கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2011.02

Page 1


Page 2


Page 3
நதியினு
கவில்
வே.ஐ.வர
நெடுந்தீவு அல்வாயூர் சி பிறைநிலாகி 35.856,ort 9 LDT 6p கே.எஸ். வெலிப்பன்ை
கட்டு
கலாநிதி.க.அ
LD6160TITf கவிஞர் ஏ தமிழ்வன தி.ஞான அருள்திருஇராே சிறு
85.600T.LDC88 அன்ட
D.L.T.D.56
சி
கே.எஸ்.சி
gueF60)é
எஸ்.நி நூல் வி
56.66 நூல் அறி
லெனின் பு கலை இலக்கி பேசும் இ

1ள்ளே.
விதகள் தராஜன் - 05
முகிலன் - 07 1.சிவநேசன் - 13
ருஷ்ணராஜா - 18 uᎠ600fl -- 2Ꮞ தராஜன் - 25 சுபாஸ் - 34 ன அத்தாஸ் - 37
ரைகள்
(5b56.png|T - O3 அமுதன் -08 '.இக்பால் - 14 mர்ணன்-26 சேகரன் - 29 சந்திரம் ஸ்ரலின் - 42
கதை
கஸ்வரன் - O6 lDങ്ങി - 21 லிங்கசிவம் - 36
50TLDT
வகுமாரன் - 35 னக்குறிப்பு
LD6)60r- 41 விமர்சனம்
ாதிகலீல் -19 முகக் குறிப்பு
மதிவானம் -38 யநிகழ்வுகள் - 41 தயங்கள் - 41

Page 4
ஜீவநதி
2011 மாசி இதழ் - 29
பிரதம ஆசிரியர்
கலாமரிை பரணிதரனி
துணை ஆசிரியர்
வெற்றிவேலி துஷ்யநீதனி
பதிப்பாசிரியர்
கலாநிதி த.கலாமரிை
தொடர்புகளுக்கு :
ආගඛ එ|ඝlගී சாமனநீதறை ஆலgப்பிள்ளையார் வீதி ඌ|Gමීකlí ඛ|L(8tpíශේෂ ඒloඨික|II]] ලීෂීබා/Élගඨ.
te, Geomeалir sajtup:
திருதெணியான் திரு.கி.நடராஜா
விதாலைபேசி 0775991949 02 2262225
E-mail: jeevanathy(a)yahoo.com
Fax: 021226.3206
வங்கித் தொடர்புகள் K. Bharameetharan Commercial Bank Nelliady A/C - 8108021808 CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு grf60LD 2600r(B.
- ஆசிரியர்
"
6,7,8,9 நிறை6ே லிருந்துL இலக்கிய இவர்கள் னொருவ சிறப்பு 6 ஆர்வலர் இளைய
ଗ{ நிகழ்ச்சிக ஆய்வரங் மிகவும் நேரத்தில் கருத்தரங் எழுத்தா நிறைந்தி
Gা( பட்டன. ! கொண்ட கட்டுரைக் அரங்குக கட்டப்பட் தலைவர்க ஏற்பாடு முறையில் ଗt! ஒன்றை எழுத்தா? until 85ftଗt திரு.தி.ஞ (86,160ổi lọt அனைவரு உரித்தாக
ஜீவநதி
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
பாராட்டி மகிழ்வோம் ! rவதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - 2011 ஜனவரி
ஆம் திகதிகளில் வெற்றிகரமாக இனிது றியுள்ளது. இலங்கையிலிருந்தும் தமிழகத்தி புலம்பெயர் நாடுகளிலிருந்தும் பேராளர்களும் ஆர்வலர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். யாவரும் ஒரே குடும்பத்தினர் போல் ஒருவருட ர் அளவளாவி, பேசி மகிழ்ந்தமை இம்மாநாட்டின் னலாம். மூத்த எழுத்தாளர்களையும் இலக்கிய களையும் சந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் தலைமுறையினர்க்கு இம்மாநாடு வழங்கியுள்ளது. காழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இம்மாநாட்டு ள் இடம்பெற்றன. மூன்றே மூன்று மண்டபங்களில் குகளும் கருத்தரங்குகளும் நான்கு நாட்களுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரே ம் மூன்று மண்டபங்களிலும் ஆய்வரங்குகளும் குகளும் இடம்பெற்ற போதும், பேராளர்களாலும் ளர்களாலும் எப்போதும் இம்மண்டபங்கள் ருந்தன. ழபத்தொரு கட்டுரைகள் ஆய்வரங்குகளில் படிக்கப் இம்மாநாட்டின் பதிவுகளாக 340 பக்கங்களைக் சிறப்புமலரொன்றும் 320 பக்கங்களைக் கொண்ட கோவையொன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டன. ரிற்கு ஈழத்து இலக்கியச் சிற்பிகளின் பெயர்கள் டிருந்தமையும் ஒவ்வோர் அரங்குக்கும் இணைத் ளூம் ஆய்வு மதிப்பீட்டாளர்களும் இணைப்பாளரும் செய்யப் பட்டிருந்தமையும் கூட, திட்டமிட்ட ான ஒழுங்கமைப்பையே வெளிப்படுத்தின. தவித அரசியல் சாயமுமின்றி எழுத்தாளர் மாநாடு கழ்த்திக் காட்ட முடியுமென்பதை சர்வதேச தமிழ் ர் ஒன்றியம் சாதித்துள்ளது. இதன் வெற்றியின் கள் பலரெனினும் திரு.லெ.முருகபூபதி, “னசேகரன் ஆகியோர் சிறப்பாகப் பாராட்டப்பட வர்கள். மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த க்கும் ஜீவநதியின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் டும்
- பரிரதம ஆசிரியர்
D- இதழ் 29

Page 5
ாழ இலக்கிய
ாழகேசரி -
கலாநிதி கந்தை
அறிமுகம்
பொதுவாக பத்திரிகைகளின் பணிகளி லொன்றாக அதன் இலக்கியப்பணிகள் காணப்படு கின்றன. அந்தவகையில் யாழ்ப்பாணத்தினைத் தளமாகக் கொண்டு இருபதாம் நுாற்றாண்டின் மூன்றாம் தசாப்த காலத்தின் ஆரம்பத்தில் வெளிவந்த ஈழகேசரிப்பத்திரிகையும் தனது பங்களிப்பினை இவ்விடயந் தொடர்பாகச் செய்வதற்குத் தவறவில்லையென்றே கூற வேண்டும். அது தான் வெளிவந்து கொண்டிருந்த காலப்பகுதியில் தனது வெளியீடுகள் முழுவதிலும் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் விமர்சனங்கள் போன்ற இலக்கிய விடயங்களுக்காகத் தனியான பக்கங் களினையும் ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈழகேசரியின் தோற்றம்
டொனமூர் அரசியல்திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில் மக்களுக்கு அரசியல் தொடர்பான கருத் துக்களினைத் தெரிவிக்கவும் சமூகச்சீர் கேடுகள், மரபுகள் மற்றும் மூடப்பழக்கங்கள் போன்றவற்றை அகற்றுகின்ற நோக்குடனும் நாட்டில் இலக்கியத் துறையினை வளர்ச்சியடையச் செய் கின்ற குறிக் கோளுடனும் 1930 யூன் 30 இல் ஈழகேசரிப் பத்திரிகை வெளிவரத்தொடங்கியது. தொடர்ந்து 28 ஆண்டுகள் தனது தொடர்ச்சியான பணியினை மேற்கொண்டு வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. நா.பொன்னையா என்பவரி னால் அவரது சொந்த அச்சகமான திருமகள் அச்சகத்திலிருந்து வெளிவந்த இப்பத்திரிகை ஈழத்தில் மட்டுமல்ல தமிழகத்திலும் தனது வாசகர் வட்டத்தினைக் கொண்டிருந்தமை அவதானிக்கத்தக்கது. ஜீவநதி -C

2த்து வளர்ச்சியில்
ஒரு பார்வை
யா அருந்தவராஜா
பத்திரிகையின் தன்மை
ஆரம்பகாலங்களில் ஒரு வாராந்தப் பத்திரிகையாகக் காணப்பட்ட இப் பத்திரிகை புதன்கிழமைகளில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தது. பின்னர் 1933 ஆம் ஆண்டி லிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தனது வெளியீட்டினைத் தொடர்ந்தது. இப் பத்திரிகை தொடங்கப்பட்ட காலத்தில் 4 பக்கங்களை மட்டுமே அதன் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. இருந்தபோதும் சில சந்தர்ப்பங் களில் 12 பக்கங்களினையும் சில சந்தர்ப்பங்களில் 16 பக்கங்களையும் கூடக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்னும் தைப்பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற விசேட காலங்களில் தனது பக்கங்களினை மேலும் அதிகப்படுத்தியிருந்தமை அவதானிக்கத்தக்கது. இப்பத்திரிகை முதல் இரண்டு வருடங்களிலும் பொதுவாக 17cmx11cm அளவிலான தாள்களில் அச்சிடப்பட்டு வெளி வந்தது. ஆனால் மூன்றாவது வருடந்தொடக்கம் 16cmx1 tcm அளவில் வெளிவரத்தொடங்கியது.
இலக்கியப் பணி
1930 ஆம் ஆண்டினை அடுத்த சுமார் 25 ஆண்டு கால வரலாற்றினை ஈழத்தின் நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு பத்திரிகைக் கால மெனலாம். அந்தவகையில் அக்காலப்பகுதியின் ஒரு பகுதியினைப் பங்குபோட்டுக் கொண்ட பெருமை இப்பத்திரிகையினைச் சாரும். ஈழத்துப் பூதந்தேவனார் காலந்தொடக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஈழ - தமிழகத் தொடர்பினை இக்காலப்பகுதியில் வலுப்படுத்திய பேராசிரியர்களோடும் கவிமணிகளுடனும் எழுத்துலக மேதைகளுடனும் உறவுகொண்டு
@一 இதழ் 29

Page 6
இரண்டு நாடுகளுக்கிடையிலும் இலக்கியப்பால மிட்ட பெருமை ஈழகேசரிக்கு உண்டு.
ஈழகேசரி மேற்கொண்ட இலக்கியப்பணி பற்றி ராஐரிகூஜி என்பவர் கூறுகின்ற கருத்து இவ்விடத்தில் அவதானிக்கத்தக்கது.
"தமிழகத்தில் மணிக்கொடிக்காலம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதுபோல் அதற்கு குறைந்தது என்று சொல்ல முடியாதவாறு நாம் பெருமரிதம் அடையும் காலம் ஈழகேசரிக் காலமாகும்."
ஈழநாட்டின் பேனாமன்னர்களையும் தமிழ்வளர்க்கின்ற செல்வர்களையும் இலக்கியத் தராசில் எடைபோட்டு ஈழகேசரி அவர்களை அறிமுகம் செய்து இலக்கிய உலகினைச் சோபிக்கச் செய்தது. ஈழத்து இலக்கிய வரலாற்றில் புதியவர் களுக்கும் புதுமைகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது இப்பத்திரிகை. இதன் இலக்கியப் பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர்கள் பலர் தங்களுக்குப் பின்னர் இரண்டு மூன்று சந்ததி எழுத்தாளர்கள் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழகேசரி எழுத்தாளர்கள் பலரை அறிமுகப்படுத்தியது மட்டுமன்றி அவர்களிடை யிலே தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் பெரும் பங்கு வகித்தது. மேலும் அது தமிழகப் பத்திரிகைகளில் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளிக் கொண்டு வந்து பெருமை சேர்த்தது. இப்பத்திரிகையின் படைப்புக்களும் பல தமிழகப்பத்திரிகைகளில் மறு பிரசுரஞ் செய்யப்பட்டன. இப் பின்னணியில் படைப் பாளிகளுக்கு அதிக வாய்ப்புக்கள் தேடிவந்ததன் காரணத்தால் அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.
இவ்விடத்தில் ஈழத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு ஈழகேசரியின் பணி தொடர்பாகச் சொக்கன் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு
“ தமிழ் இலக்கிய வளர்ச்சி போன்று இன்னும் இடம்பெறவேணர்டுமென்ற உயரிய நோக்கமே ஈழகேசரியின் கருவாக அமைந்து கொணர்டது. சமூக விழரிப்புணர்ச்சி சமூக உணர்வுகள் ஆகியவற்றை ஈழகேசரி ஒருங்கி ணைத்துக் கொணர்டது. அந்தக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் வியாபார நோக்குடன் செயற்பட்டன. ஆனால் கட்சிகளின் பினர்னணி இல்லாத வார இதழாக இருந்தபோதும் சமூக விழிப்புணர்வினை ஏற்படுத்துகின்ற படைப்புக் களைத் துணிந்து வெளியிட்டதெனலாம்."
ஜீவநதி C

நா.பொன்னையாவின் காலம்
19 3 Ο kummer 38 காலப் பகுதியில் நா.பொன்னையா ஈழகேசரிப்பத்திரிகைக்குப் பொறுப்பாக இருந்தார். இக்காலப்பகுதியில் ஓரளவுக்குப் பழமையைத் தழுவியதும் ஆராய்ச் சித்தன்மை கொண்டதுமான சமய இலக்கியப் படைப்புக்கள் வெளிவந்தன. பவளகாந்தன் அல்லது கேசரி விஜயம், அருணோதயம் அல்லது சிம்மக்கொடி போன்ற தொடர்கதைகள் பிரசுரிக்கப் பட்டன.
கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடல்கள்,பாரதிதாசன் மற்றும் நாமக்கல் கவிஞரின் பாடல்கள், உ.வே சாமிநாத ஐயரின் படைப்புக்கள் இக்காலப்பகுதியில் ஈழகேசரியினை அலங்கரித்தன. குமாரசாமிப் புலவர் எழுதிய கடிதங்கள் அவரது மகனால் தொடர்ச்சியாகப் பல காலமாக இப்பத்திரிகையில் வெளியிடப்பட்டு வந்தது. மகாவித்துவான் சி. கணேசையர், குமாரசாமிக்குருக்கள், சோ, பாலசுப்பிரமணியம் (இளமுருகனார்), சோம சுந்தரப்புலவர், நவநீத கிருஸ்ணபாரதி, குல. சுபாநாதன், சோ.நடராசன், மு.நல்லதம்பி, க.பொ.இரத்தினம், மு.செல்லையா, வரணியர் இராசரத்தினம், பொன் குமாரவேற் பிள்ளை போன்ற பலரின் ஆக்கங்கள் ஈழகேசரி யில் அக்காலப்பகுதியில் வெளிவந்தன.
சோ. சிவபாதசுந்தரத்தின் காலம்
இவரது காலத்தில் நவீன இலக்கியத்திற்கு இடமளிக்கப்பட்டது. மேலும் இக்காலப்பகுதியில் " கலாபவனம்" என்ற பகுதி ஆரம்பிக்கப்பட்டு விமர்சனங்கள் ஊக்குவிக்கப்பட்டன. சினிமா, சங்கீதம், போன்ற விடயங்கள் பல இப்பகுதியின் ஊடாக விமர்சனம் செய்யப்பட்டன. "பாதை யோரத்தில்" என்ற மற்றுமொரு புதியபகுதி ஆரம்பிக்கப்பட்டு அதில் பாட்டைசாரி என்பவரின் கருத்துக்கள் இடம்பெற்றன. மேலும் இப்பகுதியில் கலை இலக்கியம் சம்பந்தமான விடயங்கள் பல எழுதப்பட்டன. "நமது வாசிகசாலை" என்ற ஒரு பகுதி ஏற்படுத்தப்பட்டு அப்பகுதியின் ஊடாக நுால்கள் பல விமர்சனம் செய்யப்பட்டன. ஒருபக்கம் பண்டிதர்களும் வித்துவான்களும் இலக்கியத்தில் பழமை பேணுகின்ற கட்டுரைகளை எழுத மறுபுறத்தில் நவீன புனைகதை ஆசிரியர் களும் கவிஞர்களும் தங்களின் பங்களிப்பினைக் குறைவின்றி வழங்கினர்.
இவரது காலத்தில் புனைகதைத்துறையின் முன்னோடிகள் எனக்கருதப்பட்ட சி.வைத்திய D இதழ் 29

Page 7
லிங்கம், க. சம்மந்தன், இலங்கையர்கோன், தலையாளி வ.கந்தையா, வெள்ளவத்தை மு.இராமலிங்கம், சுவாமி ஞானப் பிரகாசர், விபுலானந்தர், க.கணபதிப்பிள்ளை, எம்.எஸ்.இரா சரத்தினம், மா.பீதாம்பரம் போன்றவர்களின் படைப்புக்கள் வெளிவந்தன. கவிஞர் கசின் என்பவரின் அன்னபூரணி என்ற நாவலும் பல சிறுகதைகளும் கட்டுரைகளும்கூட இடம்பெற்றன.
இராஜ அரியரத்தினத்தின் காலம்
இவர் ஈழகேசரிப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தகாலத்தில் இலக்கியத் துறையில் மற்றுமொருபடி முன்னேற்றமேற்பட்டது. எமது நாட்டு இலக்கியம் எமது நாட்டு மக்களின் வாழ்க்கையினை ஒட்டியதாக இருக்க வேண்டும். இந்த மக்களின் எண்ணங்கள் ஆக்கங்கள் போன்றவற்றினை அது பிரதிபலிக்க வேண்டும் போன்ற நோக்கங்களைக் கொண்டிருந்த இவர் எழுத்தாளர்களை நேரில் கண்டும் கடிதமூலம் தொடர்புகளை ஏற்படுத்தியும் அவர்களது ஆக்கங்களை வெளியிட்டார். சிவபாதசுந்தரத்தின்
சைக்கி
வீதியோரம் எங்கும்
விழிகள் அலைபாயும்
சைக்கிள் கடைதேடி, காற்றிறங்கிய சைக்கிளில் ஓடவியலாத உபாதையுடன் நீண்ட நாட்களாக ஓட்டம் உருக்குலைந்த வீதிகள் 2usfaberi LaBiagoTåGb காற்றின் அலைப்பில் எற்றுண்ட வாலித்தீன்கள் 2. ழகத்தினிலே ழத்தமிடும் ශූ®ම් அணிவகுப்பு விரகணங்கள் அதிர்வினை ஏற்படுத்தும் காற்றுநிரப்ப வலுவில்லா உடல்நிலையில் தேக்கம் VQ) .
ஜீவநதி (

காலத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்ட புத்தக மதிப்புரையினை அந்தந்தத்துறைகளில் பெயர் போனவர்களைக் கொண்டு எழுதி வெளியிட்டார். ஆ.செ.முருகானந்தன், அ.ந.கந்தசாமி, தி.ச.வரத ராசன், மகாகவி கஇ.சரவணமுத்து, க.வே.பஞ்சாட் சரசர்மா, நாவற்குழியூர் சோ.நடராசன், சு.வேலுப் பிள்ளை, கனக செந்திநாதன், மா.பீதாம்பரம், சொக்கன், க, சிவகுருநாதன்(கசின்), வ.அ.இராச ரத்தினம், இராஜநாயகன், சு.அம்பிகைபாகன், இ.முருகையன், எஸ். தணிகாசலம், சிவாஜி, புதுமைலோலன், கே.டானியல், எஸ்.பொன்னுத் துரை, நீலாவாணன். வி.சி. கந்தையா போன்ற பலரின் படைப்புக்கள் பிரசுரஞ் செய்யப்பட்டன
நிறைவுரை
ஈழகேசரிப்பத்திரிகை தான் வெளிவந்த 28 ஆண்டுகளும் ஈழத்தின் இலக்கியத்துறைக்கு தன்னாலான பணியினை மேற்கொண்டு வந்தது. இதன் மூலமாகப் புதியபடைப்பாளிகள் உள் வாங்கப்பட்டதுடன் இலக்கியமும் வளம்படுத்தப் பட்டது.000
ள் சவாரி
தேவைகள் தெரிவாகி மட்டுப் பட்டனவாய் வங்கி மருத்துவ மனை நண்பர்கள் சந்திப்பு ബത്ത് തൈബീ அலைபாய்ந்த கண்களில் தரிசனமாகும் சைக்கிள்கடை, காற்று நிரப்புவதற்காய் உருட்டிச் செல்லுகையில் ஒட்டிபுலர்ந்த தோற்றழடன் காற்றுழக்கும் முதியவர் காட்சியின் தாக்கத்தால் காற்றழக்க முடியாமல் மீளவும் அதே நிலையில் *گه"ق
சவாரி தொடர்கிறது.
so இதழ் 29

Page 8
然、つイ
ゞ、「つぐ、\sミ一つ பெரியாத்தை காலமாகி இன்று இருபத்தேழா அந்தியேட்டிக்கு இன்னும் நான்கு நாட்களே இப்பொழுதே வீடு களைகட்டத் தொடங்கிவிட்டது. ஏதோ திருமணத்திற்கான ஏற்பாடுகள் அமளிதுமளி.
அழைப்பிதழ் கொடுக்காதவர்களின் பட்டியை அலசுவதும், கல்வெட்டுச் செலவை பார்ப்பதில் இ வேண்டிய காய்கறிகளின் தொகை பற்றிய மதிப் சிலருமாக ஏக களேபரம்.
இவைகளெல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.
உயிரோடிருக்கையில் மனிசி ஒரு கவள தின்னப்பட்ட பாடென்ன? இப்போது யாருக்குக் காட்ட பெரிய ஏற்பாடுகள்.? என்று இவன் மனங்குமுறிய பெரியாத்தைக்கு ஆசைக்கு ஒன்றும் அ ஒன்றுமாக இரண்டே புத்திரச் செல்வங்கள் தான்.
ஆஸ்தியென்று அவவிடம் ஏதும் இல்லாததால், ஒரு மகனும் ஒரு மகளும் என்பதே சரியான வார் மகனுக்கோ, மகள் புருஷனுக்கோ ஒன்று வேலைவெட்டியில்லை. இருந்தும், மகன் தான் : வளைக் கைப்பிடித்து அந்தக் குடும்பத்துக்கு அந் விட்டான்.
மகள் தன் முறை மச்சானைக் கட்டிக்கொண்டு இருந்ததால், தாயைப் பார்த்துப் பராமரிக்கும் முழுவதும் அவள் தலையிலேயே விழுந்தது.
தனது மக்கள் மூவரையுமே பராமரிக்க படிச் புருஷனின் சொற்ப வருமானத்தில் அல்லாடும் ம தாய்க் கிழவியையும் சேர்த்துப் பார்ப்பதென்னே பரிகாரம் தான்.
இருந்தும், தன்னால் இயன்றதைக் கெ கொடுக்க முடியாதபோது திட்டிக் கரித்தும் ஆற்ற ஜீவநதி
 
 
 
 

