கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை

Page 1
ம.வே.திருஞான
D LT LD55
Q
கொழும்புத்
'il, 2

டிதர் சம்பந்தப்பிள்ளை
லிங்கசிவம்
மெய்ப்பொருள்
காண்பதறிவு
தமிழ்ச் சங்கம்,
007

Page 2

இலங்கைத் தமிழர்: வாழ்வும் வகிபாகமும்
பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை
LD. LT. DaõTea5feb
akinakawa
aliis
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2007

Page 3
சர்வசித்து வருடம் புரட்டாதி பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை ம.பா. மகாலிங்கசிவம் (C) வெளியீடு: கொழும்புத் தமிழ்ச் சங்கம் விலை: ரூபா 100.00
October 2007 Pandithar Ma. Ve. Thirugnanasambanthappillai M. P. MahalingasivamC) Published by Colombo Tamil Sanngam Price : 100.00
ISBN 978-955-8564-14-1
தமிழ்ச் சங்க வெளியீடுகளில் உள்ள கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களுடையவை; அவை சங்கத்தின் கருத்துக்கள் அல்ல.

பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை

Page 4
ii.
பொருளடக்கம்
வெளியீட்டுரை
முகவுரை
நாவலர் பரம்பரையும் மட்டுவிற்
கல்விப்பாரம்பரியமும்
வாழ்வும் பணிகளும்
பத்திரிகாசிரியர்
புனைகதையாசிரியர்
நாடகாசிரியர்
உரையாசிரியர்
பதிப்பாசிரியர்
வகிபாகம்
ix
ix
12
20
32
45
53
64

வெளியீட்டுரை
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிற் புதிதாக எழுத்தறிவாக்கம் பெற்றோரை குவியப்படுத்தி ஆக்கங்ளை மேற்கொண்டோர் வரிசையில் பண்டிதர் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை தனித்துவமானவர். இவரது எழுத்தாக்கங்களைப் புலக்காட்சி கொள்ளாது, இந்நாட்டின் இதழியல் தமிழ் வளர்ச்சியின் அமைப்பையும், அறிகைத் தொழிற்பாடுகளையும், பின்னர் நிகழ்ந்த மாற்றங்களையும் விளங்கிக் கொள்ள முடியாது. இவர் பங்குபற்றி ஆக்கம் செய்த வாசிப்புத் தளத்திலேதான் தமிழகத்திலிருந்து வந்த இலக்கிய வார இதழ்கள் ஆழ்ந்தும் அகன்றும் கால்பதிக்கலாயின. மேலும் யாழ்ப்பாணத்துச் சமய அசைவியக்கத்தை தருக்க நிலையில் விளங்கிக்கொள்வதற்குரிய அறிகைத் தளங்களை உருவாக்கியவர்களுள் இவரது தனித்துவம் மேலேழுகின்றது.
இந்த ஆய்வறிவாளரின் பணிகளை ஆழ்ந்து வெளிக் கொண்டு வரும் ஆசிரியர் திரு.ம.பா. மகாலிங்கசிவம் அவர்களின் கூர் வரைபியத்தை (MONOGRAPH) வெளியிட்டு வைப்பதிலே கொழும்புத் தமிழ்ச் சங்கம் மகிழ்ச்சியடைகின்றது. இலங்கைத் தமிழர் வாழ்வும் வகிபாகமும் தொடர்பான கூர் வரைபியங்களை வெளியிடுவதில் அயராது அறிவுழைப்பை வழங்கும் எமது பதிப்புக்குழுச் செயலாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய திரு.க.இரகுபரனும் மற்றும் உறுப்பினர்களும் நன்றிக்குரியர்கள்.
erLum. 6gurumersr தலைவர், கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

Page 5
முகவுரை
இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய பலர், அவர்களின் பணிகள் அறியப்படாமையின் காரணமாக இலைமறை காயாக இருந்துவிடுவதும் உண்டு. மட்டுவில் வே. திருஞானசம்பந்தப் பிள்ளையும் அத்தகைய ஒருவரே. அவர் நாவல், சிறுகதை, நாடகம், நூற்பதிப்பு முதலிய பல்வேறு துறைகளிலே தமிழுக்கும் சமயத் துக்கும் பணியாற்றியவர். எனினும் அவர் பணிகள் பற்றிய மிகச் சில விடயங்களே மற்றவர்களால் அறியப்பட்டிருக்கின்றன. அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள்கூட அவர் எத்தனை நூல்கள் எழுதியிருந்தார் என்பது பற்றியோ, அவர் எத்தகைய ஆக்க இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார் என்பது பற்றியோ முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சி, நாடக இலக்கிய வளர்ச்சி என்பனபற்றி வெளிவந்த நூல்களில் அவரின் ஒவ்வொரு பக்கங்கள் பார்க்கப்பட்டிருந்தனவே தவிர அவர்பற்றிய ஆய்வுக்கான ஆதாரங்கள் தேடப்படவோ, முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவோ இல்லை.
இத்தகையதொரு சூழ்நிலையிலே சம்பந்தர் பற்றியதொரு ஆய்வினை மேற்கொள்ளத் தீர்மானித்தேன். அவரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் எனப் பலருடன் தொடர்பு கொண்டபோதும் அவர்பற்றிய முழுமையான தகவல்களைப் பெறமுடியவில்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலிருந்த இந்துசாதனம் தொகுப்புக்களும் (அவையும் முழுமையாக அல்ல) சில நூல்களுமே எனக்கு ஆரம்ப ஆதாரங்களாகக் கிடைத்தன. இவ்வேளையில் அதிர்ஷ்டவசமாகத் தமிழறிஞரான, காலஞ்சென்ற க.சி. குலரத்தினம் அவர்களின் நூல்கள் பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டன. அவரின் தேட்டங்களிடையே சம்பந்தரின் பல நூல்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் சம்பந்தர் பற்றி அவர் எழுதிய கட்டுரை (கையெழுத்துப் பிரதி)யில் இருந்தும் சில தகவல்கள் கிடைத்தன. ஒருசில சான்றுகளுடன் எனது ஆய்வினை ஆரம்பித்தபோதும் நீண்ட தேடுதலின் விளைவாக பல புதிய தகவல்கள் பெறப்பட்டன.
எனினும், சம்பந்தரின் ஆக்கங்களுள் முக்கியமான சிலவற்றைப் பெற முடியவில்லை. திருமதி செம்பொற்சோதீஸ்வர செல்லம்மாள் எழுதியு இராஜதுரை' எனும் நாவலுக்கு சம்பந்தர் எழுதிய நூன்முகம் கிடைக்காதனவற்றுள் முக்கியமானதாகும். இந்நூன் முகம் கிடைத்திருந்தால் நாவலிலக்கியம் பற்றிய சம்பந்தரின்

கோட்பாடுகளை அவர் வாயிலாகவே அறிந்திருக்க முடியும். கலாநிதி நா.சுப்பிரமணியனின் கருத்து, இம்முன்னுரையின் முக்கியத் துவத்தை மேலும் எடுத்துக் காட்டுகின்றது.
"இராஜதுரை நாவலுக்கு நூன்முகம் அளித்தவரும் இக்காலப்பகுதி நாவலாசிரியரில் ஒருவருமான ம. வே. திருஞான சம்பந்தப்பிள்ளை முதலிய பலரும் நாவல் சமுதாய சீர்திருத்தத்திற்குரிய நீதிகளைப் போதிக்கும் இலக்கிய வடிவம் என்று கருதியே மதிப்பீடு செய்துள்ளனர்."
இதுபோல அவரின் "அயோத்தியா காண்டம்’ என்னும் நாடகத்திற்கு இந்துக்கல்லூரி அதிபராயிருந்த நெவின்ஸ் செல்ல த்துரை ஆங்கிலத்தில் எழுதிய நூன்முகம் கிடைக்கவில்லை. சம்பந் தரின் நாடக எழுத்துருக்களையும், நாடக மேடையேற்றத்தையும் முழுமையாகப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தவரும், ஆங்கில நாடகங்களைப்பற்றி நன்கறிந்தவருமான நெவின்ஸ் செல்லத்து ரையின் நூன்முகம் கிடைத்திருந்தால் சம்பந்தரின் நாடகங்கள் பற்றி மேலும் பல தகவல்களைப் பெற்றிருக்க முடியும். அத்துடன் இரு நாடகங்கள் தவிர்ந்த ஏனைய நாடகங்களும் கோபால நேசரத்தினம் தவிர்ந்த மற்றைய இரு நாவல்களும் கிடைக்கவில்லை. இவற்றுள் சில ஆக்கங்கள் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி நூலகத்தில் இருந்ததை அறிய முடிந்தபோதும் திடீரென ஏற்பட்ட இடப்பெயர்வு இவற்றைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை முற்றாகவே இல்லாம லாக்கியது.
கிடைக்கின்ற நூல்களை, ஆதாரங்களை மட்டுமே கொண்டு இவ்வாய்வு நிகழ்த்தப்பட்டுள்ளதால் இது எவ்வளவு தூரம் முழுமை யானது என்பது கேள்விக்குரியதாகும். எனினும், கிடைத்த சான்றுகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்ப தனை உறுதியாகக் கூற முடியும்.
எனவே, இந்த ஆய்வானது ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பன்முகப்பட்ட பணிகளை எடுத்துச்காட்டி ஈழத் தமிழ் இலக்கிய உலகில் அவரது வகிபா கச்தினை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான ஆய்வாக அமையும் என்பதும் அவர் பற்றிய மேலதிக தேடல்களுக்கான வழிக்காட்டியாக விளங்கும் என்பதும் எனது நம்பிக்கைகளாம்.
'சிவபுரம், ம.பா. மகாலிங்கசிவம்,
இணுவில் மேற்கு, இணுவில்.

Page 6

பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை 1885-1955
நாவலர் பரம்பரையும் மட்டுவில் கல்விப் பாரம்பரியமும்
ஆங்கிலேயர் இலங்கையை ஆட்சி செய்த காலப்பகுதியில், அவர்களுக்குத் தமது ஆட்சியை நிரந்தரமாக நிலைநிறுத்துவதற்குச் சமுதாய ஒத்துழைப்புத் தேவைப்பட்டது. இச்சமுதாய மனமாற்றத்தை சமயத்தின் மூலமே ஏற்படுத்தலாம் என அவர்கள் கருதிக்கொண்டனர். எனவே அரசினர் அநுசரணையுடன் பல்வேறு கிறிஸ்தவ மிஷனறி இயக்கங்கள் இலங்கைக்கு வந்தன. இவை ஈழத்தின் பல பாகங்களிலும் கல்விக் கூடங்களை நிறுவி சமயக் கல்வியைப் போதித்தன. பாடசாலைகள் மிஷனறியால் நடத்தப்பட்டதாலும் அரசாங்க சேவைக்கு மேலைத்தேசமுறைக் கல்வி ஒரு கடவுச்சீட்டாக இருந்ததாலும் உயர்பதவிகளில் ஆசை கொண்ட மக்கள் கிறிஸ்தவத்தின்பால் ஈர்க்கப்பட்டனர். இவ்வாறான கிறிஸ்தவ பிரசார முயற்சிகளுக்கு எதிராக இந்துக்களும், பெளத்தர்களும் நடத்திய இயக்கங்களை ஆறுமுகநாவலர், அந்காரிக தர்மபால ஆகியோர் வழிநடத்தினர்.
சைவ மக்கள் கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியமைக்கான காரணங்கள் குறித்து நாவலர் மேல்வருமாறு எழுதினார்.
“இத்தேசத்திலுள்ள வறியவர்கள் அனேகர் சைவசமயமே மெய்ச்சமயம் என்று அறிந்தும் அன்னம், வஸ்த்திரம் முதலி யவை பெற்றுப் படிக்கும் பொருட்டும் உபாத்தியாய ருத்தியோகம் பிரசங்கி உத்தியோகம் முதலிய உத்தியோகங் களைச் செய்து சம்பளம் வாங்கும் பொருட்டும், கவர்மென்ட் உத்தியோகத்தி நிமித்தம் துரைமார்களிடத்தே சிபாரிசு செய்விக்கும் பொருட்டும் கிறிஸ்தவ சமயத்திலே பிரவேசிப் பாராயினர்.”

Page 7
தம் சொந்த இலாபம் கருதி மதம் மாறியவர்களின் இழி நிலை யைக் கண்டு மனம் கொதித்தே நாவலர் மேற்கூறிய வாசகங்களை மனவருத்தத்துடன் எழுதினார். இந்நிலை நீடித்தால் நமது மதம், மொழி, பண்பாடு என்பன நலிவடைந்து ஈற்றில் அழிந்தொழிந்து விடும் என்பதை உணர்ந்த நாவலர், முழுமூச்சாகக் கிறிஸ்தவ மதம் ஊடுருவுவதை எதிர்த்தார். சைவ மக்கள் தமது மொழியையும், சமயத்தையும் தனித்துவத்தையும் இழக்காமல் இருக்க பல ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டார்.
சைவத்தையும், தமிழையும் தம்மிரு கண் எனக்கொண்டு பணியாற்றிய நாவலரின் பணிகள் பன்முகப்பட்டவையாக இருந்தன. சைவசமய உண்மைகளை மக்களிடையே பரப்புவதற்கு உபாத் தியாயர்களையும், பிரசாரகர்களையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பாடசாலைகளை நிறுவ முயற்சித்தார். கிறிஸ்தவர்க ளிடமிருந்த பிரசங்க மரபினை தமிழுக்கு அறிமுகமாக்கினார். புராணபடன மரபினைச் சீர்திருத்தி அமைத்தார். சமய உண்மைக ளைக் கூறும் நூல்களையும், துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். பழைய தமிழ் ஏட்டுப் பிரதிகளைப் பதிப்பித்தார். இலக்கியங்களை எழிய தமிழில் உரை எழுதி விளங்கவைத்தார். நாவலரின் இப் பரந்துபட்ட பணிகள் இரு நோக்கங்களை அடிப்படை யாகக் கொண்டிருந்தன. ஒன்று:பிற சமயத் தாக்கங்களிலிருந்து - குறிப்பாக கிறிஸ்தவ பிரசார முயற்சியிலிருந்து - சைவத்தைப் பாதுகாத்து நிறுவுவது. மற்றயது: மரபு வழியாகச் சைவத்தைப் பேணிவருபவர்களுக்கு அதன் அடிப்படையான தத்துவச் செம்மை யையும், ஒழுக்க நெறிகளையும், கிரியை முறைகளையும் தெளிவுபடுத்துவது. இந்நோக்கங்களுக்காகத் தமது வாழ்நாள் முழுவ தையுமே நாவலர் அர்ப்பணித்தார்.
நாவலரது வாழ்க்கையாலும் அவரது செயற்கரிய செயல்களாலும் ஈர்க்கப்பட்ட பலர் அவர் காலத்தின் பின்னரும் அவர் வழியில் இயங்கினர். இவர்களுள் வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, காசிவாசி செந்திநாதையர், சைவப்பெரியார் சிவபாதசுந்தரனார், சபாபதி நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்கள் யாவரும் நாவலரிடமோ அல்லது அவர் நிறுவிய பாடசாலைகளிலோ கற்றோரா கவும் நாவலரால் ஆரம்பிக்கப்பட்ட பணிகளில் ஒன்றையோ பலவற் றையோ தொடர்ந்து நடத்தியவர்களாகவும் விளங்கினர். இவ்விதமாக நாவலர் காலத்திலும் அவர் காலத்தின் பின்னரும் நாவலர் வழியில்
2 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

இயங்கிய இவர்கள் "நாவலர் பரம்பரையினர்" என அழைக்கப்
படுகின்றனர்.
"நாவலர் பரம்பரையினை நோக்கும்பொழுது இலக்கிய இலக்கண நூற்புலமை, கல்விப்பணி, நூல் வெளியீடு, சைவசமயப் பிரசாரம், பிறமத கண்டனம், பிரசங்கமுறைமை, புராணபடனம், அருட்பாக் கோட்பாடு என்பனவற்றை முக்கியமாக இனங்காட்ட முடியும்”
என்பார் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்.
இவ்வகையில் நாவலர் பரம்பரையில் நாவலரிடம் கல்விகற்ற ஒருவராகவும் அவரால் நிறுவப்பட்ட சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியா சாலைத் தலைமை ஆசிரியராகவும், அவருடைய பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றவராகவும் விளங்கியவர் மட்டுவில் க.வேற்பிள்ளை. இவர் மேலைப்புலோலி கணபதிப்பிள்ளை உடையாரின் மைந்தராக 1848 ஆம் ஆண்டு தை மாதம் தமிழுக்கு எட்டாம் திகதி பிறந்தார். கணபதிப்பிள்ளை உடையார் பாரம்பரியத் தமிழ்க் கல்வி பெற்று புராணபடனம் செய்வதிலும் திறமை பெற்றவர். வேற்பிள்ளை இளமைக் கல்வியைத் தமது தாய்வழி உறவினரான சண்முகச் சடம்பியாரிடம் கற்றார். அதன்பின் நல்லூர் கார்த்திகேய உபாத்தியாயரிடம் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். ம.க. வேற்பிள்ளையின் திறமையையும் ஆர்வத்தையும் உணர்ந்த கார்த்திகேய உபாத்தியாயர் அவரை நாவலரிடமும் வித்துவ சிரோமணி பொன்னம்பல பிள்ளையிடமும் ஆற்றுப்படுத்தி வைத்தார்.
நாவலரிடம் சைவசாத்திரக் கருத்துக்களையும் இலக்கண நுண்மைகளையும், புராணங்கள், சைவாகமங்கள் இவற்றின் போக்குகளையும், சைவாசாரங்களையும் வேற்பிள்ளை பயின்றார். நாவலர் சிதம்பரம் செல்லும்போது உடன்சென்று அங்கிருந்து கற்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது வித்துவ சிரோமணியிடம் இவரும் சபாபதி நாவலரும் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனா வரையருரையை எழுத்தெண்ணிப் படித்தார்கள் என்பர்.
"பொன்னம்பல பிள்ளைக்குப் பிறகு உரைசொல்லுகிற வித்தை வேற்பிள்ளை உபாத்தியாரிடமே குடியிருந்தது. உரை சொல் லும் வித்தையைப் பொன்னம்பலப் பிள்ளையிடம் கைப்பற்றி யது போலவே வசனமெழுதும் வித்தையை நாவலர் அவர்க ஸ்ரிடம் உபாத்தியாயர் பயின்று கொண்டார். ஒரு சிறு கடிதம்
ம.பா. மகாலிங்கசிவம் 3

Page 8
எழுதுவதானாலும் நாவலர் அவர்கள் வசனத்தைப் பின்பற்றியே
எழுதுவார்.” என்பார் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை.
ம.க.வேற்பிள்ளை பொன்னம்பலபிள்ளையிடம் கற்றுக் கொண்டிருந்த காலத்திலேதான் திருவாதவூரடிகள் புராணத்திற்கு உரையெழுதினார். இவ்வுரையின் திறத்தையும் இவரின் இலக்கிய சைவசித்தாந்த அறிவாற்றலையும் வியந்த பொன்னம்பல பிள்ளை இவருக்கு “உரையாசிரியர்” என்னும் பட்டத்தை அளித்தார். இவ்வுரை பரிமேலழகர் உரை, நாவலர் உரை ஆகிய இருவர் உரைகளையும் பின்பற்றி எழுதப்பெற்றதாகும். இவ்வுரையேயன்றிப் புலியூரந்தாதி, அபிராமியந்தாதி, என்பவற்றுக்கும் இவர் உரை எழுதினார். சிறந்த கவிஞராகவும் விளங்கிய வேற்பிள்ளை ஈழமண்டல சதகம் என்னும் சதக இலக்கியத்தையும் பர்வதபத்தினியம்மை தோத்திரம், புலோலி வயிரக்கடவுள் தோத்திரம், ஆருயிர்க் கண்மணி மாலை என்னும் செய்யுள் நூல்களையும் இயற்றினார். இவற்றோடு வேதாரணிய புராணம், சிதம்பர சிவகாமியம்மை சதகம் என்பவற்றைப் பரிசோதித்து வெளியிட்டார். இளம் வயது முதலே கோயில்களிற் புராணபடனஞ் செய்வதிலும் பிரசங்கம் செய்வதிலும் ஈடுப்பட்டிருந்தார்.
சிறந்த ஆசிரியர்களிடம் கற்றுத் தேறிய பின்னர் ம.க. வேற்பிள்ளை தமது ஆசிரியர்கள் போலவே தாமும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். மட்டுவில் வடக்கில் உள்ள சந்திரமெளலிச வித்தியாசாலை இவரால் ஆரம்பிக்கப் பட்டதாகும். இதேவேளை இவரது இல்லத்திலேயே திண்ணைப் பாடசாலை ஒன்றும் சிறப்பாக இயங்கிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும். தென்மராட்சியில் பல ஊர்களிலிருந்தும் அநேக மாணவர்கள் பிள்ளையிடம் வந்து கற்றனர். இவரிடம் கற்றோருள் ஆவரங்கால் நமசிவாயம்பிள்ளை, சாவகச்சேரி பொன்னம்பலப்பிள்ளை, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கோராவர். ம.க.வே. சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையில் தலைமையாசிரியராக இருந்தபோது நடத்திய காவிய பாடசாலையில் கற்றோருள் வித்துவான் ந. சுப்பையாபிள்ளை, சிதம்பர வித் துவான் தணி டபாணி ஐயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் இவர்களுள் வித்துவான் சுப்பையாபிள்ளையே ம.க. வேற்பிள்ளை வித்துவான் வகுப்பினருக்குக் கற்பித்த இலக்கணவிளக்கச் சூறாவளி, தர்க்க சங்கிரகம், இலக்கணக் கொத்து
4 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

முதலிய நூல்களுக்குக் கொடுத்த குறிப்புக்களைப் பாதுகாத்து ஈழத்துக்குக் கொண்டு வந்தவர்.
ம.க. வேற்பிள்ளை புலோலியைச் சேர்ந்த மகேஸ்வரியை விவாகம் செய்தார். மகேஸ்வரி தனது சிறிய தந்தையர்களாகிய இலக்கண மகாவித்துவான் வ.குமராசுவாமிப் பிள்ளையிடமும் திருவனந்தபுரம் சமஸ்தான வித்துவானும் மகாராசாக் கல்லூரி மகாபண்டிதரும், வில்கணியம் நூலாசிரியருமான வ.கணபதிப் பிள்ளையிடமும் கல்விக் கற்றவர். இக் கணபதிப்பிள்ளையே வேற்பிள்ளையின் திருவாத வூரடிகள் புராணத்திற்கு சிறப்புப் பாயிரம் வழங்கியவர். மகேஸ்வரியின் இளைய சகோதரரே சைவபோதம், திருவருட்பயன் விளக்கவுரை, கந்தப்புராண விளக்கம், சைவக்கிரியை விளக்கம், சைவசமயாசாரம், அகநூல் என்னும் நூல்களை எழுதியவரும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபராக இருந்தவருமான சைவப்பெரியார் சு.சிவபாத சுந்தரம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்தகைய கல்விப் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் ம.க. வேற்பிள்ளையின் மூத்த மகனாகப் பிறந்தவரே ம.வே. திருஞான சம்பந்தப்பிள்ளை. வேற்பிள்ளைக்கு ஐந்து புத்திரர்கள். மூன்றாவது மகன் குருகவி என்றும் பரீட்சை எடாத பண்டிதர் என்றும் போற்றப்படும் மகாலிங்கசிவம். இவர் கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராக இருந்ததோடு சிறந்த கவிஞராகவும் இலக்கிய இரசனைக்குப் பேர்போனவராகவும் விளங்கினார். இரண்டாவது மகன் சட்டத்தரணி மாணிக்கவாசகர் ஆசிரியர்களாக இருந்த கந்தசாமி, நடராசா ஆகியோர் ஏனைய புத்திரர்கள்.
ம.க. வேற்பிள்ளையின் ஆளுமை அவர் மைந்தர்களிடம் இரு கிளைகளாகப் பிரிகின்றது. அவரது கவித்துவமும் நயஞ் சொல்லுதலும் ஆகிய ஆளுமைக் கூறுகள் மகாலிங்கசிவத்திடம் உருவெடுக்கின்றன. நூலுக்கு உரைவகுத்தல், நூற்பதிப்பு, சமயப் பணி என்பன திருஞானசம்பந்தப்பிள்ளையிடம் வளர்ச்சி பெறுகின்றன. பிரசங்கமரபு, புராணபடனஞ் செய்தல், ஆசிரியப்பணி என்பன இருவரிடமும் காணப்படுகின்றன.
ம.பா. மகாலிங்கசிவம் 5

Page 9
(2)
வாழ்வும் பணிகளும்
திருஞானசம்பந்தப்பிள்ளை 1885ஆம் ஆண்டு மார்கழி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் மட்டுவிலிற் பிறந்தார். ஆரம்பக் கல்வி யைப் புலோலியில் சி.வேலாயுதபிள்ளை என்பவராலே தொடக்கப் பெற்ற பாடசாலையிற் கற்றார். புலோலியில் ஆங்கிலக் கல்வி கற்ற போதே தந்தையாரிடம் தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங் களையும், புராணங்களையும் படித்தார். தந்தையாரிடம் திருகோண மலைத் திருப்பதிகத்தையும் அதன் பொருளையும் கற்றதைத் தேவார திருவாசகத் திரட்டு நூன்முகத்தில் குறிப்பிட்டுள்ளார். வேற்பிள்ளை ஆங்கிலத்தை 'மிலேச்சபாஷை எனக்கருதி ஒதுக்கியதால் மகாலிங்கசிவம் அதனைக் கற்கவில்லை. ஆனால் சம்பந்தர் ஆங்கிலத்தைக் கவனமாகக் கற்றார். இந்த ஆங்கில அறிவே அவரது பத்திரிகைத் தொழிலுக்கும் நாவல் சிறுகதை என்பவற்றை எழுதுவ தற்கும் பின்னர் பேருதவியாக அமைந்தது எனலாம். இவர் சுழிபரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் சில காலம் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேற்பிள்ளை சிதம்பரம் பாடசாலைக்குத் தலைமை ஆசிரியராகச் சென்ற பின்னர் சம்பந்தர் முதலிய ஐவருக்கும் மாமனாரான சைவப் பெரியார் சிவபாதசுந்தரனாரின் மேற்பார்வையில் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிறு வயதில் ஐவரும் புலோலிப் பாடசாலைக் கல்வியை விட்டுவிட்டு தாயாரிடம் அடிக்கடி சென்றுவிடுவதையும் மாமனார் அங்கு சென்று அவர்களைத் தண்டித்து மீண்டும் பாடசா லைக்குக் கூட்டி வருவதையும் பண்டிதை ச.அமிர்தாம்பிகை 'மாமனும் மருகரும்' என்னும் கட்டுரையிற் குறிப்பிட்டுள்ளார். கண்டிப்புடன் அமைந்த மேற்பார்வையே பிற்காலத்தில் இவர்கள் பெற்ற சிறப்புக்களுக்கெல்லாம் காரணமாய் அமைந்ததெனலாம்.
கல்வியை ஒரளவு நிறைவு செய்ததும் சந்திரமெளலீச வித்தியா சாலை என வழங்கப்படும் அக்கால அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலே தராதரப் பத்திரமற்ற உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
6 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

