கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாவலர் நூற்றாண்டு மலர் 1979

Page 1
ரீலறுநீ ஆறுமுக நாவலர் āQL
Glտո լքthւ யாழ்ப்பாணம்
 
 


Page 2


Page 3
G
நல்லூர் பூநிலபூரீ ஆறுமுக நா6 நாருவது குருபூசையில் வெளியிடப்பரும்
நாவலர் நா 1979
பூரீலறுநீ ஆறுமுக நா
4, ஹோட்டன் ரெறஸ் ரீ கொழும்பு-7 a

миошић
வலர் அவர்களின் ன் நினைவாக
ற்ருண்ரு மலர்
வலர் சபை
மனே, பலாலி வீதி கண்டிவில்

Page 4
நாவலர் நூற்றண்டு மலர் மார்கழி, 1979 பூரீலயூரீ ஆறுமுகநாவலர் சபை வெளியீ பதிப்பாசிரியர் : பேராசிரியர் க. கைலா
அச்சுப்பதிவு : திருமகள் அழுத்தகம், சு
இலங்கை
Arumuga Navalar Centenary volume December, 1979 Published by the Srilasri Arumuga N Editor-in-charge:
Prof. K. Kailasapathv
Printers : Thirumakal Press,
Chunnakam,
Sri Lanka.

'சபதி
ன்னுகம்
avalar Sabai

Page 5
கார்த்திகைமா தத்துமக சேர்த்திப் பரசமயஞ் ே மேவுதமிழ் தந்தகந்த ே நாவலர்வீ டுற்றதிரு ந
தோற்றம் :
1822ー12ー18

ங் காசினிக்குச் சைவநிலை சதித்துச் - சீர்த்திமிக வேணல்லூ ராறுமுக
767.
- சி. வை. தா.
மறைவு
1879-12-05

Page 6


Page 7
பரீலபரீ ஆறுமுக
தோற்றம் : 1822-12-8
 

காவலர் அவர்கள்
னேற ை
879-12-05

Page 8


Page 9
மலர்க்குழு
தலைவர்: பேராசிரியர் ச
உறுப்பினர்:
பேராசிரியர் ச கலாநிதி பொ கலாநிதி அ. திரு. ச. அம் திரு. கா. சுப்
அமைப்பாளர்:
திரு. ஆ. சிவ

5. கைலாசபதி
நா. சிவத்தம்பி r. பூலோகசிங்கம்
சண்முகதாஸ் பிகைபாகன், B. A. IGLDaoub, M. A.
ாேக்சச்செல்வன், M. A.

Page 10
g કોeu u
பரீலழுநீ ஆறுமுகாகாவலர் சபையி முன்னோகாள் நீதியரசர், திரு. வீ. சிவசுப்பிரமணிய செய்தி
தமிழ்மக்கள் செய்த தவத்தின்பயஞ பெருமான், சென்ற நூற்ருண்டில் இல ஏற்படவிருந்த பேராபத்தைத் தடுத் செய்த கர்மயோகி அவர். ஆத்மீகம், எனப் பலதுறைகளிலும் தமிழ் மக்க பன்முகப்பட்டவை. அவர் புரிந்த விடுதலை இயக்கம் தோன்றுவதற்கு மு வரலாற்று நாயகராகவும், தேசியப் இன்று ஏற்றிப் போற்றப்படுகின்ருர்,
நாவலர் பெருமான் மறைந்து நூ அப்பெரியாரின் நாமமும் கீர்த்தியும் ஓங்கிவளர்ந்துள்ளன. இப்பெரியாரின் வரலாற்று முக்கியத்துவமான நிகழ்ச் எமக்குக் கிடைத்த பெரும் அதிஷ்ட களை நிறைவேற்றுவதற்காகப் பத்து எமது சபை, நாவலர் நினைவு நூற்ரு துக்குத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நூற்ருண்டு விழாவின் ஒரம்சமாக ெ பெருமானைப் பற்றிய புதிய சிந்தனைகளு தற்குத் தூண்டுகோலாக அமையும்
இம்மலரை வெகு குறுகிய காலத் குப் பக்கபலமாக நின்றுழைத்த ம மனமாரப் பாராட்டுகின்ருேம்.
காலந்தோறும் நாவலர் பணி கைகொடுத்துதவுபவர்கள் நாவலர் கொண்ட நல்ல அன்பர்களேயாவர். கிடைக்காதிருந்தால் எப்பணியும் முடியாது. நூற்றண்டின் நினைவாக வேண்டிய நிதியை உபகரித்த பெரிய அவர்களாவர் என்பதை மகிழ்ச்சியுட எல்லாம் வல்ல இறைவன் அவருக் அருள்வானக.
நந்தா விளக்காக நம் மக்களின் பெருமானுக்கு எமது நூற்றண்டு விழ
வாழ்க நா

ன் தலைவர்,
பம் அவர்களின்
ரக அவதரித்த மகாபுருஷர் நாவலர் ங்கையில் தமிழுக்கும் சைவத்துக்கும் து, அவை மீண்டும் புத்துயிர் பெறச்
பண்பாடு, சமூகம், கல்வி, மொழி ளுக்கு அவர் புரிந்த தொண்டுகள் அப்பணிகள் இந்நாட்டின் அரசியல் ன்னுேடியாக அமைந்ததால், அவர்
பெரியாராகவும் எல்லோராலும்
fறு ஆண்டுகளாகின்றன. எனினும் இன்று முன்னெப்போதையும் விட நினைவு நூற்றண்டு விழா என்னும் சி எமது தலைமுறையில் நிகழ்வது மாகும். நாவலரின் நினைவுப் பணி ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பெற்ற "ண்டையொட்டி ஆறுமாத காலத் நாடு முழுவதும் நடத்தி வருகின்றது. வளியிடப்படும் இம் மலர், நாவலர் நம் ஆராய்ச்சிகளும் மேலும் வளர்வ என நம்புகின்ருேம்.
தில் வெளியிடுவதற்கு எமது சபைக் லர்க்குழுவினரைச் சபை சார்பில்
களை நமது சபை செய்வதற்குக்
பெருமானின் மீது அபிமானங்
அவர்களின் தாராளமான உதவி இத்துணைச் சிறப்பாக நடந்திருக்க இம்மலரை வெளியிடுவதற்கு எமக்கு ார் திரு. வே. பாலசுப்பிரமணியம் ன் இங்கு குறிக்க விரும்புகிருேம். கு எல்லாச் செல்வ்மும் சிறப்பும்
நெஞ்சில் நிறைந்துள்ள நாவலர் ா அஞ்சலிகள்.
வலர் நாமம் !

Page 11
Ga
திருவாவடுதுறை ஆதி பூரீலழுநீ அம்பலவாண அவர்கள் அளித்த ஆசிச் செய்தி
* உலகெ லாமுணர்ந் ( நிலவு லாவிய நீர்மலி அலகில் சோதியன் மலர்சி லம்படி வாழ் பேரன்புடையீர்,
நலன்கள் மலியத் திருவருட்டு பூரீ ஆறுமுகநாவலர் சபை தமது ஆ நாவலருக்கு நூற்ருண்டு விழாவினை அதனை நிறைவு செய்யும் நிலையில் அறிந்து பெரிதும் மகிழ்கிருேம் ;
சைவசமயச் செந்நெறியையும் தமிழ்க் கல்வியையும் வளர்த்தல் பெருக்கால் பூரீ ஆறுமுக நாவலர், கத்தையும் விரும்பாது இல்வாழ்க நற்ருெண்டுகளின் ஒப்பரிய மேன் எவராலும் மறப்பதரிது.
இலக்கண இலக்கியங்களிலும் இவர்பாலமைந்து விளங்கிய பர வல்லமையினையும் அறிந்து மகிழ்ந்து எனும் பட்டஞ் சூட்டி அருளாசி முதல் இவர் நாவலர் என்றே அ வொன்று.
சைவ நல்லொழுக்க நெறிகள் நாவலரது நற்ருெண்டுகளால் என சைவமுந் தமிழும் தழைத்தினிதே
இடையருது பரவுதல் வேண்டும். குழுவும் இதற்காவன செய்யும் எ
நாவலர் நினைவு நூற்ருண்டுவ குழுவினர் இருவகை இன்பங்களுட பூரீ ஞானமா நடராஜப் பெருமான் திருச்சி
திருவாவடுதுறை, தஞ்சாவூர். 1979-10-25.

வமயம்
னேகர்த்தர் பண்டாரசங்கிதி
தோதற் கரியவன்
வேணியன்
அம்பலத் தாடுவான்
த்தி வணங்குவாம்.?
னை முன்னிற்க. கொழும்பில் திகழும் தீனத்து அருளாசிச் செல்வர் பூரீ ஆறுமுக ப் பல்லாற்ருனுஞ் சிறக்கக் கொண்டாடி
நூற்றண்டு விழா மலர் வெளியிடுதல் பாராட்டுகிருேம்.
அதன் வளர்ச்சிக்குக் கருவாகிய செந் வேண்டும் என்னும் அளப்பரிய ஆசைப்
தமக்கு வலியக் கிடைத்த உத்தியோ க்கையுள்ளும் புகாது ஆற்றிய சைவ ாமை சைவத் தமிழுணர்வுடையோர்
சைவ சித்தாந்த சாத்திரங்களிலும் “ந்த அறிவினையும் சைவப் பிரசங்க எங்கள் ஆதீனம் இவர்க்கு **நாவலர்' வழங்கியது. இச் சிறப்பு நிகழ்ந்த நாள் ன்புடன் அழைக்கப்படுதல் உலகறிந்த
இன்று ஒரளவேனும் நின்று நிலவுவது ரின் அது மிகைபடக் கூறியதாகாது. ாங்க, நாவலர் நற்ருெண்டு எங்கணும் நாவலர் சபையும் நூற்ருண்டுவிழாக் ான நம்புகிருேம்.
விழா மலர் சிறந்து மலரவும் விழாக் ம் குறைவறப் பெற்றுச் சிறக்கவும்
திருவருளைச் சிந்திக்கின்ருேம். ற்றம்பலம்
- அம்பலவாணபண்டாரசந்நிதி

Page 12
பரீலரு ஆறுமுக நாவ நாவலர் நூற்ருண்டு விழா ப
முன்னைநாள் நீதியரசர் திரு. வி. சிவசுப்பிரமணியம்
குழு முதல்வர் :
திரு. டீ. எம். சுவாமிநாதன்
பொது அமைப்புச் செயலாளர் :
திரு. என். சோமகாந்தன்
குழு உறுப்பினர்கள் : கலாநிதி H. W. தம்பையா, Q, c. திரு. ம. ரீகாந்தா, O. B. E. திரு. த. நீதிராசா, J. P. திரு. கா. விசுவலிங்கம், ச. P. திரு. கி. லக்ஷ்மண ஐயர், வித்தியாதி பேராசிரியர் ஆ. சதாசிவம் பேராசிரியர் க. கைலாசபதி திரு. ச. அம்பிகைபாகன் டொக்டர் சி. சண்முகநாதன் திரு. சி. சிவசுப்பிரமணியம் திரு. த. சங்கரலிங்கம் திரு. செ. சோ. சந்திரசேகரம் திரு. க. சி. சண்முகம் திரு. க. இளையதம்பி திரு. மு. சிவராசா திரு. ஆ. சிவநேசச்செல்வன் திரு. வே. சிவராசா திரு. கா. மாணிக்கவாசகர் திரு. வை. அநவரதவிநாயகமூர்த்தி கலாநிதி அ. சண்முகதாஸ் கலாநிதி கே. எஸ். நடராசா திரு. இ. இரத்தினம் திரு. க. சொக்கலிங்கம் திரு. ம. கனகசபாபதி
திரு. து. சிவசுந்தரம்

鱗。
லர் சபை
த்திய குழு
திபதி

Page 13
ਘ திருக்கயிலாய பரம்பை
26ஆவது குருமகாசர்க் முரீலறுரீ சண்முகதேசி பரமாசாரியசுவாமிகள் அவர்கள் வழங்கிய வாழ்த்துரை
* ஞாலம் நின்புகழே மி ஆலவாயில் உறையும்
அறிஞர்களின் பாராட்டுக்குரிய யாசிரியராகவும் பதிப்பாசிரியராக அவர் சமயச் சடங்குகளாகிய தீட் சிறிதும் தவழுது ஒழுகியவர். சமய எடுத்துரைக்கும் சொல்லாற்றலில் புண்ணியமுடையவர்: வாழும் வா வாழ்ந்தவர். ஈழத்திலும் தமிழகத்தி றிய தனிச் சிறப்பு இவருக்கு உரிய இளைஞர் உள்ளங்களில் நல்லொ உறுதியாகப் பதியச் செய்வன. இ காவலரை நாட்டுக்கு நல்கிய பெ அந்நாட்டின் தலைநகராக விளங்கு சபை அன்பர்கள் நாவலரின் நூற் வகையில் ஆய்வுரைகள் அடங்கிய மகிழ்ச்சி.
மலர் நன்கு மலர்ந்து மக்கள் மலர்ப்பணியில் பங்குகொள்ளும் நீடுவாழவும் செந்தமிழ்ச் சொக்கன்
தருமபுரம், மாயூரம், . 25 ۔۔۔10حے 1979

.ெ
மயம்
ரத் தருமையாதீனம் கிதானம் க ஞானசம்பந்த
கவேண்டும் ஆதியே’
ஒரு சிறந்த நூலாசிரியராகவும் உரை வும் விளங்கியவர் ஆறுமுக நாவலர்: சைகளை மேற்கொண்டு அவைகளில் உண்மைகளை எளிய இனிய நடையில் வல்லவர். சைவமாம் சமயம் சாரும் ழ்க்கைமுறைக்கு எடுத்துக்காட்டாக லும் சைவத்துறை விளங்கப் பணியாற் து. இவர் எழுதிய பாலபாட நூல்கள் ழுக்கத்தையும் ஈசுவர பக்தியையும் }த்தகைய சிறந்த ஒரு சைவசமயக் நமையோடு திகழ்கிறது ஈழத்திருநாடு. ம் கொழும்பிலுள்ள ஆறுமுகநாவலர் ருண்டு விழாவினை நிறைவு செய்யும் அழகிய மலர் வெளியிடுவது அறிய
மனத்தில் சிவமணம் கமழச் செய்யவும் அன்பர்கள் எல்லா நலனும் பெற்று
திருவருளைச் சிந்திக்கின்ருேம்.
-சண்முக தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள்

Page 14
.ெ 8дан шош
பூநீலரு ஆறுமுக நாவல ஆட்சிக் குழு - 1979 180
தலைவர்:
முன்னைநாள் நீதியரசர் திரு. வி. சிவசுப்பிரமணியம்
உப தலைவர்கள்: கலாநிதி H. W. தம்யைா, Q, C, திரு. மு. சிவசிதம்பரம், M. P. திரு. சி. ரெங்கநாதன், Q. C.
திரு. ஆ. செ. நடராசா, Advocate திரு. கி. லக்ஷ்மண ஐயர், வித்தியாதிபதி திரு. க. சிற்றம்பலம்
திரு. த. சங்கரலிங்கம்
சிவத்தமிழ்ச் செல்வி
தங்கம்மா அப்பாக்குட்டி
உறுப்பினர்கள் : திரு. ss இளே திரு. ம. கன திரு. நா. வீர திரு. து. சிவ திரு. இ. வை. திரு. ஜே. செ திரு. மு. கண திரு. கா. மா திரு. சு. இ. திரு. க. க. ச திரு. ஐ. தி.

ர் சபை
பொதுச் செயலாளர்: திரு. ம. ழரீகாந்தா, 0. B. B. பதில் பொதுச் செயலாளர்: திரு. நா. சோமகாந்தன்
கூட்டுப் பொருளாளர்கள்: திரு. த. நீதிராசா, , P. திரு. கா. விசுவலிங்கம், ச. P. திரு. எஸ். குழந்தைவேல், J. P. துணச் செயலாளர்கள் : Dr. சி. சண்முகநாதன் திரு. செ. சோ. சந்திரசேகரம் திரு. க. சி. சண்முகம்
உய பொருளாளர்: திரு. சி. சிவசுப்பிரமணியம்
பதம்பி Eæumrug சிங்கம்
சுந்தரம் த்திலிங்கம் ந்தில்நாதன் பதிப்பிள்ளை னிக்கவாசகர் பசுபதி சப்பிரமணியம் சம்பந்தன்

Page 15
ாகாவலர் சபையின் சிே முன்னோகாள் நீதியரச கலாநிதி எச். டபிள்யூ. அவர்களின் செய்தி
நல்லூர் பூரீலழறீ ஆறுமுகநாெ விழா தேசந்தழுவிய பெருவிழாவா நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் த கடந்த ஆறு மாசமாக எமது சை
நாவலர் பெருமான் சமயத்துக் அர்ப்பணித்துத் தொண்டாற்றியவ, ளாலும் அவர் புரிந்த பணிகள் இலங்கையர் எல்லோருக்கும் தமி அமைந்தன.
தனது இனத்தாராலும் அன்ே களும் ஏற்பட்டபோதிலும் - தன ராது அஞ்சா நெஞ்சுடன் இலட் பெரும்ான்.
ஏட்டுப் பிரதிகளாயிருந்த வாகனமேற்றி, விளக்கவுரைகள் ஸ்தாபித்து, பிரசுரங்களைப் புரிந்து அதனுல் தமிழ்மக்கள் அவரை எ செலுத்தக் கடமைப்பட்டிருக்கிரு.
அவர் ஒரு பெரும் சிவ்பக்தர். மல் அதன் உண்மைகளை விளக்கி அவர் நிந்திக்கவில்லை. ஆனல் கொள்ளாதவர்கள் விலை கொடுத் அவர் கண்டித்தார். பேர் சிவல் பr பைபிளைச் சிறப்புறச் செந்தமிழில் பெருமான்.
தமிழ் உரைநடையின் தந்தை பெருந் தொண்டுகள் இல்லாமற்டே யில் அழிந்துபோயிருக்கும். என(
பெருமானுக்கு அஞ்சலி செலுத் அனைவரையும் தற்பாதையில் இட்
வாழ்க
i
i

ரஷ்ட உபதலைவர்
தம்பையா, கியூ சி.
பலர் பெருமானின் நினைவு நூற்ருண்டு க. நாடெங்கும் கொண்டாடப்படுவது ருகின்றது. இதற்கான ஏற்பாடுகளைக் }ப செய்துவந்தது.
கும் தமிழ்மொழிக்குமாகத் தம்மையே ர், தமது போதனைகளாலும் சாதனைக ா தமிழ்மக்களுக்கு மட்டுமல்லாமல், ழகத்தாருக்கும் கூடப் பயனுள்ளதாக
Eயராலும் பல இடுக்கண்களும் தடை ாது நோக்கத்தைக் கைவிடாது - அய சியப் பணிபுரிந்த உத்தமர் நாவலர்
பழந்தமிழ்ப் படைப்புகளை அச்சு எழுதி வெளியிட்டு, பாடசாலைகளை து தமிழுக்கு எழுச்சியூட்டியவர் நாவலர். ன்றும் மறக்காமல் நன்றியுடன் அஞ்சலி
Ꮁ ᏯᎦᎦᎾᎢ .
சிவநெறி குன்றிப்போவதைச் சகிக்கா நிலைநாட்டினர். கிறீஸ்தவ சமயத்தை அச்சமயத்தின் உண்மைகளை விளங்கிக் து, மதமாற்றஞ்செய்ய முற்பட்டதையே ாதிரியாரோடு கிறிஸ்தவ வேதநூலாகிய மொழிபெயர்த்துதவியவர் நாவலர்
5 நாவலர் பெருமான். இவரின் அரும் பாயிருந்தால், தமிழ் இனமே இலங்கை வே மதபேதமின்றி அனைவரும் நாவலர் துவோமாக! அவரின் ஆன்மீக ஒளி ட்டுச்செல்லுமாக !
நாவலர் !
-எச். டபிள்யூ. தம்பையா

Page 16
6.
66ਘ
பூரீலழுநீ ஆறுமுக காவ6 பொதுச் செயலாளர் திரு. ம. பூரீகாந்தா அவர்களின்
செய்தி
தமிழ் மக்கள் செய்த தவப்பயல் நகர் ஆறுமுக நாவலர் அவர்களின் பூ கொண்டாடப்படும் இவ்வேளையில் நாம் எல்லோரும் பாக்கியசாலிகளே விடில் தரணியில் தமிழர்களின் வர ஒவ்வொரு கணமும் சிவசிந்தையுடனு அப்பெருமான் ஆற்றிய அரும்பணி எம்மவரால் ஏற்றிப் போற்றப்பட ே
அன்று தாவலர் ஐயா புரிந்த த6 தலேமுறையினர் நன்றியுடன் நினைவு யும் சிந்தித்துத் தெளியவும், இனிவரு யினை ஏற்ற முறையில் பொறித்துச் பெருஞ் சத்தர்ப்பமாகும். இறவாப் அஞ்சலிசெய்து, எல்லோரும் இனிது
நாவலர் நா
பூரீமனை, பலாலி வீதி, கோண்டாவில்,

DLO
ஸ்ர் சபையின்
ரின் விளைவாக வந்தவதரித்த நல்லை நூற்ருண்டு நினைவு பெரு விழாவாகக் அதில் பங்குபற்ற வாய்ப்புப்பெற்ற . அந்த மகான் தோன்றியிருக்கா லாறே திசைமாறிப் போயிருக்கும். றும் தியாக மனப்பான்மையுடனும் களுக்காக ஏழேழு தலைமுறைக்கும் வண்டியவர்.
ன்னலமற்ற தொண்டுகளை இன்றைய கூரவும், அவரையும் அவர் பணிகளை ம் சந்ததியினருக்கு அவர் பெருமை செல்லவும் நூற்ருண்டு விழா அரும்
புகழ்படைத்த எம்பெருமானுக்கு வாழ இறைவனே வேண்டுவோமாக !
மம் வாழ்க !
-ம. யூனிகாந்தா

Page 17
சிவ
இலக்கியகலாநிதி, பண் சி. கணபதிப்பிள்ளை அவ வாழ்த்துரை
* இந்தச் சரீரம் நமக்குக் கிடைத் யின்பம் பெறும்பொருட்டேயாம் *.
இந்த வசனம் சர்வசாத்திர ச படைத்தது. நாவலர் இரண்டாப் இந்த வசனம்.
率
மகான்களின் ஆத்மசக்தி, அவர் லாக, உயிர்க்குறுதி செய்துகொண்ே
நாவலர் நூற்ரூண்டில், நாவலா
தமிழ் மக்கள் மத்தியில் ஊற்றெடுத்து காண்கின்ருேம்.
பிரவாகத்தில் முழுகி, அந்த ஆவோமாக.
率
நாவலர் நூற்ருண்டு மலர், இ. ஆத்மசக்தியைத் தேன் செய்வதாக
கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.

حسا மயம்
டிதமணி பர்களின்
தது, நாம் கடவுளை வணங்கி முத்தி
ாரமாய், என்றும் பதினறு வயசு பால பாடத்தில் முதல் வசனம்
来源
ர்கள் விட்டுச் சென்றவைகன் வாயி டயிருக்கும்.
率 عهو
ர் பெருமானின் ஆத்மசக்தி, சைவத் 1ப் பிரவாகிப்பதை இன்று கண்ணுரக்
ஆத்மசக்தி பதிதற்குப் பாத்திரம்
率 事
தழ்தோறும் நாவலர் பெருமானின்
ge
-சி. கணபதிப்பிள்ளை

Page 18
சிவ
முன்னுரை
நிர்வலர் அவர்களின் பெருை சைவ மக்களின் காவலராகவும் இ லர் பெருமான் இன்று இந்நாட்டி: படுகின்ருர், வரம்புகளைக் கடந்த வையமுழுவதும் பரவியுள்ளது. நா6 அவர்தம் தொண்டின் கீர்த்தியை கும் பங்குண்டு என்பதை எண்ணும் பத்தாண்டுக் காலத்தில் சபையின் விளைவித்துள்ளன என்றே நம்புகிே நாவலர் பெருமான் இறையடி டன. நூற்ருண்டு நிறைவை நி செய்து நடத்தும் பல்வேறு நிகழ்ச் யிடுவதும் அடங்கும். நூற்ருண்டு ! மலராக அது அமைதல் வேண்டும் என மட்டுமன்றி இனி வரப்போகிறவ தார்ந்த மலர் ஒன்றை வெளியிட முன் சபை வெளியிட்ட நாவலர் நாவலர் ஆய்வுகள் இன்றிருக்கும் ந வாளரும் நாவலர் அன்பர்களும் 8 வழி வகுத்திருக்கிருேம்.
இம்மலருக்கு ஆசிகள், கட்டுை மக்களுக்கும் அறிஞர்களுக்கும் நன் அதேபோல நிதியுதவி வழங்கியோ கூறுகின்ருேம்.
இம்மலர் வெளியீட்டிற்காக உ களுக்குப் பலவழிகளில் உதவியவர் சிரத்தையுடன் அச்சிட்டுதவிய சுன் நன்றி உரியதாகுக.
இம்மலரில் வெளிவரும் கட்டுரை கட்டுரைகளை எழுதியோரே பொறுப்ப யினர் எவ்விதத்திலும் பொறுப்புை பிட விரும்புகின்ருேம்.
தமிழுலகம் தலைசாய்த்து நாலி பில் இம்மலரை அவருக்குக் காண * கற்றுணர் புலவருட் களி முற்றுன ராறு முகநா என்று பாடப்பட்டிருப்பதையே ந கின்ருேம்.
一迦

) நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது, லட்சிய வீரராகவும் விளங்கிய நாவ எல்லோராலும் ஏற்றிப் போற்றப் அவரது வான்புகழ் இப்பொழுது பலர் ஐயாவின் புகழ்பாடி, சிலைநாட்டி உலகறியச் செய்ததில் எமது சபைக் போது பரவசம் ஏற்படுகிறது. கடந்த முயற்சிகள் விரும்பத்தக்க பலனை oth.
சேர்ந்து நூறு ஆண்டுகள் ஆகிஜிட் னைவுகூருமுகமாகச் சபை ஏற்பாடு சிகளுள், நினைவுமலர் ஒன்றை வெளி நினைவஞ்சலிக்கு ஏற்ற வகையில் சீரிய எ விரும்பினேம். இன்றுள்ளவர்களுக்கு ர்களுக்கும் பயன்படக்கூடிய கருத் முயற்சி செய்திருக்கிருேம். இதற்கு நினைவுமலர்களை மனங்கொண்டும், நிலையைக் கருத்திலெடுத்தும் ஆய்வறி ஒருங்கிணைந்து ஒரு மலரை உருவாக்க
ரகள் ஆதியனவற்றை வழங்கிய பெரு றி கூறக் கடமைப்பட்டிருக்கிருேம், ருக்கும் எம் நன்றிக் கடப்பாட்டைக்
ழைத்த மலர்க் குழுவினருக்கும் அவர் களுக்கும், மிகக் குறுகிய காலத்தில் னகம் திருமகள் அழுத்தகத்தினருக்கும்
களிற் காணுங் கருத்துக்களுக்கு அக் ாவரன்றி யூனிலழறீ ஆறுமுகநாவலர் சபை யர் அல்லர் என்பதையும் ஈண்டுக் குறிப்
லர் பெருமானை வழுத்தும் இவ்விேளை க்கையாகச் சமர்ப்பிக்கிருேம்.
க்கு
வலனே ** ாமும் கூறி இம்முன்னுரையை முடிக்
லழரீ ஆறுமுக நாவலர் சபை

Page 19
உள்ளுறை
முருகையன், இ. சண்முகதாஸ், அ சிவத்தம்பி, கா. கைலாசபதி, க. அருமைநாயகம், க. தில்லைநாதன், சி. சிவநேசச்செல்வன், ஆ.
கைலாசநாதக் குருக்கள், கா.
சண்முகசுந்தரம், த. கனகரத்தினம், வை
jiji
ஆசிச் ( முன்னு உள்ளும்
நுழைவு
பல்துை
கல்வியி
மொழி Flypassa ந்ாவல் தேசிய
சீர்திரு வெகுச
நாவல நாவல்
நாவல கோட்

செய்திகள்
ரை
றை
um u?ảy
ற நோக்கில் நாவலர்
யல் நோக்கில் நாவலர் 17 யியல் நோக்கில் நாவலர் 27 யல் நோக்கில் நாவலர் 36 ர் இலக்கிய நோக்கும் பணியும் 48 வரலாற்றுப் பின்னணியில் நாவலர் 60 த்தவாதி நாவலர் 74 னத் தொடர்புப் பின்னணியில் நாவலர் 8 ர் பணியின் வைதிக அடிப்படை 90 ரின் சமயப்பணி 97 ர் பணிகளின் சைவசித்தாந்தக் பாடுகள் 105

Page 20
யோகேஸ்வரி கணேசலிங்கம்
மனேன்மணி சண்முகதாஸ் கலாபரமேஸ்வரன், சு, கணேசலிங்கம், க.
* அம்பலத்தான்" அம்பிகைபாகன், ச.
சுப்பிரமணியம், நா.
சிவப்பிரகாசம், நம. நாகேஸ்வரன், க. குலரத்தினம், க. சி. வரதராஜப்பெருமாள், வை. சபாரத்தினம், ந. கோபாலகிருஷ்ணன், ப.
சற்குணம், ம.
பூலோகசிங்கம், பொ.
கணபதிப்பிள்ளை, சி. சிவசாமி, வி.
soougr6 66äržruun
சோமகாந்தன், நா.
சொக்கலிங்கம், க.
சித்திரலேகா மெளனகுரு
ரஞ்சிதமலர் நவரத்தினம் கிருஷ்ணகுமார், இ. } சிவநேசச்செல்வன், ஆ.
-------س سے
நா6
நா6

வழி நாவலர்
வலரும் சங்கர பண்டிதரும் 123 வலரும் தாமோதரம்பிள்ளையும் 130 வலரும் பொன்னம்பலபிள்ளையும் 141 வலரும் செந்திநாதையரும் 151 வலரும் சபாபதி நாவலரும் 159 வலரும் குமாரசுவாமிப்புலவரும் 168 வலரும் கைலாசபிள்ளையும் 178 வலரும் சபாரத்தின முதலியாரும் 187 வலரும் முத்துத்தம்பிப்பிள்ளையும் 196 வலரும் கதிரைவேற்பிள்ளையும் 200 வலரும் சோமசுந்தரப்புலவரும் 214 வலரும் சிவபாதசுந்தரமும் 221 வலரும் குமாரசுவாமிக் குருக்களும் 229 வலரும் விபுலாநந்தரும் 239 வலரும் கணபதிப்பிள்ளையும் 248
லாற்றில் நாவலர்
au avrř umri GByrnt ! 257 ந்திய மறுமலர்ச்சி இயக்கப் பின்னணியில் வலர் 259 ܥܕܟܝܢ
வலர் இலக்கண முயற்சிகள் 267 பக்கத்தின் வரலாறும் நாபனத்தின் சாதனைகளும் 277
வலரும் இராமநாதனும் 281 லத்தின் பின்னணியில் நாவலர் 291
வலர் திரட்டு
வலர் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள் 299
ல்விபரப் பட்டியல் : நாவலரியல் 305
ருக்குக் கட்டுரை வழங்கியவர்கள்

Page 21
நுழைவாயில்
ஆறுமுக நாவலர்வர்கள் மை இந்த நூறு வருடங்களில் நமது நா எண்ணரிய மாற்றங்கள் நிகழ்ந்து தனையோ பொருள்களையும் பெயர் மாற்றியுள்ளது. வரலாற்ருராய்ச்சி திருக்கிறது. ஆயினும் இலங்கை வ கூடிய முக்கிய புருஷர்களில் ஒருவ கிருர் என்ற கருத்து இந்த ஒருநூற் உறுதிபெற்றுள்ளது. இதனுல் நாவ டைவிற் பல்கிப்பெருகியுள்ளன.
நாவலரின் வாழ்க்கையையும் ஏறத்தாழ இருபது இதுவரை எழு டுரைகளும் கவிதைகளும் இயற்ற பாலான நாவலரவர்களின் சரித்தி யும் வெவ்வேறு அளவில் விவரிப்ட உள்ளன. இச்சரித நூல்களிலே சிற் டும் மீண்டும் பேசப்படுவதைக் கான வெளிவந்த நாவலர் நினைவுமலர்ச மாக்க உதவியுள்ளன. இவற்றுள் கா. பொ. இரத்தினம் தொகுத்து யிட்ட நாவலர் நினைவுமலர் (1938) செய்திகளையும், தகவல்களையும், (அவ்வப்போது இந்துசாதனம் முத கள் வெளியிட்டுவந்தன என்ப பின்னர், நல்லூரிலே நாவலர் சிை நாவலர் சபையால் வெளியிடப்ெ குறிப்பிடத்தக்கதொன்முக அமை! லர் களஞ்சியம்" என்ற பகுதி வி லாக நாவலர்பற்றிய ஆய்வுக்குரிய யமையாதனவாயுள்ள பல செய்தி களும், அட்டவணைக்ளும் அப்பகு

றந்து நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ட்டிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் துள்ளன. காலக்கறங்கு சுழன்று எத் களையும் மேலது கீழாய்க் கீழது மேலாய் யும் விஞ்ஞான அடிப்படையில் வளர்ந் ரலாற்றிலே விரல்விட்டு எண்ணிவிடக் ராகிய நல்லைநகர் நாவலர் விளங்கு ருண்டுக் காலத்தில் இன்னும் கூடுதலாக பலர் ஆய்வுகளும் மதிப்பீடுகளும் நாள
பணிகளையும் வருணிக்கும் நூல்கள் pதப்பட்டிருக்கின்றன; ஏராளமான கட் ப்பட்டிருக்கின்றன. இவற்றிற் பெரும் நிரத்தையும் அவர் ஆற்றிய சேவைகளை பன. ஆய்வு நூல்கள் அருந்தலாகவே சில விஷயங்கள் வாய்பாடுபோல மீண் னலாம். ஆயினும் காலத்துக்குக் காலம் 5ள் அவர்பற்றிய ஆய்வினை ஆழ அகல காலத்தால் முற்பட்டது, பண்டிதர் நா. பொன்னையா அவர்கள் வெளி . அம்மலர் நாலலர் சம்பந்தமான பல கருத்துரைகளையும் திரட்டித்தந்தது. லிய இதழ்கள், நாவலர் குருபூசை மலர் தும் நினைந்துகொள்ளக் கூடியதே.) லு திறப்பு விழாவை யொட்டி ஆறுமுக பற்ற நாவலர் மாநாடு மலர் (1969) ந்தது. அம்மலரில் இடம்பெற்ற **நா.வ தந்துரைக்க வேண்டியது. முதன் முத ப, கண்மான ஆராய்ச்சிகளுக்கு இன்றி திகளும், தகவல்களும், காலநிர்ணயங் தியிலே தொகுத்து அளிக்கப்பட்டன.

Page 22
12
நாவலர் ஆய்வு புதிய பரிமாணங்களை முக்கியத்துவம் பெறுவதற்கும் அம்ம மில்லை. அதனையடுத்து நாவலர் சடை 150வது ஜயந்தி விழா மலர் (1972) செம்மை பெறுவதற்குத் தூண்டுகோ மான் சைவப் பெருமகளுக மாத்தி விடுதலை இயக்கத்திற்கு வித்திட்ட கள் அனைவராலும் மதிக்கப்படும் நிை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. வருமாறு எழுதினர்: “சைவர்கள் என்று பாராட்டி, இதுகாறும் விழ தமிழர்கள், தமிழர் அல்லாதவர்கள் வர்கள் அல்லாதவர்கள் - யாவரும் தோன்றியிருக்கிறது. எதிர்பார்க்கக் பிரதிபலித்தது. காலத்தின் பின்னண பிடவும் அன்னரின் சிறப்பியல்புகளை பார்க்கவும் மலர் களமாக அமைந்த, திய கட்டுரை நாவலர் இயக்கத்தின் (இம்மலரிலும் அதுபோன்றதொரு க முற்கூறிய வரிசையிலேயே இந்நூற்
கடந்த நூற்ருண்டைப் பின்ே எப்பொழுதும் இல்லாத அளவில் : மிகவும் வாய்ப்பான ஒரு சூழ்நிலை இரு கள் பல: நாவலர் இயக்க வளர்ச்சி பொதுவான கலாசார எழுச்சியின் ே இலங்கைத் தமிழிலக்கியம் பலரது 5 பிலக்கியத் தேவைகளின் விளைவா இயக்கம், தொடக்கத்திலே சமகால தாயினும் , தவிர்க்க இயலாதபடி கியப் பாரம்பரியம் முழுவதையும் த தது. ஆற்றலும் அழகும் நிறைந்த ஆக்கங்களுக்கு உயிர்ச்சத்துப் பெறவே இவ்வியக்கத்தின் விளைவுகளில் ஒன்( நோக்கிலும் சமூகவியற் கண்ணுேட்டத் டாம் பத்தொன்பதாம் நூற்ருண்டுக ஆராயப்படும் நிலை தோன்றியது.
கடந்த நான்கு தஸ்ாப்தங்களா இலக்கியப் படைப்புகள் இப்பொழு களிலும் கற்பித்தலுக்கும் ஆராய்ச்சி நவீன இலக்கியத்தை நன்கு விளங் பிற்பலமாகவும் புதுப்படைப்புகள் இருக்கும் பத்தொன்பதாம்நூற்ருன் கூடுதலான அக்கறை கொண்டிருப்ப நூற்ருண்டில் வாழ்ந்த நாவலர் பல

ப் பெறுவதற்கும் வரலாற்று தோக்கு லர் நெறிகாட்டியது என்பதில் ஐய யே வெளியிட்ட நாவலர் பெருமான் , நாவலர் ஆய்வு மேலும் ஒரு படி லாய் அமைந்தது. நாவலர் பெரு ரமன்றி, தேசியப் பெருமகனுகவும், விடிவெள்ளியாகவும் இந்நாட்டு மக் ல தோன்றிய வேளையில் அம்மலர் அவ்வேளையில் பண்டிதமணி மேல் நாவலர் அவர்களை, ஐந்தாம் குரவர் ாவெடுத்து வந்தார்கள். இப்பொழுது r - இத்தேசத்தவர்கள், இத்தேசத்த ஏகோபித்துக் கொண்டாடும் நிலை கூடியவாறு அச்சூழ்நிலையை மலர் ரியில் நாவலரை ஆராயவும் மதிப் யும், பங்களிப்புகளையும் சீர்தூக்கிப் து. நா. சோமகாந்தன் அதில் எழு படிமுறைவளர்ச்சியினை விவரித்தது. ட்டுரையை அவர் எழுதியிருக்கிருர்.) முண்டு நினைவு மலரும் அமைகிறது.
னக்கிப் பார்க்கும் பொழுது, முன் தற்சமயம் நாவலர் ஆய்வுகளுக்கு நத்தல் புலஞகும். இதற்குக் காரணங் யின் காரணமாகவும், இந்நாட்டின் பெறுபேருகவும் அண்மைக் காலத்தில் கவனத்தைக் கவர்ந்துள்ளது. படைப் கத் தோன்றிய தேசிய இலக்கிய இலக்கியங்களுக்கே முதன்மையளித்த விரைவிலேயே இலங்கைத் தமிழிலக் ழுவித் தனதாக்கிக்கொள்ள முனைந் பழைய படைப்புக்களிலிருந்து நவீன பண்டியதன் அவசியத்தை உணர்ந்தது. றகவே நாவலர் ஆய்வுகள் சரித்திர திலும் நடைபெறலாயின. பதினெட் களைச் சேர்ந்த தமிழிலக்கியம் துருவி
’க மலர்ச்சி பெற்றுள்ள நமது நவீன து கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங் சிக்கும் உரிய நூல்களாகியுள்ளன. கிக் கொள்வதற்கு இன்றியமையாத பலவற்றின் ஊற்றுக் கண்ணுகவும் ண்டு இலக்கியத்தில் ஆராய்ச்சியாளர் தைக் காணலாம். இதனுலும் சென்ற }ரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

Page 23
கடந்த பத்தாண்டுக் காலத்து செந்திநாதையர், துரையப்பாபிள் புலவர். சுவாமி ஞானப்பிரகாசர் குறித்தும், தமிழ்ப் பத்திரிகைகள் ( முதுமாணிப் பட்டத்திற்கான் ஆய்வு றன. குறிப்பிட்ட புலவர்கள் பற் விளக்கமாகவும் இவை அமைந்துள்ள நாவலரைப்பற்றிய நமது விளக்க இதே காலப்பகுதியில் சில நூற்ருள் ளும் வெளிவந்திருக்கின்றன : இவ பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றன சுவாமிகள் நினைவு மலர் (1975), றண்டு விழா மலர் (1978), காசிவ (1978) என்பன குறிப்பிடத்தக்க இவற்றிலே புதிய புதிய செய்திகளும் வெளிவந்திருக்கின்றன. நாவலருச் முள்ள தொடர்பைத் தெளிந்துெ சமைத்துள்ளன, இவற்ருேடு, அg வேற்பிளளை, தி. த. கனகசுந்தரட் அ. குமாரசுவாமிப் புலவர் முதலியே யில் வெளிவந்துள்ளன. நாவலர் களின் மூலம் நாவலரையே மே உண்டாகியிருக்கிறது.
அண்மையில் எப். எக்ஸ். ஸி. ந சென்ற மு. இராமலிங்கம், ச. 'நாவலர் சரித்திரத்திற் புதிய கண் படுத்தியுள்ளனர். நுணுக்க விவரா குறிப்புரைகள் அழுத்திக்காட்டியிரு களையும், நாவலரின் பதிப்புக்களையு ஐயங்களையும், வினக்களையும், ஆசங் வப்போது தெரிவித்து வந்திருக்கின் வந்துள்ள இலக்கிய கலாநிதி, பன் லாண்டுகளாக நாவலர் பற்றி எழு தொகுக்கப்பட்டு நூலுருவம் ப்ெ அருணுசலக்கவிராயரின் ஆறுமுகந பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம் ஆறுமுகநாவலர் சரித்திரம், சி. வை களின் தொகுப்பான தாமோதரம் அண்மைக் காலத்தில் வெளிவந்துவ சியமான 'ஆதார நூல்களாகும்.
இன்னுமொன்று, யாழ்ப்பாண பிக்கப்பட்ட காலமுதல் அங்குள் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிை புலவர்களின் கடித்ங்கள் முதலிய ப6

is
துள் brவல்ர், தாமோதரம்பிள்ள்ை, ாளை, விபுலாநந்தர், சோமசுந்தரப் முதலாய தமிழ்த் தொண்டர்கள் தறித்தும் நமது பல்கலைக்கழகங்களில் புக் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின் நிய நுண்ணுய்வுகளாகவும் காலத்தின் ாமை கருதத்தக்கது. இவற்றின்பயஞக ம் மேலும் தெளிவடைந்திருக்கிறது. ண்டு நினைவு மலர்களும் சிறப்பு மலர்க ற்றுள், அடிகளார் படிவமலர் (1969), ண்டு விழா மலர் (1972), மகாதேவ சைவப்பெரியார் சிவபாதசுந்தரனுர் நூற் ாசி செந்திநாதையர் ஞாபகார்த்த மலர் ன. வேறு சில மலர்களும் உண்டு. ம், தகவல்களும், கண்ணுேட்டங்களும் குேப் பின்வந்தோருக்கும் நாவலருக்கு காள்வதற்கு இவ்வெளியீடுகள் வழி நணுசல உபாத்தியாயர், நா. கதிரை ம்பிள்ளை, ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, பார் வாழ்க்கைச் சரிதங்களும் அண்மை வழிவந்தவர்களைப்பற்றிய சிறப்பாய்வு லும் நுணித்து நோக்கச் சந்தர்ப்பம்
டராசா, ச. அம்பிகைபாகன், காலஞ்
தனஞ்செயராசசிங்கம் ஆகியோர், ாடுபிடிப்புக்கள் " சிலவற்றை வெளிப் களின் முக்கியத்துவத்தை இவர்களது க்கின்றன. நாவலர் வரலாற்ருசிரியர் ம் குறித்துப் பொ. பூலோகசிங்கம் பல கைகளையும், ஆய்வு முடிபுகளையும் அவ் ழுர், நாவலரவர்கள் நினைவைப் பேணி ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பல் திவந்துள்ள கட்டுரைகள் இப்பொழுது ற்றுள்ளன. இன்னும் சிவகாசி இ. ாவலர் சரித்திரம், ஆர்ணுல்டு சதாசிவம் , வே. கனகரத்தின் உபாத்தியாயரின் . தாமோதரம்பிள்ளையின் பதிப்புரை
ஆகிய நூல்கள் மறுபதிப்புகளாக rளன. இவை நாவலர் ஆய்வுக்கு அவ
த்திலே பல்கலைக்கழக வளாகம் ஆரம் ர. நூலகத்திலே இலங்கைத் தமிழ் ககள், ஏடுகள், இலங்கைத் தமிழ்ப் ல்வகைப்பட்ட ஆவணங்கள் சேகரிக்கப்

Page 24
14
பட்டு வருகின்றன. பத்தொன்பத இலக்கிய ஆய்வுக்கு வேண்டிய அடி கணிசமான அளவு இருக்கின்றன. வும் ஆராயவும் விருப்பமுள்ளவர்களு ருக்க முடியாத சான்ருதாரங்களும், களும் ஓரளவு எளிதிற் கிடைக்கக் கூ பெருவாய்ப்பாகும்.
இந் நிலையில், இன்று வெளிவரு கூறிய ஆதாரங்களையும் வாய்ப்பு கொண்டு அவற்றின் பலாபலன்களை அவ்வாறு செய்ய முயல்வதே அறிவு மலரில் நான்கு அம்சங்கள் கவனிக்க பல்துறை நோக்கில் அணுகி ஆராயு நமது அறிவுலக நோக்கில் நாவலர போதனைகளையும் திறனய்வதாக இ இரண்டாவது, நாவலர் வழிவந்த அவர்களின் சிறப்பியல்புகளும், ந செயற்பட்டு வந்துள்ளமையும் இப்ட சித்திரிக்கப்பட்டிருக்கிறன. மூன்ரு நாவலரை வைத்து மதிப்பீடு செய்ய கொள்ளப்பட்டுள்ளன. நான்காவது பற்றிய நூல்கள் கட்டுரைகள் குறிட் யாகச் சுட்டிக் காட்டும் நூல் விவர பெற்றுள்ளது. நூற்றண்டு நினைை கனமும் காந்திரமும் கொண்ட மலரr வுடன் செயற்பட்டிருக்கிருேம்.
காலநெருக்கடி காரணமாக மிக வேண்டியிருந்தது. அதனை உணர்ந் செய்திகள் வழங்கிய அனைவருக்கும் குழுவில் அங்கத்துவம் வகித்து எம்( சனைகள் வழங்கிய நண்பர்களுக்கும், ராகவும், உதவிப் பதிப்பாசிரியரா ஆ. சிவநேசச்செல்வனுக்கும். யாழ் பணிபுரியும் இ. கிருஷ்ணகுமாருக் புரிந்த மாணுக்கருக்கும் நன்றிகூற யின் சார்பில் எமக்கு வேண்டிய ஆ கடி தந்த திரு. ம. பூரீகாந்தா, இருவருக்கும் நன்றி கூருதுவிட இய
இம்முயற்சியில் எம்மை ஈடுபடுத் யினருக்குப் பொதுவில் நன்றி தொ சேர்ந்து, நாவலரவர்களுக்கு அஞ்ச மலரைப் பணிவன்புடன் காணிக்ை

ாம் நூற்ருண்டு இலங்கைத் தமிழ் ப்படைச் சான்ருதாரங்கள் அங்கு ஆக, இன்று நாவலர் பற்றி அறிய நக்கு முன்னெருபொழுதும் பெற்றி
மூலநூல்களும், வழித்துணை நூல் டியதாக உள்ளன. இது பெறற்கரிய
ம் ஒரு நாவலர் நினைவுமலர், முற் நலன்களையும் இயன்றவரை மனங் ாப் பிரதிபலித்தல் அத்தியாவசியம். க்குகந்த நடவடிக்கையாகும். இம் த்தக்கவை. முதலாவது, நாவலரைப் ம் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. து சிந்தனைகளையும் சாதனைகளையும் }ப்பகுதி அமைதுள்ளது எனலாம். நல்லறிஞர்கள் இயங்கிய முறையும், ாவலர் மரபு மாறியும் மாருமலும் பகுதியில் உதாரண விளக்கங்களாற் வது, வரலாற்றுப் பின்னணியில் பும் முயற்சிகள் இப்பகுதியில் மேற் , நாவலர் நூல்களையும், நாவலர் புகள் ஆகியவற்றையும் முதன்முறை ாப் பட்டியல் இப்பகுதியில் சிறப்பிடம் வக் கொண்டாடும் வேளைக்கேற்ப ாக விளங்கவேண்டும் என்ற வேணவா
கவும் விரைவாக மலன்ர அச்சிட து உரிய வேளைக்குள் கட்டுரைகள்,
எமது நன்றி உரித்தாகுக. மலர்க் முடன் ஒத்துழைத்து உகந்த ஆலோ குறிப்பாகக் குழுவின் அமைப்பாள கவும், உயிர்நாடியாகவும் இயங்கிய ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் கும், அவ்வப்போது ஒத்தாசைகள் க் கடமைப்பட்டிருக்கிருேம். சபை தரவையும் ஆலோசனைகளையும் அடிக்
திரு. நா. சோமகாந்தன் ஆகிய பலாது.
ந்திய பூரீலழரீ ஆறுமுகநாவலர் சபை விப்பதோடு அவர்களுடன் நாமும் லி செய்து இந்நூற்ருண்டு நினைவு கயாகச் சமர்ப்பிக்கிருேம்.
க. கைலாசபதி
பதிப்பாசிரியர்,

Page 25
பல்துறை நேர்
கல்விழியல்
சமூகவியல் மொழியியல்
வெகுசனத் துெ
вrшoаш6)їиш6і)
இலக்கியம்
தேசியம்
தத்துவம்

ாக்கில் நாவலர்
நாடர்பியல்

Page 26


Page 27
கல்வியியல் ே
இ. முருகையன்
" மானுடப் பிரபஞ்சத்தின் உள் ளடக்கம் மாறிவிட்டது. ಙ್ விரும்பினுலென்ன விரும்பாவிட்டால் என்ன இன்று அவன் விஞ்ஞானத்தில் ஊறித் திளைத்த ஓர் உலகில் விழுந்து கிடக்கிருன். இவ்வுண்மை சகல மணி தர்க்கும் பொருந்தும். பசுமைப் புரட் சியின்இடையே அகப்பட்டுப்பாடுபடும் இந்திய விவசாயியும், எந்திரத்தோடு எந்திரமாய் மாறிவிட்ட தொழிற் சாலைக் கூலியாளும், அணுக்கருப் பெளதிக ஆய்கூடத்து நுட்பவினைஞரும் இதே கதியிலேதான் உள்ளார்."
கல்வி அபிவிருத்தி பற்றிய சருவ . தேச ஆணைக்குழுவின் அறிக்கையிலே மேற்காட்டிய கருத்து வலியுறுத்தப்பட் டுள்ளது.மேற்படி ஆணைக்குழு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி விஞ் ஞான பண்பாட்டு நிறுவகத்தினுல் நிய மிக்கப்பட்டது. 1972ஆம் ஆண்டில் அவ் வாணைக்குழு வெளியிட்டுள்ள அவ் வறிக்கை இன்றைய கல்வியியல் அறிஞர் களின் சிந்தனைகள் எந்தத் திசையிலே செல்கின்றன என்று சுட்டிக் காட்டுகிறது. விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சிகளி ஞல் உலகில் நிகழ்ந்துவிட்ட-நிகழ்ந்து வருகின்ற மாற்றங்களை மனங்கொண்டு, அவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அவற்றைத் துரிதப்படுத்தும் வகையிலும், அவற்றைச் சமாளிக்கும் வகையிலும்ே வருங்கால உலகின் கல்வி நடவடிக்கை கள் பெரும்பாலும் அமையும். கல்வியின்

நோக்கில் நாவலர்
இலக்குகள் இந்த நோக்கிலேதான் வரை யறுக்கப்படுகின்றன. அவ்விலக்குகளை அடையும் உத்திகளும் உபாயங்களும் முறைநெறிகளுங்கூட இந்த நோக்கிலே தான் வகுக்கப்படுகின்றன. நமது கல்விச் சாலைகளிலே கற்பிக்கப்படும் பாடங்களும் கையாளப்படும் உபகரணங்களும் மான வர்க்கென நியோகிக்கப்படும் செயல்க ளும் ஆடல் பாடல்களுங் கூட இந்த நோக்கிலேதான் திட்டமிடப்படுகின்றன. சுருங்கச் சொல்வதானல், கல்வியியலின் பிரதான அக்கறைகளுள் விஞ்ஞானதொழில்நுட்ப விருத்தியின் தாக்கங்கள், தவிர்க்க இயலாதவாறு முனைப்பும் முதன் மையும் பெற்றுள்ளன.
எனவேதான், நவீன கல்வியியலின் நியமங்களையும் கருத்தோட்டங்களையும் நாவலர் பெருமானின் கல்விப் பணிகளுக் கும் கல்விக் கோட்பாடுகளுக்கும் நாம் பிரயோகிக்க முயலும்போது மிகவும் சாவதானமாக இருத்தல் வேண்டும். விஞ் ஞான தொழில்நுட்ப விரிவுகளின் தாக்கம் நாவலர் காலத்தில் எமது தேசத்தில் அவ் வளவாக உணரப்பட்டவை அல்ல. அத னல் அதன் கூறுகள் நாவலரின் கல்விச் சிந்தனையில் இடம்பெறவில்லை. விஞ்ஞான நோக்குப்பற்றிய உணர்வோ அதன் நலத் தீங்குகள் பற்றிய எண்ணமோ நாவலரின் கவனத்துக்கு உட்பட்டவை அல்ல. ஆகை யால் நாம் அவற்றை நாவலரிடம் தேடு
தல் பொருந்தாது.

Page 28
1s
நங்கூலுரை அவரது களத்தில் வைத்தே நாம் மதித்தல் வேண்டும். அவருடைய காலம் எது, இடம் யாது என்பதைக் கருத்திற்கொண்டே அவரை நாம் அணுகு தல் வேண்டும். அவ்வாறு, அணுகும்போது அவரது களம் சமய-பண்பாட்டு-மரபுக் களம் என்னும் உண்மையை நாம் தெளிந்து கொள்ளலாம். சமயப்பண்பாட்டு மரபு களைப் பரப்புவதையும் பேணுவதையும் புதுக்குவதையுமே தமது கல்விப் பணி களின் முழுமுதல்நோக்கமாக வரித்துக் கொண்டவர் நாவலர்.
மற்றுமோர் உண்மையை நாம் மறந்து விடல் ஆகாது. அவர் ஒரு முழுநேரக் கல்விப் பணியாளர். கற்றலும் கற்பித் தலுமே நாவலருக்கு வேலை. இளமைக் காலம் முழுவதையும் அவர் கல்வியிலே செலவிட்டார். ** சைவ நூல்களைத் தாமாகவே தேடிக் கற்றுக்கொண்டார். முதனூல்கள் சமஸ்கிருதத்திலிருப்பதனுல், சமஸ்கிருதத்தையும் தாமே கற்றுக்கொண் டார். இருபத்துமூன்ரும் வயசில், "கற் பனவும் இனி அமையும்' என்று தமது கல்வியை ஒருவாறு நிறுத்திவிட்டுத் தம திருப்பிடத்தில் வளர்ந்தவர்களைச் சேர்த்து இரவிலுங் காலையிலுங் கற்பிக்கத் தொடங் கிணுர்" என எழுதுவார் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். வளர்ந்த வர்களுக்கு மட்டுமன்றி இளம் பிள்ளைக ளுக்கும் சமயச்சூழலிலே கல்வி பயிற்ற வேண்டும் என்னும் வேட்கை நாவலருக்கு இருந்தது. அவ்வேட்கையின் வெளிப் பாடே அவர் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலைகள். அவர் பதிப்பித்த நூல்களும் அவ்வேட்கையின் வெளிப் பாடே.
இன்னும் ஒன்று: தமது துறை கல் வித்துறையே என்னும் உணர்வு நாவல ருக்குப் பூரணமாக இருந்தது. அவர் எழுதிய "பாலபாடம் - நான்காம் புத்த கம்" என்னும் நூலில், "செல்வம் என் னும் தலைப்பிட்டு ஒரு பாடம் எழுதி யுள்ளார். அதிலே உள்ளவை பின்வரும் வசனங்கள் :-

இ. முருகையன்
"பொருள் சம்பாதிக்கும் நெறிக 665 வித்தை கற்பித்தல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களையும் உரைகளையுஞ் செய்து வெளிப்படுத் தல், வேளாண்மை, வாணிகம், இராச சேவை, சிற்பம் முதலியவைகளாம். ஞான நூலை வேதனத்தின் பொருட் டுக் கற்பிக்கலாகாது; கற்பித்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்."
இங்கு வேளாண்மை, வாணிகம், இராசசேவை, சிற்பம் முதலியவற்றைச் சொல்லுமுன்பு வித்தை கற்பித்தலையும் புத்தக வெளியீட்டையும் சொல்லியுள் ளார். தம்முடைய சொந்தத் தொழில் கள் பற்றிய எண்ணம் அவர் மனத்திலே மேலோங்கி நின்று அவரையறியாமலே எடுத்த எடுப்பில் வெளிவந்துள்ளது என வும் நாம் கொள்ளலாம். உலக நடை முறையை நோக்கும்போது, கற்பிக்கும் தொழில் பெரு வருவாய் தரும் தொழி லாக உள்ளது என்று கருதமுடியாது "பொருள் சம்பாதிக்கு நெறிகளுள்ளே” கற்பித்தல் இலாபகரமானது அன்று பிற தொழில்களுடன் ஒப்பிடுகையில், ஆசிரியத்தொழில் வருவாய் குறைந்த ஒன்ருகவே இருந்து வந்துள்ளது; இருந்து வருகிறது. ஆகவே, பெருவருவாய் தரும் வாணிகத்தையோ, gurr &F சேவை யையோ முதலிலே சொல்லாது வித்தை கற்பித்தலையும் புத்தக வெளியீட்டையும் முதலிலே எடுத்துரைத்தமை, நாவலருக் குக் கல்வித்துறையின்பால் இருந்த ஆராத காதலையும் ஆர்வத்தையுமே காட்டுகின் றன. ஞானுநூல் பற்றிய குறிப்பும் நாவல ரது உயிர்நிலையான ஈடுபாடு எது என் பதையே காட்டுகிறது. அவரது கற்பித் தற் பணி, கைம்மாறு கருதாத அருட் பணியே என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளல் தகும். தாம் பெற்ற கல்வியை முழுமையாகப் பிறர்பொருட்டும் பயன் படுத்த வேண்டும் என்ற இலட்சியம் நாவல ருக்கு இருந்தது. இந்த இலட்சியம் ஒன்றே அவரை ஒரு முழுநேரக் கல்விப் பணி யாளர் ஆக்கிற்று.

Page 29
கல்வியியல் நோக்கில் நாவலர்
அத்தகைய சிறந்த கல்விப்பணியாள ரின் கல்வியியற் கோட்பாடுகள் எவை, அவர் கையாண்ட முறைகள் எவை என இனிச் சற்றே பார்க்கலாம்.
2
நாவலர் வாழ்ந்த சூழலே அவரது கல்விக் கோட்பாடுகளை வரையறுத்தது. அவரது சூழல் எப்படிப்பட்டது? அவரைச் சுற்றவிருந்த சமுதாயம் எத்தகையது?
நாவலர் காலச் சமுதாயம் நிலவுடை மைச் சமுதாயம். கமத்தொழிலே முதன்மை பெற்றிருந்தது. பெரு வணிகமோ எந்திரத் தொழில்களோ தலையெடுக்கவில்லை. ஓரளவுக்கு நிலை பேறும் உறுதிப்பாடும் பெற்ற சமுதாய அமைப்பு அன்று நிலவியது. மாற்றங்கள் மிக மெதுவாகவே இடம்பெறலாயின.
**நிலைபேறுள்ள விவசாயச் சமுதாயங் களிலே, தொழில் திறமைகளையும், மரபு களையும் விழுமியங்களையும் புகட்டுவதே கல்வியின் அக்கறையாக அமையும். சமு தாய, அரசியல், சமயப் பிரச்சினைகளுக் குப் புறம்பாக, விசேட கல்விப் பிரச்சினை கள் அங்கு இருக்கம்ாட்டா' என்பார் Edgar Faure o Gr67 Sgth , Gours sypóGrit. * நாவலர் காலச் சமுதாயத்துக்கு இக்கூற்று நன்கு பொருந்தும். அரசியலில் மிகச் சிறிதளவு ஈடுபாடே நாவலருக்கு இருந் தது. ஆயினும் சமுதாயச் சீர்கேடும், சமயச் சீரழிவும் நாவலர் பெருமானின் மனத்தை உறுத்திய சங்கதிகள். அவற் றுள்ளும், சமுதாயப் பிரச்சினைகளைவிட சமயப் பிரச்சினைகளே நாவலர்து de னத்தை மிகவும் கவர்ந்தவை. சமுதாயப் பிர்ச்சினைகளைக்கூட சமய நோக்கிலே தான் நாவலர் கண்டார். -
ஆகையினல், நாவலரைப் பொறுத்த வரை, கல்வி என்பது சமயக் கல்வியே. சமய ஆசாரங்களையும் சமய தத்துவங்களை பும் உணர்த்தி, சமயர்பிமானத்தையும் பற்றையும் ஊட்டுவதே நாவலரது கல்விக் கொள்கைக்கு அடிப்படை. நாவலர்

9
பாணியிலே சொல்வதானுல், கல்வியி னும் சமயமே அதிகம்" என்பது அவர்தம் கோட்பாடு.
சமய நோக்கிலே நாவலரின் கல்விக் கோட்பாடு அமைந்தமையால், அவர் வளர்த்த கல்வியும் சில குறிப்பிட்ட பண்பு களை உடையதாயிற்று :-
(1) கருத்துக்களையும் கொள்கைகளை யும் முடிந்த முடிபுகளர்க-இறுக்கமான, அதிகாரபூர்வமான வடிவிலே வழங்கு தலும்
(2) இன்னது செய்தல் வேண்டும், இன்னது செய்தலாகாது என்று பணித் தலும்
(3) இன்னபடி ஒழுகினுல் இன்ன பலன் கிடைக்கும்; இன்ன பாவத்துக்கு இன்ன தண்டனை கிடைக்கும் என எச் சரிக்கை செய்தலும்
(4) தினசரி வாழ்க்கை அனுபவங் களை மாத்திரமன்றி, புராணச் செய்திகளை யும் பழநூற் சான்றுகளையும் திருட்டாந்த மாகக் காட்டி விளக்குதலும்
(5) முன்னையோர் கொண்ட முடி புகளையெல்லாம் சிரத்தையுடன் தலை மேற்கொண்டு ஏற்றுக்கொள்ளுதலும்
ஆகிய பண்புகளெல்லாம் நாவலர் வளர்த்த கல்வியின் இன்றியமையா இயல்புகள் ஆயின. இவையெல்லாம் பழமைபேணும் போக்கினை உடையன என்பது கண்கூடு,
பழமை பேணுதலும் கல்வியின் முக் கியமான பண்புகளுள் ஒன்ருகும், கல்வி யானது இடையருது தன்னைப் புதுக்கிக் கொள்கிறது. அதே வேளையில், அது தன் னைத்தானே மறுபடைப்புச் செய்தும் கொள்கிறது. இந்த மறுபடைப்பு அல்லது மீட்டாக்கமே அதன் தொடர்ச்சியை அருது ஒம்புவதற்கு உறுதுணை ஆகும். ஒவ்வொரு தலைமுறையினரும் தம் முன் ஞேரிட்மிருந்து பெற்ற முதுசொமாகிய

Page 30
20
அறிவை, தமது பின்னேரிடம் அல்லது அடுத்த தலைமுறையினரிடம் கையளித் துச் செல்கிருர்கள். இது மிகவும் முக்கிய மான பணி ஆகும். கல்வி உலக நடை முறையில் இப்பண் சரிவர நிகழவில்லை யானல், பாரிய இழப்புகள் நேரும். ஏற் கென்வ்ே தேடிச் சேகரிக்கப்பட்ட அறிவுச் செல்வமெலாம் வீணுகி வறிதே இறந்து படும். இது மனித குலம் முழுவதற்குமே பெரிய நட்டமாகும் அன்ருே ?
** வருந்திக்க்ற்ற நூலை மறக்கவிட்டு வேறு நூலக் கற்றல் கையிலே கிடைத்த பொருளை எறிந்துவிட்டு வேறு பொருளை அரிப்பரித்துத் தேடல் போலும் ' என நாவலர் ஓரிடத்தில் எழுதியுள்ளார். இங்கு அவர் எழுதியுள்ளது, தனியாள் ஒருவரின் கல்விபற்றி, ஆளுல் இதேகருத்தைச் சமு தாயம் முழுமைக்கும் நாம் பொருத்திப் சஈர்க்கலாம். தலைமுறைகளின் தொடர்ச் சியை முற்றுமுழுதாக நோக்கும்போது, முந்திய தலைமுறைகள் ஈட்டிய அறிவை எறிந்துவிடுதல் பேரிழப்பே ஆகும். அவ் வாறு எறிந்துவிடாது தவிர்த்தலே பழமை பேணுதல். ஆக்வே பழமை பேணுதலும் கல்வி நிகழ்முறையின் பண்பும் பணியு மாக உள்ளது.
மாற்றங்களோடு தாக்கமுற்று அவற் றைச் சீரணித்துக் கொள்வது கல்வி நிகழ் முறையின் பிறிதொரு பண்பு.
ஆறுமுகநாவலர் மாற்றங்களைச் சீர ணித்துக் கொள்ளும் பண்புக்கு அதிக முக் கியத்துவம் தரவில்லை. பழமை பேணும் பண்பையே பெரிதும் போற்றினர். ஆகை யாலேதான் அவர்கண்ட கல்வி சமயத்தை அத்திவாரமாகக் கொள்ளலாயிற்று. அக் கல்வியில், சமயசாத்திர முடிபுகள் உறுதி வாகவும் அதிகார்பூர்வமாகவும் வலியுறுத் தப்பட்ட்ன.
எங்கெங்கு கருத்துகள் உறுதியான
 

ஆய்வும் பரிசீலனையும் பரிசோதனையுமாகிய விசாரணை முறைகள் அங்கு அதிகம் செல்லுபடியாவதில்லை.
ஆனல், நவீன கல்வியியலில், ஆய்வும் தேடலும் பிரதானமான இடத்தைப் பெறுகின்றன. உண்ம்ைகளை நோக்கிய தேடலாகிய பயணமே கல்வி எனப்படும். அப்பயணத்தை மேற்கொள்வோர் தயங் கியும் தடுமாறியும், சில வேளை விழுந் த்ெமும்பியும், வேறுசில வேளைகளில் வழி மாறியும், இன்னும் சிலவேளைகளில் துரித மாய் விரைந்தும் ஓடியும் பாய்ந்தும் தம் பயணத்தைத் தொடர்கின்றனர். ஆகை யால், மனித அறிவுக்கு வசப்படக்கூடி யவையெல்லாம், உண்மைகளின் அண்ணள வாக்கங்களே; அவை பரிபூரண உண்மை அல்ல; பரம சத்தியங்கள் அல்ல -இவ் வாருன தெளிவை உண்டுபண்ணுவதும் கல்வியின் நோக்கமென இன்று கொள் ளப்படும். தனிமனித நோக்கிலுஞ் சமு தாய நோக்கிலும் இவ்வாறுண் தெளிவு அவசியமாகும். இயங்கியற் சிந்தனை முறையே இவ்வித அறிவுத்தேட்டத்துக்கு உகப்பான கருவி. இக்கருவியைக் கை யாளும்போது, சகிப்புத் தன்மையின் விதைகள் நிம் நெஞ்சகத்திலே விதைக் கப்படுகின்றன. சகிப்புத்தன்மை என்பது தீமையையும் கொடுமையையும் அனுமதிப் பது அன்று. மனிதரிடையே வேற்றுமை கள் சாத்தியம் என ஒப்புக்கொள்வதே அது. ஆகையால், அறிவுத் தேட்டத்தில் அல்லது கல்வி நிகழ்முறையில், பரிசீலனை களும் ஆய்வுகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
எனினும், சமயஞானத்தின் தன்மை காரணமாக, சுருதி, யுத்தி, அநுபவம் என்னும் மூன்றனுள்ளும் சுருதிப் பிரமா ணத்துக்கே அங்கு வலிமை அதிகமாகும். கல்வித் துறையிற் சமயத்துக்கு முதன்மை தந்து போற்றிய ஆறுமுகநாவலரும், சமயக் கருத்துக்களையும் தத்துவங்களையும் பிரமாண வடிவிலேயே மாணவர்க்கும் மக்களுக்கும் வழங்குகிருர், அவர் எழுதிய பாடநூல்களும்-பாலபாடங்களும் சைவ

Page 31
கல்வியியல் நோக்கில் நாவலர்
விஞ்விடைகளும், (துண்டுப் பிரசுரங்களும் கூட)--சமய-சாத்திரப் பிரமாண சாரங் களாகத் திகழ்கின்றன. இதனுலேதான் போலும், இரண்டாஞ் சைவவினுவிடை யின் புதிய பதிப்பொன்றுக்குப் பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் எழு திய முன்னுரையிலே பின்வரும் வசனம் காணப்படுகிறது
** இரண்டாம் சைவ வினவிடையும் நான்காம் பாலபாடமும் சைவத்துக்கு இரு கண்கள்: சைவ சாத்திர சாரங்கள்."
3
சைவ சாத்திர சாரங்களான பர்ட நூல்களை எழுதுவதையும் அவற்றை அச் சிட்டு வெளியிடுவதையும் தமது கல்விப் பணியின் கூறுகளாகக் கொண்டவர், நாவ Gavri. Syl Lunt- நூல்களைப் படிக்கிரமமாக, தரம்பிரித்து அமைப்பதும் அவர் நோக்க மாயிற்று. பாலபாடங்களிலே முதற் புத்தகத்தையும் இரண்டாம் புத்தகத்தை பும் எழுதி வெளியிட்ட அவர், மூன்ரும் புத்தகத்துக்கு ஏற்ற தரத்தில் ஒரு நூலை எழுதும் பொறுமை இல்லாதவர் ஆஞர் போலும் சைவ சாத்திர சாரங்களை இக் காலத்தவர்க்கு ஏற்ற வசன நடையிலே வழங்கிவிடல் வேண்டும் என்ற துடிப்பு தான்காம் பாலபாடமாக உருப்பெற்றது.
பாலபாடத் தொடரிலே மூன்று புத் தகங்களை எழுதிய நாவலர் சைவ்வின விடைத் தொடரிலே இரண்டு புத்தகங் ககள எழுதினர். இலக்கண நூல்களைப் பொறுத்தவரை இலக்கண வினவிடையை பும் இலக்கண்ச்சுருக்கத்தையும் நன்னூற் காண்டிகை யுரையையும் எழுதினுர். இவ் வாறு இவர் எழுதிய தொடர் நூல்களை நாம் எடுத்து நோக்கும்போது இன்றைய கல்வியியலாளர் பெரிதும் போற்றிக் கடைப்பிடிக்கும் ஒரு கோட்பாடு பற்றிய உணர்வு நாவலருக்கு இருந்தமை புலனு கிறது. அதுவே எண்ணக்கருவின் தோற்ற மும் வளர்ச்சியும்பற்றிய கோட்பாடு.

எண்ணக்கரு (Concept) என்பது என்ன? அது ஒருவரின் மனதிலே எவ்வாறு உருவாகிறது? எவ்வாறு வளர்கிறது ? அநுபவ வளம் எண்ணக்கருவைச் செம் மைப்படுத்திச் சீராக்குவது எேங்ங்ணம் ? இவை பற்றியெல்லாம் உளவியலாளர் நன்கு ஆராய்ந்துள்ள்னர். இந்த ஆய்வின் பேறுகள் கல்வியியலுக்குப் பெரிதும் துணை புரிவனவாய் உள்ளன.
காட்சிப் பொருள்களும் கருத்துப் பொருள்களுமாகிய யாவையும் நம் சிந்த தனக்கு வசமாகத் தக்கன. காட்சிப் பொருள்களை அறிமுகப்படுத்துவது சுலபம். அவற்றைக்காட்டிவிட்டாலே அவை இன் னவை என்பது விளங்கும். கண்டும் கேட் டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறியும் பொருள்களை ஐம்பொறிகளின் வாயிலாக நாம் உள்வாங்கிக்கொள்கிருேம். ஒரே யொரு பொறியின் துணைகொண்டு முழு உண்மையைக் கிரகித்துக்கொள்ள முடி யாதபோது ஏனைய பொறிகளின் துணை யையும் நாம் நாடுகிருேம். கண்ணுடியின் பின்னலே தோற்றமளிக்கும் விம்பம் மெய்யோ மாயமோ என்பதைச் சோதிக்க நாம் நமது கைகளினலே தடவித் தேடு கிருேம்; அல்லது அவ்விம்பம் ஒரு திரை *யிலே விழுமோ, மாட்டாதோ என்று சோதிக்கிருேம். இவ்வாறு நமது ஆரம்ப அநுபவத்தை வளப்படுத்துவதினுல், ஒரு பொருள்பற்றிய எண்ணக்கரு செம்மைப்
ணங்களிலிருந்தும் அவற்றை நோக்கு தும், பல்வேறு பொறிகளின் வாயிலாக அவற்றைக் கிரகிப்பதும் அவசியமாகிறது.
கருத்துப் பொருள்களை அறிமுகப் படுத்துவதோ மேலும் சிரமமான காரியம். சரியாக அறிமுகப்படுத்தாவிட்டால், மன திலே பிழையான படம் விழுந்துவிடும். விபரீதமான எண்ணக்கருவும் தோன்றக் கூடும். " பால் எப்படி இருக்கும் என் பதை விளக்கப்போக, அது மடக்கிய முழங்கைபோலக் கோணலாக இருக்கும் என்று விளங்கிக்கொண்டு விசனப்பட்ட

Page 32
22
குருடனின் கதை யாவரும் அறிந்ததே. (இந்தக்கதையை நாவலரும் தமது இரண் டாம் பாலபாடத்தில் எழுதியுள்ளார்.) ஆகவேதான், ஒரு பொருளை அறிமுகப் படுத்தி அது பற்றிய எண்ணக்கருவைச் செம்மையாக்கி வளர்த்தெடுப்பது மிக வும் அவதானமாகச் செய்யப்படவேண்டிய காரியமாகும்.
முதலிலே பருமட்டான ஒரு காட் சியை மனதிலே புகுத்தி, பின்னர் அக் காட்சியைச் சிறிது சிறிதாகச் செப்பஞ் செய்து, அக்கருத்தின் நுணுக்க விபரங் களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த் துக் கொள்வதே எண்ணக்கருவை வளர்த் தெடுக்கும் உத்தி எனக் கருதப்படுகிறது. இன்றைய புதுக்கணிதத்திலும் எண்ணக் கருக்கள் பல இந்த வித உத்தியைக் கையாண்டே வளர்த்தெடுக்கப்படுகின்
றன.
எண்ணக்கரு வளர்ச்சிக்கு உகப்பான இவ்வுத்தி நாவலரால் அடிக்கடி பயன் படுத்தப் பெற்றுள்ளது. சைவவினுவிடை களிலும் பாலபாடங்களிலும் இலக்கண நூல் வரிசைகளிலும் இவ்வுத்திக்குப் பல உதாரணங்களை நாம் காணலாம்.
முதலாஞ் சைவ சைவவினவிடையில், முதலாம் விஞ: உலகத்துக்குக் கருத்தா யாவர்? விடை: சிவபெருமான்.
இரண்டாஞ் சைவ வினுவிடையிலும் முதலாவது கேள்வியும் மறுமொழியும் அப்படியே அட்சரந் தவருமல் இருக்கின் றன.
ஆனல் அடுத்த வின; சிவபெருமான் எப்படிப்பட்டவர்? இரண்டு புத்தகங்களி லும் இது தான் கேள்வி.
முதற்புத்தகத்து விடை: என்றும் உள்
ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர்.
இரண்டாம் புத்தகத்து விடை: நித் தியரும், சருவவியாபகரும், அநாதி மல

இ முருகையன்
முத்தரும், சருவஞ்ஞரும், சருவகர்த்தா அம், நித்தியானந்தரும், சுவதந்திரருமாய் உள்ளவர்.
முதற் புத்தகத்திலே பருமட்டாக இடப்பட்ட வித்து இரண்டாம் புத்தகத் திலே முளைகொண்டு முகம் காட்டுகிறது. பருமட்டாக முகஞ்செய்யப்பட்ட எண்ணக் கரு நுணுக்க விவரங்களோடு வளர்த் தெடுக்கப்படுகிறது.
முதலாஞ் சைவவினவிடையில்-விஞ: சிவபெருமான் செய்யுந் தொழில்கள் எவை? விடை: படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றுமாம்.
இரண்டாஞ் சைவலினுவிடையில்-விஞ: சிவபெருமான் செய்யுந் தொழில்கள் எவை? விடை : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துமாம்.
முன்னர் மூன்ருய் இருந்த தொழில் கள் பின்னர் ஐந்து ஆகின்றன. முதலிலே பருமட்டாகப் புகுத்தப்பட்ட எண்ணக்கரு பின்பு விரிவுபெற்று வளர்கிறது.
இலக்கணத்தில் ஒர் உதாரணம் காண் Gurub.
எழுத்தாவது சொல்லுக்கு முதற் காரணமாகிய ஒலியாம். இது "இலக் கணச் சுருக்கம் " தரும் விளக்கம்.
மொழிக்கு முதற்காரணமும் அணுத் திரளின் காரியமுமாகிய ஒலியாவது எழுத்து .இது "நன்னூற் காண்டிகை உரை " தரும் விளக்கம். இந்த விளக்கம் இன்னுஞ் சற்றே விரிகிறது :-
* அணுத்திரள் = அணுக்கூட்டம், இங்கே அணு என்றது செவிப்புலன மணுவை; அது ஒலிநுட்பம். மொழிக்கு முதற்காரணம் எழுத்தானற் போல, எழுத்திற்கு முதற்காரணம் அணுக் கூட்டமாம். அணுக்கூட்டத்தின் காரி யம் எழுத்தாஞற்போல, எழுத்தின் காரியம் மொழியாம்."

Page 33
கல்வியியல் நோக்கில் நாவலர்
எழுத்துப் பற்றிய எண்ணக்கரு படிப் படியாக வளர்த்தெடுக்கப் படுவதை நாம் இங்கு காணுகிருேம்.
நாவலர் பெருமான் தமது பால பாடங்களையும், புராண வசனங்களையும், புராண சூசனங்களையும், புராணப் பதிப் புகளையும், திருமுறைத் திரட்டுக்களையும், திருக்குறள் உரை, திருக்கோவையார் உரை என்பவற்றையும் படிக்கிரமம் நோக் கித் தரப்படுத்தி வரிசை முறைப்படி வெளியுட்டுள்ளார் என்பது வெளிப்படை. ஆனல், இன்ன இன்ன நூல்கள் இன்ன இன்ன வயதினர்க்குப் பொருந்தும் என் னும் பிரச்சனைபற்றிக் கல்வியியல் நோக் கில் ஏதும் கருத்துக்கள் கொண்டிருந் தாரோ என்பது தெளிவாகப் புலனுக வில்லை. உதாரணமாக, நான்காம் பால பாடப் புத்தகத்தை நான்காம் வகுப்பு மாணவர்கள் (மூன்ருண்டுகள் வாசிப்பும் எழுத்தும் படித்து முடித்த மாணவர்கள்அல்லது ஒன்பது பத்துவயது மாணவர்கள்) படித்துப் பயன்பெறல் முடியுமோ என் பது ஆராய்வுக்குரியதே.
அது எவ்வாருயினும், எண்ணக்கரு வளர்ச்சிபற்றிய பூரண உணர்வுடன் நாவலர் தாம் எழுதிய நூல்களையும் பதிட் பித்த நூல்களையும் வெளியிட்டார் என்பது மெய்.
4.
இதுவரை, நாவலர் கண்ட கல்வியின் நோக்கமும் உள்ளடக்கமும் எவை எனச் கண்டோம்; அவ்வுள்ளடக்கத்தை மாண வரின் மனவளர்ச்சிக் கிரமப்படி வகுத் தமைத்து வழங்கும் முயற்சி அவர்பால் இருந்தமையையும் கண் டோம். இனி கல்வியை ஊட்டுவதற்கென அவர் கையாண்ட கருவிகளையும் முறைகளையும் சாதனங்களையும் காண்போம்.
கல்வி ஊட்டுவதற்குரிய நியம சாத னம் பாடசாலைகளே என்பது பொதுவான கருத்து பாடசாலைகளிலே சிறுவர்கள்

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கல்வி பெறுகின்றனர். இள மையிற் கற்கப்படும் இக்கல்வி * வாழ்க் கைக்கான ஆயத்தம் " என்று கணிக்கப் படுகிறது. இவ்விதமான நியமக் கல்வியை ஊட்டுவதிலும் நாவலர் ஈடுபட்டார்: பாடசாலைகளை நிறுவி அவற்றின் வாயி லாகச் சைவ மாணவர்களுக்கு "அவர்களின் சூழலிலே அவர்களுக்குப் பொருத்தமான கல்வியை ஊட்டுவதற்கு நாவலர் முனைந் தார்; V
அவ்வளவில் நின்ருரல்லர், அவர் அதற்கு அப்பாலுஞ் சென்ருர்,
பாடசாலைக்கு வெளியிலும் கல்வி நிகழல் கூடும் நிகழல் வேண்டும் என்பது அவரது நம்பிக்கை. அதற்கு அவர் பின் வரும் முறைகளைக் கையாண்டார் :-
(1) வளர்ந்தவர்களைத் தமது இருப் பிடத்துக்கு வருவித்து அவர்களுக்குக் கற்பித்தல் ;
(2) வளர்ந்தவர்கள் கூடியிருக்குஞ் சபைகளிலே புராண விரிவுரை நிகழ்த்து தல் ;
(3) கோயில்களிலும் மடாலயங்களி லும் சமயப் பிரசங்கஞ் செய்தல் ;
(4) நூற்பயிற்சி அதிகம் இல்லாத சிறுவருக்கும் வளர்ந்தோருக்கும் பயன் படும்வண்ணம் புராண வசனங்களை அச்
சிட்டு வெளியிடுதல் ;
(5) நூற்பயிற்சி நிறைந்த கற்றறி வாளர்கள் மேன் மேலும் தம்மைச் சீர் திருத்திக்கொள்ள வாய்ப்பாக, அரிய பழைய செந்தமிழ் நூல்களை வெளியிடல் :
(6) பொதுமக்களிடையே தவருண கருத்துக்களும் நடத்தைகளும் நிலவினல் அவற்றுக்குப் பரிகாரமாக துண்டுப் பிர சுரங்களை வெளியிடல் : கண்டனம் மூலமும் போதனை மூலமும் சரியான கருத்துக்களை முன்வைத்தல்.

Page 34
மேலே சொல்லப்பட்ட ஆறு முறை களும், -பாடசாலைகளுக்குப் புறம்பாக நிகழும் கல்விக்கு நாவலர் பயன்படுத்திய உபாயங்கள். முறைசாராக் கல்வி என இதனை இன்றைய கல்வியியல் வல்லார் விதந்து கூறுவர். வகுப்பறை, மாணவர், ஆசிரியர், கரும்பலகை, வெண்கட்டி என் னும் வழமையான சம்பிரமங்களுக்கு அப்பாலே எவ்வெவ் வகையிலெல்லாம் கல்வி ஊட்டப்படலாம் என்பதைத் தேடி யறிந்து பயன்படுத்திய நாவல்ரை முறை சாராக் கல்வியின் முன்னேடி என்று வரு ண்ப்பது முற்றிலும் பொருத்தமானதே.
இனி, சாந்துணையும் கல்வி அல்லது வாழ்நாள் முழுவதும் கல்வி என்பதும் இக்காலத்திலே பிரபலமாகப் பேசப்படும் ஒரு கல்வியியற் கருத்தாகும்:
'í ujir தானும் நாடாமால் ஊராமால் என்னுெருவன்
சாந்துணையும் கல்லாத வாறு? என்ருர் வள்ளுவர். இங்கும் வாழ்நாள் முழுதும் கல்வி என்னும் கோட்பாட்டினை நாம் காண்கிருேம்.
இன்றைய உலகில் இக்கோட்பாடு முக்கியத்துவம் பெறுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.
ஒன்று : எந்தவோர் அறிவுத் துறையி லும் புதுப்புது முன்னேற்றங்கள் வெகு விரைவாக நடந்தேறிச் செல்கின்றன. இதனுல் ஒருவன் முன்பு கற்ற கல்வி பழையதாகி வழக்கொழிந்து போகிறது. ஆகவே ஒருவன் பின்தங்கி விடாமல், காலத்தோடு ஒட்டிச் சேர்த்து செல்வதற்கு அவனுக்கு வாழ்நாள் முழுதும் கல்வி அவசியமாகிறது.
இரண்டு: குறிப்பிட்ட துறையொன் றில் அறிவு பெற்றுத் தொழிலாற்றியவாறு உள்ள ஒருவன், காலப்போக்கிலே அத் தொழிலிலே சலிப்படைந்து விடலாம். அன்வாறு பேசய்விட்டால் அவனுடைய வாழ்க்கையிலே தொழிலால் வரும் திருப்தி

இ. முருகையன்
இருக்காது, இந்த நிலைக்குப் பரிகாரம் தேடவேண்டுமாயின் அவனுக்குப் புதிய தொரு தொழில் தேவைப்படும். அதற் குப் புதியதொரு துறையில் அவன் கல்வி பெறவேண்டியிருக்கும். இவ்வாறு மன நிறைவுடன் தொழில்ாற்றி வாழ்வதற்கு வாழ்நாள் முழுவதும் கல்வி என்னும் கோட்பாடு துணையாய் அமையும்.
ஆணுல், நாவலர் சாந்துணையும் கல்வி என்னும் கருத்தைக் கடைப்பிடித்தது, மேலே சொல்லப்பட்ட நவீன காரணங் களால் அன்று. 'கற்றது கைம்மண்ணளவு: கல்லாததுலகளவு" என்பதை அவர் உணர்ந்திருந்தார். அத்துடன் வயதின் முதிர்ந்தோரும் வளர்ந்தோருமாகிய பலர் உலகியல் அறிவு குன்றியவர்களாயும் சமய சாத்திர ஞானம் அற்றேராகவும் இருப் பதனை அவர்தம் அநுபவத்திலே கண்டார். ஆகையால் அவர்கள் அனைவருக்கும் தாம் பெற்ற தூலறிவையும் சாத்திர அறிவை யும் புகட்டி அவர்களைச் சீர்திருத்த வேண் டும்; அவர்களை உய்விக்க வேண்டும்என் னும் நல்லெண்ணம் உடையவராக அவர் விளங்கினர். அதனுலேதான் சாந்துணையும் கல்வி அல்லது வளர்ந்தோர் கல்வி என்னும் கருத்து அவசை மிகவும் கவர்ந்தது. சற்று நுணுகி நோக்கினுல், பாலர்களுக்கென எழுதிய நூல்களிலும் அவர் வளர்ந்தோர்க் குரிய முதிர்ச்சி மிக்க எண்ணங்களை ஆங் காங்கே புகுத்தியுள்ளார் என்பது புலப் படும் எடுத்துக்காட்டாக நாலாம் பால பாடத்திலே தருமம், கடன்படல், கற்பு வியபிசாரம் முதலிய பாடங்களில் வரும் கருத்துகள் அவ்வாருனவையே.
முதியோர் கல்வியில் அவருக்கிருந்த பேரார்வமே இவ்வாறு பீறிட்டுக்கொண்டு கிளம்புகிறது எனலாம். முதிர்ச்சி மிக்க கருத்துகள் பாலபாடங்களிலும் தலை காட்டுவதற்கு இதுவே காரணம் போலும்
5
கல்விச் சாதனங்களுள் மிகவும்: பிர தானமான ஒன்று மொழி ஆகும். நாவலர்

Page 35
கல்வியியல் நோக்கில் நாவலர்
சமயக் கல்விக்குச் சாதனமாகக் கொண்ட மொழி தமிழ், அன்று தமிழ் மொழி செய்யுள் வடிவிலேயே பெரிதும் கையாளப் பட்டது. ஆனல் நாவலர் வசன நடை யையே தமது கல்விப்பணிக்கு உகந்த கருவி எனத் தேர்ந்து எடுத்துக்கொண் டார். நாவலர் கையாண்ட வசனநடை எப்படிப்பட்டது? அன்று நடைமுறையில் இருந்த தமிழ் வசனத்துக்கும் நாவலர் வசனத்துக்குமிடையே வேறுபாடேதும் உண்டா? உண்டாயின் அவ்வேறுபாடுகள் யாவை ?
அன்று வழக்கிலிருந்த தமிழ் இரு வேறுபட்ட கடுமுனைப்பான பண்புகள் கொண்டு நடந்தது.
பண்டிதர்கள் வழங்கிய கடுந்தமிழ் நடை ஒன்று. பாமரர் வழங்கிய கொடுந்தமிழ் நடை மற்றது.
பண்டிதர் நடையில் நெடிய வாக்கி பங்கள் இருந்தன. அருஞ்சொற்கள் நிரம்பி யிருந்தன. பண்டைய பழந்தமிழ்ப் பதங் களும் இருந்தன. கடினமான வடமொழித் தொடர்களும் இருந்தன.
பாமரர் நடையில் அருஞ்சொற்கள் இல்லையேயாயினும் அதில் இலக்கண நெறி யுஞ் சற்றேனும் இல்லை. சிதைவுகளும் திரிபுகளும் நிறைய இருந்தன. கொச் சைச் சொற்களும் அசப்பியமான பிரயோ கங்களும் விரவியிருந்தன.
கடுமுனைப்பான இந்த இரண்டு தடை களையும் நாவலர் நிராகரித்தார்
இலக்கண நெறி சார்ந்த ஒரு புது வகை, வசன நடைகளையும் நாவலர் நிராகரித்தார்.
இலக்கணநெறி சார்ந்த ஒரு புது வகை வசன தடையை நாவலர் தாமா கவே உருவாக்கிக் கொண்டார். திரி சொற்களை அதிகம் கையாளாமல் இயற் சொற்களையே பெரிதும் கையாண்டார். குறிய வசனங்களையும் நெடிய வசனங்களை யும் தேவை நோக்கிப் பிரயோகித்தார்
2

S
வடசொற்களை விலக்கிய தனித்தமிழ்
வசனமன்று, நாவலருடையது. அவ்வாறு விலக்குவதாலும் சிலருடைய மொழிநடை கடினமாவது உண்டு. எடுத்துக்காட்டாக, "தண்டனை என்னுஞ் சொல் வடசொல் ஆயினும் தமிழ்ப் பொதுமக்களுக்கு நன்கு பழக்கமானது. அதனை விலக்கி ஒறுப்பு என்னுந் தனித்தமிழ்ச் சொல்லையே ஒரு வர் வழங்குவாரானல் அவருடைய மொழி நடை கடினமாகும். அவ்வாறே வயது” என எழுதாது " அகவை' என எழுதும் போதும் கடினத்தன்மை உண்டாகிறது. நாவலர் பெருமான் பொதுமக்களுக்குப் பழக்கமான வடசொற்களையும் இடை யிடையே பெய்தே தம் வசனத்தை எழு
தினுர், மக்களிடையே தேசிடையாகச்
சென்று பயன் தரவல்ல ஒரு வசன நடையை உருவாக்குவதே அவரது நோக்கம். மக்கள் மொழியாகிய பழகு தமிழ் உருவாவதற்கு ஒரு முன்னேடியாக விளங்கியவர் நாவலர்.
அவருடைய தமிழ் நேரடியானது; இயல்பான ஓட்டம் உடையது; உணர்ச்சி மயமாகவும் அறிவுரீதியாகவும் இயங்கு வது. உணர்ச்சி மயமான வசனங்கள் பல,
நாவலரது யாழ்ப்பாணச் சமயநிலை"
யிலும் "சைவ தூஷண பரிகாரம் ", " சுப் பிரபோதம்", " மித்தியாவாத நிரசனம் ? முதலிய நூல்களிலும் நிரம்ப உண்டு. *யாழ்ப்பாணச் சமயநிலை பற்றித் திரு. பொ. கைலாசபதி அவர்கள் கூறுவது இவ்விட்த்தில் நினைவுகூர்த்தக்கது.
* நாவலர் * பச்சைப்படியாகச் சொல்லுகிறவர். ஒளித்து மறைத்துச் சொல்லத் தெரியாதவர். "பச்சைப் படி யாகச் சொன்னலும் சொற்கள் ஊடுருவிப் பாய்வன, குற்றவாளியைக் கொதிக்கச் செய்வன. சத்திர வைத் தியஞ் செய்து திருத்தம் விளைப்பன. இரத்தத்திலே பிறந்தசொற்கள். தம் மவர் பிறர் என்று பாரபட்சம் பாராத சொற்கள். யாவருக்கும் திருத்தம் விளைத்த சொற்கள்."

Page 36
நாவலர் சொற்கள் உணர்ச்சிமய மாகத் தொழிற்படும்பொழுது அவற்றில் வேகம் மிகுந்திருக்கும் சூடு பிறந்து விடும். 'ஒகோ! இவ்வியாழ்ப்பாணத் தில் உள்ள கிறிஸ்து சமய குருமார், சைவ சமய குருமார் என்னும் இரு சம்யகுருமாருடைய கருத்தும் தத்தம் சமயபத்தியை வளர்த்தலின் இடத்த தன்று; தத்தம் வயிறு வளர்த்தலின் இடத்ததேயாம்!" என்றவாறு பேசவல்லது நாவலர் வசனம். *கெட்டி, கெட்டி " , " சபாசு, சபாசு!" என்று எள்ளி நகை யாடும் ஆற் றலும் நாவலர் வசனத்துக்கு உண்டு.
"பாதிரியே அறிந்து கொள் " என்று ஏக வசனத்திலே எடுத்த்ெறிந்து பேசவும் * பாதிரி பின் நின்று மொங்கான் போடு வான்; நான் முன் நின்று மொங்கான் போடுவேன்" என்று திடமாகப் பேசவும் தயங்காத வசன நடை நாவலரின் வசன நடை
நாவலருக்குப் பின் வந்த திராவிட முன்னேற்றக் கழக இயக்கத்தாரின் உணர்ச்சி வசனத்தின் பண்புகளையும் நாவ லரின் உணர்ச்சி வசனத்தின் பண்புகளையும் ஒப்புநோக்கி ஆராய்வது சுவையான ஆய் வாக அமைதல் கூடும்.
நாவலரின் அறிவுரீதியான வசன நடையின் 'வெற்றிக்கு அவரது நாலாம்
சிவசமயப் பிரசங்கம்
சைவசமயம் உண்மை எனபதைத் வண்ணுர்பண்ணையிற் சிவன்கோயில் பிராம்ணுக்கள் முதலிய மற்றும் பிரபுக் பிரசங்கம் பண்ணும்பொருட் டவ்விட ஆரம்பித்திருக்கிருர்களென்று கேள்விய கம் போனமாதம் முப்பத்தோராந் ே மணிபோலக் கந்தர் குமாரர் ஆறுமுக மாணுக்கன்' என்பவரெழுதி வரவி( இரத்தினச் செப்பிற் பதித்த குன்றிமணி சமயத்தைப் பிரசங்கம் பண்ண முயற்சி தோஷம். ァー
r ഉം.
r

r இ. முருகையன்
பாலபாடத்துப் பாடம் ஒவ்வொன்றும் தனித்தனியே சான்றுகளாக அமை கின்றன.
நிறுத்தற் குறிகளின் பயன்பாட்டை வரையறுத்து, அக் குறிகளைத் தமிழ் வழக் குடன் இணைத்து வைத்தமையும் நாவல ரின் மொழிப்பணிகளுள் ஒன்று.
இவ்வாறு, தமிழ் வசனத்தைச் சனத் தொடர்புச் சாதனமாக்கி அதனை முறை சாராக் கல்வியின் பொருட்டும், வளர்ந் தோர் கல்வியின் பொருட்டும் கையாண் டவர் நாவலரே
6
தொகுத்து நோக்கும்போது, கல்வி
யின் பழமை பேணும் பணியை வற்புறுத் திய நாவலரின் கல்விக் கொள்கை சமயச் சார்புடையது. அதனுல் அது அதிகார தோரணை உடையதாய் அமைந்தது. எண் ணக்கரு வளர்ச்சிக் கிரமம் பற்றிய உணர்வு நாவலரின் பாடநூல் வரிசையிலே புலப் பட்டுத் தோன்றுகிறது முறைசாராக் கல்வி, வளந்தோர் கல்வி என்பவற்றில் அதிகம் ஈடுபாடு கொண்ட நாவலர், சிறு வர்களையும் பொதுமக்களையும் சென் றடையத்தக்க " வசன நடையொன்றை உருவாக்கினர்.
அவரது சமயப்பணி கைம்மாறு வேண் டாத அருட்பணி:
திருட்டாந்தப்படுத்தும் பொருட்டு வசந்த மண்டபத்திற் குருக்கள், 1ள் முன்பாகச் சைவசமயப் பிரபலியப் ஆத்திலுள்ள சில வித்துவாமிசர்கள் ானுேம். மேலும் அதின் முதற்பிரசங் ததி வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது :வராற் செய்யப்பட்டதென்று 'ஓர் த்ெத கடிதத்தாற் றெரியவந்தது. ரிக்குச் சமானமாய் இருக்கின்ற சிவ ப்பட்டிருப்பதைக் காண்பது மகா சந்
யதாரகை, 1848 தைமீ" 13ஆந் திகதி

Page 37
மொழியியல்
அ. சண்முகதாஸ்
நாவலர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளில் இலக்கணப் பணியும் ஒன்ருகும். இலக்கணச் சுருக்கம் என்னும் நூலை எழுதியதுடன் நன்னூற் காண்டிகை யுரையைப் புதுக்கியும் திருத்தியும் அவர் அமைத்துள்ளார். இவ்விரு நூல்களுள் இலக்கணச் சுருக்கத்தினை அடிப்படை யாகக் கொண்டு நாவலரை நவீன மொழி யியலாளர் எவ்வாறு மதிப்பிடுவர் என் பதைக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்க மாகும். S.
நவீன மொழியியற் கருத்துக்கள் நாவலருடைய காலத்திலே இங்கு நன்கு பரவியிருந்தனவென்றே, அக்கருத்துக்களை அவர் அறிந்திருந்தாரென்ருே கூறுதற் கில்லை. ஆணுல், அக்கருத்துக்களின் பின் ண்ணியிலே அவருடைய இலக்கணக் கருத் துக்களை விமரிசனஞ் செய்வது பயனுடைத் தாகும் என்பதில்ே ஐயமில்லை.
இலக்கணமென்பது மொழியின் விவ ரணமேயொழிய, மொழி இவ்வாறு பேசப் பட வேண்டும், இவ்வாறு எழுதப்பட வேண்டும் என விதிமுறை செய்வதல்ல என்பது நவீன மொழியியலின் முக்கிய கோட்பாடாகும். இந்த வகையில் மேலைத் தேயத்திலும் இங்கும் பல மொழிகளுக்கு எழுதப்பட்ட மரபுவழி இலக்கண நூல்கள் விதிமுறை இலக்கணங்களாகவே பெரும்பாலும் அமைந்து வந்துள்ளன. அது மாத்திரமன்றி, இம் மரபுவழி இலக்கண நூல்கள் இலக்கியம், தத்துவம்

ஆகியன பற்றி அறிவதற்கான கருவி நூல்களே என்னுங் கருத்தும் நிலவி வந் துள்ளது. இவ்விடத்திலே, ஆறுமுகநாவல ரின் இலக்கணச் சுருக்கம் என்ற நூலின் முதலிரு வாக்கியங்களை நோக்குவோம்:
'இலக்கண நூலாவது உயர்ந்தோர்
வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத் தையும் அறிந்து விதிப்படி எழுது தற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
அந்நூல், எழுத்ததிகாரம், சொல் லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என மூன்றதிகாரங்களாக வகுக்கப் படும்."
இவ்விரு வாக்கியங்களையுந் "துணைக் கொண்டு நாவலர் நவீன மொழியியற் கோட்பாடொன்றினுக் குடன்பட்டவ ரென்றும் வேறுசில நவீன மொழியியற் கோட்பாடுகளுக் குடன்பட்டவரல்லரென் றுங் கூறலாம்.
முதலிலே, நாவலர் எவ்வாறு நவீன மொழியியற் கோட்பாட்டுக் குட்படுகின்ரு ரென்பதை ஆராயலாம். இலக்கணம் என்பது மொழியின் இலட்சணங்களைக் கூறுவதேயன்றி இலக்கியத்தைக் கற்பதற் குரிய கருவிநூலல்ல என்பது நவீன மொழி யியற் கோட்பாடாகும். ஆனல், தமிழ் நாட்டிலே "இலக்கணம்" என்னுஞ் சொல் தனியே மொழிபற்றிய விவரணத்துக்

Page 38
2s
காகக் கையாளப்படவில்லை. மொழியா லான'இலக்கியம், அவ்விலக்கியத்துக் குப் பொருளாகும் முதல், கரு, மக்கள் வாழ்வு ஆகியனவற்றின் நெறிகளைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது. தொல்காப்பிய இலக்கண நூலைச் சுட்டுதற்கு ‘புலம்’, 'பனுவல்" என்ற சொற்களையே அந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரஞர் கையாண்டுள்ளார். "புலம்’, 'பனுவல் என்னும் இரு சொற்களுமே 'சாஸ்திரங் கrை" அல்லது "மெய்ஞ்ஞானத்தினை'க் குறிப்பனவாயுள்ளன. இந்நிலை, மொழி யாய்வுபற்றி எம் பண்டையோர் கொண் டிருந்த கருத்தினை ஒரளவு புலப்படுத்து கின்றது எனக் கொள்ள இடமுண்டு. முன்னர் மொழிபற்றிய ஆய்வெல்லாம் இலக்கியத்தைப் படிப்பதற்கும். சாஸ்திர நூல்களின் பொருளைத் தெளிவுற அறிந்து கொள்ளுதற்காகவுமே நன்டபெற்றது. இறையஞர் அகப்பொருள் உரைகாரர்,
“என்னை, எழுத்துஞ் சொல்லும் யாப் பும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே. பொருளதிகாரம் பெறேமேயெனின், இவை பெற்றும் பெற்றிலேம்." 2 என்று கூறியுள்ளதை இங்கு நினைவு கொள்ளலாம். இதே நிலை மேலைத்தேய இலக்கண வரலாற்றிலுங் காணப்படுகின்
09.
“Though as a recognized independent subject linguistics is fairly new, linguistic speculation and the analysis of languages have occupied men's minds from the earliest days of civilization in a number of different cultures. In the history of European civilization linguistic thought, like thought in so many areas, began in Ancient Greece, under the cover - all title of “ philosophy” (philosophi’a) ......... The observations of Plato, Aristotle
 

அ. சண்முகதாஸ்
and the stories on language appear as part of their general exposition of the theory of knowledge and of the principles of logic..... Under the influence of Alexandrian literary criticism, linguistic studies developed some degree of independence in later antiquity, but subsequently other factors promoted close contacts between philosophers and grammarians.”o.
என்று ருெபின்ஸ் என்பார் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். எழுத்தையும் (அல்லது ஒலியையும்) சொல்லையும் அடிப்படை யாகக் கொண்ட மொழி மேலைத்தேயத் திற் பண்டைக்காலத்திலே தத்துவ விசா ரத்துக்கும், பண்டைய இலக்கியங்களின் பொருளைத் தெளிந்து கொள்வதற்கும் கருவியாகவே அமைந்தது. தமிழ் இலக் கண மரபிலும் இக்கருத்து நன்கு வேரூன்றி யிருந்ததென்பதற்கு சபாபதி நாவல ருடைய பின்வருங் கூற்றினை எடுத்துக்
&mLL-Gurth :-
" இவ்வதிகாரத்து எழுத்துச் சொற் கருவியாக உணரப்படும்
பொருளிலக்கணம் உணர்த்தப்படும். எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்தார் அவ்வுணர்ச்சி கருவியாகக் கொண்டு பொருளிலக்கணம் ஒருதலையான் ஆராய்ந்தும் உறுதி தலைக்கூடக் கட வர் ஆவரென்க. ***
எழுத்தையுஞ் சொல்லையும் அடிப் படையாகக் கொண்ட மொழியாய்வினைத் தனியாக மேற்கொள்ளாது. அவற்றைக் கருவி யெனக் கொண்டு, ஏனைய பொருள்" விடயங்களையுஞ் சேர்த்து ஆராய்வதே *இலக்கணம்” என்று கருதிய தமிழ்ப் பேசும் அறிஞர் குழாமொன்று தமிழ் நாட்டிலே இருந்துவந்துள்ளது. ஆனல், அதே வேளையில் எழுத்துஞ் சொல்லும் ஆராய்வதே "இலக்கணம்" என்னுங் கருத் தினைக் கொண்ட இன்னேர் அறிஞர் குழாமும் தமிழ்நாட்டிலே இருந்தது என்

Page 39
மொழியியல் நோக்கில் நாவலர்
பதையும் நாம் மறந்துவிடலாகாது. உதா ரணமாக நேமிநாதம் என்னும் நூலினை எழுதிய நேமிநாதர் எழுத்தையுஞ் சொல் லையும் ஆராய்வதே "இலக்கணம்" என்னுங் கருத்தினை உடையவராவர். எழுத்துஞ் சொல்லும் ள்ன்னும் மொழியாய்வினைத் தனியாக மேற்கொண்ட குழாத்தினர் மற்றைய குழாத்தினரின் கண்டனத்துக்கு முட்பட்டனர். அவ்வாறெழுந்த கண்டன மரபினைச் சபாபதிநாவலர் பின்வருமாறு தொகுத்துக் கூறுகின்ருர்:
* முகத்துக் கண்ணுடையராயினர் அது கருவியாக உருவப்பொருள் நாடிக் காண்டலைப் பயனுகக் கொள் ளுதல் போல, எண்ணும் எழுத்தும் என்னும் அறிவுக் கண்ணுடையரா யினர் அவ்வுணர்ச்சி கருவியாகப் பொருளிலக்கணம் ஆராய்ந்து கண்டு உறுதி தலைக்கூடுதலைப் பயனகக் கொள்ளவேண்டும் என்பதாயிற்று. இனி அவ்வாறு முயலாது அக்கருவி நூல் உணர்ச்சி மாத்திரையே அமையு மென்றிருப்பரேல், அக் கல்வி அவர்க்கு வீண் உழப்பாவதல்லது பயப்பாடு உடைத்தாமாறு இன் றென்பர், * சத்தமுஞ் சோதிடமும் என்ருங் கவைபிதற்றும் பித்தரிற் பேதையார் இல் '
என்ருர் நீதிநூலோர் என்க. இனி எழுத்து ஞ் சொல்லும் ஆராய்ந்து வல்லராக முயல்வார். இக் காலத்துப் பலருளர். அவ்வாராய்ச்சி கருவியாகப் பொருளாராய்ந்து உறுதி தலைக்கூட முயல்வார் அரியர். ***
மேற்காட்டிய கூற்றுக்கள் மொழி யினைத் தனியாக ஆய்வு செய்யும் ஒரு குழாத்தினர் தமிழ்நாட்டிலே இருந்து வந் துள்ளனர் என எமக்கு உணர்த்துகின்றன. அக்குழாத்தினரின் கருத்தினை உள்வாங் கியவராகவே ஆறுமுகநாவலருந் திகழ்ந் தார். அவருடைய இலக்கணச் சுருக்க
வாக்கியங்களில் வரும்,

29
"இலக்கணநூலாவது . எழுத் ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழியதிகாரம் என மூன்றதிகாரங் களாக வகுக்கப்படும்." என்னும் பகுதி இதனை நன்கு தெளி வுறுத்துகின்றது. மொழியினைத் தனியாக ஆராயும் இக்கால மொழியியல் துறையின் போக்கிற்கேற்ப அவருடைய கூற்றும் அமைந்துள்ளதெனலாம்.
இனி, நாவலர் எவ்வாறு நவீன மொழியியற் கோட்பாடுகளுக்கு முரணு கின்ருர் என்பதை நோக்குவோம். "இலக் கண நூலாவது உயர்ந்தோர் வழக்கத் தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற்கும் பேசுதற் குங் கருவியாகிய நூலாம்." என்னும் அவருடைய கூற்று நவீன மொழியியற் கோட்பாடுகளுக்கு முரணுயமைகின்றது. முதலில், இலக்கண மென்பது மொழியின் விவரணமேயொழிய விதிமுறையல்ல வென் னும் இக்கால மொழியியற் கோட்பாட் டினை எடுத்து நோக்குவோம். தமிழிலக் கணகாரர் விதிமுறை இலக்கணத்தினையே வலியுறுத்தி வந்துள்ளனர். இலக்கியங் கண்டதற் கிலக்கணங் கூறும் மரபும், "அம்மரபின் விளைவாகப் பண்டைய இலக் கிய மொழி தூய்மையானது; அது பேணப் படவேண்டியது என்னும் நோக்கமுமே தமி ழில் விதிமுறை இலக்கண மரபுக்கு வித் திட்டன. தொல்காப்பியரின் பொருளதி காரத்து மரபியலிலே,
* மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை மரபுவழிப் பட்ட சொல்லி ஞன"6 "மரபுநிலை திரியிற் பிறிதுபிறிதாகும்" வழக்கெனப் படுவ துயர்ந்தோர்
மேற்றே நிகழ்ச்சி யவர்கட் டாக லான *”时 * மரபுநிலை திரியா மாட்சிய வாகி
- யுரைய்டு நூரு மிருவகையியல
முதலும் வழியுமென நுதலிய
நெறியின"9

Page 40
30
என்று கூறியுள்ள சில சூத்திரங்கள் தமிழிலே விதிமுறை இலக்கண மரபுக்கு வழிகோலின எனக் கூறலாம். தொல் காப்பிய உரைகாரர் விதிமுறை இலக் கணத்துக்கு மேலும் வழிகோலினர்.
** இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென் றனைத்தே செய்யு வீட்டச் சொல்லே**10
என்று தொல் காப்பி ய ர் கூறுவது, அவர் காலத்துச் செய்யுட்களிலே இடம் பெற்ற சொற்கள் பற்றிய விவரணமாக அமையலாம். ஆனல் அச்சூத்திரத்துக்கு உரை எழுதிய, கி. பி. 13ஆம் நூற் ருண்டைச் சேர்ந்த சேணுவரையர்,
** இயற்சொல்லானுஞ் செய்யுட் சொல்லாகிய திரிசொல்லானுமே யன்றித் திசைச் சொல்லும் வட சொல்லும் இடைவிராய்ச் சான்றேர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனைப் பாடைச் சொல்லுஞ் செய்யுட்குரியன வோவென் றையுற்ருர்க்கு இந்நான்கு சொல்லுமே செய்யுட் குரியன பிற பாடைச்சொல் உரிய வல்லவென்று வரையறுத்தவாறு."
என்று கூறுவது விதிமுறை வாய் பாடாக அமைகின்றது. இத்தகைய மர பின் வளர்ச்சி நிலையினையே நாம் ஆறுமுக நாவலரிலே தரிசிக்கின்ருேம். ? ? விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்கும்" இலக்கணம் கருவியாக அமைகின்றது என அவர் நேரடியாகவே விதிமுறை இலக்கணம் வகுக்கின்ருர்.
" விதிப்படி" என நாவலர் கூறிய வுடனே அதற்குரிய உரைகல் யாது என் னும் விஞ தவிர்க்கமுடியாதபடி மனத் திலே எழக்கூடியதொன்ருகும். அதற்குரிய உரை கற்களாக உயர்ந்தோர் வழக்கினை պմ, செய்யுள் வழக்கினையும் நாவலர் குறிப்பிட்டுள்ளார். இவ்விரு வழக்கினையும் அடிப்படையாகக் கொண்டே இலக்கணம் அமைக்வேண்டு மென்பது இவருடைய கருத்தாகும், இக்கருத்து இக்கால மொழி யியலின் இன்னெரு கோட்பாட்டுடன்

அ. சண்முகதாஸ்
முரண்படுகின்றது. கருத்துத் தொடர்புக் கேற்ற சாதனமாக மொழி அமைவதற்கு அதன் பேச்சு வடிவமும் எழுத்து வடிவமும் இரு மூலங்களாக அமைகின்றன. இவ்விரு மூலங்களுட் பேச்சு வடிவுக்கே இக்கால மொழியியலாளர் முக்கியத்துவங் கொடுக் கின்றனர்." ஆனல், நாவலர் உட்பட எமது தமிழ் இலக்கணகாரர் பலரும் எழுத்து வடிவுக்கே முக்கியத்துவங் கொடுத் துள்ளனர். இலக்கியங் கண்டதற் கிலக் கணம் இயம்பும் மரபின் விளைவே எழுத்து வடிவுக்கு முக்கியத்துவங் கொடுப்பதற்குக் காரணமாயிற்று. இந் நிலை மேலைத்தேய இலக்கணங்களிலுங் காணப்பட்டது பற்றி மொழியியலறிஞர் லயன்ஸ் பின்வருமாறு குறிப்பிடுவர் :
“Admiration for the great literary works of the past encouraged the belief that the language in which they were written was itself inherently purer, more correct than the current colloquial speech of Alexandria and the other Hellenistic centres. The grammars. produced by Hellenistic Scholars came therefore to have a double purpose : they combined the aim of establishing and explaining the language of the classical authors with the desires to preserve Greek from corruption by the ignorant and the unlettered. This approach to the study of language fostered by Alexandrian classicism involved two fatal misconceptions. The first concerns the relation between written and spoken language; the second has to do with the manner in which languages develop.”2
இவ்வாறு மேலைத்தேயத்திலும் பழைய செய்யுள் வழக்கைப் பேணும் முயற்சியி ணுலே எழுத்து வழக்கு முதன்மை பெற். றதை அறிகிருேம், பேச்சு மொழியே முக்கியத்துவம் வாய்ந்ததென நவீன

Page 41
மொழியியல் நோக்கில் நாவலர்
மொழியியலார் கூறியபோதும், எழுத்து மொழிக்குஞ் சில் நற்பண்புகள் உண்டென் பதை அவர் மறுத்திலர்.19
மொழியறிவினை எழுத்து" எனவும், இலக்கண நூல்களை எழுத்து நூல்" என வுங் குறிப்பிடும் வழக்கம் தமிழிலே புண்டு.** இலக்கணம் என்னுஞ் சொல் எழுதப்பட்ட இலக்கிய மொழியின் திறனை அறிவதைக் குறிப்பதன்றி, பேச்சு வழக்கி லுள்ளவற்றை அறியும் திறனுக்குரியதல்ல என்பதனைத் தொல்காப்பியரே ஏற்றுக் கொண்டுள்ளார் :
* ஒருவரைக்கூறும் பன்மைக் கிளவியு
மொன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னகிய வுயர் சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல." என்னுஞ் சூத்திரம் அதற்குச் சான்று பகருகின்றது.இன்னும் நேமிநாத ஆசிரியர்,
* புல்லா எழுத்தின் கிளவிப்பொருள் - - படினும் இல்லா விலக்கணத் தென்றெழிக...' என்று கூறியிருப்பதும் மேற்போந்த கருத் துக்கு மேலுமொரு சான்ருகின்றது. இவ் வாறு எழுத்துமொழி ஆய்வே இலக்கணம் என மரபு தமிழ் இலக்கணக்காரருடைய கோட்பாடாக அமைந்த காரணத்தினலே, பேச்சு மொழியின் இலக்கணத்தை எவரும் எழுத முற்ப்ட்டாரில்லை. அத்துடன் சாதாரண மக்களுடைய பேச்சுமொழி * இழித்துரைக்கவும் பட்டது. உதாரண மாக, **வழக்கெனப் படுவது உயர்ந் தோர் மேற்றே" என்னுஞ் சூத்திரத்தை மனத்திலே கொண்டு பேராசிரியர்,
'வழுவில் வழக்கமென்பார் உள ராயின் இக்காலத்துள்ளும் ஒரு சாரார்க்கல்லது அவர் சான்ருே ரெனப்படாரென்பது உம், இங்ஙனம் கட்டளை செய்யவே காலந்தோறும் வேறுபட வந்த அழிவழக்கும், இழி சனர் வழக்கும் முதலாயினவற்றுக்

31
கெல்ல்ாம் நூல் செய்யின் இலக்கண மெல்லாம் எல்லைப்படாது இறந்தோடு மென்பதுTஉம், இறந்த காலத்து நூலெல்லாம் பிறந்த பிறந்த வழக்குப் பற்றிக் குன்றக்கூறல் என்னுங் குற்றந் தங்குமென்பது உம். 17
என்று கூறுமிடத்து உயர்ந்தோர் வழக் க்ன்றி, ஏனையோர் வழக்கு "அழிவழக்கு" என்றும் ** இழிசனர் வழக்கு" என்றுங் குறிப்பிட்டுள்ளமையை இங்கு சுட்டிக் காட்டலாம். பேச்சுமொழியினைப் பேரா சிரியர் இவ்வாறு இழிவுபடுத்திக் கூறுதற் குரிய காரணம், எழுத்து வழக்குக்கும் உயர்ந்தோருண்ட்ய: (யார். இவ்வுயர்ந் தோர் என்பதும் எங்கும் தெளிவுபடுத்தப் படவில்லை) பேச்சுவழக்குக்கும் முதன்மை கொடுக்கப்பட்டதேயாகும். எமது இலக் கணகாரர் பேச்சுமொழிக்கு இலக்கண நூல் எழுதவில்லையென்று இங்கு குறை கூறவில்லை. அதனை எழுதப்புகின் வரு மிடர்கள் பற்றிப் பேராசிரியர் மேலே பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனல், பிறந்து மொழி பயின்று எழுதப் பழகுதற்கு முன்னரே நாம் பேசப் பழகி விடுகிருேம் என்பதையும் பேச்சுமொழி இழிசனர் வழக்கு ஆகாதென்பதையும் பேராசிரியர் உணராதுபோனதற்கு தமி ழிலே வேரூன்றிவிட்ட எழுத்து வழக் கிலக்கண மரபே காரணமாகும். குழந்தை என்ருல் "உயர் குழந்தை" என்ருே "இழிசனர் குழந்தை' என்ருே.கருத்ாது, *" குழலினிது. யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொற் கேளாதவர்' என்று வள்ளு வர் கூறியுள்ளார். குழந்தையின் பேச்சும் **இழிசனர் வழக்கு" ஆகுமோ தெரிய வில்லை. இத்தகைய ஒரு மரபினை மீற முடியாதநிலை நாவலருக்குமிருந்த கார னத்தினுலேதான் இலக்கணமென்பது செய்யுள் வழக்கையும் உயர்ந்தோர் வழக் கையும் கொண்டமைவதாகக் கூறினர்.
இவ்வாறு பல இடங்களிலே மரபு வழிப்பட்ட இலக்கணச் சிந்தனைகளைக் கொண்டுள்ள நாவலரின் இலக்கணச் சுருக்

Page 42
32
கத்தினை ஊன்றிப் படிக்கும் மொழியிய லாளர் எவருமே சிற்சில இடங்களிலே அவருடைய நுண்ணுய்வுப் போக்கினைத் தரிசிக்கத் தவறமாட்டார் என நம்ப லாம். ஓரளவு தொல்காப்பியர், நன்னூ லார் கூறிய இலக்கணங்களை அடிப்படை யாகக் கொண்டு, அவற்றைச் சுருங்கிய முறையிலே கூற முயன்றுள்ளார் நாவலர். அவ்வாறு கூற முற்படுமிடத்துக் காலத்துக் கொவ்வாத சில பழைய இலக்கண விப ரங்களை அவர் நீக்கிவிடுதலை நாம் அவ தானிக்கிமுேடிகின்றது. தொல்காப்பியர் எழுத்ததிகாரத்திலே அமைத்த பிறப்பியல் என்னும் பகுதியின் நன்னுலார் தன் னுடைய இலக்கண நூலிலே அப்படியே திரும்பக் கூறியுள்ளார். நாவலருடைய இலக்கணச் சுருக்கத்திலே பிறப்பியல் என்னும் பகுதி அமைக்கப்படவில்லை; அவர் அவ்வாறு அப்பகுதியினை நீக்கியதற்கு மொழியியலடிப்படையிலே காரணம் கூற லாம்போற் ருேன்றுகின்றது. எழுத்ததி காரம் என்னும் பகுதியிலே ஒவியதிகாரத் துக்குரிய பிறப்பியற் சூத்திரங்களைக் குறிப் விடுதல் பொருத்தமோவென நாவலர் ன்ண்ணியிருக்கலாம். மேலும், நாவலர் ஆங்கில மொழியினைத் துறைபோகக் கற்றவர். அதனல், ஆங்கில மொழியிலே ஒலியியல் பற்றிய ஆய்வுகளைப்பற்றி அவர் அறிந்திருக்கக்கூடும். ஆங்கில மொழியிலே 1a/ என்னும் ஒலி cut என்னுஞ் சொல் லிலே IA) என்ற ஒலியாகவும் cat என்னுஞ் சொல்லிலே (a) என்னும் ஒலியாகவும் car என்னுஞ் சொல்லிலே (a) என்னும் ஒலியாகவும் ஒலி வேறுபாடு கொள்ளுதலை அவர் நன்கறிந்திருப்பர். அதேபோன்று தமிழிலே-க என்னும் எழுத்து கண் என்னுஞ் சொல்லிலே (K1 ஒலியாகவும் மகன் என்னுஞ் சொல்லிலே (h) ஒலியாக வும் தங்கம் என்னுஞ் சொல்லிலே Ig) ஒலியாகவும் ஒலிப்பதை நோக்குமிடத்து தொல்காப்பியரோ நன்னூலாரோ கூறிய பிறப்பியற் சூத்திரங்கள் அத்தகைய ஒலி துட்பங்களை நுணுக்கமாக எடுத்துக் கூறு வனவல்ல என .உணர்ந்து அவற்றைக் குறியாது: அவர் நீக்கியிருக்க வேண்டு மெனக் காரணங் கூறலாம்.

அ. சண்முகதாஸ்
தொல்காப்பியர் சொற்களைப் பெயர், வினை, இடை, உரி என நான்காகப் பாகு பாடு செய்ததோடு,
“இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென் றனைத்தே செய்யுளிட்டச் சொல்லே." என்று வேருெரு வகையான பாகுபாட்டி னையுஞ் செய்துள்ளார். தொல்காப்பியருக் குப் பின்வந்த நேமிநாதர், நன்னூலார் ஆகியோர் தொல்காப்பியர் மேற்கொண்ட அவ்விரு சொற் பாகுபாட்டினையும் உறழக் கூறியுள்ளனர்.18 ஆஞல், நாவலரோ தொல்காப்பியர் பெயர், வினை, இடை, உரி என்ற பாகுபாட்டினை மத்திரங் கூறி விட்டு, இரண்டாவது வகையான பாகு பாட்டினை அறவே நீக்கியுள்ளார். நாவலர் அவ்வாறு அப் பாகுபாட்டினை நீக்கிய மையை நவீன மொழியியற் போக்கினடிப் படையிலே நியாயப்படுத்தலாம். பெயர். வினை, இடை, உரி என்ற சொற்பாகுபாடு இலக்கண அடிப்படையிலான பாகுபாடா கும். உலகிலுள்ள மொழிகள் பலவற்றி லும் இத்தகைய பாகுபாடு மேற்கொள்ளப் பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.19 ஆணுல், இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என்னும் பாகுபாடு சொற்பத அடிப்படையிலேயே மேற் கொள்ளப்பட்ட தொன்ரூகும். எழுத்துக் கள் (அல்லது ஒலிகள்) சேர்ந்து சொற்க ளாவதும், அச் சொற்கள் தொடர்ந்து சொற்ருெடராவுதும் ஆகிய இலக்கணப் போக்குக்கு சொற்பத அடிப்படையி லான பாகுபாட்டினுலே எவ்வித பயனு மில்லை என்பதை நாவலர் உணர்ந்திருக்க வேண்டும். அத்துடன் அத்தகைய பாகு பாடு இக்காலத்துத் தமிழ்மொழி இயல் புக்குப், பொருத்தமற்ற தொன்றெனவும் அவர் எண்ணியிருக்கலாம். தமிழ்ச்சொற் கோவையிலே தமிழ்மொழிக்கேயுரிய சொற்களை இயற்சொல், திரிசொல் என்று பாகுபடுத்திய தொல்காப்பியர், தமிழ்மொழியல்லாத சொற்களை "திசைச் சொல்" என்றும் "வடசொல்" என்றும் இனங்கண்டுள்ளார். தமது பிரதேசத்தின்

Page 43
மொழியியல் நோக்கில் நாவலர்
எல்லைகளிலே சில மொழிகள் பேசப்படு வதையும், அவை ஓரளவு தமிழ்ச்சாயல் கொண்டிருப்பதையும் தொல்காப்பியர் உணர்ந்திருக்கவேண்டும். இவை தமிழோடு நெருங்கிய தொடர்புடைய கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளா யிருந்திருக்கலாம். தமிழின் சகோதர மொழிச்சொற்கள் வழக்கிலுஞ் செய்யு ளிலும் கையாளப்படுவதைக் கண்ணுற்ற தொல்காப்பியர் அவற்றை முற்ருகப் புறப் புறத் தன்மையுடைய வேற்றுமொழிச் சொற்களாக எண்ணுது, திசைச்சொல் என்னும் தனியொரு பாகுபாட்டுக்குள் அடக்கிஞர். "தொல்காப்பியம், சங்க இலக்கியம் போன்ற நூல்கள் தோன்றுங் காலத்திலே கன்னடம் தமிழ்ழொழி நிலத்துப் பேச்சுமொழியாக இருந்தது." என்று கமில்ஸ்வெலபில் கூறுவதும் 20 இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும். இவ் வாறு தமிழ்ழொழி நிலத்திலிருந்து வந்த திராவிட மொழிச் சொற்களை திசைச் சொல்லென்றும் பிறமொழியாகிய ஆரிய மொழியிலிருந்து வந்த சொற்களை "வட சொல்" என்றும் தொல்காப்பியர் பாகு பாடு செய்துள்ளார். ஆஞரல், நாவல ருடைய காலத்திலே கன்னடம் தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம் எல்லாமே
அடிக்குறிப்புக்கள்:
1. தொல்காப்பியம் : எழுத்ததிகாரம்,
* வட வேங்கடந் தென்குமரி யா
தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு மு னெழுத்துஞ் சொல்லும் பொழு செந்தமி Nயற்கை சிவணிய நீ முந்துநூல் கண்டு முறைப்பட புலந்தொகுத் தோனே போக் 2. இறையனரகப்பொருள், பக்கம் 7 3. Robins, R. H. “The structure of 4. சபாபதி நாவலர், திராவிடப் பிரகா 5. மேற்படி, பக்கம் 75-76 6. தொல்காப்பியம் : பொருளதிகாரம், 7. மேற்படி, சூ. 846 8. மேற்படி, சூ. 847 9. மேற்படி, சூ. 648
3

33
பிறமொழிகள் எனக் கொள்ளப்பட்டன. இவற்றைவிடப் போத்துக்கேய, டச்சு, ஆங்கில மொழிச் சொற் கரும் பிற மொழிச் சொற்களாகத் தமிழிலே கலந் தன. ஆகவே திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடு இக்காலகட்டத்திலே பொருத்தமற்றதென நாவலர் உணர்ந் திருக்க வேண்டும். அதனல் தன்னுடைய இலக்கண நூலிலும் இயற்சொல், திரி சொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாட்டினை முற்ருக நீக்கிவிட்டார்:
தொகுத்து நோக்குமிடத்து இலக் கணச் சுருக்கம் என்னும் நூலின் தாவலர் எழுதியபோது தனக்கு:முன்னெழுந்த தமிழ் இலக்கணங்களை அப்படியே சுருக்க மாகக் கூறும் நோக்குடையவராக இருக்க வில்லை என்பது உண்மை. அவ்விலக்கணங் களை நுண்ணுய்வு அடிப்படையிலே நோக் கியே தன் பணியிலீடுபட்டார். அதனல் அவருடைய இலக்கணி அமைப்பிற் சில பண்புகளை இக்கால மொழியியற் கோட் பாடுகள் சிலவற்றின்மூலம் நியாயப்படுத் தக் கூடியதாயமைந்தன. ஆனல், பெரு
மளவிலே அவர் மரபுவழி இலக்கணக் கோட்பாடுகளைப் பொன்னேபோற் போற்
* நியுமுள்ளார்.
பனம்பாரனுரின் பாயிரம் : ாயிடைத்
தலி
குளுநாடிச்
லத்தொடு வெண்ணிப்
கறு பனுவ (ல்)க'
language' in Linguistics at Large, p. சிகை, பக்கம் 75
மரபியல், சூ. 645

Page 44
34
10, தொல்காப்பியம்: சொல்லதிகாரம், ( 11. பேச்சுமொழியின் முக்கியத்துவத்தினை மூகதாஸ், அ. . " ஆக்க இலக்கியமும் வியலும், பக். 54 12 Lyons. J., Introduction to Theoretica 13. எழுத்து மொழியின் நற்பண்புகள் ட தால், அ. நமது மொழியின் இயல்பு 4. நாராயணசாமி, பண்டித சித. '
மலர் 10. 15 தொல்காப்பியம்: சொல்லதிகாரம், கு 16 நேமிநாதம், சூ. 75 17 தொல்காப்பியம்: பொருளதிகாரம், ே 18 நேமிநாதம், சூ. 54:
பெயர்ச்சொல் வினைச்சொல் இ இயற்சொல்முத னன்கும் எய்து உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் றியலும் எனவுரைப்பர் ஈங்கு.? நன்னூல், சூ. 270:
" அதுவே,
இயற்சொற் றிரிசொலியல்பிற் எனவிரண் டாகு மிடையுரி யடு நான்கு மாந்திசை வடசொலணு 19 அரிஸ்டோட்டில் கிரேக்க மொழியில் னும் நான்கு இலக்கணக் கூறுகளைக் பெயரையும், Rhema என்பது வினை6 களையும், Arthra என்பது மூவிடப்பெ g5ů umrtřás : Sandys, J. E. A. Shor 20. Luftrit šias; Zvelebil, K., *' From Pro
Malayalam, p. 72. உசாத்துணை நூல் விபரம் : ஆறுமுகநாவலர், இலக்கணச் சுருக்கம், வி
(23ஆம் பதிப்பு) இறையனரகப்பொருள், ச்ைவசித்தாந்த நூ சண்முகதாஸ், அ. நமது மொழியின்
நினைவு விரிவுரை, ம -- " ஆக்க இலக்கியழு அறிவியலும் (பதிட் துறை வெளியீடு,
onu 6Trrasıh, 1977 சபாபதி நாவலர், திராவிடப் பிரகாசிை
சென்னை, 1960.

அ. சண்முகதாஸ்
ாப் பற்றிய விளக்கத்துக்கு, பார்க்க: சண் மொழியியலும்,’’ ஆக்க இலக்கியமும் அறி
tl Linguistics, p. 9 பற்றிய விளக்கத்துக்கு, பார்க்க: சண்முக புகள், பக். 5-6. மயக்கம்", தமிழ்ப் பொழில், துணர் 40;
ቌ• 87
பராசிரியர் உரை, சூ. 687
டைச்சொல் உரிச்சொல் தும் பெயர்ச்சொல்
ஒண்விரவிற்
பெயர்வினை
த்து . .
காவழி'
Omona, Rhema, i Syudensmoi, arthra GT6ăr கூறியுள்ளார். அவற்றுள் Onama என்பது
யையும், Syndesmoi என்பது இடைச் சொற்
யர்களையுங் குறிக்கும். மேலும் விபரங்களுக்
f History of classical scholarship.
to' South Dravidian to Old Tamil and
த்தியாதுபாலன அச்சகம், சென்னை, 1957
ற்பதிப்புக் கழகம், சென்னை, 1958 இயல்புகள், பாவலர் துரையப்பாபிள்ளை காஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, 1978 0ம் மொழியியலும்,' ஆக்க இலக்கியமும் பாசிரியர்: சண்முகதாஸ், அ.), தமிழ்த் இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண
6. சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,

Page 45
மொழியியல் நோக்கில் நாவலர்
தொல்காப்பியம்: எழுத்ததிகாரம், கணே
சுன்னுகம், 1952. --- சொல்லதிகாரம், கே சுன்னகம், 1955 ( --- பொருளதிகாரம், சுன்னுகம், 1945. நன்னூல்; காண்டிகை உரை ஆறுமுகநாவி
(24ம் பதிப்பு). நாராயணசாமி, பண்டித சித. , "மயக்கம் Lyons, J., Introduction to Theoretical Lin Robins, R. H., 'The structure of La
. at Large. Sandys, J. E., A Short History of Classi zvelebi, K. "From Proto-South Dravi m Proceedings of the of Tamil studies,
புராணபடனம் பற்றி . நான்
. இத்தேசத்துக் கோயிலதிகாரிகளு களை நியோகித்து, கோயில்களிலும் மட பொருள் சொல்லும்படி செய்வார்களாயின் நியமமாகக் கேட்பார்களே. கேட்பார்கள னுடைய ம்கிமையையும், புண்ணிய பாவங் அறிவார்களே. அறிவார்களாயின், டெ தங்கள் தங்களால் இயன்ற புண்ணியங்கை
இவ்வழக்கம் முற்காலத்திலிருந்தது என பயனும், பிரமோத்தர காண்டம் முதலிய லுள்ள திருக்கோயில்கிளெங்கும் பண்டுதெ புராணம் முதலிய சில சிவபுராணங்களை வ அங்குள்ளோர்கள் வர்சிப்பவர்களையும் பெ வழிபட்டு அவர்களுக்கு வேண்டுவன கொ
கந்தபுர --سی துன்

35
சையர் பதிப்பு, திருமகள் அழுத்தகம்,
ணேசையர் பதிப்பு, திருமகள் அழுத்தகம், இரண்டாம் பதிப்பு) கணேசையர் பதிப்பு, திருமகள் அழுத்தகம்,
பலர், வி, அச்சகம், சென்னை, 1966
', தமிழ்ப்பொழில், துணர் 40, மலர் 10. guisties, Cambridge, 1958. Linguage”, In Minnis (Ed.), Linguistics
cal Scholarship, Cambridge, 1915 dian to Old Tamil and Malayalam', ! Second International Conference Seminar
Madras, 1971, pp. 5-70.
6)
ம் மடாதிபதிகளும் சிவபுராணப் பிரசாரகர் உங்களிலும் சிவபுராணங்களை வாசித்துப் ", சைவசமயிகள் யாவரும் பேராசையோடு ாயின், பெருங்கருளுறநிதியாகிய சிவபெருமா களையும், அவற்றின் பயன்களையும் எளிதில் ாரும்பான்மையும் பாவங்களுக்கு அஞ்சித் ா விதிப்படி செய்து உய்வார்களே.
ன்பதும், அதனல் உலகத்தாருக்கு விளைந்த நூல்களிலே கண்டுகொள்க. ஈழதேசத்தி 5ாட்டு இதுகாறும் வருடந்தோறும் கந்த ாசித்துப் பொருள் சொல்லி வருகின்றர்கள். ாருள் சொல்வோர்களையும் சிரத்தையோடு டுத்து, நியமமாகக் கேட்டு வருகின்றர்கள்
ாணமுகவுரை, வாணி நிகேதனவச்சுக்கூடம், மதிUல ஆவணி, சென்னபட்டணம் (1862)

Page 46
சமூகவியல்
கார்த்திகேசு சிவத்த
".வரலாறு சகலவற்றையுக்த
- auf Fuss இயக்குனர், பொருளாதார அபிவிரு திட்டமிடலுக்கான நிறுவனம், சே
சமூகவியல் என்பது இக்காலத்தில் பெருவழக்காகப் போற்றப்படும் ஒரு பயில் துறையாகும். பொதுப்படையாகக் கூறுவ, தாளுல் அது, அத்துறையோகிக அறிஞர் மொறிஸ் கின்ஸ்பேர்க், என்பவரது கூற் றுக்கிணங்க 'மனித ஊடாட்டங்கள் (interactions), gaol-up payassir (interrelations), அவற்றின் நிலை, பலாபலன்கள் பற்றி" ஆராயும் துறையாகும். அது தனக் கென ஒரு பயில் களத்தையும் பயில் நெறி யையும் கொண்டது. ஆயினும் அது அதன் வளர்ச்சியில் இரு வேறு திசைநெறிக்ளேக் கொண்டதாகக் கிளைத்துள்ளது. மரபு papill ill Feypsefugi (conventional soக்ology) என்றும் மார்க்ஸிய நிலைப்பட்ட areyásaáuláj (Marxist sociology) Greirgi போற்றப்படுவதுண்டெனினும், அதன் அடிப்படையான அறிவுத்தளம் ஒன்றினுள் மற்றென்று அடங்குவதாக அமையுமென் பதில், அத்துறையின் கருத்தியல் அறிஞர்க ளிடையே எண்ண ஒருமைப்பாடு உண்டு. மரபியற் சமூகவியலில், சமூகத்தின் வ்ர்த்தம்ான அமைப்புக்கள், மனித நடத் தைகள், நடைமுறைகள் . எண்ணப் பெறு மான்ங்கள் (values-விழுமியங்கள்) முதலி யனவே இடம் பெறும். வரலாற்றுப் பகைப்புலத்தில் ஒருவரை, அல்லது ஒரு சமூக நிகழ்வை, அல்லது சமூக இயக் கத்தை மதிப்பிடும் முயற்சி மேற்கொள்ளப் படும்பொழுது (அதாவது வரலாற்று நிலைப் tiltl - Fepseué (historical sociology)

தோக்கில் நாவலர்
b
முடியாதுபோல்ை அதில் ஒன்றுமேயில்க்ல.*1
曲翰
னகல்
ஆய்வு) அந்த ஆய்வு சமூக வரலாருகவே (social history) GudfliuGub. Fepas a pr லாற்றுக்கு மார்க்ளீயத்தின் அடிப்படைக னான வரலாற்றுப் பொருண் முதல் வாதம் இயங்கியற்பொருண்முதல் வாதம் என் பனவே அணுகுநெறிகளாகக் கொள்ளப் படுவதுண்டு. அன்றேல் கடந்தகாலச் சமூக சம்பவமொன்றின் 'ஊடாட்டங் கள்", "இடையுறவுகள்’ ஆகியனவற்றை அறியமுடியாது போய்விடும்.
ஆறுமுகநாவலர் (1822-1879) இலங் கைத் தமிழரின் சமூக, மத, கல்வி வர லாற்றில் மிக மூக்கிய இடம் வகிப்பவ ராவர். எனவே அவரை, மேற்கே மெத்த வளரும் சமூக அறிவுத்துறையின் வழி நின்று ஆராய்ந்து, அவரது இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, வியாப்தி, நிலைபேறு ஆகியவற்றுக்கான காரணங்களை அறிந்து கொள்வது அறிவுப்பசிக்கான அத்தியா வசிய ஊணுகும். அத்தகைய ஆய்வு ஆறு முக நாவலராய்வில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தும்.
எனவே, முதலில் மரபுநிலைப்பட்ட சமூகவியலறிஞர்களின் நிலையில், சமூக வியல்துறையின் அறிவு வட்டம், பயில் களம் யாது என்பதனை நிறுவுவோம். இத்தகைய அறிஞர்களுள் முக்கியமானவ ராக விளங்குபவர் ரல்கொற் பார்சன்ஸ் (Talcott Parsons) Greirusuri. Joeuri diago தாவது:

Page 47
*சமூகவியல் ஆய்வின் முக்கிங் பொருட்கிடக்கை, சமூக நடவடிக்கை (Sociat action) usår - goya GGT pasivů பட்ட அமிசத்தினைக் கண்டறிவதாகும். பொதுப்படையாகக் கூறுவதாஞல், யாதானுமொரு பண்பாட்டினைத் தள மும் களமுமாகக் கொண்ட சமூக் அம்ைப்பொன்றில்,(அச்சமூகத்தினுள் ஏற்படக்கூடிய நடவடிக்கைகள் பற் றிய) மேனிலை எடுத்துக்காட்டாகக் கூறப்படத்தக்க, உயர் படிவ எதிர் Lintiflis gir (normative expectations) எவ்வாறு தோன்றுகின்றன, தொழிற் படுகின்றன என்பதுபற்றி அறிந்து கொள்வதன்மூலமும், பல்வேறு சூழ் நிலைகளில், பல்வேறு அந்தஸ்துகளை ályib (statuses), LuciGalgy sl-cotDü. பணி (role - பங்கு, "பாகம்")களையுங் கொண்டு தொழிற்படும் மனிதர், எவ் வெவற்றைச் செய்தல் வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது என்பது பற்றி அறிந்துகொள்வதன் மூலமும் "சமூக நடவடிக்கையின் நிறுவன நிலைப்பட்ட அமிசத்தை அறிந்து கொள்ளலாம். இந்த(ச் சமூக) எதிர் பார்ப்புகள் அப்பணிகளைச் செய்பவர் களின் நோக்குக்களுடன் ஒன்றி ணைந்தே நிற்கும். அதாவது, அப் பணிகளைச் செய்பவர் ள்த்தன்மை யினர், அவர் நிலைப்பாடு யாது, அவர் எத்தகைய சூழலில் இயங்குகின்றர், அவர் எத்தகைய காசியங்களைச் செய்யத் தூண்டப்படுகின்ருர், அவர் எத்தகைய காரியங்களைச் செய்ய். விரும்புகின்றர் என்பவையுடன் இணைந்ததாகவே சமூக எதிர்பார்ப் பும் அமையும். ஆயினும், ஒழுங்கமைதி யுடைய ஒரு பயில்நெறி என்ற முறை யில் சமூகவியலானது தனி மனிதர்க வின் ஆளுமை பற்றிய ஆய்விலும் பார்க்க, சமூக அமைப்புக்களே அதன் ஆய்வுத் துறையாக அமைவதால், தனிப்பட்ட ஒருவரது கடமைப்பணி ய்ானது அதன் ஆய்வுக்கு முக்கிய

3亨
மானதாக விருக்குமிடத்தும் தனிப் வட்டவர்களில் கண்கஞ் செலுத்தாது தனிப்பட்டவர்கண்க்கொண்டு ஆக்கப் Gt tibp Girl .gaa. ShGawaiir (collectivities சமூகத்திரள்களாக நிற்கும் நிலை) தனது கவனத்தைச் செலுத்தும். (நடவடிக்கைகளுக்கான) உந்துதல் கள் பற்றி நோக்கும்பொழுதுகூட, தனிப்பட்ட ஒருவரது நடவடிக்கைகள் பற்றி அதிக கவனஞ் செலுத்தாது பொதுப்படையான முறையில், உந்து தல்களின் வகைபாடுகள் பற்றியும், அவற்றின் வேகங்கள் பற்றியும், அவ் வுந்துதல்களின் பலாபலனுக ஏற்படும்
泰變老。下
அது முக்கிய கவனம் செலுத்தும்.
ரோல்கொற் பார்சன்ஸ் 1988-பக் 347-8)
இக்கூற்றினை ஊன்றிநோக்கும் பொழுது, ஆறுமுகநாவலர் பற்றிய, இதுவரை வந்த பெரும்பாலான ஆய்வுகள் இம் முறையில் அமையவில்லை என்பது தெரிய வருகின்றது, ஆனல் இத்துடன் மேற்கூறிய முறையில் ஆராயும்பொழுதுதான் நாவ ரின் சமூகப் பின்னணி துல்லியமாகவும், அறிவுபூர்வமாகவும் நிறுவப்படலாமென் பதும், நிறுவப்படவேண்டு மென்பதும் தெரியவருகின்றது. எம்மிற் பலர் நாவலர் என்னும் தனிமகனையே முதலும் முடிவு மாகக் கொண்டுவிட்டனர். இது நாவல ருக்கே உடன்பாடான கருத்தன்று (கைலாசபிள்கள:1955 பக்.55) எனவே, மேற் கூறிய கண்ளுேட்டத்தில்ே நோக்குவ தானுல் சமூக அமைப்பு, அதில் நிலவிய உறவுகள் ஏற்பட்ட மாற்றங்கள், மாற் றங்களால் ஏற்பட்ட தேவ்ைகள், தேவை கன் காரணமாக எழுந்த சமூக எதிர்பார்ப் புக்கள், அவ்வாறு எதிர்நோக்கிய குழு வினர், அவர்களின் தேவைகள் என்பன வற்றின் பின்னணியிலே ஆறுமுகநாவல ரீன் நடவடிக்கைக்ள் நடவடிக்கைகளுக் கான உந்துதலின் தன்மை, நடவடிக்கை களால் ஏற்பட்ட மாற்றங்கள் என்பன வற்றை நோக்குதல் வேண்டுமென்பது புலஞகிறது (சிவத்தம்பி: 1979),

Page 48
நாவலர் ஒரு வரலாற்றுப்புருடராக விருப்பதனல், இவ்வாய்வினை எவ்வாறு மேற்கொள்ளலாமென்பதற்கு ஒசிப்போவ் வழிகாட்டுகின்ருர்:
சமூக நிகழ்ச்சிகளினதும், நிகழ்வு களினதும் தோற்றம், காரணகாரியத் தொடர்பு பற்றிய விளக்கங்களை அறிந்து கொள்வதற்கான ஒரே வழி, ஒருகுறிப்பிட்ட சமூக-பொருளாதார கட்டமைவினுட் காணப்படும் (Socioeconomic formation) S6öfl Lð6öflStf களின் பருப்பொருட்சூழலை அறிந்து கொள்வது தான், மக்கள் வாழுகின்ற நிலையில், மனிதக் கருத்துக்கள், சமூகம்பற்றிய கருதுகோள்கள் ஆகி யனவற்றின் சாரமே இந்தப் பருப் பொருட் கூறுகளினுல் ஏற்படுவது தான். அதுமட்டுமன்று, மக்களின் சிந் தனையை, உந்துதல்களை, நடவடிக்கை களை, சமூக நடத்தையை உருவாக் கும் புறத்தேவையாகவும் அவை அமைகின்றன."
(ஒசிப்போவ்: 1969-பக். 21-22)
அத்தகைய ஒர் ஆய்வு இங்கு செய்யப் படுதல் முடியாது. நாவலர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக-பொருளாதாரக் கட்டமைவு, அக்கட்டமைவினுள் முனைப் புப்பெற்றுநின்ற சமூகக் குழுக்கள். அவர் களின் பொருளாதார, சமூகத்தேவைகள், அவை சமூகத்தில் பிரதிபலித்த முறைமை, இத்தேவைகள்" பற்றி நாவலர் உணர் வதற்குக் காரணமாக விருந்த அவரது குடும்பப்பின்னணி, சமயக்கல்விப் பின் னணி, அவர் உந்துதல்பெற்ற முறைமை, அவருக்கு உதவிய சமூகக்குழுக்கள், அவர் களின் தேவைகளும் (எதிர்பார்ப்புகளும்) நாவலரின் இலட்சியங்களும் இணைந்த முறைமை என்பனபற்றியும், நாவலர் நினைவு போற்றப்படுவதற்கான காரணங் கள், அவரின் நினைவு போற்றப்படும் முறைமை, போற்றுவோரின் வர்க்க நிலை பாடுகள், இவற்றின் காரணமாக நாவல ரின் ஆளுமை பற்றி நாம் இன்று கொண் டிருக்கும் கருத்துக்கள்.என அவ்வழிப்பட்ட

கார்த்திகேசு சிவத்தம்பி
ஆய்வு விரியும். இத்தகைய ஓர் ஆய்வுக்கு எம்மை இட்டுச் செல்லும் வகையில் நாவ லரின் வரலாற்றுப் பின்னணியும் பண் பாட்டுப்பின்னணியும் தெளிவாக்கப்பட்டு வருவதனை நாம் காணலாம். இவ்வாறு நோக்கும் பொழுது நாவலர் பற்றிய சமூக வரலாற்றியல் ஆய்வு தவிர்க்கப்பட முடி யாத வகையில் வளர்வதற்கான அறிவுப் பின்னணி ஏற்படுவதையும் அவதானிக்
கக் கூடியதாகவிருக்கின்றது.
(கைலாசபதி 1878, சோமகாந்தன் 1974 சிவத்தம்பி: 1978).
இக்கட்டுரையிலே முதலில், தனிமனி தனின் சாதனைகள், சமூக வரலாற்றில் (அதாவது சமூகவியல் ஆய்வு நெறியினைக் கொண்டு நோக்கும் வரலாற்றியலில்) எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என்ப தனை நோக்கி, அடுத்து நாவலரின் ** சாத னைகளை ** ச் சமூகவியற் பின்னணியில் எவ் வாறு விளங்கிக்கொள்ள முடிகின்றது என்பதனை நோக்குவோம்.
மரபியற் சமூகவியலாளர் குறிப்பாகத் தமது ஆய்வுவட்டத்தினுள் தனிமனித ஆளுமைக்கு முக்கிய மளிக்காதுவிடினும், சமூக வரலாற்றியலில் தனிமனித ஆளுமை முக்கியத்துவம் பெறுவது இய்ல்பே. இத் தகைய சமூகவியலாளரே, கைத்தொழிற் சமூகவியல், அரசியற் சமூகவியல் போன்ற உப-துறைகளில் ஆய்வு செய்யும்பொழுது * தலைமை’க்கு முக்கியத்துவம் கொடுப் பதையும் நாம் அவதானித்தல் வேண்டும்.
எனவே இங்கு நாம் வரலாற்றுத் தலைமைக்கான சமூகவியற் பின்னணியை நோக்குவோம்.
(அ) " " ஒவ்வொரு குறிப்பிட்ட காலப் பகுதியிலும் சமுதாயத்தின் ஸ்தாபன வடிவம்தான் திற னுள்ள அல்லது திறனற்ற தனி நபர்களின் பாத்திரத்தையும் அதன்விளைவாக அவர்களின் சமுதாய முக்கியத்துவத்தை யும் நிர்ணயிக்கின்றது"
(பிளெகானஷ்: பக். 82)

Page 49
சமூகவியல் நோக்கில் நாவலர்
(ஆ) * தமது வளர்ச்சிக்கு அனுகூல e மான சமுதாய நிலைமைகள் எங்கெங்கு, எவ்வெப்போது நிலவுகின்றனவோ அங்கெல் லாம், எப்போதும் ஆற்றல் கள் தோன்றுகின்றன என்பது நீண்ட காலமாகப் பார்த்த விஷயமாகும். இதற்கு அர்த் தம் யதார்த்தத்தில் தோன்று கிற ஒவ்வொரு ஆற்றல் மிக்க புருஷனும், அதாவது ஒரு சமு தாய சக்தியாக விளங்கும் ஒவ் வொரு ஆற்றல் மிக்க புருஷ னும், சமுதாய உறவுகளால் உண்டாக்கப்பட்ட ஒரு விள்ை பொருளேயாவான்’ .
(பிளெகானவ் பக். 101)
(இ) 'முன்னணியில் நிற்கும் வர்க்கம், திறமையும் ஆற்றலுமுடைய தலைவர்களின்றி, அரசியல் மேன்மையைப்பெறமுடியாது; தன்னுடைய அதிகாரத்தைப் பேணவும் வலுப்படுத்தவும் முடியாது; அதன் அரசியல் எதிரிகளுக் கெதிரா கப் போராடமுடியாது.
வரலாறு எடுத்துக்காட்டி புள்ளது போன்று, அத்தலை வர்களின் தோற்றத்தை ஊக் குவிக்கும் காலத்தின் வர்க் கத்தின் பண்புக்கேற்ப வெவ் வேறு வகைப்பட்ட காலகட் டங்களில் வெவ்வேறு வகைப் பட்ட தலைவர்கள் தோன்றி யுள்ளனர். ஒவ்வொரு வர்க்க மும், தனது சமூகப் பண்புக ளுடன் இயைந்து நிற்கும் ஒரு குறிப்பிட்ட வகைத் தலைவ னையே விதி நெறியாகத் தோற்றுவிக்கின்றது.
(டெனிசோவ்: 1988-பக்.248)
எனவே, நாவலரின் தலைமை பற்றி ஆராய்வதற்கு நாவலர் காலச் சமுதாய

39
அமைப்பு, அந்த அமைப்பில் அவருக் கிருந்த வாய்ப்புக்கள் ஆகியனவற்றை அறிவது அத்தியாவசியமாகும்.
நாவலரது எழுத்துக்கள், எழுத்தின் மூலம் அவர் சாதிக்கவிரும்பிய பணிகள், கல்வி நிறுவனங்கள், அக்கல்வி நிறுவனங் களில் பயிற்சிபெறத்தக்க தகைமையுடை யோர் போன்ற காரணிகளை அடிப்படை யாகக் கொண்டும், அவர் காலச் சமூக அமைப்புப்பற்றியும் அவ்வமைப்புச் சீர் கெடாமற் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் வாதிட்ட முறையினை அடிப்படை யாகக் கொண்டும், அவரது குடும்பப் பின் னணி அவரது குடும்பத்தினரின், திருமண உறவுகள் ஆதியன கொண்டும் பார்க்கும் பொழுது, நாவலர், அக்காலத்தில் யாழ்ப் பாணத்தில் நிலவிய, நிலவுடைமை வர்க் கத்தின் பிரதிநிதியும் தலைவருமென்பது தெரியவரும், மேஞட்டாட்சியனுபவ முடைய இவ்வர்க்கமே அக்காலத்தில் அசைவியக்கம் கொண்ட குழுவாக இயங் கியது என்பதும் புலனுகும். அக்காலத் தில் பிறிதொரு வர்க்கத்திலிருந்து நாவ லர் ஆற்றிய பணிகளைச் செய்யக்கூடிய ஒரு தலைவன் தோன்றியிருக்க முடியாது. ஏனெனில் அந்த வர்க்கங்கள் இந்தப் பிரச்சனைகளாலே பாதிக்கப்படும் நிலைமை இருக்கவில்லை.
இக்கட்டத்தில் நாவலருக்கும் செட்டி குலத்தினருக்கும் நிலவியதொட்ர்புக்கான் சமூகவியற் காரணிகளைத் தெளிவுபடுத் துவது அத்தியாவசியமாகும். நாவலர் குடும்பத்துக்கும் ஒரு செட்டி குடும்பத்தி னர்க்கும் திருமண உறவு இருந்தது. நாவ லர் கட்டிய பாடசாலைகளுக்கு ஆரம்பத் திலும் தொடர்ந்தும் உதவியளித்தோர் அக்குலத்தினரே. நாவலரின் பணி வட்டத் துள் வந்த வண்ணுர்பண்ணை, பருத்தித் துறைச் சிவன்கோயில்களுக்குச் செட்டி மாரே பொறுப்பாளராக விருந்தனர். ஆறுமுகநாவலரின் இந்தியப் பயணத்தின் பொழுதும், இவர்கள் முக்கிய இடம் பெற் றனர். ' இவ்வாறு நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு வணிக வர்க்கத்தின் உறவு

Page 50
40
இருக்கும்பொழுது அவரை நிலவுடைமை பின் பிரதிநிதியாகக் கொள்வதுமாத்திரம் பொருத்தமாகுமா என்ற வினு எழலாம்.
இதற்கு அச் செட்டிகுலத்தினரின் பொருளாதார நடவடிக்கைகளை அறிதல் வேண்டும். இவர்கள் நிலவுடைமை யமைப் பினுள்ளே தோன்றும் நகரங்களில் வாழ்ப வர்கள். அந்த அமைப்பினிடையே காணப் படும் தூரதேச வணிகம் இவர்களது பிரதான தொழிலாகும். உள்ளூரில் அவர் கள் லேவாதேவி வியாபாரத்தில் ஈடுபடு வார்கள். இதன் அடிப்படையான முதல் ''és Gallig (p56)' (usuary capital) gestb. இவ்விரு அமிசங்களுமே நிலவுடைமையின் துணைப்பொருளியற் பண்புக ளாகும். மேலும் இதே வேளையில் பிரித்தானிய ஆட்சியின் பொருளாதார நடவடிக்கை களிஞரல் (வங்கி நிறுவுதல் போன்றவை) இவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப் புக் காணப்படுகின்றது. யாவற்றுக்கும் மேலாக இவர்களது உபரி-இலாபங்கள் {Surpius-profits) கோயில் கட்டுதல், கோயில்களைப் பேணுதல் ஆகியவற்றுக் குச் செலுத்தப்படுவதே பாரம்பரிய வழக்கமாகும். அத்துடன் இக்குழுவி னர் நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தமையால், அவருள் ஒரு பிரிவினர் யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சமூக அமைப்பின் உயர் குழுவினரான வெள்ளாளருடன் இணைந்துமிருந்தனர். செட்டி வெள்ளாளர் என்ற துணைச் சாதி"யின் தோற்றமிதுவேயாகும்.
எனவே, இவையாவற்றையும் ஒன்றி ணைத்து தோக்கும்பொழுது நாவலர் அன்று நிலவுடைமைச் சமூக பொரு ளாதாரக் கட்டமைவின் உன்னதமான பிரதிநிதியாக அமைந்தார் என்பது தெர் யும். அத்துடன், அந்நிலவுடைமை அமை: புள்ளும், அக்காலகட்டத்தில் மேனுட் டாட்சித் தொடர்புடைய குடும்பங்க ளுக்கே நாவலரை எதிர்நோக்கிய பிரச் சினைகள் முக்கியமாக விருந்தன. நாவல அத்தகைய ஒரு குடும்பத்திலேயே-உத்தி யோக ஊழியர்களைக் கொண்ட் ஒரு குடு

கார்த்திகேசு சிவத்தம்
பத்திலேயே பிறந்தாரென்பதும் முக்கிய மாகும். இந்த மேனட்டுமயமாக்கத் தாக் கம் படிப்படியாகவே யாழ்ப்பாணத்தின் முக்கிய கிராமங்களுக்குச் சென்றது. அப் படிச் சென்றபொழுதுதான் அவ்வக் கிரா மங்களிலுள்ள நிலவுடைமைக் குடும்பத் தினர் சைவ-ஆங்கிலப் பாடசாலைகளை
நிறுவினர்.
(மானிப்பாய். உரும்பராய், காரை நகர், தெல்லிப்பழை, புத்தூர், அள வெட்டி, கரவெட்டி, புலோலி போன்ற யாழ்ப்பாணத்து முக்கிய கிராமங்களின் சைவ-ஆங்கிலப் பாடசாலைகளின் (கல் லூரிகளின்) தோற்றம் பற்றிய விவரங்கள் அவ்வப் பகுதிகளின் சமூக வரலாற்றுக் கான சுவாரசியமான தகவல்களாக அமையும்.
ஆறுமுகநாவலர் என்னும் வரலாற றுப்புருஷனின் நினைவு இன்றும் போற்றப்
படுவதற்குக் காரணமாக விருப்பது, இரு
துறைகளில் அவரது " கடமைப் பணிகள்' (roles) பெற்றுள்ள இடமேயாகும்,
(அ) மத-பண்பாட்டுப் பாரம்பரியப்
பேணுகை.
(4) ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்
M தோற்றுவிப்பு.
1960ஆம் ஆண்டுத் தொடக்ககாலம் வரை இரண்டாவது கடமைப்பணி தனி யொன்முக விதந்து கூறப்படவில்லை. முத லாவதுடன் இணைத்தே அதுவும் நோக்கப் பட்டு வந்தது. (சிவபாதசுந்தரம்: 1950), உண்மையில் இக்கட்டுரையிலும் முதலா
வதே ஊன்றி ஆராயப்பட G566inigu
தாகும். ஆனல் இரண்டாவது ‘கடமைப் பணி"யென 1960க்குப் பின்னர் விதந்து கூறப்பட்டது; கூறப்பட்டு வருவது, மூன் முவது பரிமாணம் ஒன்றினுக்கும்,
(இ). தேசிய வீரர் இடமளித்துள்ளதால், இக் கிளைநிலைப் போற்றல் முயற்சியின் சமூகவிய லடிப்
பட்ையின்த் தெளிவுபடுத்திக் கொள்ளல்
வேண்டும்.

Page 51
சமூகவியல் நோக்கில் நாவலர்
நாவலரின் இலக்கியப் பணியினை இலங்கை இலக்கியப் பாரம்பரியத்தின் கால்கோளாகக் கொள்ளவேண்டுமெனும் எழுத்தாளர் இயக்கமே முதன் முதலில் நாவலரது பணியினை மதச்சார்பற்ற முறையில் எடுத்துக்கூற முன்வந்தது. ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தினை எடுத்து நிறுவ 1960களில் முன்னணியில் நின்ற இயக்கம் முற்போக்கு எழுத்தாளர் சங்கமாகும். இந்த இயக்கத்தின் இலக்கிய நடவடிக்கைகளின்படி நிலைவளர்ச்சியினை அறிந்துகொள்வது அவசியமாகும். அது முதலில் ஈழத்திற்குத் தனியொரு இலக் கியப் பாரம்பரியம் உண்டு என்பதை நிறு விற்று. அடுத்து, அந்த இலக்கியப் பாரம் பரியம் தேசிய இலக்கியத் தன்மை கொண்டதென்பதை வலியுறுத்திற்று. தேசிய இலக்கியமென்பது ஒரு நாட்டில் வாழும் பல குழுக்களையும், மொழி வேறு பாடுகட்கிடையேயும் இலக்கியப் பொரு ளால் இணைப்பது என்னும் கருத்தையும் வற்புறுத்தி, மேற்சென்று அத்தகைய தேசிய, யதார்த்த இலக்கியம் படைக்கப் படுவதே அக்காலகட்டத்தின் தேவை யெனக் கூறிற்று. இவ்வாருக சமூகத்தின் முற்போக்குக்கான வளர்ச்சியுடன் இலக்கி யத்தை இணைப்பதே அவ்வியக்கத்தின் நோக்கமாகவிருந்தது. முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தினர் ஈழத்து இலக்கிய பாரம்பரியத்தின் அடிவேரைத் தேடும் முயற்சியினூடாக நாவலரை ஈழத்து இலக் கியப் பாரம்பரியத்துடன் மாத்திரமல் லாது, ஈழத்துத் தமிழ்மக்களின் முற்போக் கான இலக்கியப் பாரம்பரியத்துடனும் இணைத்தனர்.(சிவத்தம்பி: 1978). இலங்கை யின் தேசியக் கட்சியொன்றின் கிளைஇயக்க மாகத் தொழிற்பட்ட இவ்வியக்கத்தினர் இவ்வாறு நாவலரைத் தமிழில் ஈழத்தின் தேசிய இலக்கியப் பிதாவாக நிலை நிறுத் தியபொழுது, மாறிவந்த வரலாற்றியல் நோக்குக்கள் காரணமாக (changes in historiography) அவரைத் தேசியவீர ராகப் போற்றவேண்டிய தீர்க்கரீதியான ஒரு தேவையும் ஏற்பட்டது. (சோமகாந் தன்: 1972). இவ்வாறு நாவுலரை ஈழத்
4.

4鞋
துத் தமிழிலக்கியத்தின் ஊற்றுக்காலாக வும், தேசிய இலக்கியச் செல்நெறியின் விடிவெள்ளியாகவும், தேசிய விழிப்புணர் வின் தமிழ்ப்பிரதிநிதியாகவும் முன்வைத் ததால் ஒரேவேளையில் இரு காரியங்களைச் சாதிக்கக்கூடியதாக விருத்தது.
(அ) தமிழ்மக்களிடையே தமது இலக் கிய இயக்கத்திற்கு அங்கீகாரம் பெற முனைந்தமை
(ஆ) சிங்கள மக்களிடையே தமது இலக்கிய இயக்கத்தின் தேசிய நிலைப்பாட்டை எடுத்துணர்த் 5ualD.
முதலாவது மிகச் சுலபமாக நிறை வெய்தவில்லை. இரண்டாவது மிகச் சுலப மாக நிறைவெய்திற்று. இந்த இரண்டா வது சாதனைதான் இக்கட்டத்தில் முக்கிய மாகின்றது. முற்போக்கு இலக்கிய இயக் கத்தின் வேகம் 1965க்குப் பின் (பல்வேறு அகப்புறக் காரணிகளினல்) குன்றிய பின் னரும், நாவலரின் தேசிய முக்கியத்து வத்தை தமிழ் மக்களிடையேயுள்ள உயர் மத்தியதர வர்க்கத்தினர் தம்மைத் தேசிய மட்டத்தில் இணைத்துக் கொள்வதற்குப் * பயன்படுத்தத் தொடங்கினர். 1969இல் நடைபெற்ற ஆறுமுகநாவலர் சிலைநாட்டு விழாவினை இச் செல்நெறியின் வெளிப் பாடாகக் கொள்ளலாம். நாவலரைத் தொடர்ந்து நினைவுகூருவதற்கு, நாவல ருக்கு முற்போக்கு இலக்கிய இயக்கத்தின ரசல் வழங்கப்பெற்ற தேசியப் பரிமாணத் தைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ஆனல் இன்ருே, சாதி, மத வேறு பாடுகளை ஊடறுத்துச் செல்லும் தமிழ் பேசும் மக்களின் தேசியச் சுயநிர்ணய உரி மைப் போராட்டமும், இந்துத் தமிழ்மக் களிடையே நடத்தப்பெறும் சமூக சமத் துவப் போராட்டமும், நாவலரின் பணி களை வேருெரு கண்ணுேட்டத்தில் வைத்து மதிப்பிடவேண்டியதற்கான ஒரு வரலாற் றுத் தேவையை உண்டாக்கியுள்ளன. (சிவத்தம்பி: 1979 ),

Page 52
-42
நாவலரின் வரலாற்றுச் சாதனைகளைச் சமூகவியற் கண்ணேட்டத்தில் மதிப்பிட முனையும் இக்கட்டுரையில், நாவலரின் பணியையும், அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டனவற் றையும், அவரது பணிகளுக்கான, அவரா லேயே எடுத்துக்கூறப்பட்ட உந்துதல்களு டன் இணைத்து நோக்குவது அத்தியாவசிய மாகின்றது. இதற்கு நாவலர் விட்டுச் சென்றுள்ள தன்-வரலாற்றுச் சார்புநிலைப் Lull- ஆவணங்கள் முக்கியமாவது இயல்பே, அவற்றுள் மிக முக்கியமான மூன்றை நாம் இங்கு எடுத்து நோக் குவோம்.
முதலிரண்டும் அவர் 1868இலும் 1870 இலும் வெளியிட்ட விக்கியாபனங்களா கும். இவ்விக்கியாபனங்களில் முதலாவது இந்தியாவிலும், இரண்டாவது இலங்கை யிலும் வெளியிடப்பட்டது. இவை இரண் டுமே அவரது இயக்கத்தின் ஏறத்தாழ இருபதாவது வருடகாலப் பிரிவினுள் வரு பவை. எனவே இவற்றில் அவர் தமது முக்கிய ‘கடமைப்பணி" யினை ஐயந்திரிபற உணர்ந்தும் தெரிவித்துமிருப்பாரென்பது ஏற்றுக்கொள்ளப்படத்தக்க தரவாகும்.
முத்லர்வது விக்கியாபனத்தில் (1868) தான் செய்த " பரித்தியாகங்"களைப் பற் றிக் குறிப்பிட்டுவிட்டு,
* இவைகளெல்லாவற்றிற்கும் காரணம் சைவசமயத்தையும், அதன் வளர்ச்சிக்குக்கருவியாகிய கல்வியை யும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாகும்.
இப்பேராசையினுல் இருபது வருஷகாலம் நான்செய்த முயற்சிகள் பல; அவைகளுள்ளே சித்திபெற்றவை மிகச்சில, சைவசமயிகள் யாவரும் சைவசமயத்திலே சிரத்தையுடையர் களாகித் தங்கள் தங்களால் இயன்ற உதவிகள் செய்தார்களாயின், நான் எடுத்த முயற்சிகளெல்லாம் இதற்கு முன்னரே நிறைவேறி விடும்; நிறை

கார்த்திகேசு சிவத்தம்பி
வேறின், என்னைப்போல்வே பிறரும் அங்கங்கே நன் முயற்சிகளைச் செய் வார்கள் செய்யிற் கல்வியும் சமயமும் தழைத்தோங்கும். a së pesë e sa
YYSSLLSLLLS 0L00 S S LLSLLLL 0LL00L LLLLLS LLLLLLLLYSYSLLLLL LSLSLSSLLLSS Y0LLLT LLL0LLLSLLLS SLL00LL LLLLLLLLY0S
நிலையில்லாத என் சரீரம் உள்ள பொழுதே என் கருத்து நிறை வேறுமோ நிறைவேருதோ என்னும் கவலை என்ன இரவும் பகலும் வருத் துகின்றது. அக்கருத்து இது. தமிழ்க் கல்வியும் சைவசமயமும் அபிவிருத்தி 'யாதற்குக் கருவிகள் முக்கியஸ்தலம் தோறும் வித்தியாசாலை தாபித்தலும் சைவப் பிரசாரணஞ் செய்வித்தலுமே யாம்."
(கைலாசபிள்கள: 1955-பக், 54.55) எனக் கூறுகின்றர்.
1870இல் இலங்கையில் வெளியிட்ட விக்கியாபனத்தில்,
f . ..இந்தப்பிரகாரமே 6. தேசத்திலும் இலங்கையிலும் ஊர் தோறும் வித்தியாச்ாலை தாபிக்கவும் தேவாலயந்தோறும் சைவப் பிரசங்கம் பண்ணுவிக்கவும் வேண்டும். இப்படிச் செய்யிற் கல்வியுஞ் சைவசமயமுந் தழைக்கும் **
(asavrege 76ir&T 1955.--Luėš. 58)
எனவே, நாவலரின் பிரதான பணித் துறை "சைவமும் தமிழ்க் கல்வி'யும்தான் என்பது நிறுவப்பெறுகின்றது. கிறித்துவப் பாதிரிகளின் க்ல்விக் கொள்கையில் கிறித் துவத்துக்கும் கல்விக்குமிருந்த தொடர்பு காரணமாகவே இவரும் சைவத்தையும் இணைத்தார். மிஷனரிமார் யாழ்ப்பாணத் தில் கல்வி மூலம் சாதிக்க விரும்பியதை, 1881இல் லண்டனில் ஜோன் பிறெளண் என்னும் பாதிரியார் நிகழ்த்திய சொற் பொழிவொன்று நன்கு எடுத்துக்காட்டு கின்றது. அதனை அதன்மூலத்தில் வாசிக்கும் பொழுதே அதன் பூரண தாக்கத்தையும் உணரவாம்.

Page 53
சமூகவியல் நோக்கில் நாவலர்
“The School is the most powerful ally of the missonary, in as much, as it destroys all confidence in the religious books of his fathers. It destroys all confidance in the Shastras of the Hindus as religious guide. It is well known to those who have studied the subjects that these books are full of absurdities concerning nature, concerning the cosmogeny and physical geography of the world in which we live; and . a bright intelligent boy has not been in the mission school many days before he is able to go home and say to his father, Hereafter, I cannot accept for your books as my guide...' This is the first stage of the process of the boy's conversion'.
Small: Lui. 313
நாவலர் மறைந்து இரண்டுவருட காலத் திற்குப் பின்னரே, வண. ஜோன் பிறவுண் (Rev. John Brown) i g6i 6j mrgy Ginsdóu šis முடியுமெனில், நாவலர் கல்வி மூலமே சைவத்தைப் பேணவும் அபிவிருத்தி செய் யவும் முனைந்தமை ஆச்சரியத்தைத் தருவ தன்று.
மூன்ருவது ஆவணம் நாவலர், 1852இல் வில்லியம் அண்டர்சன் எனும் தேசாதி பதிக்குச் சமர்ப்பித்த “பிட்டீசம்' (petition) ஆகும். அதில் அவர் தமது இயக்கத்தின் தேவையை வற்புறுத்துகின்றர். அதற்கு முகவுரையாக அவர் கூறுவனவும், அம் முகவுரையின் பின்னர் தமது வேண்டு கோளை எடுத்துக் கூறியுள்ள முறைமையும் அவர் கண்ணேட்டத்தில், அவர் நடத்திய இயக்கத்தை எமக்கு அறிமுகஞ் செய்து வைக்கின்றன.
The petitioner in common with the best informed position of the Tamil community is bound to acknowledge with gratitude the important advantages, which his count r gymen have

43
derived from Her Majesty's Government under whose protection a gracions Providence has placed the inhabitants of this island.
The petitioner is equally bound to acknowedge that by the labours. of the different Missionaries in the Northern Province the State of Society has been considerably improved. It would however be disingenuous on his part were he to hesitate respectfully and with diferenceto express his own conviction that had the influence in the Missionary Schools been less exacting of the renunciation of the conscientious attachment to the religious predilection entertained by the Tamil youths instructed therein the latter would have derived morally greater advantages from the tution imparted to them . . . . . . . . . . . . . . . . ...........
LLLLLLLLL SLLLLS 00LL LL0L L00L LLLL LLL 0LLLLLLL LL00 L0LLLLLLL L0LL LL00L LLLLLL L0L
Since that period i. e. from 1843 when govt. schools system was abolished and grants given to Protestant & Catholic Schools the parents and relations of many youths in the country felt reluctant. to send them to the mission schools preferring that the instructon needed to qualify their children for both a useful and profitable carrer in life should not involve their alienation from and moral requirements amongst their country men . ... . ...” .
தனஞ்செயராசசிங்கம்: 1974-பக் , !
பிரித்தானிய ஆட்சியின் வருகைக்காக
இந்நாட்டு மக்கள் தெய்வத்திற்கு நன்றி செலுத்துகின்றனர் என்று தொடங்கிய நாவலர், வடமாகாணத்தில், மிஷனரி மாரின் சேவையினல் சமூகத்தின் நிலை

Page 54
44
நியாயமான அளவு உயர்ந்துள்ளது என் வரையும் ஒப்புக்கொண்டுவிட்டு, மேற்.
* மிஷனரிமார் பாடசாலைகளில் தமிழ் இளைஞர்களை அவர்களது சுய மத ஈடுபாட்டிலிருந்து விடுவிப்பதற்கு எடுத்த முயற்சிகளைச் சிறிது தளர்த்தி யிருந்தால், அக்கற்பித்தல் முறை யினுல் அவர்கள் அதிகமான அற நெறி நிலைப்பட்ட நன்மைகளைப் பெற் றிருப்பார்கள் ?? என்று சுற்றுச் சுற்றி வளைத்துச் சொல்லி விட்டு, இந்துப் பாடசாலைகளுக்கு மானி யம் அளிக்காதது பற்றிக் குறிப்பிடும் பொழுது,
"வாழ்க்கையிற் பிரயோசன மானதும் இலாபகரமானதுமான ஒரு தொழிலைப் பெறுவதற்கான தகுதி யைத் தங்கள் பிள்ளைகள் பெறுவ தென்பது, அவர்களை அவர்களது தேசத்தினரிடமிருந்தும், அம்மக்களி டையே வாழ்வதற்கான் அறநெறிப் பட்ட தேவைகளிலிருந்தும் அந்நியப் படுத்துவதாக இருத்தல் கூடாது V Q என ஆணித்தரமாகவே கூறுகின்றர்.
இங்கும் அவர் கோரிக்கை ஆங்கிலக் கல்வி காரணமாகச் சைவசமய வாழ்க் கைப் பாரம்பரியத்திலிருந்து யாழ்ப்பாண மக்கள் பிறழக் கூடாது என்பதுதான். இப் 5 "Lo. Fjögão 6Nuruh “morally”, “moral requirements' 67grth Q5 it Liisair L6as முக்கியமானவை யாகும். Morals என்பது அறநெறி, ஒழுக்கம் என்பனவற்றைக் குறிக்கும். நாவலர் குறிப்பிடும் யாழ்ப் பாணச் சைவ சமூகத்தின் "morals" (அற Gipps, secupdiasia, air), moral require - ments" ( அறநெறி, ஒழுக்கத் தேவைகள்) என்பன யாவை என்பதே இவ்விடத்தில் நாம் தெளிவாக அறிந்துகொள்ள வேண் டியனவாகும்.
அவற்றுக்கான பதிலைத் தேட முனை வதற்கு முன்னர், நாவலர் பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக்கொண்டார் என்பதும்,

கார்த்திகேசு சிவத்தம்பி
பிரித்தானிய ஆட்சிவழிவந்த சமூகமாற் றங்களை, அவை மேற்குறிப்பிட்ட அற நெறி, ஒழுக்கத்தாக்கங்களை ஏற்படுத் தாது விடின் அவற்றை அவர் ஏற்கத் தயங்கவில்லை என்பதும் தெட்டத் தெளி வாக விளங்குகின்றன. அதாவது சமூக வியல் பரிபாஷையிற் கூறுவதானுல், அவர் நவீனமயப்படுத்தலை எதிர்க்கவில்லை. ஆணுல் நவீன மயமாக்கம் (modernizatin) பாரம்பரியத்தை உடைப்பதாக இருத்தல் கூடாது என்றே கருதிஞர் என்பது தெரிய வருகின்றது. அதாவது நாவலர், பாரம் பரிய சமூக நிறுவன அமைப்பை உடைக் காத நவீனமயப் பாட்டையே விரும் பினர் என்பது தெரியவருகின்றது. சமூக அதிகாரத்தைப் பொறுத்தவரையில் இந் நிலைப்பாட்டின் தன்மை யாதென்பதே இங்கு பதிலளிக்கப்படவேண்டிய விஞ வாகும்.
இவற்றுக்கான விடையை அறிவதற்கு முன்னர், அவர் ** சைவப் பாரம்பரியம்** எனக்கொண்டவை யாவை யென்பதையும் அறிந்து கொள்ளுவோம். இவற்றை அவர் இருவகையாகக் கூறியுள்ளார்
(i) செய்யப்பட வேண்டியவை, அதாவது " உடனிலை நடத் 60.55 air (positive behaviour) (ti) செய்யப்படக் கூடாதவை. (negative behaviour) * சைவவிரோதம்', 'யாழ்ப்பாணத் துச் சமயநிலை', 'தமிழ்ப் புலமை" (முக் கியமாக 12வது அமிசம்), 'சைவ சமயி", *"அநாசாரம்" போன்ற கட்டுரைகளில் இக்கருத்துக்களை நன்கு காணலாம்.
(கைலாசபிள்கள: 1951)
இவற்றில் அவர் சடங்கு நடத்தை asahruyth (ritual behaviour) Fepassgeir நிறுவன ரீதியான அமைப்பையும் இணைத்தே நோக்கியுள்ளார் என்பது நன்கு தெரியவருகின்றது.
எனவே நாம், இக்கட்டத்தில், சமயத் தின், சமய ஒழுக்கத்தின் சமூகவிய லடிப்

Page 55
சமூகவியல் நோக்கில் நாவலர்
படையை அறிந்து கொள்வது அத்தியா வசியமாகின்றது.
**எனவே, சமூகவியலாளர் தோக் கில் மதம் என்பது, மனிதன், தனது முழுச்சூழலினுள்ளும் தான் பெறும் அது பவங்களுடன் தன்னை இயைபுறுத்திக் கொள்வதற்கான ஒரு பண்பாட்டுக் கருவியேயாகும்"
(எலிஸபெத் தொற்றிங்காம்: 1954-பக். 4)
நாவலர் மதம் பற்றிக் கூறுவனவற்றி லிருந்து அவர் அதனைப் பண்பாட்டின் கருவியாகவே கொண்டாரென்பது புலணு கிறது. ஆனல் சிறிது ஊன்றிக் கவனிக்கும் பொழுது அவர் அப் பண்பாட்டுக் கருவி பற்றிய ஒரு விளக்கத்தைக் (அதாவது வியாக்கியானத்தை) கொண்டிருந்தா ரென்பதும் ஐயத்துக்கிடமின்றிப் புலன கிறது. சமூகவியலாளர், இத்தகைய விளக் கங்களுக்கும். விளக்குபவரின் சமூக பொரு ளாதார அடிப்படைகட்கும் யாதேனு மொரு வகையில் தொடர்பு இருக்குமென் பதை வலியுறுத்துவர்.
*.ஒரு முழுச் சமூகத்தினுலோ அல்லது ஒரு சமூக அமைப்பின் பெரும் பிரிவுகளாலோஏற்றுக்கொள்ளப்படும் , கருத்தமைதிகள் (idea-systems), நீண்டகாலச் செல்வாக்கு ஊடாட்டங் களின் வழியாக வருவனவாகும். அத் தகைய செல்வாக்குகள், மத, நல் லொழுக்க, அறப் பெறுமானங்களை எடுத்தோதுகின்றனவும், அவற்றைப் பேணுவனவுமான பணிகளுடன் தொடர்புடைய குழுக்களை உள்ளடக்கி நிற்பனவாக விருக்கும். அத்துடன் (அச்செல்வாக்குகளுக்குள்) பொருளா தார, அரசியற் குழுக்களும், மேலோங் கிய அதிகாரமுடைய குழுக்களும் இடம் பெறும்.
LziS LLLL SLLLLLL 0zLL LLLLL LL LLL SLLL L S MzS S S AA M MMM M M AS S LLL AAS LLLLL LLLz
மேலும், எந்தவொரு மத ஒழுக் கக் கோட்பாடும், அதன் மிகத்

45
தூய்மையான, மூல நிலையிற்கூட, அக் காலத்தில் நிலவும் சமூக, பொருளா தார, அரசியல் நிலைமைகள் பற்றிய அபிப் பிராயங்களுடன் எவ்வித தொடர்புமற்றனவாக வளர்த்தெடுக் கப்பட முடியாது"
(h: ué. 41 · 42)
தமது இக்கூற்றுக்கு மோசஸ், புத்தர், முகம்மது, கிறிஸ்து, கல்வின் முதலிய எவருமே புறநடையல்லர் என எலிஸபெத் நொட்டிங்காம் எடுத்துக் கூறுவர். எனவே நாவலரும் இவ்விதிக்குக் கட்டுப் படுதல் இயல்பே, நாவலரை ‘ஐந்தாங் குரவர்' எனக்கொள்ளும் மரபிலேயே இச் சமூகவிளக்கம் தொக்கு நிற்கின்றதென லாம். சைவத்திற்கு "ஆபத்து"த்தோன் றிய காலங்களில் தோன்றிய முதல் நான்கு குரவர்கள் போன்று இவரும் சைவத்துக்கு ஆபத்துத்தோன்றிய ஒரு கட்டத்திலே தோன்றி, சைவத்துக்குப் புத்துயிர் அளித் தாரென்பதே அதன் உட்கருத்தாகும். ஆயினும் சைவத்துக்கு ஆபத்து ஏற்பட்ட ஒவ்வொரு காலகட்டத்தினதும் வெவ்வே ருன சமூக நிலைமைகளை நாம் மனதிற் கொண்டோமானல், ஒவ்வொருவரும், தத்தம் காலத்து நிலைமைக்கேற்ப, கோட் பாடுகளுக்கேற்பச் சைவத்தைப் **பாது காத்தனர் ** எனக் கொள்ளலாம். நாவ லரைப் பொறுத்தவரையில், அவர், யாழ்ப் பாணத்து மேனிலைச் சமூகக் குழுவைப் பாதுகாப்பதன் மூலமே, சைவத்தைப் பாதுகாக்க முடியுமென்று நம்பினர் என் பதும் அவ்வாறு தொழிற்பட்டாரென் பதும் தெட்டத் தெளிவாகின்றது, அதா வது பாரம்பரிய அமைப்புக்குள் நவீன மயப்பாட்டை இயைத்துக்கொண்டார்.
சமூக அதிகாரத்துக்கும் தத்துவத் தோற்றத்துக்குமுள்ள தொடர்பு பல அறிஞர்களால் வற்புறுத்தப்பட்டுள்ளது. சோழர் காலச் சமூக அமைப்புக்கும் முக் கியமாகச் சமூக அதிகாரத்துக்கும், சைவ சித்தாந்தத்திற்குமுள்ள உறவினைக் கைலா சபதி எடுத்து நிறுவியுள்ளார்(கைலாசபதி: 1967). படிநிலைப்பட்ட சமூக அதிகாரம்

Page 56
நிலவும் ஒரு சமூக அமைப்பில் சைவசித் தாந்தம் இயைபுறுகின்ற முறைமை அவ் வாய்வு வழியாகத் தெரிய வருகின்றது. பாரம்பரியச் சமூக அதிகார உடைவை விரும்பாத நாவலரும் சைவசிந்தாந்தத் தைத் தமது மத விளக்கக் கோட்பாடாகக் கொண்டிருந்தமையை நாம் அவதானிக் கத் தவறலாகாது.
இவற்றை அன்று நிலவிய சமூக உறவு களின் அடிப்படை கொண்டு சமூக அதிகா ரத்தை விளக்க முனையும்பொழுதுதான், qpairaortřelů9 - “Morally", " "Moral requirements' GrairuGra ibabar Feyp3; அடிப்படை துல்லியமாகின்றது.
ஆனல் இன்னுெரு வரலாற்றுண்மை யையும் நாம் மறந்துவிடலாகாது. நாவலர் சைவத்தைப் பேணுவதற்கான கல்விச் சாதனமாக முதற்கொண்டது தமிழ்ப்பாட சாலையையே, ஆனல் ஆங்கில ஆட்சி வழங் கிய உத்தியோக ஊழிய வாழ்க்கைக்கு அத்தகைய பாடசாலைகள் வாயில்களாக அமையா என்பதை யுணர்ந்த அவ்வர்க்கம் நாவலரை ஊக்குவித்தும் போற்றியும் நின்ற அதேவேளையில், அப்பாடசாலை களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வில்லை. அவர் 1872இல் தொடங்கிய ஆங் கிலப் பாடசாலைக்குத்தானும் தங்கள் பிள் ளைகளை அனுப்பவில்லை. 1876இல் அதுவும் மூடப்படவேண்டியதாயிற்று. இங்கு தலை வனின் இலட்சியம் அவனது குழுவின் லெளகீக நோக்கினுல் தோற்கடிக்கப் படு வதையும் காணலாம்.
நாவலரின் பிரக்ஞை, நிலைப்பட்ட அரசியல் நடவடிக்கை அவரது இறுதி வருடத்திலேயே எடுக்கப்படுவதையும் நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. பொன்னம்பலம் இராமநாதனுக்கு அவர் அளித்த ஆதரவு காரணமாக, நாவலர் இயக்கம் (அதாவது மதநிலை வழி நின்று சமூக அதிகாரத்தைப் பேணுதல்) அரசியல் இயக்கமாக மாறுகின்றது. இராமநாதன் யாழ்ப்பாணத்துத் தமிழ்மக்கள் சம்பந்த மாக எடுத்துக்கொண்ட முயற்சிகளும்

கார்த்தி கேசு வே த்தம்பி
நிலைப்பாடுகளும் ஆராயப்படும்பொழுது தான் இவ்வுண்மை புலனகும்.
ஆயினும் இதுவரை ஓரளவு கோடி யிட்டு மாத்திரமே காட்டப்பெற்ற சமூக நிலைநின்ற நோக்குக்கொண்டு பார்க்கும் பொழுது, நாவலரின் மத, சமூக இயக் கத்தின் வன்மையையும் வரையறைகளை யும் காணக் கூடியதாகவுள்ளது.
நாவலர் 1879 இல் மறைந்தார்.
இந்தியாவில், பிரித்தானிய ஆட்சி யின் தாக்கத்தால் இந்துக்களிடையே ஏற் பட்ட மத, சமூக சீர்திருத்தங்க்ளின் முதற் கட்டம் 1880இல் முடிவுற்றதாகக் கொள் ளப்படுகின்றது. பிரித்தானிய இந்தியா வின் முதற்கட்ட இந்து இயக்கங்கள் பற்றி ஜோர்டன்ஸ் கூறுவது, யாழ்ப்பாணத்தில் 1879 வரை நாவலரால் நடத்தப்பெற்ற இயக்கத்துக்கும் பொருத்தமாகவே யுள் ளது.
* 1880 வரையிலான முதலாவது கட் டத்தில், சமூக சீர்திருத்தம், ஐரோப் பிய செல்வாக்குக்குட்பட்டகுழுக்களைச் சேர்ந்தோர், தங்களாலும் தங்களைப் போன்ருேராலும் அனுபவிக்கப்பட வேண்டியிருந்த இன்னல்களைச் சமா ளிப்பதற்கான ஒரு விருப்பின் காரண மாகவே பெரும்பான்மையும் தோன் றிற்று. பெரும்படியான மக்கள் பற் றிய அக்கறையோ, அல்லது தாம் (அக்காலத்தில்) புதிதாகக் கண்ட றிந்து கொண்டிருந்த சமுதாய நியதி களுக்கும் அறப் பெறுமானங்களுக்கும் ஏற்ப வாழ்க்கையை மீளமைப்புச் செய்வதற்கான விருப்போ இருந்த தாகத் தெரியவில்லை. தங்களுடைய கருத்துக்களைத் தெளிவு படுத்துவதி லும் அவற்றைத் தமக்கு அண்மித் தோராகவிருந்த புத்திஜீவிகளுக்குப் பிரசாரம் செய்வதிலுமே கவனஞ் செலுத்திநின்றனர். எனவே இவ்வா முகத்தானே இம்முதற்கட்டம், நிறு வன அமைப்புக்களிலும் பார்க்க பிரசா

Page 57
சமூகவியல் நோக்கில் நாவலர்
ரத்திற் கவனஞ் செலுத்தும் ஒரு காலகட்டமாக, சீர்திருத்தவாதி முற் றிலும் தனது குழுபற்றியே அக்கறை கொண்டிருந்த ஒரு காலகட்டமாக, அத்துடன் அரசியல் அக்கறை அப் பொழுதுதான் முளைவிடுங் காலமாக
சான்ருதாரங்கள்
950.
1951.
1954.
1955. 1968.
1969.
1972.
1974.
1975.
1977.
1978.
፤ 979.
Sivapathasundaram S., – Arumug கைலாசபிள்ளை த. (பதிப்பாசிரிய
Nortingham, Elizabeth K. - Reli கைலாசபிள்ளை த. -- ஆறுமுகநாவ
Parsons, Talcolt (ed.) Knowledge Lectures, Washington.
Denizov V. Historical Materialisr
Osipov G. Seciology, Moscow. சோமகாந்தன், - இலங்கைக் கலா கைலாசபதி க. - அஞ்சலி, வட
Thanajeyarajasingham S. - The Colombo.
Jordens J. T. F. in a Cultural Hi
கைலாசபதி க. - பழந்தமிழர் வா
பதிப்பு).
சிவத்தம்பி கா. - ஈழத்தில் தமிழ்
Sivathamby K. Hindu Reaction zation, Social Seience Review, Vo
திகதியற்றவை
Small W. J. T. (ed.) A History Colombo.
பிளெகானவ், கி, வ.: வரலாற்றில் ஆர். கே. கண்ணன்), மொஸ்கோ.