“ணத்தின் பின்.
அல்லல்படும் மகளைப் பார்க்க /TUகிழவிக்கும் வருத்தம் தான். தங்கள் குடும்ப வறுமையை .6 مما శకె எண்ணி அவள் புலம்பாத நாட்களே
இல்லை. S. கிழவியைப் பொறுத்த வரை ** யில், வெற்றிலை பாக்கை இடித்துக் Cட2குதப்புவதிலேயே தன் பசியாற்றிக் வது நாள். கொள்வாள். மகளையும் பேரப் பாக்கி பிள்ளைகளின் கோலத்தையும் பார்க் கத்தான் அவளால் சகிக்கமுடிவ போலான தில்லை.
ஆத்தையும் மாமியும் இருந்தி ல இருவர் ருந்துவிட்டுக் கொடுக்கும் சாப் இருவரும், பாட்டைக்கூட அவளால் சுவைத்துச் பீடுகளில் சாப்பிட முடிவதில்லை. அப்பொழு தெல்லாம் C8 Lu J fest 6o 6TG5 6D 6 T இவனுக்கு அழைத்து ஊட்டிவிடுவதிலேயே
அலாதி திருப்தி காண்பாள்.
ம் சோறு ஆனால் மகளுக்கு இது இத்தனை பொறுப்பதில்லை. ஏதோ தனது 5l. சுயகெளரவம் பாதிக்கப்பட்டதாகத்
பூஸ்திக்கு துடிப்பாள். மகள் இந்தக் காட்சியைப் பார்த்துப் போடும் அட்டகாசத்தால் ஆசைக்கு அதிர்ந்து போவாள் கிழவி தை, "அந்தக் கிழட்டுக்கு ஆரும் ம் பெரிய குடுத்ததிலை நீங்களும் பங்கு விரும்பிய போடிறியளோ..?" என்று ஏசிப் நியமாகி பிள்ளைகளை விரட்டும் மகள் பால் அவளுக்கு ஆத்திரத்துக்குப் பதில் வீட்டோடு அனுதாபமே வரும். பொறுப்பு "பாவம், அவளும்தான் என்ன செய்வாள்? தன் ஆற்றாமையைத் 5 வைக்க தன்னிடமும் பிள்ளைகளிடமும்தானே 5ளுக்குத் காட்டமுடியும்" என நினைத்து வா சிரம ஜீரணித்துக் கொள்வாள்.
இப்படியான சந்தர்ப்பங்களில் டுத்தும், மகளின் அட்டகாசம் சில வேளை மையால் பாக்குரலைப் பறித்து வீசுமளவிற்குக்
D- ණිg 89

Page 9
கிளர்ந்தெழும். அந்த வேளையில் வெ பொச்சத்துக்குக்கூட வழியில்லையே என மறுகத்தான் முடிகிறது.
இடையிடையே இவனும் சில தின் பணி வீட்டிலிருந்து ஒளித்து மறைத்து எடுத்து வந்து கொ அப்போதெல்லாம் கிழவி, "ஏன் மோனை ( தின்னணனை அப்பு." என்று சொன்னாலும், ஆசையுடன் வாயில் போட்டு மெல்லுவதை இவன் பரவசமடைவான்.
கிழவி இவனுக்குப் பாட்டி முறைதான் எ இவனும் தகப்பனைப் போலவே "பெரியாத்தை அழைப்பான்.
இதுவரை கிழவியைத் திட்டோ திட்டென் வார்த்தைகளில் ஒன்றாவது கல்வெட்டில் இருந்த யதார்த்த மென்று இவன் ஆறுதலடைந்திருப்பான்.
கிழவியின் பூர்வீகம் பற்றிய அளவுக்கதிகம மூடைகளுடன் ஆலாபனை பண்ணியதுமட்டுமன்றி, கீ பராவியது, பிள்ளையாரை, முருகனை யென்று இனி கிழவி பாடியதாக வரும் வரிகளின் அர்த்தம்தான் புரியுமா, என்ன?
மகன் கண்ணே போல் காத்ததாகவும், மகள் போல் இயங்கியவள் கண்ணிர் வடித்து அழுது புலம்ட ஏனிந்தப் பொய்யும் புரட்டும்.?
உலக ஒப்பாசாரத்துக்காகவா இந்தக் கல் அந்தியேட்டிக் கிரியைகள், அன்னதானம் என்பதெ இவையெல்லாம் இறந்த கிழவிக்கு ஆறுதல் இவர்கள் நம்புகிறார்களா?
கிழவியின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்தை
நமது தேசம்
பஸ்சில் போனாலும் - எனக்கு கப்பலில் போவது போலவே இருந்தது. அலைகள் இருக்கவில்லை - ஆனால் ஆட்டம் இருந்தது. குன்றும் குழியுமான அந்த விதிகளில் மழை நீர் தேங்கி. ஒரத்து வாய்க்காலோடு
ஒன்று சேர்ந்து குளக்கரையை. நோக்கி சலசலக்கிறது.
லொறிகள் ஒன்றிரண்டு ஆங்காங்கே புரண்டு
கவிண்டு கிடந்தன.
இருபக்கமும் நாட்டப்பட்டிருந்த விளம்பரப்பலகைகளிலும். சேறு படிந்து புது வர்ணம் பூசப்பட்டிருந்தது.
ஜீவநதி (

ற்றிலைப் அவளால்
உங்களை டுப்பான்.
ானக்கு. நீ அவற்றை ரசித்துப்
ன்றாலும் என்றே
D 5lււջա ருெந்தால்,
T60T LIG505 அம்மனைப்
ய தமிழில் கிழவிக்குப்
ഖങ്ങg് ഞ6 புவதாகவும்
வெட்டும், iboost b?
தருமென
60T LOLOBLò
போதாதா?
இருக்கும்போது கிழவிக்கு ஒரு நல்லநாள் பெருநாள் என்று கூட ஒரு சேலை சட்டை வாங்கிக் கொடுக்காத வர்கள், கிரியைகள் நிறைவேற்றும் பிராமணிக்கு மட்டும் புடவை, குடை, மிதியடியென்று செலவு செய்கிறார் களே. ஒ, இவை யெல்லாம் நிறை வேறினால்தான் கிழவி சொர்க்கத்தில் சுகம் அனுபவிப்பாளென்று இவர்கள் மனப்பால் குடிக்கிறார்களா?
இவர்களையெல்லாம் எந்தக் கோயிலில் கட்டிவைத்துக் கசையடி கொடுப்பது?
இவன் எண்ணங்கள் பல்கிப் பெருகிக்கொண்டேயிருந்தது.
ஆயினும், இதற்கெல்லாம் பதில் சொல்வார் யார்? இந்தக் கொண்டாட்டக் கூட்டத்தினரில் நிச்சய மாக யாரும் பதில் சொல்லப் போவ தில்லை.
கல்லாகச் சமைந்திருந்து கடவுளாகக் காட்சிதரும் தெய்வங்கள் பதில் சொல்லுமா?
இவனுக்கு எதிலுமே நம்பிக்கை யில்லை, இவற்றைப் பார்க்கையில், தான்வாழும் வாழ்க்கையில் கூடத்தான்!
அழகானது இடையிடையே "நன்றி மீண்டும் வருக" என்பது மட்டும் மகுட வாக்கியமாக. பொறிக்கப்பட்டிருந்தது.
குலுக்கிற குலுக்கலில் குடல் வெளியே வந்து விடும் போல் இருந்தது.
சாளரம் ஊடாக சிலர் கழுத்தை நீட்டி வாந்தி எடுத்தார்கள். பலர் இருக்க முடியாமல் துள்ளித்துள்ளி எழுந்து நின்றார்கள்.
ஒன்று மட்டும் பரவாயில்லை. வீதிகள்
குன்றும் குழியுமாக இருப்பதால் ஒட்டுணருக்கு தூக்கம் வர வாய்ப்பில்லை.
- நெருந்தீவு முகிலன்
7
இதழ் 39

Page 10
3D856)
வாழ்க்ை
"நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
தரைநினைந்துவிட்டால்"
என எதிர்மறைச் சமூகச் சூழலுக்கும், பிரிவினைகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக அன்றே பாடினான் மகாகவி மூடநம்பிக்கைகளில் இருந்து பெருமளவில் விடுபட்டிருக்கும் இன்றைய பகுத்தறிவுச் சமுதாயம், நாகரிக மோகத்திலும், வழி தவறிய வாழ்வியல் நெறிகளிலும் சீரழிந்து கொண்டிருப்பது மனக்கசப்பான விடயமே. அன்றைய காலம் தொட்டு, இன்றை காலம் வரை வெளிவருகின்ற அனைத்து இலக்கிய நூல்களும், கலைவடிவங்களும் மக்களுக்கு ஏதோவொரு வகையில் விழிப்புணர்வூட்டக் கூடிய கருத்துக்களையே மையக் கருக்களாகக் கொண்டு ள்ளன. படைப்பாளிகள் காலத்தின் கண்ணாடிகள் என எடுத்துக்கொண்டால்"இவர்கள்சமகாலத்தில் இருட்டில் நடக்கும் நிகழ்வுகளைத்தான் வெளிச்சமிடுகிறார்கள்" என்பதை உணரமுடியும். "மக்களை நோக்கி இவ்வாறு தான் வாழவேண்டும்" என்றும் சில இலக்கியங்களும், எவ்வாறெல்லாம் வாழக் கூடாது என்பதைச் சில இலக்கியங்களும், இப்படித்தான்சீரழிந்து வாழ்கிறீர்கள் என சில இலக்கியங்களும் சுட்டிக்காட்டுகின்றன. ஆக மொத்தத்தில் இலக்கியம் என்பது தனது சமூகத்தை இருக்கும் நிலையிலிருந்து ஒரு படி உயர்த்துவ தற்காகவே அன்றி, தாழ்த்துவதற்காக அல்ல என்பது தெளிவாகிறது.
பல தனிமரங்களின் கூட்டே தோப்பாகும். இது போன்றதே நம் ஈழத்தமிழ் சமூகமும், சமூகம் என்பது மனிதர்களின் கட்டமைப்பாகும். இத்தகைய சமூகத் திற்குத் தேவையான மனித வளத்தையும், தலைமை களையும், உற்பத்தி செய்வதிலும், அவர்களைச் சமூகத்திற்கு வழங்குவதிலும், குடும்பம் எனும் உற்பத்திக்கூடம் மிக முக்கிய பங்காற்றுகிறது. தமிழர் களின் வாழ்வியல் நெறிகளில் சங்க காலம் தொட்டு மாற்றமின்றி கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சாரமே "காதல்" எனத் துணிந்து கூறலாம். காதலைப் பேசும் காலங்களிலெல்லாம் நம் மனக் கண்ணில் வந்து நிற்பது
"செம்புலப்பெயனிர்போல
அன்புடை நெஞ்சம்தாங்கலந்தனவே"
-C

மன்னர் அமுதன்
5ug|D
õpä55uJpb
எனும் மனமொத்த துணைகளின் அன்பினைக் குறிக்கும் குறுந்தொகைப் பாடல்தான். செம்மண்ணில் விழும் மழைநீர் மண்ணின் நிறத்தை பெற்று, மணத்தைப் பெற்று, அதில் கலந்துள்ள அத்தனை அம்சங்களையும்தன்னுள் ஏற்றுக்கொண்டுசெல்வதைப் போல காதல் கொண்டதலைவனும்,தலைவியும் வாழ வேண்டும்எனும்இல்லற நெறியினைஎடுத்தியம்புகிறது இப்பாடல். இல்லறக் கட்டடத்தின் அடித்தளங்கள் எவையென்றால், அவை அன்பும், விட்டுக்கொடுப்புமே. இவை இரண்டும் இல்லாத குடும்பத்தில் இருந்து சமூகத்திற்கு வழங்கப்படும்உறுப்பினர்களே சமூகத்தின் புற்றுநோயாகக் கருதப்படுகிறார்கள்.
ஈன்று புறந்தருதல் என்தனைக்கடனே! சான்றோன்ஆக்குதல்தந்தைக்குக்கடனே! வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக்கடனே நன்னடைநண்கல்வேந்தற்குக்கடனே! ஒளிறு வான் அருஞ்சமம்முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல்காளைக்குக்கடனே!
எனும் பொன்முடியாரின்புறநானூற்றுப்பாடலில் இருந்து ஒரு இளைஞனை சமூகப் பங்காளியாக மாற்றுவதில் குடும்ப உறுப்பினர்களுக்கும், சமூக உறுப்பினர்களுக்கும் உள்ள கடமைகள் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். நவீன இளைஞனொருவன் தன் வாழ்நாளில் ஒரு பகுதியைத் தன் குடும்பத்திற்குள்ளேயும், பெரும்பகுதியைச் சுற்றியுள்ள சமூகத்திலும் கழிக்கிறான் என்பது கண்கூடு கால சுழற்சியில் ஒவ்வொரு பிள்ளையும் ஒரு குடும்பத்திற்கு தலைவர்களாகிறார்கள். பின்புதன் பிள்ளைகளையும் சமூக உறுப்பினர்களாக மாற்றி அவர்களையும் ஒரு குடும்பத் தலைவராக மாற்றி விடுகிறார்கள். இந்தப் படிமுறை ஒரு சுழற்சிக்கு உட்பட்டதாகும். இது தொடர்ந்துநடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.
இந்தச் சுழற்சி வேகத்தில், இன்று பல குடும்பங்களின் அடிப்படைத் தேவையான அன்பும், விட்டுக் கொடுப்பும், விசுவாசமும், ஒளிவுமறை வின்மையும் காணமல் போய் விடுகிறது. சந்தேகம் மிகுந்து யாரை யார் கட்டுப்படுத்துவது என்ற ஆதிக்க வெறியில் பல குடும்பங்கள் சிதைந்து விடுகின்றன. ஒருவரை ஒருவர் பழிவாங்குவதாகக்கூறிக்கொண்டு
S- இதழ் 29

Page 11
நெறியற்ற வாழ்க்கை முறையினைக் கடைப் பிடிக்கிறார்கள். இவர்களே சமூக குற்றங்களுக்கும், சீரழிவுகளுக்கும் வித்திடுபவர்கள்.
ஒவ்வொருசமூகமும்ஒர் இனக்குழுமத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வோர் இனக்குழுமத்திற்கு மென சில வாழ்வியல் நெறிகளும் கடைப்பிடிக்கப் படுகின்றன. அவை தான் கலாச்சாரமும், பண்பாடும். கலாச்சாரமும் பண்பாடும் ஆங்கிலத்தில் culture என்ற ஒற்றை வார்த்தையில் அர்த்தப் படுத்தப்படுத்தப் படுகின்றன. கலாச்சாரம் என்பது பண்டைய காலம் தொட்டுநம்முன்னோர்களால் வாழையடிவாழையாக வழக்கில் இருந்து வரும் நிகழ்வுகளாகும். இவை உணவுப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள், வழிபாட்டுமுறைகள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சடங்குகள் போன்றவையாகும். சில இனக் குழுமங்களின்கலாச்சாரம் என்பது பிறகுழுமங்களல் மூடநம்பிக்கைகளாகவும் பார்க்கப்படுகின்றன.
ஆனால் பண்பாடு எனும் வார்த்தை "பண்படுத்தல்" (refine - நேர்த்தியாக்குதல்) என்ற மூலச் சொல்லிருந்து வருகிறது. கலாச்சாரம் என்பது, வழி வழியாக முன்னோர் செய்த விவசாயத்தை நாமும் அப்படியே பின்பற்றுவது போன்றதாகும். ஆனால் பண்பாடு என்பதுகளர்நிலத்தை விளைநிலமாக்குதல் (பண்படுத்தப்பட்டநிலம்) போன்றதாகும் ஒருகாலத்தில் பலதார மணம் என்பது கலாச்சாரமாக இருந்தது. பலவாறான பண்படுத்தலுக்குஉட்படுத்தப்பட்டஇன்றைய நாகரிக வளர்ச்சி பெற்ற சமுதாயம் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது, அல்லது அவரது சம்மதமின்றியோ மறுமணம் முடித்தலை தடை செய்துள்ளது.இதுவே பண்பாடாகும்.
இவ்வாறான ஒரு பண்பாடாகவே இருந்து வந்த சங்க காலக் காதல், இன்று ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது."செம்புலப்பெயனிர்க்காதலை"எவ்வாறு வெளிப்படுத்தவேண்டும்,எங்குகாதல் புரியக்கூடாது எனவும் நற்றினை அழகாகக்கூறுகிறது.
விளையாடுஆயமொடுவெண்மணல்அழுத்தி மறந்தனம்துறந்தகாழ்முளைஅகைய நெப்பெய்திம்பால் பெய்தினிது வளர்ப்ப நும்மினும்கிறந்ததுநூஷ்வை ஆகுமென்று அன்னைகூறினள்புன்னையது சிறப்பே அம்மநாணுதும்நூம்மோடுநகையே விருந்திற் பாணர்விளரிசைகடுப்ப வம்ைபுரிவான்கோடுநரலும் இலங்குநீர்த் துறைகெழு கொணர்கரீநல்கின் நறைபடுநிழல்பிறவுமார்உளவே.
(நற்றிணை - 172) காலத்தால் முந்திய அகநானூற்றிலும், நற்றிணையிலும் புன்னையின் சிறப்புகள் வெகுவாகக்

பேசப்படப்பட்டுள்ளன. மாலை மயங்கியதொரு வேளையிலே புன்னை மரத்தடியில், காதல் கொள்ள தலைவியை அழைக்கிறான் தலைவன். அவளோ புன்னை என் சகோதரி என செல்ல மறுக்கிறாள். தலைவன் தன் காதலை வெட்டி விடவே தலைவி வெட்டிப் பேசுகிறாள் என மனமொடியும் வேளை, தலைவி உரைக்கிறாள் "சிறுவயதில் புன்னை விதை களை வைத்து விளையாடுகையில், விளையாட்டாய்ப் புதைத்தவிதை இன்று மரமாகிநிற்கிறது. நெய்யையும், பாலையும் ஊற்றி, வளர்க்கப்பட்ட இப்புன்னையின் நிழலிலே தான் எமது இளமைப் பிராயத்தைக் கழித்தோம். ஆகவே இப்புன்னை என்சகோதரி இவள் முன்னால் என்னால் உன்னோடு காதல் கொள்ள முடியாது”எனும் வார்த்தைகளில்இன்றைய பேருந்தின் பின்னிருக்கைகளில் நடைபெறும் காதல் லீலைகள் அனைத்தும்தூக்கிட்டுக்கொள்ளவேண்டும்.
தமிழனின் பண்பாட்டையே இப்பாடல் வரிகள் தெளிவு படுத்துகின்றன. நம் பண்பாடு, இன்று எந்த நிலையில் உள்ளது என்பதை பேருந்தில் பயணிக்கும் ஒவ்வொருவரும்கண்டுகொள்ளலாம். காதல் என்பது தவறல்ல. அத்தகைய காதலை வாழ்வியல் நெறிகளை மீறிப் பிரக்ஞையற்று வெளிப்படுத்தலே பண்பாடற்ற செயலாகும். என்னதான் சமூக மாற்றம், மறுமலர்ச்சி, எழுச்சி என்று சந்திக்கு, சந்தி நின்று நாம் முழங்கினாலும், இவை தனிமனித மனமாற்றம் மற்றும் சீரான குடும்ப வாழ்விலிருந்துதான்உருவாக முடியும். பெற்றோர் ஒருவரை ஒருவர் பழிதீர்த்துக் கொள்வ தால்சீரழிவது,அவர்களின்சின்னச்சிறுகுழந்தைகளே. அதனாலேயே "நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம், அன்பு மணி வழங்கும் சுரங்கம்" என்று பாடுகிறான் ஒரு கவிஞன்.
இன்றைய ஈழத்துக்குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரில் ஒருவரையே சார்ந்து வாழ்கின்றனர். பெரும்பாலான குழந்தைகளின் தந்தை அல்லது தாய் இறுதியுத்தத்தில் இறந்தவர்களாகவோ அல்லது தடுப்பு முகாம்களிலோகாலத்தைக்கழிக்கிறார்கள். இத்தகைய குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும் எனும் கேள்விமனதில் ஒரு உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.
இவ்வாறு அழிந்த சமுதாயம் ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் மீதமுள்ள எம்மினம் போதை வஸ்துக்களிலும்,தீய ஒழுக்கங்களிலும்தம்மைத்தாமே அழித்துக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். வெளிநாட்டு மணமகன் மோகத்தில் எத்தனையோ முதிர்கன்னிகள் வாழ்க்கையின் மதியத்தைத் தாண்டி விட்டார்கள். இதற்கு ஆண்களும் விதிவிலக்கல்ல.
"வாரார்ஆயினும் வரினும் அவர்நமக்கு யாராகியரோதோழி 9) இதழ் 29

Page 12
எனும்(குறுந்தொகை) பாடலுக்கு இணங்கசில தலைவியர் "திரைகடல் ஓடித்திரவியம் தேடச்" சென்ற தலைவர்களைத் துறந்து, அவர் தம் நண்பரொடு உறவாடித் திளைப்பது மலிந்துவிட்டது. தலைவனின் அருகாமையின்றிகுளிர்இரவின்கடும்பனியில்தலைவி எவ்வாறு ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள் என ஒளவையின் குறுங்தொகைப் பாடல் மிக அருமையாக விளக்குகிறது
முட்டுவேன்கொல்?தாக்குவேன்கொல்? ஒரேன்யானும்ஒர்பெற்றிமேலிட்டு 'ஆஅ/ஒல்/எனக்கவுவேன்கொல்? அலமரல் அசைவளிஅலைப்ப என் உயவுநோய்அறியாதுதுஞ்சும் ஊர்க்கே இவ்வாறு பிறந்த மண்ணைத்துறந்து, மணந்த பெண்ணைத்துறந்து, சுற்றத்தையும் நட்பையும்துறந்து உழைக்கச் சென்றவர்கள் இளமையையும், உறக்கத்தை யும் விற்று ஈட்டும் பணம் பெரும்பாலும் விழலுக்கு இறைத்தநீராகிவிடுகிறது.
இவை இப்படி என்றால், காதலியைக் காணாத ஒருவன் தன் நிலையை எவ்வாறு வெளிப்படுத்து கிறான் என்பதை
ஞாயிறுகாயும் வெவ்அறை மருங்கில் கைஇல் ஊமன்கண்ணின்காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்குஅரிதே என்னும் குறுந்தொகைப் பாடல் மூலம் அறியலாம். சூரியன் சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் ஒரு பாறையின் மேல் வைக்கப்பட்டுள்ள வெண்ணை யைக் காணும் கையில்லாத ஊமை ஒருவன், அந்த "வெண்ணை" வீணாவதை எவ்வாறு தடுக்க முடியாதோ அவ்வாறே காதலியைக் காணாததால் ஏற்பட்ட ஏக்க உணர்விலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியாமல் தவிப்பதாய்க் கூறுகிறான்.
இலக்கியக் காதல் பாடல்கள் காதலை உரைட் பதற்காக மட்டும் பாடப்படவில்லை. இவை நம் முன்னோர்கள் தம் வாழ்வில் கற்றறிந்த பாடங்கள் அவர்கள் தம் கருத்துக்களைத் தெளிவாக நம்முடன் பகிர்ந்துசென்றுள்ளார்கள்.இருப்பினும்நாம்அவற்றைச் கற்பதும் இல்லை. தவறிக்கற்றாலும், கடைப் பிடிப்பதும் இல்லை.
"வம்ச விருத்தி" மட்டுமே திருமணத்தின் நோக்கமல்ல. "ஒருவனுக்கு ஒருத்தி" எனும் நெறி பிறழாத வாழ்வைக் கடைப்பிடிப்பதற்காகவே திருமணங்கள் தேவைப்படுகின்றன. பால்ய காலப் முதல், பாடையில் செல்லும் வரை மனிதனுடைய தேவைகள்காலத்திற்குக்காலம் வித்தியாசப்படுகிறதே இன்றி, ஒருபோதும் குறைவதே இல்லை. ஆணுப பெண்ணும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தும், ஒருவை ஜீவநதி