"ஆங்கிலம், பூமிசாத்திரம், சரித்திரம் என்பன இவர் படிப்பிக்கும்
பாடங்கள். மாணவர்கள் கைகள் உறைக்கவும் கண்ணிர்
சொட்டவும் பாடம் நடக்கும்” என்பர். இப் பாடசாலையில் இவரிடம் கல்வி கற்றவர்களில் பண்டித மணி சி.கணபதிப்பிள்ளையும் ஒருவர்.
பெற்றோர் இவருக்கு உரிய வயது வந்ததும் இருபாலையைச் சேர்ந்த மயில்வாகனத்தின் மகளான தெய்வநாயகியை விவாகம் செய்து வைத்தனர். இவர்களுக்குச் சண்முகசுந்தரம் என்னும் மகன் பிறந்தார். பின்னர் சம்பந்தப்பிள்ளை தெய்வானைப்பிள்ளையை இரண்டாந்தாரமாக மணஞ்செய்தார். வயிரவசுந்தரம், மகேஸ்வரி, மனோன்மணி, இராசேஸ்வரி எனும் பிள்ளைகள் பிறந்தனர்.
திருஞானசம்பந்தப்பிள்ளையது ஆளுமையின் அடித்தளம் நாவலர் பரம்பரையில் வந்த சைவசித்தாந்த நெறிநின்ற சமய உணர்வேயாகும். தமிழுக்கும் சைவத்துக்கும் அவர் பணியாற்றிய போதும் சமய உணர்வே அவரிடம் மேலோங்கி இருந்ததனை,
"சமயாபிமானம், சாதியபிமானம், தேசாபிமானம்,பாஷாபிமானம் என்ற நான்கினுள் முதல் வைத்து எண்ணப்பட்ட சமயாபிமானமே சிறந்ததாகும்” என்னும் அவர் கூற்றால் அறியலாம்.
நாவலர் எதை விரும்பினாரோ அதை நிறைவேற்ற நாவலர் ஞானபரம்பரையில் முகிழ்த்த ஒருவராகவே சம்பந்தர் வருகின்றார். நாவலரின் நீண்டகாலக் கனவாக இருந்து, அவர் காலத்தின் பின்னர் நனவான யாழ் இந்துக் கல்லூரியிலும் இந்து சாதனத்திலும் சம்பந்தர் பணியாற்றினார். நாவலரைப் போலவே சமய இலக்கியங்களைத் தேடியெடுத்துப் பதிப்பித்தார். இலக்கியங்களுக்கு இலகு தமிழில் உரையெழுதினார். புராணபடனம், பிரசங்கம் செய்வதில் ஈடுபட்டார். நாவலர் பால பாடங்களை எழுதி வெளியிட்டதுபோல் இவரும் பாடநூல்களை எழுதினார். கோயிற் புநருத்தாரணத்திலும் ஈடுபட்டார்.
சம்பந்தர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1912ஆம் ஆண்டு தொடக்கம் 35 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். அவர் இங்கு கற்பித்த பாடங்கள் தமிழும் சமயமுமாம். பழைய முறையில்
ம.பா. மகாலிங்கசிவம் 7

Page 10
இலக்கண இலக்கியங்களை நன்கறிந்தவராயும், இயற்கைப் புலமை மிக்குள்ளவராகவும், நகைச்சுவையோடு கற்பிக்க வல்லவராயும் இருந்தமையால், இந்துக் கல்லூரி மேல் வகுப்புக்களிற் கலகலப்பாகக் கற்பித்துவந்தார். இலக்கணங்கற்கத் தயங்கி நின்ற மாணவர்களுக்கு இலக்கணத்தை நகைச்சுவையோடு கற்பித்தார். பழைய இலக்கியங்களைத் தற்கால இலக்கியங்களோடு ஒப்பிட்டுக் கற்பிப்பார் என்பர்.
சமயப் பாடம் படிப்பிக்கும் வேளைகளில் சமயாசாரம், தீட்சை முதலியன பற்றிக் கூறி, மாணவர்களைப் புலாலுண்ணலைத் தவிர்க்கச் செய்து சமயாசாரமுள்ளவர்களாக வாழச் செய்தார்.
"வகுப்பில் மகனே! என்ற ஓசை; வகுப்பு முடிந்த பின் சித்திரப் பாவைப்போலிரு என்னும் இனியமொழி, தேவார பராயண நேரத்தில் இன்னிசை, அரிச்சந்திர புராணம் மயான காண்டத்தில் சந்திரமதி புலம்பல் என்ற பகுதியில் ‘பனியால் நனைந்து வெயிலா லுலர்ந்து பசியா லலைந்து முலவா’ என்ற பாடலைச் சம்பந்தர் பாடினால் துக்கசாகரத்தில் மூழ்காத பிள்ளைகள் அக்காலத்தில் ஒருவருமே இருக்கவில்லை." என்பர் க.பொ. பாலசிங்கம்.
இந்துக் கல்லூரியில் உருவான இந்து இளைஞர் கழகத்தை ஆரம்பத்தில் திருஞானசம்பந்தப்பிள்ளையே வழி நடத்தினார். சைவசமய குரவர்கள், நாவலர், சேக்கிழார் ஆகியோருடைய குருபூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. கல்லூரி மாணவரிடையே ஆங்கிலத்திலும் பேச்சுப்போட்டிகள் இந்து இளைஞர் கழகத்தால் நடத்தப்பட்டன. வாரந்தோறும் திங்கட்கிழமைகளிற் பாடசாலைக்கு வெளியிலிருந்து அறிஞர்களை அழைத்துச் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டன. தமிழ் நாட்டிலிருந்து காலந்தோறும் ஈழத்துக்கு வருகைதரும் சமயப் பெரியார்கள் இந்துக் கல்லூரிக்கும் வந்து சொற்பொழிவாற்றுவது வழமையாகும். அவ்வாறு வருவோரை வரவேற்றுப் பேசவைத்துப் பாராட்டும் வேலைகள் சம்பந்தரின் பொறுப்பிலேயே அமைந்தன.
சைவத்தின் வளர்ச்சியில் அதிக ஊக்கத்தைச் செலுத்தி வந்த சம்பந்தருக்குத் தகுந்த சந்தர்ப்பத்தை அளித்தது சைவ பரிபாலன
8 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

சபையாகும். இச்சபையில் நாற்பது ஆண்டுகள் சேைைவயாற்றிய சம்பந்தர், இறுதிக் காலப்பகுதியிற் செயலாளராகவும் இருந்தார்.
“சைவ பரிபாலன சபை வேறு, பண்டிதர் வேறு என்று நாம் கூற முடியாது. இச்சபையில் உயிர் நாடியாய் விளங்கினார் பண்டிதர்" என்பார் செல்வி சிதம்பரம். சம்பந்தர், சபையின் சார்பில் எத்தனையோ பிரசங்கங்களையும் மகாநாடுகளையும் ஒழுங்கு செய்து நடத்தினார்.
சம்பந்தர் காலமான ஆண்டாகிய 1955இன் முற்பகுதியில் சபை சார்பில் அவர் செய்த இருபணிகள் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கனவாகும். ஒன்று: இந்தியாவிலிருந்து முத்தமிழ்ப் பெருஞ் சொற் கொண்டல் புரிசை முருகேச முதலியாரை அழைத்து நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் மகாபாரதம், இராமாயணம் என்பன பற்றிச் சொற்பொழிவுகளை நிகழ்த்தத் துணிந்ததோடு அவற்றை இந்து சாதனத்திலும் வெளியிட்டார். இரண்டாவது பணி: நாவலர் மண்டபத்தில் நடைபெற்ற பெரிய அளவிலான அகில இலங்கைச் சைவமகாநாடு ஆகும். இம்மகாநாடு (21-04-1955 தொடக்கம்) நான்கு நாட்களுக்கு இடம்பெற்றது. இதற்காக இந்தியாவிலிருந்து அ.ச. ஞானசம்பந்தன், கி.வா. ஜகந்நாதன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். நான்காம் நாள் நிகழ்ச்சியில் "கச்சியப்பசிவாச்சாரியார்” என்னும் பொருளிற் சம்பந்தர் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவில் “யாழ்ப்பாணத்தில் நல்ல தமிழ் பயின்று வருவதற்குக் காரணம் பன்னெடுங்காலமாகக் கந்தப்புராணம் முறையாகப் படித்து வருவதே" என்று குறிப்பிட்டார். மேலும் கந்தப்புராணம், இராமாயணத்திலும் பார்க்க சில சில இடங்களிற் சிறந்து விளங்குகின்றது என்று ஆதாரத் துடன் விளக்கினார்.
நாவலர் வழியைப் பின்பற்றிக் கோயில் திருவிழாக்களிலும் சங்கங்கள், சபைகள் கொண்டாடும் மகாநாடுகளிலும் சைவம் பற்றிப் பேசிவந்தார். சமயப் பிரசங்கம் செய்ய வேண்டிய அவசியத்தையும் முறைமையையும்,
"சபைகள் தோறும் சனங்கள் கூடும் இடங்கள் தோறும் ஆலயங்கள் தோறும் சமயப் பிரசங்கங்கள் செய்யப்பெறுதல் வேண்டும். மெய்யடியார்கள் அவற்றைப் போதிக்கும் பொழுது அதிகாரிகளுக்கும் ஏனையோருக்கும்
ம.பா. மகாலிங்கசிவம் 9

Page 11
கோபமேனும் மனஸ்தாபமேனும் ஜெனிக்கவிட வொண்ணாது,
அதிகாரிகளின் உள்ளத்தில் நன்கு பதியக்கூடியதும்
அவர்களை வசீகரிக்கக் கூடியதுமான முறைகளையே பெரும்
பாலும் போதித்தல் வேண்டும்" எனக் கூறினார். நாவலர், அதிகாரிகளை நோக்கி வெளிப்படையான கண்டனங்களை முன்வைக்க, சம்பந்தர் அவர்கள் மனம் நோகாமற் போதிக்க வேண்டுமென்பதன் சமூகவியற் பின்னணி ஆராயப்பட வேண்டியதாகும்.
தனது பிரசங்கங்கள் மூலம் சம்பந்தர் மக்களுக்குச் சைவத்தின் மேன்மையை எடுத்துரைத்தார். அக்காலத்தில் எங்கும் பரவிய, சமயத்திற்கு மாறான பொதுவுடைமை, திராவிடக் கொள்கைகள் மக்களிடத்துப் பரவாமற் பிரசங்கங்கள் மூலம் அவர் பணியாற்றினார். மிக எளிய முறையில் பல கருத்துக்களை அவர் மக்களுக்குத் தெரிவித்தார். தாம் இறப்பதற்கு முதல்நாள் இரவுகூட வண்ணார் பண்ணைச் சிவன்கோவிலில் அம்பாள் உற்சவத்தில் பிரசங்கம் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
"பள்ளிக் கூடங்களிலும் திருக்கோயில்களிலும் மடங்களிலும் சமயப் பிரசாரம் செய்வதற்காகப் பிரசங்கங்கள், புராணபடனங்கள் செய்வதற்கு யார் அழைத்தாலும் மறுக்காது சென்று தொண்டாற்றுவார்" என்பார் மு. மயில்வாகனம்.
சமய உண்மைகளைப் பற்றிப் பிரசங்கம் செய்து மக்களுக்கு அறிவூட்டியதோடு மட்டும் நிற்காமல் எழுத்துக்கள் மூலமும் அப்பணி யினை மேற்கொண்டார். இந்து சாதனம் பத்திரிகை இதற்குச் சிறந்த சாதனமாக அமைந்தது. பத்திரிகையின் ஆசிரியராக இருந்துகொண்டு அவர் எழுதிய ஆசிரியத் தலையங்கங்களும் பெரும்பாலானவை சமய விடயம் பற்றியே அமைந்திருந்தன. இதனோடு மட்டும் நிற்காமல் சமய குரவர்களின் குருபூசைத் தினங்களிலும் நாவலர் குருபூசை தினத்திலும் கட்டுரைகளைத் தாமே எழுதியும் பிறரைக் கொண்டு எழுதுவித்தும் வெளியிட்டார்.
இவற்றோடு பல சமயநூல்களையும் எழுதி வெளியிட்டார். விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டிய முறைகளையும், அவற்றை
10 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

அனுஷ்டித்தோர் பெற்ற பயன்களையும் எடுத்துக் கூறுவனவாக சோமவாரவிரத மான்மியம், பிரதோஷவிரத மான்மியம் என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். இவற்றுட் சோமவாரவிரத மான்மியம் சோமவார காலத்தில் படிக்க வேண்டிய தோத்திரப் பாக்களையும் கொண்டுள்ளது. நூலின் தொடக்கத்தில் ஆரியவர்த்த நாட்டின் மன்னன் சித்திரவர்மனின் மகள் சீமந்தநியின் கதை கூறப்பட்டுள்ளது. அவள் சிறுவயதில் விதவையாவாள் என்று சோதிடர் கூறுகின்றனர். யாக்கியவர்க்கர் என்னும் முனிவர் இதற்குப் பரிகாரமாக சோமவார விரதத்தை அநுட்டிக்கும்படி கூறுகின்றார். இங்கு யாக்கிவர்க்க முனிவரூடாக விரதமகிமை கூறப்படுகின்றது.
ஆனால் இதற்கு நேர்மாறாகப் பிரதோச விரத மான்மியத்தில் நேரடியாகவே முதல் அத்தியாயத்தில் விரதம் அனுஷ்டிக்கும் முறை கூறப்படுகின்றது. இரண்டாம் அத்தியாயத்தில் விரதம் அனுஷ்டித்து பேறுபெற்றோர் என்னும் தலைப்பில் சத்தியாதனன் என்பவன் கதை விரிவாகக் கூறப்படுகின்றது.
இவற்றோடு நாயன்மார்கள் கதைகளையும் எழுதியுள்ளார். சமயகுரவர், சந்தானகுரவர் சரித்திரச் சுருக்கத்திலே திருஞான சம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், மெய்கண்டதேவர், அருணந்திசிவாசாரியார், உமாபதி ஆகியோர் வரலாறுகள் கூறப்பட்டுள்ளன. இதனைவிட மாணிக்கவாசகர் சரித்திரச் சுருக்கத்தில் அவர் வரலாறு தனியாகக் கூறப்பட்டுள்ளது. சம்பந்தர் ஓய்வு பெற்றபின் தமது இல்லத்துக்கு அருகேயிருந்த ஞானவைரவ சுவாமி கோயிலைப் புனருத்தாரணம் செய்து பெருப்பித்துக் கட்டியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
ம.பா. மகாலிங்கசிவம் 11

Page 12
Eo பத்திரிகாசிரியர்
இலங்கையில் சமய வளர்ச்சி கருதியே ஆரம்பத்திற் பத்திரி கைகள் நடத்தப்பட்டன. முதலிற் கிறிஸ்தவப் பாதிரிமார்களே பத்திரிகைகளைச் சமய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினர். இத்தகைய அவர்களது நடவடிக்கைகள் தேசிய சமயவாதிகளைத் தத்தம் சமய விருத்தியின் பொருட்டும் சுயமத நிலைபேற்றின் பொருட்டும் புதிய பத்திரிகைகளை ஆரம்பிக்கத் தூண்டின. பத்தொன்பதாம் நூற்றாண்டிற் கிறிஸ்தவர் மத்தியில் இருந்து உதயதாரகை (1841), கத்தோலிக்கப் பாதுகாவலன் (1876), முதலிய பத்திரிகைகள் வெளிவந்தன. முஸ்லீம் நேசன் (1882), சர்வஜன நேசன் (1885), இஸ்லாமிய மித்திரன் (1893) முதலான பத்திரிகைகள் முஸ்லீம் மக்கள் மத்தியினின்று தோன்றின. சைவர்களிடமிருந்து இலங்கை நேசன் (1877), சைவசமய போதினி (1891), சைவ உதயபானு (1880) முதலான பத்திரிகைகள் வெளிவந்தன.
யாழ்ப்பாணத்துச் சைவ மக்களும் நாவலரின் பரம்பரையினரும் இணைந்து 29-04-1888 இல் சைவ பரிபாலன சபையை ஆரம்பித்தனர். அதன் இலட்சியங்களுள் ஒன்றாகச் சைவ மக்களுக்குச் சிறப்பாகவும் தமிழ் மக்களுக்குப் பொதுவாகவும் பயன்தரக்கூடிய பத்திரிகை களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக நட்த்தல் என்னும் விடயம் அமைந்திருந்தது. இச்சபையாரின் இலட்சியத்துக்கு வடிவம் கொடுப்பதாக 11-09-1889 புதன்கிழமை இந்துசாதனம் என்று தமிழிலும் Hindu Organ என்று ஆங்கிலத்திலும் பெயரிடப்பட்டு இந்து சாதனம் வெளிவரத் தொடங்கியது. இதன் முதல் ஆசிரியராக நாவலரின் பெறாமகன் த.கைலாசபிள்ளை இருந்தார். 1920ஆம் ஆண்டு ஆனி 19இல் இவர் காலமாகிய போது அதுவரை இவரின் கீழ் உதவிப் பத்திராசிரியராக எட்டு வருடங்கள் வேலை பார்த்து வந்த ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளையை சைவபரிபாலன சபையார் பத்திராசிரியராக நியமித்தனர்.
சம்பந்தர் உதவியாசிரியராக இருந்த காலத்திலேதான் அதுவரையில் பட்சத்திற்கொரு முறை வெளிவந்த இந்து சாதனம்
12 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் வெளிவரவும் ஆங்கிலப் பிரசுரம் வாராவாரம் இருமுறை வெளிவரவும் தொடங்கியது (1913 யூன்) என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
“கையொப்பக்காரருடைய உதவி இருக்குமாயின் மாசமிரண்டு
தரம் வெளிப்படுத்தத் தொடங்கிய இப்பத்திரிகையை மாசம்
நாலுதரம் வெளிப்படுத்த ஆயத்தமாக இருக்கிறோம்.” என இந்துசாதனம் முதல் வெளியீட்டிலே த.கைலாசபிள்ளை கண்ட கனவு சம்பந்தர் காலத்திலேயே நனவாகியது எனலாம்.
இதன் பின் இந்துசாதன ஆங்கிலப் பிரசுரம் போலவே தமிழ்ப் பிரசுரமும் வாரமிருமுறை வெளிவரல் வேண்டும் என்ற எண்ணம் அதனோடு தொடர்புடையவர்களிடம் தோன்றியது. இவ்வேளை தேசாபிமானி வாரமிருமுறை வெளிவந்து கொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகலாம். ஆனால் இம்முயற்சிக்கு நிதித்தட்டுப்பாடு பெருந்த டையாக இருந்தது. அவ்வேளை ஆசிரியராகவிருந்த சம்பந்தர் தனது நோக்கத்தைக் காலந்தோறும் பத்திரிகை வாயிலாக வெளியிட்டு வந்தார். இதன் விளைவாகப் பொருள்சேரவே 1923ஆம் ஆண்டு யூலை 05ஆம் திகதி தொடக்கம் இப்பத்திரிகை வாராந்தோறும் திங்கள், வியாழக் கிழமைகளில் வெளிவரலாயிற்று.
பத்திரிகையாளன் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு,
“பத்திராசிரியரெனப்படுவோரிடத்து விசேடமாக அமைய வேண்டிய குணங்கள் தெய்வக்கொள்கை, நடுவுநிலைமை, முகமன் பாராட்டாமை, நுண்ண்றிவு, சொல்லாட்சி, சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல், யதார்த்தவாதம், சமயவாதம் முதலாம் மூவகையபிமானங்கள், பண்பு, சுதந்திரம்,
*** |
பெருந்தன்மை முதலியனவாம்
எனப் பதிலளித்தார். இக்குணங்களுட் சிலவற்றை உடையவர்களாக இருந்தாலும் அவ்வாசிரியர்கள் நடத்தும் பத்திரிகையால் உலகிற்கு நன்மை உண்டாகும் என்று கூறினார். மேலும் பத்திராசிரியர்கள் தம்மை எப்போதும் எல்லோரும் பாராட்டுவார்கள் என்று எதிர்ப் பார்க்காது கடமையை உரிய முறையிற் செய்வதே சிறந்தது என வலிறுத்தினார். தாமும் இக்கோட்பாடுகளுக்கேற்பவே பணியாற்றினார்.
இந்து சாதனம் சம்பந்தர் என்றவுடன் எவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ‘உலகம் பலவிதம்' என்ற தலைப்பில் அவர் தொடர்ச்சியாக எழுதிவந்த கதைகளே. உலகம் பலவிதம் என்பதற்கு
ம.பா. மகாலிங்கசிவம் 13

Page 13
'உலகம் - பலவிதம்' என்றும் ‘உலகு அம்பல விதம்' அதாவது உலகு சிதம்பரரகசியம் போற் புரிந்துகொள்ள முடியாதது என்றும் இருவகையாகப் பொருள் கொள்ளலாம் எனச் சம்பந்தர் கூறுவார். சிறுவர் முதற் பெரியோர் வரை எல்லோரும் படித்துச் சுவைக்கும் படியான நகைச்சுவைமிக்க நூற்றுக்கணக்கான கதைகளை அவர் இத்தலைப்பில் எழுதினார்.
“வாசகர்களைச் சிரிக்கவைத்தும் சிந்திக்கவைத்தும் அவர்
எழுதிய முறை ஆங்கிலத்திலும் அடிகள் கோல்ட்ஸ்மித் ஸ்ரீல்
முதலானோர் கையாண்ட முறையில் அமைந்தது.” என்பார் க.சி.குலரத்தினம்.
இத்தலைப்பில் வெளிவந்த தொடர்கதைகளே கோபால நேசரத்தினம், காசிநாதன் நேசமலர், துரைத்தினம் நேசமணி என்னும் மூன்று நாவல்களாக வெளிவந்தன. இவை தவிர இன்னும் பல தொடர்கதைகள் நூலுருப் பெறாமல் உள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும். இக்கதைகள் இந்து சாதனத்தின் விற்பனையைப் பலமடங்கு அதிகரிக்கச்செய்தன. தொடர்கதை வெளிவரும் காலத்தில் வாசகர்கள் அதிகாலையிலேயே சென்று இந்து சாதனத்திற்காக வரிசையாகக் காத்திருப்பது வழமை என்று கூறுவர். மலேசியா விலிருந்துகூட இக்கதைகளுக்குப் பாராட்டுக் கடிதங்கள் வந்துள் ளமை இந்துசாதனம் அங்கும் பிரபல்யமானதை வெளிப்படுத் துகின்றது.
தொடர்கதைகளைத் தவிர சமூகத்திற் காணப்பட்ட குறை பாடுகளை நேரடிக் கதைகளாகவும் உருவகக் கதைகளாகவும் நகைச்சுவையுடன் எழுதிக் கண்டித்தார். அக்கால ஆங்கிலக் கல்லூரிகளிலே தமிழ் கற்பிக்கப்படும் முறையில் பல குறைபாடுகள் காணப்பட்டன. சங்க இலக்கியங்களோ ஆத்திசூடி, கொன்றை வேந்தன் என்பனவோ கற்பிக்கப்படவில்லை. இதனைக் கண்டிக்க “உது ஆர் பாடினது” என்னுந் தலைப்பிலே சிறு உரையாடலை அமைத்துக் கிண்டல் செய்கிறார். ஆங்கிலக் கலாசாலையிலே தமிழ் கற்பிக்கும் ஆசிரியர் ‘வைகறைத் துயிலெழு', "ஊக்கமது கைவிடேல் என்னுந் தலைப்புக்களில் கட்டுரை எழுதச்சொல்கிறார். மாணவர்கள் தலைப்பு விளங்காமல் “உதன் பொருள் தெரியவில்லை, உது ஆர் பாடினது?” எனக் கேட்கின்றனர்.
14 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

“உபாத்தியாயர்: அடடா தமிழ் இப்படியா பாழடைந்தது? சரி, உங்களுக்கு நிகண்டு தெரியுமா?”
க்ணபதி: நிகண்டு தெரியாது, கற்கண்டு தெரியும் தின்றிருக்கிறேன். உபாத்தியாயர்: (தலையிற்கையை அடித்து) ஆ! ஆ! இந்தக் காலத்தில் தமிழ்மகள் இப்படியா தாலியறுத்தாள்? முருகேசன்: ஸேர், அவள் தாலியறுக்கவில்லை. அவளுடைய தாலியை சட்டம்பிமாரும் நாங்களுமாகப் பிடுங்கிவிட்டோம்"
இவ்வுரையாடற் பகுதி நாடகத்தின் ஓர் அங்கம் போல அமைந்து, முழுமை பெற்று விளங்குகின்றது. சம்பந்தரின் நாசூக்கான கிண்டலுடன் கூடிய கருத்து வாசகரின் உள்ளத்தை ஊடுருவித் தைத்ததைக் காணக்கூடியதாக உள்ளது.
சமூகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட உருவகக் கதைகளையும் அவர் பயன்படுத்தினார். 1919ஆம் ஆண்டில் அரசாங்கம் மதுவிலக்கைக் கொண்டுவந்தது. ஆனால் குறிப்பிட்ட சில இடங்களில் சட்டவிரோதமாக, அதேவேளை பகிரங்கமாகவே சாராய விற்பனை நடைபெற்றது. இதனை உலகம் பலவிதக் கதைகள், எனும் பகுதியில் உருவகமாக அமைந்தார்."
இடம் சாகச்சேரிப் பிரமர் கோவிலுக்கணித்தாயுள்ள
மணற்றிடல் 85ft Glob பின்னேரம் 5 மணி
அச்சமயத்திற் கூடியது சாராய மகாநாடு
அவைத் தலைவர்: மிஸ்ரர், பிறண்டித்துரை
காரியதரிசி : மிஸ்ரர் ஐயாத்தம்பி
பிரசாரகர் : மிஸ்ரர் சாராய நாதனவர்கள்
இப்பகுதி பெரும்பாலும் உருவகமாகவே அமைந்திருக்கின்றது.
சாராயநாதன் என்னும் பாத்திரத்தின் சொற்பொழிவி னுாடாக அரச ஆதரவும் இவர்களுக்கு இருப்பதைக் குறிப்பிடுகின்றார். “உலகம் பலவிதம் உரைநடைக் கலம்பகம் என்றே புலவர்களாற் புகழப்படுவது” என்பார் நம.சிவப்பிரகாசம்.
உலகம் பலவிதக் கதைகள் (தொடர்கதைகள் தவிர்ந்தவை) அவற்றின் வடிவத்தாலும் உத்தியாலும் புதிய அமைப்பினைப் பெற்றுள்ளன. இவை குறித்து தனித்து ஆராயவேண்டியது அவசிய மானதாகும்.
ம.பா. மகாலிங்கசிவம் 15

Page 14
சைவ, கிறிஸ்தவ சமயங்களிடையே கடுமையான போட்டி நிலவிய அக்காலச் சூழலில் கிறிஸ்தவப் பத்திரிகைகள் சைவத் தின்மேற் கண்டனங்களை வெளியிட்டபோதெல்லாம் சம்பந்தர் இந்து சாதனத்திற் கடுமையான மறுப்புக்களை முன்வைத்தார். அக்காலத்தில் வட்டுக்கோட்டை அமெரிக்கன் மிஷன் கல்லூரியி லிருந்து வெளிவந்த மாணவர் இதழான "இளஞாயிறு' என்னும் சஞ்சிகையில் 'பரமசிவனுக்கோர் பகிரங்கக் கடிதம்’ என்னும் தலைப்பில் கடிதமொன்று மாணவர் ஒருவரால் எழுதப்பட்டிருந்தது. இக்கடிதம் சைவசமயத்தையும், சிவனையும் கேலி செய்வதாக அமைந்திருந்தது. அக்கடிதத்திற்குச் சம்பந்தர் கடுமையான கண்டனம் எழுதினார். அவரது கண்டனம் யாழ்ப்பாணத்தில் மிகுந்த வாதப்பிரதி வாதங்களை ஏற்படுத்தியது. இறுதியில் வட்டுக்கோட்டைக் கல்லூரி அதிபரே அக்கட்டுரையைப் பிரசுரம் செய்ய அனுமதித்தது தவறெனப் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்கவைத்தது. சம்பந்தர் கிறிஸ்தவ சஞ்சிகையான சத்தியவேத பாதுகாவலனுடனும் பலமுறை தர்க்கத்தில் ஈடுபட்டதனை, “பாதுகாவலருடன் நீ பன்முறைகளிலே சமயவிஷயமாய்த் தர்க்கமாடியதுண்டு” எனும் அப்பத்திரிகாசிரியர் கூற்றால் அறியலாம்.?
கிறிஸ்தவ எதிர்ப்புக்களைச் சமாளித்ததோடு மட்டுமல்லாமல்,
சைவத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்த்திருத்தவும் அவர்
தயங்கவில்லை. இன்றைய சமயக்கல்வியின் இயல்பு என்னுந்
தலைப்பிலே பாடசாலைகளிற் சமயக்கல்வி அடைந்துள்ள நிலையை
விளக்கி ஆசிரியத்தலையங்கம் எழுதினார்.
“முதலிற் பாடசாலைக் கல்வியிலுள்ள குறைபாடுகளை எடுத்துக் கூறி இறுதியாகக் சைவவாழ்வுக்கு வழி எடுத்துக் காட்டும் நிலையம் கல்விக் கழகமாகவும் வழிகாட்டுவோர் ஆசிரியர்களாகவும் இருத்தல் வேண்டும். கல்வி நிலையப் பாடப் புத்தகங்கள் சமய நெறியைத் தழுவி எழுதப்படல் வேண்டும்”10
என வலியுறுத்தினார்.
பொதுவாகத் தமிழுக்கும், சிறப்பாகச் சமயத்துக்கும் பணியாற்ற வந்த இந்துசாதனத்தை இவற்றையும் தாண்டிச் சமூகப் பணிகளிலும் ஈடுபடுத்தினார்.
“இவ்விரு பத்திரிகைக்கும் (இந்துசாதம், Hindu Organ) சைவ சமய வளர்ச்சியையே அதன் தொனிப் பொருளாகக்
16 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

