கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும் ஆய்வரங்கு 2009

Page 1
ஆய்வ GjöIDAL 5 GUITEITU
 


Page 2
O3.09.2009 -
சங்கரப்பிள்ளை மண்டபம், ெ
இந்துசமய கலாசார அலு
 

சிறப்பு மலர்
இ கொழும்புத்
தமிழ்ச் சங்கம் கொழும்புத் தமிழ்த் , ாேலகத்திற்கு
།
, ملی آرامگاه لا
TkLkk00TTL0u00LLAA AAA SLLLeSAA L S L SJAJJJ STTOLLS LLLTTTAAS
+క్షణా శశిగణేశీ-H.Hu அவர்கள் நன்கொடையாக அளித்தது
திகதி.கிே.பி.கி:
06.09.2009
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
வல்கள் திணைக்களம்

Page 3


Page 4
takacsi-orgersuasib/ Office
రజdజగిబ Cassvaaucua - 537s28
Telephone
ck esca
தொலைநகல் 2890898
Fax No.
് }-2660896 பண்டு பண்டார
Gen. மத விவகார PANDU BANDA
Ministerofre
Sboard q-zsocs SsS) స్థి ဣန္တီခေါ်’ } .
Mes
Hon. Pandu Bar
Minister of Re
It gives me a great pleasure in sending this m Occasion of the Annual Research Seminar whichi
and Cultural Affairs on the theme of “The Vijay
I am aware, that the Research Seminars are orga of Hinduism, Hindu Cultural and Tamil Literatur research papers in their respective field and thes by the Department.
Theresearch seminarof this natureandrelated pul the studentsofthe Universities and the generalp
I wish the seminar all success.
Pandu Bandaranaike (M.P.) Ministerof ReligiousAffairs.
ආගමික කටයුතු අමාතාකාංශය, 115. විජේ. மத விவகார அமைச்சு, 115, விஜேராம ம MINISTRY OFRELIGIOUS AFFAERS, 15, W
 

32elavalib/Residence
లియదలియాలిలి - బడాదాe
uo(pakesivatavaveav, Kvák4ov Madugaswalawwa - Yakkala
ÓSO)GOOD (e.e.) ਕੰ°}à: යුතු අමාත්‍ය Telephone O33-2222088 நாயக்க (பா.உ) ෆැක්ස් අංකය ,
033-2222088 60மச் F බ්‍රි:తతుی RANAIKE (M.P) ligious Affairs
Roco
திகதி 7.08.209
Date
Sage
ldaranaike M.P.
ligious Affairs
assage for the Souvenir to be published on the sorganized by the Department of Hindu Religious vanagar Empire and Cultural Renaissance'.
nized annually by the Department on the topics e. The Scholars from India and Sri Lanka submit
e papers were compiled and published as a book
plications are very much beneficial to the teachers, ublic who are interested in these fields.
රාම මාවත, කොළඹ 07, ශ්‍රී ලංකාව, வத்தை, கொழும்பு 07, இலங்கை, jerama Mawatha, Colombo 07, Sri Lanka.

Page 5
ආගමික කටයුතු හා සඳ மத அலுவல்கள், ஒழுக்
MNSTRY OF RELIGIOUS AFF
මගන් අංකය 3 3 K sv ës حق { వీ. L; བ་} My No. Your No.
Mes
Mr. H. M
Secretary, Ministry of Religio
It is with great pleasure and privilege to send this occasion of the Annual Research Seminar whichi and cultural Affairs on the them of "The Vijayan:
I am aware, that the Research Seminars are orga Hinduism, Hindu Culture and Tamil Literature. T which was in India during 14th Century to 18th Ce Nadu. During this period Hindu Religion and Hi in the fields of architecture of Hindu temples and Culture.
The Research Seminars of this nature are very universities and the general public who are inter
It is my fervent wish that this endeavour will be
Y\ea
H. M. Herath Secretary, Ministry of Religious Affairs & Moral Upliftmen
 

ආචාර වර්ධන අමාතSකාංශය க மேம்பாட்டு அமைச்சர் ARS AND MORAL UPLFTIMENT
3 10.08.2009 في هنية Date i
Sage
I. Herath
Lus Affairs & Moral Upliftment
s message for the souvenir to be published on the sorganized by the Department of Hindu Religious
gar Empire and Cultural Renaissance.
nized annually by the Department on the topic of his Seminar will focus on the Vijayanagar Empire ntury covering Andra Pradesh, Mizoor and Tamil indu Culture were remarkably developed specially literature. It has greatly influenced the Sri Lankan
much beneficial to the teachers, students of the
ested in the field.
crowned with Success.

Page 6
@={ හින්දු ආගමික හා සංස්කෘතික இந்துசமய, கலாசார அலு Department of Hindu Relig
ಬ್ಭಬ್ಬ }
பணிப்பாளர் ෆිනැක්ස්
Director 255.2643 தொலைநகல் } 2 පොදු Fax:
பொது } 255.264
General
මෙග් අංකය ඔබේ අංකය எனது இல. உமது இல. My No. Your No.
வெளியி
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் தனது வருடம் ஆய்வரங்கொன்றினை நடத்திவருகின்றது. இ தொடர்பான கருப்பொருளை அடிப்படையாகக் கெ வருகின்றது. அவ்வகையில் தென்னிந்திய வரலாற்றி காலத்தோடு தொடர்புபட்டதாக “விஜயநகரப் பேர இம்முறை ஆய்வரங்கு நடைபெறுகின்றது.
"விஜயநகர நாயக்கர்’ காலமானது இந்து சமய வ பகுதியிலேயே பல சமய இலக்கியங்கள் தோற்றம் பக்திப்பாடல்களும், திருவிளையாடற் புராணம், கந்தபு இக்காலத்திலேயே வைணவமரபில் வடகலை, தென்க
இக்காலப்பகுதி கோயில் கட்டடக்கலை, சிற் வளர்ச்சிகளைப் பெற்ற காலப்பகுதியாகும். கட்டிடக் கe எனக்கோயில் பல்வேறு புதிய வளர்ச்சிகளைப் பெற்றது இக்காலத்திலேயே புது மலர்ச்சி பெறுகின்றது. இவ்வா இந்த ஆய்வரங்கு நடைபெறுகின்றது.
இவ்வாய்வரங்கு தொடர்பாகச் சிறப்பு மலர் மகிழ்ச்சியடைகிறேன். இச்சிறப்பு மலரானது விஜயநகர காசுக்கள், விஜயநகரப் பேரரசு, சமுதாயமும் இலக்கிய நாயக்கர் கால கலைப்பணி, நாயக்கர் கால சிற்பக்கை ஒவியங்கள் போன்ற பல்வேறு கட்டுரைகளைக் கொண் பயன்பெறுவதற்குரியதாக அமையும் என்பது நமது ஆய்வுக்கட்டுரைகளை நூலுருவாக்கம் செய்யும் ப6 பல்கலைக்கழக சமூகமும் உயர்தர வகுப்புமாணவர்களு
 
 

À
කටයුතු දෙපාර්තමේන්තුව வல்கள் திணைக்களம்
ous and Cultural Affairs
ඊමේල් ழின் ஆஞ்சல் 552825 E-Mail
ශ්‍රවඩ් අඩවිය . ஐயூதளம் } www.hindudept.gov.lk
'දිනය }
} hindudirayahoo.com
கதி
ate
27.07.2009
iட்டுரை
து ஆய்வுப் பிரிவின் செயற்பாடுகளுள் ஒன்றாக வருடா வ்வாய்வரங்கு இந்து சமயம், தமிழிலக்கியம் பண்பாடு ாண்டு பல்வேறு தலைப்புக்களின்கீழ் நடைபெற்று ல் மிக முக்கியமான காலமான விஜயநகர நாயக்கர் ரசும் கலாசார மறுமலர்ச்சியும்” எனும் தலைப்பில்
ரலாற்றில் ஒரு புத்தெழுச்சிக் காலாமாகும். இக்காலப் பெற்றன. அருணகிரிநாதரின் திருப்புகழ் போன்ற ராணம் முதலான புராணங்களும் பலவாக எழுந்தன. லைப் பிரிவுகளும் தோன்றின.
பக்கலை, ஓவியக்கலை போன்றவற்றில் பல்வேறு லையில் பல்வேறு மண்டபங்கள், பரிவாரக் கோயில்கள் து. இன்று கர்நாடக இசை என்று வழங்கும் இசைமரபு றான ஒரு காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டே
ஒன்று வெளியிடுவதையொட்டி நான் மிகவும் ப்பேரரசின் நாடும் மக்களும், விஜயநகர வேந்தர்காலக் மும், விஜயநகர கலைப்பணி, விஜய நகர சிற்பக்கலை, ல, விஜயநகர காலத்து ஒவியங்கள், நாயக்கர் காலத்து ாடமைந்துள்ளது. இவ்வரிய நூல் அனைவரும் படித்துப்
எதிர்பார்ப்பாகும். ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்படும் ணரியினை திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. நம், ஆய்வுத்தேடலை மேற்கொள்பவர்களும் இந்நூலின்
w

Page 7
மூலம் பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளலாம். இ தொகுத்து அளிப்பதன் மூலம் திணைக்களம் தனது ப
இவ்வாய்வரங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு பே இன்றியமையாதது. இந்து கலைக்களஞ்சிய ஆலோசன அறிஞர்களும் தங்களது பூரண ஒத்துழைப்பினை வழா
ஆய்வரங்கு வருடம் தோறும் சிறப்பாக அமையபக் அமைச்சர் மாண்புமிகு பண்டு பண்டாரநாயக்கா அவ எம். ஹேரத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி
மேலும், இவ்வாய்வரங்கின் தொடக்க வைபவத்திற் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேர நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். வருடம் தோ நடத்திவரும் ஆராய்ச்சிப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் மனமாரப் பாராட்டுகின்றேன்.
ஆய்வரங்குகளில் பங்கேற்கும், ஆய்வாளர்கள், பேர் பல புதிய விடயங்களை எமது ஆய்வுத்துறைக்கும், சமூ இவ்வாய்வரங்கில் வெளியிடப்படும் சிறப்பு மலரை ஆ வேண்டுமென்பது எனது அவாவாகும்.
a-1
சாந்திநாவுக்கரசன் பணிப்பாளர்

க்கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளை களிப்பினை வழங்குகின்றது.
ாசிரியர் சி. பத்மநாதன் அவர்களின் பங்களிப்பு மிக னக் குழுவினரும் இந்திய, இலங்கை பல்கலைக்கழக கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கபலமாக இருந்து வரும் மத விவகார அலுவல்களின் களுக்கும், எமது அமைச்சின் செயலாளர் திரு. எச் . ளைத் கூறக்கடமைப்பட்டுள்ளேன்.
கென சிறப்புரை, ஒன்றை எழுதி வழங்கிய தமிழ்நாடு, ாசிரியர் கு. சேதுராமன் அவர்களுக்கும் விசேடமாக றும் இவ்வாய்வரங்கினை திட்டமிட்டு ஒழுங்கமைத்து மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் நான்
ாசிரியர்கள்,அறிஞர்கள் கட்டுரைகளைப் படிப்பதுடன் கத்திற்கும் தருவது மிகவும் பயனுடைய விடயமாகும். ய்வாளர்களும், மாணவர்களும் படித்துப் பயன் பெற

Page 8
10.
11.
12.
3.
பொருள்
விசயநகரப் பேரரசும் கலாசார மறுமலர் ஆய்வரங்கச் சிறப்புரை - 2009 - பேராசிரியர் கு.சேதுராமன்
விஜயநகரப் பேரரசு - பேராசிரியர் க.அ. நீலகண்ட சாஸ்தி
நாடும் மக்களும் - கலாநிதி தெ. வே. மகாலிங்கம்
விஜயநகரப் பேரரசுக் காலச் சமுதாயமு - மங்கள முருகேசன்
விஜயநகரப் பேரரசுக் காலச் சமய நூல்க - பேராசிரியர் மு. வரதராசன்
விஜய வேந்தர் காசுகள் - கலாநிதி நடனகாசிநாதன்
நாயக்கர் காசுகள் - கலாநிதி நடனகாசிநாதன்
விஜயநகர கலைப்பாணி - பேராசிரியர் சி. பத்மநாதன்
நாயக்கர் கலைப்பாணி - பேராசிரியர் சி. பத்மநாதன்
விஜயநகர காலச் சிற்பக்கலை - கலாநிதி இராசு காளிதாஸ்
நாயக்கர் கால சிற்பக் கலைகள் - பேராசிரியர் சி. பத்மநாதன்
விஜயநகர காலத்து ஒவியங்கள் - பேராசிரியர் சி. பத்மநாதன்
நாயக்கர் காலத்து ஓவியங்கள் - பேராசிரியர் சி. பத்மநாதன்

ாடக்கம்
ச்சியும்
ரிகள்
ம் பண்பாடும்
கள் (கி.பி.1100 - 1700)
01
22
65
85
95
121
125
138
158
169
178
188

Page 9


Page 10
ஆய்வரங்கச் சிறப்புரை - 2009
விசயநகரப் டே
356DITëfTU LDQL
கிபி 1336இல் வைதீக சமயத்தைக் காக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட விசயநகரப் பேரரசின் மன்னர் முதலாம் புக்கரின் மகன் குமாரகம்பணன் தமிழகத்தில் கி.பி. 1371 இல் விசயநகரப் பேரரசின் மேலாதிக்கத்தை நிலைநாட்டினார். அவருக்குப்பின் மதுரையில் விசயநகர அரசப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். கிருஷ்ணதேவராயர் காலத்தில் தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளும் விசயநகரப் பேரரசின் கீழ் வந்தன. பேரரசு செஞ்சி, மதுரை, தஞ்சைப் பகுதிகளில் முறையே 1526, 1529, 1532 ஆண்டுகளில் அரசப் பிரதிநிதிகளை நியமித்தது. இவர்கள் அந்தந்தப் பகுதிகளின் நாயக்கர்கள் எனப்பட்டனர். சுமார் நான்கு நூற்றாண்டு காலம் தென்னக வரலாற்றில் பெரும் சாதனைகளைப் புரிந்த விசயநகரப் பேரரசர்களும், அவர்தம் அரசப் பிரதிநிதிகளான நாயக்க மன்னர்களும், நாட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்த முயன்றனர். இருப்பினும் அவர்கள் காலத்தில் ஆட்சிச் சிக்கல்களும் தோன்றின. மத்திய அரசும், மாநில அரசும், மாநில அரசுகளுக்குள் அடங்கிய சுமார் 72 பாளையங்களும் தனித்தனி நிர்வாகத்தைச் செய்த காலமிது. எனவே தான் திடமான மத்திய அரசைக் கொண்டிருந்த சோழப் பேரரசை ஒரு கூறாண்மை என்று சொன்ன பர்ட்டன் ஸ்டெயின் விசயநகரப் பேரரசும் அதே கூறாண்மை அடிப்படையிலான அரசசென்றே கூறினார். ஆனால் அவரே தன் கருத்தை சிறிது மாற்றி 15-16ஆம் நூற்றாண்டுகளின் விசயநகர அரசானது இந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்தில் நிலவிய அரசியல் மற்றும் சமுதாய வாழ்வுக்கு முன்னோடியான
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

ரசும் மலர்ச்சியும்
பேராசிரியர் கு. சேதுராமன்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை
அமைப்பு என்கிறார். கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி இதனை ஒரு இராணுவ அரசமைப்பைக் (War-State) கொண்ட இந்து அரசு என்கிறார். டி.சி. சர்க்கார் 956060T (C5 66ULDIT Gofuj gỊTG” (Feudalistic State) என்று ஒத்துக் கொள்கின்றார். இதனை நிலவுடமையாளர் முறை (landordism) என்று கூறுவதனைப் பெரிதும் ஏற்கின்றார். தமிழகத்தில் விசயநகர ஆட்சி ஏற்பட்டதிலிருந்தே நிலமானிய அடிப்படையிலான அரசு செயல்பட்டது. இதனை நாயக்கர் நிர்வாக முறையில் காணலாம் என்கிறார் அ. கிருஷ்ணசாமி. இவ்வாறு விசயநகர அரசின் தன்மை பற்றிப் பல கருத்துக்கள் வெளியாகியுள்ளன. விசயநகர ஆட்சியாளர்கள் அதன் தொடக்க காலத்திலிருந்து முஸ்லீம்களுடனும் பிறருடனும் போர் தொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். மிகப் பெரும் பரப்பைக் கொண்டிருந்த அவர்கள் தங்களின் ஆட்சியின் கீழிருந்த தமிழகத்தைச் சில மாநிலப் பிரிவுகளாகப் பிரித்துத் தம் இராணுவ அதிகாரிகளான நாயக்கர்களிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் தலைக்கோட்டைப் போர்வரை (கி.பி.1565) அப்பகுதிகள் மீது தங்களது மேலான இறைமையைச் செலுத்தத் தவறவில்லை. அதன்பின் நாயக்கர்கள் சுதந்திரமாக இயங்க முற்பட்டனர். வடக்கே இப்பேரரசின் தோல்வியும், வலுவிழந்த தன்மையுமே நாயக்க மன்னர்களின் சுதந்திர உணர்வுக்குக் காரணமாயிருந்திருக்கக் கூடும். தங்களைக் காக்கும் வலுவினையிழந்த அரசுக்குத் திறை செலுத்த நாயக்கர்கள் மறுத்தனர். அதுவே, பேரரசு பிற்காலத்தில் அழியவும் ஒரு காரணமாயிற்று. இருப்பினும் இப்பேரரசு தனது ஆட்சிக்காலத்தில்
1

Page 11
முந்தைய அரசுகளிலிருந்து பலவகையில் மாறியிருந்தது. அதனைப் பண்பாட்டிலும் விரிவாகக் காணமுடிகிறது.
விசயநகர அரசின் கீழ் மாநிலங்களிலும், கிராமங்களிலும் புகுத்தப்பட்ட நிர்வாக முறை நாயக்கார அல்லது ஆயகர் முறையாகும். இராணுவ சேவைக்கு நாயங்கார அல்லது ஆயகர் அல்லது அமரநாயகர்முறை என்ற பெயர் வழங்கியது. இவ்வித அமர நாயக்கர்கள் தாங்கள் பெற்றுக் கொண்ட நிலங்களுக்கு ஈடாகப் போர் வீரர்களைத் தேவையான காலத்தில் பேரரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவர்கள் தம் வருமானத்தில் ஓர் குறிப்பிட்ட அளவைப் பேரரசிற்கு அனுப்ப வேண்டும். மகாநவமி திருவிழாவிற்குப் பணம் அனுப்ப வேண்டும். மன்னரின் பிறந்தநாள் போன்ற முக்கிய நாட்களில் பரிசுப் பொருள்கள் அனுப்ப வேண்டும். தம்பகுதிகளில் குற்றங்கள் நடைபெறாதவாறு பாதுகாக்க வேண்டும். துவக்கத்தில் மன்னரால் நியமனம் செய்யப்பட்ட இவர்கள் காலம் செல்லச் செல்ல மரபு வழியில் பதவி பெற்றனர். இருப்பினும் விரும்பாதபோது மன்னர் இவர்களைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் பெற்றிருந்தார். இம்முறையை ஐரோப்பாவில் மத்திய காலத்தில் நிலவிய நிலமானிய முறையோடு ஒப்பிடலாம் என தே.வே. மகாலிங்கம் கூறுகிறார்". இம்முறையினாலும் தமிழ்நாட்டில் தொன்று தொட்டு இருந்து வந்த கிராம அல்லது தல ஆட்சி நிர்வாகங்கள் அழியத் தொடங்கின.
விசயநகர ஆட்சிக் காலத்தில் உருவான மாநில ஆட்சி அமைப்புக்களாலும், நாயக்கார முறையினாலும் பழமையான தமிழ்நாட்டு தல ஆட்சி நிறுவனங்கள் கி.பி.15ஆம் நூற்றாண்டு வாக்கில் செயலிழந்து அழிவுறத் தொடங்கின. 14-15ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் சுமார் 616 கல்வெட்டுக்கள் வெட்டப்பட்டன. அவற்றில் சுமார் 45 கல்வெட்டுகளே இவ்வமைப்புக்களைப் பற்றிக் கூறுகின்றன. இந்த 45இல் சபை பற்றி 15 கல்வெட்டுகளும், ஊர் பற்றி 14 கல்வெட்டுகளும், நாடு பற்றி 16 கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன". சதுர்வேதி மங்கலங்கள் என்ற கிராமங்களில் சபை என்றழைக்கப்பட்ட கிராம அமைப்புகள் இருந்தன. பல சதுர்வேதிமங்கலங்கள்
2

இருந்த பகுதியில் நாடு என்ற அமைப்பின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. பழைய வட ஆற்காடு மாவட்டத்தில் மூன்று இடங்களில் சபை செயல்பட்டதாகத் தெரிகின்றது. 1354இல் மல்லிநாத சதுர்வேதி மங்கலம் என்ற காங்கேய நல்லூர் சபைக்குத் திருவேங்கடமுடையார் என்பார் நிலம் விற்ற செய்தியைக் கல்வெட்டொன்று தெரிவிக் கின்றது. இதுதவிர, சபை ஒன்று தனி மனிதர்களுக்கு நிலம் விற்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளது. உக்கல் என்ற இடத்திலிருந்த சபையானது பிடாரிதாங்கல் என்ற கிராமத்தை இருவருக்கு விற்றுள்ளது. இதனால் கிடைத்த பணம் நீர்ப்பாசனக்குளம் ஒன்றினைப் பழுதுபார்க்கச் செலவிடப்பட்டது". 1371ஆம் ஆண்டைய கல்வெட்டு ஒன்று காவேரிப் பாக்கத்து மகாசபையார் பிராமணர்களுக்கு நிலம் விற்ற செய்தியைக் குறிப்பிடுகின்றது. இதுமட்டுமன்றி பல சபைகளின் மூலம் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து அங்குள்ள கோயில்களுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் பற்றிய செய்திகளும் கிடைத்துள்ளன". தளவனூரில் கிடைத்த கல்வெட்டொன்று கொப்பனாரின் ஒப்புதலுடன் கோயிலுக்கு தேவதானமாக நிலங்கொடுத்த செய்தியை அங்குள்ள ஊரவர்க்கு அறிவிப்பதாக உள்ளது". 1415 நூற்றாண்டுகளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 20 கிராமங்களில் ஊரவை செயற்பட்டது". கீழ்ப்புதுவயல் ஊரவர்கள் அவ்வூரிலுள்ள பொற்கொல்லர்களுக்குச் சில உரிமைகளைக் கொடுத்தனர். 1431ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, நார்த்தாமலையில் கோயில் நிர்வாகத்தினரும் ஊரவரும் ஒன்றாக அமர்ந்து தேவரடியார்களின் பிள்ளைகளுக்குச் சில சலுகைகள் கொடுத்ததாகக் கூறுகின்றது". காங்கேய நாட்டு நாட்டவர்கள் விநாயகர் கோயில் ஒன்றுக்கு 6 பொன் நாணயங்களைக் கொடையளித்ததாக 1449ஆம் ஆண்டு ஆவணம் ஒன்று தெரிவிக்கின்றது".
மேற்கூறப்பட்ட கிராம நிர்வாக அமைப்புகள், நிலவரி வசூல் செய்து அரசுக்கு அனுப்புதல், புதிய வரிகளை விதித்தல், மன்னரது ஆணைப்படி வரிப்பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கோயில்களுக்கு மானியமாக வழங்குதல்,
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 12
கிராமங்களில் வசூல் செய்யும் வரிப்பணத்திலிருந்து நீர்ப்பாசன வசதி செய்தல், கிராமப் பிரச்சனை, தனிமனிதர் பிரச்சனை ஆகியவற்றில் தலையிட்டு நீதி வழங்குதல், கோயில்களின் சொத்துக்களையும், அவற்றிற்குக் கிடைத்த மானியங்களையும் பாதுகாத்தல், கோயில் பூசைகளை நடத்த ஆணையிடல் போன்ற பணிகளைச் செய்தன. மாநில அரசுகளும், நாயங்கார அரசும் செல்வாக்குப் பெற்ற நேரத்தில் கிராம நிர்வாக அமைப்புகளான சபை, ஊர், நாடு ஆகியவை வழக்கொழிந்தன.
விசயநகர ஆட்சியின் அடுத்த கட்டமாக அதிகாரப் பங்கீடு முறை ஏற்பட்டது. அதாவது அவ்வாட்சியின் கீழ் நிலவிய மாநில அரசான மதுரை நாயக்கர் அரசு தனது ஆட்சிப் பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்தது. பாளையங்களின் தலைவர்களான பாளையக்காரர்களுக்குச் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டன. எவ்வாறு நாயக்கர்கள் விசயநகரப் பேரரசுக்குத் திறை செலுத்தியும் தேவைப்பட்ட போது இராணுவத்தை அனுப்பியும், வந்தனரோ அதுபோன்றே பாளையக்காரர்கள் நாயக்கர்களுக்குத் திறை செலுத்தினர். படையுதவி செய்தனர். எப்படி விசயநகரப் பேரரசர்களுக்கு நாயங்கார முறை செயல்பட்டதோ அது போன்றே நாயக்கர்களுக்கு பாளையக்காரர் முறை செயல்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி, ஏழாயிரம்பண்ணை, அரியலூர், உடையார் பாளையும், இராமநாதபுரம், சிவகங்கை ஆகியவை முக்கியமான பாளையங்களாகும்.
இக்காலத்தில் இராணு வளர்ச்சிக்கு அதிகம் செலவிடப்பட்டது. இதற்குக் காரணம் அவர்கள் காலத்தில் தொடர்ந்து ஏற்பட்ட போர்களே ஆகும். விசயநகர அரசர்கள் இராணுவ உதவிக்காக நிலக்கொடையளித்துள்ளனர். இந்நிலக் கொடை படைப்பற்று எனப்பட்டது. இவர்களுக்குப்படையுதவி செய்த நிர்வாக அமைப்புகள் நாயங்கார முறைகாரர், நாயக்கர்கள், பாளையக்காரர்கள் போன்றோராவர். இதனால்தான் இம்முறையை நிலமானிய அமைப்புமுறை' என அறிஞர்கள் கருதலாயினர். இவர்கள் காலத்தில் காவல் முறையும் ஓரளவு சிறப்பாக நடைபெற்றது. இங்கு காவலர்களே
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அவரவர் பொறுப்பில் உள்ள சொத்துக்களின் பாதுகாவலராவர். இரண்டாம் தேவராயர் காலத்தில் 12000 காவலர்கள் இருந்தனர் என்றும், ஒவ்வொருவரும் மாதம் ஒன்றுக்கு 30 பணம் ஊதியம் பெற்றனர் என்றும் வெளிநாட்டுப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர். மாநிலங்களில் நாயக்கர்களும், பாளையக்காரர்களும் காவல்முறையைப் பின்பற்றினர். இவர்கள் காலத்து நீதியும், சட்டமும் சமயச் சார்புடையதாகவும், ஒழுக்கநெறி அல்லது அறநெறி சார்ந்ததாகவும் இருந்ததாகக் கருதப்படுகிறது. கிருஷ்ண தேவராயரே தனது “அமுக்தமால்யதத்”தில் ஒரு அரசன் எப்போதும் தர்மத்தின் மீது ஒரு கண்வைத்தே ஆட்சி நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் நடைமுறையில், சட்டம் மற்றும் நெறிமுறையில் தேர்ந்த அறிவுடையவரெனக் கருதப்பட்ட பிராமணர்களின் ஆலோசனைப்படியே மன்னர்கள் செயபட்டனர்.
நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றே சமுதாய வாழ்க்கை முறையில் முந்தைய காலத்தைவிட பல மாறுதல்கள் நிகழ்ந்தன. இதற்குக் காரணம் இவர் காலத்தில் ஏற்பட்ட இஸ்லாமியர் மற்றும் ஐரோப்பியர்களின் தொடர்பாகும். இக்காலச் சமுதாய வாழ்க்கையில் முக்கியமானது சாதி முறையாகும். சாதி வேறுபாடுகள் கடுமையாயிருந்தன. சுருங்கக் கூறின் விசயநகர-நாயக்கர் மன்னர்கள் வர்ணாசிரம முறையைப் போற்றினர்". இந்த சாதிகள் ஒவ்வொன்றும் பல பிரிவுகளைக் கொண்டிருந்தன. உபசாதிகள் அதிகமிருந்தன. கலப்பு மணம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சாதி அமைப்பில் பிராமணர்கள், கம்மாளர்கள், செளராஷ்டிரர்கள், முஸ்லீம்கள், கைக்கோளர்கள், வலங்கை-இடங்கை பிரிவினர் மற்றும் பலர் இருந்தனர். பிராமணர்கள் உயரிய இடத்தைப் பெற்றிருந்தனர். சிறப்புரிமைகளை அவர்கள் அனுபவித்தனர். உபகர்மம் என்ற பூணுாலைப் புதுப்பிக்கும் சடங்கைப் பிராமணர் பின்பற்றினர். இச்சடங்கை மதுரையில் வாழ்ந்த பட்டுநூல்காரர்களும் முறைப்படி பின்பற்றும்படி 1705ஆம் ஆண்டு அரசிமங்கம்மாள் வழங்கிய கட்ஜன் சாசனம் அறிவித்தது. பிராமணர்கள் அமைச்சர்க
3

Page 13
ளாகவும், தளவாய் மற்றும் பிரதானிகளாகவும், மன்னரின் ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார்கள். சர்வமானிய நிலக்கொடைகளைப் பெற்று நிலப்பிரபுக்கள் ஆனார்கள். தெலுங்கு பேசும் மற்ற இனத்தவரை ஒதுக்கிய இவர்கள் தெலுங்கு பிராமணர்களைத் தம் பகுதியில் ஊடுருவ விட்டனர்". அவர்கள் நேர்மையானவர்கள், நல்லறிவு படைத்தவர்கள் என மன்னரும் மற்றோரும் போற்றியபோது, தலைக்கணம் பிடித்தவர்கள், இறுமாப்புடையவர்கள், மக்களின் வெறுப்புக்குள்ளான வர்கள் என போர்த்துக்கீசிய வணிகர்" குறிப்பிடுவது இங்கு சிந்திக்கத்தக்கதாகும். பிராமணர்கள் மேற்குக் கடற்கரையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்".
இவர்களுக்கு அடுத்தப்படியாக ஐவகைக் கம்மாளர்கள் இருந்தனர்". இவர்கள் 74 பிரிவுகளைக் கொண்டிருந்தனர் என முதலாம் தேவராயரது ஒரு கல்வெட்டு கூறுகிறது". இவர்கள் பல்லக்கில் ஏறிச் செல்லவும், தமக்கு முன்பு சங்கு ஊதப்படுவதற்கும் காஞ்சியிலும், விரிஞ்சிபுரத்திலும் பல உரிமைகளைப் பெற்றிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவாமத்துார் கல்வெட்டு படைவீடு, செஞ்சி, திருவண்ணாமலை, காஞ்சி ஆகிய இடங்களில் வாழ்ந்த இடங்கைப் பிரிவுக் கலைவல்லுநர்கள் பெற்ற சலுகைகள் அப் பகுதியில் வாழ்ந்த கம்மாளருக்கும் வழங்கப்பட்டன என்கிறது?. சோழ மண்டலத்தில் திருவடியில் கிடைத்த கல்வெட்டு கம்மாளர் இனத்தவருக்கு சில வரிவிலக்கு அளித்தது". மதுரையில் செளராஷ்டிர இனமக்கள் திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் இங்கு வந்தபின்பு உணவு, உடை, இறைவழிபாடு ஆகியவற்றில் பிராமணர்களைப் பின்பற்றினர். இவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் அய்யர், ஆச்சாரியர், பாகவதர் போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டனர்.
சமுதாயத்தின் அடுத்த கட்டத்திலிருந்த கைக்கோளர்கள் கோயில்களில் பணிபுரிந்தனர். பாவாடை விரித்தல், பரிவட்டம் தாக்குதல் போன்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர். தேரோடும் வீதிகளில் குடியிருந்தனர். சங்கு, தண்டு, சாமரம் போன்ற விருதுகள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டது."
4

இவர்கள் இடங்கைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் எனினும் இவர்கள் அடிக்கடி மனம் மாறும், ஒருதிடமான நிலையில்லாதவராவர். சிலநேரம் வலங்கைபிரிவுக்கும், சிலநேரம் இடங்கை பிரிவுக்கும் மாறிக் கொண்டிருந்தனர்". வலங்கை-இடங்கை பிரிவினரில் 98 பிரிவுகள் இருந்தன என அச்சுததேவராயரின் கல்வெட்டுகள் கூறுகின்றன. பல சமயங்களில் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட இவர்கள் சில நேரங்களில் இணைந்து கோயில் பணிகள் பல புரிந்துள்ளனர். வெள்ளாளர் என்போர் சங்ககாலம் முதலே செல்வாக்குப் பெற்ற நிலவுடைமையாளராவர். ஆனால் விசயநகர்-நாயக்கர் காலத்தில் அவர்களது செல்வாக்குக் குறையத் தொடங்கியது. தொண்டை மண்டலப் பகுதியில் தெலுங்கு ரெட்டிகளும், பலிஜாநாயுடுகளும், வன்னியர்களும் நிலச்சுவான் தர்களாயினர். தஞ்சைப் பகுதியில் கள்ளர் பிரிவினர் நிலவுடைமையாளராயினர். விசயநகர ஆட்சியின் பிற்பகுதியில் தொண்டை மண்டலப் பகுதியில் மிராசுதார், நாட்டாண்மை போன்ற தலைமைப் பதவிகளுக்கு வெள்ளாளருக்கும், தெலுங்கு இனத்தவருக்குமிடையே போட்டி ஏற்பட்டது".
இக்காலத்தில் தெலுங்கு மொழி பேசுவோர் பலர் தமிழகத்தில் குடியேறினர். அவர்கள் ரெட்டி, பலிஜா, கம்மவார் போன்றோராவர். செட்டிகள், கச்சவட வணிகர், சேனையங்காடிகள், கோயிலங்காடிகள், செக்கு வணிகர், உறைகாரர், குதிரைச் செட்டிகள் முதலிய இனத்தவரும் வாழ்ந்தனர். ஒவ்வொரு சாதியினரும் கோயில் திருவிழாக்களில் மரியாதையும், சலுகையும் பெற போட்டி போட்டனர். கீழ்ச்சாதியினர் என்று கருதப்பட்டவர்கள் தனித்து வாழக் கட்டாயப்படுத்தப்பட்டனர். சிலம்பாடுதல், பதினெட்டு வகை இசைக் கருவிகளை வாசித்தல், திருவிழாக்களின் போது பதினாறுகால் பந்தல் போடுதல், பிணத்தைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும்போது தேர் உடைத்தல், ஒற்றை மாடி வீட்டில் வசித்தல் முதலிய உரிமைகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டன.
இக்காலப் பெண்கள் பழமையில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர். உடன்கட்டை ஏறும் பழக்கம் தீவிரமாக இருந்தது. மன்னர்களின்
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 14
மனைவியரும் உடன்கட்டை ஏறினர். அரவையில் பெண்கள் பல பணிகளில் அமர்த்தப்பட்டனர். பல்லக்குத் தூக்குதல், சண்டை போடுதல், சோதிடம் பார்த்தல், வருவதுரைத்தல், அரசவையின் முக்கிய நிகழ்ச்சிகளைக் குறித்தல், இசை முழங்குதல் போன்ற பல தொழில்களில் அவர்கள் வல்லுநராயிருந்தனர். பல பெண்கள் தங்களைக் கோயிற் பணிக்கு அர்ப்பணித்து தேவ தாசிகளாயினர். இவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். அரசியுடன் கூட அமர்ந்து வெற்றிலை பாக்குப் போடும் உரிமையும் கிடைத்தது". இவர்தம் காலத்துத் திருமண முறை இனத்திற்கு இனம் வேறுபட்டது. இருப்பினும் இவ்வைபவத்தில் சில பொதுவான சடங்குகளுமிருந்தன. கன்னிகாதானம் என்ற திருமண முறை இருந்தது. பால்ய விவாஹமும், சீதன முறையும், பலதாரமுறையும் இருந்து வந்தது.
இக்காலத்து ஆடை அணிகலன்கள் மக்களது ஒப்பனை முறையையும், பொருளாதார நிலையையும் உணர்த்தின. ஆடை அணிகலன்களுக்கு மன்னரும், மக்களும் பெருஞ்செல்வத்தைச் செலவிட்டனர். ஒவ்வொரு சாதியினரும் வெவ்வேறு ஆடை, அணிகலன்களைப் பெற்றிருந்தனர். விசயநகர-நாயக்கர் காலத்து ஒவியங்களில் அக்காலத்தில் வழக்கிலிருந்த ஆடை, அணி கலன்கள் காட்டப்பட்டுள்ளன. இவர்கள் காலத்தில் நெசவுத் தொழில் சிறந்த முறையில் நடைபெற்றது. கைக்கோளர்கள் நெய்து வந்த தறிகளுக்கு வரிகள் போடும் வழக்கம் தொடர்ந்தது. பட்டாடை மூலாயம் என்னும் தறிவரி விசயநகர ஆட்சிக் காலத்தில் வசூலிக்கப்பட்டது. நெசவுத் தொழில் திறமை பெற்ற செளராஷ்டிர சமூக மக்கள் மதுரையில் குடியமர்த்தப்பட்டிருந்தனர். அரச குலத்தார் பட்டு ஆடைகள், பூக்கள் பின்னப்பட்ட விதவிதமான ஆடைகள் ஆகியவற்றை அணிந்தனர். தாசிகளும், பரத்தையரும் தங்களைப் பல நகைகளாலும், கவர்ச்சி மிகுந்த துணிகளாலும் வண்ணங்களாலும், வாசனைப் பொருட்களாலும் ஒப்பனை செய்து கொண்டனர்.
நாயக்கர் காலத்தில் வாழ்ந்த குமரகுருபரர் பலவகையான அணிகலன்களைத் தம் பாடல்களில்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

குறிப்பிட்டுள்ளார். அரைஞாண், அரைமணி, அரைவடம், ஆரம், இலைமுகப்பூண், உடைதாரம், ஒட்டியாணம், கச்சை, கலாபம், கழல், கிண்கிணி, குண்டலம், குதம்பை, குழை, கேயூரம், கைவளை, சரி, சன்னவீரம், சிலம்பு, சிறுதொடி, கடிகை, சூடகம், சூழியம், சூலாமணி, தமனியக் கொப்பு, தரள உத்தரியம், தலைமாலை, தொடலைக் குறுந்தொடி, தோள் வளை, நடுநாயக மணி, நித்திலச்சுட்டி, பட்டம், பாடகம், பிறை, புயவலையம், பொட்டு, பொற்குதம்பை, பொற்பட்டம், மகரக்குழை, மகர குண்டலம், மங்கல நாண், மணிமுடி, முத்துக்கச்சு, முத்துக்குதம்பை, முதாரி, முற்றிழை, மேகலை, வாளி முதலியன அவரால் குறிப்பிடப்பட்டவையாகும், தட்டான் பட்டறையில் தாமே முன்னிருந்து அணிகலன்களைச் செய்விப்பர் என்னும் குறிப்பினைக் குமரகுருபரர் கொடுத்துள்ளார்".
திருக்குற்றாலக் குறவஞ்சியில் குறி சொல்லியதற்காகக் குறத்தி ஒருத்தி பெற்ற பரிசுகளாகப் பல அணிகலன்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இவை நாயக்கர் காலத்தில் பெண்கள் அணிந்த அணிகலன்களாகும். அவை, சிலம்பு, முறுக்குத் தண்டை, பாடகம், காலாழி, பீலி, அரைஞாண் கொடி, சதங்கை, கழுத்துசரடுகள், முத்துமாலை, கல்பதித்தத் தண்டட்டி, முத்து மூக்குத்தி, மயிர்மாட்டி, குப்பி, வங்களாத்தார் கொப்பு போன்றவையாகும்°.
மக்கள் கேளிக்கைகளிலும், விளையாட்டிலும், திருவிழாக்களிலும், ஆடல் பாடல்களிலும் நாட்டம் கொண்டனர். இருவர் சண்டையிடல், வேட்டை யாடல், குதிரைப்பந்தயம், சீட்டாடல் போன்ற பொழுதுபோக்குகளை விரும்பிப் பார்த்தனர். நாட்டியம், நாடகம், கோலாட்டம், கும்மி போன்றவை கண்டு களிக்கப்பட்டன. பல்வேறு திருவிழாக்கள் நடந்தன. நூனிஸ் கருத்துப்படி, பெரும் பான்மையான பணம் கோயில் கட்டுவதிலும், திரு விழாக்களிலும் செலவிடப்பட்டது. செல்வந்தர்கள் அரசரைப் போன்று ஆடம்பரச் செலவு செய்தனர். புனித யாத்திரை மேற்கொண்டு. புகழ் பெற்றதும், இயற்கைக் காட்சிகள் நிரம்பியதுமான இடங்களுக்குச் சென்று பொழுது போக்கினர்".
5

Page 15
நாட்டில் ஒழுங்கான நீதிமுறையோ, நீதிச் சட்டங்களோ இருக்கவில்லை. நடைமுறையளவில் குற்றங்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனைகளும் தரப்பட்டன. ஆங்காங்கு ஊர்ப் பெரியோரும், ஊர்ச் சபையோரும் நீதி வங்கினர். மன்னரின் தீர்ப்பே இறுதித் தீர்ப்பாக இருந்தது.
இவ்வாறு விசயநகர-நாயக்கர் காலச் சமுதாயம் வைதீக இந்து சமுதாயமாயிருந்தது. சாதிப் பாகுபாடுகளும், கட்டுப்பாடுகளும் நிறைந்திருந்தன. சமுதாய வாழ்க்கை வைதீகச் சமயப் பண்பாட்டை எவ்வகையிலும் பாதித்துவிடவில்லை. மக்கள் சாதிப் பாகுபாட்டுடன் செயல்பட்டபோதும் அவர்கள் திருவிழாக் காலங்களில் ஒன்று கூடிசெயல்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
I
விசயநகர-நாயக்க மன்னர்கள் சிவன் அல்லது விஷ்ணு அல்லது கிராம தெய்வங்களைப் போற்றி வந்தனர். விசயநகரப் பேரரசர்கள் விருபாக்ஷர் என்னும் சைவக் கடவுளின் பிரதிநிதியாக ஆட்சி செய்தனர் என்று சொல்லப்படுகிறது. இக்காலத்தில் பக்தி என்பது வைதீக இந்து மதத்தின் முக்கிய பிரிவாக இருந்துள்ளது". அக்கால மன்னரும், மக்களும் சமயச் சடங்குகள், திருவிழாக்கள், வழிபாடுகள் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். நாயக்கர் கால முக்கிய நகரங்கள் ஆண்டின் பெரும்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தன. இவற்றில் குறிப்பிடத்தக்க நகரமாக விளங்கிய மதுரை இன்றும் நாள்தோறும் விழாக்கோலத்துடன் இருப்பதைக் காணலாம். இவ்வாறு வைதீக சமயத்தைப் போற்றிப் பாதுகாத்த விசயநகர-நாயக்க மன்னர்கள் வேதாந்த சித்தாந்த தத்துவக் கருத்துக்களை ஊக்குவித்தனர். இதற்காக மடங்களை நிறுவினர். முன்னமே வழக்கிலிருந்த மடங்களை வளர்த்தனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள தருமபுரம் மடம், திருவாவடுதுறை ஆதினம், திருப்பனந்தாள் காசிமடம், காசி ஞானப்பிரகாச சுவாமிகள் மடம், திருவொற்றியூர் அரங்கராயன்மடம், புளியங்குளம் திருவேங்கடநாதன் மடம் போன்றவை இக்காலத்தில் செழித்தோங்கின.
6

இக்காலத்தில் வைதீக சமயத் தத்துவங்கள் போற்றப்பட்டன. மந்திரங்கள், தந்திரங்கள், சகுனம் பார்த்தல், ஆகியவற்றில் நம்பிக்கை இருந்தது. சைவ சமயப்பிரிவுகள் சைவ ஆகமங்களில் அதிகம் நாட்டம் கொண்டன. 16-17ஆம் நூற்றாண்டுகளில் சங்கரரின் அத்வைதக் கொள்கைக்குப் பெரும் ஆதரவு இருந்தது. வீர சைவர்கள் சிவலிங்க வழிபாட்டில் ஆர்வம் காட்டினர். லிங்க சின்னங்களைத் தங்களது ஆபரணங்களில் கோர்த்து அணிந்தனர். வீரசைவம் தமிழகத்தின் வடபகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்தது. விசயநகர மன்னர்கள் காஞ்சியிலும் காளகஸ்தியிலும் உள்ள சிவன் கோயில்களுக்கு மானியங்கள் வழங்கியுள்ளனர்.
வைதீக சமயத்தின் மற்றொரு முக்கிய பிரிவான வைணவ சமயமும் வளர்ச்சியடைந்தது. பெரும் பாலான விசயநகர-நாயக்க மன்னர்கள் வைணவ சமயத்தைப் பின்பற்றினர். கிருஷ்ணதேவராயர், அச்சுதராயர், இராமராயர், திருமலை முதலானோர் வைணவத்தைப் பேணி வளர்த்தனர். அச்சுதரும், இராமராயரும் சிதம்பரம் கோயிலில் கோவிந்தராச சுவாமியின் உருவச் சிலையைத் திரும்பவும் பிரதிட்டை செய்தனர். 1556இல் இராமராயரது வேண்டு கோளுக்கிணங்க சதாசிவராயர் பூரீபெரும்புதூரில் உள்ள இராமானுசர் கோயிலையும், அதனோடு தொடர்புடைய பிற நிலையங்களையும் போற்று வதற்காக 31 கிராமங்களை நன்கொடையாக அளித்தார்?.
இக்கால வைணவர்களிடையே இருபிரிவுகள் இருந்தன. அவை வடகலை, தென்கலை என்பனவாகும். இவர்களுக்குள்ளிருந்த முக்கிய வேற்றுமையானது இறைவனையடைவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறை பற்றியதாகும். பக்தர்கள் உறுதியுடன் முனைந்து இறைவனின் திருப்பாதங்களைப் பற்றிட வேண்டும் என்று வடகலையினர் எண்ணியபோது தென்கலையினர் இறைவனை அடைக்கலமென்று சரணடைந்த வர்களை நல்வழிப்படுத்திக் காப்பது அவரது கடமையென்று நம்பினர். இவ்விரு பிரிவினரும் வேறுபட்ட நாமங்களைப் போட்டிருந்தனர். வடகலையைச் சேர்ந்தவர்கள் பாதமில்லா
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 16
நாமத்தையும், தென்கலைப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பாதம் உடைய நாமத்தையும் நெற்றியில் அணிந்தனர். வடகலையைப் பின்பற்றியவர்களில் பெரும்பாலோர் வடமொழியைப் பயின்றவர்களாவர். தென்கலையைப் பின்பற்றியோரில் பெரும்பாலோர் வடமொழியைப் பயின்றவர்களாவர். தென்கலையைப் பின்பற்றியோரில் பெரும்பான்மையோர் தமிழ் மொழியைச் சேர்ந்தவராவர். தேவியை மையமாகக் கொண்ட பூரீவைணவமும் செல்வாக்குப் பெற்று விளங்கியது. ஆழ்வார்களின் பாசுரங்களை வைணவக் கோயில்களில் இசையுடன் தொன்று தொட்டுப் பாடி வந்த வழக்கத்தின் உச்சக்கட்ட வளர்ச்சியாக அரையர் சேவை தோன்றியது.
இக்காலத்தில் அம்மன் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றிருந்தது. உதாரணமாக விசயநகரத்திலேயே அக்காலத்தில் மகாநவமி திருவிழா ஒன்பது நாட்கள் (அக்டோபர்-நவம்பர்) மிகப் பிரபலமாகக் கொண்டாடப்பட்டதென அப்துர் ரஷாக் கூறுகின்றார்°. இன்றும் இவ்விழா நவராத்திரி விழாவாக இந்தியா முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை நாயக்கர் காலத்தில் இது மிகப் பிரபலமாகக் கொண்டாடப் பட்டது. மதுரையில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் பூரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருமண விழாவும், அழகர் கோயில் திருவிழாவும் இணைந்து நடக்கின்றது. இது சைவ-வைணவ ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு திருவிழா எனக் கொள்ளலாம். ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கியது. தமிழாண்டின் முதல் மாதமான சித்திரையில் நடைபெறும் இவ்விழா சித்திரைத் திருவிழா எனப்படுகின்றது. இதனைத் துவக்கி வைத்தவர் திருமலை நாயக்கராவார்". இதே காலத்தில் தென் தமிழகத்தில் குக்கிராமங்களில் எல்லாம் அம்மன் வழிபாடு நடைபெறும். திருமலை நாயக்கர் பிறந்த தைப்பூசத்தன்று வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில்° தெப்பத் திருவிழா நடைபெற்றது. இது இன்றும் நடைபெற்று வருகின்றது. திருவிளையாடல் புராணத்தில் வரும் நிகழ்ச்சிகளைத் திருவிழாவாகக் கொண்டாடும் பழக்கம் இக்காலத்தில்தான் தோன்றியது. தெருக்களில் திருவிழாக் காலங்களில் தேரோடியதாக பெய்ஸ் கூறுகிறார்°.
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

இக்காலத்தில் சைவ வைணவரிடையே பூசல்கள் ஏற்பட்டன. மதுரையில் வைணவ சமயத்தாருக்குள்ளேயே, வேதாந்த தேசிகரின் சீடர்களுக்கும், LO 6ðÖT 6 6T T மாமுனியின் சீடர்களுக்குமிடையே போட்டி ஏற்பட்டது. கி.பி. 1597இல் சிதம்பரத்தில் சைவ-வைணவருக் கிடையே பூசல் ஏற்பட்டதாக பிமண்டா அடிகளார் குறிப்பிடுகிறார். மதுரையில் திருமலை நாயக்கரின் முயற்சியால் வடகலை, தென்கலை வைணவருக்கிடையே நிலவிய வேற்றுமை களையப்பட்டது.
இவர்கள் காலத்தில் காஞ்சிபுரம், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் பெளத்த சமயத்தவர்கள் வாழ்ந்துள்ளனர். இதற்கு ஆதாரமாக காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் விசயநகர் ஆட்சிக் காலத்தில் செதுக்கப்பட்ட பெளத்த சிற்பங்கள் உள்ளன. படைவீடு, சந்திரகிரி, ஜைனகாஞ்சி, செம்பை, கரந்தை, நாகர்கோவில் போன்ற இடங்களில் சமணக் கோயில்கள் இருந்தன. இவ்விடங்களில் இருந்த பெளத்த சமண மடங்களுக்குச் சொந்தமான நிலங்களைத் தேவதான நிலங்களாக கிருஷ்ண தேவராயர் மாற்றினார் எனக் கருதப்படுகிறது. 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வைணவர்களால் துன்புறத்தப்பட்டதாகச் சமணர்கள் விசயநகர மன்னர்களிடம் முறையிட்டபோது மன்னர் புக்கராயர் தலையிட்டு அவரவர் கொள்கைப்படி அவரவர் நடந்து கொள்ளும்படி இருசாராரையும் வேண்டி சமாதானப் படுத்தியுள்ளார்". மதுரை சுல்தானியர் வைதீக மதத்தவரைத் துன்புறுத்திய போது அவர்களை அடக்கியவர்கள் விசயநகர வேந்தர்கள். ஆனால் இவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரிகள் அல்ல. இஸ்லாமியர்களை ஆதரித்தனர். அவர்களைத் தம் இராணுவத்தில் சேர்த்தனர். நாகூர்தர்க்கா சிறப்பாக விளங்க உதவினர். கி.பி. 1574இல் மதுரை கோரிப்பாளையத்தில் முகம்மதியர்கள் சமயக் காரணங்களுக்காக நாயக்க மன்னரிடமிருந்து மானியங்கள் பெற்றனர். 1733இல் மீனாட்சி அரசியார் ஒரு மசூதிக்கு நிலம் மானியமாக வழங்கினார்.
விசயநகர-நாயக்கர் காலத்தில் கிருத்தவ சமயம் பரப்பட்டது. 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிருத்தவ சமயப் போதகர்கள்
7

Page 17
தமிழகத்துக்கு வந்தனர். கிருத்தவ சமயப் பரப்புப் பணி போர்த்துகீசியரும், புனித பிரான்ஸிஸ் சேவியரும் (1545) வந்தபின்பே துரிதமடைந்தது. நாயக்க மன்னர்களில் சிலரும், அவர்களது சிற்றரசர்களில் ஒருவரான கிழவன் சேதுபதியும் கிருத்தவ பாதிரியார்களுக்கு இன்னல் விளைவித்தனர். ஜான் டி பிரிட்டோவைக் கொன்றனர். இருப்பினும் கிருத்தவ பாதிரியார்கள் அயராது உழைத்தனர். மன்னர்களின் ஆதரவையும் பெற்றனர். இதனால் அம்மதம் தமிழகத்தில் வேரூன்றியது.
IV
வடமொழியையும் (சமஸ்கிருதம்), தெலுங்கு மொழியையும் இம்மன்னர்கள் பெரிதும் ஆதரித்த போதிலும் தமிழ்மொழி வளர்ச்சியில் எவ்விதத் தடங்கல்களும் ஏற்படுத்தவில்லை. இவர்தம் காலத்தில் தமிழகத்தில் தென்கோடியில் (தென்காசி) ஆட்சி செய்த (15-16 நூற்றாண்டுகள்) பாண்டிய வம்சத்தினர் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர். விசயநகரப் பேரரசர்களும், அவர்தம் கீழிருந்த நாயக்க மன்னர் சிலரும் இலக்கிய வல்லுநர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களது அமைச்சர்கள் கூட இலக்கியத்திலும் கல்வியிலும் அதிக ஆற்றல் கொண்டிருந்தனர். சில நூல்கள் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டன. சில வடமொழி நூலின் மூலக்கருத்தை வைத்து தமிழில் தனியாக எழுதப்பட்டன. பல தமிழ் நூல்கள் இயற்றப்பட்டன. இவர்கள் காலத்தில் சிற்றிலக்கியங்கள் பல தோன்றின. இவர்களது காலம் சிற்றிலக்கியங்களின் காலமெனவும் கருதப்பட்டது.
விசயநகர மன்னர் முதலாம் புக்கரின் மைந்தர் குமாரகம்பனர், சுல்தான்களிடமிருந்து மதுரையைக் கைப்பற்றி விசயநகர் ஆட்சியை நிறுவியது பற்றிக் கூறும். அவரது மனைவி கங்காதேவியால் எழுதப்பட்ட "மதுராவிஜயம்” என்னும் நூலே அவர்தம் ஆட்சியில் தமிழகத்தில் எழுதப்பட்ட முதல் இலக்கியப் படைப்பாகும். ஆனால் இது வடமொழி நூலாகும். விசயநகர வெற்றி பற்றியும். கோயில்களில் நடைபெற்ற வழிபாட்டு நெறிகள்
8

பற்றியும், இந்நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது. குமாரகம்பனரின் தமிக வெற்றிச் சிறப்புக்கள் மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன. “தொண்டை மண்டல சதகம்” என்ற நூலில் வென்று மண்கொண்ட ஏகாம்பர நாதசம்புவராயர் இரட்டைப் புலவர்களை ஆதரித்தார் என்ற செய்தி காணப்படுகின்றது". வடஆற்காட்டைச் சேர்ந்த வரும் அச்சுதராயரின் அவைப்புலவருமான இராசநாத திண்டிமா என்பவர் “பாகவத சம்பு’ வை இயற்றியதோடு அச்சுதராயரின் வாழ்க்கைச் சரிதத்தை விளக்கும் “அச்சுதராயப் யுதயத்தையும் படைத்துள்ளார். ஞானப்பிரகாச தேசிகர் என்பவர் கிருஷ்ணதேவராயரைப் பற்றி “மஞ்சரிப்பா” என்ற நூலை எழுதினார்.
வைணவ மதத்தின் வடகலைப்பிரிவின் கருத்தை விரித்துரைத்த வேதாந்த தேசிகரை விசயநகர மன்னர்கள் பெரிதும் பாராட்டினர். அவரைத் தம் அவைக் களத்துக்கும் அழைத்தனர். ஆனால் அவர் திருவரங்கத்திலேயே தங்கி* வடமொழியிலும், தமிழிலும் பல அரிய நூல்களைப் படைத்துள்ளார். இவர் எழுதிய நூல்களில் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் “யாதவாப்யுதமும்” விசிஷ்டாத்வைதக் கோட்பாட்டை விளக்கும் “ஸங்கல்ல சூர்யோதயம்” என்ற நாடக நூலும், “சததூஷணி” என்ற சிறப்பான வடமொழி நூலும் குறிப்பிடத்தக்கவை. இவரை ஓரிரவிலேயே ஆயிரம் பாடல்கள் இயற்றச் சொன்ன போது இவர் விஷ்ணுவின் பாதங்களைப்பற்றி ஆயிரம் பாடல்களை இயற்றினார் எனச் சொல்லப்படுகின்றது. பூரீவைணவக் கோட்பாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தேவியின் மூலமாக இறைவனின் பாதங்களை அடைவதாகும். இதனை உணர்த்தும் பாடல்களைக் கொண்ட இவரது “ழரீஸ்துதி”, “பூஸ்துதி” போன்றவை சிறப்புமிக்கவையாம். பூரீ பூதேவியரைத் தமக்காக இறைவனிடம் முறையிடுமாறு இவர் கெஞ்சியும், கொஞ்சியும் பாடியுள்ள பாடல்கள் பூரீவைணவபக்தி ரசத்தின் உச்சக்கட்டமெனக் கொள்ளலாம். இவரது தமிழ் நூல்களில் குறிப்பிடத்தக்கவை “மும்மணிக் கோவை' “நவரத்தினமாலை”, “அர்த்தப்பஞ்சகம்”, “அடைக்கலப்பாட்டு” போன்றவையாகும். இவரது
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 18
மகனும் சீடருமான நயினார் ஆச்சாரியார் தன் குருவைப் பற்றி இருபது பாடல்களைக் கொண்ட “பிள்ளையந்தாதி” எழுதியுள்ளார். கிருஷ்ண தேவராயரின் அவைக்களத்திலிருந்த ஹரிதாசர் என்பார் சைவ, வைணவ சமயங்களைப் பற்றிய “இருசமய விளக்கம்” என்ற நூலை இயற்றினார். பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அல்லது அழகிய மணவாளதாசர் திருவரங்கம் பற்றி ஐந்து நூல்களும், திருப்பதி பற்றி இரு நூல்களும் அடங்கிய மொத்தம் எட்டு நூல்களைக் கொண்ட “அஷ்டப்பிரபந்தம்” என்ற தொகுப்பு நூலை யாத்ததாகச் சொல்லப்படு கின்றது. இவர் ஒருவரேயன்றி ஒத்த பெயருடைய வெவ்வேறு காலத்து ஆசிரியர்களால் எழுதப்பட்டு இந்நூல் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர்".
இக்காலத்தில்தான் சைவசித்தாந்த சாத்திர நூல்கள் பல எழுதப்பட்டன. இந்நூல்களை இயற்றியவர்களில் ஒருவர் உய்யவந்த தேவநாயனார் ஆவார். இவை இலக்கிய மரபை ஒட்டி எழுதப்பட்டன. “திருவுந்தியார்”, “திருக்களிற்றுப்பாடியர்” போன்றவை இக்காலத் துவக்கத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும். மெய்கண்டாரின் “சிவஞான சித்தியார்” என்ற நூல் எழுதப்பட்டது. அருணந்தியின் மற்றொரு படைப்பு"இருபாவிருபது” ஆகும். இந்த இருபது பாக்களிலும் தன் குருவான மெய்கண்டாரின் பெயரைச் சுட்டுகிறார். ஆகமங்களின் சாரத்தை விளக்கும் “உண்மை விளக்கம்” என்ற நூல் திருப்பதியைச் சேர்ந்த மனவாசகங்கடந்தரால் எழுதப்பட்டது. உமாபதி சிவாச்சாரியர், பதினான்கு சைவ சித்தாந்தங்களில் எட்டுக்கு ஆசிரியராக விளங்கினார் என்று சொல்லப்படுகின்றது. இவற்றில் 16ஆம் நூற்றாண்டில் திருவொற்றியூரில் வாழ்ந்த ஞானப்பிரகாசரால் விளக்கம் எழுதப்பட்டது. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலும், பதினைந்தாம் நூற்றாண்டின் துவக்கத்தில் சுவரூபானந்த தேசிகரும், அவரது சீடர் தத்துவராயரும் “அத்வைத” தத்துவத்தைப் பற்றி நூல்கள் இயற்றினர். இவற்றில் குறிப்பிடத்தக்கவை “சிவப்பிரகாசப் பெருந்திரட்டு”, “குறுந்திரட்டு” என்பனவாகும்". அருணகிரிநாதர் என்னும் சைவப்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

பெரியார் 1360 பாடல்களைப் கொண்ட “திருப்புகழ்” என்னும் இனிய நூலை முருகப் பெருமான் மீது பாடியுள்ளார்.
15ஆம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் வாழ்ந்த சிவப்பிரகாசர் அருணந்தியின் “இருபாவிருபது’க்கும், உபாபதியின் “சிவப்பிரகாச” த்துக்கும் விளக்கம் எழுதியுள்ளார். வைணவத்தின் தென்கலை பிரிவினைச் சேர்ந்த மணவாள மாமுனிகள் “ராமானுஜ நூற்றியந்தாதி’க்கும் மற்ற நூல்களுக்கும் விளக்கம் அளித்துள்ளார்.
இக்காலத்தில் கோயில் தலபுராணங்கள் எழுதப்பட்டன. இவ்வகையில் வந்த முதல் நூல் உமாபதி சிவாச்சாரியாரின் “கோயிற்புராணம்’ ஆகும்". இது சிதம்பரம் சிவன் கோயிலைப் பற்றிய புனைகதைகளைக் கொண்டதாகும். ஞானப் பிரகாசர் என்பார் “திருவொற்றியூர் புராணம்” எழுதினார். புராண திருமலைநாதன் என்பவர் 1508இல் “சிதம்பரபுராணம்” மற்றும் “சிதம்பரப் பாட்டியல்” எழுதினார். வீரக்கவிராயர் “அரிச்சந்திர புராணத்தை°1524இல் எழுதினார். சிவபெருமானின் 64 லீலைகளைக் கூறும் “திருவிளையாடல் புராணம்” கி.பி.13ஆம் நூற்றாண்டின் இறுதியில் பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவரால் எழுதப்பட்டது. இதே புராணத்தின் மாறுபட்ட நூல் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவரால் வரையப்பெற்றது. புகழ் பெற்ற “வில்லிபுத்தூரார் பாரதம்” 1400இல் உருவானது. இதில் 4350 பாடல்கள் உள்ளன. செவ்வைச்சூடுவார் என்பார் 16ஆம் நூற்றாண்டில் “பாகவதபுராணம்” இயற்றினார். அச்சுதராயர், சதாசிவராயர் ஆகியோர் காலத்தில் வாழ்ந்த மறைஞானசம்பந்தர் எழுதிய நூல்களில் குறிப்பிடத்தக்கவை “சைவசமய ஆராய்ச்சி”, “முக்தி நிலை”, “சிவதருமோத்திரம்” ஆகியனவாகும். “சிவதருமோத்திரம் கோயில், அதன் அமைப்பு சைவசித்தாந்தக் கோட்பாடு முதலியன பற்றிக் கூறும் 1200 செய்யுட்களடங்கிய ஒரு தொகைநூலாகும்".
இக்காலத்தில் உரையாசிரியர்களும் தோன்றினர். சிலப்பதிகாரத்துக்கு உரையெழுதிய
9

Page 19
அடியார்க்குநல்லார், திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் போன்றவர் 14-15 நூற்றாண்டுகளில் சாதனை புரிந்துள்ளனர். கிருஷ்ணதேவராயர் காலத்து ஞானப்பிரகாசர் என்பார் அம்மன்னனுக்குப் புகழ்மாலை சூட்டியதோடு காஞ்சியின் சிறப்பைப் போற்றும் “கச்சிக் கலம்பக”த்தையும் இயற்றினார்.
விசயநகரப் பேரரசின் தொடர்ச்சியான நாயக்கர் காலம்பூத்துக் குலுங்கும் தெலுங்கு இலக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. அவர்கள் வடமொழி, கன்னடம், தமிழ் மொழிகளை ஆதரித்தனர். “பெரும் பான்மையான நூல்கள் சமய நோக்குடையவை. சைவ வைணவ அல்லது சமயத் தத்துவங்களை விளக்குபவை. குறிப்பிட்ட வழிபாட்டு இடங்களைப் புகழும் பாடல்களைக் கொண்டவை” என நாயக்கர் கால இலக்கியங்கள் பற்றி பேராசிரியர் தே.வே. மகாலிங்கம் குறிப்பிடுகின்றார். இதே கருத்து விசயநகர நாயக்கர் காலம் முழுவதற்கும் பொருந்தும், திருமலை நாயக்கரின் அமைச்சர்களில் ஒருவரான கவிஞர் நீலகண்ட தீட்சிதர் இருசிறப்புமிக்க நூல்களான “நளசரிதம் நாடகம்”, “சிவலிலார்ணம்” ஆகியவற்றை எழுதினார்".
பரஞ்சோதியார் சிதம்பரப்பாட்டியல் என்ற நூலை எழுதியுள்ளார். செவ்வைச் சூடுவார் என்பார்பாகவத புராணம் எழுதினார். தத்துவப் பிரகாசம் என்ற நூலை தத்துவப்பிரகாசர் என்பார் எழுதினார். கைவல்யநவநீதம் என்ற நூலை தாண்டவராயர் சுவாமிகள் எழுதினார். ஞானப்பிரகாச தேசிகர் காஞ்சிக் கலம்பகம் என்ற நூலையும், மண்டலபுரூடர் நிகண்டு சூடாமணி’ என்ற நூலையும் எழுதியுள்ளனர். இவர்கள் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தோராவர்.
மதுரை நாயக்கரின் அலுவலராயிருந்த மாதைத் திருவேங்கட நாதர் என்பார், “மெய்ஞ்ஞான விளக்கம்” என்னும் அத்வைத நூலை எழுதினார். பெருமாள் கவிராயர் என்ற கவிஞர் ஆழ்வார்திருநகரியில் வீற்றிருக்கும் மூர்த்தியின் மாட்சிமையைக் “குருகை மான்மியம்”, “மாறன் கிளவி மணமாலை” என்ற நூல்களில் வடித்துள்ளார். இவரது பிற நூல்கள் “திருப்பதிக் கோவை’, ‘மாறன்
10

அலங்காரம்” ஆகியனவாகும். கவிராசபண்டிதர் என்பார் “செளந்தரியலஹரி” என்ற வடமொழி நூலைத் தமிழில் எழுதினார். 17-ஆம் நூற்றாண்டில் பக்தி மயமான பல நூல்களெழுதிய குமரகுருபரர் கோயில்களைப் பற்றி பல நூல்கள் எழுதியுள்ளார். இவரது படைப்புக்களில் குறிப்பிடத்தக்கவை முருகனைப் பற்றிய “கந்தர் கலிவெண்பா' மதுரை சொக்கநாதரைப் பற்றிய “மதுரைக் கலம்பகம்’ மதுரை மீனாட்சியம்மனைப் போற்றும், “மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்”, “இரட்டை மணிமாலை” திருவாரூர், கோயிலைப் பற்றிய “திருவாரூர் நான்மணிமாலை' வைத்தீஸ்வரன் கோயில் பற்றிய “பிள்ளைத் தமிழ்”, “சிதம்பரச் செய்யுட் கோவை' கலைமகளின் புகழ்பாடும் “சகல கலா வல்லிமாலை” போன்றனவாகும். பிறவியிலேயே ஊமையாயிருந்த இவருக்கு முருகன் அருளால் பேச்சாற்றலும், கவிபாடும் ஆற்றலும் வந்ததென்பர். ழநீவைகுண்டத்தில் பிறந்த இவர் வடஇந்தியா சென்று மற்ற சமயத்தவர்களுடன், குறிப்பாக இஸ்லாமியருடன் வாதிட்டு வென்றார்.
முகலாய்ப் பேரரசரைச் சந்தித்து பனாரஸிஸ் ஒரு மடம் கட்டவும், கோயில் கட்டவும் நிலம் பெற்றார்". இவரது சமகாலத்தவர் சிவப்பிரகாசர் என்பவராவர். இவர் கிறிஸ்த்தவர்களுடன் வாதிட்டு வென்ற தாகவும், “ஏசுமத நிராகரணம்” என்ற நூலை இயற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்நூல் கிடைக்கப் பெறவில்லை". மதுரை வீரப்ப நாயக்க (1572-95)ரின் தளபதி திருவிருந்தானின் வேண்டுகோளின்படி அனாதாரி என்பவரால் “சுந்தரபாண்டியம்” இயற்றப்பட்டது. வடமொழி மொழிப்பெயர்ப்பான இந்நூல் திருவிளையாடல் புராணத்தையொத்ததாகும்.
கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர் (1625இல்) “கந்தபுராண’த்தை எழுதினார். இது கம்பரது இராமாயணத்தை ஒத்திருப்பதோடு, வடமொழி ஸ்கந்தபுராணத்தைத் தழுவியதுமாகும். இவரது மற்ற நூல்களாவன, “திருக்கழுக்குன்றம் உலா', “திருவாரூர் உலா” போன்றவையாகும். திருப் பூவனத்தில் கந்தசாமிப் புலவர் உள்ளூர் சிவன் கோயில் பற்றி உலாவும், திருவாப்பனூர் புராணமும் எழுதியுள்ளார்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 20
தஞ்சை இரகுநாத நாயக்கர் சிறந்த கவிஞராய் விளங்கினார். அவரது கற்பனைத் திறனுக்கும், புலமைக்கும் எடுத்துக்காட்டாக “நளசரிதம்”, “வால்மீகிசரிதம்”, “கஜேந்திரமோட்சம்” ஆகியவற்றைக் கூறலாம். விசயராகவ நாயக்கரால் எழுதப்பட்ட "இரகுநாதபுயூதயம்” அவரது தந்தை இரகுநாத நாயக்கரின் செயல்திறத்தை விளக்கும் தெலுங்கு இலக்கியமாகும். ராசசூடாமணி தீட்சிதரால் எழுதப்பட்ட "ஆனந்த ராகவ நாடகம்” தஞ்சை நாயக்க மன்னர்களின் வம்சாவளிப் பட்டியலை அறிய உதவுகின்றது. தஞ்சையின் இரகுநாத நாயக்கர் “சங்கீதசுதா’ என்ற நூலை எழுதிய கோவிந்த தீட்சிதரையும், “பாரிசாத அபஹரணம்” என்ற நூலை எழுதிய குமாரதட்டாச்சாரியார் என்பவரையும், “சாகித்திய ரத்னாகரம்” என்ற நூலை எழுதிய யக்னநாராயண தீட்சிதர் என்பவரையும் ஆதரித்தார். தெலுங்கு, வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் வல்லுநரான கோவிந்த தீட்சிதர் “திருவையாறு மாத்மியம்” என்ற நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
வேலூரில் லிங்கம நாயக்கரின் சம காலத்தவரான துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் ஏராளமான தமிழ் நூல்களை இயற்றினார். வட்டுவ ஆகமங்களைச் சார்ந்த சைவ தத்துவத்தையும், வீர சைவத்தின் தத்துவத்தையும், பெருமையையும் பரப்பினார். இவர் 218 பாடல்கள் அடங்கிய “அத்வைத வெண்பா”வாலும், “சதகத்ரய'த்தாலும் சைவத்தின் சிறப்பை உச்சிக்குக் கொண்டு சென்றார். இவரது சீடரான ஞானக்கூத்தர் “விருத்தாசல புராண’த்தை எழுதினார். தஞ்சை மாவட்டத்தில் சூரியநாதர் கோயில் மடத்தினைச் சேர்ந்த நமச்சிவாச்சாரியர் சிவஞான போதத்திற்கு உரை எதியுள்ளார். வேலூர் சின்ன பொம்ம நாயக்கரால் போற்றப்பட்ட அப்பய்ய தீட்சிதர் அத்வைதக் கொள்கையைப் பரப்பினார். இவரது “பரிமளா’ என்ற நூல் சைவ, வைணவக் கொள்கைகளை விளக்குகின்றது. அப்பய்யதீட்சிதர் இயற்றியுள்ள அரிய நூல்களில் சில “சொற்கோப்புக்கலை” பற்றியதாகும்". 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுரப்பதிக்கவிராயர், கூழப்பநாயக்கன் காதல்,
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

விரலிவிடுதூது ஆகியவற்றை எழுதினார். இதே நூற்றாண்டைச்சேர்ந்த தத்துவராயர் என்னும் அத்வைத ஞானி “திருப்பாவை”, “பள்ளிப்பாட்டு” முதலான நாட்டுப்பாடல் வடிவங்களில் பல பாடல்கள் பாடியிருப்பது போலவே திருப்பள்ளியெழுச்சி மரபிலும், “அருள் திருப்பள்ளியெழுச்சி”, “சிவப்பிரகாச சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி’ போன்றவற்றைப் பாடியுள்ளார்".
உமறுப்புலவர் சீறாப்புராணம், சீதக்காதி நொண்டி நாடகம், முதுமொழிமாலை போன்றவற்றை எழுதினார். முகமது நபியின் புகழை சீறாப்புராணம் கூறுகின்றது. இக்காலத்தைச் சேர்ந்த தாயுமானவ சுவாமிகள் ஏராளமான சமயப் பாடல்களைப் பாடியுள்ளார். காயல்பட்டினத்தில் பிறந்த குணங்குடி மஸ்தான் அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம், நிராமையக் கண்ணி, ஆனந்த களிப்பு ஆகியவற்றை எழுதியுள்ளார். திரிகூட ராசப்பக் கவிராயர் திருக்குற்றாலத்தைப் பற்றி ஏராளமான நூல்களை இயற்றியுள்ளார். அவைகளில் முக்கியமானவை திருக்குற்றாலத்தல புராணம், திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றாலமாலை,திருக்குற்றாலஉலா, திருக்குற்றால பரம்பொருள் மாலை, திருக்குற்றால ஊடல் போன்றவை ஆகும். இவருடைய புலமையைப் பாராட்டி இவருக்கு நாயக்க மன்னர்கள் நிலங்களைக் கொடையாக அளித்துள்ளனர். வாமனாச்சாரியார் என்பார் மேரு மந்திர புராணம் என்ற நூலை எழுதியுள்ளார். இது ஒரு சமண நூல் ஆகும். மணவாளமாமுனி என்பவர் ராமானுஜர் நூற்றந்தாதி எழுதியுள்ளார். காளமேகப் புலவர் திருவானைக் காவல் உலா எழுதியுள்ளார். தென்காசியை சேர்ந்த அதிவீரராம பாண்டியன் நைடதம், காசிக்காண்டம், கூர்மபுராணம், வெற்றிவேற்கை, லிங்கபுராணம் போன்றவற்றை இயற்றினார். இவரது நூல்கள் வடமொழி மொழிபெயர்ப்பு அமைப்பாகும். இவரது “நைடதம்” மிகச் சிறப்பான நூலாகும். இவரது பிறநூல்களில் குறிப்பிடத்தக்கது “கருவைப்பதிற்றுப் பத்தந்தாதி” யாகும். இக்காலத்தில் தோன்றிய இலக்கண நூல்களில் குறிப்பிடத்தக்கவை 16ஆம் நூற்றாண்டில் தோன்றிய யாப்பிலக்கண நூலான சிதம்பரப்பாட்டியலும், செய்யுள் இலக்கண நூலான
11

Page 21
சிதம்பரச் செய்யுட் கோவையும் வைத்தியநாத தேசிகரின் இலக்கண விளக்கமும் நவநீதப் பாட்டியலும் ஆகும்.
மேற்கூறிய வல்லுநர்கள் தவிர கிருத்தவ சமயப் பரப்பாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தொண்டு செய்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் ராபர்ட்டி நொபிலியும், வீரமாமுனிவரும் ஆவார்கள். நொபிலி ஞான உபதேசம், ஆத்தும நிர்ணயம், கடவுள் நிர்ணயம், யேசுநாதர் சரித்திரம், ஞான தீபிகை போன்ற இன்னும் பல நூல்களை எழுதியுள்ளார். இத்தாலியைச் சேர்ந்த வீரமாமுனிவர் மதுரையில் தமிழ் பயின்றார். இவரது படைப்புக்கள் தேம்பாவணி, பரமார்த்த குருகதை, திருக்காவலூர்க் கலம்பகம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், சதுர் அகராதி போன்றவை ஆகும். இக்காலத்து சிறு தலபுராணங்களில் குறிப்பிடத்தக்கவை ஞானக் கூத்தரின் “விருத்தாசல புராணம்” களந்தைக் குமரனின் “திருவாஞ்சியபுராணம்” மற்றும் அகோர முனிவர் எழுதிய கும்பகோணம், வேதாரண்யம், திருக்கானப்பேர் புராணங்களாகும்.
இவ்வாறு விசயநகர - நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ் இலக்கியம் ஓங்கி வளர்ந்தது. வட மொழி இலக்கியமும், கன்னடமும், தெலுங்கும், மலையாளமும் சம அளவில் வளர்ச்சியடைந்தன. குப்தர்கள் காலம் வட இந்தியாவில் புராண இலக்கியங்களின் வளர்ச்சியின் உச்சக்கட்ட காலம் எனில் தென்னிந்திய இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது. விசயநகர - நாயக்கர் காலமே. இவர்தம் காலத்தில் வடமொழி நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. பல உரையாசிரியர்கள் தோன்றி பழமையான நூல்களுக்கு உரையெழுதினர். கோவை நூல்கள் வளர்ந்தன. உலாநூல்களும், பிள்ளைத்தமிழ்நூல்களும் பெருகின. தலபுராணங்கள் தோன்றின. மன்னர்களைப் பற்றிய புகழுரைகள் பாடப்பட்டன. மொத்தத்தில் சமயம் தொடர்பான இலக்கியங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. சமண சமயத்தைச் சேர்ந்த பூரீபுராணமும் இக்காலத்தில் இயற்றப்பட்டது. இதனைச் சிற்றிலக்கியங்களின் காலம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இங்கு கூறப்பட்டுள்ள சில இலக்கியங்களின் காலக் கணிப்பில் கருத்து வேறுபாடுள்ளது.
12

V
விசயநகர - நாயக்கர் ஆட்சிக்காலம் தமிழகத்துக் கலை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திருந்தது. இவர்கள் வைதீக சமயத்தவர்களது கோயிற்கலையை வளர்த்தனர். தங்களின் பெருஞ்செல்வத்தை அதிற் செலவிட்டனர். பழைய கோயில்களைப் புதுப்பித்தனர். விரிவு படுத்தினர். கோயில்களைக் கோயில் வளாகங்க ளாக்கினர். கோயில் வளாகங்களைக் கோயில் நகரங்களாக்கினர். இம்மன்னர்கள் ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளப் பகுதிகள் ஆகியவற்றை ஆண்டதால் அவர்களது கலைப்பாணி பல்கலைக் கூறுகளையும் உள்ளடக்கிய கூட்டுக் கலைப்பாணியாக இருந்தது"
விசயநகரப் பேரரசர்கள் தங்களது அரசின் வடபகுதியில் பிற்காலச் சாளுக்கியர், காகாத்தியர், ஹொய்சாளர் ஆகியோரின் கலைக் கூறுகளைப் பின்பற்றினர். தென்பகுதியில் பல்லவர் - சோழர் - பாண்டியர் வளர்த்த மரபினைப் பின்பற்றினர் என கே ஆர்.சீனிவாசன் கருதுகின்றார்". அவர்களது முக்கிய கலைக் கூறுகளாவன, அலங்காரங்களுடன் கூடிய மண்டபங்கள் - அதாவது கல்யாண மண்டபங்கள், ஊஞ்சல் மண்டபங்கள், வசந்த மண்டபங்கள் - வாகன மண்டபங்கள், ரங்க மண்டபங்கள், கண்ணாடி மண்டபங்கள் - அமைத்தலும் இம்மண்டபத் தூண்களில் பல கூறுகளையும் உள்ளடக்கிய அலங்காரங்களைச் செதுக்குதலும்- அதாவது பூவேலைப்பாடுகள், சுருக்குப்பட்டி வேலைகள், சிறுசிறு சிற்பங்கள் அமைத்தல் போன்றவை - அணிவொட்டுத் தூண்கள் - தூணில் ஆளுயர சிற்பங்களையோ அல்லது யாளிகளையோ செதுக்குதல்-அமைப்பதும், வாயில்களில் உயரமான, பதினொரு தளங்களுக்கும் மேலான, ராய கோபுரங்கள் அமைத்தலும், இன்னபிறவுமாகும். இவர்களுடைய கோயில் விமானங்கள் பிரஸ்தரம் (அல்லது கபோதம் வரை) கருங்கல்லாலும் (அல்லது கடுமையான பாறைக்கல்லாலும்) மேற்பகுதிகள் செங்கல்லாலும் கட்டப்பட்டன. விமானம் மற்றும் கோபுர மேல்த்தளங்களுக்குச் செங்கற்கள் பயன் படுத்தப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 22
அவர்களது சிற்பக்கலை அமைப்பைக் கூறலாம். அதாவது கருங்கல்லில் சிறுசிறு சிற்பங்கள் அமைப்பது கடினமாயிருந்ததால் செங்கல்லைப் பயன்படுத்தி கருவறையின் மேல்த்தளங்களிலும், கோபுரத் தளங்களிலும், அளவற்ற சிற்பங்களை உருவாக்கி யுள்ளதைக் காணலாம். அவர்தம் கலைக் கூறுகளில் பல முன்னமே பாண்டியர்களால் துவக்கப் பெற்ற போதிலும் அவை விரிவடைந்து முழுமை பெற்றது இக்காலத்தில்தான். அவர்களது தூண்களின் போதிகைகள் இதுகாறும் சற்று மேல் நோக்கியிருந்த நிலையிலிருந்து மாறி கீழ்நோக்கி சற்றுக் கவிழ்ந்த தாமரை மொட்டுப்போல் அமைக்கப்பட்டு அவற்றில் புஷ்ப போதிகையானது. நாயக்கர் காலத்தில் இப்புஷ்ப போதிகை மேலும் வாழைப்பூ போன்று கீழ்நோக்கித் தொங்கத் துவங்கியது". விசயநகரப் பாணியையே நாயக்கர்களும் பின்பற்றியதோடு அவற்றை விரிவும் படுத்தினர். கோயில்முன் மண்டபங்களின் மேற் பகுதியில் கண்ணாடிச் சட்டங்கள் போல் பிரித்து இராமாயண, மகாபாரதக்கதைச் சிற்பத் தொகுதிகளை அமைப்பதும் இவர்தம் கட்டடக்கலைக் கூறுகளில் ஒன்றாகும்.
இவர்களது ஒற்றைக்கல் பெருந்துரண்களின் அடிப்பகுதிகளிலனைத்தும் இராணுவ வீரர்கள் மற்றும் பிற சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். தூண்களின் நடுப்பகுதியில் யாளி அல்லது மனித உருவங்கள், கடவுள் உருவங்கள் ஆளுயரத்தில் இருக்கும் என ஏற்கனவே கண்டோம். சில கோயில்களில் பாய்ந்து செல்லும் பெரிய குதிரையும் அதன் மீது வீரனும் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வகைத் தூண்கள் திருவரங்கம் கோயில் குதிரை மண்டபத்திலும், வேலூரிலும் காஞ்சி வரதராசப் பெருமான் கோயிலிலும் காணப்படுகின்றன. அக்காலத்தில் அதிகமான பணம் செலவழித்து குதிரைகள் இராணுவப் பயனுக்காக வெளிநாடு களிலிருந்து வருவிக்கப்பட்டன. இக்காலத்தில் கொங்கன் துறைமுகங்கள் வழியாக ஆயிரக் கணக்கான குதிரைகள் வந்திறங்கின". ஆனால் தமிழ்நாட்டுக் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள இம்மாதிரி குதிரைத் தூண்கள் தலைநகரிலேயே இடம் பெறவில்லை. விசயநகர ஆட்சிக் காலத்தில் சாதாரண தூண், ஒரு அடித்தளத்தையும், மூன்று
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

&g Tril 8,60) 6Tuth (Squire Parts) gly6ioTG கட்டுக்களையும் (Polygonal) கொண்டு, அதன் மீது போதிகையும் அமைந்திருக்கும். இதன் பெரிய அளவிலான விரிவாக்கமே அணிவொட்டுத் தூண்கள். பாண்டியரின் பிற்காலத்தில் சிறிதாகத் தூண்களில் இடம்பெற்ற நாக பந்தம் விசயநகர ஆட்சிக் காலத்தில் பெரிதானது. சோழர் காலத்தில் கோயில் சுவர்களில் இடம்பெறத் தொடங்கிய கும்பபஞ்சரங்கள் பெரிதும் இக்காலத்தில் விரிவுப் படுத்தப்பட்டன. கும்பத்திலேயே மலர்த்தோரணமும் அமைக்கப்பட்டன. இவர்களது கூடுகளில் சிம்ம முகத்தலைப்பு இருந்திருப்பினும் அவற்றிள் உள்ளே உருவங்கள் வைக்கப்படவில்லை. அதிட்டானத்தில் ஜகதிக்கு மேல் இரு வளைவுகளைக் கொண்ட பத்மம் இடம் பெறுகின்றது. இது சோழர்களின் பாணியாகும். இவர்களது கோயில்களில் கபோதப் பகுதி இருமடங்காக விரிவுப்படுத்தப்பட்டு பெரும் கொடுங்கை என்ற பெயரைப் பெற்றது. ஒவ்வொரு கோயிலிலும் திருச்சுற்றுப் பிரகாரங்கள் அமைக்கப் பட்டன. வெளிப்பிரகாரங்களில் கடைகளும், மக்கள் வசிப்பிடங்களும் இருந்தன. இதற்கு திருவரங்கக் கோயிலும், திருச்சி மலைக்கோட்டையும் நல்ல உதாரணங்களாகும். இவர்கள் காலத்து முக்கியக் கூறான இசைத் தூண்களை மதுரை மற்றும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் போன்றவற்றில் காண முடிகின்றது. விசயநகரநாயக்கர் தூண்களில் பல்லவர் தூண்களினடியில் அமைக்கப்பட்ட சிம்மங்களும் இடம் பெற்றன. இவர்களது காலத்தில் அம்மன் கோயில்களின் தென் மேற்கு மூலையில் அமைக்கப்பட்டன. விசயநகர நாயக்கர் கோயில்களின் அதிட்டானங்களில் ஒவ்வொரு பத்ர மற்றும் கர்ண மடிப்பிலும் வெவ்வேறு வகை அதிட்டானக் கூறுகள் பயன்படுத்தப்பட்டன. இதனால் இவ்வகை அதிட்டானங்களை இன்றைய ஸ்தபதிகள் “வர்க்கவேத அதிட்டானங்கள்” (மாறுபட்ட பாகங்களைக் கொண்டவை) என்று கூறுகின்றனர். இவர்கள் காலத்தில் சமயம் சாரா அரண்மனைகள் கட்டப்பட்டன. இதற்கு உதாரணமாக வேலூர் கோட்டையையும், செஞ்சிக் கோட்டையையும், மதுரை திருமலைநாயக்கர் மஹால், காந்தி மண்டபம் ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.
13

Page 23
VI
விசயநகர-நாயக்கர் மன்னர்கள் கட்டடக் கலையில் கொண்டிருந்த ஆர்வம் சிற்பக்கலையிலும் வெளிப்பட்டது. அவர்கள் பாண்டியர்களைப் போலவே கோஷ்டச் சிற்பங்களைத் தவிர்த்தனர். விமானத்தின் மேல்த்தளங்களிலும், கோபுரத்தளங்களிலும் ஏராளமான சிற்பங்களை அமைத்தனர். அவர்களது மண்டபத் தூண்களின் ஆளுயரச் சிற்பங்களை வைத்தனர். அது மட்டுமல்லாது தூண்களில் பக்கவாட்டுப் பகுதிகளிலும் சிறுசிறு சிற்பங்களை வைத்தனர். அவர்களது சிற்பங்கள் பெரும்பாலும் புராணக் கதைகளையும், தொன்மக் கதைகளையும் விளக்குவனவாகவும், யாளிகளையும், குதிரைகளையும், கொண்டனவாகவும், மன்னர்கள் கொடையளித்தோர் ஆகியோருடைய உருவங்களைக் காட்டுவனவாகவும் அமைந்தன. முந்தைய அரசர்களைப் போன்று சமயத் தொடர்பான சிற்பங்களை மட்டுமே அமைப்பது என்ற நிலை மாறி அவர்களது சிற்பங்களில் அன்றைய சமுதாயப் பழக்கவழக்கங்களையும் பண்பாட்டையும் காட்டினர். வேட்டையாடுதல், குறவன், குறத்தி, நாட்டுப்புறக் கலைகளான கோலாட்டம், பாம்பாட்டி, குரங்காட்டி, நடனங்கள் போன்றவை சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். சில சிற்பத் தொகுதிகளில் இயற்கையாக அமைந்திருக்கும் சில பறவைகளையும், மிருகங்களையும் காணலாம். இவர்களது கோயில் சுவர்களில் குரங்கு, பாம்பாட்டி, பல்லி, ஓணான், முதலை போன்றவை உயர்புடைப்புச் சிறப்பங்களாகக் காட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.
நாயக்கர் மண்டபங்களில் உள்ள சிற்பங்களில் ரதி-மன்மதன் சிற்பங்கள் அடுத்தடுத்த தூண்களிலோ அல்லது எதிரெதிர் நூண்களிலோ வைக்கப்பட்டடுள்ளது ஒரு பொது மரபாகவே அமைந்திருக்கின்றது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், பெரும்பாலும் கல்யாண மண்டபங்களில் இவை வைக்கப்பட்டிருப்பதால் இச்சிற்பங்களைத் திருமணத் தம்பதிகளான இறைவன் - இறைவிக்குப் பொருத்தமான காட்சி என்ற வகையில் அமைத்திருக்க வேண்டும். அல்லது வைணவ சமயத்தினைப்பெரிதும் போற்றி வந்த இம்மன்னர்கள் விஷ்ணுவின் மகன் என்று தொன்மக் கதை மூலம் கருதப்படுகின்ற
14

மன்மதனின் உருவமும் அவனது மனைவியின் உருவமும் இம்மண்டபங்களில் அமைந்திருக்கக் கூடுமா? என்று தெரியவில்லை. முன்பு சொன்ன கருத்துக்கு ஆதரவாயிருப்பது மதுரைக்கு அருகில் உள்ள திருமோகூர் கோயில் மகாமண்டபத்திற்கு முன்பு உள்ள சிறு திறந்தவெளி மண்டபத்தில் உள்ள ஒரு இடத்தில் இராமபிரான் சீதாப்பிராட்டியைத் தோளில் கைபோட்டு அழைத்துச் செல்கின்றார். அதற்கு முன்பு மன்மதனும், ரதியும் எதிரெதிர்த் தூண்களில் உள்ளனர். இலட்சுமணர் தனியாக ஒதுங்கி நிற்கின்றார். இம்மண்டபத்தில் இருக்கும் சிற்பங்களே மொத்தம் இந்த நால்வர் மட்டும்தான்.
விசயநகர-நாயக்கர் சிற்பங்கள் பல்லவர், சோழர், முற்காலப்பாண்டியர் சிற்பங்களைப் போன்று நெடிய மெல்லிய ஆபரணங்கள் குறைந்த உடலிலேயே நளினங்களைக் காட்டுகின்ற, புன்முறுவல் பூக்கின்ற சிற்பங்களாக இல்லை. அவைகளின் அளவுகள் சாத்திரங்களில் சொல்லப்பட்டிருப்பது போன்று இல்லை எனவும், அவை சிற்ப மரபின் அழிவினைக் காட்டுவனவாக உள்ளன என்று. ஜெ.சி. ஹால் கூறுகின்றார்". அவர்களது உடலமைப்பில் கடுமையும், உணர்ச்சி களைக் காட்டாத தன்மையும், கூர்மையான மூக்கும், அதிகமான ஆபரணங்களும் காணமுடிகின்றது. அவர்களது கால்களில் முட்டியை ஒரு மூடிய தேங்காய் முடிபோன்றும், முட்டிக்குக் கீழுள்ள முழங்கால்களில் எலும்புகூர்மையாய்த் தெரியும்படியும் அமைக்கப்பட்டுள்ளன. தெய்வ உருவங்களில் மகுடங்களில் ஏராளமான அலங்காரங்கள் காட்டப்பட்டிருந்த போதும், அரசர்களின் மகுடங்கள் மிகச்சாதாரணமாக ஒரு பக்கம் சற்று வளைந்துள்ளது போலும் காட்டப்பட்டுள்ளன. இருப்பினும் விசயநகர-நாயக்கர் சிற்பங்களை அழகற்றவை என்று எளிதாகச் சொல்லிவிட முடியாது. அவற்றில் அக்காலப் பண்பாட்டுப் படியான ஆடை, ஆபரணங்கள் உள்ளன. மேலும் கருங்கல்லைப் பயன்படுத்தி ஆளுயரச் சிற்பங்கள் அமைப்பதில் அக்காலக் கலைஞர்கள் அதிகச் சிரமப்பட்டிருக்க வேண்டும். எந்த ஒரு கலைப் பொருளையும் அந்தந்த காலச் சூழலின் அடிப்படையிலேயே நோக்க வேண்டும்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 24
VI
பல்லவ, பாண்டிய, சோழர்களைப் போலன்றி, தமிழகத்தில் விசயநகர-நாயக்க மன்னர்கள் கட்டடக்கலையிலும் சிற்பக் கலையிலும் மட்டுமல்லாது ஓவியக் கலையிலும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களது காலத்தில் ஒவியம் தீட்டுவதே முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்குக் காரணம் கற்களைக் கொண்டுவந்து சிற்பங்கள் அமைப்பதினும் ஓவியம் தீட்டுதலை எளிதென அவர்கள் கருதியிருக்க வேண்டும். அவர்களது காலத்தில் ஒரு புராணக் கதையையோ, ஒரு இதிகாசச் கதையையோ முழுவதுமாகக் கலை வடிவில் கொடுப்பது என்பது வழக்கமாக இருந்தது. அதற்கு ஒவியம் தீட்டுதலே ஏற்ற முறையாகும். அவர்தம் ஒவியங்கள் முந்தைய அரசபரம்பரையினரின் ஒவியங்களின் வளர்ச்சியின் ஒருகட்டம் என்று கருதப்பட்டாலும், அவை முந்திய காலங்களிலிருந்து பல வகைகளிலும் வேறுப்பட்டவை யாகும். உதாரணமாகப் பல்லவர்களின் ஒவியமும் சிற்பமும் அமைப்பில் வேறுபடவில்லை. ஆனால் விசயநகர-நாயக்க மன்னர்கள் தங்களது ஓவியங்களில் வட்டாரப் பண்பாட்டுக் கூறுகளை அதிகம் புகுத்தியிருப்பதைக் காணலாம். மேலும் அவர்களது கால, குறிப்பாக நாயக்கர் கால, ஒவியக் கருப்பொருள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு கதையைக் காட்டுவதாக இன்றி காப்பியத்தின் அல்லது புராணத்தின் முழுக்கதையையும் காட்டுவதாக அமைந்துள்ளமையைக் காணலாம். இதற்குக் காரணம், முன்னமே கூறியுள்ளபடி தமிழகத்தின் முந்தைய கலைக் கூறுகளோடு சாளுக்கிய மரபும் கன்னட, தெலுங்கு மரபுகளும் இணைந்தமையேயாகும்.
விசயநகரப் பேரரசர்களின் தொன்மையான ஒவியங்களை அவர்களது தலைநகரான ஹம்பியில் காணமுடிக்கின்றது. ஹம்பி விருபாக்சர் கோயிலின் பெரியமுகமண்டபத்தின் கூரையில் விஜயநகரப்பேரரசு தோன்றுவதற்குக் காரணமாயிருந்த வித்யாரண்யரின் உருவமும், பரிவாரங்கள் புடைசூழ அவர் பல்லக்கில் பவனிவரும் காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இங்கு உருவங்கள் அனைத்தும் பக்கவாட்டில் திரும்பியிருப்பதுபோல்காட்டப்பட்டுள்ளன. இது போன்ற லெபாக்ஷி என்ற இடத்திலும் வீரபத்திரராலயத்தில் மண்டபத்தின் விதானத்தின்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

(கூரை) ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. விஜயநகர ஆட்சிக்காலத்தில் லெபாக்ஷி சிறந்த வாணிகத்தளமாயிருந்தது. அங்குள்ள தங்களது குலதெய்வமான வீரபத்திரர் ஆலயத்தினை அழகுபடுத்த விஜயநகர மன்னர்களது சிற்றரசர்கள் ஏராளமாகச் செலவு செய்தனர்" விதானம் முழுவதும் ஒவியம் தீட்டப்பட்டிருந்த போதும் பெரும்பகுதி அழிந்துபோய் சிறிதளவு எஞ்சியிருக்கின்றது. இங்கு தெரியும் ஒவியங்களாவன, மகாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்கள் ஆகும். இவை தவிர இவ்வோவியங்களை செய்வித்த விருப்பண்ணர் மற்றும் வீரண்ணர் ஆகியோரின் உருவங்களும் உள்ளன. இதிகாச புராணக் கதைகளில் குறிப்பிடத்தக்கவை இராமர் பட்டாபிஷேகம், கிரதார்ஜூனியம், வடபத்ரசாயி, கிருஷ்ணர், பிட்சாடனர், காலாரி, கங்காதரர், திரிபுரந்தாகர் போன்றனவாகும். கங்காதரர், ஒவியத் தொகுதி மிக அருமையாக அமைக்கப்பட்டுள்ளது. சிவபெருமான் உயரமான மகுடம் தரித்து மூக்குத்தி மற்றும் பல ஆபரணங்கள் அணிந்துள்ளார். அவரது தலைமீது இறங்கிய கங்கைபூமி நோக்கிச் செல்வதைக் குறிக்க அவரது தலையிலிருந்து தரைவரை மீன்கள் காட்டப்பட்டுள்ளதைக் காணலாம். பார்வதி கோபத்துடன் திரும்பியிருப்பதும் சிவபிரான் அவரது தாடையைப் பிடித்துக் கெஞ்சுவதும், இவர்களுக்கருகே பணிப்பெண் நின்று கொண்டு லோக மாதாவுக்கு ஆறுதலளிப்பதும் காணக்கிடைக்காதனவாகும். இதனினும் அழகானது சிவனும், பார்வதியும் இடபவாகனத்தில் அமர்ந்து மனுநீதி கண்ட சோழனை வாழ்த்துவதாகும். கோவில்களில் உள்ள ஒவிய அமைப்பே தொடர்ந்து பல விஜயநகர-நாயக்கர் கோவில்களில் பின்பற்றப்பட்டிருப்பதால் அவை பொதுவாக லெபாக்ஷி பாணி ஒவியங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இவை கர்நாடகத்தில் அணிகொண்டே, சோமபாளையம் முதலிய இடங்களிலும் காணப்படுகின்றன. அனிகொண்டேயின் ஒவியங்கள் சோழ நாட்டு ஓவியக் கலைஞர்களின் திறனை நினைவூட்டுகின்றன என முல்க்ராஜ்ஆனந்த் கூறுகின்றார். இந்த லெபாக்ஷி அல்லது விஜயநகர - நாயக்கர் ஓவியப்பாணி கீழ்க்கண்ட முக்கியக் கூறுகளைக் கொண்டவையாகும்.
இவ்வோவியங்களில் உருவங்கள் பக்கவாட்டில் பார்த்த வண்ணம் (Profile) அமைக்கப்பட்டிருக்கும்.
15

Page 25
இவற்றில் உடல் அவயவங்களாவன மூக்கு, கண், முழங்கை, கால் இவை கூர்மையாக அமைக்கப் பட்டிருக்கும். உடலில் அதிக ஆபரணங்கள் இடப்பட்டிருக்கும். உடல் சதைப்பற்று மிக்கதாய் அமைக்கப்பட்டிருக்கும். சிவப்பு வண்ணம் அதிகமாகக் காட்டப்படும். ஆடைகளில், குறிப்பாக பெண்களின் சேலைகளில் அதிக பூவேலைப்பாடுகள் இருக்கும். ஒவியத்தின் விளிம்புகளில் வண்ணங்களும் பூவேலைப்பாடும் இருக்கும் (Border). நதிகளை அல்லது கடலைக்காட்ட மீன் போன்றவற்றை நீரில் விளையாடுவதைப் போல் காண்பிப்பர். பெண்களுக்குப் பெரிய கொண்டை அணிவிக்கப்பட்டிருக்கும். ஒவியத் தொகுதிகளில் ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு குறிப்பு தெலுங்கிலோ அல்லது அப்போது வழக்கிலிருந்த தமிழிலோ எழுதப்பட்டிருக்கும்.
இவர்களது ஒவியங்கள் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், திருவரங்கம், கும்பகோணம், திருவீழிமிழலை, உத்தரமேருர், திருவொற்றியூர், திருவலஞ்சுழி, சிதம்பரம், திருவெள்ளறை, மதுரை, அழகர்கோவில், நத்தம் கோவில்பட்டி, பூரீவில்லிபுத்தூர், ழநீவைகுண்டம் போன்ற இடங்களில் காணக்கிடைக்கின்றன. இவர்களது ஒவியங்களில் ஆடை, அணிகலன் அலங்காரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆடைகள் பூவேலைப்பாடுகளுடன் மடிப்பு மடிப்பாகவும் திகழ்கின்றன. சிகையலங்காரம் புதுவிதமாக, அதாவது நீண்ட கொண்டையுடையதாகவுள்ள பக்கவாட்டுப் பார்வை காட்டப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது. இவர்கள் கால ஒவியங்களில் பச்சை, சிவப்பு, மஞ்சள், கருப்பு போன்றவண்ணங்களே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வோவியங்கள் அமைக்கப்பட்டுள்ள சட்டங்களின் நான்கு பக்க விளிம்புகளிலும் பூவேலைப்பாடு, வட்டம், சங்கிலித் தொடர் போன்ற அலங்கார அமைப்புகளையும் காணலாம். தமிழக அரச பரம்பரையினரில் ஒவியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த வர்கள் இம்மன்னர்களே. அரசபரம்பரையினரின் கலை வளர்ச்சியில் இறுதிக்கட்டமும் இவர்களுடைய தேயாகும்.
16

VI
விஜயநகர வேந்தர்- நாயக்கர் ஆட்சிக் காலத்தில் இசை பற்றிய கல்வெட்டுச் செய்திகள் இல்லையெனினும் இலக்கியம் மற்றும் சிற்ப ஒவியங்களில் அது பற்றிய செய்திகள் பெருகிக் கிடக்கின்றன. இக்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடத்தக்கவையான அருணகிரிநாதர் அருளிச் செய்த திருப்புகழ், குமரகுருபரின் மீனாட்சி பிள்ளைத் தமிழ்,காளமேகப் புலவரின் பாடல்கள், தாயுமானவரின் பாடல்கள் போன்றவற்றில் அக்கால இசையின் தன்மைகளைக் காணலாம். திருப்புகழ் பாடல்கள் வெவ்வேறு சந்தங்களையும், இசையமைப்புகளையும் கொண்டவை. இவை இசையுலகில் தாள வகைகள் நிறைந்த களஞ்சியமாகும். இதுவரை அச்சிடப்பட்டுள்ள 1329 திருப்புகழ் பாடல்களில் அடங்கியுள்ள வெவ்வேறான சந்தங்கள் 859 ஆகும்'. கர்நாடக இசையில் காணமுடியாத, விவரிக்க முடியாத, தாளமர்ம விரிவுரைகளைக் கொண்டது இந்நூல். அருணகிரிநாதர் பூதவேதாளங்கள் இசைக்கும் 17 வகை மத்தளங்களைப் பற்றிக் கூறுகிறார். ஏறத்தாழ இவரது காலத்திற்குச் சற்றுப் பின்னால் வாழ்ந்த சைவ எல்லப்ப நாவலர் என்பார், சக்தியைத் தனது இடதுபுறம் வைத்துறையும் சிலபெருமானின் திருவண்ணாமலைத் தலத்தில் நெல்வயல்களில் ஈக்கள் ரீங்காரமிடுகின்றன, அவற்றில் ஒலியில் மலஹரி, குறிஞ்சி, தேசி, பைரவி போன்ற ராகங்கள் வெளிப்படுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்". குமரகுருபரரின் பாடல்கள் சிறந்த ஒசை நயம் கொண்டவை. தாயுமானவர் இசைமெட்டோடு கூடிய பல பாடல்களை இயற்றினார். நாட்டுப்புற இசையமைப்பைப் பின்பற்றினார். இதே காலத்தில் இயற்றப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சியில் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்று பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. மடந்தை யாழ் வாசித்தல் மற்றும் இராகங்களும், தாளங்களும் இதில் சுட்டப் பட்டுள்ளன. கின்னரியாழ், மகரயாழ், வங்கியம், தம்புரு, போன்ற இசைக்கருவிகளும். மலகிரி, தோடி, வராடி, முகாரி, கல்யாணி, யாகிரி, காந்தாரி, காம்போதி, சங்கராபரணம், தேவகாந்தாரி போன்ற இராகங்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 26
இக்காலத்தில் தெலுங்கில் போலூர் கோவிந்தகவியால் இயற்றப்பட்ட தாளதசப்பிராண தீபிகாவும், ராகதாள சிந்தாமணி'யும் சிறந்த இசை நூல்கள் ஆகும். இசையும், நடனமும், கவிதையும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளதை கோவிந்த கவி உணர்த்தினான். தஞ்சை நாயக்க மன்னர் இரகுநாத நாயக்கர் நுண்கலை வித்தகராக விளங்கினார். அவரது இசைக்கலையின் மேன்மையை 'சங்கீத சுதா’ என்னும் அவரது நூல் வெளிப்படுத்துகிறது. அவர் எந்த ராகத்தை எத்தருணத்தில் பாட வேண்டும் என்பதை வரிசைப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து வெங்கடேச தீட்சிதர் சதுர்தண்டிப்பிரகாசிகா என்ற இசைநூலை இயற்றினார். திருவேங்கடகவி என்பார் சங்கீத சார சங்கிரஹம் என்ற நூலை எழுதினார். இது வீணை பற்றி விளக்கும் அற்புதப் படைப்பாகும். இக்காலத்தில் 72 மேளங்கள் உருவானது இசைக்கலை வரலாற்றில் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். 72 மேளகர்த்தாராகங்கள் உலகம் முழுவதிலுமுள்ள இசைக்கலைஞர்களுக்கும் போற்றத்தக்க ஒரு முறையாகும்". நாயக்கர் காலம் கீர்த்தனைகளின் தொடக்க காலமாக விளங்கியது.
விஜயநகர - நாயக்கர் கால இலக்கியங்கள் மட்டுமன்றி சிற்பங்களும், ஒவியங்களும் கூட அக்கால இசைக்கலை பற்றித் தெரிவிக்கின்றன. இவர்களது காலத்துச் சிற்பங்கள் பல ஆளுயரத்தில் வடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆடவரும், பெண்டிரும் மிகப்பெரிய இசைக்கருவிகளை ஏந்திய வண்ணம் வடிக்கப்பட்டுள்ளனர்.இராமாயணச் சிற்பங்களில் முரசு காணப்படுகின்றது. கன்னியா குமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் கோயில் சிற்பங்களில் மத்தளம், பம்பை, செண்டை, முழவு போன்ற இசைக்கருவிகள் காணப்படுகின்றன. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் சித்திர மண்டபத் தூணில் கிருஷ்ணர் குழல் ஊதும் சிற்பத்தையும் நடராசர் சிற்பத்துக்குக்கீழே குடமுழா வாசிப்பதையும் காணலாம். இது போன்று ஏராளமான உதாரணங்களை தமிழகத்துக் கோயில்கள் பலவற்றில் காணலாம்.
இவர்களது ஆட்சிக் காலத்தில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவதர். கதைகள் கோயில்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

சுவர்களிலும்,மண்டபச்சுவர்களிலும்,விதானங்களிலும் வரையப்பட்டன என்று முன்னமே குறிப்பிடப்பட்டது. இவ்வோவியங்களில் திருமணக் காட்சிகளும். இறைவன் திருவீதிஉலா வரும் காட்சிகளும் இடம் பெற்றன. இவற்றில் அக்காலத்தில் வழக்கிலிருந்த இசைக் கருவிகளும் வரையப்பட்டுள்ளன. இதனைக் காஞ்சி வரதராசப் பெருமாள் கோயில், செங்கம் கோயில், சிதம்பரம், திருவாரூர், திருவலஞ்சுழி போன்ற கோயில்களில் காணலாம். முன்னமே குறிப்பிட்டது போல் இக்காலத்தில் இசைத் தூண்களும் அமைக்கப்பட்டன. இவற்றை மதுரை, குற்றாலம், திருநெல்வேலி, தென்காசி, சுசீந்திரம் போன்ற கோயில்களில் காணமுடிகிறது.
X
நாயக்கர்களில் சிலர் தாங்களே இலக்கிய வல்லுநர்களாக மட்டுமின்றி இசை மற்றும் நாட்டிய மேதைகளாகவும் திகழ்ந்தனர். தஞ்சையின் இரகுநாத நாயக்கர் சங்கீத சுதா என்ற நூலையாத்தார் என்றும் முன்னமே கண்டோம். அவரது நூல்களில் இசை, நடனம், பற்றிய செய்திகள் பரவிக் கிடக்கின்றன. இவர் எழுதிய வால்மீகி சரிதத்தில் ரம்பாவின் (விண்ணுலக ஆடலரசி) தேசி நிருத்தம் பற்றிக் குறிப்பிடுகிறார். பதின்மூன்று சம்யுக்த ஹஸ்தங்களையும், ஐந்துவகை மார்பு இயக்கங்களையும், ஏழு பக்கவாட்டு இயக்கங்களையும் பத்தொன்பது வகை முகம் அல்லது தலை அசைவுகளையும், அறுவகைப்பாத அசைவுகளையும் அவர் குறிப்பிடுகிறார். இவரே புதிய இராகங்களை உருவாக்கினார். இவரது பெயரிலேயே இரகுநாத விலாசம் என்னும் நாட்டியம் இவருக்கு முன்பாகவே நிதழ்த்திக் காட்டப்பட்டது. இவரது பிற நூல்கள் பூரீபாரிஜாதபகரண நாடகம், அச்சுதேந்திர விலாசம், கஜேந்திர மோட்சம், நளசரித்திரம், பூநீருக்மணி கிருஷ்ணவிபாஹயட்ச கானம் போன்றவையாகும். கலையின் மீது இவருக்கிருந்த அடங்காத ஆர்வத்தின் காரணமாகவும், ஆற்றலாலும் இவருக்கு அபிநவபோதன்' என்னும் சிறப்புக் கிடைத்தது. இவர் காலத்தில் கோவிந்ததீட்சிதர், ராமபத்ரம்பா போன்றோரால் எழுதப்பட்ட நூல்களிலும் இசையும், நாட்டியமும் சிறப்பாக விவரிக்கப்பட்டன.
17

Page 27
இவரது மகன் விசயராகவ நாயக்கர் சாகித்தியம் மற்றும் சங்கீதத்தில் சிறந்த வல்லுநராய் திகழ்ந்தார். இவரது அவைக்களத்தில் பரதரின் நாட்டிய சாத்திரம் விவாதிக்கப்பட்டதோடு ஆடற்கலையும் நிகழ்த்தப் பட்டது. இவரது அவைக்களத்தில் வீற்றிருந்த ரங்கஜம்மா என்னும் பெண்பாற்புலவர் பல மொழிகளில் ஆடற்கலைக்குத் தக்க பாடல்களை இயற்றுவதில் வல்லராகத் திகழ்ந்துள்ளார். மன்னாருதாச விலாசமும், உஷாபரிணயமும் இவரது படைப்புகளாகும். இரகுநாத நாயக்கர் காலத்தில் தஞ்சைக்கு விசயம் செய்த சேத்ரய்யா என்பவர் சிறப்பான பதங்களை இயற்றினார். விசயராகவ நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஆடற்கலையில் வல்ல சந்திரலேகா போன்ற நாட்டியக் கலைஞர்கள் வாழ்ந்தனர். அரசரின் முன்னிலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முதல் நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் உணர்வும், சிறப்பும், செல்வாகும் பெற்ற ஆடல் மகள் சந்திரலேகா என்பதையும் பிறகலைஞர்களின் நாட்டிய சிறப்புப் பற்றியும் இராசகோபாலவிலாசம் குறிப்பிடுகிறது". -
நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் யட்சகான வகை நாட்டிய நாடகங்கள் தமிழகத்தில் புகுத்தப் பட்டன. குறவஞ்சி நாட்டியமும் இடம்பெற்றது. இரகுநாத நாயக்கரின் கந்தர்வ வகுப்பைச் சேர்ந்த யட்சகர்கள் நடத்தும் இசை நாடகங்களே யட்சகானங்கள் என்று பெயர் பெற்றன. இவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே இசையையும் நடனத்தையும் தொழிலாகக் கொண்டவர்கள். இந்நாடகங்களை மன்னர்கள் விரும்பித் தங்கள் அவையில் நடிக்க வைத்ததோடு அவர்களே யட்சகான நாடகங்களும் எழுதியுள்ளனர். குறவஞ்சி நாட்டிய நாடகம் தமிழகக் கோயில்களில் குடியேற்றப்பட்ட தேவதாசி பரம்பரையினரால் கோயில் ஆண்டு உற்சவ விழாக்களில் நடத்தப் பெற்று வந்தது. தஞ்சைப் பெரிய கோயில் தேவதாசிகள் குறவஞ்சி நாட்டிய நாடகத்தில் பங்கு பெற்றனர். தமிழ்க் குறவஞ்சிகளில் முதல் குறவஞ்சி நாடகம் குற்றாலக் குறவஞ்சியாகும். இது கி. பி. 1720 இல் திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தை யடுத்து மேலக்காரன் என்னும் கிராமத்தைச் சார்ந்த திரிகூடராசப்பக் கவிராயரால் இயற்றப்பட்டது.
18

வெங்கடமகி என்பவர் சிறந்த புலவர். அவரது படைப்பான ‘ஸ்வரமேள கலாநிதி' என்னும் நூல் ஜதிகள் இயற்றுவதிலும் அவருக்கிருந்த ஆற்றலைப் புலப்படுத்துகிறது. சங்கீத தர்ப்பணம் என்னும் நூல் நாட்டிய நிகழ்ச்சிகளில் இடம் பெறுகின்ற நடன வகைகளைத் தொகுத்துக் கூறுகிறது.
விஜயநகர - நாயக்கர் கால இலக்கியங்களில் நாட்டியம் பற்றிய குறிப்புகள் இருந்த போதும் அவர்களது கல்வெட்டுக்களில் அதுபற்றிய செய்திகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. ஆனால் சிற்பங்களிலும் ஒவியங்களிலும் ஆடல், பாடல் செய்திகள் காணப்படுகின்றன. முன்னமே குறிப்பிட்டது போல் இக்காலத்தில் இராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவதக் கதைகளைக் கோயில்களின் மண்டபச் சுவர்களிலும், விதானங்களிலும் ஒவியமாகத் தீட்டும் மரபு எழுந்தது. இவற்றில் திருமணக் காட்சிகளில் வீதி ஊர்வலத்தில் ஆடற்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. திருக்கடவூர் கோயிலின் மகாமண்டபத்தின் விதானத்தில் ஆடல் மகளிரும், இசைக்கருவிகளை இசைப்போரும் ஒவியத்தில் தீட்டப்பட்டுள்ளனர். கோனேரிராசபுரத்தில் ஐரோப்பியர் ஒருவர் வருகையின் போது தந்த வரவேற்புக் காட்சி ஒவியத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் ஆடல் மகள் நிறை குடத்தினை ஏந்தி நிற்கின்றாள். கும்பகோணத்திற் கருகில் திருவலஞ்சுழியில் சிவபெருமான் 16 கைகளை வீசி ஆடும் காட்சிகுறிப்பிடத்தக்கது. இங்கு பிரம்மா தாளமிசைக்க, விஷ்ணு மத்தளம் வாசிக்கிறார். தஞ்சைக்கு அருகில் வெண்ணாற்றங்கரைக் கோயிலில் தேரில் இறைவன் பவனி வரும் காட்சி காட்டப் பட்டுள்ளது. இதில் இறைவனுக்குக் முன்னர் ஆடல் மகளிர் நடனமாடுகின்றனர். சமணக்காஞ்சியில் திருப்பருத்திக் குன்றம் கோயிலில் மண்டப விதானத்தில் ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவற்றில் மகளிர் நடனமாடும் நிகழ்ச்சியும், கரணக் கோலங்களும் காணப்படு கின்றன" செங்கம் கோயிலில் உள்ள இராமாயண ஒவியத்தில் பெண்கள் கொம்பு, குழல், மத்தளம் இசைத்துக்கொண்டு ஆடிக்கொண்டும்செல்கின்றனர்.
இக்காலத்தில் வாழ்ந்த சிற்றரசர்களின் அரண்மனைகளில் தீட்டப்பட்ட ஒவியங்களும் இங்குக்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 28
குறிப்பிடத்தக்கனவாகும். இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையில் விஜயரகுநாத சேதுபதியின் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களில் இசை மற்றும் நடனக் குறிப்புகள் காட்டப்பட்டுள்ளன. இக்கால கட்டத்தில் தமிழகத்தில முகலாயர் மற்றும் ஐரோப்பியப் பண்பாட்டுத் தாக்கமும் ஏற்பட்டது. சேதுபதி அரண்மனை ஒவியங்களில் இதனை உணரலாம். இங்கு முகலாயர் பாணியில் உடை அணிந்து அமர்ந்துள்ள சேதுபதி மன்னர் முன்பு பெண்கள் முகலாய ஆடை அலங்காரத்துடன் நாட்டியமாடு கின்றனர். சேதுபதி மன்னர்களின் சிறந்தவரான இரகுநாத சேதுபதியை பல்லக்கில் தூக்கிச் செல்லும் காட்சியில் நாட்டியப்பெண்களும், இசைவாணவரும் உள்ளனர். ஒரு ஓவியத் தொகுதியில் சேதுபதி மன்னர் முன்னிலையில் இருபெண்களும் நாட்டியம் ஆட, பிற பெண்கள் இசைக்கருவிகளை மீட்டும் காட்சி காணப்படுகின்றது. முத்து விசயரகுநாத சேதுபதி இசையிலும், நாட்டியத்திலும் ஆர்வம் மிக்கவராயிருந் துள்ளார். திருப்புடைமருதூர் நறும்பூதநாதர் கோயில் ஒவியத்தில் நாட்டிய மகளிர் ஆட இசைக் கலைஞர்கள் நாதசுவரம், குழல் போன்ற கருவிகளை இசைக்கின்றனர். இங்கு பெரிய நடராசர் உருவமும் உள்ளது.
விசயநகர-நாயக்கர் காலச் சிற்பங்கள் அளவில் பெரியன. அவற்றில் நாட்டியக் காட்சிகளும், இசைக் கருவிகளும் காணப்படுகின்றன. சிவபெருமானின் ஊர்த்துவ தாண்டவச் சிற்பங்கள் இக்காலத்தில் மதுரை மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயிலிலும், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலிலும் இன்னும் பிற கோயில்களிலும் அமைக்கப்பட்டன. மதுரை புதுமண்டபத்தில் இதனைக் காணலாம். மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயிலில் கம்பத்தடி மண்டபத்திலும், ஆயிரங்கால் மண்டபத்திலும், புதுமண்டபத்திலும் நடராசர் சிற்பங்களும் அவரது நாட்டியத்துடன் தொடர்புடைய இசைவாணர்களும் வடிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். கம்பத்தடி நடராசர் சிற்பத்திற்கு அருகில் சிவகாமி (பார்வதி) நாற்கரங்களுடன் மத்தளம் வாசிக்கும் நந்தி, விய்ாக்கரபாதர், பதஞ்சலி, மேளம் வாசிக்கும் திருமால், தும்புரு, நாரதர், காளி போன்றோர் காட்டப்பட்டுள்ளனர். பதஞ்சலியும், வியாக்கரபாதரும் தினந்தோறும் சிவ நடனத்தைக் கண்டுகளிப்பது
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

வழக்கமாகும். இதனைக் குறிக்கவே அவர்களது சிற்பங்களும் இங்கு காட்டப்பட்டுள்ளன". இவர்கள் காலத்துத் தூண்களிலும் சிறு சிறு நாட்டியச் சிற்பங்கள் வடிக்கப்பட்டன. இதனை அழகர்கோயில் கல்யாண மண்டபத்தில் காணலாம். ஏராளமான கோயில்களில் நடராசர் செப்புத் திருமேனி அமைக்கப்பட்டது. பேரூரில் உள்ள நடராசர் சிற்பம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இது 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில், ரோடுதிவுப்பள்ளியின் கலைக் கூடத்தில் இதே நூற்றாண்டைச் சேர்ந்த அற்புதமான நடராசர் திருமேனி உள்ளது".
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயிலில் சுந்தரேசுவரர் ஆலயத்திற்கு முன்பாக உள்ள மண்டபத்தில் குழுநடனம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவை விதானத்திற்குச் சற்றுக் கீழே அமைக்கப் பட்டுள்ளது. இவர்களுடன் சேர்ந்து தோல் இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களும் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நவதிருப்பதி தலங்களிலுள்ள கோயில்களில் நடனச் சிற்பங்கள் காணப்படுகின்றன. ஆழ்வார் திருநகரிகோயிலின் மேற்கூரையில் நடனமாதர்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. திருக்குறுங்குடி கோபுர மாடங்களில் நடனமாதர்கள் ஆடும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் மற்றொரு சிறப்பு யாதெனில் மரச்சிற்பங்களின் கவினுறு அழகாகும். இம்மரச் சிற்பங்களிலும் நாட்டியம் காட்டப்பட்டுள்ளது. நாங்குநேரி விஷ்ணுகோயில் நாடகச் சட்டத்திலும், மண்டபத்தூண்களிலும் நாட்டியச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள சபா மண்டபத்திலும், தூண்களிலும் ஆடல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மகாமண்டபத்தில் தனிநபர் நடனமும், இருவர் ஆடலும், குழுநாட்டியமும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயில் முன்மண்டபத்தி லுள்ள மரச்சிற்பங்களும் நாட்டியக் கலையைப் பிரதிபலிக்கின்றன.
இக்கால நடனப் பெண்களின் ஆடை, அலங்கார அமைப்பும், ஒப்பனையும், பல்லவர்,
19

Page 29
பாண்டியர், சோழர் காலச் சிற்பங்களில் காணப் படுவதிலிருந்து பெரிதும் வேறுப்பட்டுள்ளன. இவை 16-18ஆம் நூற்றாண்டுகளில் நாட்டுப்புற மக்கள் மற்றும் நடனப் பெண்களின் சமுதாய அமைப்பைப் பிரதிபலிக்கின்றன. இந்நாட்டியப் பெண்கள் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டனர் என்று கருதுவது மிகையன்று. நெற்றியில் நெத்திச் சுட்டியும், காதுகளில் வளையம், தோடு, ஜிமிக்கி போன்றவையும், இசுலாமியப் பண்பாட்டுத் தாக்கத்தைக் காட்டும் மூக்குத்தியும், கைவளைகளும், ஒட்டியாணமும், கால்களில் தண்டையும், கொலுசும், தலையில் பக்கவாட்டில் கொண்டையிட்டு ஆரம் தொங்குவது போன்றும், கழுத்தில் முத்துப் பதித்த நகைகளும், மொத்தத்தில் ஆடும் அணங்குகளின் உடலை ஆடை போன்று தலைமுதல் கால்வரை அலங்கரிக்கின்றன. இதனை ஒவியங்களிலும் சிற்பங்களிலும் எழிலாகக் காட்டியுள்ளனர்.
இவ்வாறு விசயநகர-நாயக்க மன்னர்கள்
தங்களது நிர்வாகத்திலும், ஆட்சியிலும், பண்பாட்டிலும், முந்தைய அரசுகளிலிருந்து
குறிப்புகள்
1
Burton Stein, Peasant State and Society in Medivel South India, 1994 a, pp. 366-395. Burton Stein, Vijayanagara, 1994 b, pp.41-42. K.A.N. Sastri, A History of South Indian, p.295. Burton Stein, psiroorg, 1994 a, p. 375-377. A. Krishnaswamy, The Tamil Country Under Vijayanagar, 1968, pp. 160-180. 6. தேவேமகாலிங்கம்,விஜயநகரப்பேரரசில் நிலைபெற்றிருந்த
பொருளாதார வாழ்க்கை வரலாறு, 1990, ப. 73. 7. மேலது. 8. A. Krishnaswany, (ypsäTGOTg. p. 84. 9. ARE, 202/1921. 10. ARE, 169/1940. 1. ARE, 212/1929. 12. ARE, 52/1905. 13. A. Krishnaswamy, p6TGOTg, Lu. 90. 14. Pudukkottai State Inscriptions, No. 702. 15. ARE, 216/1920. 16. அக்கால வர்ணாசிரம முறை பற்றி மனுசரித்திரமு' என்ற நூலில் விசயநகர அவைப்புலவரான அல்லசானி பெத்தன்னா குறிப்பிட்டுள்ளார்.
2O

விரிவுபடுத்தியும், வேறுபட்டும் இயங்கினர். அவர்கள் தென்னகம் முழுவதையும் தம் ஆளுகையின் கீழ்க் கொண்டிருந்ததால் கலப்புப் பண்பாட்டுக் கூறுகள் தவிர்க்க முடியாதனவாயின. இதனால் சாதிக்கடுமையும், பலதார மணமும் பல்கிப் பெருகின. அவற்றைக் களைய கிருத்துவ பாதிரியார்களும் அறிவுறுத்தியதாக அவர் தம் கடிதங்கள் கூறுகின்றன. இலக்கியத் துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதுவரை இருந்ததைவிட இவர்கள் காலத்தில் மன்னரும் மற்றோரும் இலக்கியப் படைப்பாளிகளாகத் திகழ்ந்தனர். கலைத் துறையில் விரிவாக்கமும் மாற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. சமயத் தொடர்பான கலைகள் மட்டுமே என்ற நிலை மாறி சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கை தொடர்பான நிகழ்வுகளுக்கு உரிய இடமாகக் கோயில்களும், வாழ்க்கையைச் சித்தரிக்கின்ற ஊடகமாகச் சிற்பங்களும், ஒவியங்களும் திகழ்ந்தன. இசையும், நாட்டியமும் கூட ஆதரவு பெற்றன. பண்டைய உன்னதத் தமிழகக் கலைவரலாற்றின் இறுதிக் கால கட்டமாக அவர்களது காலம் விளங்கியது.
17. Burton Stein, (psir 60Tg), U.58. 18. கே.கே.பிள்ளை, முன்னது. பக்.58. 19. தேவே, மகாலிங்கம், முன்னது.ப.16. 20. கொல்லன், பொற்கொல்லன், செப்புக் கொல்லன், தச்சன், கைவினைஞர் (சிலை செதுக்குவோர்) ஆகியவைஐவகைக் கம்மாளர் சாதிகளாகும். 21. கே.கே.பிள்ளை, முன்னது, ப.57 22. ARE, 65/1922. 23. ARE, 4133/1921. 24. Burton Stein, upsiTGOTg), 1994, u.478. 25. வணிக சாதியினர், நெசவுத் தொழில் செய்யும் சாதியினர், இசைப்பாடகர்கள், பானை செய்வோர்,துணி துவைப்போர், சவரம் செய்வோர், வேளாண்மை உற்பத்தி செய்வோர்,
பலதரப்பட்ட தொழில் வல்லவர்கள், தோல் பதனிடுவோர் போன்றோர் இடங்கையினராகவும் இருந்தனர். 26. Burton Stein, upsiraorg), 1994 a, us. 487. 27. Robert Sewell, A Forgotten Empire, 1991, p. 242. 28. மு. சந்தானம், தமிழ் பண்பாட்டு, மதுரை 2001, ப. 158. 29. மேலது. 30. தேவே. மகாலிங்கம், முன்னது, ப. 183. 31, Romila Thapar, A History of India, 1997, p.333.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 30
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
41.
42.
43.
45.
47.
கே.கே.பிள்ளை, முன்னது,பக்.63-64. Robert Sewell, yp6TGOTg, p. 93. இவருக்கு முன்பு பூரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருமணவைபவம் தேரோட்டமும் மாசி மாதத்தில் நடைபெற்றது. தெப்பக்குளங்கள் கோயில்களில் அதிக அளவில் உருவான காலம் விசயநகர்-நாயக்கர் காலமேயாகும். கோயில்களின் தூய்மைக்காக ஏற்படுத்தப்பட்ட இவை திருவிழா உற்சவங்களாகவும் கொண்டாடப்படலாயின. Robert Sewell, p6ůTGOTg, u. 262. K.A.N. Sastri, (p6oTGOTg, Lu. 438. துளுவ வம்சத்தலைவர் திருமலய்யதேவர் தமிழ் இலக்கியத்தைப் போற்றினார் எனவும் இரட்டைப் புலவர்களான மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியரை ஆதரித்தார் எனவும் சொல்லப்படுகின்றது. கே.கே.பிள்ளை, முன்னது.ப. 68. மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை, 1978,
J. 200. இவை இரண்டும் தமிழகத்தின் சைவ சமயத்தின் வெள்ளிக்காலம் (Silver Age) என்று கருதப்படுகின்றது. (K.A.N.) Sastri, A History of South Indian, p. 383.
மேலது. ப. 386. இது 1225 பாடல்களைக் கொண்டதும் எளிமையானதுமாகும். இதனாசிரியர் இராமநாதபுரம் நல்லூரில் வாழ்ந்த GUITGlassT66uy T6AJTri (K.A.N. Sastri) (GD6ugi, L. 386. கே.கே.பிள்ளை, முன்னது. ப. 84.
மேலது, ப. 67 இந்நூல் நம்மாழ்வாரின் சிறப்பையும் கூறுகின்றது - “மாறன்’பக்திரசத்தினையும் சொட்டுகின்றது. ஒரே அடி நான்கு முறை அமையும் செய்யுள் அலங்காரம் எனப்படும். K.A.N. Sastri, (p6oTGOTg, u. 389.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

48.
49.
50.
5.
52.
53.
54.
55. 56.
57.
58.
59.
60.
61.
62.
63.
மேலது.
கே.கே.பிள்ளை, முன்னது. ப. 869. மு.வரதராசன், முன்னது,பக்.138-139. K.V. Raman, Architecture in the Vijayanagar Period in South Indian Studies, 1990, p. 664. K.R. Srinivasan, (p6oTGOTg, u. 167. இம்முறையினை இன்றும் மக்களிடையே நிலவும் திருமண மற்றும் பிற முக்கிய மங்கள விழாக்களில் வாயிலில் அமைக்கப் பெறும் வாழைமரத்தோரணத்தில் காணலாம். வாழை மரமும் அதில் தொங்கும் வாழைப்பூ மற்றும் வாழைக்காய் ஆகியவை ஒட்டு மொத்தமாக விசயநகர்நாயக்கரின் தூண்களைப் போன்றும் அவற்றின் போதிகையைப் போன்றும் தென்படுவதைக் காணலாம். இதில் எது முந்தியது என்பது மேலும் ஆய்வுக்குரியதாகும். J.C. Harle, Art and Architecture of the Indian Subcontinent, Penguin books, 1990, p. 330. மேலது, ப. 337. C.Sivaramamurti, Indian Painting, New Delhi, 1976, р. 75. செ. வைத்தியலிங்கம், தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலைநகர், II, 1999, ப. 33. M. Arunachanlam, Musical Traditions of Tamil Nadu, Chennai, 1989, p.61. P. Sambamoorthy, History of Indian Music, Chennai, 1960, p.60 ரா.கலாராணி,தஞ்சை வளர்த்தuரதக்கலை, மதுரை, 2004, L. 80. TV. Mahalingam, Administration and Social Life Under Vijayanagar II, Madras, p. 339. கு.சேதுராமன், தமிழ்நாட்டு சமுதாயப் பண்பாட்டுக் கலை வரலாறு,மதுரை, 1997, ப. 327. George Michell, Architecture and Art of Southen Indian, Cambridge, 1995, pp. 197-198, fig. 144.
2

Page 31
விஜயநகரப் ே
இஸ்லாத்தின் தாக்குதல்களை எதிர்த்து ஏறக்குறைய முந்நூறாண்டு காலம் இந்து நாகரீகத்தையும் பண்பாட்டையும் காத்த பெருமையை விஜயநகரப் பேரரசு பெற்றது. விஜயநகர அரசர்களின் அருஞ்செயல்களே தென்னிந்தியாவின் அரசியல், இலக்கியம், கவின்கலைகள் ஆகிய துறைகளில் இந்தியாவின் பண்டை மரபுகள் அழிந்து போகாமல் இருப்பதற்குக் காரணமாகின. முழு அரசியல் உரிமையுடன் திகழ்ந்த தென்னிந்தியாவின் புகழ்மிக்க வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறுதான் இறுதி அதிகாரம் என்று கூறலாம்.
பேரரசை நிறுவிய முதலாம் ஹரிஹரன் அதனுடைய நிர்வாக முறையை உருவாக்குவதிலும் பெருந்தொண்டாற்றினான். காகதீய நிர்வாக முறையைப் பின்பற்றிய ஹரிஹரன், ராஜ்யத்தை ஸ்தலங்கள்’ என்றும் நாடுகள்’ என்றும் பிரித்து, பல பார்ப்பனர்களைக்கர்ணம் என்ற அலுவற்பெயருடைய பதவிகளில் அமர்த்தினான். அதற்கு முன் அந்தப் பதவிகளைப் பொற்கொல்லரும் வெலமர்களும் வகித்தார்கள். அவன் கொடை மாவட்டங்களிலிருந்த பலதரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றினான். அவனுடைய ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பொறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. அவற்றுள் மிகவும் பிற்பட்டவை1375ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. எனவே அந்த ஆண்டில் தான் அவனுடைய ஆட்சி முடிவடைந்திருக்க வேண்டுமென்று நாம் கருதலாம். இறப்பதற்கு முன்னரே அவன் தன் உடன் பிறந்தவர்களுள் மிகவும் திறமை வாய்ந்தவனான புக்கனே தனக்குப் பின் அரசனாக வேண்டுமென்று
22

|IIITðir
பேராசிரியர் க.அ. நீலகண்ட சாஸ்திரிகள்
விளம்பரப்படுத்தி விட்டான். உண்மையில், அரியணையின் ஆதாரமான புக்கன் குத்தியில் தன் தலைநகரை நிறுவித் தன் தமையன் ஹரிஹரனோடு 1346 ஆம் ஆண்டிலிருந்தே கூட்டாட்சிநடத்திவந்தான்.
தனியரசன் என்ற முறையில் புக்கனுடைய ஆட்சி சரியாக, இருபதாண்டுக்காலம், அதாவது 1377 ஆம் ஆண்டுவரையில் நீடித்தது. அவன் 1374ஆம் ஆண்டில் சீனாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினான் என்ற செய்தியை மிங் வமிசத்தினருடைய ஆண்டுப் பதிவுகளின் மூலம் நாம் அறிகிறோம். இதுவே வெளிநாட்டுத் தொடர்புத்துறையில் புக்கன் செய்த மிகக் குறிப்பிடத்தக்க செயல், உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரையில், பாமினி சுல்தான்களாகிய முதலாம் முகமது முஜாஹிது ஆகியவர்களுடன் புக்கன் செய்த போர்களே மிக முக்கியமான செய்திகள். அப்போர்கள் அடிக்கடி நடந்தன என்பதையும், அவற்றால் விஜயநகர ராஜ்யத்திற்குப்பெருஞ்சேதம் விளைந்தது என்பதையும் நாம் சென்ற அதிகாரத்திற் கூறினோம். 1378 ஆம் ஆண்டில் இரண்டாம் முகமது குல்பர்கா அரியணை ஏறிய பின்னர் அவ்விரு ராஜ்யங்களுக்குமிடையில் சிறிது காலம் அமைதி நிலவியது. புதிய சுல்தான் அமைதியை விரும்பியவன்.
புக்கனுடைய மகன் கம்பணன் மதுரை சுல்தானியத்தை அழித்தமை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளுள் மிகவும் குறிப்பிடத்தக்கது. புக்கனுடைய ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே கம்பணன் பேரரசின் தென் பகுதிக்கு அரசப்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 32
பிரதிநிதியாக இருந்தான். புகழ்பெற்ற தளபதிகளான கோபணனும் மங்குசாளவனும் ஆட்சித் துறையில், அவனுக்கு துணைபுரிந்தார்கள். கம்பணன் முதலிய வட ஆர்க்காடு, தென்னார்க்காடு ஆகிய பகுதிகளில் ஆட்சி செய்துவந்த சாம்புவராயர்கள் மீது தன் கவனத்தைச் செலுத்தினான். அவர்களை அடக்கிய பின் அவன் மதுரை மீது படையெடுப்பதற்கு அவர்களுடைய துணையையும் பெற்றான். மதுரையைப் பிடிப்பதற்குக் கம்பணன் செய்த போரைப் பற்றிய விவரங்கள் நமக்குத் தெரியவில்லை. ஆனால், அவனுடைய மனைவி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் (மதுரை வெற்றி) என்னும் வடமொழிச் செய்யுள்நூலில் அவனுடைய மதுரைப்போரைப்பற்றிய செய்திகள் காப்பிய இயல்புகளுடன் தரப்பட்டிருக் கின்றன. சாம்புவராயர்களை அடக்கியபின் கம்பணன் காஞ்சீபுரத்தில் தங்கியிருந்தபோது முஸ்லிம் ஆட்சியில் பாண்டிய நாடு அடைந்திருந்த இரங்கத்தக்க நிலையை அந்நாட்டு தெய்வம் அவனுக்கு எடுத்துக் கூறியதுமட்டுமன்றி அகத்தியன் அனுப்பியவாள் ஒன்றினையும் அவனுக்குக் கொடுத்ததாக அவன் கனவு கண்டான் என்று மதுரா விஜயம் கூறுகிறது. அந்த வாள் பாண்டிய அரசின் சின்னம். அதனைக் கையிலேந்தி அரசோச்சும் தகுதியைப் பாண்டியர்கள் இழந்து விட்டார்கள். பாண்டியர்கள் தங்கள் நாட்டை முஸ்லிம் ஆட்சியிலிருந்து மீட்கமுடியாத நிலையில் இருந்ததால் தான் கம்பணன் அந்தப் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த வரலாற்று நிகழ்ச்சி கி. பி. 1365ல் இருந்து 1370 க்குள் நடைபெற்றது. முஸ்லிம்களின் படையெடுப்புகள் நிகழ்ந்த காலத்தில் அவர்கள் கையில் அகப்படாமல் இருப்பதற்காகச் பூரீரங்கத்திலிருந்து எடுத்துக்கொண்டு போகப்பட்ட ரங்கநாதருடைய உருவச்சிலை 1371ஆம் ஆண்டில் மீண்டும் பூரீரங்கத்தில் நிறுவப்பட்டது. கம்பணன் 1374இல் இறந்தான்.
இவ்வாறு முதலாம் ஹரிஹரன் தொடங்கிய பணியை முதலாம்புக்கன் தொடர்ந்து செய்துவந்தான். தென்னிந்தியாவின் பல பகுதிகள் அவனுடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டன. பேரரசு 6) ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது. ராஜ்யங்களை அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசகுமாரர்களோ பேரரசரின் நம்பிக்கைக்கும் தனிப் பற்றுக்கும் பாத்திரமான
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