ஒருவர் சார்ந்தும் வாழும்படி அமைக்கப்பட்டுள்ள நம் சமூகக் கட்டமைப்பு இரு மனம் ஒத்த திருமணத்தை வலியுறுத்துவது "திறன்மிக்க மனிதவளத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், சமூகக் குற்றங்களைக் குறைப் பதற்குமே."
பெருங் குற்றங்கங்களுக்கும் துஸ்பிரயோகங் களுக்கும் அடிப்படையாக அமைவது பூர்த்தியாகாத பாலியல் தேவைகளே என்கிறது அண்மைய ஆய்வு ஒன்று. இத்தகைய பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக முறையற்ற உறவுகளைப் பேணுவதால் கடந்த வருடத்தில் மட்டும் (19 வயதிற்குட்பட்ட) இலங்கையில் 1300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கருக்கலைப்பு நடத்தப் பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உறவினர்களாலேயே இந்நிலைக்குதள்ளப்பட்டிருக்கிறார்கள்என்பதிலிருந்து இன்று உறவுமுறைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அறிந்து கொள்ள முடியவில்லையா?
உள்இறைக்குரிஇக்கார்அனற் சேவல் பிற புலத்துணையோடுஉறை புலத்துஅல்கி வந்ததன் செவ்விநோக்சிபேடை நெறிகிளர்ஈங்கைப்பூவின்அன்ன சிறு பல்பிள்ளையடுகுடம்பைகடிதனின் துவைையின்நனைந்தபுறத்தது அயனது கூரல் இருக்கை அருளிநெடிதுநினைந்து ஈரநெஞ்சின்தன்வயின் விளிப்ப
(நற்றிணை) இந்த நற்றினைப் பாடலானது வீட்டுக் குருவிகளின் வாழ்க்கை முறை மூலம் தலைவன் பரத்தையரொடு கொண்டிருந்த முறையற்ற உறவை மறைமுகமாக விளக்குகிறது. பிறிதொருதுணையோடு கூடி விட்டு வீட்டிற்கு வரும் ஆண் குருவியை, பெண் குருவியும் அதன் குஞ்சுகளும் சேர்ந்துகூட்டிற்குள் வர விடாமல் தடுக்கின்றன. அதே போன்று தலைவியும் வீட்டிற்குள் வர விடாமல்தடுத்தாள் என்று கூறுகிறது.
ஆணிற்கு அழகு எது? மைைஎன எழுஎனவழங்கும் தோள்களும் பாயன்ஆம்எனப்படர்தருமார்புமும் காளையர்க்குஉரித்துஎனக்கழறினர்கற்றோர் (அறுவகை இலக்கணம்) கற்றறிந்த பாவலர்கள் குன்றுகள் எனவும், எஃகு எனவும் சொல்லப்படுகின்ற புயங்களும், படுக்கையைப் போன்று பரந்து அகன்றுள்ள மார்பும் வாலிபர்களுக்கு உரியன என்று கூறியுள்ளனர். மனையாள் கட்டித் தளுவுவதற்கும், பிள்ளைகள் ஏறி விளையாடுவதற்கும் உகந்த அகன்ற மார்பைப் பெறுதலே ஆணிற்கு அழகென்கிறது.இப்பாடல். மேலும் இப்பாடல் மூலம் நாம் ஆணிற்கு அழகு வினைமாட்சி என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆணெனப் இதழ் 29

Page 13
படுபவன் கடுமையாக உழைத்து தன் குடும்பத்தைக் காப்பதென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதையும் அறிந்துகொள்லாம் அதனையும்தாண்டியஅழகு அவன் ஆண்மை என்கிறது வள்ளுவம்
பிறன்மனைநோக்காத பேராண்மைசான்றோர்க்கு அறனோன்றோஆன்ற ஒழுக்கு
எனும் குறள் மூலம் பிறருடைய மனைவியை காமக்கண் கொண்டு நோக்காமல் இருப்பதே பேராண்மையிலும்சிறந்த ஒழுக்கம் என்கிறது. ஆனால் இன்று வயது பேதமின்றி அனைவரையும் காமக் கண்களால் துகிலுரிப்பதும், மது மற்றும் போதையில் திளைப்பதையுமே ஆண்மையாகக் கொண்டு பலர் வாழ்கிறார்கள். இவர்கள் தம்மைத் தாமே அழித்துக் கொள்வதுடன்,தாம்சார்ந்துவாழும்குடும்பங்களையும் மீளமுடியாததுன்பங்களுக்குள் தள்ளிவிடுகிறார்கள்.
யார் யாரோடு இருக்கிறார்கள்? யாரை யார் வைத்திருக்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதும், பேசுவதும்தான் இன்றைய பெரும்பொழுதுபோக்காக உள்ளது.
உரிய கல்வியறிவை அளித்து, அறியாமையை அழிக்கும் போதே நமது சமூகம் இத்தகைய சீரழிவிலிருந்து வெளியேறி ஒரு பண்பட்ட சமூகமாக மாறும், உரிமையை இழந்துவிட்டோம். நாம் உணர்வையும் இழந்து விடுவோமோ எனும் கேள்வி இன்றைய இளைய சமுதாயத்தின் கைகளில் தான் உள்ளது. அதற்கு அவர்களுக்கு தேவையானகல்வியை உரிய முறையில் வழங்க வேண்டும்.
குஞ்சிஅழகும் கொடுந்தானைக்கோட்டழகும்
*சள்அழகும் அழகல்ல - நெஞ்சத் நல்லம்யாம் என்னும்நடுவுநிலைமையால் கல்விஅழகே அழகு
என்று நிலையான அழகு பற்றி நாலடியார் கூறுகிறது. கல்விக்கான முக்கியத்துவம் இன்று சிறிது சிறிதாக அழிந்துவருவது பெருகிவரும்தனியார்கல்வி நிலையங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது. இன்றைய ஈழத்துமானவர்கள் ஒரு பாடத்திற்கு நான்கு ஆசிரியர்களிடம் சென்று கற்கிறார்கள், இந்த நான்கு ஆசிரியர்களின் வேறுபட்ட பயிற்றுவிப்புமுறைகளை மாணவர்கள் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடன் உள்ளார்களா என்பது கேள்விக்குறியே. மாணவர் களுக்காக ஆசிரியர்கள் என்ற நிலை இன்று மாறி விட்டது. இலவசமாகக் கிடைக்க வேண்டிய கல்வியை மணித்தியாலக் கணக்கில் விற்கும் விற்பனைப் பிரதி நிதிகளாக கற்றறிந்த ஆசிரிய சமூகம் செயல்பட்டு வருவது வேதனையழிக்கிறது.
எதற்குச் செலவு செய்ய வேண்டுமென்ற எந்த வரையறையுமின்றி, செலவு செய்து இறுதியாக பிள்ளைகளை மருத்துவராகவோ, பொறியியலாள
ஜீவநதி

ராகவோ,கனக்காளராகவோ, அல்லது வெளிநாட்டில் எரிவாயு நிரப்புவராகவோ உருவாக்கி விடும் பெற்றோர், தாம் செய்த செலவுகளை வரதட்சனை மூலம் பெற்றுக் கொள்ள பெற்ற பிள்ளைகளையே விற்கத் துணிவது சமூக சீரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளஉதவிபுரிகிறது.
கல்விக்காக 30 வயது வரை பாடுபடும் நம் இளைஞர்கள், அதன் பின் தான் உழைப்பதற்கான முனைப்புகளில் ஈடுபடுகிறார்கள். நாற்பது வயதுவரை உழைத்து விட்டு, தன்னால் முடியாது எனும் சூழலில், இறுதிவருமானமானசீதனத்தையும்வாங்கிக்கொண்டு திருமண பந்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த நாற்பது வயதில் யாருமற்ற தனிமையில், எவராவது என் மேல் அன்பு காட்டமாட்டார்களா என்றகழிவிரக்கமே மிஞ்சி நிற்குமேதவிர,நிச்சயமாகநம்மிடம்இருக்கும்.அன்பைப் பகிர்ந்துகொள்ளும் மனநிலை இருக்காது.
இதை விட சற்று இராஜாங்க மனநிலையுடன் தான்சீதனம் கொடுத்துவந்த மணமகள் இருப்பார்."நீ கேட்டதெல்லாம் தான், கொடுத்தாகி விட்டதே, பிறகென்ன என்ற மனநிலையில், அவள் நிச்சயமாக மணமகன் எதிர்பார்க்கும் அன்பைப் பகிர்ந்து கொள்ள மாட்டார். மேலும் இந்தத் திருமணத்திற்காய் கடன் வாங்கிச்சீதனம் கொடுத்தமற்றுமொரு அண்ணனோ, தம்பியோ ஏதோவொரு நாட்டில் தன் இளமையை விற்றுக்கொண்டிருப்பான்.
இலங்கையில் பெண்கள் முதிர்கன்னிகளாக இருக்க வரதட்சனை மட்டும் ஒரு காரணமாக இருப்பதில்லை. ஏனென்றால் இவர்களில் பலர் வெளிநாட்டு மணமகனைத் தவிர வேறொருவரை முடிக்கமாட்டேன்என்று ஒன்றைக்காலில்நிற்பவர்கள். இன்று பெண்களே மணமகனைப் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கிறார்கள்.இது வரவேற்கக்கூடியவிடயமாக இருந்தாலும், மணமகன் தெரிவுமுறை என்பது முற்று முழுதாக"வெளிநாடு"சார்ந்த ஒன்றாகவே உள்ளது.
சப்பிரதாயச்சந்திப்பின்போது பெரும்பாலான மணமகளின்தாயார்கள் கேட்கும் கேள்வி "வெளிநாடு போற வாய்ப்பு இருக்கா.?,சீவியத்தில ஒருக்காவாவது சுவிசுக்கு கூட்டிட்டு போவிங்களா..? இவவுக்கு அந்த லண்டன் மணியைப் பார்க்க சரியான விருப்பம். அங்கையாவது ஒருக்காகூட்டிட்டுப்போவிங்களா..?
இவ்வாறு கேள்விகளைக் கேட்பவர்கள் இலங்கையில் உள்ள நுவரரெலியாவிற்குக் கூடச் சென்று எட்டிப் பார்த்திருக்கமாட்டார்கள். திருமணம் என்பது நாட்டைச் சுற்றிப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். நல்ல குணத்தினையும், அளவானவருமானத்தையும் பார்த்து, விட்டுக் கொடுப்போடு வாழ முன்வந்தால் திருமணம் என்பது ஒருசிக்கலாக இருக்காது.
இதழ் 29

Page 14
நான் சார்ந்து வாழும்சமூகத்திலிருந்துஅறிந்து கொண்டது என்னவென்றால் சாதாரண தரம் அல்லது உயர்தரம்வரை படித்த மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சிறிது அழகு குறைந்தவர்கள் என்று பிறர் சொல்லும் நிலையில் இருந்தாலும்,திருமணம் முடித்து நன்றாகவே வாழ்கிறார்கள். ஆனால் நல்ல நிறமாக இருந்து, சிறிது வசதியாகவும், கையில் தொழிலுடனும் இருப்பவர்கள் தான் முதிர் கன்னிகளாகவும், மணமுறிவுடனும் வாழ்கிறார்கள். இதற்கான காரணம், பட்டதாரிப் பெண்களோ, ஆசிரியைகளோ ஒரு ஆசிரியரை முடிக்க பெரும்பாலும் விரும்புவதில்லை. அவர்கள் ஒரு மருத்துவரையோ, பொறியியலாளரை யோ, அல்லது வெளிநாட்டுமணமகனையோதான்மண முடிக்க விரும்புகிறார்கள். இதுபோல பலகாரணங்கள் உள்ளன. பல பெண்கள்தம்திருமணவயதில் பெற்றோர் பார்க்கும் உள்ளூர் வரன்களை தட்டிக் கழித்துவிட்டு, வெளிநாட்டில் உள்ள ஒருவரை அலைபேசியில் விரும்பிக் கொண்டிருக் கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் பகலாக இருக்கும் போது இலங்கையில் இரவாக உள்ளது. அங்குள்ள இளைஞர்கள் பொழுதுபோக்காக கணணியில் பகலில் உரையாடு வார்கள். ஆனால் நம்மவர்கள், இரவுத் தூக்கத்தை தொலைத்துவிட்டுவிடிய விடிய பேசுகிறார்கள். இதன் விளைவாக, சிறு வயதிலேயே, கண்ணின் கீழ் கருவளையமும், முதுமைத்தோற்றமும் வந்துவிடுகிறது.
பெற்றோரிடமும், இளைஞர், யுவதிகளிடமும் இருக்கும் இந்த வெளிநாட்டு மாயைகள் மறைய வேண்டும்.திருமணம் என்பதை அதிஸ்டலாபச் சீட்டுப் போல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாழ்வில் படிப்படியான வளர்ச்சியே நிரந்தரமான இன்பத்தைத் தரும். ஒரே நாளில் வெளிநாட்டு மணமகனாகவோ, மணமகளாகவோ மாறி எல்லா இன்பத்தையும் அனுபவித்துவிடவேண்டும் எனும் அதிக படியானஏதிர்பார்ப்பே"முற்றுமுழுதானதோல்விக்கும்" மணமுறிவிற்கும் வழிவகுக்கிறது.
வரதட்சினையையும், முதிர்கன்னிகளையும் பற்றிப் பேசுமளவிற்கு நாம் ஒரு போதும், திருமணத் திற்கு பின்னரான வாழ்வையும், மணமுறிவுகளையும் பற்றிப் பேசுவதில்லை.நம்மைப் பொறுத்தவரை எப்பாடு பட்டாவது திருமணம் முடிந்தால் சரி என்ற மனோநிலையே பெரும்பாலோனோருக்கு உள்ளது. மணமகன் தேவை எனும் விளம்பரங்கள் எல்லாம் "வெளிநாட்டுமணமகன்/மணமகளுக்குமுன்னுரிமை” என்றுகொடிபிடிப்பதைஇலங்கையின்எல்லாதிருமண விளம்பரங்களிலும்காணலாம்.
நானறிந்தே பல பெண்களின் வெளிநாட்டுக் கணவர்கள் நாடு திரும்பியதே இல்லை. இப்பெண்கள் தம்மையும் ஒரு வெளிநாட்டுப்பெண்ணாகநினைத்துக் ஜீவநதி
-C

கொண்டு,உடைகளையும், பேச்சுவழக்கையும்மாற்றிக் கொண்டு, மன நிலை குன்றிவர்கள் போல் என் முன் அமர்ந்து உரையாடுகையில் "நீ இப்பொழுது இலங்கையில்தான் இருக்கிறாய்நீஒரு தமிழன்"என்று நான் கூறும் வார்த்தைகள் அவர்களின் போலி உறக்கத்தைக் கலைத்துவிடுவதில்லை. மாறாக "நான் பொறாமையுடையவனாகசித்திரிக்கப்பட்டுவிடுகிறேன். சிலர் திருமணத்தின் பின் பொருளாதார தேவைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுதம்மை அடகு வைத்து வீட்டிற்கு பணம் அனுப்புகிறார்கள். இத்தகையவர்களின் நோக்கம் தம் குடும்பத்தின் பொருளாதார உயர்வாக இருந்தாலும், குடும்ப அங்கத்தவர்கள் ஆடம்பர வாழ்க்கையை காலம் முழுதும் அணிந்து கொள்வதற்காகவும், கானல் கெளரவத்திற்காகவும் இவர்களை மீண்டும்வீடுதிரும்ப அனுமதிப்பதே இல்லை. இவர்களின் பிள்ளைகளும், சமூக உணர்வோ,பொறுப்போஅற்றவர்களகசார்ந்து வாழும் ஒட்டுண்ணிகளாகவே வாழப் பழகி விடுகிறார்கள்.
சுனைவாய்ச்சிறுநீரை எய்தாதென்று) எண்ணியப் பிணைமான்இனிதுண்ணவேண்டிக்கைைமாத்தன் கள்ளத்தின்ஊச்சும்கரமென்பர்காதலர் உள்ளம் படர்ந்த நெறி
என்னும் மாறன்பொறையனாரின் ஐந்திணைப் பாடல் கணவன் மனைவியின் அன்பைப் பறை சாற்றுகிறது.நதிகளற்றநிலத்திலேதாகத்தோடிருக்கும் ஜோடி மான்கள் ஒரு குட்டையில் தேங்கிக் கிடக்கும் சிறிதளவிலானநீரைக்காண்கிறது.நீரோசிறிது ஒருவர் குடிப்பதற்குக்கூடகாணாது. இந்தநிலையில்ஆண்மான் * நீ போய் நீரைப் பருகு" என தன் துணையிடம் சொல்கிறது. நீர் இருவர் பருகக் காணாது என்பதால் பிணைகூறுகிறது"இல்லை. எனக்குத்தாகமாக இல்லை, நீயே பருகு". சரி,இந்தப் பிரச்சினை வேண்டாம் "வா, இருவரும்சேர்ந்தேபருகுவோம் எனஇரண்டும்சேர்ந்து சுனையில்வாயைவைத்துநீரைப்பருகுகிறது.ஆனால் நீரின் அளவு குறையவே இல்லை. ஏனென்றால் கலைமான்குடிக்கட்டும் என பிணையும், பிணைமான் குடிக்கட்டும் என கலையும்" ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்ததால் இருவருமே குடிக்கவில்லை என இல்லறத்தைப்பாடுகிறது.இப்பாடல்
சங்க இலக்கியங்கள்,விலங்குகளின்ஊடாக நம் முன்னோர்களின்காதல்நெறியினைஎவ்வளவுஅழகாக எடுத்துரைக்கிறது. தாம் வாழும் இயற்கை எழில் கொஞ்சும்காட்டுப் பகுதியிலிருந்து விதிவசத்தால்இடம் பெயர்ந்தமான்கள், பாலைநிலத்திலும்தம் அடிப்படைப் பண்பான அன்பை விட்டுவிடவில்லையே. நாம் மட்டும் ஏன், முற்று முழுதாக மாறிவிடுகிறோம்.
இதழ் 29

Page 15
பொருளாதாரத் தேவைக்காகவும், உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவுமென வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வாழும் குடிமகன்களில் எத்தனை பேரால் தம் பிள்ளைகளை அன்போடும், அரவணை போடும் வளர்க்க முடிந்துள்ளது. எத்தனை பிள்ளைகள், தாய் தந்தையரின் சொல்லிற்கு கீழ்ப்படிகிறார்கள்? எத்தனை தாய் தந்தையர்களால் தம் பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிடமுடிகிறது.
பெற்றோர்களே - உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையும், நம் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்து இச்சமுதாயத்தில் சிறந்த குணங்களையுடைய ஒருவராக, அவரை அறிமுகப் படுத்த வேண்டியது உங்கள் கடமை தான். அதற்கு உங்கள் அன்பும் அரவணைப்பும் தான் அவர்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.
கணவன்மார்களே - உங்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டியது உங்கள் கடமையே. அதே அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது உங்கள் மனைவிஉங்களிடம் எதிர்பார்க்கும் அருகாமை யையும், அன்பையும் அவர்களுக்கு உணர்த்துவது.
چه ofیی |
சூதின் உந்துதலில்
சுற்றுது உலகம் சூழ்ச்சிச் சுழலில் சிக்கித் தவிக்குது மனிதம்
நீதி வாதங்கள் அதர்மத்தின் வாய்க்குள் மெல்லப் படுகிறது குரூரத்தின் நிறத்துள் NÝ
உலகம் தோய்கிறது
அன்பு பாசம் பண்பெனிறால் ܗܝ எனினவெனக் கேட்கும் புதிய சமுதாயத்தின் s தோற்றமும் வளர்ச்சியும் அசுர வேகம் கொள்கிறது
தெய்வ நீதி உபதேசங்கள் துறவிப் போர்வைக்குள் சிறைப்பட்டு F
சாத்தானினி அதர்ம ஞான V அநுஸ்டான மார்க்கத்தை V" போதிக்கின்றன, உலக முற்றம் メ இனம், மதம், மொழி வழி 2 துண்டாடப் படுத்தும் ༄། தூண்டுதலால்
சிதைக்கப்படும் அல்வாயூர்
சீரழிவுக் கோலங்கள் ஜீவநதி C
 

மனைவியர்களே - குடும்பப் பொருளா தாரத்தில் நீங்கள் உதவினாலும், உங்களின் தேவை களையும் நிறைவு செய்யும் பொருட்டே உங்கள் கணவன், உறக்கத்தை விற்றுக் கொண்டிருக்கிறான். நீங்கள் சிறந்த தாயாகவும், தாரமாகவும் இருப்பதே அவர்களுக்குச் செய்யும் கைமாறு.
பிள்ளைகளே - ஒவ்வொரு பெற்றோரின் கனவு களும் நீங்கள் தான். உங்கள் அழகான உடைகளும், போசாக்கான உணவும் அவர்களின் இரத்தமே. பெற்றோர்கள் தமங்கள் நிகழ்காலத்தை விற்று, உங்களுக்கான எதிர்காலத்தை அமைத்துத் தருகிறார்கள் என்பதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள்.
நமது சமூகம் சீரழிந்து கொண்டிருக்கிறது
என்பதில் எத்தகைய மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் ஒவ்வொருவரும், ஏதோ ஒரு உருப்படி யான செயலைச் செய்வதற்காகவே இவ்வுலகிற்கு அழைக்கப் பட்டிருக்கிறோம். தனிமனித மாற்றமே சமூக மாற்றம் என்பதை மனதில் நிறுத்தி நாம் சார்ந்து வாழும் சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குவோம்.000
ழலும் பூமி
அமைதியின் அழிப்பிற்கான கெளரவங்களும் விருதுகளும் வெற்றி விழாக்களும் கொடி ஏற்றங் காணுது உலக நலிதலினி காரணம் கண்டறியப் படாது புதுயுகம் படைக்கும் பிரம்மாவின் அவதாரங்கள் சுயசுப யோகங்களுக்கான தவநிலை இருப்பில் இருந்து படைக்கும் படைப்பினம் குறைப் பிரவச தோன்றல்களாக காணும் துர்ப்பாக்கியம்
எல்லாமும் நானே எனும் எகத்தான சிந்தனைக்குள் ஏற்பதும் ஏற்காததுமான எந்தச் சிந்தனைக்கும் இடமற்று நகரும் வாழ்வினர்
அத்தியாயங்கள் சூது கவ்விப் பிடிக்கும்
தேசத்தை மீட்டு புதியதோர் விதி செய்யும் 9ܪܹܐ݂ܵ மனித எண்ணங்கள்
le56 கனாக் காலங்களில் கழிகிறது.
s) இதழ் 29