கொண்டிருந்த போதும், தமிழ்மக்களின் சமூக, அரசியல், பொருளாதார, மொழிச் சிந்தகைளை வளர்த்துச்செல்வத்திலும் மிகுந்த கவனஞ் செலுத்தி வந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.' என இரா.வை. கனகரத்தினம் கூறுவது இங்கு நோக்கத்தக்கதாகும்.
சென்னை றாயல்சீமாவிற் பஞ்சம் ஏற்பட்டபோது பஞ்சநிவாரண நிதி ஒன்றைப் பத்திரிகை வாயிலாக ஏற்படுத்தினார். பெருமளவு பணத்தைச் சேர்த்துப் பஞ்சத்தால் வாடுவோருக்கு அனுப்பிவைத்தார். 1952ஆம் ஆண்டுத் தேர்தலிற் கட்சி உறுப்பினர்களிடையே மோதல்கள் ஏற்பட்டபோது. அதனைத் தடுத்து நிறுத்தத் தொடர்ச்சி யாகக் குரல் கொடுத்தார். அத்தோடு தேர்தலுக்காகும் திருக்குறள் என்ற தலைப்பில் ஒவ்வொரு பத்திரிகையிலும் ஒவ்வொரு குறளை வெளியிட்டு, அதற்குத் தேர்தற் காலத்திற்கேற்ற விளக்கவுரையும் எழுதினார்.
தேர்தலுக்காம் திருக்குறள்-7
“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ தேர்தற் புத்துரை:
பொய்ப் பிரசாரமும் புழுகு மூட்டைகளும் போலிப் பேச்சுகளும் அபேட்சகர்களுக்குப் பாராளுமன்றப் பதவியைக் கொடுக்கு மிடத்து உண்மையின் நிலைமையை அடையும்.'
தேர்தலுக்காம் திருக்குறள்-8
"குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போ டுயிரிடை நட்பு”
தேர்தற் புத்துரை:
முட்டையிலிருந்து பறவை பறந்து போக முட்டைக்கோதும்
பறவைக் குஞ்சும் பின்னர் ஒருபோதும் சந்திக்காத தன்மை
எனத் தேர்தல் முடிந்ததும் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும்
பின் ஒருவரை ஒருவர் அறியார் போல நடந்து கொள்வர்.?
தமக்கேயுரிய நகைச்சுவையோடு தேர்தற் சீர்கேடுகளைத் திருக்குறளினுடாக விமர்சிப்பதனை இங்கு காணலாம். பல்வேறு நூல்களுக்கும் உரையெழுதிய சம்பந்தப்பிள்ளை தேர்தற் சூழலுக்
ம.பா. மகாலிங்கசிவம் 17

Page 15
கேற்ப திருக்குறளுக்கும் பொருள் எழுதியதன் மூலம், இலக் கியங்களைச் சமூக அங்கதத்துக்காகக் கையாளும் ஆற்றல் கைவரப் பெற்றவராக, பழைய இலக்கியத்தைப் புத்தாக்கப்படுத்தும் ஆற்றலுடையவராக இருந்தமை புலனாகின்றது.
"புத்திரிகைகளின் போக்கும் காலத்திற்குத் தக்க கோலமாக மாறி வரவேண்டுமென்பது பலருடைய கொள்கையாகும். அக்கொள்கை சமய விஷயமொன்றில் மாத்திரமொழிய, ஏனைய விஷயங்களிற் காலத்திற்கேற்ற விதமாக நன்மைக்கான மாறுதலை அடைதலும் சாலுமென்பது எமது அபிப்பிராயம்” எனப் பத்திரிகை பற்றிக் கூறுவதிலும் இதனைக் காணலாம்."
1952ஆம் ஆண்டுத் தேர்தலிற் போட்டியிட்ட கட்சிகளுள் பொதுவுடைமைக் கட்சியை அவர் கடுமையாக விமர்சித்தார். இதற்குக் காரணம் அவர்கள் சமயத்தை-கடவுளை ஏற்காதமையே ஆகும். நேருவும் ராஜாஜியும் பொதுவுடைமைக் கட்சியை எதிர்ப்பதை எடுத்துக்காட்டி, இக்கட்சியை ஆதரிப்பது ஈழநாட்டின் பண்பாட்டுக்கும், பழம் பெருமைக்கும் பொருந்தாத ஒன்று என எழுதினார். மேலும் குலத்தைக் கெடுக்கும் கோடரிக்காம்புகள் என்னும் தலைப்பிலே, “மதம் ஒரு விதத்திலும் இருக்கக் கூடாது என்று இடது சாரிகள் கூறிநிற்க சிங்களமே ஆட்சிமொழியாக இருக்க வேண்டும் என்று திரு.பண்டாரநாயக்கா கட்சி மார்புதட்டி ஆர்ப்பரிக்கின்றது. மதமும் சிதைந்து மொழியும் இழந்து நிற்கும் நிலையைப் பாரெங்கும் வீரத்தமிழன் என்று பேரெடுத்த ஈழத்தமிழனா விரும்புவான்? அங்ங்ணம் ஒரு சிலர் எண்ணுவா ரேயானால் அன்னார் சுயநல விருப்பத்தில் பரநலம் மறந்த மகா துரோகிகளாகும் குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக் கம்புகளே” என அக்காலத்திலேயே குறிப்பிட்டார். இவ்விரு கட்சிகளையும் ஆதரித்தோர் பற்றிப் பிற்காலத்திலே தமிழர்கள் கொண்ட நிலைப்பாடு சம்பந்தரின் தீர்க்கதரிசனத்தை எடுத்துக் காட்டுகிறது.
இவரது அரசியல் பிரக்ஞையையும், தமிழ்ப் பற்றையும் அகில இலங்கைச் சைவ மகாநாட்டில் இடம்பெற்ற இன்னொரு சம்பவமும் தெளிவுபடுத்துகின்றது. 1946ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சைவ மகாநாட்டில் பல்வேறு பிரேரணைகள் கொண்டு வரப்பட்டன. இவை அனைத்தும் சமயத்துடன் தொடர்புடையன. ஆனால் இரண்டாம் பிரேரணை நமது நாட்டில் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளும்
18 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

உத்தியோகபூர்வ மொழிகளாய் வரவேண்டும்' என்பதாகும். இதனைப் பிரேரித்தவர் சம்பந்தரே. இதற்குச் சில தினங்களுக்கு முன்னர்தான் ஜே.ஆர். ஜெயவர்த்தனா சிங்களத்தை மட்டும் அரச மொழியாக்கி, தமிழரையும் சிங்கள மயமாக்க வேண்டும் என்று பிரதமரான டி.எஸ். சேனநாயக் காவைக் கேட்டிருந்தமை இப் பிரேரணையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.
பத்திரிகாசிரியராக இருந்த வேளையில் சம்பந்தர் இளம் எழுத்தாளரை ஆர்வத்துடன் ஊக்குவித்தார். நாவேந்தன் என்னும் கவிஞர் பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் இந்துசாதனம் விசேட மலருக்கு தனது கவிதையை அனுப்பினார். அதனைப் பிரசுரித்த தோடல்லாமல், அவர் கவிதையைப் பாராட்டித் தொடர்ந்தும் எழுதுமாறு தூண்டினார். இருவரும் பொது மேடை ஒன்றிற் சந்தித்த போது சம்பந்தர் நாவேந்தனின் கவிதையைப் பலவாறு புகழ்ந்து பேசினார். இது அவரது சிறந்த குணவியல்பை எடுத்துக் காட்டுகின்றது. இதேவேளை இந்துசாதனத்தில் சிறுவர் பகுதியும் இன்றியமையாதது எனக் கருதிப் பாலர்பகுதியை ஆரம்பித்த போது தமது மாணவர் ஒருவரையே அதற்குப் பொறுப்பாக நியமித்தார். அவர் ‘சுப்புமாமா' என்னும் புனைபெயரிலே தமது ஆக்கங்களை வெளியிட்டுவந்தார்.
திருஞான சம்பந்தர் இந்து சாதனம் பத்திரிகையிலே நாற்பது ஆண்டுகள் பணியாற்றினார். வெள்ளிவிழா, பொன்விழா, வச்சிரவிழா என்னும் மூன்று விழாக்களின் போதும் அவர் பத்திரிகையில் இருந்துள்ளார். பொன்விழா, வச்சிரவிழா ஆகிய இரு விழா மலர்களையும் அவர் சிறப்பாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். "முப்பத்திரண்டாண்டுகள் இப்பத்திரிகையின் எழிலையும் வளத் தையும் எழுப்பிய பண்டிதர் அக்காலத்துக்கு முன் எட்டா ண்டுகள் ஆசிரியர் த.கைலாசபிள்ளை அவர்களுக்குத் துணைபுரிந்து வந்த பணியையும் சேர்த்து நோக்கும்பொழுது ஒப்பற்ற சாதனை ஒன்றை அன்னார் நிலைநாட்டினார் என்பது இந்து சாதனத்தின் வரலாற்றில் மிக முக்கியமானதாகும்” என்பார் நம. சிவப்பிரகாசம்."
ம.பா. மகாலிங்கசிவம் 19

Page 16
(4)
புனைகதையாசிரியர்
திருஞானசம்பந்தப் பிள்ளை இந்து சாதனம் பத்திரிகையில் எழுதிய தொடர் கதைகளுள் மூன்று, நாவல்களாக நூலுருப் பெற்றன. அந்நாவல்களில் காசிநாதன் - நேசமலர்’ 1924 இல் வெளியிடப் பட்டது. கோபால - நேசரத்தினம், துரைத்தினம்- நேசமணி என்பன 1927 இல் வெளியிடப்பட்டன. எனினும் எழுபதுகள் வரை சம்பந்தப்பிள்ளை நாவலாசிரி யராகக் கொள்ளப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது. 1964 இல் வெளிவந்த ‘ஈழத்து இலக்கி வளர்ச்சியில் கனக செந்திநாதன்,
“பொது சனங்கள் இரசிக்கக் கூடியதாக, யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் பழமொழிகள் மிகுதியாகக் கொண்டதாய் உலகம் பலவிதம் என்கிற தலைப்பில் துரைரத்தினம் நேசமணி, கோபால நேசரத்தினம் முதலிய கதை நூல்களை நமக்குத் தந்துள்ள ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளைதாம் தற்கா லத்தில் எழுத்தாளர் என்னும் சொல் யார் யாரைக் குறிக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகக் காட்சியளிக்கின்றார். அவர் எழுதிய கதைகள் இளமை குன்றாத கவர்ச்சியுடன் இன்னும் இரசிக்கக் கூடியவனாக விள்ங்குகின்றன” எனக் கூறுகின்றார்.
கனகசெந்திநாதன் இந்நூல்களை நாவல்களாகக் கொள்ளாமற் கதை நூல்கள் என்றே கொடுமைள்ளமை புலனாகின்றது. இவர் இவற்றை நாவல்களாகக் கொள்ளாமைக்குப் 'பழமொழிகள் மிகுதியாகக் கொண்டதாய்' உள்ளமையும் ஒரு காரணமாகலாம். அவர் தற்கால எழுத்தாளர்களுக்கெல்லாம் முன்னோடி எனச் சம்பந்தப் பிள்ளையைக் குறிப்பிடுவதால் இக்கதைகளை நாவல்கள் எழுதுவதற்கான அல்லது பிற்கால நாவல்களுக்கான முன்னோடி முயற்சி என்றே கருதினார் எனக் கொள்ளவேண்டியுள்ளது.
1973இல் வெளியிடப்பட்ட 'ஈழத்தில் தமிழ்நாவல் இலக்கியம் - சில குறிப்புக்கள்’ என்னும் ஆ.சிவநேசச்செல்வனின் நூலிலேயே
20 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

முதன்முதலாகச் சம்பந்தர் நாவலாசிரியராகக் கொள்ளப்படுகின்றார். இதன்பின் வெளிவந்த கலாநிதி நா.சுப்பிரமணியனின் 'ஈழத்து நாவல் உலகிலே திருஞானசம்பந்தப் பிள்ளை எவ்வெவ்வகையில் சிறப்பிடம் பெறுகின்றார் என்பது ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. இந்நூலின் பின் வெளிவந்த தமிழ் நாவல் - நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்' என்னும் நூலிலும் சம்பந்தர் தமக்குரிய கணிப்பினைப் பெற்றுள்ளார்.
“திருஞான சம்பந்தப்பிள்ளையின் இந்த நாவல் முயற்சி (கோபால நேசரத்தினம்) ஈழத்துப் பின்னணியில் ஒரு முக்கி யமான திருப்பம் என்று சொல்ல வேண்டும். இந்த நாவலையும் இதைத் தொடர்ந்து எழுதிய துரைரத்தினம் நேசமணி என்ற நாவலையும் அன்றைய யாழ்ப்பாணச் சமுதாயத்திற் கண்ட மதமாற்றம், சீதனக் கொடுமை, சாதிப்பிரச்சினை முதலியவற்றைப் பொருளாகக் கொண்டு நடப்பியல் ரீதியில் யாழ்ப்பாண மக்களின் பேச்சுத் தமிழை உபயோகித்து திருஞானசம்பந்தப்பிள்ளை எழுதினார்” என அவரின் முக்கியத்துவம் இங்கு எடுத்துக் காட்டப்படுகிறது.
சம்பந்தப்பிள்ளையின் நாவல்களில் முதலில் வெளிவந்தது
காசிநாதன் நேசமலர் ஆகும். இது,
“கண்டி மீ.எஸ்.செல்வநாயகம் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி
வெளியிட்ட நேசமலர் என்னும் கதையை ஆதாரமாகக்
கொண்டு தமிழில் எழுதப்பெற்றது” எனச் சம்பந்தர் கூறுகின்றார். இந்துசாதனத்தில் வெளிவந்த தொடர்கதை நூலுருப் பெறும்பொழுது ஆறாம், ஏழாம் அத்தியா யங்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. மானிப்பாயைச் சேர்ந்த நேசமலரின் கணவன் காசிநாதன். அவன் கண்டியிற் கிறிஸ்தவ மதபோதகர் நல்லதம்பியின் மகள் எதெல் ஜோதிமதியிடம் காதல் கொண்டு தன் மனைவியைப் புறக்கணித்துவிட்டு அவளுடன் வாழ்கின்றான். நேசமலர் கணவனைத் தேடிச் சென்றபோது அவன் தனக்கும் அவளுக்கும் உறவில்லை எனக் கூறுகின்றான். இறுதியிற் கதிர்காமக் கந்தனருளால் நேசமலர் அவனை அடைவதே இந்நாவலின் கதை ஆகும்.
'கோபால - நேசரத்தினம்’ நாவல் 1926 - 1927 இலே தொடராக
இந்துசாதனத்தில் வெளிவந்து 1927 இல் நூலுருப் பெற்றதாகும். இதன் இரண்டாம் பதிப்பு 1948 இல் வெளிவந்தது. இந்நாவல்
ம.பா. மகாலிங்கசிவம் 21

Page 17
கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஒரு பாதிரியாருக்கும் அவரது உதவியாளரான போதகருக்கும் ஏற்பட்ட தோல்வியைக் கதைப் பொருளாகக் கொண்டது. சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட வள்ளியம்மை கணவனை இழந்தவள். தன் ஒரே மகன் கோபாலனுக்கு ஆங்கிலக்கல்வி போதிக்க வேண்டுமென்று விரும்பினாள். இலவசக் கல்வி கிடைக்கும் என்பதற்காக ஒரு கிறிஸ்தவப் பள்ளியிற் சேர்க்கிறாள். கோபாலன் கெட்டிக்காரப் பையனாக இருப்பதால் பள்ளியாசிரியர் குட்டித்தம்பிப் போதகர் தனது மகள் நேசரத்தினத்துடன் பழக அவனுக்குச் சந்தர்ப்பம் கொடுத்தார். மகளைக் கோபலனுக்கே மணம் முடிக்க விரும்புகின்றார். அவனை நாளடைவில் கிறிஸ்தவ சமயத்தில் சேர்த்துவிடலாம் என்றும் நம்புகின்றார். சைவத்தில் உறுதி கொண்ட கோபாலன் மதம் மாறவில்லை. ஆனால் காதலில் உறுதி கொண்ட நேசரத்தினம் திருமணத்திற்காக சைவத்திற்கு மதம் மாறுகின்றாள். அவளது தந்தை தமது கடமை தவறியதால் பாதிரியாரால் போதகர் தொழிலுக்கு அருகதையற்றவர் எனப் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். இறுதியிற் போதகரும் சைவராக மாறுகின்றார்.
சீதனத்தால் வரக்கூடிய பிணக்கு, மதுபானத்தால் வருங்கேடு, தீயவர் சகவாசத்தால் நேரும் துன்பம், பரத்தையரைச் சேர்தலால் வரும் பழி முதலியன 'துரைரத்தினம் நேசமணி’ நாவலில் உதாரணமுகத்தால் விளக்கப்பட்டுள்ளன. மத்தியதர வர்க்கத்தி னனான துரைத்தினம் திருமணப் பேச்சின்போது கூறியபடி தம் மாமனார் சீதனம் தரவில்லையென்ற காரணத்தை முன்வைத்து மனைவி நேசமணியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்புகிறான். கணவனைப் பிரிந்திருத்தல் அழகன்று என உணர்ந்த நேசமணி கணவன் வீட்டுக்குத் திரும்பி வருகிறாள். அவள் வந்து சேருமுன் துரைரத்தினம் தான் தொழில் செய்யும் நகருக்குப் போய்விடுகிறான். அங்கு தீயவர் சகவாசத்தால் மதுப்பழக்கமும் பிறபெண் தொடர்பும் ஏற்படுத்திக் கொள்கிறான். முடிவில் மனைவியின் நற்பண்புகள் கணவனைத் தவறான பாதையிலிருந்து மீட்கின்றன.
துரைரத்தினம் இயல்பாகவே நல்லவன் எனினும் சந்தர்ப்பங்களே அவனைத் தவறச் செய்தன என்று காட்ட விரும்பிய ஆசிரியர் மனைவி திரும்பி வருவதற்குள் அவன் தொழில் செய்யும் நகரத்துக்குப் போய்விடுவதாகக் கதையைச் செலுத்துந் திறன் குறிப்பிடத்தக்கதாகும். "இதுகாறும் வெளிவந்நவற்றுள் இதுவே சிறந்த
22 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

கதையாம்” என ஆசிரியரால் கூறப்படுகின்றது. இந்நாவல் கிடைக் காமையால் முதலிரண்டு நாவல்களிலிருந்தும் இது எவ்வாறு சிறப்படைகின்றது என்பதையோ, சம்பந்தர் நாவலாசிரியராகப்
படிப்படியாக எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்துள்ளார் என்பதையோ அறிய முடியவில்லை.
சம்பந்தர் எழுதிய சிறுகதைகளாக இன்று எமக்குக் கிடைப்பவை இந்து சாதனம் பொன்விழா மலரில் வெளிவந்த 'ஓம் நான் சொல்லுகிறேன்', வச்சிரவிழா மலரில் வெளிவந்த 'சாந்தநாயகி ஆகிய இரு கதைகளுமேயாம். இவற்றுள் 'ஓம் நான் சொல்லுகிறேன் என்னும் கதையில் ‘முத் தன்’ எவ்வாறு ‘முத்துக் குமாரசுவாமிப்பிள்ளை’ ஆனான் என்பது கூறப்படுகிறது. செல்வக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதிலேயே தந்தையை இழந்த முத்தனும் அவன் தாயும் ஏழ்மையில் வாடுகின்றனர். உறவினர்கள் பலர் வசதி படைத்தவர்களாக இருந்தும் அவர்களுக்கு உதவவில்லை. முத்தன் கடையொன்றில் வேலைக்குச் சேர்ந்து நேர்மையான உழைப்பால் முன்னுக்கு வருகிறான். கடைமுதலாளியின் மகளையே திருமணம் செய்கிறான். இதுவரை திரும்பிப் பாராதவர்கள் முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையுடன் உறவாட வருகின்றனர். ஒவ்வொருவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தும்போதும் “ஓம் நான் சொல்லுகிறேன்” எனப் பதில் சொல்கிறான். இதன் அர்த்தம் யாருக்கும் விளங்க வில்லை. இறுதியில் “அவர்கள் எனது பணத்துக்குத்தானே மதிப்புச் செய்தனர். ஒவ்வொரு நாளும் என்னை மதித்தவர்களின் பெயர்களைப் பணப்பெட்டிக்குப் போய்ச் சொல்வேன், அதுதான் ஓம் நான் சொல்லு கிறேன் என்பதன் அர்த்தம்” என முத்தன் விளக்கமளிக்கிறான்.
'சாந்த நாயகியில் சிறுவயதில் இருந்தே சாந்தநாயகியை அவன் முறை மைத்துனனுக்கே திருமணம் செய்வதெனப் பெற்றோர் தீர்மானிக்கின்றனர். ஆனால் குடும்பத்துள் ஏற்படும் பிணக்குக் காரணமாக மைத்துனனுக்கு வேறு இடத்திலே திருமணம் பேசப்படுகிறது. இறுதியில் வயிரவசுவாமி அருளால் இருவருக்கும் திருமணம் நிகழ்ந்ததாக ஆசிரியர் காட்டுகின்றார்.
சம்பந்தர் நாவல் உலகிற்கு வந்த காலப்பகுதியில் எழுந்த நவீன இலக்கியங்களும்கூட அறப் போதனைக்காகவே எழுதப்பட்டன. இலக்கியங்களினூடாகச் சமய உணர்வையும் அறநெறிகளையும் போதித்து மக்களை நன்னெறிக்கு உயர்த்தலே இக்கால இலக்கிய
ம.பா. மகாலிங்கசிவம் 23

Page 18
கர்த்தாக்களின் நோக்கமாக இருந்தது. இலக்கியத்தைக் கலைவடிவாகக் காண்பதிலும் பார்க்க அதனை ஒரு பிரசார சாதனமாகவும் அறப்போதனைக்குரிய வாயிலாகவுமே இவர்கள் கண்டனர். இத்தகைய போதனை நோக்கு இக்கால இலக்கியங்கள் யாவற்றிலுமே காணப்படும் ஒரு தனித்தன்மையாகும். சம்பந்தப்பிள்ளை, நாவல் என்னும் இலக்கிய வடிவத்தை எவ்வாறு கண்டார் என்பதற்குத் துரைத்தினம் நேசமணி’ நாவல் பற்றிய அவர் கருத்துச் சான்றாகும்.
“இதன் கண் சீதனத்தால் வரக்கூடிய பிணக்கு, மதுபானத்தால் வருங்கேடு, தீயவர் சகவாசத்தால் நேரும் அநர்த்தம், பரத்தை யரைச் சேர்தலால் வரும் பழி முதலியன உதாரண முகத்தான் விளக்கப்பட்டுள்ளன” என்பது அவர் கூற்றாகும். இதன் மூலம் நாவல் என்னும் இலக்கிய வடிவத்தை அறக்கருத்துக்களை உதாரணக் கதைகளாக விளக்கும் ஒன்றாகவே அவர் கருதினார் என்பது புலனாகின்றது.
இவர்கள் பழைய கதை சொல்லும் பாணியிலே புராண மரபினை மனங்கொண்டே நாவல்களை உருவாக்கினர். குறிப்பாக விஜயசீலம், காந்தமலர் ஆகிய நாவல்களிலே இப்பண்பு காணப் படுகின்றது. சி.வை. தாமோதரம்பிள்ளை காந்தமலர் பதிப்புரையில் புராண காப்பியங்களோடு இணைத்து நாவலை இனங்காண முனைந்து ள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
"செந்தமிழ்ப் பயிற்சி குன்றி ஆங்கிலக் கல்வியே அதிகரித்து வரும் இக்காலத்தில் நமது தமிழ் மக்கள் பத்திய ரூபமாகவுள்ள புராணேதிகாசங்களையும் மற்றும் நீதி நூல்களையும் இலகுவிற் பயின்று அவைகளிற் சொல்லப்பட்ட நீதிகளையும் பிறவற்றையும் அறிந்து நல்வழியடைய முடியாதவர்களாக இருக்கிறார்கள். இக்காரணம் பற்றியே இராமாயணம், பாரதம் முதலிய இதிகாசங்களும் கந்த புராணம், பெரிய புராணம் முதலிய புராணங்களும் அறிஞரால் வசன நடையில் எழுதி வெளியிடப் படலாயின. மேலைத் தேசக் கொள்கையைப் பின்பற்றிப் பல நவீன கதைகள் தமிழ்ப் பாசையில் எழுதப்படுவதும் இக்காரணம் பற்றியேயாம்” எனக் கூறுகையில் சம்பந்தரும் இராமாயணம், பாரதம் என்பவற் றையும் நாவல்களையும் ஒரே தட்டிலேயே வைத்து நோக்குவது தெரிகிறது.
24 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

"ஆண்பாலார் பெண்பாலா ரெவருங் கூசாது படிக்கவும் கேட்கவுந் தக்கதாய்க் காமசிருங்கார வருணனை, அசாத்திய மான நிகழ்ச்சிகள் வரலாறென்னு மிவைகளின்றிச் சிறந்த முறையில் எழுதப் பெற்றதாகும்” என கோபால நேசரத்தினம் பற்றிச் சம்பந்தரும்,
“சிறிதும் காமசிருங்கார வருணனைகள் இன்மையினாலே கற்கும் மாணாக்கர்கட்கு உள்ளத்தில் ஒரு சிறிதேனும் சிற்றின்ப ஞாபகம் உதிக்கச் செய்யாதென்றும் விசேசமாக எடுத்துக் கொள்ளப்பட்டமையின் வித்தியாசாலை வித்தியார்த்திகட்கு இன்றியமையாதது” என (திருவாதவூரடிகள்) புராணம் பற்றி ம.க.வேற்பிள்ளையும் கூறுகை யில் நாவல், புராணம் பற்றிய இவ்விரு நோக்குகளும் ஏதோ ஒரு வகையில் ஒன்றாக இருப்பதை அவதானிக்கலாம்.
இக்கால நாவல்களிலே காவியங்களில் உள்ளதைப் போல் வாழ்த்து, வணக்கம், அவையடக்கம் என்பன கூறப்படுவதும், நாயக நாகியரின் பிறப்பு, வளர்ப்பு என்பன ஆரம்பத்திலிருந்து படிப்படியாகக் கூறப்படுவதும் பொதுப் பண்புகளாக உள்ளன. தமது காலத்தின் பொதுப் பண்பிலிருந்து சம்பந்தரும் விடுபடவில்லை. அவரது ‘சாந்தநாயகி சிறுகதை காப்புச்செய்யுளுடன் தொடங்குகின்றது. 'ஓம் நான் சொல்லுகிறேன்"இல் முத்தனுடைய பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், இறுதியில் அவன் எய்திய சிறப்பு என்பவற்றைக் கூறுவதாகப் பன்னிரண்டு பக்கங்களுக்குக் கதை நீண்டு செல்கிறது. சம்பந்தரிடம் சுவாரஸ்யமாகக் கதை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதே தவிர சிறுகதை வடிவம் அவராலே கவனிக்கப்படவில்லை. இது வெறும் விவரணக் கதையாகவே அமைகிறது. இக்காலத்தினர் சிறுகதை என்ற வடிவம் பற்றியோ அன்றேல் அதன் உள்ளார்ந்த தன்மைகள் பற்றியோ முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. முத்தனுக்கூடாகச் சொல்லப்பட வேண்டிய இக்கதை முழுவதும் ஆசிரியர் கூற்றாக அமைந்திருப்பதால் உணர்வுபூர்வமாக அமையவில்லை. பாரம் பரியமாக இருந்துவரும் கதை சொல்லும் மரபையே சம்பந்தர் பின்பற்றுகிறார். கதையின் முடிவுப் பகுதியில் உபகதை ஒன்றும் பழைய மரபுக்குள்ளிருந்து வருகின்றது. இதுபோலவே துரைரத்தினம் நேசமணி நாவலிலும் இடையிற் 'பழையனூர்நீலிகதை' நேசமணி வாயிலாகக் கூறப்படுகின்றது.
“கதைக்குட் கதைகூறும் இம்மரபு பஞ்ச தந்திரம் இதோப
ம.பா. மகாலிங்கசிவம் 25

