கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.03

Page 1
50வது ஆண்டை நோக்கி.
ÄR LID6SI6
காலத்தின் ம பதிவு செய்யும் 2
Lonfié 2011
 

SSàS :
9 ̧ါi.JA : டெலிகிர், ஜீலn
திப்பீடுகளைப் ஊடகவியலாளன்!
olandou - 4o/=

Page 2
திருடீன சேவை
15 வருடத்திருமணசேவை நிறைவினை மூன்னிடிடு வேல் அழுதன் பாரிய சேவைக் கடிடனக் குறைப்பு
lsb:
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், சுயதெரிவுமுறை
முன்ாேழ. முத்த புகழ் பூத்த, சர்வதேச, சகலருக்கு மான திருமா ஆலோசகர் / இற்றுப்படுத்துநர் குரும்ப சி.யூர் , மாயழ வேல் முதறுடன் திங்கள், புதன் litiúil Dhaitliu ilbhli, gídíl, bhfuil]] [bbridíLGfhill லேயே தயங்காது தொடர்புகொள்ளலாம்
65698 lé: 2360488/ 2.360694/4873929
BibŠľ1j:. முன்னேற்பாடு ஒழுங்குமுறை
முகவரி: 8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக, நிலப் பக்கம், 33ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு-06
துரித- சுலபமணமக்கள் தெரிவுக்குச் சாலச் சிறந்த முறை சுயதெரிவுமுறையே ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெமுவேல் அமுதனே:
 
 
 
 
 
 
 

இதற்குத் தானா, நாடு பூராவும் ل)
இரவிரவாக அலைந்து திரிந்தோம்?
மிகப் பிரக்தியாதி பெற்று உலகப் பிரதிநிதித்துவப் பிரபலத்துடன் நிறைவெய் திய சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நினைத்துப் பெருமிதத்துடன் பூரித்திருக்கும் இந்த வேளையில், நமது நாட் டுத் தமிழ் இலக்கிய உலகின் தற்போதைய சூழ்நிலையையும் நாம் கொஞ்சம் கவனத்
'ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திர தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா ட்டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இட பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ்
தில் எடுத்துப் பார்க்க வேண்டியேயுள்ளது.
இன்று வாரா வாரம் ஒன்றுக்கு மேற் பட்ட நூல்கள் வெளிவந்த வண்ணமே வரவு காட்டி நிற்கின்றன. அதனது வெளி யீட்டு விழாக்களும் சும்மா ஜாம். ஜாம் என நடந்தேறி வருகின்றன. தொலைக் காட்சிகளிலும் தினசரிகளிலும் நூல்களின் வெளியீட்டு நிகழ்ச்சித் தகவல்கள் பாமர மக்களிடம் போய்ச் சென்றடைவதற்குப் பெரும் பங்கு ஆற்றுகின்றன.
ஆழமாகவும் நிதானமாகவும் சிந்தித் துப் பார்த்தால், இந்த வளர்ச்சியும் பிரபல மும் இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கிய மான சூழ்நிலையை உருவாக்குவதற்
செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்கா ஆவணப்படுத்தியுமுள்ளது- அத்துடன்
காகத்தான் பயன்படுகின்றனவா? என யோசிக்கும் வேளைகளில், நாம் இதற்குப் பதில் சொல்லாமல் மெளனம் சாதிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தான் தள்ளப்பட்டு விடுகின்றோம்.
காரணம், இலக்கிய ஆழம் மலினப்
201/4, Sri Kathiresan St, Colombo - 13.
Tel: 2320721
mallikaijeevaGyahoo.com
பட்டு விட்டதுடன், நவீன சாதனங்களின் ஆதிக்கமும், வசீகரமும், துரிதமும் உண் மைப் படைப்பாளிகளைப் பின்னுக்குத்
தள்ளி விட்டதோ என மெய்யாகவே எனக்
கொரு சந்தேகம், சமீப காலமாக என் நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கும் ஒரே

Page 3
யொரு கேள்வியாக என் நெஞ்சில் தொக்கி நின்று, என்னை அடிக்கடி அரித்துக் கொண்டேயிருக்கின்றது.
நவீன சாதனங்களின் பயன்பாட்டின் சுலபத்தால் மலின எழுத்தாளர் பல்கிப் பெரு கியதுடன், அவர்களது நூல்கள் அடிக்கடி வெளிவர வாய்ப்பும் பெருகியுள்ள துடன், வசதி படைத்தவர்களை அணுகி, அதற் கொரு வெளியீட்டு விழாவையும் நடத்தி, முடித்து விடுகின்றனர்.
- இந்த மலினப் பெருக்கம் நமது இலக் கியத்தின் எதிர்கால வளர்ச்சியை எங்கே கொண்டு சேர்த்து விடுமோ என்ற இயல் பான மனப் பயத்தில் தவிக்கின்றேன்.
இன்று இளந் தலைமுறையினர், பல் கலைக்கழகப் பட்டதாரிகள், ஆர்வமிக்க இளம் பெண்கள் எனப் பலரும் படைப்புல கில் கால் பதிக்க முயன்று முயற்சித்து வரு கின்றனர். வரவேற்கத்தக்கதுதான்.
ஆனால், இந்தப் படைப்புத் துறையில் நின்று, நிலைத்து, எதிர்காலத்தில் பெயர் பதிக்க வேண்டுமென்ற ஆத்மக் கொதிப்பு, இவர்கள் பலரிடம் காணப்படவேயில்லை. சிறிது காலம் எழுதுகின்றனர். பின்னர் தமது படைப்புகளைத் தொகுத்து நூலொ ன்றை வெளியிடுகின்றனர். வெளியீட்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி, நடத்தி முடிக்கின்றனர்.
-அதன் பின்னர் அவர்கள் இயல்பா கவே காணாமலே போய் விடுகின்றனர். எந்தவொரு இலக்கிய விழாவிலும் கூட்டங் களிலும் இவர்களினது தலைக் கறுப்பே தெரிவதில்லை. காண முடிவதில்லை!
இப்படியாக இடைநடுவில் காணாமலே போய் விடுவதற்காகவா இவர்கள் இலக் கிய உலகில் பிரவேசிக்கின்றனர்? என
எண்ணத் தோன்றுகின்றது.
இன்றும் எனக்கு நல்ல ஞாபகமாக இருக்கின்றது. மன்னாரில் ஒர் இலக்கியக் கூட்டம். பிரதம பேச்சாளராக என்னையும் அழைத்திருந்தனர்.
*G3LursmLoG36u síslLG6 6ísl(6036hJTLorr?" 6T6oT மனசு மறுத்தது. "இல்லையில்லை, இத் தனை தூரம் ஆர்வமுடன் அழைத்தவர்க ளினது அழைப்பை அலட்சியம் செய்யக் கூடாது! என்ற எண்ணத்துடன் பகல் பஸ் ஏறி மன் னார் சென்றேன்.
வழியில் ஏற்பட்ட தடங்கலால், பிரயா ணம் தாமதப்பட்டு விட்டது. அழைக்க வந்த வர்கள் திரும்பிப் போய் விட்டனர்.
கையுடன் கொண்டு வந்த பேப்பரை விரித்து ஒரு தேநீர்க் கடைப் படியில் தலை சாய்த்துக் கிடந்தேன், இரவு முழுவதும்.
நடுச் சாமத்தைத் தாண்டியிருக்கும். பசி, தாகம், கண்ணயர மறுத்தது, அலுப்பு நிரம்பிய தேகம்.
மெதுவாக எழும்பி, தட்டித் தடவிப் பார் த்தால், பழங் கிடாரம் ஒன்றில் தண்ணீர் அடி ஆழத்தில் தட்டுப்பட்டது.
அள்ளியள்ளி நெஞ்சு குளிரக் குடித்து வைத்தேன். முகத்தையும் சோர்வு அகலக் கழுவிக் கொண்டேன். களைப்புத் தீர்ந்தது. விடிந்து பார்த்தால்- தேநீர்க் கடையில் அழுக்கெல்லாம் கழுவித் தேக்கி வைக்கும் தண்ணிர்க் கிடாரமாக அது தென்பட்டது.
இத்தளை இலக்கிய அர்ப்பணிப்புக்களு கிடையே மனச் சங்கடம் என்னவென்றால், எனது ஒப்புதல் இல்லாமல் கூட, எனது இல க்கிய நாமம், புத்தக வெளியீட்டுத் துஷ்பிர யோகம் செய்யப்படும் அவல நிலை தான்!
- இதை யாரிடம் சொல்லி அழுவது?


Page 4
அடீடைப் படம்:
கற்றுக் கொண்டிருக்குச் இதழியல4வுfதேவராஜ்
-முருகபூபதி
“எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?
இந்தக் கேள்வியைப் பல வருடகாலமாக மிகுந்த பரிவோடு தனது அருமை மகனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார், ஒரு தாயார். இக்கேள்வியின் தொனிப்பொருள் காலம் காலமாக எம்மத்தியில் பேசு பொருள்தான்.
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு- என்று எம்முன்னோர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று இந்த கணினி யுகத்திலும் நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.
பசுமையும் குளிர்மையும் நிரந்தரமான மலையகப் பிராந்தியத்தில் பதுளையில் நாரங் களை என்ற கிராமத்தில் பிறந்து, அங்கே தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் கந்தேகெதரவில் இயங்கிய பாடசாலைக்குச் சென்று, அங்கிருந்து பதுளை சரஸ்வதி வித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் பயின்று, சித்தியடைந்து யாழ். பல்கலைக் கழகத்தில் பிரவேசித்து, இதழியல் துறைக்குள் வந்து தற்போது வீரகேசரி வாரவெளியீடு களுக்கான பொறுப்பாசிரியர் பதவியிலிருக்கும் தேவராஜ் அவர்களை அவரது தாயார் இன்றும் கேட்கும் கேள்விதான் மேலே குறிப்பிட்ட "எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?"
ஆம். தேவராஜ் படித்துக் கொண்டுதானிருக்கிறார். இதழியல் மட்டுமல்ல, சமூகத்திலும் அரசியலிலும் கலை, இலக்கிய ஊடகத்துறையிலும் படித்துக் கொண்டே இருக்கிறார். அவரைப் பொறுத்தளவில் இது முற்றுப் பெறாத பயணம் தான்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு தான் ஒரு மருத்துவராக, பொறியிலாளராக, கணக்காளராக சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற கனவு என்றைக்கும் இருந்த தில்லை. ஒரு ஆசிரியராக வேண்டும் என்ற விருப்பம் ஆரம்பப் பாடசாலையில் கற்கும் காலத்திலேயே இவருக்கு இருந்தமையால், தனது கனவைக் கல்வி சார்ந்தே வளர்த்துக் கொண்டிருந்திருக்கிறார். சிறு வயதில் சகமாணவ நண்பர்களுக்கு பாடங்களில், பரீட் சைக்கான காலங்களில் உதவும் மனப்பாங்கு, ஆசிரியராக வேண்டும் என்ற கனவையே மெய்ப்படுத்த விரும்பியிருக்கிறது.
மல்லிகை மார்ச் 2011 & 4

பேராசிரியர் க.கைலாசபதி யாழ். பல்கலைக்கழக வளாகத் தலைவராகப் பதவியேற்ற காலப் பகுதியில் தேவராஜ் அங்கே வரலாறு படிக்க வந்தார். பட்ட தாரியாகி ஒரு ஆசிரியராகவோ விரிவுரை யாளராகவோ வந்திருக்க வேண்டியவர், எண்பது ஆண்டுகால ஆயுளுடன் விருட்ச மாக வளர்ந்துள்ள வீரகேசரியின் வாரவெ ளியீட்டுக்கு வரும் படைப்புகளைப் படித்து பிரசுரத்துக்குத் தேர்வு செய்து கொண்டி ருக்கிறார்.
படைப்புகளை தேர்வு செய்வதும் ஒரு கலைதான். இக்கலையை இவர் இளம் பராயத்திலேயே கற்றுக் கொண்டு, தன்னை வளர்த்திருக்கிறார். தேவராஜின் மலையக இல்லத்திற்கு அருகாமையில் வசித்த சிதம்பர ஈஸ்வரக் குருக்கள் வீட்டில் இரு ந்த நூலகத்தை நன்கு பயன்படுத்தியிருக் கிறார். அங்கே, பெரியாரின் எழுத்துக்கள், மற்றும் திராவிடக்கழக இலக்கியங்கள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன.
இவருக்கு மட்டுமல்ல, இன்று பவள விழாக் கண்ட பலருக்கும் ஆரம்புத்தில் திரா விட இயக்க இலக்கியங்களும் எழுத்து க்களுமே ஆதர்சமானவை என்பது புதிய செய்தியல்ல. நாரங்களையில் திண்ணை யில் அமர்ந்து பெரிசுகள் மகாபாரதமும் இராமாயணமும் நல்லதங்காள் கதையும் கேட்டுக் கொண்டிருந்தபோது "சிறிசான தேவராஜ் விடிய விடிய காவிய கதாபாத் திரங்களின் சித்திரிப்பின் சுவாரஸ்யத்தில் மூழ்கினார்.
ஐந்தாம் வகுப்பிலேயே கவிதை எழுதுவதில் ஆர்வம் காட்டிய இவருக்குக் காலப் போக்கில் செ.கணேசலிங்கனின்
'குமரன்’ இதழ்கள் வரப் பிரசாதமாகியி ருக்கின்றன. அதில் வெளியான பாட்டாளி வர்க்கக் கவிதைகள், மலையகத் தோட்டப் புறங்களில் தொழிலாளர் குடும்பங்களின் உள்ளக் குமுறல்களை உணர்த்தியத னால் சமூகம் குறித்த தனது பார்வையை விசாலப்படுத்தியிருக்கிறார்.
தோட்டத் தொழிலாளர்களின் உரி மைப் பிரச்சினைகளை சுவரொட்டிகளில் எழுதி தோட்ட நிருவாகத்தினது கண் காணிப்புக்கும் ஆளாகியிருக்கிறார். சோவியத்நாடு மற்றும் இன்றைய சீனா முதலான இதழ்களை தபாலில் வரவழை த்துப் படித்திருக்கிறார்.
கல்வியைக் கற்பதிலும் நூல்களைப் படிப்பதிலும் இவருக்கு இருந்த ஆர்வம் ஒருபுறமிருக்க, சமூகம் தொடர்பான சிந்த னையும் நாளுக்கு நாள் வளர்ந்திருக் கிறது. தன்னைவிடப் பதினைந்து வயது மூத்த ஒரு இளைஞனின் வாழ்வு சீரழிந்து கொண்டிருந்தபோது, அவனை அரவணை த்து திருத்துவதற்கும் முயன்றுள்ளார். தோட்டத்தில் நடக்கும் சிறுசிறு களவுக ளுக்கெல்லாம் கைதாகும் அந்த இளை ஞன் 17 தடவைகள் தற்கொலை செய்து கொள்வதற்கும் முயன்றிருக்கிறான். அவனை திருத்துவதற்கு முயன்ற காலங் களில் தனது படிப்பறிவு அனுபவங்க ளையே பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார்.
யாழ். பல்கலைக்கழக பிரவேசம் தனது வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று சொல் லும் தேவராஜ், தமது பல்கலைக்கழக வாழ்விலும் பல சமூகப் பணிகளில் ஈடுபட்டி ருக்கிறார். குறிப்பாகக் கிழக்கு மாகாணத் தில் சூறாவளி அனர்த்தங்கள் நிகழ்ந்த
மல்லிகை மார்ச் 2011 & 5

Page 5
போதும், கைதடியில் சாதிப் பிரச்சினைகள் தலைவிரித்தாடிய போதும் சக மாணவ நண்பர்கள் மற்றும் விரிவுரையாளர்களு டன் களத்திலிறங்கியிருக்கிறார். பல் கலைக்கழக மாணவர் அமைப்பிலிருந்த போது, தேசிய இனப் பிரச்சினையும் கூர் மையடைந்திருந்மையால் நிதானமாக இயங்க வேண்டியிருந்திருக்கிறது.
"எவ்வளவு காலம் படிக்க வேண்டும்’ என்ற மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியை மலையகத்திலிருந்து அடிக் கடி கேட்டுக் கொண்டிருக்கும் அருமைத் தாயாரின் கனவை நனவாக்க வேண்டிய தேவராஜ், சமூகம்-கல்வி இவை இரண் டுக்கும் இடையே தான் எந்தத் திசை நோக் கிச் செல்லப் போகிறேன் என்பதில் தெளி வோடு இருந்தமையால் வரலாற்றுத் துறை யில் கற்றுக் கொண்டே தொல்பொ ருள் ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண் டார். பேராசிரியர் இந்திரபாலா, விரிவுரை யாளர் ரகுபதி ஆகியோருடன் ஆனைக் கோட்டையில் தொல்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். கி.பி.13 ஆம் நூற்றாண் டில் தமிழர்கள் இப்பிரதேசத்திவ் வாழ்ந்தி ருக்கிறார்கள் என்பதை நிரூபிக் கும் சான் றாதாரங்களைக் கண்டெடுத்திருக்கிறார். ஒரு வரலாற்றுச் சின்னத்தை பேராசிரியர் கைலாசபதியின் கரத்தில் வைத்து எடுத்த ஒளிப்படத்தை தேவராஜ் காண்பித்த போது, அதனைப் பார்த்து வியந்து போனோம்.
ரகுபதியுடன் அகழ்வாராய்ச்சிகளுக் காக அலைந்து திரிந்த அக்காலப் பகு தியை தம்மால் மறக்க முடியாது என்று கண்கள் மின்னிடச் சொன்னார்.
லயன்ஸ் கழகத்திற்காக தேவராஜ்
தயாரித்துக் கொடுத்த திட்டம் ஒன்றும் மிகு ந்த பாராட்டுதல்களைப் பெற்றுக் கொடுத் திருக்கிறது. ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் தமது பரீட்சைகளில் கூடுதலான பலனைக் குறைந்த செலவில் விரைவில் பெற்றுக் கொள்ளத்தக்க திட்டம் ஒன்றைத் தேவ ராஜ் வடிவமைத்துக் கொடுத்து, லயன்ஸ் கழக நிருவாகத்தின் நன்மதிப்பையும் பாரா ட்டையும் பெற்றிருக்கிறார்.
இளம்பராயத்திலிருந்தே தேடல் மனப் பான்மையுடன் இயங்கியவர், இதழியலி லும் தரமான படைப்பாளிகளைத் தேடிக் கொண்டிருப்பதனால், அசெளகரியங் களையும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. இதழுக்கு வரும் படைப்புகளை 'எடிட்' செய்யத் தெரியாத ஒருவர் எடிட்டராக இருக்க முடியாது. அவரிடம் பிரசுரத்துக்கு ஏதும் படைப்புகளை அனுப்பிவிட்டு 'ஒரு வசனத்தையும் வெட்டாமல் அப்படியே பிரசுரியுங்கள்'- என்று ஒருவர் கேட்டுக் கொண்டால், 'அப்படியானால் தான் எதற்கு இந்தப் பதிவிலிருக்க வேண்டும்" என்று திருப்பிக் கேட்பவர், தேவராஜ்,
இதழியலில் சமரசம் என்பது பற்றி தேவ ராஜிடம் விவாதித்தால், அவர் பல சுவாரஸ் யமான சம்பவங்களையும் தகவல்களை யும் சொல்லுவார். இதற்காகவே நாம் தனி
யாக ஒரு கருத்தரங்கை நடத்தலாம்.
இதழியலில் வளரக் கூடியவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி களம்கொடுப்பதிலும் தேவராஜ் கைதேர்ந் தவர்.
உதாரணத்துக்கு வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமாகும் நான் சித்தன்' கேள்வி- பதில் பகுதி. உலகெங்கும்
மல்லிகை மார்ச் 2011 $ 6

இதனை வாரந்தோறும் தவறாமல் படிக்கும் வாசகர்கள் அநேகர். குறிப்பிட்ட பக்கங்கள் தனிநூலாகவே வெளிவந்திருக்கும் தகவல் தெரியாத பலர் வாராந்தம் ஞாயிற்றுக் கிழமை வந்ததும் வீரகேசரி வாவெளியீட் டில் அதனைப் படித்த பின்னர் பக்குவமா கக் குறிப்பிட்ட பக்கத்தைக் கத்திரித்து எடுத்துப் பேரேடுகளில் ஒட்டி வைத்து வீட் டுக்கு வருபவர்களிடம் காண்பித்து படிக்கக் கொடுப்பதையும் பார்த்திருக்கிறோம்.
குறிப்பிட்ட கேள்வி- பதில் நான் சித்தனை இதழியலில் அறிமுகப்படுத்திய பெருமையும் தேவராஜ் அவர்களை சாரும்.
மலையகத்தில் பிறந்து வளர்ந்த இவ ருக்கு மலையக இலக்கியத்தின் வளர்ச் சியில் மற்றுமொரு பரிமாணத்துக்கு மலை யகப் படைப்பாளிகள் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறையவே இருக்கிறது. மலையகப் படைப்பாளிகள் நிறுவனரீதி யாக இயங்கிப் பல பணிகளை முன்னெ டுக்க வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அது ஒரு வகையான TeamWork தேவராஜ் இது விடயத்தில் மலை யகப் படைப்பாளிகளுடன் இணை ந்து ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண் டிய காலத்தின் தேவையும் இருக்கிறது.
அவுஸ்திரேலியா உட்பட பல ஐரோப் பிய நாடுகளுக்கு பயணித்துள்ள தேவராஜ், தொடர்ந்தும் சமூகம், அரசியல், கலை, இலக்கியம், ஊடகம். என்று தேடல் மனப்பான்மையுடனேயே இயங்குவதனால் இன்றும் கற்றுக் கொண்டுதானிருக்கிறார்.
"இன்னும் எவ்வளவு காலம் படிக்க வேண்டும்?” என்று அவரது தாயார் இன் றும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்.
N Happy
PHOTO
Excellent Photographers Modern Computerized
Photography
FOrლ Wedding Portraits & Child Sittings
N
N
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15. Tel: 2526345
Š
နုံ\န်ုŚ
Debans Lorš 2011 š7

Page 6
qgoq || || || || || சுவடுகள்
-க. கோபாலப்பிள்ளை
கொழும்பு மாநகரின் பிரபல்யமிக்க ஹோட்டலொன்றின் திருமண மண்டபம். வாயிலில் உயர்ரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, வந்த வண்ணமி ருந்தன. அப்படி வருவோர், உயர்தர வாழ்க்கை முறை கொண்டவர்களென்பதை அவர்தம் ஆடை அணிகலன்களே பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. மண்டபத்தின் உள்ளே, எம்மவரின் திருமணத்திற்கான அடையாளத்தைக் காட்டும் மேள வாத்திய இசைகளோ, அலங்காரங்களோ எதுவுமே காணப்படவில்லை.
அங்கே சிங்கள- தமிழ்க் கலப்புத் திருமணமல்லவா நடைபெறுகிறது மாப்பிள்ளை கதிரவன் ஓர் எஞ்சினியர், தமிழன். பெண், அவனுடன் அதே பல்கலைக்கழகத்தில் வேறொரு துறையில் கற்ற சிங்களப் பெண். அந்த மண்டபத்தில் வந்திருப்பவர்களில் இரண்டு வீதத்தினர் கூடத் தமிழர்களாக இருப்பார்களோ என்பதே சந்தேகம் தான். ஏனையவர்கள் சிங்கள இனத்தவர்கள். மாப்பிள்ளையும் பெண்ணும் பல்கலைக்கழகத்தில் கற்ற காலத்திலேயே தமது திருமணத்தைத் தீர்மானித்து விட்டிருந்தனர். தொழில்துறைசார் அந்தஸ்தில் மாப்பிள்ளை உயர்ந்து நின்றதால், பெண் வீட்டாரும் மகளின் விருப்புக்கு மறுப்புத் தெரிவிக்கவில்லை. மாப்பிள்ளையின் தந்தை சங்கரப்பிள்ளையர் நீண்டகாலமாகவே கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததால், பொருளாதார நிலையில் வளமிக்கவராக விளங்கினார். பெண் வீட்டாரும் தொழில் துறையிலும் பொருள் வளத்திலும் உயர்ந்து நின்றனர். எனவே, இவற்றை விஞ்சிய இன, மத, சாதி வேறுபாடுகளை இரு பகுதியினரும் பொருட்படுத்தவில்லை.
திருமணச் சடங்குகள் நடைபெற்றன. அவை யாவுமே சிங்களத் திருமண நடைமுறைகளாகவே இடம்பெற்றன. சகலவற்றிலுமே விட்டுக் கொடுத்த மாப்பிள்ளை வீட்டாருக்கு, அவர்களின் முறைப்படி தாலிக்கொடியைக் கட்டும் வாய்ப்பு மட்டும் வழங்கப்பட்டிருந்தது. எனவே, சிங்கள முறையிலமைந்த சங்கிலிக்குப் பதிலாக தாலிக் கொடியைக் கட்டி மகிழ்ந்தார், மாப்பிள்ளை. மாப்பிள்ளையின் பெற்றோருக்கும் அதிலொரு திருப்தி. தங்கள் பண்பாடு, கலாசாரத்தில் ஒரு சிறு பகுதியையாவது காப்பாற்றி விட்டோமே, என்ற மனத் திருப்தி. மண்டபத்தைச் சுற்றி, வந்தவர்களைச் சந்தித்துக் கொண்டு வந்த மணமகனின் பெற்றவர்களுக்கு இந்தப் பெரிய கூட்டத்தில் தங்கள்
LDeibsSeous Lorrirë 2011 靡 8
 

இனத்தவர், உறவினர் என்று சொல்லும ளவிற்கு மிகச் சிலரே வந்திருப்பது சற்று வேதனையை அளிக்காமலில்லை. அவர் களது சார்பில் வந்தவர்களிலும் உறவினர் என்று சொல்லுவோர் ஒரு சிலரே. ஏனை யோர் தொழில்முறை நண்பர்கள் என்று கூறக் கூடியவர்களே. திருமணச் சடங்கை யும், சடங்குகளின் போது சங்கரப்பிள் ளையரும் மனைவியும் ஒரங்கட்டப்பட்டது போன்று, ஒதுங்கி நிற்பதையும் கண்டு வேதனைப்பட்டுக் கொண்டிருந்த சங்கரப் பிள்ளையின் பாலிய நண்பர் வேலாயுதத் திற்கு பழைய நினைவுகள் மனத்திரையில் ஒடத் தொடங்கின.
来来来
யாழ்ப்பாணத்தின் கொக்குவில் கிரா மத்தில் மஞ்சவனப்பதி ஆலயத்தை ஒட் டிய ஒழுங்கையில் தான் சங்கரப்பிள்ளை யரின் வீடு. இளவயது முதலே, கொழும்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததால், மனை வியையும் மகன் கதிரவனையும், மகள் இனி யவளையும் ஊரிலேயே அவர் விட்டிருந் தார். அன்றெல்லாம் யாழ்ப்ப்ாணத்துக்குப் புகையிரத சேவை சிறந்த முறையில் இருந்தமையால், இரண்டு கிழமைகளுக் கொரு முறை வந்து செல்வது அவரது வழக்கம். ஆனால், நாட்டு நிலைமைகள் மாற்றம் பெற்று புகையிரத சேவை இல்லா மல் போய் கப்பலென்றும், வான் சேவை என்றும், விமான சேவை என்றும் ஆனபின் பிள்ளைகளும் கொஞ்சம் வளர்ந்துவிட, இரண்டு மாதம், மூன்று மாதங்களுக் கொரு முறை என, வந்து போகும் வழக் கத்தையும் மாற்றிக் கொண்டிருந்தார், சங் கரப்பிள்ளையர்.
வீட்டருகிலேயே கொக்குவில் இந்துக் கல்லூரி இருந்தும் கூட, மகனை சென்ற். ஜோன்ஸ் கல்லூரியில் படிக்க வைத்த சங்கரப்பிள்ளையர், மகளையும் சுண்டிக் குளி மகளிர் கல்லூரியில் சேர்த்திருந்தார். கல்லூரியில் படிப்பதைவிட, பிரத்தியேகக் கல்வி நிலையங்களிலும் படித்தால் தான் பிள்ளைகள் உயர் புள்ளிகளைப் பெறுவார் கள் என்ற சிந்தனை பெற்றோரிடத்தில் வளர்ந்து வந்த காலம் அது. சங்கரப்பிள் ளையர் குடும்பமும் இதற்கு விதிவிலக்கா என்ன? கதிரவனும் காலை மாலை என பிரத்தியேக வகுப்புக்களுக்குப் போய் வந்தான். அவன் கல்லூரியிலும் சரி, கல்வி நிலையத்திலும் சரி மிகக் கெட்டிக்கார னாக விளங்கினான். கல்வி நிலையத்தில் அவனுக்கு இணையாக காவியா என்ற மாணவியும் பயின்று வந்தாள். அவள், கொக்குவிலுக்கு அயல் கிராமமான கலட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவள். சிறந்த மாணவ, மாணவி என்ற வகையில் அவர் களிடையே நட்பு மலர்ந்தது. இருவரும் தம்மிடையே குறிப்புப் புத்தகங்கள், பாடப் புத்தகங்கள் எனப் பரிமாறிக் கொண்டனர். கல்வி நிலையத்தில் ஏற்பட்ட நட்பு காவியா, கதிரவன் வீட்டிற்கும், கதிரவன் காவியா வீட்டிற்கும் தேவையின் பொருட்டு போய்வ ரும் அளவிற்கு நெருக்கத்தை ஏற்படுத்தியி ருந்தது. அன்றைய நாட்டு நிலைமைக ளால் ரியூசன் வகுப்புக்களும் சரி, பாடசா ல்ைகளுக்கும் சரி பிள்ளைகள் சைக்கி ளையே தங்கள் பிரயாணத்துக்கான வாக னமாகப் பாவித்துக் கொண்டிருந்தனர்.
ஆரம்பத்தில் அதிகம் கண்டு கொள் ளாத சங்கரப்பிள்ளையரின் மனைவி கன காம்பிக்கைக்கு, நாளாக நாளாக "இந்த
மல்லிகை மார்ச் 2011 & 9

Page 7
நட்பு எங்குகொண்டு போய் விடுமோ? என்ற மனக்கிலேசம் ஏற்படத் தொடங்கியது. காவியா யார்? எந்த இடத்தைச் சேர்ந்த வள்? பெற்றோர் யார்? என்ன சாதி, சனம்? என்பதை அறியும் ஆவலையும் அவளுக் குத் தூண்டியது. அவளது மனக்குழப் பத்திற்குத் தீனி போடும் வகையில் அயல வர்களும் அரசல் புரசலாகச் சந்தேகத் தீயை பரப்பிவிடத் தொடங்கினர். இறுதி யில் அவர்களது உறவுக்காரப் பெண் பார் வதி முழுமையாகவே கனகாம்பிகையைக் குழப்பிவிட்டாள்.
"எடி கனகாம்பிகை, உன்ரை பொடிய னிட்டை சைக்கிளில வாற பெட்டை கலட் டியாளாம். அவளின்ரை தேப்பன் அங்கி னேக்க கூலிக்கு வேலி விராய் அடைக்கிற வனாம். வீடும் மேயிறவனாம். அவங்கள் பள்ளராமடி. இவன் ஏன் அவளோடை சைக்கிள்ள சரிசமமா திரியிறான்? அவ ளும் இங்கை வாறாள், போறாள். இந்தத் தொடர்பை நிப்பாட்டப் பார். ஏதும் ஏறுக்கு மாறாப் போச்சுதெண்டா எங்கட சாதி, சனம் காறித் துப்பும்" என்றவாறாக தான் அறிந் ததோடு கூட்டியும் குறைத்தும் கனகாம்பி கையின் காதில் போட்டாள், பார்வதி.
"அக்கா, இதை ஆரோடையும் நீ கதைக்காதை. ஊருலகத்தில உள்ள சனத்துக்குத் தெரிஞ்சா எங்களைப் பாத்து எப்பிடி யெல்லாமோ சிரிக்கப் போகுது. ஏனிந்தப் பொடிக்கு புத்தி குறுக்காலை போகுதோ ஆற்றை கண் பட்டுதோ இந்தக் குடும்பத்துக்கு” என்றவாறு அழத் தொடங்கி விட்டாள், கனகாம்பிகை.
"என்னடி விசர்க் கதை கதைக்கிறாய். நானேனடி சொல்லப் போறன்? எங்கடை
பல்லைக் குத்தி நாங்களே மணக்கிறதே? ஆனா, உங்கை எல்லாருந்தான் கதைக் கத் தொடங்கியிருக்கினம். உனக்கு முன் னாலை கதைக்காயின. ஆனபடியா, கெதியா ஏதாவது முடிவு கட்டப் பார்!’ என்று சொல்லியவாறே, பார்வதி வெளியேறினாள்.
அன்று மாலை தாய்க்கும் மகனுக்கும் பெருத்த வாக்குவாதம். கதிரவனோ, 'ஒன்றாகப் படிக்கிறம்; பழகிறம். ஏதும் புத்தகம், கொப்பி தேவை எண்டா நான் போய் வாங்கிறன். அவளுக்கு அவசரம் ஏதும் தேவையெண்டா இங்கை வந்து என் னட்டை வாங்கிறா. நாங்கள் ஒண்டாப் படிக்கிறதுக்கும் சாதிக்கும் என்ன சம்பந் தம் அம்மா? ஏன் இதை விளங்கிக் கொள் ளுறிங்க இல்லை? அதோடை நான் அவளின்ரை வீட்டுக்கு உள்ளே கூடப் போறேல்லை. அது மாதிரி அவளும் எப்பா லும் வீட்டுக்கை வந்தவளே?” என்று பல வாறாக கதிரவன் எடுத்துச் சொல்லியும் கனகாம்பிகை ஆறுதலடைவதாயில்லை. மீண்டும் மீண்டும் ஒன்றைப் பற்றியே பேசினாள்.
"நீ அவளோடை இனிமேல் கதைக்கக் கூடாது. அவள் இங்கையும் வரக் கூடாது. நீயும் அவளின்ரை வீட்டுக்குப் போகக் கூடாது" இதையே ஒப்பித்துக் கொண்டி ருந்தவளுக்கு, தான் சொல்லாமல் மறை த்து, புருசனுக்குத் தெரிய வந்தால் நிலைமை விபரீதமாகிவிடும் எனப் பயம் பற்றிக் கொண்டதால், புருசனுக்கு இதைத் தெரிவிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். ஆனால், இதையே தெரிவித்து வரச்சொன்னால், வந்த உடனேயே மனுசன் சந்நதம் ஆடத் தொடங்கிவிடும். ஏதேனும் வேறை காரணத்தைச் சொல்
மல்லிகை மார்ச் 2011 & 10