Page 16
கவிஞர் ஏ.இக்பால்
மனிதர்கள் மத்தியில் மன மகிழ்ச்சியையும், பலவிதமான அறிவிப்புக்களையும், முக்கியமான அறிவுறுத்தல்களையும் பரப்பிப் பொதுக்கருத்தை உருவாக்கி முக்கியமான இடத்தைப் பெற்றுப் பத்திரிகைகள் உலவுகின்றன. நமது அறிவியல் கழலைக் கொண்டு புற உலகைக் கூர்ந்து பார்க்கும் செயலை இதழியல் உருவாக்கித் தருகின்றது.
u55flaps fateff Daily News Paper GT6igh சஞ்சிகை Magazine என்றும் இருவகைப்படும். தினசரி, உலகெங்கும் நடைபெறும் நிகழ்ச்சிகள் செய்திகள் யாவையும் சேகரித்து அவை பற்றிய கருத்துரைத்து வெளிவரும், சஞ்சிகைகள் பல வகைப் பொருள் பற்றிய கட்டுரைகள், படங்கள், தனித்தனி கொள்கை பரப்பல், சமயவேறுபாடுகள், இலக்கியம், கவிதை சார்ந்த துறைகள் என்பனவற்றைத் தனித்தனியாகவோ, கூட்டாகவோ கூறி வெளிவரும், துறை சார் இதழ்கள் சிறு பத்திரிகைகள் வெகுசன இதழியலில் அடங்காது.
உலகத்தில் முதன்முதலில் வெளிவந்த தினசரி 6ம் நூற்றாண்டில் சீன நாட்டின் தலை நகரான பீக்கிங்கில் பிரசுரமான 'ட்ஸிங்பவோ - Tsingpao எனும் அரச செய்தித்தாளே! இது 1835வரை வெளியானது. எழுத்துக்களைச் செதுக்கிய ப்ளொக்குகளைக் கொண்டே பிரதி எடுத்து வெளியிட்டனர்.
அச்சு இயந்திரம் 17ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்பே பத்திரிகைத் தொழில் உலகெலாம் வளர்ந்து ஜீவநதி -C

பரந்தது. இந்தியாவிலேயே அச்சு கண்ட முதல் மொழி தமிழ் மொழிதான். தமிழ்நாட்டிலேயே அச்சு ஆலை நிறுவப்பட்டது. முதன்முதல் இலங்கையில் தான் தமிழ்மொழியில் பத்திரிகை வெளியானது. 1802இல் த கவர்ண்மென்ற கெஸெட் ஆங்கில வார இதழ் மூன்று மொழிகளிலும் வெளியாகிற்று. தமிழ்ப்பகுதிக்கு "அரசாங்க வர்த்தமானி எனத் தனியாகப் பெயரிடப்பட்டிருந்தது தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதிலும் இந்த "அரசாங்க வர்த்தமானிதான் முதல் தமிழ் இதழ் என்பதில் இலங்கையர் பெருமைப்படலாம்.
மொழி, அறிவு, தொழில் வளர்ச்சி என்ப வற்றை முழுமனித குலfதியாக, தனி இனரீதியாக, உலகரீதியாக, நாடுகள் ரீதியாக, பிராந்திய ரீதியாக எடுத்துக் காட்டும் சாதனம் இதழ்கள் தான். இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் ஊன்று கோல் இதழ்கள் தான்.
வாசிப்பில் எளிமையையும், வாழ்வின் உண்மையான சித்திரிப்பையும் எழுத்தாளரின் சமூக அக்கறையையும், இதழ் உரிமையாளரின் பொறுப்புணர்ச்சியையும் எடுத்துக் காட்டுவது தான் வெகுசன இதழ்களுக்கான கடமை. முற்றிலும் இதற்கு மாறுபட்டதுதான் சிற்றிதழ்கள். வெகுசனங் களைப் பாதிக்காத, குறிப்பிட்ட சமூக கலாசார சமய நோக்குகளில் ஒன்றை அல்லது இரண்டை அடிப்படையாகக் கொண்டெழுவதே சிற்றிதழ் எனலாம். அர்ப்பண நோக்குடன் எவ்வித இலாபமுமில்லாமல், கடுமையான இன்னல்களுக் கிடையில் வெளியான சிற்றிதழ்கள் முக்கிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தன. மணிக்கொடி சிற்றிதழ் புதுமைப்பித்தன் தொடக்கம் வரலாற்றுப் புகழ்மிக்க படைப்பாளி களை வளர்த்ததெனலாம். 1980களில் 'ஆனந்த விகடன், 'அக்கினிப் பிரவேசம்’ எனும் ஜெயகாந் தனின் சிறுகதை ஒன்றை வெளியிட்ட காரணத்தால் பெரும் புரளி ஏற்பட்டது. இதன் பயனால் 'ஆனந்தவிகடன் சிற்றிதழ், வெகுசன இதழாக மாறியது. இன்றைய எழுத்தாளர்கள் ஐெய மோகன், எஸ்.இராமகிருஷ்ணன், போன்றோர் சிற்றிதழ்கள் மூலம் எழுதியே வெகுசன இதழுக்கு வந்தனர். இவ்விதம் நிறையக் கூறலாம். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு போதுமானதே
பொதுநோக்கில் சிற்றிதழ்கள் இலக்கியத் திற்குச் செய்த பங்களிப்புடன் இலக்கிய உலகில் பரிமாறப்படும் பல்விதப் போக்குகளுக்கும், கலாசாரக் கூறுகளுக்கும், சமயம் சார்ந்த அறிவியலுக்கும், இனங்களின் உரிமைகளுக்கும் ஆற்றிய பங்களிப்புகள் அநேகம் இவற்றைப்பற்றிப் eig 29

Page 17
G8L 5FejLb விவாதிக்கவும் நிறைய விஷயங்களுண்டு. ஆகவே இலங்கையில் முஸ்லிம்கள் வளர்த்த சிற்றிதழ்கள் பற்றிய சிந்தனைகளின் விரிவின் ஆய்வை மட்டுமே முன்வைக்கின்றேன் என்பதைக் கூறுவதில் மனவமைதி கொள்கின்றேன்.
தொடர்பியல் காரணமாக உலகில் எத்தனையோ சாதனங்கள் வெளியாகிவிட்டன. அவற்றுள் முதலிடம் பெறும் சாதனம் இதழ்களே! அறிவு வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் இதழ்கள் மிக உறுதுணையாக இருந்தன. இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் கூட இதழ்களின் முக்கியத்துவத்தை எவராலும் தவிர்க்க முடியவில்லை. தமிழில் சாதி சமயங்களுக்கு முக்கியம் கொடுத்தே இதழ்கள் வளர்ந்தன. அதிலும் சிற்றிதழ்களின் பங்கு மிக முக்கியம் பெறுகின்றது.
18, 19ம் நூற்றாண்டுகளின் தொடக்க காலமெலாம் இலங்கை முஸ்லிம்கள் அறபுத்தமிழ் எழுத்துகளில் ஆர்வமுடையோராயிருந்தனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தே 1831களில் கிறிஸ்தவ சமயம் சார்ந்த சிற்றிதழ் வெளியாகியது. 1864களில் இந்து சமய சிற்றிதழ் வெளியானது. இதைத் தொடர்ந்தே இஸ்லாமியச் சிற்றிதழாக முஸ்லிம்கள் மத்தியில் 1869களில் 'ஆலமத் இலங்காபுரி எனும் அறபுத்தமிழ் சிற்றிதழ் வெளியானது. இதன் ஆசிரியர் சல்தீன் என்பவர் அறபு இபியையும் தமிழ் ஒளியையும் அறபுத்தமிழ் லிபியிலே இது சிற்றிதழ் மாத இதழாக வெளியானது.
இந்த வரிசையில் 1876களில் கொழும்பி லிருந்து வாரச் சிற்றிதழாக “புதினாலங்காரி' வெளிவந்தது. இதன் ஆசிரியர் நெ.ம.வாப்புமரைக் கார். இஸ்லாமியச்சமயச் செய்திகளை அதிகமாக "புதினா லங்காரி அடக்கி வெளியாக்கியது. இஸ்லாமியச் செய்திகளுடன் இஸ்லாமிய முத்திரையைப் பதித்து வெளியான சிற்றிதழாக இது உயர்ந்தது.
ஆங்கிலேயராட்சியில் கல்வி, கலாசாரம், அரசியல், இம்மூன்றிலும் தத்தம் சமூகங்களின் கீழ்நிலையை எண்ணி எழுச்சி பெறத்தூண்டிய வர்கள் அநகாரித தர்மபால, ஆறுமுகநாவலர், சித்திலெப்வை ஆகியோரே! அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், சித்திலெப்வை மூவரும் வெவ்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள். சமூக வளர்ச்சிக்குத் தாக்குக் கொடுக்கக் கூடிய பத்திரிகையை வெளியிடுவதில் ஒரே சிந்தனை யுடையோராயிருந்தனர். அநாகரிக தர்மபாலாவும், ஆறுமுக நாவலரும் அவரவர் சமூகத்திற்காக ஜீவநதி

வெளியிட்ட சிற்றிதழ்கள் போல் சித்தி லெப்வையும் தமது சமூகத்தின் கலாசார கல்வி உரிமை அரசியல் சிந்தனைகளை வளர்க்க 1883களில் 'முஸ்லிம் நேசன்" எனும் முஸ்லிம் சிற்றிதழை வெளியாக் கினார். முஸ்லிம்கள் வெளியாக்கிய வளர்த்த சிற்றிதழ்களில் மூன்றாவது இடத்தை ‘முஸ்லிம்நேசன் பெற்றாலும், அரசியல், சமயம், சமுகம், உரிமை, கல்வி, இன்னோரன்னவைகளை வைத்து ஒருமித்துக்குரல் கொடுத்த முதலாவது சிற்றிதழாக அது இடம் பெறுகின்றது.
சமூகசிந்தனை நோக்கி எழுந்த முஸ்லிம் நேசனால் கல்வி, அரசியல், கலாசாரம், உரிமை என்பன பேணப்படுவதற்குரிய, ஆரம்ப வெற்றி யைப் பெற்ற காரணத்தால், முஸ்லிம்களின் மேம்பாட்டையும், இஸ்லாமிய வளர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு 1886களில் ‘சர்வசன நேசன்" எனும் சிற்றிதழ் வெளியானது. இச்சிற்றிதழின் முதல் ஆசிரியர் ஏ.எஸ்.சி.முகைய தீன் ஆவார். கொழும்பு மெளஞ்சர்வீதி, முதலாம் இலக்க இல்லத்திலிருந்து இது வெளியானது.
மேற்கூறிய சிற்றிதழ்களின் அடிச்சுவடு களைப் பின்பற்றி 1887களில் சஷ்புர்ரான அன் கல்பில் கொன்' எனும் அறபுத்தமிழ் சிற்றிதழ் வெளியானது. சையத்(முகம்மது உசேன் இதன் ஆசிரியராவர். அறபுத்தமிழைக் கையெழுத்தில் எழுதி கல்லச்சில் வெளியான சிற்றிதழிது.
"முஸ்லிம் நேச”னை ஏழு வருடங்கள், சித்திலெப்வை அவர்கள் செம்மையாய் நடத்திய பின் சம்சுதீன் என்பவருக்களித்தார். அவர் உதுமான் என்பவரை ஆசிரியராக்கி நடத்தி வந்தார்.
ஞானவழியில் சென்ற சித்திலெப்வைய வர்கள் 1892 ஆவணி முதலாம் நாள் ஞானதீபம்" எனும் சிற்றிதழை வெளியிட்டார். இச்சிற்றிதழின் முதலாம் வெளியீட்டில் அது பற்றிக் கூறும்போது ஓர் ஆலிமும், ஒரு கிறிஸ்தவப் பாதிரியும், ஒரு பிராமணக்குருவும், ஒரு புத்தருடைய குருனான் சையும் ஓரிடத்தில் கூடி, குறித்த நாலு வேதங்களில் எந்த வேதம் திறமென்று ஆலோசிக்கிறது போலவும், அந்த ஆலிமை நோக்கி மற்ற மூவரும் ஒவ்வொருவராய்த்தங்கள் தங்கள் வேதங்களை எடுத்துக்காட்டுவது போலவும், பின்பு, அந்த ஆலிமும் அவர்களுக்கெல்லாம் மறுமொழி சொல்லி, நமது மார்க்கத்தின் உண்மையை அக்கீல் (அறிவில்)லேற்றிக் கொள்ளத்தக்கதாய் விளக்கிக் காட்டுவதுபோலும் எழுதுகிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் நல்ல கல்விமான்கள் என்றும், வீண் தர்க்கமிடாது உண்மையறியக் கருத்துள்ள வர்கள் என்றும் வைத்துக் கொள்வோம்" எனக்கூறி
இதழ் 29

Page 18
ஞான விளக்கத்தைத் தொடர்கிறார். “ஞானதீபம்" மாதாமாதம் நான்கு மேதைகளின் சம்பாஷணை களை முக்கியமாக்கியே வெளியாகியது.
சித்திலெவ்வை அவர்களின் இக்கருத்துப் பரிமாறல் பிழையானதென வாதிட்டோர் 1893களில் “ஞானதீபம்’ சிற்றிதழுக்கெதிரான "ஞானதீபசங்காரம்' எனும் எதிர் சிற்றிதழொன்றை வெளியிட்டார்கள் இச் சிற்றிதழ் “ஞானதீபத்' துக்கெதிராய் நின்று பிடிக்கவில்லை. அதனால் அச்சஞ்சிகையை நிறுத்திவிட்டார்கள்.
1889ம் ஆண்டு தொடக்கம் 1893ம் ஆண்டுவரை முஸ்லிம்கள் மத்தியில் விழிப்புணர் வை ஏற்படுத்தும் பத்துச் சிற்றிதழ்கள் வெளியாகின. இவ் வெளிப்பாடு, 1893க்குப் பின்னும் வெளியாவதற்கு முஸ்லிம் சிற்றிதழ்களுக்கு உரமான அத்திவாரமாக அமைந்ததெனலாம்.
மொழிகளின் வேகமான வளர்ச்சிக்கு இதழ்களின் தோற்றமே காரணம் எனக்கூறும் அறிஞர்கள் உளர். இதழ்களின் பார்வையால் மொழியினை வளர்த்தவர்கள் என முஸ்லிம்களைச் சொல்லலாம். முஸ்லிம்நேசன் சிற்றிதழ் ஆரம்பித்த காலத்தில் அதன் விற்பனை 35oபிரதிகள் தான் 1901இல் அதன் விற்பனை 18OO பிரதிகள் என்பதால் முஸ்லிம் வாசகர்கள் சிற்றிதழால் கற்றுணர்பவர்கள் என்பதை உய்த்துணரலாம். இதன் பயன்தான் 1900ம் வருடத்தின் பின் இலங்கை சுகந்திரம் பெறும் வரை எழுந்த சிற்றிதழ்களின் பெருக்கம் எனலாம்
1900த்திலிருந்து 1948 சுதந்திரமடையும் காலம்வரை இருபத்திரண்டு முஸ்லிம் சிற்றிதழ்கள் இலங்கையில் முஸ்லிம்களால் வெளியிடப் பட்டுள்ளன. அவற்றின் விபரமறிதல் நன்றென எண்ணுகிறேன். 1900வருடத்தில் அஷ்ஷபாப்" எனும் சிற்றிதழைத் தோற்றுவித்த அப்துல் அஸிஸ் அவர்கள் அதனை நிறுத்தி 1901இல் 'முஸ்லிம் பாவ காவலன்' எனும் சிற்றிதழை வெளியிட்டார். முஸ்லிம்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட இச்சிற்றிதழ் செய்திகளுக்கும் இடமளித்தது. இது முஸ்லிம்பாதுகாவலன் அச்சகத்தில் கொழும்பு புதிய சோனகத் தெருவிலிருந்து தோற்றம் பெற்றது. 1906களில் மிஸ்பாகுல் இஸ்லாம் எனும் சிற்றிதழை எம்.எல்.எம்.முகம்மது காசிம் ஆலிம் அவர்கள் முஸ்லிம்களின் சமூக வளர்ச்சி நோக்குடன் வெளியிட்டார். 1908களில் 'அல்முஸ்லிம்’ எனும் சிற்றிதழை, கொழும்பு முஸ்லிம் கல்வி விருத்திச் சங்கத்தினர் ஐ.எல்.எம்.அப்துல் அஸிஸ் அவர்களை Effuu TT 5 G66fAufl. 6Tr. 1914a56f6ð ஜீவநதி

"இலங்கை முஸ்லிம்’ எனும் சிற்றிதழ் கே.கே.ஏ.ஹமீத் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. இதில் நாட்டு முன்னேற்றம், பல்துறை விருத்திபற்றிய ஆய்வு என்பன அடங்கியிருந்தன. 1917இல் "லங்காமித் திரன்’ சிற்றிதழ் எம்.என்.அகமது லெப்வை அவர்களை ஆசிரியராக்கி இஸ்லாமிய தத்துவம் பேசி வெளியானது. 1919களில் 'ஹிதாயத்துல் இஸ்லாம்’ எனும் சிற்றிதழ் டாக்டர் மெளலானா செய்யத் ஹசைன் அவர்களை ஆசிரியராக்கி, இஸ்லாமிய வளர்ச்சி கருதி வெளியானது. இவ்வாண்டிலேயே ரி.கே. வை என்பவரை ஆசிரியராக்கி ஆங்கிலம், தமிழ் மொழிக்கட்டுரை களுடன், இஸ்லாத்தின் விருத்தியை நோக்கிற் கொண்டு தூதன்' பனித் தெருவிலிருந்து வெளியானது. 1920களில் அல்குர்ஆன் போதனைப் பரப்பலுக்காக ஆசிரியர் ஐ.எம்.எஸ். முகம்மது யூசூப் அவர்களால் 'சம்சுல் இஸ்லாம்" சிற்றிதழ் வெளியானது. 1930களில் ஆசிரியர் அப்துல் கபார் அவர்களால் தப்லீகுல் இஸ்லாம்" சிற்றிதழும், மதார் சாகிப்பை ஆசிரியராகக் கொண்டு "ஞானதீபம்’ சிற்றிதழும், ஓ.கே.முஹி தீனை ஆசிரியராகக் கொண்டு 'முஸ்லிம் சமரட்சனி சிற்றிதழும், மீரா முகியிதீனால் தினத்த பால்’ சிற்றிதழும் வெளியாகின. தினத்தபால் இலங்கையின் முதலாவது தினசரியாக வெளியான போதும் இஸ்லாமியச் செய்தியால் சிற்றிதழா கியது. 1931இல் 'முகம்மதலி எனும் சிற்றிதழை ஓ.கே.முஹிதீனின் ஆசிரியத்திலும் 1935களில் பாவலர் சம்சுதீனின் ஆசிரியத்தில் “ஞானச்சுடர் சிற்றிதழும், இலங்கைச் சோனகர் சிற்றிதழும் வெளியாகின 1939களில் அன்பர் பூபதிதாஸனின் "ஞானக்கடல் சிற்றிதழும் ஹிஜ்ஜான் சிற்றிதழும் வெளியாகின. 1945இல் மெளலவி அப்துல் றளoாக்கின் 'அல் இல்ம் சிற்றிதழும், 1948களில் 'இஸ்லாமிய தாரகை சிற்றிதழ் முகம்மது ஸாலிஸ் ஹிான் ஆசிரியத்திலும், ஆசிரியர் முஹிதீனின் 'உதயதாரகை சிற்றிதழும் 1947களில் முகியதீனின் தோழன் சிற்றிதழும் வெளியாகின. இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னெழுந்த இச்சிற்றிதழ்கள், இந்திய சுதந்திரப் போராட்டத்தின் நிழலில் சஞ்சரித்ததெனலாம். இக்காலம், பாகிஸ்தான் இந்தியா சுதந்திர இழுபறியில் 'இஸ்லாமிய தாரகை சிற்றிதழ் பாகிஸ்தானை
ஆதரித்ததால், இந்தியா அதைத்தடை செய்தது.
சுதந்திரத்துக்குப்பின்னெழுந்த முஸ்லிம் களின் சிற்றிதழ்கள் அநேகமாக அரசியல் பேசிநின்றதெனலாம். சில சிற்றிதழ்கள் இஸ்லாமிய இதழ் 29

Page 19
சிந்தனையையும் கல்வியியல் சிந்தனையையும் கருத்திற் கொண்டு நின்றன. சில பொழுது போக்கை முன்னிறுத்தி நின்றன. அச்சிற்றிதழ்களை மொத்தமாகக் கணக்கெடுப்பது சிறப்பென எண்ணுகிறேன். இக்கணக்கெடுப்பு 1980கள் வரையே நீளுகின்றதெனலாம். 1949களில் 'அகதியா K.S.முகம்மது தாவூதை ஆசிரியராகக் கொண்டது. 1950களில் நவயுகம் சிற்றிதழ் செய்யத் அஹமதை ஆசிரியராகக் கொண்டு வெளியாகியன. 1953களில் தாரகை, சிற்றிதழ் முகம்மது ஸாலியை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. "இஸ்லாமிய என்ற பகுதியை நீக்கிய காரணம் இந்தியத்தடையே! இக்காலத்தே ‘முஸ்லிம் மஞ்சரி சிற்றிதழை கியாசும், 'இஸ்லாமியர் சிற்றிதழை கெயிலானியும் வெளியாக்கினர். 1955களில் ஆசிரியர் அப்துல் ஹமீதால் 'உண்மை உதயம்’ சிற்றிதழ் வெளியானது. 1958இல் யூ.எம்.தாஸிமின், வழிகாட்டி சிற்றிதழும் சரந்தீப் சிற்றிதழும் வெளியானது. 1960 தாரகை ஆசிரியர் முஹம்மத், 1961 மணிக்குரல்’ எம்.ஸி.எம்.சுபைர் 1962 "மரகதம்' ஆசிரியர் இளங்கீரன், 1962 முஸ்லிம் செய்தி ஆசிரியர் முஹிதீன், 1964 புதுமைக்குரல் ஆசிரியர் முக்தார் ஏ.முஹம்மத் 1964 புதுப்பாதை ஆசிரியர் அமானுல்லாஹற் 'அல்மதீனா ஆசிரியர் சைபுல் உசேன், 1965 நிலா ஆசிரியர் மானாமக்கீன், நிலா அக்காலம் நடாத்திய போட்டியில் அன்பு ஜவஹர்ஸா ஐந்து ரூபாப் பரிசு பெற்றார். இளம்பிறை ஆசிரியர் எம்.ஏறஹற்மான், 1967 அல்இஸ்லாம் தமிழ் ஆங்கிலச் சிற்றிதழ், "மாணவமுரசு’ ஆசிரியர் ஹனிபா, அல்மதினா ஆசிரியர் எம்பி.எம்.மாஹிர் இன்ஸான் ஆசிரியர் அபூதாலிப் அப்துல் லத்தீப் 1968 “பாசமலர்' ஆசிரியர் சரண்டீப் முஸ்தா, 1970 அல்ஹஸனாத் மா அத்தே இஸ்லாமி வெளியீடு 1972 புயல்" ஆசிரியர் ஐ.ஏ.ஹமீத், 1974 மணிமஞ்சரி எம்.ஸி.எம்.சுபைர் 1975 நல்வழி ஆசிரியர் றிழ் வான்மாஸ்டர், 'அபியுக்தன்' ஆசிரியர் எச்.செம்பி முஹிதீன் ‘இஷாஅத்துல் இஸ்லாம்" வேர்வலை கடல் சிராஜாதீன் 1977 'அஷ்ஷாப்" ஆசிரியர்கள் எம்.எச்.செம் நாஸர், எம்.பாஸி இச்சிற்றேடுகள், சுதந்திரத்திற்குப்பின் 1980வரை வெளியாகின. இக்காலத்தே பேகம் ஸரினபர் தானியின் கலை மலர் அல்பிரன் ஓயாவிலிருந்து வெளியானது.
இடையே'மரகதம் சிற்றிதழைச்சிறப்பாக வெளியிட்ட அனுசரணையில் எம்.ஏறஹமான், பி.இராமநாதன், மிக உதவினர். எஸ்.பொன்னுத் துரையின் இணைப்பில் இறுகிய "இளம்பிறை ஜீவநதி