47
மேலும், சமூக சீர்திருத்தமென்பது மத சீர்திருத்தத்தினை வன்மையாக அடித்தளமாகக் கொண்டேயிருக்க வேண்டுமென்றும் பொதுவாகக் கரு தப்பட்ட ஒரு காலகட்டமாக அமைந் திருந்தது".
a Navalar, Jafna.
ர்), - ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு சென்னை (2ஆம் பதிப்பு).
gion and Society, New York. லர் சரித்திரம், சென்னை (4ஆம் பதிப்பு). and Society, Voice of America Forum
n (ed. Glazerman and Kursanov), Moscow.
சாரப் பேரவையின் தமிழ் இலக்கியவிழா மலர் இலங்கைச் சிறப்பிதழ். Educational Activities of Arumuga Nayalar,
story & India (ed A. L. Basham), Oxford. ாழ்வும் வழிபாடும், சென்னை (இரண்டாம்
இலக்கிலும், சென்னை.
o Christian Proselytization and Westerni... , No. I, Colombo.
of Methodist Church in Ceylon (1814-1864)
தனிநபர் வகிக்கும் பாத்திரம் (மொ. பெ.

Page 58
நாவலர் இல பணியும்
க. கைலாசபதி
மனிதன் படைக்கும் ஏனைய பொருட் களைப் போல இலக்கியமும் - காலதேச வர்த்தமானங்களுக்குக் கட்டுப்பட்டது. அதே வேளையில் வேறு படைப்புக்களைப் போலன்றி இலக்கியம் காலத்தை வென்று நிற்கவும் காண்கிருேம். தமது காலத்து உள்ளியல்புகளை உறுதியாகப் பிரதிபலிக் கும் இலக்கியங்களே காலத்தைக் கடந்து நிற்கும் ஆற்றலையும் பெற்று விடுகின்றன. மேலெழுந்த வாரியாகப் பார்க்குமிடத்து இது பொருந்தாவுரையாகத் தோன்றக் கூடும். ஆயினும் கூர்ந்து நோக்கினல் முரணுரை போலத் தோன்றும் மெய் யுரை என்பது புலனுகும். ஹென்ரி மற் றிஸே (1869-1954) என்ற பிரசித்தி பெற்ற பிரெஞ்சு ஓவியர் ஒரு சந்தர்ப் பத்திலே பின்வருமாறு கூறினுர்:
"கலைகள் யாவற்றிலும் அவை உருவாகிய வரலாற்று யுகத்தின் முத்திரை பொறிக்கப் பெற்றிருக்கும். ஆளுல் சிறப்பு மிக்க ஆக்கங்களில் அம்முத்திரை மிகவும் ஆழமாகப் பதிக்கப் பெற்றிருக்கும்."
காலத்துக்குக் கட்டுப்பட்டும் காலத் தைக் கடந்தும் இயங்கும் இரு பண்புகள் கலை இலக்கியத்துக்கு இருப்பதனலேயே அவைபற்றிக் காலந்தோறும் வாதப்பிரதி வாதங்கள் நிகழ்கின்றன.

க்கிய நோக்கும்
இலக்கியத்தின் நித்தியத்துவம் பற்றி ஒவ்வொரு தலைமுறையிலும் முடிவற்ற சர்ச்சைகள் நிகழக்கூடுமாயினும், அதன் அடிப்படைப் பண்பு ஒன்று உண்டு. அது தான் இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கு முள்ள பிரிக்கவியலாத பிணைப்பு ஆகும். ஆங்கிலத் திறனுய்வாளர் ஒருவர் இரத் தினச் சுருக்கமாய்க் கூறியிருப்பது நினை வுக்கு வருகிறது.
"இலக்கியம் சமுதாயத்தின் ஓர் அமிசம். அது சமுதாயத்தின் மகோன் னதமான - ஆழமிக்க - விஷயங்கள் பலவற்றை ஒட்டியிணைத்து ஒன்று படுத்தி அவற்றுக்கு உரிய வடிவங் கொடுத்து விளக்கமும் அளிக்கிறது. அதனை ஒரு சமுதாய நிறுவனம் என்றும் குறிப்பிடலாம். கலையாக்க மரபுகள் விழுமியங்கள் என்பனவற்றின் களஞ் சியமாகவுள்ளன. அதிலே கலைஞர் களும் பொதுமக்களும் சங்கமிக்கின் றனர். அதனல் மகத்தான தொடர்பு சாதனமாகவும் அது அமைந்துவிடு கிற்து. நமது விருப்பார்வம், கற்பனை ஈடுபாடு இவற்றின் வெளிப்பாடாக வும் இருக்கிறது."
நமது கலாசார பாரம்பரியம் கடுஞ் சோதனைக்கு உட்பட்ட ஒரு காலகட்டத் திலே செயற்பட்ட ஆறுமுக நாவலர், தவிர்க்க இயலாதவாறு இலக்கிய

Page 59
நாவலர் இலக்கிய நோக்கும் பணியும்
உலகிலும் சஞ்சரித்தார். அன்றும் இன்றும் கலாசாரத்தின் முக்கியமான கூறுகளில் ஒன்ருக இலக்கியம் விளங்குகிறது என் பதை எவரும் மறுக்கவியலாது. எனவே தாவலரது இலக்கியக் கொள்கை, நடை
முறை, செல்வாக்கு என்பனவற்றை ஆராய்தல் அவசியம் வேண்டப்படுவ தொன்ருகும்
இருபதாம் நூற்ருண்டிலே ‘இலக்கியம்’ என்ற சொல் வெகு பரவலாகப் பயன் படுத்தப் படுகின்ற அதே வேளையில் அதன் வரைவிலக்கணத்திலும் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன். அதனுலேயே ** எது இலக்கியம் ??" என்னும் வினு முன்னெக் காலத்திலும் பார்க்க இந் நூற்ருண்டிலே அடிக்கடி கேட்கப்படுகிறது. இலக்கியம் தோன்றிய காலம் முதல் திறனுய்வும் வாதங்களும் இருத்து வந்துள்ளபோதும் எமது நூற்றண்டிலிருப்பதைப் போன்று பன்முகப்பட்ட-காரசாரமான இலக்கிய சர்ச்சைகள் முற்காலங்களில் இருந்தன என்பதற்கில்லை. பரந்துபட்ட பொதுக் கல்வி, வெகுசன சாதனங்கள், சனநாயக உரிமைகள் முதலியன இலக்கிய சர்ச்சை களுக்குப் புதிய வாய்ப்புக்களையும் பரிமா ணங்களையும் உண்டாக்கியுள்ளன எனலாம்.
இதிலொன்றும் ஆச்சரியப்படுவதற் கில்லை. இலக்கியத்தை உள்ளடக்கும் கல்வியை எடுத்துக் கொண்டால் அதனது பண்பு, பன்னி ஆகியவற்றைப் பற்றிய கருத் துக்கள் காலத்துக்குக்காலம் மாற்றம் பெற்றிருப்பதைக் காண்கின்ருேம். ஆன்ம ஈடேற்றம், நல்லொழுக்கம், குடியியல் உணர்வு, நாட்டு முன்னேற்றம் முதலிய பல்வேறு கருத்துப் படிவங்கள் காலத்துக் குக் காலம் கல்வியின் குறிக்கோளாகக் கூறப்பட்டு வந்துள்ளன. பிளேட்டோவி லிருந்து பியாஜேவரை கல்வியைப்பற்றி எழுதியோர் தத்தம் காலத்துச் சூழ் நிலை களாற் போதிக்கப்பட்டு வெவ்வ்ேறு கோணங்களிலிருந்து கல்விக்கு விரை விலக்கணமும் விளக்கமும் கூறியிருக்கின் றனர்,
5
 

49
அறவியலை ஆதாரமாய்க் கொள்ளும் நோக்குக் கொள்கையாளர், "தருமமும், அர்த்தமும் காமமும் மோட்சமடைதலு மாகிய நான்கும் நூலால் (இலக்கியத் தால்) எய்தும் பிரயோசனம்" என்பர் ஆஞல் அழகுச் சுவையையே இலக்கியத் தின் பிரதான நோக்கமாகக் கொள்வோர் **இலக்கியத்துக்குப் புறநோக்கம் எதுவும் இல்லை என்றும், அது தன்னளவில் தானே நிறைவுடையதொன்று என்றும்,கலை கலைக் காகவே' என்றும் உறுதியாகக் கூறுவர். **உயிர்பெற்ற தமிழர் பாட்டு’ என்ற கவிதையில் புராணங்களைப்பற்றிக் கூற வந்த பாரதியார்,
ஒன்றும்ற் ருென்றைப் பழிக்கும் -
ஒன்றில்
உண்மையென் ருேதிமற்
ருென்றுபொய் யென்னும் எனக் கூறினர். இலக்கிய சர்ச்சைகளி லும் இத்தகைய ஒரு நிலையைக்காணலாம். உதாரணமாக, ஒர் இலக்கியப்படைப்புக் குரிய வாசகரின் எண்ணிக்கையைக் கொண்டே அதன் தரம் குறித்து மாறு பட்ட மதிப்பீடுகள் தோன்றலாம். 'பல் லாயிரக்கணக்கான வாசகரைக் கவரக் கூடிய ஒரு நூல் இயல்பாகவே இலக்கியத் தரம் அற்றது: அது பாமர ரஞ்சகமானது. ஆகையால் அதிலே இலக்கிய "நயம்" எதுவும் இருக்கவியலாது" என்பர் ஒரு சாரார். பல்லாயிரக்கணக்கான வாசகர் களைப் பெற்றிருந்த "கல்கி'யின் எழுத்துக் களைப்பற்றிக் கநா.சுப்பிரமணியம்போன்ற விமர்சகர்கள்
'இன்று தமிழன் மூவரை இலக்கியாசி ரியர்கள் என்று ரவிக்கிருன்: துப்பறியும் நாவல்கள் எழுதுவதில் பூரீமான் group ஸாமி ஐயங்கார், சமூக சீர்திருத்த நாவல் கள் எழுதுவதில் பூரீமதி வை. மு. கோதை நாயகி அம்மாள்.சிறுகதைகள் கட்டுரைகள் முதலியின எழுதுவதில் பூரீமான் கல்கி. பூரீமான் கல்கி இந்த நாவலால் பொது ஜன்த்தின் மனத்தைத் கவர்ந்துவிட்டார்.

Page 60
St)
இந்த்க்கவர்ச்சிக்கு முக்கியகாரணம் அவ ருடைய வசன நடை. அங்கங்கே நிகழும் ஹாஸ்யப் பேச்சுக்களும் சம்பவங்களும் பொதுஜனத்துக்கு எளிதில் புரியக்கூடிய தாக, பொதுஜனத்துக்கு அடிக்கடி பழக்க மானதாகவும் இருக்கின்றன . மனித சுபாவத்தை , தொடர்கதை படிக்கும் சுபாவம், தொடர்கதை படிக்காத சுபா வம் என்று இரண்டாகப் பிரிக்கலாம். * மேலே என்ன, "உம், உம்" என்று கேட் டுக்கொண்டு போகக்கூடிய "குழந்தை' உள்ளங்களை உத்தேசித்தே தியாகபூமி எழு தப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். நாவல் கதையாக ரஸிக்கக்கூடிய தியாக பூமியை நாவல் இலக்கியமாக அங்கீகரிப் பது சிரமம்தான்."
ஏறத்தாழ முப்பத்து நான்கு வருடங் களுக்கு முன் கல்கியின் தியாகபூமி திரைப் படமாக்கப்பட்டிருந்தசமயம் சூறவளி என் னும் இலக்கிய சஞ்சிகையில் (11-6-1939) அதன் ஆசிரியர் க. நா. சு. எழுதிய விமர் சனம் ஒன்றிலேயே மேற்காணும் பகுதி கள் இடம்பெற்றன. ஓரளவு இலக்கியப் பரிச்சய்முள்ளவர்க்கும் இப்பகுதியிலே பொதிந்துள்ள குத்தலும், கிண்டலும் புலனுகாமற் போகா. 'பொதுஜனத்துக்கு எளிதில் புரியக்கூடியதாக' இருந்த கார ணத்தினலேயே கல்கியின் ஆக்கத்தைக் கிண்டல் செய்தார் விமர்சகர். அதாவது ஜனரஞ்சகமும், இலக்கியத்தரமும் உட னெத்தியல முடியாதவை என்பது இத் திகையோரின் பிரதான வாதமாகும்.
இதற்கு நேர்மாருன கருத்தோட்ட மும் உண்டு. உதாரணத்தேடி வெகுதூரம் போகவேண்டியதில்லை.பாஞ்சாலி சபதம் முகவுரையில் பாரதியார் எழுதினர்,
' எளிய பதங்கள், எளியநடை,
எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொதுஜனங்கள் விரும்பும் மெட்டு,. இவற்றினையுடைய காவிய
மொன்று தற்காலத்திலே செய்துதரு வோன் நமது தாய்மொழிக்குப் புதிய

க. கைலாசபதி
உயிர் தருவோணுகின்றன். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு விளங் கும்படி எழுதுவதுடன், காவியத்துக் குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும்.”*
இக்கூற்று முந்தியதற்கு முரணிசை வானது என்பது வெளிப்படை. ஜனரஞ் சகத்தன்மையே இலக்கியத்தரத்தின் அடிப் படைகளில் ஒன்ருய்க் கொள்ளப்படுகிறது பாரதியார் கூற்றில் உண்மையில் இவ் விரண்டும், அதாவது இலக்கியச்சிறப்பும், ஜனரஞ்சகத்தன்மையும் ஒன்றுக்கொன்று முரணுகவோ, ஒன்றையொன்று விலக் குவதாகவோ இருக்க வேண்டுவதில்லை. ஆனல் இலக்கிய உலகில் கடந்த சில கால மாக இப்பிளவு இருந்துவருகிறது. நமது சமுதாயத்திற் கைப்பணிக்கும், கலைக்கும், உடலுழைப்பாருக்கும், புத்தி ஜீவிகளுக்கும் பேதமும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதைப் போலவே இதுவும் சமுதாய அமைப்பிற் காணப்படும் - சிற்சில முரண்பாடுகளின் பிரதிபலிப்பேயாகும்:
உலக இலக்கிய வரலாற்றை நோக் கினுல் இலக்கியம் என்பது உணர்ச்சியின் வெளிப்பாடே “பயிற்சியினுலன்றி இலக் கிய கர்த்தாவினது பாவனையினலும், அவனையும் மீறிய உள்ளார்ந்த உணர்ச்சி வேகத்தினுலுமே கவிதை முதலானவை படைக்கப்படுகின்றன என்னும் கோட் பாடு தோன்றியதையடுத்தே இப்பிளவு முனைப்பாகத் தென்படலாயிற்றென்பது புலணுகும், :::... -
இலக்கிய உலகில் நிலவும் பாகுபாட் டையும் பிளவையும் சிற்சில விகற்பங்களு டன் வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வகையிற் கூறிப்போந்தனர். உதாரண மாக டி-குயின்ஸி என்பவர் இலக்கியத்தை "ஆற்றல் இலக்கியம்(Literature ofPower), splay ga)ééuth Literature of Knowledge) என இருவகைப்படுத்திக் கூறினர். பொசாங்கே (Bosanquet) என்பவர் இலக் கியத்திற் காணும் சுவையையும் அழகை

Page 61
நாவலர் இலக்கிய நோக்கும் பணியும்
யும் வேருெரு விதத்திற் பாகுபடுத்துகிருர். மெல்லழகு (Easy beauty), வல்லழகு (difficult beauty) 6Tairug rgyalpig Lugt. பாகும். இப்பாகுபாட்டைப் பயன்படுத் தும் பேராசிரியர் வி. ஐ. சுப்பிரமணியம் மேல்வருமாறு எழுதுகிருர்,
** எளிதில் தென்படும் இன் னுேசை, உவமைப்பொலிவு, கதைப் பொருள் ஆகியவற்ருல் துலங்குவது மெல்லழகு. இது நூலைப் படித்தவுடன் மிக எளிதாகப் புலப்படும். ஆய்வோ சிந்தனையோ இதனை அறியத் தேவை யில்லை. இதிலிருந்து சற்று வேருனது வல்லழகு. இது நூலில் மறைந்து கிடப் பது எளிதில் விளங்காதது. வெண் ணெயைக் கடைந்தெடுப்பது போல் அலசிப் பார்த்தபின் இலக்கியத்தி லிருந்து துலங்குவது. துன்பியல், அருவம், பொருத்தமின்மை, இணைவு முதலியவற்ருல் உருவாவது, இலையால் மறைப்புண்ட கனி போன்றது.*
(இலக்கியப் பேழை, அறிமுகம் பக். 6 )
சற்று மேலே நாம் எடுத்தாண்ட மேற் கோளில் க. நா. சுப்பிரமணியம் "கல்கி" யில் மெல்லழகு மாத்திரம் உண்டென்று இளக்காரமாகப் பேசியதைப்பார்த்தோம். அவ்விடத்தில் வல்லழகுக் கொள்கை யையே இலக்கியத்திற் சிறப்பம்சமாக அவர் வற்புறுத்துகிறர் என்று நாம் கருத லாம். ‘ஒன்று மற்ருென்றைப் பழிக்கும்" நிலைமை இது. -
மேலே எடுத்துக் காட்டியிருப்பன எமது காலத்து இலக்கிய நிலைமையின் சிற்சில அம்சங்களாகும், ஆற்றலிலக்கியம் அறிவிலக்கியம், மெல்லழகு - வல்லழகு, ஜனரஞ்சகம். சார்பற்ற கலையார்வம் என்பனபோன்ற பாகுபாடுகளை நாவலர் எண்ணியுமிருக்க மாட்டார். எனவே தான் நாவலர் நிலைப்பாட்டினை விளங்கிக் கொள்வதற்கு எமது காலத்துப் பிரச்சின் களைச் சுருக்கமாகவேனும் குறிப்பிட் வேண்டியதாயிற்று

5篮
ஒருதாரணங் காட்டுவோம். இரு பதாம் நூற்றண்டிலே குறிப்பாக " மறு மலர்ச்சித் தமிழிலக்கியம் வளர்ச்சியுற்ற காலப் பகுதியில் டி-குயின்ஸியின் ஆற்றல் இலக்கியம், அறிவிலக்கியம் என்னும் பாகு பாடு பலராற் கைக்கொள்ளப்பட்டு வந் துள்ளது. இப்பாகுபாட்டினை முதன் முத லில் செய்த டி-குயின்ஸி 1848இல் மேல் வருமாறு ஒரு கட்டுரையில் எழுதினர்.
"அறிவிலக்கியத்தின் பணி போதிப் பதாகும். ஆற்றலிலக்கியத்தின் பணி உணர்ச்சியூட்டுவதாகும். முன்னது ஒரு சுக்கான்; பின்னது ஒரு துடுப்பு அல்ல்து கப்பற்பாய் எனலாம்"
அலெக்ஸாண்டர் போப் என்ற ஆங் கிலக் கவிஞன் பற்றி டி-குயின்ஸி (17851859) இவ்வாறு எழுதியவை ஏறத்தாழ அதே காலப்பகுதியில் இந்நாட்டில் உயிர் வாழ்ந்த நாவலருக்குப்புதிராகவே தோன் றியிருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. டி குயின்ஸி போன்ருேர் (இலக்கியத் திற ஞய்வாளர்) இத்தகைய நுண்ணிய பாகு பாடுகளை வகுத்திருப்பினும் இன்றுகூட பொதுப்படையாக நோக்குமிடத்து, எழு ~தப்பட்டதெல்லாம் ஆங்கிலத்தில் Literature என்றே வழங்கப்படும். உதாரண LDrds “Have you any literature en the subject?” என்னும் வினவில் இலக்கியம் என்னும் சொல், "பாட்டு, உரை எவை யாயினும் ஒரு பொருள்பற்றி விரித்தெழு தப்படும் அனைத்தையும்" குறிப்பதாகவே யுள்ளது. நாவலரைப் பொறுத்தவரையில் தேவாரத்தையும் திருக்குறளையும் அடிப் படையில் இலக்கியமாகவே கொண்டார். ஆஞல் தற்கால இலக்கிய விமர்சகர்களில் ஒருவரான க. நா. சு. சில காலத்திற்கு முன் திருக்குறள் இலக்கியமன்று அற நூலே என்று ஒரு வாதத்தைக் கிளப்பி யிருந்தார். க. நா. சுப்பிரமணியத்தை விதந்துகூற வேண்டிய அவசியமில்லை. நவீன இலக்கிய விம்ர்சகர்கள் பலர் இக் கருத்தையுடையவராகவே காணப்படுகின் றனர். உதாரணமாகப் புதுமைப்பித்தன்

Page 62
}
கட்டுரைகள் என்னும் நூலிலே ‘சமயத் தையும் கடத்த கலை" என்று மகுடமிடப் பட்ட கட்டுரையில்,
*" தற்காலத்திய பண்டிதர்கள் இலக்கியம் எது என்று கிவனிக்க முடி யாமல், எல்லாவற்றையும் புகழ்ந்து கொண்டு இடர்படுவதற்குக் காரணம் இலக்கியம் என்ருல் என்னவென்று அறியாததுதான்.
இவர்கள் ஒழுக்கத்தையோ, தர் மத்தையோ அல்லது மதத்தையோ பற்றிக் கூறுவது அதாவது அணியலங் காரங்களுடன் கூறுவது எல்லாம் கவிதை என்று கூறி இடர்படுவதின் காரணம். இதுதான். கவிதையைப் போதனைக்குரிய கருவியாக உபயோ கப்படுத்தும்வரை அது கவிதையாக இருக்காது. அதன் ரசனை கெட்டுவிடு கிறது. ஒழுக்கமோ, தர்மமோ, அல் லது மோட்சமோ இவற்றிற்காக எழுதப்படும் கவிதை கவிதையாகாது. ஒழுக்கமும், தர்மமும், மோட்சமும் கவிஞனது உள்ளத்தில் ஊறி, இருத யத்தின் கனிவாக வெளிப்படும் இசை தான் கவிதையாகும். ??
என்று அழுத்தம் திருத்தமாகக் கூறும் பொழுது திருக்குறள் போன்ற ஒரு நூல் இலக்கியமா என்ற ஐயம் இக் கூற்றைப் படிப்போர்க்கு ஏற்படாமற் போகாது. "இருதயத்தின் கனிவாக வெளிப்படும் இசைதான் கவிதை" என்று புதுமைப் பித்தன் மூடிவாகக் கூறுகையில் "ஆற்ற விலக்கியத்தின் பணி உணர்ச்சியூட்டுவ தாகும்’ என்று டி குயின்வி கூறியதே நமக்கு நினைவுக்கு வரும். இவையெல்லாம் இலக்கியம் பற்றி இந்நூற்ருண்டிலே எழுத் துள்ள சில முரண்பாடுகளையே எமக் குனர்த்துகின்றன. திருக்குறள் போன்ற அறவியற் சார்புடைய நூல்தான் போகட் டும். ஆற்றலிலக்கியக் கொள்கையைப் பீடிவாதமிசகவும் நெகிழ்வற்ற முறை

க. கைலாசபதி
யிலும் பற்றிக்கொள்பவர்கள் சங்க மரு விய காலத்து.நூல்களை மட்டுமன்றி, சான் ருேர் செய்யுள்களையுமே உணர்ச்சியூட் டும் பண்பு அற்றன என நிராகரிப்பதைக் காணலாம். கவிதையில் மெல்லழகை வற் புறுத்தி வந்த டி. கே. சிதம்பரநாத முத லியார், " " கவியும் உருவமும் " என்னும் கட்டுரையில் (இதய ஒலி பக். 184) எளிமை இல்லை என்ற காரணத்துக்காகப் புறநா ணுாற்றுப் பாடல்களை அலட்சியப்படுத்து கிருர். இவ்வடிப்படை நோக்கிலேயே புதுமைப் பித்தன் (மேலே குறிப்பிட்ட கட் டுரையில் ) இவ்வாறு கூறுகிருர்,
*" கவிதையின் அமைப்பும் உணர்ச் சியும்தான் கவிதையின் உரைகல். தமிழ்க்கவிதையை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று பழைய இலக்கிய மான சங்க இலக்கியங்கள்; வெறும் யதார்த்த விஸ்தரிப்புக்கள். புகைப் படக் கவிதை என்று கூறிவிடலாம். அதற்குப்பிறகுதான் கவிதையின் உண் மையான வளர்ச்சி கம்பன்வரை உள்ள பெருங்கனவுகள்"
கட்டுரையாசிரியர் குறிப்பிடும் இரு பிரி விலும் அவரது தனிப்பற்று எப்பிரிவின் மீதுள்ளது என்பது வெளிப்படை. இலக் கியத்துக்கு ஒரு தலைச் சார்பான வரை விலக்கணம் கூறுவதன் விளைவாகச் சான் ருேர் செய்யுள்களையே கண்மூடித்தனமாகக் கைவிடும் பரிதாபகரமான நிலைமை ஏற் படுகிறது. எமது காலத்து இலக்கிய முரண் பாட்டுக்கு இவ்வவலநிலையை விட வேறு சிறந்த உதாரணம் தேவையில்லை.
இவற்றையெல்லாம் அவதானிக்கும் போதுதான், நாவலரது இலக்கிய நோக் கும் போக்கும் குறிப்பிடத்தக்கனவாய் எமக்குத் தோன்றுகின்றன.ஆறுமுகநாவல ரவர்கள் பிரபந்தத்திரட்டு முதற்பாகத் திலே முதலில் இடம்பெற்றுப் பின்னர் பதிப்பாளர்களாற் பாலபாடம் நான்காம் புத்தகத்திற் சேர்க்கப்பட்டுள்ள ' தமிழ் புலமை" என்னும் வியாசத்தில் மேல் வரும் பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன.

Page 63
நாவலர் இலக்கிய நோக்கும் பணியும்
"திருவள்ளுவர் குறள், நாலடியார் முதலாகிய நீதி நூல்களைப் பதப் போரூளுடனே கற்றறிந்து கொள்க.
தேவாரம், திருவாசகம், திரு விசைப்பா, திருப்பல்லாண்டு என்னும் அருட்பாக்களைப் பண்ணுடன் ஒதவும் சுத்தாங்கமாக ஒதவும் பழகிக் கொள்க.
பெரியபுராணம், திருவிளையாடற் புராணம்,திருவாதவூரடிகள் புராணம், கந்தபுராணம் உபதேச காண்டம், கோயிற்புராணம் காசி காண்டம், கூர்ம புராணம், சேதுபுராணம், பதி, னேராந்திருமுறையிற் பிரபந்தங்கள். குமரகுருபர்சுவாமிகள் அருளிச் செய்த பிரபந்தங்கள் முதலாகிய இலக்கியங் களை ஆராய்ந்தறிக.
திருவள்ளுவர் குறள் பரிமேலழக ருரை, திருச்சிற்றம்பலக் கோவையார் நிச்சிஞர்க்கினியருரை, கல்லாடம் நச் சிஞர்க்கினியருரை என்பனவற்றைக் கற்று, இடைவிடாது பலகாலும் உளங்கொளப் பயிலுக. .இலக்கணங்களைக் கற்றறிந்து தாம் கற்ற இலக்கியங்களில் இவ்விலக் கண விதிகளை அமைத்துப் பழகுக."
நாவலரவர்களின் இலக்கிய நோக்கை மட்டுமன்றி, அவரது கல்விக்கொள்கை யையும் தெளிவுபடுத்தும் வகையில் அமைந்த இவ்வியாசத்தில் முக்கியமான சில பந்திகளையே இங்கு எடுத்தாண்டுள் ளேன். புராணங்களைப் பற்றிக் கூறுகின்ற பகுதியில் அவற்றை இலக்கியங்கள்? எனச் சிறப்பித்திருப்பதும் கவனிக்கத்தக் கதே. சைவசமயச் சார்பு இருப்பினும், மதக்காழ்ப்புக்கு இடங்கொடாமல் நூல் களைக் குறிப்பிடுவதும் குறிப்பிடவேண்டிய் தொன்றே. இலக்கிய்த்தைக் கூறுபடுத் தாமல், முழுமையாக நோக்கும் தன் மையை இப்பகுதிகளிற் காண்லாம்.
புராணங்களைத்தானே பெரும்பாலும் *இலக்கியங்களாகக் கூறியுள்ளார் நாவ

s3.
லர் என்று. சிலருக்குத் தோன்றலாம்; அந்த ஐயம் நிகரமானதும் ஆகும். எனினும் தேவாரம், திருவாகக்ம் முத லிய அருட்பாக்களுக்கும், புசாண் இலக் கிம்சங்களுக்கும், உரைகளுக்கும் நுட்பமான வேறுபாடுகளை நாவலர் காட்டியிருக்கிருர் என்பதும் நுணுகி நோக்குவோர்க்குப் புல ஞகும். புராணங்களைப் பற்றி இவ்விடத் தில் ஒன்று கூறுவது பொருத்தமாயிருக் கும். வரலாற்று அடிப்படையிலே பார்க் கும்போது நாவலரவர்கள் புராணங்களைத் தனியே சமயநூல்களாக மாத்திரம் கரு தினர் என்று கூறவியலாது. தணிகைப் ເຫຼnei) பதிப்பாசிரியரான (1959) த. ச. மீஞட்சிசுத்தரம்பிள்ளை கூறுவது சிந்தனைக்குரியது.
'' . . . . . . . ..புராண இலக்கியங்கள் பெருங் காப்பிய வகையைச் சார்ந் தன. வடமொழியில் உள்ள புராண நடை வேறு, தமிழ் மொழியில் உள்ள புராண நடை வேறு. வடமொழியிலே உள்ள புராணங்கள் வரலாற்றை மட்டும் அறிவிப்பன. தமிழ்ப்புராணங் கள் வரலாற்றுடன்காவிய இலக்கணங் களையும் பெற்று விளங்குவன. வட மொழியில் காவியங்கள் தனியே பொருந்துவன. "
தமிழ்ப்புராணங்கள் அனைத்துக்கும் அபேதமாக இக் குறிப்புரை பொருந்தும் என நாம் கருதவேண்டியதில்லை. ஆயினும் "தமிழ்ப் புலமை என்னும் வியாசத்திலிே நாவலர் குறிப்பிடும் புராணங்களில் பெரிய புராணம், கந்தபுராணம், காஞ்சிப்புராணம், திருத்தணிகைப் புராணம் முதலியன இலக் கியத் தரத்திலும் உயர்த்து விளங்குகின் றண் என்பனத மறுப்பவர் இரார். அந்த விகையில் நாவலரவர்களின் அளவுகோல் இலக்கிய நயத்தையும் உள்ளடக்கியதாய் இருந்தது என்பது கூருமலே விளங்கும்.
நாவலர்மரபில் வந்த நா. கதிரைவேற். பிள்ளையை ஞானசிரியராகப் பெற்றத ஞல்ோ என்னவோ தமிழ்த்தென்றல் திரு வி. கலியாணசுந்தரஞர் நாவலர் குறிப்

Page 64
பிட்ட புராணங்ககளயே சிறந்த காவியங்க ள்ாக்க் குறிப்பிட்டிருக்கிருஷர்;
* முன்னத்'தமிழ்ப்பெரும் புலவ ரும் பாட்டுக் காவியப் பெருங்கோயில் பல அமைத்திருக்கிருர், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, ஐம்பெருங்காப்பியம் பெரியபுராணம், கம்பராமாயணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிப் புராணம், தேவாரம், திருவாசகம், திருவாய்மொழி, திருப்புகழ் முதலிய தமிழ்க்கோயில்களிருக்கின்றன. புரா -ணங்கள் முதல் முதல் நன்னுேக்கத் துடன் எழுதப்பட்டன. நன்னுேக்கத் துடன் எழுதப்பட்ட புராணங்களில் இயற்கை உண்டு பாட்டு உண்டு: இறை உண்டு அறம் உண்டு; ஒழுக்கம் உண்டு. அன்பு உண்டு; எல்லாம் உண்டு. புராணங்களின் உட்கிடக் கையை உணர்தல் வேண்டும் ".
(முருகன் அல்லது அழகு)
நாவலரவர்கள் இலக்கியம்பற்றிக் கொண்டிருந்த இசைவிணக்கமுடைய நோக்கு. அவர் மாணக்கரிடத்தும் வெவ் வேறு அளவில் காணப்படுகிறது. உதா ரணத்துக்கு, திருவாவடுதுறை ஆதீன மகாவித்துவானுயிருந்தவரும், நாவலரின் மாணவருமாகிய யாழ்ப்பாணத்து வட கோவை சபாபதி நாவலரையே எடுத்துக் கொள்வோம். இலக்கியவரலாற்றின் திருந் தாத - முன்னுேடிமாதிரி-என்று கருதத் தகும் வகையில் அமைந்த நூலொன்றை அவர் இயற்றினர் : தி ரா விடப் பிரகாசிகை (1889). "தமிழ் இலக்கிய இலக்கணசாத்திரமெய்வரலாறுகளையெல் லாம் இனிதுபட எடுத்துப்போதிப்பது" என்பர். தமிழின் தெய்வப் பழமை மரபி யல், இலக்கண மரபியல், இலக்கிய மர
பியல், சாத்திரமரபியல், ஒழிபியல் என ஐவகைப் பிரிவு பெற்று விளங்கும் அந்
நூலில் தமிழிலக்கியத்தை விரிந்த மனப் பான்மையுடனே விவரித்திருக்கிருர் ஆசிரி
யர். திருமுறையிலக்கியம். சங்க இலக்.
கியம், காவிய இலக்கியம், புராண இலக்

க. கைல்ாசபதி
கியம், இதிகாச இலக்கியம், பலவகைப் பிரபந்த இலக்கியம் எனப் பொருள் அடிப் படையிலும் வடிவத்தின் அடிப்படையிலும் இலக்கியங்களைப் பாகுபடுத்தியிருக்கிருர்.
சபாபதி நாவலர் வேதவழக்கைப் போற்றுபவர் என்ற முறையிலும், தேவா ரம் வேதங்களின் சாரம் என்ற நம்பிக் கையின் அடிப்படையிலும் "திருமுறை பிலக்கியங்கள். திருவருளோத்துக்களாதற் சிறப்புப்பற்றியும்? அவற்றின் வரலாற்றை முதற்கண் சொன்னுர். இன்று இது கால முரணுகத் தோன்றுவது இயல்பே. எனி னும் இலக்கிய நயத்தின் பெயரில் சங்க இலக்கியங்களையோ, சங்கமருவிய காலத்து நூல்களையோ விலக்கிவைத்தார் அல்லர்,
தமது சமய நம்பிக்கையின் காரண மாக, தேவார திருவாசங்களை முதலிலே விவரித்தபின் 'திருமால் திருவடிப் பத்தி ஞான வான்பயிர் வளர்த்தற்கு இன்றி யமையா' ஞாணுமிர்தமாம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை அடுத்துக் கூறி ஞர். அதையடுத்துச் சங்க இலக்கியத்திற் கும் திருமுறை இலக்கியத்திற்கும்இடையே அமைந்த திருக்குறள் வரலாற்றைக் கூறினுர்.
* காவிய இலக்கியம்" என்னும் மூன்ரும் பிரிவில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணி மேகலை, குண்டலகேசி, வளையாபதி, சூளா மணி முதலிய பேரிலக்கியங்களைக் குறிப் பிடுவதைக் காணலாம். ** இக் காவியங் கள் தொல்காப்பிய இயல்வழிபட்டு மேற் கூறிய சங்கத்தமிழ்ச் சொற்பிரயோகம் பெரும்பாலும் மருவி நவரசங்களுட் சில வும் பலவுந் தங்கண் அடங்கக்கொண்டு உலகவியல், நீதி, வைராக்கியம் முதலிய வைகளை நன்று அறிவுறுத்துவன” என் றும், சிந்தாமணிக் காப்பியத்துக்கு நல் லுரை கண்ட நச்சினுர்கினியர் உரையா னது, "செய்யுட்களின் பொழிப்புத் திரட். டிச் சொன்முடிபு விளக்கி மேற்கோள் காட்டிப் பொருள்நுட்பந் தெளித்துக்கவி இருதயத் தோற்றிச் சிந்தாமணிக்கு நந்த்ா

Page 65
நாவலர் இலக்கிய நோக்கும் பணியும்
விளக்கம்' என்றும், சிலப்பதிகாரம், "முத் தமிழ் இலக்கியமான ஒர் சைன காவியம். சிலம்பை முக்கிய விடயமாகக் கொண் டெழுந்த காவியமாதலின், சிலப்பதிகார மெனப்பட்டது" என்றும் "பலவகைப் பிர பந்த இலக்கியம்’ என்னும் உபபிரிவில், * கலிங்கத்துப் பரணி, நளவெண்பாப் போலும் முன்னேர் பிரபந்தங்களும், குமர குருபர முனிவர் இயற்றிய பிரபந்தங் களும், சிவப்பிரகாச முனிவர் இயற்றிய பிரபந்தங்களும். . இவை போல்வன பிற வுஞ் செந்தமிழ்ப் பிரபந்த இலக்கியங் களாம்" என்றும், வேறுசில பிரபந்தங்கள், சொல்லணி பொருளணி குழுமி விளங் கும் நல்ல தமிழ்ப் பிரபந்தங்கள்; கொழி தமிழ்க் கவிகள்" என்றும் சபாபதி நாவ லர் ஆங்காங்கு எழுதும் பொழுது, அடங் கிய ஆனல் ஐயத்துக்கிடமில்லாத இலக் கிய இரசனையைக் காணமுடிகிறதல்லவா?
சபாபதி நாவலர் மொழிபெயர்த்து இயற்றிய சிதம்பர சபாநாத புராணம் என் னும் நூலிலே காவிய நயங்கள் சிறப் பாகச் சொல்லுமளவிற்கு இல்லையென் பது எவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய செய் தியே, ஆணுல் மேலேகாட்டிய மேற்கோள் பகுதிகளில் அவரிடத்து இருந்த கவியுள் ளம் ஆங்காங்குப் பளிச்சிடுகிறது என்பது கண்கூடு. அறிவியல், ஒழுக்கவியல், சமயம், இலக்கியம் ஆகியவற்றை வேறுபடுத்தி உணராமல் ஆற்றலையும் அறிவையும் இணைத்துணரும் பக்குவத்தை அவரது கூற்றுக்களிற் கண்டு த்ெளியலாம்.
இவ்வாறு அழுத்தமாகக் கூறுவதனல் நாவலர் மரபினர் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் பன்னலத் திரட்டா ளர் என்ருே. பலகோட்பாடுகளின் கருத் துக்களையும் ஒருவாறு இணைத்துக்கொள் கிறவர்கள் என்ருே நாம் கருதவேண்டிய தில்லை. தமக்கெனச் சிறப்பான நம்பிக் கைகள் சிலவற்றைக் கொண்டவராகவே இருந்தன்ர். எனினும் கண்மூடித்தனமாக இலக்கியத்தைத் தரம்பிரித்தவர் அல்லர் என்பதே மனங்க்ெர்ள வேண்டியதாகும்.

55
இவ்விடத்திலே இன்னுமொரு குறிப் பையும் கூறிவைத்தல் பொருத்தமாயிருக் கும் என எண்ணுகிறேன். இலக்கியம் என்றசொல் சிலநூற்ருண்டுகளாகத் தமி ழில் வழங்கி வந்திருப்பினும் மிகச் சமீப காலம்வரை அது பரந்தபொருளிலேயே பயன் படுத்தப்பட்டுள்ளது. உரையாசிரி யர்களே இலக்கியம் என்ற பதத்திற்குப் பொருட்செறிவு ஏற்றினர் எனக் கருத இடமுண்டு. தொல்காப்பியத்தில் இலக் கியம்’ என்னும் சொல் வழங்கப்படவில்லை. பா, பாடல், செய்யுள் முதலிய சொற்களே இலக்கியவகைகள் அனைத்தையும் குறித்து நின்றன. அவ்விலக்கிய வகைகளுள் உரை நூல்களும் அடங்கின எனக் கருதுதல் தவழுகாது. பாட்டுக்களால் இயன்ற நூல் களே மட்டுமன்றி உரைநூல்களும் இலக் கியமே என்னும் கருத்தைப் பலர் ஏற்றுக் கொள்ளாத "இருண்ட காலப்பகுதியில் உரைநடை நூல்கள் இயற்றி உய்யும் நெறிகாட்டியவர் நாவலர். அதனுமேயே " வசனநடை கைவந்த வல்லாளர்' என் னும் தனிச்சிறப்பு அவருக்கு ஏற்படுவ தாயிற்று. பொருளின் அடிப்படையில் நன்னுேக்கம் உடைய நூல்களை இலக் கியம்" என்று நாவலர் கொண்டமையால்ே தொல்காப்பிய நெறியைப் பேணிய அதே வேளையில் நவீன கல்வி முறைக்கேற்ற "இலக்கிய நூல்களையும் இயற்றுவாராயி ஞா.
இக்கண்ணுேட்டத்திலே பார்க்கும் பொழுது : இந்நூற்ருண்டிலே, உரை நடையை ஆதாரமாகக்கொண்டு எழுந்த புனைகிதை, நாடகம் முதலியன அப்பழுக் கற்ற இலக்கியங்களே என்பது போதரும், நாவலர் இருந்தால் இதனை உவந்தேற்றி யிருப்பார். எனினும் சிலவருடங்களுக்கு முன் இந்நாட்டிலே இலக்கிய ஆக்கத் திற்கு உரிய மொழிபற்றிய சர்ச்சை எழுத் தாளர் மத்தியில் எழுந்தபோது, நாவலர் மரபுபேசும் சில செந்தமிழ்க் காவலர்கள் நவீன இலக்கியப் போக்கையும் நோக்கை பும் நையாண்டிசெய்து மறுத்துரைத்தது வேடிக்கைய்ேய்ர்கும். இவர்கள் இல்க்கிய

Page 66
SS
வரலாற்றையும் இலக்கியத்தின் பண்பை பும் பணியையும் தெரியாதவர்கள் என்று கூறுவதன்றி வேறென்ன கூறமுடியும்? எத் தகைய நல்ல மரபிலும் காலப்போக்கில் சிற்சில கோட்டங்களும் பிறழ்ச்சிகளும் ஏற்பட்டு விடுகின்றன. முற் கூறிய வாதப் பிரதிவாதத்தின்போது "செந்தமிழ் வழக் குப் பற்றி நாவலிக்க உரைத்தோரது சிறுபிள்ளைத் தனமானதும், மட்டரகமா னதுமான பிரலாபம், நாவலர்வழிவந்த இலக்கிய மரபின் மறுதலிப்பு என்பதில் எள்ளள்வும் ஐயமில்லை.
** கல்வி கேள்விகள் இல்லாதவர்கள் கடவுளை அறிந்து வழிபட்டு உய்யமாட் டார்கள்' என்று கல்விக்குக் குறிக்கோள் கூறியவர் நாவலர் என்பது நாமறிந்ததே. எனினும் அந்நோக்குக்கொள்கை இலக் கிய ரசனேக்குத் தடையாயிருக்கவில்லை என்பது இக்காலத்தவர் பலர் மனங் கொள்ளவேண்டியது ஒன்ருகும். இதனை வேருெருவகையாகவும் நாம் எடுத்து விளக் கலாம்.
நாவலரவர்கள் தமது அடிப்படை நம் பிக்கைகளுக்கியைய புராணக் கருத்துக் கள்-சமயப் பொருளை-சிரமேற் கொண் ட்வர் எனினும் சீவகசிந்தாமணி போன்ற சமண சமயச் சார்புடைய காவியத்தைப் போற்றத் தவறவில்லை. அந்நூலை அவரே பதிப்பிக்க எண்ணியிருந்தார் என்பதும் தெரிந்ததே. ஆனல் இடைவிடாத சமயப் பணியில் ஆழ்ந்து போயிருத்த அவருக்கு காவியரசனை இன்றியமையக்கூடிய ஒரு பொருளாகவே இருந்தது. அவ்வின்பத்தை பும் தியாகஞ் செய்தார் என்றும் கூற இட முண்டு. ஆணுல் நாவலர் வழிவந்தவர்கள் பலர் சிறந்த ரசிகர்களாயிருக்கின்றனர். வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை" என்னும் கட்டுரையில் (கந்தபுராண கலா சர்க் பக். 31) பண்டிதமணி சி. கணபதிப் பின்ன்ெபவர்கள் பின்வருமாறுள்முதுகிருர், தரவலர் அவர்களுக்குப் பெரிய போல பொன்னம்பல பிள் கம்பராமாயணம் நரம்புத்
 
 
 
 

க. கைலாசபதி
துய்களிலும் ஊறிக்கிடந்தது. சீவக சிந்தாமணியிலும் பிள்ளைக்கு விசேஷ் பயிற்சி உண்டு . கம்பராமாயண் ரசனைகளையும் சிந்தாமணி முதலிய காவிய ரசனைகளையும் கந்தபுராணத் துக்கு வியாக்கியானம் செய்யும்போது ஏற்ற ஏற்ற இடங்களில் பொன்னம்பல பிள்ளை அள்ளிச் சொரிவார். அது வித்துவான்களாகிய மதுகரங்களுக்குப் புத்தம்புதிய அமிர்தமாய்ப் பொங்கிக் கோண்டிருக்கும்."
ஒழுக்கத்திலும் சமயத்திலும் கடுங் கண்டிப்பானவராய் இருந்த நாவலர் காவிய ரசனையை உள்ளடங்கலான முறை யில் மாணவர்க்குக் கற்பித்திருத்தல் கூடும். எனினும் நாவலர் அவர்களுக்கு மருமகரும் மாணுக்கருமான பொன்னம்பல பிள்ளையிடத்து அபாரமாக வாய்க்கப் பெற்றிருந்த காவிய ரசனை நாவலர் வழி வந்தது என்றே கொள்ள வேண்டும். பொன்னம்பலபிள்ளையிடம் காவிய ரசனை யைப் பெற்றவர்கள் பலர். பொன்னம் பலபிள்ளை காலத்திலிருந்து வழிவழி வரும் கம்பராமாயண ரசனை பண்டிதமணி சி, கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற புலவர் மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகியோர் வரை பேணிப் போற்றப்பட்டு வ்ந்துள்ள தெனலாம். இது குறித்து பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையின் கூற்று கவனிக்கத் தக்கது.
* பெரியபுராணம், கந்தபுராணம், பாரதம், கம்பராமாயணம் முதலியவைக இருக்கும் பொன்னம்பலபிள்ளை கூறிய உரைக் குறிப்புக்கள் கையெழுத்துப் பிரதிகளாய் அவருடைய மாணவ பரம்பரையி லிருந்து வருகின்றன: அவை தாய்நாட்டிலும் பாஜி யிருக் கின்றன. எனக்குக் கிடைத்ததொரு கம்பராமாயணக் குறிப்பை அண்ணு மலைப் பல்கலைக்கழக உபவேந் ஆர். பி. சேதுப்பிள்ளை அலு கேட்டுக்கொண்டபடி: 。弘 யணப் பரிசோதனத்துக்கு

Page 67
நாவலர் இலக்கிய நோக்கும் பணியும்
மாக மேற்படி பல்கலைக்கழகத்துக்கு அண்மையிற் கொடுத்துவிட்டேன் "". (சிந்தனைக் களஞ்சியம்,1978-பக்.218)
நாவலர் பாடசாலையில் 1917ஆம் ஆண்டில் குமாரசாமிப் புலவர் தலைமையில் தாபிக்கப்பெற்ற காவிய வகுப்பிற் கற்றுத் தேறிய கணபதிப்பிள்ளை அவர்கள் நாவலர் வழிவரும் காவிய இரசனைக்கும் நாம் காணக்கூடிய சாட்சியாக விருக்கிருர் என்று கூறுவதில் தவறில்லை. நாவலர் தென்னிந்தியாவிற்குப் போகிற காலங் களில் அவருடன் சென்ற பொன்னம்பல பிள்ளையிடம் காவியங்களைக் கற்றுணர்ந்து சுவைத்தோர் பலராவர். சபாபதிச் செட்டியார் என்பவர் வீட்டில் பிள்ளே யவர்கள் நடாத்திய இலக்கிய வகுப்புகள் பிரசித்தம். அதுபோலவே காவியங்களேக் கற்பதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்தோரும் பலராவர். தணிகைப் புராணம் திருவாவடுதுறை ஆதீனப் பதிப்பு முகவுரையில் த. ச. மீனுட்சிசுந்தரம்பிள்ளை பின்வருமாறு எழுதி யுள்ளார்:
** இப்போது ஆதீன வெளியீடாக வரும் இப்புராணக் குறிப்புரை, என் தமிழாசிரியர்களில் ஒருவரும் இவ் வாதீன வித்துவானுமாகிய பூரீ பொன் ஞேதுவாமூர்த்திகள் பூரீ சே. ரா. சுப்பிரமணியக்கவிராயர் அவர்களிடத் திலும், பூஜீ ஆறுமுகத்தம்பிரான் சுவா மிகளிடத்திலும் . பாடங்கேட்ட படியே எழுதி வைத்திருந்த பெறலரும் சரக்கறையாகிய குறிப்புரைகளாம். 1. பூரீ பொன்னுேதுவாமூர்த்திகள், யாழ்ப்பாணத்து பூரீ ஆறுமுகநாவலர் அவர்கள், மருகரும் மாணவருமாகிய பூரீ பொன்னம்பலபிள்ளை யுவர்கள்பால் திருவாவடுதுறை மகாலிங்கபிள்ளை யுடன் கம்பராமாயணம் கேட்பதற்கு முன்னரேயே தணிகைப் புராணம் முத லியவற்றை நன்கு ஆராய்ந்து பாடங் கேட்டவர்கள். இக் குறிப்புரை எழுதி வைத்துள்ள கால்ம் பூரீமத் உ. வே. சாமிநாதையர் அவர்கள்
6

57
முதன் முதலாக சீவகசிந்தாமணியைப் பதிப்பித்த கி. பி. 1887ஆம் ஆண்டின் முன்னரென்று தெரிகிறது.இனி, இத்தணிகைப் புராணத்தை முதன் முதலாக யாழ்ப்பாணத்து பூரீ சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் 1883ஆம் ஆண்டிலே அச்சிட்டார்கள். . 源、参
நாவலர் வழிவரும் மரபு என்று நாம் கூறும்போது சி. வை. தாமோதரம்பிள்ளை, பொன்னம்பலபிள்ளை, குமாரசுவாமிப் புலவர், நா. கதிரைவேற்பிள்ளை முதலியோ ரது பங்களிப்பையும் அவர் போன்ற ஏனை யோரின் பங்களிப்பையும் சேர்த்தே நாம் பொதுவாகக் குறிப்பிடுகின்ருேம். இம் மரபு காசிவாசி செந்திநாதையர், மேல்ப் புலோலி சைவசித்தாந்த மக்ாசரபம் நாக கதிரைவேற்பிள்ளை, சங்கர பண்டிதர் போன்ற வைரம்பாய்ந்த சித்தாந்திகளை மட்டுமன்றி இலக்கியத்துறையிலே ஈடுபா டுடையோராய் விளங்கிய தாமோதரம் பிள்ளை,பொன்னம்பலபிள்ளை,அம்பலவான தாவலர், சபாபதி நாவலர் முதலியோ ரையும் தன்னுள் அடக்குகிறது என்பது நினைந்துகொள்ளத் தக்கதாகும். இவ் வாறு பாகுபடுத்துவதே அத்துனைப் .பொருத்தமன்று எனத் தோன்றுகிறது. ஏனெனில் காசிவாசி செந்திநாதையரின் கந்தபுராண நவநீதம், தேவாரம் வேதசாரம் முதலியன அடிப்படையில் சமயப் பொருள் பற்றியனவாயிருப்பினும் அவற்றில் உள் ளார்ந்த வகையிலே இலக்கிய உணர்வு இழையோடுகிறது என்பதே பொருத்த மாகும், இவ்வாறு இலக்கியத்தை, "அறி விலக்கியம்", "ஆற்றலிலக்கியம்’ என இரு கூறுபடுத்தாமையே நாவலர் மரபின் பிர தான பண்புகளில் ஒன்று என்பது வற் புறுத்தப்படவேண்டிய தொன்ருகும்.
இவ்விடத்திலேயே இலக்கியத்துக்கும் பண்பாட்டுக்கும் உள்ள பிரிக்கவியலாத பிண்ேப்புதுலக்கமடைகிறது. "கந்தபுராண கலாசாரம் என்ற தொடரைப் பண்டித மணியவர்கள் பயன்படுத்துவது இப் பொருளிலேயே எனலாம்.

Page 68
இன்றைய யுகத்திலே கந்தபுராண உணர்வு மட்டும் வாழ்க்கைக்குப் போதா தது. அது வேறு விஷயம். ஆனல் தத்து வத்தையும் பண்பாட்டையும் இலக்கியத் துடன் இணைத்துக் காணும் நிலைக்குப் பொருத்தமான குறியீடாக, "கந்தபுராண கலாசாரம்" என்னுந் தொடர் கச்சிதமாக அமைந்துள்ளது எனலாம்.
'ஒளவையாரிலும் திருவள்ளுவரி லும் பாரதத்திலும் இராமாயணத் திலும் முழுகித் திளைத்துத் திருமுறை களும் சிவபுராணங்களும் பயிலும் ஆண்களையும் பெண்களையும் நாம் ஆக்கி வைத்திருக்க வேண்டாவா?" என்று சி. கணபதிப்பிள்ளை அவர்கள் கவலை யுடனும், ஏக்கத்துடனும் வினவும்போது நாவலர் மரபின் குரலையல்லவா கேட்
&cirGgib?
நாவலர் மரபின் இன்னெரு குறிப் பிட்த்தக்க அம்சம் மக்கட்சார்பு ஆகும். அதாவது பாரதியார், பாஞ்சாலி சபதம் முன்னுரையில் எழுதியதுபோல, அவருக் குப் பல்லாண்டுகள் முன்னதாகவே, * தமிழ் மக்கள் எல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி" எழுத முனைந் தவர் நாவலர். சமய தத்துவத்துறையில் அவர்வழிவந்தோர் இப் பண்பைத் தக்க வாறு வளர்த்துப் பயன்படுத்தவில்லை யெனினும் நா. கதிரைவேற்பிள்ளை போன் ருேர் அப்பண்பைப் பேணினர் எனலாம். நாவலர் சரித்திரம் எழுதிய த. கைலாச பிள்ளையின் கூற்ருென்று இவ்விடத்துப் பொருத்தமாயிருக்கிறது
*** முன்னிருந்த எங்கள் சமயா சாரியர்கள் தாம் தரிசனஞ் செய்யப் போன தலங்களில் எல்லாம் பதிகங் கள் அருளிச்செய்தார்கள். இவரோ தாம் போன இடங்களிலெல்லாம். ல்ோகோபகாரமான சைவப்பிரசங்கங் கள் செய்துவந்தனர் வசனம்போலப் பாட்டுக்கள் இக்காலத்திற் பிரயோ சண்முட்ையவைகளல்ல என்று சுரு

க. கைலாசபதி
தியே பாட்டுப்பாடுதலை இவர் குறைத் துக்கொண்டார். '
இம்மேற்கோளில் இடம்பெறும் சொற் ருெடர்கள் சில கூர்ந்து கவனிக்கத்தக் தன. "லோகோபகாரம்", "பிரயோசனம்? என்பனவே நாவலரது மக்கட்சார்புக்கு. விளக்கம் செய்கின்றன. இப்பயன்பாட்டு நோக்கை, சி. கணபதிப்பிள்ளை அவர்கள் மேல்வருமாறு கூறியுள்ளார். " ஆறுமுக நாவலர், எல்லோருக்கும் விளங்கத்தக்க தெளிவான நடையில் படிப்படியே பயன் தரும் வகையில் புத்தகம் எழுதவும் பதிக் கவும் நேர்ந்தது" நமது நாடும் மக்களும் நன்னிலையடைதல் வேண்டும் என்பதற் காகவே. மக்கட்சார்பினலேயே, நாவலர் தமிழிலே முதன்முதலாகப் பிரசங்கம் செய்ததும், நல்லமுறையில் கட்டுரைகளை எழுதியதும், பாடநூல்கள் எழுதி வழிகாட் டியதும், ஆங்கிலத்தில் உள்ள குறியீட்டு முறையைத் தமிழ் வசனநடையிற் புகுத் தியதும், சைவ-ஆங்கில பாடசாலையை முதன்முதல் ஆரம்பித்ததும் நிகழ்ந்தன
TGG) ITO.
நாவலர் அவர்கள் எந்த விஷயத்தை யும் சிறப்பாகச் சமயநோக்கில் சீர்தூக் கியவர். எனினும், மக்களிலே சமய அடிப் படையில் வேறுபாடு காட்டியவர் அல்லர். பொது விஷயங்களில்-கத்தோலிக்க மக் களுடன் தோளோடு தோள்நின்று இயக் கங்களில் ஈடுபட்டவர் என்பது நன்கு அறியப்பட்ட செய்தியேயாம். அதைப் போலவே கல்வித்துறையிலும் இலக்கியத் துறையிலும் நாவலர் வழிவந்த உழைப் பாளிகள் "ல்ோகோபகாரமான” வழியிற் கருமங்கள் ஆற்றவே முயன்றனர். உதா ாணமாக, "நாவலர் அவர்களுக்குப் பின் நாவலர் அவர்களைப்போலவே நமது நிலை யையும் நமது தேசத்தின் போக்கையும் நன்கு சிந்தித்தவர் பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை" . . " நாவலர் வசன மூலம் தனது கருத்துக்களைப் பிரகடனஞ் செய்தார், துரையப்பாபிள்ளை கவிதைகள் மூலம் தமது சிந்தனைகளை வெளியிட்டார். நாவலர் கண்ணீரால் எழுதிய "யாழ்ப்பா

Page 69
நாவலர் இலக்கிய நோக்கும் பணியும்
ஓரச் சமயதிலே போன்றதே பாவலர் தேசபக்தியோடு இயற்றிய "யாழ்ப்பாண சுவதேசக் கும்மி". அதிலே அவையடக் கத்து முதற் செய்யுள் வருமாறு:-
தேசோப காரங் கருதியிக் கும்மியைச் செப்புகின் றேனுத லாலெவரும்
லேசாய் விளங்க இலகு தமிழில்
இயம்புவ தேநலம் சங்கமின்னே.
எவரும் இலேசாய்-எளிதில்-விளங்கும் பொருட்டு இலகு தமிழில் பாடுவதாகப் பாவலர் கூறும்பொழுது நாவலர், சுப்பிர மணிய பாரதியார் ஆகிய இருவரது குரலை புங் கேட்கக்கூடியதாயுள்ளது. பின்வரும் செய்யுள் ஒன்றில்
கல்வித திறனை யுலகோ ரறியக்
கழறிட வில்லையிக் கும்மிய்ையான் கல்வித மாக நம்நாடு திருந்த”
நவிலுகி றேனடி சங்கமின்னே. என்று பாடும்பொழுது வித்துவச் செருக்கு எதுவுமின்றி, பழகுதமிழில் செய்யுள் இயற் றியதன் நோக்கம் எமக்குப் புலஞகிவிடு கிறது. நாவலர் மரபில் சிறப்புவாய்ந்த பெருமக்களிலே ஒருவரான பாவலர் துரை யப்பாபிள்ளையைப் போலவே கடந்த பத் துப் பதினைந்து ஆண்டுகளுக்கு.மேலாக, சமுதாய நோக்கும், தேசாபிமானமும், தமிழிலக்கிய ஆர்வமும் கொண்டு ஈழத்து
நாவலரின் கைலாசபிள்ளைய
1863ஆம் ஆண்டு பிப்ர்வரி மாதம் 8ந்: கள் திருவிளையாடற் புராணத்திலுள்ள ஒ நல்லூர்க் கைலாசபிள்ளையார் கோவில் பிரசங்கஞ் செய்தார்கள், அச்சமையத்தில் இராசதானியாகக் கொண்டு அரசாண்ட பெற்றதென்றும் பின் பறங்கியரால் கைலாசபிள்ளையார் கோவில் தமது தனி புதிதாகக் கட்டப்பட்டதென்றும் தக்க e
一山甲

59
தமிழ் எழுத்தாளர்கள் இயங்கி வருவதும், நாவலர் மரபின் நவீனவெளிப்பாடு என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஏனெனில் உண்மையான-உயிர்த்துடிப்புள்ள - மரபு என்பது கடுமையான வரையறை அற்றது: அது புனிதமான பெயர்ப்பட்டியலில் தங்கி யிருக்காதது. காலத்துக்குக்காலம் தன் னைத் தானே புதுப்பித்தும், தனக்கு வேண் டிய ஜீவசத்துப் பெற்றும் இயங்கிச் செல் வதே மரபு ஆகும்.
இவ்வாறு பார்க்கும்போது நாவலர் மரபு என ஒன்று இருப்பதன் உண்மையை ஆம் அது:தொடர்ந்து. இந்நாட்டிலே இயங்கி இந்துள்ளது என்பூதையும், அதற் குச் சில சிறப்பியல்புகளுண்டு என்பதனே யும், வெளித்தோற்றத்திற் சிற்சில மாற் தங்கள் தென்படினும் அம்மரபு இற்றைக் கும் வாய்ப்பாயுள்ள சில ஆக்கக்கூறுகளைக் கொண்டிருக்கிறது என்பதையும்; அவற் றில் ஒருமுகப்படுத்த இலக்கிய நோக்கு, மக்கட்சார்பு, நாட்டுநல நாட்டம் என் பன சிறப்பானவை என்பதையும், அவை மறைமுகமாகவேனும் உள்ளார்ந்த சக்தி யுடன் செயற்படுவதனலேயே தற்கால ஈழத்துத் தமிழிலக்கியம் சிற்சில அம்சங் ~களில் தென்னிந்திய இலக்கியப் போக்கி லிருந்து வேறுபட்டு விளங்குகிறது என் பதையும் நாம் ஐயத்துக்கிடமின்றி உணரக் கூடியதா யிருக்கிறது.
ார்கோவில் பிரசங்கம்
திக்தி ஞாயிற்றுக்கிழமை பூரீலபூரீ நாவலரவர் ஒரு திருவிளையாடலைப் பீடிகையாகக்கொண்டு மண்டபத்திற் பலர் சமுகத்தில் ஒரு சிறந்த் குறித்த கைலாசநாதர் கோவில், நல்லூரை - தமிழ் வேந்தரால் கட்டுவித்து நடத்தப் இடிக்கப்பட்டதென்றும் இப்பொழுதுள்ள் மையஞராகிய் ஆராய்ச்சி தம்பு என்பவராற் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டிஞர்.
ழப்பாணம் "விறிமன்" பத்திரிகை-10-2-1863

Page 70
தேசிய வரலா நாவலர்
க. அருமைாகாயகம்
இலங்கையில் ஆங்கிலேயரது ஆதிபத் தியமும் அதனுடன் இணைந்து வந்த அரசியல், சமூக, சமய, பொருளாதாரக் க்குத்துக்ளும் படிப்படியாக முன்னேறிச் ச்முதாயத்திற் செல்வாக்குச் செலுத்திய க்ால கட்டத்திலேயே ஆறுமுகநாவலரும் வாழ்ந்தார். அக்காலச் சூழ்நிலையே ஆறு முச் நாவலரெனும் சைவசமயச் "சீர் திருத்தவாதியை". சைவ, தமிழ் இலக்கிய இலக்கண் "உரைய்ாசிரியரை," "பதிப்பாசி ரியரை, "கண்டனப் பத்திரிகையாளரை", "சமூக சேவையாளரைத் தோற்றுவித்த தெனலாம். எனவே ஆறுமுகநாவலரைப் பற்றிய ஆய்வெதுவும் மேற்கொள்ளுமுன் னர் அக்க்ாலச் சூழ்நிலையைபற்றிய த்ெளி வான அறிவு அவசியம்ானதாகும்.
ஆங்கிலேயரது ஆட்சிக்கு முந்திய முன் னுாறு ஆண்டுகள் இலங்கையின் கரை யோரப்பகுதிகள் (யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் கி. பி. 1505 தொடக்கம் யாழ்ப்பாணம் கி. பி. 1621 தொடக்கம்) போத்துக்கீசர், ஒல்லாந்தர் போன்ருேரது ஆட்சிக்குட்பட்டிருந்தாலும் அதனுடைய பொருளாதார, சமூக, நிர்வாக உள்ள மைப்பில் புரட்சிகரமாற்றமெதுவும்ஏற்பட விற். கத்தோலிக்கச் சமயமும், ஒல் வார்க்சீர்திருத்த சபையினது சமயமும் அக்காம்ைகளில் செல்வாக்குப் பெற்றிருந் தாலும் தேசிய சமயங்களை அவைகளால் மேலாக அமிழ்த்தமுடிந்ததே தவிர அழிக்க முடியவில் **ஆங்கில்ேவ் "ஆட்சியாள்:

ற்றுப் பின்னணியில்
ருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, முந் திய இரண்டு அரசுகளும் நிலமானிய அரசுகளாகும். எனவே அவர்களுக்கு இலங்கையில் நிலவிய நிலமானிய நிர் வாகமுறை மிகவும் உதவியாகவிருந்தது. ஆங்கிலேயரது ஆட்சி முற்றிலும் புதிய தொன்ருகும். இதனுல் ஆங்கிலேயரது ஆட்சி இலங்கையில் பல புதிய அபிவிருத்தி களுக்கு வழிவகுத்தது. நவீனத்துவம் விருத்தியடைந்துவரும் மேற்கு ஐரோப் பாவின் முதற்தர அரசாக விளங்கியது இங்கிலாந்து. அங்கு நிலவிய தாராண்மை வாதக் கருத்துக்கள்-அரசியல் தாபனங் கள், தடையற்ற பொருளாதாரத் தத் துவம், மனிதாபிமான, பயனீட்டுவாதக் கருத்துக்களனைத்தும் சிறிது சிறிதாக உள் நுழைய ஆரம்பித்தன. நவீனத்துவத்தின் முழு ஆக்கிரமிப்புக்கும் இலங்கை ஆங் கிலேயர் ஆட்சிக்காலத்தில் திறந்துவிடப் பட்டது.
நவீனத்துவம் பல சிறப்பு அம்சங்களை யுடையது. நவீனத்துவம் நிலமானிய அமைப்பினின்றும் வெடித்துக் கிளப்பிய புதிய முறையாகும். அதன் சிறப்பியல்பு அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக ஏற்படக்கூடிய "திரட்சி" அல்லது ""ஒன்று கூட்டும்" (mobilisation) தன்மை என லாம். நிலமானிய அமைப்பு தேங்கி நிற் கும் நிலையென்ருல் நவீனத்துவம் பீறிட் டோடும் நிலையெனலாம். பொருளாதார ரீதியாகச் சகல கட்டுப்பாடுகளும் தளர்த்

Page 71
தேசிய வரலாற்றுப் பின் னணியில் நாவலர்
தப்பட்டுச் சந்தைச் சமுதாயம் ஒன்று உரு வாகியது: உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்குச் சந்தையும், உற்பத்தி செய்யவேண்டிய பொருட்களுக்கு மூலப் பொருட்களும் தேவ்ையாக இருந்தது. இவைகள் குடியேற்ற நாடுகளின் அத்தியா வகிகத்தையும், ஏகாதிபத்தியம் கொண் டுள்ள நாட்டின் தேவைக்கேற்ப நிர்வாக மாற்றங்கள், போக்குவரத்து வசதிகள், கல்வி வசதிகள் செய்துகொள்ளவேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியது. குடி யேற்ற நாடுகளின் வரலாற்றுப் பின்னணி யில் இவை பெரும் புரட்சிகரமாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை உள்ளடக்கி பிருந்தன. இந்நிகழ்வுகளின் விளைவாக பழைய மரபுகள்-பொருளாதார, சமூக உறவுகள் மாற்றங்காண வேண்டியிருந் தன. எனவே நவீனத்துவம் பாரம்பரியங் களையும், சம்பிரதாயங்களையும் ஊடறுத்து அரித்துச் செல்லக்கூடிய வலுவுடையதாக விருந்தது. இலங்கை போன்ற குடியேற்ற நாடுகளில் நவீனத்துவம், அந்நாடுகளின் இயல்பான வரலாற்றுப்போக்கின் விருத்தி யாகவன்றி வெளியிலிருந்து அதிகார தோரணையில் புகுத்தப்பட்டதால் அந்நாடு கள் அதனது தாக்கத்தை இலகுவில் சீர ணிக்க முடியாது திண்டாடின.
இலங்கையில் பத்தொன்பதாம் நூற் ருண்டிலே பல முக்கிய மாற்றங்கள் ஏற் பட்டன. கோல்புறூக்-கமரன் விதந்துரை களின் விளைவாக நாட்டின் நிர்வாக அமைப்புக்கள் ஒருமுகப்படுத்தப்பட்டன. கொழும்பு இலங்கையின் பிரதான நகர மாகவும், அரசியல் பொருளாதார நிர் வாகத்துறைகளின் மத்திய ஸ்தாபனமாக வும் விளங்கத் தொடங்கியது. பெருந் தோட்டப் பயிர்ச் செய்கை விருத்தியும், அதற்குத்தேவையான போக்குவரத்து வச திகளும் நாட்டின் பல பிரதேசங்களின் அந்தரங்கத்தன்மையைக் குலைத்தன. புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ சபைகளும் நன்கு- வேரூன்றின. கிறிஸ்தவ மிஷனரி மார், தத்தம் சமயங்களைப் போதிப்பதற் காகவும், பின்னர் அரசாங்கத்தின் கல்வித்

6
தேவையைப்பூரணப்படுத்துவதற்காகவும், ஆரம்பித்த ஆங்கிலப் பாடசாலைகள் தொழில் செய்வதற்கெனக் கற்ருேர் குழாம் ஒன்றை உருவாக்கின. விரிவுபடுத் தப்பெற்ற அரசாங்க தொழில்வாய்ப்பு களும், ஏனையவையும், ஆங்கிலச் மொழி யைத் தொடர்புமொழியாகக் கொண்டி சகல இன் சமய, மொழி மக்கரைக்கொண்டி மத்தியவர்க்கம் அல்லது உயர்ந்தோர் குழாம் என்னும் சமுதாய வர்க்கத்தின ரைத் தோற்றுவித்தன. ஆங்கிலேய ஆட்சி யாளர்களுக்கும், ஏனைய மக்களுக்குமிடை, வில் உள்நுழைந்த இவர்கள் மத்தியில் ஏற் பட்ட சாயமாறல்கள் சமூகமாற்றத்தின் அறிகுறிகளாகக் கணிக்கப்பட்டன. தீவின் ஏனைய பகுதிகளில் குறிப்பாகக் கண்டிப் பிரதேசத்தில் - கிறிஸ்தவம் முன்னெச் சரிக்கையுடன் முன்னேறியது. ஆளுல் யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு எவ்வித வெளித்தடைகளும் இருக்கவில்லை. தொழில் வாய்ப்புகள் பரவிய வேகத்தில் ஆங்கிலக் கல்வியும், பரவியது. பின்னர் தொழில் வாய்ப்புகள் பின்னிற்க ஆங்கிலம் முன்னேறியது. ஆங்கிலம் அந்தஸ்து மொழியானது. ஆங்கிலக்கல்வியும் அரசாங் கத் தொழில் வாய்ப்புக்களும் அவர்களைதவீ னத்துவத்தில் தொற்றிக் கொள்ளச் செய் தன. இலங்கையில் கோல்புறுக்கும், இந் தியாவில் மக்கலேயும் கண்ட கனவுகள் நன வாகின-நிறத்தால் வேறுபட்டிருப்பினும் (மாற்றமுடியாத காரணத்தால்) பழக்க வழக்கத்தினுல். சிந்தனையால் வாழ்க்கை முறையால் கறுத்த ஐரோப்பியரை உரு வாக்குவதே அவர்களின் நோக்கமாக விருந்தது. கொழும்பு பலரை ஈர்த்தது. இன்னும் சிலரை இந்தியாவும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்குட்பட்டிருந்த ஏனைய நாடுகளிற் சிலவும் ஏற்றுக் கொண்டன. இந்தநிலை பாரம்பரியங்களைப் பேணிக் காக்க வேண்டுமென்ற சிந்தன்ைபுடையோர் மத்தியில் சில தாக்கங்கள்ை ஏற்படுத்தியது.
இத்தாக்கங்களுக்கு ஈடு கொடுக்க மூனேந்ததையே தேசியம் என விளக்கலாம்.

Page 72
f2
என்பதற்குப் பொருத்தமான வரைவிலக் கனம் கொடுப்பதில் அரசியல் அறிஞர்கள் மத்தியிலும் கருத்து வேற்றுமைகள் காணப் படுகின்றின. வரலாற்றின் போக்கு, அர சியல் அறிஞர்களுக்குத் தேசியம் பற்றிய தத்துவத்தை எக்காலத்துக்கும் பொது வாணவொன்முகச் சிருஷ்டிக்க முடியாது செய்துவிட்டது. இதனுல் தேசியவாதம் கண்டத்துக்குக் கண்டம், காலத்துக்குக் காலம், சூழ்நிலைக்கேற்றவகையில் பற்பல கருத்துக்களைத் தந்துள்ளது. பத்தொன் பதாம் நூற்றண்டில் ஐரோப்பாவில் சித றிக்கிடந்த ஜெர்மனியர், இத்தாலியர் போன்ருேர் தத்தமது இனத்தவர்களை ஐக் கியப்படுத்துவதற்காக நடத்திய போராட் டங்கள் தேசியத்தின் விளைவென்பர். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் முன் குைம். பின்னரும் நடைபெற்ற அரசியல் விடுதலைப் போராட்டங்களும் தேசியத்தின் அறிகுறியென்பர். விடுதலையும், தன்னுட்சி யும் பெற்றபின்னர், பிற்போக்குடை யோர் எனக் கருதப்படுவோரை (பழமை வாதிகளைக்) களைவோரும் தேசியவாதிக ளெனப்படுவர். தேசியக் கருத்துப் படிவம் ஒருபுறம் மிகவும் விரிவானதாகவும், மறு புறம் மிகவும் குறுகிய தொன்ருகவும் காணப்படுகின்றது. தேசியத்திற்குப் பொருத்தமான வரைவிலக்கணம் கொடுக்கமுடியாவிடினும் அதனது இறுதி உருவத்தின் ஆக்கக்கூறுகளாக, வ்ரை யறுக்கப்பட்ட புவியியல் எல்லை, பொது மொழி, சமயம், கலாசாரம்,இனம்ஆகிய வற்றுடன் நீண்டகாலமாகச் சேர்ந்து வாழ்ந்து பங்குகொண்ட வரலாற்று அனு பவம்: ஆகியவற்றைக் கொள்ளலாம். இக் கருத்தினை இலங்கைபோன்ற பலவின, மொழி, சமய வேறுபாடுகள் கொண்ட நாட்டிற்கு உபயோகப்படுத்த முடியாது. எனவே உபதேசியங்கள் எனப் பன்மைப் படுத்தியே விள்க்கிக்கொள்ளமுடியும். ஒரு புவியியல் எல்லைக்குள் வாழ்ந்தாலும் இலங்கையில் வாழும் மக்களின் தேசிய உணர்ச்சிக்ளும், பற்றுக்களும் எக்காலத் திலும் ஒர்ேமாதிரியாக விருந்தது என்று கூறமுடியாது. வத்தொன்பதாம் நூற்ருண்

5. JejO5ento sfušsúb
டில் ஆங்கிலேயரூக்கு எதிராகக் கடைப் பிடித்த கொள்க்ைகள், நோக்குகளில் சில வேறுபாடுகளை அவதானிக்கலாம். இங்கும் ஆங்கிலக்கல்விகற்ருேர்து தேசிய உணர்வு வெளிப்பாட்டிற்கும் தாய்மொழியில் கல்வி கற்ரூேரது தேசிய உணர்வு வெளிப்பாட் டிற்கும் இடையிலும் பேதங்கள் உண்டு. முன்னவர் ஐரோப்பிய முறையிலும், பின் னவர் சுதேச மரபு முறையிலும் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தவிர சிலர் சில பகுதிகளில் மரத்திரம் கூடிய கவனம் செலுத்தினர்.
சமயத்துறை ? வெளிநாட்டவருக்கு எதிராகத் தோன்றிய எதிர்ப்புகள் முதலில் சமயத்துறையிலேயே ஆரம் பித்தன. பாராளுமன்ற சனநாயக முறை யைப் பின்பற்றி சட்ட நிரூபண சபை மூலமும், குடியேற்றநாட்டு மந்திரிக்கு முறையீடு செய்வதன் மூலமும் அரசியல் சலுகைகள் பெறுவதற்குமுன்னர், அரசி யல் தேசியம் பல தசாப்தங்களால் பிற் போடப்பட்டது. ஆனல் நாவலர் போன் ருேர் மேலைத்தேச நாகரிகத்தின் உண் மைச் சொரூபம் தெரியவாரம்பித்ததும் தங்கள் கருத்துக்களை வெளியிட முனைந் தனர்.
ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயர் இலங்கையின் ஆட்சியதிகாரத்தைக் கைப் பற்றிய காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்தோர் அனைவரும் பெரும்பாலும் கிறிஸ்தவரெனவே கருதப்பட்டனர்: போலிக்கிறிஸ்தவர் என்பது வேறு. 1802ம் ஆண்டில் 136,000 ஆக விருந்த புரட்டஸ் தாந்து கிறிஸ்தவரது தொகை 1806ஆம் ஆண்டில் பூஜ்ஜியமாக விருந்தது. முப்பத்தி நான்கு கிறிஸ்தவ தேவாலயங்களிருந்த விடத்தில் முன்னுற்றிருபத்தொன்பது சைவக் கோவில்கள் காணப்பட்டன. இது ஆங்கிலேயர் இலங்கையரைத் தமதாட் Pக்கு அனுசரணையாக விருப்பதற்காகச் Fமயக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியதின் பெறுபேருகும், சைவசமயமும் பழைய அனுஷ்டானி முறைகளிலெதன்யும் கை விட்டுவிடவில்லை யென்பதற்குக் கிறிஸ்

Page 73
தேசிய வரலாற்றுப் பின்னணியில் நாவலர்
தவ மிஷனரிமாரது அறிக்கைகளும் நூல் களும் சான்றுபகரும். ஆனல் வெகுவிரை வில் இந்நிலையில் மாற்றமேற்பட்டது. புதிய கிறிஸ்தவ மிஷனரிமார்-சமய, கல்வி முகாமைத்துவத்தில் முந்தியவர் களிலும் பார்க்கச் சிறந்த அனுபவமுடை யோர்-வெஸ்லியன் (1814), அமெரிக்கர் (1816), சேர்ச்மிஷன் (1818) முன்னிருந்த வ்ர்களிலும் பன்மட்ங்கு உத்வேகத்துடன் சமயப் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவர்க ளது தாபன அமைப்பு முறையும், பிர சாரமுறையும் இலங்கைச் சமய தாபனங் களை விடச் சிறப்பானவைகளாகும். கோல் புறுாக் ஆணைக் குழுவினரது விதந்துரை களின் பிரகாரம் (தலைமைப் பதவிகள்தவிர ஏனைய உத்தியோகங்களை ஆங்கிலம் படித்த இலங்கையருக்குக் கொடுத்து அதன் மூலம் மலிவான சேவையைப் பெற்றுக் கொள் ளலாம் ஆங்கிலக்கல்விக்கு ஏற்பட்ட தேவை யாழ்ப்பாணத்தவரைத் தாமா கவே கிறிஸ்துவ பாடசாலைகளுக்குச் செல் லத் தூண்டியது. உடனடியாக ஆங்கிலக் கல்வியை முறைப்படி போதிக்கக் கூடிய வச திகள் கிறிஷ்தவ மிஷனரிமாரிடம் காணப் பட்டதால் அரசாங்கம் உதவிநன்கொடைப் பணத்தையும் அவர்களுக்களித்தது. இக் காரணத்தால் சைவர்களிற் பெரும்பான் மையினர் தமது சமய சாதி ஆசாரங்களைக் கிறிஸ்தவர்களுக்கு வெளிப்படையாகவா வது அடகுவைத்து ஆங்கிலக்கல்வியினைப் பெற்றனர். ஆட்சி மாறும்பொழுதெல் லாம் ஆட்சியாளரது சமயத்தைத் தழுவிக் கொள்வது யாழ்ப்பாணத்தவருக்குப் புதிய தொன்றல்ல. ஆயினும் இக்காலத்தில் ஏற் பட்ட சமய மாற்றங்கள், உளமாற்றங் களை எற்படுத்திச் சைவர்களின் தனித்து வத்தை ஆளுமையை அழித்துவிடக் கூடுமென நாவலர் போன்ருேர் அஞ்சினர். கிறிஸ்தவ மிஷனரிமாரை ஏமாற்றுவதற் காகச் சிலர் மேற்கொண்ட போலி வாழ்க்கை சிறுவர் தொடக்கம் பெரி யோர்வரை-ஈற்றில் நிரீச்சுரவாதம் வளர் வதற்கு வழிகோலும் போலிருந்தது. இந் நிலையைத் தடுத்தரண் போடச் சைவர்கள் மத்தியில் எவ்வித தாபன அமைப்பும்

63
. இருக்கவில்லை. பெளத்தர்கள் மத்தியில்
இயங்கிய பிரிவேனுக்கள் போலவும், தென் னிந்தியாவிலிருந்த ஆதீனங்கள் போன் றனவுமான தாபன அமைப்புகள் சைவர் கள் மத்தியில் இருக்கவில்லை. எனினும்:
கிறிஸ்தவ சமயப் போக்கைத் தடுக்க
வேண்டுமென்பதில் ஒற்றுமை நிலவிய்து.
சைவர்கள் மத்தியில் தேசிய உணர், வுக்கு வித்திட்டவர் நாவலர் என்பது பொதுவான கருத்தாகும். இக் கருத்தினை நிராகரிக்க முடியாவிடினும், நாவலரது தொண்டினை அவருக்கு முந்தியோர் ஆற் றிய பணிகளுடன் ஒப்பிட்டே ஒரு முடி விற்கு "வரல்வேண்டும். நாவுலுருக்கு முன், னர், அதாவது நாவலர் தமது இயக்கத் தில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்னர், 1842 ஆம் ஆண்டளவில் வண்ணுர்பண்ணை, யில் உள்ள கனவான்களிற் சிலர் இதுபற் றிச் சிந்தித்தனர். அத்துடன் உடுப்பிட்டி அருளம்பல முதலியார் போன்றேர் liftசாலைகளையும் அமைத்தனர். அதுமாத்திர மன்றி கிறிஸ்தவர்களைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற எண்ணமும் உதயமா யிற்று - "பாதிரிமார் மதத்தில் சேர்ந்த, தவர்களை அவர்களுடைய இனசனத்தா. ராகிய சைவர்கள் தங்கள் சபை சந்தி களிற் சேர்க்காமலும், கிணறுகளில் தண் ணிர் அள்ள விடாமலும் அவர்களுடன் நெருங்கிய கொண்டாட்டம் பண்ணுமலு மிருத்தல்; அவர்களை யீனச்சாதியினரென்
றும், பிண அரிசி புசிக்கின்றவர்களென்
றும், பிணத்தண்ணிர் குடிக்கின்றவர்களென். றும் இழிவாய் பேசுதல்; அவர்களுடைய வேதத்தில் தப்பறைகள் கண்டுபிடித்து அவற்றைப் பகிரங்கமாகக்காட்டிவருதல் *
போன்ற தீர்மானங்களை எடுத்தாலும்
தொடர்ச்சியாக இவைகளைப் பின்பற்ற முடியவில்லை. எனவே நாவலர் தம்மியக் கத்தைத் தொடங்கும் வரை (1847)கிறிஸ் தவ சமயத்திற் கெதிரான எதிர்ப்பு சமூக அமைப்பில் மாத்திரம் தங்கியிருந்தது.
ஆறுமுக நாவலர் வைதீகச் சைவர்எனினும் மெதடிஸ்த கிறிஸ்தவ பாடசாலை யில் மாணவனுகவும், ஆசிரியராகவும்,

Page 74
6.
அவர் பெற்ற அறிவும் அனுபவமும், விவி லிய நூலை மொழிபெயர்ப்பதற்காகப் பேர் சிவல் பாதிரியாருடன் கொண்டிருந்த தொடர்பும் அவர்மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆறுமுக நாவலர் "புரட் டஸ்தாந்து' சைவரானுர். புரட்டஸ் தாந்து கிறிஸ்தவர்கள் கையாண்ட வழி முறைகளைப் பின்பற்றிக் கிறிஸ்தவரை எதிர்க்கவும், சைவசமயத்தை (கிறிஸ்தவர் கண்டனங்களின் அடிப்படையில்) புனருத் தாரணம் செய்யவும் துணிந்தார். நவீனத் துவம் நாவலரையும் பற்றிக் கொண்டதுசமயத்துறையில் தேசியம் பிறருக்கு எதி ராகமாத்திரம் உபயோகப்படுத்தும் உணர் வல்ல; வாழும் சமயம் வளர்வதற்காக அத் துடன் சேர்ந்துகொண்டுள்ள தீய ஒட்டு யிர்களையும் ஒழிக்க முயன்ருர், புராதன கொள்கைகள் சிலவற்றையும், தேவதை >வழிபாட்டுமுறைகளையும் கைவிடும்படி மக் களைக் கேட்டுக் கொண்டார். சைவ ஆக மங்கள் அங்கீகரிக்காத வழிபாட்டு முறை களைக் கண்டித்தார். சமயத்தின் உண்மைச் சொரூபத்தை விளக்கினர். சிவனே முழு முதற் கடவுளென்றும் 'பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவ சமயம் ஆகாது’** என விளக்கம் கூறிஉயிர்ப் பலி ஏற்கின்ற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், காட்டேறி போன்ற பிசாசுகளின் வணக்க முறைகளும் 8 பிற மதத்தவர்கள் கண்களில் ஏளனத்துக்குள் ளாகின்றபடியால் கைவிடப்படல் வேண்டு மென வற்புறுத்தினர். அத்துடன் கோவில் களில் திருவிழாக்கள் நடைபெறும்போது இடம்பெறும் சனரஞ்சகமான தேவதாசி கள் நடனம், வாணவேடிக்கைகள், ஆபா சமான சித்திரங்கள் போன்றவையும் 7 சமயத்தின் உண்மை நிலையை விளக்க வில்லை என்ற காரணத்தினுலும், சமுதா யத்தைத் தீயவழியில் இட்டுச் செல்வதா லும் விலக்கப்படல் வேண்டுமென்பது அவர் வாதம். பத்தொன்பதாம் நூற்ருண்டில் பெளத்தர்கள் மத்தியில் தோன்றிய சமய மறுமலர்ச்சியின்போது விவசாயிகள் மத் தியில் நிலவிய வழிபாட்டு முறைகளை

க. அருமைநாயகம்
நவீனப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 8 அத்துடன் கிறிஸ்தவ குருபீடங் கள் போன்ற சமய அறிவு பெற்ற பிரசா ரங்களும், தீட்சை பெற்றவர்களும், சம யத்தை வழிநடத்த வேண்டுமென விரும் பினர். யாழ்ப்பாணச் சமய நிலை (1872), நல்லூர் கந்தசாமி கோவில்(1875), மித்தியா வாததரிசனம் (1876) போன்ற பத்திரிகை களும் சிதம்பரத் தீட்சதர்களுக் கெதிரான கண்டனங்களும் நாவலர் எவ்வளவுதூரம் சைவசமயத்தை நவீனப்படுத்துவதற்கும், கிரியை முறைகளில் மாத்திரமன்றி, தத் துவ அறிவும் படித்தவர்களுக்கு இருக்க வேண்டுமென்பதற்காகப் பலபழைய சைவ இலக்கியங்களைச் சுருக்கமாக விஞவிடை கள்; பாலபாடங்களாகவும், புராணங்களை வசன நடையிலும் அச்சில் பதிப்பித்து வெளியிட்டார்.
வெளிநாட்டவருக்குக் கீழைத் தேசத் தவர்களைப் பற்றி அறிந்துகொள்ளச் செய்யச் சமய இலக்கியங்களே உதவின. நாவலருடைய இம்முயற்சிகளைத் தென்னி லங்கையில் பெளத்தசமய மக்கள் மத்தி யில் அறிஞர்களாக விளங்கிய வஸ்கடுவ gfó955) G35urri (Waskaduwa Sri Subhuti thero), ஹிக்கடுவ பூரீ சுமங்கல தேரர் (Hikkaduwa Sri Sumangala thero) é யோருடனும், சேர் முத்துக்குமாரசுவாமி போன்ருே ரின் இலக்கிய முயற்சிகளுடனும் சமயநோக்குடனும் சேர்த்துப் படிப்பின் உண்மை விளங்கும். சேர் முத்துக்குமார சுவாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள் அனைத்தும் சமய சம்பந்த மானவை.? இலங்கையில் உள்ள சமயங் களின் மேன்மையையும் அதன் மூலம் தமக்குப் பெருமையையும் தேடிக்கொள் ளும் பொருட்டுமே இம் மொழிபெயர்ப்பு கள் மேற்கொள்ளப்பட்ளன. நாவலர் குறிப்பிட்ட சமயத்தை உயர்த்துவதற்கு உழைத்தார். சேர் முத்துக்குமாசுவாமி ஆங்கிலேயரது கண்களில் தமது நாட்டுச் சமயங்களின் மகத்துவத்தை நிலைநாட்ட முயன்ருர்,

Page 75
தேசிய வரலாற்றுப் பின்னணியில் நாவலர்
கிறிஸ்தவம் ஆட்சியாளரது சமயமாக விருந்ததால் அதில் குறை காண்பதற்கும், எதிர்ப்பதற்கும் த யங் கி ய சைவர் களுக்கு உற்சாகம் கொடுத்தவர் நாவலர். அத்தகையோருக்குத் தென்பூட்டும் வகை யில் நாவலர் எழுதிய வாசகங்கள் இதற் குச் சான்ருகும். "நம்மை ஆளும் இங்கி லிஷார் கிறிஸ்து சமயானுசாரிகள் ஆகை யால், நாம் தங்கள் சமயத்தைக் கண்டிக் கவும் நமது சமயத்தை ஸ்தாபிக்கவும் புகுங்கால், எம்மேற் குரோதங்கள் கொள் வார்களன்றே? அதற்கு நாம் யாது செய் வோம்? என்பீர்களாகில்; சுவந்திரராகிய சிவன் நாம் செய்த வினைகள் எல்லாவற் றையும் ஒருங்குணர்ந்து, அவ்வினைகளுள் இன்னகாலத்திலே இன்ன வினையை அனு பவிக்கப் பண்ணுவோம் என்று நியமித்து, ஊட்டுமாறன்றி, இவ்விடத்துப் பரதந்திர ராகிய பிறர் ஒருவரால் நமக்கு ஒர் தீது வந்தடையாது." கிறிஸ்தவர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சைவ தூஷண பரிகாரம் என்ற பிரசுரத்திற்காணப் படும் வாசகங்கள் நாவலரின் துணிவுக்கும் சைவ உணர்வுக்கும் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும்.
கல்வித்தொண்டு: சமயம் மக்களின் அன்ருட வாழ்க்கையுடன் பிணைந்திருந்தது சம்யம் பற்றி பாடசாலைகள் மூலம் விரி வாகப் போதிக்கும் முறை சைவர்கள் டையே செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. சைவம் பிரசார சமயமில்லாத காரணத் தினுல் அத்தேவையிருக்கவில்லை. ஆனல் மாற்றுச் சமயங்கள் செல்வாக்குச் செலுத் திய காலத்தில் சைவப் பிரசாரகர்கள் தோன்றியதற்குப் பல்லவர் காலம் உதா ரணமாகும். எனவே கிறிஸ்தவத்தின் புதிய உத்திகளை முறியடிப்பதற்குப் பாடசாலை களின் உபயோகத்தை உணர்ந்த நாவலா வண்ணுர்பண்ணையில் ன்சவப்பிரகாச வித்தி யாசாலை(1848)யொன்றை ஸ்தாபித்தார் கிறிஸ்தவ பாடசாலைத் திட்டம் விசுவாச மான கிறிஸ்தவனை உருவாக்குவதில் ஈடு பட்டால் நாவலரது கல்வித்திட்டம் நல்ல தொரு சைவனைச் செப்பனிடுவதில் முனை
7

SSAS SSASSHqHSSAASS SSS q S SLqAAAAAAAAqAAASSASASAAALLLLSSSSSSASASASASASqSLS
65
திருந்தது. ஆறுமுக நாவலரது சைவப்பிர யாசையின் தோற்றமும் வளர்ச்சியும், அது எதிர்நோக்கிய எதிர்ப்புக்களும், அதுபற்றி நாவலரும் அவரைச் சார்ந்திருந்தோரும் கிறிஸ்தவர்களுடன் நடாத்திய விவாதங் களும், அரசாங்கத்துடன் கொண்டிருந்த தொடர்புகளும் தேசியத்தின் சிறந்த எடுத் துக்காட்டுகளாகும்.இலங்கைத் தேசிய் வர லாற்றை ஆராய்ந்தவர்கள் கூட, இவ்வா வணங்கள் ஆங்கிலத்திலிருந்த போதும், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட் டார்கள். இவ்வாவணங்கள்-சைவப்பிர காச வித்தியாசாலைக்கு உதவி நன்கொடை கோரி ஆறுமுகநாவலர் அனுப்பிய விண் ணப்பம், அதற்காக நடைபெற்ற கூட் டம், ' கூட்டத்தில் ஆற்றப்பெற்ற உரை கள். அக்கூட்டத்தில் பங்குபற்றியோரும், ஏனையோரும் அனுப்பிய விண்ணப்பம் 12 ஆகியவற்றையும், உதயதாரகை சைவப்பிர காச வித்தியாசாலையைப் பற்றிக்கண்டித்து எழுதிய கட்டுரைகளையும், அதற்கு உத் தரமாக சைவர் ஒருவர் எழுதிய பதிலையும் உள்ளடக்கும். ** இவ்வாவணங்கள் கால வரன் முறைப்படி ஆராயப்படின் தற்கால தேசிய ஆக்கக்கூறின் ஆரம்பம், வட பகுதியில் ஆரம்பமானதை அவதானிக்
கலாம். கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு
புரட்டஸ்தாந்து பாடசாலைகளுக்கு மாத் திரமன்றி, கத்தோலிக்கப் பாடசாலைகளுக் கும் அரசாங்கம் அளித்த உதவி நன் கொடைகள் நியாயபூர்வமாகத், தமக்கும் கிடைக்கவேண்டுமென இவர்கள் வாதாடி னர். " அரசாங்கம் சமயச் சார்ப்ற்ற பாட சாலைகளை நடத்தும் வரை, சைவ் சமயப் பிள்ளைகளினது கல்வியைச் சைவசமயத் தவர்களது பொறுப்பிலேயே விடவேண் டும்; கிறிஸ்தவ பாடசாலைகள் தம்மிடம் பயிலும் மாணவர்களினது சமயக் கருத் துக்களை-மனப்பூர்வமாக அவர்கள் பற்று வைத்துள்ள சமயத்தை-இழக்கக் செய் யும் தூண்டுதல்களினல் உண்மையான அங்குபெற்ற கல்வியினல் அடைய முடிய வில்லை; மேலைத்தேசக் கல்வியினல் நாட் டிற்குப் பெருநன்மை ஏற்பட்டுள்ளது உண்மையேயாயினும், கிறிஸ்தவர்கள்

Page 76
66
அளிக்கும் கல்வி சமயப் பாரம்பரியங்களுக் குச் சவாலாக அமையும் வரை அக்கல்வி யினை ஏற்றுக்கொள்ள முடியாது; பிறப் பால், சமூக உறவால், பழக்கவழக்கங் களினல் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர் கள், அறிவு வளர்ச்சி யடைந்துள்ளவர் களிடமிருந்து, மேலான கல்வியைப் பெற விரும்பினும், அத்தகைய கல்வி எதுவென் பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு தமிழர் களுடையதேயன்றிப் பிறரிடம்ஒப்படைக்க முடியாதென்றும்; இலங்கையில் வாழும் பெரும்பான்மை மக்கள் பெளத்தரும், சைவரும் என்ற காரணத்தினலும் அவர் களிடமிருந்து பெறப்படும் வரிப்பணங் களிலான உதவியைக் கிறிஸ்தவர்கள் தமது சமயப் பரம்பலுக்கு உபயோகிப்பது நியாயமற்றது என்பன போன்ற பல வாதங்களை எடுத்துக்காட்டினர். இவர்க ளது விண்ணப்பங்கள், கோரியதைப் பெற முடியாவிட்டாலும், அரசாங்கத்தின் சமய நோக்கு எவ்வண்ணம் இருக்கவேண்டு மென்பதை எடுத்து விளக்குகின்றது. சேர் முத்துக்குமாரசுவாமி பின்னெரு சந்தர்ப் பத்தில் இது போன்ற வாதங்களைச் சட்ட நிரூபண சபையில் சமர்ப்பித்தார்.
ஆனல் அக்காலச் சூழ்நிலையில் யாழ்ப் பாணத்திற்குத் தேவையாக விருந்தது, சைவத்தமிழ்க்கல்வியல்ல. தமிழ்க்கல்வியை விருத்திசெய்ய அரசாங்கமும் விரும்ப வில்லை. உதவி-நன்கொடைகள்ை அதற் காக உபயோகிக்கவும் இணங்கவில்லை. இக்கருத்தைத் தெரிவிப்பதன்மூலம் இத் தகைய கல்வி முக்கியமற்றதெனக் கூறுவ தாகமாட்டாது; காலத்தின் தேவை ஆங்கிலக் கல்வியாகவேயிருந்தது. ஆறுமுக நாவலரது பிரசாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது கிறிஸ்தவ பாட சாலைகள் துரித முன்னேற்றமடைந்தன. நாவலரது கவனம் தென்னிந்தியாவிலும்யாழ்ப்பாணத்திலும் சென்றது. இவ் விரு திசை ஈர்ப்பாலும், பொருளாதார ரீதியாக ஆதரவில்லாததாலும். தகுதிவாய்ந்த ஆங் கில ஆசிரியர்களைப் பெறமுடியாததாலும்

க. அருமைநாயகம்
சைவர்களது முயற்சிகள் கைகூடவில்லை.
கிறிஸ்தவ பாடசாலைகளுக்குப் பண உதவி செய்த சைவர்களும், காசி, சிதம்பரம் போன்ற இடங்களிலுள்ள கோவில்களுக்கு விளை நிலங்கள் உபகரித்தோரும் நாவல ரது கல்வித்திட்டங்களுக்குத் துணைநிற்க முன்வரவில்லை. இதனல் பழமை போற் றும், தமிழ்ப்பற்றுமிக்க மக்கள் மத்தியில் மாத்திரமே-சைவ தமிழ்க் கல்வி செல்வாக் குப் பெற்றது. 1872ஆம் ஆண்டு நாவலர் ஆரம்பித்த ஆங்கில பாடசாலையும் வெற்றி யளிக்கவில்லை. நாவலரது ஆங்கில பாட சாலை தோன்றியபொழுது கிறிஸ்தவ பாட சாலை யொன்றின் மாணவர் தொகை வீழ்ச்சியுற்றது. இச்சாதகமான சூழ்நிலை யைக்கூடச் சைவர்கள் உபயோகிக்கத் தவ றினர். இப்பாடசாலை நான்காண்டுகளில் மூடப்பட்டது. இது நாவலரது ஆங்கிலக் கல்வி முயற்சிக்குக் கிடைத்த பெரும் தோல்வியெனலாம். ஆனல் அத்தோல்வி, பிற்காலத்தில் நாவலரது அடிச்சுவட்டைப் பின்பற்றியோர் என அழைக்கப்பட்டோர் மத்தியில், ஒரு பாடமாக அமைந்தது.
இதன் நேரடி விளைவாகவே சைவபரிபா லன சபையினர் ஆரம்பத்திலேயே ஆங் கிலம் போதிக்கும் இந்து உயர்தர பாட சாலையை அமைப்பதில் பேரூக்கம் காட்டி னர். இப்பாடசாலையின் தோற்றம் கிறிஸ் தவப் பாடசாலைகளின் வளர்ச்சியைப்
பாதித்தது என்பதில் சந்தேகமில்லை.
சமூக நோக்கு : தேசிய வளர்ச்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று சமூக ஒருமைப் பாடாகும். பல உப-தேசிய சக்திகள் இயங்கும் நாடுகளிற் கூடச் பொது எதிரிக்காகச் சமூகங்கள் தமது இறுக்க நிலைகளைத் தளர்த்தி ஒன்றுபட்டுள்ளன. இலங்கையில் பத்தொன்பதாம் நூற்ருண் டின் கடைக்கூறுவரை அத்தகைய தேவை ஏற்படவில்லை. எனினும் இரு பெரும் சமூ கங்களின் மத்தியில் தனி வேருக சமூக ஒருமைப்பாட்டினுக்கான சக்திகள் இயக் கம் காண வாரம்பித்தன. பெளத்த மக்கள் மத்தியில் கரவர்-கொய்கம போட்டிகள் வலுவுற்று கரவரும் ஏனையோரும் பெளத்த

Page 77
தேசிய வரலாற்றுப் பின்னணியில் நாவலர்
சமய எழுச்சியின் மறைவில் நின்று தமது சமூகப் படிநிலையை உயர்த்திக் கொண்ட னர். ஆணுல் தமிழர்கள் மத்தியில் அந் நிலை ஏற்படுவது மிகவும் கஷ்டமாக விருந் தது. எனினும் மறைமுக சில சக்திகள் சாதியமைப்பின் தளர்ச்சிக்கு உந்து சக்திக ளாக விளங்கின.
போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் முயலாத துறையில் ஆங்கில ஆட்சியினர் துணிந்து ஈடுபட்டுச் சமூகக் குலைவினை ஏற்படுத்தினர். கத்தோலிக்கரும், ஒல் லாந்த திருச்சபையினரும் சமய மாற்றங் கள் செய்தபோதும் சாதி யமைப்பில் எவ்வித மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. சமய மாற்றத் தாலும், பெயர் மாற்றத்தாலும் சமூகப் படிநிலை உயரும் என எதிர்பார்த்த தாழ்ந்த சாதியினரும் ஏமாற்றத்துக் குள்ளாகினர். ஆணுல் ஆங்கில அரசின் நோக்கும் -போக்கும் வேறு விதமாக அமைந்தது. கோல்புறூக் ஆணைக்குழுவின ரின் விதந்துரைகளின் பின்னர் ஆங்கில ஆட்சியாளர் ஆரம்பகாலத்தில் (17961832) பின்பற்றிய கொள்கைகளை மாற்றிக் கொண்டனர். இராசகாரிய ஊழிய முறை ஒழிப்பு, நிர்வாக முறையில் சாதிபேத மற்ற வகையில் நியமனங்கள், நீதித் துறையில் சாதி வேறுபாடுகளுக்கு அங்கீ காரம் கொடுக்கத் தவறியமை போன்றவை சமூக அமைப்பில் ஏற்படக்கூடிய மாற்றங் களுக்கு முன்னறிவித்தல் கொடுப்பன போன்றிருந்தன. கிறிஸ்துவ சமயத்தின ரும் சாதியின் போக்கைக் கண்டித்தனர்.19 தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் தவிர புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்கள் தமது பாடசாலைகளில் தாழ்ந்த சாதியினரையும் சேர்த்து அவர்களுக்கும் கல்வி கற்கும் வாய்ப்பினை அளித்தனர். ஒரே கூரையின் கீழ் உயர்சாதிப் பிள்ளைகளுடன் சேர்ந்து கல்விபயிலும் வாய்ப்பளிக்கப்பட்டது. இப் புரட்சிகரமான நடவடிக்கைகள் உயர்சாதி யினரின் எதிர்ப்பைச் சம்பாதித்தன. பத் தொன்பதாம் நூற்ருண்டின் ஆரம்பத்திலே கிறிஸ்தவர்களுக் கெதிராகத் தோன்றிய

67
எதிர்ப்புகள் சமய எதிர்ப்புக ளென்பதிலும் பார்க்கச் சாதியாசாரத்தை நிலைநாட்டு வதற்கான எழுச்சிகள் போலத் தோன்று கின்றன. நாவலரது சமூக நோக்கையும் இவ்வடிப்படையிலேதான் ஆராயப்படல் வேண்டும். நாவலர் உயர்சாதியினரது ஏகப்பிரதிநிதியாக விளங்கினர். இவரது கண்டனங்கள், உபதேசங்கள் அனைத்தும் உயர்சாதியினரை மையமாக வைத்தே எழுதப்பட்டுள்ளன : குறிப்பாக விவசாயி கள், வர்த்தகர்கள், அரச ஊழியர்கள் போன்ருேரை விளித்தே எழுதப்பட்டுள் ளன. சிறுவர் முதல் பெரியவர்வரை சாதி ஆசாரங்களைப் பேணிக் காக்க வேண்டுமென்பதை முதலாம் சைவ விஞ விடை முதல் யாழ்ப்பாணச் சமய நிலை வரை வற்புறுத்தியுள்ளார். இவ்விரண்டு நூல் களுக்கு மிடைப்பட்ட காலம் இரு தசாப் தங்களுக்கு மேலாயினும், நாவலர் சாதி பற்றிய தமது கருத்தை மாற்றிக் கொள்ள வில்லை. பின்வரும் உதாரணங்களை எடுத் துக்காட்டாகக் கொள்ளலாம். முதலாம் சைவவினுவிடையில் ' எவர்களிடத்திலே போசனம் பண்ணலாகாது?’ என்ற வினு விற்குப் பதிலாக. தாழ்ந்த சாதியா ரிடத்திலும். போசனம் பண்ணலாகாது’ எனவும், நான்காம் பாலபாடத்தில் **நல் லொழுக்கம்' என்னும் கட்டுரையிலே 'தீண்டத் தகாத சாதியாரையும். தீண்டினலும். உடுத்த வஸ்திரத்துடனே ஸ்நானஞ் செய்தல் வேண்டும் எனவும், தேவாலய தரிசனம் என்னும் கட்டுரை யிலே "திருக்கோயிலுள்ளே போவதற்கு யோக்கியர்களல்லாத சாதியார்கள். போன்றவைஇளஞ்சந்ததியினருக்குச் சாதி பற்றிய அறிவினைப் புகட்டும் தன்மை வாய்ந்தன. யாழ்ப்பாணச் சமயநிலை என்ற பிரசுரத்தில் கிறிஸ்தவ பாடசாலைகளுக்குத் தமது பிள்ளைகளை அனுப்பிய உயர்சாதி யினரை ஏளனஞ் செய்து கண்டிக்கும் வகையில் 'தங்கள் பிள்ளைகளைப் பாதிரி மார் வீட்டிலே கீழ்ச்சாதியாரோடும் போசனஞ் செய்வித்துச் சாதியாசாரத் தையும் சமயாசாரத்தையும் இழப்பித்து, அவர்களோடு தாங்களுங் கலந்து, அவ்

Page 78
விரண்டையும் இழக்கின்றர்களே! இவர் கள் இப்படிச் செய்தும், எதிரிகளெதிரே தலைகுனியாது, தாங்கள் சைவசமயிக ளென்றும், உயர்சாதிமான்களென்றும், சிறிதும் நாணமின்றித் தலையெடுப்புடனே பாராட்டத் தொடங்குகின்ருர்களே!சீச்சீ ! இஃதென்ன மதிமயக்கம்", எனக் கூறிய கூற்றுக்கள் சாதியாசாரத்தில் எவ்வித பற்றுக் கொண்டிருந்தார் என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டுக்களாகும்.
மேற்கூறப்பட்ட காரணங்களினல் தாவலரைச் சீர்திருத்தவாதி யென்ருே அல்லது தேசியவாதியென்றே அழைக்கும் பொழுது சில ஒதுக்கீடுகளுடனேயே அவ் விபரணத்தைக் கையாளவேண்டி யுள்ளது . தென்னிலங்கையிலும், இந்தி யாவிலும், குறிப்பாகத் தென்னிந்தி யாவிலும் சாதியமைப்பின் வலு நாவலர் காலத்தில் தளர்ச்சியடையவில்லை; அது பற்றி வெகு சிலரே சிரத்தையெடுத்தனர் என்பன போன்ற கருத்துக்களை முன் வைத்து நாவலரது நோக்கங்களை நியாய பூர்வப்படுத்த சிலர் முயலலாம். அத்துடன் இலங்கை வரலாற்றுப் பின்னணியில் சமயத்திற்கேற்படவிருந்த ஆபத்தே முக் கியமானதென்றும், சமயக் கலாச்சாரத் தைப் பேணிப் பாதுகாக்கும் சக்தியுடைய உயர் சாதியினர் ஆபத்திலிருந்து மீட்கப் பட்டால் தாழ்ந்த சாதியினரது போக்கு சமூகத்தைப் பெரிதளவாகப் பாதித்திருக்க மாட்டாது என்ற வாதமும் பொருத்த மானதாக அமையலாம். இந்தியாவில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்கள் ராஜ ராம் மோகனராயரின் பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்றவைகளும். தாதோபா பாண்டுரங்கர், பாமா பத் மான்ஜி,மகாத்மாபூல் போன்ருேரும்சமயத் தையும் சமூகத்தையும் வேறுபடுத்தவில்லை. இந்து, சமயத்தை நவீனப்படுத்துவதற்கு அவர்கள் வரைந்த நகல்படம் இந்து சமூக சீர்திருத்தமாகும். சமயச் சீர்திருத்தத் துடன், ஆண்-பெண் சமத்துவமின்மை, விதவை மறுவிவாகம், தீண்டாதோர் பிரச் #డిr என்பன போன்ற பிரச்சனைகளுக்குத்

க. அருமைநாயகம்
தீர்வுகாண முயன்றனர். இவ் வொருமைப் பாடு இந்தியாவின் ஐக்கியத்திற்கு இன்றி யமையாதது என்பதை இருபதாம் நூற் முண்டிலேயே இந்தியமக்கள் உணர்ந்தனர். இச்சமாஜங்களில் அங்கத்துவம் வகித் தோர் மேலைத்தேயக் கல்வி முறையினுல் நன்மை பெற்ற உயர் குழாத்தைச் சேர்ந் தவர்கள் ஆரியசமாஜத்தினர். பழங்குடி மக்களையும், தீண்டாதோரையும் தமது இயக்கத்தில் சேர்ப்பதற்கு முயன்றனர். அத்தகைய சிந்தனை நாவலரிடம் இருந்த திற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் நிலையினின்று பேறடையலாம் என்பதற்கு உதாரணமாக நந்தனர் கதையை விளக்கினர். எனவே வரலாற்றுப்பின்னணியில் நாவலரது சமூக ஒருமைப்பாடுபற்றிய கருத்து காலத்தோ டொவ்வாதது என்றே கருதல் வேண்டும். தென்னிலங்கையிலும் இம் முயற்சிகளுக் குக் குந்தகம் ஏற்பட்டது. ஆனல் பெளத் தம்-சிங்கள மொழியினது தேசிய எழுச் சியை அடக்குவதற்காக ஆங்கில அர சாங்கம் கொய்கம சாதியினருக்கு ஆதர வளித்ததுபோல் தமிழுக்கும் சைவத்திற் கும் ஆதரவு அளிக்கவில்லை. இதனுல் நாவ லர் பணி தொடரவேண்டியிருந்தது.
அரசியல் துறை : நாவலர் ஒரு சமய வாதியாகவிருந்தபோதும் தமது முழுக்கவ னத்தையும் சமயத்துறையில் மாத்திரம் செலுத்தவில்லை. 1870ஆம் ஆண்டின் பின் னர் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகித் தங்கியபின்னர்-மக்களின் அன்ருட அரசி யல், பொருளாதார, நிர்வாக விடயங் களில் நெருங்கி ஈடுபட்டார். ஆறுமுக நாவலரும், இக்கால சீர்திருத்தத் தலைவர் கள் போன்று ஆங்கில அரசியலை ஏற்றுக் கொண்டவர். ஆங்கில அரசாங்கத்தைக் கண்டிக்கும் எழுத்துக்கள் இல்லை. ஆனல் ஆங்கில அரசியல் ஸ்தாபன அமைப்புகளு டைய உதவியுடன் மக்களது குறைபாடு களைப் போக்க முயன்ருர். மக்களுக்கு அர சியலில் கூடிய பங்கு இருக்க வேண்டும். கூடியளவு பிரதிநிதித்துவம் அதிகாரங்கள் இலங்கை மக்களுக்கும் தேவையென்ற

Page 79
தேசிய வரலாற்றுப் பின்னணியில் நாவலர்
அரசியற் கருத்துக்கள் பிற்காலத்திலெழு தவை - இலங்கைத் தேசியத் தலைவர் களைப் பொறுத்தவரை, ஆணுல் சோ முத்துக்குமாரசுவாமியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நாவலர், அவ ரைத் தமிழ்ப் பிரநிதியென அழைப்பதில் விருப்புக்கொண்டவர். அவர் பல குறை பாடுகளைப் போக்கவிழைந்தார். ஆங்கில அரசாங்கத்தின் தாராண்மைக் கருத்துச் களில் அவர் வைத்திருந்த நம்பிக்கையைப் பின்வரும் கூற்றுமூலம் அறிந்து கொள்ள லாம். யாழ்ப்பாணத்தில் சைவப் பாட சாலைகள். நிறுவவேண்டிய கருத்தை வெளி யிடும் பொழுது பின்வருமாறு அறிவுறுத் தினர். 'சாதாரணக் கல்வி விசாரணை தலைமைத்துரைக்கு விண்ணப்ப மெழுதிக் கவர்ண்மெண்டாரிடத்திலே பொருளுதவி பெற்று லெளகீகக் கல்வியை விருத்தி செய் யுங்கள். அதற்குப் பாதிரிமார் இடையூறு செய்யின் நீங்களெல்லாந்திரண்டு கொழும் புக் கவர்ண்மெண்டாருக்கு விண்ணப்ப மெழுதிக் கொள்ளுங்கள், அதற்குக் கொழும்புக் கவர்ண்மெண்டார் பாராமுகர் களாயிருப்பின் இங்கிலாந்துக் கவர்ண் மெண்டாருக்கு விண்ணப்பமெழுதிக் கொள் ளுங்கள். இந்தியாவையாளும் இங்கிலாந் துக் கவர்ண்மெண்டாரே இலங்கையையும் ஆளுகின்றனர். இந்தியாவிற் குடிகளனுப் பும் விண்ணப்பங்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவர்களுக்குநன்மைசெய்யும் கவர்ண்மெண் டார் இலங்கையிற் குடிகள் விண்ணப்ப மனுப்பினுல், அதைச் சீர்தூக்கிப் பார்த்து நன்மை செய்யாது விடுவார்களா? குற்றம் உங்களிடத்தேயன்றிக் கவர்ண்மெண்டா ரிடத்தன்று' 7 நாவலர் இங்கு விபரிக்கும் விண்ணப்ப ஒழுங்கு முறையே அக்கால அரசிற்கும். குடி மக்களுக்கு மி டையே இருந்த தொடர்பின் முக்கிய அம்சமாகும். சட்டநிரூபண சபையிற் கூட இத்தகைய முறையினை, அதாவது மக்கள் "திரண் டெழுந்து' அனுப்பும் விண்ணப்பங்களையே பின்பற்றினர். சட்டநிரூபண சபையில் மக்கள் சார்பில் சமர்ப்பிக்கப்படும் விண் ணப்பங்களுக்கும் அதனடிப்படையிலே ஆற் றப்படும் உரைகளுக்குமே . நன்மதிப்பு

இருந்தது. பிரநிதித்துவ ஆட்சிமுறை முற்றிலும் வளர்ச்சியடையாத நிலையில், அதற்குப் பரிகாரம் தேடத் தொடங்க முன்னர் நாவலர் போன்றவர்களும் 'விண்ணப்ப அல்லது முறையீட்டு’ அரசியல் முறையைப் பின்பற்றியது விந்தையல்ல.
பொது விடயங்களில் நாவலர் சமய பேதம் பாரரட்டாது நடந்துகொண்டார், யாழ்ப்பாணத்தில் பேதி நோய் கண்ட பொழுதும், கச்சேரியில் நிர்வாக ஊழல் கள் மலிந்து ' அநீதி பொய் கோள் முத லிய புத்தகங்கள் படிப்பிக்கிற கலீசு (college) " ஆகவும் "துவையினந்துரை' அதன் தலைவராக விளங்கிய போதும் நாவலர் பேதமெதுவும் பாராட்டாது பொதுசன அபிப்பிராயத்தை உருவாக் கினர். பழைய மன்னர் ஆட்சி முறைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் கிளர்ச்சிகள் செய்து தமதெதிர்ப்பைத் தெரிவிப்பர். ஆனல் , ஆறுமுக நாவலர், தம்மையும் புதிய அரசியல் அமைப்புக்குத் தயார்செய்து, கொண்டு, புதிய மக்கள் தொடர்புச் சாத னங்களை உபயோகப்படுத்தினர் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். யாழ்ப்பாணத் தில் பேதி நோய்க் காலத்தில் ஏற்பட்ட கஞ்சித்தொட்டித் தருமம், கமக்காரர் களுக்கு விதை நெல் கிடைப்பதற்காகச் சட்ட நிரூபண சபைக்கு விண்ணப்பம் செய்தல், தங்களது பிரதிநிதியைக் கொண்டு அதுபற்றி அரசாங்கத்தின் கவனத்தைக் கோரியமை ஆகிய நிகழ்வு கள் நாவலர் எவ்வளவுதூரம் சமூக நலனில் அக்கறை கொண்டார் என்பதையும், அர சாங்க. அதிபர், ஆட்சியாளர்களது தவறு களைக் சுட்டிக் காட்ட முற்பட்டார் என் பதையும் விளக்குகின்றன. இவ்விடயங் களில் சமயத்தையும், தமிழையும் முன் னிறுத்தவில்லை. -
நாவலரது பொது விடயங்களுக்கு இலங்கைநேசன் பத்திரிகை களமமைத் துக் கொடுத்தது. அதுமாத்திரமன்றி சேர் முத்துக்குமாரசுவாமி, நாவலருடன்நெருங் கிய தொடர்பு கொண்டிருந்தாரென்பதற்

Page 80
70
கும், அவர் ஆற்றிய தேச சேவையை மதித்தார் என்பதையும் அவர் சட்ட நிரூ பண சபையில் ஆற்றிய உரைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். தென்னிலங்கையில் பெளத்தசமய எழுச்சியை வழிநடத்திய சுமங்கல தேரர், சுபிதிதேரர், மொகத்து வந்த குஞனந்த போன்றேர் போல் வட பகுதியில் நாவலர் நடத்திவந்த இயக்கங் களைப் பற்றிச் சுட்டிக் காட்டியுள்ளார். நாவலரைத் தேசிய அந்தஸ்துக்கு உயர்த் தியவர் சேர் முத்துக்குமாரசுவாமி. சைவர் களது சமயத்தைப்பற்றிய அபிப்பிராயங் களை அறிவதற்கு நாவலரைக் கலந் தாலோசிக்க வேண்டுமென்பது அவரது வாதம்.9 ஏனெனில் நாவலரைப் பின்பற் றிய கூட்டத்தினரது செல்வாக்கை இகழ்ச்சி செய்ய முடியாதிருந்தது. கிறிஸ்தவ திருச்சபை ஒன்றிற்கு மானி யம் அளிப்பது சம்பந்தமான விவாதங்க ளின் போது சேர் முத்துக்குமாரசுவாமி தமது வாதங்களுக்கு ஆதரவாகக் குறிப் பிட்ட முக்கியஸ்தர்களில் நாவலரும் ஒருவராவர்.
இத்தகைய உறவுகளாலேயே பொன் னம்பலம் இராமநாதன் சட்ட நிரூபண சபைக்கு அபேட்சகராக நிற்க முன்வந்த பொழுது ஆறுமுகநாவலர் இராமநாத னுக்கு ஆதரவு கொடுக்கும்படி நேரிட்டது. இராமநாதனுக்கு எதிராகப் போட்டி யிட்ட பிறிற்ருே பல்வகையிலும் அக் காலத்தில் இராமநாதனிலும் தகுதி வாய்ந் தவர். அவருக்குப் பெரு ஆதரவும் இருந் தது. தமக்குப் பின்னர் பிறிற்ருேவே தம் மிடத்தை நிரப்பவேண்டுமென சேர் முத் துக்குமாரசுவாமியே விரும்பினர் எனவும் கூறப்படுகின்றது. அந்நிலையிலே ஆறுமுக நாவலர் இராமநாதனுக்காக ஆதரவு கொடுத்தது பிறிற்ருேவின் சமய வேறு பாட்டினுல் என்பர் ஒருசாரார்; அதை மறுப்பர் இன்னெரு சாரார், இது நாவ லரை ஆதரிப்பவர் எதிர்ப்பவர்களிடையே ஏற்படும் அபிப்பிராய பேதமெனலாம். எனினும் யாழ்ப்பாணத்தில் இராமநாதன் ஆதரவு பெறுவதற்கு நாவலரே பொறுப்

க. அருமைநாய்கம்
பாவார். இராமநாதனது விடயத்தில், நாவலர்,*சிலோன் ஒப்சேவர்' பத்திரிகை, அரசாங்கஅதிபர் வில்லியம்துவைனம் ஆகிய மூன்று 'விரோதிகள்" கருத்தொருமித்து ஆதரவை இராமநாதனுக்கு நல்கியமை அக்காலத்தில் திகைப்பூட்டும் சம்பவமாக விருந்தது-குறிப்பாக நாவலரின் செல் வாக்கு 1879ஆம் ஆண்டில் தேசியமட்டத் தில் உயர்ந்திருந்தது- சேர் முத்துக்குமார சுவாமி வில்லியம் துவைனம் பற்றிய மசோதாமீது தெரிவித்த கண்டனங்களுக் கும், விதைநெல்பற்றிய விவாதங்களுக்கும் நாவலரே பெரும் பொறுப்பாவர். அப்படி யிருந்தும் நாவலர் ஆதரித்த அபேட்சகரை துவைனமும் ஆதரித்தமை எவ்வளவு தூரம் நாவலர் பொதுவிடயங்களில் தனது விரோதிகளையும் கவர்ந்துள்ளார் என்ப தற்குச் சான்றகும். சமய, மொழித் துறை யில் மாத்திரமன்றி பிரதேசரீதியாக அமைந்திருந்த உயர்ந்தோர் குழாத்துக்கு வழிகாட்டியாகவும் தலைவராகவும் நாவலர் விளங்கினுர்,
இலங்கைத் தேசிய வரலாற்றில் நாவ லர் வகிக்கும் இடத்தைப்பற்றி அறியாத வர்களும், அநகாரிக தர்மபாலரைப் பற் றிக் கேள்விப்பட்டவர்களும் அநகாரிக தர்மபாலரைப் போன்றவர் நாவலர் என்ற கருத்தை வெளியிடுகின்றனர். தேசிய வர லாற்றில் இவ்விருவருடைய நோக்கும் செல்வாக்கும் வெவ்வேருனவை. கிறிஸ் தவ சமயங்களை எதிர்த்தவர்கள் என்ற வகையிலும், தத்தம் சமயங்களை நவீனப் படுத்த முயன்றவர்கள், அதற்காக ஏராள மான பிரசுரங்களை வெளியிட்டவர்கள் என்ற வகையிலும் மாத்திரம் ஒற்றுமை காணப்படுகின்றது. நாவலர் தமிழராக விருப்பினும், இலங்கையின் முழு தேசிய அடையாளத்திலும் அக்கறை கொண்டிருந் தார் என்பதை அவர் எழுத்துக்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். அநகாரிக தர்ம பாலர் மகாவமிசம் கூறும் பெளத்த-சிங் கள இலங்கையின் வாரிசாவார். நாவலர் தமிழ்இலக்கியத்திலும், இலக்கணத்திலும், சைவசமயத்திலும் பெருமை கண்டவர்.

Page 81
தேசிய வரலாற்றுப் பின்னணியில் நாவலர்
தென்னிந்தியாவில் நீண்டகாலம் வசித் தாலும், தமிழகத்தின் ஒரு பகுதியாக இலங்கையைக் கொள்ளவில்லை-குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களை, மாருக இலங்கை மக்களைப் பற்றிய ஐயப்பாடுகளைத் தீர்த்து வைத்தார். ஆறுமுகநாவலர் தாம் இலங் கையர் என்பதில் பெருமையடைந்தார். இலங்கையிலுள்ள தமிழர்களைத் தாழ்ந்த சாதியினரென்றும், படிப்பறிவில் குறைந் தவர்கள் என்றும் தென்னிந்தியாவில் இகழ்ச்சியாகப் பேசப்பட்ட போதெல் லாம் சாதியாசார ரீதியாகவும், கல்வி அறிவிலும் இலங்கைத்தமிழர் தென்னிந் தியருக்குக் குறைந்தவரல்லர் என்பதை எடுத்து விளக்கியமைக்கு மித்தியாவாத தரிசனம், நல்லறிவுச்சுடர் கொளுத்துதல் போன்ற பத்திரிகைகள் வாயிலாக அறிய லாம், ஆஞல் பெளத்தத்திற்கு எதிரா கவோ அல்லது சிங்கள மக்களுக்கெதிரா கவோ பிரசாரம் எதுவும் செய்யவில்லை. வரலாற்றின் போக்கினை ஏற்றுக்கொண் டவர் நாவலர். அநகாரிக தர்மபாலர் வர லாற்றின் நியதியை ஏற்க மறுத்தவர். அந காரிக தர்மபாலர் பெளத்த-சிங்களம் ஆகிய இரண்டையும் இணைத்து, அவ்விரண் டும் இனைந்ததே இலங்கைத் தேசியம் என வற்புறுத்தினர்.20 எனவே வரலாறு சில
அடிக்குறிப்புக்கள் :
1. இலங்கையில் அண்மைக்காலத்தில்
அதன் தன்மை நோக்கிச் செல்லும் ட லிருந்து சமூகவியல், வரலாறு, அரசி ஆய்வுகள் நடாத்தியுள்ளனர். இவ்வ அமைந்தாலும் அவை இன்னமும் ெ யுள்ளது. இந்துசமய எழுச்சியும் அ. எழுத வேண்டியவர்கள் காலத்துக்கு குறிப்பாக மார்க்க ஸ்தாபனத்தினர Nationalisms and Protest in Mo Colombo 1979, என்றநூலில் காணப்ப Documents of the Ceylon Natio Ceylon 1920-1950. Vol. 1 sirgaoru ளாகும்.

7
வேளை மறக்க நினைத்தாலும், அநகாரிக தர்மபாலர் செலுத்திய செல்வாக்கு தேசிய விடுதலையின்போது சிங்கள தேசியத் திற்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந் தது. ஆனல் நாவலர் தமிழரது அரசியல் வாழ்க்கையில் அவ்வித செல்வாக்கைச் செலுத்தவில்லை. நாவலர் தமிழுக்கும் சைவத்துக்கும் முடிச்சுப்போட்டு வைக்க வில்லை. ' சைவசமயத்தை தமிழ்ச் சமய மென்றும், ᎧᏈᏧ Ꭷ1 Ꮷ- ᎥᏝtᏞ1 ᏧᎦ கோயிலைத் தமிழ்க் கோயில் என்றும், அறிவில்லாத சனங்கள் வழங்குகிருர்கள். தமிழ் என் பது சமயத்தின் பெயரன்று; ஒரு பாஷை யின் பெயர்." இவ்வாக்கியத்தில் பல உண் மைகள் தொக்கி நிற்கின்றன. ஆங்கிலே யர் ஆட்சிக்காலத்திலும் அதற்குப் பின்ன ரும் தமிழர் மத்தியில் தோன்றிய தேசியத் தில் சைவமும்-தமிழும் இணைந்து, ஒன் றற்கொன்று வலுவூட்டவில்லை. நாவலர் தொடக்கிவைத்த சைவத் தேசிய உணர்வு தற்பாதுகாப்பிற்கானது. அது பிறருடன் அரசியல் போராட்டங்களுக்குப் பயன் படுத்தக்கூடியதல்ல. தமிழர் தேசியம் இது வரை சமயச்சார்பற்றதாக விருந்து வரு வதற்கு நாவலரது செல்வாக்கும் ஒரு காரணமாகலாம்.
தேசிய வாதத்தின் தோற்றம், வளர்ச்சி, ாதை என்பன பற்றிப் பலவித கோணங்களி யல் ஆகிய துறைகளில் ஈடுபட்ட அறிஞர்கள் ாய்வுகள் எமது ஆய்வுக்குப் பின்னணியாக பரியதொரு இடைவெளியை நிரப்பவேண்டி தன் போக்கும் இங்கு இடம்பெறவில்லை. ள் நிறைவேற்ற முடியாத காரணத்தால் rtó). Gay 6full Lul 'll Collective Identities dern Sri Lanka, Ed. Michael Roberts, டும் ஆய்வுகளும், Michael Roberts தொகுத்த nal Congress and National Politics in படும் முகவுரையும் பிரயோசனமானவைக

Page 82
10.
II.
2.
3.
4.
72
(i) Arumainayagam K. Hindu Reli Tribune, Vol. 21, Nos. 13 and Il
(i) அருமைநாயகம் க., பத்தொன்ப மலர்ச்சி. திருக்கேதீச்சர திருக்கு 1978 - பக். 72- 85
Morning Star, Oct. 20, 1842 வேலுப்பிள்ளை, கனம். C. D. அமெரிக்
தெல்லிப்
ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, தொ சென்னை, 1954, பதிப்பு, பக். 86.
மேற்படி பக். 87
மேற்படி பக். 69
Obeysekera, Gananath “Religious Syr Modern Ceylon
Arumainayagam K. “Sir Mutu Coor Tribune Vol. 23,
Dept. of National Archives D120/80 с.
மேற்படி கூட்டம் வண்ணுர்பண்ணை 21-08-1852 இல் நடைபெற்றது.
மேற்படி 18-12-1852 திகதியிடப்பட்ட
Thananjayarajasingham S. The Educt Colombo 1974.
Morning Star, May 12, May 26, Jun
Morning Star Feb. 23, 1854 ஐந்து ஆங்கிலத்தில் * A. A, 99 என்னும் பெ மிகவும் முக்கியமானதாகும். * They
clusiveness : still thcy insist on their for themselves. But concurrence and A. ndividuality is instructible, whether nations or races. Whether it be just assume the right to insist that anoth the views, opinions and usages of c self and social bonds, held conscien such concession is expected, may the enlightened and impartial public

க. அருமைநாயகம்
gious Life 1847-1880. A. 1976.
தாம் நூற்ருண்டின் ஈழத்துச் சைவ மறுச் - திருமஞ்சன மலர், திருக்கேதீச்சரம்,
க இலங்கை மிஷன் சரித்திரம், பழை, 1922. பக். 84-85
கு. த. கைலாசபிள்ளை
mbolism and Political Changes in Ceylon
Studies, Vol. I. No. I. p. 47.
maraSwamy ”
Nos 50, 51&52-1979
, Arumugams Memorial dated 15-12-1852
ா கைவப் பிரகாச வித்தியாசாலையில்
. கடிதம், ational Activities of Arumuga Nayalar,
e 23, July 28, August 11, 1853
து கட்டுரைகளும் மறுப்புத் தெரிவித்து யரில் சைவர் ஒருவர் எழுதிய கட்டுரை (savites) repudiate all description of privilege of thinking, judging and acting ssimilation have their legitimate limits. applied to persons or communities or , fair and reasonable for one party to her party shall conform implicitly to laimants with the tota! abrogation of tiously sacred by the persons from whom safely be left to the verdict of , either British or Hindu.’

Page 83
தேசிய வரலாற்றுப் பின்னணியில் நாவலர்
15.
16,
17.
8.
19.
20.
10, 11, 12 கூறப்பட்டவற்றைப் ப அத்துடன் " " பள்ளிக்கூடங்களுக்குக் ளிறுத்த இறைப்பொருளேயாம். இ யினர் சைவசமயிகளும் பெளத்த ச துவ சமயிகள் தொகையோ அத் உதவி அவசியமில்லை. ஆ. நா. பி.
Arumainayagam K. “ Caste in Jaf
ஆ. நா. பி. தி. பக். 71-72.
(1) ஆ. நா. பி. தி. பக். 155-16 (ii) Ceylon Hansard-1877
pp. 37 — 39. சேர் முத்துக்குமாரசுவாமி கிறிஸ்து உடனடியாக நிறுத்தப்படல்வேண்டு அவ்வுதவி மானியம் இலங்கையிலு: ளது அங்கீகாரத்தைப் பெறவில்லை ெ யாரென அடையாளம் காட்டும்டெ உதாரணங் . காட்டினுர் நாவலரை சிக்குத் தொண்டாற்றிய மொகத்துவ பந்துவந்துடாவ போன்றேராவர். குமாரசுவாமி ஆற்றியவுரை சமய விருந்தது. சமயரீதியாக நாவலர் யளிக்கக் கூடியவராகவும் இக்கால Ceylon Hansard : piral 660 prl'il fibs
1876/77. 6 airgith Oct. 18, 1876-1. Oct. 19, 1876-1 Obeysekera, Gananath : “ The Vi Through Time and Change' in C (T. 5. & தவிர மேற்படி நூலில் காணப் அநகாரிகரைப் பற்றிய இக்கருத்து
தமிழ் இக்கணத் தெளிவில்
இங்ங்ணம் இலக்கணம் எழுதுவது தவர் யாழ்ப்பாணம் நல்லூர் ஆறுமு திருந்த தமிழ்ச்சிங்கங்கள், நல்லூர் பிள்ளை, வடலூர் இராமலிங்கப்பரே இவர்கள் கொஞ்சக்காலத்துக்கு மு களிடம் கற்றுச் சொல்லிகளாயிருந்த முனிவிகளாக விருக்கிருர்கள் . .
ipsa

73
nrrifišas ங் கவர்ண்மெண்டாருதவும் பொருள் குடிக இலங்கையிற் குடிகளுள்ளே பெருந்தொகை மயிகளுமேயாம். புரோட்டஸ்டாண்டு கிறிஸ் தியற்பம். ' அப்படிப்பட்டவர்களுக்குப் பண தி. பக். 43. fna in the 19th Century.'
Tribune yol, 20 Nos 50 dk 51-1976
வதிருச்சபை ஒன்றிற்கு அளிக்கும் மானியம் மென்பதற்கு எடுத்துக்காட்டிய நியாயங்களில் ள்ள பெளத்த -சைவ சமயங்களின் தலைவர்க யன்பதாகும். அத்தகைய சமயத் தலைவர்கள் ாழுது முதலில் சேர் முத்துக்குமாரசுவாமி ஏனையோர் பெளத்தசமய விழிப்புணர்ச் பத்த குளுனந்த, சுமங்கலதேரர், சுபிதிதேரர், இலங்கை தேசிய வரலாற்றில் சேர் முத்துக் த்தலைவர்களது எண்ணங்க்ளின் பிரதிபலிப்பாக போன்ருேரும், அதற்கு அரசியல் தலைமை ப்பகுதியில் விளங்கினர். ரிய குறிப்பு பக்கம் 88.
J5.58-68 89 حس-86 . ,J j cissitude of the Sinhala-Buddhist Identity ollective Identititie. ... in Modern Sri Lanka š. 276-313 படும் கட்டுரைகள் பெரும்பாலானவற்றில்
வலியுறுத்தப்பட்டுள்ளது.
... தாவீது யோசேப்பு
து நலம் என முதல் முதல் எனக்குப் போதித் p கநாவலர் அங்கிலேயரையடுத் துறவாடா ஆறுமுகநாவலர், மாயவரம் மீனுட்சிசுந்தரம் தசியார், திரிசிரபுரம் முத்துவீரக் கவிராயர். ன்தான் தே கவியோகமாயினர். இச் சிங்கங் தவர்கள் இப்போது கலாசாலைகளில் தமிழ்
தாவீது யோசேப்பு, தமிழ் இலக்கணத் தெளிவு
- (மதராஸ், 1893)

Page 84
சீர்திருத்தவா
சி. தில்லைாகாதன்
நெருக்கடியான நிலைமைகள் தோன் றும்போது அவற்றினை நிவிர்த்திசெய்வதற் குச் சீர்திருத்தவாதிகள் தோன்றுவார் கள் என்று பொதுவாகக் கூறப்படும். சமூ கம், சமயம், மொழி, அரசியல் முதலான துறைகளிற் சீர்திருத்தங்களை முன்னெடுத் துச் சென்றவர்கள் பல காலங்களிலும் பலவிடங்களிலும் உதித்திருக்கிருர்கள்.
சீர்திருத்தவாதி எனக் கொள்ளப்படு பவர் யாவர்? சுருங்கக்கூறுமிடத்து, முழு மையான மாற்றத்தை வேண்டும் புரட்சி வாதியைப் போலன்றிச் சில துறைகளிலோ அம்சங்களிலோ மாற்றத்தை விரும்புப வன் சீர்திருத்தவாதி எனப்படுவான். இது காறும் உள்ள நிலை ஆரோக்கியமற்ற தென்ற துணிவுடனும் "புதியதோர் உல கம் செய்வோம்-கெட்ட போரிடும் உல கினை வேரொடு சாய்ப்போம்" எனத்தகும் வேகத்துடனும் செயற்படுவான் புரட்சி வாதி. இன்றைய நிலையிற் குறைபாடுகள் காணப்பட்டாலும் அடிப்படையில் அது ஆரோக்கியமானதே என்ற கருத்துடன், சில மாற்றங்களை அமுலாக்கும் நோக்கிற் செயற்படுவான்சீர்திருத்தவாதி. தன் செல் வாக்கைப் பிரயோகித்து மாறுதல்களை உருவாக்க முனையும் சீர்திருத்தவாதி சில பழக்கவழக்கங்களை மாற்றுவதன் வாயிலா கவும் சில அமைப்புக்களைப் புதுப்பிப்பதன் மூலமாகவும். சில நடைமுறைகளைத் திருத் துவதனலும் சில நிலைமைகளைச் சீர்படுத் துவதனலும் மக்கள் வாழ்க்கை நெருக்கடி

தி நாவலர்
களுக்கோ சீர்குலைவுகளுக்கோ விமோச னம் காணவியலும் என்ற நம்பிக்கையுடன் செயலாற்றுமிடத்துச் சமுதாய உறவு முறைகளில் அடிப்படையான மாறுதல் அத்தியாவசியமாகுமென உணர்வதில்லை.
எவ்வாருயினும், புரட்சிவாதிகளும் சரி சீர்திருத்தவாதிகளும் சரி தமக்கென முயலாது பிறர்க்கென முயல்பவர்களா கவும் மனிதரின் அடிப்படை நாணயத் திலும் சமுதாயக் கட்டமைவினை மாற்று தல் கூடும் என்பதிலும் நம்பிக்கை கொண் டவர்களாகவும் காணப்படுவர்.
புரட்சிகர இயக்கங்கள் என்று கூறப் படும் சிலவற்றிற் சீர்திருத்த இயல்புகளும், சீர்திருத்த இயக்கங்கள் சிலவற்றுட் புரட் சிகரத் தன்மைகளும் காணப்படுவது போன்றே, புரட்சிவாதியிடம் சீர்திருத்த இயல்புகளும் சீர்திருத்தவாதி யிடத்துப் புரட்சிகரத் தன்மைகளும் காணப்படுவ துண்டு. சமுதாய வாழ்வின் பகைப்புலத் தில் ஏற்படும் எதிரெதிரான விளைவுகளின் மாறுபட்ட ஒருமுகப்பாடுகளே சீர்திருத்த வாதிகளாகவும் புரட்சிவாதிகளாகவும் தோற்றமெடுப்ப துண் டென்றும் கூறப் படும்.
அது எவ்வாருகக் கருதப்படினும், குறிப்பிட்ட ஒருசமுதாய நிலையிலே தோன் *றும் சீர்திருத்தவாதிகள் செயல்வேக மிக் கவர்களாகக் காணப்படுவர். அவர்களது சீர்திருத்தும் அல்லது செம்மைப்படுத்தும்

Page 85
சீர்திருத்தவ ாதி நாவலர்
நோக்கங்கள் அவர்கள் எதிர்பார்த்ததை விடக் குறைவான அளவிலும், சில நேரங் களில் மிகக் கூடுதலாகவும் பலன் அளிப் பது உண்டு.
இத்துமதம் நீண்டகாலத்துக்கு முன் பிருந்தே பலமாறுதல்களையும் ஒழுங் கமைப்பு முயற்சிகளையும் சீர்திருத்த நட வடிக்கைகளையும் கண்டிருக்கிறது. ஆயினும் பத்தொன்பதாம் நூற்ருண்டில் இடம் பெற்ற சீர்திருத்த முயற்சிகளுக்குச் சிறப் பான சில இயல்புகள் காணப்படுகின்றன. அரசியல் இயக்கத்தோடு சார்புகொண்ட தன்மை விதந்து குறிப்பிடத்தக்கது. ஆறு முகநாவலரின் அரச நிர்வாக ஈடுபாட்டு நடவடிக்கைகள் சேர் பொன்னம்பலம் இராமநாதனைத் தேர்தலில் ஆதரிக்குமள வுக்குச் சென்றமை இங்கு மனங்கொள் ளத்தக்கது. சமயசீர்திருத்த முயற்சி தேசிய உருவெடுத்தமையும் மதச்சார் பற்ற இயக்கங்களில் அக்கறை செலுத் தியமையும் பகுத்தறிவுக் கொவ்வாத வற்றை நம்பத்தயங்கியமையும் (இராம லிங்க அடிகளுக்குக் கூறப்பட்ட அற்புத சக்திகளை நாவலர் கிண்டல் செய்தமை) சாதாரண நிகழ்ச்சிகளல்ல.
இந்தியாவிலும் இலங்கையிலும் உரு வாகிய பத்தொன்பதாம் நூற்றண்டுச் சீர்திருத்த இயக்கங்கள் ஆங்கில ஆட்சி யினதும் ஆங்கிலக்கல்வியினதும் கிறித்தவ மதம் பரப்பும் இயக்கங்களினதும் எதிர் விளைவுகளாகும். இந்நாடு முழுவதையும் தம் ஆளுகையின்கீழ்க் கொணர்ந்த ஆங் கிலேயர் அரசியல் பொருளாதார ரீதி யாகத் தமது ஆதிக்கத்தை உறுதிப்படுத் தப் பலமிக்க ஒர் அத்திவாரத்தை வேண் டினர். ஆன்மீக ரீதியாக அதனைச் சாதிக்க முடியுமெனக் கருதினர். ஐரோப்பிய நாக ரிகத்தைக் கீழைத்தேயம் முழுதும் பரப் பும் வகையில் அதன் விதையினை ஊன்ற மிக உவப்பான இடம் இலங்கையே என்று சார்ல்ஸ் கமரன் சிபார்சு செய்த போது நாவலருக்குப் பத்து வயதாகும். ஆங்கிலே யர் தமது ஆதிக்கத்தை இறுக்கியபோது, யாம் விடுதலை தவறிக் கெட்டவர்களாக

7s
மட்டுமன்றி, நமது பண்பாட்டையும் மறந் தவர்களாய்க் கீழைத்தேயத்தினராகவும் இல்லாமல் மேலைத்தேயத்தினராகவும் இல் லாமல் "சின்ன இங்கிலாந்து நினைவிலே திரிசங்கு சொர்க்கத்தில் இருந்தோம். அந்நியப் பண்பாட்டு ஊடுருவலை எதிர்ப் பதற்கு ஆன்மீக பலம் அவசியமென் பதைக் கருதி எம்மக்கள் மத்தியிற் காணப் பட்ட அறியாமை ஒழுக்கக்கேடு முதலிய வற்றைக் கண்டித்துச் சீர்திருத்த முன்வந் தவர் நாவலர்.
மேனுட்டுக் கல்வி புதிய அறிவினைப் பரப்பி, வரலாற்று அறிவும் தேசிய உணர் வும் சொந்தப் பண்பாட்டைப் பேணி வளர்க்கும் ஆர்வமும் பெருகக் காலா யிற்று. சுதேச மக்களின் பண்பாட்டுக்குப் பங்கம் விளைவித்த அம்சங்களை அகற்றி, மேனுட்டுக் கல்வி முறையின் நல்ல அம் சங்களைக் கைக்கொண்டு கல்விச் சீர் திருத்த முயற்சிகளை மேற்கொண்டார் நாவலர்.
கிறித்தவ மதம் பரப்பும் இயக்கத் தினர் மேற்கத்திய மனிதாபிமானச் சிந் தனைகளை இங்கு பரப்பினராயினும், அவர் களது அடிப்படை நோக்கம் அறியாமை அகற்றும் கல்வி நோக்கத்தோடு மாறு பட்டதாயமைந்தது. இலங்கை மக்கள் கிறித்தவர்களாக மாறுவதன் மூலமே உய்தி பெறுவரெனக் கருதிய மதப்பிர சார இயக்கத்தினர், அவர்களைக் கிறித் தவராக்கும் நோக்குடனும், தம் பாடசாலை களிற் கல்வி பயில்வோர் ஆங்கில ஆட் சியை உறுதிப்படுத்தவும் மேலைத் தேய நாகரிகத்தைப் பரப்பவும் உறுதுணையாவர் என்ற நம்பிக்கையுடனும் கல்வித் தொண் டில் இறங்கினர். அத்தகைய அவர்களது மதம் பரப்பும் முயற்சிகளின் மேற்கொண்ட பீதியின் விளைவாகப் பிறந்தவைதான் பல கல்வி நிலையங்களும் சமூக நல முயற்சி களும் சமுதாய சமய சீர்திருத்த நட வடிக்கைகளும் ஆகும். தம் சமயத்துக்கு ஏற்பட்ட ஆபத்தை அகற்றி, அதனைச் சீர்பட வளர்க்க வேண்டுமென்ற பேரார் வமே ஆறுமுகநாவலரைப் பின்னின்றியக்

Page 86
கியது. சமுதாய சீர்திருத்தவாதிகள் மணி தனின் கடமை யுணர்விற் பெருநம்பிக்கை வைப்பதுபோல் சமய சீர்திருத்தவாதியான நாவலர் மனிதனின் கடவுட்பற்றிலே பெரு நம்பிக்கை வைத்தார்.
தமிழ் மக்களின் வாழ்க்கையும் நாக ரிகமும் சமயத்தையும் கோயிலையும் நீண்ட காலமாகப் பெருமளவுக்குச் சார்ந்திருந் தாலும், சைவசமயத்துக்கெனத் தனியான மத்திய நிறுவனம் எதுவும் அமையவில்லை. ஆறுமுகநாவலர் காலத்திலும் சைவசமயம் கோயில்களையும் அவற்றின் அதிகாரிகளை யும் குருக்கள்மாரையும் சைவ மக்களையும் சார்ந்தே காணப்பட்டது. கோயில்களும் கோயிற் கருமங்களை நடாத்துபவர்களும் அல்லது சமயமும் அச்சமயத் தலைவர்கள் பிரசாரகர்களும் சீராக இயங்கினலன்றிச் சமயம் மதிக்கப்படத்தக்கதாய் விளங்கா தென்பது சொல்லாமலே போதரும்.
சமயத்துக்கு ஆபத்து வந்த காலத்தில் அதன் நிலையாதாரங்கள் சீரழிந்தும் செம்மையிழந்தும் கிறித்தவப் பாதிரி மாரின் கேலிக்கிடணுய்க் கிடந்தன. அத் தருணத்தில் ஆறுமுகநாவலரின் கவனம் கோயில்களையும் அவற்றின் கருமங்களை ஆற்றுவோரையும் சீர்திருத்துவதின்பாற் பெருமளவிற் சென்றது. பிறமதத்தினர் அவதூறு கூறுமளவுக்குக் கோயிற் கருமங் களும் பூசகர் தர்மகர்த்தாக்கள் நடத்தை யும் சைவமக்கள் செயல்களும் சென்றமை அவரது மனதை உறுத்தியது.
கோயில்கள் ஆகம முறைப்படி அமைய வேண்டுமென்றும் அங்கு வேத பாராயண மும் தேவார திருவாசக பாராயணமும் சைவப் பிரசங்கங்களும் நிகழவேண்டு மென்றும் நாவலர் வற்புறுத்தினர், சமு தாய வாழ்வினைப் பெருமளவுக்கு நெறிப் படுத்திய கோயில்களிலே பொதுப்பெண் கள் நடனம், வாணவிளையாட்டு, சிற்றின் பப் பாட்டுக்கள், உயிர்ப்பலி போன்றவை இடம் பெற்றமையும் சுடலைமாடன், காட் டேறி முதலியவற்றின் வழிபாடுகளும் அவருக்குச் சம்மதமில்லை.

.ெ தில்லநாதன்
கோவில்கள் கேளிக்கைகளும் வியா பாரங்களும் நடக்கும் நிலையங்களாகக் காணப்பட்டமை நாவலருக்குப் பெரும் சீர்கேடாய்த் தோன்றியது. கோவிற் திருவிழாக்களில் ஒழுங்கற்ற சனக்கூட்ட நெருக்கடியிற் பிறர் பெண்டிரைத் தீண்டும் செயல்கள் நிகழ்வதும், நகையலங்காரக் காட்சிகளாற் பிறர் கவனத்தைக் கவரப் பெண்கள் விரும்புவதும், வெகு சனங்க ளின் மத்தியிற் காளாஞ்சி பெறுவதைச் சில முக்கியஸ்தர்கள் பெரிதாய்க் கருது வதும், அடிதடிச் சண்டைகளுக்கும் வழக் குச் செலவுகளுக்கும் திருவிழா நடப்புக்கள் காலாவதும், கோவில் திருவிழாக் கூட்டத் திற் களவுகள் இடம்பெறுவதும், நித்திரை விழித்துத் திருவிழாப் பார்ப்போர் தொழி லையும் படிப்பையும் இழப்பதோடு பண விரயத்துக்கும் ஆளாவதும், ஆடு கோழி முதலியவற்றின் உயிர்ப்பலிகள் நடாத்தப் படுவதும் ஆறுமுகநாவலரைப் பொறுத்த வரை கடவுட் சிந்தைக்கு முதன்மை தராத செயல்களாக மட்டுமன்றி, அவ மானத்துக்குரிய ஒழுக்கச் சீரழிவுகளாகவும் பட்டன. அவற்றைக் களைந்து கோயில் ஒழுங்குகளைச் சீர்திருத்த அவர் முனைந்தார்.
பின்வந்த பல எழுத்தாளர்கள் சிறப் பாக மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் தம் புனைகதைகளின் மூலமாகவும் கவிதைகளின் வாயிலாகவும் அத்தகைய அலங்கோலங் களின் பால் வெறுப்பினையூட்ட எத்தனித் ததைப் பார்க்குமிடத்து அவை எவ்வளவு தூரம் சமுதாய ஒழுக்கத்தினைப் பாதித் தன என்பது புலப்படும். ஆறுமுகநாவலர் அவற்றைக் கண்டித்து அரைநூற்ருண்டுக் குப் பின் க. வேலுப்பிள்ளை, யாழ்ப்பாண வைபவ கெளமுதி என்ற தமது நூலில்,
*சீர்திருத்தம் அதிகப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல மரத்திற் புல் லுருவிகளைப் போலச் சில மோசங் களும் சிறிது சிறிதாய்ப் பெருகுவதைக் காண்பது துக்கமான சம்பவம். மது Ltnrooftb பாவித்தல், அலங்கார மாளிகை, விலைபெற்ற வர்ணப் பட் டாடை முதலியவைகளில் அதிக

Page 87
சீர்திருத்தவாதி நாவலர்
பணத்தைச் செலவிடுதல், வாண வேடிக்கை, கூத்து முதலியவைகளுக்கு வீண்செலவு செய்தல், ஐரோப்பிய நாகரிக பழக்கவழங்கங்கள் ஆதியன யாழ்ப்பாணத்தின் ஏற்றத்தையும் தோற்றத்தையும் அழிக்குங் குரு 69ë GODSF 356T nr Lib””
என எழுதியிருப்பதும் அவதானிக்கத் தக்கது,
பொதுமக்கள் ஐரோப்பிய நாகரிகத் தைப் பிரதிபண்ண எத்தனிக்கும் போலிக ளாகவும் வீண்வழிகளிற் பணத்தை விர யஞ் செய்பவர்களாகவும் மதுபானம் முதலியன பாவித்துக் கேட்டுக்கு வழிகோலுபவர்க ளாகவும் முடிந்து விடாது சீர்திருந்தி மதிப்போடு வாழவேண்டுமென்று நாவலர் ஆசைப்பட்டார். வருந்திச் சம்பாதித்த பொருளைக் கூத்து முதலிய வேடிக்கைகளி லும் பொய்வழக்குகளிலும் செலவிடாது கல்வி விருத்திக்குச் செலவிடுங்கள் என்ற நாவலர் கூற்று இன்றைக்கும் உரத்து ஒலிக்கப்படவேண்டிய ஒரு சீர்திருத்த வாதியின் கூற்ருகும்.
நாவலரின் சீர்திருத்தக் கருத்துக்கள் பொதுவாகச் சமய நூல்களையும் ஆசாரங் களையும் வரலாறுகளையும் சார்ந்தே அமைந்தபோதிலும், சனங்கள் பாவங்களை விடுத்துப் புண்ணியங்களைத் தேடும் அவ சியத்தை மட்டுமன்றி, வறுமையும் துன்ப மும் அகன்று செல்வமும் ஆரோக்கியமும் பெறவேண்டியதன் அவசியத்தையும் அவர் வற்புறுத்தினர்.
பின்னல் மிகப் பிரயத்தனப்பட்டு இந்தியாவில் மதுவிலக்கு இயக்கத்தினை நடத்திய மகாத்மா காந்தி, இராஜகோபா லாச்சாரியார் முதலியோர் கூறியவற்றை நாவலர் முன்னரே கூறிவிட்டார். தமது பூமிசாத்திரப் புத்தகத்தில் நாவலர்,
*" வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மது Lunaith...... ஆங்கிலேய துரைத்தனத் தார் தமக்குச் சாராயத்தால் எய்தும்

- M
77
பொருளைப் பிறவாயில்கள் சிலவற் ருல் எய்து விக்கத் தலைப்பட்டுக் கொண்டு சாராயத்தை ஒழிப்பாரா யின், இலங்கைச் சனங்கள் செல்வமும் ஆரோக்கியமும் அடைவார்கள்'"
என்று எழுதினர்.
கோயில்களில் உயிர்ப்பலியிடும் ஒரு வழக்கமும் நீண்டகாலமாக இருந்துவரு கிறது. இந்த நூற்ருண்டிற்கூடப் பலவிடங் களில் அவ்வழக்கத்தை வன்மையாக எதிர்க்க அதனை அநாகரிகமானதென்று கருதுவோர் பயப்படுகிருர்கள். நல்லூர்த் தேரின் உருளையிலே ஆடு வெட்டும் வழக் கத்தை நிறுத்தச் சொன்ன நாவலர், அவ் வாறு செய்யாதொழியின் தேர் பின்ன மின்றி ஒடி நிலைக்கு வாராது என்றவர் களின் கூற்றினை மேல்வருமாறு கிண்டல் செய்கின் முர் :
‘'எத்தனையோ ஆயிரம்பேர் ஏறிய பிரமாண்டப் புகைக்கப்பல்கள், பலி கொடதொழியவுஞ் சமுத்திரத்திலே நெடுந்தூரம் ஓடி இடையூறு ஒரு சிறி தும் அடையாது திரும்புகின்றன வாம்.இவ்வியாழ்ப்பாணத்தில் இவ் வொரு சிறுதேரோ பலிகொடா தொழியின் ஒடி நிலைக்கு வாராதாம்."
புதிய விஞ்ஞான அறிவுபெற்றதொரு பகுத்தறிவாளனின் சீர்திருத்தக் குர லாக இது ஒலிக்கவில்லையா ?
கோவில் நிர்வாகத்தைச் சீர்திருத்த வும் நாவலர் பெரும் பிரயத்தனம் மேற் கொண்டார். தர்மகர்த்தாக்கள் மக்கள் மத்தியிற் காளாஞ்சி கொடுத்து மதிக்கப் படுவதையும் பணம் பெருக்குவதையுங் குறிக்கோளாகக் கொண்டியங்கியமையை நாவலர் சினந்து கண்டித்தார்.
"இக்காலத்திலே, கோயிலதி காரிகள் பெரும்பான்மையும் சைவா கம உணர்ச்சியும் நல்லொழுக்கமும் சிவபக்தியுமில்லாதவர்களாயும் சிவத் திரவியாபகாரத்திலும் வியபிசாரத்

Page 88
78
திலுமே கருமத்தைச்செலுத்துவோர்
ளாயுமிருத்தலாலும் அக் கோயில் ளுக்குப் பொருள் கொடுப்போர்களுப் அவ்வாறே புண்ணிய பாவப் பகுப் புணர்ச்சின்றி, கோயில்களில் வெகு சனங்களுக்குமுன் தாங்கள் பெறும் உபசாரத்தையும், தாசிகள் கூட்டம் வானவிளையாட்டு முதலிய வேடிக்கை களையும் பொருளென மதித்தலாலும், சில கோயிலதிகாரிகள் பூசை திரு விழாக்களைக் குத்த கைகூறி விற்ற லாலும், பொய் களவு வியபிசாரம் சிசுவதை வழக்கோரம் பேசல் முதலிய பெரும் பாதகங்களைச் செய்யும் பிரா மணர்கள் கோயிலதிகாரிகளிடத்திலே பொருள்கொடுத்துப் பூசை திருவிழாக் களையும் அவற்றேடு சிவத்திரவியாப காரமாகிய அதிபாதகத்தையும் விலைக் குக் கொள்ளுதலாலும், அதனல் சைவாகமவுணர்ச்சியும் நல்லொழுக்க மும் சிவபக்தியுமுள்ள பிராமணர்கள் விலக்கப்படுதலாலும், நமது தேவா லயங்கள் சைவாகம விதிப்படி நடவா தொழிந்தன. ஐயையோ !”*
நாவலரின் இக்கருத்து இன்றும் பல விடத்து அர்த்தம் பொருந்தியதென்பதில் ஐயமில்லை.
கடவுள் பெயரிற் சேர்க்கப்பட்ட பணம் தனிப்பட்டவர்களாற் கையாடப் படுவதை, பணம் பிடுங்கும் மோசடிகளை நாவலர் அம்பலப்படுத்தினர். வரவு செலவு விபரங்களை உலகத்துக்கு ஒப்பித் தல் வேண்டுமென்ற நாவலரைச் சம்பிர தாய முறைப்படி பிரார்த்தனையிற் கண் களை மூடிக்கொண்ட ஒர் அடியார் என்று மட்டும் கொள்ளுவது சாலாது, கோயில் நிர்வாக ஊழல்களை அவர் அம்பலப்படுத் தும் விதம், "கோவில் கூடாது என்று கூற வில்லை. ஆனல் கோவில் கொடியவர் களின் கூடாரமாகிவிடக்கூடாதே என்று தான் கூறுகிறேன்" என்ற கலைஞர் மு. கருணுநிதியின் பராசக்தி வசனங்களை நினைவுபடுத்தலாம். சேர்த்த பணம் எங்கே? இக் கோயில் யாருடையது?-

G。 தில்லநாதன்
இன்றும் பலர் கேட்க அஞ்சும் இத்தகைய கடாக்களைத் தமிழ் கூறும் உலகில் நாவல ருக்கு முன் யாராவது எழுப்பியிகுக்கிருர் 56Trr?
கிறித்த மதத்தைப் பரப்பிய பாதிரி மார்கள் வேதத்தை நன்கு கற்றறிந்திருந் தமை அவர்களது சமயப் பிரசாரத்துக்குப் பேருதவியாய் அமைந்தது. அதே வேளை யில் அவர்கள் நல்லொழுக்கமுடையவர் களாகவும் தியாகசிந்தையுடையவர்களாக வும் திகழவேண்டியதன் அவசியம் வற் புறுத்தப்பட்டமை வீரமாமுனிவரின் வேதியரொழுக்கம் போன்ற நூல்களைப் பார்க்குமிடத்துத் தெளிவாகும். இந்நிலை யிற் பலரது புறக்கணிப்புக்கிடணுய் இருந்த சைவசமயக் குருமார் பொய் களவு விய பிசாரம் முதலியவற்றிற் காட்டப்படும் சைவாகம உணர்ச்சியும் நல்லொழுக்க மும் சிவபக்தியும் அருகியும் காணப்பட் டமை சைவத்தின் அலங்கோலத்துக்கும் சீரழிவுக்கும் காரணமாயிற்று. அதனல் பலவீனமுற்ற சைவசமயம் பலம்பெற்று வளரச் சைவக் குருமாரைச் சீர்திருத்த வேண்டியதவசியமென்பதனை நா வ ல ர் உணர்ந்தார். அத்துறையில் அவர் காட் டிய பேரார்வம் மேல்வரும் அவரது கூற் றுக்களாலே தெளிவாகும்.
'சைவசமயிகளே! கிறிஸ்து சமய குருமாராகிய பாதிரிமார்கள் தங்கள் பாஷையையும் அதற்கு மூல பாஷை களையும் இலக்கண இலக்கிய கணித தருக்க பூகோள ககோளாதிகளையுந் தங்கள் சமய நூல்களையும் படித்துத் தேர்ந்து பரீட்சையிற் சித்திபெற்று நெடுந்தூரத்தினின்றும் இங்கு வந்து, நம்முடைய தேச பர் ஷைகளையும் நீதி நூல்களையுஞ் சமய நூல்களையுஞ் சிறி தாயினும் படித்துப் பிரசங்கிக்கிருர் களே! உங்கள் சமய குருமாருள்ளே சிலரொழிய, மற்றவர்கள் அந் தி யே ட் டி ப் பட்டோலைதானும், இன்னுஞ் சொல்லின் அந்தியேட்டி யென்னும் பெயர்தானும் பிழையற எழுத அறியார்களே ! கெட்டி !

Page 89
சீர்திருத்தவாதி நாவலர்
கெட்டி!! சிவாகமத்தில் ஒரு சுலோக மாயினுந் தேவார தி ரு வாச கங்களில் ஒரு பாட்டாயினுந் திரு வள்ளுவரில் ஒரு குறளாயினும் அறி யாத மனிதப் பதர்களுஞ் சைவசமய குருமாராம் ! உங்கள் சைவக் குருமா ருக்கு என்ன வேலை? நீங்கள் வருந்திச் சம்பாதித்துக் கொடுக்கக் கொடுக்க அவர்கள் எளிதில் வாங்கி உண்டுடுத் துக்கொண்டு வெட்கஞ் சிறிதுமில்லா மல் மாப்பிள்ளை மாடுகள் போலத் திரி கின்ருர்களே'.
சமயத்தை உணர்த்தவும் வளர்க்கவும் வலுவற்று வெறும் சம்பிரதாயங்களிலும் சடங்குகளிலும் பிழைத்துக் கிடந்த சமய குருமாரிடம் நாவலர் கொண்ட சீற்றமும், அவரிடைக் காணத்துடித்த சீர்திருத்தமும் இவ்வார்த்தைகளிற் புலப்படும். கோவில் களையும் குரு மா ரையும் சீர்திருத்த விழைந்த நாவலர் வெகுசனங்களை நோக் கிப் பேசியமையும் வெகுசன மொழி யொன்றினைக் கையாண்டமையும் விதந்து குறிப்பிடவேண்டியவையாகும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பின்றிச் சீர் திருத்தம் சாத்தியமாகாது.சீர்குலைவுகளைப் புரிந்துகொள்ளவும் நிவர்த்தி செய்யவும் ஆர்வம் உண்டாகவும் அடிப்படைக் கல்வி அவசியமாகும். ஒழுக்கத்தைச் சீர்ப்படுத்தி சுயபண்பாட்டையும் சமயத்தையும் பேணு தற்கவசியமான ஒழுக்க பலத்தை உரு வாக்க எண்ணிய நாவலர் கல்வியை அதற் கொரு கருவியாகக் கையாண்டார். அவர் நிறுவிய கல்விக் கூடங்களும் முதியோரைக் கேள்விவாயிலாகத் திருத்த முனைந்த சொற்பொழிவுகளும் சைவ மக்கள் வாழ் வைச் சீர்திருத்த எடுத்த நடவடிக்கை களாம். செல்வம், சாதி உயர்வு, மூப்பு போன்றவற்றைவிடச் சிறப்பாய்க் கல்வி யைக் கருதிய நாவலர், சைவப்பிள்ளைகள் பொய், களவு, கொலை, சூது முதலிய வற்றை வெறுக்கும் சற்புத்திரர்களாய், அன்பும் ஒற்றுமையும் நேர்மையும் துணி வும் கல்விவேட்கையும்கொண்டவர்களாய். பெற்ருேரையும் ஆசிரியரையும் மதிக்கும்

79
குணசீலர்களாய் வளரவேண்டு மென் விரும்பினுர், V
கோயில்களில் மட்டுமன்றிச் சமுதா யத்திலும் காணப்பட்ட போலிவேஷத் தையும் ஊழலையும் நாவலர் கடிந்தார். சம்பளம், சிபார்சு, பொருள், உத்தியோ கம் முதலியவற்றின் பொருட்டு மதம் மாறியவர்களை நாவலர் எதிர்த்தமையும் ஒருவித சமூகச் சீரழிவினைத் திருத்த முயன் றமையென்றே கருதப்படலாம். நல்லொ ழுக்கமின்றிப் பிறப்பாலே தாங்கள் உயர்ந் தவர்கள் என்ற மிடுக்கோடு போலிவேஷம் போட்டவர்களை, அத்தகைய போலிவேட தாரிகளாலே சீர்குலைவுகள் துரிதகதி யடையுமென்பதை உணர்ந்து போலும், நாவலர் காரசாரமாகக் கண்டித்தமை கவனிக்கத்தக்கது.
சாதி பெரிதோ சமயம் பெரிதோ! சிவபதப்பேறு சிவ நிந் தை  ைய வெறுத்த நாவிதருக்கோ! சிவநிந் தையை வெறுக்காது தழுவிய சைவ குருமார் பிராமணர் வேளாளர் என் னும் இவர்களுக்கோ! பிராமணர் முதற் பறையர் ஈருகிய எல்லாச் சாதியாருள்ளுஞ் சைவர் உண்டன்ருே!
புறச்சமயப் பரவலைத் தடுக்கவேண்டிய தவசியமென உணரப்பட்ட காலத்திற் சமய ஒழுக்கச் சிறப்புக்கு முதன்மை தந்து நாவலர் மொழிந்த இவ்வார்த்தைகள், "ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும், கங்கைவார்சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே' என்ற திருநாவுக்கரசரை நினைவுபடுத்தும்.
சைவ மக்கள் ஒழுங்கும். கட்டுப்பாடும் குறைந்தவர்கள் என்று கூறப்படுவதுண்டு. தமிழ்நாட்டிலும் சரி இலங்கையிலும் சரி பல கோவில்களின் வீதிகளிலேயே எச்சில் உமிழ்தல், மூக்குச் சிந்துதல், மல சலம் கழித்தல் போன்றவை நிகழும், அத் தகைய சீர்கேடுகளைத் திருத்தவும் நாவலர் முயன்றர். திருவள்ளுவர் வாழ்ந்து சுமார் இரண்டாயிரம் வருடங்களின் பின் எங்கே எச்சில் , உமிழ்வது, எங்கே மலசலம்

Page 90
80
கழிப்பது, எப்படி உடம்பைச் சுத்தமாக வைத்திருப்பது, எப்படி உண்பது, எப்படி உடுப்பது, எப்படிச் சிரிப்பது, ஏன் பல் துலக்கவேண்டும், களவும் பொய்யும் கொலையும் சூதும் ஏன் ஒழிக்கப்படவேண் டும் என்பன போன்ற விடயங்களை விளக்க வேண்டியிருக்கிறதென்றல், சீர்திருத்த முயற்சிகள் எவ்வளவுதூரம் பயனளிக்க வல்லவை என்பதனையும் எண்ணிப் பார்க்க வேண்டும். எப்படியாயினும், நாவலர் சளைக்காமல் அத்தகைய விடயங்களை வற் புறுத்தியும் வாழ்க்கையைச் சீர்திருத்தப் பணியாற்றினர்.
இந்துமதத்தின் வளர்ச்சிக்கும் சமு தாய முன்னேற்றத்துக்கும் சாதி அமைப்பு முறை தடங்கலாய்க் கிடக்கிறதெனப் பொதுவாகக் கொள்ளக்கிடக்கிறது. வங் காளத்தில் இந்துசமய வாழ்க்கை முறை யினையும் சமுதாய அமைப்பினையும் சீர் திருத்த இயக்கம் நடாத்திய ராஜாராம் மோகனராய் (1772-1833) வேதாகமங் களிற் பூரண மதிப்புக் கொண்டவராயி னும், சாதி முறையினை எதிர்த்தார். ஆசார சீலராகிய நாவலர் வெகுசன துரோகத்தை எதிர்த்தும் வாந்தி நோய், பஞ்சகாலங்களிலும் பிறமதத்தினரையும் சேர்த்துக்கொண்டு பொதுநலத் தொண் டாற்றியவராயினும் சாதி அமைப்புக் கெதிராய்க் கிளர்ந்தெழவில்லை, நாவலர் தோன்றிய பிரதேசத்திற் பிறப்பினுல் உயர்வு தாழ்வு பாராட்டப்படுவதன் குறை இன்னும் தக்கபடி உணரப்படாத நிலையில் அச்சீர்திருத்தத்தை நாவலர் அன்று முன்னெடுத்துச் சொல்லவில்லை யென்பதை ஒரு குறையாகக் கொள்ள லாமோ என்பது கேள்விக்குரியது. ராஜா ராம் மோகனராய் தானும் பிராமண ரல்லாதார் வேத உபநிடதங்களைத் தீண்டு வதை அனுமதிக்க அன்று தயங்கினர்,
சீர்திருத்தவாதிகள் எனப்படுவோர் பொதுவாக மரபுவழி அமைப்புக்களின் பெருமைகளைப் போற்றிச் சார்ந்து நின்று முன்னிலை மீட்புக்கு முயல்வார்களேயன்றிப் புதிய அடிப்படை மாறுதல்களுக்காகப் போராடுவதில்லை, முன்னைப் பெருமைக்குப்

சி. தில்லைநாதன்
பங்கம் விளைக்கும் வகையிலே நடைமுறை யிற் கெட்டியாகிவிட்ட பழக்கவழக்கங்க ளைக் களைய அவர்கள் முயற்சி மேற் கொள்வர் ; முன்னைப் பெருமைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் ஒழுகுபவர்களைக் கண்டித்துத் திருத்த எத்தனிப்பர், முன் பிருந்த நிலைக்கு இடையூறு நேராத வகை யில் ஒழுகுவதற்கு அவசியமான விழுமி யங்களைப் பொதுமக்களிடைப் பரப்பும் நடவடிக்கைகளையும் மேற்கொள்வர். முந்தியவற்றுக்கு முரணுகவும் அவற்றைப் பலவீனப்படுத்தும் வகையிலும் புதியன புகுமிடத்து இரண்டுக்குமிடையில் இணக் கம் காண்பதற்கும் பண்டையமைப்புக் குக் கேடு நேர்வதைத் தடுக்க அவசிய மான சீர்திருத்தங்களை வலியுறுத்துவதற் கும் சீர்திருத்தவாதிகள் முன்வருவர்.
ஆறுமுகநாவலர் பாரம்பரிய சமுதாய சமய அமைப்புக்களை மாற்ற உத்தேசித் தாரில்லை. சைவத்தைப் பாதுகாக்கும் உணர்ச்சியால் உந்தப்பட்ட நாவலர் அதற் குக் குந்தகமாக இருந்த நிலைமைகளைச் சீர்படுத்த உழைத்தார். கோவில் நிர்வா கத்திலும் நித்திய கருமங்களிலும் காணப் பட்ட ஒழுங்கீனங்களை விலக்கப் பாடுபட் டார். சைவசமயக் குருமாரின் அவமானத் துக் கிடனுன குறைகளைக் கண்டித்துச் சமயத்தைப் பேணி வளர்க்க அவர்களிடம் எத்தகைய சிறப்புக்கள் காணப்படவேண் டும் என்பதை உணர்த்தினுர், சீரான வாழ்வுக்கும் சமயப் பெருமைக்கும் உதவத் தக்க பழக்கவழக்கங்களை மக்களிடம் பரப்ப அயராது செயற்பட்டார். மக்கள் தம் காலத்தையும் பொருளையும் அவ மாக்கும் காரியங்களை விலக்கவேண்டிய தனை வலியுறுத்தினர். சுருங்கக்கூறின் எம் மவர் புறக்கணிப்புக்கும் பிறரது அவமதிப் புக்கும் இலக்காயிருந்த சைவவாழ்க்கை யினை நேராக்கிச் சீராக்கத் தமக்குச் சரி யெனப்பட்ட வழிகளிலெல்லாம் உறுதி யோடும் தியாகசிந்தையுடனும் நாவலர் செயற்பட்டார். அவர் சைவ உலகில் சீர் திருத்த விழைந்த குறைபாடுகள் பல இன் றும் மண்டிக் கிடப்பது விசனம் தருவதா யினும், நாவலரது நடவடிக்கைகள் சமயத் துறையில் மட்டுமன்றி வேறு துறைகளிலும் விளைத்த பலனைக் குறைத்து மதிப்பிடல் சாலாது.