லித்தான் வரவைக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
சில தினங்களின் பின் சங்கரப்பிள் ளையர் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. தகவல் கிடைத்து வந்த சங்கரப்பிள்ளை யருக்கு மனைவி மெல்ல மெல்ல நடந்த வற்றைச் சொல்லிவிட்டாள். அவர்கள் பழக்கத்தில் உள்ள உறவு என்ன, வெறும் நட்புத்தானா? அதற்கு மேலும் ஏதும் 2600TLIT? 6T6öTLu605Quebeomb ஆற ՖյԼDՄ ஆராயும் பொறுமை அவரிடம் இருக்கவி ல்லை. உருத்திரத் தாண்டவம் ஆடத் தொடங்கினார். மனைவியைத் திட்டித் தீர்த்தார். கதிரவன் எவ்வளவோ சொல்லி
யும் கேட்காது, அவனைக் கைநீட்டிக்
கண்டபடி அடித்தும் விட்டார்.
'உன்ரை பிள்ளை வளர்ப்பாலை தானடி நான் தலை குனிய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கு? நீ சரியா இருந்தி ருந்தா இதுகள் தலைகால் தெரியாமல் நடத்திருக்குமே? பிள்ளையள் எங்கை போகுது, யாரோடை பழகுது, வாறது போறது ஆர் எண்டு கவனிச்சிருந்தா இப் பிடியெல்லாம் நடந்திருக்குமேடி? நான் அங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்சு அனுப்ப, இங்க திண்டு திண்டு கொழுத்ததல்லாம வேறை என்னடி செய்தனி?' வந்தபடியெல் லாம் திட்டித் தீர்த்தவாறே கோபமாக வெளியேறினார், சங்கரப்பிள்ளையர்.
வீட்டை விட்டு வெளியேறியவருக்கு ஒரே பதற்றமும் படபடப்பாகவுமிருந்தது. எங்கே போவது, என்ன செய்வதென்ப தையே தீர்மானிக்க முடியாது குழம்பிய நிலையில் நடக்கத் தொடங்கினார். கால்போன திசையில் நடந்தவர், சுயநி னைவு வந்தவர் போல, மஞ்சவனப்பதி
ஆலய வாசலில் நிற்பதை உணர்ந்தார். சற்று நேரம் ஆலய மண்டபத்தில் இருந்து சிந்திக்கத் தொடங்கினார். மனதில் சற்றுத் தெளிவேற்பட்டபோது, நண்பர் வேலாயுத தின் ஞாபகம் வரவே, அவரது வீட்டை நோக்கி நடக்கலானார். இவர் சென்ற வேளை, வேலாயுதமும் வீட்டிலேயே இருந்தார். அங்கு வேறும் சிலர் இருந்த தால், அவரை அழைத்துக் கொண்டு மீண் டும் ஆலய மண்டபத்திற்கே வந்து தனது மனதிலுள்ளவற்றை ஒன்றுவிடாமல் கொட் டித் தீர்த்தார்.
சங்கரப்பிள்ளையர் சொன்னதையெல் லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந் தார், வேலாயுதம். அவரது அமைதி சங்கரப் பிள்ளைக்கு எரிச்சலையூட்டியது.
'என்னடாப்பா, நான் எவ்வளவோ பெரிய பிரச்சினையைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறன், நீகொழுக்கட்டையை வாயுக்கை வைச்சவன் மாதிரி ஒண்டு சொல்லாம இருக்கிறாய்?" எனச் சீறத் தொடங்கினார்.
"என்னத்தைச் சொல்லுறது? நானும் பலமுறை உன்ரை மோனும் அந்தப் பெட் டையும் சைக்கிளுகளில போறதைக் கண் டிருக்கிறன். அதை மாதிரி வேறை பொடி யள் பொட்டையஞம் போகுது, வருகுது. அந்தப் பெட்டை மட்டுமில்லை. வேறை பெட்டையஞம் உன்ரை மகனோடை கதைச்சபடி சைக்கிளில போறதைக் நான் கண்டிருக்கிறன். இது இப்ப இங்க சகஜம். நீகொழும்பே தஞ்சம் எண்டு கிடக்கிறதால, இங்கத்தே நடப்பு உனக்குத் தெரியேல்ல. என்ரை பொடியனோட படிக்கிற பொடி பொட்டையள் வீட்டுக்கு வந்து போகுது. என்ரை பொடியனும் அவயளின்ரை வீட்டு
மல்லிகை மார்ச் 2011 & 11

Page 8
க்குப் போறான், வாறான். நான் அதைப் பெரிசாக்க இல்லை. ஏனெண்டா களங்க மில்லாத அதுகளின்ரை மனதை நாங்கள் காயப்படுத்தி விடக் கூடாதெண்டுதான். அதுகளின்ரை மனசில இல்லாத ஒண்டை நாங்களே ஏற்படுத்திவிடக் கூடாது" என்று நீண்டதொரு விளக்கத்தை வேலாயுதத் தார் முன் வைத்தார்.
வேலாயுதத்தார் சொல்லும் யதார்த்த மான நியாயங்களைக் கேட்கும் மன நிலையில் சங்கரப்பிள்ளையர் இல்லை. அவருக்கு வேலாயுதம் மீதும் கோபம் வந் தது. அவரிடம் ஆலோசனை கேட்க வந்தா, அவர் தன்னை உலகம் தெரியாதவன் போலப் பேசுவதாக எண்ணிக் கொண்டார்.
"நான் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை. என்ரை பிள்ள்ையளை என்ன செய்யவேணுமெண்டது எனக்குத் தெரியும். நான் பெண்சாதி பிள்ளையைக் கூட்டிக் கொண்டு கொழும்புக்கே போகப் போறன். அதைவிட வேறை வழியே எனக் குத் தெரியேல்லை!" என்று சங்கரப்பிள் ளையர் சொல்லி முடிப்பதற்குள் குறுக் கிட்ட வேலாயுதம்,
"அவசரப்பட்டு பிழையான முடிவை எடுக்காதை, சங்கரப்பிள்ளை. தங்களை நம்பாமல் அப்பா இப்பிடி ஒரு முடிவை எடுக்கிறாரே எண்டு பிள்ளையஸ் நினை ச்சா அது புதிய பிரச்சினைகளுக்கு வழி தேடிவிடும். கள்ளங் கபடம் இல்லாமப் பழ கிற மனதில வஞ்சக விதைகளை நாங் களே விதைச்சு விடக் கூடாது அங்கை கொண்டு போய் அங்கையும் இதுமாதிரி ஒரு நிலைமை ஏற்பட்டா பிறகு அங்கையி ருந்து எங்கை கொண்டு போகப் போறாய்?
சொல்லு பாப்பம். நிலவுக்குப் பயந்து பர தேசம் போன கதையாத் தான் முடியும். எனக்கெண்டா அந்தப் பிள்ளையஞக்கிடை யில சந்தேகப்படுற மாதிரி உறவேதும் இல்லை எண்டுதான் தெரியது. எனவே, அவ சரப்படாத நான் இங்கை தானே இருக் கிறன். கவனிச்சுக் கொள்ளுறன். அவையி ன்ரை பழக்கம் பிழையாயத் தான் போகு தெண்டா, பிறகு நீ நினைக்கிற மாதிரியே செய்யன்” என்று சொல்லி முடித்தார்.
'நீ என்ன தான் சொன்னாலும், என்ரை முடிவிலை மாற்றமில்லை. விட்டுப் பார்க்க அவள், அவனை இழுத்துக் கொண்டு போய் அமத்தினாப் பிறகு நாங்க உசி ரோடை வாழ ஏலுமே? படிக்காட்டாலும் பரவாயில்லை, கொழும்பில வந்து என்ரை கண்ணுக்கு முன்னால இருக்கட்டும்" என்று முடிவாய் சொல்லிய சங்கரப்பிள் ளையர், வேலாயுதம் மேலும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேளாது, பிடிவாதமா கவே அங்கிருந்து அகன்றார்.
அவசர அவசரமாக ஆக வேண்டியவ ற்றைக் கவனித்துக் கொண்டு, மனைவி பிள்ளைகளுடன் கொழும்புக்குப் புறப்பட்ட அன்று மட்டும் வேலாயுதத்தைச் சந்தித்துப் பயணம் சொன்னார். அவரும் வந்து வழி யனுப்பி வைத்தார். சங்கரப்பிள்ளையரின் நடவடிக்கையால் அவர்களிடையே நில விய நட்பு பாதிக்கப்படவில்லை. அந்த நட் பின் காரணமாகத்தான் எவ்வளவோ பிர யான நெருக்கடிகளின் மத்தியிலும் இந் தத் திருமணத்தில் வேலாயுதம் கலந்து கொள்ள வந்திருந்தார். இன்று வரை கூடக் கதிரவனுக்கும் அந்தப் பெண் காவியாவுக் குமிடையில் ஏனையவர்கள் சந்தேகப்பட் டது போன்ற ஓர் உறவு நிலவவில்லை
Locosas Lord 2011 & 12

என்பதில் வேலாயுதம் உறுதியாகவே இருந்தார்.
வேலாயுதம் சாதி வேறுபாடு பார்க்காத முற்போக்குச் சிந்தனை கொண்டவரல்லத் தான். ஆனாலும், அவரது உள்ளத்தில் இப்போது புதிய கேள்விகள் எழத் தொடங் கின. தனது மகன் கீழ் சாதிக்காரப் பெண் ணுடன் பழகுகிறான். அந்தப் பழக்கம் சில வேளை காதலாக மாறிவிடுமோ என்ற வெறும் சந்தேகத்தில் இனசனம், வீடு வளவு, சொத்து, சொந்த மண் என யாவற்றையுமே பிரிந்து இங்கு வந்தவன் தான் இந்தச் சங்கரப்பிள்ளை, மாற்றுமொழி, மாற்று இனத்திலிருந்து நாம் பிரிந்து வாழ வேண் டும் என்ற சிந்தனை கூர்மையடைந்து, இரு இனமும் துருவமயப்பட்டிருக்கும் சூழ் நிலையில், அதே மாற்று இனத்தைச் சேர் ந்த ஒருத்தியைத் தன் மருமகளாக்கியது எப்படி? அவர்களினது சாதி, குலம், கோத் திரம் எல்லாம் பார்த்தானா? தனது சாதியத் தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்ப தற்காக, வெறும் சந்தேகத்தின் அடிப்படை யிலேயே முடிவை எடுத்து, தான் பிறந்த மண்ணை விட்டே ஓடி வந்தவ்ன் இங்கு
ஏன் அதனை முன்னிறுத்த வில்லை? பெரும்பான்மையினர் என்றால் அவர்கள் எங்களை விடப் பெருஞ்சாதியினர் என்று நினைத்துவிட்டானா? அல்லது பெரும் பான்மையினர் என்றால் குறைந்த சாதியி னர் என்றாலும் பரவாயில்லை என்ற புதிய சிந்தனைக்கு வழிகாட்டியிருக்கிறானா? சங்கரப்பிள்ளை மட்டுமல்ல, அவனைப்
போன்ற பல பெற்றோர்கள் இப்படியான
சில காரியங்களைத் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். தம்மினத்த வரிடையே சாதி வேறுபாடு, ஏற்றத்தாழ்வு பார்ப்பது. ஏனைய இனத்தவர் தொடர்பில் அதனைக் கண்டு கொள்வதில்லை.
இவ்வாறு சிந்தனைக் குதிரையை ஒடவிட்டுக் கொண்டிருந்தவரை, "வேலாயு தம் எழும்பு, சாப்பிடுவம்" என்ற சங்கரப் பிள்ளையின் குரல் நிஜத்தில் நிறுத்தியது. அதிகளவிலான பெரும்பான்மையினர் கூட்டத்தில் ஓர் ஒரமாக வேலாயுதமும் சங்கரப்பிள்ளையைச் சேர்ந்தவர்களும் சுயசேவை சாப்பாட்டு வரிசையில் காத்து நிற்கின்றனர்.
A. R. R. HAR DRESSERS
89, Church Road. Matakuliya,
Colombo - S.
Te : (0)1 2527219 முற்றிலும் தளிரூட்டப் பெற்ற சறுள்
மல்லிகை மார்ச் 2011 & 13

Page 9
குறுங்கதை
ཏུ》 ཀྱི་ 8)
இராமசாமி கனகசபையின் நீண்ட கால நண்பன். மலையகத்தில் கனகசபை ஸ்ரேற்
-வேல் அமுதன்
(Estate) பாடசாலை ஒன்றின் அதிபராகக் கடமையாற்றியவேளை, அதே ஸ்ரேற்றிலே கிளாக்காக வேலை செய்தவர், இராமசாமி.
அதிபர் வெள்ளவத்தையின் ஏப்பாட்மென் (Appartment) வாங்கிக் குடியமர்ந்துள்ள இன்றைய நாள்களிலும், இராமசாமி அலுவலாகக் கொழும்புக்கு வரும்வேளை அதிபரையும் சந்தித்துப் போவது வழக்கம்.
இச் சந்திப்பு வெறுமனை நட்புக்காகத் தொடரும் ஒன்றல்ல; கனகசபையின் வேண்டு கோளுக்கு இணங்கி, ஓர் உளவு நிமித்தமும் வந்து போகின்றார்.
உளவென்றதும் நீங்கள் ஏதோ பாரதூரமான அலுவல் சம்பந்தமானது என எண்ணிப் பயப்படவும் கூடும் இது அப்படியான ஒன்றல்ல. கனகசபையின் மூத்த மகள் மாலினி மலையக வைத்தியர் அந்தனியைக் காதலித்துக் கனகசபைக் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக, Civil Marriageசாக மணமுடித்தவள். அவளின் வாழ்க்கை எப்படி அமைகிறது என்பதைக் கேட்டு அறிந்து கொள்ளுவதற்காகவே
என்றும் போல், இன்றும் கிடைத்த செய்தி எதிர்பார்த்ததற்கு எதிர்மாறானது. அதாவது, மாலினியின் வாழ்க்கை மிகவும் திருப்திகரமானது; முன்மாதிரியானது; மற்றவர்களுக்குப் பொறாமையைக் கூட, ஏற்படுத்தக் கூடிய நல்ல மாதிரி; குழந்தைகுட்டியுடன் சந்தோஷமாக வாழ்கின்றாள் என்பதே, அது.
இந்நேரம் இன்னொன்று நடக்கிறது அதிபருக்கு மகள்மார் இரண்டு என்பது நான் முற்கூட்டிச் சொல்ல மறந்தது. இரண்டாவது மகள் வாசுகி, அவளை அதிபர் பேச்சுக் கலியாணமாக சோதிடர் உத்தமத்தில் உத்தமமான பொருத்தமான உறுதி செய்யப்பட்ட பொறியியலாளர் ஒருவருக்கு கட்டி வைத்தவர்.
இன்று, வாசுகி தனிமையிற் தலைவிரிகோலமாக- சூட்கேஸும் கையுமாக கனகசபையின் வீடு தேடி வந்து நிற்கின்றாள். அதிபர் என்ன சங்கதி? என விசனமாக வினாவிய போது, கிடை த்த பதில் அதிபரையோ இராமசாமியையோ மாத்திரமல்ல, உங்களையும் ஆட்டம் காண வைக்கும்
வியப்புத் தரும் வாசுகியின் பதில்: "அந்தாளோடை வாழ ஏலாதப்பா அந்தாள் சந்தேகப் பிராணி. எடுத்ததற்கு எல்லாம் சந் தேகம். ஊராக்கள் சொந்தக்காரர் பள்ளிக்குடத்திலை சேந்து படிச்சவை ஆரையாவது தனியக் கண்டாப் போச்சு கதைச்சால் போச்சு சந்தேகம்; இப்ப கடுமையாத் தண்ணியும் போட்டிட்டு, கையைக் காலையும் அடிக்கடி நீட்டிறார்!"
மல்லிகை மார்ச் 2011 & 14

இரசனைக் குறிப்பு
தெனில்(ன் சிறுகதைத் தொகுப்பு: ஒடுக்கப்பட்டவர்கள்
-Lort. LITobërijesh
சாதியமும் தவிர்க்க இயலாதவாறு மாறிக் கொண்டு வருகின்றது. ஆனால் அடிப்படையில் அது இன்னும் அழிந்து போய் விடவில்லை. பிரபல தமிழ் முற்போக்கு எழுத்தாளர் தெணியான்- மானுடத்தைக் கூறு போடும் சாதியத்தின் இன்றைய இருப்பை இப்படிக் கண்டு கொள்கிறார். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் பேரெழுச்சி கொண் டிருக்கும் இக் கால கட்டத்தில், மனித வாழ்வு சார்ந்த இத்தகைய கருத்துரைப்பு முற்போக் குப் பகுத்தறிவாளருக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்துவது இயல்பே அதுவும் ஈழத்தமிழரைப் பொறுத்தமட்டில்- முட்கம்பி வேலிகளுக்குள் அடைபட்டும், பனி நிலங்களில் குளிரோடு போரிட்டு வாழ்ந்தும், பிடுங்கி எறியப்பட்டிருக்கும் இந்நிலையில் தமிழினத்துக்குள்ளிருக்கும் இந்த உள்ளழுகலை அம்பலப்படுத்தியிருப்பது, எந்தவொரு அசல் தமிழனையும் வெட்கப்பட வைப்பது சாத்தியமே. இதை ஆதாரப்படுத்தத் தெணியானைக் கூட்டிலேற்றி விசாரிக்கத் தேவையில்லை. தற்போது வெளிவந்துள்ள இவரது "ஒடுக்கப்பட்டவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பை வாசித்தால் இலக்கிய மென்பது காலத்தின் கண்ணாடி வாழ்வின் தரிசனம்- என்ற உண்மையை உள்வாங்கித் தெணியானின் கூற்று மெய் யானதென்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம். ッッ
யாழ்ப்பாண ஆதிக்க சாதியின் நாக்களில் தித் திப்பை ஏற்படுத்தும் நாவலர் பரம்பரை, மாப்பாண முதலியார் பரம்பரை, மழுவராயர் பரம்பரை, குலசேகர முதலியார் பரம்பரை, மணியகாரர், விதானையார் -
என்ற, அடிமட்ட யாழ்வாசிகளைத் தம்மகப்படுத்தி #: . ; வைத்திருந்த, வைத்திருக்கும் இச் சிற்றரசுகளின் எச்ச & சொச்சங்கள் இன்னும், சாம்பல் மண்ணாகியுள்ள யாழ்ப் w838 *ぶ。 பூமியில்- காணப்படுவதை- மூத்த முற்போக்கு, பஞ்சம இலக்கியவாதி தெணியான் ஒடுக்கப்பட்டவர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் சிறுகதைகளில் பூடகமற்ற நிலை யில் நேரடியாக ஆவணப்படுத்தியுள்ளார்.
இத் தொகுப்பில் இருபத்தைந்து சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. பெரும்பாலானவை பஞ்சம இலக்கியக் கதைகள். இந்த வகையில்
LD666ans LDIrré 2011 à 15

Page 10
தொகுப் பொன்றில் அதிகமான சாதியொடு க்கு முறைக் கதைகளை வெளியிட்ட மூலவர் தானேயென்ற சாதனையைத் தெணியான் தன் வசமாக்கியுள்ளார்.
தொகுப்பின் அனைத்துச் சிறுகதைக ளுள்ளும் கொழுத்த கதாம்சம், கலைத்துவ நேர்த்தியோடு காணப்படுகின்றது. சொல், பொருள், உணர்வு என இலக்கிய விற்பன் னர்களால் சுட்டப்படும் மூன்று இலட்சண ங்களும் சம நிலையில் கதைகளில் வெளி ப்படுகின்றன. அநாவசியமான சித்திரிப்பு களோ, சொற் சோடனைகளோ இல்லை. உரத்த கோஷங்களை எழுப்பாது கதை ஞர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் கதை சொல்லியிருப்பது பஞ்சமர் இலக்கிய மறுப்பாளருக்கும் வாசிப்பின் ஆர்வத்தை ஏற்படுத்தும். தொகுப்பின் பெருமளவான கதைகளை- அரை நூற்றா ண்டை நோக்கி வீறுநடை போட்டுக் கொண் டிருக்கும் "மல்லிகை மாசிகை வெளியிட்டி ருக்கிறது. இப்படியும் ஒரு தர்மம்' என்ற தொகுப்புக் கதையொன்றை அழகிய அட்டைப் படம் நினைவுபடுத்துகின்றது. தொகுப்பின் கருத்தியலுக்கு மிகவும் பொருத்தமானது இவ்வட்டையமைப்பு.
சாதியத்தினால் அடிப்படை உரிமை
கள் பறிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட தாழ்த் தப்பட்ட தமிழரது துன்பியல் வாழ்வோடு, ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள யாழ்ப்பா ணத்துச் சிற்றரசுகளின் அட்டகாசங்களும், சிறுகதைகளில் இயல்பு நிலையில் யதார்த்தமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.
சலவைக்குக் கொடுத்த சீலையை
உரிய நேரத்தில் கொடுக்காததால், தனது
தந்தை போன்ற மூத்த சலவைத் தொழி லாளி ஒருத்தரை நயினாரொருத்தன் வீதி யில் வைத்து அடித்து உதைத்து நிலத்தில் விழுத்துகிறான்.
நாட்கள் மூன்றாகப் பட்டினி கிடந்த பஞ்சப்பட்ட கிழவி, தள்ளாடு நிலையிலும் நடந்து கோயில் அன்னதானத்தில் சோறு வாங்கப் பிள்ளையார் கோயிலை அடை கிறாள். அன்னதானம் வழங்கிய கம்பளை முதலாளி எதுவித தயவு தாட்சண்யமும் காட்டாது, கிழவியைக் கற்பூரக் கல்லின் மேல் தள்ளி வீழ்த்தி, அவளது மண்டை யிலிருந்து செந்நீர் பெருக வைக்கிறார்.
குடிமையானவன் ஆதிக்க வர்க்கத்த வனுக்கு கை நீட்டி அடித்ததற்காகக் கொத் தடிமைகளான சிறகுட்டிகளின் தொழில் பறிக்கப்பட்டு அவர்கள் வாழ்வதற்குத் திண்டாட வைக்கப்படுகின்றனர். உடை யார் வீட்டுக்கு வந்த, வீட்டு இளைஞனின் நண்பனுக்கு அவன் பஞ்சமன் என்ற காரணத்தால், தங்களது பாத்திரத்தில் தேநீர் கொடுத்து உபசரிக்காது, செவ்விழ நீர் கொடுக்கின்றனர்.
சேமிக்கத் தெரியாத - பாதுகாப்பு சாதனங்கள் இல்லாத பஞ்சமனொருத்தன் கொடுத்த பணத்தை நயினையொருவர் கள்ளக் கணக்குப் போட்டு, கொடுத்தவ னுக்குக் காது குத்துகிறார்.
முற்போக்கான ஒடுக்கப்பட்ட இளை ஞர்கள் தங்களது முதியோரைப் பிரேதம் சுட வேண்டாமென வற்புறுத்தி நிறுத்த, சாதிமானொருவர் ஒரு பஞ்சமனுக்கு ஆசை காட்டித் தந்திரமாக ஏமாற்றுகிறார்.
மார்க்சிய முற்போக்குவாதிகளின்
மல்லிகை மார்ச் 2011 & 16

தொடர், போராட்டங்களால், யாழ்குடாவில் சில சைவக் கோயில்கள் சகலருக்கும் திறந்துவிடப்பட்ட போதும், கோயில் மணியக்காரர்கள் திட்டமிட்டுச் சகலருக் கும் உரிய உரிமைகளைப் பஞ்சமருக்கு மறுக்கின்றனர்.
தொகுப்பின் சிறுகதைகளுள் பொறுக்கி யெடுத்து மேலே தரப்பட்டுள்ள- பெரும் பான்மைத் தமிழனின் மனிதாபிமானமற்ற செயல்களைக் கருத்தூன்றி வாசிக்கும் ஒரு வாசகன், நடுத்தெருவுக்கு இன்று வந் துள்ள தமிழரிடையே இன்னுமா, இது? என விழிப்பான்! இதற்கான விடையை இன் னுமா..? சிறுகதை செப்பமாகத் தருகின் றது. இனவாதிகளால் யாழ்ப்பாண வாசிக சாலையொன்றுக்குள் அடைக்கப்பட்டு, குண்டு வைத்துக் கொல்லப்பட்டதைச் சொல்லும் போது, இக் கதைமாந்தரொ ருவர் "நீங்கள் கவலைப்படாதையுங்கோ அண்ணை. எங்கடை ஆக்கள் ஒருத்தரு மில்லை. அதுTஉ. எல்லாம் சமரவாகுப் பள்ளரும், இலந்தைக் காட்டு நளவருந்தா னாம்" என்கிறார். இந்த இளைஞனின் இந்த மனிதாபிமானமற்ற வார்த்தைகளை விட, சாதியம் காலத்தால் அழிந்து போய் விடவில்லை என்பதுக்கு வேறென்ன சாட் சியம் வேண்டும்?
இத் தொகுப்புச் சிறுகதைகளின் படைப்புக் காலம் 1967-2006 என்ற காலப் பகுதியென்பதுக்கான பதிவுண்டு. ஈழத்தமி ழினத்தைப் பொறுத்தவரை இக் காலப் பகுதிதான் சிறு பொறியாயிருந்த தமிழின எழுச்சியைப் பெருந்தீயாக்கியது. இத்த கைய நெருக்கடிகளுக்குள்ளும் பஞ்சமர்க ளும் உலகில் செழித்த நவீன மாற்றங்
களை உள்வாங்கித் தங்களை மறுவாசிப் புச் செய்திருக்கின்றனர். கல்வி நிலையிலு யர்ந்து, பல்கலைக்கழகங்களில் பட்டதாரி களை உற்பத்தி செய்யும் பேராசிரியர் நிலைக்குத் தம்மை மேம்படுத்தியிரு ப்பதை அனைத்துத் தமிழரும் அறிவர். அப்போ, இம் மாற்றங்களை உள்வாங்கி யும் அவர்கள் விழிப்படையவில்லையா? என்ற கேள்வி மேலெழும். அத்தோடு பஞ்சமரின் ஒடுக்குமுறைகளை நுண்மான் நுழைபுலத் தேடலோடு தொகுப்புக் கதைகளில் நிரல்படுத்திய தெணியான் இம்மக்கள் இன்னமும் கொத்தடிமைக ளெனக் கருதினாரா? அப்படியல்ல! மக்கள் இலக்கியவாதி அமரர் கே. டானியலின் பஞ்சமர் இலக்கியங்களின் தாக்கத்தால் பஞ்சமர்கள் தங்களைத் தடுக்கும் வேலிக ளைத் தாண்டி, தமது மனித உரிமை மறுப்புகளுக்கான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புகளைக் காட்டி இருக்கின்றனர். அந்த உணர்வுகளையும் தெணியான் இச் சிறுகதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொழில் கொடுத்து வாழவைத்த நயினார், தன்னைக் காரணமில்லாது காறித் துப்பியபோது, சிறை குட்டியான பஞ்சமன் தானும் நயினாரை நோக்கித் துணிந்து காறித் துப்பித் தன் எதிர்ப்பைக் காட்டுக்கிறான். தனது ஏவல்களுக்கு இணங்கிப் போன பஞ்சமன் விழிப்படைந்து மறுத்தபோது, உடையார் உலக்கையைத் தூக்குகிறார். பஞ்சமன் வில்லுக் கத்தியை விரித்து அவரோடு மோதத் தயாராகி றான். சாதியை இழிவாகச் சுட்டிக் காட்டி யவனின் கன்னத்தில் 'பளார் பளார்' என அலுவலகப் சிற்றுாழியன் விளாசுகிறான்.
பஞ்சமச்
மல்லிகை மார்ச் 2011 & 17

Page 11
துணிகரமான இத்தகைய எதிர்ப்புகளி னுாடாக காலுக்குள் போட்டு நசுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழர்கள் எழுச்சி கொண்டு விட்டார்கள். அதற்கான பூபாளந்தான் இந்த எதிர்ப்புகளென்பதைத் தெணியான் முன்னறிவித்தல் செய்துள்ளார். உடன் பிறப்புகள் சாதியத்தால் ஒடுக்கப்பட்டு இம்சைப் படுவதைக் கண்டு கொள்ளாத ‘புது வெள்ளாளரான பஞ்சமர்களும் இன்னமும் வாழ்கிறார்களென்பதை ‘இவன் மிச்சம் நல்லவன்’ என்ற சிறுகதை நாசுக்காகக் காட்டுகிறது. எம்.ஏ. பட்டதாரி யான ஒரு பஞ்சமன் சமூக அக்கறையற் றுத் தனது உத்தியோகத்தைக் காப்பாற்ற உயர் சாதியோடு சார்ந்து நிற்பது, சாதி எதிர்ப்புப் போராளிகளுக்குக் கொதிப்பை ஏற்படுத்தும் இத்தகைய களைகள் பிடுங்கி எறியப்பட வேண்டும்!
பஞ்சம சாதிகளுக்குள்ளடங்காத இரு சிறுகதைகள் இத்தொகுப்பில் உண்டு. இந்தியாவில் ஆதிக்க சாதியாக இருந்தும், இலங்கையில் ஒடுக்கப்பட்ட சாதியாக விளங்கும் பிராமண சாதி பற்றியது ஒன்று. மற்றது கரையார் சமூகமான இடைநிலைச் சாதி சம்பந்தமானது.
பொற்சிறையில் வாடும் புனிதர்' என்ற நாவலைப் படைத்ததன் மூலமாக, யாழ்ப் பாணத்துப் பிராமண சமூகத்தின் அவல வாழ்வை முதன் முதல் இலக்கியமாக் கியவர் தானென்ற சாதனையை ஏற்படுத்தி யவர் தெணியான். இத் தொகுப்பின் "காவல் அரண்கள் இவர்களது வாழ்வை ஊடறுத்துக் காட்டுகிறது.
நான் வடக்கு நோக்கிக் கைகுவிப்பது நல்லூர் முருகனுக்கல்ல. இராமசாமி
ஐயரின் வீட்டை நோக்கியே." என யாழ்ப்பாணத்துப் பிராமணர் சிலரின் முற் போக்குத் தடத்தை இனங் காட்டியவர் மக்கள் தோழர் மு. கார்த்திகேசன். அதை ஞாபகப்படுத்துகிறது இச் சிறுகதை, பட்டமரமொன்றுதான் விழுந்து படவிருக் கும் இன்னொரு மரத்துக்கு முண்டு கொடுத்து அதற்கு மறுவாழ்வு கொடுக்கும். அதற்கமைய இக் கதைமாந்தரான கோயில் குருக்கள் மணியக்காரனை எதிர்த்துப் பஞ்சமர் பக்கம் சாய்கிறார். தான் வெறும் புக்கை தின்னிப் பிராமணனல்ல வென்பதைக் காட்டுகிறார். இராமசாமி ஐயரின் தாக்கம் இவருக்கிருந்திருக்கும்
வேளாருக்குரிய சில உரிமைகளைச் சுகித்து வாழ்ந்தாலும், வட இலங்கையில் கரையார் சமூகம் இடைநிலை, ஒடுக்கப் பட்ட சமூகமாகவே கருதப்படுகிறது. இச் சமூகத்துக்கும் வேளாளர் சமூகத்துக்கு மிடையில் ஏற்பட்ட சுடலைப் பிரச்சினை 'எல்லைக் கோடுகள் சிறுகதையின் தொனிப் பொருளாக்கப்பட்டுள்ளது. நாவ லர் பரம்பரையில் வந்த நயினாரொருத்தர் கரையார் சமூகத்தோடு மோதுகிறார். தனது மனைவியின் பிணத்தைக் கரை யார் சமூகத்தின் சுடலையில் எரிக்க மறுக் கிறார். மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள சுடலைக்குக் காவிச் செல்லச் சொல்கிறார். "குடிசனப் பெருக்கம் அதிகரித்துச் சுட லைக்கருகிலேயே இப்போது பலர் குடியிருக்க வந்து விட்டார்கள். அதனாலே ஒரே இடத்திலேயே இரண்டு சுடலை கட்டுவது வீண். எல்லோரும் இப்போது மதில் கட்டப்பட்டிருக்கும் சுடலைகளி லேயே சுடலாம்!” எனச் சுற்றாடல் மாசு படுதலையும் கருதி நயினாரின் வேண்டு
மல்லிகை மார்ச் 2011 & 18

