கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அமரர் வை.அநவரத விநாயகமூர்த்தி சில இலக்கியப் பதிவுகள்

Page 1
6の6J. に到I56JJ@
ଅifର୬ இலக்
கலாபூஷணம் புை
 

அமரர் விநாயகமூர்த்தி கியப் பதிவுகள்.
1993. O8.31
32O Ο9.132. Ο 7

Page 2

31ம் நாள் நினைவு அஞ்சலி
01

Page 3



Page 4
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
நூல் விபரம்:
நூல்
6】6峦)母3
ஆசிரியர்
முதற் பதிப்பு
உரிமை
வெளியீடு
தொலைபேசி தொலைநகல் மின்னஞ்சல்
அச்சிட்டோர்
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி சில இலக்கியப் பதிவுகள்.
661
கலாபூஷணம் பி.எம். புன்னியாமீன்
ഞിട്ട് 09.2010
ஆசிரியருக்கு
சிந்தனைவட்டம், 14, உடத்தலவின்ன மடிகே உடத்தவின்ன - 20802 ழரீலங்கா
08,2493892
: 81249346 : pnpuniyameen (a)yahoo.com
சிந்தனைவட்டம் அச்சீட்டுப் பிரிவு
ISBN: 978-955-1779-29-0
04

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
அமரர்
வை. அநவரத விநாயகமூர்த்தி சில இலக்கிய பதிவுகள்.
தனது இறுதிக்காலங்களில் ஒரு நல்ல நண்பராகவும், இலக்கியத்தில் ஒரு நல்ல ஆலோசகராகவும் விளங்கிய அநவரத விநாயகமூர்த்தி அவர்களின் மறைவுச் செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், துர்ப்பாக்கியம் அச்செய்தி அன்னாரை அடக்கம் செய்த பின்பே எனக்கு எட்டியது. அன்னா ரின் பிரிவால் துயருரும் அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், அன்னா ரின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என வேண்டுகின்றேன்.
வாரத்தில் இரண்டு மூன்று நாட்களாவது காலை 7.00மணிக்கும் 7.30 மணிக்குமிடையில் விநாயக மூர்த்தியின் தொலைபேசி அழைப்பு எனக்கு வரும். நீண்ட நேரம் மனம் திறந்து சமகால இலக்கியங்கள் பற்றியும், அவ்வாரத்தில் இடம் பெற்ற பத்திரிகை செய்திகள், கட்டுரைகள் பற்றியும் கதைத்துக் கொண்டிருப்போம். இறுதியாக நாங்கள் கதைத்த நேரத்தில் மூர்த்தி அவர்களின் நூல்களை இணையத்தளத்தில் பதிவு செய்வது தொடர்பாக ஆராய்ந்தோம். அச்சந்தர்ப்பத்தில் தன்னு டைய நூல்கள் அனைத்தும் இணையத்தில் பதிவாக்கப்படு வதை அவர் மிகவும் விரும்பிய போதிலும்கூட, அவரின்
05

Page 5
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
அனைத்து நூல்களும் கைவசமில்லை என்பதையிட்டு மன வேதனைப் பட்டுக்கொண்டார். இருப்பினும், அவரின் நூல்களை இரண்டு மாதங்களுக்குள் என்னிடம் பெற்றுத் தருவதாக கூறினார். “நாங்கள் இலக்கியத்துக்காக சாதித்த விடயங்கள் எமது இளைய தலைமுறையிடத்தில் தெரியாமல் போய்விடு கின்றன. எனவே, இளைய தலைமுறையினருக்குத் தெரியக் கூடிய வகையில் தற்போது பரவலடைந்துவரும் இணையத் தளத்தில் அவை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்” என்ற முடிவில் இருந்தார். கண்டிக்கு வந்து என்னை சந்திக்க ஆவல் கொண்டிருந்த போதிலும்கூட, உடல் நிலை காரணமாக வர முடியவில்லை என ஆதங்கப்பட்டுக் கொண்டார்.
அன்னார் வாழ்ந்த காலத்தில் அன்னாரைப் பற்றிய விரிவான குறிப்பொன்றை ஞாயிறு தினக்குரலில் நான் எழுதிய துடன், இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலை ஞர்களின் விபரத்திரட்டு - தொகுதி 1 (அதாவது இவர்கள் நம்மவர்கள் பாகம் 01) ல் 282வது பதிவாகப் பதிப்பிட்டேன். இப்பதிவு வந்தநேரத்தில் மூர்த்தி ஐயா மிகவும் மனமகிழ்ந்தார். கடந்தாண்டில் அவர் யாழ்ப்பாணம் சென்ற நேரத்தில்கூட, என்னிடம் 60க்கும் மேற்பட்ட புத்தகப் பிரதிகளைப் பெற்று யாழ்ப்பாணத்தில் தனது நண்பர்களிடம் வழங்கியுள்ளார். அத்துடன், கொழும்பிலும் பல நண்பர்களுக்கு அப்பிரதிகளை வழங்கினார். இலங்கையிலுள்ள எழுத்தாளர்கள், ஊடகவியலா ளர்கள், கலைஞர்களின் விபரங்கள் திரட்டப்படும் எனது இம் முயற்சியை அவர் வெகுவாக பாராட்டியதுடன் மாத்திரமல்லாமல் அத்தொடருக்கான விபரங்களைத் திரட்டித்
O6