றஹற்மான் மரகத்தைப் புதைத்து, அதன் மேட்டில் நின்று இளம்பிறையை வெளியாக்கி எஸ்.பொன்னுத்துரையின் புனை பெயரானார். இதைத் தோண்டினால் சிக்கல் அதிகம் வெளிவரும்,
1980களிலிருந்து இற்றைவரை வெளியான முஸ்லிம்களின் சிற்றிதழ்கள் ஏராளம், கணக்கிலெடுத்தவற்றை வரிசைப்படுத்துகிறேன். 1981 ஞானச்சுரங்கம், ஆசிரியர் அப்துல்றஊப், வான்சுடர் ஆசிரியர் அப்துர்ரஹற்மான், ‘பூகம்பம்" ஆசிரியர் கலைநிலா, 1982 அஷ்ஷபாப் ஆசிரியர் எம்.எச்.எம்.சம்ஸ், பூபாளம் அல்அஸரிமத். 1983 'ஜூம்ஆ' ஆசிரியர் பலப்பிட்டி அரூஸ், 1984 "உண்மை உதயம்' ஆசிரியர் பாஸில் முஸ்தபா, தடாகம் ஆசிரியர் கலைமகள் ஹிதாயா, நிதாவுல் இஸ்லாம்' ஆசிரியர் புர்ஹானுதீன் நுஸ்றத் ஆசிரியர் கலீலூர் ரஹற்மான், “பாசமீ ஆசிரியர் செரண்டிப்முஸ்தபா, 'ஊசி ஆசிரியர் காஸிம் 1985 'ப்ரியநிலா ஆசிரியர் றம்ஜான், 1988 போர்முரசு’ ஆசிரியர் காஸிம், "முக்கனி ஆசிரியர் மதியன்பன், 'கலைச்சுடர் ஆசிரியர் வாரிஸ் அலி மெளலானா, "எழுச்சிக்குரல் ஆசிரியர் அஸ்ஹர், 1987 "பாமிஸ்மாளிகை ஆசிரியர் முகம்மது முஸ்தபா 1988 பிறைக்கவசம்’ ஆசிரியர் உக்குவல்ல அமானுல்லாஹற் "உண்மை உதயம்' ஆசிரியர் முகம்மது மூஸா, 1991 தியாகத்தென்றல் ஆசிரியர் றஷித்நியாழ், 'நேசன் ஆசிரியர் அபூரஐத் அல்ஹஜ் ஆசிரியர் எம்.ஏ.சகாப்தீன் 1992 ‘அல்உயப்ரா' ஆசிரியர் மெளலவி காதிர்கான் செளத்துல் இஸ்லாம்' ஆசிரியர் தெரியவில்லை, ‘தேன்' ஆசிரியர் றபியுதீன், 'பார்வை' ஆசிரியர் சித்திக் காஸப்பர் 1993 புள்ளி ஆசிரியர் றபீக், நூறுல்ஹக் ஆசிரியர் மர்ழியாஹரிசைன். 1980 லிருந்து 1993வரை வெளிவந்த இலங்கை முஸ்லிம்கள் வளர்த்த சிற்றிதழ்கள், 29 இன் பட்டியல்தந்தேன். முழுமையாக இதுவரை 92 சிற்றிதழ்களின் கணக்கில் இலங்கையில் வெளியான முஸ்லிம்கள் வளர்த்த 18 கவிதைச் சிற்றிதழ்களையும் சேர்க்கமுடியும் அவையாவன திக்வெல்லகமாலை ஆசிரியராகக் கொண்ட 'சுவை, எம்.ஏ.நுஃமான் நடத்திய கவிஞன் நீள்கரைநம்பி, அப்துல்சத்தார் நடத்திய க-வி-தை ஐவாத்மரைக்கார் நடத்திய ‘விடிவெள்ளி றாயுதீன் நடத்திய ‘தேன் அல்அளிமத் நடத்திய "பூபாளம்', தாஸிம் அகமதீன் வகவம் என்.ஸி.ஏ.பfதின் கோகிலம், மேமன்கவியின் சப்னா நூறும் ஹக்கின் "சோலை', ஒலுவில் அமுதனின் புதுக்குரல், காத்தான் குடி பெளஸின் ‘பா’ றபீக்கின் புள்ளி அஷ்ரப் சிஹாப்தீனின் 'யாத்ரா, கிண்ணியா அமீரலியின் எழுது, இதழ் 29

Page 20
கிண்ணியா பிரோளம் கானின் 'பேனா', . ஒலுவிலிருந்து வந்த மரங்கொத்தி, மூதூர் முகையதினின் ஓசை" என்பனவாம்.
அக்கரைப்பற்றிலிருந்து ஆரம்பித்து கொழும்பு வரை சென்று ஆரோக்கியமாக வெளிவந்த எம். பெளஸரின் மூன்றாவது மனிதன் ஐமியா நழிமிஸ்யாவில் ஸி.எம்.ஏ.அமீனின் ஆசிரியத்துள் வெளியான இஸ்லாமிய சிந்தனை, அக்கரைப்பற்றிலிருந்து வெளியான 'பாவை' குறித்துக்காட்ட வேண்டிய சிற்றிதழ்களாகும். எம்.ஹதிஸ் இஸ்கதினை ஆசிரியராகக் கொண்ட ‘அரும்பு' விஞ்ஞானச் சிற்றிதழ் 42ஆவது இதழ் வெளிவந்துள்ளது. பிரதம ஆசிரியராக A.T.M.நெளவரைக் கொண்டு அகரம்’ இதழ் வெளிவருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்காலம் பூங்காவனம், வழிகாட்டி, படிகள், உண்மை உதயம், அஸ்ஸறோ, இனிமை, அநுராகம்,
ஒரு கைதியி
ஒளியிழந்த இருளினிலே கறைபடிந்த மனத்துடனே வழியின்றித் தள்ளாடினேன் விழியிழந்த பதுமையென!
புரட்டிய பக்கங்களை விட உணரப்படாத உணர்வுகளுடன் தூசிவலைதனில் ஒரு நூல் பற்றியது, என்கரத்தை
ஒற்றைத்தலை தீக்குச்சியின் இறுதி மூச்சின் ஒளியினிலே கையில் எடுத்தேனி - அது ஒரு கைதியின் டயறி!
விழியின் கனவுகள் - அங்கு வார்த்தைகளாய் சிதறியிருந்தது வாழ்நாளின் ஏக்கம் - அதில் வழுவின்றி வாழ்ந்திருந்தது.
உணரப்பட்ட பக்கங்களை விட புரட்டப்படாத பக்கங்களே
ஜீவநதி -O

நேர்வழி, தீர்வு, முஸ்லீம், அல்ஹஸனாத், புஷ்ரா, குழந்தை இதழ் "பிஸ்மி, வார் உரைகள் இன்னும் பல வெளிவருகின்றன.
பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் ஆசிரிய கலாசாலைகள் பிராந்திய அழைப்புக்கள் அவ்வப்போது சிறப்பான சிற்றிதழ் மலர்களை காலத்துக்குக் காலம் வெளியிடுகின்றன.
இதுவரை இலங்கை முஸ்லிம்களால் வெளியான சிற்றிதழ்களில் மறைந்து விட்டவைகள் பல இன்னும் வாழுகின்றன. வாழ்ந்து கொண்டு வெளிவருபவைகளில் அநேகமானவை செத்து விட்டன இதை, இலக்கிய உலகம் எளிதில் கணக் கெடுத்துவிடும்
இலங்கை முஸ்லிம்கள் வளர்த்த சிற்றிதழ் களைத் தொகுத்துத் தந்துள்ளேன். ஆய்வாளர்கள் மேலெடுத்து விரிவாக்குதல் சிறப்பென எண்ணுகிறேன். அம்முயற்சியிலீபடுவீர்களாக,
ன் Lupól. O O
அங்கு அதிகமிருந்தது,
ஏக்கங்களின் புகலிடமாய்!
உணர்ந்து வாசித்தேன் - அதன் உணர்ச்சிகள் எண் உள்ளத்தை தூக்கிவிட்டு துடிக்க வைத்தன - நீயாவது தூரமான உணர்மைகளை புரிவாயா?" என!
விழியிலிருந்து செந்நீர்த்துளிகள் உணர்வுகள் வழியாய் சென்று உள்ளத்தை உருக்கின இவன் நிரபராதி என!
புரியாத சமூகமும், தெரியாத உணர்மைகளும் இறுதிப்பக்க இருட்டில் - என்றோ கல்லறையாய் கசிந்திருந்தன. உணர்ச்சிகளை உறையவைத்து எதிர்காலத்தை எரித்து விட்டு என்னைப் பார்த்து விழிக்கிறது - ஒரு கைதியினர் சபிக்கப்பட்ட டயறி!
- பிறைநிலா கிருஷ்ணராஜா
O- இதழ் 29

Page 21
கலைவாதிகலில்
அவிரவிற்சி $ଲିଖିତ ნlh}[i]
அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய தீர்க்க வர்ணம் என்ற நூல் என் கரம் எட்டியது. தினகரன் வாரமலரில் அவர் வாராவாரம் எழுதி வந்த பத்தி எழுத்துக்களின் தொகுப்புத்தான் இந்நூல். 236 பக்கங்களைக் கொண்ட 68 பத்திகளைக் கொண்ட இக்கனதியான பத்தி எழுத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பத்தி (Colomm) நூலின் மூலம் மூன்று விடயங்களை என்னால் அவதானிக்க முடிந்தது. ஏற்கனவே பெறுமானம் மிக்க கவிதைகளையும் ஓரிரு சிறுகதைகளையும் எழுதி TL, யிருக்கும் அஷ்ரஃப் சிஹாப்தீனால் లిrస్త్రశిని
வெகு நேர்த்தியாகப் பத்திகளையும் எழுத முடிந்திருக்கிறது என்பது At
κ
பிரதானமான ஒன்று. இரண்டாவதாக o شتهج செம்மையான தமிழ் மொழி உச்சரிப்புடன் கம்பீரமான - அதே .
(36.606.T மென்மையான
ஒலிவாங்கிக்கேற்ற குரல்வளம் கொண்ட அறிவிப்பாளராக மட்டுமே 歸 O பெரும்பாலோரால் அறியப்பட்ட Từ3, ô6 அஷ்ரஃப் சிஹாப்தீனின் இலக்கிய மீள் பிரவேச வெற்றி உலா. மூன்றாவதாக, வெகு சிரமத்தின் மத்தியில் ஒரு கவிதைச் சஞ்சிகையை வெளிக் கொணர்ந்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்று இலங்கைத் தமிழ்ச் சஞ்சிகைகளின் தலைவிதியின் படி தொடர்ச்சியாக வெளியிட முடியாத நிலையிலும் கூட, அடிக்கடி நூல்களைப் பிரசவித்துக் கொண்டிருக்கின்ற தற்றுணிவும் ஆளுமையும்,
நானும்கூட ஒரு பத்தி எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் வெளிவந்து நின்று போய்விட்ட 'சிரித்திரனில் எனது பத்தி எழுத்துக்கள் வெளிவந்துள்ளன. யாழ்ப்பாண நாளிதழான ‘ஈழநாடு", "பாமிஸ்" சஞ்சிகை, தினகரன்' போன்றவை எனது பத்தி எழுத்துக்களைச் சுமந்திருக்கின்றன. எனவே பத்தி
ஜீவநதி -O

ஹிதீனின்
(6ifმifტ%
fGlp:Diff)
எழுத்துக்கள் என்றால் என்ன என்பது எனக்கு ஓரளவு தெரியும்.
நமது நாட்டைப் பொறுத்த அளவில் கே.எஸ். சிவகுமாரன், அந்தனி ஜீவா, புலோலியூர் இரத்தின வேலோன், தெணியான், அல் அஸமேத், மேமன்கவி, கே.விஜயன் ஆகியோர் இன்னும் பத்தி எழுத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கே.எஸ். ஆங்கிலத்திலும் எழுதி வருகிறார். அதன் தராசில் நின்றே அஷ்ரஃப் சிஹாப்தீனின் பத்திகளை ஆராய வேண்டியுள்ளது.
இப்பத்திகள் மூலம் அஷ்ரஃப் ஹாப்தீன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே கூற வேண்டும். அதற்காக மூன்று காரணங்களை முன் வைக்கலாம்.
01. பத்திக்காக அவர் எடுத்துக் கொண்ட கரு (Theme அல்லது Prot)
o2. GT(gğög B6CDL- (Presentation) சொல்லுகின்ற விதம். (இந்த இடத்தில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் கூற்றொன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். "எவ்வளவு கடினமான, சீரணிக்க முடியாத கருத்துக்களையும் சொல்லுகிற விதமாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ள வைக்கலாம்” என்று "ஜே கூறுகிறார் அஷ்ரஃப் சொல்லுகிற விதமாகச் சொல்லுகிறார். 03. எடுப்பும் முடிப்பும். விசேடமாகப் பத்தியை முடிவுக்குக் கொண்டு வரும் பாங்கு. அது அலாதியானது, தனித்துவமானது, மனதைக் கவருவது அல்லது நெருடுவது.
இந்த மூவகைக் கருத்தியல் அடித்தளத்தில் நின்று தீர்க்க வர்ணத்தை விமர்சிக்கப் புகுந்தால் உண்மையில் தனி நூல் ஒன்றையே எழுத வேண்டியேற்படும் என்று கூறி வைப்பதில் நான் பின்நிற்கப் போவதில்லை.
அஷ்ரஃப் சிஹாப்தீன் தொட்டுச் செல்லாத சப்ஐக்டே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெரும்பாலும் எல்லா விடயங்களிலும் கை வைத்திருக்கிறார். கலை, இலக்கியம், நுண்கலை,
0. இதழ் 29
haula

Page 22
சினிமா, வானொலி, வரலாறு, சமூகம், பொருளாதாரம், மதம் அல்லது மார்க்கம் என்று இன்னோரன்ன விடயங்களில் ஒரு வரியாவது சேர்த்துக் கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும். நம்நாட்டிலுள்ள எல்லாம் தெரிந்த மேதாவிலாச 6Top55ITG|Tifascir (Masters of all subjects) floo&DDub தனது பத்தி மூலம் சாடியிருக்கிறார் சிஹாப்தீன். இந்த உணர்ச்சி மயமான கோபம் ஓர் எழுத்தாளனுக்குத் தேவைதான். அவரது சில குறியீடுகளின் மூலம் அந்த எழுத்தாளர்களை நம்மால் இனங்காண முடிகிறது.
இலங்கை எழுத்தாளர்களான எம்.ஏ.நுஃ மான், எம்.எச்.எம். ஷம்ஸ், லெமுருகபூபதி, கவிஞர் அப்துல்காதர் லெப்பை, தேசிக விநாயகம்பிள்ளை, ஐ.சாந்தன், அல் அஸ்மத், ஜின்னாஹற் ஷரிபுத்தீன், தாஸிம் அகமது, மருதூர் ஏ. மஜீத். எஸ்.ஐ.நாகூர் கனி, வாழைச்சேனை அமர், ஏ.ஜி.எம்.ஸதக்கா, எஸ். நளீம், ஓட்டமாவடி அறபாத், நான் உட்படப் படைப்பாளிகளுடன் இலக்கிய ஆர்வலர்களான எம்.எம்.சுஹைர், எம்.எம். அபுல் கலாம், றஸின் மாஸ்டர் ஆகியோரது பெயர்களெல்லாம் இந்தப் பத்திகளில் διόρτό 69τιό (3Lmü(6 அமர்ந்திருக்கின்றன.
இந்திய மற்றும் தமிழக எழுத்தாளர்கள் சிலரும் இப்பத்திகளில் வலம் வந்து போகிறார்கள். கலைஞர் மு. கருணாநிதி, கவியரசு கண்ணதாசன், கவிக்கோ, கவிஞர் வாலி, தென்காசி சுவாமிநாதன், சாரு நிவேதிதா, கவிஞர் ஜெயபாஸ்கரன் என்று இப்பட்டியல் தொடர்கிறது. ஒவ்வொரு பத்திக்கும் ஆசிரியர் வைத்துள்ள தலைப்புக்கள் அற்புதமானவை. தீர்க்க வர்ணம்’ என்ற தலைப்பே தித்திக்க வைக்கிறது. "வால் அளவு', 'அடையாத தாள், 'ஆன்மாவின் காவலர்கள்", "பெருவாய் மொழி, "மெய் எனும் பொய்', 'மாண்புறுவார் மகிமை", புன்னகையின் சூரியன், தன்னை ரசிக்காத நடிகன், வில்லங்க வினாக்கள்', 'இலவச இறக்கைகள், "இலை மறை பழம்', 'குறுந்தகவற் குசும்புகள்", 'இதயத்தை அசைக்கும் இசை, வராத வாப்பாவும் வற்றாத நதிகளும், துணியிலா மனிதனாய்த் துடித்தல்' போன்ற தலைப்புகள் சிலாகிக்கத் தக்கவை.
"சினிமா என்று வரும்போது இந்திய மற்றும் சர்வதேசத் திரைப்படங்களையெல்லாம் தொட்டுச் சென்றிருக்கிறார் நூலாசிரியர். பிரபல சரித்திர நாவலாசிரியர் கல்கி (இரா.கிருஷ்ண மூர்த்தி) பற்றி ஒரு தனிப் பத்தி எழுதியிருக்கிறார் ஜீவநதி -C

கல்கியின் கனவு என்ற மகுடத்தில், அதில் தியாக பூமி’ என்ற நாவல் திரைப்படமானதாகக் குறிப்பிட்டுள்ளார். எனக்கு ஞாபகம், கல்கியின் 'பொய்மான் சரடு என்ற நாவல் 'பொன் வயல்' என்ற பெயரிலும் "கள்வனின் காதலி என்ற நாவல் அதே பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தி ருக்கின்றன. "கள்வனின் காதலியில் சிவாஜியும் பானுமதியும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஒமர் கையாமின் புகழ் பெற்ற "வெய்யிற்கேற்ற நிழலுண்டு பாடல்கூட இப்படத்தில்தான்.
நூலின் அமைப்புப் பற்றியும் சொல்ல வேண்டும். ஆங்கிலப் புத்தகங்களுக்கு நிகராக அச்சிடப்பட்டுள்ளது. 'பளிச்" என்ற வெள்ளைத் தாளில் அல்லாது மங்கல் வெள்ளை (Of white) தாளில் அச்சிடப்பட்டுள்ளது. அது கூட ஒரு வகைக் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. முகப்போவிய மும் கறுப்பு வெள்ளைதான். அதில் நூலாசிரியரின் முகம் காணப்படுகிறது. கையில் எடுத்து வைத்துக் கொள்ள இதமாகவும் இருக்கிறது நூல்.
இலத்திரனியவியல் ஊடகவியலாளரான அஷ்ரஃப் வானொலி அனுபவங்களை மேலும் சில பத்திகளாகப் பதிவு செய்திருக்கலாம். வானொலி "அரிவிப்பாளர்கள் விடும் உச்சரிப்புப் பிழைகளை (அல்ல. அல்ல. கொலைகளை) நகைச் சுவை வடிவில் சாடியிருக்கலாம். (இன்று மனுவ நாட்டில் காளையும் மாளையும் நள்ள மலை பெய்யும்.)
சட்டத்தரணிகள் பற்றிய கதைகள் சுவை யாகவும் சம்பூரண நகைச் சுவைத் தன்மையுடை யனவாகவும் அமைந்திருக்கின்றன. வேறு சில விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கவும் தூண்டு கின்றன. செம்மறி ஆடுகள் என்ற பத்தியில் கண்ணி வெடிகள் பற்றிக் கூறுகிறார். அங்கு ஒரு புதுக் கவிதை முளைக்கிறது. "போலியோச் சொட்டருந்தி - விளையாடச் சென்றவனை - தூக்கி வந்தார்கள் - கால் ஒன்றை இழந்திருந்தான் - மிதிவெடியில்" (நெஞ்சைப் பிழிகிறது)
பிரபல எழுத்தாளர் மு.பொ. கூறுவது போல, "மொத்தத்தில் இந்நூல் ஒருவர் சலிப்புற்றி ருக்கும் போது தன்னை உயிர்ப்பு வைக்கப் படிக்க வேண்டிய நூல். எவ்வாறு மேற்கு நாட்டு ஆதி இலக்கியங்களான கண்டபரிக் கதைகளும் டெக ம்றன் கதைகளும் நெடும் பயணம் செல்வோர் தமது பயணக் களைப்பகற்றி உயிர்ப்புறவும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தனவோ அவ்வாறே தீர்க்க வர்ணமும் அமையும் என்பதில் சந்தேக மில்லை - உங்கள் வாழ்க்கைப் பயணத்தில்!
என் கருத்தும் இஃதே
O இதழ் 29