கோள் மறுக்கப்படுகிறது. இக் கதையும் யாழ்ப்பாணச் சமூகம் விழிப்படைவதை உணர்த்துகிறது.
“காமாளை சிறுகதை வாசகர் பார்வை யைத் தென்னிலங்கைக்குத் திருப்புகிறது. ஆசாரம்மிக்க மளுவராயர் குடும்ப வழித் தோன்றலுக்கும், குடும்பி கட்டும் சிங்கள வர் வழி வந்த ஒருவருக்குமிடையில் தோன்றும் பிரச்சினை ஆப்த நண்பர்க ளான இருவரும் உத்தியோகத்தர்கள். சிங்கள நண்பருக்குத் திருமணம். பெண் வீட்டுக்குத் தமிழரைக் கொண்டு போனால் எங்களைக் குறைவாக நினைப்பார்கள் எனக் கூறிச் சிங்கள மாப்பிள்ளை தமிழ் நண்பரைத் தன் வீட்டோடு மட்டுப்படுத்து கிறார். இச்சிறுகதையை ஆழ்ந்து படிக்கும் ஒரு வாசகன் இன்று இலங்கையில் நில வும் இனங்களுக்கிடையிலான உறவை உணர்த்தும் பார்ப்பானாகில் நந்தசேனா வின் கூற்றைப் பேரினவாத மெனவே எடுக்க முடியும். இருந்தும் முருகேசன் தான் ஏற்கனவே வாழ்ந்து வளர்ந்த சூழலை உத்தேசித்து நாம் செய்கின்ற பாவங்க ளின் பலனை அனுபவிக்கத்தான் வேண் டும்" எனத் தெளிகிறான். உண்மை இரு முகங்களில் இருப்பதைக் காண முடிகின் றது. இந்த வகையில் பஞ்சமர்கள் இரு பக்கமும் அடிவாங்கும் மத்தளமாகின்ற னர். அதே நேரம்- இனத்துவ அடையாளத் தால் மளுவராயர் பரம்பரையும் ஒடுக்கப் பட்டதே! எது எப்படியிருப்பினும் தெணியா னின் பார்வை அடிமட்ட மக்களின் பக்கமே இருக்கின்றது.
சந்ததி, சந்ததியான யாழ்வாசிகளுக்கு "அசல் யாழ்ப்பாணத்து மனிதன் சிறுகதை
மனநெருடலைத் தரும். எங்களைக் கலைச்சுப் போட்டு இப்ப யாழ்ப்பாணத்து எளிய சாதிகள். பறையர். நளவர் அடிச் சுத் தாற இறைச்சியைத் தானே வாங்கித் தின்னுறியள் எனக் காதர் கதா பாத்திரம் கூறுவது யதார்த்தமானதல்ல. ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுாறிகளின் முற் கூற்றில் தான் முஸ்லிம்கள் வடபுலத் திலிருந்து விரட்டப்பட்டனர். ஆனால் 1950களிலிருந்தே அங்கு பஞ்மர்கள் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி வியாபாரிக ளாக இருந்ததை, அன்றைய யாழ்ப்பாணச் சமூகம் நன்கறியும், சின்னக் கடையில் சூசை என்ற பஞ்சமர் மிகப் பிரபலமான மாட்டிறைச்சி வர்த்தகராகத் திகழ்ந்தவர். அதேபோல் யாழ்பபாணம் பெரியகடைச் சூழலில் பஞ்சமர்கள் ஆட்டிறைச்சி வியா பாரம் செய்தனர். கதையில் சொல்லப்பட்டி ருக்கும் வழிகளில் அக்காலத்தில் மேல் தட்டு வேளாளர் இவர்களிடம் இறைச்சி வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
ஆக, இக் கதைகளின் தொனிப் பொருளைத் தமிழ் வாசகன் உள்வாங்கி, ஆழ்ந்து சிந்தித்து, சாதி ஒழிப்பின் ஆமை நகர்வை விசை கொள்ள வைக்க வேண் டும். சாதிக் கறை தமிழ் வாழ்விலிருந்து துடைக்கப்பட வேண்டும். அதைச் செயல் படுத்துவது, இன்றைய காலத்தின் கட் டளையென்பதை மறக்கக் கூடாது.
இத் தொகுப்பு தமிழகத் தலித்திலக் கியவாதிகளுக்குக் கிடைப்பதற்கான வச திகளை நூலாசிரியர் ஏற்படுத்த வேண்டும்.
இது பூபாலசிங்கம் புத்தகசாலையின் வெளியீடாகும்.
மல்லிகை மார்ச் 2011 & 19

Page 12
தூக்கம் வர மறுக்கிறது. புரண்டு புரண்டு படுத்துப் பார்க்கிறேன். தூங்க முடியவில்லை. காலைச் சம்பவம் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து நெஞ்சில் வேதனை முட்டுகிறது.
என்னால் எதையும் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால், என்தம்பியைப் பற்றி எவராவது அவதூறு சொன்னால், என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
இன்று காலையில் என் தம்பியைப் பார்த்து சிவராமன் சொன்ன அந்த வார்த்தை இன்று முழுவதும் என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்போதும் கூட அவ்வார்த்தையின் தாக்கத்தினால்தான் தூக்கமும் வராமல் உழன்று கொண்டிருக்கிறேன்.
அவன் - சிவராமனை இவ்வளவு நாளும் தம்பியின் நண்பன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன். தம்பியுடன் ஒன்றாகப் படித்தவன் என்பதால், பாடசாலைச் சிநேக உணர்வில் தான் அவர்கள் இருவரும் பழகி வருவதாக நினைத்தேன். ஆனால் அவனோ..
என் தம்பியை அவதூறு சொல்லியிருந்தாலும் கூட, நான் இவ்வளவு தூரம் வருந்தியிருக்கமாட்டேன் என்று இப்போது என் மனம் சொல்கிறது.
- க.பரணிதரன்
உங்கை பார் மச்சான், ரோபோ போகுது...!
சிவராமன் தான் சொன்னான். என் தம்பி, யாரோ ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவனைச் சுட்டிக்காட்டி தன் கூட நின்றவனுக்குச் சொன்னான்.
அப்போதே அந்த இடத்தில் வைத்து அவனை இழுத்து மிதிக்கவேண்டும் போல் இருந்தது. ஆனால், சூழல் சரியாக அமையவில்லை.
யாழ்ப்பாணம் செல்பவர்களும் யாழ்ப்பாணத்திலிருந்து வருபவர்களும் என நிறையப் பேர் அந்த வல்லை முனியப்பர் கோயிலடியில் நின்றிருந்தனர். சிவராமனும் அவன் கூட வந்தவனும் கூட, வல்லை முனியப்பர் கோயிலில் இறங்கித் திருநீறு பூசிக்கொண்டு தான் புறப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான் என் தம்பியை ஏற்றி வந்த மோட்டார் சைக்கிளும் அந்த இடத்தைக் கடந்து கொண்டிருந்தது.
Loissans Lortó 2011 & 20
 

நான், தம்பியை முதலில் கவனிக்க வில்லை. நான் முனியப்பரைக் கும்பிட்டுக் கொண்டிருக்கையில் சிவராமன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டுத் தான் திரும்பிப் பார்த்தேன். என் தம்பியைச் சுட்டிக்காட்டி சிவராமன் கேலியாக சிரித்துக்கொண்டு, தம்பி யைப் பற்றிச் சொன்னான்.
ஓடிச் சென்று அவனைப் பிடித்து இழுத்து ‘என்னடா சொன்னாய்?" என்று கேட்டிருக் கலாம் தான். ஆனால், எண் தம்பியை ரோபோ என்று அவன் கேலி செய்ததனால் ஏற்பட்ட தாக்கத்தில் நிலைகுலைந்து போய், நான் ஒரு நிலைக்கு மீள்வதற்கிடையில் அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டார்கள்.
தம்பிக்கு வயது ஐம்பதைத்தாண்டிவிட்டது. ஆனால், அவன் எனக்கும் என்தங்கச்சிக்கும் இப்போதும் செல்லப் பிள்ளைதான்.
அவனுக்கு மூன்று'பெடியன்கள் மனைவி ரீச்சர். தம்பி பழி பாவத்துக்கு அஞ்சிநடப்ப ഖങ്ങി. அவனுக்கு பிள்ளைகளும் மனைவியும் தான் உலகம். மற்றும்படி தானுண்டு தன் வேலை உண்டு என்று நடந்து கொள்வான்.
அவனின் குணம் முழுவதுமே ஐயா மாதிரித் தான். ஐயாவைப் போல அவனும் நல்லாகப் பாடுவான். அவனின் பாட்டைக் கேட்டாலே மனதுக்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். மேடையில் ஏறிநடிப்பான் என்றால் பாத்திரமாகவே மாறிவிடுவான். ஆள் கொஞ் சம் சத்தமாகத் தான் கதைப்பான். ஆனால், கரவு கிரவு ஒன்றுமே தெரியாதவன்.
சிறுகதைகளும் கவிதைகளும் கூட தம்பி எழுதியிருக்கிறான். ஆனால், பத்திரிகையில் பிரபல்யம் வேண்டி பெயருக்காக எழுதமாட் டான். எப்போதும் சமூகத்துக்குத் தேவையான கருத்துகள் எதையும் சொல்ல வேண்டும் என
நினைத்தால், எழுதுவான். நல்லதொரு மேடைப்பிரசங்கி, எந்தவொரு விடயத்தையும் மனைவியுடன் கலந்தாலோசித்துத் தான் செய்வான். இதனால், ‘இவன் பெண்டாட்டி தாசன் என்று எங்கள் சொந்தத்துக்குள் ஒரு பிழையான விளக்கமும் உண்டு.
தம்பியின் மூத்த பெடியன் கம்பஸ் முடிச்
சுப் போட்டு, ஆசிரியராக வேலை செய்கிறான்.
அடுத்தவன் மருத்துவபீடத்தில் டொக்ரருக்குப் படிக்கிறான். சின்னவன் ஒன்பதாம் வகுப்பு.
எங்களுக்கு சின்ன வயசிலிருந்தே எங்கள் தம்பி என்றால் உயிர். அவனின் மனசு எங்களுக்குத் தான் நன்றாகப் புரியும். சரியான மென்மையானவன்.
எங்களுக்கும் குடும்பம், பிள்ளை குட்டி என்று வந்ததன் பிறகு, முந்தைய நெருக்கம், இல்லாமல் தான் போய்விட்டது. ஆனால் அவனில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை. 'அணிணை! தங்கச்சி" என்று அழைக்கும் போது பாசம் கொஞ்சி வழியும்.
ஒரு நாள் தம்பியின் மனைவி சாயந்தர நேரம் எனக்கு போன் பண்ணி“ஒரு முக்கிய விசயம் கதைக்கோணும், ஒருக்கா வந்திட்டுப் போங்கோ, அண்ணை" என்று சொன்னாள். நான் அங்கே போனபோதுதங்கைச்சியும் அங்கேதான் இருந்தாள். ஆனால், என்றைக் கும் இல்லாதமாதிரிஒருமாதிரியாக இருந்தாள். அப்போது தான் அந்த வேதனை தரும் செய்தியை தம்பி பெண்சாதி விம்மிக் கொண்டே சொன்னாள்.
"இவருக்கு ஒரு பெரிய பிரச்சினை. இவரின்ரை இதயத்துடிப்பு கொஞ்சங் கொஞ்சமா குறைஞ்சு வருகுதாம்.”
- சொல்லிவிட்டு ‘ஓ’ என்று அழுதாள். தங்கைச்சியும் அழத்தொடங்கிவிட்டாள்.
Losbsdas Lorňš 2011 š 21

Page 13
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. “பிள்ளை, விளக்கமாசொல்லணை” என்றேன்.
"நேற்று இவர் தலை சுத்துதெண்டு பெரியாஸ்பத்திரி டொக்டரிட்டை போனவராம். அப்போ இவரின்ரை இதயத்துடிப்பை கணக் கெடுத்துப்பார்த்தா, நிமிடத்துக்குநாப்பதுதான் இருந்துதாம். நிமிடத்துக்கு எழுபது எழுபத்திர ண்டு இருக்கவேண்டிய இடத்திலை, குறைவா யிருக்கெண்டு 'ஈசீஜியும் எடுத்துரூ டீ எக்கோ வும் உடனடியா எடுத்துப் பார்த்தவையாம். எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியலை.”
விபரத்தைச் சரியாகச் சொல்லி முடிக்க முன்னரே, அவள் விம்மி விம்மி அழுதாள். தங்கச்சியும் சேர்ந்து அழுதாள்.
நான் அதிர்ந்து போனேன். என் தங்கத் தம்பிக்கு இப்படி ஒரு வியாதி என்றதும் கதி கலங்கித்தான் போனேன். ஆனாலும் எங்கள் குடும்பங்களில் மூத்தவன் நான் என்ற பொறுப்போடு அவளையும் தங்கைச்சியையும் ஆசுவாசப்படுத்தினேன்.
“பிள்ளை அழாதையணை,தம்பிகவலைப் படுவான். ஒப்பரேசன் ஏதும் செய்து பார்க்க லாம் என்றேதும் சொன்னவையாமே...”
உள்ளூர என்னுள் பீதி நிறைந்திருந்த போதும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கேட்டேன்.
“ஓமண்ணை நெஞ்சிலை ஒப்பரேசன் செய்து பற்றி வைக்கவேணுமாம். பதினஞ்சு வருசத்துக்கு தொடர்ந்து வேலை செய்யக் கூடிய பற்றி வைக்கலாமாம். பிறகு. அதுக் குப் பிறகு வேறொன்று மாத்தலாமாம்."
என் தம்பி ஓர் ஊசி குத்தினால் கூடத் தாங்கவே மாட்டான். இந்த ஒப்பரேஷனை எப்படித்தாங்கப் போகிறான்? என்று நினைத் துக் கண் கலங்கினேன்.
“பிள்ளை நீஒன்றுக்குமே யோசியாதை. எங்களை எங்கடை முருகன் கைவிடமாட் டான். தம்பிக்கு ஒரு ஆபத்தும் வராது. அவனுக்கு வேண்டியதைச் செய்வம்.”
என் ஆறுதல் வார்த்தைகளால் சற்றுத் தென்பு வரப்பெற்றவளாக தம்பி மனைவி சொன்னாள்:
"அண்ணை, இதை ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். எங்களைப் பயப்படுத் திப் போடுங்கள். ஒப்பரேசன் முடியட்டும். அதுக்குப் பிறகு சொல்லுவம்.”
எனக்கும் அதுவே சரியெனப்பட்டது. தங் கைச்சியும் அதற்கு உடன்பட்டவளாகத் தலை யாட்டி சம்மதித்தாள்.
தம்பிக்கு கொழும்பு ஆஸ்பத்திரியில், நெஞ்சுக்குள் பற்றி வைத்து, நீளமான மெல்லிய கம்பி போன்ற இரு வயர்களையும் இதயத்தோடு இணைத்து இதயத்துடிப்பு வீதத்தை அறுபதாக உயர்த்தி இருந்தார்கள். ஒப்பரேஷன் காலத்தில் தம்பியின் மனைவி பட்ட வேதனையையும் மூத்த பெடி யன்கள் இருவரும் தலையைக் கவிழ்த்துக் கொண்டு அழுது நின்றதையும் 'அப்பாவுக்கு ரோச் பற்றிவைக்கப் போயினம்’ என்று விபரம் அறியாமல் தம்பியின் சின்னவன் கதைத்த தையும், தம்பியின் பயந்து வீங்கிய முகத்தை யும் பார்த்துநாங்கள் பட்டவேதனை சொல்லி
(UPlQussgöl. . .
ஒப்பரேஷன் செய்து தம்பிக்கு எல்லாம் சரியானபின்பு, தான் இவ்விடயத்தை எங்கள் இனசனங்களுக்குச் சொன்னோம். தங்களுக் குச் சொல்லவில்லை" என்று கோபித்துக் கொண்டவர்கள் ஒரு பக்கம், உள்ளூர சந் தோஷப்பட்டு ‘வக்கணை கொட்டியவர்கள் இன்னொரு பக்கம், தம்பியின் மனைவியை
மல்லிகை மார்ச் 2011 & 22

‘அமுசடக்கி’ என்று வக்கிரித்தவர்கள் 93e(5 பக்கம், தங்களுக்கும் முன்கூட்டியே சொல்ல வில்லை" என்று சுகநலம் விசாரிக்கக்கூட வராதவர்கள் இன்னொரு பக்கம் என்றெல் லாம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியி லும், தம்பி சுகம் பெற்று இன்று பழையபடி இயங்கிக் கொண்டிருக்கிறான்.
இவனைப் பார்த்துத்தான்ரோபோ என்று சிவராமன் நக்கல் அடித்திருக்கிறான்.
பாவம் தம்பி! தன்னை “ரோபோ என்று சிவராமன் நக்கலடித்ததைக் கேட்டால் கவ லைப்படுவான்."
எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு அப்போதைக்கு என்னைத் தேற்றிக்கொண்டு வந்துவிட்டேன். ஆனால், அந்தச் சொல்லின் தாக்கம் இப்போதும் என்னைக் குடைந்தெடு த்து என்னை என்னவோ செய்துகொண்டி ருந்தது.
சிவராமன்மீது மாத்திரமின்றி, அக்கதை க்குமறுப்பேதும் சொல்லாமல் அங்கீகரித்துக் கொண்ட அந்த சிவராமனோடு வந்தவன் மீதும் கோபம் பற்றிக் கொண்டு வந்தது.
இன்னும் எத்தனை பேரோடு சேர்ந்து சிவராமன் என் தம்பியை "ரோபோ என்று கேலியாகக் கதைத்திருப்பானோ..?
தம்பி கவலைப்பட்டாலும் பரவாயில்லை. காலையில் இந்த விடயத்தை தம்பிக்குச் சொல்லத்தான் வேணும்."
மனம் ஒருவாறு ஒருநிலைப் பட்டது. புரண்டு படுத்தேன்.
காலை ஆறு மணிக்கு முருகன் கோயில் காலைப் பூஜைக்கான ஆயத்தமணி அடித்த போதுதான், கண்விழித்தேன்.
தம்பி ஏழு மணிக்குமுன் வேலைக்குக் கிளம்பிவிடுவான். அவன் புறப்படுமுன் விசயத்தைச் சொல்லவேணும்."
கை, கால் அலம்பி சட்டையும் போட்டுக் கொண்டு, சைக்கிளில் தெருவுக்குள் இறங்குகி றேன்.
தம்பியின் வீட்டை நெருங்கியிருப்பேன். தம்பி "கேற்றையும் திறந்துகொண்டு சைக் கிளை உருட்டிக்கொண்டேவெளியேவந்தான்.
கையில் சொப்பிங் பாக் ஒன்றில் "ரொபி பக்கற்.
பயணம் புறப்பட்டவனைத் தடுத்து நிறுத் தக் கூடாது என்ற கரிசனையோடு அவனிடம் கேட்கிறேன்
“என்ன தம்பி இண்டைக்கு நேரத்தோ டையே வெளிக்கிட்டிட்டாய்...? இண்டைக்கு உன்னை ஏத்திக் கொண்டு போறவர் வரமாட் டாரே. பஸ்ஸிலையே போகப்போறாய்..?”
என் தம்பியின் முகத்தில் திடீரென ஒரு மலர்ச்சி தெரிகிறது. உள்ளம் பூரித்துப்போய் அவன் சொன்னான்.
"960of 6obe00T உவன் சிவராமன்ரை பெட்டை அஞ்சாம்-வகுப்பு ஸ்கொலசிப் சோதனை பாஸ் பண்ணிட்டாளாம். அதுதான் ரொபி பக்கற் வாங்கிக் கொண்டு போறன்."
எனக்குள் பெருமிதம் பீறிக்கொண்டு எழுகிறது.
‘என் தம்பிதங்கக்கம்பி அவனை எவன் ரோபோ என்று நக்கலடித்தாலும் அவன் குறைஞ்சிடமாட்டான்
என் உள்மன ஒலிப்புத் தந்த நிறைவில், அவன் போவதையே பார்த்துக் கொண்டு நிற்கிறேன்.
மல்லிகை மார்ச் 2011 & 23

Page 14
لcocاُAل طش)? 1کم ہونا فن تAدمندی اللہ تہہ
-தவராஜா வசந்தன்
சாஸ்திரியம் அறியாதவர்களும், ரசிக்கும் ஒழுங்குடையவை கிராமிய நடனங்களாகும். இவ் நடனங்கள் இயற்கையை, கால நிலையை, சமூகப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்களைப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன. மயிலாட்டம், மானாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், நிழலாட்டம், கரகாட்டம் போன்ற கிராமிய நடனங்கள் ஆடப்பட்டு வருகின்றன. ஒயிலாட்டத்தினை யாழ்ப்பாணத்தில் தென்மயிலைக் கட்டுவன் கிராமத்திலே குருசாமியும் அவருடைய குழுவினரும் அதன் தனித்துவம் இழக்காது நிகழ்த்தி வருகின்றனர். ஆடவர்கள் மட்டும் ஆடுகின்ற கிராமிய நடனங்களுள் ஒயிலாட்டமும் ஒன்றாகும். கிராமத்துக் கோயில் திருவிழாக்கள், கேளிக்கை நிகழ்வுகளில் ஆடப்படுகின்றன. 12- 20 வரையான ஆண்கள் கையில் கைக்குட்டைகளை வைத்து நடனமாடுவார்கள்.
ஆட்டம் என்றாலே அழகுதான், அதில் அழகான ஆட்டம் என்றால் எப்படியிருக்கும்? அந்த ஆட்டம் தான் ஒயிலாட்டம். இதில் ஆடுபவர்களும், பாடுபவர்களும் கொடுப்பதிலும், ஏற்பதிலும் சந்தோசமாக இருப்பார்கள். ஒயிலாட்டமானது இந்தியாவின் சங்கத் தமிழன் சொந்தக் குழந்தையாய் ஒவ்வொரு மாவட்டங்களிலும், ஆடப்பட்டு வருகின்றது. தென் இந்தியாவில் திருநெல்வேலிப் பகுதியில் கட்டப்பொம்மன் கதையும், கோவையில் வள்ளி திருமணக் கதையும், ஈழத்திலே யாழ்ப்பாணத்தில் இராமாயண, மகாபாரதக் கதையும், மலையகத்தில் மன்மதன் ரதி போன்ற கதைகளும் ஆடப்பட்டு வருகின்றன.
1945ம் ஆண்டு காலப்பகுதயில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை நிர்மாணப் பணிகளுக்காகத் தென் இந்தியாவிலிருந்து வந்த கேசவன் என்பவர் குருசாமிக்கும் அவருடைய சகாக்களுக்கும் பழக்கி 1945ஆம் ஆண்டு முதல் வீமன்காமம் கேணியடி ஆலயத்தில் ஒயிலாட்டத்தை நிகழ்த்தினார். தென் இந்தியக் கலைஞர் வருகை நின்றுவிட, சிறந்த குரல் வளமும், பாடல் இசைக்கும் திறனும், பயிற்றுவிக்கும் திறனும் உடைய குருசாமி அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒயிலாட்டக் கலை அண்ணாவியாராகப் பரிணமிக்கின்றார்.
ஒயிலாட்டமானது முதலில் பிரார்த்தனையுடன் ஆரம்பமாகும். அடுத்து நிகழ்ந்தும்
மல்லிகை மார்ச் 2011 & 24

கலைகளுடன் கால்கள் மோதுவதைத் தடுக்க 1வது பாடலானது ஆடுவோருக்கு விளக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது.
"ஒய்யாரமான இளவட்டங்கள்- ஒரு ஒய்வினில் சொல்லுகிறேன்
நேரே நில்லு நேரே நில்லு நெளியாமல் நில்லு நீங்கள்
ஆளுக்கொரு முழம் தள்ளி நில்லு காலோடு காலும் உரசாமலே- உங்கள் கைபிடி லேஞ்சி தவறாமலே
மேலோடு மேலும் உரசாமலேஉங்கள் வ்ேருவை தண்ணீர் சிதறாமலே
இவ் ஆட்டத்தினை நேர்கோட்டில் நின்றும், இரு அணிகள் எதிர் எதிராக நின்றும் கைகளில் உள்ள கைக்குட் டையை ஒய்யாரமாகச் சுற்றியும், மேலுயர்த் தியும், கால்களால் தட்டியும், துள்ளியும், சுழன்றும், தட்டி நடப்பது போன்றும் ஆடுவார்கள். ஒயிலாட்டத்தின் பக்க வாத்தியமாக உடுக்கு, தவில், நாதஸ்வரம், மத்தளம், ஆர்மோனியம், தரளம் என்பன பயன்படுகின்றது. இவை அழகுணர்ச்சி யையும், விறுவிறுப்பையும் ஆட்டத்தில் ஏற்படுத்துகின்றது. உடை, ஒப்பனையை நோக்குவோமாயின் வேட்டியை மடித்துக் கட்டி இடுப்பிலும், தலையிலும் பட்டுக் கட்டி கழுத்தில் மாலையும், உடலில் திருநீறு பூசியும் ஆடுவார்கள். 1990களில் நாட்டில் ஏற்பட்ட யுத்தச் சூழலால் கட்டுவன் கிராம மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். இக்காலப் பகுதியில் குருசாமி ஐயாவின் ஒயிலாட்டக் கலையானது அயற்கோயில் திருவிழாக்கள், கலை கலாச்சார நிகழ்வு கள், மன்ற நிகழ்வுகளில் பல்பரிமாணம்
உடையதாக உயிர் வடிவம் பெற்று வளர்ச்சியடைகின்றது. குருசாமி ஐயா தனது மூத்த மகன் சிறீதரனுக்கு மத்தள வாசிப்பையும், தனது மைத்துனன் சிவப் பிரகாசத்திற்கும், இளைய மகன் சுகுமா ருக்கும் ஒயிலாட்டமுறைகள், பாடல்க ளைப் பயிற்றுவித்தார். 2004ஆம் ஆண்டு குருசாமி ஐயாவின் மறைவுக்குப் பின் இவரது மகன் சுகுமாரின் வழிகாட்டலின் கீழ் குரும்பசிட்டி கலைக்காவிரி மன்றம் நிகழ்த்திய கிராமிய இசைநடன சங்கம விழாவில், தெல்லிப்பளை பிரதேச செயலக கலைவிழா, பாரம்பரிய கலைகள் மேம்பாட் டுக் கழகம் நிகழ்த்திய கிராமிய நடன விழா, திருமறைக் கலாமன்ற கலைவிழா வில் ஒயிலாட்டம் நிகழ்த்தப்பட்டுப் பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுகுமாரின் வழிகாட்டலின் கீழ் ஒயிலாட்டமானது கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ்ரன் கல்லூரி, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, திருக்குடும்பக் கன்னியர் மடம் போன்ற பாடசாலைகளுக்கு பழக்கிப் பலரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத் தக்கது. ஒயிலாட்டக் கலையானது இன்று கிராமியக் கோயில்கள் மட்டுமன்றி மன்ற நிகழ்வுகள், கலைக் கலாசார நிகழ்வுகள், பாடசாலை ரீதியான போட்டிகளில் பரவலாக நிகழ்த்தப்படுகின்றது. ஆட்டத் திற்கேற்ற பாட்டின் வேகமும், அங்கங்க ளின் இயக்கமும், ஆண்மையின் அழகும், ஒயிலாட்டத்தினை மெருகூட்டும். இன்றும் கட்டுவன் ஒயிலாட்டமானது அதன் தனித்துவம் இழக்காது புது மெருகுடன் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
மல்லிகை மார்ச் 2011 & 25

Page 15
69త్రిత్రీగిశీ --
அப்பாவின் முகத்தில் சந்தோஷக்களை தாண்டவமாடுகிறது. ஒன்றுமில்லாத அளவுக்கு அவர் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். ஏனெனில், இன்றுடன் அவருடைய எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்து, புதுவகையான வாழ்வொன்றை வாழப் போகின்றார்.
வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும்தடல்புடலாக நடக்கின்றன. ஏனெனில், அவரது மூத்தமகன் சந்துருவுக்குறிஜிஸ்ரேசன் நடக்கவிருக்கிறது.
காலை ஒன்பது மணியாகியும், சந்துருதன் அறையை விட்டு இன்னும் வெளியில் வரவில்லை.
தன் குடும்ப முன்னேற்றத்திற்காக சந்துரு மெழுகாக உருக்கப்பட்டுக் கொண்டிருக்கிறான். அந்த மெழுகின் வெளிச்சத்தில் ஒரு குடும்பத்தின் வாழ்வு அடங்கியிருக்கிறது.
சந்திரசேகர் அச்சுவேலியிலுள்ள சிறிய துணிக்கடை ஒன்றின் முதலாளி. அதன் மூலம் குறிப்பிடும்படியான வருமானம் கிடைப்பதில்லை. ஆனால், ஏதோ ஒரு வகையில் குடும்பத்தின் செலவும், கடையின் வாடகையையும் கொடுக்கவே சரியாக இருந்தது. தன் இரு பெண்களினது எதிர்காலம் பற்றி அவர் என்றுமே பெரிதாகக் கவலைப்பட்டதில்லை. இரண்டு ஆண்பிள்ளை களும் சகோதரிகளுக்கான வாழ்வை அமைத்துக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை.
சின்ன வயதிலிருந்தே சந்துருதன் விருப்பப்படி நடந்து கொண்டதில்லை. சந்திரசேகர் என்ன சொல்கிறாரோ அப்படியே நடந்துகொள்ள வேண்டும். படிப்பிலும் அப்படித்தான். சந்துரு கணிதத்துறையையயே படிக்க விரும்பினான். ஆனால், தகப்பனோ சந்துருவை பல்கலைக் கழகத்துக்கு எப்படியாவது அனுப்பவேண்டும் என்ற எண்ணத்தில், கணிதத்துறை படித்து அவன் பல்கலைக்கழகம் போகாவிட்டால், தான் நினைத்தவை ஒன்றும் நடக்காது என்று நினைத்து, அவனை கலைத்துறையைப் படிக்கச் செய்தார்.
சந்துருபல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் படிக்கத்தொடங்கும் போதே,ஊரில் அவனை விலைபேச ஆரம்பித்து விட்டார் சந்திரசேகர்.
துணிக்கடைநஷ்டத்தில் ஓடிய போதெல்லாம், அதனை சரிப்படுத்துவதற்காக ஊரில் பலரிடம், “என்ர மகனை நான் பட்டதாரியாக்கிப்போட்டன், இனி எனக்கென்ன கவலை. இப்பவே அவனை மாப்பிள்ளை கேட்டு இருபது, இருபத்தைஞ்சு லட்சம் தாறம் எனச் சொல்லி கனபேர் வந்திருக்கினம். நான் தான் அவன் படிச்சு முடிச்சாப் பிறகு பார்ப்பம் எண்டு சொல்லி அனுப்பிவிட்டன்” என்று கூறியே பல லட்சக்கணக்கில கடன் வாங்கிவிட்டார்.
மல்லிகை மார்ச் 2011 & 26

சந்துருதன் தாயைப் போல, நிறமும் முக அமைப்புங் கொண்டவன். பல்கலைக்கழகத் தில் பல பெண்கள் அவனைத் திரும்பிப் பார்ப்பார்கள். அப்படியானவர்களில் ஒருத்தி
தான், சுகிர்தா.
சந்துருவும், சுகிர்தாவும் ஒரே பாடத்தைத் தான் படிப்பவர்கள். சுகிர்தாதன் மனதிலுள்ள விருப்பத்தை வெளிப்படுத்த, பல வழிகளிலும் முயற்சி செய்தாள். ஆனால், சந்துரு தெரிந் தும் எதுவுமே தெரியாதவன் போல் இருந்து விடுவான். சில வேளைகளில் அவனையும் மீறி, அவன் மனதில் சுகிர்தா புகுந்துவிடு வாள். அந்த நேரங்களில் அவன் தந்தை கூறியது சந்துருவுக்கு நினைவில் வந்து குறுக்கிடும்.
"இங்கே பார் தம்பி கம்பசில படிக்கும் போது, காதல் கீதல் அப்படி ஏதாவது வரும். அது உண்மையல்ல, உன்ர வயசுக்கோளாறு. வீட்டில்உன்னை நம்பித்தான்ரண்டுதங்கச்சி யவை இருக்கினம். நானும் ஊரில் உன்னை நம்பி ஏகப்பட்ட கடன் வாங்கிவிட்டன். அதுமட்டுமில்லதம்பி, இன்னொரு விசயத்தை யும் ஞாபகத்தில் வைச்சிரு”, என்றவர், ஒரு நிமிடம் மெளனமாகி பின், தொண்டையைச் செருமியபடியே மீண்டும் தொடர்ந்தார்.
“அது ஒண்டுமில்லைத் தம்பி, உண்ரை வயதுக்குநீஅங்கினேக்கையாரையாவது காத லிச்சாலும் ஒரு ரூபா காசு வாங்காமல் நான் உனக்குக் கட்டித்தரமாட்டன். இப்பவே உன் னைக் கேட்டு, கனபேர் வந்திட்டினம். நான் தான் படிப்பு முடியப் பார்ப்பம் என்று அனுப் பிட்டன். நான் சொன்னதை ஒரு நாளும் மறக்காதை, தம்பி”.
அவர் கூறியவை அவன் மனதில் தடை போட்டுவிடும். எந்தவித எதிர்பார்ப்பும்
இல்லாமல் எதுவுமே அறியாமல், இயல்பாக வரும் காதல் உணர்ச்சிக்குக் கூட சந்திரசேகர் தடைவிதித்துவிட்டார்.
இருபத்தைந்து வருட காலப்பகுதியில் இதுவரை சந்துரு தன் ஆசையை எப்படிச் சொன்னாலும், ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி மறுத்துவிடுவார்.
எந்தவொரு உணர்ச்சியையும் வெளிப் படுத்தாத மரமாகவே அவன் வாழ்ந்துவிட் டான். மரமாக என்று கூட, கூறிவிடமுடியாது. மரம்கூட சிலவேளைகளில் தன் விருப்பப்படி காற்றிலசையும், இலைகளை உதிர்க்கும்,தன் விருப்பப்படி கிளைகளைப் பரப்பி இனத்தை விருத்திசெய்யும். ஆனால், மனிதர்கள் தான் தம் தேவைக்காக அதனை அழித்துவிடுகி றார்கள். சந்துருவும் தன் குடும்பத்துக்காக தன்னைத்தானே அழித்துக்கொண்டு இருக்கி றான்.
சந்திரசேகர் தன் இளைய மகனை தன் துணிக்கடையில் துணையாக அமர்த்திவிட்டார்.
சந்துருவுக்கு நான்காம் வருடப்படிப்பு முடிய இன்னும் இரு மாதங்களே இருந்தன. பரீட்சைக்காக வீட்டிலிருந்து படித்துக்கொண்டி ருந்தான்.
என்றுமில்லாமல், அவர்களது தூரத்து சொந்தக்காரர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அவரின் வரவு எதற்காக இருக்குமென சந்துரு வுக்கும், அவனது தாய் தந்தையருக்கும் விளங்கவேயில்லை. சந்துரு தன் பாடப் புத்தகத்தில் கண்ணைப் பதிய வைத்துவிட்டு, காதினை அவர்கள் பக்கமாக திசைப்படுத்தி விட்டான்.
மரகதம் கொண்டுவந்த தேநீரைக் குடித்த படியே, "அது ஒண்டுமில்லை, சந்திரன்,
மல்லிகை மார்ச் 2011 & 27

