கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.04

Page 1


Page 2
திருடீன சேவை
|5 வருடத் திருமணசேவை நிறைவினை முன்னிமடு வேல் அமுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு
TIJE
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், சுயதெரிவுமுறை முன்ாேழ முத்து புகழ் பூத்த சர்வதேச சகலருக்கு நான் திருமண ஆலோசகர்/ஆற்றுப்படுத்துநர் தரும்ப சிடியூர், மாலியமுவேல் 8ழதனுடன் திங்கள், புதன் lilis Isll'Ell, Fl, Eblli HðalLEl லேயோ தயங்காதுதொடர்புகொள்ளலாம்
தொலைபேசி
:3B[}մեBy:25fit)tit]չly 1873ցից
சந்திப்பு ரஸ்னேற்பாt ஒழுங்il)
spell:M :33 மெற்றோ மாடிமனை (வெள்ளந்தை காலில் நிலையத்திற்க எதிராக நிளப் பக்கம்,33தம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை வெள்ளவத்தை கொழும்பு-05
துரித- சுலபமணமக்கள் தெரிவுக்குச் சாலச்சிறந்த முறை சுயதெரிவுமுறையே ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழுவேல் அமுதனே
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி ஆதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர் ஈன நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே,
டேப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம்
சிகை மல்விகே, இதனை நாடாளுமன்றப்
செய்ததுடன் எதிர்காலச் சந்நதியினருக்காக ஆவணப்படுந்தியுமுள்ளது- அத்துடன்
நுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகையும் மல்லிகையே தான்
50 - ஆவது ஆண்டை நோக்கி. ஏப்ரல் 585 'ഠ//%' ീgrade
ഠ/0/ ഭർഗ്ഗരkle
மல்லிகை ஆர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி :வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல. அது ஓர் ஆரோக்கியமான இலக்கிய இயக்க
|முமாகும்.
எழுதியவர்களே பொறுப்பானவர்கள்
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Tel: 232O721
இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரம் தான் ஓர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா
பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் 襄
பதிவேடான ஹன்ார் 047, 2001) பதிவு :
* ட்லக வரலாற்றில் முதன் முதலில் சலூ
மல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு 罪
mallikaijeeva ayahoo.com
一覧 եւին:
5டந்த வாரம் 27.03.2011 அன்று மட்டக்களப்பு மண்ணில் வெகு கோலா கலமாக நடந்தேறி முடிந்த எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் முன் கையெடுத்து நடத்திய தமிழியல் விருது 2010 நிகழ்வில் முழுநாளும் கலந்து கொண்டேன்.
எனது இலக்கிய நண்பர் திரு.மு.தயா பரன் வெகு கரிசனை காட்டி வெகு பக்கு வமாக என்னை அழைத்துப் போயிருந்தார்.
பல படைப்பாளிகள் மிகப் பெறுமதி யான கணிப்புடன் பட்டமளித்துக் கெளர விக்கப்பட்டனர். எனக்கும் தமிழியல் வித்த கர் பட்டம் அளித்து கணம் பண்ணிக் கெளர வித்தது, இவ் இலக்கிய விழா. விழாச் சார் பாகப் பன முடிப்பும் வழங்கப்பட்டது. இவ் விழாவில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய செய்தி என்னவென்றால் நாலா பக்கமும் மணிகள் புனையப்பட்ட தலைப்பாகை சூட்டி, கெளரவித்த ஒரு புதுமை நிகழ்வு பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏராளமான இலக்கிய ரஸிகர்கள் விழா முழுநாளுமே இங்கு நடைபெற்ற நிகழ்ச் சிகளில் மனப்பூரிப்புடன் கலந்து கொண்டு சிறப்பித்தது, இங்கு குறிப்பிடத்தக்கதாகும். 22க்கும் மேற்பட்ட இந்த மண்ணை மகிழ் வித்த வித்தகர்கள், கலைஞர்கள் கிழக்கு மாகாணப் பொதுமக்கள் முன்னிலையில் கெளரவித்துப் பாராட்டப் பெற்றது, வரலாற் றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.

Page 3
முன்னர் பின்னர் முகம் முகம் பார்த் திராத பல்வேறு வகைப்பட்ட படைப்பாளி கள், கவிஞர்கள், இலக்கிய நேசர்கள் ஒரு வரை ஒருவர் நெருங்கி வந்து, தம்மைத் தாமே அறிமுகம் செய்து கொண்டு, மனந் திறந்து உரையாடிக் களித்தது. இவ் விழாவின் தனிச் சிறப்புக்களில் ஒன்றா கவே அமைந்து விட்டது.
கிழக்கு மாகாண மக்களுக்கென்றே தனித்தன்மை பெற்று விளங்கும் விருந் தோம்பும் நிகழ்ச்சி, மதிய விருந்தின் போது தலை சிறந்து விளங்கியது.
தேசம் பூராவுமே இளந் தலைமுறையி னரிடம் கலை இலக்கியத் துறையைப் பொறுத்த மட்டில் ஒரு புத்துாக்கமும் புது உற்சாகமும் தலைகாட்டி வருவதை அவ தானிக்கக் கூயதாகவுள்ளது.
ஆரம்ப கால கட்டம் தொட்டே, மல்லி கையை நெஞ்சார நேசிக்கும் உண்மை நண்பர்கள் பலரை நேரில் பார்த்துப் பலதும் பத்துமாகக் கதைத்துப் பார்த்தேன்.
அப்பப்பா இலக்கிய உலகத் தகவல்க ளையும், எழுத்தாளர் பற்றிய பல்வேறு ஆவணப் பதிவுச் செய்திகளையும் அவர் கள் மனந் திறந்து பேசிய போது நேரில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது.
இளம் படைப்பாளிகள் பலரை இந்தக் கட்டத்தில் தான் நேரில் முகம் முகம் பார்த்து, நட்புப் பாராட்டினேன். என்னை எப்படியாவது ஒரு தடவை நேரில் சந்தித்து, மனந் திறந்து பேச வேண்டும் என விரும் பியிருந்ததாகவும், இந்த இலக்கிய ஒன்று கூடல் அதற்குச் சுலபமாகவே வழி சமைத்
துத் தந்துள்ளதாகவும் மன நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர், பலர்.
விழா என்பது முக்கியமல்ல. பல்வேறு மட்டத்தினர், பல்வேறு துறையைச் சார்ந் தவர்கள், இலக்கியத்தின் பேரால் இப்படி ஒன்று கூடுவதே மகாநாட்டை விடப் பெறு மதி வாய்ந்தது என்பதும் இங்கு குறிப்பிட் L60Ts.
விருது பெற்றவர்கள் விபரம்:
வசந்தி தயாபரன், கோகிலா மகேந்திரன், நிலா தமிழின்தாசன், எஸ்.ஏ. உதயன், வி.ஜிவகுமாரன் (டென்மார்க்), ஓ.கே.குண நாதன், அகளங்கன், கு.இராயப்பு, கெகி ராவ ஸ்ைேலகா, இ.ஜீவகாருணயம், பெ.ஐங்கரநேசன், ஒவியர் நிர்மலவாசன் ஆகி யோர் மேடையில் பாராட்டுப் பெற்றனர்.
இந்த விழாவில் எனது மனதைக் கவர் ந்த மிக முக்கியமான செய்தி என்னவென் றால், ஒரு நாள் விழாத்தான். ஆனால், பெரிய முழு நாள் விழாவை நடத்தி, முடி த்து விட வேண்டுமென்றே மகா அக்கறை யுடனும் பிரதேச அபிமானத்துடனும் இலக் கிய ஆழ்மன நேசிப்புடனும் பல்வேறு வகைப் பட்டவர்கள் ஒருங்கு சேர்ந்து, மகா சிரத் தையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும், பல்வேறு துறையினர் காரியங்கள் ஆற்றி, இப்பிரதேச இலக்கிய விழாவை வெற்றிகர மாக நடத்தி முடித்ததை எந்த வகையான வார்த்தைப் பூமாலைகளைக் கொண்டும் பாராட்டி மகிழலாம் என்றே நேரில் இதை அவதானித்தவன் என்ற முறையில் மணற் திறந்து சொல்லலாம் என என் நெஞ்சுக்குப் படுகின்றது. சொல்லி விட்டேன்.
CR1-secul
======

இந்தத் தேசத்தில் தமிழ் மக்களாகிய நாமும் உன்னை
முன்னுதாரணமாகக் கொள்ளுவோம்
- உனது நாட்டுக்குத் தான் எத்தனை எத்தனை நெருக்கடிகள்! சர்வதேச நாச நிகழ்வுகள்! வரலாறு காண முடியாத இயற்கை உபாதங்கள் சீரழிவுச் சிதைவுகள்.
இந்து சமுத்திரத்தில் தனிப் பெரும் நிலமாகவும் நாடாகவும் விளங்கிவரும் உனது நாடும் உனது மக்களும் வரலாற்றில் பதியப்பட்டவர்களே!
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பிற்கால கட்டம். அந்த யுத்தத்தில் நிச்சயம் தமது பக்கம் தான் வெற்றி கொள்ளப் போகின்றது எனத் தீர்க்கமாகத் தெரிந்து கொண்டிருந்த போதிலும்- அமெரிக்க யுத்த மிலேச்சன் உனது மண்ணின் இரண்டு பிரதேசங்களின் மீது தனது நச்சரவு நாச அணுகுண்டுகளைப் பிரயோகித்து, விஷப் பரீட்சை செய்து பார்த்தான்.
ஹிரோவழிமா, நாகவராகி என்ற அந்த இரு தீவுப் பிரதேசங்களும் காலா காலமாகப் பாழ்பட்ட பூமியாக்கி விட்டு, தனது யுத்த வெற்றியை உலகம் முழுவதுமே பிரகடனப் படுத்தி, உலக ஜனநாயகத்தின் பிதாமகன் தானே எனக் கொக்கரித்து ஆர்ப்பாட்டம் செய்தான்!
அந்தச் சர்வதேச நாசத்திலிருந்து புதுப்பித்து புனரமைத்து மீண்டெழுந்த நாடு தான் நீ புதிய ஜப்பான்!
இன்று, இந்த இயற்கையின் சர்வதேசப் பேரழிவு சுனாமி ஆழி அலைகளுக்கு மத்தியிலும் பூகம்ப நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உனது நாடும் மக்களும் நிலமும் சிக்கித் திணறித் தவித்துப் போய் அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்கும் தகவலைக் கேட்டு, மனுக்குலமே உனது சுபீட்சமான புனர் வாழ்வுக்காக ஏங்கித் தவித்துப் போய் நிற்கின்றது.
- நிச்சயமாக உலகிற்கு நன்கு தெரியும்- நீ மீண்டும் புதிய பூமியாக, புதிய நாடாக, புதிய பிரதேசமாக உயிர்த்தெழுவாய் என்பது இந்தச் சர்வதேச உலகிற்கு நன்கு விளங்கும்

Page 4
அடீடைப் படம்
gேருாசிரியர் கருணாநிதியின் æඨණ්ෂීෂිණ්‍යග්‍රර් Oෙණිස්r
-பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
பேராசிரியர் மா. கருணாநிதி அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, தனது முயற்சி, உழைப்பு என்பவை காரணமாகப் பள்ளி அதிபர், பல்கலைக்கழக விரிவுரையாளர் எனப் பல பதவிகளில் அமர்ந்து தற்போது கல்வியியல் பேராசிரியராகப் பல்கலைக்கழகத்தால் பதவி வழங்கப்பட்டவர். இப்பதவி உயர்வானது, அவருடைய முயற்சிக்கும் கல்வித் துறைச் சாதனைகளுக்கும் வழங்கப்பட்ட பொருத்தமான ஒரு வெகுமதி என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இலங்கையில் பல்கலைக்கழகக் கல்விக்கு 70 ஆண்டு கால வரலாறு உண்டு (19422011). இக்காலப் பகுதியில் கல்வியியல் துறையில் பேராசிரியர் பதவி பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விட முடியும். பேராசிரியர்கள் சமுத்துலிங்கம் (1975), ப.சந்திரசேகரம், வ.ஆறுமுகம், சோ.சந்திரசேகரம், த. சின்னத்தம்பி, மா.செல்வராஜா, மா. சின்னத்தம்பி என்ற அழுத்தமான பட்டியலில் அடுத்து வருபவர் பேராசிரியர் மா.கருணாநிதி ஆவார்.
பல்கலைக்கழக முறைமையில் பேராசிரியர் பதவியைப் பெறுவதற்குச் சில நெறி முறைகளும் நிர்ப்பந்தங்களும் உண்டு. தொடர்ச்சியாக 20-30 ஆண்டு காலப் பல்கலைக்கழகக் கற்பித்தல் அனுபவத்தை வைத்து மட்டும் ஒருவர் பேராசிரியராகி விட முடியாது. பல்கலைக்கழகத்தின் நிறுவன வளர்ச்சிக்கான பங்களிப்பு, உயர்ந்த கல்வித் தகுதிகள், மேற்பட்ட மாணவர்களின் ஆராய்ச்சிக்கு உதவுதல், பல்கலைக்கழக ஆசிரியர்க ளின் தொழில் திறன் மேம்பாட்டுக்கு உதவுதல், தேசியரீதியான பங்களிப்பு என்னும் விடயங்களில் ஒருவரின் சாதனைகள் பரிசீலிக்கப்படுவதுண்டு. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருவர் தமது துறையில் எத்தகைய ஆராய்ச்சிச் சாதனைகளைச் செய்துள்ளார்? என்ற விடயமும் தமது துறை சார்ந்த அறிவு, சமூகத்தில் பரவும் வகை செய்ய அவர் எடுத்த முயற்சிகள் யாவை என்னும் விடயங்கள் நுணுவி நோக்கப்படும்.
மேற்கூறிய விடயங்களில் பேராசிரியர் மா. கருணாநிதி தமது 20 ஆண்டு காலப் பல்கலைக்கழகச் சேவையில் சிறந்த பணி ஆற்றியதன் காரணமாகவே அவர் பேராசிரியர்
மல்லிகை ஏப்ரல் 2011 率 4.

பதவிக்கு உரித்துடையவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
1991 இல் இளநிலை விரிவுரையாளரா கப் பதவியில் அமர்ந்த பேராசிரியரினை படிப்படியான வளர்ச்சியை அவருடன் அமர்ந்து நாள் தோறும் அவதானித்து வந்தவன் என்ற முறையில், அவரின் ஆச் சரியம் தரத்தக்க வளர்ச்சியை என்னால் மட்டுமே விரிவாகக் கூற முடியும். ஆய் வேடுகள், மலையகக் கல்வி பற்றி வெறும் நூல்களாக அமையாது, ஆராய்ச்சிகளாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாய் வேடுகளை முழுமையாக இல்லாவிடினும், அவற்றின் உட்பொருளையும் முடிவுகளை யும் நூல் வடிவில் கொண்டு வர வேண்டிய அவசியம் ஒன்றுள்ளது.
பல்கலைக்கழகத்தின் பணியானது உயர்தரமான அறிவைக் கற்பிப்பது மட்டு மன்று; பல்கலைக்கழக ஆசிரியர்கள் உயர்தரமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதும் மாணவர்களுக்கு ஆராய்ச்சித்துறையில் பயிற்சிகளை வழங்குவதும் அடிப்படை யான ஒரு பல்கலைக்கழகப் பணியாகும். பொதுவாக, பாடசாலைகளிலோ ஏனைய உயர் கல்விநிலையங்களிலோ, ஆராய்ச் சிப் பணி ஊக்குவிக்கப்படுவதில்லை. இவ் வகையில், பேராசிரியரின் பல்கலைக் கழ கப் பணி, அவர் எதிர்காலத்தில் ஒரு ஆய் வாளராகப் பரிணமிப்பதற்கான ஒரு சிறந்த தளத்தை வழங்கியதுடன், அவர் செய்த உயர் பட்டத்திற்கான ஆராய்ச்சிகள் அவரு க்குச் சிறந்த முறையில் ஆராய்ச்சி முறை யியல் பயிற்சியையும் வழங்கியிருந்தன.
இவ்வகையில், கொழும்புப் பல்கலைக் கழகக் கல்விப்பீடம் தொடங்கிய பல
கல்வியியல் ஆராய்ச்சிப் பணிகளில் கல ந்து கொண்ட பேராசிரியர். மா.கருணாநிதி அவர்கள் பேராதனைப் புவியியல் துறை யில் இளநிலை விரிவுரையாளராகப் பணி யாற்றிப் பின்னர், மலையகத்தில் நுவரெ லியா மாவட்டத்தில் பாடசாலை ஆசிரியரா கவும், அதிபராகவும் சிறந்த பணியாற்றிய வர். இப்பணி காரணமாக நுவரெலியா மக்களினதும் மாணவர்களினதும் நன் மதிப்பையும் கெளரவத்தையும் பெற்றவர். அவரிடம் கல்வி பயின்ற ஏராளமான மலையக மாணவர்கள் இன்றும் தமது மேம்பாட்டுக்குப் பேராசிரியரின் பங்களிப்புப் பற்றிச் சிலாகித்துப் பேசுவதுண்டு.
மலையகத்தில் கல்வித்துறையில் பணி யாற்றிய காலத்தில், மலையக மக்களின் கல்வி நிலை பற்றி ஆழ்ந்த அக்கறை செலு த்தத் தொடங்கிய பேராசிரியர், தமது உயர் பட்ட கற்க ைநெறிகளுக்கு அதனையே ஆய்வுப் பொருளாகவும் கொண்டார். யாழ். பல்கலைக்கழகத்தில் தமது M.A. பட் டப்படிப்புக்கும், பின்னர் கொழும்புப் பல் கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டப் படிப்பு க்கும் நுவரெலியா மாவட்டத்தின் கல்வி நிலையை அவர் ஆய்வுப் பொருளாகக் கொண்டார். அவர் பெற்ற இவ்விரு உயர் பட்டங்களுக்கும் அவர் தயாரித்த மலைய கக் கல்வி பற்றிய ஆய்வேடுகளே காரண மாக இருந்தன.
யாமறிய மலையகக் கல்வி பற்றிய அவரது இரு ஆய்வேடுகள் போன்று வேறு எவரும் இரு உயர் பட்டங்களுக்கான இரு ஆய்வேடுகளைத் தயாரித்ததில்லை. அவரது ஆராய்ச்சித் துறைப் பங்களிப்பே, துரிதமாக அவர் பேராசிரியராகப் பதவி உயர்வு பெறக் காரணமாயிற்று.
மல்லிகை ஏப்ரல் 2011 & 5

Page 5
இலங்கையில் கல்வியியல் ஆராய்ச்சி பைச் செய்வதற்கென ஒரு புதிய ஆராய்ச்சி நிலையம் ஒன்று கல்விப் பிடத்தில் தொடங் கப்பட்டது. உலக வங்கியின் அதிகாரிகள் இவ்வாறான நிலையத்தைக் கொழும்புப் பல்கலைக்கழகக் கல்விப் பீடத்திலேயே தொடங்குவது பொருத்தமானது எனக் கண்டனர். உலக வங்கியின் நிதி உதவி LLLEI NEREC TTI QLJulsi 2000LDTLÈ ஆண்டில் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி நிலையத்தினைப் பணிப்பாளராக இருந்து நடாத்தும் பொறுப்பும் பேராசிரியரிடம் ஒப்ப டைக்கப்பட்டது.
கல்விப் பீடத்தைச் சேர்ந்த ஏனைய பெரும்பான்மை விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் இப்பணியைச் செய்வதற் குப் பொருத்தமானவர் பேராசிரியர் தான் என இலகுவில் இனங் கண்டனர். அந்த அளவுக்கு ஆராய்ச்சிப் பயிற்சி உடையவ ராயும் சக விரிவுரையாளர்களின் நம்பிக் கையைப் பெற்றவராகவும் அப்போது பேராசிரியர் வளர்ச்சி பெற்றிருந்தார்.
NEREC அமைப்பின் பணிப்பாளராக இருந்த காலத்தில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, GTX, UNICEF போன்ற வெளிநாட்டு அமைப்புக்களுடனும் நிதி நிறு வனங்களுடனும் கல்விப்பீடத்தின் சார்பில் பேச்சுவார்த்தைகள் நடாத்தி, பல ஆராய்ச் சிச் செயற்றிட்டங்களை இந்நிலையைத் திற்குப் பெற்றுக் கொடுத்தார். அவருடைய தலைமையில் நெரெக் அமைப்பு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல ஆய்வேடு களை வெளியிட்டது. உலக வங்கி கல்வி பற்றி வெளியிட்ட பல சர்வதேச முக்கி
பத்துவம் வாய்ந்த அறிக்கைககளில், பேரா சிரியரின் வழிகாட்டலில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள் மேற்கோள்களாகக் காட் LÜLLLSIT, LITLFITHEISL, LDTFTFuff=ESir g|TiJ மொழி, கணிதம், ஆங்கிலம் முதலிய பிர தான பாடங்களில் பெறும் அடைவு மட் டங்கள் பற்றிய இவ்வாராய்ச்சிகள் கல்வித் துறையில் கொள்கை ஆக்கத்தில் ஈடுபட் டோருக்கு சிறந்த வழிகாட்டல்களாக அமை ந்தன என்பது பெருமைக்குரிய விடயம்,
கல்வியியல் ஆராய்ச்சியாளர் என்ற முறையில் உலக வங்கி போன்ற அமைப் புக்களால் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள பேராசிரியர், கல்வியியல் ஆய்வு முறையி யவில் சிறந்த தேர்ச்சி பெற்றவர், அதனை ஒரு பாடமாக உயர் பட்டக் கற்கை நெறிக ளைப் பயிலும் மாணவர்களுக்குக் கற்பி த்து வருபவர். முக்கியமாக, கல்வியியல் ஆய்வில் இன்று பயன்படுத்தப்படும் சிக்க லான புள்ளியியல் முறைகள், மற்றும் கணினிப் பொதிகளிலும் கூடிய பரிட்சயம் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வியியல் துறையில் பயிலும் ஆசிரியமானவர்கள் பயன்படுத்தக் கூடிய ஏராளமான கல்வியல் கட்டுரைகளையும் கல்வியியல் நூல்களையும் அவர் எழுதி யுள்ளார். அவருடைய கல்விச் சமூகவியல் என்ற தமிழ் நூல் தமிழ்நாடு அரசாங்கத் தின் பாராட்டைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம், இங்கு.
கல்வியியல் ஆசிரியர் என்ற முறையில் அவரிடம் ஒரு முக்கிய சிறப்பு உண்டு கல்வியியலில் ஒரு துறை என்றில்லாது
மல்லிகை ஏப்ரல் 2011 * 5

உளவியல், ஒப்பீட்டுக் கல்வி, கல்வித் தத் துவம், கல்விப் புள்ளியியல் என்று வேறுபட்ட துறைகளை மாணவர்களுக்குக் கற்பிக்கும் வல்லமை பேராசிரியருக்கு உண்டு. யாழ். பல்கலைக்கழகம், கிழக்கி லங்கைப் பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவனம், திறந்த பல்கலைக்கழகம் என்பன எப்போதுமே இவரது கற்பித்தல் சேவையை வேண்டி நிற்கும்.
பேராசிரியரின் பரந்த கல்வியியல் அறிவு ஆராய்ச்சித் திறன் என்பன கார னமாக உலகளாவிய ரீதியில் பல பல் கலைக்கழகங்களில் நடைபெற்ற சர்வதே சக் கருத்தரங்குகளிலும் கற்கை நெறிகளி லும் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக் குக் கிட்டியது. இங்கிலாந்து பாரிஸ்டல் பல்கலைக்கழகம்), ஜெர்மனி (வீப்சிக் பல்கலைக்கழகம்), இந்தியா, மலேசியா போன்ற நாடுகளிலிருந்து அவருக்குக் கிடைத்த அழைப்புக்கள் பல.
மொழித் தேர்ச்சியில் தமிழ், ஆங்கிலம் என்றில்லாது, சிங்கள மொழியிலும் அவர் சிறந்த தேர்ச்சி பெற்றவர். பல சிங்கள நூல் களை அவர் தமிழாக்கம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 15-20 ஆண்டுகாலப் பயிற்சியின் போது சிங்களத் தைக் கற்றுத் தேர்ந்து பல்கலைக்கழக ஆவணங்களத்ை கூடச் சிங்களத்திலிரு ந்து தமிழில் தரும் வல்லமை படைத்தவர், பேராசிரியர் அவர்கள்.
அவருடைய மேம்பாட்டுக்கு அவரு டைய முயற்சியும் உழைப்பும் மேற் கொண்ட பணியில் அவர் செலுத்தும் ஈடுபா
ேேம காரணம். இன்று அவருடைய தலை மையில் கல்விப் பீடத் தமிழ் கற்கை நெறி கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. எல் லாவகையிலும் சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ள பேராசிரியர் கருணாநிதி, இல ங்கை வாழ் தமிழர்களுக்குக் கிடைத்த ஒரு மாபெரும் சொத்து என்பதில் ஐயமில்லை, பல்கலைக்கழக ஆசிரியர், ஆய்வாளர் என்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் இலக்கி பத்திலும் ஈடுபாடு கொண்டவர்.இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் நாவல் களை வாசிப்பதில் ஆர்வமாக இருப்பது டன், அவை பற்றிய விமர்சனங்களையும்
மேற்கொள்பவர், எழுத்தாளர்களுடன் தொடர்புகளைப் பேணுவதுடன், இலக்கி யக் கூட்டங்களில் கலந்து கொண்டு காத்திரமான கருத்துக்களையும் வழங்கி வருகின்றார்.
மல்லிகை ஏப்ரல் 2011 & 7

Page 6
குறுங்கதை
கைமாறு
-வேல் அமுதன்
முப்பத்தொன்பது வயது மூத்த மகளுக்கு சுவிஸ் மாப்பிள்ளை ஒருவர் பொருந்தி வந்தார். சூட்டோடு சூட்டாகக் கலியாணத்தையும் உடன் வைத்து மகிழ முத்துக்குமாரு முடிவு செய்தார். கலியாணச் செலவுக்கென வைத்திருந்த ரொக்கத்தை ஒரு அவசர தேவைக்குக் கைமாற்றாக ஆத்ம நண்பன் நாகராசாவுக்குக் கொடுத்தது அவருக்கு நினைவுக்கு வர, அவரை அணுகினார்.
தனது அவசர தேவையை விளக்கி, "நல்ல காரியம் நாகராசா, நான் உன்னிடம் கைமாற்றாகத் தந்த இரண்டு லட்சத்தைத் தரவேணும்" என வேண்டினார்.
"மலிந்த விலைக்கு வாங்கக் கூடியதாக ஒரு வீடு விற்பனைக்கு வருகுது. வீட்டு உரி மையாளர் வெளிநாட்டுக்குப் போகவுள்ளார். இதை விட்டால், இந்த விலைக்கு இந்த மாதிரி வீடு இனி வாங்க ஏலா’ என விண்ணப்பித்து- மண்டியிட்டு- மன்றாடிக் கைமாற்றாக முத்துக்குமாரிடம் இரண்டு இலட்சம் கடன் வாங்கியதும்; தோட்டக் காணியொன்று விற்ப னையாகும் போலை இருக்கு, விற்பனையானதும் கேட்காமலே கைமாற்றுப் பணத்தைக் கட்டியிடுவன். அப்பிடி முடியாமல் போனால், ஒருநாள் நோட்டீஸ் தந்தா போதும், காசை எப்பிடியும் திரும்பத் தந்திடுவன்’ என வாக்களித்ததையும் நாகராசாவுக்கு நினைவுக்கு வந்தபோதும் "வாங்கின்னான் தான். ஆனால், இப்ப தர ஏலா" என முறித்துப் பதிலளித்தார்.
"அவசரம் நாகராசா உடனை முடியாவிட்டலும் ஒரு கிழமை அவகாசத்தில் சொன் னபடி மாறிக் கீறி வாங்கிக் கடனைக் கட்டிப் போடு!"
"இருந்தாலே. மாற முடிந்தாலோ தருவன் தானே! இப்ப வலு கஷ்டம், முத்துக்குமாரு” "அடே அப்பா கலியான முகூர்த்த காரியமப்பா இது மூத்தவளுக்கு வயதும் நாற்பது ஆகுது. வசதியாக வந்த நல்ல சம்பந்தத்தை விடப்படாது பாருங்கோ'
'முடியுமெண்டாத்தானே தரலாம்; நான் முடிஞ்சாற் தர்ரன்!”
"வாழ்க்கைப் பிரச்சினை அப்பா. வளவளப்புப் பேச்சை வளக்காதை, வாங்கின காசை எப்பிடியும் ஒழுங்காத் திருப்பித் தந்தே, ஆக வேணும்"
'தராட்டில் என்ன செய்வாய்?. முடிஞ்சால் செய்ய முடிஞ்சதைச் செய். பொலிஸ0க்குப் போகப் போறியா, போ!"
நாகராசாவின் பேச்சின் போக்கு மாறுவதும், வாக்கு நாணயம் சிதைவதையும் தாங்கிக் கொள்ள மாட்டாத முத்துக்குமாரு திகைப்புக்கும் பலத்த அதிர்ச்சிக்கும் ஆளானார்.
மல்லிகை ஏப்ரல் 2011 & 8

நெஞ்சில் நிலைத்த
இலக்கில நிடிைவுகள் 16
-மு. பஷீர்
அப்துல் ஹமீத் இவ்வாறு கூறினார். 'ஒரு பெரியார் எனதில்லத்திற்கு வந்து அடிக்கடி அன்போடு உரையாடிவிட்டுச் செல்வார். அவர் ஒலிபரப்புத் துறையில் பல சாதனைகள் புரிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.ஏ. கபூர். எனது வழிகாட்டிகளில் ஒருவர். உங்கள் வாழ்த்துக் கவிதையினைப் படித்து விட்டு, கெட்டிக்காரன்! அழகாகச் செய்திருக்கிறான்” . என்று உங்களை மனதாரப் பாராட்டினார் என்றார்.
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மகாநாடு, 2003ல், அரச அநுசரணையுடன் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் மூன்று நாட்களாக சிறப்பாக நடந்தது. அமைச்சர் ரவுபூப் ஹக்கீம் அவர்கள், முன் முயற்சியில் இது நிகழ்ந்தது. இந்நாட்டு எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் 88 பேருக்கு கெளரவம், பாராட்டு, பொற்கிழி வழங்கப்பட்டது. எட்டுப் பேருக்கு தலா இருபத்தையாயிரம் ரூபாய் பொற்கிழி கிடைத்தது. பொற்கிழி பட்டியலில் நானும், வானொலித் தயாரிப்பாளர் எம்.எம்.இர்பானும், இன்னும் சில படைப்பாளிகளும் இருந்தோம். இர்பான் மலர்ந்த முகத்தோடு, கோட்சூட் அணிந்து என் பக்கத்தில் அமர்ந்தவாறு உற்சாகமாகக் கதைத்துக் கொண்டிருந்தார். மனிதர் நீண்ட நாட்களாக சர்க்கரை நோயினால் பீடிக்கப்பட்டு சங்கடப்படுபவர்.
சர்வதேச மகாநாடொன்றில் தனக்கும் கெளரவம் கிடைக்கிறது என்ற உவகை அவர் முகமெங்கும் கவிந்திருந்தது. சிறிது காலத்திற்கு முன்பு- வாகன விபத்தொன்றில் படுகாயமுற்று கால் எலும்பு முறிந்து அவலப்பட்டுக் கொண்டிருந்தார். இரு தடவைகள் அவரது மருதானை வீட்டிற்குச் சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்துள்ளேன்.
இதனையிங்கு ஏன் குறிப்பிடுகின்றேனென்றால், விருது பெற்று சில வாரங்களே கழிந்திருக்கும். மூத்த வானொலிக் கலைஞர் இர்பானின் இறப்புச் செய்தி திடீரென காற்றோடு கலந்து வந்து என் செவிகளில் சங்கமித்தது. மகாநாட்டிற்கு வந்திருந்த போது மரண தேவன் அவர் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான் என்ற யதார்த்தத்தை என்னால் சீரணிக்க முடியாமலிருந்தது என்பதுதான்.
மனித இருப்பை வீழ்த்திச் சரிப்பதில் மரணத்தின் மூர்க்கமான சூட்சுமக் குறி எப்போதும் எட்டிய வண்ணமே இருக்கின்றது
மல்லிகை ஏப்ரல் 2011 & 9