Page 19
தேசம் முதலிய கதை மரபுகளின் தாக்கத்தால் அமைந்த
தாகும்” என்பார் கலாநிதி நா.சுப்பிரமணியன். தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்திலும் இப்பண்பு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பந்தரின் நாவல்களிலும் சிறுகதைகளிலும் காணப்படும் ஒரு முக்கியமான அம்சம் பழமொழிகள், நீதிநூற் கருத்துக்கள் அதிகமாகப் பயின்று வருவதாகும்.
“கணவன் மனைவியென்ற விஷயத்தில் மாத்திரம் அது பொருந்தாது. ஏனென்றால் எங்கள் பெரியோர் கொள்கைப்படி ஒரு பெண் ணுக்குக் கண் கண்ட தெய்வம் அவள் கணவனேயாம், ‘தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழையென்றும், 'கற்புடைய மாதர்கட்குத் தரணிவேந்தே கணவனல்லால் வேறோர் தெயப் வங் கருதவுண் டோ’ என்றுஞ சொல்லியிருக்கிறார்கள். மேலும், ‘கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை', 'கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்ற முதியோர் வாக்கின்படி கணவனுடைய சொல்லை மீறாது குறிப்பறிந்து நடப்பதே ஒரு பெண்ணுக்குக் கற்பாகும்." எனும் பகுதியில் ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பழமொழிகள், நீதி நூற் கருத்துக்கள் இடம் பெறுவது நோக்கத்தக்கதாகும். இது ஆசிரியருடைய போதனை மலப்பான்மையையே எடுத்துக்காட்டுகின்றது. மேலும் முன்னோர் மொழியைப் பொன்னேபோற் போற்ற வேண்டுமென்ற கோட்பாடும் இதற்குக் காரணமாக இருந்ததென்பதை,
“முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவம் என்ற பிரகாரம் இன்றியமையாத சில இடங்களிலே நாவலப் பெரியாருடைய அரிய வசனங்களை எடுத்தாண்டுள்ளேன்" என நாவலர் மொழியை எடுத்தாண்டமைக்கான காரணத்தைக் கூறு வதனூடாக அறியலாம்.
“கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகள் வரை
சைவம் கிறிஸ்தவம் ஆகிய இரு சமயங்களின் அடியாகத்
26 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

தோன்றிய சமுதாய சீர்திருத்த நோக்கமே ஈழத்து
இலக்கியங்களை நெறிப்படுத்தும் பிரதான உந்து சக்தியாக
அமைந்தது” என்பார் கலாநிதி நா.சுப்பிரமணியன். இவ்வகையில் 1914ஆம் ஆண்டில் வெளிவந்த மங்களநாயகம் தம்பையாவின் நொறுங் குண்ட இதயம் என்ற நாவல் குறிப்பிடத்தக்கதாகும். கிறிஸ்தவரான மங்கள நாயகம் தம்பையா, தமது சமயக் கருத்துக்களைக் கூறுவதற்கு ஏற்ற வகையில் நாவலின் கதையை அமைத்துள்ளார். இந்நாவல் கண்மணி, பொன்மணி என்ற இரு பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கதையாகும். ஒழுக்கங் கெட்ட ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்ட கண்மணி, பல துன்பங்களை அனுபவிக்கிறாள். ஒரு பாதிரியாரின் பிரசங்கத்தைக் கேட்டபின் கிறிஸ்தவ மதத்திலே ஈடுபாடு கொள்கிறாள். அந்த அமைதியிலேயே கண்மணி மரணமடைகிறாள். நாவலின் பிற்பகுதியிற் கிறிஸ்தவமதப் பிரசாரமும் கொள்கை விளக்கமுமே மேலோங்கி நிற்கின்றன.
சம்பந்தரும் நாவல், சிறுகதை என்னும் நவீன இலக்கிய
வடிவங்களைப் பயன்படுத்திய போதும், அவரின் பணிகளின் அடித்தளமாகச் சமயமே அமைந்திருந்தது.
“சைவசமயச் சிறுமியரை அந்நிய மதத்தினர் வைத்து நடத்தும்
வித்தியாசாலைகளிற் கல்வி பயில விடவொண்ணா வென்பதை
இந்நூல் எடுத்துக் காட்டும் இயல்பினது” எனக் கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளுக்கெதிராக சுயமத நிலைபேற்றின் பொருட்டே கோபால நேசரத்தினம் எழுதப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். இந்நாவல் முழுவதும் கிறிஸ்தவ சமயப் பிரசார முயற்சிக்கு எதிரான வகையிலேயே அமைந்துள்ளது. ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணச் சமயநிலை பற்றிக் கூறிய கருத்துக்களை மனதிற் கொண்டு இக்கதையைச் சம்பந்தர் அமைத்துக் கொண்டார் போலுள்ளது.
“பாதிரிமார்கள் பள்ளிக்கூடங்களைத் தாபித்து இக்காலத்திலே சீவனத்துக்குப் பெரும்பாலும் வேண்டும் பாஷையாகிய இங்கிலீசைப் படிப்பிப்பாராயினார்கள். பாதிரிமார்களுடைய பள்ளிக்கூட்டத்தில் இளமைப்பருவத்திற் கற்கப்புகுந்தவர்கள் அநேகர் சைவசமயத் தன்மையை அறியாமையினாலே கிறிஸ்து மதத்திற் பிரவேசித்து விட்டார்கள்.
ம.பா. மகாலிங்கசிவம் 27

Page 20
இத்தேசத்தில் உள்ள வறியவர்கள் அநேகர் சைவசமயமே மெய்ச்சமயமென்பது அறிந்தும் வஸ்திரம் முதலியவற்றைப் பெற்றுப் படிக்கும் பொருட்டும் . கிறிஸ்து சமயப் பெண்களுள்ளே சீதனமுடையவர்களையும் அழகுடையவர்களையும் விவாகம் செய்யும் பொருட்டும் கிறிஸ்து சமயத்திலே பிரவேசிப்பாராயினார்கள் . இவர்கள் . கிறிஸ்தவர்கள் போல நடிக்கின்றார்கள். ஆயினும் விபூதிதாரணம் அனுட்டானம் செய்துகொண்டும் வருகின்றார்கள்”*
இவ்வாறு நாவலர் கூறிய கருத்துக்களே ஏறத்தாழ அரை நூற்றாண்டின் பின்னர் சம்பந்தரின் நாவலிற் கதைப்பொருளாகப் பரிணமிக்கின்றமையைக் காணலாம். கோபாலனை மதம் மாற்ற முயன்ற குட்டித்தம்பிப் போதகர், பிரசங்கி உத்தியோகத்தின் பொருட்டு மதம் மாறியவர். இவர் தம்மகள் நேசரத்தினத்தைக் கோபாலனுடன் பழக விடுவது, அழகுள்ள பெண்ணை மணம்புரியும் ஆவலைத் தூண்டி மதமாற்றம் செய்விக்கும் நோக்கிலேயாகும். கோபாலனை மதம் மாறவிடாது நேசரத்தினத்தை மதம்மாறச் செய்தமை ஆசிரியரது மதப் பற்றினை எடுத்துக் காட்டுகின்றது.
ஏறத்தாழ இதே காலப்பகுதியில் எழுந்த ஜயதிஸ்ஸ ரோசலின்ட் அல்லது இன்பத் திருமணம் என்ற சிங்கள நாவலும் கோபால நேசரத்தினமும் சமய நோக்கு புலப்படுத்தப்படுவதிலே ஒத்துள்ளன. இங்கு கிறிஸ்தவப் பெண்ணான ரோசலின்ட் தனது காதலனான ஜெயதிஸ் ஸவைத் திருமணம் செய்வதற்காகப் பெளத்த சமயத்துக்கு மாறுகிறாள். இவ்வகையில் நேசரத்தினமும் ரோசலி ன்ட்டும் ஒரே தன்மையில் சித்திரிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். நேசரத்தினத்தை விவாகம் செய்ய விரும்பும் சொலமன் என்ற தீய பண்புள்ள பாத்திரம்போல வின்சன் பெரேரோ ரோசலின்ட்டை மணம் புரிய விரும்பித் தோல்வி அடைபவனாகக் காட்டப்படுகின்றான்.
காசிநாதன் நேசமலர் நாவலில் நேசமலர் கதிர்காமக் கந்தன் அருளாலே கணவனை அடைவதாகக் கூறப்படுகிறது.
“கிறிஸ்தவ சமயப் பிரசார முயற்சிகள் சைவக் குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்த்தும் வகையில் எழுதப்பட்ட இக்கதையில் ஆசிரியரின் முருக பக்தியே மிஞ்சி நிற்கிறது”* என்பார் கலாநிதி நா.சுப்பிரமணியன். இதுபோலவே சாந்தநாயகி
28 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

என்னும் சிறுகதையிலும் சாந்தநாயகி வைரவக் கடவுள் அருளாளே காதலனை அடைவதாகக் கதை அமைந்து இறைபக்தி முக்கியத்து வப்படுத்தப்படுகிறது.
சம்பந்தரிடம் அக்காலத்தில் பொதுவிற் காணப்பட்ட சில குறைகாடுகள் காணப்பட்டாலும் பல வழிகளில் அவர் ஈழத்து நாவல் உலகில் முக்கியத்துவம் மிக்கவராகின்றார். ஆரம்ப கால ஈழத்துச் சிறுகதைகளும், நாவல்களும் ஈழத்துச் சமூக அமைப்பினையோ, மக்களது வாழ்க்கைப் பிரச்சினைகளையோ சித்திரித்தனவல்ல. ஆரம்பகால நாவல்களான அசன்பே கதையோ மோகனாங்கியோ ஈழத்தினைக் களமாகக் கொண்டனவல்ல. மாறாக வரலாற்று நிகழ்ச்சிகளையும் உபதேசங்களையுமே இவை பொருளாகக் கொண்டன. இந்நாவல்களில் இடம்பெற்ற பாத்திரங்கள் மீவியல்பு கொண்டனவாகவே படைக்கப்பட்டன. மொழிநடையும் இயல்பானதாக அமையவில்லை. ஆசிரியர் கூற்றுக்களில் மட்டுமன்றி பாத்திர உரையாடல்களும் செந்தமிழ் நடையிலேயே அமைந்தன. இவற்றி லிருந்து விடுபட்டு 1918 ஆம் ஆண்டில் எஸ். தம்பிமுத்துப் பிள்ளையினால் எழுதப்பட்ட சுந்தரன் செய்த தந்திரம் என்ற நாவலிலேயே பேச்சு மொழி ஓரளவிற்கேனும் பயன்படுத்தப்பட்டது. இவரின்பின் திருஞான சம்பந்தப்பிள்ளை தமது நாவல்களில் பேச்சு வழக்கினை பரவலான அடிப்படையில் பிரயோகிக்க முனைந்தார்.
“அக்கா, நீ ஆத்திரப்படாதே, ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம். நெருப்பென்று சொன்னவுடனே வாய் வெந்து போவதல்ல. பாதிரியார் தன் கடமையைச் செய்ய நினைத்து அப்படிச் சொல்லி யிருக்க வேண்டும். இப்பொழுது உன் மகன் கிறிஸ்தவனாய் விட்டானா? உங்களுக்குப் பிரியமானால் செய்யலாம். இல்லா விட்டால் விடலாம், ஆர் உங்களை நெருக்க முடியும்" “ஒரு தினம் அவள் ஒரு தோடம்பழத்தைக் கோபாலனுக்கு முன் கொண்டு வந்து ‘உபாத்தியாயர் எங்களிடம் தோடம்பழந் தின்னலாம்தானே' என்றாள்"
இப்பகுதிகளில் பரவலாகச் சாதாரண மக்களின் பேச்சுவழக்கு இடம்பெறுகின்றது. ஆர், தின்னலாம் எனும் சாதாரண மக்களின் பேச்சுவழக்குச் சொற்களும் "நெருப்பென்று சொன்னவுடன் வாய் வெந்து போவதல்ல எனும் சாதாரண மக்களிடையே வழங்கும் பழமொழியும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கனவாகும்.
ம.பா. மகாலிங்கசிவம் 29

Page 21
தமது காலச் சமூக நிலைமைகளையும் சமூகத்தில் நிலவிய கருத்தோட்டங்களையும் பிரதிபலிப்பனவாக சம்பந்தரின் புனை கதைகள் அமைந்திருந்தன.
“ஏனையோருடன் ஒப்பிடும் போது அதிகளவு சமூக நிலைமைகளைக் கருத்திற்கொண்டு நாவல் எழுதியவர்” என மெளனகுரு, சித்திரலேகா, எம்.ஏ. நுஃமான் ஆகியோர் தமது இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் நூலில் குறிப்பிடுகின்றனர். அன்றைய யாழ்ப்பாணத்துச் சமுதாயத்திற் காணப்பட்ட மதமாற்றம், சீதனக் கொடுமை, சாதிப்பிரச்சினை, பணத்தின் செல்வாக்கு முதலியவற்றைப் பொருளாகக் கொண்டு யதார்த்த ரீதியில் சம்பந்தர் எழுதினார்.
அவர் கையாண்ட பிரச்சினைகளுக்குள் அன்று பலரது கவனத்தையும் ஈர்த்தது விதவா விவாகம் ஆகும். கோபால நேசரத்தினத்தில், விதவை மறுமணம் என்ற சமூக சீர்திருத்தக் கருத்தைச் சீரணித்துக் கொள்ள முடியாத வள்ளியம்மை என்ற கோபாலனின் தாயை இளம் விதவையான நேசரத்தினத்தினை மருமகளாக ஏற்கவைக்கின்றார். இதன்மூலம் சம்பந்தர் ஒரு மெளனப் புரட்சியையே நிகழ்த்தி விடுகிறார், இப்புரட்சி தமிழ் நாட்டாராலும் வரவேற்கப்பட்டது என்பதைத் தமிழகச் சஞ்சிகையான ஆனந்த குணபோதினியில் வெளிவந்த கோபால நேசரத்தினம் பற்றிய விமர்சனம் எடுத்துக் காட்டுகின்றது.
“இவ்வளவிலும் ஒரு பெரிய விவாதத்துக்குரிய விசயம் எவராலும் பிரஸ்தாபிக்க முடியாமலே அது சர்வ சாதாரணமாய் எங்கும் நடைபெறுவது போல சாமான்யமாய் கதையின் நெடுகக் காட்டப்பட்டுள்ளது. அதாவது கதாநாயகி "கன்னியா விதந்து' என்கிற பாகம்தான். ஒரு விதவையான மங்கையை விவாகம் செய்யலாமா என்று எவரும் தடுக்கவே இல்லை. கதையின் இறுதி வரையும் அந்த விசயத்தையே எவரும் கவனிக்கக் காணோம். விதவா விவாகம் சாதாரணமான விவாகம் போல் சகஜமாக நடந்தேறிவரும் மாதிரியில் கதை மிகு உன்னதமாய் சமத்காரமாகக் கற்பிதம் செய்யப் பட்டுள்ளது. விதவா விவாகத்தை ஆதரிக்கும் முறை நன்கு அமைந்துள்ளது.* என விதவா விவாகத்தை ஒரு பெரிய விடயமாகக் கொள்ளாமல் மிகச் சாதாரணமாக நடத்திவைக்கும் ஆசிரியரின் திறன் பாராட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஏறத்தாழ இதே காலப் பகுதியிலேதான் விதவை மறுமணம் பற்றிய கருத்துக்கள் நவீன
30 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

தமிழிலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கியமையும் வ.ரா. பாரதி ஆகியோர் தத்தம் எழுத்துக்களில் இப்பிரச்சினையைக் கையாண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கனவாகும்.
துரைரத்தினம் நேசமணி நாவலில் முக்கியமாகச் சீதனப் பிரச்சினை பேசப்படுகின்றது. மத்தியதரவர்க்கத்தினனான துரைரத்தினம், மாமனார் சொன்னபடி சீதனம் தரவில்லை எனக்கூறி நேசமணியைப் பிறந்த வீட்டுக்கு அனுப்புவதனூடகச் சீதனத்தால் ஏற்படும் பிரச்சினைகள் கூறப்படுகின்றன. மேலும் மதுப் பழக்கம், பரத்தையர் தொடர்பு என்பவற்றால் சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
ஓம் நான் சொல்லுகிறேன்’ என்ற சிறுகதையில், ஐரோப்பியர் இலங்கையில் புகுத்திய புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பணம் முக்கியத்துவம் பெறும் சூழலில் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் காட்டப்படுகின்றன. முத்தன் வசதி படைத்த குடும் பத்துப் பிள்ளை. தந்தையின் வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் அவர் இறக்க, குடும்பம் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறது. இது முத்தனது சமூக மதிப்பினைக் குறைக்கின்றது. ஆனால் அவன் முயற்சியால் முன்னேறுகின்றான். முன்பு மதிக்காதவர்களும் இப்போது மதிக்கின்றனர். "சமூகம் தரும் மதிப்பு எனக்கு இல்லை, என்னுடைய பணத்துக்குத்தான்’ என இறுதியில் அவன் வெளிப்படையாகக் கூறுகின்றான்.
அவன் முதலாளியின் மகளைத் திருமணம் செய்தபோது "முத்தன் சீதனத்துக்காகச் சாதிவிட்டிறங்கி விட்டான்” என வறுமையில் வாடியபோது கவனிக்காத சமூகம் இப்போது விமர்ச்சிக்கிறது. இங்கு சாதிப் பிரச்சினையும் எடுத்தாளப்பட்டாலும் பணப் பிரச்சினையைக் கையாண்ட அளவுக்குச் சாதிப்பிரச்சினைக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படவில்லை. இவற்றிலிருந்து நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டிய கதைப் பொருள்களையும் மாந்தர்களையும் சம்பவங்களையும் உணர்ச்சி மோதல்களையும் கொண்டு கதையை வளர்த்துச் செல்வதில் சம்பந்தர் தமது கால இலக்கிய கர்த்தாக்களிடையே தனித்துவம் பெற்று விளங்குகின்றமை புலனாகின்றது.
ம.பா. மகாலிங்கசிவம் 31

Page 22
நாடகாசிரியர்
சிம்பந்தருக்கு இளமைக்காலம் முதலே நாடகத்துறையில் ஈடுபாடு இருந்து வந்தது. அக்காலத்தில் மட்டுவிலுக்கு அப்பால் உள்ள வண்ணாத்திப்பாலம் என்ற இடத்தில் அடிக்கடி நாடகங்கள் நடத்தப்பட்டன. அத்துடன் வண்ணார்பண்ணை புத்துவாட்டியார் வளவிலும் நாடகங்கள் நடிக்கப்பெற்றன. இவ்விரு இடங்களிலும் மேடையேற்றப்பட்ட நாடகங்களிற் பெரும்பாலும் எல்லாவற்றையுமே சம்பந்தர் சென்று பார்த்ததை அறிய முடிகின்றது. இதன் மூலம் தமது நாடகத்துறை ஆர்வத்தை அவர் வளர்த்துக் கொண்டார்.
பின்னர் அவர் இந்துக் கல்லூரியில் கற்பித்த காலத்தில் நாடகத்துறையிற் பணியாற்ற அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. 1912இல் சென்னை நாடகக் கழகம் யாழ்ப்பாணத்திற்கு வந்து பல நாடகங்களை மேடையேற்றியது. அவற்றுள் ஒன்று இந்துக் கல்லூரி நிதி உதவிக்காக அக் கல்லூரியில் மேடை யேற்றப்பட்டது. இது கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களிடையே நாடக ஆர்வத்தை ஊட்டியது. அப்போதிருந்த அதிபரான சிவராஜ், கல்லூரியில் நாடகக் கழகம் நிறுவுவதற்கு ஊக்கமளித்தார். 1920இல் ஒரு நாடகக் கழகம் உருவாக்கப்பட்டது. இக் கழகத்திற்கு சம்பந்தர், வி.பொன்னையா, வித்துவான் க.இராமலிங்கம், எம்.சபாரத்தினசிங்கி போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். சம்பந்தர் முதலியோரின் வழிகாட்டலில் இக்கழகம் பல நாடகங்களை மேடை ஏற்றியது. இலத்தின் மொழி நாடகங்களிலிருந்தும் சில அங்கங்கள் மொழி பெயர்க்கப்பட்டு மேடையேற்றப்பட்டன. இக்கழகம் 1936இல் சாவித்திரி சத்தியவானையும் 1937 இல் பக்தப்பிரகலாதனையும் மேடையேற்றியமையையும், இந்நாடக மேடையேற்றங்களிற் சம்பந்தர் பெரும்பாங்காற்றியமையையும் அறிய முடிகின்றது.
“1920 களை ஈழத்துத் தமிழ் நாடக அரங்க வரலாற்றில் நவீன நாடகக் குழுக்களின் எழுச்சிக்காலம் எனலாம்” என்பார் பா.அகிலன்,
32 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

லங்கா சுபோத விலாசசபை (1913 கொழும்பு), சுபசோபன விலாசசபை (1914 கண்டி), சுகிர்த விலாசசபை (1920 மட்டக்களப்பு), சத்திய விலாசசபை (1921 அநுராதபுரம்), வித்தியா வினோதசபை (1921 கொழும்பு) போன்ற நவீன நாடகக்குழுக்கள் யாவும் இந்த இருபதுகளை ஒட்டியே எழுந்தன.
இவ்வகையிற் சரஸ்வதி விலாசசபை 1914இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. துதிக்கை உயர்த்திய இரு யானைகளின் நடுவிற் சரஸ்வதி அடையாளம் பொறிக்கப்பட்ட சின்னத்தைச் சரஸ்வதி விலாசசபை கொண்டிருந்தது. முதலியார் செ.இராசநாயகம், உடுவில் மு.சபாரத்தினசிங்கி, இணுவில் சி.ஆறுமுகதாஸ் முதலியோருடன் சேர்ந்து சம்பந்தர் சரஸ்வதி விலாசசபையை ஆரம்பித்தார்.
கால் நூற்றாண்டுக்குமேற் பணியாற்றிய சரஸ்வதி விலாச சபையின் உறுப்பினர்களுள் பெரும்பாலானவர்கள் சைவபரிபாலன சபையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதனைவிடச் சைவ பரிபாலன சபையுடன் உறவுடைய நிறுவனங்களான யாழ் இந்துக் கல்லூரி, இந்துபோட் சார்ந்தவர்களாகவும் இருந்தனர். கனகசபை என்பவர் சைவபரிபாலன சபைத் தலைவராகவும், சரஸ்வதி விலாச சபைத் தலைவராகவும் சம காலத்திற் பதவி வகித்தார். சபாரத்தின சிங்கி, சம்பந்தர் ஆகியோர் இந்துசாதன ஆசிரியர்களாகவும், இந்துக் கல்லூரி ஆசிரியர்களாகவும் அத்துடன் சம்பந்தர் சைவபரிபாலனசபை உறுப்பினராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கனவாகும்.
சரஸ்வதி விலாசசபை நாடகங்களுக்கு இந்திய நாடகக் கலை ஞர்களும் பயிற்சியளித்தனர். இவ்வகையில் எம்.ஆர்.கோவிந்தசாமி, ரி.எஸ்.சண்முகதாஸ், பி.எஸ்.வேலு நாயக்கர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களின் நாடகங்கள் மாநகரசபை மண்டபத்திற்கு அருகேயிருந்த றிச்வே மண்டபத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப் பாணத்தில் கொழும்பைப் போல் மேல்மட்ட ஆதரவு அதிகம் கிடைக்காமையாற் சரஸ்வதி விலாசசபையால் நீண்டகாலம் பணியாற்ற முடியவில்லை.
இச்சபையில் நடிப்புத் திறனுடையவர்கள் மாத்திரமன்றி முறையான இலக்கியத் திறனும் நாடகப் படைப்பாற்றலும் வாய்ந்தவர்களும் இருந்தமையால், இவர்கள் மேடையேற்றிய நாடகங்கள் இவர்களாலேயே எழுதப்பட்டன. நாடகம் எழுதுவதற்கு
ம.பா. மகாலிங்கசிவம் 33

Page 23
எனக் குழுவொன்றை இவர்கள் வைத்திருந்தமையை இந்துசாதனம் பத்திரிகை வாயிலாக அறிய முடிகிறது. இக்குழுவில் சம்பந்தர், சின்னப்பிள்ளை, வி.இராமநாதன், எஸ். சபாபதி, கே.இராமலிங்கம், சபாரத்தினசிங்கி, வைத்திய கலாநிதி எஸ்.பொன்னையா முதலியோர்
அங்கம் வகித்தனர். இவர்களுடன் சம்பந்தரே இந்நாடகக் குழுவின் பிரதான நாடக எழுத்தாளராக விளங்கினார். சரஸ்வதி விலாச சபையினர் எழுதி நடித்த எட்டு நாடகங்களில் ஆறு நாடகங்களைச் சம்பந்தரே எழுதியுள்ளமை அவரது முக்கியத்துவத்தைத் தெளிவு படுத்துகின்றது.
அவர் எழுதிய நாடகங்களில் உருக்குமாங்கதன், சகுந்தலை, மார்க்கண்டேயர், அரிச்சந்திரன், சீதா கலியாணம், அயோத்தியா கண்டம், ஆரணிய காண்டம் ஆகிய நாடகங்களைப் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. சம்பந்தரின் நாடகங்களுள், எமக்குக் கிடைப்பனவற்றுள் காலத்தால் முற்பட்டது உருக்குமாங்கதன் ஆகும். இது சரஸ்வதி விலாசசபையாரால் இரண்டாவதாக நடிக்கப்பட்டதாகும். இது ஏகாதசிப் புராணத்துள் உள்ள உருக்கமாங்கதன் கதையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். இந்நாடகத்திற்குரிய பாடல்களை கே.சி.நாதன் எழுதினார். அத்துடன் தன்மாங்கதன் என்னும் பாத்திரத்தையும் ஏற்றுத் திறம்பட நடித்தார்.
சம்பந்தர் எழுதிய இரண்டாவது நாடகம் சகுந்தலை ஆகும். இது சரஸ்வதி விலாச சபையினால் மூன்றாவது நாடகமாக மேடையேற்றப்பட்டது.
“பழைய சகுந்தலை விலாசத்தை ஆதாரமாகக் கொண்டு நாமே இக்காலத்திற்கேற்ற முறையில் வசனமெழுத திரு.கே.சி.நாதன் அவர்களே ஏற்ற கவிகளைப் பாடிச் சேர்த்தனர். இது நீண்ட சரித்திரமாதலின் இரண்டு பாகமாகப் பிரித்து இரண்டு இரவு நடிக்கப்பெற்றது. இந்நாடகத்தைப் பார்த்த பன்னுாற்றுக் கணக்கான அபிமானிகள் அந்தநேரத்தில் சரஸ்வதி விலாச சபையைப் பாராட்டினர்” எனச் சம்பந்தர் இந்நாடகம் பற்றிக் கூறுகிறார்.
மார்க்கண்டேயர் நாடகம் கந்தபுராணத்தில் உள்ள மார்க் கண்டேயரின் கதையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகும்.
34 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