Page 16
எல்லாம் நல்ல விஷயமாகத்தான் வந்தனான். இவ்வளவு காலமாகநாங்கள் சொந்தம் எண்டு இருந்தும் எந்தத் தொடர்புமில்லாமல் இருந் திட்டம். அதுதான் எங்கடை உறவை புதுப்பிக்க லாம் எண்டு வந்தனான்” என்று அவர் 6866.
அவர் அவ்வாறு புதிர்போட்டுக் கதைப்பது விளங்காமல் சந்திரசேகர் கேட்டார்.
"துரையண்ணை,நீங்கள் இவ்வளவு காலம் கழித்து வீட்டுக்கு வந்திட்டியள் சந்தோஷம். ஆனா நீங்கள் என்ன சொல்லுறியள் எண்டு விளங்கேல்லை. விளக்கமாகச்சொல்லுங்கோ.”
துரையண்ணை செருமிக் கொண்டு சொன்னார்.
“உங்களுக்குத் தெரியும்தானே என்ர தங்கச்சி, குடும்பத்தோடை லண்டனிலை இருக்கிறா. அவை இப்ப லீவுக்கு இங்க வருகி னம். கையோடை கையா, தன் மகளுக்கு இங்கே ஒரு உத்தியோக மாப்பிளையை கலியாணம் செய்ய விரும்புறாள்!"
இப்படி அவர் கூறியதைக் கேட்டதுமே, இனித்தன்னை கலியான சந்தையில் விலை பேசப்போகிறார்கள் என்று நினைத்தபடியே சந்துரு தன் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
சந்திரசேகருக்கு அளவில்லா மகிழ்ச்சி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்.
ஒன்று, இருபத்தைஞ்சுலட்சம் சீதனமாகக் கொடுக்கவிருக்கிறார்கள். மற்றையது ஆறு மாதத்தில் அவனை லண்டனுக்கு எடுக்கப் போகிறார்கள்.
இந்த இரண்டுமே சந்திரசேகருக்கு போது மான தகவல்களாக இருந்தன. ஆனால்,
'சந்துருவுக்கு அந்தப் பெண்ணைக் கலியா ணம் செய்ய விருப்பமோ, அந்தப் பெண்ணின் குணநலன்கள் எப்படி, அவள் அழகான வளா? என்பன போன்ற விடயங்கள் அவருக் குத் தேவையானதாக இருக்கவில்லை.
மரகதம் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்த்துவிட்டு ஒரு கணம் தன் மகனைப் பற்றி யோசித்துவிட்டு, நிச்சயமாக இவள் அவனுக் குப் பொருத்தமில்லை என்று எண்ணியபடியே துரையண்ணையிடம் சொன்னாள்:
“இப்பதான் தம்பி வெளியில போறான். அவன் வந்தாப்பிறகு அவனைக் கேட்டிட்டு நாங்கள் முடிவைச் சொல்லுறமே."
சந்திரசேகரத்துக்கு அவள் அவ்வாறு கூறியது பிடிக்கவில்லை. அவளைக் கடுமை யாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, "என்ரை மகன் நான் சொன்னால் கேப்பான். நான் பார்க்கிற பொம்பிளையைத்தான் கலியாணம் செய்வனென சத்தியம் செய்தவன். நீங்கள் ஒண்டுக்கும் யோசியாதையுங்கோ. மற்ற விசயங்களை நாங்கள் உங்கடை வீட்டுக்கு வந்து கதைக்கிறம்” என்றார்.
சந்துருவுக்கு இந்த விசயங்களை தாய் கூறியபோது அவன் பெரிதாக ஒன்றும் கவ லைப்படவோ, அதிர்ச்சியடையவோ இல்லை. இப்படி நடக்குமென அவன் என்றோ எதிர் பார்த்ததுதான்.
சந்துரு விரும்பிய வாழ்வு - இந்த யாழ்ப்பாணத்தில் தன் படிப்புக்கேற்ற ஆசிரி யத் தொழிலுடன் தனக்கு ஏற்ற மனைவி, பிள்ளைகள், அளவான வீடு, அழகிய வாழ் க்கை கனவோடு கனவாகவே போய்விட்டதாக எண்ணினான்.
மல்லிகை மார்ச் 2011 & 28

மகனின் சந்தோசம் எதுவென ஒருநாளும் சந்திரசேகர்நினைத்துப்பார்த்திருக்கமாட்டார்.
சந்துருவுக்கு இந்தக் கலியாணம் நடந் தால் சந்திரசேகர் வாங்கியிருக்கும் பல லட்சக் கடன் தீர்ந்துவிடும். தனது துணிக்கடையை பெரியளவில் விருத்தியாக்கலாம் இரு மகள் மாருக்கும் நல்ல சீதனம் கொடுத்துதிருமணம் செய்யலாம், இனிமேல் தான் ஊரில் மதிப்பு டன் உலாவலாம் மகன் லண்டன் சென்றபிறகு மாதாந்தம் பணம் வரும். இவை அனைத் துமே அவரது மனக்கண்ணில் நிழலாடின.
ஒரு கணம் கூட சந்துருவின் வாழ்வுபற்றி அவர் சிந்திக்கவேயில்லை.
சந்துருவுக்கு தான் இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கை படித்த படிப்பு என்பன வெல்லாம்அர்த்தமற்றவையாகவே தோன்றின.
இன்று பன்னிரண்டு மணிக்கு பொம் பிளை வீட்டில் றிஜிஸ்ரேசன்.
அனைத்து ஆயத்தங்களும் வீட்டில் நிறைவேறியாச்சு.
இனிமேல் சந்துருவெளிக்கிடவேண்டியது மட்டுந்தான், பாக்கி
இந்த நேரம் ஒரு கணம், அவன் மனதில் சுகிர்தா வந்து போகின்றாள்.
இன்னும் சில மணிநேரங்களில் பெயரே தெரியாத யாரோ ஒருத்தி - இதுவரை முகம் கூடப் பார்த்ததில்லை - அவளின் விருப்பு வெறுப்புக்கள் கூட என்னவென்று தெரியாத எவளோ ஒருத்திஒரு கையெழுத்தைப் போட்ட பின், தன் வாழ்நாள் முழுக்க துணையாக வரப்போகின்றாள்.
சந்துரு யோசித்துக்கொண்டே இருந்தான். அவனின் அறையினுள் வந்த அவனின்
தங்கைச்சி, சந்துருவின் முகத்தைப் பார்த்து அதிர்ந்தாள்.
“என்னண்ணா யோசினை?. உன்னைக் கேட்டுத்தானே அப்பா எல்லா ஒழுங்கும் செய் தவர்.?நீஏதும் செய்துபோடாதை அண்ணா"
அவளின் கண்கள் கலங்கின. சின்னத் திரையில் பார்க்கும் நாடகங்கள் போல, ஏதா வது நடந்துவிடுமோ? என்று அவள் பயந்தாள்.
சந்துருவுக்குத் தங்கச்சியைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அவளின் அறியா மையை நினைத்துச் சற்று வருந்தினான்.
இந்தச் சமுதாய அமைப்பில், எல்லோரு டைய வாழ்வும் சிறைப்பட்ட வாழ்வுதான்’ என்பதை அவளுக்கு எப்படி எடுத்துச் சொல் வது என அறியாதவனாய், உடைமாற்றி, ரிஜிஸ்ரேஷனுக்கு தயாராகின்றான்.
பத்தாண்டிச் சந்த செலுத்திறே aŭ LoeffaniaT7 CD புதிய ஆண்டு பிறந்துவிட் *○ தயவு செய்து தமது சந் தாக்க ளைப் புதுப்பித்துக் aanitorolo. CD
மனந் திறந்துமல்லிகையுடன்
ஒத்துழையுங்கள். ஏனெனில்)ே மல்லிகை உங்கள் ஒவ்வொருவ ரினதும் இலக்கியக் குரலாகும்.
அசட்டை செய்வோருக்கு முன்னறிவித்தலின்றி இதழ)ே நிறுத்தப்படும்.
ஆசிரியே
todosâens toffẻ 2011 ẳ: 29

Page 17
Being alive மொழிபெயர்ப்புக் கதைகள்
-முருகபூபதி
இலங்கையில் நடந்த முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில், மொழி
பெயர்ப்பு அரங்கில் வெளியிடப்பட்ட Bcing alive ஆங்கிலச் சிறுகதைகளின் மொழி
பாளர்களாகவே பணியாற்றுகிறார்கள்.
கனடாவிலிருக்கும் திருமதி சியாமளா நவரட்ணம் 14 தமிழ்ச் சிறுகதைகளையும் அவுஸ்திரேலியாவிலிருக்கும் திரு நவீனன் இராஜதுரை էքվի சிறுகதையையும் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்துள்ளனர்.
இந்நூலை லெமுருகபூபதி தொகுத்து ன்னார் ஏற்கனவே அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தினால் அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழாவில் (2005) வெளியிடப்பட்ட உயிர்ப்பு கதைத் தொகுதியிலும் 2010ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பூமரங் சிறப்பு மலரிலும் வெளிவந்த சிறுகதைகள் சில ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் நீண்ட காலமாக வதியும் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ரவி, கல்லோடைக்கரன், ஆறுள் தெ. நித்தியகீர்த்தி, அசந்திரஹசன், புலனா இராஜரட்ணம், நடேசன், ஆவூரான், ரதி, ஆ.சி.கந்தராஜா, அருண் விஜயராணி, முருகபூபதி, ஆழியாள் ஆகியோரது கதைகளும் அவுஸ்திரேலியாவில் சிறிது காலம் வாழ்ந்த டொக்டர் ஞானசேகரன், கலாநிதி கலாமணி ஆகியோரது கதைகளும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. Being alive ErsGlen Sluglassisi (5:- international.twiseSGyahoo.com.au Qëtaria:Lifl: 006 139308 1484
மல்லிகை மார்ச் 2011 : 30
 
 
 
 
 

My kind of Hero விது
நடப்பு அரசியல் பெறுமதி.ை உணர்த்தி.
-எல். வஸிம் அக்ரம்
முன் குறிப்பு ஒன்று
தனிமனித ஹிரோயிசக் காட்சிகளை அல்லது படத்தின் ஈற்றில் ஒரு சிறிய கதைக் கருவுக்காக இரண்டு முதல் இரண்டரை மணித்தியாலம் கதாபாத்திரப் பிம்பங்களை ஒன்று டன் ஒன்று பொருந்தாத சடவாத சினிமாப் படங்களுக்கு இன்றும் தமிழில் வெற்றி தான். உதாரணமாக எந்திரனைப் பாருங்கள். உணர்ச்சிப் படிமங்களாகச் சினிமாவை வளைத் துப் போடுகின்ற சக்தி கமராவின் கண்களிலே தங்கி நிற்கின்றது. நூறு வீதம் கணினிப் படிமங்களில் இருந்து சினிமாவின் காட்சிப் புலங்களை மீட் டெடுப்பதற்கு தமிழ் சினிமாவால் இன்னும் முடியவில்லை. அல்லது முயலவில்லை.
தமிழில் தத்ரூபமான சிறுவர் சினிமாவை இன்னும் நான் பார்க்கவில்லை. முடியவில்லை அல்லது வர வில்லை எனலாம். ஆனால், நமது நாட்டில் குறிப்பாகச் சிங்களச் சினிமாவில் அதன் பெறுமதியை விதுவில் பார்த் தேன். இத்திரைப்படம் அசோக்க ஹந்தகமவின் ஒரு அரசியல் பெறுமானம், அசோக்க ஹந்தக இலங்கையில் உள்ள ஒரு முக்கியமான இயக்குநர். இவரது இயக்கத்தில் இறுதியாக உருவான "அக்சர திரைப்படம் தணிக்கைக் குழுவால் நிராகரிக்கப்பட்ட படம், அக்சர ஊடகங்கள் வாயிலாகப் பல்வேறு விவாதத்திற்கு வழிசமைத்தது. இது தொடர்பாக அநுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் படிகள் பதிப்பகம் சார்பாக அன்பு ஜவஹர்ஷா, அநுராதபுரம் டில்சான், விளிம் ஆக்ரம், அறுதபுரம் ஈவான், எம்.சி.நஜிமுதீன் போன்றோர் கலந்து கொண்டு கருத்துப் பரிமாறியிருந்தோம். அக்சர தொடர்பான கட்டுரை ஒன்றைச் சகோதரர் அநுராதபுரம் டில்சான் (அநுராதபுரச் சிறப்பிதழ்) மல்லிகையில் எழுதியிருந்தார்.
அசோக்க இறந்தகமவின் தணிக்கைக்கு உட்பட்ட அக்சரவிற்குப் பின் வந்த படம் 'விது. இன்று நாடெங்கும் திரைகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
விது வாழ்வின் பெறுமானங்களை உரசுகின்றது. அல்லது உணர்த்துகின்றது. உலகச் சிறுவர் தினத்தை முன் நிறுத்தி திரைக்கு வந்ததாக இத்திரைப் படம் பற்றிக் கருத்துக்கள்
Lodoir Drā 2011 331

Page 18
வந்த போதும், உண்மையில் இத்திரைப் படத்தின் குறியீட்டுப் படிமமாக அல்லது வடிவமாக இலங்கையின் இன்றைய அரசியல் துலாம்பரமாகத் தெரிகின்றது. சிறுவர் படத்திற்குப் பின்னணியில் அரசி யல் எவ்வாறு வெளிப்படுகின்றது? இது தான் இத்திரைப்படத்தினைப் பார்ப்பதன் மூலம் எழும் முக்கிய வினா.
கமரா, கவிதை போன்று உணர்வுபூர் வமான ஒரு ஆயுதம், கலைஞன் மட்டுமே இவ்விரண்டையும் பயன்படுத்த முடியும். உணர்வுபூர்வமானது என்பதற்கு நிகராக புல்லரிக்கின்றது என்றால் அதன் பிரதிபலி ப்பை விது எமக்குத் தருகின்றது. எந்தவித மான பிரமிப்புமின்றி, யதார்த்தம் நிறைந்த காட்சிகளை மட்டும் நம்பி சிங்களச் சினிமா வின் பதார்த்தமாக விது நம்மை ஆக்கிர மிக்கின்றது.
மாற்றுச் சினிமா என்பது வெறும் கலைத்துவத்தை அல்லது யதார்த்ததின் பிரதியீடாக இருக்கும் என்ற நிலையைத் தவிர்த்து, அது சமகாலத்தின் சமூக அரசி யலின் நுண்தன்மையான அணுகுமுறை யாக இருக்கும் என்பதற்கு விது மிக முக் கிய சான்று. ஏலவே சிங்களத்தில் வெளி வந்த சுது கழு அளு, இரமெதியம, மேமகே சந்த, சங்கார போன்ற படங்களின் தொட ராக இத்திரைப்படத்தை நாம் காணலாம். இத்திரைப்படத்தை அநுராதபுரம் புதிய படமாளிகையில் பார்க்க அன்பு ஜவ ஹர்ஷா அவர்கள் அழைத்தபோது, அது தொடர்பான சில பிரத்தியேகத் தகவல் களை தான் ஊடகங்களில் படித்ததாகக் கூறியிருந்தார். இத்திரைப்படம் பார்க்கும் வரை அது தொடர்பான எந்த பிரக்ஞையும்
என்னிடம் இருக்கவில்லை. இப்படத்தைப்
பார்த்ததன் பின்னர், நமது நாட்டின் அரசி யல் பின்புலன்களைப் பற்றிய துல்லிய மான விமர்சன ஆளுகையை ஒரு கலைத் துவத்தின் பிரதிநிதியாக இத்திரைப்படம் முன் நிற்கிறது என்பதனை உணர்ந்தேன்.
குறிப்பு இரண்டு விது
விபச்சாரி, பிற்பொக்கட் திருடி ஒருத்தி யின் மகன் விது. சுமார் ஆறு அல்லது ஏழு வயது நிரம்பிய ஒரு அழகிய சிறுவன். இலங்கையின் மேற்குக் கடற்கரையோரங் களில் (அறிந்தவரை நீர்கொழும்பு) சுற்று லாப் பிரதேசத்தில் பாடசாலை செல்லாது தனது நாட்களைக் கடத்தும் விது, தனது தாயுடன் பாடசாலை அனுமதிக்காக அதிய
ரைச் சந்திக்கச் செல்லும் போது, பாடசா
லையில் காலையில் மாணவர்களுக்கு நடைபெறும் அசெம்பிளி (காலைக் கூட்டப் போதனை) நிகழ்வில் மாணவர்களை அதிபர் ஆங்கிலத்தில் பேசத் தூண்டும் ஒரு செயற்பாட்டை முன்வைக்கின்றார். அப்போது, அது பற்றிய எண்ணத்தில் விது தனது முதலாவது நாள் பாடசாலை நுழை
வில் கண்ட அவதானம் அவனின் ஆழ்மன
தில் பதிகின்றது. உண்மையில் முதலா வது நாளன்று, அதிபர் அவனது பிறப்பத் தாட்சிப் பத்திரத்தைக் காரணம் காட்டிப் பாடசாலை அனுமதியைத் தவிர்த்து
விடுகின்றார். விதுவிற்குப் பிறப்பத்தாட்சிப்
பத்திரம் இல்லை.
பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட விது, அதே நாள் மாலையில், கடற்கரை யோரத்தில் நீந்தி விளையாடிய பாடசாலை மாணவர்களின் ஆடைகளில் ஒன்றைத் திருடி அடுத்தநாள் அதனை அணிந்து பாட சாலை சென்று, காலைப் போதனையில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத் துவங்கி
Locosôans Lorité 2011 o 32

னான். இந்த எதேச்சையான நிகழ்வு பாட சாலையில் சிறிய பரபரப்பை ஏற்படுத் தியது. விது யார்? எந்த வகுப்பு மாணவன்? என்ற வினா அதிபரினால் பிரயோகிக்கப் பட, விது பாடசாலையிலிருந்து வெளியேறி னான். சக மாணவர்கள் விதுவைத் திருட னாக நோக்க, பாடசாலையிலிருந்து மாண வர்களால் துரத்தி அடிக்கப்படுகிறான்.
விது கரையோரத்தில் அமர்ந்து கொண் டிருந்த போது, தனது தாய் கார் ஒன்றிலிரு ந்து பலாத்காரமாக இறக்கப்படுகின்றாள். இருவரும் ஒரு பொது இருக்கையில் அமர் ந்த வண்ணம் செய்யும் உரையாடல் நெஞ் சைத் தொடுகின்ற்து. சின்னதாய் ஒரு மழைத் தூறல் பின்புலத்தில் வருடிக் கொண்டிருந்தது. எதிரே பொது விளம்பரப் பலகையில் தெரிந்த தேர்தல் விளம்பரம் தனது சுய அரசியலைப் பேச, விது "நம்மை யார் கவனிப்பது?" என்று தனது அம்மா வின் கரங்களைப் பற்றிக் கொண்டு கேட் டான். அதற்கு அவனது தாய், "நாம் யாரைக் கவனித்தாலும், நம்மை யாரும் கவனிக்கப் போறதில்லை, இந்த நாட் டில்." என்று கூறி மகனின் தலையைக் கோதுகிறாள். இக்காட்சியின் வாயிலாக இலங்கையின் நடப்பு அரசியலுக்கான எதிர்க் கலாசார குறியீட்டை இங்கு காட்ட முயற்சிப்பது சிறப்பம்சமாகும்.
ஒரு இழிந்த தொழில் செய்யும் தாய் தனது மகனின் எதிர்காலம் பற்றிச் சதா எண்ணத் தொடங்குகிறாள். தான் எப்படிக் கஷ்டப்பட்டாலும் அல்லது சமூகத்தில் இழிவாக்கப்பட்டாலும், தனது மகன் சமூகத்தில் கற்றவனாக உயர்ந்த பிரஜை யாக மாறவேண்டும் என்று தனக்குள் நம்பிக்கை வளர்த்துக் கொள்கிறாள்.
தேர்தல் கூட்டம் ஒன்றுக்காக அப்பிர தேசம் களைகட்டிக் கொண்டிருந்தது. பிர தேச அரசியல் தலைவர் ஒருவரின் வழி காட்டலில் பெரிய (தேர்தல்) கூட்டம் ஒன் றுக்கான முஸ்தீபு இடம்பெற்றுக் கொண்டி ருந்தது. தேர்தல் மேடையை அண்டிய பகுதி வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது விது, அம்மேடையில் இருந்த மைக் ஒன் றைத் திருடி மரம் ஒன்றில் அமர்ந்து உரை யாற்றத் தொடங்கினான். விது பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் பெறுமதிமிக் கதாக இருந்தது. மக்களது இயலாமையை உசுப்பிப் பார்த்தது. வாழ்வின் பெறுமதி மற் றும் இருப்பின் பெறுமதி அதன் தற்போ தைய நிலை என்று உணர்வுகளைப் புது நீர் பாய்ச்சி மக்களைக் கேள்விக்கு உட் படுத்தியது. மக்கள் கூட்டம் விதுவைச் சூழ் ந்தது. தேர்தல் கூட்டத்திற்காக மக்கள் கூட்டம் அலைமோதுவது போன்று மக்கள் திரண்டது. விதுவின் வார்த்தைகள் வசிகர மானதாக இருந்தன. உணர்வுகள் கொந்த ளிக்கச் செய்தன. விதுவை சகல ஊடகங்க ளும் படம்பிடித்தன. மறுநாள் சகல பத்திரி கைகளிலும் விதுவின் உருவப்படம் பிரசுரிக் suuLL-5. 6igs My Kind of hero 676öTD நிலைக்குத் தள்ளப்பட்டான்.
இதனைக் கண்ட அதிபர் விதுவுக்குப் பாடசாலை அனுமதி வழங்கினார். அதிய ரின் மகள் விதுவின் ஆஸ்தான நண்பியா னாள். இவர்களுக்கிடையிலான நட்பு வளர்ந்து கொண்டே போனது.
விது என்ற சிறுவன் பற்றிப் பரபரப்பான பேச்சு மக்களிடத்தில் பரவத் தொடங்கி யது. விதுவை ஒரு ஹிரோவாக மக்கள் பார்க்கத் தொடங்கினர். விதுவின் ஆளு மையில் ஒரு அறிவியல் பிரளயம் புதைந்
மல்லிகை மார்ச் 2011 & 33

Page 19
திருப்பதாகப் பொதுமக்களும், பாடசாலை சமூகமும் எண்ணத் தொடங்கியது. அதில் பிழையும் இருக்கவில்லை. அவனது பேச்சுத் தொனி, அதன் ஆழம் அனைவரை யும் வியப்பில் ஆழ்த்தியது. அவன் நாடோ டியாக இருப்பினும், சமூகத்திலிருந்து பலதைக் கற்றுக் கொண்டான். மொழி அவனுக்கு வசப்பட்டது. இது யதார்த்தம்.
விதுவின் அபரிமிதமான உணர்ச்சி மயப்பட்ட பேச்சு, பிரதேச அரசியல் தலை வரைக் கவர்ந்து விட்டது. விது பற்றிய தக வல்களைப் பெற்ற அவ்வரசியல் தலைவர், தமது கட்சியின் அரசியல் செயற்பாடுக ளுக்காக அவனைப் பயன்படுத்தத் துணிகி றார். விதுவை விலைபேசி விட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு அணுகுமுறை களை மேற்கொள்கிறார்.
உண்மையில் விதுவின் தாய், அப்பிர தேச அரசியல் தலைவனின் முன்னைய நாள் காதலி அல்லது கைவிடப்பட்ட மனைவி. இது காட்சிகளின் வசனக் குறி யாகவே வெளிப்பட்டது. இப்போது விது யார் என்பது தெரியும். ஆனால், விதுவை அரசியல் மயப்படுத்த அந்தத்தாய் கிஞ்சித் தும் விரும்பவில்லை. அரசியலினால் தனது வாழ்வு சீரழிந்ததைப் போல, தனது மகனின் வாழ்வும் சீரழிந்து விடக்கூடாது என்ற பிரக்ஞையில் அவனை வளர்க்கத் தொடங்கினாள்.
இதற்கிடையில் பாடசாலை மாணவர்க ளிடத்தில் திருடனாக தெரியப்பட்ட விது சக நண்பனாக மாறுகின்றான். குறிப்பாக ஆரம்பத்திலிருந்து பிரதேச அரசியல் தலை வனின் மகனுடன் முரண்பட்டுக் கொண்ட விது, ஒரு சந்தர்ப்பத்தில் விது, அவனுக்கு உதவுவதன் மூலம் இருவரும் நண்பர்க
ளாகின்றார்கள். ஒவ்வொரு கட்டத்திலும், இச்சிறுவர்களிடையிலான உறவு சிறுவர் உளவியலை மையப்படுத்திய கதாபாத் திர முரண்பாடும், உடன்பாடுமான உரை யாடலாக நிகழ்வது சிறப்பம்சமாகும்.
விதுவைத் தனது அரசியல் மேடைக ளில் பேச வைத்து மக்களைச் சேர்க்க வேண்டும் அதன் மூலம் தனது கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அது மட்டுமன்றி இனி சிறுவர்களுக்கான எதிர் காலம் என்ற இன்றைய அரசியல் கலா சாரத்தை விமர்சனத்திற்கு உட்படுத்தும் விதமான வசனங்களை முன்வைப்பதன் மூலம் அரசியல் சாக்கடை என்ற நிலையை இயக்குநர் நிறுவுகின்றார். அதாவது மேடைகளில் சிறுவர்களைப் பற்றிப் பேசு வது, இது சிறுவர்களின் நாடு என வியாக் கியானப்படுத்துவது, சிறுவர்கள் குழந்தை களைத் தூக்கி அரவணைப்பது வெறும் அரசியல் சடவாதம் அல்லது தற்காப்பு அர சியல் சாணக்கியம் என்ற கருதுகோளைத் தெளிவாக்குகின்றார், இயக்குநர்.
தவிர, விது வீரன் (வீரயா) என்று மக்க ளால் முன்மொழியப்படுகின்றான். அண் மைக்கால அரசியல் நிலவரத்தின்படி வீரயா என்ற வசனத்தை நாம் வீதிகளில் தெரிந்த விளம்பரங்களில் கண்டிருக்கி றோம். உண்மையில் வீரம் என்பதன் அரசி யல் கதையாடால் பற்றி சரியான விமரிசன த்தை நேர் மறை நின்று இத்திரைப்படம் பேசுகின்றது.
விதுவின் ஆளுமை, பிரதேச அரசியல் வாதியின் (விதுவின் தாயின் முன்னைய நாள் காதலன்) தேர்தல் மேடையை அலங் கரிப்பதா அல்லது பாடசாலையில் நடக்கி ன்ற நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சியை
மல்லிகை மார்ச் 2011 & 34

அலங்கரிப்பதா என்பதே கதையின் முக்கி யமாக இருக்கின்றது. விது, தனது அரசி யல் மேடைகளில் பேசுவதால் மக்கள் திர ளும் என்ற கணக்கில், பிரதேச அரசியல் தலைவன் விதுவின் தாயுடன் பேரம் பேசுகி றார். மகனின் பாடசாலைக் கல்விக்கு உதவுவதாகக் கூறுகிறார். முன்பணம் கொடுக்கின்றார். பாடசாலை உபகரணங் களை வாங்கிக் கொடுக்கின்றார். சிறுவ னைக் கடத்தித் தனது பங்களா வீட்டில் வைத்து, தனது மகனுடன் விளையாடுவ தற்கு ஆவன செய்கின்றார். தாயையும் மகனையும் ஆதரிப்பதாக வாக்களிக்கின் றான். எதற்கும் மசியாத விதுவின் தாயை அச்சுறுத்துகின்றான். விதுவின் தாய், தனது மகனின் வாழ்வு தன்னைப் போன்று அரசியலுக்குச் சோரம் போகக் கூடாது என்பதில் மிகுந்த பிரயத்தனப்படுவதைத் தனது யதார்த்தம் மிகுந்த நடிப்பால் உண ர்த்துகின்றாள். ஒரு தாயின் மனவெழுச்சி அவளது நடிப்பில் அல்லது வெளிப்பாட்டில் தொனிக்கிறது.
சிறுவன் என்ற வகையில் விது, எந்த நிகழ்வில் பேசுவது என்பது பற்றி அவனு க்கு எந்தப் பிரக்ஞையுைம் இருக்கவி ல்லை. வழமையாகப் பாடசாலை செல்வ தும் மாலை நேரங்களில் கடற்கரையோர ங்களில் விளையாடுவதும் அவனது நாட்க ளைக் கடத்திக் கொண்டிருந்தது. விதுவின் பாடசாலை நேரடி தொலைக்காட்சி நிகழ்ச் சியும் அரசியல் கூட்டமும் ஒரே நாளில் நடக்க முடிவாகியிருந்தது. பிரதேசம் மற் றும் மாவட்டம் முழுக்க ஏன் நாடு முழுவ தும் விது பற்றிக் கதைக்கும் காலம் என்பதால், விதுவின் முகத்துடன் தேர்தல் கூட்டம் ஒன்றுக்கான போஸ்டர் அல்லது
விளம்பரம் பிரதேசச் சுவர்களை ஆக்கிர மித்தது. இதனைக் கண்ட விதுவின் தாய் இதுபற்றிப் பிரதேச அரசியல்வாதியிடம் வாதிடுகிறாள். அவன் ஒன்றுக்கு ஒன்று முரணான வார்த்தைகளால் விதுவை விலைக்கு வாங்க எத்தனிக்கிறான். பாட சாலை அதிபரிடம், இதுபற்றிப் பேசும்படி விதுவின் தாய் ஒப்புவிக்கப் பிரதேச அர சியல்வாதி, அதிபரிடம் இதுபற்றிப் பேசுகி றான். ஒரு பாடசாலை அதிபருக்கான மிடுக்கை, தைரியத்தை அதிபரின் நடிப்புப் பிரதிபலித்தது. எந்த அரசியல் காரணத்திற் காகவும் சிறுவனை அரசியல் மேடைகளில் பயன்படுத்தக் கூடாது என்பதற்குக் கார ணங்களை முன்வைக்கின்றார், அதிபர். சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ப தனை நிறுவும் அரசியல் தலைவன் தனது மிலேச்சத்தனத்தை பாடசாலையின் மீது காட்டுகின்றான்.
பாடசாலை நிகழ்ச்சி நடக்காது. அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக விதுவின் தாயிடம் அரசியல்வாதி கூறி, விதுவைத் தனது கட்டுப்பாட்டில் வீட்டில் தடுத்து வைக்கின்றார், பிரதேச அரசியல்வாதி. விதுவின் பாடசாலை நிகழ்ச்சிக்காக அலங் கரிக்கப்பட்ட மேடை, நிகழ்வுக்கு முன் னைய தினம் இரவு அரசியல் கையாட் களால் தீக்கிரையாக்கப்படுகின்றது.
பாடசாலை நிகழ்வு நடக்குமா? தேர்தல் கூட்டம் நடக்குமா? என்பதே படத்தின் கிளைமெக்ஸ்.
நேரம் நெருங்குகின்றது. பாடசாலை நிகழ்வுக்கா மாணவர்களாலே அலங்கரிக் கப்பட்ட மேடை தீயில் வெந்து தணிந்து கிடக்க, அதிபர் விதுவின் தாயிடம் மகன்
LDatissans Lorriro, 2011 & 35

Page 20
எங்கே என்று வினாவுகின்றார். விது அரசி யல்வாதியின் வீட்டில் சிறைப்பட்டிருக்கின் றான் என்ற விடயம் அப்போதுதான் அவளு க்குத் துலங்குகின்றது. அவள் சிறுவனை மீட்டுத் தருவதாக அதிபரிடம் வாக்களித்து விட்டு, அரசியல்வாதியின் வீட்டுக்குச் செல்கின்றாள். அங்கே கேட் மூடப்பட்டுக் கிடக்கின்றது. வீட்டுக்குள் நுழைய பாதுகா வலன் மறுக்கின்றான். புலம்புகிறாள், தனது மகனை விடும்படி கெஞ்சுகிறாள். வீட்டுப் பாதுகாவலனின் அச்சுறுத்தலால் தான் எதுவும் செய்ய முடியாத கையாலா காத் தனத்தை எண்ணிக் கதறி தான் நகரை எரிப்பதாகக் கூறிச் செல்கிறாள். அவளைப் பின்தொடர்ந்து அரசியல் எடு பிடிகள் சென்றுவிட, வீட்டுக்குள்ளே பாட சாலை அதிபரின் மகளும், அரசியல்வாதி யின் மகனும் திருட்டு வழியாக நுழைந்து, உள்ளே இருந்த விதுவை விடுவித்து, பாட சாலைக்கு அனுப்பி வைக்கின்றார்கள். இதில் மாணவியின் பிரயத்தனம் ஒரு வகைப் புல்லரிப்பைத் தருகின்றது.
விது, பாடசாலை மேடையில் பேச ஆரம் பிக்கின்றான். அது தொலைக்காட்சியில் நேரடியாக ஒலிபரப்பாகின்றது. அதனைப் பார்த்த அரசியல்வாதி தலைகுனிகின்றார். பின்குறிப்பு மூன்று: விது
விது ஒரு தத்ரூபம் நிறைந்த சினிமா. பெரும்பாலான ரசிகர்களால் இது ஒரு சிறுவர் சினிமா என்று சமன்பாடுகள் போடப்பட்டாலும், இது ஒரு வெகுஜன சினிமா. மனிதனை உணர்வுபூட்டுகின்ற கலையைச் சினிமா தன்னுள் ஈர்க்கின்றது என்பது படத்தைப் பார்த்த அல்லது பார்க் கின்ற ரசிகனைக் கேட்டால் தெரியும்.
இப்படத்தில் ஒரு பாடல் இடம்பெறுகின் றது. மாணவர்கள் மேடையை சோடணை செய்யும் போது சங்கீதப் பாட ஆசிரியை இப்பாடலைத் தொடக்கி வைக்கின்றார். பாடல் முழுவதும் மாணவர்களாலேயே பாடப்படுகின்றது. பாடல் வரிகள் சுப்பர் மேன், ஸ்பைடர் மேன், ஹெரிபோட்டர் போன்ற படங்களை நகைப்புக்கு உட்படுத் துகின்றது. ஒரு துள்ளிசைப்பாடல். சினி மாவில் பாட எப்போதும் பூச்சியம் என்பதில் இப்பாடல் விதிவிலக்கு.
படத்தில் அரசியல்வாதியின் நடிப்பு சற்று மிகையெதார்த்தம். அவர் தன்னை அரசியல்வாதியாக நிர்ணயம் செய்வதில் சற்று அதீதம் எடுக்கின்றார். விதுவை மாணவ நண்பர்கள் காப்பாற்றுகின்ற முயற்சியும் சற்று மிகையதார்த்தமாகவே தோன்றுகின்றது. இது சிறுவர்களின் சக்தி க்கு அப்பாற்பட்டது.
படத்தில், அதிபர் மற்றும் விதுவின் தாய் ஆகிய இருவரது நடிப்பும் பாராட்டும் படியானது. அவ்வாறே விதுவின் மாணவ நண்பர்களின் நடிப்பும் யதார்த்தம் நிறைந்
தவை.
படத்தின் கதாபாத்திரத் தேர்வு பட த்தை நம்முள் ஈர்க்கின்றது. நடைமுறை சார்ந்த ஒரு பிரச்சினையை கலாபூர்வமாக நிறுவுதல் என்பதற்கு “விது மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. காட்சிக்கு காட்சி ஒளிப் பதிவு நம்மை ஆக்கிரமிக்கின்றது. நமது கண்மை நம்மாலே நம்ப முடியாதளவு காட் சிக் கோலம் புதுமையாக இருக்கின்றது. கெமராவை ஒரு துல்லியமாக கையாளும் ஒரு யுக்தியை ஒளிப்பதிவின் மூலம் காட் டுகின்றார், இயக்குநர். சாக்கடையையும்
மல்லிகை மார்ச் 2011 * 36