Page 7


Page 8
விடுத்தீர்களா? வருவதாகச் சொன்னாரா? என்று.
"ஆம்! நிச்சயம் வருவார்' என்று விடை கூறினேன்.
காலம் கடந்து கொண்டேயிருந்தது. இனி அவரது வருகை சாத்தியமில்லை யெனப் பலரும் தீர்மானித்திருந்த வேளை யில், கொட்டும் மழையில் காரிலிருந்து இற ங்கி வந்தார் அஷ்ரப், விழாவிற்கு கொழும் பிலிருந்து ஒரு எழுத்தாளர் குழாமே வந்தி ருந்தது. டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரி யர்) மேமன்கவி, அல் அசூமத், ஜின்னாவுற் சரீப்தீன், ரவுப் ஹளபீர் மற்றும் பலரும் பங் கேற்று விழாவைச் சிறப்பித்தார்கள்.
மந்திரம் ஜெபித்தாற் போன்று மழை பட் டென்று நின்று விட்டது. வேலித் தடுப்புக்க ளையும் தள்ளிவிட்டுக் கொண்டு, பெருந்திர ளான மக்கள் மண்டபத்தினுள் முண்டியடி த்துக் கொண்டு உள்ளே வந்து விட்டார்கள். அல்ஹிலால் டிரல்ஸ் ஏஜென்ஸி அதிபர் பி.டி.எம்.ஜெலில் வீட்டில் பகல் உணவு எல்லோருக்கும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அஷ்ரப் அவர்கள் கேட்டார்: "பவரீர்! உங்க ஊர் மினுவாங்கொடை தானே? இங்கெப்படி உங்களுக்கு இத் தனை செல்வாக்கு?" என்று.
"தற்போதைய எனது வாசம் இங்கு தான். இவர்கள் எல்லோரும் என்மீது அளப்பரிய அன்பு கொண்டவர்கள், ஸேர்" என்றேன்.
நெஞ்சில் நிலைத்த
இலக்கில நிடிைவுகள் 19
பொனொலியிலும் தொலைக்காட்சி
யிலும் மெய்சிலிர்க்க வைக்கும் சமாதானம்
பற்றிய பாடலொன்று அபூர்வமாக ஒலிக் கும். மறைந்த இலக்கிய நண்பர் எம்.எச். எம்.ஷம்ஸின் சிரித்த முகம் மனதில் நிலைத்து நெஞ்சை அலைக் கழிக்கும்.
வெள்ளிச் சிறகசைக்கும் வெண் புறாவே! இன்னும் வேளை வரவில் லையோ வெண்புறாவே! என்ற அற்புதப் பாடல். தேசிய மட்டத்தில் அனைவரின் உள்ளங்களையும் தொட்டிழுத்தது. தன் பன்முக ஆளுமையைக் கலை இலக்கிய உலகிற்கு அர்ப்பணித்தவர் ஷம்ஸ். அந்த ஸ்துப் பேதங்களுக்கு அப்பால், எல்லோரி டத்திலும் இலக்கிய நேயம் சொரிந்த உயர்ந்த படைப்பாளி அவர்.
நமக்குள் ஒரு முப்பது வருட கால நெருக்கமான இலக்கிய நட்பு நீடித்து வந்தது. தனது கனிவான சிரிப்பால் நெகிழ் வால், பிறருக்கு உதவுகின்ற மனத்தால், எல்லோரது இதயங்களையும் ஆகர்ஷித் துக் கொண்டவர், அவர்.
பிடிக்காதவற்றை முகத்திற்கு நேரே சொல்லும் துணிவு, பல்துறை ஆளுமை, சமூகப் பித்தலாட்டங்களைச் சாடும் எழு த்து வீரியம் என்பன ஷம்ஸின் ஒரு விசே டத் தகைமைகள். அவரது திடீர் இழப்பு, ஒரு உந்து சக்தியை இழந்து விட்டாற் போன்ற வெறுமையை நான் இன்று வரை உணர்கி றேன். பல்வேறு புனைப் பெயர்களுக்குள் ஒளிந்து கொண்டு இலக்கியத்தில் ரசாயன மாற்றம் செய்தவர், அவர்.
அவர் தேசிய நாளிதழொன்றில் உதவி யாசிரியராக பரிணமித்துக் கொண்டிருந்த வேளையில், அரசியற் காரணங்களுக்கா கப் பதவியிலிருந்து ஒரங்கட்டப்பட்டார். தொழிலை இழந்து விட்ட கவலையிருந்தா
மல்லிகை ஏப்ரல் 2011 & 12

லும், தன்னம்பிக்கை இழக்காதவராகத் தென்பட்டார். தன் மகனை ஒரு நல்ல ஊட கவியலாளனாக உருவாக்க வேண்டு மென்ற கனவில் வெற்றி பெற்றார். திடீ ரென ஒருநாள் ஷம்ஸ் என்னைத் தொலை பேசியில் அழைத்துக் கூறினார்.
"ஒரு குட் நியூஸ் தினகரன் பிரதி ஆசி ரியராக எனக்குப் பதவி உயர்வு கிடைத் திருக்கிறது. இப்படியான பதவியில் அமரப் போகும் முதல் முஸ்லிம் ஊடகவியலா ளன் நான்தான்' என்றார்.
நான் வாழ்த்துக்களைத் தெரிவித்து விட்டு, இப்படிக் கூறினேன்: ‘ஒரு ஆற்றல் மிக்கப் படைப்பாளி இனிக் கண்டதையெல்
லாம் எழுதிக் காணாமல் போகும் ஆபத்து வரக் கூடாது" என்றேன்.
"பவர் எந்த மகுடங்களும் எனக்குப் படைப்பாளி என்ற மகிழ்ச்சியைத் தராது" என்றார்.
இந்த மனிதன் எதைத் தான் விட்டு வைத்தார். கவிதையா? சிறுகதையா? நாவலா, விமர்சனமா? அறிவியலா? சம யமா? பத்திரிகைத் துறையா? நுண் கலையா? நாடகமா? புதுக் கவிதையா? குழந்தைப் பாடலா? ஹைக் கூவா, இன்னு மின்னும். ஆற்றல் மிக்க அற்புதப் படைப் பாளி வடிம்ஸ் இன்னும் நம் நெஞ்சங்களில் வாழ்கிறார்.
கொடகே தேசிய சாஹித்திய விருது-2011
இலங்கையின் முன்னணி நூல் வெளியீட்டாளர்களும் அரசின் விருதுகளைப் பெற்றவர் களுமான கொடகே புத்தகசாலையினர் மூன்றாம் தடவையாகத் தமிழ் இலக்கியப் படைப் புக்களுக்கு விருதுகளும் பணப் பரிசில்களும் வழங்கிக் கெளரவிக்க முன் வந்துள்ளனர். 2008 ஆண்டுவரை சிங்கள மொழி இலக்கியப் படைப்புகளுக்கு மாத்திரமே கொடகே இலக்கிய விருது வழங்கப்பட்டு வந்தது. 2009-2010 வருடங்களின் தமிழ் எழுத்தாளர்க ளுக்கு கொடகே தேசிய சாஹித்திய விருதும் பணப் பரிசில்களும் வழங்கப்பட்டன. இம் முறை யும் தமிழ் நாவல், சிறுகதை, கவிதை ஆகிய துறைகளில் தெரிவு செய்யப்படும் சிறந்த படைப்புக்களுக்கு, நாவலுக்கு 50 ஆயிரம் ரூபாவும், சிறுகதை"மற்றும் கவிதை படைப்புக ளுக்குத் தலா 25 ஆயிரம் ரூபாவும் விருதும் வழங்குவதோடு தமிழ் இலக்கியத்திற்கு அரும் பணியாற்றி சிரேஷ்ட எழுத்தாளர் ஒருவருக்கு ‘வாழ்நாள் சாதனை விருதும் வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் படைப்பாளிகள் 2010 ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரை இலங்கையில் வெளியிட்ட ISBN இலக்கம் பெற்ற முதல் பதிப்புக்களில் மூன்று பிரதிகளை நேரடியாகவோ அல்லது கொடகே புத்தகசாலை, இலக்கம் 675, பீ.டி.எஸ். குலரத்ன வீதி, கொழும்பு-10 என்று முகவரிக்கு 2011 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும். தொகுப்பு, மொழி பெயர்ப்புப் படைப்புக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
மேலதிக தொடர்புகளுக்கு: ad lurtsS 656,onggieCT- 011-2686925, 4614904, 077 6920106 தொலைநகல் - 011-2674187
மல்லிகை ஏப்ரல் 2011 & 13

Page 9
"மல்லிகைப் பூந்தல் சென்ற மாதம் நடத்திய சரஸ்வதி விஜயபாஸ்கரன் அவர்களினது அனுதாபக் கூட்டத்தில் பங்குபற்றியோர்.
மல்லிகை ஏப்ரல் 2011 : 14
 

இரசனைகி குறிப்பு:
தாய் (சடி தேடி. ஆர்த்தில்(யின் பேலின் சிறுகதைத் தொகுதி
-மா.பாலசிங்கம்
தமிழ்ப் புனைக்கதைப் படைப்புலகில் கார்த்திகாயினி சுபேஸ் என்ற பெயர் அடிக்கடி தலைகாட்டாதிருந்தாலும், படைப்பிலக்கியத்துக்கான பரிசுகளை அவர் கை நிறைய வைத்திருப்பது, இத்துறையில் அவருக்கிருக்கும் ஆற்றலுக்குக் கட்டியம் கூறும். புனைவிலக்கியத்தில் 1999 இல் பயணிக்கத் தொடங்கியவர் 2009 வரையான காலப் பகுதிக்குள் பெற்ற பெறுமதியான பரிசுகள் ஐந்து. குறுகிய காலப் பிரிவுக்குள் இளங்கதைஞரொருவர் இந்தளவு பரிசுகளைப் பெற்றிருப்பது இலக்கிய உலகை மலைக்க வைக்கும் இத்தகைய ஆற்றல் மிக்கப் படைப்பிலக்கிய ஆளுமையை ஊக்குவிக்கும் பொருட்டு, ஈழத்தின் முன்னணி இலக்கிய நூல் வெளியீட்டாளர்களான, கொழும்பு மீரா பதிப்பகத்தார் கார்த்திகாயினி கபேஸின் பத்துச் சிறுகதைகளைத் தாய் மடி தேடி. என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். ஈழத்துத் தமிழ்ச்சூழலில் இத் தலைப்பு நிச்சயமாகத் தாய் ே மண்னைத் தான் வாசகனின் மனதில் படர வைக்கும் அதை மேலும் உணர்த்துவது போல் கதைஞரும், "நான் பிறந்த மண்ணுக்கு இந்நூல் சமர்ப்பணம் எனத் தனது இலக்கை அம்பலப்ப டுத்தியுமுள்ளார்.
தொகுப்பின் முன்னுரையை நாடறிந்த பிரபல முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன்னையன், ஆற்றல் மிக்கதோர் படைப் பிலக்கியப் பரம்பரை ஈழத்தில் தொடர வேண்டு மென்ற இலக்கியப் பெரு நோக்கோடு, வழங்கி யுள்ளார். தினக்குரல் ஞாயிறு வெளியீட்டின் : பொறுப்பாசிரியர் பாரதி இராஜநாயகன், ! தொகுப்புக்கு அணிந்துரை செய்து சிறப்பித் துள்ளார்.
மல்லிகை ஏப்ரல் 2011 霹 15

Page 10
தாய் மடி தேடி.'த் தொகுப்பின் பத்துச் சிறுகதையுள்ளும் சுவாதீனமாகச் சென்ற போது கிடைத்த விருந்து இனியதாகவே இருந்தது.
'துள்ள முடியாத புள்ளிமான்' என்ற சிறுகதை, புதிய அலை கலை வட்டம் 2002 இல் நடத்திய போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. ‘எங்களைப் போன்ற தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியம னம் குடுக்கிறம் எண்டு சொல்லிப் போட்டுப் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில நிண்ட வைக்கெல்லாம் நியமனம் குடுத்திருக்கி றாங்கள் (பக்.10) இக்கதையில் வரும் சாந்தா இப்படிக் கூறுவதன் மூலமாக வட இலங்கையில் சமகாலத்தில் தொண்டரா சிரியர் நியமனத்தில் அரங்கேறிக் கொண் டிருக்கும் சீர்கேடுகளை அம்பலத்துக்கிழுத் திருக்கிறாள். இதே போல், எத்தனையோ அப்பாவித் தொண்டராசிரியர்கள் அரசியல் வாதிகளாலும், பணத்தாலும் வேலையற் றுக் கண்ணிர் வடிக்கத் தகைமைகளற்ற, குதிரையோடிப் பரீட்சையில் சித்தி பெற்றவர்கள் தொண்டராசிரியராகின்றனர். இந்த அநியாயத்தை வட இலங்கைக் கல்வி நிருவாகிகளுக்கு உறைக்கும் படி யாகக் கதை உணர்த்துகின்றது. இதனால் மட்டுமல்ல சாந்தா, இராணுவத்தால் முகாமுக்குக் கொண்டு சென்றதால், எமது ஆசாரத் தமிழரின் நுண்மான் நுழைபுலத் தேடலால் வாழாவெட்டியானவளென்பதும் கதையில் பதிவாகி இருக்கிறது. பேரினவா தந்தான் தமிழனைக் கொடுமைப்படுத்து கின்றதென்றால், ஈரமற்ற தமிழ் நெஞ்சங்க ளும், எமது இளந் தலைமுறையை நிர்க் கதியாக்குவதை இச்சிறுகதை சிறப்பாக உணர்த்துகின்றார்.
அண்மையில் (12.03.2011) ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் எமது இதயத் தைத் 'திக் திக' என அடிக்க வைத்ததை மறந்திருக்கமாட்டோம்! ஏற்கனவே நாமும் இந்த அநுபவத்தைப் பெற்றிருப்பதே இதற்குக் காரணமாகும். சுனாமியின் அனர்த்தத்தைக் கூறும் கதையே தனி மரம். இதற்கு 2005ல் விபவி என்று அமை ப்புச் சிறப்புப் பரிசை வழங்கியிருக்கிறது. இளங்குடும்பமொன்றில் தாய், பிள்ளைகள் ஆழிப் பேரலையில் அள்ளுண்டு போகக் குடும்பத் தலைவன் தனிமரமாகிச் சித்த சுவாதீனமற்றவனாக அலைகிறான். ஒரு கிறிஸ்தவக் குடும்பத்துள் இக்கதை வளர்க்கப்பட்டுள்ளது. அதுவும் நத்தார் பண்டிகை நாட்கள் ஈழத்தையும் சுனாமி தாக்கியது இந்நாட்களில் தானே!
இளம் இரத்தத்தில் கசிந்த துடிப்பாலும், அகங்காரத்தாலும் முற்போக்குப் பாதை யில் தொற்றி, குறைந்த சாதிப் பெண் ணைத் தானே தேடி மணந்து விறைப்புத் தணிந்த போது, ... எங்கட ஆக்களுக்கு ளேயே கட்டியிருந்தால் இப்ப ராசா மாதிரி நான் இருந்திருப்பன். என்ன மருந்து மாயம் போட்டு என்னை இழுத்தியோ தெரியே எனச் சித்திரவதைப்படுத்தி, மனைவி இறந்தபின். அந்தக் கால் இரு ந்த போது பயணத்தில் ஏற்பட்ட துன்பங்
ல்லை.
கள் எல்லாவற்றையும் இலகுவாகக் கடந்து சென்றேன். எனக் கழிவிரக்கம் கொள்ளும் ஒரு போலி முற்போக்காளனின் கதை "ஊனம். விபவியின் சிறப்புப் பரிசை 2005 இல் பெற்றது. குறைந்த சாதிப் பெண்களுக்கு போலி முற்போக்குப் பேசுப வர்களை நம்பக் கூடாதென்ற எச்சரிக்கை யைத் தருகிறது இக்கதை.
மல்லிகை ஏப்ரல் 2011 & 16

கருமுகில் தாண்டும் நிலவு இராமா யண சீதையை மறுதலிக்கும் ஒரு மறு வாசிப்புக் கதை. அமரர் க.சதாசிவம் நினை வுச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசைப் பெற்று, ஞானம்' சஞ்சிகையில் வெளியா னது. 'மாதா, பிதா, குரு, தெய்வம் அவர் மலரடி தினந் தினம் வணங்குதல் செய் வோம்" எனக் குருவாகிய ஆசிரியரைச் சங் கைப்படுத்துவது தமிழர் பண்பாடு. அத்த கையை ஆசிரியரொருவரின் மறைக்கப் பட்ட பக்கங்கள் இக்கதையில் புட்டுக் காட் டப்படுகின்றன. மனைவி சீதா கொண்டு வந்த பொன்னாபரணங்களை உருவி, உருவி அடைவு வைத்தோ, விற்றோ நண் பனோடு சேர்ந்து மதுவருந்திக் கும்மாள மடிப்பதோடு நின்று விடாது, வீட்டையும் போர்க்களமாக்குகிறார் பாலா மாஸ்ரர். சாது மிரண்டால் காடு கொள்ளாது" என் பதை நிரூபித்துக் காட்டுகிறாள் மனைவி சீதா. இக்குடும்பச் சச்சரவு ஒருபுறமிருக்க இக்கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள பாட சாலை மாணவிகளின் அமசடக்கமான உரையாடல்கள் சுவாரஸ்யமாக இருக் கின்றன. பெண் படைப்பாளிகளால் தான் ஆசிரியர்களின் மாணவிகளோடான ஊடாட்டத்தை யதார்த்தமாகச் சொல்ல முடியும் ஆசிரியர்கள் மாணவிகளிடம் அநு பவிக்க எத்தனிக்கும் ஸ்பரிச இன்பங்கள் புட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவையள மட்டும் கட்டிப் பிடிச்சு மூஞ்சையில் கொஞ் சுவார் இதற்கு மேலாக வணக்கத்திற்குரிய இக் குரு'வானவர்களை இன்னமும் சொல்லவா வேண்டும்? எது எப்படி இருப் பினும் அம்பலத்தில் சீதா கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்வது கதையில் தொய்வை ஏற்படுத்தி, யதார்த்தத் தன்மை
யைக் குலைக்கின்றது. கடை நிலை இரசிகனைச் சினிமாக்காரர்கள் ஏமாற்றும்
'திறில் இது
அமரர் செம்பியன் செல்வனின் நினை வுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசைப் பெற்ற கதை 'தாய் மடி தேடி. ஞானம்' சஞ்சிகையில் 2009 இல் பிரசுரமானது. விமானக் குண்டுக்குக் காலொன்றின் முன் பகுதியைப் பறிகொடுத்த பாலர் வகுப்பு மாணவன் காருண்யன் தாயன்புக்காக
ஏங்குவது. போர்ச் சூழலில் பெற்றோரின்
அரவணைப்பை இழந்த- அதுவும் காயப் பட்ட சின்னஞ்சிறுசுகளின்- மனோநிலை யைத் தரிசிக்க வைக்கும் சிறுகதை. வாசிக்கும் போது உள்ளம் நெக்குருகுகி றது. பழிவாங்கப்பட்ட நிலத்தில் காயப்பட் டோர் எவ்வாறு சிகிச்சை பெற்றரென்ப தையும் அறிய முடிகின்றது. போய்க் கொண்டிருக்கும் உயிரை மீட்டெடுக்கக் காயப்பட்டோருக்கு, குளுக்கோஸ் போத் தலை மரக்கிளையில் கட்டி, குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. எனவே விருட்சங்களின் கீழ் நோயாளர் வைக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றது தெளிவாகின்றது.
பரிசைப் பெற்றுள்ள ஐந்து சிறுகதைக ளும் 2002-2009 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் புனையப்பட்டதாகப் பதிவுகள் நூலில் கிடைக்கின்றன. இருந்தும் இரண்டு மட்டுமே போர்க்காலக் கதைகளா கவுள்ளன. ஏனைய மூன்றிலும் அச்சுவடி ல்லை. இயற்கை அனர்த்தம், சாதி, குடும்ப விரிசல் என்பவைகளை ஏனைய பரிசுக் கதைகள் தொற்றி நிற்கின்றன. ஐந்தும் பரிசு முத்திரைக்குப் பொருத்தமானவை Quué0T6 ortb.
மல்லிகை ஏப்ரல் 2011 & 17

Page 11
தொகுப்பைத் தொடக்கி வைக்கும் சிறுகதை ‘நான் சீதையல்ல! கனல் கக்கும் தலைப்பு பாரதியின் விளைச்ச லிலொன்றாகத்தான் இக்கதையில் வரும் சீதா இருப்பாள் இருபத்தோராம் நூற்றா ண்டில் இப்படியானதொரு துணிச்சலான பெண்னை யதார்த்தமாகக் காண்பது, இன்றைய பெண்கள் மனதில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதென்பதைப் பிரசித்தமாக்கும். இதுவும் போர்க்கால நிகழ்வுதான்! இராணு வத்தால் பிடிபட்ட சீதா இராணுவ முகாமுக் குக் கொண்டு செல்லப்படுகிறாள். முற்றாகி யிருந்த அவள் திருமணம் குழம்புவதுக்கு இது வழி வகுக்கின்றது. ”. உலகத்தில் எல்லாரும் உங்களைப் போலக் கெட்டவர் களில்லை. நல்லவங்களும் நாலு பேர் இருப்பாங்கள் எண்டதை மறந்து போகாதே ங்கோ எனத் தன் புனிதத் தன்மையை நிலைநிறுத்தி, பேரினவாதப் படையினருக் காகச் சீதா வக்காலத்து வாங்குகிறாள். இராணுவத்திடமிருந்து, நாமென்னசர்வதேசமும், இதுவரை கற்றுக் கொண்ட பாடங்களை மீட்டிப் பார்க்கும் போது, இது நம்பகமற்றதாகத் தான் இருக்கும்! சூழலின் யதார்த்தத்தை உள்வாங்கி இத்தகைய சீதாக்காளுக்கு வாழ்வளிப்பது இனத்தை அழியாது உய்விக்கும்!
'அறுவடையாகாத விதைப்புக்கள் இரா ணுவத்தின் படுபாதகச் செயலால் குடும்ப மொன்று அழிக்கப்படுவதைப் புகட்டுகிறது. இதற்கும் மேலாக இக்கதையின் மற்றொரு விடயமொன்று மனதைப் புரட்டிப் போடு கிறது. இராணுவ வீரர்களின் வல்லுறவால் கர்ப்பிணியான கோகிலாவின் கருவைக் கலைக்க ஆச்சி மூலிகைக் கசாயத்தை
அவளுக்குக் கொடுக்கிறாள். பிரசவத் தின் பின் கோகிலா மரணிக்கிறாள். பிறந்த குழந்தையும் ஊனப் துர்ரதிர்ஷ்டமான இவ்விரு நிகழ்வுகளுக்கும் ஏன் ஆச்சி கொடுத்த மூலிகைக் கசாயம் காரணமாக இருக்கக் கூடாது? ஆச்சியர்களின் அநுப வக் கை வைத்தியம் சில சமயங்களில் வாய்ப்பதுமுண்டு பிழைப்பதுமுண்டு. மூலிகை வைத்தியமும் பக்க விளைவு களை ஏற்படுத்துமென்பதையும் சிந்திக்க வைக்கின்றது! இக் கதையைத் 'தினக் குரல்" பத்திரிகை 2006 இல் பிரசுரித்திரு க்கிறது.
குழந்தைக்காக ஏங்கும் 'உதயம்’ சிறுகதை 2007ல் ஜீவநதி சஞ்சிகையின் 2 ஆம் ஆண்டு மலரில் வெளிவந்துள்ளது. தாய்மை அடையாத நித்தியாவின் கதை யாகும். இதே போல் மழலையொன்றை உருவாக்க முடியாத சந்திரசேகரின் கதை இப்படியும். வாஞ் சையை நாய்கள் மீது காட்டுகிறார் பெரிய வர் சந்திரசேகரர். வெள்ளைத் தோலர்கள் குழந்தைகள் பெற்றிருந்தாலும் நாய்கள், பூனைகளோடு கொஞ்சிக் குலாவுவார்க ளாம்! ஆனால் அந்தளவுக்குக் கீழைத் தேசத்தவர்களுக்கு விலங்குகள் மீது அன்பு இருக்குமென்பது ஆச்சரியந்தான்! இக் கதையில் மனிசன் நாய்களோடு "உடன்கட்டையும் ஏறிவிட் LITC&g
மரமேறி கந்தனின் மனதில் இருப்பதி மூன்று (1988-2009) ஆண்டுகளில் ஏற்பட்ட மகத்தான வளர்ச்சி, ஊர்ச் சாதிமான் வேலாயுதத்துக்கு ஏற்படாததை ‘எச்சில சிறுகதை புட்டு வைக்கிறது. சாதீயமென்ற
மல்லிகை ஏப்ரல் 2011 & 18

விடயத்தில் யாழ்ப்பாணத்தாரின் மூளை மரத்ததென்பதையும் உணர்த்துகின்றது. ஈழத்து எழுத்துலகப் பிரமாக்கள் இப்போ தெல்லாம் பஞ்சமரைக் காட்டிக் கொடுத்து, அவர்களது முன்னேற்றத்தை முடக்க எத்தனித்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இத்தகைய படைப்பொன்றைத் தந்ததற்காகக் கதைஞரை முற்போக்குச் சிந்தனையாளர்கள் போற்ற வேண்டும். தன் செம்பில் தொட்டதுக்காகத் தன்னால் தண்டிக்கப்பட்ட கந்தனின் மகன் பல் கலைக்கழகம் சென்று படித்து, பரிசூதியத் தில் லண்டன் சென்று, அங்கு நடந்த விருந்தொன்றில் தனக்கு முன்னிருந்து விருந்துண்கிறான். அவனது தட்டிலிருந்த இனிப்பை உண்ணக் கொடுக்கிறான். உண்டுவிட்டார். உண்மை அறிந்த பின் சாதிமான் கொதிக்கிறார். பஞ்சமரது வளர்ச்சி வாசகனை மெய்சிலிர்க்க வைக்கி றது முற்போக்குச் சிந்தனை இன்னமும் வற்றவில்லையென்பதற்கு இச்சிறுகதை சிறந்த ஆதாரம்.
அட்டைப் படத்தைக் கூர்ந்து கவனித் தால், 'தாய் மடி தேடி. என்று சிறுகதை யோடான அதன் பொருத்தப்பாட்டைக் கணிக்கலாம். சிறுவனில் மட்டுமே பார்வை குவியாதிருக்க, மேலும் ஒரிரும் முட்கம்பி வரிச்சுக்களைச் சேர்த்திருக்கலாம்! ஒவியம் அப்படி அமைந்திருக்குமாகில் இந்நூல் சிறுவர் நூலென்ற மயக்கத்திலி ருந்து தப்பியிருக்கும்.
பழிவாங்கப்பட்ட மண்ணில் வாழும் ஒரு படைப்பாளியால் வலியை ஏற்படுத்தும் சிறுகதைகளைத் தான் புனைய முடியு
மென்பதற்கு இத்தொகுப்பின் கதைகள் பொருத்தமானவை. சுகானுபவக் கதைகள் புனைவது மனச் சாட்சியாகாது தொனிப் பொருள்களுக்கு ஏற்ற விடயங்கள் படைப் புகளுள் அங்குமிங்குமாகச் சிலிம்பிக் கிடக்கின்றன. ஒழுங்கான முறையில் இவைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தால் சிறுகதை வடிவம் மேலும் பொலிந்திருக் கும். சிறுகதைகளின் இயங்கு தளம் கிரமமாகவே இருந்தும், படித்த் சமூகத்துக் குரிய பொதுப் பேச்சு வழக்கில் கதைகள் வளர்க்கப்பட்டுள்ளன. இலகுவான மொழி நடையில் அமைக்கப்பட்டிருப்பதால் அனைத்துத் தரத்தினருக்கும் வாசிக்க முடியுமானவைகளாகவிருக்கின்றன. பொதுவாக இத்தன்மை பத்திரிகையாளர் புனைவிலக்கியம் படைக்கும் போது ஊடுருவுவதுண்டு அது இக் கதைஞரை யும் விட்டுவிடவில்லை இயற்கையைக் கூர்ந்து கவனிக்கும் பழக்கம் உண்டென்ப தைக் கதைகளில் வரும் சூழல் சித்திரிப்பு கள் வெளிப்படுத்துகின்றன. இவைகளைத் தகுந்த முறையில் உள்ளிடாக்கியிருந் தால், சில சிறுகதைகள் குறியீட்டுச் சிறு கதைளாகியிருக்கும். "உதயம் சிறுகதை க்கு இவ்விபத்து ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. தென்னை பாளை தள்ளியி ருப்பதைக் கதையின் முடிவு வசனமாக் கியிருக்கலாம்.
ஆக, தமிழ் வாசகரை உரத்துச் சிந் திக்க வைக்கும் சிறுகதைத் தொகுப்புத் தாய் மடி தேடி. வரவேற்புக் கொடுத்து வாழ்த்த வேண்டும்.
மல்லிகை ஏப்ரல் 2011 & 19

Page 12
ታrUታሽ@9፡16
கிண்ணியா வாழ்க்கை
శా•Qణా(పడా8 లిdurod
இலங்கை நிர்வாக சேவைக்கு 124 பேருடன் தெரிவானேன். பயிற்சி கொழும்பில் நடந்தது. தளப் பயிற்சிக்காக யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அனுப்பப்பட்டோம். யாழ்ப்பாணத் தில் காரியாதிகாரி பற்றிக்ஸ் அவர்கள் கூடுதலான பயிற்சிகளை வழங்கினார். அவருடன் தெல்லிப்பளை காரியாதிகாரிப் பணிமனையில் பிரதிக்காரியாதிகாரியாகச் சிலகாலம் வேலை பார்க்கின்ற அனுபவம் கிடைத்தது. என்னிடமிருந்த முன் கோபத்தை நீக்கியவர் அவர் தான்.
"இதோ பார் குணம் நீ நினைப்பதைப் போல எல்லாருமில்லை. பலவிதமானவர்கள் வருவார்கள் போவார்கள். தங்கள் துயரங்களுக்குத் தீர்வு காண விரும்பி எம்மிடம் வருவார்கள். செய்ய முடியுதோ இல்லையோ. அவர்களது பிரச்சினைகளைப் பொறுமை யாக இரக்கத்தோடு செவிமடுக்க வேணும். அவநம்பிக்கையை ஏற்படுத்தக் கூடாது." என்பார். என்னிடம் வருபவர்களின் பிரச்சினைகளை இரக்கத்தோடு கேட்பதோடு அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி முறைகளையும் காட்டினேன். என்னிடம் வருபவர்கள் நம்பிக்கையோடு திரும்பிச் சென்றார்கள்.
பல்கலைக்கழகப் படிப்பு நிறைவு பெற்றதும் இரண்டு ஆண்டுகள் அங்கு கடமையாற்று கின்ற வாய்ப்புக் கிடைத்தது. ஒராண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் போதனாசிரியராகவும் ஒராண்டு கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உதவி விரிவுரையாள ராகவும் கடமையாற்றினேன். 'இதுதான் பல்கலைக்கழகம்' என்பதைப் புரிந்து கொள்ள அந்த இரண்டாண்டுகள் உதவின. பல்கலைக்கழகத்தில் கிளாஸ் அடிப்பதும் முன்னேறுவ தும் மாணவரில் தங்கியிருக்கவில்லை. அவர்கள் எவ்வளவு தூரம் விரிவுரையாளர்களிடம் "வால் பிடிக்கிறார்கள் என்பதிலும், மாணவ காலத்தில் எவ்வளவு தூரம் தம்மைச் சிறுமை யாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்பதிலும், எதுவுமே எழுதாதவர்களாகவும் இருக்கி றார்கள் என்பனவற்றில் தங்கியுள்ளன. பெண்ணாக இருந்தால் அவள் எவ்வளவு தூரம் அனுசரணையாக இருக்கிறாள் என்பதைப் பொறுத்திருக்கிறது. விரிவுரையாளர்கள் தமக் குள் போட்டி பொறாமைப்பட்டார்கள். கட்சிகளாகப் பிரிந்து செயற்பட்டார்கள். உதாரண மாகத் தமிழ் பேராசிரியர் சதாசிவம், பேராசிரியர் வித்தியானந்தன், கைலாசபதி ஆகியோ ரும் புவியியல் பேராசிரியர் தம்மையாப்பிள்ளை, சோ.செல்வநாயகம் ஆகியோரும் தனித் தனி அணிகளாக மாணவர்களைச் சேர்த்துக் கொண்டு இயங்கினர்.
முதன் மூன்று பேராசிரியர்களும் தமிழின் மரபுப் போராட்டத்தை முன் எடுத்தனர். புதுமை படைப்பதாகக் கூறிக் கொண்டு தமிழ் மொழியின் எழுத்து மரபை மீறுவதாக"
மல்லிகை ஏப்ரல் 2011 & 20