Page 91
வெகுசன தொ நாவலர்
ஆ. சிவாேகசச்செல்வன்
மனித சமுதாயத்தின் பல்துறை வளர்ச்சிகளையும் நெறிப்படுத்தி வரும் வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் பரந்துபட்ட கலாசாரப் பங்களிப்புக்களைப் பற்றி ஆழமாகவும் அகலமாகவும் சிந்திக் கும் போக்கு இன்றைய அறிவுஜீவிகளின் மத்தியிலே பரவலாகக் காணப்படுகிறது. நம்முன்னே விரிந்திருக்கும் உலகளாவிய சமூகத்தை உள்ளும்புறமும் ஆட்கொண் டுள்ள வெகுசனத் தொடர்பு சாதனங் களின் பாரிய வளர்ச்சி பத்தொன்பதாம் நூற்றண்டாரம்பம் முதலாக உருவாகிய அறிவுலக மலர்ச்சியோடு இணைந்து வளர்ச்சி பெற்றது. சமுதாயவியற் பின் னணியிலான அண்மைக் காலச் சிந்தனைகள் பாரம்பரிய தொடர்புச் சாதனங்களுட ஞன தொடர்ச்சியைக் கோடிட்டுக் காட்டு வனவாகவுள்ளன (11 : 13). சென்ற நூற் முண்டின் வரலாற்றுப் போக்கோடு இயைந்து, சமூகத்தின் பல்வேறு ஈர்ப்புக் களுக்கெல்லாம் ஈடுகொடுத்து மனிதாபி மானத்துடனும், தர்மாவேசத்துடனும் இயங்கிய நாவலர், வெகுசன கலாசாரத் தோடு இரண்டறக் கலந்து செயற்பட் டார். பன்முகப்பட்ட பணிகளின் எல்லை யிலே வெகுசன சமூகத்தின் தோற்றத்தை யும் பூரணமாக உணர்ந்து கொண்டார். ‘வெகுசனத் துரோகம்’ என்ற தலைப்புடன் இலங்கை நேசன் பத்திரிகையில் வெளி யிட்ட கடிதத்திலும், மற்றும் பத்திரிகைக் கடிதங்களிலும் மட்டுமன்றிப் பல்வேறு பணிகளிலும் சமூகம்ாற்றத்தின் பின்ன
9

டர்புப் பின்னணியில்
ணியை நாவலர் நன்கு உணர்ந்து செயற் பட்டமையை இனங்காணக் கூடியதாக வுள்ளது, “ வெகுசன சமூக சம்மதம் ” (2 : 166) என்ற தொடரை உணர்வு பூர்வ மாகவும், முதன் முதலாகவும், தமிழிலே பயன் படுத்தியவர் நாவலர் என்றே கூற லாம்.
*உதயதாரகை என்னும் பத் திரிகை இவ்வளவு காலமும் நிலைபெற் றது எதனுலே? சனங்களுடைய பணத் திணுலே. பத்திரிகையினது கடமை யாது? சனங்களுக்குப் பொது நன்மை செய்வது. யாழ்ப்பாணத்திலே உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மகம தீயர்கள் இப்பொழுது இரண்டு மூன்று வருஷ காலம் என்ன நிலையில் இருக் கிருர்கள்" (2 : 1621.
என்று விஞ வெழுப்பிய நாவலர், ** சனங் களின் நன்மையின் பொருட்டு’ ஏறத்தாழ ஐம்பத்தாறு ஆண்டுகளாக ஆற்றிய பணிகள் பத்தொன்பதாம் நூற்ருண்டு வெகுசனகலாசாரப் பின்னணியிலே புதிய பரிமாணங்களை ஏற்படுத்தின.
அக்காலத்திலே நாவலரின் பரந்த செயலாண்மைத் திறத்தினை இலங்கை நேசன் பத்திராதிபராகிய ம. சின்னத்தம்பி தமது ஆசிரிய வசனங்களிற் பின்வருமாறு எழுதினர்:
' மகாராசா சிறீமத் ஆறுமுக
நாவலர் அவர்களின் நரசினேக சற்

Page 92
82
கரும முயற்சியினலேயே, யாழ்ப் பாண சாகியமும் தீட்சித சாகியமும் செந்தமிழ்நடையும் தற்காலம் எய்தி யிருக்கின்ற பிரபல விருத்தியையும் சீர்திருத்தங்களையும் இலங்கை செனணு திபத்தியங்களில் வசிக்கின்ற பிரபுக் கள் - கலைஞர் - வித்தியார்த்திகள், எவரும் கண்டும் கேட்டும் அறிந்திருக் கின்றனரே. சுகுணபூஷிதருந் தேசாபி மாணரும் உயிர்களிலே தண்ணளியி னருமாய் ஓ பதின்மர் நமது யாழ்ப் பாணத்திலே இருந்தாலோ (1 : 1851.
மேற்போந்த வாசகங்கள் நாவலர் வாழ்ந்த காலத்திலேயே (1877ளுல தைமீ" 31ம் தீ எழுதப்பட்டவை. குறிப்பாக நாவலர் தமது 'நரசினேக சற்கரும முயற் சிகளைச்" சரிவரச் செய்வதற்குப் பயன் படுத்திய முயற்சிகளை இன்றைய வெகு சனத் தொடர்புச் சாதனங்களின் பிர தான பண்புகளி னடிப்படையில் அவ தானிக்கும் போது, நிதானமாக மதிப்பீடு செய்யப்படவேண்டியது மட்டுமன்றிச் சில எல்லைகளையும் நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்.
விஞ்ஞான தொழில் நுட்ப சாதனங் களின் பின்னணி யி லா ன வெகுசன தொடர்பு சாதனங்களின் பயன்பாடு பத் தொன்பதாம் நூற்ருண்டு முதலாக பல் வேறு நிலைகளில் அறிமுகப்படுத்தப் பட்டு வரினும் கடந்த இரு தசாப்தங்களிலேயே புதிய பரிமாணங்களைப் பெறும் சூழல் உரு வாகியுள்ளது. மேலும் அரசியல் பொரு ளாதார மரபுகளிலும், சமூக உறவுகளி லும் ஏற்பட்ட மாற்றங்கள் மூன்ருவது உலகநாடுகளிலும் குறிப்பாக இலங்கை யிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் மத்தியில் உருவாகி புள்ள புதிய மனுேபாவங்களும், சிந்தனை களும், வாழ்க்கைமுறைகளும் மக்களைப் பரந்த அளவிலே சாதி சமய மொழி அடிப் படைகளைக் கடந்த உலகளாவிய மனுேபக் குவத்தை நோக்கி வழிப்படுத்துகின்றது. பொருளாதாரவளர்ச்சி, சமூக சம்த்துவம், சமூக அண்மதி, அரசியல் விழிப்பு ஆகிய

ஆ. சிவநேசச்செல்வன்
பல்வேறு நிலைகளையும் நோக்கி, மனம் திறந்து சிந்திக்கும் வெகுசன குழாத்தினர் உருவாகும் நிலை, படிப்படியாக மலர்ச்சி பெறுகின்றது. இவ்வகை வளர்ச்சிப் போக் குக்கள் யாவற்றிற்கும் மூலகாரணமாயது நவீன வெகுசனத் தொடர்பு சாதனங் களின் வளர்ச்சியும், நவீன சமுதாயத் தோற்றமும், ஒன்றிணைந்த செயற்பாடு களுமேயாகும். குறிப்பாகச் சமூக பொரு ளாதார மாற்றங்கள், நாடுகளின் தேசிய வளர்ச்சியையும் இலக்கிய கலாசார வளர்ச்சியையும் புதிய பரிமாணங்களுடன் உருவாக்கி வருகின்றன.
"பழைய நிலமானிய சமுதாயத் தின் தேய்வு, புதிய வர்க்கங்களின் எழுச்சி, அச்சியந்திரத்தின் வருகை, குறிப்பிடத்தக்க அளவில் பரவலான கல்வி, மரபு, சம்பிரதாயம் என்பன வற்றில் நம்பிக்கைக்குறைவு, பிறப் பாலன்றிச் செய்தொழிலால் ஒரு வருக்கு மதிப்பு, உழைப்பின் மகத் துவம் முதலியன. நவீன சமுதாயத்தின் பண்புகளாகும்' (5 : 1821,
இவ்வகை நவீன சமுதாயத்தின் தோற் றப் பின்னணியிலே நாம் நீண்ட கால மாகப் பயன்படுத்தி வந்த சொற்களும் பிரயோகங்களும் புதிய அர்த்தத்தையும் பரிமாணங்களையும் பெறுவதாகவும் அமை வது தவிர்க்கமுடியாதது. 'வெகுசனம்" என்ற சனக்கூட்டத்தை விளக்கும் பேச்சு வழக்குத் தொடர் இன்று, Mass என வரும் ஆங்கிலப் பதத்தின் நவீன தமிழ் வடிவமாகப் பயன்படுத்தப் படுகின்றது (3; 1111. எனவே பொருள் எல்லையின் விரிவையும் கருத்தாழத்தையும்.” மனங் கொண்டு அவதானிக்கும்போது நவீன தொடர்பு சாதனவியல் அடிப்படையில் நோக்கும் ' வெகுசன சமூகச் சூழலை' நாம் நாவலர்காலப் பின்னணியிலே நோக்க முடியாது. நாவலரவர்களே **வெகுசனம்" என்ற தொடரைப் பயன் படுத்தி யிருப்பினும் இன்று பயன்படுத்தப் படும் அர்த்தத்திலிருந்து வேறுபட்டது என்ற உண்மையையும் முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும்.

Page 93
வெகுசன் தொடர்புப் பின்னணியில் நாவலர்
* வெகுசனம் என்பது சராசரி மனிதனே எல்லோர்க்கும் பொதுவான வையும் அதே வேளையில் ஒருவருக் கெனக் குறிப்பிட்டுக் கூறப்பட முடி யாதவையாகவுமுள்ள பொதுப் பண்பு களையுடைய மக்கட் கூட்டத்தினைக் குறித்து நிற்கும். அதாவது மற்ற மனிதரிலிருந்து பிரிந்து நிற்காத மனி தனைச் சுட்டுவதே இக் கோட்பாடு
3 : 1121. என்பதே இன்று வெகுசனம் பற்றிட் பொதுவாகப் பலராலும் ஏற்றுக்கொள் ளப்படும் வரைவிலக்கணமாகும்.
அறிவுலக மலர்ச்சியின் அடியாகவே தேசிய வளர்ச்சியானது உருவாகும் என் ந நிலையிலே வெகுசன தொடர்புச் சாதனங் களைப் பல்வகை வளர்ச்சிக்கும் பயன்படுத் தும் நிலை இன்று உருவாகியுள்ளது. புதிய நகரங்களின் தோற்றமும், பொருளாதார முறை மாற்றமும், கல்வியுலக விழிப்பும் வெகுசன சாதனங்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகளுமே நவீன சமுதாயத்தை உருவாக்கியுள்ளது (9:330). எழுத வாசிச் கத் தெரிந்த மக்கள் கூட்ட மலர்ச்சி யுடன் தொழில் நுட்ப சாதனங்களினதும் உற்பத்திச் சாதனங்களினதும் முன்னேற்ற மும் இணைந்த சமூகத்திலேதான் பத்திரிகை களின் தோற்றம், திரைப்படங்களின் தயாரிப்பு, ஒலிபரப்பு நிலையங்களின் ஒன் றிணைந்த செயற்பாடு ஆதியன புதிய சமு தாயத்தை உருவாக்கி யுள்ளது குறிப் பாக அறிவுலக மலர்ச்சியும் எழுத்தறிவு வளர்ச்சியும் வேகமடைந்துள்ளது. புதிய சிந்தனைகளை யுடைய வளர்ச்சி நோக்கை அவாவும் நவீன சமுதாயத்தின் தோற்ற மும், சுயசிந்தனையின்பாற்பட்ட மாற்றங் களை எதிர்நோக்கும் காலமும் இருபதாப் நூற்ருண்டிலேயே மலர்ச்சி பெற்றது (8 121. மாற்றங்கள்"பழமை வழி வந்தன என்ற நிலைபோய் தனிமனித சிந்தனைகளே யாவற்றையும் உருவாக்குவன என்ற சித் தாந்தம் இன்று வலுவடைந்துள்ளது சமூக அந்தஸ்தையும், சமூக எதிர்பார் புக்களையும் எதிர்நோக்கும் மக்கள் குழா

拳
s
83
நவீன வளர்ச்சிகளை நிர்ணயிக்கும் காலமும் உருவாகியுள்ளது. (10 18 தான் பெற்ற அறிவுலக விழிப்பின் பயனுக பத்திரிகை களை வாசித்து, வானுெலியைக் கேட்டுத் திரைப்படங்களைப் பார்த்து தன்னைச் சூழ வுள்ள அகப்புற மாற்றங்களைப் பற்றியும் தீவிரமாகச் சிந்திக்கும் சமுதாய மலர்ச்சி பெற்றுள்ளது.
தனிமனித சிந்தனைகளைச் சமூக சிந்த னைகளாக்கியதுடன் தன்னைச் சூழவுள்ள அகப்புற சிந்தனைகளை நெறிப்படுத்தும் வடி வங்களை இனங்கண்டும், பயன்படுத்தியும், மக்கள் வாழத் தலைப்படும் நிலையும் இன்று
உருவாகியுள்ளது. நவீன வெகுசனத்
தொடர்புச் சாதனங்களின் செயற் பாடும் இவ்வகைச் சூழலிலேயே வளர்ச்சி பெற ஆரம்பித்தது. சுருங்கக்கூறின் இன் றைய நூற்ருண்டிலேதான் வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் இயக்கம், பரந்த சமூகக் குழுவினரை நோக்கி விரி வடைந்ததுடன் புதிய செய்திகள் புதிய சிந்தனைகள், புதிய மனுேபாவங்கள் என்ற வகையில் நாடு வளர்ச்சிப்பாதையை நோக்கி வளரும் சூழலும் உருவாகியுள்ளது. பரந்துபட்ட அனுபவங்களையும், கலாசார இலக்கிய மலர்ச்சியையும், பொருளாதார
அரசியற் படிவங்களையும் இணைக்கும் வகை
யிலான, ஆக்கபூர்வமான தொடர்பு சாதன வளர்ச்சியின் மலர்ச்சி சமுதாய உறவு முறைகளைப் படிப்படியாக வலு வடையச் செய்து வருகின்றது.
பத்தொன்பதாம் நூற்றண்ட்ாரம்பத் திலே காணப்பட்ட பாரம்பரிய தொடர்பு முறை ஒருவழித்தொடர்புமுறையாகவே விளங்கியது. மனித தொடர்புகளுக்குரிய எல்லைகளும் பல்வேறு வரையறைகளைக் கொண்டேயமைந்தன. நவீன சமுதாயத் தில் காணப்படும் எல்லைகளையும் வரை யறைகளையும் கொண்டு முற்பட்ட சமுதா யத்தின் போக்குகளுக்குரிய அர்த்தங்களைக் கற்பித்தலும் பொருந்தாது. மேலும் ஒத்த சொற்ருெடர்களின் போக்கினை மட்டும் மையமாகக் கொண்டு அவை குறித்த பொருளின் எல்லைகளை வரையறை செய்

Page 94
84
தலும் பொருத்தமற்ற தொன்ருகும். "உயர்குடிப் பிறந்த நன்மக்கள் சிலரே மாந்தராகக் கருதப்பட்ட "சென்ற நூற் ருண்டில் வெகுசனம் என்ற தொடரைச் சில வரையறைகள் நிர்ணயித்தன. இதனை அண்மையில் வெளிவந்த சமூகவியலும் இலக்கியமும் என்ற நூலில் க. கைலாசபதி பின்வருமாறு விளக்கியுள்ளார்:
* பழைய சமுதாயத்தின் மிக முக்கியமான-பிரத்தியட்சமான அம் சங்களில் ஒன்று இதன் அமைப்பு முறையாகும். பழைய சமுதாயத்தில் பல்வேறு பாகுபாடுகள் நிலவின. நவீன சமுதாயத்திலும் வர்க்க வேறு பாடுகள் உண்டு. ஆயினும் பழைய சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள், பிறப்பினுலும், ஐதீகங்களினலும் இறுக்கமாகக் கட்டிக் காக்கப்பட்டு வந்தன. சமுதாயம் என்ற சொல்லே மிகக் குறுகிய பொருளில் வழங்கப் பட்டது. சிறுச்சிறு கிராமங்களிலே சிதறுண்டு பரவிக்கிடந்த மக்கட் கூட்டமானது பொதுசனம் என்னும் தொகுதியுணர்வின்றிக் குழுக்களாக இயங்கின. ஒவ்வொரு கிராமமும் பெருமளவிற்குத் தன்னிறைவுடைய தாய் ஏனைய கிராமங்களுடன் தொடர் பின்றிக் காலங்காலமாய் இருந்து வந்தன. அக்கிராமங்களில் சில குடும் பங்களே உயர்ந்தனவாய்க் கணிக்கப் பட்டன. ஏனைய பற்றிய எண்ணம் எவருக்குமே எழவில்லை' (5 : 1931,
சென்ற நூற்ருண்டிலும் இந்த நூற் ருண்டின் முதல் அரைப்பகுதியிலும் மேற் குறிப்பிட்ட நிலையே எமது நாட்டில் நில்வி யது. ஆறுமுகநாவலரின் பரந்துபட்ட பணி களின் தளமாக விளங்கிய சென்ற நூற் ருண்டின் பிற்பாதி பல்வகையான நவீன மாற்ற்ங்களுக்குத் தயார் செய்யும் கள் மாக அமைந்தமை ஈண்டு அவதானிக்கத் தக்கதொன்ருகும். இலங்கையில் நிலவிய நிலமானிய முறைச் சமுதாய அமைப்பின் பின்னணியிலே மேலைப்புல கலாசார் இன்டுருவல் உருவாக்கிய சமூக வடிவங்

呜、 வெே நசச்செல்வன்
களின் எதிர்முனைப்புப் போராட்டங்கள் பாரம்பரிய சமூகத்தினையும், சமயத்தினை யும் மட்டுமன்றிக் கலை இலக்கிய கலாசா ரச் சிதைவையும் ஏற்படுத்தின. நவீன சமுதாயத் தோற்றத்தின் அத்திபாரமும் இடப்பட்டது. நிலவுடைமைச் சமுதாயத் தின் வரையறைகளை இடித்தழிக்கும் சன நாயகச் சிந்தனைகளை உள்ளடக்கிய புதிய கல்விமுறையின் தோற்றம் பத்தொன்ப தாம் நூற்றண்டின் ஆரம்பத்திலிருந்து படிப்படியாக ஆங்கிலேயரால் புகுத்தப் பட்டது (12 : 46. கல்விமுறையின் நோக் கம் இரு அடிப்படைகளைக் கொண்டது: ஒன்று, நிருவாகத் தேவைக்கு ஏற்ற கீழுழைப்புவர்க்கத்தினரை உருவாக்குதல்; மற்றது, மேலவர் குழாத்தின் அதிகார உறவுகளுக்குரிய அந்தஸ்தைப் பயன் படுத்தி நாட்டை அமைதிப் படுத்துதலும் தம்வசப்படுத்துதலும்; இதற்கு அவர்கள் சமயத்தைக் கருவியாக்க முனைந்தனர். சுருங்கக் கூறின் வசதியும் வாய்ப்பும் நிறைந்த மக்கட் குழாம் மட்டுமன்றி யாவ ரும் நவீன சமுதாயத்தை நோக்கி மலரும் சமூகவியல் மாற்றங்கள் நிகழலாயின. இவையே வெகுசன சமூகச் சூழலின் தோற் றத்தினை உறுதிப்படுத்துவனவுமாயின.
இலங்கையிலே பத்தொன்பதாம் நூற் ருண்டாரம்பம் முதலாகப் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்ட மேலைநாட்டு நாக ரிகம் தோற்றுவித்த வெகுசன சமூகமும் வெகுசன கலாசாரமும் அந் நூற்ருண் டின் பிற்பாதியிலேயே சமூக தாக்கத்தை ஏற்படுத்தலாயிற்று. அச்சுக் கலையின் அறி முகமும் மற்றும் கல்வித்துறை மறுமலர்ச்சி யும் வாழ்க்கைமுறை மாற்றங்களும் எழுச்சிபெறும் சமூகத்திற்கேற்ற புதுவகை மரபுகளை உருவாக்கின. மனிதனது எழுத வும், வாசிக்கவும், சிந்திக்கவும் தெரிந்த ஆற்றல் ஜனநாயகப்படுத்தப்பட்ட நிலை யிலே, "அஞ்ஞான இருளை அகல்விக்கும் நல்விளக்குகளாகிய புத்தகங்கள் அச்சு வாகனமேறின. "" எழுதா எழுத்தின்" மூலம் ஓலைச்சுவடிகள் வழிவந்த இலக்கியச் செல்வங்கள் யாவற்றையும் அக்கால அறிஞர்கள் காண விள்ைந்தனர். கற்

Page 95
வெகுசன தொடர்புப் பின்னணியில் நாவல
சிறைக்குட்பட்டதாகக் காணப்பட்ட கல்வி யானது மிசனரிமார்களின் சமய இயக் கங்களாலும், அதன் வழித்தோன்றிய எதிர் இயக்கங்களாலும் விரிவடைந்த துடன், மனிதனது சமூக உறவுகளும் பொருளாதார உறவுகளும் ஒன்றிணைந்த நிலையிலே வளம்பெறும் சூழல் உருவாகி யது. கூட்டுச்சிந்தனை நிலைமாறி மக்கள் ஒவ்வொருவரும் தம்மைப்பற்றியும், சமூகப் பங்களிப்புகளைப்பற்றியும் சிந்திக்கும் சூழல் தோன்றியது, இவ்வகை உணர்வை அதி கரிக்கும் தன்மையினதாகப் பத்தொன் பதாம் நூற்ருண்டுப் பிற்பாதி முதலாக எழுச்சி பெற்ற பத்திரிகைகளும் அமைய லாயின. உதயதாரகை (1841), இலங்காபி மானி(1863), இலங்கை காவலன் (1864), இலங்கை பாதுகாவலன் (1868), புதினுதி பதி (1870), புதினுலங்காரி (1873), கத் தோலிக்க பாதுகாவலன் (1876), இலங்கை நேசன்(1877),சைவஉதயபானு (1880),சன் மார்க்கபோதினி (1885), இலங்கைத் தின வர்த்தமானி (1886), இந்துசாதனம்(1889) ஆகிய பத்திரிகைகள் வெகுசன சமூகத்தை உருவாக்கும் பணியில் முன்னின்றுழைத் தன (6 1671. புத்தகங்களை வாங்கவும், பத்திரிகைகளை வாசிக்கவும், அறிவை நுக ரவும் விளைந்து அறிவுத்தாகம் கொண்ட வணுக மனிதன் மாற முற்பட்டான், கல்வி என்பது மேல்மட்டத்தினருக்கும், சிறுகுழு வினருக்கும் உரியது என்ற மாயை அகன்று பரந்து பட்ட மக்கட்கூட்டத்தினரை அணைக்கும் வகையில் உரம் பெறலாயிற்று. வெகுசன சாதனத்தின் தலைப்பிள்ளை யாகிய உரைநடையும் சர்வவியாபகப் பண் புடன் மெருகடைந்தமை இச் சூழ்நிலையி லேயே யாகும்.
பத்தொன்பதாம் நூற்ண்டிலே வாய் GtonTyfour aðr (oral Tradition)-Syug. L'ulu GDL - யிலே திண்ணைப்பள்ளிக்கூடங்களின் மூல மும், ஆலயப் பின்னணியிலும், மற்றும் பல் வகையான தனிமனிதத் தொடர்புகளின் epocyph (Inter-Personal Communication வளர்ந்துவந்த கல்வி மரபு ஒருகணம் புதிய மாற்றங்களை எதிர்நோக்க முடியாது தடு

85
மாறியது. மேலைப்புலக் கல்விக் கவர்ச்
சியைத் துணையாகக் கொண்டு சமூக உறவு களிலே புதிய தொடர்புமுறைகளைப் பயன் படுத்த முனைந்த மிசனரிமார்களின் ஈர்ப்பு களுக்கெல்லாம் சமூகம் பத்தொன்பதாம் நூற்ருண்டாரம்பம் முதலாக அசைந்து கொடுக்கத் தொடங்கியது. இதனைப் புத்தி பூர்வமாக உணர்ந்து செயற்பட முனைந் தவருள் மூலமானவர் ஆறுமுக நாவலர் எனலாம். பாரம்பரிய சமுதாய வரை யறைகளைத் தழுவி நின்று தங்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் தவிர்க்கமுடியாத எதிரொலியாகவும்பிரதிபலிப்பாகவும்அவர் இயங்கினர் அக் காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட மேலைப்புல மரபுவழிவந்த தொடர்பு முறைகளைப் பயன்படுத்தியமை, நாவலருடைய பணிகளின் பிரதான செயற்பாடாகவும் அமையலாயிற்று.
நாவலரின் சமயப்பணியும் கல்விப் பணியும் சமூகப் பணியும் பத்தொன்ப தாம் நூற்ருண்டில் நில வி ய கருத்துத் தொடர்பு முறைகளின் வழியாகவும், மேலைப்புலத் தொடர்புமுறைகளின் வழி யாகவும் நெறிப்பட்டுவந்தது. முதலில் மேலைத்தேசக் கல்விமுறையின் வலு நிறைந்த ஊடகமாக விளங்கியவை
புத்தகங்களும், பிரசாரமுமே யாகும்.
மதம்பரப்பும் பிரதான நோக்கத்திற்குத் துணையாகச் சகல தொடர்புமுறைகளையும்
பயன்படுத்த முனைந்த மிசனரிமார் அச்சு
சாதனத்தை நிதானமாகப் பயன்படுத்த முனைந்தனர். ‘எழுதா எழுத்தின் மூலம்’, சமூகத் தொடர்பினை விரிவடையச் செய் யும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அறிவுப் பரம்பலின்மூலம் சமயக் கருத்துக்களை விதைக்க முனைந்த மிசனரிமார் எழுத்தறி வுப் புரட்சியையும் உருவாக்கினர் (12 : 50.அமெரிக்க மிசனரிமார் அச்சுயந் திரத்தைப் பயன்படுத்துவதற்கான அனு மதியினை ஆங்கிலேய அரசாங்கம் மறுத்த போது ஒலைகளில் தமது மதப்பிரசாரக் கருத்துக்களைப் பொறித்துப் பொதுமக்க ளிட்ம் பரப்ப முயன்றமை இதனை நன்கு புலப்படுத்தும் அமிசமாகும். நாட்டில்

Page 96
86
நிலவிய கூத்து மரபுகளையும், பொது sfeld,56) dulyasarruyth (Public anouncements) கூடப் பயன்படுத்தலாயினர். இவ்வகைச் சூழலிலே நாவலர் தமது கருத் துத் தொடர்பு ஊடகங்களை நிதானமாகப் பயன்படுத்த முனைந்தார். சுருங்கக்கூறின் மிசனரிமார் கருத்துத் தொடர்புக்காகப் பயன்படுத்திய வழிவகைகள் யாவற்றை, யும் பயன்படுத்த முனைந்தமை நாவலரின் பிரதான இயக்கமாகவே அமையலாயிற்று.
ஆங்கிலேய அரசாங்கம் மிசனரிமாரின் பின்னணியிலே திட்டமிட்ட வகையில் கல்வியையும் சமயத்தையும் பரப்புவதைப் பத்தொன்பதாம் நூற்றண்டின் முதற்பாதி யில் பலர் எதிர்த்தனர், உடுப்பிட்டிஅருளம் பலமுதலியார் போன்ருேர் நாவலர் காலத் தின் முன்னர் இவ்வகை எதிர்ப்புகளைக் காட்டியிருப்பினும் மிசனரிமாரின் பரந்து பட்ட செயற்பாடுகளின் பின்னணியில் அவ் வவர் குரல் பலவீனமாகவே அமிழ்ந்து போயது (12:591. மிசனரிச் சூழலில் கல்வி யைப் பெற்றுப், பேர்சிவலின் அபிமானத் தைப் பெற்ற நாவலர் மிசனரிமார்களின் இயக்கங்களைப் போலத் தாமும்மக்களுடன் தொடர்புகொள்ளும் முறைகளை நிதான மாகப் பயன்படுத்தினர். முதலில் மரபு வழியாக கோவில்களில் நடைபெறும் புராணபடன மரபையும், பிரசங்கமரபை யும் பயன்படுத்தும் வகையில் வெகுசனம் கூடும் இடங்களைத் தமதுகருத்துத் தொடர் புக் களங்களாக மாற்றினர். சமய கலா சாரப்பின்னணியிலே நடைபெற்ற புராண படன மரபுக்குப் புதிய அர்த்தத்தை நாவ லர் கற்பித்தார். யாழ்ப்பாண கலாசாரத் தில் கந்தபுராண மரபினுரடே இலக்கிய மும், சுவையும், வித்துவமும் கலக்கும் வகையில் ஆறுமுக நாவலர் புராணம் செய்த சூழலைப் பண்டிதமணி தமக்கேயுரிய நடையில் பின்வருமாறு கூறியுள்ளார்: '
* மூலமுடுக்குகளிலுள்ள வித்து வான்களும் வந்து விட்டார்கள். புராணம் கேட்கும் ஆர்வமுள்ள பெண் ஆண் அத்தனைபேருங் குழுமி விட்டார்

ஆ. சிவநேசச்செல்வன்
கள். எள்ளிட இடமின்றி எங்கும் நெருக்கம் மிக்க போதும் அமைதி குடி கொண்டிருந்தது.”*
மரபுவழிக் கருத்துத் தொடர்பு சாதன மான புராணபடன மரபுக்கு அக்காலத் திருந்த செல்வாக்கினைத் தக்கவகையிற் பயன்படுத்தி அதனைத் தமது சிந்தனை வெளிப்பாட்டுக்குக் களமாகக் கொண்ட நாவலர் உணர்ச்சியும் உருக்கமும், கருத் தாளமும் நிறைந்த பிரசங்கங்களை ஆற்றும் பணியினை ஆரம்பித்தார். நா வலர் வண்ணுர்பண்ணைச் சிவன்கோவிலில் மேற் கொண்ட பிரசங்கத்தின் தொடர்ச்சியாக நாடெங்கும் பிரசங்க மரபு செழிக்கலா யிற்று.
* சைவசமயம் உண்மை என் ப  ைதத் திருட்டாந்தப்படுத்தும் பொருட்டு வண்ணுர்பண்ணையிற் சிவன் கோவில் வசந்தமண்டபத்திற் குருக்கள் பிராமணுக்கள் முதலிய மற்றும் பிர புக்கள் முன்பாகச் சைவசமயப் பிர பலியப் பிரசங்கம் பண்ணும்பொருட்டு அவ்விடத்திலுள்ள சில வித்துவாமிசர் கள் ஆரம்பித்திருக்கிருர்க ளென்று கேள்வியானுேம், மேலும், அதில் முதல் பிரசங்கம் போன முப்பத் தோராந் தேதி வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணிபோலக் 'கந்தர் குமாரர் ஆறுமுகவராற் செய்யப் பட்டதென்று ‘ஓர் மாணக்கன்’ என்பவரெழுதி வரவிட்ட கடிதத்தாற் றெரிய வந்தது*
(உதயதாரகை, 1848 தை 13ஆந் திகதி)
மேற்போந்த பத்திரிகைச் செய்தியிற் 'சைவசமய பிரபலியப் பிரசங்கம் " என்ற தொடர் எமக்குப் பிரதானமானது. பிர. சங்கத்தை உணர்வு பூர்வமாகப் பயன் படுத்த முற்பட்டவர் நாவலர். தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குகந்த களம் என்ற தொனியுடன் செயற்பட லாயினுர். 1865ஆம் ஆண்டிலே தாம் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலை

Page 97
வெகுசன தொடர்புப் பின்னணியில் நாவல
யில் ஆற்றிய பிரசங்கத்தைப் பற்றித் தமது முதலாவது ஆவேதனத்தில் எழுதும் போது ..." "நமது வித்தியாசாலையிலே வெகுஜன சமூகத்திலே அவர்கள் கூற்றுக் கள் எல்லாவற்றையும் கண்டித்து சைவா கமங்கள் முக்கிய பிரமாணங்கள் என்றும், .பல சாத்திரப் பிரமாணங்கள் கொண்டு விரித்துப் பிரசங்கித்தேன்', எனக் கூறுகின்ருர் (7 : 67). இங்கும் அவர் ‘வெகுஜன சமூகம்" என்ற தொடரைப் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுக்கூட்டங்களையும், பொது அறிவித் தல்களையும் சமகாலத்தில் சிங்களமக்கள் மத்தியில் குணுனந்த தேரோ பயன்படுத் திப் பரந்த பொதுமக்கள் கூட்டத்தைத் தம்பால் ஈர்க்க முனைந்தமையையும், 1865ஆம் ஆண்டு முதல் பெளத்தர்கள் தென்இலங்கையில் சமயவாதம் செய்து பரந்த பிரசங்க ஆற்றலால் மக்களை விழிப் படையச் செய்தமையையும் ஈண்டு நினைவு கூரலாம். 1873இல் நடைபெற்ற "பாணந் துறைப் பொதுவிவாதக் கூட்டம் வர லாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தது. நாவலர் ஆரம்பித்த பிரசங்க முயற்சிகளும், அவர் மாணுக்கர் வழி பிரசங்க மரபும், கண்டன மரபும், விவாத மரபும் வளர்ந்தமையும், மரபுவழி வெகுசனத் தொடர்பு முறை களைப் பயன்படுத்த முனைந்த நாவலர் பணிகளின் தொடர்ச்சிக்கு நல்ல உதார ணங்களாகும் (11 : 191.
கல்வி மூலம் கருத்துத் தொடர்பு ஏற் படுத்தும் வகையில் நாவலர் இருவகை முயற்சிகளை மேற்கொண்டார். ஆங்கிலங் கற்பித்தலையே பிரதானமாகக் கொண்டி யங்கியமிசனரிப் பாடசாலைகளின் சூழலிலே 1848ஆம் ஆண்டில் சைவப்பிரகாச வித் தியாசாலையை வண்ணுர்பண்ணையில் ஆரம் பித்தார். தமது வித்தியாசாலைக்கு உப யோகமாகும் பொருட்டும், வெகுசனங் களுக்கு உபயோகமாகும்பொருட்டும் அச்சி யந்திரசாலையை அமைத்துப் புத்தகங்களை எழுதி மேற்கொண்ட நூற்பதிப்பு முயற்சி சிகள் இரண்டாவது வகையின. ஆவே தனங்களின் "பின்னணியிலே நாவலரின்

St.
கல்வித் திட்டத்தை அவதானிக்கும்போது வெகுசனச் சூழலை மையமாகக் கொண்டு அவர் ஆற்ற முயன்ற பணிகளின் விசா லத்தை உணர்ந்து கொள்ளலாம். ஐந்து வருடப் பயிற்சியளித்து வருடந்தோறும் இருபதின்மரை சமயப் பிரசாரகர்களாக வும், கற்றுவல்ல உபாத்தியாயர்களாக வும் ஆக்குவது நாவலரின் திட்டமாக அமைந்தது. யாழ்ப்பாணச் சூழலிலே கிறிஸ்துசமயப் பிரசாரத்திற்கு எதிராகப் பணியாற்றக்கூடிய நிறுவன அமைப்போ, ஆதீனங்களோ இல்லாத சூழலில் நாவ லரின் இயக்கம் பரந்த திட்டங்களை உள் ளடக்கியிருந்தமை மனங்கொள்ளத்தக் கது. ஆங்கிலேயராட்சியின் பின்னணி யிலே கருத்துத் தொடர்பு ஏற்படுத்துவ தற்கு முயன்ற நாவலரின் செயற்பாடு கள் பரந்த தாக்கங்களை ஏற்படுத்தின. அன்றைய சூழலிலே வெகுசன சமூகத்தை அரவணைக்க முயன்ற அவரது பன்முகப் பட்ட முயற்சிகளின் கரு காலப்போக்கில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கெல்லாம் மூல வித்தாகவும் இயக் க விசையாகவும் அமையலாயிற்று.”*
* பாதிரிமார் பெரும்பாலும் தங் கள் சமயநூலைத் தாங்கள் கற்றும், வெகு திரவியங்களைச் செலவழித்துப் பாடசாலைகளைத் தாபித்தும் பிறருக் குக் கற்பித்தும் தங்கள் ஆலயங்களி லும் பிற இடங்களிலும் யாவருக்கும் போதித்தும் வருகிறபடியினுலே அவர் கள் சமயம் எத்தேசங்களிலும் வளர்ந் தோங்கி வருகின்றது’. என்றும். எங்கேயாயினுஞ் சிலர் கற்ருலும், அவர்கள் பிறருக்குக் கற்பித்தாலும், யாவரும் எளிதில் அறிந்து உய்யும்படி சமயாசாரங்களைப் போதித்தலும் இல்லாமையாலும். ' (4 : 521.
போன்ற வாசகங்கள் 1860ஆம் ஆண்டு நரவலர் வெளியிட்ட "விக்ஞாபனம்", ஒன்றிற் காணப்படுபவை. நாவலர் தங் காலச் சூழலை நன்கு உணர்ந்து செயற்பட முற்பட்டமையை. இவை நன்கு உணர்த்து

Page 98
கின்றன. புத்தகங்கள், துண்டுப் பிரசுரங் கள், சிறுநூல் வெளியீடுகள் ஆதியன வற்றை வெளியிட்டதுடன் அவற்றிலே தேவைக்கேற்றவகையில் தமது உரை நடையைப் பயன்படுத்தியமையும் அவதா னிக்கத்தக்கது. விஞ்ஞாபனங்களிலும், சிறு துண்டுப் பிரசுரங்களிலும், o Gujar மொழிக்கு மிக அண்மைத்தாகிய ஒரு முறையிலே உரைநடையைக் கையாண் டுள்ளார் (3 ; 1141. இதனைக் கா. சிவத் தம்பி பின்வருமாறு விளக்குவர் ;
"வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது வசன வியாப்தியின் முதற் கட்டமாக அமைவது *கிருஸ்து தொடர்பு முயற்சிகளே. கிருஸ்து பற்றிய தொடர்பினை வெறுத்தும் மறுத்தும் புதிய இந்துத் தொடர்பினை ஏற்படுத்த விரும்பிய நாவலர் முதலி யோரது உரைநடை முயற்சிகளும் உரைநடையை உயர் இலக்கிய நிலை யிலிருந்து சர்வஜனச் சொத்தாக்கும் பணியைச் செய்தன. நாவலர் பால பாடங்களிற் காணப்படும் மொழி நடைக்கும், யாழ்ப்பாணச் சமயநிலைத் துண்டுப் பிரசுரத்திற் காணப்படும் மொழிநடைக்குமுள்ள வேறு பாடு இவ்வுண் மை யை உணர்த்தும் ”*
3 : 117J
நாவலர், தீ விர மா கத் தமது வாழ்க்கையின் பிற்பகுதியில் சமூக, அர சியற் பணிகளில் ஈடுபட்டபோது வெகு சன தொடர்புக்குகந்த பத்திரிகைக ளுடைய அறிவித்தல் நடையை (Reporting style) பயன்படுத்தினூர். 'என் அன்பர் களே, பார்சுத்துரை கொடுத்த இந்த மறுமொழியைச் சற்றே சீர்தூக்கிப் பாருங்கள். என்ன துணிவுகொண்டு இந்த மறுமொழி கொடுத்தார்", போன்ற வச னங்கள் நாவலரின், ''நரசினேக சற்கரும முயற்சிகளின்" வழிவந்தன என்பது மனங் கொள்ளத்தக்கது.
நாவலர் இளமைக் காலம் முதலாகப் பத்திரிகை சாதனத்தின் பயன்பாட்டை உணர்ந்தவர். உதயதாரகைப் பத்திரிகை யில் விகவநாதபிள்ளையுடன் நயனசாத்திர

ஆ. சிவநேசச்செல்வன்
விஞபற்றி நீண்ட கருத்துப் பரிமாறல் ஒன்றில் ஈடுபட்டிருந்தார் (1 : 1-17). அக் கருத்துப் பரிமாறலிற் பயன்படுத்திய நடைக்கும் பின்னர் விஞ்ஞாபனங்களிற் பயன்படுத்திய நடைக்கும் இலக்கண சர்ச்சை நடைக்கும் வாழ்க்கையின் பிற் பகுதியில் இலங்கைநேசன் பத்திரிகையில் எழுதிய முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை நுனித்து நோக்கும்போது நாவலர் தம்மை எவ்வாறு வெகுசன சாதனப் பின்னணிக்கும், வெகுசன சம்ம தத்திற்கும் ஏற்றவராக மாற்றிக்கொண் டார் என்பது புலணுகும். தாம் வெகுசன சமூகத்தை நோக்கி எழுதுகின்றேன் என்ற உணர்வுடன் எளிமையாகக் கிண்டலுடன் எழுதிய பின்வரும் வாசகங்கள் அவ ருடைய ஆளுமையை நன்கு காட்டு கின்றன.
** பூசினிக்காய் எடுத்தவனைத் தோளிற் றெரியும் என்ருற்போல ஒரு பாயஞ் சொல்வேன் கேளுங்கள் . இப்புத்தகத்தை வாசிக்கும்பொழுதும் கேட்கும்பொழுதும், வாய் முறுவலித் தலிலும், உதடு துடித்தலிலும், கண் சிவத்தலிலும், முகங் கறுத்தலிலும். சரீரம் படபடத்தலிலும், இடையில் எழுந்து ஒட்டம் பிடித்தலிலும் அவர் களை அறிந்துகொள்ளலாம். விடாதே யுங்கள் (7 :68).
**ஓ! யாழ்ப்பாணத்துச் சனங்களே! என விளித்தும், இலங்கைநேசன் பத்தி ராதிபரே! என விளித்தும், வெகுசனத் தொடர்பு நோக்கில் எழுதிய கடிதங்களி லும், வேண்டுகோளிலும் நாவலரின் பரந்த சமூகத்தை நோக்கிய செயற் பாடுகள் காணப்படுகின்றன.
நவீன வெகுசனத் தொடர்பு சாத னப் பின்னணியின் வரைவிலக்கணங்களின் அடிப்படையில் நோக்கும்போது நாவலரது வெகுசன சம்மதம் குறுகிய எல்லைகளைக் கொண்டமைவதாயினும், அவரது இறுதிக் காலச் செயற்பாடுகளின் அடிப்படை, பரந்த சமூகத்தை அரவணைக்கும் வகையில் அமைந்தமை மனங்கொள்ளத் தக்கது. நாவலர் தமது சமயப்பற்றினைக் கடந்து கரையூர்க் கலக வழக்கில், பென்சமின் சந்தியாகுப்பிள்ளையின் பணிகளைப் பாராட்

Page 99
வெகுசன தொடர்புப் பின்னணியில் நாவல
டிஞர். 1877ஆம் ஆண்டில் பஞ்சம், கோதாரி காரணமாகப் பல்வேறு சமயத் தவரும் மனிதர் என்ற உணர்வுடன் செயற் பட்டு உதயதாரகை, இலங்கைநேசன், கத்தோலிக்க பாதுகாவலன் போன்ற யாழ்ப்பாணச் செய்தித் தாள்களின் பாராட்டுகளுக்கு இலக்காகி இயங்கினர். கஞ்சித்தொட்டித் தருமத்தில் மத இன வேறுபாடுகளைக் கடந்து செயற்பட்டார். * சகலசனுேபகாரங் கருதிய ’ செயற்பாடுக ளாகவே நாவலர் பணிகள் அமையலாயின. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு வர்த்தகர் வேளாண்மைச் சங்கம் பற்றிய முயற்சிக ளும், மக்களுக்கு "விதைநெல்’ வேண்டி மேற்கொண்ட முயற்சிகளும் வெகுசன நோக்குடன் இயங்கிய நாவலர் பணி களுக்கு நல்ல உதாரணங்கள்.
நாவலர் பொது நன்மையை விரும் பிய தைரியமுடைய தகுந்த தொண்ட ராக இயங்கினர் (1 : 561. காலத்தையும் சூழலையும் ஆட்கொள்ளும் வகையில் வெகு சன சம்மதத்தை நோக்கி நாவலர் இயங்க முற்பட்டார். நவீனத்துவத்தை நோக்கி வீறுநடைபோட்ட சமுதாயத்தில் நாவலர் பணிகள் கா. சிவத்தம்பி கூறுவது போல ** பாரம்பரிய சமூக நிறுவன அமைப்டை
சான்றதாரங்கள் :
1. தனஞ்செயராசசிங்கம், ச., நாவல 2. கைலாசபிள்ளை. த., ஆறுமுகநாவு (சென்னை, 1 3. சிவத்தம்பி, கா. , நாவலும் வாழ்க் 4. கணபதிப்பிள்ளை, சி., ஆறுமுகநாவ 5. கைலாசபதி, க., சமூகவியலும் இல
6. சிவநேசச்செல்வன், ஆ, இலங்கைத்
பேராதனை
7. சதாமகேசன், க., பத்திரிகையில்
விழா மலர் (ெ 8. Williams, Raymond, The Long Ren 9. Thinking Ahead, Unesco, (Paris 19 10. Thompson Denys, Discrimination a 11. De Silva, M. A. and Reggie Sriw
(Unesco, Paris, 1977) 12. Sivathamby, K., Hindu Reaction to 19th Century Sri Lanka, Social Sci.
O

酋 89
உடைக்காத நவீன மயப்பாட்டின்' எல் லைக்குள் அமைவனவாயின. நிலமானிய சமுதாயத்தின் கட்டமைப்புகள் தகர்ந்து கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்த நாவ லர், "இந்தியாவையாளும் இங்கிலாந்துக் கவர்ண்மெண்டாரே இலங்கையையும் ஆளு கின்றனர்" (2 :72) என்ற உணர்வோடு இறுதிக் காலம் வரை வாழ்ந்தவர். தமக்கு முன்னே விரிந்திருந்த சமூக பொருளாதார அரசியல் அமைப்புக்குள் பாரிய வெகுசனக் கிளர்ச்சிகள் செய்யாதும், வெறியுடன் போராடாதும், அமைதியாகத் திட்டமிட்டு இயங்கித் தமது வாழ்க்கையை இலட்சியப் படுத்திக் கொண்டவர் நாவலர். இன்றைய வெகுசன தொடர்பு சாதனவியலின் பண்பு களுள் அவர் பணிகள் அடங்காதும் அடங் கியும் இருப்பது மனங்கொள்ளத் தக்கது. சுருங்கக்கூறின் தமது காலத்து வெகுசன தொடர்பு முறைகளைப் புத்திபூர்வமாகப் பயன்படுத்தி *நரசினேக சற்கரும முயற் சிகளில் முனைந்து பணியாற்றிய நாவலர் தொடர்புத்துறை இலக்கணங்களின் பல் வேறு பண்புகளுக்கு இலக்கணமாகவும், இலக்கியமாகவும் அமைகின்றர் எனக் கூற லாம்.
ர் பணிகள் (பேராதனை, 1969) பலர் பிரபந்தத் திரட்டு, 3ஆம் பதிப்பு.
954).
கையும் (சென்னை: 1978) பலர் (சாவகச்சேரி, 1979) }க்கியமும் (சென்னை, 1979) தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ாப் பல்கலைக்கழக, முதுமாணித்தேர்வு ஆய்வு, (வெளியிடப்படாதது 1975) நாவலரின் எழுத்துநடை, நாவலர் மாநாடு காழும்பு, 1969)
olution, (London, 1973)
(77ו
nd Popular Culture, (London, 1968) ardene, Communication Policies in Sri Lanka,
Christian Proselytization and Westernization in ence Review, No. I. (Colombo, Sept. 1979)

Page 100
நாவலர் பணியி வைதிக அடிப்
கா. கைலாசாகாத குருக்க
இக் கட்டுரைக்கு முதலில் வழங்கப் பட்ட தலைப்பு நாவலர் பணிகளின் வைதிக அடிப்படைகள் என்பது. இத் தலையங்கம் சிறிது திருத்தம் பெற்று நாவலர் பணி யின் வைதிக அடைப்படை என வேறுபட்டு அமையலாயிற்று. இதன் கட்டுரையே தொடக்கத்தில் விளங்கத்தருகின்றது.
என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற அருள் வாக்கினை வழங்கி அவ்வாறே வாழ்ந்த அப்பர் சுவாமிகள் வழியில் வந்த வர்கள் பூரீலழறீ ஆறுமுக நாலரவர்கள். அப்பரை நிகர்த்து நாவலர் அவர்களும் மேற்கொண்டது ஒரே பணி. ஒப்புயர் வற்ற அத்திருப்பணி சிவப்பணி என விதந்து கூறப்படுவது.
நாவலர் அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் பல இதுவரை வெளிவந்துள் ளன. இவர்தம் விழுமிய வாழ்க்கையில் இச் சிவப்பணியைத் தவிர வேறெவ்விதப் பணியையும் இவர் ஆற்றியதாக இவ்வர லாறுகள் முழுவதிலும் எங்காவது கூறப் படவில்லை. பணி செய்து கிடந்தவர்கள் அப்பர் சுவாமிகள். அவர்நிலை பணிசெய்த வேளைகளில் மாத்திரமன்றிப் பணி செய்து முடிந்த பின்னரும் வாளாவிருந்த நிலை. நாவலரோ எனின் பணி செய்ய முன் வீறு கொண்டெழுந்தார். பணிசெய்த வேளை களிலும் அவ்வாறே கருமமாற்றினர். பணி முடிந்த பின்னரும் இன்னும் தாம் தொடர்ந்து செய்ய் வேண்டுவது பற்றி நினைந்து அதற்கு ஆயந்தஞ் செய்து அதிலே

உத்வேகத்துடன் தம்மை ஈடுபடுத்தி வந் தார். இச் சிவப் பணியில் நாவலர் ஈடிலா இன்பங் கண்டார். தம் கடமை நிகழும் வேளை மனநிறைவு பெற்ருர். இஃதொன்றே இவர் வாழ்க்கையின் ஒரே இலட்சியமாக விளங்கிற்று.
* சிவபெருமான் ஆறுமுக நாவலரை யும் மகாத்மா காந்தியையும் அழைத்து உங்களுக்கு முத்தி வேண்டுமா என்று கேட் டால் இருவரும் மறுத்து விடுவார்கள். ஒருவர் சைவ சமயம் விருத்தியாக வேண் டும் என்று கேட்பார். மற்றவர் சுவராச் சியம் கேட்பார். அவர் களை அந்தப் பற்றுக்கள் விழுங்கிவிட்டன." என்று இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப் பிள்ளை அவர்கள் கூறியது இச்சந்தர்ப் பத்தில் சிந்திக்கற்பாலது வேதநாயகனும் வேத விழுப்பொருளும் வேத முதல்வனு மான சிவபெருமானே ஒப்புயர்வற்ற முழு முதற்றெப்வம் என வேத சிவாகமங்கள் அறுதியிட்டு அறைந்து கூறும் சைவ சமயத் தைக் கடைப்பிடிப்பவர்களுக்குப் பேரா பத்துக்கள் தோன்றக்கண்ட நாவலர், இவ்வாபத்துக்களைக் களைந்து நல்லதொரு நிலையை வருவித்தல் தங்கடமை என்பதை உணர்ந்தார். இதையே தம் வாழ்க்கை யின் ஒரே பணியாகக் கொண்டார். இப் பணி ஒன்றினல் மட்டுமே சைவ சமயம் மக்களிடை விருத்திபெறும் என்பதை நன் குணர்ந்து தம் வாழ்நாள் முழுவதையும்
இப்பணிக்கே அர்ப்பணித்தார்.

Page 101
நாவலர் பணியின் வைதிக அடிப்படை
நாவலரவர்களுக்கு முதற்கண் பெருங் கவலை தந்தது சைவ சமயிகளிடையே உள்ளிருந்தவாறே தோன்றி வளர்ந்து விரிந்து பரவத் தொடங்கிய ஒருவகைப் புரை. இது சைவத்தை முழுவதாகவே அழித்துவிடக்கூடிய பயங்கரம் வாய்ந்தது. அக்காலச் சூழ்நிலையே இப்புரையோட் டத்தின் ஆதி காரணம். சமய அறிவு சிறிது சிறிதாகக் குன்றிக்கொண்டே வந்த காலம் அந்தக்காலம். சைவசமயத் தையே உறுதியான பற்றுக்கோடாகக் கொண்டு ஒழிவு மறைவு எதுவேனுமின்றிச் சைவ வாழ்க்கை வாழ்ந்துவந்த ஒரு சில ருடன் அச்சம் நிர்ப்பந்தம் முதலியவை காரணமாகப் புறத்தோற்றத்தில் கிறித் தவராகவும், அகத்தே சைவர்களாகவும் பெருமளவினர் வாழ்ந்துவந்த காலம் அது. அக்காலத்தில் மக்களிடை நிலவிய இச் சூழ்நிலையில், சமய அறிவு மங்கத் தொடங்கியதில் வியப்பெதுவும் இல்லை. சமய நூல்களை மக்கள் கற்கும் வாய்ப்புட் படிப்படியாகக் குறையத் தொடங்கிய தற்குச் சமய அறிவு வழங்கும் ஆற்றல் உள்ளவர் இல்லாததும், சமய அறிவு பயக்கும் நூல்கள் மக்களுக்கு வேண்டிய அளவு கிடைக்காததும் காரணங்களாம். நாகரிகத்தில் முன்னேறியவராகக் கருதட் பட்ட மேஞட்டவரின் தொடர்பும் அச் கால வாழ்க்கைமுறையில் சமயத்தைட் பின்னணிக்குத் தள்ளிற்று. இலெளகிகப் தலையெடுத்தது. இதன் விளைவாகச் சமயா சாரங்களும் சமயரதுபட்டானங்களும் சீர் குலைந்து நிலைதிரிந்தன. சுருங்கக் கூறின் சைவசமயிகள் சைவ ஒழுக்கத்தை உறுதி யாகப் பேண முடியாதவாறு தளர்ச்சி யுற்றனர். இத்தளர்ச்சியின் காரணங்களை நன்கு ஆராய்ந்து அவற்றின் இயல்புகளை உணர்ந்து அவ்வவற்றிற்கேற்ற வழிவகை களைக் கையாண்டு தளர்ச்சியை அறவே களைவதன்மூலம் வைதிக சைவசமயத்தை வளர்ப்பதே நாவலரின் பெரும் பொறுட் பாயிற்று. மேலும், சமய நெறி நிற்பவர்க ளிடையே இவ்வாறு உள்ளிருந்தே தோன் றிய பலவகைக் குறைகளினுல் நிலை சீர் குலைந்திருந்ததைக் கண்டு பெரும் வேதனை

9.
யுற்றிருந்த நாவலருக்குப் புறத்தேயிருந்து பிற சமயத்தவர்கள் விளைவித்த தாக்கம் கடும் வேதனைதரும் புண்ணில் பழுக்கக் காய்ச்சிய வேலைப் பாய்ச்சியதாக இருந் தது. சைவ சமயத்தின் குணநலன்கள் ஒப்பற்ற சிறப்பமிசங்கள் ஆகியவற்றைப் பொருராயும், தம் மதம் ஒன்றே வளருதல் வேண்டும். ஏனைய மதங்கள் கெட்டொழி தல் வேண்டும் என்னும் நினைவு மிக்கா ராயும், வெளியே இருந்தவாறே சைவத் தின் மீது பல குறைகளைச் சுமத்தி இது மாசுகள் மலிந்ததாகக் காட்டிச் சைவ சமயத்திலும் சமயாதுப்டானங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் குற்றங்களைக் கற்பித்துச் சமயத்தைப் பரிகசித்திழித் துரைப்பதே விஷமிகளான பிற சமயத்தவ ரின் வழக்கமாயிற்று. இப் பொய்ப் பிரசா ரத்தைத் தடுத்து நிறுத்துவதும் தம் பொறுப்பு என்பதை நாவலர் உணர்ந்தார். இப் பொறுப்புகளைத் தம் கடமையாகக் கொண்டு அதை நிறைவேற்றுவதில் கண் ணுங் கருத்துமாயிருந்தார். தம் வாழ்க் கையை இப்பணிக்கே உரியதாக்கினர் ; நைட்டிகப் பிரமசரியம் மேற்கொண் டார். இத்தியாகம் இவரை இப்பணியில் முழுதாக ஈடுபட வாய்ப்பளித்தது. இவ் வாறு பணியாற்றும் வேளை நாவலர் பணி பன்முகப்பட்டு அவராற்றிய பணிகள் பல என்று பேசுமளவிற்கு விரியலாயிற்று.
நாவலரைச் சமயப் புரட்சியாளர் என்று கூறும் வழக்கம் இருந்து வருகின்றது. சமயப் புரட்சியாளர் பற்றியோ சமயச் சீர் திருத்தம் பற்றியோ பேசும் பொழுது நாவ லரையும் இணைத்துப் பேசும் வழமையை யும் இது உருவாக்கி விட்டது. நாவலர் சீர் திருத்தவாதியாக இருந்திருந்தால் தொன் மை பெரிதும் வாய்ந்த சைவ சமய அமைப் பிற் பல நவீனக் கருத்துக்களைப் புகுத்தி யிருப்பார். சமய அடிப்படைகளை அறவே மாற்றிச் சமயத்துக்குப் புதுமை மிளிர வல்ல வேறு வடிவம் தந்திருப்பார். இவ் வகைத் திருத்தங்கள் எவற்றையுமே நாவலர் செய்யவில்ல்ை என்பது அவராற் றிய பணியின் பல்வேறு இயல்புகளை நன்கு

Page 102
அறிந்தவர்களுக்குத் தெள்ளிதிற் புலணுகும் பழமை மிக்க சைவ சமயத்தின் அடிப் படைக் கொள்கைகளிலும் சைவம் இடை யீடின்றிப் பேணி வந்த பாரம்பரியத்தி லும் உறுதியான பற்றுள்ளவர் நாவலர். அவற்றைத் தகர்த் தெறியவோ அன்றி அவற்றிற்குப் புதுவடிவம் தந்து சீர்திருத் தம் செய்யவோ நாவலர் ஒருபொழுதும் முற்பட்டிலர் என்ற கருத்து எம் சிந்தனை யில் ஆழப் பதித்தற்குரியது. வேத சிவா கமங்களில் நாவலருக்கு ஆழ்ந்த பற்று இருந்தது. சைவசமயத்துக்கு இவை முத லில் வைத்து எண்ணுதற்குரிய பிரமாண நூல்கள் என்னுங் கோட்பாட்டில் இவர் கொண்ட உறுதியே இதற்குக் காரணம். வேத சிவாகமங்களுடன் அவை வழிவந்த இதிகாச புராணங்களும் சைவத்துக்குப் பிரமாண நூல்கள் என்பதைத் தம் எழுத் துக்களிலும் பேச்சுக்களிலும் வற்புறுத்தி வந்தார். நாவலர் கருதிய சைவம் வைதிக சைவம் என அவர் பரம்பரையினராலும் அவர் காட்டிய வழி நிற்பவர்களாலும் இது இன்று பேசப்பட்டு வருவது. இவ்வாறிருக் கும்பொழுது வைதிக சைவ வளர்ச்சிக்கு நாவலர் செய்த பணி முழுவதுமே வைதிக அடிப்படையிலிருந்து பிறழ்ந்து எவ்வாறு வேறு அமைப்பைப் பெறுதல் கூடும்? நாவலர் பணியில் மட்டுமன்றி அவர் வாழ்க்கை முழுவதிலுமே சுவறிப் பரவி யிருப்பது வைதிகப் பின்னணி என்பதை நன்கு நிரூபிப்பன பண்டிதமணி அவர் களின் கட்டுரைகள். இவற்றுட் சிறப்பாகக் குறிப்பிடற்குரியன " வைதிக சைவ மணங் கமழத் தொண்ட்ாற்றிய நாவலர்' என்
னும் கட்டுரையும் ' நாவலர் சரிதை வைதிக சைவ வழிகாட்டி" என்னும் கட்டுரையுமாம். இவ்வகைச் சிறப்பு
வாய்ந்த வைதிக சைவப்பணி ஆற்றிய வேளை நாவலர் கையாண்ட உத்திகள் யாவற்றிலுமே வைதிக அடிப்படை மறை வாகவோ வெளிப்படையாகவோ சுவறி அவற்றை ஊடுருவி நிற்பது தவிர்க்க முடியாததாகும்.
சைவசமயத்திற்கு தேர்ந்தவையாக முன்னர் கூறப்பட்ட இருவகை ஆபத்துக்

கா. கைலாசநாத குருக்கள்
களுள் ஒன்ருகிய புரையோட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக நாவலர் மேற் கொண்ட நடவடிக்கை அதுவரை எம் நாட் டில் எவரும் கையாளாதது. சமய அறிவை வளர்ப்பதன் மூல ம் சமய அழிவைத் தடுத்து நிறுத்தலாம் என்பதைக் கண்ட நாவலர், சமய அறிவைத் தரவல்ல சமய நூல்களைச் சைவ மக்களுக்குக் கிடைக்கக் கூடிய வாய்ப்பினைத் தோற்றுவிக்க முனைந் தார். சைவ மக்களுக்கு இவ்வாறு பயன் தரக்கூடிய நூல்கள் இரு வகையின. தமி ழில் மூலநூல்களாக உருவானவை ஒரு வகை. இவ்வகை நூல்களை நன்கு விளக்கு வதற்கு உரைகள் வேண்டப்படுவன. எனவே உரைகளுடன் கூடிய மூல நூல் களைப் பரிசோதித்து வெளியிடுதல் அவசிய மாயிற்று. சமய அறிவை அவாவி நிற்பவர் களுள் பெருமளவினர் பாமர மக்கள். இவர்கள் தேவையை உணர்ந்த நாவலர் முலநூல்கள் வழங்கும் பொருளை எளிதாக வும் மூலகங்களைக் காட்டிலும் சுருங்கிய வடிவந் தந்தும் மூல நூல்களை வசன நடைப்படுத்தி உருவாக்கினர். திருவிளை யாடற் புராண வசனம், கந்தபுராண வசனம், பெரியபுராண வசனம் முதலியவை இவ் வகை நூல்கள். இந் நூல்களில் நாவலர் முத்திரை பதிந்திருக்கக் காணலாம். வின விடைகள் மூலம் சமயக் கருத்துக்களைப் படிப்போர் இலேசாக உணரும் வண்ணம் கூறும் உத்தியைப் பெருமளவினர்க்குப் பயன் ஏற்படும் வண்ணம் முதன் முதலாக எம் நாட்டில் கையாண்டவர் இவரேயா வர். வேதாகம நெறிப்படி சமயானுட்டா னங்களைக் கடைப்பிடிப்பவர்க்கு உபயோ கப்படக் கூடிய நித்திய கருமவிதி என் னும் நூலும் இவர் யாத்த நூலேயாகும். சைவவினுவிடை, நித்தியகருமவிதி ஆகிய இரு நூல்களும் சமயக் கருத்துக்களை விளங்கத் தருவதோடு சமயப் பின்னணி யைக் க்ொண்ட சைவ வாழ்க்கையில் ஒவ் வொரு நாளும் கடைப்பிடித்தற்குரிய முறைகளையும் தெளியத் தருகின்றன: இவை வேதங்களினதும் சிவாகமங்களின தும் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவை:

Page 103
நாவலர் பணியின் வைதிக அடிப்படை
நாவலர் உருவாக்கிய இன்னுெரு வகை நூல்கள் தவறிழைத்தவர்களைத் தம் பிழைகளை உணர வைத்து அவர்களைத் திருருதுவதற்காக உருவானவை. இவற் றுள் ஒருசில சமய அறிவு குன்றிய கார ணத்தால் சமய மரபுகளிலிருந்து விலகிச் சென்றுகொண் டிருப்பவர்களுக்குரியவை, வேறு சில குற்றங்கள் கற்பித்துச் சைவ சமயத்தைப் பரிகசித்து எள்ளி நகையாடி யவர்களைக் கண்டிப்பவை. மென்மையான வார்த்தைகளால் இவர் தம் நிலை உணர மாட்டார் என்பதால் கடும் வார்த்தை களை பெய்து சமயத்திலேயே காணப்படுங் அதே குற்றங்களைக்காணுது கண்மூடி நின்று கொண்டே சைவசமயத்தில் அவற்றைக் காணும் விந்தையை உறைக்கும்படி அவர்க் கெடுத்துக்கூறிக் கண்டிப்பது கண்டனத் திற்கு வலிமை தருகின்றது. மாற்ருர் தரும் தவருன கருத்துக்களைத் தருக்கரீதி யாக மறுத்து அவை பொருத்தமற்றவை என நிறுவித் தம்வாதத்திறமையால் அவர் கள் வெட்கித்தலைகுனியும் படி எள்ளி நகை யாடுவதில் அவருக்கு நிகரெவருமிலர். கண்டனக் கலையில் இவருக்கிருந்த துணி வும் திறமையும் வேறெவருக்கும் இருந்த தில்லை என்னும் பராட்டுக்கு உரியவர். நாவலர் கண்டிப்பு மிக்கவர் என்ற கருத்து தமிழுலகில் வேரூன்றலாயிற்று. வேதாகம மரபினின்றும் இம்மியளவேனும் விலகாட் பண்பின இவரது கண்டனங்கள்.
மூல நூல்களையோ அவற்றின் உரை களையோ கருவி நூல்களையோ சமய அறிவு பயக்கும் விளக்க உரைகளையோ உருவாக் குவது தனிச்சிறப்பு வாய்ந்த பெரும்பணி. இந்நூல்கள் வெளிவராதிருப்பின் இப்பணி அறவே பயனற்றதாகி விடும். இதை யுணர்ந்த நாவலரவர்கள் இந்நூல்கள் யாவற்றையும் புத்தக வடிவில் வெளியிடு வதற்கு வழிகளை வகுத்தார். தாய்நாட் டிலும் சேய் நாட்டிலும் அச்சுக்கூடங்களை நிறுவினுர், நூல்களைச் சிறந்த முறையில் அச்சேற்றிப் பிரசுரிப்பதில் இவருக்குத் திறமை வளரலாயிற்று நாவலர் பதிப்ட என்ருல் அது பிழைகள் அறவே இல்லாத

தூயபதிப்பு என்ற பாராட்டுக்குப் பாத்திர மாஞர். நூல்களைப் பிரசுரித்து வெளியிடும் வாய்ப்பினை இவர் தோற்றுவித்தமையாற் முன் இவர் எழுதிய கண்டனங்கள் மாற் ருர் அறிவுக்கண்களைத் திறக்கப் பயன் பட்டன. மாற்ருர் தவறுகளை மாற்ருர் மட்டுமின்றி மற்ருேரும் அறியும் வாய்ப்பு ஏற்பட்டது.
சமய அறிவைச் சமய நெறி நிற்கும் பொது மக்களிடை பரப்பவும் அவர் தவ றுகள் அவர்மனதில் பசுமரத்தாணி எனப் பதியும்படி நேரே எடுத்துக் கூறவும் அவர் கையாண்ட புதுவழி உபந்நியாசமாகும். உபந்நியாசம் மூலம் மக்களுக்குக் கருத்துக் களை நேரடியாகவே அழுத்தந்திருத்தமாக எடுத்துரைக்கும் வாய்ப்பு உண்டு. நாவலர் பேச்சுக்கலையைத் திறம்படக் கையாண் டார். இது காரணமாக நாவலர் என்ற பேரும் புகழும் பெற்ருர். வைதிக சைவப் பணியே இவருக்கு இதை ஈட்டித்தந்தது. இவர் உபந்நியாசத்திறமை சமயப் பிர சாரத்துக்கு மட்டுமே பயன்பட்டது.
மேலே குறிப்பிடப்பட்ட பேச்சுக் கலை
யிலும் எழுத்துக் கலையிலும் சிறந்து
விளங்குவதற்குக் கருத்துக்களைத் தெளி வாகவும் விளக்கமாகவும் தருக்கரீதியாக வும் சிந்தித்து எழுதவும் பேசவும் திறமை வேண்டும். பேசும்பொழுதும் எழுதும் பொழுதும் கையாளப்படுவது உரைநடை யேயாகும். நூல்களுக்கு உரை வகுக்கும் பொழுதும் மூலநூல்கள் கூறும் கருத்துக் களை எளிதான வடிவில் உருவாக்கும் பொழுதும், கண்டனக் கட்டுரைகளையும் கண்டன நூல்களையும் எழுதும்பொழுதும் தெளிவானதும் கட்டுக்கோப்பு வாய்ந்தது மானதொரு நடையைக் கையாண்டாற் ருன் நூல்களின் நோக்கம் நிறைவேறும். நாவலர் தோற்றுவித்த உரைநடை அவர்
தேவைக்கு ஏற்றவாறு நன்கு அமைந்தது.
உணர்ச்சிப் பெருக்காலும் தேவையின் நெருக்கடியாலும் உந்தப்பட்ட நிலையில் நாவலர் உருவாக்கிய நடை தனியழகு வாய்ந்தது. இலக்கண நூல்களுக்கு உரை

Page 104
9.
எழுதும்போதும், மூல நூல்களுக்கு உரை எழுதும்போதும், காவியங்களில் மிகமிக அருகியும் இதுகாறும் இடம்பெற்றுவந்த உரைநடையைச் சமயக் கருத்துக்களைச் சரளமாகவும் தெளிவாகவும் கூறப்படும் கருத்துக்கள் ஒன்ருேடொன்று கோவைப் பட்டுத் தொடர்புறும் வண்ணமும் எடுத் துரைப்பதற்குப் பயன்படுத்தி அதில் வெற்றி கண்ட நாவலர், வசனநடை கை வந்த வல்லாளர் என்ற உயர் பாராட்டை யும் பெற்றர். இவர் மேற்கொண்ட இச் சைவப்பணியே இவருக்கு இப்பெருமையை ஈட்டித் தந்தது.
கந்தபுராண கலாசாரம் பரவிய யாழ் நாட்டில் புராணபடன மரபைப்பிரசித்தி பெற நிலவ வைப்பதற்கு நாவலர் அரும்பாடுபட்டார். *" வேத வாக்கியப் பொருளை வலியுறுத்தி விரித்து அறிவிப்பது புராணம்" என்பது நாவலர் வாக்கு. புராண படனத்தின் மூலம் பாமர மக்க ளிடை சமய அறிவு, இலக்கிய இரசனை முதலியவற்றைத் தோற்றுவித்துச் சமய உணர்ச்சியை வளர்க்கும் ஆற்றல் வாய்ந்த காரணம் பற்றிப் புராணபடன மரபு தனி யமிசங்கள் பொருந்தியதாய் எம் நாட்டில் நாவலர் பெருமுயற்சியால் வளரலாயிற்று. இதுவும் இவராற்றிய வைதிக சைவப் பணியின் இன்னேரமிசம்.
சமய அடிப்படையில் கல்வி வழங்கும் நோக்குடன் நாவலர் தாய்நாட்டிலும் சேய் நாட்டிலும் வித்தியாசாலைகளைத் தாபித்தார்கள். இது இவரது சைவப் பணியின் வேருேரமிசம். இதோடமை யாது சமய அடிப்படையில் கல்வி கற்பிப் பதற்கு வேண்டிய பாடப்புத்தகங்களைத் தாமே எழுதி உருவாக்கினர். ஏறக் குறைய ஒரு நூற்ருண்டின் பின், முன் னேற்றமடைந்ததாகக் கருதப்படும் இற் றைக் கல்விமுறையில் சமய அறிவு கட் டாய பாடமாக வற்புறுத்தப்பெற்று விளங்கக் காண்கின்ருேம். அக் காலத்தி லேயே சமயக் கல்விமுறையை இடம் பெறச்செய்த நாவலரின் தீர்க்கதரிசனம் பெரிதும் போற்றற்குரியது.

கா. கைலாசநாத குருக்கள்
நாவலர் வேதங்களைப் பிரமாண நூல் கள் எனவும், வேதங்கள் தேவாலயங் களில் ஒதுவதற்கு உரியவை என்றும் அடிக்கடி வற்புறுத்திவந்ததை மட்டுமே காணுகிருேம். வேதக் கருத்துக்களை எடுத்துக்கூறிக் குறிப்புரைகளோ விளக்க வுரைகளோ கூறிய சந்தர்ப்பங்களை அவர் நூல்களில் காணலரிது, இதற்குக்காரணம் மரபு தெரிந்தவர்களுக்கே தெளிவாகும்.
வேதங்களை எடுத்தாளும் மரபு சிறிது சிந்திக்கற்பாலது. வேதங்களுக்கு வழங்கும் பெயர்களுள் மறை என்பதும் ஒன்று. இப்பெயர் வேதங்களின் இயல்பைச் சுட்டிக் காட்டுகின்றது. மறையாகிய வேதங்களிற் பரந்துகிடக்கும் கருத்துக்கள் யாவுமே மறைபொருள்கள். ஊடுருவி நோக்கவல்ல ஆற்றல்வாய்ந்த ஒரு சில ருக்கே இப்பொருள்கள் புலகுைம். வேதங்கள் கூறும் தெய்வங்களே கட்புல ணுகாது உருக்கரந்துறையும் இயல்பின. இத் தெய்வங்களுக்கிடையே பரம்பொரு ளாகிய சிவபெருமானும் மறைந்து இருக் கின்ருர் என்பதை வேதவாக்கியப் பிரமா ணங்கொண்டே அநுபூதிமான்கள் விளக்கி யுள்ளனர். வேதங்களில் மறைந்து கிடக் கும் கருத்துக்கள் மறைந்திருப்பதே முறை. இது வேத பாரம்பரியம் அறிந்தவர்களின் கருத்து. ஒரு மரத்தின் வேர்கள் போன் றவை வேதங்கள். வேதங்களை மூலமாகக் கொண்டவைய்ே சமயநூல்களும் தத்துவ நூல்களும் பல்வேறு சாத்திர நூல்களும். மரத்தின் நடுத்தண்டு கொம்பர்கள் இலைகள் பூக்கள் காய்கள் கனிகள் எல் லாம் கண்ணுக்குத் தெரிபவை; வேரை ஆதாரமாகக் கொண்டவை. மரத்தின் வேர் மண்ணுள் புதையுண்டு மறைந்து கிடப்பது. இவ்வேரையும் மரத்தின் இதர பகுதிகளைப்போல் வெளியே தெரியும்படி கொணர்ந்தால், அதாவது மண்ணைக் கிளறி மரவேர்களை மண்ணுள் புதையாத வாறு வெளியே தெரியும்படி மண்ணை அகற்றி வெளிக்கொணர்ந்தால் அவ் வாறு கொண்டுவந்த மாத்திரத்திலேயே மரம் முற்றிலும் அழிந்துபடும். மறைந்த

Page 105
நாவலர் பணியின் வைதிக அடிப்படை
நிலையிலிருந்துகொண்டே தேவையான உயிர்ச் சாரத்தைப் பூமியிலிருந்து தானே உறிஞ்சி மரத்தின் பல பாகங்களுக்கும் பரவிச் சுவறும் வண்ணம் மண்ணில் மறைந்தபடியே நின்று செயலாற்று பவை மரத்தின் மூலங்களாகிய வேர்கள். வேதங்களாகிய மூல வேர்களும் இந்நிலை யினவே. இந்தியப் பண்பாட்டினை விளக் கும் சமய நூல்களாயினும், பல்கிப் பெருகி யுள்ள தத்துவசாத்திரங்களாயினும் சமய அடிப்படையிலெழுந்த நுண் கலை களை விரித்து விளக்கும் சாத்திர நூல்களாயி னும் வேதங்களாகிய மூலவேர்கள் மூலம் தாம் விளங்குவதற்கு வேண்டிய நுண்ணிய சக்தியைப் பெற்றுத் தத்தம் அமைப்பை ஏற்றுக் கருத்துக்களை வழங்குவதுடன், நுண்ணிய வடிவந்தாங்கி மறைந்து கிடக் கும் மூலத்தினின்றும் பெரிதும் விரிந்து, உருவாலும் கூறும் முறையாலும் வேறு பட்டு, அறவே வேறுபடும் அமைப்பின வான விரிவு தாங்கும் நூல்களாக மிளிர் கின்றன. வேதங்களுக்கும் இவ்வகை நூல் களுக்கும் எதுவகைத் தொடர்பும் இல்லை. என்று எண்ணவும் தூண்டுகின்றன. மரத் தின் இதர பாகங்களுக்கு உயிர்ப்பையும் செழிப்பையும் வனப்பையும் வழங்கும் வேர் மண்ணுள் மறைந்த வேர்களாகவே இருக்கட்டும். மண்ணை அகழ்ந்து அவற்றை வெளிக்கொணர முனைந்து மரத்தையே அழியவைத்தல் மடமை என்ற ஆன்ருேர் கருத்து வேதங்கள் மறைந்தே இருக்கும் இயல்பினவாகிய மறைகளே என்பதை வலியுறுத்துகின்றது.
இதுவரை கூறப்பட்ட பாரம்பரியத் தின் வழிவந்த நாவலரவர்களும் வேதங் %2%Iré சைவத்தின் அடிப்படைகளாக, மூலப் பிரமாண நூல்களாகத் தமது நூல் களில் வற்புறுத்தி அறியத்தருவதோடமை கிருர். இவ்வேதங்கள் ஒதற்குரியவை அவற்றை உரியகாலங்களில் உரிய இடங் களில் உரியவாறு ஒதுதல் வேண்டும் என் றும் வலியுறுத்துகிருர், நாவலர் பேணி வளர்த்துப் பரப்பிய சைவக் கருத்துக்கள் அனைத்திலும் அமைந்துகிடக்கும் வைதிக

அடிப்படைகள் யாவும் வைதிக அடிப்படை களாகவே, நிலத்தினுள் ஆழமாகப் புகுந்து புதையுண்டு கிடக்கும் மூலவேர்களாகவே மறைந்து கிடக்கின்றன. அவை எங்கள் பாரம்பரியத்தில் மறைந்தே கிடத்தற்குரி யன. சமயசாதனைகள் நிகழ்த்த வரும் அநு பவ வேறுபாடுகளால் அவ்வப்போது உண ரற்பாலன. இவ்வேத பாரம்பரியத்திற் கேற்ப, மறையாக விளங்கும் வேதங்களில் வேதமுதல்வனன சிவபெருமான் ஒவ் வொரு நுண்ணிய பகுதியிலும் புகுந்து பரந்து மறைந்து இருப்பதை அறியாராய் ஆராய்ச்சியாளர், சிவனென்ற சொல்லை மட்டிலுந் தேடி இருக்கு வேதம் முழுவதும் காணுராய்ச் சிவன் இருக்குவேதம் போன்ற பழைய வேதப்பகுதிகளிற் கூறப்பட்டிலன். சிவ வழிபாடு இருக்கு வேத காலத்தில் நிலவவில்லை எனவும் துணிந்து கூறத்தலைப் பட்டனர். வேதங்கள் மறைகள் என்னும் வேதபாரம்பரியத்தின் அடிப்படைத் தத்து வத்தின் நுணுக்கங்களை அறியா ஆராய்ச் சிகளின்முடிவுகள் பாரதூரமான தவறுகள் மலிந்த கருத்துக்களை யல்லவா பரப்புகின் றன!
நல்ல நீர்நிலையங்களிலிருக்கும் நீரூற் றுக்களிலிருந்து நீர் புதிதாக ஊறிக் கொண்டே யிருப்பது போன்று வேதங்க ளாகிய ஊற்றுக்களிலிருந்து புதுப்புதுக் கருத்துக்கள் தோன்றிக்கொண்டே யிருக் கும். வேதங்கள் சஞதனமானவை; அதா வது என்றுமிருப்பவை. எனவே முக்காலும் உண்மைப் பொருளைத் தருபவை. வேதங் கள் மின்சார உற்பத்தித்தானம் போன் றவை. மின்சாரம் உற்பத்தி செய்யுமிடத் தில் மின்சக்தி மிகவும் ஆற்றல் வாய்ந்தது. ஆபத்துக்களும் இங்கே நேரற்பாலன. மின் சக்தியை இதற்கெனவுள்ள கருவிகள் (Transformers) eupayah di Guju GigaGu உபயோகத்துக்காக விநியோகிக்கிருர்கள். இதனல் ஆபத்துக்கள் குறைவாகவே நேரிடும் வாய்ப்பு ஏற்ப்டும். இதேபோன்று வேதங்களும், வேதாங்கங்கள் இதிகாச புராணங்கள். சமய நூல்கள் தத்துவ சாத்திரங்கள் போன்ற மட்டுப்படுத்தும்

Page 106
96
நூல்கள் மூலம் தம் உட்பொருளை விநி யோகிக்கின்றன. புராணங்கள் வேத வாக் கியப் பொருளை விரித்து வலித்து அறிவிப் பன எனச் சைவவினுவிடை என்னும் நூலில் நாவலர் கூறியது இங்கு சிந்திக் கற்பாலது. வேதக் கருத்துக்களை நேரே பெருது மட்டுப்படுத்தி வழங்கும் இதிகாச புராணங்கள்மூலம், சமய நூல்கள் மூல மும் தத்துவ சாத்திர நூல்கள் மூலமும் நாம் பெறுதல் வேண்டும் என்பது நாவலர் கருத்து. இக் கருத்து நாவலரால் குறிப் பாகக் கூறப்படாதிருப்பினும் அவர் நூல் களில் செயற்படுத்தப் பட்டிருப்பது அவ தானத்துக்கு உரியதாகும்.
நாவலராற்றிய பணி சைவத்துடன் மட்டுமே தொடர்பு பெற்றது; வைதிகப் பின்னணியில் விளங்குவது. அவர் பேணிக் காத்த சைவம் வைதிகசைவம் என அவர் பரம்பரையினர் ஒப்புவர். அப் பணியினை அவர் தீவிரமாக ஆற்றிய வேளை அது பன்
Navalar.. . . . . Oral Traditi
The oral tradition having been vi to meeting the new challenge was the publications and commentaries on Saiva western education were books and propa by making available to the Tamil people metaphysics and ethical works in the for tradition had - to be revived. Navalar i ac own printing press for the purpose. H began preaching, as much us the missi a new movement totally foreign to the or preaching.
C. Rajasingam, A
Tr

கா. கைலாசநாத குருக்கள்
முகப்பட்டுப் பல அமிசங்களாக விரிந்தது. வைதிக சைவத்தைப் பேண முன்வந்த நாவலர் தம் வாழ்க்கையை இதற்கே அர்ப் பணித்தார். சமயிகளிடை சமய அறிவைப் பெருக்கினர். புறச்சமயத்தவர் பரப்பிய விஷமக் கருத்துக்களைக் கண்டித்தார். இவ் விரண்டையும் திறம்படச் செய்வதற்காக நல்ல நூல்களை எழுதித்தாமே அச்சிட்டு வெளியிட்டார். தமக்கென ஒருவசனநடை யினைத் தோற்றுவித்தார். பிற சமயத்தவ ரின் பொய்ப் பிரசாரத்தைக் கண்டித்தார். சமய உபந்நியாசங்களை நிகழ்த்தினுர். புராண படன மரபினை ஊக்கமாக வளர்த் தார். சமய அடிப்படையில் கல்வி வழங்க வித்தியாசாலைகளை நிறுவினர். மாணவர்க் குரிய நூல்களை எழுதி வெளியிட்டார். நாவலர் தனியணுக நின்று உழைத்த அள விற்குப் பலர் இணைந்து ஒருமித்துக் «isl— மையாற்றும் நிறுவனங்கள்கூட இதுவரை செயலாற்றியதில்லை.
ion
rtually destroyed, the greatest obstacle absence of Tamil books or suitable a literature. The powerful weapons of ganda. These could only be countered : texts of their own scripture, literature. n of cheap editions. In addition the oral complished all this by setting up his e was also teacher and exemplar and onaries did, initiating in the process Hindus-that of Prasangam (LTF iš suh)
imuganavalar-Scholar and Revolutionary. bune, Dec. 11, 1965 p. 7.

Page 107
நாவலரின் சம
த. சண்முகசுந்தரம்
மதத்தலைவரில் சிலர் தாம்வாழும் காலத்திலேயே பெரும்புகழுடன் இருப்பர்; ஆணுல் அவர் மறைந்த பின்னர் சிலகாலத் திலேயே அவரின் புகழ் குன்றிவிடும். இன் னும் சில தலைவர்களுடைய புகழ் அவர் வாழ்நாளிலேயே பரவுவதில்லை. அவரின் மறைவுக்குப்பின் அவரின் புகழ் படிப்படி யாகப் பரவி வரலாற்றிலேயே நிலையான இடத்தைப் பிடித்துவிடும். இன்னும் ஒரு errirfrtir இருக்கின்றனர். இவர்களைக் கொடுத்துவைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். இவர்வாழும் பொழுதே இவரின் பெயரும் புகழும் நன்கு பரவிவிடும். இவர் களின் மறைவிற்குப்பின்னர் இவரின் செல்வாக்கு மேலும் வளர்ந்து விடும்; யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவலர் இந்தப் பிரிவைச் சேர்ந்தவர். இவர் ஐம்பத் தேழு வயது உயிர்வாழ்ந்தவர். தன்னு டைய இருபத்துமூன்ருவது வயது தொடக் கம் மறையும் வரை சைவப் பெரும்பணி செய்தவர். இவருக்கு ஈழத்தில் ஈடிணை யற்ற மதிப்பிருந்தது; தமிழ்நாட்டிலும் அப்படியே. இவர்காலத்து வாழ்ந்தஅறிஞர் குழாத்தினர் இவரின் பரந்த அறிவைப் பாராட்டினர்: திறமையைக் கண்டு வியந் தனர்; பட்டம் வழங்கிக் கெளரவித்தனர்; நாவலர் மறைந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றும்கூடச் சைவ அறிஞர் பலரும், **நாவலர் இதுபற்றி என்ன கூறி ஞர்? நாவலர் இதுபற்றி என்ன எழுதினர்? இன்று இவர் உயிர்வாழ்ந்தால் இதுபற்றி என்னசுறுவார்?"என்ற விஞக்களை எழுப்பி

பப்பணி
விடைகாண முயலுகின்றனர். இந்தப் போக்கு ஒன்றே நாவலருக்கு ஒரு வகை யில் இக்காலமக்கள் செய்யும் மரியாதை.
திருக்குறள் தனிச் சிறப்புடைய நூல். இதனை ஒவ்வொருவரும் தாம் வாழ்ந்த காலத்திற்கு ஏற்ப விளக்கத் தலைப்படுகின் றனர். நாவலரின் வாழ்க்கையையும் காலத் திற்கு ஏற்ப விளக்குகின்ற முயற்சியும் மேற் கொள்ளப்படுகின்றது. நாவலரின் சைவத் தொண்டை ஆராயும்போது உள்ளத்தில் கொள்ளவேண்டியவை பல. அவற்றுள் முக்கியமானவை சிலவற்றைமட்டும் கவ னிக்கலாம். தான்வாழ்ந்த காலத்திலே நாவலர் பெரும் மலைபோல நிமிர்ந்து நின் றவர். அவருடைய ஒழுக்கம், அறிவு, ஆற் றல், தியாகம், இறையன்பு என்பன மக் களைப் பெரிதும் கவர்ந்தன. அறிஞர் அவரி டம் கிட்டப் போகவே தயங்கினர். "நாவ லர் அவதாரம்" எனச் சிலர் கருதினர். இந்த அவதாரப்பட்டஞ் சூட்டும் முயற் சியை நாவலர் வ்ெறுத்தார்; கண்டித்தார். இதனல் இவரின் புகழ் மேலும் ஒருபடி ஓங்கியது. ‘நாவலர் அவதாரம்' 'ஐந் தாம்குரவர்' என்றகருத்து இன்றும் நிலவு கின்றது. நாவலருக்குக் குருபூசை எடுப்பது இன்று பெருவழக்கு. "நாவலர் வாக்குத் திருவாக்கு’ எனக்கருதும் அன்பர் பலர் இருக்கின்றனர். இன்னும்கிலர் நாவலர் வாழ்ந்த காலத்திலே அவரை நேர்முகமாக வும் மறைமுகமாகவும் வன்மையாக எதிர்த் தனர்; அவரின் உயிருக்கு உலைவைக்கவும்

Page 108
9s
முயன்றனர் என்பர். இன்றும் நாவலரை எதிர்ப்பவர் இருக்கின்றனர். தமிழ் நாட் டிலே நாவலருக்கு உரிய இடம் சிறிது சிறி தாக மறுக்கப்படுகின்றது என்ற உள்ளக் கொதிப்பும் இருக்கின்றது. இந்நிலையிலே, **நாவலரின் உண்மையான மதப்பணி யாது? நாவலரின் கோட்பாடு எது? நாவ லர் சமயத்தொண்டு மூலம் எதைச் சாதித் தார்? எதைச் சாதிக்க முயன்ருர்? அதில் அவர்கண்ட வெற்றி யாது? இன்று நாவல ரின் தாக்கம் எது? காலத்தை வென்று நிற் கின்ற மதப்பணியின் அம்சம் எது?” என்ற விஞக்களுக்கு விடைகாண அறிஞர் முன் வரல்வேண்டும். இதுவே நாவலருக்குச் சைவ உலகம் செய்யக்கூடிய கைமாறு,
நாவலர் ஒரு யுகத்திலே பிறந்து வளர்ந் தவர்; இன்னும் ஒரு யுகத்திலே வாழ்ந் தவர்; மேலும் ஒரு யுகத்தை உருவாக்க உழைத்தவர். நாவலர் பிறந்து வளர்ந்த யுகம் நிலமானிய யுகம். ஈழத்திலே ஐரோப் பியர் ஆட்சி தோன்றிய பின்னரும் நில மானிய முறை நிலவியது. நிலமானிய அமைப்பு முறையிலே சிறந்து விளங்கிய குடும்பம் ஒன்றிலே இவர் பிறந்து வளர்ந் தார். பழைய கல்வி மரபை ஒட்டியே இவரின் கல்விநடந்தது. இதனைத் திண்ணைப் பள்ளிக் கல்விமுறை எனலாம். "இன்ன ரிடம் பாடம் கேட்டவர்’ என்றுதான் அந்தக் காலத்திலே ஒருவரைப் பாராட்டு வர். மேலும் ** கல்வியின் நோக்கம் கடவுளை யடைதல்” என்பதே அக்காலக் கோட்பாடாக இருந்தது. இந்த யுகத்திற்கு ஏற்பவே நாவலரின் கல்வி அமைந்தது. நிலமானிய முறை ஒருபுறம் இருக்க, வேறு ஒரு யுகம் ஈழத்திலே தோன்றியது. ஆங்கிலேயர் ஆட்சியின் பயனகப் புதிய மத்திய வகுப்பினர் தோன்றினர். இந்த வகுப்பினரின் தோற்றம் கிறித்தவ சூழ் நிலையிலே ஆங்கிலக்கல்வி மூலமும், புது முறைத் தமிழ்க்கல்வி மூலமும் நிகழத் தொடங்கியது. இதற்கேற்ப ஆறுமுகம் ஆங்கிலக்கல்வி பெறச் சென்ருர். இந்தப் புதுயுகம் என்னும் அச்சிலே வார்த்து எடுக்க நாவலரை அவரின் குடும்பத்தின்ர் முயன்றனர். அச்சுப் பிளந்து வெடித்தது.

த. சண்முகசுந்தரம்
அந்த அச்சிலே நாவலரை அடக்க முடி யாது போயிற்று. இளம் ஆறுமுகம், இந் தப் புதுயுகத்தை எதிர்க்கத் தலைப்பட் டார், புதுயுகம் ஒன்றைக்காணத் துடி துடித்தார். ஆங்கிலேயர் தோற்றுவிக்க முயலுகின்ற புதுயுகம் பழமையை அழித் துக் கேட்டைக் கொண்டுவரும் என்பதை நாவலர் நன்கு உணர்ந்தார். நாவலர் புதுயுகம் காண முயன்ருர் என்பதிலும் பார்க்கப் பழமைக்கு மெருகு கொடுத்து அதன்மூலம் பழமையை நிலைநாட்டிப் புதுயுகம் காண முயன்ருர் என்பதே பொருத்தம். இப்படியான முயற்சி தென் னிலங்கையிலும் நடைபெற்றது. சில வேளைகளில் தனிமனிதன் முடிவு வரலாற் றையே மாற்றி அமைத்துவிடும். பழமை யில் தன் கல்வியைத் தொடங்கி, புதுமை யில் அதனை வளர்த்த நாவலர் கற்ருய்ந்து ஒழுகினர். தானும் கற்ருர் ; ஆய்ந்தார்; ஒழுகினர். பிறரையும் கற்கச் செய்தார்; ஆய்வு செய்ய வைத்தார் : ஒழுக வைத் தார். இதுவே நாவலருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது.
நாவலர் பின்பற்றிய நெறி சைவ நெறி. சைவரீதி உலகெலாம் விளங்க வேண்டு மென்பது அவர் கோட்பாடு. நாவலர் காலத்திலே சைவநெறி விளங்க வில்லை. அதனை விளங்கச் செய்யவேண்டிய நிலை இருந்தது. இதனை அவர் வேதாகம எல்லைக்குள் நின்றே செய்ய விரும்பினர். வேதத்தின் பழமைய்ையும் அதன் கோட் பாட்டையும் அவர் போற்றினர். அக் காலத்திலே வேதம்தான் எல்லாம் என்ற கருத்து நிலவியது. நாவலர் வாழ்ந்த காலத்தை வரலாற்று அடிப்படையில் நோக்கலாம். நாவலரின் கருத்து யாவும் முளை கொண்டு வளர்ந்து பயிராகின. நாவலர் மறைந்த பின்னரே, சிந்துவெளிப் பண்பாட்டு ஆய்வு தொடங்கியது. ஆகவே அக்கால மரபுப்படி நாவலர் வேதாகம கோட்பாட்டையே போற்றிப் பின்பற்றி ஞர். சிந்துவெளி நாகரிகமே சிவவழி பாட்டை உருவாக்கியது என இன்று ஆராய்ச்சியாளர் நிறுவ முயலுகின்றனர். சிந்து வெளியிலே கண்டெடுக்கப்பட்ட

Page 109
நாவலரின் சமயப்பணி
சிவனை யொத்த கொம்புக்கடவுள், சிவ லிங்கம், தாய்மைக் கடவுள், மதவழிபாட் டுச் சான்று, இடப வழிபாடு என்பவற்றை நாவலர் அறிந்திருந்தால், தன் கருத்துக் களை மாற்றியிருக்கவும் கூடும். நாவலரின் சமயக் கோட்பாடு யாவும் வேதாகமவழி, தமிழில் எழுந்த சைவத் திருநூல்களை மையமாக வைத்தே உருவாகின. ஐரோப் பிய வரலாற்று உணர்வு சரியாக உரு வாகாத காலம் நாவலரின் காலம்.
நாவலருக்கு இருந்த கூரிய அறிவை அவருடன் வாழ்ந்து பழகிய எல்லோரும் மெச்சினர். வெறும் அறிவிஞல் மட்டும் நாவலர் தன் சாதனைகளை நிலைநாட்ட வில்லை எனவும் ஒருசாரார் கருதுவர். அவருக்கு இறை அனுபவம் ஏற்பட்டது. அதனை அவர் வெளிக்காட்டவில்லை. ஆங் கிலம் கற்கும் ப்ோதும் கிறித்தவச் சூழ் நிலையில் கற்பிக்கும்போதும் நாவலர் அறி வுடன் இறையன்பையும் வளர்த்தார் என வும் கொள்ளலாம். ஆகவே நாவலருக்கு உள்ளத்திலே அடித்தளத்தில் இறை உணர்வு இருந்து வந்தது. இப்படியான உணர்வே அவரைத் தூண்டியது; இது பற்றி ஆராய்ச்சியாளர் போதிய கவனஞ் செலுத்த வேண்டும். மத உலகிலே பெரிய சாதனைகளை நிலைநாட்டியவர் யாவரும் இறை இன்பம் பெற்றவர்.
நாவலர் பிறந்தது 1822இல்; மறைந்தது 1889இல், பகவான் இராமகிருட்டினர் பிறந்தது 1836இல்; மறைந்தது 1885இல், தன்சிந்தனை மூலமும் தியானம் மூலமும் புதியவழியை ஏற்படுத்தியவர் பகவான் இராமகிட்டினர். அவர் இறைஅனுபவத் தைத் தன் 23 ஆம் வயது வரையிலே பெற் ருர் தாய்மைக்கடவுளை வணங்கிய இவர் இந்தியாவிலே சமரசத்தைப் போதித்துப் புதியவழியை உருவாக்கினர். அதற்கு முன் னரே நாவலர் விழிப்புணர்ச்சிபெற்று இலங்கையிலும் இந்தியாவிலும் மதவிழிப் புணர்ச்சியைத் தூண்டிவிட்டார். பகவான் சமரசம்பேசினர்; நாவலர் திரும்பத்திரும் பச் சைவத்தை நிலைநாட்டவேண்டும் எனப் பேசினர். 'புண்ணிய பூமியாகிய பரத

99.
கண்டத்திலே’ இந்துசமயம் தோன்றியது: இதன் முக்கியமான உட்பிரிவுகள் ஆறு. இவற்றைத்தவிர அங்கு சமணமும் பெளத் தமும் தோன்றின. இசிலாமும் கிறிஸ்தவ மும் புகுந்தன. இந்துமதத்தின் உட்பிரிவு களுக்குள் கூடப் பூசல் ஏற்படுவது வழக்கம். இருந்தும் பரந்த பரதகண்டம் இந்து மதங்கள் எல்லாவற்றிற்கும் இடம் கொடுத் தது. ஆகவே சமரசம் பேசுவது அங்கு சாத்தியம். பகவானைத்தொடர்ந்து பலரும் சமரசம் பற்றி எழுதினர்; பாடினர்; பேசி னர்,ஆணுல் புண்ணியபூமிஇரண்டுநாடாகப் பிளந்து இப்போது மூன்று நாடாகிவிட்டது என்பர். சமரசம் என்னும் சீரியநோக்குத் தோல்விகண்டுவிட்டது என்பர். இருந்தும் இலட்சியவாதியின் தோல்வி, இலட்சியமற் றவரின் வெற்றியிலும்பார்க்க மாண்புடை யது என்பதும் உண்மை. நிற்க, இலங்கை யையும் நாவலரையும் நோக்கலாம். இலங்கை மிகச்சிறிய நாடு. இதில் சைவ மக்களின் தொகை குறைவு. போர்த்துக் கேயரின் ஆட்சியின்போது கத்தோலிக்க மதம் புகுத்தப்பட்டது. ஈழத்துப்பாடல் பெற்ற தலங்களும் ஏனைய தலங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப் பட்டன. போத்துக்கேயரை விரட்டிய ஒல்லாந்தரும் இலங்கையில் தமது புரட்டசுத்தாந்து மதத் திற்கே முதலிடம் கொடுத்தனர். இதனுல் சைவம் நலிந்தது. ஒல்லாந்தரை விரட்டிய ஆங்கிலேயர் சைவ சமய வளர்ச்சிக்கெதி ராக மறைமுகமான உத்திகளைக் கையாண் டனர். இந்தச் சூழ்நிலையிலே சமரசம் பேசுவதோ, ஒப்புநோக்கி ஆய்தலோ இய லாத அலுவல். தன்வீடு தீப்பற்றி எரியும் போது, பிறன்வீட்டு அழகைச் சுவைப்பது எப்படி? அந்தப் பிறவீட்டான்தான் வீட்டிற் குத் தீயையும் வைத்துவிட்டான். ஈழத்து யாழ்ப்பாணத்தை மையமாக வைத்துப் போர்க்கொடியை உயர்த்தினர் நாவலர். இந்தவகையிலே அவரை மதத்தலைவர் என்பதிலும் பார்க்க மதத் தளபதி என் பதே பொருத்தம் போலத் தெரிகின்றது. நாவலர், மேலைநாட்டவரையும், அவரின் மதத்தாக்கத்தையும் எதிர்த்தார். ஆனல் அந்த எதிர்ப்பிலே வெறுப்புணர்ச்சி கிடை

Page 110
1)
யாது. ஆங்கிலேயரையும் அவரின் பேரர சுக் கோட்பாட்டையும் மகாத்மா காந்தி எதிர்த்தார். வெறுப்புணர்ச்சி அவருக்கு இல்லை. இதனுலேதான் இந்தியா விடுதலை பெற்றபின்னருங்கூட, இங்கிலாந்து இந்திய
உறவைக் காந்தி விரும்பினுர்.
போர்த்துக்கேயரின் ஆட்சியின் போது மக்கள் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றப் பட்டனர். அவர்கள் தொடர்ந்தும் அதே மதத்தையே அனுட்டித்து வந்தனர். ஆங் கிலேயர் ஆட்சியின் போது கத்தோலிக்க மத அனுட்டானத்திற்குத் தடை இல்லை; ஆகவே கத்தோலிக்கத் திருச்சபைக்குப் *புதிய மந்தை" பெருமளவிலே தேவை யில்லை. இருப்பது போதும் என்ற நிலையில் இத்திருச்சபை இருந்திருக்கலாம். ஆங்கி லேயரின் ஆட்சியின் நிழலில் இலங்கைக் குள் புகுந்தனர் புரட்டசுந்தாந்துகளின் பல்வேறு பிரிவினர். இவர்களுக்கும் புது மந்தை பெருமளவிலே தேவைப்பட்டது. ஆகவே தம் மதமாற்ற முயற்சியில் இவர் ஈடுபட்டனர். இதனுல் நாவலர் சேனதிபதி யாக மாறினர். இந்த முயற்சியில் ஈடு பட்ட நாவலர் தன்போராட்ட முயற்சியை இந்தியாவிற்கும் எடுத்துச்சென்ருர். இந் தியாவிற்கு அச்சுக்கூடம் வாங்கப்போன வர் நாவலராகத் திரும்பி வந்தார் என்ற கருத்தும் நிலவுகின்றது. இருந்தும் நாவலர் மேற்கொண்ட இந்தியத்தூது திட்டமிட்ட செயல் என்பதே பொருத்தம். தமிழ்நாட் டிற் சைவத்தை வளர்க்கவேண்டும்; இலங் கையிலே அதனை மீட்கவேண்டும்; இதுவே நாவலரின் இலட்சியம்.
இலங்கையில் நாவலர் பின்பற்றிய வழிக்கும், இந்தியாவில் அவர் பின்பற்றிய வழிக்கும் இலட்சியம் ஒன்றேதான். அது சைவ சமய வளர்ச் சி. இருந்தும் அவர் இரண்டுநாடுகளிலும் கையாண்ட வழிவகை சற்று வேறுபட்டிருந்தன. இதுவரை கால மும் இந்தியாவிலே தோன்றிய இயக்கம் யாவும் ஈழத்தைப் பாதித்தன. இதற்கு ஓர் எடுத்துக்காட்டு பெளத்தத்தின் வருகை, ஆணுல் 19 ஆம் நூற்றண்டிலே இலங்கை

த. சண்முகசுந்தரம்
யில் தோன்றிய இயக்கம் இந்தியாவிலே தாக்கத்தை ஏற்படுத்தியது; தெற்குத் தென்கிழக்கு ஆசிய விழிப்புணர்ச்சிக்கு வழி கோலியது. இதுதான் நாவலரின் பெரு மைக்குரிய முயற்சி, யாழ்ப்பாணத்தை மையமாகவைத்து அவர் செய்த சைவ முயற்சியில் வேகத்தைக் காணலாம். இங்கே கோயில்களைத் திருப்பிக் கட்டவேண்டிய நிலை இருந்தது. சைவமரபுகளை நிலைநாட்ட வேண்டியதாயிற்று, இங்கே சைவம் என்னும் கட்டிடத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய தாயிற்று. இந்தியாவில் சைவம் என்னும் கட்டிடம் இருந்தது. அதன்மீது படிந்துள்ள துரசுகளைத் தட்டிப் புதுப்பிக்கவேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தில்லி இசிலாமியர், பிரஞ்சுக்காரர், ஆங்கிலே யர் என்போரின் படையெடுப்பால் சைவ வளர்ச்சி தடைப்பட்டது. இருந்தும் பாடல் பெற்ற தலம் பலவும் இயங்கிவந்தன. மடா திபதிகளும், பிரபுக்களும், நிலச் சுவாந் தரும் சைவவளர்ச்சிக்கு உதவி வந்தனர். ஆகவே தமிழ்நாட்டிலே சைவம் இயங்கி வந்தது. அதற்குப் புதியதொரு ஊக்கத்தை நாவலர் அளித்தார்.
கோயில்களை மையமாக வைத்தே நாவலர் தன் மதப்பணிகளை மேற்கொண் டார். மக்களைக் கோயிலுக்கு வரச் செய் வதே நாவலரின் நோக்கம். மக்கள் என் னும்போது அந்தக்காலத்திலே "வர்ணுச் சிரமதர்மம்** நிலவியது என்பதைக் கருத் திலே கொள்ளல் வேண்டும். வர்ணுச்சிரம தர்மத்தை ஒழிக்கவேண்டும் எனப் போரா டிய மகாத்மா காந்தி வர்ணுச்சிரமதர்மம் தொடக்கத்தில் ஆத்மீகக் கோட்பாடாக இருந்தது எனக் குறிப்பட்டுள்ளார். அது இக்காலத்துக்கு ஒவ்வாதது என்பதையும் ஏற்ருர், காந்திக்கு முன்னர் வாழ்ந்த நாவலர் அக்காலச் சமுதாயக் கோட் பாட்டை ஏற்றுக்கொண்டு அந்த எல்லைக் குள் நின்றுதான் பணிபுரிந்தார்; ஆணுல் போலி மதகுருமாரும், நேர்மையற்ற அறங்காவலரும் நாவலரின் கடும் தாக்குத லுக்கு ஆளாகினர். கோயில்கள் யாவும் வேதாகம அடிப்படையிலே மறுசீரமைக்கப்

Page 111
நாவலரின் சமயப்பணி
படல் வேண்டும் என்பது நாவலரின் இலட் சியம் ; ஆகவே கோயில்களில் வேதியரே பூசை செய்யவேண்டும் என்பதற்கு ஆவன செய்தார். வேதியர் நடத்துகின்ற கிரியை முறையைப் பெரிதும் விரும்பிய நாவலர் ஆசாரமற்ற வேதியரை மிகவும் வன்பை யாகக் கண்டித்தார். நாவலரின் மதிட் பைப் பெற்ற வேதியர் சிலரில் ஒருவர் யாழ்ப்பாணத்து விளைவேலி அந்தணர் வேதக்குட்டி. ஆசாரமற்ற வேதியரிடப் திருநீறு வாங்கவும் நாவலர் மறுத்தார். இங்கே சிறிய முரண்பாடு ஒன்று இருட் பதையும் காணலாம். வேதியரின் கிரியை முறையை ஆதரித்த நாவலர் வேதியரைட் பகிரங்கமாகக் கண்டித்தார். இதனுல் நாவலருக்குச் சகிப்புத்தன்மை இல்லை எனவும் சிலர் கருதினர். இலட்சிய வேட்கை கொண்ட சமயத் தொண்டர் பலரிடமும் இப்படியான போக்கு இருட் பது இயல்புதானே! புராண படனத்தை ஊக்குவித்தார் நாவலர் ; இக்காலத் திற்கு ஏற்பச் சைவச்சொற்பொழிவுகளைத் தானே நடத்தினர் ; பிறரை நடத்தும் படியும் ஊக்குவித்தார். சொற்பொழிவு கள் யாவற்றையும் சைவப்பொருளை மையமாக வைத்து நடத்தினர். பழைய கோட்பாட்டை நிலைநாட்ட நாவலர் புது வழிகளைக் கையாண்டார். நாவலருக்கு இசைப்புலமை இருந்தது. கலைகளின் நோக்கம் கடவுளைச் சேவித்தல் என்ற கோட்பாட்டையே நாவலர் பின்பற்றினர். இதனுலேதான் நந்தன் கீர்த்தனை பாடிப் பெரும்புகழ் பெற்ற கோபாலகிருட்டின பாரதியாருக்கு நாவலர், கேளாமலே சன்மானம் வழங்கிப் பாராட்டினர். இருந் தும் நாவலர், கண்ணகி வழிபாட்டையும், நல்லூரில் இடம் பெற்றுவந்த வேல் வழி பாட்டையும். கண்டித்தார். வேதாகம முறைக்கு முரண்பாடானவற்றைக் கண்டித் தல் நாவலரின் போக்கு. கண்ணகி வழி பாட்டை நாவலர் கண்டித்தற்குரிய முக் கிய காரணம் கண்ணகி சமணச் செட்டிச்சி என்பதே, மற்ருெரு காரணமும் உண்டு. கண்ணகியை வேதாகம கடவுளர் மத்தியில் வைத்துப் பூசை செய்வது நாவலரின்

101
கருத்துப்படி மகாதுரோகம். இதனல் நாவலரின் வழியைப் பின்பற்றுபவர், *" கற்பினிற் சிறந்தவள் கண்ணகி" என்ற கருத்தை மறுத்து சீதைக்குத்தான் கற்பு இருந்தது என வாதிட்டனர். தமிழுக்குரிய சிறப்பான நூல் சிலப்பதிகாரம் என்பதை இச்சாரார் மறந்தனர் போலும். மேலும் வீரரை, பத்தினிப் பெண்களை வணங்கு வது தமிழன் கண்ட மரபு என்பதை இச் சாரார் ஏற்கவில்லை. சிலப்பதிகாரம் தமிழ் மக்கள் மீதும், சிங்களமக்கள்மீதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது என்பதை இச்சாரார் உணரவில்லை. மிகப் பெரிய வர்களின் அறிவைச் சில வேளைகளில் சிறிய விருப்பு வெறுப்பு மறைத்துவிடுவ தும் வழக்கம் தானே? பழைய காலம் தொடக்கம்வேல் வழிபாடு, மர வழிபாடு, கிராமியக் கடவுளர் வழிபாடு தமிழ்கூறும் நல்லுலகில் நிலவி வருகின்றன. நாவலர் வேதாகம முறை வழிபாட்டையே விரும் பியவர். இலட்சிய ஈடுபாட்டினல், நல் லூரில் இடம்பெற்ற வேல் வழிபாட்டை நாவலர் ஏற்கவில்லை. நல்லூர் முருகன் கோவிலில் மூலமூர்த்தி அம்பு வடிவமாக இருப்பதும், அதற்குப் பக்கத்தில் அம்மை யர் இருவரையும் எழுந்தருளச் செய்ததும் ஆகம விரோதம். இந்தச் செயல் நாவல ரின் உள்ளத்தை வருத்தியது என்பர். வேலை இப்படி வணங்குவது ஆகம விரோ தம் என்றபடியால் நாவலர் இதனைத் தனக் குரிய பாணியில் எதிர்த்தார் ; ஆறுமுக நாவலரின் வேதாகமப் பற்று வேறும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மிகவும் பழைய காலத்திலிருந்து நிலவிவந்த கிரா மியக் கோயில்கள் யாவும் வேதாகம கிரியை முறையைப் பின்பற்றும் கோயி லாக மாறத் தொடங்கின. கண்ணகி, கண்ணகை அம்மஞ்க மாறிப் பின்னர் இராசஇராசேஸ்வரியாக மாறியதும் யாழ்ப்பாணத்திலேதான். இருந்தும் கிரா மிய வழிபாடு முற்ருக மறைந்துவிடவில்லை என்பதும் மகிழ்ச்சிக்குரிய அலுவல். வேல் அருள் மழையைப் பொழிகின்றது; பத்தினி வழிபாடு இன்றும் நிலவுகின்றது.

Page 112
2
காலத்தை வென்று நிற்கும் நாவலரின் நற்பணி அவரின் சைவத் திருநூல்களைப் பதிப்பிக்கும் முயற்சி. சைவத் திருநூல் என்ருல் நாவலரின் பதிப்பே என்ற முடிபு இன்றும் நிலவுகின்றது. நாவலரின் பதிப்பு என்ருல் பிழை இல்லாத புடம் செய்துள்ள பதிப்பு என்பது காலம் அளித்த தீர்ப்பு. இந்தத்துறையில் நாவலரின் தொண்டு நிக ரற்றது.இதனைச்செய்யஅவர்பட்டஇன்னல் இம்மட்டன்று. அவருடைய பணிக்குச் சற்று மாசுபடியச்செய்ய ஒருசாரார் முயன் றனர். அவரின் தொண்டைக் குறைத்து மதிப்பீடு செய்யவும் சிலர் கருதினர். நாவ லரின் சமயத்திருநூற்பதிப்பு வேலைப்பணி கருங்கல் மலைபோல உயர்ந்து நிற்கின்றது. இந்த மலையை நோக்கி வேகமாகக் கல்லை எறிந்தால் எறிந்தவரிடம் கல் மிகவும் வேக மாகத் திரும்பிவரும். மலைக்கு எதுவும் நடக் காது. எறிந்தவருக்குத்தான் கைநோகும்.
காலத்தை ஒட்டி நாவலர் மற்றுமொரு பணியிலேஇறங்கினர். சமயத்திருநூல்கள் யாவும் பாடலாகவே அமைந்திருக்கின் றன. இவற்றுள் முக்கியமான சிலவற்றை நாவலர்உரைநடையிலே எழுதினர். உரை நடையிலே கைதேர்ந்தவல்லாளர்நாவலர். கற்ருேரும் மற்ருேருமாகிய யாவருக்கும் எளிதிலே பயன்படும் பொருட்டுக் கத்திய ரூபமாக நூலைச்செய்தார். இங்கு கற்றவர் யார்? மற்ருேர் யார்? என்பது கவனிக் கப்படல் வேண்டும். செய்யுளில் உள்ள நூல்களைக் கற்று விளங்கக்கூடியவர் கற்ற வர். சற்று எழுத்துவாசனை உடையவர் மற்றவர். எழுத்துவாசனை இல்லாதவர் தான் அக்காலத்திலே பெரும் தொகை யாக இருந்தனர். இந்த உரைநடை நூல் களைப் பிறர் வாசிக்கக் கேட்டும் கல்லாத வர் இன்புறலாம். **வல்லார் வாய்க் கேட்டு அறிக" என்ற நிலை மாறி, ஒருவர் வாசிக்க மற்றவர் கேட்டறியலாம் என்ற நிலையை இந்த உரைநூல்கள் உருவாக் கின. விவிலியநூலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் பெயர்த்ததினுல் ஏற்பட்ட அனுபவத்தை நாவலர் சைவம் வளம் பெறப் பயன்படுத்தினர். கேள்வியறிவை வளர்க்கவே நாவலர் பிரசங்கமுறையைக்

* த. சண்முகசுந்தரம்
கையாண்டார்: இதற்காகவே புராணபட னத்தையும் அவர் திறம்படச் செய்து வந் தார். தானும் சொற்பொழிவு, புராணப் படிப்பு என்பவற்றைச் செய்தார். மற்ற வரைக்கொண்டும் செய்வித்தார். நாவலர் கையாண்ட உரையில் வடமொழிச் சொல் நிரம்ப உள்ளன எனவும் குறிப்பிடுவர் ஒரு சாரார். வட மொழி தாய்மொழி, தமிழ் சேய்மொழி என்ற கருத்து நிலவியது அந்தக்காலம். நாவலரின் வாக்கியங்கள் மிகவும் நீண்டவை எனவும் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர். நீண்ட வாக்கிய மாக இருந்தாலும், அதில் கருத்துத்தெளிவு, இனிமைபோன்றன இருக்கின்றன என நாவலரின் அன்பர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இங்கு கவனிக்கவேண்டிய மற் ருென்றும் உண்டு. சைவவினவிடையில், பாலபாடத்தில், புராண வசனநூலில், கண்டனத்தில் நாவலர் ஒரேவிதமான உரைநடையைக் கையாளவில்லை. இடத் திற்கு ஏற்றபடி உரை நடையைக் கையாண்டார். இதுவே நாவலரின் தனிச் சிறப்பு.
சைவ மக்கள் யாவரும் ஆசாரம் மிகுந் தவர்களாக வாழவேண்டும் என்பது நாவ லரின் சீரிய நோக்கு இப்படியான இலட் சியவேகம் உடைய தலைவர்கள் சமுதாயத் திற்குச் சில நெறிகளையும் கட்டுப்பாடுகளை யும் விதிக்க முயலுவர். இக்காரணத்தாலே தான் நாவலர், காலைக்கடன், அநாசாரம்" திருக்கோயிலிலும் திருவீதிகளிலும்செய்யத் தகாத குற்றங்கள் போன்றவற்றை எழுதி னர். செளசம், சவரம் போன்றவற்றை நாவலர் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டா லும், அவை இக்கால வாழ்க்கையிலே கடைப்பிடிக்க இயலாதவை என்பது பலரின் கருத்து. நாவலர் மீது பேரன்பு கொண்ட மேலைநாட்டு வைத்திய நிபுணர் ஒருவர் இருந்தார். பல் துலக்குதல், வாய் கொப் பளித்தல், உணவருந்துதல் போன்றவை பற்றி நாவலர் எழுதியவை மருத்துவ விஞ் ஞான அடிப்படையில் மிகவும் சரி எனக் கூறுவர். எனினும் மாறிவருகின்ற இக் காலச் சமுதாயத்தில் நாவலர் கூறிய விதி கள் பலவும் வழக்கொழிந்து விட்டன :

Page 113
நாவ லரின் சமயப்ப ணி -
அல்லது மக்களால் கடைப்பிடிக்கப் பட மல் விடப்பட்டுள்ளன. அது எவ்வாரு இருப்பினும் மிகவும் உயர்ந்தநோக்கத் துடன்தான் நாவலர் இந்த வாழ்க்கை வழி காட்டிக் குறிப்புகளை எழுதினர் என்பதில் ஐயமில்லை.
நாவலர் பெற்ற கல்வியை மூன்று வகையாகப் பிரிக்கலாம். திண்ணைப்பள்ளி மரபை ஒட்டிய ஆரம்ப கல்வி; அதே மரபை ஒட்டிய தமிழ் உயர் கல்வி: ஆங்கி லக் கல்வி. அக்காலத் தமிழ்க் கல்விக்கு முதலிரண்டும் முக்கியம். ஆத்திசூடி, கொன்றைவேந்தன் தொடக்கம் தொல் காப்பியம்வரை இளம் ஆறுமுகம் கற்ருர், தான் கற்ற கல்விமுறைபற்றிப் பின்னர் ஆறுமுகநாவலர் நன்கு சிந்தித்தார். இக் கல்விமுறையின் நிறைகுறைகளையும் அவர் உணர்ந்திருக்கவேண்டும். ஆங்கிலேயரின் ஆட்சி இந்தநாட்டிலே உருவாக்குகின்ற ஐரோப்பிய நவீன கல்விமுறையின் நிறை குறைகளையும் அவர் ஆராய்ந்தார். ஆகவே இரண்டு கல்வி முறையும் இக்காலத் தேவைக்குப்போதாதவை என்பது நாவல ரின்கருத்து. திண்ணைப் பள்ளி முறையின் நல்ல தன்மைகளையும் ஆங்கிலேயர் புகுத் தியகல்வி முறையின் நல்ல தன்மைகளையும் அவர் இணைக்கமுயன்ருர். நாவலரின் கல்வி உலகத் தொலைநோக்கிற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. இந்தக் கல்வியில் சைவம் முக்கியமான இடம் பெற வேண்டும் என் பது நாவலரின் அழுத்தமான கருத்து. ஐரோப்பியக் கல்வி, உலகியல் வெற்றிக் குத் திறவுகோல்; மரபை ஒட்டிய தமிழ்க் கல்வி அருளியல் வெற்றிக்குரிய திறவு கோல். இதனுலேதான் தன்பாடத்திட்டத் தில் சமயதீட்சை, புராணப்படிப்பு, இலக் கணக் கல்வி, பூகோளவியல், வீசகணி தம், கேத்திரகணிதம் போன்றவற்றையும் சேர்த்துக்கொண்டார். சைவக் குழந்தை யின் கல்வி, சைவச் சூழ்நிலையில் நிகழ வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு இருந் தது. இந்தக் கல்வி நன்கு நடைபெறப் போதிய பாடநூல், பாடசாலை, மாணவர் மட்டுமிருந்தாற் போதாது. நல்ல சைவ

03
தமிழ் ஆசிரியரும் தேவை. இதஞலே தான் நல்ல ஆசிரியர்களை உருவாக்க அவர் முயன்ருர். நல்ல கல்லூரிகளை நிறுவ நாவலரின் சிந்தனையே வழிகாட்டியது. எதிர்காலத்திற்குத் தேவைப்பட்ட சைவ ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை நிறுவ வும் நாவலரின் செயலே வழிகாட்டியது. தானே கற்பித்தார். தானே கற்பிக்கும் முறையையும் காட்டிக் கொடுத்தார். இதனுல் நல்ல சைவத்தமிழ் ஆசிரியர் பரம்பரை ஒன்று யாழ்ப்பாணத்தில் உரு வாகியது. இதேபோன்ற தொண்டைத் தமிழ்நாட்டிலும் செய்ய நாவலர் நட வடிக்கை எடுத்தார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்களுக் கும் நாவலருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பினுல் ஆதீனங்களே நன்மைபெற்றன எனக் கொள்ளலாம். திருவண்ணுமலை,திருவாவடுதுறை போன்ற ஆதீனங்கள் நிறுவன அடிப்படையில் கட் டுக் கோப்புடன் இயங்கின. அவை திரு வருளையும் தமிழ் அறிவையும் பெற முயன் றன. நாவலரோ திருவருளையும் தமிழ் அறிவையும் ஒருங்கே பெற்ற நடமாடும் பெரும் ஆதீனம். நாவலரின் அறிவு தமக் கும் பயன்படவேண்டும் என்பதற்காகத் திருவாவடுதுறை ஆதீனம் அவரைத் தனதாக்க முயன்றது. ஆதீனத்திலும் பார்க்கப் பரந்த ஒரு சமூகம் தமிழ்நாட் டிலும் ஈழத்திலும் இருப்பதை நாவலர் அறிவர். இந்தச் சமூகத்தின் விழிப்புணர்ச் சியே நாவலரின் குறிக்கோள். ஆகவே ஒர் இடத்திலே தங்கியிருந்து பணி செய்வ தில் மட்டும் நாவலரின் நாட்டம் செல்ல வில்லை. மேலும் நாவலரின் தனித்தன்மை
புகழ்பெற்றது. அவரை எவரும் ஒரு
எல்லைக்குள் நில் எனப் பணிக்க முடியாது. பரந்த இலட்சிய எல்லையே நாவலரின் எல்லை. நாவலரை "மேய்த்துக்கட்டக்"
கூடிய திறமை ஆதீனத்திற்கு இருந்திருக்க (plg. LlifTgl.
சமய இலட்சிய வேகத்தினல் உந்தப்
பெற்றவர்களுக்குச் சமகாலத்தில் பெரும்

Page 114
4.
மதிப்பும், எதிர்ப்பும் இருப்பது வழக்கம், தான் இயங்கும் வேகத்திலே மற்றவர் களையும் இயங்கவைக்க இலட்சியவிரர் நாவலர் முயன்ருர். இதனுல் அவருக்கு ஒரு புறத்தே பெருஞ் செல்வாக்கு ஏற்பட்டது. மறுபுறத்தே பகை வளர்ந்தது. கிறித்த பாதிரிமாருக்குக் கண்டனம் உரிய இடத் திலே கொடுக்கவேண்டும். அதே நேரத் தில் தன் சமுதாயத்தில் எழுந்த கண்ட னங்களுக்கும் பதிலடி கொடுக்கவேண்டும். இதுவும் ஒருவகையில் ** இரு முனைப் போராட்டம்." இந்தஇருமுனைப் போராட் டத்திற்குப் பல எடுத்துக்காட்டுகள் தர லாம். இதனுள் தலைசிறந்தது நல்லூர் முருகனலயத்தில் நடக்க இருந்த ஆட்டுக் கடாப் பலிநிறுத்தம், கோயிலின் சொத்துக் கோயிலுக்கே உரியது என்பது நாவலர் கருத்து. இக் கருத்துக்கு மாருக எதுநடந் தாலும் நாவலர் பொறுக்கமாட்டார். இதனுலேதான் கோயில் அறங்காவலர் பலரும் நாவலரின் கண்டனத்திற்கு இலக் காகினர். நாவலரைக் கண்டு அவர் அஞ்சினர்.
'நாவலரின் ஆத்மீக வாரிசு யார் ? யாரை அப்படியான நிலையில் நாவலர்
நாவலரின் . . . . . வாசன புத்
'' ... o.o. வித்தியாசாலைகளிலே மாணு இரண்டாவது, மூன்ருவது முதலிய வேண்டும் என்றும், அப் புத்தகங்கள் மு படி சொற்பொருள்களையும், நீதிகளையு களின் இயல்புகளையும் இனிது விளக்கு என்றும், ஏழாம், எட்டாம் புத்தகங்க என்றும் விதித்து, அவ்வகுப்பாருக்குரிய வசன எழுத்தையும் விதித்து அவ்வாறு விஷயத்தையும் இயன்றளவு சுத்தமாக விளங்குகிருர்கள்.
ஆயினும் அவ் வித்தியாசாலைகளு வாசன புத்தகங்களாறையும் செய்தி பெருந் தேர்ச்சியடைதல் நிச்சயம். அதிசுத்தமானவைகள்; இன்றியமைய பவைகள் வாசிக்குந்தோறும் கேட்குந்
- சங், சிவப்பிரகாச ய

5• சண்முகசுந்தரம்
வைக்க முயன்ருர்?' என்ற கேள்விகள் எழுவதும் இயற்கையே. நாவலரின் தலை சிறந்த மாணுக்கர் ஒருவர் அகால மரண மடைந்தார் எனத் தெரிகின்றது. இதனுல் நாவலர் தளர்ச்சியடைந்தார் எனவும் கூறுவர். ஆனல் நாவலருக்கு வாரிசு தேவையில்லை. நாவலரின் வாரிசு நாம் என்று கொடுக்குக் கட்டிக்கொண்டு களத் திலே புகுவதற்குப் பலர் துடித்து நின்றனர். நாவலர் கையளித்துச் சென்ற விலை மதிக்க முடியாத சொத்தைப் பேணிக் காப்பதற் குப் பலர் முன்வந்தனர். சங்கம் அமைத் தனர் : அச்சியந்திரசாலை நிறுவினர். இவை நாவலரின் இயக்கத்தை மேலும் வேகமடையச் செய்தன. ஏனெனில் நாவலர் சமுதாயத்தை விட்டுத் தூர ஓட வில்லை. சமுதாயத்துடன் ஒட்டி வாழ்ந்து கொண்டு சமுதாயத்தை விழிப்புணர்ச்சி பெறச் செய்து வழிகாட்ட முயன்றவர் நாவலர். அதில் பெரும் வெற்றியும் கண் டவர். நாவலர் குறிப்பாக ஈழத்தின் மத வரலாற்றிலும், சிறப்பாகத் தமிழ் வரலாற் றிலும் தனக்கென ஓர் இடத்தைப் பெற் றுள்ளார்.
தகங்கள்
க்கர்களுக்கு முறை முறையாக முதலாவது,
வாசன புத்தகங்கள் படிப்பிக்கப்படுதல் றைமுறையே அறிவு வளர்த்தற்குத் தகுந்த ஞ் சரித்திரங்களையும், உலகத்துப் பொருள் ம் வசனக் கிரந்தங்களாயிருத்தல் வேண்டும் ளே செய்யுட் கிரந்தங்களாதல் வேண்டும்
கணக்கு மறுபாடங்களையும் விதித்தலோடு கிரமமாகப் படித்த விவேகிகள் யாதொரு எழுதப்பேச வல்ல பாலபண்டிதர்களாய்
*கு உபயோகமாக ஆறுமுகநாவலரவர்களே ருந்தார்களாயின் எல்லாப் பிள்ளைகளும் நாவலரவர்கள் செய்த வசன கிரந்தங்கள் ாத சிறந்த பொருள்களை நன்கு விளக்கு தோறும் பெருமகிழ்ச்சியைத் தருபவைகள்.”
ண்டிதர், பாலாமிர்தம் (கொக்குவில்: 1903)

Page 115
நாவலர் பணி சைவ சித்த
வை. கனகரத்தினம்
** இந்தச் சரீரம் நமக்குக் கிடைத் தது. நாம் கடவுளை வணங்கி முத்தி யின்பம் பெறும் பொருட்டேயாம். இன்ன காலத்திலே இந்தச் சரீரம் நீங்கும் என்பது நமக்கு விளங்காமை யால் எக்காலத்திலும் கடவுளை வழி படல் வேண்டும். ** !
இவ்வகை நோக்கின் அடிப்படை யிலேயே நாவலரவர்கள் தமது பணி யினையும் சித்தாந்தக் கோட்பாடுகளையும் வளர்த்துச் சென்ருர் எனலாம்.
நாவலரவர்கள் சைவ மரபி லே தோன்றி, சித்தாந்த சைவர்களாகிய சுப்பிரமணியபிள்ளை, இருபாலை சேனதிராச முதலியார், வேதாந்த சித்தாந்த சமரச சிந்தை, காரேறு பசுபாச பதிலசுடிணப்ரபல சைவாகமப் பொக்கிஷம் 2 எனப் போற்றப்படுகின்ற சரவணமுத்துப்புலவர் ஆகியோரிடம் சைவசித்தாந்த வேதாந்த நூல்களையும், இலக்கண இலக்கிய நூல்களை யும், ஆகம நூல்களையும் கற்றுத் தேறினர். இத்தகைய சமய உணர்வோடு சமகால கிறிஸ்துவ நடவடிக்கைகளும், சுதேசிய சைவர்களின் ஒழுக்கக் கேடுகளும், கோயி லாளர்களின் ஒழுங்கீனங்களும் பராமுக மும், வைதீகர்களின் ஆணவமும், ஆதீனங் களோடு கொண்ட தொடர்பும், நாளாந் தம் இரண்டு மணித்தியாலங்கள் சைவசித் தாந்தம் படித்து வந்தமையும், இவற்றின் விளைவாக சைவ இலக்கிய, சித்தாந்த நூல்களைப் பதிப்பிக்க முயன்றமையும், சித்
12

ரிகளின் ாந்தக் கோட்பாருகள்
தாந்தக் கருத்துக்கள் உள்ளடக்கிய நூல் கள் பலவற்றை எழுத முற்பட்டமையும், அவரிடத்திலே அவரை அறியாமலே சைவத்தை வளர்த்துச் செல்வதற்குச் சைவாகமங்களையும் - அவற்றை விளக்கி நிற்கும் சித்தாந்தக் கோட்பாடுகளையும் பேண வேண்டுமென்ற அவாவாகப் பிறந் தது எனலாம். நாவலரவர்களின் சித்தாந் தக் கோட்பாட்டினை மூன்று வகையாக வகுத்து நோக்கலாம்.
(1) ஆகமநெறி
(i) சைவசமய நெறி
(ii) சித்தாந்தக் கோட்பாடு
சைவர்கள் வேதம், ஆகமம், திரு முறைகள், மெய்கண்ட சாத்திரம் ஆகிய வற்றை முதல் நூல்களாகக் கொள்வர், இவற்றினுள் வேதத்தினைப் பொதுநூலாக வும் ஆகமத்தினை அதன் சிறப்பு நோக்கி, சிறப்பு நூலாகவும் கொள்வர். திரு முறைகள் மெய்கண்ட சாத்திரங்கள் இவற்றினின்றும் தனித்தும் சேர்ந்தும் சித் தாந்தக் கோட்பாடுகளை விளக்குவன. அவை தனித்துவம் மிக்கவை. நாவல ரவர்கள் ஆகம ஈடுபாட்டில் கொண்டிருந்த கருத்து வளர்ச்சி அவர் கருத்திற் கொண்ட சித்தாந்தக் கோட்பாட்டின் ஒரு பகுதி யாகும். நாவலரவர்கள் ஆகம நெறி பற்றி ஆழ்ந்த ஞானமுடையவராக விளங் கினர். கந்தசுவாமி கோவில் முதலாம் பத்திரிகை (1875ளு) ஆடிமீ"), கந்தசுவாமி

Page 116
O6
கோவில் இரண்டாம் பத்திரிகை (1875ளுல் புரட்டாதிமீ), யாழ்ப்பாணச் சமயநிலை (1872 Du ஐப்பசி மீ"), மித்தியாவாத நிரசனம்(1876ளுல் தைமீ"), சுப்பிரபோதம் (1883), சைவதுரஷண பரிகாரம் (1854ளுல் வைகாசிமீ), பாலபாடங்கள் (1852), பெரியபுராண வசனம் முதலிய நூல்களி லும், சிவாலய தரிசனவிதி (1861), சைவ விஞவிடை முதல் புத்தகம் (1873?),இரண் டாம் புத்தகம், நித்திய கருமவிதி போன்ற கைநூல்களும் நாவலர் தம் ஆகம ஈடு பாட்டினை விளக்கி நிற்பனவாகும்.
சைவாகமங்கள் ஆப்த வாக்கியங்க ளாகும். அவை லெளகிகம், வைதிகம், அத்தியான்மகம், அதிமார்க்கம், மந்திரம் என ஐந்து வகைப்படும். இவ்வாகமங்கள் மந்திரம், தந்திரம், சித்தாந்தம் என்றும் பெயர் பெறும். ஆகமம் என்ற சொல்லுக் குப் பலர் பலவாறு பொருள் கொண்ட பொழுதும் நாவலரவர்கள் ஆ என்பது பாசம் எனவும் க என்பது பசு எனவும் ம என்பது பதி எனவும் பொருள்படுதலால் ஆகமம் என்பதற்குத் திரிபதார்த்த லக்ஷ ணத்தை உணர்த்தும் நூல் என்பதே சிறந்த பொருளென்க 3 என்பார். இவை ஞான பாதம், யோகபாதம், கிரியாபாதம், சரியாபாதம் என்று தனித்தனி நான்கு பாதங்களை உடையனவாக இருக்கும். இவற்றுள் ஞானபாதம் பதிபசுபாசம் என் னும், திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தை யும் யோகபாதம் பிராணுயாமம் முதலிய அங்கங்களோடும் கூடிய சிவயோகத்தை யும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தா ரம் சந்தியாவந்தனம் பூசை செபம் ஓமம் என்பனவற்றையும், சமய விசேஷ நிரு வாண ஆசாரியாபிஷேகங்களையும், சரியா பாதம், சமயாசாரங்களையும் உபதேசிக் கும். சிவதீகூைடி பெற்றேர் உண்மைப் பொருள்களைக் கற்றுணர்ந்து அதன்வழி ஒழுகி சைவர்களுக்குப் போதிக்கவேண்டிய கடப்பாடுடையவர்கள் என்பது சைவநுால் மரபாகும்.
நாவலரவர்கள் இரத்தினத் திரயத் திலே “சித்தாந்தமே சித்தாந்தம், அவை

வை. கனகரத்தினம்
களுக்கு வேருனவை பூருவபக்ஷங்கள்?* என்று ஆகமம் பற்றிக் குறிப்பிடுகின்ற கருத்திலும், அருணுசல மான்மியத்திலே **கோணுசலத்தில் உயர்ந்த கேஷத்திரம் இல்லை, பஞ்சாகடிரத்தில் உயர்ந்த மந்திரம் இல்லை, மகேச்சுர தருமத்தில் உயர்ந்த தருமம் இல்லை, சிவா கமத்தில் உயர்ந்த சாத்திரம் இல்லை' என்று ஆகமம் பற்றிச் சொல்லும் கருத்திலும் மிகுந்த உடன் பாடு உடையவராக விளங்கினர். நாவல ரவர்கள் வேதமே யாவற்றிற்கும் பிரமாண மாகக் கொள்ளப்படவேண்டும் என்று கொள்ளுவோரின் கருத்துக்களை அடி யோடு மறுத்துரைப்பார். சைவாகமத் தின் அடிப்படையில் எழுந்த ஆத்ம சிந் தனையே அவரின் அடிநாதமாக நின்று அவ ரது சைவசித்தாந்த நோக்கத்தினை வளர்த் துச் சென்றது எனலாம்.
**ஆலயமாவது எங்கும் வியாபகராய் மறைந்திருக்குங் கடவுள் தம்மை ஆன் மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டுச் சாந்நித்தியராய் எழுந்தருளியிருக்கும் இட மாகும்." இங்கு ஈசுரபத்தியை வளர்த்தற்கு ஏதுவாகிய வாக்குக்களும் செயல்களுமே பன்றி, மற்றை வாக்குக்களும் செயல் களும் தேவாலயத்திலே சிறிதும் நிகழா Söhr 600fth சாவதானமாகப் பாதுகாத்தல் வேண்டும்.8 இவ்வொழு கலா று களை நெறிப்படுத்திப் பேணுவது ஆலயங்களைச் சார்ந்த ஆசாரிகளும், கோயிலாளரும், சைவக்குருமார்களும், அங்கு தொண்டு புரியும் பிறரும் ஆவார்கள். இவர்கள் நெறியிழந்து நடக்கும்போது ஆசார ஒழுங் குகள் சீர்குலைவதுடன், மக்கள் தாம் பெற இருந்த ஆத்மீக நாட்டத்தை இழப் பதுடன் பிறமதத்தவர்களினதும், சுதேசி களினதும் கண்டனத்திற்கும், மதமாற்றங் களுக்கும் வாய்ப்பாக அமைந்துவிடுகின் றது. நாவலரவர்களுடைய காலகட்டத் தில் யாழ்ப்பாணக்குடாநாட்டில் எங்கும் இத்தகையதோர் நிலைமை காணப்பட்டது. குறிப்பாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலா ளர் ஆகமநெறிபிறழ்ந்து சென்று கோயிற் கிரிகைகளை நடத்திய பொழுது பிரசங்கத்

Page 117
நாவலர் பணிகளின் சைவ சித்தாந்தக் கோ
தின் மூலமும் துண்டுப்பிரசுரங்கள் மூல மும் அவ்வப்போது கண்டித்தார்.
எடுத்துக்காட்டுக்களாக சில ஒழுக லாறுகளை நோக்கலாம்:பிராமணர் பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப் பிடுவர்:
ஆசாரியலக்கணங்களில்லாது பாவி களாக இருக்கும் பிராமணர்களைக் கொண்டு கோயில்களில் பிரதிட்டை பூசை திருவிழா முதலியவை செய்விக் கில், கடவுள் சாந்நித்தியமாய் அருள் செய்யாரென்றும், அதனல் உலகத்திற்குக் கேடு உளதாமென்றும் சைவாகமங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாருக இக்காலத்தார் தங் கள் தங்கள் கருத்துக்கிசைய நடந்த பிராமணர்கள் எததுணைப் பாதகர்க ளாயினும், அவர்களையே மேன்மக்க ளென்று பிரதிட்டை பூசை திருவிழா முதலியன செய்ய நியோகிக்கின்ருர் கள். (சுப்பிரபோதம் 9
சைவகுருமார் பற்றிக் குறிப்பிடுகை யில் ;
சிவாகமத்தில் ஒரு சுலோகமாயி னுந் தேவார திருவாசகங்களில் ஒரு பாட்டாயினுந் திருவள்ளுவரில் ஒரு குறளாயினும் அறியாத மனிதப் பதர் களுஞ் சைவசமய குருமாராம்! சமண சமயத்துச் செட்டிச்சி விக்கிரகத்தின் இருபக்கத்தும் விநாயகக் கடவுள் விக்கிரகமுஞ் சுப்பிரமணியக் கடவுள் விக்கிரகமும் அஞ்சாது வைத்துப் பூசை உற்சவ முதலியன செய்கின்ற அதி பாதகர்களுஞ் சைவசமய குருமா ராம்!.சமண சமயக் கடவுளாகிய அரு கன்மேலே பாடப்பட்ட திருநூற்றந் தாதியிற் செய்யுளைப் பார்த்திருந்தும் அதன் பொருளை அறியாமலுந் திருநூ றென்பதற்குந் திருநீறென்பதற்கும் பேதம் தெரியாமலும் "திருநூற்றந் தாதியிலே விபூதியின் மகிமை சொல் லப்பட்டிருக்கின்றது. அதில் ஒரு புத் தகம் வாங்கித் தரமாட்டீரா என்கிற

பாடுகள் 107
அசேதனதிலகர்களுஞ் F6F). குருமாராம்! " "மாணிக்க வாசகர் பாடின திருவாசகம் ஒன்று வாங்கி னேன்; அவர் பாடின தேவாரம் ஒன்று வாங்கித் தரமாட்டீரா?" என்கின்ற மூடசனேந்திரர்களுஞ் சைவசமய குரு மாராம்! “ ‘பரசிவனுடைய ஐந்து முகங்களுள்ளே ஈசான முகம் ஊர்த் துவ முகமென்று சொல்லியிருக்கின் றதே! ஊர்த்துவ முகமாவது அண் ணுந்து கிடக்கின்ற முகமாமே! அப்படி யானுல் அபிஷேகம் பண்ணும்பொழுது தீர்த்தம் மூக்கினுள்ளே போமே! போனற் சுவாமிக்குச் சலதோஷங் கொள்ளுமே யாதுபண்ணலாம்" என் கின்ற அஞ்ஞான சிரோமணிகளுஞ் சைவசமய குருமாராம் எனக் குறிப் பிடுவார். (யாழ்ப்பாணச் சமயநிலை) 19
சோழர் காலத்தில் ஆகமங்களில் குறிக்கப்படும் உருத்திரகணிகையர் என்ற தேவதாசிகள் ஆலயங்களில் பத்தியை வளர்க்கும் பொருட்டும் கலைகளைப்பேணும் பொருட்டும் அமர்த்தப்பட்டனர். நாவ ரவர்கள் ஈழநாட்டில் அவர்கள் நி பற்றிக் குறிப்பிடுகையில் :
உருத்திர கணிகையர் வியபிசாரம் மது மாமிச பகyணம் முதலிய பாத கங்களின்றி, சிவவேடம் பூண்டு, சிவ பத்தியிற்சிறந்தவர்களென்று சைவாக மங்கள் சொல்லுகின்றன. இதற்கு மாருக இக்காலத்தார் கோயில்க ளெங்கும் மது மாமிச பகடிணமுடைய வர்களாய் வரைவின்றி யாவரையும் புணரும் ஸ்திரீகளை உருத்திரகணிகைய ரென்று நியோகிக்கின்றர்கள். சுப்பிர போதம்)" திருவுருவ வழிபாட்டை மையமாகக் கொண்டே பெரிதும் கிரிகைநெறிகள் தோன்றின.12 திருவுருவ வழிபாடு இன் றேல் ஆகம வழிபாடு இன்று" என்று குறிப் பிட்டுக் கூறுமளவிற்கு கோயில்களில் இன்றி யமையாததாக விளங்குவது திருவுருவ வழிபாடு ஆகும். சைவசமய நெறியின் அருமை வெளிப்படையாகத் திருவுருவ

Page 118
108
வழிபாட்டிலேயே அமைந்துள்ளது. நாவல ரவர்களும் திருக்கோயில் அமைப்பு முறை எவ்வளவு தூரம் ஆகமநெறி சார்ந்தன வாக அமைந்திருக்கின்றன என்பதில் மிகுந்த கரிசனை உடையவராக இருந்தார் என்பதற்கு நல்லூர்க்கந்தசுவாமி கோயில் பற்றிய இரண்டு பத்திரிகையும் தக்க சான்றுபகரும். சிலவற்றைச் சிறிதுநோக் கின் மூலமூர்த்தி என்றும்கிவலிங்கமாகவோ அன்றி அக்கோவிலின் பிரதான மூர்த்தி யாகவோ திருவுருவவடிவில் அமைந்திருக்க வேண்டுமென்பது சைவாகம சிற்ப சாத் திர விதிகளாகும். இத்தகைய மரபொ ழுங்கிற்கு மாறுபட்ட தன்மையுடையன வாகக் கந்தசுவாமிகோயில் ஆலய திருவுரு அமைப்புமுறை அமைந்திருந்தமையால் அழுத்தமாகக் கண்டித்தார்.
மூலமூர்த்தி இல்லாத கோயில் கோயிலாகாது. மூலமூர்த்தியாவது சிலைவடிவினதாய் அட்ட பந்தனஞ் செய்யப்பெற்று அசைவில்லாததாய் உள்ள மூர்த்தி; இது அசலமூர்த்தி எனப்படும். அசைவுடைய மூர்த்தி சலமூர்த்தி எனப்படும். இந் நல்லூர்க் கந்தசுவாமி கோயிற் கர்ப்பக் கிருகத் தினுள்ளே இருக்கின்ற மூர்த்தி வெள்ளியினலே செய்யப்பட்டதாய் அட்டபந்தனஞ் செய்யப்பெருததாய் அபிஷேக முதலியவைகளின் பொருட் டுத் தன்னிடத்தினின்றும் பிறிதிடத் துக்குப் பெயர்வதாய் உள்ள சல மூர்த்தி. இது மூலமூர்த்தி யாகுமா?
இக்கோயில் பெயர் யாது? கந்த சுவாமி கோயில். இங்கிருக்கின்ற மூர்த்தி கந்தசுவாமியா? இல்லை. வேலாயுதம். கந்தசுவாமிக்கு வடிவம் வேலாயுதமா? அது அவர் கைப் படைக் கலம்; அவரேவல் செய்யும் அடிமை.”*
நல்லூர்க் கந்தசுவாமி கோயில் 4
சைவாகம முறைக்கிணங்க அமையும் சைவ வழிபாட்டில் விநாயகருக்குரிய முக்கி யத்துவம் சண்டேசுவரருக்கும் உண்டு." சண்டேசுவரரின் திருவுருவம் கருவறையை

வை. கனகரத்தினம்
அடுத்து மிக நெருங்கி இடம்பெற்றுள்ள சிறு தனிக்கோயிலாக, அதன் வாயில் கரு வறையை நோக்கிய வண்ணம் அமைந் திருத்தல் வேண்டும் " என்பர். இவ் வமைப்புமுறை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இடம் பெற்றிருக்காததால்
நாவலரவர்கள்:
எந்தக் கோயிலுக்குஞ் சண்டே சுரர்கோயில் வேண்டுமே. இங்கே சண்டேசுரர் கோயில் இருக்கின்றதா? சண்டேசுர விக்கிரகந் தாபிக்கப்பட் டதா? முடிவிலே பூசையில்லாத பூசையும் முடிவிலே சண்டேசுர தரிசன மில்லாத தரிசனமும் பயன்படாவே."
என்ற கருத்தினை வெளிப்படுத்தினர்.
மேலும், இவ்வமைப்பினை யொட்டி வைரவர் விக்கினேசுரர் அமைப்பு முறை பற்றியும், திருவிழா, பூசை, உருத்திராபி ஷேகம், பலிஇடுதல், ஒதுவார்கள் போன்ற பல்வேறு துறைகளிலும் ஆகமங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை நன்கறிந்து அவை சொல்வனவற்றைக் கடைப்பிடிக் காதவிடத்து அக்குறைபாட்டினைச் சுட்டிக் காட்டுவதற்கு நாவலரவர்கள் என்றும் தயங்கியதில்லை. நாவலரவர்கள் அடிக்கடி கோயிலோடு தொடர்புடைய விடயங்கள் பற்றிப் பேசும்பொழுதெல்லாம் எந்தக் கோவில் ஆகமவிதிப்படி நடக்கிறதோ? சிவாகம சம்ம்தம்பேரலும், சிவாகம சம் மதமல்ல என்ற சொற்ருெடர்களை அடிக் கடி பிரயோகித்துக்கொள்வார். இவை நாவலரவர்களின் ஆகமம் என்ற அடிப் படையில் கொண்டிருந்த ஆழ்ந்த் புலமை யினைக் காட்டுகின்றன எனலாம்.
ஆகம நெறியினைப் பேணி சைவ சம யத்தை வளர்க்க முயன்ற நாவலரவர் கள் அதன் போக்கீடாக அமைகின்ற சைவசமயநெறியினைப் பெரிதும் வளர்க்க முற்பட்டார். சைவர்கள்எனப்படுவோர்:-
**சுத்த சாட்குண்ணிய பரிபூரண ராகிய பரமபதி சிவபெருமானே என்று துணிந்தவர்களாய், கொலை,

Page 119
நாவ லர் பணிகளின் சைவ சித்தாந்தக் கோ
களவு, கள்ளுணல், புலாலுணல், பிறன்மனை விழைதல், வரைவின் மகளிர் விழைதல், பொய்ச்சான்று ரைத்தல் முதலிய பாவங்கள் இல்லாத வர்களாய, இரக்கம், வாய்மை, கொடை முதலிய புண்ணியங்களை உடையர்களாய், குருலக்கணங் குறை வற அமைந்த சைவசாரியரை அடைந்து சிவதீஷை பெற்றுக் கொண் டவர்களாய், விபூதி ருத்திராக்ஷதார ணம், சந்தியாவந்தனம், பூgபஞ்சாகrர ஜபம், சிவத்தியானம், சிவாலய சேவை. சிவலிங்கபூசை, குருவாக்கிய பரிபாலனம், மாகேசுர பூசை முதலிய வற்றைச் சிவாகமவிதிப்படி மெய்யன் போடு செய்பவர்களாய் உள்ளவர் களே சைவர்கள் என்று சொல்லட் படும். பெரியபுராண வசனம்
மேற்காட்டிய கூற்றில் சைவர்களுக்குச் சொல்லப்பட்ட ஒழுகலாறுகளை நெறிட் படுத்தி, இறைபத்திக்ருத் திசை திருப்பு வதே சைவசமய நெறி எனலாம், இவை பெரிதும் சித்தாத்தக் கோட்பாட்டினை அடைவதற்குப் பெரு வழிகாட்டியாக அமைந்துவிடுகின்றன.
சிவபெருமானைச் சிவாகம விதிப்படி வழிபடத் தகுதியுடையவர்களாக ஆக்கு வது சிவதீகை; ஆகும்.19 சிவதீகூைடி பெற்ற வனே சைவனவான்.20 சைவ நூல்களில் கூறப்பட்டதும் பாசமூன்றையுந் தவிர்ப்பு தும் மேலானதுமாகிய தீகூைடியைத் தவிர வேறு யாதொரு ஆச்சிரமும் இவ்வுலகத் திலே மனிதருக்கு மேன்மை அன்று: ஆத லால் தீகூைடியினுற்ருன் மோகூடிம், ஆக் சிரமங்களினலும் மற்றக் கருமங்களிஞ லும் மோகூடிமில்லை. அத்துவசுத்தியின்றி முத்தியை விரும்பும் மனிதர் கோலின்றி நடக்கத் தொடங்கிய குருடர் போல்வர் தோணி இன்றிக் கடலைக் கடக்க விருப் பினவர் போல்வர்;20 என்ற வாயு சங்கி:ை யின் கருத்தில் நாவலரவர்கள் மிகுந்த நம்பிக்கை உடையவராய் விளங்கி, இதனை வலியுறுத்தினர். “தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தி*22 என்ற சிவஞான

ாட்பாடுகள் 109
போதக் கருத்தும் இங்கு ஒப்புநோக் கத்தக்கதாகும்.
சைவசமய நெறியை வளர்த்துச் செல் லும் சமயாசாரிகள் இருவர். ஒன்று பிரா மணர். மற்றவர் சைவகுருமார். பிரா மணர்கள் ஏனையோரைவிட நால்வகைத் தீகூைடிகளையும் பெற்று சகல தகுதிப்பாடு களையும் உடைய சமயாசாரிகளாகக் கணிக் கப் படுகின்றவர்கள். இத் தகுதிப்பாடுகள் சித்தாந்த நெறிக்கேற்ப ஒழுகுவோர்க்கு ஏற்புடையது. சிவதீகூைடியும், ஆசாரிய தீகூைடியும் உடையவராக வேதாகம, தேவார முதலிய திருப்பாக்கள் ஒதி உணர்ந்தவர்களாக இருத்தல் அவசியம் என்பது சைவநுாற் றுணிபு. ஆனல், * சிதம்பராலய பூசகருள்ளே சிலர் சிவா கமங்களை நிந்தித்து அவைகளிற் கூறப்படும் தீகூைடிகளில் யாதொரு பயனுமில்லை யென் றும், அக் கருத்துப்பற்றியே நாங்கள் அவைகளைப் பிரமாணமாகக் கொள்ளாது தீகூைடிகளைப் பெருதும் இருக்கின்ருேமென் றும், சிதம்பராலயக் கிரிகைகள் முழுவதும் வைதீகக் கிரிகைகளே யென்றுஞ் சொல் லித் திரிந்தனர்.23 இதே போன்ற நிலை யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த பிராமண ரிடத்தில் காணப்பட்டது. இதனுலே சிவ தீகூைடியில்லாத வைதிகப் பிராமணர் கையாலே விபூதி வாங்காத நியமம் உடையவராய், சிவதீகூைடி உடையோர் அஃதில்லாதோரை வணங்குவதிலும், அவர்களைச் சிரார்த்தம் முதலியவற்றிலே வருவித்தலும், சிவாகமப் 15lar asтигли கட்டிப் பிரதிட்டை செய்யப்பட்ட கோயில் களிலே அவர்களைக் கொண்டு பூசை திரு விழாக்கள் செய்வித்தலும் சிவாகமவிரோத மெனத் துணிந்து2* தாமும் இவர்களைத்
தவிர்த்ததோடு, தாம் அமைத்த யாழ்ப்
பான சிதம்பர சைவப்பிரகாச வித்தியா சாலைகளிலே வேதம் பொதுஆகமம் சிறப்பு நூலென்றும், வைதீக மார்க்கத்தி லொழுகுவோர் புண்ணியலோகங்களை அடைவார்களென்றும், சைவமார்க்கத்தி
லொழுகுவோர் பதமுத்திகளையும், பர
முத்தியினையும் அடைவார்களென்றும்,
இவற்றை அடைவதற்குத் தலையாயதான

Page 120
O
சிவதீகூைடியினைப் பெற்றேயாக வேண்டும் என்றும் பிரசங்கித்தார். இத்தகைய பிர சங்கங்கள் தமிழகத்திலும், ஈழநாட்டிலும் வாழ்ந்த சைவ மக்களைப் பெரிதும் சிந்திக் கத் தூண்டின.
சைவர்களால் நியமமாக ஒதப்படுதற் குரிய மூலமந்திரம்பூரீபஞ்சாக்ஷரம்ஆகும்.?* மதுபானம், மாமிசபோசனம், ஆசாரம், சிவதீகூைடி ஆகிய ஒழுக்கம் உடைய யோக் கியர்களே பூரீ பஞ்சாக்ஷரம் ஒத யோக்கி யர்களாவார்கள்.28 சிவதீகூைடி பெற்று குருவை அடைந்து பூரீ பஞ்சாகூரத்தை ஒதல்வேண்டும்.27 பூரீ பஞ்சாக்ஷரத்தின் பொருளை அறிந்து சிவபெருமான் ஆண் டவன் தான் அடிமையென்னும் முறை மையை மனத்திலே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித் துக்கொண்டு விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தாற்போல ஆன்மாவினிடத்தே சிவபெருமான் பிரகாசித்து மும்மலங்க ளும் நீங்கும்படி ஞானனந்தத்தைப் பிர
சாதித்தருளுவர்28 என்பது நாவலரவர்
களின் பேருபதேசமாகும். இக் கருத்தினை
". . . . . . . . . . . . . . . . . . யூராத்துணைத்
தேர்ந்தெனப் பாச மொருவத் தண்ணிழலாம்
பதிவிதி யென்னுமஞ் செழுத்தே* ? என்ற சிவஞானபோதச் சூத்திரத்துடனும்
*சிவம்முதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம் இதுநீ ஒதும்படி?"
என்ற திருவருட்பயன் சூத்திரத்துடனும் ஒப்பிட்டு மனங்கொள்ளத்தக்கதாகும்.
சைவர்களால் அவசியமாகத் தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் விபூதியும் உருத்திரா கூடிமுமேயாகும். " இவை சைவ சமயிகளின் அகத்தினையும் புறத்தினையும் தூ ய்  ைம பெற ச் செய்வனவாகும். சாணத்தை அக்கினியிலே தகித்தலால் உண்டாக்கப்படுவது திருநீறு. விபூதி பசிதம், பசுமம், க்ஷாரம், இரகூைடி என் பன ஒரு பொருட் சொற்களாகும்.8 விபூதியினை உத்துளனமாகவும் திரிபுண்டர

வை. கனகரத்தினம்
மாகவும் தரித்தல்வேண்டும்.88 விபூதி தரியா நெற்றி சுடுகாடு போல்வது என் பார் நாவலரவர்கள். ** நீறில்லா நெற்றி பாழ் என்பார் ஒளவைப் பிராட்டி,* விபூதி ஞாணுக்கினியிலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளக்குஞ்சிவத்துவப்பேற்றிற்கு அறிகுறி என்பது நாவலர் வாக்கு.* இது அவர் சைவ உலகிற்குப் புகட்டும் நம்பிக்கை. விபூதியின் அருளினைப் பெற்று சிவப்பேறு அடைந்தவர் ஏனதிநாத நாயனர்? விபூதியின் மகிமையினை நாயன் மார்களும் மெய்யடியார்களும் மெய்கண்ட சாத்திரங்களும் எடுத்தியம்புகின்றன. பெரியபுராணம்,
* மாசி லாத மணிதிகழ் மேனிமேல்
பூசு நீறுபோல் உள்ளும் புனிதர்கள்” * என்றும்,
“தொழுது எழுவார் வினவளம் நீறெழ
நீறணி அம்பலவன்??
என்று திருக்கோவையாரும்,
'இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில்
நின்ற மலமனைத்தும் நீங்குவதிங் கென்றல்?40 என திருக்களிற்றுப் பாடியாரும் விபூதியின் ஆற்றலின் திறத்தினைக் குறிப்பிடும்.
உருத்திராக்ஷம், தேவர்கள் திரிபுரத் தசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன் பத்தை விண்ணப்பஞ் செய்துகொண்ட பொழுது திருக்கிைலாசபதியினுடைய மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரிற் முேன்றிய மணியாகும்.41 இதனை அணிதற்கு மதுபானம், மாமிச போனம் போன்றன அற்றவராய ஆசாரமுடைய வர்களே யோக்கிதை உடையவர்கள்.? இவற்றினை சந்தியாவந்தனம், சிவமந்திர ஜெபம், சிவபூசை, சிவத்தியானம், சிவா லய தரிசனம், சிவபுராணம் படித்தல், சிவபுராணம் கேட்டல், சிரார்த்தம் முத லியவை செய்யுங் காலங்களில் ஆவசிய மாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும். தரித்துக்கொள்ளாது இவை செய்தவர்க ளுக்குப் பலம் அற்பம் ஆகும்.* இவ்வுருத் திராகூடிம் சிவபெருமானுடைய திருக்கண்

Page 121
நாவலர் பணிகளின் சைவ சித்தாந்தக் கேரி
களிற் முேன்றுந் திருவருட்பேற்றிற்கு அறிகுறியாகும்.*
'இன்னலங் கடலுட் பட்டோர் யாரையு மெடுக்கு நீரா லுன்னரும் பரம மூர்த்தி
யுத்திர என்னும்பேர் பெற்றன்*
எனக் கந்தபுராணச் செய்யுளும்,
*உன்னிச் செபிக்க வுளத்து ளமனடி
யன்னியமுந் தாழ்ந்த பலமாம்* என்று சைவசமயநெறி சூத்திரமும் இதன் சிறட் பினை நோக்கிக் குறிப்பிடும்.
இவற்றினை ஒழுங்குபடச் செய்யும் முதிர்ச்சியே சங்கம வழிபாடாகும். இவ் வழிபாட்டின் உயர்ந்தநிலையே சிவலிங்க வழிபாடாகும். சைவர்களின் உருவ வழி பாடு வீரவணக்கத்துடனே அன்றி இலிங்க வணக்கத்துடனே ஆரம்பித்திருக்கலாம். அல்லது வீரவணக்கத்தோடு ஒட்டி வளர்ச்சி பெற்ற இலிங்க வணக்கத்தோடு ஆரம்பித்திருக்கலா மென்பது பொது வான வரலாற்று ஆசிரியர்கள் கருத் தாகும்.
சிவன் புறத்தே சிவலிங்க முதலிய திரு மேனிகள் கொண்டு, தயிரில் நெய்போல் விளங்கி ஆன்மாக்களுக்கு அருள்செய் பவர்.47 சிவலிங்கம் பார்த்தலிங்கம், இட்ட லிங்கம் என இருவகைப்படும். இவற்றுள் பார்த்த இலிங்கம் ஐவகைப்படும். இட்ட லிங்கம் அறுவகைப்படும். சிவலிங்கங்களைச் சிவாகம விதிவிலக்குகளை ஆராய்ந்து, சிவ லிங்கங்களைப் பரீகூைடி செய்து, யாதொரு குற்றமும் இல்லாததாய் நல்லிலக்கணங் கள் அமையப்பெற்றதாய் உள்ள சிவலிங் கத்தையே பிரதிட்டை செய்துகொள்ளல் வேண்டும்.* இத்தகைய முறைக்கமைந்த சைவலிங்கத்தை எத்திறத்தோரும் வழி படலாம்.? நாவலரவர்கள் நைட்டிகப் பிரமச்சாரியாக வாழ்ந்தமையால் இட்ட லிங்கங்களில் ஒன்ருன படிகலிங்கத்திற்குச் சிவபூசை எழுந்தருளப் பண்ணுகின்றவர். இதனுலே, சிவலிங்கம் பற்றிய சித்தாந்தக்

ாட்பாடுகள் 111
கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்ததோடு, சிவபூசைக்கான ஒழுங்குமுறைகளைச் சிவ லிங்கவியலில் சித்தாந்த மரபுகளுக்கு இசையவும், அதன் தொடர்பாக அநு சரிக்க வேண்டிய நித்தியகருமவிதி, சிவா லய கைங்கரியவிதி, சிவாலய தரிசனவிதி, 5 குருசங்கம சேவை விதி, மகேசுர பூசை, விரதம் முதலானவற்றை ஒவ்வோர் "இயல் ஆக அமைந்து ஒழுங்குபட சைவப் பெருமக்களுக்குச் சுட்டிக்காட்டுகின்ற தன் மையைச் சைவவினவிடைகளில் குறிப்பாக சைவ விஞவிடை இரண்டாம் புத்தகத்தில் அவதானிக்கமுடிகிறது. இவற்றில் கூறப் பட்ட இயல்களுக்குத் தனித்தனியாகப் புத்தகங்களை நாவலரவர்கள் எழுதிய போதும் சைவவிஞவிடைகள் சைவசித் தாந்தக் கருவூலங்களை உள்ளடக்கிய சித் தாந்த பெட்டகமாகச் சைவஉலகிற்கு அமைந்துவிடுகின்றன எனலாம்.
நாவலரவர்களுக்கு மேற்காட்டிய கருத்துக்களைத் தாம் மனங்கொண்டு விளக்குவதற்கு ஆகமங்களின் சார்புநூல் களின் ஒன்றன, மறைஞானசம்பந்தர் இயற்றிய சிவதருமோத்திரமும் சித்தாந்த நெறியின் வழிநூலாகிய சைவசமய நெறி யுமே பெரிதும் வழிகாட்டியாக அமைந் துள்ளன என்பதையும் இங்கு மனங்கொள் ளுதல் அவசியமாகும்.
**தேவாரம், திருவாசகம், திருவிசைப் பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் என்னும் இவைகளைந்தும் அருட்பாக்க ளாகும். இவை பசுகரணம் நீங்கிச் சிவ கரணம் பெற்ற நாயன்மார்களால் அருளிச் செய்தவையாதலால் பசுவாக்கென்றே தெள்ளிதிற் துணியப்படும். இவர்கள் திரு வாக்கு அருட்பா வென்பதால் வேதத்தி லும் பார்க்க இவைகளிற்ருனே சிவபெரு மானுக்கும் உமாதேவியாருக்கும் பிரீதி அதிகம்",50 இதனலே சைவர்களால் சிவ பூசைகளிலும், அடியார் பூசைகளிலும், கோயில்களிலே பூசை திருவிழா முதலிய நித்திய நைமித்திய கருமங்களிலும் தவ ருது ஒதப்படல் வேண்டுமென்பது சாத்திர

Page 122
112
சம்பந்தமேயாகும். அநுபூதிமான்களின் அருள் வாக்கின் மீது பத்தியும், ஆய்வும் கொண்ட நாவலரவர்கள், சைவசித்தாந்த உண்மைகளைத் தாங்கியும், அதனை வலி யுறுத்தியும் நிற்கின்ற அருட்பாக்களை ஒதாதும், அடியார்க்குப் பூசை செய்யாதும் புறக்கணிப்போரையும், பராமுகமாக இருப்போரையும், மீறுவோரையும் இவற் றினைச் செய்தற்குத் தகுதியும், கடப்பாடும் உடையோர் தட்டிக்களிப்பதையும் பார்த் துப் பராமுகமாக இருந்துவிடவில்லை. அப் படிப் பட்டோரை முகம் கொடுத்துக் கண்டித்தார். இவ் வகையில் சிதம்பரம் தில்லை நடராசனுக்குப் பூசை செய்யும் தீக்ஷதர்களும் இராமலிங்க அடியார் கூட் டமும் அடங்கும்.
சித்தாந்த நெறிகளுக்கு அமைந்து சிவாநுபூதிமான்களாகவும் ஞானிகளாக வும் வாழ்ந்து சைவசமயிகளின் ஆன்மீக ஈடேற்றத்துக்கு வழிகாட்டியாக இருந்து சிவபரத்துவத்தை அடைந்த உண்மை நாயன்மார்களுக்கு விதிப்படி சிரத்தை யோடு பூசை செய்யவேண்டுமென்பது சைவநுால் மரபாகும்.
அறுபத்து நாயன்மார்களின் சிவ அநு பூதி மகிமையை இருடிகளுக்குச் சொல்லிய வர் உபமன்னியு மகா முனிவர். இவர் கிருஷ்ணனுக்குச் சிவதீகூைடி செய்தவர். சிவபூசை எழுந்தருளப் பண்ணியவர். தில்லையில் சேக்கிழார் பெரியபுராணத் தைப் பாட, சபாநாயகர் அடியெடுத்துக் கொடுத்தார். அதனைக் கேட்டவர்களுள் தில்லைவாழந்தணர் மூவாயிரரும் பிறரும் அடங்குவர். தில்லைவாழந்தணர்களில் ஒரு வராகிய உமாபதி சிவாச்சாரியார் தில்லைச் சபாநாயகர் அருளால் 'திருத்தொண்டர் புராணம்" பாடியவர். 'பெற்ருன் சாம்ப னுக்குப் பேதமறத் தீக்கை செய்து முத்தி கொடுத்த முறை" என்னும் திருமுகத் தைப் பெற்று திருவருளால் முத்தி கொடுத் தவர். பெற்ருன் சாம்பன் பிறப்பால் கீழ் சாதி. ஆளுல் ஞானத்தால் சிவஞானி, முதற்சாதி, அதேபோல் நாயன்மார்களுள்

வை. கனகரத்தினம்
பலரும் பல வகுப்பினர். ஆனல் அவர்கள் சிவஞானிகள், முதற் சாதியினர். சிவ ஞானிகள் சாதி பேதமற்று வழிபாடு இயற்றத் தகுதி உடையவர் என்பது மரபு பிறழ்ந்த சித்தாந்த மரபு. இவை இவ்வாறிருக்க, தில்லைவாழந்தணர்கள் நாயன்மார்களுக்குப் பூசை செய்யவும், பாராயணம் பண்ணவும் வழிபாடியற்றவும் மறுத்தமையால் ** கண்டன மின்றியாங் கலியின் வண்ணமே" என்ற நோக்கினை யுடைய நாவலரவர்கள் நிதானமாகவும் அழகாகவும் சைவசமய நெறியை யாவரும் உணரும் வகையில் கண்டித்தார்:
* ‘இக்காலத்து ஸ்மார்த்தப் பிரா மணருள்ளே பலர் அறுபத்துமூன்று நாயன்மாரை வழிபடக் கூசுகின்ருர் கள்; அவர்களுடைய உற்சவங்களிலே வேதபாராயணஞ் செய்யாது மறுக் கின்ருர்கள்; அவர்களுடைய அருமை பெருமைகளைச் சிறிதும் சிந்தியாது அவர்களை வேண்டியவாறு நித்திக்கின் றர்கள். ஐயையோ இது எவ்வளவு அதிபாதகம்.”*
ஒ சைவசமயிகளே, உங்கள்ெ தி ரே அறுபத்துமூன்று நாயன்மார்களை நிந்திக் கும் ஸ்மார்த்தர்களைக் காணுந்தோறும் இந்த ஐந்து விளுக்களைக் கேட்டு, அவர் களைத் தலைகுனிவித்து அவர்கள் வாயை அடக்குங்கள். அவ்வினுக்கள் இவை,
1. ஒ ஸ்மார்த்தர்களே, உங்கள் மத தாபகராகிய ஆசாரியர் சங்கராசாரி யரோ அன்ருே?
2. செளந்தரியலகரியும் சிவானந்தலகரி யும் சிவபுசங்கமும் உங்கள் சங்கரா சாரியர் செய்த கிரந்தங்களோ அன் Go?
3. அறுபத்து மூன்று நாயன்மார் க ளுள்ளே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனுரைச் செளந்தரியலகரியிலும், கண்ணப்பநாயனரைச் சிவானந்தலகரி யிலும், இயற்பகைநாயஞரையும்

Page 123
நாவலர் பணிகளின் சைவ சித்தாந்தக் கோட்
சிறுத்தொண்டநாயனுரையும் சண்டே சுர நாயனுரையும் சிவபுசங்கத்திலும் உள்ள சங்கராசாரியர் துதித்திருக்கின் ருரோ அன்ருே? 4. உங்கள் குருவாகிய சங்கராசாரியா ராலே துதிக்கப்பட்ட நாயன்மார் களை நீங்கள் நிந்தித்தலினுலே, அச்சங்கராச்சாரியரிடத்திலே அறி யாமையை யேற்றிக் குருநிந்த கர் ளானீர்களோ அன்ருே? 5. அறுபத்துமூன்று நாயன்மார்களை வணங்கும் பிராமணர்கள் பதிதர்க ளாவரெனச் சொல்லும் நீங்கள் அவர் களைத் துதிக்கும் சங்கராசாரியரைப் பதிதரெனச் சொல்லாது சொல்லி,
அவரை நீங்கள் வணங்குவதாற் பதிதரிற் பூசிதர்களாயினீர்களோ აgiaმrGშტუფ? 52
இந்நிதானத்தோடு அமைந்த ஆவேச மான கூற்று, புறச்சமயிகளான கிறிஸ் தவ சமயக் குருமார்களை நோக்கி, பாதி ரியே!* என்று அழைத்தமைக்கு ஒப்பிடக் கூடியதாக அமைந்தபோதும், கலாநிதி, பண்டிதமணி அவர்கள் குறிப்பிடும்;
**பறங்கியர் ஒல்லாந்தர் காலத் திலே சைவசமயத்துக்கு வந்த வருத் தம் சிரங்குவருத்தம் போன்றது. அது வெளித்தோல் வருத்தம். உள்ளூரச் சமயம் உயிரைப்பற்றி நின்றது. ஆங் கிலேயர் காலத்திலே சமயத்துக்கு வந்த வருத்தம் கச வருத்தம் போன்றது. உயிரைக் கொல்லுகின்ற வருத்தம் அது உட்பகையான வருத்தம். புறப்பகை யிலும் உட்பகை பொல்லாதது’** என்ற கூற்றுடன் ஒப்பிட்டு நோக்குதலே மிகுந்த பொருத்தமுடையது.
நாவலரவர்களின் சமகாலத்தைச்சேர்ந் தவர், இராமலிங்க அடிகளார். இராமை யப்பிள்ளை சின்னம்மா என்னுந் தம்பதி களுக்குத் தவப்புதல்வராய் சுபானுளுல புரட்டாதிமீ 21உ (5-10-1823) திரு அவதாரம் செய்தார்.* இவர் *திருவருட் பா" என்னும் நூலை எழுதினர். இந்நூல்
13

LTCssir 13
"திருவருட் பிரகாச வள்ளளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்கப்பிள்ளை அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய திருவருட்யா" என்னும் பெயர் தாங்கி தொழுவூர் வேலாயுத முதலியாரால் அக்ஷயடு மாசிமீ அஸ்திக்ஸ் அச்சகத்தில் (Asiatic Press) பதிப்பிக்கப்பட்டு வெளிப்படுத்தப் பட்டது. இராமலிங்கபிள்ளை பற்றியும் அவரது இந்நூல் பற்றியும் நாவலரவர் கள் பின்வருமாறு குறிப்பிடுவார்:
"தற்காலத்திலே கருங்குழி இராம லிங்கயிள்ளை யென்பர் தாம் சிவாநு பூதி பெற்றவரென்று உலகத்தார் நம்பித் தம்மை வழிபடும் பொருட்டுச் சிலபாடல்களைப் பாடி அவைகளுக்குத் திருவருட்பாவென்றும் , தமக்குத் திருவருட்பிரகாச வள்ளலாரென்றும் தாமே பெயரிட்டுக்கொண்டும் தம் முடைய மாணுக்கருள் ஒருவராலே தமக்குத் திருவருட்பா வரலாறென ஒரு புராணஞ் செய்வித்து இறுதியிற் சேர்த்துக்கொண்டும் அச்சிற் பதிப் யித்து விக்கிரயஞ் செய்விக்கின்றனர். சமயாசாரியர்களோடு சமத்துவ முடையவரென்றும் அவர் பாடலைத் தேவார திருவாசகங்களோடு சமத் துவ முடையதென்றும் பாராட்டிக் கொண்டும் பூசித்துக்கொண்டும் அநுட் டானம் பூசை சிவதரிசன முதலியன செய்யுங்காலங்களில் ஒதிக்கொண்டும் வருகின்ருர்கள். சிலபோது சென்ன பட்டணத்துள்ள சிவாலயங்களில் உற்சவத்திலே தேவார முதலிய அருட் பாக்களை நிறுத்திவிட்டு இராமலிங்க பிள்ளை பாடலையே ஒது விக் கி ன் ழுர்கள்.
இவ்வேழைகள் இப்படி மயங்கிக் கெடுதற்குக் காரணம் இராமலிங்க பிள்ளை திருவருள் பெற்றவரென்று அவர் பாடலிலும் அவர் மாணுக்கர் பாடலிலுஞ் சொல்லப்பட்டிருத்தலும் இராமலிங்கபிள்ளைக்கு இரசவாதத் தெரியுமென்றும், அவர் பல அற்பு தங்களைச் செய்கின்ருடிரென்றும், அவ

Page 124
14
ரும் அவர் மாளுக்கர்களும் சொல்லிக் கொண்டு திரிதலுமேயன்றிவேறில்லை.
(போலியருட்பா மறுப்பு
மறைகணிந்தனை சைவ நிந்தனை பொரு மனத்தை உடையவரான நாவலரவர்கள் 1869ளுல் போலியருட்பா மறுப்பு என்னும் நூலை,இராமலிங்கபிள்ளையின் நடவடிக்கை கள் சுத்தாத்துவித சைவசமய நெறிக்கு முற்றும் விரோதமாக அமைகின்றன என் பதைக் கருத்திற்கொண்டு, மாமண்டூர் தியாகேசமுதலியார் பேரிற் பதிப்பித்து வெளிப்படுத்தினுர். அன்று மடாலயங்கள் நாவலர்து இப்பணிக்குப் பேராதரவு அளித்தன என்பதையும் இங்கு மனங் கொள்ளல்வேண்டும். இந்நூலுக்கு எதிரா கப் பன்னிரு கண்டனநூல்கள் வெளிவந் தன என்பர். அவற்றுள் குதர்க்காரணிய நாசமகாபரசு என்னும் கண்டனநூல் உக்கிரகண்டனமாகும். நாவலரவர்களின் சார்பாகக் குதர்க்காரணிய நாசமகா பரசு கண்டனம், இராமலிங்கசுவாமி பாட லாபாச தர்ப்பணம் முதலான நூல்கள் வெளிவந்தன. இந்நிலையில் நாவலரவர்க ளோடு வெறுப்புக்கொண்டிருந்த தீகழிதர் கள் இராமலிங்க அடிகளைத் தமது பக்கம் சேர்த்துக்கொண்டு, சிதம்பரத்தில் பேரம் பலத்திலே சுக்கிலளுல் ஆனிமீ" உத்தர தரிசனதினம் ஒரு கூட்டத்தைக் கூட்டினர். இராமலிங்க அடிகளார் உட்பட எல்லோ ரும் நாவலரவர்களை வாயில்வந்தபடி தூஷித்தார்கள். இராமலிங்கபிள்ளை *நாவலர் என்ற சொல்லுக்கு அர்த்தம் விளக்கத் தொடங்கி, நாவில்லாதவர், நாவினுல் அலர் "உண்டாக்குவோர், நாவி ஞல் துன்பப்படுவர்" என்பன முதலாய கூறிஞர் என்பர்." சிலர் அடிக்கவேண்டு மென்று தீர்மானித்துக்கொண்டு போய் விட்டார்கள்.* இவற்றை அறிந்த நாவல ரவர்கள் தில்லைத் தலைமைத் தீகழிதரான F. நடேசன் அவர்கள்மீதும் இராம லிங்கர்மீதும் குற்றம்சாட்டி 1869ளு) கார்த்திகை 18ஆந் தேதி மஞ்சக் கும்பக் கோட்டில் வழக்கைத் தாக்கல் செய்வித் தார்.9 இவ்வழக்கை நடத்தியவர்

வை. கனகரத்தினம்
ருேபோட்ஸ் (Roberts) என்னும் வெள்ளைக் கார நீதிபதி ஆவார்.80
மஞ்சக் குப்பக் கோட்டின் வழக்கின் தீர்ப்புப்பற்றி இருபக்க சாராரும் தமது குருபத்தி பிரதேசபத்திக்கேற்ப குறித்துச் செல்வர். எல்லாவற்றுக்கும் மேலாக நாவலரவர்கள் இவ்வழக்கின் தீர்ப்பின் முடிவை மித்தியாவாத நிரசனத்தில் குறிப் பிட்டுள்ளார். இங்கு நாம் அவதானிக்க வேண்டியது நாவலரவர்கள் இராமலிங்க பிள்ளை அடிக்ளாரைக் கோட்டில் ஏத்திய மையும், நாம் நாவலரைத் துரஷிக்கவில்லை’ என்று கூறியதும் மேற்கொண்டு எவ்வித நடவடிக்கைகளையும் நாவலரவர்கள் எடுக் காமல் விட்டமையுமே யாகும்.
நாவலரவர்கள் இராமலிங்க அடியார் பாடல்களை அருட்யாக்கள் என்று என்றுமே ஏற்றுக் கொண்டவரில்லை யென்பதும், அவர் ஓர்வித அனுபூதிமானுமல்ல அவர் எவ்விதமான அற்புதங்களையும் செய்ய வில்லை என்பதும் நாவலரவர்களின் அடிப் படையான கோட்பாடாகும்.
சத்தியம் உண்மை என்பன ஒரு பொருட்சொற்கள். சத்யம் என்பது நீதி. சத்தியமும் நீதியும் ஒன்றே. சத்தியம் என்பது இறை. இறை வீற்றிருக்கும் இடங் களுள் நீதிஸ்தலமும் ஒன்று. காந்தியடிகள் சத்தியம் பற்றிக் கொண்டிருந்த கருத்துக் களை, T. M. P. மகாதேவன் பின்வருமாறு குறிப்பிடுவர்.
**ஆஸ்திகர்கள் தலைசிறந்த இந்த ஆன்மா வை இறைவன் என்கின் றனர். இதற்குக் காந்தியடிகள் சத் தியம் என்றே பெயரிட விழைந்தனர். இவ்வாறு எண்ணப்பப்பட்ட சத்தியம் உயிர்வாழ்வுக்கு எல்லாம் ஆதாரம், எல்லா உயிர்களுடைய இலட்சியமும் இதுவே'
எனவே நீதியும் இறையும் ஒன்றே, இம்மகிமை பொருந்திய நீதிமுன், நீதி மன்றத்திலே சிதம்பரத்தில் பேரம்பலத்

Page 125
நாவலர் பணிகளின் சைவ சித்தாந்தக் கோ
தில் பேசியவற்றைப் பேசவில்லை என நாக் கூசாது வாய்மை தவறிப் பேசியதைக் கேட்ட நாவலரவர்கள் அவ்விடத்திலேயே நேரடியாக எல்லோரும் அறியும்வண்ணம் அவரது அநுபூதிநெறியை உலகறியத் தெரி வித்துக் கொண்டமையால் தொடர்ந்து வழக்கை நடத்த நாவலரவர்கள் விரும்ப வில்லை எனலாம். நாவலரவர்களின் உண் மையான நோக்கம் நீதியின் முன் இராம லிங்க அடிகளாரை நிறுத்தி அவரின் அநு பூதிநெறியை ஊர், உலகறிய வெளிக் கொணர்வதேயாகும். இவ்விடயத்தில் நாவலரவர்கள் பெருவெற்றி பெற்ருர் எனலாம். திருமுறைகள் பேணப்பட்டன. திருமுறைக் கழகங்கள் தோன்றின. சித் தாந்தக் கோட்பாடுகள் வரன்முறையாக வளர்ந்தன. தமிழகத்தைவிட ஈழநாடு இவற்றின் பாதுகாவலனுக அமைகின்றது. அதன் காவலன் நாவலரவர்களே என்ருல் அது பேரூண்மையே.
தத்துவம் என்பது இறை, உலகு, ஆன்மா ஆகிய மூன்றிற்கும் உள்ள தொடர்பு, தொடர்பின்மை பற்றி விளக் குவதாகும். சைவசித்தாந்தம் இம் மூன் றின் தொடர்பை விளக்கிக் காட்டும். சாங்கியம், யோகம் முதலியவற்றில் இரு பத்தைந்து தத்துவங்களும், பஞ்சராத் திரத்தில் இருபத்திநான்கு தத்துவங்களும் குறிப்பிடப்பட, சைவசித்தாந்தம் முப்பத் தாறு தத்துவங்களைக் குறிப்பிட்டு விளக்கி நிற்கும். நாவலரவர்கள் சித்தங்கள்பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுச் சென்றபொழு தும் சில சித்தாந்தக் கோட்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதோடு, பொதுமக்கள் இலகுவாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் கோட்பாடுகள் பலவற்றினை இலகுபடுத்தி விளக்கியுள்ளார். அவற்றில் சில சித்தாந் தக் கோட்பாடுகளை நோக்கலாம்.
உலகைப் படைத்தல் காத்தல் அழித் தல் என்கின்ற மூன்று தொழில்களையுஞ் செய்தற்குக் கருத்தா ஒருவர் இருக்கின் ருர். அக்கருத்தா சிவபெருமான்.2ே அவர் என்றும் உள்ளவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அறிபவர், எல்லாம் வல்லவர்,

ஆனந்தமுடையவர், தம்வயமுடையவர், உயர்வும் ஒப்பும் இல்லாதவர். சர்வலோ கத்துக்கும் ஒரே நாயகர்? என்பது நாவ லர் காட்டும் இறைவனின் இலக்கணமும் முதன்மையும் ஆகும். இக் கருத்தினை அவ னென்றும் அவளென்றும் அதுவென்றும் இவ்வாறு பகுத்துப் பலவாய்ச் சுட்டி யுண ரப்படுஞ் சொல்லும் பொருளுமாகிய இரு கூற்றுப் பிரபஞ்சத் தொகுதி தோற்றம், நிலை, இறுதியென்னும் முத்தொழிலு டைமையாய் ஒருவனுற் தோறப்பட்டதாய உள்ள பொருளேயாம். இவ்வாழுகலின் சங்காரத் தொழிலைச் செய்யுங் கடவுளை உலகிற்கு முதற் கடவுள் ஏனையோர் அல்லர்” என்று கூறும் சிவஞானபோதக் கருத்துக்களோடும்4ே
*உலகெலா மாகி வேரு
யுடனுமா யொளியா யோங்கி அலகிலா வுயிர்கள் கன்மத்
தானையி னமர்ந்து செல்ல?65 என்ற சிவஞான சித்தியார் செய்யுளுடனும் ஒப்பிட்டு நோக்குக.
சைவசித்தாந்தம் முப்பொருள் உண் மைகளையும் நித்தியமெனக் கொள்வதால் ஆன்மாவும் நித்தியமுடையது என்பதை
ஒப்புக்கொள்கின்றது. ** ஆன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத்தடையுடையவைகளாய், சரீர ந்
தோறும் வெவ்வேழுய், வினைகளைச் செய்து வினைப் பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவைக ள்ாய் தங்களுக்கு ஒரு தலைவனை உடைய வைகளாய் இருக்கும்.
ஆன்மாக்கள் நல்வினை தீவினை யென் னும் இருவினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும் எழு வகைப் பிறப்பையும் எண்பத்துநான்கு நூருயிர யோனிபேதத் தையும் உடையவைகளாய்ப் பிறந்திறந் துழலும் என ஆன்மாவின் இலக்கணத் தையும் வியாபகத்தையும் நாவலரவர் கள் குறிப்பிடுவார்.
"அந்தக்கரண மவற்றினென் றன் றவை167 எனவரும் சிவஞானபோதச்

Page 126
செய்யுளால் அதன் நித்தியத்தையும் இலக் கணத்தையும்,
* அண்டசம் சுவேத சங்கள்
உற்பிக்கும் சராயு கத்தோ டெண்டரு காலெண் பத்து
நான்குநூ ருயிரத் தால் உண்டுபல் யோனி எல்லாம்"8
எனச் சித்தியாரில் அதன் வியாபகத் தன் மையையும் ஒப்புநோக்க முடிகின்றது.
ஆன்மா சீவன்முத்தர் நிலை என்ற பேற்றினை அடைவதற்கு முன்பாக இரு வினையொப்பு, மலபரிபாகம், சத்திநி பாதம் ஆகிய மூன்று தன்மைகளையும் கடந்து செல்லுதல் வேண்டும் என்பது சித்தாந்த மரபு. சத்திநிபாதம் என்பதற் குப் பலர் பலவாறு பொருள் கொள்வர். சிலர் சத்தி நிற்றல் என்பர், சிலர் சத்தி இறங்கல் என்பர்? நாவலரவர்கள் சத்தி நிதிபாதம் என்பதற்கு "இரு வினை யொப் பும் ஆணவமலபரிகாரமும் உற்றவிடத்தே சத்திநிபாதம் உண்டாகும். சத்திநிபாத மாவது ஆன்மாவானது ஞானத்தைத் தடுக்கும் ஆணவமலசத்தி நழுவும் அவச ரத்திலே முற்பிற் பாடறச் சிவத்தினது சிற்சத்தி பதிந்து அவ்வான்மாவினது நித்திய ஞானக்கிரிகையை விளக்குவ தாகும்" என்பர். இக்கருத்திலே பிறி தோரிடத்தில் அழுத்தமாக **சத்திநிபாத மாவது திரோதான சத்தி நீங்க அணுக் கிரக சத்தி பதிதலாம்"71 எனக் குறிப்பிடு
s
சிறுதெய்வ வழிபாடு, சமூகவியல் அடிப்படையில் ஒரு சமூகத்தின் பண் பாட்டு நிலைக்களமாகக் கொள்ளப்படு கின்றது. தத்துவார்த்த சிந்தனையியலில் சிறுதெய்வ வழிபாடும் அதன் பெயரால் நடைபெறும் பலியிடுதல் போன்ற கிரிகை நெறிகளும் அடியோடு மறுக்கப்படுவன.
சென்று காம்சிறு தெய்வோ மல்லோம் சிவபெருமான் திருவடியே சோப்பெற்றேம்"
என்ற அப்பர் வாக்கையும்: .