கூடக் கமரா செம்மைப்படுத்தி அழகுபடுத்தி யிருக்கிறது. மாயாஜாலத் திரைக்கதைக ளில் செத்துப் போன கண்கள் ஒரு புதுவித மான ஒளித்திரையில் நுழைவதான பிரமி ப்பை ஒளிப்பதிவு நிகழ்த்தியிருக்கின்றது. ஒளிப்பதிவாளர் திரு. சன்ன தேசப்பிரிய.
ஒளிப்பதிவாளர் தனது கடமையை வெற்றிகரமாகச் செய்திருக்கின்றார். ஒளிப் பதிவும், இசையும் படத்தின் இரு தூண்கள் என்பது நிரூபணமாகின்றது.
“விது கதாபாத்திரத்தில் நடித்த சிறு வன் ஒரு புதுமுகமாக இருப்பினும், திரை க்கு ஒரு கமல் ஆக காட்சித் தருகின்றான். எந்தவித சலனமுமின்றி மிக எளிமையா கக் கதையின் அங்கங்களில் ஒரு புரட்சிகர மான கதாபாத்திரமாக மனதில் நிலைக் கின்றான். மிகத் துல்லியமான நடிப்பு அல் லது வெளிப்பாடு அச்சிறுவனின் கதாபாத் திரப் பங்களிப்பில் தெரிகின்றது. எந்தவித குறைபாடுமற்ற நடிப்பை விதுவில் காணக் கூடியதாக இருக்கின்றது. படம் முழுக்க
அங்கும் இங்குமாக வெளிப்படும் நகைச்சு வைக் காட்சிகள் மிகவும் யதார்த்தம் கலந் தவை. சாதாரண சமூக வழக்கில் இருக் கின்ற நகைச்சுவைக் கலவை படத்தில் தெறிப்படைகின்றது.
வசனத்திற்கு வசனம் நமது உணர்வு கள் அரசியல் மயப்படுகின்றது. இலங்கை யின் போருக்குப் பிந்திய அரசியல் சூழலை ஒரு முக்காட்டுப் பார்வையிலிருந்து கிழி த்து மக்களுக்கு மிக நுண்ணிய பின்னுட் டலை அளிக்கின்றது. திரைக் கூடங்களும் பொதுமக்களும் ஒரு சிறுவர் சினிமாவை வரவேற்ற போதும், ஒவ்வொரு மனித வாழ் வுக்குப் பின்னும் அரசியல் இருக்கின்றது என்பதை வெள்ளிடையாக்குகின்றது விது.
விது தமிழ் சினிமாவை அல்லது மாயா ஜாலச் சினிமாவுக்குப் பந்தம் பிடிக்கின்ற நமது நுகர்வுச் சூழலுக்குப் பாரிய அச்சுறுத் தலைத் தருகின்றது என்பதை இங்கு அறுதியிட்டுக் கூறலாம். முடியுமானால விதுவை (திரும்பிப்) பார்க்கவும்.
LMLLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLLLL LL LLL LLLL LL LLL LL L LLLLLL
Cab Service
Weddings Hire, Airport Hire & all types of Services
P. Chanran
077 3858435 011 2470873
Te:
AC Van with TV Setup
LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL L LLLLL LL LLL LL LL LLLLL LLLL LL LLLLL L LLLLL LLL L L L
மல்லிகை மார்ச் 2011 * 37

Page 21
2011 சர்வதேச எழுத்தMமAதWற 2ணர்த்தும் சில/2ண்0ைகல்
-எம்.எம்.மனகர்
புத்தாண்டு பூத்த முதல் வாரத்திலேயே சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடந்து முடிந்துவிட்டது.
2011 ஜனவரி 6,7,8,9ம் திகதிகளில் நான்கு நாள் முழுமையான மாநாடாகக் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இம்மாநாடு சர்வதேசத்தையும் சேர்ந்த அறிஞர்கள், கல்விமான்கள், பேராசிரியர்கள், புலம் பெயர்ந்த படைப்பாளிகள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், நூல்கள் சஞ்சிகைகள் வெளியீட்டாளர்கள், சிற்றிதழாளர்கள், பத்திரிகையாளர், ஊடகவியலாளர்கள் என எழுத்தோடு சம்பந்தப்பட்ட, கலையோடு சம்பந்தப்பட்ட அத்தனை பெருந்தகைகளும் பங்கு பற்றி மாநாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.
இத்தனை பெரிய மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தி முடிப்பதென்றால் எத்தகைய உழைப்புத் தேவை என்பது எம் அனைவருக்கும் சொல்லாமலேயே விளங்கும். சாதா ரணமாகத் திருமண வைபவம் ஒன்றையோ, அரசியல் கூட்டம் ஒன்றினையோ ஏற்பாடு செய்வது அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. ஆனால், உலகம் முழுவதும் சுமார் 32 நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் எழுத்தாளர்களையும் ஒன்று திரட்டி இலங்கை யின் தலைநகரான கொழும்பில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் ஒன்று திரட்டுவது என்றால் கின்னஸ் சாதனைதான். எழுத்தாளர் முருகபூபதியின் தலைமையிலான ஏற்பாட்டுக் குழு அதனைச் செய்து முடித்திருக்கிறது.
இப்படியான ஒரு மகாநாட்டை நடத்த வேண்டும் என்ற எண்ணம் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பலகாலமாகத் திட்டமிடப்பட்டு ஆலோசிக்கப்பட்ட ஒன்று. இறுதியாகக் கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் கூடி ஆலோசிக்கப்பட்டது. இம்மாநாட்டின் பிரதம அமைப்பாளரும், எழுத்தாளருமான லெ.முருகபூபதி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 960LDUIT617s d-tullபேராசிரியர் கா. சிவத்தம்பி, இலங்கை அமைப்பாளர் ஞானம்' ஆசிரியர் டாக்டர் திரு.தி.ஞான சேகரன், 'மல்லிகை ஆசிரியர் திரு.டொமினிக் ஜீவா இணைந்து செயற்படும் முக்கியஸ்தர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பகுதிகளில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
"மல்லிகை" ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் நீண்டநாட் கனவு ஒன்று நிறைவேறியிருக்
மல்லிகை மார்ச் 2011 * 38

கிறது என்று சொன்னாலும், பிழையிருக் காது. ஏனெனில் "எமது எழுத்தாளர்கள் அத்தனை பேரும் புலம் பெயர்ந்து கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா, இங் கிலாந்து, பிரான்ஸ் போன்ற ஆசிய ஐரோ ப்பிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து கொண்டு இலக்கியப் பணி- எழுத்துப் பணி செய்து வருகையில், ஏன் எமது இல ங்கை நாட்டில் அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டி ஒரு சர்வதேசத் தமிழ் எழுத் தாளர் மாநாட்டை நடத்தக் கூடாது?’ என்று சிந்தித்ததன் பயன்தான் இந்த நடந்து முடி ந்த தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று சொன்
ன்ால் மிகையாகாது. இதிலே முருகபூபதி
அவர்களுக்கும், டாக்டர் தி.ஞானசேகரன் அவர்களுக்கும் பங்கு உண்டு.
ஏற்பாட்டுக்குழு கடந்த ஒரு வருடமாக நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று அமைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்க ளைக் கண்டு கலந்துரையாடல்களை நடத் தியதன் பயனாக, இவ்வளவு சிறப்பான ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்த முடிந்திருக்கிறது. மாநாட்டின் செயலாளர்க ளாக செயல்பட்ட ஜின்னா, அஷ்ரப் சிகாப் தீன் தமது பங்களிப்பை நல்ல முறையில் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
வெளிநாட்டு அழைப்பாளர்கள் உட்பட, உள்நாட்டிலிருந்து எமது கலைஞர்கள், கவிஞர்கள், படைப்பாளர்கள், எழுத்தாளர் கள் என அத்தனை பேராளர்களும் மாநா ட்டைச் சிறப்பித்தனர். போக, எமது நாட் டில் உள்ள அத்தனை பேராசிரியர்களை யும், எழுத்தாளர்களையும் ஒரே இடத்தில் சந்தித்து அளவளாவி அறிமுகமாகிக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இம்மாநாடு வழி வகுத்ததோடு தெரிந்ததைத் தெளியவும்,
தெரியாததைத் தெரிந்து அறியவும் எல் லோருக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.
தமிழ் சங்கத்தில் 13 அரங்குகளில் ஆய் வுகள் நடைபெற்றன. தமிழ்த்தூது தனிநாய கம் அடிகள், பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம், இலங்கையர்கோன், மங்களநாயகியம்மாள், சோமசுந்தரப் புலவர், ஆறுமுக நாவலர், கே.டானியல், கோ.நடேசையர், சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் சு.வித்தியானந்தன், வரதர், அறிஞர் சித்திலெப்பை, கலையரசு சொர்ணலிங்கம், அருள்வாக்கு அப்துல் காதர், அல்லாமா ம.மு.உவைஸ், புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரை நினைவுகூரும் வகையில் ஆய்வரங்குகள் ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வோர் அரங்கிலும் ஒவ்வொரு ஆய்வுகள் மேற்கொள்ளப்
LILL60.
முன்னராக, வெள்ளவத்தை காலி வீதியில் இருந்து எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்கள், கலை இலக்கியவாதிகள், தமிழ் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் புடைசூழப் பாட சாலை மாணவ மாணவியரின் அணிவகுப் புடன் தமிழ்ச் சங்க வளாகத்துள் அழைத்து வரப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
"மல்லிகை" ஆசிரியரும், எழுத்தாளரு மான திரு. டொமினிக் ஜீவாவின் மங்கள் விளக்கேற்றலுடன் மாநாட்டின் அங்குரார்ப் பண நிகழ்வுகள் பேராசிரியர் சபா. ஜெய ராசாவின் தலைமையின் கீழ் ஆரம்பமாகி யது. பேராசிரியர் கா.சிவத்தம்பி மாநாட்டு க்கு வாழ்த்துரைத்தார்.
தொடக்கவுரையை மாநாட்டின் பிரதம
மல்லிகை மார்ச் 2011 & 39

Page 22
அமைப்பாளர் அவுஸ்திரேலியா லெமுரு கபூபதி நிகழ்த்தினார்.
அவர் தம் பேச்சில்:-
"நாம் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல் நினைவிருத்திக் கொண்டு உள் ளதனால்தான் செல்லக் கூடிய பாதை தெளிவாகத் தெரிகின்றது. கலை இலக் கிய ஊடகத்துறையும், பண்பாடும் வளர்த்த பாதையில் பயணித்ததனால்தான் நம் முன்னோர் ஏற்படுத்திய சாதனைகளின் பதிவினையும் நினைவு கூர்ந்தவாறு கல் லிலே வடிக்கப்பட்ட எமது மொழி இன்று கணினியிலே வடிக்கப்படும் அளவுக்கு முன்னேறியுள்ளோம். குறிப்பிட்ட காலங்க ளில் சந்ததிகள் செய்த சாதனைகள் தமிழ் கூறும் நல்லுலகுக்கு சிறந்த சக்தியைக் கொடுத்துள்ளது. அந்த வகையில் எமது நாடு கலை, இலக்கிய, ஊடக, ஆய்வுத் துறையில் ஏனைய தமிழ் வளர்க்கும் நாடு களை விட, ஒருபடி முன்னோடியாகத் திகழ் கின்றது. வசன நடைக்கோர் ஆறுமுக நாவலர், தலித் இலக்கியத்துக்கோர் அமரர் கே.டானியல் என்போரை முன்னுதாரண மாகக் கூறலாம்.
இன்னும் சொல்லப் போனால் உலகத் தமிழ் ஆராய்ச்சியை சர்வதேச மட்டத்துக்கு இட்டுச் சென்ற தனிநாயகம் அடிகளையும், 1976ம் ஆண்டு தமிழ் நாவல் இலக்கிய நூற்றாண்டு ஆய்வரங்குக்கு வழிகோலிய பேராசிரியர் க.கைலாசபதியையும் நாம் மறந்து விடலாகாது.
ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங் கைக்கும், தமிழகத்துக்கும் வந்து தமிழ்ப் பணி செய்த அயர்லாந்து கார்ல்டுவல், பிரிட் டன் எல்லீஸ், டாக்டர் ஜி.யூபோப், இத்தாலி
கொன்ஸ்ட்டன்டைன், ஜோஸப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர், சேர்மன் விதாலி அல் லது பூர்ணிகா, டாக்டர் கிரீன் போன்றோரை நாம் குறிப்பிடுவது பொருத்தம். இந்நாடுக ளில் புலம்பெயர்ந்து தமிழ்ப் பணிபுரியும் நம் மவர்களையும் மாநாட்டுக்கு அழைத்துள் ளோம். போர்க்கால இலக்கியம், புலம்பெயர் இலக்கியம் உட்பட இலக்கிய வகைகளி னால் பெற்ற அனுபவங்களையும் மைய மாக வைத்துத் தேசிய மட்டத்தில் இயங் கிய நாம், இன்று சர்வதேசத்துக்கு உயர் ந்துள்ளோம். ஐரோப்பிய மொழிகளைக் கற்ற நம்மவர்கள் தற்பொழுது அம் மொழி களை நம்மொழிக்கு மொழி பெயர்த்துத் தமிழ் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தச் சர்வதேச மாநாடு இலங்கையில் நடத்தப்பட வேண்டும் என்று முதன் முத லாகக் குரல் எழுப்பிய மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கும், எத னையும் வெற்றி கொள்ள முடியும் என்ற தளரா தைரியத்தில் இம்மாநாட்டுக்குக் களம் அமைப்பதில் பெருந்துணையாக நின்று செயல்பட்ட "ஞானம்' ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன் அவர்களுக்கும், ஏற்பாட்டுக் குழுவுக்கும் நன்றிகளையும், பாராட்டுதல் களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் இலக்கிய ஆய்வு பற்றிக் குறிப் பிடுவதாயின் மரதன் ஒட்டம் போல, தலை முறைத் தொடர் ஒட்டமாக அது காணப் படுகிறது. கொடிய யுத்தத்தினால், இன அழிவுகள், பொருள் இழப்புக்கள், சோத னைகள், வேதனைகள் என்பவற்றைத் தாங்கிக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்நாட்டு முஸ்லிம்களும், தமிழ் மக்க ளும் மதத்தாலும் கலாசாரத்தாலும் வேறு
மல்லிகை மார்ச் 2011 & 40

பட்டிருந்தாலும், தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் இலங்கையின் எப்பாகத்தில்
இருந்தாலும் இலக்கிய, ஊடகத்துறைக
ளில் ஈடுபட்டு உழைக்கின்றனர். இவர்கள் மத்தியில் அந்நியோன்னியப் புரிந்துணர்வு ஏற்படுத்தப்படுவது அவசியம்” எனத் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
மாநாட்டின் ஆய்வரங்குகளில் அங்கம் வகித்த தலைவர்கள், இணைத்தலைவர் கள், ஆய்வு மதிப்பீட்டாளர்கள், இணைப்பா ளர்கள் என்போர்களுடன் ஆய்வுக்குட்படுத் திய விடயங்களையும் அவற்றை முன் வைத் தவர்களின் பெயர்ப்பட்டியலையும் இங்கு தருவது பொருத்தம் என்று எண்ணுகிறேன்.
தலைமை:- பேராசிரியர் சபா.ஜெய ராசா, இலங்கைக்கான மொரீஸியஸ் நாட் டுத் தூதுவர் கெளரவ தெ.ஈஸ்வரன், ஜனாப் எஸ்.எச்.எம்.ஜெமீல், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. மு.கதிர்காமநாதன்.
ஆய்வு மதிப்பீட்டாளர்கள்:- பாரதி இராஜநாயகம் (ஞாயிறு தினக்குரல் ஆசிரி யர்), கனடா சி.சிறிசுக்கந்தராசா, இந்தியா வை. ஜவஹர் ஆறுமுகம், மூத்த எழுத்தா ளர் தெணியான், இந்தியா புதுவை 'கவிதை வானில் இதழாசிரியர் கலாவிசு, கவிச்செல் வர் அழகு சந்திரகுமாரன் (இந்தியா), சி.கே. முருகன், த.சந்திரசேகரன் (இந்தியா) ஆசிரியர் "இனிய நந்தவனம்', தினக்குரல் பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கம், இங்கி லாந்து எழுத்தாளர் இரா. உதயணன், இந் தியா திருச்சி மாவட்டம் எழுத்தாளர் சங்கத் தலைவர் அரிமா புலவவர் இரா. மாறன், மட்டக்களப்புக் கலை இலக்கியப் பேர வைத் தலைவர் அன்பழகன் குரூஸ், இந் தியா பச்சைரோஜா பத்திரிகை ஆசிரியர் தத்துவக் கவிஞர் இ.பதுருத்தீன், ஊடக
வியலாளர் திரு. அருள் சத்தியநாதன், மல் லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, கனடா எஸ்.பி. கனகசபாபதி (கல்கிதாசன்), சுசீந் திரன் (பிரான்ஸ்), எழுத்தாளர் மொழிவர தன், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரி யர் தே. செந்தில்வேலவர், "இருக்கிறம்" ஆசிரியர் அருளானந்தம் சஞ்சீத், இல ங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்க ளுக்குப் பொறுப்பாளர் என்.எம்.ராஜா, வைத்தியக் கலாநிதி தாளிலிம் அகமது, ஆசிரிய ஆலோசகர் சத்தார் எம். பிர் தெளஸ், கலாபூஷணம் கவிஞர் குறிஞ்சி நாடன், ஊடகவியலாளர் புர்கான் பீ.இப்தி கார், அன்னலட்சுமி ராஜதுரை (மூத்த பத்திரிகையாளர்), இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடக வியலாளர் செல்வி சற்சொரூபவதி நாதன்.
இணைத்தலைவர்கள்:- இந்தியா இணைப் பேராசிரியர் மு.சு.தங்கம், டாக்டர் எம்.கே.முருகானந்தன், யாழ் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரி யர் எஸ்.சிவலிங்கராஜா, கலாநிதி எம்.எஸ். எம். அனஸ், எழுத்தாளர் பத்மா சோமகாந் தன், கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசி ரியை சித்திரலேகா மெளனகுரு, பேராசிரி யர் சபா ஜெயராசா, தமிழறிஞர் அகளங் கன், பேராசிரியர் அ.சண்முகதாஸ், மன் னார் தமிழ்ச் சங்கத் தலைவர் அருட்தரு. தமிழ்நேசன் அடிகளார், பேராதனைப் பல் கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி துரை மனோகரன், தென்கிழக் குப் பல்கலைக்கழக மொழித்துறை சிரே ஷ்ட விரிவுரையாளர் ரமீஸ் அப்துல்லாவற், பேராசிரியர் கலாநிதி சி.மெளனகுரு, ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தயாரிப்பா
மல்லிகை மார்ச் 2011 & 41

Page 23
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், மணிப்புல வர் மருதூர் ஏ.மஜீத், உலகத் தமிழ்ச்சிற்றி தழ்கள் சங்கச் செயலாளர் இந்தியா திரு சொர்ணபாரதி, மூத்த எழுத்தாளர் (அன்பு மணி) திரு. இரா.நாகலிங்கம், பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், விமர்சகர், எழுத்தாளர் திரு.கே.எஸ். சிவகுமாரன், அவுஸ்திரே லியா திரு.லெ.முருகபூபதி, நவமணி ஆசிரியர் அல்ஹாஜ் என்.எம். அமீன், தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித் துறைத் தலைவர் திரு.க.இரகுபரன், சட்டத்தரணி எஸ்.முத்துமீரான், கவிஞர் எம்.ஏ. அல் அஸசமத், கிழக்குப் பல் கலைக்கழகப் பேராசிரியர் மா.செல்வ ராஜா, கலாநிதி வ.மகேஸ்வரன், எழுத்தா ளர் தெளிவத்தை ஜோசன், மூத்த எழுத் தாளர் தெணியான், திரு ஆ.இரகுபதி பால முரீதரன், கலாநிதி செ.யோகராசா, இந்தியா சின்னப்ப பாரதி.
ளர் திரு எஸ்.மோசேஸ்,
இணைப்பாளர்கள்:- மேமன்கவி, திருமதி. வசந்தி தயாபரன், திருமதி. ஞானம் ஞானசேகரன், ஓ.கே. குணநாதன், தெளிவத்தை ஜோசப், ப.க.மகாதேவா, நாடகக் கலைஞர், இலக்கியச் செயற்பாட் டாளர் அந்தனி ஜீவா, சட்டத்தரணி திரு. ஜி.இராஜகுலேந்திரா, செங்கதில் ஆசிரியர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், எழுத்தாளர் திக்குவல்லை கமால், மு.தயா பரன், திரு.சி.பாஸ்கரா, ஊடகவியலாளர் கே.பொன்னுத்துரை.
சிறப்புச் சொற்பொழிவாளர்கள்:- இந்தியா நாவலாசிரியர் தோப்பில் முகம் மது மீரான், திருமதி இராஜேஸ்வரி பால சுப்பிரமணியம்,
தமிழ்த்துாது தனிநாயகம் அடிகளார் அர
ங்கில் நடைபெற்ற தொடக்க விழாவைத் தொடர்ந்து எஸ்.டி.சிவநாயகம் அரங்கில் நடைபெற்ற 'கணினியும் வலைப்பதிவுக ளும் பற்றிய ஆய்வுகளில் திருகே, சர்வேஸ் வரன் (கணினிப் பொறியியலாளர்), செல்வி சபீனதயானிதயானந்தன், திரு.மு. மயூரன், திரு.ஞா. பாலச்சந்திரன் (கணினி விரிவுரை யாளர்) ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.
இரண்டாம் நாள் இலங்கையர்கோன் அரங்கில் 'ஈழத்து தமிழ் இலக்கியம்-1 பற்றி நிகழ்த்தப்பட்ட ஆய்வுரைகளில் சப்ர கமுவப் பல்கலைக்கழக மொழித்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.நாகே ஸ்வரன், கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்), பேராதனைப் பல்கலைக்கழ கத் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையா ளர் கலாநிதி வ.மகேஸ்வரன், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரை யாளர் திரு. எஸ்.சி. எம். ஜெளசி, பேரா தனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை துணை விரிவுரையாளர் திரு.பெ.சரவண குமார் ஆகிய தமிழ்த்துறை விரிவுரையா ளர்கள் ஆய்வுகளை நிகழ்த்தினர்.
மங்களநாயகியம்மாள் அரங்கில் பெண் எழுத்துச் சம்பந்தமான ஆய்வுகளை ஊட கவியல் கல்லூரி விரிவுரையாளர் தேவ கெளரி சுரேந்திரன், இலங்கை தொழில்நுட் பக் கல்லூரியிலும், மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகப் பகுதி நேர விரிவுரையா ளர் திருமதி அவைத்தியலிங்கம், கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைப் பேராசி ரியை அம்மன்கிளி முருகதாஸ், தென்கிழ க்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரை யாளர் கலாநிதி அனுசூயா சேனாதிராஜா, லறினா அப்துல் ஹக் ஆகியோர் ஆய்வுரை களை நிகழ்த்தினர்.
மல்லிகை மார்ச் 2011 & 42

அதேவேளை சோமசுந்தரப் புலவர் அர ங்கில் 'சிறுவர் இலக்கியம் சம்பந்தமான ஆய்வுரைகளை கேணிப்பித்தன் ச. அருளா னந்தம் (மூத்த எழுத்தாளர்), திரு. சு. துரை சிங்கம் (கவிஞர் துரையர்), சிரேஷ்ட விரி வுரையாளர் ரூபி வலன்ரீனா பிரான்ஸிஸ், கே.எம்.எம். இக்பால், முன்னாள் விருவுரை யாளர் வே. குமாரசாமி, முன்னாள் கலாசா ரப் பணிப்பாளர் திரு. எஸ். எதிர்மன்னசிங் கம் ஆகியோர் முன் வைத்தனர்.
ஆறுமுகநாவலர் அரங்கில் இடம்பெற்ற 'உலகத் தமிழ் இலக்கியம்' பற்றிய ஆய் வில் பேராசிரியர் (கிழக்குப் பல்கலைக்கழ கம்) செ.யோகராசா, முனைவர் மு.சு.தங் கம் (இந்தியா), தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறைத் தலைவர் திரு.க. இரகுபரன், புலோலியூர் வேல் நந்தகுமார் ஆகியோர் ஆய்வுரைகளை நிகழ்த்தினார். மேலும் இரண்டாம் நாள் நிகழ்வில் கே.டானியல் அரங்கில் 'பல்துறை-1’ சம் பந்தமான ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. அவற்றை அவுஸ்திரேலியப் பேராசிரியர் ஜனாப். ஏ.சி.எல். அமீர் அலி, செல்வி கந் தப்புநீலாம்பிகை, திரு.ரா. நித்தியானந்தன், (எழுத்தாளர்), யாழ்ப்பாணப் பல்கலைக்க ழகச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி என்போர் நிகழ்த்தினர்.
இரண்டாம் நாள் நிறைவாக கோ. நடே சையர் அரங்கில் இடம்பெற்ற இசைக்கச் சேரிக்கு கொழும்பு தமிழ் சங்கத் தலைவர் திரு.மு. கதிர்காமநாதன் தலைமை வகிக்க இந்தியாவைச் சேர்ந்த நாவலாசிரியர் தோப் பில் முகம்மது மீரான் சிறப்புச் சொற்பொழி வாற்றினார். சுகந்தி இராஜகுலேந்திரா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
இனி மூன்றாம் நாள் நிகழ்வினைப் பார்க்கும் போது சுவாமி விபுலானந்தர் அர ங்கில் அவைக்காற்றுக் கலைகள்' என்ற தலைப்பின் கீழ் ஆய்வு நடைபெற்றது. அதாவது இருபத்தோராம் நூற்றாண்டை எதிர்க்கொள்ளலில் எமது கட்புல, செவிப் புல அவைக்காற்றுக் கலைகள்' என்பது பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ் வாய்வுரைகளை சிரேஷ்ட விரிவுரையாளர் கொ.றொ.கொன்ஸ்ரன்ரைன், கலாநிதி. கந்தையா முறி கணேசன், குறும்படத் தயா ரிப்பாளர் எம்.ஐ.ஜாபீர், நாடக நெறியாளர் நடிகர் ரவிச்சந்திரா, விமர்சகர் (நிலா) தர்ஷாயணி லோகநாதன், கவிஞர் சு.முரளிதரன், பரதக் கலைஞர் பவானி குகப்பிரியா வழங்கினர்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அரங் கில் 'ஈழத்து தமிழ் இலக்கியம்-2 ஆராய ப்பட்டது. இதற்கான ஆய்வுரைகளை முன்னாள் கலாசார உத்தியோகத்தர் செல்வி. கதிர்காமநாதன் தங்கேஸ்வரி, விரிவுரையாளர் திரு.ச.லலீசன், திரு. ம.பா.மகாலிங்கசிவம், இந்தியா திரு. வீரா. பாலச்சந்திரன், 'நிகர் சஞ்சிகை ஆசிரியர் திரு அ. லெட்சுமணன், இங்கிலாந்து சட் டத்தரணி ஜனாப் எஸ்.எம்.எம். பவர் ஆகி யோர் முன்வைத்தனர்.
அதேநேரம் வரதர் அரங்கில் 'சிற்றிதழ்" பற்றிய ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன. மூத்த எழுத்தாளர் திரு தெளிவத்தை ஜோசப், காலபூஷணம் கவிஞர் ஏ. இக் பால், உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் திரு வதிலைப் பிரபா, 'ஜீவநதி' ஆசிரியர் திரு.க.பரணிதரன், கண்டித் திருத்துவக் கல்லூரி ஆசிரியை இரா. சர் மிளாதேவி, திரு. குணேஸ்வரன், ஞானம்
மல்லிகை மார்ச் 2011 & 43

Page 24
ஆசிரியர் டாக்டர் தி. ஞானசேகரன், திரு. எஸ். கிருஸ்ணமூர்த்தி, பிரான்ஸ் திரு. வி.ரி.இளங்கோவன், இந்தியா திரு.க.பட்டா பிராமன் (அரியா பொறியியலாளர்) ஆகி யோர் நிகழ்த்தினர். இறுதியில் மல்லிகை ஆசிரியர் வழங்கிய கருத்துரை எல்லோரது வரவேற்பையும் பெற்றது.
இது இவ்வாறிருக்க சித்திலெப்பை அரங்கில் மொழி பெயர்ப்பு பற்றிய ஆய் வுரைகள் இடம்பெற்றன. இவற்றை கவி ஞர் சோ.பத்மநாதன், பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம், ஊவா வெல்லஸ்ஸ விரி வுரையாளர் திரு மார்க்கண்டன் ரூபவத னன், முனைவர் மடுளுகிரியே விஜயரத்ன 616öTGLITft flasypg55, 'Being Alive' steilim gearál
கில மொழிபெயர்ப்புக் கதைகள் அடங்கிய
நூலினை திரு.லெ.முருகபூபதி (அவுஸ்தி ரேலியா) வெளியிட்டு வைத்தார். புரவலர் ஹாசீம் உமர் முதற் பிரதியைப் பெற்றுக் கொண்டார். உரையாளர்களுக்கு சான்றித ழ்களும் வழங்கப்பட்டன. மாநாட்டில் கல ந்து கொண்டு ஆய்வுரை நிகழ்த்திய எமது சகோதர மொழி இனத்தவரான முனைவர் மடுளுகிரியே விஜயரத்ன நிகழ்த்திய உரை எல்லோரது பாராட்டுதலையும் பெற்றது.
மூன்றாம் நாள் நிறைவாக கலையரசு சொர்ணலிங்கம் அரங்கில நடைபெற்ற நிகழ்வுகளுக்கு ஜனாப் எஸ்.எச்.எம். ஜெமீல் தலைமை வகித்தார். இங்கு வீணைக் கச்சேரி இடம் பெற்றது. திருமதி. இராஜேஸ்வரி சிறப்புச் சொற்பொழிவாற் றினார். எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படமும் (திரு.மூர்த்தி, கனடா), திரு. அருண்மொழி தமிழ்நாடு, திரு.ரவிபிர தீபன் பிரான்ஸ் ஆகியோரது குறுந்திரைப் படங்களும் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளை
திரு. ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி தொகு த்து வழங்கினார்.
நான்காம் நாள் நிகழ்வாக அல்லாமா ம.மு.உவைஸ் அரங்கில் நாட்டாரியல்' சம்பந்தமான ஆய்வுரைகள் இடம்பெற்றன. இவற்றை மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத், எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம், தலவின்னை சிபார், "ஜீவநதி துணை ஆசிரியர் திரு.வெ. துஷ்யந்தன் ஆகியோர் நிகழ்த்தினர்.
புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை அரங்கில் 'பல்துறை-2 ஆய்வு நடைபெற் ՈD5l. திரு.என்.செல்வராஜா (தொகுப்பாளர் நூல் தேட்டம், நிருவாக இயக்குநர்- அயோ த்தி நூலக சேவைகள்), தமிழ்மணி மானா மக்கீன், யாழ் பல்கலைக்கழக விரிவுரை யாளர் தி.இராஜேஸ்கண்ணா, இந்தியா த.முத்தமிழ் (முனைவர் பட்ட ஆய்வாளர்), திருமலை நவம், திரு.த. அஜந்தகுமார் ஆகியோர் ஆய்வுரைகளை நிகழ்த்தினர். 6ம் திகதி சுப்ரமணியம் மாலதி மண்ட பத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் 'ஈழத் துத் தமிழ் இலக்கியச் செல்நெறியில் எதிர்ப் பிலக்கியத்தின் வகிபாகம்' எனும் தலைப் பில் கருத்தரங்கு நடைபெற்றது. கலாநிதி வ.மகேஸ்வரன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பெருவெளி சஞ்சிகை செயற்பாட்டாளர் எஸ்.எம். மிஹாத், 'மீள்பார்வை' பிரதம ஆசிரியர் சிராஜ் மஷ்ஹர், எழுத்தாளரும், ஆங்கி லப் போதனாசிரியருமான திரு. அ.ஜலிை யன் புஷ்பராஜா ஆகியோர் உரையாற்றினர். 9ம் திகதி இரண்டு கருத்தரங்குகள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. குமாரசு வாமி விநோதன் மண்டபத்தில் ஒன்றும்,
Loxosâans towửẻ 2011 ẳ 44