கே.சி.நாதனே இதற்கும் பாடல்களை எழுதினார். அத்துடன் மார்க்கண்டேயராகவும் பாத்திரமேற்றுச் சிறப்பாக நடித்தார்.
அரிச்சந்திரன் நாடகம் அரிச்சந்திர புராணத்தில் உள்ள சூழ்வினைக் காண்டம், நகர்நீங்கு காண்டம் என்னும் இரண்டையும் முதற்பாகமாகவும், ஏனையவற்றை இரண்டாம் பாகமாகவும் வகுத்துச் சம்பந்தரால் எழுதப்பட்டதாகும். சங்கீத வித்துவானாகவும், சிறந்த நடிகராகவும் அக்காலத்தில் விளங்கிய வை. இராமநாதன், அரிச்சந்திர நாடகத்திலுள்ள சில பாகங்களைத் தெரிந்தெடுத்தும், தாம் புதிதாகப் பல பாடல்களை எழுதியும் சேர்த்தார். அரிச்சந்திரன் வேடமும் ஏற்று நடித்தார். இந்நாடகத்தைப் பார்த்த எம்.ஆர்.கோவிந் சாமிப்பிள்ளை இதனைச் சிறப்பாகப் பாராட்டியதும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
ச.வி.சபையாரால் ஆறாவதாக நடிக்கப்பட்ட நாடகம் சம்பந்தர் எழுதிய சீதா கலியாணமாகும். இதற்குரிய கவிகளை இயற்றியவர் வை. இராமநாதன். இவர் விசுவாமித்திரராகவும், வித்துவான் க.இராமலிங்கம் இராமனாகவும் நடித்தனர்.
அயோத்தியா காண்டத்திற்கும் உரிய பாடல்களை இராமநாதனே இயற்றினார். இந்நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றமையும் பல நாடக சபைகளினாற் பல்வேறு இடங்களில் மேடையேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கனவாகும். இந்நாடகம் நூலுருப் பெற்றபோது இந்துக்கல்லூரி அதிபர் நெவின்ஸ்" செல்லதுரை ஆங்கிலத்தில் முகவுரை எழுதினார். இந்நூல் கேம்பிரிட்ஜ் யூனியர் பரீட்சைக்குப் பாடமாக அமைந்ததும் ஆசிரியர் பயிற்சிப் பரீட்சைக்கும் இலங்கைப் பல கலைக் கழகக் கல்லூரிப் பிரவேச பரீட் சைக்கும் பாடநூலாகவிருந்ததும் இதன் சிறப்பைக் காட்டுகின்றன. சம்பந்தரின் நாடகங்களுள் எமக்குக் கிடைப்பன ஆரணிய காண்டமும் (ஓரளவு முழுமையாக) அயோத்திய காண்டம் இரண்டாம் அங்கமுமேயாகும். ஏனைய நாடகங்கள் கிடைக்காது விட்டாலுங்கூட, கிடைக்கும் இவ்விரு நாடகப் பகுதிகளையும் வகை மாதிரிகளாகக் கொண்டு அவரின் நாடக ஆக்கத்திறன் பற்றிய கணிப்பீட்டினை ஒரளவுக்கேனும் மேற்கொள்ள முடியும்.
சம்பந்தரின் நாடகங்கள் அவரின் ஏனைய ஆக்கங்களைப் போல பெரும்பாலும் சமயத் தொடர்பு உடையவனாகவே காணப்ப
ம.பா. மகாலிங்கசிவம் 35

Page 24
டுகின்றன. தாம் நாடகத்திற்கெனத் தெரியுங் கதை மூலக்கதையின் போக்கிற்கு முரணாகாது அமைய வேண்டும் என்பதிலே அவர்
கவனம் செலுத்தினார்.
“மார்க்கண்டேயர்
இதனை, −
சென்னை பி.சம்பந்தமுதலியார் எழுதி
வெளியிட்ட மார்க்கண்டேயர் நாடகத்தை இச்சபையார் (சரஸ்வதி விலாச சபையார்) நடிக்க முயன்றனர். ஆனால் இந்த நாடகத்தில் சொல்லப்பட்டவை கந்தபுராணத்துள்ள
மார்க்கண்டேயர்
கதைக்கு முரணாக இருப்பதால் அதை
விடுத்துக் கந்தபுராணத்திற் சொல்லப்பட்டபடி நாம் எழுதிய
வசனத்தையும் கே.சி.நாதன் பாடிய பாட்டுக்களையும் கொண்டு
சிறந்த முறையில் நடித்தார்கள்” எனும் அவர் கூற்றால் அறியலாம். அவரது நாடகத் தலைப் புக்கள்கூட மூல நூலுடன் ஒத்தே செல்வதனை, இராமாயணக் காப்பியத்திலுள்ள ஆரணிய காண்டம், அயோத்தியா காண்டம் எனும் அதே காண்டப் பெயர்களையே தமது நாடகத்தின் பெயர்களாகவும் கொள்வதனுாடாக அறியலாம்.
எனினும் நாடகத்தின் உள்ளே அங்கம், காட்சி எனும் பிரிவுகளை அமைப்பதில் ஆங்கில நாடக மாபையே பின்
பற்றுகின்றார். ஆரணிய
முதலாம் அங்கம்
3Lüb
ஆறாங்காட்சி
எட்டாங்காட்சி
ஒன்பதாங்காட்சி
பத்தாங்காட்சி பதினோராங்காட்சி :
இரண்டாம் அங்கம்
காண்ட அமைப்பை எடுத்து நோக்கினால்,
: பஞ்சவடி எனும் வனம் (முதல் ஐந்து
காட்சிகளும் கிடைக்கவில்லை)
: (முதற் பகுதி - இராமலக்குமணர் சடாயுவைச்
சந்தித்தல் இரண்டாம் பகுதி அகத்திய முனிவரைச் சந்தித்தல் (ஏழாங் காட்சி கிடைக்கவில்லை)
சூர்ப்பணகை வரவும் அதனோடு தொடர்பான
நிகழ்ச்சிகளும்
: சூர்ப்பணகை தண்டிக்கப்பட்ட நிலையில்
இராமன்முன் வரல்
: சூர்ப்பனகை கரனிடம் சென்று முறையிடல்
கரன் படையெடுத்தல், போர், கரன் முதலியோர் இறத்தல், சூர்ப்பணகை இலங்கை செல்லல்.
பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

છLtb : இராவணன் அரண்மனை
ஆறாங்காட்சி : சூர்ப்பணகை நிலை கண்ட அரக்கர்,
அரக்கியர் கூற்று
இரண்டாங்காட்சி ; சூர்ப்பணகை இராவணனிடம் முறையிடல்
மூன்றாங்காட்சி : இராவணன் மாரீசனுடன் வாதாடி, அவனுடன்
பஞ்சவடிக்குப் புறப்படல்.
முன்றாம் அங்கம்
இடம் பஞ்சவடி
நான்கு காட்சிகள் உள்ளன. சீதையை இராவணன் கொண்டு செல்வதுடன் நாடகம் முடிவடைகிறது. ஒவ்வொரு காட்சியின் போதும் இடம், காலம் என்பவற்றைக் கொடுப்பதையும் அவதானிக்க முடிகி
Bg5l.
நாடகம் ஒரு கட்புல செவிப்புல ஊடகமாக இருந்தாலும் கட்புலனின் ஆதிக்கமே நாடகத்தில் அதிகம் இடம்பெறவேண்டும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் சம்பந்தரின் நாடகங்கள் செவிப்புல ஊடகத்துக்காக எழுதப்பட்டனபோற் காணப்படுகின்றன. இவரின் நாடகங்கள் முழுவதும் சொற்களின் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு காட்சிக்குரிய தன்மையைவிட வசனத்துக்குரிய தன்மையே அதிகமாக உள்ளது. இத்தன்மை காரணமாக நாடக அசைவுகள் முக்கியத்துவம் குறைக்கப் பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. அயோத்தியா காண்டத்தில் உள்ள பின்வரும் காட்சிப்பகுதி இதற்குச் சான்றாக அமைகின்றது.
குகன் : இந்த ஆச்சிரமத்திலேதான் இராமபிரான் எழுந்தருளியிருக்க வேண்டும். சரி சமீபத்தில் போய்க் கூப்பிட்டறிவோம் (பர்ணசாலை வாயிலையடைந்து) சுவாமீ அடியேன் கும்பிடுகிறேன்.
இலக்குவன்: (சத்தத்தைக் கேட்டுப் பன்னசாலையின் புறத்தே வந்து) அப்பா, நீ யார்? இங்கே யாரைத் தேடுகின்றாய்?
குக.:சுவாமி, நானோ ஏழைவேடன், சிரிங்கிபேரம் என்னுங் கிராமத்தில் இருப்பவன், என்னைக் குகனென்று சொல்லுவார்கள்.
ம.பா. மகாலிங்கசிவம் 37

Page 25
இந்த ஆற்றைக் கடந்து செல்பவர்களுக்கு ஒடம் விடுவது என் தொழில், சுவாமியைக் கும்பிடும்படியாக இங்கே வந்தேன்.
இல, : அப்பா, நீ இங்கேதான் நில், எனது அண்ணனுக்கு உனது வரவைத் தெரிவிக்கின்றேன் (எனக்கூறி இராமரிடஞ் சென்று) அண்ணா, வேடுவர் குலத்தனாம், சமீபத்திலுள்ள சிரிங்கிபேரம் என்னுங் கிராமத்தில் வசிப்பவனாம், குகன் என்னும் பெயரையுடையவன், பார்க்கும் போது தங்களிடத்து மிகவும் பக்தியுடையவன் போலக் காணப்படுகின்றான். தங்களைத் தரிசிக்க ஆசைகொண்டு இப் பர்ணசாலையின் புறத்தே நிற்கின்றான்."
இப்பகுதியை நோக்கினால் முதலிற் குகன் வந்து இராமனைக் கூப்பிட்டறிவோம் எனத் தனக்குத் தானே தனிமொழி இடம் பெறுகின்றது. நாடக அமைப்புக்கு இது தேவையற்றதாகும். அவ்வாறு கூறாமல் கூப்பிட்டிருந்தாலே போதுமானதாகும்.
அது மட்டுமன்றி இலக்குவன் குகன் கூறிய அனைத்தையும் மீண்டும் இராமனிடம் கூறாமல் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்தாலே இச்செய்தி நடிப்பின் மூலம் புலப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு அமைவதற்குச் சம்பந்தர் நாடகத்தை ஒரு அளிக்கைக் கலையாக அல்லாமல் இலக்கிய வடிவமாகக் கண்டமையே காரணமாகும். இப்பண்பு பொதுவாக சரஸ்வதி விலாசசபை நாடகாசிரியர்கள் அனைவரிடமுமே காணப்படுவதாகும். இதனையே, “யாழ்ப்பாணத்திலே தோன்றிய சரஸ்வதி விலாசசபையின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் முறையாகத் தமிழைக் கற்றதுடன் சமயஉணர்வு வாய்க்கப் பெற்றவர்களாய் விளங்கியமையாற் சொந்தமாகவே நாடகங்களையும் பாடல்களையும் இயற்றிப் பயன்படுத்தி வந்தனர். இதனால் மேடையேற்றற்கு உகந்த பண்பிலும் அதன் இலக்கியத் தரத்தையும் சமய மரபையும் பேணுவதையே இவர்கள் தமது முதன்மையான குறிக்கோளாய்க் கொண்டனர்” எனக் க.சொக்கலிங்கம் குறிப்பிடுவார்.
(606) T(5 BTL355gldsg5lb (b. 60LDuT60T (Point of Attack) உண்டு. அது ஒவ்வொரு காட்சிக்குள்ளும்கூட இருக்கும். இப்பண்பு சம்பந்தரின் மார்க்கண்டேயர், உருக்குமாங்கதன், அரிச்சந்திரன் போன்ற நாடகங்களில் அவை சிறிய, முழுமையான கதை கொண்ட
38 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

நாடகங்களாக இருப்பதால் இருந்திருக்கலாம். ஆனால் ஆரணிய காண்டம், அயோத்தியாகாண்டம் என்னும் கிடைக்கும் இந்த இரு நாடகங்களிலும் அத்தன்மை காணப்பெறவில்லை. இந்நிலை இராமாயணம் என்னும் நீண்ட கதையின் ஒவ்வொரு பகுதிகளை மட்டுமே இந்நாடகங்கள் சித்திரிப்பதால் ஏற்பட்டிருக்கலாம். தமது நாடகங்களில் சம்பந்தர் விவரணத்துகே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். காவிய மரபுபோல நிகழ்ச்சிகளை விவரித்துச் சொல்வதிலேயே அவரது கவனம் செல்கிறது. அயோத்தியா காண்டத்தில் இராமனுஞ் சீதையும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து, தம்முள் உரையாடிக் கொண்டு செல்கின்ற மிக நீண்ட பகுதி சம்பந்தரின் விவரணப் பண்புக்குச் சிறந்த சான்றாக அமைகி ன்றது. ஆரணிய காண்டத்தில் இடம்பெறும்,
“அகத்தியர்: இராமா, நீ வசிக்க விரும்பும் பஞ்சவடி சமீபத்திலுள்ளதாகும். அங்கே தண்ணிழல் தரும் உயர்ந்த விருட்சங்களும் உந்நதமான மணற் குன்றங்களும், கனிகளும் பூக்கள் மலிந்த சோலைகளும், நதிகளும், நீர்ச்சுனைகளும், இன்னபிற வளங்களும் உண்டு. இவைகள் மாத்திரமா, அங்கே இனிய கனிக் குலைகளைச் சுமந்தபடி வாழைகளும் கருப்பம் வயல்களும் செந்நெல் வயல்களும், எமது கமண்டலத்தினின்றும் பெருகிய காவிரிபோன்ற நதிகளும் ஆங்கு விளங்கும் , இச்சாநகி விளையாடுதற் காகிய தாமரைத்தடாகங்களும் ஆங்கு உண்டு. இப்படிப்பட்ட உத்தம ஸ்தலமாகிய பஞ்சவடியில் நீவிர் சென்று வைகுதிர்” எனும் பகுதி காவிய மரபின் தாக்கம் அவர் நாடகத்தில் இடம் பெறுவதைக் காட்டுகின்றது. இத்தகைய பகுதிகள் அளவுக்கதிகமாக நீட்டப்பட்டுச் செல்வதால் நாடகவடிவத்தின் இறுக்கம் தளர்ந்து விடுகின்றது.
இந்நாடகங்களிற் பாத்திர உரையாடல்களிற் சிறிய வசனங்கள்
கொண்ட பகுதிகளே பெரும்பாலும் உள்ளன. அதேவேளை சில
இடங்களிற் பந்தி பந்தியாகத் தொடர்ந்து செல்லும் பகுதிகளும்
உள்ளன.
"சூர்ப்பணகை அண்ணாவே அயோத்தியா புரியிலுள்ளவர்களாம், இராச குமாரர்களாம், தண்டகவனத்தில் வந்திருக்கிறார்கள். தாபத வடிவத்தினர். மாரனை யொத்த வனப்புடையவர், சகோதரர் இருவர், பிறப்பில் மானுடர், இந்த அநியாயத்தை எனக்குச் செய்தார்கள்.
ம.பா. மகாலிங்கசிவம் 39

Page 26
டுகின்றன. தாம் நாடகத்திற்கெனத் தெரியுங் கதை மூலக்கதையின் போக்கிற்கு முரணாகாது அமைய வேண்டும் என்பதிலே அவர்
கவனம் செலுத்தினார்.
“மார்க்கண்டேயர்
இதனை,
சென்னை பி.சம்பந்தமுதலியார் எழுதி
வெளியிட்ட மார்க்கண்டேயர் நாடகத்தை இச்சபையார் (சரஸ்வதி விலாச சபையார்) நடிக்க முயன்றனர். ஆனால் இந்த நாடகத்தில் சொல்லப்பட்டவை கந்தபுராணத்துள்ள
மார்க்கண்டேயர்
கதைக்கு முரணாக இருப்பதால் அதை
விடுத்துக் கந்தபுராணத்திற் சொல்லப்பட்டபடி நாம் எழுதிய
வசனத்தையும் கே.சி.நாதன் பாடிய பாட்டுக்களையும் கொண்டு
சிறந்த முறையில் நடித்தார்கள்” எனும் அவர் கூற்றால் அறியலாம். அவரது நாடகத் தலைப் புக்கள்கூட மூல நூலுடன் ஒத்தே செல்வதனை, இராமாயணக் காப்பியத்திலுள்ள ஆரணிய காண்டம், அயோத்தியா காண்டம் எனும் அதே காண்டப்பெயர்களையே தமது நாடகத்தின் பெயர்களாகவும் கொள்வதனுடாக அறியலாம்.
எனினும் நாடகத்தின் உள்ளே அங்கம், காட்சி எனும் பிரிவுகளை அமைப்பதில் ஆங்கில நாடக மாபையே பின்
பற்றுகின்றார். ஆரணிய
முதலாம் அங்கம்
இடம்
ஆறாங்காட்சி
எட்டாங்காட்சி
ஒன்பதாங்காட்சி
பத்தாங்காட்சி பதினோராங்காட்சி :
இரண்டாம் அங்கம்
காண்ட அமைப்பை எடுத்து நோக்கினால்,
: பஞ்சவடி எனும் வனம் (முதல் ஐந்து
காட்சிகளும் கிடைக்கவில்லை)
: (முதற் பகுதி - இராமலக்குமணர் சடாயுவைச்
சந்தித்தல் இரண்டாம் பகுதி அகத்திய முனிவரைச் சந்தித்தல் (ஏழாங் காட்சி கிடைக்கவில்லை)
: சூர்ப்பணகை வரவும் அதனோடு தொடர்பான
நிகழ்ச்சிகளும்
: சூர்ப்பணகை தண்டிக்கப்பட்ட நிலையில்
இராமன்முன் வரல்
: சூர்ப்பணகை கரனிடம் சென்று முறையிடல்
கரன் படையெடுத்தல், போர், கரன் முதலியோர் இறத்தல், சூர்ப்பணகை இலங்கை செல்லல்.
பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

ફિોLtb : இராவணன் அரண்மனை
ஆறாங்காட்சி ; சூர்ப்பணகை நிலை கண்ட அரக்கர்,
அரக்கியர் கூற்று
இரண்டாங்காட்சி ; சூர்ப்பணகை இராவணனிடம் முறையிடல்
மூன்றாங்காட்சி : இராவணன் மாரீசனுடன் வாதாடி, அவனுடன்
பஞ்சவடிக்குப் புறப்படல்.
முன்றாம் அங்கம்
இடம் : பஞ்சவடி
நான்கு காட்சிகள் உள்ளன. சீதையை இராவணன் கொண்டு செல்வதுடன் நாடகம் முடிவடைகிறது. ஒவ்வொரு காட்சியின் போதும் இடம், காலம் என்பவற்றைக் கொடுப்பதையும் அவதானிக்க முடிகி
Bg5.
நாடகம் ஒரு கட்புல செவிப்புல ஊடகமாக இருந்தாலும் கட்புலனின் ஆதிக்கமே நாடகத்தில் அதிகம் இடம்பெறவேண்டும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் சம்பந்தரின் நாடகங்கள் செவிப்புல ஊடகத்துக்காக எழுதப்பட்டனபோற் காணப்படுகின்றன. இவரின் நாடகங்கள் முழுவதும் சொற்களின் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இங்கு காட்சிக்குரிய தன்மையைவிட வசனத்துக்குரிய தன்மையே அதிகமாக உள்ளது. இத்தன்மை காரணமாக நாடக அசைவுகள் முக்கியத்துவம் குறைக்கப் பட்டிருக்கலாம் என ஊகிக்க முடிகிறது. அயோத்தியா காண்டத்தில் உள்ள பின்வரும் காட்சிப்பகுதி இதற்குச் சான்றாக அமைகின்றது.
குகன் : இந்த ஆச்சிரமத்தலே தான் இராமபிரான் எழுந்தருளியிருக்க வேண்டும். சரி சமீபத்தில் போய்க் கூப்பிட்டறிவோம் (பர்ணசாலை வாயிலையடைந்து) சுவாமீ அடியேன் கும்பிடுகிறேன்.
இலக்குவன்: (சத்தத்தைக் கேட்டுப் பன்னசாலையின் புறத்தே வந்து) அப்பா, நீ யார்? இங்கே யாரைத் தேடுகின்றாய்?
குக.:சுவாமி, நானோ ஏழைவேடன், சிரிங்கிபேரம் என்னுங் கிராமத்தில் இருப்பவன், என்னைக் குகனென்று சொல்லுவார்கள்.
ம.பா. மகாலிங்கசிவம் 37

Page 27
இந்த ஆற்றைக் கடந்து செல்பவர்களுக்கு ஒடம் விடுவது என் தொழில், சுவாமியைக் கும்பிடும்படியாக இங்கே வந்தேன்.
இல, : அப்பா, நீ இங்கேதான் நில், எனது அண்ணனுக்கு உனது வரவைத் தெரிவிக்கின்றேன் (எனக்கூறி இராமரிடஞ் சென்று) அண்ணா, வேடுவர் குலத்தனாம், சமீபத்திலுள்ள சிரிங்கிபேரம் என்னுங் கிராமத்தில் வசிப்பவனாம், குகன் என்னும் பெயரையுடையவன், பார்க்கும் போது தங்களிடத்து மிகவும் பக்தியுடையவன் போலக் காணப்படுகின்றான். தங்களைத் தரிசிக்க ஆசைகொண்டு இப் பர்ணசாலையின் புறத்தே நிற்கின்றான்."
இப்பகுதியை நோக்கினால் முதலிற் குகன் வந்து இராமனைக் கூப்பிட்டறிவோம் எனத் தனக்குத் தானே தனிமொழி இடம் பெறுகின்றது. நாடக அமைப்புக்கு இது தேவையற்றதாகும். அவ்வாறு கூறாமல் கூப்பிட்டிருந்தாலே போதுமானதாகும்.
அது மட்டுமன்றி இலக்குவன் குகன் கூறிய அனைத்தையும் மீண்டும் இராமனிடம் கூறாமல் உள்ளே சென்றுவிட்டுத் திரும்பி வந்தாலே இச்செய்தி நடிப்பின் மூலம் புலப்படுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு அமைவதற்குச் சம்பந்தர் நாடகத்தை ஒரு அளிக்கைக் கலையாக அல்லாமல் இலக்கிய வடிவமாகக் கண்டமையே காரணமாகும். இப்பண்பு பொதுவாக சரஸ்வதி விலாசசபை நாடகாசிரியர்கள் அனைவரிடமுமே காணப்படுவதாகும். இதனையே, “யாழ்ப்பாணத்திலே தோன்றிய சரஸ்வதி விலாசசபையின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் முறையாகத் தமிழைக் கற்றதுடன் சமயஉணர்வு வாய்க்கப் பெற்றவர்களாய் விளங்கியமையாற் சொந்தமாகவே நாடகங்களையும் பாடல்களையும் இயற்றிப் பயன்படுத்தி வந்தனர். இதனால் மேடையேற்றற்கு உகந்த பண்பிலும் அதன் இலக்கியத் தரத்தையும் சமய மரபையும் பேணுவதையே இவர்கள் தமது முதன்மையான குறிக்கோளாய்க் கொண்டனர்” எனக் க.சொக்கலிங்கம் குறிப்பிடுவார்.
ஒவ்வொரு நாடகத்துக்கும் ஒரு மையான (Point of Attack) உண்டு. அது ஒவ்வொரு காட்சிக்குள்ளும்கூட இருக்கும். இப்பண்பு சம்பந்தரின் மார்க்கண்டேயர், உருக்குமாங்கதன், அரிச்சந்திரன் போன்ற நாடகங்களில் அவை சிறிய, முழுமையான கதை கொண்ட
38 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

நாடகங்களாக இருப்பதால் இருந்திருக்கலாம். ஆனால் ஆரணிய காண்டம், அயோத்தியாகாண்டம் என்னும் கிடைக்கும் இந்த இரு நாடகங்களிலும் அத்தன்மை காணப்பெறவில்லை. இந்நிலை இராமாயணம் என்னும் நீண்ட கதையின் ஒவ்வொரு பகுதிகளை மட்டுமே இந்நாடகங்கள் சித்திரிப்பதால் ஏற்பட்டிருக்கலாம். தமது நாடகங்களில் சம்பந்தர் விவரணத்துகே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். காவிய மரபுபோல நிகழ்ச்சிகளை விவரித்துச் சொல்வதிலேயே அவரது கவனம் செல்கிறது. அயோத்தியா காண்டத்தில் இராமனுஞ் சீதையும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து, தம்முள் உரையாடிக் கொண்டு செல்கின்ற மிக நீண்ட பகுதி சம்பந்தரின் விவரணப் பண்புக்குச் சிறந்த சான்றாக அமைகி ன்றது. ஆரணிய காண்டத்தில் இடம்பெறும்,
“அகத்தியர்: இராமா, நீ வசிக்க விரும்பும் பஞ்சவடி சமீபத்திலுள்ளதாகும். அங்கே தண்ணிழல் தரும் உயர்ந்த விருட்சங்களும் உந்நதமான மணற் குன்றங்களும், கனிகளும் பூக்கள் மலிந்த சோலைகளும், நதிகளும், நீர்ச்சுனைகளும், இன்னபிற வளங்களும் உண்டு. இவைகள் மாத்திரமா, அங்கே இனிய கனிக் குலைகளைச் சுமந்தபடி வாழைகளும் கருப்பம் வயல்களும் செந்நெல் வயல்களும், எமது கமண்டலத்தினின்றும் பெருகிய காவிரிபோன்ற நதிகளும் ஆங்கு விளங்கும் , இச்சாநகி விளையாடுதற் காகிய தாமரைத்தடாகங்களும் ஆங்கு உண்டு. இப்படிப்பட்ட உத்தம ஸ்தலமாகிய பஞ்சவடியில் நீவிர் சென்று வைகுதிர்” எனும் பகுதி காவிய மரபின் தாக்கம் அவர் நாடகத்தில் இடம்பெறுவதைக் காட்டுகின்றது. இத்தகைய பகுதிகள் அளவுக்கதிகமாக நீட்டப்பட்டுச் செல்வதால் நாடகவடிவத்தின் இறுக்கம் தளர்ந்து விடுகின்றது.
இந்நாடகங்களிற் பாத்திர உரையாடல்களிற் சிறிய வசனங்கள்
கொண்ட பகுதிகளே பெரும்பாலும் உள்ளன. அதேவேளை சில
இடங்களிற் பந்தி பந்தியாகத் தொடர்ந்து செல்லும் பகுதிகளும்
உள்ளன.
“சூர்ப்பணகை அண்ணாவே அயோத்தியா புரியிலுள்ளவர்களாம், இராச குமாரர்களாம், தண்டகவனத்தில் வந்திருக்கிறார்கள். தாபத வடிவத்தினர். மாரனை யொத்த வனப்புடையவர், சகோதரர் இருவர், பிறப்பில் மானுடர், இந்த அநியாயத்தை எனக்குச் செய்தார்கள்.
ம.பா. மகாலிங்கசிவம் 39

Page 28
இராவணன்: (சரீரங்குலுங்கப் பெருஞ்சிரிப்புச்சிரித்து) மானுடர்கள்? சூர்ப் :ஆம் அண்ணா மானுடர்கள். அதில் சந்தேகம் வேண்டியதில்லை.
இராவ: உனக்கு இப்படிச் செய்தார்கள்? சூர்ப்: ஆம், அண்ணாவே அவர்கள்தான் என்னை இப்படி அங்கபங்கப் படுத்தினார்கள். இராவ: இளையவளே, பொய் பேசாதே பயப்படாதே, உள்ளதைச் சொல், மானுடர் செய்தார் என்பதை நான் எப்படி நம்புவேன்?"
இப்பகுதியிற் பாத்திர உரையாடல்கள் சிறுசிறு வாக்கியங்களைக் கொண்டனவாக அமைந்துள்ளமையைக் காணலாம். மாரீசனும் இராவணனும் உரையாடும் பகுதி, அகம்பன் என்னும் மந்திரி அறிவுரை கூறும் பகுதி போன்றவற்றில் வசனங்கள் பந்தி பந்தியாக நீண்டு செல்கின்றன.
நாடகத்திற் பெரும்பாலும் செந் தமிழ் நடையையே பயன்படுத்துகின்றார். இவ்வுரை நடையில் வடமொழிச் சொற்கள் அதிகம் பயின்று வருகின்றன.
அகத்தியர்:ராமா, இலட்சுமணா, குழந்தாய் ஜாநகி, வருதிர், வருதிர் நும்வரவு நல்வரவாகுக. ராமன் :(அவருடைய பாதங்களில் வீழ்ந்து வணங்கி) நற்றவக்குன்றே முத்தமிழ்ச் செல்வ, சரணம், சரணம். அகத்தியர்:ரவிகுல மைந்தர்காள் ஜெயமுண்டாகுக. சீதை:(பஞ்சாங்கமாக வணங்கி) சுவாமி, நமஸ்காரம். அகத்தியர்:குழந்தாய், ஜாநகி, மங்கலமுண்டாகுக. உன் அன்னையாம் லோபாமுத்திரை நின் வரவை எதிர்பார்த்தபடி ஆங்கிருக்கிறாள். செல்லுதி. சீதை:முனிவர் பெருமானே, அப்படியே செல்கின்றேன் (என்று அந்தப்பக்கஞ் செல்கிறாள்) அகத்தியர்:மக்காள் இப்படி அமருங்கள் அதிக வழிநடந்து அலுத்தீர் போலும்? ராமன்:சுவாமி தேவரீருடைய கிருபா கடாட்சமிருக்கும் போது எவ்வகையான சிரமமும் தோன்றா தன்றோ” (என்று கூறி ஆசனத்தில் அமருகின்றனர்)"
40 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