வை. கனகரத்தினம்
அநித்தியமானது சிறுசிறு உவப்பயன் களுக்காகச் சிறுதெய்வ வழிபாடு செய் யேன்" என்ற ஆதிசங்கரர் வாய்மொழி யையும் ஊற்றநோய் நோற்றலும் உயிர்க்கு உறுகண் செய்யாமலும்" இருந்து காப்பதே விரதம்" என்று வள்ளுவரும் ஒளவையா ரும் சொல்லிய வாக்கினை மனங்கொண்ட நாவலரவர்கள் சித்தாந்த அடிப்படை நோக்கில் பின்வருமாறு அணுகுவார்:
* "சைவசமயிகள் என்று பெயர் இட்டுக்கொண்டு உயிர்ப்பலி ஏற்கின்ற துட்ட தேவதைகளையும், காடன், மாடன், காட்டேறி, மதுரைவிரன், கறுப்பன், பதினெட்டாம் படிக் கறுப்பன், சங்கிலிக் கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்குகிறர் கள். இவர்கள் எல்லோரும் சிவத் துரோகிகள். இவர்களே அஞ்ஞானி
gair””76
சைவசித்தாந்தம் ஒரு கடவுள் கோட் பாட்டினை வலியுறுத்துவதாகும். அக் கோட்பாடு சுத்தாத்துவித சித்தாந்தத் துக்குட்படும்.
**அத்துவிதமாவது ஆன்மபோத மும் கண்ணுெளியும் போலச் சிவமும் ஆன்மாவும் தம்முள் இரண்டற ஒற்று மைப்பட்டு நிற்றல். பிரமமும் ஆன் மாவுமெனப். பொருளிரண்டில்லை ஒன்றேயெனக் கூறுவர் மாயாவாதி கள். சிவமும் ஆன்மாவும் வேறு பொருளெனவும் அவ்விரு பொருளே இரண்டென வேற்றுப்படாது அது விதுவாய் ஒற்றுமைப்பட்டு ஒன்ருய் நிற்குமெனவுங் கூறுவர் சைவசித்தாந் திகள். அத்துவித மென்னுஞ் சொற்கு இரண்டின்மை யெனப் பொருள் கொள்வர் மாயாவாதிகள். இரண் டன்மையெனப் பொருள் கொள்வர் சைவசித்தாந்திகள்,77 என்பதே ஆறுமுகநாவலரவர்களின் சுத் தாத்துவித சைவசித்தாந்த கோட்பாடா கும். இஃதோர் வரன்முறை சார்ந்த

Page 127
நாவலர் பணிகளின் சைவ சித்தாந்தக் கோ
தன்மையாகும். சைவசித்தாந்த முதல் நூலான சிவஞானபோதத்தின் ‘அவையே தானே" என்ற செய்யுள் தரும் பொருளும் இஃதே. இவையே, சைவசித்தாந்தம் மற்ற எச் சமயங்களையும் பூருவ பகrம் பண்ணு தற்கு ஒரு சமயமும் இன்மையாலும் அதுவே சித்தாந்தம் எனப்படும்? என்று நாவலரவர்களை அழுத்தமாகக் கூறுமள விற்கு இட்டுச் சென்றதெனலாம். நாவல ரவர்கள் சிவசமயவாதி என்று கூற முற் படுபவர்கள் மேற்காட்டிய அவரின் சிந்தனை களை மனங்கொள்ளுதல் அவசியமான தாகும்.
முடிவாக நாவலரவர்கள் தான் வாழ்ந்த காலத்தின் சூழ்நிலைக்கும், மக்க ளின் தேவைக்கும் ஏற்பச் சமயம், இலக்கி யம், இலக்கணம், கல்வி, நூற்பதிப்பு,
அடிக்குறிப்புக்கள் :
1. ஆறுமுகநாவலர், பாலபாடம், இரண்
கு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, (யாழ்ப்பாணம், 1972) பக். 13-1 ஆறுமுகநாவலர், பெரியபுராண சூசன் மேற்படி பக். 40 மேற்படி பக். 44.
3
4.
5 6. மேற்படி பக். 47. 7. ஆறுமுகநாவவர், பாலபாடம், இரண் 8. மேற்படி பக். 153. 9. த. கைலாசபிள்ளை (தொகுப்பு), ஆ மூன்ரும் பதிப்பு, 1954) முதற்பாக 10. மேற்படி பக். 65. 11. மேற்படி பக். 13. 12. கா. கைலாசநாதக் குருக்கள், சை6 முதற்பதிப்பு 1963) பக். 37. 13. மேற்படி பக். 105. 14. ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, இ 15. கா. கைலாசநாதக்குருக்கள், முற்கு
Ludi. 278. 16. மேற்படி பக். 278.
17. த. கைலாசபிள்ளை, மு. கு. பக். 9

tumrBassir 117
பாடநூல்கள், பிரசாரம் போன்ற பல்வேறு துறைகளிலும் புதிய மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் உருவாக்கி நிலைபெறச் செய்தார். இவ்வகை மாற்றங்களைச் சுத்த சைவத்தின் வளர்ச்சியின் பொருட்டே உருவாக்கினர். இது சுத்த சைவ நெறியை யும் சுத்தாத்துவித சைவசித்தாந்தத் தையும் உள்ளடக்கி இருந்தது. நாவல ரவர்கள் பெரிதும் சைவசமய நெறிக் கமைய, சைவமக்களின் ஒழுகலாற்றினை ஒழுங்குபடுத்தி அவர்களிடத்தில் ஆன்மீக நாட்டத்தைப் பெரிதும் வளர்க்க முற்பட்ட மையால், அதன் போக்கீடாக அமை கின்ற சுத்தாத்துவித சித்தாந்தக் கோட் பாடுகளை ஆங்காங்கே பெய்து அவற்றினை இலகுபடுத்தியும், வலியுறுத்தியும் செல் லும் பான்மையினையே அவரிடம் கான முடிகின்றது எனலாம்.
டாம் புத்தகம் (சென்னை, 1964), பக். 1. ஆறுமுகநாவலர் கவித்திரட்டு (தொகுப்பு), 4.
னம் (சென்னபட்டனம், 1949), பக். 40.
டாம் புத்தகம், (1964), பக். 150.
ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, (சென்னை, Lib, Ltd. 13.
வத் திருக்கோவிற் கிரிகைநெறி, (கொழும்பு,
இரண்டாம் பாகம் (1954), பக் 5.
குறிப்பிட்ட நூல்,

Page 128
19.
20ኗ
21.
22。
23。
24。
25.
26.
27.
28,
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42。
43.
44.
ஆறுமுகநாவலர், திருத்தொண்டர் ெ பதிப்பு, 1959), பக். 1.
ஆறுமுகநாவலர், சைவ வினுவிடை, பதிப்பு 1953) பக். 40. ஆறுமுகநாவலர், நித்திய கரும விதி
di. l. ஆறுமுகநாவலர், பெரியபுராண சூசன மெய்கண்டதேவர், சிவஞான போதமு (சென்னை, மூன்ரும் பதிப்பு. 1923) ட வே. கனகரத்தின உபாத்தியார், ழ பாணம் நாவலர் நூற்ருண்டுச் சபை ெ
* 1968) , Ꮏ ! & , Ꮾ7 .
த. கைலாசபிள்ளை, ஆறுமுகநாவலர் பதிப்பு, 1932), பக், 74.
ஆறுமுகநாவலர், சைவ விஞவிடை, இர Luis. 67.
மேற்படி பக். 67 மேற்படி பக். 68 மேற்படி பக். 78
மெய்கண்டார் சிவஞானபோதமும் சிவஞ
மெய்கண்ட சாத்திரம் பதிஞன்கு மூலமு LJu6ir (சென்னை), செய், 87.
ஆறுமுகநாவலர், சைவ வினவிடை இ மேற்படி பக். 53
மேற்படி பக். 59
மேற்படி பக் 57 ஒளவையார் நல்வழி (கொக்குவில் 2ஆ ஆறுமுகநாவலர் சைவ விஞவிடை, இ ஆறுமுகநாவலர் பெரியபுராண சூசனம்
சேக்கிழார் - பெரியபுராணம், (சென்னை சிறப்பு), செய், 6.
மாணி க்கவாசகர்,திருக்கோவையார் (Gର மெய்கண்ட சாத்திரம் பதிஞன்கு மூலமு திருக்களிற்றுப் படியார், செய், 4. ஆறுமுகநாவலர், சைவ வினுவிடை (இ மேற்படி, பக். 62.
மேற்படி, பக். 83.
மேற்படி, பக். 86.

65. கனகரத்தினம்
பரியபுராண வசனம், (சென்னை 18ஆம்
இரண்டாம் புத்தகம், (சென்னை, 16ஆம்
(கொக்குவில், நான்காம்பதிப்பு 1968),
ம் (சென்னை, 1949), பக். 43.
ம் சிவஞான சுவாமிகளின் சிற்றுரையும் 1d;. 147.
ரீலழரீ ஆறுமுகநாவலர் சரித்திரம், யாழ்ப் வளியீடு (சுன்னகம், இரண்டாம் பதிப்பு,
சரித்திரம் (பருத்தித்துறை, இரண்டாம்
ாண்டாம் புத்தகம் (1ஆம் பதிப்பு, 1953),
நானமுனிவர் சிற்றுரையும் (1923), செய். 9
ம் உரையும், இரண்டாம் பாகம், திருவருட்
ரண்டாம் புத்தகம், 1953, பக். 53.
ம் பதிப்பு, 1934), செய். 24. ரண்டாம் புத்தகம், 1953.
(1949), Luji. 80.
எட்டாய பதிப்பு, 1951, திருக் கூட்டச்
சன்னை,ஐந்தாம் பதிப்பு, 1936), செய்,118 ம் உரையும் (சென்னை, 1974), பகுதி, 1,
ரண்டாம் புத்தகம், 1953), பக், 82,

Page 129
நாவலர் பணிகளின் சைவ சித்தாந்தக் கே
45.
46.
47.
48。
49。
50.
-51.
52.
53.
54。
55.
56.
57.
கச்சியப்ப சிவாசாரியசுவாமி, கந்த மறைஞானசம்பந்தர், சைவசமய ெ எட்டாம் பதிப்பு, 1955), செய். 18 ஆறுமுகநாவலர், சைவ விணுவிடை மேற்படி, பக். 89, மேற்படி, பக். 88.
த. கைலாசபிள்ளை (தொகுதி) ஆறு 1953), பக். 2.
ஆறுமுகநாவலர், திருத்தொண்டர் (
பக். 2. மேற்படி, பக். 28-29. ஆறுமுகநாவலர், சைவதுரஷண பரிக சி. கணபதிப்பிள்ளை, "உண்மை நா6 சி. பி. மாசிலாமணி, வடலூர் இரா த. கைலாசபிள்ளை. (தொகுப்பு) பதிப்பு, 1953) , முதலாம் பாகம் , சிவாகம சித்தாந்தஞானபானுவாக ளாகவும், திருமறைப்புலமையும், 8 விளங்கிய மடாதிபதிகளும், பின்வந் அடியார் பாடல்கள் அநுபூதிமான் திருமுறைகளோடு எவ்விதத்திலும் இருப்பதாக இல்லை என்பதைப் ப ஆனல், இன்று பிரதேசரீதியான பத்தியும் ஏற்பட்டு, இராமலிங்க துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அ. 'தேவார திருவாசகப் பா வென்று மருப்பா குழாத்தினர் நிலைமை அதுதானென்ருலும், (ம. பொ. சிவஞானம், வள் பதிப்பு 1974, பக். 182)
ஆ. ** தேவார , திருவாசகத்தைக் உருக்கத்திலும் சிறந்த சில ட விருப்பு வெறுப்பு இல்லாத அ இது உண்மையே'.
(அ. லெ. நடராஜன், வள்ள பக். 1511. ஒவ்வொரு சைவ வீர்களாக நிற்க, அடிகளார் வாசகத்தை" என்று தொட வேண்டும்.
ம. பொ. சிவஞானம், வள்ளலார் க
1974), Ludii. 188.

ப் புராணம் (சென்னை, ஏழாம் பதிப்பு, 1953), நறியும், ஆறுமுகநாவலர் உரையும் (சென்னை,
6. (இரண்டாம் புத்தகம் 1953), பக். 79-80.
முகநாவலர் பிரபந்தத்திரட்டு (மூன்ரும்பதிப்பு
பெரியபுராண விளக்கம் (18ஆம் பதிப்பு, 1953),
ாரம் (சென்னை, 8ஆம் பதிப்பு-1956), பக். 1.
(மரகதம், ஜனவரி, 1962), பக். 26. மலிங்கர் சரித்திரம் (சிதம்பரம் 1954), பக். 2.
ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு (மூன்றம்
ud;.. 93-94. விளங்கிய நாவலரவர்களும் சைவ குருமார்க Pத்தாந்த ஆளுமையும் உடையவர்களாகவும் த சைவநூற் புலமை மிக்கோரும் இராமலிங்க களால் பாடப்பெற்ற, தேவார, திருவாசக ஒப்பிட்டுப் போற்றுவதற்குத் தகுதிப்பாடும் ட்டவர்த்தனமாகக் குறிப்பிட்டுச் சென்றனர். மேம்பாடு மேலோங்கியும், ஒருவித குருட்டுப் அடிகள் பாடல்கள் பற்றிப் பின்வரும் கருத்
வலர்
"டல்கள் அடியோ டு புறக்கணிக்கப்பட்டன * கூறுவது மிகைப்பட்ட கூற்ருக இருக்கலாம். வைதிகச் சைவர்கள் வருந்தக் காரணமில்லை” ளலார் கண்ட ஒருமைப்பாடு, சென்னை ஐந்தாம்
காட்டிலும், கனிவிலும், முதிர்ச்சியிலும், பாடல்கள் (த்) திருவருட்பாவில் உண்டு என்று ரன்பர்கள் சிலர் உறுதியோடு கூறுகின்ருர்கள்.
ாலார் வாழ்வும் வாக்கும், முதற் பதிப்பு, 1974 சமயிகளும் இக் கூற்றுக்களை மனம் கொள்
பாடிய 'வான் கலந்த மாணிக்க வாசகநின் .ரும் பாடலையும் இங்கு மனங்கொள்ளுதல்
ண்ட ஒருமைப்பாடு (சென்னை, ஐந்தாம் பதிப்பு,

Page 130
20
58.
59.
60.
6.
62.
63.
64。
65.
66.
67.
68.
69.
70.
7.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
த. கைலாசபிள்ளை,ஆறுமுகநாவலர் சரித் சி. கணபதிப்பிள்ளை, ஆறுமுகநாவலர்,
(சாவகச்சேரி, முதலாம் பதிப்பு, 1979
ச. தனஞ்சயராசசிங்கம் ' பண்டிதமணி வுகள் சுடரொளி சதாவதானி கதிரை(
டி. எம். பி. மகாதேவன், இந்துசமயத் தமிழ்நாடு அரசாங்கம், 1969, பக். 2
ஆறுமுகநாவலர் சைவசமயசாரம் (சண்
ஆறுமுகநாவலர் பாலபாடம் (நான்காம் 1950) u už. 1-2.
மெய்கண்டதேவர் சிவஞானபோதமும் சி பதிப்பு 1923) பக். 12-13. அருணத்தி சிவாசாரியார் சிவஞனசித்திய முதற் பதிப்பு, 1975), செய். 91.
ஆறுமுகநாவலர், பாலபாடம் (நான்காம்
மெய்கண்டதேவர் சிவஞானபோதமும் சி பதிப்பு, 1923), செய். 5.
அருணந்தி சிவாசாரியார் சிவஞானசித்தி முதற்பதிப்பு, 1975), செய். 179.
சி. பி. ராமஸ்வாமி அய்யர், சைவசித்த 1963), Luš. 103-104.
மறைஞான சம்பந்தர் சைவசமய நெறியும் பதிப்பு, 1955), பக். 22-23. ஆறுமுகநாவலர், பெரியபுராண சூசனம் திருநாவுக்கரசுசுவாமிகள் தேவாரம், ப (பூரீ வைகுண்டம் 1976), மறுமாற்றத் சோ. சுப்பிரமணியக் குருக்கள், சைவ மணியக் குருக்கள் பாராட்டு விழா ம
திருக்குறள், (சென்னை, பதிஞன்காம் ஆத்திசூடி (கொக்குவில், 2ஆம் பதிப்பு
த. கைலாசபிள்ளை (தொகு.), ஆறுமு பதிப்பு, 1954) முதலாம் பாகம், பக்.
மறைஞானசம்பந்தர் சைவசமய நெறி பதிப்பு, 1955) பக். 79.
மெய்கண்டதேவர், சிவஞானபோதமும் பதிப்பு, 1923) பக். 31.
ஆறுமுகநாவலர். பெரியபுராண சூசனம்

வை. கனகரத்தினம்
திரம் (இரண்டாம் பதிப்பு: 1932), பக். 80
நாவலர் நூற்ருண்டு நினைவு வெளியீடு, ) Luž. 101-102
எதிர்பார்க்கும் நாவலர் வழக்கின் (Մ01գவேற்பிள்ளை நினைவுவிழா மலர் (1979).
தத்துவம் , தமிழ் வெளியீட்டுக் கழகம்,
முகநாதன் புத்தகசாலை வெளியீடு 1969) புத்தகம், சென்னை, 29ஆம் பதிப்பு,
வஞான சுவாமிகள் சிற்றுரையும் (மூன்ரும்
ார் திருவிளங்கம் உரை (யாழ்ப்பாணம்,
புத்தகம், 29ஆம் பதிப்பு, 1950), பக். 3 வஞான சுவாமிகள் சிற்றுரையும் (மூன்ரும்
யார் சுபக்கமும் திருவிளங்கம் உரையும்,
ாந்தம், கும்பகோணம் (முதற் பதிப்பு
D ஆறுமுகநாவலர் உரையும் (எட்டாம்
) (1949), பக். 149,
ன்னிரு திருமுறைப் பதிப்பு வெளியீடு
திருத்தாண்டகம், செய். 5.
சமயிகளும் சிறுதெய்வ வழிபாடும் (சுப்பிர avri, 1971)
பதிப்பு, 1955), செய். 261, 1, 1933), செய். 33.
கநாவலர் பிரபந்தத் திரட்டு (மூன்ரும்
87:
பும் ஆறுமுகநாவலர் உரையும் (எட்டாம்
சிவஞானசுவாமிகள் சிற்றுரையும் (மூன்றும்
, 1949, Jáš. 139

Page 131
14
வழி:
சி. சங்க سمس، 829 H
சி. வை. -س- 2 3 8 l
Пъ. з. 6 l336 -
சி. செர் ܚ- 48 8 [
er. LT 1848 -
அ. கும حسست : 8 Il
. (6 1 8 5 5 -
ð“. S-LIT; 858 -
@b·@P点 1858 - ாகா. கதி سس I 87 1
5. EFTL ܂ ܝ 78 8 7
Sr. és)L 1878 -
&. Sudrt -ܚ 86 8 T
சுவாமி ( 1892 -
சி. கண ܚ 8:99 T

வழி நாவலர்
næadum
ரபண்டிதர்
1870
தாமோதரம்பிள்ளை
1901
பான்னம்பலபிள்ளை
1902
திகாதையர்
1924
பதி காவலர்
1903
ாரசுவாமிப்புலவர்
922
oTFGarðar
1939 ாத்தின முதலியார் 1922 . துத்தம்பிப்பிள்ளை
9 7 ரைவேற்பிள்ளை
1907 Dசுந்தரப்புலவர் 1953 ாதசுந்தரம்
1953
ரசுவாமிக் குருக்கள் 1971 விபுலாாகங்தர்
97
பதிப்பிள்ளை

Page 132


Page 133
நாவலரும் சி
யோகேஸ்வரி கணே
யாழ்ப்பாணத்திலிருந்த சமஸ் கிருத பண்டிதர்களுள் இவரே சிரேட்ட ரெனலாம். இவர் சமஸ்கிருதத்தி லுள்ள ஆகம சாத்திரங்களிலும் வல் லவர். தமிழிலுள்ள சித்தாந்த நூல் களிலும் சைவநெறியொழுக்கத்தி லுஞ் சிறந்தவர்.
சிங்கரபண்டிதர் பற்றி மகாவித்து வான் சி. கணேசையர் (1878-1958) இவ் வாறு கூறுகின்ருர். இக் கூற்றிலிருந்து சங்கரபண்டிதர் அக்காலத்துச் சமஸ்கிருத பண்டிதர்களுள் முதன்மையானவர் என் பதும், அதேநேரத்தில் தமிழ், சித்தாந்தம் என்பனவற்றை ஆழமாக அறிந்திருந்தார் என்பதும் துலக்கமாகின்றது. இவரது தமிழ், வடமொழி அறிவு பலரை இவரி டம் பாடங்கேட்கத் தூண்டியதால் பலர் இவரது மாணுக்கர்களாக விளங்கினர். இவர்களுள் சுன்னுகம் முருகேச பண்டிதர், கீரிமலைச் சபாபதிக்குருக்கள் என்போர் விதந்து குறிப்பிடத் தக்கோராவர். சுன் ஞகத்திற் பிறந்து நீர்வேலியில் வாழ்ந்த இவர் நீர்வேலியில் பல மணுக்கர்களுக்கு ஆசாளுக விளங்கியதோடு கூடவே பல நூல்களையும் எழுதினர். இவர் எழுதிய சைவப்பிரகாசனம், சுத்தசங்கிரகம், அகநிர் ணயத் தமிழுரை, அநுட்டானவிதி என்பன 'சைவசமய உண்மைகளை விளக்குவனவாக வும், தருக்கரீதியாக எழுதப்பட்டனவாக வும் விளங்குவன. கிறிஸ்துமத கண்டனம், சிவதுஷண கண்டனம் என்பன அக்காலத்

வசங்கரபண்டிதரும்
ஈலிங்கம்
திலே வேகமாகப் பரவிய பரசமயமாகிய கிறிஸ்துவத்துக்கு எதிராக எழுதப்பட்ட நூல்களாக விளங்குகின்றன. இவற்றைக் கொண்டு பார்க்குமிடத்து மேற் கூறிய சி. கணேசையர் கூற்றிலுள்ள உண்மை புலப்படாமற் போகாது.
சங்கரபண்டிதர் (1829-1870)வாழ்ந்த காலத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் அன்று வாழ்ந்த தமிழ் அறிஞருள் தலையா யவரர்கக் கருதப்பட்டவர் என்பது பலரும் அறிந்த உண்மை. நாவலரது வாழ்க்கை யாலும், அவரது செயற்கரிய செயல்களா லும் ஈர்க்கப்பட்ட பலர் அவர் காலத்தி லும், அவர் காலத்தின் பின்னரும் நாவலர் வழியில் இயங்கினர். இவர்களுள் வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை, காசி வாசி செந்திநாதையர், குமாரசுவாமிப் புலவர், சபாபதி நாவலர் என்போர் குறிப் பிட்டுச் சொல்லக் கூடியவர்களாவர். இவர்கள் யாவரும் நாவலரால் ஆரம்பிக் கப்பட்ட பணிகளில் ஒன்றையோ, பல வற்றையோ தொடர்ந்து நடாத்தியவர்க ளாகவும், நாவலரிடம் பாடங்கேட்டவர்க ளாகவும் நாவலர் நிறுவிய பாடசாலை களில் கல்வி கற்பித்தோராகவும் விளங் கினர். இவ்விதமாக நாவலர் காலத் திலும், அவர் காலத்தின் பின்னரும் அவர் வழியில் இயங்கிய இவர்களை "நாவலர் மரபினர்" எனக் கூறமுடிகின்றது.
நாவலரோடு சமகாலத்தில் வாழ்ந்த சங்கரபண்டிதர் நாவலர் வழிவந்த நாவலர்

Page 134
மரபினரிடமிருந்து சிறி து வேறுபடு கின்ருர் என்றே கருதவேண்டியிருக்கிறது. சங்கரபண்டிதருக்கும், ஏனையோருக்கும் a 6hr6T வேறுபாட்டை இவ்விடத்தில் ஆராய்தல் பொருத்தமே. சங்கரபண்டித ருடைய வாழ்க்கை, பணி என்பவற்றைப் பார்க்குமிடத்து இவருக்கு நாவலரோடு மேற்கூறியவர்களைப் போன்ற நேரடித் தொடர்பு இருக்கவில்லை என்று கூற முடி கின்றது. ஏறத்தாழச் சமகாலப்பகுதியில் வாழ்ந்த இவர்கள் இருவரும் கல்வி அறிவு மிக்கவர்களாகவும் மாணுக்கர் குழாத் தைத் தம் அறிவு, ஆற்றலால் கவர்ந்த வர்களாகவும் விளங்கிய அதேசமயத்தில் அக்கால சமுதாய அரசியல் நிலைமை களால் ஒரேவிதமாகப் பாதிக்கப்பட்ட வர்களாகவும் விளங்கினர். எனவே இரு வரும் ஒரே காலப்பகுதியில் சைவம், தமிழ் என்பனவற்றிற்கு உழைத்த கல்வியாள ராக விளங்கினர் என்பதும் பெறப்படு கின்றது. இவ்விதம் நாவலரும், சங்கர பண்டிதரும் வாழ்ந்த காலம் ஆற்றிய பணி கள் என்பவற்றில் ஒத்திருந்தபோதும், சங்கரபண்டிதர் நாவலரைத் தமது பணி களுக்கு ஒரு வழிகாட்டியாக ஏற்றுள்ளார். தன்னளவில் சங்கரபண்டிதர் ஒரு மகா பண்டிதராக விளங்கிய போதும் ஓர் இயக் கத்தை நடாத்தி இலட்சிய புருஷராக வாழ்ந்த ஆறுமுக நாவலர் தலைமையைத் தானும் ஏற்றுக்கொண்டார். ஆகவே இவை யாவற்றையும் தொகுத்து நோக் கும்போது நாவலர் மரபில் ஒழுகிய ஏனை யோரிலிருந்து சங்கரபண்டிதர் எந்த அள விற்கு வேறுபட்டு விளங்கினர் என்பது பெறப்படுகின்றது.
ஆறுமுக நாவலர், சங்கர பண்டிதர் ஆகியோர் வாழ்ந்த காலப்பகுதியிலே யாழ்ப்பாணத்தில் கிறித்தவ சமயப் பிர சாரம் வெகு வேகமாக நடைபெற்றது: மதப் பிரசாரத்தைத் தமது முக்கிய நோக்கங்களில் ஒன்ருகக் கொண்டு கிறிஸ் தவர்கள் கிழக்கிற்கு வருகை தந்தார்கள் என்பது வரலாறு கண்ட உண்மை. இக் கிறிஸ்தவர்கள் தமது மதத்தைப் பரப்பக்

யோகேஸ்வரி கணேசலிங்கம்
கையாண்ட உபாயங்களாலும், கிறிஸ்தவ மதத்தைத் தழுவுதலாற் கிடைக்கும் சலுகைகளாலும் ஏமாற்றப்பட்ட பல சைவர்கள் தம் மதத்தை விட்டுக் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தார்கள். இதனைக் கண்டு மனம் பொருத நாவலர் துணிவுடன் எதிர்ப்புக்குரல் கொடுத்தார்.
இத் தேசத்திலுள்ள வறியவர்கள் அநேகர் சைவசமயமே மெய்ச் சமய மென்று அறிந்தும், அன்னம், வஸ்திரம் முதலியவை பெற்றுப் படிக்கும் பொருட்டும், உபாத்தியாயருத்தியோ கம், பிரசங்கியுத்தியோகம் முதலிய உத்தியோகங்களைச் செய்து சம்பளம் வாங்கும் பொருட்டும், கவர்மென்டு உத்தியோகத்தினிமித்தம் துரைமார்க ளிடத்தே Guntilat செய்விக்கும் பொருட்டும், கிறிஸ்து சமயப் பெண்க ளுள்ளே சீதனமுடையவர்களையும், அழகுடையவர்களையும் விவாகஞ் செய்யும் பொருட்டும் கிறிஸ்து சமயத் திலே பிரவேசிப்பாராயினர்.
என்ற ஆறுமுகநாவலர் வாக்கியங்கள் அக் கால கிறிஸ்தவ மதமாற்றத்தை விளக்கப் போதியனவாம். தம் சொந்த இலாபம் கருதி மதம் மாறிய சைவர்களின் இழி நிலையைக் கண்டு மனங்கொதித்தே நாவலர் மேற்கூறிய வாசகங்களை வருத்தத்துடன் எழுதினர். இந்த நிலை நீடித்தால் நமது மதம், மொழி, பண்பாடு என்பன நலி வடைந்து ஈற்றில் அழிந்தொழிந்து விடும் என்பதை உணர்ந்த நாவலர் முழுமூச்சாக கிறிஸ்தவ மத ஊடுருவலை எதிர்த்தார். நம்மவர்கள் தம் மொழியையும், சமயத் தையும், தனித்துவத்தையும் இழக்காம லிருக்கப் பல ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டார். தமது பிறந்த இலங்கை நாட்டிலும் அயல் நாடாம் தமிழ் நாட் டிலும் அவர் பரந்த பணிகள் மூலம் பல மாற்றங்களை உண்டுபண்ணினர். பொது மக்களிடையே புதிய சிந்தனை உருவாகத் தொடங்கியது. அவர்கள் தமது பண்டைப் பெருமையையும் சைவ நெறிகளையும் உண ரத் தொடங்கினர். அந்நிய மோகத்தி

Page 135
நாவ லரும் சிவசங்கர பண்டிதரும்
லிருந்து விடுபட்டுத் தமது மொழியையும் தனித்துவத்தையும் பேணவேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்டது. இதனுல் பலர் நாவலர் பணிகளில் பங்குபற்றி அவரோடு கூட உழைக்க முன்வந்தனர். நாவலர் போலவே அந்நிய மதத்தவரின் பிர சாரத்தை முறியடித்து நம்மவர் உண்மை யறிந்து தன் மானத்துடன் வாழ்வதற் காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துச் செயலாற்றியவர் சங்கரபண்டிதர்.
கிறிஸ்தவ மதத்தை எதிர்த்து அர சாங்கச் செல்வாக்கோடு வாழ்ந்த பாதிரி மாருடன் நேரடி மோதல்களில் ஈடுபட்டும் கருத்தாழம் மிக்க பிரசங்கங்களைத் தருக்க ரீதியாகச் செய்தும் செயலாற்றிய சங்கர பண்டிதர் நாவலர் வழியில் தீவிரமாகச் செயலாற்றியவர் எனலாம். சங்கர பண்டி தர், நாவலர் ஆகிய இருவரும் அவர்கள் வழி நின்ருேரும் துணிவுடன் கிறிஸ்தவ மதத்துக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பியிரா விடில் சைவம் காலப்போக்கில் அழிந்து போயிருக்கும் என்பது சொல்லவும் வேண்டா. சங்கரபண்டிதர் வாழ்க்கை, பணி என்பனவற்றை ஆராய்ந்து பார்க்கு மிடத்து கிறிஸ்தவ மதத்தையும், அதைப் பரப்பிய பாதிரிமாருடன் அவர் நடத்திய நேரடி மோதல்களையும் அறிந்து கொள்ள லாம். நாவலர் தலைமையில் உருவாகிய கிறிஸ்தவசமய எதிர்ப்பியக்கம் பாதிரி மாருக்கு அச்சத்தைக் கொடுத்தது. கிறிஸ்தவப் பாதிரிகளாகிய கில்னர், பொன்சீன் பாதிரிகளின் தலைமையில் சைவத்துக்கான எதிர்ப்பியக்கம் நடை பெறத் தொடங்கியது. கிறிஸ்தவர்களால் நடத்தப்பட்ட பத்திரிகைகளாகிய உதய தாரகை, இலங்கை காவலன், கத்தோலிக்க பாதுகாவலன் என்பன முழுமூச்சுடன் சைவ சமய உண்மைகளைக் குழிதோண்டிப் புதைத் தன. இவ்விதமாகப் பத்திரிகைகள் வாயி லாகவும், துண்டுப் பிரச்ரங்கள் வாயிலாக வும் சைவசமய உண்மைகள் மறுக்கப் பட்டதைக் கண்ட சங்கரபண்டிதர் துணி வுடன் கிறிஸ்தவமத கண்டனங்களைக் கார சாரமாக எழுதினர். கிறிஸ்தவப் பாதிரி மாரின் செயல்கள் ஒவ்வொன்றும் கண்

125
டிக்கப்பட்டு சைவசமய உண்மை மக்களுக்கு விளங்கக்கூடிய முறையில் கூறப்பட்டது.
இயக்கவீரராகிய நாவலர் இக்காலத் திலே பரந்துபட்ட பல பணிகளில் ஈடுபட் டுச் செயலாற்றியமையால், காலத்துக் குக்காலம் இந்தியாவுக்குச் செல்லவேண்டி யும், பிற தொண்டுகளில் உழைக்க வேண் டியும் இருத்தது. இந் நேரங்களில் எல் லாம் கிறிஸ்தவமத எதிர்ப்பியக்கத்தைச் சங்கரபண்டிதர் நடத்திச் சென்றிருக்கின் ருர், "சம்பளக் கிறிஸ்தவர்”, “பதுக்கினர் பாதிரிமார் போன்ற தொடர்களைப் பயன் படுத்திச் சங்கரபண்டிதரும், அவரைச் சார்ந்தோரும் பாதிரிமாருடன் நேரடி மோதல்களில் ஈடுபட்டனர். இந் நோக்கத் திற்காக 1864இல் சங்கரபண்டிதர் ‘பரமத கண்டன சுயமத ஸ்தாபன சங்கம்’ என்ற ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். இச் சங் கத்திலே அக்காலத்துத் தமிழறிஞர் பல ரும் அங்கத்தவராயிருந்து சைவ சமய வளர்ச்சிக்கு உழைத்தனர். வாரந்தோறும் கூட்டப்பட்ட இச்சங்கத்திலே ஒருவாரம் பரமத கண்டனமும், அடுத்தவாரம் சுயமத ஸ்தாபனமும் செய்யப்பட்டன. இச்சங் கம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் நாவலர் இந்தியாவில் இருந்தார். நாவலர் யாழ்ப் பாணத்தில் இல்லாத சமயத்திலே சங்கர பண்டிதர் நாவலர் மரபில் ஒழுகி அவர் இலட்சியத்தை நிறைவேற்றியுள்ளார் என் பதற்கு இது ஒர் தக்க உதாரணமாகும். இச்சங்கத்தின் நோக்கத்தையும், அதன் இயக்கத்தையும் விளங்கிக்கொள்ள மேல் வரும் இலங்காபிமானிப் பத்திரிகைச் செய்தி ஆதாரமாகின்றது:
சென்ற மாதத்திய வார மொன் றில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சைவர்களுட் கற்ருேரும், மற்ருேரும் கூடிப் பரமத கண்டனஞ் சுயமத ஸ்தா பனம் என்னும் அபிப்பிராயம்கொண்டு சிற்சில கூட்ட நிருபஞ் செய்தார்கள். ஒரு வார ம் பரமதகண்டனமும், அடுத்தவாரம் சுயமத ஸ்தாபனமுஞ் செய்தார்கள். இச்சங்கத்துக்கு அக்கி ராசனபதி சங்கரபண்டிதர், லிகிதர்

Page 136
26
தில்லைநாத உபாத்தியாயர், சம்பந்தப் புலவர், சுப்பிரமணியர் . இத்தரு ணம் எங்கள்.ஆறுமுகநாவலர் இங்ங்ன மில்லையே என விசனமுற, மற்ருெருவ ரெழுந்து அவர் எங்ங்ணமிருந்தால் இவ்விஷயத்துக்கு உதவி செய்வார் எனத் துணைசெய்துவிசனமொழிக்க. ஒருவர் பதுங்கினர் பாதிரிமார் என்று பல்லவி கூட்டி அநுபல்லவியையும் சரணங்களையும் முடிக்கக் கூட்டம் முடிந்தது.
ஓர் அன்பன் இலங்காபிமானிப் பத்திரி கைச்கு எழுதிய இப்பத்திரிகைக் சுடிதத்தி லிருந்து ஆறுமுகநாவலர் யாழ்ப்பாணத் தில் இல்லாத சமயத்திலேயே சங்கர பண்டிதரால் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட் டது என அறியமுடிகின்றது. நாவலர் யாழ்ப்பாணத்தில் இல்லாத இக்கால கட்டத்திலே கிறிஸ்தவப் பாதிரிமார் முழு முனைப்போடு மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு இயங்கினர். நாவலர் எதிர்ப்பால் தாம் கிழக்கிற்கு வந்த நோக்கத்தை நிறை வேற்றமுடியவில்லையே எனப் பாதிரிமார் பேர்சிவல் பாதிரியாருக்குக் கடிதம் எழுதி யமையும், அவரது சமயப்பிரசங்கங்களைக் கண்டித்து, அவை தமது மதப்பிரசாரத் துக்குத் தடையாக விளங்குகின்றன என அவர்கள் சலிக்துத் கொண்டமையும் உதய தாரகை பத்திரிகை வாயிலாக அறியும் உண்மையாகும். இத்தகைய ஒருவர் யாழ்ப்பாணத்தில் இல்லாத சமயத்திலே சங்கரபண்டிதரும், பிறரும் இவ்வாறு செயலாற்ருது இருந்திருந்தால் கிறிஸ்தவ சமயம் யாழ்ப்பாணத்தில் வேகமாகப் பரவியிருக்கும் என்பது சொல்லவும் வேண்டா. ஆனல் நாவலர் இல்லாத தருணத்திலே சங்கரபண்டிதர் இச் சங் கத்தை ஆரம்பித்து வாராவாரம் கிறிஸ் துவத்துக்கு எதிராகப் பிரசாரம் நட்த் தியமை கிறிஸ்வர்களைக் கவலைக்குள்ளாக் கியது. இக்காலத்து உவெஸ்லியன் மிஷனரி யான யோ. கில்னர் என்பவர் வெளியிட்ட அறிவித்தலின் பின்னணியில் நாம் இதனை விளங்கிக்கொள்ளலாம்.

யோகேஸ்வரி கணேசலிங்கம்
வண்ணுர்பண்ணையில் வசிக்குஞ் சைவருக்கும் பிறருக்கும் இதைக் கொண்டு இதனடியிற் கையொப்பம் வைத்திருக்கிறவர் தெரியப்படுத்து வது என்னவெனில், மேற்படி சைவ ராவது, கிறிஸ்துமத அனுசாரிகளல் லாத பிறராவது கிறிஸ்துமத மார்க் கத்துக்கு அல்லது விவிலிய ஆகமத் துக்கு விரோதமாய்க் கொண்டுவரும் நியாயமான ஆட்சேபங்களைக் கேட்டு விடைகொடுக்கும் நோக்கமாக இம் மாதம் 22ஆம் திகதியாகிய வருகிற செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியள வில் உவெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த செட்டித்தெருப் பள்ளிக்கூட வங்க ளாவில் கூட்டம் கூடுமென்பதே.
யோ. கில்னர்
கில்னர் பாதிரியாரின் மேற்கண்ட பத்திரிகை விளம்பரம் அக்கால சமய நிலையை விளக்கப் போதியதாகும். ஒரு புறம் சங்கரபண்டிதராலும் அவரைச் சேர்ந்தவர்களாலும் 63) GF 6 SF LD உண்மைகள் விளக்கப்பட்டுக் கிறிஸ்தவ சமய கண்டனங்கள் நடத்தப்பட்ட அதே நேரத்தில், மறுபுறம் கில்னர் போன்ற கிறிஸ்தவ பாதிரிகளால் உவெஸ்லியன் பாடசாலைகளில் கிறிஸ்தவ மத ஸ்தாபனம் நடந்திருக்கின்றது. சமயத் தடுமாற்றம் மக்கள் மத்தியில் நிலவிய காலத்தில் அத் தடுமாற்றத்தை நீக்கக்கருதிச் சைவர் களும், கிறிஸ்தவர்களும் முயன்றனர். இதனுல் கிறிஸ்தவ, சைவ மதவாதங்கள், கண்டனங்கள், வெகுமும்முரமாக நடை பெற்றன. மேற்கூறப்பட்ட விளம்பரத் தின்படி உவெஸ்லியன் மிஷனைச் சேர்ந்த செட்டித்தெருப் பள்ளிக்கூடத்திலே கூட் டம் கூடப்பட்டது. அக் கூட்டம் சைவர் களால் குழப்பப்பட்டது. இக் கூட்டத் தைக் குழப்பிய சைவர்கள் பாதிரிமாரை யும், கிறிஸ்தவர்களையும் வாயில்வந்தபடி தூஷித்துக் கேலி செய்தார்கள். அத்துடன் கிறிஸ்தவக் கூட்டத்துக்கு எதிராக சைவர் கள் கூட்டமும் கூடினர் எனப் பத்திரிகைச் செய்தி கூறுகின்றது. இப் பத்திரிகைச்

Page 137
நாவலரும் சிவசங்கர பண்டிதரும்
செய்தியின் இறுதியில் 'வண்ணுர்பண்ணை யில் சைவர்கள் செய்யும் கூத்துக்களைப் பார்த்தால் வெகு வேடிக்கையாகத்தான் இருக்கிறது.** எனக் கூறப்பட்டிருப்பதை நோக்கின் எந்த அளவிற்கு சைவ, கிறிஸ் தவ மோதல் நடைபெற்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.
இக் காலப்பகுதியில் சங்கரபண்டிதர் கில்னர் பாதிரியாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கிறிஸ்தவர்களுடன், சைவர்கள் கொண்டிருந்த போட்டி மனப்பான்மை எத்துணை தீவிரம் வாய்ந்ததாக விளங்கிய தென்பதை விளக்கப் போதியதாகும்.
வண்ணுர்பண்ணை மதவாத சபை யின் அக்கிராசனபதியாகிய கில்னர்ப் பாதிரியாரவர்கட்கு விக்கியாபநம். நுங்கள் மதவாத சபையின் இங்கி வீசுக் கடிதத்தை. மொழிபெயர்த்து அறிந்து கொண்டோம். நுங்கள் சமா சியருளொருவராகிய உவுட் என்பவர் இங்கிலீசிலே தம்மோடு சமயவாதஞ் செய்யும் பொருட்டு இங்கிலீசுணர்ச்சி யில்லாத பிராமணர்கள், சைவர்களை இலங்காபிமானிவாயிலா யறைகூவி யழைத்தலும் "ஆறுமுகநாவலர், சங் கரபண்டிதர் என்பவர்கள் குறித்த மதவாத சபையில் வாதஞ் செய்வ தற்கு அஞ்சுகின்றனர் என்று இலங் காபிமானியிற் பிரகடனஞ் செய் ததும் யாது கருதியோ அறியோம் . நீரிவையெல்லா முற்று நோக்கியா மீண்டு யோகீசுரர் செய்த வாதவிதி என்னும் நூற்கருத்தை அநுசரித்து விவரிக்கும் வாத விதிகட்குடன்பட்டுக் கிரமமாகச் சமயவாதஞ் செய்யும் கருத்துடையீராயின் யாம் வாதஞ் செய்வதற்குச் சிறிதும் தடையின்று.
இங்ங்னம்
நீர்வேலி சைவப்பிரகாச சமாசீயரு ளொருவராகிய சிவ. சங்கரபண்டிதர்
இந் நீண்ட கடிதம் இலங்காபிமானிப் பத்திரிகைக்குச் சங்கரபண்டிதர் எழுதிய தாகும். இதிலே பதினுன்கு விதிகளைக்

127
கூறிய சங்கரபண்டிதர் இம் முறைக்கு உடன்படுவீராயின் நாம் வாதஞ் செய்யத் தடை யாதுமில்லை என்று பகிரங்கமாக அறை கூறுகின்றர். சமய வாதங்கள் மிகத் தீவிரமாக நடந்தன என்பதற்கு இந் நீண்ட கடிதம் சிறந்த சான்ருகும். சங்கர பண்டிதருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே சமய மோதல்கள் நடைபெற் றமையும் சங்கரபண்டிதரதும், அவரது கூட்டத்தினரதும் எதிர்ப்பினைக் கிறிஸ் தவர்கள் அறிந்து அவர்மீது வெறுப்புக் கொண்டிருந்தனர் என்றும் அறிய ஆதா ரங்களுள:
சங்கரபண்டிதரும், அவர் கூட் டாளிகளும் சில வருஷங்களாகக் கிறிஸ்தவ லேதாகமத்துக்கெதிராகப் பிரயாசைப்பட்டு ஒர் கண்டனமியற்று கின்றனர். . . சங்கர பண்டிதரும், வேறு சில வாலிபரும் செ. டி. பொஸ் வெல் ஐயரிடத்திற் போய் அதை அந்தரங்கத்திற் தர்க்கித்துப் பார்ப் பதற்கு ஓர் சமயத்தை நியமிக்கும் படி கேட்டுக் கொண்டார்கள். . பொஸ்வெல் ஐயரவர்கள் உண்மையே மேற்கொள்ளுமென அறிந்து சங்கர பண்டிதரையும், அவர் கூட்டாளிகளை யும் சந்திக்கப் பூரண சித்தமுடையவ ராகி அவர்கள் தம்மிடத்தில் வரும் படி விரும்பிநிற்கின்றனர். என்ற க்டிதத்திலிருந்து கிறிஸ்தவ சைவ தர்க்கங்கள் நடைபெற்றன எனவும், அத் தர்க்கங்கள் நடைபெறுவதற்குச் சமயம் நியமிக்கப்பட்டுக் குறிப்பிட்ட நேரத்தில் அவை நடைபெற்றன எனவும் அறிகின் Gopib.
இவ்விதமாகச் சங்கரபண்டிதர் பாதிரி மாரையும், கிறிஸ்தவர்களையும் நோக்கிக் கண்டனப் பிரசுரங்களையும், பத்திரிகைக் கடிதங்களையும் எழுதியதோடு நில்லாது கிறிஸ்தவ சமய கண்டன நூல்களையும் எழுதினர். கிறிஸ்துமத கண்டனம், மிலேச்ச மத விகற்பம், சற்பிரசங்கம் என்பன அவர் எழுதிய கண்டன நூல்களாகும். இந்நூல் களைப் படிக்கும்போது சங்கரபண்டிதர்

Page 138
28
கிறிஸ்துவ நூல்களைக் கற்று, அவற்றில் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்பதனை அறிந்தே அம் மதத்தைக் கண்டித்துள் ளார் என்பது புலனுகின்றது. கிறிஸ் துவத்தை எதிர்த்துச் சைவத்தை நிறுவும் இடங்களில் இரு மத நூல்களையும் ஆதார மாகக் கொண்டே உண்மையை நிறுவ முயலுகின்றர். தனது கருத்தை வெளியிட விவிலிய நூலில் இருந்து மேற்கோள்கள் காட்டிச் செல்வது இவருக்கு விவிலிய நூலில் இருந்த ஆழ்ந்த அறிவை விளக்கு கின்றது.
கிறிஸ்துவ நூல்களிலே நிறைந்த பயிற்சியும் பரந்த அறிவும் இருந்தமை யாலேயே பண்டிதரவர்கள் அச்சமயத்துக் குரிய நூல்களைக் கொண்டே அம்மார்க்கத் தைக் கண்டிப்பதில் சிறந்து விளங்கினர். 1882ஆம் ஆண்டில் அச்சிட்டு வெளியிடப் பட்ட கிறிஸ்துமத கண்டனம் என்னும் நூலிலே இப்பண்பினைப் பரக்கக் காண லாம். கிறிஸ்துமார்க்கத்தின் உயிர்நிலையை நன்குணர்ந்தவரான பண்டிதர் அதன் உயிர்குடிக்கக்கூடிய பாணங்களைத்தொடுத் தார். அவருக்கு முன்னரும் அவர் காலத் திலும் வேறு சிலரும் நடத்திய போர்க ளுக்கு இறுதி வீச்சாகவும் அவற்றை முடி வாக்கும் செயலாகவும்அமைந்தது பண்டித ரின் "பாசுபதாஸ்திரம். முத்துக்குமார கவிராசர் (1780-1851) ஞாணக்கும்மி, யேசுமத பரிகாரம் என்னும் இருநூல்களால் கண்டனப் போருக்கு அறைகூவிக் கொடி யெடுத்தார். நாவலர்,தாமோதரம்பிள்ளை முதலியோர் முழுமூச்சான போரை நடத் தினர்; சங்கரபண்டிதர் எதிரியை வீழ்த்திக் கிடத்திவிட்டார். மதுரை சதாவதானம் சொ. மு. செட்டியார் 1882இல் பாடிய ஒரு செய்யுள் இக்கருத்தை உருவகமாக்கி யுள்ளது. கவித்துவம் கொப்புளிக்கும் அச்செய்யுள் நினைவுகூரத்தக்கது:

யோகேஸ்வரி கணேசலிங்கம்
முத்துக் குமார கவிராச சேகரன் மொய்யமரிற் றத்தித் தடக்குண்டு நாவலர் தாவச் சவிமடிந்து சித்தங் கெடவுட றமோத ரேந்த்ரன் சிதைத்த பைபிள் செத்துக் கிடக்குது பார்சிவ சங்கரன் றெம் முனைக்கே
* பைபிளை வீழ்த்திய "" போரில் கவி ராசர், நாவலர், தாமோதரனுர், பண் டிதர் ஆகிய நால்வரும் நயம்படக் குறிப் பிடப்பட்டிருத்தல் கவனிக்கத்தக்கதாகும். பதிற்றுப்பத்து என்னும் நூலில் பெருஞ் சேரல் இரும்பொறை என்ற சேரமன்னனை அரிசில்கிழார் பாடிய செய்யுள் ஒன்றிலே புலவரைத் தோன்றல் யாவது சினப்போர் நிலவரை நிறீஇய நல்லிசைத் தொலையாக் கற்பநின் தெம்முனை யானே? என்னும் அடிகள் வருகின்றன. ** தெம் முனை’ என்ற பிரயோகம் அங்கு வருகிறது. அது வேருெரு காலத்துப் போர் சென்ற நூற்றண்டிலே நிகழ்ந்த பிறிதொரு போரின் தெம்முனை பற்றியும் அதில் முன் னின்ற தொலையாக் கல்வியுடைய சங்கர பண்டிதர் பற்றியும் வியந்து பாடியிருக்கி ருர் இராமசாமிச்செட்டியார்.
மேற் கூறியவாறு தான் வாழ்ந்த காலத்தின் தேவையை உணர்ந்து, அத ஞலே உத்தப்பட்டுச் சைவசமய பரிபால னத்துக்காகச் சமயப் போரில் ஈடுபட்டுக் கண்டன நூல்களையும், பத்திரங்களை யும் வரைந்த பண்டிதர் சைவப் பிரசங்கம் செய்வதில் வல்லவர். தர்க்கமுறையும், உண்மையும் அமைத்துவிளங்கும் நூல்களை எழுதிய சங்கரபண்டிதர் பிரசங்கங்கள் கேட்போர் மனதை ஈர்ப்பதாக அமைதல் இயல்பே. அவரின் பிரசங்கத்தைக் கேட்டு உண்மையுணர்ந்ததனுல் மதம் மாறும் எண் ணத்தைக் கைவிட்டோர் பலர். வெண்ணி றணிந்து சிவவேடம் பொலிய இவர்

Page 139
நாவலரும் சிவசங்கர பண்டிதரும்
செய்யும் பிரசங்கத்தைக்கேட்கப் பலஇடங் களிலிருந்தும் மக்கள் கூடுவார்கள். இவ ரின் ஆற்றல்மிக்க பிரசங்கச் சீரினைக் கையறுநிலைச் செய்யுளொன்றில் அவர் மானுக்கராகிய சுன்னகம் முருகேச பண்டிதர் பின்வரும் செய்யுளால் விளக்கு 6) Intti :
சைவத்தை காட்டிப் பரமத மோட்டத்
தயங்குமொரு தெய்வத்தைப் போல்வரு சங்கர பண்டித
தேசிகர்தாம் மெய்வைத்த கண்டிகை வெண்ணிற்றி னேடு
விளங்கிடச்செய் சைவப் பிரசங்கத் தெள்ளமு தென்றினிச்
சார்குவமே,
நாவலரோடு சமகாலத்தில் வாழ்ந்து, நாவலரைப் போலவே தன்னலமற்ற தொண்டுகளை ஆற்றிய சங்கரபண்டிதர்
சங்கரபண்டிதர் வாதமும்
** அதிதூர வாசியாகிய பிறஞெருவ செய்யாது தன் மாட்டுள்ள இரத்தினமே இரத்தினம் என முன்னரே நிட்சயித்து அதிதூர வாசிகளாசிய எம்மனேர் சமய நம்மது மதமன்றென முடித்து நம்மை பூ நம்மதமோ நும்மதமோ நன்மதமென மதத்தை உபயவாதி சம்மத சன்மத 6 பிரமாண நாட்டிப் ப்ோலி மாட்டி நம்ெ புகல்வேண்டும். புகின் நாம் நிரூபிதப்
மத நிறுத்துதும் !
- சங்கரபண்டிதர்
5

129
சென்ற நூற்றண்டில் தோன்றிய சமயத் தலைவர்களுள் ஒருவராவர். நாவலர் இவர் மீது நன்மதிப்புக் கொண்டிருந்தவர் என்ப தற்கு நாவலரது பெரியபுராண வசனத் துக்கு இவர் சிறப்புப்பாயிரம் பாடிய மையே தக்க சான்ருகும். நாவலர் அரும் பெருஞ் சாதனைகளை நிறைவேற்றினு ரென்ருல் அவர் காலத்தில் வாழ்ந்த பண்டிதர் போன்றேரின் பாரிய நிகழ்ச்சி களும் அவருக்குச் சாதகமாய் இருந்தமை மனங்கொள்ள வேண்டியதொன்ருகும் நாவலர் இயக்கத்தின் தன்மையையும் கூறுகளையும் தெளிவாய்த் தெரிந்துகொள் ளுவதற்குச் சங்கரபண்டிதர் போன்றேர் பற்றிய நுண்ணுய்வுகள் பெரிதும் வேண்டப் படுவனவாகும். யாழ்ப்பாணத்துத் தமிழ்க் கல்வி மரபில் பண்டிதருக்குத் தனியான தோர் இடமுண்டு.
கிறித்துவப் போக்கும்
ன் மாட்டுள்ள இரத்தினத்தைக் கண்டலும்
இரத்தினம், அவன்மாட்டுள்ளது போலி ப் பின்னர் கண்டாயப் புகுவான் போன்று த்தைக் காணுமுன்னரே நும்மதமே மதம் தும் மதத்துப் புகுவிப்பான் புகுந்த பின்னரே வாசித்தாராய் புகுந்த நீவிரே முன்னர் நும் vட்சண லட்சிதமாகி அமைந்தமை காட்டிப் மதிர் நிறுவியபின்னர் நம் மதத்தை மறுக்கப் பிரகாரானுசாரமாக நும்மதம் மறுத்து நம்
விக்கியாபநம், இலங்காபிமானி (ஏப்ரல், 1864)

Page 140
நாவலரும் தா
மனுேன்மணி சண்முகதா
நாவலர் இளமையிற் கற்ற தமிழ்க் கல்வி அவர் வாழ்வை நெறிப்படுத்தியது. தமிழ்மொழியையும் நல்லொழுக்கத்தை யும் சைவ சமயத்தையும் வளர்க்க வழி வகுத்தது. கல்வி, செல்வம், உத்தியோகம் என்ற மூன்றம்சங்களும் நிரம்பியிருந்த குடும்பத்தில் நாவலர் பிறந்தார். அவரது தமையன்மார்கள் அரசாங்க உத்தி யோகம் வகித்தவர்கள். இதனுல் தம்பி யையும் தமது பாதையிலே செலுத்த முயன்றனர். சிறுவராக இருந்த நாவலர் கற்ற நீதி நூல்களும் நிகண்டுகளும் அவர் தமிழறிவை வளர்த்தன. பன்னிரண்டாம் வயதிலே ஆங்கிலக் கல்லூரியிலே சேர்ந்து ஆங்கிலத்தையும் கற்ற நாவலருக்குப் பார்சிவல் பாதிரியாரின் நட்பு மிகுந்த பயனளித்தது. பாடசாலையில் ஆங்கிலக் கல்வியைக் கற்கும்போதே தமிழ்க் கல்வி யையும் கைவிடாது நாவலர் வாழ்ந்தார். அதஞல் தமிழறிவும் ஆங்கில அறிவுர அவரி டம் ஒருசேர அமைந்தன. கிறிஸ்தவ பைபி ளைத் தமிழாக்கும் முயற்சியை நாவலர் ஏற்றுக் கொள்வதற்கு இவ்வறிவே உதவி யது. நாவலரது பைபிள் மொழிபெயர்ப்பே சிறந்தது என்ற பெருமையையும் தேடித் கொடுத்தது. தென்னகத் தமிழறிஞராக அக்காலத்தில் விளங்கிய திருவாவடுதுறை ஆதீனத்து மீனுட்சிசுந்தரம்பிள்ளையின் வர லாற்றிலே நாவலரை இணையவைத்தது.

மோதரம்பிள்ளையும்
',பிற்காலத்தில் ஆறுமுகநாவலர் சென்னைக்கு வந்திருந்தபொழுது பல ருடைய வேண்டுகோட்கிணங்கி அவர் எழுதிய பைபிள் தமிழ் வசன புத்த கத்தைப் பரிசோதித்தற்குத் தேர்ந் தெடுக்கப்பட்டவர்'
என்று மழவை மகாலிங்க ஐயரது வாழ்க் கையோடும் தொடர்புறுவதற்கும் அவ ரது இரு மொழியறிவே துணைநின்றது, இச் செய்தி ஆறுமுகநாவலரது சரித்திரத் தினை எழுதிய கனகரத்தின உபாத்தியாய ராலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.2
இவ்வாறு நாவலர் ஏறக்குறையப் பதின் நான்கு வருடங்கள் இரு மொழி யறிவு பெற்ற காலத்தில் அக்காலச் சூழ லும் அவர் சீர்திருத்தவாதியாக மாறு வதற்கு வழிவகுத்தது. கிறிஸ்தவர்கள் தமது சமயத்தைப்பரப்பக் கையாளுகின்ற அதே முயற்சியினைச் சைவர்களும் அக்கா லத்தில் மேற்கொள்ளலாயினர். இவ் வாறு எதிராக முயற்சி எடுப்பின் கிறிஸ்தவ மதத்தை முற்ருக எமது நாட்டிலிருந்து அழித்துவிட முடியும் என்ற நம்பிக்கை சைவர்கள் மத்தியிலே தோன்றியது. அந்த நம்பிக்கை ஆறுமுகநாவலர் மனதி லும் உரம்பெற்று வளர்ந்தது. புதிய கல் விப்பணியிலே இறங்கி கிறிஸ்தவர்கள் மத்தியிலே சிந்தனைக்குரியவராக நாவலர் விளங்கினர். இந்நோக்கம் அவரது உத்தி யோகப் பணியையும் துறக்கச் செய்தது.

Page 141
நாவலரும் தாமோதரம்பிள்ளையும்
1847ஆம் ஆண்டளவில் சைவப் பாட சாலைகளைத்தாபித்துத் தமிழையும் சைவத் தையும் வளர்க்கும் பணியில் ஈடுபடுத் தியது. கிறிஸ்தவ மதத்திற்கு ஒப்பான மதமாக அன்றிச் சைவம் கிறிஸ்தவத் திலும் மேம்பட்ட மதமாக வளர வேண் டும் என நாவலர் எண்ணினர். கிறிஸ்த வர் மதம் பரப்பக் கையாண்ட வழிகளைத் தாமும் கையாள முனைந்தார். நாவலர் வெளியிட்ட சைவதுஷண பரிகாரம் என் னும் நூல் இதற்குச் சான்று பகருகின்றது. இந்நூலுக்கு எதிர்ப்பாகவும், மறுப்பாகவும் கிறிஸ்தவர்கள் சைவமகத்துவ தூஷண பரிகார நிராகரணம் அல்லது சுப்பிரதீபம் என்ற நூலை வெளியிட்டனர். இவ்வாறு எதிர்ப்புக்கள் தோன்றியதனுல் நாவலர் தன் பணியிலே பல கோணங்களிலே துணிந்து செல்லும் வாய்ப்பேற்பட்டது. சைவத்தின் காவ லஞ க முன்னின்று உழைக்கவும் முடிந்தது. தனியொருவராக நின்று பிறமதத்தையும், பிற கலாசாரத் தையும் எதிர்க்க நாவலர் அஞ்சா நெஞ் சத்துடன் கடமைபுரிந்தார்.
** இத்தேசத்திலுள்ள வறியவர் கள் அநேகர் சைவசமயமே மெய்க் சமயமென்று அறிந்தும் அன்னம் வள் திரம் முதலியவை பெற்றுப் படிக்குப் பொருட்டும் உபாத்தியாயருத்தி யோகம் பிரசங்கியுத்தியோகம் முத லிய உத்தியோகங்களைச் செய்து சப் பளம் வாங்கும் பொருட்டும் கவர்ண் மெண்டு உத்தியோகங்களினிமித்தப் துரைமார் களிடத்தே சிபார்சு செய் விக்கும் பொருட்டும் கிறிஸ்துசமயப் பெண்களுள்ளே சீதனமுடையவர்களை களையும் , அழகுடையவர்களையும் விவாகம் செய்யும் பொருட்டுப் கிறிஸ்து சமயத்திலே பிரவேசிப்பாரா யினர்கள்."3
என்னும் நாவலரின் கூற்று அவரது காலத் துச் சமூக நிலையைப் பிரதிபலித்துச் காட்டுகின்றது. மதமாற்றம் மனப்பூர்வ மாக நடைபெறவில்லை. மக்கள் பாதிரி

131
மார்களுக்கு முன்னே கிறிஸ்தவ வேடம் போட்டு நடித்து வாழ்ந்ததைத் தாமெழு திய யாழ்ப்பாணச் சமயநிலை என்ற புத்தகத் திலே நாவலர் விரிவாக விளக்கிச் செல் கின்றர்.
இத்தகைய சூழ்நிலையேதான் சி. வை. தாமோதரம்பிள்ளை பிறந்தபோதும் எமது நாட்டில் நிலவியது. நாவலரது பிறப்புச் சூழலைப்போன்று சைவசமயச் சூழலிலே சி. வை. தாமோதரம்பிள்ளை பிறக்கவில்லை. அவர் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்திருந்த பெற்ருேருக்குப் புதல்வராகப் பிறந்தவர். அதனுல் இளமைக் காலத்தில் தவிர்க்க முடியாதபடி கிறிஸ்தவராக அவர் வாழ வேண்டிய நிர்ப்பந்தமேற்பட்டது. நாவல ரது பெற்றேராகிய கந்தப்பிள்ளையும் சிவகாமியம் மையும் சைவசமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தமையால் பிறப் பால் நாவலர் சைவராகப் பிறந்தார். ஆணுல் சி. வை. தாமோதரம்பிள்ளை கிறிஸ் தவராகவே பிறந்தார். இதனுல் அவர் பிற் காலத்தில் சைவராக மாறிய போதும் பல ரது கிண்டல்களுக்கும் ஆளாக நேரிட்டது. குறிப்பாக சைவத்தமிழரான சபாபதி நாவலரால் "பிறர்மதம் பேணுவா" ரென்று இழித்துரைக்கவும் பட்டார். தன் ஞட்டுத் தமிழறிஞரான சி. வை. தாமோ தரம்பிள்ளையைச் சபாபதி நாவலர் திரா விடப் பிரகாசிகையில் தாழ்த்திக் கூறுவதற் குச் சி. வை. தாமோதரம்பிள்ளை கிறிஸ் தவராக இருந்ததே முக்கிய காரணமாக விருந்தது. அக்காலத்தில் நாவலரது சமயப் பணி பலரைச் சைவத்துக்குத் தழுவச் செய்தது போலவே சி. வை. தாமோதரம் பிள்ளையையும் மதம் மாறச் செய்தது.
ஆரம்பத்திலே கிறிஸ்தவ மதத்தை மேற்கொண்டிருந்த பிள்ளையவர்கள் பின்னர் சைவத்தை நாடி இறுகிய சமயபக்தி யுடையவராகித் தமது அந்தியகாலம் வரையும் சிவபூசை மேற்கொண்டதும் நாவலர் பெருமான் போதனையால் என்பது உணரப்படும். 5 என்ற கருத்துப் பிற்காலத்தில் சி. வை. தாமோதரம்பிள்ளையின் சமய மாற்றத்

Page 142
132
திற்கு காரணம் கூறுவதாக அமைந்துள் ளது. ஈழத்தில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் அக்காலத்தில் பரப்பிய மதத்தைப் பலரும் தழுவியதால் அவர்களது சந்ததியினரும் புத்திபூர்வமற்றுக் கிறிஸ்தவராக வேண்டிய சூழ்நிலை யேற்பட்டது. வேகமாகப் பரவி வந்த பிறமதத்தைத் தடுத்து நிறுத்தி மீண்டும் ஈழத்தில் சைவத்தைப் பரப்ப நாவலர் பணிகள் பல வழிகளிலும் உதவின. நாவலரது கட்டுரைகளும், பிரசங்கங்களும் கண்டனங்களும் சைவந் தழைக்கப் பேரு தவி புரிந்தன, பலர் நாவலர் போதனை களால் மனந்திரும்பி எது மெய்ச்சமய மென்பதை உணர்ந்து மீண்டும் சைவத் தைத் தழுவினர். இதனைச் சி. வை. தாமோதரம்பிள்ளையே தமது நூலிற் கூறி யுள்ளார்.
மனுஷனச் சிறப்பிப்பது யுத்தி. யுத்திக்காதாரம் பிரமாண மநுபவ முதலியன. இத்தன்மைய பிரமா ணுநூபவங்களால் எச்சமய மெய்ச் சமயமென்று ஒரு மனுஷன் காண்கின் ருனே அச்சமயத்திற் புகுதலே யவற் குத் தகும். அதுவே கடமை. அவ் வாறு மெய்யெனக் கண்ட சமயத்திற் புகானேல் அவன் மனுஷனல்லன்.8
**உண்மைகளைக் கடைப்பிடித்துய்தல் வேண்டுமென்ற பேரவாவால் ஏறக்குறைய இருபது வருஷமாக ஒருபட்சத் துணிபு சிறிதுமில்லாது சைவவேதாந்த சித்தாந்த ஸ்மார்த்த பெளத்த அருகாதி இந்து சமயங்களையுங் கிரேக்க லுத்தேரிய ரோமானிய புரோத்தெஸ்தானதி கிறிஸ்த சமயங்களையும் ஆராய்ந்து அடியேன் சைவமே யிவற்றுள்ளெல்லாஞ் சிறந்த தெனக் கொண்டனன்’7 என்று சி. வை. தாமோதரம்பிள்ளை தன்பெற்ருேர் கடைப் பிடித்த சமயத்தைத் தான் கைவிட் டமைக்கு விளக்கம் கூறுகின்ருர், நாவலர் சமயப் பணியினுல் சைவத்தின் உண்மைத் தன்மை உணர்ந்து மதம் மாறியவர்களில் ஒருவராகச் சி. வை. தாமோதரம்பிள்ளை நாவலரின் சமயப்பணியை மேற்கொண்ட பரம்பரையின் முதல்வராக விளங்குகின்

மகுேன்மணி சண்முகதாஸ்
ருர். அதனல் நாவலரது பிறபணிகளை யும் தாமோதரம்பிள்ளை மேற்கொள்ள முயன்ருர், அவற்றைத் தன் வாழ்க்கை யின் குறிக்கோளாகவும் கொண்டு வாழ்வு நடத்தினுர்.
சமயப்பணி ஒன்றே நாவலருக்கு முதற் பணியாகத் தோன்றியபோதும் அப் பணியைச் சரிவரச் செய்வதற்காக அவர் கையாண்ட வழிகள் ஏனைய பணிகளை அதனேடு இணைத்துக்கொண்டன. நமது சமயத்தைப் பற்றித் தெளிவுற அறிந்து கொள்வதற்காக நாவலர் சைவநுரல்களைத் தேடிக் கற்றர். எமது சமயத்தின் முத னுால்கள் வடமொழியிலிருந்தமை கண்டு அம்மொழியையும் அவர் கற்ருர், தாம் கற்றதைப் பிறர்க்கும் உணர்த்தினர். நல்ல உபாத்தியாயர்களையும், சைவப் பிரசாரகர்களையும் உருவாக்கவேண்டு மென்ற நோக்கில் பாடசாலைகளை நிறுவ முயற்சித்தார். கிறிஸ்தவர்களிடமிருந்த பிரசங்க மரபினைத் தமிழுக்கும் அறிமுக மாக்கினர். வண்ணுர்பண்ணைச் சிவன், கோயிலிலே தனது முதலாவது சமயப் பிரசங்கத்தைத் தொடங்கினர். கற்றுத் தேர்ந்தவர்களை மேலும் சைவசித்தாந்த நூல்களிலே விற்பன்னராக்கி அவர்களை யும் கிறிஸ்தவப் பாதிரிமார்களைப்போல மக்கள் மத்தியிலே அனுப்பிப் பிரசாரம் செய்விக்கவேண்டும். பொதுமக்களை வசப் படுத்தவேண்டும். கிறிஸ்தவ ஆலயங் களிலே தொழுகை நடப்பதுபோன்று எங்கள் திருக்கோவில்களிலும் திருமுறை களை ஓதி நியமமாகப் பூசைகள் நடத்த வேண்டும். கிறிஸ்தவர்களுடைய கீதங் களைப் போலப் பக்திப் பாடல்களை இசைக்கவேண்டும். சமயக் கல்வியினைப் பரப்புவதற்காக அழகான புத்தகங்களை அச்சடித்து வெளியிடவேண்டும். இத் தகைய சிந்தனைகள் நாவலர் உள்ளத்திலே எழுந்தபோது அவற்றைச் செயற்படுத்து வதற்காக உழைக்கத் தொடங்கினர். 1848ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் தன்சேவையை இத் துறையிலே முழுமனதுடன் அர்ப்பணித்

Page 143
நாவலரும் தாமோதரம்பிள்ளேயு
o
துச் செயலாற்றிஞர். முதியவர்களுக்குச் கல்வியறிவினை யூட்டல், சிறுவர்களுக்குச் கல்வியறிவினை வளர்க்கத்தக்க வகையில் ஏற்ற நூல்களை எழுதுதல், பழைய நூல் களைப் பரிசோதித்துப் பிழையறப் பதிட் பித்தல், பிரசங்கம் செய்து சமயஅறிவினை மக்கள் மத்தியிலே பரப்புதல், கிறிஸ்தவப் பாதிரிமார்களுடைய எதிர்ப்புக்களை முன் னின்று முறியடித்தல் என்பன நாவலரது அரும்பணிகளாக அமைந்தன. இதனுல் கிறிஸ்தவப் பாதிரிமார்களுடைய வழி காட்டலிலே நாவலர் சென்ருர் என்று கொள்ளினும் தவருகாது. ஆனல் கிறிஸ் தவர்களுடைய முயற்சியைப் பொது நன்மைக்காகப் பயன்படுத்தியமையே அவர் செய்த அருந்தொண்டாகும்.
** நம்மன்பர்களே, நெடுங்கால அநுபவத்தால் அறிந்த உண்மைகளைத் தேசாபிமானத்தினுலுஞ் சமயாபிமா னத்தினுலும் உங்களுக்கு வெளிப் படுத்திய நம்மை உங்களுக்குப் பகைவி ரெனக் கொண்டு தூஷித்துத் தி யாது மேலே பேசப்பட்ட குறைவ பாடுகளை அகற்றி உங்கள் இகபர லாபங்களை அடையும்படி முயலக் கட வீர்கள். நம்மை நீங்கள் எப்படி தூவிக்கினும் உங்களுக்கு நன்பை யாக முடிபவைகளை உங்களுக்கு வெளிப்படுத்துதற்கு நாஞ் சிறிது தடைப்படாவண்ணம் சிவபெருமான் திருவருள் செய்க, பொதுப்படப் பல ருக்கும் நன்மைகளைச் சொன்னுேம் திருந்த விருப்பமுடையவர் திருந்தட் டும். திருந்த விருப்பமில்லாதவா தமத்குப் பயன்படாததாயினும் பிற சிலருக்காயினும் பயன்படலாமேயென் றெண்ணி வாய் மூடிக்கொண்டிருக்கட் டும். நாங்கள் எப்படி நடக்கினும் நடப்போம். நீர் ஒன்றும் பேச திருக்கலாமே என்பார்க்கு B5frL எப்படிக் கண்டிப்பினும் கண்டிப்போம் நீர் ஒன்றும் பேசாதிருக்கலாமே என் போம்ே. பிறர் செய்யும் அநீதிகளை கண்டறிதற்கு நீர் யார்? கடவுளே!

133
அரசரோ என்பார்க்கு கடவுள் கட் டளைக்கும் அரசர் கட்டளைக்கும் udtrCr கவே பிறர்செய்யும் அநீதிகளை அக் கட்டளைகட்கு அமைந்து கண்டித்த லாகிய நமது நீதியைக் கண்டித்தற்கு நீர் யாரோ? சற்றே பேசும் என் போம்??8
என்னும் நாவலரது கூற்றுக்கள் அவரது பணிக்கு மக்கள் மத்தியிலே எதிர்ப் பிருந்ததை எடுத்துக்காட்டுகின்றது. எனி னும் அஞ்சா நெஞ்சத்துடன் நாவலர் தமக்கேற்பட்ட எதிர்ப்புக்களைச் சாடினர். மக்கள் மத்தியிலிருந்தும், கிறிஸ்தவப் பாதிரிகளிடமிருந்தும், அக்காலத்து அர &F nr (šis உத்தியோகத்தர்களிடமிருந்தும் அவருக்குப் பல எதிர்ப்புக்கள் ஏற்பட் டதை அறியமுடிகின்றது. முக்கியமாக, கல்விப்பணியை ஆற்ற முற்பட்டபோது பாடசாலைகளை நிறுவி மக்களைத் தமிழை யும் சைவமதக் கருத்துக்களையும் படிக்க வைக்க எண்ணியபோது பல தடைகள் அவருக்கு ஏற்பட்டன. 1845ஆம் ஆண்டு நாவல்ர் மாணவர்களைச் சேர்த்துத் தமிழையும் சைவத்தையும் கற்பிக்கத் தொடங்கினர். கைமாறு கருதாமல் இல வசமாக இப்பணியைச் செய்தார். அக் காலத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்ப் பள்ளிக்கூடங்களெல்லாம் கொட்டில்களி லும் திண்ணைகளிலும் பிள்ளைகளை வைத் துப் படிப்பித்துப் பணம் வாங்கும் நிறுவ னங்களாகவே இருந்தன. நாவலர் இப் பணியை இலவசமாகச் செய்வதற்காக 1848இல் யாழ்ப்பாணம் வண்ணுர்பண்ணை யிலே சைவப்பிரகாச வித்தியாசாலை என ஒரு பள்ளிக்கூடத்தை ஆரம்பித்துத் தன் மாணவர்களை அங்கு ஆசிரியர்களாக நிய மித்துக் கல்வி புகட்டிவந்தார்.
பள்ளிக்கூடத் தேவைக்கான பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்கு அச்சியந்திர சாலை அவசியமென உணர்ந்த நாவலர் 1849ஆம் ஆண்டு சென்னைக்குச்சென்ருர், தமிழ்ப் புத்தகங்களைப் பதிப்பித்து வெளி யிடவேண்டுமென்ற எண்ணம் நாவல ருக்கு ஏற்பட்டபோது தென்னகத்தவர்

Page 144
134
பலருடைய உதவியும் அவருக்குக் கிடைத் தது. அப்புத்தகங்களை வெளியிடுவதற் கான காரணத்தை நாவலரே எடுத்துக் கூறியுள்ளார்
** முற்காலத்திலே உள்ள மகிமை பொருந்திய புலவர்களாலே தமிழிற் செய்யப்பட்ட நூல்களுள்ளும் உரைக ளுள்ளும் அளவில்லாதவைகள் அச் சிற் பதிப்பிக்கும் வழக்கம் இல்லாமை யால் இறந்துபோயின. இவ்வாறு இக்காலத்தில் எஞ்சியிருப்பவைகளும் கையெழுத்துப் பிரதிகளிலே எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும் பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு பிழை பட்டனவாய்ச் சிலவிடங்களின் மாத் திரம் அருகி வழங்குகின்றன. அவற் றுள் யாதாயினும் ஒன்றைக் கற்க விரும்புவோர் அஃது இருக்கும் இடம் ஆராய்ந்தறிதல் அரிது, அறிந்தாலும் பெறுதல் அரிது. நெடுநாளாகச் செய்த பெருமுயற்சியினலே பெற்ரு லும் எழுதவல்லார் கிடைத்தல் அரிது. கிடைத்தாலும் எழுத்துக்கூலி மிகப் பெரிதாதலால் எழுதுவித்துக்கொள் ளுதல் அரிது. எழுதுவித்துக் கொண் டாலும் ஒத்துப் பார்வையிட்டுக் கொள்ளுதல் அரிது. ஒத்துப் பார்வை யிட்டுக்கொண்டாலும் கற்கும்போது பிழையற ஒதுதலும் பொருள் துணி தலும் கூடாமையால் விளையும் வருத் தம் மிகப்பெரிது. ஒரு நூலைக் கற் றற்கே இப்படிக் காலநீட்டமும் பெரு முயற்சியும் பொருட்செலவும் வருத் தமுமுளவாயின் சில வாழ்நாளையும் அதற்குள்ளே பல பிணிகளையும் கவ லைகளையுமுடைய சிற்றறிவினராகிய மனிதர்கள் சில காலத்திலே பல நூல் களைக் கற்று வல்லராதல் எப்படி? இதனுலன் ருே நமது தேசத்தாருக்குத் தமிழ்க்கல்வியிலே விருப்பமும் முயற் சியும் வரவரக் குன்றுகின்றன. இவ் வேதுவினுல் இப்பொழுது எஞ்சியா யிருக்கும் நூல்களும் விரைவில் இறந்து விடுமென்பதற்கு ஐயமில்லை. ஆத

மனுேன்மணி சண்முகதாஸ்
லால் யாவரும் எளிதிற் பயன்படும் பொருட்டு முக்கியமாய் உள்ள நூல் களையும் உரைகளையும் பலவிடங்களி னின்று வருவிக்கப்பட்ட பல பிரதி ரூபங்களைக்கொண்டு ஒருவாறு பரி சோதித்து அச்சிற் பதிப்பித்துப் பிர கடனஞ் செய்தல் வேண்டும்.
செய்யுள் வடிவாகிய நூல்களும் அவைகளின் உரைகளும் கற்று வல் லவர் சிலருக்கன்றி மற்றவர்களுக்குப் பயன்படாவாம். ஆதலால் விவேக மல்லாதவர்களுக்கும், விவேகமுள்ள வர்களுக்கும், இங்கிலீசு பாஷையைக் கற்றலிலும் லெளகீகங்களைச் செய் தலிலும் தங்கள் கவனத்தைப் பெரும் பான்மை டோக்குகின்றவர்களுக்கும், பெண்களுக்கும் எ விதி ந் பயன் படும் பொருட்டு நீதி நூல்களையும் சரித்திரங்களையும் சமய நூல்களையும் லெளகீக நூல்களையும் வெளிப்படை யாகிய வசன நடையிற் செய்து அச் சிற் பதிப்பித்துப் பிரகடனஞ் செய்தல் வேண்டும். '9
இக்கூற்றுக்கள் நாவலர் பதிப்பு முயற் சிகளிலே ஈடுபட்டதற்கான காரணத்தை யும், அவர் பதிப்புகளின் தன்மைகளையும், அவரெழுதிய வசன நூல்களின் பண்பை யும், பாடப்புத்தகங்களின் தேவையையும் பின் வந்தோர்க்குத் தெளிவாக உணர்த்து கின்றன. நாவலரது இப்பணியிலே பின் வந்தோரும் ஈடுபடத் தூண்டும் விகை யிலே அவர் தமது கருத்துக்களைத் தெரி வித்துள்ளார். இக்கருத்துக்கள் அவர் பரம்பரையிலே வந்தவர்களுக்கு ஊக்க மளித்தன.
நாவலர் பணிகளிலே குறிப்பிடத்தக்க தொன்றன நூல்களைப் பதிப்பிக்கும் பணி யினை அவர் காலத்திலேயே வாழ்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளை தொடர்ந்து ஆற்றி நாவலரது பரம்பரையிலே ஒரு முக்கிய இடத்தைப் பெற்ருர். "நல்லைநக ராறுமுக நா வ ல ர் பிறந்திலரேல்

Page 145
நாவலரும் தாமோதரம்பிள்ளேயும்
சொல்லு தமிழெங்கே? சுருதி எங்கே?" என்று வியந்த சி. வை. தாமோதரப் பிள்ளை யவர்கள் நாவலர் அடிச்சுவட்டிற் சென்று தமிழிலக்கியத்திற்கு அழியாத தொண்டினைச் செய்துள்ளார்கள். நாவலி ரைப் போலவே தனக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த இவர் இளமைக் காலத்தில் ஞானக்கும்மி, யேசுமத பரிகா ரக் என்னும் நூல்களைப் பாடியவரும் அச் காலத்தில் சிறந்த தமிழ்வித்துவானகத் திகழ்ந்தவருமான சுன்னகம் முத்துக்குமா ரக் கவிராயரிடம் கல்விகற்றவர். இலக் கிய நூல்களைக் கற்றதுடன் இலக்கணட் பயிற்சியும் பெற்றவர், அக்க்ாலத்தில் தமிழ் கற்ற ஏனையவரைப் போலல்லாது தாமோதரம்பிள்ளை நாவலரைப் போன்று தமிழை மட்டுமன்றி ஆங்கிலத்தையும் கற்க வேண்டுமென்ற அவாவினுல் உந்தட் பட்டு யாழ்ப்பாணம் சர்வசாத்திரக் கலாசாலையாகிய வட்டுக்கோட்டைச் செமினறியில் உயர்தரக் கல்வியையும் கற்றவர். கறல் விசுவநாதபிள்ளை, வித்துவான் கதிரைவேற்பிள்ளை, நெவின்ஸ், சீ. டீ. மில்ஸ் முதலான பேரறிஞர்கள் இவருக்கு ஆசிரியர்களாயிருந்தனர். கணி தம், ஆங்கிலம், தத்துவம், வானசாஸ் திரம், தமிழ் என்னும் பாடங்களிலே விசேட திறமை பெற்று முதல் மாணவ ராக விளங்கி எல்லோராலும் நன்கு மதிக் கப்பட்டவர். தாமோதரம்பிள்ளையின் தமி ழறிவைக் கண்ட நெவின்ஸ் ' பண்டிதர்' என்ற பட்டத்தை வழங்கிஞர். இருபதா வது வயதில் ஆங்கிலக் கல்வியை முடித்துக் கொண்டு தாமோதரம்பிள்ளை கோப்பாய் போதன வித்தியாசாலையின் ஆசிரியர் களுள் ஒருவராக நியமனம் பெற்ருர், இங்கு கற்பித்து வருகின்ற நாளிலேயே நீதிநெறி விளக்கவுரையை வெளியிட்டார்.
அந் நாளிலே சென்னையிலே இருந்த பார்சிவல் பாதிரியார் அவரது விவேகத் தையும், தமிழ்ப் புலமையையும் கேள்வியுற் றுச் சென்னைக் கழைத்துத் தினவர்த்தமானி என்னும் பத்திரிகை ஆசிரியராக நியமித் தார். அக்காலத்திலே சென்னைச் சர்வ

35
சாத்திரக் கலாசாலை தாபிக்கப்பட்டது. அக்கலாசாலையில் 1857ஆம் வருடம் முதன் முதல் நடத்தப்பட்ட பிரவேசப் பரீட்சைக் குத் தோற்றிச் சித்தி பெற்றதுடன், தொடர்ந்து பி. ஏ. பரீட்சையிலும் தமது ஆசிரியரான கறல் விசுவநாத பிள்ளையவர் களுடன் தோற்றிச் சித்தியடைந்தார். இதனுல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தவப்புதல்வன் என்ற பாராட்டையும் பெற்ருர், பின்னர் 1871ஆம் வருடம் நடத்தப்பட்ட நியாய சாஸ்திரப் பரீட் சைக்குச் சென்று சித்தியெய்தினர்.
நாவலர் வழிச்சென்று தாமோதரம் பிள்ளையும் சிறுவயது தொட்டே ஓய்வு நேரங்களில் பண்டைத்தமிழ்க் கிரந்தங் களைக் கற்பதிலும் பரிசோதனை செய்வதி லும் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். கடல் கோள்களாலும் பிற காரணங்களா லும் அழிந்துபோக எஞ்சியிருந்த சில நல்ல தமிழ் நூல்களும் அக்காலத்திற் செல்லரித்துச் சிதைவுறு நிலையிலிருந்தன. இவற்றைக் கண்டு தாமோதரம்பிள்ளை யவர்கள் அந் நூல்களை விரைவில் அச்சிட் டுப் பாதுகாத்தல் வேண்டுமென்பதை உணர்ந்து அப்பணியிலே ஈடுபடலாயினர். சிறு வயதிலேயே நீதிநெறி விளக்கத்தை அச்சிட்டிருந்தபோதும் அக்காலத்தில் நாவலரவர்கள் இப்பணியினை மேற்கொண் டிருந்தமை தாமோதரம்பிள்ளையின் கவ
னத்தைப் பெரிதும் ஈர்த்தது. தமிழகத்
திலே அப்போது வாழ்ந்த டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தமிழின் உயிர் நாடியாகவுள்ள சங்கநூல்களையும் காவியங்களையும் ஆராய்ந்து பதிப்பிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். நாவலரிடம் தாம் வெளியிடவிருக்கும் நூலைக் காட்டிப் பரிசோதித்து வெளியிடவேண்டும் என்ற எண்ணம் தாமோதரம்பிள்ளைக்கு ஏற்பட் டது. தொல்காப்பியம் சேனவரையத்தை நாவலரைக் கொண்டு பரிசோதிப்பித்து 1868ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வெளி யிட்டார். இந்நூல் வெளிவந்து பதினுெரு வருடங்கள் கழித்து நாவலர் இறைவனடி சேர்ந்தார். நாவலர் மேற் கொண்ட இப்

Page 146
星36
பதிப்புப் பணியினைத் தொடர்ந்து நல்ல நூல்கள் எல்லாவற்றையும் தேடியெடுத்து அவற்றை அச்சேற்றிப் பாதுகாத்தலே தமது வாழ்நாட் கடமையெனத் தாமோ தரம்பிள்ளை கருதினர். வீரசோழியம், இறையனர் களவியல், இலக்கணவிளக்கம் போன்ற இலக்கண நூல்களையும், கலித் தொகை, சூளாமணி, தணிகைப் புராணம் போன்ற இலக்கிய நூல்களையும் தேடிப் ப்திப்பித்தார். இவற்றுள்ளே தலைசிறந்த பதிப்பாகத் திகழ்வது கலித்தொகையா கும். கற்றறிந்தோர் ஏத்தும் கலித் தொகையினை அழிந்துபோகா வண்ணம் தேடிப் பதிப்பித்து உலகிற்குத் தந்த தாமோதரம்பிள்ளை வழக்கொழிந்த கலிப் பாவகைகளைச் சீர் தி ரு த் தி ப் பதிப்பித் துள்ளார்.
நாவலரது பரம்பரையிலே தோன்றிய ஏனையவர்களோடு ஒப்பிடுமிடத்து இப் பதிப்புப்பணி தாமோதரம்பிள்ளையைச் சிறப்புற வேறுபடுத்தி நிற்கிறது. இதற் குக் காரணம் இவரது முதுமாணிப்பட்ட மும் ஏனைய நவீன அறிவியற்றுறைகளில் இருந்த தேர்ச்சியுமாகும். பழைய நூல் களை அச்சேற்றிப்பதிப்பிக்குமிடத்து அவர் உரைப்பகுதிகளைப் பல கூருகப் பிரித்துப் பதவுரை, விரிவுரை, சொல்லிலக்கணக் குறிப்புக்கள், மெய்ப்பாட்டினைப் பற்றிய குறிப்பு என வேறு பிரித்து அச்சிட்டுள் ளார். அவரது தமிழறிவும் அதைப் பண் படுத்துமாறு அவரிடத்திருந்த ஆங்கில நூலறிவும்,தமிழ்நூலாராய்ச்சித் திறனும், பண்டைநூற்பயிற்சியும் பதிப்புத் தொண்டு சிறப்புற உதவின. இதனுல் பிற்காலத்தில் தமிழறிஞர் என்பதைவிடப் பதிப்பாசிரி யர் தாமோதரம்பிள்ளை என்ற புகழே அவருக்குக் கி  ைடத்த து. நாவலர் தொடக்கிவைத்த பதிப்புப் பணியினைத் தொடர்ந்து ஆற்றிச் சிறப்புற முடித்து வைத்த பெருமை அவருக்கேயுண்டு.
இன்னும் தாமோதரம்பிள்ளை நாவ லரைப்பின்பற்றித் தமது ஊராகிய ஏழாலை யிலே 1876ஆம் அண்டு ஒரு சைவப்பிர காச வித்தியாசாலையைத் தாபித்தார்.

மஞேன்மணி சண்முகதாஸ்
அங்கு கல்வித்திறமையுடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் பலபுத்தகங்கள் பரிசாகக் கொடுக்கப்பட்டன. மேல் நாட்டவர் எம் நாட்டிற் பள்ளிக்கூடங்கள் அமைத்துப் பொதுமக்களைக் கவர எண்ணியதை நாவ லர் எவ்வாறு தமது சொந்தப்பணியாகக் கொண்டாரோ அதேபோன்று தாமோத ரம்பிள்ளையும் பாடசாலை அமைத்துப் பிள்ளைகள் கல்விகற்க ஏற்பாடுகள் செய் தார். சுன்னுகம் குமாரசுவாமிப்புலவர் அப்பாடசாலையின் ஆசிரியராக நியமிக்கப் பட்டார். அக்காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய சுன்னுகம் முருகேச பண்டிதர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலு மிருந்து வந்து ஏறக்குறைய 100 மாண வர்கள் அங்கு கல்விகற்றனர். சிறந்த இலக் கண இலக்கியங்கள் கற்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வருட இறுதியிலும் வித்தியா சாலை மாணவர்கள் பிரபல வித்துவான் களால் பரீட்சிக்கப்பட்டனர். ஆறுமுக நாவலர், வித்துவசிரோன்மணி பொன் னம்பலபிள்ளை, கொக்குவில் சபாரத்தின முதலியார் போன்ற அறிஞர்கள் மாண வர்களைப் பரீட்சித்துள்ளார்களென்பதை அறிவதற்குப் போதிய சான்றுகள் காணப் படுகின்றன. 1887ஆம் வருடம் முருகேச பண்டிதரால் நடத்தப்பட்டு இலங்கை நேசன் பத்திரிகையில் வெளியான பரீட்சை அறிக்கை வருமாறு.
ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியா சாலைப் பரீட்சை: இது சென்னபட்ட ணத்தில் பி.ஏ.,பி.எல். பட்டம்பெற்ற சி. வை. தாமோதரம்பிள்ளையவர்க ளால் தாபிக்கப்பட்டு இப்போது ஒரு வருட காலமாக நடைபெற்று வரு கிறது. இவ் வித்தியாசாலையில் முதற் பரீட்சை சென்ற வருடத்து மார்கழிக் கடைசியில் பூரீலழறீ ஆறுமுகநாவலர் அவர்களாலும் இரண்டாம் பரீட்சை இந்த மாதம் 24ஆம் திகதி எம்மாலும் நடத்தப்பட்டன. முதற் பரீட்சையிற் காணப்பட்ட பிள்ளைகள் தொகை DTOs நோயின் கலக்கத்தாலும்

Page 147
நாவலரும் தாமோதரம்பிள்ளேயும்
பஞ்சத்தின் வருத்தத்தினுலும் பிள்ளை கள் முந்திய தொகையிற் சுருங்கி யிருந்தாராயினும் அறுபதிற் குறையா மல் இருந்தார்கள். இவ்வளவு பிள்ளை களுக்கும் உபாத்தியாயர் ஒருவரே யாகவும் இலக்கணம் முதலிய பாடங் களில் வினவிய குறுக்குக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பிள்ளைகள் தவரு மல் விடை சொன்னர்கள். தமது ஊரிலே பிரபுவாகிய பிள்ளையவர்கள் இவ் வித்தியாசாலையைத் தாபித்து நடத்தி வருவதுபோல் அந்த ந் த ஊரிலேயிருக்ரும் ஒவ்வொரு சைவப் பிரபுக்களும் செய்துவருவார்களாயின் சைவசமயம் தாழ்ச்சியடைவதற்கு இடமுண்டாகுமா ? பிரபுக்களே ! இவ்வாறுநீங்களும் செய்தாலென்ன?19
சுன்னகம் முருகேச பண்டிதர் வெளி யிட்ட இந்த அறிக்கையானது ஏழாலைச் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தன் மையை விளக்கிக் காட்டுகின்றது. நாவலர் போன்ருேர் சி. வை. த்ாமோதரம்பிள்ளை யின் நற்பணிக்கு ஆக்கமளித்ததையும் காணமுடிகிறது.
நாவலரைப் போன்று செந்தமிழை வசனநடையாக எழுதும் ஆற்றல் தாமோ தரம்பிள்ளையிடம் மிக்கிருந்தது. அவர் பதிப்பித்த நூல்களிலுள்ள பதிப்புரை களாலும் கத்தியரூபமாக எழுதிய சூளா மணியாலும் இது நன்கு புலப்படுகின்றது. வசன சூளாமணியின் நடையழகும் பொருட்பொலிவும் உவமான உவமேயச் சிறப்பும் முதல்நூலின் கண்ணுள்ள செய் யுட்களின் தொகுப்பும் படிப்போர் எவர்க் கும் வியப்பைத் தரும். இங்கு கலித் தொகைப் பதிப்பினுக்கு அவரெழுதிய பதிப்புரையின் ஒரு பகுதியை நோக்கு மிடத்து அதனை நன்குணர முடிகின்றது.
தமிழுக்கு க் காலாந்தரத்தில் இரண்டு பெரும் பூதங்களால் பேரிடை யூறுகள் நிகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற்கணுள்ள நாடுகளுஞ் சமுத்திரத்தின் வாய்ப்பட்டமிழ்ந்திய
16

37
போது தமிழ்ச் சங்கத்திற்கு ஆலய மாய்ச் சர்வதமிழ்க் கிரந்தமண்டபமா யிருந்த கபாடபுரம் அதன்கண்ணிருந்த எண்ணுயிரத் தொருநூற்று நாற்பத் தொன்பது கிரந்தங்களோடு வருன்ன பகவானுக்கு ஆசனமாயிற்று. பாண் டிய நாட்டின் வடபாலிலும் , ஆங் காங்கு சிதறுண்டு குலாவிய சாதாரண சனவிநோதார்த்தமான தேர்ச்சிக்குரி யனவாய் வழங்கிய சிறு நூல்களுள் சில்லறை வாகட சோதிடாதிகளுமே பிற்காலத்தார் கைக்கு எட்டுவன au fruar. 11
பதிப்புத்துறையிலே சென்ற நூற் ருண்டின் மத்திய பகுதியை நாவலர் கால மென்று கொள்ளலாம். தமிழ் மக்களை வழிநடத்துவதற்காக வசனநூல்கள் எழுதி யும், நூல்களுக்கு உரைசெய்தும், பழைய நூல்களைப் பதிப்பித்தும் ஆற்றிய தொண்டி னைத் தாமோதரம்பிள்ளை தொடர்ந்தமை யால் நாவலரையடுத்துச் சென்ற நூற் முண்டின் பிற்பகுதியைச் சி. வை. தாமோ தரம்பிள்ளையவர்கள் கா ல மென்று கொள்ளலாம். அதன்பின்னர் தொடர்ந்த காலப்பகுதியை உ. வே. சாமிநாதையர் காலமெனலாம்.
சி. வை. தாமோ த ரம்பிள்ளையின் பதிப்பு உத்திகளே அவரது பதிப்புக்களின் சிறப்புக்குக் காரணமாயின. தாம் பதிப் பிக்கும் நூல்களுக்கு வழங்கிய முன்னுர்ை களிலே தாம்பட்ட சிரமங்களை மட்டு மன்றிப் பல விடயங்களை அவர் கூறிச் செல்கின்ருர், தாம் கையாண்ட உத்தி களைக் கூறிச்சென்றுள்ளார். கிடைத்த மூலப்பிரதியை மட்டும் பதிப்பிக்காது அதைப் போன்ற பலபிரதிகளைத் தேடிப் பெற்று அவற்றி ன் பாடபேதங்களை ஆராய்ந்த பின்னரே அந்த நூல்களைப் பதிப்பித்தார். பாடபேதங்கள் 'பிரதி களிலே காணப்படுமிடங்களில் அவற்றின் சரியான மூலப்பிரதியைக் காண்பதற்காக ஒப்பிட்டுப் பார்த்துப் பின்னரே பதிப்பிக்க முற்பட்டார். பிரதிகளைத் தேடி யெடுப் பதிலுள்ள சிர மங்களும், பிரதிகள்

Page 148
38
கிடைத்த இடங்களும், அவற்றின் தன் மைகளும் வெகு நுண்ணிதாகப் பிற்காலத் தவருக்கு அவரால் பதிப்புரைகள் மூலம் உணர்த்தப்படுவது, பின்வந்த பதிப்பு முயற்சியிலே ஆர்வமுடையவர்களுக்குப் பெருமுதவி செய்வதாவுள்ளது. புத்த கத்தை வெளியிடுவது முக்கியமன்று. பிழையற அச்சிட்டு வெளியிடவேண்டு மென்ற நாவலரது பதிப்புக் கோட்பாட் டினைச் சி. வை. தாமோதரம்பிள்ளை சரி வரச் செயற்படுத்தினர். பதிப்பு உத்தி களில் அவர் நாவலரைப் பின்பற்றியே சென்ருர், நாவலர் முன்னேடியாக இருந் தமையே அவருக்கு இத் துறையிலீடுபடும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. நாவலரது பதிப்பு உத்திகளையும் இதனுல் தவிர்க்க முடியாதபடி சி. வை. தாமோதரம்பிள்ளை யும் பின்பற்ற நேர்ந்தது. நாவலர் பதிப் புக்களில் குறிப்பிடத்தக்க விசேட உத்திக ளுள. 1. பிரதிகளின் ஆதாரமில்லாமல் ஒன்றை
யும் தாமாகத் திருத்தாமை, 2. பாட பேதங்களொன்றும் அச்சி
60.
3. தனக்கு முன்னிருந்த ஆசிரியர்களது துணையின்றிச் சித்தாந்தத்திலாவது இலக்கணத்திலாவது வேறு எதிலா வது உத்தியினலே ஒன்றையும் கூறிய தில்லை. 4. அச்சிடுவதிற் பிழைகளைத் தவிர்த்தல் காலத்தின் தேவையை உணர்ந்து அதற்குரிய நூல்களை அச்சிடுந்தன்மை:
இவ்வைந்து உத்திகளையும் பின்பற் றித் தமது பதிப்புக்களேச் செய்தார். ஆணுல் நாவலரைவிட சி. வை. தாமோ தரம்பிள்ளை தாம் எழுதிய பதிப்புரைகள் மூலம் சிறப்புப்பெற்று விளங்குகின்ருர், அப்பதிப்புரைகளிலே தமது பதிப்புக்களின் நோக்கத்தையும், அவசியத்தையும் அவர் உணர்த்திச் செல்லும்போது சி. வை. தாமோதரம்பிள்ளையின் பதிப்புப்பணி நாவ லரது பதிப்புப்பணியினைவிட உயர்ந்துநிற்கி தது பாடபேதங்களைத் தாமோதரம்பிள்ளை

மஞேன்மணி சண்முகதாஸ்
தமது பதிப்பிற்குறிப்பிட்டுச் செல்வது நாவலரைவிட அவரைச் சிறந்தவராக்கி விட்டது. பதிப்பு உத்தியிலே பிற்காலத் தவர்களால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வருவது இம்முறையேயாகும். காலத்தின் தேவையை உணர்ந்து ஏற்ற நூல்களைப் பதிப்பிப்பதில் நாவலரைப் போல் குறிப் பிட்ட சிலதுறை நூல்களோடு நின்றுவிடா மல் பழைய இலக்கியம், இலக்கணம் என்ற பரந்த நூல்களை சி. வை. தாமோதரம் பிள்ளை வெளியிடமுனைந்துள்ளார். அவரது பதிப்பு முயற்சிகளைத் தென்னகத்தார் குறைத்து மதிப்பிட்டபோதும் இலக்கிய முயற்சிகளிலே ஈடுபட்ட ஈழத்தவர்க ளுக்கு அவரே முன்னுேடியாக அமைகிழுர், மேலும் தென்னிந்திய மக்களைப் பதிப்புத் துறையிலே விழிப்படையச் செய்தவ ராகவே விளங்குகின்றர்.
பதிப்பு முயற்சியோடு நின்றுவிடாது தாமும் சில நூல்களை எழுதிஞர் கட்ட ளைக் கலித்துறை, சைவமகத்துவம், ஆரும் வாசக புத்தகம், ஏழாம் வாசக புத்தகம், நட்சத்திரமாலை, ஆதியாகம கீர்த்தனம் போன்ற நூல்கள் அவற்றுட் குறிப்பிடத் தக்கவை. நாவலரது சமயப்பணி தாமோ தரம்பிள்ளையின் மனத்தைக் கவர்ந்த மைக்கு இந்நூல்கள்தான் சான்று பகர் கின்றன. சைவத்தின் மகத்துவத்தை உலகோரறியச் செய்யவேண்டுமென்ற நோக்கத்தின் வெளிப்பாடே சைவ மகத் துவமாகும். இந்நூல் வெளிவந்தபோது கத்தோலிக்க பாதுகாவலன் ஆசிரியர் அரு ளப்ப முதலியார் அதனைத் தமது பத்திரிகையிலே கண்டனஞ் செய்தார், அக் கண்டனத்துக்கு மறுப்புரைகளை வல்வை சு. வைத்தியலிங்கம்பிள்ளை, சுன்னுகம், அ. குமாரசுவாமிப்புலவர், சுன்னுகம், பூ. முருகேசபண்டிதர் முதலியோர் எழுதி னர். இலங்கை நேசன், உதயபானு என் னும் பத்திரிகைகள் சி. வை. தாமோதரம் பிள்ளைக்கு எதிராக எழுந்த கண்டனங்களை மறுத்து எழுத உதவி புரிந்தன. சைவ மகத் துவத்தை ஆதரித்து சைவமகத்துவ பாநு பாலம், இருண்மதியருசுடர், சைவமகத்துவ பாச விள்க்க மறுப்பு சைவமகத்துவ திக்கார

Page 149
நாவ லரும் தாமோதரம்பிள்ளையும்
நிக்கிரகம், சைவ மகத்துவ திக்கார மகத்து வம் போன்ற நூல்கள் எழுந்தன. இந்நூல் களை எதிர்த்து சைவமகத்துவ திக்காரம், சவை மகத்துவ திக்கார நிக்கிரக எதிரேற்று, சைவ மகத்துவ தி மிர பானு முதலிய நூல்கள் தோன்றின. இவ் வாறு பல கண்டன நூல்களைத் தோற்றுவிக்கக் காரணமாயிருந்த சைவமகத்துவம் அக் காலத்தில் எவ்வளவு பிரசித்தி பெற் றிருந்ததென்பதை ஒருவாறு நாம் ஊகித் துணரக்கூடியதாயுள்ளது. இந்நூலிலுள்ள கருத்துக்கள். சி. வை. தாமோதரம்பிள்ளை யின் தமிழ்த்தொண்டை மட்டும் புலப் படுத்துவதன்றி சைவசமயப் பாதுகாவற் பணியையும் எடுத்துக்காட்டி நிற்கின்றது. சைவசமயமே சிறந்த சமயமென்றும், கிறிஸ்தவ மதத்தின் பொருந்தாத தன்மை களை எடுத்துக் கூறும் சி வை. தாமோதரம் பிள்ளையின் கூற்றுக்கள் அவரது அக்கால மனேநிலையையும் காட்டி நிற்கின்றன.
ஏகவஸ்துவாகிய சிவமொன்றே பரமபதி. அதுவே யநாதி நித்திய வஸ்து. அவ் வஸ்துவே சைவராற் ருெழப்படுவது. தமக்குப் பிறிதாய் ஒன்றைக் கடவுடோற்றுவிப்பவரே. அஃது ஆதியுடைத்தாதல் வேண்டும். ஆகவே அநாதி நித்தியமாகாது. ஆத லாற் பதித்துவமடையாது. இது கருதி யன்ருே பதிதருங் கொலோர் பதி யென்ரும். அநாதி நித்தியமாயுள்ள தொரேபதி யன்றிப் பலவன்றென்க. கொள்க.1
என்று சைவத்தின் பெருமையைப் போற் றியும்,
மரமறியாதார்க் கிலைபறித்துக் காட்டற்கும். சற்குரு லக்ஷணமறியாத சாந்துவிச்சர் ஆபிரிக்கராதியருக் கன்ருே. யேசு லக்ஷணஞ் சற்குரு லக்ஷணமாவது நீவிர் கூறுமாறு பாவஞ் சென்ம பாவங் கன்மபாவமென விரு வகைத்தாம். அவற்றுட் கன்ம பாவந் தவிர்ந்தனரெனினும் மனுஷனுகிச் சென்மபாவத்திற்குட்பட்டவர் தானே பாவியாயினர். இவர் சற்குருவாவ தெங்ங்னம்? தன் பாவந் தொலைப்ப தற்கோர் சற்குருவறிந்தனரா?

என்று கிறிஸ்தவ மதத்தைத் தாழ்த்தியும் அவர் கூறியதாலேயே சைவமகத்து வத்திற் கெதிராகக் கண்டனங்கள் வெளி யிடப்பட்டன. கத்தோலிக்க பாதுகாவல னில் சைவ மகத்துவ திமிரபானு, சைவ மகத்துவ நிக்காரம் முதலிய கண்டனங்கள் தொடர்ச்சியாக எழுதப்பட்டன. பிறப்பி ஞல் கிறிஸ்தவராகச் சிலகாலம் கிறிஸ்தவ சமயத்தைச் சார்ந்திருத்த சி. வை. தாமோ தரம்பிள்ளையவர்கள் சைவராகிச் சைவ மகத்துவம் என்ற நூலை எழுதியமை இதனை உறுதி ப் படுத்து கி ன் றது. கிறிஸ்துவசமயச் சூழல் நாவலரைச் சைவ சமயத்தை வளர்க்கும் பணியில் ஈடுபடுத் தியது போன்று சி. வை. தாமோதரம் பிள்ளையையும் சைவத்தினை வளர்க்கும் பணியிலீடுபடுத்தியது, சைவமகத்துவம் என்ற நூலை எழுதியதன் காரணத்தை சி. வை. தாமோதரம்பில் ளை விவிலிய விரோதப் பாயிரத்திலே பின்வருமாறு குறிப்பிட்டுச் செல்கிருர்,
சைவசமய, கிறிஸ்தவ சமய போதனைகளுள் விசேடித்தனவற்றை யொன்றேடொன்றெதிரெதிரே சைவ மகத்துவத்திற் றீட்டி இவை யுக்திக் கிசைந்தன, இவை யுத்திக்கு மாறு பட்டன ஆதலால் இவையே கடவு ளால் அருளப்பட்டிருத்தல் வேண்டு மென நாட்டித் தாரதம்மியந் தாழ் வாற் கிறிஸ்தவசமயமீசுவர கிரந்தமா யிருக்கும் தகமையுடைய தன்றெனக் காட்டினன்."
நாவலரைப் போலவே கவித்திறனும் பெற்றவராகச் சி. வை. தாமோதரம் பிள்ளை விளங்கினர். தமிழ் உலகிற்கு அவர் செய்த பணிகள் இன்றைய கால கட்டத்திற்கும் வருங்காலத்திற்கும் ஏற்ற பணிகளாயமைந்தன. இதனுலவரது வர லாறு ஈழத்து இலக்கிய வரலாற்றிலே முக்கியத்துவம் பெற்றது. நாவலர் பரம் பரையில் வந்த சி. வை; தாமோதரம் பிள்ளை தமது குருவாக நாவலரைக் கொண்ட வேளையில் குருவின் அடிச்சுவட் டில் சென்றவராகவும், சில சந்தர்ப்பங்க ளில் தமது பணிகளால் குருவுக்கு மிஞ்சிய சீடராகவும் விளங்கினர்.

Page 150
14)
அடிக்குறிப்புக்கள்:
1. சாமிநாதையர், உ. வே., யூரீ மீனுட்சி 2. கனகரத்தின உபாத்தியாயர், வே. : 3. ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, ' 4. சபாபதி நாவலர், திராவிடப் பிரகாசிை 5. சி. வை. தாமோதரம்பிள்ளை நினைவும 6. தாமோதரம்பிள்ளை, சி. வை. சைவ 7. தாமோதரம்பிள்ளை, G. வை. விவில் 8. ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, u. 9. மருணிக்கியார், ஈழநாட்டுத் தமிழ் விரு 19 முத்துக்குமாரசாமிப்பிள்ளை, கு. , கும 11. தாமோதரம்பிள்ளை, சி. வை. கலித் 12. தாமோதரம்பிள்ளை, சி. வை. , சைவ 13. தாமோதரம்பிள்ளை, சி. வை. சைவ 14. தனஞ்செயராசசிங்கம், ச. , நாவலர் 1 15. தாமோதரம்பிள்ளை, சி. வை. விவிலி
கிறிஸ்தவருக்குப் பதில்
பிரம்மபூரீ மு. கார்த்திகேயப்புலவர் ( பரமத கண்டனமும் சுயமத பிரசாரமும் இருபாலை சேனதிராய முதலியாரிடம் கல் மார்க்கத்தவர் சிலர் புலவருடைய வாதங்க
* பிறந்தபோது பூணுநூல் குடுமிய பிறந்துடன் பிறந்ததோ பிறங்கு மறைந்தநாலு வேதமும் மனத் நிலம்பிளந்து வானிழிந்து நின் என்னும் பாவைச் சொல்லிப் புலவரை மிகவு
* உதித்தபோது சட்டைதொப்பி த
மதித்தஞான ஸ்நானமும் வலி விதித்தபைபி லானதுங்கண் ெ
கதித்தபேச்சை விட்டனுதி கடவு
என்னும் unr.6OLë சொல்லி அவர்களைப் மத குடாரம் என்னும் பெயருடன் ஓர் நூ
- மு. கார்த்திக்ேய

மஞேன்மணி சண்முகதாஸ்
சுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரம், பக். 82. ஆறுமுகநாவலர் சரித்திரம், பக். 14-16. பாழ்ப்பாணச் சமயநிலை", பக். 34. க, பக். 46, 55 லர்க் கட்டுரை, ஈழகேசரி, 11-3-45. மகத்துவம், பக். 0.
úlu விரோதப் பாயிரம், u ući. 132–133. பாழ்ப்பாணச் சமயநிலை”, பக். 73-74, நந்து, "தமிழ்ப்புலமை", Luis. 10-11 . ாரசாமிப்புலவர் வரலாறு, பக். 19, தொகைப் பதிப்புரை.
மகத்துவம், பக். 28. மகத்துவம், பக். 75.
பணிகள், பக். 62.
iய விரோதப் பாயிரம்.
1819-1898) நாவலரவர்களைப் பின்பற்றி செய்து வந்தவர். நாவலர் பாடங்கேட்ட வி கற்றவர். ஒரு சந்தர்ப்பத்தில் கிறிஸ்து iளுக்குச் சமாதானஞ் சொல்லவியலாது,
பும் பிறந்ததோ
நூற் சடங்கெலாம்
துளே யுதித்ததோ
றதென்ன வல்லிரே.”*
ம் பரிகசித்தனர். அதைக்கேட்ட புலவரும்,
;ானுங்கூடி வுற்றவோ
யவந்து நேர்ந்ததோ
மய்யுளத் துதித்தவோ
ளைக் கருதுமே,’
பரிகசித்தனர். மறுநாட் புலவரும் கிறிஸ்து லை இயற்றினர். W ப்புலவர் சரித்திரம் - (கொக்குவில், 1908)

Page 151
நாவலரும் பொன்னம்ப
சு. கலாபரமேஸ்வரன்
பத்தொன்பதாம் நூற்ருண்டுத் தமி ழிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும், கல்வி, சமய, வெகுசனத்தொடர்பு துறை களிலும் தமது செல்வாக்கை ஆழமாகப் பதித்த ஆறுமுகநாவலர் அவர்களின் முனைப்பான பாரிய ஈடுபாடுகளை முன் னெடுத்துச் செல்லக்கூடிய வகையிலே அவருடைய தலைமையையும் செயலாண் மையையும் நன்கு புரிந்து கொண்டு செயற்படவல்ல இலட்சியப்பற்றுக் கொண் டதும் பலதுறையாற்றல் மிக்கதுமான பரந்த அறிஞர் பரம்பரை யொன்று அன்றே இலங்கையில் உருவாகி வளர்ந் திருந்தது. தமிழகத்துடன் அத்தியந்த பிணைப்புக்கொண்டிருந்து, "தமிழ்கூறு நல் லுலகத்தில் ஈழம் தலைநிமிர்ந்து நிற்கக் கூடிய வகையில் பலதுறைகளில் முனைவர் களாகவும் வித்தகர்களாகவும் விளங்கிய இக்கூட்டத்திலே "ஆறுமுகநாவலரின் மரு கரும் மாணுக்கரும்” எனச் சிறப்புரிமை அடையினல் வழங்கப்பெறும் வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை அவர்கள் தலையாய ஒருவர்; நாவலரின் உரைமரபு, புராண படன மரபு, குருகுலக் சுல்வி மரபு முதலாம் மரபுக் கூறுகளைத் தமிழகமும் நயத்தகுவகையிலே வளர்த் தெடுத்ததுடன் தமிழிலக்கியத்திலேயே புதியதொரு இரசனை மரபின் தோற்றத் திற்கு வழிகோலியவர்: . நாவலருக்குத் தம்மை ஆட்படுத்தியவராக நமது காலம் வரைக்கும் நீடித்து வாழுகின்ற மரபுப்

லபிள்ளையும்
பற்றுறுதிமிக்க இரசனையாளர் குழாமின் மூலகர்த்தா.
O 1836ஆம் ஆண்டு சரவணமுத்துச் செட்டி யாருக்கும் நாவலரின் சகோதரியாருக்கும் மகளுகப்பிறந்து 1902ஆம் வருடம் இறந்த பொன்னம்பலபிள்ளை அவர்கள், தமது இளமைக்கல்வியை நல்லூர் கார்த்திகேய உபாத்தியாயரிடமும் மாமனரான ஆறுமுக நாவல்ரிடமும் பெற்றுக்கொண்டார். குருசிஷ்ய முறையிலே இவ்வாறு பயின்ற கல்வி யினைவிட ஆர்வமும் முயற்சியும் காரண மாகப் பல இலக்கண இலக்கிய நூல்களைத் தாமாகவே கற்றுத் தெளிவுபெற்ற சிறப் பும் இவருக்கு உண்டு. நாவலர் மரபைப் பேணும் வழிவந்தோரிற் குறிப்பிடத்தக்க பலரை உருவாக்கும் வல்லமையும், பலர் மீது தமது செல்வாக்கைச் செலுத்தவல்ல ஆளுமையும் படைத்த பொன்னம்பல பிள்ளை, வித்துவசிரோமணி" என வழங் கப்படுபவர். நாவலர் என்ருல் ஆறுமுக நாவலர், வித்துவசிரோமணி என்ருல் பொன்னம்பலபிள்ளை என்றே பொருள் படும். இலக்கிய, இலக்கணங்களைக் கற் றுத் துறை போய நுண்மான் றுழைபுலத் தினர்; வியத்தகு நுண்ணுணர்வும், அபார ஞாபகசத்தியும், கூர்த்த கிரகிப்புத் திற னும், பரந்த இலக்கிய நூலாட்சியும் மிக் கவர், அவரது உரைகளிலே பலவித இலக் கண இலக்கியத் தரவுகளையும் மேற் கோள்களையும் பரக்கக் காணலாம். தமது

Page 152
星42
காலத்திலே பதிப்புத்துறையிலே ஈடுபாடு கொண்டு உழைத்த தமிழறிஞர்கள் பல ருடைய இலக்கிய சந்தேகங்களைத் தீர்ப் பதிலே முன்னின்றவர் பொன்னம்பல பிள்ளை. உதாரணமாக, பின்னத் துரர் நாராயணசாமி ஐயர் அவர்களுக்குச் சிலப்பதிகாரம் முதலாம் நூல்களிலே ஏற் பட்ட பல தெளிவின்மைகளைப் பிள்ளை அவர்கள் தீர்த்து வைத்ததாக அறிகின் ருேம். பிள்ளையின் சங்கநூற்பயிற்சி அபார மானது என்பர் பதிப்புத்துறையிலே நாவ லர் பணியை மேலும் இட்டுச்சென்ற தி. த. கனகசுந்தரம் பிள்ளை (1:பக் 721. பிள்ளையின் சிந்தாமணிப் பயிற்சியைக் கேள்வியுற்ற உ. வே. சாமிநாதையர், நச் சிஞர்க்கினியர் உயையுடனுன தமது சிந் தாமணி முதற்பதிப்பை பிள்ளை அவர்
களுக்குச் சமர்ப்பித்து நூலிற்காணக்கூடிய
தவறுகளைத் தள்ளி, ஏற்று அங்கீகரிக்கும் படிஎழுதியிருந்தார் (2 : 2101. இத்தகைய குறிப்புக்கள் வித்துவசிரோமணியின் அறி வுத் திறனுக்குச் சான்று பகரவல்லன.
"நடமாடும் பல்கலைக்கழகம்" என விதந்துரைக்கப்படக்கூடிய அளவிலே அன் றைய யாழ்ப்ப்ாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் பற்றுறுதி மிக்க மாணவர் கூட்டத்தினைப் பெற்றிருந்த பிள்ளை அவர் கள், காலம் இடம் என்ற நியதியின்றி அவர் களுக்கு அறிவுச் செல்வத்தை வாரிவழங்கு பவராக விளங்கினர். எனினும், குறிப் பாக, தமது மாமனரின் சிறப்பான கல்விப் பணிக்கெனத் தொடங்கப் பெற்ற சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலைமையாசி ரியராகவும் பரிபாலகராகவும் சில ஆண்டு காலம் சேவையாற்றினர். நாவலரின் ஆளுமையினல் முழுமையாகக் கவரப்பட் டவர் பொன்னம்பலபிள்ளை என்று கூறு வது மிகையாகாது. a
நாவ்லர் பெருமான் மரபிலே பிள்ளை அவர்களின் விசேட பணி பண்டை நூல்க ளுக்கு உரைசெய்தமையாகும். நாவலர் பல உரைநூல்களைப் பதிப்பித்ததோடமை யாது திருமுருகாற்றுப்படை, கோயிற் புராணம் சைவசமயநெறி முதலாம் நூல்

சு. கலாபரமேஸ்வரன்
களுக்குத் தாமாகவே உரைஎழுதிப் பெருந் தொண்டு புரிந்தார். பிள்ளை அவர்கள் திட்டமிட்டு எழுதிய உரைநூல்கள் மகாபார நம் ஆதிபருவம், மயூரகிரிப்புராணம் என்ற இரண்டுமேயாம். எனினும் மாணவர் கட்கும், இலக்கிய ஆர்வங்கொண்டோர்க் கும் வாய்மொழி உரை கூறும் முறைமை யால் கம்பராமாயணம், பெரியபுராணம், சிந்தாமணி முதலாம் நூல்களுக்கும் உரை
கண்டார் எனலாம்.
இவ்வாறு பல்வேறு நூல்களுக்கு பல வேறு சந்தர்ப்பங்களில் வாய்மொழியாகக் கூறிய உரைகள், வியாக்கியானங்கள், நயக்குறிப்புக்கள் எழுத்துவடிவம் பெற்று மாணவரிடையும் இலக்கியச் சுவைஞர்க ளிடமும் மிகப் பிரபல்யமாக உலவி வந் திருக்கின்றன. ஆராய்ச்சியாளருக்கும் துணைபுரியக்கூடிய பல குறிப்புக்களை அவற் றுட் காணலாம். தமிழ் இலக்கிய உலகில் வேறெந்த ஒரு ஆசிரியருடைய வாய் மொழிக் கூற்றுக்களும் இத்துணைபோற்றப் பட்டதாக நாம் அறியோம். குமார சாமிப் புலவர் அவர்களுடைய காவிய வகுப்பிலே வித்துவசிரோமணியினுடைய உரைக்குறிப்புக்கள்-விசேடமாக சிந்தா மணிக் குறிப்புக்கள் பயன்படுத்தப்பட் டன என அறியக்கிடக்கின்றது (3 - 2301. இவருடைய பெரியபுராணக் குறிப்புக்களின் சீரினை அறிந்து திருவாரூர் சோமசுந்தரச் தேசிகர், அவற்றின் பெரும்பகுதியினை செந்தமிழ் ஏட்டிலே தொடர்ந்து வெளி யிட்டார். வித்துவசிரோமணியின் கம்ப ராமாயணக் குறிப்புக்கள் இராமாயண மூல பாட ஆய்வுக்கு உதவும் பெற்றியிலமைந் திருப்பதனல் அவற்றை ரா. பி. சேதுப் பிள்ளையின் வேண்டுகோளின்படி பண்டித மணி அவர்கள் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திற்கு அளித்திருக்கின்ருர் (3:218. இத்தகைய குறிப்புக்கள் அச்சுருப் பெரு மற் போனமை நமது துர்ப்பாக்கியமே.
பண்டைய உரையாசிரியர்களின் உரை களோ என வியத்தகுவகையிலே நமது கால விடியலிலே பழைய உரை மரபின் சீரிய அம்சங்களைக் கைக்கொண்டு உரை

Page 153
நாவலரும் பொன்னம்பலபிள்ளேயும்
எழுதியவர் பிள்ளை அவர்கள், பாடலின் நேரடிப்பொருளை அடிஅடியாக முதலிற் கூறி, பின் அகலங் கூறுவார். அகலங் கூறுங்கால் பாடற் பொருளுடன் தொடர் பானவற்றைச் சுட்டி, இலக்கண இலக்கிய மேற்கோள் காட்டி, பொருளை மரபுவழிப் படுத்தி, கதை நிகழ்ச்சியை இயைபு படுத்தி, வேண்டுழி கொண்டுகூட்டி வேறு பொருள் காட்டியும் உரைகூறிச் செல்வ துடன் ஏற்ற இடத்துக் கடா எழுப்பி விடை கண்டும், காரணங்காட்டிப் பிறர் உரையை ஏற்றும் தள்ளியும் உரையை நடாத்திச் செல்வர்.
பரிமேலழகரை ஒத்து சொற்களின் அடைவு, அமைப்பு. அவற்றை ஆண்ட காரணம் முதலானவற்றை விளக்குவதும் பொதுப்ப்டப் பொருள் கூறுதலினை விடுத்து நயத்தகுவகையிலே சிறப்பான நூதனப் பொருட்களைத் தருவதும் பிள்ளை அவர்க ளின் சிறப்பான இரு பண்புகளாம். மரபு வழியாகக் கூறப்படும் அடைகள், உவமை கள் போன்றவற்றுக்கு உண்மையான பொருள் விளக்கத்தை அன்னுரின் உரை யிற் கண்டு தெளியலாம்.
இவ்விடத்தில் ஆதிபருவ உரையி லிருந்து சில பகுதிகளை எடுத்துக்காட்டுதல் பொருத்தமானது.
** முதல் எவன் அவன் பொன்னடி போற்றி ?, பொன்னடி - பொலிவாகிய பாதங்கள். பொன் னடி யென்பதற்கு பொன்போற் போற்றிக் கொள்ளப்படும் அடியென்ருல் அத்துணைச் சிறப்பின்றும்.
[4 : Lumruluruhj
* சித்திரக் கனல் முகம் * அழகு பொருந்திய அக்கினி தேவனுடைய முகம்.
சித்திரம் என்னும் அடையை முகத்திற் கேற்றல் இத்துணைச் சிறப்பின்றும்
(4 : குருகுலச் சருக்கம் பாட்ல் 51

143
* மைவரு கண்ணிஞன் -மைவந்து குடி கொண்ட கண்ணினையுடையவள்.
மகளிருடைய கண்ணைச் சிறப்பிக்கும் மை, இவள் கண்ணைச் சேர்ந்துதான் சிறப்புறல் வேண்டுமென்று வந்து குடி கொண்ட கண்ணென்பார்.
(4: திரெளபதி மாலையிட்ட சருக்கம் Lunt. 707
* இழைப் பொலி முலை - ஆபரணம் பொலிதற் கேதுவாகிய தனங்கள்.
பொலி என்னும் வினைத்தொகை முலை என்னுங் கருவிப் பெயர் கொண்டது. * இழையாற் பொலிந்த முலை" எனப் பொருள்கோடல் சிறப்பின்று. (4 : தி. மா, af. Lint L-6-201
** கலந்தன குருகும் பேடும். (காலை வருணனையில் வரும் காட்சி அடி) சேவல்களும் பேடுகளும் நெருங்கின.
புட்சேவல்களும் பெடைகளும் உதயத் தில் இரை கவரச் செல்கின்றன. ஒன்றை யொன்று பிரியாதிருந்தன என்பார் கலந் தன குருகும் பேடும் என்ருர். 9]ur fr முழுதும் பிரிந்திருந்து உதயகாலத்திற் சக்கரவாகப் புள்ளும் பேடும் புணர்ந்தன. எனப் பொருள் கோடலும் ஒன்று இங்ங்ன மின்றிப் பொதுப்படச் சேவ ல் களும் பெட்ைகளும் புணர்ந்தன எனப் பொருள் கோடல் சிறப்பின்று.
* I4 ; g. LD nr. F. Lurreão-1 07
இத்தகைய நூதனப் பொருள்களும், பொருள் விளக்கங்களும் பிள்ளையின் உரையிலே பரந்துகிடக்கக் காணலாம். **.இங்ங்ணம் பொருள் கோடல் இத்து ணைச் சிறப்பின்று.", "...பொதுப்பட. பொருள் கொள்ளல் சிறப்பின்று." என் பது போன்ற அடிகளைப் பிள்ளையின் உரை யிலே பரவலாகக் காண்கின்றபோது, சிறப்பான பொருள் காணவேண்டும் என்ற அவரது வேணவாவின நாம் நன்கு உணர்ந்துகொள்ள முடிகின்றது. சம்பிர

Page 154
144
தாயபூர்வமாக பொதுப்படப் பொருள் காணுதலை மறுத்தல், நூதனமாகக் கொண்டு கூட்டல் முறையைக் கைக்கொள் ளல் போன்ற பண்புகள் இவரிடம் அமைந் திருந்தமையை மனங் கொள்ளுகின்ற போது இவ்ர்ை. ஒருவகையில் நச்சிஞர்க் கினியருடன் ஒப்பிடக்கூடியதாகவும் உள் ளது. நச்சினர்க்கினியரின் வித்துவத் தன்மையும், பேரறிவு நிலையும் அவர் இலக் கியத்திலே தமக்கென ஒரு தனித்துவப் போக்கினைக் கைக்கொள்ளவும் அதன்வழி அவரது இலக்கிய முயற்சிகளிற் பல தாக் கங்களை ஏற்படுத்தவும் வழிவகுத்தமை (5 : 1941 போல, பிள்ளை அவர்களின் வித்துவத்தன்மையும் ஒரொருகால் புதிய புதிய முறையில் இலக்கியப் பொருள் காணவும், ஆங்காங்கே கேட்போரைத் திணறடிக்கச் செய்யவென்றே முற்றிலும் நூதனப் பொருள் காணவும் கூடிய பல நிலைகளைத் தோற்றுவித்தது எனலாம்.
நாவ ல ர் வழிவந்தவர்களுள்ளே இரசனையாற்றல் நிரம்பப் பெற்றவராக வும், தமது காலத்திலும் பின்னும் பண்டை நூல்களின் இலக்கிய நயங்களை வாரி வழங்குப்வராகவும் புகழ் நிறைந்து விளங்கு பவ்ர் வித்துவசிரோமணி அவர்கள்; உரை யாசிரியர்களை எந்தளவு திறனுய்வாள ராகக் கொள்ளலாம் என்ற வாதப் பிரதி வாதங்களை (5 :25-26) ஒரு புறம் விடுத்து, திறனய்வாளனின் பொறுப்பான கடமைகளுள் கணிசமா ன வ ற் றை உணர்ந்து செயற்பட்ட சில முன்னைய உரையாசிரியர்களிலும் பலபடி மேற் சென்று உரை மரபுடன் இரசனையை அடி யாகக் கொண்ட ஒரு புதிய திறனுய்வு மரபையும் இணைத்து தனிச் சிறப்புப் பெறுபவர் வித்துவசிரோமணி அவர்கள். அவர்களின் உரை கூறுதலும் அதன் வழி இரசனை வெளிப்பாடும் புராண பட்டன்ங் கள்,'இலக்கிய வகுப்புக்கள் என்ற இரு *வாயில்களாலும் பெருக்கெடுத்துப் பாய்ந்
தன எனலாம்.
பொன்னம்பலபிள்ளை நாவலர் ஆரம்பித்த்புராண்பட்ன மரபினைச் சமய, பத்தி எல்லைகளைத் தாண்டி இலக்கிய

சு, கலாபரமேஸ்வரன்
ரசனைக்குமான களமாக ஆக்கியவர். தமது முன்னுேடியின் சைவப் பிரசங் கங்கள் நேரி தா. க ஒலித்த வண்ணைச் சிவன் கோவில் வசந்த மண்டபத்திலே பிள்ளை தொடங்கிய புராணபடனமானது அன்றைய யாழ்ப்பாணத்தில் சமூக அந் தஸ்து, கல்வித்தரம், வயது, தூரம் என்ற பல வேறுபாடுகளையும் கடந்து சகலரை யும் கவர்ந்திழுக்கின்ற ஒரு பெரிய கலா சார நிகழ்ச்சியாகியது. இதனல், காலப் போக்கில் இவர் பல்வேறு ஊர்களுக்கும் புராண படனத்துக்காக அழைக்கப்பட் டார் என்றும் எங்கணும் இலக்கிய இரசனை யுணர்வை வளர்த்துச்சென்ருர் என்றும் கூறுவர். அந்தவகையில் இவரை அக் காலத்து இலக்கியப் பிரசாரகர் என்றும் கூறலாம். புராணபடன முறையில் இலக் கிய நயத்துக்கு இவர் கொடுத்த அழுத்தம் காரணமாக தாம் மிக விரும்பிய கம்ப ராமாயண வியாக்கியான உரை நிகழ்ச்சி களைக்கூட அன்றே கோவில்களில் நிகழ்த்த ஆரம்பித்துவிட்டார் பிள்ளையவர்கள். நாவலர் எவ்வாறு பெரியபுராணம் மீது ஆராத பற்றுக்கொண்டிருந்தாரோ அவ் வாறு பிள்ளை கம்பராமாயணம் மீது பெரும் ஈடுபாடு வைத்திருந்தார் (3; 511.
புராணபடனமுறை இவ்வாறிருக்க, பிள்ளையவர்களின் இலக்கிய வகுப்புக்கள் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களின் பெற்றியைச் சீருடன் வழங்கிடும் மாண் புடையனவாக விளங்கின. மாணவர்க ளுக்கு அவர் பாடம் சொல்லுவதற்கு இடம், காலம் என்ற நியதிகள் இல்லை என்றும், அவ்வகையில் அவர் ஊர் நடு விலே 13: 220 உலாவித் திரிகின்ற பயன் தரும்: மரம் எண் விளங்கினர் என்றும் கூறுவர்.
பொருள் சொல்லுங்கால் கேட்ட வர்கள் "யாழிசையோ பாரதிதன் னின்னிசையோ" என்று. அயிர்க்கு மாறு தமக்கு இயற்கையாயமமைந்த இனிய மிடற்ருே சையோடும் : விரி வுரையோடும் சொல்லின்பமும் பொரு ளின்பமும் தோன்றச் சொல்வார் II: 73). s

Page 155
நாவலரும் பொன்னம்பலபிள்ளையும்
என்ற மகாவித்துவான் கணேசையரின் கூற்று இரசனையே உருவான பிள்ளையின் வடிவத்தை நமது கண்முன் நிறுத்த வல்லன.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் வித்துவசிரோமணி தொடர்பாக எழுதிச் செல்லுமிடத்து இரசிகமணி டி. கே. சி. யைப் பற்றிப் பிரஸ்தாபிப்பர். இரச னைத் தன்மை, சில இலக்கிய நூல்களில் கொண்டிருந்த அத்தியந்த ஈடுபாடு என்ற இரு அடிப்படைகளிலும் இருவரையும் இணைத்து எழுதுவர் பண்டிதமணி (13:511 தமது இரசனையாற்றலாலே தத்தம் காலத்துத் தமிழன்பர்களை வெகுவாகக் கவர்ந்த இருவரும் கவி பாடும் ஆற்றலும் கூடவே கைவரப் பெற்றவர்கள்.டி. கே.சி. கம்பராமாயணத்துடன் சில தனிப்பாடல் களை விரும்பினுர். வித்துவசிரோமணி கம்பராமாயணத்துடன் சிந்தாமணி, கந்த புராணம், பெரியபுராணம் என்ற நூல்களைப் பெரிதும் மகிமைப்படுத்தினர். ஆணுல் வித்துவசிரோமணியின் வியாக்கியானக் குறிப்புக்களையும் உரைகளையும் அவர்பற்றி சில தலைமுறைகளாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்த ன வ ற்றையும் செவ்வையாக ஆய்ந்தால், தமிழிலே இரசிகவிமரிசன முறையின் தோற்றக் கூறுகள் பலவற்றை 19ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியிலே வாழ்ந்த வித்துவசிரோ மணியின் எழுத்துக்களிலும் பேச்சுக்களி லும் காணலாம்.
இரசிக விமரிசன முறையின் அடிப் படைதான் யாது? தரமான நூல்களை அத்தியந்த ஈடுபாட்டுடன் படித்த நுண் ணுணர்வுள்ள ஒருவர், தாம் படித்தபோது அந்த நூலினுல் தமக்கு ஏற்பட்ட பாதிப் பையும் தமது மனதில் தோன்றியவற்றை யும் தமது இரசன சக்திக்கு ஏற்ப வெளித் தெரிவிப்பதே இந்த விமரிசன முறை யாகும் (6 841. ஓர் இலக்கிய ஆக்கத் திற்கும் தமக்கும் உள்ள உறவை தம்மை வைத்துப் பார்ப்பதாக இருக்கின்ற இந்த முறையிலே இலக்கிய அனுபவத்லேன் விளை
7

翼45
வாக ஒருவருக்கு ஏற்படுகின்ற மனப் பதிவுகளே முக்கிய இடம் பெறுகின்றன. இதனை மனப்பதிவு முறைத் திறனுய்வு என்றும் அழைப்பர். இந்த முறையினைக் கையாள்பவருக்கு உணர்வுநலன் பாவணு சக்தி ஆகியனவும் கிரகிப்புத் திறனுடனும் கூடிய அறிவாற்றல், மனநிலைச் சுறுசுறுப் புடன் கூடிய சுவை நுகர்வுப் பாங்கு, எழுதும், பேசும், பாடும் ஆற்றல் ஆகியன மிக முக்கியமாக அமைந்திருக்க வேண்டும் (7 : 251. இதனடியாக நூலைப் படிப்பத ஞல் ஏற்படும் உள்ளக் கிளர்ச்சியாலே அவ்வப்போது தோன்றும் கருத்துக்களை வெளியிடாமல் இருக்க முடியாமை (மன அவசம்) அவ்வப்போதைய சூழ்நிலை, சந் தர்ப்பத்துக் கேற்றவகையில் வேறுபட்ட கருத்துக்களையும் வியாக்கியானங்களையும் அளித்தல் போன்ற பண்புகளை இவ்வகைத் திறனுய்வாளரிடம் காணலாம். இவர்கள் **உணர்ச்சியி னடியாகவே கவிதை பிறக் கின்றது” என நம்புபவர்களாதலால் இலக்கியத்தை அனுபவித்துக் காண வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட வர்கள். " திறனுய்வின் சிறப்பு அனுப வித்துக் காணக்கூடிய ஒருவரின் ஆற்ற லிலேயே தங்கியுள்ளது" என்ற இக் கொள் கையால் தனி ஒருவரின் தரமும் சுவை யுமே இலக்கியத்தின் மதிப்பீட்டு அளவு கோல்களாகின்றன. இதன் விளைவாகவே திறனுய்வாளனின் வித்துவத்தன்மையும், அறிவாற்றலுமே பெரிதும் மகிமைப் படுத் தப் படுவதாகின்றது.
மேற்காட்டிய தன்மைகளுட் பெரும் பாலானவற்றை வித்துவசிரோ மணியிடம் நாம் கண்டுகொள்ளலாம். கணேசையர் அவர்களும், கணபதிப்பிள்ளை அவர்களும் தருகின்ற சில தகவல்கள் இரசிகமுறைத் திறனய்வுத் தன்மைகள் அன்னரிடம் அமைந்திருக்குமாற்றைத் தெளிவாக உணர்த்துகின்றன.
*.சனங்கள் இவர்கூறும் இன்பங் களை நுகரும் அவாவினுல் அடங்கி இருந்து கேட்பர்." l 721.

Page 156
46
**.பிள்ளை ஒரு தேன்குடம். அதை இரசிகர்களாகிய எறும்புக்கூட்டங்கள் சதா சூழ்ந்துகொண்டே யிருக்கும் 18 2211 என்று கூறப்படுபவவை. இலக்கியங்களை அனுபவித்துக் காணத் துடிப்போர் எவ் வாறு பிள்ளையவர்களை நாடி மகிழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றது.
பிள்ளை அவர்களுக்கு நுண்ணுணர்வும், இரசஞ்சக்தியும் அவற்றை வெளியிடும் ஆற்றலும் பிறப்பிலேயே கைவரப் பெற் றவை என்று கூறக்கூடியஅளவுக்கு அவரது அறிவாற்றல்கள் விதந்துரைக்கப்படுகின் றன.
'பிள்ளைக்கு கம்பராமாயணம் நரம்புத் துய்களிலும் ஊறிக்கிடந்தது .' (8 : 821.
பிள்ளையின் வாய் கவிநயஞ் சுரப்ப தோர் புதிய நீரூற்று." [8:511.
நூல்களை மீண்டும் மீண்டும் படிக்கும் போது தமக்கு ஏற்படுகின்ற மனப்பதிவு களை வெளியிடாமல் இருக்கமுடியாமை, தமக்கு அவ்வப்போது நிகழுகின்ற உணர்ச்சி பேதங்கட்கு இயைய் கருத்துக் களும் நூல்வியாக்கியானங்களும் வேறுபடு தல் முதலாம் தன்மைகள் பிள்ளை அவர் களிடம் நிரம்பியிருந்தன. இரசிக விமர் சகர்களிடம் நிலவுகின்ற முக்கிய மனப் போக்குக்கள் இவை.
"...இலக்கிய இரசனையை எவருக் காவது வெளிப்படுத்தாமல் இருக்க மாட் டாமை பிள்ளையின் நித்திய கலியாண குணம்." (8 82)
** . பிள்ளைக்கு உள்ளக்கிளர்ச்சி எவ் வளவு அமையுமோ அவ்வளவுக்கு அவர் விரிக்கும் உரைக் கருத்துக்களும் புதியன
புதியனவாக ஊற்றெடுத்துப் பிரவாகிக்
g5th f3 83J.
** .காவிய உரைநயம்" சந்தர்ப்பத் திற்கேற்றவாறு கிளர்ந்து கொண்டிருக்கும் 13: 218).
பிள்ளை அவர்கள் அவ்வப்போது வெவ் வேறுவிதமான இலக்கிய வியாக்கியானங்

சு. கலாபரமேஸ்வரன்
கள் செய்வதானது பலராலும் சிலாகித்துப் பேசப்படும் விடயமாகும். இது அவரின் தனியாற்றல் என்றும் விதந்துரைக்கப் படும். ஆனல் ஓர் இலக்கியத்தின் கலையம் சத்தைத் தனது அனுபவத்தையோ அல்லது அவ்வப்போது ஏற்படும் உணர்ச்சி பேதங் களையோ மட்டும் கொண்டு நிதானிக்கும் முறையானது இரசனை முறை விமரிசனத் தின் பெருங்குறைபாடாகின்றது என்பது மனங்கொள்ளத்தக்கது. ஒட்டு மொத் தமாகப் பார்க்கும்போது, பிள்ளை அவர் களின் உரைகளிலும் வியாக்கியானங்களி லும் பெரியவாச்சான் பிள்ளை முதலானே ரின் திவ்விய பிரபந்த வியாக்கியானங் களின் சாயலும், பண்டை உரையாசிரி யர்களின் பண்புகளும், நiனரின் இரசனை அம்சங்களும் நிறைந்து கிடப்பதனைக் காணலாம்.
19ஆம் நூற்ருண்டில் ஏற்பட்ட கலாசார மீட்சியியக்கத்தின் விளைவாக ஏட்டுப் பிரதிகளாக ஒலைச்சுவடிகளில் அழிந்துகொண்டிருந்த பண்டைத் தமிழ் நூல்கள் பல அச்சுவாகனம் ஏற ஆரம் பித்தன. பதிப்புத்துறையிலே ஏற்பட்ட இந்தப் புதிய முயற்சி தமிழிலக்கிய வளர்ச்சியிலே தனியான சிறப்பினைப் பெறும் வகையிலே பல தாக்கங்களை ஏற் படுத்திய ஒன்ருகும். இதற்கு வழிகோலி பவர் நாவலர் பெருமானுவார்.
பண்டைத் தமிழ் இலக்கிய வெளி யீட்டுக்குக் கால்கொண்டவர் ஆறுமுக நாவலர் சுவர் எழுப்பியவர் தாமோ தரம் பிள்ளை; கூரைவேய்ந்து நிலையம் கோலியவர் சாமிநாதஐயர் (9:1601.
1860ஆம், 61ஆம் ஆண்டுகளிலே திருக் குறள் பரிமேலழகர் உரையையும் திருக் கோவையார் உரையையும் சுத்தமாகப் பதிப்பித்து வெளியிட்ட நாவலர், பின் தாமோதரம்பிள்ளை அவர்களை இத்துறை பிலே உற்சாகப்படுத்தி, 1868இல் அன் னர் தொல்காப்பியம் சேனவரைய்த்தை வெளியிடுவதற்கு உதவும் வகையிலே அதனைப் பரிசோதனை செய்து கொடுத்த

Page 157
நாவலரும் பொன்னம்பலபிள்ளையும்
துடன், அந்நூலுக்கு எதிராகக் கருத்தற்ற கண்டனங்கள் எழுந்தபோது ஈழத்தவர் என்ற முனைப்புடன் ந ம து நாட்டவ ரின் இலக்கிய சாதனைகளை நல்லறிவுச்சுடர் கொளுத்தல் மூலம் தமிழகத்தார்க்கும் நிலைநாட்டியமையும் தமிழ் இலக்கிய உலகம் அறிந்த விடயங்களே.
"நாவலரின் பதிப்புத்துறை சைவஞ் சார்ந்த ஒன்றே" என சமய வட்டத்துள் மட்டும் அன்னரை நிறுத்தமுனைவது ஒரு தவருண போக்கு என்றே கூறவேண்டும். தமிழில் சீரிய இலக்கியங்களாகக்கொள் ளப்படும் சைவசமயத் தொடர்பற்ற சில நூல்களையும் பதிப்பிக்கவேண்டும் என்ற குறிக்கோள் நாவலருக்கிருந்தது. நாவலர் பதிப்பிதத திருக்கோவையார் முதற் பதிப் பிலே இனி வெளிவரும் நூல்கள் என்ற விளம்பர நூற்பட்டியலிலே சிந்தாமணி, சிலம்பு, மேகலை, வளையாபதி முதலாம் நூல் கள் காணக் கிடக்கின்றன. இவற்றுள் விசேடமாகச் சிந்தாமணி காவியத்தைப் பதிப்பிக்கும் நோக்கம் நாவலருக்கிருந்தும் என்ன காரணத்தினுல் அது செயலுருப் பெருமற் போனதோ தெரியவில்லை" என்ற அஷ்டாவதானம் சபாபதி முதலியா ரின் குறிப்பைச் சாமிநாதையர் தமது என் கதையில் பிரஸ்தாபிப்பர் (2 : 8011. செயலுருப்பெருத நாவலரின் இத்திட் டத்தை நன்குணர்ந்த பிள்ளை அவர்கள் சிந்தாமணியை கற்றுத்துறைபோய் அதன் இலக்கிய நலன்களைத் தமிழ்ச்சுவைஞர் களுக்கு வாரி வழங்குபவராக மட்டுமன்றி அதனைப் பதிப்பிக்கும் ஆர்வம் கொண்டவ ராகவும் விளங்கினர் (2 : 820), புராண படன மரபிலே திளைத்த பிள்ளை, சமண நூலான சிந்தாமணியை விரும்பியமைக்குக் காரணம் அதன் இலக்கிய வளமும், தமிழ் மரபை விட்டு விலகாத மாண்பு நலனு மாக இருத்தல் வேண்டும். (10, 11, 12 பார்க்க). பிள்ளையின் சிந்தாமணி உரைக் குறிப்புக்கள் அன்று மிகப் பிரபல்யம் பெற்றிருந்தன. இவ்வகையில் பிள்ளையின் நயப்பும் புலமையும்ஆட்சியும் எவ்வாறு தமி முகம் வரை வியாபித்திருந்தது என்பதனைச்

14
சாமிநாதையரின் குறிப்பு ஒன்றினை ஆர் வத்துடன் மேற்கோள் காட்டி விவரிப்பர் பண்டிதமணி. ஐயர், தமது சிந்தாமணிப் பதிப்பினைச் சோதித்து ஏற்றுக்கொள்ளும் படி பிள்ளையவர்களுக்கு எழுதிய கடிதக் குறிப்பிலே "பாற்கடலின் ஆழம் மந்தர மலைக்குத் தெரிவதேபோல சிந்தாமணி யின் ஆழம் உங்களுக்கே தெரியும் " எனப் புகழாரம் சூட்டுவர். பிள்ளை அவர்களின் சிந்தாமணி ஈடுபாடும் ஆட்சியும், அவரின் ாாரத ஆதிபருவ உரையிற் சரளமாக வரும் மேற்கோள்கள் மூலம் தெளிவாகத் தெரி கின்றது.
19ஆம் நூற்ருண்டில் இலங்கைத் தமிழ் அறிஞரின் இலக்கிய முயற்சிகள் பலவும் நாட்டின் எல்லைகளைத் தாண்டித் தமிழகத் தையும் அளாவிநின்றது; பல இலக்கிய அறிவியற்றுறைகளில் இலங்கையரே தமிழ் நாட்டவர்க்கு முன்னேடிகளாகவும் விளங் கினர். இவ்வகையில் நாவலர் பரம்பரை யினர் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள். நாவலர் பரம்பரையினரின் இந்தப்போக் கிற்கு பொன்னம்பலபிள்ளை புறம்பானவ ராக இருக்கவில்லை. திருவாரூர் சுப்பிர மணிய தேசிகருடன் அத்தியந்த தொடர்பு கொண்டிருந்த இவர், தமிழகம் சென்ற போதெல்லாம் வேதாரணியம், தேவ கோட்டை முதலாம் இடங்களில் வதிந் துள்ளார் என்றும், அவ்வப்போது பலரின் இலக்கிய சந்தேகங்களைத் தீர்த்ததுடன், தமது கம்பராமாயணம், சிந்தாமணி இரசனை களையும் வியாக்கியானங்களையும் கூடவே வெளிப்படுத்துவார் என்றும், அக் காலத் தில் பாண்டித்துரைத்தேவர் போன்ருே ரின் அன்பிற்குப் பாத்திரமாக விளங்கினர் என்றும் இவரது வரலாற்றுக் குறிப்புக்கள் கூறுகின்றன. இவ்வாறு தமிழகம்வரை இவர் புகழ் வியாபித்திருந்த நிலையில் இவரின் உரை வியாக்கியானங்கள் செந் தமிழ் பத்திரிகையிலும் வரவேற்றுப் பிர சுரிக்கப்பட்டமை போன்ற நிகழ்ச்சிகளிலே வியப்பில்லை.

Page 158
48
பொன்னம்பலபிள்ளை நாவலரின் மரபு என்ற பெருஞ்சாலையைச் செப்பனிட்டு வளர்த்த பெருந்தகைகளுள் ஒருவர். அதற்கு மேலாக நாவலரின் அடியொற்றி இரசனை' என்ற புதியதொரு கிளை மர பினைத் தோற்றுவித்துச் செழிக்கச் செய் தவர் என விதந்துரைக்கப்பட வேண்டிய வர். நாவலர் வழிவந்த அறிவுச் செம்மல் களுக்குள்ளே "இலக்கியம்’ என்ற துறையை விசேடமாக நோக்குவோமாகில் வித்துவ சிரோமணியின் செல்வாக்குக்கு ஆட்படா தவர் இல்லை என்றே கொள்ள வேண்டும்.
உரையாசிரியர் ம. க. வேற்பிள்ளை, வடகோவை சபாபதிநாவலர், ச. பொன் னம்பலபிள்ளை. சி. சுவாமிநாதபண்டிதர், மகாவித்துவான் கணேசஐயர், ச. சபா ரத்தின் முதலியார் முதலானேர் பிள்ளை யின் மாணவர்களாக இருந்தவர்கள். நாவ லரினதும் பிள்ளையினதும் மாணவராக விளங்கிய வேற்பிள்ளை அவர்கட்குப் பண்டை இலக்கியங்கட்கு உரை காணுந் தனித்திறன் தமதுஇருஆசான்களினதுசெல் வாக்கினுலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவு. திருவாதவூரடிகள் புராண உரையைத் தமது குருவான வித்துவசிரோ மணி முன் அரங்கேற்றிய வேற்பிள்ளை அபிராமியந்தாதி, புலியூரந்தாதி, ஈழமண்டல சதகம் என்ற நூல்களுக்கும் உரை கண்டவ ராவர். சுவாமிநாத பண்டிதர், நாவலர் காலத்து வாழ்ந்த அவரது சிஷ்ய பரம்பரை யில் மிக இறுதிக்காலம் வரைக்கும்வாழ்ந்த வரும் நாவலரிடம் அத்தியந்த குருபக்தி கொண்டு திகழ்ந்தவருமாவர். தொல்காப் பிய ஆய்வினைச் செம்மையாக மேற் கொண்ட கணேசையர், சித்தாமணி போன்ற இலக்கிய நூல்களிற் பேரார்வம் கொண்டு வாழ்ந்தமைக்கு வித்துவசிரோ மணி அவர்களின் தொடர்பு காரணமாக இருந்திருக்க வேண்டும்.
இன்றும் நம்மிடையே வாழுகின்ற பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர் க்ளும் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த இரசிகமணி கனக. செந்திநாதன் அவர் களும் பொன்னம்பலபிள்ளை தொடங்கிய

க.கலாபரமேஸ்வரன்
இரசனை மரபிற்கு மேலும் பல வலுவான அம்சங்களைக் கூட்டி ஒரளவு தெளிவான வடிவத்தையும் கெர்டுத்து அதனை நமது காலத்திலும் நிலைபெறச் செய்தவராவர். இளமையிலிருந்தே நாவலரின் கொள்கை க்ளுக்குத் தம்மை முழுமையாக ஆட் படுத்திய பண்டிதமணி, நாவலர் மரபி னர்க்கு ஈழத்து இலக்கிய கலாசாரத் துறைகளிலே தனியான இடமுண்டு என் பதைத் திடமாக நம்பியதுடன் அதனை எழுத்திலும் பேச்சிலும் நிறுவ முனைபவர். வித்துவ சிரோமணியைப் போலச் சீரும் பேருமாகப் புராணங்களுக்குப் பயன் கூறவேண்டும் என்ற பெற்றேர் வேண வாவினல் அன்னருடைய மூன்று சிறந்த மாணவரிடம் இளமையிற் கல்வி பயில் அனுப்பப்பட்ட கணபதிப்பிள்ளை, அவர் களிடம் சிறப்பாகக் கல்விப் பயன்பெற முடியாவிட்டாலும் வித்துவசிரோமணி பற்றிய கதைகள், இத்தியாதி செய்தி களால் அன்றுதொட்டே அவரின் இரச னைப்பாங்கு பற்றி ஓர் உள்ளுணர்வினைப் பெற்றிருக்க வேண்டும் என ஊகிக்க இட முண்டு. பின்பு குமாரசாமிப் புலவரின் மாணவராகப் பயின்ற காலத்தே இந்த இரசனையார்வம் வளர்ந்து, திருநெல்வேலி ஈரப்பலாத்தோட்ட வட்டமுயற்சிகளுடன் மேலும் பண்பட்டிருக்க வேண்டும். இலக் கிய இரசனையற்ற அத்தகைய ஒரு மாண வனைக்கூட 'கல்லைப் பிசைந்து கணியாக்கித் தன் கருணை வெள்ளத்தழுத்தி’ என மணி வாசகர் குறிப்பிடுவது போல இரசனையில் மூழ்கித் திளைக்கும் நிலைக்குக் கொண்டு வரக்கூடிய பண்டிதமணியின் சொல், பேச்சாற்றலைக் நினைக் கும் போதும், இரசனையிலே தோய்ந்த இனிய சொற் சித்திரங்களைக் கண்முன் நிறுத்தவல்ல அவரது சொற்பொழிவுகளால் ஈர்க்கப் பட்ட கூட்டம் ஒன்று வடபகுதியின் மூலை முடக்கு எங்கணும் பரத்திருக்கும் தன் மையை மனங்கொள்ளுகின்ற போதும் பிள்ளை அவர்களின் அன்றைய இரசனை யாற்றலையும் சூழ்நிலையையும் இனங்கண்டு கொள்ளவும், அத்தகைய தொரு இரசனை மரபு எவ்வாறு பண்டிதமணி அவர்களால்

Page 159
நாவலரும் பொன்னம்பலபிள்ளையும்
நமது காலத்திற் பேணப்படுகின்றது என் புதனை உணரவும் முடிக்கின்றது.
இரசத்தின் வெளிப்பாடே இலக் கியம்" எனத் தீர்க்கமாகக் கொள்ளுகின்ற பண்டிதமணி அவர்கள் (13 = 6), இலக்கி யங்களிலே உயிரான இரசனைக்கு உரிய பொருள் எது என்று தெரிதல் வேண்டும் என்றும் தெரிந்ததன் மேல் இரசனையை எடுத்துக்காட்டுதற் கேற்ற பாஷை நடை கைவரல் வேண்டும் எ ன் று ம் கூறுவர் (8 : 88). இவ்வகையில் அவர், இலக்கியம் சுவைக்கப்படுவதற்கு உரியது அன்றி ஆய் விற்கானதல்ல என்றும், இரசனைப்பொருட் களைத் தெரியும் அறிவும், அதனைச் சுட்டி வெளிப்படுத்தும் ஆற்றலுமே இலக்கிய விமரிசகனுக்கு முக்கியமானது என்றும் கொள்வதால் பிள்ளையின் இரசனை விமரி சன முறையை அடியொற்றி, அதனை இன் றும் ஈழத்தில் வளர்க்கின்ற பிரதிநிதியாக நம்மிடை வாழுகின்றர்.
பண்டிதமணியின் எழுத்துக்களை மாண வப்பருவத்திலிருந்தே ஏட்டுப் புத்தகமாக ஒட்டிச்சேர்த்து, பின்பு அவருடன் அத்தி யந்த ஈடுபாடு கொண்டு அவரையே தமது இலக்கிய குருவாக வரித்து, இரசிகமணி எனப் பாராட்டப்பெற்று வாழ்ந்த செந்தி நாதனும் பொன்னம்பல பிள்ளையின் இரசனை மரபினை ஈழத்திலேவளர்த்த நமது காலத்தவர்களிலே குறிப்பிடத் தக்கவர்.
திறனுய்வுத் துறையிலே மேலைத்தேய இலக்கியக் கொள்கைகளும் அளவுகோல் களும் நமது பாரம்பரிய மதிப்பீட்டுமுறை கட்கு மாருணவை என்று கருதிய செந்தி நாதன் ‘நமது இலக்கிய இரசனையும் அதன் மதிப்பீடும், நமது மண்ணிலேயும் தமிழர் நெஞ்சங்களிலேயும் வேரூன்றி மரபினலே நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று கூறும் பாங்கினல் பண்டைய உரை யாசிரியர் வழிவந்ததும், பின் வித்துவ

【49
சிரோமணி, பண்டிதமணி, டி. கே. சி. போன்றேராற் செப்பனிடப்பட்டதுமான இரசனை விமரிசன முறையை முழுமை யாகப் பின்பற்றியவர் எனக் கூறலாம். இரசனை முறைக்கு அடிப்படையான விமர்சகனின் அறிவாற்றல், "உணர்வுக் கூர்மை அல்லது அநுபூதிநெறி செந்திநாத னுக்கு அமைந்த வகையினை ஒர் ஆசிரியர் வருணிப்பதைப் பார்க்கும்போது செந்தி நாதனைப் பொன்னம்பலபிள்ளையின் இரச னைப் பரம்பரையின் வழிவந்தவராக நாம் தெளிவாக இனங்கண்டுகொள்ள முடி கின்றது. -
" ...கவியில் உயிரோடும் இடம் செந்திநாதனுக்கு மணக்கும். அது அவர் பிறப்போடு பிறந்தது. தான் பெற்ற உணர்வை அப்படியே சொற் சித்திரமாக வழங்கும் ஆற்றல் அவர் நாவிற் சிறந்தது வரதர், மூன்றவது கண், முன்னுரை.
என்பன அவ்வரிகள்.
இவ்வகையில் ஒரு இலக்கிய பரம் பரையைக் கொண்ட வித்துவசிரோ மணிக்கு ஈழத்து இலக்கிய வளர்ச்சியிலே ஒரு தனியான இடமுண்டு என்று திட மாகக் கொள்ளலாம்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்குமபோது நாவலர் பரம்பரையினரில் இலக்கியத் துறையில் தமிழாசிரியர், உரையாசிரியர், இரசனையாளர் எனப் பல்லாற்ருனும் தமது தனித்துவத்தை ஆழமாகப் பதித் ததுடன், தமக்கென ஒரு மாணவர் அல் லது இரசனைப் பரம்பரையை உருவாக்கி வளர்த் தவ ராக வித்துவசிரோமணி விளங்கியுள்ளார். இவருடைய வாழ்வும், இலக்கியப் பங்களிப்பும் தனியான ஆய் விற்குரியவை.

Page 160
50
சான்ருதாரங்கள்
1. சி. கணேசையர், ஈழநாட்டுத் தமிழ்ப் பு 2. உ. வே. சாமிநாதையர், என்சரித்திர 3. சி. கணபதிப்பிள்ளை, சிந்தனைக் களஞ்சி 4. ந. ச. பொன்னம்பலபிள்ளை, மகாபா
(யாழ்ப்பாணம்) 5. எஸ். கலாபரமேஸ்வரன், நச்சிஞர்க்கி தனைப் பல்கலைக்கழக முதுமாணிப்பட்ட 6. சி. சு. செல்லப்பா, தமிழில் இலக்கிய 7. π. கைலாசபதி, இலக்கியமும் திறனுய் 8. சி. கணபதிப்பிள்ளை, இலக்கியவழி (ய 9. வி. கலியாணசுந்தர முதலியார், வ
சென்னை: 1969). 10. உ. வே. சாமிநாதையர், சீவகசிந்தாய கினியர் உரை (சென்னை: 1922). 11. எஸ், வையாபுரிப்பிள்ளை, காவியகாலம் 12. T. P. Meenakshisundaram, A History 13. உழவர் விழாச் சிறப்புமலர், அம்பனை கt 14. J. P. Pitchard, Criticism in America
சைவ உதயபானு (ஆகஸ்ட்
சைவசமய வளர்ச்சிக்காகவும் பிரசாரத்
கப்பட்டது இப் பத்திரிகை. இதற்கு பிரம் கூறிய சிறப்புக்கவி:
* தாரகைகண் மறையத்துன்
தடுத்தெதிர்வஞ் சரைய காரவிரு வினையோட்டி வெ சந்தேக மன்றியுறு ெ மோரவே தெரிந்துண்மை
யுலகமெங்கும் சென்ெ சேருதய பானுவினை யவனி றிகழுதய பானுவெனக்

சு. கலாடிரமேஸ்வரன்
புலவர் சரித்திரம் (யாழ்ப்பாணம் : 1939). ủo (G)ớrsẵr&ư: 1950).
யம் (யாழ்ப்பாணம்: 1978).
ரதம் (ஆதிபருவம் மூலமும் உரையும்),
னியரின் திறனுய்வுக் கருத்துக்கள், பேரா ட ஆய்வு (வெளியிடப்படாதது; 1975)
விமர்சனம், (சென்னை: 1971).
வும் (யாழ்ப்பாணம்: 1972). ாழ்ப்பாணம்: 1951).
ாழ்க்கைக் குறிப்புகள் (2ஆம் பதிப்பு),
மணி (3ஆம் பதிப்பு முகவுரை), நச்சினர்க்
o (GoIF Gărðar; 1957).
of Tamil Literature (Annamalai: 1963).
லைப்பெருமன்றம் (தெல்லிப்பழை: 1972).
Indian Ed.), 1970).
- 1880)
த்திற்காகவும் யாழ்ப்பாணத்திற் தொடங் மயூரீ மு. கார்த்திகேயப் புலவர் அவர்கள்
மதிசாய்ந் தோடத் ழித்துத் தங்கு மந்த ளிய தாக்கிச் பாருளை யாரு யினையு ணர்த்தி றவரு முவந்து போற்றச்
மீதிற் * செப்ப லாமே.”

Page 161
நாவலரும் 6
க. கணேசலிங்கம்
66 ஆறுமுக நாவலரின் ஒரு மானுக் கர் செந்திநாதையர். டாக்டர் உ. வே. சுவாமிநாதையர் தமிழுக் குச் செய்த பணிபோன்ற பெரும் பணியைச் செந்திநாதையர் சைவ சமயத்துக்குச் செய்திருக்கிருர். நாவ லர் செய்யும் புராணப் பிரசங்கம், சைவப்பிரசங்கம் என்னும் இவை களைக் கேட்டு, அதன்மேல் குறிப்பு எழுதி வைத்துவிட்டன்றி உறங்காத விரதம் பூண்டவர் செந்திநாதையர். அவர் கந்தபுராண கலாசாரத்திலே முழுகித் திளைத்தவர்; கந்தபுராண நவ நீதம் என்னும் ஒரு நூலும் செய்திருக் கின்ருர், அவர் யாழ்ப்பாண கலாசா
ரத்தின் ஒரு பிரதிநிதி."
கந்தபுராண கலாசாரம் என்னும் நூலிலே செந்திநாதையர்பற்றிப் பண்டித மணி சி. கணபதிப்பிள்ளை இப்படி எழுது கிருர், இந்த வாசகங்களிலிருந்து செந்தி நாதையரின் பெருமையையும் ஆளுமை யையும் ஒருவாறு ஊகிக்கலாம்.
ஆறுமுக நாவலர் (1822-1879 ) பிறந்து கால்நூற்றண்டு கழித்து செந்தி நாதையர் (1848-1924) யாழ்ப்பாணத் துக் குப்பிளான் கிராமத்தில் பிறந்தார். ஆரம்பகாலத்தில் தமது மாமனுர் கதிர் காம ஐயரிடம் தமிழும் வடமொழியும் பயின்று, பின் யாழ்ப்பாணம் மத்திய கல் லூரியில் 10 வருடங்கள் ஆங்கிலப்படிப்பை

சந்திநாதையரும்
மேற்கொண்டார். நல்லூர் சம்பந்தப் புல வரிடம் தமிழ் இலக்கிய இலக்கணம் கற் றுத் தெளிந்த செந்திநாதையர், ஆறுமுக நாவலரின் வண்ணுர்பண்ணை சைவப்பிர காச வித்தியாசாலையில் ஆறு வருடமும் அவரின் ஆங்கில வித்தியாசாலையில் ஒரு வருடமும் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியராகப் பணிபுரிந்த இந்தக்காலத் திலே “செந்திநாதையருக்கு நாவலரிடம் ஆழ்ந்த ஈடுபாடும் நெருங்கிய தொடர் பும் ஏற்பட்டன. தமது ஆசிரியத் தொழி லிலும் பார்க்க நாவலரிடம் மாணவராய் இருந்து பாடம் கேட்பதிலேயே அவரின் பெரும் பொழுது கழிந்தது. நாவலரின் பிரசங்கங்களைத் தவருது கேட்டுக் குறிப் பெழுதுவார். அவர் தேவாரம் பாட நாவலர் சிவபூசை செய்தலுமுண்டு. நாவ லரின் மறைவினல் வருந்திய செந்திநாதை யர் தாம் பாடிய இரங்கற்பா ஒன்றன் மூலம் இதனைக் கூறுகிருர்.
* தேவாரம் யான்சொலக் கேட்டு
மகிழ்ந்து சிரத்தையுடன்
பூவாதி கொண்டு புரிசிவ பூசைப் பொலிவழகும்
பாவாணர் மெச்சச் செயும்பிர
சங்கமும் பார்த்தினியான்
நாவார வாழ்த்திடு காளுமுண்
டோநல்ல காவலனே.”
என்பது அந்தப் பா.

Page 162
152
இங்ஙனம் நாவலரிடம் மிகுந்த ஈடு பாடு கொண்டு ஆசிரியப் பணிபுரிந்த செந்திநாதையர், நாவலர் வழிமரபைப் பேணி வளர்த்த பெருந்தகையாளராகக் கருதப்பட்டார்.
**அப்பொழுது வித்தியாசாலைக்குத் தலைமை ஆசிரியர் செந்திநாதையர், ஐயர் நாவலர் செய்த ஒவ்வொரு பிர சங்கத்தையும் குறிப்பெடுத் தெழுதிக் கொண்டார். ஆறுவருடம் அது நடந் தது. ஐயரின் சமயப் பேரறிவுக்கு அரு மருந்ததொரு வித்தாய் அமைந்தது.'
சி. கணபதிப்பிள்ளையின் மேற்கூறிய கூற்றிலிருந்து, நாவலர் பிரசங்கம், செந்தி நாதையருக்கு ஏற்கெனவே இருந்த சமய அறிவு பேரறிவாய் மலர்ந்து விரிவதற்கும் அதன்மூலம் சமயத்துறையில் நாவலர் வழியில் தீவிரமாக ஈடுபட்டு செயல்படு வதற்கும் வித்தாக அமைந்ததென்பது ஒருவாறு விளங்குகிறது. செந்திநாதையர் காலம், அவர் நாவலருடன் கொண்டிருந்த தொடர்பு என்பன நாவலர் வழியில் ஐயர் செல்வதற்கும், அந்த வழியிலே ஆத்ம சுத்தியுடன் உழைப்பதற்கும் உத வினவென்பது ஐயரவர்களின் வரலாற்றை ஆராயின் புலனுகும்.
வரலாற்றுப் பெருமகனுக விளங்கிய நாவலர் பலதுறைகளில் பணிபுரிந்தவர். பன்முகப்பட்ட அவர் பணிகளெல்லாம் சைவமும் தமிழும் அந்நியர் கையிலிருந்து காப்பாற்றப்பட வேண்டுமென்ற குறிக் கோளிலிருந்து எழுந்தவையே. இந்த நோக்கத்துடனேயே நூல்களை எழுதியும் பதிப்பித்தும் பணிசெய்தார்; சமயப் பிரசங்கம் கண்டனம் என்று முழுமூச்சாக உழைத்தார்; தன்னிலும் பன்மடங்கு செல் வாக்கு மிகுந்த கிறிஸ்துவமதக் குருமா ருடன் வாதப்போர் புரிந்தார் : அரசிய லாரை தேவையேற்படும்பொழுது எதிர்த் தார்; பொதுமக்களுக்குப் பயன்படும் பல் வேறுபட்ட பணிகளைச் செய்தார். அவர் ஆரம்பித்த வேளாண்மைச் சங்கம், கஞ்சித் தொட்டித் தருமம், கரையார் வழக்கு

க. கணேசலிங்கம்.
என்பன அவரது பரந்துபட்ட பணிகளை விளக்கப் போதுமானவை. இந்தப் பரந்து பட்ட பணிகள் அனைத்திலும் அவரின் மரபு வழி செயலாற்றியவர்கள் ஈடுபட்டனர் என்று கூறமுடியாது.ஆயினும், அவர் பணிக ளிற் சிலவற்றையோ அல்லது பலவற் றையோ தொடர்ந்து நடத்தி வெற்றியீட் டியவர் பலர் அவர் மரபுவழி வந்தவர் என் பதை மறுக்க முடியாது. நாவலரின் நன் மாளுக்கராகவும் அ வரி ன் பாடசாலை களில் நல்லாசிரியராகவும் இருந்த செந்தி நாதையரின் வாழ்வு, பணி என்பனவற் றைக் கூர்ந்துநோக்கின் நாவலர்வழி வந்த இந்த மகானின் தனித்துவம் புலப்படும். நாவலர் போலவே சமயப்பிரசங்கம், புரா ணப் பிரசங்கம் முதலியவற்றில் ஈடுபட்டும் கண்டனங்கள் விடுத்தும், பாடசாலையை நிறுவியும், சொந்தமாக அச்சியந்திரசாலை வைத்து நூல்கள் பதிப்பித்தும். எழுதியும் பல பணிகள் செய்தவர் செந்திநாதையர். அவரின் பணிகளை நாவலர் பணிகள்ோடு ஒப்பிட்டு நோக்கும்போது பலவற்றில் நாவலரோடு ஒத்துள்ள அதேவேளையில் சிலவற்றில் நாவலரையும் மிஞ்சிவிட்டார் என்றே கொள்ளவேண்டியிருக்கின்றது.
ஆறுமுகநாவலர் போலவே செந்திநா தையரும் தன் ஆரம்பக்கல்வியை உள் ளூரிலும் ஆங்கிலக்கல்வியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் பயின்றவர். பத் தாண்டுகள் மத்திய கல்லூரியில் பயின்ற தால் மிசனரிமாருடைய சூழலில் பெற்ற அநுபவங்கள் இவருள்ளத்தில் ஆழ்ந்த தாக் கத்தை உண்டுபண்ணியிருக்கலாம். கால் நூற்ருண்டு இடைவெளியின் பின் செந்தி நாதையர் பிறந்தாலும் ஒரே கல்லூரியில், ஒரே சூழலில் இவரும் நாவலரும் கல்வி கற்றதால் ஒருவர் பெற்ற அனுபவங்களை மற்றவரும் ஓரளவு பெற்றிருக்கலாம் என் பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்களே இருவருக்கும் பிற்காலத்தில் பொதுவான சில இலட்சியங்களில் ஈடுபாட்டை ஏற். படுத்தின. சைவ நிந்தனை செய்வதிலும் சைவசமய தத்துவங்கள், புராணங்கள், ! கிரியைகளைப் பழித்து பொய்யென்று கூறு

Page 163
நாவலரும் செந்திநாதையரும்
வதிலும் அந்நியமதத்தைப் பரப்பவந்தவர் ஈடுபட்டனர். இவர்கள் செய்கையால் சைவசமயம் நலியுறுவதைக் கண்டு நாவல ரால் பொறுக்க முடியவில்லை. இதனை எதிர்க்க முழுமூச்சாக முனைந்த நாவலர் கண்டனங்கள் பல வரைந்தார்; வாதப் போர் புரிந்தார். இந்தப் பணிகளில் அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் செந்திநாதையர்.
இலங்கைநேசன் பத்திரிகையில் நாவ லரும் அவரின் மாணுக்கரான செந்திநா தையரும் பொதுமக்களைக் கவரும் வண் ணம் கருத்தாழம் கொண்ட கட்டுரைகளும் கண்டனங்களும் எழுதி வந்தார்கள். இவற் றையும் அவர்களின் கருத்துமிக்க சொற் பொழிவுகளையும் மறுக்க வழிகாணுத கத்தோலிக்க மதவாதிகள் அருளப்ப முத லியார் என்பவரை யாழ்ப்பாணத்துக்கு வருவித்தார்கள். அவரின் துணையுடன் நாவலரையும் அவரைச் சேர்ந்தவர்களை պմ, மிகவும் தீவிரமாகத் தாக்கத் தொடங்கிஞர்கள். இதனை ஆறுமுக நாவல ரால் பொறுக்க முடியவில்லை. இவர்க ளுடன் வாதம் செய்வதற்கு ஏற்றவர் செந்திநாதையரே என்பதை யெண்ணி அவர் மூலம் 1878ஆம் ஆண்டு ஆனி 13ஆம் திகதி இலங்கைநேசனில் ஒரு சமயவாத
விளம்பரம் விடுவித்தார்.
இவ்வியாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்க குருமார்கள் தங்கள் ** கதோலிக்கப் பாதுகாவலன் ?? என்னும் பத்திரிகையிலே நமது சைவ சமயத்தை வேண்டியவாறே துரஷித்துத் தங்கள் சமயமே மெய்ச் சமயம் என்று கர்ச்சிக்கிருர்கள். கத் தோலிக்கர்களுக்குத் தலைவராகிய LSept. Guntairéair (Bishop Bonjean) கத்தோலிக்கச்சமயத்தைச் சுட்டி ஒரு பிரசித்த சபையிலே என்னேடு வாதஞ் செய்ய உடன்படுவாராயின் அவ்வுடன் பாட்டைப் பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தக் கடவர். வாதத்தில்ே தமது மதத்தை நியாயங்கொண்டு நிறுத்துவாராயின் நான் என் சிஷ்
18

153
யர்களோடு அவர் மதத்திலே பிர வேசித்து, அம் மதத்தைக் கைமாறு ஒரு சிறிதும் வேண்டாது பிரசாரித்துத் திரிதலிலே என் வாழ்நாள் முழுவதும் போக்குவேனென்று உறுதிப்படுத்து கிறேன். - வண்ணுர்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலை உபாத்தியா யருள் ஒருவராகிய சி. செந்திநா தையர்.”* செந்திநாதையரின் இந்த விளம்பரம் தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஐய ருடன் வாதம்புரிய அந்நிய சமயவாதிகள் கோப்பாய் மாணுக்கன் என்ற புனைபெய ரில் இழிமொழித் திமிர தீபிகை என்ற தலைப்பில் 22-6-1878இல் வெளிவந்த கத்தோலிக்கப் பாதுகாவலனில் 6քG5, விளம்பரம் விடுத்தனர். இதனைப் படித்த நாவலர் அதற்கொரு கண்டனமெழுதி 29-6-1878ல் வெளிவந்தஇலங்கைநேசனில் வெளியிட்டார். இதில் செந்திநாதையர் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் முக்கிய மானவை. அதனைக் கலாநிதி ச. தனஞ்சய ராசசிங்கம் தமது நாவலர் பணிகள் என்ற நூலில் பின்வருமாறு விளக்குகிரு:ர்.
** அக்கண்டனத்தில் நாவலர்,செந்தி நாதையர் விவிலிய நூல் முழுவதை யும் கிறிஸ்தவ சமயங் குறித்து மேனட் டுக் கிறிஸ்தவரும் கிறிஸ்தவ விரோதி களும் எழுதிய நூல்களையும் கற்றிருந் தாரென்று குறிப்பிட்டுள்ளார். நாவல ருக்குத் துணையாயிருந்து சைவத்தைக் காப்பாற்றியோர் எவ்வெச் சமயப் புலமையுடையோராய்த்திகழ்ந்தார்க ளென்பதற்கு நாவலர், செந்திநானத யர் பற்றிக் கூறியது சான்ருகும்.”*
தாம் எடுத்த கருத்தை "ஆழமாகவும் தர்க்கரீதியாகவும் விளக்கி வாதமிடுவதில் வல்லவர் செந்திநாதையர். அத்துடன் அந்நிய மதநூல்களையும் அவற்றைச் சார்ந்தவற்றையும் ஆராய்ந்து வாத மிடுவார். இந்தவிதத்தில் செந்திநாதையர் நாவலரிலும் ஒருபடி மேலாக வைத்தெண் ணத் தக்கவர். அவரின் மதிநுட்பம்

Page 164
154
செறிந்த வாதத் திறமையில் நம்பிக்கை கொண்டே நாவலர் அவரை பொன்சீன் பாதிரியாருடன் வாதம்புரியத் தூண்டி விட்டார். செந்திநாதையரின் வாதத் திறமையை அறிந்த பொன்சீன் பாதிரி யார் அவரின் அழைப்பை ஏற்று வாதம் புரிந்ததாகத் தெரியவில்லை.
இத்தகைய சமயவாதத் திறமைமிக்க செந்திநாதையர், 1883ஆம் ஆண்டில், திருநெல்வேலியிலுள்ள சைவவித்தியா சாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அப்பொழுது முனிசீப் சுப்பிரமணியபிள்ளை யின் சுஜன மனுேரஞ்சினி என்ற பத்திரிகை யில் உதவி ஆசிரியர் பதவியை ஏற்ருர். இந்தக் காலத்திலேயேதான் பல்வேறு கண்டனப் பிரசுரங்கள் வெளியிட்டதன் மூலம் பாதிரிமார் தொடுக்கும் சைவமத கண்டனங்களுக்குத் திறமான மறுப்பெழுத வல்லவர் செந்திநாதையர் என்ற எண்ணம் சைவ உலகெங்கும் பரவியது. சாமுவேல் சற்குணரின் பிரசுரத்திற்கு மறுப்பெழுதி சாண் சத்திரியப் பிரசண்டமாருதம் என்ற நூலை வெளியிட்டார். 1888ஆம் ஆண்டு திருப்பற்றுாரில் அமிர்தபோதினி என்ற வார வெளியீட்டை நடத்திவரும் வேளை யில் சிவனும் தேவணு என்னும் தீயநாவுக்கு ஆப்பு, வஜ்ரடங்கம், ஞானரத்தினவளி, வீரபத்திராஸ்திரம், விவிலிய குற்சித கண் டன திக்காரம் முதலிய கண்டன நூல் கள் எழுதி வெளியிட்டார். இவரின் ஆற்றல் மிக்க கண்டனங்கள் இவருக்கு * கிறிஸ்துவமத கானன குடாரி' என்ற பட்ட த் தை ப் பெற்றுக்கொடுத்தன. இந்தப் பணிகளின் மூலம் பிரபலமான செந்திநாதையர் 1889-1898 வரையுள்ள பத்துவருட காலமும் காசியில் வசித்து சைவசித்தாந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பல பணிகள் புரிந்தார். இதனுலேயே இவரைக் "காசிவாசி செந்திநாதைய்ர்" என்று அழைப்பர்.
காசிவாசியாய் வாழ்ந்த செந்திநா தையர் காலப்போக்கில் நாவலர் போல் பல இயக்கங்கள் நடத்தியது வரலாறு கண்ட உண்மை, சைவசமயம் நலிவுறுவ

க. கணேசலிங்கம்
தைக் கண்டு அதன் வளர்ச்சிக்குப் பாடு பட்டவர் நாவலர் தம் பணிகளைத் தொடர்ந்து நடத்தத் தகுந்தவர்களை இனங்கண்டு அவரை நெறிப்படுத்தியமை பும் அவரின் பணிகளில் முக்கியமான தொன்று. மதிநுட்பம் மிகுந்த நாவலர் தம் பாடசாலை ஆசிரியராகப் பணிபுரிந்த செந்திநாதையரை நெறிப்படுத்துகிருர், எதையுமே திருந்தச் செய்யும் நாவலர் எளிதிலே எவருக்கும் நன்னடக்கைப் பத் திரம் வழங்குவதில்லை. செந்திநாதைய ருக்கு ஒரு நன்னடக்கைப் பத்திரம் வழங்கி இந்தியாவுக்கு அனுப்புகிருர்.
*பூரீ சி. செந்திநாதையரை யான் ஏழுவருட காலம் அறிவேன். ஆறு வருட காலம் என்னுடைய தமிழ் வித்தியாசாலையிலும் ஒரு வருடம் என் னுடைய இங்கிலிஷ் வித்தியாசாலையி லும் உதவி உபாத்தியாயராக இருந்து தமதுகடமையிலும்ஜாக்கிரதையோடு பிறழாமல் நடத்திக்கொண்டு வந் தவர். ஒழிவுள்ள பிறநேரங்களில் நான் பொது நன்மையின் பொருட்டு எடுத்துக்கொண்ட பிற கருமங்களை யும் நிறைவேற்றினர்."
இந்தப் பத்திரம் செந்திநாதையர்மீது நாவலர் கொண்ட நம்பிக்கையையும் மதிப்பையும் வெளியிடப் போதுமானது. அவரின் நன்னடத்தைப் பத்திரம் பெற்ற செந்திநாதையரின் சமய அறிவு பேரறி வாக மலர்ந்து பல பணிகள் செய்யத் தூண்டுகிறது: காசியில் இருந்து சமய ஆராய்ச்சிகள் நடத்தவைக்கிறது. சித் தாந்த உண்மைகளைத் தெளிந்து அறிஞர் உலகம் வியக்கும்படி பல நூல்களை எழுது கிருர் செந்திநாதையர். ‘சிந்தாந்த சிகா மணி ", "சித்தாந்த பாநு" போன்ற பல பட்டங்களைப் பெறுகிருர். நன்னடத்தைப் பத்திரம் வழங்கி இந்தியாவுக்கு இவரைப் போகத் தூண்டிய நாவலரின் முயற்சியை இங்கே பாராட்டவேண்டும்.
நாவலர் வாழ்ந்த கால்ம் சைவ உலகம் தன் சமய நெறிகளையும் பண்டைப்

Page 165
நாவலரும் செந்திநாதையரும்
பெருமைகளையும் மறந்து அன்னியத்தைப் போற்றத்தொடங்கிய காலம். பிற மதத் தவரின் போதனைகளிலும் சைவ நிந்தனை களிலும் சிக்கி உண்மையுணராது தம் அடிவேரான சைவசமய மரபுகளையும் தத் துவ ங் களை யும் கலாசாரத்தையும் பொதுமக்கள் மறக்கத் தொடங்கினர்கள். இந்தக் காலகட்டத்தில்தான் நாவலர் சைவ உலகுக்கு அதன் சமயக் கருத்துக்களை விளக்கிப் பிரசாரம் செய்தனர். அன்னிய மதத்தவரின் பொய்யுரைகளை முழுமூச் சாக எதிர்த்து கண்டனங்கள் விடுத்தனர். எம்மவர் தம் உண்மைச் சமயநிலையை உணரவும் அதன்படி ஒழுகவும் ஆவன செய்தார். மரபு வழி வந்த கலாசாரம் அழியாமல் பாதுகாத்தார். நலியத் தொடங்கிய எமது தனித்துவத்தை அழிவி லிருந்து மீட்டார். இவைகளெல்லாம் சாதாரண மக்களுக்கு ஒரு எழுச்சியையும் மறுமலர்ச்சியையும் உ ண் டா க் கி ன : புரட்சியை ஏற்படுத்தின.
இந்தநிலையில் சைவசமய அறிஞர் பலர் தம்முள் கருத்துவேற்றுமைகொண்டு வாதிட்டு நின்றனர் என்பது கருதற்பாலது. சமய தத்துவங்கள் கூறும் உண்மைப் பொருள் எதுவென்று தெரியாமல் மயங்கி னர். சித்தாந்தம் வேதாந்தம் என்று வாதிட்டனர். வேதாந்தம் கூறும் பிரமம் வேறு; சித்தாந்தம் கூறும் சிவம் வேறு : இது உயர்ந்தது; அது தாழ்ந்தது என்று தர்க்கமிட்டுத் திரிவதிலே தம் பொழுதைப் போக்கினர். மாயை, உயிர், உலகம் என்று எவையுமில்லை; எல்லாமே கடவுள் மயம் என்று கூறுவோர் இருந்தனர். மாயையும் உயிரும் என்றும் உள்ளவை; அவை பிரமத் துக்கு வேருக இல்லை என்று வேறு ஒரு சாரர் கூறினர். இங்ங்ணம் பல்வேறுபட்ட கருத்துக்கள் சமய அறிஞரிடம் இருந்த தால் உண்மை அறியமுடியாத நிலை உரு வாகியது. பிரமசூத்திரம் போன்ற நூல்க ளுக்கு உரை எழுதியவர்களே தம்முள் வேறுபட்டிருந்தனர். அவர்களின் உரைக ளும் கருத்துக்களும் மேலும் திரிக்கப் பட்டு வேறுபட்ட புதுக்கருத்துக்களும் உரு

155
வாயின. இங்ங்ணம் வேறுபட்ட கருத்துக் ளுக்கு சில வேளைகளில் ஒரேயொரு நூலே ஆயுதமாகக் காட்டப்படுவதுமுண்டு.
இந்த நிலையிலேதான் செந்திநா தையர் தம் ஆழ்ந்த ஆராய்ச்சித் திறத் தால் உண்மையை விளக்கி அறிஞருலகில் நிலவிய பிழையான கருத்துக்களைப் போக் கினர். வேதாகம தேவாரம் போன்ற நூல்கள் எழுதி வேதாந்த சித்தாந்தக் கொள்கைகளின் ஒருமைப்பாட்டை விளக் கினர். நீலகண்ட பாஷ்யத்துக்கு உரை யெழுதிப் பிரமசூத்திரம் பற்றி எழுந்த கருத்துவேறுபாடுகளை நீக்கினர். வேதம் சார்ந்த நூல்களில் உள்ள கருத்து வேறு பாடுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டி அவற்றின்மூலம் சித்தாந்த மரபை எடுத் துக் காட்ட சைவ வேதாந்தம் என்னும் நூலை எழுதினர். இத்தகைய பணிகளின் மூலம் சைவசித்தாந்த உண்மைகளை நிறுவி தம் குருவாகிய ஆறுமுக நாவலரின் வழி வழி சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார் என்பது கருதற்பாலது. மெய்கண்ட சாத் திரங்கள், திருமுறைகள் வேத உபநிடதங் களிலிருந்து சற்றே விலகியதென்ற மயக் கத்தை உண்டுபண்ணிப் பல உரையாசிரி யர்கள் திரித்துரைந்திருந்தார்கள். இடை யில் வந்த இந்த மயக்கங்களை நீக்கிய செந்திநாதையரின் பணிபற்றி பண்டித மணி கணபதிப்பிள்ளை பின்வருமாறு கூறு &მღუფff.
ஐயரவர்கள் மெய்கண்டதேவ நாயனர் அரு விய ** அத்துவித உண்மை "" ஆகிய சைவ சித்தாந்த கலாசாரத்தைத் தேவாரம் திருவாச கம் திருமந்திரம் முதலிய திருமுறை களுக்கும் வேத உபநிடதங்களுக்கும் சிவாகமங்களுக்கும் புராண இதிகாசங் களுக்கும் ஏனை அங்க நூல்களுக்கும் விரோதிக்காத முறையில் உய்த்துணர் வதற்கு, வழியில் உள்ள கல்லுகள் முள்ளு கள் செடிகளை யெல்லாம் அகற்றி வழிவகுத்திருக்கிறர்கள்.
(கந்தபுராண கலாசாரம்)

Page 166
பிரம சூத்திரம் பற்றிய மயக்கங்கள் கருத்துவேறுபாடுகளை ஐயரவர்கள் தர்க்க ரீதியாக விளக்கி அகற்றும் பான்மை அறிஞர்களால் மெச்சப்படுவது. அவரின் வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த தத்துவ விஞவிடை என்னும் நூலில் 130ஆம் வினவிடையின் அடிக்குறிப்பு இதற்கு ஒர் எடுத்துக் காட்டாகும், "A என் பானுடைய வைரிகளாகிய B, C, D என் பார் தங்களுக்குள்ளே ஒற்றுமையிலராய விடத்தும், அந்த A என் பானு டைய சொந்த ஆஸ்தியாகிய நிலத்தைத் தம் முடையதாக்கத் துணிந்து அந்நிலத்திலே A என்பானுக் குரியவென்று நாட்டப்பட் டிருந்த எல்லைக் கற்களைப் பிடுங்கியும், கள்ளச் சாசனங்கள் பிறப்பித்தும், அந் நிலம் A என்பானுக் குரியதாகாதவாறு செய்தும், அந்நிலமுடையானத் தூஷித் தும், அந்நிலத்தை “தம்முடைய ஆஸ்தி", * “தம்முடைய ஆஸ்தி," ** பொதுவாகிய ஆஸ்தி" என்றும் நெடுங்காலமாய் எழுதி யும் பேசியும் ஆண்டுவருவாராக, . என்று தர்க்க ரீதியான கதைப்போக்கிலே பிரமசூத்திரத்திற்கு உரைகண்ட நீலகண்ட Gauntjafrt fluntri, ஏகான்ம வாதாசாரி யார், வைணவாசாரியார், மத்துவாச்சா ரியார் முதலியோர் நிலைகளை விளக்குவது அக்கால மரபிலிருந்து மாறுபட்டதும் புதுமை கொண்டதுமாகும். இங்ங்ணம் விளக்கிப் பிரமசூத்திரம் " வைதீக சைவர் களுடைய சொந்த ஆஸ்தியாம் என் றும் அதற்கும் சங்கரபாஷ்யத்துக்கும் தொடர்பில்லை என்றும் நிறுவுவது அவரின் ஆழ்ந்த சமய ஆராய்ச்சிக்கும் தர்க்கத் திற மைக்கும் சான்றுபகர்வதாகும். நீலகண்ட பாஷ்ய முகப்பில் இவர் எழுதிய உபக்கிர மணிகைகளும் இவற்றை எடுத்துக்காட் டப் போதுமானவையாகும். இதுபற்ற பண்டிதமணி கூறுவது நோக்கற்பாலது.
நீலகண்ட பாஷ்ய முகப்பில், இரு நீண்ட உபக்கிரமணிகைகள் தந்திரு. கிருர். ஒன்று உபநிடத உபக்கி மணிகை மற்றது பிரமசூத்திர உப கிர மணிகை. இவை இரண்டும் சை: சித்தாந்த கலாசாரமாகிய சரப

க. கணேசலிங்கம்
தின் இரு சிறகுகள் என்றே வருணிக் கத்தக்கவைகள்.ஒவ்வொன்றும் தனித் தனி கோடி பொன்பெறும். வேதங் கள் ஆகமங்கள் புராணங்கள் இதி காசங்கள் ஸ்மிருதிகள் திருமுறைகள் சாத்திரங்கள் எல்லாம் ஆராய்ந்து ஆக்கப்பட்டவைகள் அந்த உபக்கிர மணிகைகள். ஆயிரக்கணக்கான வரு ஷமாக ஏகாத்மவாதிகள் சைவ சித் தாந்த கலாசாரத்தைச் சிதைக்கச் செய்த அடாத செயல்களை அந்த உபக்கிரமணிகைகள் கையும் மெய்யு மாக எடுத்துக் காட்டுகின்றன.
(மு. கு. நூல்)
இதிலிருந்து செந்திநாதையர் சித் தாந்த உலகில் செய்த பெரும் முயற்சி சிகளும் அம்முயற்சிகளில் நாவலர் முயற் களிலும் பார்க்கச் சிறந்த வெற்றியீட்டி யதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
இச் சித்தாந்த ஈடுபாடு இந்தியாவி லும் நாம்பிறந்த ஈழநாட்டிலும் வேறு பலரின் பெரும் பணிகளுக்கு உந்துசத் தியாக விளங்கியதைக் காணலாம். நாவ லரின் இயக்கம் கிளைவிட்டுப் பரந்து அவ ரின் வழிவந்த அறிஞர்களால் பேணி வளர்க்கப்பட்டது போன்று சித்தாந்தத் துறையில் செந்திநாதையர் ஆக்கிய பணி கள் பலர்வாயிலாகப் பல்வேறு வழிகளில் பிரதிபலித்தன. சென்னையில் சிந்தாந்த சண்டமாருதம் சோமசுந்தரநாயக்கர் ஐய ரின் நட்பால் சித்தாந்தப் பெருமையை உணர்ந்து அதனை வெளிப்படுத்துவாரா யினர். அக்காலத்தில் சென்னையில் ஏகான்ம வாதிகளுக்கும் சித்தாந்திகட்குமிடையில் இடைவிடாது வாதங்கள் நிகழ்ந்தன. அனேகமான வாதக்கூட்டங்களுக்கு ஐய ரவர்களே தலைமை தாங்க அழைக்கப்படு வார். மேலைப்புலோலி நா. கதிரைவேற் பிள்ளை இவரிடம் உபதேசம் பெற்று ஞான நூல்களை இவரிடமிருந்தே கற்றுத்தேறி ஞர். அவருக்கு மாயாவாத துவம்ச கோளரி என்ற பட்டத்தை யளித்தவரும் ஐயரவர்களே. பழனியில் வாழ்ந்து சில ஆண்டுகளின் முன் காலமான சித்தாந்த

Page 167
நாவலரும் செந்திநாதையரும்
சரபம் பிரம்மபூரீ ஈசானுசாரிய சுவாமிகள் ஐயரவர்களின் சிரேட்ட மாணவர்களில் ஒருவர். ஐயரவர்கள் இத் தொடர்புகளி ணுல் ஏற்பட்ட தாக்கத்தைப் பண்டிதமணி கணபதிப்பிள்ள்ை பின்வருமாறு கூறுவார்.
.தமிழ் நாட்டுக்கும், தாம் பிறந்த ஈழநாட்டுக்கும் அந்த மகான் அளப்பிலாத சேவை செய்திருக்கிருர், மாயாவாத மாருதத்தை ஆசமனஞ் செய்வதற்கு ஐயர் ஒர் ஆதிசேஷ ஞகவே காட்சியளித்தார். தென்னிந் தியாவிலே நல்லசாமிப்பிள்ளை அவர் கள் சைவசித்தாந்த சாஸ்திரங்களை ஆங்கிலத்தில் பெயர்த் தற்கும், ஆண்டாளம்மையார் சைவசித்தாந்த மழை பொழிதற்கும் நமது ஐயர் உறு துணையாயிருந்தார். வேதாசலம் அவர் களின் குருவாகிய சோமசுந்தர நாயக் கர் அவர்களின் மாயாவாத கண்டன சண்டமாருதத்துக்கும் ஐயர் ஊன்று கோலாயிருந்தார். இங்கே மாயா வாத துவம்ச கோளரி திரு. நா. கதிரைவேற்பிள்ளையின் கர்ச்சனைகளுக் கும், சுவாமிநாத பண்டிதர் அவர் களின் வீராவேசத்துக்கும், சிவஞான போத திராவிட மாபாடிய வெளியீட் டுக்கும் மகான் செந்திநாதையரே மூல புருஷர்.
தமது சித்தாந்த ஆய்வுகளின் மூலம் கண்ட உண்மைகளையும் சித்தாந்தக் கருத் துக்களையும் பரப்பச் செந்திநாதையர் வேறுபல முயற்சிகளும் மேற்கொண்டார். பொது மக்களிடையே சைவசமயத்தைப் பரப்ப நாவலர் பாடசாலைகள் நிறுவிய தும் அச்சுயந்திரசாலை வைத்ததும் நூல் கள் பதிப்பித்ததும் யாவரும் அறிந்த்தே. செந்திநாதையரும் தமது பணிகளுக்கு இத் தகைய வழிகளையே பின்பற்றினரென லாம். ஆனல் அவர் பின்பற்றிய இந்த வழிகள் சாதாரண மக்களுக்கு மட்டுமன்றி

157
சமய அறிவு மிக்கவருக்கும் பெரும் பயனை அளித்தன. 1902இல் திருப்பரங்குன்றத் தில் வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த வித்தியாசாலை நிறுவி சித்தாந்தம் வளர்த்தார். இப்பாடசாலையில் தமிழ் வடமொழி ஆங்கில நூல்களும் கற்பிக்கப் பட்டன. 1904இல் வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்தப் படம் வெளியிட்டுப் பெருமை பெற்றதுடன் சித்தாந்தபாது என்ற பட்டமும் பெற்றர். 1906இல் செந்திநாதசுவாமி யந்திர சாலை என்னும் அச்சகத்தை நிறுவி சிவஞானபோத வசன லங்கார தீபம் தேவாரம் வேதசாரம், நீல கண்ட பாஷ்யம், சித்தாத்துவிதப்பட விஞ விடை யென்ற அரிய நூல்களை வெளி u7 -l-frff.
நாவ்லர் பொதுமக்களிடையே சைவத் தைப் பரப்பும் முயற்சியிலீடுபட, செந்தி நாதையர் சமய தத்துவங்களில் ஆய்வு மேற்கொண்டதை மேலே கண்டோம். இதனுல் புராணக் கதைகளுக் கிடையில் புதைந்து கிடக்கும் தத்துவக் கருத்துக்களை வெளிக்கொணர அவரால் முடிந்தது. இதன் காரணமாக மக்களிடை சமய எழுச்சியும் நமது புராண இதிகாசங்களில் அபிமானமும் ஏற்பட்டன. ‘சிவனுந் தேவன என்னும் தீயநாவுக்கு ஆப்பு" என் னும் கண்டனப் பிரசுரத்தில் இராமாயணக் கதை யுணர்த்தும் தத்துவத்தை ஒரு இடத் தில் தொட்டுச் செல்கிருர். இராமர் ஆசாரியர் என்றும் சீதை எனும் உயிர் இராவணன் எனும் அஞ்ஞானத்தால் பற் றப்பட்டபோது அவ்வஞ்ஞானத்தை யொழித்து உயிரை ஆட் கொண் ட முறையை விளக்கி வர்ல்மீகி முதலியோர் காவிய நவரசங்கள் வாயிலாக உண்மை யைப் பொழிந்தார்களென்று இயம்புகி முர். இவ்வாறே தமது வைதிக சுத்தாத் துவித சைவசித்தாந்த சமயம் என்னும் பொருள் குறித்த கட்டுரை யொன்றில் (இந்துசாதனத்தில் வெளிவந்தது.) சரியை

Page 168
கிரியை, யோகம், ஞானம் ஆகிய நெறி களின் உள்ளார்ந்த கருத்தை விளக்கி அவற்றைப் பின்பற்றுவோரின் மனே வளர்ச்சிக்கேற்ப அ வை ஒவ்வொன் முக விடுபட்டு ஈற்றில் புறக்காரணமாகிய காயத் தொழிலையும் அகக் காரணமாகிய மனத்தொழிலையும் கைவிட்டுக் கேட்டல் சிந்தித்தல் சமாதி (நிஷ்டை) என்னும் நிலைகளில் சாதகன் வளர்வதைக் கூறுவது அறிவு சார்ந்த, விஞ்ஞான பூர்வமான விளக்கமாக அமைகிறது. அன்றைய கால கட்டத்தில் இத்தகைய விளக்கங்களும் ஐயரின் பணிகளும் மிகவும் வேண்டப் படுவனவாய், அறிவு சார்ந்தவையாய் இருந்தன என்பது ஆராயின் புலப்படும். இங்கே குப்பிளான் செந்திநாதையர் ஞாபகார்த்த சபை வெளியீடான காசி வாசி செந்திநாதையர் (1978) என்னும்
வாழ்க்கையை அர்ப்பணித்
" ஆறுமுகநாவலர் தமிழுக்கும் .ை வாழ்க்கையை அர்ப்பணித்தார். பழந்தமி முதலில் பதிப்பித்தவர். நாவலர் பதிப்பு மதிப்புக் கொடுக்கப்படுகிறது. தமிழ் வசன கையாண்டவர். அதனுல் தமிழ் வசன இவருடைய மாணுக்கர் பரம்பரையும் சி மதிப்பும் பெற்று, எண்ணிலடங்காத அரி

க, கணேசலிங்கம்
நூலின் பதிப்புரையில் இக்கட்டுரையாளர் எழுதியது பொருத்தமாக அமைகிறது :
'அன்றைய நிலையில் நம் சமய நெறிகளை மக்கள் மறக்கத் தொடங் கினர். புராணக் கதைகளே உண்மைச் சமயமென மயங்கினர். மக்ான் செந்திநாதையர் நம் சமய நெறிக ளின் உள்ளார்ந்த நோக்கத்தை எடுத் துரைத்தார். புராணக் கதைகளில் புதைந்து கிடக்கும் தத்துவ உண்மை களை வெளிக்கொணர்ந்தார். அன்று அவரின் நோக்கு விஞ்ஞான நோக் காக விளங்கியது. . நம் வைதீக நெறியின் உண்மையையும், தனித் தன்மையையும் நிலைநாட்ட உதவிய அவரின் அறிவும், துணிவும், தன்னம் பிக்கையும் எக்காலத்திலும் எவரும் பின்பற்ற வேண்டியன."
ᎠᏛᏝᏰᏛ
சவத்துக்கும் தொண்டாற்றுவதற்கே தம் ழ் நூல்கள் பலவற்றைத் திருத்தமாக முதன் என்ரு ல், அதற்கு இன்று வரையிலும் தனி எநடையையும் முதன்முதலில் திருத்தமாகக் த்தின் தந்தை என்று போற்றப்படுகிருர், }ப்பு மிக்கது. வாழ்நாளில் பெரும்புகழும் ய சாதனைகள் புரிந்தவர்.'
தமிழ்வட்டம் ஆண்டுமலர் (சென்னை, 1969.)