சுப்ரமணியம் மாலதி மண்டபத்தில் ஒன்று மாக நடைபெற்றது.
குமாரசுவாமி விநோதன் மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் நலிவுற்ற மக்கள் தொடர்பான இலக்கியப் பதிவுகள் போதிய கவனத்தைப் பெற்றுள்ளனவா? என்ற தலைப்பின் கீழும், சுப்ரமணியம் மாலதி மண்டபத்தில் நடைபெற்ற கருத் தரங்கில் நவீன தமிழ் இலக்கியம் உலக தரத்தை எட்டியுள்ளதா?’ என்ற தலைப் பின் கீழும் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
முன்னைய தலைப்பான நலிவுற்ற மக்கள் தொடர்பான இலக்கியப் பதிவுகள் போதிய கவனத்தைப் பெற்றுள்ளனவா? என்பதை எடுத்து விளக்கும் விதத்தில் இந் தியா கா.வெ.தியாகசாந்தன், திரு. மார்க் கண்டன் ரூபவதனன், எழுத்தாளர் டாக்டர் ச.முருகானந்தன், எழுத்தாளர் திரு. ரா. நித்தியானந்தன், திரு.வேலாயுதம் இராமர் என்போர் கருத்துரைகள் வழங்கினர்.
அடுத்த தலைப்பான நவீன தமிழ் இல க்கியம் உலகத் தரத்தை எட்டியுள்ளதா? என்பதை ஆராயும் விதமாக டாக்டர் நொயல் நடேசன், திருமல்ை நவம், திரு. வி.ரி. இளங்கோவன், திரு. ஜி. இராஜ குலேந்திரா (சட்டத்தரணி), ஊடகவியலா ளர் திரு.கே. விஜயன் என்போர் தமது கருத் துக்களை முன்வைத்தனர்.
இரண்டாவது கருத்தரங்கு மூத்த எழுத் தாளர் தெணியான் மற்றும் திரு. ஆ. இரகு பதிuாலழுநீதரன் இணைத்தலைமை வகி க்க, இறுதியான கருத்தரங்குக்கு கலாநிதி செ.யோகராசா, இந்தியா சின்னப்பபாரதி ஆகியோர் இணைத்தலைமை வகித்தனர்.
மாநாட்டின் நிறைவு நாளான இறுதி நாளன்று வெள்ளவத்தை இராமகிருஷ்ண
மிஷன் மண்டபத்தில் கைலாசபதி அரங் கில் நிறைவு விழாக் கொண்டாடப்பட்டது. இலங்கைக்கான மொரீஸியஸ் நாட்டுத் தூதுவர் கெளரவ தெ.ஈஸ்வரன் தலைமை யில் நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பதிதி களாக கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி, அருட் தந்தை கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளார் பங்கு பற்றி சிறப்பித்தார்கள்.
மாநாட்டுப் பிரதம அமைப்பாளர் திரு.லெ.முருகபூபதியும், மாநாட்டு இணை ப்பாளர் ஞானம் ஆசிரியர் டாக்டர் திரு. தி.ஞானசேகரன் (தலைவர் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்) ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து சிறப்பதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன. கவிஞர் அஷ் ரப் சிகாப்தீன் நன்றியுரை வழங்கினார். "வேரிலிருந்து நாடகமும், பரத நாட்டியமும் இடம்பெற்றன. எஸ்.எழில்வேந்தன் நிகழ்ச் சிகளைத் தொகுத்து வழங்கினார்.
மாநாட்டு மலர் வெளியிட்டு வைக்கப்பட் டது. மாநாட்டு மலர் அறிமுகவுரையை கவி ஞர் டாக்டர் ஜின்னா ஷரிபுத்தீன் நிகழ்த்த, மலர் வெளியீட்டுரையை கம்பவாரிதி இ.ஜெய ராஜ்நிகழ்த்தினார். மற்றும் ஜீவநதி, ஞானம், படிகள் போன்ற இதழ்களின் சிறப்பு மலர் களும் வெளியிட்டு வைக்கப்பட்டன. இவற்றின் முதல் பிரதிகளை தமிழ்த் தொண் டாளர் புரவலர் அல்ஹாஜ் ஹாஸிம் உமர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சிகளை அஷ்ரப் சிகாப்தீன் தொகுத்து வழங்கினார். மாநாட்டின் பயன்கள் 1. தமிழ் கலை, இலக்கிய ஊடகத்துறை சார்ந்தவர்களின் நலன்கள் உரிமைகள் தொடர்பாக அரசாங்கத்துடனும், அமைச் சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துதல்.
மல்லிகை மார்ச் 2011 $ 45

Page 25
2. இந்நாட்டின் தமிழ் முஸ்லிம் படைப் பாளிகளின் நூல் விநியோகத் திட்டம் உயர்கல்விப் பீடங்களிலும், நாடெங்கிலும் இயங்கும் பொது நூலகங்களிலும் முறை பாக, சீராக இயங்குவதற்கு வழிவகை களை மேற்கொள்வது.
3. போரினால் பாதிப்புற்ற ஏழைத் தமிழ் எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உத வும் நம்பிக்கை நிதியம் ஒன்றினை உரு வாக்குவது.
4. பெரும்பான்மை இனத்தவர்களுடன் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள் சமத் துவமாக வாழும் வகைகளை கலை இலக் கிய ஊடகத்துறையினர் சார்பாகத் தொடர் ச்சியாக வலியுறுத்தல், 5. இது சம்பந்தமான உரையாடலுக்கு நாம் அனைவரும் கருத்து ஒருமித்து ஒன்றுபட்டு உழைப்பது. 6. இதழியல் ஊடகங்களில் எழுதும் LUGTL’lu IT Gíslaf, Gil GäT AF ET LDT GOTIEŭ EGTE GITT உயர்த்துவதற்கு ஊடக நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துதல்,
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மாநாட்டு ஆரம்ப நாள் நிகழ்வு களின் போது மாநாட்டுக்கு வழங்கிய வாழ்த்துரையில் கூறிய அறிவுரையை நாம் மனதில் இருத்திக் கொள்வது எமது எதிர் கால நடவடிக்கைகளுக்குப் பயன்படும் என நினைக்கிறேன். அதாவது "எமது இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர் த்துவதற்காகப் பணியை தமிழ் எழுத்தாளர் கள் முன்னெடுக்க வேண்டும். தமிழை வளர்ப்பதற்கு எமக்குத் தேவையில்லை நாம் எம்மைத் தமிழால் வளர்த்துக் கொள்ள இது போன்ற மாநாடுகள் பயன் படும்" என அவர் தெரிவித்தார்.
மாநாட்டுத் தீர்மானங்கள்:
நடந்து முடிந்த சர்வதேச தமிழ் எழுத் தாளர் மாநாடு உத்தேச தனது எதிர்காலப் பயணத்தை வெற்றிகொள்ள ஐந்து தீர்மா னங்களை எடுத்திருக்கிறது. அதனை மாநாட்டின் செயலாளர் அஷ்ரப் சிகாப்தின் அவர்கள் மாநாட்டு இறுதி நாள் நிகழ்வின் முடிவில் முன்வைத்தார்.
OGO) GILLITel6 TE
1. இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இம்மாநாடு நடத்தப்பட வேண்டும். 2. சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் ஒன்றி பத்தின் தலைமைச் செயலகம் இலங்கை பில் அமைந்திருக்கும். 3. தமிழ் பேசும் சகல நாடுகளிலும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்படவேண்டும்.
4. இம்மாநாட்டைத் தொடர்ந்து நடத்திச் செல்ல நிதியம் ஒன்றினை ஏற்படுத்த வேண்டும்,
5. சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களின் ஆக் கங்களைப் பதித்து வெளியிடுவதற்கெனப் பதிப்பகம் ஒன்றினை உருவாக்குதல்,
இந்த ஐந்து தீர்மானங்களும் பொது வாக மேற்கொள்ளப்பட்டாலும், காலப் போக்கில் தமிழ் எழுத்தாளர்களின் நலன்க ளில் கவனம் செலுத்துதல், தமிழ் இலக் கிய முயற்சிகளை சர்வதேசம் எங்கும் எடு த்துச் செல்லுதல், தமிழ் மொழியின் செழு மையையும், தமிழ் மொழியில் படைக்கப்
த்தையும் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்லுதல் போன்ற பல்வேறு துனைச் செயற்பாடுகளையும் சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் மேற்கொள்ள இருக்கிறது.
மல்லிகை மார்ச் 2011: 46

memon kavi(a) yahoo.com
இன்றைய காலகட்டத்தில் வலைப் பதிவுகள் அடைந்த நிலையில் வெவ்வேறு காலகட்டங்களில் அதை பற்றி இன் வலைப்பதிவுகளில் குறிப்புகள் இவை: வலைபதிவுகள்" (BL0GS)
35 Taf s).[13] (ypLib (kasi Gothamizmanam. Comm)-2006
சென்ற ஆண்டின் ஆன்லைன் ஆங்கில அகராதிகளில் அதிகமாக தேடப்பட்ட சொல் எது தெரியுமா? Blog என்ற சொல் இது, புகழ்பெற்ற மெர்ரியம்-வெப்ஸ்டர் ஆங்கில அகராதிப் பதிப்பகத்தினரால் 2004ம் ஆண்டின் மிக முக்கியமான சொல் (the Word of the year) என்றுதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதிலிருந்து இந்தச் சொல்லின் பிரபலத்தைப் புரிந்துகொள்ளலாம். உண்மையில் டிடழப என்பது நடிடழபளன்ற சொல்லின் சுருக்கமாகப் பிறந்து, இன்று தனியான சொல்லாகவே நிலைபெற்றுவிட்டது. Blog என்பதன் பொருள்தான் என்ன?
A Web site that contains an online personal journal with reflections, comments, and often hyperlinks provided by the writer என்பது அதற்கான விளக்கம், தமிழில் சொல்வ தானால், தனியாள் ஒருவர், தன் எண்ணங்களை, கருத்துக்களை, ஆங்காங்கேசுட்டி (hyperlink)களுடன் பதிவு செய்யும் ஒரு இணையத்தளம் எனலாம்.
செய்தி நிறுவனங்கள், நாளிதழ்கள், வார மாத இதழ்கள் ஆகியவை அரசியல், வணிகக் காரணங்களின் தாக்கத்தால் ஒரு சார்புநிலைஎடுக்கவோ, மேம்போக்கான பார்வை கொள்ளவோ வாய்ப்பிருக்கிற விஷயங்களில் கூட, கட்டுப்பாடற்ற, பரவ லான, பன்முகப்பார்வைகொண்ட கருத்துக்களையும் சிந்தனைகளையும் இணைய
மல்லிகை மார்ச் 2011 :47

Page 26
வாசகர்களுக்கு வலைப்பதிவுகள் அளி க்கின்றன. விரிவு வலையில் பதிவு செய்யப்படுவதால், தமிழில் வலைப்பதி வுகள் என்று சொல்லலாம்) இதனால் படிப்பறிவும், சுதந்திர வேட்கையும், வசதி வாய்ப்புகளும் அமைந்திருக்கும் மேற்கத்திய சமூகங்களில் இன்று வலைப் பதிவுகள் ஒரு பெரிய மாற்று ஊடகமாக வளர்ந்துவருகின்றன.
இன்றைக்கு சுமார் அறுபது லட்சம் (ஆம், 6000000) வலைப்பதிவுகள் இருக் கலாம் என்று ஒரு கணக்கு சொல்கிறது. முதலில், தமிழில் வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றனவா? ஆமாம், இன்று தமிழில் முன்னூறுக்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. 60லட்சத்தோடு ஒப்பிடும்போது 300 மிகக் குறைவாகத் தெரியலாம். ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பல மொழி புழங்கும் சமூகத்தில், வலைப்பதிவுகள் இப்போதுதான் வளர ஆரம்பித்திருப்பதால், இந்த எண்ணிக் கையே ஆரோக்கியமானதே.
சொல்லப்போனால், இன்று இந்திய மொழிகளிலேயே அதிகம் வலைப்பதிவு கள் எழுதப்படுவது தமிழில்தான். இன் னும் இணையத் தொடர்புவசதிகள் முன் னேறும்போது, பன்மொழியிலும் எளிதில் எழுத ஏதுவாக கணினி நுட்பம் வளரும் போது, கட்டாயம் இந்தியாவிலும் வலைப் பதிவுகள் கவனிக்கத்தக்க மாற்று ஊட கமாக வளரும் வாய்ப்பு உள்ளது.
நடந்து முடிந்த அமெரிக்க தேர்தல் சமயத்தில் பிரசாரம், விவாதம், ஆதரவு திரட்டல் ஆகிய செயல்களில் வலைப் பதிவுகளின் பங்குகணிசமாக இருந்தது.
சமீபத்தில் கடற் பெருக்கால் தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட சேதங்கள் வலைப் பதிவுகளில் வெளியிடப்பட்டதும், உலக அளவில் பல வலைப்பதிவர்கள் நேரடித் தகவல்களை எழுதி பாதிக்கப்பட்டோ ரின் அவலத்தை, மீட்பு, நிவாரணப் பணி களின் தேவைகளையும், குறைபாடுக ளையும் சுட்டிக்காட்டியதும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது ஜனவரி 6ம் தேதியிட்ட தி இந்து ஆங் கில செய்தித்தாளின் தலையங்கத்தி லேயே குறிப்பிடப்பட்டது.
சரி, தமிழில் எழுதப்படும் வலைப் பதிவுகளை எங்கே காணலாம்? எப்படி வலைப்பதிவுகள் வெளியே தெரியும்? யார் என்ன எழுதுகிறார்கள் என்று எப்ப டித் தெரிந்துகொள்வது?
தமிழில் வலைப்பதிப்போர் ஒரு கூட்டு சமுதாயமாக பல முயற்சிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளார்கள். முக்கியமாக வலைப்பதிவுகள்பட்டியல்
ஒன்று கடந்த 18 மாத காலமாக இயங்கி
வருகிறது. அதன் இணைய முகவரி: http://tamilblogs.blogspot.com
இத்துடன், எந்த வலைப்பதிவில் இன்று புதிதாக என்ன எழுதப்பட்டுள்ளது என்று சுடச்சுட தகவலைத் திரட்டி, பட்டியலி ட்டு வலைப்பதிவுகளை வாசிக்க வசதி யாக அமைத்திருக்கிறது தமிழ் மணம், காம் என்ற வலைவாசல் (போர்ட்டல்). இங்கே வலைப்பதிவு நுட் பத்தை அறி ந்து கொள்ள தொடுப்புகளும் விவாதி க்க ஊடாடு மன்றமும் அமைக் கப்பட்டு ள்ளன. உலகம் முழுதும் இருந்து தமி ழில் வலைப்பதிக்கும் நூற்றுக் கணக் கான ஆர்வலர்களுக்கு ஓர் அரங்கமாக
மல்லிகை மார்ச் 2011 & 48

தமிழ்மணம் வலைவாசல் திகழ்கிறது. (S)56 (S60)600Tuu(p656) if: www.thamiz
Ilala,COl
இணையத்தமிழ் வாசகர்களுக்கு வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவம் வலைப்பதிவுகள் மூலம் கிடைக்கிறது என்றால் அது மிகையல்ல.இதன்மூலம் தமிழில் கணினி நுட்பமும் கூட வளர்வ தும் இன்னொரு கூடுதல் பயன். நீங்க ளும் வலைப்பதிவுகளை வாசித்துப் பாருங்கள். உங்களில் சிலர் கட்டாயம் உடனே உங்களுக்கென்று ஒரு வலைப் பதிவையும் தொடங்கி எழுதவும் கூடும். இது உங்களுக்கு நல்லதொரு பயனு ள்ள பொழுதுபோக்காக அமையும் என்பதில் ஐயமில்லை.
b6 (3: http://thatstamiloneindia.in/art culture/essays/2006/kasi.html வலைப்பதிவுகளும் படைப்பாக்கத்தின் ஜனநாயகமும் இரா.சிந்தண் 03 பெப்ரவரி 2011
வாசிப்பு உலகத்தில் புதியவர்கள் நுழைந்தால்தான், எழுத்து லகத்திற்கு கொண்டாட்டம். அப்போதுதான், இலக்கி யம் புத்தாடை அணிய முடியும். - அந்த வகையிலான முன்னேற்றங்கள் சமீப நாட்களில் அதிகரித்திருக்கின்றன. ஒரு பக்கம் புத்தகத் திருவிழாக்கள், வாசி ப்பை ஒரு கொண்டாட்டமாக்கி னால், மற்றொரு புறம் இணையவெளி வலைப் பக்கங்கள் படைப் பாக்கத்தில் ஜன நாயகத்தைப் புகுத்தியிருக்கின்றன.
தமிழ் வலைப்பக்கங்களில் சுமார் 2700 பதிவர்கள் இருப்பதாக தமிழ் வெளி எனும் திரட்டி கூறுகிறது. வலைப்
பதிவர்களாக இருக்கும் புதிய தலை முறை எழுத்தாளர்களிடம் இருந்து இன்று வரை சுமார் 200 புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. 10 ஆயிரத்திற் கும் அதிகமான உலகம் தழுவிய தமிழ் வாச கர்கள் இப்பக்கங்களில் அன்றாடம் உலவு கிறார்கள். எங்கோ குவைத்தில் ஒரு கட்டுமானத் தொழிலாளியாக அலை ந்து கொண்டிருக்கும் தொழிலாளி க்கும் சற்றுத் தமிழில் இளைப்பாறும் மாய வழியை இணையம் உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது. அவர்கள் கணினி யின் துணையுடன் அந்த வீதியில் கூடி விவாதிக்கிறார்கள், வாசிக்கிறார்கள். ஆரோக்கியமாகவும், அரட்டையாகவும் பேசுகிறார்கள்.
தகவல் தொடர்பு வசதிகளின் ஒரு நீட்சியாகத்தான் இணையம் நமக்கு அறிமுகமானது. ஆனால், கணிப்பொறி யுடனே அதிக நேரத்தைச் செலவிட்டு வந்த புதிய தலைமுறை, தனது படைப் பாக்கத்துக்கான தேடலை நிறுத்திவிட வில்லை. முதலில் மின்னஞ்சல்கள் வழி யாகவும் பின்னர் குழும அஞ்சல்களா கவும் இணையம் ஒரு ஊடகமாக உரு வெடுக்கத் துவங்கியது. வளர்ச்சிப்போக் கில், அவை சமூக வலைப்பக்கங்களாக உருவெடுக்கத் துவங்கின. இன்று பல கோடி மக்களை எல்லைகள் தாண்டி பிணைக்கும் சமூக வலைத்தளங்களும், வலைப்பக்கங்களுமாக அவை வடிவம் கொண்டுள்ளன.
தனியாக அடைத்துவைத் தாலும், மனிதனால் சமூக வாழ்க்கையைத் தவி ர்க்க முடியாது என்பதையே மேற்கண்ட வளர்ச்சி காட்டுகிறது. தகவல் தொழில்
LD66ans Lorré 2011 & 49

Page 27
நுட்ப மாணவர் ஜஸ்டின் ஹால் shttp:/ Winks.net/> என்ற ஒரு வலைப் பக் கத்தை 1994 ஆம் ஆண்டில் உருவாக் கினார். இதுவே, முதல் வலைப்பக்கமா கக் கருதப்படுகிறது. இருப்பினும் இணையப் பதிவு என்ற ஆங்கில வார்த் தைகளை இனைத்து (Web = log = blog) பிளாக் என்ற சொல் 1999இல் தான் புழக்கத்தில் வந்தது. தனிநபர் வலைப்பக்க வசதியை முதன் முதலில் பைரா லேப்ஸ் என்ற கனடிய நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த நிறுவனத தைத் தான் பின்னர் கூகிள் நிறுவனத்தி னர் கைப் பற்றினர். (கூகிள் தேடு பொறியை காலப்பொருத்த மானதாக வைத்திருப்பதில் இந்த வலைப்பக்கங்க ளின் இயக்கம் மிக அத்தியாவசியமா னதாக பின்னர் மாறியது). இப்போது பிளாக்கர் தவிர வேர்டு பேட், டைப் பேட் யார்ல் என பல நிறுவனங்களும் தற் போது இலவச வலைத்தள சேவையை வழங்கி வருகின்றன.
ஏற்கனவே சொன்னதைப் போல, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளி லிருந்து புலம் பெயர்ந்த தமிழர்களே இணையப் பக்கங்களை முதலில் பயன் படுத்தத் துவங்கினார்கள், ஆனாலும் யூனி கோட் என்ற தமிழ் எழுத்துரு பயன்பாட் டுக்குக் கிடைத்த பின்னரே, வலைப் பக் கங்கள் அதிக வாசகர்களைத் ஈர்க் கத் துவங்கின. தமிழில் முதல் பதிவு 2003 ஆம் ஆண்டு அக்டோபரில் எழுதப்பட்டி ருக்கிறது. அதற்கு முன்னரே நிறையப் பதிவர்கள் இருந்திருந்தாலும், தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தி, தமிழ் மொழி யில் முதல் பதிவு எழுதப்பட்டது அன்றே.
ஆனால், மிகச் சிலநாட்களிலேயே பல் வேறுபட்ட எழுத்தாளர்களும் வலைப் பக்கங்களைக் கைக்கொள்ளத் துவங் கினார்கள். இவை வாசிப்புக்கு ஒரு புதிய எல்லையைக் கொடுத்ததுடன் ஊடகத் தளத்தில் இரண்டு முக்கிய விசயங்க
ளைச் சாத்தியமாக்கியிருக்கின்றன.
நன்றி -hitlig;:'','','','W','Lykiet TLC:tan1
சுந்தர்ஜி எனும் தமிழகத்து புதுச் சேரியை சேர்ந்தவர் வலைப்பதிவாளர். தனது வலைப்பதிவான 'கைகள் அள் எளிய நீர் எனும் தனது வலைப்பதிவில் மொழிப் பெயர்த்து தந்திருக்கும் சீனக் கவிஞர் பை ஜுயி யின் ஒரு கவிதை. சுந்தர்ஜிக்கு நன்றிகளுடன் உங்கள் பார்வைக்கு.
என் வயோதிகத்தில் குடும்பத்துக்கு ஒரு கவிதை
இப்போது Aது ஈழத்திஜீது. நிதிநிதிநிதிரீகை புனர் ஈமியூதாயிரம் மிசவிவழிக்க இருக்கிறது. எனி அருகே
ffiW፵Ñሽw Ñùùùዦûኛ
இருக்கிறார். மிக உண்தரன் கீத்சியையும் திய ரீதத்தையுச் சார்விப்பது சுரீதி இருக்கிறார்கள் எனி
துரகரீகரூர் திருகனிகிரு. மினி வீடு சாதரணாக இருந்தாறும் r Waறுடைய புதிய ஆடையை அணிந்திருக்கிறேனி. Ta ஆக்ஜீதுர்துச் எண் பக்கமிருது
மல்லிகை மார்ச் 2011 : 50

என் கீயர். அந்த சாதரனான் திரைக்குப் பக்கத்தில் எண் ஆக்கை மாற்றப்பட்டிருக்கிறது. கினி சிறிய தின ஆயு நீலத்திரைக்கு rான் நிர்கிறது இப்போது, ஒரு ரேனி எனினிடம் ஏதோ வீசிக்கிறார்.
திராக தானி கவிதைகள் எழுதுகிறேன். சிஐ ஹோகனின் மருந்து பாத்திற்காக ஆLைE அடது வைக்கிறேr. இந்தச் சிறிய கரியங்களையெர்ரம் செய்து முழத்தான பிர் சூரியனுக்கு மினி முதுகைக் கீட்டிய
இார் சமையலிகரணி ஆப் தயாரிக்கிறனி. தத்துருங்குரேனி.
கினி நாயர்கள் அறுவியிருந்தTதிற்கு
சென்னை புத்தகதி தன்தட்சி அரங்கில் எழுத்தவுரிதம்பு சிற்றின் இருநூல்கள் வெளியீடு
புத்தக வெளியீட்டுத்துறையில் நீண்ட காலமாகச் சாதனை படைத்து வரும் நியூ சென்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தார் இலங்கை எழுத்தாளர் தம்பு சிவாவின் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்" (கட்டுரைத் தொகுதி, சொந்தங்கள் (சிறுகதைத் தொகுதி) ஆகிய இரண்டு நூல்களையும் பதிப்பித்து, சென்னைப் புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளியீட்டு விழாவையும் நடத்தியுள்ளார்கள்.
நியூ சென்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண்மைப் பணிப்பாளர் தோழர் *曇 ஜி.துரைராஜ் அவர்களின் தலைமை ஐ யில் 09.01.2011 அன்று சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கில் வெளி 17. ܘ ̄ ܬܘܼܬ݂ܐ. பீட்டு விழா நடைபெற்றது. பிரபல தென்னிந்திய திரைப்படக் கலைஞ துே ரும் எழுத்தாளருமாகிய கலைமா >· திரு.ராஜேஸ் அவர்கள் நூல் களை வெளியிட, பொதிகை தொலைக் காட்சி நிகழ்ச்சித் தயாரிப் பாளரும் கவிஞருமாகிய திருமதி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் முதல் பிரதி களைப் பெற்றுக் கொண்டார்கள். நன்றியுரையை நூலாசிரியர் தம்பு சிவா வழங்கினார்.
படத்தில் எழுத்தாளர் தம்பு சிவாவின் துனைவியார் ராதா, இணுவில் பறுவத நாதன், திருமதி ஆண்டாள் பிரியதர்ஷினி, தம்பு சிவா, கலைமாமணி ராஜேஸ், என்.சி.பி.எச். நிறுவ னத்தின் முதன்மைச் செயலர் எஸ்.மணவாளன், மேலாண்மைப் பணிப்பாளர் ஜி.துரைராஜ்
ஆகியோரைக் காணலாம்.
மல்லிகை மார்ச் 2011 : 51

Page 28
கற்றவரை இவ்வுலகம் போற்றும்- இது
கல்விப்பெருமையை
பறைசாற்றும். வையகத்து வாழ்வாங்கு வாழ்வோரை வாழவைக்கும் வழிநிலையை நித்தியமாய் காட்டும். அதை அறிந்து தான் வாழ்த்துது இளம் காற்றும்
நேர்மையாய் உண்வாழ்வை வாழு - பிறர் கவலையை காது கொடுத்து கேளு. திக்கற்று வாழ்வோரை தீமைகள் ஆழ்கையிலே சியாது அவருக்காப் மாளு. தரணியிலே நீ வாழ்வது 8மலு
கவலையின்றி வாழ்பவன் தான் யாரு - சிலரின் கண்ணிரண்டும் குருடு நீ பாரு.
நம்பிக்கை இழக்காமல் நாணயம் தவறாமல் இலட்சியத்தை நோக்கி
நீஊறு. அதை விட இன்பம் எண்ண 8வறு?
நடுவீதியில் பெண்ணை மறியாதே - அவளுண் மனைவியாகலாம் அது தெரியாதே. தீயண்ைணங்கள் பலவகாண்டு தவறுகள் பல செய்து வாழ்க்கையில் நீயும் சரியாதே - பின் பைத்தியமாய் வீதியில் திரியாதே
அரிதாரம் பூசாமல் பழகு - தீயவர் உண்ணருகுக வந்தாலே விலகு.
சமூகத்தில் ப8ைபரு ஏமாற்றக்காத்திருப்பர் இது தானே இன்றைய உலகு. இதையறிந்தாலே உன் வாழ்வு அழகு
மல்லிகை மார்ச் 2011 & 52
 

சித்தனையைத் துண்றல் சிறுகதைகல் அடங்சிய/ சீனw 2தwகு0Mன் ‘செந்நீரும் கண்ணிரும்"
-சமுருகானந்தன்
தன்னுடைய திறமையையும், அறிவையும், நேரத்தையும் சமூக மக்களின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்துபவர்களில் எழுத்தாளர்களுக்கு முக்கிய இடம் உண்டு. இனவாத கொடுங் கயிற்றால் இறுகக் கட்டப்பட்டு, ஆயுத அடக்கு முறைகளால் கொடுங்கோன்மைக்கு உட்பட்டிருந்த சிறுபான்மை இனத்தினது விடுதலை வேண்டி, அதற்கான போராட்டத்தை இடையறாது நடாத்தி, தன் வாழ்வு முழுவதையும் அர்ப்ப ணித்து இறுதியில் வீரமரணமடைந்த ஒரு மாவீரனின் மண்ணிலிருந்து பிறந்த கதைகள், சமரபாகு சீனா உதயகுமாரின் "செந்நீரும் கண்ணிரும் தொகுதியில் இடம்பிடித்துள்ளன. தொகுதியின் தலைப்புப் போலவே, கதைகளைப் படிக்கும் போது செந்நீரைக் கண்ணிராக வடிக்கின்றோம். ஈழத் தமிழர் வரலாற்றின் ஒரு பொற்காலத்தில் அம்மக்கள் எதிர்கொண்ட அவலங்ங்கள் கதைகளில் தரிசனமாக்கி, மனதை அரித்து அதிலிருந்து விடுபட முடியாமல் கலங்க வைப்பதால், உதயகுமாரின் எழுத்துக்கள் உச்சம் பெறுகின்றன.
உதயகுமாரின் சில கதைகளைப் படித்த பின்னர், மனது நீண்ட நேரம் அழுது கொண்டே இருப்பதை தவிர்க்க முடியாதிருக்கிறது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தேசமும், காலமும், நம்மோடு வாழும் மக்களும் கதைகளின் களங்களாகவும், கதாபாத் திரங்களாகவும் உலா வருகின்றமையால், அவரது கதைகள் வாசகனின் மனதுக்கு மிக நெருக்கமாக வந்துவிடுகிறது. மனிதாபிமானமும், மனித நேயமும் மிக்க ஒரு சமுதாயம் அவரது இலட்சியமாக இருப்பதைக் கதைகளில் காண முடிகிறது. அமைதியும், சமத்துவமும், அன்பும் மிக்க ஒரு சமுதாயத்தில் நாம் வாழக் கிடைக்காதா? என்ற ஏக்கம் வாசகன் மனதில் தோன்றுகிறது.
உதயகுமாரின் கதைகளின் வெற்றிக்குக் காரணம், இலகுவான கதை சொல்லும், குழப்பமின்றி கதையை நகர்த்திச் செல்லும் உத்தி முறையுமே ஆகும். சாதாரண வாசக னுக்குப் புரியாமல் எழதுவது தான் உயர் எழுத்து எனப் போலி முகம் காட்டும் பம்மாத்து இவரிடம் இல்லை.
அண்மைக் காலமாக எழுதி வரும் புதிய படைப்பாளிகள் பல நம்பிக்கையூட்டும் படைப்புகளை அறுவடையாக்குவது ஆரோக்கியமான விடயம். மயூரன், கேசவன், நிரேஸ்குமார், வசிம் அக்ரம், சந்திரகாந்தா முருகானந்தன், பரணிதரன், சின்னராஜன், லுணுகல்ை முறி, பிரமிளா பிரதீபன், முல்லை முஸ்ரிபா, பவானி என இன்னும் நீண்டு
மல்லிகை மார்ச் 2011 & 53

Page 29
கொண்டு போகும் புதியவர்கள் மத் தியில் சீனா உதயகுமாருக்கு முக்கிய இட முண்டு. அவரது அண்மைக் காலப் படைப் புகள் இலங்கைத் தமிழ் எழுத்துலகுக்கு ஒரு நம்பிக்கையான படைப்பாளி கிடைத்துள் ளார் என்பதையே உறுதி செய்கின்றன.
அண்மையில் அவர் வெளியிட்டடுள்ள அவரது முதலாவது சிறுகதைத் தொகுதி யான செந்நீரும் கண்ணிரும் பதினெட்டு சிறுகதைகளைத் தாங்கி வந்துள்ளது. சமகால முள்வேலி முகாமை அட்டைப்பட மாகத் தாங்கி வந்துள்ளமை ஊடாகக் கதைகளின் போக்கை ஊகிக்க முடிகின் றது. சமர்ப்பணம் மூலமும் இவரது இனப் பற்று பளிச்சிடுகின்றமை இன்னொரு சிறப்பம்சம். நவீன வடிவங்களிலும், உள்ள டக்கத்துடன் தமிழ்ச் சிறுகதைகள் வெளி வர ஆரம்பித்துள்ள இன்றைய கால கட் டத்தில் சீனா உதயகுமாரும் அந்த நீரோட் டத்தின் தாக்கமுற்ற ஒருவராக சில கதை களில் வெளிப்படுகின்றார். இனவிடுதலை வேட்கை கொண்டவராக இருந்தாலும், இவரது கதைகள் பிரசார வாடையின்றி, ஆரவாரமற்ற ஆழமான விடயங்களை நாசு க்காகத் தொட்டுச் செல்கின்றமை இவரது எழுத்து வன்மைக்கு சான்று பகர்வதாக உள்ளமை பாராட்டுக்குரியது. இளம் எழுத் தாளர்களின் பலமும் பலவீனமும் இவர் கதைகளில் புலனாவதாக மூத்த படைப் பாளியும், விமர்சகருமான செங்கை ஆழி யான் குறிப்பிட்டுள்ளமை ஏற்புடையதே. எனினும் பலமே மேலோங்கியுள்ளது.
இவரது கதைகள் அலுவலக சூழலிலும், பாடசாலை சூழலிலும் பெரும்பாலும் அமைந்துள்ளன. இவர் பணியாற்றும் முகா மைத்துவ உதவியாளர் பதவியும், பகுதி நேர கடமையாற்றும் தனியார் கல்வி நிலைய
ஆசிரிய பதவி நிலையும் இரட் டைக்குழல் துப்பாக்கி போன்றதொரு நித்திய அனுப வங்களைத் தருவதால், அவரது கதைக ளில் இவ்வனுபவங்கள் பிரதிபலிக்கின் றன. எல்லாக் கதைகளிலும் மனிதநேயக் கண்ணோட்டம் மிளிர்கின்றது. போரில் தோய்ந்த தேசத்து அனுபவங்களை பல கதைகளிலும் லாவகமாக உள்வாங்கியுள் ளார். சன்னங்கள் துரத்துகின்றன, மனிதன், நாய், முட்கம்பி ஆகிய கதைகள் முழுமை யான போர்க் கதைகளாகப் பதிவாகியுள்ளன.
மக்களுக்கு உதவ வேண்டிய அலுவ லர்கள்- ஆசிரியர்கள் சிலரின் போலி முகங் களைப் புட்டுக் காட்டும் அதே வேளை, கட மையுணர்வுள்ள அலுவலர், ஆசிரியர்களு க்கு என்றுமே மதிப்புத் தான் என்பதையும் கூறியுள்ளமை ஒரு நாணயத்தின் இரு பக் கத்தையும் பார்க்கும் இவரது நடுநிலைப் பார்வைக்குக் கட்டியம் கூறுகின்றது. மலர் விழியாள் கதை வித்தியாசமாக எழுதப்பட் டிருந்தாலும், அது தேறவில்லை என்றே தோன்றுகிறது.
தாயகத்தில் வெளிவந்த ‘செந்நீரும் கண்ணிரும் சிறுகதை இத்தொகுதியிலு ள்ள நல்லதொரு சிறுகதை. மயில்வாக னத்தார் நல்லதொரு பாத்திரப்படைப்பு. வட மராட்சி மண்வாசனை கமழ எழுதப்பட்டி ருந்த கதையில், அவரது மரணம் கண் னிரை வரவழைத்தாலும், அவரது இலட்சி யப் பயணம் அவரது மரணத்தின் பின்ன ரும் அவரது பணி பிறரால் தொடரப்படுவது மனநிறைவு கொள்ள வைக்கிறது.
மோகனா தப்பி விட்டாள் கதையில் பெண்கள் படும் கஷ்டங்களும், எதிர்கொள் ளும் அவதூறுகளும் சிறப்பாகப் பதியப்பட் டாலும், கதையின் முடிவில் நாயகியைச்
மல்லிகை மார்ச் 2011 * 54