பழமைவாதியான சதாசிவம் குரல் தந்தார். ‘தமிழ் மரபு மீறப்படலாம்' என்றார் கைலாச பதி. மரபு தெரிந்தவர்களாலேயே மரபு மீறப்பட வேண்டும்" என்றார் வித்தியானந் தன். இந்தப் போராட்டத்தை முன் எடுத்த வர்களுக்கு இழிசினர் வழக்கு என்று கிளம்பிய வாதம் இழிசினர் வழக்காகி சாத கமாக அமைந்தது. அக்காலத்தில் யாழ்ப் பாணத்தில் நிகழ்ந்த சாகித்திய விழாவில் கைலாசபதி சார்பான தலித்து எழுத்தாளர் கள் கூழ் முட்டை எறிந்து இப்போராட்ட த்தை உச்சப்படுத்தினர். பேராதனைப் பல் கலைக்கழகத்திலும் இப்போராட்டம் எதி ரொலித்தது. பேராசிரியர் வித்தியானந் தனின் கருத்துக்களால் கவரப்பட்ட நானும் பாதிப்புற்றேன். பல்கலைக்கழகத்தில் இர ண்டாண்டுகள் முடிவதற்குச் சில நாட்கள் இருக்கின்ற வேளையில் நிகழ்ந்த பட்ட தாரி ஆசிரியர்களை நியமிக்கும் நேர்முகப் பரீட்சை கொழும்பில் நிகழ்ந்தது. யாழ்ப் பாண மாவட்டத்திற்குத் தெரிவாகி யாழ்ப் பாணம் வந்தேன். வடமாகாணக் கல்வி அதிகாரி மகாதக்தில பாடசாலைகளை ஒதுக்கித் தந்தார். கொக்குவில் இந்துக்கல் லூரியின் ஆசிரியரும் எனது புவியியல் ஆசிரியருமான குணபாலசிங்கமும், ஹாட்லி கல்லூரி அதிபருமான பூரணம் பிள்ளையும் என்னை விரும்பிக் கேட்டனர். நான் அண்மை கருதி கொக்குவில் இந்துக் கல்லூரியில் இணைந்தேன். கொக்குவில் இந்துக் கல்லூரியில் கற்பித்த காலத்தில் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியி லும் அதேவேளை கொழும்புத்துறை ஆசி ரிய பயிற்சிக் கலாசாலையிலும் கல்வி கற் பிக்க நேர்ந்தது. ஆறு ஆண்டுகள் கழிந் தன. ஆசிரியப் பெருமக்கள் குறித்த என்
அபிப்பிராயம் மாற்றமடைந்தது. இதுவா பள்ளிக்கூடம்?
தாங்கள் வாங்குகின்ற மாதச் சம்பளத் துக்கு நியாயமாக வேலை செய்யாத சில ஆசிரியர்களைக் கண்ணுற்றேன். வகுப்புக் களுக்குச் செல்வதும் பாடநூல்களை வாசித்து விடுவதுமாக அவர்கள் பொழுது கழிந்தது. தங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்ளும் எண்ணமற்ற ஆசிரியர்களைக் கண்டேன். சிலருக்கு எந்த விதமான கல்வியறிவும் இருக்கவில்லை. மாணவர்க ளுக்கு ஏற்ற விதமாக அவர்களுக்குப் படிப்பிக்கத் தெரியவில்லை. பாடவேளை களை சில ஆசிரியர்கள் தங்களது பரீட்சை தயாரிப்பதற்குரிய தளமாகப் பயன்படுத்திக் கொள்வதையும் கண்டேன். ரியூற்றறிக ளில் படிப்பிப்பவை தானே? என்கிற ஆசிரி யர்கள் சிலரையும் கண்டேன். வகுப்பறை கள் எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் பட்டறைகள் என்பதை அவர்கள் உணர வில்லை. மிக்க வேதனையாக இருந்தது. இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்த தும் முதலாவது நியமனம் தெல்லிப்பளை காரியாதிகாரி பணிமனைக்குக் கிடைக்கு மென எதிர்பார்த்தேன். திருகோணமலை கிண்னியாவில் பணியாற்றிய காரியாதி காரி தன்னுடைய செல்வாக்கினால் அதைத் தனதாக்கிக் கொண்டார். கிண்ணியாவு க்கு மனைவி, மகளுடன் பயணமானேன். கிண்ணியாப் பயணத்துடன் புதியதொரு வாழ்க்கையில் அநுபவங்கள் உத்தியோ கத்திலும் இலக்கியத்திலும் எனக்கேற்பட் டன. முப்பதாண்டுகளுக்கு மேலாக வன் னிப் பிரதேசங்களின் மக்கள் வாழ்க்கை பரிச்சயமானது. அவர்களின் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்து கொண்டேன்.
மல்லிகை ஏப்ரல் 2011 & 21

Page 13
அக்காலவேளையில் எனது நண்பன் செம்பியன் செல்வன் திருகோணமலையி லுள்ள சென்.யோசெப் கல்லூரியில் ஆசிரியனாக இருந்தான். அவனுடைய உதவியுடன் கிண்ணியா சென்று தங்கி பதவியேற்றேன். திருகோணமலை நகரத் துடன் ஒரு பொரு'யால் (பாதை) கிண் ணியா இணைக்கப்பட்டிருந்தது. கிண் ணியா ஒரு முஸ்லீம் கிராமம். அறியாமை யும் வறுமையும் அப்பிரதேசத்தில் ஆட்சி செலுத்தியதைக் கண்டேன். எனக்கு ஏற் பட்ட முதல் நாள் அனுபவமே அக்கிராம மக்களது அப்பாவித்தனத்தையும் அவர் கள் விடயமறிந்தவர்களால் சுரண்டப்படுவ தையும் காட்டின. கூப்பன் என்கிற இலவ சப் பங்கீட்டு அட்டை பெறுவதற்காக ஒரு மூதாட்டி வந்திருந்தார். விசாரித்து நியாயம் இருந்ததால் கூப்பன் கொடுத்தேன்.
"மூண்டு வரியமாகத் திரியிறன். ஒருத்த ரும் தரவில்லை. இண்டைக்கு வா. நாளைக்கு வா எண்டு அலைக்கழிச்சினம். நீங்க உடனை தந்திட்டியள். அதுக்காக இந்த ஏழையிடம் இருக்கிற இந்த முட்டை களை வாங்கிக் கொள்ள வேணும். என்ன ட்டை ஓங்களுக்கு தாறதுக்கு வேற காசியி ல்லை மோன்."
அழுக்குப் பிடித்த பழைய துணியில் ஆறு முட்டைகள் வைத்துக் கட்டப்பட்ட பொதியை அந்த வயதான மூதாட்டி என் முன் மேசையில் வைத்தாள். திடுக்குற் றேன். இது இந்தக் கந்தோர் வழக்கம் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
"இப்படி எல்லாம் செய்யக் கூடாது. நாங்க எங்க கடமையைத்தான் செய்தம். அவ்வளவு தான்." எனப் புரிய வைக்க
எனக்கு வெகு நேரம் எடுத்தது. பின்னேரங் களில் "பெரியில் ஏறிக் குடாக்கடலைத் தாண்டி திருகோணமலை நகரத்திற்குப் பயணப்பட்ட என் வெளிக்கள உத்தியோ கத்தர்கள் வெறும் கையுடன் செல்ல ബിബ്ലെ,
கிண்ணியாப் பிரதேச மக்கள் இலகு வில் அடைவு வைக்கும் பாண்டமாக அவர் களது குடும்பக் கூப்பன்கள் அமைந்தன. அரசாங்கம் இலவசமாக அரிசி வழங்கும் கூப்பன்களை அடைவு வைத்து தமது உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்து விட்டு, வருடம் முழுவதும் வறுமையில் வாடினர். கூப்பன்களை அடைவு பெற்றவர் கள் வீடுகளுக்கு வண்டில் கணக்கில் வாரா வாரம் அரிசி சாமானகள் சென்றன. இந்த மோசடிக்குக் கூட்டுறவு கிளை மனேச்சர்கள் சிலரும் உதவினர். இதனை முழுமையாக என்னால் நிறுத்த முடிய வில்லை.
இப்பிரதேசத்தில் அரசியல் தலையீடு அதிகம். நான் பச்சை மையால் எழுதிய னுப்பும் ஒடரை உடன் நிறைவேற்றவும். நான் சிவப்பு மையால் எழுதியனுப்பும் ஒடரை நிறைவேற்றத் தேவையில்லை. அவர்கள் எனது கட்சிக்கு எதிரானவர்கள் எனப் புரிந்து கொள்க." என்றார் அவர். மை வேறுபாட்டை மனிதர்களிடம் வேறு பாடாகக் காண என்னால் முடியவில்லை. எனது பணிகள் நன்கு நடைபெற திரு கோணமலை அரசாங்க அதிபராகவிருந்த திஸ்ஸ தெய்வேந்திரா உதவியாக இருந் தார். அக்காலகட்டத்தில் நான் யொகாறா' என்றொரு குறுநாவலைக் கிண்ணியா வைப் பகைப்புலகமாகக் கொண்டு நான்
மல்லிகை ஏப்ரல் 2011 & 22

கொண்டு எழுதினேன். அதில் கற்பனை யாக உருவாக்கிய சில பாத்திரங்கள் சில பெரியவர்களின் இரகசி வாழ்க்கையைத் தற்செயலாகச் சுட்ட நேர்ந்தது. இக்குறு நாவலில் வருகின்ற பாத்திரங்களின் உரை யாடலை அங்கு வாழ்ந்த கவிஞர் அண் ணல் செம்மைப்படுத்தி உதவினார். கிண் ணியா பிரதேசத்திலும் வாழ்கின்ற மக்களி லும் பார்க்க வழங்கிய கூப்பன்களின் தொகை கூடுதலாக இருந்ததால் அது பற் றிய ஆராய நேர்ந்தது. அதனோடு சம்பந் தப்பட்ட கிராமசேவையாளர் வேலையிலிரு ந்து நீக்கப்பட்டார். இவை அனைத்தும் எனக்கு எதிராகத் திரும்பின. வவுனியா செட்டிக்குளம் பிரதேசக் காரியாதிகாரியாக உடனடியாக இடம் மாற்றப்பட்டேன்.
செட்டிக்குளத்தில் காரியாதிகாரியாகக் கடமையாற்றிய காலம் என் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. என் இலக்கிய வாழ்வி லும் நிர்வாக வாழ்விலும் பெரும் மாற்றத் தைத் தோற்றுவித்தது.
"செட்டிக்குளம் ஒரு பொல்லாத பிரதே சம். இவர் எப்படிச் சமாளிக்கப் போறார்?
"அது ஒரு அன்பொலிஸ் ஏரியா, பொலீஸ் கிடையாது. இவரும் விதானை மாரும் தான் பொலிஸ் வேலையும் பார்க்க வேணும். குற்றவாளிகளை அரெட்ஸ் பண் ணுறது. கோர்டில புரடியஸ் பண்ணுறது. வழக்காடுகிறது எல்லாம் டி.ஆர்.ஒ. தான். அவர் தான் எல்லாம். அங்க போயி அடி வாங்காத டி.ஆர்.ஒ. இல்லை”
வவுனியாக் கச்சேரியின ஓ.ஏ.கிருஸ் ணர் என்னை வரவேற்று, நான் புறப்படும் போதும் "ட்பிள்பரல்" கன்னொன்றையும் ஒருபெட்டி ‘கார்ட்றெ' யையும் எடுத்து
மேசை மீது வைத்து "இவையும் உமது தான். எடுத்துப் போம்." என்ற போது தான் நான் பதவி ஏற்கப் போகின்ற பிரதேசத்தின் சிறப்புத் தெரிந்தது. "நீர் கேள்விப்பட்டதைப் போல செட்டிக்குளம் மோசமானதல்ல. உம்மால் சமாளிக்க முடியும். ஆகச் சமாளி க்க முடியாவிடில் வவுனியாப் பொலிசைக் கூப்பிடும். தயங்காமல் போம்." என்றார். அவர் வார்த்தைகள் தெம்பைத் தந்தன. அவர் தந்தவற்றை எடுத்துக் கொண்டு செட்டிக் குளத்திற்குத் துணிச்சலுடன் வந்தேன்.
எனது போர்ட் கார் செட்டிக்குளம் நோக் கித் தயக்கத்துடன் நகர்ந்தது. என் அரு கில் என்மனைவியும் சிறுமியான என் மகளும் அமர்ந்திருந்தனர். எங்களைத் தொடர்ந்து எனது அலுவலக ஜீப் வந்தது. செட்டிக்குளம் ஒரு குடியேற்றக் கிராமம். பரம்பரையான வன்னி மக்களும் யாழ்ப்பா ணக் குடாநாட்டை அடுத்துள்ள தீவுகளிலு ள்ள மக்களும் நிலம் பெற்றுக் குடியேறியி ருந்தார்கள். யார் பெரிதென்பதில் அடிக்கடி இங்கு சச்சரவு ஏற்படுமாம். எனது மனைவி க்குச் செட்டிக்குளம் நெருங்க நெருங்கப் பயம் ஏற்பட்டது. எனது கார் செட்டிக்குளம் சந்தியை நெருங்கியது. சந்தியில் ஒரே சனக்கும்பல். இரு பகுதியினர் கலவரப்பட் டார்கள். அவர்களில் இருவர் எங்கள் காரை நெருங்கினர். ஒருவன் எனது காரின் போனட்டின் மீது ஓங்கியறைந்தான்.
'இது செட்டிக்குளம் தெரியாது. சந்தி யில் மெதுவாக வரவண்டும்." என்று கத்தி னான்.
நான் காரை நிறுத்தினேன். பின்னால் எடுத்தேன். பிறகு முன்னோக்கி வேகமாக எடுத்தேன். காரை மறித்த இருவரும் அடி
மல்லிகை ஏப்ரல் 2011 & 23

Page 14
பட்டு இரண்டு பக்கங்களிலும் விழுந்தனர். N நான் எப்படிக் காரில் இருந்து இறங்கி Š னேன் டபிள் பரல் துப்பாக்கியைக் கையில் N H AP FoY S எடுத்தேன் காட்றெயை லோட் பண்ணி N S னேன் என்பது தெரியாது. ミ S N "57T60T 5760T 2-56 L- 19.3/T.9. N P N அப்படியே எழுந்து மரியாதையா ஒபிசுக்குப் H OTO s G3 TraG3st' N ミ நான் சொன்னவை அப்படியே நடந் Š Excellent S தன அலுவலகத்திற்கு விரைந்து வந் N Photographers N தேன். வவுனியாப் பொலிசாருடன் தொடர்பு S N கொண்டு உடன் வந்து கலவரம் செய்யும் ŅModern Computerized அனைவரையும் கைது செய்யுமாறு கேட் N Photography S டுக் கொண்டேன். N For S N "இது செட்டிக்குளத்தில் சகயமான N Š கலவரம். அவங்களோட ஏன் பிரச்சினை? ミ Wedding Portraits S பேசாமல் விடுங்கோ. காணாதது போல Š & S விட்டிடுங்கோ. போலிசைக் கூப்பிட N . . . S வேணாம். பிறகு கரைச்சல் தருவாங்கள். N Child Sittings S வேலை செய்ய விடாங்கள்" என்றார் எனது Š s அலுவலக சி.சி. நான் பிடிவாதமாகச் S N சொன்னதைச் செய்தேன். பொலிசார் வந் N Photo Copies of È தார்கள். இரு பகுதியாரையும் கைது N Identity Cards (NIC), செய்து சென்றார்கள்.
சயது சறைாகள N Passport & S இந்த இரண்டு செயல்களும் தொடர்ந்த S O S எனது நிர்வாகத்திற்கு உதவின. N Driving Licences S "93yg. stolu stro 20óg N Within 15 Minutes நம்மட நாகநாதியையும் தருமனையும் N S கைது செய்தாராம். நித்தம் கலவரம் செய் Š ミ யும் இரண்டு பகுதியினரையும் கூட்டுமொத் N 300, Modera Street, S தமாகப் பிடிச்சு றிமாண்டில போட்டாச்சாம். N S புது டி.ஆர்.ஒ. எதுக்கும் அசையவோ N Colombo ~ 15. s
N
d
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ཚིལ། ༠༧:༠༧, Tel : 2526345
தொடரும் h" is
மல்லிகை ஏப்ரல் 2011 & 24

ن/ر -Clonaou أمنواع--
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை.
திருகோணமலை இறங்குதுறையிலிருந்து மூதூர் செல்லும் கப்பல் புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. இரண்டு மூன்று வாரங்களாக இடைவிடாது பொழிந்து தீர்ந்த வானத்தின் சோகைச் சூரியன் தெரிந்தான். மழை வெள்ளம் தேங்கி
மூதூருக்குச் செல்லும் தரை வழிப் பாதை தடைப்பட்டிருந்ததால் வழ மையைவிடப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஊருக்குச் சென்று சேர்ந்து விடும் முனைப் பில் வெகு நேரமாய் வரி சையில் முண்டியடித்துக் காத் திருந்த பயணிக
ளின் பதைபதைப்பை ஊர் பார்க்க
வந்திருந்த உல்லாசப் பயணிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு A6) W () (ON: நின்றிருந்தார்கள்.
சிவப்பு, மஞ்சள், இளநீலம், பச்சை வண்ண நவீன ரக ஆடைகளுடன் பளிரி டும் குளிர்க் கண்ணா டியணிந்த இளம் யுவதிகள். தொப்பிகளை பின்புறமாகத் திருப்பிய ணிந்து செல்போனில் துள்ளிசை கேட்கும் சாயம் போன ஜீன்ஸ் டீசேர்ட் விடலைப் பையன்கள். பொலித்தீன் பக்கற்றுக்களில் சிறைப் பிடித்த கடலைகளைக் கழுத்திலே மாலையாய் அணிந்து அவர்களுக்கிடையிலே சுற்றியலையும் கடலை வியாபாரிகள். அடிக்கடி வந்து செல்லும் துறைமுகப் பொலீஸ் ஜீப் வண்டிகள் என்று அந்த இடமே பரபரப்பாக இருந்தது.
சற்று நேரத்தில் துறைமுகக் காவல் நிலையத்தின் பயணிகள் வழிக் கதவு திறக்கப் பட்டது. அதுவரை பொலீசாரின் அனுமதிக்காகக் காத்துக் கிடந்ததில் எரிச்சலடைந்திருந்த மனிதப் பாம்பு, சட்டெனக் கப்பல் தளத்தை நோக்கி வேகமாய் நகர்ந்தது. பயணிகள் யாவரும் ஏறிக் கொண்டதும் தளத்துடன் கட்டப்பட்டிருந்த பிணையல் கயிறுகள் கழற்றிக் கப்பலினுள்ளே வீசப்பட்டன. ங்ே.க்! என்று ஒரு தடவை பிளிறிவிட்டுப் பின்புறமாய் அசைந்தது அந்த மிதக்கும் வெண்ணிறப் பிரமாண்டம்.
பயணச் சீட்டைப் பெற்றுக் கொண்ட அடுத்த கணமே, ஏணியைப் பிடித்துக் கப்பலின் மேல்தளத்தின் பின்புற மொட்டை மாடிக்குச் சென்று விடுவது எனது வழமை. அது மழையோ வெயிலோ குடையைப் பிடித்துக் கொண்டாவது அந்தத் திறந்த தளத்தில் நின்று பயணம் செய்தால் தான் திருப்தி எனக்கு. கஞ்சத்தனமின்றி வீசும் கடல் காற்றை நுகர்ந்த படி இயற்கைத் துறைமுகத்தின் எழிலைக் கண்களால் அள்ளிப் பருகியபடி செல்லும் பயணம் அது. கப்பலின் அடிப்புறமிருக்கும் நீர்ச் சுழலிகள் துரத்திவிடும் உப்புநீர் கற்றைக
மல்லிகை ஏப்ரல் 2011 & 25

Page 15
ளெல்லாம் கொதிக்கும் பாலாய் உருண்டு திரண்டு வெகுதூரத்தில் விரைந்தோடிச் சென்று வரையும் நீர்க்கோலங்களைப் பார் த்துக் கொண்டிருக்கச் சலிப்பதேயில்லை எனக்கு. பின்புறமாய் நகர்ந்த கப்பல் சட் டெனக் குலுங்கி நின்றுவிட்டு, முன்னோ க்கி வேகம் பிடிக்கத் தொடங்கிய போது.
"எக்ஸ்யூஸ்மீ, நீங்க பைசர் சேர்ட தம்பியா?"
குரல் வந்த திசையில் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க சற்று உயரமான இளைஞன் ஒருவன் டீ சேட், ஜீன்ஸ் மெல் லிய பிரேம் கண்ணாடி அணிந்து மிடுக்காக நின்றிருந்தான். அவனது தோளிலே ஒரு பிரயாணப் பையும் கைகளிலே சில பிளா ஸ்டிக் பைல்களும் இருந்தன. முகத்திலே சிநேகமான புன்சிரிப்புப் பரவியிருந்தது.
"இல்ல. நான் அவருட மருமகன். நீங்க. யாரு, தம்பி?’ அவனை அதற்கு முன்பு எங்கோ பார்த்தது போலத் தோன் றியது. இப்போதெல்லாம் தெரிந்தவர்க ளைக் கூடச் சட்டென ஞாபகம் வருவ தில்லை.
"நான். சுரேஷ் சுரேஷ்குமார்! உங்கட
மாமா பைசர் சேருகிட்ட படிச்சனான். இப்ப
கொழும்புல வேல செய்யிறன். நீங்க சரியா அவரு மாதிரியே இருக்கிறீங்க. அது தான்." என்றான் புன்னகை மாறாமல்,
"ஓ! அப்படியா? இப்ப என்ன லீவுல வாறிங்களா, தம்பி?’ திடீரெனத் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட ஒரு புதியவ னுடன் பேச்சைத் தொடர்வது எப்படி என்ற தடுமாற்றம் தீராமலே கேட்டேன்.
"இல்ல. ஒரு வேலையாகத்தான்
வந்தேன். அப்படியே ஊரையும் பாத்திட்டுப் போகலாமெண்டுதான்."
கப்பல் வேகம் பிடித்து, தூரத்தில் கம்பீர மாய் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கும் ப்றீமா கோதுமை ஆலையை நெருங்கிக் கொண்டிருந்தது. சீனக்குடா விமானத்த ளத்திலிருந்து உயரே எழுந்தது பயிற்சி விமானம் ஒன்று.
அவன் மேலே பறந்து கொண்டிருந்த விமானத்தைக் காட்டி, அதன் இரைச்சல் குறைந்ததும், "நம்ம ஊர் நிலைமைகள் எப்படியிருக்கு. இப்ப?’ என்றான், வெகு இயல்பாய். அந்தக் கேள்விக்கு எந்த வகை யில் பதில் கூறுவது என்று தெரியவில்லை. எந்தக் கோணத்திலே சொல்வதானாலும் முதலில் அவன் யாரென்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியமிருந்தது எனக்கு. 'தம்பி சுரேஷ், நீங்க யாருட மகன்?
அவன் தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்டே, 'ஏன் அண்ண, நான் யாரு எவ ருண்டு தெரிஞ்சிட்டுத்தான் பதிலே சொல் வீங்களா? சரி சொல்றன்' அவன் பேச்சி லிருந்த ஏளனம் தீயாய்ச் சுட்டது.
'இல்ல, இப்பல்லாம் எதையுமே சொல் றதுக்கு முதல் கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கு, தம்பி, அதுதான்." என நான் மழுப்ப, அவன் சிறிது நேரம் அமை தியாக இருந்தான். எங்கள் தலைக்கு மேலாக கடல்நாலைகள் இரண்டு கீச்சிட்ட படி பறந்து போயின.
'நான் என்ன சொல்ல வாறனெ ண்டா.." என்று நான் தொடங்கும்போதே அவன் குறுக்கிட்டு, "பரவாயில்லண்ண. நீங்க உண்மையைத் தானே சொன்னிங்க.
மல்லிகை ஏப்ரல் 2011 & 26

உண்மையச் சொல்றதுதானே இப்பல்லாம் ஆபத்தான வேலையே. இங்க உள்ளதை உள்ளபடி சொல்வன்ட உயிருக்கும் இருப் புக்கும் உத்தரவாதமே இல்லாதபோது, வேற என்னதான் செய்வீங்க- சரி, இனி நாம வெறும் ஹலோ மட்டும் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான். சரிதானே?” அவன் பேச்சிலிருந்த நையாண்டி எனக்குப் பிடித்திருந்தது. 'ஏன், இண்டைக்கு மழை வருமா, வெயில் அடிக்குமா..? காத்து வீசுமாண்டு கூடக் கேட்கலாமே?" என் றேன் அவனது குறும்புக்கு ஈடு கொடுப்ப தாக நினைத்துக் கொண்டு. அதுதான் நான் செய்த தவறு.
"அதுவுமில்லையெண்டால், இருக் கவே இருக்கிறது, கிரிக்கெட்; தமிழ் சினிமா! நமீதாக்கு எதிலை மச்சம்? சூர் யாவுக்கு எத்தனை லட்சம் என்று பேசலாம் தொல்லையே இல்லாம!" என்று சிரித்தவ னின் நகைப்பு எனக்கும் தொற்றிக் கொண் டது. எங்களது சிரிப்பொலி கேட்டு மேல் தளத்தில் நின்றிருந்தவர்கள் ஒருதடவை திரும்பிப் பார்த்து விட்டுப் பின் கிழக்குத் தொடுவானம் பார்த்தார்கள். எனது காலடி யில் உருண்டு வந்த பந்தைத் துரத்தி வந்து எடுத்துக் கொண்டோடினான் ஒரு சிறுவன். இதற்கிடையில் கீழ்த்தளத்திற்கு இறங்கி இரண்டு யோகட் கிண்ணங்க ளோடு திரும்பி வந்தான் சுரேஷ். இருவரும் யோகட் சுவைத்தவாறே மேல்தளத்தில் கும்பலாகக் கூடிக் கூச்சலிட்டுக் குதூகலிக் கும் உல்லாசப் பயணிகள் குதூகலத்தை வேடிக்கை பார்த்தோம்.
"பாருங்க தம்பி மழைக் காலத்தையும் பார்க்காம, இப்பிடி ஊர் பார்க்க வந்திடுது
களே?" என்றேன், பேசிக் கொண்டிருக்கும் விடயத்தை திசை மாற்றும் யோசனை պւ-6ծl.
"ம்ம் விடுங்கண்ண. அதுகளாவது கிடைச்ச சுதந்திரத்தை சந்தோசமா அனுப விக்கட்டும்!” என்று சிரித்தவன், உடனே திரும்பி, "ஒண்டு கவனிச்சீங்களா? ஒரு கரு த்தை வெளிப்படுத்துறதுக்கு இருக்கிற சுத ந்திரத்தை நாமே சரியாகப் பயன்படுத்திறது கிடையாது. இப்பிடியே பாவிக்காம விட்டா ஒருநாள் இருக்கிறதும் இல்லாமப் போயி டும். தெரியுமா?’ எனக்குத் திக்கென்றது.
'தம்பி, நீங்க ஏதாவது பத்திரிகையிலா வேலை செய்றிங்க?"
அவன் சட்டென யோகட் சாப்பிடுவதை நிறுத்தி, தனது இரு கைகளையும் மார்புக் குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, என் னையே வைத்த கண் வாங்காமல் பார்த் தான். "இது என்ன முத்திரை குத்தல் அண்ண? ஏன். பத்திரிகை ஆட்கள் மட் டும்தான் இப்படிப் பேசனுமா? சாதாரண என்னைப் போல ஆட்கள். குடிமகன் கள் சே. அந்தக் குடிமகன்களில்ல. இது பிரஜைகள். இது பற்றியெல்லாம் பேசக் கூடாதா, என்ன?”
'இல்ல, தம்பி! நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா இதெல்லாம் கருத்துக ளைக் கருத்துகளால மட்டுமே எதிர்கொள் ளுற நாடுகள். சமுதாயங்களுக்குத்தான் சரிவரும். இல்லையா?" என்று நான் கூற, அவன் வியந்து போய், "அட அப்படி வாங்கண்ண வழிக்கு. இப்பதானே சரியா வாயையே திறக்கிறீங்க. உங்கட மாமா பைசர் சேர் எவ்வளவு கதைப்பார் தெரி யுமா?’ என்றான் உற்சாகம் பொங்கிட,
மல்லிகை ஏப்ரல் 2011 & 27

Page 16
எனக்குச் சற்றுப் பெருமையாகவும் கூச் சமாகவும் இருந்தது.
கப்பல் இப்போது வெளித்துறைமுகத் துக்குள் நுழைந்தது. கடற்படையின் அதி வேகப் படகு ஒன்று நீரைக் கிழித்துக் கொண்டு கப்பலைத் தாண்டிச் செல்ல உல்லாசப் பயணிகள் சந்தோசத்தில் கூச்ச லிட்டுக் கையசைத்தார்கள்.
"சரி, இப்ப சொல்லுங்க. எப்படி இருக் குது நம்ம ஊர் நிலைமைகள்? அவன் விடுவதாக இல்லை.
"என்னத்தைத் தம்பி சொல்றது..? இரண்டு மாசமா மழை விடாது பெய்து வய லும் தொழிலும் அழிஞ்சு போய்க் கிடக் குது. ஏற்கனவே எத்தனையோ அழிவுக ளைப் பார்த்த நம்ம சனத்தை இப்ப இந்த மழை வெள்ளமும் சேர்ந்து கஷ்டத்தைக் குடுக்குது. ரேடியோவத் திறந்தா மழை யையும் நிவாரணத்தையும் தான் எப்பவும் சொல்றாங்க.. ஆனா, மழை மட்டும்தான் சரியா வந்து கிடைக்குது. இதுதான் ஊர்நிலைமை!’
"அப்படியா? அப்ப இதையெல்லாம் யாரும் கவனிக்கிறதில்லையா?*
'இப்பத்தான் வெள்ளம் கொஞ்சம் வடிஞ்சு சனம் கரையேறுது. அதுக்குள்ள திரும்பவும் மழை வந்து நாசாமாக்கிட்டி ருக்கு. திரும்பியும் வரும் என்றாங்க. இனி யென்ன? பழையபடி அகதி வாழ்க்கை. அரச நிவாரணம். அதில ஊழல். புதுப் புது மோசடிகள் என்று போகப் போகுது 26ttfriumG"
'இதெல்லாம் இன்னமும் முடியல் லையா, எத்தனை அழிவுகள் வந்தாலும்
ஒவ்வொரு முறையும் உண்மையாகப் பாதிக்கப்பட்ட சனங்களுக்கு எதுவுமே சரியாகக் கிடைக்கிறதில்ல. இது மாறவே மாறாதா?”
“எப்படி மாறும்? உண்மையா பாதிக்கப் பட்டவன ஏமாத்தி ஏறிமித்திச்சுப் போட்டு, வசதியுள்ளவன் பின் கதவால எடுத்திட்டுப் போறானே? இதெல்லாம் புதுசா? எத் தனை முறை பார்த்தாச்சு?’ என்றேன், சலிப்பு மேலிட,
சீராகச் சென்று கொண்டிருந்த கப்பல் இப்போது சற்று ஆடத் தொடங்கியது. அந்த ஆட்டமே அது ஆபத்தான பாதாள மலைப் பகுதியைக் கடந்து செல்கின்றது என்பதைத் தெரிவித்தது. கப்பலின் ஆட் டம் அதிகரிக்க அதிகரிக்க அதுவரை கூச்ச லும் வேடிக்கையுமாக இருந்த உல்லாசப் பயணிகள் பயத்திலே அடங்கிப் போயினர். என்னைப் போன்ற தினசரிப் பயணிகளு க்கு அவர்களது மிரட்சி வேடிக்கையாக இருந்தது.
"அண்ண, நானும் கேக்கணும். கேக் கணும் என்று நினைச்சேன்! ஒரு குளம் போல் கடல் அமைதியாக இருக்கிற காலத்தில கூட, இந்த இடத்தில மட்டும் ஏன் இப்படி ஆட்டுது?"
"ஆட்டம் இல்லாத கடல் பயணமும் மோசடி இல்லாத அரச நிவாரணப் பணிக ளும் சுவாரஸ்யமாகவா இருக்கும். அதுதான் போல!"
"ஆஹா! இது நல்லாயிருக்கே. நீங்க கதை, கவிதைகள் எழுதுற ஆள்போல இருக்கு. இதே போலத்தால் உங்க பைசர் சேரும் வேடிக்கையாகக் கதைப்
மல்லிகை ஏப்ரல் 2011 & 28