Page 169
<960/C0ớõ DT6 சபாபதி நாவ
அம்பலத்தான் 6 Sy
ஆறுமுக நாவலர் அவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றிப் பல்வேறு துறைக ளிற் பணியாற்றியோருள் "நாவலர்" என் னும் பட்டம்பெற்றுத் திகழ்ந்தோர் இருவர்; கோப்பாய்ச் சபாபதி நாவலர் ஒருவர்; சித்தன்கேணி அம்பலவாண நாவலர் மற்றவர். இவர்களுக்கும் திரு வாவடுதுறை ஆதீனகர்த்தர்களே நாவ லர்ப்பட்டம் வழங்கினர்.
சபாபதி நாவலர் வாழ்க்கையையும், பணியையும் நோக்குமிடத்து அவை பல அமிசங்களில் ஆறுமுக நாவலர் வாழ்க்கை யையும், பணியையும் அடியொற்றியிருக் கக் காணலாம். நாவலர் அவர்களுக்கு இருபத்து இரண்டு ஆண்டுகள் பிற்பட்டுப் பிறந்த சு. சபாபதிப்பிள்ளை (1844-1903), அன்னர் மறைந்து இருபத்துநான்கு ஆண்டு களுக்குப் பின் தேகவியோகமானுர், ஐம்பத்தெட்டு வருடங்கள் வாழ்ந்த சபா பதிப்பிள்ளை, ஆறுமுக நாவலர் மரபின் குறிப்பிடத்தக்க பிரதிநிதிகளில் ஒருவ ராகத் திகழ்கிருர் என்பதில் தடையெதுவு மில்லை.
தமது பிறப்பிடமாகிய வடகோவை யிலே ஜெகந்நாதையர் என்பவரிடம் ஆரம் பக் கல்வி பயின்ற சபாபதிப்பிள்ளை அக் காலத்தில் வாழ்ந்த சமஸ்கிருதப் பேரறிஞ ரான நீர்வேலி சிவசங்கர பண்டிதரிடம் முறையாகக் கல்வி கற்ருர், st) (p5 நாவலர், வித்துவசிரோமணி பொன்னம் பலபிள்ளை ஆகியோரிடத்திலும் இவர்

பாடங்கேட்டவர் என்று சிலர் கூறுவர். எவ்வாருயினும் அக்காலத்திலே யாழ்ப் பாணத்தில் வாழ்ந்த ஓர் இளைஞர் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் பெறக்கூடிய கல்வியனைத்தையும் அவர் பெற்றிருந்தார் எனத் துணிந்து கூறி விடலாம்.
இந் நிலையில் சபாபதிப்பிள்ளையின் கல்வியையும், தகுதியையும், திறமையை யும் கண்ட ஆறுமுகநாவலர் சிதம்பரத் திலே தாம் நிறுவிய சைவப்பிரகாச வித்தி யாசாலையில் தலைமை ஆசிரியராய்ப் பணி புரியுமாறு அவரை அனுப்பிவைத்தார். நாவலரவர்கள் சபாபதிப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்தமையே அடிப்படையான ஒரு செய்தியை எமக்குணர்த்துகிறது. அதாவது சபாபதிப்பிள்ளைக்குக் கல்வியில் அதிக ஈடுபாடு இருந்தது என்பதாகும். இவ்வீடுபாடே நாவலர் வித்தியாசாலையி லிருந்து அவர் விலகி மேலும் தமது அறிவுத் தேடலை மேற்கொள்ளுதற்கும் காரணமா யிருந்தது எனக் கருதலாம்.
சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியா சாலைத் தலைமைத் தமிழ்ப் போதகாசிரி யர்ப் பதவியைக் கைவிட்ட சபாபதிப் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சென்று அங்கு பதிஞருவது மகாசந்நிதான மாய் வீற்றிருந்த பூரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகளிடம் அருளுபதேசம் பெற்ருர், பின்னர் அங்கேயே பன்னிரண்டு

Page 170
160
வருடங்கள் தங்கியிருந்து இலக்கிய இலக் கண சாத்திர நூல்களைக் கற்றுத் தமது கல் வியை மேலும் விருத்தி செய்துகொண் டார். அவரே ஒரு சந்தர்ப்பத்திற் கூறியது போன்று, திருவாவடுதுறை ஆதீனத்தில் *"உண்மை நூலுணர்ச்சியும் மெய்யுபதேச மும்’ பெற்றர். சுப்பிரமணிய தேசிக ருக்கும், சபாபதிப்பிள்ளைக்கும் அணுக்கத் தொடர்பு ஏற்பட்டிருத்தல் வேண்டும். பிற்காலத்தில் சபாபதிப்பிள்ளை இயற்றிய நூல்களிலே குருவணக்கப் பாடல்களில் தேசிகரைப் போற்றுவதைக் காணலாம். திருமயிலை சே. சோமசுந்தரம்பிள்ளை கூறி யிருப்பதைப்போல, சுப்பிரமணிய தேசிக ரும், சபாபதிப்பிள்ளைபால் கொண்ட "அன்பின் மிகுதியால் அவரைத் தமது அபிமான புதல்வராக வைத்து உபசரித்து வேண்டுஞ் சன்மானங்கள் செய்து கொண் டாடி வந்தனர்." அதுமட்டுமன்று அவரே சபாபதிப்பிள்ளைக்கு நாவலர்" என்னும் பட்டத்தினையும் சூட்டி மகிழ்ந்தார். இவை யெல்லாவற்றுக்கும் மேலாக திரிசிரபுரம் மீனுட்சிசுந்தரம்பிள்ளை (1815-1876) மறைந்ததன்பின் சபாபதி நாவலரையே ஆதீன மகாவித்துவானக அமர்த்திக் கொண்டார். இத்தகைய நிகழ்வுகளினல் சபாபதி நாவலரது வாழ்க்கை பெருமள விற்கு ஆதீனத்துடன் இணைக்கப்பட்டது மட்டுமன்றி, பெரும்பான்மை தமிழ்நாட்டி லேயே கழியவும் நேர்ந்தது. சென்னையி லும் சிதம்பரத்திலும் அவர் முப்பத்தைந்து வருடகாலம் வசித்தார். அங்கு அவரிடம் கல்வி கற்றவரும் பலராவர். இவரிடம் கல்வி கற்றவர்களில் சிதம்பரம் அ. சோம சுந்தர முதலியார், விழுப்புரம் 9עrמוזח சாமிப்பிள்ளை, மாகறல் கார்த்திகேய முதலியார், மயிலை க. சிங்காரவேலு முதலியார், சிதம்பரம் சிவராமச் செட்டி யார், திருமயிலை பாலசுந்தர முதலியார், சிதம்பரம் முத்துவேலாயுதபிள்ளை, மாவை வே. விசுவநாதபிள்ளை, சுழிபுரம் சிவப் பிரகாச பண்டிதர், வதிரி சி. தாமோ தரம்பிள்ளை என்போர் குறிப்பிடத் தக்க வர்கள். நிண்டகாலத் தமிழக வாழ்க்கை பின் விளைவுகளும் பல. ஆறுமுக நாவலர் பரம்பரையில் சபாபதி நாவலர் சேர்ந்தும்

** அம்பலத்தான்"
சேராமலும் இருப்பதற்கும் இதுவே பிர தான ஏது எனலாம்.
மடாலயத் தொடர்பு காரணமாகவே சபாபதி நாவலருக்கும் ஆறுமுக நாவலர் "வட்டத்தினருக்கும் அவ்வப்போது சிற்சில முரண்பாடுகள் எழுந்தன என்று கூறத் தோன்றுகிறது. உதாரணமாக ஒரு சந் தர்ப்பத்தில் ஆறுமுகநாவலரது மருகரும் மாணுக்கருமான நல்லூர் வை. திருஞான சம்பந்தபிள்ளைக்கும் சபாபதி நாவலருக்கும் விரோதமுண்டாகியது. திருஞானசம்பந்த பிள்ளை "தர்க்ககுடாரதாலுதாரி என்ற புனைபெயரில் வெளியிட்ட கண்டனப் பத் திரத்திலே சபாபதி நாவலரை மட்டுமன்றி. திருவாவடுதுறைப் பண்டார சந்நிதிகளை யும் சற்றே இழுத்து எழுதியிருந்தார். சபாபதியார் அப்பத்திரங்களை மடாதி பதிக்கு அனுப்பியதோடு அப்பிரசுரம் ** சமவாத சைவப் பிசாசாகிய ஞானப் பிரகாசர் மரபில் பிறந்தவனும், ஆறுமுக நாவலருக்கு மருகன் முறையாயுள்ளவனும் அவருடைய வித்தியாசாலையிற் கற்பவனு மாகிய" திருஞானசம்பந்தப் "பிள்ளையால் எழுதப்பட்டது எனக் கடிதமும் எழுதி யிருந்தார். சுப்பிரமணிய தேசிகரவர்கள் பிரசுரத்தின் பிரதியையும் கடிதத்தையும் ஆறுமுகநாவலருக்கு அனுப்பியிருந்தார். ** சமவாத சைவப்பிசாசாகிய ஞானப் பிரகாசர் ' என்ற குறிப்பைக் கண்டு கோபங்கொண்ட ஆறுமுகநாவலர் "பிசாசு யார்?' என்ற மிக நீண்ட கடிதம் ஒன்று எழுதி மகாசந்நிதானத்துக்கு அனுப்பி வைத்தார். நாவலர் பிரபந்தத் திரட்டு என்ற நூலில் "அகோர சிவாசாரிய பத்ததி தூஷண கண்டனம்'', 'சபாபதிக் குருக் கள் விஞ" என்னும் தலைப்புக்களிலே உள்ள இரு கட்டுரைகளும் மேற்படி கடி தத்தின் சாராம்சத்தை உள்ளடக்கியன வாகும். ‘சபாபதிக் குருக்களவர்களால் எழுதப்பட்டு நாவலரவர்களால் திருத்தப் பட்டவை" என்ற அடிக்குறிப்பு நூலைப் பதிப்பித்த த. கைலாசபிள்ளையால் இடப் பட்டதாதல் வேண்டும். சபாபதி நாவ லரை முன்னிலைப்பாங்கில் கண்டிக்கும் காரசாரமான அக் கட்டுரைகளில் திருவா

Page 171
ஆறுமுக நாவலரும் சபாபதி நாவலரும்
வடுதுறை ஆதீனம்பற்றிப் படர்க்கைப் பாடான பாங்கில் குறிப்புகள் இருப்பது நோக்கற்பாலது. தேவையேற்படின் மகா சந்நிதானங்களைக் கண்டிக்கவும் ஆறுமுக நாவலர் தயங்கவில்லை என்பதனையே இச் சம்பவம் நிரூபிக்கின்றது. ஆறுமுக நாவ லரின் கடிதங் கண்ட தேசிகர் ஒரு வகை யான சம *ானக் கடிதம் நாவலருக்கு எழுதினர் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆறுமுக நாவலரைப் போலவே தமிழ் தந்த தாமோதரரும் அன்று மடாதிபதி கள் சிலரிடத்துக் காணப்பட்ட குறை பாடுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கினு ரில்லை. அவர் எழுதிய பதிப்புரைகளைப் படிப்போர்க்கு இவ்வுண்மை புலப்படும். குறிப்பாக தமிழ் நூற்பதிப்பில் மடத்தலை வர்கள் போதிய அக்கறை காட்டாதிருந் தமையை மனக்கசப்புடன் தாமோதரம் பிள்ளை எடுத்துக்கூறிஞர்.
இவ்வாறு ஆறுமுகநாவலர் வட்டத் தினருடன் சில சமயங்களில் சபாபதி நாவலர் எதிர்வாதம் புரிய நேரிட்ட போதும் இலக்கிய, இலக்கண சாத்திர நூற்புலமை, கல்விப்பணி, நூல்வெளியீடு சைவசமயப் பிரசாரம், பிறமத கண்ட னம், பிரசங்கமுறை இவற்றில் ஆறுமுக நாவலர் தொடக்கி வைத்த பணிகளை விரும்பியோ விரும்பாமலோ பல வழி களிலே தொடர்ந்து செய்து வந்தார். நாவலர் அவர்கள் பால் இறுதிவரை பெரு மதிப்பு வைத்திருந்தார் என்பதும் வெளிப் படை. உதாரணமாக, அவர் வெளியிட்ட திராவிடப் பிரகாசிகை (1899) என்னும் முக்கியத்துவம் வாய்ந்த நூலில் 'இலக் கிய மரபியல்’ எனும் அதிகாரத்திலே கருங்குழி இராமலிங்கர் பாடல்களைத் **திருவருட் பாக்கள்" என்று கொண்டாடு வோரைக் கண்டிக்கும் பகுதியில் ஆறுமுக நாவலர் அவர்களின் "" போலியருட்பா மறுப்பு’ எனும் வியாசத்தைப் பிரமா ணித்து எழுதிச் செல்வதைக் காணலாம். நாவலர் பரம்பரையினரை இனங்கண்டு கொள்வதற்குரிய கடைசிக் கடுஞ்சோதனை அல்லது கட்டளைக்கல் அவர்கள் இராம லிங்கர் விடயத்தில் கடைப்பிடிக்கும் கண்
9

16
ணுேட்டமாகும். அதில் சபாபதி நாவலர் எதுவித ஐயத்துக்குமிடமின்றி "போலி யருட்பா' மறுப்பினரையே சார்ந்து நின்ருர்,
இவ்வாறு அடிப்படையில் சபாபதி நாவலர் ஆறுமுக நாவலர் பரம்பரையைச் சேர்ந்தவராயிருப்பினும் மேலே குறிப் பிட்டதுபோல, சிற்சில வேறுபாடுகள் இருப்பதும் கவனிக்கத்தக்கதே. நாவலர் பரம்பரை என்று கூறும்போது ஒரே அச் சில் வார்த்த-இம்மியும் வேறுபாடற்ற எல்லாப் பண்புகளிலும் ஒப்பான சீடர்களை நாம் கருதக்கூடும். ஆயினும் அவ்வாறு கற்பனை செய்வது நடைமுறைக்குப் பொருந்துவதன்று. பின்வந்த சீடர்களின் ஆளுமை அவர்களியங்கிய சூழலில் அவர் களைப் பாதித்த செல்வாக்குகள் உலகி யல் நிலைமைகள் என்பன சிலபல வேறு பாடுகளைத் தோற்றுவித்திருக்கும் எனக் கூறுவது தவரு காது.
அந்நிய கலாசார ஆதிக்கத்தை எதிர்த்தும், பிறசமய ஊடுருவல்களைத் தடுக்கு முகமாகவும் ஆறுமுகநாவலர் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மும்முர மான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த காலத் தில் தமிழ், சைவம் என்பவற்றுக்கு ஓரள வேனும் பற்றுக்கோடாய் விளங்கியமை மடாலயங்களும் சிற்சில சமஸ்தான அவை களுமேயாம். எனினும் பொதுநோக்காகப் பார்க்குமிடத்து இந் நிறுவனங்கள் புற வுலகைப் பற்றிய உணர்வு அதிகமின்றித் தம்மளவில் நிறைவுடையனவாய் இயங்கி வந்தன. அத்தகைய அமைப்பின் தவிர்க்க இயலா விளைவுகளாய்ச் சில விரும்பத் தகாப் போக்குகளும் நிலவின. தம்மைச் சார்ந்திருப்போருக்குத் தனிச்சலுகைகள் வழங்குதல், பிரச்சினைகளில் ஒருதலைச் சார் பாக முடிவெடுத்தல், குறுகிய குழு மனப் பான்மையுடன் விஷயங்களை எதிர் நோக் குதல், பரந்த சமுதாய சக்திகளுடன் சேர்ந்துஇயங்காது விலகிநிற்றல்,புதுமைக் குப் போதிய முக்கியத்துவம் அளிக்கா திருத்தல் என்பன இப்போக்குகளிற் சில வாம். நாவலர் பெருமான் இப்போக்கு

Page 172
162
களைத் தமது பெ ா து வாழ்க்கையின் தொடக்கத்திலேயே நுணுக் கமா கத் தெளிந்துகொண்டவர்.
இந்திய விஜயங்களின்போது அவர் இரு முக்கியஸ்தர்களைச் சந்திக்கவும், பழக வும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன; ஒருவர் ஆறுமுகவர் அவர்களுக்கு *நாவலர்' என்னும் பட்டத்தை அளித்துக் கெளர வித்தும் இலக்கணக்கொத்து முதலிய கடின நூல்களை அவரைக்கொண்டு பதிப் பித்தும், ஆதீன மகாவித்துவானக இருந்த மீனுட்சிசுந்தரம்பிள்ளைக்கும் காட்டாத சிவஞானபாடியச் சிற்றுரை, பொழிப்புரை முதலியவற்றை அவருக்குக் காட்டி மகிழ்ந் தவர்களுமான திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் பூரீலபூரீ சுப்பிரமணிய தேசிகர் அவர்கள் ; மற்றவர் நாவலரவர்களின் ஈடிணையிலாப் புலமையையறிந்து அவரைக் கொண்டு திருக்குறள் பரிமேலழகர் உரை, திருக்கோவையாருரை, தருக்க சங்கிரகம் அன்னம்பட்டீயம் என்பவற்றைத் தமது செலவில் அச்சிடுவித்தும், நாவலர் அவர் களின் ஐந்தாவது இந்தியப் பயணத்தின் போது தமது "அதிகாரத்தை அடக்கிக் கொண்டு" அவரைப் பலவாறு வேண்டித் தமது சமஸ்தானத்துக்கு வருவித்தும் பின்னரும் அவர்களைக் கொண்டே சேது புராணம் என்னும் சீரியநூலைப் பதிப்பித்து அச்சிடுவித்தவருமான இராமநாதபுரம் மன்னரின் சகோதரர் பொன்னுச்சாமித் தேவர் (1837-1870). சமயத் துறையிலும் அரசியல்துறையிலும் குறிப்பிடத்தக்க வகையில் செல்வாக்குடன் விளங்கியவர் கள் ஆதீனக் கர்த்தாவும், அமைச்சரவர் களும். அப்படியிருந்தும் அவர்கள் வாரி வழங்கியிருக்கக்கூடிய பட்டங்களுக்கும், பட்டாடை, பரிசுகளுக்கும், பண உதவி களுக்கும் வசப்படாமல் தமது மகோன்ன தமான இலட்சியக் கனவுகளுக்காகத் தன் னந்தனியனுய் அடிப்படைக் கொள்கை களை விட்டுக்கொடுக்க விரும்பாதவராய் வாழ்ந்தார் ஆறுமுகநாவலர். ஆணுல் அத் தகைய நெஞ்சுரமும் ஆன்மீகவீரமும் எல் லோருக்கும் எளிதில்வந்து பொருந்துவன

** அம்பலத்தான்*
அல்லவே! அவ்விலட்சிய நோக்குடனேயே தாம் பிறந்த ஊர்க்கோயிலாம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில் நிர்வாகிகளையும் அன்று கண்டித்தார். வடமாகாண அதிப ராயிருந்த துவையினம் துரையுடனும் மோதிக்கொண்டார். ? ? நாமார்க்கு ங் குடியல்லோம்" என்ற நன்னம்பிக்கை அவருக்கிருந்தது. இன்றைய சமூகவியற் கண்ணுேட்டத்தில் விபரிப்பதாயின் ஆறு முகநாவலர் நிலையில் நிறுவனங்களுக்கு இலகுவில் தலைசாய்த்துத் தம்மை இழக் காதவர். ஆனல் அவர் பரம்பரையில் வந்தோர் அனைவரிடத்தும் அதே கண் டிப்பையோ மசியாத் தன்மையையோ எதிர்பார்த்தல் இயலாது. நாவலரை ஏனையோர் பலரிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது சமரசத்தித்கு இடமளித்காத இவ்வுறுதி நிலையேயாகும்.
இது விஷயத்திலே சபாபதி நாவலர், ஆறுமுகநாவலர் வழியினின்றும் சற்றுவேறு படுகின்ருர், சபாபதி நாவலர் தாம் வித்து வானுய் வீற்றிருந்ததிருவாவடுதுறை ஆதீன மடாதிபதிகளுடன் மாத்திரமன்றி மதுரை ஆதீனம், சூரியனுர் கோயில் ஆதீனம் மடாதிபதிகளுடன் நெருங்கிய தொடர் புகளைக் கொண்டிருந்தவர். மதுரைத் திருஞானசம்பந்தர் ஆதீனத்திலே "மகா வித்துவான் பட்டம்பெற்றவர்.இராமநாத புரம் பூரீபாஸ்கரசேதுபதி அவர்களிடம் பல சந்தர்ப்பங்களிலே பற்பல பரிசில்களையும், சன்மானங்களையும் பெற்றவர். சபாபதி நாவலர் ஞானுமிர்தம் பத்திரிகையை நடத் துவதற்கும் சிதம்பரம் செங்கழுநீர்ப் பிள்ளையார் கோவில் வீதியில் அச்சுக் கூடம் வைத்து நடத்துவதற்கும் பண வசதியும், இடவசதியும் அளித்தவர் சேதுபதிமன்னர். சிதம்பரத்திலே சேதுபதி ஒழுங்குபண்ணிக் கொடுத்த இடத்தி லேயே கடைசிவரை வாழ்ந்தார் சபாபதி நாவலர். பாஸ்கர சேதுபதியின் விருப்பப் படியே சில தடவைகள் இராமநாதபுரத் துக்கு விஜயம்செய்து அவரது அவையிற் பிரசங்கங்கள் செய்தும், மன்னருடன் தல யாத்திரை செய்தும் அவரது அன்புக்

Page 173
ஆறுமுக நஈவலரும் சபாபதி நாவலரும்
குப் பாத்திரராயிருந்து வந்தார். இதனல் 1891ஆம் வருடம் மன்னர் சபாபதி நாவலருக்கு மூவாயிரம் ரூபா சன்மானம் அளித்தார்.
சபாபதி நாவலர் சேதுபதிமன்னருக்கு மரியாதை செய்ததுபோலவே மன்னரும் அவருக்குப் பல வழிகளில் மதிப்புக் கொடுத்தார். உதாரணமாக, சேதுபதி அவர்கள் சபாபதி நாவலருக்கு எழுதிய கடிதங்களில் :
** சைவசிகாமணியாயும் பரசமய கோளரியாயும் விளங்கா நிற்கும் கனம் நாவலரவர்களுக்கு" என்றும், **சைவப் பயிர் தழைக்கப் பிரசங்க இடிமுழக்குடனும் விபூதி ருத்திராட் சம் பொலிவாகும் மின்னலுடனும் ஓங்கி வளரும் ஒரு முகிலாகிய கணம் நாவலரவர்கட்கு”*
என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறே ஆதீனகர்த்தாக்களும் அவ்வப்போது சபாபதி நாவலரைப் பாராட்டியுள்ளனர். சபாபதி நாவலரின் உத்தர கிரியைகள் நடைபெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்தார் அனுப்பிய பட்டுப் பீதாம்பரம், மாலை. பரிவட்டம், முதலியன சாத்தப்பட்டனவெனத் தெரி கிறது. தமக்குப் பிடித்தவர்களுக்குப் பட் டங்களைத் தாராளமாய்க் கொடுக்கும் ஆதீனங்களும் அரசவையும் சபாபதி நாவலரை 'சைவ சூளாமணி" "நாவல ரேறு' என்றெல்லாம் வருணித்தன. அத் தகைய பாராட்டுரைகள் அவரை மகிழ் வித்திருக்கவேண்டும்.
சபாபதி நாவலர் வெளியிட்டனவாக சுமார் இருபது நூல்கள் உள்ளன. சிதம் பர சபாநாத புராணம் (1885), சிவகர்ணு மிர்தம், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், பாரத தாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம், யேசுமத சங்கற்ப நிரா கரணம் (1879), இலக்கண விளக்கப் பதிப் புரை மறுப்பு, திராவிடப் பிரகாசிகை,

1.63
வைதிக காவிய தூஷண மறுப்பு, ஞான சூடாமணி, ஞாளுமிர்தம், திருச்சிற்றம்பல யமகவந்தாதி, மாவையந்தாதி, சிதம்பர பாண்டிய நாயக மும்மணிக்கோவை, வட கோவைச் செல்வ விநாயகர் இரட்டைமணி மாலை, நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதி கம், வதிரி நகர்த் தண்டபாணிக் கடவுள் பதிகம், புறவார் பனங் காட்டூர்ப்புற வம்மை பதிகம், சிவஞான யோகிகள் குருபூசை மஹோத்சவம், திருவிடைமருதூர்ப் பதிற் றுப்பத்தந்தாதி என்பனவாம்
இவற்றில் வடமொழி நூல்களின் மொழிபெயர்ப்பும் தல புராணங்களும் கோயில்கள் மீது பாடப்பெற்ற பிரபந் தங்களுமே பெரும்பாலானவை. யேசுமத சங்கற்ப நிராகரணம் போன்ற ஒரு நூலும் எழுதியமை நோக்கத்தக்கது. பிறரைச் சார்ந்து நின்று நூலியற்றியதன் விளைவை இந்நூல்களிற் காணலாம். இதே முறை யிலே திரிசிரபுரம் மீனுட்சி சுந்தரம்பிள்ளை யும் இயங்கிக்கொண்டிருந்தார். இன்னு மொன்று கண்மூடித்தனமான பழமைப்பற் றையும் இவரது நூல்களிற் காணக்கூடி யதாயிருக்கிறது. இதுவும் மடாலயத்துச் செல்வாக்கே என்று கருதத் தோன்று கிறது. ஆதீனத்தார் விரும்பிப் போற்றிய இலக்கிய, இலக்கண சாத்திர நூல்களையே சபாபதி நாவலர் போன்ருேர் கற்றும் கற்பித்தும் வந்தனர். சுயமாகச் சிந்திக் கவோ, புதிய கல்விமுறைகளை எண்ணிப் பார்க்கவோ அவர்கள் ஊட்டிய சூழல் உகந்ததாயிருக்கவில்லை. எஸ். வையாபுரிப் பிள்ளை கூறியிருப்பது போல,
இவ்வாறு சொந்தக் கல்வி முயற் யில் ஒருவர் ஈடுபடுவதற்கு இடங் கொடுக்கக் கூடியது ஆதீனம் அன்று. விரிந்த கல்வியுலகம்தான் அங்ங்ணம் செய்ய வல்லது.
ஆறுமுகநாவலர் பரம்ப  ைர யைச் சேர்ந்தவர்களிற் சிலர் காலத்தின் தேவை யையும், கட்டளைகளையும் தெளிவாக உணரவில்லை என்று கூறுவது பொருத்த

Page 174
164
மாயிருக்கும். உதாரணமாகப் பழந்தமிழ்ப் பனுவல்களைப் பதிப்பிப்பதில் முன்னேடி யாயும், முதல்வராயும் விளங்கிய சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் கருத்துக் களையும், வரலாற்று நோக்கையும் சபா பதிநாவலர் திராவிடப் பிரகாசிகை என்னும் நூலில் மூர்க்க வெறியுடன் தாக்குகிருர்,
புத்த மித்திரனர் இயற்றிய வீரசோழி யம் என்னும் இலக்கணநூலை பெருந்தேவ ஞர் உரையோடு 1881இல் வெளியிட் டார். சி. வை. தாமோதரம்பிள்ளை. மற் ருெரு இலக்கண நூலான இலக்கணவிளக் கம் 1889ஆம் ஆண்டு அவரால் பதிக்கப் பெற்றது. இந் நூல்களின் பதிப்புரை களிலே அவர் கூறிய கருத்துக்கள் சில வற்றையே சபாபதி நாவலர் கண்டித்து எழுதினர். அதனை இவ்விடத்திலே விவ ரித்தல் அவசியம் இல்லை. சபாபதி நாவ லரின் கண்டனத்தின் தன்மையே குறிப் பாக நோக்கத்தக்கதாகும்.
வீரசோழியப் பதிப்புரைத் தொடக் கத்திலே சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கு முள்ள தொடர்பைச் சிறிது விவரித்து விட்டுத் தமிழ் இலக்கிய சரிதத்தைக் கால முறைப்படி பாகுபாடுசெய்ய முனைந்தார் தாமோதரம்பிள்ளை. தமிழியல் ஆய்வு வர லாற்றை நோக்குமிடத்து இப்பாகுபாடு முற்பட்ட முயற்சிகளில் ஒன்றென்பதில் எதுவித ஐயமுமில்லை. மொழிநூல் அறிவு, சரித்திர ஆராய்ச்சி, கல்வெட்டு ஆய்வு என்பன மிகக் குறைந்தளவே நிலவிய காலத்தில் எழுதிய தாமோதரம்பிள்ளை, அன்றைய அறிவையும் தமது நுண்ணு ணர்வையும் கொண்டு தமிழிலக்கிய வர லாற்றை எட்டுக் காலப் பகுதிகளாக வகுத்துக் கூறினுர்.
அன்றைய ஆய்வறிவுச் சூழ்நிலையில் இப்பாகுபாடு வரலாற்று நோக்காலும், கால ஆராய்ச்சி உணர்ச்சியாலும் தூண்டப் பெற்றது என்பதில் ஐயமில்லை. "காலங் கடந்த காலத் தே கைலயங்கிரியில் ** நிகழ்ந்தனவான சம்பவங்களைக் கூறும் பெளராணிக மரபிலிருந்து விடுபட்டு இலக்

** அம்பலத்தான்'
கியத்தைப் பரிணுமநோக்கில் வரையறை செய்யும் ஆய்வுநெறி இப்பாகுபாட்டிற்கு ஆதாரமாயுள்ளது என்பதும் வெளிப்படை தமிழராய்ச்சி வளர்ச்சியில் தாமோதரம் பிள்ளைக்குத் தனிச்சிறப்பான ஓர் இடமுண் டென்பதை மறுப்பார் இல்லை.
ஆனல் திராவிடப் பிரகாசிகை ஆசிரியர் இந்நோக்கினையே வன்மையாய்க் கண்டிக் கிருர். தாமோதரம்பிள்ளையவர்களைப் பெயர்சொல்லிக் குறிப்பிடாது, ' வீர சோழியப் பதிப்புரைகாரர்', 'சிற்சிலர்' என்று குறித்துக் கொண்டு அவரது கருத் துக்களை மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்க் கையையும் இழிவுபடுத்தி எழுதினர். தமது உபாசன குருவான சிவஞானமுனி வரின் கூற்று ஒன்றை மறுத்தெழுதிய தாமோதரம்பிள்ளையின் கூற்றைக் கண் டித்து ஓரிடத்திலே கீழ்வருமாறு எழுது கிருர் சபாபதி நாவலர்:
" சிவஞானமுனிவர் அகத்திய ராற்றமிழ் பூமியிலே உற்பத்தியாயின தெனக் கொண்டார்" என்று வீர சோழியப் பதிப்புரைகாரர் கூறியது அறிவு புறம்போய பிதற்றுரையே யாதல் சிறுமகார்க்கும் இனிதுவிளங்கு மென்க.
பத்தொன்பதாம் நூற்ருண்டிலே தமி முலகில் வாழ்ந்த தலையாய ஆய்வறி வாளர்களில் ஒருவர் தாமோதரம்பிள்ளை. அவரது புதுமுயற்சிகளை வித்துவக் காழ்ப் பினுல் மட்டும் கண்டனஞ் செய்யவில்லை சபாபதி நாவலர். தாமோதரம்பிள்ளை முன்னுேக்கிய பார்வையுடையவர். சபா பதி நாவலர் பின்னுேக்கு கின்றவர். ஆராய்ச்சியின்போது திறனுய்வின் போது எத்துணை மதிப்புக்குரியவராயினும் அவ ரது கருத்துக்களும் முடிபுகளும் ஐயப் பாட்டுக்குரியனவே. அம் முறையிலே தாமோதரம்பிள்ளை சிவஞான முனிவர் போன்ற முற்பட்ட கல்வியாளரை விமர் சனத்துக்குட்படுத்தினர். எவரும் தவறு விடக்கூடிய இயல்புள்ளவர் என்றும் கரு தும் ஆய்வறிவடிப்படையிலேயே தாமோ தரம்பிள்ளை சிவஞான முனிவரையோ

Page 175
ஆறுமுக நாவலரும் சபாபதி நாவ லரும்
அல்லது திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் களையோ விமர்சித்தார். உதாரணமாக இலக்கண விளக்கப் பதிப்புரையிலே திருவா வடுதுறை ஆதீனத்தார் வேண்டுமென்றே இலக்கண விளக்கம் பெருமை இழக்கத் தக்க செயல்களைப் புரிந்தனரென்றும் அச் செயல்கள் களங்கமுடையன வென்றும் வாதிட்டார். இலக்கண விளக்கத்தின் குறைகளை எடுத்துக்காட்டும் நோக்கத் துடன் எழுதப்பட்டதாகக் கூறப்படும். இலக்கண விளக்கச் சூறவளி ** ஒர் அநி யாய கண்டனம்" என்றும் அக் கண்டன நூலைச் சிவஞான முனிவர் குரோத உணர்ச்சியுடன் இயற்றினுர் என்றும் வற் புறுத்தினர். ஆனல் சபாபதி நாவலரோ ஆதீன கர்த்தர்களும், சிவஞான முனி வரும் தவரு நிலையுடையவர்கள் என்று நம்பியவர். சான்றுகளின் அடிப்படையில் ஒருவரையோ, ஒரு நூலையோ மதிப்பிடா மல் விதிதரு முறையில் அமைந்த வாதங் களில் அவர் ஈடுபட்டார். உதாரணமாகப் பின்வரும் கூற்றைக் காட்டலாம்.
* ஒதநீர் வேலியுலகின் கண்ணே வேத வழக்கொடு மாறு கொள்வார் மதங்களை மறுத்து இருவகைத் தமிழ் வழக்கையும் நிறுத்தியோம்புதல் சிவ ஞான யோகிகள் ஒழுகலாரும். அப் பெற்றியுடைய முனிவர் வேத வழக் கொடு மாறுபடக் கூறமாட்டார்"
இத்தகைய பல்வேறு கண்டனங்கள் தாமோதரம்பிள்ளையைக் கவலைக்காளாக்கி யிருத்தல் வேண்டும். ஆயினும் அவற்றைப் பொருட்படுத்தாது கருமமே கண்ணுக உழைத்தார். கண்முன்னே வெகு வேக மாக அழிந்துகொண்டிருந்த ஏட்டுச் சுவடி களை மீட்டெடுத்து அச்சிட்டு வெளிப் படுத்துவதே இலட்சியமாய்க் கொண்டி யங்கிய பிள்ளையவர்கள், அநாவசியமான வாதப் பிரதிவாதங்களில் நேரத்தை விர யஞ் செய்ய விரும்பினரல்லர். அதுமட்டு மன்று, இக் கண்டனங்களின் தன்மையை யும் அவர் இனங்கண்டு கொண்டமையால் மெளனமாயிருந்து பணி செய்வதே மேலான மார்க்கம் என்றுணர்ந்தார்.

6S
இவ்விடத்திலே இன்னுமொன்று கூறுதல் பொருத்தமாயிருக்கும். கண்டன நூல்களைச் சபாபதி நாவலர் எழுதிய வேளையிலும் பண்டைய உரையாசிரியர் வழிவரும் நடையினையே கைக்கொண் டார். ஆறுமுகநாவலரும், அவரை நன் குணர்ந்த தாமோதரம்பிள்ளை, செந்திநா தையர் முதலியோரெல்லாம் ஒரளவு நூற்புலமையுடையோரும் விளங் கி க் கொள்ளத்தக்க எளிய நடையிலே எழுதி னர். இவர்களின் ஏனைய நூல்களும் அவ் வண்ணமேயுள்ளன. உதாரணமாக, கலித் தொகைப் பதிப்புரையிலே ஏட்டுச் சுவடி களின் நிலையைப் பற்றித் தாமோதரம் பிள்ளை மனமுருகி எழுதியவை முதல்தர மான படிப்போர் உள்ளத்தைத் தைக்கும் வசனநடைப் பகுதிகளாகத் தமிழக்கிய உலகில் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. ஒருவகையான இலக்கிய வரலாற்று முன் னேடி நூல் என்ற முக்கியத்துவம் திரா விடப் பிரகாசிகைக்கு உண்டெனினும் அத் நூலிற் கையாளப்பட்டுள்ள உரைநடை இடைக்காலத்து உரையாசிரியர்களின் நடையைப் பெரிதும் ஒத்திருப்பதால் பண்பு வேறுபாடின்றி வாய்பாடு ரீதியில் அமைந்துள்ளது. 'சபாபதிநாவலரவர்கள் உரைநடை சிவஞானமுனிவர் உரைநடை போலச் சிறந்து நிலவும் பெருமை வாய்ந் தது’ எனக் கூறப்பட்டுள்ளதாயினும், நுனித்து நோக்கின் அக்கூற்று சிவஞான முனிவர் பெருமையையே பேசுவது புல ஞகும். அகப்பண்பற்றுப் புறத் தோற்றம் மட்டுமே ஒத்த நகல்நடை சபாபதி நாவலருடையது என்று கருதவும் அக் கூற்று இடந்தருகிறது எனலாம். பெரும் பாலான மடாலயக் கல்வியாளரின் நடை யைப் போன்று மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்டதொன்றே சபாபதிநாவல ரின் நடையுமாகும். ஆனல் சுயகருத்துக் களைக் கூறிய ஆறுமுகநாவலரது நடை தற்சார்புடைய தன்முதலான நடையா கும். அதனையே தாமோதரம்பிள்ளை, அ. குமாரசுவாமிப் புலவர் முதலியோர் ஆதர்சமாய்க் கொண்டனர்.

Page 176
166
மொத்தத்தில் சபாபதி நாவலரின் செய்யுள் நடையும் உரைநடையும் கடின நடையில் அமைந்தனவெனினும், அவரது உபந்நியாசங்கள் சில ஓரளவு எளிமை யான நடையில் அமைந்திருப்பதும் குறிப் பிட வேண்டியதொன்றே. பேச்சுநடைக்கு எளிமை இன்றியமையாததென அவர் உணர்ந்தனர் போலும். காட்டாக **சமயம்" என்னும் பொருள் குறித்து அவர் செய்த "மகோபந்நியாசம் " ஒன்றில் வரும் பகுதியைப் பார்க்கலாம் :
இன்னும், இவ் வுல கத் தி லே மாநுடர் ஒவ்வோர் தொடர்ச்சி பற்றிச் செய்து போதரும் அபிமானங் கள் சாதியபிமானம், தேசாபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானமெனப் பலவகைப்படும். அவற்றுள், சாதி யபிமானத்தினை நோக்கத் தேசாபி மானம் உயர்ந்தது. தேசாபிமானத் தினை நோக்கப் பாஷாபிமானம் உயர்ந்தது ; பாஷாபிமானத்தினை நோக்கச் சமயாபிமானம் உயர்ந்தது. சாதியபிமானம், தேசாபிமானம், பாஷாபிமானங்கள் உயிர்க்குப் புறம் பாயுள்ள ஒவ்வோர் பொருள்பற்றி உயிர்களிடத்து நிகழுங் குணங்க ளாம். சமயாபிமானம் உயிர்க்குயி ராகிய கடவுள் சம்பந்தங் காரண மாக உயிர்களிடத்து விளங்கும் ஞான குணமாம். ஆதலால், மனிதர் மற்றை அபிமானங்களினும் சமயாபிமானத் தினையே அதிக சிரத்தையோடும் பெரிது போற்றி ஒழுகுதல் வேண்டும்.
திராவிடப் பிரகாசிகை நூலிற் காணப் படும் நடையுடன் ஒப்பிடும்பொழுது மேற் காணும் பகுதி எளிமையானதே. எனினும் ஆறுமுகநாவலருடைய நேரடியான பேச்சு நடையின் சாயலை இதிற் காணவியலாது. (மேற்காணும் பகுதியில் "* சாதியினும் சமயமே பெரிது" என்று ஆறுமுகநாவலர் கூறியதன் செல்வாக்கைக் காணலாம்.)

** அம்பலத்தான்”
காலத்தின் தேவைகளுக்கேற்ப அரும் பிக்கொண்டிருந்த புதிய கல்வி முறைக ளும், அணுகு முறைகளும், மேலைத்தேய அறிவியலின் விரும்பத்தக்க கூறுகளும் சபாபதி நாவலரைக் கவர்ந்ததாய்த் தெரியவில்லை. தாமே சொந்தத்தில் அச் சகம் நடத்தியபோதும், அச்சகத்தின் அன் றைய அடிப்படைப் பணியையும் பங்கை யும் அறிவுபூர்வமாகவோ அன்றி உணர்வு பூர்வமாகவோ அவர் கிரகித்திருந்தார்என் பதற்கில்லை. அதாவது ஆறுமுக நாவலர் அச்சகம் வாங்கியதும் நூல்களைப் பிழை யின்றி வெளியிட்டதும் தன்னையொத்த கல்வியாளரின் அறிவு விருத்திக்காக மட்டு மன்று. ** கற்ருேரும் மற்ருேருமாகிய யாவ ருக்கும் எளிதிலே பயன்படும்பொருட்டு”* ஆறுமுகநாவலரவர்கள் கத்தியரூபமாகச் செய்து பல பழைய நூல்களைப் புதுமுறை யில் வெளியிட்டார். நூல்கள் வாயிலாக, உரைநடை என்ற சாதனம் மூலமாக அவர் வெகுசனங்களுடன் தொடர்பு கொள்ள முற்பட்டார். தொடர்பு சாத னங்களில் ஒன்ருக அச்சகத்தையும் பிர சுரங்களையும் அவர் இனம் கண்டுகொண் டார். அதஞலேயே பொன்னுச்சாமித் தேவர் போன்ருேர் பிரசார வன்மை கைவந்த நாவலர் கையால் நூல்களை வெளிப்படுத்த விழைந்தனர். நூல்வெளி யீட்டு முயற்சிகளால் தமிழ் வளரும் என் பதை நாவலர் நன்கறிந்திருந்தார். அத் தகைய வளர்ச்சியுடன் தமது பெயரையும் நிலைநிறுத்திக் கொள்ளவே தேவர்போன்ற வர்கள் விரும்பினர். தேவர் பொருளுதவி யுடன் (ரெளத்திரி வருஷம்) நாவலர் வெளியிட்ட திருக்கோவையாருரைப் பதிப் புரையிலே ஓரிடத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.'
திருக்கோவையாருரையைப் பதிப் பித்துப் பிரகடனஞ் செய்தற்கு உதவி செய்த மகா-ா-ா-யூரீ பொன்னுச் சாமித் தேவர்களுடைய பெருந்தகை மையை நான் பாராட்டுதல் போலவே

Page 177
ஆறுமுக நாவலரும் சபாபதி நாவலரும்
அதனைக் கற்போர் யாவரும் மிக்க உவகையோடு பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன். முற்காலத்திலே பாண்டியர்களைப்போல இக்காலத் திலே இப் பிரபு அவர்கள் தமிழை வளர்ப்பார்கள் என்று உறுதியாகக் கருதுகிறேன்.
புலவரைப் புகழ்ந்து இச்சகம் செய் யாமல் அவர்களுக்குப் புத்திமதி கூறி வழி நடத்தக்கூடிய தன்னம்பிக்கையும் தகை மையும் ஆறுமுகநாவலருக் கிருந்ததை மேலேயுள்ள வாக்கியங்கள் தெளிவாக்கு கின்றன. அவரவரை அவரவருக்குரிய இடத்தில் வைத்து நோக்க நாவலரவர் களால் முடிந்தது. ஆனல் அவர் வழிவந்த எல்லாருக்கும் அது சாத்தியமாயிருக்க வில்லை. சபாபதி நாவலர் கல்வித் தகுதி இருந்தபோதும், ஆறுமுக நாவலரைப் போலச் சுதந்திரமாக இயங்கும் தகைமை இல்லாமையால் புரவலரைப் புகழ்ந்து வாழவேண்டியவராயிருந்தார்.
சான்ருதாரங்கள் :
1. ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, மூ 2. சபாபதி நாவலர், திராவிடப்பிரகாசிை
(GeFGirão, 1927).
3. சிவகாசி அருணுசலக் கவிராயர், ஆறு
(யாழ்ப்பாணம், 1973).
சே. சோமசுந்தரம்பிள்ளை, சபாபதி நா 5. மு. இராகவையங்கார், செந்தமிழ் வள சபாபதி நாவலர், ஞானமிர்தம் (சம சித்தாந்த சங்கத்து வெளியீடு (செ.
7. எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழின் ம 8. உ காவியகாலம் (ெ 9. ---- தமிழ்ச் சுடர்மணிக

167
இவற்றை எண்ணும்போது நல்லைநகர் நாவலர் ஞானமரபில் வந்த சபாபதி நா வல ரின் முனைப்பான - ஆக்கபூர்வ மான "முற்போக்கான" அம்சங்களைக் கைக்கொள்ளக் காலவழுப்பட்ட போக் குகளையே பற்றிக் கொண்டிருந்த மை புலனுகும். வேருெரு விதத்தில் நாவலர் மருகர் கைலாசபிள்ளையும் இத்தகைய தொரு நிலையிலேயே இருந்தார் என்று கூறத் தோன்றுகிறது. ஆறுமுகநாவலர் நிறுவனங்களைக் கடந்து செயற்பட முயன் முர்; பெருமளவில் வெற்றியும் கண்டார். இவர்கள் நிறுவனங்களுக்குள் தம்மை நிறுத்திக்கொண்டனர்; நிலையியல் நோக் கில் நின்றனர். சபாபதி நாவலர் போன் ருேருடன் ஒப்புநோக்கி ஆராய்கையி லேயே ஆறுமுகநாவலர், தாமோதரம் பிள்ளை, சு. சிவபாதசுந்தரம் ஆகியோரின் சிறப்பியல்புகளும் தனித்துவமும் முனைப் பாகத் தென்படுகின்றன. -
பன்ரும் பதிப்பு (சென்னை, 1954). க, பதிப்பாசிரியர் அ. சிவகுருநாதபிள்ளை
முகநாவலர் சரித்திரம், மூன்ரும் பதிப்பு
வலர் சரித்திரச் சுருக்கம் (சென்னை, 1955). ார்த்த தேவர்கள். (திருச்சிராப்பள்ளி, 1948), யமும் நால்வர் பிரபாவமும்), மலேயா சைவ ன்னை 1926), றுமலர்ச்சி (சென்னை, 1948). ਸਫਰ, 1957)
ள், நான்காம் பதிப்பு (சென்னை, 1968).

Page 178
நாவலரும் குமாரசுவாமிப்
ச. அம்பிகைபாகன்
Bவலருக்கும், குமாரசுவாமிப் புல வருக்குமிருந்த உறவை ஆராயமுன் குமார சுவாமிப்புலவரின் தோற்றம், கல்வி முத லியவற்றைக் கவனிப்பது பொருத்தமாக இருக்கும். குமாரசுவாமிப் புலவர் முத்துக் குமாரக் கவிராயரின் தம்பியாரின் பேர ஞகச் சுன்னுகத்தில் 18-1-1854ல் தோன் றினர். சுன்னுகம் தொன்றுதொட்டு சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் பண்ணையாக விளங்கிவந்தது. அங்கு சிறந்த புலவர்களும், முப்பொழுதும் திருமேனி தீண்டும் அந்தணர்களும் வாழ்ந்துவந் துள்ளனர். அங்கு பெரும் கல்லூரிகள் இல்லாவிட்டாலும் சைவ மணம் கமழும் மயிலனிச் சைவவித்தியாசாலை என்னும் பாடசாலை இயங்கிவந்தது. சிவானுபூதிச் செல்வரான செல்லாச்கி அம்மையாரும் சுன்னுகத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
முத்துக்குமாரக் கவிராயர் சிறந்த புலவராக விளங்கியதோடு கிறிஸ்தமதக் கண்டனத்தில் நாவலருக்கு முன்னுேடியாக விளங்கினர். கவிராயர் இயற்றிய ஞானக் கும்மி, யேசுமதபரிகாரம் முதலிய நூல்களை நாவலர் இருமுறை பிரசுரம் செய்வித் தார். முத்துக்குமாரக்கவிராயர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் ஆசிரியர் என்ப தும் குறிப்பிடத்தக்கதே.
புவவர் பிறக்கும்பொழுதுநாவலருக்கு
வயது முப்பத்திரண்டு. புலவர் சிறுவனுக இருக்கும்பொழுது நாவவர் பெரும்பா

புலவரும்
லும் இந்தியாவில் இருந்தபடியால் அவ ரைச் சந்திப்பதற்கோ அவரிடம் கல்வி கற்பதற்கோ வாய்ப்புக் கிடைக்கவில்லை.
புலவர் ஆரம்பத்தில் மல்லாகம் ஆங் கில வித்தியாசாலையில் ஆங்கிலம் கற்றுவந் தார். ஆனல் புலவரின் தகப்பஞர் இவர் ஆங்கிலம் கற்பதை விரும்பாத படியால் நான்காம் வகுப்போடு ஆங்கிலக் கல்வியை நிறுத்திக்கொண்டார். இதன்பின் தமிழ்க் கல்வியைச் சுன்னகம் முருகேச பண்டித ரிடம் பெற்றுக் கொண்டார். முருகேசு பண்டிதர் இலக்கணத்தில் பெரும்புலமை பெற்றிருந்தபடியால் அவரை இலக்கணக் கொட்டர் என மக்கள் அழைத்தனர். புலவரின் சிறந்த இலக்கணப் புலமைக்கு வித்திட்டவர் முருகேசு பண்டிதரே. பண்டிதரிடம் புலவருடன் கல்வி கற்றவர் களில் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஊரெழு சரவணமுத்துப் புலவர், சு ன் ஞ க ம் வைத்தியநாதபிள்ளை என்பவர்கள் சிறப் .குறிப்பிடப்படவேண்டியவர்கள் 9536. חנ_t இவர்கள் புலவரின் சினேகிதர்களாக விளங்கியதோடு நாவலரின் பாரம்பரி யத்தை வளர்ப்பதில் புலவரைப்போல் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்தனர்.
புலவர் சமஸ்கிருதத்தைச் சுன்னகவாசி யும், புல வ ரின் உறவினரும், வட்டுக் கோட்டை செமினரியில் கற்றுத்தேறியவ ருமான நாகநாத பண்டிதரிடம் கற்றுக் கொண்டார். நாகநாதபண்டிதர் தமிழ்,

Page 179
நாவலரும் குமாரசுவாமிப் புலவரும்
சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் முதலிய பாஷைகளில் வல்லுநராக விளங்கிஞர். சமஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழி ப்ெயர்ப்பதற்குப் புலவருக்கு வழிகாட்டி யாகவிருந்தார். மயிலனி சுப்பிரமணிய சுவாமிகோயில் வீதியில் இருந்த மடத்தில் வசித்து வந்த வேதாரணிய சைவக் குருக் கள் நமசிவாய தேசிகரிடம் சமயக் கல்வி யைப் பெற்றுக்கொண்டார். மேற்கூறிய மூவரிடத்திலும் தாம் கல்வி கற்றதை மேகதூதக் காரிகை குருவணக்கத்தில் பின்வருமாறு கூறுகின்ருர் : தூய மயிலனிச் சுப்ர மணியனத் தூநமச்சி வாய குருவை முருகேச பண்டித மாமணியைப் பாய வடகலை தேர்நாக காத சபாமணியைக் காய மொழிமனஞ் சேர்த்துதும் நம்கண் மணி
ளன்று. முதற் சந்திப்பு
நாவலர் இந்தியாவில் பல வருடங்கள் கழித்தபின் 1870ஆம் ஆண்டு யாழ்ப் பாணம் திரும்பினர். அப்பொழுது அவ ருக்குப் பண்ணையில் மகத்தான ஒரு வர வேற்பு அளிக்கப்பட்டது. இவ் வரவேற் பின்போதே புலவர் நாவலரை முதன் மூதல் கண்டனர். அப்பொழுது புலவருக்கு வயது பதினைந்து. இதன்பின்னர் நாவலர் யாழ்ப்பாணத்தில் எங்கு பிரசங்கம் செய் தாலும் அதனைத் தவருது கேட்டு வந் தனர். நாவலரின் சிவப்பொலிவினுலும் நாவன்மையினுலும் வசீகரிக்கப்பட்டு அவரை நேரில் காணவேண்டும் என்னும் அவா ஏற்பட்டது. நாவலரைச் சந்திப்ப தற்கு வசதி செய்து கொடுத்தவர் இவரின் சகமாணவரான சரவணமுத்துப் புலவர் ஆவர். புலவர் முத்துக்குமாரக் கவிராய ரின் பேரன் என்பதை அறிந்ததும் அவரை அன்போடு வரவேற்ருர், புலவருக்குக் கல்வியில் இருக்கும் ஆர்வத்தைக் கண்ட நாவலர் தம்மிடம் வந்து இலக்கண இலக் கியங்களிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றனர். இதன்பின்னர் நாவலர் சிவபதம் அடையும்வரைக்கும் அவரிடம் காலத்துக்குக்காலம் சென்று தமது சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்ட தோடு தமது கவிதைகள், கட்டுரைகள்,
20

69
கண்டனங்கள் முதலியவற்றை அவருக்குக் காண்பித்து வந்தனர். அவற்றின் சிறப் பைக் கண்ட நாவலர் புலவரைப் பாராட்டி வந்தனர். இதுபற்றிப் புலவர் நாவலர் மறைந்தபொழுது பாடிய பாட்டொன்றில் பின்வருமாறு கூறுகின்ருர்:
என்கவிதை என்கடிதம் யார்க்கும் இனிதென்று நன்குறவே பாராட்டும் நாவலனுர் - எங்கேயோ கங்கைமுடிச் சங்கரன்பொற் கஞ்சமலர்ச் செஞ் இங்குவர வுங்கருத்தோ என். (சரண்விட்(டு)
நாவலர் முன்மாதிரியாலும் அவர்க ளின் பிரசாரத்தினுலும் யாழ்ப்பாணத்தில் புராணபடனம் புத்துயிர் பெற்றது. புலவர் கள், பண்டிதர்கள் எல்லோரும் புராண படனத்தில் பங்குபற்றினர். கந்தபுராணத் தில் தெய்வயானையம்மை திருமணப் படல மும், பெரியபுராணத்தில் வெள்ளையானைழ சருக்கமும் விசேஷ பகுதியாகக் கருதப் பட்டன. இப்பகுதிகள் படிக்கப்படும் இடங்கள் புலவர் அவைகளாக மாறி விடும். வாதப் பிரதிவாதங்களும் நடப்ப துண்டு .
நாவலர் தமது நீண்டகால அனுப வத்தையும், அறிவையும் கொண்டு புராண படனத்தில் ஈடுபடுவோர் கவனிக்கவேண் டிய விதிகளைத் தாம் பதிப்பித்த கந்தபுரா ணத்தில் கூறியுள்ளார். பொருள் சொல் லுவோர் எப்படிப் பொருள் சொல்ல வேண்டுமென்று கூறியிருப்பது பின்வரு மாறு: 'இலக்கணப் பிழையில்லாமலும், வெளிப்படையாகவும், இன்றியமையா இடங்களில் விரிவாகவும் பொருள்சொல்ல வேண்டும்.’’ ஆணுல் பொருள் சொல்வோ ரில் பெரும்பாலோர் நாவலரின் பொன் மொழிகளைக் கவனியாது தமது பாண்டித் தியத்தைக் காட்டி மக்களை மயங்க வைத்தனர். இதனை அவதானித்து வந்த புலவர், "இலங்கைநேசன்" பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதினர். அக் கடிதத்தின் சிலபகுதிகள் நோக்கத்தக்கவை.

Page 180
170
கந்தபுராண வள்ளியம்மை திரு மணப் படலத்துக்கு விருத்தியுரை பேசும் உரையாசிரியர்களே! நீங்கள் எத்தனையோ ஆண் சனங்களும் பெண் சனங்களும் புராணம் கேட்டற்கண் நம்பிக்கையோடு வந்து உங்கள் வாய்களையே எதிர்பார்த்திருக்க, நீங் கள் அவர்களுக்குக் கொஞ்சமும் விளங்காமல் வெளிப்படையான இயற் சொற்களை யெல்லாம் திரிசொற்க ளாக மாற்றிச் சொல்லுகிறீர். "பூ" என்பதற்கு வீ என்கிறீர்கள், "மறைந்து போனர்? என்பதற்கு *அந்தர்த்தமாயினர்" என்கிறீர்கள். சித்தியாரில் சில செய்யுட்களையும் அவற்றின் கடின வாக்கிய மாய் அ  ைமந்த வியாக்கியானங்களையும் எடுத்துப் படிக்கிறீர்கள். சில கவி களுக்கு வேதாந்த சித்தாந்தப் பிர சங்கம் செய்கிறீர்கள்.
உங்கள் விருத்தியுரையில் சில இடங்களில் "செந்தினை இடியுந் தேனும் என்னும் பாட்டுவர வைகறை விடியல் செல்ல மற்ற நாளிலும் மத்தியானம் ஆகிறதே. இப்படி விருத் தியுரை கூறும் நீவிர் உரையில்லாத ஒரு நூலிற்காவது இப்படலத்துக் காவது உரையெழுதி வெளிப்படுத்த லாமே. அங்ங்ணம் செய்யாத காரணம் என்னையோ? உரையெழுதி வெளிப் படுத்தினுல் பொருளும் புகழும் ஒருங்கு சித்திக்கும்.
மேற்படி புலவரின் கடிதத்துக்குப் பல உரையாசிரியர்கள் பல மறுப்புக் கடிதங் கள் எழுதினர், இக்கடிதங்களுக்கு விடை எழுதத் தகுதிவாய்ந்தவர் நாவலரே எனக் கருதி அவரைக் கொண்டு ஒரு விடை எழுதுவித்து அதேபத்திரிகையில் வெளி யிட்டார் (இலங்கை நேசன்). அக்கடிதம் பின்வருமாறு:
ية

ச. அம்பிகைபாகன்
கடிதர்க்குத்தரம் டிதர்களே,
பல ஊர்களிலுள்ள பலரையும் பொதுப் டக் கண்டித்த கண்டனத்தை நீங்கள் உங் 1ள்மேல் இட்டுக் கோவிப்பது நீதியன்று. ராணப்பிரசங்கச்சபையிலே வந்து இருக் றவர்களுக்குள்ளே சிலர் ஒழிய மற்றவர் ாள் எல்லாரும் கல்வி இல்லாதாவர்களே. ஆகையால் மிக வெளிப்படையாகிய நடை பிலே பிரசங்கிப்பதே முறை, அங்கே இலக் 5ணங்கள் எடுத்துச் சொல்வது தகுதி பன்று. உங்கள் பிரசங்கங்கள் தங்களுக்கு விளங்கவில்லையென்றே வெகுசனங்கள் குறை சொல்லிக்கொண்டு திரிகிருர்கள். சிவபுராண விதியிலே 27ஆம் பிரிவைப் 1ாருங்கள்.
சிவஞான சித்தியார் முதலிய சித் நாந்த நூல்கள் படித்தற்குரியோர் இவர் ான்பது திருக்கோவையார் உரை இறுதி பிலுள்ள தமிழ்ப்புலமையிலே 15ஆம் பிரி பிலும், சைவ விஞவிடையிலும் கண்டு கொள்ளக்கடவீர். எங்காயினும் இன்றி மையாத இடத்தில் ஒரு துண்டுவாக்கியம் தாகரிப்பது தகுதி.
புலவர் நாவலர் நெறிநின்றே சைவ மயப் பிரசாரமும், கிறிஸ்தமதக் கண்டன pம் செய்தார். நாவலர் நெறி வைதிக சைவ நெறி. வைதிக சைவ நெறிக்கு வதாகமங்களும், அவற்றின் வழிவந்த ருமுறைகளும் மெய்கண்ட சாத்திரங் ளும் பிரமாண நூல்களாகும். புலவர் ாம் செய்த பிரசங்கமொன்றில்-பின்னர் அது கட்டுரையாக வெளிவந்தது-வைதிக சைவ சமயத்தை நன்கு விளக்கியுள்ளார். Nப் பிரசங்கத்தில் நாவலர் வைதிக சைவத்தின் வளர்ச்சிக்குச் செய்த தொண் டைப் பின்வருமாறு கூறியுள்ளார். "இக் ாலத்தில் பூரீலழறீ ஆறுமுக நாவலர் அவர்கள் வைதிக சைவ சாத்திரங்களைப் ரிசோதித்து அச்சிட்டும், வைதிக சாஸ் நிரப் பொருட்களை எவர்க்கும் இலகுவாக அறியும்படி செந்தமிழிலே சிறந்த வசன

Page 181
நாவலரும் குமாரசுவாமிப் புலவரும்
ரூபமாகப் பல புத்தகங்களை அச்சிட்டும் ஆங்காங்கு சைவப்பிரசங்கங்கள் செய்தும் பல வித்தியாசாலைகளைத் தாபித்தும், கற் பித்தும் பலவாருக வைதிக சைவ பரி பாலனத்திலே கண்ணுக இருந்தார்".
புலவர் செய்த கண்டனங்கள் எல்லாப் நாவலர் பாணியில் அமைந்துள்ளன அவர் விடும் சொல் அம்புகளெல்லாப் எதிரியின் உள்ளத்தைத் தைக்கக்கூடிய முறையில் விடப்பட்டன. அவர் எழுதிய கிறிஸ்தமதக் கண்டனத்தின் ஒரு பகுதி யைக் கீழே காண்க.
**உன் சைவ கண்டனம் கண்டனம் ஒருவரியேனும் பிழையற எழுத அறியாது சைவநுாலும் அறியாது, " தாபர் ** **நீமர்" முதலிய சொல்விளம்பி விட்டுச் கொண்டு வெளிப்பட்ட நீயா சைவ தூஷணம் செய்யத் துணிந்தாய். உன் பத்திரிகையில் உள்ள பொய், குறளை, கடுஞ்சொல் முதலிய இழிமொழிகளே உன் யோக்கியதையை யாவருக்கும் இனிது விளக்கிவிட்டன.
இருடிகள் சாபத்தால் இலிங்கம் அழுகி விழுந்த கதை, எந்தச் சாத்திரத்திலே, எந்தப் பாகத்திலே, எந்த ஆப்தராலே சொல்லப்பட்டிருக்கின்றது. இன்ன சாஸ் திரத்திலே, இன்ன இடத்தில் சொல்லட் பட்டிருக்கின்றது என்று காட்டு. அஃது இயலாதாயின் வாய் மூடு.
சைவர் சிவன் ஒருவரே பரமபதி யெனச் கொண்டு வணங்குகின்ருர்களே யன்றி, நீ சொல்லியவாறு பலரைப் பரமபதியாக வணங்கவில்லை. இந்த உண்மையை நாவலர் எழுதிய "சைவசமயம்", "கல்வி என்னும் பத்திரிகைகளாலும், பேர்சிவல் பாதிரியார் எழுதிய "லான்ருேவ்வேட்" என்னும் புத் தகத்தினுலும், சைவமகத்துவம் முதலிய நூ ல் க ள |ா லும் துணிந்துகொள்ளக் கடவாய்.”*
விக்கிரக ஆராதனைக்கு எதிராக ஒரு வர் ஒரு துண்டுப் பிரசுரத்தை வெளி

யிட்டார். அதனைக் கண்டித்துப் புலவர் 1899ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முத வாம் திகதி இந்துசாதனத்தில் வெளியிட் ц-тfѓ.
இந் நாளிலே **விக்கிரகாராதனைச் சமாதான கிராகிருது' என்னும் நாமத் தோடு பகிரங்கப்பட்ட பஞ்சிகை ஒன்று ஒருவர் தர வாசித்தேன். அது செய்தவர் இன்னுரெனப் புலப்படவில்லை. ஆயினும் ஒரு மாயாவாதி என்று அனுமித்தற்கு ஞாய முண்டு. அவர் அப் பஞ்சிகையிலே, "நிலை பெறுமா றெண்ணுதியே" என்பது முதலிய அருட்பாக்கள் விக்கிரக ஆராதனையைக் குறிக்கவில்லை யென்றும், சமய குரவரும் பிறரும் விக்கிரக வணக்கம் கருதினர் அல்ல என்றும், அவற்றின் பொருள் வேறென்றும் தட்டுளுப்புற்றுக் கூறு வா ரா யி ன ர். தேவாரம் முதலிய அருட்பாக்களிலும் பிற வற்றிலும் விக்கிரகாராதனை விசிட்டமாகக் கூறியிருத்தல் ஆபால கோபால நியாய மாகவும் அவருக்குப் புலப்படவில்லை. அவர் தேவார திருவாசகங்களையும் பெரிய புராணத்தையும் கிரமமாகப் பார்த்து விக் கிரகாராதனை விசிட்டத்தையும் அதஞல் முத்தியடைந்த மெய்ம்மையையும் அறியக் கடவர். தேவாரத்துக்குக் கோழம்பப் பொருள் கொள்ளுதல் நீதியன்று.
இங்ங்ணம் சுன்னுகம், அ. குமாரசுவாமிப்பிள்ளை விளம்பு டுல், தைமீ" 15வ.
(மேலே கொடுக்கப்பட்ட கடிதத் தில் புலவர் சில அரும்பதங்களை உப யோகித்துள்ளார். அவற்றின் பொரு ளைப் பின்வருமாறு கொள்ளலாம்: பஞ்சிகை - துண் டு ப் பத் தி ரி  ைக; தட்டுளுப்புற்று - தடுமாற்றப்பட்டு; கோழம்பப் பொருள் - குழப்பமான பொருள்; ஆபால கோபால - எல் லோருமறிந்த.)

Page 182
தமிழ்த்தொண்டு:
தமிழ் வள்ளலும் நாவலரின் பேராபி மானத்துக்கு உரியவருமான சி வை. தாமோதரம்பிள்ளை என்பவரால் ஏழாலை யில் 1876ஆம் ஆண்டு ஒரு சைவப்பிரகாச வித்தியாசாலே தாபிக்கப்பட்டது. அப் பாடசாலைக்கு முதல் வருடத்தில் முருகேச பண்டிதரும், அவரைத் தொடர்ந்து இரு பது வருடங்களுக்குமேல் தலைமை ஆசிரிய ராகப் புலவரும் இருந்தனர். புலவர் அங்கு செய்த அருந்தொண்டினை அவ்வித்தியா சாலை மாணவரைப் பரீட்சித்தவர்களின் அறிக்கைகளிலிருந்து அறியலாம். 1877ஆம் ஆண்டு அப்பாடசாலையைப் பரீட்சித்த முருகேச பண்டிதரின் அறிக்கையின் ஒரு பகுதி பின்வருமாறு:
** இவ்வித்தியாசாலையில் முதற் பரீட்சை சென்றவருடத்து மார்கழிக் கடையில் பூரீலயூரீ ஆமுகநாவலர் அவர்க ளாலும், இரண்டாம் பரீட்சை இந்த மாதம் இரண்டாம் திகதி எம்மாலும் நடத்தப்பட்டன. முதற் பரீட்சையில் காணப்பட்ட பிள்ளையின் தொகை நூறு. நோயின் கலக்கத்தாலும் பஞ்சத்தின் வருத்தத்தினுலும் பிள்ளைகள் முந்திய தொகையில் சுருங்கி இருந்தாராயினும், இரண்டாம் பரீட்சையிலும் அறுபதிற் குறையாமல் இருந்தார்கள். இவ்வளவு பிள்ளைகளுக்கும் உபாத்தியாயர் ஒருவரே ஆகவும், இலக்கணம் முதலிய பாடங்களில் வினவிய குறுக்குக் கேள்வியில் எல்லாவற் றிற்கும் பிள்ளைகள் தவழுமல் விடை சொன்னர்கள்."
1882ஆம் ஆண்டு சபாரத்தின முதலியார் நடத்திய பரீட்  ைசயி ன் அறிக்கை வருமாறு :
"உபாத்தியாயரின் இடையரு முயற் சிக்குப் பிள்ளைகளே சாட்சியாக இருக் கின்றனர். கல்வித்திறமை உடைய ஒவ் வொரு பிள்ளைக்கும் பிள்ளையவர்கள் பல புத்தகங்களைப்பரிசாகக் கொடுத்தார்கள். இதேைல கல்வியைத் தாம் எவ்வளவாக மதிக்கிருர்கள் என்பதனைச் செய்கையாற் காட்டுகிருர். இவரைப்போல் ஏனைய

உத்தியோகத்தர்களும் செய்வார்களாயின் தமிழ்க்கல்வி எவ்வளவாக விருத்தியடை պւն. '
1891ஆம் ஆண்டு பாடசாலையைப் பரீட்சித்த வித்துவசிர்ோமண்ணி ச. பொன் னம்பலபிள்ளையின் அறிக்கையின் ஒருபகுதி பின்வருமாறு :
* மேல்வகுப்பு மாணவர்கள் படிக் கும் பாடங்களாவன: தொல்காப்பியம், நன்னூல், திருவள்ளுவர் குறள், முல்லை அந்தாதி, கம்பர் அந்தாதி, தணிகைப் புராணம், இரகுவம்சம் என்னும் இவைக ளாம். இவைகளுள் எவ்வெப்பகுதிகளிலும் வினவிய வினுக்களுக்கெல்லாம் மாணுக்கர் கள் தக்க விடை அளித்தார்கள். இத் துணைச் சாமர்த்தியராக அதி பிரயாசத் தோடு கற்பித்த உபாத்தியாயர் பூரீ குமார சுவாமிப் புலவருடைய வித்தகம் எவரா லும் வியக்கற்பாலது "
புலவர் ஒரே ஆசிரியராக இருந்து கொண்டு அறுபதிற்கும் நூற்றுக்குமிடை யிலுள்ள மாணவர்களுக்கு எப்படிக் கல்வி பயிற்றினர் என்ற கேள்வி எழுகின்றது. உயர்வகுப்பு மாணவர்களைக் கீழ்வகுப்பு மாணவர்களுக்குக் கற்பிக்கப் பயன்படுத் தியதினுலேயே இது முடிந்திருக்கவேண்டு மென்றுஎண்ண இடமுண்டு.இம்முறையைச் சட்டாம்பிள்ளை முறையெனக் (Monitorial System) கூறப்பட்டது. இப்படிக் கற் பிப்பதனுல் மேல்வகுப்பு மாணவர்களுக் குத் தாம் கற்றதில் தேர்ச்சியும் தெளிவும் ஏற்படும். நாவலர் அவர்கள் மேல் வகுப் பில் படித்துக்கொண்டு இருக்கும்பொழுது கீழ்வகுப்பு மாணவர்களுக்குக் கற்பித்தார் என்பதை அவர் சரித்திரத்திலிருந்து அறிய லாம்.
புலவரிடம் ஏழாலையில் நூற்றுக்கணக் கான மாணவர் கற்றுத் தேறினர். அவர் களில் தெல்லிப்பழை சிவானந்தையர், சுன்னுகம் மாணிக்கத் தியாகராஜ பண்டிதர், ஏழாலை தம்பையா உபாத்தி யாயர் முதலியோர் சிலர் ஆவர். சிவா

Page 183
நாவலரும் குமாரசுவாமிப் புலவரும்
னந்தையர் புலியூர்ப் புராணம், புலியூர் அந்தாதி, சனிதுதி முதலிய நூல்களை இயற்றினர். மாணிக்கத் தியாகராஜ பண் டிதர் கதாப்பிரசங்கம் செய்வதில் வல்லுந ராக விளங்கினர். தம்பையா உபாத்தி u untuuri புராணங்களுக்குப் பொருள் சொல்வதில் சிறந்து விளங்கினர்.
புலவரும் நாவலரைப்போல் பல நூல்களை வெளிட்டார். ஏழாலை சைவ வித்தியாசாலையில் ஆசிரியராக இருந்த காலத்தில் பல பிரபந்தங்களையும், மேக தூதக் காரிகை போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும், இலக்கண சந்திரிகை போன்ற இலக்கண நூல்களையும் இயற்றினர். இக் காலத்தில் இவரின் வடமொழி ஆசிரியர் நாகநாத பண்டிதர் மொழிபெயர்த்த இதோபதேசம் என்னும் நூலையும் பதிட் பித்தார். இதற்கு நியாயவாதி பிறிட்டோ என்பவரும், வண்ணுர்பண்ணை த. செல் லப்பாபிள்ளை என்பவரும் முகவுரைகள் வழங்கினர்.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம்
1898ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் தாபிக்கப்பட்டதோடு புலவருக்கும் நாவலர் சைவ வித்தியா சாலைக்கும் நெருங்கிய தொடர்பு ஏற் பட்டது. இச் சங்கத்திற்கு மேற்படி வித்தியாசாலை முகாமையாளர் த. கைலாச பிள்ளை தலைவராகவும், அதன் தலைமை ஆசிரியர் மா. வைத்திலிங்கம்பிள்ளை காரிய தரிசியாகவும் இருந்தனர். அதன் வித்துவ சபையில் முன்கூறப்பட்ட இரு உத்தி யோகத்தரோடு பின்வருவோர் அங்கத் தவராக இருந்தனர். -அ. குமாரசுவாமிப் பிள்ளை, க. வேலுப்பிள்ளை ஆசிரியர், <鹦· முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. சிதம்பரப் பிள்ளை, சு. சரவணமுத்துப்பிள்ளை, சிறிமத் சு. ஏரம்பையர், அ. அருணசல சாத் திரியார், மு. கணேச பண்டிதர்.
இச்சங்கம் பிரவேச பாலபண்டிதப் பரீட்சைகளை நடாத்திவந்ததோடு, இப் பரீட்சைகளுக்கு ஆயத்தம் செய்வோருக்கு

நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை யில் வகுப்புக்களும் நடந்திவந்தது. இப் பரீட்சைகளை நடத்தும் சபையில் புலவர் முக்கிய அங்கத்தவராக இருந்தார்.
மேற் கூறப்பட்ட வித்துவ சபையில் அங்கத்தவராக இருந்தவர்களில் பெரும் uit Goutri நாவலரின் மாணவர் என் பதைக் குறிப்பிடவேண்டும். இவர்கள் நாவ லர் ஆரம்பித்து வைத்த தமிழ்ப் பணியை இச்சங்கம் மூலம் தொடர்ந்து செய்து வந்தனர்.
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் கிறிஸ்தவ மதத்தவர்களும் அங்கத்தவர் களாக இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. 1899ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பட்டமளிப்பு விழாவுக்கு வைமன் கதிரவேலுப்பிள்ளை தலைமை தாங்கினர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபர் நெவின்ஸ் செல்வத்துரை குறிப்புரை கூறி ணுர்.
இச்சங்கம் நெடுங்காலம் சிறந்த தொண்டாற்றி வந்தது. 1906ஆம் ஆண்டு கலாயோகி ஆனந்தகுமாரசுவாமி யாழ்ப் பாணத்துக்கு வந்தபொழுது இச்சங்கம் அவருக்கு ஒரு வரவேற்பு அளித்ததோடு **வித்தியா வினுேதன்' என்னும் பட்டத் தையும் அவருக்கு வழங்கியது.
சென்னை அரசாங்கம் 1913ஆம் ஆண்டு ஒரு தமிழ் அகராதியை Lexicon) தொகுத் தற்கு வண. யேஸ்-சாண்ட்லர் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அக்குழு தயா ரித்த மாதிரிப்பிரதி ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்துக்கு அனுப்பியது. அப் பிரதியைச் சங்கம் புலவரிடம் கொடுத்து அதைப்பற்றி ஒரறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டது. புலவரும் அப்பிரதியில் காணப் படும் குறைகளைக் கொண்ட ஓர் அறிக்கை யைச் சங்கத்திற்குச் சமர்ப்பித்தார். சங் கமும் அவ்வறிக்கையைப் பரிசீலனை செய்து சாண்ட்லருக்கு அனுப்பியது. அவ்வறிக்கை யைப்பார்வையிட்ட சாண்ட்லர் யாழ்ப்பா ணம் வந்து சங்கத்தோடும் புலவரோடும்

Page 184
74
ஆலோசனை நடத்தினர். புலவரைச் சென்னைவந்து அகராதிவேலையில் உதவி செய்யும்படி கேட்டார். புலவர் நாவலர் வித்தியாசாலையை விட்டுப்போக விரும் பாதபடியால் அவ் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். 1898ஆம் ஆண்டு தொடக்கம் நெடுங்காலம் சிறந்த பணி யாற்றிய யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கத் தைப்பற்றி ஓர் ஆராய்ச்சி நடைபெற வேண்டியது அவசியம்.
புலவர் 1898ஆம் ஆண்டு ஏழாலைச் சைவ வித்தியாசாலை மூடப்பட்டபின், 1902ஆம் ஆண் டு நாவலர் வித்தியாசாலையைச் சேரும் வரைக்கும் வீட்டிலேயே பாடம் சொல்லிவந்தனர். இக்காலந்தில் அவ ரிடம் படித்தவர்களில் தென்கோவைக் கந்தையாபிள்ளையும் மகாவித்துவான் கணேசஐயரும் விசேடமாகக் குறிப்பிடப் படவேண்டியவர்கள்.
இக்காலத்தில் சூடாமணி நிகண்டு இரண்டாம் தொகுதி, யாப்பருங்கலக் காரிகையுரை, திருவாதவூரர் புராண மூலம், கண்ணகி கதை முதலிய நூல்களை வெளி யிட்டார்.
புலவரும் மதுரைத் தமிழ்ச்சங்கமும்
மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901ஆம் ஆண்டில் பாலவந்தனம் ஜமீன்தார் பாண் டித்துரைத் தேவரின் பெருமுயற்சியால் தாபிக்கப்பட்டது. இச்சங்கத்தைத் தாபிப் பதற்கு 1898ஆம் ஆண்டில் தொடங்கப் பட்ட யாழ்ப்பாணச் சங்கத்தின் அமைப்பு முறை, படாவிதானங்கள் முதலியன பேருதவியாக இருந்தன. இவற்றை நெடுங் காலம் தமிழ்நாட்டில் வசித்துவந்தவரும் யாழ்ப்பாணச் சங்க ஸ்தாபகருள் ஒருவரு மான ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை மூலம் பாண்டித்துரைத் தேவர் பெற்றுக்கொண் டார். மேலும் புலவரின் பெரும் புலமை யைக் கேள்விப்பட்ட மதுரைத் தமிழ்ச்

ச. அம்பிகைபாகன்
சங்கத்தின் தலைவரான பாண்டித்துரைத் தேவர் சங்கத்தின் வித்துவ அங்கத்தவ ராக இருக்கும்படி கேட்டுப் பின்வரும்
கடிதத்தை எழுதினர்.
மதுரைத் தமிழ்ச் சங்கம்
17-10-1903.
2ցաn,
1901ஆம் வருடம் மேமாதம், இம் மதுரைமாநகரின் கண்ணே ஒரு தமிழ்ச் சங்கம் ஸ்தாபனமாய் நடைபெற்று வரு வதைப் பத்திரிகை வாயிலாகத் தாங்கள் அறிந்திருக்கலாம். அதன் விபரம் இத் துடன் அனுப்பியுள்ள பிரகடனப் பத்திரத் தால் நன்கு விளங்கும். தாங்கள் அச் சங்கத்தின் வித்துவ அங்கத்தவருள் சிறந்த வித்துவானக அமர்ந்திருந்து வேண்டியவற் றைச் செய்யுமாறு வேண்டிக்கொள்ளு கிறேன்.
இங்ஙனம்
பொ. பாண்டித்துரை
புலவரும் இதற்கு இசைந்துகொண்டார். பின்னர் தேவர் சங்கப் பத்திரிகையான செந்தமிழுக்குக் கட்டுரைகள் எழுதும் படி கேட்டு பின்வரும் கடிதம் எழுதினர். மதுரைத் தமிழ்ச் சங்கம், 28шт,
நம் சங்கத்தினின்றும் செந்தமிழ் எனப் பேரிய ஒரு மாதாந்தப் பத்திரிகை வெளிப் படுத்தலாமென முன்னரே அறிவித்துள்ள படி வெளியிடற்கு அப் பத்திரிகைக்குத் தாங்கள் அருமையிற் கற்ற கல்வியானுய விஷய தானங்கள் இன்றியமையாதன வாய்ச் சிறப்புடையவாதலின் தங்கள் நுண் அறிவுக்கெட்டிய அரும் பெரும் விஷயங் கள் யாவும் செந்தமிழ்ப் பத்திரிகை தன் னிடங்கொண்டு இத்தமிழுலகிற்கு நன்மை புரியுமாறு செய்விக்கத் தங்களை வணக்க
மாக வேண்டுகிறேன்.
தங்களன்பன் பாண்டித்துரை

Page 185
நாவலரும் குமாரசுவாமிப் புலவரும்
தேவர் கேட்டுக்கொண்டபடி புலவர் ஆரம்பத்திலிருந்தே செந்தமிழுக்குக் கட் டுரைகள் எழுதினர். பின்னர் 1922ஆம் ஆண்டில் இறக்கும் வரைக்கும் கட்டுரை கள் எழுதிக் கொண்டிருந்தனர். இப்படிப் புலவர் செந்தமிழுக்கு நூற்றுக்கு மேற் பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். இவை தமிழ் கற்கும் மாணவருக்கு அரிய பொக் கிஷமாகும்.ஆகவே இவற்றைத் தொகுத்து வெளியிட வேண்டியது அவசியமாகும். இது எப்போ கைகூடுமோ தெரியாது.
பாண்டித்துரைத் தேவருக்குப் பின் தமிழ்ச் சங்கத்துக்குத் தலைவராயிருந்த இராஜராசேஸ்வர சேதுபதியும் புலவரி டத்துப் பேரன்பும் பெருமதிப்பும் வைத் திருந்தார். புலவர் தாமியற்றிய தமிழ்ப் புலவர் சரித்திரத்தைச் சேதுபதிக்கு அர்ப் பணம் செய்தார். சேதுபதியும் சன்மான மாக ஒரு தொகைப் பணத்தை வழங்கினர். சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்தவரும் பாண்டித்துரைத்தேவரின் தகப்பனருமான பொன்னுச்சாமித்தேவர் தி ருக் குறள், திருக்கோவையார், சேதுபுராணம் முதலிய நூல்களை நாவலரைக்கொண்டு பரிசோதிப் பித்து வெளிவரச் செய்தது இங்குக் குறிப் பிடத்தக்கது. தமக்குதவி செய்த சேது பதியைப் பாராட்டி சில பாக்கள் யாத்து தமிழ்ப்புலவர் சரித்திரத்துக்கு எழுதிய முன்னுரையில் சேர்த்துக் கொண்டார். அதிலொரு பாட்டுப் பின்வருமாறு:
சீதை காவல ஞதியி னுட்டிய
தேவ ராலயம் போற்றிடுங் காவலன் நீதி காவலன் தொன்னெறிக் காவலன்
நீடு முன்னவர் செய்தரு மங்களின் பாது காவலன் பாவலர் காவலன்
பழைய வைதிக சைவர்கள் காவலன் சேது காவலன் செந்தமிழ்க் காவலன் சீர்த்தி ராஜரா சேர மன்னனே.
மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குப் புலவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி மு. இராகவையங்கார் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு;

75
**தாங்கள் செந்தமிழுக்கு எழுதி அனுப்பும் விஷயங்கள் தமிழக முழுவதும் பாராட்டப்படத்தக்கனவாய் ஒளிர்கின் றன. நம் செந்தமிழ்ப் பெருமையை வளர்த்தற்கண் தாங்கள் கொண்டுள்ள முயற்சி அளவு வேறெவரும் கொண்டிலர் என்பது இந்நாட்டின் பொது அபிப் 19grrruth, **
1902ஆம் ஆண்டில் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலைமையா சிரியரானுர், நாவலரின் இலட்சியங்களை நன்கறிந்தவரும், சிறந்த தமிழ்ப்புலவரும் ஆசிரியத் தொழிலில் நிரம்பிய அனுபவம் பெற்றவருமான ஒருவர் நாவலர் வித்தி தியாசாலைக்குத் தலைமையாசிரியராகக் கிடைத்தது ஒருபெரும் பாக்கியமாகும், புலவருக்கும் பல அறிஞர்கள் கூடும்அவை களமாக விளங்கிய அவ்வித்தியாசாலைக்கு தலைமையாசிரியராக இருக்கக்கிடைத்த பேறு பெரும் பேருகும். இதனுல் தகுதி வாய்ந்த இடத்துக்குத் தகுதியான ஒருவர் கிடைத்தார் என்று கூறவேண்டும்.
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நாவலர் வித்தியாசாலையில் தோன்றி அங்கேயே நடைபெற்று வந்தது. அந்தச் சங்கமூலம் புலவர் செய்த பணிகளையும் மதுரைத் தமிழ்ச்சங்கமூலம் செய்த பணிகளையும் முன்பு கவனித்தோம். இனி நாவலர் வித் தியாசாலை மூலம் செய்த பணியைக் கவ னிப்பாம்.
புலவர் ஆரம்பத்தில் கால் நடை யிலேயே வித்தியாசாலைக்குச் சென்று கால் நடையிலேயே வீடு திரும்பினர். வீட்டுக் கும் வித்தியாசாலைக்கும். உள்ள தூரம் ஆறு மைல், புகைவண்டி வந்தபின்னர் காலையில் புகைவண்டிமூலம் சென்று மாலை யில் நடந்து வந்தார். வித்தியாசாலை காலை ஒன்பது மணிக்கும் மாலை நான்கு மணி வரைக்கும் நடைபெறும். ஒருமணிக்கும் இரண்டுமணிக்கு மிடையில் இடை வேளை யில் சிவன்கோயில் வடக்கு விதியில் வசித்து வந்த புலோலி. வ. குமாரசாமிப்புலவ ரைத் தினசரி சந்தித்து உரையாடுவர்.

Page 186
176
காலையில் வித்தியாசாலைக்கு முன்பாக நாவலர் கோட்டத்தில் வசித்துவந்த ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையைத் தவருது சந் திப்பார்.
புலவர் பாடம் சொல்லுவது வகுப் போடு நின்றுவிடாது. வீடுதிரும்பும்போது பலருக்கு வழிநெடுகே பாடம் சொல்லிக் கொண்டு போவார். புலவர் இப்படி நடந்துகொண்டே பாடம் சொல்வதைக் கண்ட மக்கள் அவரை நடமாடும் கலைக் களஞ்சியமென்று அழைத்தனர். நான் சுன்னகத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆத லால், முதுகில் புத்தகக் கட்டுத் தூங்க மாணவர் புடைசூழ புலவர் வீடு திரும்பு வதைப் பலமுறை கண்டுள்ளேன்.
வீடு திரும்பியதும் படுத்துக்கொண்டு நண்பருடன் உரையாடுவர். புலவருக்கு எந்நேரமும் கல்வி பற்றிய சிந்தனையே. அவருக்கு உலக விவகாரங்களில் ஈடுபாடு கிடையாது. இவருடைய போக்கு மேல் நாட்டுச் சிறந்த பேராசிரியர்களின் (dons) போக்கை ஒத்திருந்தது.
புலவர் நாவலர் வித்தியாசாலையில் கல்வி கற்பித்தபொழுது அவரிடம் பல சிறந்த மாணவர் கல்வி கற்றனர். அவர் களில் உடுவில் இரத்தினேஸ்வர ஐயர், பன்னலை பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை, மட்டு வில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, மட்டக்களப்பு புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை முதலியோரைச் சிறப்பாகக் குறிப் பிடவேண்டும். இரத்தினேஸ்வர ஐயர் இலங்கையிலும் இந்தியாவிலும் ஆசிரிய ராக இருந்தவர். இவர் கட்டுரை எழுது வதிலும், கவி பாடுவதிலும், பிரசங்கம் செய்வதிலும் வல்லுநராக விளங்கினர். பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை பன்னுலை சேர் அம்பலவானர் கனகசபை வித்தியா சாலைக்குத் தலைமை ஆசிரியராக இருந்து இளைப்பாறியுள்ளார். புலவர் புராணங்க ளுக்குப் பொருள் சொல்லுமிடங்களில் இவரே புராணங்களை வாசிக்கும் பேறு பெற்றவர். மட்டக்களப்புப் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கவி இயற்றுவதில்

邸。 அம்பிகைபாகன்
சிறந்து விளங்கியதோடு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் விரிவுரையாள ராகவிருந்து அருந்தொண்டாற்றினர்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை புலவ ரிடம் கற்று மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டித பரீட்சையில் சித்தியெய்தியவர். திருநெல்வேலி சைவ ஆசிரிய கலாசாலை யில் நெடுங்காலம் விரிவுரையாளராக விருந்து நூற்றுக்கணக்கான ஆசிரியர் களுக்குத் தமிழ்ச்சுவை ஊட்டியவர். அக் காலத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு காவிய பாடசாலையை நடாத்தி பல தமிழ்ப் பண்டிதர்கள் தோன்றுவதற்கு வழிவகுத்தவர். ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர்களின் பெருமையை உலகறியச் செய்தவர். இவர் கல்விக்குச் செய்தசேவை யைப் பாராட்டி இலங்கைச் சர்வகலா சாலை இலக்கிய கலாநிதி என்னும் கெளரவப் பட்டத்தை வழங்கியது. நோய் முதுமை முதலிய இன்னல்களைப் பொருட்படுத்தாது இப்பொழுதும் தமிழ், சைவப் பணியாற்றி நாவலர், புலவர் பாரம் பரியத்தைக் காப்பாற்றி வருகிருர்,
புலவர் நாவலர் வித்தியாசாலையில் இருந்த காலத்தில் சாணக்கிய நீதிவெண்பா, இராமோதந்தம் முதலிய செய்யுள் நூல் களையும் திருவாதவூரர் புராண உரை, கம்ப ராமாயண பாலகாண்ட உரை, தண்டி அலங் காரப் புத்துரை முதலிய உரை நூல்களையும் தமிழ்ப்புலவர் சரித்திரம், இதோபதேசம், சிசுபால சரிதம், இரகுவம்ச சரிதாமிர்தம் முதலிய வசன நூல்களையும் இயற்றினர். இவர் இக்காலத்தில் இயற்றிய வினைப் பகுபத விளக்கம் என்னும் சிறுநூல் இவரின் இலக்கணப் புலமைக்கும் தனித்துவமான ஆராய்ச்சித் திறனுக்கும் எடுத்துக் காட் டாக விளங்குகிறது.
புலவர் ஆசிரியராக இருந்து பெற்ற சம்பளத்தை அறிந்தால் இக்கால ஆசிரியர் அதிர்ச்சியடைவர். ஏழாலைச் so வித்தியாசாலையில் இருந்த இருபது வருட காலமும் சம்பளமாக மாதம் பத்து ரூபாய்

Page 187
நாவலரும் குமாரசுவாமிப் புலவரும்
பெற்ருர், நாவலர் வித்தியாசாலையில் பத்துரூபாயோடு ஆரம்பித்து ஈற்றில் இரு பத்திரண்டு ரூபாய் பெற்ருர். பரமேஸ் வராக் கல்லூரியை சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆரம்பித்தபொழுது அங்கு பண்டிதராக வரும்படியும் உயர்ந்த சம்ப ளம் தருவதாகவும் கூறினர். ஆணுல் புலவர் தமக்குப் பல்லாற்ருனும் உகந்த தாய் இருந்த நாவலர் வித்தியாசாலையை விட்டுப்போக விரும்பவில்லை.
நாவலர் சமயம், கல்வி, அரசியல், சமூகம், பொருளாதாரம் என்னும் பல துறைகளில் பணியாற்றினர். புலவரின் பணி சமயம் கல்வி என்னும் இருதுறை களிலும் அமைந்திருந்தது எனலாம்" ஆணுல் இவ்விருதுறைகளிலும் ஆற்றிய பணிகள் மூலம் அழியாப் புகழை ஈட்டிக் கொண்டார். சேர் பொன்னம்பலம் அரு ஞசலம், சேர் அம்பலவாணர் கனகசபை, டபிள்யூ துரைசாமி போன்ற அரசியல் தலைவர்களும், த. கைலாசபிள்ளை, நெவின்
சான்ருதாரங்கள்
1. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, கு.,
(யாழ்ப்பாணம்-1970).
2. குமாரசுவாமிப்புலவர், த. தமிழ்ப்பு
(யாழ்ப்பாணம்-1951).
3. Sibels rigoTib-Hindu Organ-1897,
செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம்
2

177
செல்லத்துரை, ஜே. கே. சண்முகம், அலன் ஏப்பிரகாம் போன்ற கல்விமான்களும், சீ. அருளம்பலம், கே. தம்பையா போன்ற வழக்கறிஞர்களும் சேர்ந்து புலவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய சேவையை அரசாங் கத்துக்கு எடுத்துக்காட்டி 1920ஆம் ஆண் டில் அரச சன்மானம் பெற்றுக்கொடுத் தனர். இதுபெற்று இருவருடங்களுக்குள் அதாவது 9-3-1922இல் அவர் காலமா ஞர். புலவரை நன்கு அறிந்த முதுபெரும் புலவரான வெள்ளகால் சுப்பிரமணிய முதலியார் இவர்மீது பாடிய செய்யுள் ஒன்றை எடுத்துக்காட்டி இக் கட்டுரையை முடிப்பாம்,
என்றுமுள தென்மொழியில் வடமொழியில் இலக்கியத்தில் இலக்க ணத்தில் நன்றுபயில் மாணுக்கர்க் குயர்குருவாய்
நூல்கள்பல கயக்கத் தந்தோன் துன்றெழில்கூர் சுன்னுகக் குமாரசுவா
மிப்புலவர் தூய சீர்த்தி நின்றிலக விவ்வுலகை நீங்கினுன் அறிஞர்மனம் நீங்கி லானே.
குமாரசுவாமிப்புலவர் வரலாறு
லவர் சரித்திரம், இரண்டாம் பதிப்பு
1898, 1899.
. 1922 و I9028-س-

Page 188
நாவலரும் த. கைலாசபில்
கா. சுப்பிரமணியம்
"கைலாசபிள்ளையைக் கூப்பிடுங்கள்!”
நாவலரவர்கள் கடைசியாகக் கூறி யது இது. நோய் அதிகப்பட்டிருந்த வேளை யில் அவரது மாணுக்கரும் உறவினரும் நெருங்கி நின்று வித்தியாசாலை விஷயங் களைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என வினவியபோது அவர் கூறிய கடைசி வார்த்தை இது. குறிப்பிடப்பட்ட கைலாச பிள்ளையே இத்தகவலை எமக்கு அறியத் தருகிருர்.
நாவலரவர்களின் தமையன்மாருள் ஒருவரான தம்புவின் மகனும் நாவலரிடம் நேரடியாகப் பாடங் கேட்கும் வாய்ப்புப் பெற்றவருமான த. கைலாசபிள்ளை (1855-1939) நாவலர் பறைந்தபின் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து அவரது பணிகளை நிர்வகித்தவர். நாவலர் வர லாற்றை ஆராய்கின்றவர்களுக்கு மிகவும் இன்றியமையாத ஆதாரங்களாகத் திகழும் ஆறுமுக நாவலர் சரித்திரம் (1916), ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு (1921) ஆகிய நூல்களைத் தந்தவர். இன்று எம் மத்தியில் நாவலர் வழிவந்த சைவத் தமி ழறிஞராகத் திகழும் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஏற்த் தாழ இரு தசாப்தங்கள் கைலாசபிள்ளை யின் நிழலில் வாழ்ந்து கற்றுத் தெளிந் தவர். இவ்வகையில் நாவலர் வழிவரும் பண்பாட்டுச் சிந்தனைகளை எமது தலைமுறை யுடன் இணைத்து வைத்த ஒரு வரலாற்

ர்ளையும்
றுப் பாத்திரமாக அமைந்தவர் கைலாச பிள்ளை என்பது புலணுகும்.
இவர் தாம் எழுதிய ஆறுமுகநாவலர் சரித்திரம் என்ற நூலில் நாவலரின் கடைசி வார்த்தையாகக் குறிப்பிட்டுள்ள மேற்படி கூற்று உண்மையிலேயே நாவலரின் வார்த்தை தானு ?அல்லது வேறு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாவலர் சென்னதை இவர் தமக்குள்ள குடும்ப உறவுரிமையை அழுத் திக் காட்டும் நோக்கில் மரணப் படுக்கை யுடன் தொடர்பு படுத்தினரா என்ற ஐயம் எழுவது இயல்பே. இதற்கான விடை தேடுவதை விடுத்து மேற்படி கூற்றை ஆறுமுக நாவலர் சரித்திரத்தில் இட்டதன் மூலம் அவர் புலப்படுத்தியுள்ள உள்ளர்த்தம் என்ன என்பதனை ஆராய்வது பயனுடையது.
நான் நாவலரவர்களுடைய தமை யனுர் ஒருவருடைய மகன். அவர்க ளுடைய எழுத்துவேலைகளைச் சில வருஷ காலம் செய்தவன். அவர்களுடைய சரித்திரம் அறிந்தவன் . (ஆறுமுகநாவலச் சரித்திரம் - முகவுரை) இவர் (நாவலர்) சிவபதமடை வதற்கு ஒரு வாரத்திற்குமுன் ஒருநாள் அடியேனை நோக்கி நாளைக்கு உதயத் தில் வா, சில விஷயங்கள் எழுத வேண்டும் என்ருர். அவ்வாறே அடி யேனும் போய் நின்றேன்.
(மேற்படி பக். 92)

Page 189
நாவலரும் த. கைலாசபிள்ளேயும்
என்னை ஆறுமுக நாவலருடைய தளத்திலே சிலர் பட்டாபிஷேகம் பண்ணிவைக்க, நான் சைவத்தைத் தாங்குகிறவர்களையும் அவர்களுடைய எடுப்புக்களையும் தூஷிக்கிறேனென் gth - ... (To S. R. Rajaratnam - துண்டுப்பிரசுரம் 1929)
சைவபரிபாலன சபையே. நான் பெற்ற அருமருந்தன்ன பிள்ளாய் நீ முற்பிறவியில் ஆறுமுக நாவல ரையா அவர்களுடைய பிள்ளை. இந் தப் பிறவியில் என்னுடைய பிள்ளை.
(கடிதம்-துண்டுப்பிரசுரம்-1934)
பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் புலப்படுத்தியுள்ளவற்றை மே ற் படி கைலாசபிள்ளையைக் கூப்பிடுங்கள் என்ற கூற்றேடு இணைத்து நோக்கும்போது மேலெழுந்தவாரியான குடும்ப உறவு, ஆசிரிய மாணவத் தொடர்பு ஆகியவற் றுக்கு அப்பால் நாவலர் பணிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கான தகுதி தமக்கு மட்டுமே உரியதென்னும் தன் னம்பிக்கையுடன் கூடிய உரிமைக்குரலை அவதானிக்கலாம். இவ்வாறு கைலாச பிள்ளை நாவலர் பணிகளுக்கு வாரிசுரிமை யுணர்வுகொள்வதற்குக் காரணமாயிருந்த சூழ்நிலையை நோக்குவது அவசியம்.
முப்பது ஆண்டுகட்கு மேலாக, சைவ சமய அடிப்படையிலான இலங்கைத் தமி ழர் பண்பாட்டைப் பாதுகாப்பதற்காக வும் கட்டி வளர்ப்பதற்காகவும் பிரசங்கம், கல்வி, நூற்பிரசுரம் ஆகிய மூன்று தளங் களில் நின்று இயக்கம் நடத்தித் தனி மனித நிறுவனமாகத் தி க ழ் ந் த வர் நாவலர் இறுதியாக வண்ணுர்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியாசாலையிலே (1879 வைகாசி முலம்) நிகழ்த்திய பிரசங்கத் திலே,
எனக்குப்பின் சைவசமயம் குன் றிப்போகுமென்று பாதிரிமார்கள் சொல்லுகிருர்கள். ஆதலால் நான்

179
உயிரோடிருக்கும்போதே உங்களுக் ஒரு சைவப்பிரசாரகரைத் தேடிக்கொள்ளுங்கள்.
(கனகரத்தின உபாத்தியாயர் ஆறுமுகநாவலர் சரித்திரம்-பக். 120)
என்று தெரிவித்த கருத்தில் ஒருவித ஏக்க மும் எச்சரிக்கையும் இழையோடுவதை அவதானிக்கலாம். தகுந்த வாரிசு உரு வாகவில்லையே என்பது ஏக்கம், சமயம் அழியாமல் காப்பாற்றவேண்டும் என்பது எச்சரிக்கை. நாவலர் தனிமனித நிறுவன மாக இயங்கியவர். இவரது மாணவர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு துறையிலே சிறந்து விளங்கினர்களேயன்றி இவரு டைய இடத்தை நிரப்பக்கூடியவகையில் உருவாகவில்லை. அவ்வாறு உருவாகியிருக்க வும் முடியுமோ என்பது சந்தேகமே. நாவலரால் பண்பாளரென்று கருதி வளர்க்கப்பட்டவர்கள் நாவலருக்கு முன்பே உலகவாழ்வை நீத்தனர். இச் சூழ்நிலையைப் பண்டிதமணி சி. கணபதிப் பிள்ளையவர்கள்,
நாவலர் தனித்தவர். அவருக்கு வாரிசு "இல்லை". அவருடைய மாணுக் கர்கள் மகாபடித்தவர்கள் என்று சொல்வார்கள். ஆணுல் அவரைப் போலத் தருமத்தைச் சிந்தித்தவர்கள் அல்லர். அவரைக் குரவராக்க முயன் ருர்கள் வாய்க்கவில்லை. வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை காரி யந் தெரிந்தவர். நாவலரால் சிறை வாசமும் செய்தவர். நாவலரை அக் கினி என்று சொல்லித் தூர விலகி நடந்து கொண்டார். சதாசிவம்பிள் ளையை அவருடைய உத்தம மாணவர் என்று சொல்வார்கள். ஆனல் நாவ லரோ அவரிடந்தானும் தருமத்தை ஒப்பிக்கக்கூசி ஒப்பியாது விட்டு விட் டார். எக்கருமங்களையும் எவரிடமும் அவர் ஒப்பிக்கவில்லை. சுப்பிரமணிய பிள்ளை என்ருெரு மாணவரைத் தரு மம் தெரிந்தவர் என்று கண்டார். அவர் 1873ல் தேக வியோகமானர்.

Page 190
盈89
...நீர்வேலிச் சிவசங்கரபண்டிதர் மகாமேதை. படிப்பின் பயனுக ஒழுக் கமும் அவர்பால் இருந்தது. அவர் நாவலருக்கு இளையவர். அவருக்கு முன்னமே போய்விட்டார். என்று எடுத்துக்காட்டுகிருர்,
(நாவலர்-1968, பக். 56)
இதிலே கைலாசபிள்ளையைப் பற்றிய குறிப்பே இடம்பெறவில்லை. நாவலரின் சைவப்பிரகாச வித்தியாசாலைகள் இரண் டுக்கும் (சிதம்பரம் - வண்ணுர்பண்ணை) என். கே. சதாசிவம்பிள்ளை என்பவரே நிர்வாகி என்று நாவலர் 1876 இல் உறுதி எழுதி வைத்ததாகவும் சதாசிவம்பிள்ளை 1910ஆம் ஆண்டில் தம்பு கைலாசபிள்ளை யிடம் பொறுப்புக்களை உறுதியெழுதிக் கொடுத்தார் என்றும் வை. முத்துக் குமாரசுவாமி தெரிவிக்கிருர்,
(Srilasri Arumuga Nayalar The Champion Reformer of the Hindus-1968, page 94-95) 1876 இல் சதாசிவம் பிள்ளையைப் பொறுப்பாளராக நியமித்த ஆறுமுகநாவ லர் 1879இல் அவர்மீது நம்பிக்கை இழந்து விட்டாரா? இந்தப் பின்னணி பற்றிய ஆய்வு இங்ரு அவசியமில்லை. ஆனல் வர லாற்ருய்வுக்கு முக்கியமானது. நாவலர் தமது சிந்தனையையும் செயலையும் தொடரு வதற்கான தகுந்த பாத்திரம் ஒருவரும் கிடைக்கவில்லையே என்று ஏக்கங் கொண் டிருந்தார் என்பதைப் பண்டிதமணியவர் களின் கூற்று உணர்த்துகின்றது. இந்நிலை யிலே நாவலரோடு நெருங்கிப் பழகவும் அவருடைய எழுத்து வேலைகளைச் செய்ய
வும் வாய்ப்புக் கிடைத்த கைலாசபிள்ளை
நாவலரின் சிந்தனைகளையும் செயல்களையும் தொடரும் பணியைத் தம்முடைய வாழ்க் கைப் பணியாகக் கொண்டு செயற்படத் தொடங்கினர். 8
நாவலர் பத்தொன்பதாம் நூற்ருண் டின் நடுப்பகுதியில் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில்-குறிப்பாக வடபிர தேசத் தமிழ்மக்கள் மத்தியில் நடத்திய

நா. சுப்பிரமணியம்
இயக்கம் சைவமய அடித்தளத்திலமைந்த பண்பாட்டியக்கமாகும். ஐரோப்பிய ஆட்சி யாளர்களின் கீழ் மூன்று நூற்ருண்டுக ளாக அடிமைப்பட்டிருந்த சமுதாயத்தில் கிறித்தவ சமயப் பிரசார முயற்சிகள் பண்பாட்டடிப்படையைத் தகர்க்கத் தொடங்கியிருந்தன. இந்நிலையில் இலங் கைத் தமிழரின் சொந்தப் பண்பாட்டினைக் காத்து நிறுவவேண்டிய பணி நாவலர் போன்ற ஒரு ஆற்றலாளனை எதிர்நோக்கி நின்றது. இலங்கைத் தமிழரின் மரபு வழிப் பண்பாடென்பது அன்றையகாலப் பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை மையமாகக் கொண்டமைந்த (E } சமய அடிப்படையிலான பண்பாடகவே கருதப்பட்டதெனக் கொள்வது தவரு காது. அங்குதான் கிறிஸ்தவ சமய பிரசார முயற்சிகளும் குவிக்கப்பட்டிருந் தன; முழுமூச்சாகச் செயற்பட்டன. எனவே இத்தகையகுழலில் பண்பாட்டைக் காக்க தன் சிந்தனை சொல் செயல் மூன் றையும் முன்வைத்து முயன்ற "கந்தர் ஆறுமுகம் பண்பாட்டின் அடிப்படையான சமயத்தை ஆதார நூல்கள் கூறும் வரை விலக்கணங்களுடன் மீட்டு நிறுவ முனைந் தார். இவ் வரைவிலக்கணங்களை விரித் துரைக்கும் ஆற்றலுக்குக் கொடுக்கப் பட்ட பாராட்டே **நாவலர்” என்ற பட்டமாகும். பண்பாட்டுப் பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்ட நாவலருக்கு சமய அடிப்படைகளிற் சீர்திருத்தம் செய்வ தற்கோ அல்லது சமரசங் காண்பதற்கோ வேண்டிய சிந்தனை உருவாவதற்கு வாய்ப் பிருந்திருக்கமுடியாது. அது நவீன சிந்தனை களின் விளைவேயாகும்.
வேதங்களையும் சிவாகமங்களையும் சைவசித்தாந்த சாஸ்திரங்களையும் ஆதார மாகக்கொண்ட சைவ சமய நம்பிக்கை யுடன் சிவபுராணங்களும் திருமுறைகளும் காட்டும் வாழ்க்கைமுறையினை அனுசரிப் பதே வாழ்க்கையின் பண்பும் பணியும் ஆகும் என்பது நாவலரின் அசையாத நம்பிக்கை. அவரது பிரசங்கங்கள் நூற் பிரசுரங்கள் ஆகியவற்றில் இழையோடி

Page 191
நாவலரும் த. கைலாசபிள்ளையும்
நிற்கும் பண்பு இதுவே. இதைப் பிரசாரம் செய்வதற்கே தமது வாழ்வின் முப்பத்தி ரண்டு வருடங்களை அவர் செலவுசெய்தார்.
நாவலரின் வண்ணுர்பண்ணைச் சைவ வித்தியாசாலையில் அவரது மாணுக்க ரான காசிவாசி சி. செந்திநாதஐயரிடமும் அவர் இந்தியாவுக்குச் சென்றபின் உரை யாசிரியர் ம. க. வேற்பிள்ளையிடமும் ஆறுமுகந. பலரிடமும் கல்வி கற்க வாய்ப் புப் பெற்ற கைலாசபிள்ளை நாவலரின் மேற்கண்ட வாழ்க்கை பற்றிய நோக் கினைத் தமது முதுசொத்தாக வரைந்து கொண்டார்.
நாவலர் காலமானதை அடுத்துப் பத்து ஆண்டுகளுக்குள் 1888இல் யாழ்ப் பாணம் சைவபரிபாலன சபை நிறுவப்பட் டது. இச்சபையின் தலைவராக வித்துவ சிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை யும், செயலாளராக த. கைலாசபிள்ளை யும், திரு. த. பொன்னம்பலபிள்ளை, திரு. வி. காசிப்பிள்ளை, திரு. எஸ். எம். பசுபதிச் செட்டியார் முதலியோர் சபையின் உறுப் பினராகவும் அமைந்தனர். தனிமனிதனுக நாவலர் செய்த சைவப் பிரசாரத்தை நிறுவன ரீதியில் அமைந்து செய்யும் ஒரு இயக்க வளர்ச்சியை இங்கு அவதானிக்க முடிகின்றது. இச்சபையமைப்பில் கைலாச பிள்ளை கொண்டிருந்த பங்கை அவரே,
நீ முற்பிறவியிலே ஆறுமுக நாவலரையா அவர்களுடைய பிள்ளை, இப் பிறவியில் என்னுடைய பிள்ளை. தான் சென்ற சர்வதாரிடு) ஆரம்பத் தில் என்னுடைய முழுமுயற்சியினலே யாழ். சைவவித்தியாசாலையில் ஒரு கூட்டங்கூட்டி அதில் உன்னை உண் L-IT is ........ நாவலரையா அவர்க ளுடைய மற்றைச் சீஷர்களும் மாளுக் கர்களும் மற்றை அங்கங்களாகவும். என்று கடிதம் என்ற துண்டுப் பிாசுரமூலம் (1934) வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் சபையின் முயற்சியினலே 1889இல் யாழ்ப் பாணம் இந்துக்கல்லூரி உயர்நிலைப் பாட

சாலையாகத் தோற்றுவிக்கப்பட்டது. இக் கல்லூரியின் தோற்றத்திற்குக்காரணராக இருந்தோருள் த. கைலாசபிள்ளை முக்கிய மானவர். இவர் அதில் சிலகாலம் சம்பள மின்றிச் FLDuLulu TL.b கற்பித்தவர். நாவலர் தமது காலத்தில் தோற்று வித்துத் தோல்விகண்ட வண்ணுர்பண்ணை சைவ ஆங்கில வித்தியாசாலைக் கனவை (1872 -77) நிறைவு செய்யும் வகையில் அமைந்த இக்கல்லூரி இன்று எம் மத்தியில் சிறப்புற வளர்ந்தோங்கி நிற்கிறது.
சைவபரிபாலனசபை 1889இல் வெளி யிடத்தொடங்கிய இந்து சாதனம் பத்திரி கையின் ஆசிரியராக ஏழு ஆண்டுகள் (1889-1896) கைலாசபிள்ளை பணிபுரிந் தார். நாவலர் உதயபானு என்ற பெய ரோடு சைவப்பத்திரிகை நடத்த முயன்று விளம்பரம் கொடுத்திருந்தார் என்றும் அப்பெயரில் இவரது மாணுக்கர்களால் சிறிதுகாலம் நடத்தப்பட்டுவந்த பத்திரி கையே பின்னர் இந்துசாதன மாகப் பரி ணமித்தது என்றும் ஆறுமுக நாவலர் சரித் திரத்தில் கைலாசபிள்ளை குறிப்பிட்டுள்
ளார் (பக். 84).
சைவ அபிமானிகள் சங்கம், சைவ வித்தியாசாலை, சைவசித்தாந்தசபை, சைவ கலாவிருத்திச்சங்கம், சைவ சித்தாந்த மகாசமாஜம், கிறிஸ்து மத கண்டன சபை ஆகிய பலசபைகளைத் தோற்றுவிப்பதில் கைலாசபிள்ளை முன்னின்றுழைத்தார். இறுதி இரு சபைகளுக்கும் தலைவராகத் திகழ்ந்தார். இவற்றினூடாக அன்றைய காலப்பகுதிச் சைவப் பெரு மக்களை இணைத்து அவ்வப்போது எழும் பிரச்சனை களுக்குத் தீர்வு காண முயன்றமையும் சமய பிரசாரம் செய்தமையும் புலனுகின் sigil.
தமிழ் விவிலிய புத்தக மொன் றின் அட்டையிலே தாம் செய்ய உத் தேசித்த கருமங்கள் இவையிவை என்று குறித்த இடத்தில், கிறிஸ்து மத கண்டன சபை, சைவசமய பரி பாலனசபை என்னும் இரண்டு பேர்

Page 192
82
களும் எழுதப்பட்டிருக்கின்றன. இந் துக் கல்லூரிக்கும் இவரே காரண ரென்பது அதன் வரலாற்றுப் புத்த கத்தில் அறியக் கிடக்கின்றது.
(ஆறுமுகநாவலர் சரித்திரம்-பக். 90) என்ற கூற்றின்மூலம் கைலாசபிள்ளை தமது செயல்கள் நாவலரின் சிந்தனையின் விளைவு களே என்பதை உறுதிசெய்கிருர்,
ஆறுமுகநாவலருக்குப் பின்னர் வண் ணுர்பண்ணை சைவப்பிரகாச வித்தியா சாலை மனேஜராக 1910ஆம் ஆண்டிலே த. கைலாசபிள்ளைக்கு உரிமை உறுதி யெழுதிக் கொடுக்கப்பட்டதென முன்னர் பார்த்தோம். ஆணுல் அதற்குப் பல ஆண் டுகள் முன்பிருந்தே கைலாசபிள்ளை இவ் வித்தியாசாலையின் ‘மனேஜர்' ஆசுத் திகழ்ந்தார் என்று தெரியவருகிறது"
1900க்கு அண்மையில் நாவலரின் தமையனுர் புதல்வர் த. கைலாச பிள்ளை அவர்கள் நாவலரின் மாண வர் என்ற கருத்தில் நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலைக்கு மனேஜர் ஆயினர்
(ஆறுமுகநாவலர்-பக்.134) என பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை குறிப்பிட்டுள்ளார். 1902ஆம் ஆண்டுவரை அவ் வித்தியாசாலையின் தலைமையாசிரிய ராகத் திகழ்ந்த வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலபிள்ளை காலமானபின் சுன் ணுகம் குமாரசுவாமிப்புலர் தலைமையாசி ரியரானர். கைலாசபிள்ளை, குமாரசுவா மிப்புலவர் இருவரின் கூட்டுறவில் இருப தாண்டுகள் நாவலர் சைவப்பிரகாச வித் தியாசாலை புதிய தோற்றத்துடன் பொலிந்தது. குமாரசுவாமிப்புலவர் தலை மையாசிரியராக நியமனம் பெறுமுன்பே கைலாசபிள்ளையோடு நண்பராகத் திகழ்ந் தவர். இருவரும் இணைந்து தமிழ்ச் சங்க்ம் ஒன்றை நிறுவினர். 1898இல் நிறுவப் பட்ட இச்சங்கம் 1901இல் மதுரையில் நிறுவப்பட்ட நான்காம் தமிழ்ச் சங்கத் திற்கு மூன்று ஆண்டுகள் மூத்தது; மது ரைத் தமிழ்ச்சங்கம் இச்சங்கத்தின்

நா. சுப்பிரமணியம்
அமைப்புவிதிகளைக் கேட்டறிந்து பயன் படுத்திக்கொண்டது என்பர்.
நாவலர் தமது 'தமிழ்ப் புலமை" என்ற கட்டுரையிலே,
தமிழ் கற்றவர்களை நடுவு நிலை மையின் வழுவாது பரீகூைடி செய்து அதில் வல்லவர்களென நன்கு மதிக் கப் பட்டவர்களுக்கு அவரவர் தகுதிக் கேற்ற பெயரும் சின்னமும் கொடுக் கும் சபையார் இக்காலத்தில் இல்லா மையால், தமிழ்க் கல்வியில் வல்லவர் களும், வல்லவரல்லாதவர்களும் ஒப்ப மதிக்கப் படுகிருர்கள். என்று குறிப்பிட்டுள்ளார். கைலாசபிள்ளை யும் குமாரசுவாமிப் புலவரும் இச் சங் கத்தை நிறுவுவதற்கு நாவலர் அடித்தளம் அமைத்திருந்தார் என்ருல் தவருகாது. இந்தத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் த. கைலாசபிள்ளை, தலைமைப் புலவர் அ. குமாரசுவாமிப் புலவர், உறுப்பினர்கள் புலோலி வ. குமாரசுவாமிப் புலவர், மாணிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, மாதகல் ஏரம்பையர், மாதகல் அருணுசல ஐயர், நீர்வேலி சிவசங்கர பண்டிதர், கொக்குவில் ச. சபாரத்தின முதலியார், ஊரெழு சு. சரவணமுத்துப் புலவர் ஆகி யோர். இச்சங்கத்தால் பாரதி, பண்டிதர் முதலிய வகுப்புகள் நடத்தப்பட்டன, அ. குமாரசுவாமிப்புலவர், சங்கர பண்டிதரின் புதல்வரான சிவப்பிரகாச பண்டிதர், வடலியடைப்பு அருணுசல சாஸ்திரி ஆகி யோர் இங்கு ஆசிரியப்பணி புரிந்தனர். 1906இல் கலா யோகி ஆனந்த குமார சுவாமிக்கு வரவேற்பு நிகழ்த்தி **வித்தியா வினுேதன்' என்ற கெளரவ விருதை வழங்கியமை இந்தச் சங்கத்தின் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியா கும்,
நாவலர் சைவப்பிரகாச வித்தியா சாலை மானேஜராகப் பணிபுரிந்த காலத் தில் கைலாசபிள்ளை மேற்கொண்ட புது முயற்சி 1917இல் தொடங்கப்பட்ட காவிய பாடசாலையாகும். மாணவர்களுக்கு உண்டி

Page 193
நாவலரும் த. கைலாசபிள்ளையும்
யும் உறையுளும் வழங்கி நடத்திய இட் பாடசாலையில் கற்றவர்களே பண்டிதமணி கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற புலவர் மணி, ஏ. பெரியதம்பிப்பிள்ளை, க. குரு மூர்த்திஐயர், பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை, அச்சுவேலிக் குமாரசாமிக்குருக்கள் முத லிய பதினெண்மர்.
இவ்வாறு நிறுவனங்களை உருவாக்கி நாவலரின் சமயக் கல்விப் பணியையும் இலக்கியப் பணியையும் தொடர்ந்த த. கைலாசபிள்ளை நூற்பிரசுரம் என்ற வகை யில் சதுர்வேத தாத்பர்ய சங்கிரகம், முத் திரா லக்ஷணம் (1911), பசுபதிபாச விளக் கம் (1906), சிவஞானபோத விருத்தி, சித் தாந்த சிகாமணி சிவயோகரத்தினம், சிவ யோகசாரம், சிவஞான சித்தியார் (சுபக்கம்) முதலிய சமய தத்துவ நூல்களையும் வசனத் தொடை (1907) என்ற இலக்கண நூலை யும் முற்கூறிய ஆறுமுகநாவலர் சரித்திரம், ஆறுமுக நாவலர் பிரபந்தத் திரட்டு ஆகிய வற்றையும் வெளியிட்டுள்ளார். சிவகீதை யைப் பரிசோதித்தார். இவையன்றிப் பெருந்தொகையான துண்டுப் பிரசுரங் களையும் வெளியிட்டுள்ளார். இத் துண்டுப் பிரசுரங்கள் அவரது சமகால சமூக சமய தத்துவ பண்பாட்டுப் போக்குகள் தொடர் பான கண்டனங்களாகவும் கருத்துக்களாக வும் அமைந்திருக்கக் காணலாம் சிவகாசி மு. ரா. அருணுசலக் கவிராயர் செய்யுள் வடிவில் இயற்றிய ஆறுமுக நாவலர் சரித்திரத்தின் இரண்டாம் பதிப்புக்கு (1934) கைலாசபிள்ளை ஒரு முகவுரை எழுதியுள்ளார். இது பண்டிதர் சி. கண பதிப்பிள்ளையின் பெயரில் பிரசுரமாகியது, தமிழ் நாட்டில் செந்தமிழ்ச் செல்வி என் னும் சஞ்சிகையைக் களமாகக் கொண்டு நடைபெற்ற 'திருநான்மறை விளக்கம்’ என்ற ஆய்வில் கைலாசபிள்ளை எழுதிய அபிப்பிராயம் மா. சாம்பசிவபிள்ளையின் திருநான்மறை விளக்க ஆராய்ச்சி என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. ஆறுமுக நாவலர் எழுதிய திருவிளையாடற்புராண வசனத்தை அவர் காலமானபின் நிறைவு செய்து வெளியிட்டார்.

இவ்வகையில் அறுபது ஆண்டுகளாகக் கைலாசபிள்ளை நிறுவன அடிப்படையிலும் தனிமனிதராகவும் புரிந்த பணிகளை சம கால (1879-1939) ஈழத்தின் வரலாற் றிற் பொருத்தி நோக்கி மதிப்பிட வேண் டியது அவசியம்.
தமிழ்ப் பாஷையைக் குறித் தும் சமய விருத்தியைக் குறித்தும் இவர் காலத்துக்குக் காலம் எடுத்துக் காட்டிய குறை நிறைகளை அநேகர் அங்கீகரியா விடினும் இவரது சமய சிந்தனையுடன் கூடிய உயரிய நோக் கினை எவரும் ஆட்சேபிக்க மாட்டார். பொதுவாகத் தற்காலத்தில் உள்ளோர் இவர்கொள்கைகளை ஏற்கா தவராய் இருப்பினும் இவர் மாட்டு அவர்க்கிருந்த மதிப்புக் களவின்று. அதற்கெல்லாம் காரணம் இவரது நேர்மையும் தாம் சொல்வதுபோல் உதாரணமாக நடக்கும் திறமையும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதிஉடமை யுமேயாகும். 1939-02-23இல் கை லா ச பிள்ளை மரணமடைந்ததைத் தொடர் ந் து 1939-02-26 ஈழகேசரி இதழில் பிரசுர மாயிருந்த ஒரு குறிப்பில் அமைந்துள்ள மதிப்பீடு இது. ஏறத்தாழ இருபதாண்டு களின் பின்னர் அதே ஈழகேசரி இதழில் * ‘ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் வரிசை ** என்ற தலைப்பில் த. கைலாசபிள்ளையவர் களைப்பற்றி எழுதியவர்,
நாவலர் பெருமான் காலஞ் சென்ற பின்பு அவர்களுடைய கொள் கைகளை, வழிகளை, வாழ்க்கை முறை களை அப்படியே கைக்கொண்டு தமிழி லும் சைவத்திலும் அளவுகடந்த அபி மானமுடையவராய் அதன் நிலை பேற்றுக்குத் தமது வாழ்நாளை அர்ப் பணஞ் செய்துவந்த பெரியார் திரு. தg கைலாசபிள்ளைதான் எ ன் ரு ல் அதை அப்படியே ஆவலுடன் ஆமோ திக்க எவரும் பின்னிற்க மாட்டார் (1957-5-19).
என்று குறிப்பிட்டுள்ளார்;

Page 194
董84
மேற்கண்ட இருவகைக் கருத்துக்களும் சரியான மதிப்பீடுகள்தானு என்பது ஒரு புறம் இருக்க, கைலாசபிள்ளையின் வாழ்க் கையும் சாதனைகளும் எவ்வாறு சமகாலத் திலும் பிற்காலத்திலும் சமூகத்தால் கருதப்பட்டன என்பதையும் அப்படிக் கருதப்படுவதற்குக் காரணமாயமைந்த கைலாசபிள்ளையின் உள்ளார்ந்த பண்புக ளையும் நாம் உணர்ந்துகொள்ள இவை துணைபுரிகின்றன எனலாம்.
கைலாசபிள்ளை நாவலரின் கொள்கை களைப் பின்பற்றியவர். அவற்றை அப் படியே கைக்கொண்டு வாழ்ந்தவர். ஆனல் சமகால சமுதாயத்தில் இவரது கொள் கைகள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. இது ஈழகேசரி குறிப்பால் மட்டு மன்றி இவரது துண்டுப் பிரசுரமொன்றி லேயே,
பின்னே எழுதப்படுவன என் னுடைய அபிப்பிராயம். இதற்கு LDITGip607 அபிப்பிராயமுடையோரே இங்கு பலர். என்னுடைய அபிப் பிராயத்தை வெளியிடுவதேயன்றி மற்றவர்கள் என்னேடு சேருவார்க ளென்பதும் மற்றவர்களைச் சேர்க்க வேண்டுமென்பதும் என் கருத்தல்ல. என்று குறிப்பிட்டுள்ளமை மூலமும் உறுதி யாகின்றது. அன்றியும் சமகால சமய சமூகப் பிரச்சினைகள் குறித்து நிறுவனங் களை நோக்கியும் தனிமனிதரை நோக்கி யும் நடத்திய துண்டுப் பிரசுரப் போரட் டங்களும் இவரது, சமூகத்துடன் இணைந்து நின்று செயல்பட முடியாதிருந்த மனப் பாங்கைக் காட்டுகின்றன.
கைலாசபிள்ளை ஆங்கிலம் கற்றவர்; சமகால யாழ்-நகர சங்கத்துடன் மக்கள் நலன் குறித்துக் கடிதப் போக்குவரத்து நடத்தியவர். உலகவரலாறு, பொரு ளாதாரம், பண்பாடு, தத்துவம் என்பவை பற்றி நிறைய அறிந்துவைத்திருந்தவர். தமிழர் பண்பாடு தொடர்பாகப் பல துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டவர். தென்தமிழ்த் தனிமாட்சி, தமிழ்க்கல்வி ஆகிய

- - நா. சுப்பிரமணியம்
தலைப்புக்களில் இவர் எழுதியுள்ளவற்றில் தமிழர் பண்பாடு பற்றி இவர் கொண் டிருந்த கருத்துக்கள் அவரது சமகால, பாவலர் தெ. து. துரையப்பாபிள்ளை, சோமசுந்தரப்புலவர் முதலியோர் கொண் டிருந்த கருத்துக்களோடு தொடர்பு படுத்தி ஆராயப்படத்தக்கன.
o « ' O தமிழ்ப்பிள்ளைகள் பலர் தமது சுவபாஷையைக் கற்காது இங்கிலீ சையே படிக்கத் தொடங்கியிருக் கிருர்கள். அது இடுப்பிலே வேட்டி கட்டாது தோளிலே அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டாற்போல் இருக் கிறது. என்று தமிழ்க்கல்வி பற்றி 1922ஆம் ஆண் டிலே சிந்தித்தவர். "சுயராச்சியம்" என்ற சொல்லைத் தமது பிரசுங்களிலே கையாண் டுள்ளார். தேசவிடுதலை உணர்வுபற்றியும் நன்கு உணர்ந்திருக்கிருர். இவை யாவும் அவரது பரந்த உலகியலறிவுக்குச் சான்று கள். கைலாசபிள்ளை தங்களுக்குப் படிப் பித்தகைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது பண்டிதமணியவர்கள்,
". உலகப் படிப்பு புஸ்தகப் படிப்பு எல்லாம் சேர்ந்தது அந்தப் படிப்பு" என்பர்.
(ஈழகேசரி ஆண்டுமடல், பக். 41)
இத்தகைய பரந்த விஷய அறிவு கொண்ட கைலாசபிள்ளை பெண் கல்வி, சாதிமுறை, காந்தீயம் ஆகியவை தொடர் பாகப் பொதுவான சமூகப் போக்குடன் ஒத்துப்போக முடியாதவராயிருந்தார்.
1937ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி இலங்கைக்கு வந்து சென்றதை அடுத்து உருவான ஹரிஜன சமவுரிமை, சாதிசமரச ஆலயப்பிரவேச உணர்வுகளை இவர் ஆரம் பத்தில் ஆசிரியராக இருந்து நடத்திய இந்து சாதனம் பத்திரிகையே ஆதரித்து எழுதிய வேளையில் அவற்றை க் கடுமையாகத் தாக்கி எழுதியவர் இவர். (கைலாசபிள்ளை நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் தர்மபரிபாலகராகவும் திகழ்ந்தவர் என்

Page 195
நாவலரும் த. கைலாசபிள்ளேயும்
பது இங்கு குறிப்பிடத்தக்கது). இத்தகைய போக்குகள் கைலாச பிள்ளை யை ஒரு கண்டனகாரர் எ ன் று ம் சமூகத்தோடு ஒத்துப்போகத் தெரியாதவர் என்றும் கருதவைத்ததன் மூலம் அவரது நாவலர் வழிவந்த சீரிய பணிகளைச் சரியாக ம தி ப் பி ட் டு வெளிப்படுத்துவதற்குத் தடையாக அமைந்துவிட்டன எனலாம்.
நாவலர் வடமொழி வேதங்களையும் ஆகமங்களையும் ஆதாரமாகக் கொண்ட சைவசமயத்தின் வாரிசு. தமிழ்நாட்டில் 1920ஆம் ஆண்டை அடுத்து உருவான "திருநான்மறை விளக்கம்" என்ற சிந்தனை தமிழிலேயே முதன்முதலில் தோன்றியது என்பதாகும். இது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளில் நாவலர் கருத்தை அடி யொற்றி வடமொழி வேத முதன்மையை ஆதரித்தவர் கைலாசபிள்ளை. ஈழத்துச் சைவ வரலாறு எழுதப்படும்போது இது விரிவாக நோக்குதற்குரியது.
நாவலரின் பெருமையைக் குறைக்கும் வகையிலே தமிழ்நாட்டில் உ. வே. சாமி நாதையரின் மீனுட்சிசுந்தரம்பிள்ளை சரித்தி ரம் என்னும் நூலில் வெளிவந்த குறிப்பைநாவலர் தமது திருக்கோவையாருரை, திருக்குறட் பரிமேலழகருரை முதலியவற் றுக்கு மீனுட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாயிரம் பெற இரந்து நின்ருர் என்று பொருள்பட எழுதப்பட்டுள்ள குறிப்பைக் கண்டித்து நாவலர் பெருமையைக் காக்க முனைந்த முதல்வர் கைலாசபிள் ளையேயாவர். 1934இல் இவர் தொடங் கிய இம்முயற்சியே இன்றுவரை பண்டித மணி அவர்களின் நாவலர் புகழ்பேணும் முயற்சியின் முனைப்பான அம்சமாகத் திகழ்கின்றது.
நாவலரின் கல்விப்பணியின் தொடர்ச் சியும் வளர்ச்சியுமாக’ அமைந்தது சைவ ஆசிரிய கலாசாலை நிறுவும் முயற்சி. இம் மாபெரும் முன்னேடி முயற்சியில் ஈடுபட்ட காரைநகர் ச. அருளுசலம் (1864-1920) அவர்களுக்குப் பலவகையிலும் ஆதர வளித்துப் பக்கபலமாக நின்று அறிவுரை
22

185
பகர்ந்து உற்சாகமூட்டியவர் கைலாச பிள்ளை. சைவ ஆசிரியர்களைத் தோற்று வித்த திரு. ச. அருணசலம் அவர்களின் சரிதத்தை எழுதிய சி. கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் இத்தொடர்பில் கூறி யிருப்பது கவனிக்கத்தக்கதாயுள்ளது.
திரு. த. கைலாசபிள்ளை அவர்கள் பழமைபேணு மியல்பினர். புதும்ை யில் நாட்டமில்லாதவர். பழமையைப் பேணியும் புதுமையைக் கண்டித்தும் பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிட் டார்கள். அரையில் நாலுமுழ வேட்டி மாத்திரம் அணிந்து கொள்வார்கள் நெற்றியில் திரிபுண்டரமுஞ் சந்தனப் பொட்டும் அவருக்குத் தனியழகைக் கொடுத்துக்கொண்டிருக்கும். திரு. அருணுசலமவர்களின் பாடசாலையை நடத்த இடங் கொடுத்ததோடமை யாது அவர்களைத் தம் பாடசாலைக் குத்தலைமைப் பணி தாங்க இடங் கொடுத்து வேதனமுங் கொடுத்து ஆதரித்தார்கள்.
நாவலர் நிறுவிய தாபனங்களின் பரி பாலகராக - மனேஜராக இருந்த கைலாச பிள்ளை நாவலரைப்போல இலட்சிய வேட் கையுடன் வாழ்ந்த அருணுசல உபாத்தி யாயரைப் பெரிதும் போற்றி மதித்ததில் வியப்பெதுவும் இல்லை. 'நாவலரையன்றி மற்றெவரையும் மதித்துப் பேசியறியாத மனேஜர் அவர்கள், அருணுசலம் அவர் களைப்பற்றி, "நாவலருக்குப் பின் ஒரே யொரு மனிதர், என்று வருணித்ததைக் கேட்டுப் பிரமித்துப் போனேன்’’ என்று திரு. ச. அருணுசலம் என்னும் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் பண்டிதமணி கணபதிப்பிள்ளை கூறியிருக்கிருர். 1936இல் அருணுசலம் அவர்களின் மகன் சிவபாதத் துக்கு எழுதிய கடிதம் ஒன்றிலே ‘பரோப காரிகளென்று யாழ்ப்பாணந்திற் பிறந்த வருள் இரண்டாவதாக நான் மதித்திருப் பது இவரையே” என்று அருணுசல உபாத்தியாயர் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிட்டிருப்பதும் மனங்கொள்ளத் தக்கதே.

Page 196
கைலாசபிள்ளை நாவலர் வித்தியா சாலைக்கு மனேஜராக இருந்த காலத்தி லேதான், 1910ஆம் ஆண்டில் பாவலர் தெ. அ. துரையப்பாபிள்ளை அமெரிக்க மிசன் பாடசாலையுடன் தொடர்பை முறித் துக்கொண்டு, நாவலர் கல்விப்பணியைத் தொடர்வதுபோல மகாஜன உயர்நிலைப் பள்ளிக்குக் கால்கோள் விழா எடுத்தார். (1912இல் கல்லூரி இப்பொழுது அமைந் துள்ள இடத்தில் புதிய கட்டிடம் நிறுவப் பட்டது). சேர் பொன். இராமநாதன் 1913இல் இராமநாதன் மகளிர் கல்லூரி யையும், 1921இல் பரமேசுவராக் கல் லூரியையும் நிறுவினர். 1922இல் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் உதய மாயிற்று. இம் முயற்சிகள், பத்தொன்ப தாம் நூற்ருண்டிலே நாவலர் தொடக்கிய கலாசார பாதுகாப்பு இயக்கத்தின் கனி கள் எனலாம். ஆணுல் நாவலர் தாமே தோற்றுவித்த வண்ணுர்பண்ணைச் சைவ வித்தியாசாலையைப் பொறுப்பேற்று நடத் திய கைலாசபிள்ளை பிற்காலத்தில் தாபக ரின் அபிலாஷைகளுக்கேற்ப அதனைத் திறம்பட நடத்தவே சிரமப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது. சமகால நிகழ்வுக ளோடு இயைந்து செயற்படத் தவறி விட்டார் என்ற பொருளில் பண்டிதமணி நாவலர் என்ற நூலில் குறிப்பாக
கீரிமலைச் சிவன்கோயில்
** பூரீலபூரீ ஆறுமுகநாவலரவர்கள் யெனப்படுமிடத்திலே (தலவிசேஷ தீர் யல்லச்) சைவசமயிகள் யாவர்க்கும் ே பெறுவதாய் அதற்காக எவ்வெக்கா சிவபுண்ணிய வளர்ச்சிக்குக் காரணம சிவாலயப் பிரதிஷ்டை செய்வது அத்தி வுள்ளக் குறிப்பை வெளிப்படையிற் யாதாரு மொத்துக்கொள்ளாதாரு ெ

- நா. சுப்பி ரமணி யம்
உணர்த்துகிறர். இது நுனித்து நோக்கற் பாலது.
தொகுத்து நோக்குமிடத்து, நாவல ரின் சிந்தனைகளையும் சாதனைகளையும் கிர கித்துச் செயலாற்றும் தகுதி தம்மிடம் உண்டு என்ற தன்னம்பிக்கையுடன் தமது பணியைத் துவங்கியவரெனினும், அப்பணி யின்போது பல சங்கங்களையும் தாபனங் களையும் நிறுவியவரெனினும், தாமே நூல் களை வெளியிட்டாரெனினும், அவ்வப் போது சிலர் நாவலரின் பெருமையைக் குறைத்து மதிப்பிடும் முயற்சிகளை மேற் கொண்ட பொழுதெல்லாம் அவற்றை வன்மையாக எதிர்த்தவரெனினும், நாவ லர் மரபைப் பேணும் மரபைத் தொடக்கி வைத்தவரெனினும், நாவலர் வழிக்கோர் காவலராக விளங்கினரெனினும், காலப் போக்கிற்கேற்ப அவரது சிந்தனை பரிணு மம் பெருமையினுல் ஆக்கபூர்வமான வழி களில் விரிந்த காட்சியுடன் நாவலர் பெரு Lonroof air அடிப்படை இலட்சியங்களை வளர்த்தார் எனக் கூறுவது சிரமமாயிருக் கிறது. மனேஜராகவும் ஒரு கண்டனகார ராகவுமே அமைந்து விட்டார் எனத் தோன்றுகிறது. அந்த அளவில் சிற்சில அக்கறைகளுடன் ஒதுங்கி வாழ்ந்து விட்
டார்.
இவ்வியாழ்ப்பாணத்திலே கீரிமலை த்த விசேஷங்களை மாத்திரம் நோக்கி பாதுவாய்ச் சிவாகமவிதிப்படி நடை பமுங் கொடுக்கப்படுந் திரவியங்கள் ாகவே யுபயோகிக்கப்படுவதாக ஒரு யுத்தமமெனக் கொண்ட தமது திரு பிரசித்தி செய்தார்களென்பதனை யறி
ாருவரு மிலர்."
- புலோலி ஒரு சைவசமயாபிமானி சைவ உதயபானு (6 - 3 - 1882 )

Page 197
நாவலரும் சபாரத்தின மு
கம. சிவப்பிரகாசம்
சந்தானுசாரியர் என்ருல், மெய்கண்ட தேவர், அருணந்திசிவம், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம் ஆகிய சந்தான குரவர்களையே குறிக்கும். சமயகுரவர் எனும் பொழுது, சம்பந்தர், அப்பர், சுந் தரர், மாணிக்கவாசகர் இவர்களையே நம் நினைவிற் காண்கின்ருேம். அங்ங்ண் நாவலர் என்ற மகுடம் நல்லைநகர் ஆறுமுகநாவல ரையே சுட்டும் என்பது சொல்லாமலே தோன்றும். இவ்வாறே நால்வர் என்று குரவர்களை நயந்துழைப்பது வழக்கம். நால்வர் என்ற சொல்லே, முதலும் கடை யும் அவ்வாறே நிற்க, இடைநின்ற எழுத் துக்கள் மாறி நாவலர் ஆக ஒலிப்பது ஒரு அணியே.
இந்த வசையிலேயே முதலியார் என்ற பதமும் கொக்குவில் ஊர்வாசர், குகதாச ராய் விளங்கிய சபாரத்தின முதலியா ரையே அறிமுகப்படுத்தும் எனல் பொருந் தும். நாவலர் நற்றகையார் காலத்தில் வாழ்ந்த, நாவலர் நற்பணியின் பொற்பு நயங் கண்டுவந்து, அவ்வழி நிற்க முயன்ற வர்களில் முதலியார் எனும் அரசபட்டம் அணிசெயும் சபாரத்தின முதலியாரே முதல் வரிசையில் உள்ளவர்களில் ஒருவ ராக விளங்கினர்.
தாம் வாழ்ந்த சமகாலத்தால், பயின்ற பன்மொழிப் பயிற்சியினல், கற்றறிந்த உண்மைகளைப் பிறருக்கு உற்றவழி எடுத் துரைக்கும் எண்ணத்தினுல், புறச்சமய

pதலியாரும்
இருள் போக்கவும் அகச்சமய மயக்கம் நீக்கவும் அறிவுரை பகரும் ஆர்வத்தினுல் இவை யாவற்றினும் மேலாக இறைநெறி நின்று திகழ்ந்த நீர்மையினுல், நாவலர் நல்வழியை முதலியார் தாவித் தொடர்ந்து சேவை புரிந்தார் என்ற கருத்து இக் கட் டுரையிற் பொருந்துவது காண்க.
நாவலர் நானிலத்துதித்த நன்னள், சித்திரபானு ஆண்டு மார்கழித் திங்கள் ஐந்தாம் நாள் அவிட்ட நட்சத்திரம் (18-12-1822). முதலியாரின் தோற்றம்; காலயுத்தி ஆண்டு சித்திரைத் திங்கள் மூன்ரும் நாள் அசுவினி நட்சத்திரம் (17-4-1858). ஐந்தாங்குரவர் அரனடி அடைந்தது, பிரமாதி ஆண்டு கார்த்திகை மாதம் இருபத்தோராம் நாள், வெள்ளிக் கிழமை மகநட்சத்திரம். (குருபூசை கார்த் திகை மகந்தொறும் உரிய முறையில் நிகழ்ந்து வருகின்றது.) முதலியார் இவ் வுலக வாழ்வு நீத்தது, துந்து பி ஆண்டு ஐப்பசித் திங்கள் முப்பதாவது நாள் புதன் கிழமை ஏகாதசித் திதி (உத்தரம் நட்சத் திரம். 15-11-1922) சிராத்தம் திதியில் நடைபெறுவது. இருபத்தோராண்டு அக வையினராய் முதலியார் முதிர்ந்த காலத் துக்குள், சற்குருமணியின் பெருவாழ்வுத் திருவமைந்த வகையில் இப்பேறு முதலி யாரின் பூர்வபுண்ணிய முதுசொம் ஆனது இங்கு குறிப்பிடத் தக்கது.

Page 198
தோணிபுரத் தோன்றலும், சொற் கோவும் ஏககாலத்தவர்கள் என்னும் பொழுது அப்பர் அடிக்ளுக்கு ஆளுடைய பிள்ளையாரின் அருட்கண் பாலித்தமையை உணர்கின்ருேம். அப் பெற்றியிலேயே வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, சபாபதி நாவலர், காசிவா சி பிரம்மபூரீ செந்திநாதையர், குமாரசுவாமிப் புலவர், தேசோபகாரி இராமநாதவள்ளல், பேர் சிவல் கனம் பாதிரியார் ஆகியவர்களுக்கும் ஒரு புகழ் எய்தியிருக்கும் மகாத்மா காந்தி காலத்து மற்றைய தேசாபிமானிகள் இப்பெற்றித்தாய புகழ் தமக்குற்றதாகப் பேசி மகிழ்வதை உலகறியும். அவ்வகை யிலே இன்னும் அகல யோசிக்கின் முதலி யாருக்கும் இத்தகைய புகழ் எட்டிய தெனலாம்.
பன்மொழிப் பயிற்சி:
நாவலர் அவர்கள் நாவன்மை யடைந் தவர் என்ற வகையில் மட்டும் அப் பட் டத்துக்குரியவராயின ர ல் ல ர். மும் மொழிகள் முட்டின்றி முறைப்படி பயின்று எம்மொழியிலும் எண்ண எழுத, எழிலுடன் எடுத்துரைக்க ஏற்ற ஆற்றல் பெற்றவர் எங்கள் நாவலர். இஃது யாவரும் ஏற்றுக் கொள்ளும் வரலாற்றுண்ம்ை.
முதலியார் அவர்களும் செந்தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் செம்மையான கல்விப்பேறும் வடமொழிப் பயிற்சியும் பெற்றிருந்தனர். ஈச்சுர நிச்சயம் என்னும் முதலியாரின் நூலுக்கு ஆசிரியர் சரித் திரம் எழுதிய சென்னை மயிலாப்பூர் அறிஞர் செ. வே. ஜம்புலிங்கம்பிள்ளை அவர்களே இதற்கு ஆதாரம்.
பூரீலபூரீ நாவலர் பெருமானிடத் தும் சிலகாலம் அவர்களது பாடசாலை யிலே தமிழ்க்கல்வி பயின்றனரென்ப. அப்போது இவருடன் ஒருங்கு கற்றவ ருள் முக்கியமானவர் யாழ்ப்பாணச் சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராக விளங்கிய த. கைலாச பிள்ளை அவர்களாவர். நாவலர்

நம. சிவப்பிரகாசம்
பெருந்தகையாரது அருட்பார்வையின் றிறத்தால் இவருக்குச் சமயபக்தி இளமையிற்ருனே வேரூன்றியது. நாளேற ஏற, அது பெரிதும் வளர்வ தாயிற்று. நாவலர் அவர்களைப் போலவே இவரும் தழுது பத்தொன் பதாம் வயது முதல் சமயச் சார்பாக உழைக்கத் தலைப்பட்டார்.
ஈச்சுரநிச்சயம்-நூலாசிரியரின் சரித்தி ரம்-செ.வே. ஜம்புலிங்கம்,ஜயஆண்டு
கற்ற கல்விக் கழகம்
ஒருவரின் புகழுக்கு அவர் கல்வி பயின்ற கழகமும் உரியதாய் வருவது உலக அநுபவ மாகும். ஒருகல்லூரிப் பழைய மாணுக்கர், தம்முன் ஒருதனி நட்புத் தொடர்பு ஏனைய பழைய மாணுக்கர்களுடன் நேராகவும் மறைமுகமாகவும் இயங்குவதை உணர் வது வழக்கம். இவ்வாறு விழைந்து மெச் சிப் பாராட்டி இன்புறுவதும் இவர்களுக்கு இயல்பு. இந்தவகையிலே யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி, தமிழகப் பேரறிஞர் களின் வரலாற்றில் நித்திய இடமும் நிலை யான புகழும் பெற்றுவிட்டது. இந்த மத் தியகல்லூரியின் பெருந்தொடர்பே வணக் கத்துக்குரிய பாதிரியார் பேர்சிவல், நாவ லரைக் கண்டெடுத்துக் காசினிக்குக் காட் டித் தமக்கும் பேரீட்ட வைத்ததல்லவா? நாவலரை நயந்து வளர்த்த மத்திய கல் லூரியின் மண்ணில் நண்ணிய ஏனை யோருக்கும் இக் கண்ணியம் இம்மியள விலாவது இயையும்தானே! அத்தகை யோர் கல்விக்கவினுமுடையவர்களாயின் அவர்களுக்கு எம்மட்டாகும் இக்கீர்த்தி!
நாவலர் சைவப் பிரகாசவித்தியா சாலையில் அக்காலம் கல்விபயின்ற அறிஞர் களும், நாவலரின் பின் நடந்த காவிய பாடசாலை வகுப்புகளிலே கற்ற மாணக் கர்களும், தம்முள் நாவலர் மரபுத் தொடர்பு ஒன்று இணைந்தியக்குவதை அநுபவித்து ஆனந்தமுறுவர். இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களைக் காணும் பொழுதெல்லாம் காவிய ப்ாடசாலையும் நாவலர் மரபும்

Page 199
நாவலரும் சபாரத்தி ன முதலிய ாரும்
மனக்கண் தோன்றும் அநுபவப் பாக்கிய வான்கள் பலர் இருக்கின்றனர். நீர்வலரி டம் சிற்சில நூல்கள் கற்றவர் சுன்னைக் குமாரசுவாமிப்புலவர், இவர்கள் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலைப் பிரதம ஆசிரியராக இருந்து பல மாணுக்கர்களைக் கல்வித்துறையில் ஈடேற்றியவர். மத்திய கல்லூரியின் மாண்பு சைவப்பிரகாச வித் தியாசாலைக்கும் உண்டாகும் அல்லவா?
கற்போரும் கற்பிப்போரும்
கோடன் மரபு சாலுங், கொள்வோ னின்றகைமை, ஈவோனின் இயல்பிற்றங் கும். நாவலர் அவர்கள் நற்றமிழும் சற் சமயமும் கற்றறிய முதற்கண் முன்னின் றவர்கள், பெற்ற தந்தை யாரும் உற்ற தமையனுரும். அதன்பின் நல்லூர் சரவண முத்துப்புலவரும் இருபாலைச் சேஞதிராச ரும் எங்கள் ஏந்தலுக்குக் கல்விவளம் ஈந்த பெருமைக்குரியவர் ஆயினர். ஈழத் துத் தமிழ்மொழி எழில்வரலாற்றில் இவர் களின் புகழ் பரவிக்கிடக்கின்றது.
சேனதிராசமுதலியார் காலம் 1750 - 1840. யாழ்ப்பாணத்தில் இலக்கணக்கல்வி பரம்பச்செய்தவர் இவர்என்று குமாரசுவா மிப்புலவர் செய்த தமிழ்ப்புலவர் சரித்திரம் கூறுகின்றது. சரவணமுத்துப் புலவரும் ஆறுமுகநாவலரும் சேஞதிராச முதலியா ரின் மாணுக்கர்கள் என்றும் குறிப்பிடு கின்றது இச்சரித்திரம். இவர் இயற்றிய பலநூல்களிற் சிறந்தது நல்லைவெண்பா.
முதலியார் பாடங்கேட்டது பண்டிதர் சுயம்புநாதரிடம். ஆனல் இவ்விடத்திலே முக்கியமாகக் குறிக்கப்பட வேண்டியது முதலியார் நாவலர் ஐயாவிடம் சின்னுட் சிலபகல் தமிழ்க்கல்வியைச் சைவப்பிர காச வித்தியாசாலையிற் பெற்ருர் என் பதே. ஒரு திங்கள் ஆயினும் பேரறிஞர் ஒருவரிடம் கல்வி பயிலும் புண்ணியம் நண் ணுவது பெரும்பேறல்லவா? அத்தகைய சித்தியைப் பெற்ருர் முதலியார். நாவலர் பாற் கல்வி நயந்தவர்கள் தங்கள் காலத் தில் முன்னணியில் நின்றர்கள்; அவ்வாறு முதலியாரும் இந்த நல்ல அணியில் இடம்

189
பெற்றர் என்ருல் அப்பேற்றுக்கு நர்வலர் தொடர்பு ஏதுவானதென்போம்.
இக்காலத்திலுள்ள அறிஞர்கள் சிலர் தங்கள் தராதரத்தை 'அப்பாக்குட்டி உபாத்தியாரிடம் பயன் கேட்டது" என்று பூரிப்புடன் கூறுவதுண்டு. செந்தமிழ் உணர்ச்சி எமக்குத் தந்த எந்தை நமசி வாயப்புலவர் (1860-1942) இவ்வாறு சொல்லி இறும்பூப்பெய்தியதை யாமறி வோம்,
அப்பாக்குட்டி உபாத்தியார் என்பது, சுன்னைக்குமாரசுவாமிப் புலவரையே.
முதலியாருக்கும் இவ்வகையிலே நாவ லர் நன்னுமத்தைப் பயன்படுத்தும் சிறு வாய்ப்புக் கிடைத்தமை பெரிதே.
நூலியற்றிய நுண்மாண்
நாவலர்பெருமான் எண்ணும் எழுத்து மாம் இரு கட்பார்வைச் சீர்நE பெற்ற மேதை என்பதை அவர்கள் உலகுக்கு உவந்தளித்த நூல்கள் பலவும், சொற் பொழிவுகள் பற்பலவும் நன்கு புலப்படுத் துவன. அளவை, இலக்கணம் இரண்டி னும் பரந்த புலமை நிரம்பியவர் எங்கள் நாவலர். இலக்கண எல்லைகாத்து நியாய நெறிநின்று நூல்களை இலக்கிய எழிலு டன் யாத்தனர். சொற்பெருக்குகளும் இத்தகைய நுண்மைபெற்றியங்கின.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்றும்; எண்ணென்ப ஏனை எழுத் தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றும், எண்ணெழுத் துக்கண் இவையாய்ந்திந் நூற்பயனைக் கண்ணுங்காண் பார்நற் கதி என்றும்; நூல் கள் நுவல்கின்றன. திருச்சிற்றம்பலக் கோவையாரின் நூற்சிறப்புப் போற்றிய புலவர்:-
ஏரணங் காணென்பர் எண்ணர்,
எழுத்தென்பர் இன்புலவோர், சீரணங் காயசிற் றம்பலக்
கோவையைச் செப்பிடினே.