இங்கு செவ்விய நடையிலேயே பாத்திரங்களின் உரையாடல்கள் அமைக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இன்றும் அரச நாடகங்களில் பாத்திர உரையாடல்கள் செவ்விய நடையிலேயே அமைக்கப்படுவது இவ்விடத்தில் நினைவு கொள்ளத்தக்கதாகும். இவ்வுரையாடற் பகுதியிற் சரணம், ஜெயமுண்டாகுக, நமஸ்காரம், கிருபாகடாட்சம் முதலிய வடமொழிச்சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. பெரும்பாலும் வடமொழிச் சொற்களைத் தவிர்த்து எழுதும் சம்பந்தர், நாடகத்தில் அவற்றைப் பயன்படுத்துவதற்கு தமிழக நாடகக் குழுக்களின் பாதிப்பும் காரணமாக இருந்திருக்கலாம். இதேவேளை குகனின் கூற்றுக்களில் பேச்சுத்தமிழ்த் தன்மை அதிகமாக உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
குக:சுவாமி இது ஏழை, இப்படி நிற்கின்றேன். சாமிக்காக நல்ல
தேனும் தெரிந்தெடுத்த மீனும் கொண்டு வந்திருக்கிறேன். தங்கள்
விருப்பம் எப்படியோ??
எனும் பகுதி இதற்குச் சான்றாக அமைகின்றது.
சம்பந்தரின் நாடகங்கள் வசன நாடகங்களாக இருந்தாலும் இசை நாடகச் செல்வாக்குக் காரணமாக பாடல்கள் காணப்படுகின்றன. கே.சி. நாதன், வை.இராமநாதன் ஆகிய இருவரும் சம்பந்தரின் நாடகங்களுக்கான பாடல்களை எழுதினர். அத்துடன் நாடகக் கதை இடம்பெறும் மூல நூலில் இருந்தும் பல பாடல்கள் எழுத்தாளப்பட்டுள்ளன. இந்நாடகங்களிற் குறித்த ஒரு பாத்திரத்தின் உணர்ச்சி எல்லை மேலே செல்கின்றபோது பாடல்கள் வருவதை அவதானிக்க முடிகின்றது. ஆரணிய காண்ட நாடகத்தில் தசரதன் இறந்ததைக் கேட்ட சடாயு பலவாறு புலம்பியபின் மூர்ச்சை அடைகின்றான். மூர்ச்சை தெளிந்தபின்னர் எழுந்து துயரத்தின் உச்சத்தில்,
“புரவலருங் கொடைக்கும் நின் பனிக்குடைக்கும்
பொறைக்கும் நெடும் பண்புதோற்ற
கரவலருங் கற்பகமும் உடுபதியும்
கடலிடமும் கழித்து வாழப்
புரவலர்தம் புரவலனே பொய்ப்பகையே மெய்க்கனியே
புகழின் வாழ்வே
இரவலரும் நல்லறமும் யானுமினி
’என்படநீத் தேகினாயே س
ம.பா. மகாலிங்கசிவம் 41

Page 29
எனும் (கம்பராமாயணப்) பாடலைப் பாடுவதாகக் காட்சி அமைக்கப் பட்டுள்ளது.
பல பாத்திரங்கள் இடம்பெறும் இந்நாடகங்களிற் பிரதான பாத்திரங்கள் மட்டுமே ஆழமாக வளர்த்துச் செல்லப்படுகின்றன. ஏனைய துணைப் பாத்திரங்கள் தேவைக்கேற்ப வளர்த்துக் கொண்டு விடப்படுகின்றன. இம்முறை பெரும்பாலும் எல்லா நாடகங்களிலும் கையாளப்படுவதாகும். இந்நாடகங்களின் பாத்திரங்கள் எல்லாம் பண்புப் பாத்திரங்களாக (Type Character) அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பண்புப் பாத்திரமாக (நல்லவன் அல்லது கெட்டவன்) அமைவதற்கு இராமாயணப் பாதிப்பே காரணமாகும். காப்பியங்க ளிலுள்ள பாத்திரங்கள் எல்லாம் பண்புப் பாத்திரங்களாகவே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாரம் பரியத்தினூடாகவே சம்பந்தரின் பாத்திரப் படைப்புக்கள் அமைந் துள்ளன.
நடிப்புத் துறையிலும் சம்பந்தர் தனது ஆற்றலை வெளிப்ப டுத்தினார். அவர் சிறந்த நகைச்சுவை நடிகராக விளங்கினார். அம்மான் சபாரத்தினம், பபூன் செல்லையா, ஏ.கே.சுப்பிரமணியம், நாகலிங்கம், சம்பந்தர் ஆகியோர் சரஸ்வதி விலாச சபையின் பிரதான விகட நடிகர்களாக இருந்தனர். அயோத்தியா காண்டத்தில் சம்பந்தர் நகைச்சுவைப் பாத்திரமேற்று நடித்து பலராலும் பாராட்டப்பட்டதை அறிய முடிகின்றது.
“சரசுவதிவிலாசசபையின் நாடகங்கள் ஒவ்வொன்றிலும் பிள்ளை யவர்கள் நகைச்சுவைப் பாத்திரங்களையேற்று நடித்து வயிறு குலுங்கச் சிரிக்கவைப்பார். நகைச்சுவைப் பாத்திரத்தை மட்டுமன்றி எந்தப் பாத்திரத்தையும் ஏற்றுத் திறம்பட நடிக்கும் ஒரு குணசித்திர நடிகர் அவர்" என அ.க.சு. என்பவர் குறிப்பிடுகிறார். நடிகராக மட்டுமன்றி நெறியாளராகவும் பணியாற்றியமையை அயோத்தியா காண்டத்தை நெறியாள்கை செய்தமை பற்றிக் கிடைக்கும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.
ஈழத்தில் இயற்றப்பட்ட நாடகங்கள் எனும் தலைப்பில் இலங்கை வானொலியிற் சம்பந்தர் ஆற்றிய உரையும் அவர் பணிகளிற் குறிப்பிடப்பட வேண்டியதாகும். இச்சொற்பொழிவு பின்னர் ஈழத்து நாடகத்தமிழ் எனும் தலைப்பில் ஈழநாட்டுத் தமிழ் விருந்து எனும்
42 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

நூலிற் கட்டுரையாக வெளிவந்தது. ஈழத்தின் ஆரம்பகால நவீன நாடக வரலாற்றை அறிய இன்று எமக்குக் கிடைக்கின்ற சான்றுகளுள் இக்கட்டுரை மிக முக்கியமானதாகும். சரஸ்வதி விலாசசபை பற்றிய முறையான தகவல்கள் இக்கட்டுரையிலே தரப்பட்டுள்ளன. சரசுவதி விலாசசபையால் மேடையேற்றப்பட்ட ஏழு நாடகங்கள் பற்றியும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. க.சொக்கலிங்கம் எழுதிய ஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி எனும் நூல் சரசுவதி விலாசசபை பற்றிய தகவல்களைப் பெற இக்கட்டுரையையே முழுமையாகப் பயன்படுத்தியுள்ளமை இக் கட்டுரையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. சரசுவதி விலாச சபையின் நாடகங்கள்பற்றி மட்டுமன்றி அக்காலத்தில் ஏனைய சபைகளாலும் நடிக்கப்பட்ட மேலும் பதினைந்து நாடகங்கள் பற்றிய தகவல்களும் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு, திருகோணமலை பிரதேசங்களில் எழுந்த நாடகங்கள் பற்றிய தகவல் களும் , இங்கு இடம் பெறுகின்றமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். நாடகக் கலைக்கு நாட்டில் நிலவிய மதிப்புத் திரைப்படத்தின் வருகையாற் குறைந்துபோய் விட்டது என மனம் வருந்திய சம்பந்தர் கட்டுரையின் இறுதியில் அதுபற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
“ய்ாம் தொகுத்துச் சொல்லத்தக்கது வின்னுமொன் றுண்டு. பண்டு தொட்டு இவ்வீழ நாட்டில் விருத்தியடைந்து வந்த நாடகக் கலை இப்பொழுது உலக்கை தேயப் நீது உளிப்படியானவாறு பெரிதும் குன்றத் தலைப்பட்டுவிட்டது. இக்காலத்திலே நாடகநூல்களை இயற்றுவோர், நடிப்போர், அபிமானிப்போர் எவரையும் காணோம். சினிமா எனப்படும் பேசும்படக்காட்சி இந்த ஈழநாட்டில் எவ்விடத்திலும் நடக்கத் தலைப்பட்ட பின்பு இங்குள்ள மக்கள், இந்தியாவிலிருந்து இடையறாது இறக்குமதி செய்யப்படும் அந்த விபரீதக் காட்சிகளைப் போய்ப் பணம் கொடுத்துப் பார்ப்பதிலும் அவற்றைப் பாராட்டுவதிலும் அவற்றிற் காட்டப்படும் விபரீதக் கொள் கைகளைப் பரின் பற்றிக் கெடுவதலும் ஈடுபட்டிருக்கிறார்களே யொழிய எவரேனும் புதிய நாடகங்களைத் தாமாக எழுத, எழுதிப்படம்பிடிக்கக் கண்டிலேம். ஆனால் சிங்களவர் தமிழ்மொழியிலுள்ள சில
ம.பா. மகாலிங்கசிவம் 43

Page 30
சரித்திரங்களை நாடகமாக எழுதிக் கவிபாடிச் சேர்ந்து நடித்துப் படக்காட்சிகளாகவும் செய்திருப்பதைத் கான்கின்றோம்.' எனக் கூறுகின்றார்.
இங்கு நாடகக்கலைத் தேய்வினைக் குறிப்பிட்டு நாடகங்களைச் சினிமாவாக எடுக்கவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்து கின்றார். சிங்களவர்களின் பணியினை உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றார். இக்கால கட்டத்திலேதான், தமிழகத்திற் சினிமா ஒரு முக்கியமான சாதனமாக மாறுகின்ற விடயமும் அண்ணாத்துரை, கருணாநிதி போன்றோரின் நாடகங்கள் சினிமாப்படங்களாக எடுக்கப் பட்டமையும் குறிப்பிடத்தக்கனவாகும். இவற்றினைப் பின்பற்றி ஈழத்து நாடகமும் காலத்துக்கேற்ப மாற்றமடைய வேண்டுமென்ற பிரக்ஞை உடையவராகச் சம்பந்தர் இருந்தார் என்பதை இப்பகுதி மூலம் அறியமுடிகின்றது.
இவ்வாறு சம்பந்தர் நாடகத்துறையிற் பன்முகப்பட்ட பணிகளை ஆற்றியுள்ளபோதும் ஈழத்து நாடக வரலாற்றில் அவர் முக்கியத்துவம் இன்னும் உணரப்படவில்லை. சொர்ணலிங்கம் போன்றவர்கள் தமிழகத்தில் எழுதப்பட்ட நாடகங்களையே மேடையேற்றிக் கொண்டிருந்த வேளையிற் சம்பந்தர் தாமாகவே நாடகங்களை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“இருபதுகளின் ஏனைய நாடகக்குழுக்களிடம் இல்லாத முக்கியமான இயல்பினைச் சரஸ்வதி விலாசசபையினரிடம் காணலாம். அதாவது ஏனைய நாடகக் குழுக்கள் யாவும் ராஜ்பகதூர் பம்மல் சம்பந்த முதலியாரது நாடகங்களில் தங்கி நிற்க இவர்கள் அதனோடு கூடவே பல சுய ஆக்க எழுத்துருக்களோடு அரங்கிற்கு வந்தார்கள்” எனச் சரஸ்வதி விலாசசபைபற்றி, அகிலன் பொதுவாகக் கூறுவது, சரஸ்வதி விலாசசபையினரின் ஏழு நாடகங்களில் ஆறு நாடகங்களை எழுதிய சம்பந்தருக்கே சிறப்பாக உரியதாகும்.
44 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

(6)
உரையாசிரியர்
D.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் பணிகளுள் முக்கி யமானது பல்வேறு நூல்களுக்கு உரை எழுதியமையாகும். கதிர்காமவேலன் திருவருட்பா, கல்வளையந்தாதி, நமச்சிவாய மாலை என்னும் நூல்களுக்கும் அரிச்சந்திரபுராணம் மயான காண்டம், திருக்குறள் முதல் இருபது அதிகாரங்கள், வில்லிபாரதத்தில் இராசசூயச்சருக்கம், புட்யாத்திரைச்சருக்கம், கிருஸ்ணன்தூதுச் சருக்கம், கந்தபுராணத்திற் சரவணப்படலம், திருவிளையாடற்படலம் என்னும் நூல்களின் பகுதிகளுக்கும் அவர் உரை எழுதியுள்ளார். செந்தமிழ் வாசகசிந்தாமணி என்னும் பாடநூலில் நளவெண்பா - கலிநீங்குகாண்டம், நாலடியார்- கல்வி என்னும் அதிகாரம், கந்தபுராணம் - வில்லவன் வாதாவி வதைப்படலம், கம்பராமாயணம் - மாரீசன் வதைப்படலம், திருக்குறள் - கேள்வி என்னும் அதி காரம்,பழமொழிநாநூறு சில பாடல்கள் என்பவற்றுக்கும் தேவார திருவாசகத் திரட்டிலே திருநீற்றுப்பதிகம், நமசிவாய திருப்பதிகம், திருகோணமலைத் திருப்பதிகம், திருவாசகம் என்பவற்றுக்கும் சம்பந்தரின் உரைகள் உள்ளன. இவற்றினை நோக்கும்போது தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் முக்கியமானதாகக் கருதப்படும் இலக்கியங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு சிறு பகுதிக்கேனும் அவர் உரை எழுதியுள்ளார் என்பதுப்புலனாகின்றது.
சம்பந்தர் இந்நூல்களுக்கு எழுதிய உரைகள் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விசேடவுரை, நுண்பொருள் விளக்கவுரை என ஐவகையாகக் காணப்படுகின்றன. இவற்றுட் பதவுரை என்பது பதங்களைப் பிரித்துச் சொல்லுக்குச் சொல் உரை கூறுவதாகும். பொழிப்புரை என்பது செய்யுளின் சாரத்தைக் கூறுவது. கருத்துரை, செய்யுளின் கருத்தைக் கூறுவது. நுண்பொருள் விளக்கவுரை என்பது செய்யுட்பொருளின் நுட்பத்தை எடுத்துக் கூறுவது. விசேடவுரை, இவ்வுரைக்கும் மேலாகச் செய்யுளில் உள்ள இலக்கணக் குறிப்புக்கள், விசேடமாக அமைந்திருக்கும் பொருட்சிறப்பு என்பவற்றைத் தருவதாகும். சம்பந்தர் நமசிவாய மாலைக்குப் பதவுரை மட்டுமே எழுதியுள்ளார். வில்லி பாரதம் இராசசூயச் சருக்கத்திற்குப்
ம.பா. மகாலிங்கசிவம் 45

Page 31
பதவுரையும் பொழிப்புரையும் எழுதப்பட்டுள்ளன. திருக்குறள் (1-20 அதிகாரங்கள்) கல்வளையந்தாதி என்பவற்றுக்குப் பதவுரையும் விசேடவுரையும் எழுதப்பட்டுள்ளன. தேவாரதிருவாசகத் திரட்டுக்குப் பொழிப்புரையும், அரிச்சந்திரபுராணம் மயானகாண்டத்திற்கு பொழிப்புரையோடு விசேட உரையும் எழுதியுள்ளார். கதிர்காமவேலன் திருவருட்பா, புட்பயாத்திரைச் சருக்கம் ஆகிய நூல்களுக்கும் நுண்பொருள் விளக்கவுரை எழுதியுள்ளார்.
அவர் இலக்கியங்களுக்கு உரை எழுதியதற்கான காரணத்தை, "இவ்வந்தாதிக்கு இயற்றமிழ்ப் போதகராசிரியராக விளங்கிய வல்வை ச.வைத்தியலிங்கம் செய்த பதவுரை ஒன்று உள்ளது. அவ்வுரை திட்பநுட்பம் வாய்ந்ததேனும், தமிழ் கல்வி அருகிவரும் இக்காலத்து மாணாக்கருக்கு உபாத்தியார் உதவியின்றிப் பயின்று கொள்வதற்கு அமைந்ததன்றாகலின் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரின் கேள்விப்படி இவ்வந்தாதிக்கு இந்தப் பழைய உரையைத் தழுவி அற்ப கல்வி அறிவுடையவர்களுக்கும் இலகுவில் விளங்கத் தக்கதாக ஒரு விரிவான உரையை எழுதியுள்ளோம்.” எனக் கல்வளையந்தாதி உரைபற்றிக் குறிப்பிடுவதனுாடாக அறியலாம். இதிலிருந்து ஓர் உரையானது வித்துவ வேலைப் பாடுகளுடன் இருப்பதைக் காட்டிலும் அது இலக்கியத்தைச் சாதாரண கல்வி அறிவுடையோருக்கும் விளங்க வைப்பதாக இருப்பதே முக்கியமென அவர் கருதியமை புலனாகின்றது. மற்றவர்களுக்கு விளங்க எழுத வேண்டுமெனபதற்காக அவர் தொல்லாசிரியர் மரபை மீறவும் தயாராக இருந்தார் என்பதை,
"இப்பொழிப்புரை மாணவர்கட்குப் பெரிதும் பயன்படும்வண்ணம் எழுதப்பட்டமையால் தொல்லாசிரியருடைய நடையின்றும் பேதமுற்றிருக்குமென எண்ணுகின்றேன். ஆயினும் எழுதிய நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் என்பதே எமது நம்பிக்கை” எனக் கூறுவதன் மூலம் அறியலாம்.
சம்பந்தர் எழுதிய உரைகளிற் பெரும்பாலானவை பதவுரைகளாக இருக்கின்றமையால் செய்யுளை சிறு சிறு பதங்களாகப்பிரித்து எளிதில் விளங்கும்படியாகப் பொருள் கூறுகின்றார். பாடலுக்குக் கொண்டு கூட்டுக்கள் இன்றிப் பெரும்பாலும் நேரடியாகவே பொருள் கூறுகின்றார்.
46 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

"இயம் - பிச்சை, ஏற்று - எடுத்து, உண்டாய் - உண்டவரே, பாதம் - பாதங்களே, அன்பு - (தேவரீரிடத்துப்)பத்தி, இல்லேன் இல்லாத சிறியேனுடைய, தலைமேல்-தலையின்மேல்,
வைத்த - வைத் தருளிய, செய்யனே - சிவந்த
மேனியுடையவரே, வானோர் - தேவர்கள், போற்றும்
துதிக்கின்ற, தேவனே - கடவுளே, - நமச்சிவாய எ-று” எனச் சிறு சிறு பதங்களாகப் பிரித்து இலகுவாக விளங்கும்படி பொருள் கூறுகின்றார்.
அரிச்சந்திரபுராணம் மயானகாண்டம் உரை பொழிப்புரையாக அமைந்ததாற் பெரும்பாலும் பதத்தைப் பிரித்துப் பொருள் கொள்ளாமற் பொருளை மட்டும் தனியே எழுதுகின்றார். கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளவேண்டிய சிக்கலான பாடல் உள்ள இடங்களில் மட்டும் பதங்களைப் பிரித்து எழுதி அதற்கு நேரே பொருள் கூறுகின்றார்.
"ஆறெல்லாம் அடிகள் வைத்த அடியெல்லாம் விழிநீர் நின்ற தூறெல்லாம் அரிவை சென்ற சுவடெல்லாங் குருதி சொட்ட மாறெல்லாம் கூந்தல் துன்று வனமெலாந் துணிகள் யாக்குந் தேறேல்லாம் தகைமைத் தன்றிச் செடியெல்லாம் தேடிச்
சென்றாள்" என்னும் பாடலுக்கு,
"துன்று வனமெல்லாம் ஆறு எல்லாம் அடிகள்- நெருங்கிய காட்டு மார்க்கம் எல்லாம்(சந்திரவதி சென்றனளாதலின் அவளது) அடிச்சுவடுகள் உள்ளன,வைத்த அடி எல்லாம் விழிநீர் நின்ற- வைத்த அடிச்சுவடெல்லாம் (அவளது) கண்ணிரப் பெருக்கு நிறைந்தன. அரிவை சென்ற தூறெல்லாம் மாறு எல்லாம் கூந்தல் துணிகள் - சந்திரவதி சென்ற புதர்களின் கிளைகளிலெல்லாம் அவள் கூந்தலும் வஸ்திரமும்." என பதங்களைப் பிரித்துக் கொண்டு கூட்டி எழுதி அதற்கு நேரே உரை எழுதுகின்றமையைக் காணலாம்.
தேவார திருவாசகத் திரட்டிலே திருக்கேதீச்சரத் திருப்பதிகத்துக்கு வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை எழுதிய உரையை அப்படியே கொடுத்துள்ளார். திருகோணமலைத் திருப்பதிகம், நமசிவாய திருப்பதிகம் முதலியவற்றுக்கு தாமே உரை எழுதியுள்ளார். பொன்னம்பலப் பிள்ளையின் உரையை நோக்கினால்,
ம.பா. மகாலிங்கசிவம் 47

Page 32
"பரந்து உயர்ந்த பெட்டி போன்ற சடாமுடியிலே பெரிய கங்கை யைப் பொருந்தும்படி வைத்து ஒரு பாகத்தை அருட்சத்திக்குக் கொடுத்த கொள்கையை உடையவரும், விஷ்ணுவாகிய பன்றி யினது எயிற்றை அணிந்த மார்பை உடையவருமாகிய சிவபெருமான், தமது இருப்பிடமாகிய வானரச் சோலைகளிலே மந்திகள் மகிழ்ச்சி பெருக இருக்கின்ற மாந்தோட்டத்தில் உள்ள திருக்கேதீச்சரம் என்னும் தலத்தை ஒரு காலத்தும் பிரியார் எறு”* என உரை அமைகின்றது. ஒரு பாடலின் உரை ஒரே வசனமாகி பாடல்கள் முடிகின்ற இடத்திலேயே வசனமும் முடிகின்ற தன்மையைப் பொன்னம்பலப்பிள்ளையின் உரையிலே காணலாம். சம்பந்தரின் உரையை இதனோடு ஒப்பிட்டு நோக்கினால் அவர் உரை இதிலிருந்தும் வளர்ச்சியடைந்ததாக, சிறப்பு மிக்கதாகக் காணப்படுகின்றது.
திருகோணமலைப் பதிகம் எட்டாம் பாடலுக்கு,
"(கைலை மலையை) எடுக் க முயன்றவனாகிய இராவணனுடைய கர்வத்தைத் தமது திருவடிப்பெருவிரலால் ஊன்றிக் கெடுத்தவர். அவ்விராவணன் பின்னர்த் தோத்திரம் பண்ண அவனுக்கு அதிகாரம் முதலிய செல்வங்களைக் கொடுத்தவர். தோன்றுதலாகிய பிறப்பும் பின்னர் வருதலாகிய இறப்பும் இல்லாதவர். தம்மைப் புறக்கணித்துத் தக்கன் செய்த யாகத்தை நிறைவேறவொட்டாது தடுத்தவர். பின்னர் அத்தக்கனுக்குத் தம்மிடத்து இயல்பாகவுள்ள கருணையாற் பெருமையையும் வாழ்வையும் கொடுத்தருளியவர். எவராலும் விரும்பப்படும் மிக்க புகழையுடையவர் என்னும் இச்சிறப்புக்களோடு கூடிய பரமேஸ்வரன் திருகோணமலை யென்னுந் தலத்தில் எழுந்தருளியுள்ளார்."
என உரை எழுதுகின்றார்.
இங்கு சம்பந்தர், பாடலைப் பொருளுக்கேற்ப பிரித்துச் சிறுசிறு வாக்கியங்களாக எழுதுவதைக் காண முடிகின்றது. உரையெழுதிச் செல்லும்போது பாடலின் தேவைக்கு ஏற்ப இலக்கணக் குறிப்புக்க ளைக் கொடுத்துச் செல்வதும் சம்பந்தரின் வழமையாகும். இது பாடலின் பொருளை மேலும் விளங்கவைப்பதோடு படிப்பவருக்கு இலக்கண அறிவை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.
48 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

"வரவலளோ என்பதில் ஒகாரம் எதிர்மறை-வரக்கூடிய வளல்லள் என்பது பொருள். இலஸ், இல்லாதவள் ஆவள் எனக் குறிப்புவினை ஆக்கத்துடன் காலம் விரித்துப் பொருளு ரைக்கப்பட்டது. எதிர்காலத்ததாதலின் இவ்வாறு குறிப்புவினை எதிர்காலத்து விரிதலைச் சேனாவரையருரையானு முணர்க. யாது காரணத்தால் என்னும் பொருள் பயக்கும் ஏன் என்பது அவாய் நிலையாற்றொற்க இவள் இங்கனம் இருத்தல் (கைக்கயிற்றுட்பட்டும் மறையாமலும் இருத்தல்) என்ற சொற்களைத் தொடர்ந்து தனிவாக்கியமாயிற்று" எனும் உரைப்பகுதியில் இதனைக் காணலாம். இலக்கண அறிவு வெளிப்படுவது போலவே இவருரைகளிற் சைவசித்தாந்த அறிவும் வெளிப்படுவதை அவதானிக்க முடிகிறது.
சம்பந்தர் உரையெழுதிச் செல்கின்றபோது செய்யுளில் வருகின்ற புராண சம்பவங்களை அல்லது கதைகளை எடுத்துக் கூறிச் செல்வதும் சம்பந்தரின் பண்பாகும். "முன்னால் விளைந்த கனல் மூழ்கவெம்மின் முதலே நடந்த மதலாய்” எனும் மயானகாண்டப் பாடலடிக்கு அரிச்சந்திரனின் மகன் நெருப்பில் விழுவதற்கு தாய் தந்தையரை முந்திச் சென்றதான முன் நிகழ்ந்த கதையைக் கூறுகின்றார். இதுபோலவே கல்வளை அந்தாதியில் உள்ள பாடலில் வரும் புராணக் குறிப்புகளோடு தொடர்புடையனவான திருமால் பிரமன் அடிமுடி தேடிய வரலாறு, திருமால் மோகினியாகி அமுதம் பகிர்ந்த கதை முதலியன கூறப்படுகின்றன.
சம்பந்தரின் படைப்புக்களை முழுமையாக ஆராய்ந்தால் அவர் இருவகையான உரை நடைகளைப் பயன்படுத்துவதை அவதானிக் கலாம். ஒன்று பொதுமக்களின் பேச்சுவழக்குச் சொற்களை அதிகம் கொண்டதாய் பழமொழிகள் நீதிநூற் கருத்துக்கள் என்பன விரவி வருகின்ற உரைநடை. அவரது புனைகதைகளிலும் இந்து சாதனம் பத்திரிகை எழுத்துக்களிலும் இதனைக் காணலாம். இது பற்றிப் "புனைக்கதையாசிரியர்” என்னும் அத்தியாயத்திலே விரிவாகக் கூறப் பட்டது. இன்னொன்று ஆறுமுகநாவலரின் உரைநடையைப் பின்பற்றி அமைந்த ஓர் உரைநடையாகும். இவ்வகை உரைநடை அவர் உரையெழுத்திய நூல்களின் முகவுரைகளிலும் காணப்படுகின்றது. இவ்விரு உரைநடைகளுக்கும் இடையே அவர் ஆக்கங்களில் மிகத்தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றன.
"இன்னும் ஆறுதலாகப் பேசிக்கொள்வோம்"
ம.பா. மகாலிங்கசிவம் 49