சாக வைத்திருப்பது அவசியமாகப்பட வில்லை. துணிச்சலற்ற முடிவு. "சுயநலம்' சிறுகதையிலும் பெண்களின் பிரச்சினை கள் அலசப்பட்டுள்ளது. இது யதார்த்தமாக நடக்கும் கதைதான். சறுக்கிப் போகும் சில பெண்கள் போலன்றி, இந்தக் கதையின் நாயகியின் உறுதி சிறப்பாக உள்ளது.
சீனா உதயகுமார் சாதியத்திற்கு எதிரா கத் தனது கதைகளில் ஆணித்தரமாகக் குரல் கொடுத்துள்ளார். "புதியதல்லவே' என்ற சிறுகதை முழுமையான ஒரு சாதி யத்திற்கு எதிராகக் குரல் எழுப்பும் கதை யாக அமைந்துள்ளது.
குறுகிய காலத்துள் மிக அதிகமாக எழு தியதன் மூலம் மட்டுமன்றி, சமூகப் பிரச் சினைகளைத் தொட்டு எழுதியமையா
லும், தங்கு தடையற்று மொழி நடையில், பிசுறற்ற வார்ப்புகளாகக் கதைகளை எழு தியமையினாலும் அதிக கவனிப்பைப் பெற் றுள்ள சீனா உதயகுமார், உள்ளடக்க த்திலும், மொழி நடையிலும் காட்டும் அக் கறையினை, உருவத்திலும் உத்தியிலும் அதிகம் காட்டுதல் அவசியம். இதன் மூலம் ஈழத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளரா கத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இவருக்கு நிறையவே இருக்கிறது.
வெறும் புகழ்ச்சி வேண்டாம், உண்மை யாக எனது கதைகள் பற்றிய இரசனைக் குறிப்புகளைக் கூறுங்கள் எனக் கேட்டிருந் தார். நான் கதைகளை மீளக் கூறவில்லை. வாசித்து அனுபவியுங்கள். நிறைவடைய நிச்சயம் நிறைய விடயங்கள் உள்ளன.
ཡོད༽
மல்லிகை ஆண்டுச் சந்தாதாரராகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
ஆண்டுச் சந்தா 600/-
தனிப்பிரதி 40/- syskTC Losuř 200/-
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231. Hatton National Bank. Sea Street,Colombo-11. காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்புவோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominie Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு
முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. காசுக்கட்டளை seisojCILU6usressi Dominic Jeeva. Kotahena, P.O. 6T60Tš (s.sllISLG esociu6.Lb.
தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
Losiossans Lorið 2011 Š 56

Page 30
இங்கிருந்தும் எங்கும் போக முடியாது எங்கிருந்தும் இங்கும் வரமுடியாது
2,
மேகம்
கறுத்துக் கறுத்து இறுகியது
பூமி
கறுப்புத் துணியால் 6IIIGDL (DQ856-5IabL). உருகும் கறுப்பைக் கண்டு 2லகமே கலவரமடைந்தது மேலும் மேலும் கறுப்பின் கனதி அதிகரித்துக் கொண்டே போனது கறுப்புக்கு
எத்தனை வடிவங்களே அத்தனை வடிவங்களில் இருந்தும் பயங்கரமே வழிந்து கொண்டிருந்தது பயங்கரத்தின் நிறந்தான், கறுப்போ?
3,
உண்மையில்
ஆயுதங்களை விLஅடைமழை வலிமை வாய்ந்தது
Jain/92 در ۶ l
ஆயுதங்களல் 2ண்டாக்க முடியாத இழிவுகளைக் கL அLைமழை
96 iTLIIbá 6lbégog எந்தவொரு ஆயுதத்தாலும் இத்தகைய கருங்குளிரை 26bILITö585 dDIQULIIIğ5I எந்தவொரு ஆயுதமும் இருபத்துநான்கு மணி நேரமும் தொடர்ந்து தொழிற்படுவதுமில்லை மேலும் எந்தவொரு ஆயுதமும் எந்தவொரு பாதையையும் மூடுவதுமில்லை
4.
LIQ856ir
பிணங்கள் போல்
மிதக்கக் கண்டேன் சந்தைமேரு செத்துக் கிடக்கக் கண்டேன் சவத்தின் மேல் புகைகின்ற
கொள்ளிக்கடிடையென
Qsab situTLIIIsab6ir LaD85ué Baixt:Ló. இழுகிச் செத்த தக்காளியும் வாடிச் செத்த கீரையும் புழுவெனச் செத்து நாறி மனத்தாலும் பொன்விலை போகக் கண்டேன்
வாங்குவோர் எவரையும் காணேன்.
LosiosSenas Lomńråk 2011 奉 56
 

மீள முடியாத இரவின் புதர்களில் புதைந்து போயுள்ளது அர்த்தமற்ற கனவின் ரேகைப் புள்ளிகள்.
ஆக்கிரமிப்பின் காலத்தடங்கள் அகிம்சை இன்றிப் பொழியும் நிர்வான தேசத்தை நேசிக்க முயல்கின்றன.
மரண ஒலங்களை வாசிக்கும் சுவாச நாதிகளை அறுத்துப் பழியிடும் போர் துவங்கியது.
மனமேகங்களில் தவழும் இருத்தல் பற்றிய குறியீடுகளில் தீச்சண்ண்ம பீச்சியது உலக தரிசனங்கள்
சுவாசக்காற்றின் உஷ்ண விருட்சம் தாழாமல்
فقالهلات تركيا
மனித உருவங்கள் எரிந்து போயின.
பேய்காற்று ஊசலாடும் நடு இரவில் அச்சக் கோடுகள் சிவப்பு நிறக் கோலம் வரைய ஓவியப் பறவைகள் எதிரே தெரியும் பெருவெளியில்
பூக்களை வராண்டும் கவிதை வரிகள் பூப்பெய்து வெடித்துச்சிதற பிரபஞ்ச அணுக்கள் ஒவ்வொன்றும் இன்றும் இன்றும் வெறி கொள்ளும்
கல்லறைக் கனவுகள்
5ITOOTLL
LD60L (Bở சிரிப்புடன் குழந்தை பிறக்கும் மரணத் தோற்றத்துடன்.
Debsiana Lortë 2011 ë 57

Page 31
ஒரு கதை சொல்லியின் கதை
உபாலி லீலாரத்னாவின் விடைபெற்ற அந்தர்
- ජිග්ට(Cන්{3රික්)
உபாலி லீலாரத்னாவின் PINIWANTHALAWA எனும் சிங்கள நாவலின் = தமிழ் மொழிபெயர்ப்பாக திக்குவல்லை கமாலின் மொழிபெயர்ப்பில் விடை பெற்ற வசந்தம்' எனும் பெயரில் தமிழில் தம் கைக்கு கிடைத்திருக்கிறது.
இலங்கையின் மலையகப் பகுதியான் தலவாக் கல்ல பகுதியில் நாவலாசிரியர் 69-70 வாழ்ந்த காலகட்டத்தை இந்த நாவல் நிகழும் களமாக்கி, உபாலி லீலாரத்ன என்ற மனிதனின் சிறு பிராயத்து வாழ்க்கையின் ஒரு துண்டத்தைச் சொல்லி இருக்கிறார்.
உபாலியின் இந்த நாவலுக்கான முதல் வாசிப்பில் இதுவொரு சுயசரிதைச் சார்ந்த நாவல் (Biographical Novel) எனத் தெரியவரும் தமிழ்ச் சூழலில் அவ்வாறான சுயசரிதைப் பாங்கான ஆக்க இலக்கிய முயற்சிகளுக்கான பரிச்சயம் சமீப கால மாக அதிக அளவில் தமக்கு கிடைத்திருக்கும் சூழலில், நமது சகோதர மொழியான சிங்கள மொழியில் வெளிவந்த அத்தகைய நாவல்கள் பற்றிய பரிச்சயம் நம் வசம் இல்லாத நிலையில், உபாலியின் இந்த நாவல் நண்பர் திக்குவல்லை கமா லின்மொழிபெயர்ப்புகைவண்ணத்தில் கிடைத்திருப்பது புதிய அனுபவமாக இருக்கிறது. அந்த வகையில் இந்த நாவல் சுயசரிதை சார்ந்த ஒரு சிங்கள மொழி நாவல் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதோடு, மேலும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணிகளே இந்த நாவலுக்கான எனது பார்வையாக அமைகிறது.
பொதுவாக சுயசரிதைப் பாங்கான அல்லது சுயசரிதை சார்ந்த படைப்பு எனும் பொழுது, நாம் அப்படைப்பின் உள்ளடக்கம் சார்ந்த விடயமாகவே பேசுகிறோம். அதே வேளை அத்தகைய இலக்கியப் பிரதிகளின் மொழியை பற்றி அல்லது மொழி நடையை பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை அல்லது கவனிப்பதில்லை என்ப தாக எனக்குப் படுகிறது.
Dis ir 21 寧
 

அதாவது ஒரு படைப்பைப் பற்றிப் பொதுவாக நாம் எழுப்பும் கேள்விகள் அப்படைப்பு எக்காலகட்டத்தில் எழுதப் பட்டது? எக்காலகாட்டத்தை வைத்து எழுதப்பட்டது என்பதாகத்தான் இருக்கி றது. ஆனால் அப்படைப்பு எக்காலத்தில் இருந்து கொண்டு எழுதப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுப்புவதில்லை. அவ் வாறான ஒரு கேள்வி எழுப்பப்படும் பொழுதுதான், அப்படைப்பாளி அப் படைப்பில் பேசியிருக்கும் காலத்திற்கு சென்று அமர்ந்து எழுதியிருக்கிறாரா? அல்லது நிகழ்காலத்தில் உட்கார்ந்தது கடந்த காலத்தைப் பார்த்திருக்கிறாரா? என்பது தெரியவருவதோடு, அவர் கையாண்டிருக்கும் அந்த உத்தியில் எந்த அளவுக்கு வெற்றி பெற்றியிருக்கி நார் என்பதும் நமக்குத் தெரிய வரும் உபாலியின் விடை பெற்ற வசந் தம்" எனும் இந்த நாவல் பிரதியில் உபாலியே கதை சொல்லியாகச் செயற் படாது, அவரும் ஒரு கதாபாத்திரமாக வந்து, அந்த நாவலின் கதையை சொல்ல ஒரு கதை சொல்லியை உரு வாக்கி, அக்கதை சொல்லியை, அந்த 'காலத்திற்கு (69-70) அனுப்பி அக்கால கட்டத்தில் அமர வைத்து எழுதியிருக் கிறார் என்பதை இந்த நாவல் எமக்கு எடுத்துக் காட்டுகிறது. சென்று அமர் ந்து' எழுதும் பாணியின் பொழுது, விபர மாகவும் சரியாகவும் அதாவது துல்லிய மாகச் சொல்ல வேண்டிய தேவை இருக் கிறது. அவ்வாறான வேளை சில படைப பாளிகள் இடறி விடுவதுண்டு. அந்த வகையில் அவ்வுத்தியைக் கையாளுவ தில் ஒரிரு இடங்களில் மட்டுமே உபாலி
இடறி இருந்தாலும், பெரும்பாலாக வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு பல மான காரணம் இந்த நாவலின் உள்ள டக்கம் அவரது சுயசரிதையின் ஒரு துண்டமாக இருப்பதே
2008 ஆம் ஆண்டு அளவானது. அந்த காலகட்டத்தில் இந்தத் தேசத்தில் நிலவிய இனப்பிரச்சினையும் போர்ச் சூழலும் உக்கிரமான காலகட்டம் அந்த வேளை இனங்களிடையே குறைந்து போன ஒருமைப்பாட்டையும், புரிந்துனர் வையும் மீண்டும் உருவாக்கிவிட வேண் டும் என்ற சிந்தனையும் இந்த தேசத்து சீரிய சிந்தனையாளர்களிடமும், படைப் பாளிகளிடமும் மேலோங்கி இருந்த கால கட்டம் அது. அத்தகைய சிந்தனை கொண்ட நண்பர் உபாலி தனது இந்த நாவலுக்கான ஒரு கதை சொல்லியை உருவாக்கும் தேவைக்கு ஆட்படுகிறார். அதற்கு தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமான தலவாக்கல்ல பிரதேசத் தில் கழிந்த தமிழ் சிங்கள மக்கள் ஒன்றா கக் கலந்து வாழ்ந்த அவரது சிறுபரா பத்து வாழ்க்கை அனுபவங்கள் பெரிதும் உதவ, அந்த அனுபவங்கள் எடுத்துச் சொல்லும் ஒருகதை சொல்லியை உரு வாக்கிக் கதையை நகர்த்துகிறார்.
அந்த வகையில் ஒர் இலக்கியப் பிரதி கொண்டிருக்கும் அரசியலை அப் படைப் பின் கதை சொல்லி வழியாக இனங் காணலாம். உபாலி லீலாரத்ன எனும் படைப்பாளி தான் கொண்டிருக்கும் கருத்தியலை, அரசியலை மிகுந்த தெளி வுடன், அந்த நாவலுக்காக உருவாக் கிய கதை சொல்லி வழியாக ஸ்தாபித் திருக்கிறார் இந்த நாவல் மூலம் எனலாம்.
Debiasana, Lorritið 2011 3 59

Page 32
இந்த நாவலைத் தன்னிலை நின்றோ, எந்தவொரு இனத்தைச் சார்ந்த பாத்தி ரம் வழியாகவோ, நாவலை உருவாக்கா மல், இன, மத அடையாளம் நீக்கம் பெற்ற ஒரு கதை சொல்லி வழியாக அந்த நாவலை நகர்த்தி இருப்பது அவ ரது நிதானத்தை எடுத்துக் காட்டுகிறது
அதாவது எந்தவொரு வகையிலும் அந்த காலத்தின் கதையைச் சொல்ல உபாலி உருவாக்கி இருக்கும் நாவலின் கதை சொல்லி, எந்த இடத்திலேனும் சார்பு நிலை எடுத்து விடக்கூடாது என்ப தில் உபாலி மிக கவனமாக இருக்கிறார்.
இத்தகைய சிந்தனைகளின் பின்ன ணியில்தான் விடைபெற்ற வசந்தம் எனும் உபாலி லீலாரத்னவின் விடை பெற்ற வசந்தம்’ நாவலில் உள்நுழைகிறோம்.
இலங்கையின் மலையகப் பகுதி யான தலவாக்கல்லை பிரதேசத்தில் தேயி லைத் தோட்டங்களையும் நகரப் பகு தியை இணைக்கும் எல்லையாக அமைந் திருக்கும் நகரச் சபை வீடமைப்புத் தொகுதியில் மூவின மக்களும் (இந்த நாவலில் ஒரு முஸ்லிம் முக்கிய பாத்தி ரங்களில் ஒன்றாக இல்லாமல் இருப்பது குறைவாக தெரிகிறது) வாழ்கிறார்கள். அவர்களின் இளசுகளின் கதையே இந்த நாவல்.
முதல் வாசிப்பில் இந்த நாவலை வாசிக்கும் முடிக்கும் ஒருவருக்கு அவர வர் சிறுபிராயத்து அனுபவங்கள் ஒரு கணம் நினைவுக்குகு வந்துப் போகும் என்பது நிச்சயம். அத்தோடு அவரவர் ரசனைக்கு ஏற்பதாம் படித்த படைப்போ, திரைப்படமோ நினைவுக்கு வரக்கூடும்.
இதற்கு காரணம் மிக விரிவாக சிறு பிராயத்து வாழக்கையை உபாலி சித்தி ரிப்பதுதான். என்னை பொறுத்த வரை இந்த நாவலை படித்துக் கொண்டிருக் கும் பொழுநு பாலு மகேந்திராவின் 'அழியாத கோலங்கள்’ எனும் திரைப் படம் நினைவுக்கு வந்து போனது.
மேலும், சுயசரிதை சார்ந்த படைப்பு என்ற வகையில் தன்னிலை நின்று இந்த நாவலை சிங்கள சமூகத்தைச் சார்ந்த ஒரு பாத்திரம் வழியாக உபாலி நகர்த்தி இருப்பார் என்பதுதான் பொதுவான வாசக எதிர்ப்பார்ப்பு அமையும். ஆனால் ஒரு பொதுவான கதை சொல்லியை உருவாக்கி, அப்பகுதியில் வாழும் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த வெள்ளை யன் எனும் தமிழ் பையனை மையமாகக் கொண்டு கதையை நகர்த்தி இருப்பது கவ னிக்க தக்க ஒரு விடயமாக இருக்கிறது.
இந்த நாவல் முழுவதும் அந்த பகுதி சிறுசுகளின் அட்டகாசம்தான்.
அந்நச் சிறுசுகளுக்கு எந்த விதமான அரசியல் கருத்துகளும் இருப்பதில்லை.
மதம் என்பது கூட, அன்றாடம் மேற் கொள்ளும் ஒரு ஜாலியான விடயமே ஒழிய வேறு ஒன்றுமல்ல. அதனால்தான் சிங்கள நண்பர்கள் பன்சலைக்கு செல் லும் பொழுது, அன்றாடம் தங்களுடன் இருக்கும் வெள்ளையனையும் அழைத் துச் சொல்ல விரும்புவதும், வெள்ளை யன் என்ற தமிழ் பையன் செய்த வெசாக் கூட்டை உயர்த்தி பிடிப்பதும், தமிழ் குடும்பங்கள் சார்ந்த மதச்சடங்குகளில் (பேய் ஒட்டுதல் என்ற மாதிரியான) சிங்
Lodbeŝams Lomňó 2011 äß 60

கள சமூக இளசுகளும் அருகே இருப் பதாக நாவல் சித்திரிக்கிறது.
வெள்ளையன் செய்த வெசாக் கூடு இனந் தெரியாதவர்களால் உடைக்கப் படுவது கூட, இனத் துவேஷம் காரண மாக அல்ல இளசுகளிடேயே இயல்பா கவே நிலவும் பொறாமை உணர்ச்சியின் காரணமாகத்தான் என்பதை தவறாமல் கதைச் சொல்லி பதிவுச் செய்து ('. . .நண்பர் வட்டத்தில் அநேகரின் நெஞ்சிலே மெல்லிய பொறாமைத் தி சுடர்விட, ஆரம்பித்தது. 'பக்கம்-89) இருப்பது அவர்களிடையே நிலவும் நெரு க்கதையும் அன்னியோன்னியத்தையும் மிக அழுத்தமாக எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறாக இந்த நாவல் முழுதும் அந்த பகுதியில் வாழும் இரு இனங்க ளும் மிகுந்த புரிந்துணர்வுடனும், ஒற்று மையுடனும் வாழ்வின்ற வாழ்வியலை நம் முன் சித்திரித்துச் செல்கிறதே.
அச்சித்தரிப்பின் ஊடாக அன்று அங்கு நிலவிய சமூக அரசியல் பிரச் சினைகளை நேரடியக உரத்த நிலை யில் பேசாவிடினும், நாவலின் ஓரிடத் தில் பின்வருமாறு பேசுகிறது.
வெள்ளையன் வெசாக் கூடு செய்யும் பணியில் ஈடுபடும் வேளையில் இடம் பெறும் ஒர் உரையாடலில் அன்றைய அரசியல் நிலைமை சற்று உரத்து பேசப்படுகிறது.
இந்தப் பகுதியிலுள்ள எல்லாத் தமிழ் வீட்டிலும் ஒவ்வொரு விளக்காவது வைத்திருந்தால் என்ன மாதிரி அழகா யிருக்கும்'
சின்னத்தம்பி சொன்னான்.
"தோட்டப்பக்க தமிழ் முதலாளிமாரும் தொழிற்சங்கக்காரரும், அரசாங்க வேலை செய்யும் தமிழ் தொரைமாரும் சொல்வ தத்தான் மக்கள் செய்றாங்க. வெசாக் போயாவுக்கு தங்களது வீடு வாசலைத் தூய்மையாக்கி அழகுப்படுத்தி இரவை க்கு களிமண் விளக்கொன்றாவது பற்ற வைக்க இந்த மக்கள் ரொம்பதான் விரும் புறாங்க. ஆனால் அதைச் செய்ய விட றாங்களில்லயே" அவ்வாறு கூறிய நல்ல மாமா இன்னொரு சிகரட்டை உதட்டில் வைத்தார்.
புத்தர் பிறந்ததும் காலமானதும் ஞானம் பெற்றதும் இந்தியாவில். அதை நீனை வுட்டத்தான் நாங்கள் இங்கே இப்படிக் கொண்டாடுகிறோம்.” கொதலாவது கூறினான்.
"அப்படியிருந்தும் இந்தியாவிலிருந்து இங்கை வந்து. இந்த நாட்டின் தோட் டங்களில் வாழும் மக்களுக்கு, புத்த பெரு மானுக்காக ஒரு விளக்கு வைக்க இடம் கொடுக்காதத பாருங்க” சுஸில் கூறி னான்.
அந்த தொழிற்சங்கக்காரரும் மொத லாளிமாரும் அரசாங்கதுரைமாரும் தமிழ் மக்களின் எதிரிகள். சிங்கள மக்கள் நம்ம நண்பருங்க” என்று கூறிய வெள்ளையன் கீழேயுள்ள வீட்டுத் தொகுதியில் பிரகா சமாக எரியும் தனதுவெசாக் கூட்டை மகிழ்ச்சியோடு பார்த்தபடியிருந்தான். "சிங்கள மக்கள் தமிழ் மக்களின் நண்பர் கள்'அவன் உள் மனத்தால் முனு முனுைத்தான்.
மல்லிகை மார்ச் 2011 $ 61

Page 33
இந்த நாட்டின் தமிழர்களுக்கு எதிரி கள் தமிழர்கள் எனத் தொடங்க- அவ்வா றாக எதிராக இருக்கும் பகுதியினரான தோட்டப்பக்க தமிழ் முதலாளிமாரும், தொழிற்சங்கக்காராரும் அரசாங்க வேலை செய்யும் தமிழ் துரைமாரும் தமிழ் மக்களின் எதிரிகள் என்ற கூறு வதன் மூலம், இந்த நாவலின் பிரதி பின் வரும் நிலையான வாசிப்பு உட்படக் கூடிய ஆபத்தினை எதிர் கொள்கிறது. அதாவது-இன ஒருமைப்பாட்டையும், அவ்வினங்களிடையிலான நெருக்கத் தையும், புரிந்துணர்வையும் எடுத்துரைப் பதற்காக இன மத அடையாளம் நீக்கம் பெற்ற உபாலி உருவாக்கிய கதை சொல்லி, ஓர் இன அடையாளத்திற்கு ஆட்படுதல் அதாவது அந்த கதைச் சொல்லியிடம் ஒரு சார்புநிலை வெளிப் படுதல் என்பதான வாசிப்பாக முடிகிறது. அடுத்து இந்த தேசத்தில் கடந்த காலத்தில் நடந்த கசப்பான அனுபவங் களுக்கு, இந்த தேசத்து இனவாத, மற்றும் சர்வதேச நவ காலனியத்தின் ஏஜண்ட்களாகப் பணி செய்த முதலா ளித்துவச் சக்திகளும்(இதில் மூவினத்தி னரும் அடங்கிருந்தார்கள்) தான் கார ணம் என்பதை இந்த நாடு தெரிந்துக் கொண்ட, உணர்ந்துக் கொண்ட(அந்த தாவல் நடக்கும் காலகட்டத்திற்கும் இக்கூற்றும் பொருந்தும். வேண்டுமா னால் சிறுதிருத்தம் செய்துக் கொள்ள லாம் இன்று நவகாலனியத்தின் ஏஜண்ட் கள் என்றால், இந்த நாவல் நடக்கின்ற காலகட்டத்தில் காலனியத்தின் எச்ச சொச்சங்கள் என்று வாசித்துக் கொள் ளலாம் அவ்வளவுதான்.) ஒரு சூழலில
'குறித்த இனத்தைச் சார்ந்தவர்கள் மட்
டுமே காரணம் என்பதை வெகுசன அப்பி ரயாயமாக காட்டியிருப்பது, சார்பு நிலை யற்ற நிலையில் உருவாக்கப் பட்ட ஒரு கதை சொல்லியை ஒர் இனத்தவராக வாசிக்க வைத்துவிடும் ஆபத்தையும் இந்த நாவலின் மேற் குறித்த எடுத்து ரைப்பு எதிர் கொள்கிறது.
இனி இந்த நாவின் சிற அம்சமாக சொல்வது என்றால். அந்த காலத்திற்கு சென்று அமர்ந்து எழுதிச் சொல்லும் பாங்கு அந்த சூழலுடன் நம்மை இணை த்து விடுகிறது. அப்படி அமர்த்து எழுதவதனால், இந்த நாவலின் உள்ள டக்கம் ஒரு நாவலுக்கு தேவையான இல்லாவிடினும், சென்று அமர்ந்து எழு தும் பாங்கானது, Detailed ஆக சூழலை யும் சம்பவங்களையும் எடுத்துரைப்பதன் காரணமாக அந்நாவலின் ஒரு கதா பாத்திரமாக நாமும் மாறி விடுகிறோம்.
ஆனால் சிற்சில இடங்களில் கதைச் சொல்லி அந்த காலத்திலிருந்து எழு ந்து விடுவது அதாவது அந்த காலத்து சூழலையும் சம்பவங்களையும் இந்த காலத்துடன் ஒப்பீட்டு சொல்வது மூலம், கதைச் சொல்லியுடன் அந்த காலத்தி லிருந்து நாமும் எழும்பி விடுகிறோம்.
உதாரணமாக வெசாக் நிகழ்வையிட் டுச் சொல்லும் பொழுது "அந்ந நாட்க ளில் இப்போது போல் ஒவ்வொரு சந்தியிலும் விதவிதமான தானசாலை கள் காணப்படவில்லை." (பக்கம்-70)
நாவலின் இன்னொரு இடத்தில் அன் றைய சைக்கிள் பாவனை பற்றி சொல்
DebsSans ortë 2011 ë 62

லும் வரும் பொழுது அப்போதெல்லாம் சைக்கிள் பாவிப்பவர்கள் மிகவும் குறைவு. தபால் கந்தோரில் வேலை செய்பவர்களிடமும் பசுமாடு வைத்தி ருப்பவர்களிடமும் மாத்திரமே காணப் LILL607, 77 (1 Jaisastb-92)
இவ்வாறாக கதைச் சொல்லியான வர் நாவலில் சிற்சில இடங்களில் கதைச் சொல்லும் காலத்திலிருந்து எழுப்பி விடுவதை நாம் காண்கிறோம். இதையிட்டு சற்று நாவலாசிரியர் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இவ்வாறாறன சிற்சில குறைகள் இருப்பினும் ஒரு புனையாக்கத்திற்கு தேவையான கற்பனை" அதற்காக ஒரு படைப்பாளி எடுத்து கொள்ளும் சிரமம், ஏதுமின்றி, நேர் கோட்டு பாணியில் கதைச் சொல்லியிருக்கும் பாங்கின் மூலம், உபாலி அவரது சிறு பிராயத்து காலத்தில் செயற்பட்ட ஒரு யதார்த் ததை நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். இறுதியாக. இந்த நாவலின் முடிவு என்பதும் கூட, எதிர்மறையான் குறியீட் டுப் பாங்கான வாசிப்புக்கு ஆட்படக் கூடிய ஆபத்தினை கொண்டிருப்பதாக எனக்குப் படுகிறது.
ஒற்றுமையுடனும் வாஞ்சையுடனும் வாழும் அப்பகுதி மூவின மக்கள் அயல வர்கள் என்ற ரீதியில் ஒட்டுறவின் கார ணமாக பரஸ்பர நிலையில் சுக தூக்கங் களில் பங்கு கொள்வது அங்கு வழமை tu JT60īg.
அவ்வாறான வழமையான ஒன்று தான் இந்த நாவலின் பிரதான பாத்திர மான வெள்ளையன் என்ற தமிழ் பையன்
தன் சகாக்களுடன் புரியும் வண்ட வாளங்களுக்காய் தன் தாய் சீதாதேவி யிடம் அடிகள் வாங்கும் பொழுதெலாம் அயல் வீட்டு சிங்கள பெண்மணியான நோனாச்சி காப்பாற்றுவது வழமையா னது. அவ்வாறான ஒருகாட்சியுடன் நாவல் தொடங்குகிறது. அத்தகைய ஒருகாட்சியுடன்தான் நாவல் முடிகிறது. ஆனால் இம்முறை நோனாச்சி வெள் ளையனை அவன் தாயிடமிருந்து அவனை காப்பாற்றுவதில்லை என்ப தோடு நாவல் நிறைவு பெறுகிறது.
இம்முறை வெள்ளையன் தன் சகாக் களுடன் தேன்கூட்டை ஒன்றை களைப் பதும் அதனால் ஒரு சிலருக்கு காயம் ஏற்படுவதாகவும் எடுத்துக் காட்டபடுகி றது. நோனாச்சி இந்த நாவலின் இறு தியில் வெள்ளையனை அவன் தாயி டமிருந்து காப்பாற்றாமைக்கு அந்த தேன்கூட்டை களைத்தமைத்தான் கார ணம் என்பது அந்த நாவலின் முடிவில் சொல்லப்படவில்லை.
தேன்கூடு கலைக்கப்படுவதும், அத னால் பலர் காயம் பட்டனாலும், இந்த நாவலில் ஒரிடத்தில் வெள்ளையன் செய்த வெசாக் கூடு உடைக்கபட்ட பொழுது அச்சூழலில் வெளிப்பட்ட அள வான அதிர்வு கூட. இங்கு வெளிப்பட வில்லை. ஆக அச்சூழலானது, தேன் கூட்டை களைப்பை அவ்வளவு சீரிய ஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆகவே வெள்ளையனை இம்முறை காப்பாற்றாமைக்கு நோனாச்சி தேன் கூட்டுக் கலைப்பைக் காரணமாகச் சொல்லி விட முடியாது.
மல்லிகை மார்ச் 2011 & 63

Page 34
தேன்கூட்டைக் கலைப்பது என்பது வழமையாக வெள்ளையன் அண் கோ சகாக்கள் புரியம் வண்டவாளங்களில் ஒன்று. பொதுவாகச் சிறுசுகள் புரியும் வண்டவாளங்கள் முன் நிபந்தனையுடன் மேற்கொள்ளபடுவதில்லை. அதாவது அவர்கள் புரியும் வண்டவாளங்கள் முன்-பின் விளைவுகளை மனங் கொண்டு மேற் கொள்ளப்படுவதில்லை. ஆக வெள்ளையனை நோனாச்சி காப் பாற்றமைக்கான ஒரு Strong ஆன கார ணம் சொல்லப்படாததால், உபாலி இந்த நாவலை சொல்வதற்கு உருவாக் கிய இன அடையாளமற்ற கதை சொல்லி ஓர் இன அடையாளத்திற்கு, ஓர் இன சார்பு நிலைக்கு ஆளாகி விடுவதன் மூலம், நாம் மேலே குறிப்பிட்டது போல் குறியீட்டுப் பாங்கான, எதிர் மறையான வாசிப்புக்கான கேள்விகள் எழுப்புக் கூடிய ஆபத்தினை இந்த நாவலின் இறுதி முடிவு எதிர்கொள்கிறது.
அதாவது நாவலாசிரியர் இந்த முடிவின் மூலம் நோனாச்சி வெள்ளை யனை காப்பாற்றமைக்கான ஒரு காரண த்தை பகிரங்மாக முன் வைக்காமை. அந்த நிகழ்வை நாவலின் முடிவாக இடம் பெற வைத்து, அந்த நிகழ்வின் மீது ஒரு கவனக் குவிப்பை உருவாக்கி யமை ஆகியவையின் காரணமாக, இந்த நாவலின் பிரதி மறுவாசிப்பு வாச கனுக்கு ஒரு எதிர்மறையான குறியீட்டுப் பாங்கான வாசிப்புக்கு ஆட்படுத்தும் ஆபத் தினை எதிர் கொள்வதற்கான சாத்திய த்தை ஏற்படுத்தி விடுகிறது.
அந்த வாசிப்பின் பிரகாரம்
இவ்வளவு காலம் வெள்ளையன் என்ற தமிழ் பையன் தன் தாயிடம் அடி வாங்கும் பொழுதெலாம் காப்பாற்றும் அயல் வீட்டு சிங்களப் பெண்மணியான நோனாச்சி நாவலின் முடிவில அவனை காப்பாற்றைமையை காட்டியது மூலம், அந்த நாவல் நடக்கும் காலத்திற்கு பிறகு வந்த காலகட்டத்தில், இலங்கை எனும் தேன்கூட்டை இந்த பொடியன் கள்' கலைத்து, பலரை பாதிக்க வைத் தார்கள் என்பதைக் குறியீடாகச் சொல்லி, அத்தகைய செயலுக்கு ஒரு தமிழ்ப் பொடி யன் தலைமை வகித்தான் (எல்லோரும் இணைந்து புரியும் வண்டவாளங்களு க்கு அதிகமாக அடிக்கடி அடிகள் வாங் குவது தமிழ் பொடியன் வெள்ளையன் தான்), அதன் காரணமாகச் சிங்களதமிழ் மக்கள் மத்தயில் ஓர் முறுகல் நிலை நெருக்கமின்மை தோன்றியதை நோனாச்சி வெள்ளையனை காப்பாற் றமை வழியாக குறியீட்டாகவும் அத்த கைய ஒரு காலகட்டத்திற்குள் அந்த நாவல் உள் நுழைகிறது என்பதையும் சொல்லாமல் சொல்லுகிறாரோ ஐயத்து டனான ஒரு கேள்வி எழுகிறது.
எவ்வாறாயினும் உபாலு லீலாரத்ன வின் விடைபெற்ற வசந்தம் எனும் இந்த நாவல் பெரும்பாலான அளவுக்கு இந்த நாட்டின் எல்லா இனங்களிடேயே புரிந்து ணர்வு, ஒருமைப்பாடு, நெருக்கம் என்பன காலம் காலமாக இருந்து வந்துள்ளது என்பதை மிக அழகாக, இந்த நாவலின் முதல் வாசிப்பு வாசகனுக்கு சொல்வ தில் எந்த விதத்திலும் பின்நிற்கவில்லை என்பதே இந்த நாவலின் வெற்றியாகும்.
lo&sâaos lorửo 2011 ẳ 64