Page 200
190
என்று வியங்குங்கால் இக் கருத்தினை அமைத்திருப்பதை நோக்குவோமாக.
மக்கட்குக் இடுகண், தருக்கமும் வியா கரணமும் என்பது வட நூலார் கூற்று. ஏரணம், அளவை, தருக்கம், நியாயம் ஒரு பொருட்கிளவிகள்.
முதலியாரும் அளவை, இலக்கணம் இரண்டையும் நன்கு கற்றறிந்தார் என் பது அவர்கள் இயற்றிய ஈச்சுர நிச்சயம், பிரபஞ்சவிசாரம் என்னும் நூல்களிலிருந்து அநுமானிக்கக் கூடியதாயிருக்கிறது. இறை ஒன்றில்லை என்பாரின் கூற்று இம்மிய ளவேனும் ஒவ்வாததென நியாயங்காட்டிச் சைவசித்தாந்த உண்மைகளை உணர்த்தும் வகையில் சுபக்கம், பரபக்கமாக அமைந் தவை ஈச்சுர நிச்சயம், பிரபஞ்ச விசாரம், என்னும் நூல்கள். எவ்வாறு வணக்கத்துக் குரிய பாதிரியார் பேர்சிவல், நாவலர் பெருமானை விவிலியவேதத்தை மறுத்துச் சைவசமயத்தை நிலைநாட்டும் பண்பிலே தர்க்க அணிதுலங்கும் நூல்களை இயற்று விக்க ஏதுவாக இருந்தனரோ, அவ்வகை யிலே பெளதிகவாதிகளில் அக்காலத்திலே தீவிரவாதியாயிருந்து சமயவாதிகள் பல ரைத் தம்வலைக்குட் சிக்கவைத்த பிறட்லா (Brablaugh)என்பவர் முதலியாரை நாவ லர் நடையிலே ஆவன செய்ய ஏவிய காரணராயிருந்தனர் என்று அநுமானித் தல் நியாயமே.
ஈச்சுர நிச்சயம் என்னும் நூலுக்குச் சிறப்புப்பாயிரம் இயற்றிய சுன்னைக் குமாரசுவாமிப் புலவர் நாவலரின் நன் னய அபிமானி. புலவரின் பாயிரம் நாவல ரையும் முதலியாரையும் ஒரே பார்வை யில் நோக்கவைக்கும் ஆக்கம் போல மிளிர்கின்றது.
பூவுலகிற் கடவுளில்லை மறைகளில்லை
யென்றுரைக்கும் பொய்ம்மை வாதப்
பாவிகடங் கொள்கையெலா மறுத்துரைத்துத்
தர்க்கநெறி பரவக் காட்டி

நம. சிவப்பிரகாசம்
மூவருமாய் முத்தொழிலு முறையியற்றி
யாவருக்கும் முதன்மை பூண்ட
தேவொருவ னுளனென்று பற்பலரும்
விற்பனமாய்த் தேறும் வண்ணம்
சூத்திரமு மதற்கியைந்த செந்தமிழ்சேர்
வாக்கியமுந் துலங்கத் தீட்டிச் சாத்திரத்தின் கருத்தமைதி தர்க்கமுறைக்
கியைவுபெறத் தயங்க காட்டி நாத்திகர்கண் மனமறுக வீச்சுரநிச்
சயமென்று நாமஞ் சூட்டிக் கோத்தொருநூல் பிரகடனஞ் செய்துதந்தான்
யாருமிது கொள்க மாதோ,
நூலாசிரியரின் சீரிய நோக்கத்தை மேலாகிய இவ்விரு விருத்தங்களாலும் விளக்கிய புலவர், இந்த ஆக்கத்தைத் தந்த முதலியாரை அடுத்த செய்யுளால் அறிமுகஞ் செய்துவைக்கின்றனர்.
செய்தவன்யா ரெனிலறைதும் யாழ்ப்பாணக் கொக்குவிலிற் சேருஞ் செல்வன் சைவநெறி முறையாளன் குகதாசன்
பரசமயத் தார்கள் சொல்லும் கைதவநுாற் கண்டனங்கள் பலபுரிந்து
சைவமதக் காவல் பூண்டோன் மெய்தவரு வாக்குபடுத் துவமுடையோன்
நடுநிலைமை மேலாக் கொள்வோன்.
பரசமயக் கைதவநுாற் கண்டனஞ் செய்தல், அவ்வழி சைவமதக் காவல் பூணல், நாவலர் காட்டிய சேவைநெறி. இதை முதலியார் கைக்கொண்டார் என்று புலவர் சுட்டிப் புகட்டுகின்றர்.
இனி, முதலியாரின் வசனநடையின் வண்ணத்தை ஈச்சுர நிச்சயம் என்ற நூலில் உள்ள அவதாரிகையில் முதலாம் பந்தி ஆகிய பின்வரும் வசனங்கள் நன்கு புலப் படுத்துகின்றன.
காணப்படுவதாகிய இப்பிரபஞ் சம் தனக்கோர் நிமித்த காரணரை யுடையதா அன்ரு என்பது மானுட தேகிகளாகிய நாம் எல்லாம் அத்தியா

Page 201
நாவலரும் சபாரத்தின முதலியாரும்
வசியகம் அறியக்கடவதோர் விடய மாகும். பிரபஞ்சத்துக்கோர் காரணர் உளராமாயின், அந்தக் காரணர் தாமே நமது சுகதுக்க அனுபவங்கள் தமக்கும் காரணர் என்பது உம், அந்தச் சுகதுக்கங்களை நாம் அனுப வித்தற்குரிய களம், இம்மையேயன்றி மறுமையும் ஒன்று உண்டென்பது உம், இந்த இம்மை மறுமை இரண்டன் கண்ணும் நாம் அனுபவிக்கும் அனுப வங்கள் அனைத்தும் நமது வினையளவுக் கியைய அந்தக் காரணரால் வரை யறுத்து நியதிசெய்யப்படும் என்ப தூஉம் பிறவும் இனிது துணியப்படும். ஆதலின், நமக்குமேல் வரக்கடவன வா கி ய அனுபவங்களனைத்தையும் வழிப்படுத்தற்கமைந்த பிரயத்தனங் களையெல்லாம் நாம் இப்போதே தப்பாது செய்து கொள்ளு தற் பொருட்டு, முந்தக் கடவுள் உண்மை யைச் சந்தேக விபரீதமற நிச்சயித் துக்கொள்ளுதல் ஒருதலையாக வேண் டப்படும்.
நாவலர் வசனநடை நறுமணம் இங்கே வீசுவதை முதலியார் படைப்பிலிருந்து ஒரு பிடி அமுது நன்கு பதம் காட்டு கின்றது.
நாவலர் பெரியபுராண வசனநூல் முக வுரையில் முதலாவது பந்தியை இவ்விடத் தில் எடுத்துக் காட்டுவதவசியம்.
சுத்த சாட்குண்ணிய பரிபூரண ராகிய பரமபதி சிவபெருமானே என்று துணிந்தவர்களாய், கொலை களவு கள்ளுண்ணல், புலாலுண்ணல், பிறன் மனை விழைதல், வரைவின் மகளிர் விழைதல். பொய்ச் சான்றுரைத்தல் முதலிய பாவங்கள் இல்லாதவர்க ளாய் இரக்கம், வாய்மை, கொடை முதலிய புண்ணியங்களை உடைய வர்களாய், குரு வணக்கங் குறைவற அமைந்த சைவாசாரியரை அடைந்து சிவதீகூைடி பெற்றுக் கொண்டவர்க ளாய், விபூதிருத்திராக்ஷதாரணம். சந்

19
தியாவந்தனம், பூரீ பஞ்சாக்ஷரஜபம், சிவத்தியானம், சிவாலயசேவை, சிவ லிங்கபூசை, குருவாக்கிய பரிபாலனம், மாகேசுர பூசை முதலியனவற்றைச் சிவாகம விதிப்படி மெய்யன்போடு
செய்பவர்களாய் உள்ளவர்களே சைவர்கள் எ ன் று சொல்லப்படு வார்கள்.
மேலே காட்டப்பட்ட நாவலர் வச னங்களின் இலக்கிய நடையை மட்டும் இலக்காகக் காட்டுவதல்ல எமது நோக்கம். நாவலர் நூற்ருண்டு விழாக் காலத்திலே யாவது சைவர்கள் யார் என்ற வரை விலக்கணத்தை நாவலர் வரைந்தவாறே நாம் அறியவேண்டும். அறிந்து நாமும் அவ்வாறு சைவர்களாய் வாழ்கின்ருேமா என்று அகத்தில் ஆராய்தல் வேண்டும். ஆராய்ந்து மனச்சான்று மகிழவடையுமே யானுல் நாவலர் நினைவு நன்னினைவாகும்.
இருவரும் பண்ணிய புண்ணியம்
அவமொழி கூறிச் சைவசமயத்தை நிந்தித்த பரசமயத்தாரால் உண்டான தீமையை அகற்றித் தீவிர சேவைசெய்து சிவபுண்ணியம் இயற்றினுர் எங்கள் நாவலர். இத்தொண்டினைச் சிவபுண்ணி யத்திற் சிறந்ததென்று சிவதருமோத்தரம் செப்புவதை இங்கே காண்போம்:
நிறுத்திடவல் லாணமல னுனெறியை யென்று மறுத்திடவல் லானவல மார்க்கமய லுற்றே நிறுத்திலன் மறுத்தில னெனிற்கரிச நேச மறுத்தவனை மாகைகரி சல்லவற மாமே.
இது அகத்தியமாமுனிவருக்கு அறு முகக் கடவுள் அறிவுறுத்திய அறநெறி
uitgjib.
ஒரு சமயத்துக்கு இடையூறு வருவிக் கப்படும்பொழுது, அச்சமய அடியார்கள் அரனை நோக்கி நொந்து அறம் நிலவ ஆவன செய்தலைக் கடமையாகத் திட சங்கற்பஞ்செய்து சமயங் காத்த வரலாறே திருத்தொண்டர் புராணம். சமண் செய் சதியைத் தாங்காது கவுணியர்கோன்

Page 202
192
"நான்மறைகள் ஏத்துஞ் சீலமே ஆல வாயிற் சிவபெருமானே' என விடுத்த விண்ணப்பம் "ஞாலநின் புகழே மிக வேண்டும் ' என்பதே.
நாவலர் அடியாரும் நின்ற நிலை இதுவே. புறச் சமய போதகர்களுடன் சொற்போர் புரிந்து தமது சமய உண்மை நிலையை நாட்டினர்.
முதலியார் அவர்களும் இம்முன் மாதிரியை முன்வைத்து நிரீச்சுரவாதிக ளுடன் சொல் யுத்தத்தில் இறங்கி நீதி நிலைநாட்டப் பணியாற்றினர். ஈச்சுர நிச்சயத்தை எழுதினர். பிரபஞ்ச விசாரத்தை வரைந்தார்.
நாவலர்-பேர்சிவல் சொல் யுத்தம் முதலாவது
முதலியார்-பிறட்லா மொழி யுத்தம் அதனைச் சார்ந்தது.
சைவப்பெரியாரும் (சிவபாதசுந்தரம் பிள்ளை)தர்க்கவாதச் சமரைத் தொடர்ந்து புரிந்தனர்.
இவர்கள் சைவங்காத்த தளபதி நாவல ரின் வழிவந்த தளபதிகள். ஆங்கிலத்திலும் கை ஓங்கியது
நாவலரின் எழுத்து வல்லமை, அக் காலத்து அரச அதிகாரிகளிடம் அன்னர் நடத்திய வாக்குவாதக் கடிதத்தொடரில் நன்கு தெளிவாகின்றது. நல்லூர் ஆறு முகம் என்ற நாமம் அரச அதிகாரி துவைனம் அவர்களுக்கு நாநடுக்கத்தைக் கொடுப்பதென்று வரலாறு கூறுகின்றது. முதலியார் அவர்களும் ஆங்கில மொழி வாயிலாகச் சைவசமய உண்மைகளை விளக்கிப் பெரும்பணிபுரிந்தனர். Essentials of Hinduism என்ற நூல் இந்துசமயச் சிறப்பு அம்சங்களைத் தெளிவா கத் தொகுத்து விளக்கும் வகையில் முதலியா ரால் 1910ஆம் ஆண்டு எழுதப்பட்டு 1913ஆம் ஆண்டு சென்னை மெய்கண்டான் அச்சியந்திரசாலையிற் பதிப்பிக்கப்பட்டது.
இந்நூலில் ஒரு சின்னஞ்சிறு பகுதியை மட்டும் இங்கு வெளியிடுவதே கட்டுரை

நம. சிவப்பிரகாசம்
எல்லைப் பணிப்பைக் காப்பதற்கு வழி
யாகும்.
அப்பகுதியாவது:
I will in the first place, ask
“What is true religion?' True religion, I may say, is the religion that helps us in discovering the truth. And what is the truth? God is the only truth which has an independant existence of its own, and the religion that enables us, to see this God is the true religion. How are we to see God? We cannot see Him with our physical eyes nor can we even know Him by our mind. Our “seeing God is only our realizing Him by our experience or enjoyment.
சிவஞானபோதம் என்னும் மெய்கண்ட சாத்திரப் பெருநூலை ஆங்கிலத்தில் அணி பெற அமைத்த ஜே. எம். நல்லசாமிப் பிள்ளை அவர்களின் வரலாற்றை வகுத்த திருவாசகமணி கே. எம். பாலசுப்பிர மணியம் அவர்கள் அதிலே முதலியாரின் இந் நூலைப்பற்றிக் கூறியிருப்பது குறிப் பிடத்தக்கது.
சைவசித்தாந்தப் பின்னணியில் எழுதப் பெற்ற இந்த நூலிலே முதலியார் இந்து சமயம் எத்தகையது என்று பாயிரம் அமைத்துச் சைவசித்தாந்தத்தை நன்கு விளக்கியிருக்கின்றனர். மறு பிறப்புண்மை யென்பதையும் ஆன்மாக்கள் என்று முள் ளவை யென்பதையும் மேனுட்டு அறிஞர் கள் ஒப்புக்கொள்வது பற்றி எடுத்தாளு கையில் புகழ்பெற்ற ஆங்கிலக்கவிஞர் இறைடென் (Dryden) யாத்த பாவிலே பொருத்தமான அடிகளைக் குறிப்பிட்டிருப் பது முதலியாரின் பரந்த ஆங்கிலப் பயிற் சியைக் காட்டும். ' *
அப் புலவரின் செய்யுளாவது : Souls cannot die; They leave a former home and in new bodies dwell and from them toam

Page 203
நாவலரும் சபாரத்தின முதலியாரும்
இதனை எம்மொழியில் இயம்பிடில்,
ஆன்மா அழிவதில் அணையும் உடம்பறத் தான்போய் வேறுடல் சார்ந்திடும்; தொடர் இது.
உலோங்பெலோ (Longfellow) புலவர்
உரையையுங் காட்டுதும்
“Mysterious change from birth to death from death to birth from earth to heaven from heaven to earth'' செந்தமிழ்ச் சீரில் :
பிறந்தன இறக்கும் பிறக்கும் இறந்தன திறமிது மண்ணிவர்ந் தெழில்விண் திகழ்ந்து பூமியிற் பின்னும் புகுவ துன்ன தாமிப் புதிர்நிலை ஆகும் விகற்பம்.
இவ்வாறே முதலியார் இன்னும் உவேட்ஸ் வேது (Wordsworth) இற்றெணி சன் (Tennyson) முதலிய ஆங்கிலப் பாவ லர்களின் கருத்துக்களையும் ஆதாரமாகக் காட்டித் தம் வாதத்தை வலியுறுத்திய திறமை செப்பற்குரியது.
சிவஞானபோதச் சூத்தி ரங் களின் பொருட்சத்தினை ஆங்கிலத்திற் பொருத்த மாக முதலியார் விளக்கியிருப்பதும் சாற் றப்பட வேண்டிய ஒரு அம்சம்.
அவனவ ளதுவெனு மவைமூ வினமையிற் றேற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா மந்த மாதி யென்மஞர் புலவர். முதலியார் இதன் பொழிப்பை ஆங்கிலத் தில் எளிய நடையில் அமைத்திருக்கிருர், As the universe differentiated as he, she and it undergoes the three changes of origin, development and decay, it is an entity created by an efficient cause. It undergoes resolution it is again reproduced on account of its connexion with Mala. Hara, Therefore, is the first cause of the universe.' நாவலர் அவர்கள் ஆங்கிலத்திலிருந்து விவிலிய நூலை அரிய தமிழில் ஆக்கம் செய்து விவிலிய அடியார்களதும் தமிழ் ஆங்கில அறிஞர்களதும் பெரும் பாராட் டைப் பெற்ருர். முதலியார் மொழி பெயர்ப்பைத் தமிழிலிருந்து ஆங்கிலத்
23

93.
துக்கு ஆக்கினர். இருவகையிலும் அடிப் படையிலுள்ள அம்சம் இருமொழிப் பயிற் சியே. 15-12-1852ஆம் திகதி நாவலர் மேன்மைதங்கிய தேசாதிபதிக்கு ஆங்கிலத் தில் விடுத்த மனு கலாநிதி ச . தனஞ்ஜய ராஜசிங்கம் அவர்களின் ஆறுமுகநாவல ரின் கல்வி விருத்திப்பணிகள் என்ற ஆங் கிலமொழி நூலிற் பிரசுரிக்கப்பட்டிருப்பது பார்க்க.
கடல் கடந்து செய்த கடமை
நால்வர் நடமாடிய புண்ணிய பூமி யிலே அவர்களின் அடிச்சுவட்டில் அடி யெடுத்து வைத்து அரும்பணியாற்றி ஐந் தாங் குரவரெனும் அணி மொழி அடை யாளம் பெற்ற நாவலர் நற்றகையார், ஈழத்தில் இருந்து புரிந்த சிவபுண்ணியம் இந்தியத் தமிழகத்திலும் ஏற்றமாய் நிகழ்ந்ததென்பதை விரித்துக்கூறின் இக் கட்டுரை விரியும். மன்னர்கள் மன்றமா அதிபர்கள், மாமேதைகள் எல்லாரும் நாவலருக்குப் பெருமதிப்பளித்தனர் என்று மட்டும் சொல்லித் திருவாவடுதுறை ஆதீ னம் வழங்கிய நாவலர் பட்ட நிகழ்ச்சி முடிசூட்டு படலமாய் அமைந்தது என்று காட்டுவ திவண் போதுமானது.
திருவாவடுதுறை ஆதீனம், சிதம்பரம், சென்னை, இராமேஸ்வரம் ஆதீயாம் தெய் வீகத் தலங்களின் பத்தொன்பதாம் நூற் ருண்டு வரலாற்றில் நாவலர் தொண்டு நல்லிடம் பெற்றுவிட்டது. பாண்டித்துரை தேவர் அவர்கள் தந்தையார், மகாவித்து வான் மீனுட்சிசுந்தரம்பிள்ளை போன்ற அதிவிசேட அறிஞர்கள் நாவலர்பால் ஆர்வங்கொண்டு அன்னுரின் நன்னுவி லெழுந்த சொன்மாரியிலே தோய்ந்தின் புற்றனர் என் ருல் வேறு விளம்பவும் வேண்டுங்கொல்!
இராமநாதவள்ளல் எடுத்த கல்வித் திருப்பணியில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகமாக விரிந்து விளங்குவதுபோலச் சிதம்பர நாவலர் வித்தியாசாலை வளர்ந்து உயர்நிலைப் பள்ளியாக வளம்பெற்றிருக் கின்றது. நாவலர் அறம் சிதம்பரத்திலே நிரந்தர நிலையை உரிமையுடன் அடைந்து

Page 204
194
விட்டது. நர்வலருக்கு நினைவுச் சின்னம் நடுகல் ஆகத்தான் அமையவேண்டும் என்று நாம் நினைத்கவேண்டியதில்லை. நாவலர் உயர்நிலைப் பள்ளி யாவரும் அறிந்த நடுகல்.
இந்த இந்திய இணைப்பு எங்கள் முதலி யாருக்கும் ஒருவகையிற் கிட்டியதென்ருல் நாவலரும் முதலியாரும் நன்று இணைத்துக் கட்டுரை இயற்றுவது ஏற்ற நெறியே.
தென்இந்திய சைவசித்தாந்த மகா சமாசம் தன்னிகரற்ற சமயப்பெருமன்றம். சைவப்பேரறிஞர்கள் தலைமை தாங்குவ
தைப் பெருமையாகத் தாங்குவது. ஈழத்
துக்கும் : இங்கு உரிய இடம் உண்டென் பதை நாவலர் நன்னமம் இந்தியாவில் முன்பே நிலைநாட்டிவிட்டதல்லவா? தொல் காப்பியம் பதிப்பித்த தொல் சிறப்பு வாய்ந்த சி. வை. தாமோதரம்பிள்ளை , திருவிதாங்கூர் நீதியரசர் பொன்னம்பல பிள்ளை, காசிவாசி அந்தணர்திலகம் செந்திநாதஐயர், 1800 ஆண்டுகளுக்குமுன் தமிழர் என்ற நூலை ஆங்கிலத்திலெழுதிய சட்ட அறிஞர் வி. கனகசபைப்பிள்ளை. மொழி ஆராய்ச்சியாளர் தி. த. கனகசுந் தரம்பிள்ளை என்போரும் இன்னும் சிலரும் ஈழத்தின் பெருமையை இந்தியாவில் முன் னரே அமைத்துவிட்டார்கள். ஞானப் பிரகாச சுவாமிகள், இலக்கண சுவாமிகள்
இவர்கள் ஒரு தனி வரிசை .
இலங்கைப் பேரறிஞர் என்ற வகை யிலே இராமநாத வள்ளல் இந்தச் சமா சத்தின் முதல் மாநாட்டுக்குத் தலைமை தாங்கித் தனது அழகிய பிரசங்கத்தினல் பெருமதிப்பைச் சமாசத்துக்கும் தமக்கும் ஈழத்துக்கும் ஈட்டிக் கொடுத்தவர். இந் தப் பரம்பரையில் எங்கள் முதலியாரும் இடம் பெற்ருர் என்பது விசேடமே.
பத்திரிகைகளுக்குக் கட்டுரை உபயப் பணி
நாவலருக்கும் உதயபானு என்ற சிறந்த சைவப்பத்திரிகைக்கும் பெருந்தொடர் பிருந்திருக்கிறது. உதயதாரகை என்ற வெளியீட்டுக்கும் நாவலர் உபகாரியா
s

நம. சிவப்பிரகாசம்
பிருந்தனர். உதயபானு ஆசிரியராயிருந்த ஊரெழு சரவணமுத்துப்பிள்ளை (18481916) நாவலரைப் போற்றிய பாவொன்று பின்வருமாறு:
தேனே கனியோ வெனவே
சுவைக்குஞ் செழுந்தமிழில் தானே தனக்கிணை யாகி
யுதித்துயர் சற்குருவாய் வானேர் புகழ்கல்லை வந்தரு
ணுவலன் வண்புகழை நானுே சொலவல்லன் சேடனுங்
கூறிட நாணுவனே.
சரவணமுத்துப்புலவர் சேஞதிராய முதலியாரின் மாணுக்கர். உதயதாரகைக் குக் கட்டுரை உதவியவர்.
உதயபானு என்ற பத்திரிகைக்கு முதலி பாரும் எழுதிவந்தனர். என்று அறியக் கிடக்கின்றது. உதயபானுவின் கதிர் இயக்கமே இந்துசாதனம் எழ நின்றதிற்கு ஏது. முதலியார் அவர்கள் இந்துசாதனம் ஆங்கில தமிழ்ப் பிரசுரங்களிற் கிரமமாக நல்லுரைகள் பலப் பல வரைந்து நேயர் களை மகிழ்வித்து வந்தனர். நாவலர் இட்ட சமயவிழிப்புணர்ச்சியெனும் முளை நாற் றிலே எழுந்த செழும் பயிர் சைவ பரிபா லணசபை. அச்சபையின் சாதனமே இந்து சாதனம். நாவலர் மருகரும் மாணுக்கரும் ஆன வித்துவ சிரோமணி ந. ச. பொன் னம்பலபிள்ளை சபையின் தொடக்கத் தலை வராகவும், நாவலர் தமையனுர் தனயன் திருவாளர் கைலாசபிள்ளை சாதனத்தின் ஆரம்ப ஆசிரியராகவும் இருந்தனர் என் பது இச்சந்தர்ப்பத்திற் பொருத்தமாய்க் குறிப்பிடத்தக்கது.
அக்காலப் பத்திரிகைகள் சமய மொழி வாதங்களுக்கு உயர்பீடமாயமைந்திருந் தன. புலவர்கள் கலைஞர்கள் ஆசிரியர்கள் நியாயவாதிகள் பத்திரிகை வாயிலாகக் கருத்தரங்குகள் நடத்திக் கல்வி அறிவு செறியவைத்தனர். மதுரைச் செந்தமிழ்த் திங்கள் வெளியீட்டிற் சுன்னைக் குமார சுவாமிப் புலவர் ஆராய்ச்சி வாதங்கள்

Page 205
நாவலரும் சபாரத்திண முதலியாரும்
சிறப்பாக நடத்தினர் என்பதை யாவரும் அறிவர்.
அருச்சனை பாட்டாய் அமைந்தமை
வசனநடை கைவந்த வல்லாளர், இசை ஓசை எழிலமையப் பாடிய சொல்லா ளரும் என்பதை அவர்கள் இயற்றிய செய் புளும் கீர்த்தனமும் காட்டும். நாவலர் செய்த விநாயக வணக்க ஆசிரியவிருத்தம் அன்னுர் உள்ளத்தின் உட்பொருள் வெள் ளத்திலிருந்து சுனைத்த சிற்ருறு. முதலியா ரும் பாட்டால் அருச்சனை செய்து முதல் வன் அருளை நாடி நின்றனர், நல்லை நான் மணிமாலை, சரவணபவ மாலை, கிருபாகர சிவ சுப்பிரமணியர் மும்மணிக் கோவை, இன்னும் சில முதலியாரின் செய்யுளியிற்றும் திற னைக் காட்டும் நூல்கள்.
வண்ணைச் சிவன் கோயிலிலே நாவலர் இருபத்தைந்தாண்டுப் பராயத்திலே முதல் முதலாகச் சைவப்பிரசங்கஞ் செய்யத் தொடங்கி அத்தொண்டில் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டதன் பயணுக இந்நாட் டில் ஒரு மறுமலர்ச்சி எழுச்சிகொண்டது. புராணபடனம் இன்றியமையாத நிகழ்ச்சி ஆனது. ஆசாரசீலர்களாய்ப் புராணம் படிக்கப்படவேண்டியதைப்பற்றி நாவலர் கூறிய அறிவுரையையும் இவ்விடத்தில் காட்டுதல் பொருந்தும்.
**இப்புராணம் சிவபுராணமாத லால் இதனை ஒதிப் பயன்பெறக் கருது G. Ganu nrriř s Gir,  ைசவா சாரி யரை அடைந்து தீகூைடிபெற்றுக் கொண்ட வர்களாய் இருத்தல் வேண்டும்?? இதுவே நாவலர்நெறி. திருக்கேதீச்சரத் தேன்பொந்தைத் தேடிக் கண்டு அச்சிவாலயம் மறுபடி ஓங்க வழிவகுத்துவைத்த நாவலர் கீரிமலைச் சிவன்கோயில் புனர்உத்தாரணஞ் செய் யப்படவேண்டிய அவசியத்தைக் காட்டி

195
ஒரு விஞ்ஞாபனமும் விடுத்தனர். நல் லூர்க் கந்தசுவாமிகோயில் ஆகமவிதிப்படி ஓங்க அரும்பாடுபட்டார். சிதம்பரத்தி லும் சிவாகம விதி நிர்ணய நியமத்தை நிலைநாட்டப் பலகால் முயன்றனர். முதலி யாரும் கொக்குவிலில் எழுந்தருளியிருக் கும் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயிற் ருெண்டில் ஈடுபட்டிருந்தனர்.
நற்குஞ்சரக்கன்றை நண்ணி, எதை நாவலர் வேண்டினுர் என்பதை, முன்காட் டிய விநாயக வணக்கம் விளக்குகின்றது. கலைஞானம் கற்குஞ்சரக்கன்று என்றவாறு இயல்பாய் ஞான எழுச்சி எய்தினர். பேர றிவு பெற்ருர் அருளும் உற்ருர். அப்பேற் றின் பயனை வையகமும் பெறுகவென்று நூல்கள் பல ஆக்கினர் நாவலர்.
வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணுெடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே. என்றனர் முந்திய குரவர்களில் முதல்வர் பிந்திய ஐந்தாங் குரவரின் வேண்டு கோள் எவ்வாறிருந்திருக்கும் என்பதைப் பின்வருமாறு கற்பனை செய்கின்ருேம்.
நீதி சைவமன் றென்றடு நிந்தனை
போதி யானின்ற புறச்சம யத்தரை
வாதில் வென்றழிக் கத்திருவுள்ளமே. இக்கற்பனை மிக்கதாகாது.
முதலியாரும் இதுபோன்ற வேண்டு கோள் விடுத்துச் சமயங்காக்கும் ஆக்கப் பணி செய்தனர் என்போம்.
நாவலரும் முதலியாரும் நற்பணி ஒரேவழி நின்று புரிந்து நாமெலலாம் வாழ நன்னெறி காட்டி நின்றனர். நாவ லர் நூற்றண்டுவிழா தேவரும் விரும்பத் தக்க சீருடையது. யாவரையும் சமயாதுப் டர்களாக வாழவைக்கத் துரண்டும் சிந் தனையைத் தந்துதவுவது.

Page 206
நாவலரும் முத்துத்தம்பிப்
க. காகேஸ்வரன்
நாவலர் அவர்களுக்குப் பின் வந்த இலங்கைத் தமிழர் பெரும்பாலானுேர், ஏதோவொரு விதத்தில் அவ்விலட்சியபுரு ஷரின் சிந்தனைகளாலும் செயல்களாலும் ஆகர்ஷிக்கப்பட்டனர் என்பது வரலாறு காட்டும் உண்மை. செயற்கரிய பலவற் றைச் செய்து 'தம் புகழ் நீறீஇச் சென்ற** நாவலரவர்கள், தாம் சாதித்தவற்றுடன் பின்வந்தோர் உழைக்கக்கூடிய துறைகளை யும் கோடிகாட்டிச் சென்ருர். வரலாற்று யுகபுருஷர் ஒருவருக்குரிய தனித்துவமான முறையில், பலர் பல பிறவிகளில் செய்யும் காரியங்களைத் தனது ஐம்பத்தேழு வருட வாழ்க்கையிற் திரிகரண சுத்தியுடன் நிறைவேற்றினர் நாவலர். அவருக்குப் பின்வந்தோர் தத்தம் ஆற்றலுக்கும் அறி வுக்கும் ஆளுமைக்கும் ஏற்ப தனியொரு துறையிலோ அல்லது சில துறைகளிலோ நாவலர் வகுத்த பாதையிற் பணியாற்ற முயன்றனர். வெவ்வேறு அளவில் வெற்றி யுங் கண்டனர். சிலர் இரண்டொரு துறை களில் நாவலரவர்களிலும் பார்க்க அதிக மாகவும் ஆழமாகவும் உழைத்தனர். இன்னுஞ் சிலரோ பல துறைகளில் அயரா துழைத்தனர். அவ்வாறு பல துறைகளில் பணியாற்றிக் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் கண்டவர் ஆ. முத்துத்தம்பிப் ப்பிள்ளை அவர்கள்.
மானிப்பாய் முத்துத்தம்பிப்பிள்ளை (1858-1917) நாவலருடைய நேர்முக மாணுக்களுக இல்லாதபோதிலும், நாவலர்

பிள்ளையும்
பத்தனுக விளங்கினர் என்பதில் ஐயமில்லை. நாவலரவர்களின் பணிகளை அடியொற் றியே அவரது ஆக்கபூர்வமான முயற்சி களும் அமைந்தன. நாவலரவர்களிடம் கல்வி கற்றிருக்கக் கூடிய காலத்தில் அவர் பிறந்து வளர்ந்தாரெனினும், யாழ்ப்பா ணம் மத்திய கல்லூரியிலும் சிலகாலம் படித்தவரெனினும் நாவலரவர்களிடம் பாடங்கேட்டதாகத் தெரியவில்லை. ஆயி னும் நாவலரது சமயப்பணிகளில், குறிப் பாக பரமத கண்டன முயற்சிகளில், அவ ருக்குப் பக்கபலமாக இருந்தவரும் தலை சிறந்த தமிழ்ப்புலவருமான சுன்னுகம் பூ. முருகேசபண்டிதர் (1829 - 1900) அவர்களிடம் தமிழ்க்கல்வியைப் பெற்றர். ஏறத்தாழ நாவலர் காலத்தவரான முருகேச பண்டிதர் தம் வாழ்நாளின் பிற் பகுதியைத் தமிழ்நாட்டிற் கழித்தவர் ; அங்கேயே - திருப்பாற்றுாரிலேயே இறந் தவர். ஆயினும் இலங்கையில் இருந்த காலத்தில் அவரிடம் பாடங்கேட்டவருள் முத்துத்தம்பிப்பிள்ளையும் ஒருவர். இவ ருடன் சுன்னகம் அ. குமாரசுவாமிப் புல வர், ஊரெழு சரவணமுத்துப் புலவர் ஆகியோரும் பாடங்கேட்டனர் என்பர். அந்த வகையில் மரபுவழிக் கல்வியில் தக்க பயிற்சி பெற்ருர் என்பது மனங்கொளத் தக்கதாகும்.
அன்றும் (இன்றுங்கூட) இலங்கை யிலே தமிழ்க் கல்வியில் சிறப்புற்றேர் ஒரு கட்டத்தில் தமிழகத்திற்குச் செல்லு

Page 207
நாவலரும் முத்துத்தம்பிப்பிள்ளேயும்
வதும், அங்கு சக கல்வியாளருடன் தொடர்புகளை விருத்திசெய்து கொள்வி தும், நூல்களை வெளியிடுவதும் இயல் பான நிகழ்ச்சிகளாகக் காணப்படுகின்றன நாவலரவர்களும் அவர் காலத்தவர் பல ரும் அவர்களுக்குப் பின் வந்தவர்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் சில வரு டங்கள் தங்கியிருந்து கல்விப் பணியும் நூல் வெளியீட்டுப்பணியும் செய்துவர் திருக்கின்றனர். அம்பலவாண நாவலர், சபாபதி நாவலர், முருகேச பண்டிதர், தாமோதரம்பிள்ளை முதலானேர் தமிழ் நாட்டு மண்ணிலேயே இயற்கையெய் தினர்.
த மிழா ர் வ மும், அறிவுப் பசியும், முயற்சி வேட்கையும் மிக்கிருந்த முத்துத் தம்பிப்பிள்ளையும் சுமார் இருபது வருடங் கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தமது ஆசிரியர் முருகேச பண்டிதர், இலட்சிய குரு நாவலர் ஆகியோரின் முன்மாதிரி யைப் பின்பற்றித் தமிழ் நாட்டிலும் தமிழ்ப்பணி புரிய முற்பட்டார். நாவல ரவர்களின் அடியொற்றி வாழ்ந்தவரெனி னும், இரண்டொரு வேறுபாடுகளும் உண்டு என்பது கவனிக்கற்பாலது. சைவம், தமிழ் இவை இரண்டையும் பொதுவாகவும், சைவத்தைச் சிறப்பாகவும் கொண்டு தொண்டாற்றியவர் நாவலரவர்கள். ஆனல் முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களோ தமிழ் சைவம் இவையிரண்டினுள், தமிழ் இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றையே தமது விசேஷ கவனத்திற்கு உட்படுத்தி ஞர். அவர் எழுதிய சுமார் முப்பது நூல் களில் ஐந்தாறு நூல்களே நேரடியாகச் சமயப் பொருளைத் தழுவியமை. ஏனை யவை இலக்கணம், வரலாறு, பொது அறிவு, பூமிசாத்திரம் முதலிய உலகியல் அறிவுசார்ந்த பொருள்களைத் தழுவியவை. இதனுல் பிள்ளையவர்களுக்குச் சமயப்பற்று இல்லை என்பது பொருளன்று. அவரது அக்கறை உலகியலறிவு சார்ந்த பொருள் களில் அதிகம் சென்றது என்பதேயாகும். கல்விக்குரிய பாடநூல்களை வெளி யிடுவதில் முத்துத்தம்பிப்பிள்ளை பெரும் பாலும் நாவலர் வழியையே பின்தொடர்ந்

197
தார். புதிய இலகுபோத பிள்ளைப்பாடம், புதிய இலகுபோத பாலபாடம் (1-8ஆம் வகுப்பு), சைவ பால போதம், இலங்கைப் பூமிசாத்திரம் முதலியன பாடநூல் தேவை களை மனங்கொண்டே எழுதப்பட்டன. நாவலர்பெருமான் தாம் எழுதிய பாட நூல்களைப் பெரும்பாலும் தமிழிலக்கிய இலக்கண வரம்பிற்குள்ளும் சைவசமயப் பொருளைப் பிரதானமாகக் கொண்டும் எழுதினர். ஆனல் மாறிய சூழ்நிலைக் கேற்ப, பின்வந்தோர் பள்ளிக்கூடங்களின் பாடவிதானத் தேவைகளுக்கியைய பல தரப்பட்ட நூல்களை வெளியிட்டனர். முத்துத்தம்பிப்பிள்ளை தமிழ்நாட்டிலும், யாழ்ப்பாணத்திலும் தாமே அச்சகங்கள் நிறுவி நடத்தியவரா கையால் திட்டமிட் டுப் பல பாடநூல்களையும், அவற்றின் விற்பனை யா ல் பெற்ற வருவாயைக் கொண்டு வேறு பல நூல்களையும் வெளி யிடக்கூடிய நிலையில் இருந்தார். இவருக் கும் சற்றுப் பின்னர்த் தோன்றிய குரும்ப சிட்டி நா. பொன்னையா (1893-1951) அவர்கள் இதே பணியை மேலும் திறம் படச் செய்தார். நாவலர் காலத்தில் பாட நூல் வெளியீடு வணிகமாய் உருப்பெற வில்லை. ஆனல் காலப்போக்கில் தவிர்க்க இயலாதவாறு அது சந்தைநிலைமைகளுக் குக் கட்டுப்பட்ட பொருளாய் மாறியது: ஆயினும் முத்துத்தம்பிப்பிள்ளை, பொன் னையா போன்ருேர் அவ்வணிகத்தையும் அறவழியிற் செய்து, கிடைத்த வருவாயை யும் நற்கருமங்களுக்குச் செய்து புகழீட்டி னர்; அதாவது நாவலரவர்கள் காட்டிய லோகோபகாரமான செயல்களை வ்ெவ் வேறு வகைகளிற் செய்தனர்.
தென்னிலங்கையிலும், தமிழ் நாட்டி லுமாக ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து பல்வேறு அனுபவங்களைப் பெற்று 1893ல் முத்துத்தம்பிப்பிள்ளை மீண் டும் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினர். நாலலர் சிவபதமெய்திப் பதிஞன்கு ஆண்டு கள் ஆகியிருந்தன. நாவலர் பணிகள் நிறு வன அடிப்படையில் நடைபெறத் தொடங் கியிருந்தன. நிறுவனங்களுக்கு ஏற்பட்டிக்

Page 208
19s
கூடிய பல்வேறு பிரச்சினைகளும் "பிய்ச்சல் பிடுங்கல்களும் அவ்வப்போது எழத்தான் செய்தன. அந்நிலையில் நாவலர் நாமத்தை மேலும் விளங்கவைக்கும் நோக்கத்துடன் முத்துத்தம்பிப்பிள்ளை நாவலர் அவர்கள் பணியாற்றிய வளவை வாங்கி அதற்கு "நாவலர் கோட்டம்" எனப் பெயரிட்டு, அச்சகம் ஒன்றை நிறுவி அதற்கு **நாவ லர் அச்சுக்கூடம்" எனப் பெயர் சூட்டித் தமது முயற்சிகளை ஆரம்பித்தார். அச்ச கத்துடன் உவாட் அன் டேவி (Ward & Davy) என்ற பெயரில் மற்ருெரு வியா பார நிறுவனத்தையும் தமது சகோதரர் வீரசிங்கம்பிள்ளையுடன் சேர்ந்து நடத்தி ஞர். இவற்ருல் பிள்ளையவர்களுக்குப் போதிய வருமானம் வந்துகொண்டிருந் தது. ஓரளவு உறுதியான வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொண்டு, தமிழா ராய்ச்சி, நூல்வெளியீடு, சமூக சேவை, வைத்தியப்பணி முதலியவற்றில் ஊக்கத் துடன் ஈடுபட்டார். 1887ஆம் வருடத் திலேயே சென்னையில் ஜ"பிலி அச்சுக் கூடம் என்றபெயரில் ஒரு பிரசுராலயத்தை முத்துத்தம்பிப்பிள்ளை நடத்தத் துவங்கி யிருந்தார். அக் காலப்பகுதியிலேயே "செந்தமிழ் வசனச் சிங்கம்" என்ற பாராட்டும் இவருக்குச் சென்னையில் கிடைக்கப்பெற்றது. ஆறுமுகநாவலரின் மாணுக்கரில் ஒருவராகிய நல்லூர் க. சதா சிவம்பிள்ளை அக் காலத்தில் சென்னையி லிருந்தார், அவரின் ஆதரவும், சி. வை. தாமோதரம்பிள்ளையின் ஊக்குவிப்பும் முத்துத்தம்பிப்பிள்ளைக்குப் பேருதவியா யிருந்திருத்தல் வேண்டும்.
அக்காலந்தொட்டே பிள்ளை அவர் களுக்குத் தென்னிந்திய கல்விமான்களு டன் ஆய்வறிவுத்தொடர்பு ஏற்பட்டது. நாவலர்பெருமான் மறைந்தபின்னரே *தமிழியல்" என்று இக்காலத்தில் வழங்கப் பெறும் ஆராய்ச்சித்துறை மெல்ல மெல்ல உருவாகியது, மேனுட்டுத்தமிழறிஞருடன் சி. வை. தாமோதரம்பிள்ளை, வி. கனக சபைப்பிள்ளை. தி. த. கனகசுந்தரம் பிள்ளை, தா, பொன்னம்பலபிள்ளை, முத லிய இலங்கைத் தமிழறிஞரும், பெ. சுந்

க. நாகேஸ்வரன்
தரம்பிள்ளை (1855-1897), பண்டிதர் டி. சவரிராயபிள்ளை (1859 - 1923), கே. ஜி. சங்கரன், மாகறல் கார்த்திகேய முதலியார், கே, வி. சுப்பிரமணிய ஐயர், கே. ஜி. சேஷையர் முதலிய தமிழ்நாட் டறிஞரும் மேற்கொண்ட பல்துறை ஆராய்ச்சிகள்- சாசனவியல், சொல்லெ ழுத்தியல், வரலாற்றியல், மூலபாடத்திற ஞய்வு-முதலாம் துறைகளில் செய்யப் பட்ட நூதன ஆய்வுகள் "தமிழியல்" என்ற அறிவுப்பிரிவு உருவாக வழிசெய் தன. அது உருவாகிய காலப்பகுதியில் இயங்கிய முத்துத்தம்பிப்பிள்ளை செந்தமிழ் முதலிய தமிழ்ச் சஞ்சிகைகளுக்கு மட்டு Ld6ötst), Tamilian Antiquary. Sidhanta Deepika முதலிய ஆங்கில ஏடுகளுக்கும் கட்டுரைகள் எழுதினர். அந்தவகையில் நாவலருக்குப்பின் செழித்துவளர்ந்த ஆய் வுலகிலும் பிள்ளையவர்களுக்கு ஒர் மதிப் பான இடம் கிடைக்கலாயிற்று, தமிழியல் பரிணுமத்தில் இலங்கையர் பங்களிப்பு கணிசமானது.
இத்தகைய ஆய்வுநோக்கு வளர்ச்சி யின் விளைவாகவே, வரலாற்று நூல்கள் எழுதும் விருப்பம் பிள்ளையவர்களுக்கு ஏற் பட்டிருத்தல் வேண்டும். இலங்கை வரலாற். றுச் சூசனம் (1883), யாழ்ப்பாண வரலாறு (1912), தென்மொழி வரலாறு (1920) என்பன முதன்முயற்சிகள் என்பது நினைவு கூரற்பாலது. குறிப்பாக யாழ்ப்பாண வரலாற்றினை எழுதுவதில் அவர் காட்டிய முன்மாதிரியே சுவாமி ஞானப்பிரகாசர் (1875-1947), முதலியார் செ. இராச நாயகம் (1870-1940) முதலியோருக்குத் தூண்டுகோலாய் இருந்தது எனலாம்.
நாவலர் மரபுடன் மற்ருெரு தொடர் பும் பிள்ளையவர்களுக்குப் பிற்காலத்தில் ஏற்பட்டது. தமிழைப் பல வழிகளிலும் சிறந்தோங்கச் செய்யவேண்டு மென்று சங்கற்பம் பூண்டிருந்த நாவலரவர்கள் *தமிழ்ப் புலமை" என்ற கட்டுரையில் மரபுவழித் தமிழ்க்கல்வியை நிறுவன அடிப்படையிலே வளர்ப்பதற்குத் திட்ட மிட்டிருந்தார். அதற்கு உருவங்கொடுக்கு முகமாக பூரீமத் த. கைலாசபிள்ளை அவர் கள் 1898ல் யாழ்ப்பாணத்திலே தமிழ்ச் சங்கம் ஒன்றினைத் தாபித்தார். நாவலர் வித்தியாசாலை சங்கக்கட்டிடமாக அமைந்

Page 209
நாவலரும் முத்துத்தம்பிப்பிள்ளையும்
தது. குகதாசர் ச. சபாரத்தினமுதலி யாரைச் செயலாளராகக் கொண்டியங் கிய தமிழ்சங்கத்தின் வித்துவ உறுப்பினர் SGTys அ. குமாரசுவாமிப் புலவர், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, வட் டு க் கோட்டை ஆறுமுக உபாத்தியாயர், நல் லூர் வே. கனகசபாபதி ஐயர், ஊரெழு சு. சரவணமுத்துப்பிள்ளை என்னும் ஐவரும் திகழ்ந்தனர். இவர்களுள் மூவர் முரு கேசபண்டிதரின் மாணுக்கர் என்பது கருதற்பாலது, யாழ்ப்பாணத்துத் தமிழ்ச் சங்க வித்துவானுகப் பிள்ளையவர்கள் விளங்கியமையினுல்,பின்னர் தமிழகத்திலே மதுரையம்பதியில் பாலவநந்தம் ஜமீன் தார் பாண்டித்துரைத்தேவர் (1867-1911) தமிழ்ச்சங்கத்தை 1901இல் நிறுவிய பொழுது, பிள்ளையவர்களையும் கலந் தாலோசித்தார் என்று கூறப்படுகிறது. அது எவ்வாருயினும் மதுரைத் தமிழ்ச் சங்கத்துடன் பிள்ளையவர்களுக்கு நெருங் கிய தொடர்பு இருந்தது. சங்கத்தின் LDT 660 suunt Gor செந்தமிழ் பிள்ளையின் கட்டுரைகள் பலவற்றை வெளியிட்டு வந்தது. சங்கத்தின் துவக்க காலத்தி லிருந்தே அவர் சங்கப் பரீட்சகருள் ஒரு வராக இருந்தார். ('ஈழத்துப் புலவர்கள்’ என்ற கட்டுரை செந்தமிழ் இதழில் வெளி வந்ததே). முத்துதம்பிப்பிள்ளை பாண்டித் துரைத் தேவரின் நண்பனுகவும் விளங்கி ஞர். பாரதச்சுருக்கம் (1903) தேவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. கலைக் களஞ்சியப் பாங்கிலமைந்த அபிதான கோசம் (1902) என்னும் மகத்தான நூலைப் பிள்ளையவர்கள் பெரும் பிரயாசைப்பட்டு இலட்சிய நோக்குடன் வெளியிட்ட வேளை யில் அதில் நூறு பிரதிகள் தமக்கனுப்பு மாறு கேட்டுக்கொண்ட பாண்டித்துரைத் தேவர், ஆசிரியரது தகைமையை நன்கறிந் திருந்தார் என்று கருதலாம்.
முத்துத்தம்பியின் நெருங்கிய பந்துக் கள் பலர் மானிப்பாயில் கிறிஸ்தவர்களாக இருந்தனர். பாவலர் சரித்திரதீபகம் (1886) என்ற பிரசித்திபெற்ற நூலின் ஆசிரியரும் உதயதாரகை பத்திராதிபராக சுமார் நாற் பது வருடங்கள் பணியாற்றியவருமான ஆர்னல்டு சதாசிவம்பிள்ளை (1820-1896) இவரின் பேரனர் ஆவர். ஆயினும் பிள்ளை யவர்கள் சைவச் சூழலிலேயே வளர்ந்து, சைவமரபினையே பேணி வந்தார். நாவல

ரவர்கள் வைதிக அடிப்படையில் அமைந்த சைவநெறியையே போற்றிப் பேணியவர். வேதாந்த, சமரசப் போக்குகள் அவருக்கு உடன்பாடில்லை. ஆனல் நாவலருக்குப்பின் வேதாந்த விசாரம் இலங்கையிலே கற் ருேர் மத்தியில் ஆங்காங்கு இடம் பெற் றது. வேதாந்திகளாக இராதவர்களும் அதனை ஈடுபாட்டுடன் கற்றறிய முனைந் தனர் ; விரும்பினர். அதற்கு ஒரு காரணம் சுவாமி விவேகாநந்தர் (1863-1902) இந்தியாவிலும் மேற்குலகிலும் பெற் றிருந்த பெருஞ் செல்வா க் கா கும். சுவாமிகள் 1897இல் யாழ்ப்பாணத் திற்கு விஜயஞ்செய்தார்; யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாபெரும் வரவேற் புக் கூட்டம் நிகழ்ந்தது. இத்தகைய சூழலில் முத்துத்தம்பிப்பிள்ளை விவேகா நந்தரால் ஈர்க்கப்பெற்றமை வியப்பல்ல. விவேகாநந்த சுவாமிகள் சொற்பொழிவின் சாரம் (1897) என்னும் நூலை வெளியிட் டார்; அதைப்போலவே, பிற்காலத்தில் *கலாயோகி ' என உலகப் புகழ்பெற்ற இலங்கையின் தவப்புதல்வர்களில் ஒருவ ரான ஆனந்த கே. குமாரசுவாமி (18771947) அவர்கள், தமது மனைவியாருடன் யாழ்ப்பாணத்துக்கு விஜயஞ் செய்தபோது (1906) இந்துக்கல்லூரியில் நிகழ்த்திய ஆங்கிலச் சொற்பொழிவைத் தமிழில் பெயர்த்து வெளியிட்டனர். அதுமட்டு மன்று, பிள்ளையவர்கள் வித்துவ உறுப் பினராக இருந்த யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் ஆனந்த குமாரசுவாமிக்கு ? வித் தியா விநோதன்" என்னும் விருதையும் வழங்கிக் கெளரவித்தது.
நாவலர் மரபில் வந்த முத்துத்தம்பிப் பிள்ளை இருபதாம் நூற்ருண்டிலும் வாழ்ந் தவராகையால், நாவலர் தொடக்கி வைத்த பணிகள் சிலவற்றை மாறிய சூழ்நிலைகளுக்கேற்பத் தொடர்ந்து செய்த தோடமையாது, தாமும் சிற்சில புது முயற்சிகளில் ஈடுபட்டார். நாவலரின் முன்மாதிரியைப் பின்பற்றி, இலங்கைத் தமிழ்க் கல்வி மரபு ஒன்று உண்டு என்ப தனைப் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்து செயற்பட்டவர் பிள்ளையவர்கள். அன்ன ரின் நூல்களும், சிந்தனைகளும் மறுமதிப் பீடு செய்யப்பட்டு இலங்கை இலக்கிய மரபில் தகுந்தபடி வைத்தெண்ணப்படல் வேண்டியவை.

Page 210
நாவலரும் கதிரைவேற்பில்
க. சி. குலரத்தினம்
தமிழ்மொழியையும் சைவசமயத்தை யும் கருத்திற்கொண்டு நோக்கும்போது, தமிழ்நாடு என்னும் தென்னிந்தியாவும், ஈழநாடு என்னும் இலங்கையும் முறையே தாய்நாடு போலவும் சேய்நாடு போலவும் பண்டைக்காலம்முதல் இக்காலம் வரை யும் நிலவிவருகின்றன என்பதை உணர லாம் இருநாடுகளும் அன்று தொட்டு இன்றுவரை ஒன்றுக்கொன்று கொடுத் தும் கொண்டும் தமிழ்ப்பணி புரிந்து வரு கின்றன எனலாம். முன்னர் சங்க காலத் தில் முடிநாகராயர், பூதந்தேவளுர் போன்ற புலவர் பெருமக்கள் பலர் இங் கிருந்து ஆங்குச் சென்று தமிழ் வளர்த் தார்கள் என்ப.
பின்னர் காலத்துக்குக்காலம் தமிழ் வேந்தரான சோழர் பாண்டியர்கள் ஈண் டுப் படையெடுத்து வந்து ஆட்சி செய்த போதெல்லாம் புலவர் பெருமக்களும் கலை வாணர்களும் ஆங்கிருந்து வந்து ஈண் டுறைந்து நாகரிகம், கலாசாரம். பண்பாடு வளரப் பெருமளவில் உழைத்தார்கள். அவர்களால் நம்நாட்டுப் பல கலைகளும் புத்துயிர் பெற்றுப் பெருஞ் சிறப்புற்ருேங் கின என்பது வர ல n .
போத்துக்கேயர் இலங்கைக்கரைநாடு களில் தமதான செலுத்திய காலத்தில் நம்நாட்டுக் கலைவளம் ததும்பும் கோயிற் கட்டடங்கள் யாவும் தரைமட்டமாக்கப் பட்டதோடு, நம்மதக் கோட்பாடுகளும்

ர்ளையும்
அடி தலையாக்கப்பட்டன. அப்போதெல் லாம் யாழ்ப்பாணத்துச் சைவப் பெருமக் கள் சிலர் தமிழ்நாட்டுக் கேகித் தமிழை. யும் சைவத்தையும் பேணி வளர்த்துப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்தார் கள். அவர்களுள் திருநெல்வேலி ஞானப் பிரகாசத்தம்பிரான் சுவாமிகளும் வரணி தில்லைநாதத்தம்பிரான் சுவாமிகளும் குறிப் பிடத்தக்க ஞானிகளாவர்.
ஈழநாட்டவரின் சைவத்தமிழ் உபகரிப்பு
இங்ங்னமாக ஈழநாட்டவர் பலர் காலத்துக்குக்காலம் தமிழ்நாட்டுக்கேகிச் சைவத்துறையேயன்றித் தமிழ்த்துறை. பரிபாலனத்துறை, நீதித்துறையாகிய பல துறைகளிலும் நெறிதிறம்பா வகையில் பணிபுரிந்துவந்தனர். பத்தொன்பதாம் நூற்ருண்டிலக்கிய வளர்ச்சியில் ஈழநாட் டவர் பங்கு மிகப் பெரிதாகும். அவர்தம் உபகரிப்புக்களின் பெருமையை முன்னர் ஆறுமுகநாவலர் அவர்களே நல்லறிவுச் சுடர் கொளுத்தலில் நன்காராய்து எழுதி யுள்ளார்.
ஆறுமுகநாவலர் அவர்களின் முன்னே ரில் ஒருவரே திருநெல்வேலி ஞானப்பிர காசத்தம்பிரான் சுவாமிகள். அவர் யாழ்ப் பாணத்தை ஆண்ட பறங்கியதிபதிக்கு இறைச்சியின் பொருட்டுப் பசுக்கன்று கொடுக்க மறுத்து, ஊரைவிட்டு இரவிர வாகத் தோணியேறித் தமிழ் நாடு சென்ற வர் அவர். பாரதநாட்டில்மிக வடக்கில்

Page 211
நாவலரும் கதிரைவேற்பிள்ளேயும்
காசிவரையுஞ் சென்றுறைந்து, பெளஷ்க ராகமத்துக்கு வடமொழியிலேயேபேருரை என்னுப் பாடியம் எழுதியவர் அன்றி சிவ யோகசாரம், சித்தாந்தசிகாமணி, பிர மாண தீபிகை, பிரசாத தீபிகை, அஞ் ஞான விஷேசனம், சிவயோகரத்தினம், சிவாகமாதிமான்மிய சங்கிரகம் முதலிய நூல்களையும்; தமிழில் சிவஞானபோத விரி வுரை, சிவஞானசித்தியார் உரை என்ப வற்றையும் எழுதித் திருவண்ணுமலை ஆதீ னத்துக்கே காணிக்கையாகக் கொடுத்துச் சிதம்பரத்திலே தம் பெயர் வழங்கத்திருக் குளந் தோண்டித் திருமடமும் கட்டியவ frr:6 ti.
இவரியற்றிய உரையொன்றினைக் கண் டித்து எழுதிய சிவஞானத்தம்பிரான் என் பவரின் கண்டனத்தைக் கண்டித்து இவரின் மாணவர் ஒருவர் வச்சிரதண்டம் என்னும் மறுப்புரை எழுதிப் பெரும் புகழெய்தி னர் என்பர். இங்ங்னமே யாழ்ப்பாணத்து வரணியைச்சேர்ந்த தில்லைநாதர் என்பார் தமிழ்நாடு சென்று, அங்கே ஞானப்பிரகா சத்தம்பிரான்பால் ஞானம் பெற்றுத் தம் பிராணுகிப் பணிசெய்தகாலத்தில், தஞ்சா வூர் மன்னனின் குழந்தையொன்றின் கடுஞ் சுரநோயைத் திருநீறுகொண்டு தீர்த்துப் பெரும் புகழும் செல்வமும் பெற்றுத் திரு மறைக்காடு என்னும் வேதாரணியத் திருத்தலத்தில் சிறப்பான திருப்பணி வேலைகள் செய்திருந்தனர்.
ஈழநாட்டுப் பல்கலைப் புலவர்கள்
இவ்வாருக ஈழநாட்டவர் பலர் சக லாகம பண்டிதர் என்றும், மகாவித்துவான் என்றும், பல்கலைப்புலவர் என்றும், வித் துவசிரோமணி என்றும், சித்தாந்தசரபம் என்றும், கலாவினுேதர் என்றும், அருங் கலைவாணர் என்றும், ' நாவலர் என்றும், தருக்க கோடரி என்றும், சதாவதானி என் றும் புகழ்பெற்றிருந்தார்கள். இவர்கள் ஈழத்திலேயன்றித் தமிழ்நாட்டிலும் புகழ் பெற்று ஒளிவிளக்குகளாயிருந்து சுடர்விட் டுப் பிரகாசித்தார்கள்.
24

20 it
இந்த ஒளிவிளக்குகளுக்கு ஒரு வரன் முறையான பாரம்பரியம் அமைந்திருந்தது அது மிகுந்த சூக்குமமானதாய் இவர் களுக் கூ டா க ச் சென்றதால் இவர் களின் எழுச்சியும் நோக்கும் கருத்தும் செயலும் ஒருமுகமாகவே அமைந்திருந் தன. இந்தத்திருக்கூட்டத்தில் முன்னவர் பின்னவர் என்னும் இரு திறத்தாரையும் இணைத்து, அவர்களின் நடுவே நாயகமணி யாயிருந்தவர் நல்லூர் பூரீலபூg ஆறுமுக நாவலர் அவர்களாவர்.
தமிழ் நாட்டிற் கொண்டும் கொடுத் தும் பணிசெய்து வந்த எங்கள் நாயகங் களுக்குப் பின்னணியாகப் பாரம்பரிய மொன்று தொடர்ந்து நின்று பிடரியைப் பிடித்துத் தள்ளி ஊக்கிவந்தது; வருகின் றது. அது திருக்கைலாய பரம்பரை என் னும் சிறப்புப் பெற்றது. V−
அது முன்னர் திருக்கைலாசத்து.அகச் சந்தான குரவர் வழியில் வந்தமெய்ஞ் ஞான ப ரம்ப  ைரயின ர (ான புறச் சந்தான குரவர் பரம்பரையாகும். புறச் சந்தான குருசீட பரம்பரையில் வந்தவர் கள் செய்த பெரு முயற்சியின் பயனுக அமைந்தவைகளே தமிழ் நாட்டுக்குத் தனிச் சிறப்புத் தருகின்ற சைவ மடங்கள் என்னும் ஆதீனங்களாகும். இவற்றுள் தரும புரவாதீனம், திருவாவடுதுறையாதீனம் என்பன மேற்கு நாட்டு ஒக்ஸ்போட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் போன்று கல்வித்துறையிற் பெரும்பணி செய்வன வாகும். அன்றிப் பாரம்பரியத்தைப் பாது காத்துப் புராதனமானவற்றைச் சணுதன முறையில் பேணி வருவனவாகும். இவை போன்ற திருவண்ணுமலையாதீனம், திருப் பனந்தாள் ஆதீனம், குன்றக்குடியாதீனம், மதுரையாதீனம், சூரியனு ரா தீனம் , பேரூராதீனம் என்பனவோடு ஈழத்தில் வரணியாதீனம் எனவும் ஒர் ஆதீனம் அன்று நிலவி வந்தது.
வரணி, கரணவாய், கெருடாவில், புலோலி, விளைவேலி முதலிய பகுதிகள் புலத்துறை முற்றிய பெரியார்கள் வாழ்ந்த

Page 212
இடங்களாகும். அவர்களின் செல்வாக்கு இன்றும் திருமறைக்காட்டில் பசுமையாக நிலவி வருகின்றது. ஆங்கு ஈழநாட்டவர் பணிகள் பன்முகமாயமைந்துள்ளன.
இந்தமுறையில் தமிழ்நாட்டில் வேதா ரணியத்துக்கும் ஈழநாட்டில் வடமராட் கிக்குமிடையில் உண்டான நெருக்கமான மிகுசைவத் தொடர்பு, தாயுமானசுவாமி களாலும் உண்டானது என்று கருதுவாரு முளர். தாயுமான சுவாமிகளின் தந்தை யார் கேடிலியப்பபிள்ளை ஈழத்து வடம ராட்சியைச் சேர்ந்தவர் என்று தஞ்சா வூரைப் பிறப்பிடமாகக் கொண்ட கலா நிதி சு. நடேசபிள்ளை அவர்கள் அடிக்கடி கூறுவதுண்டு
திருக்கைலாய பரம்பரை
இற்றைக்கு 185 ஆண்டுகளுக்கு முன் திருவண்ணுமலையாதீனத்துக் கனகசபாபதி யோகி என்னும் கூழங்கைத்தம்பிரான் சுவாமிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை புரிந்து வண்ணைச் சிவன் கோயில் தரும கர்த்தாவின் மாளிகையில் எழுந்தருளி யிருந்தார். பத்தொன்பதாம் நூற்ருண் டின் ஆரம்பத்திலேயே கூழங்கைத் தம்பி ரான் சுவாமிகளின் மாணவர்கள் பலர் குடாநாடெங்கும் ஒருமுகமாகச் சைவத் தமிழ்ப் பணிபுரிய வாரம்பித்தார்கள். அவர்களுள் இருபாலை நெல்லைநாத முதலி யார், மாதகல் மயில்வாகனப் புலவர், நல்லூர் கந்தப்பிள்ளை, இருபாலை சேணுதி ராயமுதலியார் குறிப்பிடத்தக்கவராவர்.
ஆறுமுகநாவலரின் குரு
கூழங்கைத் தம்பிரான் சுவாமிகள் என்னும் கனகசபாபதி யோகியின் மாண வர்கள் வரிசையில் முதலிடம் வகித்தவர் இருபாலைச் சேனதிராய முதலியார். அவர் நினைவாற்றல் மிக்குள்ள படிப்பாளி. எதனையும் ஒருமுறையிற் கேட்டுணரும் ஆற்றல் வாய்ந்தவர். நன்னுரலை நாற்பது நாள்களில் கேட்டுணர்ந்தவர். பல்வேறு. மொழிகளை அறிந்த பன்மொழிப்புலவர்;

க. சி. குலரத்தினம்
வேதாகமங்களை நன்கறிந்த வைதிகர். தமிழில் ஏராளமான பிரபந்தங்களை இயற்றியவர். அருந்தமிழ்க் கவிஞனும் ஆணுவியல்பிற் சேஞதிராய முதல் என் றும், கற்றுநிறைந்த இதமுறு நுண்மதிச் சேணுதிராய முதலி என்றும், நான திராவிடமு நன்னிலக்க ஞறுறச்செய் சேணுதிராய முதலி என்றும் புலவர்பெரு மக்கள் போற்ற வாழ்ந்தவர். தமிழ், வடமொழி, ஆங்கிலம் முதலிய மொழிக ளேயன்றிப் போத்துக்கீயம், ஒல்லாந்தம் ஆகிய மொழிகளையும் நன்கறிந்தவராய் யாழ்ப்பாணத்து நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பு முதலியாராயிருந்து பின் சட் டம் பயின்று சட்டத்தரணியாயுமிருந் தவர். சிலகாலம் நீதிபதியாயும் கடமை புரிந்தவர்.
சட்டத்தரணியாயிருந்த காலத்தில் நல்லூரிற் கந்தசுவாமி கோவிலுக்கு அணித்தாக வாழ்ந்த காலத்தில் நறுமலரை நாடிவந்த வண்டினங்கள் போலச் சேனுதி ராய முதலியாரைப் படிப் பார் வம் நிறைந்த மாணவர்கள் வந்து மொய்த் தனர். அவருடைய மாணவர்களுள் கோப்பாய் அம்பலவாண பண்டிதர், நல் லூர் கார்த்திகேய ஐயர், நல்லூர் சம்பந்' தப் புலவர், நல்லூர் மனப்புலியார், சர வணமுத்துப் புலவர், நீர்வேலி பீதாம்பரப் புலவர், கந்தரோடை நாகநாத பண்டி தர், வல்லிபட்டித்துறை ஏகாம்பரப் புலவர், மறவன்புலம் சயம்பர், வட்டுக் கோட்டை சண்முகச் சட்டம்பியார், காரைதீவு கார்த்திகேய ஐயர் முதலா னேரும் நல்லூர் கந்தப்பிள்ளை மைந்தன் ஆறுமுகம்பிள்ளை அவர்களுமாவர்.
பெருஞ் செல்வப் பிரபுவான சேஞதி. ராய முதலியார் பொருள் கொடுத்துத் தேடிவைத்த ஏடுகள் மிகப்பல என்பர். அவற்றுள் ஒரு சில ஆறுமுகநாவலர் அவர்களால் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றன. பல ஏடுகள் நீதிபதி வைமன் கதிரைவேற் பிள்ளை "அவர்கள் மூலம் லண்டனிலுள்ள கையெழுத்து நூல்நிலையத்துக்கு அனுப் பப்பெற்றன.

Page 213
நாவலரும் கதிரைவேற்பிள்ளையும்
புராணப் பிரசங்கி எனப் பெயர்பெற்ற நாவலருக்கு நல்லூரில் கந்தபுராணட் பிரசங்கஞ் செய்ய வழிகாட்டியாயிருந் தவர் சேஞதிராய முதலியாரேயாவர். அன்றி நாவலர் தமது சைவப்பிரகாசி வித்தியாசாலையில் முதற் பிரசங்கஞ் செய்தபோது அதற்குத் தலைமைதாங்கிச் சிறப்பித்தவர் சேஞதிராய முதலியாரின் மைந்தன் இராமலிங்கம் என்பவராவர்.
குருபரம்பரை
சேஞதிராய முதலியாரிடம் பயின்ற மாணவர்களிடம் பயின்று படிப்பாளிக ளாய் விவேக முறுக்கேறிய வித்துவான் கள், புலவர்கள், பண்டிதர்கள் குடாநா டெங்கும் பரவியிருந்தார்கள். கோப்பாய் அம்பலவாண பண்டிதரிடம் பயின்றவர்க ளுள் பீற்றர் பேர்சிவல் என்பாரும், சுன் ஞகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களும் தலையாயவர்கள். கந்தரோடை நாகநாத பண்டிதரிடம் பயின்றவர்களுள் நீர்வேலி சங்கரபண்டிதர் அவர்கள் வலம்புரிச்சங்கு போன்றவர். இவரிடம் கல்விகற்று விற் பத்தியடைந்த பெருமக்கள் கூட்டம் பெரிது. வட்டுக்கோட்டை சண்முகச் சட்டம்பியாரின் நன் மாணவனே ஜே.ஆர் ஆனுேல்ட் என்று உதயதாரகைப் பத் திரிகை நடத் தி ய சதாசிவம்பிள்ளை
иштөurf.
நல்லூர் சரவணமுத்துப்புலவரிடம் கற்றவர்களும், மாணவர்களின் மாணவ ராய்க் கற்றவர்களும் நாடெங்கும் பரவி யிருந்தார்கள். இங்ங்ணமே ஆறுமுகம் பிள்ளை அவர்களிடம் கற்றவர்களும் அவர் தம் மாணவர்களின் மாணவர்களாயுற்ற வர்களும் ஈழநாட்டில் மாத்திரமன்றித் மாத்திரமன்றித் தமிழ்நாட்டிலும் பரவி யிருந்தார்கள். இன்றுவரை அந்தப் பரம் பரை பல்கிப் பெருகிப் பரவிவருகின்றது கண்கூடு,
சரவணமுத்துப்புலவர் கண்டனங்கள் எழுதுவதில் கைதேர்ந்தவர். அவர் பல 569 Dis வட்டுக்கோட்டையிலிருந்து

203
வெளிவந்த உதயதாரகை என்னும் செய் தித்தாளில் களத்தூர் வேதகிரி முதலியா ரின் கட்டுரைகளுக்குக் கண்டனங்கள் எழுதி வந்தவர். எனவே ஆறுமுகப்பிள்ளை அவர்களுக்கு இளமையிலேயே கண்டனம் எழுதும் வரன்முறை நன்கு பழகிய துறை யாயிருந்தது.
நாவலர்ப்பட்டம்
முன்னர் மாணிக்கவாசகசுவாமிகள் மிண்டிய மாயாவாதம் சுழல்காற்றுப் போலத் தமிழ்நாட்டில் வீசிய நிலைமை யைப் பாடியருளியுள்ளார். அந்த மாயா வாதம் காலத்துக்குக் காலம் வீசிவந்தமை போலப் பத்தொன்பதாம் நூற்ருண்டிலும் வீசியது. மாயாவாதப்பேயை அகற்ற வல்லார் ஒருவரை எதிர் பார்த்திருந்த வருள் ஒருவர் திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீன உபய சந்நிதான மாயிருந்த இரண்டாம் பட்டம் மேலகரம் பூரீசுப்பிரமணிய தேசிக மூர்த்திகளாவர். அவர் வித்துவான்களுடைய திறமையை நன்கறிந்து பாராட்டும் நுண்மாணுழை புலமுடையவர். வடமொழிவாணர்களும் தமிழ்ப்பெரும் புலவர்களும் சிறந்து வாழத் தம் வாழ்நாளளவும் பணிபுரிந்தவர். அர சியலாளரும் நன்கு மதிக்கும் வண்ணம் ஆதீன அலுவல்களை அரிதிற் செய்து வந்தவர்.
இத்தகைய பெரியார் நல்லூர் ஆறுமுகம்பிள்ளை சென்னையில் பெருஞ் சிறப்புப் பெற்றதும், சைவத்தையும் தமி ழையும் வளர்த்தற்பொருட்டு அச்சகம் வாங்கிப் போவதையும், அவர் சென்னையி லிருந்து தெற்கு நோக்கித் திருத்தலங்களை வணங்கி வருவதையும் தக்கார் சொல்லக் கேட்டு, ஆதீனத்திற் பொறுப்புவாய்ந்த வர்களைக் கொண்டு அவரைக் கோலாகல மாகத் தம்மிடம் அழைப்பித்து உரையாடி மகிழ்ந்து, மகாசந்நிதானம் அவர்களுக் கும் அறிமுகஞ் செய்து சிறப்பித்து, அங் கிருந்தோர் யாவரும் கேட்டின்புறுமாறு அவரைப் பிரசங்கம் செய்யுமாறு வேண் டினர். ஆறுமுகப்பிள்ளையும் தமக்குக்

Page 214
204
கைவந்த சைவப்பிரசங்கத்தை மிக அரு மையாகச் செய்தார். இது நிகழ்ந்து 1849ஆம் ஆண்டிலாகும். அப்போது அவ ருக்கு இருபத்தாறு வயது நிரம்பி இருபத் தேழு ஆரம்பித்திருந்தது.
அப்பொழுது அவர் செய்த பிரசங்கம் சிவாகமங்களிலே பிரதிபாதிக்கப்படும் பதிபசுபாசங்களை யுணர்த்துவதாயும், சுருங் கச் சொல்லல் முதலிய பத்தழகு என்னும் திவ்விய இலக்கணஞ் செறிந்த செந்தமிழ் வசனமாயும், தருக்க சம்பிரதாயம் நிறைந்ததாயும், பிறரெவராலுஞ் செய் தற் கரியதாயும், கேட்பாரை மனமுருகிக் கண்களினின்றும் அருவி சொரியப் பண் ணுவதாயும் இருப்பக்கண்ட உபய சந்நி தானங்களும் மற்றையோரும் மகிழ்ந்து அவருடைய நாவன்மையை வியந்து ஆராமையோடு பொன்னுடை போர்த்து, மலர்மாலை சூட்டி, நாவலர் என்னும் பட் டத்தையும் நல்கி நாகரிகமாக வாழ்த்தி ஞர்கள். அன்று தொடக்கம் எல்லோரும் அவரை ஆறுமுகநாவலர் என வழங்கி வந்தார்கள்.
நாவலர் அவர்களின் பன்முகப் பணிகள்
நாவலர் ஐயாவின் பன்முகப் பணிகள் பாடசாலைகளை நிறுவுதல், சைவாசிரியர் களை உருவாக்குதல், சைவப்பிரசார கரை உருவாக்குதல், அச்சுக்கூடம் நிறுவுதல், ஏட்டுப்பிரதிகளை நூல் வடிவில் பதித்தல், துண்டுப்பிரசுரங்களை வெளியிடுதல், சைவப் பிரசங்கஞ் செய்தல், புராண படனஞ் செய்தல், சைவாசார சீலத்தைக் காத்தல், சிவாலயங்களைப் புனரமைத்தல் என்பன வும் இவையோடொத்தனவுமாம்.
நாவலரின் மாணவ பரம்பரை
இவற்றைக் குறைவறச் செய்யவல்ல குணவான்கள் பலரை அவர் தயாரித்த பெருமையிஞல், அவருக்குப் பின் அவர் தம் மாணவ பரம்பரையினர் அவர் செய்த பணிகளை தொடர்ந்து செய்வதற்குத் முயன்றனர். அவர் மாணவர்களின் பெயர்களையாவது முதலில் அறிந்து

க. சி. குலரத்தினம்
கொண்டால் அவர்கள் பணிகளை ஒரள வுக்கு அறிந்துகொள்வதாய் அமையும்.
நாவலரின் நேர் மாணவரென வந்த வருள் குப்பிழான் செந்திநாதையர், வேலணை கந்தப்பிள்ளை , வண்ணை கனகரத் தினம், ஆறுமுகத்தம்பிரான், சுப்பிரமணிய பிள்ளை, இணுவில் நடராசையர், வைத்தி லிங்கபிள்ளை, அச்சு வேலி வேல்மயில் வாகனச் செட்டியார், நல்லூர் சதாசிவப் பிள்ளை, மு. தில்லைநாதபிள்ளை, இணுவில் அம்பிகைபாகர், ச. பொன்னம்பலபிள்ளை, வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை, பொன்னுத்துரை ஐயர், நமச்சிவாயத்
தம்பிரான், வன்ருெண்டச்செட்டியார், கோப்பாய் சபாபதிநாவலர், நல்லூர் தியாகராசபிள்ளை, இராமநாதபுரம்
இராமசாமிப்பிள்ளை, மட்டுவில் வேற் பிள்ள்ை, சுழிபுரம் திருஞானசம்பந்தபிள்ளை, சுன்னகம் குமாரசுவாமிப்பிள்ளை, நல்லூர் கைலாசபிள்ளை, விசுவநாதபிள்ளை, கொக் குவில் சபாரத்தின முதலியார் முதலா ஞேரும் இன்னும் பலருமாவர்.
நாவலர் அவர்களுடைய மாணவர் களுள் நமச்சிவாயத் தம்பிரான், வன் ருெண்டச் செட்டியார், இராமசாமிப் பிள்ளை முதலானேர் தமிழ்நாட்டவராவர். இவர்கள் நாவலர் அவர்களின் பிற்காலச் சீடர்கள், இவர்கள் 1864ஆம் ஆண்டுக் குப்பின்னரே நாவலரின் பிரசங்கமாரியில் அறநனைந்து அவரை விடாமற் பின் தொடர்ந்து பாடங்கேட்டவர்கள். வன் ருெண்டச் செட்டியார் மகிபாலன் பட்டி யைச்சேர்ந்த பெருஞ்செல்வர். அவர் தமது பிற்காலந்தில் கண்ணுெளி மங்கியபோதி லும் பேச்சுத்துணைக்கு ஒருவரையும் பணி புரிய ஒருவரையும் அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தும் இலக்கிய இரசனை கேட்டின்புற்றதோடு, நாவல ரவர்களின் மருகரும் மாணவருமான வித் துவசிரோமணியிடமும் இலக்கிய இரசனை கேட்டின்புற்று மீண்டவர்.
தம்மிடங்கற்றுவந்த மாணவர்களுக் குப் பொருளை விளக்கும் ஆற்றல் நாவலர்

Page 215
நாவலரும் கதிரைவேற்பிள்ளையும்
ஐயாவிடம் வியக்கத்தக்க அளவில் அமைந் திருந்தது. அதுவே நாளடைவில் மிக விரி வடைந்து பெருஞ் சொற்பொழிவாற்ற லாக மலர்ந்தது. அவர் சைவசமய வளர்ச் சியின் பொருட்டுக் கோயில்களிலும் பொதுவிடங்களிலும் திருவிழாக்களிலும் நல்லநாள்களிலும் சமயச் சொற்பொழி வுகள் பல செய்தார்.
தாய்நாடு திருந்தினுல் சேய் நாடு திருந்தும் என்று கருதிய நாவலர் ஐயா, தாய்நாடாகிய தமிழ்நாட்டிலேயே தமது பெரும் பணியைப் பரந்த அளவில் பன் முகமாக ஆரம்பித்தார். தமிழ் நாட்டிலே கல்வியிலும் சைவசமய ஒழுக்கத்திலும், திருக்கோயில் வழிபாட்டு முறைகளிலும் நிலவிய குறைகளை முதலிற் திருத்துவதற்கு முயன்ருர், தம்முடைய மாணவர்களுக் கும் சொற்பொழி வாற்றும் பயிற்சியைக் கொடுத்து அவர்களைக் கொண்டும் பேசு வித்தார். அவருக்குமுன்னர் அங்காயினும் இங்காயினும் சொற்பொழிவாற்றும் வழக் கம் வெகுவாக நிலவவில்லை. அவர் பேசக் கேட்டவர் பலர், அவர் கூறியவண்ணம் நடக்கத் தலைப்பட்டார்கள். புலாலுண்ட வர் பலர் அதனைக் கைவிட்டார்கள். சிவா லயஞ் செல்லாதவர் பலர் ஒழுங்காகப் போகத் தலைப்பட்டனர். சிவபூசை செய் யாதவர்கள் பலர் அதனைச் சிரத்தை யோடு செய்யத் தொடங்கினர்.
நாவலர் காலத்தில் கண்டனங்கள் எழுதவேண்டிய நிலைமை நிலவியது. அவர் எம்மவர் பலரின் ஒழுக்கக்கேடுகளைக் கண்டித்தும், புறமதத்தவர் தம்மதத்தைப் பரப்பும் முறையினைக் கண்டித்தும் பத்திரி கைகளுக்குக் கண்டனங்கள் எழுதியும் துண்டுப்பிரசுரங்களாக வெளியிட்டும் வந் தார். அவர் எழுதியவை தருக்கரீதியாச அமைந்த அமைவில் தகர்க்க முடியாதன வாயு மிருந்தன. அவர் எழுதிய கொலை மறுத்தல், சுப்பிரபோதம், சைவ தூஷண பரிகாரம், நல்லறிவுச் சுடர் கொளுத்தல் போலியருட்பா மறுப்பு, யாழ்ப்பாணச் சமய நிலை, நல்லூர் கந்தசுவாமி கோயில், மித்தி யாவாத நிரசனம் முதலியன இலக்கியங்

களாகவுள்ளன. தருக்கவொழுங்கிலமைந் துள்ளன.
சதாவதானம் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள்
நாவலர் அவர்களுக்குப்பின் அவர்தம் மாணவர்களேயன்றி, மாணவர்தம் மாண வர்களும் வரன்முறையாகப் பணிகளைப் பாரம்பரியமாகச் செய்துவந்தார்கள். அத் தகையவர்களுள் வித்துவ சிரோ மணி பொன்னம்பலபிள்ளை வழியில் வந்த மாண வர் பெருக்கம் பெரிதாகும். வித்துவசிரோ மணி அவர்களை மகா மகோபாத்தியாய சாமிநாதையர் அவர்களே பாற்கடலின் ஆழமறிந்த மந்தாரமலையென ஆராமை யோடு கொண்டாடினரென்ருல் அவரின் பெருமையை வேறு எவர்தான் பேசமாட் டார்.
எட்டுத்தொகை நூல்களுள் ஒன்ருன நற்றினை எனும் நூலைப் பதித்த பின்னத் தூர் நாராயணசாமி ஐயர் (1862 - 1914) வித்துவ சிரோமணி திருமறைக் காட்டில் ஒய்வெடுத்திருப்பதைக் கேட்டதும் ஆங்கு விரைந்து அவருக்கு மாணவரான செய் தியை மகா மகோபாத்தியாயர் தமது கட்டுரைகளில் எழுதியுள்ளார். நாராயண சாமி ஐயரவர்களின் மாணவர்களுள் ஒருவரே உலகியல் விளக்கம் எழுதிப் புகழ் பெற்ற நவநீதகிருஷ்ண பாரதியாராவர். பாரதியாரவர்கள் இராமநாதன் கல்லூரி யிலும் பரமேஸ்வராக் கல்லூரியிலும் பல்லாண்டுகளாகப் பணிபுரிந்தவர்.
நாவலர் அவர்களின் மற்ருெரு மாண வர் நல்லூர் தியாகராசபிள்ளை என்பவ ராவர். தியாகராசபிள்ளை அவர்களிடம் முறையாகக் கற்று ஆறுமுகநாவலரின் மாணவ பரம்பரையோடு தம்மைத் தொடர்பு படுத்தி அவர் வழியில் தொண்டு செய்து பெரும்புகழ் பெற்றவர்களுள் மேலைப்புலோலி நாகப்பபிள்ளை மைந்தன் கதிரைவேற்பிள்ளை என்பவராவர். அவர் 1870ஆம் ஆண்டிற் பிறந்தவர். நாகப்ப பிள்ளை முருகப்பெருமானிடத்துப் பக்தி பூண்டு தமதில்லத்தில் வேற்கோட்டம்

Page 216
206
அமைத்து வழிபட்டு வந்தவர். கதிரைவேற் பிள்ளை உள்ளூரிற் சிலகாலம் ஆரம்பக் கல்வி பயின்றபின் நொத்தாரிசு சிதம்பரப் பிள்ளை அவர்களிடம் எழுத்தாளராயிருந்த பின், 1895ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக் குச் சென்றவர்.
அவர் தமிழ் நாடெங்கும் சைவப்பிர் சங்கஞ் செய்தும், நூல்களுக்கு நுண்ணுரை எழுதிப் பதித்தும், அரியதொரு அகராதி தொகுத்தும் கண்டனங்கள் எழுதிப் பரப்பியும், நன்மாணவர் பலரை உரு வாக்கி விடுத்தும் பெரும்பணி புரிந்த வகையில் ஆறுமுக நாவலர் அவர்களுக் கும் அவருக்கும் ஒற்றுமைக் குறிப்புகள் சில அமைந்துள்ளன. கதிரைவேற்பிள்ளை தமிழும் சைவமும் வளர்த்ததோடு நன் மாணவரையும் பணிசெய்யப் பழக்கிய பான்மையை அன்னுரின் மாணவருள் ஒருவராய தமிழ்ப்பெரியார் திரு. வி. கலி யாணசுந்தர முதலியார் அழகாகவும் அமைவாகவும் எழுதியுள்ளார்.
முதன் முதல் எனக்குக் கல்விக் கண் திறந்தவர் யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி நா. கதிரைவேற் பிள்ளை. அவர்தம் பெரும் பொழுது சமயவாதங்களிலும் கண்டனங்கள் வரைவதிலும் செலவாயிற்று. குறிப் பிட்ட நேரத்தில் மாணுக்கர் அவரி டத்தில் தமிழ் பயிலுதல் இயல்வ தில்லை. ஒய்வு கிடைக்கும் எந்தநேரத் திலும் அவர் பாடஞ்சொல்வார். எவ்விடத்திலுஞ் சொல்வர். அவரது வாதப் பேச்சுக்களிலுந் தமிழ் மணங் கமழும், கலைமகள் நடம்புரிவள், மாணுக்கர் ஐயப்பாடுகள் பல நீங்கும்.
பிள்ளையவர்களின் பணி
பிள்ளையவர்கள் சென்னையிற்பலவிடங் களிற் சைவத் தொண்டும் தமிழ்த் தொண் டும் செய்துவந்தார்கள். அவற்றுட் சிறப் பாகக் குறிப்பிடத்தக்க இடங்கள் கந்த சுவாமி கோயில் வசந்த மண்டபமும் சிந்தாதிரிப்பேட்டை பரமேஸ்வரிகோயில்

க. சி. குலரத்தினம்
மண்டபமும் என்பர். இவ்விடங்களில் அவர் தணிகைப் புராணம், கந்தபுராணம், திரு. விளையாடற் புராணம் சொல்லிவந்தார்.
கலியாணசுந்தர முதலியார் முதலாய மாணவர்களும் பொதுமக்களும் பிள்ளை யவர்களின் பேச்சை இரண்டிடங்களிலும் கேட்டுப் பெரும் பயன்பெற்றனர். அவ ரின் பிரசங்கமேடை பல்கலைக்கழகங்களா கத் திகழும் என்றும், அவரின் சொன் மாரி வெள்ளத்தில் இலக்கியம், இலக்க ணம், தர்க்கம், சாத்திரம் முதலியன தேங்கும் என்றும், அத்தேக்கம் மாணுக் கர்க்குக் கலைவிருந்தாகும் என்றும் கலி யாணசுந்தரமுதலியார் எழுதியுள்ளார்.
சென்னை வெஸ்லி கலாசாலையில் uu nr 6õT மாணுக்கஞ யிருந்தபோது யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை யவர்களின் அன்புக்குரியவனுனேன். ஆங்கிலத்திற் பித்துக்கொண்டு திரிந்த எனக்குத் தமிழில் வேட்கையை எழுப் பியவர் அவரேயாவர். அவரிடம் நான் நெருங்கிப் பழகிவந்தபோது, பெரியபுராணத்தைப் படிக்குமாறும், நாயன்மார் வரலாறுகளை உரைநடை யில் எழுதி எழுதிப் பயிற்சிபெறு மாறும் அவர் எனக்கு அடிக்கடி சொல்லிவருவார். அவ்வாறே யான் பெரிய புராணத்திற் சிறுதேர் உருட்டி யும், சிற்றில் கட்டியும் விளையாடி வந்தேன். அவ்வப்போது அரும்பதங் களுக்கு உரை குறித்துக்கொள்வது முண்டு. நாயன்மார் வரலாறுகளை உரைநடையில் எழுதுவதுமுண்டு.
நாவலர் அவர்களுக்கு இளமைக் காலந் தொடக்கம் பெரியபுராணத்தில் பெரிய ஈடுபாடு இருந்தது. அது பேரபிமான மாய்ப் பெரும் பக்தியாய்க் கனிந்தது. அதனுல் அவர் அதனை அச்சிற்பதித்ததோடு அருமையான சூசனமும் செய்தார். அன்றி மாணவர்களும் பொது மக்களும் படித் தறியும் வண்ணம் பெரிய புராணத்தை உரைநடையில் எழுதியும் அச்சிட்டார்.

Page 217
நாவலரும் கதிரைவேற்பிள்ளேயும்
பெரியபுராணப் பைத்தியம், நாவல ரவர்கள் பரம்பரையில் படித்துவந்த கதிரைவேற்பிள்ளையையும் பற்றிக்கொண் டது. அதனல் அவர்தம் மாணவர் கலியாண சுந்தரஞர் பெரியபுராணத்தைப் பெரிதும் போற்றிப் படித்துக் குறிப்புரை எழுதிப் பதித்ததோடு நாயன்மார் திறம் என்ருெரு நூலையும் எளிய தமிழில் எழுதினர். தமது பெரியபுராணப் பதிப்பில் கலியாணசுந்தர ஞர் போற்காதத்தில் எழுதிய வாசகம் ஆறுமுகநாவலர் அவர்களையும், கதிரை வேற்பிள்ளை அவர்களையும் இணைக்கின்றது.
பெரியபுராணம் உபோற்காதம்
இத்துணைச் சிறப்பினையுடைய அருமருந் தன்ன இத் திருத்தொண்டர் புராண மூலத்தை பூரீலபூரீ ஆறுமுகநாவலர் பெரு மான் பிரதிக்கிணங்கப் பரிசோதித்து, அஃதுடன் அடியேனியற்றிய அரும்பதக் குறிப்புரையையும் வ ச ன த் தை யும் சேர்த்து, 1871ஆம் ஆண்டிலே அமிழ்தினு மினிய தமிழீழ நாட்டிலே அவதரித்து, அருட்பாவென்பது ஆறிருமுறையேயென அரச மன்றமேறிப் பசுமரத் தாணிபோ ஞட்டி, முன்னர்த் தில்லையம்பதியில் நடை பெற்ற திருமுறை மகோற்சவத்தை இக் காலத்து மக்கள் கண்டின்புற்றுய்ய அத் தில்லையினும் பிறபகுதிகளினும் இனிமை யாய் நடத்திக்காட்டி, 1907ஆம் வருஷத் திலே சிவனடி சேர்ந்த சதாவதானம் பூரீலபூரீ நா. கதிரைவேற்பிள்ளையவர்கள் ஞாபகசின்னத்திற்காக வெளி யி ட் டு தங்கள் குருபக்தியை விளக்கினர் எனது தமையனுர் திருவாரூர் வி. உலகநாத முதலியாரும், எனது கெழுதகை நண்பரும் உழுவலன்பரும் ஆகிய அ. சிவசங்கர முதலி ιμπO5ιb.
இங்ங்ணம் திருவாரூர் வி. கலியாணசுந்தரன்
திருமுருகாற்றுப்படையும் கதிர்காமக் கலம்பகமும்
நாவலர் அவர்கள் முருகப்பெருமானைக் குலதெய்வமாகப் போற்றிவந்தவர், அவர் குடும்பத்தில் தந்தையார் பெயர் கந்தப் பிள்ளை என்றும், மைந்தன் பெயர் ஆறு

207
முகம் என்றும் அமைந்துள்ளதைக் கொண்டு அறியலாம். நாவலர் குடும்பத் தாரை ஆட்கொண்டருளியவர் முருகப் பெருமான் என்பது நாவலரவர்களின் எழுத்துக்களால் அறியக்கூடியதாயிருக் கிறது.
நாவலர் அவர்கள் நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படையை 1851ஆம் ஆண்டில் உரையுடன் அச்சிட்டு வெளியிட்டவர். அதன் பல பதிப்புக்கள் தமிழ்நாட்டில் வெளிவந்தபின்னும், அதனைத் தாமறி யாதவர்போல் மகாமகோபாத்தியாயர் கலாநிதி ஐயா அவர்கள் 1887ஆம் ஆண்டில் எழுதிய நிலவில் மலர்ந்த முல்லை என்ற கட்டுரையில் எழுதியுள்ளார். அஃதாவது அன்ருெருநாள் 1887ஆம் ஆண்டில் நிலா வேளையில் தாம் ஏடு தேடிப் போனவழி யில் ஓர் ஏட்டுக் கட்டில் முல்லைப் பாட்டு என்று தொடங்கும் நூல் ஒன்றை விரித்த தாகவும், அது பத்துப்பாட்டென்றும் அதன்கண் திருமுருகாற்றுப்படை முதலாகப் பத்து நூல்கள் உளவென்றும் தாம் நாளடைவில் அறிந்ததாகவும் நல்லுரைக் கோவையில் நயம்பட எழுதியுள்ளார்.
திருமுருகாற்றுப்படையைப் பத்துப் பாட்டோடு பதிப்பித்த ஐயா அவர்கள் விடாக்கண்டராய்ச் சில பிழைகளைச் சரி யெனப்புரிந்து பதிப்பித்துள்ளார். முருக பெருமானின் கோழிக் கொடி ஏன்றடு விறற்கொடி அஃது அங்ங்னமாகவும் ஐயா அவர்கள் வென்றடு விறற்கொடி என்றே சாதிப்பர். அன்றிப் புலம்புரிந்துறையும் செலவு என்பதை புலம் பிரிந்துறையும் செலவு என்பர். நாவலர் அவர்களின் பதிப்பில் புலம்புரிந்து என்றேயுள்ளது. அதில் புலம் அறிவு.
கதிரைவேற்பிள்ளை அவர்களும் முருக உபாசன புரிந்த நாகப்பரின் மைந்தர், முருகப்பெருமானின் திருநாமத்தைப் பூண் டவர், முருகபக்தர். அவர் கதிர்காமக் கலம்பகத்தைப் பிழையறப் பதித்துப் பெரும் புகழ்கொண்டவர்.

Page 218
28
கந்தப்ப் சுவாமிகள் செய்தருளிய கதிர்காமக் கலம்பகம் என்னும் நூல் கறை யானரித்து மறைந்து விடாவண்ணம் பாதுகாத்துதவிய பெருமை கதிரைவேற் பிள்ளையவர்களுக்கே உரியது. நாவலர் அவர்களுக்குத் தமிழ்நாட்டுப் பெரியார் பலர் நூல்களை அச்சிடுவதற்குப் பொரு ளுதவி செய்தவாறே பிள்ளை அவர்களின் பணிக்கும் தமிழ்நாட்டுப் பெரியார்கள் பெரிதுமுதவினர். பிள்ளையவர்கள் கதிர் காமக் கலம்பகத்தை அச்சிடுவதற்கு ஆவன செய்துதவியவர், மதுரை பாதரக் குடி ஆ. சொக்கலிங்கம்பிள்ளை என்பவ ராவர். கதிரைவேற்பிள்ளையவர்களின் கதிர்காமக் கலம்பகப் பதிப்பைப் பாராட் டிப் பாடிய புலவர்களுள் பரிதிமாற் கலைஞன் என்னும் சூரிய நாராயண சாஸ்திரியாரும் ஒருவராவர்.
கந்தப்பர் செய்த கதிர்காமக் கலம்பகத்தைச் சந்தமொடு மச்சிட்டான் சால்புறவே-சந்ததமுங் கந்தனடி பேணுங் கதிரைவேற் பிள்ளையெனு மந்தமிழ்ப்பா வாணனினி தாய்ந்து,
கந்தபுராணமும் சுப்பிரமணிய பராக்கிரமமும்
நாவலரவர்கள் கந்தபுராணத்தில் பெரிதும் ஈடுபட்டுப் புராணப் பிரசங்கஞ் செய்தும் அதனை வசனநடையில் எழுதி யும் உதவிய பான்மையில் பிள்ளையவர்கள் தம்மைத் தடுத்தாட் கொண்ட தடங் கருணைப் பெருங்கடலாகிய கந்தசுவாமி யாரின் வல்லமையைக் குறிக்கும் சுப்பிர மணிய பராக்கிரமம் என்னுஞ் சைவாகமக் களஞ்சியத்தை எழுதினர்.இந்நூல் பிள்ளை யவர்கள் மறைந்த பின்னரே வெளி வந்தது.
உரை நயம்
நாவலர் செய்த உரைகள் பழைய உரையாசிரியர்கள் மரபில் அமைந்துள்ளன வாகும். கோயிற் புராணவுரை, சைவ சமய நெறியுரை, திருச்செந்திலந்தாதி யுரை, திருமுருகாற்றுப்படையுரை, மரு தூரந்தாதி யுரை, சிவதருமோத்தரவுரை

க. சி. குலரத்தினம்
முதலிய உரைகள் யாவும் பீடுபெற நில வும் உரைகளாகும்.
பிள்ளையவர்களும் இறுக்கமான உரை யெழுதுவதில் வல்லவராயிருந்தார். அவர் எழுதிய கூர்மபுராணவுரை. பழனித்தல புராணவுரை, திருவருணைக்கலம்பகவுரை, சிவராத்திரிப் புராணவுரை, நைடதவுரை என்பன் அவர் விரிவுரை எழுதும் ஆற்ற லைக் காட்டி நிற்கின்றன. பிள்ளையவர் களின் நைடதவுரை எண்ணுரறு பக்கங்கள் வரை பரந்ததாயினும் அவர் அதனை அடக்கவிலையாக இர ண் டு ரூபாவுக்கே விற்றதால் அது விரைவில் விற்பனையாகி ஆறு பதிப்புகளுக்குமேல் வெளிவரலா யிற்று.
நாவலர் அவர்கள் பேர்சிவல் பாதிரி யாருக்குப் பண்டிதராயிருந்தாற்போல, பிள்ளை அவர்கள் தமிழ்நாட்டில் ஆரணி சமஸ்தான வித்துவானுயிருந்தார். நாவ லர் அவர்கள் தாம் செய்யவிரும்பிய முழு. நேரச் சைவத்தொண்டு, தமிழ்த்தொண் டுக்கு ஆசிரியர் உத்தியோகம் தடையா யிருந்தது எனக் கருதி அதனை இடையில் பரித்தியாகஞ் செய்தார். பிள்ளை அவர்க ளும் அவ்வாறே தாம் கற்பித்துவந்த கலாசாலையின் தொடர்பை விட்டு முழு. நேரப் பணி புரிந்துவந்தார். நாவலர் அவர்களைப் படித்தவர்கள் பெரிதும் மதித்தவாறே பிள்ளையவர்களையும் பெரிய வர்கள் மதித்தார்கள். நாவலர் அவர்க ளுக்கு நன்மானுக்கர் பரம்பரை அமைந்த வாறே பிள்ளை அவர்களுக்கும் அஃது அமைந்தது.
நாவலர் அவர்களைப் பற்றித் தம் பேரனர் மூலம் நன்கறிந்த பழநி வேதா கம பாடசாலைத் தலைவர் காசிவாசி சித் தாந்த சரபம் ஈசான சிவாசாரியர் தமிழ் நாட்டிலும் ஈழநாட்டிலும் பயபத்தியுடன் பேசியவாறே; பிள்ளையவர்களைப்பற்றி நன் கறிந்த தத்புருஷதேசிகர் அவர்கள் அவ ரைப்பற்றி எங்கும் பேசுவது வழக்கமா யிற்று

Page 219
நாவ லரும் கதிரைவேற்பிள்ளையும்
சபைகள் உருவானவை v−
நாவலர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் அங்கும் இங்கும் சைவப் பாடசாலைகளும் சைவம் வளர்க்கும் பரி பாலன சபைகளும் உதயமானுற் போல, பிள்ளை அவர்களின் முயற்சியால் அங்கும் இங்கும் பல சபைகள் உண்டாகின. நாவலர் அவர்கள் சமூக நன்மையின் பொருட்டுத் தம்மவர் பிறர் என்று பார பட்சம் காட்டாது கண்டித்துத் திருத்த முனைந்தவாறே பிள்ளை அவர்களும் கண் டித்துச் சிலருடைய பகைமைக்கு ஆளா யினர். நாவலர் அவர்களைப் போல பிள்ளை அவர்களும் சொல்லின் செல்வராக விளங்கியமையால் இவர் பேசியவற்றைக் கேட்பதற்கு ஆயிரக்கணக்காக மக்கள் கூடுதல் வழக்கமாயிருந்தது.
நாவலர் அவர்களும் பிள்ளை அவர்களும்
நாவலர் அவர்களும் பிள்ளை அவர்க ளும் என்னும் தொடர்பில் இரு பெரும் நிகழ்ச்சிகள் அறியக்கிடக்கின்றன. முன் னர் ஆறுமுகநாவலர் அவர்கள், காராளர் என்பார் நான்காம் வருணத்தார் என்று எழுதியதைப் பின்வந்த படிப்பாளிகள் சிலர் மறுத்துக் காராளர் மூன்ரும் வரு ணத்தவரேயாவர் என்று பொருட்பட வருணசிந்தாமணி என்னும் நூல் எழுதிய தோடு நாவலர் அவர்களையும் யாழ்ப் பாணத்தாரையும் வெகுவாகக் கண்டித் திருந்தார்கள்,
பிள்ளை அவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்துக்குச் சென்றபோது இந்தப் பிரச் சினை சூடுபிடித்து பலப்பல விவாதசபைகள் சேர்ந்தன. தம்மை வந்து மொய்த்தவர் பலர் எழுப்பிய ஆட்சேபங்களுக்குச் சமா தானம் சொல்ல முற்பட்ட பிள்ளை அவர் கள் ஆறுமணி நேரமாக வேளாளர் நான் காம் வருணத்தவரே என்று அழுத்தந் திருத்தமாகப் பேசி முடித்தார். அங்ங்ன மாகவும் அதில் அமைதி பெருதார் அந்த நூலின் இரண்டாம் பதிப்பில் பிள்ளை அவர்களையும் வெகுவாகத் தாக்கி எழுதி வெளியிடுவாராயினர். இந் நூல் 800
25

209
பக்கங்கள் வரை வளர்ந்துள்ளது. அது
நிற்க.
திருவருட்பா
இராமலிங்க சுவாமிகள் என்னும் திரு வருட்பிரகாச வள்ளலார் பாடிய பாடல் களை ஒருசாரார் திருவருட்பா என்றனர், ஒருசாரார் அவை அருட்பாவாகா என் றனர். அருட்பா என்பவை பன்னிரு திருமுறைகளே என்று வைதிகர்களான அவர்கள் கருதினர். திருக்கோயில்களில் திராவிடவேதம் அருளிப்பாடுக என்று குருக்கள் சொல்லும்போது பாடவேண்டி யவை பன்னிரு திருமுறைகளே என்று நாவலர் ஆணித்தரமாகக் கூறினர்.
தம் சீடர்கள்மீதும் பாடல்கள் திரு வாய்மலர்ந்த இராமலிங்க சுவாமிகளின் பாடல்களைத் திருமுறை வரிசையில் சரியா சனம் வைக்க நாவலர் விடவில்லை. பக்திச் சுவை ததும்பும் ஓசை நயமுள்ள் இனிய பாடல்கள் தமிழில் ஆயிரக்கணக்காகவுள் ளன. மீனுட்சிசுந்தரம்பில் ளை அவர்கள் பாடிய தலபுராணங்களிலுள்ள உருக்க மான பாடல்களை அவ்வத் தலங்களிலேயே திருமுறைகளுக்குப்பதிலாக எவரும் பாடுவ தில்லை. அவ்வாருக இராமலிங்க சுவாமி களின் புதிய பாடல்களுக்குத் திருவருட்பா என மகுடமிட்டுப் பாடுவதை நாவலர் விரும்பவில்லை. பக்திப் பாடல்களைக் கேட் டுருகும் பான்மையுள்ளவர் அவர். அது வேறு. தாம் தமது சிவபூசையில் ருே ஜா மலரிட்டுப் பூசிக்கும் வழக்கம் உள்ளவ ராயினும் புட்பவிதியை அவர் புதுக்கிப் பதிக்கவில்லை. புட்பவிதியில் ருேஜா மல ரைப் புகுத்தவில்லை.
கோபாலகிருஷ்ண பாரதியார்
நாவலருக்கு வித்துவக்காய்ச்சல் ஒரு போதும் வந்ததில்லை. அவர் காலத்தில் வாழ்ந்த பக்திமானுய கோபாலகிருஷ்ண பாரதியரிர் பாடிய நந்தன் கீர்த்தனைகளை அவர் ஒருநாள் கேட்டு நெஞ்சம் உருகி யவர், ஒருசமயம் அவர் சிதம்பரத்தில் அர்ச்சனைசெய்து வணங்கி மீண்ட வழியில்

Page 220
210
கோபாலகிருஷ்ண பாரதியார் பாடிக் கொண்டு நின்ருர், மார்புக்கு நேரே கைகளை நீட்டியவாறு பாடிக்கொண்டு நின்றவரின் பாட்டைக் கேட்டுருகித் தாம் கொண்டு மீண்ட பிரசாதத்தையும் மடியி லிருந்த வெள்ளி நாணயங்களையும் அவர் கோபாலகிருஷ்ண பாரதியாரின் கைகளி லிட்டுத் தலைசாய்த்துத் தம்வழியே மீண்ட நாவலர் எவர் பாடலையும் வெறுக்கவில்லை.
இராமலிங்க சுவாமிகள்
நாவலர் நல்லவரென்முல் இராம லிங்க சுவாமிகளின் பாடல்களைக் கண்டித் தமை ஏன் ? பொருமையா? வித்துவக் காய்ச்சலா ? அன்று, அன்று. பின் எதற்கு? கொஞ்சம் அவதானியுங்கள். சுவாமிக ளின் சீடவர்க்கத்தில் சிலர் ஒருவிதமான வர்கள். அவர்களைப்பற்றிச் சுவாமிகளே என் சீடர் மிகக் கொடியர் என்று பாடி யுள்ளார். தம் சீடர்களைத் தடுத்தாட் கொள்ளத் திடநெஞ்சமில்லாத சுவாமிகள் சீடர்களின் கைப்பொம்மையாகியிருந் தார். தலையிருக்க வாலாடிய வகையில் சீடர்கள் வால் காட்டத் தொடங்கி ஞர்கள்.
சுவாமிகளின் சீடர் செத்தவரை எழுப்ப வல்லவர் எங்கள் குருநாதர் என்று பிரசாரஞ் செய்தபோது கிறிஸ்தவர்கள் வெகு அவதானமாக நோக்கினர். செத் தவர் எவரும் உயிர்பெற்று எழுந்திராமை கண்ட அவர்கள், இப்படித்தான் சைவ நாயன்மாரும் அற்புதங்கள் செய்தார்கள் போலும் என்று கூறினர்கள். அந்தவேளை யில் நாவலர் பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் கவாமிகள்பக்கம் திரும்பினுர் கள். கண்டித்தார்கள்.
வழக்கு
நாவலரின் கண்டனத்தைக் கேட்டவர் களும் படித்தவர்களுமான சீடர்கள் தங் கள் குருநாதனைப் பேரம்பல மண்டப் த் துக்கு இட்டுச் சென்று நாவலரைத் தாக் கிப் பேசச் செய்தார்கள். பேச்சின் போக் குத் திசைதிரும்பி ஊத்தை வசனங்களாய் நிந்தனையாய் அமைந்தன. நாவலர் என்ற பட்டத்தின் பொருளேசிதைந்தது.நாவால்

க. சி. குலரத்தினம்
அலர் தூற்றவல்லார் என்றும் திரித்தனர். இது நிகழ்ந்தது 1869ஆம் ஆண்டு ஆனி உத்தர உற்சவத்தின்போதாகும். இதற் குள் சிதம்பராலயத்துத் தில்லைமூவாயிரவர் மரபில் வந்த தீட்சிதர்களுக்குள்ளேயே சிவதீட்சை யில்லாதாரும், பூசைக்கிர மத்தை அறியாதாரும் பதஞ்சலி முனிவர் செய்த பத்ததியைப் படியாதாரும் இருந்த ତot nf. சைவப்பிரசாரகராகிய நாவலர் இவற்றைத் திருத்தவும் முயன்றுகொண் டிருந்தார். தீட்சிதர்களுள் ஒருவர் ஆடு களை வெட்டிக் குவித்து வேள்வி செய் யவும் முற்பட்ட துண்டு. இவற்ருல் தீட்சிதர் சிலர் நாவலரை வெகுவாகப் பகைத்ததுண்டு. அவரை அடித்து முரித்து விடுவதற்கும் கோபுரவாயில் கொடுங் கதவுக்குள் நசித்து விடுவதற்கும் தாம் ஆயத்தம் என்றும் அச்சுறுத்தினர்கள். அவர்களுக்குச் சுவாமிகளின் சீடர்களும் தூபமிட்டார்கள். இந்நிலையில் நாவலரின் அபிமானிகள் நாவலரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு தூண்டினர்கள். நிலைமை மோசமாயிருந்ததால் வழக்கைத் தொடர்ந்தார். அடித்து முரிப்பேன் என்ற தீட்சிதர் சபாநடேசர் முதலாம் எதிரி. அவதூருகப் பேசிய சுவாமிகள், இராம லிங்கர் இரண்டாம் எதிரி.
வழக்கைத் திசைதிருப்புவதற்கு எதிரி கள் செய்த தந்திரோபாயங்கள் நீதி மன்றத்தில் செல்லுபடியாகவில்லை. தீட்சி தருக்கு ஐம்பது ரூபா குற்றம் விதிக்கப்பட் டது. அதைக் கட்டத் தவறின் அவர் ஒரு மாத காலம் சிறைபோதல் வேண்டும் எனத் தீர்க்கப்பட்டது. இரண்டாம் எதிரி யாய சுவாமிகள் அப்படி எதுவும் தாம் பேசவில்லை என்று சொன்னதும், நாவலர் தம்மை நிந்தித்துவிட்டு நிந்திக்கவில்லை என்று சொல்பவர் மீது வழக்கில்லை என் றதும் நீதிபதி பெருந்தன்மையாக அவரை விடுதலைசெய்தார் என்ப.
கதிரைவேற்பிள்ளை அவர்கள்
நாவலர் அவர்களைப் போலத் தமிழ்
நாட்டில் நல்லோர்களால் அபிமானிக்கப் பெற்ற பிள்ளை அவர்களுக்குப் பிரதேசங்

Page 221
நாவ லரும் கதிரைவேற்பிள்ளையும்
கள் தோறும் கற்றறிந்தோர் தங்கள் அட மானங்காரணமாக ஆராமையோடு பட டங்கள் சூட்டி மகிழ்ந்தனர். மாயாவா தும்சகோளரி, அத்து வித சித்தாந்: மகோத்தாரணர், நாவலர், பண்டிதர் மகாவித்துதான், பெருஞ்சொற் கொண் டல் முதலான பட்டங்கள் அவர் பிரசங் மாரி பொழிந்து சைவவான்பயிர் வளர்த் போது வழங்கப்பெற்றனவாகும். அவ திருநீறு, உருத்திராக்கம் ஆகிய சிவ சின் னங்களின் மகிமையைப்பற்றித் தொட பாக மூன்று மாதகாலம் பேசியபோது வைணவர்களும் கேட்டிருந்தனர் என்ப.
இங்ங்ணம் பிள்ளையவர்கள் சைவச, யத்தின் மகத்துவத்தைப் பற்றிப் பன்மு. மாகப் பேசிவந்த காலத்தில், சண்ட மாருதம் சோமசுந்தரநாயக்கருக்குப் பின் சைவத்திறன் பேசியவர் இவரே என்று பலருங் கொண்டாடிஞர்கள். பிள்ளையவர் கள் பேச்சிலும் எழுத்திலும் சைவப் கமழ்ந்தது. அந்நாளின் அருட்பா என்ருள் பன்னிரு திருமுறைகளே யன்றி வேறெட பாடல்களுமல்ல என்று பேசியும் எழுதி யும் வந்தார். இவற்றைக் கவனித்த ஒரு சிலர் வேண்டுமென்று முல்லா வீதி என் னும் இடத்தில் ஒருசபை கூட்டி, இராப லிங்கசுவாமி என்னும் திருவருட் பிரகாச வள்ளலார் அவர்களின் பாடல்கள் அருட்பா என்றும், அவர் ஐந்தாம் குரவரி என்பதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், அவரின் அற்புதப் பாடல்கள் ஐந்தாம் வேதம் என்றும் பேசிப் பிரசாரஞ் செய்துவந்தார்கள்.
சைவப்பெரியார்களின் ஆர்வம்
முல்லா வீதியினரின் முயற்சி யை அறிந்த சைவப்பெரியார்கள் பலர், பிள்ளை யவர்களிடம் முறையிட்டு, எதிரிகளைத் தலைகுனியவைத்தல் வேண்டும் என்றும் சைவத்திருநெறிப் பன்னிரு திருமுறை களைப் பற்றி சாங்கேபாங்கமாக எ6 லோரும் கேட்டின்புறுமாறு பேசுமாறுட வேண்டி அவர் இசைவு பெற்றுப் பெரு விழாவெடுத்தனர். அவ்விழாவில் பிள்ளை

5
2.
அவர்கள் விசுவரூபம் எடுத்தாற் போல்
வீரந்ததும்ப எழுந்து நின்று திருமுறை களைப்பற்றி மணிக்கணக்காகப் பேசினர்.
பேச்சின் இடையே அருட்பா என்ருல் என்ன மருட்பா என்ருல் என்ன என்று வரை விலக்கணம் வகுத்துப் பேசிய போது இராமலிங்க 36numtólags Grifflesör untL-6ãiv&ssair மருட்பாவே என்று பல ஆதாரங்களோடு பேசி விளக்கினர். முப்பத்தைந்து ஆண்டு களுக்கு முன் நாவலர் அவர்கள் பேசிய பான்மையில் மருட்பா என்ருல் என்ன என்று விளக்கிப் பேசினுர்.
பிள்ளை அவர்கள் பேசியதை வாய்ப் பாகக் கொண்டு இராமலிங்க சுவாமிகளின் நெருங்கிய உறவினரான தனராய வடி வேற்பிள்ளை என்பார். பிள்ளை அவர்கள் மீதும், அவர் நண்பர் பாலசுந்தர நாயக் கர் என்பார் மீதும் 1904ஆம் ஆண்டு யூன் மாதத்தில் சென்னை பொலிஸ் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவ் வழக்கின் இலக்கம் 24533/1904 என்று அறியக் கிடக்கிறது.
இந்த நூதனமான வழக்கில் எதிரிக ளான பிள்ளையவர்கள் பக்கத்தில் வழக்கை நடத்துவதற்குச் சட்டத்தரணிகளான பிரம்மபூரீ விசுவநாத சாஸ்திரியார், பிரம்மபூரீ ராமசாஸ்திரியார் என்னும் வைதிகர்கள் இருவர் முன்வந்தார்கள் இவ் வழக்கை ஆறுமாத காலம் விசாரித்த நீதிபதி கனம் அஜிஜ"டின் சாயபு பஹதூர்
என்பவராவர்.
இவ்வழக்கின் விசாரணையின்போது பிள்ளை அவர்களின் மதிநுட்பத்தால் தத் துவ போதினி, தத்துவ விவேசிணி, தத்துவ விசாரிணி, தினவர்த்தமாணி, சுகிர்த வசனி, ஞானபானு, அற்புதப்பத்திரிகை, வர்த்தமான வி ம ர் சனி, திராவிடப் பிரகாசிகை, பாவலர் சரித்திர தீபம் முதலிய வெளியீடுகள் மேற்கோளாகப் படிக்கப் பட்டன. வழக்கு 1904ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 21ஆந் தேதி தள்ளப்பட்டது.

Page 222
22
வழக்கில் பிள்ளையவர்கள் வெற்ற பெற்றதோடு அருட்பா என்ருல் சைவத் திருநெறிப் பன்னிரு திருமுறைகளே என் பதும் நிரூபிக்கப்பெற்றது. பிள்ளையவர் களும் அலர்தம் நண்பர்களும் இதனைப் பெரிய பேருக மதித்து அடுத்துவந்த ஞாயிற்றுக்கிழமை முத்துக்குமாரசுவாமி கோயிலில் பெருவிழா வெடுத்துப் பன்னிரு திருமுறைகளை ஊர்வலமாக எழுந்தருளச் செய்தார்கள்.
பிள்ளையவர்களின் மாணவர்களின் உத்தம மாணவர்களாகிய திரு. வி. உலக நாத முதலியாரும் அவர் தம்பியார் திரு. வி. கலியாணசுந்தரமுதலியாரும் இவ் விழாவில் பெரும் பங்குபற்றியதோடு, உலகநாத முதலியார் திருவருட்யா விஜய நாமாவளி என்னும் பிரசுரம் ஒன்றை வெளியிட்டு எல்லோருக்கும் இலவசமாக வழங்கினர்.
இவ்விழாவை முன்னின்று நடத்தி யவர் கந்த மடத்துத் தம்பையா உபாத்தி யாயர் என்னும் சுவாமிநாத பண்டித ராவர். இவரே பன்னிரு திருமுறைகளுள் தேவாரத் திருமுறைகள் ஏழையும் அடங் கன் முறை என்னும் மகுடமிட்டுத் தல வரலாறு முதலிய சிறப்புக்களுடன் சுத்தப் பதிப்பாக முதன்முதலில் வெளியிட்டவர். இவர் வடகோவைச் சபாபதி நாவலர் அவர்களின் அரிய நண்பராயுமிருந்து, அவர் திருவாவடுதுறையில் பெருஞ் சிறப் புற்றிருந்த காலத்து அவருதவியுடன் சிவ ஞானபடியம் என்னும் சிவஞானபோதப் பேருரையையும் வெளிவர உழைத்தவர். இவர் 1934ஆம் ஆண்டில் மறைந்தபோது இலக்கிய கலாநிதி, பண்டிதமணி கணபதிப் பிள்ளை அவர்கள் கண்கலங்கிப் பாடிய பாடல்தான் முந்நூறடிக்கும் அதிகமான இரங்கற்பாவாகும். நிற்க.
பிள்ளை அவர்கள் அருட்பாவென்முல் பன்னிரு திருமுறைகளே என்றதை நீதி மன்றம் வரை விளங்கவைத்து விழா வெடுத்த வைபவத்தைத் தமிழ்ப்பெரியார் திரு. வி. கலியாணசுந்தர முதலிார் அழ

க. சி. குலரத்தினம்
காகப் பாடியுள்ளார். அப்பாடலின் ஒரு பகுதியாவது படித்தல் அமைவுடைய தாகும்,
மன்னவர் நீதி மன்றினி லேறிப் பன்னிரு முறையே உன்னருட் பாவென ஆணி பசுமரத் தறைந்தா லென்னக் காட்டிச் சாத்திரம் நாட்டின னெவனுே சிற்றம் பலத்திலும் மற்றத் தலத்திலும் வளவன் நடாத்திய வளமார் திருமுறை விழாவை இந்நாள் வளாமல் நிகழ்த்தி உண்மை யருட்பா வன்மையை முன்போல் எங்கணும் பரப்பிய கங்கணன் எவனுே. இத்தகை புகழ் பூத்த பிள்ளையவர்களைக் குருவாகக் கொண்ட திரு. வி. க. தாம் பதித்த பெரிய புராணத்தைத் தமது குருவுக்குக் காணிக்கையாகச் சமர்ப்பித் துள்ளார்.
வெற்றியின் மேல் வெற்றி
அருட்பாவழக்கில் பிள்ளை ய வ ர் கள் வெற்றி பெற்று விழா வெடுத்தபோது, வழக்கில் தோல்வி கண்டவர்கள் தோல் வியை ஒப்புக்கொள்வதற்கு நாணி உயர் நீதிமன்றத்தை நாடினர். அவர்கள் செய்த 143ஆம் இலக்க அப்பீல் 21-11-1905 இல் விசாரிக்கப்பட்டது. அதனை ஆங்கிலேயப் பிரபுக்களான இருவர் விசாரித்தார்கள். அவர்கள் நீதியரசர் மூர் என்பாரும் நீதி யரசர் பென்சன் என்பாருமாவர். அவர் கள் அப்பீலில் எவ்வித ஆதாரமும் இல்லை என்று எழுதி அதனைத் தள்ளிவிட்டார்கள். அதனல் திருமுறைகளே திருவருட் பாக் கள் எனப் பீடுபெற்று நிலவுவனவாயின.
வருண சிந்தாமணி
வேளாளர் என்னும் வருணத்தார் யாவர் என்பது பற்றிப் பத்தொன்பதாம் நூற்ருண்டின் இறுதிக்காலத்திலும் இருப தாம் நூற்ருண்டின் ஆரம்ப காலத்திலும் ப்டித்தவர் மத்தியில் பெரிய பரபரப்பை உண்டாக்கிவந்தது. வேளாளர் மூன்றம் வருணத்தார்,என்றும் நான்காம் வருணத் தார் என்றும் இருசாரார் வாதிட்டுப் பெரிய கட்டுரைகளும் கண்டனங்களும்

Page 223
நாவலரும் கதிரைவேற்பிள்ளையும்
எழுதினர். வேளாளர் மூன்ரும் வருணத் தார் என்பதை விளக்குமுகமாகக் கடலூர் கனகசபைப்பிள்ளை என்பார் 1901 இல் வருண சிந்தாமணி என்ருெரு பெரியநூலை வெளியிட்டிருத்தார். அதில் வேளாளர் நான்காம் வருணத்தார் என நிகண்டில் வெளியிட்ட ஆறுமுக நாவலர் அவர்களை யும் கிண்டலாகக் கண்டித்திருந்தார்.
கதிரைவேற்பிள்ளையவர்கள் 1899ஆம் ஆண்டிற் பதிப்பித்த பெயரகராதி என் னும் நூலில் வேளாளர் சூத்திரர் என்று பதித்திருந்தார். இதனைப் படித்தவர்கள் சிலர் பிள்ளை அவர்களையும் கண்டித்து ** இவர் ஈழநாட்டுச் சூத்திரராதலின் அவ்வாறு பொருள்கொண்டனர் போலும் என்றும், இ ன் னு ம் பலவிதமாகவும் கிண்டல் செய்தனர். பிரபஞ்ச மித்திரன், பூலோக நண்பன் முதலாய பத்திரிகை களில் கண்டனங்கள் வெளியிட்டனர். அவை வாய்ப்பூட்டு, சர்வாங்கப் பூட்டு முதலிய தலையங்கங்களிலும் வெளிவந்தன.
மலைநாடு வேழமுடையது என்றும், சோழநாடு சோறுடையது என்றும் எழுதி யவர்கள் ஈழநாடு மதுவுடையது, கள் நிறைந்தது என்றனர். ஈழநாடு நீசர் வாழ்ந்த நாடு என்றனர். **யாழ்ப் பாணத்தில் வாழ்கின்ற யாவரும் வரும் பழிபாவ மஞ்சார், மாந்தரை மயக்கி வருவாய் தேடி வாழ்வதே மற்றவர் வழக்கமாமால் ' என்பன போன்ற அடி
சான்றதாரங்கள் :
நாவலர் பிரபந்தத் திரட்டு ஆறுமுகநாவலர் சரித்திரம் - ஆறுமுகநாவலர் - பண்டிதமணி நாவலர் மாநாடு மலர் - 196 நாவலர் குருபூசை அறிக்கை6, நா. கதிரைவேற்பிள்ளை-திரு. அரசவனத்து அறநிலையம்-திரு வருண சிந்தாமணி-கனகசடை
9. செந்தமிழ்ச் செம்மல்-க. சி.

213
களைக்கொண்ட செய்யுள்களைப் பாடி நிந்தித்தனர். முன்னர் வெளிவந்த வருண சிந்தாமணியின் இரண்டாம் பதிப்பில் விவகாரகாண்டம் என்னும் பகுதி முழுவ தும் யாழ்ப்பாணத்தாரை வைத பாக மாகும்.
இன்னும் வருணசிந்தாமணி விவகார காண்டம் என்னும் பகுதி முழுவதும் ஆறுமுகநாவலர் அவர்களையும், கதிரை வேற்பிள்ளையையும் துஷித்துத் திருப்தி கண்டதோடு, நாவலர் அவர்கள் தொழு வூர் வேலாயுத முதலியாரவர்கள் விடுத்த குதக் காரண்ய நாச மகாபரசு என்னும் வெளியீட்டாலும் பிள்ளை அவர்கள், கூடலூர் கனகசபைப்பிள்ளை வெளியிட்ட வருணசிந்தாமணியாலும் வாயடங்கினர் என்றும் சொல்லியின்புற்றனர்.
நாவலர் அவர்களைப் போலவே பிள்ளை அவர்களும் மகநட்சத்திரத்தில் மறைந்த தாக அறியக் கிடக்கிறது.
“கார்த்திகைமாதத்துமகங்காசினிக்குச் சைவகிலை சேர்த்திப் பரசமயஞ் சேதித்துச் - சீர்த்திமிக
மேவுதமிழ் தந்தகந்த வேணல்லூ ராறுமுக நாவலர்வீ டுற்றதிரு நாள்.”
* பன்னு பரபவத்துப் பங்குனிப்பதின்மூன்றில் மன்னுமுதற் பக்கஞ்சேர் மாமகத்தில்-மன்னு கதிரைவேலன்றதைக்கான்மலர்க்கீழ்ச்சேர்ந்தான் கதிரைவே னுவலவன் காண்.”
னகரத்தின உபாத்தியாயர்
சி. க.
9
சிதம்பரம்
வி. க. வாவடுதுறை ஆதீனம்
'96ir2T
குலரத்தினம்

Page 224
நாவலரும் சோமசுந்தரப்
வை. வரதராஜப்பெருமா
இலங்கையின் சைவ அறிஞரிடத்தும் தமிழறிஞரிடத்தும் நாவலர் பெருமானின் பணிகளும் கொள்கைகளும் கொண்டுள்ள ஆட்சி, பலரும் ஏற்றுக்கொள்ளும் ஓர் உண்மையாகும். நவாலியூர் சோமசுந்தரப் புலவரிடத்து (1880-1953) நாவலரவர் களின் கொள்கைகளும் நூல்களும் எத் தகைய தாக்கத்தை ஏற்படுத்தின என் பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். புலவரவர்களின் வாழ்க்கையை மூன்று கூறிட்டு நோக்கலாம். இளமைக் காலம்; ஆசிரியத் தொழில் செய்த காலம்; பிற்காலம் என்ற இம் மூன்று காலப் பகுதி களிலும் நாவலர் அவர்களின் கொள்கை கள் அவரது இலட்சியங்கள் ஆகியன எவ்வாறு புலவரவர்களை ஆட்கொண்டிருந் தன என்பதை ஆராய்வோம்.
புலவரவர்கள் ஆரம்பத் தமிழ்க் கல்வியைத் தன் தந்தையாரிடமே பெற் ருர் . இதை அவர்தம் தந்தையார் மறைந்த போது அவருக்கு நன்றி மறவாக் காணிக் கையாகச் செய்த தந்தையார் பதிற்றுப் பத்து என்னும் நூலிற் காணலாம். புலவ ரின் தந்தையார் திரு. ஆ. கதிர்காமர். சில காலம் அரசசேவையில் இருந்து பின் னர் வாணிபம், விவசாயம் ஆகிய தொழில் களை மேற்கொண்டவர். இலங்கையின் பல பாகங்களுக்கும் வியாபார நிமித்தம் சென்று வந்தவர். இவர் சிங்களத்திலும் சிறிது பரிச்சய முடையவர். ** சேர்ந்தார்க்குச் செவ்விளநீர் போலினிக்கும் சிங்களவர்'

புலவரும்
எனச் சிங்களமக்களைப் பாராட்டிக் கூறுவ ரென்று புலவரவர்கள் கூறுவதுண்டு. கதிர் காமர், நாவலர் பெருமான் காலத்தவர் ; அவரிடத்து மிகு ந் த பக்தியுடையவர். தொழில் காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வெளியே செல்லாத சமயங்களில் நாவல ரவர்களின் பிரசங்கங்களைத் தவழுது கேட்டு வந்தவர், தந்தையாரிடமிருந்தே நாவலர் பெருமானைப் பற்றிப் புலவர் முதன்முதல் அறிந்தார். இதைப் புலவர் தந்தையார் பதிற்றுப் பத்தில் பின்வருமாறு கூறுகின்ருர்
சைவமுந் தெய்வத் தமிழும்கன் கோங்கச் செய்தவப் பயனுய்த் திருவுருக் கொண்ட பூமலி மெய்ப்புகழ்ப் புண்ணிய மூர்த்தி நாவலர் பெருமான் நல்லுரை எடுத்தே ஆவலோ டெங்கட் கறைபவ ரினியார்
நாவலரவர்கள் கடும் பஞ்சத்தின் போது கஞ்சித்தொட்டித் தருமம் செய்த தும், கொள்ளைநோயின்போது யாழ்ப்பா ணக் குருநகர்ப் பகுதியில் அரச அதிகாரி களின் கெடுபிடியால் வாடிய மக்களுக்கா கப் பேசியதும், நிவாரண வேலைகளிற் தானே ஈடுபட்டு உதவியதும் போன்ற பல கதைகளையும் தந்தையாரிடம் கேட்டறிந் தார், புலவரின் தந்தையார், நாவலரவர் கள் செய்த பல பொதுத் தொண்டுகளை அறிந்தவர்; அவருடைய அஞ்சாமை நேர்மை முதலிய பெருங்குணங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர். நாவலரவர்

Page 225
நாவலரும் சோமசுந்தரப் புலவரும்
கட்கு அக்காலத்திலிருந்த சில பெரும் உத்தியோகத்தர்களும் கோயிலதிகாரிக ளும் செய்த கொடுமைகள் பற்றிய கதை கள் புலவர் அவர்களின் மனதை நன்ருக உருக்கிவிட்டன. இதே நேரத்தில் பிறி தொரு உண்மையையும் அவர் தந்தையார் சொன்ன கதைகளிலிருந்து அறிந்தார். யாழ்ப்பாணத்துக் கிறிஸ்தவமக்கள் மத குருமார் உட்பட, நாவலரிடத்து உள்ளுற நல்லெண்ணமும், மதிப்பும் வைத்திருந் தனர் என்பதும் அவர்கள் சமயச் சார்பில் லாத ஏனைய பொதுத் தொண்டுகளில் நாவலருடன் ஒத்துழைத்து வந்தனர் என் பதுமே அதுவாகும். பெஞ்சமின் சந்தியாகு பிள்ளை போன்ற நாவலர் காலத்துக் கிறிஸ் தவப் பிரமுகர்கள் பலர் நாவலருக்குப் பல பொது விடயங்களில் ஆதரவாகவும் துணையாகவும் இருந்தனர். இக் கதைகள் சைவசமூகத்தில் மேல்தட்டு மக்களிடையே நிலவிய (இன்றும் நிலவிவரும்) ஆஷாட பூசித்தன்மையையும் சுயநலத்தையும் புலவ ரறியச் செய்தன. இவற்றின் பிரதி பலிப்பைப் புலவர் பாடிய நாவலர் அஞ்ச லியிற் பல இடங்களிற் காணலாம்.
வஞ்சக மனத்தார்க் கஞ்சா உரனும்
மாற மனநிலையும்
செஞ்சொலரங்கின் மஞ்சின் முழங்கிச்
சேரா ருளங்கூரச் செப்பிடு மதுரச் சற்பிர சங்கத்
திப்பிய நாவலமும் விஞ்சு மதிப்பும் நெஞ்சி னினைக்கின்
வேறெவருக் குண்டோ மேவல ருட்கும் மேன்மை யொழுக்கம்
மேவிய பாவலனே.
தன்னவரும் பிறருமென்று சாராமே
நடுவுநிலை சார்ந்து நின்றே அன்னவர்கள் வழுவியவை யஞ்சாது
வெளிப்படுத்தி யறிவை யூட்டு முன்னவனே தமிழ்மக்கள் முதுநிதியே
கற்பகமே முடியாக் கல்வி மன்னவனே யெனவாழ்த்த வந்துதித்த நாவலன்ருள் வாழி வாழி.

- -۰۰--~~~~حسس----- x - سس۔س--سیہ... ہے۔--سب--عتسسہ..................,,
215
இவருடைய இளமைக் காலத்திலே, உயர்கல்வி கற்கவேண்டிய பருவம் வந்த போது, இவரது தந்தையார் நோய்வாய்ப் பட்டமையால் வியாபாரம் குன்றி வறுமை வந்தது; இவருடைய உறவினர்கள் சிலர் மேற்கல்விக்காக மதம் மாறியிருந்தனர். இந்த வழியைப் பின்பற்ற புலவரவர் களுக்கு எள்ளளவேனும் உடன்பாடில்லை; இக்காலத்திற்றன் புலவருக்குக் குருவரு ளும் கிட்டிற்று. குருவின் சந்திப்பின் பின் னர் வெறும் ஆசாரங்கள், வேடங்கள், கிரியைகள் பாலிருந்த பிடிப்பு விடுபட் டது. இவ்விடத்தில் ஆழ்ந்த மனிதாயதம், சகிப்புத்தன்மை, கடின உழைப்பு என்பன மேலோங்கி நின்றன. இவருடன் சேர்ந்து குருவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற் ருெருவரும் நவாலியில் இருந்தார். இப் பெரியார் அக்காலத்தில் உரிமை மறுக்கப் பட்ட சமூகத்தவராயிருந்த போதிலும் குருவின் சந்திப்பின் பின் ஆயரா முயற் சியுடையவராய் சித்த வைத்திய சாத்தி ரத்தைக் கற்றுச் சிறந்த வைத்தியராய்த் திகழ்ந்தார். இச் சம்பவங்கள் போலி ஆசாரக் கொள்கைகளில் புலவரைச் சிக்க விடாது காப்பாற்றி விட்டன. கல்வியும் வாழ்க்கை வசதிகளும் மறுக்கப்பட்டத ணுற்ருன் உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கீழ்நிலையடைந்தார்கள் என்பது புலவரின் உறுதியான கருத்து, இதனை அவரியற்றிய உயிரிளங்குமரன் நாடகத்தில் ஒரு பாத் திரத்தின் மூலம் வெளியிடுகின்கிருர்,
தீண்டாத சாதி நாமென்றே-எம்மைச் சேராது விடவேண்டாம் ஆண்டைமாரே ஆண்டவனுர் படைப்பில்-நாங்கள்
அரியபடைப் பாம்ஐய ஆண்டைமாரே
புலையரென்று எமைத் தள்ளுவீர்-கல்வி
புகட்டாது விட்டதனுற் புலையரானுேம்
உலைவிலாக் கல்வி பெற்றேமேல்-நாங்கள் உம்மைப்போ லாசார முடையராகுவோம்?
ஏரி னுழுத லுண்டி யுதவும் நூலி நெசவு சீலை யுதவும் ஒன் றுயர்ந்த தொன்ற தல்ல.

Page 226
26
இவ்வாறே பாரம்பரியமான முறை களை அச்சொட்டாக ஏற்கும் முறையினின் றும் இவர் மாறுபட்டு நின்றர். சைவ விஞ விடையிற் சொல்லப்பட்டவைகளையெல் லாம் அதிற் சொன்னபடியே கொள்ள வேண்டும் என்ற கருத்து புலவருக்கு உடன் பாடில்லை. ஆயினும் வெளிப்படையாக அக்கருத்தை வெளியிட அவர் விரும்ப வில்லை. காரணம், நாவலர் பெருமானைச் சமய குரவர் நிலையில் வைத்துப் போற்றி வந்தமையேயாகும்.
நாவலர் சமய ஆசாரங்களையும் விதி க்ளையும் எழுதும்போது தனது சொந்தக் கருத்துக்களின்படி அவற்றை மாற்றியோ, திருத்தியோ எழுதமாட்டா ரென்றும், சாஸ்திரங்களில் இருந்த வாறே எழுதி விடுவார் என்றும், அவ்வாறு அவர் செய் தமைக்குக் காரணம் விதிகளில் மாற்றங் களைச் செய்யத் தாம் அருகரல்ல என்று நாவலரவர்கள் நினைத்தமையே என்றும் புலவர் கூறுவர். மேலும் ** சமயமே சாதியிலும் உயர்ந்தது ' என்று நாவல ரவர்கள் கூறியதையும் புலவர் கூறுவர். ஆயினும் சீர்திருத்த விடயங்களில் சைவ விணுவிடை முதலியவற்றில் நாவலர் கூறிய வற்றை, நாவலரின் சொந்தக் கருத்துப் போற் கொண்டு காலத்திற் கொவ்வாத முறையில் விதண்டாவாதம் செய்யும் வைதிகர்களைக் கண்டு புலவர் மிகவும் பயந்தார். இவர்களை எதிர்த்து நிற் காது ஒதுங்கிக்கொண்டது ஒரு பெருங் குறையே. ஆயினும் அவர் மனத்தில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது என்பதை அருகிருந்தோர் அறியமுடிந்தது.
புலவருக்குப் பதினெட்டு வயதாகும் போது, வட்டுக்கோட்டையில், அம்பல வாண நாவலர் (1855-1932) முதலிய பெரியார்கள், சைவப்பிள்ளைகள் படிப்ப
தற்காக ஆங்கிலப் பாடசாலையொன்றை"
நிறுவ முயற்சியெடுத்து வந்தார்கள். பாடசாலைக்கு முதல்வராக திரு. சின்னத் துரை என்னும் ஆசிரியர் பொறுப்பேற்

வை. வரதராஜப்பெருமாள்
றர். சின்னத்துரை அவர்கள் வேதன மில்லாமலும், குறைந்த வேதனத்திலும் தம்முடன் வேலைசெய்ய விரும்பிய ஆர்வ முள்ள இளைஞர்களை ஒன்று சேர்த்தார். இவ்வாறு ஆசிரியர் சின்னத்துரையிடம் சேர்ந்தவர்களிற் புலவருமொருவர். புலவ ருக்குக் குருவின் ஆக்ஞையும், சின்னத் துரை அவர்களுடன் சேர்ந்து பணி செய் யும்படி யிருந்தது. பணக் கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், இப்பாடசாலையிற் சேர்ந்து ஆசிரியணுகத் தொண்டு செய்ய ஆரம்பித்தார். அம்பலவாண நாவல ரவர்களும், சின்னத்துரை ஆசிரியரும் பாடசாலைப் பணியை நாவலருக்குச் செய்யும் தொண்டாகவே கருதினர். அம்பல வாண நாவலர் சுவாமிகள் பாடசாலையில் வேலைசெய்யும் இளைஞர்கட்கு நாவலரின் இலட்சியங்களை நினைவுபடுத்துவாராம். நாவலருடைய ** மணிகொண்ட." என்ற பாடலை அம்பலவாண சுவாமிகள் சொல் லும்பொழுது அழுதுவிடுவாராம். பாட சாலையைச் செவ்வனே நடத்துவது நாவல ருக்குச் செய்யும் வழிபாடாகவே கருதி வந்தார்கள். புலவரும் மிகவும் சிரத் தையுடன் தாமே முயன்று கற்றும், கற் பித்தும் வந்தார்கள். சின்னத்துரை ஆசிரிய ரவர்கள் பாடசாலை முடிந்த நேரங்களிற் புலவருடன் வேலைசெய்துவந்த மற்றைய இளைஞர்கட்கும், புலவருக்கும் ஆங்கில இலக்கியம், உயர் கணிதம் முதலியவற் றைப் பயிற்றி வந்தார். தான் மாத்திர மல்லாது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யில் படித்துக்கொண்டிருந்த பட்டதாரி ஆசிரியர்களைக் கொண்டும் தன் கீழ் வேலை செய்யும் ஆசிரியர்கட்குப் பல புதிய விஷ யங்களைக் கற்பித்தும்வந்தார். பரீட்சைக்கு அண்மிய காலங்களில் இரவு வகுப்புகளும் புலவர் நடாத்துவார். இதனுற் புலவர் நேரம் கடந்தே வீடு திரும்புவார். இச் சமயங்களில் அவர் தந்தையார் அவரைத் தேடிச்செல்வதுமுண்டு. இதனைப் புலவ ரவர்கள். பின்வருமாறு குறிப்பிடுகிறர்.

Page 227
நாவலரும் சோமசுந்தரப் புலவரும்
மாலை வந்தது வல்லிருள் செறிந்தது காலையிற் சென்ற மைந்தனைக் காணேன் வாடுமென் சிந்தை யெனவழி பார்த்து தேடி வருகுநர் இனியார் பீடுறு தவத்தாற் பெற்றபெரி யோனே.
(தந்தையார் பதிற்றுப்பத்துஇரங்கற்பத்து-5)
ஆசிரியர் சின்னத்துரை அவர்கள் இந்தியாவிற் கற்றவர்; அவர் அக்காலத் தில் வளர்ந்து வந்த இந்திய தேசிய இயக் கத்தாற் பெரிதும் கவரப்பட்டார். சின் னத்துரை ஆசிரியர் அவர்களின் தொடர்பு புலவரவர்களைத் தேசியவாதியாக, தேச பக்தராக மாற்றியது. புலவரவர்களைத் தேசியவாதியாக, தேசபக்தராக மாற்றி யது. புலவரவர்கள் இதைப் பலமுறை கூறியுள்ளார்கள், திரு. சின்னத்துரை அவர்களிடத்துப் புலவருக்கு ஆழ்ந்த அன் பும் அபிமானமும் உண்டு.
அக்காலத்தில் வித்தியா தரிசகர்கள் ஆண்டுதோறும் பாடசாலைகளுக்கு நேரே சென்று பரீட்சிப்பர். சித்தியடைந்த மாணவர் தொகையைக் கொண்டே அரசு வழங்கும் உதவிப் பணத்தின் அளவு நிர்ண யிக்கப்படும்.இவற்றைக் கருத்திற்கொண்டு பலர் சைவாங்கில வித்தியாசாலை ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்காது என்றும் கூறினர். ஆயினும் ஆசிரியர்கள் கடுமை யாக உழைத்து வருடத்திற்குவருடம் சித்தி யடையும் மாணவர் தொகையும், அரசின் பண உதவியும் உயரும்படி செய்தனர். பள்ளிக்கூட வளர்ச்சி அம்பலவாண நாவல ரவர்களை மிகவும் மகிழ்வித்தது. அம்பல வாண நாவலரவர்கள் ஒருமுறை ஆசிரியர் களைச் சந்தித்தபோது,
ஆறுமுக ஐயற்கு ஆட்செய்யப் பெற்றனம்யாம் வேறறங்கள் வேண்டர் இனி என்ற வித்துவசிரோமணி ந. ச. பொன் னம்பலபிள்ளையின் பாடலொன்றைச் சொல்லி, "நீங்களெல்லோரும் குருமணி யின் தொண்டைச் செய்கிறீர்கள், உங்கட்கு ஒருகுறையும் வராது" என்று ஆசீர்வதித்
26

217
தார் அம்பலவாண நாவலரவர்கள், ஆறுமுக நாவலரவர்களை, "குருநாதன்", *குருமணி’ என்றே குறிப்பிடுவாராம். அவரியற்றிய நாவலர் சற்குரு மணிமாலை என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.
புலவர்கட்கு நெருங்கிய உறவினரும் இணைபிரியாத நண்பருமாக இருந்தவர் நவாலியூர் திரு. இ. வைத்தியலிங்கம் அவர் கள். இருவரும் ஒன்ருகவே படிப்பார்கள், புலவரின் வீட்டிலோ வைத்தியலிங்கமவர் களின் வீட்டிலோ இருவரும் சந்தித்துத் தமிழ் இலக்கண நூல்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் படிப்பார்களாம். விளங் காதவற்றைக் குறித்து வைத்துக்கொண்டு நாவலரவர்களின் சைவப்பிரகாச வித் தியாசாலை சென்று திரு. அ. குமாரசுவாமிப் புலவரவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். தமக்குத் தெரிந்தவற் றைச் சொல்லிக்கொடாது மறைப்பதே வித்துவ இலக்கணமாயிருந்த அக்காலத் திலே அன்போடு காலம், இடம் என்ப வற்றைக் குறியாது தம்மிடம் வந்தவர் கட்கெல்லாம் வரையாது வித்தியாதானம் செய்த குமாரசுவாமிப் புலவரவர்களின் பெருந்தன்மை புலவரவர்களைப் பெரிதும் கவர்ந்து விட்டது. இவர்கள் காலத்தில் மீண்டும் கோயில்களிற் தாசியர் நடனம், உயிர்ப்பலி, வழிபடவரும் ஒடுக்கப்பட்ட மக்களை இம்சித்தல் போன்ற கேடுகள் மலிந் திருந்தன. திரு. வைத்தியலிங்கமவர்கள் இவற்றைத் திருத்தவும், சமய நெறிகளைப் போதிக்கவும் ஒரு பத்திரிகை நடத்த விரும் பினர்.புலவரும்,திரு.வைத்தியலிங்கமுமாக சைவ பாலிய சம்போதினி என ஒரு பத்தி ரிகை ஆரம்பித்தனர். அதிகம் பிரசித்த மில்லாத இரு இளைஞர்கள் அக்காலத்துப் பண்டிதர்களிடமிருந்து இலகுவில் விஷய தானம் பெறமுடியுமா? இருவரும் குமாரசுவாமிப் புலவரவர்களை அணுகினர் கள். குமாரசுவாமிப் புலவரவர்களே விஷயதானம் செய்ததோடு தமது ஆலோ சனைகளையும் வழங்கி ஊக்குவித்து வந்தார். இப்பத்திரிகை நாவலரவர்கள் எழுதிய கட்டுரைகள், திருவிழாக்கள் பற்றிய கண்

Page 228
28
டனங்கள் முதலியவற்றை மேற்கோள் காட்டிச் சீர்திருத்தநோக்கோடு சிலகாலம் வெளிவந்தது. பத்திரிகையின் போக்கைக் கண்ணுற்ற ஆசுகவி க. வேலுப்பிள்ளை யவர்கள் (1860 -1944) தாமே விஷய தானம் செய்ததோடு ஊக்கமும் கொடுத்து வந்தார். பொருள் முடையாற் பத்தி ரிகை பின்பு நின்று போயிற்று.
1920ஆம் ஆண்டின் மேல் புலவரிடம் படித்த மாணவர்கள் பலர் கற்றுத் தேறி நல்ல நிலையை அடைந்தார்கள். இவர் களிற் சிலர் சமய, சமூக, சீர்திருத்தப் பணிகளிற் புலவருடன் சேர்ந்து ஈடுபட் டார்கள். காலஞ்சென்ற வ ட் டு க் கோட்டை வழக்கறிஞர் நாகலிங்கமவர் கள் (ஊர் மக்களாற் சிவலை நாகலிங்க மென அழைக்கப்படுபவர்) கோயில்களில் உயிர்ப்பலி நீக்கம் முதலிய சமய சீர்திருத் தங்களிலும் தேசிய, தேச விடுதலைப் பிரசாரங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார். புலவர் இவரிடத்து அதிக அன்புடைய வராயிருந்தார். புலவரவர்களின் ஆக்கங் களை உடனுக்குடன் பெற்று வெளியுலகுக் குக் கொண்டு வந்தவரில் ஒருவர் ஈழகேசரி பத்திராதிபர் திரு. நா. பொன்னையா அவர்கள் ஆகும். ஈழகேசரிப் பத்திரிகையே புலவரின் பல ஆக்கங்களை வெளிக் கொணர்ந்தது. இவர்களுடைய தொடர் பால் தேசிய இயக்கங்களிலும் காந்தியத் திலும் ஆர்வத்தை ஏற்படுத்திற்று. காந்தி யடிகளிடம் புலவர் கொண்ட ஈடுபாடு பல ஈழகேசரி இதழ்களில் காந்தி அஞ்சலியாகப் புலவர் யாத்த பாக்களிலிருந்து புலணு கிறது. உயிரிளங் குமரன் நாடகத்திலும் காந்தியம் சார்ந்த கருத்துக்கள் வருகின் றன.
தெள்ளிய நீதி வள்ளுவன் செய்த எள்ளலில் தொழிலும் நெசவு தொழிலே ஏந்தும் புகழ்ச்சிக் காந்தி யடிகள் தேர்ந்து கொண்டதும் நெசவு தொழிலே ஆதி சிதம்பர நாதனெங் களுக்கு அம்மை சுந்தரி யோடு தந்திடும் நீதி யான நெசவு தொழிலை நீங்கள் விடுத்த நேரம் தொடங்கி

வை. வரதராஜப்பெருமாள்
வறுமை வந்தது பெருமை நின்றது அரசு போனது அடிமை யானது
பாவை யெடுங்கள் தறியை நடுங்கள் ஆடை நெய்யுங்கள் பிடை போய்விடும் இழந்த அரசியல் பெற்று வளம்பெற வாழலாம் வாய்மையீங் கிதுவே.
1920ஆம் ஆண்டு முதல் தனது பள்ளிக் கூடத்திலே ஒய்வு நேரங்களில் புலவர் சித்தாந்த வகுப்புகள் நடத்தி வந்தார். இதைவிட சனி, ஞாயிறு விடுதலை நாட்க ளிலும் வீட்டில் தமிழ் படிப்பித்து வந்தார். வேதனம் இன்றியே கற்பித்து வந்தார். பல சமூகத்தவரும், பல சமயத்தவரும் அவரிடம் பயின்ருர்கள். தமிழுக்கு நாவலர் கொடுத்த சஞ்சீவி மருந்து நாவலர் வசன மிடை என்பது புலவர் கருத்து. இக் கருத் தின் பிரதிபலிப்பே " " அன்ன நடை பிடியி னடை . . . “ என்ற நாவலர் தோத் திரப் பாடல். தம்மிடம் தமிழ் கற்க வருப வர்கட்கு நாவலரின் வசனநூல்களுள் ஒன்றை வாங்கிப் படிக்கும்படி செய்வார். இந் நூலை வைத்துக்கொண்டே இலக்கண விதிகளையும் விளங்கப்படுத்துவார். வசனங் கள் எளிமையாகவும், தர்க்கரீதியாகவும், சொற்செட்டும், பொருட்செறிவும் உடை யனவாகவும் இருக்க வேண்டும் என்பது அவர் கருத்து. இத்தகைய இலக்கணங்க ளெல்லாம் அமையப்பெற்றது நாவலர் ରu &Fତ୪Twb.
கந்தபுராணம் புலவரின் உளங் கவர்ந்த இலக்கியம். வாழ்விற்குரிய நீதிகள் முதல் இலக்கண விதிகளுக்கு உதாரணங்கள் ஈரு கப் புலவர் கந்தபுராணக் கவிதைகளையே கையாளுவார்கள். கந்தபுராண கலாசா ரம் என்னும் நெருப்பு போர்த்துக்கீச, ஒல்லாந்த ஆட்சிக் காலங்களில் குன்றி யிருந்ததைச் சுவாலித் தெரியச் செய்தவர் நாவலர். கந்தபுராணக் கதைகளும் அவற் றின் உண்மைக் கருத்துக்களும் என்னும் புலவரின் நூல் நாவலரின் சுப்பிரபோதம் போன்றது.

Page 229
நாவலரும் சோமசுந்தரப் புலவரும்
1938ஆம் ஆண்டு புலவர் ஆசிரியத் தொழிலிலிருந்து இளைப்பாறினர். ஆயினும் அடிக்கடி வட்டுக்கோட்டைப் பள்ளிச் கூடத்திற்குப் போய்வருவார். இக்காலத் திற் தொய்வுநோய் புலவரை அதிகம் வருத் தியது. இதனுல் தாம் நினைத்திருந்த பல வேலைகளைப் புலவரால் செய்யமுடியவில்லை.
இலவசக் கல்வித் திட்டம், நாடு விடு தலை பெற்றமை புலவருக்கு மகிழ்ச்சியை யும் புத்தூக்கத்தையும் கொடுத்தன. சுதந் திரத்தின் பின் நாடு ஒற்றுமையாக பல துறைகளிலும் முன்னேறும் என்று நினைத் தார். இந்நிலைக்கு மாருக வகுப்புவாதம் தலைதுாக்கி நின்றது, அவருக்குப் பெரும் மனவேதனையைக் கொடுத்தது. அநேச மாகப் பொது வாழ்வினின்றும் விலகிச் கொண்டு விட்டார்கள். மறுமலர்ச்சி என்ற மாத வெளியீட்டில் அடிக்கடி புலவரின் பாடல்கள் வெளிவரும். இதை நடத்தியவ ரான வரதரிடத்திற் புலவருக்கு நல்ல மதிப்பும், அன்புமுண்டு. பொதுமக்கள் மத்தியிற் தமிழ் பரவுதற்கு இவை நல்ல முயற்சிகள் என்பது புலவர் கருத்து.
தமிழ்க்கல்வி சம்பந்தமாக நாவல ரவர்களின் கருத்தையொட்டித் தமிழ்ப் பண்டித பட்டத்துக்காக, ஆரியதிரா விட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்தும் பரீட்சை பாட விதானங்கள், விரிவடைய வேண்டும், நவீன தருக்க சாஸ்திரம், கணிதம் முதலியவைகளும் சேர்க்கட் படவேண்டுமென்றும் அடிக்கடி கூறுவார். இதற்கு ஆதாரமாக நாவலர் சைவப்பிர காச வித்தியாசாலை விக்கியாபனங்களிற் **கணித, பூகோள, க கோ ள |ா தி சாஸ்திரங்களும் தருக்கமும் கற்பித்தல் வேண்டும் ** என்பதை எடுத்துக்காட்டு வார். "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ் விர ண் டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு ' என்ற குறளில் **எண் " என் பதன் கருத்துச் சிந்தித்து அறியப்படுபவை என்றும், இதிற் கணிதம் மாத்திரமல்லாது தருக்கம் முதலியனவும் அடங்கும் என்ட தும் அவர் கருத்து. தமிழறிஞர்கள், தேசத்துப் பெரும்பான்மை மக்களின்

219
பாஷையாகிய சிங்களத்தையும் படிக்க வேண்டுமென்றும் கூறுவர். அவரின் கவி தைகளிலும் இக் கருத்து இடம்பெற் றுள்ளது.
வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் சிங்கள ஆசிரியராக மகாசங்கத்தவர் ஒருவர் (பிக்கு) வந்திருந்தார். அவரைப் புலவர் வட்டுக்கோட்டைக்குப் போகும் போதெல்லாம் சந்தித்து அளவளாவுவார். புலவர் இறப்பதற்குச் சில காலங்களுக்கு முன் பெளத்த சங்கத்தைச் சேர்ந்த ஓர் அன்பர் சங்கானையிலிருந்து அடிக்கடி வந்து சந்தித்துப் போவார். இவருக்காக மணி மேகலை காப்பியத்திலுள்ள பெளத்தசமயக் கோட்பாடுகளை எடுத்து விளக்கிக்கூறுவார். 1949க்கு மேல் அதிகம் வேலைகளைச் செய்ய முடியாதபடி நோய் தாக்கி வந்தது. நூல்களைப் படித்தலும் யாராயினும் பாடங்கேட்க வந்தாற் பாடஞ்சொல் வதுமே அவர் பொழுது போக்காய் இருந் தன. பெரும்பாலும் வெளிவிவகாரங் களிலும், பொதுவாழ்விலுமிருந்து விலகி யிருக்கவே விரும்பினுர், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் இலக்கிய ரசனையிலும் அவர் கூறும் சமயக்கருத்துக் களிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டார். சைவசமயி யார்? என்பதற்குப் பண்டித மணிஅவர்கள் ஆபிரகாம் லிங்கனின் கதை மூலம் விளங்கப்படுத்தியதைத் தன்னி னிடம் வருபவரிடம் சில நாட்களாகச் சொல்லி மகிழ்ந்தார். இக்கருத்து மிகவும் வைதிகக் கொள்கையுடைய ஒரு ஆசிரிய ருக்கு மிகுந்த சினத்தைக் கொடுத்தது. புலவரிடத்து மதிப்புடையவராயினும் அவர் ஒருநாள் நல்லூரிற் புலவரைக் கண்ட போது மேற்படி கருத்தைக் கூறியதற் கும் அதை ஆதரிப்பதற்கும் கடும் ஆட் சேபம் தெரிவித்ததோடு நிர்த்தாட்சண்ய மாகப் புலவரைக் கண்டித்து விட்டார். புலவரவர்கள் ஏற்ற சமாதானத்தை உடனே சித்தாந்த சிகாமணி யிலுள்ள ஒரு பாடலை மேற்கோள் காட்டிச்சொல்லியும், இத்தகைய வாதப் பிரதிவாதங்கள் அவ ருக்கு மனவேதனையைக் கொடுத்தன.

Page 230
220
சமயம், மொழி சம்பந்தமாக அவர் சுொண்ட கருத்துக்களைத் தன்னிடம் பெரி தும் நெருங்கிப் பழகியவர்களன்றிப் பிற ருக்கு அதிகம் வெளியிடுவதில்லை. சில விடங்களில் உறுதியாக நின்று தன் கருத்தை வெளியிட்டிருந்தால் அது பெரு நன்மையாயிருந்திருக்கும். தனது கருத்துக் களையும் தன் குருநாதரின் சரித்திரத்தை யும் எழுதிவைக்க விரும்பினர். இவை ஈடேறவில்லை. தனது குருநாதரின் சரித் திரத்தில் ஆங்காங்கே எழுதி வைத்தவை களைக் கொண்டு கிரியைகள், ஆசாரங்கள் இவற்றிற்கப்பாற்பட்ட உயர்ந்த மனித சமுதாயமே குருநாதரின் போதனைகளில் வலியுறுத்தப்பட்ட தென்பதை அறியலாம். ஒருமுறை புலவர் வட்டுக்கோட்டைக்குப் போகும்போது வழுக்கியாற்றுப்பாலத் தடியில் யோகர் சுவாமிகளைச் சந்தித்தார், வண்டியை நிறுத்திச் சுவாமிகளை வணங் கினர். சுவாமிகள்,
தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோமனே
மண்ணுவ துஞ்சோமன் மண்டலமே என்று பாடி, சோமசுந்தரம், "சிவபெரு மான் ஆர் சொல்லு?" என்ருர். புலவர் பதில் சொல்லவில்லை. சுவாமிகள் "சோம சுந்தரம் இந்த இலங்கையிலை இரண்டு கை இரண்டு காலோடை திரியிறதெல்லாம்
நாவலர்பற்றி . . . . . . ஜி. யூ.
திருவாசகம் - ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. அந்நூலுக்கு போப் பற்றியும் கோயிற்புராணம் பற்றியும் எழு கிருர்.
“The very accomplished editor of t a zealous reviver in modern times of the C gives his account of the meaning of th

வை. வரதராஜப்பெருமாள்
சிவம்.சிங்களவன்,தமிழன், பறங்கி எல்லாம் சிவம். இந்தச் சிவங்களெல்லாம் நல்லாய் வாழவேண்டுமென்று நினைத்துக் கும்பிடு வ்துதான் பெரியபூசை" என்று சொல்லி விட்டுப்போனுர். இது புலவருக்குச் சொல் லிய ஆறுதல் மொழியோ? என்னவோ?
நாவலருடைய கல்விப் பணியும் சமயப் பணியும் புலவரையும், மற்றைய அறிஞரை யும் நல்ல பணிகளைச் செய்ய வழி காட்டி யது. நாவலர் தனது காலத்திற் செய்ய வேண்டியவற்றைத் தமது காலத்தை அநு சரித்துச் செய்தார். ஆனல் இது நாவலர் கொள்கை. இவ்வாறு செய்வதே நாவலர் திருவுள்ளம் என்று கூறி மாற்றங்களை விரும்பாதவர் பலர் பிற்காலத்தில் நாவல ரைப் பற்றிச் சரியான விளக்கத்தை வருங்காலம் அறிய முடியாதவாறு குழப்பி யிருக்கிருர்கள். இத்தகைய பூசல்கட்குச் செல்ல விரும்பாத பல அறிஞர்களும் உண்மையைக் கூருமல் ஒதுங்கி விட்டார் கள். இந்நிலை மாறி பேரறிஞர்கள் சமய சமூக, நாட்டுத் தலைவர்கள் போன்றேரது பணிகளைக் காய்தல் உவத்தலின்றி நடுநிலை நின்று ஆராய்ந்து மெய்ப்பொருள் காணும் மரபு தழைக்க வேண்டும். இத்தகைய ஒரு மரபை வளர்த்தலே நாவலர், புலவர் போன்ருேருக்கு இக்கால அறிஞர் செய்யும் பெரும் கைமாருகும்.
போப்
ஜி. யூ. போப் அவர்களால் இங்கிலாந்தில் எழுதிய முன்னுரையில் சிதம்பரத்தைப் துமிடத்துப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்
he Puranam (and commentator upon it) aiva system, Arumuga Navallar of Jaffna is strange scene.
The Tiruvacagan English Translation, Introduction and Notes: Oxford 1900).

Page 231
நாவலரும் சிவபாதசுந்த
க. சபாரத்தினம்
66 நவீன மனிதன் பூரண வளர்ச்சி யற்று அவஸ்தைப் படுகிருன். தனது முந்தையர் கடைப்பிடித்த சமய வாழ் வைக் கைவிட்டான். அச்சமய பண் பாடும், அதன் சிறப்பு அம்சமான மனிதாபிமானமும் அவன் கையி லிருந்து நழுவுகின்றன.* இன்றைய ஆங்கில இலக்கியத்தின் மாமேதையாக விளங்கும் எவலின் வோ (Evelyn Waugh) Gods Tai L. sciógil gigi. அவரின் புகழ்பெற்ற படைப்புகள் சித்தி ரிக்கும் பாத்திரங்களும் சம்பவங்களும் இக் கருத்தையே இடித்துரைக்கும்.
மேல்நாட்டு மனிதனைக் குறிப்பாகக் கொண்ட நூலாசிரியர் அவனுடைய சமயம் எது? பண்பாடு எது? மனிதாபி மானம் எத்தகையது? என்ற விளுக்க ளுக்கு விடை தெரியாதவரல்ல. அவரு டைய நூல்களில் பொதிந்து கிடக்கும் ஆத்மீக உண்மைகள் அதற்குச் சான்று Lu 55th.
கிறித்துவ சமயம் மட்டுமல்ல, மற்றைய சமயங்கள் எல்லாம் ஆசிய நாடுகளிலே தோன்றின. காலவெள்ளத்தில் அகப்பட் டுத் திசைதிரும்பித் திரிபு அடைந்தன. நூலாசிரியர் குறிப்பிடும் இன்றைய இருண்ட காலம் எங்கள் நாட்டையும்
தாக்கத் தவறவில்லை.

TCiptiђ
அவதார புருஷன்
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கி லேயர் முறையே 300 ஆண்டுகளுக்கு மேற்படத் தங்கள் சமயத்தையும், லோகாயத நாகரிகத்தையும் எங்கள் மத் தியில் விதைத்தனர். நல்ல பலன்களும் பெற்றனர். ஆனல் தமிழ்மொழி, சைவ சமயம் ஆகிய இரண்டும் நலிவுற்று தம் உயிருக்கே மன்ருடிக் கொண்ட காலம் அது. அக்காலத்தில் அவதரித்த உத்தமர் ஆறுமுகநாவலர். 18-12-1822 நாட்டின் சரித்திரத்திலேயே இடம்பெற வேண்டிய நாள். நாவலர் பிறந்ததன் அருமை தெரிந்த தமிழ் தந்த சி. வை. தாமோ தரம்பிள்ளை, நல்லைநக ராறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லுதமிழெங்கே சுருதியெங்கே-எல்லவரும் ஏத்துபுரா னுகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே ஆத்தனறி வெங்கே அறை. என்று பாடினர்.
**நாவலரைப்பற்றி ஒன்றுமே தெரி யாத பலர் பலவாறு பிதற்றுகின்றனர். ஆணுல் அவர் ஒரு அவதார புருஷன் என்று தாம் ஆங்கிலத்தில் எழுதிய சிறு நூலில் சொன்னவர் சைவப்பெரியார் சிவபாத சுந்தரம். சொல்வதைத் தெளிந்து, சொற் களை அளந்து சொல்லுகின்ற வன்மை படைத்த சு, சிவபாதசுந்தரம் (1877-1953) எவ்வாறு தமது கூற்றை விரித்தார் என் பதைக் காண்க. s

Page 232
222
நாவலர் அத்திவாரமிட்ட திருப் பணியை இரண்டு துறைகளில் ஆழ்ந்து ஆராய்ந்தவர் சைவப்பெரியார். "'நான் இல்வாழ்க்கை புகாத காரணம் சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவி யாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்' என்பது நாவலர் கூற்று. இதைப் பயன்படுத்தி அத்துறைகளிலே தாமும் அவ்வழி நின்று பணிபுரித்த சைவப்பெரியார் நாவலர் தமிழுக்கு அளித்த புத்துயிரைப் பெரிதாக மதிக்கவில்லைப் போலும் !
தமிழ்மொழி
அந்நியர் ஆட்சியில் தமிழ்மொழி பாரதூரமாகத் தாக்கப்படவில்லை என்ற கருத்து சைவப்பெரியாரின் கருத்து. தமிழ் மொழியைச் சிறையில் வைத்தவர் அந் நியர் அல்லர். பண்டிதர்கள், வித்துவான் களுக்குரிய ஜென்ம வியாதியாகிய வித்து வக் காய்ச்சல் தமிழ் அறிவைப் பொது மக்கள் மத்தியில் பரவ விடவில்லை. ஏட் டில் எழுதிப் படிக்கும் துர்ப்பாக்கியம் இதற்கு உறுதுணையாயிருந்தது. நாவலர் ஏட்டில் பூட்டியிருந்த தமிழைச் சிறை மீட்டார். தமிழ் இலக்கியத்துக்கு நாவலர் செய்த அருந்தொண்டு, இலக்கிப் ரசனை யைப் பெரிதாக மதிக்கும் சுபாவமற்ற சைவப்பெரியாருக்கு இனிக்காமலிருந் திருக்கும்.
** நாவலரின் இலக்கிய பயிற்சித் திறனை அவரால் அச்சிடப்பட்ட பரிமே லழகருரை, திருக்கோவையாருரை, பாரதம், கந்தபுராணம் முதலிய நூல்கள் காட்டும். இலக்கணப்பயிற்சி வன்மையை இலக்கணச் சுருக்கம், சேணுவரையம், நன்னூற் காண் டிகை, பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து முதலிய இலக்கணங்கள் காட்டும். நீதிநூல் நியாய நூல்களின் வன்மையும், சைவ சித்தாந்த சாத்திரவன்மையும், பெரியபுராண சூ ச ன மும், சைவசமய நெறியுரை முதலியனவுங் காட்டும்.
"பரிசோதன வன்மையை அச்சிட்ட நூல்கள் எல்லாம் காட்டும். செந்தமிழ்

ந. சபாரத்தினம்
வாக்கியத்தொடை வன்மையைத்திருவிளை யாடற்புராண வசனம், பெரியபுராண வசனம் முதலியன காட்டும்.”*
சுன்னுகம் குமாரசுவாமிப்புலவர் அவர் கள் எழுதிய தமிழ்ப்புலவர் சரித்திரத்தில் இவ்வாறு கூறியிருக்கிருர், அந்நியர் ஆட் சியில் இத்தகைய சாதனைகள் புரிய எத் துணை வீரம் வேண்டியிருந்ததோ?
FLDuo
சமயத்துறையில் மதமாற்றம் என்ற கொடுநோய்க்கு மருந்துகாண்பதே நாவ லரின் பணிகளில் முதலிடம் பெற்றது. மிஷனரிமார் கையாண்ட வழிவகைகளைத் தாமும் நாடினர். பைபிளைச் செந்தமிழில் மொழிபெயர்த்து தமது பேராசிரியரான Gổ t_u rỉ gì 6ự cải ( Percival ) t trr9ìỉìunrrịìaör மனத்தை உருக்கிய நாவலர், பொதுமக் கள், சிறுபிள்ளைகள் இலகுவிற் புரியக்கூடிய நூல்களை எழுதிக் குவித்தார். சமஸ்கிரு தத்திலும், சித்தாந்த சாஸ்திரங்களிலும் கொலுவிருந்த சமயக்கருத்துக்களை நூல் கள்மூலமும் பிரசங்கமுறையிலும் மக்கள் மனத்தில் பதியவைத்தார்.
இந்த மகத்தான பணியில் நாவலருக் குக் கைவந்த கொடை அவருடைய தனித் துவம் வாய்ந்த வசனநடை. அதற்கு அவரே தந்தையாயினர். இதன் அழகை வர்ணித்து வியந்த நவாலியூர் சோமசுந் தரப் புலவர்,
அன்னநடை பிடியினடை யழகுகடை
யல்லவென வகற்றி யந்நாட் பன்னமுது புலவரிடஞ் செய்யுணடை
பயின்றதமிழ்ப் பாவை ய்ாட்கு வன்னநடை வழங்குகடை வசனநடை யெனப்பயிற்றி வைத்த வாசான் மன்னுமருள் நாவலன்றன்னழியாகல்
லொழுக்ககடை வாழி வாழி. என்று பாடினர்.
நூல்கள்
தருக்கரீதியாகவும் தெளிவாகவும் மாணவர்க்குரிய பாடநூல்கள், வளர்ந் தோருக்குரிய வசனநூல்கள், பிறமதத்த

Page 233
நாவலரும் சிவப ாதசுந்தரமும்
வர்களின் தவருண கொள்கைகளையும், தம் மதத்தவரின் பேதைமைகளையும் தகர்த்தெ றியும் கண்டனங்கள் என்றின்னுேரன்ன் முறை வகைகளில் நாவலரின் வசனநடை மிளிர்ந்தது. சமயத்தில், முதலாம் சைவ வினவிடட தொடங்கி சிவஞானபோதத் தில் முற்றும், இலக்கண விஞவிடை இலக் கணச் சுருக்கமாய் இலக்கணக்கொத்தாய் காண்டிகையாய் சேனவரையத்தில் முடி யும். நாவலர் எழுதிய பூமிசாத்திரம் இற் றைக்கு நூற்ருண்டுக்கு முன்னர் ஆரம்ப வகுப்புக்களில் பூமிசாத்திரங் கற்பித்த முறைக்கிணங்க வெளிவந்தது. ஆசிரியருக் குரிய குறிப்புகள் அபூர்வமானவை.
சைவப்பெரியார்
இந்தப் பணியை இந்த முறையில் தொடர்ந்தவர் சைவப்பெரியார். ஆசிரியர் வரிசையில் அவருக்குத் தனியிடம் உண்டு. எந்தப்பாடமாயினும் அதை மாணவருக்கு விளக்கும்போது அவர் கையாளும் முறை யில் புதுமை பொலியும். பெரியாரும் நாவ லரைப்போல் பாரம்பரிய மரபை எல்லை யாகக்கொண்டு மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தக்க நூல்களை எழுதி வெளியிட்டார். சைவ போதம் முதற்புத்தகம் சிறுவர்க்கும், இரண்டாம் புத்தகம் வளர்ந்தோர்க்கும், திருவருட்பயன் சிரேட்டவகுப்பு மாணவர் களுக்கும், பெரியவர்களுக்கும், சைவசம யத்தின் அடிப்படைகளைச் சமய நிலை யிலும் தத்துவநிலையிலும் விளக்கவல்ல நூல்கள். சைவக்கிரியை விளக்கம், சைவ சமயசாரம், சைவத்தின் பெருமை, கந்த புராண விளக்கம், பொதுமக்களுக்குரிய நூல்கள் தருக்கநூல், தருக்கநூற் சாரம், படிப்பிக்கும் முறைகளும் விதிகளும் என் பன சைவக்கல்விக்கு உறுதுணையாய், கேட் போர் சிந்தனையைக் தூண்டவும் வல்லன. “Shaiva School of Hinduism'- gring லத்தில் எழுதப்பெற்ற **இந்து சமயக் கொள்கை' உலகப்பிரசித்திபெற்ற நூல். இந்திய தத்துவப் பேராசிரியர் ராதாகிருஷ் ணன் அவர்கள் எழுதிய நூல்களுக்கு ஒப் பிடலாம் என்ற புகழ்மாலை பெற்ற நூல்

223
அது. நூல் தலைப்பில் இந்து என்ற பெயரை முதலில் எடுத்தாண்ட முன்னுேடிகளில் சைவப் பெரியார் குறிப்பிடத்தக்கவர்.
சொல்வன்மை
நாவலர் பெருமானுக்கும் சைவப் பெரியாருக்கும் அவர்கள் இருவரும் எழு திய நூல்கள் வாயிலாகக் காணும் ஒற் றுமை குறிப்பிடத்தக்கது. தருக்க முறை யில் பாடம் அமைக்கும் முறையும், கட்டுக் கோப்புத் தொடர்ச்சியும் தெளிவு பிறக்கும் வண்ணமும் இவர்களின் நூல்க ளில் சிறப்பு அம்சங்களாம். நூல்கள் மட்டுமல்ல, பிரசங்க முறையிலும் சீடன் குருவைப் பின்தொடர்ந்த பாங்கு எளிதில் புலப்படும். நாவலரின் சீர்திருத்த முயற்சி களுக்குப் பெரு வெற்றி அளித்தது அவ
ருடைய பிரசங்க வன்மையே!
*சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.”
என்ற பொய்யாமொழி நாவலரின் பேச்சு வன்மைக்கு மிகப் பொருத்தமானது. கருத்துத் தெளிவில் உதித்தது அவருடைய பிரசங்கம். கண்டனங்களில் வீராவேசம் பொறிதட்டும்; இந்தியாவிலே நடத்திய பிரசங்கங்கள் மடாதிபதிகளைப் பிரமிக்க வைத்தன. வண்ணுர்பண்ணை சிவன்கோவில் மண்டபத்தில் நடந்த பிரசங்கங்களில் ** நான் ஆயத்தமில்லை" என்று தொடங்கி, அதனையே பீடிகையாகக் கொண்டு "மரணத் துக்கு ஆயத்தமில்லை யென்று மிக விரித்து இனிமையும் திறமையும் தோன்றப் பேசி னர். இந்தச் சம்பவத்தை சைவப் பெரி யார் தமது "ஆறுமுகநாவலர் " என்ற சிறிய ஆங்கில நூலில் குறிப்பிட்டிருக்கிருர், வீரமும் பக்தியும் ததும்பும் பிரசங்கம் நாவலருடையது. சைவப் பெரியாரின் பேச்சு வேறுவிதமானது. சிந்தனைத் தெளிவு செறிந்த தனித்துவம் அதற்கு உண்டு. மிகப்பெரிய கருத்துக்களைக் கடுகுப் பிர மாணத்தில் வழங்கும் ஆற்றல் அவருக்கே உரியது. நாவலர் வீரன்; சைவப் பெரியார் விவேகி. அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில்

Page 234
1945இல் சைவப் பெரியார் "புராணங்க ளின் பெருமையும் அருமையும்" என்ற பொருள்பற்றி ஆற்றிய உரை அக்காலத் தில் நாத்திகம் பேசத் தொடங்கிய திரா விடக் குழந்தைகள் கூட்டத்தைத் திணற வைத்தது மூச்சடங்கினர் என்ருல் விவேகம் என்னே ! -
கல்வி வளர்ச்சி
பிறமதக் கல்லூரியில் பெரும்பான்மை யான சைவக் குழந்தைகள் கற்று வருவ தஞல் அவர்களின் மனம் மாசுபட்டு, சைவத்திற்கு இன்றியமையாத திருநீறு அணிதலைத் தாமே கைவிட்டனர் என்று வாதாடினர் நாவலர். சைவத் தமிழ்ப் பாடசாலைகள் பலவற்றைப் பல்வேறு இடங் களில் நிறுவியவர் ஆங்கில பாடசாலை ஒன்றை வண்ணுர்பண்ணையில் 1872ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அது வளர்ச்சி குன்றி மடிந்த காரணம் ஆட்சியாளர் மிஷனரிமாரின் சூழ் ச் சிக் கு அளித்த ஆதரவேயென்பது வெளிப்படை.
இத்தோல்வி 18 ஆண்டுகளின்பின் பெரு வெற்றியாகப் பரிணமித்தது. இன்று 90 வயதை எட்டித்தொடும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி நாவலரின் சைவாங்கில வித்தியாசாலையின் மறு பிறப்பு என்றே கொள்ளவேண்டும். ஆங்கிலக் கல்வியின் அவசியத்தை ஆதரித்த நாவலர் சைவப் பிள்ளைகள் தங்கள் சொந்தப் பண்பாட் டின் பின்னணியில், தேசிய நோக்கில், கல்வி பயில்வதையே இறுதி மூச்சுவரைக் கும் குறிக்கோளாகக் கொண்டனர்.
இது நாவலரின் தனிப்பட்ட இயக்கம் அல்ல. நாடு முழுவதிலும் நாவலர் கொள்கை தேசியமயமாகப் பரவிவந்தது. பெளத்த தலைவன் அநகாரிக தர்மபால, இஸ்லாமிய தலைவன் சித்திலெப்பை போன்ற பெரியார்கள் கொழும்பில் பிர பல தேசியக் கல்லூரிகளை நிறுவ முன் வந்தனர். 19ஆம் நூற்ருண்டின் கடைசிக் காலப்பகுதியில் உருவெடுத்த இத் தேசிய இயக்கம் 1885-1895 என்ற பத்து வருட எல்லைக்குள், கொழும்பு ஆனந்தாக் கல்

ந. சபாரத்தினம்
லூரி, யாழ் இந்துக் கல்லூரி, கொழும்பு சகிராக் கல்லூரி என்ற இம் மும்மூர்த்தி களை ஸ்தாபித்து வெற்றிகண்டது. இன்றும் முதன்மை வகிக்கும் இக் கல்வி நிலையங் கத் தேசிய ஸ்தாபனங்கள் என்ற வகை யில் அரசால் பேணி வளர்க்கப்படவேண்
L6)6.
தேசியக்கல்வி
மேற்குறிப்பிட்ட மூன்று புகழ்வாய்ந்த கல்லூரிகள் இந்நாட்டின் கல்விமரபைப் பேணிவந்தன என்பது மிகையாகாது. கல்வி மரபு யாது ? பிள்ளைகள் தம் முந்தை யர் கடைப்பிடித்துவந்த சமய, கலாசாரச் சூழலில் கல்வி கற்றலேயே குறிக்கும். மத மாற்றம் காரணமாகவும், ஆங்கிலேய கிறித்தவ பாடசாலைகளில் கல்வி கற்ற தாலும், பெற்றேரின் சமயவுணர்ச்சி பெலவீனப்பட்டதை நாம் மறக்கலாகாது.
நாவலர் பெருமானின் கல்வித் திட் டத்தின் மூலக் கருத்து இதுவே. அவர் வளர்த்த இயக்கம் இந்த அடிப்படை உண்மையைப் பிரதிபலிக்கிறது. ஆங்கிலம் படிக்கப்போன நாவலர் அந்தச் சூழ்நிலை யில் உண்மைக் கல்வி நிகழ்ந்ததா என் பதை உணர்ந்தார். தம்மை முற்றும் மாற்றிக்கொண்டு உண்மையான தேசியக் கல்வியின் தொண்டனுகவும் தலைவனுகவும் செயல்புரிந்தார். ஒரு மாணவர் பரம் பரையை உருவாக்கினர். யாழ்ப்பாணத் தில் தமிழ்மணம், சைவமணம் என்ருல் அவை நாவலரால் உண்டானவை. அது இன்றும் நிலைத்திருக்கிறதென்ருல் நாவலர் பெருமானின் மாணவர் பரம்பரை முற்றி லும் அருகிப்போகவில்லையென்பது கருத்து.
தேசியக் கல்வி இயக்கத்தை நாவல ருக்குப் பின் துரிதப்படுத்தியவர் சைவப் பெரியார். அவர் வாழ்ந்த காலம் ஆங்கில லக் கல்வியின் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்த காலம். எனவே ஆங்கில கிறித்தவக் கல்லூரிகள் ஆதிக்கம் உச்சநிலை அடைந்தகாலம் அது, சைவப்பிள்ளைகள் பைபிள் பாடத்தை கேம்பிறிட்ஜ் கனிட்ட, சிரேட்ட பரீட்சைகளுக்குப் படித்த காலம்.

Page 235
நாவலரும் சிவபாதசுந்தரமும்
சைவப் பெரியாரே பைபிள் பாடத்தை மிகத் திறமையாய்ப் படிப்பித்த நல் லாசான் ஆயின், சைவசமயம் எங்கே ! சைவச்சூழல் எங்கே? மத மர் ற் ற ம் பாதிரிமார் உள்ளத்தில் மூளாத்தீ போல் உள்ளே கனன்ற காலம் அது.
ஒய்வுபெற்று கந்தவனப் பதியின் தமது வானப்பிரஸ்த வாழ்வைத் தொடர்ந்து நடத்திவந்த காலத்தில் சைவப்பெரியா ருக்குஇலங்கை அரசு விட்ட அழைப்பு கல் விச் சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்த உதவியது. இதற்குமுன் சுழி புரம் விக்ரோரியாக் கல்லூரி, மாணிப்பாய் இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பரமேஸ் வரக் கல்லூரிகளில் தலைமைதாங்கி, உயர் கல்வி அளித்து அவர் சைவம் வளர்த்தார். நாவலரின்சீடர்கள் கட்டி எழுப்பிய யாழ் இந்துக்கல்லூரி போதாதென்று சேர் பொன்னம்பலம் இராமநாதனைத் தூண்டு வித்து பரமேஸ்வரக் கல்லூரியை நிறுவு வித்தவர் சைவப்பெரியார் என்பது இன்று பலருக்குத் தெரியாது. சேர் இராமநாத னின் ஆலோசனை கொண்டு, திரு. சு. இராசரத்தினத்தின் நிர்வாகத்தில் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தை நிறுவியவர் களில் சைவப்பெரியார் முதன்மை பெற் றவர்.
கல்வி மந்திரி கன்னங்கரா 1940இல் நியமித்த கல்வி ஆய்வுக் குழுவில் சைவட் பெரியார் அங்கம் வகித்து, சிறந்த கல்விச் கருக்களை விளக்கிக் குழு வின் பெரு மதிப்புப் பெற்றவர். அந்தக் குழுவே நாட்டுக்கு இலவசக்கல்வியை அளித்தது இதன் விளைவை விரிக்க வேண்டியதில்லை புரட்சிகரமான மாற்றம் கல்வித்துறையில் ஏற்பட இது வழி வகுத்தது. அந்தக் குழு வின் அறிக்கையில் இடம் பெற்ற சைவ பெரியார் திரு. சு. சிவபாதசுந்தரத்தின் கருத்து அவரது தீர்க்க தரிசனத்தையுட நாவலரின் நீண்டகாலப் பேராசை செய படும் திறனையும் உள்ளடக்கியது.
“The grant-in-aid system shoul be abolished; and all schools shoul be state schools. These bodies an
27

225
individuals who own schools would oppose the abolition as their business would come to a stand still, but that is not concern of the country.
The freedom of the child is of infinitely greater value than the freedom of the parent born with religious in difference; of all freedoms religious freedom is most precious'.
இது இரண்டாம் நாவலரின் புரட்சி கரமான கருத்து; புரட்சிகரமான பாதை யைச் சுட்டிக் காட்டுவதை நாம் கவ னத்திற் கொள்ள வேண்டும். பெளத்த் சமய, இஸ்லாமிய சமயப் பிள்ளைகளுக்கும் விடிவு காணும் வழி, சைவப் பெரியார் சிந்தையில் உ த ய மாகி, மகாத்மா காந்தியின் ஆங்கில உரைநடைப் பாங்கில் வெளிவந்த கருத்து அது. ஆயினும் இக் கருத்தைச் செயற்படுத்த இலங்கை அர சுக்குப் பதினேழு ஆண்டுகள் தேவைப் lult-. GÖT.
நாவலர்பெருமானையும் சைவப் பெரி யாரையும் அவர்கள் நாட்டுக்குழைத்த கல்வியும் சமயமுமாகிய துறைகளில் அவர்கள் கொண்டிருந்த ஆழமான கருத் தையும் விளங்கிக் கொண்டவர் எந்தக் காலத்திலும் சிலரிலும்சிலரே. முற்போக்கு வாதம் என்ற சண்டமாருதம் வீசத் தொடங்கிய காலம் தொட்டு அவ்விரு மகான்களும் பிற்போக்கு வாதிகளென் றும் சமயம் சாதி என்ற பித்துப் பிடித்த வர்கள் என்றும் கூறி வருவது அறியா மையின் அபாய நிலையைக் காட்டுகின்றது.
சாதிமான் யார்?
* நீதியின்மேல் பசி, தாகங் கொண் டவர் எவரோ அவரே சாதிமான். நீதி யோடு சம்பந்தஞ் செய்கிறவர்கள் சீவனத் திற்காகக் கீழே இறங்கி வருவதில்லை”. இன் றைய சமூகத்தில், அடிக்கிற காற்றுக் கெல்லாம் வளைந்து கொடுப்பவர் சாதி மான்களா என்பது நாவலரின் வரை விலக்கணத்திலிருந்து தெரியும்.

Page 236
226
முதலாம் எதிரி
இற்றைக்கு நூறுவருடங்களுக்குமுன் நாவலர் வீராவேசத்துடன் எதிர்த்துப் போராடிய சத்துராதி யார்? அது இன்று எந்தக் கோலங்கொண்டு இன்னும் எங் கள் மத்தியில் ஊடுருவல் செய்கின்றது. ஐம் பத்திரண்டு வருடங்களுக்கு முன் இலங் கைக்கு விஜயம்செய்தவர் மகாத்மாக்ாந்தி. இந்துமதத்தின் பேரால் சமூகத்தைக் கெடுத்துவரும் தீண்டாமை என்னும் நோய் கோவில்களில் மிருகபலியிடுதல், நாட்டியப் பெண்களின் நடனம், திருவிழாச் சீர்கேடு கள் முதலிய ஊழல்களை, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்னும் வகையில் கண் டித்தும் இந்து மக்களின் பிரத்தியேக மான கூட்டம் ஒன்றில் உ?ை யாற்றினர். ஆனல், கிறீஸ்தவ சங்கம் ஒன்று இயேசு நாதரின் போதனைபற்றிக் காந்தியடிகளைக் கேட்டபோது அவர் அளித்த விடை நாவ லரின் போராட்டத்தை விளக்கிவைக் கிறது. அதனை நாட்டுமக்கள் அனைவருக் கும் பயன்தரும் வண்ணம் மகாத்மா கூறி ஞர்
“Do not confuse Jesus teaching with what passes as modern civilisation and pray, do not do unconscious violence to the people among whom you cast your lot. Don't let your Christian propaganda be anti
national.
You Ceylonese should not be torn from your moorings; and those from the West should not consciously or un consciously lay violent hands upon the manners customs and habits of the Ceylonese in so far as they are not repugnant to fundamental ethics and morality-'
சீர்திருத்தச் செம்மல்கள்
சுதந்திரம் என்றதன் உட்பொருளை விளக்கவந்த கருத்தே இது. மதத்தின் பேரில் அதன் போர்வையில், மக்கள் தேசிய மரபில் அமைந்த நாகரிகத்தை

ந. சய ாரத்தினம்
யும் பண்பாட்டையும், பரிகசித்து வந்த அந்நிய மனுேபாவத்தையும், சமூகத்தைச் சீர்குலைக்கும் மதமாற்ற ஊடுருவல்களை யும் முறியடிக்கப் போராடியவர்கள், இவ் விரு சீர்திருத்தச் செம்மல்களாகிய நாவ லரும் அவர் பின்வந்த சைவப் பெரியாரும் ஆவர்.
கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி யின் தந்தையார் சேர் முத்துக்குமார சுவாமி இலங்கைச் சட்டசபையில் கவர் ணரைப் பார்த்து நாவலரை இப்படி வர் ணித்தார்:
“It is the Hindu of Hindus, Arumukha Navalar in the North. He is one of those orientals who can measure swords even with such a giant as my Hon’ble friend (the then Queen's Advocate)Mr. R. Cayley in an argumentative way. His whole life has been spent in preaching and writing against Christianity and he has a following which cannot be despised”.
நாவலரின் இயக்கம் எத்தன்மை யானது என்றும் அதனை இலகுவில் இலட் சியம் செய்ய முடியாதென்றும் ஆணித் தரமாக வகுத்துரைத்தார். இன்னுெரு கவர்ணருக்கு நாவலரை அறிமுகப் படுத் தியவர் சேர் பொன். இராமநாதன். அது வும் சட்டசபையில் நடைபெற்ற சம்பவம்.
“Navalar is the champion Reformer
of the Hindus’
என்ற வாக்கியம் சரத்திர முக்கியத்துவம் பெற்றுவிட்டது. கிறிஸ்தவ மதத்தை எவ் வாறு நாவலர் கண்டித்தார் என்பது ஆராய்ந்து அறியவேண்டிய தொன்று. பிற்காலத்தில் காந்தியடிகள் கூறிய கருத் துக்கு உடன்பாடான செயல் இது. நாவலர் எழுதிய சைவதுஷண பரிகாரம் என்ற அற்புதமான நூல் அதை நிரூபிக்கின்றது. மதமாற்றத்தை ஆணித்தரமாகக் கண்டிக் கும் அந்த நூல், கிறிஸ்தசமயம் முறை யற்றது என்று சொல்லவில்லை. சைவக் கோட்பாடுகளைத் தெளிவாக விளக்கி நிலை நிறுத்தியதோடு, சைவத்தைவிடக் கிறிஸ்

Page 237
நாவலரும் சிவபாதசுந்தரமும் ----
தவமதம் எவ்வகையிலும் விஷேடமான தில்லை என்று வற்புறுத்துகிறது.
இந்த முறையை நாவலருக்குப் பின் கடைப்பிடித்துச் சைவத்தின் சிறப்பையும், பிறசமய ஊடுருவல்களையும் கவனத்திற் கொண்டு பல ஆக்கபூர்வமான செயல் களை ஆற்றியவர் சைவப்பெரியார். எல் லாச் சமயங்களும் பரம்பொருள் ஒன் றையே அடைய உதவும் வெவ்வேறு வழி கள் என்ற கருத்தைச் சைவப் பெரியார் ஏற்றுக் கொள்ளவில்லை.
“ The view that all religions are different paths to the ultimate goal is as untenable as the belief of the bigot that his religion alone can take a soul to God, since it is the capacity of the soul that counts and not the guidance given by books.'
g» av sub Godë Gulu, “ “ Saiva School of of Hinduism” என்ற நூலில் அவர் இப் படிக் கூறியிருக்கிருர், அரசியல் காரண மாக, தேசத்தை ஒற்றுமைப்படுத்தும் பெரு நோக்குடன் இந்த முறையை மகாத்மா காந்தி போன்றவர்கள் கடைப் பிடித்திருக்கிருர்கள் என்பது அவருடைய கருத்து. ஆயினும் சைவத்தின் மேன் மையை விளக்கும்போது, ' எந்தச் சமயத் தவரும் தமது சமயக் கடவுளை வழிபடும் போது அவ்வழிபாட்டைக் கடவுள் ஏற்று அருள்செய்வாரென்று கொள்வது சைவ சமயம் மாத்திரமே ' .
யாதொரு தெய்வங் கண்டீர் அத்தெய்வ
மாகி ஆங்கே மாதொரு பாகர்தாம் வருவர்" என்று 'சைவத்தின் மேன்மை' என்ற அத்தியாயத்தில் கூறுகிருர்,
இவ்விரு மகான்களும் சாதிவெறி யர் சமய வெறியர் என்ற தப்பான கருத் துக்கள் இன்றும் நிலவிவருகின்றன.

பாதிரிமார்களில் பெருங் குணம் படைத்த உத்தமர்கள் பலர் இருந்தார்கள் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. நாவ லரின் மதிப்புக்கு உரியவரும் நாவவரைத் தமது குரு போன்று மதித்தும் வந்தவர் வணக்கத்துக்குரிய பேர்சிவல் (Percival) பாதிரியார். அதே போல ச், சைவப் பெரியார் காலத்தில் தேசியத்துக்கும் சைவ சமயத்துக்கும் உரிய மதிப்புக் கொடுத் தவர் யாழ்ப்பாணக் கல்லூரியின் புகழ் பெற்ற அதிபர் வணக்கத்துக்குரிய பிக்னல் (Bicknel) பாதிரியார். மகாத்மா காந்தி, தாகூர் போன்ற பாரதத் தலைவர்களில் அவருக்கு இருந்த அபிமானம் அசாதாரண மானது. அவருடைய அணைப்பில் உரு வானவர்தான் அறிஞர் ஹன்டி பேரின்ப நாயகம். இவர் உருவாக்கிய இயக்கம் யாழ்ப்பாண வாலிபர் மகாநாடு. இந்த மகாநாடு இலங்கைக்குப் பூரண சுதந்திரம் வேண்டுமென்ற பெருநோக்குக் கொண்ட இயக்கமாக வளர்ந்தது. இதன் சீர்திருத் தத் திட்டங்களில் தீண்டாமை ஒழிப்பு முதலிடம் பெற்றது. கிறிஸ்துமதத்தவ ரான பேரின்பநாயகத்தின் அழைப்பை ஏற்றுச் சைவப்பெரியார் இம்மாநாட்டின் தலைவராகப் பணிபுரிந்தமை பலருக்கும் வியப்பாக இருந்தது.
உச்சிக் குடுமியுடனும் வெறும் வேட்டி சால்வையுடனும் அவர் ஆற்றிய தலைமை யுரை புரட்சிகரமானது.
**வருணுச்சிரமதர்மம் தொழிலை அடிப் படையாகக் கொண்டது. அதிலே தீண்டா மைக்கு இடமில்லை. சமாசன, சமபோசன மறுப்புப் போன்ற தீமைகள் இருப்பதற்கு நியாயமுமில்லை. தீண்டாமை என்பது அந்திய படையெடுப்புடனும் அடிமை வியா பார முறையுடனும் வந்திருக்கவேண்டும் என்ற பகுதி அவ்வுரையிலே காணப்படு கின்றது.
1930இல் திருநெல்வேலியில் நடை பெற்ற மாநாட்டில் * சமபோசனம் " செய்த காரணத்தால் சைவப்பெரியார் சாதிவெறியரின் கல்லெறிக்கும் ஆளாஞர்.

Page 238
228
1931ஆம் ஆண்டு இந்த நாட்டிலே டனெ மூர்த்"திட்டம் முற்போக்குச் சூழலை ஏற் படுத்தும் நோக்கத்துடன் செயற்படுத் தப்பட்டது. இத் திட்டம் சுதந்திர நோக் குக்கு முரணனதென்று யாழ்ப்பாண வாலிப ம்காநாடு அவ் வருடம் நடை பெற்ற பொதுத் தேர்தலைப்பகிஷ்கரித்தது. மன்னரைத் தவிர வடமாகாண அபேட்ச கர்கள் அனைவரும் அப் பகிஷ்கரிப்பை ஆதரித்தனர். அப் பிரசித்திபெற்ற பகிஷ் கரிப்பைத் தலைமைதாங்கி நடத்தியவர் திரு. சு. சிவபாதசுந்தரம்.
இருமகான்கள்
ஆங்கிலப் படிப்பையும், அதன் பயனன உத்தியோக வாய்ப்பையும் உதறித்தள்ளிச் சைவமும் தமிழும் பேணப் போர்க்களத் தில் குதித்தவர் நாவலர்பெருமான். சைவ மரபில் வளர்ந்து பட்டப்படிப்புக்குப் பின் எடுத்த எடுப்பிலே திரிகோணமலையில் உள்ள கத்தோலிக்கப் பாடசாலையில் அதிப ராகவும்பணிபுரிந்தசைவப்பெரியார்அதனை உதறித்தள்ளி யாழ்ப்பாணத்துக்கு வந்து கல்வியும் சைவமும் வளர்த்தவர். அது கோணம்ாமலையான் கட்டளைபோலும்,வீடு திரும்பிய சைவப்பெரியார், நாவலரின் விருப்பத்துக்கு அமைய **செத்தார் எலும் பணிவானகிய திருக்கேதீச் சரத்தானின் தானின் தொண்டைமுன்னின்று நடத்திய தோடு இறுதி மூச்சுவரையும் நாவலரின் வாரிசு என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பணிபுரிந்தார்.
இவ்விருவரும் ஒருவர்பின் ஒருவராய் வந்தது நாடுசெய்த தவப்பயனே! நாவலர் பெருமான் 'சைவப்பாடசாலைகள் கட்டி, சைவப்பிரசங்கங்கள் செய்து, சைவ நூல் கள் எழுதி ஒரு மாணவர் பரம்பரையை உருவாக்கிச் சைவப் பொதுமக்களின் எழுச் சிக்கும் சைவத்தின் புத்துணர்வுக்கும் காரணமாயிருந்தார். சைவப்பெரியார் அவர்

ந. சபாரத்தினம்
கள், சைவாசிரிய பரம்பரை ஒன்றை உரு வாக்கி, சைவநுால்கள் எழுதி, குறித்த எழுச்சியை அறிஞர்கள் மத்தியில் வலுப் படுத்திய பெரும் பேராசிரிய மூர்த்தியா யிருந்தார்.
இவ்விருவரின் நூற்ருண்டு நிறைவு விழாவும், நினைவு விழாவும் ஒன்றின்பின் ஒன்ருய் நிகழ்வது எமக்கு மகிழ்ச்சி அளிக் கும் சம்பவமாகும். சென்ற ஆண்டு வெளி வந்த சைவப்பெரியார் நூற்ருண்டு விழா மலரில் எழுதிய அறிஞர் ஒருவர் **இவ் விரு பெரியாரும் சைவத்தின் புண்ணியக் கண்கள் இரண்டு" என்ற கருத்தை வெளி யிட்டார். சைவத்தில் இவர்கள் இருவருக் கும் நிகர் எவருமில்லை யெனலாம்,
ஒரு நாட்டின் மொழிக்கும் மதத்துக்கும் தொண்டாற்றினவர் என்றே, ஒரு சமுதா யத்தினதும் ஒரு இனத்தினதும் வளர்ச்சிக் குத் தம்மை அர்ப்பணித்தவரென்ருே இவர் களை நாம் குறுகிய எல்லைக்குள் அடக்கி வைப்பது தவறு. மக்களின் அவலநிலையைக் கண்டு கண்ணிர் துடைக்கக் காலத்துக்குக் காலம் தோன்றும் பெரியார்கள் என்றே மதிக்கவேண்டும். மகாத்மா காந்தியின் வரிசையில், மனித குலத்தின் மதிப்புக் குரிய குருமூர்த்திகள் எனக் கொள்ளலாம்.
“சத்தியம் உரைக்கனங் நாளும் சகலபல் உயிர்க ளுக்கும் நித்தமும் இதமே செய்க
நினைக்குக சிவத்தை என்றும் அத்தன்வே தாக மத்தில்
அருளிய பொருளிம் மூன்றும் எத்திறச் சமயத் தோர்க்கும்
எம்மதத் தினர்க்கும் ஏற்கும்."
இச்சிறு பா குறிக்கும் பேருண்மை இலக்கியமாக வாழ்ந்தவர்கள் இவ் விரு பெரியாரும் ஆவர்.