Page 23
ஊருக்கு மத்தியில் இப்படி ஒரு குளம் 6 உருவானதோ தெரியவில்லை. ஏதாவது பெரிய ே அதற்காக மண் அகழ்ந்தெடுத்ததுபோன்ற விசால மழை காலத்தில் குளம் நிரம்பி வழியும். மிதமிஞ்சி வழியே வெளியேறும். வெயில் காலத்தில் குளம் சு தூண்டில் போடுபவர்களும், கரப்புக் குத்து அத்தாங்கு வடிப்பவர்களும், கோவணக் கட்ே கரையோரங்களில் திரிந்து குளமீன்களைப்பிடித் எடுத்துச் செல்வர். விரால், குறட்டை, சுங்கான் மீன் குளத்தின் பெயர் “வண்ணக்குளம்"
சணல் கட்டுகளை குளத்தில் ஊறப்போட்டு, அல்லது இருவாரம் சென்றபின், ஊறிய சணல்கத்ை கைகளாலும் அடியில் பிடித்துக் கொண்டு, ஓங்கி ஓ சனல்பிரியச் செய்து, ரோட்டோரமாக உள்ள கிடுகு காயப் போடுவார்கள். பின்நேரம் வந்து அவற்றை வீட்டுக்குக் கொண்டுபோய் சணல் வேறு கம்ப பிரிப்பார்கள்.
சணலை நூல்நூற்று வலை பின்னுவார் கம்பை விறகாகப் பாவிப்பார்கள் நெருப்புச் ச இச்சுள்ளிகளும் விசுக் கென்று பத்திக் கொள்ளும் பெண்கள் உரி மட்டைகளை ஊறப்போட்டு கழித்து வீட்டுக்கு அள்ளிக் கொண்டுபோய் எடுப்பார்கள்.
இவை எல்லாவற்றையும் விடக் அருவருப்பான விடயம் சிறுவர் சிறுமியர் குளக்கை மலம் கழித்து, குளத்தில் கழுவிக் கொண்டு ே குளத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஆமைகள் அவ்விடத்தை வெளியாக்கிச் சுத்தப்படுத்தும் இெ வருடங்களுக்கு முந்திய கதை.
பிரதேசசபை அலுவலகம்: "efereof GeFutuolomb?" "இந்தக்குளம் பொதுமக்கள் சுகாதாரத் நுளம்பு எக்கச்சக்கமாகப் பெருகிறது"
"அப்படியானால் குளத்தை மூடி விடுவதைத் வழியில்லை."
“குளத்தை மூடுவது அவ்வளவு லேசான காரி “குப்பை கொட்டி நிரப்பினாலும் வருட8 செல்லும்."
ஜீவநதி (
 

'ப்படித்தான் காயில் கட்டி Dான குளம், ய நீர் கான் ருங்கிவிடும். பவர்களும் டாடு அதன் து வீட்டுக்கு கள் தேறும்,
ஒரு வாரம் தகளை இரு
வேலிகளில் ற அப்படியே பு வேறாகப்
கள். சணல் taraf(8Lu Teo
} ஒருவாரம் தும்பு தட்டி
கொஞ்சம்
ரயோரத்தில்
பாவார்கள் வெளியேறி தல்லாம் 50
துக்கு கேடு.
தவிர வேறு
ub 5166d." கணக்கில்
"el ú (8uIT 6r6ñ60 g5T6ñ Gafuyu Go Tub?
"பொதுமக்கள் குளத்தைப் பாவிப்பதைத் தடை செய்யவேண்டும் குப்பை கொட்டிக் குளத்தை நிரப்ப ®GlGöör®ub?”
"அப்படியானால், பிரதேச சபையிடம் இதை ஒப்படைக்கலாம்"
அன்று முதல் குளத்தில் இறங்குவது தடை செய்யபட்டுள்ளது என்ற "போர்டு". நாட்டப்பட்டது. பிரதேச சபையின் குப்பை வண்டில்கள் வந்து குப்பையைக் கொட்டிச் சென்றன.
வருடங்கள் சில சென்றன. குளம் மூடப்படவில்லை. குளக் கரை ஓரம் குப்பை கொட்டி மேடாகிய நிலத்தை லெவல்படுத்தி இரண்டு குடும்பங்கள் வீடமைத்துக் கொண்டன. கிழக்குக்கரையில் குளத்து ஒரமாக, வளவுச் சொந்தக் காரர்கள் குளக் கரையோரமாகத் தங்கள் வளவை விஸ்தரித்துக் கம்பி வேலியும் போட்டுக் கொண்டனர்.
குளத்தில் எவ்வித மாற்றமு ിങ്ങാണു.
குளக்கரையோரம் வீடு கட்டிக் கொண்டவர்கள் நுளம்புத் தொல்லை யால் பாதிக்கப்பட்டனர். அதையும் பொருட்படுத்தாது அவர்கள் அவ்வீடு களில் தொடர்ந்து வசித்தனர். அத்துடன் குளப்பக்கமாகத் தங்கள் எல்லை வேலியையும் நகர்த்திக் கொண்டனர்.
மழைக்காலத்தில் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து கரையோரம்
இதழ் 29

Page 24
உள்ள இரு குடும்பங்களின் வீட்டுக்குள்ளும் சென்றது பாடசாலையில் போயிருந்து வெள்ளம் வடிந்ததும் தங்கள் வீடுகளுக்கு வந்தனர். வெள்ள நிவாரணமு கொண்டனர். பிரதேச சபையின் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தொழில் நுட்ப உத்தியோகத்தர் கூறினார். "குளத்தை மூடுவதென்பது லேசுப்பட்ட கா குளத்தின் வடபுறத்திலுள்ள வீதியை அகலமாக்கி வரத்தைச் சீர் செய்யலாம். ஏதாவது ஒரு என்ஜிஓ ை குளத்தை மூடுவதற்கு ஆலோசனை கேட்கலாம்.
தொழில் நுட்ப உத்தியோகத்தரின் கூற்று ருக்கும் பிடித்திருந்தது. ஆனால் 'என்ஜி ஒ' ஒன்றை தான் கஷ்டமாக இருந்தது.
குளத்தை வந்து பார்த்த என்ஜிஓ அதிகாரிகள் ஏற்படக் கூடிய செலவைக் கருத்திற் கொண்டு பி விட்டனர்.
பிரதேச சபைச் செயலாளர் ஒரு ஆ6ே குழுவை அமைத்தார். தொழில் நுட்ப உத்திே தலைமையில் கிராம சேவை உத்தியோகத்தர், 'ஆர்டி நிர்வாகத் தலைவர், முன்னாள் கிராம சேவகர் மற்று உள்ள சில நலன்விரும்பிகள் இக்குழுவில் இடம் டெ குளத்தை முழுதாக மூடி அல்லது அரைவா8 அந்த இடத்தைப் பொதுமக்கள் கூடும் இடமாக்க ே இக்குழுவின் பொறுப்பு.
மீண்டும் ஓட்டம் ஆரம்பமானது. ஆனால் எவ்வித வழியும் பிறக்கவில்லை. இதற் வேறொரு பிரச்சினை தலைதுாக்கியது அரச அலுவலகத்திலிருந்து ஒரு அதிகாரி வந்தார். மூடக்கூடாது. அது நன்னீர் மீன்பிடிக்குளம் என்றான். ஆலோசனைக் குழு போராட வேண்டி ஏற்பட்டது.
"ஐயா, இது நன்னீர் மீன்பிடிக்குளம் அல்ல. ( குளம். பல வருடங்களுக்குமுன் வண்ணார்கள் இக் துணி தோய்த்தனர். அதன் பின் அவர்கள் கொ சென்றதும், குளம் சும்மாதான் இருக்கிறது. குளத்தை யோகம் செய்கின்றன. நுளம்பு கொதிக்கிறது. பெ சுகாதாரத்துக்கு இது ஒரு பெரிய தலையிடியாக உ "நீங்கள் சொன்னால் சரியாகிவிடுமா, இந்தக் மூடிவிடுவதற்கு நீங்கள் நடவடிக்கை எடுப்பதாக எ முறைப்பாடு வந்துள்ளது."
"ஐயா ஆரோ பேயணுகள் உங்களுக்கு மு அனுப்பியிருக்கிறார்கள். எப்பவோ ஒரு இக்குளத்தில் குளமீன் பிடித்தார்கள். இப்போ குளத் இல்லை. நுளம்புதான் நிறைய உள்ளது."
"அது சரி நீங்கள் குளத்தை மூடும் ே இடைநிறுத்துங்கள் இந்த விடயம் பற்றித் தீர விச நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்!"
“எப்போ அறிவிப்பீர்கள்?"
ஜீவநதி C

அவர்கள் "அதை இப்போது எப்படிச் மீண்டும் சொல்ல முடியும் கச்சேரியில் நன்னீர் ம் பெற்றுக் மீன் வளர்ப்பு அதிகாரி இருக்கிறார். மீண்டும் மற்றும் அதிகாரிகள் இருக்கிறார்கள் அவர்களோடு கலந்தாலோசித்த பின் தான் உங்களுக்கு அறிவிக்கமுடியும்." ரியமல்ல "சரி இரண்டு வாரங்களுக்குள் , போக்கு உங்கள் அறிக்கை கிடைக்காவிட்டால், வப்பிடித்து, நாங்கள் எங்கள் நடவடிக்கையைத்
தொடர்வோம்." 6.606 "அது என்னவோ அரசாங்க ப்பிடிப்பது அதிபரைப் பகைத்துக் கொள்ளாதீர் கள். அவ்வளவுதான் நான் அதனால் சொல்வேன்" என்று கூறிவிட்டுக் ன் வாங்கி கச்சேரி அதிகாரி புறப்பட்டு சென்றார். ஆலோசனைக் குழு உடனடி 0ாசனைக் யாகக் கூடினார்கள். அவர்களுக்கு யாகத்தர் ஒரு வெறியே வந்துவிட்டது. எவ்வளவு ஓ வலய விரைவாக முடியுமோ அவ்வளவு றும் ஊரில் விரைவாக இந்த வேலையை முடிக்க பற்றனர். வேண்டும் என்றார்கள். *60u epię கோடிக் கணக்கில் செலவு வண்டியது செய்யவேண்டிய வேலை, செய்தாலும் மலையைக் கல்லி எலியைப் பிடிப்பது போன்ற வேலை குளம் என்னவோ கிடையில் சிறிய குளம் தான் மிஞ்சிப்போனால் அதிபர் பத்து ஏக்கருக்கு மேற்படாது. குளத்தை அதைமூடிச் சிறுவர் பூங்கா ஆக்குவ அவரோடு தென்பது சுண்டைக்காய் காற்பணம். சுமை கூலி முக்காற்பணம் என்ற வண்ணாங் கதைதான் ஆனாலும் ஆலோசனைக் குளத்தில் குழுவினர் இம்முயற்சியில் தீவிரமாக லனிக்குச் இறங்கினர். த் துஷ்பிர பல 'என்ஜீஓ’க்கள் குளத்தைப் ாதுமக்கள் பார்வையிட்டபின் ஒரு என்ஜீஓ' ஸ்ளது." உதவுவதற்கு முன் வந்தது. குளத்தை, அந்த நிறுவனம் தன் அதிகாரி ாங்களுக்கு யை அனுப்பி நிலைமையை நன்கு பரிசீலனை செய்து அவ்வேலையைத் றைப்பாடு தங்கள் வேலைத் திட்டங்களில் 5ாலத்தில் ஒன்றாகச் சேர்த்துக் கொள்ள முன் தில் மீனே வந்தது.
அதன்வேலை அடுத்த வருடம் வலையை ஆரம்பமானது. பூர்வாங்க தரவு Tரித்தபின் களைப் பரிசீலனை செய்து வேலையை
ஆரம்பிக்கஅறுமாதம் சென்றது.
வீதியோரமாக உள்ள குளத்தை D இதழ் 29

Page 25
அரைவாசிமூடி, குளத்தோரமாக, ஒரு குழாய்வேலிடே பகுதியை மட்டமாக்கிப் பின்னேரத்தில் பொதுமக்கள் இடமாக அதைஅபூக்கும்வேலையில்நிறுவனம் ஈடுபட்ட ஆலோசனைக் குழுவினர் அரைமனதுடன் இன சிறுவர்பூங்கா ஒன்று அமையாவிட்டால் தங்கள் முயற்சி கிடைத்ததாகக்கொள்ள முடியாது என அவர்கள் கருதிை கரையோரமாகஉள்ளவளவுக்காரர்களை அணுகிஅவ வளவுகளையும் சுவீகரித்தால் மட்டுமே ஒரு பூரணம பூங்காவை அமைக்க முடியும் இதை எப்படிச் செய்வது? ஆலோசனைக்குழுவினர்நாலாபக்கமும்ஓடினா வேண்டிய ஆட்களை பிடித்து கதைக்க வேண்டிய அவர்களுடன் கதைத்தார்கள் ஆனால் அதற்கு இணங்குவதாக இல்லை.
"ஐயோ எங்களுக்குப் பெண்பிள்ளை இருக்க ஒரு அவளைக்கரைசேர்ப்பதற்கு இந்தக்காணித்துண்டுஒன்றுத அதைக்கேட்காதீங்க"
“என்னம்மா, இத்தனைவருஷமா பேய்க்காடு என் ஒதுக்கிவிட்ட காணி இப்போ அதை நாங்கள் கேட்டது பேசுறிங்க"
“முன்பு அதற்கு ஒரு தேவை இருக்கவில்ை அதுக்கொரு தேவை இருக்குத்தானே?"
"உங்களுக்குத் தெரியுமா? அரச தேவைக்கு காணியையும்அரசாங்கம்சுவீகரிக்கலாம்"
"ஐயையோ! அப்படியெல்லாம்செய்துபோடாதீங்
"வெறும்காட்டுப்பூமி அரசாங்கம்சுவீகரித்தாலும் பெறுமதியைக் கொடுப்பார்கள் நீங்கள் வேறு காண
"அரசாங்கம் பணம் கொடுப்ப தென்றல் எந்தக்காலமோ! எங்கடஅவசரத்துக்குப்பணம்கிடைக்கு "கிடைக்காமளன்ன? பிரதேசசபைச்செயலாளர்த காணிகளைப் பொறுப்பேற்பார்.அவரே முன்னின்று உங் பணத்தை பெற்றுத்தருவார்."
இன்னும் கொஞ்ச நேரம் பேசி, அவர்களைச் வைத்தபின் அவர்கள் பிரதேச சபைச் செயலாளரி விஷயத்தைக்கூறினார்கள். அவருக்கு இனிஇல்லையெ6 குளப்பகுதியைப் புனரமைப்பதற்காகப் பொறுப்பேற்று ‘என்ஜிஓ மிகத்துரிதமாகத்தன்வேலையைத்தொடர்ந்த
O упут у கொழும்புப் பல்கலைக் பதவி உயர்வு பெற்ற
ஜீவநதி உளமார்
-C
 

Tட்டு மூடிய கூடும் ஒரு
தஏற்றனர். க்குப் பலன் ர்.கிழக்குக் rebelladLulu ான சிறுவர்
முறையில் அவர்கள்
நகாலத்தில் ான்இருக்கு
றுநீங்களே ம் இப்படிப்
o. 8ü(8unt
Telgij6DLL
களங்களை
அதுக்குரிய ரி வாங்கிக்
Lõp5ö5 ம் சென்று றமகிழ்ச்சி க் கொண்ட
5.
மேற்படி புனரமைக்கப்பட்ட குளத்தைத் திறந்து வைப்பதற்கு பிரதேச செயலாளரை அணுகினார்கள் ஆனால் அவரோ அதை முற்றாக மறுத்துவிட்டார். அவர்கூறிய காரணம்
"நடக்கமுடியாதது என்று கருதிய ஒரு வேலையை எங்களால் செய்ய முடியாத ஒரு வேலையை அந்த 'என்ஜீ ஓ'செய்துமுடித்தது. அதுமட்டுமல்ல, பல மில்லியன் ரூபாய்களைச் செலவுசெய்து இவ்வேலையை முடித்தது. எனவே அந்த நிறுவனத்தலைவரைக் கொண்டு திறந்து வைப்பதுதான்முறையானது"
"அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் தமிழ்பேசமாட்டார். அவர் எப்படி இதைச் செய்வார்என்றுதான்யோசிக்கிறோம்"
"மொழிதெரியாவிட்டால்என்ன? ஒரு மொழி பெயர்ப்பாளரை வைத்துக் கொள்ளவேண்டியதுதானே?"
“eff) e üuş08u Q8FuüG86)ımlb” என்றார்கள். ஆலோசனைக்குழுவினர்.
திறப்பு வைபவம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலோ சனைக் குழுவினர் இரவுவிரவாகப் பாடுபட்டதன்அறுவடையே அது.
குறித்தநாளில் குறித்த நேரத்தில் குறித்த"என்ஜிஒதலைவரும்அவருடைய உதவியாளர்களும் ஒருவாகனத்தொடர்
ரியில்வந்துசேர்ந்தனர்.
அவரை வரவேற்று மலர் மாலை அணிவித்து மேடைக்கு அழைத்து வந்தார்கள். சம்பிரதாய பூர்வமான
அவர் அந்தச் செயற்திட்டத்தின் பெயர்ப்பலகையைத்திறந்துவைத்தார்.
அதில் இந்த வண்ணக்குளம்" பொதுமக்களிடம் இன்று கையளிக்கப் படுகிறது. எனஎழுதப்பட்டிருந்ததுT0
O O O O வாழ்த்துகின்ரோந்! கழக கல்வியியற் துறைப் பேராசிரியராகப் பேராசிரியர் ம.கருணாநிதி அவர்களை
ப் பாராட்டி வாழ்த்துவதில் பெருமை
அடைகிறது.
eBash 29

Page 26
6JTg
g:LLIT, (ËLITË EUT! இன்று நீ இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றதாக அறிந்தேன்.
சோகம் என் உயிரை அரிக்கிறது. பிரிவுகள்
துயர் தருபவைதான். ஆனால், நீ
மீண்டும் வருவாய் அறிவேன், நான்.
ஆசிரிய சைனியத்திடமும் ஏழை விவசாயிகளின் உள்ளங்களிலும் கிராமவாசிகளாப் .3ܬܐ நலிவுற்று
ஒடுக்கப்பட்டு உழலும் மாந்தரிடையேயும்
நீ வருவாய். புதுப்பித்துக் கொண்ட பலத்தோடு
flLDITü. மீண்டும் நீ வந்து சேர்வாய், ܐܢܘܢ
போரிடுவோர்க்
LDDJ51JCITLD TIELD 52.ITT UPG|LGČIT நீ வருவாய், ஏனெனில் " நன்றியுள்ள மக்கள் கூட்டத்திடையே
ஆங்கில மூலம் -
தமிழில் - த.
-: நாட்டைச்சேர்ந்த போலோ பிரெய்றி ஒடுக் வைக் குறித்து, பத்தாம் ஆண்டு நினைவுநாளி
 
 

i ஆசிரியம்
மரணித்தோர்க்கு - புலவோர் சொல்வது போல் - மரணத்தின் முடிவில் சுவர்க்க வாசல் திறக்கும். உலகு விரியும். வாழ்வு மலரும்.
呜一 விடுதலைக்கான கல்வி விதையை நாட்டினாய், நம்பிக்கை ஒளி பாய்ச்சினாய். கண்ணி மழையினாலேனும் வியர்வையினாலேனும் அதனை நாம்
காப்போம்.
நீகனவு கண்ட பெருவிருட்சத்தை போர்க்குனம் கொண்ட அதன் கிளைகளுடன் நச்சுச் செடி களைந்து நாம் வளர்ப்போம். செழிப்பான மரமாய் வளர உழைப்போம்!
Lindia Turner
கப்பட்டோர் கல்வி மீட்புச் சிந்தனையாளர், அவர் 5ù (1997) Lindia Tull Tiner GrupEJ LI E55āle555 555,

Page 27
GTIGi Digoi படுக்கைவரை காதுகளில் கிணு கிணுத்து நுழையவும் பார்க்கின்றாய் என் முக சலனம் அறிய சுற்றிச் சுற்றி வருகின்றாம்.
ளையில் அவளாகித்ததும்பும் வைன் தந்த தகதகப்பில்
ಹiâi புலத்
தென்மூச் లై
 

கொத்து ரெட்டிக்காரனின் 岛上 தடப்பினிலும்,
9.C. Gustains arenesis eepൺ geിങg துங்கப் பழகியவன் நான் முட்டாளே, உன்னால் முடியுமா
என்னை எழுப்ப?
Jamii பாரினதோ கழிவுகளில் குந்தி எழும்பி வரும்

Page 28
LO Tணிடப் பிறவியின் மகோன்னதத்தை உணர்ந்து வாணாளை வீணாள் ஆக்காமல் அதை மனுக்குலத்தை நெறிப்படுத்துவதற்கான கருவியாகப் பயன்படுத்திஅப்பணிக்கெனவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பலருளர். அந்நெறிப்படுத்தலைக்கலை, இலக்கியங்கள் மூலமும் ஏற்படுத்தமுடியும் என்ற பிரக்ஞையுடன் செயற்பட்ட ஈழத்தறிஞர் பட்டியலில் முதன்மையான ஒருவராகத் திகழ்பவர் புலவர் ம.பார்வதிநாதசிவம். கவிதை, கட்டுரை, பத்திரிகைத் துறை, ஆசிரியப்பணிஎன்னும் பலதளங்களினூடாகச் சமூக முன்னேற்றத்திற்காகவும் மானிடமேன்மையை நிலைநிறுத்துவதற்காகவும் உழைத்துவருபவர். இந்த ஆண்டுபவளவிழாக்காணுகின்றஅவரது பல்பரிமாணப் பணிகளைச் சுருக்கமாகத் தருவதாக இக்கட்டுரை
பார்வதிநாதசிவம் 14.1.1936இல் குருகவி மகாலிங்கசிவம் அருமைமுத்து தம்பதிகளின் நான்காவது மகனாகப் பிறந்தார். இவர் பிறந்த இடம் மாவிட்டபுரம் இவர் பிறந்த குடும்பமோ தொடர்ச்சியான நீண்ட இலக்கியப் பாரம்பரியத்தைக்கொண்ட குடும்பம் இவரது தந்தையார்உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளை திருவாதவூரடிகள்புராணம், அபிராமிஅந்தாதி புலியூர் அந்தாதி முதலிய நூல்களுக்கு உரை எழுதியவர். திருவாதவூரடிகள் புராண உரைச்சிறப்புக்காரணமாக வித்துவ சிரோன்மணி பொன்னம்பல பிள்ளையால் உரையாசிரியர் என்ற பட்டம் அளித்துக் கெளரவிக்கப் பட்டவர். ஈழத்தின் பெருமை கூறும் ஈழமண்டல சதகத்தை இயற்றித்தமிழக அறிஞர்களிடம் 'பிள்ளைக் கவி என்ற பட்டத்தைப் பெற்றவர். மட்டுவில் சந்திர மௌலீசவித்தியாலயத்தின்ஸ்தாபகராகவும்சிதம்பரம் நாவல்பாடசாலையின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர்.
மக.வேற்பிள்ளையின் மனைவிபுலோலியைச் சேர்ந்த உமாமகேஸ்வரிசைவப்பெரியார் சு.சிவபாத சுந்தரத்தின் சகோதரி திருவனந்தபுரம் மகாராஜாக் ஜீவநதி C
 