Page 33
“அவனுடைய மனம் எங்கே சென்றிருந்ததென்பதை
நாமெல்லோரும் அறிவோ மல்லவா” என்னும் பகுதிகள் கோபால நேசரத்தினம் நாவலிற் பாத்திரங்களின் உரையாடலாக அமைந்தவை, இங்கு, கொள்வோம், எல்லோரும், அறிவோம் என்பவற்றில் 'ஓம்' என்னும் தன்மைப்பன்மை விகுதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களின் பேச்சுவழக்கிற் பயன்படுத்தப்படுவதாகும். ஆனால் உரைநூல்களில்,
“சைவ பரிபாலனசபையார் பொறுப்பில் வெளியிடலானேம்"
"நன்றி பாராட்டுகின்றேம்”
“அடுத்தபதிப்பில் நன்றியறிதலோடு திருத்திவைப்பேம்" என்னும் வாக்கியங்களில் ‘ஏம்’ என்னும் பலர்பால் விகுதியே பயன்படுத்தப்படுகின்றது. இது ஏட்டு வழக்கிற்கு உரியதாகும். இவ்வெடுத்துக்காட்டுக்கள் சம்பந்தரது இருவகையான உரைநடைக ளுக்கும் இடையேயான வேறுபாடுகளை உணர்த்தும் மாதிரிகளாக அமைகின்றன.
“எங்கள் சமயகுரவர் நால்வருள் ஒருவராக விளங்கும் மாணிக்கவாசக சுவாமிகளுடைய திவ்விய சரித்திரம் எமது தந்தையார் இயற்றிய திருவாதவூரடிகள் புராண விருத் தியுரையை ஆதாரமாகக் கொண்டு ஆறுமுகநாவலர் எழுதிய பெரிய புராண வசனத்தின் நடையையும் இயன்றவரையிற் பின்பற்றி எழுதப்பெற்றதாகும்”
என மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரம் பற்றிச் சம்பந்தரே கூறுவதுபோல அவருடைய உரை நடையின் பெரும்பகுதி ஆறுமுகநாவலரின் உரைநடையைப் பின்பற்றியே அமைந்துள்ளது. எனினும் இவ்விருவரினதும் உரைநடைகள் சில முக்கிய இயல் புகளில் வேறுபடுகின்றன. வடமொழிச் சொற்களைப் பெருமளவிற் கையாள்வதும் சில இடங்களில் மிக நீண்ட வசனங்களை எழுதுவதும் நாவலரின் தனித்தன்மையாகும். அவரின் சில வசனங்கள் ஒரு பக்கத்துக்கு மேலாகவும் நீண்டு செல்கின்றமை குறிப்பிடத் தக்கதாகும். ஆனாற் சம்பந்தர் வடமொழிச் சொற்களை முடிந்தவரை நீக்கித் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்துகின்றார். இவ்விரு வருடைய உரைநடைகளும் வடமொழிச் சொற் பயன்பாட்டில் வேறு படும் மிகச் சிறப்பான நிலையைச் சமயகுரவர் சந்தான குரவர் சரித்திரத்திற் காணலாம்.
50 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

“இவ்வாறு தொகுத்தெழுதும் போது 'முன்னோர் மொழி பொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோற் போற்றுவம்' என்ற பிரகாரம் இன்றியமையாத சில இடங்களில் நாவலப் பெரியாருடைய அரிய வசனங்களையே எடுத்தாண்டுள்ளேன்' என நூன்முகத்திற் குறிப்பிடுகின்றார். ஆனால் நாவலருடைய பெரியபுராணவசனத்தில் உள்ள அரிய வசனங்களை எழுத்தா ளுகின்ற இடங்களில் மூல நூலில் உள்ள முழுச் சொற்களையும் அப்படியே பயன்படுத்த வில்லை.
"திருஞானசம்பந்தப்பிள்ளையார், மற்றநாள், பிராதக்காலத்திலே ஆலயத்திற் சென்று . ” (பெரிய புராண வசனம்)
"திருஞானசம்பந்தப்பிள்ளையார், அடுத்தநாள், அதிகாலையில் ஆலயத்திற் சென்று . ’ (சம்பந்தர் எடுத்தாண்ட வசனம்)
“பின்பு ஒரு பிரகாரம் மனசைத் திருப்பி புஸ்பங்களைக் கொய்து கொண்டு . ’ (பெரிய புராண வசனம்)
“பின்னர் ஒருவாறு தம்மனசைத் திருப்பிப் பூக்களைக் கொய்து கொண்டு . ” (சம்பந்தர் எடுத்தாண்ட 618F607b)
ஆறுமுகநாவலர் பயன்படுத்திய பிராதக்காலம், ஒரு பிரகாரம், புஸ்பங்கள் என்றும் வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக அதிகாலை, ஒருவாறு, பூக்கள் என்னுந் தமிழ்ச் சொற்களை அவரின் வசனத்திலேயே சம்பந்தர் புகுத்துவதை இங்கு காணலாம்.
வாக்கியங்கள் எழுதும்போது மிக நீண்ட வசனங்களை விட்டு எளிமையான சிறிய வாக்கியங்களை எழுதுவதே சம்பந்தரின் பண்பாகும். பத்திரிகைத்துறை அனுபவங்களும் அவருக்கு இதற்கு உதவியிருக்கலாம்.
"இவருடைய பாடல்கள் சொன்னயம் பொருணயஞ் செறிந்தன. இலகுவான தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டன. நவரசங்களும் அமைந்தன. சந்தவின்பம் பொலிந்துள்ளன. தன் மகனைப் பறிகொடுத்த சந்திரவதி புலம்பலாக இந்நூலின் மயான காண்டத்தில் வருங்கவிகள் சோக ரசத்தோடு கூடியனவாய், படிப்போர், கேட்போர் உள்ளத்தை உருக்குமியல்பின" எனும் பகுதியிற் சிறுசிறு வாக்கியங்களால் அமைந்த அவரின் சிறப்பான உரைநடையைக் காணலாம். அவருரையின் சில பகுதிகள்
ம.பா. மகாலிங்கசிவம் 51

Page 34
பழந்தமிழ் உரையாசிரியர்களின் உரையினை நினைவூட்டுவனவாகவும் அமைந்துள்ளன.
“தம்மை வழிபடுவோருக்கு விக்கினங்களை நீக்கி வழிபடார்க்கு விக்கினங்களை ஆக்குதலின் விநாயகக் கடவுளுக்கு விக்கினேசுவரன் எனவும் ஒரு திருநாமம் உண்டு. தம்மை வழிபடார்க்கு விக்கினங்களையாக்குதல் இறைவ னுக்கு முறையாகுமோ எனின், அற்றன்று, பாசத்தினாற் பாதிக்கப்பட்ட ஆன்மாக்களை ஈடேற்றுவதற்கு அப்பெருமான் இயற்றியருளும் மறக் கருணை முறை அதுவாகும்”* என்னும் உரைப்பகுதி சேனவரையர், நச்சினார்க்கினியர் உரைகளை ஒத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சம்பந்தரின் உரைநடையிற் குறியீடுகளைப் பயன்படுத்தும் தன்மையிற் சில சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானது வாக்கியம் முடிகின்ற இடத்தில் முற்றுப்புள்ளி இடாமல் அரைப்புள்ளி இடுவதாகும். ஒரு பொருளைப் பற்றிக் கூறுவதாக வருகின்ற பல வாக்கியங்கள் தொடர்ச்சியாக அரைப்புள்ளி பெற்றுவந்து ஈற்றில் மட்டும் முற்றுப்புள்ளி பெற்று நிற்கும். இதன் காரணமாக ஒரு பெரிய பந்தியே பல அரைப்புள்ளிகளைப் பெற்றதாய் ஈற்றில் ஒரே ஒரு முற்றுப்புள்ளி பெறுவதாக அமையும். அடுத்த முற்றுப்புள்ளி அடுத்த பந்தி முடிகின்ற இடத்திலேயே இடப்படும்.
“அடியார் பெருமையைப் பாடுதற் கருகராயுள்ளவர் சேக்கிழார் சுவாமிகள், கடவுள்மாமுனிவர் போன்ற அருங்கவிப்புலவராவர்; அதனைச் செந்தமிழ் நடையில் எழுதுவதற்குரியவர் ஆறுமுக நாவலவர்கள் போன்ற அறிஞராவர்; இங்கனமாகவும், எங்கள் சமயகுரவர் சந்தான குரவருடைய வரலாற்றையும் மகிமையையும் சுருக்கிச் சொல்வதாகிய சமய குரவர் சந்தான குரவர் சரித்திரச் சுருக்கம் என்னும் இந்நூலைத் தமியேன் சொல்லத் துணிந்தமை என் அறிவு மேலிட்டினாலன்று; தொண்டர் பெருமையைச் சொல்லும்பேறு தமியேனுக்கும் கிடைக்குமே என்ற ஆசை மேலிட்டினாலேயாகும்." எனும் பகுதியில் இதனைக் காணலாம். இங்கு வாக்கிய அமைப்பை விடப் பொருள் அமைப்புக்கே சம்பந்தர் முக்கியத்துவம் கொடுப்பதை அவதானிக்க முடிகிறது.
52 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

(7)
பதிப்பாசிரியர்
"செய்யுள்வடிவாகிய நூல்களும் அவைகளின் உரைகளும் கற்று வல்லவர் சிலருக் கன்றி மற்றவர்களுக்குப் பயன்பாடாவாம். ஆதலால் விவேகமில்லாதவர்களுக்கும் விவேகமுள்ளவர்களுக்கும் இங்கிலீசு பாசையைக் கற்றலிலும் லெளகீகங்களைச் செய்தலிலும் தங்கள் கவனத்தைப் பெரும்பான்மை போக்குகின்றவர்களுக்கும் பெண்களுக்கும் எளிதிற் பயன்படும் பொருட்டு நீதிநூல்களையும் வெளிப்படை யாகிய வசன நடையிற் செய்து அச்சிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்தல் வேண்டும்" என ஆறுமுகநாவலர் வேண்டுகோள் விடுத்தார். இவ்வேண்டுகோள் நாவலர் பதிப்பு முயற்சிகளிலே ஈடுபட்டதற்கான காரணத்தையும் அவர் பதிப்புகளின் தன்மைகளையும் அவரெழுதிய வசனநூல்களின் பண்பையும் பாடப் புத்தகங்களின் தேவையையும் பின்வந்தோர்க்குத் தெளிவாக உணர்த்துவனவாக அமைந்துள்ளன. இக்கருத்துக்கள் அவர் பரம்பரையிலே வந்தவர்களுக்கு நூற்பதிப்புப் பணியில் ஈடுபட ஊக்கமளித்தன.
நாவலிரின் பணியைத் தொடர்ந்து ஈழத்திற் பலர் நூற்பதிப்பு முயற்சியில் ஈடுபட்டனர். இவ்வகையில் தமிழகத்திலும் சிறந்த பதிப்பாசிரியர் எனப் பெயர்பெற்ற சி.வை.தாமோரம்பிள்ளை குறிப்பிடத்தக்கவர் ஆவார். அவர் நீதி நூல் விளக்கத்தைத் தமது இருபதாவது வயதிற் பதிப்பித்தார். 1868இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையருரையைப் பதிப்பித்தார். இதனைப் பரிசோதித்தவர் நாவலர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் இறையனார் களவியல், இலக்கணவிளக்கம், வீரசோழியம், தொல் காப்பியம் முழுவதும் (வேறுவேறு உரைகளுடன்), கலித்தொகை, சூளாமணி, தணிகைப் புராணம் என்பனவும் தாமோதரம்பிள்ளையாற் பதிப்பிக்கப்பட்டன. நாவலர் சமய, இலக்கண நூல்களை மட்டும் பதிப்பிக் க, சி.வை.தா. பழந் தமிழ் இலக்கியங்களையும் பதிப்பித்தமை கவனத்திற்குரியதாகும். நாவலர்
ம.பா. மகாலிங்கசிவம் 53

Page 35
பரம்பரையில் வந்த ம.க.வேற்பிள்ளை வேதாரணிய புராணம், சிவகாமியம்மைசதகம் என்னும் நூல்களைப் பதிப்பித்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கதாகும். இவர்கள் வழியில் ம.வே.திரு ஞானசம்பந்தப் பிள்ளையும் பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
சம்பந்தரின் பதிப்பு முயற்சிகளுக்கான சூழல் சைவ பரிபாலன சபையாராலேயே உருவாக்கப்பட்டது. 1923ஆம் ஆண்டிற் சேர். பொன். இராமநாதன், வைத்தியலிங்கம் விஜயரத்தினம், வட்டுக்கோட்டை இராசரத்தினம், வைமன்வீதி இராசரத்தினம் முதலியோரின் முயற்சியால் சைவ வித்தியா விருத்திச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்தினாற் சைவவித்தியாசாலைகள் ஊர்கள் தோறும் புதிதாகத் தொடங்கப்பட்டன. சைவ பரிபாலனசபையார் முன்னரே பாடநூல்களைப் பதிப்பித்து வெளியிட்டிருந்த போதும் இச்சூழலில் அவை போதுமானதாயிருக்கவில்லை. இத்தேவைக்கேற்பச் சபையார் தமது பாடநூல்களைப் புதுக்கிப் பதிப்பிப்பதற்குச் சம்பந்தரைப் பதிப்பாசிரியராக நியமித்தனர். சம்பந்தர் சில பாடங்களைப் புதுக்கியும் பலவற்றை எழுதியும் மேல்வகுப்புகளுக்கான வரிசையைப் புதிதாகத் தயாரித்தும் ஆரம்பத்திற் பதிப் பித்தார். இச்சூழலினுடாகவே சம்பந்தர் ஒரு பதிப்பாசிரியராக உருவாகின்றார். தமது பெரும்பாலன நூல்களைச் சைவபரிபாலன சபையாரின் அச்சகத்திலேயே பதிப்பித்தபோதும் சண்முகநாதன் புத்தகசாலை அச்சகத்திலும் பூரீ லங்கா புத்தகசாலை அச்சகத்திலும் சில நூல்களைப் பதிப்பித்துள்ளார். ஈழமண்டலசதகத்தைச் சென்னை சென்று வித்தியாதுபாலன அச்சகத்திற் பதிப்பித்தார்.
சம்பந்தர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த மைக்கான ஆதாரபூர்வமான தகவல்களைப் பெறமுடிகின்றது. அவரின் பதிப்புகளைத் தொகுப்புப் பதிப்பு, உரைப்பதிப்பு, சுருக்கப்பதிப்பு என மூன்றாக வகைப்படுத்தலாம் போல் உள்ளது. ஒருவருடைய அல்லது பலருடைய படைப்புக்களிலிருந்து சில பகுதிகளைத் தொகுத்துத் தருவது தொகுபுப்பதிப்பாகும். உரைப்பதிப்பு என்பது ஒரு நூலுக்கு அல்லது அதன் பகுதிக்கு உரையெழுதிப் பதிப்ப தாகும். சுருக்கப் பதிப்பு என்பது ஒரு நூலினது மூலத்தை மட்டும் அல்லது நூலில் உள்ள கருத்துக்களைச் சுருக்கி வெளியிடுவதாகும். இம் மூன்றுவகையில் அவர் பதிப்பித்த நூல்கள் பாகுபடுத்தப்பட்டு அத்துடன் இன்று கிடைக்கும் நூல் எத்தனையாவது பதிப்பு என்பதும் அது பதிப்பிக்கப்பட்ட ஆண்டும் கீழே தரப்படுகின்றன.
54 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

(அ) தொகுப்பு பதிப்பு
ஆண்டு பதிப்பு 01. I சோமவாரவிரதமான்மியம் 1929 02ம் பதிப்பு 02. செந்தமிழ்வாசகசிந்தாமணி 1935 01ம் பதிப்பு 03. சமயகுரவர் சந்தானகுரவர் சரித்திரச் சுருக்கம் 1 1948 01ம் பதிப்பு 04. பிரதோசவிரதமான்மியம் 1951 01ம் பதிப்பு 05. தேவாரதிருவாசகத்திரட்டு 1955 01ம் பதிப்பு 06. கலாமஞ்சரி 07. சிவராத்திரி விரதமான்மியம் 08. ஒன்று தொடக்கம் எட்டு வரையான பால WW
UTL1B6i
(ஆ) உரைப் பதிப்பு:
ஆண்டு பதிப்பு 01. அரிச்சந்திரபுராணம் மயானகாண்டம் 1929 04ம் பதிப்பு 02. அரிச்சந்திரபுராணம் மயானகாண்டம் 1953 11ம் பதிப்பு 03. திருக்குறள் (முதல் இருபது அதிகாரங்கள்) 931 02ம் பதிப்பு 04. கதிர்காமவேலன் திருவருட்பா 1931 02ம் பதிப்பு 05. வில்லிபாரதம் - இராசசூயச் சருக்கம் 193 01ம் பதிப்பு 06. கல்வளை அந்நாதி 1934 01ம் பதிப்பு 07. மயூகிரிப்புராணம் 1937 02ம் பதிப்பு 08. நமச்சிவாயமாலை 1949 03ம் பதிப்பு 09. புட்பயாத்திரைச் சருக்கம் 1952 |02ம் பதிப்பு 10. நளவெண்பா - கலிநீங்குகாண்டம் 11. கிருஸ்ணன்தூதுச் சருக்கம் AA 12. திருக்குறள் (25-34 அதிகாரங்கள்) 13. ஈழமண்டலசதகம் (ந.சபாபதிப்பிள்ளை உரை) ருதிரோற்காரி01ம் பதிப்பு 14. ஈழமண்டலசதகம் (ம.க.வேற்பிள்ளை உரை) ருதிரோற்காரி 01ம் பதிப்பு 15. புலியூர் அந்நாதி 16. திருவாதவூரடிகள் புராணம் - பொழிப்புரை 1947 02ம் பதிப்பு 17. திருவாதவூரடிகள் புராணம் - விருத்தியுரை 1915 |02ம் பதிப்பு 18. திருவாதவூரடிகள் புராணம் - விருத்தியுரை 1939 03ம் பதிப்பு
(இ) சுருக்கப் பதிப்பு :
ஆண்டு பதிப்பு 01. மாணிக்கவாசகசுவாமிகள் சரித்திரச்சுருக்கம் 1954 04ம் பதிப்பு 02. செந்தமிழ்மொழிவளம்
ம.பா. மகாலிங்கசிவம் 55

Page 36
சம்பந்தரின் பதிப்புக்களிலிருந்து அவரின் பதிப்பு நோக்கங்களையும் பதிப்புக்கான நெறிமுறைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. அவரின் பதிப்பு நோக்கங்கள் பலவாக அமைந்தாலும் பதிப்புக்கள் மாணவர்களின் பாடநூல்களுக்கான தேவையை நிறைவேற்றுவன வாகவே அமைந்துள்ளன.
“செந்தமிழ் வாசக சிந்தாமணி முதற்தொகுதி என்னும் இப்புத்தகமானது கனிஷ்ட பாடசாலை விடுகைத்தராதர வகுப்பு, பிரவேச பண்டித வகுப்பு, லண்டன் மற்றிக் வகுப்பு முதலியவற்றில் பயிலும் மாணாக்கருக்கு உபயோகமாகும்படி வித்தியா பகுதியின் புதிய நூல்களிலும் இருந்து தொகுத்த செய்யுள்களையும் பாடங்களையும் இவற்றின் உரை அரும்பதவிளக்கம் என்னுமிவைகளையும் தன்னகத்தே அடக்கியுள்ளதாகும்.” என்னும் செந்தமிழ்வாசக சிந்தாமணி முகவுரை இவர் பாடநூல் தேவைகளை மனதிற்கொண்டு பாடத்திட்டத்துக்கு அமையவே இந்நூலைத் தயாரித்துப் பதிப்பித்தார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எனினும் இவர் எழுதிப் பதிப்பித்த பல நூல்கள் பதிப்பிக்கப்பட்டதன் பின்னர் விவேகானந்தா சபை முதல் "கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் வரை பாடநூல்களாகக் கொள்ளப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரம் விவேகானந்தா சபை மேற்பிரிவுப் பரீட்சைக்கும், அயோத்தியா காண்டம் "கேம்பிறிட்ஜ் யூனியர் பரீட்சை, ஆசிரியர் பயிற்சிப் பரீட்சை, இலங்கைப் பல்கலைக்ழகக் கல்லூரிப் பிரவேசப் பரீட்சை என்பவற்றுக்கும், மயானகாண்டம், தேவாரதிருவாசகத்திரட்டு என்பன எஸ்.எஸ்.சி.வகுப்புக்கும் கலாமஞ்சரி ஈ.எஸ்.எல்.சி. வகுப்புக்கும் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத் தக்கதாகும்.
மேலும் இவரது பதிப்பு நோக்கங்களுட் சுத்தப்பதிப்புக் கிடைக்க வேண்டும் என்பதும் அவை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதும் உள்ளடங்கி இருந்தமையை,
“இதனை நாவலர் ஏற்கனவே வெளியிட்டுள்ளார், அப்பிரதிகள் இப்பொழுது கிடைத்தலரிது. இக்காலத்திற் பிறரால் வெளியிடப்பட்டு வரும் இப்பிரபந்தம் பிழைகள் விரவியதாய்க் காணப்படுகின்றது.” எனும் கதிர்காமவேலன் திருவருட்பா முன்னுரையால் அறியலாம்.
56 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

சம்பந்தரின் பதிப்புக்கள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில் உள்ளதைக் காண முடிகின்றது. நூலின் முன் அட்டையில் நூலின் பெயரும் தனது பெயரும் விலையும் பதிப்பித்த ஆண்டும் இடம்பெறும். அவர் தமது பெயரை “பண்தர் ம.வே.திருஞான சம்பந்தப்பிள்ளை” என்றே எழுதுவது வழமையாகும். எல்லா நூல்க ளினதும் அட்டைகள் தமிழில் எழுதப்பட்டிருக்க அரிச்சந்திர புராணம்
மயானகாண்டம் மட்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதற்கு இந்நூல் "கேம்பிறிட்ஜ் பல்கலைகழகப் பாடத் தேவைக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்டமை காரணமாகலாம். எல்லா நூல்களின் அட்டையிலும் நூலுக்கு எவ்வகையான உரை (பதவுரை பொழிப்புரை / விளக்கவுரை) எழுதப்பட்டுள்ளது என்பதும் நூலாசிரியர் வரலாறு இடம்பெற்றால் அதுவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இப்பதிப்புக்களில் முன் அட்டையை அடுத்துவரும் முதற் பக்கமே மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இங்கு நூற் பதிப்புப் பற்றிய முழுமையான தகவல்கள் தரப்படும். இங்கு மூல நூலின் ஆசிரியர் பெயர், உரை எழுதியவர் பெயர், உரை எழுதியவரின் சிறப்புக்கள், எங்கு பதிப்பிக்கப்பட்டது, எத்தனையாம் பதிப்பு என்பன குறிப்பிடப்படுகின்றன. பெரும்பாலும் பதிப்பிக்கப்படும் நூல் பதிப்பிக்கப்பட்ட அச்சகத்தின் எத்தனையாவது வெளியீடு என்பதும் தரப்படும். கதிர்காமவேலன் திருவருட்பா’ சிறிலங்கா புத்தகசாலையின் ஆறாவது வெளியீடாகும். தமிழ் ஆண்டும் ஆங்கில வருடமும் இவற்றிற் கொடுக்கப்படும். எல்லா நூல்களிலும் முதற் பக்கத்தின் மேற்புறத்தில் உ-சிவமயம் என்று இருக்கச் சோமவார விரதமான்மியத்தில் மட்டும் கணபதி துணை என்றிருக்கிறது.
இவர் பதிப்புகளில் இரண்டாவது பக்கத்தில் நூன்முகம் இடம்பெறும். சோமவாரவிரத மான்மியம், பிரதோசவிரத மான்மியம், மயானகாண்டம் ஆகிய மூன்று நூல்கள் தவிர்ந்த ஏனைய நூல்களுக்கு நூன்முகம் உள்ளது. மயானகாண்டம் பதினோராம் பதப் பரில் நூலாசிரியர் வரலாறு மட்டும் இடம் பெற கல்வளையத்தாதியில் நூன்முகமும் நூலாசிரியர் வரலாறும் எழுதப் பட்டுள்ளன.
நூன் முகத்தில் நூல் பதிப்பிக்கப்பட்டதற்கான காரணம், முன்னர் பதிப்பித்தவர்களின் பெயர், நூலின் சிறப்பு, நூல் எழுந்தகாலம்,
LO. UT. Lm5IT6S5f6Juh 57

Page 37
நூலாசிரியர் காலம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. மூலநூல் அல்லது நூலாசிரியர் பற்றிய பல்வேறு சர்ச்சைகளையும் குறிப்பிட்டு அவற்றுக்குத் தீர்வு கூறும் போக்கும் இப்பகுதியிற் காணப்படும். கதிர்காமவேலன் திருவருட்பாவில்,
“இந்துநூலாசிரியரின் பெயரும் பிரதிக்குப் பிரதி வேறு வேறாக வரையப்பட்டுள்ளது. இன்னொரு பதிப்பில் இதன் ஆசிரியர் குமரகுருபர சுவாமிகள் எனக் குறிக்கப்பட்டுள்ளது. வேறொரு பதிப்புப் பிரதியில் நூலாசிரியரின் பெயர் தேவராஜ சுவாமிகள் எனக் குறிப்பிட்டுள்ளது. உற்று ஆராயப் புகுவோருக்கு இம் மூவருள் எவரேனும் இந்நூலாசிரியர் அல்லர் என்பது புலனாகும். இந்நூலின் உண்மையான ஆசிரியர் திருக்கை லாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் பத்தாவது குருமூர்த் தியாகிய சிவஞானதேசிக சுவாமிகள் ஆவர். இச்சுவாமிகள் காலம் பதினேழாம் நூற்றாண்டு ஆகும்.” என நூலாசிரியர் பற்றிய சர்ச்சைகளைக் கூறித் தீர்வுக்கு வருகின்றார். இது போலவே கல்வளை அந்தாதியிற் சின்னத்தம்பிப் புலவரின் தந்தையார் வில்லவராய முதலியாரா அல்லது விலலவதாச முதலியாரா என்னும் இரு கருத்துக்கள் உள்ளமையைக் கூறித் தீர்வுக்கு வருகின்றார். இத்தீர்வுக்குக் கச்சேரிப் பதிவுகளைச் சான்று காட்டுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஒவ்வொரு நூலின் பதிப்பின்போதும் தமக்கு உதவியவர்களின் பெயர்கள், தொகுப்பு நூலாயின் தொகுப்புக்கள் எங்கு இருந்து எடுக்கப்படுகின்றன என்னும் தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. “இங்ங்ணம் தொகுத்து எழுதும்போது ஆறுமுகநாவலர் அவர்கள் செய்த பெரியபுராண வசனத்தை ஆதாரமாகக் கொண்டு தொகுத்தேன். இன்றியமையாத சில இடங்களில் நாவலப் பெரியாருடைய அரிய வசனங்களையே எடுத்தாண்டுள்ளேன். மாணிக்கவாசக சுவாமிகள் வரலாற்றை எந்தையார் எழுதிய திருவாதவூரடிகள் புராண விருத்தியுரையை ஆதாரமாகக் கொண்டு முந்திய நான் எழுதி வெளியிட்ட மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரத்தைத் தழுவித் தொகுத்து எழுதினேன். சந்தானபுலவர் வரலாற்றைச் சைவத் திருவாளர் சே.வெ. ஜம்பலிங்கம்பிள்ளை அவர்கள் எழுதிய சந்தானபுலவர் வரலாற்றுச் சுருக்கத்தைத் தழுவிச் சிற்சில இடங்களில் முறையே விரித்தும் சுருக்கியும் தொகுத்துள்ளேன்.” எனச் சமையகுரவர் சந்தான குரவர் சரித்திரச் சுருக்கம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
58 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