Page 239
நாவலரும் குமாரசுவாமி
ப. கோபாலகிருஷ்ணன்
நாவலப் பெருந்த கையார் சமயத் தின் பொருட்டுத் தமது உயிரையும் விடச்சித்தமாயிருந்தனர். அவர்களைப் போல் இனி ஒரு புண்ணிய புருஷன் பிறப்பதில்லை. இத்ணுலே நாவலர் அவர்களை ஐந்தாங்குரவர் என்றும் சைவப்பிரசாரகர் என்றும் சைவ உலகம் போற்றுகின்றது. இப்பெரி யார் போல் அகத்தூய்மையோடு கரு மங்களைச் செய்து நிறைவேற்றுவது மற்றையோருக்கு அரியதெனினினும்,
அவர் காட்டிய கொள்கைகளைக் கடைப்பிடித்தொழுகச் சைவர்கள் ஒவ்வொருவரும் கடமைப்பட்டுள் SMT nrrif g6ir
பத்தொன்பதாம் நூ ற் ரு ண் டி ல் பூரீலழறீ ஆறுமுகநாவலரவர்கள் சைவசமய வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை மதிப்பிடும் வகையில் அமைந்த இக்கூற்று நாவலர் மறைந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின் னர் (1949) வெளிவந்த ஒரு பத்திரிகை யின் ஆசிரியத் தலையங்கத்தின் பகுதி யாகும். இப் பத்திரிகையின் பெயர் ஆறு முக நாவலர். பத்திரிகையை வெளியிட்ட வர்கள் யாழ்ப்பாணம் வேதாகம சைவ சித்தாந்த சபையினர். பத்திரிகையின் ஆசிரியர் அச்சுவேலி சிவாகம ஞானபாநு சிவபூணி ச. குமார சுவாமிக் குருக்கள் (1886-1971). வேத சிவாகமங்களின் அடிப்படையிலான சைவத்தை நிலை நிறுத்
துவதற்குத் தனது வாழ்நாளின் முப்பத்

க் குருக்களும்
திரண்டு வருடங்களை அர்ப்பணித்த ஆறுமுக நாவலர் தனி மனிதனுகப் புரிந்த பணி களை அவர் மறைந்தபின் தொடர்ந்து நடத்தும் நோக்கினைக் கொண்டு, இலங் கையில் உருவான பல்வேறு நிறுவனங் களில் ஒன்று வேதாகம சைவசித்தாந்த சபை. இச்சபையின் தலைமைப் பொறுப் பையும் வகித்தவர் சிவபூரீ குருக்கள் அவர் களேயாவர். நாவலரின் பரந்துபட்ட ஆளுமையினல் ஈர்க்கப்பட்ட பலர் அவர் காட்டிய வழிநின்று அவரது மரபு வழு வாத சமயக் கொள்கைகளையும் பணிகளை யும் பேணும் தலையாய கடமையிலே தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். இதன் காரணமாக நாவலரை ஆதர்ஷமாகக் கொண்டு ஒரு ஞானபரம்பரையே உரு வாகியதை அவதானிக்கலாம். இந்த ஞானபரம்பரையினர் மேற்கொண்ட பணி கள் யாவும் நாவலர் பணியின் வளர்ச்சி யும் தொடர்ச்சியுமாக அமைந்தன என் பது மனங்கொள்ளத்தக்கது. இவ்வகை யில் இந்நூற்ருண்டிலே நாவலரின் இலட் சியங்களை நிறைவேற்றுவதில் தம்மை ஈடு படுத்திய ஒருவரர்கத் திகழ்பவர் சிவபூg குருக்களவர்கள். -
நாவலர் மறைந்து (1879) ஏழு ஆண்டு களின் பின்னரே குருக்களவர்கள் பிறந் திருக்கிருர். 1886ல் ஆதிசைவ அந்தண குலத்தில் அச்சுவேலி ந. சபாபதிக்குருக்
களுக்குப் புத்திரனுகப் பிறந்த குருக்க ளவர்களின் கல்வி, கேள்வி விருத்திக்குக்

Page 240
230
காரணமாக அமைந்தவர்கள் நாவலர் மரபில் வந்தவர்களே.
நாவலரினல் நெறிப்படுத்தப்பட்ட சைவ இயக்கத்தில் நெருங்கி உழைத்த நீர்வேலி பூரீலபூரீ சிவசங்கர பண்டிதர் அவர்களின் குமாரரும் நாவலரிடம் இடை யிடையே பாடங்கேட்டவருமாகிய சிவப் பிரகாச பண்டிதரிடம் குருக்கள் தமிழை யும் சமஸ்கிருதத்தையும் பயின்ருர், அத் துடன் சுன்னுகம் வித்துவசிரோமணி பூணிமத் அ. குமாரசுவாமிப் புலவர்களிடத்தும் முறைப்படி கற்றதோடு நாவலரின் பெருமகளுகிய பூரீமத் த. கைலாசபிள்ளை அவர்களிடத்தும் தமிழ்நூல், சித்தாந்த நூல் ஆகியவற்றைப் பாடங்கேட்டவர். சங்கானை அ. அருளுசல சாஸ்திரிகளிடமும் புலோலி ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்க ளிடமும் சென்று சிவாகமங்களைக் கற்ற வர். பூரீமத் த. கைலாசபிள்ளையால், வண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் ஆரம்பிக்கப்பட்டு சுன்னுகம்குமாரசுவாமிப் புலவரால் நடத்தப்பட்ட காவிய வகுப்பு களில் பயின்றவர். உடுவில் அம்மன் கோவில் வித்துவான் ச. ஜகந்நாதையர், காரைநகர் சு. பஞ்சாட்சர ஐயர், திரு கோணமலை இ. கு. பூர்ணுனந்தேசுவரக் குருக்கள் முதலியவர்கள் இவரது காலத் காலத்தில் பயின்ற சக மாணவர்கள். நாவலரின் மரபிலே பயின்ற இவர் நாவல ரின் சமயக் கருத்துக்களை நடைமுறைப் படுத்துகின்ற பணியில் தனது சமயப் பணியைத் தொடங்கினர்.
பத் தொ ன் பதா ம் நூற்றண்டில் நாவலர் நடத்திய இயக்கத்தின் உயிர்நாடி வேதாகம வழிவந்த சைவ உணர்வாக இருந்தது. சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த்தல் வேண்டும் என்பதே அவரது நோக்கங்களாக அமைந்தன. சைவப் பணியே அவரது உயிர்மூச்சாக இருந்தது. நாவலரின் இயக்கம் இரு முக்கிய முனைக ளைக் கொண்டிருந்தது. பரசமயத்தவர்க ளால் சைவக் கோட்பாடுகளுக்கும் வழி பாட்டு முறைகளுக்கும் எதிராகப் பரப்பப்

ப. கோபாலகிருஷ்ணன்
பட்ட தூஷணங்களைக் கண்டித்து, சைவ சமய ஆதாரங்களை வேதசிவாகமங்கள் ஆகிய முதனூல்களிலிருந்தும்திருமுறைகள், கந்தபுராணம் ஆகிய வழிநூல்களிலிருந்தும் பிரமாணங்களுடன் எடுத்துக்காட்டுவது ஒன்று. நாவலரின் சைவதுரஷண பரிகாரம் (1854) இதற்கு எடுத்துக்காட்டு. மற்றை யது சைவர்களாக வாழுகின்றவர் மத்தி யிலே சமயம் தொடர்பாக நிலவிய அறியா மையையும் ஒழுக்கக் குறைபாடுகளையும் களைவதாகும். குருக்களவர்களது சைவப் பணி இரண்டாவது அம்சத்தையே அடிப் படையாகக் கொண்டு விளங்கியதென்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சமயத்தைப் பின்பற்றுபவர்களிடம் காணப்படக்கூடிய அறியாமை, ஒழுக்கக் கேடு என்பவற்றிற்கு அச்சமயத்நை வழி நடத்தும் குருமாரும் ஒருவகையிற் காரண மாவர். இதனை நாவலர் நன்கு உணர்ந் திருந்தார். வேதசிவாகம நெறிப்படி ஒழு கத்தவறிய பிராமணர்களைக் கண்டித்தார்.
இக்காலத்தார் தங்கள் தங்கள் கருத்துக்கிசைய நடந்த பிராமணர் கள் எத்துணைப் பாதகர்களாயினும் அவர்களையே மேன் மக்களென்று பிர திட்டை பூசை திருவிழா முதலியன
செய்ய நியோகிக்கிருர்கள்.
1 : d. 13J
இவ்வாறு கண்டித்த நாவலர், சைவா கம உணர்ச்சியும் நல்லொழுக்கமும் சிவ பத்தியும் உள்ள பிராமணர்களே ஆலயக் கிரியை செய்யத் தகுதியானவரெனக் கருதி ஞர். இதனைப் பின்வரும் கூற்ருல் உணர 6WTh:
நமது சைவசமயிகள் ஒற்றுமை யுடையவர்களாய்த் திரண்டு, தேவா லயங்களெங்கும் சைவாகமங்களில் விதித்த இலக்கணங்களமைந்த பிரா மணர்களைக் கொண்டே பிரதிட்டை, பூசை, திருவிழா முதலியவற்றை விதி
வழுவாது இயற்றுவித்தலும்.
Il : Luji. 14

Page 241
நாவலரும் குமாரசுவ ாமிக் குருக்களும்
இவ்வகையில் நாவலர் எதிர்பார்த்த ஓர் அந்தணப் பெருமகனின் இடத்தைத் தமது சிந்தனை, சொல், செயல் ஆகிய வற்ருல் சிவபூீரீ குருக்கள் நிறைவு செய்ய முனைந்தார்.
நாவலரவர்கள் சிவாகமம் விதிக்கும் சிவதீகூைடி பற்றியும் உறுதியான கொள்கை யுடையவராக இருந்தார். சைவத் திருக் கோயில்களில் சிவதீகூைடி பெற்றவர்களே குருமாராகக் கடமைபுரியத் தகுதியுடை யவரென்பது நாவலரின் உறுதியான கருத்து. நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைப் பற்றி (1 : பக். 10-11) பற்றி நாவலர் பிரஸ்தாபிக்கும் பொழுது இவ்விஷயத் தில் அவரது தீவிரமான கொள்கையை உணரலாம்.
பெரியபுராண வசனத்திலே தில்லைவா ழந்தணர்களின் சிறப்பை எடுத்துக் கூறிப் புகழ்ந்த நாவலர் சிதம்பராலயத்தில் தமது காலத்தில் சிவதீகூைடி பெருமைக்காகத் தனது பிரசாரத்தின்போது தில்லைவாழ் அந்தணரை வன்மையாகக் கண்டித்தவர். அப்படிப்பட்ட நாவலர் சிவதீகூைடி பெற்ற பிராமணர்களை உயர்வாக மதித்தமைக்கு விளைவேலி வேதக்குட்டிக் குருக்களை நன் ருக மதித்து அவர்களிடம் தீகூைடி பெற் றமை நல்ல எடுத்துக்காட்டாகும். சிவபூg குருக்களவர்களும் 1910இல் சிவாகம பண்டி தரும் உபந்நியாசகருமாகிய ஊரெழு சிவ. சதாசிவக் குருக்களிடம் ஆசாரியாபிகேஷம் செய்யப்பெற்று ஈசான சிவாச்சாரியர் என்ற தீக்ஷா நாமத்தைப் பெற்றவர். குருக்களவர்களின் சிவாசாரிய பெருமை யைப் பற்றிப் பின்வரும் கூற்று மனங் கொள்ளத்தக்கது.
அக்காலத்தில் மதிப்புக்குரிய வேதக்குட்டிக் குருக்கள் போல இக் காலத்தில் ஆதி சைவர்களுக்குள்ளே அச்சுவேலி சிவபூீரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் சிவாகமம் வல்ல வர்களாய், சைவக்கிரியை கைவந்த

231
வர்களாய், ஞானகாண்ட அறிவும் உடையவர்களாய் விளங்குகின்றர்கள். t3: துண்டுப்பிரசுரம்)
நாவலர் கல்வி மரபில் வந்த குருக்கள் அவர்கள் மாணவர்கட்குத் தீகூைடி, ஆசாரி யாபிஷேகம், மந்திரோபதேசம் முதலிய வற்றை நடத்தும் தீக்ஷா குருவாகச் சிறந்து விளங்கிய தன்மையைக் குருக்களின் சம காலத்தவரும் ஒருசாலை மாணுக்கருமாகிய சிவபூீரீ இ. கு. பூர்ணுனந்தேசுவரக் குருக் கள் அவர்கள், சிவபூணி குருக்களின் "குரு பரத்துவத்தை பரவும் வகையால் தெளி tu anrth.
தீகூைடி வகையிற் சாஸ்திர தீகூைடிக் குரிய முறைப்படியே பல குருமாருக்கு ஆகமக்கிரியை முதலியவற்றிலும் மற் றும்பல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்று விளங்கத்தக்க ஞானத்தைப் போதித்தும் இவை பற்றிய பல நூல் களை இயற்றியும் விளக்க உரைகள் எழுதி அச்சிடுவித்தும் குரு என்ற பதத்திற்குரிய இலக்கியமாக விளங்கு கிழுர், 12 : பக். 421
குருக்கள் அவர்கள், நாவலர், காசி வாசி செந்திநாதையர் ஆகியோர் இந்தியா சென்று தலயாத்திரைகள் மேற்கொண் டமை போன்று சிவத்தல யாத்திரையைச் சிவபுண்ணியமாகக் கருதி 1916ஆம் 17ஆம் ஆண்டுகளில் தலயாத்திரையைத் தமிழகத் தில் மேற்கொண்டு சமயப்பணி புரிவதற் கேற்ற சமய அனுபவங்களையும் பெற்றவர்
நாவலரவர்கள் தமது காலத்தில் சமயக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தார். அவ்வெண்ணத்தைச் செயற்படுத்தும் வகையில் பல்வேறு இடங் களில் சைவப்பிரகாச வித்தியாசாலைகளைத் தாபித்தார். வண்ணுர்பண்ணை சைவப் பிரகாச வித்தியாசாலை, மற்றும் கோப் பாய், புலோலி ஆகிய இடங்களிலும் வித்தியாசாலைகளை நிறுவினர். அவரது வழிவந்த குருக்கள் அவர்களும் 1918ஆம்

Page 242
232
ஆண்டு அச்சுவேலியில் விநாயகராலய மேலை வீதியில் தமது சொந்த நிலத்தில் "சரஸ்வதி வித்தியாசாலை" என்ற பெயரில் பாடசாலையை தாபித்தும் மற்றும் மருதன் கேணியிலும் சோரன்பற்றிலும் சைவப் பாடசாலைகளை ஆரம்பித்தும் வைத்தவர். சைவசமயத்தைச் சைவசமயிகள் முறை யாக அறிவதற்குப் பிரசங்கம் துணை செய் யும் என உணர்ந்து அதனையே தம் பணியா கக் கொண்டவர். இதனை, குருக்களவர்கள் தமது பாடசாலையில் செயற்படுத்தியவர். ஈழத்துச் சமயப் பெரியார்களும் தமிழகத் தைச் சேர்ந்தவர்களும் இப் பாடசாலையில் நிகழ்ந்த மாதப்பிரசங்கங்களிலும் விசேட தினப் பிரசங்கங்களிலும் கலந்துகொண் டனர்.
நாவலரவர்கள் சிதம்பரத்தில் ஒரு குருகுலம் தாபிப்பதற்குத் திட்டம் வகுத்து மக்களிடம் பொருள் கோரினர். போதிய பணம் சேராமையால் அவர்களுடைய முயற்சி சிதம்பரத்தில் வித்தியாசாலை நிறு வுவதோடு நின்றுவிட்டது. குருக்களவர்கள் நாவலரின் இக்கனவைப் பலவழிகளில் நன வாக்க முயன்ருர், நாவலர் போற்றிய திருக்கேதீச்சர ஸ்தலத்தில் உருவாகிய வேதாகமப்பயிற்சி நிலையத்திற்குக் குருக் கள் முழுமனதுடன் உழைத்தவர். ‘அர்ச்ச கர் பயிற்சிக் கல்லூரி அமைத்து அர்ச்சகர் களைச் சிறந்த குருமாராக வரச்செய்வது மிகமேலாகிய சிவபுண்ணியச் செயலாகும்" என்ற உறுதி கொண்ட குருக்களவர் களுக்கு திருக்கேதீச்சரத் திருப்பணிச்சபை, இந்துமாமன்றம் போன்றவற்றின் நல்லா தரவும் கிட்டியது. இந்நிறுவனங்களின்
முயற்சியினுல் சிவானந்த குருகுலம் என்ற
பெயரால் இப்பயிற்சிநிலையம் உருவாகியது, சிவபூரீ குருக்களவர்களே பிரதம குருவா கவும், அதிபராகவும் விளங்கினர். குருகு லம் தற்பொழுது யாழ்ப்பாணத்திலே இந்துமா ம ன்ற த் தி ன் ஆ த ர வுட ன் சிவானந்த குருகுல பரிபாலன சபையால் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குருக்களவர்கள் தம்முடைய இல்லத் தில் பிராமணப் பிள்ளைகளுக்கும் சைவப் பிள்ளைகளுக்கும் தமிழிலும், சமஸ்கிருதத்

ப. கோபாலகிருஷ்ணன்
நிலும் கருவிநூல்களையும், நீதிநூல்கள்ை ம், சமயநூல்களையும் படிப்பித்தவர். பாழ்ப்பாணத்தில் பல இட்ங்களில் பிரா மணப்பிள்ளைகள், சைவப்பிள்ளைகள் நலன் 5ருதி நடத்தப்பட்ட வகுப்புகளில் சிவாக மங்கள், பத்ததி மு த லி ய வ ற்  ைற ப் போதித்து, சமயநூல்களையும் படிப்பித் 5 Tit.
நாவலர் சைவசமய அடிப்படை அம் Fங்களை மக்களுக்கு எடுத்துக்கூறும் வகை பில் சைவத்தின் ஆதார இலக்கியங்களா யெ புராணங்கள், திருமுறைகள் போன்ற வற்றை வெளியிட்டார். சமய வாழ்வில் அனுட்டிக்கக் கூடியவற்றை விளக்கும் பொருட்டு புட்பவிதி, சிவாலய தரிசனவிதி அனுட்டானவிதி (முதலாம் புத்தகம்), அனுட்டானவிதி (இரண்டாம் புத்தகம்), சிவ பூசாவிதி, சிராத்தவிதி, போசனவிதி, பூசைக் கிடம்பண்ணும்விதி, தருப்பணவிதி, சைவ விணுவிடை என்பன அவர் நூல்களுட் சில வாகும்.
நாவலரைப் பின்பற்றிக் குருக்களவர் களும் நூல்களை எழுதியும், ஆகமங்களி லிருந்து தொகுத்தும், மொழிபெயர்த்தும், நூல்களைப் பதிப்பித்தும், நூல்களுக்கு உரை எழுதியும், அருந் தொண்டாற்றினர். திருக்கோயில் கிரியை செய்யும் குருமாருக் குப் பயன்படக்கூடிய பிரதிஷ்டா நூல் களைப் பெருமளவில் ஆகமங்களிலிருந்து தொகுத்து வெளியிட்டமை குறிப்பிடத் தக்கதாகும். தமிழபிமானம், சைவப்பற்று ஆழ்ந்த சமய ஞானம் ஆகிய அம்சங்கள் இவரது நூல்களில் மிளிர்கின்றன. குருக் கள் அவர்கள் எழுதிய நூல்களுள்:
சைவப்பிரகாசிகை (l-V) (1933 முதல் ாழுதினர்), சிவபூசை விளக்கம் (1928), மகோற்சவ சந்திரிகை (1932), சிரார்த்தத் நீபிகை (1933), பிராசாத தீபவுரை (1933), விநாயக பரத்துவம் (1934), புவனேசுவரி மகத்துவமும் திருவூஞ்சலும் (1934), சைவ Fாஸ்திர பரிபாலனம் (தொகுப்பு 1940), ஆலய அமைப்பு, ஆலய சேவை (1949), வேதாகமநிரூபணம் 1 (1950), வேதாகம

Page 243
நாவலரும் குமாரசுவாமிக் குருக்களும்
நிரூபணம் II (1951), நீர்வேலி யூரீலழறி சிவசங்கர பண்டிதர் சரித்திரம் ( 1 9 5 4 ) , முப்பொருள் விளக்கம் (1955), சிவபூசாவிதி (1956), மகோற்சவ விளக்கம் (1958), முத்திராலட்சணம் (1962), சிவராத்திரி நிர்ணயம் (1963), சோபகிருது வருஷ நவராத்திரி - சிவராத்திரி விரத நிர்ணயம் (1983), மூர்த்தியலங்காரம் (1988), சைவ காலப் பகுப்பு (1968) என்பன அவரால் தமிழில் எழுதப்பட்ட நூல்களுட் சில. சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நூல் களுள் சிவகாமசேகரம் பிரதிட்டாவிதி 1 (1949), சிவலிங்கப் பிரதிட்டாவிதி I, சுப்பிர மணியப் பிரதிட்டா விதி, பிரணயகல ஹவர் ணனம்,வைதிகசந்தியாவந்தன விதி (1960), அக்கினிகார்ய விதி (1964), சுப்பிரமணிய ஆலய நித்திய பூசாவிதி (1964), சைவ சிரார்த்த விதி (1965), பைரவ பிரதிட்டா விதி (1968) என்பன சில. குருக்களவர் கள் உரை எழுதிய நூல்களுள் அணுட்டான அகவலுரை (1937), கோளறு பதிகம் ஆகி யவை சில. பார்வதீ பரமேசுவரர்களின் திருவூடல் (1937) அவரால் பரிசோதிக்கப் பட்டு வெளிவந்த நூல். குருக்களின் குறிப்புரையுடன் வெளிவந்தது நீர்வேலி பூனிலழறீ சிவசங்கரபண்டிதரின் பிராசாத சட்சுலோகி (1956) என்ற நூலாகும். குருக்களவர்கள் முதன்முதல் எழுதி வெளி யிட்ட நூல் அச்சுவேலி சித்திவிநாயகர்மீது பாடிய ஊஞ்சல் (1915) ஆகும்.
குருக்களவர்களின் நூல்களைப் பாட நூல்கள், கிரியை நூல்கள், தத்துவ நூல் கள், பிரதிட்டை நூல்கள், உரை நூல்கள் என வகைப்படுத்தலாம். நாவலர் எழுதி வெளியிட்ட பாலபாட வரிசையில் வந்த நூல்களைப்போன்று குருக்களவர்களும் சைவப்பிரகாசிகை நூல் வரிசையில் ஐந்து பாகங்களை வெளியிட்டார். இந் நூல்க ளுக்கு பூரீமான் சு. நடேசபிள்ளை, கலா நிதி உ. வே. சாமிநாத ஐயர், பூரீமத் சு. சிவபாதசுந்தரம், பூg. தி. சதாசிவ ஐயர், பூரீமான் சு. இராசரத்தினம் போன் ருேர் வழங்கிய மதிப்புரைகள் இந் நூல்களின் தரத்தை மட்டிடப் போதுமானவை. இந்
28

r
233
நூல்கள் சைவசமய உணர்வும் ஒழுக்கமும் சிறுவரிடையே வளர வேண்டுமென்ற நோக்கத்தோடு எழுதப்பட்டவை.
குருக்களவர்கள் சில ஆகமங்களை யாவது எழுதிப் பேண வேண்டும் என்ற ஆவலில் இந்தியாவில் உள்ள பல சிவா சாரியர்களோடு தொடர்புகொண்டு இயங் கினர். ஆகமப்பிரதி உபகரித்தோரில் திரைலோக்கி சிவபூரீ காசிநாதக்குருக்க்ள், குன்றக்குடி ஷண்முகநாதக்குருக்கள் ஆகி யோர் குறிப்பிடத்தக்கவர்கள், குருக் களின் பெரும்பாலான நூல்களுக்குப் பதிப் பாசிரியர்களாக விளங்கியவர் அவரது புத்திரன் சிவபூரீ வைத்தீசுவரக்குருக்களும் திருமயிலை வே. ஜம்புலிங்கம் பிள்ளையு மாவர். நாவலர் மரபில் வந்த குருக்கள் பெற்ற தமிழ், சமஸ்கிருத மொழிகளின் புலமைக்கு இந் நூல்கள் சான்ருகும், திருக்கோயிலில் கிரியைகளில் ஈடுபடும் குருமார் வேதாகம அறிவில் மேம்பட்ட வர்களாக விளங்கவேண்டுமென நாவலர் கொண்ட இலட்சியத்தினை நிறைவு செய்ய முனைந்தது போல் அவரது சைவக்கிரியை, பிரதிட்டை நூல்கள் விளங்குகின்றன.
சைவசித்தாந்த தத்துவத்தின் புல மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது அவர் இயற்றி வெளியிட்ட முப்பொருள் விளக்க மாகும் (1955). இந் நூலுக்கு அணிந்துரை வழங்கிய இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பின் வருமாறு கூறுவர்.
உலகத்துக்குக் கருத்தா யாவர்? சிவ பெருமான் என்று தொடங்குகின்றது சைவவினவிடை, 'உலகம் என்ற ஒன்று உண்டு. அதற்கு ஒரு கருத்தா வேண்டும். அந்தக் கருத்தா சிவபெரு மான்' என்று நிரூபிக்கச் சைவ விஞ விடை தலைப்படவில்லை, முப்பொருள் விளக்கம் என்னும் இந்நூல் நிரூபிக் கத் தலைப்பட்டுச் சைவவினவிடைக்கு ஒரு பாஷியமாய்ச் சிவஞான சித்தியா
ரின் சாரமாய் அமைந்திருக்கிறது.
14 : илф. 5)

Page 244
234
யாழ்ப்பாணத்திலே வேதாகமங்களின் மரபுக்கெதிராக எதிர்ப்பொன்று உருவா கியபோது கரணவாய் சைவ ஆராய்ச்சிச்சங் கத்தினரின் ஆதரவுடன் குருக்கள் எழுதிய நூல் வேதாகம நிரூபணம் ஆகும் (1950(1), 1951(1). அவரது நிதானத்தையும் சமய அனுபவ முதிர்ச்சியையும் இந்நூல் வெளிப் படுத்துகின்றது. சைவம் தமிழ்ச் சமயம் என்று கூறி வேதாகமங்களின் தொன் மையை எதிர்ப்பவர்களை உரிய ஆதாரங் களுடன் மறுத்து வேதசிவாகமங்களே சுத் தாத்துவிதவைதிக சைவசித்தாந்த முத னுால்கள் என குருக்கள் நுண்ணிய ஆராய்ச் சித் திறனுடன் எழுதியவைதான் இவ்விரு நூல்கள். இந்நூலில் நாவலர் நடையின் சாயலைக் காணலாம். நாவலரின் பணியில் குருக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் மதிப்பும் இந்நூலில் வெளிப்படுகிறது.
ஆறுமுகநாவலர் பழைய வைதிக  ைசவத்  ைத ப் புனருத்தாரணம் செய்ய வந்த பெரியார். சமய குர வர் சந்தான குரவர் முதலிய அருட் செல்வர்கள் காட்டிய நெறியிலே நின்று நமது சற்சமயமாகிய வைதிக சைவத்தைப் பரிபாலனஞ் செய்தார். அதுவன்றிப் புதியதொரு நெறியை நிறுவினுரல்லர். (5 பக். 20-21)
இந்நூலில் குருக்கள் தான் உருவாகி வந்த பரம்பரையைப் பற்றிக் கூறும் கருத் தும் குறிப்பிடத்தக்கது.
நாவலரும் (சங்கர) பண்டிதரும் திருத்தி வைத்த பரம்பரையே நம் நாட்டில் இன்றும் சைவத்தைப் புரந்து வருகிறது. 5 : Luis. 21.
தனது ஆசிரிய பரம்பரையினர் மீது கொண்ட அபிமானம் காரணமாகக் குருக் கள் பூரீலழறீ சிவசங்கர பண்டிதர் ஞர்ப கார்த்த சபைக்குத் தலைவராக இருந்து யூரீலழரீ சிவசங்கர பண்டிதர் சரித்திரம்(1954) எனும் நூலை எழுதி வெளியிட்டமை குறிப் பிடத்தக்கதாகும். பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை தமது அணிந்துரையில்,

ப. கோபாலகிருஷ்ணன்
பூரீலழறி சிவசங்கர பண்டிதர் அவர் களின் சரித்திரம் எழுதுவதற்கு அதிகா ரமும் உரிமையும் தகுதியும் படைத்த வர்கள் எவரோ அவர்களால் எழுதப் பட்டிருக்கிறது, (6 பக். XVI)
பூரீ மெய்கண்டான் சித்தாந்த மகா நாட்டிற்கு 1931ஆம் ஆண்டு குருக்கள் அவர்களால் எழுதப்பெற்றுச் சன்மானிக் கப்பெற்ற சிவஞானபோதம் ஒன்பதாம் சூத்திரம் எனும் கட்டுரை தருமையாதீனத் தால் விசேட மலராகப் பதிப்பிக்கப்பெற்ற தாகும். குருக்கள் பெற்ற இக் கெளரவம் அவரது தத்துவ சாத்திரப் புலமையை வெளிப்படுத்துவதாயுள்ளது.
நீண்டகாலமாகக் குருக்கள் பெற்ற சமய அனுபவங்களையும் நுண்ணிய ஆராய்ச் சித் திறனையும் உணர்ந்து அவர் காலத்தில் இருந்த பல சங்கங்களும் சபைகளும் இவ ரது புலமையைப் பயன்படுத்திக் கொள் ளத் தவறவில்லை. காலமாறுபாட்டால் வரும் வேதாகம விரோதங்களை நிராகரித் தற்பொருட்டு ஆறுமுகநாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையில் பூரீத. கைலாச பிள்ளை அவர்களால் தாபித்துத் தலைவ ராயிருந்து நடத்தப்பட்டுவந்த சைவாபி மாணிகள் சங்கத்திலிருந்து மாதமொரு சஞ்சிகையாகப் பல சஞ்சிகைகள் வெளி வந்தன. அவற்றைப் பார்வையிட்டு அச்சுக்குக் கொடுக்கும் பொறுப்பாளராகக் குருக்கள் செயல்பட்டார்.
யாழ்ப்பாணம் வேதாகம சைவ சித் தாந்த சங்கத்தின் தலைவராக இருந்து குருக்கள் மேற்கொண்டபணிதான் அவர் காலத்தின் உச்சக் கட்டமெனலாம், நாவலர் மரபு வந்த சைவப்பணி என இதனைக் குறிப்பிடலாம். நாவலரின் கொள்கைகளைச் சைவ உலகுக்குப் பிர கடனப்படுத்தும் பணியாக அமைந்தது. கட்டுரையின் தொடக்கத்தில் மேற்கோ ளாகத் தரப்பட்டது சபையின் வெளியீ டாகிய ஆறுமுகநாவலர் பத்திரிகையில் (விரோதிளும் சித்திரைமீ" 1949) இடம் பெற்ற குருக்களின் ஆசிரியத் தலையங்கக்

Page 245
நாவலரும் குமாரசுவாமிக் குருக்களும்
கூற்றின் பகுதியாகும். இக்கூற்று நாவல ரைப் பற்றிய குருக்களது மதிப்புரையாக வும் பத்திரிகையின் நோக்கமாகவும் அமைந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது.
நாவலர் தமது காலத்தில் உதயபானு என்ற பத்திரிகை நடத்த விரும்பினரென வும் அவ்விருப்பம் அவரது மாணவரால் மேற்கொள்ளப்பட்டுப் பின் இந்துசாதன மாக மலர்ந்ததாகவும் அறிய முடிகின்றது. இவ்வகையில் நாவலரின் வழிவந்த குருக்க ளும் நாவலர் பயன்படுத்த விரும்பிய பொதுசன சாதனத்தை அவரது கொள் கைகளைப் பரப்பும் களமாகக் கருதிச் செயற்பட்டார் நாவலர் பரம்பரையில் பயின்று அவரது சைவக் கொள்கைகளில் ஊறிய குருக்களுக்கு நாவலரின் சிந்தனை களை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல இச்சாதனம் நன்கு துணைபுரிந்தது எனில் மிகையில்லை. "ஏதமில்சீர் ஆறுமுக நாவல ரவர்கள் இச் சஞ்சிகை ரூபமாகப் புனர் ஜென்மம் எடுத்து வருகிருர் " என்றே இப்பத்திரிகை மக்களுக்கு அறிமுகஞ் செய்துவைக்கப்பட்டமை இங்கு கவனிக் கத் தக்கதொன்ருகும். நாவலரின் திரு வுருவப் படத்தை ஒவ்வொரு இதழும் தாங்கி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
குருக்களவர்களுக்கு இலங்கையில், தமது சைவப்பணியை நிறைவேற்ற இப் பத்திரிகை உதவியது போல தமிழகத்தில் சைவத் தொண்டைச் செய்வதற்குச் சைவ சாஸ்திர பரிபாலனம் என்ற பத்திரிகை உதவியது. குருக்கள் 1939ஆவணி தொடக் கம் 1941 மார்கழி வரை ஆசிரியராக இருந்து நடத்திய பத்திரிகை சைவசாஸ்திர பரிபாலனம் ஆகும். இந்தியாவில் சாஸ்திர விரோதமான பல கிளர்ச்சிகள் தோன்றி சமய வரம்பை அழித்துக்கொண்டு வரும் நிலையைக் குருக்களது இந்திய விஜயத்தின் போது சைவாபிமானிகள் பலர் குருக்க ளிடம் எடுத்துக் கூறியதோடு, சாஸ்திர விஷயங்களை வெளிப்படுத்துவதற்கும் நூல் கள் அழிந்து போகாது பாதுகாத்தற்கும் சைவப் பத்திரிகை அவவசியமெனவும்

235
ஊக்கப்படுத்தினர். அதன் விளைவாகவே சைவ சாஸ்திர பரிபாலனம் உதயமானது.
இப்பத்திரிகைக்கு ஆதரவு நல்கிய தமி ழகச் சிவாசாரியார்களில் திருவாவடு துறை சுவாமிநாதக் குருக்கள், மாயூரம் வைத்தியநாதக்குருக்கள், சிவபுரம் சுவாமி நாதக் குருக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். **பழைய வைதிக சைவம் பரக்கவே" என்ற மேற்கோளைத் தாங்கிச் சமய சம்பந்தமான வெளியீடாக இப்பத்திரிகை இலங்கையிலும் தமிழகத்திலும் பவனி வந்தது. இப்பத்திரிகையின் வாயிலாக இந்தியாவில் உள்ள அந்தணர்கள், சைவப் பெரியார்கள், கல்விமான்கள், திருவாவடு துறை ஆதீனம், திருத்தருமையாதீனம், திருப்பனந்தாள் காசிமடத்துத் தலைவர் ஆகியோரின் மதிப்பும், ஆதரவும் நாவலர் வழிவந்த குருக்களுக்குக் கிடைத்தது. இப் பத்திரிகையில் திரு. சு. சிவபாதசுந்தரம், திரு. மு. ஞானப்பிரகாசம், மாவை சா. குமாரசுவாமிக் குருக்கள் போன்ற இலங்கை அறிஞர்களும் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்களும் விஷயதானம் செய்து பத்திரிகையை வளம்படுத்தினர்.
குருக்களவர்கள் விரதாதி விஷயங்களிற் சிலர் எழுதிய நிர்ணயங்களையும் கருத்துக் களையும் நிராகரித்துச் சில பத்திரிகைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்துசாதனம், ஈழகேசரி, சோதிட பரிபாலினி, சுவதர்ம போதம், சிவநேசன் முதலிய பத்திரிகைக ளிற் குருக்களவர்கள் எழுதிய கட்டுரை கள் குறிப்பிடத்தக்கவை. இவை யாவும் தொகுக்கப்பட்டு நூல் வடிவில் வெளிவர வேண்டியது அவசியமாகும்.
ஈழத்திலுள்ள திருக்கோயில்களில் நடைபெற்ற வைபவங்களில் பெருமளவு கலந்து சிறப்பித்துள்ளதோடு மந்திரம், கிரியை, பாவனை மூன்றும் வழுவாது பிர திட்டை உற்சவாதி கிரியைகள் செய்வதில் பிரசித்திபெற்றவர் குருக்களவர்கள். ஆலய அமைப்பு, விக்கிரக அமைப்பு, ஆகிய துறைகளிலும் குருக்கள் போதிய அனு

Page 246
236
பவும் பெற்று விளங்கியவர். நாவலர் சைவப்பணிகளைத் திருக்கோயிலைக் கேந்திர மாகக் கொண்டே நிறைவேற்றினர். அதே போன்று குருக்கள் அவர்களும் திருக் கோவிலோடு தொடர்புள்ள எல்லா நுணுக்கங்களையும் அறிந்து சமுதாயத்திற் குப் பெருந் துணை புரிந்தார். திருக்கே தீச்சர திருப்பணிச் சபைக்கு வேத ஆகம வழுவின்றி ஆலயப் புனருத்தாரண பணி நடைபெற நல்ல ஆலோசனைகளை வழங்கி யதையும் நினைவு கூர்தல் அவசியம்.
தமிழகத்தில் திருவாவடுதுறை ஆதீனம் *நாவலர்" பட்டம் சூட்டி நாவலர் பெரு மானைக் கெளரவித்து இலங்கைச் சைவப் பெரியாருக்குப் பெருமை பாராட்டியது, அதே போன்று குருக்களவர்களின் சிவா கம அறிவின் ஆழத்தையும் புலமையையும் பாராட்டும் வகையில் மதுரை திருஞான சம்பந்த சுவாமிகள் ஆதீனம் அவருக்கு *சிவாகம ஞான பாநு" என்ற பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தமை (1966) ஆறுமுக நாவலர் பரம்பரைக்குக் கி  ைடத் த கெளரவ மெனலாம்.
நாவலரின் வழிநின்று சைவத்தொண்டு புரிந்த குருக்களின் சேவையைச் சைவ உலகம் மறக்கவில்லை. நாவலரின் வைதிக சைவநெறியைப் பேணியதோடு மாத்திர மின்றி அதன் வழி சைவம் காத்த பெரு மையைப் பாராட்டும் வகையில் ஒரு விழா (1960) குருக்களவர்களுக்கு நடத்தப்பட் டமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியி லிருந்து சைவ உலகம் குருக்கள் அவர்களை எவ்வாறு உயர்ந்த நிலையில் வைத்து மதிக் கின்றது என்பது புலப்படுகின்றது. அப் பொழுது யாழ்ப்பாண அரச அதிபராக விளங்கிய திரு. ம. பூரீகாந்தா அவர்களின் தலைமையில் குருக்கள் பாராட்டு விழாச் சபை அமைக்கப்பட்டுச் செயற்பட்டது. யாழ்ப்பாணம் வைத்தீசுவர வித்தியாலய அதிபராகவிருந்த திரு. ச. அம்பிகைபாகன் தலைமையில் மலர் வெளியீட்டுச் சபை அமைக்கப்பட்டு குருக்கள் பாராட்டு விழா மலர் ஒன்று வெளியிடப்பட்டது. குருக்க ளின் சேவையைச் சைவ உலகு உணரும்

ப. கோபாலகிருஷ்ணன்
வண்ணம் பல அறிஞர்கள் குருக்களின் சைவத்தொண்டை மதிப்பீடு செய்துள் ளமை குறிப்பிடத்தக்கது. திரு. ச. அம் பிகைபாகன் பதிப்புரையில்,
குருக்கள் அவர்கள் ஈழநாட்டிலும் தமிழ் நாட்டிலும் சைவத்தையும் தமிழையும் வளர்த்த ஞானப்பிர காச முனிவர், பூgலயூரீ ஆறுமுக நாவ லர், காசிவாசி செந்திநாதையர், இலக்கணம் முத்துக்குமாரத் தம் பிரான் போல் வேதாகமங்கள், சைவ சித்தாந்த சாஸ்திரங்கள், திருமுறை கள் முதலியவற்றைத் துறைபோசுக் கற்றவர்கள். இதனுலேயே குருக்கள் அவர்கள் சைவசித்தாந்த உண்மை களை மரபு பிறழாது எடுத்துரைக்க முடிகிறது. (7 ; பதிப்புரை
எனக் கூறுவது மனங்கொள்ளத் தக்கது.
திருக்கேதீச்சர கும் பா பிஷேகம் 1976இல் நிகழ்ந்தபோது வெளியிடப்பட்ட திருக்குட திருமஞ்சன மலரில் குருக்களைப் பற்றிய கட்டுரையில் இடம்பெற்ற மதிப் பீடு குருக்களின் சைவத்தொண்டின் பெரு மையை விளக்கும். W
சிவாசாரியர் திலகமாய்த் திகழ்ந்து சைவ சமய வளர்ச்சிக்கு வேண்டிய வழிமுறைகளை ஆராய்ந்து பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர்களுக்குப் பின் னர், இவ்விருபதாம் நூற்ருண்டிற் சிவதொண்டாற்றியவர் அச்சுவேலி *சிவாகம ஞானபாநு சிவபூg ச. குமார சுவாமிக் குருக்களவர்களாவர் . . . ... சைவ சமயம் பற்றி எழுந்த நூல்களை அழியாது பாதுகாக்கவும் போற்றவும் குருக்களவர்கள் ஆற்றிய பணிகள் அளப்பரிய.
I8 : L d. 156-157
திருக்கேதீச்சர திருப்பணிச் சபைத் தலைவராகப் பணிபுரிந்த சிவமணி சேர் கந்தையா வைத்தியநாதன் குருக்களிடம் உயர்ந்த மதிப்புக் கொண்டவர். குருக்க ளோடு திருப்பணி விடயங்களில் நெருங்

Page 247
நாவலரும் குமாரசுவாமிக் குருக்களும் —
கிய தொடர்புகொண்டவர். குருக்களைப் பற்றி அவருடைய கருத்து மனங்கொளத் தக்கது.
வேதாகமம், பன்னிரு திருமுறை, மெய்கண்ட சாஸ்திரம் முதலாம் சைவசித்தாந்த நூல்களுக்கு விளக் கமும் அருள் உரையும் பகர்வதில் பூரீலபூரீ ஆறுமுகநாவலர் பத்தொன் பதாம் நூற்றண்டுக்குப் பெருமை தந்த பெருமான் ஆவர். அங்ங்னமே இருபதாம் நூற்ருண்டுக்குப் பெருமை அளித்து வருபவருள் சிவபூரீ ச. குமார சுவாமிக் குருக்கள் தலைசிறந்து விளங் குகிருரெனக் கூறுவது மிகையாகாது. (7-பக். 201
குருக்களவர்கள் கதிர்காம மகிமை பற்றி தக்ஷண கைலாச மான்மியத்தில் கூறப்பட்ட வடமொழி வரலாற்றைத் தமிழில் மொழிபெயர்த்துப் பகுதிபகுதி யாக இந்து சாதனத்தில் எழுதியதைத் தொகுத்து 1972ல் இந்துசாதனம் கதிர் காம மான்மியம் என்ற பெயரில் வெளி யிட்ட பொழுது பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை அளித்த அணிந்துரையில்,
பூரீலபூரீ ஆறுமுகநாவலர் அவர் களையும் பூரீலழறீ சிவசங்கர பண்டிதர் அவர்களையும் பின்பற்றி மரபு பிற ழாது நூலுரைகள் செய்து உபகரித் தவர்கள் குருக்கள் அவர்கள். சிவா லயக் கிரியைகள் விரத நிர்ணயங்கள் முதலிய சமய காரியங்களிற் கலக்க முறுங் காலங்களில் ஒரு கலங்கரை விளக்காய்த் தெளிவு செய்து வந்த வர்கள் குருக்கள் அவர்கள்.
(9: பக். 2] என்ற கூற்று குருக்களது புலமையை வெளிப்படுத்தும்.
நாவலரின் சமகாலத்தவரும் சமயப் பணியைப் பேணு வ தி ல் நாவலரின் வழிநின்றவருமான செந்திநாதையர் நீல கண்ட பாஷியத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செயற்கரிய காரியஞ் செய்த

237
பெருமை பெற்றவர். ஐயரவர்களின் இரு மொழிப் புலமை இக் காரியத்தைச் செய்யத் துணைபுரிந்தது. ஐயரவர்களைப் பற்றிச் சைவசித்தாந்த மகாசமாஜ உதவிச் சபைத்தலைவர் ஜே. எம். நல்லசாமிப் பிள்ளை குறிப்பிடும் பொழுது,
எமக்குத் தெரிந்த மட்டில், இத் தமிழ் நாட்டில் இரு மொழியினும் வல்லுனராகி அதிலும் வேதாகம நூல் களிற் பயின்று நம் மாகமாந்தங்களை யும் அதன் பூர்வோத்திரங்களையும் பூர்த்தியாயுணர்ந்து, அதிலும் அவ் வுண்மைகளை நம்மனுேர் உணரும் பொருட்டு அநேக கணக்கான நூல் களையும் பத்திரிகைகளையும் பதிப்பித்து நம் சைவத்தை வளர்த்து வந்தவர்க ளில் நம்மையரவர்களைவிட இன்னும் பெரியாரைக் கண்டிலம்.
I10 ; Ludi. dr. (6).J என்பர்.
ஐயரவர்களிடம் காணப்பட்ட இத் தகைய பண்புகள் குருக்களவர்களுட்ைய நூலாக்கங்களிலும் நாம் அவதானிக்க லாம். நாவலர் மரபில் வந்த ஐயரவர் களுடைய செயலாற்றல்கள் குருக்கள் மேற்கொண்ட பணிகளுக்கு ஆதர்ஷமாக இருந்து துணை புரிந்திருக்கலாமென்பதை இவ்வொப்புமை புலப்படுத்துகிறது.
குருக்களவர்கள் நாவலர் வழிநின்று வைதிக சைவத்தைப் பேணியதோடு மாத் திரமின்றித் தான் ஆற்றிவந்த சைவத் தொண்டு நாவலர் வகுத்த வழியிலேயே தனக்குப் பிறகும் தொடரவேண்டுமென உறுதிப்படுத்திக் கொண்டமை குறிப்பிடத் தக்கதொன்ருகும். குருக்களவர்கள் சிவத் தொண்டு புரிந்து வந்த அச்சுவேலிப் பிள்ளை யார் கோவிலின் பரிபாலனத்தைத் தனது மூன்று பேரப்பிள்ளைகளுக்கு 1969ல் உறு திப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தபொழுது "குறிப்பிட்ட கோவி லின் காரியங்கள் சிவாகமங்களின் விதி முறைகளுக்கும் பூரீலபூரீ ஆறுமுக நாவலர் வரையறை செய்த சைவக் கோட்பாடு

Page 248
238
களுக்கும் விதி களு க்கும் தேசவழமை விதிகளும் முரண்பாடின்றி இடம்பெற வேண்டும்?" எ ன் ற உளப்பாங்கோடு எழுதிவைத்துள்ளமை மனங் கொள்ளத் தக்கது. நாவலரின் சைவப் பணியைத் தொடர்ந்து பேணிய குருக்கள் தனக்குப் பிறகும் அம்மரபின்படி அப்பணி தொடரப் பட வேண்டுமெனச் சிந்தித்தவர். நாவலர் பேணிய வைதிக சைவமரபினைத் தன்னை யடுத்து வரும் பரம்பரையினரும் பேண வழிவகுத்துச் சென்றவர்.
நாவலர் மரபில் வந்த சிவபூணி குருக் கள், நாவலரது சைவப்பணியில் ஈடுபாடு கொண்டு உறுதியான கொள்கைப்பற்று டன் அவரையே ஆதர்ஷமாகக் கொண்டு செயற்பட்டவர். நாவலர் மரபைப் பேணிய உதாரண புருஷராக விளங்கியதோடு அம்
சான்றதாரங்கள் :
1. கைலாசபிள்ளை, த. , சுப்பிரபோத
(சென்னை, 1954).
2. பூர்ணுனந்தேசுவரக் குருக்கள், இ. கு
ச. குமாரசுவாமிக் குருக்கள் பாராட்டு வ 3. கணபதிப்பிள்ளை, சி., "சிவபூரீ ச. குட
(துண்டுப்பிரசுரம்) (சை. ஆ. கலாசா 4. குமாரசுவாமிக் குருக்கள். ச. , * முப்ெ
சகம், யாழ்ப்பாணம்) 2ஆம் பதிப்பு, 5. குமாரசுவாமிக் குருக்கள், ச., வேத நிதி யந்திர சாலை, பருத்தித்துறை) 1 6. குமாரசுவாமிக் குருக்கள், ச. நீர்ே (பூரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம்) 7. அம்பிகைபாகன், ச, சிவபூரீ ச. குமாரச
பதிப்புரை. 8. "அழலாடி’, ‘*சிவாகம ஞானபாநு, சிவ V தீச்சரம் திருக்குடத் திருமஞ்சன மலர்,
9. குமாரசுவாமிக்குருக்கள் ச., "கதிர்கா
சாலை, யாழ்ப்பாணம்) 1972.
10. செந்திநாதையர் சி. , ** சிவஞானபோ பாலன யந்திரசாலை, சென்னை). நள(

ப. கோபாலகிருஷ்ணன்
மரபைத் தனது காலத்தில் சொல்லிலும் செயலிலும் உளத்தூய்மையுடன் பேணிய வர். அதுமாத்திரமின்றித் தனது பரம்பரை யினரும் அம்மரபிலிருந்து சிறிதும் பிறழக் கூடாது என உறுதிசெய்து தீர்க்கதரி சனத்துடன் செயற்பட்டவர். சிவபூg குருக்களவர்கள் நாவலர் வழிவந்த வர லாற்றுப் பாத்திரமாகவே சமுதாயத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறர். ஈழத்தின் சைவ வரலாற்றில் குருக்களவர்களுக்கு நிரந்தர இடமுண்டு என்பதில் ஐயமில்லை.
(உறுதிப்பத்திரத்தில் இடம்பெற்ற இவ் விபரத்தைத் தெரிவித்து அதன.இக்கட்டு ரையில் எடுத்துக் காட்ட அனுமதி யளித்த குருக்களின் பேரப்பிள்ளைகளில் ஒருவரான அச்சுவேலி கு. வை. கனகசாபதிக் குருக்க ளவர்களுக்கு நன்றி.)
ம், ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு
**குருபரத்துவம்'. அச்சுவேலி சிவ்ழறி விழா மலர், 1960.
மாரசுவாமிக் குருக்களும் சைவத்துறையும் " லை, திருநெல்வேலி), 1958.
பொருள் விளக்கம்’ (பூரீ சண்முகநாத அச்
1960,
ாகம நிரூபணம் முதலாம் பாகம், (கலா 950。
வலி பூரீலழறீ சிவசங்கரபண்டிதர் சரித்திரம்,
I 954.
சுவாமிக்குருக்கள் பாராட்டுவிழா மலர் 1960
பழீரீ குமாரசுவாமிக் குருக்கள்', திருக்கே 1976
ம மான்மியம் (சைவப்பிரகாச அச்சியந்திர
த வசனுலங்கார தீபம்’ (சைவ வித்தியாது இu), சித்திரைமீ" பக். சு. (6).

Page 249
நாவலரும் வ
ம. சற்குணம்
நிாவலர் தமிழுக்கும் சைவசமயத் துக்கும் பணிபுரிந்தவர். நாவலரை முன் மாதிரியாகக் கொண்டு அ வ ரு  ைடய வாழ்க்கை முறையை அடியொற்றித் துறவு பூண்டு தமிழுக்கும் இந்து சமயத் துக்கும் தொண்டாற்றிய வர் சுவாமி விபுலாநந்தர். எனவேதான் "நாவலரின் பாரிய பணிகளின் வளர்ச்சியும் தொடர்ச் சியுமாகவே சுவா மி விபுலாநந்தரின் பணிகள் அமைந்தன" என்பது யாவரா லும் ஒப்புக் கொள்ளப்பட்டு வருகின் றது. ஆறுமுகநாவலர் சைவமும் தமிழும் வளர்த்த தில் லை யிலும் தொண்டாறறி ஞர்கள். விபுலாநந்த அடிகள் அத் தில்லையின் எல்லையில் அமைந்த திருவேட் களத்தில் அவ்வண்ணமே சைவமும் தமி ழும் வளரத் தொண்டு புரிந்தார். இவ் விருவரது திருவுருவப்படங்களும் தில்லைக் கும் திருவேட்களத்துக்கும் இடையில் அமைந்த அண்ணுமலைப் பல்கலைக் கழகத் தின் தமிழ்க்கல்லுரி மண்டபத்தை அணி செய்கின்றன.
சைவத்தையும் தமிழையும் இரு கண் களாகப் போற்றி வளர்ந்த நல்லூர் ஆறு முக நாவலரிடத்துத் தனிப்பட்டதொரு மதிப்பு விபுலாநந்த அடிகளுக்கிருந்தது. எனவேதான் அடிகள் கிழக்கிலங்கையின் ஆறுமுகநாவலராகத் திகழ்ந்தார்.2 நேரம் வாய்க்கும் போதெல்லாம் நாவலரின் சீரிய தொண்டுகளைப் பாராட்ட அடிகளார் தவ றியதில்லை. யாழ்ப்பாணத்திலே ஒரு பல்

பிபுலாநந்தரும்
கலைக்கழகம் அமையவேண்டுமென அடிகள் விரும்பியபோது,
"பூரீலழரீ ஆறுமுகநாவலர் களு டைய முன்மாதிரியைப் பின்பற்றிச் சைவசமயமும் சைவக்கல்வியும் நிலை பேறடைய வேண்டும் என்னும் ஒரு நோக்கத்தோடு நைடிகப் பிரமச்சாரி கள் பத்துப்பேர் முன்வருவார்களா யின் இந்நாடு நலமடையும்" என்று கூறி நாவலரின் பாரிய பணியைப் பாராட்டினர். அத்தோடு பருத்தித்துறை அத்தியடிச் சைவவாலிப சமாசத்து ஆண்டு நிறைவு விழாவில் "யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் புலவர்" பற்றி உரையாற்றிய போது சுவாமி பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார்.
**நல்லூர் தமிழ் மன்னர் மடித் தலத்திலிருந்து விளையாடித் தவத்தின் மிக்க முனிவருரைத்த ஞான மொழி கேட்டு மகிழ்வெய்தி வரகவிவாண ரொடு உடனுறைந்து கழிமகிழ்வெய் திய தமிழ் மக்கள் பூரண வனப்புத் தோன்ற நடித்தகாலம் ஆறுமுகநாவ லர் காலமாகும்" என்று கூறிச்சென்ருர் .* இவற்றையெல் விட நாவலர்பால் சுவாமி விபுலாநந் தருக்கிருந்த மதிப்பினை அறிந்துகொள்ள நாவலர் மீது அவர் பாடிய "நாவலர் சமயக்கீர்த்தி மாலை" என்னும் கவிதைத் தொகுதியொன்றே போதும்.

Page 250
240
சொல்லுதல் வல்லான் சோர்விலன் அஞ்சான் துணிவுகொள் சிந்தையான் அவனை
வெல்லுதல் யார்க்கும் அரிதென உரைத்த மெய்மறைப் பொருட்கிலக் காகி
நல்லையி லுதித்த நாவலர் பெருமான்.
என்று தனது கவிதை நடையிலே பாராட் டிச் சென்றுள்ளார். எனவே நாவலர் பெருமானை முன்மாதிரியாகக் கொண்டு சுவாமி விபுலாநந்தர் தனது வாழ்க்கை யையும் பணிகளையும் தொடர்ந்தார் என் பதில் தவறில்லை.
இருவரது இயற்பெயர்களும் அழகும் இளமையும் கொண்ட முருகப் பெருமா னின் பெயரையே கொண்டு அமைந்திருக் கக் காணுகின்ருேம். நாவலருக்கு ஆறு முகன் என்றும் சுவாமிக்குத் துறவு பூணு முன் மயில்வாகனம் என்றும் பெயர். நா வ ல ர் தேகவியோகமடையும்போது அதாவது 5-12-1879இல் அவருக்கு வயது 56 மாதம் 11 ஆகும். 7 அப்போது சுவாமி விபுலாநந்தர் பிறக்கவே இல்லை. சுவாமி 27-03-1892இல் (கர வருஷம் பங்குனி 16) பிறந்தார். அவர் பூதவுடலை விட்டுப் புகழுடம்பெய்தியபோது (19-07-1947) அவருக்கு வயது 56. நாவலர் 19ஆம் நூற்ருண்டின் (18-12-1822) ஆரம்பத் திலே பிறத்தவராதலால் அவர் தமிழ றிஞர்களாகிய சுப்பிரமணியபிள்ளை என் பவரிடத்தில் ஆத்திசூடி, மூதுரை முதலிய நீதிநூல்களையும் நிகண்டு முதலிய கருவி நூல்களையும் மனனஞ் செய்தே படித்தார். பின்னர் வேலாயுதபிள்ளை, நல்லூர் சரவ ணமுத்துப்புலவர் இருபாலைச் சேஞதி ராயமுதலியார் முதலான வித்துவான் களிடம் தமிழிலே உயர்தரமான இலக்கிய இலக்கணங்களைக் கசடறக் கற்ருர், வட மொழியைக் தனது சொந்த முயற்சியாற் படித்தார். இவரது படிப்பு திண்ணைப்பள் ளிக்கூடங்களிலும் குரு சீட முறையிலும் ஏட்டுப் படிப்பாகவே அமையலாயின, சுவாமி விபுலாநந்தரின் படிப்பு அச்சுப் புத்தகப் படிப்பாக இருந்ததுடன் முறை யான பள்ளிப்படிப்பும் இவருக்குக் கிடைத் தது. இவர் குஞ்சித்தம்பி ஆசிரியரிடம்
g
文化

ம. சற்குணம்
பாடங்கேட்டதுடன் நில்லாது தந்தை பாரிடமும் தாய்மாமன்மாராகிய வசந்த rrrgot 6stört, சிவகுருநாதபிள்ளை ஆகி யோரிடமும் பாடங்கேட்டு வந்தார்.? பின்பு பு. பொ. வைத்திலிங்கதேசிகரிடம் Gருக்குறள், பாரதம் முதலானவற்றை பும் நன்னூல், சூடாமணி நிகண்டு முத பியவற்றேடு வடமொழியையும் கற்றுக் கொண்டார். இவை பிறர் எழுதி வைத்த தறிப்புகளில் இருந்து எடுக்கப்பட்டதாயி னும் சுவாமியின் கூற்றென்று இதனையே அரண் செய்கின்றது.
**பல பாடங்கள் படித்து. வாசிக் கப் பழகிக் கொண்ட பின்னர் என் கையில் வைக்கப்பட்ட புத்தகம் அஸ் வமேதபர்வம். அஸ்வமேதபர்வத் தைப் பலமுறை யான் வாசித்து முடித்த பின்பு என் தந்தையார் என் கையில் நான்கு பெரிய புத்தகங் களாகக் கட்டப்பட்டிருந்த பாரத வசனத்தை எடுத்துத் தந்தார். பள்ளிக்கூடத்துப் பாடங்களுக்குக் காலைப் பொழுதும், பாரதவசனம் வாசிப்பதற்கு மாலைப் பொழுதுமாக இளமையிற் பழகிய பழக்கப்படியே நான் பின்னுளிலும் தமிழையும் ஆங் கிலத்தையும் ஒருங்கு கற்று வந்தேன். . . அதன் பின்பு பெரியபுராண வசனம், பஞ்சதந்திரம், விநோதரச மஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம், காசிகாண்டம் முத லிய நூல்கள் ஒன்றின்பின் ஒன்ருக எனக்குத் தரப்பட்டன. ஒரு நூலை மூற்ருக முடிக்கும் வரையும் மற்ருெரு நூலினுட் பிரவேசிக்கப்படாது என்று எந்தையார் எனக்குச் சொல்லிய கற் பனை எனது கல்விப் பயிற்சிக்கு மிக வும் உபகாரமாயிற்று என்பதைப் பின் ஞளில் அறிந்து கொண்டேன்'10
வட்டுக்கோட்டை செமினரியிலே மதமாற்றம் பெற்ருலன்றி ஆங்கிலம் கற்க முடியாது. ஆனல் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அத்தியட்சகர் பீற்றர் பேர்சிவல் அக்கொடிய நிபந்தனைகளைத் தளர்த்தி

Page 251
நாவலரும் விபுலாநந்தரும்
யிருந்ததால் நாவலர் அங்கு மதமாற்றப் பெருமலே ஆங்கிலம் கற்கச் சென்ருர், ! இக்கல்லுரரி வேம்படியிற் பள்ளிக்கூடப் எனவும் வழங்கப்படும்." சுவாமி விபுல் நந்தர் தமிழ்ப்பாடசாலையிற் த மிழைட் படித்து வந்ததுடன் கல்முனையில் மெதி டிஸ்த மிஷன் பாடசாலையிலும், கத்தோ லிக்கக் கல்லூரியாகிய மட்டக்களப்ட அர்ச். மிக்கேல் கல்லூரியிலும் சேர்ந்து ஆங்கிலக் கல்வியைக் கற்று வந்தார். கல்முனையில் உள்ள வெசுலியன் மிஷன் பாடசாலையிலும், மட்டக்களப்பு அர்ச் மிக்கேல் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிலும் உதவி ஆசிரியராகக் கடமையாற்றினர். மானிட் பாய் இந்துக் கல்லூரியில் அதிபராகச் கடமையாற்றினர் அ ப் போது அதன் முகாமையாளர் மு. திருவிளங்கம் அவர்க ளினது தொடர்பு சுவாமிக்குக் கிடைத்தது யோகர்சுவாமிகளோடும் இக் காலத்தில் தொடர்பு வைத்திருந்தார் எனவும் அறி கின்ருேம்.* தென்கோவைப் பண்டிதர் ச. கந்தையாபிள்ளை, நல்லூர் சிற். கைலாச பிள்ளை, வதிரி சி. தாமோதரம்பிள்ளை முதலியவர்களோடு கொண் டி ரு ந்த தொடர்பு சுவாமிகளுக்கிருந்த தமிழ் ஆா வத்தை மேலுந் தூண்டியது.
நாவலர் மெதடிஸ்த மிஷனிலும் சுவாமி விபுலாநந்தர் மெதடிஸ்த மிவு ளிலும், கத்தோலிக்க மிஷனிலும் ஆங் கிலக் கல்வியைப் பயின்றவர்கள். பொது வாக இருவரும் கிறிஸ்தவக் கல்லூரிகளிலே ஆங்கிலக்கல்விப் பயிற்சியைப் பெற்றிருக கிருர்கள். அக்கல்லூரிகளிலே ஆசிரியர்க் ளாகவும் கடமையாற்றியுள்ளனர். இந்தக் கிறிஸ்தவச் சூழல்தான் அவர்கள் சைவ சமயப்பணியில் ஈடுபடத் தூண்டுகோலாய இருந்தது எனலாம். பெயரளவில் திருவா வடுதுறை ஆதீனம் ஆறுமுகநாவலரைத் தந்ததாயினும் உண்மையில் பதினன்கு வருடக் கிறிஸ்தவச் சூழலே நாவலரை நமக்குத் தந்தது. அதுபோலச் சுவாப சர்வானந்தரின் தரிசனமே விபுலாநந்த அடிகளை நமக்குத் தந்ததாயினும் கிறிஸ்த
29

24
வக் கல்லூரிகளிற் பயின்று அங்கே ஆசிரிய ராகக் கடமையாற்றிய சூழலே கிழக் கிலங்கையின் ஆறுமுகநாவலராகவும் விஞ் ஞான அறிஞராகவும் அவரை எமக்குத் தந்தது. இருவரும் ஆசிரியராக இருந்தனர் எனினும் சுவாமி விபுலாநந்தர் பயிற்றப் பட்ட ஆசிரியர். இலண்டன் கேம்பிறிஜ் சீனியர் பரீட்சையிற் தேர்ச்சி பெற்றவர். பட்டதாரி ஆசிரியர். மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் பண்டிதர்.
நாவலருக்குச் சமயம் உயிர். மொழி உடல். உயிர் நிலைபெறுவதற்கு உடலை நல்ல முறையிற் பேணவேண்டும். எனவே தான் சமயத்தை வளர்க்க மொழி வளர்ச்சி அவசியமாயிற்று. மொழியைப் பேணுவதற்குக் கல்வியை விருத்தி செய் தல் இன்றியமையாததாகிறது. தமிழ்க் கல்வியும் சைவசமயமும் அபிவிருத்திபெற முக்கிய தலங்கள் தோறும் வித்தியாசாலை நிறுவுதலும் சைவப்பிரசாரஞ் செய்தலும் வேண்டுமெனக் கண்டார். நாவலர் பீற்றர் பேர்சிவல் துரைக்குத் தமிழ்ப் பண்டிதராக இருந்துகொண்டு அவருடன் வேலை பார்க் காத பிற்பகலிலும் இரவிலும் மாணுக்க ருக்குத் திண்ணைப் பள்ளிக்கூடம் அமைத்து இலவசமாகப் பாடஞ் சொல்லிக்கொடுத் தார். 14 1848ஆம் ஆண்டு ஆவணி 05இல் வண்ணுர்பண்ணைச் சைவப்பிரகாச வித்தியா சாலையைத் தொடங்கி அரசாங்க நன் கொடை எதுவுமின்றி நடத்தி வந்தார். 1864ஆம் ஆண்டு ஐப்பசி 28இல் சிதம் பரத்திலும் சைவப்பிரகாச வித்தியாசாலை யொன்றைத் தொடங்கி நடத்தினர். யாழ்ப்பாணத்திலே கொழும்புத்துறை, கந்தர்மடம், பருத்தித்துறை, மாதகல், இணுவில் முதலிய இடங்களிலும் சைவ வித் தியா சாலைகளை ஆரம்பித்தார்." கிறிஸ்தவக் கல்லூரிகளில் ஆங்கிலங் கற் கச் செல்லும் சைவசமயப் பிள்ளைகளைத் தடுக்கும் பொருட்டு 1872ஆம் ஆண்டு தைமாதம் வண்ணுர்பண்ணையில் சைவாங் கிலக் கல்லூரி யொன்றை நிறுவினர். எனினும் போதிய வசதியின்மையாலும், மிஷனரிமாரின் போட்டியினலும், அரசாங்

Page 252
கத்தின் நிதி உதவி கிடைக்காமையாலும் 1876இல் அது மூடப்பட்டது.
நாவலர் நைட்டிகப் பிரமச்சாரி, தமக்கென எந்த நன்மையுங் கருதாது தனிப்பட்ட ஒருவனுக நின்று தங்குறிக் கோளை எண்ணத்திலும், மொழியிலும், செயலிலும் காட்டி வந்தார். ஆனல் சுவாமி விபுலாநந்தர் இராமகிருஷ்ண சங்கத் துறவி. இந்தச் சங்கத்தோடு சுவா மிக்குத் தொடர்பிருந்ததால் அவரிடம் 1925இல் கிழக்கிலங்கையின் இராம கிருஷ்ணசங்கப் பாடசாலைகளின் முகா மைக்காரர் பதவி ஒப்புவிக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணத்து வண் ணு ர் பண்ணை வைத்தீசுவரன் வித்தியாலயத்தை நடாத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப் பட்டது. கிழக்கிலங்கையில் அக்காலத்தில் பாடசாலைகளை நடாத்தி வந்தவர்கள் மெதடிஸ்த மிஷனையும் கத்தோலிக்க மிஷ னையும் சேர்ந்த பாதிரிமார்களே. கிறிஸ் தவரால் நடாத்தப்பட்ட இப் பாடசாலை களிற் குறித்த சமய அடிப்படையிலே கல்வி புகட்டப்பட்டது. இக் குறையை நீக்கும் முகமாக ஆறுமுகநாவலரை முன் மாதிரியாகக் கொண்டு அவரது அடிச் சுவட்டிலே கல்விப்பணியைத் தொடர்ந் தார். காரைதீவு, கல்முனை, மண்டூர், அக்கரைப்பற்று, சித்தாண்டி, ஆரையம் பதி, கல்லடி, ஆனைப்பந்தி முதலான இடங்களிற் பாடசாலைகள் இராமகிருஷ்ண சங்கத்தாற் பராமரிக்கப்பட்டு வந்தன. இப்பாடசாலைகளைப் பராமரிக்கும் பொறுப் பும் சுவாமியிடம் ஒப்புவிக்கப்பட்டது.
காரைதீவு சாரதா பெண் கள் பாட சாலையும் ஆனைப்பந்தி இராமகிருஷ்ண சங்க பெண்கள் வித்தியாலயமும் அடிகளாரால் நிறுவப்பட்டன. இவ்விரு பாடசாலைகளி லும் அநாதைப் பெண்பிள்ளைகளுக்கு உறைவிடம் அமைத்துக் கொடுத்தார். அதுபோல கல்லடியில் அமைந்துகிடந்த பாலைவனத்தைச் சோலைவனமாக்கி ஆங் கோர் சிவானந்தவித்தியாலயம் எனப்படும் சைவாங்கிலக் கல்லூரியை நிறுவினர். அதன் பாங்கரில் அநாதை ஆண் குழந்தை

களுக்கு அநாதை இல்லமும் வகுத்துக் கொடுத்தார். திருக்கோணமலை இந்துக் கல்லூரியும் சுவாமியால் ஏற்படுத்தப் பட்டது.
நாவலர் சைவசித்தாந்தியாகவும், வேதாந்தியாகவும் இருந்தார். ஆனல் சுவாமி விபுலாநந்தர் வேதாந்தியாகவும், சைவ சிந்தாந்தியாகவும் திகழ்ந்தார். தனது குறிக்கோளை நிறைவேற்றக் கருதி வடக்கே அச்சுக்கூடம் வாங்சச் சென்ற நாவலர் அச்சியந்திரத்தோடு ஆறுமுக நாவலராகத் திரும்பி வந்தார். சுவாமி விபுலாநந்தர் மேலைத்தேயக் கலைகளைத் தமிழில் அறிவுறுத்தி விஞ்ஞானத்தையும் செந்தமிழாய்த் துய்க்கத் துணைசெய்து உருவங்கூடத் தெரியாதவாறு மறைந்து கிடந்த யாழின் நுட்பங்களை ஆராய்ந்து யாழ்நூல் என்னும் இசைத் தமிழ் நூலை யும், தமிழில் நாடக இலக்கண நூல் நிரம்பியிருந்தும் இலக்கியங்கள் இல்லா திருத்தலையும் ஆங்கிலத்தில் இலக்கணங் கள் இல்லாதிருக்க இலக்கியங்கள் நிரம்பி யிருத்தலையும் நன்கு புலப்படுத்தி மதங்க சூளாமணி என்னும் ஒரு நாடகத் தமிழ் நூலையும் வெளியிட்டார். செந்தமிழ், தமிழ்ப்பொழில், இராமகிருஷ்ண விஜயம், பிரபுத்தபாரத, வேதாந்தகேசரி முதலிய பல்வேறு சஞ்சிகைகளிலும் இலக்கணம், இலக்கியம், சமயம், தத்துவம், விஞ் ஞானம், வரலாறு, மொழியியல், தர்க் கம் முதலானவை பற்றியெல்லாம் தமிழி லும் ஆங்கிலத்திலும் எழுதி வெளியிட் டார். இவ்வாறு முத்தமிழ்த் துறையிலும் சுவாமியின் பணி விரிந்து சென்றதால் அவருக்கு ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் * முத்தமிழ்ப் புலவர் " என்ற பட்டத்தை இலச்சினையிற் பொறித்துக் கொடுத்துக் கெளரவித்தது.' இதனுல் சுவாமி * முத்தமிழ் வித்தகராஞர் .
நாவலர் பண்டைத் தமிழ் நூல்களை மூலத்தோடும் உரையோடும் பதிப்பித் தார். சேதுபுராணம், கந்தபுராணம், பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் என்பன வும், திருக்குறள் மூலமும் உரையும், திருக்

Page 253
நாவலரும் விபுலாநந்தரும்
கோவையார் மூலமூம் உரையும் என்பனவும் நாவலராற் பதிப்பித்து வெளியிடப் பட்டன. இவை நாவலர் பதிப்பாகை யால் நல்ல பதிப்பு என்ற பெயரைப் பெற்றது. பெரியபுராண வசனம், திரு விளையாடற்புராண வசனம், சிதம்பர ம்ான் மியம் முதலான வசன நூல்களை எழுதி வெளியிட்டதோடு மாணுக்கருக்குப் பயன் படும்படி சைவவிஞவிடை,17 இலக்கணச் சுருக்கம், பாலபாடம் முதலியவற்றையும் எழுதி வெளியிட்டார். ஆ த் தி சூ டி. கொன்றைவேந்தன் என்பவற்றின் உரை களைப் புதுக்கியும் திருத்தியும் வெளியிட்
T. **யாழ்ப்பாணச் சமயநிலை ", **நல்லுர்க் கந்தசுவாமிகோயில் * , **நல் லறிவுச்சுடர் கொளுத்தல்’, ‘சிவாலய
தரிசனவிதி ** என்பன போன்ற கட்டுரை களையும் துண்டுப் பிரசுரங்களையும் எழுதி
Golanu Gifu mrtř .
இத்தகைய பணிகளுக்குச் சுவாமி விபுலாநந்தர் வாழ்ந்த காலச் சூழ்நிலை இடமளிக்கவில்லை எனினும் முத்தமிழுக் கும் தொண்டாற்றியதோடு இராமநாதன் கல்லூரியிற் தமிழ்ப் பண்டிதராகவிருந்த நவநீதகிருஷ்ண பாரதியார் செய்யுள் நடையில் எழுதிய உலகியல் விளக்கம் என்னும் நூலை மட்டக்களப்பு வித்துவான் ச. பூபாலபிள்ளை எழுதிய உரையுடன் சேர்த்து தமிழிற் பதிகமும் கடவுள் வாழ்த் தும், ஆங்கிலத்தில் விமரிசனமும் எழுதிச் சில செய்யுள்களை ஆங்கிலத்தில் செய்யுள் நடையில் மொழிபெயர்த்துப் பதிப்பித் தாா.
நாவலர் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றிலே சிறந்த புலமை பெற்றிருந் தார். சுவாமி இந்த மும்மொழிகளோடு இலத்தீன், கிரேக்கம், வங்காளி, சிங்களம், அரபி ஆகிய வேறுமொழிகளிலும் வல்வவ ராகத் திகழ்ந்தார்.18 நாவலர் செய்யுள் இயற்றும் தகுதி பெற்றிருந்தும் அவர் அதிலே அதிகமாக ஈடுபடவில்லை. இதன் கா ர ண த் தை அவர் பெரியபுராண வசனத்தின் முகவுரையிலே கூறியிருப்ப தைக் கொண்டு அறிந்துகொள்ளலாம்.19

ஆணுல் சந்தர்ப்பம் கிடைக்கும்போது சமயம் சம்பந்தமான சில செய்யுள்களும் இயற்றியுள்ளார். கீர்த்தனங்களும் பாடி யுள்ளார். சுவாமி விபுலானந்தரோ யாப் பினை நன்கு அறிந்தவர். எந்தக் கருத்தை எந்த யாப்பில் அமைக்கவேண்டும் என் பதை இயல்பாக அறிந்தவர். சமயம் இலக்கியம் சம்பந்தமாகக் கவிதைகள் பல பாடிக் " கவிதைச் சக்கரவர்த்தி’ என்ற பெயரைப் பெற்ருர், அவரது க வி  ைத க ளி ற் பல மொழிபெயர்ப்புக் கவிதைகளாகக் காணப்படுகின்றன. அவர் தாமாக யாத்த கவிதைகள் கவித்துவப் பொலிவும் கனிவும் செறிந்து காணப்படும் தன்மையன. நீரரமகளிர் இன்னிசைப் பாடல்கள் முதலானவற்றைப் பாடிய தோடு தமிழிசை, ஏழாம் நூற்ருண்டிலும் அதற்குப் பின்னரும் இருந்த தமிழிசை பற்றியும் சொற்பொழிவாற்றியுள்ளார். 29 சுருங்கக்கூறின் விபுலாநந்த நாவலர் தமது ஆக்கங்களில் ஒப்பியல் நோக்கிற் பழமையையும் புதுமையையும், மேற் றிசைச் செல்வத்தையும், கீழைத்தேசப் பண்பாட்டையும் ஆழமாக ஆராய்ந்து அவற்றிலே உள்ளவற்றை உயிர்த்துடிப் புடன் எடுத்துக்காட்டினுர் எனலாம்.2
நாவலர் "பைபிள் மொழிபெயர்ப்பில் பீற்றர் பேர்சிவலுக்கு உதவியாக இருந் தார். சுவாமி ஆங்கில கிரேக்க மொழிக் கவிதைகள் பலவற்றைத் தமிழ் நடை பிறழாது மொழிபெயர்த்ததுடன் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் நூல்கள் பலவற்றையும் மொழிபெயர்த் துள்ளார். விவேகானந்த ஞானதீபம், சுவாமி விவேகானந்தரின் சம்பாஷனைகள், நம்மவர் நாட்டு ஞானவாழ்க்கை, பதஞ்சலி யோகசூத்திரம், கருமயோகம், ஞானயோகம் என்பன இவரது மொழிபெயர்ப்பு நூல்க ளாகும். கலை ச் சொல் லா க் க மகா நாட்டுக்குத் தலைமைதாங்கிப் பல கலைச் சொற்களைத் தமிழ்ப்படுத்தவும் காரணரா யிருந்தார். மேற்றிசைச் செல்வம், விஞ் ஞான தீபம் என்னும் முற்றுப்பெருத நூல்கள் இவரது மொழிமெயர்ப்பு நூல் களே. வடமொழியில் தனஞ்சயனர்

Page 254
244
எழுதிய தசரூபத்தை மொழிபெயர்த் துத் தனது மதங்கசூளாமணி நூலிலே சேர்த்துக்கொண்டார்.
இருவரும் சமயத்துக்கும் சமூகத் துக்கும் சீர்திருத்தத் தொண்டு புரிந்த வர்களே. நாவலர் நல்லூர் கந்தசுவாமி கோயிற் சீர்திருத்தத்தில் ஈடுபட்டார். அங்கு பல எதிர்ப்பின் மத்தியில் ஆட்டுப் பலி நிறுத்தப்பட்டது. சிவாலய தரிசனங் களுக்கு விதி வகுத்தார். யாழ்ப்பாணத் திலே கோதாரி நோயால் ஏற்பட்ட பஞ்சத்தைப் போக்கக் ‘கஞ்சித் தொட்டித் தருமம் ஏற்படுத்தினர். சிதம்பரத்தில் தங்கியிருந்தபோது மகாமாரி உண்டான தால் யார் தடுத்தும் கேளாது அங்கு சென்று மக்களுக்குச் சமய உண்மை களையும், உபதேசங்களையும் செய்தார். இவருடைய மா ன க் க ர் ஒருவருக்கு வைசூரி நோய் கண்டபோது தனியே சென்று பார்த்து வந்தார். சுவாமி விபுலா நந்தர் தீண்டாமையை ஒழிக்கப் பாடு பட்டவர். திருவேட்களச் சேரியில் இராப் பள்ளியொன்றை ஏற்படுத்திச் சேரி மக்கள் கல்விக்காக வசதி செய்து கொடுத் தார். 22
‘அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் செம்மை வாழ்வு வாழ்ந்த போது செய்த பணிகள் பல. தாழ்ந்த இடங்களுக்குத் தாமே சென்று அவர் தம் நிலைமையையும் வளரவேண்டிய வகையினையும் காட்டித் திருத்த முற் படுவார். அவருடன் நானும் சில அன்பர்களும் செ ல் லு வது ண் டு. அங்குள்ள பிள்ளைகளுக்கென வடை, சுண்டல் முதலியன கொண் டு சென்று கொடுத்து அவர்களை மகிழ்வூட்டி வருவோம். இளங் குழந்தைகளைக் குளிப்பாட்டி சட்டையிட்டு மகிழ் வோம். என் உள்ளத்தில் மக்களில் வேறுபாடு காட்டி வாழக்கூடாது என்ற உணர்வு அரும்பிய அடிப்படை, இந்து மத பாடசாலையில் அமைந்தது என் ருலும் அது தளைந்தமைக்குக் கார

ம. சற்குணம்
ணம் அடிகளார் ஊற்றிய அருநலம் சான்ற நன்னீரேயாகும்."
இது திரு. அ. மு. பரமசிவானந்தம் கூறியது.23
மஹாகவி பாரதியின் பாடல்களைச் சர்க் காரின் அடக்குமுறைக்கு அஞ்சாது ஈழநாட் டிலும், தமிழ் நாட்டிலும் பரவச் செய்த பெருமை அடிகளையே சாரும். இருவரும் இலட்சியவிரர்கள்.அஞ்சாநெஞ்சம் படைத் தவர்கள். அநீதியைக் கண்டவிடத்து நாவ லர் முன்னின்று எதிர்க்கப் பின்னிற்க மாட்டார். கஞ்சித்தொட்டித்தருமத்தின் போது பிறிற்றே அவர்கள் நண்பராய் இருந்தபோதும் இலங்கைச் சட்டநிருபண சபைக்குத் தமிழர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு சேர் பொன். இரா மநாதனேடு போட்டியிட்டபோது இராம நாதனை ஆதரித்து "நட்புவேறு யோக்கி யதை வேறு" எனக்கொண்டு பிறிற்ருேவை எதிர்த்தார். இராமலிங்கவள்ளலாரின் திருப்பாடல்களை அருட்பாக்கள் அ ல் ல அவை மருட்பாக்கள் என்று வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டார். மருமகனுக் காகப் பக்கஞ்சாராது நீதியைக் கடைப் பிடித்தார். வித்துவசிரோ மணிக்கு ஐந்து வருடம் சிறைவாசம் கிடைத்தது. ஆனல் சுவாமி விபுலாநந்தர் வாழ்ந்த காலச் சூழல் நாவலரைப்போல அவரைக் கொதித்தெழச் செய்யாது விட்டாலும் சந்தர்ப்பம் நோக்கித் தேசிய வீரராகத் திகழ்ந்தார். முதலாம் உலக யுத்தத்தின் போது போருக்குச் செல்லவும் சுவாமி அஞ்சலில்லை. போர்வீரனெருவணுக நாட் டிற்கு இரத்த தானஞ் செய்ய முன்வந் தார். இவரின் நாட்டுப்பற்று மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின் பற்றச் செய்தது. 1933ஆம் ஆண்டு அண்ணு மலைநகர் பட்டமளிப்பு விழாவுக்காகப் பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த போதும் சுவாமியின் வீட்டில் மட்டும் தைரியமாகக் காங்கிரஸ் கொடியைப் பறக்கவிட்டார். அன்றைய பிரித்தானிய அரசுக்கு அவர் சிறிதும் அஞ்சவில்லை.

Page 255
நாவலரும் விபுலாநந்தரும்
நாவலர் பெருஞ் சைவ மடங்களோடு தொடர்பு கொண்டிருந்தார். திருவாவடு துறை ஆதீனம், திருவண்ணுமலை ஆதீனம், தருமபுர ஆதீனம் முதலானவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடலாம். உபயசந்நிதா னங்கள், தில்லைவாழ் அந்தணர்கள், சைவாசாரியர்கள் ஆகியோரதும் இராம தாதபுரம் பொன்னுச்சாமித் தேவரதும் நட்பு இவருக்கிருந்தது. சுவாமி விபுலா நந்தர் உயர்தரக் கல்லூரிகளோடும், பல் கலைக் கழகங்களோடும், மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் முத லியவற்ருேடும் தொடர்பு கொண்டிருந் தார். இவரது தொடர்புகள் பேராசிரியர் கள், மஹாவித்துவான்கள், ஆராய்ச்சி யாளர்களோடும் இருந்தன. கோனுரர் ஜமீந்தார் நச்சாந்துப்பட்டி திரு, பெ. ராம. ராம. சிதம்பரஞ் செட்டியாருடன் நட்புக் கொண்டிருந்தார். பல வித்துவ சிரோமணிகளையும் நல்லாசிரியர்களையும் நாவலர் உருவாக்கியது போல சுவாமியும் நல்லாசிரியர் பலரையும், பட்டதாரிகளை யும் உருவாக்கித் தந்தார். யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத் தைச் சீரான முறையில் அமைத்தார். தமிழ்ப்பண்டிதர் பலர் உருவாகினர். மத் திய மாகாண சைவ மகாசபையொன்றை நிறுவி அங்கும் சைவ சமயக் கல்வியைப் பரப்பிய பெருமை அடிகளாருக்கே உரியது.
நாவலரும் நாவலரைச் சார்ந்த ஆசி ரியர்களும் இலவசமாகவும், ஒரளவு சம் பளம் பெற்றும் படிப்பிடித்து வந்தார்கள், ஆனல் சுவாமியால் உருவாக்கப்பட்ட ஆசி ரியர்களும் பிறரும் சம்பளத்திட்ட முறை யிலே கடமையாற்றினர், நாவலரின் கல் விப்பணி யாழ்ப்பாணம். சி த ம் பரம் ஆகியவற்றுடன் நின்றுவிட்டது. சுவாமி யின் கல்விப்பணி அண்ணுமலை நகரிலும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திரி கோணமலை, கண்டி, கொழும்பு ஆகிய பிரதேசங்களிலும் செறிந்து ஈழம் முழுவ திலும் பரந்து சென்றது.
* குணம் மிகுந்தவரிடையே கோபமும் உண்டு" என்ற பழமொழி பொய்த்து விட

மல் அவை இரண்டும் நாவலரிடம் இருந் தன,21 நாவலர் கடுங்கோபியானுலும் பின் னிணக்கம் கொள்பவர். இதனுல் நாவல ருக்குச் சைவசமயிகளுக்குள்ளும் பிறமதத்த வருக்குள்ளும் பகைமை இருந்தது. ஆனல் சுவாமி விபுலாநந்தர் இராமகிருஷ்ண சங் கத் துறவியாய் இருந்தபடியால் சாந்த மான குணமும் அமைதியான சுபாவமும் உடையவராய்த் திகழ்ந்தார், திருவேட் களச் சேரிச் சீர்திருத்தத்தினுற் பல இடை யூறுகள் சுவாமிக்கு ஏற்பட்ட போதும் அவற்றைச் சுவாமி அன்புடன் ஏற்றுக் கொண்டார். அத்தகைய நிலையில் அவர் பக்குவப்பட்டு மிருந்தார். நாவலரின் குளிப்பு எப்போதும் சுடுநீரிலே நடை பெறும். சுவாமி குளிர் நீரிலே குளிப்பார். இருவரும் தாவரபோசனம் உண்பவர்கள். நாவலருக்கு ருே சாப்பூவில் அதிக விருப் பம். சுவாமிக்கு இடியப்பமும் முருங்கைக் காய்ச் சொதியுமென்ருல் அலாதியான விருப்பம். இடையிடையே தாம்பூலமும் தரித்துக் கொள்வார்.
சமயசீர்திருத்தம் செய்த நாவலருக் கும், சமயத்தொண்டு புரிந்த சுவாமிக் கும் ஈழநாட்டிலும் தமிழகத்திலும் நல்ல வரவேற்பிருந்தது. நாவலருக்கு யாழ்ப் பாணத்தைவிடத் தமிழகத்திலே செல் வாக்கு இருந்தது போலச் சுவாமிக்கு மட் டக்களப்பைவிட யாழ்ப்பாணத்திலே நல்ல கெளரவம் கிடைத்தது. ஆறுமுக நாவல ருக்கு "நாவலர்’ பட்டம் கிடைத்தது தமி ழகத்திலே. சுவாமிக்கு *முத்தமிழ்ப் புலவர்' பட்டம் கிடைத்தது யாழ்ப் பாணத்திலே. அத்துடன் அவருக்குப் பல் கலைக்கழகத்தில் Gug 78rfuri பதவி கிடைத்ததும் மட்டக்களப்பு மக்களை முந்திக்கொண்டு யாழ்ப்பாணத்தவரே கெளரவம் கொடுத்தார்கள். 02-10-43ல் யாழ்ப்பாண மக்கள் அளித்த வரவேற் பிலே நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடிய வரவேற்புப்பாடலின் ஒரு பகுதி யால் இதனை அறியலாம்,

Page 256
246
வெண்பா
வாழி யினியதமிழ் வாழி தமிழகத்தார்
வாழி மணியிலங்கை வான்கழகம்-வாழியரோ
பேரா சிரியன் பெரியவிபு லாநத்தன்
ஒரா யிரம்யாண் டுலகு.
மட்டக்களப்புத் தமிழ் மன்றம்
29-04-44ல் வரவேற்புக் கொடுத்தது. அப்போது ம ட் டு நகர் ப் பண்டிதர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை வரவேற்புப் பத் திரம் பாடிக் கையளித்தார். அதன் ஒரு பகுதி வருமாறு:
கலைச்சொல் லாக்கம் கவின்செய்தோய் வருக உள்ளத் துயர்வெண் ஓங்கிடும் ஈழம் பல்கலைக் கழகப் பைந்தமிழ்ப் பீடத் தொருமுதற் பெரும்பே ராசான் வருக அருள்விபு லாநந்த அடிகளார் வருக
பட்டம் பதவிகளுக்காக இருவரும் அலைந்துதிரியவில்லை. அவை தாமாகவே அவர்களை வந்தடைந்தன.
நாவலருக்கு "அஸ்மா வியாதி உடன் பிறந்தே கொல்லுவதாய் இருந்தது. சுவாமி நல்ல திடகாத்திரமாக இருந்த போதும் பிற்காலத்தில் பாரிசவாதத்தாற் பீடிக்கப் பட்டார். நாவலர் பெயர் இன்னும் மங்க வில்லை. சுவாமியின் பெயர் மங்கிச் செல்லு வதற்குக் காரணர் யார் ? நாவலரின் வாரிசுகளாலும் அவரால் உருவாக்கப்பட்ட
அடிக்குறிப்புகள் :
l.
சிவநேசச்செல்வன், ஆ., 'தமிழியல் வ தர்' ஈழநாடு வாரமலர், 07-04-74. வித்தியானந்தன், சு., 'ஈழத்திலும் பெரியார்கள் *, உரும் பராய் சைவத் தய அழுத்தகம், சுன்னுகம், 1977, பக். 6 அம்பிகைபாகன், ச., (தொகுப்பாசிரி அச்சகம், யாழ்ப்பாணம், 1976, பக். விவேகானந்தன் - 1926 (மார்கழி இத் *நல்லைநகர் ஆறுமுகநாவலனுர் நாவல யுணர்த்தும் நாவலர் மெய்க்கீர்த்தி ம "நல்லூர் ஆறுமுக நாவலஞர்" என்று திருக்கிறது. (நாவலர் மாநாடுமலர், பெ

சற்குணம்
தருமதாபனங்களாலும் அவரது ஆக்கங்கள் பலமுறை அச்சுவாகனம் கண்டுவிட்டன. ஆனல் சுவாமியின் யாழ்நூலும், கணேச தோத்திர பஞ்சகம் முதலிய கவிதைத் தொகுதியும், இரண்டாம் பதிப்பை மட் டுமே இதுவரை கண்டுள்ளது. மொழி பெயர்ப்பு நூல்கள் மயிலாப்பூர் இராம கிருஷ்ண சங்க வெளியீடாகப் பல பதிப் புக்களைக் கண்டுள்ளது. நடராசவடிவம், தில்லைத்திருநடனம் முதலியனவும், சஞ்சி கைக் கட்டுரைகள் பலவும் மீண்டும் வெளி வந்துள்ளன. மதங்கசூளாமணி மறுபதிப் பைக் காணவே இல்லை.
நாவலரையும் சுவாமி விபுலாநந்த ரையும் ஒப்பிட்டு ஆராய முன்வந்த இக் கட்டுரையானது அழைப்பின் பேரிலே எழு தப்பட்டதால் நாவலரையோ சுவாமி யையோ வீக்கதாக்கமின்றியே எழுதப் பட்டது என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இரு வரும் தமிழுக்கும் சைவத்துக்கும் பாரிய தொண்டினைச் செய்தவர்கள். அவர்களை வேறுபடுத்த அவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலையே காரணமாய் இருந்ததன்றி வேருென்றும் இல்லை. இவ்வொப்பீடு நல்லறிஞர் பலருக்கு இவ்விருவர் வாழ்க்கையினையும் பணிகளையும் மேலும் மேலும் துருவி ஆராய்வதற்கு உபகாரமா யிருக்கும் என்று நம்புகின்றேன்.
ளர்ச்சியின் முன்னுேடி -- சுவாமி விபுலாநந்
தென்னகத்திலும் தமிழ்க் கல்வி பரப்பிய Sழ் வித்தியாலய வைரவிழா மலர், திருமகள் ).
பர்), விபுலாநந்தர் உள்ளம், விபுலாநந்த 56.
iழ்).
ந்தீவினிற் புரிந்த நற்றவத் தொண்டினை ாலை ” என்னும் இக்கவிதைத் தொகுதி ம், "ஆறுமுகநாவலர்" என்றும் வெளிவந் ய்கண்டான் அச்சகம், கொழும்பு, 1969,

Page 257
நாவலரும் விபுலாநந்தரும்
6.
கவிதாஞ்சலி, பக். 01, மு. திருந அடிகள், எக்ஸ்ஸெல்ஸியர் பவர் சிவகுருநாதன், சி., (பதிப்பாசிரிய பிரகாச அச்சியந்திர சாலை, யாழ்ப்ட
7. . கனகரத்தினம், வே., ஆறுமுக நாவல
8.
9.
10.
ll.
12.
13.
l4.
15.
6.
17.
18.
19.
20.
21.
22.
23.
24。
(2ஆம் பதிம்பு) 1968 பக். 13. கர வருஷ வாக்கிய பஞ்சாங்கம், சோ (2ஆம் பதிப்பு) பக். 30. (கர வருஷம் என்று டி. ரி. செல்வநாயகமும், 2! கொள்வர்.) செல்வநாயகம். டி. ரி. , விபுலாநந்த Luji. 18. விபுலாநந்தர், பூீமத் சுவாமி. , ' 1928, பக். 302, பொன். பாக்கியம், பண்டிதை. , அச்சகம், சித்தங்கேணி, 1970, பக் கணபதிப்பிள்ளை, சி. , ஆறுமுக நால திருக்கணித அச்சகம். சாவகச்சேரி, அம்பிகைபாகன், ச. , யோகசுவாமிகள் I972, Ltd. 29. தனஞ்சயராசசிங்கம், ச. , நாவலர் 1969, d. 24. கைலாசபிள்ளை, த., ஆறுமுக நாவலர் சென்னை, (4ம் பதிப்பு) 1955, பக். செந்தமிழ்த் தொகுதி - 42, (பகுதி g) föBITổiv “Methodist Catechism” GT நாவலரால் இயற்றப்பட்டது. சோமசுந்தரம், அ. , முத்தமிழ் வித் (3ஆம் பதிப்பு) 1966, பக். 50 ஆறுமுகநாவலர், பெரியபுராண வசன பட்டனம் (21ஆம் பதிப்பு), முகவுரை சீனி வேங்கடசாமி, மயிலை, , **வி ஈழமணி விபுலாநந்த நினைவு மலர், சி6ே வித்தியானந்தன், சு., தமிழியற் சிந்த 1979. பக். 49. பி. பூரீ., நானறிந்த தமிழ்மணிகள் 4 2 3 - 23 ژن ه t I j பரமசிவானந்தம், அ. மு. **விபுலா சுதந்திரன் அச்சகம், கொழும்பு, 196 மாயாண்டி பாரதி, கா., நாவலர் ெ (3ஆம் பதிப்பு) 1962, பக். 140.

247
வுக்கரசு (தொகுப்பாசிரியர்), விபுலாநந்த ரஸ், மதுரை, 1951, பக். 111 - 116.
ர்) நாவலர் மெய்க் கீர்த்தி மாலை, சைவப் ாணம், 1969, (செய். 07) பக். 03.
சரித்திரம்,திருமகள் அழுத்தகம், சுன்னகம்.
திட விலாச அச்சியந்திர சாலை, கொக்குவில், பங்குனி 16ஆந் திகதியை 25 - 03 - 1892 - 03 - 1892 என்று ச. அம்பிகைபாகனும்
அடிகள், அப்பர் அச்சகம், சென்னை, 1953,
பத்தினிப் பெண்டிர் வணக்கம்’, சரஸ்வதி,
நாவலர் சரித்திர ஆராய்ச்சி, சுசீலா தேவி
53。
பலர், (நாவலர் நூற்றண்டு நினைவு மஞ்சரி)*
1979, Ltd. 27.
, பூணி சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்,
பணிகள், நெஷனல் பிரின்டர்ஸ், கண்டி,
சரித்திரம், வித்தியாதுபாலன யந்திரசாலை, 6 .
03) 1945, பக். 39- 40. ன்னும் கிறிஸ்தவ சமயநூலைப் பின்பற்றி
நகர் பூரீநிவாஸ் பிரிண்டிங் பிரஸ், சென்னை,
ம், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்ன , 1 955, Ltd. 03-04
லானந்த அடிகள் வரலாற்றுக் குறிப்பு', ான் பிரிண்டர்ஸ், கொழும்பு, 1948 பக். 63.
ன, ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம்,
மூவேந்தர் அச்சகம், சென்னை, 1971
எந்த அடிகளார்', அடிகளார் படிவமலர்,
, பக். 26.
ருமான், ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை,

Page 258
நாவலரும் கன
பொ. பூலோகசிங்கம்
ஆரூர னில்லைப் புகலியர் கோனில்லை
யப்பனில்லைச் சீருரு மாணிக்க வாசுக வில்லைத்
திசையளந்த பேரூரு மாறு முகநா வலனில்லைப்
பின்னிங்கியார்
நீருரும் வேணியன் மார்க்கத்தைப் போதிக்கு நீர்மையரே. என்று ஆறுமுகநாவலர் வையத்துள் 56 வருடம் 11 மாதம் 16 நாள் வாழ்வாங்கு வாழ்ந்து, 1879ஆம் ஆண்டு திசம்பர் மாதம் ஐந்தாம் தேதி பூதவுடலை நீத்ததை யடுத்து, அவர்தம் செய்ந்நன்றியைப் போற்றிநின்ற சைவ ஈழம் கலங்கி மார்க்க மறியாது இரங்கி நின்றது. 1899 ஆம் ஆண்டு ஜ"லாய் மாதம் 27ஆம் தேதி மட்டுவில் தருமர் சின்னத்தம்பியின் ஏக புத்திரனுகத் தோன்றிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை நாவலரவர்கள் பரம் பரைச் சூழலிலே தலைப்படத் தொடங்கி யது 1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி.
இம்முப்பத்தெட்டு வருட இடைவெளி நாவலரவர்கள் பணிகளின் காத்திரமான தன்மையை எடுத்துக்காட்டுவதாக அமை கின்றது. அவரைப்போல ஒருவர் வாராத போதும், அவர் பண்படுத்திய நிலம் களர் LITUTgil, u Gv Gör அளிப்பதாகத் தொடர்ந்து விளங்கியது. கதலிகம் மூர்க் காவேசத்தோடு சைவத்தை நிலைதளரச்

ணபதிப்பிள்ளையும்
செய்ய முயன்ற இக்கட்டத்திலே, சைவம் பாருமல் இருந்ததை நாம் இங்கு ஞாகப் படுத்திக் கொள்ளின் நாவலரவர்கள் செய்த பணிகளின் காத்திரம் புரியும். அத்தோடு நாவலரவர்கள் வழியிலே தொடர்ந்த பணிகளும் சைவ உலகத்தி னைக் காத்துநின்றன.
இலங்கை நேசன் (1875), உதயபானு' (1880) சைவாபிமானி (1884) இந்து சாதனம் (1889) ஆகிய பத்திரிகைகளும் சைவ (சமய) பரிபாலன சபையும் (1888) இக்கால கட்டத்திலே நாவலரவர்கள் விட்ட இடத்திலே தொடர்ந்து செயற்பட முற்பட்டன நல்லூர் க. சதாசிவப்பிள்ளை, கோப்பாய் ச. பொன்னம்பலபிள்ளை, நல் லூர் த. கைலாசபிள்ளை ஆகியோர் நாவலர் தருமச் சொத்துக்களைப் பரிபால னஞ் செய்து வந்தனர். நல்லூர் வித்துவ சிரோமணி ச. பொன்னம்பலபிள்ளை பாடஞ்சொல்வதிலும் பிரசங்கம் செய் வதிலும் தனிவழியே சென்றனர். சைவ சூக்குமார்த்தபோதினிப் பத் தி ரா திபர் வேலணை வி. கந்தப்பிள்ளை சைவப்பிரசா ரகராக விளங்கியதோடு தீவுப்பற்றிலே சைவம் தளைத்து வளர வழி செய்தனர். இணுவில் நடராசையர் தமிழ் நாட்டி லும், இலங்கையிலும் சைவசித்தாந்த சாத்திரங்களைப் பாடஞ் சொல்வதிலே தனது பெயரை நாட்டினுர். சித்தாந்த சிகாமணியாக, கிறிஸ்துமத கானன குடாரி யாகக் காசிவாசி செந்திநாதையர் விளங்

Page 259
நாவலரும் கணபதிப்பிள்ளேயும்
கிஞர். சித்தன்கேணி ஆ. அம்பலவாண நாவலர் ஏகலைவனுக நாவலரவர்களைப் பின்பற்றி அவர்வழியே செல்ல முற்பட்ட னர். புலோலி சதாவதானம் நா. கதிரை வேற்பிள்ளை மாயாவாததும்ச கோளரி, அத்துவித சித்தாந்த மகோத்தாரணர், சைவசித்தாந்த மகாசரபம், போலியருட் பாப் பிரபந்த நிர்க்கந்த கிஞ்சுக கண்டன சண்ட மாருதம் எனும் சிறப்புகளைச் சூட் டிக்கொண்டார். வண்ணை சி. சுவாமிநாத பண்டிதர் திருமுறைப் பெருமையைப் பரப்புவதிலே முன்னின்ருர், சுன்னகம் அ. குமாரசுவாமிப்புலவர் நாவலர் பரம்பரை யின் முக்கியஸ்தராக உருவாகிக் கொண் டிருந்தார். அவர் 1902ஆம் ஆண்டின் கடைசியிலே வண்ணை சைவப்பிரகாச வித் யாசாலைத் தலைமையாசிரியர் பதவிக்கு நியமனம் பெற்ருர்,
இம்முப்பத்தெட்டு வருடங்களின் தாக் கம் எதுவுமின்றி பண்டிதமணியவர்கள் நாவலர் சூழலிலே 1917இலே தலைப்படத் தொடங்கவில்லை என்பது ஈண்டு மனங் கொள்ளத்தக்கது. அமெரிக்கமிஷன் பள்ளி யின் செல்வாக்கிலும் நாவலர் பரம்பரை யின் தாக்கம் பின்னணியில் இருந்து கொண்டே இருந்தது.
பண்டிதமணியவர்களின் வாழ்க்கைப் பயணத்தை ஊன்றி நோக்கும்போது, மூன்று முக்கிய கட்டங்களை அவதானிக் கலாம்; மூன்று கட்டங்களிலும் மூவர் தம் செல்வாக்கினைப் பிரயோகிப்பதைக் காணலாம். முதலாவது கட்டத்திலே வித் துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளையும், இரண்டாவது கட்டத்திலே <器gj色P5 நாவலரும், மூன்ருவது கட்டத்திலே உப அதிபர் கைலாசபதியும் பண்டிதமணி யவர்கள் வளர்ச்சிப் பாதையிலே முக்கியத் துவம் பெறுகின்றனர். "நாவலரும் பண் டிதமணியும் பற்றிச் சிந்திக்கும்போது, முன்னைய கட்டத்தினையும் ஒதுக்கிவிட்டு நோக்குதல் பொருத்தமாகாது. ஏனெ னில், இவையிரண்டும் நடுவணதிற்குக் காரணமாகவும், காரியமாகவும் முறையே அமைகின்றன.
30

பண்டிதமணி யவர்கள் மட்டுவிலார். அவ்வூரினர்தாம் உரையாசிரியர் வேற் பிள்ளை உபாத்தியாயர். அவரும் பண்டித மணியவர்களின் பாட்டனுர் ஆறுமுகத் தாரும் ஒன்றைவிட்ட சகோதரர்கள். மேலும் இரு குடும்பத்தினரும் பக்கத்து வீட்டுக்காரர்கள். எனவே இரு குடும்பமும் நெருங்கிய தொடர்புள்ளனவாக இருந் தன. ஆறுமுகத்தாரின் புதல்வர் சின்னத் தம்பி உரையாசிரியர் வேற்பிள்ளையிடம் திருவாதவூரடிகள் புராணத்திற்கும் கந்த புராணத்திற்கும் ப யன் கேட்டவர். அத ணுல், கதை சொல்வதை-பயன் சொல் வதைப் போன்று இராகத்துடன் சொல் லதை - தமது பொழுது போக்காகக் கொண்டவர். மேலும், உரையாசிரியர் கருத்துகளை ஏற்றும் நடந்து வந்தவர். உரையாசிரியர் ஆங்கிலம் பறங்கிப் பாஷை என்றும் தமிழுக்கும் சமயத்துக்கும் மாரு னது என்றும் செய்த பிரசாரத்தினை ஏற் றுத் தம் ஏக புத்திரன் கணபதிப்பிள்ளையை ஆங்கிலம் படிக்க விடாது இருந்தவர். கணபதிப்பிள்ளைக்குத் தாமே திருவாத வூரடிகள் புராணத்திற்குப் பயன் சொல்லிக் கொடுத்ததோடு அ  ைம ய ர து, பயன் சொல்வதிலே திறமை பெற வேண்டும் என்ற ஆசையினலே, தம் சகோதர முறை யினரும் பயன் சொல்வதிலே தம் காலத் திலே பேரெடுத்தவருமான உரையாசிரி யர் புதல்வர் மகாலிங்கசிவத்திடம் படிக்க விட் ட வர். தனங்கிளப்பிற்குக் குடி பெயர்ந்தபோது கணபதிப்பிள்ளை மகா லிங்கசிவத்திடம் படி க் கும் வாய்ப்பினை இழந்தபோதும், வித் து வ சிரோமணி பொன்னம்பலப்பிள்ளையின் மா னு க் கர் மூவரிடம் படிக்கும் வாய்பினைப் பெற்ற னர். அம்மூவரிலே ஒருவர் சாவகச்சேரி ச. பொன்னம்பலபிள்ளை.
பண்டிதமணியவர்கள் புத்தி ஒருமுகப் பட்டுப் படிக்க முனைந்ததற்கு முற்பட்ட கட்டம் முற்கிளந்தது. இக்கட்டத்திலே சிறப்பிடம் பெறத் தொடங்கியவர் வித் துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை.

Page 260
艺5●
பொன்னம் பலப்பெயர்ப் புட்கலா வர்த்தம்
புராதன நியாயோததி W புகழ்சங்க லக்கியப் புணரிரா மாயணப்
பொருவறு மளக்கர்புவியிற் றுன்னித் துலங்கிமலி சூதனுெலி மாலையாங்
தொல்பயோ ததிகாவியத் துங்கவார் கவிபார தப்பரவை லக்கணத்
தொடுகடல்க டுய்த்தெழுந்தே மின்னிலக் திடுக்கிட விடித்தியாழ்ப் பாணகிரி
மீதேறி நல்லைமுடிமேன் மேவிப் படிந்துசெந் தமிழ்மேதை நிதிமாரி
மிகவும்பொ ழிந்திட்டதிச் சன்மத்து வித்தியார்த் தின்பயிர் தழைத்திடச் சாந்தகா யகிசமேத - சந்த்ரமெள லீசனே யைக்தொழில் விலாசனே
சந்த்ரபுர தலவாசனே என்ற வித்துவ சிரோமணி புகழ்மாலை உரையாசிரியர் வேற்பிள்ளை சூட்டியது; நல்லறிவுச் சுடர் கொளுத்தலாம் ஈழமண் டலச் சதகத்திலே இடம்பெறுவது. மட்டு வில் க. வேலுப்பிள்ளை உபாத்தியாயர் வித்துவ சிரோமணியவர்களிடம் பலநூல் களைக் கற்று, அவரிடம் உரையாசிரியர் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றவர். அவரைப் போன்று புராண பட னம் செய்து பேர் பெற்றதோடு, மட்டுவிலி லும் புராண படனம் செய்யும் பரம்பரை பொன்று உருவாகக் காலாக அமைந்த வர், பொன்னம்பலபிள்ளை தம் மாணுக் கருக்குத் தம் குருவாகிய வித்துவ சிரோ மணியவர்களின் இலக்கிய இரசனைக் கதை களை வாயூறி வாயூறிச் சொல்லிக்கொண் டிருப்பதைப் பொழுது போக்காகக் கொண்டவர் (சி. கணபதிப்பிள்ளை. சிந்த னைக் களஞ்சியம், 1978 பக். 226). இளை ஞர் கணபதிப்பிள்ளை மனதிலே வித்துவ சிரோமணியவர்கள் ஆரம்ப கட்டத்திலே இடம் பெறத் தொடங்கியது வியப்புக் குரியதன்று.
ஆறுமுகநாவலர் தமக்கு வாரிசாக எ வ  ைர யும் சுப்பிரமணிய பிள்ளையின் வியோகத்தின் பின்பு கருதாத போதும், வித்துவ சிரோமணியவர்களிடம் மிக் க

பொ. பூலோகசிங்கம்
பற்றுடையவராக இருந்தார். நாவல ரவர்களின் சரித்திரம் அதிகம் அறிந்த மனேஜர் கைலாசபிள்ளை,
இவர் குடும்பப்பற்று அற்றவரா யினும், மருமகளுகிய வித்துவசிரோ மணி பொன்னம்பல பிள்ளையிடத்து மிக் க பற்றுடையவரா யிருந்தார். அதற்குக் காரணம் பொன்னம்பல பிள்ளை தமிழிலே சிறந்த வித்துவான யிருந்து பலருக்குத் தம்மைப் போலக் கைம்மாறு வேண்டாது கல்வி கற் பித்து வந்ததேயாம்.
என்று கூறுவர் (ஆறுமுகநாவலர் சரித்திரம் 1919, பக். 14). பற்றுக்குக் காரணம் கூற வேண்டிய நிலையினை வித்துவ சிரோமணி யவர்கள் ஏற்படுத்தி விட்டார். இந்நிலை யினை மனேஜர் கைலாசபிள்ளை மறந்து விடவில்லை என்பதைச் சேற்றுரர் ரா. அருணுசலக் கவிராயர் பாடிய யாழ்ப் பாணத்து நல்லூர் பூg ல பூரி ஆறுமுக நாவலர் சரித்திரத்தின் இரண்டாம் பதிப் புக்கு எழுதிய முகவுரையும் காட்டுகின் றது (பக் 9). இந்நிலையால் நாவலரவர் களும் பாதிக்கப் பட்டுள்ளார். இதனை மித்தியாவாதநிரசனத்திலே,
சைவப்பிரசாரகர் தமது சுற்றத் தார்களை முன்னர்த் திருத்தியன்ருே பின்னர்ப் பரார்த்த காரியங்களிற் றலையிடல் வேண்டும் என்ருய். எனத் தொடங்கும் ஒன்பதாம் பந்தி காட்டு கின்றது. ஒழுக்கவீனங்களைப் பொறுக் காத உள்ளம் படைத்த நாவலரவர்களி டம் வித்துவசிரோமணி மீதேற்பட்ட கோபம் எவ்வாறு புறநடையாயிற்று என் பதைப் பண் டி  ைத பொன். பாக்கியம் கேட்டுத் தந்துள்ளார் (நாவலர் சரித்திர ஆராய்ச்சி, 1970, பக்.75-76). சந்தேக நிவர்த் தியிலே கோபம் தணிந்து விடுமாம். வித் துவ சிரோமணிக்கு எதிராகக் கண்ணிரு டன் நாவலரவர்கள் சாட்சி சொன்னதும் மருமகன் மீது ஏற்பட்ட பற்றினுலே போலும். (பொன். பாக்கியம்: நாவலர் சரித்திர ஆராய்ச்சி, பக். 76.)

Page 261
நாவலரும் கணபதிப்பிள்ளையும்
யாமெலாம் நின்னடி யேமென வுன்னப் பெறினும் பணிகரி குயிலென் றணிபெறு மூன்றையும் புற்றிற் கானின் மாவிற் புகுத்திய சிற்றிடைப் பணைமுலைத் தேமொழி மடவார் கண்ணெனுங் காலவே லெண்ணி னுழைய நெஞ்ச மழிந்த நிலைய மாகிப் பாடி காவலிற் பட்டுழன் றிட்டனம் அதனுல் எமைநீ யிகத்த லமைவுடைத் தாயினும் என்று வித்துவசிரோமணியவர்கள் கூறுவது காண்க. வித்துவசிரோ மணி யவர்களின் சொல்விற்பனமும் பயன் சொல்லவல்ல வித்தையும் அவர்களுடைய குற்றங்களை நாவலரவர்களை மறக்கச் செய்து விட்டன. வித்துவசிரோமணியவர்கள் நாவலரவர் கள் காலத்திலேயே அவருக்கு அடுத்தபடி யிலே வைத்து மதிக்கப்பெற்றவராக விளங்கினுர், நாவலரவர்களிடம் கற்றவர் களும் தம் கல்வியை வித்துவ சிரோமணி யவர்கள் மூலம் பூரணப்படுத்திக்கொள்ள அவாவி நின்றனர். ஈழத்து அறிஞர் மட்டு மன்றித் திருவாவடுதுறை பொன்னுேது வார் மூர்த்திகள், திருவாவடுதுறை சுப் பிரமணிய ஒதுவார், திருவாவடுதுறை மகாலிங்கம் பிள்ளை, பழநி குமாசாமித் தம்பிரான், காரைக்குடி சொக்கலிங்கச் செட்டியார், பின்னத்துரர் நாராயணசாமி ஐயர், உரத்தூர் கோ. வைத்திலிங்க பிள்ளை,த.ஆ.சபாபதிப்பிள்ளைமுதலிய தமிழ் நாட்டவரும் வித்துவ சிரோமணியவர்களி டம் பாடம் கேட்டவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது. பெரியபுராணம், கந்தபுரா ணம், தணிகைப்புராணம், பாரதம், கம்ப ராமாயணம், சீவக சிந்தாமணி முதலியன வற்றிலே வித்துவ சிரோமணியவர்கள் மிகுந்த பயிற்சியுடையவராகத் திகழ்ந் தார். சைவசம்பந்தமான வியாக்கியா னங்களிலே கம்பராமாயணத்தையும் சிந்தா மணியையும் ஏற்ற ஏற்ற இடங்களிலே அள்ளிச்சொரிந்தவர் வித்துவ சிரோமணி
யவர்கள்.

25
சமயவுண்மைகளுக்கு - அ வ ற் றின் விளக்கத்திற்கு நிலைக்களமாக நாவல ரவர்கள் கொண்ட புராணபடனத்தைக் காவியரசனைக்குப் பயன் படுத்தியவர் வித் துவசிரோமணி நாவலரவர்கள் காலத் திலே இரசிக சிகாமணியாக விளங்கி இலக்கியச்சுவைக்கு வழிகாட்டியவர், பக் திச் சுவைக்கு மாமனும் இலக்கியச் சுவைக்கு மருகனும் என்ற நிலையினை ஒரே காலத்திலே யாழ்ப்பாண மக்கள் கண்டு களித்தனர்.
பண்டிதமணியவர்களின் " " வித்துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை' என் னும் கட்டுரையை வாசிப்பவர்கள் (கந்த புராண கலாசாரம், 1959) அவரை எவ் வளவு தூரம் வித்துவ சிரோமணியவர்கள் ஆகர்ஷித்துள்ளார் என்பதைத் தெளி வாக உணரமுடியும். வித்துவசிரோமணி யவர்களின் கல்யாண குணத்தைக் கூறி மகிழும் பண்டிதமணியவர்களை மட்டுவில் க. வே. மஹாலிங்கசிவமும் அவ்வழியே செல்லத் தூண்டியவராகின்ருர்,
புலமை நிரம்பியமைந்த உள்ளம் தன் பெருமையை எண்ணுத எளிவந்த சுபாவம், சதாகாவிய உலகிற் சஞ் சரித்து இன்புறுதல் இவற்றையெல் லாம் ஊடுருவி நிற்கும் திரிபுரசுந்தரி தேவி பக்தி ஆகிய இந்நாலு அமிசங் களும் ஒருங்கு சேர்ந்ததே பண்டித ரவர்களுடைய தனிப்பண்பு. எனத் தம் தேவி மானச பூசையந்தாதி யை மஹாலிங்கசிவத்திற்குச் சம ர் ப் பண ஞ் செய்த முகாந்திரம் தி. சதாசிவஐயர் கூறு வது ஊன்றி நோக்கத்தக்கது. பாலியத் திலே பழமலையந்தாதி படிப்பித்த மஹா லிங்கசிவத்தின் தொடர்பு கோப்பாய் பயிற்சிக்கல்லூரியிலும் பண்டிதமணியவர் களுக்குக் கிட்டியது. வித்துவ சிரோமணி யவர்களின் மதுகரமாகநின்ற பண்டித மணியவர்களை, இரசனை வழியிலே முன் னேறச் செய்தவர் மஹாலிங்கசிவம், பண் டிதமணியவர்களின் கேள்வி ஞானத்தை விருத்தியாக்கி இலக்கியச்சுவைக்கு மேலும்

Page 262
2$2
காரணமாயமைந்தது ஈரப்பலாச் சங்கத் திலே நடைபெற்ற மேலைத்தேயக் காவி யங்கள் முதலானவற்றின் அலசலும் என் பதுவும் குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலை யிலே பண்டிதமணியவர்கள் 1929 இல் அமர்ந்ததையடுத்து வித்துவசிரேமணியின் இலக்கியப் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலைமையும் உருவாகியது. பாடத்திட்டம் எவ்வாறிருப்பினும் பண்டித மணியவர்கள் இலக்கியச்சுவை ஏற்படுத் தக்கூடிய பாடல்களைத் தெரிந்து ஆரம் பத்தில் சில மாதங்களாக மாணுக்கரைப் பக்குவப் படுத்துவதையே பயிற்சியாகக் கொண்டிருந்தனர். (கனக. செந்திநாதன் *மூன்றது கண்”, 1959, பக், 29)
பண்டிதமணியவர்கள் ஆசிரியர் கலா சாலையிலே பணிபுரியத் தொடங்கியதை அடுத்து விரிவுரைகள் நிகழ்த்த ஆரம்பித் தனர். அவர் முதலிலே கலாநிலையத்தில் தான் விரிவுரைகள் ஆற்றத்தொடங் கிஞர் என்றும் அவர்தம் முதல் விரிவுரை **சின்னத்தம்பிப்புலவர்’ 1933ஆம் ஆண் டில் நிகழ்த்தப் பெற்றதென்றும் கலா நிலையத் தாபகர் கூறுவர் (பண்டிதமணி சி. கணபதிப்பிள்னை அவர்கள் மணிவிழா மலர், 1959 பக். 7). இவ்விரிவுரை பற்றி எஸ். ஹன்டி பேரின்பநாயகம் கூறுவது கவனிக்கத்தக்கது.
மெல்லிய நெடுவல் ஆளொருவர் எழுந்தார். பின் குடுமி, மேலிலே சால்வை மாத்திரம், சட்டையில்லை. முதற் பதினைந்துநிமிடம் அருகிலிருந்த வர்களுக்குத்தான் பேச்சுக்கேட்டது. சிறிது சிறிதாய்க் குரலுயர்ந்தது. யாவ ரும் கேட்கமுடியும்; கேட்டார்கள். ஆடாமல் அசையாமல் இருந்தார்கள். இடையிலே வயிறுகுலுங்கச் சிரித்தார் கள். பேச்சாளர் முகத்திற்புன்சிரிப்புத் தான். கல்லின்மேற் கல்லு வைக்க வளரும் கட்டடம்போற் பேச்சுவளர்ந் தது. பள்ளுப் பிரபந்தத்தைப் பற்றி விளக்கம் தந்தார். "தண்டிகைக் கன

பொ. பூலோகசிங்கம்
கராயன் பள்ளு, கதிரைமலைப் பள்ளு முதலியவற்றிலிருந்து மேற்கோள்கள் எழுத்தாளப்பட்டன. பள்ளுகளில் பருளாய் விநாயகர் பள்ளே சிறந்த தென்பது நிலைநாட்டப்பட்டது. வில் லவராய முதலியர் வீட்டுப் படலையிற் பொன பூச் சொரி ந்து நின்ற கொன்றை மரத்திற்குச் சின்னத்தம் பிப்புலவர் சாகாவரம் கொடுத்து விட்டார். புலவர் அவர்கள் புகை யிலை நறுக்கை நாடித் தகப்பனர் வீட் டின் இறப்பை ஆராயும் காட்சிக்குக் கணபதிப்பிள்ளைப் பண்டிதர் சாகா வரம் கொடுத்திருக்கிருர், குறும்புப் பையனுன சின்னத்தம்பி தகப்பணு ரில்லா நேரம் பார்த்து அவர்அயர்த்து மறந்து விட்டுப் போகும் புகையிலைத் துண்டையோ காம்பையோ ஆவ லுடன் தேடி வாய்க்குள் போடும் காட் சியைப் பண்டிதருடைய பேச்சைக் கேட்டவர்கள் மறக்கமுடியாது
(மணிவிழா மலர், பக், 40)
ஹண்டி மாஸ்டர் கூற்றிலிருந்து பண் டிதமணியவர்கள் வித்துவ சிரோமணி யவர்கள் தடத்திலே செல்வதை உணர லாம். பண்டிதமணியவர்களின் கலாநிலைய விரிவுரைகளில் 'வித் துவ சிரோமணி பொன்னம்பலபிள்ளை'யும் ஒன்றென்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது (மணிவிழா மலர். பக். 7). இக்கால கட்டத்திலே பண்டிதமணி யவர்கள் சமய சம்பந்தமான விரிவுரை கள் ஆற்றவில்லை.
வாழ்க்கையில் தாம் சாதிக்காத சமய உண்மைகளை மேடையில் நின்று பேசும் மனப்பான்மை அற்றவர்கள்! சைவ சித்தாந்த உண்மைகளைத் தாம் நன்கு கற்று அறியும்வரை அவற்றைப் பற்றி விரிவுரைகள் நிகழ்த்துவது தவறு எனக் கருதி வாழ்ந்தவர்கள். இக் காரணத்தினுல் அக் காலத்தில் சமய விரிவுரைகள் நிகழ்த்துவதற்கு மறுத்திருக்கிருர்கள்.

Page 263
நாவலரும் கணபதிப்பிள்ளையும்
என்னும் கலாநிலையத் தாபகர் நவரத்தி னம் கூற்றுகள் சான்று பகர்வன (மணி விழா மலர் பக். 8) ,பண்டிதமணியவர்களின் இலக்கிய ரசனைக் கட்டுரைகள் பலவும் இக் காலத்திற்குரியனவாக இரு த் த ல் வேண்டும். தொகுப்பித்தவர்கள் கால வர்த்தமானத்தைப் புறக்கணித்துப் பதிப் பித்தமையில் ஆய்வு சிரமத்திற்குரியதாய் விட்டது.
1938 காத்திகையில் கம் பன் ஒரு நாடகப் புலவன் என்ற சொற்பொழிவி னைப் பண்டிதமணியவர்கள் கொழும்பிலே நிகழ்த்தி யிருக்கின்ருர் (மூன்றவதுகண், பக். 32). வட்டுக்கோட்டை இந்துக்கல்லூ ரியிலே நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பாடல்களுக்கு 1940 தையிலே விமர்சனம் செய்துள்ளார் (ைெடி, பக். 25). ஆணுல் 1940ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரும் தேதி முதல் ஆனந்த விகடனிலே உ. வே. சாமி நாதையர் பெயரால் வெளிவந்த என் சரித்திரம் என்ற தொடரிலே இழிவுரைகள் பிரசுரமானபோது பண்டிதமணி யவர்கள்
முனைப்பின்றி நின்ருர் (டிெ, பக். 20).
பண்டிதமணியவர்கள் நாவலர் சிந் தனக் கட்டத்தை அணுகிக்கொண்டிருந் தார். 1933இலே திருவாவடுதுறையா தீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் பூரீ மீனுட்சிசுந்தரம்பிள்ளை யவர்கள் சரித்தி ரம் முதற்பாகம் வெளிவந்த போதே நாவலர் நினைவுநிழல் படியத் தொடங்கி விட்டது. ஆயினும் அது இரங்கற்பா வடிவத்தினைப் புதுமையாகக் கண்டனத் திற்குப் பயன்படுத்திய ரசனைப் படைப் பிற்கே வழிவகுத்தது. சுவாமிநாத பண்டி தர் மீது பாடப்பெற்ற அவ்விரங்கற்பா 1934ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலே வெளிவந்தது. 1938இலே வெளிவந்த அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்ல முடி யாது எனும் கட்டுரையும் உலகியலிற் காணமுடியாத விசித்திரப்பிறவி நாவல ரவர்கள் என்பதை அங்கத நயத்துடன் சுவையாக அமைத்துக் காட்டும் கட் டுரையே ஒழிய நாவலர் சிந்தனைக் கட் டுரையன்று m

253
காவிய பாடசாலை மாணவனுக இருந்த காலை ஈரப்பலாச் சங்கத்திலே அறிமுக மான அளவெட்டி பொ. கைலாசபதி (சிந் தனைக் களஞ்சியம், பக். 234) சைவாசிரிய கலாசாலை உப அதிபராக விளங்கிய காலத் திலே, 1933இலே, சித்துலகத்தொடர் புடையவர் போலத் தோன்றியபோதும், அவரை "மனுஷ வடிவிலுள்ள தெய்வம்" என்று கருதியபோதும் (மூன்றவது கண், பக். 26-27); மணிவிழா மலர்,பக் 15) அருகி லிருந்தும் பண்டிதமணியவர்களுக்கு அவ ருடைய சமயப் போக்கிலே மணஞ் செல்ல வில்லை (சிந்தனைக் களஞ்சியம், பக். 233). 1940ஆம் ஆண்டு வரையிலேதான் கைலாச பதியுடன் அவர் நெருக்கமான தொடர்பு கொள்கிருர் (சிந்தனைக் களஞ்சியம், பக், 237), பண்டிதமணியவர்கள் 1941ஆம் ஆண்டு சிந்திரைமாதம் ஆசிரிய கலாசாலை வளவை விட்டு ஒரு ஒழுங்கையிலுள்ள சிறு குடிசைக்குத் தன் இருப்பிடத்தை மாற் றினர் (மூன்றவது கண், பக். 26). மன மாற்றம் இடமாற்றத்திற்குக் காரணம் போலும்.
1942-1947 வரை அவர் ஒரு பொதுத் தொண்டாயினும் பிரசங்க மாயினும் கட்டுரையாயினும் வெளி யிடாமல் சமயம் படிப்பதில் காலத் தைக் கழித்தார்.
(மூன்றவது கண், பக். 28)
பண்டிதமணியவர்களின் ஞான ஒடுக்க காலமாகிய இக்கட்டமே ஆறுமுகநாவ லர் கட்டமாதல் பொருத்தமாகும். கவிச் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த கட் டத்திலிருந்து சமயச்சிந்தனைக் கட்டத் திற்கு - ஆத்ம சிந்தனைக் கட்டத்திற்குப் பண்டிதமணி யவர்கள் மாறிக்கொண் டிருந்த கட்டம் இதுவாகும்.
இக்கட்டத்திலே உபஅதிபர் கைலாச பதியின் செல்வாக்கு முக்கியமானபோதும் அது நாவலரவர்களின் சிந்தனைகளின் வரம்புகளை உள்ளடக்கியதாகவே அமைந் தது. ஆத்மசிந்தனை ஆத்ம விசாரமாகி யது பின்பேயாகும்.

Page 264
254
நாவலர் ஐயா அவர்களின் நோக் கங்களை என்னிலும் பார்க்க பதினு யிரம் மடங்கு நன்கு விளங்கினவர் களும், ஐயா அவர்களின் நிலையை உணர்ந்தவர்களும், அவர்களிலே அளவுகடந்த பக்தி பூண்டவர்களும் இந்த ஈழமண்டலத்திலே இரண்டே இரண்டுபேர் இருக்கிருர்கள்.
(மூன்றவது கண், பக். 27)
அவர்களில் ஒருவர் பொ. கைலாச பதி என்ற பண்டிதமணியவர்களின் பழைய கூற்றிலே ஆறுமுகநாவலர் தாம் அருவுருவாக நிற்பது புலனுகின்றது: கைலாசபதியின் விளக்கத்திலே நாவல ரவர்களின் உண்மைகளைக் காணப் பண்டித மணியவர்கள் இக்கட்டத்திலே முயல்கி ருர், 'சாதியினுஞ் சமயமே அதிகம்’ இதற்கொரு எடுத்துக் காட்டாக அமை யலாம். சமயக் கட்டுரைகள் வெளிவந் தன; நாவலரின் உண்மைச் சரித்திரங்கள் வெளிவந்தன.
கைலாசபதியின் செல்வாக்கு ஆறுமுக நாவலர் கட்டத்திற்குப் பண்டிதமணியவர் களை இட்டுச் சென்றபோதும் அங்கேயே நிலைகொள்ள விடவில்லை; அப்பால்
நாவலர் நூல்களின் மறு பதிப்
'நாவலரால் எழுதப்பெற்றன முதல் மூன்றம் பாலபாடம் சிதம்பரம் சைவப்பிரச பொன்னம்பலபிள்ளை செய்தது. நாவலர் எழு செய்யாது அச்சிடுதலே பெருந்தன்மையா பொருந்தாத சில மாறுபாடுகளைச் செய்து துக்காட்டாக இரண்டொன்று கூறுவோம். பாடத்தில் (1954இல் வந்த 18ஆம் பதிப்பு கும் போக்குவரவு செய்பவர்கள் தோணி இப்போது புகைவண்டியிலும், ஆகாய வி காணப்படுகிறது. இப்போது என்பது முன்னுல் கி. பி. 1879இல் காலமான நாவல தமா? இக் கூற்றைப் பதிப்பாளருடைய அ துலங்குமே.?*
வள்ளு

பொ. பூலோகசிங்கம்.
கொண்டு சென்றுவிட்டது. இக்கட்டத் தினைக் கைலாசபதி கட்டம் என்று கூற லாம். இக்கட்டத்தின் தோற்றுவாயினை "ஆரியமும் தமிழும்" என்பதிலே 1940 இலே இனங்காண முடியுமாயினும், அது நாவலர் கட்டத்திலே மருவியிருந்த போதும், அறுபதுகளை அடுத்துத்தான் முனைப்புடன் வெளிப்படத் தொடங்குகின் றது. இறையனுர் களவியலுரையும், தொல் காப்பியப் பொருளதிகாரமும் கைலாசபதி சிந்தனைக்குத் தூண்டுகோலாக அமைந்திருந்ததனைப் பண்டிதமணியவர் கள் கட்டுரைகள் சிலவற்றிலே காண லாம். சிந்தனைக் களஞ்சியத்திலே இடம் பெறும் வள்ளுவர் வாழ்க்கை விளக்கு, தமிழ், ஆரியமும் தமிழும் என்பன காண்க.
பண்டிதமணியவர்கள் வாழ்க்கையிலே ஆறுமுகநாவலர் கட்டத்திற்குக் காரண மாயது வித்துவசிரோமணி கட்டம்; காரிய மாகியது கைலாசபதி கட்டம். நாவலர் கட்டம் நடுவணதாகி நின்று ஒன்றின் அந் தத்திலே தோன்றி மற்றதின் ஆதியிலே சங்கமமாகி விடுகின்றது, இடைநிலைப் பண்பினதாகி, மாற்ற முற்றதாயினும், அக்கட்டம் முன்னையதிலும் பின்னையதிலும் நீக்கமற நிற்கின்றது,
புகள்
இரண்டாம் நான்காம் பாலபாடங்கள், காச வித்தியாசாலைத் தரும ஆட்சியாளர் தியுதவிய பாலபாடங்களை மாறுபாடு சிறிதும் ாகும். ஆனல் இக்காலத்து உரிமையாளர் அவைகளை வெளியிட்டிருக்கிருர்கள். எடுத்
இரண்டாம் பாலபாடம் தேசங்கள் என்ற பக்கம் 31) **இலங்கைக்கும் இந்தியாவுக் அல்லது கப்பல் ஏறிச்செல்லல் வேண்டும், மானத்திலும் செல்லலாம்' என்ற பகுதி
எப்போது? எண்பத்துமூன்ருண்டுகளுக்கு 1ர் எழுத்தாக இதனைக் காட்டுவது பொருத் டிக்குறிப்பாகக் கொடுத்திருந்தால் நேர்மை
இ. மு. சுப்பிரமணியபிள்ளை வர் இருபதாம் நூற்றண்டுத் தமிழ், 1962.

Page 265
வரலாற்றில்
நாவலர் யாரே
மறுமலர்ச்சி இ
நாவலரின் இல
நாவலர் இயக்க
நாவலருக்குப்பி
காலத்தின் பின்
 

இயக்கப் பின்னணி
]க்கண முயற்சிகள்
கத்தின் வரலாறு
ன் இராமநாதன்
ர்னணி

Page 266


Page 267
நாவலர் யாரே அவர் தகைை
சி. கணபதிப்பிள்ளை
சற்றே விசாரிப்போம் : மகாத்மா காந்தியடிகளின் சரித்திரம் , மலகடம் சுத்தி செய்வதிலிருந்து, இந் திய விடுதலை பரியந்தம் நீண்டது.
கொடிய பஞ்சகாலத்தில், ஆங்காங்கு கஞ்சித் தொட்டியமைத்து ஏழைகளுக்குக் கஞ்சி வார்த்தலிலிருந்து, இலங்கைப் பிரதி நிதித் தெரிவுவரை நீண்டது நாவலர் சரித் திரம்.
அடுத்தடுத்து மழையின்மையால் ஏழை விவசாயிகளுக்கு அரசாங்கம் விதை நெல் வழங்கியது. கச்சேரியோடு தொடர்பு பட்ட பூதங்கள், ஏழைகள் கைக்கு எட்டா மல், விதை நெல்லைத் தம் வாயிலிட்டு, வயிற்றுள் தள்ளி, நீரழிவுக்கு வித்திட்டுக் கொண்டன. மாகாண அதிபதி, கண்டுங் காணுதவராயிருந்தார்.
நாவலர் கொதித்தெழுந்தார். விதை நெல் விவாதம் கவர்ணருக்கு அப்பால் குடி யேற்றநாட்டு மந்திரி பரியந்தம் முழங்கி யது. சேர். முத்துக்குமாரசாமி நாவலரின் வலக்கரமாயிருந்தார். -
ஆங்கில அரசில் நீதியைப் பெறமுடி பும்" என்ற தைரியம் நாவலருக்குப் பரி பூரணமாயிருந்தது.
யாழ்ப்பாணத்துக் கச்சேரி அநீதி, பொய், கோள் முதலிய புத்தகங்கள் படிப் பிக்கின்ற கலீசு (COMEGE); அதற்குத் தலை
3.

ம யாதோ!
வர் (PRINCIPAL) துவைனந்துரை; உபாத் தியாயர்கள் பாவந்தோன்றிய நாளையிற் ருேன்றிய பதகன்’ ஆகிய முதலியார் முத லிய சில உத்தியோகத்தர்கள்; அவைகள் படிப்பிக்கிற தாலுகாப்பள்ளிக் கூடங்கள் (TALUK SCHOOilS) ga) 32,68, Loja, it gigs (35 டைய தானங்கள்' - என்பது நாவலரின் கர்ச்சனை.
துவைனத்துக்கு நடுக்கம் எடுத்தது. உத்தியோகம் இழந்து, மறியற்சாலை புகும் நிலை நேர்ந்தது.
இவை நாவலரின் புறச் சரித்திரம்.
இவ்வாருய சரித்திரம் மிகப் பல.
இனி நாவலர் பெருமானின் அகச்சரித் திரத்துக்கு வருவோம்.
* புறத்திணை மருங்கிற் பொருந்தினல் லது அகத் திணை மருங்கின் அளவுதல் இலவே' என்பது தொல்காப்பியம்’’
t 够
நிலையில்லாத என் சரீரம் உள்ள பொழுதே என்கருத்து நிறைவேறுமோ, நிறைவேருதோ என்னுங் கவலை என்னை இரவும் பகலும் வருத்துகின்றது. அக் கருத்து இது : தமிழ்க் கல்வியும் சைவ சமயமும் அபிவிருத்தியாதற்குக் கருவிகள் முக்கிய ஸ்தலந்தோறும் வித்தியாசாலை தாபித்தலும், சைவப் பிரசாரணஞ் செய் வித்தலுமேயாம். இவற்றின் பொருட்டுக்

Page 268
258
கிரமமாகக் கற்று வல்ல உபாத்தியாயர் சளும், சைவப்பிரசாரகர்களும் வேண்டப் படுவார்கள். ஆதலினலே, நல்லொழுக்க மும், விவேகமும், கல்வியில் விருப்பமும் இடையரு முயற்சியும், ஆரோக்கியமும் உடையவர்களாய்ப் பரீக்ஷக்கப்பட்ட பிள் ளைகள் பலரைச் சேர்த்து, அன்னம் வஸ்தி ரம் முதலியன கொடுத்து, உயர்வாகிய இலக்கண விலக்கியங்களையும், சைவ சாஸ் திரங்களையும் கற்பித்தல் வேண்டும். அவர் களுள் ளே தேர்ச்சியடைந்தவர்களையே உபாத்தியாயர்களாகவும், சைவப் பிரசா ரர்களாகவும நியோகிககலாம்' - என்பது நாவலர் பெருமானின் வாக்கு.
இவ்வாக்கிலிருந்து நாவலரின் அகத் திணையாகிய அகச்சரித்திரம் ஊகிக்கத்தக் கது. இவ்வாக்கின் இறுதியில் பிரசித்கி பெற்ற நாவலரின் ஐந்தாண்டுத் திட்டம் அரும்புவதைக் காணலாம்.
நாவலரின் அகப்போர் மதமாற் றத்தை எதிர்த்து எழுந்தது.
சநீதி திரி பாதிரிகள்’ என்பது முத்துக் குமார கவிராயர் வழங்கியதொருதொடர், பதிற்றுப்பத்துச் சிறப்புத் தொடர்களோடு வைத்தெணனைத் தக்கது இத்தொடர்.
es re Xo
நாவலர் பெருமானின் நீதி, பார்சிவல் பாதிரியாரை நீதி திரி பாதிரிகளின் வரிசை
யிலிருந்தெடுத்து நீதி நெறியில் திரித்து விட்டது.
பார்சிவல், நீதிக்குத் தலைவணங்கி, நாவலரை மம (எனது) குரு என்ருர், நாவ லர் அவரை அபரசாக்கியர் என்கின்ருர்;
. t exe
1857-ல் உண்டானது சென்னைச் சர்வ கலாசாலை. 1823-ல் உண்டானது வட்டுகி கோட்டைச் செமினரி. 1822 இறுதியில் பிறந்தவர் நாவலர்.
மிஷனரிகள், படித்தவர்கள் கிறிஸ்த வர்களாயே இருப்பார்கள் என்று நம்பி ஞர்கள்.

சி. கணபதிப்பிள்ளை
பெருங்கைகளெல்லாம் கிறிஸ்தவர்க ளாய் மாறி அங்கே படித்தார்கள். அவர் களுக்குக்கிறிஸ்தவ நாமங்கள் வழங்கப்பட் டன. பாரிய சிங்கங்கள் ஆர்ப்பரித்தெழுந் ტნ 6ხy”.
பாதிரிமார் வெற்றிச் சங்கைக் கையி லெடுத்தார்கள்.
oxo
1847ஆம் ஆண்டு 31ஆம் தேதி இரவு வண்ணைச் சிவன் கோவிலிலிருந்து ஒரு சங்க நாதம எழுந்தது.
பாதிரிமார் எடுத்த சங்கை மெல்ல நிலத்தில் வைக்க நேர்ந்தது.
8. o · exo te
பாதிரிமார் நம்பியிருந்த சிங்கங்க ளெல்லாம், பூனைகளாய் நாவலரைப் பின்
பற்றின.
பாதிரிமார், படித்தவர்கள் கிறிஸ்த வர்களாயிருக்கமாட்டார்கள் என்ற முடி வுக்கு வந்தார்கள். செமினுரி சாதாரண கல்லூரியாயிற்று.
娜 «ҳ» es
ஹிங்ஸ்பரி, கறல், உவைமன், பிற வுண் முதலிய நாமங்களின் வரலாறுகளை ஆராய்ந்தால, அவை ஒவ்வொன்றும நாவ லரின் அகச் சரித்திரம்பற்றிக் கதை சொல்
IUD.
t oKo
நாவலர் காலம், வித்துவான்கள் தம் திறமைகளைக் காட்டிப் பிரபந்தஞ் செய்து, தமமுட்களித்த காலம் நாவலர் அந்த வரிசையில் சேராமல், ஆணுவிலிருநது கருவி நூல்களையும் சமய நூல்களையும் இலக்கியங்களையும படிக்கிரமத்தில் வெளி யிட்டு, அறிவு ஒழுககங்களை வளாக்க வழி செய்வாராயினர்.
● 哆 ex
சென்ற நூற்ருண்டில், " மேன்மை கொள் சைவ நீதி" க்கு தம்மை அர்ப்ப ணித்த ஒர்ே ஒரு மகான் நாவலர் பெரு ம்ான்.

Page 269
இந்திய மறுமல இயக்கப் பின்ன
வி. சிவசாமி
இந்திய இலங்கைவரலாற்றில் கி. பி. 19ஆம் நூற்ருண்டு ஒரு பிரதான கால மாகும். இந்நாடுகளின் சமய, பண்பாட்டு வரவாற்றில் இக்காலம் ஒரு திருப்புமுனையு மாகும். இக்காலத்திய சமய, சமூக மறு மலர்ச்சி இயக்கங்கள் பழைமையும் புதுமை யும் கொண்டுவிளங்கின. இவ்வியக்கங்க ளின் இயல்புகளை நன்கு ஆரா ய் ந் த பேர்சிவல் ஸ்பியர் எனும் பிரபல வரலாற் முசிரியர் இவை " " இந்தியப் பண்பின் உருவமாற்றம் *1 எனக் குறிப்பிட்டுள் ளார். மேலும் இக்காலம் (19ஆம் நூற் முண்டு) இந்திய வரலாற்றிலுள்ள மிக முக்கியமான மூன்று காலங்களில் ஒன்று’’ என கே. எம். பணிக்கர் என்ற பிறிதொரு வரலாற்ருசிரியர் வருணித்துள்ளார்.2
நாவலர் வாழ்ந்த காலத்திலேதான் வட்டுக்கோட்டையிலிருந்த அமெரிக்க கிறித்தவ உயர் கல்வி நிறுவனத்தின் அதிப ராகப் பணியாற்றிய வண. ஹொய்சிங்ரன் சிவஞானபோதம், சிவப்பிரகாசம் தத்துவக் சட்டளை முதலிய சைவசித்தாந்த நூல்களை ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து மேனட் டவர்க்கு இவற்றினை 19ஆம நூற்றண்டு நடுப்பகுதியில் அறிமுகம செய்தார். இதன் பின்னரே வண. கலாநிதி போப் அவர்க ளின் திருவாசக ஆங்கில மொழிபெயர்ப் பும், தமிழகத்தினைச் சேர்ந்த நல்லச "மிப் giraft. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ச. சபாரத்தினமுதலியார் போன் ருே ர் சைவசித்தாந்தLபற்றி ஆங்கிலத்தில் எழு திய நூல்களும வெளிவந்தன.

sjófó? ாணியில் நாவலர்
நாவலர்கால இந்தியாவிலேற்பட்ட மறுமலர்ச்சி அல்லது புத்துயிர்ப்பு இயக் கங்களிலே , வங்காளத்திலே தொடங்கிய பிரமசமாஜம், இராமகிருஷ்ண இயக்கம், குஜாரத்திலே தொடங்கிய ஆரியசமாஜம் என்பன குறிப்பிடற்பா லன. இவ்வியக் கங்கள் ஏற்பட்ட காலத்திலே நாவலர் பெருமளவு வாழ்ந்தவராயினும், அவற் றுடன் அவர் தொடர்புகொண்டிருந்திலர். ஆனல் அவர் மேற்கொண்ட நடவடிக்கை கள், ஆற்றிய பெரும்பணிகள் ஆகியன வற்றிற்கும மேற்குறிப்பிட்ட இயக்கங்க ளிலே நிலவிய கருத்துக்களுக்குமிடையில் ஒற்றும்ை வேற்றுமைகள் காணப்பட்டன. ஒற்றுமை அம்சங்கள், இந் நா டு க ள் மேனுட்டவர் ஆட்சி ககுட்பட்டிருந்தமையி ஞலும் ஏறக்குறைய ஒரேவிதமான பிரச் சினைகளை இவை எதிர்நோக்கியதாலும, சமகாலச் சிந்தனைகள் எனறவகையாலும் பிறவற்ருலு-ம ஏ ற் பட் டி ரு க் க லா ம எனவே, நாவலரைச் சமகால இந்திய மறுமலர்ச்சிப் பின்னணியிலே நோக்குதல் பொருத்தமே.
இவ்வியக்கங்களிலே காலத்தால் முந் தியத. ன பிரமசமாஜத்தி%ன முதலில் எடுத்துககொள்ளலாம். இதனை நிறுவிய வர ன ராம் மோகன்ருேய் (1774-1833) செல்வம்படைத்த வைதிகப் பிராமண குடும்பத்திலே பிறந்த ர், இளம வயதி லேயே உண்மையி%ன அறியும ஆவல். உடையவராக விளங்கினர். இந்துசமய, நூல்களை மட்டுமன்றி, இஸ்லாமிய, கிறித்

Page 270
260
தவமத நூல்களையும் நன்கு ஆராய்ந்தவர். தாய்மொழியான வங்காளி, சம்ஸ்கிருதம். அராபியம், பாரசீகம், ஆங்கிலம், கிரேக் கம், லத்தீன், ஹீப்ரு முதலிய பத்து மொழிகளிலே நன்கு பாண்டித்தியம் பெற் றிருந்தார். இவர் சிலகாலமாக வங்கா ளத்திலே பிரித்தானிய சிவில் சேவையிலே கடமையாற்றிய திரு டிக்பியின்கீழ்ப் பணி யாற்றிப் பாராட்டுப் பெற்றவர். இவர் உலகின் பிரதான மதங்களை அவ்வவற்றின் பிரதான மூல நூல்களில் ஆய்வுசெய்தவர். இவரின் பன்மொழித்தேர்ச்சி இக்காரணத் தாலும் ஏற்பட்டது.
இந்துசமயத்திலே, சமகாலத்திலே நில விய மூடநம்பிக்கைகள், சீர்கேடுகள் அர்த்த மற்றகிரியைகள் முதலியவற்றைக் களைந்து தாம் சரியென உணர்ந்தவகையில் இவர் அதனைச் சீர்திருத்தி அமைக்கவிரும்பினர். இவ்வாறு செய்வதன் மூலமே கிறித்தவத் திற்குச் சமமான அல்லது மேலான வலு வுள்ள சக்தியாக இந்துசமயம் விளங்கும் எனக் கருதினர். பகுத்தறிவும், உண்மை யுமே அவர் கண்ட பெரிய இலட்சியங்கள். இந்நோக்கத்திற்கு உபநிஷதங்கள் கூறும் வேதாந்தமே சிறந்ததெனக் கருதினர் ஏக தெய்வ வழிபாட்டினை நன்கு வலியுறுத் திய இவர், உபநிடதங்கள் கூறும் நிர்க் குணப் பிரமத்தில் ஈடுபாடுகொண்டமை யில் வியப்பில்லை. உருவ வழிபாடு, பல தெய்வ வழிபாடு முதலியனவற்றைக் கண் டித்த இவருக்கு மேற்குறிப்பிட்ட உபநிஷ தங்கள் கூறும் நிர்க்குணப் பிரமம் உகந்த தாகத் தென்பட்டது. இவருடைய இப் பெயர்ப்பட்ட நோக்கிற்குக் கிறித்தவ, இஸ்லாமியத் தொடர்புகளும் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கலாம். அதுமட்டு மன்றி, இம்மதங்களிற்போன்று ᎧᎫ ᏯᎦ தெய்வ வழிபாட்டினை நன்கு வலியுறுத்து வதன் மூலமே இந்துமதம் அவற்றிற்கு ஈடாகவும் இணையாகவும் மட்டுமன்றி மேலானதாகவும் விளங்கும் எனவும் அவர் கருதியுமிருக்கலாம். இவருடைய இக் கருத்து இவர் பாரசீக மொழியில் எழுதி யுள்ள துஹவத் உல் - முவ்ஹித்தின் எனும் நூலிலே தெளிவாகக் காணப்படுகிறது. 3 முக்கியமான உபநிடதங்களை இவர் வங்

வி. சிவசாமி
காளி மொழியிற் பெயர்த்தார். இவரின் சங்கம் முதலில் பிரமசபா" எனவும், பிரமசமாஜம் (கடவுளின் சங்கம்) என வும் அழைக்கப்பட்டது.
இவரின் பிறசமய ஆய்வுகளும் குறிப் பிடத்தக்கவை. இளம்பிராயத்திலே இந்து சமயநூல்களை மட்டுமன்றி இஸ்லாமிய நூல்களையும் இவர் நன்கு கற்றவர். இஸ் லாமிய சமயப் பண்பாட்டு மரபுகளிலும் நன்கு தோய்ந்தவர். பாரசீகம், அராபிய மொழிகளை நன்கு கற்றவர், கிறித்தவ சமயம்பற்றி நன்கு ஆராய்ந்தவர். குறிப் பாக யூனிற்றேரியன் கிறித்தவக் கோட் பாடுகளிலிவருக்கு மிக்க ஈடுபாடேற்பட் டது. இந்துசமயத்தினை இதன்பாணியில் அடை0க்கவும் விரும்பினர் எனவும் கருதப் படுகிறது. இவர் ஏற்படுத்திய பிரமசமா ஜத்தில் இதன் சாயலைக் காணலாம். எனது இதயம் யூனிற்றேறியவாதத்தில் ஈடுபடுகிறது 4 என இவர் கூறியிருந்தா லும், கிறித்தவத்தினை இவர் தழுவவில்லை. கிறித்தவம் பற்றித் தாம் கொண்டிருந்த கருத்துக்களை "யேசுவின் வாழ்க்கை" எனும் நூலிலே வெளியிட்டார். இந்நூல் இவர் போற்றிய உபநிடத வேதாந்த அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இத ல்ை, கிறித்தவக் குருமார் குறிப்பாகச் கலாநிதி ரைற்லர் போன்றேர் இதனைக் கண்டித்துப் பிரசுரங்கள் வெளியிட்டனர்.5 அவற்றை நிராகரித்து இவரும் கண்டன நூல்கள் வெளியிட்டார். தமது பிரசுரங் களை வெளியிடுதற்காக 1823-ல் யூனிற் றேரியன் அச்சியந்திரசாலையினை நிறுவி ஞர். 8 கிறித்தவக் கோட்பாடுகளைக் கண் டி த் துப் பிரசுரங்கள் வெளியிட்டார். ஆணுல் கிறித்தவத்தினை ஒரு பெரிய சமய மாக மதித்துவந்தார் என்பதும் குறிப் பிடற்பாலது. இவருடைய செல்வாக்கி ஞலேதான் பாப்ரிஸ்ற் மிஷனரியாக வங் காளத்திற் திருப்பணிசெய்த வண. அதம் யூனிற்றேரியணுக மாறினர்." இவர் பல மதங்களை ஒப்பிட்டு ஆய்வதில் ஈடுபாடுடை யவர். ? ஒப்பியல் சமய ஆராய்ச்சி செய்த முதலாவது அறிஞர் இவர் " என மோனி யர் வில்லியம்ஸ் இவரைப் பாராட்டியுள் orfTrf.

Page 271
இந்திய மறுமலர்ச்சி இயக்கப் பின்னணியில் ந
ராம் மோகன்ருேய் தமது பாரம்பரிய மான சமய அதுஷ்டானங்கள் சிலவற் றைத் தொடர்ந்து கவனித்துவந்தார். பிராமணர் அணியும் முப்புரி நூலினைத் தரித்தார்; காயத்திரி செபம் செய்தார். பல்வேறுசமய பண்பாட்டுக் கருத்துக்களில் ஈடுபாடு உடையவராயினும் இறுதிவரை இந்துவாகவே விளங்கியவர். ஆணுல் இவ ருடைய சமரச நோக்கினைக் கண்ட பலர் இவரைத் தத்தம் மதத்தவர் எனக் கூறி னர். இவரே இங்கிலாந்திற்குப் புறப்படு முன் தாம் இறந்தபின் தமது சரீரத்தினை இந்துக்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகிய முப்பெரும் சமயத்தவரும் கோரு வர் என நகைச்சுவையாகக் கூறினர் 8 என அறியப்படுகிறது.
இவர் சமூகச் சீர்திருத்தங்களிலும் மேனுட்டுக் கல்வியிலும் ஈடுபாடுகொண் டிருந்தார். இந்தியா தேங்கிய நிலையி லிருந்து புதிய ஊக்குவிப்புப்பெற்று உலக அரங்கிலே தலைநிமிர்ந்து விளங்குதற்கு இந்திய சமூகத்திலே சீர்திருத்தங்களும், ஆங்கிலக் கல்வியும் அவசியமென உணர்ந் 'தார். சம்பத் கெளமுதி " எனும் பத் திரிகைமூலம் வங்காளி மொழியிலே மக்க ளுக்கு அரசியலறிவு புகட்டினர். சமூகத் திலே பெண்களின் நிலைகண்டு மனம் கலங் கினர். சமகால இந்தியாவின் தாழ்ந்த நிலைக்குப் பெண்களின் அவலநிலைதான் காரணம் எனக் கருதினர்.9 சதீ’ (உடன் கட்டையேறும் வழக்கம் ) பாலிய விவாகம் முதலானவற்றைக் கண்டித்தார். சதீ’ வழக்கத்தினை ஒழிப்பதற்குச் சமகால ஆங் கிலேயத் தேசாதிபதியான வில்லியம் பென்ரிங் மேற்கொண்ட நடவடிக்கைக ளுக்கு அமோக ஆதரவு நல்கினர். பெண் களின் நிலை திருந்துவதற்குப் பெண் கல்வி அவசியமென்பதை உணர்ந்து செயலாற்றி ஞர். ஆங்கிலக் கல்வியினைப் போதிப்ப தற்கு நிருவாகிகளும், கிறித்தவ மிஷ னரிமாரும் மேற்கொண்ட நடவடிக்கை களுக்குப் பேராதரவு வழங்கினர். ஆங் கிலக் கல்விமூலமே இந்தியா மேலைத்தேய விஞ்ஞானம், தாரான மைக் கருத்துக்க ளைப்பெற்று முன்னேற்றமடையும் எனக் கருதினர். அதேவேளையில் தாய்மொழி

Tsas) 261
யான வங்காளி மொழி வளர்ச்சிக்கும் தொண்டுபுரிந்தார்.
இவர் தமது கருத்துக்களையும் விவா தங்கள் சிலவற்றையும் வங்காளமொழியி லும் பிரசுரித்தவர். இவருடைய இத் தொண்டினலே வங்காள மொழியிலே வசனநடை வளர்ச்சியுற்றதெனக் கூறப் படுகிறது. புதிய கருத்துக்களை வெளியிடும் மொழியாகவும் அது மாறியது. 10 இவ ரின் வங்காளி மொழிநடையிலே சம்ஸ்கிரு தச் சொற்கள் அதிகமாக இடம்பெற்றன. ஆஞல் வங்காளி மொழியின் வசனநடை இவருக்குப்பின் வந்தவர் க ளா லே யே மேலும் வளர்ச்சியுற்றது.
சமூகத்திலே நிலவிய சாதிமுறையினை இவர் கண்டித்தார்; சமத்துவத்தை வற் புறுத்தினர். ஆண்களும், பெண்களும் சரி நிகர்சமானமாக வாழவேண்டுமென விரும் பினர்; விதவை மறுமணத்தை ஆதரித் தார். இந்திய விதவைகளின் துயரக்க ணிர் கண்டு கலங்கியவர். திருமணம்பற்றி மஹாநிர்வாண தந்திரம் என்னும் சைவ நூலிலே கூறப்பட்டிருக்கும் கருத்தினை ருேய் ஆதரித்தார். அதாவது ? ? சைவத் திருமணத்திலே சாதியும் வயதும் கவனிக் கப்படுவதில்லை. சிவபெருமான் அருளியிருப் பதற்கேற்ப ஒரே குலத்தவரைச் சேர்ந்த வரானல் தவிர்க்கப்பட வேண்டியவரை (சபிண்ட) விட்டு ஏனைய கணவனில்லாத எப்பெண்ணினையும் ஒருவன் திருமணம் செய்யலாம் ‘’ என்பதே.11 இக்கருத்தி னைப் பிரமசமாஜத்தினர் சமூகத்திலே பரவ லாக்க முயற்சித்தனர். இவ்வாறு கலப் புத் திருமணத்தினை இவர் ஆதரித்தமை குறிப்பிடற்பா லது.
பிரமசமாஜம் 1828-லே தொடங் கிற்று. ஆனல் இஃது ஒரு தனிப்பட்ட சமயமன்று; சீர்திருத்த இயக்கமாகவே இலங்கிற்று. இவ்வியக்கம் பொதுமக்க ளிடையிலே பரவவில்லை. ஆணுல் அக்கால வங்காளத்திலே வாழ்ந்த மத்திய வகுப்பு மக்களுக்குத் தேவையான சுயநம்பிக்கை யினைஇவ்வியக்கம் அளித்தது. "A பிரித் தானியர் ஆட்சியிலே ருேய்க்கு மிகுந்த நம் பிக்கையிருந்தது. 19-ம் நூற் ருண் டு த்

Page 272
262
தொடக்கத்திலே வெலெஸ்லி பிரபு FFL. டிய வெற்றிகளைக் கேள்விப்பட்ட வங்க மக்கள் மகிழ்ச்சியுற்றுக் கடவுளை வணங் கினர் எனக் கூறப்படுகிறது. 12 மேலைத் தேயப் பண்பாட்டின் சில அமிசங்களினலே கவரப்பட்டவராயினும, தாம் இந்திய நாட்டவர் என்பதை ருேய் மறந்திலர். தமது கருத்திற்பட்ட பகுத்தறிவு அடிப் படையிலான இந்துசமயத்தினையே அவர் விருப பிஞர். இவரின் பேச்சுத்திறனும் விவாதத்திறனும் குறிப்பிடற்பாலன. வங் காளி, அராபியம், ஆங்கிலம், சமஸ்கிரு தம ஆகிய நான்கு மொழிகளிலே தம்மை எதிர்த்தோாைக் கணடித்தார். 13 இவ ரின் சில நடவடிக்கைகளையும், கருத்துக் களையும் சிலவகைகளிoல நாவலர்பெரு மனின் நடவடிக்கைகள், கருத்துக்களு டன் ஒப்பிட்டு நோக்கலாம். கிறித்தவர் களுடன கொண்டிருந்த தொடர்புகள் கண்டனங்கள் தாய்மொழிககல்வி ஆங் கிலக்கலவி, சமயததினைத் தாம் கருதிய வகையிலே பேணுதல், அச்சுயந்திரம் நிறுவுதல் முதலியவற்றைச் சுட்டிக்காட்ட
G) A LO .
சுவாமி தயானந்தசரஸ்வதி (18241883) நாவலர் காலததவர்; குஜாரத் திலே பிறந்தவர்; நாவலரைப்போன்று நைஷ்டிகப் பிரமச்சாரி; இளம்பிராயத் திலேயே துறவறத்தை மேற்கொண்டவர். நாவலரைப் போலன்றி, ஆங்கில அறிவு இல்லாதவர். உடைமையினை அறியும் ஆவ லுடன் இளம் பிராயம் தொடடுப் பல ஆ0ை டுகள கப் பல இடங்களுக்கும் சென் (gsi. 1860-லே சுவாமி பிரஜா நந்த என்ற குருவினைச் சந்தித்து உபதேசம் பெறருர், மூனறு ஆண்டுகள் அவருடன் தங்கியிருந்து பின் பல இடங்களிலும் தமது கருததுக்களை எடுததுக் கூறவந்தார். இவர் சமயக்கிரியைகள் பலவற்றையும், உருவ வழிபாட்டினையும் புறக்கணித்தார்.
இவர் திறமையான பேச்சாளரும் எழுத்தாளருமாவர். விவாதங்களிலே பிர பல்யம் பெற்றவர். இவ்வகையில் இவர் ருேயுடனும் நாவலருடனும் ஒப்பிடற பலர். இவர் தமது சுறறுப்பிரயாணத்

வி. சிவசாமி
தின்போது பிரமசமாஜத்தினரைச் சந் தித்ததாகவும் அவர்களுடன் சேர்ந்து கூட்டாகச் செயலாற்றுவதிலே கருத்து வேறுபாடுகள் நிலவியமையாலே திரும்பி வந்தார் எனவும் கூறப்படுகிறது. 4 ஆணுல் மக்கள் மொழியிலே பிரசாரம் செய்ய வேண்டுமென்ற கருத்தினை அவர்களிட மிருந்து பெற்ருர் எனவும், அதன்விளை வாக வதந்தியினைப் பயன்படுத்தினர் என வும் அறியக்கிடக்கிறது. 1 இவருடைய பிரசாரங்கள் பிறசமயத்தவருக்கு எதிராக மட்டுமன்றி இந்துசமயத்தின் பல பிரிவின ருக்குமெதிராகவும் நடைபெற்றன காசி யிலே காசி மகாராஜா தலைமையிலே நடை பெற்ற மாபெரும் விவாதங்களிலே வைதிக சமய அறிஞர் பலரைத் தோற்கடித் தார். 16 இவ்விவாதங்கள் நாவலர் பெரு மான் யாழ்ப்பாணத்திலே நடத்திய விவா தங்களை நினைவூட்டுகின்றன.
தமது கருத்துக்களைப் பரப்புதற்கு ஆரிய சமாஜத்தினை (நற்பண்புடையோர் சங்கம்) உருவாக்கினர். சமகால இந்து சமயத்தின் சீர்கேடுகளை நீக்கி அதனைச் சமகாலத்திற்கேற்ற பெரிய சக்தியாகத் திகழச் செய்வதற்கு வேதங்களிலே கூறப் படும் தூய மார்க்கமே சிறந்ததெனக் கருதி ஞர். வேதங்களுக்கே திரும்பிப் போ' என்பது இவரின் உயரிய இலட்சியம். பிரமசம 1 ஜம்போன்று இவர் உருவ வழி பாட்டினையும், கிரியைகளையும் கண்டித் தார் பெண்கள் நலன் பேணுதலை வற் புறுத்தினர். பாலிய விவாகத்தைக் கண் டித்தார்; சாதி முறையினைச் சாடினர்; கல்வியின் அவசியத்தை இருபால ருக்கும் வற்புறுத்தினர். பல கல்விநிலையங்கள் தோன்ற வழிகோலினர். ஆனல் பசுவினைப் பேணுதலையும் வற்புறுத்தினர் " வேதங் கள் இ  ைற வ ன ல் அருளப்பட்டவை (சுருதி); தற்கால அறிவு யாவும் வேதங் களிலிருந்தே தோன்றியவை " என்ற கருத் தினை இவர் கொen டிருநதார். பிரமசமா ஜததிலே காணப்பட்ட சமரசத்தினையோ, ஒத்துமே வலையே ஆரிய சம ஜ த் தி லே காண புடியாது இவர் பிறசமய க கோட் பாடுகளை நிராகரித்தது மட்டுமன்றி. இந்து சமயத்திலே நிலவிய பல வகைப் பிரிவு கிள

Page 273
இந்திய மறுமலர்ச்சி இயக்கப் பின்னணியில் ந
யும் கருத்துக்களையும்கூட இவர் ஏற்றுக் கொண்டிலர். வேதமார்க்கமே இவரின் பெரும் இலட்சியம். அதுவே, அக்கால இந்துசமூகத்தினை மேனுட்டு அரசியல் பண் பாட்டுத தாக்கங்களிலிருந்து காப்பாறற வல்லது என்பதே அவரின் அசையாத நம்பிக்கை. சத்தியார்த் பிரகாஸ்" (உண்மை யின் வெளிச்சம்) எனும் நூல் அவரின் கருத்துக்களை வேதங்களினதும், ஸ்மிருதி களினதும் அடிப்படையிலே விளக்குகின் றது. சுத்தி (தூய்மைக்கிரியை) மூலம் தாமாகவோ அல்லது பலாத்காரமா கவோ பல நூற்ருண்டுகளாக இஸ்லாம், கிறித்தவத்தினைத் தழுவியவர்களின் சந் ததியினரும், சமகாலத்தவரும் இந்துசம யத்திலே மீண்டும் சேரவிரும்பினல், அவர் கஃாச் சேர்த்தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இம்முயற்சியில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றவர்; பஞ்சாப் பிலே இவருக்குப் பெரிய ஆதரவு நிலவிற்று. இவருடைய இம்முயற்சி நாவலருடைய சைவசமயப் பிரசாரத்தை நினைவூட்டுகின் றது. நாவலரும் கிறித்தவத்தைப் பரவ விடாது தடுத்தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதோடு நின்று விடா து கிறித்தவராக இருந்த பலரைத் திரும்ப வும் சைவத்திற்கு மீட்டவர். எடுத்துக் காட்டாக சி. வை. தாமோதரம்பிள்ளை, கரல் விஸ்வநாதபிள்ளை போன்ருேரைக் குறிப்பிடலாம். மேலும் தயானந்தசரஸ் வதியின் சத்தியார்த் பிரகாஸ் சிலவகையில் நாவலரின் பாலபாடங்களுடன் ஒப்பிடற் பாலது. -
மேலைத்தேயப் பண்பாட்டுத் தாக்கம் எதுவுய பெருமலே மேனுட்டவரின் ஆதிக் கததனை இவர் எதிர்த்தார். ? ? இந்திய கயபதுகாப்பு உணர்வின் வடிவமாகத் த சுழநதார்.’’8 ஆரியப் பண்பாடு, நாக tகய ஆகியவற்றின சிறப்பினையும் அர சியலில் மிக முன்னேற்றயன கருத்துக் களையும பெரிதும் விளக்குபவராக இவர் தகழந்தார்: "" வேற்றுநட்டவரின் ஆட்சி யினுல் எபபெயர்ப்பட்ட நன்மைகளேற் படடாலும் இந்தாட்டவரின் (இந்திய

நாவலர் 263
ரின்) ஆட்சியே இந்நாட்டிற்கு மிகச் சிறந்த தாகும் '19 என முழங்கிஞர்.
இவர் தமது கருத்துக்களை உயர்வர்க் கத்தினரிடையே மட்டுமன்றிப் பொதுமக் கள் மததியிலும் குறிப்பாகப் பரப்பிவந் தார். குஜாரத்திலும் பார்க்கப் பஞ்சாப் பிலேதான் இவரின் கருத்துக்கள் நன்கு பரவின. சாதிமுறையினை வன்மையாகக் கண்டித்தார். பல தாழ்ந்த மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டவர். இவர் ஒழுக்கத்தினை த் தா ன் வற்புறுத்தினர். ஆண் பெண் இருபாலாருகும் கட்டாயக் கல்வி அவசியமென்ருர் 20 ஆணுல் கலவன் பாடசாலைக் கல்வியினை விரும்பிலர்; பெண் கல்வியினை வற்புறுத்தினர். பெண்கள் வேதங்களைக் கற்கலாம் ; வேதமந்திரங் களை ஜெபிக்கலாம்; எவரும் வேதங்களைக் கற்கலாம 2 எனக் கூறியுள்ளார். மக் கள் போர்ப்பயிற்சி பெற்றிருக்கவேண்டும் எனவும் ஆயுதங்களை உற்பத்திசெய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். 22 இதனுலே பிரித்தானிய அரசாங்கம் இவ ரைச் சந்தேகத்துடன் நோக்கிற்று, தேசிய இயக்கம் தோன்றுமுன் பிரித்தானிய ஆட் சிக்கு எதிராக இவர் சதிசெய்தார் என வி. கிரியல் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.23
இஸ்லாம், கிறித்தவம் பரவியதன் விளைவாக, குறிப்பாக இஸ்லாம் பரவிய தற்கு எதிரான விளைவாகவே ஆரியசமா ஜம் தோன்றிற்று. இந்துசமயத்திற்குள்ளே நிலவிய பல சீர்கேடுகளை வன்மையாகக் களைவதுடன் புறச்சமயத்தவர்களின் தாக் குதல்களைச் சமாளிப்பதற்கான பாதுகாப்பு இயக்கமாகவும் இது விளங்கிற்று ' என ஜவஹர்லால் நேரு இதுபற்றிக் குறிப்பிட் டுள்ளமை கவனிததற்பாலது. 24
தயானந்தசரஸ்வதி சமூகம் பற்றிக் கொண்டிருநத சில கருத்துக்கள் நாவலர் கருத்துககளுடன் ஒப்பிடற்பாலன இரு வரும் வருணுஸ்ரம தர்மத்தினை ஏற்றவ ராயினும் தத்தம் நோக்கிற்கேற்ப விளக்க மளிததுள்ளனர். தயானந்தர் இதில் ஒழுக்கத்தினையேயன்றிப் பிறப்பினை வற்

Page 274
264
புறுத்திலர். சிலவகையில் இத்தகைய கருத்தினை நாவலரும் கொண்டிருந்தமை மனங்கொளற்பாலது. எடுத்துக்காட்டாக ச* பிராமணர் முதற் சூத்திரர் இறுதியாக வுள்ள நான்கு வருணத்தாரும் தீகூைடியி ஞலே துவிசத்துவம் (இரு பிறப்பாளர்க் குரிய நிலை) அடைந்தார்களாயின் ஆகமம் ஒதுதற்கு அதிகாரிகளாவர். நான்கு வரு னத்தவர்களும் தீகூைடிபெற்றவர்களாயின் ஆகமக் கிரியைகளை அனுஷ்டிக்கவேண்டும். தீகூைடியுடையவராயினும் ஒழுக்கமில்லா தவராயின் தீகூைடியில்லாதவரோடொப் பர். சூத்திரனுயினும் ஒழுக்கமுடையவ ஞயிற் பிராமணனெனப்படுவான். பிரா மனணுயினும் ஒழுக்கமில்லாதவனுயிற் சூத் திரன் எனப்படுவான். பிராமணருள்ளும் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் உண்டு. கூடித்திரியருள்ளும் பிராமண கூடித் திரிய, வைசிய, சூத்திரர் உண்டு. வைசிய ருள்ளும் பிராமண, க்ஷத்திரிய, வைசிய சூத்திரர் உண்டு. சூத்திரருள்ளும் பிரா மண, கூடித்திரிய, வைசிய, சூத்திரர் உண்டு. அவரவர் நடைகளினுலே அவரவ ரைப் பகுத்தறிந்துகொள்ளலாம் ' என நான்காம் பாலபாடத்திலே நாவலர் கூறி யிருப்பவை ஒப்பிடற்பா லன.25 மேலும் தயானந்தசரஸ்வதிபோல நாவலர்பெரு மானும் பஞ்சநிவாரணப்பணிகளிலீடுபட் டவர். இருவரும் கல்வியினை நன்கு வற் புறுத்தினர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் (18381886) நாவலர் காலத்திய வங்காளத் திலே வாழ்ந்த பெரிய இந்து ஞானி. இவர் முறையான கல்விபயின்றிலர். இவர் எளிமையான மனிதர்; கல்விமான் அல் லர்; ஆனல் ஆழ்ந்த சமயப்பற்றுள்ளவர். எ னினும் பரந்தநோக்குடையவர்.”* 26 இவர் இயற்கையாகவே சமய ஈடுபாடும் ஆழ்ந்த மறைஞானமும் கொண்டவர்; சாரதாதேவியினைத் திருமணம் செய்தவ ராயினும் அவரைத் தாம் வழிபடும் சக்தி யாகவே கண்டார். சில காலமாகக் (18501867) காளிகோவில் அர்ச்சகராக விளங் கினர்.

வி. சிவசாமி
இவர் உண்மையான ஞானத்தைத் தேடி உலகின் பிரதான சமய ஞானிகளை அணுகி அவரவர் சமய உண்மைகளை நேர டியாகவே உணர முயற்சித்தார். இந்து, இஸ்லாமிய, கிறித்தவ ஞானிகளை அணுகிச் சிலகாலம் அவர்களுடன் கழித்தார். அவர் களின் சமய அநுபவங்களை ஆய்ந்து உணர்ந்தார். இறுதியிலே, "எல்லா மதங் களும் ஒரே முடிவினைக் கொண்டவை; ஒரே சராம்சத்தினை (பரம்பொருளை)க் கொண் டவை' என்ற சமரச நோக்கினையுடையவ ரானுர்,
இவர் ஆங்கிலம் பயிலாதவர்; மேனுட் டுப் பண்பாட்டுத் தாக்கத்திற்குட்பட்டிலர்: ஆத்மீக வாதத்தையே வற்புறுத்தி வந் தார். இந்தியாவின் மிகப் பழைமையான ஆத்மீக மரபிலே வந்த ஞானியர் வரிசை யில் ஒருவராகவே இவர் திகழ்ந்தார். மத் திய கால வங்காளத்திலே விளங் கிய சைதன்யர் முதலிய ஞானிகளின் ஆத்மீக மரபையொட்டித் திகழ்ந்த இறைஞானி யாகவே இவர் இலங்கினர். 27 ருேப், தயானந்தர் போன்ருேர் இந்து சமயத்தின் குறிப்பிட்ட பிரிவுகளையோ, அமிசங்களை யோ தாம் சரியெனக் கருதியவாறு வற் புறுத்தினர். ஆனல் இந்து சமயத்தின் பல் வேறு பிரிவுகளேயும் அமிசங்களையும் ஏற்று, அவ்வவற்றிலுள்ள தாம் கண்ட நற்பண்பு களை இவர் மேம்படுத்தினர்.
இவரும் சமூக நலன் பேணியவர், ஒழுக்க ரீதியிலான கல்வியினை இவர் வற் புறுத்தினர். " " மக்களுக்கான பணியே தெய்வம்’ 28 என்ற கருத்தினைக் கொண்டி ருந்தார். இ வ ரின் சமரச நோக்கினை, இறைவனின் பெயர்கள் பல; அவனை அடைவதற்கான வழிகள் பல; ஒருவன் தான் விரும்பிய பெயரிலோ, வடிவிலோ அழைக்கும்போது அப்பெயரிலோ, வடிவி லோ இறைவனை அவன் காணுவான்' என வரும் பகுதியிலும் நன்கு அறியலாம். இக் கருத்தினை இவர் அன்ருட வாழ்க்கையிலே காணக்கூடிய உதாரணங்கள் மூலம் விளக் கியுள்ளார்.29 இந்துமதப் புத்துயிர்ப்பிற்கு ஒழுக்க ரீதியிலான அங்கீகாரம் தத்துவ

Page 275
இந்திய மறுமலர்ச்சி இயக்கப் பின்னணியில் ந
அடிப்படை, மிக உயர்ந்த இலட்சியம், ஆத்மீக முக்கியத்துவம் ஆகியனவற்றை அளித்தார்.
19-ம் நூற்றண்டின் பிற்பகுதியிலே கேணல் ஒல்கொற் என்பவரும், பிளவற் ஸ்கி அம்மையாரும் பிரமஞான சங்கத் தினை நிறுவினர். இச்சங்கம் வேறுபட்ட சமயங்களுக்கிடையிலுள்ள அடிப்படையி லான ஒற்றுமையினை வலியுறுத்தியது. சம ரச நோக்கினை நன்கு வரவேற்றது. இதன் ஸ்தாபகர்கள் மேலைத்தேயத்தவராயினும், இந்திய சமய பண்பாட்டு மரபுகளிலே மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தனர்.
இந்தியாவிலே சமகாலத்திலே தோன் றிய சமய சமூக சீர்திருத்த இயக்கங்களைப் போலவே இது வும் சமூக நல னை ப் பேணிற்று. சமயப் பற்றினையும், கல்வியினை யும் வற்புறுத்திற்று. இதன் தாக்கம் இந்தி யாவிலே இந்து சமயத்திலும், இலங்கை யிலே பெளத்தத்திலும் நன்கு ஏற்பட்டது. வேற்று நாட்டவர் நிறுவிய இச்சங்கம் இன் றும் தொடர்ந்து இந்தியப் பண்பாட்டினை வலியுறுத்தி வருவதும் குறிப்பிடற்பாலது. இச்சங்கத்தைச் சேர்ந்த அன்னிபெசென்ற் அம்மையாரின் இந்திய தேசீயத் தொண்டு கள் குறிப்பிடற்பாலன.
சமகாலத் தென்னிந்தியாவிலே மேற் குறிப்பிட்ட முக்கியமான இயக்கங்கள் போன்றவை நிலவாவிடினும் இரண்டு குறிப்பிடற்பாலன. இவற்றுள்ளே மேற் குறிப்பிட்ட பிரமஞான சங்கம் ஒன்று; மற்றது நாவலரின் சம காலத்தவரான இராமலிங்க சுவாமிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் இவருக்கும் நாவலருக்கு மிடையிலே நடைபெற்ற அருட்பா - மருட்பா விவாதங்களை விட்டு நோக்கும் போது, இவரின் சமய சமூகக் கருத்துக் கள் சில சமகால வடஇந்திய சீர்திருத்தங் களிலே காணப்பட்டவற்றுடன் ப்பிடற்ஓ பாலன. இவர் ருேய் இராமகிருஷ்ணர் போன்று சமரசத்தினை வலியுறுத்தினர். ருடைய சமரச சுத்த சன்மார்க்கம் மக்களிடையிலே சமூக நலன் ஒருமைப் பாடு ஒழுக்கம், கல்வி முதலியனவற்றை வலியுறுத்திற்று சாதி முறையினை வன்
32

ாவலர் 265
மையாகக் கண்டித்தது. 80 இவர் மக்க ளுக்கு மருத்துவ உதவியும் செய்து வந் தார். இவருடைய சமரச சுத்த சன்மார்க் கம் 31 ஒரு வகையில் இந்தியாவிலே குறிப் பாகத் தமிழகத்திலே தொன்றுதொட்டு நிலவிய சமய சமரச நிலையின் தொடர்ச்சி யாகவும் காணப்படுகிறது. இதனை இவ ருக்கு முற்பட்ட காலத்தவராகிய தாயுமா னவர் வலியுறுத்திய வேதாந்த சித் தாந்த சமரச நன்னிலை ’யுடனும் ஒப்பி டலாம். மேலும் இவருக்குச் சற்றுப் பின், மேலைத்தேயச் சமய சமரசவாதி கள் உருவாக்கிய பிரமஞான சங்கம், சமய சமரசம், ஆன்மநேய ஒருமைப்பாடு பற்றிய கருத்துக்களை இந்தியாவிலே பரப்பும் என்பது பற்றி மு ன் கூட் டியே இவர் கூறியுள்ளார் என்ற கருத்துப் பிரமஞான சங்கத்தினர் மத்தியிலே நில விற்று. 32 இவரின் சமரச சுத்த சன்மார்க் கத்திற்கும் பிரமஞான சங்கத்திற்குமிடை யிலே குறிப்பிடத்தக்க ஒற்றுமையமிசங் கள் உள்ளன. பிரமஞான சங்க ஸ்தாபகர் களில் ஒருவரான பிளவற்ஸ்கி அம்மையார் அடிகளாரின் பெருமை பற்றிக் குறிப்பிட் டுள்ளார். வள்ளலார் 1867லே சமகாலப் பிரம சமாஜத்தினருடன் உருவ வழிபாடு பற்றி விவாதம் செய்து வெற்றி பெற் ლუგf. 3 3
மேற்குறிப்பிட்ட இந்திய மறுமலர்ச்சி இயக்கங்கள் வலியுறுத்திய கருத்துக்களை நாவலர் கருத்துக்களுடன் ஒப்பிடுகையிலே வேற்றுமை, ஒற்றுமையம்சங்கள் இவற்றி டையிலே காணப்படுதலை அவதானிக்க லாம். இவ் இயக்கத் தலைவர்கள் அனைவ ரும் இந்து சமயத்தின் பழைமையிலும், சிறப்பிலும் ஈடுபாடு கொண்டவர்கள். தம் தம் மதிநுட்பத்திற்கேற்றவாறு இந்து சம யத்தினைச் சமகாலச் சூழ்நிலையிலே பெரு மதிப்புள்ள கெளரவமுள்ள நிலை க்கு க் கொண்டுவர முயற்சித்தனர். இவர்கள் யாவரும் மதமாற்றத்தினைப் பொதுவாக விரும்பிலர். தத்தம் நோக்கங்களிற்குக் கிறித்தவர் கையாண்ட சில வழிமுறைகளை புமிவர்கள் பின்பற்றினர்: கிறித்தவம்பர வாது தடுத்தலும், சீர்கேடுகளைக் களைதலு

Page 276
266
மிவர்களின் சில பிரதான நோக்கங்களா
கும்.
அனைவரும் ஏதோ வகையில் சமூக
நலன், கல்வி, பெண்கள் நலன் பேணுதல் முதலியவற்றை வற்புறுத்தினர். சமூக சமத்துவத்தினை ருேய் தயானந்த சரஸ் வதி, இராமலிங்கர் போன்றேர் நன்கு
: :
22. 23。 24.
25.
26. 27. 28.
29. 30
31.
32.
அடிக்குறிப்புகள்
Spear Percival, INDIA Wol: llarea Britain, Pannikkar K. M., THE DETERMINING PERIODSO Joshi V. C. (Ed.) RAMMOHUN ROY AND THE
1975, page 78. Joshi V.C. (Ed.) lbid page 24. Joshi V. C. (Ed) libid, page 26. Bhattacharyya H. (Ed.) THE CULTURAL HERIE Bhattacharyya H. bid. Joshi V. C. (Ed) op cit page 68 Joshi V, C, (Ed) op cit. page 37. Joshi, V. C. (Ed) op cit, pages 13, 15-16off: Majumdar B., HiSTORY OF INDIAN SDCIAL AMD DAYANANDA, Culcutta, 1957, paeg 20. a. Pannikkar K, M., A SURVEY OF INDIAN HISTO Joshi V. C. (Ed) op cit, page 145 Joshi V.C. (Ed) op cit 'age 95. Maiumdar R.C. (Ed) BRITISH PARAMOUNTOY 1965, Fage 109, Majumdar R C. (Ed) Ibid. Majumdar R. C. (Ed) Ibid page 108. Majumdar R, C (Ed) Ibid., page 111. Majumdar B, op. cit page 246. Majumdar B. Ibid. page 262. Majumdar R. C. (Ed) op cit. page 120. a. Swami Dayananda Saraswati, LIGHT OFT by Dr. Chirajiva Bharadwaja, Allababad 1 b, " Majumdar B. op, cib. page 263. c, Majumdar R. C. op. cit page 110. Majumdar B. op. cië page 263. Majumdar R. G., op, citi. page 265,
awaharlal Nehru, THE DESCOVERY OF IND) ஆறுமுகநாவலர் நாலாம் பாலபாடம் செ Jawaharlal Nehru. op. cit, page 338 Jawaharlal Nehru, lbid Nilakantha Sastri K. A., THE DEVELOPEMIEN page 187 Majumdar R. C sJEd). op. cit, page 123 a. இராமலிங்க சுவாமிகள், திருவருட்ப
திருமுறை பார்கக. b. Annamalai S. P. THE LIFE AND TEACE
pages 39 ff இச்சங்கம் தெ ாடக்கத்திலே சமரச வே சமரச சுத்த சன்மார்க்க சத்தியசங்கம் 6 ஊரன் அடிகள், இராமலிங்க அடிகளார் 278 - 284
335 ஊரன் அடிகள், மேற்படி பின் இணை

வி. விவசாமி
வலியுறுத்தினர். பொதுப்பட நோக்கும் போது, ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்புக்களும், பொது அம்சங்களும் இருப் பினும் நாவலர் பெருமான் தயானந்த சரஸ்வதியுடனேதான் பெருமளவு ஒத்துக் காணப்படுகிருர் எனலாம்.
1965, page 158. f INDIAN HISTORY, Bombay, 1962, page 4. PROCESS OF MODERNIZATION IN INDIA, New Delhi
0F İNDIA, Yol: 4, Calcutta 1975, page 613.
POLITICAL IDEAS FROM RAMMOHUN ROY TO
RY Bombay, 1962, page 215.
: AND INDIAN RENAISSANCE, Part II Bombay
'RUTE OR SATYARTH PRAKASH, Tr. into English 9:15, vide Ch. III
A. Great Britain, 1956, page 337. *ன்னை பக். 81 - 82.
T OFRELIGION IN SOUTH INDIA, Madras 1963
பத்திருமுறை, சென்னை, 1928, ஆழும்
INGS OF SAINT RAMALING AR, Bombay, 1973.
த சன்மார்க்க சங்கம் எனவும், பின்னர் எனவும் அழைக்கப்படது.
வரலாறு திருச்சிராப்பள்ளி, 1971 பக்.
ப்புகள் ப. 12-24 குறிப்பாக ப. 16-18.