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
தரவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அவர் உயிருடன் இருந்த காலத்தில் எனது இந்த விபரத்திரட்டு முயற்சியினால் அவரின் தொடர்பு மேலும் மேலும் வலுவடைந்தது.
என் ஞாபகத்திலுள்ள வரை 2009 கார்த்திகை மாதம் இறுதிக் கட்டத்தில் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொணர் டு கதைத் தார் . அச் சநீதர் ப் பத்தில் தானி இணையத்தளத்தில் தனது நூல்களை பதிவிடுவது தொடர்பாகவும் நாம் கதைத்தோம். அவர் உயிருடன் இருந்த காலத்தில் அம்முயற்சியை என்னால் சாத்தியப்படுத்த முடியவில்லை.
ஆனால், வெகுவிரைவில் அவரின் அந்த ஆசையை நான் நிறைவேற்றி வைப்பேன். மூர்த்தி ஐயா அவர்களின் முழு புத்தகங்களும் என் கைவசமில்லை. கைவசமுள்ள பெருந் தகைகள் எனக்குத் தந்துதவினால் பேருதவியாக இருக்கும்.
அவற்றை இணையத்தளத்தில் பதிவிட்ட பின்பு ஒப்படைத்து விடுவேன்.
இச்சிறு நூலில் இடம்பெற்றுள்ள குறிப்புகள் என்னால் ஏற்கனவே எழுதப்பட்டவை. இதனுடாக அன்னாரின் சமயத்துறை ஈடுபாட்டினையும், இலக்கிய ஈடுபாட்டினையும் தெரிந்து கொள்ள முடியுமாக இருக்குமெனக் கருதுகின்றேன்.
07

Page 6
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
மீண்டும் அன்னாரின் பிரிவால் துயருரும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அன்னாரின் ஆத்ம ஈடேற்றத்துக்கு மனதாற வேண்டுகின்றோம்.
tai afunufai, மஸிதா புணர்னியாமீன் சிந்தனைவட்ட குடும்பத்தினர் 06.01.2010
08

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி சில இலக்கிய பதிவுக்ள்.
வடமாகாணம், யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டு, தனது இறுதிக் காலங்களில் மேல் மாகாணம், கொழும்பு மாவட்டம், தெஹிவளை - கல்கிசை தேர்தல் தொகுதியில், தெஹிவளை 540-E கிராமசேவகர் பிரிவில் வசித்து வந்தவரும்: பழுத்த தமிழ்ப் புலமைப் பாரம் பரியத்தில் வந்தவருமான சிவநெறிச் செம்மல் வைத்திய லிங்கம் அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் பவளவிழாக் கண்ட முதுபெரும் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார்.
1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இணுவில் எனும் கிராமத்தில் பரம்பரையாக சமயத் தொண்டும், தமிழ்ப் பணியும் புரிந்து வந்த குடும்பத்தில் ‘தணிகைப் புராண உரையாசிரியர் மகா வித்துவான் பொ. அம்பிகைபாகரின் புதல்வரும், இயற்றமிழ் ஆசிரியருமான அ.க.வைத்தியலிங்கம் செல்லம்மா தம்பதி யினரின் கனிஷ்ட புதல்வராகப் பிறந்த அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் இணுவில் ரீ அம்பிகைபாகர் சைவப்பிரகாச வித்தி யாலயத்தில் (தற்போது இணுவில் இந்துக்கல்லூரி) ஆரம்பக் கல்வியைக் கற்றார்.
09

Page 7
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
பின்னர் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர்கல்வியைக் கற்றார். யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும்போது இலண்டன் LDibisig,66)56 (London Matriculation Exam) usilis Lis திற்கேற்ப நடத்தப்பட்ட விசேட பரீட்சையில் தமிழ்மொழி, ஆங்கிலமொழி, ஆங்கில இலக்கியம், கணிதம் ஆகிய பாடங் களில் அதி விசேட சித்திபெற்றார். அத்துடன் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் வித்துவான் முதலாவது தேர்வுப் பரீட்சை யிலும் சித்தியடைந்தார்.
யாழ் இந்துக் கல்லூரியில் 1939ல் உயர்தர வகுப்பு மாணவனாகக் கல்வி கற்று வரும்போது 'அந்தி மாலைக் காட்சி என்ற கட்டுரை எழுதி கல்லூரிச் சஞ்சிகையான ‘இந்து இளைஞனில் (Young Hindu) வெளியிட்டதுடன் அவர் எழுத் துலகில் காலடி எடுத்து வைத்தார்.
‘வளரும் பயிரை முளையில் தெரியும்' என்பர். மாண வப் பருவத்திலேயே எழுதும் துடிப்பும், தூண்டலும் பெற்றதால் எழுத்து அவருக்கு இயற்கையிலே இயல்பாக அமைந்த உள்ளுணர்வு என்பது தெளிவு. 1939ஆம் ஆண்டில் தொடங் கிய எழுத்துப் பணி அவர் மரணிக்கும் வரை தொடர்ந்து கொண்டேயிருந்தது. இவரின் அந்திமக் காலங்களில் தனது பதினோராவது நூலான 'ஆனந்த நடனம்' என்னும் நூலை எழுதிக் கொண்டிருந்தார்.
10

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
1944 ஆம் ஆண்டில் அரசாங்க சேவையில் எழுது வினைஞனாகச் சேர்ந்த அநவரத விநாயகமூர்த்தி படிப்படியாக பதவி உயர்வு பெற்று இறுதியாக கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றி 1983ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
1956ஆம் ஆண்டில் திருநெல்வேலியைச் சேர்ந்தவரும், யாழ் இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகக் கடமையாற் றிய வருமான அருளம்பலம் சிவயோகம் என்னும் மங்கை நல்லாளைத் தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்று நடத்திய இல்லறம் என்னும் நல்லறத்தின் பயனாக சிவகுமார், சிவானுசாந்தன் என்னும் இரு புத்திரர்களும், சிவகெளரி என்னும் புத்திரியும் இவருக்கு உளர்.
தனது சமய, இலக்கிய, பத்திரிகைத்துறைகளில் வழி காட்டியாக இருந்தவர்கள் முறையே தனது தந்தையார் இயற் றமிழ் ஆசிரியர் அ.க. வைத்தியலிங்கம், கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.டி. சிவநாயகம் ஆகியோர். இவர்கள் மூவரும் தற்போது அமரத் துவம் அடைந்து விட்டபோதிலும் அப்பெரியார்களை கடைசி வரை அன்புடன் நினைவு கூர்ந்து வந்த இணுவை மூர்த்தியின் இலக்கியப் பணிகள் பல துறைகளிலும் வியாபித்து நிற்பதினால் அதனைச் சுருக்கமாகப் பின்வரும் அடிப்படையில் வகுத்து நோக்குவது இலகுவாக அமையலாம்.
11