தளபதிகளோ ஆட்சி செய்தார்கள். உதயகிரிராஜ்யம் (நெல்லூர், கடப்பை), பெனுகொண்ட ராஜ்யம் (பெல்லாரி, அனந்தப்பூர், வடமைசூரின் சில பகுதிகள்) முல்வாயி ராஜ்யம் (மைசூரின் சில பகுதிகள், சேலம், தென்னார்க்காடு), அரக ராஜ்யம் அல்லது மலக ராஜ்யம் (பனவாசி, சந்திகுத்தி, கோவா), துளு ராஜ்யம் அல்லது பரகூர் மங்களூர் ராஜ்யம் ஆகியவைகளும் மேலே கூறியவாறு விஜயநகரப் பேரரசின் எல்லைக்குள்ளிருந்த சிறிய ராஜ்யங்கள்.
முதலாம் புக்கனுக்குப் பின் அவனுடைய மகன் இரண்டாம் ஹரிஹரன் பட்டத்துக்கு வந்தான். அவன் 1377 முதல் 1404 வரையில் இருபத்தேழாண்டு ஆட்சி புரிந்தான். அவன் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தைத் தென்னிந்தியா முழுவதிலும் நிலைநாட்டினான். மாதவரின் உடன் பிறந்தவரும் மிகவும் புகழ் பெற்றவருமாகிய சாயனாச்சாரியர் ஹரிஹனுடைய முதலமைச்சராயிருந்தார். ஹரிஹரன் தன்னுடைய சிற்றப்பன் பெரியப்பனுடைய மக்களுக்குப் பதிலாகத் தன்னுடைய மக்களையே மாகாண ஆளுநர்களாக நியமித்தான். அவ்வாறு தான் தேவராயன் உதயகிரி ஆளுநன் ஆனான். சற்றுத் தள்ளியஉறவினர்கள்மாகாண ஆளுநர்களாயிருந்தால் அவர்களுக்கு அரச பதவியின் மேல் ஆசை தோன்றக் கூடும். அது பேரரசின் சிதைவுக்குக் காரணமாகலாம். அத்தகையதொரு நிலைமை ஏற்படாமல் தடுப்பது ஹரிஹரனுடைய நோக்கம். ராஜகொண்டாவில் ஆட்சி செய்துவந்த வெமல அரசன் அனுப்பொட்டன் சுமார் 1369இல் தெலிங்கனாமீது படையெடுத்துக் காப்பைய நாயக்கனை வென்று கொன்றுவிட்டான். அதனால் தெலிங்கானாவின் அரசியல் நிலையையில் ஒரு முக்கிய மாறுதல் ஏற்பட்டது. அனுப்பொட்டன் பாமினியரசர்களோடு நட்புறவு கொண்டிருந்தான். எனவே, அனுப்பொட்டனுடைய வலிமையின் பெருக்கத்தால் கொண்ட வீட்டுக்கும் விஜய நகருக்கும் அபாயம் நேரக்கூடும். இரண்டாம் ஹரிஹரனுடைய மகன் இளவரசன் இரண்டாம் புக்கன் 1390 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வாரங்கல் மீது இருமுறை படையெடுத்தான். ஆனால், அப்படையெடுப்புகளால் முடிவான விளைவுகள் ஏற்படவில்லை. ஏழாண்டுகளுக்குப் பின் அவன் பங்கலைக் கைப்பற்றினான். தலைநகரத்திலிருந்து எட்டியிருந்த அந்த ஊரில் ராணுவ தளத்தை
23

Page 33
அமைத்துக் கொண்டு தெலிங்கானா மீது படையெடுப்பது எளிதாயிருந்திருக்கும். ஆனால், விரைவிலேயே அவன் பங்கலை இழந்து விட்டான்.
விஜயநகரப் பேரரசின் எல்லை வேறு திசைகளிலும் விரிவடைந்தது. வடமேற்கில் முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்த கோவா, சால், தபோல் ஆகிய துறைமுகங்களும் கரப்பட்டினமும் விஜயநகர ஆட்சிக்குள் வந்தன. சிறிது காலம் கிருஷ்ணா நதி விஜயநகரப் பேரரசின் வட எல்லையாக இருந்தது. கொண்ட வீட்டு ரெட்டிகளின் ஆட்சியிலிருந்த கர்நூலும் நெல்லூரும் - குண்டூரின் சில பகுதிகளுங்கூட - விஜயநகர ஆட்சிக்குள் வந்தன (1382 - 1385). தென்னகத்திலும் விஜயநகரப் பேரரசின் ஆட்சி வலிமையடைந்தது. இளவரசன் விரூபாட்சன் தென்னகத்தின் மீது படையெடுத்து அங்கு விஜயநகர ஆதிக்கத்தை வலுப்படுத்தியதோடு இலங்கைக்கும் சென்று அதனையும் விஜயநகருக்குத் திறைசெலுத்துமாறுசெய்தான். இவ்வாறு விஜயநகரப் பேரரசின் வலிமை பெருகுவதற்குப் பாமினியரசன் இரண்டாம் முகமதுவினுடைய இயல்புகளும் அவன் இறந்தபின் அதிகார ஆவல் மிக்க துருக்கிய அடிமை துகல்சிங் செய்த சூழ்ச்சிகளின் பயனாக பாமினிய ராஜ்யத்தில் தோன்றிய குழப்ப நிலையும் ஒரளவேனும் காரணமாயிருந்தன என்று நாம் உறுதியாகக் கூறலாம். 1398-99இல் விஜயநகருக்கும் பாமினி ராஜ்யத்திற்கும் மீண்டுமொரு கடுமையான போர் தொடங்கியது. அதில் வெற்றிபெற்ற பிரோஸ் இரண்டாம் ஹரிஹரனுடைய படைகளை கிருஷ்ண நதிக்கரையிலிருந்து 6JTT6TLOT60T போர்க் கைதிகளுக்கு ஈடாக ஒரு மிகப் பெருந் தொகையை மீட்புப் பணமாகப் பெற்ற பின்னரே அவன் போரை நிறுத்துவதற்கு ஒப்புக் கொண்டான். அதற்குப் பின் இருதிறத்தாரும் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்ட உடன்படிக்கைக்கு இரண்டு ராஜ்யங்களின் எல்லைகளும் போருக்கு முன்பிருந்தது போலவே இருக்கவேண்டும் என்றும் ஒருவர் மற்றவருடைய குடிமக்களைத் துன்புறுத்தாமலிருக்க வேண்டு மென்றும் தெளிவற்ற கூறுகளைக் கொண்ட தாயிருந்தது. அந்தச் சமயத்தில் தட்சிணத்தின் பல பகுதிகளிலும் தோன்றிய பஞ்சம் மக்களுடைய துன்பத்தை மேலும் பெருக்கியது. இரண்டாண்டுக்குப் பின் மாளவ சுல்தானும் குஜராத் சுல்தானும்
24

ஹரிஹரனோடு சேர்ந்துகொண்டால் அவன் பாமினி சுல்தானுக்குச் செலுத்துவதாக ஒப்புக் கொண்டிருந்த திறையைச் செலுத்தாமல் நிறுத்திவிட்டான்.
1404 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரண்டாம் ஹரிஹரன் இறந்த போது அவனுடைய மக்களுள் கடுமையான அரசுரிமைப் போட்டி ஏற்பட்டது. அரியணையைக் கைப்பற்றுவதில் முதலில் விரூபாட்சன் வெற்றிபெற்றான். ஆனால், விரைவில் இரண்டாம் புக்கன் அவனைத் தள்ளிவிட்டுத் தானே அரியணையேறி இரண்டாண்டு ஆட்சி செய்தான் (1405-06). இறுதியில் முதலாம் தேவராயன் புக்கனை தோல்வியடையச் செய்து தானே அரியணையேறி, 1406 நவம்பர் 5 ஆம் தேதியன்று தன் முடி சூட்டு விழாவை நடத்தினான்.
இரண்டாம் புக்கனும் தேவராயனும் விஜய நகரத்தில் புதிய சுவர்களையும் கோபுரங்களையும் கட்டியதோடு வெளியரண்கள் பலவற்றையும் கட்டி விஜயநகரத்தை மிகவும் விரிவுபடுத்தினார்களென்று போர்ச்சுகீசிய வரலாற்றுப் பதிவாளர் நூனிஸ் எழுதிவைத்திருக்கிறார். ஆனால், அவர்கள் செய்த மிகப்பெரிய செயல் துங்கபத்திரை நதியில் ஒர் அணைகட்டி, அதிலிருந்து பதினைந்து கல் தொலைவிலிருந்த விஜயநகரத்தை இணைப்பதற்கு ஓர் உயர்மட்டக்கால்வாயை வெட்டியதுதான் என்று சூவல் கூறுகிறார். பழைய நகரத்தின் பல பகுதிகளில் இப்போதிருக்கின்ற விளைநிலங்களுக்குப் பாசன வசதி தருகிற கால்வாய்தான் புக்கனும் தேவராயனும் வெட்டிய கால்வாய் என்பது உண்மையாயிருந்தால், அவர்களுடைய செயல் மிகவும் வியக்கத்தக்க அருஞ்செயல் என்று சூவல் மேலும் கூறுகிறார். மலையடிவாரத்திலுள்ள கெட்டியான பாறையைப் பல கல் நீளம் பிளந்து அந்தக்கால்வாயின் ஒரு பகுதி வெட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவிற் காணக்கிடக் கின்ற மிகவும் குறிப்பிடத்தக்க நீர்பாசனத் திட்டங்களுள் இந்த அணையையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சூவல் கூறிவியப்படைகிறார்.
தேவராயனுடைய ஆட்சியின் தொடக்கத்திலேயே விஜயநகரும்பாமினி ராஜ்யத்துக்கும் போர் மூண்டது. முடுகலில் இருந்த ஒர் அழகிய பெண்ணின் மீது தேவராயன் கொண்ட ஆசைதான் அந்தப்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 34
போருக்குக் காரணமென்று பேரிஷ்மா கூறுகிறார். ஆனால், இந்து ராஜ்யமாகிய விஜயநகரத்தோடு ஒரு ஜிஹாதைத் (புனிதப்போரை) தொடங்கவேண்டு மென்று பிரோஸ் விரும்பியது தான் அந்தப் போருக்குக் காரணமாயிற்றென்று வேறு சிலர் எழுதிவைத்திருக்கின்றனர். போர் முதலில் பிரோஸுக்குப் பாதகமாய் இருந்ததெனினும், இறுதியில் தேவராயன் செய்துகொண்ட உடன்படிக்கை அவனுடைய மதிப்புக்குப் பெரிதும் ஊறு விளைவிக்கக்கூடியதாய் இருந்தது. விஜய நகரிலிருந்து அரபிக்கடலுக்குச் செல்லும் முக்கியமான வழியிலிருந்த ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பங்காப்பூரைத் தேவராயன் பிரோஸுக்குக் கொடுத்துவிட்டது. மட்டுமன்றித் தன்னுடைய மக்களுள் ஒருத்தியையும் சுல்தானுக்கு மணமுடித்து வைத்தான்.
அந்த நேரத்தில் கொண்டவீட்டு ரெட்டிகள் தேவராயனுக்கு எதிராகக் கிளம்பினார்கள். அவர்கள் பிாேரஸஸுடன் உடன்படிக்கை செய்து கொண்டிருந் தார்களென்று நினைக்க இடமிருக்கிறது. எனவே, அந்த நேரத்தில் கிடைத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு, உதயகிரியைத் தாக்கி, விஜயநகர ஆட்சியிலிருந்த சில பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டார்கள். அந்தப்பகுதிகள் 1413இல் தான் மீண்டும் விஜயநகர ஆட்சிக்குள் வந்தன.
கிருஷ்ணுவுக்கும் கோதாவரிக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆட்சி செய்துவந்த தெலிகுச்சோட மன்னன் ஆனதேவன் என்பவனும் பிரோஸுடன் நட்புறவு கொண்டிருந்தான். அந்த உறவால் நிகழக் கூடிய தீங்கைத் தடுப்பதற்காகத் தேவராயன் அப்போது ராஜமகேந்திரவரத்தில் ஆட்சி செய்தவனும் ஆனதேவனுடைய மைத்துனனும் ஆகிய காட்டைய வேமன் என்னும் ரெட்டியரசனுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டு, இருவரும் சேர்ந்து ஆனதேவனைத் தாக்கினார்கள். 1415 ல் தொடங்கிய அந்தப் போர் முதலில் ஆன தேவனுக்குப் பாதகமாய் இருந்தது. ஆனால், விரைவில் பிரோஸ் ஆனதேவனுக்குத் துணை செய்தான். பின்னர் நடந்த சண்டையில் காட்டைய வேமன் உயிர்துறந்தான். தேவராயனுடைய படைகளும் தோல்வி அடைந்தன. அதன்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

விளைவாக பிரோஸ் தெலிங்கானாவின் மீது தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநிறுத்தினான் ஆனால் தேவராயன் பங்கலைக் கைப்பற்றிப் பிரோஸின் போக்குவரத்துத் தொடர்புக்கு இடையூறுண் டாக்கினான். அதன் பின் அந்த நகரம் ஈராண்டு முற்றுகைக்கு உட்பட்டது. பாமினியரசனுடைய வலிமை குறைந்தது. அன்றியும், அப்போது தோன்றிய கொள்ளைநோய் பாமினிப் படைகளின் வலிமையை மேலுங் குறைத்தது. இந்தச் சாதகமான நிலையில் தேவராயன் பாமினிப் படைகளைத் தோல்வியுறச்செய்து மிகப்பெரிய வெற்றி பெற்றான் (1419). ராஜமகேந்திரவரத்து ரெட்டிகள் மீண்டும் வலிமை பெற்றார்கள். இறந்து போன கட்டைய வேமனுடைய தளபதி அல்லாடன் என்பவன் அவர்களுக்குத் தலைமைதாங்கி, காட்டையனுடைய மகன் குமாரகிரியை ராஜமகேந்திரவரத்தின் அரசனாக்கினான். ஆனால், கொண்டை வீட்டைத் தேவராயனும் ராஜகொண்டாவெலமர்களும் தமக்குள் பங்கு போட்டுக் கொண்டார்கள். அதனால், அந்த ராஜ்யம் அழிந்தது. இந்தப் பல்வேறு போர்களிலும் சண்டைகளிலும் தேவராயனுடைய மகன் வீரவிஜயராயனும் அவனுடைய அமைச்சன் லட்சுமீதரனும் அவனுக்குப் பெருந்துணை யாயிருந்தார்கள். தேவராயனைக் கொல்வதற்காக நடந்த ஒரு சதியில் லட்சுமீதரன் தேவராயனைக் காப்பாற்றினான் என்றும் சிலர் கூறுகின்றனர். 1422 இல் தேவராயன் இறந்தபின் அவனுடைய மகன் ராமச்சந்திரன் சில மாதம் அரசனாய் இருந்தான். அதன்பின் வீரவிஜயராயன் அரசனானான். தேவராயனுடைய ஆட்சியில் இறுதி ஆண்டுகளில் விஜயநகரத்துக்கு வந்த இத்தாலியன் நிக்கலோ கான்டி அந்த நகரத்தைப் பற்றி எழுதிவைத்த வருணனை நமக்குக் கிடைத்திருக்கிறது.
வீர விஜயராயன் எத்தனை ஆண்டுகள் ஆட்சிசெய்தான் என்பது சரியாகத் தெரியவில்லை. அதைப்பற்றிப் பலர் பல விதமாகக் கூறுகிறார்கள். உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், அவன் சுமார் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தான் என்று நாம் கருதலாம் (1422-26). அவன் குறிப்பிடத்தக்க செயல் எதனையும் செய்யவில்லை என்று நூனிஸ் கூறுகிறார். அவனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த அவனுடைய
25

Page 35
மகன் இரண்டாம் தேவராயன் வீர விஜயராயனுடைய ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே அரசியல் நிர்வாகத்தில் பங்குபெற்றிருந்தான் என்று கருதலாம். பாமினி ராஜ்யத்திற்கும் விஜய நகரத்துக்கும் வழிவழி வந்த பகைமை வீரவிஜயன் காலத்திலும் தொடர்ந்தது. எனவே பாமினி அரசன் அகமது ஷா விரைவியிலேயே வீரவிஜயனோடு போர்தொடுத்து, அவனுடைய படைகளை வென்று, போர் வீரரல்லாத ஏராளமான மக்களையும் கொன்று குவித்தான். இருதரப்புப் படைகளும் துங்கபத்திரை நதிக் கரையில் மோதின. விஜயனுடைய பாசறை ஒரு நாள் வைகறையில் எதிபாராத தாக்குதலுக்குட்பட்டது. விஜயன் வேகமாகத் தப்பியோடி ஒரு கரும்புத் தோட்டத்தில ஒளிந்து கொண்டான். அவனை அங்கே கண்ட முஸ்லிம் வீரர்கள் அவன் ஒருசாதாரணத் தொழிலாளி என்று நினைத்தார்கள். அதே நேரத்தில் பாமினிப் படைகள் வெற்றிபெற்றுவிட்டன என்று அவர்கள் கேள்விப்பட்டார்கள். அதனால், அவர்கள் அந்தத் தொழிலாளியைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களுடைய நண்பர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டார்கள். அதன்பின் அகமது ஷா பாதுகாப்பற்ற கிராமங்களைத் தாக்கி எதிர்ப்பட்ட மக்கள் எல்லாரையும் கொன்றான். இரக்கத்தை இதயத்திலிருந்து அறவே அகற்றிவிட்ட அகமதுஷா இருபதாயிரம் இந்துக்களைக் கொன்றபின் மூன்று நாள் ஓரிடத்தில் தங்கி, தான் செய்த அருஞ்செயலைக் கொண்டாடியபின் மீண்டும் அந்தத் திருப்பணியைத் தொடங்குவான். இவ்வாறு ஏராளமான மக்களைக் கொன்றது மட்டுமன்றி அவன் கோயில்களை அழித்து, விக்கிரகங்களை உடைத்து, பார்ப்பனக் கல்லூரிகளை அழித்து மகிழ்ந்தான். விஜயன் பாமினி அரசனுக்குச் செலுத்த வேண்டிய திறை நிலுவைகள் அனைத்தையும் செலுத்திய வரையில் அந்தப் படுகொலை நிற்கவில்லை. மேலும், அவன் கல்வி கேள்விகளிற் சிறந்த பார்ப்பனர் உட்படத் தன் குடிமக்கள் பலரை அகமதுஷா சிறைபிடித்துச் செல்வதற்கும் உடன்பட்டான். அதன்பின்னரே சண்டை நின்று சமாதானம் ஏற்பட்டது.
விஜயனுக்குப்பின் அவனுடைய மகன் இரண்டாம் தேவராயன் சுமார் 1426இல் அரசன் ஆனான். தேவராயன் கஜபெட்டகாரா' என்னும் தொடர் 'யானை வேட்டைக்காரன்’ என்று பொருள்படும்.
26

அவன் யானையை ஒத்த வலிமையுடைய பகையரசர் பலரை வென்றவன் என்று அணியிலக்கண மரபுப்படி அத்தொடருக்குப் பொருள் கொள்ள வேண்டுமென்று சிலரும், யானை வேட்டையில் மிகவும் விருப்ப முள்ளவன் என்று சொற்பொருள் கொள்ளுதலே பொருத்தமாக இருக்குமென்று வேறு சிலரும் கருதுகின்றனர். அஞ்சா நெஞ்சனான பெத்த கொமட்டிவேமன் 1420 இல் இறந்தபின் கொண்டவீடு ராஜ்யம் வலிமையிழந்து அமைப்பண்மையற்றநிலையில் இருந்தது. அந்த ராஜ்யத்தை 1428ஆம் ஆண்டுக்குள் தேவராயன் வென்று விஜயநகர ஆட்சியில் இணைத்துவிட்டான். அதன்பின் தேவராயன் கஜபதி மரபினர் ஆட்சியில் ஒரிசா ராஜ்யத்தின் மீது தன் கவனத்தைத் திருப்பினான். தேவராயன் கொண்ட வீட்டைக் கைப்பற்றியதால் அவனுக்கும் கஜபதியின் மேலாதிக்கத்திலிருந்த சிற்றரசர்களுக்கும் பகை ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகத் தேவராயன் ஒரிசாவின்மீது படையெடுத்தான் என்று நாம் கருதலாம். ஆனால், போர் தொடங்குவதற்குள் ராஜமகேந்திரவரத்து அல்லாடரெட்டி தலையிட்டு அமைதியை ஏற்படுத்தினான். அதன்பின் வெகு விரைவில் அல்லாடரெட்டி இறந்துபோனான். அவனுக்குப்பின் வந்த அவனுடைய மக்கள் அல்லய வேமனும் வீரபத்திரனும் தங்களுடைய தந்தையைப் போலவே கலிங்கத்தோடு பகைமை பாராட்டுவதன் மூலம் தங்களுடைய செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ளும் பொதுவான நடைமுறைக் கோட் பாட்டைப் பின்பற்றினார்கள். 1435 ஆம் ஆண்டில் கபிலேஸ்வரன் என்பவன் கலிங்கத்தின் அரியணை ஏறினான். அவன் ஆற்றல் மிகுந்த அரசன். எனவே, அவன் ராஜமகேந்திரவரத்தின்மீது படையெடுத்தான். அரசியல் துறையிலும் திருமண உறவுகளின் வாயிலாகவும் விஜயநகர அரசர்களோடு தொடர்பு கொண்டிருந்த ராஜமகேந்திர ஆட்சியாளர்கள் கபிலேஸ்வர கஜபதியின் படையெடுப்பைச் சமாளிப்பதற்கு இரண்டாம் தேவராயனுடைய துணையை நாடினார்கள். அவனும் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, ஒரு படையுடன் சென்று கபிலேஸ்வர கஜபதியை வென்று துரத்தினான். ராஜமகேந்திரவரத்திற்கு ஏற்பட்ட ஆபத்து அப்போது நீங்கியது. ஆனால், இரண்டாம் தேவராயன் இறந்தபின் கபிலேஸ்வரன் ராஜமகேந்திர வரத்தைப் பிடித்துக்கொண்டான்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 36
தேவராயன் சேரலத்தின்மீது படையெடுத்தான். கொல்லத்தரசனும் ஏனைய சிற்றரசர்களும் அவனுக்குப் பணிந்தார்கள். ஆனால், கோழிக் கோட்டில் ஆட்சி செய்துவந்த ஜாமரின் முழு உரிமைபெற்ற அரசனாகவே இருந்தான். அந்தச் சமயத்தில் தென்னிந்தியாவுக்கு வந்திருந்த அப்துர் ரஜாக் என்னும் பெயருடைய பாரசீகத் தூதர் ஜாமரின் தேவராயனுடைய மேலாதிக்கத்திலிருந்த அரசர்களுள் ஒருவன் அல்லன் எனினும் அவன் தேவராயனிடம் மிகுந்த அச்சங்கொண்டிருந்தான் என்றும் பாரசீகத் தூதரைக் காலதாமதமின்றித் தன்னிடம் அனுப்புமாறு தேவராயன் விடுத்த கடிதத்தைக் கண்டவுடனே அவன் அந்த ஆணைக்குக் கீழ்ப்படிந்தான் என்றும் கூறுகிறார். தென்னிந்தியா முழுவதும் தேவராயனுடைய ஆதிக்கத்திலிருந்தது என்பதற்கு அப்துர் ரஜாக் சான்று பகர்கிறார். தேவராயனுடைய ராஜ்யம் இலங்கையிலிருந்த குல்பர்கா வரையிலும் பரவியிருந்தது என்று அவர் எழுதிவைத்திருக்கிறார். தேவராயனுக்குக் கொல்லம், இலங்கை, பழவேற்காடு, பெகு, டெனாசரிம் முதலிய நாடுகள் திறை செலுத்தின என்று நூனிஸ் உறுதியாகக் கூறுகிறார்.
பாமினி ராஜ்யத்துக்கும் விஜயநகர ராஜ்யத்துக்கும் வழிவழி வந்த பகை தேவராயன் காலத்திலும் தொடர்ந்தது. 1436ஆம் ஆண்டில் இரண்டாம் அலாவுதீன் பாமினி அரியணை ஏறியவுடனே விஜயநகர அரசன் செலுத்தவேண்டிய திறை நிலுவையை வசூல் செய்வதற்காகத் தன் உடன்பிறந்தான் முகமதுவை ஒரு படையுடன் அனுப்பினான். தேவராயன் ஒரு பெருந்தொகையை அவனுக்குச் செலுத்தினான். பாமினிப்படைகளோடு விஜயநகரப் படைகள் எப்போது போர் செய்தாலும் தோல்வியே கண்டன. பாமினிப்படைகளின் வெற்றிக் குரிய காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கும் அந்த நிலைமையை மாற்றுவதற்கேற்ற வழிவகைகளை ஆராய்வதற்கும் தேவராயன் தன்னுடைய பிரபுக்களோடு கலந்து பேசினான். அந்தப் பேச்சுவார்த்தைகளின் பயனாக முஸ்லிம்களையும் விஜயநகரப் படைகளிற் சேர்த்துக்கொள்வதென்றும், அவர்களுடைய மதக் கோட்பாடுகளைப் பின்பற்று வதற்கு அவர்களுக்கு முழு உரிமை தருவதென்றும்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

அவன் முடிவு செய்தான். மேலும், தன்னை அவர்கள் தலை தாழ்த்தி வணங்கும்போது அவர்களுடைய மதக் கோட்பாடுகளுக்கு எதிராக நடக்கும் பாவத்தை அவர்கள் செய்யாமலிருப்பதற்காகத் தன்னுடைய அரியணைக்கு முன்னால் திருக்குரான் பிரதி ஒன்றை வைப்பதற்கு ஏற்பாடு செய்தான். அன்றியும், இந்துப் போர்வீரர்களுக்கு நல்ல பயிற்சி - முக்கியமாக வில் வித்தையில் - அளிப்பதற்கும் தேவராயன் ஏற்பாடு செய்தான். இவ்வாறு சீர்திருத்தத்திற்குட்பட்ட விஜயநகரப் படை முன்பிருந்ததைவிட அதிகத் திறமை பெற்ற படையாக விளங்கியது.
1443 இல் அப்துர் ரஜாக் கோழிக்கோட்டில் இருந்தபோது இரண்டாம் தேவராயனுடைய சகோதரர்களுள் ஒருவன் அவனைக் கொல்லும் நோக்கத்துடன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தான் என்று கூறுகிறார். ஆனால், அந்தச் சதி வெற்றிபெறவில்லை. உடல்நலமில்லை என்று காரணங்கூறி, தேவராயன் அந்த விருந்துக்குப் போகாமல் நின்றுவிட்டான். ஆனால், விருந்துக்குச் சென்றிருந்த பல பிரபுக்கள் உயிரிழந்தார்கள். அந்தச் சதியைப் பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் பாமினி சுல்தான் இரண்டாம் அலாவுதீன் நன்றாக அறிந்திருந்தான் என்பது தோன்றுகிறது. ஏனெனில், அதன்பின் விஜயநகரில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவன் ஏழு லட்சம் வராகனைத் தனக்குக் கொடுக்கவேண்டுமென்று தேவராயனுக்குவ் சொல்லியனுப்பினான். தேவராயன் அந்தத் தொகையைக் கொடுப்பதற்கு மறுத்ததுமன்றி ராயச்சூர் ஆற்றிடைநிலத்தின் மீது படையெடுத்தான். தொடக்கத்தில் அவனுக்கு நல்ல வெற்றி கிடைத்தது. முதலில் தேவராயன் முடுகலைக் கைப்பற்றினான். அதன்பின் அவன் ராயச்சூரையும் பங்காப்பூரையும் முற்றுகையிட்டுப் பிஜப்பூர் வரையிலிருந்த நாடு முழுவதையும் அழித்தான், ஆனால், பாமினிப் படைகள் விரைவில் புத்துரம் பெற்று, விஜயநகரப் படைகளோடு போர் செய்து, தேவராயனை முடுகல் வரையில் பின்வாங்குமாறு செய்தன. அதன்பின் மூன்று சண்டைகள் நடந்தன. கடைசிச் சண்டையில் தேவராயனுடைய பெரிய மகன் இறந்தான். அவனுடைய படைகள் முடுகல் கோட்டைக்குள் ஒடி ஒளிந்துகொண்டன. ஆனால், பாமினித்தளபதிகளில் முக்கியமான இருவர் தேவராயன் கையில்
27

Page 37
அகப்பட்டுக் கொண்டனர். அந்தத் தளபதிகளை விடுதலை செய்து தன்னிடம் ஒப்படைக்காவிட்டால் இந்துக்கள் எல்லாரையும் மொத்தமாகக் கொலைசெய்யப்போவதாகப் பாமினி சுல்தான் அச்சுறுத்தினான். வேறுவழியின்றி, தேவராயன் அந்தத் தளபதிகளை விடுதலை செய்துவிட்டான்.
தேவராயன் பல கட்டடங்களைக் கட்டினான்; புலவர்களை ஆதரித்தான். அவனே கல்வி கேள்விகளில் வல்ல நூலாசிரியன். கற்றறிந்தவர்கள் செய்த வாதங்களுக்குப் பலமுறை வெற்றியுறுமாறு அவன் தலைமை தாங்கினான் என்று நாம் அறிகிறோம். புகழ் பெற்ற டிண்டிம குடும்பத்தைச் சேர்ந்த ஆஸ்தான வித்துவானும் (அரசவைப் புலவர்) பூரீநாதர் என்னும் தெலுங்குக் கவிஞரும் ஒருமுறை வாதிட்டனர். பூரீநாதரே சிறந்தவர் என்று தீர்ப்புக் கூறிய தேவராயன் அவருக்குக் கனனாபிஷேகம் செய்து வைத்தான்.
1446 மே மாதத்தில் தேவராயன் இறந்தான். அவனுடைய நீண்ட ஆட்சி வளமான ஒன்று என்று பொதுவாகக் கூறலாம் அவனுக்குப் பின் இரண்டாம் விஜயராயன் அரசன் ஆனான். ஆனால், வெகுவிரைவில் தேவராயனுடைய மகன் மல்லிகார்ஜுனன் அரியணை ஏறினான். அவனுடைய முடிசூட்டு விழா 1447 மே மாதத்திற்கு முன் நடைபெற்றது.
மல்லிகார்ஜுனன் வலிமையற்றவன்; நிர்வாகத் திறமை இல்லாதவன். அதனால் அவன் அரியணையேறிய காலந்தொட்டு ராஜ்யத்தில் உட்பூசலும் நலிவும் குழப்பமும் ஏற்பட்டன. இந்த நிலை நாற்பதாண்டுகளுக்குமேல் நீடித்தது. இறுதியில் போர்த்திறனும் அரசதந்திரத்திறனும் ஒருங்கே பெற்ற சாளுவ நரசிம்மன் விஜயநகரப் பேரரசின் வலிமையையும் பெருமையையும் மீண்டும் நிலை நாட்டினான். அந்த இடைக்காலம் கிளர்ச்சிகளும் மனநிறைவின்மையும் நிறைந்ததாக இருந்தது. பழைய அரச வமிசத்தினருக்கு எதிர்ப்பு மிகுந்தது. அவர்களுள் பலர் கொலை செய்யப்பட்டனர். மல்லிகார்ஜுனனுடைய ஆட்சியின் தொடக்கத்தில் வெலமர்களுடைய தலைநகரான ராஜகொண்டாவை பாமினிப் படைகள் கைப்பற்றிக்கொண்டன.
28

அதனால், வெலமர்கள் கர்நூல் மாவட்டத்தில் ‘வெலுகொடு' என்னும் இடத்தைத் தங்கள் தலைநகராக்கிக் கொண்டார்கள். அதன்பின் ராஜகொண்டாவின் அண்மையிலிருந்த பகுதிகளில் ஆட்சிசெய்த சிறிய தலைவர்கள் பேரரசுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினார்கள். அதனால் நாட்டில் அமைதி குலைந்தது. பேரரசின் வலிமை குன்றியது. அந்த நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இரண்டாம் அலாவுதீனும் கபிலேஸ்வர கஜபதியும் விஜயநகரின் மீது படையெடுத்து அதனை முற்றுகையிட்டார்கள். ஆனால், அந்தநகரம் வெற்றி நகரம்’ என்னும் தன்னுடைய பெயருக்கேற்ப முற்றுகையை நெடுநாள் சமாளித்தது. எனவே, எதிரிகள் குறிப்பிடத்தக்க வெற்றி எதனையும் அடையாமல் திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று.
ஆனால், கபிலேஸ்வரன் போரைத் தொடர்ந்து நடத்தினான். அவனுக்குத் தெலிங்கானாவிலிருந்த வெலமத் தலைவர்களும் சத்திரியத் தலைவர்களும் துணைபுரிந்தனர். அவன் 1454ற்குள் ராஜயமகேந்திர வரத்தையும் கொண்ட வீட்டையும் கைப்பற்றிக் கொண்டான். அவன் பூரீசைலம் வரையிலுள்ள பகுதிகளை வென்றான். அவன் வென்ற இடங்களில் கர்நூல் மாவட்டத்தின் பெரும் பகுதி அடங்கியிருந்தது. அவனுடைய மகன் ஹம்பர், மாமூது கவானை வென்று வாரங்கல்லைக் கைப்பற்றினான். 1461இல் ஹமாயூன் இறந்தபின், ஹம்பர் பீடாரையும் வென்றான். அதன்பின் கபிலேஸ்வரன் உதயகிரியைப் பிடித்துக்கொண்டது மட்டுமன்றி, விஜயநகரப் பேரரசின் தென் மாகாணங்களில் காஞ்சிபுரத்தையும், திருச்சிராப் பள்ளியையும் வென்றான் (1463)
இவ்வாறு ஒட்டப்பேரரசு அதற்கு முன்னும் பின்னும் இல்லாத அளவு விரிவடைந்தது. அதனுடைய செல்வாக்கு கங்கை முதல் காவிரி வரையில் பரவியது. தெலுங்கு மாவட்டங்கள் ஒரிசாப் பேரரசின் எல்லைக்குள் சென்றுவிட்டன என்பதும் சிலகாலம் அவை ஒரிசாவின் ஆட்சியிலேயே இருந்தன என்பதும் வரலாற்றுண்மைகள். ஆனால், தென்னகம் விஜயநகரப் பேரரசின் ஆட்சியில்தான் இருந்தது. தென்னகத்தின் மீது நிகழ்ந்த ஒரிசாப்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 38
படையெடுப்பு ஒரு திடீர் தாக்குதல். வெற்றியுறுமாறு தாக்கியபின் ஒரிசாப் படைகள் வந்த வேகத்திலேயே திரும்பியும் போய்விட்டன. விஜயநகரப் பேரரசின் ஆட்சியிறைமையை அந்தப் பேரரசின் பிரபுக்கள் காப்பாற்றினார்கள். அவர்கள் வலிமையும் திறமையும் பெற்றவர்கள். அவர்கள் பேரரசின் எல்லைக் குள்ளிருந்த மாகாணங்களை ஏறக்குறைய சுயேச்சையாக ஆண்டு வந்தார்கள். பெயரளவில் மட்டும் அவர்கள் மல்லிகார்ஜுனனுடைய மேலாதிக்கத்தில் இருந்தார்கள். அத்தகைய பிரபுக்களுள் சாளுவகோபதிம்மன் ஒருவன். அவனுக்குத் திருமலை தேவமகாராஜன் என்ற வேறு பெயரும் இருந்தது. அவன் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆளுநனாக இருந்தான். அவனை ஒத்த சிறப்புடைய இன்னொரு பிரபுவான சாளுவ நரசிம்மன் பேரரசின் மையப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் ஆட்சி செய்து வந்தான். அவனுக்குத் துளுவ வமிசத்தைச் சேர்ந்த திறமை மிக்க வீரன் ஈஸ்வரன் பெருந்துணை யாயிருந்தான். மல்லிகார்ஜுனன் 1965 ஜூனுக்கும் அக்டோபருக்கும் இடையில் இறந்து போனான்.
அவனுடைய மகன் ராஜசேகரன் அப்போது குழந்தையாய் இருந்தான். எனவே, இரண்டாம் தேவராயனுடைய தம்பி பிரதாப தேவராயனுடைய மகன் இரண்டாம் விருபாட்சன் விஜயநகர அரசன் ஆனான். அவன் விஜயநகர அரியணை ஏறுவதற்குமுன் பல ஆண்டுகள் பெனுகொண்டாவின் ஆட்சியாளனாய் இருந்தான். அவன் தீயொழுக்கம் உடையவனென்றும் மது மயக்கத்திலும் மாதர் மையலிலும் எப்போதும் ஆழ்ந்து கிடந்தான் என்றும் நூனிஸ் எழுதிவைத்திருக்கிறார். எனவே, அவன் காலத்தில் கோவா, சால், தபோல் போன்ற பேரரசின் பல பகுதிகளை முஸ்லிம்கள் கைப்பற்றிக் கொண்டார்கள் என்பது நமக்கு வியப்புத் தரவில்லை. மைய அரசின் அதிகாரம் தொடர்ந்து குறைந்து கொண்டே போயிற்று. வலிமைமிக்க மாகாண ஆளுநர்களுடைய முயற்சிகளே பேரரசு அடியோடு சிதைந்து போகாமல் காத்தன. சந்திரகிரி ராஜ்யத்தின் ஆட்சியாளனான சாளுவ நரசிம்மன் என்பவனே அவர்களுள் மிகவும் சிறப்புவாய்ந்தவன். 1463இல் ஒட்டர்கள் படையெடுத்தபோது அவனுடைய ஆட்சியிலிருந்து ராஜ்யத்தின் சில பகுதிகளை
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அவர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். எனவே, இப்போது அவன் கஜபதியின் மீது போர் தொடுத்து, உதயகிரியை முற்றுகையிட்டு, அதனைக் கைப்பற்றிக்கொண்டான் (1470). அவன் தமிழகத்தில் நடந்த ஒரு கலகத்தை அடக்கினான். அதன்பின் கபிலேஸ்வரனுடைய ஒரிசாவில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவன் பேரரசின் கிழக்கு மாவட்டங்களிலிருந்த ஒரியர்களைத் தோல்வியுறச் செய்து துரத்திவிட்டு, கோதாவரி நதிவரையில் இருந்த பகுதிகளைத் தன்னுடைய ஆட்சியின்கீழ்க் கொண்டு வந்தான். கொண்டவீடும் மசூலிப் பட்டினமும் 1477ற்குள் அவனுடைய கைக்குள் வந்தன. பாமினி சுல்தான் மூன்றாம் முகமதுவின் துணையுடன் புருஷோத்தமனைத் துரத்திவிட்டு ஒரிசாவின் அரியணையைக் கைப்பற்றியிருந்த ஹம்பருக்கு எதிராகச் சாளுவ நரசிம்மன் இப்போது புருஷோத்த மனுக்கு உதவ முயன்றான் என்பது தோன்றுகிறது. அதனால், நரசிம்மனும் புருஷோத்தமனும் பாமினியரசனுடைய பகையைச் சமாளிக்க வேண்டியதாயிற்று. காஞ்சிபுரத்தைத் திடீரென்று தாக்கி அங்கே கிடைத்த ஏராளமான கொள்ளைப் பொருள்களுடன் மீண்டுகொண்டிருந்த சுல்தானை வழிமறித்து அந்தப் பொருள்களுள் பெரும்பகுதியை மீட்ட பெருஞ் சிறப்பு துளுவ தளபதி ஈஸ்வரனைச் சேரும்.
இரண்டாம் விருபாட்சன் 1485 வரையில் ஆட்சிசெய்தான். அந்த ஆண்டின் இடையில் அவனுடைய மூத்தமகன் அவனைக்கொன்றுவிட்டான். ஆனால், அவன் அரியணையேற விரும்பாமல் தன்னுடைய தம்பி படியராவ் (பிரவுடதேவராயன்) என்பவனுக்கு முடிசூட்டி வைத்தான். தன்னை அரியணையேற்றிய தன்னுடைய தமையனைக் கொலை செய்வதற்கு ஏற்பாடு செய்ததுதான் புதிய அரசன் செய்த முதல் வேலையாய் இருந்தது. அதன்பின் அவன் மதுபானத்திலும் மாதர் மையலிலும் ஆழ்ந்துவிட்டான். அதனால், அரசியல் நிர்வாகத்தைக் கவனிப்பதற்கு அவனுக்கு நேரமில்லாமல் போய்விட்டது. பேரரசைக் காப்பாற்ற வேண்டுமானால் பழைய அரச வமிசத்தை அழித்துவிட்டுத் தானே அரியணை ஏறுவதைத்தவிர வேறுவழியில்லை என்பதை சாளுவ நரசிம்மன் உணர்ந்தான். எனவே, விஜயநகரின் மீது படையெடுத்து அதனைக்
29

Page 39
கைப்பற்றுமாறு அவன் தன்னுடைய தளபதியான நரசநாயக்கனுக்கு ஆணையிட்டான். அந்தப் படையெடுப்பின் இறுதி நிகழ்ச்சிகளை நூனிஸ் விளக்கமாக எழுதிவைத்திருக்கிறார். அந்த வர்ணனை ஒரு சொல்லோவியமாகத் திகழ்கிறது. நரசிம்மனுடைய தளபதி மாநகரின் வாயிலை அடைந்தபோது அவனை எதிர்ப்பதற்கு அங்கே யாரும் இல்லை. பின்னர் அவன் அரச மாளிகைக்குள் நுழைந்தான். அங்கும் அவனை யாரும் தடுக்கவில்லை. அதன்பின் அவன் அரசனுடைய அந்தப் புரத்துக்குச் சென்று பெண்கள் சிலரையும் கொன்றான்.அப்போதும் அவனை ஒருவரும் எதிர்க்கவில்லை. இறுதியில் அரசன் என்ற பெயருடன் மாளிகையிலிருந்த கோழை ஓடி விட்டான். அதன் பின் நரசிம்மன் அரச பதவிக்கு உயர்த்தப்பட்டான்' (486) இவ்வாறு நூனிஸ் எழுதிவைத்திருக்கிறார்.
இவ்வாறு அடாவழியில் நரசிம்மனும் அவனுடைய ஆட்களும் விஜயநகர அரியணையைக் கைப்பற்றியதன் மூலம் பேரரசின் அழிவைத் தடுத்தார்கள் என்பதில் ஐயமில்லை. எனினும்,நரசிம்மன் அரியணை ஏறியதைப் பலர் எதிர்த்தார்கள். அவ்வாறு எதிர்த்த தலைவர்களை அடக்குவதற்காக நரசிம்மன் பெரு முயற்சி செய்யவேண்டியதாயிற்று கடப்பை மாவட்டத்திலிருந்த பெரணிபாடு என்னும் இடத்தில் ஆட்சிசெய்துவந்த சம்பட்டர்களும் மைசூரின் அருகில் உம்மத்துார் என்னுமிடத்தில் ஆட்சி செய்துவந்த பாளையக் காரர்களும் வேறு சிலரும் நரசிம்மனை எதிர்த்துக் கலகஞ் செய்தார்கள். அவர்களோடு போர் செய்து அவர்களை அடக்குவதற்கு நரசிம்மன் தன் காலத்தையும் வலிமையையும் ஏராளமாகச் செலவழித்தான். இறுதியில் அவர்கள் அவனுடைய ஆட்சியை ஏற்றுக்கொண்டார்கள் என்பது உண்மைதான். ஆனால், அந்த நேரத்தில் பேரரசுக்கு வெளியாரால் உண்டான ஆபத்துகளைத் தடுப்பதற்கு நரசிம்மனால் முடியவில்லை. அவ்வாறு பேரரசுக்கு ஆபத்து விளைவித்தவர்களுள் புருஷோத்தமன் ஒருவன். மூன்றாம் முகமது இறந்தபின் பாமினி ராஜ்யத்துக்கு நேர்ந்த பலக்குறைவைப் பயன்படுத்திக் கொண்ட புருஷோத்தம கஜபதி கிழக்கு கடற்கரையில் ஒரிசாவுக்கும் (நெல்லூரிலுள்ள) குண்டலக்கம்ம நதிக்கும் இடையிலிருந்த எல்லா நாடுகளையும் 1489ஆம் ஆண்டுக்குள் பிடித்துக் கொண்டான். இறுதியில் அவன் உதயகிரி வரையில் வந்து
30

அதனையும் முற்றுகையிட்டான். முற்றுகையை நீக்குவதற்காக நரசிம்மன் செய்த முயற்சி படுதோல்வி யடைந்தது. கஜபதி அவனை வென்று சிறைபிடித்தான். உதயகிரிக் கோட்டையையும் அதனைச் சுற்றியிருந்த பகுதிகளையும் கஜபதிக்குக் கொடுக்க ஒப்புக்கொண்ட பின்னரே கஜபதி அவனை விடுதலை செய்தான்.
இரண்டாம் விருட்பாசன் காலத்தில் பேரரசு, மேற்குக் கடற்கரைத் துறைமுகங்களை இழந்துவிட்டது அதனால் விஜயநகரக் குதிரைப் படைக்கு இன்றியமையாத குதிரை வாணிகம் சீர் குலைந்தது. நரசிம்மன் துளுவ நாட்டை வென்று, ஹொனவர், பட்டக்குலா (பட்கல்), மங்களுர் ஆகிய துறைமுகங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்ததன் மூலம் குதிரை வாணிகம் மீண்டும் நடைபெறுவதற்கு வழி செய்தான். ஆர்மஸ், ஏடன் ஆகிய இடங்களிலிருந்து தன்னுடைய ராஜ்யத்திற்குக் குதிரைகளைக் கொண்டுவருவதற்கு ஏற்பாடு செய்து, அவற்றைக் கொண்டுவந்த வணிகர்கள் கேட்ட விலையைக் கொடுப்பதற்கு நரசிம்மன் இசைந்ததால் அந்த வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைத்தது என்று நூனில் கூறுகிறார். அன்றியும் அவன் தன்னுடைய படைகளின் வீரத்தையும் போர்த் திறமையையும் உயர்த்துவதற்கேற்ற நடவடிக்கைகளையும் எடுத்தான்.
உதயகிரித்தோல்விக்குப்பின் அவன் நீண்டநாள் உயிர் வாழவில்லை. 1491இல் அவன் இறப்பதற்கு முன் இளைஞர்களான தன்னுடைய இரு மக்களையும் தன்னிடம் மிகுந்த பற்றுடனும் உண்மையுடனும் நடந்துவந்த நரசநாயக்கனிடம் ஒப்படைத்தான். அந்த நரசநாயக்கன் துளுவ வமிசத்து ஈஸ்வரனுடைய மகன். அரச குமரர்களுள் மூத்தவனான திம்மபூபனை நரசன் முதலில் அரியணையேற்றினான். ஆனால், நரசனுக்குப் போட்டியாய் இருந்தவர்களுள் ஒருவனான திம்மராசன் என்பவன் திம்மபூபனைச் சூழ்ச்சியால் கொன்றுவிட்டான். அதனால் அவனுடைய தம்பி இம்மடி நரசிம்மன் அரசனானான் (1491). ஆனால் அரசியல் அதிகாரம் முழுவதையும் நரசநாயக்கன் தன்னுடைய கையிலேயே வைத்துக்கொண்டான். மேலும் அவன் அரசர்க்குரிய நடையுடை பாவனைகளைக் கைக்கொண்டது மட்டுமன்றிச் சாளுவ அரச மரபுக்குரிய பட்டப் பெயர்களையும் சூடிக்கொண்டான். அதனால்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 40
அரசனுக்கும் அவனுக்கும் பிணக்கு ஏற்பட்டது. தன்னுடைய அண்ணன் சாவுக்குக் காரணமாயிருந்த திம்மராசனைத் தண்டிக்குமாறு இம்மடி நரசிம்மனை நரசிம்ம நாயக்கன் அவ்வாறு செய்ய மறுத்தது மட்டுமன்றி இம்மடிநரசிம்மன் திம்மராசனிடம் அன்பாகவும் நடந்தான். அதனால் நரசநாயக்கனுக்கும் அரசனுக்கும் ஏற்பட்ட பிணக்கு மேலும் அதிகமாயிற்று. அந்த மன வேறுபாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போனதால், நரச நாயக்கன் விஜய நகரத்தை முற்றுகையிடுவதற்காகப்பெனுகொண்டாவி லிருந்து ஒரு படையை நடத்திக்கொண்டு வந்தான். அதனால் அச்சமடைந்த இம்மடி நரசிம்மன் திம்மராசனுக்கு மரண தண்டனையளித்து நரசநாயக்கனோடு சமாதானஞ் செய்துகொண்டான். அதன்பின் நரசநாயக்கன் அரசனைப் பெனு கொண்டாவுக்குக் கொண்டுபோய் அங்கு அவனை மிகக்கடுமையான கண்காணிப்பில் வைத்துவிட்டான். அதனை இரண்டாம் அடாவழி அரசுரிமைப் பறிப்பு என்றுகூறலாம். அதனால் நரசநாயக்கனுக்கு எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பால் ஏற்பட்ட தொல்லை களைச் சமாளிப்பது நரசனுடைய ஏனைய வேலைகளுக்கு இடையூறாயிற்று. இவ்வாறு பல தொல்லைகளுக் கிடையில் நரசன் பன்னிரண்டு பதின்மூன்றாண்டுகள் அரசன் என்ற பட்டத்தைச் சூடிக் கொள்ளாமலே அரசு அதிகாரங்கள் அனைத்தையும் வகித்து வந்தான்.
தனக்கு எதிராகக் கலகஞ்செய்து தன்னுடைய ஆட்சியிலிருந்த விலகிவிட்ட ராயச்சூர், உதயகிரி ஆகிய கோட்டைகளை மீண்டும் கைப்பற்றி, அவற்றை விஜயநகரப் பேரரசின் எல்லைக்குள் கொண்டு வருவதற்குத் தனக்கு நேரமில்லாமற் போய்விட்டதால் அவற்றை மீட்கும் பணியை நரச நாயக்கனிடம் ஒப்படைத்துவிட்டுச் சாளுவ நரசிம்மன் இறந்தான். பிஜப்பூரில் முழு உரிமை பெற்ற அரசனாக அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த யூசுப் அடில்கானைத் தாக்குவதற்கு நரச நாயக்கன் ஒப்புக்கொண்டால் அவனுக்கு ராயச்சூர் முடுகல் ஆகிய கோட்டைகளைக் கொடுத்துவிடுவதாக பாமினி அரசன் காசிம் பரீது 1492-93இல் பேரம் பேசினான். அதற்கிணங்கிய நரசநாயக்கன் தன்னுடைய படையை ராயச்சூர் ஆற்றிடை நிலத்தின்மீது போக்கினான். அந்தப்படை துங்கபத்திரை நதியைக் கடந்துமுடுகல்,
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

ராயச்சூர் ஆகிய ஊர்கள் வரையிலுமிருந்த நாடுகளைச் சூறையாடி அழித்தன என்று பெரிஷ்ா கூறுகிறார். அதே சமயத்தில் காசிம் பரீதின் தூண்டுதலின்பேரில் தன்னைத் தாக்கிய வேறு பகைவர்களையும் சமாளிக்கவேண்டியிருந்ததால் அடில்கான் விஜயநகரப் படைகளை உடனடியாக எதிர்க்கும் நிலையில் இல்லை. ஏனைய பகைவர்களைத் தோல்வியுறச் செய்து துரத்தியவுடனே. அடில்கான் விஜயநகரப் படைகளை எதிர்க்கத் தொடங்கினான். அதனால் நரசநாயக்கன் புதிதாகத் தான் வென்ற நாடுகளை அடில்கானின் தாக்குதலினின்று காக்க வேண்டியதாயிற்று. ஆனால், அடில்கான் தன்னுடைய முயற்சிகளில் வெற்றியடையவில்லை. அவன் தோல்வியடைந்து துங்க பத்திரை நதிக்கு வடக்கில் ஆதோனிக்கு அருகிலிருந்த மன்வீ என்னுங் கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தான். அதன்பின் அவன் நரசநாயக்கனுக்குப் பணிந்துவிட்டதாகப் பாசாங்கு செய்து சமாதான உடன்படிக்கையைப் பற்றிப் பேசுவதற்காக நரச நாயக்கனை அழைத்தான். நரசனும் அதற்கிணங்கி அங்கே போனான். ஆனால், அடில்கான் அவனைத் திடீரென்று தாக்கி அவனுடனிருந்த எழுபது பிரபுக்களைக் கொன்று விட்டான். அதனால் விஜயநகரப் படை ஒடிவிட்டது. அடில்கான் வெற்றி பெற்றான் எனினும், ராயச்சூர் ஆற்றிடை நிலம் 1502ஆம் ஆண்டு வரையிலும் விஜயநகரத்தின் ஆட்சியிலேயே இருந்தது. அந்த ஆண்டில் மாமூதுவின் ஆலோசனைப்படி பாமினிப் பிரபுக்கள் ஒரு ஜிஹாதைத் (புனிதப்போரை) தொடங்கினார்கள். அதன் விளைவாக ராயச்சூர் முடுகல் ஆகிய கோட்டைகள் உட்பட ராயச்சூர் ஆற்றிடை நிலம் முழுவதும் யூசுப் அடில் ஷாவின் ஆட்சிக்குள் சென்றுவிட்டது.
1463-64இல் கபிலேஸ்வர கஜபதிதென்னாட்டைத் தாக்கிய பிறகு, பேரரசின் தென்பகுதியில் ஆளுநர்களாயிருந்தவர்கள் மைய அரசின் ஆதிக்கத்தை உண்மையிலேயே மதித்து அதற்கடங்கி நடந்தார்களென்று சொல்லமுடியாது. தலைநகரத்தின் அருகிலிருந்த பகுதிகளில் தன்னுடைய அதிகாரத்தை நிலை நாட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சாளுவ நரசிம்மன் தன்னுடைய கவனத்தைத் தென்னாட்டுப் பக்கம் திருப்பமுடியாத நிலையிலிருந்தான்.
31

Page 41
காவிரியாற்றுக்குத் தெற்கிலிருந்த மாகாணங்கள் அவனுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொண்டன என்று உறுதியாகக் கூறமுடியாது. 1496ஆம் ஆண்டிலோ அதற்குச் சிறிது முன்னரோ நரசநாயக்கன் தன்னுடைய படைகளுடன் தென்னாட்டுக்குச் சென்று அங்கு கொடுங்கோலாட்சி செய்து கொண்டிருந்த அரச அலுவலர்களை அடக்கினான். அவ்வாறு அடக்கப்பட்டவர்களுள் திருச்சி, தஞ்சை ஆளுநனாகவிருந்த கோனேட்டி ராஜனும் ஒருவன். சீரங்கத்திலிருந்த வைணவர்கள் அவன் மீது பல புகார்களைக் கூறினார்கள். அதனால்தான் அவனை அடக்கி நெறிப்படுத்த வேண்டியது நரச நாயக்கனுடைய கடமையாயிற்று. அதன்பின் நரசன் ஆங்காங்கே சிற்றரசர்களாக ஆட்சி செய்துகொண்டிருந்த மானபூஷனையும் அடக்கி அவர்களெல்லாம் விஜயநகரத்தின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளுமாறு செய்தான். அதனால் கன்னியாகுமாரிவரையிலிருந்ததென்னகம் முழுவதும் விஜயநகரப்பேரரசின் எல்லைக்குள் வந்தது. அதன்பின் நரசன் காவிரியாற்றின் குறுக்கே ஒரு பாலத்தை அமைத்து சீரங்கப்பட்டணத்தைத் தாக்கினான். அதனை ஆண்டுவந்த ஹியூண வமிச அரசன் நஞ்சராஜன் நரசனுக்குப் பணிந்தான். அதன்பின் நரசன் மேற்குக் கடற்கரையிலிருந்த பல இடங்களை வென்று கோகர்ணம் வரையிலும் தன் படையை நடத்திச் சென்றான் (1497). அதனுடன் அந்த நீண்ட படையெடுப்பு வெற்றிபெற முடிந்தது.
நரச நாயக்கன் தன்னுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் கஜபதியோடு மீண்டும் மோதினான். முப்பதாண்டு ஆட்சி செய்தபின் புருஷோத்தமன் 1496இல் இறந்தான். அதன்பின் அவனுடைய மகன் பிரதாபருத்திரன் அரசன் ஆனான். சுமார் 1499இல் அவன் விஜயநகரப் பேரரசின் தென் பகுதியைத் தாக்கினான். அந்தத் தாக்குதலைச் சமாளிப்பதற்கு நரசன் ஆயத்தமாயிருந்தான். இருதிறந்தாரில் யாரும் வெற்றியடைந்தனர் என்று சொல்லமுடியாத நிலையில் போர் முடிந்தது. அதனால், கஜபதி ராஜ்யத்தின் தெற்கெல்லை முன்போலவே கிருஷ்ணா நதியின் தென்கரையோடு நின்றுவிட்டது.
நரச நாயக்கன் 1503இல் இறந்தான்.தன்னுடைய தலைவன் சாளுவ நரசிம்மன் தொடங்கிய பணியில்
32

தொடர்ந்து ஈடுபட்டதோடு பேரரசுக்குப் புதிய வலிமையையும் தேடித் தந்த மன நிறைவோடு அவன் இறந்திருக்கவேண்டும். பேரரசின் பரந்த பகுதிகள் பலவற்றிலும் அதனுடைய ஆதிக்கத்தை உறுதியாக நிலைநாட்டி, படைகளின் அமைப்பாண்மையையும் சீர்திருத்திய சிறப்பு அவனைச் சேரும். அவனுடைய திறமைமிக்க மகன் கிருஷ்ணதேவராயன் காலத்தில் விஜயநகரப் பேரரசு பெற்ற பெருமைக்கு நரச நாயக்கனுடைய ஆட்சி அடிப்படையாக இருந்தது என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.
நரசன் இறந்தவுடனேயே அவன் வகித்துவந்த பதவியை அவனுடைய மூத்த மகன் வீர நரசிம்மன் என்ற இம்மடி நரச நாயக்கன் வகிக்கத் தொடங்கினான். சட்டப்படி அரசனாக இருந்த இம்மடி நரசிம்மன் தானாகவே அரசாள்வதற்குப் போதிய வயதை அடைந்திருந்தான். எனினும், அவன் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருந்தான். இறுதியில், 1505ல், அவன் கொலைசெய்யப்பட்டான். அதன்பின் சிறிது காலத்தில் வீர நரசிம்மன் விஜயநகர அரியணையேறினான். இவ்வாறு அவன் அந்தப் பேரரசில் ஆட்சிசெய்த மூன்றாம் அரசமரபான துளுவ வமிசத்தைப் தொடங்கினான். நரச நாயக்கனுடைய சாவுக்குப் பின் நாட்டிலிருந்த தலைவர்கள் அனைவரும் கலகஞ்செய்தார்கள் என்று நூனிஸ் கூறுகிறார். அதன்பின் நடந்த கொலையும் அடாவழி அரசுரிமைப் பறிப்பும் வீர நரசிம்மனுடைய நிலைமையை மேலும் கடினமாக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவன் ஆட்சிசெய்த ஆறு ஆண்டுக் காலம் முழுதும் கலகங்களை அடக்குவதற்காக அவன் செய்த சண்டைகளிலேயே ஏறக்குறையக் கழிந்துவிட்டதென்று கூறலாம். அப்படி அவன் செய்த சண்டைகள் அனைத்திலும் அவன் வெற்றிபெற்றான் என்று சொல்வதற்கும் இல்லை. யூசுப் அடில்கான் தன்னுடைய ஆட்சியெல்லையைத் துங்கபத்திரை நதிக்குத் தெற்கே நீட்டுவதற்கு மீண்டும் விரும்பி, அந்நதியைக் கடந்து அவன் கர்நூலை முற்றுகையிட்டான். அரவீடு வமிசத்தைச் சேர்ந்த ராமராஜனும் அவனுடைய மகன் திம்மனும் வீரநரசிம்மனுக்குத் துணைநின்று, அடில்கானுடன் பொருது, அவனைப் பின்னடையச் செய்தது மட்டுமன்றி, அவனைத் தூரத்திக்கொண்டு சென்று தோல்வியுறவும் செய்தார்கள். விஜய நகர
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 42
அரசனுக்குத் துரோகம்செய்த ஆதோனித் தலைவனை அவர்கள் வென்று துரத்திவிட்டு ஆதோணியைக் கைப்பற்றினார்கள். இறுதியில், அவர்கள் செய்த உதவிக்காக வீர நரசிம்மன் அவர்களுக்கு ஆதோணியையும் கர்நூலையும் ராணுவமானியமாகக் கொடுத்தான்.
இதற்கிடையில் உம்மத்துாரிலும் சீரங்கப் பட்டணத்திலுமிருந்த ஹியூனத் தலைவர்கள் விஜயநகரத்துக்கெதிராகக் கலகம் செய்தார்கள். வீரநரசிம்மன் தலைநகரைத் தன் தம்பி கிருஷ்ணராயனுடைய பொறுப்பில் விட்டுவிட்டுத் தன் படையுடன் தெற்கே சென்று உம்மத்துரை முற்றுகையிட்டான். மூன்று மாதம் முயன்றும் உம்மத்தூரைக் கைப்பற்ற முடியாததால் அவன் முற்றுகையை கைவிட்டுவிட்டு, சீரங்கப்பட்டணத்தின் மீது படையெடுத்தான். அங்கும் அவன் வெற்றி பெறவில்லை. ஆனால், துளு நாட்டில் அவன் சில சிறு வெற்றிகளையடைந்தான். அப்போதுதான் மேற்குக் கடற்கரையில் தங்கள் வாணிக நிலையங்களை நிறுவிக்கொண்டிருந்த போர்ச்சுகீசியர்களுடன் அவன் நட்புறவான தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டான். தன்னுடைய போர் வீரர்களுக்கு நல்ல பயிற்சியை அளிப்பதற்கும் தன்னுடைய குதிரைப் படைக்குத் தேவையான குதிரைகளைப் பெறுவதற்கும் போர்ச்சுகீயர்கள் உதவுவார்கள் என்று நம்பிக்கையில் அவன் கண்ணனூரிலிருந்த ஆல்மீடாவிடம் ஒரு தூதுக் குழுவை அனுப்பினான். ஆனால், பட்கல் என்னுமிடத்தில் ஒரு கோட்டை கட்டுவதற்கு இசைவு கோரி ஆல்மீடா விடுத்த வேண்டுகோளுக்கு வீரநரசிம்மன் எவ்வித மறுமொழியும் தரவில்லை. பிரபுக்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ளுவதற்கு வரையறைக்குட்பட்ட இருவர் போராட்ட முறையை ஊக்கியதன் வாயிலாகவும் வாட்போர்த் திறனுக்கு அழகிய பெண்களைப் பரிசு கொடுத்தன் வாயிலாகவும் வீர நரசிம்மன் தன் குடிமக்களுடைய போர் விருப்பையும் திறமையையும் வளர்க்க முயன்றான்.
வீரநரசிம்மன் கோவாவைப்பிடிக்கும்முயற்சியிலும் ஈடுபட்டான். கோவாவிலிருந்த முஸ்லிம் ஆளுநன் விஜயநகரத்தரசனோடு போரிட்டுக்கொண்டிருந்தான் என்று இத்தாலியப் பயணி வர்த்தமா என்பவன் எழுதி
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

வைத்திருக்கிறான் (1506). ஆனால், அந்த முயற்சியில் வீரநரசிம்மன் வெற்றி பெற்றானா என்பது தெரிய வில்லை. உம்மத்துரை மீண்டும் தாக்குவதற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்த சமயத்தில், 1509இல், அவன் இறந்து போனான். ராமேஸ்வரம், சீரங்கம், கும்பகோணம், சிதம்பரம், பூரீசைலம், காஞ்சிபுரம், காளஹஸ்தி, மகாநந்தி, கோகர்ணம் முதலிய தென்னந்தியக் கோயில்கள் பலவற்றிற்கு அவன் அளித்த தாராளமான கொடைகளை அவனுடைய ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த பொறிப்புகள் குறிப்பிடுகின்றன. தன்னுடைய எட்டு வயது மகன் தனக்குப் பின் அரசனாக வேண்டுமென்று விரும்பியதால், அவன் மரணப் படுக்கையிலிருந்தபோது, கிருஷ்ண தேவராயனுடைய கண்களைப்பிடுங்கிவிடுமாறுதன்னுடைய அமைச்சன் சாளுவதிம்மனைக் கேட்டுக்கொண்டதாயும், சாளுவதிம்மன் ஒரு பெண் ஆட்டின் இரு கண்களைப் கொண்டுவந்து அவை கிருஷ்ணதேவராயனுடைய முகத்திலிருந்து பிடுங்கப்பட்ட கண்கள் என்று காட்டிய தாயும் நூனிஸ் எழுதி வைத்திருக்கிறார். ஆனால், அந்த ஒன்றுவிட்ட உடன் பிறந்தார்களுள் பகைமையிருந்தது என்று காட்டுவதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. மேலும், தனக்குப்பின் அரியணை யேறுவதற்குரியவன் கிருஷ்ணதேவராயன்தான் என்று வீரநரசிம்மனே அவனைத் தெரிந்தெடுத்ததாக உள்ளூர்மரபுவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிருஷ்ணதேவராயனுடைய முதற் பொறிப்பில் குறிக்கப்பட்டுள்ள தேதி 1509 ஜூலை 26 என்பது. அதற்குப்பின் இரு வாரங்கழித்து அவன் கிருஷ்ண ஜயந்தியன்று முடிசூடிக் கொண்டான். அரசன் திருமாலின் அவதாரம் என்ற எண்ணத்தை உண்டாக்குவது அதன் நோக்கம். கிருஷ்ண தேவராயனுடைய ஆட்சிக் காலம் விஜயநகரத்தின் மிகச் சிறந்த காலம்; அப்போது அந்தப் பேரரசின் படைகள் சென்ற இடமெல்லாம் வெற்றிபெற்றன. அந்தக் காலத்தில் தலைநகரம் மிகச் செழித்த வளமுடையதாயிருந்தது. கிருஷ்ணதேவராயன் அரியணையேறிய போது அவனுக்கு இருபது இருபத்தைந்து வயதிருக்கும். அரியணையேறிப் பத்தாண்டுக்குப் பின் கிருஷ்ணதேவராயனைப் பார்த்த பேயிஸ் பின்வருமாறு கூறுகிறார்:'அரசன் நடு உயரமும் சிவப்பு நிறமும் அழகிய தோற்றமும்
33

Page 43
உடையவன். அவன் சிறிது தடித்திருக்கிறான் என்றே கூறவேண்டும். அவனுடைய முகத்தில் அம்மை வடுக்கள் இருக்கின்றன. குடிமக்கள் தம்முடைய அரசனைக் கண்டு அவ்வளவு அதிகமாக அஞ்சக்கூடும் என்று நாம் கருதலாமோ அவ்வளவு அதிகமாக அவனைக் காணும் மக்கள் அஞ்சுகிறார்கள். அதுபோலவே அவன் எல்லா வகையிலும் குறைபாடற்றவனாக இருக்கிறான். அவன் இனிய இயல்புடையவனாகவும், எப்போதும் களிமகிழ்வார்ந்தவனாகவும் இருக்கிறான். அவன் வெளிநாட்டாரை வரவேற்று அவர்களை மதித்து நடக்கிறான். அவர்கள் எந்த நிலையில் இருப்ப வர்களாயினும் அவர்களுடன் இனிமையாகப் பேசி அவர்களைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் விசாரிக்கிறான், அவன் ஒரு பெரிய அரசன், நீதிநெறி வழவாதவன்; ஆனால், அவனுக்குத் திடீர் திடீரென்று அடக்கமுடியாத கோபம் வந்துவிடும். அவன் கடுமையான உடற்பயிற்சியின் மூலம் தன்னுடைய உடல் வலிமையைக் காத்துக் கொண்டான். குதிரையேற்றத்தில் அவன் வல்லன்; காண்போர் களிக்கும் கம்பீரமான தோற்றமுடையவன்; தானே போர்க்களம் புகுந்து தன் போர்வீரர்களுக்குத் தலைமை தாங்கி நடத்துவதில் விருப்பமுடையவன்; ஆபத்தைக் கண்டு அஞ்சாத வீரமும் தளராத ஊக்கமும் உடையவன். தன்னுடைய போர் வீரர்கள் எல்லாரிடத்திலும் அவன் அன்புடையவன்; அவர்கள் நலத்தில் எப்போதும் கவனமுடையவன். ஒவ்வொரு சண்டைக்குப் பின்னும் காயமடைந்தவர்களைப் பார்த்து அவர்களுக்குத் தேவையான மருத்து வத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு அவன் தவறமாட்டான். அவனை அனைவரும் மதித்து அவனிடத் அன்பு பாராட்டினார்கள். பேயிஸ் கூறுவதைப் போல, அவன் ‘எல்லாரிடமும் நட்பும் நயமுடையவனாயும் எல்லா வகையிலும் குறைபாடற்றவனாயும் இருந்தான்.
கிருஷ்ணதேவராயன் பட்டத்துக்கு வந்த சமயத்தில் பேரரசின் நிலைமை மனநிறைவுதருவதாய் இல்லை. விஜய நகரத்தின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கலகஞ் செய்த உம்மத்துார்த் தலைவன் மைசூரின் பெரும்பகுதிக்கு உரிமை கொண்டாடினான். பேரரசின் வடகிழக்கு மாவட்டங்கள் ஒரிசாவின் ஆதிக்கத்தில் இருந்தன. விஜயநகரத்தின்மீது வெளிப்படையாய்ப் பகைமை பாராட்டிய பிரதாபருத்திரன் அந்த ராஜ்யத்தை
34

வலுச்சண்டைக்கு இழுப்பதற்கும் தயாராய் இருந்தான். பாமினி ராஜ்யம் நடைமுறையில் ஐந்து சிறு ராஜ்யங்களாகப் பிரிந்து விட்டது என்பது உண்மைதானெனினும் முஸ்லிம்களுடைய பகைமை எவ்வகையிலும் குறைந்திருந்தது என்று சொல்ல இயலாது. முக்கியமாக, பிஜப்பூர் சுல்தான் விஜயநகரின் மீது கடுமையான பகை கொண்டிருந்தான். அதே சமயத்தில் புதிதாக இந்தியாவுக்கு வந்திருந்த போர்ச்சுக்கீசியர்களுடைய வலிமையையும் கிருஷ்ணதேவராயன் கவனத்தில் கொள்ள வேண்டியதாயிருந்தது. அவர்கள் இந்தியாவின் கடல் வழிகளையும் மேற்குக் கடற்கரையில் நடைபெற்ற கடல் வாணிபத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதிலும், உள்நாட்டு அரசுகளோடு, லாபமுள்ள அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் முனைந்திருந் தார்கள். எனினும், பத்தே ஆண்டுகளுக்குள் கிருஷ்ணதேவராயன் விஜயநகரத்தின் ஆதிக்கத்தை நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உறுதியாக நிலைநாட்டிவிட்டான். அவனுடைய பரந்த ராஜ்யத்தில் அவனை எதிர்க்க நினைப்பவர் யாரும் இலர். அதிக மனக்குறையுடையவர்களும் இலர் என்ற நிலையையை அவன் உண்டாக்கினான். போர்ச்சுகீசியர்களும் அவனுக்கு நண்பரானார்கள்.
முதலில், அவன் பாமினிப் படைகளோடு போரிட வேண்டியிருந்தது. ஒவ்வொராண்டும் விஜயநகர ராஜ்யத்தின்மீது ஜிஹாத் நடத்துவது என்று 1501ஆம் ஆண்டில் சுல்தான் மாமூது தீர்மானித்தற்கிணங்க முக்கியமான பாமினிப் பிரபுக்கள் பீடாரில் ஒன்றுகூடி அவனுடைய தலைமையில் விஜயநகர ராஜ்யத்தின் மீது 1509ஆம் ஆண்டில் படையெடுத்தார்கள். ஆனால், முன்னைய ஆண்டுகளைப் போல நாட்டைச் சூறையாடவும் அழிக்கவும் இந்த ஆண்டு முடியா தென்பதை அவர்கள் விரைவில் உணர்ந்தார்கள்.
திவானி என்னும் நகர்வரையில் முன்னேறிய முஸ்லிம் படைகளைக் கிருஷ்ணதேவராயன் வழிமறித்து, அவற்றோடு போர்செய்து, அவற்றைக் கடுமையாகத் தாக்கித் தோல்வியுறச் செய்தான். சுல்தான் குதிரையிலிருந்து விழுந்து கடுமையான காயமடைந்தான். அவன் விரைவில் குணமடையாததால் அவன் தலைமையில் வந்த
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 44
பிரபுக்கள் பூசல், சண்டை ஆகிய பாயைச் சுருட்டிக் கொண்டு பீடாருக்குத் திரும்பினார்கள் தோற்றுப் பின்வாங்கிய படைகளைக் கிருஷ்ணதேவராயன் துரத்திக்கொண்டு சென்றான். அவ்வாறு துரத்தப்பட்ட படைகளை நடத்திச் சென்றவர்களுள் ஒருவனான யூசுப் அடில்கான் கோல்கொண்டா என்னும் கோட்டைக்கருகில் திரும்பிநின்று கிருஷ்ணதேவராயனை எதிர்த்தான். ஆனால், அப்போது நடந்த சண்டையில் அவன் உயிரிழந்தான். அதன் பின் கோல்கொண்டாவைத்தன் வசப்படுத்திக் கொண்டு கிருஷ்ணதேவராயன் தன் தலை நகருக்குத் திரும்பினான்.
இந்தச் சண்டையின் தொடக்கத்தில் கிருஷ்ண தேவராயனுக்கு உதவி செய்வதாயும், அதற்குக் கைம்மாறாகக் கோழிக் கோட்டு ஜாமரினை எதிர்ப்பதற்குத் தனக்கு உதவி செய்ய வேண்டு மென்றும் போர்ச்சுகீசிய ஆளுநனான ஆல்புகர்க் கிருஷ்ண தேவராயனுக்குச் சொல்லியனுப்பினான். மேலும், அராபிய பாரசீகக் குதிரைகளைக் கிருஷ்ண தேவராயனுக்கே விற்பதாயும் பிஜப்பூருக்கு விற்கப் போவதில்லை என்றும் ஆல்புகர்க் வாக்களித்தான். குதிரை வாணிகத்தின் தனியுரிமையைப் பெறுவதில் கிருஷ்ணதேவராயன் பெரு விருப்புடையவனாய் இருந்தானெனினும் ஆல்புகர்க்கு அவன் உடனே மறுமொழி அனுப்பவில்லை. அதன்பின் ஆல்புகர்க் பிஜப்பூர் சுல்தானுடைய ஆட்சியிலிருந்த கோவாவைத் தாக்கினான். போர் பல மாதம் நடந்தது. பிஜப்பூர்ப் படைகளும் போர்க்சுகீசியப் படைகளும் மாறிமாறி அடைந்த வெற்றி தோல்விகளின் விளைவாக கோவா பலமுறை கைம்மாறியது. இறுதியில், 1510ஆம் ஆண்டின் கடைசியில் ஆல்புகர்க் கோவைவைக் கைப்பற்றி அங்கே போர்ச்சுகீசிய ஆட்சியை நிறுவினான். அதற்குப் பிறகு பட்கலில் கோட்டை கட்டுவதற்கு இசைவு கோரி முன்னர் ஆர்மீடாவிடுத்த வேண்டுகோளை ஆல்புகர்க் கிருஷ்ண தேவராயனுக்கு மீண்டும் விடுத்தான். அதற்குக் கிருஷ்ணதேவராயன் இணங்கினான்.
சிறிய அளவில் நிகழ்ந்த இந்தத் தொடக்கப் போர்களுக்குப்பின் கிருஷ்ணதேவராயன் தன் தலைநகரில் சிலகாலந் தங்கித் தன்னுடைய படைகளைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டான்.
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அதுவரையில் பண்ணைக்குடியுரிமை முறையைச் சார்ந்து அமைப்பாண்மை அற்றிருந்த விஜயநகரப் படையை ஒரு சிறந்த போர்ப்படையாய்க் கிருஷ்ண தேவராயன் மாற்றினான். அதன்பின், பிஜப்பூர் சுல்தானுக்கும் பாமினி சுல்தானுக்கும் ஏற்பட்டிருந்த பூசலின் விளைவாக பிஜப்பூர் அடைந்திருந்த வலிமையற்ற நிலையைப் பயன்படுத்திக் கொண்டு கிருஷ்ணதேவராயன் ராய்ச்சூர் ஆற்றிடை நிலத்தின் மீது படையெடுத்து ராயச்சூர்க் கோட்டையைப் பிடித்துக்கொண்டான். இதற்கிடையில் யூசுப் அடில்கான் இறந்து விட்டானாதலால் அவனுடைய இளவயது மகன் இஸ்மாயில் அடில்ஷா பிஜப்பூருக்கு அரசனாக இருந்தான். அதிகாரம் முழுவதும் கமால்கான் கையிலிருந்தது. அவனே பிஜப்பூர் அரசனாக வேண்டுமென்று சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். கிருஷ்ண தேவ ராயன் போர்க்சுகீசியருடன் நட்புறவான தொடர்பு கொண்டிருந்தான் என்பதையும் கமால்கான் அறிந்திருந்தான். எனவே, இந்த முறை விஜய நகரப்படைகளைப் பிஜப்பூர்ப் படைகள் வலிமையாக எதிர்க்க வில்லை. இஸ்மாயில் அடில்ஷாவின் தாயாருடைய தூண்டுதலின் பேரில் 1511-மே மாதத்தில் கமால்கான் கொலை செய்யப்பட்டான். அதனால், கமால்கானின் நண்பர்களாயிருந்த பாரசீகப் பிரபுக்களும் குராசனிப் பிரபுக்களும் கோபங்கொண்டு கிளர்ச்சி செய்தார்கள். இந்த நிலையில் பிஜப்பூர்ப்படைகளினுடைய எதிர்ப்பின் தாம் மேலுங் குறைந்தது. எனவே, கிருஷ்ணதேவராயன் ராயச்சூரைக் கைப்பற்றிய பின்னர், குல்பர்காவின் மீது படையெடுத்து, மாமூதைக் காவலில் வைத்துவிட்டு, அரசியலதிகாரம் முழுவதையும் தன் கையிலேயே வைத்திருந்த அமைச்சின் அமீர் பரீதை வென்று, குல்பர்காவைப் பிடித்துக் கொண்டான். அங்கிருந்து அவன் பீடாரின்மீது தன் படைகளைச் செலுத்தினான். சிறிது கால முற்றுகைக்குப்பின் அவன் பீடாரைக் கைப்பற்றி, மாமூதை விடுதலை செய்து, யவன (முஸ்லிம்) ராஜ்யத்தை நிறுவியவன்' என்ற பட்டத்தைச் சூட்டிக்கொண்டான்.
அதே சமயத்தில் கிருஷ்ணதேவராயன் தன்னுடைய ஏனைய பகைவர்களான உம்மத்துரர் அரசனோடும் ஒரிசா அரசனோடும் பொருது கொண்டிருந்தான். 1509ஆம் ஆண்டில் பாமினிப்
35

Page 45
படைகளைத் தோல்வியடைச் செய்து துரத்திய சிறிது காலத்திற்குள் கிருஷ்ணதேவராயன் உம்மத்துார் மீது படையெடுத்தான். வீர நரசிம்மனுடைய ஆட்சியின் இறுதியாண்டுகளிலிருந்தே உம்மத்துரர் கங்கராயன் விஜயநகர ஆதிக்கத்துக்கு எதிராகக் கலகஞ் செய்து கொண்டிருந்தான் என்பதை நாம் முன்பே பார்த்தோம். கிருஷ்ணதேவராயன் முதலில் கங்கராயன் கைப்பற்றியிருந்த பெனுகொண்டாவைத் தாக்கினான். அந்த வலிமை பொருந்திய கோட்டையைப் பிடித்தபின் கிருஷ்ணதேவராயன் உம்மத்துரையும் கங்கராயனுடைய தலை நகராயிருந்த சிவசமுத்திரத்தையும் தாக்கினான். சிவசமுத்திரம் வீழ்வதற்கு ஓராண்டுக்கு மேல் பிடித்தது. அங்கிருந்து தப்பியோடிய கங்கராயன் காவிரியில் மூழ்கி இறந்து போனான். சிவசமுத்திரத்தை விஜய நகரப்படைகள் தரைமட்ட மாக்கின. கங்கராயன் மீது கிருஷ்ண தேவராயன் தொடுத்த போர் 1510 ஆகஸ்டில் தொடங்கி 1512ன் இறுதியில் முடிந்தது. இவ்வாறு தான் வென்ற புதிய பகுதிகளைக் கிருஷ்ண தேவராயன் ஒரு புதிய மாகாணமாக்கி அதற்குச் சீரங்கப்பட்டணத்தைத் தலைநகராக்கினான். புதிய மாகாணத்திற்குச் சாளுவ கோவிந்தராயன் முதல் ஆளுநனாக நியமிக்கப்பட்டான். அந்த மாகாணத்தின் உள்ளூராட்சி மூன்று உள்ளூர்த் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களுள் ஒருவன் தான் புகழ்பெற்ற பெங்களூர்க் கெம்பே கவுடன்.
சாளுவ நரசிம்மனுடைய காலத்திலிருந்தே பேரரசின் கீழ்க் கடற்கரை மாவட்டங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டிருந்த ஒரிசா அரசனோடு கிருஷ்ணதேவராயன் அரியணையேறிய சிறிது காலத்திற்குள்ளாகவே போர் தொடங்கினான். ஆனால், கங்கராயரோடு தொடங்கிய போர் வெற்றியுடன் முடிந்த பிறகு தான் இந்த மூன்றாம் முனைப்போரைக்கிருஷ்ணதேவராயன் உண்மையான ஊக்கத்துடன் நடத்தினான். 1513-ல் உதயகிரியை முற்றுகை இடுவதற்ககக் கிருஷ்ணதேவராயன் ஒரு படையை அனுப்பினான். விரைவில் கிருஷ்ண தேவராயனே நேரிற்சென்று போரை நடத்தினான். குன்றின் மீதிருந்த கோட்டையை அடைவது முடியாத காரியமாய் இருந்ததால் கிருஷ்ணதேவராயன் பாறைகளை வெட்டிப் புதிய பாதைகள் பலவற்றைப்
36

போட்டான். அந்தப் பாதைகளின் வழியாக அவனுடைய படைகள் ஏறிச் சென்று கோட்டையை அடைந்தன. இவ்வாறு முற்றுகை தொடங்கி ஒன்றரையாண்டுக்குப்பின் விஜயநகரப் படைகள் உதயகிரியைப் பிடித்தன.
தலைநகருக்குத் திரும்புகிற வழியில் கிருஷ்ணதேவராயனும் அவனுடைய மனைவிகளான திருமலா தேவியும் சின்ன தேவியும் திருப்பதிக்குச் சென்று வேங்கடனை வணங்கித் தங்களுடைய நன்றிக் கடனைச் செலுத்தினார்கள் (1514 ஜூலை). மேலும், அவன் உதயகிரியிலிருந்த அழகிய பாலகிருஷ்ண விக்கிரகம் ஒன்றை எடுத்துக்கொண்டு போய் விஜயநகரில் எழுந்தருளச் செய்தான். வியாசராயர் என்ற ஞானி புதிய பாடல்களை இயற்றி அந்த நன்னிகழ்ச்சியைப் பாராட்டினார். இவ்விரு செயல்களும் கிருஷ்ணதேவராயனுடைய கடவுள் பக்திக்குச் சான்று தருகின்றன. உதயகிரியை முற்றுகையிலிருந்து விடுவிப்பதற்குப்பிரதாபருத்திரன் செய்த முயற்சி தோல்வியடைந்தது. அவனுடைய படைகளை விஜயநகரப் படைகள் கொண்டவீடு வரையிலும் துரத்திச் சென்றன. போகும் வழியிலிருந்த சிறிய கோட்டைகள் எல்லாவற்றையும் விஜயநகரப் படைகள் கைப்பற்றிக் கொண்டன. சில கோட்டைகள் தாமாகவே பணிந்தன. இவ்வாறு வெற்றிமேல் வெற்றி பெற்ற விஜயநகரப் படைகள் கடைசியில் கொண்டவீட்டை வளைத்துக்கொண்டன. அந்த முற்றுகையை முதலில் சாளுவ திம்மராசன் முன்னின்று நடத்தினான். அதன்பின் கிருஷ்ண தேவராயனே தன் படைகளுக்குத் தலைமை தாங்கினான். கிருஷ்ணா நதிக்குத் தெற்கில் கஜபதியின் ஆட்சியிலிருந்த மாவட்டங்களில் கொண்ட வீடு மிக முக்கியமான கோட்டையாய் இருந்ததால் அது படை வலிமைமிக்கதாக இருந்தது. மேலும், ஒரிசா ராஜ்யத்தின் முக்கியமான தலைவர்கள் பலர் அதற்குள்ளிருந்து காவல் புரிந்தனர். முற்றுகை பல மாதங்கள் தொடர்ந்து நடந்தது. கோட்டைக் குள்ளிருந்த பலர் உணவின்றி இறந்து போயினர். அதன் பிறகுதான் விஜயநகரப் படைகள் மதிற்கவர்களின் மீதேறிக் கோட்டைக்குள் நுழைந்து, அங்கிருந்த வீரர்களைத் தோல்வியுறச் செய்து, கோட்டையைப் பிடிக்க முடிந்தது. ஒரியப் பிரப்புக்கள் பலரும் கஜபதியரசனுடைய மனைவியும் அவனுடைய
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 46
மகன் ஒருவனும் சிறை பிடிக்கப்பட்டு விஜயநகருக்கு அனுப்பப்பட்டனர்.
கொண்டவீடு மாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை சாளுவ திம்மனிடம் ஒப்படைத்து விட்டுக் கிருஷ்ண தேவராயனும் அவன் மனைவிமாரும் அமரேஸ்வரரை வழிபடுவதற்காக அமராவதிக்குச் சென்றார்கள். அங்கிருந்து அவர்கள் பூரீசைலத்துக்குச் சென்று, மல்லி கார்ஜுனரை வழிபட்டு, அந்தக் கோயிலுக்கு மிகத் தாராளமான கொடைகளை அளித்தபின் தலைநகருக்குத் திரும்பினார்கள்.
அதன்பின் வெகு விரைவில் அவன் தன் படைகளோடு மீண்டும் போர்க்களம் புகுந்தான். தலைநகரிலிருந்து விஜயவாடாவுக்குத் தன் படைகளை நடத்திச் சென்று, அந்த நகரைப் பிடித்து, அதனைத் தன் முன்னேற்றத் தனமாக்கிக் கொண்டான். அவன் மனம் போரிலேயே ஈடுபட்டிருந்ததெனினும், விஜயவாடாவுக்குப் போகும் வழியில் அகோபலத்தில் நின்று நரசிம்மனை வழிபடுவதற்குத் தன்னுடைய நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்தான். விஜயவாடாவுக்கு வடமேற்கில் சிறிது தொலைவிலுள்ள கொண்டபள்ளியின்மீது கிருஷ்ணதேவராயன் தன் கவனத்தைத் திருப்பினான். அது உயர்ந்த மதில்களையும் நல்ல காவலையும் பெற்ற ஒரு வலிமைமிக்க கோட்டை அதனைக் கிருஷ்ண தேவராயன் முற்றுகையிட்டான். முற்றுகையை நீக்குவதற்காகப் பிரதா பருத்திரன் அனுப்பிய படையைக் கிருஷ்ண தேவராயன் கிருஷ்ண நதியின் கரையில் மறித்துத் தோல்வியடையச் செய்தான். முற்றுகை இரண்டு மாதங்கள் நீடித்தபின் கோட்டை வீழ்ந்தது. அதன்பின் கிருஷ்ணதேவராயன் தெலிங்கானாவிலிருந்த வேறுபல கோட்டைகளையும் கஜபதியின் மேலாதிக்கத்தில் இருந்த நலகொண்டா, வாரங்கல் மாவட்டங்களின் பல பகுதிகளையும் கைப்பற்றினான்.
இவ்வாறு தெலிங்கானா முழுவதும் விஜயநகர ஆட்சிக்குள் வந்தது. அதன்பின் கலிங்கம் என்ற பெயருக்குரிய நாட்டின் மீது கிருஷ்ணதேவராயன் படையெடுத்து ராஜமகேந்திரவரத்தையும் வேறு பல நகரங்களையும் கைப்பாற்றினான். விஜயநகரப்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

படையின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கு கஜபதி ஒரளவு முயன்றான். ஆனால், விஜயநகரப் படை வழியிற் கண்ட ஊர்கள் அனைத்தையும் அழித்துக் கொண்டே பொட்னுTர் சிம்மாத்திரி வரையிலும் வெற்றியுடன் முன்னேறியது. அந்த இடத்தில் கிருஷ்ணதேவராயன் ஒரு வெற்றிக் கம்பத்தை நாட்டி விட்டு ராஜமகேந்திரவரத்தின் வழியாய்த் தன்னுடைய தலைநகருக்குத் திரும்பினான் (1516). ஆனால், அவனுடைய படைகள் கலிங்க நாட்டுக்குள் மேலும் முன்னேறி, அந்த நாட்டின் தலைநகரான கட்டாக்கை அடைந்தன. அதனால் பேராபத்துக் குள்ளான பிரதாபருத்திரன் சமாதானஞ் செய்து கொள்ள விரும்பித் தன் மகளைக் கிருஷ்ண தேவராயனுக்கு மணமுடித்து வைத்தான். கிருஷ்ண தேவராயனும் மிகத் தாராள மனத்துடன் நடந்து கொண்டான். கிருஷ்ண நதிக்கு வடக்கிலிருந்த ஊர்கள் அனைத்தையும் அவன் கஜபதிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டான்.
கிருஷ்ணதேவராயனுடைய ஒரிசாப் படையெடுப்பு பதினாறாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றிலேயே மிகச் சிறந்த படையெடுப்புகளுள் ஒன்று என்று கூறலாம். அவன் அந்தப் படையெடுப்பை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இஸ்மாயில் அடில்கான் ராயச்சூர்க் கோட்டையை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான். அதனை மீட்பதற்காகக் கிருஷ்ணதேவராயன் ராயச்சூர் ஆற்றிடைநிலத்தின்மீது 1520இல் படையெடுத்தான். அந்தப் படையெடுப்பைப்பற்றிய செய்திகளை நூனிஸ் எழுதி வைத்திருக்கிறார். இந்த முறை இரண்டி லொன்று பார்த்து விடுவதென்ற முடிவுடன் கிருஷ்ணதேவராயன் ஒரு பெரும் படையுடன் அடில்ஷாவை எதிர்ப்பதற்குச் சென்றான். அந்தப் படையில்போர் வீரர்களுடன் சென்ற பரிவாரத்தையும் சேர்த்தால் சுமார் பத்து லட்சம் பேர் இருந்தனர் அன்றியும் அந்தப் படையில் ஐநூறு யானைகளும் இருந்தன. கிருஷ்ண தேவராயன் ராயச்சூருக்குக் கிழக்கில் தன் பாசறையை அமைத்துக்கொண்டு அந்தக் கோட்டையை முற்றுகையிட்டான். இஸ்மாயில் ஒரு வலிமைமிக்க படையுடன் கிருஷ்ண நதியைக் கடந்து, ஐந்து கல் முன்னேறி, ராய்ச்சூருக்கு ஒன்பது கல்தொலைவில் தன் பாசறையை அமைத்துக்கொண்டான். அவனுடைய
37

Page 47
படையில் ஏராளமான குதிரை வீரர்கள் இருந்தார்கள். ஐயத்திற்கிடமில்லாத விளைவைத் தரவிருந்த அந்த முக்கியமான சண்டை 1520 மே மாதம் 19ஆம் நாளன்று நடந்தது. விஜயநகரப் படைகள் முன்னே சென்று பிஜப்பூர்ப் படைகளை நேரடியாகத் தாக்கின. அந்த வேகத்தைத் தாங்க முடியாத பிஜப்பூர்ப் படைகள் பின்னடைந்து சென்றன. ஆனால், அந்த நேரத்தில் பிஜப்பூர்த் துப்பாக்கிப் படை தன்னுடைய வேலையைத் தொடங்கியது. தோளோடு தோள் நெருங்கி அடர்த்தியாக முன்னேறிக்கொண்டிருந்த விஜயநகர வீரர்களுள் ஏராளமான பேர் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாயினர். அதனால், அவர்கள் பின்னடைந்தார்கள். பிஜப்பூர் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டுவந்து கடுமையாகத் தாக்கினார்கள். அப்போது இரண்டாம் அணிக்குத் தலைமை தாங்கி நின்றிருந்த கிருஷ்ணதேவராயன் தன்னுடைய குதிரை மீதேறி எஞ்சியிருந்த தன் படைகள் அனைத்தையும் முன்னேறித் தாக்குமாறு கட்டளையிட்டான். அந்த மூர்க்கமான தாக்கு தலுக்கு ஈடுகொடுக்க முடியாத பிஜப்பூர்ப் படைகள் சின்னாபின்னமாகச் சிதறியோடின. அவற்றை விஜயநகர வீரர்கள் தணியாத கடுமையுடன் கிருஷ்ணாநதி வரையிலும் துரத்திக் கொண்டு சென்றார்கள். இவ்வாறு கிருஷ்ணதேவராயன் தனக்கு நேரவிருந்த தோல்வியைப் பெரு வெற்றியாய் மாற்றினான். அடில்ஷாவின் பாசறையை விஜயநகர வீரர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். அடில்ஷா தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்றபடி ஒரு யானைமீதேறி ஓடிவிட்டான். சண்டையில் விஜயநகர வீரர்கள் ஏராளமான பொருள்களைக் கைப்பற்றினார்கள். இரண்டிலொன்று பார்த்து விடுவது என்ற கிருஷ்ண தேவராயருடைய நோக்கமும் நிறைவேறியது. அந்தச் சண்டைக்குப் பின் இஸ்மாயில் அடில்கான் கிருஷ்ண தேவராயனுடைய பெயரைக் கேட்டாலே அஞ்சினான். அதனால் சாகும் வரையில் அவன் கிருஷ்ணதேவராயனோடு போர் செய்ய முடியவில்லை. விரைவில் கிருஷ்ணதேவராயன் ராயச்சூரைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கோட்டையைக் கைப்பற்றுவதற்குக் கிறிஸ்டோவ்டி பிகரேதோ என்பவன் தலைமையில் சண்டை செய்த போர்ச்சுகீசிய வீரர் சிலர் பேருதவியாக இருந்தனர்.
38

மதில்மீதிருந்து சண்டையிட்ட முஸ்லிம் போர் வீரர் பலரை அவர்கள் தங்கள் துப்பாக்கியால் ஒவ்வொரு வராகக் குறிபார்த்துச் சுட்டு வீழ்த்தினார்கள்’ அதனால் மதிற்கவர்களை அடைந்து அவற்றைத் தகர்த்தெறிவது விஜயநகர வீரர்களுக்கு எளிதாயிற்று. தலைநகரில் நடந்த அடுத்த மகாந்வமி விழாவில் போர்ச்சுகீசியத் தலைவனுக்குக் கிருஷ்ணதேவராயன் தனிப்பெருமை யளித்துப் பாராட்டினான்.
பலரும் புகழ்ந்து பாராட்டிய இந்த வெற்றி பல முக்கியமான அரசியல் விளைவுகளுக்குக் காணமாயிற்று. வெற்றிப் பெருமிதத்திலிருந்த கிருஷ்ணதேவராயன் மிகுந்த செருக்குடன் நடக்கத் தொடங்கினான். தோற்றுப்போன இஸ்மாயில் அடில்ஷாவுக்கு வேண்டுமென்றே எரிச்சலூட்டும் வகையில் அவன் நடந்தான், அவனிடமிருந்து வந்த தூதனை ஒரு மாதம் காத்திருக்கச் செய்தபின், இஸ்மாயில் அடில்ஷா நேரில் வந்து வளைந்து வணங்கித் தன் காலை முத்தமிட்டால்தான் அவனிடமிருந்து கைப்பற்றிய ஊர்களையும் கோட்டைகளையும் அவனுக்குத் திருப்பித் தரமுடியும் என்று சொல்லியனுப்பினான். விஜயநகரத்தின் படை வலிமை வளர்வதால் தங்களுக்கு நேரக் கூடிய ஆபத்தை உணர்ந்த முஸ்லிம் சுல்தான்கள் நாளடைவில் தங்களுக்குள்ளிருந்த பிணக்குகளைத் தீர்த்துக்கொண்டு தங்களுடைய பொதுப் பகைவரான விஜயநகரத்தாரை எதிர்ப்பதற்கு ராயச்சூர்ச் சண்டை வழிகோலியது. இறுதியாக, ராயச்சூர் வெற்றியால் மேற்குக் கடற்கரையிலிருந்த போர்க்சுகீசியர் பயனடைந்தனர். ‘போர்ச்சுகீசியர் களுடைய வாணிபம் முழுவதும் இந்துக்களுடைய ஆதரவையே சார்ந்திருந்ததால், கோவாவின் உயர்வும் தாழ்வும் விஜயநகரத்தில் ஆட்சி செய்த முன்றாம் அரச மரபினருடைய உயர்வுதாழ்வுகளோடு தவிர்க்க முடியாதவாறு பிணைந்திருந்தன. அவர்கள் உயர்ந்தபோது கோவாவும் உயர்ந்தது. அவர்கள் வீழ்ந்தபோது கோவாவும் வீழ்ந்தது
கிருஷ்ணதேவராயனோடு உடன்படிக்கை செய்வதற்காக இஸ்மாயில்ஷா விஜயநகருக்கு அனுப்பிருந்த அசத்கான் லாரி என்னு வஞ்சகனுடைய சூழ்ச்சியின் விளைவாக 1522இல் கிருஷ்ண
ஆய்வரங்குச் சிறப்புமலர். 2009

Page 48
தேவராயன் மீண்டுமொரு முறை பிஜப்பூர்மீது படையெடுத்தான். விஜயநகர ராஜ்யத்தின் வடக் கெல்லையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடில்கான் அல்லது அவனுடைய தாயார் கிருஷ்ண தேவராயனைச் சந்திப்பதற்கு இணங்கியிருப்பதாய் அசத்கான் சொன்னதை நம்பிய கிருஷ்ணதேவராயன் அங்குச் சென்றான். ஆனால், அங்கே அவ்விருவருள் ஒருவரும் வரவில்லை. அதனாற் சீற்றமடைந்த கிருஷ்ணதேவராயன் அவர்களுக்கு ஒரு நல்ல பாடங் கற்பிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் குல்பர்காவுக்கு சென்று அதனைத் தரை மட்டமாக்கினான். மேலும், அவன் பிரோசாபாத், சாகர் ஆகிய கோட்டைகளையும் கைப்பற்றிக்கொண்டு, தன்னுடைய படையைப் பிஜப்பூர் வரையில் நடத்திச் சென்று, அந்த நகரத்திற் சிறிது காலந்தங்கி, அதற்கு மிகுந்த சேதம் விளைத்துவிட்டுத் திரும்பினான். குல்பர்காவில் சிறைப்பட்டிருந்த மாமூது பாமினியின் மக்களை விடுவித்து, அவர்களுள் மூத்தவனை அரசனாக்கிவிட்டு, மற்றவர்களை விஜயநகருக்கு அழைத்துவந்து, அவர்களை மிகவும் அன்பாக நடத்தினான். இவ்வாறு பாமினி சுல்தானியத்துக்குப் புத்துயிரூட்டுவதற்காக இந்து அரசனான கிருஷ்ணதேவராயன் செய்த முயற்சி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும், பாமினி ராஜ்யத்தின் சிதைவுக்குப்பின் தோன்றியிருந்த ஐந்து முஸ்லிம் ராஜ்யங்களின் சுல்தான்களும் கிருஷ்ண தேவராயனுடைய முயற்சியை வெறுத்தார்கள். எனவே, அவர்கள் விஜய நகரத்தின்மீது கொண்டிருந்த பகை மேலும் வளர்ந்தது.
கிருஷ்ணதேவராயன் உயிரோடிருந்தபோது தன்னுடைய ஆறு வயது மகனை அரசனாக்கித் தான் மந்திரிப் பதவியை வகித்தான் என்று நூனிஸ் எழுதி வைத்திருக்கிறார். கிருஷ்ணதேவராயன் தன் மகன் திருமலைராயனுக்கு இளவரசுப்பட்டம் சூட்டியதைத் தான் நூனிஸ் இவ்வாறு எழுதி வைத்திருக்கிறார் என்று நாம் கருதவேண்டும். அந்த நிகழ்ச்சி 1524ஆம் ஆண்டில் நடைபெற்றிருக்க வேண்டும்; ஏனெனில், அந்த ஆண்டில் திருமலைராயனுடைய பெயரில் வெளியிடப்பெற்ற பொறிப்புகள் நமக்குக் கிடைத்திருக் கின்றன. முடிசூட்டுவிழா எட்டு மாதம் நடந்ததென்றும் அந்தச் சமயத்தில் திருமலைராயன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான் என்றும் நூனிஸ் கூறுகிறார்.
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

திருமலைராயன் பெற்ற உயர்வால் முதலமைச்சன் சாளுவதிம்மனுடைய பதவியும் அதிகாரமும் தாழ்ந்து விட்டதால் அவனுடைய மகன் இளவரசனுக்கு நஞ்சு வைத்துவிட்டான் என்றும், அதனால்தான் இளவரசன் இறந்துபோனான் என்றும் நூனிஸ் மேலும் கூறுகிறார். உண்மையையறிந்த கிருஷ்ண தேவராயன் அமைச்சனைத் தன்னுடைய அவைக்கு வரச்சொல்லி, அனைவர் முன்னிலையிலும் அவன் செய்த கோழைத்தனமான குற்றத்தை எடுத்துக் கூறி, அவனையும் 96)igO)60)LLU குடும்பத்தினர் அனைவரையும் சிறையில் அடைத்து விட்டான். அவனுடைய அவையிலிருந்த போர்க்சுகீசியர் சிலர் அந்த வேலையில் அவனுக்கு உதவி செய்தனர். திம்மனுடைய மக்களுள் ஒருவன் சிறையிலிருந்து தப்பியோடியபோது, அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கிவிட்டு, மீண்டும் அவனைச் சிறையில் தள்ளிவிட்டார்கள், அவனோடிருந்த மற்றக் கைதிகளுடைய கண்களும்பிடுங்கப்பட்டன.
அடில்ஷா தான் இழந்த நாடுகளை மீட்பதற்காக மீண்டும் ஒரு முயற்சி செய்தான். ஆனால் கிருஷ்ணதேவராயன் தன் படைகளுடன் புறப் பட்டதைக் கேள்விப்பட்டவுடனே அவன் திரும்பியோடி விட்டான். அதன்பின் கிருஷ்ணதேவராயன் பெலகாம் மீது படையெடுப்பதற்கு ஆயத்தஞ் செய்தான். அப்போது பெலகாம் அடில்ஷாவின் ஆதிக்கத்தில் இருந்தது. ஆனால், கிருஷ்ணதேவராயன் திடீரென நோய்வாய்ப்பட்டு விரைவில் இறந்துபோனான் (1529). இறப்பதற்கு முன் அவன் தன் ஒன்றுவிட்ட தம்பி அச்சுதராயனைத் தனக்குப் பின் அரசனாக நியமித்தான்.
கிருஷ்ணதேவராயன் ஒப்புயர்வற்ற போர்த் திறமை பெற்றிருந்தது மட்டுமின்றி அரசியல் நயத் திறத்திலும் நிர்வாகத் திறமையிலும் மிக உயர்ந்த இடத்தை வகித்தான். அதுபோலவே கவின் கலை களிலும் அவன் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்ததால் அவற்றிற்குப்பேராதரவுதந்தான். வெளிநாட்டிலிருந்து வந்த பலர் விஜயநகரத்தின் பேரழகையும் கம்பீரமான தோற்றத்தையும் கண்டு உள்ளக் கிளர்ச்சி யடைந்தனர். அதனால், அவர்கள் அதனைப் பலவாறு புகழ்ந்து வியந்து பாராட்டினார்கள். அந்த நகரத்தின் செல்வச் செழிப்பையும், அதனுடைய போர்
39

Page 49
வலிமையையும், அங்கு நடைபெற்ற விழாக்களையும், அதற்கரசனாயிருந்த கிருஷ்ணதேவராயனுடைய வீரத்தையும் அவர்கள் மிகவும் புகழ்ந்து பாராட்டியிருக் கிறார்கள். அவர்களுடைய வர்ணனைகளைப் படிப்பது உள்ளத்தில் மிகுந்த எழுச்சியைத் தருகின்றது. தென்னிந்தியா முழுவதும் கிருஷ்ண தேவராயனுடைய ஆட்சியில் இருந்தது. பங்காப்பூர், கெர்சப்பா, பட்கல் முதலிய இடங்களில் ஒரளவு சுதந்திரமாக ஆட்சி செய்துவந்த சிற்றரசர்கள் அவனுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டார்கள். பேரரசு அவனுடைய நேர் ஆட்சியில் இருந்த போதிலும், அதனுடைய பலவேறு மாகாணங்களிலும் ஆளுநர்களாய்ப் பணியாற்றிய தளபதிகள் நடைமுறையில் ஏறக்குறையச் சுயேச்சையாகவே தங்களுடைய ஆட்சியை நடத்தி வந்தார்கள். அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள காலாட் படையினர். குதிரைப் படையினர், யானைப் படையினர் ஆகியவர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவை எந்த நேரத்திலும் ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றியும் அவர்கள் மையக் கருவூலத்திற்கு ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய தொகையை ஒழுங்காகச் செலுத்த வேண்டும். அவ்விரு நிபந்தனைகளுக்கும் உட்பட்டு அவர்கள் நடந்துகொண்ட வரையில் மைய அரசு அவர்கள் அதிகாரத்தில் தலையிடாது. அத்தகையதோர் ஆட்சிமுறை திறமையாக நடைபெறவேண்டுமானால், மன்னவன் மக்கள் அனைவருடைய மதிப்பையும் பெறுகிற வகையில் நடந்து கொள்ள வேண்டும். அயராத உழைப்பாற்றலும் சாமர்த்தியமும் உடைய வனாயிருப்பதோடு தன் கடமைகளை ஆற்றுவதில் மிகவும் விழிப்பாகவும் இருக்கவேண்டும். கிருஷ்ண தேவராயன் அந்த இயல்புகள் எல்லாவற்றையும் உடையவனாயிருந்தான். அதனால் அவனுடைய ஆட்சிக் காலத்தில் அவனுடைய பரந்த ராஜ்யத்தின் எந்தப் பகுதியிலும் குழப்பமோ அமைதிக் குலைவோ ஏற்படவே இல்லை. அவன் கல்வி கேள்விகளிற் சிறந்தவன். அவனே ஒரு கவிஞன். 'ஆமுக்த மால்யதா' என்னும் கவிதை நூல் அவன் எழுதிய ஒன்று என்று சொல்லப்படுகிறது. அரசன் கடைப்பிடித்த ஆட்சி முறையின் அடிப்படைக் கொள்கைகளின் விளக்கமும் அந்த நூலில் ஏனைய செய்திகளோடு இடம்பெறுகிறது. புகழ்மிக்க தெலுங்குக் கவிஞர் அல்லசாணி பெத்தனா
40

அரசவைக் கவிஞராக இருந்து கிருஷ்ண தேவராயனுடைய அவைக்கு அணி செய்தார். தகுதியறிந்து பரிசில் வழங்கும் அவனுடைய வள்ளன்மை நாடு முழுதுமிருந்த தலைசிறந்த புலவர் பலரை அவனுடைய அவைக்கு ஈர்த்து, அதனால் அவனுடைய புகழ் மேலும் மேலும் ஓங்கியது. அவனுடைய சமயப் பற்றும், மதக் காழ்ப்பின்மையும் ஏனைய துறைகளில் அவனடைந்த புகழுக்கு ஒத்த புகழை அவனுக்கு அளித்தன. அவனுக்கு வைணவத்தில் மிகுந்த பற்று இருந்தது என்பது உண்மையே. எனினும், இந்து மதத்தின் ஏனைய பிரிவுகளையும் அவன் சமமாக மதித்து நடந்தான். சண்டையில் தோற்றுப்போன பகைவர்களிடம் அவன் காட்டிய கருணையும், போரிற் கைப்பற்றிய ஊர்களில் வாழ்ந்த மக்களிடம் அவன் காட்டிய ஒப்பரவும், குடி மக்களையும் சிற்றரசர்களையும் அவன்பால் ஒருங்கே ஈர்த்த அவனுடைய போர்த்திறமையும், வெளிநாட்டுத் தூதர்களிடத்தில் அவன் வழக்கமாகக் காட்டி அன்பும் அவர்களுக்களித்த இனிய வரவேற்பும், அவனுடைய வீறார்ந்த தோற்றமும், அவனுடைய கண்ணியமான தூய வாழ்க்கைக்கு அறிகுறியாயிருந்த அவனுடைய இனிய இயல்பும் பண்பட்ட பேச்சும், குடிமக்களுடைய நலனில் அவனுக்கிருந்த பேரார்வமும், எல்லாவற்றிற்கும் மேலாக அவன் கோயில்களுக்கும் பார்ப்பனர்க்கும் அளித்த மாபெரும் மானியங்களும் தென்னிந்திய அரசர்கள் அனைவரிலும் அவனே தலைசிறந்தவன் என்பதை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.
கிருஷ்ணதேவராயன் பல கட்டடங்களைக் கட்டி, தலைநகரின் வசதியையும் அழகையும் பெருக்கினான். தன்னுடைய ஆட்சியின் தொடக்கத்தில் அவன் விரூபாட்சர் கோயிலில் ஒரு பழைய கோபுரத்தைப் பழுதுபார்த்ததோடு ஒரு புதிய கோபுரத்தையும் கட்டினான். 1513இல் கிருஷ்ணசாமி கோயிலொன்றைக் கட்டி உதயகிரியிலிருந்து எடுத்துக்கொண்டு வந்த பாலகிருஷ்ண விக்கிரகத்தை அதில் எழுந்தருளச் செய்தான் என்பதை நாம் முன்பே கண்டோம். கோவாவில் ஆளுநர் முதல்வர் (கவர்னர்-ஜெனரல்) இசைவின்பேரில், அங்கிருந்த போர்ச்சுகீசியப் பொறியியல் வல்லுநன் ஒருவனை விஜயநகரத்துக்கு வரவழைத்து அவனுடைய உதவியால் விஜயநகரத்தை சுற்றியிருந்த புன்செய் நிலங்களின் பாசன வசதியைக்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 50
கிருஷ்ணதேவராயன் பெருக்கினான். தலைநகரின் தென்புறத்தில் அழகிய புறநகர் ஒன்றை நிர்மாணித்து அதற்குத் தன்னுடைய தாயாரான நாகலாதேவியின் நினைவாக நாகலாபுரம் என்று பெயரிட்டான். அந்த நகரத்திற்குத் தேவையான தண்ணிர் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து வந்தது. அந்தத் தொட்டியை விஜயநகரத்திற்குத் தாம் சென்றிருந்தபோது கட்டிக்கொண்டிருந்தார்கள் என்று பாயிஸ் கூறுகிறார். நதிக்கரையிலிருந்த விட்டலசாமியின் கோயிலுக்குக் கிருஷ்ணதேவராயன் புதிய ஒப்பனை செய்தான். விஜயநகரக் கட்டடக் கலையின் ‘ஒப்பனை நயவளத்தினுடைய உச்ச நிலையை அந்தக் கோயிலில் நாம் காண்கிறோம். அந்தக் கோயிலை அழகுபடுத்தும் பணி கிருஷ்ணதேவராயன் இறந்த பின்னும் பல ஆண்டு தொடர்ந்து நடைபெற்றது. 1565ஆம் ஆண்டில் முஸ்லிம்கள் விஜயநகரத்தைத் தகர்த்தெறியும் வரையிலும் அந்த வேலை தொடர்ந்து நடந்ததென்று நாம் கருதலாம். கிருஷ்ணசாமி கோயிலின் தென்மேற்குக் கோணத்திற்கருகில் இருந்த ஒரு பாறையைச் செதுக்கி உருவாக்கிய மிகப் பெரிய நரசிம்மச் சிலை கிருஷ்ணதேவராயன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த கடைசித் தொல்பொருட் சின்னங்களுள் ஒன்றாக இருக்கிறது (1528). அது பல சிதைவுகளுக்குள்ளாகியபோதிலும் விஜயநகரத்தின் இடிபாடுகளுள் நம் கவனத்தைப் பெரிதும் கவருகின்ற ஒரு கலைச்சின்னமாக இன்னும் திகழ்கிறது.
அச்சுதராயனுடைய அவையில் சிறிது காலந் தங்கியிருந்த நூனிஸ், புதிய அரசன் தீயொழுக்க முடையவனென்றும், கொடுங்கோலனென்றும், நேர்மையும் தைரியமும் அற்றவனென்றும், நாட்டின் குடிமக்களும் தலைவர்களும் அவனுடைய தீய குணத்தையும் நடத்தையும் மிகவும் வெறுத்தார்கள் என்றும் எழுதிவைத்திருக்கிறார். அச்சுதன் உண்மையில் அவ்வளவு கெட்டவன் என்று தோன்றவில்லை. தனக்குச் சொந்த மகன் ஒருவன் இருந்தபோதிலும், அச்சுதராயனே தனக்குப் பின் அரசனாக வேண்டுமென்று கிருஷ்ணதேவராயன் அவனைத் தெரிந்தெடுத்தான். எனினும், அவன் அரியணையேறியபோது(1529) அவனுடைய நிலைமை கடினமாகத்தான் இருந்தது. அச்சுதராயனையும் மற்ற அரசகுமாரர்களையும் நாட்டின் அமைதிகெடக்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கூடாது என்ற காரணத்துக்காகக் கிருஷ்ண தேவராயன் சந்திரகிரிக் கோட்டையில் அடைத்து வைத்திருந்தான். கிருஷ்ணதேவராயன் இறந்தவுடனே அவனுடைய பதினெட்டு மாதக் குழந்தையே அரசன் என்று ராமராயன் விளம்பரப்படுத்தினான். ஆனால், அந்தக் குழந்தையின் பெயரில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ராமராயன் செய்த சூழ்ச்சியைச் சாளுவ வீர நரசிம்மன் தகர்த்து, அச்சுதராயன் சந்திரகிரியிலிருந்து வரையிலும் விஜயநகர அரியணையை காலியாக வைத்திருந்தான். வேறொருவனை அரியணையேற்றுவதற்கு ராமராயன் செய்த முயற்சியைத் தடைசெய்யும் நோக்கத்துடன், அச்சுதராயன் சந்திரகிரியிலிருந்து திரும்பி வருகிற வழியில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலில் திருப்பதியிலும்பின்னர்க் காளத்தியிலுமாக இருமுறை முடி சூடிக் கொண்டான்.
கிருஷ்ணதேவராயன் இறந்து போனான் என்று கேள்விப்பட்ட உடனே விஜயநகரத்தின் பகைவர்க ளெல்லாம் அந்தப் பேரரசைத் தாக்கத் தொடங்கி னார்கள். இஸ்மாயில் அடில்கான் மீண்டும் ராயச்சூர், ஆற்றிடை நிலத்தின்மீது படையெடுத்து ராயச்சூரையும் முடுகலையும் பிடித்துக் கொண்டான். அந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்ப்பதற்கு அச்சுதராயன் எவ்வித முயற்சியும் செய்வதற்கு முன்னரே அது முடிந்துவிட்டது. அச்சுதராயனுடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் இந்த ஒன்றைத் தவிர வேறு எதையும் நூனிஸ் எழுதி வைக்கவில்லை என்ற கூறலாம். அதே சமயத்தில் கஜபதியரசன் மேற்கொண்ட படையெடுப்புத் தோல்வி யடைந்தது. அதுபோலவே கொண்ட வீட்டைக் கைப்பற்றுவதற்காக கோல்கொண்டா சுல்தானான குதுப்ஷா செய்த முயற்சியும் தோல்வியடைந்தது.
இறுதியில் அச்சுதராயன் விஜயநகரத்தை அடைந்தபோது, ராமராயனோடு சமாதானஞ் செய்துகொண்டு, இருவரும் சேர்ந்து ஆட்சியை நடத்துவதென்ற ஏற்பாட்டுக்கு ஒத்துக்கொண்டான். அதனால் சினமடைந்த சாளுவ வீர நரசிம்மன் தலைநகரத்திலிருந்து நீங்கித் தெற்கே சென்று. உம்மத்தூர் அரசனோடும் திருவடிராஜ்ய (தென் திருவிதாங்கூர்) அரசனோடும் சேர்ந்து கொண்டு, அச்சுதனுக்கு எதிராகக் கலகஞ் செய்தான்
41

Page 51
அச்சுதன் ஒரு படையுடன் தென்னாட்டுக்குச் சென்றான். அதற்கு அவனுடைய மைத்துனன் சகலராஜு திருமலை தலைமை தாங்கினான். அந்தப் படை பொருநை ஆற்றின் கரைவரையிலும் வெற்றியுடன் முன்னேறி, அங்கே ஒரு வெற்றிக் கம்பத்தை நாட்டி விட்டு மீண்டது. கலகக்காரர்களால் இழப்புக்குள்ளாகிய பாண்டிய மன்னனை அச்சுதன் மீண்டும் அரசனாக்கினான். அவன் தன் மகளை அச்சுதனுக்கு மணமுடித்து வைத்தான். அச்சுதராயனுடைய படை சாளுவ வீர நரசிம்மனையும் அவனுடைய துணைவர்களையும் தோல்வியுறச் செய்தது மட்டுமன்றி, அவர்களைச் சிறைபிடித்து, பூரீரங்கத்தில் தன் பாசறையை அமைத்து அங்கே தங்கியிருந்த அச்சுதராயனிடம் கொண்டு வந்து அச்சுதராயன் உம்மத்துார் வழியாகத் தலைநகருக்குத் திரும்பினான். வழியிலிருந்த சிற்றரசர்கள் அவனுக்குப் பணிந்து அவனுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
அதன்பிறகு சிறிது காலத்தில் கிருஷ்ண தேவராயனுடைய மகன் இறந்துபோனான். அதனால் ராமராயனுடைய வலிமை குறைந்தது. அதிலிருந்து அச்சுதனுடைய போக்கும் மாறியது. எப்போதும் சச்சரவுக்குக் காரணமாயிருந்தராய்ச்சூர் ஆற்றிடைநிலத்தின்மீது அச்சுதராயன் படையெடுத்து, கிருஷ்ணா நதிவரையிலிருந்த பிஜப்பூர் நாடுகளைத் தன்னுடைய அதிகாரத்திற்குப் பணியுமாறு செய்தான். அதனால் அவனுடைய நிலைமை மேலும் வலிவடைந்தது. இந்த வெற்றிக்கு அப்போது பிஜப்பூர் அடைந்திருந்த வலுக்குறைவு பெரிதும் உதவியது. 1534ஆம் ஆண்டில் இஸ்மாயில் அடில்கான் இறந்துபோனான். அவனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த அவனுடைய மகன் மல்லு அடில்கானை மக்கள் விரும்பவில்லை. தகாவழிப் பேர்போன அசத்கான் லாரியின் தூண்டுதலின் பேரில் பிரபுக்கள் மல்லு அடில்கானை எதிர்த்துக் கலகஞ் செய்தார்கள். அதனால் வலிமையிழந்திருந்த மல்லு அச்சுத ராயனுடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சமாதானம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று.
அதற்குப்பின் அச்சுதராயனுடைய ஆட்சியின் வரலாறு தெளிவற்றதாக இருக்கிறது. 1536-37இல் குத்தியில் ஏற்பட்ட ஒரு கலகத்தை அச்சுதன்
42

அடக்கிய பிறகு அவன் தன்னுடைய அலுவலர்களோடு திருப்பதிக்குப் போனான். இதற்கிடையில் ராமராயன் தன்னுடைய அதிகாரத்தையும் வலிமையையும் பெருக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். பழைய ஊழியர்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அவன் தன்னுடைய உறவினரையும் நண்பரையும் நியமித்தான். 1535இல் பிஜப்பூர் சுல்தானியத்தின் அரியணையேறிய புதிய சுல்தானான இப்ராஹிம் அடில்கான் பதவியிலிருந்து நீக்கிய 3000 முஸ்லிம் போர்வீரர்களை ராமராயன் விஜயநகரப் படையில் சேர்த்துக் கொண்டான். இவ்வாறு தன் வலிமையைப் பெருக்கிக் கொண்டபின் அவன் திருப்பதியிலிருந்து தலைநகருக்குத் திரும்பிக் கொண்டிருந்த அச்சுதனை வழிமறித்து, அவனைப் பிடித்துச் சிறையிலடைத்து விட்டு, தானே அரசன் என்று விளம்பரப்படுத்தினான். ஆனால் பிரபுக்கள் அவன் அரசனாவதை எதிர்த்தார்கள். அதனால் அவன் அச்சுதனுடைய சிற்றப்பன் மகனான சதாசிவனை அரசானாக்கி, அவனுடைய பெயரில் ஆட்சியை நடத்தினான். அதன் பின்னர் பேரரசின் தென்பகுதியில் ஏற்பட்ட கலகங்களை அடக்குவதற்காக ராமராயன் தலை நகரைவிட்டுச் செல்லவேண்டியிருந்தது. அவ்வாறு போனபோது தன்னுடைய நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான ஒர் ஊழியனிடம் அச்சுதனை ஒப்படைத்துவிட்டு ராமராயன் ஒரு படையுடன் தென்றிசை சென்றான். அந்தப் படையெடுப்பில் அவன் முழுவெற்றியடையவில்லை. மேலும், அவன் எதிர்பார்த்ததற்கு மேல் அந்தப் படையெடுப்புநீடித்தது. அதற்கிடையில் அவன் நம்பிக்கை வைத்திருந்த ஊழியன் அச்சுதனை விடுவித்து விட்டுத் தானே முதலமைச்சன் என்று விளம்பரப்படுத்தி விட்டான். ஆனால், விரைவிலேயே சலகராஜு திருமலை அவனைக் கொன்றுவிட்டு அவன் வகித்த அதிகாரத்தைத் தானே வகிக்கத் தொடங்கினான். தென்னாட்டுக் கலகக்காரர்களோடு சமாதானஞ் செய்துகொள்வதற்கு ராமராயன் இந்த நிகழ்ச்சிகளைப் பயன்படுத்திக் கொண்டு தலைநகருக்குக்குத் திரும்பினான்.
பட்ட காலிலேயே படும்' என்றபடி விஜயநகர
ராஜ்யத்துக்கு மேலும் பல தொல்லைகள் நேர்ந்தன. நாம் மேலே கண்ட நிலையைப் பயன்படுத்திக் கொண்ட
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 52
இப்ராஹிம் அடில்கான் விஜயநகரத்தின் மீது படையெடுத்து அதனை முற்றுகையிட்டான். பிஜப்பூரைக் கிருண்ஷ்ணதேவராயன் அழித்ததை மனத்தில் வைத்திருந்த இப்ராஹிம் நாகலாபுரத்தை யழித்துத் தரைமட்டமாக்கினான். தமக்குள் யாரேனும் ஒருவனோடு இப்ராஹிம் சேர்ந்து கொள்ளக் கூடும் என்று அச்சுதராயன், ராமராயன் ஆகிய இருவருமே அஞ்சினர். அதற்கிடையில், வஞ்சகனான அசத்கானுடைய சூழ்ச்சியால் அகமது நகர சுல்தாக் பிஜப்பூர்மீது படையெடுத்தான். ராமராயன் அச்சுதராயன் ஆகிய இருவருடனும் இப்ராஹிம் ஒரேசமயத்தில் சமாதானப் பேச்சைத் தொடங்கினான். அச்சுதனே விஜயநகர அரசனாக இருப்பதென்றும் ராமராயன் தன்னுடைய ஆட்சிக்கடங்கியிருந்த பகுதியில் அச்சுதனுடைய தலையீடின்றி ஆட்சிபுரியலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. தன்னுடைய தொண்டுக்காக இப்ராஹிம் 6JT6TLOT60T செல்வங்களைக் கைம்மாறாகப் பெற்றுக் கொண்டு தன்னுடைய ராஜ்யத்துக்குத் திரும்பினான். அவனுடைய உதவியால் ஏற்பட்ட ஒப்பந்தம் 1542இல் அச்சுதன் இறக்கும் வரையிலும் நடைமுறையில் இருந்தது.
உள்நாட்டுக் கலகங்களாலும், வெளியார் படைடுப்பாலும், ராமராயனுடைய சூழ்ச்சியாலும் அச்சுதனுடைய ஆட்சிக் காலம் முழுவதுமே இன்னல் நிறைந்ததாக இருந்தது. வாணிகம்பலஇடையூறுகளுக் குள்ளாகியது. எல்லாச்சாலைகளிலும் ஆறலைகள்வர் இருந்ததால் புனிதத் தலங்களுக்குச் செல்ல விரும்பிய மக்கள் பெருந்துன்பத்துக்குள்ளானார்கள். இவ்வாறு நேர்ந்த பல்வேறு இன்னல்களையும் சமாளிப்பதற்கு அச்சுதன் தைரியமாக முயன்றான். நூனிஸும் ஏனையோரும் எழுதிவைத்துள்ளபடி அவன் அவ்வளவு மட்டரக அரசனல்லன். அவர்கள் அவனுடைய இயல்புகளை மிகவும் குறைவாக மதிப்பிட்டார்கள். அவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட அச்சுத ராயப்யுதயம்' என்னும் அணிநலமிக்க வடமொழிச் செய்யுள் நூலொன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. அது அச்சுதன் உயிரோடிருந்த போதே அவனுடைய அரசவைப் புலவன் ராஜநாத டிண்டிமன் என்பவனால் எழுதப்பட்டது. அச்சுதனைப் பற்றிய வரம்பு கடந்த புகழுரைகள் அந்த நூலில் மலிந்து கிடக்கின்றன
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

என்பது உண்மைதான். எனினும், பொதுவாகக் காணமுடியாத மிக உயர்ந்த இயல்புகளை அச்சுதன் பெற்றிருந்தான் என்பதை அந்த நூலைப்படிக்கும் நாம் உணரத்தான் செய்கிறோம்.
அதற்கிடையில், அச்சுதனுடைய ஆட்சிக் காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும், போர்ச்சுகீசியர் தம்முடைய ஆட்சியைத் தென்னிந்தியாவின் கடற்கரைப் பகுதிகளில் நிலைநாட்டிக் கொண்டிருந்தனர். தங்களுடைய வாணிகத்தைக் காத்துக் கொள்வதற்குத் தேவை என்று தோன்றிய எல்லா இடங்களிலும் அவர்கள் கோட்டைகளைக் கட்டினார்கள். விஜயநகரப் பேரரசோடு நட்புறவாக இருப்பது போல அவர்கள் காட்டிக்கொண்டார்களெனினும், கோழிக்கோட்டு ஜாமரினுடனும் விஜயநகரத்தின் சிற்றரசர்களுடனும் அவர்கள் அடிக்கடி பொருது கொண்டே இருந்தார்கள். இந்தியர்களைப் படுகொலை செய்வதும், அவர்களுடைய ஊர்களைச் சூறையாடுவதும், அவர்களுடைய செல்வங்களைக் கொள்ளையடிப்பதும் தங்களுக்குக் கடவுள் தந்த உரிமை என்று அவர்கள் நினைத்தார்கள் போலும் நயமாக மழுப்பிப் பேசாமல் உண்மையைக் கூறவேண்டுமானால், இந்தியாவுக்கு வந்த போர்ச்சுகீசியர் வரலாறு ஒரே அட்டூழிய மயமாக இருக்கிறது. தங்களுடைய கைகளுக்கெட்டிய செல்வச் செழிப்புடைய கோயில்கள் அனைத்தையுமே கொள்ளையடிப்பதில் அவர்கள் பெருவிருப்புடைய வர்களாயிருந்தார்கள். அவர்களுடைய வேட்டைக் கரங்களிலிருந்து திருப்பதியும் தப்பவில்லை (1545).
நாகம நாயக்கனுடைய மகன் விஸ்வநாத நாயக்கன்தான் மதுரையில் புகழ்பெற்ற நாயக்க மரபினர் ஆட்சியைத் தொடங்கியவன் என்று அவனுடைய வழித்தோன்றல்கள் கருதினார்கள். அச்சுதன் தென்னாட்டின்மீது படையெடுத்தபோது விஸ்வநாதனும் அவனுடன் சென்று சாளுவ வீரநரசிம்மன், திருவடி முதலியவர்களை அடக்கு வதற்காக விஜயநகரப்படைகள் செய்த போர்களில் பெரும்பங்கு ஏற்றான் என்றும் இறுதியில் அச்சுதன் அவனை மதுரையின் ஆளுநனாக நியமித்திருக்க வேண்டுமென்றும் நாம் கருதலாம். அவன் 1533 முதல் 1542 வரை அச்சுதன் இறக்கும் வரையில் மதுரையின்
43

Page 53
ஆளுநனாக் இருந்தான். அதன்பின் வேறொருவன் அந்தப்பதவியை வகித்தான். நாகமன்தான் சுயேச்சை பெற்ற மதுரை நாயக்க மரபினர் ஆட்சியை நிறுவினான் என்பதற்குச் சான்றேதும் இல்லை. அந்த வேலையை அவனுக்குப்பின் அவனுடைய மகன் கிருஷ்ணப்பன் செய்திருக்கக்கூடும் என்று கருதலாம்.
அச்சுதராயனுக்குப்பின் அவனுடைய மகன் முதலாம் வேங்கடன் அரசன் ஆனான். ஆனால், அவன் அப்போது, இளைஞனாக இருந்ததால் அவனுடைய மாமன் சகலராஜதிருமலை அவனுக்குப் பதிலாக ஆட்சியை நடத்தினான். அதனைப் பிரபுக்கள் எதிர்த்தார்கள். ஆனால், சகலராஜு அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. வேங்கடனுடைய தாய் வரதாதேவி தன் உடன்பிறந்தானுடைய நோக்கத்தில் ஜயங்கொண்டு அவனை அடக்குவதற்காக அடில்கானுடைய துணையை நாடினாள். அடில்கான் விஜயநகர ராஜ்யத்தின்மீது படையெடுத்தான். ஆனால், திருமலை அவனை வழியிலேயே கண்டு பேசி அவன் கேட்ட பணத்தைக் கொடுத்து, அவனைத் திரும்பிப் போகுமாறு செய்தான். அதற்கு எதிராக, ராமராயக் குத்தியில் சிறையிருந்த சதாசிவனை விடுவித்து, அவனே அரசன் என்று விளம்பரப்படுத்தி, அவனுக்குத் துணை செய்யுமாறு அடில்கானுக்கு வேண்டுகோள் விடுத்தான். அதனை விரும்பியேற்றுக் கொண்ட அடில்கான் விஜய நகரின்மீது படையெடுத்தான். அதற் கிடையில், மிகவும், குழப்பமடைந்திருந்த தலைநகரக் குடிமக்கள் திருமலையே தங்களுடைய அரசன் என்று விளம்பரப்படுத்திவிட்டார்கள். திருமலை அடில்காளை எதிர்த்துப் போர் செய்து பெருவெற்றி பெற்றான். தோல்வியடைந்த அடில்கான் திரும்பிச் சென்றுவிட்டான். தனக்குப் போட்டியே இல்லாமல் செய்துவிடும் நோக்கத்துடன், முதலாம் வேங்கடனை மட்டுமன்றி அரச குடும்பத்தினர் அனைவரையும் திருமலை கொலைசெய்து விட்டான். அதன்பின் அவனுடைய கொடுங்கோன்மையின் வேகத்தைத் தாங்க முடியாத பிரபுக்கள் மீண்டும் அடில்கானுடைய துணையை நாடினார்கள். அவனும் வந்தான். ஆனால், அவனுடைய மட்டுமீறிய செருக்கைக் கண்டு பிரபுக்கள் அவன் மீது சினமும் வெறுப்பும் அடைந்தார்கள். அதனால் தன்னுடைய உயிருக்கே
44

ஆபத்து நேரலாம் என்று அஞ்சிய அடில்கான் திரும்பிப் போய்விட்டான். இறுதியில், சதாசிவனுடைய பெயரில் ராஜ்யத்தைக் கைப்பற்றிக் கொள்ளும் நோக்கத்துடன் ராமராயன் போரில் இறங்கினான். முதலில் அவன் பெனுகொண்டாவைக் கைப்பற்றினான். அதன்பின் அவன் திருமலையைப் பல சண்டைகளில் தோல்வியுறச் செய்து இறுதியில் துங்கபத்திரையின் கரையில் நடந்த சண்டையில் அவனை வெட்டி வீழ்த்தினான். பின்னர், அவன் தலைநகருக்குச் சென்று, 1543இல் சதாசிவனுக்கு முடிசூட்டினான்.
முதல் ஏழெட்டு ஆண்டுக்காலம் சதாசிவன் ஒருவனே அரசனாயிருந்தான். ஆனால், அரசியலதிகாரம் (ՄԱgճաՑIւն ராமராயன் கையிலிலேயே இருந்தது. நாளடைவில் ராமராயன் அரசர்க்குரிய பட்டப்பெயர்களை வைத்துக் கொண்டதோடு, சதாசிவனைக் கடுமையான காவலில் வைத்துவிட்டான். எனினும், ராமராயனும் அவனுடன் பிறந்தவர்களாக திருமலையும் வேங்கடாத்திரியும் ஆண்டுக்கொருமுறை சட்டப்படி அரசனாயிருந்த சதாசிவனைக் கண்டு அவனே தங்கள் தலைவன் என்ற காட்டிக் கொள்ளும் வகையில் அவன்முன் விழுந்து வணங்கிவிட்டு வந்தார்கள்.
ராமராயன் பழங்குடிப் பிரபுக்களுள் பலரைக் கொன்றுவிட்டுத் தன்னுடைய குடும்பத்தினரைத் தலைமைப் பதவிகளுக்கு நியமித்தான் என்று பெரிஷ்டா கூறுகிறார். இந்தச் செய்தியை மற்றவர்கள் எழுதி வைத்திருக்கிற குறிப்புகளும் பொறிப்புகளும் உறுதிசெய்கின்றன. முஸ்லிம்கள் பலரை ராமராயன் தன்னுடைய படையிற் சேர்த்துக்கொண்டான். இரண்டாம் தேவராயன் காலத்திலேயே அந்தப் பழக்கம் தொடங்கியது என்பது உண்மைதான். ஆனால், அப்போது விஜயநகரப் படையில் சேர்க்கப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சிறிதாய் இருந்தது. மேலும், அப்போது அவர்களுக்கு முக்கியமான பதவி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால், ராமராயன் அந்தப் புத்திசாலித்தனமான கோட்பாட்டைப் பின்பற்றாமல் முஸ்லிம்களையும் முக்கியமான பதவிகளில் அமர்த்தினான். அதனால் விஜயநகர ராஜ்யத்தின் உள்நாட்டு விவகாரங்களை நெருங்கிக் கவனித்து, அவற்றைப் பற்றிய
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 54
செய்திகளைத் தெரிந்துகொள்வற்கு அவர்களுக்கு வாய்ப்பேற்பட்டது. மேலும், தக்கண முஸ்லிம் ராஜ்யங்களின் விவகாரங்களில் தலையிடுவதற்கு வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் அவன் தலையிட்டு அவற்றுக்குள் பகைமையை மூட்டிவிட்டான். அவ்வாறு செய்வதன் மூலம் அவற்றின் வலிமையைக் குறைப்பதற்கும் தன்னுடைய வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கும் அவன் முயன்றான். ஆனால், முஸ்லிம் அரசர்கள் ராமராயனுடைய சூழ்ச்சியை உணர்ந்து, தங்களுக்குள்ளிருந்த பகைமையை மறந்து, விஜயநகரத்திற்கெதிராக ஒன்று திரண்டார்கள். ராமராயன் போட்ட தப்புக் கணக்குக்குரிய தண்டனையை அவன் அடைந்தான். அவன் முஸ்லிம் ராஜ்யங்களுக்கெதிராகச் செய்த சூழ்ச்சியின் நேர்விளைவுதான் ரட்சசிதங்கடி (தலைக்கோட்டை) சண்டை.
சதாசிவராயனுக்கு முடிசூட்டிய சிறிது காலத்துக்கெல்லாம் ராமராயன் மீண்டும் தன் படையுடன் தென்திசை செல்ல வேண்டியதாயிற்று. அரசியலதிகாரம் முழுவதும் அவன் கையிலிருப் பதைக் கண்ட அவனுடைய எதிரிகள் அவன்மீது பொறாமை கொண்டார்கள். சந்திரகிரிக்குத் தெற்கிலிருந்த பகுதிகள் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தன. அவர்கள் ராமராயனுடைய ஆதிக்கத்தை எதிர்த்துக் குழப்பமுண்டாக் கினார்கள். தென்னாட்டில் திருவிதாங்கூரின் மேலாதிக்கத்தில் கயத்தாற்றில் ஆட்சிசெய்து வந்த பாண்டிய மரபினரை அங்கிருந்து துரத்தி விட்டார்கள். அப்போது தமிழகத்திலிருந்த ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்களுக்குத் தூய பிரான்ஸிஸ் ஸேவியர் தலைவராய் இருந்தார். அவரும் அவருடைய தோழர்களும் சேர்ந்து, மன்னார் வளைகுடாவின் முத்துச் சலாபக் கரையிலிருந்த பரதவர்கனைத் தங்களுடைய மதத்திற்கு மாற்றியதோடு நில்லாமல், விஜயநகரக் குடிமக்களாக இருப்பதற்கு மாறாக அவர்கள் போர்ச்சுகீசிய அரசின் குடிமக்களாக மாறிவிடுவது நல்லதென்று அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் முஸ்லிம் வணிகர்களுடைய கொள்ளை ஆதாய வேட்டையிலிருந்தும் இந்து ஆளுநர்களுடைய கொடுங்கோன்மையிலிருந்தும் தப்பித்துக்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கொள்ளலாம் என்றும் பாதிரிகள் சொல்லிக் கொடுத்தார்கள். பிரான்ஸிஸ் மடத்துறவிகளும் ஏசு சங்கப் பாதிரிமார்களும் கடற்கரை ஊர்களிலிருந்த இந்துக் கோயில்களை இடித்துவிட்டு அங்கெல்லாம் மாதா கோயில்களைக் கட்டும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டார்கள். அதே சமயத்தில் கோவாவின் போர்ச்சுகீசிய ஆளுநன் காஞ்சிபுரத்துக் கோயில்களைக் கொள்ளையடிப்பதற்கு ஆயத்தஞ் செய்துகொண்டிருந்தானென்ற செய்தியும் பரவியது. பேரரசின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே ஆட்சி செய்துவந்த சிற்றரசர்கள் தங்களுக்குள் அடிக்கடி சச்சரவிட்டுக்கொண்டதும் அவர்கள் போர்ச்சுகீசி யர்களோ அரசியல் பேரம் பேசிக் கொண்டிருந்ததும் நாட்டில் முன்னரே இருந்த குழப்பத்தை அதிகமாக்கின.
தென்னாட்டிலிருந்த குழப்பத்தைப் போக்கி அமைதியை நிலைநாட்டுவதற்காக ராமராயன் தன்னுடைய சிற்றப்பன் மகன் சின்னத்திம்மனை ஒரு பெரும் படையுடன் அனுப்பினான். சின்னத்திம்மன் முதலில் கலகக்காரர்களின் வசத்திலிருந்த சந்திரகிரியை மீட்டான். அதன்பின் அவன் சோணாட்டிற்குள் நுழைந்து புவனகிரியைத் தாக்கிக் கைப்பற்றினான். பின்னர் அவன் கடற்கரை ஒரமாகவே சென்று, காவிரியைக் கடந்து, நாகூரையடைந்தான். அங்கே கத்தோலிக்கர் களுடைய அடாத செயலால் சிதைந்துபோயிருந்த ரங்கநாதர் கோயிலை அவன் புதுப்பித்தான். அதன்பின் அவன் தஞ்சாவூர் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஆட்சி செய்துவந்த உள்ளூர்த் தலைவர்களை அடக்கி அவர்கள் செலுத்தவேண்டிய திறை நிலுவையை வசூல் செய்தான். பின்னர் அவன் இன்னுந் தெற்கே சென்று கயத்தாற்றுக்கும் தூத்துக்குடிக்கும் அரசனாயிருந்த பெட்டம் பெருமாளின் செருக்கையடக்கி, பாண்டியன் இழந்த நாட்டைக் கைப்பற்றி, அவனை மீண்டும் பதவியில் அமர்த்தினான். அங்கிருந்து அவன் மேற்கே திரும்பி, திருவிதாங்கூரில் ஆட்சி செய்த ஐந்து திருவடிகளின் படைகளைத் தோவாழைக் கணவாயில் சந்தித்துத் தோல்வியுறச் செய்து துரத்தினான். பின்னர் அவன் திருவிதாங்கூரின் ஏனைய பகுதிகளின்மீது படையெடுத்து, அவற்றை ஆட்சி செய்த அரசனை வென்றபின், அவனை நல்லவிதமாக நடத்தி, முன்னர் அவனுடைய
45