பார். கேட்டுக் கொண்டே இருக்கலாம்" என்றான்.
"எப்ப நீங்க அவருக்கிட்ட படிச்சீங்க, தம்பி?
"ஒ! அதுவா. அது நான் ஓ.எல் எடுக் கிற நேரத்துல. அவர் எங்க அப்பாட கூட் டாளிதானே? அதனாலதான் எங்க வீட்டு க்கு வந்து விஞ்ஞானப் பாடம் சொல்லித் தந்தாரு. அவருட்ட படிச்ச பிறகுதான் அந்தப் பாடமே விளங்கியது. ஆனா, காசே வாங்க மாட்டாரு. எங்க வீடடுப் பிலாப்பழச் சுளைகள்தான் அவருட டியூசன் பீஸ் என்று அப்பா நக்கலடிப்பார்"
"அப்பிடியா? எங்க இருக்கு, ஒங்கட வீடு G3asñrğ C3gmrL* 6vouumt?ʼ'
"இல்லண்ணே ஆஸ்பத்திரிக்குப் பின் வளவுதான் எங்க தோட்டம், நான் ஓ.எல். எக்ஸ்ாம்வ ஏ எடுத்ததுக்குக் காரணமே பைசர் சேர்தான். ஏ.எல்லுக்கும் கொஞ்சம் உதவி செஞ்சிருக்காரு. படிப்பிச்சு முடி ஞ்சா போதும், உலகப் புதினங்கள் பேசிட் டிருப்பாரு. கெட்டிக்காரர். அப்பாவுக்கு அவரெண்டா உயிர். எனக்கும்தான்!"
சிறிது நேரம் இருவரும் பேசிக் கொள் ளாமல், தனித்தனியே அவரவர் சிந்தனை யிலாழ்ந்திருந்தோம்.
கப்பல் பாதாள மலையைத் தாண்டியி ருந்தது. கிழக்குப் புறமாக வெகுதூரத்தில் தெரிந்த தொடுவானம் சூரியனின் கதிர் களை வாங்கிப் பளபளத்துக் கொண்டிரு க்க, சுரேஷ்யாருடனோ செல்போனில் பேசிக் கொண்டிருந்தான். கடலில் ஆங்காங்கே சிறுமீன் பிடி வள்ளங்கள் தென்பட் டன.
"சரி, இந்த வெள்ள நிவாரண வேலை
கள் எப்படி நடக்குது? உதவிகள் கஷ்டப் பட்ட சனத்துக்குத்தான் போகுதா? இல்ல சுனாமில மாதிரித்தான் இதுவுமா?" செல் போனை அணைத்துவிட்டுக் கேட்டான் சுரேஷ்.
நான் பதில் கூறவில்லை. வெகுதூரத் தில் துள்ளிக் குதித்துக் காற்றில் எழுந்து மீண்டும் கடலுக்குள் விழுந்தோடியது ஒரு பெரியமின்.
"என்ன அண்ண, யோசிக்கிறீங்க? இன்னமும் என்மேல நம்பிக்கை வரல்லயா உங்களுக்கு?”
"அப்படியில்ல, தம்பி இதுகளப் பத்திப் பேசிறதுக்கே வெறுப்பாயிருக்குது. எவ்வ ளவு காலம் போனாலும் எத்தனை ஆட்சி மாறினாலும் எவ்வளவு கடுமையான சட்டத் தைப் போட்டாலும் இந்த ஊழல் மோசடி களெல்லாம் குறைஞ்சபாடில்லையே..?" "அப்படியெண்டா இதையெல்லாம் தடுக்கிறதுக்கு இப்ப இருக்கிற நீதி அமைப் புகள் எதுவுமே சரிவராது என்றீங்களா?"
"புதுசா என்ன சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதில உள்ள ஒட்டைகளைக் கண்டுபிடிச்சிடுறாங்க, அவ்வளவு அனுபவ சாலிகள். பழம் பெருச்சாளிகள் இவங்க!” "அப்படியெண்டா, நேர்மையானவங்க என்று யாருமே இல்லையா?"
"இருப்பாங்க. ஒன்றிரண்டு பிழைக் கத் தெரியாததுகள் எண்டு பெயரெடுத்தது கள் இல்லாமலா இருக்கும்? ஆனா, மொத்த அமைப்புமே ஒருவிதமா இயங்கும் அந்த ஒன்றிரண்டு பேரால என்னதான் பெரிசா செய்ய முடியும்?"
போது,
'விளங்குது விளங்குது. நிர்வான
மல்லிகை ஏப்ரல் 2011 & 29

Page 17
ஊரில கோவணம் கட்டினவன்ட நிலமை எண்டுதானே சொல்ல வாறிங்க?" என்று என் வார்த்தைகளை அவனே முடித்து வைத்துவிட்டு என்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில தீவிரமான சிந்தனை ரேகைகள் ஓடின.
"ஒகே! ஒத்துக்கிறேன். ஆனா, இப்பிடிப் பொது மக்கள்ற காசுபனத்தை மோசடி செஞ்சுட்டிருக்கிறவங்களால இப்பிடி அநியா யமாச் சேர்த்த பணத்தையெல்லாம் சும்மா வச்சிட்டிருக்க முடியாதே அண்ணை?
"அப்படியென்டா..? எனக்கும் விளங் கேயில்ல தம்பி?
"இல்ல, ஒரு அரசாங்க ஊழியரோட வருமானம் எவ்வளவு இருக்குமெண்டு ஊருக்கே ஒரளவு தெரியும். ஒரு அரசாங்க ஊழியரோட வருமானம் செலவழிச்சாலோ, சொத்துக்கள வாங்கிப் போட்டாலோ ஊரில அக்கம் பக்கத்துல உள்ளவங்க ளுக்கு சந்தேகம் வராமலா போகும்?"
"ஓ! நெருப்பிருந்தா புகையத்தானே செய்யும்?
"அப்படிப் புகையும்போது சுத்தியிருக் கிற சமூகமே அவரைக் கேவலமா பேசாதா? நடத்தாதா அண்ன?” "சரி, அப்படிப் பேசினா?” "ஒரு முழுச் சமூகமுமே இப்படியான மோசடிக்காரர்களை ஒதுக்கி வச்சால் அதைப் பார்த்து இனிமேல் மோசடி செய்ய நினைக்கிறவங்களாவது பயப்பட மாட்டாங் களா?’ என்றான், அப்பாவித்தனமாக, எனக்குப் பொத்துக் கொண்டு வந்த சிரிப் பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன்.
வானிலிருந்து ஒன்றிரண்டு மழைத்துளி கள் விழுந்தன.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளை யில் குவிந்து கிடந்த பிணங்களையும் அழிந்து கிடந்த சொத்துக்களையும் LunTiT த்து விட்டுக் கலங்கிப் போய் பற்றில்லா மைத் தத்துவம்' பேசித் திரிந்த மனிதர்க ளையெல்லாம் ஒருமுறை நினைத்துக் கொண்டேன். அன்று சுடுகாட்டுத் தத்துவங் கள் பேசிய சாமானியர்களில் பலர் இப்போ அரச நிவாரண சேவையில் பங்கு பற்றிய பிற்பாடு பெரிய பிரமுகர்களாகிய மாயங்க ளையும், புனித யாத்திரை கடமையாகும ளவுக்கு வீங்கிப் பெருத்த ஜாலங்களையும் மனதிற்குள் ஒருமுறை எண்ணிப் பார்த்துக் கொண்டேன்.
என் மனதிலே விரிந்த அந்தக் காட்சி களை சுரேசிடம் விபரித்தேன். அதையெல் லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிரு ந்து விட்டு, அமைதியாகவே இருந்தான். அவனது முகபாவத்தை வைத்து எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் அவனது அடு த்த கேள்வியை யூகித்தேன்.
அதாவது நேர்மையாக உழைத்த பணத்தில் அன்றி இப்படி ஏழை மக்களின் வயிற்றிலடித்துச் சம்பாதித்த காசைக் கொண்டு புனித யாத்திரைகள், பூஜை புனஸ்காரங்கள் செய்தால் அதையெல் லாம் ஆண்டவன் ஏற்றுக் கொள்வாரா? என்று ஒரு கேள்வியை அவன் கேட்பானெ ன்று எதிர்பார்த்தேன். அப்படி ஒரு கேள்வி யைக் கேட்டால், என்னிடம் மெளனத் தைத் தவிர, வேறு என்ன பதில் இருக்கப் போகின்றது? மனிதர்களைத் தான் ஏமாற்றுகிறார்கள் என்றால் தாங்கள் நம்பு கின்ற ஆதர்ச சக்திகளையும் ஏமாற்றும்
மல்லிகை ஏப்ரல் 2011 $ 30

துணிவு இவர்களுக்கு எப்படி வருகின்றது?
ஒருவேளை.
'என்ன திரும்பவும் ஊமையாட்டீங்க
(8Lunrelა?’’
நான் சற்று முன் நினைத்ததை அவனி டம் கூறினேன். அதற்கு அவனோ, "இவங்களெல்லாம் தங்களுடைய களவு கொள்ளைக்கு அந்த சக்திகளையும் ஒரு பாட்னராக்கிக் கொள்றாங்க, தெரியுமா?
'விளங்கயில்ல. அதாவது ஆண்டவ னும் பங்கு என்றா சொல்றீங்க? இதென்ன புதுக்கதை?" என்றேன், புரியாமல்,
'இல்ல. நான் கடவுளக் குறை சொல்ல வரல்ல. ஆனா, கடவுள் பற்றிய நம்பிக்கைளால் கூட இந்தப் பகல் கொள் ளையர்களை அவர்களது பாவச் செயல்க ளிலிருந்து காப்பாற்ற முடியல்ல பார்த்தீங் களா அண்ண?
அவன் சொல்வது உண்மைதான். எனக்குத் தெரிந்தளவில் இப்படியானவர் கள் எத்தனையோ பேர் சிறந்த ஆன்மீக நம்பிக்கையும், வெளிப்படையான பேணுத லும் உள்ளவர்களாகத்தானே இருக்கிறார் கள். இந்த ஆசாடயூதிகள் இப்படியான செயல்களிலே ஈடுபடும்போது எப்படித்தான் கடவுளின் பார்வையிலிருந்து தங்களை மறைத்துக் கொள்கிறார்களோ..? ஒரு வேளை இதெல்லாம் கடவுளர்களின் ஆளு கைக்குள் வராத விடயங்களே என்னவோ?
"என்னமோ தம்பி, இந்த நேர்மை நியா யமெல்லாம் தொலைஞ்சு போய் மிச்சம் காலமாச்சு. ஒவ்வொருத்தனும் தனக்கு மேலிருக்கிறதா நம்புகிற சக்தியை இல்ல ண்டா, சொந்த மனச்சாட்சியை மதிச்சு
நடந்தாலாவது இப்படியான அசிங்கமான கேவலமான மோசடிகள்ல சம்பாதிச்சு வாழமாட்டான். அந்தக் காசில கடவுள் சேவை செய்யுறளவுக்கு துணியவும் மாட் டான். அவ்வளவுதான் நான் சொல்லு வன்' என்றேன், கோபத்தோடு,
"அட! அப்படியெல்லாம் ஒரேயடியாக மனச விட்டுராதீங்கண்ணை. உண்மைக் குண்மையா கடவுளுக்குப் பயந்துக்கிட்டு நேர்மையா வாழ்றவங்களும் இருக்கத் தான் செய்யுறாங்க"
"ஏங்க. தம்பி அதெல்லாம் அண்டண் டைக்குக் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிற அடித்தட்டுச் சனங்களுக்கிட்டத்தான் இருக்கு, தம்பி. அந்தச் சனத்திலருந்து ஒருத்தன் கொஞ்சம் உருப்பட்டு முன்னேறி மேல வந்திட்டானெண்டா அவனும் மாறிப் போயிடுறானே! அவனே விரும்பினாலும் நேர்மையா வாழ இயலாது; வாழவும் விடமாட்டான்களே, இவங்க."
“அதெப்படி அவ்வளவு திட்டமாச் சொல் நீங்க, நீங்க?"
"அதெல்லாம் ஒரு சங்கிலிக் கோர்வை தம்பி அடிமட்ட ஊழியன் தனக்கு மேல இருக்கிற அதிகாரிய அனுசரித்தால்தான் வாழலாம். அந்த அதிகாரி அவனுக்கு மேலுள்ள அதிகாரியை திருப்திப்படுத்த ணும். அந்த அதிகாரியோ தனக்குப் பெரிய இடத்தை சமாளிச்சு நடக்கணும். இப்படியே அடியில இருந்து உச்சி வரைக் கும் நெளிவு சுளிவுகள் இருக்கிற நிலமை யில எப்படித் தம்பி நேர்மையா ஒருவனால இருக்கலாம்? இதெல்லாம் ஒருவித எழு தாத சட்டங்களடாப்பா" என்றேன், அவ னிடம் காட்டமாக.
மல்லிகை ஏப்ரல் 2011 & 31

Page 18
"அப்படியெண்டா? என்ன நடந்தாலும் நேர்மையாகத்தான் இருப்பன் என்று விடாப்பிடியாக இருக்கிற ஒரு அரசாங்க ஊழியனாலேயோ ஒரு அதிகாரியாலயோ
நீங்க சொல்ற இந்த எழுதாச் சட்டங்களல
இருந்து தப்பவே முடியாதா? சொல்லுங் கண்ண, நீங்க" என்றான், அவனும் என் கோபத்துக்கு ஈடுகொடுத்து.
எனக்கு அவனுடைய அப்பாவித்தனத் தைப் பார்த்துக் கோபமும் சிரிப்பும் ஒன்றா கக் கிளம்பியது.
"ஓ! முடியுமே! அதாவது, இற்த ஊழல் மோசடி முதலைகளெல்லாம் ஒண்டு சேர் ந்து அந்த நேர்மையான ஆட்டுக்குட்டி யைக் கடிச்சுக் குதறாமல் பேசாம விட்டு வைச்சா, தாராளமா முடியுமே. ஹ. ஹா!" என்று வாக்கியத்தை முடிப்பதற்கு முன்பே, அடக்க இயலாத வெடிச்சிரிப்பு பொத்துக் கொண்டுவர, சுற்றியுள்ள அனை வரும் வேடிக்கை பார்ப்பதையும் பொருட் படுத்தாமல் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கி னேன். கப்பலைச் செலுத்திய மாலுமி கூட, கண்ணாடியை உயர்த்தி ஒருமுறை வேடிக்கை பார்த்தார்.
சுரேஷ் என் திடீர்ச் சிரிப்பைப் பார்த்துத் திகைத்துப் போய் அப்படியே அமர்ந்து விட் டான். அவனாலும் எதுவுமே பேச இயல வில்லை.
'$j.s!'
கப்பல் வேகத்தைக் குறைத்த போது தான் மூதூர் இறங்குதுறையை நெருங்கியி ருந்ததைப் பார்த்தேன். பேச்சு சுவாரஸ் யத்தில் நாங்கள் கவனிக்கவில்லை.
'தம்பி சுரேஷ்! வாங்க இறங்கிப் போவோம். ஜெற்றி வந்திட்டுது. இங்கிருந்து
எப்படிப் போகப் போறிங்க..? கரையில என்ட மோட்டப் பைக் இருக்கு. இன் னொரு ஹெல்மெட் இருந்தால்."
"இல்ல, நீங்க போங்கண்ண! எங்கட டிப்பார்ட்மெண்ட வாகனம் இங்கதான் மூதூர்ல ரெண்டு கிழமையா வேலயா நிக் குது. ட்றைவருக்கு கோல் பண்ணியிருக்கி றன். நீங்க பைக்ல போங்க. தேங்ஸ்!”
இருவரும் மேல்தளத்திலிருந்து இறங்கி மக்கள் கூட்டத்தில் கரைந்தோம்.
மரப்பாலத்திலே எனக்குச் சிறிது முன்னே குளிர்க் கண்ணாடியணிந்து மிடுக்காக நடந்து கொண்டிருந்தான், சுரேஷ், கரையில் அவன் இறங்கியதும் ஒருவன் அவனை நோக்கி ஓடிவந்து, "குட் மோர்னிங் சேர்!" என்று மிகவும் பவ்யமாகப் பிரயானப் பையை வாங்கிக் கொண்டு பின்னால் நடந்தான்.
மூதூர் ஜெற்றிக் கடையொன்றிலிருந்து எனது பழைய மோட்டார் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு, நான் வீதிக்கு ஏறிய போது, அந்த நவீனரக சொகுசு பஜிரோ வாகனம் கம்பீரமாக நின்றிருந்தது. நான்
அதனைத் தாண்டிச் செல்கையில் அதன்
முன்னிருக்கையிலிருந்த கறுப்புக் கண் ணாடி தாழ்ந்து வெளிப்பட்டான் சுரேஷ். 'அண்ணன் போய் வாறன்! பைசல் சேர்ங் இன்னும் அதே இடத்திலதானே இருக் கார்? ஓகே பிறகு சந்திப்போம். ஸ்பீயூ. uை?" என அவன் விடை பெற்று சீறிக் கிளம்பும் போதுதான் அந்த பஜிரோ வாகனத்தின் பின்புறக் கண்ணாடிக் கதவிலே, இலஞ்ச ஒழிப்புத் திணைக் களம்' என மூன்று மொழிகளிலும் எழுதியி ருப்பதைப் பார்த்தேன்.
மல்லிகை ஏப்ரல் 2011 * 32

O
○lー l
-பிரமிளா பிரதீபன்
இராமச்சந்திரன் இப்படி செய்வானென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அம்மா சொல்ல சொல்ல எனக்கு வியர்த்துக் கொட்டியது. என்ன பதில் சொல்வ தென்றே தெரியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.
ஏதேதோ ஏசிவிட்டு வீட்டிலிருந்து போய்விட்டானாம். இனி இந்தப் பக்கம் வரமாட்டேன் என்று கூடச் சொல்லியிருக்கிறான். அம்மா அவனை வேலைக்காரனாய் பயன்படுத்துவ தாயும், அது தனக்குப் பிடிக்கவில்லையென்றும். இன்னும் ஏதேதோவெல்லாம் சொல்லி யிருக்கிறானாமே...!
எங்கள் நட்பின் மீதான நம்பிக்கையில் அம்மா அவனைச் சொந்த மகனாகவே எண்ணி யிருந்தாள். அவன் அதிக நாட்கள் இருப்பதும் எங்கள் வீட்டிலேயே தான். இத்தனை காலமாய் இப்படியெல்லாம் இருந்து விட்டுத் திடீரென ஏன் இப்படி செய்து விட்டான்?
ஆரம்பத்தில் நானும் இராமச்சந்திரனும் பகையாளிகளாகத் தான் இருந்தோம். அவனது முகத்தைப் பார்க்கத்தானும் எனக்குப் பிடிக்காது. அவனுக்கும் அப்படித்தான். நேருக்கு நேராய் சந்திக்கும் தருணங்களில் ஹாக். தூ.வெனக் காறி இருவருமே உமிழ்ந்து எங்கள் வெறுப்பைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது வழமை. அப்போது நான் எட்டாம் தரத்திலும் அவன் ஏழாம் தரத்திலும் படித்துக் கொண்டிருந்ததாய் எனக்கு ஞாபகம். இருவருமே ஒரே பாடசாலை. ஒரே பஸ்சில் செல்ல வேண்டிய எரிச்சலான பொழுதுகள் அவை. வீட்டில் இருந்து சுமார் ஏழு கிலோ மீற்றர் தூரத்திற்கு வேகமாய் நடந்து சென்று, எப்பாடு பட்டாவது அந்த ஸ்கூல் பஸ்சைப் பிடித்து விடுவோம்.
நான் நடக்கும் போது ஒரு இரண்டடி தூர இடைவெளியில் இராமச்சந்திரன் பின்னால் வந்து கொண்டிருப்பான், ஜங்சனை அடைய முன் என்னை எப்படியும் முந்திவிடும் எண்ணத்தில் வேகமாய் நடப்பான்.
நான் மட்டும் சும்மாவா?. பாதை வளைவுகளில், அவன் தென்படா நொடியில், வேக மாய். மிக வேகமாய் ஒடி ஒடிப் போய் படாரென நடப்பது போல பாவனை செய்வேன்.
திரும்பிப் பார்த்தால் அதே இரண்டடி இடைவெளியில் அவன்.கள்ளநாய். அவனும் ஓடி வந்திருக்கிறான்.
இப்படியே தினம் தினம் எங்கள் பகையும் வெறுப்பும் கூடிக் கொண்டே போனது. அவனைப் பார்த்து ‘காதலாகிக் கசிந்து.' எனும் தேவாரத்தைப் பாடினால் கோபத்தின் உச்சிக்கே போய்விடுவான்.
மல்லிகை ஏப்ரல் 2011 & 33

Page 19
அது ஒரு சுவையான கதை. அவன் மூன்றாம் தரத்தில் படித்துக் கொண்டிருந்த போது, ‘காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி." என்ற சம்பந்தர் தேவாரத்தை அப் படியே பார்த்தெழுதி கடிதத்தின் இறுதியில் இதை யாரிடமாவது காட்டினால் காதல் கசக்கும்" என்றும் குறிப்பிட்டு அதை ஒரு மாணவியிடம் கொடுக்க, அது எப்படியோ எல்லோரிடமும் மாட்டிப் பாடசாலைக்கே அந்தக் கடிதம் அம்பலமாகிப் போனது.
அன்றிலிருந்தே அவன் பெயர் ‘காதலா கிக் கசிந்து தான்.
அவன் என்னைக் கடக்கும் சில நேரங் களில் நான் உருக்கமாக அந்தத் தேவாரத் தைப் பாடிக் கொண்டிருப்பேன். செருப்புக் காலை அழுத்தமாக நிலத்தில் மூன்று முறை தேய்த்துக் காட்டி "தேய்ஞ்சிருக்கு 6T6öTurrett.
நானும் சளைக்காமல் பாடிக் கொண்டி ருப்பேன்.
இராமச்சந்திரன் வீட்டுக்குப் போகும் போது என்னையும் கூட்டிக் கொண்டே தான் அம்மா போவதுண்டு. அவனுடைய ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து மூலை யில் வீசிவிட்டு வந்துவிடுவேன். நல்லாத் தேடட்டும் சனியன்’ என்று.
அவன் என்னுடைய வரலாறுக் கொப் பியை எப்படியோ எடுத்து ஒளித்து, என் னைப் பரீட்சை நேரத்தில் தடுமாற வைத் தது மனதிற்குள் ஆழமாய்ப் பதிந்து போயி ருந்தது.
ஆனாலும் என்ன நினைத்தேனோ தெரியவில்லை. என்னுடைய பதின்மூன் றாவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இராமச்சந்திரனையும் அழைத்திருந்தேன்.
தயங்கித் தயங்கி ஒரு பூ பொகேயுடன் வாசற்படியில் நின்றான்.
"6hTLT ....... D-6iTC36TT 6II......"
கையைப் பற்றி அவனை உள்ளே இழுத்து நன்றாக உபசரித்து சிரித்து. (99..... T9. . . . . .
அவனும் ஏதோ உணர்ந்திருக்க வேண்டும். என்னுடன் சண்டை பிடிப்பதை அறவே நிறுத்திவிட்டான்.
அவன் வாங்கித் தின்னும் ஞானக்கத் தாவில் பாதியை பிய்த்து எனக்குத் தரத் தொடங்கினான். மோதலில் ஆரம்பித்து. நெருங்கியதொரு நட்பில் போய் முடிந்தது எங்கள் உறவு.
நிறைய விடயங்கள் பற்றி மனது விட் டுப் பேசிக் கொள்வோம். கடைசிவரை இதே நட்புடன் இருப்பதாய் ஒருவருக்கொ ருவர் சத்தியமும் பண்ணிக் கொண்டோம். கால வேகத்தில் நாங்களும் வளர்ந்து தொழில் படிப்பென்று பிரிந்திருந்தாலும் இராமச்சந்திரன் எனக்கு நல்ல நண்பனா கவேதான் இருந்தான்.
நான் திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தாயான பின்னும் கூட இராமச்சந்திரன் எனக்கொரு தூய்மையான நண்பனாகவே தான் இருந்தான்.
அவன் பாக்கியசாலி. சொந்த ஊரி லேயே தொழில் செய்யும் அதிர்ஷ்டம் அவ னுக்குக் கிடைத்திருந்தது.
பிறந்து வளர்ந்து அணுவணுவாய் இரசி த்து வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊர் மண்ணைப் பிரிந்து வெளியேறும் போது எத்தனை வலியிருக்கும் தெரியுமா?
எனக்குத் தெரியும். உடம்பில் இருந்து
மல்லிகை ஏப்ரல் 2011 & 34

ஏதோ ஒரு பாகத்தை அறுத்து எடுத்து விட்
Tsjib (BJT6No....
தொழில் நிமித்தமாயும் திருமணமாகி யும் நான் ஊர் எல்லையைத் தாண்டும் அந்த நொடியில், எனக்குத் தெரியாம லேயே எங்கெல்லாமோ வலித்திருக்கிறது. குண்டுசியால் உடலெங்கும் துளையிடுவ தையொத்து ஆடிப் போயிருக்கிறது மேனி. இராமச்சந்திரன் ஊரிலேயே இருக்கி றான் என்ற விடயம் தான் எனக்குப் பெரு த்த ஆறுதல். அடிக்கடி தொலைபேசியில் ஊர்க் கதைகள் ஒவ்வொன்றாய் சொல்லிச் சிரிப்பான்.
LDTuum eup 600TT 6, g5! Gut 600TLIT LQu வெரட்டிட்டானாம். கிளியக்கா யாரோடோ ஒடி போயிடுச்சாம். பவானி வயசுக்கு வந்துடுச்சாம். டையப் போடப் போறாராம்.
மாரியப்பு தாத்தா மண்
இப்படி ஏகப்பட்ட கதைகள். கடைசியாய் சென்ற கிழமையில் ஒரு நாள் நெடுநேரமாய் கதைத்துக் கொண் டிருந்தான். நேரில் பேச வேண்டும் எனக் கூறியதாய் ஞாபகம்.
எதற்காக அவன் என் வீட்டினருடன் கோபித்திருப்பான்...? எனக்காகவேனும் யோசித்திருக்கக் கூடாதா..?
பலமுறை முயற்சி செய்தும் போனில் அவனைப் பிடிக்க முடியவேயில்லை.
எது எப்படிப் போனாலும் இராமச்சந்திர நம்பிக் தூய்மையான
னிடம் நான் கொண்ட நட்பை.
அந்தத் நேசிப்பை இழக்க விரும்பவில்லை.
65) 85 66) U., , ,
நாலுநாள் லிவுடன் ஊருக்குக் கிளம்பு கிறேன். வழியெல்லாம் இராமச்சந்திரனு
டன் நான் கழித்த இனிமையான தருண ங்கள் நிழலாடிய படியே..!
அம்மா ஆயிரத்தெட்டுக் கதைகள் சொன்னாள். அவனுடன் பேசாதே என் றாள். அவனில் நிறைய மாற்றம் இருப்ப தாய்ச் சொன்னாள். 'திடீரென வீட்டை விட் டுப் போய்விட்டான் அரை லூசு என்றாள்.
என் தங்கைக்கும் நல்ல ஏச்சு, 'ஊர் கெட்டுக் கிடக்கு. அனையெல்லாம் இனி வீட்டிற்குள் விடக்கூடாது. நீயும் பல்லைக் காட்டிக் காட்டி அவனுடன் பேசத் தேவை யில்லை. " அம்மா காரசாரமாய் தங்கை யைத் திட்டினாள்.
நான் ஒன்றுமே பேசாமல் இராமச்சந்தி ரன் வீட்டுக்குப் போனேன்.
டி.வி. பார்த்துக் கொண்டிருந்தவன் கீழே குனிந்து கொண்டான். நான் அவனது முகத்தாடையை வேகமாய் என்னை நோக்கித் திருப்பி,
“நாயே. இத்தனை வருஷமாப் பழகிட்டு இப்படியா செய்வ.? என் அம்மா உனக்கும் அம்மா மாதிரித் தானேடா..? சனியனே சாகிற வரைக்கும் உன் நட்பு இருக்கும்னு நினைச்சேனே...!"
"நானும் அப்படி நினைச்சதாலத் தான் இப்படிப் பண்ணினேன்.”
புரியாமல் அவனைப் பார்த்தேன்.
“என்னடா சொல்லுற?"
அலுமாரிக்குள் நோண்டித் தேடி எடு த்து ஒரு கடிதத்தை என்னிடம் தந்தான்.
அதில், “எங்காவது என்னைக் கூட்டி ட்டு போயிடு. இல்லாட்டி செத்துடு வேன்.” என்று என் தங்கையின் கையெ ழுத்துத் தெளிவாய் இருந்தது.
மல்லிகை ஏப்ரல் 2011 * 35

Page 20
-ஆனந்தி
ஒட்டாமலும், பிரிந்தும் போயிருக்கிற தசாதரம் குறைந்த, அன்பு வற்றிப் போன, சமூக உறவுகள் நடுவே, உயிர் வார்ப்பான உண்மை ஒளியைத் தேடி, துளசிக்குக் கண் திறந்து கொண்டிருந்த நேரமது. சாட்சி பூர்வமாகக் கண்முன் தெரியும் வாழ்க்கைத் தரிசனங்கள் நடுவே, எடுபடாமல் கரை ஒதுங்கிப் போன அவளது மெய்யான இருப்பு நிலை கொண்ட அவளின் உணர்வுகள் ஒரு புறம், அதையே மையமாக வைத்து, நிலை மாறாத அவளின் தடங்கள், இன்னும் வயதுக்கு வராத அரும்பு மனம் கொண்ட சின்னஞ்சிறு குழந்தைப் பெண்தான் அவள். வாழ்வின் கறைகள் ஏதும் படியாத, நிச்சலமான வெள்ளை உள்ளம் அவளுக்கு.
வெறும் விளையாட்டு நினைப்புகளைத் தவிர, பிரிந்து போய் சேறு பூசிக் கொள்கிற மாதிரி வேறு உலகமிருக்கவில்லை. எனினும் வளர்ந்து, பூச்சாண்டி காட்டுகிற நடைமுறை உலகின் கண் முன்னே, அவளின் நிலைமை வ்ேறு. அவர்கள் சொன்னார்கள். அவள் இப்போது குழந்தையில்லை. நினைத்தபடி ஒடவும் வரம்புகளைக் கடக்கவும். அவளை இயங்க விடாமல் தடுத்தது ஒரு முள்வேலி.
ஏனென்றால் அவள் நிலைமை அப்படி. அப்பொழுதே அவள் நல்ல வளர்த்தி. எக்கச்சக்கமாக ஏகப்பரப்பில் சதை போட்டிருந்தது. அவள் சீக்கிரமே வயதுக்கு வந்து விடுவாளாம்! இந்நிலையில் காற்று வெளி சஞ்சாரம் தேவைதானா? அப்போது அவளுக்கு அது தேவையாக இருந்தது. காற்றுவெளியில் பறப்பதற்கு இருகால்கள் மட்டுமல்ல, மனமே தயார் நிலைதான். எப்பேர்ப்பட்ட மனம். அவளுக்கு மனம் ஒன்று இருப்பதாக யார்தான் அறிவார்? இது பெண்ணுக்குச் சோதனையான காலம். இப்போதல்ல, என்றுமே பெண் என்பதால், கழுத்துக்குக் கயிறுதான்.
அந்தக் கயிற்றில், இப்போது அவள் மாட்டிக் கொண்டிருக்க நேர்ந்தது. அதைவிடக் கொடூர கொடுமை. என்னதான் நடக்கட்டும். அவள் பெண் என்பது மாறப் போவதில்லை. அது ஒரு பிறவிச் சாபமாய் அவளின் உயிருக்கே உலை வைத்துவிட்டுப் போகும். அதை அவள் அந்த வயதிலேயே காண நேர்ந்தது.
ஒரு சமயம் பெரியக்கா அபிராமியுடன் கல்லூரியில் ஒன்றாகப் படிக்கிற, அவளின் சினேகிதி வீட்டிற்கு வந்திருந்தாள். மாலை அக்கா தினமும் கல்லூரிக்குப் போய் வரும்
மல்லிகை ஏப்ரல் 2011 & 36
 