இதுபோலவே தேவாரதிருவாசகத் திரட்டிலே திருநீற்றுப் பதிகம் நமச்சிவாயத் திருப்பதிகம் என்பவற்றுக்கு முன்னர் இருந்த பழைய உரையை ஆதாரமாகக் கொண்டு உரை எழுதியமையையும் திருகோணமலைத் திருப்பதிகத்துக்கு ம.க. வேற்பிள்ளை முன்னர் கூறிய சில குறிப்புக்களைக் கொண்டும் கற்றோர் சிலர்வாய்க் கேட்டும் உரை எழுதியமையையும் கூறுகின்றார். மயூரகிரிப்புராணத்துக்குப் பொன்னம்பலப்பிள்ளை எழுதிய உரைக்கு மேலதிகமாகத் தாம் எழுதிய விசேட உரையைப் பகர அடைப்புக் குறிக் குட் கொடுத்துள்ளார். இவை சம்பந்தரின் பதிப்பு நேர்மையை எடுத்துக் காட்டுகின்றன. திருக்குறட் பதிப்பில் (01-20 அதிகாரங்கள்) மட்டும் ஒவ்வொரு குறளுக்கும் ஆங்கில மொழிப் பெயர்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது யாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படவில்லை. இம் மொழிபெயர்ப்பைச் செய்தவர் சைவப் பெரியார் சு.சிவபாதசுந்தரம் ஆக இருக்கலாம் என ஊகிக்க முடிகின்றது.
சம்பந்தர் பதிப்பித்த பெரும்பாலான நூல்கள் பல பதிப்புக்களைப் பெற்றவையாகும். அரிச்சந்திர புராணம் மயான காண்டத்திற் பதினொரு பதிப்புக்கள் வெளிவந்துள்ளன. இவ்வாறான பல பதிப்புக்கள் வெளிவந்ததன் காரணமாக அவர் பதிப்புக்களிற் பாடபேதங்கள் நேர்ந்துள்ளன. பாட பேத திறனாய்வு வளர்ச்சியடைந்து வரும் இவ்வேளையிற் சம்பந்தரின் பதிப்புக்களிற் காணப்படும் பாடவேறுபாடுகள் குறித்து ஆராய வேண்டியது அவசியமானதாகும். இவ்வகையில் இரு பதிப்புக்கள் கிடைக்கின்ற மயான காண்டமும் திருவாதவூரடிகள் புராண உரையும் சிறப்பாக எடுத்துக்கொள்ளப் பட்டுப் பாடபேதங்கள் பற்றி ஆராயப்படுகின்றது.
மயானகாண்டம் நான்காம் பதிப்பும் (1929) பதினோராம் பதிப்பும் (1953) எமக்குக் கிடைக்கின்றன. நான்காம் பதிப்பிற் பொழிப்புரை மட்டும் இடம்பெறப் பதினோராம் பதிப்பிற் பொழிப்புரை, விசேடவுரை, இலக்கணக் குறிப்பு என்பவற்றுடன் நூலாசிரியர் வரலாறு நவமாக எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. முந்திய பதிப்பில் நூன்முகத்தில் இடம்பெறும் விடயங்கள் பிந்திய பதிப்பில் நூலாசிரியர் வரலாற்றுட் சேர்க்கப்பட்டுள்ளன. புதுக்கிய 11ஆம் பதிப்பு என்னும் குறிப்பு இம்மாற்றங்கள் 11ஆம் பதிப்பிலே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. பதிப்பாசிரியரின் பெயர் முந்திய பதிப்பில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரித் தமிழ்ப் போதகாசிரியரும்
ம.பா. மகாலிங்கசிவம் 59

Page 38
இந்து சாதனப் பத்திரிகை ஆசிரியருமாகிய ம.வே.திருஞான சம்பந்தப்பிள்ளை என்றிருக்க பிந்திய பதிப்பிற் பதவிகள் எதுவும் இடம்பெறாமல் பெயர் மட்டுமே இடப்பட்டுள்ளது. இதற்கு அவர் இவ்விரு பதவிகளிலும் இருந்து ஓய்வு பெற்றமையே காரணமாகும்.
நான்காம் பதிப்பில் முதற்பக்கத்தில் ஏழாம், எட்டாம் வகுப்புகளில் பயிலும் மாணவருக்குச் செய்யுட் பாடமாக உபயோகிக்கத்தக்கது என்றும் நூல்முகத்திற் கேம்பிறிட்ஜ் யூனியர் பரீட்சைக்கும் உரியதென்றும் குறிபிடுகின்றார். ஆனால் பிந்திய பதிப்பிற் கலாசாலைகளிற் செய்யுட் பாடமாக உபயோகிக்கப்படுவது என்று பொதுவாகக் கூறுகின்றாரே தவிர எந்த வகுப்புக்கு உரியதென்று குறிப்பிடவில்லை. அட்டையின் உட்புறம் இலங்கை அரசினர் பாடப்புத்தக சபையாரின் அங்கீகாரம் பெற்றது என பொதுவாகவே கூறுகின்றார். இம்மாற்றம் எதனால் நிகழ்ந்தது என அறியமுடிய வில்லை. செய்யுள் இலக்கம், பக்க இலக்கம் என்பன முந்திய பதிப்பிலே தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட பிந்திய பதிப்பில் சர்வதேச இலக்கங்கள் எழுதப்படுகின்றன.
இரு பதிப்புக்களிலும் நூலாசிரியரான ஆசுகவிராயரின் காலம் 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியாக அல்லது 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக இருக்க வேண்டும் எனக்கூறுகின்றார்.
“இவர் இயற்றிய சிறந்த நூலாகிய அரிச்சந்திரபுராணம் கிறிஸ்துவுக்குப் பின் 1524ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் உள்ள திருப்புல்லாணி எனப்படும் திருமால் கோயிலில் சக்கர தீர்த்தக்கரையின் மேல்மண்டபத்திற் பேரறிஞர் பலர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டதென அறியக்கிடத்தலின் இப்புலவர் விஷயமாக ஆராய்ச்சியாளர் கூறும் காலம் பொருத்தமுடைத்தாம்.” எனும் பகுதி 11ஆம் பதிப்பிற் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தகவல் சம்பந்தருக்கு, பின்னரே கிடைத்திருக்க வேண்டும் எனக் கருத வேண்டியுள்ளது. சுப்பையாபிள்ளை உடன் இருந்து எழுதியும் நேரமில்லாதபோது தாமே சில செய்யுளுக்கு உரை எழுதியும் உதவினார் எனும் குறிப்புப் பிந்திய பதிப்பில் நீக்கப்பட்டுள்ளது.
திருவாதவூரடிகள் புராண விருத்தியுரை பதிப்பு இதிலிருந்து வேறுப்பட்டதாகும். இப்புராணத்திற்கு ம.க. வேற்பிள்ளை எழுதிய
உரையே பதிப்பிக்கப்பட்டுள்ளது. ம.க.வே. யின் பதிப்பிக்கப்பட்ட
60 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

மூன்று நூல்களையும் சம்பந்தர் மீளப் பதிப்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
"பிள்ளைப் புலவரின் (ம.க. வேற்பிள்ளையின்) ஒளியைக் காலும் பிள்ளை மகாலிங்கம் எனினும் அவர்கள் அச்சிட்ட நூல்கள் அழிந்து போகாமற் காத்து வரும் பிள்ளை புலவர் திருஞான சம்பந்தர் அவர்களே” எனும் குலசபாநாதனின் கூற்றுச் சம்பந்தரின் பதிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது. திருவாதவூரடிகள் புராண உரை 1895இல் முதலில் இன்னொருவரால் பதிப்பிக்கப் பட்டதாகும். சம்பந்தர் இதன் இரண்டாம் பதிப்பை 1915 ஆம் ஆண்டிலும் மூன்றாம் பதிப்பை 1939ஆம் ஆண்டிலும் வெளியிட்டார். இவற்றுள் 01ஆம் பதிப்பும் 03ஆம் பதிப்புமே இன்று கிடைக்கின்றன. இரண்டாம் பதிப்பு பற்றி,
"அப்பதிப்பை அச்சிடுவதற்கு முந்தியே முதற்பதிப்பின் ஒருபிரதியைச் சிதம்பரத்தில் அக்காலத்தில் நாவலர் கலாசாலை தலைமையாசிரியராக இருந்த எமது தந்தை யாரிடம் அனுப்பினேம். அவர்கள் அக்காலத்தில் திருவாத வுபூரடிகள் புராணம் மூலமாகவும் மூலமும் உரையுமாகவும் பிறரால் அச்சிடப்பட்டு வழங்கிய பிரதிகளுட் காணப்பட்ட பாடபேதங்களையும் விபரீத உரைகளையும் கண்டித்து சமாதானம் எழுதியும் பல புதிய விடயங்களைச் சேர்த்து எழுதியும் உதவினார்கள். அத்திருத்தங்களுடனேயே 2ம் பதிப்பு அச்சிடப் பெற்றது." எனச் சம்பந்தர் கூறுகின்றார். இக்கூற்றிலிருந்து அவர், பதிப்பிக்கப்படும் மூலபாடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று கருதியமை புலனாகின்றது. 3ஆம் பதிப்பிற் சம்பந்தர் செய்த மிக முக்கியமான மாற்றம் சருக்க அட்டவணை புதிதாக அமைத்துக் கொண்டதாகும். இவ் அட்டவணையில் நூலில் உள்ளே உள்ள விபரங்கள் தரப்படுகின்றன.
"இதன்கணுள்ள பாடங்களின் அருமை பெருமைகள் விஷய
அட்டவணையைப் பார்க்கவே நன்கு விளங்கும்" எனச் செந்தமிழ் வாசக சிந்தாமணி நூன்முகத்திற் குறிப்பிடுவதை நோக்கும் பொழுது நூலின் அருமை பெருமைகள் மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கும் விளங்குவதற்காகவே சருக்க அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகின்றது.
ம.பா. மகாலிங்கசிவம் 61

Page 39
நூலிற் புலோலி வ. கணபதிப்பிள்ளை, சுன்னாகம் குமரரசுவாமிப்
புலவர், புலோலி அ.சோமசுந்தரப் புலவர் ஆகியோரின் சிறப்புப்
பாயிரங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் அ. சோமசுந்தரப் புலவரின்
மூன்று செய்யுட்களைச் சம்பந்தர் மூன்றாம் பதிப்பில் நீக்கியுள்ளார்.
இம்மூன்று செய்யுட்களும் ம.க. வேற்பிள்ளை பற்றியும் அவரின்
உரைச் சிறப்பு பற்றியும் கூறுவனவாகும். இதுபோல ம.க.
வேற்பிள்ளையின் உரைப்பாயிரத்தின் இறுதியில் உள்ள, "அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு”
"குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்" என்னும் இரு குறட்பாக்களையும் நீக்கியுள்ளார். இவ்வாறு நீக்கப்பட்டமைக்கான காரணத்தை அறிய முடியவில்லை. இம்மாற்றங்கள் ம.க. வேற்பிள்ளை இருந்த காலத்திற் செய்யப் பட்டனவா அல்லது அவர் காலத்தின் பின் செய்யப்பட்டனவா என்பதனையும் அறிய முடியவில்லை. அவர் காலத்திற் பதிப்பிக்கப்பட்ட 2ஆம் பதிப்புக் கிடைத்திருந்தால் இதனை அறிந்திருக்க முடியும்.
திருவனந்தபுர மகாராஜா கலீஜ" என்பதில் உள்ள கலிஜ" என்னும் ஆங்கிலச் சொல்லை நீக்கிவிட்டுக் கல்லூரி என்னும் சொல்லைப் பயன்படுத்துகின்றார். இது ஆசிரியரின் மொழித் தூய்மைப்படுத்தலை எடுத்துக்காட்டுகின்றது. இதுபோலவே வடமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைப் பயன் படுத்துவது பற்றி ஏலவே கூறப்பட்டது. மொழித் தூய்மையாக்கம் அக்காலப் பதிப்புக்கள் பலவற்றிலும் காணப்படும் பொதுப்பண்பாகும்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகத்தார் பிரதாப முதலியார் சரித்திரத்தைப் பதிப்பித்தபோது அதில் உள்ள வடமொழிச் சொற்களை எல்லாம் நீக்கி தமிழ்ச் சொற்களைப் பெய்து வெளியிட்டமையும் 'மாதாவின் துவஜம் என்னும் பாரதி பாடலின் தலைப்பு 'தாயின் மணிக்கொடி’ என பிற்காலப் பதிப்புகளில் மாற்றப்பட்டமையும் இதற்குச் சான்றுகளாகும்.
பொதுவிற் பாடபேதங்களைக் குறிக்கோட்பிழை, தற் செயற்பிழை என இருவகைப் படுத்தலாம். இவ்விருவகைப் பாட பேதங்களும்
62 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

பல்வேறு காரணங்களாலே தோன்றுகின்றன. தற்செயற்பிழை பெரும்பாலும் காட்சி காரணமாகத் தோன்றுவதாகும். எழுத்துப் பிழை முதலியன இப்பிரிவில் அடங்கும். ஆனாற் பல்வேறு குறிக்கோள்களை மனதிற்கொண்டு பிரக்ஞை பூர்வமாகச் செய்யும் திருத்தங்களே குறிக்கோட்பிழை என்னும் பிரிவில் அடங்கும். குறிக்கோட்பிழை அடிப்படையில் மொழியியல் சார்புடையதாகும். எனினும் பண்பாடு, அழகியல் ரசணை முதலியவற்றின் அடிப்படையிலும் இத்தகைய பிழைகள் தோன்றுகின்றன.தற்செயல் பிழைகளை வகைப்படுத்தி அவற்றிற்கிடையே சிற்சில அமைதிகளைக் கண்டு கொள்ளலாம். ஆனாற் குறிக் கோட் பிழைகள் இலகுவிற் கண்டறிய இயலாதவையாகும். இவை எழுதுவோரது மனநிலையுடன் தொடர்புடையன. சம்மந்தப்பட்டவர்களின் ஆளுமை நன்கு அறியப்படும்போதே அவர்களது திருத்தங்களுக்கான காரணங்கள் ஓரளவுக்கேனும் தெளிவாகும்.
இவ்வகையிற் சம்பந்தரின் பதிப்புகளிற் காணப்படுபவை பெரும்பாலும் குறிக்கோட் பிழைகளே என்பது தெளிவாகின்றது இவற்றுள் பல திருத்தங்களுக்கான காரணத்தை அறிந்துக் கொள்ள முடியவில்லை. எனினும் முறையாக இவற்றை ஆராய்ந்தாற் காரணத்தைக் கண்டு பிடிப்பது கடினமல்ல. அவரின் முழுப் பதிப்புகளுமே தேடிக் கண்டு பிடிக்கப்பட்டால் பாடபேதங்கள் பற்றிய மேலும் பல சுவாரசியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ம.பா. மகாலிங்கசிவம் 63

Page 40
(8)
வகிபாகம்
D.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை ஆறுமுக நாவலரின் சைவசித்தாந்த நெறிநின்ற ஞானப்பரம்பரையில் முகிழ்த்து அவரின் பணிகளை முன்னெடுத்துச் சென்றார். தமது ஆசிரியப் பணி மூலம் சைவாசாரமும் இறைபக்தியும் மிக்க மாணவர்களை உருவாக்கிச் சமயப் பணியிலே ஈடுபடுத்தினார். மாணவர்களுக்குச் சமய அறிவை ஏற்படுத்துவதற்காகப் பல நூல்களை எழுதி வெளியிட்டார். இலக்கியங்களுக்கு இலகு தமிழில் உரை எழுதி விளங்க வைத்ததோடு நாற்பதுக்கு மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்து பதிப்புத் துறையில் பெரும் பங்காற்றினார்.
சைவபரிபாலன சபையின் முக்கிய அங்கத்தவராக இருந்து சமய மகாநாடுகளை நடத்தி மக்களுக்கு சமய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். தாமே சமயப் பிரசங்கங்கள் செய்ததோடு தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் இருந்த சிறந்த அறிஞர்களையும் அழைத்துப் பிரசங்கங்கள் செய்வித்தார். நாவலரின் நீண்டகால கனவாக இருந்து அவர் காலத்தின் பின்னர் உருவான இந்துசாதனப் பத்திரிகையில் 32 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். சிறந்த பத்திரிகாசிரியராக விளங்கிப் பத்திரிகையை வளர்த்தெடுத்ததோடு அதனை சமய வளர்ச்சிக்குப் பெரும் பங்கு ஆற்றவும் வைத்தார். நாவலரைப் போலவே கண்டனங்களில் ஈடுபட்டுச் சைவத்தின் உள்ளே இருந்த குறைப்பாடுகளைச் சுட்டிக்காட்டியதோடு பிறமதத் தாக்கங்களிலிருந்து சைவத்தைப் பாதுகாக்கும் பணியையும் மேற்கொண்டார்.
எனினும் சம்பந்தர் நாவலரின் பணிகளைப் பிண்பற்றியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவருடைய பணிகள் நாவலரின் பணிகளையும் தாண்டிக் காலத்திற்கு ஏற்ப விரிவடைந்தன. நாவலர் நாடகக் கலைஞர்களிடையே காணப்பட்ட ஒழுக்கச் சீர்கேடுகளாலும் வேறு பல காரணங்களாலும் நாடகங்கள் நடப்பதையும் நாடகங்கள் பார்க்கச் செல்வதையும் கண்டித்தார். எனினும் அவர் பரம்பரையில் வந்த சம்பந்தரோ சரஸ்வதிவிலாச சபை என்ற நாடகக்குழுவை
64 பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

உருவாக்குவதில் முன்நின்றதோடு பல நாடகங்களை எழுதி மேடையேற்றி அவற்றிலே தாமும் நடித்தார். அத்துடன் ஈழத்துத் தமிழ் நாடகக் கலை வளர வேண்டும் என்று கட்டுரை வாயிலாகவும் வலியுறுத்தியமை வியப்புக்குரியதாகும். அக்காலப் பகுதியிலே ஈழத்துக்கு வந்த நாடகங்களை மேடையேற்றிய தமிழ் நாட்டு நாடகக் குழுக்களின் பாதிப்பே சம்பந்தரை நாடக உலகிற்கு ஈர்த்து வந்திருக்க வேண்டும்.
நாவலரிடமிருந்து சம்பந்தர் வேறுபடும் இன்னொரு அம்சம் நாவல், சிறுகதையாகிய நவீன இலக்கிய வடிவங்களைக் கையாண்ட மையாகும். நாவலர் பரம்பரையில் வேறு எவரிடத்திலும் காணப்படாத இந்த அம்சம் நாவலர் பரம்பரையினருட் சம்பந்தர் தனியான ஓரிடத்தில் இருப்பதைக் காட்டுகின்றது. இவ்வாறான நவீன இலக்கியங்களின் பயன்பாட்டுக்குச் சம்பந்தரின் பத்திரிகைத்துறை அனுபவங்களே காரணமாக அமைந்திருக்க வேண்டும். அக்காலப் பகுதியில் வெளி வந்த பத்திரிகைகளிலே தொடர்கதைகள் வந்து கொண்டிருந்தமையும் கிறிஸ்தவர்களான மங்களநாயகம் தம்பையா போன்றவர்கள் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தை மேற்கொள்வதற்கான ஒரு கருவியாக நாவலைக் கொள்ள முயன்றமையும் சம்பந்தரை நாவல் எழுதத் தூண்டியிருக்கலாம்.
எனவே சம்பந்தர் நாவலரின் பணிகளையும் தாண்டி அப்பால் செல்வதற்கு அவர் காலச் சூழலே காரணம் எனலாம்.
"நாவலர் பரம்பரை என்று கூறும்போது ஒரே அச்சில் வார்த்த இம்மியும் வேறுபாடற்ற எல்லாப் பண்புகளிலும் ஒப்பான சீடரகளை நாம் கருதக்கூடும். ஆயினும் அவ்வாறு கற்பனை செய்வது நடைமுறைக்குப் பொருந்துவதன்று. பின்வந்த சீடர்களின் ஆளுமை, அவர்கள் இயங்கிய சூழலில் அவர்களைப் பாதித்த செல்வாக்குகள், உலகியல் நிலைமைகள் என்பன சிலபல வேறுபாடுகளைத் தோற்று விக்கும் எனக் கூறுவது தவறாகாது" எனும் பேராசிரியர் க.கைலாசபதியின் கூற்று இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
ம.பா. மகாலிங்கசிவம் 65

Page 41
12.
அடிக்குறிப்புக்கள்
ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு (பக்கம்30)
பண்டிதமணி நினைவுமலர் (பக்கம் 98)
திருவாதவூரடிகள் புராண உரை - உரையாசிரியர் சரித்திரம் (VI)
சைவப் பெரியார் சு.சிவபாத சுந்தரனார் நினைவு மலர் (பக்கம் 40)
மட்டுவில் தந்த பண்தம் சி.க.சிதம்பரப்பிள்ளை (பக்கம் 06)
இந்துசாதனம்
இத்தகவலை எனக்குத் தந்தவர் அவரின் மாணவரான திரு.க.சிவராமலிங்கம்.
இந்துசாதனம் (12-08-1955) பக்கம் 03.
இந்துசாதம் (12-08-1955) பக்கம் 04.
இந்துசாதனம் ஆசிரியர் தலையங்கம் (07-07-1924)
இந்துசாதனம் (22-07-1955)
இந்துசாதனம் பொன்விழா மலர் பக்கம் 06.
இத்தகவலைத் தந்தவர் சம்பந்தரின் மருமகன் வீ.சண்முகரத்தினம்.
“ம.வே.திருஞான சம்பந்தப்பிள்ளை” எனும் அவரின் கட்டுரை- பக்கம் 11
(கையெழுத்து பிரதி)
இந்து சாதனம் பத்திரிகைகள் முழுமையாகக் கிடைக்காததால் இது
பற்றிய முழுமையான தகவலைப் பெற முடியவில்லை.
இத்தகவலைத் தந்தவர்கள் அவரது மகன் தி.சண்முகசுந்தரம், உறவினரான
ஆறுமுகம் ஆகியோர்.
இந்து சாதனம் (09-06-1938)
இந்து சாதனம் (21-01-1931)
இந்து சாதனம் நூறாவது ஆண்டுச் சிறப்பிதழ் (11-09-1988)
இந்து சாதனம் வச்சிரவிழா மலர் (பக்கம் 32)
. இந்து சாதனம் (27-06-1952)
1.
இந்து சாதனம் நூறாவது ஆண்டுச் சிறப்பிதழ் (11-09-1988)
இந்து சாதனம் (13-05-1952)
. இந்த சாதனம் (25-05-1952)
பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை

14. இந்து சாதனம் வச்சிரவிழா மலர் - ஆசிரிய தலையங்கம்
15. இந்து சாதனம் (13-05-1952)
16. இந்து சாதனம் நூறாவது ஆண்டுச் சிறப்பிதழ் (11-09-1988)
ஈழத்து இலக்கிய வளர்ச்சி (பக்கம் 161) 2. தமிழ் நாவல் - நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் - சிட்டி, சிவபாத
சுந்தரம் (பக்கம் 160 தொடக்கம் 161 வரை)
இந்து சாதனம் (13-03-1924)
இந்து சாதனம் (31-09-1931)
இந்து சாதனம் (31-09-1931)
3
4.
5
6. கோபால நேசரத்தினம் முகவுரை (பக்கம் - 1)
7. கோபால நேசரத்தினம் முகவுரை (பக்கம் - 1)
8. திருவாதவூரடிகள் புராணம். ம.க. வேற்பிள்ளை உரை - முகவுரை (பக்.1)
9. ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் (பக்கம் - 144)
10. கோபால நேசரத்தினம் (பக்கம் - 112)
11. சமயகுரவர் சந்தானகுரவர் சரித்திரச் சுருக்கம் - முகவுரை (பக்கம் - 11)
12. கோபால நேசரத்தினம் முகவுரை (பக்கம் - 01)
13. ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு (பக்கம் - 01)
14. இத்தகவல் 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தில் இருந்து பெறப்படுகிறது.
15. மேற்படி நூல் (பக்கம் - 13) 16. கோபால நேசரத்தினம் (பக்கம் - 07) 始
17. மேற்படி நூல் (பக்கம் - 13)
18. ஆனந்தகுணபோதினி (1927 ஆனி மாத இதழ்)
ஈழத்தின் நவீன நாடகத்தின் தோற்றம் பேசப்படாத மறுபாதி- சரஸ்வதி
விலாசசபை. அற்றுகை - ஜனவரி- மார்ச்,1995 (பக்.124) ஈழத்து நாடகத் தமிழ் - ஈநாட்டுத் தமிழ் விருந்து (பக்.132)
மேற்படி (பக்.133)
செந்தமிழ் வாசக சிந்தாமணி (பக்.67)
ஈழத்து தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி (பக்.58)
இந்து சாதனம் (18.07.1932)
ம.பா. மகாலிங்கசிவம் 67

Page 42
0.
11.
12.
இந்து சாதனம் (12.07.1932)
இந்து சாதனம் (18.07.1932)
செந்தமிழ் வாசக சிந்தாமணி (பக்.66)
ரீ லங்கா - ஓகஸ்ட் 1955, (பக்.55)
ஈழத்து நாடகத் தமிழ் - ஈழநாட்டுத் தமிழ் விருந்து(பக்.145)
அகிலன், பா. முற்குறித்தது.
கல்வளை அந்தாதி உரை - முகவுரை
அரிச்சந்திரபுராணம் - மயானகாண்டம் உரை - முகவுரை நமச்சிவாயமலை உரை (பக். 25)
அரிச்சந்திரபுராணம் - மயானகாண்டம் உரை (பக். 08)
தேவாரதிருவாசகத்திரட்டு (பக். 14)
தேவாரதிருவாசகத்திரட்டு (பக். 30)
மயானக்காண்டம் உரை (பக். 40)
கோபால நேசரத்தினம் (பக். 16)
கோபால நேசரத்தினம் (பக் 16)
திருக்குறள் உரை (01-20 அதிகாரங்கள் முகவுரை)
. கவ்வளை அந்தாதி உரை - முகவுரை
. மாணிக்கவாசக சுவாமிகள் சரித்திரம் - முகவுரை
. சமயகுரவர் சந்தான குரவர் சரித்திரச் சுருக்கும் - முகவுரை
. மயானகாண்டம் உரை (பக். 14)
. கல்வளை அந்தாதி உரை (பக். 14)
. சமயகுரவர் சந்தான குரவர் சரித்திரச் சுருக்கம் - முகவுரை
நாவலரும் தாமோதரம்பிள்ளையும் என்ற கட்டுரையில் திருமதி மனோன்
மணி சண்முகதாஸ் இதனை எடுத்தாண்டுள்ளார். நாவலர் நூற்றாண்டு
விழா மலர் (பக். 134)
நூன்முகம் - கதிர்காமவேலன் திருவருட்பா
நூன்முகம் - சமயகுரவர் சந்தான குரவர் சரித்திரச் சுருக்கம்
நூன்முகம் - அரிச்சந்திர புராணம் - மயானகாண்டம் உரை
ரீ லங்கா - ஓகஸ்ட் - 1955
பதிப்புரை - திருவாதவூரடிகள் புராணம்
பண்டிதர் ம.வே.திருானசம்பந்தப்பிள்ளை


Page 43
Fழத்துத் தமி தொடர்ச்சியாக LD. LumT. LD a5 mT 6Afrñi a5 8 பல்கலைக்கழகத்திே பயின்று, சிறப்பு நிை ஞானபரம்பரையைச் போற்றப்பட்டவரும் ப
Şxxx.
வேற்பிள்ளையின் பூட்டன் என்ற தந்தையார் பார்வதிநாதசிவம் அணி புலவர் பட்டம் பெற்றவர். சிறந்த கவி மனம் நோகப் பேசாமலும் வாழும் நல்:
பார்வதிநாதசிவத்தின் தந்தையார் கலாசாலையிலே தமிழ் விரிவுரைய இரசனைச் சிறப்புப் பற்றியும் கவித்துவ ஊறக் கூறியும் எழுதியும் வந்துள்ளார்.
பேரனின் பெயரை உடையவனே மகாலிங்கசிவம் - பார்வதிநாதசிவம் - 1 மரபும் நீண்டு தொடர்கின்றன.
நன்மாணாக்கனாக விளங்கிய ம8 மரபுவழி இலக்கிய இலக்கணங்கள் ஆழமான புலமையுடையவர். இவை சிறுகதை, கட்டுரை, குழந்தைப்பாட ஆற்றலும் ஆளுமையும் உடையவர் பெற்றவர். அறிவாலும் ஆற்றல திரு.பா.மகாலிங்கசிவத்தின் புலமை மர
ISBN 978-955-8564-14-1
அச்சுப்பதிப்பு. கெளரி அச்சகம், 207, சேர் இரத்தின
 
 
 

ழ்ப் புலமை மரபின் அறாத் விளங்குபவர் இந்நூலாசிரியர் வம் , இவர் யாழ்ப் பாணப் ல தமிழைச் சிறப்புப் பாடமாகப் லயிலே சித்தி எய்தியவர். நாவலரின் சேர்ந்தவரும் உரையாசிரியர் எனப் ல நூல்களின் ஆசிரியருமான ம.க.
பெருமைக்கு உரியவர். இவரின் ாணாமலைப் பல்கலைக்கழகத்திலே
ஒர். நிலம் அதிர நடக்காமலும் பிறர் ல மனிதர்.
மகாலிங்கசிவம் ஆசிரிய பயிற்சிக் பாளராகப் பணிபுரிந்தவர். இவரின் ம் பற்றியும் பண்டிதமணி சி.க.,வாயூற
பேரன் ஆவான். ம.க.வேற்பிள்ளைமகாலிங்கசிவம் எனப் பேரும் புலமை
காலிங்கசிவம் இன்று நல்லாசிரியர். ரிலும் நவீன இலக்கியங்களிலும் இவரது குடும்பச் சொத்து. கவிதை, ல்கள் எனப் பல துறைகளிலும் I. இவற்றிற்காகப் பரிசில்கள் பல ாலும் பண்பாலும் உயர்ந்த பு தொடர்வதாக,
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைவர்,
தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ஜோதி சரவணமுத்து மாவத்தை, கொழும்பு - 13.