Page 55
ஆட்சியிலிருந்த நாடுகளுள் பெரும்பாலானவற்றை அவனுக்கே திருப்பிக் கொடுத்தான். திருவனந்த புரத்தில் பத்மநாபசாமியை வழிபட்டபின் அவன் குமரி முனைக்குச் சென்று, அங்கு ஒர் வெற்றிக் கம்பத்தை நாட்டிவிட்டுத் தான் வென்ற நாடுகள் அனைத்தையும் தான் செய்த போர்களில் தமக்குப் பேருதவி செய்த தன் தம்பி விட்டலனுடைய பொறுப்பில் விட்டுத் தலைநகருக்குத் திரும்பினான்.
போர்ச்சுகீசியர்களுக்கும் ராமராயனுக்கும் இருந்த தொடர்புகள் எப்போதுமே நட்புறவாயிருந்தன என்று சொல்ல முடியாது. 1542இல் மார்டின் அல்பான்சோ டிசௌசா கோவாவின் ஆளுநனாகப் பதவியேற்ற பின்னர் அத்தொடர்புகள் மேலும் சீர்கேடுற்றன. அவன் கோவாவுக்கு வந்து சேர்ந்த சிறிது காலத்திற்கெல்லாம் பட்கல் துறைமுகத்தைத் தாக்கிக் கொள்ளையடித்தான். சோழமண்டலக் கரையில் அவன் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தானென்பதை நாம் மேலே கண்டோம். அவனுக்குப்பின் கோவாவின் ஆளுநனான ஜோவா டி காஸ்டிரோவுடன் 1547இல் ராமராயன் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டான். அதன் பயனாக, விஜயநகரம், குதிரை வாணிகத்தின் தனியுரிமையைப் பெற்றது. அதன்பின் 1558ஆம் ஆண்டு வரையில் ராமராயன் திடீரென்று சேன்தோமைத் தாக்கினான். சேன்சோமிலிருந்த ரோமன் கத்தோலிக்கர்கள் இந்துக் கோயில்கள் பலவற்றை அழித்துவிட்டார்கள் என்று அவனுக்குப் பல முறையீடுகள் வந்திருந்தன. மேலும், சேன்தோம் குடிமக்கள் மிகவும் பணக்காரர்களென்று அவன் கேள்விப்பட்டிருந்தான். அதனால் அவன் ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்த நினைத்தான். சேன்தோமைத் தாக்குவதன் மூலம் அவன் தன்னுடைய மதத்தைக் காப்பது மட்டுமன்றி. அங்கிருந்த செல்வத்தில் ஒரு பகுதியை அடைந்து தன் கருவூலத்தை நிரப்புவதற்கும் விரும்பினான். சேன்தோமைக் கைப்பற்றியபின் அவன் நூறாயிரம் பகோடாவைத் திறையாகக் கேட்டான். அதில் ஒரு பாதியை உடனே செலுத்த வேண்டுமென்றும் மறுபாதியை ஓராண்டிற்குள் செலுத்த வேண்டும் என்றும் அவன் நிபந்தனை விதித்தான். மறுபாதி செலுத்தப்படும் வரையில் தன்னிடம் பிணையாக வைத்துக்கொள்வதற்காக சேன்தோமின் குடிமக்களுள் மிகவும் முக்கியமான
46

ஐந்துபேரை அவன் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனான். சேன்தோமுக்கு உதவி வாராமல் தடுப்பதற்காக ராமராயன் தன்னுடைய சிற்றப்பன் மகன் விட்டலராயனை அதே சமயத்தில் கோவாவின் மீது படையெடுக்கச் செய்தான். இக்கேரித் தலைவன் சங்கண்ண நாயக்கன் அந்தப் படையெடுப்பில் விட்டலராயனுக்குத் துணை புரிந்தான். போர்ச்சுக்கீசியருக்கு இவ்வாறு பல இடையூறுகள் நேர்ந்தாலும் அவர்கள் மலையாளக் கரையில் கொள்ளையடிப்பதையும் சூறையாடுவதையும் நிறுத்தவில்லை.
ராமராயன் தட்சிண முஸ்லிம் ராஜ்யங்களின் விஷயத்தில் கடைப்பிடித்த தவறான கோட்பாடுதான் ரட்சசி - தங்கடிச் சண்டைக்குக் காரணமாயிற்று என்று நாம் முன்பு கூறினோம். அவன் அந்த ராஜ்யங்களோடுவைத்துக்கொண்ட தொடர்புகளையும் ரட்சசி தங்கடிச் சண்டைக்குக் காரணமாயிருந்த தொடர் நிகழ்ச்சிகளையும் பற்றி இப்போது நாம் விவரமாகக் கூறுவோம். பிஜப்பூரும் அகமதுநகரும் 1542-43இல் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டன. அதன்படி பிஜப்பூர் சுல்தான் விஜயநகரத்தின் விஷயத்தில் தன்னுடைய உசிதப்படி நடந்து கொள்ளலாமென்றும் அதில் அகமதுநகர் தலையிடாதென்றும், அதுபோலவே பீடாரின் விஷயத்தில் அகமதுநகர சுல்தான் தன்னுடைய உசிதப்படி நடந்துகொள்ளலாமென்றும் அந்த விஷயத்தில் பிஜப்பூர் தலையிடாதென்றும் இரு சுல்தான்களும் ஒப்புக்கொண்டார்கள். அதன்பின் இப்ராஹிம் அடில்ஷா விஜயநகர ராஜ்யத்தின்மீது படையெடுத்தான். ஆனால், கேலடித் தலைவன் சதாசிவ நாயக்கன் இப்ராஹிமை வென்று துரத்தினான். பீடாருக்குச் சொந்தமான கல்யாணிக்கோட்டையைக் கைப்பற்றுவதற்கு 1548ல் ராமராயன் பர்ஹான் நைஜாம் ஷாவுக்குத் துணை செய்தான். பர்ஹான் 1553இல் இறக்கும் வரையில் கல்யாணிக் கோட்டை அவன் வசத்திலேயே இருந்தது. அவனுடைய மகன் குதுப்ஷாவுடன் நைஜாம்ஷா கோல்கொண்டா சுல்தானாகிய இப்ராஹிம் குதுப்ஷாவுடன் ஒர் உடன்படிக்கை செய்துகொண்டு, பிஜப்பூர் மீது படையெடுத்து, 1557இல் குல்பர்காவை முற்றுகையிட்டான். இப்ராஹிம் அடில்ஷா தனக்குத் துணைசெய்யுமாறு
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 56
ராமராயனை வேண்டிக்கொண்டான். ராமராயனும் உடனே தன் படையுடன் சென்றான். ஆனால், அவன் போர் செய்து ரத்தஞ் சிந்த விரும்பவில்லை. எனவே, அவன் அப்போது மாறுபட்டிருந்த எல்லா சுல்தான்களையும் அழைத்து, பீமா நதியும் கிருஷ்ணா நதியும் கூடுகிற இடத்தில் ஒரு மாநாடு கூட்டினான். அந்த மாநாட்டில் நடந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக, பரஸ்பர உதவி பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று ஏற்பட்டது. அதன்படி, அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளுள் யாதேனும் ஒன்று வன்முறைத் தாக்குதலுக்குட்பட்டால், ஏனைய நாடுகள் ஒன்று சேர்ந்து அவ்வாறு தாக்குதலைத் தொடங்கிய நாட்டை எதிர்க்க வேண்டுமென்றுமுடிவு செய்யப்பட்டது. இந்த நாளில் அந்த ஒப்பந்தத்தைக்
கூட்டுப்பிணைய ஒப்பந்தம்' என்று கூறுவர்.
இந்த நால்வர் மாநாட்டிற்குச் சிறிது காலத் திற்குப்பின் இப்ராஹிம் அடில்ஷா இறந்துபோனான். அவனுக்குப்பின் அவனுடைய இளவயது மகன் அலி அடில்ஷா பட்டத்துக்கு வந்தான். பிஜப்பூருக்கும் விஜயநகரத்துக்கும் இருந்த இனிய தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் அலி அடில்ஷா வழக்கத்திற்கு மாறான செயல் ஒன்றைச் செய்தான் என்று பெரிஷ்டா கூறுகிறார். அவன் பட்டத்துக்கு வந்த சிறிது காலத்திற்குள் ராமராயனுடைய மக்களுள் ஒருவன் இறந்து போனான். அதற்காகக் தன் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்ள விரும்பிய அலி விஜயநகருக்கே நேரில் சென்றான். அங்கு அவன் மிகுந்த மரியாதையுடன் வரவேற்கப்பட்டான். ராமராயனுடைய மனைவி அவனைத் தன் தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டாள். மூன்றுநாள் விஜயநகரில் தங்கியபின் அலி பிஜப்பூருக்குப் புறப்பட்டான். அப்போது ராமராயன் அவனை நகருக்கு வெளியிற் சென்று வழியனுப்பவில்லை. அந்த அவமதிப்பை அலி தன் மனத்தில் நிரந்தரமாக வைத்துக்கொண்டான். தன்னுடைய நட்பைப் பெறுவதற்காக சுல்தான் இவ்வளவு பணிவாக நடக்கிறானென்றால் அவனுடைய வலிமை மிகவும் குறைந்திருக்கவேண்டுமென்று TTLo.JTusör எண்ணினான் போலும்.
நால்வர் கூட்டுப்பிணைய ஒப்பந்தத்தை முதலில் மீறியவன் ஹூசைன் நைஜரம் ஷாவே. அவன்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

1560இல் பிஜப்பூர் மீது படையெடுத்தான். அலி விஜயநகருக்கு ஒடி ராமராயனுடைய துணையை நாடினான். ராமராயனும் துணைபுரிய இசைந்தான். மேலும், ஒப்பந்தப்படி கோல்கொண்டா சுல்தான் இப்ராஹிம் குதுப்ஷாவும் பிஜப்பூரின் துணைக்கு வரவேண்டுமென்று ராமராயன் கூறினான். அவன் விருப்பமில்லாமலே அதற்கு இணங்கினான். ஆனால், கூட்டாக வந்த படைகளைக் கண்டவுடனே நைஜாம்ஷா பின்னடைந்து தன்னுடைய ராஜ்ய எல்லைக்குள் சென்றுவிட்டான். கல்யாணியைக் காக்கும் பொறுப்பைத் தன்னுடைய இந்துத் தளபதிகளுள் ஒருவனான போப்பால் ராஜிடம் நைஜாம்ஷா ஒப்படைத்தான். கூட்டுப்படைகளுள் ஒரு பகுதியைக் கல்யாணி முற்றுகைக்காக விட்டுவிட்டு, அடில்ஷாவும் ஏனையோரும் அகமது நகரத்தின்மீது சென்றார்கள். கூட்டுப்படைகள் நைஜாம்ஷாவை ஜம்கெட் என்னுமிடத்தில் தோல்வியுறச் செய்தன. புறமுதுகிட்டு ஓடிய அவனைக் கூட்டுப்படைகள் தெளலதாபாத் வரையில் துரத்திச் சென்றன. இனிமேல் எதிர்த்துநிற்க முடியாதென்று உணர்ந்த நைஜாம்ஷா கல்யாணியை அலி அடில்ஷாவுக்குக் கொடுத்துச் சமாதானம் செய்துகொண்டான். அதனால் அடில்ஷா ராமராயனுக்கு மிகவும் கடமைப்பட்டவன் ஆனான். அதன்பின் ராமராயன் பீடாரின்மீது படையெடுத்து பரீதுஷாவைத் தோல்வியடையச் செய்தான். அதனால் ராமராயன் செய்யும்போர்களில் அவனுக்குத் துணை புரிவதற்குப் பரீதுஷா இசைந்தான்.
ராமராயன் முதலில் கோல்கொண்டா சுல்தான் குதுப்ஷாவின் அவையில் ஒர் அலுவலனாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவன். எனவே, அந்த ராஜ்யத்தின் உள்நாட்டு நிலையைப் பற்றி அவன் நேரடியாக அறிந்திருந்தான். அன்றியும் அந்த ராஜ்யத்தின் பிரபுக்களுள் பலர் அவனுடைய நண்பர்களாய் இருந்தார்கள். இப்ராஹிம் குதுப்ஷா, கோல்கொண்டாவின் அரசனாவதற்கு முன் தன்னுடைய சகோதரனுடைய சீற்றத்திலிருந்து தப்புவதற்காக விஜயநகருக்கு ஓடி வந்து அடைக்கலம் புகுந்தான். பின்னர், 1550இல் அவன் சகோதரன் இறந்த பிறகு ராமராயன் அவன் கோல் கொண்டாவின் அரசனாவதற்குத் துணைபுரிந்தான். அதனால், தொடக்கத்தில் இப்ராஹிம் குதுப்ஷாவும்
47

Page 57
ராமராயனம் நண்பர்களாய் இருந்தார்கள். ஆனால், நாளடைவில் அவர்களுடைய தன்னலப் பற்றுகள் அவர்களுடைய நட்புறவைச் சிறிது சிறிதாகத் தேய்க்கத் தொடங்கின. அதனால் அகமது நகருக்கெதிராகப் போர்செய்வதற்கு ராமராயன் அழைத்தபோது இப்ராஹிம் குதுப்ஷா அரை மனதுடன்தான் இசைந்தான். பின்னர், அவன் பிஜப்பூருக்கெதிராக வெளிப்படையாகவே பகைமை பாராட்டி, அகமது நகருடன் சேர்ந்து கொண்டு கல்யாணியை முற்றுகையிட்டான். அதனால் கல்யாணியைக் காப்பதற்கு ராமராயன் சென்றான். அதே சமயத்தில் கோல்கொண்டா ராஜ்யத்தின் தென்மாவட்டங்களின்மீது படையெடுக்குமாறு ராமராயன் தன்னுடைய தம்பி வேங்கடாத்திரிக்கு ஆணையிட்டான். அதனால் குதுப்ஷாவும் நைஜாம்ஷாவும் கல்யாணி முற்றுகையைக் கைவிட்டுப் பின்னடைந்தார்கள். ராமராயன், நைஜாம்ஷாவைத் துரத்திச் சென்றான்; அடில்ஷா குதுப்ஷாவைத் துரத்திச் சென்றான். விஜயநகரப் படைகள் மீண்டும் அகமது நகரை முற்றுகையிட்டன. ஆனால், அண்மையிலிருந்த ஆற்றில் வெள்ளம் வந்து விட்டதால் விஜயநகரப் படைகள் பின்னடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னடையும்போது அவற்றிற்குச் சேதமும் ஏற்பட்டது. அடில்ஷாவிடம் தோல்வியடைந்த குதுப்ஷா பல தொல்லைகளுடன் தன் தலைநகருக்குத் திரும்பினான். வேங்கடாத் திரியின் படையெடுப்பால் அங்கே மிகுந்த குழப்பம் ஏற்பட்டிருந்தது. விரைவில் ராமராயனும் அகமது நகரிலிருந்து திரும்பி கோல்கொண்டாமீது சென்றான். அவனுடைய கவனத்தை வேறுபக்கம் திருப்பும் நோக்கத்துடன் குதுப்ஷா கொண்ட வீட்டைத் தாக்கினான். ஆனால், அங்கும் அவன் தோல்வியே கண்டான். அதன்பின் அவனுடைய நாட்டை விஜயநகரப்படைகள் சூறையாடி அங்கிருந்த முக்கியமான எல்லாக் கோட்டைகளையும் கைப்பற்றிக் கொண்டன. இறுதியில், சுமார் 1563ல், கோல்கொண்டா, கணபுரம், பங்கல் ஆகிய நகர்களை ராமராயனுக்குக் கொடுத்துக் குதுப்ஷா சமாதானஞ் செய்துகொண்டான். அந்தப் போர் விஜயநகருக்கும், கோல்கொண்டாவுக்கும் இடையில் இருந்த பிளவை அதிகமாக்கியது. முஸ்லிம் ராஜ்யங்களின் தோல்விக்கும் மானக்கேட்டுக்கும் மீண்டும் மீண்டும் காரணமாயிருந்த இந்து ராஜ்யமான விஜயநகரத்தை
48

அழித்தே தீர்வது என்று இப்ராஹிம் குதுப்ஷா உறுதி பூண்டான். முஸ்லிம் ராஜ்யங்களிலிருந்து சென்ற தூதர்களையும் ராமராயன் உரிய மதிப்புடன் நடத்தவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தங்களுக்குள் ஒற்றுமையில்லாதது ராம ராயனுக்குச் சாதகமாய் இருந்தது என்பதை முஸ்லிம் அரசர்கள் உணர்ந்தார்கள். விஜயநகரப் படைகளின் தாக்குதலால் ஏனைய முஸ்லிம் அரசர்களைவிட அதிகமாக இழப்புக்குள்ளாகியிருந்த இப்ராஹிம் குதுப்ஷாவும் ஹ9சேன் நைஜாம்ஷாவும் தான் விஜயநகரத்திற்கு எதிராக முஸ்லிம் கூட்டணியை உருவாக்குவதற்கேற்ற முயற்சியைத் தொடங்கியவர்க ளென்று நாம் கருதலாம். அகமது நகரத்தின்மீதும் கோல்கொண்டாமீதும் படையெடுத்தபோது விஜயநகரப் போர்வீரர்கள் முஸ்லிம்களுக்குப் புனிதமான இடங்களையழித்தும் முஸ்லிம் குடிமக்களைக் கொன்றும் இன்னும் பலவகையிலும் இழைத்த தீமைகள் ராமராயன்மீது முஸ்லிம் சுல்தான்கள் கொண்ட வெறுப்புக்கும் பகைமைக்கும் முக்கியமான காரணமாக இருந்தன என்று பெரிஷ்டா உறுதியாகக் கூறுகிறார். அகமது நகரத்திற்கும் பிஜப்பூருக்கும் ஏற்பட்ட அரசியல் கூட்டுறவு திருமண உறவுகளால் வலிமைபெற்றது. ஹ9சேன் நைஜாம்ஷாவின் மகள் சாந்துபீபியை அடில்ஷாவும், 9660)||60)lu தங்கைகளுள் ஒருத்தியை ஹ9சேனுடைய மூத்த மகனும் மணந்து கொண்டார்கள். அந்த இரு திருமணங்களும் ஒன்றாகவே நடந்தன. அந்தத் திருமணங்கள் நடந்து முடிந்த சிறிது காலத்திற்குள் புனிதப் போருக்குத் தேவையான ஆயத்தங்கள் தொடங்கின. தட்சிண முஸ்லிம் சுல்தான்கள் ஐவருமே ராமராயனை எதிர்த்துப் போரிட்டார்களென்று இந்து வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. ஆனால், முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ள குறிப்புகளில் பீடார் சுல்தானுடைய பெயர் இடம்பெறவில்லை. வஞ்சகனான அலி அடில்ஷா இறுதிவரையிலும் இரு தரப்பினரிடத்திலும் நட்புறவாக இருப்பதாகவே காட்டிக்கொண்டான். கடைசியாக முஸ்லிம் படைகள் பிஜப்பூர்ச் சமவெளியில் ஒன்று திரண்டு, 1564ஆம் ஆண்டின் இறுதியில், தென்திசை நோக்கி அணிவகுத்துச் சென்றன.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 58
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடக்க விருந்த மிகப்பெரும் போர் விரைவில் தொடங்கப் போகின்றதென்பதை உணர்ந்த ராமராயன் 1564ஆம் ஆண்டு விஜயதசமியன்று (செப்டெம்பர் 15) தன்னுடைய பிரபுக்களிடம் அந்தச் செய்தியைச் சொல்லி, இருக்கிற படைகள் அனைத்தையும் காலங்கடத்தாது ஒன்று திரட்டுமாறு ஆணையிட்டான். பல வரலாற்றாசிரியர்கள் இந்தச் சண்டையைப் பற்றிய குறிப்புகளை எழுதியிருக் கிறார்கள். அதிற் கலந்துகொண்ட போர்வீரர்களின் எண்ணிக்கையைப் பற்றி அவர்கள் எழுதியுள்ள குறிப்புகளை நாம் அப்படியே நம்பிவிட இயலாது. எனினும், அந்தச் சண்டையில் இருதரப்பிலும் மிகப் பெருந்தொகையான போர்வீரர்கள் கலந்து கொண்டார்களென்பதில் ஐயமில்லை. 1564 டிசம்பர் 26ஆம் நாளன்று முஸ்லிம் படைகள் கிருஷ்ணா நதிக்கு அருகிலுள்ள தலைக்கோட்டை என்னும் அரண்பெற்ற சிறிய நகரத்தை அடைந்தன. ராமராயன் மிகத் தைரியமாகவும் தன்னுடைய வலிமையில் மிகுந்த நம்பிக்கை உடையவனாகவும் இருந்தான். எதிரிகள் கிருஷ்ணா நதியைக் கடக்காதவாறு காவல் புரிவதற்காகப் பலவகைப் போர்வீரர்களையும் கொண்ட ஒரு வலிமைமிக்க படையைத் தன் தம்பி திருமலையின் தலைமையில் அவன் முதலில் அனுப்பினான். அதன்பின் அவன் தன்னுடைய இன்னொரு தம்பி வேங்கடாத்திரியை அனுப்பினான். இறுதியில் எஞ்சியிருந்த படைகளுடன் அவன் தானே சென்றான். இந்துப் படைகள் கிருஷ்ணா நதியின் தெற்கில் முகாமிட்டிருந்தன. முஸ்லிம் படைகள் அந்நதியின் இரு கரையிலும் பாசறை அமைத்திருந்தன. இறுதிச் சண்டையைப் பற்றியும் அதற்குமுன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றியும் ஒரு சார்பான குறிப்புகளைப் பலர் எழுதி வைத்திருக் கின்றனர். ஆனால், அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நடந்தது நடந்தவாறே இப்போது எழுதுவது மிகவும் கடினம். இறுதிச் சண்டை நடந்த களம் கிருஷ்ணா நதியின் தென்கரையில் இருந்தது. ஆனால், அந்த நதியின் வடகரையில் ஒன்றுக்கொன்று பத்துக்கல் தள்ளியிருந்த ரட்சசி என்னும் கிராமமும் தங்கடி என்னும் கிராமமும் தலைக்கோட்டையைவிடப் போர்க்களத்துக்கு அருகிலிருந்ததால் அந்தச் சண்டையைத் தலைக்கோட்டைப் போர் என்று
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

சொல்லாமல் ரட்சசி - தங்கடிப் போர் என்று வரலாற்றாசிரியர் சிலர் கூறுகின்றனர்.
இருதரப்புப் படைகளும் ஒரு மாதகாலம் ஒன்றையொன்று எதிர்த்து நின்றன. அப்போது பூர்வாங்கமான பலப் பரீட்சைகள் பல நடந்தன. அத்தகைய பரீட்சை ஒன்றில் நைஜாம்ஷாவும் குதுப்ஷாவும் கடுமையான தோல்வி அடைந்தார்கள். அதனால் எதிரிகளை ஏமாற்றுவதற்கு ஏற்ற ஏதாவது தந்திரத்தைக் கையாள்வது இன்றியமையாதது என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். வலிமைமிக்க ராயனோடு சமாதானஞ் செய்துகொள்ள விரும்புவதாக நடித்து, அதற்குரிய பேச்சுவார்த்தை களையும் அவர்கள் தொடங்கினார்கள். அதே சமயத்தில் அவர்கள் அடில்ஷாவுடன் பேசி அவனுடைய இரண்டுங்கெட்டான் நிலையைக் கண்டித்து அவனுடைய துணையை உறுதியாக்கிக் கொண்டார்கள். ராமராயனுடைய படையிலிருந்த முஸ்லிம் தளபதிகளுடன் அவர்கள் ரகசியத் தொடர்பு கொண்டிருக்கக்கூடும். எல்லா ஆயத்தங்களும் முடிந்த பிறகு, போலித் தாக்குதல் ஒன்றின் மூலம் அவர்கள் எதிரிகளின் கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டு, கிருஷ்ணா நதியைக் கடந்து, இந்துப் படைகளின்மீது பெருந்தாக்குதல் ஒன்றைத் தொடங்கினார்கள். எதிர்பாராது நிகழ்ந்த அந்தத் தாக்குதலைக் கண்டு மனந்தளராமல் ராமராயன் அதனைச் சமாளிப்பதற்குரிய வகையில் தன் படைகளை அணிவகுத்து நிறுத்தினான். இறுதிச் சண்டை 1565 ஜனவரி 23ஆம் நாள் நடந்ததென்று பெரிஷ்டாவும் சூவலும் சொல்கிறார்கள். ராமராயனும் அவன் உடன்பிறந்தார் இருவரும் சண்டையில் கலந்துகொண்டார்கள். தன்னுடைய முதுமையையும் பாராது ராமராயன் ஒரு சிவிகையில் அமர்ந்து போர்த்திற நடவடிக்கைகளை இயக்கினான். அவன் மைய அணிக்குத் தலைமை தாங்கினான். அந்த முனையில் அவனுடைய படைகளை ஹ9சேன் நைஜாம்ஷாவின் தலைமையிலிருந்த படைகள் எதிர்த்தன. திருமலையின் தலைமையில் போர் செய்த இடப்புற அணியை அலி அடில்ஷாவின் தலைமையில் இயங்கிய பிஜப்பூர்ப் படைகள் எதிர்த்தன. வலப்புற அணிக்கு வேங்கடாத்திரி தலைமை தாங்கினான். அதனை ஆமதாபாத் பீடார் சுல்தான் கோல் கொண்டா சுல்தான் ஆகியவர்களுடைய தலைமை
49

Page 59
யிலிருந்த படைகள் எதிர்த்தன. நன்றாகச் சண்டை செய்த விஜயநகரப்படைகள் முதலில் வெற்றிபெற்றன. ஆனால், ராமராயனுடைய இரு முஸ்லிம் தளபதிகள் திடீரென்று எதிர்க்கட்சியில் சேர்ந்துகொண்டார்கள். அவர்களுள் ஒவ்வொருவரும் எழுபது எண்பதாயிரம் வீரர்களுக்குத் தலைமை தாங்கியவர். அதன்பின் ஏற்பட்ட நிலைமை சீசர் பிரடரிக் பின்வருமாறு விபரிக்கிறார்.
இரு தரப்புப் படைகளும் மோதின. ஆனால், சண்டை சிறிது நேரத்தில் முடிந்துவிட்டது. அது நான்கு மணி நேரங்கூட நீடிக்கவில்லை. சண்டை மும்முரமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் அந்த இரண்டு துரோகிகளும் தங்களுடைய போர் வீரர்களுடன் திடீரென்று தங்கள் அரசனுக்கு எதிராகத் திரும்பிவிட்டார்கள். அதனால் ஏற்பட்ட பெருங்குழப்பத்தைக் கண்டு அதிர்ச்சியும் அச்சமும் அடைந்த விஜயநகரப் படைகள் களத்தைவிட்டு ஒடத்தொடங்கின.
ராமராயன் நைஜாம்ஷாவி கையில் மாட்டிக் கொண்டான். அவன் உடனே ராமராயனுடைய தலையை வெட்டி, அதனை ஓர் ஈட்டி முனையில் மாட்டி, இந்துப் போர்வீரர்கள் அனைவரும் பார்க்குமாறு உயர்த்திப் பிடித்தான். அதனைக் கண்டு களத்தை விட்டு ஓடிய இந்துப் போர்வீரர்களைத் துரத்திக்கொண்டு போன முஸ்லிம் படையினர் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைக் கொன்றனர். இந்துப்படைகளில் பெருங்குழப்பம் ஏற்பட்டது. திரும்பி நின்று போர் புரிவதற்கும் தலைநகரைக் காப்பதற்கும் எவ்வித முயற்சியையும் யாரும் செய்யவில்லை. தலைநகருக்குச் செல்லும் வழி திறந்து கிடந்தது. தோற்றுப்போன செய்தியோடு போர்க்களத்திலிருந்து மனமுடைந்து திரும்பிய போர்வீரர்களும் அரசகுமாரர்களுமே தலைநகரத்திற்குள் முதலில் நுழைந்தார்கள். தலைநகரத்தின் குடிமக்கள் எக்கேடு கெட்டாலும் சரியென்ற முறையில் திருமலை கருவூலத்திலிருந்த செல்வங்கள் அனைத்தையும் வாரி, 1550 யானைகளின்மீது ஏற்றிக்கொண்டு, சிறையிலிருந்த அரசன் சதாசிவராயனுடனும் அரச குடும்பத்தைச் சேர்ந்த மகளிருடனும் தப்பி ஒடிவிட்டான்.
50

வெற்றிபெற்ற முஸ்லிம்படைகள் விஜயநகருக்குள் நுழைவதற்குள், திருடர்களும் காடுவாழ் மக்களும் கூட்டங் கூட்டமாக அந்த நகருக்குள் நுழைந்து, அங்கு வாழ்ந்த ஆகூழில்லா மக்களைத் துன்புறுத்தி, அவர்களுடைய வீடுகளையும், கடைகளையும் கொள்ளையடித்தார்கள். அதன்பின் முஸ்லிம் போர்வீரர்கள் வந்தார்கள். “அவர்கள் நகர மக்களைத் தங்கள் வாளால் வெட்டி வீழ்த்தினார்கள். வீடுகளுக்குத் தீ வைத்தார்கள். கோடரியும் கடப்பாரையும் கொண்டு கட்டிடங்களை இடித்துத் தகர்த்தார்கள்; எத்தனையோ நாள் இந்த நாச வேலையை அவர்கள் தொடர்ந்து செய்தார்கள். இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்று குவித்தவக் கூற்று என்று மக்கள் அச்சத்தினாலும் துன்பத்தினாலும் ஒருநாளைக்கு எத்தனையோ முறை செத்துப் பிழைத்தார்கள். மீண்டும் சாவதற்கு உலக வரலாற்றில் இத்தகையதொரு நாசவேலையையாரும் எங்கும் எப்போதும் கண்டிருக்க முடியாது” என்று கூறலாம். அது எவ்வளவு பெரிய நகரம் எவ்வளவு அழகானது எவ்வளவு வீறார்ந்தது! அதை நாம் நேற்றுத்தான் கண்டுகளித்தோம். அந்தோ! இன்று அது அழிந்து வீழ்ந்துவிட்டது. நேற்று அந்த நகரத்தில் மக்கள் பொங்கி வழிந்தார்கள். பல்வேறு தொழில்களிலும் அவர்கள் பரபரப்பாக ஈடுபட்டார்கள். செல்வச்செழிப்பில் அந்த நகரம் செம்மாந்துநின்றது. ஆனால், இன்று அழிந்துவிட்டது ஐயகோ, எவ்வளவு கம்பீரமான நகரம் எவ்வளவு விரைவில் அழிந்துவிட்டது வெறிபிடித்த விலங்கு போன்ற பகைவர்கள் அதனை இன்று பிடித்து, பல்லாயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து, கட்டிடங்களையெல்லாம் இடித்துத் தகர்த்துவிட்டார்கள். அந்த வெறிச் செயலை, கொலைச்செயலை, பலநாள் தொடர்ந்து நடந்த அந்த மிருகத்தனத்தை அந்தப் பயங்கரமான அழிவு வேலையை விவரிக்கச் சொற்களும் உளவோ? அந்த அழிவிலிருந்து விஜயநகரம் மீளவேயில்லை. அதனைப்பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்று திருமலை சிறிதுகாலத்திற்குப்பின் முயன்றான். ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
திருமலை பெனுகொண்டாவிற்குக் குடியேறி, வலிமைமிக்கபடையொன்றினை மீண்டும் உருவாக்கப்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 60
பல வகையிலும் முயன்றான். பணத்தட்டுப்பாடு சமாளிக்கமுடியாமல் போனபோது, போர்த்துக்கீச வாணிகர்களிடமிருந்து அவன் பல குதிரைகளை வாங்கிக்கொண்டு, அவற்றுக்குப் பணங் கொடுக்க மறுத்துவிட்டான். விஜயநகரக் குடிமக்கள் ராமராயனுடைய மகன் திம்மன் என்ற பெத்த திருமலைதான் பகர ஆளுநனாக (அதாவது, சதாசிவராயன் பெயரில் ஆட்சி புரிபவனாக) இருக்கவேண்டும் என்று விரும்பினார்கள். திருமலை விஜயநகரை விட்டுவிட்டுப் பெனுகொண்டாவிற்குக் குடியேறியதற்கு அதுவும் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. நாட்டில் அமைதியின்மையும் குழப்பமும் ஆறாண்டு நிலவின. அதன்பிறகுதான் திருமலை தானே அரசனென்று அரியணையேற முடிந்தது. பயிற்சியும் அனுபவமும் உடைய சிவில் நிர்வாக அலுவலர்களைத் தள்ளிவிட்டு ராமராயன் தன்னுடைய உறவினர்களை உயர்பதவிகளில் அமர்த்தினான் என்பதை நாம் முன்பு கண்டோம். அந்தத் தவறான கோட்பாட்டின் தீய விளைவுகள் ராமராயனுடைய துன்பங்கள் அதிகரிப்பதற்குக் காரணமாயின. நாட்டின் பல பகுதிகளிலும் கலகங்கள் தோன்றின. குற்றஞ் செய்வோர் எண்ணிக்கையும் குற்றங்களும் அதிகரித்தன. பாளையக்காரர்கள் கொள்ளைக் கூட்டத்தினர் ஆகியவர்களுடைய கொடுமை மிகுந்தது. மதுரை, தஞ்சாவூர், செஞ்சி ஆகிய இடங்களிலிருந்த நாயக்கர்களுடைய ஆட்சி நடைமுறையில் முழு உரிமையுடைய ஆட்சியாகமாறியது இந்தக் காலத்தில்தான் என்று கூறலாம்.
பேரரசுக்கு இத்தகையதொரு பெருங்கேடு நேர்ந்த பின்னரும் பெத்த திருமலைக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. அவன் தன்னுடைய சிற்றப்பனுக்கு எதிராகத் தனக்கு உதவி செய்யுமாறு அலி அடில்ஷாவை வேண்டினான். அவன் முதலில் விஜயநகருக்குச் சென்றுபின்னர் பெனுகொண்டாவை முற்றுகையிடுவதற்கு ஒரு படையை அனுப்பினான். ஆனால், சவரம் சென்னப்பநாயக்கன் என்ற திறமைமிக்க தளபதியின் தலைமையில் சண்டையிட்ட பெனுகொண்டாவை அடில்ஷாவின் படைகள் பிடிக்க முடியவில்லை. திருமலை இப்போது நைஜாம்ஷாவின் துணையை நாடினான். நைஜாம்ஷா பிஜப்பூர் மீது படையெடுத்தான். அதனால், அடில்ஷா தன்னுடைய
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

நாட்டைக் காப்பதற்காக விஜயநகரிலிருந்து திரும்பினான் (1567). விரைவில், பிஜப்பூரைத் தாக்குவதற்காக நைஜாம்ஷாவும் குதுப்ஷாவும் திருமலையை அழைத்தார்கள். அவனும் அதற்கிசைந்தான். ஆனால், அடில்ஷா முஸ்லிம் அரசர்களோடு சமாதானஞ் செய்துகொண்டு, திருமலையை எதிர்த்து, 1568இல் அவனுடைய நாட்டைத் தன் முழுவலிமையுடனும் தாக்கி, ஆதோணியை முற்றுகையிட்டு, பெனுகொண்டா விலிருந்து ஆதோனிக்கு உதவி போய்ச் சேராமல் தடுப்பதற்காகப் பெனுகொண்டாவுக்கும் ஒரு படையை அனுப்பினான். பெனுகொண்டா அடில்ஷாவின் படையை எதிர்த்து மீண்டும் சமாளித்தது. ஆனால், ஆதோணி வீழ்ந்து விட்டது.
இத்தனை இன்னல்களுக்கிடையிலும் திருமலை விஜயநகரப் பேரரசின் பெரும்பகுதியைத் தன்னுடைய ஆதிக்கத்திலேயே வைத்திருந்தான். தென்னாட்டு நாயக்கர்களுடைய புதிய நிலையை அவன் வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லையெனினும், நடைமுறையில் அதனை ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தன்னுடைய நண்பர்களாக்கிக் கொண்டான். மைசூரில் ஆட்சிசெய்த வாடியர்களும், வேலூர், கேலடி ஆகிய இடங்களில் ஆட்சிசெய்த நாயக்கர்களும் இன்னும் பேரரசின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவே இருந்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் வழங்கிய மண்டலங்களின் நிர்வாகத்தைப் பொதுவாக மேற்பார்வை செய்வதற்கும் பேரரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் தனித்தனி அரசபிரதிநிதிகளைத் திருமலை நியமித்தான். தெலுங்கு நாட்டுக்குப் பெனுகொண்டாவைத் தலைநகராக்கி அதற்குத் தன் மூத்த மகன் சீரங்கனை அரச பிரதிநிதியாக நியமித்தான்.
கன்னட நாட்டுக்குத் தன் இரண்டாம் மகன் ராமனை அரச பிரதிநிதியாக நியமித்து, சீரங்கப் பட்டணத்தை அந்நாட்டின் தலைநகராக்கினான்; தமிழகத்துக்குச் சந்திரகிரியைத் தலைநகராக்கி அங்கு தன் கடைசி மகன் வேங்கடபதியை அரச பிரதிநிதியாக நியமித்தான். அவன் நலிவுற்ற கர்நாடகப் பேரரசுக்குப்புத்துயிரூட்டியவன்' என்னும் பட்டப்பெயரை வைத்துக்கொண்டு 1570ஆம் ஆண்டில் பேரரசனாக முடிசூடிக் கொண்டான்.
51

Page 61
ஆனால், அப்போதே அவன் முதுமை எய்தியவனா யிருந்தான். அதனால், அவன் சிறிதுகாலம் ஆட்சிசெய்தபின் அரச பதவியைத் துறந்துவிட்டான் என்பது தெரிகிறது. அதனால் அவனுடைய மூத்த மகன் சீரங்கன் 1572ல் அரசன் ஆனான். பேரரசின் எல்லைகள் சுருங்கிவிட்டன. எனினும், அது புத்துயிர் பெற்று மீண்டுமொரு நூற்றாண்டு நிலைத்து நின்றதற்குத்திருமலையின் முயற்சியேகாரணமாயிற்று
சதாசிவனுடைய கதி என்னவாயிற்று என்று நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவனைத் திருமலையின் மக்களுள் ஒருவன் கொலைசெய்து விட்டானென்று 1567இல் சீசர் பிரடரிக் கேள்விப்பட்டார். ஆனால், அது புதிய அரவீடு அரச மரபினரை விரும்பாத பகைவர்கள் கட்டிவிட்ட கதையாக இருக்குமென்று நாம் கருதலாம். சதாசிவன் பணிவிணக்கமான இயல்புடையவன். அவனால் யாருக்கும் தீங்கு நேராது என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். எனவே, அவனைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. அவன் சிறையிலேயே வாடி இறுதியில் இயற்கை மரணத்தை எய்தினான் என்று நினைப்பது பொருத்தமாக இருக்கும். 1576ஆம் ஆண்டு வரையில் வெளியிடப்பெற்ற பொறிப்புகளில் அவனுடைய பெயரை நாம் காண்கிறோம்.
திருமலை 1578 வரையில் உயிரோடிருந்தா னெனினும் அவனுடைய மகன் முதலாம் சீரங்கன் 1572ஆம் ஆண்டிலிருந்தே அரசனாக இருந்தான். பேரரசின் வலிமையை மீண்டும் நிலைநாட்டும் பணியை அவன் தொடர்ந்து செய்தான். ஆனால், அந்த முயற்சிக்குப் பல இடையூறுகள் நேர்ந்தன. அன்றியும், முஸ்லிம் அரசர்களுள் இருவர் பேரரசின்மீது மீண்டும் படையெடுத்துச் சில பகுதிகளைப் பிடித்துக் கொண்டனர். 1576இல் அலி அடில்ஷா ஆதோனியிலிருந்து ஒரு படையை அனுப்பிப் பெனுகொண்டாவை முற்றுகையிட்டான். தன்னுடைய தலைநகரைக் காக்கும் பணியைத் திறமைமிக்க தளபதி சென்னப்பனிடம் ஒப்படைத்துவிட்டுச் சீரங்கன் கருவூலத்திலிருந்த செல்வங்களை எடுத்துக்கொண்டு சந்திரகிரிக்குச் சென்றுவிட்டான். முற்றுகையைச் சென்னப்பன் மூன்றுமாதம் சமாளித்தான். அதற்குள் சீரங்கன்
52

கோல்கொண்டா சுல்தானுடைய துணையை நாடினான். அவனும் துணைக்கு வர இசைந்தான். அன்றியும், சீரங்கனே பெனுகொண்டாவுக்கு ஒரு 606) அனுப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தான். மேலும், அடில்ஷாவினுடைய இந்துத் தளபதிகளுள் ஒருவனைச் சீரங்கன் தன்பக்கம் இழுத்துக் கொண்டான். அந்த நடவடிக்கைகளின் விளைவாகச் சென்னப்பன் 1576 டிசம்பர் 21ஆம் நாள் அடில்ஷாவை வென்றான். அதனால் அடில்ஷா பிஜப்பூருக்குத் திரும்பிப் போய்விட்டான். ஆனால் அடுத்த மூன்றாண்டுகளுக்குள் இப்ராஹிம் குதுப்ஷா சிரங்கனோடு அண்மையில் செய்துகொண்ட உடன்படிக்கையைப் புறக்கணித்துவிட்டு விஜயநகரப் பேரரசின்மீது படையெடுத்தான். சீரங்கனை வெறுத்த பிரபுக்கள் சிலரோடு குதுப்ஷா ரகசிய ஒப்பந்தம் செய்திருக்கக்கூடும் என்று நினைக்க இடமிருக்கிறது. எனவே, அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் அவன் தக்க சமயம் பார்த்துப் பேரரசின்மீது தன் தாக்குதலைத் தொடங்கினான் என்று நாம் நினைக்கலாம். கோல்கொண்டா சுல்தானுடைய சேனையில் பதவிவகித்த முரஹரிராவ் என்னும் மராட்டியப் பார்ப்பனன் அஹோபலத்திலுள்ள செல்வமிகுந்த நரசிம்மர் கோயிலைக் கொள்ளையடித்து மட்டுமன்றி விஜயநகருக்குச் சொந்தமான பல ஊர்களையும் சூறையாடி அவற்றைக் கைப்பற்றிக் கொண்டான். ஆனால், அந்த ஊர்கள் எல்லாவற்றையும் விஜயநகரப் படைகள் பின்னர் மீட்டுக் கொண்டன.
கோல்கொண்டா சுல்தான் மீண்டும் படையெடுத்து, கொண்ட வீட்டுக்கு அருகிலிருந்த பகுதியைத் தாக்கினான். விஜயநகரப் படைகளுக்கும் கோல்கொண்டாப் படைகளுக்கும் வினுகொண்டா, கொண்டவீடு, சந்திரகிரி ஆகிய கோட்டைகளுக்கு அருகில் போர் நடந்தது. அந்தக் கோட்டைகள் அனைத்தையும் சீரங்கன் கைப்பற்றிக் கொண்டதாக அவனுடைய பொறிப்புகள் கூறுகின்றன. எனினும், உண்மையில் இப்ராஹிம்தான் பல வெற்றிகளைப் பெற்றுப் பல ஊர்களைப் பிடித்துக்கொண்டான் என்பது தெரிகிறது. அவ்வாறு அவன் அப்போது கைப்பற்றிய பகுதிகளை விஜயநகரம் பின்னர் மீட்கவேயில்லை. சீரங்கன் வெற்றிபெறாததற்குப் பல
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 62
காரணங்கள் இருந்தன. பேரரசு நடைமுறையில் பல பகுதிகளாகப் பிரிந்து போயிருந்தது. அவனுடைய சகோதரர்கள் அவனுக்குத் துணைபுரியவில்லை. பிரபுக்களுக்குள் பல கட்சிகள் இருந்தன. அதனால், அவர்கள் ஒருவரோடொருவர் சச்சரவிட்டுக் கொண்டிருந்தார்கள். மேலும், அவர்களுள் பலர் முஸ்லிம் அரசர்களோடு ரகசியத் தொடர்பும் வைத்திருந்தனர். அதனால் பேரரசின் வலிமை குறைந்து போய்விட்டது. சீரங்கன் 1585இல் பிள்ளையில்லாது இறந்துபோனான். அப்போது அவனுடைய கடைசித் தம்பி வேங்கடன் அரசனானான். திருமலையின் ஆட்சிக் காலத்தில் வேங்கடனுடைய தமையனான ராமன் சீரங்கப் பட்டணத்தின் அரச பிரதிநிதியாய் இருந்தான் என்பதை நாம் முன்பு கண்டோம். அவனுக்கு ஆண் மக்கள் இருவர் இருந்தார்கள். ஆனால், அவர்கள் இளவயதினராய் இருந்தார்கள். அப்போதிருந்த நிலையில் முதிர்ச்சியும் ஆற்றலும் உடைய ஒருவன் அரசனாக இருப்பது இன்றியமையாததாக இருந்தது. எனவே, பிரபுக்கள் ஜக்கராயன் என்பவன் தலைமையில் கூடி வேங்கடனையே அரசனாக்குவது என்று முடிவு செய்தார்கள். அவனும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மேலாகவே திறமையாக ஆட்சி புரிந்தான். அவன் 1585.86ல் தன்னுடைய முடிசூட்டு விழாவை நடத்தினான். அவன் ஆட்சி செய்த இருபத்தெட்டு ஆண்டு காலத்தில் பேரரசின் வலமும் வளமும் புத்துயிர் பெற்றன. விஜயநகரத்துக்குத் தீராத தொல்லையாயிருந்த தட்சிண முஸ்லிம்களுடைய படையெடுப்புகளைத் தன் படை வலிமையால் சமாளித்தான்; உள்நாட்டுக் கலகங்களை அடக்கி அமைதியை நிலைநாட்டினான்; நாட்டின் பொருளாதார வளத்தைப் பெருக்கினான்.
சீரங்கன் காலத்தில் கோல்கொண்டா அரசன் கைப்பற்றிக் கொண்ட ஊர்களை மீட்கும் பணியில் வேங்கடன் முதலில் தன் கவனத்தைச் செலுத்தினான். கோல்கொண்டா அரசன் இப்ராஹிம் 1580ஆம் ஆண்டில் இறந்து போன பிறகு அவனுடைய மகன் முகமது குலி குதுப்ஷா பட்டத்துக்கு வந்தான். வேங்கடன் குலி குதுப்ஷாவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யுமாறு கொண்டவீட்டுப் பகுதியில் இருந்த மக்களைத் தூண்டிவிட்டான். எதிர் நடவடிக்கையில் ஈடுபட்ட குலி குதுப்ஷா, கர்நூல் மாவட்டம்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

முழுவதையும் கடப்பை அனந்தப்பூர் மாவட்டங்களின் சில பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டு பெனுகொண்டாவையும் முற்றுகையிட்டான். அப்போது வேங்கடன் குலியுடன் சமாதானப் பேச்சைத் தொடங்கினான். தான் பெற்ற வெற்றிகளால் மனநிறைவடைந்த குலி பெனுகொண்டாவின் அண்மையிலிருந்த பகுதியினின்று திரும்பிப் போய்விட்டான். போரில் இவ்வாறு கிடைத்த தளர்வு நேரத்தை வேங்கடன் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான். நீண்ட முற்றுகையைச் சமாளிப்பதற்கு ஏற்றவாறு பெனுகொண்டாவை ஆயத்தம் செய்து கொண்டபின், வேங்கடன் மீண்டும் முஸ்லிம்களை எதிர்த்தான். மீண்டும் பெனுகொண்டாவை முற்றுகையிட்ட போது குலி தன் பிழையை உணர்ந்தான். அவனை வேங்கடன் தோல்வியுறச் செய்தான். அப்போது மழை தொடங்கிவிட்டதால், கிருஷ்ணா நதியில் வெள்ளம் வந்து, தான் திரும்பிப் போவதற்குரிய வழியை அடைத்து விடக்கூடும் என்பதை உணர்ந்த குலி, தான் புதிதாக வென்ற பகுதிகளை நிர்வாகம் செய்வதற்குரிய சில ஏற்பாடுகளை அவசரமாகச் செய்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டான். வேங்கடன் விரையிலேயே குத்தியைக் கைப்பற்றிக்கொண்டு கண்டிக் கோட்டையை முற்றுகை யிட்டான். அந்த முற்றுகையை விலக்குவதற்காகக் கொண்ட வீட்டிலிருந்து வந்த ஒரு படையை வேங்கடன் வழிமறித்துத் தோல்வியுறச் செய்து சிதறியோடப் பண்ணினான். இன்னொரு கோல் கொண்டா படை ருஸ்தம்கான் என்பவனுடைய தலைமையில் வந்தது. அதனை வேங்கடன் பெண்ணையாற்றின் கரையில் வழிமறித்துத் தாக்கித் தோல்வியடையச் செய்து சின்னாபின்னமாக்கினான். கண்டிக் கோட்டை வீழ்ந்தது. அதன்பின் வேங்கடன் வேறுபல கோட்டைகளையும் கைப்பற்றிக்கொண்டு கோல்கொண்டாப் படைகளைக் கிருஷ்ணா நதிக்கப்பால் விரட்டியடித்தான். பின்னர் குலி கிருஷ்ணா நதியையே விஜயநகர ராஜ்யத்தின் எல்லையாக ஏற்றுக்கொண்டான். இன்னும் கிழக்கேயிருந்த உதயகிரியும் 1589ஆம் ஆண்டுக்குள் வேங்கடனுடைய ஆட்சிக்குள் வந்தது. ஆனால், கொண்டவீட்டுப் பகுதி இன்னும் கொல் கொண்டாவின் ஆட்சியிலேயே இருந்தது. உள்நாட்டில் உண்டான குழப்பம் கோல்கொண்டா மீது செல்ல முடியாமல் வேங்கடனைத் தடுத்தது.
53

Page 63
வேங்கடன் அரசனான பின்னரும் பிரபுக்கள் தமக்குள் சச்சரவிட்டுக்கொண்டது மட்டுமன்றி அவ்வப்போது வேங்கடனையும் எதிர்த்துக் கலகம் செய்தார்கள். அவர்களை அடக்குவதில் வேங்கடனுடைய நேரமும் ஆற்றலும் விரயமாயின. எடுத்துக்காட்டாக, தம்மைய கவுடன் கோலாரில் கலகஞ்செய்தான். அவனை வேங்கடன் விரைவில் அடக்கி அவனிடம் திறையும் வசூல் செய்தான். ஆனால், அதைவிடப் பெரிய கலகமொன்று இப்போது கொடைமாவட்டங்கள் என வழங்கும் ராயலசீமையில் ஏற்பட்டது. அங்கே நந்தல கிருஷ்ணமராயனும் இன்னுஞ் சில பிரபுக்களும் சேர்ந்து 1597-98ல் வேங்கடனை எதிர்த்தார்கள். வேங்கடன் கிருஷ்ணமராயனை ஜம்புலமடகு என்னுமிடத்தில் தோல்வியுறச் செய்தான். அதன்பின் கிருஷ்ணமராயன் நந்தல (நந்தியால்) கோட்டையில் ஒளிந்துகொண்டான். வேங்கடன் அந்தக்கோட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை மூன்று மாதம் நீடித்தபின் கிருஷ்ணமராயன் வேங்கடனுக்குப் பணிந்தான். அவனை வேங்கடன் சந்திரகிரிச் சிறையிலடைத்துவிட்டான். கிருஷ்ணமராயன் சாகும்வரையிலும் சிறையிலேயே இருந்தான். ராமராயனுடைய சகோதரனான வேங்கடபதியின் பேரன் கண்டனவோலு கோபால ராஜூ என்பவனும் இன்னும் சில பிரபுக்களும் செய்த கலகத்தைத் தன்னிடம் உண்மையாக நடந்துகொண்டதளபதிகளின் உதவியோடு வேங்கடன் அடக்கினான். பின்னர் கலகக்காரர்களின் உடைமைகளை எடுத்துத் தனக்கு உதவிசெய்த தளபதிகளுக்கு வழங்கினான். தமிழகத்திலும் வேங்கடனுக்கு எதிராகக் கலகங்கள் தோன்றின. வேலூரிலிருந்த லிங்கம நாயக்கன் அந்தக் கலகங்களுக்குத் தலைமை தாங்கினான். பெரும்பேட்டுச் சீமை (செங்கல்பட்டு, மதுராந்தகம்) அமரத்தை (ராணுவ மானியத்தை) வேங்கடன் வெலுகோட்டி கஸ்தூரிரங்கப்பனுடைய மகன் யாச்சம நாயுடு என்பவனுக்குக் கொடுத்தான். லிங்கமனுடைய வலிமையைக் குறைப்பதற்கு அவன் உதவுவான் என்று வேங்கடன் எதிர்பார்த்தான். லிங்கம நாயக்கனுக்கு அடங்கிய நாகன் என்பவனுடைய ஆட்சியிலிருந்த முக்கியமான ராணுவ நிலையமான உத்தரமேரூரை யாச்சம நாயுடு கைப்பற்றிக் கொண்டான். அப்போது லிங்கம நாயக்கன் தன்னுடைய கட்டுப்பாட்டிலிருந்த கோட்டைத் தலைவர்களை மட்டுமன்றி செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்த
54

நாயக்கர்களையும் தன்னுடைய துணைக்கு அழைத்தான். மறுமலர்ச்சி பெற்றுக்கொண்டிருந்த பேரரசின் வலிமையைக் குறைப்பதற்கு அவர்களும் ஆர்வமாகவே இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பெரும் படையைத் திரட்டி, நாகனுடைய மைத்துனனான தாவுல பாப்ப நாயுடு என்பவன் தலைமையில் 1601ஆம் ஆண்டில் உத்தரமேரூர்மீது செலுத்தினார்கள். ஆனால், யாச்சமன் அஞ்சவில்லை. தன்னுடைய தம்பிசிங்கனுடைய துணையோடு அவன் தன்னைத்தாக்கவந்த படையை எதிர்த்தான். பின்னர் நடந்த சண்டையில் பாப்பன் உயிரிழந்தான். ஏனையோருள் பலர் களத்திலிருந்து ஓடிவிட்டனர்; மற்றவர்கள் சிறைப்பட்டார்கள். இவ்வாறு தன் முயற்சியில் முழு வெற்றியடைந்த யாச்சமனை வேங்கடன் பெரிதும் பாராட்டினான். ஆனால், லிங்கமனும் அவனுடைய கூட்டாளிகளும் தங்களுடைய முயற்சியைக் கைவிடவில்லை. வேங்கடன் லிங்கமனை வேலூருக்கு அருகில் தோல்வியடையச் செய்த பின்னர் சோணாட்டிற்குச் சென்று அங்கு நடந்த சண்டையிலும் கலகக்காரர்களை வென்றுவிட்டு, காவிரியைக் கடந்து சென்று மதுரை நாயக்கனுடைய நாடுகளைச் சூறையாடினான். இவ்வாறு வேங்கடன் தொடர்ந்து பெற்ற வெற்றிகளால் தமிழகத்தில் தோன்றிய கலகங்களின் அடிப்படை தகர்ந்தது. கலகக்காரர்கள் வேங்கடனுக்கு அடங்கிப் போனார்கள். ஆனால், லிங்கமன் மட்டும் பணியவில்லை. வேலூர்க் கோட்டையின் வலிமையில் அவனுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. சிறிது காலத்தில் அந்தக் கோட்டையையும் வேங்கடன் கைப்பற்றித் தன்னுடைய ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தான். லிங்கமன் தன்னுடைய பதவியையும் உடைமைகளையும் இழந்தான்.
1565ஆம் ஆண்டுக்குப்பின் பேரரசின் வட மாவட்டங்களின் மீது முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் படையெடுத்ததால் அந்தப் பகுதியிலிருந்த கிராமங்களே ராஜ்யத்தின் ஏனைய பகுதிகளைவிட மிகுந்த சேதத்துக்கும் துன்பத்துக்கும் உள்ளாயின. அவை மீண்டும் வளம் பெறுவதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுப்பதில் வேங்கடன் தன் கவனத்தைப் பெரிதும் செலுத்தினான். தன்னுடைய நிலங்களிற் பயிரிட இசைந்த குடியானவர்களுக்கு அவன் பயிரிடும் உரிமை, செலுத்தவேண்டிய கடமை
ஆய்வாங்கச் சிmப்பமலர் - 2009

Page 64
முதலிய விஷயங்களில் தாராள மனப்பான்மையுடன் நடந்துகொண்டான். பிரபுக்களும் அரசனைப் பின்பற்றினார்கள். அதனால், அவர்கள் விதித்த எளிய நிபந்தனைகளால் மனமுவந்த குடியானவர்கள் தங்களுடைய வழக்கமான தொழிலில் முன்போலவே ஈடுபட்டார்கள். வலுவிழந்து கொண்டிருந்த கிராம சபைகளுக்கு அவன் தன்னுடைய ஆதரவையளித்து அவை முன்போல் செயற்படுவதற்கு உதவினான். விருப்பு வெறுப்பின்றி நடுவுநிலையோடு நீதி வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அவன் எடுத்தான். வேங்கடன் அரசனானபோது பேரரசு சிதைந்துவிடும் நிலையில் இருந்தது. ஆனால், சுமார் முப்பதாண்டுகள் அவன் செய்த ஆட்சியின் பயனாக அந்த அழிவு நேராமல் காத்தான். அவன் 1614ல் இறக்குமுன் தன் அண்ணன் மகன் சீரங்கனைத் தனக்குப் பின் அரசனாக நியமித்தான்.
வேங்கடனுடைய ஆட்சிக்காலத்தில்தான் டச்சுக்காரர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் தங்களுடைய வாணிப நிலையங்களை நிறுவினார்கள். 1605இல் டச்சுக்காரர்கள் கோல்கொண்டா சுல்தானுடன் தொடர்புகொண்டு நைஜாம்பட்டினத்திலும் மசூலிப் பட்டினத்திலும் தங்களுடைய வாணிப நிலையங்களை நிறுவினார்கள். நறுமணச் சரக்கை வழக்கமாக வாங்கிய மேனாட்டு மக்கள் மிகவும் விரும்பியவையும் பலகாலம் அவர்கள் வாங்கிப் பயன்படுத்திப் பழகியவையும் ஆகிய வாணிபப் பொருள்கள் தங்களுக்குக் கிடைக்கவேண்டுமானால், கீழ்க் கடற்கரையில் இன்னுஞ் சற்றுத் தெற்கிலிருந்தவையும் இந்து ராஜ்யத்திற்குச் சொந்தமானவையும் ஆகிய சில இடங்களில் தங்கள் நிலையங்களை நிறுவவேண்டுமென்பதை டச்சுக்காரர்கள் விரைவில் உணர்ந்தார்கள். எனவே, தெக்ளுபட்டினத்தில் (சென் டேவிட் கோட்டை) ஒரு வாணிப நிலையத்தை நிறுவுவதற்கு அவர்கள் 1608இல் செஞ்சி நாயக்கனுடைய இசைவைப் பெற்றார்கள். இரண்டாண்டுகளுக்குப் பின் அவர்கள் பழவேற் காட்டில் ஒரு வாணிப நிலையத்தைத் தொடங்கு வதற்கும் தனியுரிமையோடு அங்கு வாணிபம் செய்வதற்கும் வேங்கடன் இசைவு தந்தான். சேன்தோமிலிருந்த போர்த்துக்கீசர்கள் பழவேற் காட்டைத் தாக்கக்கூடும் என்று டச்சுக்ாரர்கள்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அஞ்சினார்கள். அதனால், வேங்கடனுடைய பட்டத்தரசி பழவேற்காட்டில் ஒரு கோட்டையைக் கட்டத் தொடங்கினாள். அந்த வேலை விரைவில் முடியாததால் டச்சுக்காரர்களே தங்களுடைய செலவில் கோட்டையைக் கட்டிமுடித்து விட்டார்கள். அது அவர்களுக்கு நல்லதாகப் போயிற்று. வேங்கடன் இறந்த பிறகு விஜயநகரப் பேரரசில் உள்நாட்டுக் கலகங்களும் குழப்பமும் ஏற்பட்டன. அப்போது பழவேற்காட்டுக் கோட்டை டச்சுக் காரர்களுக்கு நல்ல பாதுகாப்பு அளித்தது. 161இல் ஆங்கிலேயர் பழவேற்காட்டில் இறங்குவதற்குச் செய்த முயற்சி தோல்வியடைந்தது. ஆனால், மிகவிரைவில் அவர்கள் நைஜாம்பட்டினத்திலும் மசூலிப்பட்டினத்திலும் வாணிபம் தொடங்கினார்கள். வேங்கடன் இறக்கும் தறுவாயிலிருந்தபோது அவர்கள் வேலூருடன் தொடங்கிய பேச்சு வார்த்தைகள் பயன் தரவில்லை. ஆனால், 1621இல் அவர்கள் டச்சுக்காரர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பயனாக அவர்களும் பழவேற்காட்டில் வாணிபம் செய்யலாம் என்று டச்சுக்காரர் ஏற்றுக்கொண்டனர். ஆனால், விரைவிலேயே ஆங்கிலேயர்கள் தங்கள் வாணிப நிலையத்தை முதலில் பழவேற்காட்டுக்குச் சிறிது வடக்கிலிருந்த ஆர்மகானுக்கு மாற்றி இறுதியில், 1639-40இல், மதராசுக்கும் மாற்றிக்கொண்டார்கள். 1620இல் டேனிஷ்காரர்கள் தரங்கம்பாடியில் தங்கள் வாணிப நிலையத்தை நிறுவினார்கள்.
இரண்டாம் வேங்கடனுக்குப் பல மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவனுக்கு ஆண்பிள்ளை இல்லை. அவனுடைய மனைவிகளுள் ஒருத்தி தன்னுடைய சேடி ஒருத்தியின் பிள்ளையை இரவல் வாங்கி அதனைத் தன் பிள்ளை என்று சொல்லி வளர்க்கத் தொடங்கினாள். அந்த மோசடியை அறிந்த வேங்கடன் அவள் மீதிருந்த விருப்பத்தால் இதை அறிந்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், நிலைமை மேலும் மோசமாவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அவன் தன் தமையன் ராமனுடைய மகன் சீரங்கனைத் தனக்குப் பின் அரசனாக நியமித்தான். ஆனால், வேங்கடனுடைய மகன் என்று சொல்லி அவனுடைய மனைவிகளுள் ஒருத்தி வளர்த்துவந்த பிள்ளையும் இருந்ததால் நிலைமை சிக்கலாகியது. சீரங்கனும் அவ்வளவாகத் திறமையும்
55

Page 65
விவேகமும் உடையவனல்லன். அவன் நிலங்களையும் பணத்தையும் அணிமணிகளையுந் தனக்குத் தருமாறு பிரபுக்களை வற்புறுத்தியதோடு விவேகமற்ற முறையில் அரசு அலுவலர்களையும் நியமித்தான். அதனால் பல பிரபுக்கள் அவனை வெறுத்தார்கள். பிரபுக்களுக்குள் இரு கட்சிகள் ஏற்பட்டன. வேங்கடனுடைய தனிப்பற்றுக்குப் பாத்திரமாயிருந்த மனைவியின் உடன்பிறந்தான் கொப்பூரிஜக்கராயனைத் தலைவனாகக் கொண்ட கட்சி வேங்கடனுடைய மகனை ஆதரித்தது. இன்னொரு கட்சி வெலுகோட்டி யாச்சம நாயக்கனுடைய தலைமையில் சீரங்கனை ஆதரித்தது. ஜக்கராயன் தன்னுடைய துணைவர்களான திம்மநாயக்கன் மகராஜன் ஆகியவர்களின் உதவியோடு சீரங்கனையும் அவனுடைய குடும்பத்தினர் அனைவரையும் பிடித்துச் சிறையில் அடைத்துவிட்டு, வேங்கடனுடைய மகனை அரசனாக்கி, பிரபுக்களிற் பலரைத் தன்வசப்படுத்தி, அவனுக்கு அரச மரியாதை காட்டுமாறு செய்தான். ஆனால், யாச்சமன் ஜக்கராயனை எதிர்த்து நின்று தன் கட்சிக்குத் துணை தேடத் தொடங்கினான். ஒரு வண்ணானுடைய உதவியால் அவன் சீரங்கனுடைய இரண்டாம் மகன் ராமனைச் சிறையிலிருந்து கள்ளத்தனமாகக் கடத்திக் கொண்டு வந்தான். சுரங்கம் ஒன்றின் வழியாகச் சீரங்கனைக் கடத்திக்கொண்டு வருவதற்காக அவன் செய்த முயற்சி தோற்றது. அதன்பின் சீரங்கன் மேலுங் கடுமையான காவலில் வைக்கப்பட்டான். ஜக்கராயன் இல்லாத நேரத்தில் வேலூர்க் கோட்டையிலிருந்த காவலர்களைக் கொலை செய்துவிடுமாறு கோட்டைத் தலைவனாயிருந்த இதி ஒபலேசனை யாச்சமன் தூண்டிவிட்டான். அவனும் அவ்வாறே செய்தான். காவலர் கொலையுண்ட செய்தியைக் கேட்டவுடன் யாச்சமன் வந்து கோட்டையைக் கைப்பற்றிக் கொள்வது என்பது அவர்கள் செய்து கொண்ட ஏற்பாடாக இருந்தது. ஆனால், அந்தச் செய்தியை முதலிற் கேள்விப்பட்ட ஜக்கராயன் வேலூருக்கு வேகமாகத் திரும்பி வந்தான். அதனால் யாச்சமனுடைய திட்டம் நிறைவேறவில்லை. அதன்பின், சீரங்கனையும் அவனுடைய குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிடுவதுதான் சூழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்கு ஒரே வழியென்று நினைத்த ஜக்கராயன் அவ்வாறே செய்துவிட்டான். சீரங்கன் பட்டத்துக்கு வந்து அப்போது நான்கு மாதங்களே ஆகியிருந்தன.
56

அந்தப் படுகொலையைக் கேள்விப்பட்ட மக்கள் பேரதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்தார்கள். அதனால் அவர்கள் ஜக்கராயனையும் அவனுடைய துணைவர்களையும் மிகப் பெரிதும் வெறுத்தார்கள். சீரங்கனுடைய குடும்பத்தில் தப்பிப் பிழைத்தவன் ராமதேவன் ஒருவன்தான். மக்கள் அவனிடம் மிகுந்த பரிவு காட்டினார்கள். தன்னுடைய முன்னெச்சரிக் கையான நடவடிக்கைகளால் ராமதேவனுடைய உயிரைக் காத்த யாச்சமன் அவனையே அரசன் என்று விளம்பரப்படுத்தினான். அதன்பின் ஒரு நீண்ட உள்நாட்டுப் போர் தொடங்கியது. அது பேரரசின் எல்லாப் பகுதிகளிலும் பரவியது. யாச்சமன் ஒரு சண்டையில் ஜக்கராயனைத் தோல்வியுறச் செய்தான். அதனால் அவன் நாட்டைவிட்டுக் காட்டுக்கு ஒடிப்போனான். நெல்லூர் மாவட்டத்தின் வடமேற்குப் பகுதியில் அவனுக்குச் சொந்தமாக இருந்த கொப்பூரி நிலங்களையும் செல்வங்களையும் யாச்சமன் கைப்பற்றிக்கொண்டான். ஆனால், ஜக்கன் சளைக்கவில்லை. மதுரை நாயக்கன் முத்துவீரப்பன், செஞ்சி நாயக்கன் கிருஷ்ணப்பன் ஆகியவர்களின் துணையுடன் மீண்டும் யாச்சமனை எதிர்த்தான். யாச்சமன் தஞ்சாவூருக்குச் சென்று ரகுநாத நாயக்கனுடைய துணையைப் பெற்றான். ஜக்கராயனும் அவர்களுடைய துணைவர்களும் தங்கள் படைகளுடன் திருச்சிக்கருகில் திரண்டார்கள். யாச்சமன் வேலூரிலிருந்து தன்னுடைய படையை நடத்திச் சென்றான். வழியில் ரகுநாத நாயக்கன் அவனுடன் சேர்ந்துகொண்டான். கல்லணைக் கருகிலுள்ள தோப்பூர் என்னுமிடத்தில் இரு திறத்தாரும் கைகலந்தனர். ஜக்கராயனும் அவனுடைய துணைவர் பலரும் சண்டையில் உயிரிழந்தார்கள். அவனுடைய படைகள் சிதறியோடின. யாச்சமன் முழு வெற்றி பெற்றான் (1616). இத்தனை தொல்லைகளுக்கும் காரண மாயிருந்த வேங்கடனுடைய மகன் சிறை பிடிக்கப்பட்டான். கிருஷ்ணப்ப நாயக்கன் செஞ்சியைத் தவிர ஏனைய கோட்டைகளை இழந்தான். அவற்றை மீட்பதற்காக அவன் செய்த முயற்சி இன்னுமொரு தோல்வியில் முடிந்தது. அவனும் சிறைப்பட்டான். ஆனால், அதனுடன் உள்நாட்டுப் போர் முடியவில்லை. ஜக்கராயனுடைய தம்பி எதிராஜன் முயற்சியும் பிரபுக்களுள் ஏற்பட்ட பூசலும் போர் நீடிப்பதற்குக் காரணமாயின. இறுதியில்,
ஆய்வரங்குச் சிறப்பு மலர் - 2009

Page 66
1619இல் வேங்கடனுடைய மகன் இறந்தான். அதன்பின் ராமதேவன் எதிராஜனுடன் சமாதானஞ் செய்துகொண்டு அவனுடைய மகளையும் மணந்துகொண்டான். அதனால் ராமதேவன் கர்நாடகத்தின் அரசன் என்று ஏற்றுக்கொள்ளப் பட்டான். ஆனால், மதுரை நாயக்கன் அவனுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிராஜன் தன் மருமகனுக்கு முழு ஆதரவும் தந்தான். அதுபோலவே, ரகுநாத நாயக்கனும் அவனுக்குத் தன்னுடைய ஆதரவைத் தந்து, விடாப்பிடியாக அவனை எதிர்த்த தலைவர்கள் அனைவரையும் அடக்கிப் பேரரசின் மேலாதிக்கத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு செய்தான். ஆனால், ராமதேவன் எதிராஜனுடன் சமாதானஞ் செய்து கொண்டது யாச்சமனுக்குப் பிடிக்கவில்லை. எதிராஜனுக்குச் சொந்தமானதும் பழவேற்காட்டை உள்ளடக்கியதுமான கொப்பூரி நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொள்வதற்கு யாச்சமன் திட்டமிட்டிருந் தான். ஆங்காங்கே நடந்த பல சண்டைகளுக்குப்பின் பேரரசின் எஞ்சியிருந்த பகுதிகளில் ராமதேவனுடைய மேலாதிக்கம் 1629ஆம் ஆண்டுக்குள் ஒருவாறு ஏற்றுக்கொள்ளப்பட்டது. செஞ்சி நாயக்கனும் தன்னுடைய பகையை மறந்து, ராமதேவனுடைய மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு, அவனுடைய நண்பனானான். யாச்சமனுடைய துணைவர்களும் அடக்கப்பட்டார்கள். பழவேற்காடும் அதற் கருகிலிருந்த பகுதிகளும் மீண்டும் எதிராஜன் உடைமையாகிப் பேரரசின் எல்லைக்குள் வந்தன. இவ்வாறு பதினைந்து ஆண்டுகள் நடந்த பூசல்களுக்குப்பின் ராமதேவன் ஒரளவு வெற்றிபெற்றான்.
முன்பு கண்ட உள்நாட்டுப் போர் பீஜப்பூருக்கு நல்ல வாய்ப்பாக முடிந்தது. பிஜப்பூர் சுல்தான் எவ்வளவோ காலமாக மேற்குத் தெலுங்கு நாட்டைக் கைப்பற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தான். அந்த ஆசை கடைசியில் நிறைவேறியது. 1619-20இல் அவன் அப்துல் வஹாப்கான் என்பவன் தலைமையில் ஒரு படையை அனுப்பிக் கர்நூலைத் தாக்கச் செய்தான். கர்நூல் கோட்டைத் தலைவன் கோபாலராஜன் பிஜப்பூர்ப் படைகளைக் கடுமையாக எதிர்த்தான். அவனுக்கு கோல்கொண்டாவும் துணைபுரிந்தது. சண்டையில்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

தோற்றுப்போன அப்துல் வஹாப்கான் கோபாலராஜனுடன் சமாதானஞ் செய்துகொண்டு திரும்பிப் போனான். ஆனால், அதனால் நிரந்தர அமைதி ஏற்படவில்லை. அவன் 1624இல் மீண்டும் படையெடுத்து வந்து கர்நூலைத் தாக்கினான். கர்நூலின் அண்மையிலிருந்த நண்பர்கள் கோபாலராஜனுக்குத் துணைபுரிந்தார்கள். எனினும் பிஜப்பூர்ப்படைகள் வெற்றிபெற்றன. கோபாலராஜன் கோட்டையைக் கைவிட்டுவிட்டு ஒடிப்போனான். உள்நாட்டுப் போரினால் தொல்லைக்குட்பட்டிருந்த ராமதேவனால் கோபாலராஜனுக்குத் துணைபுரிய முடியவில்லை. மேலும், இருபத்தெட்டே வயதான ராமதேவன் 1630இல் இறந்துபோனான். அதனால், கர்நூல் பிஜப்பூரின் ஆட்சிக்குள் நிரந்தரமாகச் சென்றுவிட்டது.
ராமதேவனுக்கு மகனுமில்லை; உடன்பிறந்தாரு மில்லை. எனவே, அவன் 1565ஆம் ஆண்டில் தலைக்கோட்டைச் சண்டையில் உயிர் துறந்த ராமராயனுடைய பேரன் பெத்த வேங்கடனைத் தனக்குப்பின் அரசனென்று நியமித்திருந்தான். ஆனால், ராமதேவனுடைய பெரியப்பன் திம்மராஜன் அரசுரிமை தனக்கே சேரவேண்டுமென்று கூறி ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால், மூன்றாம் வேங்கடன் தன் சொந்த ஊரான ஆனகொண்டியை விட்டு வெளியே வரமுடியவில்லை. செஞ்சியும், தஞ்சாவூரும், மதுரையும் வேங்கடனை ஆதரித்தன. திம்மனுக்கு யாரும் துணை செய்ய வில்லை. அவன் அடாவழியில் அரசுரிமையைப் பறித்துக் கொண்டவன் என்று மக்கள் பொதுவாகக் கருதினார்கள். அப்படியிருந்தும் ராஜ்யத்துக்கு அவனால் தொல்லை ஏற்படத்தான் செய்தது. அதனால் தோன்றிய உள்நாட்டுப் போர் 1635இல் அவன் இறக்கும் வரையிலும் நடந்தது. தொடக்கத்தில் திம்மன் சில வெற்றிகளைப் பெற்றான். ஆனால் மூன்றாம் வேங்கடனுடைய தம்பியாகிய சென்ன வேங்கடனுடைய மகன் சீரங்கன் தன்னுடைய பெரியப்பன் சார்பில் போரில் இறங்கினான். அவனுக்குப் பழவேற்காட்டிலிருந்த டச்சுக்காரர்களும் துணைபுரிந்தார்கள். சண்டையில் தோற்றுப்போன திம்மன் வேங்கடனுடைய உரிமையை ஏற்றுக் கொண்டான். ஆனால், அவன் வென்ற இடங்களில் சிலவற்றை அவனே வைத்துக்கொள்வதற்கு
57

Page 67
இசைவுபெற்றான். அதன்பின்னும் அவன் தொல்லை கொடுத்ததால், செஞ்சி நாயக்கன் அவனை 1635ல் போரில் வென்று கொன்றுவிட்டான். அதன்பின் நாட்டில் அமைதி ஏற்பட்டது. வேங்கடன் வேலூருக்குச் சென்று அங்கேயே குடியேறிவிட்டான். இதற்கிடையில் பிஜப்பூர் சுல்தான் பெனுகொண்டாவைத்தாக்கினான். அதனைக் காக்கும் பொறுப்பை வேங்கடன் கொண்டி நாயக்கனிடம் ஒப்படைத்தான். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்குப்பின் பேரரசு சிதைந்து போகும் வரையிலும் கொண்டிநாயக்கன் பெனுகொண்டாவைப் பகைவர் கைப்பற்றாதவாறு பார்த்துக் கொண்டான்.
செஞ்சி நாயக்கனிடம் வேங்கடன் தனிப்பற்று வைத்திருந்தான் என்று நினைத்த தஞ்சாவூர் மதுரை நாயக்கர்கள் வேங்கடனைச் சிறைபிடிப்பதற்குச்சூழ்ச்சி செய்தார்கள். அவர்களுடைய சதியாலோசனை வெளிப்பட்டுவிட்டதால் போர் மூண்டது. ஆனால், விரைவிலேயே ஏதோ ஒரு வகையான சமாதானம் ஏற்பட்டது. தொடக்கத்தில் தன் பெரியப்பனுக்குப் பெரிதும் துணைசெய்த சீரங்கன் என்ன காரணத்தாலோ அவனுக்கு எதிராகப் பிஜப்பூர் சுல்தானுடன் சேர்ந்து கொண்டான். அதனுடன் நில்லாமல் அவன் முதலில் 1638ஆம் ஆண்டிலும் பின்னர் 1641ஆம் ஆண்டிலும் தன்னுடைய பெரியப்பன்மீது படையெடுக்குமாறு பிஜப்பூர் சுல்தானைத் தூண்டிவிட்டான். முதற் படையெடுப் பின்போது பிஜப்பூர்ப் படைகள் பெங்களுரை முற்றுகையிட்டன. வேங்கடன் வேறு வழியில்லாமல் ஒரு பெருந்தொகையைப் பிஜப்பூர் சுல்தானுக்குக் கொடுத்து 1639ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சமாதானஞ் செய்துகொண்டான். அந்த ஆண்டின் இறுதியில் தென்னகத்து நாயக்கர்கள் அனுப்பிய படைகளின் துணையோடு வேங்கடன் முஸ்லிம் படைகளை எதிர்த்து ஓரளவு வெற்றியடைந்தான். அதனால் முஸ்லிம்கள் சிறிது காலம் அவனுடைய ராஜ்யத்தைத் தாக்குவதை நிறுத்தி வைத்தார்கள். ஆனால், அவர்கள் மீண்டும் 1641இல் படை யெடுத்தார்கள். ரந்துலாக்கான் என்பவன் தலைமையில் வந்த அந்தப் படையுடன் சீரங்கனும் வந்தான். வழியிலிருந்த சில கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டு அவர்கள் வேலூரின்மீது தங்கள் படைகளைச் செலுத்தி, அங்கிருந்து பன்னிரண்டு கல் தொலைவில் தங்கள் பாசறையை
58

அமைத்துக்கொண்டார்கள். அப்போதும்தென்னகத்து நாயக்கர்கள் வேங்கடனுக்குத் துணைபுரிந்ததால் வேலூர் பகைவர் கையில் சிக்காமல் தப்பியது.
கர்நாடகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சிகளைக் கவனித்துக் கொண்டிருந்த கோல்கொண்டா சுல்தான் ஒரு படையை அனுப்பி, கீழைக் கடற்கரையில் இந்து ராஜ்யத்திற்குச் சொந்தமான எத்தனை இடங்களைப்பிடிக்கமுடியுமோ அத்தனை இடங்களையும் பிடிக்குமாறு கட்டளை யிட்டான். அந்தச் சமயத்தில் விஜயநகரப் பேரரசின் ஆயுள் முடிந்துகொண்டிருந்தது. அதன் இறுதிக்காலம் நெருங்கிவிட்டதென்பதை எல்லோருமே உணர்ந்தனர். நெல்லூரின் தென்கோடியில் ஆர்மகானுக்குத் தலைவனாயிருந்த வெலுகோட்டித் திம்மனும் மதராஸ், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களுக்குத் தலைவனாயிருந்த தாமெர்ல வேங்கடனும் கோல்கொண்பாப்படையைஎதிர்த்தார்கள். ஆனால், அவர்களால் கோல்கொண்டாப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியவில்லை. மூன்றாம் வேங்கடன் தன்னுடைய தலைநகராகிய வேலூரிலிருந்து ஒடிச் சித்தூர் மாவட்டத்தில் நாராயணவரத்துக்கு அருகிலுள்ள காட்டில் ஒளிந்து கொண்டான். அங்கு அவன் 1641 அக்டோபர் 10ஆம் நாளன்று இரங்கத்தக்க நிலையில், உதவுவார் யாருமின்றி இறந்து போனான்.
மூன்றாம் வேங்கடனுக்குக் குழந்தையில்லாததால் அவனுக்குத் துரோகம் செய்த அவனுடைய தம்பி மகன் சீரங்கனே அரசனானான். வேங்கடன் மலைக்காட்டில் மரணப் படுக்கையில் இருக்கிறான் என்று கேள்விப்பட்ட சீரங்கன் பிஜப்பூர்த் தளபதி களிடமிருந்து நழுவித்தன்னுடைய முன்னோர்களின் நாட்டைப் பகைவர்களிடமிருந்து காக்கப் போவதாக விளம்பரப்படுத்திக்கொண்டான். பின்னர், 1642 அக்டோபர் 29ஆம் நாள், அவன் அரச பதவியில் தன்னை அமர்த்திக் கொண்டான். ஆனால், எதிர்க்கட்சியில் சேர்ந்துகொண்டு அவனிழைத்த தீமையை அவனே அரசன் ஆனபின் சமாளிப்பது எளிதாக இல்லை. தாமெர்ல வேங்கடன் செஞ்சிக் கிருஷ்ணப்ப நாயக்கன் போன்ற பிரபுக்கள் பலர் அவனை எதிர்த்தனர். ஆனால், முஸ்லிம் அரசர்க்கிடையில் இருந்த பொறாமை சிறிது காலம் அவனுக்கு உதவியாக இருந்தது. அதனால், அவன்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 68
பிஜப்பூர் சுல்தானுடைய உதவியோடு, 1644 ஜனவரியில் கோல்கொண்டாப் படைகளின் முன்னேற்றத்தைத் தடுத்து, அவை உதயகிரியைத் தாண்டி வராதவாறு செய்தான். அந்த வெற்றியின் விளைவாக அவன் சிறிது வலிமை பெற்றவனாதலால், தென்னக நாயக்கர்களிடம் பெருந்தொகைகளைக் கேட்கவும் அவற்றை வசூலிக்கவும் அவனால் முடிந்தது. அவ்வாறு வசூலான பணத்தைத் தனக்கு உதவிசெய்த பிஜப்பூர் சுல்தானுக்குக் கைம்மாறாக அவன் கொடுத்தான். மதுரை நாயக்கனும் செஞ்சி நாயக்கனும் மீண்டும் கலகஞ் செய்தார்கள். இன்னுமொரு கோல்கொண்டாப் படை பழவேற்காடு வரையில் எதிர்ப்பின்றி முன்னேறியது. சீரங்கனால் அதைத் தடுக்க இயலவில்லை. ஆனால், பழவேற்காட்டுக் கோட்டையிலிருந்த டச்சுத் தலைவன் அப்படையை வென்று துரத்தினான். செஞ்சி நாயக்கன் கோல்கொண்டாப் படையுடன் சேர்ந்து கொள்ளக்கூடும் என்று அஞ்சிய சீரங்க அவனோடு சமாதானஞ் செய்துகொண்டான். பின்னர், அவன் கோல்கொண்டாப் படையை எதிர்த்து வெற்றிபெற்று அதனை நெல்லூர் மாவட்டத்தின் வடக்கிலுள்ள கண்டுக்கூர் வரையிலும் துரத்திக்கொண்டு சென்றான். ஆனால், பிஜப்பூரும் கோல்கொண்டாவும் தமக்குள் உடன்படிக்கை செய்துகொண்டதால் அந்த இரு ராஜ்யங்களின் படைகளும் ஒன்றுகூடின. அவற்றின் கூட்டு வலிமையை எதிர்த்து நிற்க இயலாத சீரங்கன் தன் படைகளுடன் பின்வாங்கினான். அதன்பின் கோல்கொண்டாவின் தளபதி மீர் ஜம்லா கர்நூல் வழியாக வேலூரின்மீது படையெடுப்பதற்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்தான். அந்த நேரத்தில் கோல்கொண்டா சுல்தான் போரை நிறுத்துமாறு மீர் ஜம்லாவுக்குத் திடீரென்று கட்டளையிட்டான். மேலும், அவன் பிஜப்பூர் சுல்தானுக்கு இழப்பீடும் கொடுத்தான். அவ்வாறு அவன் நடந்துகொண்டதற்கு அவன் சீரங்கனோடு மறைவாகச் செய்துகொண்ட ஏதோ ஒர் உடன்படிக்கைதான் காரணமென்று நாம் கருதலாம். அதனால், முஸ்லிம்கள் படையெடுக்கக்கூடும் என்ற அச்சத்திலிருந்து சீரங்கனுக்குச் சிறிது காலம் விடுதலை கிடைத்தது. ஆனால், விரைவிலேயே தென்னகத்து நாயக்கர்கள் மதுரைத் திருமலை நாயக்கனுடைய உதவியை நாடினார்கள். அவனும்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

வேலூர்மீது தன் படையொன்றை முஸ்தபாக்கள் தலைமையில் அனுப்பினான். தென்னகத்து நாயக்கர்கள் கலகத்தை அடக்குவதற்காகத் தன் படையுடன் சென்றிருந்த சீரங்கன் தன்னுடைய தலைநகரைக் காப்பதற்காகத் திரும்பி வந்தான். அதே சமயத்தில் கோல்கொண்டாப் படைகளும் வினுகொண்டா, உதயகிரி ஆகிய கோட்டைகளின் மீது பாய்ந்தன. இவ்வாறு பல திசைகளிலிருந்தும் வந்த அபாயத்தைச் சமாளிக்க இயலாத சீரங்கன் இந்து ராஜ்யத்தையும் மதத்தையும் கோயில்களையும் பார்ப்பனர்களையும் அழிவினின்று காப்பதற்குத் தனக்கு உதவுமாறு தன்னுடைய குடிமக்களைக் கடைசியாக வேண்டிக்கொண்டான். அந்த வேண்டுகோள் தென்னகத்து நாயக்கர்களின் காதுகளில் விழுந்ததாகவே தெரியவில்லை. மேலும், கர்நாடகத்தைக் கைப்பற்றி அதனைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்ளுமாறு கோல்கொண்டாவையும் பிஜப்பூரையும் முகலாயப் பேரரசன் கேட்டுக் கொண்டிருந்தான். 1645 டிசம்பரில் தன்னுடைய மேலாதிக்கத்திலிருந்த நாயக்கர்களிடமே தோல்வியடைந்த சீரங்கன் வேலூருக்குத் திரும்பிச் சென்றான். தளபதிகள் தங்களுக்குள் ஏற்பட்ட வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்வதற்காகப் பிஜப்பூருக்குப் போய்விட்டதால் பிஜப்பூர்ப் படையெடுப்பினால் ஏற்பட்ட துன்பம் சிறிது காலத்திற்குக் குறைந்தது. ஆனால், கோல் கொண்டாப் படைகள் சும்மா இருக்கவில்லை. மீர்ஜம்லாவின் தலைமையில் முன்னேறிய கோல்கொண்டாப் போர்வீரர்கள் நெல்லூர் கடப்பை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளைப் பிடித்துக் கொண்டார்கள். அதற்குள் பிஜப்பூரிலிருந்த முஸ்தபாக்கானும் திரும்பிவந்து வேலூரைத் தாக்குவதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருந்தான். அப்போதுதான் இந்துக்கள் அனைவருக்குமே ஆபத்து நேரப்போகின்றதென்பதை நாயக்கர்கள் உணர்ந்தார்கள். அப்படியும், மதுரை நாயக்கன் மற்ற நாயக்கர்களுடன் சேராமல் ஒதுங்கியே நின்றான். வேலூரைக் காத்து நின்ற போர்வீரர்களைப் பேணுவதற்குத் தேவையான பணம் கையில் இல்லாமற் போனதாலும் பணம் திரட்டுவதற்கு வேறு எந்த வழியும் இல்லாமற் போனதாலும் சீரங்கன் வேலூர்க் கோட்டையிலிருந்த மகளிரின் நகைகளையும் திருப்பதிக் கோயிலின்
59

Page 69
செல்வங்களையும் பயன்படுத்தினான். வேலூர்க் கோட்டைக்கு வெளியில் நடந்த ஒரு சண்டையில் சீரங்கன் ஒரு சிறு வெற்றி பெற்றான். ஆனால், அவனுடைய துணைவர்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டு அவனைக் கைவிட்டு விட்டுக் கோட்டைக்குள் சென்று விட்டார்கள். அதனால், தான் பெற்ற சிறு வெற்றியால் சீரங்கன் பெரும்பயன் ஒன்றும் அடையவில்லை. அதன்பின் விரிஞ்சிபுரத்தில் 1646 ஏப்ரல் 4ஆம் நாள் ஒரு பெருஞ்சண்டை நடந்தது. அதில் மைசூர், மதுரை, தஞ்சாவூர் ஆகியவற்றின் ஆட்சியாளர்கள் சீரங்கனுக்குத் துணை செய்தார்களெனினும் பிஜப்பூர்ப் படைகளே வெற்றி பெற்றன. அதன்பின் முஸ்தபாக்கான் வேலூரை முற்றுகையிட்டான். அதற்குள் கோல்கொண்டாப் படைகள் கீழைக் கடற்கரையில் பழவேற்காடு வரையில் இருந்த எல்லா ஊர்களையும் பிடித்துக் கொண்டன. அப்பொழுதும் டச்சுக்காரர் கோல்கொண்டாவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில், முஸ்லிம் படைகளை மேலும் எதிர்த்து நிற்க முடியாதென்பதை உணர்ந்த சீரங்கன் வேலூரை விட்டுவிட்டுத் தஞ்சாவூருக்குப் போய் அங்கு அடைக்கலம் புகுந்தான். 1652ஆம் ஆண்டுக்குள் கர்நாடகம் முழுவதும் முஸ்லிம் ஆட்சிக்குள் சென்றுவிட்டது. மதுரையும் மைசூரும் அதனைத் தடுக்க இயலவில்லை. 1649ல் தஞ்சாவூரும் பிஜப்பூருக்குப் பணிந்தது. (அதற்குச் சிறிது முன்னரே செஞ்சி பணிந்து விட்டது) அதன்பின் சீரங்கன் மைசூரில் அடைக்கலம் புகுந்து வேலூரில் பெயரளவில் அரசு வீற்றிருந்தான். கேலடித்தலைவர்களின் துணையோடு வேலூரை மீட்க வேண்டுமென்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால், அந்த எண்ணம் வெறும் பகற்கனவாக முடிநத்து. இறுதியில், சுமார் 1672ல் சாவு வந்து அவனுடைய துன்பத்தினின்று அவனுக்கு விடுதலையளித்தது.
கர்நாடகத்தின் வீழ்ச்சி இந்து ஆட்சியின் வீழ்ச்சியாகிவிட்டது என்று கூறமுடியாது. பிஜப்பூர்ப் படைகள் கர்நாடகத்தைக் கைப்பற்றி, அதனைச் சூறையாடி, சீரங்கனை மைசூரில் அடைக்கலம் புகுமாறு செய்துகொண்டிருந்த அதே சமயத்தில், சிவாஜி தன்னுடைய வெற்றிமிகுந்த வாழ்க்கையைத் தொடங்கிக் கொண்டிருந்தான். அவன் 1674இல்
60

சத்திரபதி என்று முடிசூடிக் கொண்டான். அதற்கு ஈராண்டுக்கு முன்வரையிலும் சீரங்கன் உயிரோடிருந் தான். மதுரையும் மைசூரும் சுயேச்சையுடைய இந்து ராஜ்யங்களாகவே பதினேழாம் நூற்றாண்டின் இறுதி வரையில் மட்டுமன்றிப்பதினெட்டாம் நூற்றாண்டையும் தாண்டி நின்றன.
எனினும், தோற்றத்திலிருந்து முந்நூறாண்டு களுக்கு மேல் நிலைத்து நின்ற கர்நாடக - விஜயநகரப் பேரரசு பதினேழாம் நூற்றாண்டின் இடையில் அழிந்துவிட்டது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த நீண்டகாலம் முழுவதிலும் அது தன்னுடைய வட எல்லையிலிருந்த முஸ்லிம் ராஜ்யங்களோடு தொடர்ந்து போர் செய்து கொண்டிருந்தது; மதுரை சுல்தானியத்தை அழித்தது: தென்னகத்தின்மீது முஸ்லிம்கள் படையெடுக்காமல் தடுத்தது. இந்துக்கள் சிலர் முஸ்லிம் அரசர்களுடைய அலுவலர்களாய் இருந்தனர் என்பதும் முஸ்லிம்கள் சிலர் இந்துப் படையில் போர்வீரர்களாய்ப் பணியாற்றினர் என்பதும் உண்மையே. அன்றியும், இந்து அரசர்களுக்கும் முஸ்லிம் அரசர்களுக்கும் இடையில் சில அரசியல் கூட்டணிகள் ஏற்பட்டன என்பதும் உண்மையே. ஆனாலும், பாரத நாட்டின் பரம்பரைப் பண்பாட்டுக்கும் அமைப்புகளுக்கும் கடைசிப் புகலிடமாயிருந்த தென்னிந்தியா முஸ்லிம்களின் கையில் விழாமல் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு நிறுவப்பட்ட விஜயநகரப் பேரரசின் வரலாற்று அடிப்படை இயல்பை அந்த அரசியல் கூட்டணிகளும் திருமண உறவுகளும் மாற்றிவிடவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். சாயனர் தலைமையில் அமைந்த அறிஞர் குழுவினர் எழுதிய வேத விளக்கவுரையும் தென்னிந்தியா விலிருந்த முக்கியமான கோயில்களுள் ஏறக்குறைய எல்லாவற்றிலுமே விஜயநகரப் பேரரசர்கள் கட்டிய மனங்கவரும் புதிய கட்டிடங்களும் அந்த இந்துப் பேரரசின் பெருமைக்குரிய நினைவுச்சின்னங்களுக்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகத் திகழ்கின்றன. போர்த்துக்கீசர்களும் ஏசு சங்கப் பாதிரியார்களும் தென்னிந்திய மக்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயன்றார்கள். அதனால் அவர்கள் விஜயநகரப் பேரரசர்கள் அவர்களுடைய மேலாதிக்கத்திலிருந்த சிற்றரசர்கள் ஆகியவர்களுடைய வெறுப்பைச்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 70
சம்பாதித்துக் கொண்டார்கள். அவ்வரசர்களுடைய எதிர்ப்பின் விளைவாகக் கிறிஸ்தவ மதம் அதிகமாகப் பரவாமல் நின்றுவிட்டது.
இப்போது பேரரசின் ஆட்சியில் நடைமுறையி லிருந்த அரசியல், நிர்வாக, ராணுவ முறைகளைப் பற்றிச் சில செய்திகளைக் கூறிய பின்னர் இந்த அதிகாரத்தை முடித்துக் கொள்ளலாம். அரசுரிமை கொள்கையளவில் பரம்பரையாக வந்தது என்பது உண்மையே. ஆனால், பேரரசு கடுமையான பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஒரு பக்கத்தில் முஸ்லிம் ராஜ்யங்களின் பகைமையாலும் இன்னொரு பக்கத்தில் சிற்றரசர்களுடைய முரண்பாட்டாலும் தோன்றிய இன்னல்களைச் சமாளிப்பதற்கு அது எந்த நேரத்திலும் ஆயத்த நிலையில் இருக்கவேண்டும். அதனால், அந்தப் பேரரசின் அரியணையில் அமர விரும்பியவர்கள் உண்மையிலேயே அரச தந்திரத் திறனும், போர்த்திறனும் மிகுதியாகப் பெற்றவர்களாக இருக்கவேண்டுமென்பது இன்றியமையாததாயிற்று. எனவே, திறமையற்ற அரசர்களைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டோ, சிறையில் அடைத்துவிட்டோ, அதிகார விருப்பமும் திறமையும் வாய்ந்த அமைச்சர்கள் தாங்களே அரியணையேறியதும், அடாவழி அரசுரிமைப் பறிப்பால் மும்முறை புதிய அரசு மரபுகள் ஆட்சியைக் கைப்பற்றியதும், அந்தச் சமயங்களில் பிரபுக்கள் இரு கட்சியாகப் பிரிந்து அரசுரிமைக்குப் போட்டியிட்டவர்களை ஆதரித்ததும் நமக்கு வியப்பைத் தரவில்லை. ஆனால், விஜயநகரப் பேரரசில் உண்டான கட்சிப் பூசல்களால் விளைந்த வெறுப்பும் பகையுணர்ச்சியும் பாமினி ராஜ்யத்திலும் அதற்குப் பின்வந்த ஐந்து முஸ்லிம் ராஜ்யங்களிலும் உண்டான வெறுப்பையும் பகையுணர்ச்சியையும் போல அவ்வளவு கடுமையானவை அல்ல என்று பொதுவாகக் கூறலாம். ஒரு சிலரைத் தவிர ஏனைய தலைவர்களெல்லாரும் பேரரசில் அவ்வப்போது தோன்றிய உள்நாட்டு அரசியல் நிலை தங்களுக்குப் பிடிக்காமலிருந்தாலும், கலகத்தில் ஈடுபட்டு அந்நிலையை மாற்ற முயல்வதைவிட விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் அதனை ஏற்றுக் கொள்வது நல்லது என்று கருதி அதன்படியே இயன்ற வரையில் நடந்தார்கள்.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

அரசனுக்கு ஆலோசனை கூறுவதற்கென அமைச்சரவை ஒன்றிருந்தது. அரசனும் அந்த அவையை அடிக்கடி கலந்தாலோசித்தான். எனினும், அமைச்சரின் ஆலோசனையை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயமில்லை. தன்னுடைய விருப்பம்போலும் தனக்கு மிகவும் பிடித்த தனி மனிதர்களுடைய ஆலோசனையின் படியும் நடப்பதற்கு அவனுக்கு முழு உரிமை இருந்தது. ஆட்சியதிகாரம் அனைத்தையும் தன் கையிலேயே குவித்து வைத்திருக்கிற அமைச்சனும் அரசன் அவனை விரும்புகிற வரையில்தான் அமைச்சனா யிருக்கலாம். அரசன் நினைத்தால் அவனை எப்போது வேண்டுமானாலும் பதவியிலிருந்து நீக்கி விடலாம்; அவனுக்கு எத்தகைய தண்டனையை வேண்டுமானாலும் தரலாம். தன்னுடைய மகனைச் சாளுவதிம்மன் கொலைசெய்து விட்டான் என்று கருதிய கிருஷ்ணதேவராயன் அவனுக்களித்த தண்டனையை நாம் அறிவோம்.
அரசன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம் என்பது அந்தக் காலத்து வழக்கம். அன்றியும் அவன் தனக்கும் தன் மனைவி களுக்கும் பணிவிடை செய்ய ஏராளமான பணிப்பெண் களையும் அரண்மனையில் வைத்திருந்தான். அவர்கள் எல்லாருக்கும் வசதி மிகுந்த தனித்தனி அறைகள் இருந்தன. அரசனுடைய அந்தப்புரத்தைத் தக்க முறையில் வைத்திருப்பதற்கு அரண்மனை வரவு செலவுத் திட்டத்தில் ஒரு கணிசமான பகுதி செலவாயிற்று. அரசகுமாரர்கள் அவர்களுடைய திறமைக்கேற்ற நிர்வாகப் பதவிகளில் அமர்த்தப் பட்டார்கள். அரியணையேறுவதற்கு யாதேனும் ஒருவகையில் உரிமையுடைய அரசகுமாரர்களுடைய நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி அவர்களுக்குக் காவல் போடுவதும் உண்டு. கிருஷ்ணதேவராயனைப் போன்ற வலிமைமிக்க அரசர்கள் அவ்வாறு செய்தார்கள்.
மைய அரசின் அலுவல்களைக் கவனிப்பதற்குப்பல நிர்வாகத்துறைகளிருந்தன. அரண்மனைக் கருகிலேயே நல்ல அமைப்பாண்மையுடைய தலைமைச் செயலகமும் இருந்தது. தலைநகரில் இரண்டு கருவூலங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று சிறியது: மற்றது பெரியது. சிறிய கருவூலம் அன்றாட நடைமுறை வரவு செலவுகளைக் கவனித்துக் கொண்டது. பெரிய
61

Page 71
கருவூலத்தில் ஏராளமான செல்வங்கள் கையிருப்பாக வைக்கப்பட்டிருந்தன. அந்தச் செல்வங்களை மேலும் மேலும் பெருக்குவதற்கு ஒவ்வோர் அரசனும் விரும்பினான். யாரும் காணமுடியாதவாறு அந்தக் கருவூலத்தைப் பூட்டி முத்திரை வைத்து விடுவார்கள் என்றும் மிகுந்த பணத் தட்டுப்பாடு ஏற்பட்டாலொழிய அதனை அரசன் திறக்கமாட்டான்' என்றும் பேயிஸ் எழுதிவைத்திருக்கிறார்.
அரசனுக்குச் சொந்தமான விளைநிலங்கள், மகாநவமி விழாவின்போது சிற்றரசர்களும் மாகாண ஆளுநர்களும் செலுத்திய திறை, பேரரசின் பல துறைமுகங்களிலும் இறக்குமதியும் ஏற்றுமதியும் ஆன வாணிபப் பொருள்களின்மீது விதிக்கப்பட்ட துறைமுக வரி, சுங்கவரி ஆகியவை அரசனுடைய வருமானத்தின் முக்கிய ஆதாரங்களாயிருந்தன. வரியைப் பணமாகவும் கட்டலாம்; பண்டமாகவும் கட்டலாம். விளைநிலங்கள் சரியானபடி அளக்கப் பட்டன. நிலத்தின் பரப்புக்கும், அதனுடைய தரத்துக்கும், அதில் விளைந்த தானியத்துக்கும், அதனுடைய அளவுக்கும் ஏற்றவாறு வரி விதிக்கப்பட்டது. நன்செய் நிலத்திற்கும் புன்செய் நிலத்திற்கும் வரி விகிதங்கள் வேறுபட்டன. குடியானவர்கள் ஆறிலொரு G6L 60) LO 60) LL அரசனுக்குச் செலுத்த வேண்டுமென்பதுதான் மரபெனினும் பல சமயங்களில் அவர்கள் அதைவிட அதிகமாகவே செலுத்தினார்கள். சில சமயங்களில் முழு விளைவில் பாதியை அவர்கள் வரியாகச் செலுத்தினார்கள். கோயில்களும் கற்றறிந்த பார்ப்பனர்களும் விதிக்கப்பட்ட அளவுப்படி நிலவரியில் தங்களுக்குரிய பாகத்தை எடுத்துக் கொள்ளலாம். வீட்டுவரி, தொழில்வரி, பலவகைப் பட்ட இசைவாணைக் கட்டணங்கள், வாணிபப் பொருள்களின் இடம்பெயர்வு வரி, சந்தை வரி, நீதிமன்றங்கள் விதித்த குற்றத்தொகை முதலியவை ஏனைய வருவாய் ஆதாரங்களாயிருந்தன. மேலே சொன்ன வரிகளுள் பலவற்றை வசூலிக்கும் உரிமை ஏலத்தில் விடப்பட்டது. மாகாணங்கள் மைய அரசின் நேர் ஆட்சியிலிருந்த பகுதிகள் ஆகிய இரண்டிலுமே இந்த ஏலமுறை கடைப்பிடிக்கப்பட்டது. எனவே, வரிச்சுமை மிகவும் அதிகமாகவும் கொடுமையாகவும் இருந்ததென்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது.
62

அரண்மனைப் பராமரிப்பு, போர் வீரர்கள் பராமரிப்பு, அறக் கட்டளைகள் ஆகியவை முக்கியமான செலவினங்கள். அரசனுடைய வருவாயை நான்கு சமபாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை அரண்மனைக்கும் அறக்கட்டளைகளுக்கும் ஒதுக்கவேண்டுமென்றும், எஞ்சிய பாகத்தை கையிருப்புக் கருவூலத்திற் சேர்த்துவிட வேண்டு மென்றும் கிருஷ்ணதேவராயன் ஒரு கொள்கையை வகுத்தான். அஃதொரு குறிக்கோளே தவிர, உண்மை நடைமுறை அப்படித்தான் இருந்ததென்று சொல்ல இயலாது. அது அவ்வப்போது தோன்றிய நிலைமையைப் பொறுத்ததாயிருந்தது.
இந்து ராஜ்யங்களுக்குள் யாதேனும் ஒன்றை ராணுவ ராஜ்யம் என்று சொல்லக்கூடுமானால் அது விஜயநகரமாகத்தான் இருக்கும். ஏனைய இந்து ராஜ்யங்களைவிட விஜயநகர ராஜ்யந்தான் இந்த இயல்புகளை மிகுதியாகப் பெற்றிருந்தது. பேரரசன் நிலையான ஒரு பெரிய சேனையை வைத்திருந்தான். அதில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவை இருந்தன. போர் வீரர்கள் நான்கு மாதத்திற்கொருமுறை சம்பளம் வாங்கினார்கள் என்றும்,போர் வீரர்களுக்குச் சம்பளந் தருவதற்காக மாகாண வருவாய் மீது காசோலை தரும் முறை ஒருபோதும் கையாளப்படவில்லை என்றும் அப்துர் ராஜாக் எழுதி வைத்திருக்கிறார். அதனால், மைய அரசின் கருவூலத்திலிருந்தே சம்பளம் நேராகத் தரப்பட்டது என்பது தெளிவு. மேலும், பேரரசின் பல்வேறு பகுதிகளிலும் ராணுவ மானியங்கள் ஏராளமாக இருந்தன. அந்த மானியங்களுக்கு நாயக்கர்கள் என்று வழங்கிய ராணுவத் தளபதிகள் அதிகாரிகளாய் இருந்தார்கள். தங்களுடைய மானியத்திலடங்கிய ஊர்களில் வரி வசூல் செய்வதற்கும் அவற்றின் நிர்வாகத்தை நடத்து வதற்கும் அவர்கள் அதிகாரம் பெற்றிருந்தார்கள். அதற்குக் கைம்மாறாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். செய்தி கிடைத்தவுடனே அந்தப் படைகள் பேரரசின் நிலைப்படையோடு சேர்ந்து போர்க்களம் புகுவதற்கு ஆயத்தமாயிருக்க வேண்டும். அத்தகைய நாயக்கர்கள் இருநூறு பேருக்கு மேல் இருந்தார்க ளென்று நூனிஸ் குறிப்பிடுகிறார். வில்வித்தை,
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 72
வாள்வித்தை முதலியவற்றில் பயிற்சியளிப் பதற்கெனத் தனியாக நடத்தப்பட்ட ராணுவப் பள்ளிகள் இருந்தன. அந்தப் பள்ளிகளிற் பயிற்சி பெற்றவர்கள் பேரரசின் சேனையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். பீரங்கிப் படையில் வெளிநாட்டினரே இருந்தனர் என்று பொதுவாகக் கூறலாம். பாசறையைத் தெருக்களும் திறந்த வெளிகளும் கொண்ட இயங்கும் நகரம் என்று சொல்லலாம். போர் வீரர்களோடு ஏராளமான பரிவாரத்தாரும் சென்றனர். அவர்கள் சண்டையிற் கலந்து கொள்ளாதவர்கள். போர் வீரர்களுடைய இயக்கத்திற்கு அவர்கள் ஒரளவு தடையாகத்தான் இருந்தார்கள். ஆனால், படைகளோடு பரிவாரமும் செல்வது அந்தக் காலத்தில் பொது வழக்கமாக இருந்தது. நாட்டைக் காக்கும் பணியில் கோட்டைகள் முக்கியமான இடத்தை வகித்தன. கோட்டையை எவ்வாறு முற்றுகையிடுவது, எதிரிகள் கோட்டைக்குள் நுழையாமல் எவ்வாறு தடுப்பது என்பன போன்ற கலைகளில் அந்தக் காலத்துப் போர்வீரர்கள் நல்ல பயிற்சி பெற்றிருந்தார்கள். அப்போது நடந்த சண்டைகளில் எதிரிகளில் கோட்டைகளை முற்றுகை இடுவதென்பது அடிக்கடி நடைபெற்ற நிகழ்ச்சியாக இருந்தது. ராயர்கள் பல துறைமுகங்களையும் இலங்கையின் சில பகுதிகளையும் தங்களுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்தார்களாதலால் அவர்களிடம் ஒரு கப்பற்படையும் இருந்திருக்கவேண்டும். ஆனால், அதனுடைய அமைப்பாண்மை எத்தகையது, அதில் எத்தனை கப்பல்களும் மாலுமிகளும் வீரர்களும் இருந்தார்கள் என்பன போன்ற தெளிவான செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை.
மாகாண ஆட்சி அவ்வப் பகுதியினுடைய முன்னைய வரலாற்றின் அடிப்படையில் அமைந்தது. தமிழகத்திலும் மேற்குக் கடற்கரையிலும் பழைய அரச மரபினரே ஆட்சி செய்ய அனுமதிக்கப் பெற்றனர். அவர்கள் பேரரசனுக்குப் பணிந்து அவனுக்குரிய திறையைச் செலுத்தினார்கள். பேரரசன் நியமித்த உயர் அதிகாரிகளின் பொது மேற்பார்வையில் அந்தச் சிற்றரசர்கள் ஆட்சி செய்தார்கள். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே அந்த மேற் பார்வைப் பதவிகளில் அமர்த்துவது பொது
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

வழக்கமாகயிருந்தது. தெற்கில் பாண்டியரும் திருவடி மரபினரும் மேற்கில் கெர்சப்போ, கர்க்கல் முதலிய பகுதிகளில் ஆட்சி செய்தவர்களும் மேலே கூறிய முறையில்தான் செயற்பட்டார்கள். தமிழகம் சோழர் காலத்தில் இருந்ததைப் போலவே வளநாடு, நாடு, கூற்றம் என்னும் நிர்வாகப் பகுதிகளை உடைய தாயிருந்தது. அதுபோலவே, சோழர் காலத்துக் கிராம நிர்வாகமும் விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் அழியாமல் காக்கப் பெற்றது. கிராம சபைகள் முன்போலவே செயற்பட்டன. தெலுங்கு நாட்டிலும், கன்னட நாட்டிலும் விஜயநகரப் பேரரசர்கள் குறைபாடற்ற முறையில் உருவாக்கியிருந்த கிராம நிர்வாக முறைகளைத் தமிழகத்தின்மீது அவர்கள் சுமத்தவில்லை. ஆனால், கிராம சபையின் நிர்வாக அதிகாரிகள் மைய அரசுடனும், அதனுடைய பிரதிநிதிகளுடனும் அதிகமாக இணைக்கப் பெற்றதால் சபையின் தன்னாட்சியுரிமை மிகவும் சுருங்கிப் போயிற்று. நிர்வாகப் பிரிவுகளின் பெயர்களும், அவற்றின் நிர்வாகத்தை நடத்திய அலுவலர்களின் பெயர்களும் அவ்வப் பகுதியின் வழக்கிற்கேற்ப மாறியிருந்தாலும், மைய அரசினால் நியமிக்கப்பெற்ற மாகாண ஆளுநர் அனைவருமே அவ்வப் பகுதியிலிருந்த ராணுவ முக்கியமுடைய கோட்டைகளின் ராணுவத் தலைவராய் இருந்தனர். சாதாரணமான சிவில் அலுவலர்கள் அந்தப்பதவிக்கு நியமிக்கப் பெறவில்லை. மாகாணங்கள் அல்லது ராஜ்யங்களின் எல்லைகள் அவ்வப்போது தோன்றிய நிர்வாகத் தேவைகளுக்கு ஏற்றவாறு மாறிக் கொண்டே இருந்தன. பேரரசின் வடவெல்லையிலிருந்த பகுதிகள் முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையில் அடிக்கடி கைம்மாறிக் கொண்டே இருந்ததால், அவற்றின் எல்லைகளும் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தன. ஆளுநர்களும் நாயக்கர்களும் ஊரில் இல்லாதபோது அவர்களுடைய ராணுவமானியங்களை அவர்களிடமிருந்து அதிகாரம் பெற்ற பிரதிநிதிகள் ஆட்சிசெய்தார்கள். இன்றைய வேவுத்துறையின் பணியை அன்று முறையாக அமைக்கப்பெற்ற ஒற்றர்படை கவனித்துக்கொண்டது. பேரரசின் அலுவற் பதவிகளில் அமர்ந்திருந்த ஊழியர்களுடைய செயல்களையும் அண்டை நாட்டு அரசர்களின் செயல்களையும் சூழ்ச்சிகள் திட்டங்கள்
63

Page 73
முதலியவற்றையும் ஒற்றர்கள் வேவு பார்த்து அவ்வப்போது அரசனுக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். எல்லைகளிலிருந்த கோட்டைத் தலைவர்கள் எல்லோரும் பொதுவாக அரசனுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் களாகவே இருந்தார்கள். பிரபுக்கள் தலைநகருக்குச் சென்று அரசனைக் காணவேண்டுமென்ற விதியிலிருந்து எல்லைக் கோட்டைத்தலைவர்களுக்கு விலக்களிக்கப் பட்டது. காவற்படை (போலிஸ்) தேவையான அளவு திறமையுடன் பணியாற்றியது. எங்காவது திருடு போய்விட்டால் காவற்படையினர் திருடுபோன பொருளை மீட்டுத்தரவேண்டுமென்பதும், தவறினால் அந்தப் பொருளுக்குரிய பணத்தை அவர்களே கொடுத்துவிட வேண்டுமென்பதும் விதி. காடுவாழ் மக்களால் இன்னல் ஏற்படலாம் என்று எதிர்பார்த்த பகுதிகளில் பாளையக்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்குத் துணைவர்கள் பலர் இருந்தனர். பாளையக் காரர்களுக்கும் அவர்களுடைய துணை வர்களுக்கும் தேவையான வருவாயைத் தருவதற்காக அரசன் ஜாகீர் என்ற நிலக் கொடைகளைப் பாளையக்காரர்களுக்கு அளித்தான். தெருக் காவலர்கள் இரவில் ரோந்து சுற்றினார்கள். தலைநகரத்திலிருந்த காவற்படை மிகத்திறமையாகப் பணியாற்றியதென்று அப்துர் ரஜாக் போன்ற வெளிநாட்டினர் பாராட்டியுள்ளனர்.
படிப்படியாய் அமைந்து பணியாற்றிய நீதிமன்றங்கள் குடிமக்களுக்கு நீதி வழங்கின. பேரரசனுடைய சபைதான் மீயுயர் மேல் முறையீட்டு நீதிமன்றமாக இருந்தது. சில நீதிமன்றங்கள் இயங்கு மன்றங்களாய்ப் பணியாற்றின. உரிய அலுவலர்கள் எங்கெங்கு முகாமிட்டனரோ ஆங்காங்கு வழக்குகள் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பெற்றது. சட்ட நுணுக்கங்களில் ஐயம் தோன்றியபோது யாக்ஞவல்லியருடைய ஸ்மிருதியும் பராசர ஸ்மிருதிக்கு மாதவர் எழுதிய பாஷ்யமும்
64

தனிச்சிறப்புடைய மேற்கோள்களாகப் பயன்பட்டன. சிறு குற்றங்களையும், சாதி விதிகளையும், வாணிப விதிகளையும் மீறியவர்கள் மீது சுமத்தப்பெற்ற குற்றங்களையும் முதலில் கிராம நீதிமன்றங்களும் சாதிச் சங்கங்களும் வாணிபச் சங்கங்களும் விசாரித்தன. அத்தகைய வழக்குகள் அரசு அலுவலர்கள் நடத்திய நீதிமன்றங்கள் வரையில் போவது அரிதென்று கூறலாம். மானிடச் சான்று கிடைக்காதபோது கடவுளை நம்பிய கடுஞ்சோதனை முறையை நீதிமன்றங்கள் சான்றாக ஏற்றுக்கொண்டன. பலவகைப்பட்ட தண்டனைகள் அளிக்கப்பட்டன. அவற்றுள் கைகால்களை வெட்டுதல், கழுவேற்றுதல், யானையை விட்டு மிதிக்கச் செய்தல் போன்ற தண்டனைகள் இந்தக் காலத்தில் வாழும் நமக்கு மிகக் கொடுமையாகவும் காட்டுமிராண்டித்தன மாகவும் தோன்றும்.
இந்து அரசியல், சமுதாய முறைகளை முஸ்லிம்கள் அழித்துவிடாமல் காப்பது தங்களுடைய கடமையென்ற தெளிந்த உணர்வுடன் விஜயநகரப் பேரரசர்கள் தங்கள் ஆட்சியை நடத்தினார்கள். அவர்கள் முஸ்லிம்களோடு செய்த போர்களில் பலமுறை தோல்வி கண்டார்களெனினும், மேலே சொன்ன கடமையை நிறைவேற்றுவதில் அவர்கள் பெருவெற்றி கண்டார்கள். இன்றைய தென்னிந்திய சமுதாய அமைப்பு வட இந்திய சமுதாய அமைப்பினின்றும் பலவகைகளில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபட்டிருக்கிறதென்பதும், தலைமுறை தலைமுறையாக வந்த உயர்தனிச் சிறப்புடைய சிற்பிகள் உருவாக்கிய ஒப்பற்ற கலையழகுடைய பல பெரிய கோயில்கள் இன்றைக்கும் தென்னிந்தியாவை அணி செய்கின்றன என்பதும், இந்து முஸ்லிம் பிரச்சினை நடைமுறையில் தென்னிந்தியாவில் இல்லையென்பதும் விஜயநகரப் பேரரசர்கள் செய்த முயற்சிகளின் வெற்றிக்கு ஓரளவு சான்று பகர்கின்றன.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 74
நாடும் மக்களு
கிராமங்களும் பேரூர்களும்
விஜய நகரப் பேரரசானது தான் சிறந் தோங்கியிருந்த காலத்தில் கிருஷ்ணா நதிக்கு வடக்கிலுள்ள மாவட்டங்களையும், மேற்குக் கரையில் மலபார் மாவட்டத்தையும், கொச்சி, திருவாங்கூர் யூனியனையும் தவிர்த்து, இன்றைய சென்னை மாநிலம் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. மைசூரையும் பம்பாயில் வடக்குக் கனரா, தார்வார் ஆகிய மாவட்டங்களையும் அடக்கியிருந்தது.
“சரந்தீப் எல்லைகளிலிருந்து குல்பார்கா எல்லைகள் வரையிலும், வங்களாத்திலிருந்து மலிபார் வரையிலும் ஆயிரம் பாராசாங்குகள் தொலைவுக்கு” இப்பேரரசு பரவியிருந்த தென்று பாரசீகத் தூதர் அப்துர்ரஸாக் கூறுகிறார். கிருஷ்ண தேவராயரின் கீழான விஜயநகரப் பேரரசின் பரப்பளவைக் குறிப்பிட்டுப் பியாஸ் என்ற போர்த்துகீசிய வரலாற்றாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்: “இந்த நரசிம்ஹப்பேரரசானது, முந்நூறு கிரவோ நீளக் கடற்கரை கொண்டுள்ளது. ஒவ்வொரு கிரவோவும் குன்றுப் பகுதியில் ஒரு லீக் (சுமார் மூன்று மைல்) நீளமாகும். அவ்வாறாக இப்பேரரசுக்குரிய பல்லாகேட், சாரமாவோடெல் (சோழ மண்டலம்) ஆகியவற்றை எட்டுகிறது. அகலத்தில் இது நூற்று அறுபத்து நான்கு கிரவோ உடையது. பெரிய கிரவோ அளவு ஒவ்வொன்றும் நம் லீக் அளவில் இரண்டைக் குறிக்கும். ஆக, இதன் கடற்கரை அளவு அறுநூறு லீகுகளை எட்டுகிறது. அதற்குக் குறுக்காக அளவு முந்நூற்று
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

5D
கலாநிதி. தெ.வே. மகாலிங்கம்
நாற்பத்தெட்டு லீகுகள். பட்ட கல்லா (பட்கல்) முதல் ஒரியா நாடு வரையில் குறுக்காக” மொத்த நிலப்பரப்பும், 1,40,000 சர மைல்களை அடக்கியுள்ளது"
விஜயநகரப் பேரரசு நிலை பெற்றிருந்த தென்னிந்தியாவில் பூகோள அமைப்பு தனித்தன்மை பெற்று விளங்குகிறது. இத்தாலி நாடு போன்று கிழக்கில் வங்களாக் குடாக் கடலும், தெற்கில் இந்துப் பேராழியும் மேற்கில் அராபிக் கடலும் ஆக மூன்று பக்கங்களிலும் நீர் சூழ்ந்துள்ளது. மேற்குக் கரையில் மகாராஷ்டிர நாட்டிலிருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் நிலை பெற்றுள்ளன. இம் மேற்குத் தொடர்ச்சி மலைகள் தீபகற்பத்தின் வெப்ப தட்ப நிலைகளையும், மக்களுடைய ஜீவாதாரத் தொழிலாகிய உழவுத் தொழிலையும் பாதிக்கின்றன. கிழக்குக் கடற்கரை யோரமாக தொடர்ந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தெற்கே நீலகிரி மலை வரையில் உள்ளன. தென்னிந்தியாவின் நிலவமைப்பு மேற்கிலிருந்து கிழக்கே சரிவாக உள்ளமையால் தென்னிந்தியாவின் பேராறுகள் பலவும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. தீபகற்பத்தின் மேற்குக் கரையிலுள்ள மலை தொடர் தாழ்ந்த பகுதியிலுள்ள மேகங்களைத் தடுத்து கரையின் கடல்பகுதியில் அதிக மழையை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஒப்பிடும்போது மலைத் தொடரின் நிலம் நோக்கிய பகுதி குறைந்த மழையைப் பெறுகிறது. உயரம் குறைவான மலைப்பகுதியில் மேகம் தடையில்லாமல் கிழக்கு நோக்கிச் சென்று
65

Page 75
விடுகிறது. பல்லாரி, கடப்பை, கர்னூல், அனந்தப்பூர் ஆகிய இன்றைய ஜில்லாக்கள் உள்ள மத்திய பீடபூமி பகுதியானது குறைந்த மழையையே பெறுகிறது. இப்பகுதிகளில் வெப்பம் அதிகமாக உள்ளது.
வரலாற்றுக் காலம் முதல் இந்திய நாட்டில் கிராமங்களே அதிகமாக இருந்தன. விஜயநகரப் பேரரசிலும் கிராம வாழ்க்கையே மக்களுடைய பொருளாதார வளத்தைப் பாதித்துள்ளது. விஜய நகரப் பேரரசு இருந்த இடத்தில், இப்போது ஐம்பதாயிரத்துக்கு அதிகமான கிராமங்கள் இருந்த போதிலும் விஜயநகர ஆட்சிக் காலத்தில் எத்தனை கிராமங்கள் இருந்தன என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. அக்காலத்தில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுக்களின் துணை கொண்டு ஆராய்ந்தால் தாங்கொணா வரிச்சுமையாலும், கொள்ளை - நேர்ந்ததாலும், மழையின்மை, பெருவெள்ளம் முதலிய இயற்கைத் துன்பங்களினாலும் பல கிராமங்களை விட்டு மக்கள் குடி பெயர்ந்தனர் எனக் கூறலாம். மேற்கூறப்பெற்ற ஏதுக்களால் பல கிராமங்கள் சீரழிந்த போதிலும் பண்படாத நிலப்பகுதிகளில்" அல்லது காடுகளில் அழிந்ததைப் புதுப்பித்ததன் மூலமோ அல்லது புதிதாகவே உருவாக்குவதன்மூலமோ வேறு பல கிராமங்களின் தோற்றத்தை வரலாறு காட்டுகிறது. அத்தகைய கிராமங்கள் அந்தணர்களுக்கு சர்வ மானியமாகவோ அல்லது கோவில்களுக்கு தேவதானமாகவோ வழங்கப்பட்டன. ஆகவே விஜயநகரப் பேரரசின் காலத்தில் கிராமங்கள் அதிகரித்தன என்பதற்கு நல்ல சான்று கிடைக்கிறது.
ஈர நிலம், காய்ந்த நிலம், தோட்டம், மேய்ச்சல் நிலம், நாட்டுப் புறம், விவசாய நிலம், குளம், ஏரி முதலியவற்றுடன் கிராமங்கள் திகழ்ந்தன. சில தலைமை கிராமங்கள் எல்லைப்புறம் அல்லது பிடாகை அல்லது சிற்றுார் எனப்படும் சிறு பகுதிகளைப் பெற்றிருந்தன."
கிராமங்களின் எல்லைகளைக் குறிப்பதற்குத் திரிசூல”அடையாளங்கள் பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் புதைக்கப்படுவது வழக்கம். இவ்விதம் புதைக்கப்பட்ட கற்கள் சிறு தெய்வங்களாகவும்" வழிபடப்பட்டன. கிராமத்தின் உயர்ந்த பகுதிகளில்
66

வீடுகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு ஜாதியினரும் குறிப்பிட்ட பகுதிகளில் முடிந்த வரையில் விலகி வாழ்ந்தனர்." இவ்வாறாக அக்கிரகாரம் (பிராமணர் பகுதி), முதலியவற்றுடன் கம்மாளத் தெரு', கைக்கோலத் தெரு" ஆகியவற்றுக்கான சான்றுகளையும் கிராமங்களில் நம்மால் காண முடிகிறது. நெசவாளரே கைக்கோலர், இவர்கள் கோவில் பகுதியிலும் குடியிருந்தனர். ஜாதி கெட்ட தாழ்ந்த மக்கள் கிராமத்தின் முக்கிய இடத்தை விட்டு வெகு தூரம் தள்ளி வசித்தனர். ஆக, புலையர்கள் (பொலியாஸ்), “மறைவான இடங்களில், வயற் காடுகளில், திறந்த வெளிகளில்” வாழ்ந்தார்கள் என்றும், பறையர்கள் “மிகவும் ஒதுக்குப் புறமான இடங்களில்” வாழ்ந்தார்கள் என்றும் பார்போசா கூறுகிறார்."முஸ்லீம்கள் தங்களுக்கெனத் தரப்பட்ட தனிப் பகுதியில் வாழ்ந்தனர்."
விஜயநகரப் பேரரசுக்கு விஜயம் செய்த அயல் நாட்டுப் பயணிகளின் நேரடி சாட்சியங்கள் ஒன்றையொன்று அடுத்திருந்த செழிப்பான நகரங்கள் அந்தப் பேரரசில் இடம் பெற்றிருந்ததைக் குறிப்பிடுகின்றன. மங்களூருக்கும், பேதனூருக்கும் இடையில் தான் பயணம் செய்த போது, “ஒவ்வொரு நாளும் ஒரு நகரத்துக்கோ அல்லது மக்கள் தொகைப் பெருக்கம் கொண்ட ஒரு கிராமத்துக்கோ” தான் சென்றதாகக் கூறுகிறார் அப்துர்ரசாக்." அப்துர் ரசாக்குக்கு நானூறு ஆண்டுகள் கழித்து அந்தப் பேரரசுக்கு விஜயம் செய்த நிக்கிதின் என்ற ரஷ்யப் பயணி, அதன் வடமேற்குப் பகுதிகளினூடே சென்று பார்த்தவர் ஆவார். பெரிய நகரங்களுக்கிடையில் கணிசமான எண்ணிக்கையில் சிறு நகரங்கள் இருந்தனவென்றும், அத்தகைய மூன்று அல்லது நான்கு நகரங்களைத் தான் ஒவ்வொரு நாளும் கடந்து சென்றதாகவும் அவர் கூறுகிறார். “மிகப் பல நகரங்கள்” என்று அவர் குறிப்பிடுகிறார். பேரரசில் மாபெரும் நகரங்கள், கிராமங்கள், கோட்டைகள் பல இருந்தன என்று பார்போசா கூறுகிறார்." நாடு முழுவதுமே மக்கள் நெருக்கமாக வசித்தனர் என்ற பியாசின் கூற்று இதை உறுதி செய்கிறது. ஆகவே அந்தப்பேரரசில் நகர மையங்கள் பல நிறைந்திருந்தன என்பதையே பல விவரங்களும் மெய்ப்பிக்கின்றன. முன்பு விஜயநகரப் பேரரசு வியாபித்திருந்த அதே
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 76
நிலப்பரப்பில் இப்போது 450 நகரங்கள் வியாபித்துள்ளன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
அநேக பட்டணங்கள் பழமையானவை. சில மட்டுமே விஜயநகர ஆட்சியின் போது தோன்றியவை.
இப்புதிய பேரூர்களும் பட்டணங்களும் தோன்றி வளர்ச்சியடைவதற்குப் பல காரணங்கள் துணை புரிந்தன. தெய்வத்தன்மை பொருந்திய கோவில்கள் இருந்த ஊர்களுக்கு மக்கள் புனித யாத்திரை செய்யவும், அங்கே தங்கியிருந்து நல்வாழ்வு நடத்தவும் விரும்பினர். வியாபாரத்தின் பொருட்டு பொருள்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் வசதியுள்ள இடங்களில் சந்தைகள் கூடுவது வழக்கம். இவ்விதம் சந்தைகள் கூடிய இடங்கள் பேரூர்களாக வளர்ந்தன. பேரரசு பல மாகாணங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்தது. கிருஷ்ணதேவராயர் தன்னுடைய மனைவி நாகலாதேவியின் நினைவாக நாகலாபுரி என்ற பேரூரைத் தோற்றுவித்து அப்புதிய நகரில் தங்களுடைய அரண்மனைகளை அமைத்துக் கொள்ளும்படி தன்னுடைய நாயக்கர்களுக்கு ஆணையிட்டிருந்தார். பொதுவாகக் கூறுமிடத்து, விஜயநகர ஆட்சிக் காலத்தில் பேரூர்கள் திட்டமிட்டு அமைக்கப் பெறவில்லை. பெரும்பான்மையில் கிராமங்களே பேரூர்களாகவும், பட்டணங்களாகவும்
வளர்ந்தன. இடவசதியுள்ள கிராமங்கள் பேரூர்களாக வளர்ச்சியடைந்தன. எதிரிகளின் படையெடுப்புக்களிலிருந்து நகரங்களைக்
காப்பற்றுவதற்கு கோட்டைச் சுவர்கள் அமைக்கப் பெற்றிருந்தன. விஜயநகரத்தின் மதிற்கவர் அறுபது மைல் சுற்றளவிற்கு நீண்டிருந்ததாக நிக்கோலோடி-கான்டி என்பார் கூறுவர். பெரிய நகரங்களில் வசித்த மக்களுடைய தேவைப் பொருட்களில் பல கிராமங்களில் இருந்து தான் கிடைத்தன. பட்டணங்களிலும் நகரங்களிலும் பலவிதமான கைத்தொழில்கள் வளர்ந்து அங்கே உற்பத்திசெய்யப் பெற்ற பொருட்கள் பட்டணங்களிலிருந்து வெளியேயும் ஏற்றுமதியாயின.
விஜயநகரப் பேரரசின் மேற்குப் பகுதியில் அங்கோலா, மீர்ஜான், ஹோனவார், பட்கல், மாசாந்துார், வரகூர், பாசுரூர், மங்களூர், கம்பளத்தூர் முதலிய முக்கிய பட்டணங்கள் இருந்தன.
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

சங்கீதபுரம், பாரங்கி, (Bharangi) உத்திரை ஹெர்சோப்பா பெட்னுரர் என்ற முக்கிய இடங்களும் இருந்தன. பேரரசின் மத்தியப் பகுதியில் பூநீரங்கபட்டினம், துவாரசமுத்திரம் இக்கேரி, பங்காபுரம், இராய்ச்சூர், சூதோணி, விஜயநகரம், பெனுகொண்டா முதலிய பட்டணங்களும் நகரங்களும் இருந்தன. கொண்டவீடு, பூரீசைலம், உதயகிரி முதலிய நகரங்கள் பேரரசின் தெற்குப் பகுதியிலும், காளத்தி, திருப்பதி, சந்திரகிரி, பழவேற்காடு, மைலாப்பூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் முதலிய பட்டணங்களும், பட்டினங்களும் கிழக்குப் பகுதியில் இருந்தன. திருவரங்கம், மதுரை, பூரீவில்லிபுத்துர், திருநெல்வேலி, இராமேச்சுரம், திருவனந்தபுரம் முதலிய பட்டணங்கள் பேரரசின் தெற்குப் பகுதியிலும், கிழக்கிலும் அமைந்திருந்தன.
மக்கள் தொகை
விஜயநகரப் பேரரசில் சுறுசுறுப்பான வியாபாரம் நடைபெற்றமையால் மக்கள் தொகையும் அதிகமாக இருந்ததென நாம் உணரக்கூடும். ஆயினும் மெளரியப் பேரரசில் நடைபெற்றது போன்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்மையாலும், போதுமான ஆதாரங்கள் இன்மையாலும், பேரரசின் மக்கள் தொகை இன்னதென வரையறுத்துக் கூறுதற்கில்லை. விஜயநகர ஆட்சியில் அந்நிய நாடுகளிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்திருந்த தூதர்கள், வியாபாரிகள் மற்றும் வழிப் போக்கர்கள் முதலியோருடைய கூற்றுக்களில் இருந்தே அப்பொழுதிருந்த மக்கள் தொகையை குற்று மதிப்பாகக் கூற வேண்டியிருக்கிறது. மேற்கூறப் பெற்றவர்கள் தங்களுடைய நாடுகளை ஒப்பிட்டே தென்னிந்தியாவின் ஜனத்தொகையை ஒருவாறு மதிப்பிட்டுள்ளனர்.
1420ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசிற்கு வந்த நிகோலோ-டி-கான்டி என்பார், இந்நாட்டில் தன்னால் நம்ப முடியாத அளவிற்கு ஜனத்தொகை இருந்ததெனக் கூறியுள்ளார். இருபதாண்டுகளுக்குப் பின் போந்த அப்துர் ரசாக் என்பார் பேரரசில் மக்கள்
67

Page 77
தொகை மிகுந்து இருந்ததெனவும், ஆனால் உத்தேசமான எண்ணிக்கையை தகுந்த ஆதாரத்துடன் தன்னால் கணக்கிட முடியாதெனவும் கூறியுள்ளார். பேரரசின் மேற்கில் இருந்த தெலி மலையிலிருந்து (Mount Dely) கொல்லம் வரையில் ஒரே மக்கள் மயமாக இருந்ததென பார்போசா என்பார் சாற்றியுள்ளார். 1520-ஆம் ஆண்டில் போந்த பீயாஸ் என்னும் போர்த்துகீசி ஆயர் விஜயநகரப் பேரரசு முழுவதிலும் பட்டணங்களும் கிராமங்களும் நிறைந்திருந்ததெனக் கூறியுள்ளார்.
இரண்டாம் தேவராயர் காலத்தில் விஜய நகரத்திற்கு வந்த அப்துர் ரசாக் “தான் இதுகாறும் கண்களால் காணப்பெறாததும் செவிகளால் கேட்டறியாத அளவிற்கு செழிப்புற்று இருந்த தெனவும் அந்நகரத்தில் மக்கள் மிக்க நெருங்கி வாழ்ந்தனர்” என்றும் கூறுவர். இந்நகரத்தில் ஆயுதம் தாங்கக் கூடிய போர் வீரர்க்ள் மாத்திரம் 90 ஆயிரம் பேர் இருந்தனரென்று றிகோலோ கான்டி கூறியுள்ளார். “அழகிய அரண்மனைகள் நிறைந்த விஜயநகரத்தில் வளமுற வாழ்க்கை நடத்திய கணக்கற்ற செல்வர்களும், வியாபாரிகளும் வாழ்ந்தனர். நகரத்தின் தெருக்கள், நீளமாக இருந்தன. நான்கு தெருக்கள் கூடும் இடங்களில் உள்ள சதுரமான வெற்றிடங்களில் கணக்கற்ற மக்கள் கூடியிருந்தனர்” என்று பார்ப்போசா கூறியுள்ளார். “விஜயநகரம் உரோம் (Rome) நகரத்தை விட பெரியது. அந்நகரத்தின் ஜனத்தொகையைப் பற்றி நான் கூறினால் ஒருவரும் நம்ப மாட்டார்கள். போர் வீரர்களும் குதிரைகளும் நுழைந்து செல்ல முடியாதபடி மக்களும் யானைகளும் வீதிகளில் நிரம்பியிருந்தன. ஒரு மாடி உள்ளதும், மாடிகள் இல்லாததுமான வீடுகள் ஒரு லட்சத்திற்கு மேல் இருந்தன” என்று பீயாஸ் கூறியுள்ளார். இவருடைய கூற்றின்படி, ஒரு வீட்டிற்கு ஐந்து நபர் என சராசரியாகக் கொண்டாலும் ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் விஜயநகரத்தில் இருந்தனர் எனக் கொள்ளலாம். மதிற் சுவர் சூழ்ந்த அரண்மனையில் வாழ்ந்த அரச வமிசத்தவர்களையும், அரண்மனையிலிருந்த அலுவலர்களையும், வீரர்களையும் அவர்களுடைய ஏவலாட்களையும் கணக்கிட்டால் இத்தொகையை
68