வானில், கூடவே அந்த நித்யாவும் வந்தி றங்கும் போது, துளசி வாசலில் நின்று ஆர்வமாக அதைப் பார்த்துக் கொண்டிருந் தாள். வீட்டிற்குள் அடைந்து கிடப்பது, போர் அடித்ததால், அந்தப் புது விருந்தாளி யின் வருகை, அவளுக்கு இனம் புரியாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவள் அக் காவை விட நல்ல நிறம். பூசினாற் போல மெல்லிய உடல்வாகு. பேசும் போது கண் கள் சிரிக்க முகத்திலே, அபூர்வமான ஒளிக்கீற்றுத் தோன்றியது. உள்ளே சென்று நீண்ட நேரமாய் அவளுக்குப் பக் கத்தில் அமர்ந்து கலகலவென்று சிரித்த முகத்துடன் அவள் பேசுவதை நாள் முழு தும் கேட்டுக் கொண்டிருக்கலாம் போல தோன்றியது.
அவள் வெளிப்படையாக விகல்பமி ன்றி, எல்லோருடனும் சகஜமாகவே பழகி னாள். அந்நியத்தன்மை விட்டுப் போன, இந்த நெருக்கம், அவளுக்கு இயல்பான ஒரு சாத்வீக குணமாய் எல்லோரை யும் வசீகரித்தது. அதிலும் குறிப்பாகத் துளசிக்கு அவளது இந்த நெருக்கம் அப்போதைய மனோநிலையில் பெருஞ் சந்தோஷத்தை யும் திருப்தியையும் அளித் தது. அவள் நித்யா அருகிலேயே வெகுநேர மாய்த் தன்னை மறந்து நின்று கொண்டிருந்தாள். அவள் உரும்பிராயிலிருந்து வந்திருப்ப தாக அக்கா கூறினாள். ஒரு கிழமை வரை அவள் அங்குதான் நிற்கப் போகிறாள். அரிக் கன் லாந்தர் விளக்கொளிதான் அப்போ தெல்லாம். இன்னும் அவர்களின் ஊருக்கு மின்சாரம் வரவில்லை. இருந்தாலுமென்ன. துளசியின் கண்களுக்கு முன்னே, அக்கிரா மம் முழுவதுமே, ஒளி வார்ப்பாகக் களை கட்டி நிற்கிற ஒரு சொர்க்க பூமி தான்.
அவளுக்கு அந்தக் கிராமத்தின் இனிய தடங்கள் மிகவும் பழகிப் போனவை. அதன் இயல்பான பெருமைகளோடு வாழத் தெரிந்த, பளிங்கு மனதைக் கொண்டிருக் கிற ஒரு பாமரச் சிறுமி அவள். இதை யாருமே கண்டு கொண்டதாகத் தெரியவி ல்லை. அவள் மூச்சோடு மூச்சாய் ஒன்று பட்டிருந்த அவளுடைய அழகிய அந்தக் கிராமமே, அவளில்லாமல், அல்லது ஒழி ந்து போன காட்சித் தடங்களுடன் வெறுமை கொண்டு நிற்பதுபோல் பட்டது.
அதனோடு ஒன்றுபட்டு உயிர் கலந்து விளையாடித் திரிந்த காலம். செல்லரித்துப் போன ஒரு கனவு போலாயிற்று. இப்போது அவள் வீட்டைவிட்டு வெளியே வருவது கூட இல்லை. சாமத்தியப்படுகிற வய தென்று சொல்லிக் கட்டிப் போட்டுவிட் டார்கள். இந்தக் கட்டிலிருந்து, மீண்டு வந்த மாதிரி ஒரு நிலைமை இப்போது, நித்யா வின் வருகையால், மனம் துயரம் விட்டுச் சிலிர்த்துக் கொண்டிருப்பதாய், உணர்வு தட்டிற்று. அக்காவும் அவளுமாய் இரவு முழுக்க ஒரே அரட்டைதான். அவள் பேசும் போது, துளசி மிகவும் உரிமையோடு, அவள் தோள்மீது சாய்ந்து, பாதித் தூக்கத் தில் விழிப்பது போலிருந்தாள். கனவிலே ஒரு தேவசஞ்சாரமாய், அவள் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. மடை திறந்த வெள்ளம் மாதிரி, அவள் உணர்ச்சிபூர் வமாய் வாய் ஓயாமல் பேசியபடியே இருந் தாள். மங்கிய விளக்கொளியில், நைட்டி யுடன், அவள் ஒரு மிருதுவான பட்டுத் தேவதை போல், தோன்றினாள். அவள் மடியில் சாய்ந்து படுத்தவாறே, சலனமின் றித் துளசி, அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். நித்யா தன் விரல்க
மல்லிகை ஏப்ரல் 2011 * 37

Page 21
ளால், அவளின் தலைமுடியைக் கோதி ஸ்பரிஸிக்கும் போது, அவளுக்கு அடி யோடு உலகமே மறந்து போனது. அவள் கண் மயங்கிய நிலைமையைப் பார்த்து விட்டு, அபிராமி கூறினாள்.
"இப்பதான், இவள் முகத்திலை மகிழ்ச் சியை நான் பார்க்கிறன். வீட்டிற்குள் அடை ச்சு வைக்கிறது, இந்த வயசிலை ரொம்பக் கொடுமையில்லையா?”
"ஏன் அப்படிச் செய்யினம்?"
"இவள் அதீத வளர்த்தி. கெதியிலை பெரிசாகி விடுவாளாம். அதுதான் இந்த விலங்கு"
"நல்ல வேடிக்கை தான். இப்ப எல் லாத்தையும் அனுபவிக்கிற வயசிலே, நான் கையோடு இவளைக் கூட்டிக் கொண்டு போறன்"
"உது நடவாது, அப்பா உடன்பட LoTLLITsi.”
"ஏன்? எதற்காகவாம்?"
"உனக்குத் தெரியாது. எங்கடை சமூக நிலை, துளசியை உன்னோடு அனுப்பி னால், ஊரிலை ஒரு மாதிரிக் கதைப்பி னம். அப்பா அதுதான் யோசிப்பார்"
"நான் அவரோடு கதைக்கிறன்"
அவள் தர்க்கரீதியாக, அப்பாவோடு கதைத்து வென்ற பின், துளசி அவளோடு உரும்பிராய் போவதென்று முடிவாயிற்று. அதன் பிறகு துளசிக்குக் கால்கள் நிலை கொள்ளவில்லை. அவளுடைய உலகம் வாழ்வின் கறைபடியாத, ஒரு புண்ணிய பூமி. மானஸிகமாய், அதனோடு ஒன்றுபட்டு வாழ்வதே, இயல்பாக இருந்தது அவளு
க்கு. ஊருக்குப் பயந்தால், வாழ்ந்த மாதிரித் தான். வாழ்க்கையென்பது எங்கேயோ துருவ விளிம்பில் நிற்கிறது. மூச்சு விடாமல் துரத்துகிறது, பெண்ணென்ற ஒலி. அதன் துரத்தலை உணர்ந்தவாறே உரும்பிராய் க்கு வந்து சேர்ந்தாள் துளசி. இந்தமுறை தீபாவளிக் கொண்டாட்டம் கூட அங்கு தான். நித்யா கையோடு அதற்கான உடுப்புக் களை எடுத்து வந்துவிட்டாள். வெறும் பரு த்தியிலான பாவாடை சட்டை மட்டும் தான். அப்பா அதற்கு மேல் போகமாட்டார், வச தியில்லை எதுவாயிருந்தாலென்ன. துள சிக்கு எல்லாம் ஒன்றுதான். அந்த வயதி லும் மனசுதான் முக்கியம். அது சுயாதீன மாக இயங்கினாலே போதும். அவள் அவ ளாகவே இருக்க வேண்டும். கரைகளற்ற வானம், அவள் கைக்கு வந்தாலே போதும்.
உரும்பிராய் மண்ணிலே வானம் முட்டிக் கொண்டு நின்றது. அவன் சுதந் திரமாக, நித்யாவுடன் கைகோர்த்துக் கொண்டு, எல்லா இடமும் போய் வரத் தொடங்கினாள். இதற்கு உடல் ஒரு தடை யல்ல. அவளுக்குத் தெரியும், வானம் எங் கேயிருக்கிறதென்று. மனிதர்கள் குறுக்கீடு இல்லாத வரை, வாழ்க்கை அவள் கைக ளில் மட்டுமல்ல. மனதிலும் ஒரே குளிர்ச் சித் தொடராய் அது பிடிபடும்.
இங்கு வந்த பிறகு நெருடல் மிகுந்த உறவுகளே மறந்து போயின. காலில் வில ங்கு அறுபட்டுப் போன மாதிரியும் இருந் தது. ஒருநாள் நித்யா கேட்டாள்.
"இப்ப உனக்குச் சந்தோஷம் தானே?”
"எல்லாம் இஞ்சை இருக்குமட்டும் தானே. அங்கை திரும்ப வீட்டை போறதை நினைச்சால், வெறுப்பாக இருக்கு"
மல்லிகை ஏப்ரல் 2011 & 38

"நீ ஒன்றும் போக வேண்டாம்"
"அதெப்படி? அதுவும் எத்தனை காலத் திற்கு?"
“எல்லாம் நான் பார்த்துக் கொள்ளுறன்"
தீபாவளி முடிந்த பிறகு, அவளைக் கூட்டிக் கொண்டு போக அப்பாவே நேரில் வந்துவிட்டார். அவர் இரு தலைமுறை களைத் தாண்டிய, அந்தக் காலத்து மனி தர். கட்டுப்பாடு மிக்க நடைமுறை வாழ்க் கையில், அபார நம்பிக்கை கொண்டிருப்ப வர். அக்கா மூலம் விலாசம் அறிந்து, அவர் அங்கு வந்து சேர்ந்த போது, நித்யா தான் அவரை எதிர்கொண்டாள். அவளுக்கு இரு சகோதரிகள். மூத்த சகோதரிக்கு வீட்டிலே கல்யாணத்திற்காக வரன் பார்த்துக் கொண்டிருந்த நேரம். நித்யாவின் அப்பா குமாரசாமி, ஸ்டேசன் மாஸ்டராக இருந்து ஒய்வு பெற்றவர். அவருக்கு வீட்டிலே தங் கியிருந்து, துளசியுடன் மனம் விட்டுக் கதைப்பதற்குக் கூட நேரம் கிடைப்பதி ல்லை. நித்யாவின் அம்மாவுக்கு துளசியை நன்கு பிடித்துவிட்டது. வந்த கொஞ்ச நாளி லேயே அவள் அவர்களின் வீட்டுச்செல்லப் பிள்ளை போலாகியிருந்தாள். எதிர்மறை யாக அப்பா வந்து சேர்ந்ததும், மனதில் பயம் அதிகரித்தது. அவரோடு வீட்டிற்குப் போக நேர்ந்தால் மீண்டும் சிறை வாசம் தான். வானம் அவளின் இருப்பை விட்டுத் தொலைந்து போகும். இப்படித் தொலை ந்து போவதற்கே தன்னுடைய வாழ்க்கை இருப்பதாக அவள் பயம் கொண்டாள். ஒரு பெண்ணாகப் பிறந்துவிட்ட பாவத்திற்காக, இப்படியே கழுவாய் சுமந்து சாக வேண்டி யதுதான் என்று தோன்றியது.
அப்பா வந்த போது, அவள் நித்யாவின் முதுகிற்குப் பின்னால், ஒளிந்து நின்றிருந் தாள். அவளின் மனநிலையை அறிந்து கொண்டவள் போல், அப்பாவின் முகம் பார்த்து நித்யா துணிச்சலோடு கூறினாள்.
"துளசி எங்களுடனேயே இருக்கட்டும். அவள் சந்தோஷம் முக்கியமல்லே’
"இல்லை அறிவுபூர்வமாகச் சில விட யங்களை நாங்கள் யோசிக்க வேண்டி யிருக்கு. இன்னும் கொஞ்ச நாளிலை, சாமத்தியப் படப் போறாள். எப்படி விட இயலும்? இவ்வளவு நாளும் இருக்கவிட் டதே, பெரிய காரியம். இப்ப நான் இவ ளைக் கூட்டிக் கொண்டு போகாவிட்டால் என்ன நடக்கும்? வீண் அவப்பழிதான் மிஞ்சும்’
'ஆர் மீது..?”
"எங்களைக் குற்றம் சொல்ல மாட்டி னமே. சரி பேச நேரமில்லை. நீ வெளிக்கிடு துளசி"
அவர் யாருக்குப் பயப்படுகிறார்? அது சமூகம் தானென்றால், அவர் குற்றவாளி யேயில்லை. ஒரு பாரம்பரியமான சமூக ஒழுக்கத்தைக் கட்டிக் காப்பதற்கே, அவர் இப்போது போட்டுக் கொண்டிருக்கிற வேஷமும் கூட. இதையெல்லாம் நினைத் தால், மனம் தாங்கவில்லை. ஒன்பது வயது கூட நிரம்பாத, மிகவும் சின்னப் பெண்ணான துளசியைப் பொறுத்தவரை, அப்பாவின் இந்த அடிமட்டக் கருத்து, ஒரு பாரதூரமான விடயம் தான். நித்யா எவ்வளவோ வாதாடிப் பார்த்துவிட்டாள்.
மல்லிகை ஏப்ரல் 2011 $ 39

Page 22
கடைசியில் அவர் கட்சியே ஜெயித்தது. இதிலே யாருக்கு வெற்றி என்று புரியவி ல்லை. வெற்றி தோல்வி முக்கியமல்ல. மனதின் உணர்வுகள் தான் முக்கியம். அப்பாவுக்கு இது எங்கே புரியப் போகிறது. அவருடன் புறப்படும் போது, துளசி மனம் நெகிழ்ந்து, பெரிதாக அழுதுவிட்டாள்.
வீட்டிற்கு வந்த பிறகு, வெளியே தலை காட்ட முடியவில்லை. வீட்டிலேயிருந்து, வேலை பழகு என்று, அப்பா கண்டிப்பாகக் கூறிவிட்டார். அதற்கான காலமிது. அவள் பெண்பிள்ளை என்பதால் சராசரி ஆணைப் போல, அவளுக்கு வாழ்ந்து அனுபவிக்கிற உரிமைகளெதுவுமிருக்கவில்லை. இந்த வயதில் கூட, அவள் சுதந்திரமாக வெளியே போனால், சமூகம் குற்றக் கண் கொண்டு பார்க்கும். அவளுக்கோ காற்றுச் சஞ்சார மாக உலகைப் பார்க்க வேண்டும். அப்படி முன்பு சுற்றித் திருந்தவள் தான். இப்பொ ழுதோ அவளின் கால்களின் விலங்கு, அப்பாவின் கைகளில், ஒருநாள் அதை அறுத்துக் கொண்டு போக, அவள் தயாரா னாள். அப்பாவிடம் மன்றாட்டமாகக் கேட்ட பிறகே, விடை கிடைத்தது. அவள் நெடுநா ளாய் போய்வந்த ஓர் உறவினர் வீட்டிற்கே, தன்னிச்சையாகப் போகக் கிளம்பினாள். அவள் வெளியே வந்து, எவ்வளவு நாளாகி விட்டது. ஊருக்குள் புதிதாய் போவது போல், தோன்றியது. போகும் வழியில், எதிர்ப்பட்டவர்களெல்லாம், அவளை வித்தியாசமாகப் பார்த்து, மேய்ந்து விட்டே போனார்கள். சித்தப்பா வீட்டில் வரவேற்பு எப்படி இருக்குமோ தெரியவில்லை.
அவரின் வீடு நல்ல குளிர்ச்சியாக இருந் தது. நீண்ட வழிக்கு, ஒரே கமுகும் தென்
னையுமாய் ஒரே சோலையாக இருந்தது. அதன் குளிர்ச்சியை அனுபவித்தவாறே, அவள் பின்புறமாகப் போய், அடுக்களைப் படியேறி வரும் போது, ஒரு குரல் கேட்டது.
'வாரும் உரும்பிராய் பெட்டை, வந்து உருளைக்கிழங்குக்குத் தோலுரியும்’
குரல் வந்த திக்கை நோக்கி, அவள் மனவருத்தத்தோடு நிமிர்ந்து பார்த்தாள். அக்குரலுக்குரியவன் வேறு யாருமில்லை. அவ்வீட்டுச் சமையல்காரன் நவரத்தினம் தான். அவன் நீண்ட காலமாக அங்கு சமையல்காரனாக இருக்கிறான். ஏற்க னவே பழகிய முகம் தான் அவளுக்கு. இருந்தாலுமென்ன, பழகிய நினைவு மற ந்து போய், அவன் வாயில் ஏன் இந்த இட றல் மொழி? அப்படி என்னதான் பெரிதா கச் சொல்லிவிட்டான்? அவள் யோசித்தாள்.
"நான் உரும்பிராய் பெட்டையாமே? நான் அங்கு போய் வந்ததை, இவன் எப்படி அறிந்தான்? யார் சொல்லியிருக்கக் கூடும்? இதை ஒரு கேவலமான சந்தி சிரிக்கக் கூடிய புதினமாக எடுத்து, ஊரெல்லாம் கதை பரவியதற்கு, எனக்கு இந்த அடை மொழியே போதும். நான் உரும்பிராய் போய் வந்தது அவ்வளவு பெரிய குற்றமா? என்னை ஏன் இப்படி வேர் அறுத்து விடுகினம். நான் பெட்டைச்சி என்பதால், இதுதான் நடக்குமோ?
அவளுக்குப் பெரும் அவமானமாகப் போய்விட்டது. மிகச் சின்ன வயதிலேயே மனதால், உணர்வுகளால், காயப்பட்டுச் சிலுவை சுமக்கிற மாதிரி, அவள் வெகு வாக நொந்து போனாள். நவரத்தினத்தின்
மல்லிகை ஏப்ரல் 2011 $ 40

முகத்தை நேர் கொண்டு பார்க்கவே மனம் கூசியது. அவள் உரும்பிராய் போய் வந்த விவகாரம் பெரும் பிரச்சினைக்குரியதாகி, ஊரையே எரித்துக் கொண்டிருப்பது போல், அவள் உணர்ந்தாள். அப்படி அவள் போன விவகாரம், ஒரு பகிடிக் கதையாகித் தன்னை வதம் செய்து, நோகடிக்கவே தனக்கு அந்த உரும்பிராய்ப் பெட்டை என்ற சந்தி சிரிக்கும் அவப் பெயர் நேர்ந் திருப்பதாக அவள் மிகவும் மனம் வருந்தி நினைவு கூர்ந்தாள். அந்த அனுபவச்
சூட்டைப் பெற்றுக் கொண்ட பின், வாழ் க்கை மீதான நம்பிக்கையே, அடியோடு வேரனுந்து போன மாதிரிப் பெண்ணாகப் பிறந்துவிட்ட பாவம், அதன் சாபத்தீட்டுகள், இது ஒன்று மட்டுமல்ல, இன்னும் வரும். காற்றுவெளி காணாத அந்தக் கானல் பூமியில் தன்னைத் தொலைப்பதற்கே, தனக்கு இந்த வாழ்க்கை விடிந்திருப்பதாக, ஒளி காணாத அதன் சுவடுகளின் நெருப் புக் குடித்துத் தான் அழிந்து போவதே நிச்சயமென்று, அவளுக்கு உறைத்தது.
/ー
மல்லிகை ஆண்டுச் சந்தாதாரதராகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
-།༽
ஆண்டுச் சந்தா 600/- தனிப்பிரதி 40/-
96öI0 LD6ùĩ 200/-
ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு:
Dominic Jeeva 072010004231, Hatton National Bank. Sea Street, Colombo - 11.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominic Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. STSišsLL6o6T espLU6Jstassi Dominic Jeeva. Kotahena, P.O. 6T60Tš (sflüSLG அனுப்பவும். தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
மல்லிகை ஏப்ரல் 2011 季 41

Page 23
சிட்னியின் படைபுலகம்
-மேமன்கவி
சிங்கள கலை இலக்கியச் சூழல் என்பது பரந்தது. கணிசமான தொகையினர் அம்மொழியின் சூழலில் கலை இலக்கியப் படைப்பாளிகளாக தம்மை வெளிப்படுத்தி வருகிறார்கள். நீண்ட காலமாக சிங்களப் படைப்பிலக்கியங்கள் தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அத்த கைய முயற்சிகள் வழியாக நம்மால் பல பழைய, புதிய சிங்கள மொழி படைப்பாளிகளை அறிமுகப் படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது. அதேவேளை : ஒரு பாரிய அளவான முயற்சியாக அல்லாவிடினும், : சில அடிப்படை ரீதியான சில தகவல்கள் சொல்லும் சிங்கள கலை இலக்கிய வளர்ச்சிப் போக்கை பற்றிய அறிமுகமும் கைட் நமக்கு தமிழில் கிடைத்திருக்காத "நிலையில், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட படைப்புகள் வழியாக மட்டுமே அம்மொழி படைப்பாளிகளை நாம் அறிந்து வைத்திருக்கிறோம். அவ்வாறான முயற்சியின் வழியாக நமக்கு அறிமுகமானவர் தான் சிட்னி மாகளப் டயஸ்,
சிட்னி ஆசிரியராக பணியாற்றியதோடு, பல சமூக களப் பணிகளை ஆற்றிக் கொண்டும் தன்னை ஒரு படைப்பாளியாக வளர்த்தெடுத்து வருபவர். குறிப்பாக இ சிறுவர் இலக்கியத் துறையில் மிக தீவிரமாக இயங்கி வருபவர். கணிசமான சிறுவர் இலக்கியங்களை வெளியிட்டவர். சிறுவர்களின் நலனுக்கான பல அரச சார்ப்பற்ற நிறுவனங்களுடன் பணியாற்றிவர். தற்பொழுது Thothanna the Centre for Children and Youth Development எனும் நிறுவனத்தின் மூலம் சிறுவர் நலன்களுக்கான பல பணிகளில் ஈடுபட்டு வருவதோடு, பல சிறுவர் இலக்கிய நூல்களையும் வெளியிட்டு வருபவர். இவ்வாறான பல்வேறு தளங்களில் இயங்கி வரும் சிட்னியின் பல சிறுவர் நாஸ்கள் தமிழில்
والثقافي المؤلفات الأضلات .
மல்லிகை ஏப்ரல் 2011 : 42
 
 
 
 
 
 
 

மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது சிறுகதைகள் இரு தொகுப்புகளாக தமிழில் வெள' வந து ள என கிங்களத் தில் வெளிவந்த "எந்தரி நீதிய’ எனும் சிறுகதைத் தொகுப்பு 2008
ஆம் ஆண்டு தோதென்ன வெளியிடாக 'ஊரடங்குச் WF சட்டம்' எனும் தலைப்பில் எம்.சி, ரஸ்மின், மல்லிகாதேவி ஆகியோரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. அடுத்து சிங்களத்தில் வெளிவந்த "பவாசரனா' எனும் தலைப்பில் வெளி வந்த சிறுகதைத் தொகுப்பு 2009ஆம் ஆண்டு தோதென்ன வெளியிடாக "தொடரும் உறவுகள்’ எனும் தலைப் பில் திக்குவல்லை கமாலின் மொழி பெயர்ப்பில் வெளிவந்துள்ளது. இவ்விரு தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளின் வழியாக நாம் சிட்னியின் படைப்புல கத்தை தரிசிக்க முடிந்திருக்கிறது.
சமூகப் பிரக்ஞை மிக்க ஒரு கலை இலக்கியப் படைப்பாளியின் படைப்புக வில் கற்பனையின் பங்கு மிக குறை வாகவே இருக்கும். அதற்கு மேலாக தான் கண்ட யதார்த்தமே அதிக அளவில் கலந்திருக்கும். அப்படைப்பு கள் யதார்த்ததின் தெறிப்புகளாக பதிவுகளாகவே வெளிப்படும். அதே வேளை அந்த யதார்த்த த்தில் உள் ஒளிந்து கொண்டிருக்கும் முரண்பாடு களை போராட்டங்களை தன் படைப் பாக்க ஆளுமையினூடாக வெளிப்படுவ தில்தான் ஒவ்வொரு படைப்பாளியின் தனித்துவம் வெளிப்படும்.
யதார்த்தம் , ,
சிங்கள கலை இலக்கியங் களை பொறுத்தவரையும் அதன் சூழலில வணிக எழுத்து என்ப தும், வெறும் கற்பனை ஆக்கங் கள் இருக்கத்தான் செய்கின்றன. அதே வேளை காத்திரமான கலை இலக்கிய முயற்சிகளில் மிக சிறப்பாக வெளிப்படுகிறது. சிட்னியும் தன் படைப்புலகத்தின் ஊடாத தான் சார்ந் திருக்கும் சமூகத்தின் யதார்த்ததை மிக துல்லியமாக தன் படைப்புகளில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சிட்னி பரவலாகச் சிறுவர் இலக்கிய கர்த்தாவாக பரவலாக அறியப்பட்டிருந் தாலும், அவர் தன் சிறுகதைகளில் முன் வைத்திருக்கும் யதார்த்தமானது பிறர் சொல்லத் தயங்கும் அல்லது சொன் னோல் தான் சார்ந்த சமூகம் வழியாக எதிர்கொள்ளும் எதிர்ப்பைப் பற்றிக் கவலை கொள்ளாது முன் வைக்கப்ப டும் யதார்த்தம் எனலாம்.
இவ்வாறாக சிட்னி தன் படைப்பு லகத்தினூடாக காட்டும் பல்வகையா னது. தமிழில் சிட்னியின் கதைகள் அடங்கிய தமிழில் வெளிவந்த இரு தொகுப்புகளிலும் சிறப்பான மொழி பெயர்ப்பில் தரப்பட்டிருந்தாலும், இவ் விரு தொகுப்புகளிலும் அடங்கியுள் கதைகள் எந்தெந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளன என்ற தகவல்கள் கொடுக்கப்படவில்லை நாங்களே அக் கதைகளின் வழியாக யூகித்து கொண் டால் ஒழிய அக்கதைகள் எழுதப்பட்ட காலகட்டங்களை நம்மால் அறிந்துக்
மல்லிகை ஏப்ரல் 2011 + 43

Page 24
கொள்வதில் சிரமத்தை எதிர் கொள்கி றோம். ஏனெனில் இந்த நாடு கடந்து வந்த காலகட்டங்களில் ஒரே விதமான நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நடந்தேறி இருக்கின்றன. உதாரணமாக வேலை நிறுத்த போராட்டங்கள்.ஆகவே ஒவ் வொரு கதையாக்கத்தில் அக்கதை எழுதப்பட்ட காலகட்டத்தை குறிப்பிட்டி ருக்கலாம். சிட்னி தன் படைப்புலக சித் திரிப்பில் எத்தகைய உலகங்களை காட்டுகிறார். என்பதை இனி பார்ப்போம்.
நமது தேசம் கடந்து வந்த கால கட்டத்தில் இனம், வயது, பால்நிலை என சகல பேதங்களை கடந்து, எல்லா இன மக்களும் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும், இன்றைய ஜனநாயக அரசியல் கலாசாரம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் சித்திரிக்கும் வகை யில் அமைகின்றன சிட்னியின் ‘ஊரடங் குச் சட்டம்’ ‘தேசப்பற்றாளன்” “பெரிய ஸேரின் தேர்தல்” “பறை ஒலி” ஆகிய கதைகள்.
நான் ஏலவே குறிப்பிட்டது போல் இக்கதைகளுக்கான காலகட்டங்கள் குறிப்பிட தவறினாலும், “ஊரடங்குச் சட்டம்’ எனும் கதை 1983 இனக்கல வரத்தை கொண்டு எழுதப்பட்டிருக்கி றது என அக்கதையின் மூலம் தெரிய வருகிறது. அத்தகைய சித்திரிப்புடன் அக்கதை எழுதபட்டிருக்காவிடின், கடந்த காலத்தில் இந்த நாடு பல ஊரட ங்குச் சட்டங்களை கண்டு வந்த தால் அக்கதையில் சொல்லப்படும் ஊரடங் குச் சட்டம் எக்காலத்திற்குரியது என்ற
கேள்வி நம்மில் எழும். அவ்வாறுதான் இந்த நாடு பல வேலை நிறுத்தப் போரா ட்டங்களை கண்டிருக்கிறது. அத்த கைய ஒரு போராட்டத்தை பற்றி பேசுகி ன்ற அதனால் ப்ாதிக்கப்படும் ஒருவனின் குடும்ப நிலையை பேசும் கதையாக 'அவனது கிறிஸ்மஸ்’ எனும் கதை அமைகிறது. அக்கதையின் நாயகன் ஜோசப் பெரேரா மேற் கொண்ட வேலை நிறுத்த த்தில் அவனது வேலைக்கு வேட்டு வைக்கப்பட்டதே அவனது குடும்ப கஷ்ட நிலைக்கு ஆளாவதும், அக்குடும்ப சுதந்திரமாகவும் மகிழ்ச்சி யாக கிறிஸ்மஸ் கொண்டாட முடியாத நிலை என காட்டப்படுகிறது. சொல் லப்பட்ட விடயம் யதார்த்தமானாலும் அந்த வேலை நிறுத்த போராட்டத்தை பற்றி விபரமாக சொல்லபடாது மட்டு மல்லாமல், ஒரு தொழிற்சங்கத்துடன் இணைந்துதான் அவன் அந்த வேலை நிறுத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் அதனால் அவனது வேலை பறி போயி ருக்க வேண்டும். ஆனால் அக்கதையில் அவன் மேற்கொண்ட வேலை நிறுத்தம் என சொல்லவதன் மூலம், அவன் மட் டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபாட் டான் என்றதாக அர்த்தம் ஆகுகிறது.’ ‘தேசப் பற்றாளன்” “பறை ஒலி’ ஆகிய கதை கள் அன்றைய நம் தேசம் இருந்த நிலை யில் எல்லோருமே சந்தேகக் கண்ணு டனே நோக்கப்பட்டார்கள் என்பதாக அதில் ஒவியன் ஆனாலுமென்ன? கவி ஞன் ஆனாலுமென்ன? அதிலும் பெரிய அவலம் என்னவென்றால் கவிஞனின் கவிதைப் புத்தகப் பார்சலே குண்டு என்று வெடிக்க வைக்கப்படுவதுதான்.
மல்லிகை ஏப்ரல் 2011 * 44