Page 8
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
1) பத்திரிகைத்துறை 2) இலக்கியத்துறை 3) சமய, சமூகப் பணிகள்
பத்திரிகைத்துறை
இலங்கையில் தமிழ்பேசும் மக்களிடையே தமிழ் பண் பாடு, கலாசாரம் முதலியவைகளைப் பரப்புவதற்கும். காலத்திற் கேற்ப புதிய கருத்துக்களைப் படைத்து தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் இலக்கிய சஞ்சிகைகள் குறைவாக இருந்த காலகட்டத்தில் தமிழ் இலக்கிய சஞ்சிகைகள் வெளிவர வேண் டும் என்ற துடிப்பு மிக்க இளைஞராகக் காணப்பட்ட அநவரத விநாயக மூர்த்தி அவர்கள் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ஜயவருஷம், சித்திரை மாதம்) 'உதயம் மாத சஞ்சிகையின் முதலாவது இதழை வெளியிட்டார்.
1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வெளிவந்த இச்சஞ்சிகையை எத்தனையோ சோதனைகளுக்கும், தனது தனிப்பட்ட அரச பணிப்பழுவுக்கும் மத்தியில் அரசாங்கத்தின் அனுமதியுடன் கெளரவ ஆசிரியர் பொறுப்பை ஏற்று ஒரு புதிய சகாப்தத்திற்கு வித்திட்டார்.
தமிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு இலக்கியம், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள்,
12

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
நகைச்சுவைகள், பாலர் மன்றம், மாதர் பகுதி முதலிய பல்வேறு அம்சங்களைக் கொண்டு வெளிவந்த "உதயம்' சஞ்சிகையின் செந்தமிழ் மணம் கமழும் ‘இரண்டு ஆண்டு மலர்களையும் வெளியிட்டார்.
கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி என்று போட்டி களை நடத்தி இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்ததோடு பரிசுகளும் வழங்கி அவர்களைக் கெளரவித்தார். ‘சிற்பி சரவணபவன், கச்சாயில் இரத்தினம், கே. டானியல் போன்ற சிறுகதை எழுத்தாளர்களும் செ. வேலாயுதபிள்ளை, வன்னியூர் வேலன் போன்ற கவிஞர்களும் பரிசு பெற்று உற்சாகமடைந்து பெரும் எழுத்தாளர் ஆனார்கள். உதயம் ஈழத்தில் பல புதிய எழுத்தாளர்களை உருவாக்கிய தோடமையாது அவர்கள் மத்தியில் ஒரு புத்துணர்ச்சியைத் தூண்டி விட்டது. இவ்வாறு ஈழத்து இலக்கிய உலகில் 1950களில் 'உதயம்' சஞ்சிகை புரிந்த இலக்கியப் பணியைத் தமிழ்நாட்டு சஞ்சிகைகளும், ஈழத்து சஞ்சிகைகளும் திறம்படப் பாராட்டின. உதாரணத்திற்கு சில பத்திரிகைகளின் அபிப்பிராயத்தைக் கீழே இணைத்துள்ளேன்.
米 சேய் நாடாகிய இலங்கையிலிருந்து வெளியாகும்
உதயம் (மாதப் பத்திரிகை) தமிழ் இலக்கிய வளர்ச் சியையே குறிக்கோளாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டி லிருந்து வருகிறது.வித்துவான் பண்டிதர் க.பொ. இரத் தினம் எம்.ஏ, பி.ஓ.எல். அளிக்கும் இலக்கிய விருந்தில் வள்ளல் பாரியைப் பற்றிய கட்டுரை சுவைமிகு தமிழில் தீட்டப்பட்டு இலக்கிய மணம் வீசுகிறது.
- கல்கி (சென்னை) 1954.08.15 -
13

Page 9
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
米
தமிழ் வருடப் பிறப்பிலிருந்து உதயம் வெளிவரத் தொடங் கியுள்ளது. முதல் இதழில் ரீ பி. கோதண்டராமன், திரு. கா.பொ. இரத்தினம், ரீ.வை அநவரத விநாயக மூர்த்தி முதலியோர் நல்ல கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
- விந்தியா (பம்பாய்) - ஜூலை 1954 -
இலங்கையிலிருந்து வெளிவந்த மலர்களில் ஒரு தனிஸ்தானத்தை உதயம் ஆண்டு மலர் பெறுகின்றது.
- வீரகேசரி (கொழும்பு) .
“இணுவை மூர்த்தி” அவர்களின் இடையறாத முயற்சி யால் வத்தளை என்ற இடத்திலிருந்து கடந்த ஒராண்டு காலமாக திங்கள் தோறும் உதயமாகி வந்து கொண்டி ருக்கும் உதயத்தின் ஆண்டு மலரைப் பார்த்ததும் தமிழர்களின் இதயங்களில் நீங்காத ஓர் இடத்தை 'உதயம் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது.
* சுதந்திரன் (கொழும்பு) 1955.07.10
சஞ்சிகையின் வளர்ச்சி வெறும் சொல்லோவியங்க
ளால் மட்டும் அமைந்து விடுவதில்லை. சிறந்த உயிர்ச்சித்தி ரங்களும் அதன் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாதனமாகும். இந்த உண்மையை நன்கு புரிந்து கொண்ட விநாயக மூர்த்தி சிறந்த சித்திரக் கலைஞர்களான சிவஞான சுந்தரத்தையும் (சிவாஜி சிரித்திரன் சுந்தர்) அம்பிகைபாகனையும் உதயத்தின்
14