இன்னும் அதிகமாகவே கூறலாம். நகரத்தைச் சுற்றி வாழ்ந்த மற்ற மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்திருக்கும்.
விஜயநகரப் பேரரசின் தலைநகரத்தில் வாழ்ந்த மக்கள் தொகையை மேற்கூறப் பெற்றவாறு கணக்கிட்டாலும், நாட்டுப் புறங்களில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவது சுலபமல்ல. “பெரிய நகரங்களின் தோற்றம் தற்கால நாகரிகத்தின் பெரிய பிரச்சினையாகியுள்ளது.” விஜயநகரப் பேரரசு அடங்கியிருந்த பகுதியில் இன்று சுமார்நானூற்றுஜம்பதுபேரூர்களும்ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட கிராமங்களும் இருக்கின்றன. நகர்ப் புறங்களில் கிராமங்களில் இருப்பதைவிட ஜனத் தொகை குறைவாகவே கொள்ள வேண்டும். தொழில் பெருக்கமும், கல்வி வசதியும், வேலை வாய்ப்புகளும் நிறைந்த பெரிய நகரங்களில் மக்கள்தொகை பெருகுவது இயல்பேயாகும். இப்பொழுதுள்ள தொழிற்பெருக்கமும், உயர்தர தொழில், ஆதாரக் கல்வி வசதிகளும் வியாபாரப் பெருக்கமும், வேலை வாய்ப்புகளும், போக்குவரத்து சாசனங்களும் விஜயநகரப் பேரரசில் கிடையாது. ஆகையால் நாட்டுப்புற மக்களின் எண்ணிக்கை நகர்புற மக்களுடைய தொகையை விட அதிகமாகவே இருந்ததெனக் கூறலாம். நகரங்களில் வாழ்ந்த மக்களின் அன்றாடத் தேவைகளில் பல கிராமங்களில் இருந்தே கிடைத்தன. நகர வாழ்க்கையின் ஆடம்பரச் செலவுகளை தாங்கக் கூடியவர்களும், நகரங்களில் அலுவல் பார்த்தவர்களுமே அங்கு வசித்தனர்.
விஜயநகரப் பேரரசில், நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்த மொத்தமான மக்கள் தொகையை கணக்கிடுவது எளிதான காரியமன்று, ஆயினும், மூர்லாந்து (Moreland) என்னும்ஆசிரியர் விஜயநகரப் பேரரசின் ஜனத்தொகையை கணக்கிட முயற்சி செய்துள்ளார். பேரரசின் தலைநகரத்தை நேரில் பார்த்த நிக்கோலோ-டி-கான்டி, அப்துர் ரசாக், பார்போசா, பீயாஸ் என்ற அன்னியர்கள், விஜயநகரத்தின் படைப்பெருக்கத்தை பத்து லட்சம் பேரெனவும் இப்படையினரை இருபது லட்சம் பேர்களாகவும் அதிகரிக்க முடியும் எனவும் கூறியுள்ளனர். விஜயபுரி (Bijapur), விஜயநகரம்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 78
ஆகிய சேனைப் பெருக்கத்தைப் பத்து லட்சம் பேர் எனவும் இப்படையை இருபது லட்சம் பேர்களாக அதிகரிக்க முடியும் எனவும் கூறியுள்ளனர். விஜயபுரி, விஜயநகரம் ஆகிய இரு நாடுகளின் சேனைப் பெருக்கத்தை பத்து லட்சம் பேர் என போர்த்துகீசிய வியாபாரியாகிய நூனிஸ் கூறுவர். இக்கூற்றை ஐரோப்பிய நாடுகளின் படைகளோடு ஒப்பிடமுடியும். 1914ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் 31 பேரில் ஒருவரும், ஜெர்மனியில் 32 பேரில் ஒருவரும் போரில் ஈடுபட்டிருந்தனர். இம்முறையை விஜயபுரி, விஜயநகரம் ஆகிய இரு நாடுகளும் கைக் கொண்டிருந்தால் இவ்விரு நாடுகளின் மக்கள் தொகை மூன்று கோடி மக்கள் இருக்கலாம் என மூர்லாந்து கூறியுள்ளார்.
இவ்வித முடிவுக்கு வந்த மூர்லாந்து என்பாரின் ஆராய்ச்சி ஏற்றுக் கொள்ளக் கூடியதா என நாம் இப்பொழுது காண வேண்டும். 1420இல் விஜயநகரத்திற்கு விஜயம் செய்த நிக்கோலோ கான்டி அந்நகரத்தில் ஆயுதம் தாங்கிப் போர் செய்யக் கூடிய வீரர்கள் சுமார் 90 ஆயிரம் பேர் இருந்தனர் என்பர். 1440-ல் விஜயநகரத்திற்கு வந்த அப்துர் ரசாக் விஜயநகரப் பேரரசின் சேனையில் பதினொரு லட்சம் பேர் இருந்தனர் என்பர். 1474இல் நிகிடின் என்ற ரஷ்யர் விஜயநகர அரசின் சேனை பத்துலட்சம் பேராக இருக்கலாம் எனக் கூறியுள்ளார். துவார்த்தி பார்போசாவும் அதே எண்ணிக்கையைக் கூறுவதுடன் எல்லா வீரர்களுக்கும் ஊதியம் கொடுக்கப் பெற்றதெனவும் சொல்லுவார். “கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகரத்தில் பத்து லட்சம் வீரர்கள் இருந்தனர். அவசியமானால் எண்ணிக்கையை இருபது லட்சமாகவும் அதிகரிக்கக் கூடும். இவ்வளவு எண்ணிக்கையுள்ள வீரர்கள் போர் செய்யவதில் ஈடுபட்டிருந்தும், நகரத்தில் மக்கள்தொகை குறைவாக இருந்ததெனக் கூற முடியாது. பொருள்களை வாங்குவதிலும், விற்பதிலும் பெருந்தொகையான மக்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களையன்றி உழவுத் தொழிலும் கைத் தொழில்கள் செய்வதிலும் ஏராளமான மக்கள் பங்கு கொண்டிருந்தனர்” என்று பீயாஸ் என்ற போர்த்துக்கீசியர் கூறுவர். இக் கூற்றுக்களால் விஜயநகரப் பேரரசின் மாமூலான சேனா வீரர்களின்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

எண்ணிக்கை பத்து லட்சம் என்றும், போர்க் காலங்களில் அது இருபது லட்சமாக உயர்ந்த தென்றும் நாம் அறியக்கூடும். விஜயநகரம் தக்காண முஸ்லீம் நாடுகளின் சேனா வீரர்களின் எண்ணிக்கை பத்து லட்சம் என்றும், இருபது லட்சமாகக் கொண்டாலும், இத்தொகை மொத்த ஜனத்தொகையில் முப்பதில் ஒன்று என்று மூர்லாந்து உத்தேசிப்பது ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல. பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளில், இருபதாம் நூற்றாண்டில் நிலவிய விகிதாசாரத்தைக் கொண்டு பதினாறாம் நூற்றாண்டில் தென்னிந் தியாவின் நிலைமையுடன் ஒப்பிடுவது சரியாகத் தோன்றவில்லை.
1822ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் மக்கள்தொகை ஒருவிதமான கணக்கிடப்பட்டது. அதன்படி சென்னை மாகாணமும் வட கன்னட ஜில்லாவும் சேர்ந்த நிலப்பரப்பின் ஜனத்தொகை 135 லட்சமாகும். 1871இல் மைசூர் நாட்டின் மக்கள் தொகை 50 லட்சமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. 1822இல் அதன் ஜனத்தொகை 35 லட்சமாக இருந்திருக்கலாம். 1822இல் சென்னை மாகாணமும் மைசூர் நாடும் சேர்ந்த நிலப்பரப்பின் மக்கள் தொகை ஒரு கோடியே அறுபது லட்சமெனக் கூறலாம். இந்நிலப் பகுதியையே விஜயநகரப் பேரரசின் நிலப்பரப்பாகக் கொள்ளலாம். போர்கள் அதிகம் நடைபெறாத 1880 முதல் 1900ஆம் ஆண்டு வரையில் இப்பகுதியின் ஜனத்தொகை சுமார் 2 1/2 கோடியாக இருந்தது. 17, 18ஆம் நூற்றாண்டுகளில் அடிக்கடி போர்களும், கொள்ளை நோய்களும் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பெருக்கு அதிகமாக இருந்திருக்க முடியாது. ஆகையால் பதினாறாம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசில் 140 அல்லது 150 லட்சம்தான் இருந்திருக்கக் கூடும். விஜயநகர ஆட்சிக்காலத்தில், தற்காலத்தைப் போன்று மக்கள் தொகையின் வளர்ச்சி இருந்திருக்க முடியாது. ஏனெனில் நாட்டில் அடிக்கடி போர்கள் நடந்தன. போர்களினால் நாடு சீரழிந்து பஞ்சமும் கொள்ளை நோய்களும் ஏற்பட்டன. இப்பொழுது உள்ளது போன்ற மருத்துவ சாதனங்களும் சுகாதார வசதிகளும் பதினாறும் நூற்றாண்டில் இருந்தவெனக் கூறுவதற்கில்லை.
69

Page 79
விஜயநகரப் பேரரசில் அயல்நாட்டு மக்கள் பலர் வணிகத்தின் பொருட்டுக் குடியேறினர். உள்நாட்டுக குடிப்பெயர்ச்சிகளும் நடந்தன. பர்மா, கிழக்கிந்தியத் தீவுகள், மலாக்கா முதலிய வெளிநாடுகளுக்கு தென்னிந்தியர் சென்றுவியாபாரத்திற்காககுடியேறினர். பருவமழை தவறியதினாலும், வெள்ளத்தினாலும் உண்டாகிய பஞ்ச காலங்களில் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மக்கள் குடி பெயர்ந்தனர். அரசியல் காரணங்களினாலும், சமய வேற்றுமை யினாலும் உண்டான துன்பங்களைப் பொறுக்க முடியாமலும், தாங்க முடியாத வரிச்சுமையினாலும் மக்கள் இடம் பெயருவதும் நடந்தது. சில தொழில்களில் தேர்ச்சி பெற்ற இனத்தவர்களுக்கு இடவசதியும், வாழ்க்கைக்கு ஏற்ற வசதிகளையும் அரசாங்க அளித்ததினாலும், அவர்கள் ஓரிடம் விட்டு மற்றொரு பகுதிக்கு குடிமாற்றம் செய்தனர். தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் விஜயநகரப் பேரரசு பரவிய பொழுது புதிய மாகாணங்கள் அமைவுற்றன. இப் புதிய மாகாணங்களின் தலைநகர்களில் அரச சேவையை நாடியும் பொருள் தேடுவதற்கும் பலர் குடிபெயர்ந்தனர். பதினைந்து, பதினாறும் நூற்றாண்டுகளில் ஆந்திர நாட்டிலிருந்து பல வேளாளர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறினர். தென்னாட்டில் உள்ள கோவில்களின் பெருமையையும் சமயாச்சாரியர் களுடைய சிறப்பையும் கண்டும் கேட்டும் மனச்சாந்தியடைவதற்கு பல புண்ணியஸ்தலங்களில் பலர் குடியேறி வாழ்ந்தனர்.
மக்களின் தொழில் வேறுபாடு (Classes of People)
ஒரு சமூகத்தில் உள்ள மக்களை பொருளியல் காரணமாக (Economic) பொருள்களை உற்பத்தி செய்பவர்கள், (மற்ற சேவைகளை செய்பவர்கள் என்றும்), அவற்றை நுகர்வோர் அல்லது அனுபவிப்பவர்கள் என்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். அவர்கள் பணியும், சமூகத்திற்கு வேறு விதத்தில் தேவைப்பட்டது. ஆனால் வெறும் பொருளியல் கண்ணில் நோக்கினால், அவர்கள் உற்பத்தியாளர்களின் நெற்றி வியர்வையிலும், உழைப்பிலும் வாழ்பவர்களே.
70

பேரரசில் முக்கிய பதவிகளை வகித்த நாயக்கர்கள் அல்லது பிரபுக்கள் அரசாங்கம் என்னும் கட்டடத்தின் தூண்கள் போல விளங்கினர். மாகாணங்களின் தலைவர்களாகவும் சேனாதிபதிகளாகவும் மற்ற அலுவலாளர்களாகவும் பதவி வகித்து பலவித சிறப்புரிமைகளை அனுபவித்து வந்தனர். ஒவ்வொரு நாயக்கருக்கும் ஏராளமான நிலங்கள் நாயக்கத் தானமாகக் கொடுக்கப் பெற்றிருந்தன. (இந்த நாயக்கர்கள்) அந்நிலங்களின் வருமானத்தை வசூல் செய்து அவ்வருமானத்தின் சரிபாதி தொகையைப் பேரரசருக்குச் செலுத்த வேண்டும். அரசனுக்கு உற்றுழ் உதவுவதற்காக ஒர் நிலமானியப் படையை வைத்துக் கொள்ள வேண்டும். அச்சுத தேவராயர் காலத்தில் படை செலவை நாயக்கன்மார்கள் ஆறு லட்சம் வீரர்களையும் இருபத்திநான்காயிரம் குதிரைகளையும் வைத்துக் காப்பாற்ற வேண்டி இருந்தனர். இந்த நாயக்கன்மார்கள் அரசனிடமிருந்துநிலங்களைப் பெற்று அதற்கீடாக போர்ப் படையாகிய பாளையத்தை நிருவகித்தமையால் பாளையக் காரர்கள் என்றும் அழைக்கப்பெற்றனர். இந்தப் பாளையக்காரர் களுக்கு கொடுக்கப் பெற்ற நிலங்களிலிருந்து ஆண்டொன்றிற்கு ஆறு லட்சம் வராகன் வருமானம் வந்ததென்றும், நிலங்களிலிருந்து மொத்தமாக ஒரு லட்சத்து இருதினாயிரம் வராகன் வருமானம் வந்ததென்றும், வீரர்களுக்கும் குதிரைப் படைகட்கும், யானைகளுக்கும் ஏற்பட்ட செலவுகளை பாளையக்காரர்களே செய்ய வேண்டியிருந்த தெனவும் நூனிஸ் (சூரைேண) என்பார் கூறியுள்ளார். அச்சுத தேவாயர் ஆட்சியில் வீரநரசிம்ம சாளுவநாயக்கர் அல்லது சாளுவ தண்ட நாயக்கர் என்ற பெயர் கல்வெட்டுக்களில் அடிக்கடி காணப்பெறுகிறது. இவர் சோழ மண்டலத்தில் மகா மண்டலிசுரராக நியமிக்கப் பெற்றிருந்தார். திருக்கோவலூர், புவனகிரி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், தேவிப்பட்டினம், காயல்பட்டினம் முதலிய பேரூர்கள் அவருடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. இலங்கைத் தீவிற்கு அருகில் உள்ள இடங்களிலும் அவருடைய ஆட்சி நிலை
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 80
பெற்றிருந்தது. அவருடைய ஆட்சிக்கடங்கிய மாநிலத்தின் வருமானம் ஆண்டொன்றிற்கு பதினொரு லட்சம் வராகன்களாகும். அதில் மூன்றில் ஒரு பகுதியை பேரரசனுக்குக் கொடுத்த பிறகு முப்பதினாயிரம் காலாட்படைகளையும், மூவாயிரம் குதிரை வீரர்களையும் நாற்பது யானைகளையும் வைத்துப் பராமரித்து வந்தார். விஜயநகரப் பேரரசில் இவ்வித நாயக்கன்மார்கள் இரு நூற்றிற்கு மேற் பட்டவர்கள் இருந்தனரெனவும், இவர்களிடையே பேரரசின் நிலங்கள் பிரிக்கப்பட்டிருந்தனவென்றும் நூனிஸ் கூறியுள்ளார். மேற்கூறப் பெற்ற நாயக்கன் மார்களுக்கு உதவி செய்ய பல காரியதரிசிகள் இருந்தனர். விஜயநகரத்தில் பேரரசருடைய அரண்மனையின் 661) gil பக்கத்தில் திவான்கானா என்ற அமைச்சர்களின் காரியாலயம் இருந்தது. அக்காரியாலயம் நாற்பது தூண்கள் கொண்ட ஓர் சபை வடிவில் அமைக்கப்பெற்றிருந்தது. அதற்கு எதிரில் நூறடி நீளமும், ஆறடி அகலமும், ஆறடி உயரமும் உள்ள அடுக்கு மாடியொன்று அமைந்திருந்தது. அந்த அடுக்கு மாடிக்கு அருகில் பல எழுத்தர்கள் அமர்ந்திருந்தனர். அந்த மாடிகளில் அரசாங்கத்திற்குரிய ஆவணங்கள் எல்லாம் அடுக்கப் பெற்றிருந்தன என அப்துர் ரசாக் கூறுவர்.
தற்காலத்திய அரசாங்கங்கள் போலவே விஜயநகரப் பேரரசில் அரசியலைத் திறம்பட நடத்துவதற்கு பெரிய காரியாலயங்கள் இருந்தன. அக்காரியாலயங்களில் ஏராளமான அலுவலர்கள் பணியாற்றுவதற்கு ஏற்ற வாய்ப்புகள் இருந்தன. குடியானவர்களிடமிருந்து நிலவரியையும், வியாபாரிகளிடமிருந்து சுங்கம் முதலிய வரிகளையும் வசூல் செய்வதற்கு எண்ணற்ற பணியாட்கள் இருந்தனர். கிராமங்களில் மணியக்காரர், கெளடா (முன்சீப்), ஷன்போக் கணக்குப்பிள்ளை (கர்ணம்), தோட்டி, தலையாரி என்ற அலுவலாளர்கள் இருந்தனர். அரசியல் அலுவலர்கள் எவ்விதம் நியமிக்கப் பெற்றனர் என்றோ அவர்களுடைய அலுவல் நிலையைப் பற்றியோ அல்லது ஊதிய விகிதங்களைப் பற்றியோ நாம் தெளிவாக உணர்ந்து
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கொள்ளுவதற்கேற்ற ஏதுக்கள் இல்லை. கிராமங்களில் இறைவரியை வசூலித்தவர்களுக்கும் மற்ற அலுவலாளர்களுக்கும் மானியமாக நிலங்கள் கொடுக்கப் பெற்று இருந்தன. நிலங்களை அனுபவித்து வந்த நாயக்கர்மார்கள் தாங்கள் அரசனுக்குச் செலுத்திய பகுதி போக எஞ்சிய தொகையைத் தாங்களே அனுபவித்தனர்.
விஜயநகரப் பேரரசில் பெரிய சேனை இருந்ததென்பதை நாம் முன்னரே பார்த்தோம். பேரரசின் நிலையான சேனையென்றும், நிலமானிய பிரபுக்களாகிய நாயக்கன்மார்கள் அனுப்பி வைத்த சேனைகள் என்றும் அச்சேனையை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். நிலையான சேனையின் எண்ணிக்கை 24 ஆயிரம் குதிரைகளும், ஒரு லட்சம் காலாட் படையும் என துவார்த்தி-பார்போசா கூறியதை பீயசும் ஒப்புக் கொள்ளுகிறார். விஜயநகர அரசர்கள் தங்களுடைய மெய்க்காப்பாளர்கள் போன்று கரி, பரி, காலாட் படை அடங்கிய சேனையென்றை அமைந்திருந்தனர் என்று நூனிஸ் கூறியுள்ளார். இப்படையில் சுமார் 200 பேர்கள் இருந்தனர். மொகலாய மன்னர்கள் அமைந்திருந்த அகாதிகளுக்கு (Ahadis) ஒப்பாக இவர்களைக் கூறலாம். ஒவ்வொரு மெய்க்காப்பாளருக்கும் ஆண்டொன்றிற்கு 600 முதல் 1000 வராகன் வரையில் ஊதியம் கொடுக்கப் பெற்றதென பீயஸ் கூறியுள்ளார். பேரரசின் சேவையில் இருந்த படை தலைமை அதிகாரி ஆண்டிற்கு ரூ.47,000 ஊதியம் பெற்றார். மற்றையோர்க்கு இல்லாத பல சிறப்புரிமைகளையும் பெற்றிருந்தார். ஓர் சாதாரண படை வீரனுக்கு மாதம் ஒன்றிற்கு நான்கு முதல் ஐந்து வராகன்கள் ஊதியமாகக் கிடைத்ததென டேம்ஸ் (Dames) என்பார் கூறுவர். இன்றைய ரூபாய் கணக்கில் பார்த்தால் ரூ.22.8க்கும் ரூ.28க்கும் இடையில் கிடைத்தது. இவ்வாறு பெற்ற ஊதியங்களினால் பல பொருள்களையும் சேவைகளையும் பெற்று, இராணுவ வீரர்கள் அரசாங்கத்தின் செல்வப் பிள்ளைகளாக வாழ்ந்தனர் என்று கூறலாம் (போர்க் காலங்களில் மாத்திரம் சேகரிக்கப் பெற்ற நிலமானியப் படைகளின்
எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருந்தது) விஜயநகரப் படைகளில் இந்துக்களோடு
71

Page 81
முஸ்லிம்களும் சேர்த்துக் கொள்ளப் பெற்றனர். பேரரசின் பல பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கென பல வசதிகள் தரப்பட்டு சேனையில் அமர்த்திக் கொள்ளப் பெற்றனர். அவர்களுக்கு சமய வழிபாட்டுரிமையும் நிலமாகியங்களும் அளிக்கப் பெற்றன. கிருஷ்ண தேவராயர் காலத்தில் நடந்த இராய்ச்சூர் போரில் இஸ்லாமிய வீரர்களே முன்னணியில் விளங்கினர் என இராபர்ட் சிவெல் கூறியுள்ளார்.
நகர்க் காவல் புரியும் போலீஸ் பட்டாளங்களும் விஜய நகரத்தில் இருந்தன. இரண்டாம் தேவராயர் காலத்தில் பன்னிராயிரம் போலீஸ்காரர்கள் நகரத்தைப் பாதுகாத்ததாக அறிகிறோம். போலிஸ் படைகளை அடக்கியாளுதற்கு பெயில் (Baift) என்ற தனியதிகாரி இருந்தார். எல்லைப்புறங்களில் காவல் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு காவல்காரர்கள் என்ற பெயர் வழங்கியது.
நிலமானியமும் கிராம மக்கள் கொடுக்கும் சில ஊதியங்களையும்அவர்கள் அடைந்தனர். கிராமங்களில் பாடிகாவல் அதிகாரம் பெற்ற தலையாரி என்ற ஊழியர் போலீஸ் கடமைகளைச் செய்து வந்தார்.
கலைஞர்களும் கல்வியில் வல்லவர்களும்
விஜயநகரப் பேரரசர்கள் கல்வியில் வல்ல அறிஞர்களையும், கலைச் செல்வர்களையும் போற்றி ஆதரித்தனர். முற்காலத்தில் இப்பொழுதுபோல் வழக்கறிதல், கல்வி போதனை, செய்தித்தாள் தொழில், நூலாசிரியர்கள் என்ற தெளிவான பாகுபாடுகள் இல்லை. மத்தியகால இந்தியாவில் கல்வி, சமயத்தோடு பிணைப்பட்டிருந்தமையால் தனித்தனி துறைகளில் சிறப்பெய்திய கல்வி யாசிரியர்கள் கிடையாது. ஆயினும் பலதுறைக் கல்வியில் சிறப்புற்ற அறிஞர்கள் பலர் வாழ்ந்தனர். இலக்கியம், இதிகாசம், புராணங்கள் முதலியவற்றில் வல்ல பல அறிஞர்கள் குருகுல முறையில் மாணவர்களுக்குப் போதனை செய்தனர். அரசர்களும் சிறந்த கல்விமான்களை ஆதரித்து அவர்களுக்குத் தகுந்த பதவிகளையும் சன்மானங்
72

களையும் அளித்தனர். அறிவில் சிறந்தவர்களுக்கு சதுர்வேதி மங்கலங்கள் அளிக்கப்பட்டன. சைவ, வைணவ ஆலயங்கள் சிறந்த கல்விக்கூடங்களாகத் திகழ்ந்தன. ஆலயங்களில் வேதங்களும், ஆகமங்களும், மெய்ப்பொருள் நூல்களும் போதிப் பதற்குத் தகுந்த ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பெற்று நிலமானியங்களும் கொடுக்கப் பெற்றன. விஜயநகர் ஆட்சியில் நிலை பெற்றிருந்த மடாலயங்கள் சிறந்த கல்வி நிலையங்களாகத் திகழ்ந்தன. சோதிடம், வானநூல், மருத்துவம் முதலிய கலைகளில் வல்லவர்களை அரசர்கள் ஆதரித்தனர். தேவாலயங்கள் கல்விச்சாலை களாகவும், அறச்சாலைகளாகவும், மருத்துவமனை களாகவும் விளங்கி மக்களுடைய உடலுக்கும் உயிருக்கும் உறுதிபயக்கும் சேவைகளைச் செய்தன. இசை, நாட்டியம், சித்திரக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை முதலிய அருங்கலைகளைப் போற்றி வளர்த்த தொழில்களும் நிலை பெற்றிருந்தன. விஜயநகர ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பெற்ற தேவாலயங்கள், அரண்மனைகள், கோட்டைக் கொத்தளங்கள் நீர்ப்பாசன அமைப்புகள் முதலியவை இடிந்து கிடக்கும் நிலைமையில் இருந்தாலும், அவைகள் அமைக்கப்பெற்ற காலத்தில் அருங்கலை களுக்கு அரசாங்கம் அளித்த ஆதரவை எடுத்துக் காட்டுகின்றன. இவ்விதக் கலைத் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்களுடைய உற்சாகத்தை அவர்களுடைய கைவண்ணங்களே காட்டுகின்றன. சித்திரக்கலையில் வல்லவர்களுக்கு அரசர்கள் உதவியளித்ததினால் அக்கலை செழிப்புற்று வளர்ந்தது. இசையும் பரதநாட்டியமும் ஆதரவு பெற்றன. இவ்விரு கலைகளிலும் வல்ல பெண் மணிகள் தங்களுடைய இளமையிலிருந்து இக் கலைகளைக் கற்று அவற்றின் கருவூலங்களாக விளங்கினர். தேவாலயங்களில் பணியாற்றிய தேவரடியார், பதியிலார் பெண்களும், ஆண்களும் இக்கலைகளைப் போற்றி வளர்ப்பதில் தங்களுடைய வாணாளைக் கழித்தனர். பரதநாட்டியத்திற்கென தனியரங்குகளும் நிலை பெற்றிருந்தன. விஜயநகர அரசர்கள் சிற்பக்கலையைப் போற்றிய விதத்தை அக்காலத்தில் அமைக்கப்பெற்ற தேவாலயங்களிலும், கோபுரங்களிலும், மண்டபங்களிலும் நாம் இன்றும் காணலாம். கல்வெட்டு எழுத்துக்களை எழுதுவதில்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 82
வல்லவர்களின் கை வன்மையை அவர்களால் எழுதப்பெற்ற கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும் காணலாம். பதினாறாம் நூற்றாண்டிற்கு முன்னர் கோவில் மதிற்கவர்களே ஆவணக் காப்பகங்களாக விளங்கின. அச்சுத் தொழில் உண்டாவதற்குமுன் கல்வெட்டுக்களும் செப்பேடுகளுமே சிறந்த நூலகங்களாகத் திகழ்ந்தன.
வைதிக நெறிப்படி சமய வாழ்க்கையில் ஈடுபட்ட முனிவர்களும்,யோகிகளும்,மடாலயத்தலைவர்களும், மக்களை நல்வழிப் படுத்துவதற்கெனவே தங்களுடைய வாணாளைக் கழித்தனர். சிறந்த வேதாகம விற்பன்னர்களாகவும், மெய்ப்பொருள் ஞானிகளாகவும், சித்தர்களாகவும் திகழ்ந்தனர். மடாலயங்கள் செல்வம் நிறைந்தனவாக இருந்தன. தேவலாயங்களில் சேவை செய்த அந்தணர்களும் புரோகிதர்களும் மக்களுடைய இம்மை மறுமை வாழ்விற்கு நல்வழி காட்டினர். கேள்வியாளர், கணக்கர், மெய்க்காவல்காரர், குருக்கள், பொற்பண்டாரம், திருவிளக்கு ஏற்றுவோர், மேளக்காரர், குடை, கொடி பிடிப்போர் என்ற தொழிலாளிகள் கோவில்களில் பலவிதமான அலுவல்களைப் பார்த்தனர்.
வணிகர்கள் அல்லது வியாபாரிகள்
விஜயநகரப் பேரரசின் தொடக்கத்திலிருந்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் வணிகத் தொழில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் முதலியோர் பேரரசின் வாணிபத்தில் பங்கு கொண்டனர். அரேபியாவி லிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து வியாபாரம் செய்வதில் போர்த்துக்கீசியர் பங்கு கொண்டனர். இந்துக்களில் செட்டியார்கள் வணிகத் துறையில் பெருமை பெற்றனர். சில அந்தணர்களும் வியாபாரம் செய்தனர். போக்குவரத்து தொழிலில் பலர் ஈடுபட்டிருந்தனர்.
மனமகிழ் மன்ற (பொழுது போக்குத்) தொழிலாளர்கள்
விஜயநகரப் பேரரசில் மக்களுடைய விளையாட்டு களும் பொழுது போக்குச் செயல்களும் மிக
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

உற்சாகத்துடன் நடந்தன. அரசாங்கமும் பொது மக்களும் அவற்றிற்கு ஆதரவளித்தனர். மல்யுத்தம், குத்துச் சண்டை, சேவல் போட்டி, பொம்மலாட்டம் முதலியன அக்காலத்தில் நடைபெற்றன. விஜயநகர அரண்மனையில் ஆயிரம் மல்லர்களுக்கு மேல் இருந்தனர். தங்களுடைய கைகளில் வட்ட வடிவமான ஓர் ஆயுதத்தைக் கொண்டு ஒருவரை யொருவர் குத்திக் கொண்டு அரசருடைய முன்னிலையில் மல்யுத்தம் செய்தனர். மல்யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓர் பட்டு வேஷ்டி இனாம் கொடுக்கப் பெற்றது. மல்யுத்தம் நடக்கும் பொழுது முறைப்படி போரிடவும், வெற்றி பெற்றது இன்னவர் என்று நடு நிலைமை தவறாது நிச்சயிக்கவும் மல்லர்களுக்குள் நடுவர்கள் இருந்தனர். "மல்யுத்தம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர்களும் அக்காலத்தில் இருந்தனர். இம்மல்லர்களுக்கு போட்டி ஏற்பட்டால், மற்போரின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், அரசனுடைய சம்மதத்தோடும், குறிப்பிட்ட தினத்தில், இன்னவை என்று வரையறை செய்ய பெற்ற ஆயுதங்களோடு மற்போர் செய்வது வழக்கம். மல்லர்கள் இடுப்பில் கச்சையணிந்து மற்போர் நடக்கும் இடத்திற்கு முகமலர்ச்சியோடு செல்வது வழக்கம். அரசர்கள், பிரபுக்கள் முன்னிலையில் தெய்வ வணக்கம் செய்து பின்னர் மற்போரைத் தொடங்குவர். மல்லர்கள் போரிடும் பொழுது அவர்களுடன் கூட நிற்கும் துணைவர்கள் தவிர வேறு ஒருவரும் பேச்சுக் கொடுக்கக் கூடாது. இம்மாதிரிச் சண்டைகள் சர்வ சாதாரணமான விஷயம். இதில் நாள்தோறும் பல மல்லர்கள் அடிபட்டு இறந்து விடுவதும் உண்டு” என்று பார்போசா என்பார் கூறியுள்ளார். அக்காலத்தில் பொதுமக்கள் விரும்பிய பொம்மலாட்டமும் அடிக்கடி நடப்பதுண்டு. சேவல்களைப் பழக்கி சேவற் போர் நடத்தி அதனால் பிழைப்பு நடத்தியவர்களும் இருந்தனர். பருந்து, இராசாளி முதலிய பறவைகளின் உதவியினால் யானைகளையும் கரடிகளையும் வேட்டையாடுவதும் உண்டு. நாடோடிகளும் தொழுதுண்டு பிழைப்பவர்களும் இருந்தனர்.
விஜயநகர மன்னர்களும் பிரபுக்களும் செல்வச் செழிப்பினால் பெருமித மிக்க ஆடம்பர வாழ்வு
73

Page 83
வாழ்ந்தனர். அரண்மனையிலும் அந்தப்புரத்திலும் பிரபுக்களுடைய வீடுகளிலும் குற்றேவல்களைப் புரிவதற்குப் பலர் ஏவலாளர்களாக நியமிக்கப் பெற்றனர். பிரபுக்கள் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்றாற் போல பணியாட்களை அமர்த்திக் கொண்டனர். அரண்மனையிலும் அரசவையிலும் குற்றேவல் புரிந்த பணியாட்களைப் பற்றி அந்நிய நாட்டு வழிப்போக்கர்கள் கூறியுள்ளனர். பேரரசர்கள் நாடு காணச் சென்றால் அவர்களைப் பின் தொடர்ந்து தொண்டர்களின் சேனையொன்றும் குதிரைப் படையும் செல்வது வழக்கம். அரண்மனையில் தனியிடமான அந்தப்புரங்களில் அரசிகளும் அரசிளங்குமரிகளும் வாழ்ந்தனர். ஒவ்வொரு அரசிக்கும் தனி வீடும், அடியோர் பாங்கும் ஆயமும் (ஏவலாளர்கள்) காவர்காரர்களும் இருந்தனர். “விஜயநகர மன்னர் ஒருவருக்கு 12 ஆயிரம் மனைவிகள் இருந்ததாகவும், அவர்களுள் நான்காயிரம் பேர் அரசன் எங்கு சென்றாலும் கால்நடையாகவே சென்று சமையல் செய்வது வழக்கம் என்று நிக்கோலோ கான்டி கூறுவர். முக்கிய அரசிகள் பல்லக்கில் செல்வது வழக்கம். இன்னும் சிலர் குதிரைகளின் மீதும் செல்வதுண்டு. அரசருடன் பல்லக்குகளில் சென்ற அரசிகளில் பலர். அரசன் இறந்து விட்டால் உடன்பட்டை ஏறித் தங்களை மாய்த்துக் கொள்ள வேண்டுமென்ற நிபந்தனை இருந்தது. இரண்டாம் தேவராயர் காலத்தில் அந்தப்புரத்தில் எழுநூறுக்கும் மேற்பட்ட அரசிகளும் ஆசைநாயகிகளும் இருந்தனர் என அப்துர் ரசாக் கூறியுள்ளார். கிருஷ்ணதேவராயர் காலத்தில் பன்னிரண்டாயிரம் பேர் இருந்தன ரென்றும் பீயஸ் கூறுவர். அச்சுத தேவராயர் காலத்தில் நான்காயிரம் பணிப்பெண்கள் அந்தப் புரத்தில் இருந்ததாக நூனிஸ் கூறியுள்ளார். இப் பணிப்பெண்கள் அரசிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பல்லகில் சுமந்து சென்றனர். பல பணிப்பெண்கள் மல்யுத்தம் செய்வதிலும், வருங் காலத்தைப் பற்றிச் சோதிடம் சொல்லுவதிலும் இசை பாடுவதிலும் வல்லவர்களாக இருந்தனர். பலர், வாளும் கேடயமும் கொண்டு போர் செய்வதற்குப் பலவிதமான தோல் கருவிகளையும், துளைக் கருவிகளையும் கொண்டு இசை பாடவும் தெரியும் என்று பீயஸ் கூறியுள்ளார். மகாநவமி திருவிழாவில்
74

இந்தப் பணிப்பெண்கள் சிறந்த சேவைகளைச் செய்தனர்.
அடிமைகள்
விஜயநகர ஆட்சிக்காலத்தில் ઈી6uf அடிமைகளாக வாழ்ந்தனர் என்பதற்கும், அடிமை வியாபாரம் நடைபெற்றதற்கும் சான்றுகள் உள்ளன. கிராமப்புறங்களில் உழவுத் தொழிலிலும் நகர்ப்புறங்களிலும் அடிமைகள் எஜமானனுடைய நிலங்களில் உழவு வேலை பார்த்தனர். நகரங்களில் குற்றேவல்களைப் புரிந்தனர். தென்னிந்தியாவில் அடிமைத் தன்மை நிலை பெற்றிருந்ததாக அப்துர் ரசாக் நிகோலோ-டி-கான்டி, பார்ப்போசா என்பவர்கள் கூறியுள்ளனர். பீதார் (Bidar) நகரத்தில் கருமை நிறம் பொருந்திய மக்களை விலைக்கு விற்பதும் வாங்குவதும் நடைபெற்றது. போர்த்துகீசியர்களும் அடிமைகளை தங்கள் வேலைக்கு அமர்த்திக் கொண்டிருந்தனர். அடிமைச் சந்தைகளில் ஆடுமாடுகளைப் போல் மக்கள் விலை போயினர் என்று லின்ஸ்சோடனும் (Linschoten) கோவா நகரத்தில் பெரும்பான்மையான மக்கள் அடிமைகளாக இருந்தனர் என்று பீட்ரோ டெல்லா 6)T6öl (Petra Della Valle) 6T6üTuT(5in fisiólu6T6T6OTri. 1470ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற சாசனம் ஒன்றில் அடிமைகளைப் பற்றியும் மற்றொரு கல்வெட்டில் பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர் என்றும், வீரபணாஜியர் என்பவர் களுக்குஹோலியர்கள் அடிமைத் தொழில் செய்தனர் என்றும் தெரிகிறது."
பலமுறைகளில் அடிமை 66uu ITLu IT yüih நடைபெற்றது. சில குடும்பத்தினர் தங்களை பரம்பரை அடிமைகளாக விற்றுக் கொள்வதுண்டு. அவர்கள் மற்ற அஃறிணைப் பொருள்கள் போல் வாங்கி விற்கப்பட்டனர். வாங்கிய கடனைக் கொடுக்க முடியாதவர்கள் கடன் கொடுத்தவர்களுக்கு அடிமைகளாயினர். உண்ண உணவும் உடுக்க உடையும் கிடைக்காத பஞ்ச காலங்களில் அடிமை வியாபாரம் அதிகரித்தது. சோழமண்டலக் கரையோரத்தில் கொடிய பஞ்சம் நேர்ந்த பொழுது மக்கள் உணவின்றி வாடி வதங்கினர். தங்களுடைய
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 84
குழந்தைகளை நான்கு அல்லது ஐந்து பணம் ஆகிய சிறியதொகைக்கு விற்றனர். அப்பொழுதுமலையாள நாட்டிலிருந்து வந்த அடிமை வியாபாரிகள் அரிசியையும் தேங்காய்களையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கப்பல் நிறைய அடிமைகளை ஏற்றிச் சென்றனர் என்று பார்போசா கூறியுள்ளார். 1630இல் நிலவிய ஓர் கொடிய பஞ்சத்தில் தென்னிந்திய மக்கள் தங்களுடைய குழந்தைகளை ஐந்து பணத்திற்கு பெறக்கூடிய அரிசியைப் பெற்றுக் கொண்டு விற்றனர். மலையாள நாட்டு அடிமை வியாபாரிகள் அக்குழந்தைகளைக் கொண்டு போய் கிழக்கிந்தியத் தீவுகளில் ஈவிரக்கமின்றி விற்று பெரும் பொருள் பெற்றனர். கற்புத் தவறிய பெண்களில் பலர் அடிமைகளாக விற்கப்பட்டனர். இப்பழக்கம் சாதிப் பிரிவினைக்கு ஏற்றாற்போல நடைபெற்றது. அந்தணர்கள் கோமுட்டிகள் முதலிய வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கற்புத் தவறினால், விபசாரம் செய்தவர்கள் என்று பிறர் அறியும்படி கைகளில் சூடிட்டு சாதி விலக்கம் செய்யப்பட்டனர். மற்றைய வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஈவிரக்கம் இன்றி அடிமைகளாக விற்கப்பட்டனர். மலை நாட்டில் வேலையின்றியும், அனாதைகளாகவும் சுற்றித் திரிந்த இளைஞர்களை அந்நாட்டுத் தலைவர்கள் அடிமைகளாக விற்று விடுவது வழக்கம். அடிமை வியாபாரம் நடைபெற்ற போதிலும், அடிமைகள் இரக்கமுடன் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
பொருள் உற்பத்தி செய்தவர்கள் உழவுத் தொழில் செய்து உணவுப் பொருள்களை உண்டாக் கியவர்களும் கைத்தொழில் செய்து நுகர்ச்சிப் பொருள்களை உண்டாக்கியவர்களும் என்று உற்பத்தி செய்வோர்களை இருவகையாகப் பிரிக்கலாம். விஜயநகர ஆட்சியிலும் தென்னிந்தியாவில் உழவுத் தொழிலே முக்கியத் தொழிலாக இருந்தது. உழவு வேலை இல்லாத காலங்களில் மற்றக் கைத் தொழில்களை செய்வது வழக்கம். உழவர்களிற் சிலர் ஆயர்களாக ஆடுமாடுகளை வளர்த்தனர். பசுக்களையும் எருமைகளையும் பேணி வளர்த்து அவைகளிடமிருந்து பால் வளத்தைப் பெற்று பாற்பயனாகிய தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலிய உணவுப் பொருட்களை உற்பத்தியாக்கினர். பசுக்களைப் பாதுகாத்தவர்கள் இடையர்கள் என்றும்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

ஆடுகளை வளர்த்தோர் குறும்பர்கள் என்றும் பெயர் பெற்றனர். அரசாங்கமும் இடையர்களுடைய நலத்தைக் கருதி உரிய காலங்களில் அவர்கள் செலுத்த வேண்டிய வரிகளை நீக்கி பாதுகாப்பளித்தது.
தற்காலத்திலிருப்பது போல் இல்லையெனினும் தொழிற்சாலைகளில் பலருக்கு வேலையளித்தது. உழவு வேலையற்ற சமயம் உழவர்கள் தொழிற் சாலைகளில் வேலை செய்தனர். ஆயினும் கிராமங்களில் அந்தந்த கிராமங்களுக்குத் தேவையான பொருள்கள் உற்பத்தியாயின. தொழிலாளர் என்ற தனிப்பிரிவு அப்பொழுது இல்லை. கைத்தொழில் விளைஞர்களை நெசவுத் தொழிலாளர், எண்ணெய் உற்பத்தி செய்வோர் எனப் பிரிக்கலாம். கண்மாளர்கள், பாஞ்சலர்கள் எனவும் அழைக்கப்பெற்றனர். இவர்கள் இரும்புக் கொல்லர், பொற்கொல்லர் கன்னாரத் தொழிலர், தச்சர்கள், விக்ரகங்களை வார்ப்போர் என ஐவகையாகப் பிரிவுற்றிருந்தனர். இந்த ஐந்து வகையானத் தொழில்களை செய்தோர்கள் விஸ்வகர்மாவின் ஐந்து புதல்வர்களாகிய மனு, மயன், துவஸ்திரி, சிற்பி விஷ்வக்சேனன் என்போரின் சந்ததியர்கள் என அழைக்கப் பெற்றனர். இத் தொழில்களெல்லாம் பரம்பரை குடும்பத் தொழில்களாக வளர்ந்தன. ஒவ்வொரு தொழிலையும் சேர்ந்த குடும்பங்கள் தனித்தனித் இனங்களாகப் பிரிந்து விட்டன. இரும்புக் கொல்லர்கள் உழுகலப்பைக்கேற்ற இரும்புச் சாமான்களையும், வண்டிகளுக்கு ஏற்ற இரும்புப் பொருள்களையும், மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் ஏற்றலாடங்களையும் செய்தனர். பொற் கொல்லர்கள் மகளிர்க்கும், ஆடவர்க்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற அணிகலன்களையும், கோவில் விக்ரகங்களுக்கு ஏற்ற உயர்தர ஆபரணங்களையும் செய்தனர். கன்னார்கள், கோவில்களுக்கும் இல்லங்களுக்கும் ஏற்ற சமையல்பாத்திரங்களையும் விளக்குகள் முதலிய அழகுப் பொருள்களையும் செய்தனர். முதலாம் தேவராயர் காலத்தில் பாஞ்சால இனத்தைச் சேர்ந்தவர்கள் 74 பிரிவுகளாகப் பாகுபாடு அடைந்திருந்தனர் என்று கல்வெட்டுக்களிலிருந்து நாம் உணருகிறோம். மேலும், இவர்களும் இடங்கையார், வலங்கையார் என்றும் பிரிவுற்றிருந்தன
75

Page 85
ரென்றும் இவர்களுக்குள் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேற்றுமை கொண்டு தங்களுக்குள் கலகம் செய்து கொண்டனர் என்றும் அரசாங்கம் தலையிட்டு அவர்களிடையே அமைதியை நிலை நாட்ட வேண்டியிருந்தது என்றும் அறிகிறோம். எடுத்துக் காட்டாக, மதுரையை ஆண்ட வீரப்ப நாயக்கர் பாஞ்சால வகுப்பைச் சேர்ந்த ஐந்து இனத்தவரும் தனித்தனியாக பிரிந்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளார். தனிப்பட்ட தொழிற் செய்யும் சாதியைச் சேர்ந்தவர்கள் ஒன்றுபடும் பிரிவினைச் சக்தியே இதற்குக் காரணம் என்ற கூறலாம். சமூக அமைப்பில் தனிப்பட்டஉரிமைகளுக்காக பலதிறப்பட்ட மக்களிடையே பெருங்கலங்கள் விளைவதும் உண்டு.
சமூக அமைப்பில் தாழ்ந்த நிலையில் இருந்த வர்கள் சில உரிமைகளுக்காக பெரு முயற்சியும் செய்தனர். தொழிலாளர்கள் பெரு முயற்சிகள் எடுத்து பல உரிமைகளைப் பெற்றதும் உண்டு. எடுத்துக்காட்டாக தச்சத் தொழிலாளர்கள் தேர்த் திருவிழாக்களின் பொழுது தங்களுடைய தலையில் தலைப்பாகை அணிந்து கைகளில் உளியும் சுத்தியும், மரம் அறுக்கும் வாளையும் கொண்டு தேரின் பின் போவதும், சிலர் இடுப்பில் அங்கவஸ்திரம் அணிந்து போவதும் வழக்கங்கள் என கல்வெட்டுக்களிலிருந்து நாம் உணருகிறோம். தறிகளில் துணிகளை நெய்து மக்களுக்கு உடுக்க உடையளித்த கைக்கோளர்கள் அக்காலத்தில் மிக்க செல்வாக்குப் பெற்றிருந்தனர். தேவாலயங்களை நன்முறையில் நடத்துவதிலும் கோவில்களுக்குரிய வரிகளை விதித்து அவற்றை வசூல் செய்வதிலும் பங்கு கொண்டனர். கோவில் களுக்கு அருகாமையில் அவர்கள் குடியிருந்தனர். அவர்கள் தங்களுக்கெனப் பல உரிமைகளை அடைவதற்கு முயற்சி செய்தனர். துணிகளுக்குச் சாயம் தோய்த்த தொழிலாளர்களும் இவ்வினத்தைச் சேர்ந்தவராவர். வாழ்விலும் சாவிலும் சங்கு முழக்கம் செய்வதும், பல்லக்கில் ஊர்வலம் போவதும் அவர்கள் பெற்ற சில உரிமைகளாகும். எள், தேங்காய், முத்துக்கொட்டை முதலிய எண்ணெய் வித்துக்களி லிருந்து எண்ணெய் உண்டாக்கிய எண்ணெய் வணிகர்களும் இவ்வினத்தைச் சேர்ந்தவராவர். குயவர்கள், கள்ளிறக்குவோர், தோல் பதனிடுவோர் முதலிய தொழிலாளர்களும் இருந்தனர். இவர்கள்
76

பற்றி அதிக விவரங்கள் இல்லையெனினும், இவர்கள் சமூகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும், பட்டினத்திலும் சலவைத் தொழிலாளர்களும் நாவிதர்களும் மக்களுக்குத் தேவையான சேவை செய்து வந்தனர். சுரங்கங்களில் வேலை செய்து உலோகங்களை எடுத்தவர்களும் இருந்தனர்.
கிராமச் சபைகள்
சபை, ஊர், நாடு என்ற மூவகையான கிராமச் சபைகள் விஜயநகர ஆட்சிக் காலத்தில் நிலைபெற்றிருந்தன. சதுர்வேதிமங்கலங்கள் என்ற கிராமங்களில் சபைகளும், ஊர்ச்சபைகளும் இருந்தன. பல சதுர்வேதி மங்கலங்கள் அடங்கிய பகுதியில் நாடு என்ற அமைப்பு நிலைபெற்றிருந்தது. நானாதேசிகள், மணிக்கிராமம், மூவாயிரவர் என்ற தொழிற் சங்கங்களும், வியாபாரச் சங்கங்களும் அப்பொழுது நிலைபெற்றிருந்தன. மக்களுடைய அன்றாட பொருளாதார வாழ்க்கையில் கோவில் களும் சிறந்த சேவை செய்தன.
கிராமச் சபைகள் எவ்விதம் தோன்றின என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. அந்தணர்கள் மாத்திரம் வாழ்ந்த பிரம்மதேயக் கிராமங்களில் சபைகள் அமைந்திருந்தன. அந்தணர்களும் மற்றைய இனத்தவர்களும் சேர்ந்து வாழ்ந்த கிராமங்களில் ஊர்ச்சபைகள் இருந்தன. ஊர்ச்சபைகள் எவ்விதம் அமைக்கப்பெற்றன எனக் கூறமுடியவில்லை. சதுர்வேதிமங்கலங்களில் இருந்த சபைகள் எவ்விதம் அமைக்கப்பெற்றன என்று உத்திரமேரூர்க் கல்வெட்டுக்கள் தெளிவாகக் கூறுகின்றன. அந்தணர்கள் மாத்திரம் வாழ்ந்த சதுர்வேதி மங்கலத்தில் அமைக்கப் பெற்ற சபைகள் நிலவுரிமைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. அக்காலத்திய கல்வெட்டுக்களில் ஏகபோகம், கணபோகம் என்ற இருவகையான நிலவுரிமைகள் கூறப்பட்டுள்ளன. தனிமனிதன் ஒருவன் தானாதி வினிமய கிரய விக்கிரயங்களுக்குப் போக்கியமாய் புத்திர பெளத்திர பாரம்பரியமாய் அனுபவிக்கப்பெற்று வந்த நிலங்களுக்கு ஏகபோக உரிமையென்றும், கிராமத்தில் வசித்த எல்லா மக்களும் சேர்ந்து மேற்கூறப்பெற்ற உரிமைகளோடு அனுபவித்து
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 86
வந்தால் அதற்கு கணபோக உரிமையென்றும் பெயர்கள் வழங்கின. இரண்டாம் ஹரிஹர தேவராயர், அந்தணர்கள் பலர் கணபோக உரிமையுடன் நிலங்களை அனுபவிக்கும்படி சில நிலங்களைக் கொடுத்துள்ளார். அவ்வித நிலங்களைக் கிராமத்தில் வாழ்ந்த எல்லா அந்தணர்களும் தானாதி, வினிமய கிரய விக்கிரயங்கள் செய்தல் வேண்டும். 1529ஆம் ஆண்டில் கடலாடி என்னும் கிராமத்தை இராமச் சந்திர தீட்சிதர் என்பாருக்கு ஏகபோக உரிமையாக அச்சுத தேவராயர் வழங்கியுள்ளார்.
கணபோக உரிமையில் கீழ்க் கண்ட உரிமைகளைக் காணலாம். 1. அவ்வுரிமையில் உள்ள நிலங்களை கிராமத்தைச் சேர்ந்த எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து உழுது பயிரிட்டனர். அவரவர்கள் உதவிய உழவிற்கும் மற்ற உழைப்பிற்கும் ஏற்றாற்போல் நிலங்களில் மகசூலைப் பிரித்துக் கொண்டனர். 2. சில கிராமங்களில் ஒரு பகுதி நிலங்கள் ஏகபோகமாகவும், மற்றொரு பகுதி கணபோகமாகவும் அனுபவிக்கப் பெற்றன. 3. சில கிராமங்களில் உள்ள நிலங்கள் முதல், இடை, கடையென மூன்று தரங்களாகப் பிரிக்கப் பெற்றிருந்தன. கிராம சமூகத்தைச் சேர்ந்தவர் களுக்கு இம்மூன்றுவித நிலங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு கொடுக்கப்பெற்று சாகுபடி நடப்பது உண்டு. தஞ்சை மாவட்டத்தில் இவ்வித நிலப்பிரி வினைக்கு கரையீடு என்ற பெயர் வழங்கியது. கணபோக கிராமங்களில் மக்கள் தொகை பெருகிய பொழுது அவர்களின் விவகாரங்களைக் கவனிக்க ஒரு குழு மிக அவசியமாயிற்று. இந்தத் தேவைக்காகவே சபை உருப்பெற்றது. கணபோகம் அல்லது சமுதாயம் எனப்படும் கிராமங்களில் கூட்டு வாழ்வின் விளைவாக சபைகள் தோன்றின.
மேற்கூறப்பெற்ற நிர்வாகக் கடமைகளோடு கூட இன்னும் பல முக்கிய கடமைகளையும் சதுர்வேதி மங்கலக் கணபோகச் சபைகள் ஆற்றின. கண போகத்தைச் சார்ந்த நிலங்களை விற்பதும் வாங்குவதும் சபைகளே செய்து வந்தன. ஏகபோக கணபோக நிலங்களிலிருந்து நிலவரி வசூல் செய்து மத்திய அரசாங்க பண்டாரத்திற்கு அனுப்பிவைத்தன.
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அரசாங்கத்திற்குரிய வரி வசூல்களை நிறுத்தி வைப்பதும், புதிய வரிகளை விதிப்பதும், அவ்வரிகளில் ஒரு பகுதியை தேவாலயங்களுக்கு மானியமாகக் கொடுப்பதும் ஆகிய உத்தரவுகளை மத்திய அரசாங்கத்தினர் கிராமசபைகளுக்கே அனுப்பி வைத்தனர். கிராமசபைகள் அந்த உத்தரவுகளைக் கோவில் சுவர்களில் வெட்டுவிப்பதும், வரிவசூல் புத்தகங்களில் அவற்றிற்கேற்ப மாற்றங்களை செய்து கொள்வதும் வேண்டும். வரிவிதிப்பு வசூல் முதலிய வற்றில் மாற்றங்கள் நேருமாயின், அரசாங்கத்தார் கிராமசபைகளுக்கு உடனுக்குடன் தெரிவித்தனர். சபைகளைக் கலந்து ஆலோசித்த பிறகு புதிய வரிகள் விதிக்கப் பெற்றன. கிராமங்களுக்கென விதிக்கப் பெற்ற வரிகளை கிராமசபைகள் வசூல் செய்து கிராமங்களின் நன்மைக்கே செலவிட்டன. கிராம மக்களுக்கு நீதி வழங்கும் அதிகாரமும் சபைகளுக் கிருந்தன.
கிராமங்களில் குற்றங்கள் செய்தோருக்குத் தண்டனையான அவர்களுடைய நிலங்கள் பறிமுதல் செய்யப் பெற்றன. கிராமங்களிலுள்ள பொது விடங்களும் மகாசபையால் பராமரிக்கப் பெற்றன. கோவில்களுக்கும் மற்ற அமைப்புக்களுக்கும் பொதுமக்கள் வழங்கிய மானியங்களையும், அறக் கட்டளைகளையும் கிராமச் சபைகள் பாதுகாத்தன. வேதப் பயிற்சி செய்யும் அந்தணர்களுக்கு உணவளிப்பதற்கு ஏற்ற காப்புறுதிக் கட்டணங்களைப் பாதுகாத்தன. தேவாலயங்களுக்குச் சொந்தமான நிலங்களைப் பயிரிடுவதற்கும், அந்த வருமானத்தைக் கொண்டு நித்திய நைவேத்தியங்களை நடத்து வதற்கும் சபைகள் பொறுப்பேற்றன.
தொழிற்சங்கங்களும் கூட்டுறவுகளும்
நாட்டின் பொருளாதார அமைப்பில் தொழிற்சங்கங்கள் இடம்பெற்றிருந்தன. ஒரே தொழில் செய்பவர் இதில் ஒன்றுகூடி, தங்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினர். இத்தொழிற்சங்கங்கள் அந்தந்த ஊரைச் சார்ந்தவையாக இருந்தன. சில சமயம் வெளி ஊரிலிருந்தும் இதில் சம்பந்தம் பெற்றிருந்தனர். இத்தொழிற்சங்கங்களின் அங்கத்தினர் ஒரே
77

Page 87
மதத்தைச் சேர்ந்தவராகவே இருந்தனர். ஒரே மதத்தைப் பின்பற்றுபவர் என்ற காரணம் இத்தொழிற்சங்கங்களை ஒற்றுமையாக இயங்க வைத்தன. தொழிற்சங்கங்கள் வியாபாரச் சங்கங்கள் என்ற இருவகையான அமைப்புக்களைப் பற்றிய பல ஆதாரங்கள் உள்ளன. ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குரிய தொழில் வசதிக்காக அமைத்துக் கொண்ட சங்கம் தொழிற்சங்கமாகும். எடுத்துக்காட்டாக வீரபாஞ்சாலர் என்றழைக்கப் பெற்ற பொற்கொல்லர்கள், இரும்புக் கொல்லர்கள், கன்னார், தச்சர், விக்கிரகங்கள் வார்ப்போர் ஆகியோர் தங்களுக்குள் தொழிற்சங்கங்களை அமைத்துக் கொண்டனர். கிருஷ்ணதேவராயர் எழுதிய ஆமுக்தமால்யதா என்னும் நூலில் நெசவாளர், பொற்கொல்லர், பட்டுநூல்காரர், கோமுட்டிகள், கோணிப்பைகள் செய்வோர், கூடை முடைவோர்கள் முதலிய தொழிலாளர்களின் சங்கங்களைப் பற்றிக் கூறப்பெற்றுள்ளது. உப்பு உற்பத்தி செய்வோரும், தங்களுக்குள் சங்கங்கள் ஏற்படுத்தியிருந்தனர். பொதுவாக விஜயநகரப் பேரரசில் பதினெட்டு வகையான சங்கங்கள் இருந்தனவென அறிகிறோம்.
மேற்கூறப்பெற்ற சங்கங்களில் தொழிற்ப் பாரம்பரியம் அமைந்து இருந்தது. மூதாதையர் களுடைய தொழிலை விடாது, பின் வந்தவர்கள் செய்வது வழக்கம். ஒரு தொழிலை விட்டு ஒருவன் மற்றொரு தொழிலைச் செய்ய ஆரம்பித்தால் தன்னுடைய தொழிற்சங்கத்தையும் மாற்றிக் கொள்வது வழக்கம். இவ்விதத் தொழில் மாற்றத்தினால் சாதியின் அடிப்படை தகர்ந்து போவதும் உண்டு. ஒரே சாதியைச் சேர்ந்த மக்கள் பலவிதமான தொழில்களில் ஈடுபடுவதும் நடைபெற்றது. தொழிற்சங்கங்களில் உறுப்பினராக இருந்தவர்களே நகரங்களிலும் பேரூர்களிலும் அத்தொழில்களை தடையின்றி நடத்த முடியும். இத்தொழிற்சங்கங்களில் அங்கம் வகிக்கும் எல்லோருக்கும் சமமான வேலை வாய்ப்புககளும், உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் அளித்து, தொழில் போட்டியினால் உண்டாகும் வேலையில்லா நிலைமையையும் இச்சங்கங்கள் நீக்கின.
78

அக்காலத்திய கல்வெட்டுக்களில், தொழிற் சங்கங்கள் எவ்வாறு அமைக்கப் பெற்றனவென்று தெளிவாகக் கூறப் பெறவில்லை. ஆயினும் தொழிற் சங்கங்களைப் பற்றிக் கூறும் கல்வெட்டுக்களில், சங்கத்தின் கட்டுப்பாட்டைக் குலைத்தவர்கள் பாஞ்சால சங்கங்களிலிருந்தும், நாட்டிலிருந்தும் நீக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அகமதாபாத் நகரத்தில் அமைக்கப் பெற்றிருந்த தொழிற்சங்கங்களைப் பற்றிய விதிகளிலிருந்து, விஜயநகர ஆட்சிக் காலத்தில் விளங்கிய தொழிற்சங்கங்களைப் பற்றி நாம் உய்த்துணரக் கூடும். “தொழிற்சங்கங்களின் விதிகளை மீறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப் பெற்றன. அபராதம் கொடுக்கத் தவறியவர்கள் சாதியிலிருந்து விலக்கப் பெறுவர். மற்ற தொழிற்சங்கங்களிலிருந்தும் நீக்கப்பெற்று வேலை வாய்ப்பும் பெறாத நிலையை அடைவர்.” மேற்கூறப்பெற்ற சங்கங்கள் ஒற்றுமையுடன் தொழிற்பட்டு அரசாங்கத்திலிருந்து இனத்திற்கேற்ப பல உரிமைகளைப் பெற்றன. புதிய வரிகள் விதிக்கப்படும்பொழுது இச்சங்கங்களின் சம்மதத் தோடு விதிக்கப்பெற்றன. வரிகளின் விகிதம் இடத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபட்டிருந்தது. பல வரிகளை வசூல் செய்து கோவில்களுக்கும் மற்ற சமய அமைப்புகளுக்கும் அறக்கட்டளைகள் அமைக்கப் பெற்றன. தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் அமைந்திருந்த தெருக்கள் அத்தொழிலாளர்களின் பெயர்களோடு அமைந்திருந்தன. இச்சங்கங்களின் அதிகாரம் ஓர் குறிப்பிட்ட தொழிலாளர்கள் வசித்த எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. காஞ்சி புரத்திலும் விரிஞ்சிபுரத்திலும் நிலைபெற்றிருந்த தொழிற்சங்க அங்கத்தினர் களுக்கு, திருவிழாக் காலங்களில் சங்கு ஊதிக்கொண்டு பல்லக்கில் அமர்ந்து செல்லும் உரிமைகள் இருந்தன. இவ்வித உரிமைகளை மற்ற தொழிற்சங்கங்களும் அரசாங்கத் திடம் போராடிப் பெற்றன.
வணிகச் சங்கங்கள்
வணிகத்துறையில் ஈடுபட்டிருந்த பல வணிகர்கள்
தங்களுடைய வணிகத்திற்கென தனித்தனிசங்கங்கள் அமைத்துக் கொண்டனர். கல்வெட்டுக்களின்
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 88
துணைகொண்டு விஜயநகர ஆட்சியில் அமைக்கப் பெற்றிருந்த பல வணிகச் சங்கங்களின் பெயர்களை நாம் அறிந்து கொள்ளலாம். அவற்றுள் ஐம்பத்தாறு தேசத்தைச் சார்ந்த உபயநானாதேசிகன், வீரபணாஜி யர்கள், வைசிய வாணிப நகரத்தார், கடைக் கூட்டுத்தாபனத்தார், நகரத்தார், அய்யா வோலர், அய்யாவோல சால மூலர் என்பவை முக்கியமானவை. இச்சங்கங்கள் விஜயநகரப் பேரரசின் பல பாகங்களில் நிலைபெற்றிருந்தனவென்றும் அவைகள் பலதிறப்பட்ட வாணிபம் செய்தனவென்றும் அறியக் கிடக்கின்றது.
ஐம்பத்தாறு தேசத்திய நானாதேசிகன் என்போர் மைசூர் நாட்டில் ஐஸ்வர்யபுரம் என்னும் ஊரில் வசித்தவர்கள் என்றும் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து விஜயநகரப் பேரரசின் பல பாகங்களில் வணிகம் செய்தனர் என்றும் நாம் உணர்கிறோம். கர்நாடகப் பகுதியில் நிலவிய முக்கிய வணிகக் குழுவிற்கு வீரபணாஜியர் என்ற பெயர் வழங்கியது. தமிழ்நாட்டில் இவர்கள் வீரவலஞ்சீயர் என்றழைக்கப் பட்டனர். வணிகம் செய்வதற்கு அஞ்சாதவர்கள் என்றும் இவர்களைக் கூறலாம். வட இந்தியாவில் உள்ள அஜிச்சத்திரம் (Ahicchattra) என்ற இடத்திலிருந்து வந்து தக்கணத்திலுள்ள ஐகோலே என்னுமிடத்தில் தங்கி வணிகம் செய்தனர். இக்குழுவினரின் வணிகத்தை மேற்பார்வை செய்வதற்கு ஐநூறு பேர் கொண்ட பெரிய நிர்வாகக் குழுவொன்று இருந்ததாகவும் அறிகிறோம். கி.பி. 12, 13ம் நூற்றாண்டுகளில் இக்குழுவினர் தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பல வாணிப நிலையங்களை ஏற்படுத்தி பெருவாரியான முறையில் வியாபாரம் செய்தனர். பிற்காலத்தில், இந்தியாவில் வாணிபம் செய்து இந்திய நாடு முழுவதையும் ஆங்கிலப் பேரரசின் கீழ்க் கொண்டு வந்த கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கு இவர்களை ஒப்பிடலாம் என அறிஞர் பார்னட் (Barnet) கூறுவர். இந்த வீரபணாஜியர் என்ற வணிகக் குழுவினரின் செயல்கள் முறைப்படி நடக்கும்படி செய்வதற்கு ஐநூற்றுக்கு மேற்பட்ட சட்டதிட்டங்கள் இருந்தன என்று நாம் அறிகிறோம்.
வலஞ்சீயர் (பலஞ்சியர்) என்பது பணாஜியர் என்பதின் மற்றொரு வரி வடிவம் என்றும், அது
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

வடமொழியில் வணிகர் என்று பொருள் பெற்றபனிஜா அல்லது பணிஜிகா என்பதின் திரிபு என்றும் அறிஞர் (Fleet) கூறுவர். வீர சைவர்களாகிய இலிங்காயத்து சமயத்தைச் சேர்ந்தவர்களிடம் பணாஜிகர் என்ற பிரிவு உள்ளது. கன்னட மொழியில் வீரபணாஜியர் என்பது தீவிர சமயப் பற்றுள்ளவர்களைக் குறிக்கும், நகர பரிவாரகர், மும்முரி தண்டர் அவர்களுக் கிருந்தன. விஜயநகரம், அஸ்தினாவதி, துவார சமுத்திரம், பெனுகொண்டா, குத்தி, அதாவணி, உதயகிரி, சந்திரகிரி, ஹோனாவூர், சந்தவூர், அரகம், சந்திரகுட்டி, அன்னிகிரே, ஹாலிகிரே, நீடுகல்லு, சிமிதானகல்லு, தரியகல்லு, சிங்கப்பட்டினம், தேரகநம்பி முதலிய பேரூர்களில் வீரபணாஜியர் களுடைய வணிகச் சங்கங்கள் அமைந்திருந்தன.
வைசிய வணிக நகரத்தார்களைப் பற்றிப் போதுமான செய்திகள் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழ்நாட்டில் வாணிபம் செய்தனர். கடைக் கூட்டுத்தாபனரும் தமிழ்நாட்டில் சங்கங்கள் அமைத்திருந்தனர். விஜயநகரத்து நவரத்தின வியாபாரிகள் முத்து, இரத்தினம், வைரம் முதலிய விலையுயர்ந்த பொருள்களை தங்களுடைய திறந்த கடைகளில் வைத்து வியாபாரம் செய்தனர் என அப்துர் ரசாக்கும் பீயசும் கூறியுள்ளனர். ஓரினம் அல்லது சமயத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே கடைவீதியில் வியாபாரம் செய்தனர். இதுவும் சங்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தது. கர்நாடகத்தைச் சேர்ந்த வீரபணாஜியர்கள் இலிங்காயத்துசமயத்தவர்களாவர். பல வணிகர்கள் தங்களை வசுதேவர் அல்லது குபேரனுடைய சந்ததியார்கள் எனக் கூறிக் கொண்டனர். இதனால் அவர்களுக்குள் ஒருவித ஒற்றுமை நிலவியது. வணிகர் சங்கங்களை இப்பொழுதுள்ள பொறுப்பாண்மைக் கழகங்களுக்கு (Trust) ஒப்பிட முடியாது. ஏனெனில், வியாபாரம் பொதுவாக நடைபெற்று, இலாபத்தை எல்லா வியாபாரிகளும் பங்கிட்டுக் கொள்ளும் வழக்கம் கிடையாது. வியாபாரிகளுடைய நலத்தைக் கருதியே இந்தச் சங்கங்கள் அமைந்திருந்தன. பொருள்களை வாங்கும்பொழுது மொத்தமாக வாங்கித் தனித்தனியாகவே விற்றனர்.
சில வணிகச் சங்கங்களுக்கு நகரத்தார்கள் அல்லது செட்டியார்கள் என்ற பெயர் வழங்கியது.
79

Page 89
கன்னட, தெலுங்குப் பகுதிகளில் இந்த நகரத்தார்களுடைய தலைவருக்குப் பட்டண சுவாமி என்ற பெயரும் வழங்கியது. பட்டண சுவாமிகள் எம்முறையில் நியமனம் பெற்றனர் என்று விளங்கவில்லை. ஆனால், நகரங்களில் இருந்த வியாபாரச் சங்கங்களை அவர்கள் மேற்பார்வை செய்து வியாபாரத்தைப் பெருக்கினர். அவர்கள் வெளியிடங்களுக்குச் சென்றால் மற்ற வியாபாரிகள் அவர்களைத் தக்க மரியாதையுடன் வரவேற்றனர். அவர்களுடைய போக்குவரத்து செலவிற்கும் உணவிற்கும் ஏற்படும் செலவையும் பொறுத்துக் கொண்டனர். அவர்களுடைய தகுதிக்கேற்ற உறையுளும், ஆடைகளும் வழங்கப் பெற்றன என்று சில கல்வெட்டுக்கள் கூறுகின்றன. பட்டண சுவாமிகளுக்கு அடுத்தாற்போல வியாபாரத்தில் மிக்க அனுபவமுள்ள வணிகர்களுக்கு வர்த்தக விவஹாரி என்ற பெயரும் வழங்கியது. இவ்விரு வருக்கும் நிலைபெற்றிருந்த உறவைப் பற்றிக் கூறுவதற்கு ஏற்ற ஆதாரங்கள் இல்லை. ஆனால் தங்களுடைய சங்கங்களின் அதிகார எல்லைக்குட் பட்ட இடங்களில் சந்தைகளையும் கண்காட்சி களையும் அமைத்து வியாபாரத்தைப் பெருக்கினர். மகாபிரபு என்றொரு அலுவலாளரும் வணிகச் சங்கங்களின் வளர்ச்சிக்குப் பணிபுரிந்தனர்.
தொடக்கத்தில் வணிகச் சங்கங்கள் தனிப்பட்ட அமைப்புக்களாகவே விளங்கின. நாளடைவில் அரசாங்கத்தாலும், பொதுமக்களாலும் மதிக்கப்பெற்று, அரசாங்கத்தாரிடம் அவர்கள் விடுத்த வேண்டு கோள்கள் நிறைவேறுவதும் உண்டு. நானாதேசி வியாபாரிகளுடைய விண்ணப்பங்களை புக்கண உடையார் என்ற அரசர் நிறைவேற்றியுள்ளார். அரசர்கள் வரி விதிக்கும் பொழுது வியாபாரச் சங்கங்களின் ஆதரவையும்பெற்றுவரிவிதிப்பதுண்டு.
திருமலைராயருடைய அலுவலாளராகிய அப்பராஜதிம்மப்பர் என்பார் பட்டண சுவாமியின் சம்மதத்தோடு ஒரு கோவிலுக்குச் சில அறக் கட்டளைகளை ஏற்படுத்தியுள்ளார்." அண்ணா கம்பதேவர் என்ற அச்சுததேவராயருடைய அலுவலாளர் சில விவசாய வரிகளையும், திருமணத்திற்கு விதிக்கப்பெற்ற வரிகளையும்
80

நானாதேசி சங்கத்தின் சம்மதத்தோடு கோவில் களுக்குத் தானம் செய்துள்ளார். 1534ஆம் ஆண்டில் வரையப் பெற்ற ஓர் சாசனத்தின்படி, இலேபாக்கூழி நாட்டைச் சேர்ந்த விஸ்வேஸ்வர தேவபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்ற சந்தையில் கிடைத்த சுங்க வருமானத்தை அவ்வூரைச் சேர்ந்த வியாபாரச் சங்கத்தினர் கோவிலுக்குத் தானம் செய்துள்ளார். பஞ்ச காலங்களில் அரசாங்கத்திற்குச் சேரவேண்டிய வரிகளை வஜா பெறுவதற்கும் வணிகச் சங்கங்கள் உதவி புரிந்தன.
வணிகச் சங்கங்கள் அரசாங்க அலுவலாளர் களுக்கு சில கெளரவப் பட்டங்களை அளிப்பதும் உண்டு. ஐம்பத்தாறு நாடுகளின் சுங்க அதிகாரியாகிய மும்முடி தன்னாயகர் என்பாருக்கு நகர பரிவார மும்முரிதண்ட என்ற வணிகச் சங்கங்களும் அவைகளில் அங்கம் வகித்த முன்னூறு பில்லர்களும் (Billas) விஜயநகரத்து ஹோலியர்களும் (Holyas) காண, விருபாட்சதேவரின் திருவடிகளில் ஒர் வைர மாலையை வைத்து வணங்கி பிருதிவி செட்டித்தானம் என்ற நகரசபைத் தலைமையை வழங்கினர் என்று ஒர் சாசனம்கூறுகிறது."சமூகச் சீர்திருத்தச்செயல்களிலும் சில வணிகச் சங்கங்கள் ஈடுபட்டன. 1449ஆம் ஆண்டில் பாகூர் என்ற இடத்தில் வசித்த சில செட்டியார்கள், கற்புமுறைதவறிய பெண்களைப்பற்றிச் சில வரன்முறைகளை ஏற்படுத்தினர். ஆனால் இந்த சாசனம் முழுமையாக நமக்குக்கிடைக்காமையால் அந்த சட்டங்களைப் பற்றி நாம் முழுவதும் அறிந்து கொள்ளுவதற்கில்லை." மேற்கூறப்பெற்ற முறைகளில் விஜயநகரப் பேரரசின் அரசியல், பொருளாதார, சமூக காரியங்களில் வணிகச் சங்கங்கள் பங்குகொண்ட போதிலும், அந்த சங்கங்களின் வரலாற்றை முற்றிலும் உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற ஆதாரங்கள் நமக்குக் கிடைக்கவில்லை.
தேவாலயங்கள்
சோழப் பேரரசர்கள் காலத்தைப் போலவே விஜயநகர ஆட்சியிலும் தென்னிந்தியாவின் பொருளாதார வாழ்வில் தேவாலயங்களின் பங்கு மிகச் சிறப்புற்று இருந்தது. தென்னிந்திய மக்களின் சமய வாழ்வின் அடிப்படையாக விளங்கிய தேவாலயங்கள்,
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 90
அவர்களுடைய அன்றாட பொருளாதார வாழ்விற்கும் உதவி செய்தன.
தென்னிந்திய தேவாலயங்களில் அருட்செல்வமும் பொருட்செல்வமும் செழித்தோங்கின. தேவதான நிலங்களைப் பயிரிடுவதற்கும், தரிசாகக் கிடந்த நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளையுண்டாக்கி கிராமங்கள் செழிப்படைவதற்கும் கோவில்கள் உதவி செய்தன. கோவில்களில் நடைபெறும் நித்திய நைவேத்தியங்களுக்கும், திருவிழாக் காலங்களுக்கும் பலவிதமான பொருட்களும் சேவைகளும் தேவைப்பட்டன. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் பெரும்பாலானவைகளை தேவாலயங்கள் வாங்கி உபயோகம் செய்தன. உழவுத் தொழிலினால் உற்பத்தியான பொருட்களையும் கைத்தொழிற் பொருட்களையும் நிரம்ப வாங்கிய கோவில்களில் பலவிதமான தொழிலாளிகள் வேலை செய்து பிழைத்தனர். பாங்குகளும், கூட்டுறவு நாணயச் சங்கங்களும் இல்லாத அக்காலத்தில், உழவுத் தொழிலுக்கும், திருமணங்கள் முதலிய காரியங் களுக்கும் மக்களுக்குக் கடன் கொடுத்து உதவி செய்வதில் கோவில்களின் பொருட்செல்வங்கள் உதவி புரிந்தன. கிராமங்களிலும், நகரங்களிலும் உற்பத்தி செய்யப்பெற்ற பல கைவினைப் பொருட்களை தேவாலயங்கள் வாங்கியதால் கணக்கற்ற ஏழை மக்களுக்குப்பிழைப்புக் கிடைத்தது.
தென்னிந்திய கோவில்களின் செல்வச் செழிப்பே அவற்றின் சீரழிவிற்கும் ஓர் காரணமாயிருந்ததெனக் கூறுவதிலும் உண்மையுண்டு. வடநாட்டிலிருந்து 1310ம் ஆண்டில் படையெடுத்தமாலிக்காபூர் வாரங்கல், துவாரசமுத்திரம், திருவரங்கம், மதுரை முதலிய இடங்களில் நிலைபெற்ற கோவில்களிலிருந்து ஆயிரக்கணக்கான மணங்கு நிறையுள்ள தங்கம், வெள்ளி, முத்துக்கள், நவரத்தினங்கள் முதலியவற்றை யானைகளின் மீதும் ஒட்டகங்களின் மீதும் ஏற்றிச் சென்றதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். பின்னர் துக்ளக் முகம்மதுவின் படையெடுப்பின் பொழுதும் இவ்விதமாகவே நடந்துள்ளது. தற்கால மதிப்பின்படி பத்து கோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்கம், வெள்ளி முதலியவை வாரிச் செல்லப்பட்டனவெனக் கூறலாம். இவ்வளவு செல்வங்களும், தென்னிந்திய கோவில் களுக்கு எங்கிருந்து கிடைத்தவை? தென்னிந்திய
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அரசர்களும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அரசாங்க அலுவலாளர்களும் பொது மக்களும் தேவாலயங்களுக்கு அளித்த செல்வங்களே, இவ்விதமாக அன்னியர்கள் அள்ளிச் சென்றவையாகும். கோவில்களுக்கு கொடுக்கப்பட்ட நிலங்களுக்கு தேவதானம் திருவிளையாட்டம் என்ற பெயர்கள் வழங்கியுள்ளன. அரசாங்கத்திற்குரிய வரிகள் நீக்கப் பெற்ற நிலங்களுக்கு தேவதான இறையிலி என்று பெயர். ஒரு கோவிலைச் சுற்றி வசித்த மக்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகள் பலவற்றை கோவில் அதிகாரிகளே வசூலித்துக் கொள்ளும்படி அரசன் உத்தரவிடுவதும் வழக்கமாகும். கோவில்களில் இடிந்து போன பகுதிகளை சீர்ப்படுத்துவதற்கும், புதிய மண்டபங்கள் அமைப்பதற்கும், தேர்த்திருவிழா அபிஷேக ஆராதனைகள் நடத்துவதற்கும் தானங்களும், அறக்கட்டளைகளும் வைக்கப்பெற்றன. தங்கத்தினாலும், வெள்ளியினாலும், விக்கிரகங்கள் வார்க்கப் பெற்றன. பொன்னும், மணியும், முத்தும், நவரத்தினங்களும்பதிக்கப்பெற்றபல ஆபரணங்களும் கோவில்களுக்கு அளிக்கப் பெற்றன. நிலையான விளக்குகள் எரிவதற்காக ‘சாவா மூவா’ பேராடுகளும் பசுக்களும் வழங்கப் பெற்றன. விக்கிரகங்களின் அபிஷேகங்களுக்கு வேண்டிய பால், நெய், பஞ்ச கெளவியம் முதலிய பொருட்கள் கோவிலிலுள்ள பசுமடங்களிலிருந்தே கிடைத்தன. விக்கிரகங்களுக்கு சூட்டப்பெறும் மாலைகளுக்கும், அருச்சனை செய்வதற்கும் உரிய புஷ்பங்களுக்கும் துளசிக்கும் ஏற்ற நந்தவனங்கும் கோவில்களுக்கு அளிக்கப்பெற்றன. சர்வமானிய இறையிலியாகக் கொடுக்கப்பெற்ற கிராமங்களுக்கு எடுத்துக்காட்டாக மாடம்பாக்கம் என்னும் ஊரில் சேர்வை ஆளுடைய நாயனார் கோவிலுக்குக் கொடுக்கப்பெற்ற சர்வமானிய இறையிலியைக் கொள்ளலாம். “ஓர் கிராமத்தின் நான்கு எல்லைகளையும் கூறி அக்கிராமத்தில் உள்ள நஞ்சை, புஞ்சை, நாற்பாக்கெல்லையும் உட்பட தோட்டம், புறம்போக்கு நிலங்கள் உட்பட மற்றும் தறியிறை, வெட்டிவரி, கார்த்திகைப் பாய்ச்சல், நற்கிடா, நல்லெருது முதலிய வரிகளும் சேர்த்து திருநாமத்துக் காணியாக சந்திராதித்த வரையும் கொடுத்தோம்’ என்பது கல்வெட்டின் வாசகமாகும்." 1520ஆம் ஆண்டில் கிருஷ்ண தேவராயர், சோழ மண்டலத்தில் உள்ள
81

Page 91
சிவாலயங்களுக்கும், வைணவத்தலங்களுக்கும் அறக்கட்டளையாக சோடி, அரசுப்பேறு, குலவரி முதலிய வரிகளிலிருந்து கிடைக்கும் பதினாயிரம் வராகன்களைக் கொடுத்துள்ளார்.* இரண்டாவது தேவராயர் சந்திரகிரி ராஜ்யத்திலுள்ள போரேற்றுப் பெருமாள் கோவிலின் அறக்கட்டளைக்காக 131பொன் 64 பணம் கூடுதலுள்ள இரட்டைவரி (ஜோடி)யை அளிக்குமாறு தன்னுடைய அலுவலாளர் பூரீகிரிநாத உடையாருக்கு உத்தரவிட்டுள்ளார்.*
மேற்கூறப் பெற்றபடி தேவாலயங்களுக்குக் கிடைத்த நிலங்கள் அன்றியும் அவற்றின் வருமானத்தின் மிகுதியிலிருந்து கோவில்களுக்குப் பல வகையான நிலங்களும், கோவிலை நிர்வாகம் செய்வோரால் வாங்கப் பெற்றன. இந்நிலங்களைப் LuuSfGo குடியானவர்களை அரசாங்க அதிகாரிகளிடமிருந்தும் மற்றையோரிடமிருந்தும் கோவில் நிர்வாகிகள் காப்பாற்றினர். இரண்டாம் தேவராயர் ஆட்சியில், திருவொற்றியூர் கோவிலைச் சேர்ந்த நிலங்களைப் பயிரிட்ட குடியானவர்கள் மீது ஜோடி, முகப்பார்வை, அங்கசாலை, சம்பாதம், விசேடதாயம் முதலிய வரிகளை விதித்தும், சர்வமானிய இறையிலி நிலங்களுக்கும் குத்தகை கொடுக்கப்பட வேண்டுமென அரசாங்க உத்தரவு வந்தபொழுது கோவில் அதிகாரிகள் அரசனிடம் முறையிட்டனர். அதை விசாரித்த அரசன், மேற்கூறப் பெற்ற வரிகளையும், மற்றும் அரிசிக்காணம், நற்கிடா, நல்லெருது, வெட்டி கட்டாயம் முதலிய வரிகளை நீக்கியும் தேவதான இறையிலி நிலங்களுக்கு வரியில்லை என்றும் உத்தரவிட்டதாக நாம் அறிகிறோம்.*
தரிசாகக் கிடந்த நிலங்களைப் பயிரிட்டு,உணவுப் பொருட்களைப் பெருக்குவதற்கும் கோவில்கள் உதவி புரிந்தன. தேப்பெருமாள் நல்லூர் என்ற படைப்பற்றில் கோவிலுக்குச் சொந்தமான இரண்டு செய்களை திருமழிசையாழ்வார் கோவில் நிர்வாகிகள் உழவுக் காணியாக விலைக்கு வாங்கினர். இந்த இரண்டு நிலங்களுக்கும் மேடாக இருந்தமையால் அவற்றைப் பயிரிட முடியவில்லை. அவைகளைச் சீர்திருத்தம் செய்து, நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தி ஆண்டொன்றிற்கு 200 பணம் வருமானத்திற்கு குத்தகைக்கு விட்டதாக நாம் அறிகிறோம்* 1412ஆம்
82

ஆண்டில் மைசூர் நாட்டில் கோலார் ஜில்லாவில் உள்ள குருந்தமலை கோவில் ஸ்தானிகர்கள் திம்மண்ணன் என்ற ஒருவருக்கு சித்த சமுத்திரம் என்ற நீர்ப்பாசனக் குளத்தை வெட்டுவிப்பதற்கு ஒர் தர்ம சாசனம் செய்து கொடுத்துள்ளனர்.* வடவாற்காடு ஜில்லாவில் உள்ள திருப்பனங்காடு என்னும் கிராமத்தில் நீர்ப்பாசன 6f உடைத்துக்கொண்டு நிலங்கள் தரிசாகக் கிடந்த பொழுது அவ்வூர்க் கோவில் அதிகாரிகள் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை விற்று அக்குளத்தைச் சீர்ப்படுத்த உதவி செய்தனர்.* தேவாலயங்களுக்குச் சொந்தமான நிலங்களை தங்கள் செலவில் சீர்ப்படுத்தி நிலத்தின் வருமானத்தை அதிகரித்த தனிப்பட்ட நபர்களுக்கு கோவில்களில் சில அதிகாரங்களையும், பரிவட்டம், தீர்த்தம், திருநீற்றுப் பிரசாதம் முதலிய கெளரவங் களையும் வழங்குவது வழக்கம்*
கோவில்களின் அறக்கட்டளைக் குழுவினர்க்குக் கோவில் நிலங்களை அடமானம் வைப்பதற்கும் அதிகாரம் இருந்தது. ஆனால், இவ்விதம் அடமானம் வைப்பதால் தர்மம் செய்தவர்களுடைய எண்ணங் களுக்கு மாறாக பல சங்கடங்கள் உண்டாயின. இச்சங்கடங்களை நீக்குவதற்காக, மூன்றாம் பூரீரங்கராயருடைய அலுவலாளரான சித்தராமப்பர் என்பவர் தேவதான பிரம்மதேய நிலங்களை அடமானமாகப் பெற்றவர்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு அனுபவித்த பிறகு வேறு தொகையைக் கேட்காமல் போக பத்திரம் எழுதிக் கொடுத்து நிலங்களைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென கிராமங்களில் வசித்த ரெட்டிகளுக்கும், கணக்குப்பிள்ளைகளுக்கும் உத்தரவிட்டுள்ளனர்.* செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ள மதுராந்தகச் சோழ சதுர்வேதி மங்கலத்தில் வாழ்ந்த பெரியோர்களும் கோனேட்டி அய்யன் என்ற அரசியல் அதிகாரியும், தென்னாற்காடு ஜில்லாவில் சிந்தாமணி என்னும் ஊரில் வாழ்ந்த கோவில் அதிகாரிகளும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதன்படி கோனேட்டி அய்யனுடைய காலத்தில் அடமானத்திலிருந்து மீட்கப்பெற்ற தேவதான, பிரம்மதேய, இறையிலி நிலங்களை எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் அடமானம் வைக்கக் கூடாதென தீர்மானம் செய்தனர்.* இந்தச் சட்டங்களால் கோவிலுக்குரிய
ஆய்வரங்குச் சிறப்புமலர். 2009

Page 92
நிலங்களை அடமானமாகப் பெற்றவர்கள் இலாபம் அடைவதற்கும், கோவில்கள் அவற்றை இழப்பதற்கும் உரிய வாய்ப்புகள் குறைவுற்றன.
தேவாலயங்களில் நித்திய நைவேத்தியங்களுக்கு வேண்டிய குடம், தேங்காய், அரிசி, மஞ்சள், சாம்பிராணி, புஷ்பம், சந்தனம், வாழையிலை, நெய், உப்பு, மிளகு, எண்ணெய், கடுகு, வெல்லம், சர்க்கரை, வாழைப்பழம், தயிர் முதலிய பொருள்களை வாங்குவதற்கு கோவில் நிலங்களிலிருந்து வந்த வருமானம் உதவியாக இருந்தது*
தேவாலயங்களின் கருவூலத்திலிருந்து மக்களுடைய தேவையை உணர்ந்து கடன்கள் கொடுக்கப் பெற்றன. கி.பி. 1372இல் இராமநாத தேவாலயத்தின் கருவூலத்தில் இருந்து அக் கோவிலின் நிலங்களைப் பயிரிட்ட குடியானவர் களுக்கு அக்கோவிலின் ஸ்தானிகர்கள் 150 பொன் கடன் கொடுத்ததாக அறிகிறோம்." இவ்விதம் கொடுக்கப்பெற்ற கடனைத் திருப்பித் தரமுடியாத வர்கள் தங்கள் நிலங்களை கோவில்களுக்கு விற்று விடுவதும் உண்டு. புதுக்கோட்டையைச் சேர்ந்த செவ்வலூர் என்ற கிராமத்தில் உள்ள திருப்பூமீஸ்வரம் உடைய நாயனார் கோவில் அதிகாரிகள் தேனூர் வடப்பற்றுகிராமத்தாருக்குக் காணிக்கை என்னும் வரி செலுத்துவதற்காக 300 சக்கரப் பணம் கடன் கொடுத்திருந்தனர். அக்கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்கள் தங்களுடைய நிலங்களை கோவில் அதிகாரிகளிடம் விற்றுவிட்டனர். திருவரன்குளம் என்னும் கிராமத்து மக்களும், பாடிகாவல் அதிகாரிகளும், நரச நாயக்கர் காலத்தில், சில கடன்களைக் கொடுப்பதற்கு அக்கோவில் அதிகாரிகளிடமிருந்து கடன்களை வாங்கியிருந்தனர். அக்கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் திருவரன்குளத்து கோவிலார்க்குத் தங்கள் நிலங்களை விற்றனர்.*
விஜயநகர ஆட்சிக்காலத்தில் தேவாலயங்கள் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளித்தன. பிதுரூர் கோவிலின் ஊழியர் பலருக்கு ஒய்வு ஊதியங்களும் மற்ற சலுகைகளும் கொடுக்கப் பெற்றதாக அப்துர் ரசாக் கூறியுள்ளார். தானத்தார் என்ற கோவில் அதிகாரிகள், கோவில்களுக்குரிய நிலங்களைப்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

பராமரித்து, அலுவலாளர்களை மேற்பார்வை செய்து கோவில்களை சிறந்த முறையில் பாதுகாத்தனர். கோவில் கேள்வி, கோவில் கணக்கு, மெய்க்காவல், அறைகாவல், பொற்பண்டாரம், திருவிளக்குக் குடி மாகேஸ்வரர்கள் என்பவர்கள் முக்கிய கோவில் அதிகாரிகளாவர். மேளக்காரர்கள், இசை பாடுவோர், சங்கு முழங்குவோர், குடை பிடிப்போர், நந்தவனம் பாதுகாப்போர் முதலியோர் மற்ற கோயில் தொழிலாளர்கள் ஆவர். காலையிலும், மாலையிலும் வழிபாடுகள் நடக்கும் பொழுது இசை பாடுவதற்கும், நாட்டியம் ஆடுவதற்கும் பல இசையாசிரியர்களும் நாட்டிய மாதர்களும் இருந்தனர். திருமுட்டம் கோயிலில் பனிரெண்டு இசையாசிரியர்களும், 360 கோவில் ஊழியர்களும் இருந்ததாக ஒர் கல்வெட்டுக் கூறுகிறது.° வேத பாராயத்திற்கும், இதிகாச புராணங்களை விரித்துரைப்பதற்கும் கல்வியில் வல்லவர்கள் நியமனம் செய்யப் பெற்றனர். சில கோவில்களில் மருத்துவ உதவியும் வழங்கப் பெற்றது. மேற்கூறப் பெற்ற அலுவல்கள், பரம்பரை உரிமையுள்ளவை. நியமனங்கள் செய்வதில் ஏதாவது தகராறு நடந்தால் கோவில் சபைகள் நியாயம் வழங்கின.
சோழர் காலத்திய கல்வெட்டொன்று, கோவில் வேலைகளுக்கு எவ்விதம் நியமனங்கள் செய்யப் பெற்றனவென்று தெளிவாகக் கூறுகிறது. தேவார திருப்பதிகங்களை பாடுபவர்கள் வேலையில் காலி ஏற்பட்டால், முன்னர் அவ்வேலை செய்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் அவர்களுக்குரிய, ஊதியத்தைப் பெறுக் கொண்டு திருப்பதிகங்களைப் பாட வேண்டும். அவ்வாறு நெருங்கிய உறவினர்கள் இல்லாமற் போனால் தகுதி வாய்ந்த மற்றவர்களுக்கு திருப்பதிகங்களைப் பாடும் அலுவல் அளிக்கப் பெறுதல் வேண்டும்.* மேற்கூறப் பெற்ற அலுவலாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நிலமானியங்கள் அளிக்கப் பெற்றன. சிலர் கோவில் பிரசாதங்களில் ஒரு பகுதியை ஊதியமாகப் பெற்றனர். நிலமானியம் பெற்றவர்கள் நிலங்களிலிருந்து பயனை அடையலாமே தவிர அவற்றை அடமானம், கிரயம், தானம் முதலியன செய்ய முடியாது. திருப்புட்குழி கோவில் கல்வெட்டொன்றில் கோவில்களுக்குச் சேவை செய்வதற்கென மானியமாகக் கொடுக்கப் பெற்ற நிலங்களை அடமானம் வைப்போரும், கிரயம்
83

Page 93
செய்வோரும்-வாங்குவோரும் கோவில் அதிகாரி களால் அபராதங்கள் விதிக்கப்பெறுவர் எனக் கூறப்பெற்றுள்ளது.*அவர்கள், தெய்வ, அரச, சமூக துரோகிகளாகவும் கருதப்பெறுவர் திருப்புடைமருதூர் தேவாலயத்தில் இராமநாதன் என்பவர் தேவாலய கவியரசாக நியமனம் பெற்ற, நிலமானியமும் வாடகையில்லா வீடும் அளிக்கப் பெற்றார்.
நெசவுத் தொழிலாளர்களாகிய கைக்கோளர் களுக்கு தேவலாயங்கள் பல வழிகளில் உதவி செய்தன. செங்கற்பட்டு ஜில்லா பெருநகர் கிராமத்தில் வெகு நாட்களாக நெசவுத் தொழிலாளர் களுக்கு குடியிருப்பு வசதியில்லாதிருந்தது. அவ்வூர்க் கோவிலின் திருமட விளாகத்தில் சம்புவராயர்கள் காலமுதல் உபயோகப் படாமல் இருந்த இடங்களில் இருபது வீடுகள் அமைப்பதற்கு
Foot Notes
1. Elliot, The History of India as told by its own
Historians,vol-iv,p. 105. 2. Swell, A Forgotten Empire, P.239.
சதாசிவதேவாராயர்காலக்கல்வெட்பொன்று அவரதுகுந்தள தேசம் 126000 யோசனைப்பரப்பென்று கூறுகிறது (Epigraphia Carnatica, vii, ci 62) Mer 1913 Para 52. 432-1917, Rep. 1918, Para 46. 59 of 1914; Rep., 1915 Para44. 586 of 1926; Rep., 1927, Para 92. a. 432 of 1917; 213 of 1924.
See Francis, South Arcot District Gasetteer, pp. 92-93. 8a. Barbosa, I.P. 9. 396 of 1911. 10. 311 of 1911. 11. Barbosa II, pp.65, 68, 69. 12. Sewall, A Forgotten Empire p.256. 13. Elliot, History of India, p. 104.
3.
84

வசதியாக நிலங்களை விற்ற, கோவில் திருமதிலைச் சீர்ப்படுத்துவதற்கம் சில அணிகலன்களைச் செய்வதற்கும் செலவழிக்கப்பட்டது. (குடியிருப்பு இடங்களுக்குரிய சில வரிகளைக் கொடுக்க முடியாத நெசவாளர்களுக்கு அவ்வரிகளை குறைக்க நிருவாகத்தினருக்கு அதிகாரம் இருந்தது.) மானாம்பதி கிராமத்தில் வானவ சுந்தர நாயனார் கோவிலுக்குரிய இடங்களில் வாடகை சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வீடுகளை அமைத்துக் கொள்ளு வதற்கு சில கைக்கோளர்களுக்கு அனுமதி கொடுக்கப் பெற்றது. கோவில்கள் அறச்சாலை களாகவும் விளங்கி ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் செய்தன. இதுகாறும் கூறப் பெற்ற செய்திகளால் விஜயநகர ஆட்சியில் மக்களுடைய வாழ்வில் கோவில்கள் எவ்விதம் பங்கு கொண்டன என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
14. Major, India in the Fifteenth Century, p. 12.
. Barbosa, II. p. 1250.
E.C. VIII, sb 258 and E.C. V B!. 75. No. 681 of 1922; M. E. R. 1923, Para 83 E. C. V. B. 75 E. C XII, TP. 86 No. 267 of 1899 No. 324 of 1911. M. E. R. 1912, Para 49 M. E. R. 1916, Para 60 No. 226 of 1913 and M. E. R. 1913, Para 54 No. 258 of 1919 25. E. C. X, MB 259 26. No. 251 of 1906 27. No. 270 of 1916 28. M. E. R. 1918, Para 77 29. No. 408 of 1922 30. E. C. IV, GP. 35 3. E. C. IV, GP. 33 32. I. P. S. NOS. 237 and 733 33. No. 270 of 1916, M.E.R., 1916, Para 72. 34. S.I.I., II, P. 256. 35. M.E.R., 1916, Para 60.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 94
விஜயநகரப் ே சமுதாயமும்ப
சமுதாயம்
தின்மூன்றாம் நூற்றாண்டிலேயே இஸ்லாமியர் குடியேறி விட்டனர் என்ற போதிலும் அவர்களுடைய வருகை தமிழ்ச் சமுதாய வரலாற்றில் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் குறிப்பிட்டுப் பெரிதாகக் காட்டத்தகு மாறுதல் எதனையும் விளைவித்து விடவில்லை. ஆனால், விஜயநகர ஆட்சி தமிழகத்தில் பரவிய பின்னர் தமிழ்ச் சமுதாயம், கலை ஆகியவற்றில் பெரும் மாறுதல்கள் விளைந்ததைக் காண்கிறோம்.
பதினான்காம் நூற்றாண்டுவரை தமிழ்மொழி பேசுவோரே தமிழகத்தில் பெரும்பான்மையினராக விளங்கினர். ஆனால், அதன் பின்னர் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி பேசுவோர் உட்புகுந்தனர். இன அடிப்படையில் பார்த்தால் இம்மக்கள் திராவிடர்கள்தான். ஆனால் பண்பாட்டு அடிப்படையில் நோக்கினால் அவர்களுடைய மொழி, வாழ்க்கைக் கூறு ஆகியவற்றில் ஆரியக் கூறுகள் மிகுந்திருந்தன. தமிழின் மக்கள்தாம் தெலுங்கும், கன்னடமும் என்றாலும், ஆரியக் கணவராம் வடமொழியை மணந்து அவை இலக்கணம் முதல் இலக்கியம் வரையிலும் ஆரியக் கூறுகளை நிரப்பிக் கொண்டு விட்டனர். தமிழ்ப் பெண் இசுலாமியரை மணந்து நெற்றிக்குப் பொட்டிடாமல் தலைக்கு முக்காடிட்டு வாழ்வது போன்ற நிலை என்று இதனைக் கூறலாம்.
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

பரசுக் காலச் ண்பாடும்
திரு. மங்கள முருகேசன்
பதினேழாம் நூற்றாண்டில் பல்வேறு மொழி, இனம், சமயம் ஆகியவற்றைக் கொண்டதாகத் தமிழ்ச் சமூகத்தை இஸ்லாமியர், கிறிஸ்தவர், செளராட்டிரர் வருகை மாற்றியது. பதினேழாம் நூற்றாண்டு இதன் தொடக்கமாக அமைந்தது. எனினும் இந்துக்கள் பெரும்பான்மையோர் என்ற நிலையில் மாறுதல் இல்லை. பதினேழாம் நூற்றாண்டினைக் குறித்த சமுதாய வரலாறு தெளிவாகக் கூறும் ஆய்வு சமீபகாலம் வரை இல்லாமல் இருந்தது. சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சி. ஈ. இராமச்சந்திரன் மேற்கொண்ட முறையான ஆய்வு பதினேழாம் நூற்றாண்டில் சமுதாயப் பண்பாட்டு வரலாற்றினைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்த ஆய்வேடு பதினேழாம் நூற்றாண்டினைப் பற்றியது எனினும், அதற்கு முன்னும் பின்னும் உள்ள தலைமைகளை எடுத்துக் காட்டுவது நமக்குத் துணை புரிகிறது.
சமுதாயப் பிரிவுகளைப் பொறுத்தமட்டில் பல பிரிவுகளைக் கொண்டதாக விளங்கியது. பிராமணர், வேளாளர், செட்டிகள், சேனையங் காடிகள், கைக்கோளர்கள், பூரீ கோபாலர்கள் ஆகியோர் தலையாய சாதிப் பிரிவினர். இப்பிரிவினுள் பல உட்பிரிவுகள் இருந்தன. செளராட்டிரர், இசுலாமியர், கிறிஸ்தவர் தமிழகச் சமுதாய அமைப்பில் கலந்ததன் விளைவு பிற பண்பாடுகளின் தாக்கத்தைக் காட்டுகிறது.
85

Page 95
விஜயநகரப் பேரரசுக் காலத்திற்குப் பின்னர் பிறமொழிகளைப் பேசக்கூடிய ஆரிய அமைப்பில் தலையாய பிரிவினரான பார்ப்பனர்கள் அல்லது பிராமணர்கள் தமிழகத்தில் குடியேறினார்கள். பதினாறாம் நூற்றாண்டிலேயே சமுதாய விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் இப் பார்ப்பனர்கள் தங்களை உயர்வானவர்கள், இரு பிறவியாளர்கள் என்று கூறிக்கொண்டதையும், அரசர்களின் ஆதரவினால் தனிச்சிறப்பும் செல்வாக்கும் கொண்டு விளங்கியதையும் கண்டு ஏனைய பார்ப்பனரல்லாதவர்கள் மனம் புழுங்கினர். வேதங்களிலும், வேதாகமங்களிலும், ஸ்மிருதிகளிலும் பெற்ற தேர்ச்சியினாலும், வணிகர்களாக, அமைச்சர் களாக, படைத் தலைவர்களாகக் கூடச் சிலர் அமர்ந்து மேலாதிக்கம் செலுத்தினர். இதனால் பிற மக்களின் வெறுப்புக்கு ஆளாயினர். போர்த்துக்கீச வணிகர் ஒருவர் கி.பி. 1537ஆம் ஆண்டில் எழுதிய குறிப்பு ஒன்றில் பிராமணர்கள் இறுமாப்புடையவர் களாக விளங்கினர் என்று குறிப்பிடுகிறார். இந்த அடிப்படையில் டாக்டர் கே. கே. பிள்ளை குடிமக்கள் அவர்களிடம் முழுக்க, முழுக்க நல்லெண்ணமும் நல்லுறவும் கொண்டிருக்க முடியாது’ என்று கூறுகிறார்.
LumírúLuoríræoir
சிவனை வழிபட்ட பார்ப்பனப் பிரிவினர் ஸ்மார்த்தாக்கள் என்றும், திருமாலை வழிபட்டோர் பூரீவைணவர்கள் என்றும், திருமால், சிவன் இருவரையும் வழிபட்டோர் மத்வர்கள் என்றும் அழைக்கப்பெற்றனர். ஸ்மார்த்தாக்கள் எண்ணிக் கையில் அதிகமிருந்தனர். பூநீவைணவர்கள் அடுத்த நிலையினர். பூரீவைணவர்களில் வடகலை, தென்கலை என இரு பிரிவினர் இருந்தனர். மூன்று பார்ப்பனப் பிரிவினரும் புராணங்களை ஏற்றுக் கொண்டனர். மூன்று பிரிவினருமே மார்பின் குறுக்கே முப்பிரிநூல் அணிந்திருந்தனர். பார்ப்பனர்களின் குலத்தொழில் ஒதல், ஒதுவித்தல் ஆகும். அரசுப்பதவிகளை வகித்தவர்கள் லெளகீகப் பிராமணர்கள் எனவும், வேத, வேள்விகளைச் செய்து தர்ப்பையைக் கையிலேந்தி சாத்திர, சம்பிரதாயங் களுடன் நீண்ட ஆடையை இடுப்பைச் சுற்றி
86

அணிந்து தைத்த மேலாடை அணியாமல் வாழ்ந்தவர்கள் வைதீக பிராமணர்கள் ஆவர். கோவில்களில் ஊழியம் செய்து வந்தவர்கள் மற்றையப் பிரிவினரால் மண உறவு முதலானவற்றிற்கு ஏற்கப் பெறவில்லை.
βαλΙοΙΙΙτσιτά
பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையிலிருந்த வர்கள் வெள்ளாளர்கள். கோவை, சேலம், வட ஆர்க்காடு, திருநெல்வேலி மாவட்டங்களில் நிறைந்து காணப்பெற்றனர். கார் காத்தார், சோழியர், கொடிக்கால், கோட்டை, பாண்டவர், சாய்ந்தலை, வெள்ளாளர்கள் என்று பல பிரிவினர் இருந்தனர். வெள்ளாளர்கள், வேளாளர்கள் என்றும் அழைக்கப் பெற்றனர். வெள்ளாளர்கள், வெள்ளாளர் பிரிவினர் பிற பிரிவினரிடம் மண உறவு கொள்வதில்லை. ஆனால் கலந்துண்ணல் உண்டு. வெள்ளாளர்கள் மது, மாமிசம் உண்பதில்லை. விதவை மணமும் அவர்களால் ஏற்கப் பெறவில்லை.
coasăsBasroTňr
நெசவுத் தொழிலைக் கைக்கோளர்கள் மேற்கொண்டிருந்தனர். கைக்கோளர்கள் நெய்து வந்த தறிகளுக்கு விஜயநகர மன்னர்கள் வரி போடும் வழக்கம் இருந்தது. கைக்கோளர்களுக்கென்று தனித் தெருக்களே இருந்தன. காஞ்சிபுரம், விரிஞ்சிபுரம்,திருவண்ணாமலை முதலிய இடங்களில் பல்லக்கு ஏறிச் செல்லவும் தமக்கு முன் சங்கு ஊதப் பெறவும் புதிய உரிமைகளைப் பெற்றனர். கைக்கோளர்களிடையேயும் பல பிரிவுகள் இருந்தன. செளராட்டிரர்களும் நெசவாளர்களே.
Lurodébarrooňr
பொற்கொல்லர், கருமான், பித்தளைப் பாத்திரக்காரர், தச்சர், கல்தச்சர் முதலானவர்கள் பாஞ்சாலர்கள் என்று கூறப்பெற்றனர். பார்ப்பனர் களைப் போலப் பூணுால் அணிந்து கொண்டனர். பாஞ்சாலர்களில் சிலர் சைவ உணவுக்காரர்கள், சிலர் அசைவ உணவுக்காரர்கள். சாணர்கள் பனை வெல்லம் தயாரிக்கும் தொழில் செய்தனர். கள்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 96
இறக்கும் தொழிலும் இவர்தம் தொழிலாயிற்று. கள் இறக்கும் தொழிலைச் செய்தமையால் கீழ்நிலையில் வைத்து எண்ணப் பெற்றனர்.
இடங்கை, வலங்கைப் பிரிவுகள்
சோழர் காலத்திலிருந்து இடங்கை, வலங்கைப் பிரிவினரைக் குறித்து அறிந்துள்ளோம். இடங்கை, வலங்கைப் பிரிவினர் நில அளவுகோல் புதியதாக நுழைக்கப்படவே அதனை எதிர்த்துப் போராடினர். விஜயநகர அரசின் ஆளுநர் அவர்களை வெள்ளாளர், பார்ப்பனர் உதவியோடு, அவர்களுக்குப் பணியக் கூடாது என்று ஒர் ஒப்பந்தம் செய்துகொள்ளச் செய்தார். இக்கிளர்ச்சி 1429ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தின் வடபகுதிகளில் ஏற்பட்டது. இடங்கை, வலங்கைப் பிரிவினர் அரசுடன் மோதியதோடு அல்லாமல் சில சமயங்களில் தமக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டனர். இரு வகுப்பினரும் மலையம்பட்டுக் கல்வெட்டுப்படி முரண்பட்டுச் சண்டையிட்டனர் என அறிகிறோம். பலர் மாண்டனர். 1438இல் இரு பிரிவினரும் திருவிழாக்களில் எவ்விதம் பங்கேற்பது என்று முடிவு செய்து கொண்டனர். 1440இல் மற்றுமோர் உடன்பாடு ஏற்பட்டது என்று அறிகிறோம். தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் முதன்மைக் குடிகள் என்ற பெயரைப் பெற்றனர். தெலுங்கர் வரவால் தமிழக மக்கட் பிரிவினர் தம்முடைய முந்தைய தொழிலை விட்டுக் கீழ்மட்டத் தொழில்களைச் செய்தனர்.
செட்டிகள், மறவர்
வாணிகம் செய்தவர்கள் செட்டிகள் எனவும் கோமுட்டிகள் எனவும் அழைக்கப் பெற்றனர். முடி திருத்துவோர், துணி வெளுப்போர் முதலானவர்கள் சற்றுக் குறைந்த தகுதியுடையவர்களாகக் கருதப் பெற்றனர். கள்ளர் எனப்பட்டவர்கள் கொள்ளைத் தொழிலைச் செய்தனர். இராமநாதபுர மாவட்டப் பகுதிகளில் மறவர் என்ற இனத்தவர் வாழ்ந்தனர். ஐரோப்பியர் இவர்களில் பெரும்பாலானவர்களைக் கிறித்துவ சமயத்திற்கு மாற்றினர்.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

άιρο ωΙΦίτζιαστή
பறையர், பள்ளர், சக்கிலியர் முதலானவர்கள் தாழ்ந்த வகுப்பினராகக் கருதப் பெற்றனர். சக்கிலியர் தோல் தொழில்களைச் செய்தனர். தோட்டி கிராமப் பணிகளை மேற்கொண்டனர் இந்துவாக இவர்கள் விளங்கிய போதிலும் இந்து சமூகத்தினல் இழிந்தவர்களாகக் கருதப் பெற்றது கொடுமையே. பறையர் எல்லா வகையான பணிகளையும் செய்தனர். இவர்கள் பார்வையில் பட்டாலே பாவம், தொட்டால் தீட்டு என்ற நிலையிருந்தது. அபிதுபாய் இவர்தம் நிலையை எடுத்துக் காட்டுகிறார். வெளிநாட்டவரான அபிதுபாய் அவர்களுடைய பழக்கவழக்கங்கள், குணவியல்புகளைக் கடிந்து கூறுகிறார். வள்ளுவன் என்ற பறையர் குலப் பிரிவினர் பறையர் வகுப்பாரில் பார்ப்பனர் என்று கருதப் பெற்றனர். அவர்கள் தமக்குள்ளேயே மண உறவு கொண்டனர். திருவில்லிபுத்தூரில் தேவேந்திர குடும்பர் என்ற குலத்தினருக்கும், பறையருக்குமிடையே பெரும் பூசல் ஒன்று விளைந்தது. அதன் பின்னர் சில உரிமைகள் பெற்றனர். ஒற்றை மாடி வீட்டில் வாழவும், விழாக்களின் போது பதினாறு கால் பந்தல், பிணத்தைக் காடேற்றும்போது மூன்று தேர் உதைத்தல், பஞ்சவன் என்ற பட்டப்பெயர், பதினெண் வகை இசைக்கருவிகள் இசைத்தல் முதலான உரிமைகள் பெற்றனர்.
பள்ளர் வகுப்பினர் தங்களைப் பறையர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதினர். பள்ளர்கள் இடங்கைப் பிரிவினர் ஆவர். சக்கிலியர்கள் என்பார் பறையர்களைவிட இழிந்தவர்கள் என்று கருதினர். தோட்டி வகுப்பார் மனைவியரைப் பொதுவாக வைத்துக் கொண்டனர். மது அருந்துதல், விதவை மணம் முதலானவை இந்நான்கு வகுப்பினரிடையே காணப்பெற்றது. ஒருத்தியைப் பலர் வைத்திருக்கும் உறவு தோட்டிகளிடம் இருந்தது. வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு உணவுப்பொருள் படைக்கும் உயரிய தொழில் செய்தவர்கள் இழிந்தவர்களாக சமுதாயத்தில் கருதப்பெற்றது. மிகவும் வருந்தத்தக்க நிலை என்பதில் ஐயமில்லை. அடிமைகளைப் போல அவர்கள் வாழ்ந்தனர் என்றே கூறவேண்டும்.
87

Page 97
நாடோடிகள்
நாடோடியாகத் திரிந்த வகுப்பினர் சிலரைக் குறித்தும் இந்நூற்றாண்டுக் காலத்தில் அறிகிறோம். குறவர்கள் என்பார் மிகுந்திருந்தனர். குறவர்கள் இடம் விட்டு இடம் சென்று வாழ்ந்தனர். எங்கும் நிலையாக வாழவில்லை அவர்கள். உப்புக் குறவர்கள் என்ற பிரிவினர் உப்பு வாணிபத்திற்கு உதவினர். இரண்டாவது வகைக் குறவர்கள் மூங்கிலால் கூடை, பாய் முதலியவற்றைச் செய்து வயிறு வளர்த்தனர். குறவர்கள் குறி சொல்லுவோராகவும் விளங்கினர். குறப் பெண்களும் அவ்வாறேயாம். குறவர் பேசும் மொழிபுரியாத மொழி. இலம்பாடிகள் என்ற மற்றொரு நாடோடிக் கூட்டத்தவரைக் குறித்து அபிதுபாய் குறிப்பிடுகிறார். இவர்கள் மராத்தியர்களுடன் தொடர்புடையவர்கள் என்பது அபிதுபாயின் கருத்து. இலம்பாடிகள் நரபலி கொடுப்பவர்கள். உட்டர்கள் என்பவர்கள் மற்றொரு நாடோடிக் கூட்டத்தவர். தொம்பரர்கள் என்ற தொம்பைக் கூத்தாடிகள், பாம்புப் பிடாரர்கள் பலரும் இச்சமுதாய உறுப்பினர்களாக விளங்கினர். காடுகளில் காடர், இருளர் முதலான பிரிவினர் வாழ்ந்தனர்.
சிறுபான்மையினர்
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு முன்பே தமிழகத்தில் இஸ்லாமியர் இருந்தனர். ஜெசூட்டுகள் அவர்களை மூர்கள்’ என்று அழைத்தனர். நாயக்கர்களின் கீழும் முஸ்லிம்கள் பணியாற்றினர். கர்நாடக நவாபுகளின் ஆட்சிக் காலம் வரை தமிழகத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது.
தமிழ்ச் சமுதாயத்தில் கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினராகவே இருந்தனர். விஜயநகரப் படையினரால் புன்னைக் காயலில் இருந்து போர்த்துக்கீசர் விரட்டப் பெற்றதால் கிறிஸ்துவம் பரவிட இயலவில்லை. ஜெசூட்டுகளின் முயற்சி யினாலேயேதான் கிறிஸ்தவம்பரவிற்று பதினெட்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் கர்நாடகப் பகுதி ஆங்கிலேயர் வசமான பின்னரே பரவியது. கிறிஸ்தவர்களும் ஐந்து விழுக்காட்டிற்கும்
88

குறைவாகவே இருந்தனர். சமணர்களும் சிறுபான்மைப் பிரிவினரே ஆவர். அவர்களைக் குறித்துப் பட்டயங்களிலும், தமிழ் தெலுங்கு இலக்கியங்களிலும் குறிப்புகள் ஏதுமில்லை. மகாவீரரை வழிபாடு செய்தபோதும் பல சமணர்கள் பதினேழாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்துக்களாகி விட்டனர்.
சாதிக் குழுக்கள்
ஒவ்வொரு சாதிப் பிரிவினரும் தமக்கெனத் தனிச் சாதிக் குழுக்களைக் கொண்டிருந்தனர். சாதிப் பிரிவுகளுக்குள் விதிமுறைகளை வகுத்தல், மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்தல் முதலான பணிகளை இக்குழுக்கள் மேற்கொண்டன. ஒவ்வொரு சாதிக் குழுவிலும் அக்குழுவில் அச்சாதியின் முதியோர் தலைமை வகித்தனர்.
அவ்வாறான சாதித் தலைவர்களுக்குத் தனித்தனிப்பட்டங்கள் இருந்தன. சாதித் தடைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதித்தல், சவுக்கடி கொடுத்தல் முதலியன தண்டனைகளாகும். சாதியிலிருந்து தள்ளுதலே கடுமையான தண்டனை. அவ்வாறு நீக்கப்பெற்றோர் உறவு, நட்பு அத்தனையும் இழக்க வேண்டியதாயிற்று. திருமணம், ஈமச்சடங்கு ஆகியவற்றில் கலந்து கொள்வதும் இதனால் தடுக்கப் பெற்றது.
சாதியிலிருந்து தள்ளப்பட்டவர்களைத் திரும்பவும் சேர்த்துக் கொள்ள அவர்களுடைய நாக்கில் தங்கக் கம்பினால் சூடு போடுதல் அல்லது உடலில் சூடு போடுதல் முதலிய வழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில் பஞ்சகெளவியம் எனப்பெற்ற பால், தயிர், நெய், சாணம், சிறுநீர் ஆகிய மாட்டின் ஐந்து பொருட்களை அருந்தித் தூய்மை செய்யப் பெற்றனர். சில தவறுகளைச் செய்தவர்கள் விமோசனமே பெறமுடியாது. பறையர்குலப் பெண்ணுடன் கூடிய பார்ப்பனரும், பசுவின் மாமிசத்தைத் தின்றவர்களும் ஒரு போதும் திரும்பத் தம் சாதியில் இணைய முடியாது.
திருமணம்
திருமணம் என்பது புனிதமாகக் கருதப்பெற்ற உறவு ஆகும். திருமணமாகாதவனுக்கு சமுதாயத்
ஆய்வரங்குச் சிறப்புமலர் -2009

Page 98
தகுதி ஏதும் கிடையாது. மனைவியை இழந்தவனின் நிலையும் அத்தகையதே. பிள்ளையில்லாதவர்களின் மணவாழ்வு முழுமை பெற்றதாகக் கருதப்படவில்லை. காதல் என்பது பொதுவாக காணப் பெறவில்லை. குழந்தை மணம் பொதுவான வழக்கமாக இருந்ததே அதற்குக் காரணம் எனலாம். ஆறு வயதில் கூடத் திருமணம் நடைபெற்றது. மணம் செய்யத் தகுதி ஏதும் வேண்டியதில்லை. இளமை மணம் பார்ப்பனர்களிடையே கண்டிப்பாகப் பின்பற்றப் பெற்ற ஒன்று எனலாம். மணம் செய்ய மங்கையின் விருப்பைக் கேட்க வேண்டியதில்லை. ஒரே சாதியாக மணமகனும், மணமகளும் அமைய வேண்டுவதே அடிப்படைத் தகுதி. பார்ப்பனர்கள் வயிற்றில் குழந்தையிருக்கும்போதே கூடச் சம்பந்தம் பேசினர் என்று நிக்கோலாஸ் வாஷிங்டன் சற்று மிகைப்படுத்திக் கூறியுள்ளார்.
மாமன் தன் தங்கை மகளை மணக்கலாம். ஆனால் அண்ணன் தம்பி மகளை மணக்கக்கூடாது. மனைவியை இழந்தவன் மனைவியின் தங்கையை மணக்கலாம். ஒரு சகோதரரின் மக்கள் அவருடைய சகோதரியின் மக்களை மணக்கலாம். சகோதரர்களின் மக்களோ, சகோதரிகளின் மக்களோ தம்முள் மண உறவு கொள்ளக்கூடாது. இந்த மண உறவு விதிமுறைகள் பார்ப்பனர் முதல் பறையர் வரை ஒன்றாகவே அமைந்திருந்தன. சமுதாயத்தில் பெற்றிருந்த மதிப்புமிக்க நிலையைப் புகழ்ந்து கூறுகிறார்.
பெண்டிர் இழிவு நிலை
தனிவாழ்க்கையில் பெண்டிர் சிறப்புப்பெறவில்லை என்பது உண்மையே. கணவன் மனைவியிடத்து ஆதிக்கம் செலுத்தினான். கணவனை ஒருபோதும் மனைவி இகழ்ந்து பேசிவிடக்கூடாது. பெயர் சொல்லி அழைக்கக் கூடாது. இதெல்லாம் இளமையிலேயே அவர் எண்ணத்தில் பதிக்கப்பெற்ற கருத்து விதைகள். மனைவி கணவனின் தோழியாகக் கருதப்பெறவில்லை. மண நாளன்றுதான் மணமக்கள் ஒரே இலையில் ஒன்றாக அமர்ந்து உண்டனர். அதன்பின் ஆடவன் உண்டபிறகே அவள் அவ்விலையில் உண்ண வேண்டும். இது போன்ற இழிவு நிலையிலிருந்து
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

தப்பித்து வாழப் பெண் மணவாழ்வே வேண்டாமென ஒதுக்கி வாழ்வதும் இழிவுடைய நிலையாகவே கருதப் பெற்றது. பெண்கள் ஆடவருடைய இச்சையைத் தீர்க்கப் படைக்கப்பெற்ற பச்சைக் கிளிகள் என்று அக்கால இந்துக்கள் அழுத்தமாக எண்ணினர். விதவையான பெண் சமுதாயத்தில் சிறப்பு நிலையை இழந்துவிடுவாள். விதவையைப் பார்ப்பதே அபசகுனம் என்று எண்ணப் பெற்றது.
விதவையர்
விதவைப் பெண்டிர் கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரிற் பழுத்த பலாதான். நகை அணியக்கூடாது. வெள்ளையாடை அணிய வேண்டும், நெற்றியில் பொட்டுவைக்கக்கூடாது, தலையை மழித்துக்கொள்ள வேண்டும் என்பது பார்ப்பனப் பெண்டிருக்கு அளித்த விதவைக் கோலம். விளையாட்டு, கேளிக்கைளில் அவள் பங்குபெறக் கூடாது. விதவைகள் மறுமணம் அனுமதிக்கப் பெறவில்லை. இந்நிலை பிராமணர்,
முடிந்து மணவிழா நடைபெறவில்லை யெனினும் கணவனாக வேண்டியவன் இறந்து விட்டால் கண் கலங்கி விதவையாகக் காலமெல்லாம் வாழ வேண்டிய நிலைக்குப்பெண் தள்ளப்பெற்றாள். ஒருவனும் அவளை மணக்க முன்வரார். இளமை, அழகு, பணமிருந்தாலும் விதவையை மணக்க விரும்பார். இதன் விளைவு சமுதாயத்தில் பார்ப்பனர் குல விதவைப் பெண்டிர் எண்ணிக்கை அதிகமிருந்தது. “இந்துப் பெண்கள் இயற்கையிலேயே கற்புடைய வர்கள். இந்துப் பெண்கள் பிற நாகரிகம் வாய்ந்த பெண்களைவிடக் கற்புடையவர்கள் என்றுகூடச் சொல்வேன்”என்கிறார் அபிதுபாய். இயல்பாகவே இந்துப் பெண்களுக்கு வாய்த்த பண்புகள் சமுதாயத்தில் பெரிதும் ஒழுக்கக்கேடு நிகழ்வுறாமல் காத்தன எனலாம்.
உடன்கட்டை ஏறுதல்
சில பெண்கள் கணவன் இறந்த பின்னர் உடன்கட்டை ஏறல் என்ற பழக்கத்தை மேற்கொண்டனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் இப்பழக்கம் பரவியிருந்தது என்பதற்கு பார்போசா, நியூனிஸ் முதலானோர் குறிப்புகள் உதவுகின்றன. அப்பழக்கம்
89

Page 99
நாயக்கர்க6ை
திமிழகக் கட்டடக் கலையான திராவிட கட்டடக் கலைப்பாணியின் இறுதிக் கட்டமாக அமைவது நாயக்கர் காலத்துக் கலைப்பாணியாகும். பதினாறாம் நூற்றாண்டிலே, 1565இல் தலைக் கோட்டைப் போரின் விளைவாக விஜயநகரம் அழிந்த பின்பு, தமிழகத்திலே, விஜயநகர ராயர்களின் பிரதிநிதிகளான நாயக்கர் சுதந்திரமாக ஆட்சி புரிந்தனர். மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் இடங்களிலிருந்த நாயக்கர் தனித்தனியான இராச்சியங்களை ஆட்சி புரிந்தனர். அவர்களில் மதுரை நாயக்கரே பிரபல்யமானவர்கள். பாண்டி நாடும் திருச்சி, திருவரங்கம் முதலிய பட்டினங்கள் அடங்கிய சோழநாட்டுப் பகுதிகளும் அவர்களின் வசமாயிருந்தன. தமிழகத்துக் கோயிலமைப்பின் இறுதியான வளர்ச்சிக்கட்டம் மதுரை நாயக்கரோடு பெரிதும் தொடர்பு கொண்டதாகும்.
தமிழ் நாட்டுக் கட்டடக் கலை மரபு மதுரை நாயக்கரின் காலத்தில் மேலும் பெரு வளர்ச்சி அடைந்தது. விஜயநகர காலத்திலே தென்னகக் கோயில்கள் இராய கோபுரம், கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய யாளித்துரண்கள் எனப் பல புதிய அம்சங்களைப் பெற்று விசாலமாகிப் பொலிவுடன் விளங்கின. அந்த வகையாக கட்டட அமைப்பு நாயக்கரின் காலத்தில் மேலும் அபிவிருத்தி யடைந்தது. புதிய பல பிராகாரங்கள் ஆலயங்களைச் சுற்றி அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிராகாரத்திலும் நான்கு பக்கங்களிலும் கோபுர வாசல்கள்
138

லப்பாணி
பேராசிரியர் சி. பத்மநாதன்
அமைக்கப்பட்டன. கோபுரங்கள் பல தளங்கள் பொருந்தியனவாய் வானத்து முகில்கள் தோயும் வண்ணம் உயரமாக ஓங்கி எழுந்த கோலத்தில் அமைக்கப்பட்டன. மதுரை, திருவரங்கம் ஆகிய தலங்களிலே ஒப்புயர்வில்லாத கட்டட அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
மதுரையிலே விசுவநாத நாயக்கர் காலத்திற் கட்டட வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. திருமலை நாயக்கருடைய காலத்தில் (1623-1659) மிகச் சிறந்த க்ோயில்களும் மண்டபங்களும் மதுரையிலே தொடர்ந்து கட்டப்பட்டன. நாயக்க மன்னர்கள் பழைய கோயில்களைப்புனரமைத்தார்கள். கோயில் வளாகங்களிலே பிரதானமான ஆலயங்களைச் சுற்றித் திருக்காமகோட்டம் போன்ற துணைக் கோயில்கள் பலவற்றை எழுப்பினார்கள். பிரமாண்டமான கோபுரங்களையும் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த வனப்புமிக்க மண்டபங்களையும்உருவாக்கினார்கள். கோயில்களிலே முன்பிருந்த மதில்களுக்கிடையிலுள்ள நான்கு மூலைகளும் ஒரே அகலமுடையதாய் இருக்கும். ஒவ்வொரு மதிலின் நடுவிலும் கோபுரவாயில் அமைந்து காணப்படும். ஒவ்வொரு பிராகாரத்திலும் நான்கு கோபுரவாயில்கள் அமைந்திருக்கும். பிராகாரங்களில் நூற்றுக்கால்மண்டபம்,ஆயிரங்கால் மண்டபம்,திருக்குளம் முதலியனவும் அமைந்திருக்கும். திருவரங்கத்திலே நீள் சதுரவடிவிலான ஏழு திருச்சுற்றுகள் அமைந்து காணப்படுகின்றன. திருச்சுற்றுகள் முடியும் இடங்களிலெல்லாம்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 100
குறவர் குலப் பெண்டிர் பச்சை குத்துவர். பெரும்பாலும் இந்துப் பெண்டிரில் கீழ்வகுப்பார் எனப் பெற்றோரே பச்சை குத்திக்கொண்டனர். புக்கணன், துபாய் ஆகிய இருவருமே எவ்வாறு பச்சை குத்தினர் என்பதை விளக்குகின்றனர்.
பொழுதுபோக்குகள்
சதுரங்கம் விளையாடுவது உயர் வகுப்பாரிடையே காணப்பெற்றது. சதுரங்கம் போர் ஸ்தலம் என்று பெயர் பெற்றிருந்தது. கோழிச் சண்டை பார்ப்பது அனைவரின் பொதுவான பொழுதுபோக்கு. டேவர்னியர் குரங்குகள் சண்டையிடுவதைப் பார்த்து மக்கள் பொழுதைப் போக்கியதைக் குறிப்பிடுகிறார். பெண்கள் உடற்பயிற்சி விளையாட்டுக்கள் நிகழ்த்தியதை ஜான் பிரையர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்களிடையே புனித ஜார்ஜ் கோட்டையில் சண்டையிட்டுப் பொழுது போக்குதல் வழக்க மிருந்தது.
பொருளாதார நிலை
தொடர்ந்து வேளாண்மையே பொருளா தாரத்தின் மையமாக விளங்கியது. விஜயநகர காலத் தமிழகம் மூவகைப்பட்ட கிராமங்களைக் கொண்டு விளங்கியது. தானமாக அளிக்கப் பெற்ற கிராமங்கள் தேவதானம், பிரம்மதேயம், மடப்புறம், திருநாமத்துக் காணி, திருவிடையாட்டம் எனப் பெயர் பெற்றிருந்தன. பண்டார வாடை, அமரம் என அழைக்கப்பெற்ற இரண்டாவது வகைக் கிராமங்கள் அரசின் முழு உரிமையாகும். தனியார்க்கு எனச் சொந்தமான கிராமங்கள் மூன்றாவது வகையின. கிராமங்கள் திட்டமிடப்படாமல் முறையேதுமின்றி அமைக்கப் பெற்றிருந்தன. நெருக்கமாக சுகாதார வசதிக் குறைவுடன் விளங்கின எனலாம்.
சத்திரங்கள், மண்டபங்கள் ஆகிய பொது இடங்கள் இருந்தன. மண்டபங்களில் வீதி உலாவின்போது இறை வடிவங்கள் வந்து தங்கின. சத்திரங்கள் பொது நலனுக்கும், வழிப்போக்குக்கும் பயன்பட்டன. சாலை ஓரங்களில் தண்ணிர்ப் பந்தல்கள் இருந்தன.
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கிராமங்களின் அமைப்பு வீடுகள், விளை நிலங்கள்,தெருக்கள், புறம்போக்கு நிலங்கள், பொது இடங்கள் ஆகியவை கொண்டு விளங்கிற்று. வசதி படைத்தோர் பெரிய வீடுகளிலும், சமூகக் குழுக்கள் தனித்தனித் தெருக்களிலும் வறியவர்கள் குடிசைகளிலும் வாழ்ந்தனர். பெரிய தூண்கள் மேற்கூரைகளைத் தாங்கின. ஐரோப்பியர் இல்லங்கள் வசதியானவை. குடிசைகளுக்கு ஒலை வேயப்பெற்றிருந்தது. வீட்டின் முன்னால் திண்ணைகள் இருந்தன. சமயலறைகள் அயலார் பார்வையில் படாதவகையில் வீட்டின் மூலையில் இருந்தன. விழாக்காலங்களில் வீடுகளின் முன் பந்தல்கள் அமைத்துக் கொண்டனர்.
கிராம நிலங்கள் நன்செய், புன்செய், தோட்டம் எனப்பாகுபாடு செய்யப்பெற்றிருந்தன. நிலங்களின் பருப்பு விளைச்சல், வளமை அடிப்படையிலமைந் திருந்தது. நன்செய்யில் புன்செய் பயிர் விளைந்தால் நன்செய்த் தரப் புன்செய் எனவும், புன்செய்யில் நன்செய் பயிர் செய்யப்பட்டால் புன்செய்த் தர நன்செய் என்றும் அழைத்தனர்.
நாட்டு நிலமனைத்தும் நாடாளுவோனுக் குரியன எனினும், உரிமை பெற்றவர்களாக நில உடைமையாளர்கள் விற்றல், வாங்கல் செய்யும் உரிமை பெற்றிருந்தனர். நில உரிமை 1. நிதி, 2. நிக்ஷேபம், 3. ஜலம், 4. பாஷணம், 5. அக்கினி, 6. ஆகம், 7. சித்தம், 8. சாத்யம் ஆகிய எட்டுவித உரிமைகளைத் தன்னுள் கொண்டிருந்தது. பொற்கொல்லர், தச்சர் முதலான பணியாளர்களுக்கு மானியங்களாக நிலங்கள் வழங்கப் பெற்றன. உரிமைப் பணியில் இருக்கும் வரையே என நிர்ணயிக்கப் பெற்றிருந்தது.
பயிர் விளைச்சலுக்கு ஆற்றுப் பாசனம், குளத்துப் பாசனம், கிணற்றுப் பாசனம் ஆகிய மூன்று முறைகளில் பாசனம் ஏற்பட்டது. பாசன வசதியின் பொருட்டுச் சிறுதொகையினை அரசுக்கு வழங்கிட வேண்டியதாயிற்று. குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றை அரசும் தனியாரும் மேற்பார்வையிட்டனர். கால்வாய்கள் அமைத்திட முயலுகையில் வழியில் கால்வாய் செல்லும் பாதை
91

Page 101
நிலங்களைக் கையகப்படுத்தினர். கிராம மக்கள் பொதுப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். நாங்குநேரி கிராம மக்களின் தனி ஒப்பந்தத்தைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். இவ்வொப்பந்தப்படி குளத்தில் சேர்ந்த பாசி, மண் ஆகியவற்றில் குறிப்பிட்ட அளவினை அகற்ற உடன்பட்டனர். அரசே தூர்வாரும் பணியை மேற்கொள்ளுதலும் உண்டு. தனியார் இச்சீரமைப்புப் பணிகளைச் செய்ய அரசு ஊக்குவித்தலும் உண்டு. அக்கதேவன் என்பவர் தென் மகாதேவ மங்கலத்து ஏரியில் தூர்வாரும் பணியை மேற்கொண்டார். நீர்ப் பங்கீட்டின்போது ஏற்பட்ட பிரச்சினைகளை அரசு அலுவலர் தலையிட்டுத் தீர்த்தனர். ஆலத்தூர், அத்திப்பற்று என்னும் இரு கிராமத்தவருக்கும் இடையே ஏற்பட்ட சிக்கல் மகாபிரதானி அரசர் திப்பரசர் என்பவரால் தீர்க்கப்பெற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நெற்பயிரே முக்கியப்பயிராய் விளங்கிற்று. வரகு, திணை, பச்சைப் பயறு, கொள்ளு, உளுந்து, அவரை, மஞ்சள், கரும்பு, எள், ஆமணக்கு ஆகியவை பயிரிடப் பெற்றன. பருத்தி, அவுரி, சாயச் செடிகள் உற்பத்தியாயின. கருமிளகு, வால் மிளகு, லவங்கம் பட்டை, கடுகு, ஏலக்காய், ஜாதிக்காய் ஆகியவை பற்றிய குறிப்புகளையும் காண்கிறோம். பழ வகைகளில் மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, வாழை குறிப்பிடத்தக்கன. தேங்காய், பாக்கு, வெங்காயம், பூசணி முதலியவை குறித்தும் அறிகிறோம்.
நிலத்தை உழுது பயிரிட்டனர். மர ஏரில் மரக்கொழு இருப்புப் பட்டையுடன் விளங்கியது. நீர் வளமாகக் கிடைத்த பகுதிகளில் இரு போகமும், மழை நீர் கிடைத்த பகுதிகளில் ஒரு போகமும் விளைவித்தனர். மலையடி வாரங்களில், மலைச் சரிவுகளில் மேற்கொள்ளப் பெற்ற வேளாண்மை 'கும்மரி" எனப் பெற்றது.
உழவுத் தொழிலாளர்கள் கடன் பெற்று வாழ்ந்தனர். தங்கள் வீட்டு மணவிழா முதலானவற்றைக் கடன் பெற்றே செய்ய வேண்டியவர்கள் ஆயினர். கடன் பெற்றவர்கள் அடிமைகளைப் போல் வாழ்ந்தனர். கொத்தடிம்ை
92