அடுத்து பொருளாதார நெருக்கடிக்கு முன்னால் கொடுக்கப்பட்ட வாக்கினை காப்பற்ற முடியாத நிலைமை, மற்றும் மதமும், அது சார்ந்த மதிப்பிடுகள், கொடுக்கப்படும் கெளரவம் போன்றவை கள் பின் தள்ளப்பட்டு விடுகின்றன என்பதை நாம் மேலே குறிப்பிட்ட "அவனது கிறிஸ்மஸ் கதையுடன் சிட்னியின் “துனுமடலாவைத் தேரரின் கதை’ ‘பெரிய சுவாமி அவர்கள் போன்ற கதைகளையும் இணைத்துப் பார்க்கலாம், “அவனது கிறிஸ்மஸ்” கதை ஒரு எழுதுவினைஞரின் வாழ்க் கையில் மதம் கொடுக்கின்ற நெருக்க டியை பேசுகிறது என்றால், “துனுமடலா வைத் தேரரின் கதை’ ‘பெரிய சுவாமி அவர்கள் ஆகிய இரு கதைகள் பெளத்த பிக்குமார்களின் தனிப்பட்ட வாழ்க்கை நிலையை பற்றி பேசுவனவாக இருக் கின்றன. பொதுவாக இந்த நாட்டில் பெளத்த பிக்குமார்களை பொறுத்த வரை சிங்கள சமூகத்தினரால் பெரிதும் மதிக்கப்படுகின்றவர்களாக கெளரவிக் கப்படுகின்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அவர் தம் தனிப்பட்ட வாழ்க் கையில் எதிர் கொள்கின்ற குறிப்பாக பொருளாதாரம் மற்றும் நோய் உற்று தல், பாரம்பரிப்புக்கான துணைகள் அற்ற நிலை போன்றவை சம்பந்தமாக எந்த விதமான அக்கறையும் சமூகம் கொள்வதில்லை என்பதை மிக திறந்த நிலையில் சிட்னி “துனுமட லாவைத் தேரரின் கதை’ ‘பெரிய சுவாமி” ஆகிய இரு கதைகளிலும் பேசி இருக்கிறார்.
சிட்னியின் கதைகள் பெண்ணிய நிலை நின்று பேச முயற்சித்து இருக்
கின்றனவா என தேடும் பொழுது நேரடி யாக சிட்னியின் கதைகள் பெண்ணியம் என்று பேசுவதில்லை. ஆனால், பெண் சார்ந்த பிரச்சினைகளை பற்றிப் பேசி இருக்கிறார் என்பதும் மறுப்பதற் கில்லை. தாம்பத்திய வாழ்க்கை முறை மையில் ஆண் பெண் உறவுநிலைக ளில் முரண்பாடுகள், ஒருவரை புரிந்து கொள்ளாமை என்பதன் விளைவாக குடும்பம் என்ற கட்டமைப்பில் இரு சாரும் எதிர் கொள்கின்ற மனோத்துவ ரீதியாக ஆட்படும் உணர்வு நிலைகளை சிட்னியின் நீண்ட இரவு’ ‘இரண்டாவது உபாயம்’ போன்ற கதைகள் மெல்லி தாக எடுத்து காட்டுகின்றன. அதே வேளை இன்றைய ஆணிய சமூக அமைப்பில் பெண் உடல் வெளி (அதா வது அழகு அழகுயின்மை என்ற மாதிரி யான)யை அளவுக் கோலாக கொண்டு பெண்ணின் இருப்பும் அந்தஸ்தும் கணிக்கப்படுகிறன. கவனப்படுத்துகி றது என்பதையும் சிட்னியின் கதைகள் பேசுகின்றன. இந்த வகையில் “அர்ப்ப ணிப்பு’ ‘லிலாவதி டீச்சர்” ஆகிய கதை களைச் சொல்லாம். இதில் ‘அர்ப் பணிப்பு குடும்பம் என்ற கட்டமைப்பில் அழகு அழகியின்மை எனும் நிர்ணயத் தில் அக்காவின் உடல் வெளி நோக் கப்படுவதன் மூலம், அவனது மண வாழ் க்கை ஈடேறாமல் போனவதும், அத னால் அழகு என கணிக்கப்படுகின்ற தங்கச்சிக்காரியின் மண வாழ்க்கு ஈடேறுவதில் ஏற்படும் தடை, அதற்காக அக்கா செய்யும் தியாகம் என்பதாக கதை நகர்கிறது. அந்த தியாகம் மோசமான ஆண் என்ற தெரிந்த பின்பும் அவனை மணக்க தீர்மானிப்பதுதான்.
மல்லிகை ஏப்ரல் 2011 $ 45

Page 25
அதே வேளை ஆணிய சமூக அமைப் பின் கருத்தாக்கங்கள் பொது வாழ்வில் ஈடுபட்டிருக்கும் (அவை சக பெண்களின் வழியாகவும் இருக்கலாம்) ஒரு பெண் ணின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்க த்தை ஏற்படுத்துகின்றன என்பதை ‘லிலாவதி டீச்சர்’ எனும் கதை பேசுகி றது. முதல் வாசிப்பில் அக்கதை சக ஊழியர்களுடன் இணைந்து சக ஊழிய ரின் வீட்டு கல்யாணத்திற்கு கொடுக்கப் போகும் இணைப் பரிசை பற்றியும் அதற் காக ஒதுக்கு வேண்டிய பணத் தொகை பற்றியும், அதனால் ஏற்படும் நெருக்கடி பற்றி பேசும் கதையாக தெரியும். ஆனால், ஆழ்ந்து அக்கதை பயிலுகின்ற பொழுதுதான் அக்கதை லீலாவதி டீச் சரை முன் வைத்து பெண்களின் இன் றைய நிலை பற்றியும், அவனது உடல் வெளி மீதான சமூகத்தின் சகல மட்டத் தினரின் ஆதிக்கத்தையும் விமர்சன த்தை பற்றியும் பேசுவதாக தெரியும். உதாரணமாக அக்கதையில் வரும் பின் வரும் வரிகள் மேற்குறித்த கூற்றை நிருபிக்கும் வகையில் அமைகின்றன.
‘நல்லதொரு தொழிலைச் செய்வ தற்கான தகுதியும் அவளிடம் இருக்க வில்லை. குறைந்த பட்சம் உருவத் தோற்றத்திலாவது அடுத்தவர் மனதில் இடம் பிடிக்கும் வல்லமையும் அவ ளுக்கிருக்கவில்லை.”
ஏன் லீலாவதி டீச்சரின் உடல் வெளி பற்றிய எடுத்து காட்டிடும் அவ்வரிகளை தொடர்ந்து “தனது கணவனைத் திரு மணம் செய்ததிலிருந்து அவரிடம் வாங்
கிய அடியுதைகளைக் கணக்கிடவே இயலாது”
எனும் இவ்வரிகள் மூலம் இன்றைய சமூக அமைப்பில் பெண் உடல் வெளி மீதான ஆதிக்கத்தை நம்மால் புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால், அதே வேளை இவ்வரிகள் ஆணிய சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்துகிறதோ எனும் சந்தேகத்தை எமக்குள் ஏற்படுத் துகிறது. அதாவது- ஒரு பெண் நல்ல தொரு தொழில் செய்ய குறைந்த பட்சம் பிறரை கவரும் வகையிலான உருவத் தோற்றம் இருக்கவேண்டும் என்ற எதிர் பார்ப்பை எடுத்துகாட்டுவதாக இருக்கி றது. இவ்விடத்தில் லீலாவதி டீச்சர் மீது ஆசிரியர் கொள்ளும் அனுதாபம் பலஹினப்பட்டு விடுகிறது. சிட்னி தானே ஒரு ஆசியராக பணியாற்றிவர் என்ற வகையில் இக்கதையிலும், 'வகுப் பறை வழக்கு’ எனும் கதையிலும், ஆசிரியத் தொழில் ஈடுபட்டிருக்கும் மனித நேய மிக்க பெண்ணோ ஆணோ தம் மாண வர்களின் மீது காட்டும் அக்கறை எத்த கையது என்பதையும் இவ்விரு கதைக ளில் எடுத்துக் காட்டுகிறார்.
சிட்னியின் கதைகளில் பெண்களின் நிலை என்பதை பற்றி தேட முனையும் பொழுது, இன்றைய சமூக சூழலில் பெண்ணினம் எதிர்க் கொள்ளும் தாய்மை சார்ந்த விடயங்களை பேசுகி ன்ற கதைப்பிரதிகளாக நீண்ட இரவு' “இரண்டாவது உபாயம்’ ‘இரண்டு அம் மாக்கள்’ ‘தேவாங்குக் குட்டி”, ஆகிய மூன்று கதைகள் அமைந்துள்ளன. அம்
மல்லிகை ஏப்ரல் 2011 & 46

மூன்று கதைகளிலும் வெவ்வேறு தளங்களில் நின்று தாய்மை நிலை பற்றி சிட்னி எடுத்துரைக்கிறார். "நீண்ட இரவு' எனும் கதையில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாத ஒரு பெண்ணின் நிலையையும் அதனால் அவளது கணவனால் அவள் பார்க்கப்படும் நிலையை எடுத்துக்காட்டிகிறது. அதே வேளை "இரண்டாவது உபாயம்’ கதையோ ‘நீண்ட இரவுக்கு எதிர் மறையான நிலையில் வெளிப்படுகிறது. அதில் கணவன் மனைவிக்கு இடையி லான ஊடலையையும் கூடலையையும் கூட, பொருளாதார காரணிகளே தீர்மா னிக்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றன. "இரண்டு அம்மாக்கள்” கதையோ வீட்டு வளர்ப்பு பிராணியான பூனையால் ஏற்படும் தொல்லையால் ஏற் பட்ட அதன்குட்டிகளை தூர விடுவதும், பின் தாய் பூனையின் ஒலம் கேட்டு தாய்மை உணர்வு பொங்க அவைகளை வீட்டில் அனுமதிப்பதாக கதை முடிகி றது. மிருகமானாலுமென்ன மனிதனாலு மென்ன தாய்மை உறவும் அது சார்ந்த உணர்வும் புனிதமானது என்பதை இக் கதையில் சிட்னி காட்டிச் செல்லுகிறார்.
அதே வேளை இன்றைய பொருளா தார சமூக அமைப்பில் எல்லாமே பணம் கொடுத்து வாங்கப்படும் சூழலில், தாய்மை நிலையும் பேரம் பேசப்படுகி றது என்பதை "தேவாங்குக் குட்டி’ எனும் கதையில் இனங்காட்டுகிறார். வறுமையான சூழலில் கர்ப்பமான கட் டத்தில் விதவையாகிப் போன பெண்ணி டம், அவளுக்குப் பிறக்கப் போகும்
குழந்தை தனக்கு தந்து விடவேண்டும் என்னும் ஒப்ப்பந்தத்தில் ஒரு பணக்கார பெண் பாராமரிக்க, பிறக்கும் குழந்தை விகாரமான மிகத் தோற்றத்துடனும் வலது குறைந்த நிலையில் பிறக்க, இறுதியில் அவளை பாரமரித்த பணக் காரப் பெண் அதனை ஏற்காமல் போக, எத்தகைய பிள்ளை என்றாலும் அது தன் பிள்ளை அதனை வளர்தெடுப்பதே இனி தன் வாழ்க்கை என முடிவுக்கு வரு கிறாள் அப்பெண். அருமையான கதை என்ற பொழுதும் இக்கதையின் தலை ப்பு எனக்கு சற்று இடறலை ஏற்படுத்தி யது. ஏனெனில் இன்றைய காலகட்டத் தில் சமூகத்தில் சில நிலைகளில் இருக்கும் பிரிவினரை குறித்து பயன் படுத்தபடும் சொல்லாடல்கள் தவிர்க் கப்படுகின்றன. உதாரணங்களாக மன நலம் குன்றியோர், பாலியல் தொழிலா ளிகள் அரவாணிகள், வலது குறைந் தோர் இவ்வாறான சமூகத்தினரை குறிக்கக் கடந்த காலங்களில் பயன் படுத்தப்பட்ட சொல்லாடல்கள் தவிர்க் கப்படுகின்றன. அவ்வாறான ஒரு வகுப் பினரான வலது குறைந்தோரை நோக்கி அவர் தம் அங்கக் குறைவுகளை, பழிக் கும் வகையிலான சொல்லாடல் பயன் படுத்தப்படுவதில்லை. ஆனால், மேற் குறித்த "தேவாங்குக் குட்டி’ எனும் கதையின் தலைப்பு அங்க பலஹினத் துடன் பிறக்கும் ஒரு குழந்தையை குறி க்க இச் சொல்லை பயன்படுத்தபட்டி ருக்க கூடாது என எனக்கு படுகிறது.
ஒரு வயது எல்லைக்குப் பின் ஒவ் வொரு மனிதனுக்கும் மரணப்பயம் நிழ
மல்லிகை ஏப்ரல் 2011 * 47

Page 26
லாய் தொடர்கின்ற ஒன்றாக இருக்கி றது. இதைபற்றி தனது கதையான் “மரணம் சித்திரித்து காட்டும் சிட்னி. ‘பிஞ்சுப்பூவின் அந்திமகாலம்’ எனும் கதையில் தனக்கு மரணம் வந்து விட வேண்டும் தன் பிள்ளைக்கு தொல்லை யாக இருந்து விடக்கூடாது என கருதி செயற்பட்டு விரும்பிய வாறே மரணிக் கும் ஒரு தந்தையின் மனோநிலையை சித்திரிக்கிறது.
இனி சிட்னியின் கதைகளிலே எனது கவனத்தை இரண்டு கதைகள் கவர் கின்றன. அவை “தொடரும் உறவுகள்’ ‘பூங்கா காவலனின் காதல் கனவு’ , ஆகிய இரு கதைகளாகும். இவ்விரண்டு கதைகளும் ஆண் பெணு உறவு மற்றும் காதல் என்பவற்றை பேசிகின்ற கதை கள்தான். ஆனால், இது வரை சொல்லப் பட்ட சிட்னியின் கதைகள் மத்திய வர்க்க அல்லது வறுமையில் சிக்கி தவிக்கும் சமூத்தினரை பற்றி பேசி யவை என்ற வகையிலும், பொதுவா கவே சிட்னி எல்லா கதை மாந்தர்களில் எவருமே சுப்பர் ஹீரோக்கள் அல்ல. அவர்கள் பெண்கள்ஆயினும் சரி, ஆண் கள் ஆயினும் சரி. சராசரி நம் முன்னே நடமாடும் எத்தகைய நடத்தைகள் குண இயல்புகள் கொண்டிருப்பார்களோ அவைகளை அப்படியே யதார்த்தம் பிறழ்வாமல் காட்டுவதில் சிட்னி எந்த விதமான தயக்கத்தையும் காட்டவி ல்லை. அதற்கு உச்சமான உதாரணங் களாக நாம் மேற்குறிப்பிட்ட இருகதை கள் வெளிப்பட்டுள்ளன.
'பூங்கா காவலனின் காதல் கனவு’, எனும் கதையில் தான் தன் சக பெண் ஊழியரால் காதலிக்கப்படுவதாக நம் பிக் கொண்டிருக்கும் வரை, பூங்காவின் காவல்காரனான பிரேமதுங்க ,அங்கு வரும் காதல் ஜோடிகளின் நடத்தை களை, சட்டத்தால் அனுமதிக்கப்படாத நிலையிலும், மனிதாபிமான உணர்வு டன் அனுமதிப்பதும், அந்த நடத்தைக ளின் வழியாக கிளர்ச்சி பெறுவதுமாக இருந்த பிரேமதுங்க, ஒருகட்டத்தில் தான் அப்பெண்ணால் தான் காதலிக் கப்படவில்லை என்பதை அறிந்த பின், அங்கு இருக்கும் காதல் ஜோடி களை மிருகத்தனமாக விரட்டுகிறான். தன் காதல் வெற்றி அடையாததனால் உல கில் வேறு யாருடைய காதலும் வெற்றி அடையக் கூடாது என்ற வெறிக்கு ஆளா குகிறான். இக்கதையின் சிறப்பு பிரேம துங்கவின் மனோநிலையில் ஏற்படும் மாற்றங்களை நடத்தையை அழகாக சித்திரிப்பதும், அத்தகைய வர்க்கத்தி னரை (ஒரு வகையில் விளிம்பு நிலை சமூகம்) பிரச்சினைகளை பற்றி யோசித் திருப்பது கவனத்திற்குரியதாகிறது.
அடுத்து “தொடரும் உறவுகள் கதை யில் வரும் பிந்துவா, சந்தர்ப்பவசத்தால் இளம் வயதில் தன் தந்தையயை திரு மணம் முடித்து விதவையாகி நிற்கும் தன் சிறிய தாயார் பிரேமாவதியை தன் வாழ்க் கை துணையாக ஆக்கிக் கொள்கிறான். பிந்துவாவின் இச்செயல் ஒழுக்கவியல் ரீதியாக விமர்சிக்கப்பட லாம். ஆனால், மனித உணர்ச்சிகள் முன்னே அதிலும் பலாத்காரமாக (பிரேமா
மல்லிகை ஏப்ரல் 2011 & 48

வதியை பிந்துவாவின் தந்தை பலாத் தகாரமாக தூக்கிச் சென்று திருமணம் செய்து கொண்டவன்) திணிக்கப்படும் இருப்பு நிலைகள் உடைவது இப்படி தான். பிந்துவாவின் இச்செயலுக்கான ஒழுக்கவியல் விளிம்பு நிலையைச் சார்ந்த மக்களுக்கான ஒழுக்கவியல். இதனை சரியாகவே சிட்னி இக்கதை யில் முன் வைத்திருக்கிறார்.
இதுவரை சிட்னி இரு தொகுப்புகளில் இடம் பெற்ற அத்தனை கதைகளில் செயற்பட்ட பல்வேறு தன்மைகளை பார்த்தோம் ஆனால், ஒட்டு மொத்த கதை களிலும் உள் நின்று செயற்பட்டு கொண் டிருக்கும் ஒர் உண்மையை நாம் அடை யாளப்படுத்திக் கொள்ள வேண்டி இருக் கிறது. இந்த கதைகளை பேசப்படும் சகல பிரச்சினைகளுக்கும் அடி ஆதார மாக செயற்படுவது பொருளாதார சமூக வர்க்க முரண்பாடே ஆகும். பெண்ணின் உடல் வெளியாக ஆகட்டும், தாய்மை
உணர்வாக இருக் கட்டும், காதல் உணர்ச்சி ஆயினும் சரி, அரசியல் ஆயி னும் சரி, இப்படியாக எல்லா நிலைகளி லும் அடி ஆதாரமாக இயங்கி இருப்பது பொருளாதார சமூக வர்க்க முரண்பாடே காரணமாகுகிறது. இதனை சிட்னி ஒரு சில கதைகளில் பகிரங்கமாக பேசினா லும், மிச்சமான கதைகளில் அதை பற்றி பகிரங்கமாக பேசாவிடினும் அதுவே உண்மை. இந்த உண்மையை விரிவாக சிட்னியின் ஒவ்வொரு கதை களையும் ஆழமாக ஆராயும் பொழுது தான் விரிவாக தெரியவரும்.
அந்த வகையில் சமூகத்தில் நில வும் பல்வேறு முரண்பாடுகளை போராட் டங்களை, அவைகளுக்கான காரணமா னதை பகிரங்கமாகவோ முறைமுகவோ, யதார்த்த நெறி பிறழாது தன் படைப் புலகின் வழியாக நம் முன் வைத்திருப் பது மூலம் சிட்னி மாகஸ் டயஸ் தன்னை ஒரு காத்திரமான படைப்பாளி என்பதை நிருபித்திருக்கிறார் எனலாம்.
A. R. R. HAR DRESSERS
89, Church Road, Matakuliya,
Colombo - 15.
Te 3 (0)12527219
liigub õele oli artõi
மல்லிகை ஏப்ரல் 2011 & 49

Page 27
A=====سسس
>བའི་ ం6లాం
-சீரா உதயகுமார்
அந்த வீட்டு முற்றத்தில் அழகான பூமரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. முற்றத்தில் ஒர் ஒரமாக முப்பதிற்கும் குறையாத வாழைமரங்கள். அவற்றுள் சில குலை தள்ளி, தலை சாய்த்து நின்று கொண்டிருந்தன. அழகான பெரிய வீட்டுக்கு அவை எப்பவும் பசுமையுடன் புது சுகமும் செய்து கொண்டிருந்தன.
கால் மேல் கால் போட்டு, உடலை நிமிர்த்தி வைத்து, ஒரளவான சாய்வான கதிரையில் இருந்து தினசரிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார் சோதிடர் வாமதேவன் ஐயா.
அவரைச் சாத்திரியார் என்றால் தான் எல்லோருக்கும் தெரியும். அந்த ஊரில் என்ன அயல் கடந்து அயல் ஊரவருக்கும் அவரை நன்கு தெரிந்திருந்தது. அந்தளவுக்கு அவர் ஒரு விலாசமான மனிதர்.
வாத்தியார் வேலை பார்த்து, இடையிடை சாத்திரமும் பார்த்து ஐம்பத்தைந்து வயதில் ஒய்வெடுத்தவர். இன்று சாத்திரம் பார்ப்பதையே தனது முழுமையான தொழிலாக்கியி ருந்தார்.
ஏழையானவன் ஏழையாகவே இருக்க வேண்டும் பிச்சை எடுக்கிறவன் தொடர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் தொழிலாளி எப்பொழுதும் தொழிலாளியா கவே இருக்க வேண்டும். நாலும் தெரிந்த ஊர் முதலாளியாகத் தானே எந்நாளும் இருக்க வேண்டும் இவையே சாத்திரியாரிடம் உள்ளுறைந்து இருக்கும் பூர்வாங்க வாசகங்கள்.
'அண்ணை மிக நல்லவர் பெரிசு, சிறிசு பார்க்கமாட்டார். எவரோடும் அன்பாகக் கதைப்பார்! எல்லாரையும் மதிச்சுப் பழகுவார்"
"சாத்திரியார் ஏழை மாணவர்களெண்டால் விரும்பி உதவி செய்வார்’
“எங்கட ஊரில் ஏதாவது நன்மை, தீமை எண்டால் சாத்திரியார் தான் முன் நின்று நடத்துவார்’ என்றெல்லாம் ஊர்ச்சனம் அவரை உயர்வு நவிர்ச்சியாகக் கதைக்கும்.
"மாமா. நான் ஓ.எல். பாசாகிட்டன் மாமா' என்று மிகவும் பெளவியத்துடன் சொல்லிக் கொண்டு சாத்திரியார் முன் நின்றாள் சுமித்திரா.
இவ் வார்த்தை அரவம் கேட்டு, பத்திரிகையைத் தனக்கு வலது புறமாகச் சாய்த்துப் பிடித்தபடி, மூக்குக் கண்ணாடியின் மேல் பிறேம் இடுக்கின் ஊடாகக் கண் பார்வையை
மல்லிகை ஏப்ரல் 2011 & 50

வெளியே எறிந்தார். புருவத்தை உயர்த்திப் பார்த்தவர், வந்திருப்பது சுமித்திரா என் பதை உறுதிப்படுத்திவிட்டு, மூக்குக் கண் ணாடியை முகத்திலிருந்து எடுத்தார்.
"ஆ. சுமித்திராக் குட்டியே வாடா, வாடா!" என்று அலங்காரமாக அவளை அழைத்தார். நாணிக் கோணி வந்து அவர் முன் அவள் நின்று கொண்டிருந்தாள்.
தன் முன் யார் நின்று கதைத்தாலும் உறவு முறை சொல்லி எவரையும் வசியம் செய்து விடுவார், சாத்திரியார். அது மட்டு மில்லாமல் தன்னை விட வயதில் குறை ந்த ஆண்களை எடி சேர்த்தும், பெண்களை எடா போட்டும் வலு லாவகமாய்க் கதைப்பார்.
இப்படி அவர் கதைப்பதில் தான் எவ்வ ளவு லாவண்யம் இவரின் கதைகள் கேட் டால் மயங்காதவர்களும் உருகிமயங்குவர்.
சுமித்திரா ரொபிப் பையை அவர் முன் நீட்டியபடி பணிவாக நின்றாள்.
"கேள்விப்பட்டேன்டா சோதனையில் நல்லபடியாகப் பாசாகியிட்டியள் என்று." சாத்திரியார் அதிலிருந்து இரண்டு ரொபி களை எடுத்துக் கொண்டார்.
"அப்பா ரொபி வாங்கித் தந்து விட்டுச் சாத்திரி மாமா வீட்டை தான் முதல்ல போய் வரச் சொன்னவர்" சுமித்திரா கூறி இந்த வார்த்தைகள் கேட்டவர் திடுக்கிட்ட வர் போலானார். ஓங்கி அடித்த சுட்டியல் அவர் தலையில் விழுந்தது போல் இருந் தது. நல்லாகவே சங்கடப்பட்டார். எட்டாகப் போட்ட காலினை பதினொன்றாக மாற்றிக்
கொண்டார். இனி என்ன கதைப்பது என்ற பீதியில் திக்குமுக்காடினார்.
ஊரில் யாராவது ஸ்கொலர்சிப், ஓ.எல், ஏ.எல் பாசாகிய விடயம் இவர் அறிந்தால் உடனேயே அவர்கள் வீடு தேடிச் சென்று வாழ்த்தி, கையுறையாக ஏதாவது கொடு த்து விட்டு வருபவர்.
பணம் அவர் கையை விட்டு உபகார மாக இன்னொரு இடம் போகும் போது, மனம் பொருமி உழைவார்.
இதுவரை கால ஓ.எல் பெறுபேறுகளி லேயே சுமித்திராவின் பெறுபேறு அந்த ஊருக்கொரு சாதனையாகவே இருந்தது. ஆனாலும் சாத்திரியார் இன்னும் சுமித்திரா வின் வீடு போய் அவளை வாழ்த்தி விட நினைக்கவில்லை. மாறாக சுமித்திரா ரொபி கொண்டு சாத்திரியாரின் வீட்டுக்கே முதல் வந்திருந்தாள்.
"அப்பா, சாத்திரி மாமா வீட்டைதான் முதல்ல போய் வரச் சொன்னவர் என்று சுமித்திரா சொன்ன வார்த்தைகள் சாத்திரி யாரின் நெஞ்சைச் சுட்டுச் சென்றது. சுளி ரென அவரின் மனது சுழண்டு போயிருந்தது.
"மாமா, மாமியும், மச்சியவையும் எங்க நிக்கினம்? சுமித்திராவின் வஞ்சகமில் லாத வினவுதலோடு சாத்திரியார் சுய நினைவுக்கு வந்தார்.
'வீட்டுக்குள் தான்ரா நிக்கினம், உள்ளே போடா” என்று கட்டளையிட்டார். அவரின் கட்டளையைத் தொடர்ந்து அவள் உள்ளே சென்று கொண்டிருந்தாள்.
மல்லிகை ஏப்ரல் 2011 & 51

Page 28
அவள் உள்ளே வருவதைக் கண்டு கொண்ட சாத்திரியாரின் இளைய மகள் ரேணுகா வீட்டுப் பின்புறமாக ஒடி ஒளிந் தாள். அதனை சுமித்திரா தற்செயலாகக் 56cot C6 LTsit. ரேணுகா தன்னைக் கண்டுவிட்டு ஒடுகிறாள் என்பதை அவள் புரிந்து கொண்டாள். அவளின் பஞ்சு போன்ற நெஞ்சு, ரேணுகாவின் பொறாமை எனும் கொடிய விசத் தீபட்டு பத்தி எரிந்து கொண்டது.
ரேணுகா கடந்த வருடச் சோதனையில் ஓ.எல் பாசாகியிருந்தாள். ரேணுகாவின் அந்தப் பெறுபேறு சுமாரான ஒன்றுதான். ஆனால், சுமித்திராவின் பெறுபேறு என்பது அந்த ஊருக்குப் பெரும் சாதனையாக இருந் தது. அதுதான், இதனை ரேணுகா வால் சகித்துக் கொள்ள முடியவில்லைப் போலும்,
சுமித்திராவின் உள்ளம் கசக்கப்பட்டு நெருப்பில் விழுந்த பூவாகியது. புன்னகை யென மலர்ந்திருந்த முகம் இருள் சூழ்ந்து கரித்துக் கொண்டது. அதற்கு அப்புறம், அந்த வீட்டில் யாரையும் கண்டு ரொபி கொடு த்து மகிழவோ, கதைக்கவோ சுமித்திரா விரும்பவில்லை. அந்தளவுக்கு அவள் உள் ளம் சுக்கெனச் சப்பளிக்கப்பட்டிருந்தது.
அவளின் அப்பா நாளாந்தக் கூலி வேலைக்குப் போவார். அப்பிடிப் போனால் தான் அவர்கள் வீட்டு அடுப்பு எரியும். அந்த ஊரில் பலருக்கு, ஒரு நாள் என்பது மூன்று வேளையும் சாப்பாடு. சிலருக்கு மட்டும் அநேக நாட்கள் ஒருவேளைதான். அந்த சிலருக்குள் இவளும் அடங்கிவிட்டாள். 6նDI மையின் உச்சத்தில் நின்று உழன்றவள். படிப்பு ஒன்றே அவளின் இலகு (p656OTub.
ஒவ்வொரு பொழுதிலும் துடிப்பாய்ச் செயற் பட்டுப் படித்தவள். நேற்று பிற்பகல் வெளி யாகிய ஓ.எல் பெறுபேறு, கசங்கி இறுகிய அவளின் மனதை அழகிய ரோஜா போல் மலரச் செய்திருந்தது.
தந்தையின் மதிப்பான சொல் கேட்டு சாத்திரியாரின் வீடு வந்தவளுக்கு இங்கு கிடைத்தது வெறும் ஏமாற்றம் தான். வேண்டுமென்றே அவளின் உள்ளம் கிழிக்கப்பட்டிருந்தது.
ரேணுகா செய்த இந்தமாதிரிச் செயலு க்கு சுமித்திரா அழுதிருக்க வேண்டும். அப்படி அவள் அழவில்லை. அழுதால் கூட இந்த மாதிரியான கவலைகளை அது ஆற் றிவிட்டிருக்காது. படக்கென்று வந்த 29کH(UP கையை கடும் மனப் போராட்டத்தின் மத்தி யில் அடக்கிவிட்டிருந்தாள்.
இத்தனைக்கும் அந்த வீட்டின் சுவர் களில் தொங்கியிருந்த விளம்பர 5Tlist டிகள் சுத்திக் கொண்டிருந்த மின் விசிறி யின் காற்றுப்பட்டு அங்கும், இங்கும் ஆடிச் சுவரோடு மோதிக் கொண்டன.
சுமித்திராவின் வரவு கண்ட சாத்திரியா ரின் மனைவி கமலம் தன் முகத்தை எதிராகத் திருப்பிக் கொண்டாள்.
நல்ல காலம்! சாத்திரியார் மூச்செறிந்து தும்மிய போது, அந்த உரத்த பெரும் ஒசை கேட்டு தன் பார்வையினை அங்கே குவித் திருந்தாள் சுமித்திரா. அதனால் இந்த அவ மரியாதையினை சுமித்திரா கண்டு கொள்ள முடியாமல் போனதால், அக்கணம் அவள் உள்ளம் பாதுகாப்படைந்தது.
மல்லிகை ஏப்ரல் 2011 & 52

அடுத்தடுத்து சரியும் விக்கெட்டுக்கள் போல் அந்த வீட்டில் உள்ள எதிர்-மரியா தைகள் கோலோச்சி நின்றன. அவசரமாய் வீட்டு அலுவல்களில் மூழ்கியுள்ளது போல் கமலத்தின் செயல்கள் இருந்தன.
ஏதேச்சையாகத் திரும்பும் போது சுமித் திராவைக் கண்டு கொண்டது போல் "டேய் சுமித்திராவே வாடா, வாடா! எப்பவடா வந்தியள்?’ என்று வரவேற்றாள் கமலம்.
நிறைய ரொபிகளைக் கமலத்தின் கைகளுக்குள் திணித்து வைத்தாள் சுமித் திரா. அவளை உச்சி மோந்து கட்டியணை த்துக் கொஞ்சிக் கொண்டாள் கமலம்,
பூதத்தனமான கமலத்தின் உச்ச நடிப்பு மிக லாவகமாக அரங்கேறியது. எவரையும் வசியம் செய்யும் கமலத்தின் வார்த்தை யாலங்கள் சிறுபிள்ளை சுமித்திராவை மயக்கிச் சென்றன. கமலம் மாமி தங்க மானவள் இரக்க சுபாவமுடையவள் என் பதை அவை எடுத்தியம்பி நின்றன. சுமித் திராவுக்குள்ளும் கமலம் மாமியின் மனது உயர்வாகவே ஓங்கி நின்றது.
சுமித்திரா அந்த வீட்டிலிருந்து வெளி யேறும் பொழுது கமலமும், சாத்திரியாரும் சேர்ந்து வழி அனுப்பி வைத்தனர். கடித உறைக்குள் ஆயிரம் ரூபாத் தாளினை வைத்து அவளின் வலது கைக்குள் செருகி விட்டார், சாத்திரியார். அதனை அவள் கூச் சப்பட்டு வாங்கினாள்.
சாத்திரியார் உள்ளே வந்து அதே கதி ரையில் உட்கார்ந்து கொண்டார். கமலம் புறுபுறுப்புடன் வீட்டின் உள்ளே போனாள்.
அப்போது, இவர்களின் மூத்த மகள் பானு வெளிக் கேற்றினைத் திறந்தபடி வந்து கொண்டிருந்தாள்.
"எங்கே எல்லாம் உத்தியோகம் பாக்க வெளிக்கிட்டுத் திரியினம். இப்பதான் ஊத்தை மயிலன்ர மோள் ரொபி தந்திட்டுப் போனவள்' சாத்திரியார் வலு கடுப்புடன் சினந்து பேசிக் கொண்டார்.
“எங்கடயளுக்கு ஒரு நேரமும் சோறு குறையக் கூடாது. சுத்திச் சுத்திப் போட்டு வந்து தின்னத்தான் இருக்கினம்’ அவரின் ஆவேசம் எவெரெஸ்ற் சிகரத்தையும் தாண்டிச் சென்றது.
பானு எதுவும் கதைக்கவில்லை. சைக் கிளை வீட்டுப் பின் பக்கச் சுவரோடு சாத்தி விட்டு, பின் வாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்தாள். உள்ளே கமலமும் புலம்பிக் கொண்டிருந்தாள்.
"என்னடி ரண்டும் முருங்கை மரத் திலை ஏறி நிக்குதுகள்?’ ரேணுகாவைப் பார்த்து பானு கேட்டாள்.
“வேறையென்ன? உவள் சுமித்திரா மூதேசி வந்து போனவள். தான் திறமையா கப் பாஸ் பண்ணிப் போட்டனாம். ரொபி தந் திட்டுப் போறாள். ஊரில ஆரும் சோதனை பாஸ் பண்ணினால் என்ன? ஆருக்கு வேலை கிடைச்சால் என்ன? என்னத் துக்கு இஞ்சை சொல்ல வருகினம்?" ரேணுகா மனம் சரியில்லாதவளாகப் பதில் சொன்னாள்.
அவள் இப்படி உருக்கொண்டு கதை
மல்லிகை ஏப்ரல் 2011 & 53