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
இலக்கியப் பணியில் தன்னோடு இணைத்துக் கொண்டார். சித்திரக்காரர் சிவாஜி தீட்டிய கேலிச்சித்திரங்கள் (Cartoons) வாசகர்களுடைய சிந்தனைக்கு விருந்தாக அமைந்து அவர்களுடைய பாராட்டுக்களையும் பெற்றன.
இவ்வாறு சீரும் சிறப்புமாக வளர்ச்சியடைந்து வந்த இந்தச் சஞ்சிகை, பொருளாதாரக் கஷ்டத்தினால் 1956ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் தொடர்ந்து வெளிவர முடியாது
உதயம் இலக்கியத் திங்கள் வெளியீட்டில் எழுதிவந்த சில எழுத்தாளர்களின் பெயர்களை இவ்விடத்தில் ஞாபக மூட்டுவது அர்த்தமுள்ளதாக அமையும். வித்துவான் பண்டிதர் க.பொ. இரத்தினம், வித்துவான் க.கி. நடராஜன், வித்துவான் எப்.எக்ஸ்.ஸி. நடராசா, வை. சுப்ரமணியசிவம், லஷ்மி வேலுப் பிள்ளை, வை. அநவரத விநாயக மூர்த்தி, செ. வேலாயுத பிள்ளை, மஹாகவி, முருகையன், கி.வா. ஜகந்நாதன், பரம ஹம்ஸதாசன், நாவற்குழியூர் நடராசன், சில்லையூர் செல்வரா சன், ஈழத்துச் சோமு, அ. ந. சுந்தசாமி, கச்சாயில் இரத்தினம், தாழையடி சபாரத்தினம், கே. டானியல், பேராசிரியர் கே. கைலாசபதி. இப்படி பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
இலக்கியத்துறை
அநவரத விநாயகமூர்த்தி அவர்களின் இலக்கியத்துறை செயற்பாடுகள் பற்றிய பதிவுகளைத் தேடுகையில் 1956ஆம்
15

Page 10
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
ஆண்டு டிசம்பர் மாதம் 02ஆம் திகதி ஈழகேசரி’ பத்திரிகையில் ‘தமிழ் வளர்க்கும் செல்வர்கள்’ எனும் தலைப்பில் "இளவரசு எழுதியிருந்த கட்டுரையின் ஒரு பகுதியை அறிமுகமாகக் கொள்ளலாமெனக் கருதுகின்றேன்.
“.ஈழத்தில் அன்று தமிழ் வளர்த்த பெரியார்களிற் பலர் ஆங்கிலத்திலே பாண்டித்தியம் பெற்று அரசாங்க பதவி வகிப்பவர்களாகத் தான் இருந்தார்களென்பதை அவர்களது வாழ்க்கை வரலாறுகள் நமக்கு நினைவூட்டிக் கொண்டிருக் கின்றன. அந்நியராட்சியின் கீழ் அப்பெரியார்கள் சேவை செய்தார்க ளென்றாலும் தம் தாய்மொழியின் வளர்ச்சிக்காக எத்தனையோ பல அரிய காரியங்களைச் சாதித்துள்ளார்கள். ஆனால் இன்று ஆரம்ப ஆங்கில அறிவோடு இலிகிதர்களாகப் பேனா பிடிக்கும் வாலிபர்களிடையே தானும் தமிழ்மொழியைப் பற்றிப் பேசினால் அதற்கும் தமக்கும் வெகுதூரம் என்ற தன்மையில் விலகிக் கொள்கிறார்கள். அவர்கள் பெருமைப்படுவதெல்லாம் நீண்ட காற்சட்டையையும் நிம்மதியாக வாயில் வைத்துப் புகைக்கும் கவின் சுருட்டையும்(சிகரட்) பற்றித்தான் என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். தாய் மொழியைப் பேசவெட்கப்படும் அவ்வாலி பர்கள் மத்தியில் தனையர்கள் சிலர் இன்றும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களது தாய்மொழி ஆர்வத்திற்குரிய சந்தர்ப்பகாரணங்களை நாம் இங்கு ஆராய்வதிலும் பார்க்க அந்த ஆர்வத்தைப் பாராட்டுவதுதான் சாலப்பொருத்தமானது. அவ்விதம் பாராட்டு தலுக்குரியவர்களில் திரு. அநவரத விநாயகமூர்த்தியும் ஒருவராக விளங்கினார் என்பதை நிரூபிக்க நாம் ஆதாரம்தேடி அலைய வேண்டிய அவசியமேயில்லை.”
16

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
இந்த அடிப்படையில்: மக்கள் இலக்கியம் படைக்கும் கலைஞர்களை மதிக்க வேண்டும் என்பதை விருப்பமாகக் கொண்ட அநவரத விநாயகமூர்த்தி தனது பெயரைச் சுருக்கித் தன் பிறந்தகமான இணுவிலின் பெயரோடு அதனை இணைத்து கடைசிவரை 'இணுவை மூர்த்தியாக எழுத்தாளர் மத்தியில் பிரகாசித்தார்.
இணுவை மூர்த்தியின் இலக்கிய சிருஷ்டிகளில் இருந்து அவர் தமிழ் ஆர்வம்மிக்க ஒருவர் என்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்”, “வள்ளுவன் தந்த தமிழ் மறை”, “நற்றமிழ் வல்ல நாவலன்', மக்கள் கவிஞன் பாரதி”, “சாகுந்தலத்தில் ஓர் இனிய காட்சி” போன்ற கட்டு ரைகள் இலக்கிய இன்பம் தருவன. பண்டைத் தமிழ் இலக்கி யங்களில் அவருக்குள்ள தொடர்பு அவரது கட்டுரைகளில் பரந்து விளங்கக் காணலாம்.
தமிழ் நாட்டுப் பாடசாலைகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட ‘திரிவேணித் தமிழ்ச் செல்வம்' என்ற பாடநூலில் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் இருவரின் படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. ‘ஞயம்படவுரை என்ற பொருளில் அநவரத விநாயகமூர்த்தி எழுதிய படைப்பு அவற்றில் ஒன்று. மற்றது ஈழத்து தமிழ் அறிஞரும் முன்னாள் அமைச்சருமான சு. நடேசபிள்ளை எழுதிய ‘கடல் கடந்த தமிழ்' என்னும் கட்டுரை. அந்த நூலில் தத்துவஞானியும்,
17