நிலை காணப்பெற்றது. வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்ட பெரும்பான்மை மக்கள் ஏழைகளாக வாழ்ந்தனர். வயலில் வேலையில்லாதபோது மீன் பிடித்தல், காடுகளில் காய் கனிகள் பறித்தலைத் தொழிலாகச் செய்தனர். உழவர்கள் மீது வரிச்சுமையுமிருந்தது.
தொழில்கள்
இக்காலத் தொழில்கள் சிறு அளவிலானவை. பெருந்தொழிலாக விளங்கியது நெசவுத் தொழில் ஆகும். எண்ணெய் எடுத்தல், வெல்லம் காய்ச்சுதல் முதலான தொழில்களும் இருந்தன. தொழில்களைக் கிராமப்புறத் தொழில்கள், நகர்ப்புறத் தொழில்கள் என்று பகுக்கலாம்.
கிராமங்களை அடிப்படையாகக் கொண்டே பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. மரங்கள் கிராமப்புறங்களில் நிறைந்து காணப் பெற்றமையால் அவைகளைச் சார்ந்து தொழில்களும் விளங்கின. பனை, தென்னை ஆகியவற்றின் சாறுகளைத் திரட்டிக் காய்ச்சி வெல்லம் செய்தனர். எள், தேங்காய், ஆமணக்கு ஆகியவற்றைச் செக்கிலிட்டுப் பிழிந்து எண்ணெய் எடுத்தனர். மட்பாண்டம் வனைதல் மற்றுமொரு கிராமபுறத் தொழிலாகக் கருதலாம். மட்பாண்டங்கள் செய்வோர் குயவர் எனப்பெற்றனர். கோவில்களுக்கும் மட்பாண்டங்களை வழங்கினர். மீன்பிடித்தல் குத்தகை அடிப்படையிலும், தனிப்பட்ட வகையிலும் நடைபெற்றது. வலை, தூண்டில் முதலான மீன் பிடிக் கருவிகள் பயன்படுத்தப்பெற்றன.
நெசவுத் தொழில் பெரும்பாலும் நகர்ப்புறத் தொழிலாக விளங்கியது. பருத்தி, பட்டு நெசவு தொடர்ந்து நடைபெற்றது. பட்டு பெரும்பாலும் கருநாடகத்திலிருந்தே வந்தது. பட்டுத்துணிகளின் சிறப்பை அயல் நாட்டவர் குறிப்புகளில் காண்கின்றோம். கைக்கோளர்கள், சாலியர்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டனர். செளராட்டிரத்திலிருந்தும் நெசவாளர்கள் இங்கு வந்து குடியேறினர். அபிதுபாய் தமிழகத்தில் நெய்யப்பெற்ற உயர் துணிகளைக் குறித்துக் கூறுகிறார். நெசவாளர்கள் இன்று போல் அன்றும்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 102
வறுமையில் வாடிய கூட்டத்தவர்தாம். சொந்தப் பணமின்றி வணிகர் வழங்கிய பணத்தில் நூல் முதலியவற்றை வாங்கி நெய்து பிழைப்பைத் தொடர்ந்தனர். வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டவர்கள் நூல் நூற்றலைச் செய்தனர். அரசு நெசவாளர்கள் மீது வரிப்பளு கூடியபோது பல சமயங்களில் வரி விலக்கு செய்தது. வரிப்பளு தாங்காமல் திருவொற்றியூர், சளுக்கை ஆகிய இடங்களிலிருந்து நெசவாளர் சாயம் தோய்த்தல் தொழிலைச் செய்தனர். காஞ்சி, மதுரை ஆகிய இடங்களில் சாயத் தொழில் நூல் வல்லுநர்கள் இருந்தனர்.
பொன்னினை உருக்கி அணிகலன்கள் செய்தனர். காசு அச்சடிக்கும் நாணயச் சாலைகள் தலைநகரங்களில் இருந்தன. படைக் கலன்கள் செய்வோர் இருந்தனர். வீட்டுக் கலன்கள் செய்வோரும் இருந்தனர். ரதகாரர் எனப்படுவோர் மரத்தால் ரதங்கள், பல்லக்கு, வண்டிகள் ஆகியவற்றைச் செய்தனர். கப்பல்கள், படகுகளையும் தச்சர்கள் செய்தனர். தோலால் காலணிகளைச் செய்வோர் இருந்தனர்.
முத்துக் குளித்தலும் இக்காலத்தே முக்கிய தொழிலாக விளங்கிற்று. முத்துக் குளித்தல் கீழைக் கடற்கரையில் நடைபெற்றது. காயல் ஒரு முத்துக்குளி துறைமுகமாக விளங்கியது. ஜூன் மாதத்தில் தொடங்கி நவம்பரில் முடிவுற்றது. ஆண்டுதோறும் முத்துக்குளித்தல் நடைபெறாது. ஏழு எட்டுப் படகுகளில் சென்று ஆயிரம் சிப்பிகளை எடுத்து வந்தனர். ஒவ்வொரு ஆயிரம் சிற்பியிலும் ஐந்து பணம் மதிப்புள்ள முத்தாவது கிடைத்தால்தான் முத்துக் குளித்தலைச் செய்தனர். இத்தொழிலில் பலர் ஈடுபட்டிருந்த போதிலும் பெரும் லாபம் ஏதும் பெற்றிடவில்லை. டச்சுக்காரர்கள் பெரிய அளவுள்ள சங்குகளையும் முத்துக்களையும் வாங்கினர்.
குடியானவர்களிடமிருந்து தொழில் பிரிவினரைப் பிரித்துக் காட்டுவதற்காகச் செட்டிகள், சேளைக் கடையர், கைக்கோளர், வாணியர் பட்டடை என்ற சொல்லால் அழைக்கப்பெற்றனர். வேலைப் பங்கீடு என்பது இக்காலத்தில் இல்லையாதலால் ஒவ்வொரு
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

தொழிலாளியும் முழுமையான பொருட்களையே உருவாக்கினர். பெண்டிர் தொழில் செய்வதில்துணை புரிந்தனர். இடம்பெயர்தல் என்பது எல்லாத் தொழிலாளர்களிடத்தும் பொதுவாகக் காணப் பெற்றது. தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைத் தாய்மொழிகளாகக் கொண்டோர் தமிழகத்தில் விஜயநகரக் காலத்தில் குடியேறினர்.
வாணிபம்
உள்நாட்டு, வெளிநாட்டு வாணிபம் வர்த்தகத்தை மேற்கொண்டவர்கள் செட்டிகளும், கோமுட்டிகளும் ஆவர். வாணிகம் சந்தைகள் வாயிலாக விற்கப் பெற்றன. கால் நடைகளான பசுக்கள், எருதுகள், குதிரைகள் ஆகியனவும் விற்கப்பட்டன. சந்தைகள் வாரம் தோறும் கூடின. செஞ்சியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சந்தை கூடியது.
அரிசி, கண்டசாரி சர்க்கரை ஆகியவை மெலிந்தே, ஏடன், ஒர்முஜ், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. தேங்காய், கருமிளகு ஆகிய உணவுப்பொருள்களும், சாயப்பொருள்களான அவுரி, வாசனைப் பொருள்களான குங்குலியம், சந்தனம், கணிப்பொருள்களான இரும்பு, கல்வகை யிலான நவரத்தினம், செம்பு, பவளம் முதலிய நவரத்தினக் கற்களும் பருத்தி, பட்டு ஆடைகள், காலிகோ என்றும் அச்சடித்த துணி வகைகளும் ஏற்றுமதி செய்யப் பெற்றன.
ஏற்றுமதியைப் போலவே இறக்குமதிப் பொருள்களும் நிறைந்திருந்தன. பொன், வெள்ளி, தகரம், காரீயம், செம்பு, இரும்பு ஆகியவை ஏடன், சீனா, ஜெட்டா முதலான பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப்பெற்றன. நவரத்தினக் கற்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பெற்ற போதிலும் இலங்கையிலிருந்து செம்பு, பவளம் ஆகியன இறக்குமதி செய்யப்பெற்றன. சுமத்திரா, மெலூக்கஸ் ஆகிய பகுதிகளிலிருந்து இறக்குமதி செய்யப் பெற்றவை லவங்கம், பட்டை ஆகியன. மலாக்கா, ஜாவா, போர்னியோ, சீனா, வங்கத்திலிருந்து அகில், கற்பூரம், வாசனைப் பொருள்கள், மிளகு ஆகியன இறக்குமதியாயின. அபின், மஞ்சள், பன்னீர், கஸ்தூரி ஆகியன சீனாவிலிருந்து இறக்கு மதியாயின.
93

Page 103
வாணிபம் சிறக்க வழிகள் வேண்டும். நெடுஞ்சாலைகள் வாணிபத்திற்குப் பயன்பட்டன. வண்டிகளில் பொருள்களை ஏற்றிச் சென்றனர். பரிசல், படகுகள், மரக்கலங்கள், கப்பல்கள் பயன்பெற்றன.
நாகப்பட்டினம், திருமலை ராயக் பட்டினம், தரங்கம் பாடி, பரங்கிப்பேட்டை, தேவாரம் பட்டினம், கூளிமே, சதுரங்கப் பட்டினம், மயிலை, பழவேற்காடு ஆகியவை துறைமுகங்களாகும். இவ்விடங்களி லிருந்து கலங்கள் பல இடங்களுக்கும் சென்றன. நகரங்கள் பல பகுதிகளுடனும் சாலை வழியே இணைக்கப்பெற்றன. விஜய நகரத் தலைநகரை மைலாப்பூருடன் சாலை ஒன்று இணைத்தது. சந்திரிகிரி, திருப்பதி, பழவேற்காடு ஆகிய நகரங்களூடே இச்சாலை சென்றது. காளகஸ்தி, திருப்பதி, காஞ்சி இடையே நெடுஞ்சாலையொன்று இருந்தது. திருவண்ணாமலை, சிதம்பரம், மதுரை, இராமேசுவரம், தனுசுக்கோடி ஆகிய இடங்களூடே மற்றொரு பாதை சென்றது.
தொழில், வாணிகம் குழாம்கள்:
தொழிலாளர்களைக் கொண்ட வணிகக் குழுக்கள் அவை செய்யும் தொழிலுக்கேற்ப கைவினைக் குழாம்கள், வணிகக் குழாம்கள் என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டன. கல்வெட்டுகள் 18 வகை கைவினைக் குழாம்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. குயவர், எண்ணெய் வணிகர், நெசவாளர், சலவையாளர், முடி திருத்துவோர் ஆகியோர் அடங்கியிருந்தனர். காஞ்சியில் கம்மாளர் குழு இருந்தது. விரிஞ்சு புரத்தில் நெசவாளர்,
94

குழுக்களும், சித்திர மேழிப் பெரிய நாட்டார் என்று அழைக்கப் பெற்ற வேளாண் குழுவினரும் இருந்தனர்.
பளஞ்சிகர், நானா தேசிகர், வாணிப நகரத்தார், வைசியர், மும்முரி தண்டர்கள், செட்டிகள், ஐயவோளு, மணிக்கிராமத்தார் முதலானோர் வணிகக் குழுவினர் ஆவர். குதிரை வணிகர் குதிரைச் செட்டிகள் ஆவர். நவரத்தினக் கற்களில் வாணிபத்தை மணிக் கிராமத்தார் என்னும் குழுவினர் கட்டுப்படுத்தினர். தக்கண பீடபூமியிலும், தென்னகத்தின் பல பகுதிகளிலும் பணியாற்றிய ஐயவோளு குழுவினர் தம்மை வாசுதேவர், வீரபத்திரரின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டனர். இக்குழுவில் அடங்கியவர்கள் கவரர்கள், செட்டிகள், வீரவாணியர், நானா தேசிகர், ஏரி வீரர்கள் ஆவர்.
இசுலாமியர், போர்த்துக்கீசர், டச்சுக்காரர்கள், டேனியர்களும் பணியாற்றினர். விஜயநகரப் பேரரசு கோட்டைப் போரில் தோல்வியுற்ற பின்னர் போர்த்துக்கீசரின் வாணிகம் வீழ்ந்தது. நாகப்பட்டினம், வேலூர், சந்திரகிரி ஆகியவை மேல் நாட்டவர் வாணிபம் செய்த இடங்கள். தேவனாம் பட்டினம் டச்சுக்காரர்கள் வாணிப நிலையமாக விளங்கியது. போர்த்துக் கீசர் தேவனாம் பட்டினத்துத் தொழிற் கூடத்தை விஜயநகரப் பேரரசின் துணையோடு பிடுங்கிக் கொண்டனர். டச்சுக்காரர்கள் பழவேற் காட்டில் எழுப்பிய கோட்டையும், தொழிற் கூடமும் தரை மட்டமாக்கப்பட்டன. தரங்கம்பாடியில் டேனியர்கள் தொழிற் கூடம் அமைத்தனர். ஆங்கிலேயரும், டச்சுக்காரர்களும் பழவேற்காட்டில் தொழிற்கூடம் அமைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றன.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 200

Page 104
விஜயநகரப் பே சமய நூல்கள்
பிறர் ஆட்சியில் இலக்கியம்
சேக்கிழார் கம்பர் காலத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆற்றல் மிகுந்த ஆட்சி இல்லாமல், குழப்பங்கள் மெல்ல மெல்லத் தலையெடுத்தன. சோழரின் பேரரசு வரவரக் குறுகியது. பாண்டியர் மறுபடியும் ஓங்க முடியவில்லை. ஹொய்சளர் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெறத் தொடங்கினார்கள். பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் வட நாட்டை ஆண்டு வந்த அலாவுதீன் அனுப்பிய படைத்தலைவன் மாலிக்காபூர் தெற்கே இருந்த அரசுகளை வென்று அமைதியைக் குலைத்தான். மதுரையிலும் அவனுடைய படைகள் நுழைந்து குழப்பம் உண்டாக்கின. ஐம்பது ஆண்டுகாலம் பாண்டியநாடு மாலிக்காபூர் ஆட்சியிலும் அவனுக்குப் பின் வந்தவர்களின் ஆட்சியிலும் இருந்தது. ஆந்திராவில் விஜயநகர ஆட்சி ஏற்படும் வரையில் தமிழ்நாட்டில் அமைதி இல்லை. பிறகு தென் இந்தியா முழுவதும் விஜயநகர ஆட்சியின்கீழ் வந்தது. மதுரையில் விஜயநகரத்தாரின் செல்வாக்குப் பெற்ற நாயக்கர்கள் ஆட்சியை ஏற்படுத்தினார்கள். கலைகளும் இலக்கியமும் ஓரளவிற்கு மீண்டும் வளர்ச்சிபெறத் தொடங்கின. தஞ்சாவூர்ப் பகுதியும் (சோழநாடும்) நாயக்கர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. அதற்குப் பிறகு அந்தப் பகுதி மராட்டியர் ஆட்சிக்கு மாறியது. கர்நாடக நவாபு தமிழ்நாட்டின் வடபகுதியைக் கைப்பற்றி ஆளத் தொடங்கினான். போராட்டங்களும் போர்களும் நடந்தன. நாட்டில் அமைதியான சூழ்நிலை நிலவ முடியவில்லை.
விஜயநகரப்பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

பரசுக் காலச்
(d. 1100 - 17OO)
பேராசிரியர் மு. வரதராசன்
இத்தகைய சூழ்நிலையில் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சேக்கிழார், கம்பர் போன்ற பெரும்புலவர்களும் பெரிய இலக்கியங்களும் தோன்ற முடியவில்லை. நாயக்க மன்னர்கள் சமய நூல்களுக்கும் சமயக் கலைகளுக்கும் இலக்கியங்களுக்கும் மதிப்புத் தந்து வளர்த்து வந்த காரணத்தால், அவ்வப்போது சமயச் சான்றோர்கள் தோன்றிச் சிறந்த நூல்கள் எழுதினார்கள்; பழைய சமய நூல்களுக்கு விரிவான விளக்கங்கள் எழுதினார்கள்; சமயத்தைக் காக்கும் மடங்கள் தோன்றின; அந்த மடங்களை ஒட்டிப் புலவர் சிலர் சமயமும் தமிழும் வளர்த்து வந்தார்கள். புலவர்கள் தல புராணங்கள் பாடி அந்தந்த ஊர் மக்களை மகிழ்வித்தார்கள். சிறுசிறுநூல்கள் இயற்றி அங்கங்கே இருந்த செல்வர்களையும் சிற்றரசர் களையும் மகிழ்வித்தார்கள். அந்த நூல்களுள் சில, நேரே அவர்களின் புகழைப் பாடி மகிழ்விப்பவை. வேறு சில, தரம் குறைந்த காமச்சுவையான பாடல்களை இயற்றி அந்தச் சுவையால் அவர்களின் உள்ளங்களை மகிழ்வித்தவை. தஞ்சாவூரில் ஆண்ட மராட்டிய மன்னர்களின் ஆதரவிலும் அப்படிப்பட்ட நூல்கள் ஏற்பட்டன. அந்தச் சூழ்நிலைக்கு இடையே எந்த அரசரையும் செல்வரையும் பொருட்படுத்தாத சித்தர் என்னும் ஒருவகை ஞானிகள் வாழ்ந்த உயர்ந்த தத்துவப் பாடல்களை எளிய சொற்களால் பாடினார்கள். தத்துவராயர் முதலான ஞானிகளும் வாழ்ந்து உலகியல் கடந்த ஞானப் பாடல்கள் பாடினார்கள்.
95

Page 105
அந்த அமைதியற்ற நூற்றாண்டுகளிலும் கவிதைவளம் அடியோடு வறண்டு போகவில்லை. இடையிடையே கவிஞர்கள் சிலர் தோன்றிப் புதிய இலக்கியச் செல்வம் சிறிய அளவிலேனும் படைத்துத் தந்தார்கள். அருணகிரியாரும் வில்லிபுத்துராரும் ஆயிரக்கணக்கான பாடல்கள் அளித்தார்கள். கற்பனைத் திறன் மிகுந்த காளமேகம் முதலான புலவர்கள் சுவையான பாடல்கள் இயற்றினார்கள். குமரகுருபரரும் சிவப்பிரகாசரும் உயர்ந்த புலமைச் செல்வம் நிரம்பியவர்கள். கலைச்சுவைக்காக இலக்கியம் படைக்காவிட்டாலும், GEFOLL வளர்ச்சிக்காக அவர்கள் படைத்த நூல்களில் இலக்கியச் சுவையும் கலந்துள்ளது. அவர்கள் பலவகை நூல்கள் படைத்தவர்கள். முயன்றிருந்தால், ஒப்பற்ற பெரிய காப்பியங்களையும் அவர்கள் இயற்றியிருக்கமுடியும். அமைதியற்ற அரசியல் சூழ்நிலை நாட்டில் இருந்தபோதிலும், இலக்கியப் படைப்பு இடையறாமல் நடைபெற்று வந்ததாகவே தோன்றுகிறது. அதற்கு முன்பு பல நூற்றாண்டு களாகத் தமிழிலக்கியம் தொடர்ந்து பெற்றுவந்த வளர்ச்சியுடன் நன்கு வேரூன்றித் தழைத்திருந்த காரணத்தால், அந்தச் சில நூற்றாண்டுகளின் அரசியல் குழப்பம் அந்த இலக்கியச் சோலையைப் பெரிதும் தாக்கவில்லை. வழக்கம்போல் பூத்துக் குலுங்கிக் காய்த்துப் பெரும்பயன் தராவிட்டாலும், சோலையின் பசுமை அடியோடு மாறிப்போகவில்லை; புதிய தளிர்கள் விட்டன. இலைகள் தழைத்தன; அரும்புகள் அரும்பின; சிற்சில பூக்களேனும் பூத்தன; சிறுசிறு அளவிலேனும் காய்களும் கனிகளும் காணப்பட்டன.
சித்தர் பாடல்கள்
இந்தக் காலத்தில் சித்தர்கள் என்ற பெயரால் ஞானிகள் சிலர் தோன்றித் தம் அனுபவ உணர்வு களை எளிய தமிழால் பாடினார்கள். இந்தக் காலத்திற்கு முன்னமே வாழ்ந்த (ஆறாம் நூற்றாண்டைச்சார்ந்த) திருமூலர் முதலானவர் களையும் இந்தச் சித்தர்களோடு சேர்த்துக் கூறுவது உண்டு. அகத்தியர் என்ற பழம் புலவரையும் சித்தர் எனக் கருதுவோர் உண்டு. தமிழிலக்கண ஆசிரியராகிய அந்தப்பழைய அகத்தியர் வேறு சித்த
96

மருத்துவர்களுள் ஒருவராகக் கருதப்படும் அகத்தியர் வேறு. இந்தச் சித்தர்களுள் பெரும்பாலானோர் சைவர்கள் ஆயினும், பொதுவாக இவர்கள் சாதி சமய வேறுபாடுகளைக் கடந்தவர்கள்; மூட நம்பிக்கைகளுக்கு இடம் தராதவர்கள்; சடங்குகளையும் சடங்குகளோடு ஒட்டிய வழிபாடுகளையும் போற்றாதவர்கள். தம் வாழ்க்கை அனுபவங்களால் கண்டறிந்த உண்மைகளை மட்டுமே தெளிவாக எடுத்துச் சொல்வது இவர்களின் நோக்கம். இவர்கள் தத்துவஞானிகள், மெய்யுணர்வு பெற்றவர்கள். இவர்களில் சிலர் யோகிகளாய்ச் சிறப்புற்றவர்கள்; சிலர் மருத்துவர்களாய் விளங்கியவர்கள். இவர்களின் வழியில் வளர்ந்த தமிழ் மருத்துவக் கலை சித்த மருத்துவம் எனப் பெயர்பெற்றது. இவர்கள் பழைய தமிழ் இலக்கண மரபுகளையும் அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. கற்றறிந்த புலவர்களுக்காக என்று பாடல்கள் இயற்ற விரும்பவில்லை. பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் பாடல்கள் இயற்ற விரும்பிய காரணத்தால், நாட்டுப் பாடல்களில் கண்ட பல செய்யுள் வடிவங்களைப் பயன்படுத்தி எளிய பேச்சுவழக்குச் சொற்களைக் கையாண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்கள். சிலருடைய பாடல்கள் மறைபொருள் உடையவை. வெளிப்படையாகப் பார்க்கும்போது எளிய பொருள் ஒன்று தோன்றும். ஆழ்ந்து கற்றால் உட்பொருள் ஒன்று உணரப்படும். மருந்து பற்றிய பாடல்களில் ஒவ்வொரு மூலிகைக்கும் வெவ்வேறு பெயர் ஒன்று குறிப்பிட்டிருக்கும். சைவம் என்னும் சொல் தாளிசபத்திரத்தைக் குறிக்கும்; சரசுவதி என்பது வல்லாரைக் கீரையைக் குறிக்கும். இவ்வாறு சொற்கள் வெவ்வேறு பொருளில் வழங்கியதால், பாடல்களைப் படித்து நேரே பயன்பெற முடியாது. மரபு வழியில் கற்றுத் தேர்ந்தவர்களின் வாயிலாகவே பயன்பெற முடியும்.
சித்தர் பாடல்களை இன்றும் தெருவில் பாடிச் செல்வோர் உண்டு. பாம்பாட்டிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், அழுகணிச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர் முதலானவர்களின் பாடல்களை ஆர்வத்துடன் படிப்பவரும் பாடுவோரும் இன்றும் உள்ளனர்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் -2009

Page 106
ஊத்தைக் குழிதனிலே மண்ணை எடுத்தே உதிரப் புனலிலே உண்டை சேர்த்தே வாய்த்த குயவனார் பண்ணு பாண்டம் வரைஒட்டுக்கும் ஆகாதென்று ஆடுபாம்பே.
என்பது பாம்பாட்டிச் சித்தர் பாடல். மனித உடம்பின் தோற்றத்தையும் பயனற்ற தன்மையையும் கூறுவன இந்த அடிகள். இடைக்காட்டுச் சித்தர் என்பவரின் பாடல்கள் பசு மேய்க்கும் இடையர்கள் பசுவைப் பார்த்தும் இடையர்களின் தலைவனைப் பார்த்தும் பாடும் முறையில் அமைந்தவை; கருத்தெல்லாம் கடவுளைப் பற்றியும் ஞானநெறியைப் பற்றியும் அமைந்திருக்கும். மனம் என்னும் கரணத்தை ஒரு பேயாகக் கருதிப் பாடுபவர் அகப்பேய்ச் சித்தர். குதம்பை என்னும் காதணி அணிந்த பெண்ணை விளித்துப் பாடும் முறையில் பாடல்களை அமைத்த காரணத்தால் ஒருவர் குதம்பைச் சித்தர் என்று குறிக்கப்பட்டார்.
மாங்காய்ப் பால் உண்டு மலைமேல்
இருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி
என்பது அவருடைய பாடல்களுள் ஒன்று. மாங்காய், தேங்காய், பால் என்பன வெளிப்படையாகத் தெரிந்த எளிய சொற்கள். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மறைபொருள் அமைத்துப் பாடியுள்ளார்.
உள்ளங்கால் வெள்ளெலும்பு ஆகத்திரியினும்
வள்ளலைக் காணுவையோ - குதம்பாய் வள்ளலைக் காணுவையோ?
இவ்வாறே சித்தர் பாடல்கள் பல, தெளிந்த நடையில் எளிய சொற்களில் அமைந்து ஆழ்ந்த நுண்பொருள் உணர்த்துவனவாக உள்ளன.
சைவ சாத்திரங்கள்
சைவ நாயன்மார்களின் பாடல்களாக உள்ள பக்தி நூல்கள், சைவ சித்தாந்த சமயத்தின் தோத்திர
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

நூல்கள் எனப் போற்றப்படும். கி.பி. 12, 13, 14ஆம் நூற்றாண்டுகளில் உய்யவந்த தேவநாயனார் முதலானவர்களால் இயற்றப்பட்ட பதினான்கு நூல்கள் சைவ சித்தாந்த சமயத்தின் சாத்திர நூல்கள் எனப்படும். அவற்றை இயற்றியவர்கள் புலமை நிரம்பியவர்கள்; அக்காலத்தின் தேவைக்கு ஏற்ப இலக்கியம் இயற்றாமல் சாத்திரங்கள் இயற்றினார்கள். அந்தச் சாத்திர நூல்களில் பெரும்பாலானவை இலக்கிய மரபை ஒட்டி பழைய நூல்களின் வாய்ப்பாடுகளை அமைத்து இயற்றப்பட்டுள்ளன. உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருவுந்தியார் எனப்படுவது, பெண்கள் உந்தீ பற என்று சொல்லி விளையாடிப் பாடும் பாடலின் வடிவில் அமைந்தது; அழகான நடையில் உயர்ந்த சமய உண்மைகளை விளக்குவது. திருக்களிற்றுப்படியார் அவர் வழி வந்த சான்றோர் ஒருவர் இயற்றிய செய்யுள் நூல். பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையை விளக்கிச் சைவ சித்தாந்தத்தின் அடிப்படை நூலாக விளங்குவது சிவஞானபோதம். அது மெய்கண்டார் இயற்றியது. பன்னிரண்டு சூத்திரங்கள் உடையது. அவருடைய நாற்பத்தொன்பது மாணவர்களுள் தலை யானவராகிய அருணந்தி சிவாச்சாரியார் இயற்றிய சிவஞான சித்தியார் என்பது 328 செய்யுள் கொண்ட விரிவான நூல். அவருடைய இருபா இருபஃது என்பதும் சைவர்களால் போற்றப்படும் ஒரு சாத்திரம். உமாபதி சிவாச்சாரியார் சிவப்பிரகாசம் என்னும் சிறப்பான நூலின் ஆசிரியர். அவர் ஏழு சாத்திர நூல்களும், இரண்டு புராணங்களும், வேறு சில நூல்களும் இயற்றியுள்ளார். சேக்கிழாரின் வரலாறு கூறும் சேக்கிழார் புராணத்தை இயற்றியவர் அவரே. மனவாசகம் கடந்தார் என்பவர் இயற்றிய உண்மை விளக்கம் என்பதும் ஒரு நல்ல சாத்திர நூல்.
தஞ்சைவாணன் கோவை
இக்காலத்தில் தஞ்சைவாணன் கோவை என்பதை இயற்றியவர் பொய்யாமொழியார் என்னும் புலவர். அதில் உள்ள நானூறு செய்யுள்களும் கற்பனைக் காதலர் இருவரின் காதல் வளர்ச்சியைப் படிப்படியாகக் கதைபோல எடுத்துக்கூறும் கோவை என்னும் இலக்கிய வகை ஆகும். நானூறும்
97

Page 107
தஞ்சாக்கூரில் ஆண்ட ஒரு சிற்றரசனைப் புகழும் குறிப்புகள் உடையவை.
காதலியின் வாழ்க்கையில் அவளுக்கும் காதலனுக்கும் உறவு ஏற்பட்டது என்ற உண்மை அறியாமல் பெற்றோர்கள் இருந்தனர். அப்போது தம் மகளின் உடலில் ஏற்பட்ட வாட்டத்தையும் மெலிவையும் ஏதோ ஒரு நோய் என்று தவறாக உணர்ந்து, அதற்கு வேறு பரிகாரங்களைத் தேடத் தொடங்கினார்கள். ஆனால் அவளோடு நெருங்கிப் பழகிய தோழிக்கு உண்மை தெரியும். தக்க வாய்ப்பு நேரும்போது பெற்றோருக்கு அறிவிக்க வேண்டும் என்று தோழி காத்திருந்தாள். வாய்ப்பு நேர்ந்தவுடன், உண்மையை எடுத்துக் கூறுகிறாள். “ஒரு நாள் இவளுடன் நாங்கள் சோலையில் பொழுதுபோக்கிக் கொண்டிருந்தபோது, மதம் பிடித்த யானை ஒன்று ஒடி வந்தது. நாங்கள் ஓடினோம்; அது எங்களைத் துரத்தி வந்தது. அஞ்சி அலறினோம். அப்போது எங்கிருந்தோ வீரன் ஒருவன் அங்கே தோன்றி, இவளைத் தன் இடப்பக்கத்தில் பற்றிக் கொண்டு, அந்த யானைமேல் தன் வேலை எறிந்து தடுத்தான். வேல் பட்ட இடத்திலிருந்து வந்த இரத்தம் அந்த வீரனின் மார்பில் ஒழுகி ஒரு பகுதியைச் செந்நிறம் ஆக்கியது. அவனுடைய இடது தோளின்மேல் சாய்ந்துகிடந்த உங்கள் மகளின் கண்களிலிருந்து வந்த கண்ணிர் கண்களில் தீட்டிய மையுடன் கலந்து கருநிறமாய் ஒழுகி வீரனுடைய மார்பின் இடப்பகுதியைக் கருநிறமாக்கியது. அப்போது அந்த வீரன் எப்படித் தோன்றினான், தெரியுமா? உமாதேவியை இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமான் போலவே தோன்றினான்’ என்று சொல்லிப் பெற்றோர்க்கு உண்மை விளங்க வைத்தாள்.
மண்அலை யாமல் வளர்க்கின்ற வாணன்தென்
மாறைவெற்பில அண்ணலை ஆயிழை பாகன்என்று அஞ்சினம் அஞ்சனம்தோய் கண்அலை நீர்இடப் பாகமும் மேலவந்த
கைக்களிற்றின் புண்அலை நீர்வலப் பாகமும் தோயப்
பொருதஅன்றே.
98

இவ்வாறு கோவையின் ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு புகழ்ச்சியையோ உணர்ச்சியையோ எடுத்துக்கூறி, நானூறு பாட்டுக்களால் ஆகிய தொடர்ந்த கதைபோல் அமைந்திருக்கும். அவற்றுள் பல பாட்டுக்கள் கற்பனைச் சுவையுடன் விளங்கும்.
உரையாசிரியர்கள்
முன்னமே தமிழ்நாட்டில் இருந்த கோயில்கள், பெரிய பெரிய கட்டடங்களும் இக்காலத்தில் சிற்ப வேலைப்பாடுகள் நிரம்பிய மண்டபங்களும் பெற்று விளக்கம் உற்றன. முன்னமே இருந்த சமய நூல்கள், விரிவான விளக்கங்களும் துணை நூல்களும் பெற்று விரிவு அடைந்தன. அவைபோலவே, முன்னமே இருந்த உயர்ந்த இலக்கியங்கள், உரையாசிரியர் களால் நுட்பமான உரைகளும் நயமான விளக்கங்களும் பெற்றுச் சிறப்பு அடைந்தன.
உரைகளும் விளக்கங்களும் எழுதியவர்கள் இலக்கிய வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் நல்ல தொண்டு புரிந்தார்கள். அவர்கள் எல்லோரும் கற்றுத் தெளிந்த அறிஞர்கள். அவர்களின் எழுத்துகளிலேயே பழைய தமிழ் உரைநடை இன்று காணமுடிகிறது. எட்டாம் நூற்றாண்டில் களவியல் என்னும் நூலுக்கு நக்கீரர் என்னும் உரையாசிரியர் எழுதிய உரையே அவ்வகையில் பழமையானது. அது செறிவும் செழுமையும் உடையது. ஆயினும் செய்யுளில் சீர்கள் அமைப்பது போலவே சொற்கள் அளவுபட்டு அமைந்து எதுகையும் மோனையும் நிரம்பிய அந்த நடை உரைநடையாக இல்லாமல் செய்யுள் நடை போன்றே உள்ளது. அந்த உரைக்கு அடுத்த பழமை உடையது தொல்காப்பியம் முழுமைக்கும் இளம்பூரணர் எழுதிய உரையாகும். பிறகு வந்த உரையாசிரியர்கள் அவருடைய பெயரைச் சுட்டாமல் உரையாசிரியர் என்ற பெயராலேயே குறிப்பிடுவர். இது அவருடைய சிறப்புக்குச் சான்றாக உள்ளது. நக்கீரரின் உரைநடை போல் அலங்கார நடையாக இல்லாமல், இளம்பூரணரின் உரைநடை எளிமையும் தெளிவும் பெற்றுள்ளது. அவருடைய காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனலாம். அடுத்துப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியத்தில்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 108
ஒரு பகுதிக்கும் திருக்கோவையார்க்கும் உரை எழுதியவர் பேராசிரியர் என்று வழங்கப்படுபவர். அவருடைய நடை செறிவும் செம்மையும் வாய்ந்தது. சேனாவரையர் தொல்காப்பியத்தின் இரண்டாம் பகுதிக்கு உரை எழுதினார். திட்பநுட்பம் செறிந்த நடை அவருடையது. வடமொழிப் புலமையும் நிரம்பியவர் அவர் நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியரும் வடமொழி கற்றவர். அவர் தமிழ் இலக்கணத்திற்கும் இலக்கியத்திற்கும் செய்த தொண்டு பெரிது. தமிழில் பல நூல்களுக்கு உரை எழுதிய பெருமை அவரையே சேரும். பாடல்களுக்கு நேரே உரை கொள்ளாமல் அந்வயப்படுத்திப் பொருந்தாத வகையில் சொற்களை எங்கெங்கோ கொண்டுசேர்த்துப்பொருள் கொள்ளும் செயற்கை முறை அவரிடம் உள்ள குறை ஆகும். ஆயினும் அவருடைய அறிவும் திறனும் போற்றத் தக்கவாறு அவர் எழுதிய உரைகளில் விளங்குகின்றன. அவருடைய உரைநடைபெருமிதமும் அழகும் கூடியது. இந்த உரையாசிரியர்களின் உரைகளில் அங்கங்கே காட்டும் மேற்கோள்கள் பல பழைய நூல்களிலிருந்து அமைந்தவை. அவற்றால் மறைந்துபோன பல நூல்களைப் பற்றி ஒரு சிறிதாவது அறிய முடிகிறது.
சிலப்பதிகாரத்திற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையால் பழங்காலத்து இசை நூல்கள், நாடக நூல்கள் பலவற்றின் பெயர்களை அறிகிறோம். அந்த உரையால் பழந் தமிழ்நாட்டுக் கலைகளைப் பற்றி எவ்வளவோ அறிய முடிகிறது. முழுதும் தெளிவாக அறிய முடியாவிட்டாலும், கலை வரலாறு பற்றிய இருள் ஒரளவு விலகுகிறது என்று கூறலாம். அவர்க்கு முன்பே சிலப்பதிகாரத்துக்கு அமைந்த பழைய உரையும் ஒன்று உண்டு. இரண்டு உரைகளின் நடையும் செம்மையானவை; எதுகை மோனைகளும் சீர்களின் அடுக்குகளும் குறைந்தவை; கருத்துக்களைத் தெளிவாக விளக்குபவை.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் மணக்குடவர் முதலிய பத்து அறிஞர்கள். அவர்களுள் புகழ்பெற்றவர் பரிமேலழகர். வடமொழி நூல்களின் கருத்துகளைத் தழுவியும் ஒப்பிட்டும் உரை எழுதும் போக்கு உடையவர் அவர். அதனால் சில இடங்களில் நூலாசிரியரின் உண்மைக் கருத்தை
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

உணரமுடியாமற் போயினும், பல இடங்களில் திருக்குறளின் பொருளாழத்தையும் நயத்தையும் நன்கு புலப்படுத்தியவர் அவர்.
பரிமேலழகர் (பதினான்காம் நூற்றாண்டில்) இரண்டு பழைய நூல்களுக்கு உரை எழுதியவர். பரிபாடல், திருக்குறள் என்பன அவருடைய உரை பெற்ற இரண்டு நூல்கள். திருக்குறளுக்கு எழுதிய உரையாலேயே அவர் புகழ்பெற்று விளங்குகிறார். தமிழில் உள்ள உரையாசிரியர்களுள் அவரே மிகச் சிறந்தவர். அவர் வடமொழி, தமிழ் ஆகிய இருமொழிப் புலமையும் நிரம்பியவர்; நுட்பமாகப் பொருளுணர்ந்து ஆழ்ந்து சிந்தனை செய்து அரிய கருத்துகளை எல்லாம் விளக்குவதில் வல்லவர். அவருடைய திருக்குறள் உரையிலும் சில சிறு குறைகள் உள்ளன. ஆயினும் அவர் ஆழ்ந்து கண்டு உணர்த்தியுள்ள நயங்களும் நுட்பங்களும் கணக்கற்றவை. ஓரிடத்தில் கூறியதை மறுபடியும் கூறாத செறிவும், உணர்த்தும் பொருளுக்கு ஏற்றபடி சொற்களை வரையறுத்து நிறுத்தி எழுதும் திறனும் அவருடைய உரையின் சிறப்பியல்புகள். வேண்டாத அடைமொழிகளுக்கு இடம் தராமல், நேரிய முறையில் உரிய பொருளை விளக்குமளவிற்கே சொற்களை அளந்து பயன்படுத்துவார். செறிவு, நுட்பம், நேர்மை ஆகிய பண்புகள் அமையத் தமிழ் உரைநடையைக் கையாண்டவர் அவர். இக்காலத்து அறிவியல் (சயன்ஸ்) கருத்துகளுக்கு ஏற்றது அவரது நடை. அவருடைய திருக்குறள் உரையின் நுட்பத்திலும் செம்மையிலும் உள்ளத்தைப் பறிகொடுத்த சைவ சமயச் சான்றோர் உமாபதி சிவாச்சாரியார் என்பவர், உயர்ந்த தமிழ் நூல்களின் பட்டியலைத் தரும்போது திருக்குறள் ஒன்றாகவும் பரிமேலழகர் உரை மற்றொன்றாகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார். பதினேழாம் நூற்றாண்டில் இருந்த திருமேனி இரத்தின கவிராயர் என்பவர் அவருடைய உரையில் உள்ள அரிய கருத்துகளை விளக்கி நுண்பொருள் மாலை' என்ற தனி நூலையே இயற்றினார்.
பெயர் அறியப்படாத அறிஞர்களின் உரைகள் வேறு சில இலக்கிய நூல்களுக்கு அமைந்தன. மயிலைநாதர், கல்லாடர், தெய்வச்சிலையார்
99

Page 109
முதலியவர்கள் இலக்கண நூல்களுக்கு உரை எழுதியவர்கள்.
பொதுவாக, இந்த உரையாசிரியர்களின் நடை எல்லாம் வடசொல் குறைவாகக் கலந்த நடை அல்லது தூய தமிழ்நடை என்று கூறுமாறு உள்ளன. ஆயின், ஆழ்வார்களின் பாடல்களுக்கு உரை எழுதியவர்கள், வடசொற்களும் தமிழ்ச்சொற்களும் விரவிக் கலந்த மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள் (முத்தும் பவளமும் கலந்த மாலைபோல் தமிழும் வடமொழியும் கலந்த நடை என்னும் பொருளில் அந்த நடைக்கு மணிப்பிரவாளம் என்ற பெயர் வழங்கினார்கள்). பக்திப் பாடல்களின் பொருளாழத்தையும் பலவகை நயங்களையும் விளக்குவதில் அவர்களின் உரைகள் நிகரற்று விளங்குகின்றன. அவர்கள் கல்வி வல்ல அறிஞர்களாக மட்டும் நிற்காமல், சமயத்துறையில் ஈடுபட்டுத் தம் வாழ்வைத் தியாகம் செய்த சான்றோர்களாகவும் வாழ்ந்தமையால், அவர்களின் உரைகள் சாத்திர நூல்கள் போல் வைணவ அறிஞர்களால் அளவற்ற பக்தியுடன் போற்றப்படுகின்றன.
வடமொழி இதிகாசங்களையும் சைன சமய நூல்களையும் தழுவித் தமிழில் நூல்கள் இயற்றப்பட்ட இக்காலத்தில், புலவர்கள் வீரம் பற்றியும் காதல் பற்றியும் தனித்தனிப் பாடல்கள் பாடும் வழக்கம் குன்றியது. வடநூல்களிலிருந்து கதைகளையும் வருணனைகளையும் கடன் வாங்கும் பான்மை வளர்ந்தது. வாழ்க்கையில் உள்ளவற்றைப் பாடும் மரபைக் கடந்து இல்லாதவற்றைக் கற்பனை செய்து பாடும் புதுமை வளர்ந்தது. வடநூல்களின் கதைகளையும் மரபுகளையும் மட்டும் அல்லாமல், வடமொழிச் சொற்களையும் மிகுதியாகக் கையாளத் தொடங்கினார்கள். சிறப்பாக, சமயத்தொடர்பான வாதங்களையும் கருத்துகளையும் எடுத்துரைக்கு மிடத்தில் வடமொழிச் சொற்களைத் தயங்காமல் கலந்தனர். மணிமேகலையின் சமயவாதம் நிகழும் பகுதியிலேயே இதன் தொடக்கத்தைக் காணலாம். சைனர் வடமொழி நூல்களைத் தழுவி எழுதியவற்றில் வடசொல் கலப்புப் பெருகியது. பூரீபுராணம் என்னும்
100

சைனநூலின் நடையே ஒருவகைக் கலப்பு நடையாக அமைந்தது. தமிழ்ச் சொற்களும் வடமொழிச் சொற்களும் பாதிக்குப்பாதிகலந்தாற்போல் அமைந்த அந்த நடையை வேண்டுமென்றே சமயச் சார்புள்ள புலவர்கள் போற்றத் தலைப்பட்டார்கள். ஆனால் இலக்கியமே நோக்கமாகக் கொண்டு கற்று உரைநூல்கள் எழுதிய அறிஞர்கள் ஏறக்குறைய அதே காலத்தில் வாழ்ந்த போதிலும் அந்த மணிப்பிரவாள நடையில் எழுதவில்லை. மிகக் குறைந்த அளவில் ஒரு சில வடசொற்கள் மட்டுமே கலந்த செந்தமிழ் நடையிலேயே அவர்கள் தம் உரைகளை எழுதினார்கள். இளம்பூரணர், குணசாகரர், மயிலைநாதர் முதலானவர்கள் சைனர். பேராசிரியர், நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார் முதலானவர்கள் சைவர். பரிமேலழகர் வைணவர். இவர்கள் எல்லோரும் சிறந்த தமிழ்த்தொண்டு புரிந்த அறிஞர்கள்; இலக்கண இலக்கியத் துறையில் தேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மேற்குறித்த அறிஞர்களைப் போல் மணிப்பிரவாள நடையில் எழுதாமல், செந்தமிழ் நடையையே கையாண்டார்கள். திட்பநுட்பம் வாய்ந்த பழைய தமிழ் உரைநடைக்கு எடுத்துக்காட்டாக உள்ளவை இவர்களின் உரைகளே.
புராணங்கள் முதலியன
வடமொழியில் உள்ள புராணங்களைத் தமிழில் எழுதும் முயற்சி வளர்ந்தது. அவ்வாறு தரப்பட்ட புராணங்களுள் பெரியது பத்தாயிரம் செய்யுள் உடைய கந்தபுராணம். அது வடமொழியில் உள்ள சிவசங்கர சங்கிதையைத் தழுவிப் பதினாயிரத்துக்கு மேற்பட்ட செய்யுள்களால் தமிழில் எழுதியது ஆகும். முருகனின் பிறப்பு, வளர்ப்பு, திருவிளையாடல், சூரபத்மனுடன் நிகழ்த்திய போர், தெய்வயானையின் திருமணம், வள்ளியின் காதல் முதலியவை பற்றி விரிவாகப் பாடிய புராணம் அது. கச்சியப்ப சிவாச்சாரியார் என்னும் அதன் ஆசிரியர் பழைய தமிழ் இலக்கிய மரபுகளை விடாமல் போற்றியவர். வர்ணனைகளுக்குக் கற்பனை மெருகு ஏற்றிப் பாடுவதில் வல்லவர் அவர். கவிச்சுவை நிரம்பிய புராணம் ஆகையால் மற்றப் புராணங்களைவிட அது சிறந்து நிற்கிறது.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 110
செவ்வைச்சூடுவார் என்னும் புலவர் வடமொழி பாகவதத்தைத் தழுவித் தமிழில் 5000 செய்யுள் கொண்ட நூல் இயற்றினார். அரசகேசரி என்பவர் காளிதாசரின் இரகுவம்சத்தை மொழிபெயர்த்து 2480 செய்யுளில் பாடினார். புகழேந்திப் புலவர் பாரதத்தில் வரும் நளனுடைய கதையை அழகான வெண்பாக்களால் பாடினார். அதிவீரராமர் என்னும் பாண்டிய அரசகுடும்பத்தைச் சார்ந்தவர் அதே கதையை விருத்தப்பாவால் பாடினார். கூர்ம புராணத்தையும் இலிங்க புராணத்தையும் அவர் தமிழில் ஆக்கினார். கச்சியப்ப முனிவர் என்பவர் விநாயக புராணத்தை மொழிபெயர்த்துப் பாடினார். வீரகவிராயர் அரிச்சந்திர புராணம் பாடினார். அவருடைய பாடல்களின் நடை நல்ல ஒட்டம் உடையது. பாடல்கள் உருக்கம் உடையவை. கற்பவர் நெஞ்சினை நெகிழ்விக்க வல்லவை. வடமலையப்பர் மச்சபுராணத்தை மொழிபெயர்த்தார்.
சைனர்களுள் மண்டலபுருடர் என்பவர் வடமொழி சைனபுராணமாகிய ஆதிபுராணத்தை தமிழில் இயற்றி பூரீபுராணம் எனப் பெயரிட்டார். அது மணிப்பிரவாள நடையில் இயற்றப்பட்டது. கயசிந்தாமணி என்ற சைனநூலும் மணிப்பிரவாளத்தில் எழுதப்பட்டதே ஆகும். மேருமந்தர புராணம் என்னும் சைனநூல் வாமன முனிவர் என்பவரால் இயற்றப்பட்டது. அது இயல்பான தமிழ் நடையில் அமைந்தது. அறநெறிச் சாரம் என்ற நீதிநூல் முன்றுறையரையனார் என்ற சைனரால் இயற்றப்பட்டது.
தல புராணங்கள்
உமாபதி சிவம் என்பவர் பதினான்காம் நூற்றாண்டில் கோயில் புராணம் என்னும் தலபுராணம் பாடினார். அதற்குப் பிறகு அதை ஒட்டி எழுந்த நூல்கள் பல. தலபுராணங்களுள் புகழ்பெற்றவை மதுரையில் உள்ள சிவபெருமானின் அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் கூறும் புராணங்களே. வேம்பத்தூரார், பெரும்பற்றப்புலியூர் நம்பி, பரஞ்சோதி என்னும் புலவர்கள் திருவிளையாடற் புராணங்கள் இயற்றியவர்கள். பரஞ்சோதி இயற்றிய திருவிளையாடலே இன்று பெரிதும் போற்றப்பட்டு வருகிறது. அவருடைய விருத்தப்பாக்கள் இனிமையும்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

தெளிவும் உடையனவாக இருத்தலே அதற்குக் காரணம் ஆகும். 3360 பாடல்கள் கொண்ட விரிவான நூல் அது. விளக்கமான வர்ணனைகள் பல அந்த நூலில் உண்டு.
தருமபுர மடத்தைச் சார்ந்த புலவர்கள் திருமழபாடி, திருவொற்றியூர் முதலான தலங்களுக்குப் புராணங்கள் பாடினார்கள். நிரம்ப அழகிய தேசிகர் திருப்பரங்கிரிப் புராணம், சேது புராணம் என்னும் தலபுராணங்களை இயற்றினார். வடநாட்டுத் தலமாகிய காசிக்கும் நூல் இயற்றியவர் அதிவீரராம பாண்டியர். காசிக் காண்டம் என்பது அந்த நூலின் பெயர். திருமலைநாதர் சிதம்பர புராணம் பாடினார். திருத்தணி என்னும் முருகன் தலத்தைப் புகழ்ந்து தலபுராணம் இயற்றினார் கச்சியப்ப முனிவர். தணிகைப் புராணம் என்னும் அந்த நூல் தலபுராணங்களுள் அழியாமல் வாழும் சிறப்புடையது ஆகும்.
திருவாரூர்,திருவெண்காடு, திருவண்ணாமலை, திருச்செங்கோடு, விரிஞ்சீபுரம், வேதாரணியம், கும்பகோணம் முதலான ஊர்கள் பற்றித் தலபுராணங்கள் பாடப்பட்டன. புகழ்பெற்ற புலவர் சிவப்பிரகாசர் திருக்கூவப் புராணம் பாடினார். அவரும் அவருடைய உடன்பிறந்தோர் இருவரும் சேர்ந்து பாடிய சீகாளத்திப்புராணம் சுவையான நூல். வீரராகவ முதலியார் திருக்கழுக்குன்றப் புராணம் இயற்றினார்.
தலபுராணங்கள் அக்காலத்தில் மக்களின் உள்ளங்களை மிகக் கவர்ந்திருந்தன. நாட்டுப் படலம், நகரப்படலம் என முதலில் அமையும் பகுதிகள் இலக்கியச் சுவையுடன் அமைக்கப்பட்டன. புலவர்கள் இயற்கையழகுபற்றியும் நிலவளம் முதலியன பற்றியும் உழவர் முதலானவர்களின் வாழ்க்கை வளம் பற்றியும் கண்டகனவுகளை எல்லாம் அந்தத்தலபுராணங்களுள் அமைத்து, அந்தந்த நாடுகளையும் ஊர்களையும் சிறப்பித்தார்கள். ஆகவே, அந்தந்த நாட்டு மக்கள் படித்துத் தம்தம் நாடுகளையும் ஊர்களையும் பற்றிப் பெருமையும் பற்றும் கொண்டு மகிழ்ந்தார்கள். கொடியவர்களும் அதிகாரச் செருக்கு மிகுந்தவர் களும் துன்பமுற்று மனம் திருந்திக் கோயில்களுக்கு
101

Page 111
வந்து வழிபட்டு நல்லவர்களாக மாறியதாகத் தலபுராணங்கள் கதைகள் கூறுவது வழக்கம். அந்தக் கதைகளைச் சுவையோடு படித்து மக்கள் மகிழ்ச்சியுறுவதற்குத் தலபுராணங்கள் பயன்பட்டன. கதைகளோடு கலந்து கலையின்பத்தை ஊட்டுவதற்கு அந்த நூல்கள் உதவின.
பதினேழாம் நூற்றாண்டில் தலபுராணங்கள் பல இயற்றிப் புகழ்பெற்றவர் எல்லப்ப நாவலர். திருவண்ணாமலை,திருவெண்காடு, திருவிரிஞ்சை, தீர்த்தகிரி, திருச்செங்காட்டங்குடி முதலிய தலங்களுக்குப் புராணங்கள் எழுதினார். விரிவான வருணனைகளைச் சுவையாக அமைப்பதில் வல்லவர் அவர். பக்திச்சுவை நிரம்பிய பாடல்களை அவற்றில் அமைத்துள்ளார். திருவண்ணாமலை பற்றி அவர் இயற்றிய திருவருணைக்கலம்பகம், கலம்பக நூல்களுள் சிறப்புடையதாகப் போற்றப்படுகிறது. இலக்கிய நயம் உள்ள பாடல்கள் பல அதில் உள்ளன.
சென்னையின் பகுதியாக உள்ள திருவொற்றியூருக்கு ஒருபுராணம் ஞானப்பிரகாசரால் இயற்றப்பட்டது. திருவாரூர் பற்றிய புராணம் ஞானக்கூத்தர் என்பவரால் இயற்றப்பட்டது. இவ்வாறு தலங்களுக்கு எழுதப்பட்ட புராணங்கள் கணக்கற்றவை ஆயின. ஒவ்வொரு தலபுராணத்திலும் அந்தந்தக் கோயிலைச் சிறப்பித்துக் கூறுவதற்காக, இந்திரன் முதலான தேர்கள் தாம் பெற்ற சாபம் நீங்குவதற்காகவும் பாவம் தீர்வதற்காகவும் அந்த ஊர்க்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்ததாகவும் அதற்குப் பிறகே கடவுளின் அருள் பெற்றுக் கடைத்தேறியதாகவும் கதைகள் புனையப்பட்டன. அந்தந்த ஊரை அடுத்த மலை ஆறு முதலியவை விரிவாக வர்ணிக்கப்பட்டன. கதைகளும் வர்ணனைகளும் பெரும்பாலும் ஒரே வகையாக இருப்பது உண்டு.
இத்தனை தலபுராணங்களுள் பலவற்றை இன்று கற்றவர்களும் போற்றிப் படிப்பதில்லை. படிக்கும் இரண்டொரு தலபுராணங்களையும் ஆர்வத்தோடு படிப்பவரைக் காணமுடியவில்லை. ஆயிரக்கணக்கான செய்யுள்களை அருமுயற்சி செய்து இயற்றிப் புலவர்கள் தந்த நூல்கள் இந்த நிலைக்கு வரக்
102

காரணம், இவற்றுள் பலவற்றில் இலக்கியக் கலைவிருந்து குறைந்திருப்பதே ஆகும். எங்கள் ஊர்க்கு ஒரு புராணம் வேண்டும், எங்கள் தலைவனுக்கு ஒரு கோவை வேண்டும், ஓர் உலா வேண்டும், ஒரு கலம்பகம் வேண்டும் என்று போட்டியிட்டுக் கொண்டு பல தல புராணங்களையும் மற்ற நூல்வகைகளையும் இயற்றுமாறு செய்தார்கள் அக்காலத்தார். அவற்றில் இலக்கியப் புதுமை உண்டா, நயம் உண்டா, வாழ்வை ஒட்டிய படைப்பு உண்டா என்று கவலைப்படவில்லை. அந்தத் தலபுராணம் முதலியவற்றுள் ஒன்றுக்கொன்று வேறுபாடு மிகுதியாக இல்லை. ஏறக்குறைய ஒரே வகையான அமைப்பு, ஒரே வகையான செய்யுள் வடிவம், ஒரே வகையான வர்ணனைகள் என்று பாடினால், ஒரு நூலைப் படித்தவர்கள் மற்றொரு நூலைப் படிக்கும்போது சலிப்பு அடைகிறார்கள். செய்யுள் படித்துப் படித்துப் பொருள் உணர்வதற்கு உரிய பயிற்சிக்கு வேண்டுமானால் படிக்கலாமே தவிர, இலக்கிய நயத்துக்காக, கலைவிருந்துக்காகப் படிக்கத் தேவையில்லாமற் போகிறது. தவிர, பாடிய புலவர்கள்தம் சுற்றுப்புறத்தாரின் வாழ்வை ஒட்டி நடப்பியலாக (realism ஆக)ப் பாடுவதை மறந்து, வெறுங் கற்பனை வேடிக்கையிலும் சொல் விளையாட்டிலும் ஈடுபட்டவர்களாக இருந்து நூல்கள் இயற்றினால், அந்த நூல்கள் ஒரு காலத்தில் ஒரு சிலர்க்குப் பயன் தரலாம்; காலம் கடந்து பயன் தருவதோ, பலர்க்கும் இன்பம் அளிப்பதோ முடியாமற்போகிறது. தலபுராணங்கள் முதலியவை இன்று மறுபதிப்புத் தேவை இல்லாமல் போய்விட்டதற்குக் காரணம் இதுவே ஆகும். ஆயினும் அவற்றுள் விரல்விட்டு எண்ணக்கூடிய நூல்கள் சில, இலக்கியச் சிறப்புக் குன்றாமல் இன்றும் விளங்குகின்றன. முழு நூலும் பயனுள்ளதாக இல்லாவிட்டாலும் சில பகுதிகள் சிறந்து நிற்கின்றன. காரணம், அவற்றை இயற்றிய புலவர்கள் கலைத் திறமையும் உணர்ச்சிப் பெருக்கும் கற்பனையாற்றலும் உடையவர்களாக இருந்ததே ஆகும். ஒவியக் கலையில் வல்லவன் தன்னை மறந்து கிழிக்கும் கோடுகளும் சிலவேளைகளில் கலைப்பொருள் உடையனவாக விளங்குதல்போல் அவை சிறந்த புலவர்களின் திறமையால் சுவையுடன் அமைந்து விட்டவை எனலாம்.
ஆய்வரங்குச் சிறப்புமலர்-200

Page 112
அழகிய மணவாளதாசர்
யமகம், சிலேடை முதலான சொல்லலங் காரங்கள் மிகுதியாக அமைந்துள்ள ஒரு தொகுப்பு அஷ்டப் பிரபந்தம் என்பது. அதில் உள்ள எட்டு நூல்களில், ஐந்து நூல்கள் திருவரங்கம் (ழரீரங்கம்) என்னும் கோயிலைப் பற்றியவை. இரண்டு திருப்பதியைப் பற்றியவை. கலம்பகம், அந்தாதி என்னும் நூல் வகைகள் திறமையோடு இயற்றப் பட்டுள்ளன. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் அல்லது அழகிய மணவாளதாசர் என்னும் வைணவ பக்தர் இவற்றை இயற்றினார் என்று பொதுவாகக் கூறப்படுகிறது. இந்த எட்டு நூல்களும் ஒருவரே பாடியவை அல்ல, ஒரே பெயர் உடைய வெவ்வேறு காலத்துப் புலவர் சிலர் பாடியவை என்று சிலர் கருதுகின்றனர். பாடல்களின் சொல்லாட்சியும் பொருளமைப்பும் ஏறக்குறைய ஒரே வகையாக உள்ளன. யமகமும் திரிபும் ஆகிய சொல்லலங் காரங்கள் அமைந்த அந்தாதிப் பாடல்கள் பாடிய அளவில் பொருள் விளங்குவன அல்ல. வந்த தொடர்களே திரும்பத் திரும்ப வரும்; ஆனால் ஒவ்வொரு தொடரிலும் சொற்களை வெவ்வேறு வகையாகப் பிரித்து வெவ்வேறு பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்கையாகச் சொற்கள் அமைந்த செய்யுள்கள் ஆதலால், ஆழ்வார்களின் பாடல்கள்போல் படித்தவுடன் நெஞ்சை உருக்கும் தன்மை இல்லை. சீரங்க நாயகர் ஊசல் என்னும் நூலில், ஊசலாடுதலை வைத்துப் பாடியுள்ள பாடல்கள் சுவையும் நயமும் பெற்றுள்ளன.
பட்டினத்தார் பாடல்கள்
பத்து அல்லது பதினொன்றாம் நூற்றாண்டில் பட்டினத்தார் என்ற பெயரில் சைவசமயத்தைச் சார்ந்த சான்றோர் ஒருவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து சமயப்பாடல் சில பாடியுள்ளார். அவருடைய பாடல்கள் சைவத் திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. கோயில் நான்மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபது என்பவை அவருடைய நூல்கள். பாடல்கள் நேரான ஒட்டம் உடையனவாய், கற்பவர் உள்ளத்தை
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

வயப்படுத்துவனவாய் உள்ளன. அவருடைய அகவல் பாக்களின் நடை, எளிமையும் தெளிவும் உடையது. உலக வாழ்க்கையில் செய்யத்தக்க கடமைகளைச் செம்மையாகச் செய்து, உள்ளத்தில் மட்டும் கடவுளின் நினைவு கொண்டால் போதும் என்பது அவருடைய கருத்து. சிந்தையைச் சிவனிடம் வைத்திருப்பதால், இல்வாழ்க்கையில் மனைவி மக்களோடு இன்பமாக வாழும் வாழ்வையும் இழக்கவில்லை, இறந்தபின் பெறும் முத்தியையும் இழக்கவில்லை என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.
அந்தப் பாடல்கள் தவிர, பட்டினத்துப் பிள்ளையார் திரட்டு என்ற புத்தகம் ஒன்று உள்ளது. இந்த நூலில் உள்ள பாடல்களே மக்களிடம் பரவியுள்ளன. இவற்றைப் பாடியவர் அதே ஊரில் பதினான்குபதினைந்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த வேறொருவர். அவருடைய பாடல்கள் எளிமை யானவை;பேச்சுவழக்குச் சொற்கள் பல கொண்டவை; உணர்ச்சி மிகுந்தவை. அவர் கடுமையான துறவறம் மேற்கொண்ட துறவி, இல்வாழ்க்கையைப் பழித்தும் உலகவாழ்வை வெறுத்தும் பாடிய பாடல்கள் பல இந்த நூலில் உள்ளன. பெற்ற தாயிடம் பேரன்பு கொண்டவர் என்பது, தாய் இறந்தபோது அவர் நெஞ்சம் நெகிழ்ந்து, உருகிப் பாடிய பாடல்களால் தெரிகிறது. அந்தப் பாடல்களை இன்றும் பலர் பாடி உருகுகிறார்கள். அவரைப் பற்றி வழங்கும் கதைகள் அவருடைய கடுமையான துறவறம் பற்றி விளக்கு கின்றன. பாடல்களும் அதை மெய்ப்பிக்கின்றன.
பட்டினத்தாரின் மாணவராக இருந்து உயர்நிலை பெற்றவர் பத்திரகிரியார். துளுவநாட்டு மன்னராக இருந்து பிறகு பட்டினத்தாரிடம் வந்து துறவியானார் என்று சொல்லுவர். அவர் பாடல்கள் பத்திரகிரியார் புலம்பல்' என்ற தொகுப்பாக உள்ளன. தத்துவக் கருத்துகள் நிரம்பிய பாடல்கள் அவை. இரண்டு அடி உள்ள பாடல்களில் தம் உணர்வுகளையும் ஏக்கங்களையும் உருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார்.
பாரதம்
வில்லிபுத்தூரார் பாரதத்தைத் தமிழில் நாலாயிரத்து முந்நூறு விருத்தப்பாவால் இயற்றினார்.
103

Page 113
அவருடைய பாரதம் இலக்கிய உலகில் இடம்பெற்று வாழ்கிறது. பாடல்கள் நல்ல ஒட்டம் உள்ள நடையில் அமைந்தவை. போர்க்கள் நிகழ்ச்சிகளைப் பாடும் இடத்தில் நடை மிகமிடுக்காகச் செல்கிறது; போரின் வேகத்தை நடையே புலப்படுத்துவதாக உள்ளது. அவ்வாறே வியப்பு அவலம் முதலான சுவைமிகுந்த நிகழ்ச்சிகளைப் புலப்படுத்தும் இடங்களிலும், அந்தந்த உணர்ச்சிக்கு ஏற்றவாறு நடையின் இயக்கம் உள்ளது. பாரதக் கதையில் உள்ள சுவையான பகுதிகளை எல்லாம் விடாமல் கூடியவரையில் சுருக்கித் திறம்படத் தமிழில் தந்த புலவர் அவர். இசை நயம் உடைய சந்தப் பாடல்களைப் பாடுவதில் வல்லவர் அவர். அத்தகைய பாடல்களை இயற்றுவதற்கு உரியவாறு தமிழோடு வடசொற்களை மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளார்.
அருணகிரியார்
வில்லிபுத்தூரார்போல் தமிழ்ச் செய்யுள்களில் மிகுதியான வடசொற்களைக் கலந்த மற்றொரு தமிழ்ப்புலவர் அருணகிரிநாதர் என்பவர் . சந்தப் பாடல்களைப் பாடுவதில் இணையற்று விளங்கியவர் அவர். அவர் பாடியுள்ள மூவாயிரம் பாடல்களும் திருப்புகழ் என்ற நூலாக உள்ளன. எல்லாம் முருகக் கடவுள்மேல் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் ஆகும். வெவ்வேறு வகையான சந்தங்களும் இசை யமைப்புகளும் உடைய அவை, இசையுலகில் லயம் தாளவகைகள் நிறைந்த களஞ்சியமாகப் போற்றப்படு கின்றன. அத்தனை வகையான வேறுபாடுகள் நிறைந்த இசைப்பாடல்கள் வேறு எங்கும் இல்லை என்று இசையறிஞர்கள் போற்றிக் கூறுகிறார்கள். இன்றும், தமிழ் இசையரங்குகளில் திருப்புகழ்ப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன. தேவார காலத்திற்குப் பிறகு பாடப்பட்ட பக்திப் பாடல்களுள் மிக்க புகழ்பெற்று விளங்கி வருபவை திருப்புகழ்ப் பாடல்களே ஆகும். பெரும்பாலான பாடல்களில், முன்பகுதியில் வேசையர்களின் சிற்றின்பக் கவர்ச்சியை வெறுக்கும் வெறுப்பும், பின்பகுதியில் முருகனுடைய அற்புதத் திருவிளையாடல் பற்றிய புராணக் கதைகளும் அந்தந்தத் தலங்களின் பெருமைகளும் எடுத்துரைக்கப்படுகின்றன. அவர் இயற்றிய கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி
104

என்பவை பக்திச்சுவை நிரம்பியவை. கந்தரந்தாதி, வேல் விருத்தம்,மயில் விருத்தம்,திருவகுப்பு என்பவை அவருடைய மற்ற நூல்கள்.
நளவெண்பா
வடமொழியில் பாரதத்தில் உள்ள நளன் என்னும் அரசனுடைய கதையைத் தமிழில் அழகான வெண்பாவால் இயற்றியவர் புகழேந்தி (16ஆம் நூற்றாண்டு). அவர் ஒட்டக்கூத்தரின் காலத்தில் இருந்தவர் என்றும் பாண்டி நாட்டு இளவரசியைச் சோழன் மணந்துகொண்டபோது மணமகளின் சீதனப் பொருள்களோடு சேர்ந்து சோழநாட்டு அரண்மனைக்கு வந்தவர் என்றும், வந்த இடத்தில் அவர்க்குத் தீங்கான பல செயல்களை ஒட்டக்கூத்தர் செய்தார் என்றும், சிறையில் இடுமாறு செய்தார் என்றும், புகழேந்தியிடம் சிறைக் கைதிகள் சிலர் தமிழ் கற்றுக் கவிஞர்கள் ஆனார்கள் என்றும், அந்தக் கவிஞர்களின் திறமையை உணர்ந்து உண்மையைத் தெளிந்த பிறகே அரசன் புகழேந்தியைச் சிறையிலிருந்து விடுவித்தான் என்றும் கதைகள் சொல்லும். அந்தக் கதைகளில் சில பாடல்களில் பிற்காலத்தாரால் புனைந்து சேர்க்கப்பட்டுள்ளன. அவைகளும் 5 6006) LT 6T பாடல்களே. நளவெண்பாவில் உள்ள வெண்பாக்கள் 424. அந்தப் பாடல்கள் எல்லாம் இனிய ஒட்டம் உள்ள நடையில் அமைந்தவை. தட்டுத் தடை இல்லாமல் சொற்கள் ஓடிவந்து புலவர்க்கு ஏவல் செய்வனபோல் பாடல்கள் இயல்பாக அமைந்துள்ளன. எளிய நடையிலும் உள்ளன. ஆகையால், பிற்காலத்தில் வெண்பாவில் புகழேந்தி என்ற பாராட்டு அவருக்குக் கிடைத்தது. தமயந்திசுயம்வர மண்டபத்திற்குள் வரும் காட்சியைக் கூறும் இடத்தில், மன்னர்களின் கண்களாகிய தாமரை மலர்கள் பூத்த சுயம்வர மண்டபத்தில் வெள்ளைச் சிறகுகளை உடைய அன்னப் பறவை செந்தாமரைப் பொய்கையில் செல்வதைப் போல் வந்தாள் என்கிறார். நாட்டை இழந்து தமயந்தியுடன் காட்டை அடைந்த நளன், நள்ளிரவில் அவள் உறங்கிக் கொண்டிருந்தபோது இருவரும் அணிந்திருந்த ஒற்றையாடையைக் கத்தியால் அரிவதைக் கூறும் புலவர், அந்த ஒற்றையாடையை
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 114
மட்டும் அல்லாமல், ஒருயிராக இருந்த நிலையையும் அரிவதாகவும், தன் அன்பை முற்றும் முதலோடும் அரிவதாகவும் எடுத்துரைக்கின்றார். தம்மைப் போற்றிய சந்திரன் சுவர்க்கி என்னும் சிற்றரசனை நளவெண்பாவில் ஐந்து இடங்களில் நன்றி யுணர்வோடு புகழ்ந்துள்ளார்.
பூஞ்சோலையில் பெண்கள் மலர் பறிக்கும் காட்சியைப் புகழேந்தி வருணிக்கிறார். அருஞ்சொல் ஒன்றும் இல்லாமல் பலர்க்கும் தெரிந்த எளிய சொற்களாலேயே ஒரு சிறு காட்சியை - எல்லோரும் நாளும் கண்டுவரும் சாதாரண காட்சியை - நயமாகக் கூறுகிறார். ஒரு சிறு மரத்தின் கொம்பில் உள்ள பூக்களைப் பறிப்பதற்காகப் பெண்கள் அந்தக் கொம்பை வளைக்கிறார்களாம். வளைக்கிறார்கள் என்றும் கூறவில்லை; தொடுகிறார்கள் என்று கூறுகிறார். பெண்களின் கை தீண்டியவுடன் அந்தக் கொம்பு வளைந்து அவர்களின் காலில் சாய்ந்து வணங்குகிறதாம். பெண்களின் கை தீண்டினால் வணங்காதவர்கள் யார் என்று குறிப்பிடுகிறார்.
பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே பூவையர்கை தீண்டலும்அப் பூங்கொம்பு -
CSLD66&leus பொன்னடியில் தாழ்ந்தனவே பூங்குழலாய்
காண்என்றான் மின்நெடுவேல் கையான் விரைந்து.
இவ்வாறு பல பாடல்களில் கதையே ஆனாலும், வர்ணனையே ஆனாலும், எளிய நடையில் நயமாகச் சொல்லும் திறன் மிக்கவர் புகழேந்தி.
புகழேந்தி சோழனால் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், சிறை வழியாக நீர் கொண்டு வரச் செல்லும் பெண்கள் மனம் மகிழும்படியாகச் சில நூல்களை எளிய நடையில் பாடி அவர்களின் உதவியைப் பெற்றார் என்று ஒரு கதை சொல்லும். அவ்வாறு அவர் பாடிய நூல்கள் பவளக்கொடி மாலை, அல்லியரசாணிமாலை, புலந்திரன் தூது, ஏணி யேற்றம், பஞ்சபாண்டவர் வனவாசம் முதலியன.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

இவற்றுள் பெரும்பாலானவை பாரதத்தில் உள்ள கதைகளின் தொடர்பானவை; அல்லது, அவற்றை ஒட்டி நாட்டு மக்களிடையே வழங்கிவந்த கதைகளை விளக்கியவை, பவளக்கொடி மாலை முதலியவை எளிய நடையில் அமைந்தவை; கொச்சைத் தமிழ் கலந்தவை; படித்தவுடன் பொருள் விளங்குபவை. அவற்றை ஒருவர் படிக்க, பலர் கூடிக் கேட்டு மகிழும் வழக்கம் கிராமங்களில் உண்டு. நாட்டுப்பாடல்கள் போலவே கற்பனை வளமும் உள்ளத்தைத் தொடும் சிறப்பும் உடையவை. நளவெண்பாவைப் பாடிய புலவர் வேறு என்பதும், பவளக்கொடி மாலை முதலியவை பிற்காலத்தில் நாட்டுப்பாடல்களின் முறையில் வேறொரு புலவர் இயற்றியிருக்கவேண்டும் என்பதும் அறிஞர் கருத்தாகும். பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழேந்தியின் பெயரைப் பிற்காலத்தார் பயன்படுத்திச் சில எளிய பதைப்பாடல்களை எழுதிப் பரப்பினார்கள் என்பதே உண்மை. புகழ்பெற்ற புலவர் ஒருவரின் பெயரைப் பிற்காலத்தார் பயன்படுத்திக் கொள்வது உண்டு என்பதற்கு அவ்வையார், கபிலர், அகத்தியர், திருவள்ளுவர் முதலானவர்களின் பெயரால் பிற்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் சான்றாக உள்ளன. புகழேந்தியின் பெயரால் நிலவும் கதைப் பாடல்கள் பலவும் அப்படிப்பட்டவைகளே.
அதிவீரராமர் முதலானோர்
பாண்டியர் மரபைச் சார்ந்த அதிவீரராம பாண்டியர் பதினாறாம் நூற்றாண்டில் தென்காசி யிலிருந்த சில பகுதிகளை ஆட்சி புரிந்தார். அவர் தமிழ்ப்புலமை நிரம்பியவர்; அவருடைய ஆட்சி அவருக்குத் தந்த புகழ் சிறிது; அவர் இயற்றிய நூல்களே இன்று அவருடைய பெயரை விளக்கி நிற்கின்றன. அவர் இயற்றிய புராணங்கள் சில. காசிக்காண்டம் 2525 செய்யுளில் காசியின் பெருமையைக் கூறுவது. அவற்றைவிட நைடதம் என்னும் காப்பியமே பலராலும் போற்றப்படுவது. அது நிஷத நாட்டை ஆண்ட நளன் என்னும் அரசனுடைய வாழ்வை விளக்குவது. பாரதத்தில் ஒரு பகுதியாக உள்ள கதையை விருத்தம் என்னும் செய்யுள் வடிவால் கூறுவது. தொடக்கத்தில் கதை விரிவாகக் கூறப்பட்டு வந்து, பிற்பகுதியில் சுருக்கமாக அமைந்து
105

Page 115
விரைவில் முடிக்கப்படுகிறது. அதிவீரராமருடைய தேவியாகிய அரசி தம் கணவரின் நூலில் அந்தக் குறை இருப்பதைச் சுட்டிக்காட்டினாராம். நல்ல நடையில் அமைந்திருந்தபோதிலும், ஆசிரியர்க்குக் காமச்சுவையில் ஈடுபாடு மிகுந்த விளங்குவது போல் மற்றச் சுவைகளில் இல்லை. நூலின் சிறப்புக்கு அது குறை ஆகிறது. அவர் ஒரு நீதி நூலும் இயற்றியுள்ளார். அது வெற்றிவேற்கை அல்லது நறுந்தொகை எனப்படும். அவ்வையாரின் ஆத்திசூடிபோல் அது ஒரு காலத்தில் போற்றிக் கற்கப்பட்டு வந்தது. நீதிகளை எளிய முறையில் நேராக எடுத்துரைக்கும் போக்கை அதில் காணலாம். (இலக்கியம் இயற்றவல்ல புலவர்கள் நீதிநூலும் இயற்ற விரும்புதல் அந்தக் காலத்து வழக்கமாக இருந்ததுபோல் தெரிகிறது. அதனால் தான் குமரகுருபரர் ஒரு நீதிநூலும், சிவப்பிரகாசர் மற்றொரு நீதிநூலும் இயற்றினார்கள்)
அவருடைய தமையனார் வரதுங்கராம பாண்டியர் என்பவரும் புலமை நிரம்பியவரே. பிரமோத்தர காண்டம் என்னும் சைவநூலை இயற்றியவர் அவர் பக்திப் பாடல்களாக அவர் இயற்றிய நூல் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி என்பது. உருக்கமான பக்தியுணர்ச்சியை அந்தப் பாடல்களில் காணலாம். அதனால் அது குட்டித்திருவாசகம் என்று ஒரு காலத்தில் போற்றப் பட்டு வந்தது. அதில் உள்ள ஒரு பாடல் வருமாறு:
சிந்தனை உனக்குத் தந்தேன்
திருவருள் எனக்குத் தந்தாய் வந்தனை உனக்குத் தந்தேன்
மலரடி எனக்குத் தந்தாய் பைந்துணர் உனக்குத் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய் கந்தனைப் பயந்த நாதா
கருவையில் இருக்கும் தேவே.
மச்சபுராணத்தை வடமொழியிலிருந்து தழுவி எழுதியவர் வடமலைப்பிள்ளையப்பன் என்பவர். அவர் புலவர்க்கு உதவும் செல்வராகவும் வாழ்ந்தவர். அவருடைய உதவிகள் பெற்ற இரத்தினக்கவிராயர் என்பவர், புலவர் ஆற்றுப்படை என்னும் நூல்
106

இயற்றினார். அதன் வாயிலாக, புலவர்களுக்கு அந்த வள்ளலின் கொடைப்பண்பை அறிமுகப்படுத்தினார்.
காளமேகம்
எண்ணியவுடன் அதே நேரத்தில் கவி பாடுகிறவர்களை ஆசுகவி எனச் சொல்வது உண்டு. தமிழிலக்கியத்தில் ஆசுகவிகள் மிகுதியாகப் பாடிப் புகழ்பெற்றவர் காளமேகப் புலவர் என்பவர். அவர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். காளமேகம் எதிர்பாராமல் பெருமழை பெய்து திகைக்க வைப்பதுபோல், நாட்டில் பல நிகழ்ச்சிகளின்போது ஆசுகவிகள் பல பாடி வியப்பூட்டிய காரணத்தால் அவர் காளமேகம் எனப் பெயர் பெற்றார். அவருடைய இயற்பெயர் காலப்போக்கில் மறக்கப்பட்டது. அவருடைய பாடல்களில் பல, கேட்பவர்க்கு எளிதில் பொருள் விளங்கக்கூடியவை: ஆற்றலான உணர்ச்சிகளைப் புலப்படுத்துபவை. சிலேடை அமைந்த கவிகளும் சில உண்டு. புலவர்களை மதியாமல் செருக்குடன் இருந்த சிலரின் செருக்கு அடக்கும் வகையில் அவர்களைப் பழித்துப் பாடிய பாடல்களும் உண்டு.
அவர் பழைய இலக்கிய மரபை ஒட்டியும் நூல்கள் இயற்றியுள்ளார். அவற்றுள் திருவானைக்காவுலா என்பதும் சித்திரமடல் என்பதும் அழியாப் புகழ் உடையவை. முன்னது, பலர் சூழப் பெருமையுடன் தலைவன் உலா வருவதை வருணிக்கும் முறையில் அமைந்த நூல் வகை. பின்னது, காதலில் ஏமாற்றம் உற்றவர் தம்மை வருத்திக்கொள்வதாகப் பாடும் மடல் வகையைச் சார்ந்தது. ஆயினும் அவர் தம் தனிப் பாடல்களாலேயே மக்களின் நெஞ்சில் வாழ்ந்து வருகிறார்.
காளமேகப் புலவர் ஒர் ஊருக்குச் சென்றபோது சத்திரத்தில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவருக்கு அப்போது பசி உணவுக்கு நேரம் ஆயிற்று. சமையல் ஆகிக்கொண்டிருப்பதாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. கடைசியாக ஆட்கள் வந்து இலை இட்டுப் பரிமாறியபோது, காலம் தாழ்த்து அவர்கள் உணவு பரிமாறியதைப் பற்றி நகைச்சுவை யோடு பாடினார்: “இந்தச் சத்திரத்தில் உணவு
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 116
சமைப்பவர்களுக்குப் பொழுது அஸ்தமிக்கும் போது அரிசி வந்து சேரும். அதைக் குத்தி உலையில் இடும்போடு, ஊர் அமைதியாக உறங்கிவிடும். சமைத்த சோற்றை அகப்பையால் எடுத்து இலையில் பரிமாறும்போது பொழுது விடியத் தொடங்கி கிழக்கே வெள்ளி முளைக்கும்” என்று பாடினார்.
கத்துகடல் கழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதில் அரிசிவரும் - குத்தி உலையில்இட ஊர் அடங்கும் ஓர் அகப்பை அன்னம் இலையில்இட வெள்ளி எழும். மோர் விற்பவள் ஒரு முறை அவருக்கு மோர் விற்றபோது, அந்த மோரில் நீர் மிகுதியாகத் கலந்திருப்பதைக் கண்டார். உடனே நகைச்சுவை யோடு ஒரு பாடல் பாடினார். “நீ வானத்தில் இருக்கும்போது மேகம் என்று பெயர் பெறுகிறாய். நிலத்திற்கு வந்தபிறகு நீர் என்று பெயர் பெறுகிறாய். இந்த மங்கையின் கையை அடையும்போது மோர் என்ற பெயர் உனக்கு அமைகிறது. எத்தனை பெயர்களை நீ பெறுகிறாய்!” என்றார். சில தெய்வங்களைப்பற்றியும் அவர் எள்ளிநகையாடுவது போல் சுவையாகப் பாடியுள்ளார்.
இரட்டைப் புலவர்
புலவர் இருவர் தம் உடற்குறை காரணமாக ஒன்றுபட்டு இலக்கிய வாழ்க்கை நடத்திய விந்தையான வரலாறு தமிழிலக்கியத்தில் உள்ளது. ஒருவர் அத்தை மகன்; மற்றவர் அவர்க்கு அம்மான் மகன். ஒருவர் குருடர்; மற்றவர் முடவர். முடவரால் நடக்க முடியாது; ஆனால் வழிகாட்ட முடிந்தது; குருடர் வழிகாண முடியாது; ஆனால் மூடவர் காட்டிய வழியில் நடந்துசெல்ல முடிந்தது. குருடரின் தோளில் முடவர் அமர்ந்துசெல்வது வழக்கம் ஆயிற்று; ஒருவரின் துணை மற்றவர்க்குக் கிடைக்க இருவரும் சேர்ந்து ஒருவகைக் கூட்டுவாழ்க்கை நடத்த முடிந்தது. இருவர்க்கும் அமைந்திருந்த புலமைச் சிறப்பு அந்தக் குறையான வாழ்க்கைக்கு ஒளிதந்தது. இளஞ்சூரியர், முதுசூரியர் என்ற பெயரால் அவர்கள் தனித்தனியே அழைக்கப்பட்டனர். பிறப்பாலும் உடற்குறையாலும் ஏற்பட்ட உறவை, இருவருடைய புலமைத்திறமும் உறுதிப்படுத்தின. நான்கு அடிகள்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கொண்ட வெண்பாவில், ஒருவர் முன் இரண்டு அடி பாட, மற்றவர் அதே உணர்ச்சியுடனும் அதே கற்பனையாற்றலுடனும் பின் இரண்டு அடி பாடி முடித்து வந்தனர். புலமையை மதியாத செல்வர்களைத் தாழ்வுறச் செய்து பாடிய பாடல்கள் அவர்களின் மான உணர்ச்சியைக் காட்டுகின்றன. நல்ல பண்பு உடைய செல்வர்களை அவர்கள் புகழ்ந்து பாடிய பாடல்கள் அவர்களின் நல்ல மனத்தின் நன்றி யுணர்ச்சியைப் புலப்படுத்துகின்றன. சொற்சுவையும் பொருட்சுவையும் நிரம்ப அவர்கள் பாடிய தனிப் பாடல்கள் பல. நகைச்சுவை ததும்பும் பாடல்களும் உள்ளன. எள்ளி நகையாடும் பாடல்கள் தனிச் சுவையோடு அமைந்துள்ளன.
கலம்பகம் என்னும் நூல்வகை (பலவகைப் பொருள்களும் பலவகைச் செய்யுளில் அமைய நூறு பாடல்கள் கொண்ட இலக்கியம்) பாடுவதில் புகழ்பெற்றவர்கள் இரட்டையர். திருவாமாத்தூர்க் கலம்பகமும், தில்லைக் கலம்பகமும் இவர்கள் இயற்றியவை. உலா வகையில் இவர்களின் ஏகாம்பரநாதருலா புகழ் உடையது.
அந்தகக் கவி
பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் இருந்தும், புலமை நிரம்பியவராய் இலக்கியத் தொண்டு புரிந்தவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் என்பார். இவர் இசையிலும் பயிற்சி உள்ளவர். சிறந்த கவிஞராகவும் விளங்கியவர். இவர் இயற்றிய பாடல்கள் சொற்சுவையும் பொருள்நயமும் உடையவை. இவர் இலங்கைக்கும் சென்று அங்கே அரசாண்டுவந்த பரராசசிங்கனைத் தம் பாடல்களால் மகிழச் செய்து சிறந்த பரிசுகள் பெற்றார்.
பிற்காலத்தில் பலவாக வளர்ந்த இலக்கிய வகைகளைப்பாடுவதில் இவர் தேர்ந்தவர். பிள்ளைத் தமிழ், கலம்பகம், கோவை, உலா ஆகியவற்றை இவர் பாடியுள்ளார். திருக்கழுக்குன்றத்தைப் பற்றிய தலபுராணம் ஒன்றும் இவர் இயற்றியுள்ளார். இவர் பாடிய உலாநூல்கள் இரண்டு. ஒன்று ஒர் அரசனைப்பற்றிய உலா நூல்; மற்றொன்று
107

Page 117
திருவாரூர்ச் சிவபெருமானின் உலாப்பற்றியது. பின்னதே சிறப்புடையதாகப் புகழ் பெற்றது. திருவாரூர் உலா என்னும் அந்த நூலே, உலா நூல்களுள் மிக இனிமையானது. உயர்ந்தது என்று கருதப்படுகிறது. இவை தவிர, இவர் அவ்வப்போது கடிதங்கள்போல் பிறர்க்கு எழுதியனுப்பிய கவிதைகள் பல உண்டு; அவை சீட்டுக்கவிகள் எனப்படும். அவைகளும் சுவைமிகுந்தவை; கற்பனை மெருகு அமைந்தவை.
அதிமதுரகவி முதலானோர்
காளமேகப் புலவரின் காலத்தில் வாழ்ந்து புகழ்பெற்ற மற்றொரு கவிஞர் அதிமதுரகவி என்பவர். அவருடைய கவிதைகளும் கற்பனைச்சுவை மிகுந்தவை.
அந்தக் காலத்துப் புலவர்கள் பலர்க்கு, நல்ல சொல்வளமும் கற்பனைத் திறனும் அமைந்திருந்தன. ஆயினும் அவர்கள் புதிய நூல்களைப் படைத்து மகிழ்ச்சியோடு வாழ முடியவில்லை. வாழ்க்கையில் வறுமை அவர்களை வாட்டியது. தம் பாடல்களை மக்களிடம் பாடி அதனால் வயிறு வளர்க்க முடியாத நிலை இருந்தது. செல்வர்களைப் புகழ்ந்து பாடி அவர்களின் பொருளுதவி பெறவும் முடியவில்லை. மனம் மகிழ்ந்து புலவர்களைப் போற்றிக் காக்கும் வள்ளல்களும் அக்காலத்தில் இல்லை. அதனால் மனம் நொந்து வாடிய புலவர்களின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகப் பின்வரும் பாடலைக் குறிப்பிடலாம்:
கல்லாத ஒருவனைநான் கற்றாய் என்றேன் காடெறியும் மறவனைநாடாள்வாய் என்றேன் பொல்லாத ஒருவனைநான் நல்லாய் என்றேன் போர்முகத்தை அறியானைப் புலியேறு என்றேன் மல்லாரும் புயம்என்றேன் சூம்பல் தோளை வழங்காத கையானைநான் வள்ளல் என்றேன் இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான் யானும்என்றன் குற்றத்தால் ஏகின்றேனே. “காலம் எல்லாம் பலரைப் புகந்து பாடினேன்: இல்லாதவை எல்லாம் சொல்லிப் பாடிவந்தேன்; எனக்குக் கிடைத்த மறுமொழியும் இல்லை
108

என்பதுதான் (கொடுக்கப்பட்ட பொருள் இல்லை, கொடுப்பதில்லை)” என்று சொல்லிப் புலவர் தம் வறுமைக்காக வருந்தினார்.
தொல்காப்பியத் தேவர் என்பவர் ஒரு கலம்பக நூல் பாடினார். அது திருப்பாதிரிப்புலியூர் என்னும் தலத்தில் உள்ள தெய்வம் பற்றிப் பாடியது. சுவை மிகுந்த இலக்கியமாக ஒரு காலத்தில் அது கருதப்பட்டு வந்தது. இரட்டைப் புலவர்களாலும் அது புகழப்பட்டது.
திருக்குருகைப்பெருமாள் கவிராயர் என்பவர் நம்மாழ்வாரிடம் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவர் அகப்பொருள் பற்றிய இலக்கண நூல் ஒன்றும் அணியிலக்கணம்பற்றிய நூல் ஒன்றும் இயற்றி, மாறன் என்ற நம்மாழ்வாரின் பெயராலே வழங்கினார். மாறனகப்பொருள், மாறனலங்காரம் என்பவை அந்நூல்களின் பெயர்கள். அவை அல்லாமல் சில செய்யுள் நூல்களும், சிறு இலக்கியங்களும் இயற்றினார்.
மடங்கள்
சைவ சமயத்தைக் காப்பதற்காக ஏற்பட்ட சைவமடங்கள் சமயத்துறையில் பணி பல புரிந்ததோடு, தமிழிலக்கியத்தை வளர்த்துப் போற்றுவதிலும் ஆர்வம் செலுத்திவந்தன. பழைய நூல்களைக் காப்பதற்கும் புதிய நூல்களைப் படைப்பதற்கும் அந்த மடங்கள் ஆதரவுதந்தன. அந்த அமைப்புகளுக்குத் தலைமை பூண்டு விளங்கிய சிலர், தமிழ் நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்களாகவும் அவற்றை ஆராய்வதில் ஈடுபாடு கொண்டவர் களாகவும் இருந்தார்கள். அதனால் புலவர் பலர், மடங்களைச் சார்ந்து வாழ வாய்ப்பு இருந்தது. சென்ற சில நூற்றாண்டுகளில் புகழ்பெற்ற புலவர்கள் சிலர், மடங்களைச் சார்ந்தவர்களாக இருந்ததற்குக் காரணம் அதுவே. அவர்கள் மடங்களில் தங்கிப் பலர்க்குத் தமிழ் நூல்களை இயற்றியுள்ளனர்; அந்தப் புலவர்களும் பல நூல்களைக் கற்பித்து இலக்கியத் தொண்டு புரிந்து வந்தார்கள். அவர்களைப் போற்றி ஆதரவு தந்து வந்த மடங்களின் தலைவர்களும் சில சமய நூல்களை இயற்றியுள்ளனர். பதினான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட திருவாவடுதுறை
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 118
மடத்திலும், தருமபுர மடத்திலும் வாழ்ந்த புலவர்கள் இயற்றிய நூல்கள் சில, இலக்கிய வாழ்வு உடையவை; அவர்களுள் சிலர் பழைய நூல்களுக்கு உரைகளும் எழுதினார்கள். திருவண்ணாமலை மடமும், துறைமங்கல மடமும் வீரசைவ சமயத்தைச் சார்ந்தவை. அவைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் துணை புரிந்தன.
குமரகுருபரர்
தருமபுர மடத்தைச் சார்ந்த புலவர்களுள் பெரும்புகழ் பெற்று இலக்கிய உலகில் விளங்குபவர் குமரகுருபரர் என்பவர் (17-ஆம் நூற்றாண்டு). அவர் இளமையிலேயே துறவியானவர்; இளமையிலே கவி பாடுவதில் சிறந்து விளங்கியவர். மதுரையில் அரசாண்டுவந்த திருமலை நாயக்கரின் வேண்டு கோளின்படி, மதுரைக் கோயிலின் மீனாட்சி யம்மையின்மேல் பிள்ளைத்தமிழ் பாடினார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்னும் அந்த நூலுக்குப் பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் சிறப்பான இடம் உண்டு. அதில் உள்ள பாட்டுகள் பக்திச் சுவையும் இலக்கிய நயமும் இனிய ஓசைச் சிறப்பும் உடையவை. மதுரை என்ற நகரத்தைப்பற்றிய கலம்பக நூலும் பாடினார். திருவாரூர்பற்றி நான்மணிமாலை என்ற இலக்கியமும், சிதம்பரத்தைப்பற்றி மும்மணிக் கோவை, செய்யுட் கோவை, சிவகாமியம்மை இரட்டைமணிமாலை என்ற நூல்களும் இயற்றினார். தருமபுரத்தில் தம்முடைய ஆசிரியர்மேல் பண்டார மும்மணிக்கோவை என்ற நூல் இயற்றினார். தமிழ்ப் புலவர்களுள் வடநாட்டுக்குச் சென்று தங்கியிருந்து தமிழ்நூல்கள் பாடியவர் அவர் ஒருவரே. காசியில் தங்கி ஒரு மடத்தை ஏற்படுத்தினார். அது இன்னும் உள்ளது. அப்போது தில்லியை ஆண்ட முகலாய அரசரிடம் பேசி அவருடைய உதவி பெற முயன்றார். அதற்காக இந்துஸ்தானி மொழி கற்கக் கலைமகளின் அருளை வேண்டிச் சகலகலாவல்லி மாலை பாடினார். வடநாட்டில் தங்கியிருந்தபோது கம்பராமாயணத்தை இந்துஸ்தானியில் விளங்கிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். வேறு புராணப் பிரசங்கங்களும் சைவ சமய உபதேசங்களும் நிகழ்த்தினார். காசியைப் புகழ்ந்து கலம்பகம் இயற்றினார். காசியிலேயே முத்தியும் பெற்றார்.
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அவர் இயற்றிய மற்றொரு பிள்ளைத்தமிழ் நூல் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் என்பது. குறத்தி தெய்வ அருள்பற்றிக் குறிசொல்லும் முறையில் அமைந்தது மீனாட்சியம்மை குறம் என்பது. அவருடைய எந்த நூலிலும் கற்பனைவளம் காணலாம்; இனிய ஓசைநயமும் பொருட்சுவையும் காணலாம். நீதிகளைச் சொல்லுவதிலும் தெளிவும் திறனும் உடைய புலவர் என்பதை அவருடைய நீதிநெறிவிளக்கம் என்னும் நூலில் காணலாம். அது 120 வெண்பாக்களால் ஆகியது. உவமைகள் நிரம்பியது.
காப்பியங்களும் புராணங்களும் வளர்ந்தபின். இயற்கையின் அழகை உள்ளவாறு எடுத்துக் கூறும் சொல்லோவியங்கள் குறைந்து, உயர்வுநவிற்சியாகப் புனைந்து கூறும் வருணனைகள் மிகுந்தன. சங்ககால இலக்கியத்தில் வாழ்வில் கண்டவற்றை விளக்கிக் கூறும் அழகிய சொல்லோவியங்களே பெரும்பாலும் காண்கிறோம். ஒருசில இடங்களில் உயர்வுநவிற்சிகளும் காணப்படுகின்றன; அவைகளும் உள்ளவற்றை உணர்ச்சியோடு கூறும் காரணத்தால், மிகைப்படுத்திக் கூறுவனவாக உள்ளனவே அல்லாமல், இல்லாதவற்றைப் புனைந்து கூறும் வருணனைகளாகவோ உள்ளவற்றை அளவு கடந்து புனைந்துரைக்கும் வெறுங் கற்பனைகளாகவோ இல்லை. பிறகு எழுந்த காப்பியங்களில் இந்த நிலை சிறிது மாறியது. உள்ளவற்றை அழுத்தமாக வற்புறுத்திக் கூறுவதற்காக அமையும் உயர்வு நவிற்சிகள் மட்டும் அல்லாமல், வேடிக்கைச் சுவைக்காக அளவுமீறிப் புனைந்து கூறும் வருணனைகளும் இடம்பெற்றன. புராணங்கள் வளர்ந்த பிறகு, பல புராணங்கள் பெருகியபிறகு, புனைந்து கூறுவதில் புலவர்கள் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டார்கள். கற்பனை என்னும் பறவை மண்ணைவிட்டுப் பறந்தது மட்டும் அல்லாமல், விண்ணைவிட்டும் பறந்துவிடுவதாயிற்று. வருணனைகள், வாழ்க்கையோடு ஓரளவிற்காவது தொடர்புபட்டிருக்கவேண்டும் என்ற கொள்கை கைவிடப்பட்டது. அவ்வாறு வரம்பு கடந்து கற்பனை செய்வதும் கவிஞர்களுக்கு உரிய ஒரு மரபு என்று கருதும் நிலைமை வந்தது. குமரகுருபரர் அக்காலத்துப் புலவர்களுள் ஒரு தனிச்சிறப்பு உடையவராக இருந்தபோதிலும், உண்மையான
O9

Page 119
படைப்புத்திறன் வாய்ந்த பெருங்கவிஞராக விளங்கியபோதிலும், அந்தக் காலத்தின் வேகம் அவரையும் விடவில்லை. அளவு கடந்த கற்பனை வருணனைகள் அமைப்பதில் அவருடைய புலமை நெஞ்சமும் ஈடுபட்டது.
அவருடைய வருணனைகளில் மண்ணுலகத்தின் மரங்கள் உயர்ந்து ஓங்கி விண்ணுலகத்தை எட்டி, அங்கு உள்ள கற்பனை மரங்களோடு ஒன்றுபட்டு வளர்ந்து நிற்பதைக் காண்கிறோம். விளையாட்டுப் பெண்கள் சின்ன முச்சிலால் வாரிக் குவித்த மணிகள் பெரிய குவியல்கள் ஆகின்றன; வானத்தை எட்டி உயர்ந்த குவியல்களாய் வழியை அடைக்கின்றன; ஆற்றின் குறுக்கே நின்று அவை அடைப்பதால், ஆற்றின் நீரும் தடைப்பட்டுத் தேங்கி நிற்கின்றது; அந்த நீர்த்தேக்கத்தில் சூரியனும் சந்திரனும் தோணிகள் ஆகின்றன. மதுரையில் உள்ள சோலைகளின் உயரம் சொல்ல முடியுமா? அவைகளும் வானளாவி உயர்ந்திருக்கின்றன. வண்டுகள் அந்தச் சோலை மலர்களின் மகரந்தப் பொடிகளை உதிர்க்க, அந்தப் பொடிகள் ஆகாய கங்கையைத் தூர்த்து விடுகின்றன. உழவர்கள் கள் குடித்து மயங்கும் மயக்கத்தில் எருமைகளுக்கும் வானத்தில் படரும் கருநிற மேகங்களுக்கும் வேறுபாடு அறியாமல் தடுமாறுகிறார்கள். அந்த மேகங்களையும் தங்கள் எருமைகளோடு சேர்த்துக் கட்டி வேலை வாங்குகிறார்களாம். வயல்களில் விளையும் கரும்புகளின் உயரம் எவ்வளவு? அவைகளும் 6666 வளர்கின்றன. இந்திரனுடைய யானையாகிய ஐராவதம் அந்தக் கரும்புகளை விண்ணுலகத்தில் இருந்தபடியே தின்கின்றது. நெல்கதிர்களும் விண்ணுலகத்தினுள் எட்டி உயர்கின்றன. காமதேனு அங்கே அந்தக் கதிர்களைத் தின்று மகிழ்கின்றது. வாளை மீன் இங்கிருந்து துள்ளிப்பாய்ந்து சந்திர மண்டலத்தைத் தாக்கி அதன் அமிழ்த தாரைகள் பூமியில் பொழியுறுமாறு செய்துவிட்டுத் திரும்பிவருகிறது. மற்றொரு வாளைமீன் துள்ளிய துள்ளலில் விண்ணுலகத்தில் உள்ள காமதேனுவின் மடியில் முட்டுகிறது. அந்தக் காமதேனு, மடியில் முட்டியது தன் கன்று எனக் கருதிப் பாலைப் பொழிகிறது. இவ்வாறு அவர் எத்தனையோ கற்பனைகளைப் படைத்துள்ளார். அவை சுவையாக உள்ளன
110

என்றாலும், பொழுதுபோக்குக்கு உரிய வேடிக்கை யாகவே உள்ளன. பெரும்புலவராகிய அவரை, அந்தக் காலத்துச் சொல்லலங்கார மயக்கமும் விடவில்லை. சிலேடை, மடக்கு முதலிய அலங்காரங்கள் அமைந்த செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
இவ்வாறு அக்காலத்துப் போக்குகளை அவரிடம் கண்டபோதிலும், உண்மையான கவிஞரின் சிறந்த இயல்புகளையும் அவரிடம் முற்றக் காணலாம். மரஞ்செடி கொடிகளையும் பறவை விலங்குகளையும் அவற்றின் அழகிய காட்சிகளையும் கண்டு மகிழ்ந்த அவருடைய கலையுள்ளத்தைப் பல பாட்டுகளில் காணலாம். சொற்களைச் சுவைத்து ஆளும் புலவர் என்பதை நயமாக சொல்லமைப்பும் ஒசையினிமையும் உடைய பல பாட்டுகளில் உணரலாம்.
நீதிகளைச் சொல்லுமிடத்தில் சுவை குறையாமல் அழகாக எடுத்துரைக்கும் திறன் அவரிடம் இயல்பாக உள்ளது. நிலையாமையைப் பற்றிக் கூறுமிடத்திலும் சுவை குன்றவில்லை. “இளமை, நீரில் தோன்றும் குமிழி போன்றது. நீரில் எழும் அலைகள் போன்றது செல்வம். உடம்போ, நீரில் எழுதப்படும் எழுத்துப் போன்றது. ஆகவே, நம்மவர்களே, எம் சிவனுடைய அம்பலத்தை வணங்காமல் இருப்பது ஏன்?”
நீரில் குமிழி இளமை நிறைசெல்வம் நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில் எழுத்தாகும் யாக்கை நமரங்களாள் என்னே வழுத்தாதது எம்பிரான் மன்று.
கல்வியைப்பற்றி அவர் எடுத்துக் கூறியுள்ள உயர்ந்த கருத்துக்கள் பல; கல்வியில் தேர்ந்த புலவர்களிடத்தில் பெருமதிப்பு உடையவர் அவர். “பிரமனுடைய முகத்திலேயே கலைமகள் வாழ்கிறாள் ஆயினும், அவன் புலவர்களுக்கு நிகர் ஆக முடியாது. ஏன் என்றால் பிரமன் படைத்த உடம்புகள் அழிகின்றன. ஆனால் புலவர்கள் படைத்த உடம்புகளாகிய நூல்கள் அழியாமல் வாழ்கின்றன’ என்கிறார். கலைமகளின் அருளை வேண்டிப் பாடிய சகலகலாவல்லி மாலையிலும்அவர் கவிஞர்க்கு உரிய பெருமிதத்துடன் பாடியுள்ளார். “மண்ணாளும் வேந்தர்களில் சிறந்தவர்களும் என்பாட்டைக் கேட்ட
ஆய்வரங்குச் சிறப்புமலர் -2009

Page 120
அளவில் பணியுமாறு செய்ய வேண்டும்” என்று வேண்டிப் பாடினார். கலைமகளுக்கும் எவ்வளவு பெருமை தருகிறார் உலகங்களைக் காக்கும் கடவுளாகிய திருமால் உறங்குகிறானாம்; உலகங்களை அழிக்கும் தெய்வமாகிய சிவன் பித்துப் பிடித்தவனாகிவிட்டானாம்; ஆனால் படைக்கும் கடவுளாகிய பிரமன் மகிழ்ந்து சுவைகொள்ளும் கரும்பாகக் கலைமகள் விளங்குகிறாளாம் இவ்வாறு எதைப் பாடினாலும் நயமும் சுவையும் விளங்கப்பாடிய பெருங்கவிஞர் குமரகுருபரர்.
சிவப்பிரகாசர்
பதினேழாம் நூற்றாண்டின் தமிழ்ப்புலவர்களுள் சிறந்து விளங்கியவர் இருவர். ஒருவர் குமரகுருபரர். மற்றவர் சிவப்பிரகாசர், சிவப்பிரகாசரும், குமரகுருபரர்போல் துறவியே, வீர சைவம் என்னும் சமயத்தைச் சார்ந்தவர் அவர். துறைமங்கலம் என்னும் இடத்தில் அமைந்த மடத்தில் வாழ்ந்தவர். வாயின் இதழ் குவியாமல் (ம.ப.வ. ஆகிய எழுத்துக்கள் இல்லாமல்) பாடுவதற்கு உரிய நிரோட்டகம் என்னும் வகையில் யமகம் என்னும் சொல்லணி அமைத்து நிரோட்டக யமக அந்தாதி என்னும் நூலை இளமையில் பாடிப் புகழ் பெற்றார். திருவெங்கை என்ற ஊரில் மடம் அமைத்துத் தங்கியிருந்தபோது, அந்த ஊர்பற்றி ஒரு கோவையும் கலம்பகமும் பாடினார். தம் ஆசிரியர் மேல் கலம்பகம், தாலாட்டு, பிள்ளைத்தமிழ், திருப்பள்ளியெழுச்சி, தூது ஆகிய இலக்கிய வகைகள் இயற்றினார். நீதி நூலாக அவர் இயற்றியது நன்னெறி என்பது. திருக்காளத்தி என்னும் தலத்தைப் பற்றிய புராணம் இயற்றத் தொடங்கி ஒரு பகுதியை எழுதினார் அவருடைய தம்பி கருணைப்பிரகாசர் என்பவர். அதற்குப் பிறகு சிவப்பிரகாசர் அதைத் தொடர்ந்து இடைப்பகுதியை எழுதினார்; அதன் பிற்பகுதியை மற்றொரு தம்பி வேலைய சுவாமிகள் எழுதிப் புராணத்தை முடித்தார். இவ்வாறு உடன்பிறந்தார் மூவருடைய புலமையும் பெற்று உருவானது திருக்காளத்திப் புராணம். சிவப்பிரகாசர் இயற்றிய இருபத்துமூன்று நூல்களுள் புகழ்பெற்று நிற்பவை நால்வர் நான்மணிமாலையும் பிரபுலிங்க லீலையும் ஆகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரையும்பற்றிப்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

பத்துப் பத்துப் பாடல்கள் கொண்டு நாற்பது பாடல்களால் அமைந்தது நால்வர் நான்மணிமாலை என்னும் சுவைமிகுந்த நூல். சிவப்பிரகாசர் அந்த நால்வரிடமும் கொண்ட பேரன்பு அந்த நூலில் புலனாகிறது. பாடல் ஒவ்வொறும் கற்பனை நயமும் பொருட்சிறப்பும் உடையதாய் விளங்குகிறது. பிரபுலிங்கலீலை என்பது வீரசைவ சமயத்தைச் சிறப்பித்து எழுதப்பட்ட காப்பியம். சிவபெருமானின் அவதாரமாகிய அல்லமப்பிரபு என்பவரைத் தலைவராகக்கொண்டு அமைந்த அந்தக் காப்பியம், எல்லா நயமும் நிரம்பிக் கற்பவர்க்குச் சுவைமிக்கதாக உள்ளது. உவமையழகும் கற்பனைவளமும் நிரம்பிய காப்பியமாகத் திகழ்கிறது. மாணிக்கவாசகரின் திருவாசகத்தில் சிவப்பிரகாசரின் உள்ளம் மிகுதியான ஈடுபாடு கொண்டது. நால்வர் நான்மணிமாலையில் ஒரு பாட்டில் அவர் கூறுவது வருமாறு; "வேதங்களை ஒதினால், கண்களில் நீர் பெருக்கி நெஞ்சம் நெகிழ்ந்து உருகி நிற்பவர்களை யாம் கண்டதில்லை. ஆனால் திருவாசகத்தை ஒரு முறையே ஒதினாலும், கல்போன்ற மனதும் நெகிழ்ந்து உருக, கண்கள் மணல் கிணறு போல் சுரந்து நீர்பொழிய, உடம்பில், உரோமம் சிலிர்ப்பு அடைய, நடுக்கம் அடைந்து பக்தர் ஆகின்றவர்கள் தவிர வேறு வகையானவர்கள் இந்த உலகில் இல்லை”
வேதம் ஒதின் விழிநிர் பெருக்கி
நெஞ்சம்நெக்கு உருகிநிற்பவர்க் காண்கிலேம் திருவாச சகம்இங்கு ஒருகால் ஒதின் கருங்கல் கரைந்துகக் கண்கள் தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப்பு எய்தி அன்பர் ஆகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே.
சிவஞான முனிவர்
திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவர் ஈசான தேசிகர் என்னும் சாமிநாத தேசிகர். அவர் இலக்கணக்கொத்துஎன்னும் நூலை இயற்றியதோடு, கலம்பகம் முதலான சில இலக்கியங்களும் இயற்றினார். அவருடைய மாணவர் சங்கர நமச்சிவாயர் நன்னூலுக்கு உரை எழுதினார். மடத்தைச் சார்ந்த பெரும்புலவராகிய சிவஞான
111

Page 121
முனிவர் (18-ஆம் நூற்றாண்டில்) அந்த உரையை விரிவாக்கினார். வடமொழி, தமிழ் இரண்டிலும் தேர்ந்த அவர் தொல்காப்பியத்தின் முதல் சூத்திரத்திற்கு விரிவான ஆராய்ச்சி நூல் எழுதினார். அவருடைய காஞ்சிப் புராணம் (காஞ்சிபுரத்தைப் பற்றியது) தலபுராணங்களுள் தனிச் சிறப்போடு இலக்கிய நயம் மிகுந்து விளங்குகிறது. திருக்குறளின் அடிகளை அமைத்து வெண்பாக்களால் அவர் இயற்றிய நீதிநூல் சோமேசர் முதுமொழி வெண்பா. அந்நூலில் திருக்குறள் நீதிகளுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டாகக் கதைகளையும் பல வரலாற்று நிகழ்ச்சிகளையும் அமைத்துப் பாடியுள்ளார். சைவசித்தாந்த சமயத்திற்கு அடிப்படை நூலாகிய சிவஞானபோதத்துக்கு மாபாடியம் (மகா பாஷ்யம்) என்ற விரிவுரையும் ஒரு சிற்றுரையும் வேறு சில சமய நூல் விளக்கங்களும் எழுதியுள்ளார். வடமொழியிலும் தருக்கத்திலும் இலக்கணத்திலும் அவர் பெற்றிருந்த புலமையை அவருடைய உரைநூல்கள் காட்டும். இலக்கண விளக்கம் என்ற நூலுக்கு இலக்கண விளக்கச் சூறாவளி என்ற மறுப்பு சிவஞான சித்தியாரின் ஓர் உரையில் ஒரு பகுதிக்கு வைரக்குப்பாயம் என்ற பெயரால் மறுப்பு என்று இவ்வாறு புலவர்கள் அஞ்சத்தக்க வகையில் மறுப்பு நூல்கள் எழுதியவர் அவர். வடமொழி நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவர் இயற்றிய சிறுநூல்களுள் புகழ்பெற்றவை அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் என்னும் இரண்டும் பிள்ளைத் தமிழ் நூல்களாகும். சில கோயில் தலங்களைப் புகழ்ந்து சிறு நூல்கள் இயற்றியுள்ளார்.
சிவஞான சுவாமிகளின் மாணவராகிய கச்சியப்ப முனிவர் தணிகைப் புராணம் என்னும் சுவைமிகுந்த தலபுராணத்தை எழுதினார். அது திருத்தணி என்னும் தலத்தைப் புகழ்ந்து முருகக் கடவுளின் பெருமையை விளக்குவது. அவர் காலத்தில் பலர் சீவக சிந்தாமணி என்னும் சைனக் காப்பியத்தைப் படித்து அதன் சுவையைப் பாராட்டித் திரிவதைக் கேட்டு, வேறு சமயநூலைப் போற்றுவதைவிட்டுச் சைவசமய நூலில் ஈடுபட வேண்டும் என்று ஆசைகொண்டு இதை இயற்றினாராம். அதனால் சீவகசிந்தாமணி போலவே, பலவகைச் சுவைகளும்
112

நிரம்பிய இலக்கியமான அதைப் படைத்தார். அவருடைய மாணவர் கந்தப்பையர் பேரூர்ப்புராணம், விநாயக புராணம், பூவாளூர்ப் புராணம், கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூது, திருத்தணிகை ஆற்றுப்படை முதலான பலவகை நூல்களையும் இயற்றினார்.
தொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவர் என்பவரும் சிவஞான முனிவரின் மாணவர். திருத்தணித் திருவிருத்தம், துறைசைக் கோவை, கலசைக்கோவை, சிதம்பரேசர் வண்ணம் முதலியன அவர் நூல்கள், அவர்காலத்து மடத்துத் தலைவர்களின் மேலும் நூல்கள் இயற்றினார். அவை திருச்சிற்றம்பல தேசிகர் சிந்து, அம்பலவாண தேசிகர் ஆனந்தக்களிப்பு முதலியன. நாட்டுப் பாடல் வடிவங்களை அவற்றில் கையாண்டார்.
சாந்தலிங்க சுவாமிகள்
பதினெட்டாம் நூற்றாண்டில், சென்னையை அடுத்த திருப்போரூரில் ஒரு மடத்தை ஏற்பத்திய புலவர் சாந்தலிங்கசுவாமிகள். அவர் வீரசைவ சமயத்தைச் சார்ந்த துறவி. வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடுதூது முதலிய சுவையான சமய நூல்களை இயற்றினார். அவர்க்குப் பின்வந்த சிதம்பர சுவாமிகள் இயற்றிய நூல்களும் சிறப்புக்கு உரியவை. அவற்றுள் திருப்போரூர் சந்நிதிமுறை என்னும் தொகுப்பு, உருக்கமான பக்திப்பாடல்கள் அடங்கியது.
சிதம்பர சுவாமிகள்
பிற்காலத்தில் துறவறத்தாராய் விளங்கிப் பக்தி இலக்கியம் படைத்தவர்களுள் அந்தச் சிதம்பர சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். மீனாட்சியம்மைமீது நீண்ட ஒரு பாடலும், நெஞ்விடு தூது என்ற நூலும் வேறு சில பாடல்களும் இயற்றியவர். திருப்போரூர் என்னும் தலத்தில் உள்ள முருகன்மேல் பிள்ளைத் தமிழும், தாலாட்டும், திருப்பள்ளி யெழுச்சியும், குயில்பத்தும், அடைக்கலப்பத்தும் திருவாசகத்தைப் பின்பற்றி பாடியவை; திருவாசகம் போலவே பாடல்கள் உருக்கமாக உள்ளன. திருப்பள்ளியெழுச்சிப்பாடலும்
ஆய்வரங்குச் சிறப்புமலர்-200

Page 122
திருவாசகத்தில் உள்ளவாறே அமைந்தது. பாடல்களின் நடை தடையற்ற ஒட்டம் உடையது; பக்திச் சுவைக்கு ஏற்ற நெகிழ்ச்சி வாய்ந்தது.
தத்துவராயர்
இலக்கிய வடிவங்களையும் நாட்டுப்பாடல் வடிவங்களையும் பயன்படுத்தித்தத்துவக் கருத்துகள் அமைந்த பல பாடல்களைப் பாடியவர் தத்துவராயர் என்பவர். அவர்போல் வேறு யாரும் அத்தனை வடிவங்களைப் பயன்படுத்தியவர்கள் இல்லை எனலாம். உலா, தூது, கலம்பகம், பரணி, அந்தாதி முதலான பலவும் பாடியுள்ளார். அஞ்ளுவதைப் பரணியும் மோகவதைப் பரணியும் அவர் பாடிய பரணி நூல்கள். அவற்றில் அரசர்களின் போர்க்களங்கள் இல்லை. ஞானிகளின் போர்கள் உள்ளன. அஞ்ஞானமும் மோகமும் ஞானத்தால் வெல்லப் பட்டனவாக ஆன்மிகப்போர்கள் பாடப்பட்டுள்ளன. சில பாடல்கள் திருவாசகத்தைப் பின்பற்றிப் பாடியிருக்கிறார். பக்தியுணர்ச்சிக்கு முதன்மை இல்லாமல், தத்துவக் கருத்துக்களை விளக்கிப் பாடியதால், திருவாசகம் போல் பாடல்கள் இலக்கியச் சிறப்புப் பெற முடியவில்லை. திருவாசகத்தில் உள்ளதுபோல், இவரும், குயிலே இறைவனை நீ வரக் கூவாய் என்று குயிலை விளித்துப்பாடியுள்ளார். திருவாசகத்தில் உள்ள அன்னைப்பத்துப் போலவே இவரும்,'அன்னே என்னும் என்று முடியும் பாடல்கள் இயற்றியுள்ளார். திருச்சாழல் பாடியுள்ளார்;அச்சோ என்று முடியும் பாடல்கள் இயற்றியுள்ளார். அம்மானை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஊசல் முதலிய பாடல்களும் திருவாசகத்தைப் பின்பற்றி இயற்றப்பட்டுள்ளன. தேவாரத்தில் உள்ளவை போல, காதல் துறைகள் அமைந்த பக்திப் பாடல்களும் பாடியிருக்கிறார். இவை தவிர, புதிய வடிவங்கள் பலவற்றை நாட்டுப் பாடல்களிலிருந்து கண்டெடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார். மாலையில் சிறுவர் சிறுமியர்க்குத் திருட்டிதோஷம் கழித்துக் காப்பிடும் பாட்டாக அந்திக்காப்பு பாடியுள்ளார். பகடி, பந்தடித்தல், குறத்தி தன்னை அறிமுகம் செய்துகொளல், குறிசொல்லுதல் முதலிய பலவகைப் பாடல்களும் நாட்டுப்பாடல்களை ஒட்டி அமைந்தவை. குணலை, பறை, இம்பில், காளம் முதலிய இசைக்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கருவிகளைக்கொண்டு ஒலிப்பவர்களைப் பின்பற்றி அமைந்த பாடல்களும் உள்ளன. பாம்பாட்டியின் பாடலும், குரவையாடும் பாடல்களும் பாடியுள்ளார். ஆண்டாளின் பாடலைப் பின்பற்றி, கனாக் கண்டேன் தோழி நான்’ என்ற வகையிலும் பாடியுள்ளார். அவர் பாடியுள்ள பல்லிப்பாட்டு இனிய வகையில் அமைந்துள்ளது.
ஓடும்மணம் நம்மினுடன் உறவுசெயுமாகில் உள்ளநிலை மெல்ல உணர்வு ஆகிவருமாகில் நாடும்இடம் எங்கும்அறிவு ஆகிவிடு மாகில் நல்லகுரல் நல்லதிசை சொல்லுசிறு பல்லி.
பல்லியைப் பார்த்து நல்லது சொல், நல்ல திசையில் ஒலி என்று பாடும் பாட்டில் இவ்வளவு உயர்ந்த கருத்தை அமைத்து இனிய பாடலாக ஆக்கித் தந்திருப்பது வியப்பானது.
தாண்டவராயர்
அத்வைதக் கொள்கையை அழகான 310 விருத்தப் பாக்களால் விளக்கும் நூல் கைவல்ய நவநீதம் என்னும் நூல். தத்துவ விளக்கமாக உள்ள நூல் இவ்வளவு சுவையாக அமைய முடியுமா என்று படிப்பவர் வியந்து போற்றும்படியாக இயற்றியுள்ளார் தாண்டவராய சுவாமிகள் என்னும் சான்றோர். பாடல்கள் எளிய நடையில் அமைந்து இனிய ஓசை உடையனவாக உள்ளன. நூலின் பெயர்க்குப் பொருள் ஆன்மாவின் தனித்தன்மையை விளக்கும் வெண்ணெய் என்பது. உபநிடதங்களும் சங்கரா தரும் விளக்கங்களுமாகிய பாற்கடலைக் கடைந்தெடுத்த வெண்ணெய் என்று கூறப்படுவதற்கு ஏற்றவகையில், சமய உண்மையை மிகச் சுருங்கிய முறையில் சுவையாக எடுத்துரைக்கும் நூல் இது.
தாயுமானவர்
தாயுமானவர்(1705-1742) வடமொழி, தமிழ் ஆகிய இரு மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்த ஞானி. திருச்சிராப்பள்ளியில் அக்காலத்தில் ஆட்சி நடத்திவந்த விஜயரங்க சொக்கநாதரிடம் அமைச்சராக இருந்தவர். அந்தப் பதவியைப் பொருட்படுத்தாத மனநிலை-உலகியல் கடந்த ஞானநிலை-பொற்றார்
113

Page 123
பதவியைத் துறந்தார். பல பாடல்கள் பாடியும் சமாதிநிலையில் இருந்தும் காலம் கழித்தார். அவருடைய பாடல்கள் மிக உயர்ந்த நிலையில் நின்று பாடப்பட்டவை. சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரு நிலைகளுக்கும் ஒருவகைச் சமரசம் கண்டவர் அவர். உபநிடதக் கருத்துக்களையும் மற்ற ஞான நூல்களின் உட்பொருளையும் மிகத் தெளிவாகத் தமிழில் பாடல்களாகப் பாடியவர் அவர் பக்திச் சுவையான பாடல்களையும் பாடினார். காதல் துறைகளின் வாயிலாக உயர்ந்த உண்மைகளை உணர்த்திய பாடல்கள் மிக அழகாக அமைந்துள்ளன. ஆகாரபுவனம்,'ஆனந்தக்களிப்பு:பைங்கிளிக்கண்ணி என்னும் பாடல்களில் அதைக் காணலாம்.
அகமேவும் அண்ணனுக்குரன் அல்லல் எல்லாம்
சொல்லச் சுகமான நீபோய்ச்சுகம்கொடுவா பைங்கிளியே. எந்த மடலூடும் எழுதா இறைவடிவைச் சிந்தை மடலாஎழுதிச்சேர்ப்பேனோபைங்கிளியே.
கண்டதனைக் கண்டு கலக்கம் தவிர்எனவே விண்ட பெருமானையும்நான் மேவுவனோ
பைங்கிளியே.
இவ்வாறு ஐம்பத்தெட்டுக் கண்ணிகள் (இரண்டு அடிப் பாடல்கள்) கொண்டது பைங்கிளிக்கண்ணி. ஆனந்தக் களிப்பு என்னும் பகுதி காதல் துறையில் தோழியை விளித்துக்கூறும் பாடல் ஆகும்.
சங்கர சங்கர சம்பு - சிவ சங்கர சங்கர சம்பு
114

என்ற இசைமெட்டோடு பிச்சையெடுக்கும் பண்டாரங்கள் தெருவில் பாடும் நாட்டுப்பாடல் வகை அது. அந்த இசையமைப்பில் உயர்ந்த கருத்துக்களை அழகாகப் பாடியிருக்கிறார்.
உள்ளதும்இல்லதுமாய்முன் - உற்ற உணர்வதுவாய் உன் உளம்கண்டது எல்லாம் தள்எனச் சொல்லிஎன் ஐயன் - என்னைத் தான்ஆக்கிக் கொண்ட சமர்த்தைப்பார் தோழி.
இவ்வாறே மிக நுட்பமான உண்மைகளை எல்லாம் எளிய இரண்டு அடிப்பாடல்கள் பலவற்றில் தெளிவாக விளங்குமாறு அமைத்துள்ளார். uJITujë, 56doT60of என்ற பகுதி அப்படிப்பட்டது. அது 389 கண்ணிகள்
9-60Լացl.
எல்லாரும் இன்புற்றிருக்கநினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே.
சினம்அடங்கக் கற்றாலும் சித்தினலாம் பெற்றாலும் மனம்அடங்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே.
இவ்வாறே எல்லாக் கண்ணிகளும் உயர்ந்த சமய உண்மைகளை எடுத்துரைப்பவை. மக்களிடையே எவ்வகை வேறுபாடும் கருதாமல், எல்லோரிடத்தும் அன்பு பூண்ட பெருமனம் படைத்தவர் தாயுமானவர். சமயப் போராட்டங்களைக் கடந்து சமரச ஒளி கண்டவர் அவர். அவருடைய பாடல்களில் அத்தகைய ஒளி வீசுவதையும் காணலாம்; இலக்கிய மணம் கமழ்வதையும் உணரலாம்.
ஆய்வரங்குச் சிறப்புமலர்-20

Page 124
விஜய வேந்தர் காசுகள்
திமிழ்நாட்டில்கியி13-14ஆம் நூற்றாண்டுகளில் ஆட்சி புரிந்த பிற்காலப் பாண்டியர்களின் வழித்தோன்றல்கள் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட அரசுரிமைப் போராட்டத்தின் காரணமாகக் கி.பி. 1310ல் தில்லி சுல்தானின் தளபதியான மாலிக்காபூர் பாண்டியர்களை வீழ்த்தி மதுரையில் முகமதியரின் ஆட்சியைத் தோற்றுவித்தான். இந்த நிலையைப் பார்க்கையில் தமிழகத்தின் அரசியல் நிலைமை கி.பி. 14ஆம் நூற்றாண்டில் பெரும் அளவு தாழ்ந்து விட்டதென்பதை ஊகிக்கமுடிகிறது. அதேநேரத்தில் தமிழகத்துப் பண்டைய மன்னர்கள் தாம் இமயத்தின் சிகரத்தில் தம் இலச்சினையைப் பொறித்ததாக கூறிக் கொண்டிருப்பது புலவர்களின் வெறும் கற்பனையாக மட்டும் கொள்ள முடியா தென்பது உறுதியாகிறது. முடிவேந்தர் மூவரின் காலம் முதல் தமிழகத்துப்படைதான் வடநாட்டுக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறதே தவிர, வடநாட்டு அரசாட்சி தமிழகத்தைப் தன்னாட்சிக்குக்கீழ் கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. மெளரியப் பெரும் பேரரசன் அசோகன் காலத்திலாயினும் குப்தப் பேரரசன் சந்திரகுப்தன் காலத்திலாயினும், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஆட்சிசெய்தஹர்ஷவர்த்தனனின் காலத்திலாயினும் தமிழகத்தை அவர்களால் கைப்பற்ற இயலவில்லை. ஒரேயொரு முறை கலிங்க வேந்தன் காரவேலன் பாண்டிய மன்னனை வென்றதாகத் தெரிகிறது. அவ்வெற்றிகூட நிலைத்த வெற்றியாக இல்லாமல் உடனேயே தென்பகுதி மன்னர்களின் கூட்டெதிர்ப்பை அவன் எதிர் கொண்டு தம் ஆட்சிப் பகுதியை சுருக்கிக் கொள்ள
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கலாநிதி நடனகாசிநாதன்
வேண்டியதாயிற்று என்பது வரலாற்றுண்மை. ஆனால் மத்தியகாலச் சோழ மன்னர்கள் ஒவ்வொருவராக மாறி மாறி தமிழக எல்லையைக் கடந்து வடபகுதியில் இருந்த பல நாடுகளை வெற்றி கொண்ட செய்தியினை முதலாம் இராசராசன் முதல் முதலாம் குலோத்துங்கன் காலம் முடியவும் பின்னர் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்திலும் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் நிலைமை முற்றிலும் மாறி வட கோடியில் ஆட்சிபுரிந்த டில்லி சுல்தான், தென் கோடியில் ஆட்சி புரிந்த பாண்டியனை வெற்றி கொண்ட நிகழ்ச்சி கி.பி. 14ஆம் நூற்றாண்டில்தான் நிகழ முடிந்திருக்கிறது. காரணம் பாண்டிய மன்னர்களுக்குள் ஏற்பட்ட அரசுரிமைப் போரேயாகும்.
இந்நிலையை ஒரு முடிவுக்குக் கொண்டுவர விசயநகர வேந்தன் முதலாம் புக்கன் தன் மகன் குமார கம்பணன் தலைமையில் ஒரு படையை அனுப்பி வைத்தான். குமார கம்பணன் தமிழகத்தின் வடபகுதியில் தனியாட்சி செலுத்தி வந்த சம்புவராயர்களை முதலில் வென்று, பின்னர் மதுரைக்குச் சென்று, சுல்தானோடு போரிட்டு முகமதிய ஆட்சிக்கு முடிவு ஏற்படுத்தினான். இந்நிகழ்ச்சி குமார கம்பணனின் பட்டத்தரசி கங்காதேவியால் எழுதப்பெற்ற'மதுரா விஜயம் என்ற நூலில் விரிவாக விளக்கப் பெற்றுள்ளது. மதுரைத் தலவரலாறும் குமாரகம்பணனின் மதுரை வெற்றியைப் படம்பிடித்துக் காட்டுகிறது.’ இவ்வாறு தமிழகத்தில் ஏற்பட்ட விசயநகர வேந்தர் ஆட்சி
115

Page 125
தொடர்ந்து கி.பி. 17ஆம் நூற்றாண்டு முடிய நடைபெற்றது. இக்காலக் கட்டத்தில் விசயநகர வேந்தர்களால் வெளியிடப்பெற்ற காசுகள் தமிழகத்தில் பல பகுதிகளில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. அவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள காசுகளில் பெரும்பகுதி சென்னை அரசினர் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்து பாதுகாக்கப்படுகின்றன. அக்காசுகளின் பட்டியலை அக்காட்சியகத்தின் காப்பாட்சியராகப் பணியாற்றிய டாக்டர் சங்கரநாராயணா 1977இல் பதிப்பித்துள்ளார். விசயநகர வேந்தர்களால் வெளியிடப்பெற்ற காசுகள் பற்றிப் பொதுவாகப் பரமேஸ்வரிலால் குப்தா 1969லேயே தம் நூலில் எழுதியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் விஜயநகரக் காசுகள் என்ற ஒரு நூலை என். இரமேசன் வெளியிட்டார். அண்மையில் தமிழ்நாட்டுக் காசுகள் பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ள டாக்டர் நாகசாமியும் தம் நூலில் இவ்வேந்தர்களின் காசுகள் பற்றி தனிப்பிரிவாகத் தந்திருக்கிறார்."
விசயநகர வேந்தர்களின் ஆட்சி சங்கம குலத்தைச் சார்ந்த முதலாம் ஹரிஹரன் (கி.பி.1336) காலம் தொடங்கி, சாளுவகுலம், துளுவ குலம், ஆரவீடு குலம் என நான்கு குலத்தைச் சார்ந்த மன்னர்கள் ஆட்சிக்காலம் முடிய நிகழ்ந்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட நான்கு குல மன்னர்களில் சாளுவ குல மன்னர்கள் காசுகளை வெளியிட்டனரா? அல்லது அவர்களால் வெளியிடப்பட்ட காசுகள் இதுவரை கிடைக்கவில்லையா என்பது விடை காண
முடியாத புதிராக உள்ளது.
சங்கம குலத்து முதல் மன்னன் முதலாம் ஹரிஹரன் வெளியிட்ட காசுகளில் அனுமன், கருடன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வாசகம் கன்னட எழுத்தில் உள்ளது. முதலாம் புக்கனின் (கி.பி. 1356-1377) காசிலும் கருடன் உருவம் தான் காணப்படுகிறது. இவரது காசிலும் கன்னட எழுத்துதான் எழுதப்பட்டிருக்கிறது.
இரண்டாம் ஹரிஹரனின் (கி.பி. 1377-1404) தங்கக் காசுகளில் உமா மகேசுவரர். லட்சுமி நாராயணர், லட்சுமி நரசிம்மர், சரசுவதி, பிரம்மன்
116

உருவங்களும், செப்புத் காசில் காளையின் உருவமும் காணமுடிகிறது. நந்தி நாகரியில் வாசகம் உள்ளது. இவர் காசுகளில்தான் முதன் முதலில் 'வீர' என்பதற்குப் பதிலாக ப்ரதாப' என்ற வாசகம் காணப்படுகிறது. தேவராயர் (கி.பி. 1422-1466) வெளியிட்ட தங்கக் காசுகளில் உமா மகேசுவரர் உருவமும், செப்புக் காசுகளில் முதல்முதலாக யானையின் உருவமும் காணப்படுகின்றன. இக்காசுகளில், தங்கக்காசுகளில் தேவநாகரியையும், செப்புக் காசுகளில் கன்னடத்தையும் பயன்படுத்தி யுள்ளனர்.
சாளுவ குல மன்னர்கள் காசுகளைப் புதிதாக வெளியிட்டார்களா அல்லது முன்பு வழக்கிலிருந்த காசுகளையே பயன்படுத்திக் கொண்டார்களா என்பது தெரியவில்லை.
துளுவ குல மன்னர்கள் வெளியிட்ட காசுகளில் சங்கம குலத்தினரால் பயன்படுத்தப்பட்ட உமா மகேசுவரர் மற்றும் காளை உருவங்களைத் தம் காசுகளில் பொறித்ததோடு, வெங்கடேசர் மற்றும் கிருஷ்ணர் உருவங்களும் புதிதாகப் புகுத்தப்பட்டன.
கிருஷ்ண தேவராயரால் வெளியிடப்பட்ட காசுகளில் வெங்கடேசர், சிவபார்வதி, பாலகிருஷ்ணர், காளை, கருடன் ஆகிய உருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. இவரால் வெளியிடப்பட்ட செப்புக் காசுகளில் கன்னட எழுத்தும் மற்ற நாணயங்களில் நாகரி எழுத்தும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அச்சுதராயர்தான் (கி.பி. 1530-1542) முதன் முதலில் கண்ட பேருண்டப் பறவையின் உருவம் பொறித்த காசை கண்ட பேருண்டப் பறவையின் உருவம் பொறித்த காசை வெளியிட்டார். இக்காசுகள் தங்கத்திலும் செம்பிலும் கிடைத்துள்ளன.
ஆரவீடு குலத்தைச் சார்ந்த மன்னர்களில் திருமலைராயரால் வெளியிடப்பட்ட காசுகளில் பூரீராமர், சங்கு, சக்கரம், கருடன், பன்றி, யானை காளை; திருமால், இலக்குமி உருவங்களுக்கு நடுவில் மன்னன் கூப்பிய கரங்களுடன் அமர்ந்த நிலை ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முதலாம் வெங்கடராயர் (கி.பி. 1542) காலத்தியக்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 126
காசுகளில் நாகரி வாசகங்களோடு ஒரு வரியில் மட்டும் கன்னடம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சிங்கராயர் வெளியிட்ட காசுகளில் தெலுங்கு வாசகம் மட்டுமே காணப்படுகிறது. ஆதலால் இவர் விசயநகரப் பேரரசின் வடகிழக்குப் பகுதியில் அரசுப் பிரதிநிதியாக இருந்த போது இவை வெளியிடப் பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது."
விசயநகர வேந்தர்கள் காலத்தியக் காசுகளின் பெயர்களை இலக்கியங்களும் கல்வெட்டுகளும்
கீழ்வருமாறு தெரிவிக்கின்றன."
தங்கக் காசுகள்
1. கத்யனா
2. வராஹன்
3. பொன்(அ)பகோடா
4. பணம்
5. ஹக
வெள்ளிக் காசு
1 தாரா
செப்புக் காசுகள்
1. பணம் 2. ஜிடல் 3. 85T8,
இரண்டாம் தேவராயர் ஆட்சிக் காலத்தில் கீழ்வரும் காசுகள் பயன்பாட்டில் இருந்ததாக அந்நாட்டுக்கு வருகை புரிந்த அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
தங்கக் காசுகள்
1. வராஹன் 2. பர்தப் = 1/2 வராஹன் 3. பணம் = 10 பர்தப்
வெள்ளிக் காசு
1. தர் = 16 பணம்
செப்புக் காசு
1 1/3 தர்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

விஜயநகர வேந்தர் காசுகள் சங்கம குலம்
முதலாம் ஹரிஹரன்
(கி.பி. 1336-1357)
1 முன்பக்கம் பின்பக்கம்
2. முன்பக்கம் பின்பக்கம்
3. முன்பக்கம் பின்பக்கம்
முதலாம் புக்கன்
(கி.பி. 1356-1377)
1. முன்பக்கம் பின்பக்கம்
2. முன்பக்கம் பின்பக்கம்
அனுமனின் உருவம் கோடுகள் நடுவில் மூன்று வரிகளில் பூரீவீர ஹரிஹர என்று கன்னட எழுத்தில்
அனுமனின் உருவம் ஹரிஹர என்ற இருவரிகளில், நாகரி எழுத்தில்
கருடனின் உருவம் பூரீ வீரஹரிஹர என்று கோடுகள் நடுவில் மூன்று வரிகளில் கன்னட எழுத்தில்
அனுமனின் உருவம் வீர புக்கராய என்று கன்னட எழுத்தில் மூன்று வரிகளில்
அனுமனின் உருவம் வீர புக்க பதிராய என்று
நாகரி எழுத்தில் மூன்று வரிகளில்
இரண்டாம் ஹரிஹரன்
(கி.பி. 1377-1404) 1. முன்பக்கம்
பின்பக்கம்
2. முன்பக்கம்
நான்கு கரங்களுடன் சிவனும், பார்வதியும் அமர்ந்த நிலை, தலையில் கிரீடமகுடம் சந்திரன், சூரியன் உருவங்கள். பூரீப்ரதாபஹரிஹர என்று கோடுகள் நடுவில் மூன்ற வரிகளில் நாகரி எழுத்தில்
நான்கு கரங்களுடன் விஷ்ணுவும், லக்ஷமியும் அமர்ந்த நிலை
117

Page 127
முதலாம் தேவராயர் (கி.பி. 1406-1422)
1.
பின்பக்கம்
முன்பக்கம்
பின்பக்கம்
முன்பக்கம்
பின்பக்கம்
முன்பக்கம்
பின்பக்கம்
முன்பக்கம்
பின்பக்கம்
முன்பக்கம்
பின்பக்கம்
முன்பக்கம்
பின்பக்கம்
பூரீப்ரதாப ஹரிஹர என்று மூன்று வரிகளில் நாகரி
எழுத்தில்
லக்ஷமி நரசிம்மர் அமர்ந்த நிலை பூரீப்ரதாபஹரிஹர என்று நாகரி எழுத்தில் (தற்பொழுது இலண்டன் அருங் காட்சிய கத்தில் உள்ளது)
வட்டத்துக்குள் திமிலோடுடைய
ET606T
ப்ரதாபஹரிஹர என்று இரண்டு வரிகளில் நாகரி எழுத்தில்
உமை சிவபெருமானின் இடது தொடை மீது அமர்ந்த நிலை பூரீப்ரதாபதேவராயர் என்று மூன்று வரிகளில், நாகரி எழுத்தில்
பத்மாசகத்தில் அமர்ந்துள்ள நாராயணரின் மடியில் இலகண்டிமி அமர்ந்த நிலை பூரீப்ரதாபதேவராய என்று மூன்று வரிகளில் நாகரி எழுத்தில்
புள்ளிகளால் அமையப் பெற்ற வட்டத்தினுள் காளை பூரீ தேவராய என்று இரு வரிகளில் நாகரி எழுத்தில்
திமில் கொண்ட காளை. மேல் பகுதியில் சந்திரன், சூரியன் பூரீதேவராயர் என்று கன்னட
எழுத்தில்
118