Page 29
த்த கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சாத்திரியார், கொதிநிலையுடன் எழுந்தார். அவர் கோபமாக எழுந்து கொண்ட வேகம் கண்டு, தான் கதைப்பதை நிறுத்திக் கொண்டாள் ரேணுகா. அவள், பானுவின் பின்னால் ஒளிந்து கொண்டு சிறு பதட்டம் அடைந்தாள்.
'டியே நாயளே மட்டு மட்டாகப் பாஸ் பண்ணினது பத்தாது, அதுக்குள்ள கதைக் கிற கதையளைப் பாருங்கோவன். சனி யன்களே! கதைச்சுக் காட்டினம் பெரிய கதையாய். தெரியேல்ல கொப்பன்ர குணம், வெட்டித் துலைச்சுப் போட்டுப் போடுவன்’ என்று சாத்திரியார் சந்நதமாடினார்.
அவரின் சந்நதம் கண்டு அந்த வீடு அமைதியானது.
() () () ()
அன்றைய மாலை நேரம், சாத்திரியார் வாழைத் தோட்டத்திற்குள் மண்வெட்டியு டன் நின்று கொண்டிருந்தார். உடைத்து நின்ற வாய்க்கால் வரம்புகளைச் செப்பம் செய்து கொண்டிருந்தார். கமலம் தேநீர் கொண்டு வந்தாள். தேநீருடன் வந்த கமல த்தைக் கண்ட சாத்திரியார், மண்வெட் டியை வாழைமரம் ஒன்றோடு சரித்துச் சாத்தி விட்டு கை கால்களைக் கழுவிக் கொண்டு வந்தார்.
கமலம் கொடுத்த தேநீரும், பயறுத் துவையலும் சுவையாக இருந்திருக்க வேண்டும். அவரின் வாய் இதமாய்ப் பொச் சடித்துக் கொண்டது.
வாழைக்குட்டி ஒன்று சாய்ந்து நின்றது.
வாழைத்தடலிலிருந்து கிழித்த கீலத் துண்டொன்றினால் அதனை, பெரிய வாழை ஒன்றுடன் சேர்த்துக் கட்டினார். குட்டி வாழை நிமிர்ந்து நின்றபோது மெல்லிய காற்றுப் பட்டு அதன் இலைகள் அசைந்து கொண்டன. சாத்திரியாரும் தன் நெஞ்சு தடவி நிமிர்ந்து கொண்டு நாரி உழைவைப் போக்கியவாறு சுற்றும் முற் றும் பார்த்தார்.
அந்த நேரம் பார்த்து விதானையார் அங்கு வந்து கொண்டிருந்தார். விதானை யாரைக் கண்ட சாத்திரியார் சுறுசுறுபடைந் தவரானார்.
"6 IntLIT 65T60607 6JTL-IT...." உரிமையோடு அழைத்தார்.
என்று
அப்போது, அந்த இடத்துக்கு இரண்டு கதிரைகள் வந்தன. விதானையார் அமர் ந்து கொண்டு கதையைத் தொடங்கினார்.
"மச்சான் மயிலன்ர மோளுக்கு அடிச்ச அதிஸ்ரம் இங்க ஆருக்கடா அடிக்கும்!”
“ஓம் ஓம்! உதென்னெண்டு மச்சான் உந்தப் பெட்டை உப்பிடி ரிசெல்ற் எடுத்த 6እl6ff?”
உரையாடல்கள் கனகச்சிதமாக முன் நோக்கி நகர்ந்து சென்றன. நல்ல விடயங் களை ஆய்வு செய்வனவாக அவை இருக் கவில்லை. மாறாக, அவை விமர்சனமாய்
முத்தி, முறுகி முறிந்து விழுந்தன.
சுமித்திரா கெட்டிக்காரி என்பது அந்த ஊருக்கே தெரிந்த விடயம். ஒருவரின் வளர்ச்சி கண்டு மனம் பொறுக்கமாட்டாத
மல்லிகை ஏப்ரல் 2011 & 54

வர்கள் உதட்டால் வாழ்த்தி, உள்ளத்தால் எரிவர் என்பது இதுதான் போலும்.
"இல்லை மச்சான், உது கொம்பியூட்ட ரிலதான் ஏதோ பிழை நடந்திருக்கு' இத னைச் சாத்திரியார் சாத்திரம் பார்த்துக் கண்டு பிடித்தது போல் தன் மன அழுக் காற்றை உடனடியாகவே விதானை முன் கொட்டிவிட்டார்.
“ஒ. பின்ன..!" என்றபடி, சாத்திரியார் சொன்னவற்றை விதானையார் அரை குறை மனதோ ஏற்றுக் கொண்டார். எதி லும் உண்மை இருந்தால்தானே மனதும் ஏகமனதாக ஏற்கும் என்பதை விதானை யாரின் பதில் கூறி நின்றது.
"ஊத்தை மயிலன்ர மோளாவது உப் பிடி ரிசெல்ற் எடுக்கிறதாவது” சாத்திரியார் அறளை பிடிச்சவர் போல் திரும்பத் திரும்ப அரட்டிக் கொண்டிருந்தார்.
வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த விதானையாரும் "ஓம். ஒம். உது உப்பிடித்தான் நடந்திருக்க வேண்டும். நீ சொல்லும் போதுதான் எல்லாம் விளங்குது சாத்திரியார்’ என்றார் விதானையார். சாத்திரியாரும், விதானையாரும் கதைத்த உரையாடலின் இறுதிச் சம்பாசனைகள், விதானையாருக்குத் தேநீர் கொண்டு வந்த கமலத்தின் காதிலும் விழுந்து, எழுந்து போயின. இவை கேட்டு கமலத்தின் மனது இதமாய் இனித்தன. தேநீர் கொடுத்து விட்டுப் போனவள் உடனடியாகவே பயறுத் துவையல் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து விதானையாரின் கைகளில் திணி த்து விட்டுப் போனாள்.
‘துவையல், நல்ல உருசையாகக் கிட
க்கு" என்று ருசித்தவர், தேநீரை இரண்டு முறை உறிஞ்சினார். அதைப் பார்த்த சாத்திரியாரின் வாயும் ஊறிக் கொண்டது.
இத்தனை விடயங்கள் நடந்தேறிக் கொண்டிருக்கையிலேயே, விதானையார் வீட்டுக்கு ரொபி கொடுக்கச் சென்ற சுமித் திரா அங்கு ரொபி கொடுத்து விட்டு, விதா னைப் பெரியப்பா சாத்திரி மாமா வீட்டை நிற்கிறார் என்பதை அறிந்துதான் இங்கே வந்தவள்.
"ஊத்தை மயிலன்ர மோளாவது உப் பிடி ரிசெல்ற் எடுக்கிறதாவது" என்று சாத் திரியார் கதைத்த அக்கணமே சுமித்திரா கேற் தூணோடு நின்று கொண்டிருந்ததை இவர்கள் இருவரும் கவனிக்கவில்லை. மனதில் துக்கம் தூக்கிக் கொள்ள அந்தத் தூனோடு தலையைச் சாய்த்துக் கொண் டாள். மனம் வெம்பி, குமைஞ்சு கொள்ள கண்கள் கண்ணிரை வெளித் தள்ளின.
தனது மானம் கிறுக்கப்படும் அந்தத் துளிர்க் கணத்திலேயே கிள்ளிவிட வேண் டும் என்று நினைத்து விறுவிறு எனத் தன் வீடு நோக்கிச் சென்றாள்.
அங்கே தன் புத்தகப் பையினை எடுத்து, அதற்குள்ளிருந்த கணிதக் கருவிப் பெட்டியை எடுத்து அதனைத் திறந்தாள். பெட்டியின் உள்ளடியில் இருந்த பேப்பர்த் தாளை விலத்திப் பார்த்தாள். அதே ஆயி ரம் ரூபாத் தாள் முளித்தபடி இருந்தது. இப்ப, அது இவளைப் பார்த்து ஏளனம் செய்வது போல், அவளுக்கு உணர்த்தி யது. அதை எடுத்து தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்தபடி சாத்திரியாரின் வீடு நோக்கி மிடுக்குடன் புறப்பட்டுக் கொண்டி ருந்தாள், சுமித்திரா!
மல்லிகை ஏப்ரல் 2011 $ 55

Page 30
குறுங்கதை
offles)|O
“அந்தக்காணி என்ரை மச்சான்ரை காணி என்னட்டைக் கிடக்குப் பவர் ஒவ் அற் றோணி. உதை வைச்சுக் கொண்டு நான் எந்தக் கோர்ட்டுக்கு வேணுமெண்டாலும் போவன்!" உரத்த குரலில் மருதநாயகம் சொன்னது, எட்டு வீட்டிற்குக் கேட்கும் போலிருந்தது. வார்த்தைகளில் பறந்த அனல் யாரையும் கிட்டே அண்ட விடயில்லை. பரமசிவம்பிள்ளை தான் மெல்லக் குரல் கொடுத்தார்: "அது உங்கட பராமரிப்பிலை கிடக்குதெண்டு ஊருக்கே தெரியும்தானை? இப்ப என்ன பிரச்சினை, உதிலை.?
“என்ன பிரச்சினையோ, ஆறுமுகத்தார் அதுக்குள்ளை ஆடு கட்டிப் போட்டார்!’ "ஆடுதான.? வாயில்லாச் சீவன்கள். கொஞ்சம் மேஞடசு போட்டுப் போகட்டுமன்." "மேஞ்சு போட்டுப் போகட்டுமோ..? உப்பிடி நினைச்சு விட்ட முதலிலை ஆட்டைக் கொண்டு ஆள் வருவார். பிறகு கட்டுற நேரம், அவுக்கிற நேரம் வளவுக்கை கிடக்கிற பிலா, மாவிலை கண் போகும். எல்லாத்தையும் பாத்துக் கொண்டிருக்க நான் என்ன பேயனோ." “சரி சரி விடுங்கோ. உது சின்னப் பிரச்சினை. சொன்னா ஆறுமுகத்தார் வேறை இடத்திலை ஆட்டைக் கட்டுவார்."
மருதநாயகம் தணிந்து போகச் சில நிமிடங்கள் ஆகிற்று.
દ્રુfો દ્વfો હ્યf] D
கிராம அலுவலர் தலைமையில் கிராம மட்ட டெங்கு ஒழிப்புக் குழு தீவிரமாகக் கூடியது. ஒவ் வொருவர் வீட்டுச் சுற்றாடலும் துப்பரவு செய்யப்பட வேண்டும் எனத் தீர்மானிக் SUULL-gl.
பற்றைகள் வளர்ந்த காணிகள் உரிமையாளரால் துப்புரவாக்கப்பட வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சனசமூக நிலைய முன்றலில் கூடிய ஊரவர்களிடையே மருதநாயகமும் நின்றிருந்தார். 'அண்ணை, உங்கட வேரவிலை காணியுக்கை சரியான பத்தை. நுளம்புகள் பெருகீடும். ஒருக்காத் துப்புரவாக்குங்கோ." என்றார் பரமசிவம்பிள்ளை.
“எது.? வேரவிலை காணியோ?. அதுக்குச் சொந்தக்காரர் வெளிநாட்லை. நான் ஏன் துப்புரவாக்கோனும்.?"
மருதநாயகத்தின் குரல் ஏறியது. "ஒமோம்! வருமானதுக்குகெண்டா உங்கட காணி. செலவுக்கெண்டா அவையின்டை காணி." என முணுமுணுத்தபடியே வாயை மூடிக் கொண்டார் பரமசிவம்பிள்ளை.
மல்லிகை ஏப்ரல் 2011 & 56

ல்லையென்றால் 0ᎯᏏᎲᏓᎯᏏᏛi ®ಕಹಾನಿಯಾ நீ எவன் தான்? என்றேன்
- mTar எனது தெருக்களில் நான் மனிதன் இல்லையென்றான் இப்போது 96(f)6ODUg முகமூடிகளின் விற்பனை اقاقی இதைவிடவும் அமோகமாய் நடக்கிறது gue 2 வேறெதைத்தான் 8 ற் AFFTin(8tar விதவிதமாய் (pbpറ്റൂ6l. 2P ളഞ്ഞ് நான சொல்வேன்! கோரமுகம். ● சிரித்தமுகம். மனதின் 9ழுக்கு gത്രത്തെങ്കpങ്കl. வெளியே திரளும் அனைத்துக்கும் பிரதிநிதிகள் šŕhľI6OLIDĽbń அமோகமாய் இருக்கிறார்கள் ஏமாந்து விடக் கLாதென்று தான் ஒருவன் எப்போதும் எல்லா முகங்களிலும் நினைக்கிறேன். கணக்கெடுத்து வாங்குகிறான் எனினும் நிறங்களிலும் பேதம். சிரிப்புகள் வழியும் இத்தனையும் வேண்டுமென்றான்! 2தடுகளுக்குள் கடைசியிலே கரு நஞ்சு இத்தனை முகம் அணிந்தாய் வளர்வதென்றால் 2ந்தன் சொந்தமுகம் எங்ஙனம் எதுவென்றேன்! அதை நம்பி.? சொந்த முகம் என்றால் UUIG) 5565.db&QBlb என்னவென்று கேLLான்! அவர்களின் விழியிருக்குகளில் b6061T6uIGO f596)6OIII.3 வழிந்து ஒழுகுகிறது Ď 86x6XII.? மனதின் அழுக்கு
மல்லிகை ஏப்ரல் 2011 率 57

Page 31
அர்wwணிNடன் இvங்கிwrவர்
- டொலிலில் ஜீவா
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ஒருநாள் சாயங்காலம் இளம் பெண் ஒருவர் என் னைத் தேடி, மல்லிகைக் காரியாலயத்திற்கு நேரில்
வந்திருந்தார்.
வழமையாக மல்லிகைக்கான உள்ளடக்க விஷயங் களை ரோசி என்றொரு இளம் பெண்தான் தட்டச்சுச் செய்து தருவது, வழக்கம்.
அவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. * எனவே, தொடர்ந்து மல்லிகைக்குத் தட்டுச்சுச் செய்து தர, : * ஒரு புதுமுகம் அவசர அவசியமாகத் தேவைப்பட்டது. 2.
அவளின்ரை வேலையை இங்கு தொடர்ந்து செய்து "சி தாறன்!" என மெதுவாகவும் பணிவான தன்னடக்கத்துடனும் சொன்னார், அந்த இளம் பெண்.
"முடியுமெண்டால், நான் நாளைக்கே வேலைக்கு வாறன்!" எனத் தொடர்ந்தார். அந்தப் பணிவும் தன்னடக்கமும் எனக்கு உடனே மனசுக்குப் பிடித்துப் போய் விட்டது. நான் தொடர்ந்தேன். "உங்கட பெயர் என்ன? எங்கை இருந்து வாஹீங்கள்? உங்கட சொந்த ஊர் என்ன?" என்றேன்.
"நான் பக்கத்திலைதான் இருக்கிறன். கொச்சிக்கடை அந்தோனியார் கோயிலடிப் பக்கம். ஊர் கரவெட்டி, பேர் சாந்தகுமாரி, வீட்டிலை கூப்பிடுற பேர் றுாபி. முன்னமேயே மல்லிகையைப் பற்றி என்னுடைய சினேகிதிகள் சொல்லக் கேள்விப்பட்டிக்கிறன். அதுதான் தேடி வந்தனான்'
அன்று தொட்ட மல்லிகை உறவு.
எனக்கு ஒரேயொரு சகோதரி இருக்கிறார் ஊரில், அவருக்கு மூன்று பெண் குழந் தைகள். அதில் மூத்தவள் என்னில் உயிரும் பிரானனுமாக இருப்பா, 'மாமா. மாமா!" என என்னையே சுற்றிச் சுற்றி வருவாள்.
அந்த மருமகள்களில் ஒருத்தியைப் போலத்தான் இந்த நூபியிடமும் நான் பாசத்தைக் கொட்டிப் பழகி வந்தேன்.
மல்வித்தை ஏப்ரல் 2011 率 58
 
 
 
 

நான் எதுவுமே அதிகம் பேசமாட்டேன். என் குறிப்பறிந்து முகபாவம் தெரிந்து, மனோநிலை உணர்ந்து காரியமாற்றுவ தில் மகா சாமார்த்தியசாலி இந்த சாந்தகுமாரி.
நாள் முழுவதுமே அமைதியாகத் தான் தனது கடமையைப் பேணிச் செய்து கொண்டிருப்பார். அதே சமயம் சகலவற் றையும் நன்கு கிரகித்து வைத்திருப்பார்.
மல்லிகைக்குக் கிடைத்த ஒரு வரப்
பிரசாதம் என நினைத்து, சகல பொறுப்புக் களையும் இவரிடமே ஒப்படைத்து விட்டு, நான் மல்லிகை இதழ்களை வெளியிடு வதிலேயும் மல்லி கைப் பந்தல் நூல்களை வெளிக் கொணர்வதிலேயுமே கண்ணுங் கருத்துமாக இருப்பேன்.
எனக்குப் பல வழிகளிலுமே உட்தவியா கவும் ஒத்தாசையாகவும் இருந்த இவர், இந்த மாதத்துடனேயே மல்லிகையை விட்டு, யாழ்ப்பாணம் செல்லுகின்றார்.
- எங்கிருந்தாலும் வாழ்க்
ജൂഖ്
யுத்தம் தொடங்குமுன் கோவில் வாசலில்
யுத்தமிட்டு சத்தமிட்டுக் கொட்டனெடுத்து மண்டையுடைத்து கதவடைத்து இரத்தம் பாய்ந்த கதைகள் கடவுள் கந்தனுக்கும் காட்சியானது.
போரெழுந்து
மக்கள் இடம்பெயர
நம்முருகன் பாதுகாப்புப் பெற்றுக் கொண்டார்.
அதிசிரவீந்தின்
வேலெடுத்து விளைநிர்க்கவென முருகன் எண்ணும் போதுதுவக்கு முனையில் காவல் நிறுகும், ஆண்டுகள் பல அடைந்திருந்த கந்தவேலன். ஆடியில் மட்டும்- மக்களை அரோகரா போட வைப்பான். எமது கோவில்- எமக்கே கோவில் என்று சொன்னோர் எல்லாம் மக்களுடன் மக்களாய் ஒன்றாய் நின்றுகண்ணுக்கு எட்டாத கந்தனின் தரிசனத்திற்காய் காத்து நிற்கின்றனர்!
மல்லிகை ஏப்ரல் 2011 : 59

Page 32
'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்
கவிஞர்.ஏ.இக்பால்
2011 பெப்ரவரி 11ல் காலஞ்சென்ற சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரன் 1956 பெப்ரவரி 17ல் காலஞ்சென்ற பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக 1958 மார்ச் "சரஸ்வதி இதழில் ஆசிரியத் தலையங்கம் எழுதினார்.
2011 மார்ச் 5ல் மல்லிகைப் பந்தல் சிவாசுப்பிரமணியம் தலைமையில் சரஸ்வதி ஆசிரியர் விஜயபாஸ்கரனின் மறைவுக்காக அநுதாபக் கூட்டம் நடத்தியது.
2011 மார்ச் மல்லிகை இதழ் சரஸ்வதி விஜயபாஸ்கரன் பற்றி வியந்தெழுதியது. 2011 மார்ச் ஞானம் இதழ் தலையங்கம் தீட்டி இலக்கியச் சிற்றிதழுக்கு இலக்கணம் வகுத்த சரஸ்வதி விஜய பாஸ்கரன்' என வியந்தது.
இவற்றையெல்லாம் உற்று நோக்கும் போது 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' எனும் தமிழ் வாக்குப் பவித்து நிற்பதைக் காணலாம்.
ஞாபகமாக "சரஸ்வதி சஞ்சிகையையும் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் சரஸ்வதியில் பிரசுரமான படத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
±ೇಳoತ್ಲಿ ನ್ನು
}
ܠܐ = | ܒ ܚ ܐ ܠܐ 1 1 11
.
. = : 11
S S S S S SSSS ॥
॥ का ताज की
-
மல்லிகை ஏப்ரல் 2011 + 50
 
 

தீர்வு தான் என்ன?
"2,5L load."
வேலை இல்லை, வேலை இல்லை என்று வெட்டிப் பொழுது போக்காமல் சுய தொழில் ஏதாவது செய்து பாரு
"என்ன தொழிலைச் செய்வது?"
"தொழிலுக்கா பஞ்சம்? மரக்கறி, தேங்காய், இளநி முதலிய பொருட்களைக் கை வண்டி ஒன்றில் ஏத்தி, விடு வீடாகக் கொண்டு விக்கலாம் தான. இன்னும்."
"முதலுக்கு எங்க நான் போறது?" "பெரிய முதல் தேவையில்ல. ஒரு ஆயிரம் ரூபா இருந்தால் போதும்"
"இது கொஞ்சம் சங்கடமான தொழில்." "அப்படியானா, வங்கியில் கடன் எடுத்து ஒரு கடையைத் தொடங்கலாம்'
"அதற்குப் பெரிய தொகை வேணுமே?"
"இந்தா பார் நான் வங்கியில் பத்து லட்சம் கடன் எடுத்து மூன்று கடைகளை ஒரே வரிசையில் கட்டினேன் ஒரு கடைக்குப் பத்தாயிரம் ரூபா வீதம் மாத வாடகை மாதம் முப்பதாயிரம் ரூபா கிடைக்கிறது. வங்கிக்குக் கட்ட வேண்டிய ரூபா இருபதாயிரம் போக, மீதி பத்தாயிரம் கையில் கிடைக்கிது"
"அதெல்லாம் பெரிய விஷயங்கள், நமக்குக் கட்டுப்படியாகாது"
"ஒண்டு சொல்லுறன், கேட்கிறியா? எனது மூனாவது கடைக்காரர் கடையை விடப் போவதாகசச் சொல்கிறார் நீ அந்தக் கடையை எடு. ஒரு வியாபாரத்தைத் தொடங்கு"
"முதல் வேணுமே?"
'முதல் நான் கடனாகத் தருகிறேன். மாசா மாசம் லாபத்திலிருந்து என் கடனைக் EEGL! LL53ITLib"
'5laiteDT El LITLITJLp qeflijuajith?"
மல்லிகை ஏப்ரல் 2011 & 61

Page 33
"Oilman goods peo6) salumungb. பொருட்கள் நீண்ட காலம் பழுதாகமலும் இருக்கும்"
"சரி, அப்படியே செய்வம்"
கோபாலும் வசந்தனும் கைகுலுக்கிக் கொண்டார்கள்.
செல்வி ஸ்ரோர்ஸ் கடை திறப்பு விழா கோலாகலமாக நடந்தது. வசந்தனுக்குப் பரம சந்தோஷம். கோபாலுக்கும் அப்படித் தான்.
மாத முடிவில் கை நிறையப் பணம் கிடைத்தது. வசந்தன் கோபாலைக் கடவு ளாக மதித்தான்.
கோபால் சொன்னான்: 'நமக்குள் இந்த சம்பிரதாயம் எல்லாம் வேண்டாம். நமது நட்பு நீடிப்பதற்கு இறைவனாகப் பார்த்துக் கொடுத்த கொடைதான் இது"
பல மாதங்கள் கடந்தன.
நண்பர்கள் இருவரும் நிறைந்த மன தோடு வாழ்க்கையை நடாத்தினர்.
திடீரென்று ஒரு நாள் 3 காற்சட்டைக் காரர்கள் ஜீப்பில் வந்து இறங்கினார்கள்.
"நாங்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையிலிருந்து வருகிறோம். வீதியை அக ட்டுவதற்காக றோட்டுக் கரையில் உள்ள கடைகளை அகற்றி வருகிறோம்"
'அதற்கு நான் என்ன செய்ய
வேணும்?"
"வீதியை அகட்டும் போது, உங்கட
கடைக்கு மூன்று அடி உள்ளுக்கு வருகி றது. அதனால்..?”
'அதனால?"
"அந்த மூன்று அடியை உடைத்துக் கடையை உள்ளுக்குக் கட்ட வேணும்”
கோபாலும் வசந்தனும் விக்கித்து நின்றார்கள்.
"ஐயா நாங்க வங்கியில கடன் எடுத்துக் கடைகளைக் கட்டியிருக்கிறம். அதை இடித்தால் எங்கள் மாத வருமான் படுத்து விடுமே."
"அதனாலென்ன? எங்கள் அதிகார சபை அதற்கு நஷ்டஈடு கொடுக்கும் தானே?"
இருபகுதியினரும் நீண்ட நேரம் வாதா டினார்கள். ஆனால், பலன் ஒன்றும் ஏற்பட வில்லை.
மூன்று கடைகளும் மூடப்பட்டன. கடைக்காரர்கள் சாமான்களை அள்ளிக் கொண்டு போய் வீட்டில் போட்டார்கள். வேறு இடத்தில் உடனடியாக வியாபார த்தை ஆரம்பிக்க முடியவில்லை.
ஒரு வாரத்துக்குள் வீதி அபிவிருத்தி அதிகாரசபை அலுவலர்கள் வந்து மூன்று கடைகளினதும் முன்புறத்தை இடிக்கத் தொடங்கினார்கள். இரண்டேநாளில் மூன்று கடைகளும் மூக்கறுந்த சூர்ப்பன கையாகின.
கோபாலும் வசந்தனும் தலைமேல் கைவைத்து உட்கார்ந்தனர். கோபாலுக்கு மாத வாடகை போனது. வசந்தனுக்கு மாதாந்த வருமானம் போனது.
மல்லிகை ஏப்ரல் 2011 * 62

கடையை இடித்ததற்கான நஷ்டஈடு வரு வதாகக் கானோம். எனவே கோபால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சென்று பணிப்பாளச்ை சந்தித்தான். அவர் கூற்றுக் கோபாலை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"நஷ்டஈடா? அப்படி எதுவுதும் கிடை
யாதே. முறைப்படி நீங்கள் தான் உங்கள்
செலவில் கடையை இடித்திருக்க வேண் டும். இப்போது எங்கள் செலவில் கடையை இடித்திருக்கிறோம். அதற்கு நீங்கள் தான் எங்களுக்கு நன்றி சொல்ல வேணும்."
கோபால் வாயடைத்துப் போனான்.
"அப்படியே உங்கட செலவில் உடை த்த பகுதியைச் செப்பனிட்டுக் கொடுங்க (36T65'
பணிப்பாளர் பெரிதாகச் சிரித்தார். "அப்படிக் கட்டத் தொடங்கினால் கோடி கோடியாகப் பணம் தேவைப்படுமே? யார் கொடுப்பார்கள்?
"இடிப்பதற்குப் பணம் கொடுப்பவ ரையே கேளுங்கள்'
'66öT60 (3s.65urt?'
'இல்லை ஐயா! சீரியஸாகத்தான் கேட்கிறன். உங்கட அதிகாரசபை வீதி அபிவிருத்தி மேற்கொள்கிறது. அதற்கென லட்சக் கணக்கில் செலவிடுகிறது. அந்தச் செலவுக்குள் உடைத்த கடைகளைச் செப்பனிடுவதையும் சேர்க்கலாமே?
"அதெல்லாம் முடியாது”
"அப்படியானால் நான் கோர்ட்டில் வழக்குப் போடுவேன்"
"தாராளமாகப் போட்டுக் கொள். ஆனா, எங்களை அசைக்க முடியாது”
"இதென்னையா அநியாயம்? அபிவிரு த்தி வேலைக்காக அரசாங்கம் கோடிக் கணக்கில் செலவு செய்கிறது. அதில் உடைத்த கடைகளைச் செப்பனிட்டுக் கொடுக்க முடியாதா?”
"இதெல்லாம் தேவையில்லாத கதை. நேரத்தை வீணாக்காமல் இந்த ஒபிஸை விட்டுப் போயிடுங்க!” ad
'போகாவிட்டால் என்ன செய்வீங்க?"
"செக்கியுரிட்டியைக் கூப்பிட்டு உன் னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளு (366tt'
"அப்படியா? பாதிக்கப்பட்ட கடைக்கா ரர் அத்தனை பேரும் சேர்ந்து உங்கள் அலு வலகத்துக்கு முன் உட்கார்ந்து சத்தியாக் கிரகம் செய்தால் என்ன செய்வீங்கள்?"
'போலீசைக் கூப்பிட்டு உங்களை வெளியேத்துவோம்"
கோபாலும், வசந்தனும் கடை கடை யாக ஏறிப் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி னார்கள். அவர்கள் சத்தியாக் கிரகத்துக்கு அவ்வளவு ஆதரவு அளிக்கவில்லை.
'உண்ணா விரதம், சத்தியாக்கிரகம் எல்லாம் இந்த நாளில எடுபடாது. நீங்க பாக்கிறீங்கதானே? வேலையில்லாப் பட்டதாரிகள், வீடுகளை விட்டு வெளியேற் றப்பட்டவர்கள் எல்லாரும் உண்ணாவிர தம் சத்தியாக்கிரகம் இருந்தார்களே. ஆர்ப் பாட்ட ஊர்வலம் நடத்தினார்களே. ஏதா
மல்லிகை ஏப்ரல் 2011 & 63

Page 34
வது பிரயோசனம் ஏற்பட்டதா? அதெல் 6UTuð gosög;é &m 6utfb'
"இப்பிடிச் சொன்னால், எப்படி? எங்கட எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டாமா?
'அதற்காக, மலையைக் கவ்வி எலி யைப் பிடிப்பதா?”
"வேறு என்னதான் செய்யலாம்?"
"நம்ம எம்பியைப் பிடித்துப் பாராளுமன் றத்தில் கேள்வி கேட்கச் செய்யலாம்?"
"அதிலும் பிரயோசனமில்லை. அவர் கள் கேள்விகள் எல்லாம் ஹான்சார்ட்டில் பதிவாகும். அவ்வளவுதான்!”
"பாலிமென்டில் கேள்வி கேட்காமல், அமைச்சரைக் கண்டு பேசச் சொல்லலாம். ஜனாதிபதியோடு கதைக்கச் சொல்லலாம்"
‘அப்படி ஏதாவது செய்யத்தான் வேண்டும்’
எம்.பி பார்லிமென்டில் கேள்வி கேட் டார். அமைச்சரைக் கண்டு பேசினார். ஜனாதிபதியுடன் பேசினார். ஒன்றும் நடக்க வில்லை.
வீதிகள் இருமருங்கிலும் கற்குவியல் உடைக்கப்பட்ட றோட்டுக் கற்கள் கும்பம்
கும்பமாக இருந்தன.
இருமருங்கிலும் உடைக்கப்பட்ட கடை கள் செப்பனிடப்படாமல் இருந்தன. கடை களுக்கு முன்னே உடைக்கப்பட்ட கடைக ளின் உடைவுகள் தேங்கிக் கிடந்தன.
கோபாலும் வசந்தனும் ஒடித் திரிந்தார்
கள். அவர்களுக்கு உதவி செய்வார் யாரு மில்லை. காடு வெட்டிப் பாதை அமைப் போர் நிலையில் அவர்கள் இருந்தனர்.
மண்டையைப் பிய்த்துக் கொண்டு யோசித்தார்கள். அதன் பலன், வீதி விஸ் தரிப்பால் பாதிக்கப்பட்டோர் சங்கம்' உரு வானது. கடிதத் தலைப்புகள் அச்சிடப் பட்டன. நோட்டீஸ்கள் விநியோகிக்கப் பட்டன. செய்திகள் அனுப்பப்பட்டன. முத லாவது கூட்டம் நடந்தது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானப் பிரதிகள் முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்பட்டன.
சங்கத்தின் குழுவினர் எம்.பி.மார்களை நேரில் சென்று சந்தித்து நிலைமையை விளக்கினர். அமைச்சருக்கு ஒரு மகஜர் அனுப்பப்பட்டது.
ஒரு குழுவினர், நேரில் சென்று அமைச் சரைச் சந்தித்து நிலைமையை விளக்கு வதெனத் தீர்மானிக்கப்பட்டது. கோபால் தலைவராகவும், வசந்தன் செயலாளராக வும் செயற்பட்டனர்.
அவர்கள் தலைமையில் அமைச்சரைச் சந்திப்பதற்காக ஒரு குழு கொழும்பு சென்றது.
உடனடியாக அவரைச் சந்திக்க முடிய வில்லை. அவருக்கும் பல வேலைகள். அதனால கொழும்பில் இரண்டு நாள் தங்கி நின்று அமைச்சரைச் சந்தித்தனர். அமைச் சர் பெரிய மனது பண்ணி விரைவில் மட்டக்களப்புக்கு வருவதாகக் கூறினார்.
வீதி அபிவிருத்தி அமைச்சர் மட்டக் களப்பில் நடைபெறும் வேலையைப் பார்வையிட மட்டக்களப்புக்கு வருகை
மல்லிகை ஏப்ரல் 2011 & 64