Page 11
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -ઈ6) இலக்கியப் பதிவுகள்.
முன்னாள் இந்திய ஜனாதிபதியுமான சர்வபள்ளி இராதா கிருஷ்ணன், கி.ஆ.பெ. விசுவநாதன், கி.வா. ஜகந்நாதன், சேர். சி.வி. இராமன் போன்ற அறிஞர்களின் படைப்புகளும் இடம் பெற்றிருந்தன.
அண்மையில் வெளிவந்த இணுவை மூர்த்தியின் 10வது நூலான “இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள்” என்பது தமிழக மணிமேகலைப் பிரசுரத்தினரின் வெளியீடு. இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“ஆழ்ந்த அறிவு, மரபிலக்கியப் பயிற்சி, சமயப் புலமை, வரலாற்று ஞானம், இவையனைத்தும் கைவரப் பெற்ற ‘சிவ நெறிச் செம்மல் அவர்களின் கட்டுரைகள் இளையதலை முறையி னருக்கு தமிழின் ஆழத்தினையும், உண்மையினையும் உணர்த்தும் என்பதில் ஐயமில்லை.”
சப்ரகமுவ பல்கலைக்கழக முதுநிலைத் தமிழ் விரிவுரை யாளர் வாகீச கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் மேற்குறித்த நூலுக்கு அணிந்துரை வழங்கும் போது
“.நூலாசிரியர் இணுவை மூர்த்தி ஈழத்தின் மரபுவழி இலக்கியக் கல்விப் பாரம்பரியத்தின் வழிவந்த ஒருவர். இவரது கருத்தியல் சிந்தனையோட்டத்தில் ஆழமான சைவாசார மரபுப் பிடிப்பும், தமிழ், தமிழரின் பெருமை சார்ந்த அதீத பற்றும் தாம்
18

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
அவதரித்த பிறப்பு மதமான சைவத்தின் பற்றுறுதி வைராக்கியமும் தொனிக்கும் ஈழத்தின் புகழ்பூத்த நீண்டதொரு நாவலர். பாரம்பரியத்தின் சுவடுகளையும், ஓடலாவணங்களை யும் எச்ச சொச்சங்களையும் மூர்த்தியின் எழுத்து நடையிலே கண்டுகளிக்கலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.
சென்னை. அடையாறில் அமைந்துள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தினர் 1980ஆம் ஆண்டில் தொகுத்து வெளியிட்டுள்ள 'உலகத் தமிழ் எழுத்தாளர் யார்? எவர்?” என்னும் நூலில் இணுவை மூர்த்தியின் இலக்கியப் பணிகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ‘கல்கி கிருஷ்ண மூர்த்தியினால் ஆரம்பிக்கப் பட்ட சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆரம்ப கால உறுப்பினராக அநவரத விநாயக மூர்த்தி இருந்துள்ளார்.
சமய, சமுகப் பணிகள்
இவரது இலக்கியப் பணி, சமய, சமூகப் பணிகளுடன்
இணைந்ததாகவே காணப்படுகின்றது. இலக்கியத்தை
வேறாகவும் சமயத்தை வேறாகவும் பிரித்து எழுதாமல்
இலக்கியத்தினூடாகவே சமயத்தையும் இணைத்து எழுதி
வந்தமை மிகவும் குறிப்பிடக்கூடிய ஒரு விடயமாகும். இலங்கை
யிலும், தமிழ் நாட்டிலும் வெளிவரும் சஞ்சிகைகளுக்கும், சிறப்பு
19

Page 12
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
மலர்களுக்கும் இலக்கியம், வரலாறு, ஆராய்ச்சி ஆகிய துறை களில் கடந்த அறுபது ஆண்டுகளாக கட்டுரைகள் எழுதி வந்தார். இவைகளுள் பல சமயத்துடன் இணைந்தவையே.
1948ஆம் ஆண்டு தொடக்கம் 1951ஆம் ஆண்டுவரை வத்தளை உணுப்பிட்டி இந்து சன்மார்க்க சங்கத்தின் உதவிச் செயலாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் கல்வி அமைச்சில் கடமையாற்றிய காலப்பகுதியில் இந்துமன்றத்தின் செயலாளரா கவும், துணைத் தலைவராகவும், தலைவராகவும் சைவ சமய வளர்ச்சிக்கு அரும்பெரும் பணியாற்றியுள்ளார். சங்கத்தின் சார்பில் சமய நூல்களை வெளியிட்டது மட்டுமன்றி பாடசாலை மாணவர்களிடையே சமய அறிவைப் பேச்சுப் போட்டிகள் மூலம் பரப்புவதில் முனைப்புடன் செயற்பட்டு வந்துள்ளார். பல ஆண்டுகள் கலைமகள் விழாக்களை நடத்துவதற்கு அச்சாணி யாக செயற்பட்டவர் இணுவை மூர்த்தியே. கல்வி அமைச்சின் கலைமகள் விழா என்றால் தனிச் சிறப்புடன் நடப்பதற்கு அயராது உழைத்த தொண்டன் இணுவை மூர்த்தி என்று கூறுவது மிகையாகாது.
தனது இறுதிக் காலங்களில் இணுவை மூர்த்தி சர்வதேச சமய சுதந்திரத்திற்கான நிறுவனத்தின் (International Association for Religious Freedom) Qsit(plbLi Lissilsit துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சைவத் தமிழ் பற்றுக்கு வித்திட்டவர் தனது தந்தையாரே எனக் குறிப்பிட்ட விநாயக மூர்த்தி இது பற்றி மேலும் பின்வருமாறு குறிப்பிடும்போது.
20