(இவ்வகைக் காசுகள் சிலவற்றில் காளைக்கு மேற்பகுதியில் “தே’ என்று எழுதப்பெற்றுக் காணப்பெறும். “தே’ என்பது தேவாரயர் என்பதன் சுருக்கமாகவும் இருக்கலாம் அல்லது அச்சடிக்கப்பட்ட இடத்தைக் குறிப்பதாகவும் இருக்கலாம்.)
5. முன்பக்கம் : புள்ளிகளால்ஆனவட்டத்தினுள் காளை, தே' என்னும் நாகரி எழுத்து. மேற்பகுதியில் சந்திரன், சூரியன் பின்பக்கம் : பூரீ நீலகந்ட என்று மூன்று
வரிகளில், நாகரி எழுத்தில்
இரண்டாம் தேவராயர் (கி.பி.1422-1446)
1. முன்பக்கம் : புள்ளிகளாலான வட்டத்தினுள்
யானை உருவம் பின்பக்கம் : குறுவாள், தேவராயர் என்று இருவரிகளில், நாகரிஎழுத்தில்
2. முன்பக்கம் : புள்ளிகளாலான வட்டத்தினுள்
U606 பின்பக்கம் : பூரீ தேவராயர் என்று மூன்று
வரிகளில், கன்னட எழுத்தில்
3. முன்பக்கம் : இரண்டிலுள்ளது போன்றே.
மேலும் 'ல என்னும் எழுத்து. பின்பக்கம் : பூரீ தேவராயர் என்று இரு
வரிகளில், நாகரி எழுத்தில்
4. முன்பக்கம் : இரண்டிலுள்ளது போன்றே
பின்பக்கம் : குறுவாள், யதா' (அ) கஜம்
என்று எழுதப்பெற்றுள்ளது.
5. முன்பக்கம் : யானையின் உருவம்
பின்பக்கம் ! நடுவில் குறுவாள், இரு பக்கங்களிலும் சங்கு, சக்கரம், மேற்பகுதியில் ‘ழரீதேவ என்றும், கீழ்ப்பகுதியில் ராய என்றும் எழுதப்பட்டுள்ளது
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 128
6. முன்பக்கம் : புள்ளிகளாலான வட்டத்தில் அலங்கரிப்பட்ட யானை, மேற் பகுதியில் “தே’ என்னும் கன்னட எழுத்து.
பின்பக்கம் : ப்ரதாபதேவாரய என்று மூன்று வரிகளில் நாகரி எழுத்தில்
7. முன்பக்கம் : யானை, மேற்பகுதியில் சூரியன் பின்பக்கம் : பூரீதேவராயகஸ பேதகர
என்று நாகரி எழுத்தில்
8. முன்பக்கம் : யானை, மேற்பகுதியில் 'தே
என்று மூன்று வரிகளில் நாகரி எழுத்தில் பின்பக்கம் : ராய கஜ கண்ட பேருண்ட என்று மூன்று வரிகளில் நாகரி எழுத்தில்
9. முன்பக்கம் : மன்னன்ஈட்டியைக் கொண்டு
யானையோடு பொருதுதல் பின்பக்கம் : எட்டில் உள்ளவாறே.
10. முன்பக்கம் : சிவனும், பார்வதியும்
பின்பக்கம் : பூரீப்ரதாப தேவராய என்று மூன்றுவரிகளில் நாகரி எழுத்தில்
துளுவ குலம்
வீரநரசிம்மன் (கி.பி. 1505 - 1509) 1. முன்பக்கம் நரசிம்ஹஉருவம்
பின்பக்கம் : நரசிம்ஹ என்று கன்னட
எழுத்தில் கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509 - 1529) 1. முன்பக்கம் : வெங்கடேஸ்வரர் உருவம்
பின்பக்கம் : பூநீக்ரிஷ்ணதேவராய என்று மூன்று வரிகளில், நாகரி எழுத்தில்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

2. முன்பக்கம்
பின்பக்கம்
3. முன்பக்கம் பின்பக்கம்
4. முன்பக்கம்
பின்பக்கம்
5. முன்பக்கம் பின்பக்கம்
அச்சுதராயர் (கி.பி. 1529-1542) 1. முன்பக்கம்
பின்பக்கம்
சதாசிவராயர் (கி.பி. 1542 - 1576) 1. முன்பக்கம்
பின்பக்கம்
2. முன்பக்கம் பின்பக்கம்
சிவனும் உமையும் அமர்ந்த நிலை
பூநீக்ரிஷ்ணராய என்று மூன்று வரிகளில், நாகரி எழுத்தில்
பாலகிருஷ்ணனின் உருவம் பூநீப்ரதாப க்ரிஷ்ணராய என்று மூன்று வரிகளில்
புள்ளிகளாலான வட்டத்தில்
5606
பூநீக்ரிஷ்ணராய என்று இரு வரிகளில், நாகரி எழுத்தில்
கருடனின் உருவம் பூரீப்ரதாப க்ரிஷ்ணராய என்று நாகரி எழுத்தில்
கண்டபேருண்ட பறவை தன் மூக்கினாலும் நகங்களாலும் யானையைத் தூக்கிப் பிடித் திருத்தல்
பூரீப்ரதாப ச்யுதராய என்று மூன்ற வரிகளில், கிரந்த எழுத்தில்
மேடை மீது விஷ்ணுவும் லக்ஷமியும் அமர்ந்த நிலை பூரீப்ரதாப சதாசிவராய என்று மூன்று வரிகளில், நாகரி எழுத்தில்
சிவன், உமை அமர்ந்த நிலை ழநீசதாசிவராய என்று மூன்று வரிகளில், நாகரி எழுத்தில்.
119

Page 129
ஆரவீடு குலம்
திருமலராயர் (கி.பி. 1570 - 1572) 1. முன்பக்கம் : இராமர், சீதை அமர்ந்த நிலை, அனுமன் அருகில் நின்ற நிலை பின்பக்கம் : பூரீதிருமலராய என்று மூன்று
வரிகளில், நாகரி எழுத்தில்
2. முன்பக்கம் : 1ல் உள்ளவாறே
பின்பக்கம் : அனுமன் உருவம் 3. முன்பக்கம் : கருடன், அதன் முன்பு குறுவாள்,இரு பக்கங்களிலும் சங்கு, சக்கரம்
அடிக்குறிப்பு
S. Tiruvenkatachari, Madura Vijayam, Gangadevi, Ca மதுரைத்தலத்தார் வரலாறும் மதுரைக் கோயில் திருப்பணி N. Sankaranarayana, Bulletin of the Madras Govt. M N. Ramesan, Vijayanagar Coins in Andhra Pradesh M Dr. R. Nagaswamy, Tamil Coins A Study, pp. 148-15 நாணயங்கள், பக்கங்கள் 127-129 டாக்டர். பரமேஸ்வரிலால் குப்தா, நாணயங்கள்,பக்.120 Panchamukhi, Vijayanagar SexCentenary Vloume. N. Sankaranarayanan, Op. cit, p. 11.
120

பின்பக்கம்
4. முன்பக்கம் பின்பக்கம்
5. முன்பக்கம் பின்பக்கம்
ழரீரங்கராயர் (கி.பி. 1572 - 1583) 1. முன்பக்கம்
பின்பக்கம்
Into IV.
பூரீதிருமலராய என்று இரு வரிகளில், நாகரி எழுத்தில்
பன்றியின் உருவம்
ழரீதிருமலராய என்று மூன்று வரிகளில், நாகரி எழுத்தில்
யானையின் உருவம்
பூரீசலமராய என்று மூன்று வரிகளில், நாகரி எழுத்தில்
பிரபையின் நடுவில் வெங்கடேசர் உருவம் பூநீரங்கராய என்று நாகரி எழுத்தில்
மாலையும், மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியீடு useum New Series - General Section, Vol. XIV, No. 1
useum.
9.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 130
நாயக்கர் காசுகள்
விசய நகர கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்திலேயே செஞ்சி, தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்களில் நாயக்கர்களது சீர்மை உருவாகத் தொடங்கிவிட்டது. இந் நாயக்கர்கள் விஜயநகரப் பேரரசுக்குக் கட்டுப்பட்டவர்களேயாயினும் வாய்ப்பு ஏற்படும்போதெல்லாம் தங்களது தனித்த ஆட்சியை நிலைநாட்டும் முயற்சியை மேற்கொண்ட வண்ணமே இருந்துவந்தனர்.இந்தச் சூழ்நிலையில் தங்கள் ஆட்சிப் பகுதியில் விஜயநகரப் வேந்தர்களால் வெளியிடப்பெற்ற காசுகள் புழக்கத்தில் இருக்கையிலேயே இவர்களும் சில காசுகளை வெளியிட்டிருக்கின்றனர் என்று அறியமுடிகிறது.
செஞ்சிப் பகுதியை ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 15671575) ஒரு வகைக் காசை வெளியிட்டிருக்கிறார். இக்காசில் கிட்டினப்ப நாயக்கர் என்று நான்கு வரிகளில் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இக்காசின் முக்கியத்துவம் யாதெனில் நாயக்கர் என்று தம் குலப்பெயரையும் எழுதி வெளியிடப்பட்டிருப்பதாகும்.
தஞ்சைப் பகுதியில் நாயக்கராட்சி அச்சுத தேவராயரின் காலத்தில் ஏற்பட்டது. தஞ்சை நாயக்க வம்சத்தின் முதல் மன்னர் செவப்ப நாயக்கராவார். இவருக்கு இப்பகுதி பூரீதனமாக வழங்கப் பெற்றதாகும். இவர் சிறந்த கொடையாளராகவும் திறமைமிக்க ஆட்சியாளராகவும் விளங்கியிருக்கிறார். இவரது காலத்தில் வெளியிடப் பெற்ற காசாக ஒரு
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

கலாநிதி நடனகாசிநாதன்
காசு அண்மையில் நாகசாமியால் இனம் காண முடிந்திருக்கிறது. இக்காசில் முன்பக்கம் புள்ளிகளாலான வட்டத்தில் சங்கின் உருவமும், பின்பக்கம் இரு வரிகளில் நாகரி எழுத்தில் சவப்பா என்று எழுத பெற்றும் காணப்படுவதாக கூறியுள்ளார். கல்வெட்டுக்களில் செவப்பாவினுடைய பெயர் செவன்றபதி செவபூப, சின்னசெவ மற்றும் சிறுசெவ என்றும்; இலக்கியத்தில் சவப்பா' என்றும் குறிக்கப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆதலால் சவப்பா என்று எழுதப்பெற்றுள்ள இக்காசு தஞ்சை நாயக்க மன்னன் செவப்பாவினால் வெளியிடப்பெற்றதாக இருக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.
செவப்ப நாயக்கரின் பேரனும் அச்சுதப்ப நாயக்கரின் மகனுமான விசய இரகுநாத நாயக்கன் (கி.பி.1600-1634) தஞ்சைநாயக்க மன்னர்களிலேயே மிகச் சிறந்த போர் வீரராகவும் நிர்வாகத்திறமை பெற்றவராகவும் விளங்கிப் பல அருஞ்செயல்களைச் செய்திருக்கிறார். இவரது நற்பணிகள் சிகரமாக விளங்குவது கும்பகோணத்தில் அமைந்துள்ள இராமசாமி கோயிலாகும். இவர் காலத்தில் வெளியிடப்பெற்ற இரண்டு வகை செப்புக் காசுகளை அளக்குடி ஆறுமுக சீதாராமன் அறிஞர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். ஒரு காசு தஞ்சை மாவட்டம்கும்பகோணத்தில் கிடைத்ததாகவும், இதில் மன்னனது பெயர் நாகரி எழுத்தில் ரகுநாத என்று இரு வரிகளில் எழுதப் பெற்றிருப்பதாகவும்,
121

Page 131
ஒளிப்படத்தோடு வெளியிட்டுள்ளார். இரண்டாம் காசு தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றுப் பகுதியில் கிடைத்திருப்பதாகவும், இக்காசின் பின்பக்கத்தில் விசய ரகுநாதன் என்று தமிழ் எழுத்தில் தமிழ் மொழியில் காணப்பெறுவதாகவும் எழுதியுள்ளார்."
தஞ்சை நாயக்க மன்னர்களான செவப்ப நாயக்கன், அச்சுதப்ப நாயக்கன், விசய ரகுநாத நாயக்கன் ஆகியோர் காலத்தில் அமைச்சராக இருந்து அரும்பணியாற்றியவர் கோவிந்த தீட்சிதராவார். குறிப்பாக விசய இரகுநாதன் காலத்தில் அம்மன்னனுக்கு அமைச்சராகவும், அரச குருவாகவும் ஆலோசகராகவும் விளங்கி மன்னரின் அளப்பரிய வெற்றிகளுக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறார். ஆதலால் மன்னன் இத்தீட்சதரின் சீரிய பணிகளைப் பாராட்டும் முகத்தான தஞ்சை மாவட்டத்தில் கோவிந்தக்குடி, கோவிந்த புத்தூர், ஐயன் பேட்டை, ஐயன் கடைவீதி, ஐயன் குளம், ஐயன் வாய்க்கால் எனப் பல ஊர்களையும், நீர்நிலைகளையும் மற்றும் கடைவீதிகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். அத்தோடு இவரது நினைவாக ஒரு செப்புக் காசையும் வெளியிட்டு இந்திய நாட்டு வரலாற்றிலேயே ஒரு புது சகாப்தத்தைத் தோற்றுவித்திருக்கிறான். அவன் காலம் வரை இந்தியாவில் ஆட்சி புரிந்த எந்த மன்னரும் நினைத்துப் பார்க்காத ஒரு புதுமையை இவன் செய்து முடித்து, இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கிறான்.
இக்காசின் முன்பக்கத்தில் தோரண வாயிலுக்கு நடுவே மன்னர் நின்ற நிலையிலுள்ள உருவமும், பின் பக்கத்தில் மூன்று வரிகளில் தமிழில் கோவிந்தய்யா என்று எழுதப் பெற்றும் காணப்பெறுவதாகவும்; இக்காசு கும்பகோணம் காவிரி ஆற்றுப்படுகையில் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் நாகசாமி தம் நூலில் விசய இரகுநாதனால் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று ஒரு காசைக் குறிப்பிட்டுள்ளார். இக்காசில்
122

முன்பக்கம் இராமர், இலக்குவன் (சீதை) மற்றும் அனுமன் உருவங்கள் நிற்கும் நிலையிலும்; பின் பக்கம் மன்னன் தம் இடையில் நீண்ட வாளினைச் செருகிக் கொண்டு நிற்கும் உருவமும் காணப்படு வதாகவும் தெரிவித்திருக்கிறார். இராமர் மீது அடங்காப் பற்றும் பணிவும் கொண்டிருந்த காரணத்தால் இரகுநாதன் இக்காசை வெளி யிட்டிருக்கலாம். என்று கருதியுள்ளார். இவ்வகைக் காசு தஞ்சைப் பகுதியில் மிகுந்த அளவில் கிடைத்து வருவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
மதுரையில் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்கிப் பாண்டி நாட்டு மன்னனை அரசு கட்டிலில் அமர்த்தும் பொருட்டு நாகம நாயக்கரை, கிருஷ்ண தேவராயர் அனுப்பி வைத்தார். கொந்தளிப்பை அடக்கிய நாகம நாயக்கர் பாண்டியனுக்கு அரசுரிமையைத் தராமல் தாமே அதை ஏற்று விட்டார். இதையறிந்த கிருஷ்ண தேவராயர் நாகமனை வீழ்த்த அவரது மகனாக விசுவநாத நாயக்கனை அனுப்பி வெற்றி காணச் செய்தார். அப்போது நிலவிய பாண்டிய நாட்டின் சூழ்நிலையையுணர்ந்த கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கரையே மதுரையில் ஆட்சி செலுத்தும்படி அனுப்பி வைத்தார். இவ்வாறு மதுரை நாயக்கர் ஆட்சி தொடங்கப் பெற்றது. விசுவநாத நாயக்கர் விஜய நகரப் பேரரசுக்கு அடங்கியவர் என்றாலும் தம்மைப் பாண்டியன் என்றே அழைத்துக் கொண்டார். அதற்குச் சான்றாக இவரால் வெளியிடப்பெற்ற ஒரு காசு இன்றும் காணப் படுகிறது. இக்காசில் முன்பக்கம் நிற்கும் மனித உருவமும், பின்பக்கம் இருகயல், இடையில் சாட்டை, பிறைச்சந்திரன் மற்றும் இடப்பக்கமிருந்து வலப் பக்கமாகத் தமிழில் விசுவநாதன் என்று எழுதப் பெற்று காணப் பெறுகின்றது.
இவனால் வெளியிடப்பெற்ற மற்றொரு வகைக் காசை டாக்டர் நாகசாமி தாம் குற்றாலத்தில் ஒருவரிடம் பார்த்ததாகவும், அக்காசில் முன் பக்கத்தில் பாண்டியன் என்று தமிழில் எழுதப்பெற்றும், அதற்குக் கீழ்ப்பகுதியில் இரு கயல்களும் பின்பக்கத்தில் விசுவநாதன் என்று தமிழிலும் எழுதப்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 132
தமிழகத்தில் சிறுவடிவிலான சில செப்புக் காசுகள் பெரும் அளவில் கிடைத்து வருகின்றன. இவற்றில் ஒரெழுத்து அல்லது ஈரெழுத்துக்களே காணப்படுகின்றன. இவ்வெழுத்துக்களைக் கொண்டு அண்மைக்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்கள் சிலரால் இவை வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற கருத்து கொள்ளப்பட்டிருக்கிறது."
வி என்று நாகரி எழுத்தில் ஒருவகையும், தெலுங்கு கன்னட எழுத்தில் மற்றொரு வகையும் எழுதப் பெற்றிருக்கும் காசு வீரப்ப நாயக்கராலும், சொ என்று தெலுங்கு கன்னட எழுத்தில் எழுதப் பெற்று காணப்படுவது சொக்கநாத நாயக்கரால் வெளியிடப்பட்டது என்றும், தி என்று தெலுங்கு எழுத்தில் எழுதப்பட்டிருப்பதும் திருமலை நாயக்கரால் வெளியிடப்பெற்றிருக்கலாமென்று ஊகிக்கப் பட்டிருக்கிறது.
தேசிகாச்சாரி தம் நூலில் ஒரு காசின் ஒளிப்படத்தை வெளியிட்டு அதில் கீழ்க்காணுமாறு காணப்படுவதாக எழுதியுள்ளார். முன்பக்கத்தில் மேடை மீது படுத்திருக்கும் காளை உருவமும், பின்பக்கம் நான்கு சதுரங்களில் மங்கம்மா என்று தெலுங்கு எழுத்தில் எழுதப்பெற்றும் காணப் படுகிறது. இக்காசு மதுரையை ஆட்சி புரிந்த இராணி மங்கம்மாவால் வெளியிடப்பட்டது என்று கருதப்படுகிறது.
நாயக்கர் காசுகள் செஞ்சி நாயக்கர் காசு
முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
(கி.பி. 1567-1575)
1. முன்பக்கம் இடப்பக்கம் திரும்பி நிற்கும்
5T606T
2. பின்பக்கம் : கிட்டிணப்ப நாயக்கர் என்று
நான்கு வரிகளில், தமிழில்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

தஞ்சை நாயக்கர் காசுகள்
விசையரகுநாதன் (கி.பி. 1600-1634)
1. முன்பக்கம் : திருமகள் அமர்ந்த நிலை
பின்பக்கம் விசையரகுனாதன் என்று
நான்கு வரிகளில் தமிழில் 2. முன்பக்கம் : சிவன், பார்வதி அமர்ந்த
நிலை பின்பக்கம் ரகுநாத என்று இரண்டு
வரிகளில், நாகரியில்
3. முன்பக்கம் : தோரண வாயிலுக்குள்
நாயக்க மன்னர் உருவம் நிற்கும் நிலை பின்பக்கம் கோவிந்தய்யர் என்று
மூன்று வரிகளில், தமிழில்
மதுரை நாயக்கர் காசு
விசுவநாத நாயக்கர் (கி.பி. 1529-1564) 1. முன்பக்கம் நிற்கும் மனித உருவம்
பின்பக்கம் : இரு கயல், நடுவில் சாட்டை இடப்புறமிருந்து வலப்புறமாக விசுவநாதன் என்று தமிழில்.
2. முன்பக்கம் : இரு கயல், இவைகளுக்கு மேல் பகுதியில் பாண்டிய
என்று தமிழில் பின்பக்கம் : விசுவநாதன் என்று தமிழில்
வீரப்ப நாயக்கர் (?) (கி.பி. 1572-1595) 1. முன்பக்கம் : நிற்கும் மனித உருவம்,
இடக்கரத்துக் கீழ் குறுவாள் போன்று தெரிகிறது. பின்பக்கம் நிற்கும் காளை, வி என்று
நாகரி எழுத்தில்
123

Page 133
2. முன்பக்கம் : நிற்கும் மனித உருவம்
பின்பக்கம் நிற்கும் காளை, காளைக்கு
முன்பு சங்கும் வி என்று தெலுங்கு - கன்னட எழுத்தும்.
சொக்கநாத நாயக்கர் (?) (கி.பி. 1659-1682)
1. முன்பக்கம் நிற்கும் மனித உருவம்
பின்பக்கம் நிற்கும் காளை. காளையின்
முன்பு சங்கு. காளைக்கு மேற்பகுதியில் சொ என்று தெலுங்கு - கன்னட எழுத்தில்
அடிக்குறிப்பு: 1. ஆறுமுக சீதாராமன்,தமிழகத் தொல்லியல் சான்றுகள், பக்க 2. Tamil Coins - A Study, p. 164. 3. Coinex94Madras, Special Bulletin, Madras Coin Soci 4. தமிழகத் தொல்லியல் சான்றுகள், தொகுதி,(1994),பக்கம் 5. Op. cit, uébash. 30
6. Op. cit, p. 166.
7. Op. cit - p. 168.
124

திருமலை நாயக்கர் (?) (கி.பி. 1623-1659) 1. முன்பக்கம் : நிற்கும் மனித உருவம்
பின்பக்கம் : தி என்று தெலுங்கு எழுத்தில், வலப்பக்கம் திரும்பி நிற்கும் காளை. முன்பக்கம் குறுவாள், மேற்பகுதியில் பிறைச்சந்திரன்.
மங்கம்மாள் (கி.பி. 1689-1706) 1 முன்பக்கம் மேடை மீது படுத்திருக்கும்
5T606. பின்பக்கம் : நான்கு சதுரங்கள். மங்கம்மாள்
என்று சதுரங்களில் தெலுங்கில்.
iety, (1994), ušah 16. 29.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 134
விஜயநகர கை
விஜய நகரம்
பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியிலே (கி.பி. 1335) கர்நாடக தேசத்தின் தென்பகுதியில் உதயமாகிய விஜயநகரம் காலப்போக்கில் ஒரு பெரும் பேரரசாக வளர்ச்சி அடைந்தது. அது கர்நாடக தேசத்தின் பெரும்பகுதியையும், ஆந்திரப்பிரதேசத்தின் சில பகுதிகளையும் தமிழகத்தையும் உள்ளடக்கிய அமைப்பாக விளங்கியது. விஜயநகரம் பதினைந்தாம் நூற்றாண்டிலே, கிருஷ்ண தேவராயரின் ஆட்சியில் உன்னத நிலையை அடைந்தது.
துருக்கியரின் ஆதிபத்தியத்திலிருந்து மீட்சி பெற்று, இந்து கலாசாரத்தின் புகலிடமாக விளங்கு வதற்கென்று அமைக்கப்பெற்ற விஜயநகரம் தென்னிந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. வளத்திலும், ஆதிக்கபலத்திலும், கலை வனப்பிலும், மாடமாளிகைகள், கோபுரங்கள், கடைவீதிகள், சுகாதார வசதிகள் ஆகியவற்றின் சிறப்பிலும் அதற்கு நிகரான வேறெந்த நகரமும் விந்தியத்திற்குத் தெற்கிலுள்ள பகுதிகளில் அமைந்திருக்கவில்லை. இந்தியாவிற்கு வந்த மேனாட்டவர் உரோமபுரிக்கு நிகரான பெருநகரமாக, அலங்காரக்கோலத்துடன் விஜயநகரம் விளங்குவதைக் கண்டு வியப்புற்றனர்.
அத்துணைச் சிறப்பு வாய்ந்த நகரம், 1565ஆம் ஆண்டிலே ராமராயர் தலைக்கோட்டைப் போரிலே மாண்டதும், வஞ்சினங் கொண்ட பகைவர்களாற் பல மாதங்களாக இடித்தழிக்கப்பட்டது. அரண் மனைகளும், அரச மாளிகைகளும், கோட்டைகளும்,
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

லப்பாணி
பேராசிரியர் சி. பத்மநாதன்
கோயில்களும், அங்காடிகளும், வீதிகள் தோறும் அமைந்த வீடுகளும் பிரதானிகள், வணிகர், ஸ்தானிகர் முதலியோரின் மாளிகைகளும் இடிந்து வீழ்ந்தன. முன்னொரு காலத்திலே அமராவதி போல் அமைந்திருந்த அற்புதக் கோலமான நகரம் குடியிருக்க முடியாத கொடும்பாழாகி விட்டது. அதன் அழிபாடுகள் ஹம்பியிலே, பல சுற்றுமைல் வட்டத்திலே காணப்படுகின்றன. அவற்றைப் பார்ப்பதற்கு பல நாட்கள் செல்லும், பாழடைந்த நகரம் காலப்போக்கில் மண்மேடுகளாகி மறைந்து விட்டது. பிரித்தானியர் காலம் முதலாக இன்றுவரையுள்ள தொல்லியல் விற்பன்னர்கள் மண்மேடுகளை அகழ்ந்து அரியனவும் பெரியனவுமாகிய தொல்பொருட் சின்னங்களை வெளிக்கொணர்ந்த வண்ண மாயுள்ளனர். அரண்மனையின் அத்திபாரங்களும், அழகிய வேலைப்பாடுகள் அமைந்த படிக்கட்டுக்கள் பொருந்திய நீர்த்தேக்கமும், மகாநவமி மண்டபம் எனப்படும் ராயர்களின் சபா மண்டபத்தின் அதிர்ஷ்டானப் பகுதியும் மையப் பகுதியில் உள்ளன. அவற்றுக்குச் சமீபமாக, ஒரு பக்கத்தில் விசித்திரமான முறையிலமைந்த நீரேந்து கால்வாய் அமைந்துள்ளது. மற்றப்பக்கத்திலே, சற்றுத் தூரத்திலே, பத்மமஹால் என்று சொல்லப்படும் அந்தப்புரக் கட்டடமொன்றும் ராயர்களின் பட்டத்து யானைகளுக்குரிய யானைப்பந்தியும் காணப்படு கின்றன. அவை நன்கு பேணப்பட்ட நிலையில் உள்ளன. அவற்றுக்கப்பால் கோயில்களின் இடிபாடுகள், கடைவீதிகளின் அழிபாடுகள், கோட்டை வாசல்களின் இடிபாடுகள் என்பன பரந்து காணப்படுகின்றன.
125

Page 135
விஜயநகர காலத்துப் பண்பாட்டுக் கோலங்கள்
தென்னிந்திய வரலாற்றிலே விஜயநகர காலம் பல சிறப்பம்சங்கள் பொருந்திய காலமாகும். நிர்வாக முறையிலும் சமுதாயவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படலாயின. விஜயநகர ராயர்கள் தங்கள் பேரரசின் பகுதிகளை இராச்சியம், என்னும் பெரும்பகுதிகளாக அமைத்து, அவற்றின் நிர்வாகத்துக்குத் தேவையான ஏற்பாடுகளை உருவாக்கியிருந்தனர். அரச குடும்பத்தையும் படைத்தலைவர்களையும், விசுவாசம் மிக்க வேறு பிரதானிகளையும் அவற்றில் இராச பிரதிநிதிகளாக நியமித்தனர். முள்வாயி இராச்சியம், சந்திரகிரி இராச்சியம், படை வீடு இராச்சியம் முதலியன இராச்சியப் பிரிவுகளாகும். தமிழகத்திலே மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் சமஸ்தானங்கள் உருவாகியிருந்தன. அவற்றில் g?TIT GF பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் நாயக்கர் என்னும் பதவிப் பெயரைக் கொண்டிருந்தனர். பதினாறாம் நூற்றாண்டிலே, தலைக்கோட்டைப் போரின் விளைவாக விஜயநகர ராயர்களின் ஆதிக்கம் சரிந்ததும் நாயக்கர் பரம்பரை அடிப்படையிலே சுதந்திரமாக ஆட்சி புரியத் தலைப்பட்டனர்.
விஜயநகர காலத்திலே தென்னிந்திய சமுதாயத்திலும் கலாசார வளர்ச்சிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. தெலுங்கு தேசத்துப் பிரதானிகளும் கர்நாடகத்தவர்களும் நிர்வாக அமைப்பிலும் படைகளிலும் பிரதானமான பதவிகளைப் பெற்றனர். மதுரை, தஞ்சாவூர், செஞ்சி முதலான இடங்களில் இராச பிரதிநிதிகளாகச் சென்ற நாயக்கர் தெலுங்கர் என்பது குறிப்பிடற் குரியது. அவர்களின் வசமாயிருந்த படைகளிலும் கர்நாடகரும் தெலுங்கரும் பெருமளவிலே காணப்பட்டனர். அவர்களுக்கு நிலமானியங்கள் வழங்கப்பட்டன. பெருந்தொகையான பிராமணரும், நெசவாளரும், கம்மாளரும், வணிகரும் அதற்கு வடக்கிலுள்ள பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்குச் சென்று அங்கு குடிகளாயினர். மக்கட் செறிவு, சனசஞ்சாரம் என்பவற்றிலே விஜயநகரப் பேரரசிலே
126

புதிய பரிமாணங்கள் ஏற்பட்டன. அதன் பிரதிபலனாகக் கலாசாரப் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்க வகையிலே, மொழி வேறுபாடுகளைக் கடந்த நிலையில் ஏற்பட்டது. தென்னிந்தியா அனைத்திலும் கலாசாரப் பொதுமை அழுத்தம் பெறுவதற்கு விஜயநகரப் பேரரசு ஏதுவாகியது. வைதீக மரபினை அடிப்படையாகக்கொண்ட இலக்கிய பண்பாட்டு மறுமலர்ச்சி ஏற்பட்டது. கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏற்பட்ட இலக்கிய வளர்ச்சிகளிடையே பொதுப்பண்புகள் காணப்படுகின்றன. புராணம், இதிகாசம், காவியம் ஆகியவற்றின் செல்வாக்கு அவற்றிடையே மிகுந்து காணப்படுகின்றது. ஆலயங்களையும் ஆலய வழிபாட்டினையும் அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வளர்ச்சிகளும் பண்பாட்டு வளர்ச்சிகளும் மொழிவழியாக அமைந்த நான்கு தென்னிந்தியப் பிராந்தியங்களிலும் பொதுவானவையாகும். விஜயநகர காலம் தமிழ் இலக்கியத்திலே தலபுராணங்கள் தோன்றிய காலமாகும். பிரபந்தங்களிற் பெரும்பாலானவையும் அக்காலம் முதலாகத் தோன்றியவை என்பது குறிப்பிடற்குரியதாகும். அவை கோயில்களைப் பற்றியவை என்பதும் கவனித்தற்குரியது.
கட்டடக்கலை, நடனம், இசை, ஓவியம் ஆகிய துறைகளிற் பொதுவான அம்சங்களின் அடிப்படையிலே புதிய மரபுகள் தோன்றலாயின. அவை பரஸ்பரத் தொடர்புகளின் மூலமாகவும் பரஸ்பரச் செல்வாக்குகளின் விளைவாகவும் ஏற்பட்டவை. கட்டடம், சிற்பம் ஆகிய துறைகளிலே கர்நாடக மரபுகளும் தமிழக மரபுகளும் வேறுபாடின்றிக் கலப்புற்று விடுகின்றன. ஒவியக்கலையில், விஜயநகர காலத்தில், கர்நாடகத்திலும் ஆந்திர தேசத்திலும் ஒரு புதிய கலைப்பாணி உருவாகியது. அது விரைவிலே தமிழகத்திலும் பரவிவிடுகின்றது. பிரதானமான தென்னிந்தியக் கோயில்கள் பலவற்றிலே விஜயநகர காலத்தில் வரையப்பெற்ற வண்ண ஒவியங்கள் இன்றும் வனப்புடன் விளங்கு கின்றமையைக் காணலாம். இசைக்கலையைப் பொறுத்தமாட்டில் கர்நாடக சங்கீதம் வளர்ச்சிபெற்ற காலமாக விஜயநகர காலம் விளங்குகின்றது. அதிைே தமிழிசையும் தெலுங்கு இசைமரபும் சங்கமமாகி
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 136
விடுகின்றன. தென்னிந்திய கலாசாரப் பொதுமை யினைப் பிரதிபலிக்கும் சாதனமாகக் கர்நாடக சங்கீதம் விளங்குகின்றது. கதகளி, யக்ஷகாணம், குச்சுப்புடி என்னும் நாட்டிய வகைகள் விஜயநகர காலம் முதலாக உற்பத்தியான பிரவிருத்திகளை ஆதாரமாகக் கொண்டவை.
கோயிலமைப்பில் மாற்றங்கள்
விஜயநகர காலத்திலே தென்னிந்தியக் கட்டடக்கலையிற் குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் ஏற்பட்டன. விஜயநகரத்திலும் அதன் மேலாட்சியின் கீழமைந்த மாநிலப் பகுதிகளிலும் நூற்றுக் கணக்கான பல புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. பல கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டன. விஜயநகரத்திலுள்ள விட்டலசுவாமி கோயில், ஹஸாரராமர் கோயில், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள லெபாகூழி என்னுமிடத்துக் கோயில், வேலூர் சலகண்டேஸ்வரம், தேவிகாபுரத்து அம்மன் கோயில் முதலியன புதிதாக அமைக்கப்பட்ட கோயில்களாகும். புராதனமான தலங்கள் பலவற்றிலும் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. சோழராட்சிக் காலத்தைப் போல விஜயநகர காலமும் தென்னிந்தியாவிலே கோயில்கள் புனரமைப்புப் பெற்ற காலமாகும். நூற்றுக்கணக்கான தலங்களிலே சிதைவுற்ற பழங்கட்டடங்கள் இடிக்கப்பெற்றுப் புதிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. மதுரை, பூரீரங்கம், காஞ்சிபுரம், அழகர்மலை முதலியவற்றில் அவ்விதமான புனரமைப்பு வேலைகள் இடம்பெற்றன. அவற்றிலே நன்கு பேணப்பட்ட நிலையிலுள்ள சில கட்டடங்கள் தொடர்ந்தும் நிலைபெற்றன. நூற்றுக்கணக்கான தலங்களிலே புராதனமான கட்டடங்களைச் சுற்றியும், அவற்றுக்கிடையில் புதிய கட்டடங்கள் அமைக்கப்பெற்றன. அதனாற் கோயில் வளாகம் விசாலமாகிப் பேரமைப்பாகியது. கோயிலின் பிரமாண்டமான தோற்றம் விஜயநகர கலைப் பாணியின் ஒரு அம்சமாகும்.
விமானங்கள் பொருந்திய கற்றளிகளைச் சில நகரங்களிலே பல்லவ மன்னர்கள் அமைத்தனர். சோழப்பேரரசர் காலத்தில் அத்தகைய கோயில்கள் தமிழகம் முழுவதிலும் அமைக்கப்பட்டன. அயல்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

நாடுகள் சிலவற்றிலும் சோழர் கலைப்பாணியில் அமைந்த கட்டடங்கள் உருவாக்கப்பட்டன. பிற்காலச் சோழரின் ஆட்சியிலே கட்டட அமைப்பிலே குறிப்பிடற்குரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவை சிதம்பரம் கோயிலை மையமாகக் கொண்டிருந்தன. பன்னிரண்டாம், பதின்மூன்றாம் நூற்றாண்டுகளிலே அங்கு திருக்காமகோட்டம், நூற்றுக்கால் மண்டபம், திருத்தேர்க்கோயில், ஆயிரங்கால் மண்டபம், திருநடைமாளிகை எழுநிலைக் கோபுரம், சுற்றுப்பிரகாரங்கள் என்னும் பல அமைப்புகள் தோன்றியிருந்தன. சைவசமய மரபிலே கோயில் எனப் படுவதாகிய சிதம்பரம் அளவுப் பிரமாணங்களிலும் அலங்காரத் தோற்றத்திலும் தென்னகத்திலே தலைமைக் கோயிலாகியது. அதனை முன் மாதிரியாகக் கொண்டு பின்பு விஜயநகரப் பேரரசின் பல பகுதிகளிலே கோயிலமைப்புகள் பெரும் வளர்ச்சி அடைந்தன.
பிற்காலச் சோழரின் ஆட்சியிலே, குறிப்பாகச் சிதம்பரத்திலே காணப்பெற்ற சோழர் கலைப் பாணியின் சிறப்பம்சங்கள் விஜயநகர காலத்திலே திராவிட கலைப்பாணியின் பொது அம்சங்களாகி விடுகின்றன. பாண்டியப் பேரரசரின் காலத்திலே, சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ளனவற்றைப் போன்ற அம்சங்கள் தென் தமிழ்நாட்டிலும் விருத்தி பெற்றிருந்தன என்பதும் இங்கு கவனித்தற்கு உரியதாகும். தமிழகத்திலுள்ள பிரதானமான தலங்கள் பலவற்றிலே திருக்காமகோட்டம், நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், திருநடை மாளிகை, பல்தளக் கோபுரங்கள், சுற்றுப் பிரகாரங்கள் என்னும் அமைப்புகள் விஜயநகர காலத்தில் மிகுந்த வனப்பும் உறுதிப்பாடும் கொண்டு விளங்கும் வண்ணமாக அமைக்கப்பட்டன. கோயில் வளாகம் பல சுற்றுப்பிரகாரங்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றிலும் வானோங்கு கோபுரங்கள் அமைந்திருக்கும்.
விஜயநகர கலைப்பாணியில் ஆலயம் பிரமாண்டமாய் அமைந்திருப்பதோடு அலங்கார வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் விளங்கும். அந்த வேலைப்பாடுகள் மண்டபங்களிலும் தூண்களிலுஞ் சிறந்து விளங்கும். விஜயநகர காலத்திற் கோயில்
127

Page 137
வளாகங்களில் பல வகையான மண்டபங்கள் அமைக்கப்பெற்றன. அவை பல வரிசைகளில் அமைந்த தூண்களோடு விசாலமான கட்டடங்களாக அமைந்திருக்கும், அவற்றிலே கல்யாண மண்டபம் எல்லாவற்றுள்ளும் சிறப்புடையதாயிருக்கும். அது முற்காலங்களிலே காணப்படாதவொன்று, அதனை அமைக்கும் வழக்கம் விஜயநகர காலத்தில் ஏற்பட்ட ஒன்றாகும். உயரமான அதிர்ஷ்டானத்தில் அமைந்திருக்கும் கல்யாண மண்டபத்தின் நடுவிலமைந்த பீடத்திலே, சுவாமியினதும் அம்மனதும் படிமங்களை அலங்காரக் கோலத்துடன் வைத்து வருடந்தோறும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். திருக்கல்யாண உற்சவம் விஜயநகர காலம் முதலாகத் தென்னிந்தியக் கோயில்களிலே பொதுவழக்காகி விட்டது. கல்யாண மண்டபம் பக்கச் சுவர்களின்றி அமைந்திருக்கும். அதன் கூரை தட்டையானது. மண்டபம் முழுவதும் கல்லினால் அமைந்திருக்கும். அதிலுள்ள தூண்களிற் காணப்படும் அற்புதக் கோலமான சிற்ப வேலைப்பாடுகளின் காரணமாகக் கல்யாண மண்டபம் ஒர் அலங்கார மண்டபம் போலக் காட்சியளிக்கும். கற்றுரண்களிலே புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட சிற்பங்களும் கடவுட் படிமங்களும் கலைநயம் மிகுந்த கோலத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
விஜயநகர கலைப்பாணியிலே தூண்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவை அளவிற் பெரியவை; மிகவும் உயரமானவை; மிகுந்த சுற்றளவினைக் கொண்டவை, ஒவ்வொரு தூணும் தனிக் கல்லில் அமைந்தது. தூண்கள் கூட்டுத் தூண்கள் போலக் காட்சியளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நடுவில் அமைந்த பிரதானமான தூணைச் சுற்றி வேறும் பல தூண்கள் அமைந்த கோலமாயிருக்கும்.
விஜயநகர கலைப்பாணியிலே தூண்கள் சிறப்பிடம் பெறுகின்றன. அவை பல நூற்றுக் கணக்கில் ஆலய வளாகத்திலே காணப்படும். நூற்றுக்கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றிலே தூண்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. அவை பலவிதமான கோலங்களில் அமைந்துள்ள கூட்டுத்
128

தூண்களாகும். அவை சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய அலங்காரத் தூண்களாகக் காணப்படுகின்றன. அவற்றிலே அளவிற் பெரிதான உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிலவற்றிலே கம்பீரமான தோற்றங்கொண்ட தாவிப் பாயும் போர்க் குதிரையின் வடிவம் அமைந்திருக்கின்றது. கடிவாளம் குதிரையின் மேல் போர்வீரன் للاوا-اطيا அமைந்திருக்கும் கோலத்திலே உருவம் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டிருக்கும். பூநீரங்கத்தில், குதிரைகளரி என்று சொல்லப்படும் சேஷாத்திரி மண்டபத்திலும் வேலூர் சலகண்டேஸ்வரர் கோயிலிலுங் காணப்படும் குதிரை வடிவங்கள் கலைவனப்பில் உன்னதக் கோலமானவை.
சிங்கத்தின் உருவம் அமைந்த தூண்கள் இன்னொரு வகையானவை. பல்லவர் கலைப் பாணியில் யாளித் தூண்கள் சிறப்பிடம் பெற்றிருந்தன. பிற்காலக் குடபோகங்களிலே தோன்றிய யாளித் தூண்கள் இராஜசிம்மபாணியிலமைந்த கோயில்களிலே கட்டடத்தின் எல்லாப் பாகங்களிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. விஜயநகர காலத்தில் சில சமயங்களில் முற்கால வழமைப்படி தூணின் அடிப்பாகத்திலே யாளியின் உருவத்தை அமைத்தனர். மண்டபங்களில் அமைந்துள்ள கலப்புத் தூண்களிலே சாலையை நோக்கிய துணைத் தூணிலே, அதன் மேற் பாகத்திலே, வாயைப் பிளந்துகொண்டு முன்னங் கால்களைத் தூக்கி நிற்கும் நிலையிற் சிங்கத்தின் முழுவடிவம் அமைக்கப்பட்டது.
விஜயநகர கலைப்பாணியிலே பொதுவாக வகையான தூண்கள் காணப்பட்டன. சில சமயங்களில் ஒரிடத்திலேயே அம்மூன்று வகைகளைச் சேர்ந்த தூண்களும் அமைந்திருந்தன. ஒரு வகையிலுள்ளவற்றிலே பிரதானமான நடுத்துணை ஒட்டிய வண்ணமாகப் பக்கங்களிலே பிரமாண்டமான சிற்பங்கள் செதுக்கப்பட்ட தூணமைப்புகள் காணப் படும். குதிரைத் தூண்கள், யாளித் தூண்கள், கடவுட் படிமங்கள், செதுக்கப்பட்ட தூண்கள் முதலியன அந்த வகைக்குரியனவாகும். அவ்விதமான தூண்கள் ஆயிரங்கால் மண்டபம், நூற்றுக்கால் மண்டபம், திருநடைமாளிகை போன்றவற்றிலே காணப்படும்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 138
இரண்டாவது வகையிலுள்ள தூண்கள் நடுவிலுள்ள பிரதானமான தூணைச் சுற்றி உருண்டை வடிவான மெலிந்த கம்பங்கள் அமைந்திருக்கும். அவை எல்லாம் ஒரே கல்லிலே செதுக்கப்பெற்றவை. கம்பங்கள் ஒவ்வொன்றையும் கைவிரல்களாற் தட்டும்பொழுது வெவ்வேறு விதமான இசையொலி கிளம்பும் வண்ணமாக மிக நுட்பமான முறையில் அவை அமைக்கப்பட்டிருக்கும். கர்நாடக சங்கீத முறையிலுள்ள சப்தஸ்வரங்கள் ஒலிக்கும் வண்ணமாக அவை உருவாக்கப்பட்டிருக்கும். விஜயநகரத்து விட்டல சுவாமி கோயில் மண்டபத்தூண்கள் அவற்றிலே பிரசித்தமானவை.
மூன்றாம் வகையிலுள்ள தூண்களின் அமைப்பு வேறுபட்டதாகும்.கோயிலின்மாதிரியான சிற்றுருவங்கள் வனப்புமிகுந்த கோலத்திலே கீழிருந்து மேலாகப் பல வரிகளிலே செதுக்கப்பட்டிருக்கும். சில சமயங்களிற் சிகரம், கோபுரம் என்பவற்றிலுள்ள மாடங்களை ஒத்த நுண்ணிய உருவங்கள் தூண்களிலே அமைந்திருக்கும். விஜயநகர காலத்துத் தூண்களிலே மேற்பகுதியிற் புஷ்ப போதிகை சிறப்பம்சமாக விளங்கும். போதிகையானது வளைந்து நீளமாகத் தொங்குங் கோலத்தில் அமைந்திருக்கும். அதன் முகப்பிலே ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கிய மலர்கள் கீழ்நோக்கித் தொங்கும் கோலம் தெரியும். போதிகையின் முகப்பிலே கவிழ்த்ததாமரை மொட்டின் உருவம் அமைந்திருக்கும். தூண்களின் அமைப்பின் மூலம் விஜயநகர கலைப் பாணியிலுள்ள கட்டடங்களைச்சிரமமின்றிஅடையாளங்
காணலாம்.
கர்நாடகத்துக் கோயில்கள்
விஜயநகர காலத்துக் கோயில்களைக் கர்நாடகத்துக் கோயில்கள் என்றும், ஆந்திர தேசத்துக் கோயில்கள் என்றும், தமிழகத்துக் கோயில்கள் என்றும் பிராந்திய அடிப்படையில் வகை செய்யலாம். அம்மூன்று பிராந்தியங்களிலும் தனியான பண்புகளைக் கொண்ட கட்டடக்கலை மரபுகள் நெடுங்காலமாக வளர்ச்சி பெற்றிருந்தன. விஜயநகர காலத்திலே அவற்றுக்கிடையிலான பொதுப்பண்புகள் மேலும் வலுப்பெற்றன. திராவிட கலைப்பாணியின் செல்வாக்கு கர்நாடக மாநிலத்துக் கட்டடங்களிலும் கூடுதலான அளவில் ஏற்பட்டது.
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

விஜயநகர காலத்துக் கர்நாடகத்துக் கோயில்களில் சிருங்கேரியிலுள்ள சங்காராசாரியார் பீடத்திற்குச் சொந்தமான வித்தியாரண்யர் கோயிலும் விஜயநகரத்து விட்டல சுவாமி கோயில், ஹஸாரராம ஆலயம் என்பனவும் சாலச்சிறந்தனவென்று கலை வரலாற்று ஆசிரியர்களாற் போற்றப்படுகின்றன. அவற்றுள் கேழடிப் பிராந்தியத்துக் கலைப்பாணியைப் பிரதிபலிக்கின்றதான வித்தியாரண்யர் கோயிலின் அதிர்ஷ்டானம் அற்புதக் கோலமானது என்பர். அதிலமைந்த சிற்ப வேலைப்பாடுகள் காண்போரைக் கவரும் வனப்புமிக்க வசீகரத்தோற்றங்கொண்டவை. அக்கோயிலைப்பற்றி விவரங்கள் நூல்களிலே வெளிவராதுள்ளமையால் அவற்றைப் பற்றி எதனையும் கூறுமாறில்லை.
விஜயநகர கலைப்பாணிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்கும் கோயில்களிலே விட்டலசுவாமி கோயில் சாலச்சிறந்ததாகக் கொள்ளப்படும். அதன் திருப்பணி வேலைகள் கிருஷ்ண தேவராயரின் ஆட்சிக்காலத்தில் (1509 - 1529) ஆரம்பமாகி அச்சுதராயரின் (1529 - 1542) காலம்வரை நடைபெற்றன. அதிலே கட்டட வேலைகள் முழுமையாக நிறைவேறவில்லை. விட்டலசுவாமி கோயிலானது 500 அடி நீளமும் 310 அடி அகலமும் கொண்ட பிராகாரத்தினுள் அமைந்திருக்கின்றது. பிராகாரத்தின் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் கோபுர வாசல்கள் அமைந்திருக்கின்றன. பிராகாரச் சுவர்களை ஒட்டி மூன்று வரிசைகளில் அமைந்த தூண்கள் பொருந்திய திருச்சுற்று மாளிகை அமைந்திருக்கின்றது.
கோயில் வளாகத்தில் 6 பிரதானமான கட்டடங்கள் அமைந்திருக்கின்றன. கர்ப்பக்கிருகத்து மூலவர் மகாவிஷ்ணுவின் ஒரு கோலமாகிய பாண்டுரங்கர் என்னும் விட்டலசுவாமியின் படிமமாகும். ஆலயம் மிகவும் நீளமானது; கிழக்கு நோக்கிய அமைப்பினைக் கொண்டது. அது 230 அடி நீளமானது. அதன் உயரம் 25 அடியாகும். விமான சிகரம் செங்கல்லினால் அமைக்கப்பட்டிருத்தல் கூடுமென்றும் அது காலப்போக்கிலே சிதைவுற்று மறைந்துவிட்டது என்றுஞ் சிலர் கருதுவர். கர்ப்பக்கிருகம் 75 அடி நீளமான பக்கங்கள் கொண்ட
129

Page 139
சதுரமான அமைப்பாகும். அதனைச் சுற்றிச் சுற்றாலை அமைந்துள்ளது.
கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. இவற்றில் முதலிரண்டும் அடங்கிய பகுதி 135 அடி நீளமும் 67 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதன் சுவர்களின் வெளிப்புறத்திலே தேவகோட்டங்களும், அரைத்தூண்களும், அலங்கார விதானங்களும் நுட்பமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. அர்த்தமண்டபத்திலும் மகாமண்டபத்திலும் தூண் வரிசைகள் உள்ளன. அர்த்த மண்டபத்துக்கு மூன்று வாசல்கள் உள்ளன. கிழக்கு வாசல் மகாமண்டபத்தி னுரடாகச் செல்லும் வாசல், வடக்கிலுந் தெற்கிலு முள்ள வாசல்களைப் படிக்கட்டுகள் மூலம் அடைய வேண்டும். அவற்றுக்கு மேலே தூண்களோடு கூடிய சிறிய முகமண்டபங்கள் அமைந்துள்ளன.
சுவர்களற்றதான மகாமண்டபம் 100 அடி நீளமான பக்கங்களைக் கொண்டுள்ளது. அதுகுமுதப்படைகள் அமைந்த ஐந்தடி உயரமான அதிர்ஷ்டானத்தின் மேல் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் மூன்று பக்கங்களில் வாசல்கள் உள்ளன. வாசற்படிகள் வழியாக ஏறிச்சென்று அவற்றை அடையலாம். வாசற்படிகளின் முன்னால் அவற்றின் ஓரங்களிலே யானைகளின் உருவங்கள் கவர்ச்சிமிக்க கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்திலே உன்னதமான வேலைப்பாடுகளுடன் அமைந்த கலப்புத் தூண்கள் காணப்படுகின்றன. அவற்றிலே கம்பீரமான தோற்றங் கொண்ட போர்க்குதிரைகளின் வடிவங்களும் யாளிகளின் உருவங்களும் அலங்காரமான தோற்றத்துடன் அமைந்துள்ளன. சில கலப்புத் தூண்களிற்காணப்படுங்கம்பங்கள்கைவிரல்களினாலே தட்டப்படுமிடத்துச் சப்தஸ்வரங்கள் ஒலிக்கின்றன. மகாமண்டபத்திலே 12 அடி உயரமான 56 கலப்புத் தூண்கள் உள்ளன. அவற்றிலே 16 தூண்கள் நீள்சதுரமான மையப்பகுதியைச் சுற்றிஅமைந்துள்ளன. ஏனைய தூண்கள் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
விட்டலசுவாமி கோயில் வளாகத்திலுள்ள கட்டடங்களிற் கல்யாண மண்டபமே மிகுந்த,
130

வணப்புடையதாகும். மகாமண்டபத்திற்குத் தென் கிழக்கில் அமைந்துள்ள கல்யாண மண்டபத்தின் பக்கங்கள் 6.2 அடி நீளமானவை. அது குமுதப் படைகளைக் கொண்ட உயரமான அதிர்ஷ்டானத்தில் அமைந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றுந் தனிக்கல்லிலே செதுக்கப்பெற்றவை. தூண்களின் சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த சிறப்புடையவை. விஜயநகர கலைப்பாணிக்குரிய கட்டடங்களிலுள்ள மற்றைய கல்யாண மண்டபங்கள் எல்லாவற்றுக்கும் விட்டலசுவாமி கோயில் மண்டபமே முன்மாதிரியாக அமைந்திருந்தது என்று கொள்ளலாம்.
கல்யாண மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றுக் கிடையில் ஒரு அழகிய தேர் அமைந்திருக்கின்றது. அதன் அடிப்பாகமும், சக்கரங்களும், தேரின் முதற்றளமும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. அதன் சிகரமும் மேற்பகுதியின் மற்றப் பாகங்களும் சுதை, மரம் போன்றவற்றால் அமைக்கப்பட்டவை. அவை காலப்போக்கிற் சிதைந்துவிட்டன. அதனைப் போன்ற கற்றேர்கள் தாத்பத்திரி, திருவாரூர் முதலிய தளங்களிலுங் காணப்படுகின்றன.
ஹஸாரராமர் கோயில்
விஜயநகர இராசதானியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஹஸாரராமர் கோயில் அளவிற் சிறியதாயினும் விஜயநகர கலைப்பாணியின் செம்மை நலன்களைச் சிறப்புற வெளிக்காட்டும் சித்திரக் கோயிலாகும். அது அரச குடும்பத்தவரும் அவர்களின் உரிமைச் சுற்றமும் வழிபாடு செய்வதற்குரிய கோயிலாக விளங்கியது. அது 24 அடி உயரமான சுவர்களையுடைய பிராகாரத்தினுள் அமைந்திருக்கின்றது. கட்டடவமைப்பு கிழக்கு நோக்கிய வண்ணமானது.
கோயில் வளாகத்தினுட் கர்ப்பக்கிருகம், அந்தராளம், அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய நேர் வரிசையில் அமைந்திருக்கின்றன. அளவிற் பெரியனவான கோயில்களைப் போலப் பரிவாரதேவர் சந்நிதானங்களும், கல்யாணமண்டபம், திருக்காம கோட்டம் ஆகியனவும் அதிலுள்ளன. கோயிலின் கிழக்குப் பக்கத்திலே கோபுர வாசல் அமைந்திருக்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 140
கின்றது. கோபுர வாசல் வழியே சென்றதும் முகமண்டபம் காணப்படும். அதன் நடுவிலுள்ள சதுரத்தில் நான்கு மூலைகளிலும் நான்கு தூண்கள் உள்ளன. அவை கருமை வண்ணமான கற்களில் அமைந்தவை. அவற்றின் வேலைப்பாடுகளிலே தனிப் பண்புகள் காணப்படுகின்றன. தூண்களின் நடுவிலே நீள்சதுர வடிவமும் கனசதுர வடிவமும் மாறி மாறி அமைந்திருக்கின்றன. பிராகாரத்தின் வடக்கிலுந் தெற்கிலும்நுழைவாசல்கள் அமைந்துள்ளன. அவற்றின் முன்னால் முகமண்டபங்கள் காணப் படுகின்றன. விமானம் 50 அடி உயரமானது. அதன் முதலாவது தளம் கருங்கல் வேலைப்பாடாகும். அதன்மேல் அமைந்துள்ள பகுதிகள் செங்கல்லால் ஆனவை.
லெபாகூறி வீரபத்திரர் கோயில்
ஆந்திரப் பிரதேசத்தில் ஆனந்தபுர மாவட்டத்தில் லெபாகூழி என்னும் ஊர் உள்ளது. அது கர்நாடகப் பகுதிகளுக்குச் சமீபமான தெலுங்குப் பிரதேசத்திலுள்ள ஊராகும். அவ்வூரிலமைந்த பகுதி முற்காலத்தில் விஜயநகர இராச்சியத்தின் பகுதியாக அமைந்திருந்தது. அங்கு 16ஆம் நூற்றாண்டிலே கட்டப்பெற்ற பெருங்கோயிலொன்றுண்டு. அது இந்நாட்களிலே தலயாத்திரைகளுக்குரிய தலமாக விளங்குகின்றது. அது விஜயநகர கலைப்பாணியின் கலைக்கூடமாக அமைந்திருப்பதால் உல்லாசப் பிரயாணிகளும் ஆராய்ச்சியாளரும் அங்கு நாள்தோறும் செல்கின்றனர். கோயில் மண்டபங்களின் விதானங்களிலே வனப்புமிகுந்த ஒவியங்கள் வரையப் பெற்றுள்ளன.
லெபாகூழியிலுள்ள கோயில் வீரூபண்ண, வீரண்ண என்னும் சகோதரர்களால் அமைக்கப் பட்டது. அவர்கள் பேணுகொண்டாவிலுள்ள நந்திலக்கிச்செட்டியின் புதல்வராவர்; விஜயநகர மன்னரின் அரச பிரதானிகளாகக் கடமை புரிந்தவர்கள். ஆலயம் வீரபத்திரக் கடவுளின் கோயிலாக நிர்மாணிக்கப் பெற்றது. வீரபத்திரக் கடவுள் வழிபாடு தெலுங்கு தேசத்தவரிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தது.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

விஜயநகர காலத்துக் கோயில்களில் லெபாகூழிக் கோயில் தனிப்பண்புகளைக் கொண்ட கட்டடவமைப் பாகும். அது ஒரு முத்தளியாகும். நடுவிலுள்ள மண்டபத்தைப் பொதுமையாகக் கொண்டுள்ள மூன்று தளிகள் லெபாகூழியில் உள்ளன. அந்த வகையில் அது கல்யாணிச் சாளுக்கியரதும், ஹோய்சளரதும் கோயில்களை ஒத்ததாகும். மண்டபத்தின் விதானத்திலே வீரபத்திரரின் பேருருவம் வரையப்பட்டுள்ளது. அதனருகில் வீரூபண்ண, வீரண்ண ஆகியோரின் உருவங்களும் சித்திரக் கோலமாயுள்ளன.
லெபாகூழியிலுள்ள மூன்று தளிகளும் சிவன், மகாவிஷ்ணு, வீரபத்திரர் ஆகியோரை மூலவராகக் கொண்டவை. ஈஸ்வரனுக்குரிய சந்நிதானம் பெருமாள் கோயிலை எதிர்நோக்கிய கோலத்தில் அமைந்துள்ளது. நடுவில் அமைந்துள்ள பிரதானமான தளி வீரபத்திரக் கடவுளின் கோயிலாகும். கோயில் வளாகம் உயரமான மதில்களாற் சூழப்பெற்ற பிராகாரத்தினுள் அமைந்திருக்கின்றது. பிராகாரத்தினுள் அமைந்திருக்கும் கட்டடங்களிற் உட்பிராகாரத்துக்கும் ஒடுங்கிய அர்த்தமண்டபத்திற்கும் இடையிலுள்ள மண்டபமே கலைநயம் பொருந்திய வேலைப்பாடு களைப் பொறுத்தமட்டில் சாலவும் சிறந்ததாகும்.
நாட்டிய மண்டபத் தூண்களிலுள்ள சிற்பங்கள் மிகுந்த சிறப்புடன் விளங்குகின்றன. ஒவ்வொரு தூணிலும் பல உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டியக் கரணங்களும், மேள வாத்தியமும் தேவலோகத்தவரின் இசைக் கச்சேரிகளும் கவர்ச்சி மிகுந்த தோற்றத்துடன் விளங்கும் வண்ணமாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிரமன் மேளவாத்தியம் செய்யுங் காட்சிமிகுந்த சிறப்புடன் விளங்குகின்றது. தும்புரு வீணை மீட்டும் காட்சி, நந்தி உடுக்கினை ஒலித்தல், ரம்பையின் உன்னதமான நாட்டியம், சிவபெருமானின் புஜங்கத்திராஸித நடனக் கோலம் முதலிய யாவும் கலைநயம் மிகுந்த பொலிவுடன் காணப்படுகின்றன. உள்மண்டபத்திலே கஜாந்தகர், நர்த்தன கணபதி, துர்க்காதேவி ஆகியோரின் உருவங்கள் அழகிய கோலத்தில் அமைந்துள்ளன.
131

Page 141
தொண்டை நாட்டுக் கோயில்கள்
தொண்டை நாட்டிலே, விஜயநகர காலத்திலே சில கோயில்கள் புதிதாக அமைக்கப்பட்டன. அவை செஞ்சியிலுள்ள நாயக்கர் சமஸ்தானத்தின் கீழமைந்த பகுதிகளிற் காணப்பட்டன. வேலூர்க் கோட்டையினுள் அமைக்கப்பெற்ற ஜலகண்டேஸ்வரம் அவற்றிலே தலைசிறந்த ஆலயமாகும். கோட்டைக்குள்ளே வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள அக்கோயிலின் வளாகம் மிகப்பெரியதாகும். அதன் மிகப்பெரிய கோபுர வாசல் தெற்குப் பிராகாரச் சுவரை ஒட்டி அமைந்துள்ளது. அக்கோயிலிற் காணப்படும் கல்யாண மண்டபம் கலாவிமர்சகரினாலே பெரிதும் போற்றப்படுவது. அது கோபுர வாசலின் இடப் பக்கத்தில் அமைந்திருக்கின்றது. அதிலுள்ள கலப்புத் தூண்களிலே தாவிப் பாயும் போர்க்குதிரைகளின் உருவங்கள் கம்பீரமான தோற்றத்துடன் காணப் படுகின்றன. அவற்றிலே கடிவாளம், வளையம், சவுக்கு முதலிய அம்சங்கள் தனித்தனியாகக் காணப்படுங் கோலத்திலே மிகவும் நுட்பமாகச் செதுக்கப் பெற்றுள்ளன. கல்யாண மண்டபத்தின் நடுவிலே ஒரு சதுரமான மேடை அமைந்திருக்கின்றது. அதன் நான்கு மூலைகளிலும் தூண்கள் நிறுத்தப் பெற்றுள்ளன. அம்மேடையைத் தாங்கிநிற்குமாப்போல் ஆமையின் வடிவம் அமைந்திருக்கின்றது.
ஆலயத்திலே மூலவராக இலிங்கம் அமைந்திருக்கின்றது. கோயில் விமானம் அழகிய கோலத்துடன் காட்சியளிக்கின்றது. கர்ப்பக் கிருகத்துக்கு முன்னால் அந்தராளம், அர்த்த மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. ஜலகண்டேஸ்வரத்தில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. அவற்றையொட்டிய திருச்சுற்று மாளிகைகளில் வனப்புமிக்க வேலைப் பாடுகள் அமைந்த தூண் வரிசைகள் காணப்படு கின்றன. வடகிழக்கு மூலையிலே இசைத் தூணொன்று செதுக்கப்பட்டுள்ளது. 9 பிராகாரத்தின் வடமேற்கிலும், வடகிழக்கிலும், தென்கிழக்கிலும், தேவகோட்டங்களும், மேடைகளுங் காணப்படுகின்றன. கோபுரம்பதினாறாம்நூற்றாண்டுக் கட்டடங்களின் அம்சங்களைக் கொண்டுள்ளது. அதிற் பத்மம், பஞ்சரம், கும்ப பஞ்சரம், கூடு முதலிய அம்சங்கள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
32

விரிஞ்சிபுரத்திலுள்ள மார்க்கசகாயநாதர் கோயிலும் விஜயநகர காலத் திருப்பணியாகும். கட்டட அமைப்பிலும் சிற்ப வேலைப்பாடுகளிலும் அது ஜலகண்டேஸ்வரத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது. பிரதான கோயிலும், அதனைச் சுற்றியுள்ள தேவ கோட்டங்களும் கலைவனப்பில் வேலூர்க் கோயிலைப் போன்றவை வடவார்க்காடுமாவட்டத்தைச் சேர்ந்த தேவிகாபுரத்துப் பெரியநாயகி அம்மன் கோயிலும் விஜயநகர காலத் திருப்பணியாகும். அது இம்மடி நரசிங்க நாயக்கரால் அமைக்கப்பட்டதாகும். கோயில் கிழக்கு நோக்கியது: அது 143 மீற்றர் நீளமும் 74 மீற்றர் அகலமுங் கொண்டுள்ளது. கோயிற் பிராகாரச் சுவரின் வெளிப்பக்கத்தில் யானை, குதிரை, பன்றி முதலியவற்றின் சிற்பங்களின் அணிவரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்திற் சுற்றுப் பிராகாரங்கள் இரண்டு காணப்படுகின்றன. வெளிப்பிராகாரத்துக் கோபுரம் மிகவும் உயரமான ஏழுநிலைக் கோபுரமாகும். இரண்டாம்பிராகாரத்தினுட் கல்யாண மண்டபம், தேரடி மண்டபம், திருக்குளம், சிறு மண்டபங்கள் முதலியன அமைந்துள்ளன. உட்பிராகாரச் சுவர்களின் இரு பக்கங்களிலும் யாளி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரத்திலுள்ள பிரதான கோயில்களான ஏகாம்பரநாதர் கோயில், வரதராசப் பெருமாள் கோயில் ஆகியவிரண்டும் விஜயநகர காலத்திற் புனர்நிர்மாணம் பெற்றன. அவற்றின் கோபுரங்களும், பிராகாரங்களும், மண்டபங்களும், திருச்சுற்று மாளிகைகளும் மிகவும் பிரமாண்டமானவை. விஜயநகர காலத்திலே தமிழகத்திற் புனரமைக்கப்பட்ட கோயில்களில் அவையே மிகவும் பெரியனவாகும். வரதராசப் பெருமாள் கோயிலின் கல்யாண மண்டபத் தூண்களிலே தனிச்சிறப்புடைய சிற்பவேலைப்பாடுகள் அமைந்துள்ளன. புராணக் கதைகளும், குறிப்பாகத் திருமாலின் அவதாரங்கள் பற்றிய கதைகளும் மிக நுட்பமான முறையிலே சிற்பக் காட்சிகளாக வடிக்கப்பெற்றுள்ளன. ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கதை சொல்லும் விதமாக அவற்றிலே சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஆய்வரங்குச் சிறப்புமலர் -2000

Page 142
சோழநாட்டுக் கோயில்கள்
பாடல்பெற்ற தலங்களிற் பெரும்பாலானவற்றைக் கொண்டுள்ள சோழநாட்டிலே பல பெருங்கோயில்கள் திருக்காமக் கோட்டம், சுற்றுப் பிராகாரங்கள், நூற்றுக்கால் மண்டபங்கள், கோபுரம் முதலிய புதிய கட்டடங்களைப் பெற்று விசாலமாகிப் பொலிவு பெற்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் அமைந்திருக்கும் திருக்காமக் கோட்டமான பெரியநாயகி அம்மன் கோயில் விஜயநகர காலத்திலே அமைக்கப்பட்டதாகும். தலத்திலே நாயக்கர் காலத்திலே புதிதாக அமைக்கப்பெற்ற காளையின் உருவத்திற்கு வலப்புறத்திலே அமைந்துள்ள அம்மன் கோயில் வேலைப்பாடுகளிலும் அளவுப் பிரமாணங்களிலும் பெருவுடையார் கோயிலுக்குப் பொருத்தமான அமைப்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் வேலைப்பாடுகள் விஜயநகர காலத்தின் முற்பகுதிக்கு உரியனவாகும்.
திருவரங்கத்தின் வரலாற்றிலே விஜயநகர காலம் ஒரு பிரதானமான வளர்ச்சிக் கட்டமாகும். அக்காலத்தில் அங்கு ஆரம்பமாகிய புனர்நிர்மாண வேலைகள் நெடுங்காலமாக நடைபெற்றன. உட்பிராகாரங்களும், அவற்றின் கோபுரங்களும், ஆயிரங்கால் மண்டபமும் சேஷாத்திரி மண்டபமும் அக்காலத்துக்கு உரியனவாகும். குதிரைக் களரி எனும் சேஷாத்திரி மண்டபத்திலுள்ள தூண் வரிசைகள் அவற்றிலுள்ள தாவிப் பாயும் குதிரைகளின் உருவங்களின் காரணமாகக் கலாவிமர்சகர்களின் கவனத்தைப் பெற்றன. மண்டபங்களிலே கலப்புத் தூண்களையும், அவற்றின் ஒரு முகத்திலே போர்க்குதிரையின் முழுமையான வடிவத்தையும் அமைக்கும் முறை தென்னிந்தியக் கலைமரபிலே முதன்முதலாக விஜயநகர காலத்திலே ஆரம்பிக்கப்பட்டது. திருவரங்கத்திற் போல உன்னதமான வேலைப்பாட்டுடன் பெருந் தொகையான தூண்களில் போர்க்குதிரையின் உருவங்கள் வேறெங்கும் அமைக்கப்படவில்லை. குதிரைக் களரியிலே காணப்படும் குதிரை வடிவங்கள் கம்பீரமான தோற்றத்துடனும் எழிலார்ந்த கோலத்துடனும் விளங்குகின்றன. அவை
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அதிவேகத்திலே தாவிப் பாயும் குதிரைகளின் வடிவங்கள். அவை அளவிலாத பேராற்றலுக்கும் தணியாத உத்வேகத்துக்கும் உருவகமாக அமைந்த வடிவங்கள். ஒவ்வொன்றும் சராசரியாக ஒன்பது அடி உயரங்கொண்டவை. அவற்றைச் செலுத்தும் சாரதிகளாக அவற்றின் மேலே போர்வீரர் அமர்ந்திருக்கின்றனர். கலைவனப்பில் அவை இணையிலாதவை; அற்புதக் கோலமானவை.
மதுரைக் கூடல் அழகர் கோயில்
விஜயநகர காலத்திற் பாண்டி நாட்டிலே புராதனமான வைணவ தலங்களிலும் சைவத் தலங்களிலும் பல புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டன. தொண்டைநாடு, சோழநாடு ஆகியவற்றிலுள்ள கோயில்களிற் போல பாண்டி நாட்டுத்திருத்தலங்களிலும் காமகோட்டம், கல்யாண மண்டபம், திருநடைமாளிகை, சுற்றுப் பிராகாரங்கள் முதலியன அமைக்கப் பெற்றன. இந்த வகையில் மதுரைப் பெரிய கோயிலைப் போலக் கூடல் அழகர் கோயில், அழகர் கோயில், திருப்பரங்குன்றம், திருவாதவூர் ஆகியன குறிப்பிடத்தக்கவை. கூடல் அழகர் கோயில் மதுரையிலுள்ள ஒரு புராதனமான விண்ணகரமாகும். அது மீனாகூழியம்மன் கோயிலுக்கு அண்மையில், அதற்குத் தென் மேற்கிலே அமைந்துள்ளது. கூடல் புராணம் என்பது அதற்குரிய தலபுராணமாகும். கூடல் அழகர் கோயிலின் விமானம் மிகவும் உயரமாகவும் வனப்பு மிக்கதாகவும் அமைந்திருக்கின்றது. அது அங்குள்ள கோபுரங்களைக் காட்டிலும் மேலோங்கி விளங்குவது கோயிலின் ஒரு சிறப்பம்சமாகும். அது அஷ்டாங்க விமானம் என்னும் வகைக்குரியதாகும். அது சதுரமான பீடத்தின் மேல் அமைந்திருக்கின்றது. அதன் தளங்கள் நீள்சதுரமானவை. அமைப்பிலே திராவிட கலைப்பாணியின் அம்சங்களைப் பெற்றவை. அதன் சிகரம் வட்டமானது. அதன்மேற் பொன்மயமான ஸ்தூபி அமைந்திருக்கின்றது. விமான தளங்களிலே கீழ் இருந்து மேலாக முறையே ஆசன, சயன, ஸ்தானககோலங்களிலே திருமாலின் படிமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ஒழுங்கு காஞ்சிபுரம் வைகுந்தப் பெருமாள் கோயில் விமானத்தின் அமைப்பினைப் போன்றதாகும்.
133

Page 143
கோயிலின் கட்டட வேலைப்பாடுகள் விஜயநகர கலைப்பாணிக்கு உரியனவாகும். இக்கோயிலிலே காணப்படும் கர்ணகூடுகள், பஞ்சரங்கள், சாலைகள் என்பன பல தளங்களைப் பெற்றுச் சிறு கோயில்களைப் போன்று அமைந்துள்ளன. கும்ப பஞ்சரங்களும் அவ்வண்ணமாகவே அமைந்துள்ளன. அதிஷ்டானப் படைகளிலே வைணவ மரபிலுள்ள புராணக் கதைகள் சிற்ப வடிவிலே செதுக்கப் பெற்றுள்ளன. கோயிலின் மண்டபத்திலே விஜயநகர இராசப் பிரதானிகளின் பிரதிமைகளும் வைணவ மரபு பற்றிய சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோயிலுக்குரிய காமகோட்டம் அண்மைக் காலத்திலே முற்றாக இடிக்கப்பட்டு மீண்டும் கட்டப் பெற்றுள்ளது. இக்கோயிலுக்கு விஜயநகர ராயர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் வழங்கிய தானங்களை வர்ணிக்கும் சாசனங்கள் கோயில் வளாகத்தில் இருந்தன. அர்த்த மண்டபத்திற்கு வேண்டிய கற்களை கந்தாடை கோணம்மான் என்பவர் வழங்கினார் என்றும் இம்மடி எல்லப்ப நாயக்கரின் பரிபாலன காலத்தில் அது கட்டி முடிக்கப் பெற்றது என்றும் இராமராயரின் காலத்துச் (கி.பி. 1547) சாசனம் ஒன்றிலே குறிப்பிடப் பெற்றுள்ளது. பதினாறாம் நூற்றாண்டிலே புராதனமான கட்டடங்களை இடித்து விஜயநகர கலைப்பாணியிலே கூடல் அழகர் கோயிலைப் புனர்நிர்மாணஞ் செய்தார்கள் என்று கொள்ள முடிகின்றது.
கள்ளழகர் கோயில்
தென்னாட்டிலுள்ள பிரதானமான விண்ண கரங்களில் ஒன்றான கள்ளழகர் கோயில் மதுரைக்கு வடக்கிலே, அதற்குப்பன்னிரண்டு மைல் தூரத்திலே, அழகர் மலையின் அடிவாரத்திலே அமைந்திருக் கின்றது. முற்காலங்களிலே கோயிலும் அதன் சுற்றாடலில் அமைந்த ஊரும் அரண்களாற் சூழப்பட்டிருந்தன. ஊர் மக்களின் குடியிருப்புக்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டன. கோயிலின் பாகங்களும் அரண்களின் சில பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. அரணின் தெற்கு வாசல் வழியாகச் சென்றதும் அலங்கார விநாயகர் கோயில் என்னும் ஆலயத்தை அடையலாம். அதைக் கடந்து
134

வெளிப்பிராகாரத்துத் தெற்கு வாசலான இரணியன் வாசல் மூலம் அழகர் கோயில் வளாகத்தை அடைய முடியும். வெளிப்பிராகாரத்தின் கிழக்குப் பக்கத்திலே புராதனமான சுப்பிரமணியர் கோயிலின் அழிபாடுகள் பெருமண்மேடாக அமைந்துள்ளன. மூன்றாம் பிராகாரத்துக் கிழக்கு வாசலில் மிக உயரமான ஏழுநிலைக் கோபுரம் அமைந்திருக்கிறது. அதன் வாசல் பதினெட்டாம்படி வாசல் எனப்படும். நேர்வரிசையில் அமைந்த அம்சங்கள் பொருந்திய வனப்பு மிகுந்த அக்கோபுரம் பதினாறாம் நூற்றாண்டில் அமைக்கப் பெற்றது. அக்கோபுர வாசலிற் கறுப்பண்ண சுவாமிக்கு வழிபாடு நடைபெறும். அதற்கு வடக்கில் அமைந்திருக்கின்ற வந்திவாசல் என்பதன் மூலமாகவே பெரும்பாலான அடியார்கள் கோயிலுக்குப் போகின்றனர். அதன் மூலம் சென்றதும் விசாலமான முற்றத்தை அடையலாம். அதிலே பல மண்டபங்கள் காணப்படு கின்றன. அவற்றிலே கல்யாண மண்டபம் மிகப் பெரியதாகும். வேறு கோயில்களில் உள்ளவற்றைப் போல இங்கும் கல்யாண மண்டபம் அலங்கார வேலைப்பாடுகள் பொருந்திய பிரமாண்டமான தூண்களுடன் அமைந்திருக்கின்றது. அங்குள்ள தூண்களிலே யாளி வடிவங்களும் கடவுட் படிமங்களும் மன்னர்களின் உருவச் சிலைகளும் எழிலார்ந்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. நரசிம்ம அவதாரம், வராக அவதாரம், லக்ஷ்மி, கிருஷ்ணர், கருடாரூட மகாவிஷ்ணு, ஆஞ்சநேயர், திரிவிக்கிரமர், ரதி-மன்மதன் என்போரின் உருவங்கள் அவற்றிலே செதுக்கப் பெற்றுள்ளன. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1573 - 1595) ஆட்சி புரிந்த கிருஷ்ணவீரப்ப நாயக்கர், இரண்டாம் விஸ்வநாத நாயக்கர் ஆகியோரின் உருவச் சிலைகள் அங்கு அமைந்திருக்கின்றன. மண்டபத்தின் கட்டட வேலைப்பாடுகள் பதினாறாம் நூற்றாண்டிற்கு உரியவை. அதன் சமீபமாக உள்ள சிறிய மண்டபங்கள் விஜயநகர காலத்துப் பல்வேறு கட்டங்களுக்கு உரியனவாகும்.
கல்யாண மண்டபத்திற்குப் பின்னால் அமைந் திருக்கும் தொண்டமான் கோபுர வாசல் ஊடாக கோயிலின் மூன்றாம் பிராகாரத்தை அடையலாம். அக்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டமைந்தது.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 144
அதன் அதிஷ்டானத்தில் உபானம், கண்டம், குமுதம், அகரப்பட்டியல் என்னும் படைகள் உள்ளன. அதன் கவர்களிலுள்ள அரைத்தூண்களிலே பலகை, இதழ், கபோதம், போதிகை என்னும் அம்சங்கள் காணப் படுகின்றன. கோபுரத்தின் தள வேலைப் பாடுகள் பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டுகளுக்கு உரியவை. மூன்றாம் பிராகாரத்தின் தெற்குப் பக்கத்திலே அமைந்துள்ள திருமலை நாயக்கன் பிராகாரத்தில் பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பல கட்டடங்கள் உள்ளன. ஆழ்வார் சந்நிதி, தாயார் சந்நிதி, பள்ளியறை என்ற கிரம வரிசையில் அவை அமைந்திருக்கின்றன. இந்தப் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையிலே மேட்டுக் கிருஷ்ணர் கோயில் அமைந்திருக்கின்றது. அதனை ஒட்டி ஆறு தூண் வரிசைகள் பொருந்திய மகாமண்டபம் காணப்படு கின்றது. அதன் தெற்குச் சுவரிலே முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுடைய சாசனம் உண்டு. அதிலே கோயில் பொன் வேய்ந்த பெருமாள் திருமண்டபம் என்று எழுதப்பட்டிருக் கின்றது. கிருஷ்ணன் கோயிலின் அதிர்ஷ்டானம், உபானம், பத்மதளம், குமுதம், கண்டம், கபோதம் என்னும் படைகளைக் கொண்டுள்ளது. சுவர்களை ஒட்டிய அரைத் தூண்களிற் புஷ்ப போதிகை காணப்படுகின்றது. மாடக்குழிகளின் ஒரமாகவுள்ள அரைத்துரண்களின் மேலே கபோதம், கூடம், சாலை என்னும் அமைப்புகள் தெரிகின்றன. விஜயநகர கலைப்பாணிக்குரிய எல்லா வகையான கூட்டுத் தூண்களும் இம்மண்டபத்திலே காணப்படுகின்றன. கிழக்குப் பிராகாரத்தின் வழியே ஆரியன் மண்டபத்தை அடையலாம். அளவிற் பெரியதான அம்மண்டபம் விஜயநகர கலைப்பாணியில் அமைந்த ஒன்றாகும். ஒருவகைத் தூண்களின் அடிப்பாகத்தில் யாளி உருவம் அமைந்துள்ளது. ஆரியன் மண்டபத்திலே அமைந்திருக்கும் தூண்களில் வெவ்வேறு காலங்களுக்குச் சிறப்பாக உரிய கோலத்துடன் புஷ்ப போதிகைகள் அமைக்கப் பட்டுள்ளன.
ஆரியன் மண்டபத்து ஆரியன் வாசல் வழியே இரண்டாம் பிராகாரத்தை அடைய முடியும். அதிலே வைரவர் கோயிலும் விநாயகர் கோயிலும்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அமைந்திருக்கின்றன. அவற்றிலே அடியார்களுக்கு விபூதிப் பிரசாதம் வழங்கப்படும். கள்ளழகர் சந்நிதியின் கர்ப்பக்கிருகம் வட்ட வடிவமானது. அதன்மேல் அமைந்த விமானமும் அவ்வண்ணமானது. அதன் பிரதசுழிண பாதையும் வட்டமான தோற்றங் கொண்டதாகும். அந்த வட்டமான பிரதசுஷிண பிரகாரம் நங்கல் குன்றம் பிராகாரம் என்று சொல்லப்படும். அதன் சுவர்களில் துளையிட்டுச் செம்மையாக அமைக்கப்பட்ட பலகணிகள் உள்ளன. வைணவ கோயில்களிலே சயனக் கோலத்து மூலவரைக் கொண்ட சந்நிதானங்களில் விமானத்தை வட்டமாகவோ வண்டிக் கூடாரம் போலவோ அமைப்பது வழமை. ஆனால், இங்கு வழமைக்கு மாறாக ஸ்தானகக் கோலத்தில் மூலவர் அமைந்த சந்நிதானத்தில் விமானம் வட்ட வடிவில் அமைந்துள்ளது.
மூலவரை பூரீபரமசுவாமி என்று சொல்வர். ஒரே பீடத்தில் அவரின் இரு பக்கங்களிலும் பூரீதேவி, பூதேவி ஆகியோரின் படிமங்கள் அமைந்துள்ளன. அழகர், பூரீ செளந்தரராஜர் என்பன உற்சவ மூர்த்தியின் திருநாமங்கள். கர்ப்பக்கிருகத்தின் மேல் அமைந்துள்ள கட்டடம் சோமச்சந்த விமானம் என்று சொல்லப்பேடும். அதன் கிழக்குப் பக்கத்திற் பிதுக்கமாய் அமைந்துள்ள மாடக்குழியிற் கருட வாகனரின் உருவம் அமைந்திருக்கின்றது. அதன் கீழ் கஜலசுஷ்மியின் உருவம் தெரிகின்றது. சிகரத்தின் மேல் மூன்று ஸ்தூபிகள் அமைந்திருக் கின்றன. விமானம் முழுவதும் பொன்முலாம் பூசப் பெற்றுள்ளது. இராஜகோபுரம் வெளிப்பிராகாரத்திலே இரணியன் வாசல் அமைந்துள்ள தெற்குப் பக்கத்திலே அமைந்திருக்கின்றது. தெற்குச் சுவருக்கும் கோயிலுக்கும் இடையிலே வசந்த மண்டபம் என்னும் பழைய கட்டடம் காணப்படுகின்றது. அது பதினான்காம்பதினைந்தாம் நூற்றாண்டுகளிலே கட்டப் பெற்றதாகும். அதன் விதானத்திலே வைணவ மரபிலுள்ள புராணக் கதைகளையும் இராமாயணக் கதைகளையும் விளக்கும் வண்ண ஒவியங்கள் வரையப் பெற்றுள்ளன. அவை சமகாலத்திலே திருப்பருத்திக்குன்றத்தில் வரையப்பட்ட ஒவியங்களை ஒத்திருக்கின்றன.
135

Page 145
திருமோகூர்
மதுரைக்கு வடகிழக்கிலே, ஆறுமைல் தூரத்தில் அமைந்துள்ள திருமோகூர் பிரசித்தமான 108 வைணவ தலங்களில் ஒன்றாகும். அது நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், மணவாள மாமுனி ஆகியோரின் பாடல்களைப் பெற்ற சிறப்புடைய தலம். அது மோகன ஷேத்திரம் என்று சொல்லப்படும். அங்குள்ள இறைவரைக் காளமேகப் பெருமாள் என்றும் இறைவியை மோகன வல்லித் தாயார் என்று சொல்வது வழக்கம். புராதன தலமான திருமோகூரிலே பதினான்காம் நூற்றாண்டு முதலாக அமைக்கப் பெற்ற கட்டடங்கள் உள்ளன. ஆலயம் அளவிற் சிறியது; அதன் பிராகாரச் சுவர்கள் வழமைக்கு மாறாக மிகவும் உயரமானவை. கோயிற் பிராகாரங்களில் அழகான மண்டபங்கள் பல காணப்படுகின்றன. அதன் கிழக்கு வாசலுக்கு அண்மையிற் கம்பத்தடி மண்டபம் காணப்படுகின்றது. அதிலே கட்டப்பொம்மனின் படைத்தலைவர்களான பெரியமருது, சின்னமருது என்போரின் அழகிய உருவச் சிலைகள் உள்ளன. அந்த மண்டபத்திற்கு அப்பால் கருட மண்டபம் காணப்படுகின்றது. அதன் தூண்களிலே இராமர், சீதை, இலக்குமணர், இரதி, மன்மதன் ஆகியோரின் படிமங்கள் கவர்ச்சிமிக்க கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளன. அதனை அடுத்துள்ள மகாமண்டபத்திலே காணப்படுந் தூண்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்தன வாகும்.
காளமேகப் பெருமாள் சந்நிதானத்தின் கர்ப்பக்கிருகம் சதுர வடிவில் அமைந்துள்ளது. அதிஷ்டானத்திலே பத்மதளம், குமுதம், கண்டம், கபோதம் என்னும் படைகள் காணப்படுகின்றன. சுவர்களும் அரைத்துTண்களும் வேதியின் மேற் கட்டப்பெற்றுள்ளன. மத்திய பகுதியில் அமைந்த சாலையில் மாடக்குழி அமைந்துள்ளது. அதன் இரு பக்கங்களிலும் மேற்புறத்திலே கும்ப பஞ்சரங்கள் அமைந்துள்ளன. அரைத் தூண்களிலே கூடும் சாலையும் பொருந்தியுள்ளன. போதிகைகள் விஜயநகர கலைப்பாணியின் அம்சங்களைக் கொண்டுள்ளன. கொடுங்கையின் மேல்வியாளமாலம் தெரிகின்றது. மகர வடிவங்கள் பல கபோதத்தின்
136

மேல் நீட்டிய கோலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. விமானம் இருதள விமானமாகும். அது வட்ட வடிவமானது. நான்கு பக்கங்களிலும் பிதுக்கமாய் அமைந்துள்ள கூடுகள் காணப்படுகின்றன. தளங்களுக்கிடையிலே சிங்கக் கூடுகள் அமைக்கப் பட்டுள்ளன.
அதன் வேலைப்பாடுகளின் அடிப்படையில் காளமேகப் பெருமாள் கோயில் பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குரியதென்று கொள்ளத் தக்கதாகும். ஆயினும், மூலஸ்தானத்திலே பாண்டியர் கலைப்பாணியின் அம்சங்கள் சில காணப் படுகின்றன. வடகிழக்கு மூலையிலே கூfராப்தி சயனர் சந்நிதி அமைந்திருக்கின்றது. அதன் மண்டபத்திலே எட்டுத் தூண் வரிசைகள் உள்ளன. அங்குள்ள தூண்களிற் புராதனமான கலைப் பாணிக்குரிய அம்சங்கள் தெரிகின்றன. தூண்கள் சதுரமானவை. அவற்றின் மேலே புராதன கால அமைப்புடைய இதழ் வடிவமும் இரட்டைப் பலகையும் அமைந்துள்ளன. நாக பந்தங்கள் அவற்றில் அமைக்கப் படவில்லை. மாடக்குழிகளின் ஓரங்களிலுள்ள குறுந்துரண்களின் மேற் தோரண வடிவந் தெரிகின்றது. கூராப்திசயனர்கோயில்பதின்மூன்றாம் பதினான்காம் நூற்றாண்டுகளிலே கட்டப்பெற்றது என்று கருதலாம். கோயில் வளாகத்திலுள்ள சுவர்களிலே பாண்டியர் காலத்துச் சாசனங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
திருவாதவூர்
மதுரைக்குத் தென்கிழக்கிலே, பதினாறு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் திருவாதவூர் சைவசமய மரபிலே மிகுந்த சிறப்புடைய தலமாகும். சங்கப் புலவர்களில் மிகுந்த சிறப்புப் பெற்றவரான கபிலரும் மாணிக்கவாசக சுவாமிகளும் திருவாதவூர் வாசிகள் என்பது குறிப்பிடற்குரியது. அங்கு பள்ளி கொண்ட உடையாரை வேதபூரீஸ்வரர் என்றும வேதநாதர் என்றுஞ் சொல்வர். தமிழிலும் வடமொழியிலும் அதனைப் பற்றிய தலபுராணங்கள் உள்ளன. கோயிலின் கர்ப்பக்கிருகம் சதுரமானது. அதன்மேல் அமைந்த விமானம் திராவிட விமானம் ஆகும். மூலஸ்தானத்திற்கு முன்னால் அர்த்த
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 200

Page 146
மண்டபம், மகாமண்டபம் என்பன காணப்படுகின்றன. அவற்றுக்குத் தென்புறத்திலே ஆறுகால் பீடம் என்னும் மண்டபம் அமைந்திருக்கின்றது. அதிலுள்ள தூண்கள் எண்கோண அமைப்புக் கொண்டவை. அந்த மண்டபத்திற்கு மேலே பிரமாண்டமான பிரஸ்தரம் காணப்படுகின்றது. அது மிகப்பெரிய கற்பாளங்களைக் கொண்டு அமைக்கப்பெற்றுள்ளது. அக்கற்பாளங்கள் பத்து முதல் பதினான்கு அடி வரையான நீளங் கொண்டவை.
நடராசர் சந்நிதியின் முன்பு மிக அழகுடைய மண்டபம் அமைந்திருக்கிறது. அதிலே யாளி வடிவங்கள் செதுக்கப் பெற்ற கலப்புத் தூண்கள் காணப்படுகின்றன. தூண்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்தவை. அப்பாணிக்குச் சிறப்பம்சமாக உள்ள பல மலர் வடிவங்கள் கொண்ட புஷ்ப போதிகைகளும் அந்த நூற்றுக்கால் மண்டபத் தூண்களிலே காணப்படுகின்றன. தென்மேற்கு மூலையிலே காளீஸ்வரர் கோயில் அமைந்திருக் கின்றது. அதன் மண்டபத்திலே எண்கோணமான கட்டைத்தூண்கள் அமைந்துள்ளன. தூண்களின் புஷ்ப போதிகைகள் பதினாறாம் நூற்றாண்டுக்குரிய
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கலைப்பாணியில் அமைந்துள்ளன. மூலஸ் தானத்திற்குச் சமீபத்திலே திருக்காமகோட்டம் அமைந்திருக்கின்றது. மேற்குப் பிராகாரச் சுவரின் அருகிலே சப்தமாதரின் படிமங்கள் காணப் படுகின்றன. வடக்குச் சுவரின் அருகிலே திருவாதவூரடிகளின் படிமம் சிதைவுற்ற நிலையிலே காணப்படுகின்றது. காளமேகப் பெருமாள் கோயிலின் மூலஸ்தானமும் மண்டபங்களும் வனப்பு மிகுந்த கோலத்துடன் அமைக்கப் பெற்றுள்ளன. விஜயநகர கலைப்பாணியின் உன்னதமான பண்புகளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அவை விளங்குகின்றன. பாண்டி நாட்டிலே விஜயநகரப் பேரரசரின் காலத்திற் பல புதிய ஆலயங்கள் அமைக்கப்பட்டதோடு புராதனமான தலங்கள் பலவற்றிற் கட்டடங்கள் புனர்நிர்மாணம் பெற்றன. மதுரைப் பெரிய கோயிலிலும் விஜயநகர காலக் கலைப்பாணியில் அமைந்த மண்டபங்களும் சந்நிதானங்களுங்கோபுரங்களும் அமைந்துள்ளமை குறிப்பிடற்குரியதாகும். அவற்றை அடிப்படையாகக் கொண்டு மதுரை நாயக்கரின் ஆட்சிக் காலத்திலே திராவிடக் கலைப்பாணியின் வளர்ச்சி நிறைவு பெற்றது.
137

Page 147
நாயக்கர்கை
திமிழகக் கட்டடக் கலையான திராவிட கட்டடக் கலைப்பாணியின் இறுதிக் கட்டமாக அமைவது நாயக்கர் காலத்துக் கலைப்பாணியாகும். பதினாறாம் நூற்றாண்டிலே, 1565இல் தலைக் கோட்டைப் போரின் விளைவாக விஜயநகரம் அழிந்த பின்பு, தமிழகத்திலே, விஜயநகர ராயர்களின் பிரதிநிதிகளான நாயக்கர் சுதந்திரமாக ஆட்சி புரிந்தனர். மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்னும் இடங்களிலிருந்த நாயக்கர் தனித்தனியான இராச்சியங்களை ஆட்சி புரிந்தனர். அவர்களில் மதுரை நாயக்கரே பிரபல்யமானவர்கள். பாண்டி நாடும் திருச்சி, திருவரங்கம் முதலிய பட்டினங்கள் அடங்கிய சோழநாட்டுப் பகுதிகளும் அவர்களின் வசமாயிருந்தன. தமிழகத்துக் கோயிலமைப்பின் இறுதியான வளர்ச்சிக்கட்டம் மதுரை நாயக்கரோடு பெரிதும் தொடர்பு கொண்டதாகும்.
தமிழ் நாட்டுக் கட்டடக் கலை மரபு மதுரை நாயக்கரின் காலத்தில் மேலும் பெரு வளர்ச்சி அடைந்தது. விஜயநகர காலத்திலே தென்னகக் கோயில்கள் இராய கோபுரம், கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய யாளித்துரண்கள் எனப் பல புதிய அம்சங்களைப் பெற்று விசாலமாகிப் பொலிவுடன் விளங்கின. அந்த வகையாக கட்டட அமைப்பு நாயக்கரின் காலத்தில் மேலும் அபிவிருத்தி யடைந்தது. புதிய பல பிராகாரங்கள் ஆலயங்களைச் சுற்றி அமைக்கப்பட்டன. ஒவ்வொரு பிராகாரத்திலும் நான்கு பக்கங்களிலும் கோபுர வாசல்கள்
138

லப்பாணி
பேராசிரியர் சி.பத்மநாதன்
அமைக்கப்பட்டன. கோபுரங்கள் பல தளங்கள் பொருந்தியனவாய் வானத்து முகில்கள் தோயும் வண்ணம் உயரமாக ஓங்கி எழுந்த கோலத்தில் அமைக்கப்பட்டன. மதுரை, திருவரங்கம் ஆகிய தலங்களிலே ஒப்புயர்வில்லாத கட்டட அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
மதுரையிலே விசுவநாத நாயக்கர் காலத்திற் கட்டட வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. திருமலை நாயக்கருடைய காலத்தில் (1623-1659) மிகச் சிறந்த கோயில்களும் மண்டபங்களும் மதுரையிலே தொடர்ந்து கட்டப்பட்டன. நாயக்க மன்னர்கள் பழைய கோயில்களைப்புனரமைத்தார்கள். கோயில் வளாகங்களிலே பிரதானமான ஆலயங்களைச் சுற்றித் திருக்காமகோட்டம் போன்ற துணைக் கோயில்கள் பலவற்றை எழுப்பினார்கள். பிரமாண்டமான கோபுரங்களையும் சித்திர வேலைப்பாடுகள் அமைந்த வனப்புமிக்க மண்டபங்களையும்உருவாக்கினார்கள். கோயில்களிலே முன்பிருந்த மதில்களுக்கிடையிலுள்ள நான்கு மூலைகளும் ஒரே அகலமுடையதாய் இருக்கும். ஒவ்வொரு மதிலின் நடுவிலும் கோபுரவாயில் அமைந்து காணப்படும். ஒவ்வொரு பிராகாரத்திலும் நான்கு கோபுரவாயில்கள் அமைந்திருக்கும். பிராகாரங்களில் நூற்றுக்கால்மண்டபம், ஆயிரங்கால் மண்டபம்,திருக்குளம் முதலியனவும் அமைந்திருக்கும். திருவரங்கத்திலே நீள் சதுரவடிவிலான ஏழு திருச்சுற்றுகள் அமைந்து காணப்படுகின்றன. திருச்சுற்றுகள் முடியும் இடங்களிலெல்லாம்
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 148
தூண்களும், அவற்றிலே மனிதரைப் போன்று உயரமான சிற்ப வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே சில கடவுளர் படிமங்களாகும். வேறு சில மன்னர்களின் பிரதிமைகளாகும்.
நாயக்கர் கலைப்பாணியில் அமைந்த கோயில்கள் மதுரையில் மட்டுமன்றி தமிழகத்தின் எல்லாப் பாகங்களிலும் காணப்படுகின்றன. மதுரை, திருவரங்கம், திருவானைக்கா, திருவாரூர், இராமேஸ்வரம், சிதம்பரம், திருவண்ணாமலை, பூரீ வில்லிபுத்தூர் முதலிய தலங்களிலெல்லாம் நாயக்கர் கலைப்பாணியின் அம்சங்களைக் காணமுடிகின்றது.
மதுரைக் கோயில்
மதுரைக் கலைப்பாணியின் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குவது மதுரை மீனாட்சியம்மன் கோயிலாகும். மதுரையிலே மீனாகூரி அம்மனுக்கும் சுந்தரேசுவரருக்கும் தனித்தனியாக இரு பெருங் கோயில்கள் அமைக்கப்பட்டன. 850 அடி நீளமும் 725 அடி அகலமுங் கொண்டுள்ள நீள் சதுரமான முற்றத்திலே அக்கோயில்கள் இரண்டும் அமைக்கப் பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் அருகருகில், கிழக்கு நோக்கிய கோலத்தில், அமைந்துள்ளன. முற்றத்தின் நான்கு பக்கங்களும் உயரமான மதில்களாற் சூழப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்தின் நடுவிலும் கோபுரவாயில் அமைந்திருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் பிரதான வாயில் கிழக்குப் பக்கம் உள்ளது. அதிலிருந்து கோயிலை நோக்கி200 அடி நீளமும் 100 அடி அகலமுங் கொண்ட விசாலமான பாதை அமைந்திருக்கின்றது. அதன் இரு பக்கங்களிலும் மிக உயரமான தூண்கள் அமைந்திருக்கின்றன.
மீனாகூழி அம்மன் கோயில் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குத் தென்புறமாக அமைந்திருக்கின்றது. அதற்குக் கிழக்கே வனப்புமிக்கதான பொற்றாமரைக் குளம் அமைந்துள்ளது. பிரதானமான மண்டபங்கள், மூலஸ்தானங்கள் இரண்டிற்கும் கிழக்கிலுள்ள வெளிமதிலுக்கும் இடையே காணப்படுகின்றன. பிராகாரச் சுவர் ஒவ்வொன்றின் நடுவிலும் பிரமாண்டமான அளவுகொண்ட கோபுரம் உள்ளது.
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

பிரதானமான கோபுரவாசல் கிழக்குப் பிராகாரச் சுவரோடு அமைந்திருக்கின்றது. ஆயினும், இந்நாட்களில் அஷ்டசக்தி மண்டபம், வழியாகவே பெரும்பாலான அடியார்கள் கோயிலுக்குட் போகின்றனர். அது அம்மன் கோயிலுக்கு நேரில் அமைந்துள்ளது.
அஷ்டசக்தி மண்டபத்தின் வழியாக ஐந்து அங்கணங்களைக் கொண்ட மீனாகூழி நாயக்க மண்டபத்தை அடையலாம். அதற்கு மேற்கிலே எழுநிலைக் கோபுரமான சித்திரகோபுரம் உள்ளது. மதுரைக் கோபுரங்களில் அதுவே மிகவும் உயரமானது. சித்திரகோபுர வாசலிலிருந்து முதலி மண்டபம் வழியாகப் போனாற் பொற்றாமரைக் குளத்தைச் சூழ்ந்துள்ள சித்திர மண்டபத்தை அடையலாம். அதன் வடக்கு, கிழக்கு விதானங்களிலே திருவிளையாடற் புராணத்திலே சொல்லப்படுகின்ற 63 லீலைகளைப் பற்றிய நவீன காலத்து ஒவியங்கள் உள்ளன. 170 அடி நீளமும் 120 அடி அகலமுங் கொண்ட பொற்றாமரைக் குளம் கோயில் வளாகங்களில் அமைந்திருக்கும் குளங்களிலே மிகவும் வனப்புடையது. சித்திர மண்டபத்தின் வடக்கிலிருந்து பார்க்குமிடத்து தெற்குக் கோபுரமும் பொற்றாமரைக் குளமும் கவர்ச்சிமிக்க தோற்றத்துடன் விளங்கும். குளத்திற்கு மேற்கிலே மங்கம்மாள் மண்டபம், எண்ணைக்காப்பு மண்டபம் என்பன காணப்படு கின்றன. வடமேற்கிலே கிளிகட்டி மண்டபம் அமைந்துள்ளது. அது அம்மன் சந்நிதிகோபுரத்துக்கு முன்னால் அமைந்திருக்கின்றது.
சந்நிதி கோபுரத்தினுடாக அம்மன் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தை அடையலாம். அது 225 அடி நீளமும் 150 அடி அகலமுங் கொண்டது. அதன் வடகிழக்கு மூலையிலே திருமலை நாயக்கரதும், அவரது தேவியரதும் சிற்ப வடிவங்கள் உள்ளன. அவை கதையினால் அமைந்தவை. அவ்வுருவங்கள் வடமேற்கு மூலையில் அமைந்துள்ள கொலு மண்டபத்தை நோக்கிய கோலத்தில் அமைந்துள்ளன.
நவராத்திரி விழா வழமையாகக் கொலு மண்டபத்திலே கொண்டாடப்படும். அதற்கு
139

Page 149
வடக்கிலே கடக கோபுரம் அமைந்திருக்கின்றது. வடக்குச் சுற்றாலை வழியாகச் சென்று திரும்பி இரண்டாம் பிராகாரத்தை ஒட்டியமைந்த சுற்றாலை வழியே போய் ஆறுகால் பீடத்தை அடையலாம். அதனைக் கடந்ததும் முதலாம் பிராகாரத்தை அடையலாம். அது 125 அடி நீளமும் 70 அடி அகலமுங் கொண்டது. அதன் நடுவில் மீனாகூழி அம்மன் சந்நிதி உள்ளது. அதிற் கர்ப்பக்கிருகமும் மகாமண்டபமும் உள்ளன. மண்டபத்திற்கு மேற்கிலே பள்ளியறை அமைந்துள்ளது.
கிளிகட்டி மண்டபத்தினூடாக நடுக்கட்டு கோபுர வாசல் வழியாகச் சுந்தரேஸ்வரர் கோயிலை அடையலாம். 420 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட அதன் இரண்டாம் பிராகாரத்தில் முக்குறுணிப் பிள்ளையார் என்று சொல்லப்படும் விநாயகரின் பெருவடிவம் உள்ளது. அப்பிராகாரத்தின் மேற்கு மதிலையொட்டி பாலக கோபுரமும் ஈஸ்வரங்களான பல தேவகோட்டங்களுங்காணப்படு கின்றன. வடமேற்கு மூலையிலே சங்கத்தார் கோயில் உள்ளது. வடக்குச் சுற்றாலையிற் கரியமாணிக்கர் கோயில் அமைந்துள்ளது. அதன் மண்டபம் வடக்கிலுள்ள சின்னமொட்டைக் கோபுரத்துடன் இணைகின்றது. சபாபதி சந்நிதி அடங்கிய நாயக்க மண்டபம் என்னும் நூற்றுக்கால் மண்டபம் இரண்டாம் பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது. அதற்கு முன்னால், கிழக்குப்பிராகாரத்தில் கம்பத்தடி மண்டபமும் நந்தி கோயிலும் காணப்படுகின்றன. தென்கிழக்கு மூலையில் ஞானசம்பந்தர் கோயில் அமைந்திருக்கின்றது.
சுவாமி கோயிலின் முதலாம் பிராகாரம் 250 அடி நீளமும் 150 அடி அகலமுங் கொண்டது. சந்நிதி கோபுரவாசல் வழியாக அதனுட் போகலாம். அதன் தெற்குப் பிராகாரச் சுவரோடு கூடிய சாலையில் 63 நாயன்மாரின் படிமங்கள் உள்ளன. வடமேற்கு மூலையில் சுந்தரேஸ்வரரின் எழுந்தருளியான உற்சவமூர்த்தியின் பள்ளிபீடமான மதுரை நாயக்கர் சந்நிதானம் அமைந்துள்ளது. முதலாம் பிராகாரத்தின் வடக்குப் பக்கத்தில் எல்லாம் வல்ல சித்தரின் சந்நிதானம் அமைந்துள்ளது. கிழக்கிலுள்ள ஆறுகால் பீடத்தின் வழியே மகாமண்டபத்தை
140

அடையலாம். அதிலமைந்துள்ள வெள்ளியம்பல சபையில் இடது காலை ஊன்றிய வண்ணம் தாண்டவம் புரியும் நடராஜரின் உருவம் காணப்படு கின்றது. மகாமண்டபத்திற்கும் கர்ப்பக்கிருகத்திற்கும் இடையில் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.
நாயக்க கோபுரவாசல் வழியாகச் சுவாமி கோயிலிருந்து வெளியே சென்றதும் ஒரு பெரிய முற்றத்தை அடையலாம். அதிலே பல மண்டபங்கள் காணப்படும். நாயக்க கோபுரத்தின் தெற்குப் புறமாகவுள்ள இரண்டாம் பிராகாரத்துக் கிழக்குச் சுவரின் சமீபத்திலே கல்யாண மண்டபம் உள்ளது. அதற்கும் நாயக்க கோபுரத்துக்கும் இடையிலே சுப்பராயர் மண்டபம் காணப்படுகின்றது. நாயக்க கோபுரம், கிழக்குக் கோபுரம் என்பவற்றிற்கு இடையிலே வீரவசந்தராய மண்டபம் அமைந்திருக் கின்றது. அதற்கு வடக்கிலே ஆயிரங்கால் மண்டபம் காணப்படுகின்றது. முத்துராம ஐயர் மண்டபம், கல்யாணசுந்தர முதலியார் மண்டபம், சேர்வைக்காரர் மண்டபங்கள் என்பன வீரவசந்தராய மண்டபத் திற்குத் தெற்கில் உள்ளன. கிழக்குக் கோபுரத்திற்கு வெளியே, வீதிக்கு அப்பால் திருமலை நாயக்கரின் திருப்பணியான புது மண்டபம் அமைந்திருக்கின்றது.
திராவிடக் கலைப்பாணியின் முழுமையான வளர்ச்சிக் கோலத்தை மதுரையிலே காண முடிகின்றது. ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாகக் கோயிற் கட்டடக் கலையில் ஏற்பட்ட வளர்ச்சிகளை அங்குள்ள கட்டடங்கள் பிரதிபலிக்கின்றன. பாண்டியப் பேரரசர் காலத்துக் கலைப்பாணியின் அம்சங்களும், விஜயநகர ராயர்களின் காலத்துக் கட்டட முறைகளும், அவர்களின் பின் வந்த நாயக்கர் கலைப்பாணியின் உன்னதமான வடிவங்களும் அங்கு அமைந்துள்ளன. பாண்டியர் காலத்துக் கட்டடங்கள் அங்கு மிகச் சிலவே உள்ளன. ஆயினும், பாண்டியர் காலக் கட்டட அமைப்பினை அடிப்படையாகக் கொண்டு மதுரைக் கோயில் வளர்ச்சி அடைந்தது என்பது கவனித்தற்குரியதாகும். கிழக்கு, மேற்குக் கோபுரங்களின் அடித்தளங்களிலும் கடக, பாலக கோபுரங்களிலும் பாண்டியர் கலைப்பாணியின் அம்சங்கள் தென்படுகின்றன. நேரான மூலைகளைக் கொண்ட கோபுர தளங்களும், பிற்காலத்திற்குரிய
ஆய்வரங்குச் சிறப்புமலர். 2009

Page 150
வளைவு கொண்ட மூலைகளோடு அமைந்த கோபுரங்களும் மதுரையில் உள்ளன. உட்கோபுரங்கள் எல்லாம் முதலாவது வகைக்குரியனவாகும். வெளிக்கோபுரங்கள் பொதுவாக இரண்டாவது வகையில் அமைந்துள்ளன.
விஜயநகர காலத் தூணமைப்புகள் மதுரையிலே தனிப் பண்புகளைப் பெற்று விடுகின்றன. ஒற்றைக் கல்லிலே நடுவிலுள்ள தூணோடு இணைந் திருக்குமாற் போல வேறு பல தூண்களையும் சித்திர வேலைப்பாடுகளுடன் செதுக்குவது விஜயநகர கால வழமையாகும். அந்த வழமை கர்நாடக தேசத்திலும் தமிழகத்திலும் ஏற்பட்ட ஒன்றாகும். பொதுவாக நடுவிலமைந்த தூண் பிரமாண்டமான தோற்ற முடையதாகவும் சதுரமானதாகவும் அமைந்திருக்கும். அதனைச் சுற்றியமைந்த தூண்கள் உருண்டை வடிவினவாகவும் மெலிந்த தோற்றங் கொண்டன வாகவும் காணப்படும். மதுரையிலே துணைத் தூண்கள் சதுரமாகவும் இடைவெளியின்றி முழுமையும் நடுத்தூணை ஒட்டிய விதமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. விஜயநகர காலத்தில் மதுரையில் அமைக்கப்பட்ட மண்டபங்களிலுள்ள தூண்கள் யாவும் யாளித்துரண்களாக அமைந்திருக் கின்றமை குறிப்பிடத்தக்கது. நாயக்கர் காலத்துச் சாலைத் தூண்களில் மட்டுமே பாய்மாவின் உருவங்கள் அமைக்கப்பட்டன.
சுந்தரேஸ்வரர் கோயில்
சுந்தரேஸ்வரர் கோயிலின் கர்ப்பக்கிருகம் சதுரமான ஒவ்வொரு பக்கமும் 33 அடி நீளமானது. அதன் தாங்குதளம் உபபீடம், அதிர்ஷ்டானம் என்னும் பகுதிகளைக் கொண்டது. தெற்கு, மேற்கு, வடக்குப் புறங்களில் கர்ப்பக்கிருகச் சுவர்கள் 6 அடி நீளத்திற்குப் பிதுக்கமாகியுள்ளன. அவற்றிலே முறையே தகூதிணாமூர்த்தி, லிங்கோற்பவர், துர்க்கை ஆகியோரின் படிமங்கள் உள்ளன. தேவகோட்டம் ஒவ்வொன்றினதும் இரு பக்கங்களிலும் கோட்டங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கோட்டத்திலும் பத்து அடி உயரங்கொண்ட யானையின் உருவம் வனப்பு மிகுந்த கோலத்துடன் விளங்குகின்றது. அவற்றின்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அணிகலன்களிடையே வேறுபாடுகள் உள்ளன. சுந்தரேஸ்வரர் கோயில் இந்திரனுடைய கட்டளைப்படி விஸ்வகர்மாவினால் அமைக்கப் பெற்றது என்பது ஐதீகம். அதனால், அதனை இந்திர விமானம் என்பர். அட்டதிக்கஜங்கள் தாங்கி நிற்கும் கோலத்தில் விமானம் அமைந்துள்ளது.
கருவறை உட்புறத்திலே 11 அடி சதுரமாகும். அதன் சுவர் 8 10’ அகலங் கொண்டது. கருவறையின் நடுவிலே சுயம்புலிங்கமும், அதன் வடகிழக்கு மூலையில் மனோன்மணி அம்மனின் படிமமுங் காணப்படுகின்றன. கருவறைக்கும் 8 அடி அகலமுடைய அந்தராளத்திற்கும் நடுவில் 4 அடி நீளமான இடைவழி உண்டு. அந்தராளத்திற்குக் கிழக்கில் அர்த்த மண்டபம் உள்ளது. கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றின் அதிர்ஷ்டானங்கள் ஒரே விதமானவை.
அர்த்த மண்டபத்துக்கு முன்னால் முகமண்டபம் அமைந்திருக்கின்றது. அவற்றிற்கிடையே கதவு அமைந்துள்ளது. அதன் மேலமைந்த தோரணத்திலே கஜலக்ஷ்மியின் வடிவம் உண்டு. கதவின் இரு பக்கங்களிலும் துவாரபாலகரின் கம்பீரமான உருவங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றின் அருகே, ஒருபக்கத்தில் வல்லப கணபதியின் உருவமும் மற்றப் பக்கத்தில் மயில்வாகனரான சுப்பிரமணியரின் வடிவமும் உள்ளன.
முகமண்டபத்து முன்பாகவுள்ள மகாமண்டபம் 85 அடி நீளமும் 55 அடி அகலமுங் கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு பக்கத்துப் புறச்சுவரிலும் நான்கு தேவகோஷ்டங்கள் உள்ளன. மகாமண்டபத்துச் சுவர்களிலே திருவிளையாடற் புராணக் கதைகளைக் குறிக்கும் பல சுதைச் சிற்பங்கள் உள்ளன. மகாமண்டபத்திற்கு இரண்டு வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கிலே ஆறுகால் பீடம், வழியாக அமைந்துள்ளது. பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்போரின் உருவங்கள் சபாபதி சந்நிதியின் சமீபத்தில் உள்ளன. சந்நிதியிலுள்ள ஆடவல்லாரின் படிமம் ஆறடி உயரமானது. அது வெள்ளிக்கவசம் பூண்டவண்ணமாய் உள்ளது. அம்மனின் ஸ்தானகக் கோல வடிவம் அருகில் அமைந்திருக்கின்றது.
141

Page 151
ஆறுகால் பீடத்தின் அமைப்பு குறிப்பிடத்தக்க அளவிலே கவர்ச்சியானது. அதன் எண்கோணப் பட்டைத் தூண்களின் போதிகைகளிலே தாமரை மொட்டுப் போன்ற பூமுனைகள் காணப்படுகின்றன. தூண்களின் வேலைப்பாடு 14 ஆம், 15 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. பீடத்தின் படையொன்றிலே நாட்டியக் கோலத்தில் உள்ளவர்களின் உருவங்கள் வரிசையாக உள்ளன. அவை வெவ்வேறு கரணங்களின் விளக்கமாய் உள்ளன. அருகிலே வாத்தியகாரரின் உருவங்களுந் தெரிகின்றன. தாமரை வடிவங்கள் வரிசையாக அமைந்துள்ள கபோதத்தின் மேலே நடனக் கோலங்கள் சிறிய உருவத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
மீனாகூறி அம்மன் கோயில்
மீனாகூழி அம்மன் கோயில் அதற்கு வடக்கிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயிலைக் காட்டிலுஞ் சிறியதாகும். அதன் சதுரமான கர்ப்பக்கிருகத்தின் பக்கங்கள் ஒவ்வொன்றும் 25 அடி நீளமானது. அதன் அர்த்த மண்டபம் 45 அடி நீளமும் 25 அடி அகலமுங் கொண்டுள்ளது. கர்ப்பக்கிருகத்து வாசலின் மேலுள்ள தோரணத்தில் கஜலக்ஷமியின் வடிவம் அமைந்துள்ளது. அர்த்த மண்டபத்துச் சுவர்கள் வெறுமையானவை. அதிலே தூண்கள் காணப்பட வில்லை. அதன் வாயிற்புறத்தில் இருபக்கங்களிலும் நான்கு கரங்கள் பொருந்திய துவாரபாலகர் உருவங்கள் காணப்படுகின்றன.
கர்ப்பக்கிருகச் சுவர்களில் மூன்று பக்கங்களிலே தேவகோஷ்டங்கள் உள்ளன. அவற்றின் ஓரங்களிலே அரைத்தூண்களும் சிறு தூண்களும் அமைக்கப் பட்டுள்ளன. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானா சக்தி ஆகியோரின் படிமங்கள் முறையே தெற்கிலும், மேற்கிலும், வடக்கிலுமுள்ள நடுக் கோஷ்டங்களிலே தாபனமாகி உள்ளன.
மகாமண்டபத்தில் ஆறு தூண் வரிசைகள் உள்ளன. அதன் நடுவிலே விசாலமான இடைவழி அமைந்திருக்கின்றது. ஒவ்வொரு பக்கத்திலும் தூண்வரிசைகளுக்கிடையிலே மும்மூன்று அங்கணங்கள் உள்ளன. மண்டபத்தின் நடுவிலுள்ள
142

தூண்கள் கரியமாணிக்க தேவர் ஆலயத்தூண்களைப் போன்றவை. அங்கணங்களோடு கூடிய தூண்கள்
சதுரமானவை.
பள்ளியறையும், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோரின் கோட்டங்களும் வேலைப்பாட்டில் அம்மன் கோயிலை ஒத்தவை. மீனாகூழியம்மன் கோயிலின் வேலைப்பாடுகள் 15ஆம் நூற்றாண்டுக் கலைப்பாணிக்குரியவை என்று ஆராய்ச்சியாளர் கருதுவர்.
மண்டபங்கள்
மதுரைக் கோயிலில் மண்டபம், திருச்சுற்றாலை, திருநடைமாளிகை என்னும் அமைப்புகள் வனப்புடன் விளங்குகின்றன. அவற்றின் கட்டட அமைப்புகளும் கவர்ச்சி மிக்க சிற்பங்களும் ஆலயத்தின் உன்னதமான கோலத்திற்கு உறுதுணையாகின்றன. மண்டபங்களிலே கிளிகட்டி மண்டபம், கம்பத்தடி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், புது மண்டபம் என்னும் நான்கும் அதிவிசேடமானவை. கம்பத்தடி மண்டபம், கொடிக்கம்ப மண்டபம், சுந்தரேஸ்வர மண்டபம், துவஜஸ்தம்ப மண்டபம், என்னும் பெயர்களாலும் வழங்கும். அது நாயக்க கோபுரத்துக்கும் சந்நிதி கோபுரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது. பிராகாரத்தின் நடுவில் அமைந்துள்ள அம்மண்டபத்தில் நந்திபீடமும், இரண்டு கொடித்தம்பங்களும், பலிபீடமும் அமைந்துள்ளன. உன்னதமான சிற்பவேலைப்பாடுகள் பொருந்திய தனிக்கல்லில் அமைந்த எட்டுத் தூண்கள் அங்குள்ளன. ஒவ்வொரு தூணிலும் 24 சிவ மூர்த்தங்களும் வனப்புமிக்க கோலத்துடன் விளங்கும் வண்ணமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ரிஷபாரூடர், ரிஷபவாந்திகர், மீனாகூழிசமேத கல்யாணசுந்தரர், சோமாஸ்கந்தர், கைலாசாரூடர், திரிபுராந்தகர் ஆகிய வடிவங்கள் சாலச் சிறந்தவை.
இரண்டாம் பிராகாரத்தின் வாயிலின் சமீபத்திலே, நாயக்க கோபுரத்தின் இரு பக்கங் களிலே 10 அடி உயரங் கொண்ட கடவுட் படிமங்கள் உள்ளன. ஊர்த்துவதாண்டவர், அகோரவீரபத்திரர், அக்கினி வீரபத்திரர், காளி முதலியோரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 152
நந்தி பீடத்திலுள்ள இடபம் இயல்பான அளவுடையது. அதன் தோற்றம் கம்பீரமானது. கொடித்தம்புங்களின் வேலைப்பாடும் செம்மையானது. கம்பத்தடி மண்டபத்தின் விதானம் மிகவும் உயரமானது. அதிலுள்ள தூண்களும் மிகவும் பெரியவை. நடுவிலுள்ள இரண்டு வரிசைகளிலு முள்ள தூண்கள் நாற்கோண அமைப்புக் கொண்டவை. அவற்றிலே வனப்பு மிக்க சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மூன்றாம் வரிசையிலுள்ள தூண்கள் நாற்கோண அமைப்புக் கொண்டவை. அவற்றிலே வனப்பு மிக்க சிற்பங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. மூன்றாம் வரிசையிலுள்ளவை கூட்டுத் தூண்களாகும். அவற்றின் நடுவிலே பல்கோணப் பட்டைத் தூண்கள் உள்ளன. பிராகாரத்தின் கிழக்குச் சாலை ஞானசம்பந்தர் கோயிலுடன் இணைந்து விடுகின்றது. வடக்கில் அது நாயக்கன் மண்டபம் என்னும் நூற்றுக்கால் மண்டபத்தைச் சேருகின்றது.
கம்பத்தடி மண்டபம் பதினாறாம் நூற்றாண்டிலே கிருஷ்ண வீரப்ப நாயக்கரின் காலத்திலே (15721595) கட்டப்பெற்றது.
நாயக்க மண்டபம்
சுந்தரேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிராகாரத்து வடகிழக்கு மூலையிலுள்ள நாயக்க மண்டபம் நூற்றுக்கால் மண்டபம் என்றுஞ் சொல்லப்படும். உயரிய பீடத்தில் அமைந்துள்ள அதனைக் கம்பத்தடி மண்டபத்திலிருந்துபடிக்கட்டுகள் வழியே சென்று அடையலாம். அதிலே உயரங் குறைந்த தாங்குதளத்தில் அமைந்த சபாபதி கோட்டம் உள்ளது. அங்கு கல்லிலே செதுக்கப்பெற்ற நடராஜரின் பெரும் படிமம் காணப்படுகின்றது. அக்கோட்டத்திற்கு முன்னால் நான்கு தூண்கள் பொருந்திய சிறிய மண்டபம் உள்ளது. தூண்கள் கருங்கல்லில் அமைந்தவை; பளிங்கு போன்ற பளபளப்பான தோற்றங்கொண்டவை. எட்டுத்திக்கு யானைகளும் தாங்கி நிற்குமாப் போல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோரின் படிமங்களும் ஆலயத்தில் வைக்கப்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

பட்டுள்ளன. மீனாகூழி கலியாணத்தை விளக்கும் சிற்பங்கள் ஆலயத்தில் அமைந்துள்ளன. இம் மண்டபம் சின்னப்பன் என்பவனால் சக வருஷம் 1448 இல் (கி.பி.1526) அமைக்கப்பெற்றதென்று திருப்பணி விவரம் என்பதிலே எழுதப்பட்டுள்ளது. குட்டி நாட்டு மல்லய சின்னப்பனால் அது கட்டப்பெற்றது எனத் திருப்பணிமாலை கூறுவதும் கவனத்திற்குரியதாகும்.
கிளிகட்டி மண்டபம்
அதில் அமைந்திருக்கும் அலங்கார வேலைப்பாடுகளின் காரணமாக மதுரையிலுள்ள மண்டபங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானதான கிளிகட்டி மண்டபம் பொற்றாமரைக் குளத்திற்கு மேற்கில் உள்ளது. அதனூடாக மீனாகூதி அம்மன் கோயிலுக்குப் போகலாம். அது இரு வரிசைகளிலே தூண்கள் பொருந்திய சாலை போன்ற அமைப்புடைய தாகும். தூண்களிற் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மிகவுஞ் சிறப்பானவை. பஞ்சபாண்டவர், திரெளபதி ஆகியோரின் உருவங்கள் அவற்றில் அமைக்கப் பட்டுள்ளன. கிராத வேடத்திற் சிவனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. வாலி, சுக்கிரீவன் என்போரின் உருவங்களும் அங்குள்ளன. பல தூண்களில் யாளி உருவங்கள் அமைந்துள்ளன. மண்டபத்தை அடுத்துள்ள அம்மன் சந்நிதானத்தின் வாசலின் இரு பக்கங்களிலும் துவாரபாலகரின் உருவங்கள் மிகவும் சிறப்பான வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலே இரண்டு கைகள் மட்டுமே அமைந்துள்ளன.
கிளிகட்டி மண்டபம் பஞ்சபாண்டவர் மண்டபம் என்றும் புருஷாமிருக மண்டபம் என்றுஞ் சொல்லப்படும். சிராமலை செவ்வந்தி மூர்த்திச் செட்டியின் மகனாகிய திருவம்பல செட்டியால் இம்மண்டபம் கட்டப்பெற்றது என்பதைத் திருப்பணி மாலை மூலம் அறிய முடிகின்றது. விஜயநகர இராசப்பிரதானியான திம்மய்ய நாயக்கராற் புருஷாமிருக மண்டபம் அமைக்கப்பட்டதென்ற குறிப்பும் திருப்பணி விவரம், திருப்பணிமாலை என்பவற்றிலே காணப்படுகின்றது. எனவே புருஷாமிருகமண்டபம் தனியானவொரு அமைப்பாக முற்காலங்களிலே கொள்ளப்பட்டதென்று கருதலாம்.
143

Page 153
கிளிகட்டி மண்டபத்து விதானமும் தூண்களும் ஒளிமிகுந்தவண்ண ஓவியங்களுடன் விளங்குகின்றன. சைவசமயம் தொடர்பான சிற்ப லக்ஷணங்களின் விளக்கமாக அவை அமைந்துவிடுகின்றன. பலவிதமான சிவனின் மூர்த்தங்களும் விநாயகர், சுப்பிரமணியர், அம்மன் முதலியோரின் உருவங்களும் அங்கு வரையப்பெற்றுள்ளன.
ஆயிரங்கால் மண்டபம்
அளவிற் பெரியதான ஆயிரங்கால் மண்டபம் ஆதிவீதியில் அமைந்திருக்கின்றது. அதன் வடக்கு, கிழக்குப் பக்கங்கள் வெளிப்பிராகாரச் சுவருக்கு அண்மையில் உள்ளன. 250 அடி நீளமும் 240 அடி அகலமுங்கொண்ட அம்மண்டபத்தில் எல்லாமாக985 தூண்கள் காணப்படுகின்றன. அவற்றின் வேலைப்பாடு விஜயநகர கலைப்பாணிக்குரியதாகும். மண்டபம் தெற்கு நோக்கியது. வாயிற்புறத்தினூடாகச் சென்றதும் தெற்கு வடக்காகப் பெருவெளி காணப்படுகின்றது. அதன் ஓரங்களிலே இரு தூண்வரிசைகள் உள்ளன. அதற்கு மேற்கிலும் கிழக்கிலும் தூண்வரிசைகள் பொருந்திய பகுதிகள் உள்ளன. மண்டபத்தின் நடுவிலே, வடக்குப் புறத்திலே, சபாபதி அரங்கம் அமைந்திருக்கின்றது. அதிலே கூர்மபீடத்தை ஆதாரமாகக் கொண்ட தாண்டவமூர்த்தியின் பேருருவம் அமைந்திருக்கின்றது. அதன் தாங்குதளம் இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. சபாபதி அரங்கத்திற்குப் போகும் வழியில் யாளித்தூண்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பம்சம் அதன் தூண்களிற் காணப்படும் சிற்ப வேலைப்பாடாகும். பிரமாண்டமான உருவங்கள் செதுக்கப்பட்ட அலங்காரமான சிற்பங்கள் வேறு பல இடங்களிலுங் காணப்படுகின்றன. ஆயினும், இம்மண்டபத்திலே காணப்படும் சிற்பங்கள் பல தனிச்சிறப்புவாய்ந்தவை. அதிற் காணப்படும் கடவுட் படிமங்கள் சிறப்பாக நூல்களிற் கூறப்படும் பிரதிமாலசுஷணங்களுக்கு அமைய உருவாக்கப்பட்டவை. ஆயினும், அவை உயிரோட்டமான கோலங்கள் கொண்டவை.
144

அங்கலகூடிணங்களின் அளவுப் பிரமாணங்கள் இயல்பான உருவங்களில் உள்ளவற்றைப் போன்றவை. மதுரையிலுள்ள தூண்கள் கருங்காலி போன்ற கருமையான கற்பாளங்களில் உருவாக்கப்பட்டமை. அவற்றிலே செதுக்கப்பெற்ற சிற்பங்கள் எண்ணெய் பூசினாற் போலப் பளபளப்புடன் மிளிர்கின்றன. அவற்றின் முகபாவங்களும், அங்காபிநயங்களும், ரஸபாவங்களும் வரைவிலாத வனப்புக் கொண்டவை.
முதலிரு வரிசைகளிலுள்ள தூண்களில் அங்கம் வெட்டின சிவன், கங்காள மூர்த்தி, கண்ணப்ப நாயனார், அரியநாத முதலியார், அரிச்சந்திரன், சந்திரமதி, குறத்தி, குறவன் முதலியோரின் உருவங்கள் இணையிலாத வகையில் வடிக்கப் பெற்றுள்ளன. இரண்டாம் வரிசையிலுள்ள தூண்களில் பாண்டியராசர்,திரிபுராந்தகர், கணேசர், சுப்பிரமணியர், நாகராஜர், சரஸ்வதி, துவாரபாலகர் ஆகியோரின் உருவங்கள் உள்ளன. மோகினி, பிச்சாடனர், அகோர வீரபத்திரர், ரதி, மன்மதன், காளி, திரெளபதி முதலியோரின் சிற்பங்கள் நடு வரிசைத் தூண்களிலே அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபத் தூண்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்த கூட்டுத் தூண்களாகும். நடுவிலுள்ள பிரதானமான தூண்கள் பூமுனை பொருந்திய போதிகைகளுடன் காணப்படுகின்றன. மேற்குப் பக்கத்திலுள்ள மண்டபத்தின் அடித் தளத்திலே புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபம் அரியநாத முதலியாரின் திருப்பணியாகும். அவர் முதல் நான்கு நாயக்க மன்னரின் காலங்களிற் சேனாதிபதியாகவும் அமைச்சராகவும் கடமை புரிந்தவர். அரியநாத முதலியாரின் படிமமொன்று முன்வரிசையிலுள்ள தூனொன்றில் அமைக்கப்பெற்றுள்ளது. திருப்பணி விவரம், திருப்பணி மாலை என்பவற்றிலுள்ள குறிப்புகளினால் அம்மண்டபம் கிருஷ்ண வீரப்ப நாயக்கரின் காலத்தில், கி.பி. 1572 ஆம் ஆண்டிலே கட்டி முடிக்கப்பெற்றது என்பதனை அறியமுடிகின்றது.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 154
புது மண்டபம்
உன்னதமான வேண்டுகளுடன் அமைந்துள்ள புதுமண்டபம் திருமலை நாயக்கர் காலத் திருப்பணியாகும். அது. கி.பி. 1626-1633 ஆகிய காலப்பகுதியிலே கட்டி முடிக்கப் பெற்றது. அது 320 அடி நீளமும் 105 அடி அகலமுங் கொண்டுள்ளது. கிழக்குக் கோபுரத்துக்கு முன்னால் அமைந்திருக்கும் புது மண்டபம் ஒரு நெடுஞ்சாலை போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. நீளப்பாட்டில் அதன் நடுவில் ஒர் இடைவழி அமைந்துள்ளது. அதனிரு பக்கங்களிலும் இவ்விரு அங்கணங்களைக் கொண்ட சாலைகள் காணப்படுகின்றன. மண்டபத்தில் நான்கு தூண் வரிசைகள் உள்ளன. நாயக்கர் கலைப்பாணியில் அமைந்துள்ள நான்கு வகையான தூண்கள் அங்குள்ளன. அவற்றுட் கூட்டுத் தூண்கள் ஒரு வகையினவாகும். யாளித் தூண்கள் இரண்டாம் வகையினைச் சேர்ந்தவை. மூன்றாம் வகையிலுள்ளவை கடவுட் படிமங்கள் செதுக்கப்பட்டவை. மன்னர்களதும், பிரதானிகளதும், மனிதர் பிறரதும் உருவங்களைக் கொண்ட தூண்கள் நான்காவது வகைக்குரியவை.
புதுமண்டபத்தின் மேற்குப் பகுதியில் வசந்த மண்டபம என்று சொல்லப்படும் பகுதி உண்டு. அதில் ஒரு தளத்தில் நிறுவப்பட்ட கருமையான, பளபளப்பான தூண்களின் மேல் விதானமொன்று அமைந்திருக்கின்றது. உற்சவ காலத்திற் சில சமயங்களிலே மீனாகூஜி சமேதரான சுந்தரேஸ்வரரின் எழுந்தருளி விக்கிரகம் அங்கு வைக்கப்படும். விஸ்வநாதர் முதலாகத் திருமலை நாயக்கர் வரையுள்ள மன்னர்களின் உருவங்கள் மத்தியிலுள்ள இரண்டு வரிசைகள் ஒவ்வொன்றிலுமுள்ள ஐவைந்து தூண்களிலே அமைக்கப்பட்டுள்ளன. குதிரைத் தூண்களும் யாளித் தூண்களும் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள வரிசைகளிற் காணப்படுகின்றன.
அஷ்ட சக்தி மண்டபம்
மீனாகூழி அம்மன் கோயிலுக்கு நேராக
அமைந்திருக்கும் அஷ்ட சக்தி மண்டபம் இந்நாட்களிற் பிரதான நுழைவாயிலாகப்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

பயன்படுத்தப்படுகின்றது. அதன் முன்புறத்திலே அளவிற் பெரிதான கோபுரவாசல் அமைந்திருக் கின்றது. பக்கச் சுவர்களின் மேற்பகுதியில் விநாயகரதும் சண்முகரதும் படிமங்கள் காணப் படுகின்றன. மண்டபத்தில் இரண்டு தூண்வரிசைகள் அமைந்துள்ளன. முதலாவதாகவுள்ள தூண்களில் அஷ்டசக்திகளின் உருவங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. இரண்டாம் வரிசைத் தூண்களில் நாயக்க மன்னர் நால்வரின் பிரதிமைகள் காணப்படுகின்றன. மண்டபத்தின் கூரை வில்வளைவான அமைப்புடையது. விதானத்திலே அம்மனுக்குரிய யந்திரங்கள் ஐந்தும், அவற்றைச் சுற்றி மலர் வடிவங்களும் வண்ண ஒவியங்களாக வரையப்பெற்றுள்ளன. இம்மண்டபத்தின் மேற் கெல்லையில் மகாகணபதி, சண்முகர் ஆகியோரின் படிமங்கள் உன்னதமான் கோலத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அஷ்டசக்தி மண்டபம் திருமலை நாயக்கரின் அந்தப்புரப் பெண்ணொருத்தியாற் கட்டப்பெற்றது என்பர்.
மீனாகூறி நாயக்க மண்டபம்
வீரவசந்தராய மண்டபம் கிழக்குக் கோபுரத்தை ஒட்டி அமைந்திருக்கின்றது. அது அளவுப் பிரமாணங்களிற் புதுமண்டபத்தை ஒத்ததாகும். அதன் நடுவில் இடைவழியும் ஒரங்களிலே சாலைகளும் அமைந்துள்ளன. வரிசைகளாக அமைந்துள்ள தூண்கள் கூட்டுத் தூண்களாகும். அவை பலவகையான வேலைப்பாடுகள் கொண்டவை. அவை தாங்கி நிற்கும் கூரை நீளமான கற்பாளங்களினால் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பக்கத்திலுள்ள தூண்களில் உருத்திரன், உருத்திரகாளி, காலாதரமூர்த்தி முதலியோரின் உருவங்கள் தூண்களிற் செதுக்கப்பட்டுள்ளன. விதானத்திலே தாமரை மலரும் நாட்டியக்காரரின் வடிவங்களும் கவர்ச்சி மிக்க கோலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வீரவசந்தராய மண்டபம் திருமலை நாயக்கரின் சகோதரரான முத்துவீரப்ப நாயக்கரின் திருப்பணியானது என்று திருப்பணி விவரம் கூறும். அது சகவருடம் 1533க்குச் சமமான கி.பி 161இலே கட்டி முடிக்கப்பெற்றது.
145

Page 155
முதலிப்பிள்ளை மண்டபம்
சித்திர கோபுரத்துக்கும் பொற்றாமரைக் குளத்தின் வடகிழக்கு மூலைக்கும் இடையில் அமைந்துள்ள முதலிப்பிள்ளை மண்டபம் வெளிச்ச மின்றி இருட்டாயிருப்பதாற் கரிய மண்டபம் என்றுஞ் சொல்லப்படும். அதிலே சித்திர வேலைப்பாடுகள் அமைந்த பன்னிரண்டு தூண்கள் உள்ளன. அவற்றிலே பிச்சாடனர், மோகினி என்போர் பற்றிய புராணக்கதை வடிவமான சிற்பங்கள் சிறப்பான முறையிலே செதுக்கப்பட்டுள்ளன. ஆறாவது தூணிலே அமைந்திருக்கும் சிற்பம் மண்டப ஸ்தாபகரின் கோலமானது என்று கருதலாம். சித்திர கோபுரத்தைக் கட்டிய குடந்தை முதலியார் இம் மண்டபத்தை அமைப்பித்தாரென்று திருப்பணி விவரம்,திருப்பணிமாலைஎன்பனகுறிப்பிடுகின்றன.
சேர்வைக்கார மண்டபம்
வீரவசந்தராய மண்டபம், மீனாகூழி நாயக்க மண்டபம் ஆகியவற்றிற்கு இடையிலமைந்த முற்றத்திலே நவீன கால அமைப்புகளான முத்துராம ஐயர் மண்டபம், கல்யாணசுந்தர முதலியார் மண்டபம், மீனாகூரி்நாயக்க மண்டபம் ஆகியன அமைந்துள்ளன. அவை அளவிற் சிறியனவாயினும் அழகிய வேலைப் பாடுகள் பொருந்தியனவாகக் காணப்படுகின்றன. தூணமைப்புகளே அவற்றின் பிரதானமான சிறப்பம்சமாகும். அவற்றின் தூண்கள் உயரமானவை யாகவும் மெலிந்த தோற்றத்துடனும் அமைந்துள்ளன. அவற்றின் பூமுனை பொருந்திய போதிகை வனப்புமிக்க கோலமானவை.
ஆதி வீதியிலும் அழகான சிறிய மண்டபங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு மூலையிற் காணப் படும் ஆறுமுத்த முதலி மண்டபம் கி.பி. 1760ஆம் ஆண்டளவிலே கட்டப்பெற்றதாகும். வெங்கடேஸ்வர முதலியாரின் திருப்பணிகளான தென்மேற்கிலுள்ள திருமச்சி நாயக்க மண்டபம், வடகிழக்கிலுள்ள தட்டுச் சுற்று மண்டபம் என்பன குறிப்பிடத்தக்கவை. இங்குள்ளவை மண்டபங்களிற் காலத்தால் முற்பட்டது பெச்சக்கால் மண்டபம் என்பதாகும். அது கி.பி. 1658ஆம் ஆண்டளவிலே பெச்சியக்கா என்னும் பெண்ணால் அமைப்பிக்கப்பெற்றது.
146