தந்தார். அதிகாரசபை உத்தியோகத்தர் கள் அவருக்கு மாலைகள் அணிவித்து, வேலை நடைபெறும் பகுதிக்கு அழைத்து வந்தார்கள்.
பத்திரிகை நிருபர்கள் குட்டி போட்ட பூனை போல் குறுக்கும் நெடுக்கும் ஓடி னார்கள். கமராக்கள் பளிச் பளிச்சென்று கண் சிமிட்டின. அவரது வருகையால் ஒரு நாள் வேலை தடைப்பட்டது. பொதுமக்கள் பாதையைச் சற்றி வளைத்துப் போனார்
86.
உடைந்து கிடந்த வீதிகளையோ, அல்லது றோட்டுக் கரையோரங்களில் குழம்பிக் கிடந்த வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் தட்டுத் தடுமாறிப் பயணம் செய்ததையோ அமைச்சரால் பார்க்க முடியவில்லை.
அவருக்கென்று அமைக்கப்பட்ட மேடையில் ஏறி நின்று அலங்காரமாகப் பேசினார். நாளும் பொழுதும் அரசாங்கம் மேற் கொள்ளும் அபிவிருத்திகளைப் பற் றிப் பேசினர். அவரைச் சூழவுள்ள பிரமு கர்கள் சோடாக் குடித்து மகிழ்ந்தார்கள். கைதட்டினார்கள்.
கடை உடைப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள், அமைச்சரிடம் ஒரு மகஜரைக் கையளிக்க முயன்றார்கள். ஆனால் அதி காரிகள் அதைத் தடுத்து விட்டனர்.
பலத்த கட்டுக்காவலும் போடப்பட்டது. பொதுமக்கள் மேடையை நெருங்காமல், எட்ட நின்று ஒலி பெருக்கியில் அமைச்ச பேசுவதைக் கேட்டனர்.
தமது குறைகளை அமைச்சரிடம்
சொல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்க வில்லை.
அமைச்சர் வந்து வீதி அபிவிருத்தி யைப் பார்வையிட்டுச் சென்ற விடயம், படங் களுடன் கொட்டை எழுத்தில் பத்திரிகை யில் பிரசுரமாகியது.
பொதுமக்கள்- கடைக்காரர் அனுப விக்கும் கஷ்டங்கள் பற்றி ஒரு வார்த் தைதானும் பத்திரிகையில் பிரசுரமாக வில்லை. அமைச்சரின் வருகைக்குப் பின்னாவது உடைத்த, கடைகளுக்கு நஷ்டஈடு கிடைக்கும் என என எதிர்பார்த்த மக்கள் ஏமாந்தர்கள். கோபால், வசந்தன் இருவரும் அதில் அடங்குவர்.
அமைச்சர் வந்து சென்று ஒரு மாதம் கடந்து விட்டன. எவ்வித பலனும் ஏற்பட வில்லை.
கோபாலும், வசந்தனும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகை த்து நின்றார்கள். மூன்று மாதம் வங்கிக் கடன் கட்டப்படவில்லை. வீடு வளவை அடகு வைத்து வங்கிக் கடன் கட்டுவதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி இருக்க வில்லை. அவர்களது எதிர்காலம் கேள் விக் குறியாகியது.
வீதி அபிவிருத்தி வேலை ஆமை வேக த்தில் நகர்ந்தது. நிழல் தரும் பெருமரங்கள் தறிக்கப்பட்டன. வீதி எங்கும் ஒரே வேகா வெயில். கடை உடைபட்டவர்களுக்கு மாத வாடகை படுத்தது. கடையில் வியா பாரம் செய்தவர்களுக்கு மாத வருமானம் படுத்தது. கோபாலும், வசந்தனும், அவர்க ளின் குறியீடு ஆகினார்கள்.
மல்லிகை ஏப்ரல் 2011 & 65

Page 35
கடிதங்கள்
'கற்றுக் கொண்டிருக்கின்ற ஊடகவியலாளன்'
என்ற கட்டுரை குறித்து
பDல்லிகையில் எனது படத்தினை அட்டையில் பிரசுரித்ததுடன் என்னைப் பற்றிய
கட்டுரையைப் பிரசுரித்தமைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அக்கட்டுரையில் தமிழர்கள் 13ஆம் நூற்றாண்டில் குடியேறியதாகக் குறிப்பிடப்பட் டுள்ளது.
உண்மையில் இவ்வாறே பல சிங்கள வரலாற்றாசிரியர்களும் தொல்பொருளியலா ளர்களும் கூறிவந்தனர். இதனை மறுதலிப்பதாகவும் தமிழ் மக்கள் இலங்கையில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு அளவிலேயே வாழ்ந்தனர் என்பதை நிரூபிப்பதாகவும் வட பகுதியில் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப் பட்ட முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக்கள் சான்று பகர்கின்றது.
அக்கட்டுரையில் கி.கி. 13ஆம் நூற்றாண்டெனத் தவறுதலாகப் பிரசுரமாகியுள்ளது என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அடுத்த மல்லிகை இதழில் இதனைப் பிரசுரிக்குமாறு மிகுந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
அன்புடன் வி.தேவராஜ்
'வீரகேசரி வார வெளியீடுகளின் பிரதம பொறுப்பாசிரியர்
சர்வதேச தமிழ் எழுத்தாளர் கொழும்பு மாநகரில் நான்கு நாட்கள் ஒன்று கூடித் தமிழ் எழுத்தாளர்களினது பொதுப் பிரச்சினைள் பற்றி விவாதித்துத் திட்டங்கள் தீட்டி முழுமைப் படுத்தியதை மல்லிகை இதழ்களிலும் பொதுவாக நாளேடுகளிலும் படித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மெத்த மகிழ்ச்சி.
என்னதான் காழ்ப்பு விமரிசனங்கள் இவ்விழாவைப் பற்றிப் பலர் பலவிதமாகக் கருத்துக்கள் தெரிவித்திருந்த போதிலும் கூட, இந்த மாபெரும் இலக்கிய ஒன்று கூடல் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகவே எதிர்காலத் தலைமுறையினரால் கணித்துக் கெளரவிக்கப்படும் என்பது திண்ணம்.
விழா நடைபெற்று முடிந்த நாட்களை விட, அதன் பின்னர் அது பற்றிய பல்வேறு
மல்லிகை ஏப்ரல் 2011 & 66

மாறுபட்ட கருத்துக்களின் பரவல் தாக்க மும் இவ்விழாவை மிகப் பெரிய இலக்கிய விழாவாகவே உருமாற்றி விட்டது.
எதிர்க்கணையினர் பல பகுதிகளில் இருந்தெல்லாம் மாற்றுக் கருத்துக்களை யும் வக்கணை மிக்க அறிக்கைகளையும் தமது இருப்பை நிலை நாட்ட, எழுத்தில் பதிய வைக்கலாம்.
ஆனால், திட்டமிட்டு இப்படியானதொரு சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களினது பொது மகாநாட்டை இவர்களால் எண்ணிப் பார்த்து விடக் கூட முடியாதே.
தமது கையாலாகாத் தனத்தையும் செயல்பாட்டின்மையையும் போர்த்து மேவி மறைக்கத்தான் இந்த வக்கரிச்ச அபிப்பிரா யங்களும் பரபரப்பு விமர்சனங்களுமாகும்.
இந்த எழுத்தாளர் மாநாட்டின் ஆழ மான வெற்றி, இப்போதே இலங்கை இளம் தமிழ் எழுத்தாளர் மத்தியில் எதிரொலிக் கத் தொடங்கி விட்டது.
இந்த மாநாடு முடிந்த இரண்டு மூன்று மாதங்களுக்கிடையிலேயே, நமது இளம் படைப்பாளிகளினது பல்வேறு வகைப்பட்ட நூல்கள் நாட்டின் நாலாதிசைகளில் இருந் தும் வெளிவந்து கொண்டிருப்பதே இதற் குச் சாட்சியாகக் கொள்ளலாம்.
வெள்ளவத்தை
சமீபத்தில் தினக்குரல் தினசரியில் உங்களுடைய சுய வரலாற்றுக் குறிப்புக ளடங்கிய பொதுப் பேச்சொன்றை முற்றா கப் படித்துச் சுவைத்தேன்.
தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற அற் றைத் திங்கள் என்ற மகுடத்தில் நீங்கள்
உங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட சகல வாழ்வனுபவங்களையும் விரிவாகப் பேசி உரையாற்றியுள்ளிர்கள்.
நான் அந்தப் பேச்சினது எழுத்துப் பிரதி யைத் தான் தினசரிப் பேப்பரில் சுவைத்து, ரசித்துப் படித்தேன். என்னைப் பொறுத்த வரைக்கும் உங்களைப் போன்ற ஒர் அடி நிலைச் சமூகத்தில் பிறந்து, வளர்ந்து, போராடி மக்களால் அங்கீகாரம் பெற்று ள்ள, ஆரோக்கியமாகச் சிந்திக்கித் தெரிந்த ஒருவரால் தான் மனந் திறந்து இப்படியான கருத்துக்களைப் பொது மக்கள் மத்தியில் விளக்கமாகப் பேசித் தெளவுபடுத்திவிட முடியும் என மெய்யாகவே நம்புகின்றேன்.
உங்களது முழுப் பேச்சின் உள்ளடக் கமும் எழுத்தில் தெளிவாக வெளி வந்தி ருந்தது.
வாழ்வின் பல கசப்பான நேரடி அனுப வங்களையும் அவமானங்களையும் எப்படி உங்களால் இத்தனை தெவிளாவ மக்கள் மத்தியில் கருத்து வடிவில் விளங்கப்படுத்த முடிகின்றது? என மெய்யாகவே எனக்குள் நானே ஆச்சரியப்பட்டுக் கொண்டேன்.
ஆனால், நீங்கள் எழுதும் போதோ அல்லது மேடையில் கருத்துக்களைச் சொல்லும் போதோ பதட்டப்படாமல் ஆத்ம அர்ப்பணிப்புடன் முழு உண்மைகளையும் சொல்லி விடுவதாகவே என் மனசிற்குப் படுகின்றது.
நீங்கள் நேரடியாகக் கருத்துக்களைச் சொன்ன அந்தக் கூட்டத்திற்கு நான் நேரடி யாகவே வந்திருக்க வேண்டும் என என் உள்மனம் எனக்குச் சொன்னது.
மல்லிகை ஏப்ரல் 2011 * 67

Page 36
அந்தப் பேச்சு எனக்கு அறிவுறுத்திச் சொன்னது.
இப்பொழுது நானொன்றைக் கடைப் பிடித்து ஒழுகி வருகின்றேன். பேப்பர்களில் உங்களைப் பற்றிய செய்திகள், தகவல் கள், வேறு ஏதாவது எழுத்து ஆவணங்கள் வெளி வந்தால், அத்தனையையும் ஆறுத லாக இருந்து பொறுமையாக அவற்றைக் கத்தரித்து, கொப்பி ஒன்றில் பதவிசாக ஒட்டி வைத்து ஆவணப்படுத்தி வருகின் றேன்.
வயது ஏற ஏறத்தான் உங்களது கருத் துக்களிலும் சிந்தனைகளிலும் புதுப் புது மெருகேறி வருகின்றதோ? என எனக்குள் நானே கேட்டு வருகின்றேன்.
இனிமேல் கண்ட கண்ட கூட்டங்க ளுக்குப் போய் நேரத்தை வீணடிக்காமல் பொறுப்புள்ள மேடைகளில் கருத்துக்க ளைச் சொல்வதற்குத் தெண்டித்துப் பாருங்கள்.
நீர்கொழும்பு. செல்வி.ச.சுகிர்தராணி.
நான் இந்தக் கடிதத்தை மட்டக்களப்பு
அவசரமாக எழுதி வைக்கின்றேன்.
சென்ற கிழமை நமது நகரத்தில் பிரப லமாகவும் பிரமாண்டமாகவும் பொதுவா கச் சொன்னால், கோலாகலமாகவும் நடந் தேறி முடிந்த- நமது பிரதேசத்திற்கே தனிப் பெரும் கெளரவத்தைத் தேடித் தந்துள்ள எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடத்திய தமிழியல் விருது- 2010 விழாவுக்கு நான் நேரில் வந்திருந்தேன்.
உங்களது பெயர் முன் பின்னாக எனக்
குத் தெரிந்துள்ளது கூட, ஒரளவு உண்மை தான்! மல்லிகைச் சஞ்சிகையைப் பற்றியும் கேள்விப்பட்டதுண்டு. படித்துப் பார்க்கக் கூடிய வாய்ப்பு வசதி ஒன்றுமே கிட்ட வில்லை,
இங்கு நடைபெறும் விழா விளம்பரத் தில் கூட, பாராட்டப்படுவோர் பட்டியலில் உங்களது பெயரும் இருந்த போதிலும், நீங்கள் இவ் விழாவில் கலந்து கொள்ள வருவீர்களோ, ! வுடன் கூடத்தா ைநான் விழாவுக்கு வந்தி ருந்தேன்.
டீர்களோ என்ற ஐயுற
உண்மையை மனந் திறந்து சொல்ல ட்டுமா? நீங்கள் இவ் விழாவில் நேரடியாகக் கலந்து கொண்டதும் பாராட்டாளர்கள் அனைவருக்கும் மொத்தமாகவே நீங்கள் மேற் கொண்ட பேச்சும் எனது வாழ்க்கை யிலேயே நான் இதுவரை அனுபவிக்காத அனுபவங்களில் ஒன்றென்றே நானிதைக் குறிப்பிட விரும்புகின்றேன்.
மறக்கவே முடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று.
முதன் முதலாக உங்களது மல்லிகை மார்ச் 2011 இதழும் இந்தத் தடவை தான் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. மட்டக்க ளப்பில் இங்கு மல்லிகை கடைகளில் கிடைப்பதேயில்லை!
உங்களது மேடை உரையை நேரில் கேட்டதிலிருந்தே உங்களுடன் இலக்கி யத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற மன ஆசையின் நிமித்தமாகவே இந்தக் கடிதத்தை நேரடியாக உங்களுக்கே எழுதுகின்றேன்.
ஆர்.ரஞ்சனி,
மட்டக்களப்பு.
மல்லிகை ஏப்ரல் 2011 * 68

- ALT66 self
இ பல இளம் எழுத்தாளர்கள் எழுத்து முதிர்ச்சி அடையும் முன்னரே, அவசரகதியில் இன்றைய அச்சு வசதியைப் பயன்படுத்திக் கொண்டு, தமது படைப்புக்களை "ஆவறி போவறி' என்ற கணக்கில் நால் வடிவில் வெளியிடுகின்றனர். இந்த இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றிர்கள்?
சாவகச்சேரி சதவச்செல்வம் * இப்படியான இளம் படைப்பாளிகள் மிக்க அவசரகதியில் பேரும்புகழும் சம்பாதிக்க, இலக்கியத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்த முன்வருகின்றனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் தமது படைப்புக்களை நூலுருவாக்கி, அதற்கு வெளியீட்டு விழாவையும் வைத்தகட்டத்திலேயே பலரும் காணாமலே போய்விடுகின்றனர். பெரும்பாலோர் நகரத்தில் நடைபெறும் இலக்கியக் கூட்டங்களிலும் பங்குகொள்வதில்லை. அந்தப்பக்கமே தலையைக் காட்டுவதுமில்லை.
பின் எப்படி ஆரோக்கியமான இலக்கியம் இவர்களிடம் இருக்கும்?
இ வரலாறு காணாத ஜப்பானிய நாட்டில் நடந்த சுனாமி, ஆறாவளி பற்றிய உங்களுடைய upaoтаоco GrađтGOTP
வெள்ளவத்தை ஆர்.திருமுருகன் * தொலைக்காட்சிபார்த்துக் கொண்டிருந்த வேளையிலும் அடுத்த நாள் தினசரிப்பத்திரிகைகளைப் படித்துக் கொண்டிருந்த சமயத்திலும் என் நெஞ்சு அப்படியே பரிதவித்துப் போய் விட்டது.
அன்று இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் அமெரிக்க ஆளும் மிலேச்சக்கும்பல் இரண்டு தடவைகள் ஹிரோஷிமா, நாகஷாகி நகரங்கள் மீது அணுகுண்டு வீசி அந்நாட்டையே நாசப்படுத்தி விட்டான்.
இன்று இயற்கையின் கோரச் சீற்றம் அந்தநாட்டு மக்களை நிலைகுலைய வைத்துவிட்டது. இந்தக் கொடுஞ்
மல்லிகை ஏப்ரல் 2011 & 69

Page 37
சீற்றத்தின் பாரிய அழிவுகளில் இருந்து, புத்தம் புது ஜப்பான் மீண்டெழ வேண்டும் என் மனதார விரும்புகின்றேன்.
இ மல்லிகைக் காரியாலயம் மலர்ந்த பத்தாண்டு புதிய தொடக்கம் இடத்திற்கு இப்போது இடம் மாறிவிட்டதாக எனது கொழும்பு இலக்கிய நண்பன் சமீபத்தில் Gagist CocoGUefusio croTeslag தகவல் தந் தான். புதிய மல்லிகை இதழ்களைப் பார்த் தால் அதனது பழைய முகவரியிலும் தொலைபேசி எண்ணிலும் மாற்றமேதும் Garful JG5GioGODGOGLUf
குருநாகல் ஆர்.குருநாதன்
* முன்னர் மேல்தட்டு அறையில் மல்லிகை அலுவல கம்பலகாலங்களாக இயங்கிவந்தது. இன்று அதன் கீழே, நிலத்தடி அறையில் இயங்கி வருகின்றது. முன்னர் படி ஏறி இறங்க, வயது காரணமாகச் சிறிது சிரமமாக இருந்தது. இன்று அந்த அடிக்கடி ஏறி இறங்கும் பாரிய உடற் சிரமங்களிலிருந்து சற்று விடுபட்டு விட்ட சந்தோஷம். மன நிறைவு.
*ề “ert/ciosugôi” đo đfirfiuJiữ 60ggu JLJfrcu&T னின் மறைவு ஞாபகார்த்தமாக அநதாயக் கட்டமொன்றைமல்லிகைப்பந்தல் ஊடாக ஒழுங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களது மனசில் தோன்றியது?
வவுனியா எஸ்.ஏ.ராமேஸ்வரன்
* மல்லிகை இதழின் அட்டைப் படங்களில் தகுதி யானவர்களினதும் தகைமை மிக்கவர்களினதும் உருவப் படங்கள் இடம் பெற வேண்டும் என அந்தக் காலத்திலேயே நான் மனதில் முடிவெடுத்துக்கொண்டு, இன்று வரையும் நடைமுறைப்படுத்திவரும் சம்பவங்க ளில் ஒன்றுதான். சரஸ்வதி ஆசிரியருக்கு எடுக்கப்பட்ட அநுதாபக் கூட்டம்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்காகவும், இந்த நாட்டு இலக்கிய வளர்ச்சிக்காகவும் தம்மை ஒப்புக் கொடுத்து மனசார உழைத்து வந்தவர்களுக் கும் மல்லிகைப் பந்தல் ஞாபகார்த்தக் கூட்டங்களை ஒழுங்கு செய்து, கட்டம் கட்டமாக நடத்தியே தீரும்!
இ, உங்களது அந்தக் கால நண்பனும் எழுத்தாளருமான செ.கணேசலிங்கன் சமீபத்தில் கொழும்பு வந்துள்ளதாகப் பத்தி ரிகைகளில் பார்த்து அறிந்து கொண்டேன். கொழும்பு வந்த அவர் உங்களை வந்து சந்தித்தாரா?
நீர்கொழும்பு 6Tsh).(356LITsueir
* அன்னாரது மகன் குமரன் ஒருநாள் காலை கணேசலிங்கனை மல்லிகைக் காரியாலயத்திற்கு அழைத்து வந்திருந்தார். இருவருமே பழைய நட்பைப் பரிமாறிக் கொண்டோம். பின்னர் சரஸ்வதி ஆசிரியர் திரு.வ.விஜயபாஸ்கரனுக்கு அஞ்சலிக் கூட்டம் ஒன் றைக் கொழும்பில் ஒழுங்கு செய்திருந்தேன், மல் லிகைப்பந்தல் ஊடாக, அந்த அஞ்சலிக் கூட்டத்திற்கும் அவரே தலைமை தாங்கிக் கருத்துரைத்தார்.
இ சமீபத்தில் தமிழ்நாட்டுக்குப் போகும் 20.Gg5aFib (egntong 22.audioUTULMTP flasp&teles ளில் கலந்து கொள்ள இருக்கிறீர்களா? நீங் கள் தமிழகத்திற்குப் போய் வந்து நீண்ட காலமாகி விட்டதே என்ற ஆதங்கத்தில் கேட்கின்றேன்.
யாழ்ப்பாணம் ஆர்.பூங்கோதை
* இப்போதைக்குப் போகக் கூடிய சூழல்நிலை இருப்பதாக என் மனதிற்குப் படவில்லை. ஏதாவது முக்கியமான இலக்கியநிகழ்வோ அல்லது இலக்கியத் தேவையோ இருந்தால்தான் எனது தமிழகப்பயணம் திட்டமிடப்படும்.
இ மறைந்த ஈழத்து எழுத்தாளர்களினத
மல்லிகை ஏப்ரல் 2011 * 70

ஞாபகார்த்தத்தை முன்னிட்டு, ஒரு நாளை ஞாபக நாளாகக் கடைப் பிடித்து, அன்னா Gooů UýluU2GouULGöTé2GorbGg5rrayLb ஞாபகார்த்த நிகழ்வைத்தொடர்ந்து நடத்தி வந்தால், என்ன?
CBESTÜLunrui. எஸ். அனுஜன் * நல்லதொரு யோசனைதான், இது இது சம்பந்த மாகச் சிந்தித்து, மறைந்த எழுத்தாளர்கள் மீது அபி மானமும் அக்கறையும் கொண்டவர்களுக்கு இந்த யோசனையைச் சமர்ப்பிக்கின்றேன்.
இ ஜப்பானியத் தீவில் சமீபத்தில் நடை பெற்ற முடிந்த மகா மகா மோசமான புயல் வெள்ளப் பேரழிவைப் பற்றி என்ன நினை க்கிறிர்கள்?
தெஹிவளை. ஆர்.சாம்ஸன்
* உலக மனுக்குலமேபதறித்துடித்த ஊழிக் கொடும் நிகழ்வு, அது புயல், வெள்ளம் அல்ல இன்றைய பிரச்சினை. அதன்பின்னர் தொடர்ந்துநிகழ்ந்து வரும் சம்பவங்களால் உலகமே விக்கித்துப்போய், செய்வத றியாது திகைத்துப் போயுள்ளது.
வெற்றிவெறிபிடித்தஅவமரிக்கா, அன்றுஹிரோ ஷிமா, நாகஸாகி என்ற நகரங்களின் மீது அணு குண்டுவீசி, ஜப்பானியநாட்டையேநச்சுப்டுத்தினான். இன்று சேதத்தின் பின் விளைவுகளாக அணு உலைகளே கட்டம் கட்டமாக வெடித்துச் சிதறி நச்சு அணுக்கதிர்களையே உலகெங்கும் காற்றுடன் பரவச் செய்துள்ளது.
அணுசக்தி ஆக்கம் பற்றிச் சிந்தித்து வந்த மனுக்குலம் முழுவதும், இன்று நச்சு அணுக் கசிவு பற்றியே சிந்தித்துப்பதறிப் போய்க் கிடக்கின்றது.
இ சமீபத்தில் ஒர் அதிசயத்தைக் கூர்ந்து பார்த்துச் சந்தோவடிப்பட்டுக் கொள்ளுகின் றேன்!உங்களதுஉருவம் அடிக்கடி தொலைக்
காட்சிகளில் காட்டப்படுகின்றது. செய்திப் பத்திரிகைகளிலும் உருவப்படங்கள் இடம் பெறகின்றன. இந்த வெகுசனப் புகழைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
திருகோணமலை. எல்.எம்.செல்வம்
* அரசியல்வாதிக்கும் சினிமா நடிகர்களுக்கும் இந்த வெகுசனப்புகழ் அவசியம் தேவையானதொன்று தான். வெறும் எழுத்தாளனுக்கு இந்த வெகுசனப் பரபரப்புப் புகழால், எந்த விதமான தனிப் பெரும் செல்வாக்குக் கிடைத்து விடுவதில்லை. .
தரமான படைப்பாளி என்றால், மக்களுக்கானமக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட் படைப்புக்களை அவன் சிருஷ்டித்து- மக்கள் மத்தியில் உலவவிட்டு, மக்கள் நெஞ்சங்களில் அழியா இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவேண்டும்.
மற்றும்படியான புகழ்கள் அனைத்துமே நிலையா னவையல்ல!தற்காலிகமானவையே!
S சர்வதேச எழுத்தாளர் மாநாடு இந்தள விற்குப் பெரும் வெற்றியையும் சர்வதேசச் சாதனையையம்மனசளவில்தாங்கிக்கொள் ளாத ஒரு சில புத்திசீவிகள்- இதில் சில CLUDITafarfuLUritasg 5Lib 69|Liu(256.Jft. G5f Tu"LGODLநொடியெல்லாம் சொல்லிச்சொல்லி மாநாட் டினது மகத்தான வெற்றியைக் கொச்சைப் பருத்தி எழுதுகின்றனரே. இதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
வெள்ளவத்தை. ஆர்.ரமணா
* இவர்கள் யாரிடமுமே ஆரோக்கியமான சர்வதே சத்தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி முடிக்கத்தக்க தென்போ, திராணியோ மருந்துக்குக் கூட இல்லை. தாமும் இலக்கிய உலகில் உலவி வருவதைக் காட்டக் கூடிய வெறும் எழுத்துக் கூட்டம்தான் அன்னாரது
கட்டுரைப்பிரலாபங்கள். விட்டுத் தள்ளுங்களேன்.
மல்லிகை ஏப்ரல் 2011 * 71

Page 38
மல்லிகை ஏப்ரல் 2011 : 72
3. 2 lagi TigitigasilGcucu இற்றையே ரெக்கும் மறக்க முடியாது- அடிக்கடி மgரச எாளில் நினைத்துப் பார்க்கும் நிகழ்ச்சிஒன்றை மீராரும் இர மீட்டிச் சொற்ற
ԼՔԼուLIIIյrTF
கொக்குவில், * நிருமணம்செய்த அந்தக்காலகட்டம் Fib LTTEft கூடர் செல்லவில்லை. ஏதோவொரு முக்கிய அலுவல்
ாரணமாகக் கொழுப்புக்கு வந்திருந்தேன்.
என்.கணேசநாதன்
இப்போழுது சில்லையூர்ச் செல்வராசன் *):Tıptı. பில் வீரகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் சாயங்காலம் தேநீர்க் கடையில் இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருந்த சமயம் அவர் வாய் விப்ர் ஒரு சினிமாப் பாடலை உரத்த நாளில் பாதக் HIIT, IIT
"சே இந்தப் பாட்டை வெறுமனே ஒரு தேத்தண் விரிக் கடையில் இருந்தா கேக்க வேணும்? காஸ்பேஷ் கடற்கரையில் இருந்தல்லவா, இதை ரசிக்க வேணும்' என நான் ஜி சுப்பேற்றி விட்டேன்.
அப்பொழுது சில்லையூரிடம் கார் கீருந்தது. அது al-lif: நின்று கொண்டிருந்தது.
"ஜீவாவின் ஆசையை நானேன் வீணாகக் filtli பான்? வாய்யா ரெண்டு பேரும் கடற்கரைக்குப் போய் பாட்டை ரசிப்போப்" என உடனே புறப்பட்டு விட்டார்.
tாலி முகக் கடற்கரைத் நிருப்பத்தில் நமது கார் போய்த் திரும்பிய வேளையில், அதிபயங்கர வேகத் தில் எநிரே அந்த காரொன்று எமது காரைப் பநப் பார்த்து விட்டது.
மரண அடி காருக்கு. சில்லையூர் ஒரு பக்கக் கதவு வழியாகத் தூக்கி எறியப்பட்டார். எனக்கோ கார்க் கண்ணாடி மண்டையைப் பதப் பார்த்து விட்டது.
சூழ நின்றவர்கள் நம் ஆருவரையும் பிரதான
வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்று ரேவே சில்லையூர் காயக்கட்டுக்களுடன்
சீர்,ே வந்து சேர்ந்துவிட்டார்.
எனக்கோ தகவல் ஊருந்துத் தர் ந்து விடக்
கூடாதே என்ற மனப் பயப்.
ஒரு கிழமை கழித்து, நானும் ஆஸ்பத்திரிக் கட்டுக்களுடன் வெளியே வந்தேன்.
பின்னர்தான் வீட்டாருக்குத் தகவலே allisi. ந்தது.
* நீங்கள் தமிழ்நாட்டுக்கு எத்தனை தட வைகள் போயிருக்கின்றிர்கள் உலகில் is தெந்த நாடுகளுக்குப் போயுள்ளீர்கள்:
шпвйтініппіт. ரி. தவநேசன்
* தமிழ்நாட்டுக்கு நான் 35 தடவைகளுக்கு ாேல் சென்று வந்திருக்கின்றேன். பல்வேறு இலக்கிய நிகழ் ச்சிகளில் எல்லாம் பல ஊர்களில் கலந்து கொண்டி நிக்கின்றேன். முதல் முதலில் போனது எனது முதல் சிறுகதைத் தொகுதி"தண்ணீரும் கண்ணீரும் சாஹித் நியமண்டலப் பரிசைமுதன்முதலில் பெற்றுக் கொண்ட காசித்தில். அதுதான் என் முதற் பயணம்,
பின்னர் மாஸ்கோ, பாரிஸ், லண்டன், பேர்லின் என்று உலகப் பரப்பிலுள்ள தஎேநகரங்களுக்குப் போய், கீலக்கிய உரையாற்றியுள்ளேன்.
č* ? šľ5aTF1 a ITalu aJua. சிநபவ ருாப கார்த்தமாக என்னத்தை இலக்கிய உல கில் பதிய வைத்துள்ளீர்கள்
கொடிகாமம், ஜி.கனநாதன்
"மல்லிகை என்ற இலக்கியப் [fiി:Iിജ് நாமும், மல்லிகைப்பந்தல் என்ற புத்தக வெளியீடுக iரின் பெயர்களுமே கீன்றுவரையும் எனது &ßêIT FIJL35] கீரிய ஆாபகங்களை நிEarயூட்டிக் கொண்டே கீருப்பதுதான்!
2014 ஆகதிரேசன் மீதி, கொழும்பு 13 முகபரியில் வசிப்பவரும், பல்லிகை djali: Ë, Çikustiullit Erinirtit டொமினிக் ஜீடா அவர்களுக்காக, கொழும்பு rfield itselrig (ELC3, 143A, i.e. it flusitat lakshmi Printers அச்சகத்தில் அச்சிடடு பெனியிடப் பற்றது.

S
Cassette
Audio Luxury & Fancy Goods
S.
alculator
C
d's
sae [×] 计 slo R*: sae : C) 的 그나} > 出
Dealers

Page 39
BROCHURES, CATALOGUES, SOUVENIRS, BOOKMARKs, GREETING CA
HAPPY DIGITAL
Digital Colour Lab,
No. 75 1/1, Sri Sumanatis
Te: +94 11 49373 Web: WWWhdck.com, E
 

ENTRE (PV) LTD
Digital Oiset Press
a Mawatha, Colombo - 12. 36,+94117394592