கடிதங்கள்
உங்களுடைய சகோதரி சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உங்களது புகையிரத நிலைய அருகாமை வீட்டில் காலஞ் சென்றுவிட்டதாக இங்கு வெளிவரும் தினசரிப் பத்திரிகையில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.
எப்படியும் இங்கு கட்டாயம் வந்து போவீர்கள் என நம்பினேன்.
உங்களை ஊரில் சந்தித்துக் கதைத்து விடலாம் என மனசார நம்பியிருந்தேன்.
இரண்டொரு நாட்கள் கழிந்த பின்னர் சைக்கிளில் உங்களைத் தேடி வந்து விசாரித்துப் பார்த்தளவில், பிரேதம் எடுத்த அடுத்தடுத்த நாட்களிலேயே நீங்கள் கொழும்பு திரும்பி விட்டதாகவும், தெரிந்து மனசார விசனப்பட்டுக் கொண்டேன். W
நீண்ட நெடிய நாட்களாகிவிட்டன, உங்களை நேர் முகமாகச் சந்தித்துக் கதைத்து.
கனக்க எல்லாம் மனம் விட்டுக் கதைக்கலாம் என மனசார நம்பியிருந்தேன். உங்களது முகத்தையும் ஒருதடவை பார்த்திருக்கலாம் என எண்ணியிருந்தேன்.
அது முடியாமல் போய் விட்டதே என்பது எனக்குப் பெரிய மனக் கஷ்டம்.
46-வது ஆண்டு மலரைப் பூபாலசிங்கம் பஸ் நிலையக் கடையில் நீங்கள் கொழும்பு சென்றதற்குப் பின்னர் இரண்டொரு நாட்களில் பெற்றுக் கொண்டேன்.
ஒன்றை வடிவாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும், நீங்கள். மல்லிகையை உருவாக்கி வளர்த்தெடுக்கப் பசளையிட்டது இந்த மண். அத்துடன் நீண்ட நெடுங் காலமாக நீர் ஊற்றி வளர்த்தெடுத்ததும் இந்த மண்ணேதான்!
உங்களது குடும்பத்திற்கும் தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் ஏற்பட்ட இந்தக் குடும் இழப்பிற்காக மனசார எனது ஆழ்ந்த துயரத்தைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ஒரு தடவை யாழ்ப்பாணம் வந்து போங்கள். பலர் சந்திக்க ஆவலாக உள்ளனர்.
நல்லூர். சு.பிரதாபன்
மல்லிகைக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என நீண்ட நாட்களாகவே எண்ணியி
ருந்தேன்.
நான் ஆச்சரியப் படுவது ஒன்றுதான்.
LDabsûans Lorré 2011 & 65

Page 35
தனி மனிதனாக இருந்து கொண்டு, இத்தனை உள்நாட்டு யுத்த நெருக்கடிக ளுக்கு மத்தியிலும், புலிகளினது கெடுபிடிக ளுக்கு இடையேயும் இருந்து தளம்பாமல் கொள்ளாமல் ஓர் இலக்கிய இலட்சிய இத ழைக் வெளிக் கொணர்ந்தீர்களே அந்த மெய்யான இலக்கிய ஒர்மத்தை மெய்ச்சு கின்றேன். மதித்துக் கனம் பண்ணுகின் றேன். மனசாரப் பாராட்டுகின்றேன்.
பார்க்கப் போனால், ஒரு வெள்ளைச் சட்டையும் கரை போடாத வெள்ளை வேட்டியும் உடுத்திக் கொண்டு, தெரு வழியே ஒரு சாதாரணனைப் போல மல்லி கையைக் கையில் சுமந்த வண்ணம் நடந்து திரியும் நீங்கள் நிச்சயமாக நாளைய வரலாற்றுநாயகன் தான்! பேசப்படுவீர்கள்.
இப்படியான ஒரு சாதாரணன் இந்த மண்ணில் நடந்து திரிந்து தெருத் தெரு வாக மல்லிகை இதழ்களை விற்றுத் திரிந் தானா? என்பதை நாளைய அறிவு உலகம் நம்பவே கொஞ்சம் கஷ்டப்படத் தான் போகின்றது. இது உண்மை!
இது எனது மனக் கணிப்புக்களில் ஒன்று
அட்டையில் உருவம் பதித்தவர்களில் இருந்து இன்றுவரை தமது உருவம் மல் லிகை அட்டைப்படத்தில் பதியப்படவில் லையே என்ற வெப்பியாரத்தில் உங்கள் மீது சேறு வாரிச் சொரிபவர்கள் பலரை என க்கு ஏற்கனவே தெரியும்.
இதுவும் கூட, உங்களுக்குத் தெரியும் என் பது கூட, எனக்குத் தெரியும்
இதில் ஆச்சரியம் என்னவென்றால்,
சுன்னாகம்,
இந்த அற்ப சலனங்களுக்கு- அவதூறுக ளுக்கு- கொஞ்சம் கூட மதிப்புக் கொடாமல் நிமிர்ந்து நின்று காரியமாற்றுகின்றீர்களே, அது தான் 'எங்கட ஜீவாவின் அடிப்படைப் பண்பாடாகும்.
நிச்சயமாக எதிர்கால இலக்கிய, கல் வித் தலைமுறை இதைக் கவனத்தில் கொண்டு ஆராயவே செய்யும்.
உங்களைப் புதிய புதிய கோணங்க ளில் ஆய்வு செய்யும், நூல்கள் எழுதும், மேடைகளிலும் அலசும்.
ஒன்றை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அதிலும் மல்லிகையில் பிரசுரமாவதை நீங்கள் அறவே விரும்பமாட்டீர்கள். உங் களை சமகாலத்தில் எழுத்தில் புகழ்வதை யும் பாராட்டுவதையும் விரும்பமாட்டீர்கள் என்பது எனக்கு நல்லாத் தெரியும். இந்தக் கடிதத்தைக் கூட முழு வடிவத்தில் வெளி யிட மாட்டீர்கள் என்பது கூட, எனக்குத் தெரியும்.
உங்களை ஒரு தடவை நேரில் பார்க்க விருப்பம்,
தயவு செய்து ஒர் எழுத்தைக் கூட, வெட்டிப் பிரசுரிக்க வேண்டாம்.
உங்களப்ை பற்றி, நிறையவே எழுத எண்ணம். சுய புராணம் என எனது எழு த்தை ஒதுக்கி விடாமல் பிரசுரியுங்கள்.
இதைப் போன்ற தற்காலிக புகழுக்கு அப்பாற்பட்டவர் நீங்கள் என்பது கூட, எனது அறிவுக்குத் தென்பட்டதுதான். இருந்தும் எழுத வேண்டும் போல, இருந் தது. எழுதுகின்றேன்.
அ.ஞானேஸ்வரி
மல்லிகை மார்ச் 2011 & 66

பDல்லிகைக்கு ஒர் இலக்கியக் கடிதம் எழுத வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. ஆனால், நீங்கள் மல்லிகையில் கடிதப் பகுதியையே பெருசு படுத்துவதி ல்லை என்ற மன ஆதங்கம் வெகு நாட்க 6TITs636 26tuTG.
இலக்கிய இதழ்களுக்குக் கடிதமும் முக்கிய இலக்கியப் பகுதி என்பதை நீங்கள் உணர வேண்டும். கடந்த காலங் களில் தமிழகத்திலிருந்து வெளிவந்த "எழுத்து', 'சாந்தி, தாமரை", "சரஸ்வதி போன்ற இலக்கியச் சிற்றேடுகள் தொடர் ந்து வாசகர் கடிதங்களைத் தொடராகப் பிரசுரித்து வந்துள்ளதையும் நீங்கள் அறி வீர்கள். சஞ்சிகைக்கும் தொடர் வாசகனுக் கும் ஒரு தொடர்பும் நெருக்கமும் அடிக்கடி தேவை. அப்பொழுதுதான், பரஸ்பரம். ஒர் இலக்கிய ஈர்ப்பும் பரஸ்பரம் புரிந்துணர்வும் தொடர்ந்து நிலைக்கும்.
எனவே தொடர்ந்து தொடர்பு குலையா மல் இலக்கிய ரசிகர்களின் கடிதங்களை வெளியிட முனையுங்கள்.
உங்களுடைய கருத்துக்களைப் படிப் பது மாத்திரம் எங்களது வேலையாக இரு ந்து விடக் கூடாது. எங்களது மனசில் ஏற் படும் எண்ணங்களையும் அபிப்பிராயங்க ளையும் பரந்து பட்ட மல்லிகை வாசகர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது இலக் கிய வளர்ச்சிக்கும் எதிர்காலத் தேவையாக வும் இருக்கக் கூடும்.
பலருக்கு இலக்கிய ஆர்வமும் ரசனை யும் நெஞ்சு முட்ட இருக்கலாம். இருக் கின்றது. ஆனால், அவர்களால் படைப்பு
இலக்கியம் நேரடியாகச் செய்ய மனவ லிமை போதாது. பயம் வேறு. ஆனால், தமது மன எண்ணங்களைச் சிநேகிதனுக் குச் சொல்வது போல, தோழிக்குக் கடிதம் வரைவது போல, நெஞ்சு திறந்து எழுதலா மல்லவா?
எனவே பரந்த, விரிந்த கடிதத் தளத்தை மல்லிகையில் தொடர்ந்து வெளியிடுகள்.
தமிழகத்தில் இன்று பல பல பகுதிக ளில் இலக்கிய நிகழ்வுகளும், ஆரோக்கிய மான சர்சைகளும் நடந்தேறி வருகின்றன.
தமிழகத்திலுள்ள இலக்கிய ரசனை மிக்க ஒர் எழுத்தாளரைத் தேர்ந்தெடுத்து, மாதா மாதம் தமிழகக் கடிதம் ஒன்றையும் எழுதி, வெளியிடலாமல்லவா?
நீங்களும் கொழும்பையே தஞ்சமென்று குந்தியிராமல், தேசத்தின் பரந்துபட்ட பிர தேசங்களுக்கும் போய் வரவேண்டும்?
இப்படிப் பற்பல பிரதேசங்களுக்குப் போய் வருவதால், பல வகைப்பட்ட இலக் கிய நெஞ்சங்களை நேரில் பார்த்துக் கதை க்க, உரையாட, சந்தா வசூலிக்க, புதிய புதிய படைப்பாளிகளுடன் நட்புக் கொள்ள இது பயன்படுமல்லவா?
மூடியிருக்கும் கண்கள் திறப்பதற்கி டையில் 50-வது ஆண்டு வந்து விடும். மல் லிகையின் 50. ஆண்டு மலருக்கு முன் னரே, அத்தனை வேலைகளையும் செய்து முடிக்கத் தெண்டியுங்கள். அநுபவங்கள் புதிய புதிய பாதைகளைத் திறந்து வைக்
கும.
மிருசுவில். அ.சர்வேஸ்வரன்.
மல்லிகை மார்ச் 2011 * 67

Page 36
(lonტ )والالانفه ففعلا
இன்னல்களோரு
இரண்டறக் கலந்துவி:L இருண்ட இவ்
இரவுகள்
விடியலின் வருகைக்காய் தவமிருந்தபடியே. தூக்கமில்லாத விழிகள் தினமும் விழித்தவாறே விடியலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு எங்கோ ஒரு மூலையில்
தெரு நாய்களின்
அபாய இலுளையிரும் ஒலிகள் ஒலித்தவாறே செல்கிறது. சில்வண்டுகளின் ரீங்காரங்களை
(806ilbib olLIITU bä56)6b856
வரவிருக்கின்ற
இன்னல்களுக்கா?
ஆயிரம் கேள்விகள்
இன்னமும் முளைவிடவாறே.
அசாதாரணங்கள் எங்கும்
நிறைந்திருக்கின்ற
nܗ̇ܟܢܝܘܟܼܗܿy% ܚܘܿܢܘ79Gܪܢܘ6l
இவ் இரவுகளில் மாத்திரம்
இப்படியல்ல. நகர்ந்து கொள்கின்ற நாடிகளிலும் எங்கும் மெளன சாம்ராச்சியம்,
ஏதோ ஒரு உருப் பெறாத
அச்சம்
பின்தொடர்கிறது. யதார்த்தம் உரைக்கப்பட மொழிகள் திரணியற்றுத் தொண்டைக்குள்
சிக்கிக் கொள்கிறன.
மெளன தேவதை எல்லோர் இதயங்களிலும் நிரந்தர வாசியாகியிருக்கின்றாள். எங்கும் எதிலும்
வினாக்குறிகளே தொக்கி நிற்பனவாய்,
lobaans tortë 2011 ë 68
விடைகளை உரைத்திட முடியாது எங்கும் ததும்பும் மெளனமாய் தொடரும் இவ்வாழ்தலில் சில மெளனங்கள்
இன்னும் மொழிபெயர்க்கப்படாமலேயே
 

KAP story n
- ALT666 ST
இ. இந்த ஆண்டு ஆரம்ப மாதத்தில் நடைபெற்று முடிந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றி மல்லிகை மிகைப்படுத்திக் கணிப்பீடு செய்கின்றது எனக் கருதுகின்றேன். நான். இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
புத்தளம். ச.அருந்தவநாதன்
* அப்படிநீங்கள் கருதுவது உங்களது சொந்தக்கருத்து. அதில் நான் தலையிடவில்லை. ஒருவன் ஒருதடியை நிலத்தில் போட்டுவிட்டு, “இந்தத்தடியைக் கையால் தொடவும் கூடாது. முறிக்கவும் கூடாது. இதைச் சிறுப்பித்துக் காட்டவேண்டும்” என்றானாம்.
பலர் திகைத்துப் பின் வாங்கி விட்டனர். ஒரு பார்வையாளன் முன் வந்து, அதன் பக்கத்தே வரியதொரு தடியைப் போட்டானாம். முன்னால் போட்டதடி இயல்பாகவே சிறுத்துப் போய்விட்டது.
அதைப் போல, சும்மா சும்மா வாய்ச்சவடால் அடிப்பதை விட்டு விட்டு, இன்னொரு மாவரும் எழுத்தாளர் மகாநாட்டை நடத்திக் காட்டட்டுமே, இவர்கள்?
வாய்ச்சவால் அடித்து மற்றவர்களினது உலகசாதனையைக் கொச்சைப்படுத்தும் இப்படியொரு சாதனையை இவர்களால் இந்த ஜென்மத்திலும் சாதித்துக் காட்டவே முடியாது. இது சர்வ நிச்சயம்!
இ இன்று தேசம் தழுவிய நிலையில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தெல்லாம் புதுப் புதுப் பத்தகங்கள் வெளிவந்த வண்ணமாகவே இருக்கின்றனவே, இத்தனை நால்களுமே விற்பனையாகிவிடுகின்றனவா?
கொக்குவில். எஸ்.தவயோகன்.
* ஆர்வமும் விடாமுயற்சியும் தங்களதுபடைப்புக்களைநூலுருவாக்கிப்பார்க்கவேண்டும் என்றமனஅவாவும் இவைகளுக்குப்பின்னால் உள்ள உந்து சக்திகள், சிலர் துணிந்து வெளியீட்டு விழா நடத்துவார்கள். ஒரு சில பிரதிகள் அங்கு விலை போகும். அப்புறம் கட்டுக் கட்டாகக் கட்டி ஒரு மூலையில் போட்டு விட்டு, அச்சகக் கடனைத் தீர்க்கப்பல வழிகளையும் நாடியோசித்துக் கொண்டே நடமாடித்திரிவார்கள்.
இதற்கு ஒரேயொரு வழியைப் புத்தகம் வெளியிடுவோர் யோசிக்க வேண்டும். வெளியிடும் நூல்களைச் சந்தைப்படுத்த ஆக்கபூர்வமான வழிமுறைகளை நாடவேண்டும்.
Lodibicaans Lorrirė 2011 & 69

Page 37
இ உலகப் பரப்பெங்கும் இன்று விரிந்து, பரந்த போய் வாழ்ந்து வரும் நமது நாட்டு 2_gdorgoLouTGOT TárlőfT5Gir LoGibGolcoasuLGöT இன்றும் தொடர்பைப் பேணி வருகின்ற
gor?
ஹட்டன், ஆர். மதனராஜ்
* வெளிநாடுகளில் பரந்து விரிந்து வாழும் நமது இலக்கியச் சகோதரங்கள் அடிக்கடி தொலைபேசியில் விசாரிப்பதுண்டு. பலர் மல்லிகை வெளியீடுகள் சம் பந்தமாகவும் பேசுவார்கள். புகுந்த நாட்டில் அவர்க ளுக்குப்பல்வேறுபிரச்சினைகள், நெருக்கடிகள்.
இருந்தும் இலக்கிய ஆர்வத்துடனும் மங்கிப் போகாத ரசனையுடனும் எம்முடன் தொடர்பு கொள் ளுகின்றனரே, அதுவே போதும்
இ நீண்டநெருங்காலமாக,நீங்கள் கிழக்கு மாகாணத்திற்கு வந்து. எங்களை எல்லாம் பார்த்துப் பழக வேண்டும் என்ற இலக்கிய écritonJCLo SBcio GoocuouLJfT, உங்களுக்கு?
கல்முனை. எஸ்.மீராமுகைதீன்
* நீண்டவுநடுங்காலமாகநான் உங்களதுபகுதிக்கு வரவில்லை என்பது உண்மைதான். ஆனால், மல் லிகை இதழ் பரவலாக மாதா மாதம் அங்கெல்லாம் வரத்தானே செய்கின்றது?
மார்ச் மாதக் கடைசி வாரத்தில் நான், கண் டிப்பாக உங்களது பிரதேசத்திற்கு வந்துபோகத்தான் இருக்கின்றேன். இலக்கிய அபிமானிகளை நேரில் சந்தித்து அளவளாவுவதுதான் எனது நோக்கம்.
இ 46வது ஆண்டுமலர்-வெளிவந்து விட்ட தாகப் பேப்பரில் படித்தேன். எனக்கேன் இன்னமும் ஆண்டுமலர் அனுப்பவில்லை? என்ன காரணம்?
பதுளை. எஸ்.ஆர்.கணேசன்
* உங்களது கடிதம் கிடைக்கப் பெற்றதும், கணினி யில் பதியப்பட்டிருந்த பழைய சந்தாதாரர்களின் முகவரிகளை ஒரு தடவை ஆறுதலாக நோட்டமிட்டு அவதானித்துப் பார்த்தேன்.
இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே உங்களது ஆண்டுச் சந்தா முடிந்துவிட்டது. அதை நீங்கள் கவனத்தில் கொள்ள வில்லை.
இப்படியேதான் பலரும் குற்றஞ் சாட்டுகின்றனர். எப்போவோசந்தாசெலுத்திவிட்டு, இப்போதுமலர் ஏன் கிடைக்கவில்லை எனக்கேட்கின்றனர். மலர் ஒன்றைத் தபாலில் அனுப்ப ரூபா 120/- நமக்குச் செலவாகின் றது. இதைக் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண் டும், நீங்கள். ஒழுங்காகச் சந்தா செலுத்தாதவர்க ளுக்குக் கண்டிப்பாக மல்லிகை அனுப்பப்படமாட்டாது.
இ 45-வது ஆண்டு மலர் வெளிவந்துள்ள தாகப் பேப்பர்களில் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.அம்மலரைப்பெற்றுக்கொள்ள மனதார விரும்புகின்றேன். அதைப் பெற் றக்கொள்ளநான்என்னசெய்யவேண்டும்?
தெஹிவளை. ஆர்.எஸ்.தேவதேவி
* மலரின் விலை 250/- தபாற் செலவு 120/- ஒருமலரை தபால் மூலம் பெற்றுக் கொள்ள ரூபா 370/- செலவு செய்ய வேண்டும். நீங்கள் கொழும் பிற்கு ஏதாவது அலுவலாக வர முடிந்தால், அல்லது உங்களுக்குத் தெரிந்தவர் தலைநகருக்கு வந்தால் நேரில் மலரைப் பெற்றுக் கொள்ளலாம். உங்களது வசதிப்படி செய்யுங்கள்.
இ. "மல்லிகைப் பந்தல்" வெளியீடுகளை நான் விலைக்கு வாங்க விரும்புகிறேன். பெரும்பாலான நால்களை எங்கு வாங்க combfo 69 GG JGaflu5Auru uġig5&sü பட்டியில்
கிடைக்குமா?
வெள்ளவத்தை, செல்வி.எஸ்.சரோஜினி
மல்லிகை மார்ச் 2011 & 70

°F மல்லிகைப்பந்தல் வெளியிட்டநூல்களின் பெயர்ப் பட்டியல் ஆண்டுமலர்களில் வெளிவந்துள்ளது. பார்க் கலாம். பக்கத்தேயுள்ள புத்தகக் கடைகளில் விசாரித் துப் பாருங்கள். கிடைக்கலாம். பெரும்பாலான புத்த கங்கள் கிடைக்கத் தான் வேண்டுமென்றால் சிரமத் தைப் பாராமல் மல்லிகைக் காரியாலயத்திற்கு நேரில் வந்துதான் பெற்றுக் கொள்ள முடியும். உங்களது வசதி போலச் செய்யுங்கள்.
இ நீங்கள் திட்டமிட்டு, எந்தெந்த நேரங்க ளில் ள்முதுவதுண்டு?
உரும்பிராய். ஆர்.சிவநேசன்
* முன்னர் நான் படைப்பு எழுத்தாளனாக இருந்த காலகட்டத்தில், திட்டமிட்டுச்சிலநேரங்களை முன்னரே சேமித்துக்கொண்டுஎழுதிவருவேன். என்றைக்குநான் மல்லிகை ஆசிரியரானேனோ, அன்று தொடக்கம் தேவை ஏற்படும் நேரங்களில் எல்லாம் எழுத வேண் டியசூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. எனவே, தேவைகருதி, நேர காலமில்லாமல் நான் எழுத வேண்டியுள்ளது.
இ மல்லிகையின் வரவு 50 ஆண்டுகளை
அண்மித்து விட்டதே. அது தனிமனித சாத GoGOTélő 95 GU5GOLou JGöGuGhjrf
UF6op. எம்.கண்ணன்
* நான் எனது கடமையைச் செய்து வருகின்றேன். மிகுதியை வருங்காலத்திற்கே விட்டு வருகின்றேன். வரலாறு தீர்மானிக்கட்டுமே
இ உங்களது சுயசரிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு,நாலாக வெளிவந்து GauLg5. e9lgjGumGo, 2 rälsGTS 6u ajon ற்று நால் சிங்களத்தில் மொழி பெயர்க் கப்பட்டு, அதுவொரு நாலாக வெளிவருவது, காலத்தின் கட்டாயமல்லவா?
s"Upub. STs).9J.Gorsloe
* நீங்கள் ஆசைப்படுவது நியாயமானவை தான்.
எனக்கும் அது சம்பந்தமாக ஓர் எண்ணமுண்டு. சகோ தர எழுத்தாளர் திக்குவல்லை கமாலிடமும் கலந்துரை யாடியுள்ளேன். முயற்சிப்போம். கைகூடும்.
இ. இந்தாண்டு ஆரம்ப கால கட்டத்தில் மிக மிகச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்தேறி, நிறைவெய்திய சர்வதேச எழுத் தாளர் மாநாட்டிற்கு ஆரம்ப அத்திவார மிட்டது நீங்கள்தான் எனப் பகிரங்கமாக நண்பர்கள் முருகபூபதியும் ஞானசேகர னும் விழா மேடையில் எழுத்தில் அறிக்கை யிட்டு வந்திருந்த மக்களுக்குத் தெரியப் பருத்தினார்களே, அதன் பின்னணி பற்றிச்
afggy Ghafiriogo uppuuLotf
ásurrutb. எம்.தவசீலன்
* இது என் பெயர் சம்பந்தப்பட்டபடியால் பெரிதாக ஒன்றையும் சொல்ல விரும்பவில்லை. 2000-ம் ஆண்டில் பாரீஸ் பெருநகரில் மாபெரும் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது. என்னையும் சிறப்பு விருந்தினராக அவ்விழாவில் கலந்து கொள்ள அழைத்திருந்தனர். சகல ஐரோப்பிய, அமெரிக்க நாடு களில் இருந்தெல்லாம் பேராளர்கள் அவ்விழாவில் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்திருந்தவர்கள் அனைவருமே நம்மவர்கள். நம் மண்ணைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள். பின்னர் லண்டன் போனேன். Guir6ôleiðir GumrCardär. 896örGp Grör DGIVT6G6IwgibLICL முனைப்புத் தான் இது
அன்று அவ்விழாவை நேரில் பார்த்து பிரமித்த என் நெஞ்சிற்பட்ட எண்ணம் தான் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல். விழாக் குழுவினரு க்கு என்மனமார்ந்த சர்வதேச வாழ்த்துக்கள்!
ằs. Loebeöì6ơo& Cềg5!}&aficỡĩ đ9ịt: 6uot-6Uou-J அலங்கரித்த பல பிரமுகர்களைத் தொகு த்து நான்கு நூல்களை இதுவரை வெளியி ட்டுள்ளிகள். அடுத்த கட்டம் என்ன?
6 hu6ageseñurt. ஆர்.ராகுலன்
Lososses LorůřŠ 2011 季 7

Page 38
மல்லிகை மார்ச் 2011 :72
? இதுவரையும் கிட்டத்தட்ட 170 பிரமுகர்களுக்கு மேற்பட்டவர்களைப் பதிவு செய்துள்ளேன். தீவர்க ஊரில் பலரைக் கூட்டிக் கழித்து, நூறுபேர்களைத் தொருந்து அடுத்த பரப்பாைக்கு ஆாபகத்தில் வைத்தி ருக்தாப் போல, பெரியதொரு நூலைத் தொகுத்த விரிக்க விருப்புநின்றேன். பல முகங்கள் இயல்பாகவே இயல்பாகவே இந்த வரலாற்றுத் தொகுப்பில் இடம் பெறாமலேயே போகவும் கூடும். அனுபவம் பல படிப்பினைகளை எனக்குக் கற்றுத் தந்துள்ளது. சிந்தப் படிப்பினைகளுக்கு அமையவே அந்தப் பெருந் தொகுப்பு நூல் அயையும்,
ஃ சமீபத்தில் கொழும்பு மாநகரில் நடந்து முடிந்த "சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் LDT "TH" LÍTILL 20 LdJTGLIJLEILLITTELIT SEO FÉLAGGT gill LI GLUT LI LI LI JITTLLI LI TIFTIT?”
gmT=STEGAJ எஸ்.தேவநேசன்
ஈ எனது அபிப்பிராயம் ஒரு பக்கம் இருக்கட்டும். நானும் விழாக் குழுவில் ஒருவனாக இயங்கியவன். எனவே, சார்பு நிலை எனது அபிப்பிராயங்களில்
கீடம்பெறலாம்.
சென்னையில் இருந்து வெளிவரும் முற்று முழுதான நீலக்கியச் சஞ்சிகையான 'தீராநதி" பெப்ரவரிதேழில் வெளிவந்த கட்டுரையை ஒருதடவை ஆற அமர ருேந்து படித்துப் பாருங்கள். மற்றுப் பெப்ரவரி முதல் வாரப் வெளிவந்த குமுதம் நீதவிழயும் ஒருதடவை ஊன்றிக் கவனித்துப் படித்துப் பாருங்கள். உண்மை விளங்கும். விழாவின் பாரிய வெற்றிப்பரிமானமும் அதனது சர்வதேச வியாபகமும் நன்து தெரியும்,
Ys. Lociolcúl GTI) EE5eki as, Tifli LLUITAJILLJ Lib ELiib GILULLIT
ந்து விட்டதாக இலக்கிய நண்பர் ஒருவர் சமீபத்தில் என்னைச் சந்தித்தபொழுது எனது கவனத்திற்குக் கொண்டு வந்தார். eTT TMMMMHLT S TLkTLTTS LLTTLLL LLLL
இதழைக் கூர்ந்து படித்துப் பார்த்தேன்.முக ഖrflLി IDT]]:ഥഴ്ച| ിട്ട്f|LIlൈL്
தென்றிவளை. ஆர்.சரவணன்
* மல்லிகைக் காரியாலயம் இதுவரையும் மேல் மாடியில் தான் நீயங்கி வந்துள்ளது. ஜனவரி பொங்கலுடன் அதே கட்டடத்தின் நிலத்தடி அறைந்த மாற்றப்பட்டு விட்டது. முன்னர் படியேறி அறைக்குள் உள்நுழைவது சற்றுச்சிரமமாக ருேந்தது. இன்று வசதியாகவும் சுலபமாகவும் நிருக்கின்றது. அதே சமயம் முகவரி மாற்றமோ, அல்:tது தொலைபேசி ாற்றபோகிஸ்னீ,
KS TMTMTTTLLLL LL OO TTTTSLTMLLLLL
என நினைக்கின்றேன். அந்தச் சிறுகருது றெயக் (தறும்படமாகக் கொழும்பில் தயாரித் துள்ளார்களாம்,இலக்கியவிழாவில் கேள்விப்
பட்ட செய்தி. அதைப் பற்றிய தகவற்காச்
ിf( !plLഥTP
கொட்டாஞ்சேனை, ஆர்மொகமட்சவிம்
" சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்திலிருந்து நண்பரொருவர் கொழுப்பு வந்திருந்தார். அவர் குறுப்படம் தயாரிப்பது சம்பந்தமாக ஆலோசனை வழங்க வந்தனர் எனத் தெரிந்தது. அவர் எனது சிறு கதைகளில் ஒன்றைக் கறுப்படமாகத் தயாரிப்பதற்கு எனது அனுமதியை விருப்பிக் கேட்டார். "உங்களு டைய எந்தச் சிறுகதையைக் குறும்படமாகத் தயாரிக் கலாம்?" என எனது அபிப்பிராயத்தையும் நேரடியா
isrāI L'ITIT.
நான் எனது மனரில் நெடுநாட்களாகவே பதிந்தி ருந்த மாதுகை" என்ற கதையைத் தயாரிக்கலாம் என அபிப்பிராயப் தெரிவித்தேன்.
தறும்படம் தயாரித்து முடிந்து விட்டதாகக் கேள்வி. மார்ச் மாதக் கடைசியில் அப்படம் காட்சிப் படுத்தப்படும் எனச் சமீபத்தில் தகவல் சொன்னார்கள்.
2014. பூங் கதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும் மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டான்ருமான T TTTT TsuTH kekTTTTTTMMTS TTTaa MLkeeeTOTTTu u TeeES L0LS LLLLLTTTT TuTTMD SLSLSLL LLLLCaaL அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பேற்றது.

நீங்கள் தரமான இலக்கியச் சுவைஞரா?
'மல்லிகைப்பந்தல் வெளியீடுகளைத் தொடர்ந்துபடியுங்கள்
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நமது மண்ணைச் சார்ந்த படைப்பாளிகளின் பல்துறைப்பட நூல்களை வெளியிரு வருகின்றது. மல்லிகைப் பந்தல் நிறுவனம்
மல்லிகைப் பந்தல் வெளியீடுகளை நீங்கள் வாங்கும் போது, அதனது ஆதரவு மல்லிகை மாத இதழுக்கும் சுவறுகின்றது என்பதை ஆாபகத்தில் கொள்ளுங்கள்
மல்லினைப் பந்தல் தொலைபேசி: 2320721

Page 39
0/rfoര7
DATABASE PRINTING, BROCHURES, CATALOGUES, SOUVENIRS, BOOKMARKS, GREETING CARDS, NAME TAGS, CD/DVD COVERS, COLOUR BIODATA, STICKERS INVITATION CARDS, PROJECT REPORTS BOOK COVER, MENU CARDS, THANKING CARDS, CERTIFICATES, BOOKS, POSTERS, CD STOMER, PLASTIC CARDS, SCRATCH CARDS, VISITING CARDS.
Dari Colour
No. 75 1/1, Sri Suman
le: -94. 1149 Web: Whock.co.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CENTRE (Pvt) LTD
be Digital Oiset Press atissa Mawatha, Colombo - 12. 37336, -94. 117394592
E-mail: happy2002Glive.com