கல்லூரி சமஸ்கிருத விரிவுரையாளர் வ.கணபதிப் பிள்ளை, இலக்கணக்கொட்டர் வ.குமாரசாமிப்புலவர் ஆகியோரின்பெறாமகள். ஈழத்தின்முதற்பெண்புலவர், பண்டிதை பத்மாசனி, மதுரைத் தமிழ்ச் சங்கம் பண்டிதபரீட்சையில் தங்கப் பதக்கம் பெற்ற பண்டிதை வாலாம்பிகை இவர்களை உருவாக்கிய புலமையாளர் பார்வதிஅம்மையார் ஆகியோரின்உறவினர்.
புலவர் ம.பார்வதிநாதசிவத்தின் தந்தையார் பண்டிதர்.ம.வே.மகாலிங்கசிவம் 12ஆவது வயதிற் பழனிப்பதிகம் பாடியதால் குருகவி என்று போற்றப் பட்டவர். சிறந்த கவிஞராகவும் நகைச்சுவைப் பேச்சாளராகவும் விளங்கியவர். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் 20வருடங்கள் தமிழ்ப்பாட விரிவுரையாளராகக் கடமையாற்றியவர்.
<二三
سمحبتــــــــــي
一三みー三> ஆளுமை சிக்க 4 ந(Uக பர்வதிதேசிதும்
தமிழ் வண்ணன்
மகாலிங்க சிவத்தின் தமையனார் பண்டிதர் ம.வே.திருஞானசம்பந்தம்பிள்ளை ஈழத்தின் ஆரம்ப காலநாவலாசிரியராகவும்சிறுகதைஎழுத்தாளராகவும் இந்துசாதனம் பத்திரிகாசிரியராகவும் 40 இற்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்த பதிப்பாசிரியராகவும் சரஸ்வதி விலாசசபை மூலம் நாடகங்களை எழுதி நடித்தவராகவும் விளங்கியவர்.
இத்தகைய கலைக்குடும்பத்திற் பிறந்த பார்வதிநாதசிவம்தனதுஆரம்பக்கல்வியை வீமன்காமம் மகாவித்தியாலயத்திற்கற்றார். இங்குஇலக்கண வித்தகள் நமசிவாய தேசிகரிடம் கற்கக் கிடைத்த வாய்ப்பு இவருக்குத் தமிழார்வத்தை ஊட்டியது. பின்னர் மகாஜனாக் கல்லூரியில் இடைநிலைக்கல்வியைத் தொடர்ந்தபோது கவிஞர் செகதிரேசர்பிள்ளையின் வழிகாட்டல் இவரைக்கவிதைத்துறையிற் பிரகாசிக்கச் செய்தது. இவர் S.S.C வகுப்புக்களிற் கற்கும்போதே இவரது கவிதைகள் வீரகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவரத்தொடங்கிவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இவரது பிரசுரமான முதலாவது கவிதையான"வெய்யோன் என்னும்கவிதையில்உள்ள, 6) -இதழ் 29

Page 29
வானத்தைப் பொன்னாக்கி விடுவோமென்று
வானவர்கள் செய்த ஒளிமருந்தோ? அன்றி வானத்தின் திலகமோ? மரங்கள் தந்த
மலர்கட்கு வண்ணமிடும் கலைஞனோ நீ? வானத்தே நின்று பொன் அம்பினாலே
வையத்தின் இருள்கடியும் வீரன்தானோ? நானிலத்தே ஏழைகட்கும் செல்வந்தர்க்கும்
நடுநிலைமை வகிக்கவைத்த பொன் விளக்கோ? என்னும் பகுதி இவரது இளமைப் பருவக் கவித்துவத்துக்குச்சான்றாகின்றது.
பாடசாலைக்கல்வியை முடித்துக்கொண்டஇவர் 1957ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர்பட்டக்கற்கை நெறியைத் தொடர்ந்து புலவர்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 1961இல் நாடு திரும்பி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் இயங்கிய இராமநாதன்அக்கடமியினும் பின்னர் கண்டி புனிதஅந்தோனியார்கல்லூரியிலும்தமிழ்ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
1977 இல் இடம் பெற்ற இனக்கலவரத்துடன் ஆசிரியப் பணியை விட்டுத்திரும்பிய புலவர் அதன் பின்னர் பத்திரிகைத்துறையுடன்தன்னைமுழுமையாக இணைத்துக் கொண்டார். ஏற்கனவே கலைக்கண், சுதந்திரன்ஆகிய பத்திரிகைகளிற் பணியாற்றிய புலவர் 1979இல் ஈழநாடு பத்திரிகையிற் சேர்ந்து உதவி ஆசிரியராகவும் பதவிஉயர்வுபெற்றார். அப்பொழுது ஈழநாட்டின் செய்தி ஆசிரியராக இருந்த எஸ்.எம்.கோபாலரத்தினத்தின் தொடர்பு பத்திரிகைத் துறையில் முழுமையான அறிவையும் ஆர்வத்தையும் இவருக்கு ஏற்படுத்தியது.
1989இல் முரசொலிபத்திரிகையில் இணைந்த புலவர் சிறிதுகாலம் உதவி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணியாற்றினார். முரசொலி நிறுத்தப்பட்டதன்பின்னர் 1992இல்உதயன் பத்திரிகை யில் இணைந்துகொண்டு 2002 வரை ஏறத்தாளப் பத்துவருடங்கள் பணியாற்றிஓய்வுபெற்றார்.
1966ஆம் ஆண்டில் மயிலங்கூடலைச் சேர்ந்த ஆசிரியையான பரமேஸ்வரியைத் திருமணம் செய்த புலவருக்கு பாரதி, மகாலிங்கசிவம், இளங்கோ பாலமுரளி என்னும் நான்கு பிள்ளைகள் பிறந்தனர். இவர்கள் நால்வருமே ஆசிரியர்கள் இவர்களுள் மகாலிங்கசிவம் கவிதை, சிறுகதை, விமர்சனம் என்பவற்றுடன் பத்திரிகைத்துறையிலும் ஈடுபட்டு வருகின்றார். பாலமுரளிகவிதை, பேச்சு, பத்திரிகைத் துறை என்பவற்றில் ஆர்வம் காட்டுகின்றார். ம.க.வேற் பிள்ளை, குருகவி ம.வே.மகாலிங்கசிவம், புலவர் ம.பார்வதிநாதசிவம் எனத் தொடர்ந்துவரும் கவிதைப் பாரம்பரியம் நான்காவது பரம்பரையாகவும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றமை சிறப்பாகக்
ஆப்படவேண்டியதாகும் -(

கவிதைப் பணி
மகாகவி (து.உருத்திரமூர்த்தி)யால் "எமது எதிர்கால எதிர்பார்ப்பு என்று நம்பிக்கையுடன்கூறப்பட்ட புலவர் ம.பார்வதிநாதசிவம் இதுவரை காதலும் கருணையும்(1972), இருவேறு உலகம்(1980), இன்றும் ஒரு திங்கள்(1988), இரண்டுவரம் வேண்டும்(1985), பசிப்பிணி மருத்துவன்(2001), மானங்காத்த மறக்குடி வேந்தன் என்னும் ஐந்து கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். இவற்றுடன்கட்டுரைத் தொகுப்பான தமிழ்ச்செல்வம் 2009இல் வெளியிடப்பட்டது.
இவரது கவிதைகளைக் குறுங்காவியங்கள், தனித்தனித்தலைப்பில் அமைந்த கவிதைகள் என்னும் இருவகைகளாகப் பிரிக்கலாம். முதலாவது நூலான காதலும் கருணையும் நூலில் காதலும் கருணையும் என்னும் குறுங்காவியமும் 21 தனிக்கவிதைகளும் உள்ளடங்குகின்றன. குறுங்காவியம் எழில்நிலம் என்னும் ஊரிற் கல்விபோதிக்கும் குருவின் தூய்மை யானகாதலைப்பாடுகின்றது.இருவேறுஉலகம் இன்னும் ஒருதிங்கள், இரண்டு வரம்வேண்டும் என்றும் மூன்று நூல்களும் முழுமையான குறுங்காவியங்களே. இவை அனைத்தும் அகப்பொருள்சார்ந்தகாதலைப் பொருண் மையாகக் கொண்ட காவியங்களே. 170விருத்தப் பாக்களாலும் 3 ஆசிரியப் பாக்களாலும் பாடப்பட்ட 'இன்னும் ஒரு திங்கள் சந்தேகம் என்னும் கொடு நோய்க்குஆளான கணவனைப் பண்பாலும் பரிவாலும் திருத்தும் ஒரு பெண்ணின் உயர்ந்த வாழ்வியலைச் சித்திரிக்கின்றது.பசிப்பிணிமருத்துவன், மானங்காத்த மறக்குடிவேந்தன் என்பவை புறப்பொருள்சார்ந்தவை. "செம்மையான யாப்பமைதியைக் கொண்டு புலவராற் பாடப்பட்ட இக்குறுங்காவியங்கள் புதுமைக்கண் கொண்டு எழுதப்படாவிடினும் சொல்லும் முறையாற் புதுமைபயப்பன. எளிய தமிழால் சீர்தளை தட்டாது புலவர் சொல்லும் முறைமைகற்றோர் மாத்திரமின்றி மற்றோரும்பொருளறிந்து சுவைக்கக்கூடியது" என்பார் சிரமேஷ்
எனினும் ஈழத்துக் கவிதைப்பரப்பிற் புலவ ருக்குப்புகழ்தேடிக்கொடுத்தவை,தனித்தனித்தலைப்புக் களில் அமைந்த அவரது கவிதைகளே. தமது சமகாலச் சமூகத்திற்காணப்பட்டநல்லவிடயங்களையும்கீர்கேடு களையும் நகைச்சுவை உணர்வோடு புலவர் பாடி யுள்ளார். எதுகை மோனைகளுக்காகச் சொற்களைத் தேடாத பரம்பரையாக வந்த இயல்பான கவிதை ஓட்டம் அவரது கவிதைகளுக்கு மேலதிக பலமாக அமைந்தது. காதலும்கருணையும் தொகுப்பில்இடம்பெறும்ஆபூர்வ வைத்தியர் என்னும் தலைப்பில் அமைந்து,
நாடியைப் பார்த்தார் இல்லை
நயனத்தைப் பார்த்தார் இல்லை மாடியைப் பார்த்தவாறே
7) இதழ் 29

Page 30
மருந்தினை எழுதித்தந்தார் நாடி2யைப் பார்த்துத் தந்தால்
நன்றென்றேன் அருகின் நிற்கும் ைேடியைப் பார்க்க வேண்டும்
ைேட்இன்னே செல்சென் என்றார் என்னும் கவிதைப் பகுதி மருத்துவர் சிலரிடம் காணப்படும் குறைபாட்டை நகைச்சுவையுடன் இயல்பாகச்சித்திரிக்கின்ற இக்கவிதைஈழத்துவிமர்சகள் பலரால்விதந்துகூறப்பட்டது.
"புலவர் பார்வதிநாதசிவம் அவர்கள் வித்துவ பரம்பரையைச் சேர்ந்தவர். கவிதையும், உரையும் அவரது பரம்பரைச் சொத்து. 'குலவித்தை கல்லாமற்பாகம் படும் என்பதற்கமைய புலவர் அவர்களுக்குக் கவித்துவம் அடிபணிகின்றது” என்று பண்டிதர்வ.நடராஜாவும்
“பார்வதிநாதசிவம் போல ஒருவரம்பிற்குள் நிற்கும் அதேவேளை காலப்போக்கில் நின்று விலகித்தனித்துநிற்காமல், இயன்றளவில் அதை அனுசரித்தும்செய்யுள்இயற்றுவோர்பொதுவாகப் பயன் படுத்தும் யாப்பு அமைதிகளைக் கொண்டு, உணர்வு பூர்வமாக எளிமைத்தன்மையுடன் புலவர் பாடுவது கவனிக்கத்தக்கது என்று பேராசிரியர்ககைலாசபதியும் குறிப்பிட்டமை இங்குகவனிக்கத்தக்கதாகும்.
பத்திரிகைப்பணி
தமிழாசிரியராகப்பணி தொடங்கிய புலவரின் தொழில் உலகம் பத்திரிகைத்துறையிலேயே அதிகம் தங்கியிருந்தது. ஏறத்தாழ 30 வருடங்கள் ஈழநாடு, முரசொலி,உதயன் ஆகிய மூன்று பத்திரிகைகளிலும் புலவர் பணியாற்றியுள்ளார். இவரது பத்தரிகைப் பணியைப் பின்வரும் மூன்றுவகைகளிற் பிரித்து ஆராயலாம்.
1. பண்டைய இலக்கியங்களை இன்றைய தலைமுறைக்கு எளிமையான கட்டுரைகள் மூலம் அறிமுகம் செய்தமை.
இவ்வகையிலே தான் பணியாற்றிய மூன்று பத்திரிகைகளிலும் ஐம்பதிற்கு மேற்பட்டகட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றுள் தெரிவு செய்யப்பட்ட 22 கட்டுரைகள் தமிழ்ச் செல்வம்" என்னும் நூலாக
ஜீவநதி
Sofiys-6Of agisidiar-1OOOf a
மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
வேண்டிய ெ
K. Bharaneetharan, Kalaiak
வங்கி மூலம் சந்தா
K. Bhara
commercial Bank A/CNo. - 810802
ஜீவநதி C

வெளியிடப்பட்டுள்ளன.புலவர் தமது கட்டுரைகளில் தமிழ்இலக்கியங்களையும் இலக்கியகர்த்தாக்களையும் அறிமுகப்படுத்துவதுடன் மட்டும்நின்று விடாது மேலைத்தேய இலக்கியங்களையும் தேவையான இடங்களில் ஒப்பிட்டுக்காட்டியுள்ளார்.
2. பேட்டிகள் மூலம் ஈழத்துத்தமிழ் அறிஞர் களைச்சாதாரணவாசகருக்கும்அறிமுகப்படுத்தியமை ஈழநாடு வாரமலர் ஆசிரியராகப் புலவர் நியமனம்பெற்றபோதுஅறிவும்அனுபவமும் என்றபதிய பகுதியை ஆரம்பித்துமுத்தமிழ்த்துறைகளையும்சேர்ந்த அறிஞர்களைப் பேட்டிகண்டு எழுதினார் பேராசிரியர் சு.வித்தியானந்தன், கலையரசு எஸ்.சொர்ணலிங்கம், பண்டிதர்கவிரகத்திசிரித்திரன்ஆசிரியர்செசிவஞான சுந்தரம், சிற்பிசிவசரவணபவன், வானொலிக்கலைஞர் சக்கடத்தார் ராஜரத்தினம் செங்கைஆழியான் முதலியோர் இவர்களுட்குறிப்பிடத்தக்கவர்கள் புலவரது பேட்டிகள் குறித்த அறிஞரின் கலை இலக்கிய ஆளுமையை வெளிக்கொணர்ந்தது மட்டுமன்றிப் பல புதிய தகவல்களையும் அவையாக வாசகர்களுக்கு முன்வைத்தது. இப்பேட்டிகள் இதுவரை நூலுருப்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 3.இளம் எழுத்தாளர்களைஊக்குவித்தமை
புலவர் முரசொலி பத்தரிகையின் வாரமலர் ஆசிரியராக இருந்தபோது கவிதை (ஈழத்துக் கவிஞர்பக்கம்), சிறுவர் பகுதி (பூஞ்சிட்டு), சிறுகதை, கட்டுரைகள் எனப்பன்முகத் தளங்களில் ஈழத்து எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களை வெளிக்கொணர வாய்ப்புக்கள் வழங்கினார். இதேபோல் உதயன் பத்திரிகையின் வராமலரானசஞ்சீவியிற்பணியாற்றிய போதும் இளம்படைப்பாளிகளை ஊக்குவிக்க முன்னுரிமை வழங்கினார்.
இவ்வகையில், கவிதை,கட்டுரை, பத்திரிகைத் துறை என்பவற்றினூடாகப் புலவர் பார்வதிநாதசிவம் ஆற்றிய பணிகள் தமிழ் கூறு நல்லுலகால் என்றும் நினைவில் வைத்திருக்கப்படுவனவாகும். அவரது பவளவிழா ஆண்டில் முழுவரலாற்றையும் அடக்கிய மலர் ஒன்று வெளியிடப்படவேண்டியதும், ஆக்கங்கள் முழுமையாகத்தொகுக்கப்படவேண்டியதும்காலத்தின் தேவையாகும்.
ந்தா விபரம் jugoir digi-1OOOOff GarofstroB-S35U.S மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும். அனுப்ப பயர்/முகவரி
lam Alvai North west, Alvai. செலுத்த விரும்புவோர்
meetharan
- Nelliady Branch 1808 CCEYLKLY
s இதழ் 29

Page 31
எனது இல
f
எனது இலக்கிய இயங்கு நிை எனது'இலக்கியத்தடம் என்ற இந்தத்தொடை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில் உலகில் முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநா நடந்தேறியிருக்கிறது. 2011 ஜனவரி 6,7,8,9ஆ திகதிகளில் கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில் நடைபெற் இந்த மாநாட்டின் இலங்கை இணைப்பாளராக இருந் மாநாட்டை ஒழுங்கு செய்து நடத்திவைக்கும் பொறுப் எனதாக இருந்தது. இந்த மாநாடு சிறப்பாக நை பெற்றதைத் தொடர்ந்து உலகின் பல பாகங்கள் லிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ண இருக்கின்றன.
"மாநாட்டின் வெற்றிக்குமூலக்கல்லாக நின்று தாங்கள் ஆற்றியுள்ள பணி போற்றுதற்குரியது மாநாட்டைத்தங்கள் குடும்ப நிகழ்ச்சிபோலப் பாவித் அர்ப்பணிப்புடன்நிறைவேற்றியுள்ளீர்கள். தங்கள் பண தொடர வாழ்த்துக்கள்"என எழுதியிருக்கிறார் தமி நாட்டைச் சேர்ந்த பேராசிரியை மு. சு.தங்கம் அவர்கள் "ஈழத்து இலக்கியச் செல்நெறியில் முக்கிய மான ஒரு வரலாற்றுக்கட்டமாக இம் மாநாடு திகழு என்பது எமது நம்பிக்கை.உங்களது இலக்கிய இயங்கு நிலையிலும் உச்சமான ஒரு வெளிப்பாடாக வரலாற்று நிகழ்வாக இம்மாநாடு கணிக்கப்படும்" எ6 எழுதியிருக்கிறார் கனடாவில் வாழும் கலாநிதி நா.சுப்பிரமணியன் அவர்கள்.
- "இம்மாநாட்டிற்காக வெற்றிக்காக உழைத் அனைவரோடும் இருவரை மனம் திறந்து பாராட் வேண்டும். ஒருவர் முருகபூபதி, மற்றவர் ஞானசேகரன இந்த இருவரும்உலகத்தமிழ் எழுத்தாளர் அனைவரது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர்கள்" என பாராட்டியுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ் துற்ைத்தலைவர் கலாநிதிதுரை மனோகரன் அவர்கள் இந்த வாழ்த்துக்கள் எனக்குப் பெரு உற்சாகத்தைத் தருகின்றன. இம்மாநாடு எத்தகை நெருக்கடிகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியி நடந்தேறியிருக்கிறது என்பது பலருக்குத் தெரிந் விடயம். இருப்பினும் தெரியாத பல விடயங்களு இருக்கின்றன. அவற்றைப் பதிவு செய்வதும் ஒ( வரலாற்றுத் தேவை என நான் கருதுகிறேன். ஜீவநதி -
 

திஞானசேகரன்
லயில் ஓர் உச்சமான வெளிப்பாடு
-
.
இத்தகைய ஒரு சர்வதேச மாநாட்டினை
இங்கு நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை முதன் (மதலில்(மன்வைத்தவர்மல்லிகை ஆசிரியர் டொமினிக்
ஜீவா அவர்கள். இதன் பிரதம அமைப்பாளராக
விளங்குபவர் அவுஸ்திரேலியாவில் வாழும் திரு. லெமுருகபூபதிஅவர்கள்.
இந்தச் சர்வதேச மாநாட்டினை நடத்து வதற்கான முன்னோடிக்கலந்துரையாடல் 2010 ஜனவரி மாதம் மூன்றாம் திகதி கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில்
இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலில் நாட்டின் நாலாபுறமிருந்தும் சுமார் 180 பேர்வரை கலந்து
Garraxi LT 86. Eu Teffluff, Sr. feijãLôL, பேராசிரியர் சி. மெளனகுரு உட்பட நாட்டின் பல புத்திஜீவிகள் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவிய
லாளர்கள் பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள்
எனப்பலரும்கலந்துகொண்டு தத்தமது கருத்துக்களைத்
தெரிவித்தனர்.இந்த மாநாட்டை நடத்துவதற்கென ஒரு நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது. அந்தக்
குழுவில் உலகளாவிய ரீதியிலும் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்."
இலங்கைக்கான இணைப்பாளராக நான் தெரிவு செய்யப்பட்டேன். எனது பணி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வதாக அமைந்தது. மாநாட்டு அமைப்பாளர் முருகபூபதி 'வெளிநாடுகளில் பரந்து வாழும்
எழுத்தாளர்கள் கலைஞர்களுடன் தொடர்புகொண்டு இந்த மாநாட்டுக்கான ஒழுங்குகளை மேற்கொண்டார்.
சர்வதேசரீதியில் மாநாடு நடத்துவதானால் அதற்கு ஒரு காரியாலயம் வேண்டும். அங்கு பணியாற்றத் தொடர்பாளர்கள், லிகிதர்கள் வேண்டும். இது பற்றிய எந்தவொரு ஒழுங்குகளும் செய்யப்படாத நிலையிலேயே இணைப்பாளராகிய நான் இயங்க வேண்டியிருந்தது.
எனது ஞானம் சஞ்சிகையின் காரியாலயம்
சர்வதேச எழுத்தாளர் மாநாட்டுக் காரியாலயமாக
இயங்க வேண்டியிருந்தது. உலகெங்கிலும் உள்ள் இலக்கியவாதிகள் எந்தநேரமும் தொடர்பு கொள்ளக் கூடியவகையில் ஞானத்தின் தொலைபேசி, தொலை
இதழ் 29