Page 277
நாவலரின் இலக்க தாக்கமும் விளைவு
கலையரசி சின்னேயா
ாவலர் சைவ சமயத்தை வளர்த்த லையே தமது இலட்சியமாகவும் முக்கிய பணியாகவும் கருதியவர். அதே சமயத்தில் சைவத்தின் வளர்ச்சிக்குத் தமிழ்க்கல்வி வளர்ச்சியும் இன்றியமையாதது என்பதனை யும் உணர்ந்தவர். கல்வி கேள்வி இல் லாதவர்கள் கடவுளை அறிந்து வழிபட்டு உய்யமாட்டார்கள்’’ என்பது நாவலர் கருத்து. அதனுல் நாவலர் சைவசமயத்தை யும், அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய தமிழ்க் கல்வியையும் ஒருங்கே வளர்த்தலை விரும்பி, சமயப் பணியுடன் தமிழ்ப் பணி யையும் செய்தார். தாம் நிறுவிய பாடசா லைகளின் பாட விதானங்களில் சைவத்தை யும் , தமிழையும் இணைத்தே காட்டியுள் ளார். நாவலர் எழுதிய விக்கியாபனம் ஒன்றிற் கூறப்படும் கருத்துக்கள் இவ்விடத் தில் நோக்கத்தக்கன.
நமது தமிழ்நாடெங்கும் பாடசா லைகளைத் தாபித்து பிள்ளைகளுக்குச் சமய நூல்களையும், அவைகளுக்கு வேண்டுங் கருவி நூல்களையும், முனி வரும் மன்னரும் முன்னுவ பொன்னன் முடியும்’ என்றும் வறியார் இருமை யறியார்' என்றும் திருக்கோவையா ரில் அருளிச் செய்தபடி இம்மை மறு மைப் பயன்களுக்குத் துணைக்காரண மாய் உள்ள பொருளை ஈட்டுதற்கு வேண்டும் லெளகிக நூல்களையும், கற் பித்தலும், திருக்கோயில்கள் தோறும் சனங்களுக்குச் சமய நெறி யைப்

ண முயற்சிகள்
போதிப்பித்தலும் மிக மேலாகிய புண் னியங்களாம்.
ஆறுமுகநாவலர் சரித்திரம் த. கைலாசபிள்ளை எழுதியது மூன்ரும் பதிப்பு இவ்விக்கியாபனத்தில் சைவ நூல்களுடன் கருவிநூல்கள், லெளகிக நூல்கள் என்ப னவற்றையும் பாடசாலைகளிற் கற்பிக்க வேண்டும் என நாவலர் கூறுவது சமயப் பணியுடன் தமிழ்ப் பணியிலும் அவர் ஈடு பாடு கொண்டமையைக் காட்டுகின்றது.
நாவலர் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ்க்கல்வி இருந்த நிலையும் நாவலரைத் தமிழ்ப்பணி புரிய வைத்தது என்றே சொல்ல வேண்டும். தமது காலத்தில் தமிழ்க்கல்வி இருந்த நிலையினை நாவலரே
உணர்த்தியுள்ளார்.
பாதிரிமாருடைய தமிழ்ப் பள்ளிக் கூடங்களிலே படிப்பிக்கிற உபாத்தி யாயர்கள் தமிழை நன்ருகக் கற்றுக் கொண்டவர்களல்லர்; அவர் களிற் பெரும்பான்மையோர் சம்பள நிமித் தம் கிறிஸ்து சமயத்திற் புகுந்தவர் கள்; கிறிஸ்து சமயத்திற் புகுந்தமை யின் பொருட்டே அவர்கள் உபாத்தி யாயருத்தியோகம் பெற்ற வர்கள். அங்கே படிப்பிக்கப்படும் புத்தகங்க ளிற் பெரும்பாலன சுத்தத் தமிழ்நடை யின்றி இலக்கணப் பிழைகளினல் நிறைந்தவைகளும் சைவ தூஷணங் களினற் பொதிந்தவைகளுமாய் உள்

Page 278
268
ளவைகள். அங்கே படித்தவர்கள் திருத்தமாகிய கல்வியில்லாதவர்களும் ஒரு சமயத்தினும் பற்றில்லாத நிரீச் சுர வாதிகளுமாகின்ருர்கள். அவர்கள் பேசுந் தமிழோ அன்னிய பாஷை நடையோடு கலந்த அசுத்தத்தமிழ்.
(ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு) சைவ சமயிகளே. உங்கள் சமய குருமாருள்ளே சிலரொழிய மற்றவர் கள் அந்தியேட்டிப் பட்டோலைதானும் இன்னுஞ் சொல்லின் அந்தியேட்டி யென்னும் பெயர்தானும் பிழையற எழுத அறியார்களே !
(ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு) என நாவலர் கூறுவனவற்ருல் நாவலர் காலத்தில் கிறிஸ்தவப் பள்ளிக்கூடங்களில் தமிழ்க்கல்வி நன்முறையில் பயிற்றுவிக்கப் படவில்லையென்பதும், சைவ சமயத்தை வளர்க்கும் சைவ குருமார்களுள் பெரும்பா லானேர் தமிழைப் பிழையற எழுதத் தெரியாதவர்களாக இருந்தனர் என்பதும் புலனுகின்றது.
நாவலர் செய்த தமிழ்ப்பணியின் ஒரு பகுதியாகவே அவரின் இலக்கண முயற்சி கள் அமைகின்றன. பாதிரிமாரின் பள்ளிக் கூடங்களில் படிப்பிக்கப்படும் புத்தகங்கள் சுத்தத் தமிழ் நடையின்றி இலக்கணப் பிழைகள் நிறைந்தனவாய் இருப்பதையும், அப்பள்ளிக் கூடங்களில் படிப்போர் அந்நிய பாஷை நடையோடு கலந்த அசுத்தத் தமி ழைப் பேசுவதையும் அவதானித்த நாவ லர் மாணவர்களுக்கு இலக்கண அறிவினை ஊட்டுவதற்காக இலக்கண நூல்களைப் பதிப்பித்தும், உரைகளையும், வசன இலக் கண நூல்களையும் எழுதியும் தமிழ் இலக் கனக் கல்விக்கு உதவியுள்ளார். எனவே நாவலரது இலக்கண முயற்சிகளை இலக் கண நூல்களைப் பதிப்பித்தமை, இலக்கண நூல்களுக்கு உரைகள் எழுதியமை, புதிய வசன இலக்கண நூல்களை ஆக்கியமை என மூன்று பிரிவில் நோக்கலாம்.
இலக்கண நூல்களைப் பதிப்பித்தமை
நாவலர் நன்னூல் மூலமும் சங்கர நமச் சிவாயப் புலவரால் செய்யப்பட்டு சிவஞான

assuvuyà Sisišr2ruar.
சுவாமிகளால் திருத்தப்பட்ட விருத்தியுரை யும் என வழங்கும் நன்னூல் விருத்தியு ரையை 1851-ஆம் ஆண்டிலும். திருவா வடுதுறைச் சிவஞான முனிவர் அருளிச் செய்த இலக்கண விளக்கச் சூருவளி, தொல் காப்பியச் சூத்திர விருத்தி திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து பூஞரீ சுவாமிநாத தேசிகர் அருளிச் செய்த இலக்கணக்கொத்து மூலமுமுரையும் என்பன வற்றை 1866-ஆம் ஆண்டிலும் பரிசோதித் துப் பதிப்பித்துள்ளார். இவற்றுடன் சி. வை. தாமோதரம்பிள்ளையால் 1868ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட தொல்காப் பியம் சொல்லதிகாரம் சேணுவரையம், சதா சிவப்பிள்ளையால் 1882-இல் பதிப்பிக்கப் கப்பட்ட பிரயோக விவேகம் மூலமுமுரையும் என்னும் நூல்களைப் பரிசோதித்தவரும் நாவலரே.
நாவலரால் பரிசோதிக்கப்பட்டுப் பதிப் பிக்கப்பட்ட இந்த ஆறு நூல்களும் நாவல ருக்கு முன்பு எவராலும் பரிசோதித்துப் பதிப்பிக்கப்படவில்லை. எனவே இவற்றை முதலிற் பரிசோதித்து வெளி யிட் ட பெருமை நாவலருக்கேயுரியது. இவற்றுள் நன்னூல் விருத்தியுசை பிரயோக விவேகம் மூலமுமுரையும் என்னும் இரண்டினையும் தவிர ஏனைய நான்கினையும் நாவலர் பிற ரின் வேண்டுகோளுக்கிணங்கவே பரிசோ தித்துக் கொடுத்துள்ளார் என்பது கவனித் தற்குரியது. இலக்கண விளக்கச் சூறவளி, தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி, இலக் கணக் கொத்து ஆகிய மூன்றினையும் திருவா வடுதுறை சுப்பிரமணியதேசிக சுவாமிகள் வேண்டுகோளுக்கிணங்கியும் தொல்காப்பி யம் சேஞவரையத்தை சி. வை. தாமோத ரம்பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்கியும் நாவலர் பரிசோதித்துக் கொடுத்துள்ளார்.
ஏட்டில் எழுதப்பட்டிருந்த பழந்தமிழ் இலக்கண நூல்களை அச்சிற் பதிப்பிக்கும் முயற்சியில் நாவலருக்கு முன்னர் தமிழ் நாட்டு அறிஞர்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர். வில்லிவாக்கம் தாண்டவராய முதலியார் நன்னூல் மூலம் நம்பியகப் பொருள்மூலம் புறப்பொருள் வெண்பாமாலை மூலம் என் பனவற்றை இலக்கண பஞ்சகம் என்ற தலைப்

Page 279
நாவலரது இலக்கண முயற்சிகள் - தாக்கமும்
பில் 1835ஆம் ஆண்டில் பதிப்பித்துள்ளார். இராமாநுச கவிராயர் 1847இல் நன்னூ லுக்கு தாம் ஒரு உரையினை எழுதிப் பதிப் பித்துள்ளார். மழவை மகாலிங்க ஐயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சிஞர்க் கினியத்தை 1847இல் பதிப்பித்துள்ளார். இவர் களுள் மழவை மகாலிங்க ஐயர் தவிர்ந்த ஏனையவர்கள் பழந்தமிழ் இலக் கண நூல்களைப் பேண வேண்டும் என்ற நோக்குடன் பதிப்புத் துறையில் இறங்கிய வர்களும் அல்லர். ஆங்கிலேயர் தமிழைக் கற்பதற்கு உதவிசெய்யும் நோக்கிலேயே அவர்கள் இலக்கண நூல்களைப் பதிப்பித் தனர். எவ்வாருயினும் இலக்கண நூல் களைப் பதிப்பிக்கும் முயற்சியில் நாவல ருக்கு முன்னர் சிலர் ஈடுபட்ட போதும் அவர்களது முயற் சி பரந்த அளவில் அமையவில்லை என்றே கூறலாம். எனவே அதிக இலக்கண நூல்களை முதலிற் பரிசோ தித்துப் பதிப்பித்தவரும் நாவலரே. நாவ லர் பல இலக்கண நூல்களைப் பதிப்பிக்க விரும்பியமையை 1862-இல் வெளிவந்த திருக்கோவையார் பதிப்பில் சேர்க்கப்பட் டுள்ள இனி அச்சிற்பதிப்பிக்கப்படும் புத்த கங்கள் என்ற பிரகடனப் பத்திரிகையின் மூலம் அறியலாம். அதில் இறையணுரகப் பொருள் உரை, தொல்காப்பியம் இளம் பூர னருரை, தொல்காப்பியம் நச்சிஞர்க்கினிய ருரை, அகப்பொருள் விளக்கவுரை புறப் பொருளுரை, யாப்பருங்கலவுரை, நவநீதபாட் டியலுரை, சிதம்பரப்பாட்டியல், பிரபந்ததீபம், வீரசோழியவுரை, நேமிநாதவுரை என்னும் இலக்கண நூல்களும் குறிப்பிடப்பட்டுள் ளன. இவ்விதம் ஏட்டில் இருந்த நூல்களை அச்சிற் பதிப்பிற்கும் முயற்சியில் நாவலர் ஈடுபட்டமைக்கு தமிழ்க்கல்வி வளர்ச்சியில் அவருக்கு இருத்த ஆர்வமும், பழந்தமிழ் நூல்களை யாவருக்கும் எளிதில் பயன்படு மாறு செய்யவேண்டும் என்ற விருப்புமே காரணமாயமைந்தன என்பது 1860இல் வெளிவந்த திருகோவையார் பதிப்பில் அது பந்தமாகச் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்ப் புத்தகங்கள்" என்ற பகுதியில் நாவலர் கூறுவனவற்ருல் தெரிகின்றது.
வில்லிவாக்கம் தாண்டவராய முதலி யார் ஆங்கிலேயரால் தமிழ்நாட்டில் நிறு

முயற்சிகளும் 259
வப்பட்ட சென்னைக் கல்விச் சங்கத்தின் (The College of Fort St. George gaold As தமிழ்ப் புலவராக இருந்தவர். சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவராக இருந்த ரிச் சாட் கிளார்க் துரையின் விருப்பத்திற்கி ணங்க நூல்கள் எழுதியவர். இராமாதுச கவிராயர் ஐரோப்பியர் சிலருக்குக் கல்வி பயிற்றியவர். ஐரோப்பிய மாணவர்களின் வேண்டு கோளுக்கிணங்கி நன்னூலுக்கு உரையெழுதியவர். மழவை மகாலிங்க ஐயர் நாவலரால் திருத்தப்பட்ட பைபிள் மொழிபெயர்ப்பை பார்வையிட மிஷனரி மாரால் தெரிவு செய்யப்பட்டவர். இத்த கைய காரணங்களினுல் இவர்களை ஒரளவு அரசாங்க அணை வினை ப் பெற்றவர்கள் என்றே கருதவேண்டும்.
அங்கிலேய அரசு தமிழ் நாட்டில் உண்டாகி பிரபல்லியமாகும் போது அங்கிலேயரால் நன்கு மதிக்கப்பட்டு வந்த தமிழ்ப் பண்டிதர்கள் இராமா நுஜ கவிராயர், விசாகப் பெருமாளை யர், தாண்டவராய முதலியார், அ. சபாபதிமுதலியார், அ. வீராசாமி செட்டியார், வேலாயுத முதலியார், சரவணப் பெருமாளையர்.
அங்கிலேயரையடுத்துறவாடாதி ருந்த தமிழ்ச் சிங்கங்கள் நல்லூர் ஆறு முகநாவலர், மாயவரம் மீனுட்சி சுந் தரம்பிள்ளை, வடலூர் இராமலிங்கப் பரதேசியார், திரிசிரபுரம் முத்து வீரக் » 35 GT fru uriř.
(தாவீது யோசெப்பு, இலக்கணத் தெளிவு-1893) என்ற கூற்றும் மேற்கூறிய கருத்தினை உறுதி செய்ய உதவுகின்றது.
நாவலருடைய பதிப்புக்கள் இலக்க ணப் பதிப்புக்களும், இலக்கியப் பதிப்புக் களும் சிறந்த பதிப்புக்கள் என்று நாவலர் காலத்திலே போற்றப்பட்டன. அதனுலே தான் பொன்னுச்சாமித் தேவர், சுப்பிர மணிய தேசிகர், சி. வை. தாமோதரம் பிள்ளை ஆகியோர் நாவலரைக் கொண்டு நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தனர்.
"இவருடைய கல்வித் திறமையை யும் புத்தகங்கள் அச்சிடும் திறமை

Page 280
270
யையும் அறிந்த இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவர் இவரைக் கொண்டு திருக்குறள் பரிமேலழக ருரை, திருச்சிற்றம்பலக் கோவை யுரை, தருக்க சங்கிரக உரை, சேது புராணம் என்னும் நூல்களைப் பரிசோ திப்பித்து அச்சிடுவித்தனர். சி. வை. தாமோதரம்பிள்ளை தொல்காப்பியம் சேஞவரையத்தை இவரைக்கொண்டு பரிசோதிப்பித்து அச்சிட்டார்’
(ஆறுமுகநாவலர் சரித்திரம்)
இவர் அச்சிடும் புத்தகங்களில் பிழைகள் இல்லாமையையும், அவை கள் வாசிப்பவர்களுக்கு இலகுவாயி ருத்தலையும் கண்ட திருவ வடுதுறை யாதீனத்து பூரீலபூரீ சுப்பிரமணியதேசி கரவர்கள் இவரை க் கூடவிருத்திப் டோசனம் பண்ணும் அக்காலங்களில் புகழ்ந்து புகழ்ந்து பாராட்டுவார்’’
(ஆறுமுகநாவலர் சரித்திரம்)
எனக் கைலாசபிள்ளை கூறியவை நாவல ரின் பதிப்புக்கள், நாவலர் காலத்திலேயே தாக்கத்தினை ஏற்படுத்தியமையைக் காட்டு கின்றன. ஆறுமுக நாவலரைக் கொண்டு தொல்காப்பியம் சேணுவரையத்தைப் பரிசோ தித்துப் பதிப்பித்த சி. வை. தாமோதரம் பிள்ளை, பின்னர் தொல்காப்பியம் பொருள திகாரம் நச்சினுர்க்கினியத்தைப் பதிப்பிக்கும் பொழுது நாவலரின் உதவியினைப் பெற முடியாத நிலையில் நாவலர் பெருமானின் பெருமையினை வியந்துள்ளமையினைத் தொல்காப்பியம் பொருளதிகாரப் பதிப்பு ரையில் காணலாம்.
விடியலவெங்கதிர்கா யுமவெய மலகலறை’’ என்னும் வாக்கியத்தை யும், ஒரு பரிபாடற் செய்யுளையும் சரி யாகப் பிரித்துணர்தற்கு எத்தனை புல வரிடம் கொண்டு திரிந்தேன்? எத்தனை வித்துவான்கட்குக் கடிதமெழுதிக் கை சலித்தேன்? எனக்கு வந்த மறுமொழி த8ள வெளியிட்டுச் சொன்னல் வெட் கக் கேடென்றறிக. அவை பூரீலபூரீ ஆறுமுகநாவலர் பெருமான் மகத்து வத்தை நன்கு விளக்கின.

கலையரசி சின்னர்யா
என்று பொருளதிகாரப் பதிப்புரையில் சி. வை. தாமோதரம்பிள்ளை கூறியுள்ளார்.
நாவலருடைய பதிப்பு நூல்கள் நல்ல பதிபுப்கள்" என்ற பெயரினைச் சிறப்பினைப் பெறுவதற்குக் காரணமாயமைந்த சில விடயங்களை அறிஞர்கள் விதந்து கூறியுள் ளனர்.
இலக்கண இலக்கியப் பிழைகளும் அச்சுப் பி  ைழ களும் இல்லாமல் உயர்ந்த தமிழிலக்கண இலக்கிய நூல் களையுஞ் சைவசமய நூல்களையும் பதிப் பித்துதவுவார் அரியரான எமது இள மைக் காலத்தில் ஆறுமுகநாவலரவர் களே அந்நூல்களைப் பிழையறப் பதிப் பித்து உதவினவர்கள்.
(மறைமல்யடிகள், நாவலர் நினைவு மலர்)
தமிழ் வசன நடையிற் குறியீடுக ளாட்சியும், சந்திபிரிதலும் இவர்க ளாற்ருன் முதன்முதல் கையாளப்பெற் றன. பழைய தமிழ் வசன நூல்களை (அக்காலத்தில் அச்சிடப்பட்ட கதா மஞ்சரி, பஞ்சதந்திரம்)ப் படிக்க இய லாது. சந்தி பிரிக்காமல் அச்சிடப்பட் டிருப்பதால், நாவலர் அச்சிட்ட நூல் களைப் பார்த்த பின்னரே பலரும் சந்தி பிரித்துத் தமது நூல்களை அச்சிடலா யினர்.
(செ. வே. ஜம்புலிங்கம்பிள்கள இந்துசாதனம் பொன் விழா மலர்)
இக் கருத்துக்களை நோக்குகையில் அச்சுப் பயிற்சி குறைந்த காலத்தில் நூல்களைப் பிழையறப் பதிப்பித்தமையும், பதிப்பித்த நூல்களை வாசிப்பவர்களுக்கு இலகுவான முறையில் சந்தி பிரித்தும், குறியீடுகளை எடுத்தாண்டும் பதிப்பித்தமையுமே நாவ லர் பதிப்புக்களுக்குச் சிறப்பினை நல்கின என்பது தெளிவாகின்றது.
நாவலர் பதிப்புக்களுக்குப் பொதுவா கக் கூறப்படும் பண்புகள் அவரது இலக் கணப் பதிப்புக்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. நாவலரால் பரிசோதித்துப் பதிப் பிக்கப்பட்ட இலக்கண நூல்களில் பதிப்பு

Page 281
நாவலரது இலக்கண முயற்சிகள் - தாக்கமும்
ரையோ அன்றி முகவுரையோ இடம்பெற வில்லை. அதனுல் பதிப்புநெறி பற்றிய நாவ லரது கருத்துக்களையோ, அல்லது பதிப்பு முறையில் அவர் கடைப்பிடித்த வரைய றைகளையோ நாவலர் கூற்ருக நாம் பெற முடியாதுள்ளது. எனினும் நாவலரது இலக் கண நூற்பதிப்புக்களைக் கொண்டு அவற் றின் பண்புகளை அறிந்து கொள்ளலாம். நாவலர் முதன்முதலில் பதிப்பித்த இலக் கண நூலான நன்னூல் விருத்தியுரையினை நோக்குமிடத்து அதில் குறியீடுகளின் ஆட் சியும், சந்தி பிரித்தெழுதும் தன்மையும், சூத்திரத்தின் பொருள் விளக்கவுரை என் பனவற்றைத் தெளிவாகப் புலப்படும்படி பந்தி பிரித்துக காட்டும் பண்பும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. நவ லர் நன்னூல் விருத்தியுரை இரண்டாம் பதிப்பு முயற்சி யில் ஈடுபடுவதற்கு இக் குறைபாடுகளே காரணமாக இருந்திருக்க லாம். 1851இல் அச்சிடப்பட்ட நன்னூல் விருத்தியுரையையும் 1866இல் அச்சிடப் பட்ட இலக்கணக் கொத்து, இலக்கண விளக் கச் சூருவளி, தொல் காப்பியச் சூத்திர விருத்தி என்பனவற்றையும் ஒப் பி ட் டு நோக்குமிடத்து இக்கருத்துத் தெளிவடை யும். நன்னூல் விருத்தியுரைப் பிற்காலப் பதிப்புக்கள் முதற்பதிப்பிலிருந்து வேறு பட்டமைந்துள்ளமையினல் ந ன் னுர ல் விருத்தியுரை முதற் பதிப்பினை நோக்குமி டத்தே இவ்வேறுபாட்டினைத் தெளிவாக அறிய முடியும். எனவே நாவலரின் இலக் கணப் பதிப்புக்களில் நன்னூல் விருத்தியு ரைப் பதிப்பிலும்விட ஏனைய இலக்கணப் பதிப்புக்கள் கூடியளவு சிறந்த பதிப்புக்க ளாக உள்ளன எனக் கூறலாம். குறியீடு களைத் தேவையான இடங்களில் கையாண் டும், சந்திபிரித்தும், பந்திகள் பிரித்தும் படிப்போருக்கு இலகுவான முறையில் அவை அமைந்துள்ளன. நாவலர் பதிப் பித்த இலக்கண நூல்களில் பாட பேதங் கள் இடம்பெருமையும் முக்கிய பண்பா கும். நாவலர் பதிப்பித்த பரிசோதித்த இலக்கண நூல்களிற் காணப்படும் இப்பண் புகள் நாவலர் பதிப்புக்களுக்கு முன்னர் வெளிவந்த இலக்கணப் பதிப்புக்களில் குறைவாகக் காணப்படுவதும் ஒப்பிட்டு நோக்குமிடத்துத் தெளிவாகும். நாவலரது

ளவுகளும் 271
இலக்கண நூற்பதிப்புக்கள் அவரது ஏனைய முயற்சிகளைப் போன்று அவர் காலச் சமூ கத் தேவைக்கேற்பவே அமைந்தன. அத ஞலேதான் நாவலர் தொல்காப்பியப் பதிப்பில் தொடங்காமல் நன்னூல் விருத் திப் பதிப்பில் தொடங்கினர் எனலாம்.
இலக்கண நூல்களுக்கு உரைகள் எழுதியமை:
இப்பகுதியில் அடங்குவதாக ஆறுமுக நாவலரின் நன்னூற் காண்டிகையுரை (1880) விளங்குகின்றது. அது " "நன்னூற்காண்டிகை யுரை யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகநாவ லரவர்கள் திருத்தியும் விளக்கியும் கூட்டியும் புதுக்கியது' என்ற பெயரில் வழங்குகின் றது. நாவலரின் நன்னூற் காண்டிகை யுரை பற்றிச் சில கருத்துக்கள் கூறப்பட் டுள்ளன.
வீரசைவராகிய விசாகப்பெருமா ளையர் நன்னூலுக்கு கருத்துரை பதப் பொருள் உதாரணம் என்பன உடைய முக்காண்டிகை செய்தாரென்றும் ஆறு முகநாவலர் வினவிடை என்னும் இரண்டினையும் அதனேடு சேர்த்து ஐங் காண்டிகையாகிய காண்டிகை யுரை செய்தாரென்றும் கூறுவர் சிலர்3
(ஆ. வேலுப்பின்ளே வரலாற்றுத் தமிழ் இலக்கணம்)
இவ்விதம் கூறுபவர்களை இரு நூல்களையும் ஒப்பிட்டு நோக்காதவர்கள் என்றே கருத வேண்டியுள்ளது. பூலோகசிங்கம் அவர்கள்,
வழக்கிலிருந்த உரைகளில் மான வர்களுக்கு விளங்க வேண்டு வன வற்லற மேலும் விளக்கியும், அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்பு கள் பல கூட்டியும், பகுபதமுடிபு சில காட் டியும், சொல்லிலக்கண சூசி சேர்த்தும் இன்றியமையாத அப்பியா சங்களைத் தொகுத்தும் நாவலர் புதிய முறையில் நன்னூலுக்கு காண்டிகை யுரையினை எழுதினர். (தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள்) எனக் கூறுவது பொருத்தமான கருத்தா கும். வழக்கிலிருத்த உரைகளில்" எனப்

Page 282
272
பொதுவாகப் பூலோகசிங்கம் அவர்கள் கூறினலும் விசாகப் பெருமாளையரின் நன் ாற் காண்டிகையுரையே நாவலரின் தேந்ேத அடிப்படையாக அமைந் தது எனக் கூறலாம்.
நாவலரின் நன்னூற் காண்டிகையுரை வெளிவருவதற்கு முன்னர் 1847இல் இரா மாநுச கவிராயர் நன்னூலுக்கு உரையெ ழுதினர். 1851இல் நாவலர் சிவஞான சுவாமிகளால் திருத்தப்பட்ட நன்னுரல் விருத்தியுரையைப் பதிப்பித்தார். 1875 இல் விசாகப் பெருமாளையர் நன்னுரலுக் குக் காண்டிகையுரை எழுதினர். அதன் பின்னரே நாவலரின் நன்னூற் காண்டிகை யுரை வெளிவந்தது. நாவலர் நன்னுாற் காண்டிகை உரையை இலக்கணங் கற்கப் புகும் மாணவர்களைக் கருத்திற்கொண்டே எழுதியுள்ளார். நாவலர் தமது நன்னூற் காண்டிகையுரையில் குத் தி ரங்க ளு க்கு இடையிடையே பரீஷை விஞக்களை அமைத் துள்ளார் நூலின் முடிவில் அப்பியாசங்கள் பலவற்றை இணைத்துள்ளார். இலக்க னம் கற்றவர், இலக்கியத்தில் அவ்விலக் கணம் அமைந்து கிடக்கு முறைமையை ஆராய்ந்து விதியோடு கூறப் பயிலல் வேண் டும்" எனக்கூறி இலக்கணவமைதி காணும் முறையை ஆருக வகைப்படுத்திக் கூறியுள் ளார். அதில் முதல் வகையான பகுபதமுடி வுக்கு பல உதாரணங்களைக் காட்டி விளக்கி யுள்ளார். சொல்லிலக்கண சூசியினைச் சேர்த்துள்ளார். இறுதியில் உபாத்தியாய ருக்கு அறிவித்தல்’ ‘மாணுக்கர்களுக்கு அறிவித்தல்" என்ற தலைப்பில் இலக்கணம் கற்கும் முறைபற்றிய சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அப்பியாச விஞக்களுக்கு விடை காகிதத்திலாயினும், கற்பலகையிலா யினும் எழுதி உபாத்தியாயருக்குக் காட்டித் திருத்துவித்து அப்படித் திருத்தப்பட்டதைத் தாங்கள் பார்த்து உள்ளத்தமைத்துக் கொள்ளவேண்டும்
பேசும் பொழுதும், எழுதும் பொ ழுதும் இலக்கணப் பிழையறப் பேசு வும் எழுதவும் பழகல் வேண்டும்.

கலே யரசு சின்னயா
பிழைபடப் பேசினும் எழுதினும் இலக்கணக் கல்வியாற் பயன் ஒரு சிறி தும் இல்லை. பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் எல்லோருக்கும் பொருள் விளங்கத்தக்க இயற்சொற்களை வழங் கல் வேண்டும். என்பன மாணுக்கர்களுக்கு கூறிய கருத்துக் களில் சிலவாகும், இவை யாவும் மாணவர் களுக்காகவே நாவலர் நன்னூற் காண்டி கையுரையை எழுதியுள்ளார் என்பதனைத் தெளிவாக்குகின்றன.
மாணவர்கள் இலக்கணங் கற்பதற் காக நன்னூற் காண்டிகையுரையினை எழு திய நாவலர், தமக்கு முன்னர் விசாகப் பெருமாளையர் எழுதிய உரையில் மாண வர்களுக்கு விளக்கம் வேண்டிய இடங்களில் உதாரணங்களை விளக்கியும், சில இடங் களில் விசாகப் பெருமாளையரின் உரையி னைத் தெளிவு நோக்கித் திருத்தியும், சில சூத்திரங்களின் உரைகளில் சில கருத்துக் களைப் புதிதாகக் கூட்டியும் நன்னூற் காண் டிகையுரையினை எழுதினர். இவற்றிற்கு உதாரணமாகச் சில இடங்களைக் குறிப்பிட லாம். பெயரின் பொதுவிலக்கணத்தினைக் கூறும் 'இடுகுறி காரணப் பெயர் பொதுச் சிறப்பின" என்ற சூத்திரத்துக்கு விசாகப் பெருமாளையர் பொருள் கூறிய பின்னர்,
*" (உ+ம்) மரம் - இடுகுறிப் பொ துப் பெயர்; பனை - இடுகுறிச் சிறப்புப் பெயர்; அணி - காரணப் பொதுப் பெயர்; முடி - காரணச் சிறப்புப் Go_ulu u ti ””
என உதாரணங்களை எடுத்துக் காட்டியுள் ளார், நாவலரோ அவ்வுதாரணங்களை விளக்கிப் பின்வருமாறு கூறியுள்ளார்.
உதாரணம்: மரமென்பது, ஒரு காரணமும் பற்ருது வழங்கும் பெய ராய் மா, பலா முதலிய பல பொருள் களுக்கும் பொதுவாய் நிற்கையால் இடுகுறிப் பொதுப்பெயர், மா, பலா என்பன ஒரு காரணமும் பற்ருது வழங் கும் பெயராய் ஒவ்வொரு பொரு ளுக்கே சிறப்பாய் நிற்கையால் இடு குறிச் சிறப்புப் பெயர். அணியென்பது

Page 283
நாவலர்து இலக்கிண முயற்சிகள் - தாக்கமும்
அணியப்படுதலாகிய காரணம்பற்றி வழங்கும் பெயராய், இடுவன தொடு வன கட்டுவன கவிப்பன முதலிய ஆப ரணங்கள் பலவற்றிற்கும் பொதுவாய் நிற் கை யாற் காரணப் பொதுப் பெயர். முடி கழல் என்பன முடியிற் கவிக்கப்படுவதுங் கழலிற்கட்டப்படு வதுமாகிய காரணம்பற்றி வழங்கும் பெயராய் ஒவ்வொரு பொருளுக்கே சிறப்பாய் நிற்கையாற் காரணச் சிறப் புப் பெயர்.
என்பது நாவலரது விளக்கம். ஆகுபெயர், வேற்றுமை என்பனபற்றிய நன்னூற் சூத் திரங்களுக்கு விசாகப் பெருமாளையரும் நாவலரும் எழுதிய உரைகளை ஒப்பிட்டு நோக்கின் விசாகப் பெருமாளையரின் உரை -யினை நாவலர் தெளிவு நோக்கித் திருத்தி யுள்ளமையினை அவதானிக்க முடியும். ஆரும் வேற்றுமை குறிப்புவினை என்பன வற்றைப் பற்றிக் கூறும் சூத்திரங்களின் உரையில் விசாகப் பெருமாளையர் கூருத சில கருத்துக்களை நாவலர் கூட்டிக் கூறி யுள்ளமையைக் காணலாம். இவ் விதமா கப் பலவிடங்களில் விசாகப் பெருமாளை யர் எழுதிய நன்னூற் காண்டிகை உரை யினை நாவலர் விளக்கியும், திருத்தியும், கூட்டியும் புதுக்கியபடியால்தான் நன் னுாற் காண்டிகையுரை ஆறுமுகநாவலர் திருத்தியும், விளக்கியும், கூட்டியும் புதுக் கியது' எனக் கூறப்படுகின்றது. நாவ லர் புதுக்கிய பகுதிகளில் சங்கர நமச்சி வாயர், சிவஞான முனிவர் ஆகியோரின் தாக்கமும் ஓரளவு காணப்படுகின்றது.
வசன இலக்கண நூல்களை ஆக்கியமை
இலக்கணச்சுருக்கம் (1873), இலக்கண விணுவிடை (1875) என்னும் இரண்டும் நாவ லர் எழுதிய வசன இலக்கண நூல்களா கும். நாவலருக்கு முன்பு தமிழ்நாட்டில் பலர் வசன இலக்கண் நூல்களை எழுதி புள்ளனர். தமிழ்நாட்டில் வசன இலக் கண நூல்களின் தோற்றத்திற்கான கார னத்தினை மயிலை சீனி வேங்கடசாமி பின் வருமாறு கூறுகின்ருர்:
33

முயற்சிகளும் 273
தமிழ் மொழியைப் படிக் கத் தொடங்கிய ஆங்கிலேயர்களுக்குத் தமிழ் இலக்கணநூல்கள் எளிதில் விளங்கவில்லை. ஏனென்ருல் நன்னூல் முதலிய இலக்கணங்கள செய்யுள் நடையில் அமைந்திருந்தன. வசன நடையில் இலக்கணங்கள் அத்தக் காலத்தில் இல்லை. சூத்திரங்களைப் படித்து அவற்றிற்குப் பொருள் தெரிந்துகொண்டு பின்னர் இலக்க ணத்தை அறிந்துகொள்வது கடின மாக இருந்தது. ஆகவே, அவர்க ளுக்கு வசன நடையில் அமைந்த இலக்கண நூல் தேவைப்பட்டது. ஆகவே, அக்காலத்து ஆங்கிலக்கிழக் கிந்திய அரசாங்கத்தார் தமிழில் வசனநடையில் இலக்கணநூல் எழுது கிறவர்களுக்கு ஒரு தொகை ரூபா பரிசு அளிப்பதாக விளம்பரம் செய் தார்கள். இதன் காரணமாக முதன் முதல் தமிழில் வசன இலக்கணநூல் தோன்றியது. (பத்தொன்பதாம் நூற்றண்டில் தமிழ் இலக்கியம்)
இந்நோக்கில் எழுந்த முதல் வசன இலக் கணநூல் 1811 இல் வெளிவந்த சுப்பராய முதலியாரின் தமிழ் விளக்கம்’ என்பர். தமிழ் விளக்கம் வினவும் விடையுமாக அமைந்தது என்பது நூல் முகப்பிலேயே குறிக்கப்பட்டுள்ளது. "தமிழ் விளக்கத்தின் பின்னர் இலக்கண விஞ விடையாயும் , இலக்கணச் சுருக்கமாயும் பல வசன இலக் கண நூல்கள் எழுந்துள்ளன. அவற்றுள் பெரும்பாலன * தமிழ் விக்ளக்கம்’ போல் தமிழரல்லாத பிறர் தமிழ் இலக்கணத்தி னைக் கற்பதற்கு எழுதப்பட்டன. நாவல ரது இலக்கணச் சுருக்கமும், இலக்கண விஞ விடையும் தமிழர்கள் தமிழைப் பிழையறப் பேசவும் எழுதவும் இலக்கண அறிவு அவ சியம் என்ற கருத்தில் தமிழ் மாணவர்களுக் காக எழுதப்பட்டவை.
தமிழ் கற்கப்புகுஞ் சைவசமயிகள் முன்னர்ப் பாலபாடங்களைப் படித்துக் கொண்டு, இலக்கணச் சுருக்கத்தைக் கற்றறிந்து இயன்றளவு பிழையில்லா மல் எழுதவும் பேசுவும் பழகுக.

Page 284
274
என்ற நாவலரின் கூற்று இங்கு நோக்கத் தக்கது. தமிழ் நாட்டறிஞர்களில் விசாகப் 'பெருமாளையரிடம் ஒரளவு இந் நோக்கிருந் தமையினை அவரது போலபோத இலக்கணம்” "இலக்கணச் சுருக்க விஞவிடை’ என்பனவற் றின் முகவுரைகளினல் அறியலாம்"
நாவலரது இலக்கணச் சுருக்கம் எழுத் ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழியதிகாரம் என்ற முப்பிரிவில் இலக் கண விதிகளை உதாரணங்களுடன் இலகு வான வசன நடையில் விளங்குவதாக உள் ளது. பரீஷை வினக்களும் ஒவ்வொரு இ லக் கண ப் பிரிவுகளுக்கும் பின்னர் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இலகுவான முறையில் எழுதப்பட்ட வசன இலக்கண நூலாக இது விளங் கி னு ம் தெளிவு மேம்பட்ட இலக்கண விளக்கங் கள் பல இலக்கணச் சுருக்கத்தில் காணப் படுகின்றன. குற்றியலுகரம், செய்வினை - செய்ப்பாட்டுவினை, புணர்ச்சி என்பனவற் றிற்கு நாவலர் கூறும் விதிகளை உதாரண மாகக் குறிப்பிடலாம். இலக்கண விஞவிடை இரண்டாம் புத்தகம் இலக்கணச் சுருக்கத்தின் அமைப்பினை ஒட்டி அதிலும் சுருக்கமாக இலக்கண விதிகளை வினவிடையாக உதாரணத்துடன் விளங்குகிறது. இத் தன் மையினல் மாணவர்களின் அடிப்படை இலக்கண அறிவுக்குகந்த நூலாக அது அமைந்துள்ளது. இலக்கணச் சுருககத்தில் கூறப்பட்ட சில மேலதிக இலக்கண விதி களை மாணவர்களின் அறிவு வளர்ச்சியினைக் கருத்திற்கொண டு இலக்கண விஞவிடையில் நாவலர் தவிர்த்துள்ளார். நாவலர் எழு தத் தொடங்கிய இலக்கண விஞவிடை முதற் புத்தகம் ஆரம்ப இலக்கணக் கல் விக்கு உதவக் கூடியதாக இருந்திருக்க லாம். இவற்றினல் நாவலர் வசன இலக் கண நூல்களை, மாணவர்களின் அறிவு வளர்ச்சியினைக் கருத்திற் கொண்டு படி யாக இலக்கண அறிவினை ஊட்டத்தக்க தாக எழுத முயன்றுள்ளார் என்பது தெரி கின்றது. -
நாவலரது வசன இலக்கண நூல்க ளுக்கு முன்னர் எழுந்த வசன இலக்கண நூல்களுள் விசாகப் பெருமாளையரின் இலக்

கலையரசி ன்ேனையா.
கணச் சுருக்க விருவிடை சிறந்த வசன இலக்கண நூலாக அமைந்துள்ளது. எ னும் நாவலரின் இலக்கணச் சுருக்கம் வெளிவந்த பின்னர் விசாகப் பெருமான யரின் இலக்கணச் சுருக்க விஞ விடையின் பயன்பாடு குறைந்தது. விசாகப் பெருமா ளையரின் இலக்கணச் சுருக்க விஞ விடையுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து நாவலரின் இலக் கனச் சுருக்கம் படிப்பவர்களுக்கு இலகு வான முறையில் சந்திபிரித்தும் குறியீடு களை இட்டும் இலக்கண விதிகளை இலகு வான முறையில் விளக்குவதாக உள்ளது: விசாகப் பெருமாளையரின் இ லக் கண ச் சுருக்க விணுவிடையில் யாப்பிலக்கணம் அணியிலக்கணம் என்பன தனியாகப் பதிப் பிக்கப்பட்டு வழக்கிலிருக்க, ஏனைய பகுதி கள் அவ்வளவு முக்கியத்துவம் பெருமைக்கு நாவலரின் இலக்கணச் சுருக்கமே காரண Lorres Gort'ıb.
தமது நோக்கத்திற்கேற்ற வகையில் இலக்கண நூல்களைச் சந்திபிரித்தும், குறி யீடுகளை இட்டும் எளிமையாக விளங்கிக் கொள்ளத் தக்கவகையில் பதிப்பிக்கவும்: எழுதவும் நாவலருக்கு கிறிஸ்தவச் சூழல் உதவியுள்ளது. அதனுலேயே நாவலர் தாம் மேற்கொண்ட முயற்சிகளை நன்முறையில் நிறைவேற்றினர். அதன்மூலம் தன் பின் வந்தோர் பலரைத் தன் வழியிற் செல்ல வைத்தார்,
தனது காலத்திற்கேற்றவை எவை என்பதனையும் இன்றியமையாதன எவை என்பதனையும் சிந்தித்து அவற் றைச் செயற்படுத்தியமையே நாவல ரது சிறப்புக்கும் தனித்துவத்திற்கும் அடிப்படை. பத்தொன்பதாம் நூற் முண்டுத் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆவ சியமாக இருந்த சில கருமங்களை நிறை வேற்றினர். நன்கு ஆற்றப்பட்ட அக் கருமங்கள் பிறருக்கு ஆதர்ஷமாக அமைந்தன.
(நாவலர் மாநாடு விழா மலர்) என நாவலரது முயற்சிகள் எல்லாவற்றிற் கும் பொதுவாகக் கைலாசபதி அவர்கள் கூறும் கருத்து நாவலரது இலக்கண முயற் சிகளுக்கும் பொருத்தமாக அமைகின்றது.

Page 285
நாவலரது இலக்கண முயற்சிகள் - தாக்கமும்
நாவலருக்குப்பின் ஈழத்தவர்கள் பலர் இலக்கண நூல்களைப் பதிப்பித்து இலக்கண நூல்களுக்கு உரைகள் எழுதி யும் வசன இலக்கண நூல்களை ஆக்கியுட இலக்கணத் துறையில் உழைத்துள்ளனர் அவர்களுக்கெல்லாம் நாவலரே வழ காட்டி என விதந்து கூருவிடினும், நான் லரின் இலக்கண முயற்சிகளின் தாக்க அவர்களை ஒரளவு வழிநடத்தியது-பாதி: தது எனக் கூரு திருக்கமுடியாது. பெரு பாலும் நாவலருடன் தொடர்புடைய நாவலர் பரம்பரை என்ற வட்டத்தினுள் இடம்பெறத்தக்க சிலர், நாலருக்குப்பின் இலக்கண முயற்சிகளில் ஈடுபட்டுத் தமிழ் இலக்கண வரலாற்றில் ஈழத்து இலக்கண முயற்சிகளுக்கும் காத்திரமான ஓரிட: தினை அளித்துள்ளமையைக் காணலாம்.
நாவலர் தமிழ் வளர்ச்சிக்காகவும் பழந்தமிழ் இலக்கண நூல்கள் யாவரு கும் எளிதில் பயன்படவேண்டும் என்பத காகவும் பழந்தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைப் பதிப்பித்தார். அவற்றின் சிற பினை அறிந்து நாவலரைக்கொண்டு தொ காப்பியம் சொல்லதிகாரம் சேஞவரைய தைப் பரிசோதித்து பதிப்பித்த சி. வை தாமோதரம்பிள்ளை, அதனைத்தொடர்ந்து நாவலர் காட்டிட பாதையில் பல பழ, தமிழ் இலக்கண நூல்களைத் தாமே ப சோதித்துப் பதிப்பித்துள்ளார். தொ காப்பியம் பொருளதிகாரம் நச்சினுர்க்கினிய (1885), தொல்காப்பியம் எழுத்ததிகார நச்சிஞர்க்கினியம் (1891), தொல்காப்பிய சொல்லதிகாரம் நச்சிஞர்க்கினியம் (1892) வீரசோழியம் (1881), இலக்கண விளக்க (1889), இறையனுர்களவியல்உரை (1883) என்பன சி. வை. தாமோதரம்பிள்ளை ப சோதித்துப் பதிப்பித்த இலக்கண நூல் ளாகும். இவற்றுள் தொல்காப்பியம் எழு ததிகாரம் நச்சிஞர்க்கினியம் தவிர்ந்த ஏ% யவை சி. வை. தாமோதரம்பிள்ளையிஞ லேயே முதலிற் பதிப்பிக்கப்பட்டுள்ளன இதனுல் நாவலரை அடியொற்றி இல கணப் பதிப்பு முயற்சியில் இறங்கிய சி வை. தாமோதரம்பிள்ளை இலக்கண பதிப்பு முயற்சியில் நாவலரிலும் மேம்பட்( விளங்கியதுடன், தமிழ் இலக்கணவரலா

விளைவுகளும் 27s
றில் இலக்கண நூல்களைப் பதிப்பிக்கும்
முயற்சியில் ஈழத்தவரே முன்நிற்கும் நிலை யினையும் உருவாக்கி விட்டார்.
சுன்னுகம் அ. குமாரசாமிப் புலவர் யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், அகப்பொருள்விளக்கம் என்பனவற்றிற்கு முன்னர் வழக்கிலிருந்த உரைகள் மாண வர்களுக்குக் கடினமானவையாக இருந்த மையால் அவற்றிற்குப் புத்துரைகளை எழு தினர். வெண்பாப்பாட்டியல், யாப்பருங்கலம் என்பவற்றிற்கும் அந்நோக்கில் பொழிப் புரைகளை எழுதியுள்ளார். சிவசம்புப்புல வர் யாப்பருங்கலக்காரிகைக்கு உரை στ(Lρ தினர். வ. குமாரசாமிப் புலவர் ஆறுமுக நாவலரின் நன்னூற் காண்டிகையுரைக்கு மேலும் விளக்கத்தைக் கொடுத்துக் "காண் டிகையுரை விளக்கம் எழுதியுள்ளார். ஆ முத்துத்தம்பிப்பிள்ளை எழுதிய நன்னூல் இலகுபோதம் எழுத்ததிகாரம் நன்னூல் இலகுபோதம் செல்லதிகாரம் என்பன 9ቌG፴ வகையில் நன்னூலுக்கு எழுதப்பட்டஉரை என்றே கருதத்தக்கனவாயுள்ளன. தொல் காப்பியம் எழுத்ததிகாரம் நச்சிஞர்க்கினியம் (1937), தொல்காப்பியம் பொருளதிகாரம் பின்நான்கியல்களும் பேராசிரியமும் (1943) தொல்காப்பியம் பொருளதிகாரம் முன்ஐந் தியல்களும் நச்சிணுர்க்கினியமும் (1948), தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேணுவரை யம் (1938) என்பன ஈழகேசரி நா. பென் னையாவினல் சி. வை. தா. ஞாபகார்த்த வெளியீடுகளாக வெளியிட ப்பட்டுள்ளன. இப்பதிப்புகளை வித்துவான் கணேசையரே பரிசோதித்துக்கொடுத்து, அவற்றிற்கு உரைவிளக்கங்களும் எழுதி եւ Gir an Ir rՒ. பழைய உரைகள் சில விடங்களில் தெளி வற்றும், விளங்குவதற்கு முடியாதும் இருந்த நிலையால் கணேசையரின் உரை விளக்கங்கள் அப்பிரச்சினையை இலகுவில் தீர்த்துவைத்தன. இத்தகைய முயற்சிகள் மாணவர்களுக்கு இலக்கணக் கல்வியிஜன. இலகுபடுத்தும் நோக்கில் அமைந்துள்ள மையால் இங்கும் நாவலரின் தாக்கத்தி னைக் காணமுடிகிறது.
மாணவர்களின் அறிவு வளர்ச் இக் கேற்ப நாவலர் தமது வசன இலக்கண

Page 286
276
நூல்களில் தேவையற்ற சிக்கலான இலக் கன விதிகளை விலக்கி, வளர்ச்சிநெறியில் இலக்கண வினுகிடை இலக்கணச் சுருக்கம் என்னும் இரண்டினையும் அமைத்தமை வகுப்புநிலைக்கேற்ப வசன இலக்கண நூல் களை எழுதும் நிலையைத் தோற்றுவித்தது. ** திண்ணைப் பாடசாலை முதல் காலேஜ் வரையும் உபயோகமாகும்படி இப் புத்த கம் சுலபமான நடையில் எழுதப்பட்டுப் பத்தி பத்திகளாக பிரிக்கப்பட்டிருக்கி றது" என்று தனது வசன இலக்கண நூலான "இலக்கணத் தெளிவு பற்றிக் கூறிய தாவீது யோசெப்பு என்பவர்தான் அத்தகைய நூலின எழுதுவதற்கு வழி காட்டியவர் நாவலரே என நூல் முகவு ரையில் கூறியுள்ளார். ஈழத்தில் வகுப்பு களின் தரத்திற்கேற்ப எழுதப்பட்டவை யாக அப்பா பிள்ளையின் ‘தமிழ் இலக்கண தீபிகை’ (1891), ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை யின் " புதிய இலகுபோத இலக்கணம் , ஞானச் சகோதரர் சவரிமுத்து எழுதிய "இலக்கணதீபம்', "இலக்கணபாலபோதம்"
1836-ம் ஆண்டு மார்ச்சு மா பண்ணை சைவப்பிரகாச வித்தியாச முகநாவலரவர்கள் பலர் சமூகத்தி தார்கள்; அந்தச் சமயத்தில் அ. நமச்சிவாயப் புலவர் சம்ஸ்கிருதத்தி துப் படித்துக் காட்டினர். நாவ கொண்ட விஷயம் வைதிகப் பிரா சைவக்குருமாரோ சிற*தவர்கள் யிருந்தோர் அனைவரும் ஏற்றுக் ெ சிறந்தவர்கள் என்பது அச்சபையி ஏற்றுக்கொள்ளும்படி சைவக்குரும லரவர்கள் பல நியாயங்களைக் கா
(யாழ்ப்பாணம், விறீ
நீர்வேலி பூரீமத் சங்கர பண்டி நமச்சிவாயப் புலவர் என்றும் அ6

X8,۶۰۷ ۰
கலையரசி சின்னமா
(1920), மானிப்பாய் ம.ந. ஞானமுத்து எழுதிய *இலக்கணக்கிரகம்’ (1908), என் பன விளங்குகின்றன. இராமநாதனின் செந்தமிழ் இலக்ணமும் மாணவர்களுக்கு இலக்கணக் கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் எழுந்ததே நாவலர் தமது இலக் கணச் சுருக்கத்தில் தொடர்மொழி அதி காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். நாவலருடன் நெருங்கிப் பழகியவரும் உற வினருமான கைலாசபிள்ளை வசன இலக் கண அமைதியினை விளக்கி ‘வசனத் தொடை (1907) என்ற நூலை எழுதினர். இவை யாவும் நாவலர் தமது காலத் தேவைக்கேற்பச் செய்த இலக்கண முயற் சிகள். சிறந்த தாக்கத்தினை ஏற்படுத்திப் பின்வந்தோரை வழிநடத்திச் சென்ற மையைக் காட்டுகின்றன. சிறப்பாக சி. வை. தாமோதரம்பிள்ளை, அ. குமாரசா மிப் புலவர், ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை, வித்துவான் கணேசையர் ஆகியோரின் இலக்கண முயற்சிகளின் வெளிப்பாட் டுக்கு நாவலரின் இலக்கண முயற்சிகளின் தாக்கமே காரணமென லாம்.
தம் வெள்ளிக்கிழமை வண்ணுர் ாலை மண்டபத்தில் பூரீலபூரீ ஆறு ல் ஒரு சிறந்த பிரசங்கஞ் செய் வர்களுடனிருந்து, பூரீமத் சங்கர திலுள்ள சில பிரமாணங்களை எடுத் லரவர்கள் பேசும்படி எடுத்துக் மணர்களோ, தேசிகரெனப்படுஞ் என்பது. அச்சபையிற் சமூகமா காள்ளும்படி சைவக் குருமாரே பிற் சமூமாயிருந்தோர் அனைவரும் ாரே சிறந்தவர்கள் எனறு நாவ ட்டிச் சாதித்துள்ளார்கள்.
psiT Lorrñá 10 1836)
தரவர்கள் அக்காலத்தில் சங்கர ழைக்கப்பட்டவரென்ப.
- பத்திராதியர்

Page 287
இயக்கத்தின் வரல ஸ்தாபனத்தின் சா
ாகா. சோமகாந்தன்
நாவலர் சபையின் பெரு முயற்சியிஞ லும், தூண்டுதலாலும் நாவலர் நினைவி நூற்ருண்டு விழா ஊர் ஊராக, கிராமம் கிராமமாகக் கொண்டாடப்படும் ஒரு மிக பரந்த தேசியப் பெருவிழா உருவெடுத் துள்ள இவ்வேளையில், நாவலர் இயக்கத் தின் பரிணும வளர்ச்சியை, அவ் வளர்ச்சி யின் படிமுறைக் கட்டங்களை மனங்கொள் ளல் அவசியம்.
நாவலர் பரம்பரை என்று உரித்துச் கூறுவதில் தன் நிறைவும் ஆன்மீக அமைதி யும் கண்ட தமிழறிஞர் பரம்பரை நாவல ரின் நினைவை, அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை உயிர்ப்புடனும் உண்மைட் பற்றுடனும் பேணி வந்தது. இந்த தமிழ் அறிஞர் அணியில் முதுபெரும் ஞானியும் மூத்த பேரறிஞருமாகிய பண்டிதமணி, இலக்கிய கலா நிதி, சி. க. அவர்கள் மகோன்னதமான ஓர் இடத்தை வகிக்கி ருர்கள். நாவலர் பெருமைகளை, அவர் தம் அற்புதமான சாதனைகளை தமிழ் கூறும் நல் லுலகத்திற்கு விளக்குவதில், எடுத்து இயம் புவதில் பண்டிதமணி அவர்களும், சைவப் பெரியார் சிவபாதசுந்தரம் முதல் பயிற் றப்பட்ட ஆசிரியராகவும், படைப்பிலக் கிய கர்த்தாவாகவும் திகழ்ந்த ரசிகமணி, கனக. செந்திநாதன் ஈருக ஒருபெரும் அறிஞர் படை செய்த அரும்பணிகள் என்றுமே தமிழ் மக்களால் மறக்கப்படச் கூடியனவல்ல.

)ாறும் தனகளும்
ஆண்டாண்டு தோறும் ஒரு சிறு கூட் டத்தினரால் அனுஷ்டிக்கப்பட்ட குருபூசை யின் நடுநாயகமாக விளங்கிய ருத்தி ராட்சை தரித்து, திருநீறு அணிந்து சிவ சீலராக தவக்கோலங் காட்டிய இந்த ஐந் தாங் குரவர் விடுதலைப் பேரியக்கத்துக்கு வித்திட்ட தேசியத்தின் முதல்வர், தேசிய விழிப்பின் எழுச்சியின் பிதாமகர்' என்று தமிழ்மக்களால் மட்டுமல்ல, இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களாலும் கொண்டா டப்படும் நிலைக்கு உயர்ந்தது எவ்வண்ணம்?
ஒலைச் சுவடிகளாக ஒரு சிலரின் கரங் களில் மட்டும் இருந்த தமிழ் இலக்கிய நூல்களை நாவலர் பெருமான் அச்சேற்றி நூல் வடிவில் பிரசுரித்தமையும், அவற் றைச் சாதாரண தமிழ் மக்களும் புரிந்து பயன்படக்கூடிய வகையில் விளக்கியும், புதுக்கியும் வெளியிட்டமையும் 1920 - 30
ஆம் ஆண்டுகளில் பரந்த பயன்கொடுக்க
ஆரம்பித்தன. 1922ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் வித்தியாபகுதியின் அங் கீகாரத்துடன் இயங்க ஆரம்பித்தது. பண் டித, பாலபண்டித பரீட்சைகள் ஒழுங்காக வும் விரிவான முறையிலும் நடைபெற் றன. பின்னுளில் பரமேஸ்வர பண்டித ஆசி ரியர் கலாசாலையும், திருநெல்வேலியில் காவிய பாடசாலையும் இப் பரீட்சைகளுக்கு மா ன வ ர் க ளேப் பயிற்றுவித்தன. இப் பாடத்திட்டங்களுக்கு வழுவில்லாத, தர மான தமிழ் நூல்கள் தேவைப்பட்டன.

Page 288
278
நாவலர் பெருமான் புதுக்கி, விளக்கவுரை எழுதிப் பதிப்பித்த நூல்களே இவற்றின் ஆதாரமாக அமைந்தன. நாவலர் வெளி யிட்ட நூல்கள் பரந்த அளவில் படித்துத் தேறும் ஓர் அவசியம் பல நூற்றுக் கணக் கான மாணுக்கர்களுக்கு ஏ ற் பட்ட து. **நாவலர் பெருமான் எழுதிய பால பாடங் களும், பெரிய புராண வசனம், கந்த புராண வசனம் ஆகியனவும், பெரிய புராண சூசன மும் தமிழ் வசன நடைக்குச் சிறந்த இலக் கியங்களாகும்’ என்று, யாழ் - ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் அன்றைய காரியதரிசியாகிய இருந்த பண் டிதர் அ. சரவணமுத்து அவர்கள் தெரி வித்த கருத்து தமிழை முறையாகக் கற்க ஆரம்பித்த ஒரு பெரும் கூட்டத்தின் இலக் கிய இலக்கணப் பேராசாஞக நாவலர் பெருமான் முகிழ ஆரம்பித்ததைக் காட்டு கிறது.
1930ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் சென்னை லெக்கிக்கன் அகராதியை வெளி யிட்ட தமிழறிஞர்கள் எடுத்த முயற்சியும் ஈழகேசரி ஆரம்பமானது. தமிழ் மக்கள் மத்தியில் தமிழில், தமிழிலக்கியத்தில் ஆர் வமும் அக்கறையும் ஏற்படும் விழிப்பிற்குக் கால்கோளாக அமைந்தன.
மரபு வழிச் செய்யுள் இலக்கியம், கட் டுரை இலக்கியம் என்ற நிலையிலிருந்து தமிழ் இலக்கியப் பரப்பு நவீன இலக்கிய வடிவங்களைத் தழுவிச் செல்ல ஆரம்பித் தது. இலங்கையர் கோன், சம்பந்தன், வைத்திலிங்கம் போன்ற இலங்கையின் நவீன தமிழ் இலக்கியத்தின் மூலவர்கள் எனப் போற்றப்படும் சிருஷ்டி இலக்கிய கர்த்தார்கள் புனைகதை இலக்கியங்களைப் படைக்க ஆரம்பித்தனர். இதைத் தொ டர்ந்து வரதர், கனக. செந்திநாதன், அ. ந. கந்தசாமி முதலானுேரை உள்ளடக் கிய மறுமலர்ச்சிக் குழு’ செயற்பட ஆரம் பித்தது. இக் குழு இலங்கைத் தமிழிலக்கி யத்துக்கு ஒரு தேசிய உள்ளடக்கத்தை உணர்வு பூர்வமாக அளித்தது.
இதன் பின்னர் கே. ராமநாதன், கே. கணேஷ், அ. ந. க. ஆகியோர் ஆரம்பித்து நடத்திய பாரதி என்ற சஞ்சிகை தமிழ்

நா. சோமகாந்தன்
இலக்கியப் பரப்பில் முற்போக்கான சிந்த னைகளைப் பெய்தது.
இதைத் தொடர்ந்து 1950ஆம் ஆண்டு களில் சமூக பிரக்ஞையோடும் முற்போக் கான சிந்தனையுடனும் எழுத்துத்துறையில் ஈடுபட ஆரம்பித்த இளம் எழுத்தாளர்கள் பலர் தாபன ரீதியாக இயங்கத்துவங்கினர்
இவர்கள் தென் இந்தியா உட்படத் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதினதும் தர மான பண்பான இலக்கியப் படைப்புகளை வரவேற்ற போதிலும் தென்னிந்திய வர்த் தக இலக்கிய ஆதிக்கத்தை எதிர்த்து வந்த னர். இலங்கைத் தமிழ் இலக்கியம், இலங் கைத் தமிழ்மக்களை, அவர்களின் வாழ்வை பிரச் சினைகளை மையமாகக் கொண்டு படைக்கப்பட வேண்டும் என்று போரிட்ட னர். மண்வாசனை, இலங்கையே இலக்கி யக் களமாதல், தேசிய இலக்கியம் போன்ற கோட்பாடுகளை அவர்கள் முன் வைத்த
தேசிய இலக்கியத்திற்கான இப் போராட்டத்தில் இலங்கைத் தமிழிலக் கியம் தனது தனித்துவ முத்திரையைப் பதிக்கவும், தனது சொந்த மரபையும், பாரம்பரியத்தையும் கால் கோளாக க் கொள்ளவேண்டிய ஒரு தத்துவார்த்த ரீதி யான தேவை ஏற்பட்டது. இதன் உந்துத லினல் இவர்கள் தமது தனித்துவ மர்பைத் தேட ஆரம்பித்தனர். அப்போதுதான் நாவலர் பெருமானை, அவர் பணிகஜ, அவர் தொடங்கி வைத்த பாரம்பரியத் தினை அவர்கள் ஆழமாகக் கற்க ஆரம்பித் தனர். நாவலர் பாரம்பரியம் மத விழிப் பினை அடியாதாரமாகக் கொண்டு முகிழ்ந்த போதிலும், சைவத்தையும் தமி ழையும் காக்க அவர் ஆரம்பித்த போராட் டம் தேசிய விழிப்பிற்கும் ஆகவே, இலங் கையில் தேசியத்திற்கும் வித்திட்டTவர லாற்று உண்மையினை அவர்கள் கண்டனர்.
மரகதம், தினகரன் தேசாபிமானி முத லிய ஏடுகளில் எழுத்தாளர்களும் விமர் சகர்களும் எழுதிய ஏராளமான கட்டுரை

Page 289
இயக்கத்தின் வரலாறும் ஸ்தாபனத்தின் சாத
கள் நாவலரை. அவரது வரலாற்றுப்பாத் திரத்தை அவரது பாரம் பரியத்தின் முற் போக்கான உள்ளடக்கத்தை பு தி ய கோணங்களில்தரிசித்துக்காட்டின.இதைத் தொடர்ந்து 1962-ல் கொழும்பு விவே கானந்தாசபை மண்டபத்தில் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் ஸ்திரமான பலம் மிக்க அமைப்பான இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நாவலருக்குத் தனிச் சிறப்பான ஒரு விழாவினை எடுத்தது. பல பேரறிஞர்கள் பங்குபற்றிய இவ்விழாவில் நாவலர்பற்றிய புதிய மதிப்பீடுகள், புதிய சிந்தனைகள் ஸ்தூலமாக முன்வைக்கப்பட் டன. எழுத்தாளர்களால் நாவலர்பெரு மானின் வரலாற்றுப்பாத்திரமும் பணி களும் புதிய கோணத்தில் இனங்காட்டப் பட்டபின்னர், குருபூசைக்குரிய ஐந்தாங் குரவரை தேசியத்தின் ஜனநாயகக்கரு வூலத்தின் மூத்தமுன்னுேடியாக நாடுஏற்க ஆரம்பித்தது.
அரசாங்க திணை க் களங்களிலுள்ள தமிழ்க்கழகங்கள் ஒருங்கிணைந்து 1965 டிசம்பரில் நாவலருக்கு எடுத்த பெருவிழா வில் அக்காலத்தேசாதிபதி உட்படஅமைச் சர்கள், தேசியத்தலைவர்கள் கலந்து கொண்டு நாவலரின் தேசியப்பாத்திரத் தை வலியுறுத்தினர்.
இவ்வாறு உருவாகிய நாவலர் இயக் கத்துக்கு ஒரு ஸ்தாபன வடிவம் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாகப் பிறந்தது. தமிழ்மொழியையும் பண்பாட் டையும் வளர்ப்பதையும், தமிழுக்குத் தொண்டுசெய்த பெரியோர்களின் நினைவு நிலைக்கக்கூடிய பணிகளில் ஈடுபடுவதையும் நோக்கமாகக் கொண்டியங்கிவரும் நடை முறைத்தமிழியக்கத்தை இவ்வுணர்வு தீவிர மாகப்பற்றிக்கொண்டது.
1968-ல் சென்னையில் நடைபெற்ற தமிழாராச்சி மாநாட்டில் தமிழுக்குத் தொண்டாற்றிய பெரியோர்களுக்குச் சிலை நிறுவிக்கெளரவிக்கப்பட்டபோது, நாவ லர் பெருமான்புறக்கணிக்கப்பட்ட நிகழ்வு, இலங்சைத் தமிழ்மக்கள் மத்தியில் பெரும்

னைகளும் 279
மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இந்த உண்ர்ச்சிப்பெருக்கு நாவலர் இயக்கத் திற்கு தாபன வடிவம் கொடுக்கவேண்டும் என்ற உணர்வைச் செயற்படுத்த வாய்ப் பான நிலையை உருவாக்கியது நடை முறைத்தமிழ் இயக்கம் எடுத்த உற்சாக மான உடனடி நடவடிக் கை களால் 17-9-1968-ல் நாவலர்சபை நிறுவப்பட்
-து.
நாவலர் ச  ைப ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டிலேயே, நல்லூரில் 1969 ஜூன் 29 அன்று நாவலர் சிலையை நிறுவி தமிழ் மக்களின் நீண்டகாலக்கனவை நனவாக்கி யது. சிலைநாட்டுவிழா தமிழ்மக்கள் வாழு மிடங்களிலெல்லாம் பெருவிழாவாக உரு வெடுத்தது.
நாவலர் தினத்தையொட்டி நாவ லர்சபை, ஆண்டுதோறும் நாவலர் வாரத் தைக் கொண்டாடியது. பல கருத்தரங்கு கள் நாவலர் நூற்கண்காட்சி, கிறப்பு மலர்கள், பத்திரிகை, அனுபந்தங்கள் வானெலி, நிகழ்ச்சிகள் மாணவர்பேச்சு கட்டுரைப்போட்டிகள் எனப்பல அம்சங் கள் நாவலர் வாரத்தில் வருடந்தோறும் இடம் பெற்றதன் விளைவாக, நாவலர்பற் றிய ஒரு புதியவிழிப்பு தேசிய வியாபித மாக ஏற்பட விரிவுற ஆரம்பித்தது.
நாவலர் சபையின் முயற்சியாலும், நாவலர் மதிப்பீட்டுக்கு புதிய பரிமாணத் தை அளித்த எழுத்தாளர்களின் உந்துதலி ணு,லும் 29-10-71 அன்று அரசு நாவலர் தாபல்முத்திரையை வெளியிட்டு அன் ஞரை தேசிய இயக்கத்தின் பிதாமகராக உத்தியோகபூர்வமாகவே பிரகடனஞ்செய்
占安·
நாவலர் உட்பட மேலும் ந 1 ன் கு பெரியார்களினதும் முத்திரைகள் வெளி யிடப்பட்டதையொட்டி கொழும்பு கலா பவனத்தில் கலாசார அமைச்சர் தலைமை யில் நடந்தவிழாவில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் உரையாற் றிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப்பிரதிநிதிகள், நாவலர்பற்றிய சிந்

Page 290
280
தனைகளை சிங்கள ஆய்வறிஞர்கள் மத்தி யில் ஆதாரபூர்வமாகவும், விஸ்தாரமாக வும் முன் வைத்தனர். இவ்விழாவிலே தான் நாவலர் பிறந்த இல்லம் அரும் பொருட்சாலையாகவும், ஆய்வுபீடமாகவும் மாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுத்தாளர்களால் முன்வைக்கப்பட்டது. இக்கருத்தைக் கலாசார அமைச்சர் ஏற்று பின்னர் பாராளுமன்றத்திலும் அறிவித் தார். இதனைத் தொடர்ந்து நல்லூரி லுள்ள நாவலர் பிறந்த வீடு இருந்த காணி அரசினல் பொறுப்பேற்கப்பட்டது. நாவலர் கலாசார நிலையம் நிறுவுவதற் கான அடிக்கல்நாட்டுவிழா நல்லை நகரில் கோலாகலமாக நடைபெற்றது.
எனினும், இந்தப் பணி துரதிர்ஷ்ட வசமாக இன்னும் பூர்த்தியடையாத நிலை யிலேயேயுள்ளது.
நாவலர் இயக்கம் புதியவீச்சையும் பரிமாணத்தையும் பெற்றுள்ள இன்றைய நிலையில் இதையொட்டி மேலும் பல ஆக் கப்பணிகள் நிறைவேற்றப்படவேண்டியுள்
ଖୁଁ ଖୁଁ ଖୁଁ
1. நாவலர் கலாசார நிலையம் அமைக்கும் பணி உடனடியாகப் பூர்த்தி செய்யப் படவேண்டும்.
2. நாவலரின் ஆக்கங்கள் திரட்டு நூல் களாக வெளியிடப்பட வேண்டும்.
3. நாவலர் பற்றிய ஆய்வினை மேலும் விஸ்தாரமான அளவிலும் நிலையான முறையிலும் மேற்கொள்வதற்கான

4,
நா. சோமகாந்தன்
ஸ்திரமான ஓர் அமைப்பு உருவாக் கப்படவேண்டும்.
இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள நாவலர் சொத்துக்கள் சரி யான முறையில் திரட்டப்படுவதுடன் அவரது அறநிதி ஒழுங்கானமுறையில் இயக்கப்படவேண்டும்.
நாவலரது எழுத்துக்கள் பாடவிதா னத்திட்டங்களில் மேலும் பரவலா கச் சேர்க்கப்படுவதுடன் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நாவலர் ஆய் வுகள் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
நாவலர் திட்டத்தில், இன்றைய நிலை  ைம க ரூ க்கு ஏற்றவற்றையாவது செயல்படுத்த காத்திரமான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் இலக்கியமும், தமிழாராய்வும், சைவமும் மேலும் பல்கிப் பெருகவும், கிளைத்துச் செழிக் கவும் ஆக்கபூர்வமான பணிகளையும் உ த விக ளே யும் வழங்குவதுதான் உண்மையில் நாவலர் நினைவை, அவ ரது பெருமரபினை உயிர்ப்புடன் பேணி வளர்த்துப் போற்றும் புனிதமான கைங்கரியத்தின் தலையாய கடமையா கும்.
இந்தப் பணிகளையும் ஏனைய பிற பணி
களையும் நிறைவு செய்ய நாவலர் அபிமா னிகள் விடாமுயற்சியுடன் செயலாற்றுவ துடன் சபைக்குப் பக்கபலமாகவும் இருப் பார்களென எதிர்பார்க்கிருேம்.

Page 291
34
நாவலரும் இ
க. சொக்கலிங்கம்
'நமக்கு முன்பு இன்றுள்ள கடமை, தகைசான்ற இந்தப் பெருமகனின் (சேர். முத்துக்குமாரசுவாமியின்) இட த்திற்குத் தகுதிவாய்ந்த ஒருவர் யார் என்று காண்பதே. சட்டசயிைலே எமது பிரதிநிதியாக அமர்பவர் தமி ழராயிருத்தல் வேண்டும்; அவர் சிறந்த கல்விமாஞய் விளங்கல்வேண்டும். உய ர்ந்த கொள்கையுடையவராதல் வேண் டும். நல்ல செல்வ வசதி பெற்றிருத்தல் வேண்டும். உயர்ந்த சமூகத்திலே பழ கக்கூடிய நல்வாய்ப்பு உடையவராதல் வேண்டும். தமது கருத்துக்களிற் சுதந் திரராயும் எந்தச் சூழலிலும் எவ்வித அச்சமுமின்றி அக்கருத்துக்களை வெளி யிட வல்லவராயுமிருத்தல் வேண்டும். இவையாவிலும் மேலாக அவர் ஆள் வோரதும் ஆளப்படுவோரதும் மதிப் பிற்கு உரியவராதல் இன்றியமையா தது. பெரியோர்களே, பொறுமை யோடு ஆராய்ந்தால் மேற்கூறிய பண் புகள் யாவும் பொருத்தியவர் பொன் னம்பல முதலியார் இராமநாதன் அவர் களே என்பதில் ஐயத்திற்கு இடமே யில்லை. . இங்குள்ளவர்களில் எவரும் திரு. இராமநாதனில் நம்பிக் கையற்றவராய் இரார் என்பது என் நம்பிக்கை. எனவே பின்வரும் பிரேர ணையை உங்கள்முன் சமர்ப்பிக்கிறேன்.
தமிழ் இனத்தின் தலையாய உறுப் பினர்களாகிய நாம் திரு. பொன்னம் பல முதலியார் இராமநாதன், எமது

ராமநாதனும்
பிரதிநிதியாய் அமர்வதற்கான எ ல் லாத் தகுதிகளும் வாய்ந்தவர் என்று ஏகமனதாகத் தீர்மானிக்கின்ருேம். சமூகத்தின் உயர் அந்தஸ்தில் விளங் குபவரும் சுதந்திரமான வகுவாயை உடையவருமான இவரே எ ல் லா வகையிலும் தகுதிவாய்ந்த வேட்பா ளர் என்று இந்தக்கூட்ட உறுப்பினர் யாவரும் ஏற்றுக்கொள்கின்றனர்."
1879 ஆம் ஆண்டு மே மாதம் 22ஆந் தேதி பி. ப. 2மணியளவில், நாவலர் சை வப்பிரகாச வித்தியாசாலேயிலே, யாழ்ப் பாணத்தின் உயர்மட்டத்தினரும் கல்வி மான்களுமான 3000 பேர்வரை கூடியி குந்த கூட்டத்திலே பூரிலழறி ஆறுமுகநாவ லர் அவர்கள் பிரேரித்த பிரேரணையும் அப்பிரேரணையை ஒட்டி அவர் நிகழ்த்திய சொற்பொழிவின் ஒரு பகுதியும் மேலே தரப்பட்டுள்ளன. இலங்கைச் சட்டசபை, யிலே, கல்விகற்ற தமிழரின் பிரதிநிதியாப் விளங்கிய சேர். முத்துக்குமாரசுவாமியின் (1833-1879) மறைவினைத் தொடர்ந்து அவரின் இடத்திற்கு ஒருவரை நியமிப்பது பற்றித் தேசாதிபதிக்குத் தமது கருத்தி னேத் தெரிவிக்க நடந்த கூட்டமே அது. அதனைக் கூட்டுவித்தவர் ஆறுமுகநாவலர். நாவலர் பரிந்துரைத்துப் பிரேரித்த வேட் பாளரான இராமநாதனுக்கு அப்பொழுது வயது 29. அவர் கொழும்பு வாசி. நியாய வாதித் தொழிலில் ஈடுபட்டுச் சிறிது சிறி தாக முன்னேறிக் கொண்டிருந்த அவருக்கு யாழ்ப்பாணம் புதிதும்ாணிப்பாயே இராம

Page 292
282
நாதனின் தாயகமெனினும் அவர் பிறற் ததும் வளர்த்ததும் வாழ்த்தது மெல்லாம் கொழும்பிலேதான் இத்தகைய ஒஈவ ரையே நாவலர், தமிழருக்குப் பிரதிநிதி பாய் அமர்த்த விரும்பினர்g
இராமநாதனுடன் போட்டி யிட் ட வேட்பாளர் சாதாரணரல்லர் இராமநா தனின் சகலஞன திரு. கிறிஸ்ரோப்பர் பிறிற்ருே என்பவரே அவர். பிறிற்ருே கல் கத்தாப் பல்கலைக் கழகத்துக் கலை.ாணிப் பட்டதாரி. புகழ் பெற்ற நியாயவாதி; மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியவர். யாழ்ப்பாணத்தில் அவரின் ஆதரவாளர் கள் பெருந்தொகையினரா யிருந்தார்கள். நாவலர் தமது சைவப்பிரகாச வித்தியா சாலையிலே இராமநாதனை ஆதரித்து நடத் திய கூட்டத்தைப் போன்று பிறிற்ருேவின் ஆதரவாளர் வாழ்ப்பாணம், கோப்பாய், மல்லாகம்,சாவகச்சேரி,பருத்தித்துறை,புத் தளம், கம்பளை, மட்டக்களப்பு, கா லி ஆகிய இடங்களிலே கூட்டங்கள் நடத்தி னர்.2 எனினும் மாட்சிமை தங்கிய தேசா திபதி, ஜேம்ஸ் ஆர். லோங்டன், நாவலரும் அவரைச் சார்ந்தோரும் பரிந்துரைத்த பொன்னம்பல முதலியார் இராமநாதன் அவர்களையே சட்டசபை உறுப்பினராய் நியமித்தார். இராமதாதன் நி ய ம ன ம் பெற்றதற்கான காரணத்தினைச் செவிவ ழிச் செய்தியாலும் ஒரளவு அ றி ந் து கொள்ளலாம்: ** நாவலர் எழுந்தார் ’ என்ற கட்டுரையில் பண்டிதமணி இதனை நாடகத்தன்மையுடன் விவரித் திரு க் கி ருர்.3
இராமநாதன் துரை (1850-1930) இலங்கையின் தேசிய, கலாசார சமய வர லாற்றிலே சாதித்தவற்றை இருந்துபார்க்க நாவலருக்கு வாய்ட புச் கிட்ட வில்லை. அவர், இராமநாதன் சட்டசபைச் குத் தெரிவு பெற்ற அதே ஆண்டில் (5-12-79 இல்) இறை யடி எய்திஞர்.
1884ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 11ஆத் தேதியன்று சட்டசபையிலே இராம நாதன் உரையாற்றியபொழுது நாவலர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டார்.

க. சொக்கலிங்கம்
"சகிப்பின்மையானது வேறு வேறு காலங்களிலே வேறு வேறு சூழ்நிலக ளிலே அவர்களிடையே (மிஷினரிகளி டையே) காணப்பட்டது. ஆனல் இற் றை நாளிலே அது சிறப்பாக அவதா னிக்கக் கூடியதாய் இருக்கிறது. 1879 இலே இந்துக்களின் தலைமைசால் சீர் திருத்தவாதியின் மரணத்தின் பின்னர் தான் இந்த தி லே'
மாட்சிமை தங்கிய தேசாதிபதி சேர் "ர்தர் ஹமில்டன் கோடன்: நீங்கள் யாரைப்பற்றிக் கூறினீ. கள்?
மாண்புமிகு சேர், இராமநாதன் :- இந்துக்களின் தலைமைசால் சீர் திருத்த வாதி ஆறுமுகநாவலர்பற்றி,4
நாவலர் ஆங்கில ஆட்சியின் தொடக்க காலத்திலே தோன்றியவர்.ஆங்கிலமொழிக் கல்வியின் தொடக்க நி%லயிலே வெஸ் லியன் மிஷன் பாடசாலையிலே ஆங்கிலம் கற்றவர். ஆங்கில நாகரிக மும் கலாசா ரங்களும் ஆங்கிலக் கல்வியினுரடாக நுழை வுபெருத காலத்திலே அவரின் ப* ை வப் பருவம் கழிந்தது.
யாழ்ப்பாணத்திலே தொடக்கப்பட்ட பள்ளி*ள் யாவும் மிஷனரிகளாலே தொ டக் கப்பட்டவை. மிஷனரிகளின் நோக்கம் ஆங்கில நாகரிகத்தைப் புகுத்துவதன்று; கிறிஸ்தவத்தைப் பரப்புவதே. எனவே அவர்கள் தமது கல்விமுறையிலே சைவத் தைச் சாடுவதும் கிறிஸ்தவத்தின் பெரு மையை எடுத்துரைப்பதுமே குறியாகக் கொண்டிருந்ததினல், நாவலர் போன்ருே ரின் உடை, நடை பாவனைகளிலே அதிக கவனமோ அவற்றை மாற்றவேண்டு மென்ற எண்ணமோ கொண்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. " பார் சிவல் துரைக் குப் பண்டிதராகும்போது நாவலர் தாம் ஒருபோதும் விபூதி அழிக்க மாட்டாரென் றும், உத்தூளனம், திரிபுண்டரம் ஆகிய இருவகையானும் விபூதி தரித்துக் கொண் டுதான் வருவாரென்றும், தாம் கிறிஸ்து மத கண்டனம் செய்வதைப்பற்றிக் குறை

Page 293
நாவலரும் இராமநாதனும்
சொல்லக் கூடாதென்றும் இவை முதல கிய நிபந்தனேகளே யெல்லாம் \ச் கட்டு: கொண்டார். பார்சிவல் துரையும் தம குக் கீழேயுள்ள கிறிஸ்தவர்கள் பல பஞ்சாட்சரக் (சம்பளம்) கிறிஸ்தவர் ளென்றும் சைவருள்ளும் இவரொருவே சரியானவரென்றும் நிச்சயமாக அறிந்து கொண்டபடியாலும் தமக்கு நாவல! போன்ற வேறு பண்டிதர் அகப்படாடை யாலும் அவருடைய கேள்விகளுக்கெே லாம் உடன்பட்டுக் கொண்டார். 15
19 ஆம் நூற்ருண்டின் பிற்கூறு, இர மநாதன் கல்வி கற்ற காலமாகும். அ காலத்தில் ஆங்கிலம் அரியணையிலே நிை யாக இடம் பெற்றுவிட்டது. சமயச் சா பிலிருந்து விடுபட்டு ஆங்கில அரசிற்கு விசுவாசமாக உழைக்கக்கூடிய ஒரு கூட்டத் தினரை உற்பத்தி செய்யும் யந்திரமா ஆங்கிலக் கல்வி மாறி விட்ட காலகட்டத் திலேதான் இராமநாதன் கொழும்பிலுள்ள இராணி கலைக்கழகத்தில் (Queen's Acade my-இன்றைய ருேயல் கல்லூரி) மாணவி ராகச் சேர் கிருர். அக்காலத்தில் அந்தச் கலைக்கழகத்தின் முதல்வராய் விளங்கிய வர் கலாநிதி பாக் குருெப்ற் போக் (Dr. Barcroft Boake) GT 68 Lu auri. Sew Gurf Spiš, கல்விமான். ‘தமது மாணவ ரிலே கட்டுட் பாட்டையும் ஒழுங்கையும் அயர முயந் சித் திறனையும் ஆழப்பதித்தவர் 8 இவ ரின் ஆளுமையும், தாய்மாமனரான சேர். முத்துக்குமாரசுவாமியின் வழிகாட்டலும் இராமநாதனை ஆங்கிலக் கல்விக்கும் வாழ்க் கை மூறைக்கும் ஆற்றுப்படுத்தின. பணம் பட்டம், பதவி ஆகியவற்ருல் சாமானிய ரிலிருந்து மேலுயர்ந்து உருவாகிக் கெ"ண் டிருந்த பிரபுத்துவக் குடும்பம் ஒன்றின் உறுப்பினர் பெறக்கூடிய, பெறவேண்டும் என்று கருதப்பட்ட கல்வியினை இராமநா தன் பெற்ா?ர். இதனுல் நடை, உடை பாவனை களிலே அக்காலத்தில் அவர் ஒரு * பிறவுண் சாகிப் " ஆக இருந்திருப்பார் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே.
"அவரின் இளமைக் காலத்தில் அவர் மேற்றிசை நாகரிகத்துக்கு ஆட்பட்டிருந்

283
தார். ஆடம்பரமான மீதூணும், குடிவகை களும் அவராலே பயன்படுத்தப்பட்டன. தரமான விஸ்கியின் சுவை அவருக்குத் தெரிந்திருந்தது. ஆங்கிலப் பிரபு ஒருவர் தமது பரந்த பொழுது போக்குப் பயணத் தின் போது இலங்கையில் இராமநாதனின் விருந்தினராகத் தங்கியிருந்து அன்ஞரின் விருந்தயர்தற் பண்பை அநுபவித்துள் ளார். அந்தப் பிரபு கிழக்கு நாடுகளிலே சிறந்த விஸ்கியைத்தான் அருந்தக் கிண்டத் த தும், சிறந்த ரென்னிஸ் மைதானத்தில் விளையாடக் கிடைத்ததும் இராமநாத னின் “க கஸ்தானிலேயே என்று குறித் துள்ளார். இதனேடு இராமநாதன் மேற்கு நாட்டுப் பாணியில் உடை அணிவதிலும் எல்வூட் தொப்பியைப் பயன் செய்வதி லும் பெருமையடைந்தார். "7 சேர். முத் துக்குமாரசுவாமியின் செல்வாக்கினல் இராமநாதனும் அவர்தம் சகோதரர்களும் தமது குடுமிகளை இளம் வயதிலே நீக்கிக் கொண்டனர் எனவும் தெரிகிறது. இராணி கலைக் கழகக் கல்வியின் பின்னர் சென்னை இராசதானிக் கல்லூரியிலே பட்டதாரிக் கல்வியை இராமநாதன் தொடர்ந்த போ திலும் அதனை நிறைவு செய்யாமலே நாடு திரும்பிஞர். பின்பு அக்கால நியாயவாதி கள் நாயகமான நிச்சட் மோகன் (Richard Morgan ) ST57 ur faðir 6þj u 1 b 6 யாளராய் அமர்ந்து மூன்ருண்டு நியாய வாதிப் பயிற்சியை ஈராண்டுகளில் முடித்து நியாயவாதயா ஞர்.
ஆக, நாவலரின் கல்வி முறையினின் றும் இராமநாதனின் கல்விமுறை தலை முறை இடைவெளி காரணமாகவும் சூழல் காரணமாகவும் பெரிதும் வேறுபட்டிருந் து. இளம் வயதிலே தமது ஆங்கிலக் கல் வியோடு இருபாலைச் சேணுதிராய முதலி யார், சரவணமுத்துப் புலவர் ஆகியோ ரிடம் தமிழையும் தமது சுயமுயற்சியாலே சம்ஸ்கிருத மொழியையும் நாவலர் கற்றுத் தேர்ந்தவர். இடைவிடாத கடும் உழைப் பினலும் ஆசிரியத் தொழிலைப் பயன் கரு தாது பணியாக மேற்கொண்ட பரந்த அனுபவத்தாலும் நாவலர் தம்மைப் பேர நிஞராய் இளமையிலேயே ஆக்கிக் கொண்

Page 294
284
டமுறைமைக்கும் இராமநாதனின் முறை மைக்கும் எவ்வளவோ வேறுபாடிருத்தது. எனினும் இராமநாதன் சென்னையில் வசித்த போது தமிழ் தந்த தாமோதரம்பிள்ளே யின் மேற்பார்வை கிடைக்கப் பேற்றமை பாலும், தருமவாஞன தம் தந்தையாரின் சமயவாழ்வின் செல்வாக்கினுலும், பிற்கா லத்தில் அருட்பரானந்த சுவாமிகளின் உபதேசங்களாலும், இளமைக் கல்வியின் போது விவிலிய வேதங்களேயும் மெய்யிய லயும் ஒழுக்கவியலையும் கற்கக் கிடைத்து வாய்ப்பினுலும், இராமநாதன் கல்லூரி யிலே அவர் நியமித்த வடமொழி, தென் மொழிப் பண்டிதர்களின் உதவியிஞலும், இவையாவிலும் மேலாகத் தமது கூர்ந்த மதியினுலும் சமயமொழி அறிவினை வளர்த் துக் கொண்டார் எனலாம். இதஞலும் இயல்பாகவே அமைந்த பயிற்சிப் பண்பி ஞலும் பிற்காலத்தில் இராமநாதன் ஒர் உள்ளத் துறவியாக, ஞானியாக, சமய வாதியாக மாறுவது எளிதாயிற்று. நாவல ரளவு சைவத்திரு அமைந்த எளிமையான கோலத்தை மேற்கொள்ளாவிட்டாலும் பிற்காலத்தில், ஒரு தமிழ்க் கனவான கத் தமது உணவு, உடை பழக்கவழக்கங்க ளிலே இராமநாதன் மாற்றத்தை ஏற் படுத்திக் கொண்டார்.
இராமநாதனைப் போல நாவலர் பெரும் செல்வக் குடும்பத்திலே தோன்றி யவரல்லர். தமிழையும் கற்றுப் பிறமொ ழியான ஆங்கில அறிவும் பெற்று அவற் றின் உதவியால் ஆராச்சி, மொழி பெயர்ப்பாளர் பதவிகளிலிருந்த நடுத்த ரச் செல்வ வசதியுடைய குடும்பப் பின் னணியே தாஇலகுக்கு வாய்த்திருந்தது. இதனேடு தம் உறவினரின் உதவிகளையும் நாடாது மான உணர்வோடு வாழ்ந்தவர் அவர் விவாகம் செய்து சீதனப் பணத் தில் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட வரல்லர். வலியக் கிடைத்த தமிழ்ப்பண் டிதருத்தியோகத்தையும் வேண்டாமென்று உதறித் தள்ளித் தாம் கற்ற ஆங்கிலத்தி ஞலே பெறக்கூடிய உத்தியோகத்தையும் தேடாது வாழ்ந்த தியாகியே நாவலர் அவர்கள் இத்தனையையும் அவர் மேற்

க. சொக்கலிங்கம்
கொண்ட காரணம் "சைவ சமயத்தையும் அதன் வளர்ச்சிக்குக் கருவியாகிய கல்வி யையும் வளர்த்தல் வேண்டும் என்னும் பேராசையேயாம்'.8 தமது நூல்களின் விற்பனையாலே கிடைத்த பணம், இராம நாதனின் மாமனுரான நன்னித்தம்பி முத லியார் போன்ற வள்ளல்கள் வழங்கிய நிதியுதவி, மக்களிடம் பீடியரிசி தண்டி விற்றுப் பெற்ற பணம் ஆகியவற்றைக் கொண்டு மிகவும் சிரமங்களுக்கிடையே 1848 ஆம் ஆண்டு ஆவணி 5 ஆத் தேதி யன்று யாழ்ப்பாணத்து வண்ணுர் பண்னை யிலே சைவப்பிரகாச வித்தியாசாலேயை யும், 1854 ஆம் ஆண்டு ஐப்பசி 28 ஆந் தேதியன்று சிதம்பரத்தில் ஒரு வித்தியா லயத்தையும் தாபித்தார். சைவப்பிள்ளை கள் சைவச் சூழலிலே சைவத்தையும் தமிழ் மொழியையும், உலகியலுக்குரிய பூகோனம், கணிதம், வானவியல் முதலிய வற்றையும் கற்றல் வேண்டும் என்ற வேணவாவே அவரை இப்பணியில் ஈடு படுத்தியது. "1871 ஆம் ஆண்டில் வண் ணுர்பண்ணையில் யோன் கில்னர் ( Rev. John Kiner) என்பவர் நடத்திய வெஸ்லி யன் ஆங்கிலப் பாடசாலையிற் சைவமா ணுக்கர் விபூதியணிந்து சென்றமைக்காகப் பாடசசலையிலிருந்து வெளியேற்றப்பட்ட னர். நாவலர் அப்பிள்ளைகளின் நன்மை கருதி ஒரு சைவ ஆங்கிலப் பாடசாலை யினே வண்ணுர்பண்னேயில் 1872ஆம் ஆண் டில் நிறுவிஞர். போதிய பணமில்லாமை யாலும் பிள்ளைகள் பலர் சேராமையா லும் இவ் வாங்கிலப் பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது’.9 சிதம்பரத் திலே திருவீதியிலே விசாலமான திலம் ஒன்றை வாங்கி அந்த நிலத்திலே பாட சாலே, பூசைக்கட்டு, சாத்திரக்கட்டு, சகையற்கட்டு ஆகியன அமைத்து, கல்வி யறிவொழுக்கங்கள் கொண்ட உபாத்தி யாயர்களே நியமித்து ஆன்மவியல், உலகி யல் ரீதியான இருவகைக் கல்விகளேயும் கற்பித்து இவற்ருேடு திருமறையோதற் பயிற்சியுமளித்து முறையான சைவப்பிரசா ரகர்களை உருவாக்கும் பயிற்சி நிலையமாக அதனை ஆக்கும் எண்ணமும் நாவலருக்கு இருத்தது. இதன் விபரத்தை 1880 ஆம்

Page 295
நாவலரும் இராமநாத னும்
ஆண்டில் அவர் Gausfull Gåsálu TRI னத்திற் காணலாம்.10 ஆகுல் அவரின் திட்டம் நிறைவேறவில்லை. நாவலர் தமது இறுதிக் காலத்திலே இரிமலையிலே சிவன் கோயில் ஒன்றினை மீண்டும் கட்டுவதற் கான திட்டம் வகுத்து அதுபற்றியும் பொதுமக்களின் பார்வைக்கென ஒரு துண் டுப்பிரசுரம் எழுதி வெளியிட்டார்.11 ,"அவர் சிவபதமடைந்த சிலவாண்டுகளுக் குப் பின் உதயபாலு, இலங்கைநேசன் மூத லிக செய்தித் தாள்கள் அவர் வழியிற் சென்று விடுத்த விளம்பரங்களினுற் சைவ சமய மக்கள் விழிப்புற்று இவ்வாலயப் பணியினை இனிது நிறைவேற்றினர்.1,12
இராமநாதனைப் பொறுத்த வரையிலே பாடசாலை நிறுவல் என்பது கடினமான காரியமாயிருக்கவில்லை. நாவலரின் வழிச் சென்று யாழ்ப்பாணம் இந்துக்கள் லூசிச் சபை 1890 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை நிறுவியதும் தனிப் பட்ட பெரியார்கள் ஆங்காங்கே பாட சாலே கண் நிறுவியதும் இராமநாதனது சிந்தனையைத் தூண்டியிருத்தல் வேண்டும். ஆங்கிலக் கல்வியை நாடிக் கொழும்பு வரும் தமிழிளேஞர் ஆங்கில நாகரித்திற்கு ஆட்பட்டு அழிவுறலைக் கண்ட அவரின் உள்ளத்திலே யாழ்ப்பாணத்திற் சிறந்த தொரு கல்லூரியை நிறுவவேண்டுமென்ற வேணவா வளர அவ்வெண்ணம் உதவியி ருக்கலாம். எனினும் அவர் முதலில் நிறு வியது இராமநாதன் மகளிர் கல்லூசியை யே. ஏனெனில் யாழ்ப்பாணத்திலே சிறு வர்களிலும் சிறுமிகளின் நிலேயே கொழும் பில் உள்ளதிலும் பயங்கரமாக இருப் பதை அவர் கண்டார். கிறிஸ்தவச் சூழலி லிலே சைவ மகளிரின் நிக்ல மோசமானது கண்டு இராமநாதன் மனம் புழுங்கியதால் அவரால் 1913 ஆம் ஆண்டிலே இராமநா தன் மகளிர் கல்லூரி, மருதஞமடத்தில் நிறுவப்பட்டது. 1921 ஆம் ஆண்டில் ஆண் சுகுக்காகத் திருநெல்வேலியிற் பரமேசு வரக் கல்லூரி நிறுவப்பட்டது இராம நாதன் இந்துக் கல்லூரி முகாமைச் சபை யிலும், நியாயவாதி சு. இராசரத்தினத் தைச் செயலாளராகக் கொண்ட சைவ

285
வித்தியா விருத்திச் சங்கத்திலும் த&வ ராய் விளங்கியவரென்பதும் இங்குக் குறிப் பிடத்தக்கதே.
இருபதாம் நூற்ருண்டின் முதற்கா லிலே கல்வியைப் பற்றிய எண்ணங்கள் பெரிதும் வளர்ச்சி பற்றுவிட்டன. நாவ லர் காலக் கல்வி நிலைக்கும் இருபதாம் நூற்ருண்டுக் கல்வி நிலைக்கும் பாரிய வேறுபாடு காணப்பட்டது. சமயத்தை அடிநாதமாகக் கொண்டு சிறந்த சமயியை உருவாக்க வேண்டும் என்று கருதிய நாவலரின் கருத்துப் பழையதாகிவிட்டது. ஒழுக்கமும், உயரறிவும் வாழ்க்கைப் பயன் Lf7 (Fid ŚlsIpš - FIG advapsepulär இராமநாதன் தமது குறிக்கோளாய்க் கொண்டிருந்தார் என்பதற்கு அவரின் பின்வரும் கூற்றே எடுத்துக்காட்டாகும்.
* பரமேஸ்வரக் கல்லூரி, இந்திய ஞானிகளின் ஞானத்தோடு, தமிழ் சங் கத இலக்கியச் செல்வங்களும் இணைந்து பிரித்தானியரின் மிகச் சிறந்த கல்விப் பாங்கினைத் தமிழ்ச் சிறுவர் பெறக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தவென நிறுவப்பட் டது. இக் கல்வியாலே தீயவன் நல்லவனுய் மாறும் நன்மை ஏற்படும். குறும்புகளா லும் வல்லுணர்ச்சியாலும் உந்தப்படுப வன், அவற்றின அடக்கி நற்பணிகளுக்கு உதவுவோணுவான்.மத்தைபோலச் சோம்பி வேலையற்று உழல்பவன் அத்தகைய தீமை யிலே தோயாதவரை ஊக்கமுடையோணு பும் பிறர் நலம் கருதுவோணுவுக் மாறுவான் முரடணுயும் ஆபாசச் செயல்களில் ஈடுபடு வோரூயும் இருப்பவன் சீர்திருத்தப்படு வான். குறுகிய மனப்பான்மையும் வெறுப் புணர்வும் உடையோன் அநுதாபமும் சகிப்பு மனப்பான்மையும் எய்தப் பெறு வான். சித்தனையின்றி அந்நியரின் நடை, உடை. பாவனைகளைக் கிேலிசெய்யத்தக்க வஐகயிலே பின்பற்றுவோன் பரம்பரை பரம்பரையாய் நிலைபெற்றுவரும் தன் மூதாதையரின் இலட்சியங்கனை அவை எவ் வளவு தூரம் எமது தேவைகளுக்கும் சூழ் நிலைகளுக்கும் போருத்தமாய் உள்ளன என்ற அறிவுடன், தான் பிறந்த நாட் டிற்குப் பொருந்தும் நடை, உடை பாவ

Page 296
286
னைகளை மேற்கொள்வான். இத்தகைய செயலுத்தலால் அமையும் தனது இலட். இயங்கள் உலகியலானவையும், ஆன்மிக மானவையுமான மகிழ்ச்சியை நிலைபெறுத்
தும் என்ற உணர்வோடு அலன் செயற் படுவான் '13
இராமநாதனின் தந்தையாரான Gଙ୍ଗl s*$r னம்பல முதலியார் கொழும்பிற் கொச் சிக்கடையிலே கட்டத் தொடங்கிய பொன் னம்பல வாணேச்சரத்தைப் பூர்த்திபண்ணி வைத்ததோடு இராமநாதன் கல்லூரியிலே இராமநாதேச்சரத்தையும் பரமேசுவரக் கல்லூரியிலே பரமேசுவரன் ஆலயத்தை யும் கட்டித் தமது கோயிற்பணி ஆர்வத் தையும் ஈடுபாட்டை யும் இராமநாதன் வெளிப்படுத்தியுள்ளார். நாவலர் தமது சைவ ப் பிர காச வித்தியாசாலைகளிலே நாயன்மார் &ள் அறுபத் ஜீ மூவர் க்கும் கோயில் சமைத்ததும் நினைவிற் கொள் லத் தக் கீதே, மிஷனரிகளின் பாணியிலே தேவாலயத்தோடு பாடசாலைகளையும் இணைத்து நடத்தும் முறையினே இவ்விரு வரும் பின்பற்றினர்.
நாவலரைப் போலச் சமய ஆராய்ச்சி யிலும் தாம் அறிந்த உண்மைகளே எழுத் திலும் பேச்சிலும் வெளியிடுவதிலும் இராம நாதன் ஈடுபட்டதுண்டு. ஆணுல் கல்விக் கோட்பாட்டிலே நாவலசிலிருந்து Gally பட்டு விரிவான கள் விமுறை பொன்றினை மேற்கொண்டது போலவே சமய விடயத் திலும் இராமநாதன் வேறுபடுவதை நாம் காணலாம். நாவலர் ஒரு சைவ சித்தாந்தி சிவாகமங்களையும் திருமுறைகள் மெய் கண்ட சாத்திரங்களையும் உயிரெனப் போற் றியவர்; அவற்றின் மரபு சளுக்கு எதிரான வற்றைச் சாடுவதிலே மூழுமூச்சாக ஈடு பட்ட வர். கிறிஸ்தவர் சைவசமயத்தைக் கண்டித்த வேளைகளிலே வெகுண்டெழுந்து சைவத்தின் உண்மையை நின் தாட்ட தி தம் நாவன்மையையும் எழுத்து && କନ୍ଧ ।ld ତs) {!! யும் பயன்படுத்தியவர் கிறிஸ்தவத்துக்கு எதிராக அவர் எழுதி GÐ, ofiu. L- IS FAI தூஷணபரிகாரம் அவர் கிறிஸ்தவத்தின்மீது கொண்ட சீற்றத்தை மட்டுமன்றிக் கிறிஸ் தவ சமயத்தில் அவர் பெற்றிருந்த அதி
 

க. சொக்கலிங்கம்
வின் அளவினையும் புலப்படுத்துவதாகும். விவிலிய வேதமொழி பெயர்ப்பிலே பார் சிவல் பாதிரியாருக்கு உதவியதாலும் கிறிஸ்தவ சூழலிலே பல ஆண்டுகள் வாழ்ந் தத7லும் அதன உள்ளும் புறமும் நாவ லருக்கு நன்கு தெரிந்திருந்தது.
இராமநாதன் காலத்திலே கிறிஸ்தவ எதிர்ப்புப் போராட்டம் பெருமளவு வற்றி வடிந்துவிட்டது கிறிஸ்தவ மதமாற்றமும் முன்னளவு தீவிரமாக இருக்கவில்லை, மாரு கக் கிறிஸ்தவத்தோடு சைவத்தை ஒப்பு நோக்கும் இயல்பும் ஓரளவு சமய சமரச நோக்கும் ஏற்படத் தொடங்கிவிட்டன. இராணி கலேக்கழகத்தில் லத்தீன் மொ ழியைக் கற்றதாலும் விவிலிய வேதத்தை வல்லார் வாய்க்கேட்டு அறிந்தமையாலும் ஒழுக்கவியலைக் கற்றதாலும் அதே வேளை யில் இல் லத்தில் சைவசமய சாத்திர தோத்திரங்களைப் படித்ததாலும் ஆங்கில மொழிமூலம் பெற்ற பரந்த மனப்பான்மை பாலும் இராமநாதன் கிறிஸ்தவம் -சைவம் ஆகயவற்றை ஒப்பீடுசெய்து ஆராயும் முயற்சியிலே பிற்காலத்தில் ஈடுபட்டார் இதன் பயணுக 1898ஆம் ஆண்டிலே The Gospel of Jesus according to St Mathew as interpreted to R. L. Harrison by the Godly Experience of Sri Parananda s) så sp (5ír Gyth, 19 0 2 2) áð An Eastern Exposition of Gospel of Jesus according to St John Being an interpretation there of By Sri Paran anda By the Lightof John Yoga-Edited by R. L. Harison என்ற நாலும் இராநமாதனுல் வெளிப் (Eishu --Gr. 3êg, tb. Sr. Parananda என்பது இராமநாதன் தteக்கு இட்டுக் கொண்ட தீட்சா நாமமாகும்.
1897இல் விவேகானந்த சுவாமிகள் இலங்கைக்கு வருகை புரிந்தார். இராம நாதனின் வரலாற்றிலே அவருக்கும் விவே கானந்த சுவாமிசளுக்கும் சந்திப்போ தொடர்போ ஏற்பட்டதற்கு எவ்வித ஆதா ரமும் இல்லை; எனினும் , இராமநாதன் தமக்கு வழங்கிய பரானந்தா என்ற நாம மும், ஞானயோ இம் என்ற சொற் பிரயோ கமும் அவர் இந்நூல்களிலே கூறும் கருத்

Page 297
நாவலரும் இராமநாதனும்
துக்களும் இவரின் வேதாந்தச் சார்பினை ஒரளவு புலப்படுத்துகின்றன. 1914 ஆம் ஆண்டில் பகவத்கீதையைப் 'பகவத்கீதா?* எனத் த&யங்கமிட்டு அதற்கு மொழி பெயர்ப்பு: விருத்தியுரையும் இராமநாதன் எழுதியுள்ளார், பெரும்பாலும் வடமொ ழிப் பதங்களையும் வடமொழிக் கிரந்த எழுத்துக்களையுங் கூடக் கையாண்டு இவ் விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இராம நாதன் தியான சமாதியிலே ஈடுபட்டிருக் கும் காட்சியைக் கொண்ட நிழற்படமும் அவரின் நிலையினை எடுத்துக் காட்டுவ தாகும், காலத்தின் மாற்றத்திற்கும் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்க இராமநா தனின் சமயச் சிந்தனைகள் பக்குவமடைந் தன என்றே கொள்ள வேண்டியிருக்கிறது. 1996 ஆம் ஆண்டிலே இராமநாதன் மைரன்டிபெல்ப்ஸ் என்னும் அமெரிக்க நியாயவாதியும் தமது சீடருமான ஒரு வரின் அழைப்பினை ஏற்று அமெரிக்கா சென்று அங்குச் சமயத் தொடர்பான சொற்பொழிவுகளை ஆற்றினர். அவை The Culture of the Soul Among Western Nation என்ற பெயரில் 1908 ஆம் ஆண் டில் முதற் பதிப்பாகவும் அதே ஆண்டுக் கடைசியில் இரண்டாம் பதிப்பாகவும் வெளியாகியுள்ளன.
'நம்பிக்கையில் எழுச்சியும் கடவுள் பத்தியில் வைராக்கியமும் குருவைக் கரு வியாகக் கொண்டே எழுகின்றன. ஆன் மாவையும் இறைவனையும் உறவுபடுத்தும் உண்மைகள் ஞாஞனுபவங்களாய் முகிழ்த் தெழ ல், அவற்றைப் போதிக்கின்ற குரு வின் ஆழ்ந்த பேரறிவிலேயே தங்கியுன்
ଶitଜ୪f ' ' .. 4
*அன்பே இறைவன், ஆகவே அன்பில் வாழ்பவன் இறைவனில் வாழ்வோளுவன், இறை2 னும் அவனுள் வாழ்கின் முன், (1 யோன் IV 16 மத்தேயு சுவிசேஷத்தின் V-V அதிகாரங்களிலே) யேசு கிறிஸ்து நாதர் சாந்தி அல்லது அன்பின் கோட் பாட்டைப் பலவேறு உதாரணங்களால் விளக்குகின் ருர், இறைதத்துவம் அல்லது அவனது சாம்ராச்சியம் (மோட்சம்) ஒழுக்க

287
நிலை நிற்போர்க்கே கிட்டுமல்லாது, அறி வாளரின் விவேகத்தினலே அதனைப்பெற முடி&ாது. இவ்வகையிலே யூத அறிவு வாசிகளிலிருந்து (Scribes) அவர் வேறு படுகின் ருர் "15
1925ஆம் ஆண்டிலே கம்பளையிலே சிங் களவருக்கும் மூஸ் லிங்களுக்குமிடையே கல வரம் மூண்டதையடுத்து 1915 ஆகஸ்ட் 30 ஆந் தேதி அடக்குமுறைச் சட்டம் (Martial Law) p g. L–6Ih QFüulLLடது. 16 இச்சட்ட 8 தின் அடிப்படையிலே டி. எஸ். சேனநாயக் கா. எப். ஆர். சேன நாயக் கா, சாள்ஸ் பத்துவத்துதேவா ( பெளத்த பிர: ம ஞான சங்கத் தலைவரா யிருந்தவர்) உட்படச் சிங்களத் தலைவர் பலர் ஆங்கில தேசாதிபதியின் கட்டளை யின் பேரிலே சிறைப்பிடிக்கப்பட்டனர். பலர் துப்பாக்கிச் சூட்டிற்கும், கொலைக்கும் இரையாயினர். சிங்கs! வருக்கு இழைக்கப் பட்ட அநீதியை எடுத்துரைக்க இராம நாதன் இங்கிலாந்து சென்று லண்டனிலே ஆங்கில மேலிடத் தாட்சியாளருக்கு உண் மைகளை எடுத்து விளம்பிச் சிங்களத் தலை வர்களே விடுதலை செய்ஜித்தார். அநியா யங்களுக்குக் காரணராயிருந்த தேசாதி பதியை மீள அழைக்க வைத்தார், இவற் றிஞலே சிங்கள மக்களின் நெஞ்சங்களிலே நிலையான இடத்தைப் பெற்ருர்.
பெளத்த ஆலயங்களின் சொத்துரி மைச் சட்டம், முஸ்லிங்களின் திருமண உரிமைச் சட்டம், யாழ்ப்பாணத்திற்குக் கொழும்பிவிருந்து பு:கயிரதப் பாதை சமைக்கும் கோரிக்கை, மலைநாட்டுக் கூலி மக்களின் உரிமைகள் தேவைகளை நிறை வேற்றும் சட்டம் முதலாகப் பல சீர் திருத்தங்களுக்கும் காலாயிருந்தவர் இராம நாதனே,
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுகவர் தமது நாவன் மை காரணமாகத் திருவா வடு துறை ஆதீனத்தின் உபய சந்நிதா னங்களால் நாவலர் என்னும் பட்டம் வழங்கப்பெற்றுக் கெளர்விக்கப்பட்டார்:

Page 298
288
தமிழிலே நாவலரின் தாவன்மைக்கு நிகராக இராமநாதன் தமிழிலும் ஆங்கி லத்திலும் தலைசிறந்த சொற்பொழிவாள ராய்த் தம் காலத்திலே விளங்னுெர் என் பதற்குச் சான்றுகள் பல உள. 'Siver tomgued o ator of the East” GT iš pas போற்றப்பட்ட அவர் சிறந்த நியாயவாதி யாசவும், ஈடு இணையில்லாத சட்டசபை உறுப்பினராசவும் விளங்கியதிலே வியப் பில்லை. உள்ளத்திலே தோன்றியதை ஒளிவு மறைவின்றி எடுத்துரைப்பதிலும், உண்மை ஒளியோ டு தெளிவாக விடயங்களை விவ ரிப்பதிலும், ஆதாரங்களின் அடிப்படையி லன்றிப் பேசாமையிலும் நாவலரைப் போலவே இராமநாதனும் சிறந்து விளங் கிர்ை என்பதை அவரின் சட்டசபை உரை களிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்,
"தனிப்பட்ட நட்பிஞலே பொதுப் பணிகள் பாதிக்கப்படுதல் கூடாது. இதுவே என் கருத்தாகும். இந்நாள் எனக்கு மிகவும் சங்கடமான நாள். மனத்திற்கு மகிழ்ச்சி தராத செய லொன்றை நான் செய்ய நேர்ந்த ள் னது. ஆஞல் என்னதான் நேர்ந்தா லும் அதனை நான் செய்தேயாக வேண்டும்; ஏனெனில் மக்களின் நியா யமான வேண்டுதற் குரலானது கடவு ளுக்கும் பிரித்தானிய சிம்மாசனத் திற்கும் உங்களுக்கும் விருப்பமான ஒன்ருகவே யிருக்கும். கனந்தங்கிய அங்கத்தவர் எவராவது இச் சபை யிலே குற்றஞ் சாட்டப்பட்டால் அவர் எழுந்து "நான் பிழை செய்து விட் டேன். எனக்குப் பதிலாகத் தகுதி வாய்ந்தவர் அறிவுரைகன் கூறட்டும், எவ்விதம் இந்தக் கடமைகள் ஆற்றப் பட்டிருக்க வேண்டுமோ அவ்வாறு ஆற்ற நான் தவறிவிட்டேன்" என்று கூறுதல் வேண்டும். 17
நாவலர் "வசனநடை கைவந்த வல்லா ளர். மாணவர், பொதுமக்கள், அறிஞர் ஆகிய ஈழத்திறத் தாருக்கும் உகந்த வகை யிலே வேவ்வேறு வகை வசன நடையைக்
கையாண்டு பல நூல்களே எழுதியவர்:

க, சொக்கலிங்கம்
அவை இன்னும் தமிழ் மொழியின் கலம் கரை விணக்கங்களாயுள்ளன. இராமநாத னும் ஆங்கிலத்தில் மட்டுமன்றித் தமிழி லும் சில நூல்களை எழுதியுள்ளார். பகவதி கீதைக்கு விருத்தியுரை, 18 திருக்குறட்பாரயி இராமநாத பாஷ்யம், ஒளவை தயை ஆத்திசூடி மந்திர விளக்கம், செந்தமிழ் இலக்கணம் ஆகியன அவர் எழுதியநூல்கள். தாவலரின் வசன நடையின் பொலிவு, அழகு, தனித் தன்மை தெளிவு என்பன இராமநாதனின் வசன நடையிலே இல்லை என்பது அவற்றைப் படிப்பவர்க்கு எளிதிற் புலனகும். ஆனல் ஓர் ஒழுங்குமுறையினை யும் கம்பீரத்தையும் மாணவ நிலையில் விட யங்களை அணுகும் போக்கும் அவரின் நூல் களிலும் உரைநடையிலும் காணக் கிடக் கின்றன. ஓர் எடுத்துக்காட்டுப் பின்வரு terт дії
"நான் கொலை செய்யவில்லை, நான் களவு செய்யவில்லே, நாண் கள் ளுண்ணவில்லை, நான் பொய்சொல்ல வில்லை" என்று கூறுகின்றவன் கடையி லுள்ள மாமிசத்தை வாங்குவித்துப் புசித்துக்கொண்டும், ஒருவன்மேல் குற் றம் சுமத்தி அவனுடைய கீர்த்தியைப் பங்கம் பண்ணிக் கொண்டும், அறிவை ம&க்கும் "இவையினை'யும், புகையிலை யையும் அடிக்கடி உபயோகித்துக் கொண்டும், தன் சித்தத்தில் உள் ளதை மறைக்கும் பொருட்டுத் தந் திரமான சொற்களால் GaGagt அர்த்தமாகும் படி பேசிக்கொண்டும் ஒழுகுவாஞயின். அவன் அழகுள்ள வாழ்வாகிய பேரறிவையும் பேரன் பையும் அடையமாட்டான்.”*18
நாவலர் தமது தமிழ்ப் புலமையைச் சைவ வளர்ச்சிக்கு கருவியாகப் பயன்படுத் துவதையே குறிக்கோளாகக் கொண்டிருந் தார். வடமொழியும் தமிழ் மொழியும் சமமானவை. இறைவனுல் ஆக்கப்பட் டவை என்பது அவர் கருத்து, சமயப் பற்றில் அவர் கொண்டிருந்த அளவு மொழிப்பற்று அவருக்கு இருக்கவில்லை என்றே கூறல் வேண்டும். தமது நான்காம் பாலனடத்திலே தமிழ், தமிழ்ப்புலமை

Page 299
தகவலரும் இராமநாதனும்
என்று இருபாடங்களை மிகவும் அமைதியாக உணர்ச்சிக் கலப்பு அதிகமின்றி அவர் எழுதியிருத்தல் காணலாம். தமிழ்ச்சைவன் ஒவ்வொரு வனும் ஒழுக்க நெறியையும் சைவ நெறியையும் போற்றவேண்டும் என்று அவர் வற்புறுத்தினுரேயன்றித் தமி ழன் தமிழையே பேசவேண்டும் தமிழ்ப் பண்பாடுகளையே வாழ்விற் கடைப்பிடித் தல் வேண்டும் என்ருவது, இலங்கையன் என்ற உணர்வோடு வாழவேண்டுமென் ருவது அவர் அடித்துக் கூறியதில்லை. ஆனல் இராமநாதனே தமிழர் மட்டும் தமது கலாசாரத்தினைப் பேணித் தமது சொந்த மொழியிலே வீட்டிலும் வெளியிலும் பேச வேண்டும் என்று கூறுவதோடு நில்லாது சிங்களவரும் தமது மொழி, கலாசாரங்க ளேப் பேணல் வேண்டும் என்று வற்புறுத் தினர். தமது காலத்தில் மேற்றிசை நாக ரிகமும் பயிற்சிப் பண்புகளும் இலங்கைய ரைப் படிப்படியாக ஆட்கொண்டு வரு வதை இராமநாதன் மனவேதனையோடு அவதானித்த காரணத்தினலேயே இந்நாட் டவரின் சொந்தமொழி கலாசாரங்களை அவர்கள் பேணல் வேண்டும் என்று அறி வுறுத்தினர் அயல் நாடாகிய இந்தியாவில் நிகழ்ந்துவந்த சுதந்திரக் கிளர்ச்சிகளும் தேசீய உணர்வும் இராமநாதனையும் பாதித் திருத்தல் வேண்டும். 1904ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தாளில் அவர் ஆனந் தாக் கல்லூரியில் ஆற்றிய சொற்பொழிவு அவரின் தேசீய மொழி உணர்வுகளுக்கு நல்லதோர் எடுத்துக்காட்டு.
'* சிங்கள மொழிக் கல்வியையும் உங் கள் முழுமையான ஆற்றலையும் பயன் செய்து வளர்த்தல் வேண்டும். ஆங்கி லம் தேவைப்படாத இடங்களிலெல் லாம், அதனைத் தவிர்த்துச் சிங்களத் தையே பேசல் வேண்டும். இப்படிச் செய்வீர்களாயின் நீங்கள் உங்கள் தாய் நாட்டிற்கு உண்மைப் பக்ஷணி யாற்றுவதாய் நான் கூறுவேன். அவ் வாறு செய்யாது உள்ளும் புறமும் மேற்கு நாகரீகத்தையே பூண்டவர்க ளாய், உங்கள் மொழியினைப் பொது மேடைகளிலும் இல்லங்களிலும் பேசக் கூசுபவர் கனாய், உங்கள் தேசீய நிறு
35

289
வனங்களைப் பாகாக்க முன்வராதவர் களாய் இருப்பீர்களாயின் உங்களில் ஒருவர் கூடச் சிங்களவர் என்று கூறத் தகுதியற்றவராகி விடுவீர்கள்." 19
நாவலர் காலத்திலேயே பத்திரிகை பொதுசனத் தொடர்புச் சாதனமாக நில வத் தொடங்கிவிட்டது; நாவலர் மாணவ ராய் வெஸ்லியன் மிஷன் பாடசாலையிலே கல்வி கற்கும் பொழுதே அக்காலத்தில் வெளியான உதயதாரகையிலே எழுதத் தொடங்கி விட்டார். பிற்காலத்தில் இலங்கைதேசன் பத்திரினுகயிலும் அவர் எழு தியதுண்டு. சைவரின் நலம் பேண ஒரு பத்திரிகை வெளியாவதை அவர் விரும்பி ஞர். அவரின் மறைவைத் தொடர்ந்து சிறிது காலத்திலே சைவ உதயபானு என்ற பத்திரிகை தோன்றியது. 20 சைவ பரிபா லனசபை 1889 இலிருந்து இந்துசாத னத்தை வெளியிட்டு வருகின்றது.
இராமநாதனும் பத் திரி கை யின் தேவையை நன்கு உணர்ந்திருந்தார். "எங்களுக்குப் பல தேவைகள் உள்ளன. எவரினதும் கைக்கூலியாகத் தன்னைத் தாழ்த்திக்கொள்ளாத பத்திரிகையே இந் நாட்டின் முதலாவது பெருந்தேவையரகும் தமிழர்க்கென்று ஒரு பத்திரிகை வேண் டாமா? தவருண பிரதிநிதித்துவத்தினே எதிர்த்துப் போராட அது ஓர் அவசிய தேவையன்ருே? பல நாள்களாய், வாரங்க ளாய், மாதங்கள்ாய், ஆண்டுகளாய் நாம் பிழைவழிச் செல்லும் பத்திரிகைகளின் கொடுங் கைகளில் அகப்பட்டு வருந்து கின்ருேம்."20 என்று ஒருதடவை அவர் குறிப்பிட்டார். இந்தக் குறைகளைப் போக்க அவர் பலரைக் கூட்டுச்சேர்த்து "The Ceylonese" என்ற ஆங்கிலப் பத்திரிகை யைப் பங்கடிப்படையில் நடத்தினர். ஆஞல், பங்காளிகளின் மிதமிஞ்சிய தலை யீட்டிஞலே பத் தி ரி  ைக இடைநின்று போயிற்று. இராமநாதன் தமது வாழ்க்கை யிலே கூட்டுச்சேர்ந்து முயன்று தோற்ற முயற்சி இது ஒன்றுதான்.
இராமநாதனின் சட்டசபை நுழைவை யடுத்து நாவலரின் வாழ்வு நிறைவுற்றது

Page 300
90
இலங்கையிலே டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையை அடுத்துச் சர்வசன வாக் குரிமை பெற்றமக்கள் அரசாங்கசபைக்குத் தம் பிரதிநிதிகளைத் தெரியத் தொடங்கிய
பொழுது இராமநாதனின் வாழ்க்கை இனிதுற்றது. (1930) இவை தற்செயல்
சான்குதாரங்கள்
1. ச. தனஞ்சயராசசிங்கம்- நாவலர் பணி
இந்து மாணவர் சங்கம், இலங்கைப்
ng. 3 சி. கணபதிப்பிள்ளை - ஆறுமுகநாவலர்
திருக்கணித அச்சகம், சாவகச்சேரி. 4. யாழ்ப்பாணம் நல்லூர் த. கைலாசபில்
(தான்காம் பதிப்பு-1956) ஆறுமுகதா
5. சி. கணபதிப்பிள்ளை- ஆறுமுகநாவலர் 6. M. Wythi lingaim - Thic Life of Sir Pa
Thirumakal Press, Chunnakam. 7, Ibid. 8. சி. கைலாசபிள்ளை - பூரீலயூரீ ஆறுமுக 9. டிெ
2
10. டிெ 11, ச. தனஞ்சயராசசிங்கம்- நாவலர் பண 12. டிெ
13. The Hon. Sri R a manathan - The Ai College. 1946 Thirumakal Peest, Chu 4. P. R um an t'han K C M.G. - The Cult (1906) G. P. Putnam's Sons New
15 Sri Parananda” s - Commentary on
& Co Ltd, London (1898) 16. P. Ramanathan K. C., M. G., The M.
St. Martin Press, London
17 Ιο ό 18. M. Wythilingam - The Life of Sir Pon 9. bid Wol,
20 bid

க. சொக்கலிங்கம்
நிகழ்ச்சிகளா? அல்லது இவ்விருபெரியார் களதும் தேவை அவ்வக் காலத்தோடு மூடி வடைந்து விட்டதன் அறிகுறியா என்பது MosalonsoßsGsm† -orn ü*Sur Sh. அதற்கு இது இடமன்று
Rasdır (1969) பல்கலைக் கழகம், பேராதனை.
r (1979)
ான - ஜீலழறீ ஆறுமுகநாவலர் சரித்திரம் 'aar . Jafab, Gior
onnampals m Ramanathan Wol (1971)
நாவலர் சரித்திரம்
fastv (1969)
m of the Students at Parameshvara .nnakam. are of the Soul Among Western Nation
York & London St. Mathew Kegan Paul, Trench Trubner.
artial Law In Ceylon 1915(1916)
nanapalam Ramanathan Vol I

Page 301
காலத்தின் பி நாவலர்
சித்திரலேகா மெளனகு
ஆறுமுகநாவலர் இறந்து இவ்வருடப் ஒரு நூற்ருண்டு நிறைவு பெறுகின்றது இந்த நீண்ட இடைக்காலத்தில் நாவல பற்றிய பற்பல புகழுரைகளும் கருத்துை களும் ஆய்வுமுயற்சிகளும், மதிப்பீடுகளும் இடம்பெற்றுள்ளன. 1882ம் ஆண்டு கனகரத்தின் உபாத்தியாயரால் எழுதி வெளியிடப்பெற்ற ஆறுமுகநாவலர் சரித் திரம் முதற்கொண்டு அண்மையில் கலாநிதி கா. சிவத்தம்பி எழுதிய ஆங்கிலக் கட் டுரை 1, சமுக இவை பற்பல வகையினவா அமைந்துள்ளன. எனினும் இவற்றினூே ஒரு வளர்ச்சிப் பரிணுமத்தை அவதானி கக் கூடியதாயுள்ளது. தாவலர் பற்றி ஆரம்பத்தில் காணப்பட்ட உணர்ச்சி மீதூரப்பெற்ற தயப்புரைகளின் வேக தணிந்து நாவலரது பணிகள், அவற்றின் பன்முகப்பாடு, அவரது கருத்தோட்ட கள் முதலியவை பற்றிய நிதானமான புறநிலைப்பட்ட ஆய்வு உறுதிபெற்று வழு கிறது. இந்நிக்யில் நாவலரது காலம் அக்காலத்தின் வரலாற்றுப் போக்ை இயக்கிய சக்திகள, ஆகியவை பற்றிய அறிவும் நாவலரை மேலும் புரிந்துகொள்ள உதவுவனவாகும்,
வரலாற்றில் முக்கியத்துவம் பெறு ன்ேற எந்த ஒரு தனிநபரையும் பூரண மாகப் புரிந்துகொள்ள காலச் சூழலில் பின்னணியில் அவரை ஆராய்வது இன்

ன்னணியில்
b
யமையாததாகும். ஏனெனில் குறிப்பிட்ட காலத்தின் பெளதீகச் சூழல்களே இயக்கங் களையும் இயக்கங்களின் தலைவர்களையும் உருவாக்குகின்றன. தனிநபர்களின் விசேஷ குணவியல்புகள் அவ்வியக்கங்களின் சில் அமிசங்களை நீருணயித்தாலும் அவற்றின் சொதுவான செல்நெறிகனைப் பெளதீகச் சூழல்களே தீர்மானிக்கின்றன:
.யதார்த்தத்தில் தோன்றுகிற ஒவ் வொரு ஆற்றல் மிக்க புருஷனும், அதாவது ஒரு சமுதாய சக்தியாக விளங்கும் ஒவ்வொரு ஆற்றல் மிக்க புருஷனும் சமுதாக உறவுகளால் உண் டாக்கப்பட்ட ஒரு விளைபொருளேபா வாள். விஷயம் இவ்வாறிருக்கிறத ஞல், தாம் சொன்னபடி ஆற்றல் மிக்க புருஷர்கள் நிகழ்ச்சிகளின் தனித் தனி விசேஷாம்சங்களை மட்டும்தான் மாற்றமுடியுமதவிர, அவற்றின் பொதுப்போக்கை ஏன் மாற்றமுடி பாது என்பது தெளிவாகிறது. அவர் களே இந்தப் போக்கினுல் விளைந்த ஒரு விக்ள பொருள்தான். இந்தப் போக்கு மட்டும் இருந்திராவிட்டால் சாத்தியத்தையும் யதார்த்தத்தையும் வேறுபடுத்தி வைத்திருக்கிற வாயிற் படியை அவர்கள் தாண்டியிருக்கவே
onru. Arff sesir.

Page 302
292
எந்தத் தனிமனிதரையும் ஆர்ாய்வதற்கு ரிய கருத்தியல் அடிப்படையை மேற்கா ணும் கூற்று சுருக்கமாக விளக்குகிறது.
நாவலர் வாழ்ந்த காலமான பத் தொன்பதாம் நூற்ருண்டு அகில உலக அரங்கிலும் பெரும் பெரும் மாறுதல்களைக் கண்டு கொண்டிருந்த காலம். ஐரோப் பாவில் நடந்தேறிய கைத்தொழிற் புரட் சியின் விளைவுகள் துல்லியமாகத் வெளித் தெரியத் தொடங்கியிருந்தன. நில மாணி யச் சமூக அமைப்பு சிதைந்து அதன் &Spas ஒழுகலாறுகளும் மதிப்பீடுகளும் தத்துவங்களும் நிலையிழக்கத் தொடங் கின. மேற்கைரோப்பாவில் முதலாளித் துவம் வளர்ச்சியடைந்து புதிய சமூக வர்க்கங்கள் உருவாகின po 35 Gav nr 6mil தொழிலாளி எனும் தீர்க்கமான வேறு பாடுடைய இவ்வர்க்கங்கள் சமூக முரண் பாடுகளை மேலும் தெளிவாக்கின.
நவீன உலகைப் பொறுத்தவரை முக்கியத்துவமும் பிரசித்தமும் பெற்ற நிகழ்ச்சிகள் பல இக்காலத்தில் நடை பெற்றன. முதலாவது தொழிலாளர் இயக்கமான சார்டிஸ்ட் இயக்கம் 1848ம் ஆண்டு உச்சநிலையை அடைந்தது. 1847ம் ஆண்டு முதலாவது சர்வதேசத் தொழி லாளர் ஸ்தாபனமான பொதுவுடைமைக் கட்சி கார்ல்மார்க்ஸ், பிரடரிக் எல்கஸ் ஆகியோரின் தீவிரமான பங்கேற்றலுடன் நிறுவப்பட்டது: 1859 ல் சார்ல்ஸ் டார் வினல் இயற்கைத் தேர்வின் மூலம் இன வகைகளின் தோற்றம் என்ற நூல் வெளி யிடப்பட்டது. 1861 ல் ஐக்கிய இத்தாலி பிரகடனப் படுத்தப்பட்டத. 1870 ல் பிரான்சில் தொழிலாளர்களின் எழுச்சி தீவிரமாகத் தொடங்கியது. இதன் பெறு பேருக 1871 ல் பாரீஸ் கொம்யூன் அமைக் கப்பட்டது. நாவலர் பணிகள் வேகமாக நடைபெறத்தொடங்கியிருந்த காலகட்ட த்தில் (1847-1879) ஐரோப்பாவில் நடை பெற்ற உலகைக் குலுக்கிய நிகழ்ச்சிகளில் இவை சிலவாகும். உலகமே புதிய அனுப வத்திற்கு உட்பட்டு நின்ற இக் காலத்தின் தன்மைபற்றி நாடகத் தன்மையுடன்

சித்திரலேகா மெளனகுரு
குறிப்பிட்டார் ரஷ்ய அரசியலெழுத்தாள ரான அலெக்ஸாண்டர் ஹேர்சன் (18121870)
இது குறிப்பிடத்தகுந்த காலம். புதினப்பத்திரிகைகளை எடுக்கும்போது எனதுகை நடுங்குகிறது. ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்காத ஏதோ ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புதிய தோர் பெருமுழக்கம் கேட்கிறது. மனித குலத்தின் ஒளிமிகுந்த மறு பிறப்பு நிகழும் நாள் வெகு அருகிலி ருக்கிறது. மனிதனது இதயத்தைப் புதிய சக்தி அழுத்தமாகப் பற்றியிருக் கிறது. எதனலும் தடுக்க முடியாத தைரியம் இன்றைய நாளின் விதியா யுள்ளது. 3
ஆசியாவிலும் மெல்லமெல்ல புதிய நிலைமைகள் உருவாகிக் கொண்டிருந்தன. ஐரோப்பாவில் நிகழ்ந்தது போன்று விஞ் ஞான, தொழில் நுட்ப, வர்த்தக முன் னேற்றங்கன் பெருமளவில் நிகழாவிடினும் பண்டைய நிலமானியம் நிலை தளரத் தொடங்கியிருந்தது. யப்பான் ப்ோன்ற நாடுகளில் அவற்றின் உள்ள ஈர்ந்த வளர்ச் சியும், இலங்கை இந்தியா போன்றவற்றில் அன்னிய ஏகாதிபத்தியம் அறிமுகப்படுத் திய புதிய பொருளாதார முறைகளும் இதனைச் சாத்தியப்படுத்தின. புதிய தேசிய முதலாளிவர்க்கம் இந்நாடுகளில் உருவா கியது. குடியேற்றங்களாக இருந்த இலங் கை இந்தியா போன்ற நாடுகளில் அன் னிய ஆட்சிக்கு எதிரான் நிகழ்ச்சிகள் நடைபெற்றன; இயக்கங்கள் ஏற்பட்டன. இவ்வியக்கங்கள் ஆரம்பத்தில் சமய பண் பாட்டடிப்படையில் தோன்றியன வாகவே உள்ளன. அன்னியராட்சியும், அதன் பலா பலன்களும் பாரம்பரிய சமூக அமைப் பினைத் தளர்த்தி, பண்பாட்டுக் கூறுகளை யும் ஆட்டங்காணச்செய்தன.
இந் நிலையிலேயே அன்னிய சமயத் துக்கெதிராகவும் அன்னிய கலாசாரத் துக்கு எதிராகவும் சமய பண்பாட்டியக் கங்கள் தென்னசியாவிற்முேன்றின,. இந்

Page 303
காலத்தின் பின்னணியில், நாவலர்
தியாவில் பிரம்ம சமாஜம் (1828) ஆரிய சமாஜம் (1875) ஆகியன இவ்வழியில் எழுநதவையே. இலங்கையில் பெளத்தர் களிடையிலும் சைவர்களிடையிலும் இத் தகைய சமய பண்பாட்டியக்கங்கள் தோன் நித் தொழிற்பட்டன. இவை அடிப்படை யில் இருபண்புகளைக் கொண்டுே விளங்கின. ஒன்று, புத்துயிர்ப்பு அல்லது மறுமலர்ச்சி இரண்டு, சீர்திருத்தம். புத்துயிர்ப்பு அடிப் படை யில் ஏற்பட்ட இயக்கங்கள் புதிய மாறுதல்களுக்கிடையிலும் பழைய அமைப் புகள், மரபுகள், மதிப்பீடுகள் என்பவற் றைக் கட்டிக்காக்க முற்பட்டன. காலத் தால் ஒதுக்கப்படுபவற்றையும் மீண்டும் நிலைபெறச் செய்து அவற்றுக்குப் புத்துயி ரளிக்க முற்பட்டன. தயானந்தசரஸ்வதி நிறுவிய ஆரிய சமாஜம் இதற்குச் சிறந்த உதாரணமாகும். தாவலரது சமயக் காப் பியக்கமும் இதே வகையைச் சேர்ந்தது தான் சீர்திருத்த அடிப்படையில் அமை யும் இயக்கங்சளும் அடிப்படை மாற்றம் எதையும் செய்வதில்லே. எனினும், வளரும் புதிய சூழலுக்கம் நிலைமைக்கும் தக பழைய மரபுகளிலும் மதிப்பீடுகளிலும் சிறு மாற்றங்களை யாயினும் செய்யத்தயங் குவதும் இல்லை. இந்தியாவில் ராஜாராம் மோகனராயின் பிரம்மசமாஜம் இதற்கு எடுத்துக் காட்டாகும்3
மூன்று நூற்ருண்டுகளாகத் தொடர் ந்து அன்னியரின் தலையீட்டுக்கு இலங்கை உட்பட்டபோதும் பிரித்தானியரின் ஆட்சிக் காலமான பத்தொன் பதாம் நூற்ருண்டி லேயே வேகமான மாறுதல்களை இந்நாடு அடைந்தது. இதற்கு முன்னர் இலங்கை யின் கரையோரப் பிரதேசங்கனைக் கைப் பற்றியிருந்த போத்துக்கேயரும் ஒல்லா ந் தரும் இலங்கையின் பாரம்பரிய விளை பொருள்களையே ஏற்றுமதி செய்தனர். இதனுல் புதிய பொருளாதார முறைகள் புகுத்தப்படவில்லை. luir put huius நிர்வாக முறையில் இவர்கள் அடிப்படை மாறுத லெதனையும் செய்யவில்லை. pểisở Lp 7 (xfì tu முறையே தொடர்ந்து சமூக அமைப்பின் அச்சாணியாக விளங்கியது. ஆளுல் கிறித்

293
தவ மதத்திநன் பல்வேறு பிரிவுசஞம் கரையோரப் பகுதிச் சுதேசிகளிடை பரவி யது மட்டுமே குறிப்பிடத்தக்க அம்சமா கும். சுருங்கக் கூறின் கிறித்தவ மத பாம்பலைத் தவிர வேறெத்தகைய பாரிய வரலாற்றணு பவத்துக்கும் போத்துக்கேயர், ஒல்லாந்த ஆட்சியில் இலங்கை உட்பட வில்ல யெனலாம்.
பத்தொன்பதாம் நூற்ருண்டில் இந் நிலை மாறியது. 1802 ல் தனது குடியேற் றங்களிலோன்ரு க இலங்கையைச் சுவீகரித் துக்கொண்ட பிரித்தானிய அரசாங்கம் 1815 ல் சண்டிராச்சியம் பிடிபட்டதுடன் முழு நாட்டிலும் தனது தனியாட்சியைச் செலுத்தும் வாய்பைப் பெற்றது. முதன் முதல் இலங்கை ஒரே நிர்வாகத்திற்கு உட் பட்டது. நிர்வாசப் பிரிவுகளிலும் நிர் வாக முறைகளிலும் மாற்றம் செய்யப் பட்டது. பாரம்பரிய விவசாயப் பொருளா தாரம் புறக்கணிக்கப்பட்டது. 1 830 tà ஆண்டுகளில் கோப்பிச் செய்கை ஆரம் பிக்கப்பட்டதிலிருந்து வர்த்த கத்திற்கு அடிப்படையாக அமையக்கூடிய பெருந் தோட்டச் செய்கையிலே கவனம் செலுத் தப்பட்டது. கோப்பிச் செய்கை தோல்வி யுற்றபோதும் தேயிலை, றப்பர் ஆகியவை தொடர்ந்து ஏற்றுமதிக்குரிய பொருள் களாக அமைந்தன. தோட்ட ஸ்களில் வேலை செய்வதற்கு இந்தியாவிலிருந்து தொழிலா ளர் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். நிர்வாகத் தேவையையும் பொருளாதாரத் தேவையையுமொட்டி தந்தி, தபால், முதலிய தொடர்பு சாதன சேவைகள் ஆரம்பிக் கப்பட்டன. பெருந்தெருக்களும் புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்
6.
மேற் கூறியவை யாவும் இலங்கையின் பாரம்பரிய சமூக அமைப்பில் மாற்றங் களை ஏற்படுத்தின வர்த்தகமும் தொழி லும் பெருக, நகரங்கள் வளர்ச்சியடைந் தன. இலங்கையின் வரலாற்றில் முன் னெப்போதும் காணப்படாத கூலித்தொழி லாளரும், மாத வேதனம் பெறும் புதிய

Page 304
2.94
தோர் உத்தியோக வகுப்பினரும் தோன் றினர். இலங்கையின் பாரம்பரிய நில மானிய அமைப்பும் அதன் சமூக மதிப்பீடு களும் ஆட்டம் காணத் தொடக்கின. இராஜகாரியம் எனப்படும் மானியமுறை 1832 ம் ஆண்டிலும், அடிமைமுறை 84 ம் ஆண்டிலும் சட்டப்படி ஒழிக்கப்பட்டமை மேற்கூறிய வற்றின் விளைவுகளாகும். இவற்றை நோக்கும் போது பிரித்தானிய ஆட்சி, ஒருவகையில் 'இலங்கை வரலாற் றை முன்னுக்குத்தள்ளும் பணியைத் தன் னுணர்வின்றியே செய்துள்ளது" என்பது தெரிகிறது. இவ்விடத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியின் விளைவு குறித்துக் கூறப்பட்டுள்ள ஒரு கருத்து கவனிக்கத் தக்கது.
இங்கிலாந்து, இந்துஸ்தானத்தில் ஒரு சமுதாயப் புரட்சியை உண்டாக் கியபோது மிக இழிந்த ஆசைகளால் உந்தப்பெற்ற தென்பதும், அப்புரட் சியை அறிவற்றமுறையில் நிறைவேற் றியதென்பதும் உண்மையே. ஆனல் பிரச்சினை அதுவல்ல, ஆசியாவின் சமூக நிலையிலே அடிப்படையான புரட்சி ஏற்படாமல், மனிதகுலம் தன் இலட்சியத்தில் நிறைவு எய்துமா என்பதே கேள்வி. நிறைவு எய்தாது என்ருல், இங்கிலாந்து இழைத்த குற்றங்கள் எத்தன்மைத் தாயினும் எத்தனை ஆயினும், அது அந்தப்புரட் சியைச் சாதிப்பதில் தன்னுணர்வில் லாத வரலாற்றுக் கருவியாகப் பயன் பட்டிருக்துறது. கி
இந்தியாவில் நிகழ்ந்தது போன்ற பெருமாற்றமெதையும் இங்கிலாந்து இலங் கையிற் சாதிக்காவிடினும், பண்டைய சமூக அமைப்பின் அடிப்படையில் தளர்ச் சியை ஏற்படுத்தியது. அதன் சிதைவில் புதியதோர் ஸ்திரமான அமைப்பை ஏற் படுத்தாவிடினும் புதிய நிலைமைகளைச் சிருட்டித்து விட்டமையே அதன் முற் போக்கான தன்மையாக அமைந்தது.
இத்தகைய நிலைமையில் சுதேசிகளி

சித்திரலேகா மெளனகுரு
டையே ஏற்பட்ட கிறித்தவ சமயத்தாக் கத்துக்கும் ஒரு புதிய பரிமாணம் ஏற்பட் டது. கிறித்தவம் வேற்று மதம் என்பதும் அது வேற்று இனத்தவருக்கு உரிய தென்" தும் மேலும் உணரப்பட்டது. பாரம்பரிங் சமூக அமைப்பின் கலாசாரக் கட்டுமான மான சமயத்தைப் பேணவும் நிலைநிறுத் தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இத் தகைய ஒரு விளக்கத்துடனேயே நாவலர் அவர்களது சமயக் காப்பு நடவடிகைகள் அணுகுதல் வேண்டும்.
'சைவசமயத்தையும் அதன் வளர்ச் சிக்குக் கருவியாகிய கல்வியையும் வளர்த் தல் வேண்டும் என்னும் பேராசையால்" உந்தப்பட்ட நாவலர் அக்காலத்தில் யாழ்ப் பாணத்து உயர் சமூகத்தவரிடையே நில விய கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் உருவம் கொதித்தார். நாவலருக்குமுன்பே சுதேசிகள் கிறிஸ்தவரஈ குதல் பற்றிய அதி திருப்தி யாழ்ப்பாணத்தவர் மத்தியில் நிலவியிருக்கின்றது. சி டி. வேலுப்பிள்ளை யின் அமெரிக்க இலங்கை மிஷன் சரித்திரம் கிறித் தவ ரா ன சுதேசிகனச் சைவ சமயத்தவர் எவ்வாறு நோக்கினர் என் பதற்குச் சான்று பகருகிறது கிறித்தவர் கள் நடாத்தும் ஒழுங்கான பாடத்திட் டம் கொண்ட பாடசாலைகள் போன்றவை சைவச் சூழலில் அமைதல் வேண்டும் என்ற விருப்பும் சைவர்களிடையே காணப்பட் டது. 1847 ம் ஆண்டு யாழ்ப்பான உயர் சமூகத்தவர் சிலரால் பாடசாலே நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவை யாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போன்று நாவலரால் 187ம் ஆண்டிறுதியில் பிறமதம் கடிந்து தம்மதம் நாட்டும் சைவப்பிரசங் கம் வண்ணுர்பண்ணை சிவன்கோயிலில் தொடங்கப்பட்டது. சைவச்சூழலில்சிறுவர் கல்வி பயிலுதற்காக 1848 ல் வண்ணுச் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை நிறுவப்பட்டது இவற்றைத் தொடர்ந்து நாவலர் இறக்கும் வரைக்கும் சமயத்தை நிலக்களஞகக் கொண்ட அவரது பணி தொடர்ந்தது.

Page 305
காலத்தின் பின்னணியில் நாவலர்
நாவலரது சைவப்பணிகளின் அடிப் படை சைவ சமயத்தில் காலக்கிரமத்தில் படிந்த குறைபாடுகளை நீக்கி அதனைப் பாரம்பரிய நெறிப்படி பேணுதலாகும்; நாவலரது பிரசங்கங்களும், பிரசுரங்களும் இத்தகைய அடிப்படையைத் தெளிவு படுத்துகின்றன. அடிப்படையில் பிராமணி யத்தை ஆதரித்த நாவலருக்குத் தமது காலத்துப் பிராமணர்கள் பலருடன் ஒத் துப் போகமுடியவில்லை. சிவாகம விதிக்கு மாமுயினவற்றை அவர்கள் செய்கிருர்கள் எனக் குற்றம் சாட்டினுர் . நாவலரது இலட்சியவாதமே இதற்குக் காரண மாயிற்று. ஆளுல் வேறு விஷயங்களில் தாவர் பணிகள் பரந்த அளவிலான ஆதர வைப் பெருமைக்கு இந்த இலட்சிய வேக மும் ஒரு காரணமாகும். நாவலரது பணி aseb கருத்துக்களும் எதிர்கொண்ட ஆதரவின்மை குறித்து நாவலரது வரலாறு எழுதியோர் குறிப்பிட்டுள்ளனர்.
. யாழ்ப்பாணத்திலுள்ள பிரபுக் களேயாவது மற்றைச் சாமானிய சனங் களேயாவது மேவாது இப்பெருந் தொடக்கங்களேத் தொடங்கிஞராத லானும், சர்வலோக நாயகராகிய சிவபெருமாஞலே விதிக்கப்பட்ட விதி களுக்கு மாரூரக தடப்பவர்கள் பிரா மணராகியிருத்தாலும், சைவகுருமா ராயிருந்தாலும் பிரபுக்களாயிருந்தா லும், சுற்றத்தராயிருந்தாலும், மித் திரர்களாயிருந்தாலும், பகைவராயி ருந்தாலும் எவரையும் தாட்சண் ணியமின்றி அவ்வப்போது கண்டித்த லாலும், எத்திறத்தாரும் அவர்மீது பொழுமையுங் கோபமுங்கொண்டு, அவருக்கும் அவரது தொடக்கங்சளுக் கும் விரோதமாக அனேக இடையூறு களேச் செய்தார்கள் 5.
இத்தகைய இடையூறுகள் குறித்து நாவல ரவர்களும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளார்.
தன் இம்மைப் பயன்களெல்லாம் இகழ்ந்தும் கைம்மாறு வேண்டாதும்

295
இருபது வருஷ காலம் சுவசமயவிருத்தி யின் பொருட்டு முயற்சி செய்வோ னுெருவன் மற்றைச் சமயத்தார்களுள் ளிருப்பாஞயின் அவனெடுத்த முயற்சி களுள் யாது சித்திபெருது. நம்முடைய சைவ சமயிகள் தங்கள் சமயமும் பாஷயும் விருத்தியடையும் பொருட்டு நான் செய்யும் முயற்சிகளுக்கு உதவி செய்யாமை மாத்திரையினமையாது பெரும்பான்மையும் அவ மதிப்பும் இடையூறுமே செய்கிருர்கள் . பூர்வ காலத்திலே சைவசமய விருத்தியின் பொருட்டு முயன்ற பெரியோர்களுக் குச் சுவசமயிகளாலே நன்கு மதிப்பும் பரசமயிகளாலே இடையூறுஞ் செய்யப் பட்டன. தற்காலத்திலே சைவசமய விருத்தியின் பொருட்டு முயலும் எனக்கு சுவசமயிகளாலே அவமதிப்பும் இடையூறும் செய்யப்படுகின்றன "6
சைவசமயத்தின் மேன்மைக்காக இருபது வரூஷ காலம் முயன்றும் தம் நாட்டவர்களால் அது சரியானபடி உண ரப்பட வில்லையே என்ற கழிவிரக்கம் இவ் வாசகங்களில் தொனிக்கின்றது. தாவல ரது சைவப்பணி பொதுசனங்கள் மட்டத் தைப் பூரணமாக எட்டாததால் அது மக்கள் மத்தியில் எத்தகைய சலனங் களையும் எற்படுத்தவில்லை. உயர் சமூகத் தைத் தளமாகக் கொண்ட இப்பணி அச் சமூகத்திலும் ஒரு சிறுபகுதியினரிடம் மட் டுமே ஆதரவைப் பெற்றது நாவலர் அவர்களின் கடுமையான இலட்சியவாதம் மட்டும் இதற்குக் காரணம் என்று கூற வியலாது. பேராசிரியர் கா. இந்திர பாலா கூறியிருப்பது போல, "இதற்குக் காரணம் யாழ்ப்பாணச் சமூகத்திலே ஒர ளவு பணம் படைத்த இந்துக்கள், அர சியல் தலைவர்கள் ஆகியோருட்பட பெரும் பாலானவர்கள் நாவலருடைய இயக்கத் துக்குத் தொடர்த்து ஆதரவு கொடுக்கத் தவறியமையே ஆகும். இவர்கள் இந்துக் கல்வியில் அவ்வளவு அக்கறை கொண் டிருக்கவில்லை. மதமாற்றஞ் செய்யாது.

Page 306
296
சிறந்த ஆங்கிலக் கல்வியைப் பெற்று அரசாங்கப் பதவிகளப் பெற்றுக் கொன் வதே இவர்களுடைய நோக்கமாக இருந் தது. நாவல் ர் காலத்திற்குப் பின்பு செல்வாக்குப் பெற்ற இந்துக்கள் எங்கு கல்வி பயின் றிருந்தனர் என்பதை ஆராய்ந் து பார்த்தால் இதனேக் கண்டுகொள்ள லாக்' இதனை எண்ணும்பொழுது காலத் தின் எத்தகைய தேவையைப் பிரதிபலிப் பவராக நாவர்ை விளங்கினர் என்பது நுணுகி ஆராயத்தக்க கொன் ருகும். எதிர் காலத்தில் இது செய்யப்பட வேண்டிய ஆராய்ச்சி. நாவலரது சமய சமூகக் கோட் பாடுகளையும் கருத்தோட்டங்களையும்நோக் கும்போது அவர் பழைமையின் பாற்கொண் டிருந்த பற்றும், சலதன தர்மத்தையும் விதிகளையும் இம்மியும் மீறக்கூடாது என்பதிற் காட்டிய அக்கறையும் தெரிய வரும். தமது காலத்துப் பிராமணர்க ளுடனும், கோயிலதிகாரிகளுடனும் பகைத் துக் கொண்ட:ை3க்கு அவர்கள் சமய விதிகளை மீறுகிருர்கள் என்பதே மூதற் காரணமாயிற்று. நல்லூர்க் கந்த சுவாமி கோயில் பற்றிய இரு கண்டனப் பிரசுரங் கள் வெளிவரவும் மேற்கூறியதே காரண மாயிற்று. இவற்றைவிட சைவசமயி, அநாசாரம் ஆகிய தலைப்புகளில் அவர் வெளிப்படுத்திய பிரசுரங்களும் சனதன விதிகளில் நாவலருக்கிருந்த பற்றைவெளிப் படுத்துகின்றன.
சமயத்தின் பழமையையும் தூய்மை யையும் பேணவிரும்பியமை சமூகத்திலும் அத்தகைய கண்ணுேட்டத்தைச் செலுத் தவே உதவியது. சைவசமய ஆசாரங்களை வற்புறுத்தியபோது அதனுடன் சேர்த் துச் சாதியாசாரத்தையும் வற்புறுத்த வேண்டி நேர்ந்தது. நாவலரது எழுத்துக் களில் பல விடங்களில் சாதி அபிமானத் தையும் ஆச7ரத்தையும் வற்புறுத்துகின்ற போக்குக் காணப்படுகிறது. சைவம் சாதி யின் பெயரன்று. சிவனை வழிபடும் மதம் சைவம். அதனை அனுட்டிப்பவர் பிராமணர் முதல் பறையரீருகப் பல சாதியார் என இலங்கைநேசன் பத்திரிகையில் எழுதினர்

சித்திரலேகா மெளனகுரு
நாவலர். 7 அநாசாரம் என்ற பிரசுரத்தில் தாழ்ந்த சாதியாரிடமாவது, அவர்களுட னிருந்தாவது, அவர்கள் காணவாவது போசனம் பண்ணுதல் அநா சாரம் எனக் குறிப்பிட்டார் 8, தாழ்ந்த சாதியார் வசிக்கும் தெரு வழியே சுவாமியை எழுந் தருளப் உண்ணல் குற்றம் எனக் கண்டித் கார் 9: கரையார் எனும் சாதியார் தாழ்ந்த சாதியார்களே 6 4 &6ז & Lשם இலக்கியச் ஈ ன்று கொண் டு வாதிட் LITii 1 0
பத்தொன்பதாம் நூற்ருண்டில் இந் திகாவில் வாழ்ந்த ராஜாராம் ப்ோகன ராய் (1774 - 1833) தயானந்த சரஸ்வதி (1824 - 1883) ஆகிய சமயப் பெருமக் களை ஆறுமுகநாவலருடன் ஒப்பிடுதல் அவரை மேலும் புரிந்துகொள்ள உதவும். பண்டைய இந்து சமயத்தின் மேன்மையை மக்கள் உணர்ந்து அதன் நன்மைகளை
அடையும் வண்ணம் துராசாரங்களைக் களைதல் ராஜாராம் மோகனராயின் நோக்கமாயிருந்தது. தமது காலத்து
நவீன உலகின் நடைமுறைகளுடன் ஒத் துப் போகாதவற்றை இந்து மதத்தில் இடையில் ஏற்பட்ட துராசாரங்கள் என மோகனராய் குறிப்பிட்டார். சாதி வேற் றுமை, பல தெய்வ வணக்கம், பெண் ணடிமை முறை ஆகியவை இத்தகையவை எனக் கூறி அவற்றை நீக்க முனைந்தார். மீண்டும் வேத காலத்திற்குத் திரும்புவதை இலட்சியமாகக் கொண்ட தயானந்த சரஸ்வதியும் தொழில் முயற்சிசளுக்குத் தக வருணப் பிரிவே சமூகத்திற்கு ஏற் புடையது என்ரு ரிெ பெண்களின் சுயா தீனத்தை ஏற்றுக்கொண்டார். ஏக தெய்வ வணக்கத்தை ஆதரித்தார். வேதங்களை யும் உபநிடதங்கனேயும் பிரதான நூல் களாய்க் கோண்டதும் இவர்களது பார்வை
விசாலிப்புக்கு உதவிற்று.
சைவ சமய வழி நின்று சிவாகம நூல்களையே விதி நூல்களாகக் கொண்டு சமயப்புனருத்தாரண்ம் செய்ய முயன்ற நாவலர் தமது சமகாலத்தவர்களிலிருந்து

Page 307
காலத்தின் பின்னணியில் நாவலர்
gerera Gagaull-8á adajůá8. bg மட்டுமன்றி கிறித்தவ சமயத்தின் நேரெ திர்த் தாக்குதலும் நாவலரவர்கன் மிகுந்த உறுதியுடன் ஆகம விதிகளைப் பேணிய மைக்கு ஒரு காரணமாகும், எனினும் நவீன இந்து மத மறுமலர்ச்சிக்கு மூன் னின்றுழைத்த பெரியார்கன் சிலருக்கும் தாவலர் அவர்களுக்குமுள்ள வேற்துமை கள் நோக்கற்பாலன. அதற்கு இது ஏற்ற இடமன்று
நாவலர் காலத்தில் இலங்கை அரசி வல், சமூகம் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் பல முக்கியமான நிகழ்ச்சிகள் தடைபெற்றன. 1847ல் ஏற்பட்ட பொரு சாதார மற்தம் இலங்கையரசையும் வெகு வாகப் பாதித்தது. அரசாங்கம் நிதிநெருக் கடிக்குள்ளாயிற்று. இதனைச் சமாளிக்கப் பல புதிய வரிகள் விதிக்கப்பட்டன, 1848ல் கண்டி, குருநாகல், கொழும்பு போன்ற இடங்களில் கலகங்கள் தோன் றின. கண்டியில் இக்கலகம் பலத்த வன் முறையிஞல், அடக்கப்பட்டது. இதை அடுத்துத் தேசாதிபதி ரொறிங்டனும் இராஜினமாச் செய்தார். 1856ல் கோயில் நிலப்பதிவுச் சட்டம் விதிக்கப்பட்டது. இதஞலும் பெருமளவு நிலங்களை அரசாங் கம் சுவீகரித்தது. மக்கள் மத்தியில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
யாழ்ப்பாணத்தவரை இந்நிகழ்ச்சிகள் நேரடியாகப் பாதிக்கவில்லே. எனினும் இவை பற்றிய செய்திகள் அக்காலப் பத் திரிகைகளில் இடம்பெற்றுள்ளன. உதய தாரகைம் பத்திரிகை 1848 ஆகஸ்ட் மாதக் தொடக்கம் நவம்பர் மாதம்வரை ஒவ் வொரு இதழிலும் கண்டிக் கலகம் பற்றி எழுதியது. எனவே இவற்றை அறியக்கூடிய வசதி யாழ்ப்பாணத்தவருக்கிருந்தது.
தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்ற இந்நிகழ்ச்சிகன் நாவலரை எவ்விதத்தி லும் பாதித்ததாகத் தெரியவில்லை. யாழ்ப் பாணத்தையும் அதற்குள்ளும் சைவத்தை யுமே தமது நோக்கின் எல்லைகளாகக்
36

297
கொண்டமை இதற்குக் காரணமாயினுந் திருக்கலாம். எனினும் நாவலரது வாழ்க் கையின் இறுதி முன்முண்டுகளில் சமயத் துக்கும் அப்பால் அவரது தோக்கு விரித் துள்ளது. 1876ல் பஞ்ச:ேசிற்பட்டபோது கஞ்சித்தொட்டி நிறுவி ஏழைகளின் பசி தீர்த்தமையும், வடமாகாண அரசாக்க அதிகாரியாகவிருந்த துவைனம் என்ப வரின் நிர்வாக ஊழல்களுக்கெதிராகப் பத்திரிகையில் தரிமாவேசத்துடன் எழுதிய மையும், வடமாகாண நிர்வாகச் சீர்கேடு கள் சம்பந்தமாக லோங்டன் தேசாதி பதிக்கு விண்ணப்பித்தமையும் அக்காலத் தில் தொடங்கப்பட்ட வர்த்தக வேளாண் மைச் சங்கத்தின் நன்மைகளே உணர்ந்து அதில் பங்கு கொள்ளும்படி மக்களை வேண்டியமையும் இதற்குச் சான்றுக STnTsh,
கோயிலlதிகாரிகளினதும், சமய குரு birifier sub ASEaugs&raqub aspideasður ayuh கண்டித்துப் பிரசுரமெழுதிய நாவலர் மேற்கூறியவை பற்றிப் பத்திரிகையிலெழு தியமை அவரது நோக்கிலும் கொள்கையி லும் ஏற்பட்ட மாற்றத்தையும் விரிவை யும் உணர்த்துகிறது. எனினும் இவற்றில் துவைனத்தைக் கண்டித்தமையோ லோங் டன் தேசாதிபதிக்கு விண்ணப்பம் எழுதிய மையோ ஆங்கில ஆட்சியை எதிர்க்கும் நோக்குடன் செய்யப்பட்டவையல்ல. ஆங் கிலேயரின் ஆட்சியிலும் அவர்களது ஜன நாயகக் கொள்கைகளிலும் நாவலருக்கு நம்பிக்கை இருந்துள்ளது, “மாதா வயிற் றிற் சிசுவும், அம்மாதரிவினுலுங் கொல்லப் படாவண்ணஞ் சாவதானமாக ஆனதடத் தும் அரசினர்" என்று ஆங்கில அரசைப் போற்றிய நாவலர் மக்களின் வேண்டு கோளைக் கவனித்து தடவடிக்கை எடுக்கும் தாராண்மை அதற்கு உண்டு என நம்பி ஞர்12 பத்தொன்பதாம் நூற்ருண்டில் ஆங்கில ஆட்சியை ஆதரிந்தோரும் அதன் நிர்வாகச் சீர்கேடுகளைக் குறை கூறினர். யாழ்ப்பான நிர்வாகத்தை நாவலர் எதிர்ந்தமை அத்தகையதே

Page 308
298
இவை யாவற்றையும் தொகுத்து நோக்கும் போது தமது காலச் சமய சமூ கக் கலாசாரமரபுகள் உடைந்து விடாது திலைதிறுத்தமுற்பட்ட ஒருவராக ஆறுமுக நாவலர் காட்சியளிக்கிருரர். இந்த அம் சமே அவரது பணிகளிலும் அவரது ஆளு மையிலும் மேலோங்கிக் காணப்படுகிறது. ஆளுல் இதற்காக அவரை வரலாற்றை வழிதவறவிட்டவர் என்று கூறுவதற்கும் இல்லை. அவ்வாறு நாவலர் இங்கிருந்தால் அவர் பற்றி இத்தனை வியாக்கியானங்கள் இடம் பெற்றிருக்கமுடியாது. வரலாற்றுக் குரிய புருஷர் அவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கருங்கக் கூறின் நாவலர் A5 காலத்து மாற்றங்களையும் சலனங்களையும் அவற்றின் தன்மைகளையும் அறிவுபூர்வமாக வும் உள்ளுணர்வாகவும் அறிந்திருந்தார்.
afir first Uriassir
1. Sivathamby. K., “Hindu Reacti westernization ia 19th Century { Colombo, September 1979.
2. பிளெகானவ். கி. வ, வரலாற்றில் த
už : 1 01
8. Oldpostair A Short History of t
4. மார்க்ஸ் - எல்லெல்ஸ், இந்தியாவின்
'ui : 29
5, suvaprissar உபாத்தியாயர் Casu,
968 to 27
8. Cuaui. Luik i SV 5 - 98 7. ஆறுமுகநாவலர் விரபந்தத்திரட்டு, ெ 8. மேற்படி 81
மேற்படி 2 sh uSS ud : 11 2 10. மேற்படி 1ம் பகுதி பச் 137 -1 11 மேற்படி பக் 63 12. மேற்படி Uä : 71, 153

சித்திரலேகா மெளனகுரு
அச்சியந்திரசாலைகள் நிறுவியதும், ஆங்கி லப்பாடசாலை அமைத்ததும் இந்த அறி Gń6ör Lu austras STarsuh. Sr algub, Ješs மாற்றத்தையும் இயக்கத்தையும் தமது சமய சமூக நிலைகளிலே காண முனைந்தா ரல்லர். இவ்விரு அம்சங்களுமே அக்கால வரலாற்று நிலையின் விளைவுகளாகும். மாறு தல் நிகழும் சமூகத்தில் அதனை மறுத லிக்கும் போக்கும் இடம் பெறுதல் வியப் பன்று. பொதுவில் மாறுதலே உணர்ந்த நாவலர் இன்னேர் வகையில் அதனை மறுப்பவராகவும் காட்சியளிப்பதை இதுவே விளக்கும். நாவலர் பற்றிய நுண் ணுய்வுகள் பெருகிவரும் சூழலில் அவரை மதிப்பீடு செய்யும் முயற்சிகளும் வரலாற் முய்வின் ஓர் அம்சமேயாகும். வரலாற்று நாயகரான நாவலரவர்களை வரலாறு கூர்ந்து நோக்குவதில் வியப்பெதுவும் இல்லையல்லவா?
on to christian proselytization and Sri Lanka' in Social Science Review.
னிநபர் வகிக்கும் பாத்திரம், மொஸ்கோ,
he World, Wol, I, Moscow, 1974, p. 414.
முதல் விடுதலைப் போர் சென்னை, 1969
ஆறுமுகநாவலர் சரித்திரம், யாழ்ப்பாணம்,
parasor, 1954 i f& I 41

Page 309
நாவலர் வாழ் முக்கிய சம்ப
தொகுப்பு:
ரஞ்சிதமலர் கவரத்தின்
1822 டிசம்பர் 18
1827
1834 ஆகஸ்டு
1841
I 841 GoIF où uhuri 2
1842 (ஆணி 2)
1846 ஜனவரி
1846 ஜூன் 8
பிறப்பு.
கும், சிவக் வித்தியார நல்லூர் கி முதலியாரி பீற்றர் ப லியன் மிக
சரவணமு யாரிடமும்
untrigadi வெஸ்லிய grš6v.
பார்சிவல் பாதியாரு பெயர்க்க
நயன சா6 எழுதிய த பற்றிய த முதலாவது தொடர்ச் வெளிவந்
தந்தையா "இரத்தின Աrf 59 (6
g2sa së fitoi பித்தல்.
அம்பலவா களையும் 6 செல்லல்,
ITs

க்கையில் வங்கள்
எம்
அவிட்ட நட்சத்திரத்தில் ப. கந்தப்பிள்ளைக் காமியாருக்கும் பிறந்தார். ம்பம், சிறிய தமிழ் ப் பள்ளிக்கூடத்தில் சுப்பிரமணிய உபத்தியாயரிடமும் வேலாயுத
டமும் கற்றல். ார்சிவல் பாதிரியார் நடாத்திய யாழ் வெஸ் Fன் கல்லூரிக்கு ஆங்கிலம் கற்கச் செல்லல். த்து உபாத்தியாயரிடமும் சேனதிராய முதலி
கற்றல்.
பாதிரியாரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ் ன் மிசன் கல்லூரியில் தமிழ், ஆங்கில ஆசிரிய
துரைக்கு தமிழ்ப் பண்டிதராக நியமனம், டன் சேர்ந்து விவிலிய நூலைத் தமிழில் மொழி
ஆரம்பித்தல், ஸ்திர வின என்ற தலைப்பில் உதயதாரகையில் மிழ், ஆங்கிலக் கடிதங்கள் மூலம் "கட்புலன்" மது சந்தேகத்தை வெளியிடல், இது அவரது து எழுத்தாகத் தோன்றுகிறது. இதன் சியாகப் பல கடிதங்கள் உதயதாரகையில் தன.
ார் மரணம். அவர் பாடத் தொடங்கி யிருந்த rவல்லி விலாசம்’ நாடகத்தினைப் பாடிப்
சய்தல்.
பப்பிள்ளைகளுக்கு இலவசமாகப் பாடம் படிப்
ான முதலியாருடன், சென்னை வித்தியாசாலை வித்துவான்களையும் காண்பதற்காக இந்தியா இதுவே அவரது முதலாவது இந்தியப் பிர க இருக்கலாம்.

Page 310
300
Il 847 Lq. Fuħ Lui 3 1
1848 மார்ச் -ஜூலை
1848 (ஆவணி 5)
1848 செப்டெம்பர்
1849 g"గాడి
1850-51
1851 (பங்குணி)
1851 ஏப்பிரல்
1851 அக்டோபர்
1852 ஏப்பிரல்
1855
I854
1854 geyāGBu mtruri”
1855
1857 டிசம்பர்
வண்ணுர்பண் கிறிஸ்து மதப் சைவப் பிரசா
h− இந்தியப் பிரய
னிந்திய தேவ மொழிபெயர் ஸ்போல்டிங் ட ஆறுமுக நாவ தாக ஆணல்ட வண்ணுர்பண்ை தாபித்தல்.
பார்சிவல் பா
யோகத்தைத் தையும் சமய பணித்தல். இந்தியப் பிரய அச்சியந்திரம் துறை ஆதீனத் சூடாமணி நிக பிக்கப்படல். பாலன யந்திர முதலாம், இ நீதிநூல்களும் பின்னர் தான் திருச்செந்தினி சிடல்.
கொலைமறுத்த நன்னூல் விரு. இயற்றல். பெரியபுராண திருமுருகாற்று
சைவதுரஷன
டம் ஆதியன சைவசமயம் தலை எதித்தா, இந்தியப்பிரய செல்லல் , பிர பண்ணச் செ6
வெஸ்லியன் தூஷண பரிக
தாயார் மரண

ரஞ்சிதமலர் நவரத்தினம்
னச் சிவன் கோவிலில் முதன் முதலாகக் பிரசாரத்தை எதிர்த்து (கண்டித்து) ங்கம்.
ாணம், பார்சிவல் பாதிரியாருடன் தென் ாலயத்தில் விவிலிய நூலின் யாழ்ப்பான ப்பை ஒப்புவிக்கச் செல்லல். பண்டிதர், சந்திரசேகர பண்டிதருடன் லர் உடன் வர தாமும் சென்னை சென்ற ட் சதாசிவம்பிள்ளை கூற்று. ணயில் சைவப்பிரகாச வித்தியாசாலை
திரியார் பாடசாலையில் பார்த்த உத்தி
துறத்தல், இதன் நோக்கம், முழுநேரத் , சமூக, இலக்கியப் பணிக்கு அர்ப்
பாணம். நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் வாங்குவதற்குச் செல்லல். திருவாவடு ந்தால் "நாவலர் பட்டம் வழங்கப்பெறல். :ண்டு உரை, செளந்தர்யலகரி உரை பதிப் யாழ்ப்பாணத்திற்கு வந்து “வித்தியாது ம்" என்னும் அச்சியந்திரசாலை தாபித்தல்; ரண்டாம், நான்காம் பாலபாடங்களும் எழுதி அச்சிடல். (மூன்ரும் பாலபாடமே ாகாம் பாலபாடமாக வெளிவந்தது).
ரோட்டக யமக அந்தாதி உரை அச்
ல் என்னும் பிரசாரத்தை அச்சிடல். த்தியுரை அச்சிடல். சிவாலய தரிசன விதி
வசனம் எழுதித் தயாரித்தல்,
ப்படை உரை இயற்றல்.
பரிகாரம். சுப்பிரபோதம், வச்சிரதண்
அச்சிடல், சைவதூஷண பரிகாரத்தில் பற்றிய கிறிஸ்தவ மிசனரிகளின் தாக்கு 宁。
ாணம். நல்லூர் சதாசிவம்பிள்ளையுடன் ம்மசாரியம் ஏற்று சிவபூசை எழுந்தருளப் ன்றமை.
மெதடிஸ்த ஆண்டறிக்கையில் சைவ ாரத்துக்குப் பாராட்டு.
5r líb.

Page 311
நாவலர் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்
1858 பெப்ரவரி 14
1858 జ్ఞలిడి
1859 மே
860
1860 அக்டோபர்
1861 Gip
1881 (ஆவணி)
1862 மே
1862 ஜடுலை
1863 (uonrtit syf)
1864 சனவரி
1864 அக்டோபர் 28
1864
86s நவம்பர்
866
1867
1867 (ஆணி)
1867 (ஐப்பசி) 1868 சனவரி
சைவ வித் அதன் வர இந்தியப் பில் வித்தி செல்லல்,
திருவாசக றைப் பர் பெயரால் வேறு நூ திருவண்ணு திருக்கோ திருக்குறள் (அன்னம்
கந்தபுரான் சிதம்பரத்தி வண்ணை ை
மேற்படி யகர் கோ
இந்தியப் சாமி தேை துப்படலு! தலயாத்தி சாலை ஒன் சிதம்பர ே திருவிளைய புராணம், சேதுபுரா தொல்கா என்பன அ
அருட்பா திருவாசக ally pr(tଘror&f (! சிதம்பரத்தி முயன்றை திருத்தொ தலைவராக ஆற்றல். சிதம்பர ( அருணகிரி கோயிற்பு

r 301
தியாசாலைக்குப் பணம் சேர்க்கும்பொருட்டு லாற்றைப் பிரசங்கம் செய்தல்.
பிரயாணம். நூல்கள் அச்சிடவும் சென்னை யாதுபாலன அச்சியந்திரசாலை தாபிக்கவும்
மூலம், திருக்கோவையார் மூலம் என்பவற் சோதித்து, மாணவர் சதாசிவப்பிள்ளை அச்சிட்டு வெளியிடல்.
ல்களும் அச்சிடல்,
மலையில் உருத்திராக்கம் சூட்டப்பெறல். வையார் உரை அச்சிடல்.
பரிமேலழகர் உரை, தருக்கசங்கிரகம் பட்டீயம்) ஆதியன அச்சிடல். ன வசனம் பதிப்பித்தல். தில் சைவவித்தியாசாலை நிறுவும் பொருட்டு சைவ வித்தியாசாலையில் பிரசங்கம்.
காரணத்திற்காக பருத்தித்துறை சித்திவிநா விலில் பிரசங்கம். பிரயாணம். இராமநாதபுரத்தில் பொன்னுச் வருடன் பிணக்கும் சந்திப்பும் சாதுரா சாத் b.
ரை (நோக்கம்-சிதம்பரத்தில் வித்தியா "றைத் தாபித்தல்). வித்தியாசாலை தாபித்தல். ாடற் புராண வசனம் அச்சிடல், சேது
இலக்கண விளக்கச் சூருவளி அச்சிடல். ணம், இலக்கண விளக்கச் குழுவளி அச்சிடல். ப்பியச் சூத்திர விருத்தி, இலக்கணக்கொத்து அச்சிடல் . பதிப்பு. (இது அகத்தியர் தேவாரத்திரட்டு, ம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரிய செய்யுட்டிரட்டு ஆகியன சேர்ந்த தொகுப்பு). தில் தீக்ஷிதர்கள் ஆடு வெட்டி வேள்விசெய்ய மயைத் தடுத்தல். , • ண்டைநாட்டுப் புண்ணிய பரிபாலன சபைத் நியமனம். சிறந்த சொற்பொழிவொன்று
மும்மணிக்கோவை பதிப்பித்தல். நாதர் திருவகுப்பு பதிப்பித்தல். ராண உரை வெளியிடல்.

Page 312
302
1868 செப்டம்பர்
869
1869 பெப்ரவரி
1869 (வைகாசி) 1869 (ஆணி)
1869 (கார்த்திகை)
1869 (uoft riřss)
1870 பெப்ரவரி 27
872
1872 9յծGւ-frւյrr
星87易
சைவசமய ெ சேஞவரையம்
சிதம்பரத்திலு நிறுவி சைவப் நிதிசேர்க்கும்
6gTmt Fmt fó y நாவலர் மீது கண்டனம். *நல்லறிவுச் சு யாருக்கு நாெ பதினுேராம் : சிதம்பரத்தில் சாரத்தில்" ந1 கந்தபுராணம் போலியருட்ப தாம் இராம6 ணங்களைத் தெ
மஞ்சக்குப்பக் லிங்கர் தாம் மறுத்தல்.
அருட்பா வழ பிள்ளைக்கு நா நீதிபதி வழக்
ஆறுவருட இ ணம் திரும்பு ஊர்வலம். ய பிரகாச வித்
நல்லூர் கந்த தில், "வேதக் லல், இது அ தாகக் கொன் வண்ணை சை
*யாழ்ப்பாண "திருக்கேதீச் (இவ்ையிரண் கேட்டை எ வதற்குத் தீ கொளல்.)
கோப்பாயிலு சாலைகளைத்

ரஞ்சிதமலர் நவரத்தினம்
தறியுரை வெளியிடல். தொல்காப்பியம்
பரிசோதித்தல்.
ம் வேதாகம பாடசாலை, மடம் என்பன பிரசாரகர்களை உருவாக்கும் முயற்சிக்கு பொருட்டு விண்ணப்பஞ் செய்தல்.
தலியாரின் விஞ்ஞானப் பத்திரிகை" ம் சி. வை. தாமோதரம்பிள்ளை மீதும்
டர் கொளுத்தலில் வீராசாமி முதலி பலர் மறுப்பு.
திருமுறை பதிப்பித்தல்.
இராமலிங்கர் தமது "பேரம்பலப் பிர ாவ்லரை அவதூறு செய்தல்
அச்சிடல். T மறுப்பு வெளியிடல், இதில் நாவலர் பிங்கபிள்ளையை எதிர்த்த மைக்கான கார நளிவாக எடுத்துக் கூறல்.
கோட்டில், வெகுசனக்கூட்டத்தில் இராம நாவலரை அவதூறு செய்யவில்லை என
க்கு. வழக்குரை மன்றத்தில் இராமலிங்க வலர் கொடுத்த மதிப்பைக் கண்ணுற்ற கைத் தள்ளுபடி செய்தல். }ந்திய வாழ்க்கையின் பின்னர் யாழ்ப்பா தல். பூம்பல்லக்கில் பெரிய வரவேற்பு ாழ்ப்பாண மக்களால் வண்ணை சைவப் தியாசாலையில் அளிக்கப்பட்ட வரவேற்பு. சுவாமி கோயிலில், கந்தபுராண படனத் காட்சி" என்ற பாடலுக்குப் பயன் சொல் வரது புராண விரிவுரைகளுள் தலைசிறந்த ாளப்படுகின்றது. வ ஆங்கில வித்தியாசாலை தாபித்தல். ச் சமயநிலை" அச்சிட்டு வெளியிடல். ர ஆலய விண்ணப்பம் வெளியிடல். டிலும் திருக்கேதீச்சர ஆலயத்தின் சீர்
டுத்துக்கூறி, அதனைச் செம்மைப்படுத்து பிர நடவடிக்கை எடுக்கும்படி வேண்டிக்
ம்,புலோலியிலும் சைவப்பிரகாச வித்தியா தாபித்தல்.

Page 313
நாவலர் வாழ்க்கையில் முக்கிய சம்பவங்கள்
1873 சனவரி
1873 (பங்குனி)
1874 ஆகஸ்ட்
1875 ஜூன்
1875 ஆகஸ்ட்
I 875
1876 சனவரி
1876 நவம்பர்
1876 டிசம்பர்
1877
நல்லூர் க. சபை கூட் கையொப்ட
சைவவிஞவ
நல்லூர் ம
பாக நடத்
நல்லூர் ச வெளியிடல்
நல்லூர் க. வெளியிடல்
(இவையிர6 சாத்திர வி
திருவிளைபா நன்னுரல் 6 சிவபூசாவிதி பணவிதி, ே
* மித்தியாவ திருஞானச குரவர் எ கேள்வியுற் பிக்கும்படி
தங்கபஸ்பட தம்மைக் ெ 5. Fl frL5 யும் கூறப்ட கத்தோலிக் goir Frt tři
முறையீடு.
நல்லூர்
தொடரச் வெகுசனத்
சந்தியாகுட் டினைப் பார்
யாழ்ப்பான SFD u ub!” , . சுரங்கள் . கண்டித்து சேர்த்துக்
களுக்குக் க

303
ந்தசுவாமி கோயிலைத் திருத்தியமைக்க ஒரு டி காரியசபை நியமித்தல். ரூபா 6000க்கு 1ம் சேர்த்தல்.
விடை முதற் புத்தகம் பதிப்பித்தல். டத்தில் தங்கி கோயில் உற்சவத்தைச் சிறப் ‘துதல்.
ாந்தசுவாமி கோயில் முதலாம் பத்திரிகை
.
ந்தசுவாமி கோயில் இரண்டாம் பத்திரிகை
.
ண்டும் தூஷணைகளின்றி, நியாயத்தோடும் தியோடும் எழுதப்பட்ட கண்டனங்கள்)
டற் புராணம், நன்னுற் காண்டிகையுரை, விருத்தியுரை என்பன திருத்தி வெளியிடல், தி, அனுட்டான விதி, சிரார்த்த விதி, தருப்
பாசன விதி, தமிழகராதி என்பன எழுதுதல்.
ாத நிரசனம் வெளியிடல். இதில் வை. ம்பந்தப்பிள்ளை என்பார் தம்மை ஜந்தாங் னப் (நாவலரை) பாடிப் பதிப்பித்ததைக் று அதனை வேறு பிரகாரம் மாற்றிப் பதிப் செய்வித்தமை கூறப்பட்டுள்ளது. மேலும் ம் என்ற பெயரில் விஷமருந்து கொடுத்துத் கொலை செய்ய முயற்சி செய்தமை சிதம்பரம் நிச் செட்டியாரால் தோல்வியடைந்தமை பட்டுள்ளது.
கர் வாழும் கரையூரில் பேதி நோய். மக் ல் நாவலர் அரசாங்கத்திற்கு வன்மையான
கோயில் நிர்வாகிக்கு எதிராக வழக்குத் Pலரை நியமித்தல். துரோகம் என்ற அறிக்கையில் பென் சமீன் பிள்ளை என்ற கத்தோலிக்கரின் தொண் rாட்டுதல்.
ாத்தில் பஞ்சம், "சமயம்! சமயம்" "இதுநல்வ ‘வெகுசனத்துரோகம் முதலிய துண்டுப்பிர முலம் ஏசண்டு துவையினம் அவர்களைக் எழுதுதல், ஒரு மகாசபை கூட்டிப் பொருள் கஞ்சித்தொட்டித் தருமம் நிறுவி, ஏழை ஞ்சி வார்ப்பித்தல்.

Page 314
304
1877 gifth iri 12
1877 ig-Flat ri 26
1878 சனவரி
1878 (Suo 24
1878 ஜூன் 29
1879 G3 to 22
1879 go@(ຄ)
1879 is bui 2
1879 gributř 5
1 & 79 g. Filiburî 6
வேளாண்ை பத்திரிகையி வெளியிடல்,
வோளாண் & இலங்கை ே
தேசாதிபதி விஜயம் செ ஊழல் பற்ற
“ 6 tho & 66
இருமொழி : மாருதம்" எ டனம் வெவ
இலங்கை பொன். இர காச வித்தி
சைவப்பிரக தாயனுர் கு சங்கத்தின் இ அவமதிப்பா சில வார்த்ை
சுகவீனம் ஏ, வண்ணுர்பண்
சிதம்பரம் சு கள் செய்யட் தகனம்.

ரஞ்சிதமலர் நவரத்தினம்
மச் சங்கம் பற்றி "இலங்கை நேசன்" ல், பத்திராதிபருடன் கூட்டாகக் கருத்து
மைச் சங்கத்தின் பயன்பற்றிய பேச்சு நசனில் வெளியீடு.
லோங்டனுக்கு அவர் யாழ்ப்பாண்த்திற்கு ப்தபோது அரசாங்க ஊழியர் மத்தியிலான
விண்ணப்பம் சமர்ப்பித்தல். பன் கோயில் பிரசுர வெளியீடு.
திமிர தீபிகையினைத் தாக்குமுகமாக gF6ts tன்ற தலைப்பில் இலங்கை நேசனில் கண் ரியிடல்.
சட்டநிருபண சபைத் தேர்தலில் சேர் ாமநாதனை ஆதரித்து வண்ணை சைவப்பிர யாசாலையில் முதற் பிரசாரக் கூட்டம். ாச வித்தியாசாலையில், சுந்தரமூர்த்தி ருபூசையில் இறுதிப் பிரசங்கம். இப் பிர 1றுதியில், சைவசமயிகளால் தமக்கேற்பட்ட லும், இடையூருலும் மனம் வெதும்பிச் தைகள் கூறல்,
ற்படல் ணையில் இறைவனடி சேரல்.
சபாபதிச் செட்டியாரால் ஈமக்கிரியை பட்டு, சந்தனக்கட்டை மேல் திருவுடல்

Page 315


Page 316