கல்யாண மண்டபம்
கல்யாண மண்டபம் சுந்தரேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிராகாரத்துக் கிழக்கு மதிலை ஒட்டி அமைந்திருக்கின்றது. அது அமைக்கப்பட்ட பொழுது சுவர்களின்றிக் காணப்பட்டது. அதிலேதோரணங்கள் அமைந்துள்ளன. அதன் நடுவிலே கருமையான கற்றுாண்கள் பொருந்திய பீடம் அமைந்துள்ளது. அதன் மேலான விதானம் மரத்தால் அமைக்கப்பட்ட தாகும். அதில் உன்னதமான வேலைப்பாடுகள் உள்ளன. கல்யாண மண்டபம் விஜரங்க சொக்கநாத நாயக்கரால் அமைக்கப்பட்டது. வருடாந்த உற்சவமான மீனாகூS-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் அங்கு நடைபெறுவது வழமை. குண்டோதரனின் வடிவமொன்று அங்கு வைக்கப்பட்டுள்ளது.
அன்னக்குளி மண்டபம்
மேலைக்கோபுரத்திற்கு மேற்கிலே இம்மண்டபம் காணப்படுகின்றது. அது நான்கு சிறிய மண்டபங்கள் அடங்கிய தொகுதியாகும். அதன் முகப்பிலேநான்கு பெரிய யானைகளின் கல்லுருவங்கள் அமைந்துள்ளன. அவற்றைப் போன்ற உருவங்கள் சுந்தரேஸ்வரர் கோயிலின் இரண்டாம் பிராகாரத்தி லுள்ள திருஞானசம்பந்தர் சந்நிதியிலுங் காணப் படுகின்றன. இங்குள்ள மூன்றாவது மண்டபத்தில் யாளித்துரண்கள் அமைந்துள்ளன. யாளி உருவங்கள் கட்டையானவை; மெலிந்த தோற்றங் கொண்டவை. அவை ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ளவற்றைப் போன்றனவாகும். தெற்கிலும் வடக்கிலும் அமைந்திருக்கும் நடுத்துரண்களிற் பிரமன், விஷ்ணு
ஆகியோரின் வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்காவது மண்டபத்தில் அழகான வேலைப்பாடுகள் அமைந்துள்ள கூட்டுத்துரண்கள் உள்ளன. தெற்கிலுள்ள தூண்களிலே பாண்டியராசர், வியாக்கிரபாதர், சாமரை தாங்குபவர், பிரம்மா ஆகியோரின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதேபோல வடக்கிலுள்ள தூண்களில் விஷ்ணு. பதஞ்சலி முனிவர், அரசி என்போரின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்திற் காணப்படும் சிற்பங்கள் கலைவனப்பில் உன்னத மானவை. அங்க லக்ஷணங்களையும், உணர்ச்சி
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 156
பாவங்களையும், அணியலங்காரங்களையும் கலைஞர் வெளிப்படுத்தியிருக்கும் கோலம் அற்புதமானது.
கோபுரங்கள்
மதுரைக் கோபுரங்கள் வானோங்கு கோபுரங்கள். அவை நெடுநிலைக் கோபுரங்கள், அழகு மிகுந்தவை; வேலைப்பாட்டில் உன்னத மானவை; அவற்றுக்கு நிகரானவை வேறெங்குங் காணப்படுவதில்லை. பாண்டியர்கள் உருவாக்கிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு சில கோபுரங்கள் பிற்காலத்திலே கட்டப்பெற்றன. வேறு சில பாண்டியர்களாற் கட்டி முடிக்கப் பெற்றவை. மற்றக் கோபுரங்கள் அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு பிற்காலங்களிலே கட்டப்பெற்றவை. அவற்றிலே கூடம், பஞ்சரம், சாலை என்னும் அமைப்புகள் சிறப்பிடம் பெறுகின்றன. வெளிக் கோபுரங்கள் எல்லாம் ஒன்பது தளங்களோடு அமைந்தவை. அவை ஒவ்வொன்றும் ஏறக்குறைய 150 அடி உயரமானவை. அவை எல்லாம் மேனோக்கிய உட்சரிவான வளைவுகளுடன் அமைக்கப்பெற்றுக் கவர்ச்சி மிகுந்த கோலத்துடன் விளங்குகின்றன.
வெளிக்கோபுரங்களிற் கீழைக்கோபுரமே மிகவும் புராதனமானதாகக் கொள்ளப்படுகின்றது. அது காலாகாலமாகப் புனர்நிர்மாணம் பெற்றுள்ளது. அதன் புராதனமான அம்சங்கள் அடிப்பாகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அதிலுள்ள தேவ கோட்டங்களும், மாடக்குழிகளும், கூடுகளும் சீர்குலைந்த நிலையிற் காணப்பட்டன.
கீழைக் கோபுரத்தின் தாங்குதளம் கல்லினால் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேற்பகுதி செங்கல் வேலைப்பாடாகும். அதன் வாசலிலுள்ள கதவு 35 அடி உயரமானது. கோபுர தளங்கள் ஒவ்வொன்றிலும் கூடம், சாலை, பஞ்சரம் என்பன வரிசைக்கிரமமாய் அமைந்துள்ளன. திருவிளையாடற் புராணக் கதைகளை ஆதாரமாகக் கொண்ட கதைச் சிற்பங்கள் தளங்களில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் புனராக்கஞ் செய்யும் பொழுது நவீன காலக் கட்டடப் பொருள்களைப் பயன்படுத்தி யுள்ளனர்.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

கோபுர வாசலில் இரண்டு சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றின் வாசகங்கள் மேல்வருமாறு அமைந்துள்ளன: 1. திரிபுவனச்சக்கரவர்த்தி கோதேரின்மை
கொண்டான் சுந்தரபாண்டியன் திருக்கோபுரம்.
2. திரிபுவனச்சக்கரவர்த்தி கோதேரின்மை
கொண்டான் அவனிவேந்தராமன் திருக்கோபுரம். அவனிவேந்தராமன் என்பது முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் (1251-1268) விருதுப் பெயர்களில் ஒன்றென்பதால் இரு சாசனங்களும் சுந்தரபாண்டியனையே குறிப்பிடு கின்றன என்பது தெளிவாகும். கோபுரம் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பெற்றது என்றும், அதனால் அது அவன் பெயரால் வழங்கியது என்றுங் கொள்வதற்கு இச்சாசனங்கள் ஆதாரமாகின்றன. சுவாமி கோயிலுக்குரிய கோபுரம் சக வருடம் 140இல் (1218) சுந்தரபாண்டியனால் அமைக்கப்பெற்றது என்ற குறிப்பு திருப்பணி விவரத்தில் உண்டு. சுந்தரபாண்டிய கோபுரம் சுந்தரபாண்டியனால் அமைக்கப்பட்டதென்று திருப்பணிமாலை கூறும். கீழைக் கோபுரத்திற் பாண்டியரின் இலச்சினையாகிய இணைக்கயல் வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது.
கோபுரம் தொடர்பான திருப்பணி வேலைகள் பன்னிரண்டாம் நூற்றாண்டிலே தொடங்கிவிட்டன என்றும் அது பதின்மூன்றாம் நூற்றாண்டிலே சடையவர்மன் சுந்தரபாண்டியனின் காலத்திலே கட்டிமுடிக்கப் பெற்றது என்றும் கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 - 1230), சடையவர்மன் குலசேகரன் (1236), சடையவர்மன் குலசேகரன் (1190) ஆகியோரின் சாசனங்கள் இரண்டாம் தளத்தில் உள்ளன.
மேலைக் கோபுரம் ஒன்பது தளங்களோடு அமைந்துள்ள மேலைக் கோபுரம் 14ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. ஆதி
147

Page 157
வீதியிலுள்ள ஒன்பது தளங்களோடு கூடிய மேலைக் கோபுரத்தைப் பராக்கிரம பாண்டியன் அமைப்பித்தான் என்று திருப்பணி விவரத்திலே கூறப்பட்டுள்ளது. திருப்பணி மாலையும் அவ்வாறே கூறுகின்றது. கோபுரத்தின் அதிர்ஷ்டானம் நிலத்திலே புதைந்துவிட்டது. புராணக்கதை விளக்கமான சிற்பங்களும் கடவுட் படிமங்களும் கோபுர தளங்களிலே அமைக்கப் பட்டுள்ளன. அவற்றிலே திருப்பாற்கடலைக் கடையும் காட்சியும் ரிஷபாரூடரின் கோலமும் மிகுந்த சிறப்புடையவை.
தெற்குக் கோபுரம் : தெற்குக் கோபுரம் சிராமலை செவ்வந்தி என்பாரின் திருப்பணியான தென்று திருப்பணி விவரம், திருப்பணி மாலை என்பவற்றிலே சொல்லப்படுகின்றது. அது கி.பி. 1478ஆம் ஆண்டளவிலே கட்டப்பெற்றது. அது விஜயநகர கலைப்பாணியில் அமைந்தது என்பது வரலாற்றுக் குறிப்புகளாலும் கட்டட வேலைப் பாடுகளாலும் உணரப்படும். தென்கோபுரமான பணியாரக்கடைக் கோபுரத்தைப் பெரிய செவ்வந்திலிங்கம் செட்டிகட்டினார்’ என்று பூனிதாள என்னும் நூலிலே எழுதியுள்ளனர்.
தாங்கு தளத்தின் நிலைகள் இரண்டும் கருங்கல்லால் அமைக்கப்பட்டவை. மேற்றளங்கள் செங்கல் வேலைப்பாடானவை. கோபுரத்தின் தோற்றம் உன்னதக் கோலமானது. பொற்றாமரைக் குளத்துக்குச் சமீபமாக அமைந்திருப்பதால் அது மிகுந்த வனப்புடன் விளங்குகின்றது. அதன் அரைத்துரண்களின் அடியில் யாளி வடிவங்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ளன.
வடக்குக் கோபுரம் ஒன்பது தளங்களைக் கொண்ட வடக்குக் கோபுரத்திலே அண்மைக்காலம் வரை சிகரம் கட்டப்பெறாமையால் அது மொட்டைக் கோபுரம் என்று சொல்லப்படும். 19ஆம் நூற்றாண்டிலே அதன் சிகரம் நாட்டுக்கோட்டைச் செட்டிகளாற் கட்டுவிக்கப்பட்டது. பீடத்திலுள்ள தளங்கள் இரண்டும் கல்லினாற் கட்டப்பெற்றவை. கோபுரத்தின் அமைப்பும் வேலைப்பாடும் தெற்குக் கோபுரத்தின் அம்சங்களை ஒத்திருக்கின்றன. தேவ .
148

கோட்டங்களிலே குறுந்தூண்கள் அமைந்துள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். அதிலுள்ள தூண்களின் கபோதங்களிற் புஷ்ப போதிகைகள் காணப் படுகின்றன. அது 16ஆம், 17ஆம் நூற்றாண்டுகளுக்கு உரிய கலைப்பாணியின் அம்சங்களைக் கொண்டுள்ளது. கிருஷ்ண வீரப்ப நாயக்கரின் காலத்தில் அது கட்டப்பெற்றது என்பதைத் திருப்பணி விவரம் மூலமாக அறியமுடிகின்றது.
புது மண்டபத்திற்குக் கிழக்கிலுள்ள இராஜ கோபுரத்தின் தாங்கு தளம் கீழைக் கோபுரத்தில் உள்ளதைக் காட்டிலும் இரு மடங்கு விசாலமானது. அது 200 அடி நீளமும் 120 அடி அகலமுங் கொண்டது. அதன் நிர்மாண வேலைகள் திருமலை நாயக்கரின் காலத்தில் ஆரம்பித்தன. அதிலே 50 அடிக்கு மேலான உயரமுடைய பிரமாண்டமான தூண்கள் அமைந்திருக்கின்றன. அதிர்ஷ்டானத்திலே அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்த வனப்புடன் செதுக்கப்பட்டுள்ளன. மாடத் தூண்கள் அளவிற் பெரியவை. அரைத் தூண்களிலே யாளி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலை நாயக்கரதும் அவரது தேவியரதும் பிரதிமைகள் பல அதிலே உருவமைக்கப்பட்டுள்ளன. மீனாகூழியின்பட்டாபிஷேகக்
காட்சி சுவரிலே சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
வெளிக்கோபுரங்களைத் தவிரக் கோயில் வளாகத்தில் எட்டு உட்கோபுரங்கள் உள்ளன. அவற்றுட் சித்திரக் கோபுரம் ஏழு தளங்களைக் கொண்டுள்ளது. ஏனையவை அதனிலுஞ் சிறியன வாகும். மீனாகூதி அம்மன் கோயிலுக்கு முன்னால் அமைந்திருக்கும் சித்திரக் கோபுரம் கி.பி. 1570ஆம் ஆண்டளவிலே அரியநாத முதலியாரின் மகனாகிய காளத்தி முதலியாராற் கட்டப்பெற்றது. அதன் தளங்கள் பொருத்தமான அளவுப்பிரமாணங்களுடனும் வனப்பு மிக்க கோலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.
சுவாமி கோயிலின் முன்னால் அமைந்த நாயக்க கோபுரம் 16ஆம் நூற்றாண்டிலே கட்டப்பெற்றது. அரசரின் தர்மமாக அச்சுதராயரின் (1529 - 1542) அடப்பமான ஈஸ்வரப்பாவின் மகனான விஸ்வப்பா என்பவரால் அது கட்டப்பட்டதென்று சாசனக் குறிப்புண்டு. அது ஐந்து தளக் கட்டடமாகும். சுவாமி
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 158
கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் இடையிலே காணப்படும் ஐந்து தளக் கோபுரமான நடுக்கட்டுக் கோபுரமும் 16ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிற் கட்டப்பெற்றதாகும். நடுக்கட்டுக் கோபுரத்தின் கோஷ்டங்களில் அமைந்திருக்கும் நடராஜ வடிவமும் சண்முகரின் படிமமும் மிகவும் அழகானவை. நாயக்க கோபுரத்திலுள்ள வைரவர், வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்களுஞ் சாலச் சிறந்தவை. கி.பி. 1559ஆம் ஆண்டுக்குச் சமமான சக வருடம் 1481இல் நடுக்கட்டுக் கோபுரம் அமைக்கப்பட்டதென்று திருப்பணி விவரத்திலே எழுதப்பட்டுள்ளது. அது செவ்வந்திமூர்த்தியால் அமைக்கப்பட்டதாகும்.
மதுரையிலுள்ள கோபுரங்கள் எல்லாவற்றிலும் கடக கோபுரமே மிகப் பழமையானது போலத் தெரிகின்றது. அதன் வேலைப்பாடுகளின் அடிப்படையில் அதனைப் 13ஆம் 14ஆம் நூற்றாண்டுகளுக்குரிய கட்டடமாகக் கொள்ள முடிகின்றது. அம்மன் கோயிலின் மேற்கு வாசலிலுள்ள அக்கோபுரம் 16ஆம் நூற்றாண்டிலே புனரமைக்கப்பட்டது என்று கொள்வதற்கான காரணம் உண்டு. சுவாமி கோயிலின் மேற்கு வாசலில் அமைந்திருக்கும் பாலக கோபுரம் கடக கோபுரத்தைப் போன்ற அமைப்பாகும். சக வருடம் 1296 (கி.பி. 1374)இல் அதனை மல்லப்பன் என்பவர் அமைப்பித்தார் எனத் திருப்பணி விவரத்தில் எழுதப்பட்டுள்ளது. அதிலுள்ள கூடுகள் பாண்டியர் கலைப்பாணியின் அம்சங்களைக் கொண்டுள்ளன. அதன் பூதகண வரிசையும் கொடுங்கை மேல் அமைந்துள்ள வியாளவரியும் கடக கோபுரத்தில் உள்ளவற்றைப் போன்றவை. பாலக கோபுரத்தை முன்மாதிரியாகக் கொண்டு நவீன காலத்துக் கோபுரங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன.
சின்ன மொட்டைக் கோபுரம் சுந்தரேஸ்வரர் கோயிலின் வடக்குப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. நாயக்க கோபுரம், நடுக்கட்டுக் கோபுரம் என்பவற்றை அது பல அம்சங்களில் ஒத்திருக்கின்றது. அது கி.பி. 1560ஆம் ஆண்டளவிலே செவ்வந்தி வேலன் என்பவராற் கட்டப்பெற்றது என்பர். அதன் கட்டட வேலைப்பாடுகள் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக் குரியவை.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

சந்நிதி கோபுரங்கள் இரண்டும் பழமையானவை. சுவாமி கோயிற் சந்நிதி கோபுரத்திலே 12ஆம் 13ஆம் நூற்றாண்டுகளுக்குரிய கலைப்பாணியின் அம்சங்கள் காணப்படுகின்றன. மீனாகூழி அம்மன் கோயிலுக்குரிய சந்நிதி கோபுரம் பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரிய கலைப்பாணியின் அம்சங்களைக் கொண்டுள்ளது. (335T LJ அமைப்பானது பாண்டியப் பேரரசர் காலம் முதலாக நவீன காலம் வரை அடைந்த பரிணாம வளர்ச்சியை ஆராய்ந்து அறிந்து கொள்வதற்கான அம்சங்கள் மதுரையில் உள்ளமை குறிப்பிடற்குரியது.
திருப்பரங்குன்றம்
ஆறு படைவீடுகளில் ஒன்றான திருப்பரங் குன்றம் ஏறக்குறைய இரண்டாயிரம் வருஷங்களாக நிலைபெற்று வந்துள்ள புராதனமான வழிபாட்டுத் தலமாகும். அது மதுரைக்குத் தென்மேற்கில் நான்கு மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. விஜயநகர - நாயக்கர் காலங்களிலே திருப்பரங்குன்றத்திலே பல மண்டபங்களும் கோபுரமும் அமைக்கப்பெற்றன. நாயக்கர் கலைப்பாணிக்குரிய பல சிறப்பம்சங்களை அவற்றிலே காண முடிகின்றது.
கர்ப்பக்கிருகத்தின் முன்னால் அமைந்துள்ள ‘அர்த்த மண்டபம்’ நாயக்கர் கலைப்பாணியில் அமைந்துள்ளது. அதன் தூனொன்றிலே திருமலை நாயக்கரின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளதால் அம்மண்டபம் அவரின் திருப்பணியானதென்று கருதலாம். அதற்கு முன்னால் மகாமண்டபமும் கம்பத்தடி மண்டபமும் உள்ளன. நாயக்க மன்னர் இருவரின் உருவங்கள் கம்பத்தடி மண்டபத்தில் உள்ளன. அவை அடையாளங் காணப்படவில்லை. அதிற் பராசரர், வேதவியாசர் ஆகியோரின் படிமங்கள் உன்னதக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பத்தடி மண்டபத்தின் கீழே திருவாசிமண்டபம் அமைந்துள்ளது. அதன் வாசற்படிகளின் ஓரங்களிலே குதிரை உருவஞ் செதுக்கப்பட்ட சிறு கற்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. குதிரைகளின் சிற்பங்களுக்குப்பின்னாற் சக்கரங்களின் வடிவங்கள் காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டபத்திலே
49

Page 159
திருவிளையாடற் புராணக் காட்சிகள் சிற்பங்களாகத் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிவன் தாயின் வடிவங் கொண்டு, தாயை இழந்த பன்றிக் குட்டிகளுக்குப் பாலூட்டுங் காட்சி, புலி மான் குட்டிகளுக்குப் பாலூட்டுதல், மீனாகூழியின் திக்விஜயம், மீனாகூழி திருக்கல்யாணம், சுவரதேவரின் உருவம், ஊர்த்துவ தாண்டவக் கோலம் முதலியன சிறிய வடிவங்களாய் அமைந்துள்ளன.
திருவாசி மண்டபத்திற்கு நேராக வசந்த மண்டபம் உள்ளது. வசந்த மண்டபத்துக்குப் போகும் வழியில் அஷ்டசக்திகளில் நால்வரின் உருவங்கள் காணப்படுகின்றன. முத்தம்பல முதலியாரின் அழகிய படிமம் ஒன்றும் அங்குள்ளது. திருவாசி மண்டபத்தின் முன்னால் விஜயநகரப்பாணியிலமைந்த எழுநிலைக் கோபுரம் அமைந்திருக்கின்றது. அதன் அதிர்ஷ்டானத் தளங்கள் இரண்டும் கல்லினால் அமைக்கப்பட்டவை. அதன் மேலுள்ள கூடம், பஞ்சரம், சாலை என்பவை நேர்த்தியாக அமைந்துள்ளன. அதன் சுவர்களிலே மாடக்குழிகளும், அவற்றின் அருகிலே அரைத்துரண்களும் குறுந்துாண்களும் உள்ளன. கோபுரமும் திருமதிலும் விஸ்வநாத நாயக்கரின் பேரனான கிருஷ்ண வீரப்ப நாயக்கராற் கட்டப்பெற்றவை என்பது கோபுரத்திலுள்ள சாசனங்கள் இரண்டின் மூலம் அறிய முடிகின்றது. அச்சாசனங்கள் சகவருடம் 1505இல் (கி.பி. 1583) எழுதப்பட்டவை.
கோபுர வாசலைக் கடந்ததும் ஆஸ்தான மண்டபத்தை அடையலாம். அது 16 அடி நீளமும் 94 அடி அகலமுங் கொண்டது. அதில் 25 அடி உயரமான 48 தூண்கள் உள்ளன. முன்வரிசையிலுள்ள தூண்களிற்குதிரை வடிவங்களும் சிலவற்றிலே யாளி உருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நடராஜர், மீனாகூழி, பதஞ்சலி, வியாக்கிரபாதர், ஊர்த்துவ தாண்டவர், காளி ஆகியோரின் படிமங்கள் தூண்களில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். மண்டபத்தின் நடுவிலுள்ள அங்கணத்திலே அமைக்கப்பட்டுள்ளசுப்பிரமணியர்தெய்வயானையம்மன் திருமணக் கோலம் கவர்ச்சிமிக்க வண்ணமாய் அமைக்கப்பட்டுள்ளது. இராணி மங்கம்மாளின் .
150

பிரதிமையொன்றும் ஆஸ்தான மண்டபத்தில் அமைந்துள்ளது. கம்பத்தடி மண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றிலே விஜயநகர கலைப்பாணியில் அமைந்த தூண்கள் காணப்படுகின்றன. அவற்றின் கபோதங்கள் புஷ்ப போதிகைகளோடு அமைந்திருக் கின்றன.
திருவரங்கம்
சைவசமய மரபிலே கோயில் எனப்படுவது சிதம்பரம் என்றாற் போலத் தமிழக வைணவ மரபிலே திருவரங்கம் தலங்கள் எல்லாவற்றிலும் தலை சிறந்தது. அது மிகவும் புராதனமானது, நீண்டகால வரலாற்றினைக் கொண்டது. ஆழ்வார்கள் பலரின் பாடல் பெற்ற சிறப்பு அதற்குண்டு. பூரீ இராமானுஜரும் ஆச்சார்களிற் பலரும் அதனைத் தலைமைத் தானமாகக் கொண்டு தங்கள் இயக்கங்களை நடத்தினார்கள்.
சோழராட்சிக் காலம் முதலாக அமைக்கப்பெற்ற கட்டடங்கள் திருவரங்கத்தில் உள்ளன. இறையகமும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்களும் காலகாலம் புனரமைக்கப்பட்டமையால் மிகப் பழைமையான கட்டடங்களின் கலைக்கோலங்கள் மாறிவிட்டன. மூலஸ்தானப் பகுதியிலே பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பெற்ற கட்டடங்களின் பகுதிகள் தெரிகின்றன. இரண்டாம் பிராகாரத்தில் ஹொய்சள வீரநரசிம்ம தேவன் காலத்துத் திருப்பணியான சந்நிதி அமைந்திருக் கின்றது. அது கர்நாடகத்திற்குச் சிறப்பாக உரிய ஹொய்சளர் கலைப்பாணியில் அமைந்துள்ளது. ஏனைய கட்டடங்கள் எல்லாம் விஜயநகர காலத்திலும் நாயக்கர் காலத்திலுங் கட்டப்பெற்றவை.
தென்னிந்தியக் கோயில்கள் எல்லாவற்றிலும் பூரீரங்கமே மிகப் பெரியதாகும். அது மிகவும் விசாலமான வளாகத்தினுள் அமைந்திருக்கின்றது. நாற்சதுரமான அதன் வெளிப்பிரகாரம் 2,850 அடி நீளமும் 2,475 அடி அகலமுங் கொண்டுள்ளது. கோயில் வளாகத்திலே எல்லாமாக 21 கோபுரங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே சில கட்டி முடிக்கப் பெறாதவை. பூரீரங்கத்து ஆயிரங்கால்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 160
மண்டபம் பிரமாண்டமானது. அதன் தூண்களில் அமைந்துள்ள சிற்பங்களும் மிகுந்த சிறப்புடையவை.
நடுவிலமைந்த கோயிலைச் சுற்றி எல்லாமாக ஏழு பிராகாரங்கள் உள்ளன. அவற்றில் மூன்று வெளிப்பிரகாரங்களும் கோயிலின் பகுதிகளாகவும் அதனைச் சூழ்ந்துள்ள நகரத்தின் பகுதிகளாகவும் இணைத்திருக்கின்றன. அவற்றிலே காணப்படும் பிராகாரங்கள் பிரமாண்டமானவை. ஏழாம் பிராகாரத்தின் தெற்கு வாசலிலுள்ள கோபுரங்கள் இரண்டும் கட்டிமுடிக்கப்பெறாத மொட்டைக் கோபுரங்களாக விடப்பட்டிருந்தன. அவை 300 அடி உயரமான சிகரத்தைத் தாங்க வல்ல பிரமாண்டமான தாங்குதளங்களாக அமைக்கப்பட்டிருந்தன.
கோயிலின் மத்திய பகுதி நான்காம் பிராகாரத்தினுள் அடங்கியதாகும். அப்பிராகாரம் 1,235 அடி நீளமும் 849 அடி அகலமுங் கொண்டுள்ளது. வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும் அமைந்துள்ள மதில்களிலே கோபுர வாசல்கள் உள்ளன. அவற்றுட் கீழைக் கோபுரமே மிகப் பெரியதும் இணையிலாவணப்பும் கொண்டதுமாகும். அதற்குச் சமீபத்திலே, நான்காம் பிராகாரத்திலே சிறப்பு மிக்கதான ஆயிரங்கால் மண்டபம் அமைந்திருக்கின்றது. வேறு பல மண்டபங்களும் அந்தப் பிராகாரத்திலே காணப்படுகின்றன.
மூன்றாம் பிராகாரம் 767 அடி நீளமும் 503 அடி அகமுங் கொண்டது. அதன் வடக்குப் பக்கத்திலும் தெற்குப் பக்கத்திலும் கோபுரங்கள் அமைந்துள்ளன. பிரதான வாசலான தெற்குக் கோபுரவாசல் வழியே சென்று கருட மண்டபத்தை அடையலாம். அதன் நடுவிலே தூபி போன்ற அமைப்பினைச் சிகரமாகக் கொண்ட சந்நிதானம் காணப்படுகின்றது. கருட மண்டபத்திலே தூண்கள் வரிசையாக அமைக்கப் பட்டுள்ளன. அதனருகே சூரியபுஷ்கரணி என்னும் குளம் அமைந்திருக்கின்றது. அப்பிராகாரத்தின் வடக்கு எல்லையிற் சந்திர புஷ்கரணி என்னும் குளம் காணப்படுகின்றது.
இரண்டாம் பிராகாரம் 426 அடி நீளமும் 295 அடி அகலமுங்கொண்டுள்ளது. அதிற் தூண் வரிசைகள்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

பொருந்திய மண்டபங்கள் நிறைந்துள்ளன. அதன் மேற்குப் பக்கத்திலே நீளமான திருநடமாளிகை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கிலுந் தெற்கிலும் கோபுர வாசல்கள் உள்ளன. தெற்குக் கோபுர வாசல் வழியாக முதலாம் பிராகாரத்தை அடையலாம். அது 240 அடி நீளமும் 181 அடி அகலமுங் கொண்ட சுற்றளவினை உடையது. அதனுட் கர்ப்பக்கிருகமும் அதனைச் சுற்றியுள்ள கட்டடங்களும் உள்ளன. கர்ப்பக்கிருகம் வட்டமானது. அதன் விமானம் பொன்மயமானது; வண்டிக் கூடாரம் போன்ற தோற்றங் கொண்டது.
திருவானைக்கா
திருவரங்கத்திற்கு ஒரு மைல் தூரத்தில் அமைந்திருக்கும் ஜம்புகேஸ்வரம் என்னுந் திருவானைக்கா நான்கு பிராகாரங்கள் பொருந்திய ஆலயமாகும். அது தமிழகத்திலுள்ள மிகப் புராதனமான சைவத் தலங்களுள் ஒன்றாகும். தேவார முதலிகளின் பாடல் பெற்ற சிறப்பு அதற்குண்டு. காலாகாலம் நடைபெற்ற புனர்நிர்மாண வேலைகளினாலே ஆதியான கட்டடங்களின் சுவடுகள் மறைந்துவிட்டன. ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டுகளில் அது கற்றளியாக நிர்மாணிக்கப்பட்டது என்று கருதலாம். அங்கு பிற்காலச் சோழர்களின் ஆட்சியில் அமைந்த கோபுர வாசல் காணப்படுகின்றது. கோபுரத்திலே பதின்மூன்றாம் நூற்றாண்டிற் பாண்டியர்கள் தங்கள் இலட்சினையான இணைக்கயல் வடிவத்தைப் பொறித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக நோக்கு மிடத்துக் கோயிலின் இப்போதைய வடிவம் விஜயநகர நாயக்கர் கலைப்பாணியின் அம்சங்கள் பொருந்திய கோலத்திலே காணப்படுகின்றது.
கோயிலின் முதலிருபிராகாரங்களும் கூரையால் மூடப்பட்டிருக்கின்றன. ஆலயம் கிழக்கு நோக்கியது. எனவே, அதன் பிரதான கோபுர வாசல் கிழக்கில் அமைந்திருக்கின்றது. இரு பக்கங்களிலும் 112 தூண்கள் காணப்படுகின்றன. வலப்பக்கத்திலே திருக்குளம் அமைந்திருக்கின்றது. அதனைச் சுற்றி இரு தளங்களைக் கொண்ட மண்டபம் காணப் படுகின்றது. அவற்றிற்கிடையிலே இலிங்கம், நந்தி
15

Page 161
மண்டபம்,கொடிக்கம்பம்போன்றவைகாணப்படுகின்றன. பிற நாயக்கர் காலத்துக் கோயில்களைப் போல அதிலுள்ள மண்டபங்களும் திருச்சுற்றுமாளிகைகளும் மிக விசாலமானவையாக அமைந்திருக்கின்றன. அவற்றிலே வரிசையாக அமைந்துள்ள தூண்கள் மிகவும் உயரமானவை. அத்துரண்களில் அமைந் திருக்கும் சிற்பங்கள் மதுரையிலுந் திருவரங்கத்திலும் உள்ளவற்றின் வனப்பைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும், கோபுர வாசலின் முன்னால் அமைந் திருக்கும் மண்டபத்திலே புராணக் கதைகளையும் கடவுளரின் கோலங்களையும் விளக்கும் உன்னதமான நாயக்கர் காலச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
இராமேஸ்வரம்
இந்துக்களின் மிகப் புனிதமான தலங்களுள் ஒன்றாக விளங்கும் இராமேஸ்வரத்திலே மிக விசாலமான கட்டட அமைப்புகள் காணப்படுகின்றன. கோயில் வளாகத்தினுள் பல்வேறு காலங்களைச் சேர்ந்த வெவ்வேறு கோயில்களுங் கட்டடங்களும் அமைந்திருக்கின்றமை ஒரு குறிப்பிடத்தக்க அம்ச மாகும் அவை ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகளைச் சேர்ந்த கட்டடக்கலை வளர்ச்சியிணைப்பிரதிபலிக்கும் பான்மையில் அமைந்துள்ளன. சோழச் சக்கர வர்த்திகள் காலத்துக் கோயில்களும் பாண்டிய மன்னர் காலத்துக் கட்டடங்களும் விஜயநகர காலத்துத் திருப்பணிகளும் நாயக்கர் காலத்துக் கட்டடங்களும் சேதுபதிகளின் திருப்பணிகளும் அங்கே காணப்படுகின்றன.
இராமேஸ்வரம் கோயில் ஓர் உயரமான பீடத்தில் அமைந்திருக்கின்றது. அதனைச் சுற்றி மூன்று பிராகாரங்கள் உள்ளன. மூன்றாம் பிராகாரத்திற்கும் வளாகத்தின் வெளிப்புறச் சுவருக்கும் இடையில் இடைவெளியின்றிப் பூஞ்சோலைகளுந்தோப்புகளும் அமைந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கோயிலுக்கு வேண்டிய மலர்கள் கிடைக்கின்றன. சிலர் இந்தப் பகுதியை நான்காவது பிராகாரமாகக் கொள்வர். முதலாம் பிராகாரத்தினுட் பல கட்டடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே இராமநாதசுவாமி கோயிலும் திருக்காமகோட்டமான பர்வதவர்த்தினி
152

அம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன. அவற்றிற்கிடையே தென்புறத்தில் ஒரு சுவர் அமைந்திருக்கிறது. மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள பிராகாரம் 57,43 மீற்றர் நீளமும் 36.5 மீற்றர் அகலமுங் கொண்டுள்ளது. இராமநாதசுவாமி கோயில் 0.9மீற்ற உயரத்தில் அமைந்திருக்கின்றது. அதே உயரத்தில் நான்கு பக்கங்களிலுமுள்ள பிராகாரச் சுவர்களை ஒட்டியுள்ள மேடைகளில் தேவகோட்டங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே பரிவார தேவர்களினதும் வேறு தேவர்களினதும் படிமங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தைச் சுற்றியுள்ள திருநடைமாளிகை மங்கலவீதி என்னும் பெயரால் வழங்குகின்றது.
திருக்காமகோட்டத்தின் சுற்றுப்பிராகாரப் பகுதி 40.38 மீற்றர் நீளமும் 18.7 மீற்றர் அகலமுங் கொண்டது. அந்தப் பிராகாரத்தினுள் இராமநாதர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், விசாலாட்சியம்மன் கோயில், நடராசர் சந்நிதி, பர்வதவர்த்தினி சந்நிதி, இராமநாதசுவாமி கோயில், சோமாஸ்கந்தர் கோட்டம் முதலானவை அமைந்திருக்கின்றன. பிராகாரத்தின் நிலமட்டத்தில் கல் அடுக்கப்பட்டுள்ளது. இராமநாதசுவாமி கோயில் விமானம் முத்தள விமானமாகும். மூலஸ்தானம் 10.3 மீற்றர் நீளமுடைய பக்கங்களைக் கொண்ட சதுரமாகும். மூலஸ்தானம் அடியிலிருந்து பிரஸ்தரம் வரை 4.3 மீற்றர் உயரங் கொண்டதாகும். கர்ப்பக் கிருகம், அர்த்த மண்டபம் ஆகியவற்றிற்கிடையே அந்தராளம் அமைந்திருக்கின்றது. அர்த்த மண்டபத்திற்கு முன்னால் அளவிற் பெரியதான மகாமண்டபம் அமைந்திருக்கின்றது. அது 40.76 மீற்றர் நீளமும் 26.23 மீற்றர் அகலமுங் கொண்டுள்ளது. அதிலே வரிசையாக அமைந்த தூண்கள் பல உள்ளன. அது வழிபாடு செய்கின்ற அடியார்கள் கூடி நிற்கும் இடமாகும். அர்த்த மண்டபத்து வாயிற்கதவின் மேலே கஜலசுஷ்மியின் உருவம் அமைந்திருக்கின்றது. அதன் இரு புறங்களிலும் துவாரபாலகரின் உருவங்கள் காணப்படுகின்றன. கர்ப்பக்கிருகத்திலே மூல பேரன் என்று சொல்லப்படும் இலிங்கம் உள்ளது. அதனை இராமபிரானும் சீதாப்பிராட்டியாரும் தாபனம்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 162
பண்ணினார்கள் என்பது ஐதீகமாகும். அதன் காரணமாக அது இராமலிங்கம் என்று சொல்லப் படும். அது மணற்கல்லில் இருந்து செதுக்கிய வடிவமாகும். கர்ப்பக்கிருகத்திலே ஸ்படிக லிங்கம் ஒன்றும் அமைந்திருக்கின்றது. அதற்கு முதலில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
காசி விஸ்வநாதர் கோயில்
இராமலிங்கசுவாமி கோயிலுக்கு அண்மையிலே, வடக்குப் பக்கத்திலே காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. அது 52 மீற்றர் நீளமும் அகலமுங் கொண்ட சதுரமான அமைப்பாகும். அதிலே காணப்படும் இலிங்கத்தை காசியில் இருந்து கொண்டுவந்து அனுமார் தாபித்தார் என்று சொல்வர். கோயிலின் சுவர்களிலே வனப்புமிக்க சிற்பங்கள் காணப்படுகின்றன. அக்கோயில் இராமலிங்கசுவாமி கோயிலுக்குரிய மகா மண்டபத்தின் ஓர் அங்கமாக அமைந்திருக்கின்றது. வாசற்கதவின் இரு பக்கங் களிலும் உலோக வார்ப்பான துவாரபாலகர்களின் உருவங்கள் உள்ளன.
சோமாஸ்கந்தர் கோட்டம்
பிரதான கோயிலின் மகாமண்டபத்தின் தெற்குப் பக்கத்தில் அதனுடன் இணைந்த வண்ணமாகச் சோமாஸ்கந்தர் கோட்டம் அமைந்திருக்கின்றது. அது 49 மீற்றர் நீளமான பக்கங்களைக் கொண்ட சதுரமான அமைப்பாகும். அதிலுள்ள சுவர்களிலும் அழகிய சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரஸ்தரம் வரை உள்ள பகுதி 3.8 மீற்றர் உயரமானதாகும். கர்ப்பக்கிருகத்திலே உலோக வார்ப்பான சோமாஸ்கந்தரின் படிமம் அமைந்திருக் கின்றது. வாசற்கதவின் இரு பக்கங்களிலும் உலோகத்தில் அமைந்த துவாரபாலகர் படிமங்கள் உள்ளன.
மகாமண்டபத்திலே இராமர், இலக்குமணர், சீதாப்பிராட்டியார் ஆகியோரின் உலோகப் படிமங்களும் சீதாராமர் கல்யாணக்கோலமான உலோகப் படிமமும் கவிகை ஒன்றின் கீழ் அமைந்திருக்கின்றன. அத்துடன் அஞ்சலிபந்தமான கோலத்தில் அனுமாரின் உருவம் அமைந்திருக்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கின்றது. பிராகாரத்தினுள் அகஸ்தீஸ்வரலிங்கம், கந்தமாதனேஸ்வரலிங்கம் முதலான இலிங்க உருவங்கள் காணப்படுகின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்களின் உலோகப் படிமங்களும் எழுபத்திரண்டு சிவனடியார்களின் கற்சிற்பங்களுங் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
நடராசர் சந்நிதிகள்
கோயிலின் வடக்குப் பக்கத்திலே சிவமூர்த்தங்கள் அமைந்திருக்கும் இரண்டு சந்நிதிகள் உள்ளன. அவற்றிலொன்று அம்பல வாணர் சிவகாமசுந்தரி ஆகியோரின் திருக்கோயி லாகும். மற்றையது சிதம்பரேஸ்வரர் ஆலயமாகும். இவ்விரண்டிலும் சிவகாமி சமேதரான நடராசரின் உலோகப் படிமங்கள் உள்ளன.
விசாலாட்சி அம்மன் கோயில்
வடக்குப் பக்கத்திலே அமைந்திருக்கின்ற விசாலாட்சி அம்மன் கோயிலின் பகுதிகள் பல இரண்டாம் பிராகாரத்தை ஒட்டி அமைந்திருக் கின்றன. அதன் விமானம் ஏகதள விமானமாகும். சமீபத்திலே கோடி தீர்த்த மண்டபம் என்பது காணப்படுகின்றது. அதற்கு அண்மையிலே நர்மதேஸ்வரர், ஏகாதஸபுத்திரர் ஆகியோரின் படிமங்கள் உள்ளன.
இராமநாதசுவாமி கோயிலின் உட்பிராகாரச் சுவர்களிற் செம்மைப்படுத்தப்பட்ட கருங்கற்களாற் கிழக்கு வாசலின் சமீபத்திலே சூரியன், சந்திரன், உரோகிணி, கார்த்திகை, உஷா, பிரதி உஷா ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன. மகாமண்டபத்தினுடைய தென்கிழக்கில் சர்வதீர்த்தம் என்னும் கிணறு அமைந்துள்ளது. பிராகாரத்தினுள் ஆடல்செய் மண்டபம் என்னும் நடனமாளிகை அமைந்திருக்கின்றது.
நந்தி மண்டபம்
ஆலயத்தின் முன்னால், உட்பிராகாரத்தினுள்
அமைந்திருக்கும் நந்தி மண்டபம் வனப்புமிக்க கட்டட அமைப்பாகும். அதிலே மிகுந்த வனப்புடைய 38
153

Page 163
தூண்கள் உள்ளன. அளவில் மிகப்பெரியதான சுதையில் அமைக்கப்பட்ட நந்தியின் உருவம் அங்கு காணப்படுகின்றது. அது 6.9 மீற்றர் நீளமும் 3.6 மீற்றர் அகலமும் 5.25 மீற்றர் உயரமுங் கொண்ட கம்பீரமான வடிவமாகும். அதனைத் திருமலை நாயக்கரும் மகனாகிய கிருஷ்ணப்ப நாயக்கனும் அமைத்தனர் என்று கோயில் ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளது. நந்தி மண்டபத்திற்கருகிலே கொடிமரமும் பலிபீடமும் அமைந்திருக்கின்றன. ஏகதள விமானம் பொருந்திய விநாயகர் கோட்டமும் சுப்பிரமணியர் கோட்டமும் அதற்கண்மையில் அமைந்திருக்கின்றன. சுப்பிரமணிய சுவாமி கோட்டத்திற்கு முன்னால் உயரிய பீடம் ஒன்றிலே நவக்கிரக பீடம் அமைந்திருக்கின்றது.
பர்வதவர்த்தினி அம்மன் கோயில்
சோழர், பாண்டியர் காலங்களிலும் ஆகமப் பிரகாரமாகத் திருக்காம கோட்டத்தை மூலவர் கோயிலின் இடப்பக்கத்தில் அமைப்பது வழமை. ஆனால், விஜயநகர நாயக்கர் காலங்களில் இதற்கு எதிர்மாறான முறையிற் திருக்காம கோட்டத்தை அமைத்தனர். அக்காலத்தில் அம்மனை இறைவனின் வாமபாகினியாக அன்றி தகூழினபாகினியாகக் கொண்டனர். கலியாண வைபவங்களில் மாங்கல்ய தாரணத்திற்கு முன்புமணப்பெண்ணுக்கே முதன்மை உரியது என்ற கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கு ஏற்பட்டது. இராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி, திருக்குற்றாலம் முதலிய தலங்களிற் திருக்காம கோட்டம் மூலவர் கோயிலின் வலப்பக்கத்தில் அமைந்து விடுகின்றது. திருக்காமகோட்டம் அமைந்துள்ள பிரகாரப்பகுதி 40.4 மீற்றர் நீளமும் 18.7 மீற்றர் அகலமுங்கொண்டுள்ளது. கர்ப்பகிருகம், அர்த்தமண்டபம் ஆகிய இரண்டும் சுமார் 10 மீற்றர் நீளங் கொண்டவை. அவற்றின் அகலம் 4.6 மீற்றர் ஆகும். இறையகம் பிரஸ்தரம் வரை 3.9 மீற்றர் உயரங் கொண்டது. மூலஸ்தானத்திலே பர்வத வர்த்தினியின் படிமம் ஆசன நிலையில் அமைக்கப் பட்டுள்ளது. அர்த்தமண்டபத்து வாசலில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய ஆறு தூண்கள் உள்ளன. அவற்றோடு வேறு பல தூண்களும் அங்குள்ளன.
154

ஆலயத்தின் பின்னால் தென்மேற்கு மூலையிலே இரட்டை விநாயகரின் கோயில் இருக்கின்றது. இந்தக் கோயிலைச் சந்தான சௌபாக்ய கணபதி கோயில் என்று குறிப்பிடுவர். தென்மேற்கு மூலையிலே அனந்த சயனக் கோலத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் காணப் படுகின்றது.
சுக்கிரவார மண்டபம்
வெள்ளிச் சபுக்கை என்றும் நவசக்தி மண்டபம் என்றுஞ் சொல்லப்படும் நீள்சதுரமான சுக்கிரவார மண்டபம் அம்மன் கோயிலுக்கு முன்னால் அமைந்திருக்கின்றது. அதில் வெள்ளிக்கிழமை தோறும் திருவிழா நடைபெறுவதால் அது சுக்கிரவார மண்டபம் என்று சொல்லப்படும். அதிலே 32 தூண்கள் காணப்படுகின்றன. தேவியின் கோலங்களும் சேதுபதிகளின் உருவங்களும் அவற்றிலே சிற்பங்களாக வடிக்கப்பெற்றுள்ளன. கோயிலையும் மண்டபத்தையும் பிரிக்கின்ற சுவரிலே அஷ்டலசுஷ்மியின் வடிவங்கள் காணப்படுகின்றன. தென்கிழக்கு மூலையிற் சந்திரசேகரர், பிரமன், விஷ்ணு முதலியோரின் சிற்பங்கள் காணப்படு கின்றன. இந்த மண்டபத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலே தூண்வரிசைகள் அடங்கிய வேறொரு மண்டபம் உள்ளது. அதன் தூண்களிலே இராமரதும், அனுமாரதும், அடியார்கள் பலரதும் சிற்பவடிவங்கள் காணப்படுகின்றன. இரண்டாம் பிராகாரம் 16 மீற்றர் நீளமும் 94 மீற்றர் அகலமுங் கொண்ட சுற்றளவினை உடையதாகும். அதன் மதிற் சுவர்கள் 5.48 மீற்றர் உயரங் கொண்டவை. அதன் வடக்குப் பக்கத்திலே பாழடைந்த நிலையில் 32 தூண்கள் காணப்படு கின்றன. கோயிலின் மடப்பள்ளி இதன் தென்கிழக்கு மூலையில் அமைந்திருக்கின்றது. கங்கை, யமுனை, காயா, சூரியன், சந்திரன்,பிரம்மகத்திய விமோசனன் என்னுந் தீர்த்தக் கிணறுகள் வடக்குப் பகுதியில் உள்ளன. கிழக்குப் பகுதியிலே சங்க தீர்த்தம், சக்கர தீர்த்தம் என்னும் கிணறுகள் உள்ளன. இரண்டாம் பிராகாரம் விஜயநகர காலத்து திருப்பணியாகும். இராமேஸ்வரத்திலே மூன்றாம் பிராகாரத்தைச் சுற்றி
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 164
மிகப் பெரிய திருச்சுற்று மாளிகை அமைந்திருக் கின்றது. இதனைப் போன்ற அளவுடைய வேறொரு அமைப்பு தமிழகத்தில் வேறெங்கும் காணப்படுவ தில்லை. கோயிலைச் சுற்றி அமைந்துள்ள சுற்றுப் பாதையானது 17 அடியிலிருந்து 21 அடிவரை அகலமுடையதாகும். நில மட்டத்தில் இருந்து கூரைவரை அது 25 அடி உயரங்கொண்டதாகும். அதில் வரிசை வரிசையாகத் தூண்கள் அமைந் துள்ளன. கோயிலைச் சுற்றி அமைந்திருக்குந் திருச்சுற்றுமாளிகை முற்றிலும் கூரையினால் மூடப்பட்டுள்ளது. அது மி உயரமான தோற்றங் கொண்டது. 3,000 அடி நீளமான திருச்சுற்றுப் பாதையில் அமைந்துள்ள தூண் ஒவ்வொன்றும் 5 அடி உயரமுள்ள அடித்தளத்தில் அமைந்துள்ளது. தூண்கள் சராசரியாகப் பன்னிரண்டு அடி
g) LtUTLDT 60T 606).
மூன்றாம் பிராகாரம் தெற்குப் பக்கத்திலே 207 மீற்றர் நீளமும் வடக்குப் பக்கத்திலே 195 மீற்றம் நீளமுங்கொண்டுள்ளது. கிழக்குப்பக்கத்தில் அதன் நீளம் 130 மீற்றராகும். மேற்குப் பக்கம் 18 மீற்றர் நீளங் கொண்டது. அதில் எல்லாமாக 1,212 தூண்கள் உள்ளன. அது சொக்கட்டான் மண்டபம் என்றுஞ் சொல்லப்படும். சபாபதி கோயில், கந்தமாதனேஸ்வரம், இராமலிங்கப் பிரதிஷ்டை, சேதுமாதவர் கோயில், என்பனவும் அவற்றோடு சோழர் காலத்தில் அமைக்கப்பட்ட மூன்று கோயில்களுங் காணப்படுகின்றன. கல்யாண மண்டபம், அநுப்பு மண்டபம் என்னும் கட்டடங்களும் இதிலே காணப்படுகின்றன. அவை இரண்டும் சேதுபதிகள் காலத்துத் திருப்பணியாகும். பிற தலங்களிலுள்ள விஜயநகர நாயக்கர் காலத்து மண்டபங்களைக் காட்டிலும் இவை அளவிற் சிறியனவாகும். இராமேஸ்வரத்திலே மண்டபத் தூண்களிற் கடவுளர் படிமங்களும், ஆடல் மகளிர் படிமங்களும், விலங்குகளின் உருவங்களும் சிற்பங்களாக அமைந்துள்ளன. குதிரைகளின் மேலும் யானைகளின் மேலும் ஏறிச் செல்லும் வீரர்களதும் வேட்டைக்காரரதும் உருவங்கள் மிகுந்து காணப்படுகின்றன. தூண்களிலே பத்மாசனம், கருக்குப்பட்டை, பாதம்,பத்மமாலை, கண்டம்,கலசம்,
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

விருத்தம், தடி, கண்டம், கும்பம், கண்டம், பத்மம், பலகை, வீரகண்டம், போதிகை என்ற வண்ணமாகப் பகுதிகள் அமைந்திருக்கும். சதுரவடிவமான தூண்கள் பொதுவாக மண்டபங்களினதும் பிராகாரங்களினதும் சுமையைத் தாங்கி நிற்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. தூண்களிற் கருக்குப்பட்டை, பாதம் என்னும் பகுதிகளிற் சிற்பங்களும், அலங்கார வேலைப்பாடுகளும், மனிதரின் உருவங்களும் அமைந்திருக்கின்றன. தூண்கள் பிரமாண்டமான அளவு கொண்டவை. கனதியான சிற்பங்களைத் தாங்கும் பல பாகங்கள் இணைக்கப்பெற்ற கோலத்தில் அமைந்தவை.
கோபுரங்கள்
இராமேஸ்வரத்திலே நான்கு போபிரவாயில்கள் உள்ளன. கிழக்கிலும் மேற்கிலும் கோபுரங்கள் அமைந் துள்ளன. வடக்கிலுந் தெற்கிலும் கோபுரங்களின் அதிஷ்டானங்கள் மண்டுமே அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கோபுரங்கள் நாயக்கர் காலத் திருப்பணிகளாகும். கிழக்குக் கோபுரம் இரண்டாம் பிராகாரத்திற்கு முன்னால் அமைந்திருக்கின்றது. ஏழு தளங்களுடன் அமைந்துள்ள அக்கோபுரம் மிகுந்த வனப்புடனும் உறுதியுடனும் விளங்குகின்றது. அது பாண்டியர் காலத்து அதிஷ்டானம் ஒன்றிலே அமைந்திருக்கின்றது. அது கி.பி.1659 ஆம் தளவாய் சேதுபதியினால் அமைக்கப்பெற்றது என்பது ஒர் ஐதீகம். ஆயினும், சாசனக் குறிப்பின் அடிப்படையில் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமேஸ்வரத்திலே கோபுரம் ஒன்று காணப்பட்ட தென்று பேராசிரியர் இராமன் கருதுகிறார். மேற்குக் கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. உள்ளே அதன் பகுதிகள் சிதைவடையாத நிலையில் இருக்கின்றன. அதிலே மிக முக்கியத்துவம் வாய்ந்த சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பூதகணங்கள், இடபங்கள், கிருஷ்ணர், இராதை, ருக்மணி, ரிஷிபத்தினியர், பிக்ஷாடனர் ஆகியோரின் உருவங்கள் இந்தக் கோபுரத்தை அலங்கரிக்கின்றன.
இராமேஸ்வரம் வெவ்வேறு காலங்களில் அமைக்கப்பெற்ற பல கோயில்களையும் கட்டட
155

Page 165
அமைப்புகளையும் கொண்ட தலமாக விளங்குகின்றது. பத்தாம் நூற்றாண்டு முதலாகப் பதினெட்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் உருவாக்கப்பெற்ற கட்டடங்கள் அங்குள்ளன. மூன்றாம் பிராகாரத்திற்கு வெளியிலுள்ள கோயில்கள் சோழர் காலத்திற் குரியவை. கலியான மண்டபம், அனுப்பு மண்டபம் முதலானவை சேதுபதிகளின் காலத்தவை. ஏனையவை பெரும்பாலும் விஜயநகர நாயக்கர் காலங்களைச் சேர்ந்தவை. அங்குள்ள பிரதானமான கோயில்களும் அதிக வனப்பு மிக்கதான திருநடைமாளிகையும் திருமலை நாயக்கர், கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோர் காலங்களுக் குரியனவாகக் கருதப்படுகின்றன.
திருநெல்வேலிக் கோயில்கள்
நாயக்கர் பாணியில் அமைந்த இரு பெருங் கோயில்கள் திருநெல்வேலியிலும் பூரீ வில்லிப்புத் தூரிலுங் காணப்படுகின்றன. திருநெல்வேலியில் அமைந்த கோயில் இரட்டைக் கோயில். அவற்றில் ஒன்று ஈஸ்வரமாக அமைந்தது. மற்றையது திருக்காமக் கோட்டமான அம்மன் கோயிலாகும். அவை இரண்டும் 760 அடி நீளமும் 550 அடி அகலமுங் கொண்ட நீள் சதுரவடிவமான முற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு கோயில்களும் சம அளவிலான தளங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மூலஸ்தானத்திற்கு முன்னால் அந்தராளம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்பன அமைந்திருக் கின்றன. வெளிப்புறத்திலே ஒவ்வொரு பக்கத்திலும் பிராகாரச் சுவரின் நடுவிற் கோபுரம் அமைந்திருக் கின்றது. வரிசையான தூண்கள் அமைந்த மண்டபங்களும் ஆயிரங்கால் மண்டபமும் வெளிப் புறத்தில் அமைந்திருக்கின்றன. ஆயிரங்கால் மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும் கொண்டது. அதிலே 10 வரிசைகளில் 1,000 தூண்கள் காணப்படுகின்றன. திருநெல்வேலிக் கோயிலைப் போன்ற அமைப்புழரீவில்லிப்புத்தூரிலே காணப்படுகின்றது. அது நில மட்டத்தில் இருந்து உச்சிவரை செங்கற் திருப்பணியாக அமைந்திருக் கின்றது. பூச்சுக்களுக்குச் சுண்ணாம்பைப் பயன்
155

படுத்தியுள்ளனர். அதன் கோபுரம் 13 தளங்களுடன் உயரமாக எழுந்து நிற்கும் மண்டபத்தைப் போலத் தெரிகின்றது; அது 100 அடி உயரங்கொண்டதாகும். அதன் கூரை பெளத்த கோயில்களிலே காணப் படுவனவற்றை ஒத்திருக்கின்றது. நடுவிலே அது சூரியனைப் போன்ற தோற்றத்தில் அமைந்திருக் கின்றது. அதன் மூலைகள் குவிந்தும் மேற்புறம் வளைந்தும் அமைந்துள்ளன. தென்னிந்தியக் கோபுரங்களிலே அமைப்பிலுந் தோற்றத்திலும் தனிமை பொருந்தியதாக அக்கோபுரம் விளங்கு கின்றது.
நாயக்கர் காலக் கட்டடக்கலை வளர்ச்சியைப் பற்றிய இப்பகுதியில் சோ நாட்டுக் கோயில்கள் பற்றியுங் குறிப்பிடுவது அவசியமாகும். திருவாரூர் தியாகேசர் கோயிலும், தொண்டை மண்டலத்து வட ஆர்க்காடு மாவட்டத்து திருவண்ணாமலைக் கோயிலும் நாயக்கர் காலக் கட்டடங்களைக் கொண்டுள்ளன. திருவாரூர்க் கோயில் மிகவும் புராதனமானதாகும். தேவார காலத்திற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்குள்ள கோயில் சிறப்புற்று விளங்கியது. அங்குள்ள கோயில் கற்றளியாக அமைக்கப்பட்டது. காலப்போக்கில் புதிய அமைப்புக்களைப் பெற்றுப் படிப்படியாகக் கோயில் அளவிலே பெரிதாக வளர்ச்சியடைந்தது. திருவாரூரிலே தியாகேசருக்கும் வான்மீகேசருக்கும் தனித்தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கருவறைகள் ஏறக்குறைய 190 அடிநீளமும் 160 அடி அகலமுங் கொண்ட பிராகாரத்தினுள் அமைந்திருக்கின்றன. கட்டடங்கள் கிழக்கு நோக்கியவை. கிழக்குப் பக்கத்துச் சுவரின் நடுவிலே கோபுரவாசல் அமைந்திருக்கின்றது. அதன் மேல் அமைந்த கோபுரம் இராய கோபுரம்; அது பதினைந்தாம் நூற்றாண்டில் அமைக்கப் பெற்ற தென்று சொல்லப்படுகின்றது. இரண்டாம் பிராகாரம் 400 அடி நீளமும் அகலமுங் கொண்டுள்ளது. அதன் கிழக்கிலும் மேற்கிலுங் கோபுரங்கள் அமைந்திருக் கின்றன. மூன்றாம் பிராகாரம் ஏறக்குறைய960 அடி நீளமும் 730 அடி அகலமுங் கொண்டதாகக் காணப்படுகின்றது. அதன் கிழக்கு வாசலிலும் மேற்கு வாசலிலும் பிராமாண்டமான கோபுரங்கள்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 166
அமைந்திருக்கின்றன. மூன்றாம் பிராகாரத்தில் ஆயிரங்கால் மண்டபம் ஒன்ற கட்டி முடிக்கப்பெறாத நிலையிற் காணப்படுகின்றது. வெளிப்பிரகாரத்தின் கிழக்குக் கோபுரம் வேலைப்பாட்டில் அதி சிறப்புமிக்க கோபுரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. அது பதினெட்டம் நூற்றாண்டின் முற்பகுதியிலே அமைக்கப்பட்டதென்றுகொள்ளலாம். அக்கோபுரத்தில் கீழ்த்தளங்கள் மூன்றும் அலங்காரமான தோற்றத் துடன் அமைந்திருக்கின்றன. அவற்றிலே காணப் படும் அரைத்தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளும் அளவிலே பெரியனவாகவும் வனப்புடையனவாகவும் விளங்குகின்றன. அவற்றுக்கு மேலுள்ள தளங்கள் இரண்டில் மாடக்குழிகளும் கருமை நிறங்கொண்ட வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
வாeநரில் ஒன்ாள்ை ஒன்றாக அமைர் ருவாரூ ஒனறனுள ஒனறாக அமைந திருக்கும் மூன்று பிராகாரங்களிலும் கோபுரங்கள்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

சிறப்பாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். திருவண்ணாமலைக் கோயிலும் அமைப்பில் அதனைப் போன்றதாகவே காணப்படு கின்றது. அதன் வெளிப்பிராகாரத்துக் கோயில்கள் நாயக்கர் காலத்திற்குரியவை.
நிறைவாக தஞ்சை இராஜராஜேஸ்வரமுடையார் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோயிலைக் குறிப்பிடலாம். அது 120 அடி நீளமும் 35 அடி அகலமுங் கொண்ட கட்டடமாகும். அதிலே 55 அடி உயரமுடைய விமானங் காணப்படுகின்றது. கலையழகிலே சோழரின் மகோன்னதமான ஆலயத்தின் இணையிலா விமானத்தின் வனப்பிற்கு நிகரான வகையில் இக்கோயிலின் விமானத்தைப் பதினெட்டாம் நூற்றாண்டிலே தமிழகத்துக் கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர்.
157

Page 167
விஜயநகர கா சிற்பக்கலை
விஜயநகர மன்னர்கள்
ர்ேநாடகத்தைச் சேர்ந்த பெல்லாரி மாவட்டத்திலே ஒசுப்பேட்டை என்னும் ஒர் ஊர் உள்ளது. அதில் இருந்து 12 கிலோமீற்றர் தூரத்தில் ஹம்பி என்ற சிற்றுார் காணப்படுகின்றது. அதுவே சுமார் 700 வருடங்களுக்கு முன்பு விஜயநகரம் என்னும் பெயராற் சிறப்புற்று விளங்கியது. அங்கே பெருநகரம் ஒன்றின் அழிபாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. விஜயநகரம் சங்கம சகோதரர்களினாற் பதினான்காம் நூற்றாண்டிலே இராச்சியம் ஒன்றின் தலைநகரமாக அமைக்கப்பட்டது. தென்னாட்டு இந்துக்களைத் துருக்கியர் ஆதிக்கத்திலிருந்துபாதுகாத்துக்கொள்வதற்கென்றும் இந்து சமயத்தையும் அதனைச் சார்ந்த கலாசாரத்தையும் காப்பாற்றுவதற்கும் அந்த இராச்சியம் அமைக்கப்பட்டது. காலப்போக்கிலே அது விஸ்தாரமாகிப் பெரும் பேரரசாகியது. கர்நாடக தேசத்தின் பெரும்பகுதியும் தமிழகமும் தெலுங்கு தேசத்தின் பல பாகங்களும் அதில் அடங்கியிருந்தன. கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக் காலத்தில் விஜயநகரத்தின் ஆதிக்கம் உன்னத நிலையிலே காணப்பட்டது.
சங்கமர் (1336 - 1486), சாளுவர் (1418 - 1505), துளுவர்(1505-1570), ஆறவீடு(1572-1649)என்னும் வம்சங்களைச் சேர்ந்த மன்னர்கள் வரிசைக்கிரமமாக விஜயநகரத்தை ஆட்சி புரிந்தனர். பொதுவாக அவர்கள் எல்லோரும் கலை வளர்ச்சிக்கு ஆதரவு புரிந்தனர். இரண்டாம் தேவராயன் (1422 - 1446),
158

கலாநிதி இராசு காளிதாஸ்
மல்லிகார்ச்சுனன் (1447-1465), வீரநரசிம்மன் (1505 - 1509), பூரீரங்கன் (1572-1585) முதலிய பேரரசரின் காலங்களில் இலக்கியம், கட்டடக்கலை, சிற்பக்கலை போன்றவற்றில் உன்னத வளர்ச்சிகள் ஏற்படலாயின. கி.பி. 1565ஆம் ஆண்டு தலைக்கோட்டையில் நடந்த போரிலே தக்கணத்துச் சுல்தான்கள் ஐவரும் ஒன்றுகூடித் தாக்கி விஜயநகரத்தை அழித்தனர். துளுவர்களின் ஆட்சிக்கால முடிவில் இப்பெருங்கேடு நிகழ்ந்தபோதும் ஆறவீடு வம்சத்தவர் தோன்றி விஜயநகரப் பேரரசைப் புனர்நிர்மாணஞ் செய்தனர். சாளுவர் காலத்திலே கேழதி, இக்கேரி, மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என்பவற்றிலே நிறுவப்பட்ட நாயக்க வம்சத்தவர் விஜயநகர காலத்துக் கலாசார மரபுகளைப் பேணிப் போற்றி அவை மேலும் அபிவிருத்தி அடைவதற்கு வழிவகை செய்தனர். தென்னிந்தியக் கலை வரலாற்றைப் பொறுத்த வரையில் நாயக்கர் காலம் விஜயநகரப் பண்புகளின் தொடர்ச்சிக் காலம் ஆகும்.
விஜயநகர அழிபாடுகளும் சிற்பங்களும்
ஒசுப்பேட்டையில் இருந்து பேருந்திலே பிரயாணஞ் செய்து, முதுவீரண்ணா என்று அழைக்கப்படும் வீரபத்திரன் கோயிலருகிலே இறங்கி நடந்து சென்றால் விஜயநகரத்துக் கட்டடங்களினதும், சிற்பங்களினதும் சிறப்பினை அழிபாடுகளின் மூலம் கண்டறியலாம். வீரபத்திரர் கோயிலிலே மிகப்பெரிய சிற்பங்கள் சில காணப்படுகின்றன. வீரபத்திரர், இலக்குமி, நரசிம்மர், கடுகுகணபதி, சிவலிங்கம், நந்தி ஆகிய
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 168
உருவங்களைக் காணலாம். வீரபத்திரரின் கோலம் உத்தாரமானது. படிமம் ஸ்தானக நிலையில் அமைந்துள்ளது. கரங்கள் ஒவ்வொன்றிலும் கத்தி, வில், அம்பு கேடயம் என்பன அமைந்திருக்கின்றன. கனல் தெறிக்குங் கண்களுடன் தக்கனைத் தண்டித்த வீரபத்திரரை அந்நாட்களிலே போர்க் கடவுளாக வழிபட்டனர். கன்னட-தெலுங்கு நாயக்கர் வீரபத்திரரைத் தம் குலதெய்வமாகப் போற்றினார்கள். அந்த மரபு இன்று வரை நிலவி வருகின்றது.
விஜயநகரச் செல்வாக்கு கர்நாடகத்திற்கு அப்பாற் பரவியபொழுது தமிழகம், தெலுங்கு தேசம், கலிங்க தேசம் ஆகியவற்றிலும் வீரபத்திரர் வழிபாடு அதிக செல்வாக்கினைப் பெறத் தொடங்கியது. வீரபத்திரரின் படிமங்களைத் தென்னிந்தியா முழுவதிலுங் காணமுடிகின்றது. உதாரணமாகத் தெலுங்கு தேசத்திலே லெபாஷி, பூநீசைலம் என்பவற்றிலே வீரபத்திரருக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலே மதுரை, தாடிக்கொம்பு என்னுமிடங்களில் வீரபத்திரரின் சிற்பங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. விஜயநகரத்திலே காணப்படும் உத்தான வீரபத்திரரைச் சதாசிவராயரின் ஆட்சிக் காலத்தில் 1545இல் பிரதிஷ்டை செய்தனர். ஆயினும், வீரபத்திரர் வழிபாடும் அதற்குரிய வழிபாட்டுச் சின்னங்களும் தென்னிந்தியாவிலே அதற்கு முன் நெடுங்காலமாக நிலைபெற்றுள்ளன. உத்தான வீரபத்திரரின் கோலம் மிகப்பெரியது. எனினும், அவர் பள்ளி கொள்ளுங் கோயில் அளவிற் சிறியதாகும். அது முதுவீரம்மன் கோயில் என்று குறிக்கப்படுகின்றது. இந்நாட்களிலும் அங்கு வழிபாடு நடைபெறுகின்றமை குறிப்பிடற் குரியதாகும். அக்கோயிலைத் தாண்டிச் சென்றதும் விஜயநகரத்தின் வானளாவிய பெருங்கோயில்களைக் காணலாம்.
நரசிம்மர்
நெல்லும் கரும்பும் விளைகின்ற வயல்கள் நடுவே
அமைந்துள்ள பாதை வழியே சிறு தூரம் நடந்து சென்றதும் விஜயநகரத்தினுட் பிரவேசிக்கலாம்.

அங்கு இடப்பக்கத்திலே இரு உருவங்கள் தென்படும். அவற்றிலொன்று யோகநிலையில் உத்குடிகா சனத்தில் அமர்ந்துள்ள இலக்குமி - நரசிம்மர் வடிவமாகும். மற்றையது நிலத்திலே நடப்பெற்றுத் தண்ணிரைப் பீடமாகக் கொண்டு தோன்றும் சலகண்ட மகாலிங்கம் என்பதாகும். நரசிம்மர் வழிபாடு மிகவும் புராதனமானது. குப்தர் காலக் குடபோகங்களிலே கருவறை மூர்த்தியாக நரசிம்மர் விளங்குகின்றார். மனித உடலின் அம்சமும், சிங்கத்தலையும் கூடி அமைந்தவர் நரசிம்மர். வைணவ மரபிலே நரசிம்மருக்குச் சிறப்பிடம் உண்டு. திவ்விய பிரபந்தப் பாசுரங்களிலே நரசிம்மர் போற்றப்படுகின்றார். பாண்டியர், பல்லவர் காலத்தில் நரசிம்மரின் வடிவங்கள் கோயில்களில் அமைக்கப் பட்டிருந்தன. நாமக்கல், ஆனைமலை, சிங்கப் பெருமாள் கோயில் என்பவற்றிலே கருவறையில் வீரநரசிம்மரின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.
போராற்றலின் உருவமாகிய வீரநரசிம்மரைத் தங்கள் அபிமானத்திற்குரிய கடவுளாக விஜயநகர மன்னர்கள் போற்றினார்கள். அவரின் நாமத்தைத் தங்கள் புதல்வர்கள் சிலருக்கும் சூட்டினார்கள். நரசநாயக்கர், சாளுவநரசிம்மன், இம்மடிநரசிம்மர் என்னும் பெயர்கள் அத்தகையனவாகும். அதர்மத்தை அழித்து நீதியை நிலைநாட்ட அவதாரம் செய்த வீரநரசிம்மர் தனது பணி நிறைவேறியதும் யோகநாயகராய் இலக்குமியுடன் அமர்ந்து விடுகிறார். பொதுவாக அந்த நிலையில் அவரின் படிமம் பத்திராசனத்தின் மேல் அமைந்திருக்கும். ஆனால், விஜயநகரத்தில் அவர் பாம்பணைப் பள்ளியில் வீற்றிருக்கிறார். அதே சமயம் இராசநாகத்தின் ஆறு படங்கள் அவரின் சிங்கத்தலைக்கு மேற் தோன்றுகின்றன. நாக படங்களுக்கு மேல் மேலும் சிங்கத்தலை தோன்றுவது படிமக்கலையில் ஒரு புதுமையாகும். மேலே காணப்படும் சிங்கமுகம் மகர தோரணத்தின் முடியில் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
கணபதி
கடுகு கணபதியாகிய விக்கின விநாயகர் பத்திராசனத்தின்மேல் லலிதாசனக் கோலத்தில் அமர்ந்திருக்கின்றார். கரங்களிலே அங்குசம், பாசம்,
159

Page 169
மோதகம், தந்தம் என்பன காணப்படுகின்றன. அவருடைய முடி கரண்ட மகுடமாகும். காதுகள் சுளகு போல் விரிந்த தோற்றமுடையவை. வயிறு மத்தளம் போன்றது. உதரபந்தம், உபவிதம் முதலான பல ஆபரணங்கள் தெரிகின்றன. கணபதி வழிபாடு குப்தர் காலம் முதலாக நிலவி வந்திருக்கின்றது. காணபத்யம் என்பது தனியொரு வழிபாட்டு நெறியாகவும் கொள்ளப்பட்டது. கர்நாடக தேசத்தில் கணபதி வழிபாடு சிறப்புப் பெற்றிருந்ததனை அவதானித்த வெளிநாட்டவர்களும் அதனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். துவாரசமுத்திரத்திலே அமைந்திருந்த விக்னேஸ்வரர் கோயிலைப்பற்றி தொமின்கோ பைஸ் என்னும் போர்த்துக்கேயர் வர்ணிக்கின்றார். அங்கே காணப்பட்ட மனித உடலும் யானைத்தலையும் தும்பிக்கையும் தந்தங்களும் கொண்டிருந்த படிமத்தைப் பற்றி அவர் வர்ணிக்கின்றார். இப்படிமத்திலே ஆறு கரங்கள் முன்பு இருந்தன என்றும், அவற்றில் இரண்டு விழுந்து விட்டன என்றும், எஞ்சிய இரண்டும் விழும் சமயத்திலே பிரளயம் நிகழும் என்றும் அங்குள்ளவர்கள் கூறியதாக அவர் குறிப்பிடுகின்றார். விநாயகருக்குத் தினந்தோறும் அமுது படைத்து வழிபாடு செய்தனர். அச்சமயத்தில் நாட்டியப்பெண்கள் உபசாரமாக நடனமாடுவது வழமை என்றும் அவர் குறிப்பிடு கின்றார்.
விருபாக்ஷர் கோயில்
விஜயநகரத்தின் வடபுறத்திலே கருங்கற் பாறைகளை ஊடறுத்துச் செல்லும் துங்கபத்திரை ஆறு ஓடுகின்றது. தென்மேற்கிலே ஹேமகூடம் என்னும் மலை காணப்படுகின்றது. அதன்மேலே கதம்ப - நாகர கலைப்பாணியில் அமைந்த சமண வஸ்திகளும் இந்துக் கோயில்களும் அமைந்திருக் கின்றன. தென்கிழக்கு மூலையிலே மாதங்கபர்வதம் என்னும் மலை உள்ளது. மேற்கிலே விரூபாக்ஷர் ஆலயமும் கிழக்கே அரசரின் சபாமண்டபமும் அமைந்துள்ளன. அவற்றிற்கிடையே அங்காடிகளில் அமைந்த கட்டடங்களின் அழிபாடுகளும் கடை வீதிகளின் சுவடுகளுந் தெரிகின்றன. விரூபாக்ஷர் ஆலயத்திற்கு வடக்கே பம்பாதேவி கோயில் அமைந்திருக்கின்றது. அது புராதனமானது.
160

கிராமவாசிகள் வழிபட்ட பம்பாதேவி என்னும் கிராமியத் தெய்வத்தை வழிபடுவதற்கென்று அது அமைக்கப்பட்டது. இரண்டாம் தேவராயரின் காலத்திலே (1422 - 1426) பிரமாண்டமான கட்டடமாக விரூபாக்ஷர் ஆலயம் அமைக்கப்பட்டது. விஜயநகர கலைப்பாணியில் அமைந்த கோயில்களில் அது உன்னதமான கட்டடமாகும். அதிலே யாளித் தூண்கள், அலங்கார மண்டபம், கோபுரங்கள், பிராகாரம் முதலிய அம்சங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. மகாமண்டபத்தின் முகட்டு விதானத்திலே சித்திரங்கள் வரையப்பெற்றிருந்தன. திரிபுராந்தகர், கலியாணசுந்தரர், கல்கி ஆகியோரின் உருவங்கள் சிறப்பான கோலத்தில் வரையப் பெற்றுள்ளன.
விஜயநகரப் பகுதிகளுங் கோயில்களும்
விரூபாகூடிர் ஆலயம் அமைந்த தானத்தை மையப்பகுதியாகக் கொண்ட விஜயநகரம் காலப்போக்கிலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றது. அதில் விரூபாகூடிபுரம், அச்சுதபுரம், விட்டலபுரம், கிருஷ்ணாபுரம், கமலாபுரம், வரததேவி அம்மன் பட்டினம், மலப்பனங்குடி, அநந்தசயனக்குடி, நாகலாபுரம், ஒசுப்பேட்டை, திருமலாதேவி அம்மன் பட்டினம் என்பன அதன் பகுதிகளாகும். அப்பகுதிகளிற் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றிலே அநந்தசயனக்குடி கோயில், மலப்பனங்குடி மல்லையா கோயில், பாலகிருஷ்ணன் பட்டினக் கோயில் என்பன குறிப்பிடத்தக்கவை. ஹேமகூட மலையிலும் பல இந்துக் கோயில்களும் சமணக் கோயில்களும் அமைந்திருந்தன. விரூபாக்கன் கோயில், மாதங்க மலைமேல் அமைந்த மாதங்கேஸ்வரர் ஆலயம், அச்சுதபுரத்து திருவேங்கல நாதன் கோயில், துங்கபத்திரைக் கரையிலே காணப்படுங் கோதண்டராமன் கோயில் ஆகிய கோயில்கள் மிகப் பிரசித்தமானவை.
அரண்மனை வளாகத்திலே சிறப்புமிக்க பல கட்டடங்களின் அழிபாடுகள் காணப்படுகின்றன. அரண்மனைக் கட்டடங்கள், தாமரை மஹால், ஹஸாரராம ஆலயம், தர்பார் வளாகத்தில் அமைந்திருக்கும் புஷ்கரணி, மகாநவமி மண்டபத்து
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 170
அதிஷ்டானம், கமலாபுரத்தருகிலுள்ள இரகுநாதன் கோயில், துங்கபத்தரையின் தென்கரையிலுள்ளதும் கல்லாலான இரதத்துடனும் கல்யாண மண்டபத்துடன் கூடியதுமான விசய விட்டலர் கோயில் ஆகியனவற்றின் சிற்ப வேலைப்பாடுகள் உன்னதமானவை.
வித்யாசங்கர் கோயில்
விஜயநகர கலைப்பாணிக்கு உன்னதமான எடுத்துக்காட்டாகச் சிருங்கேரியில் அமைந்துள்ள வித்யாசங்கர் கோயில் காணப்படுகின்றது. அது ஸப்தரத வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் கருவறையிலே மூலவர் மூவரின் உருவங்கள் உள்ளன. சாளுக்கியர் கலைப்பாணியின் அம்சங்களையும் கெழதி நாயக்கரின் கலைப்பாணியின் அம்சங்களையும் கொண்டுள்ள அற்புதக் கோலமான அந்த ஆலயம் ஒரு சிற்பக்கூடமாகச் சிறந்து விளங்குகின்றது. அது பத்திரா நதியின் கரையிலுள்ள சங்கர மடத்தின் பீடமாக விளங்கும் சிருங்கேரியைச் சேர்ந்ததாகும். இந்தியக் கட்டடக்கலை வரலாற்றில் அக்கோயிலுக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. சங்கரர் மடத்தின் அதிபரான வித்யாரண்யர் விஜயநகரத்தை அமைத்துக்கொள்வதில் சங்கம சகோதரர்களுக்குப் பெருமளவிலே ஆதரவு புரிந்தார். விஜயநகரத்தின் தோற்றம் பற்றிய மரபுவழிக் கதைகள் அவருக்குச் சிறப்பிடம் வழங்குகின்றன. அவரின் உருவச் சித்திரங்கள் ஒவியமாகவும் சுதைச் சிற்பமாகவும் விரூபாக்ஷர் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன.
இருதள பீடத்தில் அமைந்த வித்யாசங்கரர் கோயிலின் சுவர்ப்பகுதிகளிலே விநோதமான வடிவுகொண்ட சிற்பவரிசைகள் அமைக்கப் பட்டுள்ளன. சர்வதோபத்திரமாக நான்கு திசைகளிலும் வாயிலை ஒட்டிச்சிற்பங்கள் சீராக அமைக்கப்பட்டுள்ளன. திருமாலின் தசாவதாரங் களானவராகம், நரசிம்மம், மச்சம், கூர்மம் முதலியன அங்கு சிற்பக்கோலத்தில் உள்ளன. சமண தீர்த்தாங்கரரின் உருவங்களும் குதிரையின் மீது அமர்ந்த கல்கியின் வடிவங்களும் அங்கே காணப்படுகின்றன. தேவியை மடியில் வைத்திருக்குங்
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

கோலத்திற் பிரமனது உருவமும் ஏழுதலை ஆதிசேடன் மேல் அமர்ந்த இலக்குமி நரசிம்மரின் சிற்பமும் அங்குள்ளன. முகமண்டபத்திலுள்ள தூண்களின் சிற்பஅமைதிகள் மிகவுஞ்சிறப்புடையவை
விஜயநகர காலக் கோயில்களின் வடிவங்கள்
விஜயநகரம் கர்நாடக தேசத்திலே தோன்றிக் காலப்போக்கில் தென்னிந்தியப்பகுதிகள் பலவற்றை உள்ளடக்கிய பேரரசாக வளர்ச்சி அடைந்திருந்தது. தென்னிந்தியக் கட்டடக்கலை வளர்ச்சியில் விஜயநகரம் ஒர் ஆழமான முத்திரையைப் பதித்துள்ளது. விஜயநகர கலைப்பாணியில் திராவிட கலைப்பாணியின் செல்வாக்கு மேலோங்கியது. கர்நாடகத்துக் கோயில்களிலும் அதன் செல்வாக்கு மிகுந்தளவிலே ஏற்பட்டது. திராவிட கலைப்பாணியி லுள்ள கோயில்கள் ஆறு கோணமான அல்லது எட்டுக்கோணமாக சிகரத்தைக் கொண்டிருக்கும். பல்லவர் காலத்துக் கைலாசநாதர் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில் முதலிய ஆலயங்கள் நீளப்பாட்டிற் கர்ப்பகிருகம், அந்தராளம், அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகிய பகுதிகளைக் கொண்டிருந்தன. சோழர் காலத்திலே முக மண்டபம் எனப்படும் அக்கிரமண்டபம், நந்திபீடம், கொடிமரம், பலிபீடம், கோபுரவாசல் என்னும் அம்சங்களையும் கட்டட அமைப்பிற்சேர்த்துக் கொள்வது வழமையாகி விட்டது.
விஜயநகர காலத்திலே ஆலய வழிபாட்டிலும் கோயிற் கிரியைகளிலும் பல புதிய அம்சங்கள் சேர்ந்து விட்டதாற் கட்டடத்தைப் பிரமாண்டமான அமைப்பாக விஸ்தரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பிற்காலச் சோழர்கள் தில்லை நடராசரைக் குல தெய்வமாகப் போற்றினர். கோயில் என்றால் சைவ சமய மரபிலே பேரம்பலத்தைக் குறிக்கும் அளவுக்குச் சிதம்பரம் மிகச்சிறப்புடைய தலமாக வளர்ச்சி பெற்றது. முதலாம் குலோத்துங்க சோழன் காலம் முதலான மன்னர்களின் கட்டடத்திருப்பணிகளின் பயனாக அத்திருத்தலம் அதன் முன்னைய நிலையைக் காட்டிலும் ஆறு மடங்கு பெரிதாகியது. திருக்காமகோட்டம், நூற்றுக்கால் மண்டபம், நீராழி
161

Page 171
மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், எழுநிலைக் கோபுரங்கள், மூன்று சற்றுப்பிராகாரங்கள் என்பன அமைக்கப்பட்டன. அத்துடன் மூலஸ்தானத்திலே கவர்ச்சிபொருந்திய சித்திர வேலைப்பாடுகள் கொண்ட நடராசர் சிலையும் முதலாங் குலோத்துங்கனின் காலத்தில் அமைக்கப்பட்டமை குறிப்பிடற்குரியது. சிதம்பரம் கோயிலின் வடிவமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு விஜயநகர காலத்திலே தமிழகத்தின் பிரதான கோயில்கள் விரிவாக்கம் பெற்றன. எனவே, விஜயநகர கலைப்பாணி பற்றிப் பேசுமிடத்து திருக்காம கோட்டம், ஆயிரங்கால் மண்டபம், வானளாவிய கோபுரம், சுற்றுப்பிரகாரங்கள் ஆகியவற்றின் மீது கவனஞ் செலுத்த வேண்டும்.
விஜயநகர காலத்தில் மிகப் பெருமளவிலே படிமங்கள் உருவாக்கப்பட்டன. உலோகத்திலும் கல்லினாலும் மரத்தினாலும் கதையினாலும் சிற்பங்களையும் படிமங்களையும் விக்கிரகங்களையும் அலங்கார வடிவங்களையும் உருவாக்கி ஆலயங்களிலே அமைத்தார்கள். தேவ கோட்டப் படிமங்கள், உற்சவ விக்கிரகங்கள், மூலவர் படிமங்கள், விமானம், கோபுரம் ஆகியவற்றின் அலங்காரச் சிற்பங்கள் எனப் பல வகையான உருவங்கள் செய்யப்பட்டன. விஜயநகர காலத்தைப் போல முன்னைய காலங்களில் மிகப்பெரும் எண்ணிக்கையில் அவை அமைக்கப்படவில்லை. உதாரணமாகச் சொல்லின், ஒரு மரத்தேரிற் சராசரி 300 சிற்பங்கள் இருப்பின், தமிழகத்தில் 500 தேர்கள் இருக்கக் கூடுமாயின் எல்லாமாக 1,50,000 மர வேலைப்பாட்டிலமைந்த சிற்பங்கள் இருந்திருக்க வேண்டும் என்று கொள்ளலாம். அதே போல ஒரு கோபுரத்தில் 700 சுதைச்சிற்பங்கள் அமைந்திருக்கும் என்று கொண்டால், தமிழகத்தில் 500 கோபுரங்கள் இருந்தால் 3,50,000 சிற்பங்கள் வரை இருந்தன என்று கணக்கிடலாம்.
தேவிகாபுரம் பெரிய நாயகியம்மன் கோயில் முக மண்டபத்துத் தூண் ஒவ்வொன்றிலும் மூன்று நிலைச் சதுரப்பட்டையில் பன்னிரண்டு சிறிய கற்சிற்பங்கள் காணப்படுகின்றன. அம்மண்டபத்தில் முப்பது துண்கள் உள்ளன. அவற்றில் எல்லாமாக 432
162

கற்சிற்பங்கள் எழில் பொருந்திய வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளன. விஜயநகர காலத்து மண்டபங்கள் அனைத்தையுங் கணக்கெடுத்து, அவற்றிலுள்ள சிற்பங்களை அளவிடுவதற்குக் கணிப்பொறியாலும் இயலாது எனின் மிகையாகாது. அவற்றிலே காணப்படுஞ் சிற்ப விநோதங்கள் அதிசயமானவை. மதுரையிலே சுந்தரேஸ்வரர் கோயிலின் அருகிலுள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பஞ்சமுக நரசிம்மியும் மீசையுடைய முகமும் பருத்து அகன்ற மார்பகங்களை உடைய அலியின் சிற்பங்களுங்காணப்படுகின்றன. திருவண்ணாமலை ஆயிரங்கால் மண்டபத்தில் நடமாடும் நரசிம்மனைக் காணலாம். இவற்றைப் போன்ற உருவங்கள் பல தலங்களில் உள்ளன.
விஜயநகர மன்னர்களின் திருப்பணிகள்
விஜயநகரப் பேரரசர்கள் தென்னிந்தியாவின் பல பாகங்களிலே கோயிற் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டனர். பல தலங்களிலே பழுதடைந்த கோயில்களைப் புனராக்கம் செய்தனர். வேறு பல தலங்களிலே புதிய கட்டடங்களை அமைத்தனர். பொன் முதலிய உலோகங்களையும் வராகன் முதலான பொற்காசுகளையும்ஆலயத் திருப் பணிகளுக்கென்று ராயர்கள் வாரி வழங்கினார்கள். மூல மூர்த்திகளுக்கும் உற்சவ மூர்த்திகளுக்கும் ஆபரணங்களை நன்கொடையாக வழங்கினார்கள். நித்திய, நைமித்திய கருமங்களைச் செய்வதற்கென்று பல வகையான நன்கொடைகளைக் கோயில்களுக்கு வழங்கினார்கள். கோயில்களிலே மந்திரோபாசனை செய்வோர்க்கும் ஆராதனை செய்யும்பிராமணருக்கும் சிவயோகிகளுக்கும்பாகவதர்களுக்கும் சீவிதமாகவும் அன்னதானக் கொடைகளுக்கென்றும் நன்கொடை களை வழங்கினார்கள். சிலசமயங்களிலே திருவிழாக் காலங்களிலே ஆலய தரிசனம் பண்ணிச் சிறப்புச் செய்தனர். அவற்றைப் பற்றிய செய்திகள் பெரும்பாலுஞ் சாசனக் குறிப்புகளாக உள்ளன. கீழ்வருவன அவற்றுட் சிலவாகும்.
1. சக வருடம் 1315இல் (கி.பி. 1393) இரண்டாம் ஹரிஹரராயர் காஞ்சி காமாகூழி அம்மன் கோயிலுக்குத் தாமிர நிலைக்கதவு வழங்கினார் (EI-III, No.32, p. 230)
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 200

Page 172
சக வருடம் 1334இல் (கி.பி. 1412) அரிஹரராய உடையார் என்பவர் பவானி வட்டத்திலே பரிபாலகராக விளங்கிய காலத்தில் திருவரங்கநாதர் கோயிலுக்குத் தானங்கள் வழங்கினார். அமுது, கற்பூர ஆராதனை, நந்தாவிளக்கு, சந்தனக்காப்பு, மலர்மாலைகள், நறும்புகை, வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை இடுவதற்கென்று அறக்கட்டளை செய்தார். மேலும், நந்தவனம் ஒன்று இடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கே அன்னதானம் வழங்குவதற்கென்று அரிசி, பருப்பு, நெய், காய்கறி, மோர், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றைக் கிரமமாகக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. (El-XVI, No. 15,p. 226)
இரண்டாம் தேவராயனின் திருவரங்கச் செப்பேடுகள் கி.பி. 1428இல் அரங்கனுக்கு 12 நந்தா விளக்குகளும் மாலைகளும் வழங்கியமை ujpó5 G5fl66śśl6óTp60T. (EI-VVII, No.9,p. 117)
மல்லிகார்ச்சுனனின் திருவரங்கச் செப்பேடுகள் கி.பி. 1426இல் அரங்கனுக்கு நித்திய அன்னமும், தாம்பூலமும், மாலையும் வழங்கி சமபந்தி நிறுவித் தானஞ் செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலையும் குறிப்பிடுகின்றன. (EI-XVI, No.28, pp. 352-3)
இரண்டாம் விரூபாக்ஷனின் பூரீசைலம் செப்பேடுகள் கி.பி. 1466இல் நித்திய பூசைக்கும் (போகம்) விழாக்களுக்கும் பூமிதானம் வழங்கியமையினைப்பதிவுசெய்கின்றன. (El-XV, No. 2, p.25)
ஒசுப்பேட்டைக்கு அருகிலுள்ள சங்கலாபுரக் கல்வெட்டு கிபி.1513இல் கிருஷ்ணதேவமகாராயர் அங்கே கோடி விநாயகருக்கு வழிபாடு, தேர்த்திருவிழா, கோயிற்றிருப்பணிஎன்பவற்றுக்கு வழங்கிய தானங்களை வர்ணிக்கின்றது. (E-IV, No.38, p.269)
கிருஷ்ணதேவ மகாராயரின் பிரான்மலைக் கல்வெட்டு (கி.பி. 1518) அங்குள்ள நல்லமங்கை
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

12.
பாக சுவாமிஆலயத்திற்கு வழங்கிய நித்தியபோக தானங்களை அறிவிக்கின்றது. (El-XXI, No. 19, p. 124)
கிருஷ்ணதேவ மகாராயரின் சாசனமொன்று அசலாபுரி எனப்பட்ட கொண்டவீடு (ஆந்திரப் பிரதேசம்) நகரில் இராகவனுக்குக் கோயில் கட்டப்பட்டு, திருமதில், கோபுரம் என்பன எடுக்கப்பட்டமை பற்றித் தெரிவிக்கின்றது. தங்கத்தாற் படிமம் வார்த்து வழங்கப்பட்டது. மேலும்,மங்கள சைலத்திலே நரசிம்மன் கோயிலில் அரிக்குஇளங்கோயில்(பிராசாதம்)அமைக்கப்பட்டு, அதற்குத் தங்கக் கும்பங்கள் அணி சேர்க்கப்பட்டன.
மேற்படி ஆண்டில் மகாராயரின் மந்திரியான சாளுவதிம்ம கொண்டவீட்டில் இராம பத்திரனுக்குக் கோயில் கட்டி, ஒன்பது கலசங்கள் நிறுத்தி, கோபுரம், பிராகாரம், உத்சவ மண்டபம் இணைத்து, உத்சவ விக்கிரகங்கள், தங்க நகைகள்,முத்துமாலைகள் என்பவற்றைத்தானம் LIGdTGoofsOTITii. (EI-VI, No.32, p. 231)
கிருஷ்ணதேவ மகாராயரின் காஞ்சிபுரம் செப்பேடுகள், அவர் 1522இலே பல புனித தலங்களைத் தரிசித்துத் தானங்கள் வழங்கியமையினை வர்ணிக்கின்றது. சிதம்பரம், விருப்பாக்கம், திருக்காளத்தி, திருப்பதி, காஞ்சி, அகோபிலம்,சங்கமம்,திருவரங்கம்,கும்பகோணம், மகாநதிதீர்த்தம், நிவ்ருத்தி, கோகர்ணம், இராமசேது ஆகிய தலங்களுக்கும் மகாராயர் யாத்திரை போனதாகச் சொல்லப்படுகின்றது. (EI-XIII, No. 8, p. 132)
கிருஷ்ணதேவ மகாராயரின் உதயம்பாக்கம் சாசனம் (கி.பி. 1528) காஞ்சிபுரத்துச் சங்கராச்சாரியார் மடத்துச் சந்திரசேகர சரசுவதி ஆச்சாரியாரின் மாணவர் சதாசிவ சரசுவதிஅவர்களுக்கு வழங்கியகொடையினைக் s-gh. (EI-XIV, No. 12, p. 169)
அச்சுதராயரின் கடலாடி செப்பேடுகள் (கி.பி. 1529) அவர் திருக்கோகர்ணம், சங்கமம்,
163

Page 173
சிதம்பரம், சோனாத்ரி, விரிஞ்சிபுரம், காஞ்சி, திருக்காளாத்தி, கும்பகோணம் ஆகிய தலங்களிலுள்ள கோயில்களுக்கு வழங்கிய தானங்களின் விவரங்களைக் குறிப்பிடுகின்றன. (EI-XIV, No. 12, p. 169)
13. திருவரங்க நாதருக்குச் சிந்தாமணி என்னுங் கிராமத்தைச் சதாசிவராயர் மானியமாகக் கொடுத்தமை பற்றித் திருவரங்கத்திலுள்ள கல்வெட்டொன்று(கி.பி.1545) குறிப்பிடுகின்றது. (EI-XXIX, No. 9, p. 77)
14. அரங்கநாதருக்கு இரத்தினக்கற்கள் பதித்த கவசம், பீதாம்பரம், கழுத்துமாலைகள், உஷ்ணிசம், கிரீடம், குண்டலங்கள், கடிசூத்திரம் முதலியவற்றை வேங்கடபதி மகாராயர் வழங்கியமையினை வெள்ளங்குடி பட்டியம் (கி.பி. 1598) மூலம் அறியமுடிகின்றது. மேலும், தேரோட்டம், நித்திய சேவைகள் என்பனவற்றுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் இராயரால் வழங்கப்பட்டன.
இதுரை மேற்கோளாகக் கையாளப்பட்ட சாசனக் குறிப்புகள் கிடைக்கின்றவற்றில் ஒரு சிலவேயாகும். ஆயினும், அவை தென்னகம் முழுவதிலுமுள்ள பிரதானமான தலங்களுக்கு விஜயநகர ராயர்கள் காலாகாலம் யாத்திரை போனமைக்கும், அவற்றுக்குத் தானங்களை வழங்கி, ஆலய தருமங்களையும் கோயிற்கலைகளையும் பாதுகாத்த மைக்கும் சிறந்த உதாரணங்களாகும்.
விஜயநகர கலைப் பாணியில் அமைந்த கட்டடங்கள் பலவிடங்களில் உள்ளன. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தாடிபத்திரி என்னும் ஊரிலுள்ள இராமலிங்கேஸ்வரம் அவற்றில் ஒன்றாகும். அதில் ராயகோபுரங்களும்வேங்கடரமணனின்திருப்பணியான மகாமண்டபமும் உள்ளன. மூன்று மூலஸ்தானங்கள் அமைந்த திருகூடாசலம் என்னும் லெபாகூழிகோயில் விஜயநகர காலத்து ஆலயங்களில் ஒன்றாகும். அதில் இரகுநாதன், வீரபத்திரன், பாபவிநாசன் ஆகியோர் மூலவராயுள்ளனர். பேணு கொண்டாவி லுள்ள சிவன் கோயிலும் இராமர் கோயிலும்,
164

புஷ்பகிரியில் அமைந்திருக்கும் சென்னகேசவர், சந்தான மல்லேசுவரர், உமாமகேசுவரர் கோயில்களும் விஜயநகர காலத்தனவாகும். சோமபாலம் சென்னராயன் கோயிலும் அதன் மகாமண்டபம், கல்யாணமண்டபம் என்பனவும் அக்காலத்தனவாகும். சந்திரகிரியிலுள்ள ஒன்பது கோயில்களும் பூரீசைலம் மல்லிகார்ச்சுனர் கோயில், பிரமராம்பாள் கோயில் என்பனவும் திருப்பதியிலுள்ள பல கட்டடங்களும் விஜயநகர கலைப்பாணியில் அமைந்தவை.
விஜயநகரம் கி.பி. 1565இல் அழிக்கப்பட்டதும் ஆறவீடு வம்சாவழியினரான ராயர்கள் சந்திரகிரியை இராசதானியாகக் கொண்டனர். பின்பு, இராசதானி தமிழகத்தின் வடபகுதியிலுள்ள வேலூருக்கு மாற்றப்பட்டது. அவ்விரு நகரங்களிலும் விஜயநகர காலத்துக் கட்டடங்கள் உள்ளன. சாசனங்கள் மூலம் கோயில்கள் சிலவற்றைப் பற்றி மட்டுமே அறிந்து கொள்ளலாம். கோயில்களை அடையாளங் காண்பதற்கும், அவற்றின் தோற்ற வளர்ச்சிகளை கால வரிசையில் வரையறைப்படுத்திக் கொள்வதற்கும், இலக்கியங்களும் கர்ணபரம்பரைக் கதைகளும் ஒரு வகையில் ஆதாரமாயுள்ளன.
தென்னிந்தியக் கட்டடக்கலை வரலாற்று ஆராய்ச்சியாளரில் முன்னோடிகளான டூப்ரோயில், பெர்கஸன், பெர்ஸி பிரவுண், ஹவெல் நீலகண்ட சாஸ்திரிமுதலியோர் தமிழகத்திலுள்ள கோயில்களில் ஒரு சிலவற்றையே விஜயநகர கலைப்பாணிக் குரியனவாக அடையாளங் கண்டனர். வேலூர் சலகண்டடேஸ்வரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், வரதராசப்பெருமாள் கோயில், சிதம்பரம், திருவரங்கம், மதுரை மீனாகூழி அம்மன் கோயில் ஆகியவற்றிலுள்ள கட்டடங்களே விஜயநகர கலைப் பாணிக்குரிய உதாரணங்களாகக் கொள்ளப்பட்டன. ஆனால், உண்மையில் விஜயநகர காலத்துக் கோயில்கள் தமிழகத்துமாவட்டங்கள் எல்லாவற்றிலும் உள்ளன.
மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலே தாடிக்கொம்பு, அழகர்கோயில், ஆனைமலை,
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 174
திருமோகூர், திருவாதவூர்,திருப்பரங்குன்றம் போன்ற பலவிடங்களில் அக்காலத்துக் கோயில்கள் பலவற்றைக் காணலாம். இலக்கியக் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு விஜயநகர காலத்திற் குரியனவாகிய 200 கோயில்களை இ.கா.கே. இராசராசன் அடையாளங் கண்டுள்ளார்.
லெபாகூதியில் அமைந்திருக்கும் திரிகூடாசலக் கோயில் வீரபத்திரர் வழிபாட்டிற்குச் சிறப்பாகவுரிய தலமாகும். அங்கே, ஆதியில், விஜயநகரத்துப் பம்பாதேவியினை ஒத்தவொரு கிராம தேவதை வழிபாடு நிலவியதென்பர். இரத்தக் கண்ணி'என்ற தேவதையின் வழிபாடு நிலவியதன் காரணமாக லெபாகூழி என்னும் பெயர் உருவானதென்று கருதலாம். ஆயினும், சமஸ்கிருத மொழியில் லேப என்றால் ஒட்டுதல், மூதாதையருக்குப் பிண்டம் வழங்கிக் கையைத்துடைத்தல் அல்லது தீட்டு என்று பொருள்படும். லேபயாகின் என்பது தந்தைவழி 4 முதல் 6 வரையான தலைமுறையிலுள்ள மூதாதையரைக் குறிக்கும். உலோகத்தாலான கண்கள் ஒட்டப்பட்ட விக்கிரகத்தின் மூலம் வழிபடும் தேவதையொன்றினை லெபாகூழி என்று குறிப்பிட்டனர் என்றுங் கருதலாம். இன்றும் நாட்டுப்புறங்களில் இவ்வழக்கு நிலவுகிறது. அத்துடன் பிதிர்களுக்கு ஆண்டுதோறும் செலுத்தும் கடன்களை ஏற்கும் தேவையாகவும் லெபாகூழியைக் கொள்ளலாம். இத்தலத்திலே தக்கனைச் சங்காரம் பண்ணிய வீரபத்திரர் முதலிடம் பெறுவதால் லெபாகூழி உமையோடு தொடர்புடையவளாகலாம். தகூடிபிரஜாபதி உமையின் தந்தையாவான். சிவனின் உக்கிராம்சமாகிய வீரபத்திரனுடன் தொடர்புடையவன் என்பதால் லெபாகூழி காளியாதலுங் கூடும்.
நாகலிங்கம் லெபாகூழியிற் காணப்படும் மிகப்பெருஞ் சிற்பங்களில் ஒன்றாகும். மூன்று தளமாக அமைந்த நாகத்தின் சுருள்களின் மேல், ஏழு படங்களுக்குக் கீழே யோனியுடன் அமைந்த லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வகையான நாகலிங்கங்கள் விஜயநகர காலம் முதலாக வழிபடப்பட்டன. கல்யாண மண்டபத்திலே அமைந்திருக்கும். கல்யாணசுந்தரரின் சிற்பம் வனப்பு மிக்கதாகும்.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

திருக்கைலாய மலையிலே கல்யாண வைபவம் நடைபெறுவது போன்ற காட்சி வடிவமைக்கப் பட்டுள்ளது. சபையிலே பிரமன், திருமால், முனிவர்கள், அட்டதிக்குப் பாலகர் முதலியோர் அமர்ந்திருக்கின்றனர்.
இங்குள்ள மண்டபங்களிற் கிராத வடிவிலே பன்றியை வேட்டையாடும் சிவன், பாய்ந்து கிராதனைத் தாக்கும் வராகம், சிவனிடமிருந்து ஆத்மலிங்கத்தைப் பெறும் இராவணன், கைகூப்பிய கோலத்தில் மனித உடலும் மாட்டுத்தலையின் வடிவமும் பொருந்திய நந்திதேவர், அகன்ற கண்களும் மீசையும் அமைந்துள்ள கோலத்துடன் வாளுடன் தோன்றும் வீரபத்திரர், கோரமான பார்வையுடன் வாயைப் பிளந்த வண்ணமாகத் தோன்றும் யோகநரசிங்கரின் சித்திரங்கள் என்பன ஒவியங்களாக வரையப்பட்டடுள்ளன.
இவற்றிலே சிறப்பு மிகுந்த சித்திரமாக விளங்குவது ஐந்து முகங்களும் - பத்துக் கரங்களுமுடைய மகாவிஷ்ணு உருவமாகும். கிரீட மகுடங்களையும் பீதாம்பரத்தையும் அடிப்படையாகக் கொண்டு அதனை விஷ்ணுவின் கோலமென்று அடையாளங் காண முடிகின்றது. முன்னிரு கரங்களும் அபய வரத கரங்களாய் உள்ளன. பின்னுள்ள கரங்களிற் சங்கு, சக்கரம், அம்பு, வில், வச்சிராயுதம், உடுக்கை என்பன உள்ளன. மும்மூர்த்திகளிலே தாமே முதலான மூர்த்தி என்ற நிலையில் விஷ்ணு தோன்றுகிறார். திருமாலை மூவரில் முன்முதல்வன்' என்று பெரிய திருமொழி வர்ணிக்கின்றமையுங்கவனித்தற்குரியது. வீரபத்திரன் கோயிலில் விலங்கு வடிவத்திலே காணப்படும் நந்தி ஒரு அலங்கார வேலைப்பாடாகும்.
தூண்களில் அமைந்த சிற்பங்கள்
விஜயநகர காலத்திலே தூண்களிற் சிறிய சிற்பங்களை வடிக்கும் முறை விருத்தியடைந்தது. பெரியபுராணத்திலே வரும் சிறுத்தொண்டர் கதை. கிராதார்ஜுனியக் கதை முதலானவற்றின் அம்சங்கள் தூண்களிலே சிற்ப வடிவங்களாக அமைக்கப்பட்டன. சிறுத்தொண்டருக்குச் சிவன்
165

Page 175
பிள்ளை வரம் அருள்வது, சிராளனின் பிறப்பு, சிவன் அன்னதானங் கேட்டு வருதல், சீராளனின் தலை வெட்டப்படுவது, வைராகியான சிவன் அன்ன முண்பதற்கு ஆசனத்தில் அமர்தல், சிவன் பார்வதி சமேதராய்க் காட்சி கொடுத்துச் சீராளனை உயிர்மீட்டல், சிறுத்தொண்டருக்கு அருள் புரிதல் போன்ற காட்சிகள் தூண்களிலே சிற்ப வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகச் சைவ சமய மரபிலுள்ள சிறுத்தொண்டர் புராணக் கதையினை அடிப்படையாகக் கொண்ட சிற்ப வடிவங்கள் ஆந்திரப்பிரதேசத்திலும் கர்நாடகத்திலும் அமைக்கப் பட்டுள்ளன.
அர்த்தமண்டபத் தூண்களிலே பலவிதமான சிறிய சிற்பங்கள் அமைக்கப்பட்டன. உமாதேவியார், கணபதி, நந்திதேவர் ஆகியோருடன் ஆனந்த தாண்டவம் புரியும் நடராசர், துர்க்கை, திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள், காலகாலன், சாலபாஞ்சிகை முதலியோரின் உருவங்கள் லெபாகூழி முதலிய கோயில்களிற் காணப்படுகின்றன.
மண்டபங்கள்
விஜயநகர காலத்து மண்டபங்கள் பலவற்றிலே யாளித்துரண்கள் அலங்காரக் கோலத்துடன் அமைக்கப்பட்டன. பூரீசைலத்து மல்லிகார்ச்சுனர் ஆலயத்தின் பிரமராம்பாள் தேவியின் முகமண்டபம் யாளித்துரண்கள் பொருந்திய ஒரு அலங்கார வேலைப்பாடாகும். விஜயநகரத்து விட்டலசுவாமி கோயில் விரூபாக்ஷர் ஆலயம், ஹஸாரராமர் கோயில் என்பவற்றிலும், வேலூர் சலகண்டடேஸ்வரம், திருவரங்கம், பூரீவில்லிபுத்தூர், தாடிக்கொம்பு, திருமுட்டம் ஆகியவற்றிலுள்ள ஆலயங்களிலும் யாளித்துரண்களும் சிற்பவேலைப்பாடுகள் அமைந்த தூண்களுங் காணப்படுகின்றன.
ழரீசைலத்தில் அமைந்துள்ள கோயில் வளாகத்துச் சுற்றுமதில் அதில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகளின் காரணமாக மிகுந்த சிறப்பினைப் பெறுகின்றது. சிற்பங்களினாற் சிறப்புற்று விளங்கும் திருமதில்களையுடைய கோயில் அங்குள்ளதனைப் போல பரதகண்டத்தில்

வேறெங்குங் காணப்படுவதில்லை. அட்டமாசித்தி பெற்ற சித்தர்களின் சாதனைகளை விளக்கும் சிற்பங்கள் காணப்படுவதாற் பூரீசைலத்துக் கோயில் சித்தர்தலம் எனப்படும்.
ஊர்த்துவரேதசு என்னும் கோலத்திற் சமண தீர்த்தாங்கரரைப் போலச் சமபாதத்தில் நிற்கும் சிவன், மகிஷமர்த்தினியான அட்டபுயநாயகி, கதாயுதத்தை ஏந்திய கோலத்தில் அமைந்திருக்கும் யோகநரசிம்மர், இலிங்கத்திலிருந்து தோன்றி அக்கமகாதேவிக்கு அருள் பாலிக்கும் கோலமான சிவன் முதலியோரின் உருவங்கள் நுட்பமான வேலைப்பாடுகளாகும்.
திருக்குறுங்குடி, அழகர்கோயில், தாடிக்கொம்பு, விருத்தாசலம், கும்பகோணம், சேரன்மகாதேவி, திருவில்லிபுத்தூர், திருக்கோயிலூர், செஞ்சி, நாங்குனேரி, திருநெல்வேலி, திருவைகுண்டம், வந்தவாசி, அரியலூர், திருக்கண்ணமங்கை, குடுமியான்மலை, சுசீந்திரம், தாரமங்களம், தென்காசி, திருவானைக்கோயில், லால்குடி, திருப்புத்தூர், திருவொற்றியூர், மைலாப்பூர், திருவல்லிக்கேணி, திருப்புவனம் (மதுரை), சிதம்பரம் முதலிய தலங்களில் விஜயநகர கலைப்பாணியில் அமைந்த வேலைப்பாடுகள் உள்ளமை அண்மைக் கால ஆராய்ச்சிகளின் மூலம் தெளிவாகியுள்ளது. இத்தலங்கள் சிலவற்றிலே கட்டடங்கள் எல்லாம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. வேறு சிலவற்றிலே மண்டபம், கோபுரம், பிராகாரம் முதலிய அமைப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன. திருவரங்கம், திருப்பதி, அழகர்கோயில் ஆகியன, மிகப் புராதனமான வழிபாட்டுத் தலங்களாகும் ஆயினும் அவற்றிலே காணப்படும் பெருங்கட்டடங்களிற் பல விஜயநகர கலைப்பாணியில் அமைந்தனவாகும். ஆறுபடை வீடுகளிலுள்ள கோயில்களும் விஜயநகர காலத் திருப்பணிகளாகும்.
புராதன காலத்துக் குடவரைக் கோயில்கள் அமைந்திருக்கும் ஆனைமலை, திருப்பரங்குன்றம், திருக்கோகர்ணம், குடுமியாமலை, குன்றாண்டார் கோயில் முதலிய தலங்களில் விஜயநகர காலத்தில்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 176
ஆலயங்கள் விரிவாக்கம் பெற்றன. இக் கோயில்களில் மரம், கல், சுதை, உலோகம் என்பவற்றில் அமைக்கப்பட்ட எண்ணற்ற சிற்பங்கள் உள்ளன. இராமகாதை, ஹரிவம்சம், பாகவத புராணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் முதலியவற்றிலே காணப்படும் கதைகளை ஆதாரமாகக் கொண்டு பெருந்தொகையான சிற்பங்கள் இக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன.
நரசிம்ம அவதாரத்தின் பல்வேறு கோலங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தூணி லிருந்து மனித உடலும் சிங்கத்தின் தலையும் பொருந்திய கோலத்தில் நரசிம்மர் வெளிப்படுவதைத் திருவானைக்கா கோயிலிற் காணலாம். நரசிம்மர் இரணியனுடன் சமர் புரிதல், இரணிய சங்காரம், இலக்குமி - நரசிம்மர், அகண்ட பேரண்ட நரசிம்மர், நரசிம்மி முதலிய வடிவங்களைத் திருக்குறுங்குடி, விருத்தாசலம் போன்ற தலங்களிற் காணலாம்.
விஜயநகர காலத்துச் சிற்பங்களிலே திருமாலின் தசாவதாரக் கோலங்கள் குறிப்பிடத்தக்கவை. சிருங்கேரி, அழகர்கோயில் ஆகிய இடங்களில் பத்து அவதாரங்களையும் விளக்குஞ் சிற்பங்கள் ஒரே வரிசையில் உள்ளன. மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், இராமாவதாரம் ஆகியவற்றின் வடிவமான சிற்பங்கள் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயில், மதுரைக் கூடலழகர் கோயில் ஆகியவற்றில் அமைந்திருக்கின்றன. திருவிளையாடற் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட சிற்பங்கள் மதுரை மீனா கூதி சுந்தரேஸ்வரர் கோயிலும் பெரியபுராணக் கதைகளை விளக்குஞ் சிற்பங்கள் தேவிகாபுரத்திலும் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற் புராணத்தில் வர்ணிக்கப்படும் மும்முலைத் தடாதகை சுந்தரேஸ்வரரைப் போருக்கு அழைக்கும் காட்சி மதுரை மீனாகூதி அம்மன் கோயிற் புதுமண்டபத்திலே வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்முலைத் தடாதகை மகிஷமர்த்தினியின் கோலமாகி எருமைத் தலைமேற் காலூன்றி நிற்கும் காட்சி திருப்பரங்குன்றத்துக் கல்யாண மண்டபத்திலே சிற்பக் கோலமாக அமைந்துள்ளது.
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

மச்ச-கூர்ம-வராக கர்வபங்க மூர்த்தி என வர்ணிக்கப்படும் சிற்ப வடிவங்களை சைவக் கோயில்கள் சிலவற்றிலே காணப்படுகின்றன. சிவன் அல்லது முருகன் மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் ஆகிய அவதாரங்களின் கர்வத்தை அடங்குங் கோலத்தைப் பிரதிபலிக்குஞ் சிற்பங்கள் சில கோயில்களில் உள்ளன. தமது அவதார காரியம் முடிந்தும் சினந்தணியாது உலகில் இடர் புரிந்தமையின் காரணமாகத் திருமால் தண்டனை பெற்று மீட்சி பெற்றார் என்ற கதைகள் காலப் போக்கில் உருவாகின. சரபபராணக் கதைகள் அத்தகையனவாகும். அழகுமலைத் தேரில் முருகன் வராகத்தை வதைப்பதும், மீட்கப்பட்ட திருமால் சங்கு, சக்கரம் என்பவற்றை ஏந்திய நிலையில் அஞ்சலிபந்தமாக நிற்குங் கோலமும் தெரிகின்றது. இதே போன்ற காட்சியைத் திருவாரூர் முருகன் தேரிலுங் காணலாம். நரசிம்மர் இரணியவதம் புரிந்த மகாதேவர், நரசிம்மரை அடக்குவதற்கென்று தோன்றியவர் சரபமூர்த்தி. சரபத்தில் மானிட அம்சங்களோடு விலங்கு, பறவை என்பவற்றின் அம்சங்களுஞ் சேர்ந்துவிடுகின்றன. சீறிய சிங்கம் சரபனிடம் படும்பாட்டைச் சிற்பத்திற் காண்பது விந்தையான காட்சியாகும்.
திருமால் அவதாரங்களின் எலும்புகளைக் கங்காளமாகக் கட்டிச் சுமந்து செல்பவர் கங்காளமூர்த்தி. சிவன் சரபமாகி நரசிம்மனை அடக்கினானென்று சைவர் கொள்வதால், வைணவர் நரசிம்மரை அட்டமுக அகண்ட பேரண்டம் என்னும் எட்டுத் தலையுடைய அகண்ட பேரண்ட பறவையாக்கிச் சிவனைத் தண்டிப்பதாகச் சிற்பம் படைத்தனர். இத்தகைய நான்கு வடிவங்களை எம்மால் அடையாளங் காண முடிந்தது. வில்லியனூர் கணபதி தேர், திருவில்லிபுத்தூர் ஆழித்தேர், திருவரங்கத்து நரசிம்மன் இளங்கோயில் ஒவியம், திருவரங்கத்துத் தெற்குத் தெருவீதியிலுள்ள கோபுரத்துச் சுதைச் சிற்பம் என்பவற்றில் அவை காணப்படும்.
அட்டமுக அகண்ட பேருண்ட வடிவத்தில் சிங்கம், புலி, குதிரை, பன்றி, குரங்கு, கழுகு, கரடி,
167

Page 177
பாம்பு என்பவற்றின் முகங்கள் உள்ளன. புலி தவிர்ந்த ஏனைய யாவும் வைணவ சம்பந்தமானவை என்பது புராணக் கதைகளால் அறியப்படும். சைவத்துடன் தொடர்புடையதான புலி வடிவம் அட்டமுக அகண்ட பேரண்டத்தோடு சேர்ந்து கொள்வதும் வியப்பிற் குரியதன்று. ஐமுக நரசிங்கனைச் சிவாம்சமாகச் சாத்திரங்கள் கொள்வதுண்டு. ஒவ்வொரு முகத்திலும் சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவற்றின் அடையாளமான முக்கண் அமைந்திருக்கும். இராமரின் உத்தம பக்தனாகிய அனுமனையும் சிவாம்சமாகக் கொள்வர்.
காமக் கோலங்கள்
இந்து சமய மரபிலே ஆன்மா இறைவனை அடைவதற்கு (1) யோக மார்க்கம், (2) போகமார்க்கம் என்னும் இரு வழிகள் உள்ளன என்று கொள்ளப்படும். தவம், புலனடக்கம், ஞானம் என்பவற்றால் பிரமத்தை அடைவது யோக மார்க்கமாகும். தந்திர முறையினைச் சாதகன் போகத்திலே மூழ்கிப்பரத்தைக் காண்கிறான். போக மார்க்கத்திற் செல்வோர் மச்சம், மாமிசம், மது, முத்திரை, மைதுனம் என்னும் பஞ்ச மகரங்களையும் ஒப்புக்கொள்வர். காபாலிகர், காளாமுகர், சாக்தர் முதலாயினோர் போக மார்க்கத்தில் நின்றனர். வங்கதேசம்,கலிங்கம், மத்தியபாரதம் ஆகியவற்றிலே பரவியிருந்த தந்திர மார்க்கத்தின் செல்வாக்கு தென்னிந்தியாவிலும் ஏற்பட்டது.
168

பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் அமைக்கப்பட்ட சிற்பங்களிலே மைதுனக் கோலங்கள் இடம்பெறவில்லை. ஆனால், விஜயநகர காலத்திற் காம உணர்ச்சிகளைப் பல்வேறு கோலங்களிற் பிரதிபலிக்குஞ் சிற்பங்கள் பல உருவாக்கப் பட்டுள்ளன. முத்தமிடும் காட்சிகள், ஆலிங்கனத் தோற்றம், காம உணர்ச்சியால் ஏற்படும் பலவகையான வெளிப்பாடுகள் என்பன சிற்ப வடிவங்களாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் வர்ணிக்கும் புராணக் கதைகள் பல சிற்பக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
தொகுத்து நோக்குமிடத்து விஜயநகர காலத்திலே பெருந்தொகையான சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. அவை கடவுட் படிமங்களாகவும் அலங்காரச் சிற்பங்களாகவும் அமைந்தன. புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றிலுள்ள கதைகளை ஆதாரமாகக் கொண்ட சிற்பங்கள் மிகுதியாக உருவாக்கப்பட்டன. வைணவக் கோயில்களில் தசாவதாரங்களின் தோற்றத்தை விளக்கும் சிற்பங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டன. சரபமூர்த்தி, வீரபத்திரர் என்போரின் உருவங்களும் மைதுனக் கோலமான வடிவங்களும் முற்காலங்களிற் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டன. சிறுத்தொண்டர் பற்றிய கதை தெலுங்கு தேசத்துக் கோயில்களிலும் கர்நாடகத்துக் கோயில்களிலும் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளமை இன்னொரு சிறப்பம்சமாகும்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் -2009

Page 178
நாயக்கர் கால சிற்பக்கலை
மதுரைக் கோயிற் சிற்பங்கள்
த கண்டத்திலே கட்டக் கலை வரலாற்றிலே தனிச்சிறப்புடன் விளங்குகின்ற மதுரைக் கோயில் சிற்பக் கலை வரலாற்றைப் பொறுத்தவரையிலும் முதன்மைத் தலமாக விளங்குகின்றது. அங்கு போல வேறெங்கும் பெருந்தொகையான சிற்பங்களைக் காண முடிவதில்லை. சோழர் காலச் சிற்பக் கலையைப் பொறுத்தவரையில் வெண்கலப் படிமங்களைப் பற்றிச் சிந்திக்கின்றோம். கற்சிற்பங்களைப் பொறுத்தவரையில் மூலவர் படிமங்களும் விமானத்தின் சுவர்ப்புறங்களில் அமைந்த சிற்பங்களும் அதிகப் பிரசித்தமானவை. ஆனால், நாயக்கர் காலத்தைப் பொறுத்தவரையிற் கோயில் மண்டபங்கள் எல்லாம் சிற்பக் கலைக் கூடங்களாக விளங்குகின்றன. ஆயிரங்கால் மண்டபம், கல்யாண மண்டபம், திருச்சுற்று மாளிகை முதலான அமைப்புக்களில் எல்லாம் ஆயிரக் கணக்கான பிரமாண்டமான தூண்கள் அமைந்திருக்கின்றன. அவற்றிலே பல்லாயிரக் கணக்கான சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மதுரைக் கோயிற் கடவுட்படிமங்களும் மன்னர்களதும் பிரதானிகளதும் உருவங்களும் பெருந் தொகையில் அமைக்கப்பட்டுள்ளன. கடவுட் படிமங்கள் ஆகமப் பிரகாரமானவை. சிற்ப நூல்களிலே சொல்லப் படுகின்ற பிரதிமாலசுடிணங்களுக்கு அமைய அவை உருவாக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற் புராணம், ஹாலஸ்ய மகாத்மியம், சிவபுராணங்கள் முதலிய வற்றிலே சொல்லப்படுகின்ற கதைகளுக்கு விளக்கமான சிற்பங்கள் அங்கு அமைக்கப் பட்டுள்ளன, மதுரையிலே தூண்களுக்கும்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

பேராசிரியர் சி. பத்மநாதன்
கட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட்ட கருங்கல் மிகவும் கருமையானது; கருங்காலி போன்ற தோற்ற முடையது. உளிகளினாலே செதுக்கப்படுமிடத்து மெழுகு பூசினாற்போல் பளபளப்பாக மினுங்கும் தன்மை கொண்டது. அங்கே விஜயநகர நாயக்கர் காலக் கலைஞர்கள் உன்னதமான சிற்பங்களை வடித்துள்ளனர். தமிழகத்திலே சிற்பக்கலை வளர்ச்சி நாயக்கர் காலத்தில் முதிர்ச்சி நிலை அடைந்தது. பொதுவாக உருவங்கள் பிரமாண்டமானவை; மிகுந்த வனப்புடையவை; தனிச்சிறப்புடைய ஒரு கலைப்பாணியின் அம்சங்களைப் பிரதிபலிக்கும் பான்மை கொண்டவை. சோழர்காலச் சிற்பங்களோடு ஒப்பிடுமிடத்து அவை கனதியான தோற்றங் கொண்டவை. மதுரைக் கோயிலிலுள்ள சிற்பங்களைக் கடவுட் படிமங்கள், உருவச் சிற்பங்கள் என இரண்டு பிரதான வகையினவாக வகுத்து நோக்கலாம். விமானங்களிலும் கோபுரங்களிலும் அமைந்திருக்கும் சிற்பங்கள் வேறொரு வகைக்குரியனவாகும். மண்டபங்களிலும் அவற்றிலுள்ள தூண்களிலும் அமைந்திருக்கும் வடிவங்களே இங்கு வர்ணிக்கப்படுகின்றன.
கடவுட் பழமங்கள்
1) திருக்கல்யாணம்
கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தூண் ஒன்றிலே மீனாகூஜி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சிற்பக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதனைப் போல புது மண்டபத்திலும் ஒரு சிற்பம் அமைந்திருக் கின்றது. அதிலே நின்ற கோலத்திற் சிவன்
169

Page 179
வலக்கரத்தால் மீனாகூழியின் வலது கையைப் பற்றி நிற்கும் கோலம் தெரிகின்றது. இடப்பக்கத்திலே திருமால் தாரைவார்த்து கன்னிகாதானம் செய்யுங் காட்சி அமைந்திருக்கின்றது. அவர்களுக்குப் பின்னால் மரத்தின் உருவம் தெரிகின்றது. இந்திரனால் மீனாகூழிக்கு வழங்கப்பட்ட கற்பகதருவே அதுவாகும். இவர்களுக்குச் சமீபத்திலே பிரமன் புரோகிதராக இருந்து ஓமம் வளர்க்கும் காட்சி தெரிகின்றது. பக்கத்திலே பெண்கள் இருவரின் உருவங்கள் தெரிகின்றன. பிரதிமாலசுஷ்ணங்கள் எல்லாம் ஆகமப் பிரகாரமானவை. புது மண்டபத்திலுள்ள சிற்பம் பதினேழாம் நூற்றாண்டில் உருவாக்கப்பெற்றது. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பம் 1870இல் வடிக்கப்பெற்றது. இரண்டும் ஒரே பாணியில் அமைந்தவை. மணமக்களின் முகபாவமும் அங்க லக்ஷணங்களும் இணையிலாத வகையிலே சித்திரிக்கப் பெற்றுள்ளமை கவனித்தக்கத்தது.
2. திரிபுராந்தகர்
திரிபுராந்தகரின் உருவங்கள் பல இடங்களில் உள்ளன. புது மண்டபத்தில் இரு வடிவங்கள் காணப்படுகின்றன. ஆயிரங்கால் மண்டபத்தில் ஒன்றும் கம்பத்தடி மண்டபத்தில் ஒன்றும் உள்ளன. முப்புரங்களைச் சிவன் அழித்த காட்சியைத் திரிபுராந்தகர் வடிவம் குறிக்கின்றது. வேதத்திலே சம்ஹிதை, பிராமணம் ஆகிய பகுதிகளிலே. திரிபுரதகனம் பற்றிக் குறிப்புகள் உள்ளன. மகாபாரதத்திலே கர்ண பருவத்தில் அதனைப் பற்றிய வர்ணனை காணப்படுகின்றது. திரிபுராந்தகரின் எட்டு வடிவங்கள் பற்றிச் சொல்லப்படுகின்றது. கம்பத்தடி மண்டபத்திலுள் உருவத்திலே சிவன் இரதத்திலே மேற்செல்லுங்காட்சி அமைந்திருக் கின்றது. வலதுகால் இரதத்தின் பாகத்திலே அமைந்திருக்கின்றது. இடதுகால் முன்னால் ஊன்றிய கோலத்திற் தெரிகின்றது. சாரதியாகப் பிரமா வந்திருக்கின்றார். விஷ்ணு, அக்கினி, யமன், சாவித்திரி முதலிய தேவர்கள் படைக்கலங்களாக வடிவெடுத்துள்ளனர்.
புது மண்டபத்திலுள்ள திரிபுராந்தகர் வடிவம் வேலைப்பாட்டில் முன்னையதைக் காட்டிலுஞ் சிறந்ததாகும். உருவத்தின் எல்லா அம்சங்களும்
17)

செம்மையாகவும் ஒளி மிளிரும் வண்ணமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள சிற்பத்தில் இரதம் காணப்படவில்லை. சிவனுடைய உருவம் பீடம் ஒன்றிலே அமைந்து காணப்படுகின்றது. சிவனுடைய உருவத்தின் கீழே கணேசரின் வடிவம் தெரிகின்றது. ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள திரிபுராந்தகரின் வடிவம் அதிக சிறப்புடையதாகும். அது விநாயகர், பாண்டியராசன் ஆகியோரின் உருவங்களுக் கிடையிலே காணப்படுகின்றது. உருவத்தின் அங்க லக்ஷணங்கள் மிகுந்த வனப்புடன் விளங்குகின்றன. அது கம்பீரமான தோற்றத்துடன் உயிரோட்டமான கோலத்துடன் காணப்படுகின்றது. அம்பிலே திருமாலுடைய வடிவம் மிகவும் நுட்பமான முறையிலே செதுக்கப்பட்டுள்ளது.
3. உமாசகித மூர்த்தி
உமாதேவியாரும் ஈஸ்வரரும் ஆசனக் கோலத்தில் அமைந்திருக்குங் காட்சி இதிலே விளங்குகின்றது. உமாதேவியாரின் உருவம் இறைவனின் இடப்பக்கத்தில் உள்ளது. அம்மனின் வலதுகால் மடித்தும் இடதுகால் மடித்துக் கீழ் நோக்கித் தொங்கும் நிலையிலும் காணப்படுகின்றன. திருக்கலியாணத்திற்குப் பின்பு அடியார்களுக்குக் காட்சி கொடுத்த நிலை இதுவாகும். இரண்டு சிற்பங்களும் ஒரே தூணில் அமைந்திருக்கின்றன.
4. சுகாசனக் கோலம்
கம்பத்தடி மண்டபத்திலே, அடுத்துள்ள தூணிலே சுகாசனக் கோலமும் காலஹரமூர்த்தியின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளன. சுகாசனக் கோலத்தில் இறைவனும் தேவியும் ஆசனக் கோலமாய் உள்ளனர். முன்வலக்கரம் அபயகரமாகும். பின் வலக்கரத்தில் அகூடிமாலை காணப்படுகின்றது. முன் இடக்கரம் வரத கரமானது. அதன் பின்னுள்ள கரம் சூலம் ஏந்திய கோலத்தில் அமைந்துள்ளது. சிவனுடைய வலது கால் மடித்துக் கீழ் நோக்கித் தொங்கும் நிலையில் அமைந்துள்ளது. அம்மனின் வலக்கரம் மலரேந்திய கோலத்தில் உள்ளது. இடதுகை பீடத்தில் அமைந்துள்ளது. இடதுகால் பீடத்திலே தொங்கிய வண்ணமாயுள்ளது. சிவனது இடதுகால் அம்மனின் வலது கால் மேற் படிந்திருக்கின்றது.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 180
5. காலஹர மூர்த்தி
இது மார்க்கண்டேயருக்குச் சிவபெருமான் அபயம் அளித்த கதையை விளக்குஞ் சிற்பமாகும். சிவனடியார்களில் உத்தமோத்தமரான மார்க்கண்டேயர் பதினாறு வயது அடைந்ததும் இறக்க நேரிடும் என்று சொல்லப்பட்டது. சமயம் வந்ததும் அவருடைய உயிரைக் கொள்வதற்கு எமராசன் வந்தான். தன்னைக் காத்தருளச் சிவபெருமானை மார்க்கண்டேயர் இறைஞ்சி வேண்டினார். சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தார். அதிலிருந்து தோன்றிய இறைவன் காலனை அடக்கி மார்க்கண்டேயருக்கு அபயமளித்தார். சூலமேந்திய கோலத்திற் சிவன் எமராசனை அடக்குங்காட்சி இதிலே வடிவமைக்கப்படுள்ளது. முன் வலக்கரத்தில் மழுவும் பின் வலக்கரத்திற் சூலமுங் காணப் படுகின்றன. முன் இடக்கரத்திற் கபாலமும், அதன் பின்னுள்ள கரத்திலே மானும் தெரிகின்றன. வலதுகால் பீடத்தை ஊன்றிய வண்ணமாய் உள்ளது. இடதுகால் காலனின் கழுத்தினை ஊன்றிய கோலத்திற் காணப்படுகின்றது. இலிங்கத்தின் மறுபுறத்திலே மார்க்கண்டேயரின் வடிவம் அதனைக் கட்டிப்பிடித்த கோலத்திலே தெரிகின்றது.
6. நடராஜர் வடிவம்
கம்பத்தடி மண்டபத்து மூன்றாவது தூணிலே ஆடவல்லானின் உருவம் அமைந்திருக்கின்றது. வெள்ளியம்பலத்திலும் நாயக்க மண்டபத்திலும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அளவிலே பெரிய நடராஜர் வடிவங்கள் அமைந்துள்ளன. மீனாகூழி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவ தினத்திலே வியாக்கிரபாதர், பதஞ்சலி ஆகியோரின் பொருட்டுச் சிவபெருமான் தாண்டவம் புரிந்தார் என்பது புராணக்கதை. பொன்னம்பலத்திலே தாண்டவம் பயின்ற நடேசப் பெருமான் அவ் இருவர்களின் பொருட்டு வெள்ளியம்பலத்திற் திருநடனம் செய்தார். இக்கதையை அடிப்படையாகக் கொண்டு திருவாலவாய் வெள்ளியம்பலம் என்று வர்ணிக்கப் பட்டது. பாண்டியர்கள் நடராஜர் சபைக்கு வெள்ளிவிதானம் அமைத்தனர். வெள்ளியம்பலத்திலே சிவபெருமான் ஆடுகின்ற கூத்து சற்று வேறுபட்டதாகும். அங்கு இடக்கால் முயல்கன் மீது ஊன்றிய கோலத்தில் அமைந்திருக்க வலக்கால்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

வீசித்தொங்கிய நிலையிற் காணப்படும். கம்பத்தடி மண்டபத்து நடராசரின் கோலம் பொன்னம்பலத்தி லுள்ளதைப் போன்றதாகும். சிவனுடைய முடி ஜடா மகுடமாகும். முன் இடக்கரம் கஜகஸ்தமாகும். அதன் பின்னுள்ள கரம் அக்கினிச் சுவாலை ஏந்திய கோலமானது. முன் வலக்கரம் அபயஹஸ்தமாகும். பின் வலக்கரம் டமருஹம் ஏந்தியுள்ளது. வீசித் தொங்கிய இடக்கால் முயலகன் பிடித்துள்ள பாம்பின் தலைமேற் தங்கியுள்ளது. அருகிலே பார்வதியின் உருவம் அமைந்துள்ளது. நடராசரின் உருவத்தின் கீழ் நான்கு கரங்களுடன் நந்திதேவர் காணப்படுகின்றார். முன்னிரண்டு கைகளும் மத்தளம் கொட்ட பின்னிரு கைகளும் மான், மழு ஏந்திய கோலமாயுள்ளன. நந்திதேவரின் இரு பக்கங்களிலும் வியாக்கிரபாதர், பதஞ்சலி ஆகியோர் காணப்படுகின்றனர். அதே தூணின் வேறொரு பக்கத்தில் மகாவிஷ்ணு மேளங்கொட்ட, தும்புரு, நாரதர் ஆகியோர் வீணை இசைக்கின்றனர். அத்துடன் மிக மெலிந்த தோற்றத்துடன் காளியின் உருவமும் தெரிகின்றது. தூணின் அடுத்த பக்கத்திலே பிரமா தாளம் போடுங்காட்சி தெரிகின்றது. திருநடம் காண்பதற்கு வந்த மற்றைய தேவர்களதும் ரிஷிகளதும் உருவங்கள் தெரிகின்றன. தூணின் வேறொரு பக்கத்தில் காமதகனரின் உருவம் அமைந்துள்ளது.
கம்பத்தடி மண்டபத்திலுள்ள நான்காவது தூணிலே சந்திரசேகரர், இலிங்கோத்பவர், ரிஷபாந்திகர், இராவண அனுக்கிரக மூர்த்தி ஆகியோரின் உருவங்கள் ஆகம விதிகளுக்கு அமைய அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
7. ரிஷபாந்திகர்
காளையிற் மேற் சிவனும் பார்வதியும் அமைந்திருக்கும் உருவம் ரிஷபாரூடரின் வடிவம் போன்றதாகும். காளை தலையை உயர்த்தி நிற்குங் கோலம் இவ்வடிவத்தின் சிறப்பம்சமாகும். சிவனுடைய முன் வலக்கரம் அபயஹஸ்தமானது. அதன் பின்னமைந்த கரம் மழுஎந்தியுள்ள கோலமானது முன் இடக்கரம் தொடையில் தங்கும் வண்ணமாக அமைந்துள்ளது. பின் இடக்கரம் மான் ஏந்திய கோலமானது. சிவனதும் அம்மனதும் கால்கள் அமைந்திருக்கும் கோலம் ஆகமப் பிரகாரமானது.
171

Page 181
8. இலிங்கோத்பவர்
கம்பத்தடி மண்டபத்திலே தூண் ஒன்றிலே ரிஷபாந்தகரின் உருவத்திற்கு வலப்பக்கத்திலே இலிங்கோத்பவரின் உருவம் அமைந்துள்ளது. இலிங்கம் நான்கு பட்டைத் தூண்போல் ஆனது. அதன் கோணங்கள் வட்டமாகச் செதுக்கப் பட்டுள்ளன. வழமை போலச்சிவனுடைய உருவம் லிங்கத்தில் இருந்து வெளிப்படுமாற் போல் உருவாக்கப்பட்டுள்ளது. முழங்காலின் கீழ் அமைந்த பகுதி உருவத்திலே செதுக்கப்படவில்லை. சிவனுடைய கோலம் சந்திரசேகரர் வடிவமாகும். முன்வலக்கரம் அபயஹஸ்தமாகும். முன் இடக்கரம் தொடையிலே தங்கியுள்ளது. இலிங்கத்தின் மேற்பக்கத்திலே அன்னப்பறவையின் உருவமும் பிரமாவின் தலையும் கைகளும் செதுக்கப் பட்டுள்ளன. திருமால் வராக அவதாரமாக வருங்காட்சி இலிங்கத்தின் அடியிலே தெரிகின்றது. வலப்பக்கத்திலே பிரமனும் இடப்பக்கத்திலே விஷ்ணுவும் கைகூப்பி வணங்குங் கோலத்திலே காணப்படுகின்றனர். இதனைப் போன்ற இலிங்கோத்பவரின் வடிவங்கள் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலிலும் தசாவதார குடபோகத்திலுங் காணப்படுகின்றன. கீழமாத்துTர் சிவாலயத்திலும் இவ்வாறான வடிவம் உண்டு. இலிங்கத்திலிருந்து சிவன் வெளிப்படுவதும் மேலே பிரமன் பறந்து செல்வதும் அடியிலே திருமால் வராகமாகி நிலத்தை உழுவதும் அதிலே சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளன.
9. SprireaGoor அணுக்கிரக மூர்த்தி
கைலாய மலையை இராவணன் பெயர்க்க முற்படுங் காட்சி இரண்டு சிற்பங்களில் அமைந்துள்ளது. அவற்றில் ஒன்று புது மண்டபத்திலே காணப்படுகின்றது. அது மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றது. சிவனும் பார்வதியும் உமாசகிதர் கோலத்திலே அமைந்திருக்குங் காட்சி புது மண்டபத்துச் சிற்பத்திலே காணப்படுகின்றது. அவர்களின் ஆசனத்தின் கீழ் வழமைபோலக் கைலாய மலையின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. முனிவர் கணங்கள் இறைவனை இறைஞ்சிய கோலத்திற் காணப்படுகின்றனர். இராவணன் முன்னால் முழந்தாளில் நின்று பத்துத் தலைகளையும் சாய்த்து இருபது கரங்களையுங் கூப்பிச் சிவனின்
172