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்
"á á
இணுவையம்பதியில், வாழையடி வாழையாக சைவத்தையும், தமிழையும் பேணிக் காத்த பரம்பரையில் வந்து பிறந்தமையினால் இளமைப் பராயத்திலேயே அடியே னுக்கு சைவ சமயத்திலும் தமிழ் மொழியிலும் ஆழ்ந்த பற்று ஏற்பட்டது என்றே கூறலாம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உள்ள பிரசித்தி பெற்ற இணுவில் ரீ பரராஜ சேகரப் பிள்ளை யார் திருக்கோயிலுக்குத் தினமும் காலையில் சென்று வழிபாடு கள் செய்து வருவது வழக்கம். மாலையில் சிறிது தூரத்தில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலுக்கும் சென்று வழிபாடுகள் செய்துவிட்டு வந்து பாடங்களைப் படிப்பது அன்றாட வழக்க மாக இருந்து வந்துள்ளது. பாடசாலை விடுமுறை நாட்களில் அபிராமி அந்தாதி திருக்குறள், நல்வழி போன்ற நூல்களில் பத்துப் பாடல்கள் தினந்தோறும் மனப்பாடம் செய்து தந்தை யாருக்கு ஒப்புவிக்க வேண்டும். இவ்வாறு செய்துவர காலப்போக் கில் என்னையும் அறியாமலேயே சைவ சமயப் பற்றும் தமிழ் மொழிப் பற்றும் என் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில் எனது இளமைப் பிராயத்தில் எனது தந்தையாருடன் திருச் செந்தூருக்கு யாத்திரை சென்று முருகன் அருள் பெற்று வந்தமையை ஒருபெரும் பேறாகக் கருதுகின்றேன்.
“.1928ஆம் ஆண்டில் எனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகனுக்குரிய ஆறு படை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலத்திற்கு எனது தந்தையாருடன் யாத்திரை சென்று வந்தமை இன்றும்
21

Page 13
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
எனது நினைவில் பசுமையாக இருக்கிறது. யான் குழந்தையாக இருக்கும்போது எனக்கு எற்பட்ட கடுமையான சளிச்சுரம் உரிய மருந்துகளைப் பாவித்து வந்ததனால் குண மடைந்தபோதும் அதன் தாக்கம் எனது பேசும் சக்தியைப் பெரிதும் பாதித்தது. அதனால் தெளிவாகப் பேசமுடியாத நிலை எற்பட்டது. எனது பெற்றோர் தகுந்த வைத்தியம் செய்வித்தும் பேசும் ஆற்றலில் எதுவித முன்னேற்றமும் இல்லாமையினால் திருச்செந்தூர் முருகப் பெருமானை வேண்டுதல் செய்ததுடன் நேர்த்திக் கடனும் வைத்துவிட்டனர். அந்த நேர்த்தியை நிறை வேற்றவே என்னையும் அழைத்துக் கொண்டு தந்தையார் கந்தசஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் சென்றார். அத்திருத்தலத்தில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களும் தந்தையார் நோன்பிருந்து செந்தி முதல்வனை வேண்டுதல் செய்ததன் பயனாக மீண்டும் பேசும் சக்தியைப் பெற்றதாக அறிந்தேன். அதனால் காலப் போக்கில் முருகப் பெருமானிடம் தீவிர பக்தி ஏற்பட்டது.”
இதுவரை இவரின் பத்துப் புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
1) நவராத்திரியும், கலைமகள் வழிபாடும் - 1975 2) கல்விச் செல்வி - 1978 3) நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை - 1978 4) யாழ் திருநெல்வேலி அருள்மிகு ரீ
முத்துமாரி அம்பாள் ஆலய வரலாறு - 1994 5) தேவியர் மூவர் தோத்திரப்பாடல்கள் - 1997
22

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்
6) சிவயோக சுவாமிகளும், அவர் அருளிய போதனைகளும்
-1998 7) திருநெல்வேலி பழங்கிணற்றடி ரீ வீரகத்தி விநாயகர்
ஆலய வரலாறு (இந்து சமய பண்பாட்டு அலு 8) சிவநெறிச் சிந்தனைகள் - 2000 9) யாழ்ப்பாணம் இணுவில்அருள்மிகு ரீபரராஜ சேகரப்பிள்ளை
யார் திருக் கோயில் - 2003 10) இலங்கை இலக்கியத்தில் இனிய முத்துக்கள் - 2004
இவரது நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படையெனும் நூலினை கல்வியமைச்சு கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம், பாடவிதான அபிவிருத்தி நிலையம், கொழும்பு தெற்குப் பிராந்திய கல்வித் திணைக்களம், இலங்கை தொலைக்கல்வி நிறுவனம் ஆகியவற்றின் இந்து மன்றம் 1978.11.08ஆம் திகதி வெளியிட்டு வைத்தது. இவ் விழாவில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் திரு. எஸ். சர்வானந்தா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அறிஞர் பெருமக்களின் பார்வையில் இவரைப் பற்றிய சில கருத்துக்களை சுருக்கமாக தொகுத்து நோக்குவோம்.
“.திரு. வை.அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் சைவத்தையும், தமிழையும் பாதுகாத்து வரும் அரும்பணி யில் தம்மை இணைத்துக் கொண்டவர். பண்பட்ட அனுபவம் வாய்ந்த முதுபெரும் எழுத்தாளர், சமய நிறுவனங்கள் பலவற்
23