பெருமைகளைப் பாடுங் காட்சி வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதைப் போன்ற சிற்பம் ஒன்று கம்பத்தடி மண்டபத்துத் தூண் ஒன்றில் அமைந்துள்ளது. அதிலே பீடத்திற் கூடுதலான அலங்கார வேலைப் பாடுகள் காணப்படுகின்ன. சிவனுடைய முன் கரங்கள் அமைந்துள்ள விதமும் சற்று வேறுபட்ட தாகும். இராவணனுடைய வதனம் ரெளத்ர பாவத்துடனும் உமாசகிதரின் கோலம் சார்ந்த சொரூபமாகவும் அமைந்துள்ளன.
10. விருவடிய வாகனர்
சிவனும் பார்வதியும் உமாசகிதர் கோலத்தில் இடபத்தின் மேல் அமர்ந்திருக்கும் காட்சி கம்பத்தடி மண்டபத் தூண் ஒன்றிலே செதுக்கப்பட்டுள்ளது. வஸ்திராபரணங்களும், அங்க இலகூடிணங்களும், முத்திரைகளும் வழமைபோலக் காணப்படுகின்றன.
11. ஏகபாத மூர்த்தி
ரிஷபாரூடர் வடிவம் அமைந்திருக்கும் அதே பக்கத்தில் ஏகபாத மூர்த்தியின் உருவமுங் காணப்படுகின்றது. அதனையொத்த வடிவம் ஒன்று புது மண்டபத்திலும் அமைந்திருக்கின்றது. இரண்டு உருவங்களும் சில அம்சங்களில் வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. புது மண்டபத்திலுள்ள படிமத்திலே சிவனது வலப்பக்கத்தில் இருப்பது பிரமனும் இடப்பக்கத்தில் இருந்து மகாவிஷ்ணுவும் தோன்றுகின்றனர். இருவரின் வடிவங்களிலும் கால்கள் தெரியவில்லை. முன்னிரு கரங்களும் அஞ்சலி ஹஸ்தமாய் அமைந்திருக்கின்றன. பின்னுள்ள கரங்கள் வழமையான சின்னங்களை ஏந்திய வண்ணமாயுள்ளன. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பத்திலே சிவனுடைய உருவம் மட்டுமே தெரிகின்றது. அதிலே பிரமனதும் விஷ்ணுவினதும் உருவங்கள் காணப்படவில்லை. ஏகபாத மூர்த்தியின் உருவத்தின் கீழ் மூன்று கோயில்களின் பிரதிமைகள் அமைக்கப்பட்டுள்ளன.
12. அர்த்தநாரி வடிவம்
அதே தூணில் அர்த்தநாரி வடிவம்
அமைந்திருக்கின்றது. அதிலே வழமைபோல
வலப்பக்கத்தில் ஈஸ்வரனுக்குரிய லக்ஷணங்களும்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 182
இடப்பக்கத்திலே அம்மனுக்குரிய அம்சங்களும் அமைந்திருக்கின்றன. பார்வதியின் கை லோலஹஸ்தமான தொங்கு கரமாயுள்ளது. வடிவத்திலே சிவனுக்குரிய பாதியில் முன்கரம் அபயஹஸ்தமாக அமைந்திருக்கையில் பின்கரம் மழு ஏந்திய கோலத்திற் காணப்படுகின்றது. புது மண்டபத்திலுள்ள அர்த்தநாரியின் வடிவம் கூடிய வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. அதிலே அம்மனின் பாகத்தில் இரண்டு கரங்கள் காணப் படுகின்றன. முன்கரம் லோல ஹஸ்தமாகும்.
13. ஹரிஹர மூர்த்தி
அர்த்தநாரியின் இடப்பக்கத்தில் அமைந்திருக் கின்ற ஹரிஹர மூர்த்தியின் வடிவத்தின் ஒரு பாகம் சிவனுக்குரிய அம்சங்களையும் மற்றப் பாகம் திருமாலின் அம்சங்களையும் கொண்டுள்ளது. அர்த்தநாரி வடிவத்தைப் போல இதிலே வலப்பாகத்திற் சிவனுக்குரிய அம்சங்கள் காணப் படுகின்றன. அதில் முன்கரம் அபயகரமாக அமைந்துள்ளது. பின்கரம் கதையினைப் பிடித்த வண்ணமாயுள்ளது. பின்கரம் சக்கரம் ஏந்திய நிலையிற் காணப் படுகின்றது. இதனை ஒத்த உன்னதமான வேலைப்பாடு கொண்ட சிற்பம் ஒன்று புது மண்டபத்திலே காணப்படுகின்றது. அதிலே இடப்பாகத்தில் விஷ்ணுவின் முன்கரம் கடஹஹஸ்தமாய் அமைந்திருக்கின்றது. அதன் உருவம் பெரியது. மிகுந்த வனப்புடையது.
14. தகூழிணாமூர்த்தி
அதே தூணின் வடக்கு முகத்திலே தகூரிணாமூர்த்தியின் வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. கைலாசமலையிலே ஆலமரத்தின் கீழேயோகாசனக் கோலத்திலே ஈஸ்வரன் அமர்ந்திருக்குங் காட்சி சிறப்பான முறையிலே செதுக்கப்பட்டுள்ளது. முழங்கால் மட்டத்தில் மடித்துத் தொங்கும் வலக்கால் முயலகன் மேல் தங்கும் நிலையில் உள்ளது. இடக்கால் மடித்து வலக்கால் மேல் அமைந்திருக்குங் கோலத்தில் உள்ளது. இறைவனை வணங்கும் ரிஷிகளதும்முனிவர்களதும் உருவங்கள் தெரிகின்றன. தகூழிணாமூர்த்தி உருவத்திற்கு எதிரிலே அமைந்துள்ள தூணில் காமதகனரின் சிற்பம் அமைந்திருக்கின்றது. தலையிலே ஜடாபாரம் அமைந்திருக்கின்றது. முன் வலக்கரம் ஞான
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

முத்திரையில் அமைந்துள்ளது. முன் இடக்கரம் வரதகரமாகும்.
15. கஜஹார மூர்த்தி
மதுரைக் கோயிலில் கஜஹார மூர்த்தியின் இரண்டு வடிவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கம்பத்தடி மண்டபத்தில் தகூழிணாமூர்த்தியின் சிற்பம் காணப்படும் தூணின் அருகிலுள்ள கம்பத்திலே காணப்படுகின்றது. மற்றையது புது மண்டபத்தில் இருக்கின்றது. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பம் மரபுவழியானவேலைப்பாடுகளுடன் அமைந்திருப்பதோடு அலங்காரத் தோற்றத்துடனும் காணப்படுகின்றது. சிவனின் உருவம் எட்டுக் கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. பின் கரங்கள் இரண்டும் யானைத் தோலைப் பிடித்த கோலத்தில் உள்ளன. மழு, சூலம், அம்பு ஆகிய படைக்கலங்கள் வலக்கரங்கள் மூன்றில் அமைந்திருக்கின்றன. மான், கபாலம், வில் ஆகியவற்றின் வடிவங்கள் வலக்கரங்கள் மூன்றிலே காணப்படுகின்றன. வலக்கால் முற்புறமாக உயர்த்தியானையின் தோளில் தங்கும் வண்ணமாக அமைந்திருக்கின்றது. பிரதிமையின் பீடத்திலே இறைவனை வணங்கும் முனிவர்களின் உருவங்கள் சிறப்பாகச் செதுக்கப் பட்டுள்ளன. கம்பத்தடித் தூணிலே சிவனுடைய கோலத்தைக் கண்டு பயத்தினால் உருக்குலைந்த கோலத்தில் நிற்கும் பார்வதியின் உருவம் அமைந்திருக்கின்றது. அம்மனின் அருகிலே குமாரக் கடவுளின் வடிவம் தெரிகின்றது.
18. 6ñhörarITLoorñr
மதுரையிலே பிச்சாடனரின் உருவங்கள் கோயிலின் பல பகுதிகளிற் காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், முதலி மண்டபம், ஆகியவற்றிலுள்ள தூண்களிலும் சுந்தரேஸ்வரர் கோயில் முதலாம் பிராகாரத்திலும் அவ்வுருவங்கள் காணப்படுகின்றன. கோபுரங்களின் பல இடங்களிலே பிச்சாடனரின் சுதை உருவங்கள் அமைந்துள்ளன. பிச்சாடனரின் மூன்று அடி உயரமான உலோகப் படிமம் ஒன்று சுவாமி கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் சிலவற்றிலேஎழுந்தருளியாக எடுத்துச் செல்லப்படும். ஆயிரங்கால் மண்டபத்தி லுள்ள சிற்பமே அவை எல்லாவற்றிலும் மிகுந்த வனப்புடையதாகும். அதன் உயரம் ஆறடிக்கு
173

Page 183
மேலானது. அதில் நான்கு கரங்கள் அமைந்துள்ளன. முன்வலக்கரமானது மான் ஒன்றின் தலையிலே தங்கியிருக்கின்றது. பின் வலக்கரம் சூலம் ஏந்திய கோலமானது. முன்னிடக் கரத்திலே கபாலந் தெரிகின்றது. பிச்சாடனரைச் சுற்றி அரவங் காணப் படுகின்றது. காலிலே பாதணிகளும் கண்டா மணிகளுந் தெரிகின்றன. இடப்பக்கத்திலே ரிஷிபத்தினிகள் இடுகின்ற பிகூைடியினை ஏந்தும் கலசத்தோடு வாமனக் கோலமான ஒருவரின் உருவம் அமைந்துள்ளது. தூணின் மற்றொரு முகத்திலே அனசூயா முதலான ரிஷிபத்தினிகளின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பத்தில் அங்கங்களின் அளவுப் பிரமாணங்கள் பொருத்தமான வகையில் அமைக்கப்படவில்லை. மானினுடைய உருவம் செம்மையாக அமையவில்லை அதிலே ரிஷிபத்தினிகளின் உருவங்களும் அமைக்கப் LIL66)606).
17. உருத்திரன்
கம்பத்தடி மண்டபத்திலே பிச்சாடனரின் உருவத்திற்குப் பக்கத்திலே உருத்திரனின் உருவம் அமைந்துள்ளது. வலக்கரங்கள் இரண்டும் சிதைந்து விட்டன. பிற்காலத்தில் அவற்றைச் சுதை கொண்டு புனராக்கஞ் செய்துள்ளனர். சடை அக்கினிச் சுவாலை போல அமைந்திருக்கின்றது. பெருத்த மீசையும் பற்களும் வடிவத்திலே தெரிகின்றன. அளவுக்கு மேலாக ஆபரணங்கள் அமைந்திருக் கின்றன. திரிசூலம், மழு, அம்பு, வாள் ஆகியன வலப்பக்கத்திலுள்ள நான்கு கரங்களிலும் அமைந்திருக்கின்றன. இடப்பக்கத்துக் கரங்களிலே கபாலம், மான், மணி, கேடயம் என்பன தெரிகின்றன. முகப்புப் புறமாகப் படுத்திருக்கும் அசுரன் மேல் உருத்திரனின் வடிவம் அமைந்திருக்கின்றது. இந்தப் படிமம் வனப்புடையதாக அமையவில்லை. வீரவசந்தராய மண்டபத்தில் உருத்திர காளி சமேதரான உருத்திரனின் படிமங்கள் இரண்டுள்ளன. அவ்வடிவங்கள் செம்மை நலம் பொருந்திய கோலத்தில் அமைந்துள்ளன. சடை வழமைபோல மிக ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலே சித்திரிக்கப் பட்டுள்ளது. சடையிலே இலிங்கம் தெரிகின்றது. உருத்திரனுடைய உருவத்தில் நான்கு கரங்கள் காணப்படுகின்றன. பின் வலக்கரத்தில் மழுவும் பின் இடக்கரத்தில் மானும் அமைந்திருக்கின்றன. முன் ,
174

இடக்கரத்திலே கேடயம் தெரிகின்றது. முன் வலக்கரம் உடைந்து விட்டது. ஆரங்கள் எல்லாம் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் அடியிலுள்ளது கபால மாலையாகும். முழங்காலிலும் கணுக்காலிலும் ஆபரணங்கள் அமைந்துள்ளன.
18. கிராதார்ஜுனர்
அர்ஜூனன் தவமிருந்து மகேஸ்வரனிடம் இருந்து பாசுபதம் பெற்ற கதை மகாபாரதத்திலுள்ள வனபர்வத்திலே சொல்லப்படுகின்றது. அதை அடிப்படையாகக் கொண்டு உருவமைக்கப்பட்டது கிராதார்ஜூன மூர்த்தி வடிவமாகும். அது கம்பத்தடி மண்டபத்துத் தூண் ஒன்றிலே அமைக்கப் பட்டுள்ளது. அர்ஜூனனுக்குப் பாசுபதம் வழங்கிய நிலையில் ஈஸ்வரனின் உருவம் அமைந்திருக்கின்றது. அதற்கு முன்னால் அம்பு, வில்லு ஆகியவற்றை ஏந்திய கோலத்தில் அர்ஜூனனுடைய வடிவம் தெரிகின்றது. இந்தச் சிற்பம் ஆகமங்களிலே சொல்லப்படும் விதிகளுக்கு முரணான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
19. சோமாஸ்கந்தர்
கம்பத்தடி மண்டபத்திலுள்ள சோமாஸ்கந்தர் வடிவம் அதிக சிறப்புடையதாகும். அம்மையப்பரின் உருவங்கள் ஆசனக் கோலத்திலும் சுகாசன நிலையிலும் உள்ளன. அவர்களுக்கிடையிலே நடன மாடும் குமரேசனின் வடிவம் அமைந்திருக்கின்றது. சிவனுடைய முன்வலக்கரம் அபயகரமாய் உள்ளது. முன்னிடக்கரம் சிங்ககரணமாய் அமைந்துள்ளது. பின் வலக்கரத்திலே மழுவும் பின் இடக்கரத்திலே மானும் வழமைபோல அமைந்துள்ளன. அம்மனின் வலக்கரம் மலரேந்திய கோலமானது. இடக்கரம் ஆசனத்தில் அமைந்துள்ளது. குமரேசரின் கைகள் இரண்டும் மலரேந்திய வண்ணமானவை; மகுடம் கரண்டமசூடமாகும்.
20.ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி
சிவன் காளியோடு போட்டியாக ஆடிய நடனம் ஊர்த்துவ தாண்டவம் ஆகும். ஊர்த்துவ தாண்டவத்திலே சிவன் வலக்காலைத் தலையின் மட்டத்திற்கு உயர்த்தி ஆடுகின்ற கோலம் அமைந்திருக்கும். நாட்டியத்திலே காளிக்கு நிகரானவர்கள் இல்லை. காளியும் சிவனும்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 184
போட்டியாக ஆடினார்கள். இறுதியிலே காளியை வெற்றிகொள்ளும் வண்ணமாகச் சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். நாணத்தின் காரணமாகக் காளியினால் அவ்வாறு ஆடிக்கொள்ள முடிய வில்லை. ஊர்த்துவ தாண்டவக் கோலச் சிற்பங்கள் புது மண்டபத்திலும் கம்பத்தடி மண்டபத்திலும் உள்ளன. வலது பக்கத்திலுள்ள ஐந்து கைகளிலும் டமருகம், மழு, அம்பு, ஈட்டி, சூலம் ஆகியன அமைந்துள்ளன. இடப்பக்கத்துக் கரங்களிலே அக்கினி, மான், அம்பு, கேடயம், மணி ஆகியன தெரிகின்றன. சிவனுடைய இடக்காலின் கீழ் முயலகனின் உருவம் அமைந்திருக்கின்றது. புது மண்டபத்திலுள்ள வடிவத்தின் பிரதிமாலக்ஷணங்கள் சற்று வேறுபட்டனவாகும். கரங்களிலுள்ள படைக்கலங்கள் அதிலே வேறு விதமாக அமைந்துள்ளன. காளியின் உருவம் பஞ்சமுக வாத்தியத்தை இசைக்கும் கோலத்தில் அமைந்திருக் கின்றது. பீடத்திலே நந்தி மேளங்கொட்டும் கோலமும், தாளம்போடும் நிலையிற் பிரமாவிள் வடிவமும், திருமால் பதாக என்னும் கருவியை மிழற்றும் கோலமும் செதுக்கப்பட்டுள்ளன. புது மண்டபத்திலுள்ள ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் வடிவம் உன்னதமான வகையில் அமைக்கப் பட்டுள்ளது. கலை வனப்பில் மதுரையிலே காணப்படுஞ் சிற்பங்களிற் சாலவுஞ் சிறந்தனவற்றுள் ஒன்றாக لع إلك கொள்ளப்படுகின்றது. அங்கலகூடிணங்களும் பாவங்களும் உன்னதமான முறையில் அமைக்கப் பெற்றுள்ளன. வடிவம் வசீகரமான தோற்றங் கொண்டது. கலாதத்துவமும் அனுபவ முதிர்ச்சியும் ஒப்பற்ற வகையில் இவ்வடிவத்திலே பிரதிபலிக்கின்றன.
21. asrofi
காளியின் உருவங்கள் இரண்டு கம்பத்தடி மண்டபம், புது மண்டபம் ஆகியவற்றிலே காணப் படுகின்றன. கலை வனப்பிலும் வேலைப்பாடுகளின் சிறப்பிலும் அவை இரண்டும் மிகச் சிறந்தவை. ஏறத்தாள ஒரே தன்மையானவை. இரண்டு உருவங்களிலும் எட்டுக் கரங்கள் காணப்படுகின்றன. கம்பத்தடி மண்டபத்துச் சிற்பத்திலே கேசபந்தம் அக்கினிச் சுவாலை போலத் தோன்றுகின்றது. திரிசூலம், அம்பு, டமருகம் ஆகியன வலக்கரங்களில் உள்ளன. இடக்கரங்கள் கபாலம், வில், வச்சிரம்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

என்பவற்றை ஏந்தியுள்ளது. காளியின் இடக்கால் கணம் ஒன்றை ஊன்றிய கோலத்தில் அமைந்திருக் கின்றது. புது மண்டபத்திலுள்ள வடிவம் உக்கிரம் மிகுந்த தோற்றங் கொண்டுள்ளது. அதன் வலக்கரங்களிலே திரிசூலம், அம்பு, அங்குசம், ஈட்டி என்பன அமைந்துள்ளன. இடக்கரங்களிலே கபாலம், வில், பாசம், கேடயம் ஆகியன காணப்படுகின்றன. உருவத்திலே ஆபரணங்கள் மிகுந்து காணப் படுகின்றன. வீரவசந்தராயமண்டபத்தில்உருத்திரனின் வடிவத்திற்கு அருகிலே உருத்திரகாளியின் உருவம் காணப்படுகின்றது. கிரீடம் ஜுவாலமாலமாக அமைந்திருக்கின்றது. பின்புறத்திலே ஐந்துதலை நாகம் தெரிகின்றது. காளியின் உருவம் நடனக் கோலமாகும். அதில் எட்டுக் கரங்கள் காணப் படுகின்றன. முன் வலக்கரம் விஸ்மய முத்திரையில் உள்ளது. ஈட்டி, சக்கரம், அங்குசம் என்பன ஏனைய வலக்கரங்களில் உள்ளன. இடக்கரங்களிலே கபாலம், கேடயம், சங்கு, அங்குசம் ஆகியன அமைந்துள்ளன. நடனத்தோற்றம் லாவண்யமான கோலத்தில் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
22.வீரபத்திரர்
நாயக்கரின் ஆட்சிக் காலத்திலே வீரபத்திரர் வழிபாடு மிகுந்த செல்வாக்குப் பெற்றது. மதுரைக் கோயிலில் வீரபத்திரரின் வடிவங்கள் பல உள்ளன. அவற்றின் பிரதிமாலசுஷ்ணங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. அகோர வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர் ஆகியோரின் உருவங்கள் கம்பத்தடி மண்டபத்தில் உள்ளன. அவை வழமையானவை; ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, காளி ஆகியோரின் உருவங்களைப் போல அளவிற் பெரியவை. தக்க யாகத்திலே தன்னை அவமானப்படுத்தியமைக்குப் பழிவாங்கும் வண்ணமாகத் தக்கனை அழிக்குமாறு வீரபத்திரர், பத்திரகாளி என்போர் சிவனால் அனுப்பப்பட்டனர் என்பது புராணக் கதை. அகோர வீரபத்திரரின் உருவத்தில் ஜடாமகுடம் அக்கினிச் சுவாலைகளால் அமைந்திருக்கின்றது. வலக்கரங்களில் ஒன்று சூலம் ஏந்திய கோலமானது. மற்றொரு கரம் அம்பறாத்தூணியிலிருந்து அஸ்திரத்தை எடுக்கும் நிலையில் அமைந்திருக்கின்றது. மான், மழு, டமருகம் என்பன மற்றக் கைகளில் உள்ளன. இடக்கரங்களிலே கேடயம், வில், வச்சிராயுதம், மான் முதலியவற்றின் உருவங்கள் அமைந்திருக்கின்றன.
175

Page 185
வடிவத்தின் பிரதிமாலகூடிணங்கள் ஆகமப் பிரகாரமானவை. மினாகூழியம்மன் கோயிலின் தென்புறமாக அமைந்துள்ள யவந்தீஸ்வரர் சந்நிதியிலும் வீரவசந்தராய மண்டபத்திலும் வீரபத்திரரின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தில் பல உருவங்கள் உள்ளன. அதிலுள்ள முதலாவது தூணிலே அகோர வீரபத்திரரின் உருவம் அமைந்திருக்கின்றது. தோற்றம் பயங்கரமானது. தொங்கும் மீசையும் நீண்ட கோரப் பற்களுங் காணப்படுகின்றன. ஜடாம குடத்திலே இலிங்கத்தின் உருவம் நடுவில் அமைந்திருக்கின்றது. சிகைச் சக்கரத்தில் சிங்கமுகம் காணப்படுகின்றது. இடது கரத்திற் கேடயமும் வலது கரத்தில் வாளின் கைபிடியும் காணப்படுகின்றன. கழுத்திலே தொங்கும் கபாலமாலையின் உருவம் தெரிகின்றன. கால்கள் இரண்டும் மனிதவடிவம் ஒன்றை உழக்கும் கோலத்தில் அமைந்திருக்கின்றன. அது தக்ஷனுடைய உருவமாகும். கம்பத்தடி மண்டபத்திலும் அகோர வீரபத்திரர், அக்கினி வீரபத்திரர் ஆகியோரின் உருவங்கள் காணப்படுகின்றன.
23.அஷ்ட சக்திகள்
சக்திகள் எண்மரின் உருவங்கள் அஷ்டசக்தி மண்டபத்தில் அமைந்துள்ளன. இடைவெளியின் இரு
சியாமளை, மகேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் படிமங்கள் வடக்குப் பக்கத்திலும் கெளமாரி ரெளத்திரி வைஷ்ணவி, மகாலக்ஷமி என்போரின் உருவங்கள் தெற்குப் பக்கத்திலும் அமைந்துள்ளன. எல்லாச் சிற்பங்களும் ஏறக்குறைய ஐந்து அடி உயரமானவை. சமபங்க நிலையில் தூண்களிலே அவை செதுக்கப் பட்டுள்ளன. ரெளத்திரி, மனோன்மணி ஆகியோர் தவிர்ந்த ஏனையோரின் முன்கரங்கள் அபயமாகவும் வரதமாகவும் உள்ளன. மனோன்மணி, ரெளத்திரி நீங்கலாக உள்ள சக்திகளின் முடிகள் கிரீட மகுடங்களகும் யக்ஞரூபினியின் பின்வலக் கரத்திலே சுருவமும் பின்னுள்ள இடக்கரத்திலே மலர்வடிவமும் அமைந்துள்ளன. சியாமளையின் கரங்கள் தாமரை, நீலோற்பலம் ஆகியவற்றைஏந்தியுள்ளன. மகேஸ்வரியின் கரங்களிலே தாமரை மலரும் பாசமும் தெரிகின்றன. மனோன்மணியினுடைய சின்னமுத்திரையில் அமைந்த வலக்கரத்தில் அக்ஷமாலை தெரிகின்றது. முன்
175

இடக்கரத்தில் நீலோற்பலம் அமைந்துள்ளது. மற்றக்கரங்களில் தாமரை மலர்கள் உள்ளன. முடி ஜடா மகுடமாக அமைந்துள்ளது. கெளமாரியின் பின்கரங்கள் இரண்டும் சக்தி, வச்சிராயுதம் ஆகியவற்றை ஏந்திய வண்ணமாயுள்ளன. ரெளத்திரியின் சடாமகுடம் அக்கினிச் சுவாலைகளினால் அமைந்தது; உதடுகளின் ஓரங்களிலே கோரமான பற்கள் தெரிகின்றன. முன் வலக்கரத்திற் சூலமும் இடக்கரத்திற் கபாலமும் அமைந்துள்ளன. பின் வலக்கரத்தில் டமருகமும் இடக்கரத்திற் சங்கும் காணப்படுகின்றன. வைஷ்ணவியின் முடி கீரிட மகுடமாகும். நெற்றியிலே திரிபுண்டரம் தெரிகின்றது. பற்கள் கோரமானவை பின் வலக்கரம் சக்கரம் ஏந்தியுள்ளது. பின் இடக்கரத்தில் சங்கு அமைந்துள்ளது. மகாலஷ்மியின் பின் கரங்கள் தாமரை மலர்களை ஏந்திய கோலமானவை.
24.விநாயகர்
விநாயகரின் படிமங்கள் பல காணப்படுகின்றன. கோயில் வளாகத்திலே விநாயகர் கோட்டங்களும் அமைந்துள்ளன. கிளிகட்டி மண்டபத்து சித்தி விநாயகர் சந்நிதி தலவிநாயகருக்கு உரியதாகும். சுந்தரேஸ்வர் கோயிலின் நடுக்கட்டு கோபுரத்திற்கு முன்னால் முக்குறுணிப்பிள்ளையாரின் பெருவடிவம் அமைந்திருக்கின்றது. அதிலே நான்கு கரங்கள் காணப்படுகின்றன. முன் வலக்கரத்தில் தந்தமும் பின் வலக்கரத்தில் அங்குசமும் அமைந்துள்ளன. முன் இடக்கரத்திலே மோதகமும் மற்றக்கரத்திலே பாசமும் அமைந்திருக்கின்றன. உருவம் பத்மாசன நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
அஷ்ட சக்தி மண்டபத்தில் எலி வாகனத்தில் அமர்ந்த பிள்ளையாரின் வடிவம் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. இடப்பாகத்திலே தேவியின் உருவம் தெரிகின்றது. படிமத்திலே பத்துக் கரங்கள் அமைந்துள்ளன. அங்குசம், தந்தம், சக்கரம் ஆகியவை வலக்கரங்கள் மூன்றில் அமைந்துள்ளன. இடக் கரங்களிலுள்ள உருவங்களில் தாமரை, கரும்பு வில், பாசம் என்பனவே தெளிவாகத் தெரிகின்றன. முன் இடக்கரம் தேவியை அணைத்த வண்ணமா யுள்ளது. துதிக்கையிலே கலசம் அமைந்திருக்கின்றது. ஆயிரங்கால்மண்டபத்திலும் மகா கணபதியின் சிற்பம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 186
25.குமாரக் கடவுள்
நான்கு கரங்கள் பொருந்திய சுப்பிரமணியரின் வடிவம் ஆயிரங்கால்மண்டபத்தில்அமைந்திருக்கின்றது. மயில் வாகனராகி அவர் காட்சியளிக்கின்றார். பின்கரங்களில் சக்தி, வச்சிராயுதம் ஆகியவை அமைந்திருக்கின்றன. முன் வலக்கரம் அபயகரமாக அமைந்துள்ளது. முன் இடக்கரம் மயிலைப் பிடித்த கோலத்திலே தெரிகின்றது. அசுஷ்ட சக்தி மண்டபத்தில் ஆறுமுகக் கடவுளின் வடிவம் அமைந்திருக்கின்றது. அதிலே பன்னிரண்டு கரங்கள் உள்ளன. முன்கரங்கள் இரண்டும் அபயமாகவும், வரதமாகவும் உள்ளன. மணி, அம்பு, வாள், சக்கரம், பாசம் ஆகியன வலக்கரங்களில் அமைந்திருக்கின்றன. இடக்கரங்கள் வேல், வில், கேடயம், மலர், கோழி ஆகியவற்றைப் பிடித்த வண்ணமாய் உள்ளன. கோபுரங்கள் சிலவற்றிலும் குமாரக் கடவுளின் உருவங்கள் காணப்படுகின்றன.
28. சரஸ்வதி
ஆயிரங்கால் மண்டபத்திலே உன்னதமான வேலைப்பாடுகளுடன் கூடிய சரஸ்வதியின் படிமம் செதுக்கப்பட்டுள்ளது. கைகளிலே வீணையின் உருவம் அமைந்திருக்கின்றது. அங்கலக்ஷணங்களும் அபிநயங்களும் மிகுந்த வனப்புடன் அமைக்கப் பட்டுள்ளன. தலையிலே கிரீடம் அமைந்திருக்கவில்லை.
27.கங்காள மூர்த்தி
ஆயிரங்கால் மண்டபத்தில் அமைந்துள்ள கங்காள மூர்த்தியின் வடிவம் ஆகமங்களிலே சொல்லப்படும் அமைப்பில் இருந்து சில அம்சங்களில் வேறுபட்டதாகும். மூர்த்தியினுடைய முன் வலக்கரம் மானைத் தொடுங் கோலத்தில் அமைந்துள்ளனது. பின் வலக்கரம் டமருகம் ஏந்தியுள்ளது. முன் இடக்கரத்தில் கபாலம் அமைந்துள்ளது. சூல தண்டம் பின் இடக்கரத்தில் அமைந்துள்ளது. கங்காளர் வஸ்திர தாரணராகக் காட்சியளிக்கின்றார். பாதங்களிலே அணிகள் தெரிகின்றன.
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

28.இரதியும் மன்மதனும்
ரதி மன்மதன் ஆகியோரின் உருவங்கள் ஆயிரங்கால் மண்டபத்திலே அமைக்கப்பட்டுள்ளன. மன்மதனுடைய உருவம் சிதைவுற்றுள்ளது. கைகள் இரண்டும் உடைந்துவிட்டன. கையில் ஏந்திய கரும்பு வில்லின் ஒரு சிறிய துண்டமே எஞ்சியுள்ளது. இரதியின் வடிவம் நன்கு பேணப்பட்டநிலையிலே காணப்படுகின்றன. ரதியை அழகின் உருவமாக வியக்கத்தக்க வண்ணம் கலைஞர் வடிவத்துள்ளமை போற்றுதற்குரிய சாதனையாகும். அன்னப் பறவையின் மேல் அமர்ந்திருக்கும் கோலத்தில் வடிவம் தெரிகின்றது. பக்கத்திலே அமைந்திருக்கும் சாமரை வீசும் உருவம் அற்புதக் கோலமானது.
மண்டபத் தூண்களிலே நாயக்க மன்னர்களின் உருவங்களும் அவர்களின் தேவியரின் வடிவங்களும் திருப்பணி செய்த பிரதானிகளின் உருவங்களும் பல இடங்களிலே காணப்படுகின்றன. எல்லா நாயக்க மன்னர்களின் வடிவங்களும் மண்டபங்களிலே அமைக்கப்பட்டிருக்கின்றமை ஒரு சிறப்பம்சமாகும். கற் சிற்பங்கள் இயல்பான தோற்றங் கொண்டன வாகவும் உயிரோட்டம் உள்ளனவாகவும் அமைந்திருக் கின்றன. அவர்களுக்குரிய வஸ்திர அலங்காரங்களும் பதவிச் சின்னங்களான அணிகலன்களும் மிகுந்த வனப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.
ஆயிரங்கால் மண்டபத்திலே காணப்படும் குறவன், குறத்தி, வேடன், அரண்மனைப் பணிப் பெண் முதலியோரின் உருவங்கள் வேலைப்பாட்டிற்கு சாலவுஞ் சிறந்தவை. இவற்றைப் போன்ற யதார்த்த பூர்வமான மனித உருவங்களின் மாதிரி வடிவங்களைக் காண்டல் அரிது. மதுரைக் கோயில் விஜயநகர நாயக்கர் காலச் சிற்பக்கலையின் அருங்காட்சியகமாக விளங்குகின்றது. அங்குள்ள வடிவங்கள் தமிழகத்து கட்டட, சிற்பக் கலை வளர்ச்சியின் உன்னத கட்டத்தைப்பிரதிபலிக்கின்றன.
177

Page 187
விஜயநகர கா ஓவியங்கள்
தினான்காம் நூற்றாண்டில் உருவாகிப் படிப்படியாக வளர்ச்சி பெற்ற விஜயநகரப் பேரரசு தென்னிந்தியப் பிரதேசங்கள் பலவற்றை உள்ளடக்கிய விசாலமான, வளம் பொருந்திய இராச்சியமாக விளங்கியது. அக்காலத்திற் தென்னிந்தியாவிலே பொருளாதார உற்பத்தி பெருகியதன் காரணமாகத் தூர தேசங்களுடன் வாணிபத் தொடர்புகள் மிகுந்தளவில் ஏற்பட்டன. விஜயநகரப் பேரரசில் இந்து கலாசாரம் சிறப்புற்று அபிவிருத்தியடைந்தது. கர்நாடக தேசத்திலும் தமிழகத்திலும் அமைந்திருந்த கோயில்கள் மேலும் பெருவளர்ச்சி அடைந்தன. கலியாண மண்டபம், இராய கோபுரம், பல சுற்றுப் பிரகாரங்கள் என்பன மேலதிகமாக அமைக்கப்பட்டதால் இந்துக் கோயில் அளவிலே பேரமைப்பாகியது.
கட்டடக் கலையிலே விஜயநகர காலத்திற் சில புதிய சிறப்பம்சங்களும் ஏற்படலாயின. அக்காலத்துக் கோயிலமைப்புகள் அலங்கார வேலைப்பாடுகள் மிகுந்தவை. கோயிலின் எல்லாப் பாகங்களிலுங் குறிப்பாகச் சுவர்ப்புறங்களில் இடைவெளிகளின்றிச் சிற்பங்கள் நிரை நிரையாக அமைக்கப்பட்டன. தூண்களின் அமைப்பிலே பல அபிவிருத்திகள் ஏற்படலாயின. முக மண்டபத்திலும், கலியான மண்டபத்திலும், ஆயிரங்கால் மண்டபத்திலும் அமைந்த தூண்கள் ஒவ்வொன்றும் பல உறுப்புகளை உடையனவாகக் காட்சியளித்தன. நடுவிலுள்ள தூணைச் சுற்றி வேறுபாடான அளவிலமைந்த பல கற்றுாண்கள் .
178

O லதது
பேராசிரியர் சி. பத்மநாதன்
அதனுடன் இணைக்கப்பட்டன. காண்போர் மருளும் வனப்புமிக்க சிற்பங்கள் ஒவ்வொரு பாகத்திலும் உருவாக்கப்பட்டன.
விஜயநகர காலத்திலே ஓவியக் கலை முற்கால மரபுகளின் அடிப்படையிலே பெரிதும் விருத்தி பெற்றது. சுவர்களிலும் விதானங்களிலும் வண்ணமை கொண்டு சித்திரங்களை வரையும் மரபு பொது வழமையாகியது. உடையலங்காரங்களிலும் அணிகலன்களைப் பொறுத்த வரையிலும் புதிய முறைகள் வழக்கில் வந்தன. விஜயநகர காலத்துச் சிற்பங்களிலும் ஒவியங்களிலும் காலத்திற்குச் சிறப்பாகவுள்ள வழமைகள் நன்கு பிரதிபலிக்கப் படுகின்றன. பொதுவாகத் தேவர்களதும் மனிதர்களதும் உருவங்கள் வஸ்திராலங்காரம் உடையனவாகவே காணப்படும். வஸ்திரங்களும் தற்காலத்தில் வழங்கும் மாதிரிகளுக்கு ஒப்பானவையாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது. அரசர், பிரதானிகள், உயர் குழாத்தினர் முதலியோரின் உருவங்களிலே அங்க வஸ்திரங்கள் உடலுறுப்புக்களை மூடியவண்ணம் அமைந்திருக்கும். சேலையினை அணிந்த கோலத்திற் பெண்களின் உருவங்கள் காணப்படும். ஆடை வண்ண வேலைப்பாடுகள் பொருந்தியதாகவுங் கவர்ச்சி கொண்டதாகவும் அமைந்திருக்கும். அவற்றிலே கோடுகளும் மடிப்புகளும் வனப்புடன் செம்மையாக அமைந்து காணப்படும். அங்க லக்ஷணங்கள் சோழர் காலத்துச் சித்திரங்களில் உள்ளனவற்றைக் காட்டிலுஞ் சற்று வேறுபட்டனவாயிருக்கும்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 188
இன்று வரை எஞ்சியுள்ள ஓவியங்கள் பெரும்பான்மையுஞ் சமயச் சார்புடையவை என்பதால் அவை சைவம், வைணவம், சமணம் ஆகிய சமய நெறிகளோடு சம்பந்தமானவையாகவே காணப் படுகின்றன. சமணக் கோயில்களிலுள்ள ஒவியங்கள் வர்த்தமான மகாவீரரின் பிறப்பு, வளர்ப்பு, சமண சமய வரலாறு முதலியவற்றைப் பற்றிய விடயங்களைப் பொருளாகக் கொண்டு அமைந்திருக்கும். சைவ, வைணவக் கோயில்களிலே காணப்படுஞ் சித்திரங்கள் புராணக் கதைகளையும் மகாபாரதம், இராமாயணம் போன்றவற்றின் அம்சங்களையுங் காட்சிகளாகக் கொண்டுள்ளன. விஜயநகர காலத்து ஒவியங்களின் சுவடுகள் ஹம்பி, ஆனைக்கொந்தி, தாட்பத்ரி, காஞ்சிபுரம், காளஹஸ்தி, திருப்பதி, திருவண்ணாமலை, சிதம்பரம், திருவாரூர், கும்பகோணம், திருவரங்கம் முதலாக இடங்களிலுள்ள கோயில்களிலே காணப் படுகின்றன.
1. திருப்பருத்திக் குன்றத்து ஓவியங்கள் விஜயநகர காலத்து முதலாவது கட்டத்திற்குரிய ஒவியங்கள் திருப்பருத்திக் குன்றத்து வர்த்தமானர் கோயிலில் அமைந்துள்ள சங்கீத மண்டபத்திலே காணப்படுகின்றன. தமிழகத்துச் சமண சமயத் தலங்களில் திருப்பருத்திக் குன்றம் பிரதானமான ஒன்றாகும். அது நீண்டகால வரலாறு கொண்ட தலமாகும். இன்றும் அது சமணரின் வழிபாட்டுத் தலமாக விளங்குகின்றது. அங்குள்ள கோயில் 14ஆம் நூற்றாண்டிலே புனரமைக்கப்பட்டது. அது இருகப்ப என்னும் பிரதானியின் திருப்பணியாகும். இரண்டாம் புக்கராயனின் அமைச்சனாகவும் சேனாதிபதியாகவும் இருகப்ப விளங்கினார். அவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர். அக்கோயிலின் சங்கீத மண்டபத்து விதானத்திலே 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் சிதைவடைந்துள்ளன.
அங்கிருந்த சித்திரங்களின் சில அம்சங்கள் மட்டுமே இன்றுவரை எஞ்சியுள்ளன. ஒரு காட்சி வர்த்தமான மகாவீரரின் பிறப்பினைப் பற்றியதாகும். அவருடைய தயாரான பிரிய காமினியின் உருவஞ் சித்திரிக்கப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தவுடன்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அதனை நீராட்டி, அதற்கு எண்ணெய் பூசும் நிகழ்ச்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை செளதர் மேந்திரனும் மனைவியாகிய சசியும் செய்து முடித்தனர். அவர்களின் உருவங்கள் வனப்புடன் காட்சியளிக்கப்படுகின்றன. ஆடையலங்காரங்களும் முகபாவனைகளும் சமகாலத்து வழமைகளை யதார்த்தபூர்வமாகப்பிரதிபலிக்கின்றன. இன்னுமொரு சித்திரத்திலே வர்த்தமானரின் முன்னிலையிற் செளதர்மேந்திரர் பாத சுவஸ்திக கரணத்தில் நடனமாடுங்கோலந் தெரிகின்றது.
2. விருபாகூழர் கோயில் ஒவியங்கள்
(1) வித்யாரண்யர் ஊர்வலமாக அழைத்துச்
செல்லப்படுதல்
விஜயநகரத்தில் அமைந்த விருபாக்ஷர் கோயிலின் முகமண்டபத்தின் விதானத்திலே சிறப்பு வாய்ந்த ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. அங்குள்ள காட்சியொன்று விஜயநகர இராச்சியத்தின் தோற்றத்திற்கும் ஆரம்ப கால வளர்ச்சிக்கும் உந்து சக்தியாக விளங்கிய வித்யாரண்யரைப் பற்றியதாகும். அவரைப்பல்லக்கில் ஏற்றிக் கொண்டு ஊர்வலமாகக் போகுங் காட்சி சித்திரிக்கப் பட்டுள்ளது. அவருக்கு முன்னும் பின்னுமாகப் பெரியதோர் கூட்டம் செல்வதைக் காணலாம். யானைகளும், குதிரைப்படைகளும், ஒட்டகங்களும், குழல் வாசிப்பவர்களும், மேள தாள வாத்தியக் காரர்களும் அவர்களோடு பெருந்திரளான மக்களும் செல்லுங் காட்சி தெரிகின்றது. பதினான்காம் நூற்றாண்டிலே இடம்பெற்றதாகக் கருதிய ஒரு நிகழ்ச்சியைப் 16ஆம் நூற்றாண்டிலே இங்கே ஒவியமாக வரைந்துள்ளனர்.
(2) சுயம்வரக் காட்சிகள்
இதற்கு அப்பால் மூன்று காட்சிகள் அமைந்துள்ளன. அவற்றிலொன்று துருபதனுடைய இராசதானியிலே, விசித்திரமான சுழலுஞ் சக்கரத்தை அம்பினால் எய்து அரிய சாதனை புரிந்ததன் பயனாக அர்ச்சுனன் பாஞ்சாலியைத் துணைவியாகப் பெற்றமை பற்றியதாகும். இதனையடுத்துக் காணப்படுவது எவராலும் வளைக்க (փգաT5 மகேஸ்வரனுடைய
179

Page 189
பிரமாண்டமான வில்லினை வளைத்துத் தனது தனியாண்மையைச் சனக மகாராசனது அரச சபையிலே இராமன் நிலைநிறுத்தியமையும், அதன் பயனாக ஏற்பட்ட சீதா - இராமர் கலியாணக் காட்சியும் உருவமாகி அமைந்துள்ளன. அத்துடன் இராமனது தம்பியரின் திருமணக் கோலங்களுந் தெரிகின்றன. அவை சனக மகாராசனின் அவையிலே ஈடேறிய நிகழ்ச்சிகளாகத் தெரிகின்றன. அவற்றிற்கு அப்பால் திருமால் அவதாரங்களும திரிபுராந்தகரின் உருவமும் மதனாந்தகரின் கோலமும் ஒரு வரிசையிலே அமைந்துள்ளன. அவை எல்லோராவிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள வடிவங்களினின்றும் முற்றிலும் வேறுபட்டனவாகும்.
3. லெபாகூறி ஓவியங்கள்
லெபாகூழி என்னும் ஊர் ஆந்திர தேசத்தில், அனந்தபுரம் என்னும் மாவட்டத்தில் அமைந்திருக் கின்றது. அது இந்நாட்களில் ஒரு சிற்றுாராகவே காணப்படுகின்றது. முன்னொரு காலத்தில் வர்த்தகப் பாதைகளின் மையமாக விளங்கியது. மேலும் தீர்த்த யாத்திரைகள் போகும் வழியில் அது அமைந்திருந்தமையுங் குறிப்பிடத்தக்கது. லெபாகூரியில் வரலாற்றுச் சிறப்புடைய ஆலயம் ஒன்று அமைந்திருக்கின்றது. அது முற்காலங்களில் விஜயநகர கலைப்பாணியின் பிரதான மையங்களில் ஒன்றாக விளங்கியது. அங்கே ஹொய்சலர் காலத்துக் கலைப்பாணிக்குரிய கட்டட அமைப்பைப் பின்பற்றி லெபாகூழிகோயில் அச்சுதராயர் காலத்தில் விரூபண்ண நாயக்கர், வீரண்ண நாயக்கர் என்னும் இரு சகோதரர்களால் அமைக்கப்பட்டது. அவர்கள் இருவரும் அப்பிராந்தியத்தில் அரசப் பிரதிநிதிகளாக இருந்தனர். ஆலயம் புதிய திருப்பணியாகும். அது விஜயநகர கலைப்பாணிக்குரிய சிறப்பம்சங்களுடன் விளங்கியது. நிர்மாணகாரர் இருவரும் பேணு கொண்டாவைச் சேர்ந்த நந்திலக்கி செட்டியின் மக்களாவர். அவர்கள் வீரபத்திரக் கடவுளைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள். லெபாகூழி ஆலயம் மூன்று ஆலயங்கள் இணைந்த கட்டட அமைப்பாகும். மூன்று கோயில்களும் கூடி முக்கோண வடிவமாய் அமைந்துள்ளன. அவற்றினிடையே ஆலயங்கள் மூன்றுக்கும்
18O

பொதுவான மண்டபமொன்று அமைந்திருக்கின்றது. அதன் விதானத்திலே வீரபத்திரக் கடவுளின் பெருவடிவமான உருவம் ஒன்றும், கடவுளை வழிபடுங் கோலத்தில் விரூபண்ண, வீரண்ண என்போரின் உருவங்களும் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன.
லெபாகூரி கோயிலில் எழுதப்பட்டுள்ள அச்சுதராயர் காலத்துச் சாசனங்களிற் பல அரிய செய்திகள் சொல்லப்படுகின்றன. நிர்மாணகாரரைப் பற்றிய விவரங்களும் கோயிலைப் பற்றிய செய்திகளும் சுற்றாடலைப் பற்றிய வர்ணனைகளும் அவற்றிலே அடங்கியுள்ளன. மூன்று கோயில்களும் சிவன், விஷ்ணு, வீரபத்திரர் என்போரை முறையே மூலவராகக் கொண்டவை. சிவன் கோயில் விஷ்ணு கோயிலை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது. மூன்றாவது கோயிலான வீரபத்திரர் கோயில் கோயில் இங்கு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. லெபாகூழி கட்டட அமைப்பில் உட்கோபுரத்திற்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடையிலமைந்த மண்டபமே மிக அழகானது கவர்ச்சி பொருந்தியதுமான அமைப்பாகும்.
1. நாட்டிய மண்டபத்து ஒவியங்கள்
நாட்டிய மண்டபத்தின் சுவர்களிலும் விதானத்திலும் ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன. அங்கே மகாபாரதக் காட்சிகளும் இராமாயணக் காட்சிகளும் புராணக் கதைகளும் ஒவியங்களாக வரையப்பெற்றிருந்தன. அத்தோடு பார்வதி திருக்கல்யாணம், தக்ஷணாமூர்த்தி, இராமர் பட்டாபிஷேகம், அர்ச்சுனன் வில்லாண்மையால் திரெளபதியை வென்றமை போன்ற காட்சிகள் அங்கு அமைந்திருந்தன. அர்ச்சுனனின் தவம் பற்றிய கதை பல காட்சிகளில் வரையப்பெற்றுள்ளது. சிவபெருமான் சுகாசனக் கோலத்தில் அமர்ந்திருத்தல், வேடர்கள் முனிவர் வேடம் தாங்கி வருதல் அர்ச்சுனனுக்கு இந்திரன் அஸ்திரங் கொடுத்தல், அர்ச்சுனனுக்கு முன்பு சிவன் வேடன் உருவிலும் உமையவள் பன்றி வேடத்திலுந் தோன்றுதல், பன்றியின் நிமித்தமாக வேட்டுவ வடிவங் கொண்ட மகேஸ்வரனும் அர்ச்சுனனும் தம்மிடையே போர் புரிதல், இறுதியிலே மகேஸ்வரன் அர்ச்சுனனுக்கு வெல்லுதற்கு அரிதான பாசுபத அஸ்த்திரத்தை வழங்கி ஆசீர்வதித்தல்
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 190
முதலான அம்சங்கள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.
பார்வதி திருக்கலியாணம் கவர்ச்சி பொருந்திய வண்ணமாக வரையப்பெற்றுள்ளது. தேவர்களும் முனிவர்களும் கலியாணம் பார்க்க வந்திருக்கின்றனர். விஷ்ணு, வாயு அக்கினி ஆகியோர் பிரதான விருந்தினராகக் காட்சியளிக்கின்றனர். கலியான வைபவத்திற்கு முன்பு பார்வதி சூடிய வஸ்திராபரணங்கள் கவர்ச்சியான வகையிலே சித்திரிக்கப்பட்டுள்ளன. திருக்கல்யாணத்தின் பின்பு சிவனும் உமையும் விளையாடிய சூதாட்டம் மிகச் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. அந்த விளையாட்டில் உமையவள் வெற்றி பெறுங் காட்சி தெரிகின்றது.
இன்னொரு சித்திரத்திலே மனுநீதி கண்ட சோழனின் கதை காட்சியாக வருகின்றது. சோழ இளவரசனுடைய தேர்ச் சக்கரத்தில் அகப்பட்டுக் கொண்ட ஆன் கன்று உயிர்நீத்தலும், அதனால் ஆறாத்துயருற்ற தாய்ப்பசு அரண்மனை வாயில் சென்று மன்னனிடங்குறை சொல்லுவதும், அதனை அறிந்த மன்னன் நீதியை நிலைநாட்டி மனுநீதி கொண்டான் என்று பெரும்புகழ் எய்தியதும், பரிவு கொண்ட ஈஸ்வரன் அரசிளங்குமரனுக்கும் ஆன் கன்றுக்கும் உயிர் வழங்கிய அற்புதமும் இங்கே சிறப்பாக வரையப்பெற்றுள்ளன.
வீரபத்திரக் கடவுளை வழிபடுங் கோலத்தில் ஆலய நிர்மாணகாரராகிய விருபண்ண நாயக்கரும் வீரண்ண நாயக்கரும் பரிவாரங்கள் சகிதம் காணப்படுகின்றனர். அவர்களுக்குக் கோயிற் பூசகர் விபூதிப் பிரசாதம் வழங்கும் காட்சி தெரிகின்றது. அவர்களுடைய வஸ்திரங்களும் தலையலங்காரங்களும் மன்னருக்குரியவை போலத் தெரிகின்றன. அவை திருப்பதியிலும் சிதம்பரத்திலு முள்ள கிருஷ்ண தேவராயரின் படிமங்களில் உள்ளவற்றையும், திருப்பதியிலுள்ள திருமலராயரின் உருவத்தில் உள்ளவற்றையும் ஒத்திருக்கின்றமை குறிப்பிடற்குரியது. அவை அரசருக்கும் அரசப் பிரதானிகளுக்கும் உரிய ஆடையலங்காரங்களாகும். அவர்களைச் சூழ்ந்து நிற்கும் பரிவாரத்தாரின் ஆடைகள் வேறுபட்டவை. அவர்கள் இடுப்பின் கீழே
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

வேஷ்டி போன்ற ஒரு வஸ்திரத்தையும் மேற்புறத்திலே மணிக்கட்டுவரை ՃՄյկ եւ வெள்ளைநிறச் சட்டையினையும், இடுப்பினைச் சுற்றி வண்ண வேலைப்பாடுகளமைந்த உத்தரியத்தினையும் அணிந்த கோலத்திலே காணப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் தலைப்பாகை அணிந்துள்ளனர். பெண்கள் நுண்ணிய வேலைப்பாடு பொருந்திய தங்க நூலிழைத்த வண்ண வண்ணச் சேலைகளை அணிந்த கோலத்தில் உள்ளனர். அவற்றின் மடிப்புகளும் முடிச்சுகளும் வனப்புடைய கோலத்துடன் விளங்குகின்றன.
2. அர்த்த மண்டபத்து ஓவியங்கள்
சிவனது வீரப்பிரதாபக் காட்சி
அர்த்த மண்டபத்திலே சைவ சமய மரபிற் சிறப்பிடம் பெறுகின்ற சிவனைப் பற்றிய புராணக் கதைகள் பல ஒவியங்களாக வரையப்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று இலிங்கோத்பவர் வடிவில் அடியார் களுக்கு அருள் வழங்குவதனைப் பற்றிய காட்சியாகும். அடியார்கள் சகிதம் மார்க்கண்டேயர் நிற்பதைக் காணலாம். சிவபெருமான் மார்க்கண்டேயருக்கு அனுக்கிரகம் புரிந்து இயமனிடம் இருந்து மீட்ட பின்பு மார்க்கண்டேயர் பெருமானை வணங்குங் காட்சி தெரிகின்றது என்று கலா விமர்சகர்கள் கொள்வர்.
இதனையடுத்து அந்தகாசுரன் வதை வண்ண ஒவியமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. அஞ்ஞானத்தின் உருவமாகிய அந்தகனை ஞானமயமான சிவம் ஒழிக்கின்ற காட்சியாக இது அமைகின்றது. அஞ்ஞானமானது இருள் வண்ணம் என்பதால் அந்தகனைக் கரி வண்ணத்திலும் ஞான சொரூபமான சிவனை ஒளி வடிவிலும் ஒவியர்கள் வரைந்துள்ளனர். அந்தகாசுர சம்ஹார மூர்த்தியை ஒரு புறத்திலே முனிவர்களும் மறுபுறத்திலே அடியார்களும் போற்றி வழிபடுங்காட்சி தெரிகின்றது.
தகூழிணாமூர்த்தியின் உருவம் அதனையடுத்து வருகின்றது. குன்றத்தின் மேலே கல்லாலின் நிழலிலே அமர்ந்த கோலத்தில், வாழ்க்கை பற்றிய தத்துவங்களை மிகுந்த சிரமத்தோடு இடையறாது
181

Page 191
ஆராய்கின்ற இருஷிகளுக்கு ஞான உபதேசஞ் செய்கின்ற காட்சி ஒவியமாக வரையப்பட்டுள்ளது. சிவனுடைய முகம் ஒளி மயமானதாகவும் உன்னதமான கம்பீரத்துடனும் விளங்குகின்றது. மடித்துக் கீழே ஊன்றிய இடக்கால் மீது மடித்துத் தங்கிய வண்ணம் வலக்கால் தெரிகின்றது. அவற்றின் மேல் யோகபட்டம் பந்தமாகியுள்ளது. யோகதசுஷிணா மூர்த்தியினைச் சுற்றிப் போற்றித் தொழுகின்ற நிலையிலே அடியார் கூட்டந் தெரிகின்றது. இந்த ஒவியமானது நாட்டிய மண்டபத்திலே காணப்படுந் தகூழிணாமூர்த்தியின் வடிவினைக் காட்டிலும் வனப்பு மிகுந்ததாகும். இன்னொரு காட்சி சண்டேச அணுக்கிரகம் பற்றியதாகும். சண்டேசருக்கு அனுக்கிரகம் புரிந்து, ஆலயத்திற் காவலராக நியமனம் வழங்கி, அப்பதவிக்குரிய சின்னமாக மழுவாயுதத்தைக் கொடுக்குங் காட்சி அற்புதக் கோலமாக அமைந்து விடுகின்றது. இருவருக்கும் இடையிலே நிற்கின்ற கணத்தவர் இருவர் சிவனடியார் கூட்டத்திற்கு இதனை விளம்பரப்படுத்தும் வண்ணமாக ஒரு நீளமான வாத்தியக் கருவியை வாசிக்கின்றனர். விசாரசர்மனார் பசுக்களை மேய்க்கும் பொழுது பயன்படுத்திய கம்பு மழுவாக மாறிய கோலமும் அங்கே சித்திரிக்கப்பட்டுள்ளது. லெபாகூழியிற் காணப்படுகின்ற சண்டேஸ் அணுக்கிரக மூர்த்தம் ஆகமங்களிற் கூறப்படும் வர்ணனைகளில் இருந்தும் சற்று வேறுபட்டதாகும். அத்துடன் காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலிலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் அமைந்துள்ள வடிவங்கள் ஆகமப் பிரமாணமானவை. அவற்றிலே பதவி வழங்குவதற்கு அடையாளமாக மாலை சூட்டுங் காட்சி தெரிகின்றது.
பிக்ஷாடனர்
ஒரு புறத்திலே பிக்ஷாடனரின் கோலம் அமைந்துள்ளது. தனக்கெதிராக முனிவர்கள் செய்த தவத்தினைக் குழப்பும் நோக்கத்துடன் சிவன் ஆண்டி வடிவமாகி முனிவர்களின் பத்தினியரிடத்தே பிச்சை கேட்டுச் சென்றார் என்பது புராணக் கதை. இங்குள்ள சித்திரத்திலே பிக்ஷாடனர் வடிவிலே சிவன் செல்கின்றமையைக் காணலாம். சிவனுடைய கோலம் அளப்பரிய செளந்தர்யமானது. பிக்ஷா
182

பாத்திரத்தைக் கணம் ஒன்று ஏந்திச் செல்கின்றது. வீதி வழியே போகும் பிக்ஷாடனருடைய கோலத்தினால் பதி விரதைகளாகிய ரிஷி பத்தினிகள் மனம்தளம்பி, காம வயப்பட்டுத் தத்தளிக்கும் கோலம் சித்திரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் தடுமாறுவதை அங்க அபிநயங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. ரஸ பாவங்களைச் சந்தர்ப்பதற்கு ஏற்ற வகையிலே உன்னதக் கோலத்திலே சித்திரிப்பதில் ஒவியம் வரைந்தவர்கள் தங்கள் திறமையை இங்கு புலப்படுத்தியுள்ளனர். பிக்ஷாடனருடைய மட்டற்ற பேரழகும் மகிமையான தோற்றமும் மிகச் சிறப்பாக உருவகிக்கப்பட்டுள்ளன. சிவனுடைய அளப்பரிய சுந்தரத் தோற்றத்தைக் கண்ட மான் அபிமானங் கொண்டு துள்ளிப்பாய்கின்றது. இருஷி பத்தினி ஒருத்தி பிக்ஷாபாத்திரத்தில் அன்னமிட்ட சமயத்திலே பரவசமாகி தன்னை மறந்து தன்னாமங் கெட்ட நிலையிலே காணப்படுகின்றாள். அருகிலே இன்னொருத்தி அன்னமிடுவதற்கு ஆவலோடு காத்து நிற்கின்றாள்.
இதற்கு அப்பால் மூன்று ஒவியங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று ஹரிஹரரின் மூர்த்தமாகும். அதிலே அழித்தற் கடவுளின் அம்சமும் காத்தற் கடவுளின் அம்சமும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டுள்ளன. உருவத்திலே ஒரு பாதி சிவனுடை ருத்திர பாவத்திற்குரியது. இன்னொரு பகுதி விஷ்ணுவினுடைய சாந்தமான அனுக்கிரக பாவத்திற்குரியது. ஒவ்வொரு பகுதி விஷ்ணு வினுடைய சாந்தமான அணுக்கிரகபாவத்திற்குரியது. ஒவ்வொரு பாகத்தின் அம்சங்களுந் தனித்தனியாக அவ்வக் கடவுளுக்குரிய பிரதிமாலக்ஷணங்களோடு காணப்படுகின்றது. விஷ்ணுவுக்குரிய பாகம் கரு வண்ணமானது. சிவனின் பாகம் சிவப்பு நிறங் கொண்டது. இதன் அருகே சிவனுடைய கல்யாண சுந்தர வடிவம் அமைந்திருக்கின்றது. அருகினிலே பார்வதியின் உருவம் வரையப் பெற்றுள்ளது. சிவன் - பார்வதி திருக் கல்யாணத்தைப் பார்ப்பதற்குப் பெருந்தொகையான இருஷிகளும் பெண்களும் வந்து கூடியுள்ளனர். பிரமன் புரோகிதராக வந்து கலியான வைபவத்தை நடத்துகின்றார். இதனை ஒத்த ஓவியம் ஒன்று நாட்டிய மண்டபத்திலுங் காணப்படுகின்றது.
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 192
அடுத்துள்ள காட்சியிலே மூன்று லோகங்களினதும் காவலரான ஈஸ்வரன் போர் வீரனாகி ஆலீடகோலத்திற் தோன்றும் நிலை ஒவியமாக வரையப் பெற்றுள்ளது. பூமியைத் தேராகவும் சந்திர சூரியரை அதன் சக்கரங்களாகவுங் கொண்டு முப்புரங்களை எரிப்பதற்குச் செல்லுங் காட்சி இங்கே வரையப் பெற்றுள்ளது. நான்கு வேதங்களும் தேர்க் குதிரைகளாக உருவாகியுள்ளன. பிரம்மதேவன் சாரதியாக வந்துள்ளான். மேருவை வில்லாகவும் வாசுகியை நாணாகவுங் கொண்டு திரிபுரங்கள் மீது அஸ்திரங்கள் செலுத்தப்படுகின்றன. திரிபுரங்களிலுள்ள அசுரர்களை அழிப்பதற்கென்று திருமால் அஸ்திரங்களாக வடிவு கொண்டுள்ளான். திரிபுரதகனத்தைக் கண்ட சிவகணங்களும் அடியார் கூட்டமும் ஆர்ப்பரித்து ஆடுகின்றனர். இந்த ஒவியத்திலே சிவனுடைய உருவம் திரிபங்கமாகவும் பார்வதியினுடைய வடிவம் சமபங்கமாகவும் அமைந்துள்ளன. இறைவரின் வேணியில் அமைந்த கங்கையின் பாவத்தினாற் பார்வதிக்குக் கோபம் உண்டாகின்றது. கண்டிதா நாயகிக்கும் சடநாயகனுக்கும் இடையிலான தகராறு இங்கே சிறப்பாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளது. அம்சும பேதாகமம், சில்பரத்தினம் ஆகியவற்றிலும் இந்த அம்சத்தை எவ்வாறு பிரதிமா லக்ஷணங்களிலே விளக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது. பார்வதியினுடைய விரகிதானனம் இந்த ஒவியத்திலே மிகச் சிறப்பாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. இந்த ஒவியத்தின் அருகிலே சிவனுடைய புஜங்கத் திராஸித நடனக் கோலம் அமைந்திருக் கின்றது. அதற்குப் பக்கத்தில் விருஷய ஆரூடராகி, பார்வதியுடன் இடபத்தின் மேல் அமர்ந்திருக்குங் கோலந்தெரிகின்றது.பக்கத்திலே அந்தகனின் தலை மேல் காலொன்றினை ஊன்றிய கோலத்தில் நந்தியின் வடிவங் காணப்படுகின்றது. மேலும், சந்திரசேகர மூர்த்தத்திற் சிவனுடைய கோலம் வரையப் பெற்றுள்ளது. அருகிலே பார்வதியின் ஆசனக் கோலம் சித்திரிக்கப்பட்டுள்ளது. வலக்கரத்திலே மலர் மொட்டு அமைந்திருக்கின்றது. கீரிட மகுடம், குசபந்தம்முதலியனதேவியின் ஆபரணங்களாயுள்ளன.
வீரபத்திரர் கோயிலின் மூலஸ்தானத்துச் சுவர்களிலே வரையப்பெற்றுள்ள ஒவியங்களிற் சிவ மூர்த்தங்கள் பல காணப்படுகின்றன. அங்குள்ள
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அடியவர் கூட்டத்திற் குரங்கு முகங் கொண்ட ஒருவரின் உருவங் காணப்படுகின்றது. அதனை முசுகுந்தச் சக்கரவர்த்தியின் வடிவம் என்று கொள்ளலாம். திருவாரூரில் முசுகுந்தனின் உருவம் பல காட்சிகளிலே அமைந்திருக்கின்றது. சிவனுடைய தலைசிறந்த அடியார்களுள் முசுகுந்தனும் ஒருவன் என்பது ஜதீகமாகும். தியாகராஜருடைய படிமங்களைச் சிவலோகத்தினின்றுங் கொண்டு வந்து அவற்றை முசுகுந்தன் திருவாரூரிலே தாபனஞ் செய்து ஆலயங் கட்டினான் என்பது புராணக் கதை. அது திருவாரூர்ப் புராணத்தில் விரித்துரைக்கப்படு கின்றது.
சோம பாளயத்தில் உள்ள விஷ்ணு கோயில் லெபாகூரி ஆலயத்தைக் காட்டிலுஞ் சற்றுக் காலத்தாற் பிற்பட்டதாகும். அது பெரிதுஞ்சிதைவுற்ற நிலையிலே காணப்படுகின்றது. அதன் நுழை வாயிலை அடுத்துள்ள மண்டபத்திலே இராமாயணக் காட்சிகளின் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவை குறிப்பிடத்தக்க வனப்புடன் காணப்படுகின்றன. அவை ஓரளவிற்கு லெபாகூS கோயிலின் அர்த்த மண்டபத்திலுள்ள ஒவியங்களை ஒத்திருக்கின்றன. இராமன் தாடகையைக் கொல்லுங் காட்சி, மந்தரையின் சொல்லைக் கேட்டு மனங்குழம்பிய கையேயினைத் திருப்திப்படுத்தத் தசரதன் மேற்கொள்ளும் முயற்சி, அரச குமாரர், வாத்தியக்காரர், மேளகாரர், விறலியர், பாணர் போன்றோரின் தோற்றங்கள் முதலியன மிகுந்த திறமையோடு வரையப்பெற்றுள்ளன.
பதினாறாம் நூற்றாண்டின் கடைக்காற்கூற்றைச் சேர்ந்த ஒவியங்கள் ஆணைகொந்தியிலுள்ள உச்சயப்ப மடத்திலே காணப்படுகின்றன. அவற்றின் பொருள்மரபு சமகால வளமைகளைப் பிரதிபலிப்ப தாகும். அத்துடன் அவை ஒவியக் கலைஞர்களின் அனுபவ முதிர்ச்சியினையும் விளக்கும் வண்ணமாக உருவாக்கப்பட்டுள்ளன. உயிரினங்களை அவதான மாகவும் சீவகாருண்யத்துடனும் கலைஞர்கள் நோக்கினார்கள் என்பதற்கு அணில்களின் சித்திரங்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். சில ஒவியங்களிலே பல்லக்குகளைப் பெண்கள் தூக்கிக் கொண்டு ஒடுங்காட்சி வரையப்பெற்றுள்ளது. நாயக்கர் காலத்துத் தென்னிந்திய ஒவியங்களில்
183

Page 193
அரசிளங்குமாரர்களைப் பெண்கள் தூக்கிச் செல்லுங் காட்சியைச் சித்திரங்களிலே வரைந்துகொள்வது ஒரு பொதுவான வழக்கமாகும். நவநாரிகுஞ்சரம் என்னும் வடிவம் அக்காலத்து ஒவியங்களிலே சிறப்பிடம் பெறுகின்றது. மன்மதன் - ரதிபோன்றோரைப் பெண் வடிவமான யானைகளுங் குதிரைகளுந் தாங்கிச் செல்லுங் காட்சி இவ்வாறு வர்ணிக்கப்படும். விஜயநகரப் பேரரசின் எல்லாப் பாகங்களிலும் கலை வடிவங்களிலே நவநாரி குஞ்சரங்கள் இடம் பெறலாயின. மூத்வித்திரி என்னுமிடத்தில் தூண்களிலும் மரத்தாலான சிற்பங்களிலும் அத்தகைய வடிவங்கள் காணப்படுகின்றன. காஞ்சிபுரத்துக் கோயில்களிலும் அவற்றைப் பரவலாகக் காணலாம்.
3. காஞ்சிபுரத்து வரதராஜ பெருமாள் கோயில் ஒவியங்கள்
ஆண்டாள் ஊஞ்சல் மண்டபம் என்பதன் முகட்டு விதானத்திலே ஒவியங்கள் காணப்படுகின்றன. அங்கே கோபிகா வஸ்திரஹரணம், காலியமர்த்தனம் போன்ற கிருஷ்ணரது பால்ய பருவநிலைகள் காட்சிகளாக வரையப்பெற்றுள்ளன. திருமால், பூதேவி, பூரீதேவி என்னுந் தேவியரோடு வீற்றிருத்தல், நாட்டியக் கரணங்கள், விஜயநகர ராயர்களின் இலச்சினைகளான வராகம், ஈட்டி என்பவற்றின் உருவங்கள், பல்லக்கிலே வைத்துக் கொண்டு செல்லப்படும் வித்யாதரரின் வடிவங்கள், மன்மதன் - ரதி என்போரின் வாகனங்களாகிய யானைகள், குதிரைகள் போன்றவற்றின் உருவங்கள் முதலியன வனப்புடைய கோலத்தில் வரையப்பெற்றுள்ளன. மூலைகளில் தேவர்களதும் கருடர்களதும் உருவங்கள் காணப்படுகின்றன.
நரசிம்மர் கூடத்திற்கு எதிரிலுள்ள மண்டபத்திலும் முகட்டு விதானத்தின் மையப் பகுதியினைச் சுற்றியுள்ள வரிசையிலே மன்மதன் - ரதி ஆகியோரின் உருவங்கள் வெவ்வேறு கோலங்களிலே வரையப்பெற்றுள்ளன. ஒவியம் வரையப்பெற்ற களத்தின் மூலைகளிலே கிளி வாகனத்தில் அமர்ந்த ரதியின் உருவங்கள் அமைந்துள்ளன. சில இடங்களிலே மலரம்புகளை
1.

ஏவுதற்குக் கரும்பு வில்லை வளைத்த கோலத்திற் காமனின் வடிவந் தெரிகின்றது. வேறு சில இடங்களிலே மன்மதன் தனது நாயகியினைக் காம உணர்ச்சியோடு பிடித்து நிற்குங் காட்சி தெரிகின்றது. இன்னுஞ் சில இடங்களில் ரதியைக் கைப்பிடித்துக் கொண்டு அவளின் தோழியர் சகிதமாகக் காமன் கூத்தாடுங் காட்சி வரையப்பெற்றுள்ளது. சிவப்பு, மஞ்சள், பச்சை, கரிநிறம் ஆகிய வண்ணப் பூச்சுக்களின் சுவடுகள் இப்பொழுதுந் தெரிகின்றன. மற்றைய வண்ணங்கள் பெரும்பாலும் முற்றாக மறைந்து விட்டன.
வரதராஜப் பெருமாள் கோயிலின் பின்புறத் திருச் சுற்று மாளிகையிலே சில ஒவியங்கள் காணப்படுகின்றன. வரதராஜரின் சுருட வாகனம் பிரமாண்டமான உருவத்திலே அங்கு சித்திரமாக அமைந்துள்ளது. அதன் இரு பக்கங்களிலும் பெருங் குடைகளும், சாமரைகளும், வேறு சின்னங்களும் வரையப் பெற்றுள்ளன. கருடாழ்வார் திருவிழாக் காட்சியின் உருவமாக இது அமைந்திருக்கின்றது. வரதராஜப் பெருமாள் கோயிலிலே வருடந்தோறும் கருடாழ்வார் உற்சவம் மிகவுஞ் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஒவியத்திலே அடியார்கள் இருவரின் உருவங்கள் தெரிகின்றன. ஒருவரின் உருவம் யானை மேல் இருந்து கொண்டு தாள வாத்தியம் செய்கின்ற அரசனுடைய கோலமாகும். பக்கத்திலே ஒரு சாதாரணமான அடியார் பக்திப் பரவசமாகி நிற்குங் கோலந் தெரிகின்றது. இவ்வுருவங்களுக்கு அருகிலே அமைந்துள்ள சித்திரத்திலே திருமகள், மணமகள், நீலாதேவி என்னுந் தேவியர் மூவர் சகிதம் விஷ்ணு அமர்ந்திருக்கும் காட்சி தெரிகின்றது. இந்த ஒவியத்திலே வண்ணங்கள் ஒளியுடன் விளங்குகின்றன. உருவங்களின் கோடுகள் நன்கு பேணப்பட்ட நிலையில் உள்ளன. அவை பதினேழாம் நூற்றாண்டிற்கு உரியனவாகலாம்.
அளவிலே மிகப்பெரிதான விஜயநகரப் பேரரசில் அடங்கிய பிரதேசங்கள் ஒவ்வொன்றிலுஞ் சில அம்சங்களிற் தனித்துவமான மரபுகள் காணப்பட்டபோதும் அவற்றிடையே ஒரு பொதுவான கலைப் பாணிக்குரிய சிறப்பம்சங்கள்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 194
விரவியிருந்தமையினை அவதானிக்க முடிகின்றது. கஜபதி மன்னர்களின் ஆட்சியின் கீழ் அமைந்த கலிங்க தேசத்திலும் விஜயநகர பாணியில் ஏற்படலாயிற்று.
4. திருவலஞ்சுழி ஓவியங்கள்
திருவலஞ்சுழியுள்ள கபர்த்தீஸ்வரர் கோயிலிற் பதினேழாம் நூற்றாண்டில் வரையப்பெற்ற சிறப்பு வாய்ந்த ஒவியங்கள் காணப்படுகின்றன. அங்குள்ள மண்டபத்தின் விதானத்திலே சிவபெருமானுடைய லீலைகள் வனப்புமிக்க கோலத்தில் வரையப் பெற்றுள்ளன. பிரதேச ஸ்தவம் ஓரிடத்தில் சிறப்புடன் விளங்குகின்றது. சிவனுடைய ஆட்டத்திற்கு ஒத்திசைவாக வாத்தியக்காரர் இசைக் கருவிகளை மிளற்றுங் கோலத்திலே காணப்படுகின்றனர். பல கரங்களைக் கொண்ட சிவன் வாசுகியுடன் கூடி உத்வேகமாக ஆடுந் தாண்டவக் கோலந் தெரிகின்றது. வாசுகி கழன்று திருவாசி போல் அமைந்திருக்கும் காட்சி தெரிகின்றது. தாண்டவத்தின் வேகத்தினால் முடியில் அணிந்திருந்த மன்னர்கள் எல்லாம் விழுந்து சிதறிக் காணப் படுகின்றன.
சடையிலிருந்த கங்கை நிலை தளர்ந்து விட்டதால் மீன்கள் அங்கு மிங்குமாக விழுந்து ஒடுகின்ற காட்சி தெரிகின்றது. தாண்டவத் தினுடைய அதீதமான வேகத்தினாலே முயலகன் மேல் ஊன்றிய பாதம் நிலைமாறிய கோலந் தெரிகின்றது. இது அற்புதக் கோலத்தை கலம் ஒன்றிலே தாமரைமலர் ஏந்திய கோலத்திற் சிவகாமசுந்தரி நின்ற நிலையிலே வியப்புடன் பார்க்குங் காட்சி அமைந்திருக்கின்றது. பிரமன் தாளம் போட விஷ்ணு மிருதங்கத்தை ஒலிக்கின்றார். தேவர்களில் ஒருவர் பக்கத்திலே நின்று பஞ்சமுக வாத்தியத்தை ஒலிக்கின்ற கோலம் அமைந்திருக் கின்றது. ரிஷிகளும் வானவர்களும் விண்ணிலிருந்து இந்த அற்புதக் காட்சியைக் கண்டுகளிப்புறுகின்றனர்.
வேறொரு ஓவியத்தில் வாமனர்களான கணத்தவர்களோடு பிக்ஷாடனர் வடிவிலே சிவபெருமான் சென்று ரிஷிபத்தினிகளிடம் இருந்து
விஜயநகரப்பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

உணவு பெறுங் காட்சி வரையப்பெற்றுள்ளது. இன்னொரு காட்சியிலே ரதி - மன்மதன் ஆகியோரின் உருவங்கள் அமைந்திருக்கின்றன. ரதி அன்னத்தின் மேல் இருக்குங் காட்சி வரையப் பெற்றுள்ளது. மன்மதன் கிளிகளினால் இழுக்கப்படுந் தேரிலே ஆலிடமான கோலத்தில் இருந்த வண்ணமாக மலரம்புகளைக் கரும்பு வில்லினால் எய்கின்ற காட்சி காணப்படுகின்றது. யெளவனமான நடனக்காரர் சகிதம் ரதி காணப்படுகின்றாள்.
ஒரு சித்திரத்திலே விஷ்ணு அனுக்கிரக மூர்த்தியின் உருவம் வரையப்பெற்றுள்ளது. அதிலே சிவனும் பார்வதியும் இடபவாகனத்தில் அமர்ந்த கோலத்தில் உள்ளனர். அவர்களை வழிபடும் திருமாலுக்குச் சிவபெருமான் அருள் புரியுங் காட்சி தெரிகின்றது. இன்னும் ஒரு சித்திரத்திலே குமாரக் கடவுள் பிரமனுக்குப் பிரணவ மந்திரம் பற்றி விளக்கிய காட்சி அமைந்திருக்கின்றது. பிரமனும் ரிஷிகளுங் கூடி இருக்கும் சபையிலே அவர்களை நோக்கிய வண்ணம் சிவனும் பார்வதியும் வீற்றிருக்கின்றனர். சிவனுடைய கரம் ஒன்று சின்முத்திரையுடன் காணப்படுகின்றது. அது ஞானோபதேசத்தின் அறிகுறியாகும். சபையோர் முன்னிலையிற் பாலகன் ஒருவனின் கோலந் தெரிகின்றது. அது பிரமனுக்கு ஞானோபதேசம் செய்த குமாரக் கடவுளின் தோற்றமாகும். குமாரக் கடவுளின் சக்தியானது இறைவனையே வியப்பில் ஆழ்த்திவிட்டது. குமாரக் கடவுள் ஞான வடிவம் என்பதால் அவரைக் குரு மூர்த்தி என்றும் ஞான சாஸ்தா என்றுங் கொள்வாராயினர். இந்தக் காட்சி அற்புதக் கோலமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. வேறொரு காட்சியிற் சிவனை நோக்கிப் பெரியதோர் கூட்டம் அணிவகுத்துச் செல்லுங் கோலந் தெரிகின்றது. பிருங்கி முனிவர், நந்திகேஸ்வலர், விஷ்ணு, பிரமன், இந்திரன் முதலானோர் அக்கூட்டத்தில் காணப்படுகின்றனர். இந்திரனுடைய உடல் முழுவதும் கண்கள் போன்ற உருவங்கள் தெரிகின்றன. இந்திரனுக்கு ஆயிரங் கண்கள் உண்டு என்பது புராணக் கதை. இவற்றைப் போன்ற, பெளராணிக சாரமான வேறும் பல ஒவியங்கள் இங்கே காணப்படுகின்றன.
185

Page 195
5. திருவண்ணாமலை ஒவியங்கள்
விஜயநகரப் பேரரசர் காலத்து ஒவியங்கள் சில திருவண்ணாமலைக் கோபுரத்திலும் மண்டப மொன்றிலுங் காணப்படுகின்றன. திருவண்ணா மலையிலுள்ள ராயகோபுரம் பதினொரு நிலைகளைக் கொண்ட பேரமைப்பாகக் கிருஷ்ண தேவராயரின் ஆட்சியிற் செல்லப்ப நாயக்கரால் அமைக்கப்பட்டது. அதன் விதானத்திலே கஜவேட்டைக் காட்சியொன்று சித்திரக் கோலமாக விளங்குகின்றது. விஜயநகர மன்னர்களின் பிரஸஸ்திகள் ராயர்கள் கஜ வேட்டை கண்டருளியமையினை அவர்களின் சிறப்பிற்குரிய சாதனைகளின் ஒன்றாகக் குறிப்பிடுகின்றது. பெரிய வேளமொன்றை வீரர்களான இருவர் பிடிக்கும் காட்சி இங்கு காணப்படுகின்றது. அதனைச் சுற்றி மற்றுமோர் ஒவியம் காணப்படுகின்றது. அதிலே நாட்டியப் பெண்களின் வடிவங்கள் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. நடனத்தைக் கண்டு இரசிக்கும் முடிதரித்த ஆண்மகன் ஒருவனின் உருவமும் அழகான கோலத்தில் அமைந்துள்ளது.
திருவண்ணாமலையில் எழுந்த மண்டபத்திலும் பல சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அம்மண்டபம் கோயிலின் பின்புறமாக மலையின் அடிவாரத்தைச் சுற்றி அமைந்திருக்கின்றது. அதன் விதானத்தில் நான்கு வெவ்வேறான கதைகள் சித்திரக் கோலமாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றிலொன்று பார்வதி பரமேஸ்வரரின் திருக்கல்யாண வைபவமாகும். இரண்டாவது சித்திரம் இராமாயணக் கதையின் அம்சமொன்றினை விளக்கும் காட்சியாக அமைந்திருக்கின்றது. மற்றொன்று ஆயர்குலக் கன்னியொருத்தியும் கோபாலனொருவனுங் கூடிக் குலாவிக் குதூகலிக்கும் காட்சியின் கோலமாகும். நான்காவது ஒவியம் வள்ளி திருமணம் பற்றிய கதையின் சித்திரக் கோலமாய் அமைந்துள்ளது.
5. திருவரங்கம்
விஜயநகர காலத்தின் முற்பகுதியில் வரையப்பெற்ற ஒவியங்கள் சில திருவரங்கநாதர் ஆலயத்து வேணுகோபாலர் சன்னதிக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபம் ஒன்றின் விதானத்திற்
186

காணப்படுகின்றன. கோகுலப் பெண்களும் ஆனிரைகளும் சூழ்ந்து நிற்க, கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைக்கும் காட்சி இங்கு வரையப் பெற்றுள்ளது. கோகுலப் பெண்களின் உருவங்கள் மிகுதியான ஆபரணங்களுடன் அமைந்திருக் கின்றன. அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள் அழகிய சித்திர வேலைப்பாடுகள் பொருந்தியவை.
6. திருவீழிமிழலைச் சித்திரங்கள்
நாயன்மார்களின் பாடல் பெற்ற உத்தம தலங்களில் ஒன்றான திருவிழிமிழலையிலே 15ஆம் 16ஆம் நூற்றாண்டுகளில் வரையப்பெற்ற ஒவியங்கள் சில காணப்படுகின்றன. கோயிலின் கட்டுமானங்கள் சோழப் பேரரசர் காலத்தவை என்பதை அங்குள்ள சாசனங்கள் மூலமாகவும் சிற்பங்களின் கலைப் பண்புகளினாலும் அறிந்து கொள்ளலாம். அங்கு 11ஆம் நூற்றாண்டளவில் அமைக்கப்பட்ட மண்டபம் ஒன்றிலே குழலூதும் கண்ணனின் கோலமும் காளிங்கமர்த்தனக் கோலமும் சித்திரக் காட்சிகளாய் அமைத்துள்ளன. வேணுகோபாலின் சித்திரத்திலே கண்ணனின் குழலோசையினாற் கவரப்பட்டடுப் பரவசமாகி மெய்மறந்து நிற்கும் கோபியரின் கோலம் வனப்பு மிகுந்த காட்சியாக வரையப்பட்டுள்ளது. காளியமர்த்தனனின் இரு மருங்கிலும் ருக்மிணி, சத்தியபாமா ஆகியோரதும் கொடிப் பெண்கள் இருவரினதும் வனப்புமிக்க வடிவங்கள் வரையப் பட்டுள்ளன. இவ்வோவியங்கள் 15ஆம் நூற்றாண்டில், விருப்பண உடையாரின் காலத்தில் வரையப்பட்டவை என்று சிலர் கருதுவர். விருபண்ண உடையார் இக்கோயிலுக்கு வழங்கிய தானங்களை வர்ணிக்கும் சாசனங்கள் சில உள்ளன.
7. திருவெள்ளறை ஓவியங்கள்
திருச்சி மாவட்டத்துத் திருவெள்ளறையில் அமைந்துள்ள ஆலயங்களில் ஒன்று புண்டரீ காக்ஷர் கோயில், அதன் திருச்சுற்று மாளிகைச் சுவர்களிலும் விதானங்களிலும் முற்காலங்களில் ஒவியங்கள் காணப்பட்டன. ஆனால் இந்நாட்களிலே சித்திர மண்டபத்து விதானத்தில் மட்டுமே ஒவியங்கள் உள்ளன. அங்குள்ள சில சித்திரங்கள் இராமாயணக்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 196
கதையின் சில அம்சங்களை விளக்குவனவாகும். வேறு சில சித்திரங்கள் அழகிய பூ வேலைப் பாடுகளின் கோலமானவை.
சில சித்திரங்கள் அசாதாரணமான உருவங்களின் விளக்கமானவை. ஒருதலை கொண்ட இரு மீன்களின் வடிவங்கள், ஒரே தலையுடன் அமைந்த எருது, யானை ஆகியவற்றின் உருவங்கள், ஒரு மீனுக்கும் மனிதனொருவனுக்கும் பொதுவான ஒரே தலை என்ற விதமாக விசித்திரமான உருவங்கள் அவற்றிலே காணப்படுகின்றன.
திருவெள்ளறையிலே சீதைக்கு அனுமன் சூளாமணி கொடுத்தது வரையிலான இராமாயணக் கதை ஒவியமாக வரையப்பெற்றுள்ளது. சுக்கிரீவனின் பட்டாபிஷேகம் மிகுந்த வனப்புடன் விளங்குகின்றது. பாம்பாட்டியின் உருவகமான ஒவியம் அங்குள்ள மற்றுமொரு சிறப்பான சித்திரமாகும். மகுடி ஊதும் பாம்பாட்டியின் வடிவமும் அவன் முன் படமெடுத்தாடும் நாகமும் பாம்பாட்டியின் அருகிலிருந்து கொண்டு அதனை அவதானிக்கும் குரங்கின் உருவமும் இயற்கை வனப்புடன் காணப்படுகின்றன.
8. திருமலைச் சமணர் ஓவியங்கள்
திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் திருமலையிலே முதலாம் இராஜராஜனின் தமக்கையாரான ஆழ்வார் பராந்தகன் குந்தவையாரால் அமைக்கப்பட்ட சமணப்பள்ளி இன்றும் நிலைபெறுகின்றது. மலையின் அடிப் பகுதியில் முற்காலத்திற் பல ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன. காலப்போக்கில் கட்டடம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இயற்கையாக அமைந்துள்ள மேல்விதானத்தில் இப்பொழுதும் சில ஒவியங்கள் காணப்படுகின்றன. பூ வேலைப்பாடுகள் அமைந்த திரைச்சீலை விரிப்பும் போலச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அடுத்துள்ள அறையிலே சமண
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

முனிவர்களின் உருவங்களும் பெண்கள் சிலரின் உருவங்களும் சித்திரக் கோலத்தில் அமைந்துள்ளன. வேறொரு அறையிலே சமண சமய மரபிலுள்ள சமவசரணத்தின் காட்சி அமைந்துள்ளது. செங்கற் கட்டடத்தின் புறத்தே பெண்கள் மூவரின் முகங்கள் அழைகாக வரையப்பட்டுள்ளன.
திருப்புடைமருதூர் ஓவியங்கள்
விஜயநகர காலத்து ஒவியங்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருப்புடைமருதூர் கோயிற் கோபுரத்திலுங் காணப்படுகின்றன. அவை சமயச் சார்பற்றவை. அவை சமகாலத்து வாணிபத்தின் அம்சமொன்றின் விளக்கமானவை. அராபிய வணிகர் கப்பலொன்றிற்குதிரைகளோடு வந்திறங்குங் காட்சி ஒவியமாக அங்கு வரையப்பட்டுள்ளது. குதிரைகளின் வடிவங்கள் கம்பீரமான தோற்றத்துடன் காணப்படுகின்றன. படைகளுக்கு வேண்டிய குதிரைகளை விஜயநகர ராயர்கள், அராபியா, பாரசீகம் முதலிய தேசங்களிலிருந்தும் வணிகர் மூலம் இறக்குமதி செய்தார்கள். பெருந் தொகையான குதிரைகளை வணிகர் தென்னிந்தியப் பிரதேசங்களுக்கு இறக்குமதி செய்தமை பற்றிய 6) குறிப்புகள் நூல்களில் உள்ளன. அவற்றை உறுதி செய்யுமாப்போலத் திருப்புடைமருதூர் ஓவியங்கள் அமைந்து விடுகின்றன.
விஜயநகர காலத்திலே புராணக் கதைகளையும் இராமாயணக் கதைகளையும் ஆதாரமாகக் கொண்ட காட்சிகள் சுவரோவியங்களாக வரையப்பட்டன. அவை அளவிற் பெரியனவாகவும் புதிய அம்சங்கள் பொருந்தியனவாகவுங் காணப்பட்டன. அவற்றுட் கிருஷ்ணரைப் பற்றிய ஓவியங்களே மிகுந்து காணப்பட்டன. அங்கலகூடிணங்கள், மனித உருவங்களின் முகபாவங்கள், ஆடை ஆபரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் அவற்றிலே சில புதிய பண்புகளை அவதானிக்க முடிகின்றது.
187

Page 197
நாயக்கர் கால ஓவியங்கள்
தினாறாம் நூற்றாண்டில், தலிக்கோட்டைப் போரின் விளைவாக 1565ஆம் ஆண்டில் விஜயநகரப் GLIJJ Gi சீர்குலைந்தது. தக்கிணத்தின் சுல்தான்களின் படைகள் விஜயநகரத்தில் நெடுங்காலந் தங்கியிருந்து அதனை முற்றாக அழித்தனர். அதற்குப் பின்பு பேரரசர் பதவிபெற்ற ராயர்கள் பேணு கொண்டவில் இருந்து அதிகாரஞ் செலுத்தினர். மண்டலங்களிலுள்ள தளகர்த்தர்கள், சிற்றரசர்கள், சாமந்தர்கள் முதலாயினோர் படிப்படியாகச் சுதந்திரமாக ஆட்சி புரியத் தலைப்பட்டனர். தமிழகத்திலுள்ள அத்தகைய பிரதானிகளிலே மதுரை, தஞ்சாவூர் ஆகிய சமஸ்தானங்களைச் சேர்ந்த நாயக்கர்கள் பிரதானமானவர்கள். பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டுகள் தமிழக வரலாற்றிலே நாயக்கர் சாலம் எனப்படும். விஜயநகரப் பேரரசர்களைப்போல நாயக்க மன்னர்களும் இலக்கியவாதிகளுக்கும் கவிவாணருக்கும் வித்துவான்களுக்கும் கலைஞர் களுக்கும் ஆதரவு வழங்கினார்கள். கோயில்களிலே கட்டடங்களைக் கட்டுவதில் அதிக கவனஞ் செலுத்தினார்கள். சங்கீதம், நாட்டியம் ஆகிய கலைகளின் விருத்திக்கு ஆதரவு புரிந்தார்கள். அதேபோல ஒவியக் கலைஞர்களும் நாயக்க மன்னரின் ஆதரவையும் பாராட்டையும் பெற்றனர். தஞ்சாவூரில் ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர்களும் அத்தகைய பண்புகளைக் கொண்டிருந்தனர்.
நாயக்கர் கால ஓவியக் கலையானது சில தனிப்பண்புகளுடன் விளங்குகின்றது. அக்
183

)தது
பேராசிரியர் சி. பத்மநாதன்
காலத்துத் தமிழகத்து ஓவியக் கலையானது மரபுவழியான சம்பிரதாயங்களையும் மராட்டியரதும் மொகாலயரதும் கலைப்பணியின் செல்வாக்கினையும் பிரதிபலிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. நாயக்கர் காலத்து ஒவியங்களிற் திருப்பருத்திக்குன்றம், சிதம்பரம், மதுரை, திருவாரூர், இராமேஸ்வலம் ஆகிய தலங்களிலுள்ளவை பிரதானமானவையாகும். இன்னும் பல தலங்களிலே அக்காலத்து ஒவியங்களும் அவற்றின் சுவடுகளும் காணப் படுகின்றன. இந்தக் கட்டுரையிலே திருவாரூர் தவிர்ந்த ஏனைய தலங்களிலே காணப்படுஞ் சித்திரங்களின் பொதுப் பண்புகள் மேலோட்டமாக ஆராயப்படும்.
திருப்பருத்திக் குன்றம்
திருப்பருத்திக் குன்றத்து வர்த்தமானார் கோயிலின் சங்கீத மண்டபத்தின் முகட்டு விதானத்திலே நாயக்கர் காலத்தில் வரையப்பெற்ற ஒவியங்கள் பல காணப்படுகின்றன. அவை சமண சமயச் சார்புடையவை; சமண மரபிலுள்ள கதைகளையும் கோட்பாடுகளையும் விளக்கும் வகையில் அமைந்தவை. ஒவ்வொரு காட்சியின் கீழும் அதனைப் பற்றிய சுருக்கமான விளக்கம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. கோயில் ஒவியங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு பொது வழமையாகிவிட்டது. சிதம்பரம், திருவாரூர் முதலான தலங்களிலே ஒவியங்களை விளக்கும் வாசகங்கள் அநேகம் உண்டு. ரிஷபதேவர், வர்த்தமானர், நேமிநாதர் ஆகியோரின் சரிதங்கள் சித்திரக்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 198
காட்சிகளாகச் சங்கீத மண்டபத்து விதானங்களிலே அமைக்கப்பட்டுள்ளன. வரவேற்பு வைபவங்களிற் பூரண கும்பம் வைத்தல், மலர்தூவி அஞ்சலிசெய்தல், மாலை சூட்தல் முதலிய விடயங்கள் இதிற் சிறப்பாக வரையப்பட்டுள்ளன. பல சித்திரங்களிலே நாட்டியக்காரரின் உருவங்களும் இசைக் கலைஞரின் வடிவங்களும் வரிசை வரிசையாக வரையப்பெற்றுள்ளன. கிருஷ்ணரின் லீலைகளும் அங்கு காட்சிகளாக வரையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் ஓவியங்கள்
தஞ்சாவூரிலே நாயக்கர் காலத்து ஒவியங்கள் பல காணப்படுகின்றன. திருச்சுற்று மாளிகையின் மேற்குப் புறத்தில் ஒரு விசாலமான சித்திரத்திலே தேவர்களின் உருவங்கள் வரையப்பெற்றுள்ளன. அவற்றிலே யானை மேல் அமர்ந்த இந்திரனின் கோலமும், ஆட்டுக்கடாவின் மேல் இருக்கும் அக்கிணிதேவனின் வடிவமும் எருமையினை வாகனமாகக் கொண்ட யமனின் உருவமுந் தெரிகின்றன. நரவாகன ஆரூடராக நிருத்திதேவரையும் மகர வாகனத்தில் வருணனையும் மானின் மேல் மருதரையும் வரைந்துள்ளனர். பாற் கடலினைக் கடைந்த காட்சி இங்கே சித்திரிக்கப்பட்டுள்ளது. அச்சமயத்திலே தோன்றிய கல்ப விருகூரம், உச்சை சிரவஸ் என்னும் தேவலோகக் குதிரை, ஐராவதம், காமதேனு, ரம்பை, ஊர்வசி என்னுந் தேவலோகத்து நாட்டியப் பெண்கள் முதலாயினோர் தோன்றிய காட்சி இந்தச் சித்திரத்திலே தெரிகின்றது. இவற்றின் ஒரத்திலே தேவர்கள் முன்பு பத்மாசனத்தில் அபயம், வரதம் ஆகிய ஹஸ்தங்களோடு அமர்ந்திருக்குந் திருமகளின் வடிவம் சிறப்பான கோலத்துடன் வரையப்பட்டுள்ளது. அருகிலுள்ள தென்புறச் சுவரிலே தேவர்களும் அசுரர்களும் மந்தரமலையை மத்தாகவும் வாசுகியினைக் கயிறாகவும் கொண்டு பாற் கடலைக் கடையுங் காட்சி அமைந்துள்ளது. மந்தர மலைக்கு ஆதாரமாக ஆமை அமைந்திருக்கின்றது. நீர், சமுத்திரம் என்பவற்றின் அடையாளமாக மீன்களும் மலர்களுந்தெரிகின்றன. இந்தக் காட்சிக்கு மேலே பூரீதேவி, பூதேவி என்போர்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

சகிதமான விஷ்ணுவின் உருவம் வரையப்பட்டுள்ளது. பிரமன், இந்திரன் முதலான தேவர்கள் திருமாலை நோக்கி வந்திருக்குங் காட்சி தெரிகின்றது. இந்திரனின் வடிவம் ஈரிடங்களிலே வரையப்பெற்றுள்ளது. ஓரிடத்தில் யானை மேல் இந்திரனின் வடிவத்தை வரைந்துள்ளனர்.
இதற்கு அப்பால், வடக்கு நோக்கிய சுவரிலே துருவாச முனிவரைப் பற்றிய விசாலமான சித்திரக் காட்சி தெரிகின்றது. துருவாச முனிவர் தவவேடத்தில் இருக்கின்ற ஒரு கோலந் தெரிகின்றது. அதற்கப்பாற் தடாக நீரினால் அவர் சிவலிங்கத்திற்கு அபிஷேகஞ் செய்யுங் காட்சி அமைந்திருக்கின்றது. இன்னும் ஒரு காட்சியிற் சிவலிங்கத்தை நோக்கிச் செல்லுகின்ற இந்திரனுக்கு இலிங்கத்திற்குச் சூட்டப் பெற்ற மாலையொன்றினை எடுத்து முனிவர் கொடுக்குங் காட்சி உள்ளது. இன்னொரு சித்திரத்திலே தேரில் இருந்த வண்ணமாக வீரர்கள் போர்புரியுங் காட்சி வரையப்பெற்றுள்ளது. எதிர்ப்புறமாகவுள்ள சுவரிலே கம்பன், நிகம்பன் முதலான அசுர்களோடு துர்க்கை போர் புரியுங் காட்சி காணப்படுகின்றது. போர் வீரர்களுக்குரிய ஆலிடமான கோலத்திலே துர்க்கையின் வடிவம் அமைந்துள்ளது. இதற்கு அப்பாலமைந்த வடக்கு நோக்கிய சுவரிலே இந்தக் காட்சி ஒரு முறை வரையப்பெற்றுள்ளது. அத்துடன் சிவனைப் பூசிப்பதற்குத் திருமால் தடாகம் ஒன்றிலே மலர் கொய்யும் நிலை தெரிகின்றது. திருமால் நாள்தோறும் ஆயிரம் மலர் கொண்டு சிவனைப் பூசிப்பதும், ஒரு நாள் ஒரு மலர் குறைந்துவிட்டதால் திருமால் தனது கண்மலரை அர்ப்பணித்த பொழுது மாலுக்குச் சிவன் விஷ்ணு அனுக்கிரக மூர்த்தியாகி அருள் வழங்கியமை சிறப்பாக வரையப்பெற்றுள்ளது. தடாகம் செம்மையாக அமைந்திருப்பதோடு அதற்கு அண்மையில் மரங்கள் பலவுந் தெரிகின்றன. தஞ்சாவூரிலுள்ள கும்பகோணம் முதலாகிய ஊர்களில் நாயக்கர் கால ஓவியங்கள் பல காணப்படுகின்றன.
சிதம்பரத்து ஓவியங்கள்
தில்லையில், திருக்காமக் கோட்டத்தின் முன்னால் அமைந்த மகாமண்டபத்தின் முகட்டு
189

Page 199
விதானத்திலே சிவனும் திருமாலும் முறையே பிக்ஷாடனராகவும் மோகினியாகவும் தோன்றிய காட்சி வனப்புமிக்க ஒவியமாக விளங்குகின்றது. தாருகா வனத்திற் தங்கியிருந்த ரிஷிகளையும் ரிஷி பத்தினிகளையுஞ் சோதனை செய்யும் நோக்கத்துடன் அரனும், அரியும் இந்த வேடங்களைத் தாங்கிச் சென்றனர். அங்கே பிக்ஷாடனர் ரிஷி பத்தினிகளைக் கவர்ந்தமை, ரிஷிகள் மோகினியின் தோற்றத்தில் மோகங் கொண்டு தங்கள் தவ வலிமையினை இழந்தமை என்பவற்றைப் பல காட்சிகளாக வரைந்துள்ளனர்.நீளமான வரிசையில்அவ்வோவியங்கள் வரையப் பெற்றுள்ளன. மிகுந்த அழகும் ஒளியும் பொருந்திய வண்ணங்களில் அவை வரையப் பட்டுள்ளன. தமது நோக்கத்திலே தோல்வி கண்ட ரிஷிகள் சிவனை அழிப்பதற்கென ஆவிஸாரிக ஹோமம் தொடங்கியமையும், அதிலிருந்து மான், அரவம், புலி, முயலகன் முதலானவை தோன்றியமையும் சித்திரங்களாக வரையப் பெற்றுள்ளன. மண்டபத்தின் ஒரு பகுதியிலே கணேசர், உமாசகிதர், கந்தக் கடவுள், வள்ளி, தெய்வயானை அம்மன், ரிஷிகள் ஆகியோரின் உருவங்கள் தெரிகின்றன. கைலாசத்திலே உமா மகேஸ்வரரோடு நந்தி பேசிக் கொண்டிருக்குங் காட்சி வரையப்பெற்றுள்ளது. சிவகணங்கள் நடராஜரையும் சிவகாமசுந்தரியையும் சூழ்ந்த வண்ணமாய் இருக்குங் காட்சி அமைந்திருக் கின்றது. அத்துடன் சிவனடியார்களின் வாழ்க்கை வரலாறுகளை விளக்கும் புராணக் கதைகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன. திருக்காமக் கோட்டத்துக் கோபுரவாயிலுக்கு அண்மையிலுள்ள மண்டபத்து விதானத்திலே, கனகசபையிலே சிவகாமசுந்தரி சமேதராய் நடராசர் வீற்றிருக்குங் காட்சி வனப்புமிக்க கோலத்துடன் விளங்குகின்றது. அவர்களைச் சுற்றிக் கோள்களும் தேவகணங்களும் சிதம்பரத்துத் தீகூழிதர் முதலானோரும் காணப் படுகின்றனர். இவ்வோவியங்கள் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
மதுரை ஒவியங்கள்
மீனாகூழி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வானுலகத் தேவரும் பூலோக மாந்தரும் வியப்புடன் கண்டு களிக்கும் காட்சியாக விளங்குகின்றது.
190

அதனொரு புறத்தில் இராணி மங்கம்மாள் மீனாகூழி திருமணத்தைக் கண்டு போற்றி வணங்கும் காட்சி தெரிகின்றது. மகாராஜ பூனிட்மான்ய மகாராஜ பூரீ மங்கம்மாள் அவர்கள் எனத் தெலுங்கிலும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது. மங்கம்மாளின் அருகிலே இளமைக் கோலத்தின் விஜயரங்க சொக்கநாத நாயக்கரின் உருவம் வரையப் பட்டுள்ளது. மறு புறத்திலே தளவாய் இராமப்ப ஐயனுடைய உருவமும் பெயரும் வரையப்பட்டுள்ளன.
மீனாகூழி அட்ட திக்குப்பாலகருடன் சமர்புரியும் காட்சி சித்திரமாக அருகிலே வரையப்பட்டுள்ளது. வேறொரு சித்திரத்திலே மீனாகூரியிடமிருந்து அந்தணர் ஒருவர் செங்கோலை வாங்குங் காட்சி அமைந்திருக்கின்றது. அருகிலே இராணி மங்கம்மாள் சகிதமாகப் பலர் வணங்கி நிற்கும் கோலந் தெரிகின்றது. இந்தக் காட்சி மதுரை நாயக்கர் மீனாகூழி அம்மனிடமிருந்து ஆட்சி யுரிமையினையும் அதிகாரத்தையும் பெற்றவர்கள் என்ற கருத்தின் உருவகமாகும்.
அழகர் கோயில் ஓவியங்கள்
நாயக்கர் கால ஒவியங்கள் பல மதுரையிலுள்ள அழகர் கோயிலிற் காணப்படுகின்றன. வசந்த மண்டபம், கல்யாண மண்டபம், திருச்சுற்று விதானம் என்பவற்றிலே 17ஆம் நூற்றாண்டில் வரையப்பெற்ற ஒவியங்கள் உள்ளன. சோமசந்த விமானத்தைச் சுற்றி அமைந்துள்ள சுதை உருவங்களிலும் வண்ணப்பூச்சிகள் காணப்படுகின்றன. திருச்சுற்று மாளிகையிலுள்ள ஒவியங்களில் மகாவிஷ்ணு, பூரீதேவி ஆகியோரின் வடிவங்கள் சாலச் சிறந்தவை. அவை திருமலைநாயக்கர் காலத்தவை.
வசந்த மண்டபத்திலே காணப்படும் ஒவியங்கள் மிகுந்த வனப்புடன் வரையப்பட்டுள்ளன. உயிரோட்ட மான அந்த ஒவியங்களின் வண்ணப் பூச்சு மிகுந்த பிரகாசத்துடன் விளங்குகின்றது. கருவறையிலுள்ள மூலவரின் கோலத்தை வசந்த மணடபத்தில் சிறப்புமிக்க வண்ணமாக வரைந்துள்ளனர். மற்றொரு சித்திரக் காட்சியில் பஞ்ச மூர்த்திகளினதும் அவர்களின் தேவியரதும் உருவங்கள் இணையிலா
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 200
வனப்புடன் விளங்குகின்றன. இராமாயணக் காட்சிகள் இன்னொரு வகைக்குரியனவாகும். இராமகாதையின் பிரதானமான அம்சங்களை வசந்த மண்டபத்திலே சித்திரங்களாக வரைந்துள்ளனர். அவற்றிலொன்று தசரதனின் தேவியர் பல்லக்கில் அயோத்திக்கு ஏற்றிச் செல்லப்படுங் காட்சியாகும். ஒவியத்திற்குப் பொருளான கதை புராதனமான தெனினும் அதிலே சித்திரக் கோலமாகியுள்ள கதாபாத்திரங்கள் சமகாலச் சமுதாய நிலைகளையும் பழக்க வழக்கங்களையும் பிரதிபலிப்பனவாகவே அமைந்துள்ளன. பதினேழாம் நூற்றாண்டிலே மதுரையில் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு தரங்களிலும் எவ்வாறான ஆடைகளையும் ஆபரணங்களையும் அணிந்தனர் என்பதை இவ்வோவியங்கள் பதிவு செய்கின்றன.
இராமர் முதலான இராச குமாரரின் பிறப்புப் பற்றிய காட்சிகள் இயற்கையான கோலத்தில் அமைந்துள்ளன. குழந்தைகளைத் தொட்டிலிட்டுத் தாலாட்டும் கோலம் வனப்பு மிகுந்த காட்சியாக அமைந்துள்ளது. அது தூங்கும் அஞ்சல் என்று எழுத்துக்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இராமர் பட்டாபிஷேகம் பற்றித் தசரதன் அரண்மனையிலுள்ள சாபமண்டபத்தில் மந்திராலோசனை நடத்தியமை பற்றிய சித்திரக் காட்சி தொடர்பான விளக்கம் மேல்வருமாறுஎழுதப்பட்டுள்ளது:தெசரதமாராசாவும் விசுவாமித்திரனும் அறுபத்தாறு ராசாக்களும் கூடி கொளுவு சாவடியிலிருந்து கொண்டு ராம சுவாமி பட்டாபிஷேகத்துக்கு மந்திரிமாருடன் கூடி ஆலோசனை பண்ணுவது என்று எழுதப்பட்டுள்ளது.
வசந்த மண்டபத்து ஒவியங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் சுருக்கமான விளக்கக் குறிப்புகள் பேச்சு வழக்கான மொழி நடையில் எழுதப்பட்டுள்ளன. ஒவியங்களின் விளக்கமாகச் சுருக்கமான குறிப்புகளை எழுதும் மரபு நாயக்கர் காலத்திலே தமிழகத்திற் பொது வழக்காகிவிட்டது. செங்கம், பூரீ வில்லிப்புத்தூர் இராமநாதபுரம், திருவாரூர், திருப்பருத்திக்குன்றம் முதலிய இடங்களிலுள்ள சுவரோவியங்களில் ஒவியங்களின் விளக்கமான வாசகங்கள் உள்ளன. அவை யாவும் பிரதேச மொழி
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

வழக்கினையும் பேச்சு வழக்கினையும் இயல்பான வடிவத்திலே பதிவு செய்யும் சிறப்புடையவை. தமிழுரை நடை வரலாற்றை ஆராய்வதற்கு அவை சிறந்த ஆதாரங்களாகும். அழகர் கோயில் வசந்த மண்டபத்தில் எழுதப்பட்டுள்ளன வசனமொன்று மேல்வருமாறு அமைந்துள்ளது.
யிந்தபந்தி வாசிச்ச பிரகு மேல்பத்தி
வாசிச்சு நெடுகிலுபோயி வாசிச்சு இந்த
கீள்பத்தி வாசிச்சுக் கொண்டு மூரைவரையிலும்
போகவும்.
திருவரங்கத்துச் சித்திரங்கள்
திருவரங்கத்தில் வேணுகோபாலர் சன்னதியிலும் வேறு நான்கு இடங்களிலும் ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றுளொன்று தென்திசையிலுள்ள மூன்றாவது கோபுர விதானத்தில் அமைந்துள்ளது. மற்றொன்று தாயார் சன்னதியின் உட்சுற்று விதானத்திலும் பக்கச் சுவர்களிலுங் காணப்படுகின்றது. இன்னுமொரு சித்திரம் இராமானுஜர் சன்னதியின் முன்மண்டப விதானத்திலே காணப்படுகின்றது. வேறொன்று அதனை அடுத்திருக்கும் கிளி மண்டபத்தில் வரையப்பட்டுள்ளது. அவற்றுட் கோபுரத்தில் அமைந்துள்ள ஒவியம் 17ஆம் நூற்றாண்டிற்குரிய தாகும். தாயார் சன்னதி, இராமானுஜர் கோயில் என்பவற்றின் ஒவியங்கள் விஜயரங்க சொக்கநாதர் காலத்திற்குரியனவாகும்.
ஆழ்வார் திருநகரி ஓவியங்கள்
ஆழ்வார் திருநகரி ஆதிநாதப்பெருமான் கோயிலிற் கருவறை முன் மண்டபம், நம்மாழ்வார் சன்னதி, இராமாயணக் கொரடு ஆகிய பகுதிகளில் நாயக்கர் காலத்து ஒவியங்கள் உள்ளன. அவை 18ஆம் நூற்றாண்டில் விஜயரங்க நாயக்கர் காலத்தில் வரையப்பெற்றவை. அவற்றிலே தமிழகத்திலுள்ள ஒன்பது வைணவக் கோயில்களின் வடிவங்களும் அவற்றிலுள்ள மூலவரின் உருவங்களும் வரையப்பட்டுள்ளமை குறிப்பிடற்குரியது. விஜயரங்க சொக்கநாதரின் வடிவம் சிற்பக் கோலத்தில் இவ்வாலயத்திலே அமைக்கப்பட்டுள்ளது.
191

Page 201
சேதுபதிகளின் அரண்மனை ஓவியங்கள்
மதுரை நாயக்கரின் மேலாட்சியின் கீழ் இராமநாதபுரப் பகுதியை ஆட்சி புரிந்த சேதுபதிகளின் அரண்மனைகளிற் சிறப்புடையதான இராமலிங்க விலாசம் தரம்மிக்க ஒவியங்கள் நிறைந்த கலைக்கூடமாகத் திகழ்கின்றது. இராமலிங்க விலாசம் என்னும் மாளிகை கி.பி. 1700ஆம் ஆண்டளவில் கிழவன் சேதுபதியாற் கட்டப்பெற்றது. அதில் இராமாயணக் காட்சிகளும் பாகவத புராணக் கதைப் பகுதிகளும் சித்திரங்களாக வரையப் பெற்றுள்ளன. இராமாயணக் காட்சிகள் விஜய ரகுநாத சேதுபதியின் காலத்தில் வரையப் பட்டுள்ளன. அவை தெலுங்கு இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று சொல்லப் படுகின்றது. சித்திரங்களைப் பற்றிய விளக்கக் குறிப்புகள் இடையிடையே எழுதப்பட்டுள்ளன. வால்மீகி ஆசிரமத்துக்கு நாரதர் வந்தவுடனேயே பூசைபண்ணி,புண்ணியக் கதைசொல்லச் சொல்லிக் கேட்டதற்கு இராமசுவாமி புண்ணிய புருஷனென்று இராமாயணம் சொன்னது என்ற விளக்கத்துடன் சித்திரக் காட்சிகள் ஆரம்பாகின்றன. பால கண்டம் முதலாகப் பரதன், இலக்குமணன், சந்தருக்கனன் ஆகியோர் திருமணங்கள் வரையான இராமாயணக் கதை சித்திரக் காட்சிகளாக இங்கு வடிவமைக்கப் பட்டுள்ளது. அவற்றை அடுத்து பாகவத ஓவியகள் வரையப்பட்டுள்ளன.
சேதுபதிகளின் காலத்து அரசியல் நிகழ்ச்சிகள், போர்கள், களியாட்ட விழாக்கள், அந்தபுரக் காட்சிகள் என்பன பற்றிய ஓவியங்கள் இங்கு காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். உத்தரகோசமங்கையிலுள்ள காணப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும். உத்தரகோசமங்கையி லுள்ள கோபுரத்திலும் அங்குள்ள நடராஜர் சன்னதியின் வீதானத்திலும் இராமேஸ்வரத்திலும் வேறு சில தலங்களிலும் சேதுபதிகளின் காலத்து ஒவியங்கள் உள்ளன.
மராட்டியர் காலத் தஞ்சாவூர் ஓவியங்கள்
சோழநாட்டின் பிரதானமான பகுதிகள் தஞ்சை நாயக்கரின் ஆட்சியில் அடங்கியிருந்தன. தஞ்சாவூர் ,
192

அவர்களின் இராசதானியாக விளங்கியது. பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நாயக்கரின் ஆட்சி ஒழிந்து மராட்டியரின் ஆட்சி ஏற்பட்டது. தஞ்சாவூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பகுதிகளில் நாயக்கரதும் மராட்டியரதும் ஆட்சிக் காலங்களில் நடனம், இசை, ஓவியம் ஆகிய கலைகள் வளர்ச்சியடைந்தன. கர்நாடக் தேசம், மகாராஷ்டிரம் ஆகியவற்றின் கலைப் பாணிகளின் செல்வாக்குக் குறிப்பிடத்தக்க அளவிலே ஏற்படலாயிற்று ஒவியக் கலையினைப் பொறுத்தவரையில் மொகாலயக் கலைப்பாணியின் சில அம்சங்கள் தமிழ் நாட்டிலும் பரவலாயின.
நாயக்கரின் ஆட்சிக் காலத்திலே தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சித்திரசாலையிற் புதிதாக ஒவியங்கள் வரையப்பட்டன. இரகுநாத நாயக்கரின் காலத்திலே அந்த ஒவியங்கள் வரையப்பட்டன. அவற்றுட் கண்ணப்ப நாயனார், சக்கரதானமூர்த்தி, அட்டதிக்குப் பாலகர் என்போரின் ஒவியங்கள் குறிப்பிடற்குரியவை.
மராட்டியரின் ஆட்சிக் காலத்திலே சோழ நாட்டவரின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆடையணிகள், இசை, ஓவியம் போன்ற கலைகள் ஆகியவற்றிலே வடதேசத் தொடர்புகளினாலும் மேனாட்டுத் தொடர்புகளினாலும் மாற்றங்கள் ஏற்பட்டன. தஞ்சாவூர் அரண்மனைக் கட்டடங் களிலும் திருவாரூர் முதலான வழிபாட்டுத் தலங்களிலும் அமைந்துள்ள சுவரோவியங்களில் ஓரளவிற்கு அந்த மாற்றங்களைக் கண்டு கொள்ளலாம்.
தஞ்சாவூர் அரண்மணையிலுள்ள பல இடங்களில் மராட்டிய மன்னர் காலத்துச் சுவரோவியங்கள் காணப்படுகின்றன. அரண்மனை வளாகத்துத் தர்பார் மண்டபத்தின் பின்புறச் சுவரிலும் வடக்குச் சுவரிலும் அக்காலத்தில் வரையப்பட்ட சித்திரங்கள் ஒளி குன்றியும் சிதைவுற்றுங் காணப்படுகின்றன. வடக்குச் சுவரில் நாயக்கர் காலத்து ஒவியங்களுக்குமேற் புதிதாக ஒவியங்கள் வரையப்பட்டுள்ளன. சரஸ்வதி மகாலுக்குப் போகும்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 202
வழியிலே வரையப்பட்டிருக்கும் இராமர் பட்டாபிஷேகக் காட்சி மராட்டியர் காலச் சித்திரக் கலையின் சிறப்பிற்குச் சிறந்தவோர் உதாரணமாகும்.
சரபோஜி மன்னர் காலத்து ஒவியங்கள் பெருவுடையார் கோயிலின் திருச்சுற்று மாளிகையிலும், அங்குள்ள அம்மன் கோயிலின் முகமண்டப விதானத்திலும், சுப்பிரமணியர் கோயிலின் முன் மண்டபத்திலும் காணப்படுகின்றன. அம்மன் கோயிலின் ஒரு பகுதியில் தேவி மகாத்மியம் சித்திரக் கோலமாக வரையப் பட்டுள்ளது. மற்றொரு பகுதியிலே தக்கயாகக் காட்சிகள் சித்திரங்களாக வரையப்பெற்றுள்ளன. மேலும் பக்கச் சுவர்களில் ராதா கல்யாணம், வள்ளி கல்யாணம், மீனாகூழி கல்யாணம் போன்ற வைபவங்கள் சித்திரக் கோலத்தில் அமைந்துள்ளன. அவற்றிலே குறிப்பிடத்தக்க கலைச் சிறப்புகள் எவையுங் காணப்படவில்லை.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மராட்டிய மன்னர்களான சரபோஜி, துக்கோஜி, சுஜான் பாயி பிரதாப் சிங், துளஜா, ஏகோஜி, ஷாஜி முதலியோரின் உருவங்கள் பெரிய அளவிலே வரையப்பட்டுள்ளன. அவற்றுட் சரபோஜியின் உருவம் மிகச் சிறப்புடையது. ஐரோப்பியச் செல்வாக்கு, மெகாலயச் செல்வாக்கு என்பவற்றின் விளைவாகத் தமிழகத்து ஒவியங்களில் அரசரின் மாதிரி வடிவங்களை ஒவியங்களாக வரையும் வழக்கம் ஏற்பட்டதென்று கருதலாம்.
கோனேரிராஜபுரத்து ஓவியங்கள்
கோனேரிராஜபுரம், உடையார் பாளையம், நெய்தவாசல், வெண்ணாற்றங்கரை, குறிச்சிமுதலிய இடங்களில் மராட்டியர் கலைப்பாணியிலுள்ள ஒவியங்கள் உள்ளன. தஞ்சாவூருக்கு அண்மையி லுள்ள வெண்ணாற்றங்கரை என்னுமூரிலே ஆனந்தவல்லியம்மன் கோயில் என்னுமொரு ஆலயமுண்டு. அங்கு வனப்பு மிக்க ஓவியங்கள் சில காணப்படுகின்றன. அவற்றிலே சரஸ்வதியின் சித்திரம் மிகவுஞ் சிறப்பானது. தஞ்சாவூருக்குச் சிறப்பான வீணையின் கோலம் அதிலே வனப்புடன்
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்

விளங்குகின்றது. கடவுளரின் வடிவங்களும், இசைவாணர், நாட்டியக்காரர் ஆகியோரின் கோலங்களும், தும்புரு, நாரதர், சுகமுனிவர் ஆகியோரின் உருவங்களும் சித்திரங்களாக வரையப்பெற்றுள்ளன.
திருப்பனந்தாளுக்குச் சமீபமாக அமைந்துள்ள குறிச்சி என்னும் ஊரிலுள்ள கோயிலின் முக மண்டபத்து விதானத்தில் இராமாயணக் காட்சிகள் சில ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. அவை 19ஆம் நூற்றாண்டுக்குரியவை.
நெய்தவாசல் சிவன் கோயிலில் மராட்டியர் காலத்துச் சித்திரங்கள் சில காணப்படுகின்றன. அவை மேளக் கச்சேரியினையும் ஊர்வலக் காட்சியினையும் விளக்குஞ் சித்திரங்களாகும். திருச்சி மாவட்டத்து உடையார் பாளையத்தில் வரதராஜப் பெருமாள் கோயில் என்னும் ஆலய மொன்று உள்ளது. அங்குள்ள சுற்று மண்டபத்திலே இராமாயணக் காட்சிகள் வரையப்பெற்றுள்ளன. அதன் நான்கு மூலைகளிலும் பீரங்கிகளைப் பெற்ற கோலத்தில் அயோத்தி நகரம் அங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மராட்டியர் கால ஒவியங்கள் சில தஞ்சாவூர் மாவட்டத்து நன்னிலத்திற்கு அருகிலுள்ள கோனேரிராஜபுரம் சிவன் கோயிலில் உள்ளன. கோயிலுக்குச் சென்றிருந்த ஐரோப்பிய பிரதானிகளுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு காட்சி ஒவியமாக அங்கு வரையப்பெற்றுள்ளது. அவர்கள் மேளதாள வாத்தியங்களுடனும் நாட்டிய உபசாரங்களுடனும் வரவேற்கப்படும் கோலம் தெரிகின்றது. அரசரும், அந்தணரும், பொதுமக்களும் கூடி அவர்களை வரவேற்குங் காட்சி தெரிகின்றது. மராட்டியரின் காலத்திலே தஞ்சாவூரிற் சுவரோவியங்களோடு கண்ணாடி ஒவியங்களையும் ஒலைச்சுவடி ஒவியங்களையும் வரையும் வழக்கம் உண்டாகியது. கிருஷ்ணரைப் பற்றிய மரபு வழிக் கதைகளும் இராமர் பட்டாபிஷேகமும் அரசரின் உருவங்களும் கண்ணாடி ஒவியங்களாக வரையப்பட்டன.
193

Page 203
செங்கம் ஓவியங்கள்
செஞ்சி நாயக்க மன்னனால் கி.பி. 1600இல் அமைக்கப்பட்டதும், திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டத்துச் செங்கம் என்னுமிடத்தில் உள்ளதுமான வேணுகோபால பார்த்தசாரதி கோயிலில் இராமாயணக் காட்சிகள் ஒவியங்களாக வரையப் பட்டுள்ளன. இக்கோயிலின் மகாமண்டபத்து விதானத்தில் இராமாயணக் கதை ஆரம்பத்தி லிருந்து இராமர் பட்டாபிஷேகம் வரை சித்திரக் கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திரசித்துவின் நிகும்பல யாகம், அவன் இலக்குவனோடு போர் புரிதல், சஞ்சீவி பர்வதத்தை அனுமன் கொண்டு வருதல், மேகநாதன் கொலைப்படுதல், இராவண சங்காரம், சீதையின் அக்கினிப் பிரவேசம், இராமர் பட்டாபிஷேகம் போன்ற காட்சிகள் ஒவியங்களாக வரையப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்கள் தெலுங்கு மொழியிலுள்ள இராமாயணக் கதையினை
194

ஆதாரமாகக் கொண்டவை என்பது குறிப்பிடற் குரியது. வான்மீகி இராமாயணத்திலும் கம்ப ராமாயணத்திலும் காணப்படாத அம்சங்கள் சில இங்குள்ள ஒவியங்களில் இடம்பெற்றுள்ளன.
விஜயநகர - நாயக்கர் கால ஒவியங்களிலே சில சிறப்பம்சங்கள் காணப்படும். அவற்றில் உருவங்கள் ஒரு பக்கத்தைப் பார்த்த கோலத்தில் அமைந்திருக்கும். மூக்கு, கண், முழங்கை, கால் போன்ற உறுப்புகள் சற்றுக் கூர்மையாக அவற்றிலே அமைந்திருக்கும். சித்திரங்களில் அணிகலன்கள் மிகுந்து காணப்படும். வண்ணப்பூச்சுகளிற் சிவப்பு நிறம் கூடுதலாகக் காணப்படும். சித்திரங்களின் விளிம்புகளில் பூவேலைப்பாடுகளும் வண்ணங்களும் அதிகமாயிருக்கும். பெண்களின் கூந்தல் பெரிய கொண்டையாகக் கட்டிய கோலம் தெரியும். ஒவியக் காட்சிகளின் சிறு குறிப்புகள் தெலுங்கிலோ தமிழிலோ எழுதப்பட்டிருக்கும்.
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 204
விஜயநகர நாயக்கர் க
 

ல கலைப்படைப்புக்கள்

Page 205
விஜயநகர நாயக்கர் க
filВНИШЋћJI - hill
 
 

T6O 5606OūLIGO)LūLäö56ÏÎ
LGIDÖGUITLÓ (EESTILTIG)

Page 206
விஜயநகர நாயக்கர் க
 

ல கலைப்படைப்புக்கள்
593UHEJub - a) birË5TI'EDL oldi)
".W"\""/WWW\پيلم விஜயநகரம் - பத்ம மஹால் அந்தப்புரம்

Page 207
விஜயநகர நாயக்கர் கா
li li li li li
下
 

ல கலைப்படைப்புக்கள்
W. WAAAAAAAAAAAAAAAAAAAAAAAMAWAWA
कहैं ।
விஜயநகரம் - மகாநவமி மண்டப அதிட்டானம்
I WÄ ” W
யநகரம் - மகாநவமி மண்டப அதிட்டான சிற்பங்கள்

Page 208
விஜயநகர நாயக்கர் க
TWN
* WW
முநீ ரங்கம் - மகா மண்டபத்தூண்கள்
 
 
 

ால கலைப்படைப்புக்கள்
சிதம்பரம் -
t

Page 209
விஜயநகர நாயக்கர் கா
 


Page 210
விஜயநகர நாயக்கர் கா
மதுரை மீனாட்சி அம்மா
 

10 கலைப்படைப்புக்கள்
T (BEITGlilio EchITLUL

Page 211
விஜயநகர நாயக்கர் கா
in II
திருப்பெருந்துறை - நாய
 

ால கலைப்படைப்புக்கள்
A MWAKAWAIIVEIRA
SMKKW
ܦܝ ܨ .
FIFF
க்கர் கால ஓவியங்கள்

Page 212
51534IböJ filTILIö5í| 5
 

Tல கலைப்படைப்புக்கள்

Page 213
விஜயநகர நாயக்கர் க
 

Iல கலைப்படைப்புக்கள்
|||||||||||| انار
மதுரை - சிவன் பார்வதி சுகாசனமூர்த்தம்

Page 214
* 鷲
* igious. Aff
of Hindu R
沅
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்
 
 

நமேம்பாட்டு அமைச்சு
பல்கள் திணைக்களம்
195

Page 215
65 (L65 GOGOUGUD 03-09-2009வியாழக்கிழமை மாலை 3.00 மணி தலைமை
பேராசிரியர்சி பத்பநாதன் தகைசார்பேராசிரியர் பிரதம விருந்தினர்கள்
மாங்புமிகுபண்டு பண்டாரநாயக்க :அமைச்சர்
இமதஅலுவல்கள் அவர்ச்சு
மாண்புமிருகே.என்.டக்காஸ்தேவானந்தா அமைச்சர் சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சு சிறப்பு விருந்தினர்கள்
திரு எச்.எம்.ஹோத் 臧
செயலாளர்,மத ஆல்கள் ஒழுக்கம்ேபாட்டு அமைச்சு கலாநிதிரு.சேதுராமன் தலைவர் வரலாற்றுத்துறை,
INAugurALEREMONY o3-o9-2oo9Thursday - 3. oo pm
Prof. S. Pathmanathan
ProfessõEeritus
Chlef Guests
Hon-Bапdu Bandагапаike Minister of Religious Affairs Hon. K. N. Douglas Devananda Minister of Social Services and Social Welfare
Guests of Honour
Mr.H.M. Herath
Secretary, Ministry of Reli gious Affairs & Moral Upliftment.
G. Sethuraman Head, Department of History,
Madurai
Kamarajar University,
 
 
 
 
 
 
 
 

கழ்ச்சிநிரல்
lī.I.: lī.i. i, 300 – கேள்விளக்ந்ேநக் 3.0 - தேவாரம்
நிருமதி பவானி முகுந்தன்; அபிவிருத்தி உத்தியோகத்தர் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம்:
வரவேற்புரை
நிரு ம சண்முகநாதன், உதவிப்பரிேப்பாளர் இந்துசமய, கிள்சார அலுவங்க
எதினைக்களம்
3.30 - ஆசியுரை :
சுவாரிசர்வருபானந்தா:
தலைவர்.
இராமகிருஷ்ணமிஷன்,கொழும்பு
3.40 = தொடக்கவுரை: - - - திருமதிசாந்தி நாவுக்கிரசன், பணிப்பாளர் இந்துசமய், கலாசார அலுவல்கள் திணைக்களம்
400 - தலைமையுரை
பேராசிரியர் sf. பத்மநாதன் தகைசார் பேராசிரியர்
40 - சிறப்பு:விருந்தினர் விவர
நிருனச் எம். ஹேரத்
செய்வாளர், ந்த் மத அலுவல்கள் ஒழுக்க மேம்பாட்டு அமைச்சு
4.20 - பிரதம் விருந்தினர் உரை
மாண்புமிகு பண்டு பன்டாரநாயக்க :يقة ச்சர் 菲
மத அலுவல்கள் அமைச்சு
4.30 பிரதிவிருந்தினர் வரை . . . . . . .
மான்புமிகு கே. என்:க்ன்ஸ் தேவான்ந்து 臀、
சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 216
விஜயநகரப் பேரரசும் கலாசார மறுமலர்ச்சியும்
 

g

Page 217
துரைமீனாகூ
== 蠶
 

、睦 தூண்கள் குதிரைச்சிற்பங்கள்
ஆய்வரங்குச் சிறப்புமலர் - 2009

Page 218
ஆய்வரங்குச்சி
விஜயாககர
கலாசார மறு O3.09.2009 -
சங்கரப்பிள்ளை மண்டபம்,
d () நிகழ்ச்சிநிரல் 04-09-2009 வெள்ளிக்கிழமை அமர்வு 0 அரசும் சமூகமும் தலைமை :பேராசிரியர் சி. பத்மநாதன் மு.ப. 8.25 தேவாரம்
8.30 தமிழகத்தில் விஜயநகரப் பேரரசர் ஆட்சி
பேராசிரியர் எ. சுப்பராயலு இணைப்பாளர், பிரெஞ்சு இந்திய ஆய்வு நிறுவகம், பாண்டிச்சேரி 9.00 விஜயநகர நாயக்கர் காலச் சாசனங்கள்
கலாநிதி வி. வேதாசலம் கல்வெட்டாய்வாளர், (பணி நிறைவு), தொல்பொருட் திணைக்களம் தமிழ்நாடு, 9.30 செஞ்சி, வேலூர் நாயக்கர்காலக் காசுகள்
திரு ஆறுமுகம் சீதாராமன் நாணயவியல் ஆய்வாளர், தமிழ்நாடு 10.00 விஜயநகர காலத்து ஊர்களின் விரிவாக்கம்
பேராசிரியர் ப. சண்முகம் முன்னைநாட் தலைவர், தொல்லியற்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு 10.30.11.00 தேநீர் இடைவேளை
அமர்வு 02 9 Jélild afépéb(plb
தலைமை :பேராசிரியர் எ. சுப்பராயலு
pநாடு
(p.u. I 1.00 விஜயநகர காலத்து தென்னிந்திய
இலங்கை வாணிபத் தொடர்புக்ள் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் தலைவா, வரலாறறுததுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 11.30 மதுரை, தஞ்சை நாயக்கர் கால காசுகள்
திரு ஆறுமுகம் சீதாராமன் நாணயவியல் ஆய்வாளர், தமிழ்நாடு 12.00 இலங்கையில் விஜயநகரச் செல்வாக்கு
பேராசிரியர் சி. பத்மநாதன் தகைசார் பேராசிரியர் 12.30 விஜயநகர நாயக்கர் காலத்தில்
தென்னிந்திய வாணிபம் பேராசிரியர் (திருமதி) விஜயா இராமசாமி தலைவா, வரலாற்றுத்துறை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடெல்லி 1.00 - 2.00 மதிய போசனம்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

றப்புமலர் 2009
ப் பேரரசும்
மலர்ச்சியும்
- 06.09.2009
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
அமர்வு 03
அரசும் சமூகமும் தலைமை :பேராசிரியர் சி. க. சிற்றும்பலம் பி. ப. 2.30 விஜயநகர காலத்தில் சமுதாய மாற்றங்கள்
பேராசிரியர் எ. கப்பராயலு
இணைப்பாளர், பிரெஞ்சு ஆய்வு நிறுவகம், பாண்டிச்சேரி
3.00 நெசவாளர் சமூகம்
பேராசிரியர் விஜயா இராமசாமி
தலைவர், வரலாற்றுத்துறை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுடெல்லி
3.30 விஜயநகர நாயக்கர் கால
இலக்கியங்களில் பெண்கள் கலாநிதி செ. யோகராஜா சிரேஷ்ட W விரிவுரையாளர், தமிழ்த்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம் 4.00 விஜயநகர காலத்தில் தொழில்கள்
பேராசிரியர் ப. சண்முகம் முன்னைநாட் தலைவர், தொல்லியற்துறை, சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு
4.30 - 5.00 தேநீர் இடைவேளை
«өшоfto o4
சமயமும் தத்துவமும் தலைமை பேராசிரியர் வி. சிவசாமி பி.ப. 5.00 விஜயநகரகாலத்து அம்மன் வழிபாடு பேராசிரியர் கு. சேதுராமன் தலைவர், வரலாற்றுத்துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை
5.30 விஜயநகர நாயக்கர் காலத்தில்
முருகன் வழிபாடு திரு பூரீ பிரசாந்தன் விரிவுரையாளர், ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்
6.00 வைஷ்ணவகால உரைமரபு
பேராசிரியர் சு. வெங்கட்ராமன் தலைவர், தமிழ்த்துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
199

Page 219
05-09-2009 சனிக்கிழமை
அமர்வு 05 சமயமும் தத்துவமும் தலைமை : பேராசிரியர் கு. சேதுராமன் மு.ப. 8.25 தேவாரம்
8.30 விஜயநகர காலத்தில் சைவசித்தாந்த வளர்ச்சி பேராசிரியர் (திருமதி) கலைவாணி இராமநாதன் சிரேஷ்ட விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
9.00 அத்வைத மரபில் தத்துவராயர்
கலாநிதி கிருஷ்ணவேணி நோபேர்ட் தலைவர், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
9.30 விஜயநகர நாயக்கர் காலத்தில்
வேதாந்த மடங்கள் பேராசிரியர் சு. இராஜகோபால்
கல்வெட்டாய்வாள் (பணிநிறைவு), தொல்பொருட் திணைக்களம், தமிழ்நாடு
10.00 - 10.30 தேநீர் இடைவேளை அமர்வு 06
சமயமும் தத்துவமும் தலைமை : பேராசிரியர் சு. வெங்கட்ராமன்
10.30 மாணிக்கவாசகரின் புத்தெழுச்சிக் காலம்
திரு.க.இரகுபரன் சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
11.00 குமரகுருபரர்
திருமதி வசந்தா வைத்தியநாதன்
11.30 வைஷ்ணவ ஆசாரியர் மரபு பேராசிரியர் சு.வெங்கட்ராமன் தலைவர், தமிழ்த்துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
12.00 தாயுமானவர்
பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர்
தகைசார் பேராசிரியர்
12.30 - 1.30 மதியபோசனம்

அமர்வு 07
சமயமும் தத்துவமும்
தலைமை பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர்
பி.ப 1.30 சித்தர் o O
திரு எஸ். அருந்தாகரன்
விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
2.00 அருணகிரிநாதரும் அனுபூதியும்
திருமதி நாச்சியார் செல்வநாயகம்
சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
2.30 விஜயநகர காலத்தில் சைவம்
திரு எஸ். துஷ்யந்த்
3.00 விஜயநகர, நாயக்கர் காலப் பண்பாட்டில்
சமஸ்கிருத மொழிச் செல்வாக்கு திரு பால கைலாசநாதசர்மா
சிரேஷ்ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்
அமர்வு 08
மொழியும் இலக்கியமும் தலைமை: பேராசிரியர் கா. சிவத்தம்பி
4.30 -
3.30
4.00
5.00
5.00
5.30
இலக்கண நூல்கள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் வருகை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கோயிற் பிரபந்தங்கள் கலாநிதி வ.மகேஸ்வரன் சிரேஷ்ட விரிவுரையாளர், பேராதனைப் பல்கலைக்கழகம்
தேநீர் இடைவேளை
பள்ளுப் பிரபந்தங்கள் கலாநிதி துரைமனோகரன் தலைவர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
நாயக்கர் காலத்துத் தமிழ் நாடகங்கள் பேராசிரியர் சி. மெளனகுரு
ஆய்வரங்குச் சிறப்புமலர்-2009

Page 220
06-09-2009 ஞாயிற்றுக்கிழமை அமர்வு 09 மொழியும் இலக்கியமும்
தலைமை :பேராசிரியர் அ. சண்முகதாஸ் மு.ப. 8.25 தேவாரம்
8.30 புராணங்களும் தல புராணங்களும்
திரு. இ. குமரன் விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
9.00 உரையாசிரியர் அடியார்க்கு நல்லார்
கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கிழக்குப் பல்கலைக்கழகம்
9.30 தனிப்பாடல்களில் வசைக்கவி
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா தலைவர், தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
10.00 - 10.30 தேநீர் இடைவேளை
eunfo IO
மொழியும் இலக்கியமும் தலைமை :பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா 10.30 விஜயநகர நாயக்கர் காலத்து
தனிப்பாடல்களில் பெண்மை
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
1100 நாயக்கர் கால இலக்கியங்களின்
மொழி நிலை கலாநிதி சுபதினி ரமேஸ் தலைவர், மொழியியற்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
11.30 விஜயநகர நாயக்கர் காலத்து
சமஸ்கிருத இலக்கியங்கள் Ci symraffurfir ef. efansgrifŷ
12.00 100 மதிய போசனம்
விஜயநகரப் பேரரசும் கலாசாரமறுமலர்ச்சியும்

அமர்வு 11
மொழியும் இலக்கியமும்
தலைமை
பி.ப1.00
2.00
:பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
குறவஞ்சி இலக்கியங்கள் கலாநிதி. எஸ். செல்வரஞ்சிதம் விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்கள் திருமதி, ரூபி வலன்ரினா தலைவர், தமிழ்த்துறை கிழக்குப் பல்கலைக்கழகம்
விஜயநகர நாயக்க காலத்தில் நாட்டுப்புற இலக்கியங்கள் பேராசிரியர் இ. முத்தையா தலைவர், நாட்டுப்புறவியல், காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
eudira 12
கலையும் பண்பாடும்
300\}goLD
S.L. 2.30
பி.ப 3.00
3.30
4.00
4.30 - 5.00
பேராசிரியர் சி. பத்மநாதன் விஜயநகர நாயக்க காலத்தில் சிற்பக்கலை கலாநிதி வி. வேதாசலம் கல்வெட்டாய்வாளர், (பணிநிறைவு)
விஜயநகர நாயக்க காலத்தில் கட்டடக்கலை பேராசிரியர் கு. சேதுராமன் தலைவர், வரலாற்றுத்துறை, காமராஜா பலகலைககழகம, மதுரை.
விஜயநகர நாயக்க காலத்தில் ஓவியக்கலை கலாநிதி. எஸ். இராஜகோபால் கல்வெட்டாய்வாளர், தொல்பொருட் திணைக்களம், தமிழ்நாடு.
விஜயநகர நாயக்க காலத்தில் நாட்டுப்புறக்கலை
Gaffu இ. முத்தையா தலைவர், நாட்டுப்புறவியல், காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
தேநீர் இடைவேளை
5.00 கலந்துரையாடல்
Printed By: Anush Printers, coll-11. Tel: 0777-244893

Page 221


Page 222
PRINTED BY UNIE ARTS (PWT) LTD,48B, BLOE