Page 14
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
றில் பொறுப்புகளை ஏற்று சமயத் தொண்டு ஆற்றிய அனுபவம் மிக்கவர்.”
கலாநிதி ப. கோபாலகிருவுர்ணன் கலைப் பீடாதிபதி யாழ். பல்கலைக்கழகம்.
“.சைவத்தையும், தமிழையும் வளர்த்த ஒரு குடும் பத்தில் உதித்த ஆசிரியர் அவர்கள் தமது சிறந்த வாழ்க்கை யோடு மட்டும் நில்லாது அரும்பெரும் நூல்களைக் கசடறக் கற்றுத் தனது அறிவை மேம்படுத்தியதோடு அதனை மற்றவர் களுடனும் பகிர்ந்து கொள்வதில் சிறப்படைகிறார்.”
பேராசிரியர் வி.க.கணேசலிங்கம்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
“.பயனுள்ள பணிகளை வாழ்நாளில் செய்பவர்கள் ஒரு சிலரே. அதிலும் பதிப்புத்துறையிலும், பக்தித் துறையிலும் இணைந்த சிந்தனையோடு பயனுள்ள முறையிலே வாழ்வை அமைத்து வாழ்வோர் இன்னும் சொற்பரே! இவ்வகையில் “நல்லாருறவும் நின் பூசை நேசமும்” என்னும் கோட்பாட்டுடன் சீரான குடும்ப வாழ்வு வாழ்பவர் அன்புப் பெரியார் மூர்த்தி அவர்கள்.
வாசிக கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் (MA) முதுநிலை விரிவுரையாளர், மொழித்துறை சப்ரகமுவ பல்கலைக்கழகம்
இணுவை மூர்த்தி என்னும் வை. அநவரத விநாயக மூர்த்தியின் தமிழ் இலக்கியப் பணியும் சமயப் பணியும் அவர் எமது சமுதாயத்துக்குச் செய்த பெரிய உபகாரமாகும் அவருக்கு ‘சிவநெறிச் செம்மல்" என்னும் விருதினை நல்லைத்
24

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்
திருஞான சம்பந்தர் ஆதீன இரண்டாவது குரு மஹா சந்நிதானம் ரீலறி சோமசுந்தர தேசிகஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் வழங்கியது மிகவும் பொருத்த மானது என்பதை இன்றைய சமுதாயம் ஏற்றுக் கொள்ளும்.
கவிஞர் அம்பி (இ.அம்பிகை பாகர்) Lüцоum fuals flum (Papu New Guinea)
“சிவநெறிச் செம்மல் வை. அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் பழுத்த தமிழ்ப் புலமைப் பாரம்பரியத்தில் வந்தவர். பவளவிழாக் கண்ட முதுபெரும் எழுத்தாளர். கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ள சிறந்த எழுத்தாளர். சமய நிறுவனங்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை ஏற்று அரும் பெருஞ் சேவையாற்றிய சமயத் தொண்டராவார். கல்வி அமைச்சில் நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றியதுடன் கல்வி அமைச்சின் இந்துமன்றத்தின் தலைவராகவும் பணி புரிந்தவர். சர்வதேச சமய சுதந்திரத்திற் கான நிறுவனத்தின் (I.A.R.F) கொழும்புப் பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றிவரும் இப்பெரியார் ‘சந்நிதி சமய சஞ்சிகையின் மதியுரைஞர்களில் ஒருவராவார்.
திரு. க. சிவஞானம் JP செயலாளர் நாயகம்,
சமயசுதந்திரத்திற்கான சர்வதேச நிறுவனம், ரீலங்கா.
பரம்பரையில் வந்துதித்தவர் திரு. அநவரத விநாயகமூர்த்தி. யாழ்ப்பாணத்தில் இணுவில் ஊரில் இவர் பரம்பரையினரே
25

Page 15
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள். அன்றும் இன்றும் சைவத்தைப் பேணிக் காத்து வருப வர்கள் ஆவர்.
- கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
சமயத்துறை ஈடுபாட்டினைப் போலவே சமூகத்துறை யிலும் இவர் ஈடுபாடு மிகைத்திருந்தது. கல்வி அமைச்சில் இவர் பணியாற்றிய இரண்டு தசாப்த காலகட்டத்தில் இந்து, முஸ்லிம் சமூக வேறு பாடுபாராமல் ஆசிரிய குழாத்திற்கு கணிசமான சேவைகளை வழங்கியுள்ளார். அத்துடன் கல்வி அமைச்சினால் நிறுவப்பட்ட 'ஆசிரியர்களின் சம்பள மீளாய்வுக் குழுவிலும் அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
பெற்ற விருதுகள்.
வை. அநவரத விநாயகமூர்த்தி அவர்களின் சமய, சமூகப்பணிகளைப் பாராட்டி 1995.02.12ம் திகதி நல்லைத் திருஞானசம்பந்தர் ஆதீன இரண்டாவது குரு மஹாசந்தானம கொழும்பு ஜோன் டி.சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் 2005 ஜனவரி 22ந் திகதி நடைபெற்ற கலாபூஷண விருது வழங்கும் வைபவத்தில் கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமைகள் அமைச்சர் விஜித ஹேரத், முதுபெரும் எழுத்தாளர் சிவநெறிச் செம்மல் வை. அநவரத விநாயக மூர்த்திக்கு ‘கலாபூஷணம்’ விருது வழங்கிக் கெளரவித்தார்.
இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத் தினால் வெள்ளவத்தை இராம கிருஷ்ணமிஷன் மண்டபத்தில்
26

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
நடைபெற்ற அருள்நெறி விழாவின் போது, ‘திருநெல்வேலி ரீ விரகத்தி விநாயகர் ஆலய வரலாறு' என்னும் சிறந்த நூலை எழுதி வெளியிட்ட ‘சிவநெறிச் செம்மல் வை. அநவரத விநாயமூர்த்தி, இராம கிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி ஆத்ம னந்தஜியிட பரிசும் விருதும் வழங்கி கெளரவித்தார்.
ரீலறி சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் சிவநெறிச் செம்மல்’ எனும் விருது வழங்கி கெளரவித்தார்.
இந்தியா டெல்லியில் அமைந்துள்ள ASIA INTERNATIONAL 6T6ip p56160th 1984b sgorge) "LEARNED INDIA” என்னும் நூலை ஆங்கில மொழியில் தொகுத்து வெளியிட்டது. இந்த நூலில் இணுவை மூர்த்தியின் இலக்கிய, சமயப் பணிகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தணிகைப்புராண உரையாசிரியர் மஹாவித்துவான் பொன். அம்பிகைபாகர் அவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஈழத்தில் வாழ்ந்த தமிழ்ப் பெரும் புலவர்களில் ஒருவராக நன்கு மதிக்கப்பட்டவர். தாய்நாடாகிய ஈழத்தில் மட்டுமன்றி தமிழகத்திலும் இலக்கியப் பணிகள் புரிந்தவர். வளரும் தமிழை வளம் படுத்திய தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் உற்ற நண்பராக விளங்கினார்.

Page 16
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
*கலாபூஷணம்’ ‘சிவநெறிச் செம்மல்"வை. அநவரத விநாயகமூர்த்தி அவர்கள் இப்புலவர் பெருந்தகை பொன். அம்பிகைபாகர் அவர்களின் பேரனாவார் என்பது குறிப்பிடத் தக்கது.
வயதில் முதிர்ந்தவரானாலும் சிறுபிள்ளை போல இனிமையாகப் பழகும் இப்பெரியார் இறுதியாக வாழ்ந்த முகவரி.
V.Anavarathavinayaga Moorthy. I6, 4/6 Vander Wert Place
Dehiwala.
TVP 0112717335
28

-சில இலக்கியப் பதிவுகள்.
இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் வெள்ளவத்தை இராம கிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்ற ‘அருள்நெறி விழாவின் போது, 'திருநெல்வேலி ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வரலாறு' என்னும் சிறந்த நூலை எழுதி வெளியிட்ட ‘சிவநெறிச் செம்மல் வை. அநவரத விநாயமூர்த்தி, இராம கிருஷ்ணமிஷன் தலைவர் சுவாமி ஆத்மானந்தஜி யிடமிருந்து தமக்குரிய பரிசைப் பெறுவதையும், அருகில் கல்வி, உயர்கல்வி அமைச்சு மேலதிகச் செயலாளர் எஸ்.தில்லை நடராஜா நிற்பதையும் படத்தில் 866f).
29

Page 17
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
30

அமரர் வை. அநவரத விநாயகமூரத்தி -சில இலக்கியப் பதிவுகள்.

Page 18
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
யாழ்ப்பாணம்திருநல்லு
அருள்மிகு
ரீமுத்துமாரிஅம்மாள்
380L OGO.g)
32
 

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
மூர்த்தி ஐயா அவர்களினால் வெளியிடப்பட்ட உதயம் பத்திரிகையின் முகப்பட்டை

Page 19
XX
கொழும்பு ஜோன் டி.சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் 2005 ஜனவரி 22ந் திகதி நடைபெற்ற கலாபூஷண விருது வழங்கும் வைபவத்தில் கலாசார அலுவல்கள், தேசிய மரபுரிமைகள் அமைச்சர் விஜித ஹேரத், முதுபெரும் எழுத்தாளர் ‘சிவநெறிச் செம்மல் வை. அநவரத விநாயக மூர்த்திக்கு ‘கலாபூஷணம்' விருது வழங்கிக் கெளரவிக்கிறார்.
34
 

அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
ஓர் இரவில் தயாரான இச்சிறு நினைவு நூல்.
என் மதிப்பிற்குரிய நண்பர் அநவரத விநாயகமூர்த்தி அவர்களின் மறைவையடுத்து 31 ம் நாளை நினைவொட்டி எனினால் எழுதப்பட்ட கட்டுரையை அனுப்பி வைக்கு முகமாக தை 05, 2010 இரவு 700 மணியளவில் அணி னாரின் மகள் சிவகெளரி அநவரத விநாயகமூர்த்தி அவர்க ளுடனி தொலைபேசி மூலம் தொடர்பு கொணிடேனி. அச்சந்தர்ப்பத்தில் விநாயகமூர்த்தி ஐயா அவர்களின் 31 நாள் நினைவு நிகழ்வுகளுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி யாகிவிட்டதாகவும், நினைவு நிகழ்வுகள் தை 09, 2010 இல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிந்தேனி.
அதைத் தொடர்ந்து தை 05, 2010 இரவோடிரவாக இச்சிறு நூலுக்கான கணனிப்படுத்தல் ஏற்பாடுகளை செய் ததுடன், அச்சீட்டு ஏற்பாடுகளையும் துரிதமாக நிறைவு செய்து தை 06, 2010ல் சகோதரி சிவகெளரிக்கு புகையிரதம் மூலம் அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொணிடேனர். எனவே, புத்தகம் கணனிப்படுத்தப்பட்டு அச்சுப்படுத்தப்பட்டு சுமார் 12 மணிநேரத்துக்குள் இச்சிறுபுத்தகம் உருவாக்கம்
35

Page 20
அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி -சில இலக்கியப் பதிவுகள்.
பெற்றதினால் சிறு தவறுகள் இருக்கலாம். மணினிக்குமாறு வேண்டிக் கொள்கினிறேன்.
அவசரத்தில் அச்சிட்டதினால் முகப்பட்டையையோ, ஏனைய படங்களையோ நான்கு வர்ணத்தில் அச்சிட முடியவில்லை. பின்பு அமைதியாக அமரர் வை. அநவரத விநாயகமூர்த்தி ஐயா பற்றிய விரிவான ஆய்வுப் புத்தகமொன்றை சிந்தனைவட்டம் வெளியிடும்.
மிக்கநன்றி
கலாபூஷணம் j6746. jazýzfurtuozý
சிந்தனைவட்டம், 14 உடத்தலவின்ன மடிகே உடத்தவின்ன - 208O2றிலங்கா தொலைபேசி : 0812493892 தொலைநகல் : 0812493746 ш56й6069+60 : рmpuпіуапneen (Qyahoo.com
தை 06, 2010
36
 
 
 


Page 21
عسير سنة
ISBN: 978-955-17
 

79-29-0