Page 32
நகல், மின்னஞ்சல் தொடர்புகள் பாவிக்கப்பட்டன. அவுஸ்திரேலியாவில் வாழும் முருகபூபதியுடன் தினமும் தொடர்புகொள்ளவேண்டியிருந்தது. அதற்காக ஞானம் காரியாலயத்திலிருந்து தனியாக ஒரு தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
இணைப்பாளராகிய நான் இந்த மாநாட்டின் ஒழுங்குகளை மேற்கொள்வதற்காக இலங்கையின் பலபாகங்களுக்கும் சென்று முன்னோடிக் கூட்டங்கள் நடத்தியதோடு மாநாட்டில் பங்குபற்றுவதற்கான விண்ணப்பப் படிவங்களையும் விநியோகித்தேன்.
மாநாட்டுக்கான ஆயத்தங்களை நாங்கள் மேற்கொண்டவேளை எதிர்ப்பிரசாரப்பூகம்பம் ஒன்று வெடித்தது. மாநாட்டுக்கு எதிரான பிரசாரங்கள் முடுக்கிவிடப்பட்டன. இலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் தமிழகத்தில் இருந்து இதன் கத்திரதாரியாக இயங்கினார். நச்சுப் பிரச்சாரங்கள் கக்கப்பட்டன. இந்த மாநாட்டின் பின்னணியில் இலங்கை அரசு இருந்து இயங்குகிறது. இலங்கை அரசு கொடுத்த பணத்திலேயே இந்த மாநாடு நடைபெறுகிறது. தமிழர்கள் கொலையுண்ட பூமியில்எழுத்தாளர் மாநாடு நடத்தக் கூடாது." எனப் பிரசாங்கள் உலகெங்கும் காட்டுத்தீ போலப் பரவின. இந்தப் பிரசாரங்களுக்குப் பத்திரிகைகள், மின்னஞ்சல் தொடர்புகள், இணையங் கள், இணைய வலைப்பின்னல்கள் பாவிக்கப்பட்டன. சென்னையில் ஓர் எழுத்தாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த மாநாட்டுக்கெதிரான கையெழுத்து வேட்டை இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் எழுத்தாளர்களையும் அவர்களது எழுத்துக் களையும் பகிஷ்கரிக்க வேண்டுமென பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய பகிஷ்கரிப்பை மேற்கொள்வதற்கு மாநாட்டில் கலந்து கொள்ளாதவர் களின் பெயர்ப்பட்டியலை நூலாக வெளியிடவேண்டும். அப்போதுதான் வருங்கால சந்ததியினருக்கு அது பயனுள்ளதாக அமையும்" எனவும் மாநாட்டுக்குப் பயணித்தவர்களது பயணம் 'அடிமைகளின் பயணம் எனவும் கூறப்பட்டது.
இந்தப் பிரசாரங்களுக்கு காழ்ப்புணர்ச்சியே காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்த எதிர்ப்பிரசாரங்கள்உலகளாவியரீதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இலங்கையிலும் சிறிது சிறிதாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பத் தொடங்கின. 'முருகபூபதி முற்போக்குப் பாசறையில் வளர்ந்தவர். அப்படியிருக்கையில் ஞானசேகரனிடம் இந்த மாநாட்டை ஒழுங்கு செய்யும்பொறுப்பைக் கொடுத்தது தவறு. முற்போக்கு அணியினரிடம் இந்தப் பொறுப்பு கையளித்திருக்கப் படவேண்டும்’ எனப் புதிதாக ஒருசாரார் கிளம்பினர். இந்தக் கருத்தை முருகபூபதி யிடமும் நேரிடையாகவே கூறினார். இவர்களில் சிலர் மாநாட்டு செயற்குழுவில் முக்கிய பதவி வகித்தவர்கள். ஜீவநதி

இவர்கள் என்னுடன் ஒத்துழைக்க மறுத்தனர். செயற்குழுக் கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்த்தனர். மாநாட்டை ஒத்திப் போடவேண்டும் என்றனர். மாநாட்டின் பெயரை மாற்றி புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர் மாநாடு எனப் பெயர் கட்டவேண்டும் என்றனர்.
சர்வதேச ரீதியில் ஒரு தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்திய பெருமை ஏற்பாட்டாளரான முருகபூபதிக்கோ களத்திலிருந்து இந்த மாநாட்டு ஒழுங்குகளை மேற்கொண்ட ஞானசேகரனுக்கோ கிடைத்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் பலர் இயங்கினர்.இந்த மாநாட்டைஎப்படியாவது நிறுத்திவிட சகல வழிமுறைகளையும் கையாண்டனர்.
இதேவேளையில் எனது பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து பலர் நெருக்கடி கள் கொடுத்தனர். ஆரம்பக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாநாட்டுக்குஆதரவாகப் பேசிய பேராசிரியர், தனக்கும் இந்த மாநாட்டுக்கும் சம்பந்தமில்லை எனப் பத்திரிகை யில் அறிக்கை விடுத்தார். வெளிநாட்டு வானொலிப் பேட்டிகள் கொடுத்தார். இதுவும் எமக்குப் பாரிய பின்னடைவைக் கொடுத்தது.
இந்த மாநாட்டை நடத்துவதற்கு தன்னால் 50 இலட்சம் ரூபாவை புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடம் சேகரிக்க முடியுமென ஆரம்பக் கூட்டத்தில் பகிரங்கமாகவே கூறியிருந்தார் முருகபூபதி. ஆனால் இந்த எதிர்ப்பிரசாரங்களை ஒரு சாட்டாக வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்கள் பலர் பணம் கொடுப்பதைத் தவிர்த்தனர்.
இந்த மாநாட்டை நடத்தவிடாமல் செய்வதற்கு முயற்சிப்பவர்களின் கை நாளுக்கு நாள் ஓங்கிக் கொண்டிருந்தது.
ஆனாலும் நாம் மனம் தளரவில்லை. பொய்ப் பிரசாரங்களுக்கு அடிபணியக்கூடாது. எப்படியும் மாநாட்டை நடத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாதத் துடன் நானும் முருகபூபதியும் செயற்பட்டோம். பொய்ப் பிரசாரங்களை முறியடிப்பதில் வெளிநாட்டிலிருந்து முருகபூபதியும் உள்நாட்டிலிருந்து நானும் செயற் பட்டோம். மாநாட்டை நடத்துவதற்கான காரணங்களை வெளிநாட்டிலிருந்து கொண்டு கூறுவதைவிட உள் நாட்டிலிருந்து கொண்டு விளக்குவது பொருத்தப்பாடாக இருக்கும்போல் எனக்குத் தோன்றியது. எனவே "களத்திலிருந்து பேசுகிறோம்" என்ற தலைப்பில் இணையத் தளங்களில் எனது நேர்காணல்களை நல்கினேன். அந்த நேர்காணல்களின் அடிநாதமாகப் பின்வரும் செய்தியிருந்தது:
“இந்த மண்ணில் மூன்று தசாப்தகாலம் போரின் நெருக்கடிகளுக்குமுகம் கொடுத்துக்கொண்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து இதழ் 29

Page 33
கொண்டிருந்ததமிழ்பேசும் மக்கள் தமது உணர்வுக6ை வெளிக்காட்டவும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தமது தொப்புழ் கொடி உறவுகளோடு கலந்து பேசவு உறவாடவும், உலகளாவிய ரீதியில் பரந்து வாழுL தமிழர்களோடு கலந்து பேசவும் கருத்துப் பரிமாற்றட செய்யவும் தம்மைக் கட்டி எழுப்பவும், வீழ்ச்சியுற்றமை நிலையிலிருந்து எழுச்சிபெறவும் ஓர் ஆரம்பம் தேவை அந்த ஆரம்பமாக இந்தச் சர்வதேச எழுத்தாளர் மாநாடு அமையுமென எதிர்பார்க்கலாம்
நடந்து முடிந்த யுத்தத்தினால் தமிழ், முஸ்லிம் சிங்கள, மக்களிடையே மனவிரிசல்கள் ஏற்பட்டுள்ளன சீர் குலைந்து போயிருக்கும் இந்த உறவை தமிழ் முஸ்லிம் சிங்கள இலக்கிய வாதிகள் ஒன்றுகூடி உரையாடி ஓர் ஆரோக்கியமான உறவுப்பாலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு களமாகவும் இந்த மாநாடு அமையும்"
இந்தச் செய்தி ஓரளவுக்கு எதிர்ப்பிர சாரத்தைத் தணிக்க உதவியதென்றே கூறலாம்.
களத்தில் - அதாவது இலங்கை மண்ணில் உள்ளவர்களுக்கு இந்த மாநாடு தேவையாக இருக்கிறது. வெளியில் உள்ளவர்கள் இதுபற்றித் தீர்மானிப்பது சரியல்ல என்ற தொனி அதில் இருந்தது. தமிழக எழுத்தாளர்களிடையே நிலவிய எதிர்ப்பலைகளை முறியடிப்பது சற்றுக் கடினமாக இருந்தது. தமிழகத்திலிருக்கும் எழுத்தாளர் ஒருவரா லேயே இது சாத்தியமாகும் என்று தெரிந்து கொண்டோம் யுகமாயினி சித்தன் அதற்கு ஒரு வழி கூறினார். எழுத்தாளர் கோவைஞானிக்கு உண்மை நிலைமை யை விளக்கி அவரை மாநாட்டுக்கு ஆதரவாகச் செயற்படவைத்தால் வெற்றி கிட்டும் என்றார்.
கோவைஞானி ஒருமுதுபெரும்எழுத்தாளர், தமிழ்நேயம் என்ற அமைப்புக்கு தலைவராக விளங்கு பவர். இந்த அமைப்பில் பலநூறு எழுத்தாளர்கள் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள். அவருடன் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு அரைமணிநேரம் கலந்துரையாடினேன். அவருக்கிருந்த ஐயங்களைத் தீர்த்து வைத்தேன். அரசாங்கம் இந்த மாநாட்டின் பின்னணியில் இருந்து இயங்கவில்லை. இந்த மாநாடு அரசாங்கத்தின் பணத்தில் நடத்தப்படவில்லை என்பதை நான் அவருக்கு நிரூபிக்க வேண்டியிருந்தது. எனது அரசியல் நிலைபாட்டை அவருக்கு ஆதாரங்களுடன் விளக்கினேன். போர்க்காலத்தில் ஞானம் சஞ்சிகையில் நான் ஈழத் தமிழ் மக்களின் அவலநிலையை விளக்கி எழுதிய ஆசிரியத் தலையங்கங்களை அவருக்குக் கூறினேன். பின்னர் அவற்றை அனுப்பியும் வைத்தேன். அவர் இந்த மாநாட்டுக்கு பேராசிரியர் சிவத்தம்பி வருவாரா? அவரை வரச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு நான், பேராசிரியர் கட்டாயம் வருவார். அவரை வரச்செய்வது
ஜீவநதி

எனது பொறுப்பு, நீங்கள் நம்பலாம் என்று பதிலளித்தேன். என்னில் எனக்கு நம்பிக்கை இருந்தது. கோவை ஞானி உண்மைநிலையைப் புரிந்து கொண்டு நடக்கவிருக்கும் தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தனது ஆதரவை நல்குவதாக வாக்களித்ததோடு நல்வாழ்த்தையும் தெரிவித்தார். தனது'தமிழ்நேயம் அமைப்பினர்கள் யாபேருக்கும் சுற்றுநிரூபம் அனுப்பி இந்த மாநாட்டுக்கு ஆதரவு அளிக்கும்படி வேண்டினார். இந்தச் செயற்பாட்டால் தமிழக எழுத்தாளர்களின் எதிர்ப்பு அலைகள் ஓய்ந்து போயின.
இது தொடர்பாக இங்கிலாந்தில் வாழும் பிரபல எழுத்தாளரான இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியம் அவர்கள் தேனீ இணையத்தளத்திலும் தினக்குரல் வாரமஞ்சரியிலும் எழுதிய கட்டுரைகளில் பின்வருமாறு தெரிவிக்கிறார்."காழ்ப்புணர்ச்சிக்காரரின் இலங்கை ஒன்று கூடலுக்கான கடிதத்திற் கையெழுத் திட்ட-இலக்கியத்துறையில் நான் மிகப் பெரிய மதிப்பு வைத்திருக்கும் கோவை ஞானி ஐயாவைத் தொடர்புகொண்டபோது, 'அம்மா, நான் இதுபற்றி கலாநிதி ஞானசேகரத்திடம் விளக்கம் கேட்டேன். அவர் சொன்ன பதில்கள் திருப்தியாக இருந்தன. பலநாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் முழுச் சுதந்திரத்துடனும் பங்குபற்றும் இந்த மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று சொன்னார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரசாரங்களை முறியடிக்கும் அதேவேளை மாநாட்டு ஒழுங்குகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியிருந்தது. ஏற்கெனவே தெரிவுசெய்யப்பட்ட செயற்குழுவில் சிலர் அக்கறையுடன் இயங்காததால் புதியவர்களை சேர்த்துக்கொண்டேன். உலக இஸ்லாமியத் தமிழ் மாநாட்டை 2002 இல் இலங்கை யில் நடத்தி அனுபவம் பெற்ற எழுத்தாளர்களான ஜின்னாஹற் ஷரிபுத்தீன், அஷ்ரப் சிஹாப்த்தீன் ஆகியோரை செயற்குழுவில் இணைத்துக்கொண்டேன். அஷ்ரப் சிஹாப்த்தீன் மாநாட்டுச் செயற்குழுவின் செயலாளராக இருந்து திறமையாகச் செயற்பட்டார். ஜின்னாஹற்ஷரிபுத்தீன் ஏற்ற ஆலோசனைகள் கூறினார். மாநாட்டைநடத்துவதற்கான இடமாக கொழும்புத்தமிழ்ச் சங்கத்தைத் தெரிவு செய்தேன். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு அங்கத்தவர்கள் பலர் மாநாட்டு செயற்குழுவிலும் அங்கத்துவம் வகித்து மாநாட்டை சிறப்புற நடாத்த ஏற்பாடு செய்தனர். இதில் ஆழ்வாப் பிள்ளை கந்தசாமி,ஜி.இராஜகுலேந்திரா, திருமதிசுகந்தி இராஜகுலேந்திரா, ப.க.மகாதேவா, சிபாஸ்கரா, திருமதி வசந்தி தயாபரன், பத்மா சோமகாந்தன் ஆகியோர் முக்கியமானவர்கள். தமிழ்ச்சங்கத்தில் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் நூலகச் செயலாளராகவும் இருந்து நான் ஆற்றிவரும் பணியின் தொடர்பில் தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பலரை இதில் இணைக்க சாத்தியமாக இருந்தது. கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் இதழ் 29

Page 34
தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பலரும் எமக்கு நல்லாதரவு வழங்கி இந்த மாநாட்டினை சிறப்பாக நடாத்த உதவினர்.
நிதிச்செயலாளராக திரு.பூபாலசிங்கம் முரீதரசிங் திறமையாகக் கடமையாற்றினார். இவர்களைவிட தெளிவத்தை ஜோசப், ஓகே குணநாதன், கே.பொன்னுத்துரை, மு.தயாபரன், மேமன்கவி, திக்குவல்லை கமால், த.கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் எமக்கு உதவி புரிந்தனர்.
மாநாட்டு ஆயத்தங்களை மேற்கொண்டிருந்த காலத்தில், திரு.அந்தனிஜிவா தமிழகத்திற்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவ்வேளையில் அவர் பேராளர் விண்ணப்பங்களை எடுத்துச் சென்று தமிழக எழுத்தாளர்களிடையே விநியோகித்ததோடு உலகச் சிற்றிதழ் சங்கத் தலைவர் வதிலைபிரபாவின் தலைமையில் 43 சிற்றிதழாளர்கள் மாநாட்டில் பங்குபற்றவும் வகைசெய்தார், அந்த வகையில் அந்தனிஜீவாவின் பங்களிப்பும் முக்கியமானது,
ஜனவரியில் தொடங்கப்பெற்ற மாநாட்டு ஏற்பாடுகள் ஞானம் சஞ்சிகையின் பணிமனையை முற்றுமுழுதாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்தன. இதில் எனது குடும்ப அங்கத்தவர்கள் யாவருமே பணியாளர்களாக இயங்கவேண்டியிருந்தது. இறுதி மூன்று மாதங்களிலும் ஒவ்வொரு வார இறுதியிலும் மாநாட்டுச் செயற்குழுக் கூட்டங்கள் ஞானம் பணிமனையில் இடம்பெற்றன. மாலை வேளைகளில் தொடங்கிய செயற்குழுக் கூட்டங்கள் சிலநாட்களில் இரவு 11 மணிவரைகூட நீடித்தன.
எதிர்ப்பிரசாரங்கள்முறியடிக்கப்பட்டு, மாநாடு குறிப்பிட்டபடி நடக்கப்படப்போகிறது என்று தெரிந்ததும் மதில்மேல் பூனையாக இருந்த பலர் எமது பக்கம் சாய்ந்தனர். விண்ணப்பங்களும் மாநாட்டுக் கட்டுரை களும் வந்து குவியத் தொடங்கின. நாம் மிகவும் உற்சாக மாகச் செயற்பட்டோம் பிரதம அமைப்பாளர் லெ. முருக பூபதியும் உரிய நேரத்தில் அவுஸ்திரேலியாவிலிருந்து வந்து எம்முடன் இணைந்துகொண்டார்.
இப்போது புதிய பிரச்சினை ஒன்றை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அரசாங்கத்தில்அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "இந்த நாட்டில் ஒரு சர்வதேச எழுத்தாளர் விழாவை நடத்துகிறீர்கள், அரசாங்கத்துக்கு இதனை முறைப்படி தெரிவிக்க வேண்டும். அரசாங்கத்தின் சார்பில் நான் வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
எனது நிலைமை தர்மசங்கடமாக இருந்தது. "இந்தமாநாட்டை அரசாங்கமே பின்னணியில் இருந்து நடத்துகிறது என்றும் அதனால் இந்த மாநாட்டைப் பகிஷ்கரிக்கவேண்டும் என்றும் வெளிநாடுகளில் பிரசாரங்கள் நடக்கின்றன. இதில் அரசாங்கப் பாராளு
ஜீவநதி

மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வது இந்த மாநாட்டை நடக்கவிடாமல் செய்வதாக - முளையிலே கிள்ளிவிடுவதாக அமையும், தயவு செய்து எம்மைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களை நேரில்சந்தித்து எமது நிலைப்பாட்டை விளக்க ஒரு சந்தர்ப்பம்தாருங்கள்" என வேண்டினேன். அவர் எனது இல்லத்திற்கு வந்து என்னைச் சந்திப்பதாகக் கூறினார். ஆனாலும் அவர் நிலைமையைப் புரிந்து கொண்டு என்னைச் சந்திக்க வரவில்லை.
இந்த மாநாட்டு ஒழுங்குகள் யாவும் பூர்த்தியான நிலையிலும்கூட இந்த மாநாட்டுக்கு வருகை தரவிருந்த பேராளர்கள் சிலரையும் பிரமுகர்கள் சிலரையும் மாநாட்டுக்குப் போகவேண்டாம் எனத் தடுப்பதில், மாநாட்டுச் செயற்குழுவில் அங்கம் வகிக்கும் பிரகிருதிகள் சிலர் முயன்று தோற்றனர்.
இந்த மாநாட்டில் அரசியல் பேசமுடியுமா? பேச்சுச்சதந்திரமுண்டா? எனப் பதிவுத்தபால் எழுதி ஓர் இலக்கிய இயக்கத்தினர் கேட்டிருந்தனர். அவர்களுக்கு நாம் அரசியல் பேசலாம், நிகழ்ச்சிநிரலுக்கு அமையப் பேசலாம் என்று பதிலளித்தோம். மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் முழுமையான பேச்சுச் சுதந்திரத்துடன் தமது கருத்துக்களைத் தெரிவித்தார்கள் என்பதை மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருமே அறிவர்,
மாநாடு நடைபெறுவதற்கான நாட்கள் நெருங்க நெருங்க பலதரப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மாநாட்டுச் செலவுக்கான பணத்தைப் பெறுவதற்கென நாம் ஒரு வங்கிக் கணக்கைத் திறந்திருந்தோம். வெளிநாட்டில் உள்ளவர் களை அந்தக்கணக்கில் பணத்தை வைப்புச் செய்யும்படி முருகபூபதி வேண்டியிருந்தார். ஆனால் ஓரிருவர் மாத்திரமே அந்தக் கணக்கில் வைப்புச் செய்தனர். இந்த நிலையில் போதிய பணம் இல்லாமல் மாநாட்டுக்கான ஒழுங்குகளை மேற்கொள்வது சிரமமாக இருந்தது. முற்பணம் கொடுப்பதற்கு பணம் இருக்கவில்லை.
பேராசிரியர் சிவத்தம்பியை மாநாட்டுக்கு எப்படியாவது அழைத்துவந்து விடவேண்டும். அவர் வருகை தராவிட்டால் மாநாட்டு ஏற்பாட்டாளருக்குத் தோல்விதான் என்ற நிலைமை இருந்தது. அவரை எப்படி வரச்செய்வது?
செயற்குழுவிலிருந்து கொண்டே மாநாட் டுக்கு எதிராகச் செயற்பட்டு மாநாடு ஏற்பாடுகளுக்குக் குந்தகம் விளைவிப்பவர்களை எப்படிச் சமாளிப்பது.?
மாநாட்டு நிகழ்ச்சிகளில் தங்களது பங்க ளிப்பும் இருக்கவேண்டும் என எச்சரித்து உள்நுழைய முற்படும் அரசியல்வாதிகளைச் சமாளிப்பது எப்படி?
இந்த மாநாடு தொடர்பாகப் பலதரப்பட்ட கேள்விக் கணைகளை எம்மை நோக்கி வீசிக் கொண்டிருக்கும் இலக்கியவாதிகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு வேறு.
இதழ் 29

Page 35
இத்தனையையும் சமாளித்துக்கொண்டு நான் இந்த மாநாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டேன்.
மாநாட்டுக்கு ஒருகிழமை இருக்கும்போது பேராசிரியர் கா. சிவத்தம்பியை மாநாட்டுக்கு வரும்படி அழைக்க திரு. முரீதரசிங், திருமதிபத்மா சோமகாந்தன் ஆகியோருடன் அவரது இல்லத்திற்குச் சென்றேன். பேராசிரியர் சுகவீனம் காரணமாகத் தன்னால் மாநாட்டுக்கு வரமுடியாமல் இருக்கிறது. வேண்டு மானால் தனது உரையை வீடியோ செய்து அதனை மாநாட்டில் போட்டுக்காட்டுங்கள் என்றார். என்னுடன் கூடவந்தவர்கள் அந்தளவில் திருப்தி கொண்டனர். என்னால் திருப்திகொள்ள முடியவில்லை.
மூன்று நாட்களின்பின் வீடியோ செய்வதற் கான தொழில்நுட்பவியலாளரை அழைத்துக்கொண்டு நான்மட்டும் பேராசிரியர் இல்லத்திற்குச் சென்றேன். அவரது பேச்சு வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் நான்சாவகாசமாக சிறிது நேரம்அவருடன் இருந்துகதைத்தேன். இந்த மாநாட்டில் அவரது வருகை எத்தகையமுக்கியமானது என்பதை எடுத்துக்கூறினேன். “ஸேர், இது உலகின் முதலாவது தமிழ் எழுத்தாளர் மாநாடு. எங்கள் மண்ணில் நடைபெறவிருக்கிறது. உலகில் எங்கு தமிழ் மாநாடு நடந்தாலும் அதில் நீங்கள் முன்வரிசையில் இருக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் எங்குமே தமிழ் மாநாடு நடைபெறுவதில்லை. எங்கள் மண்ணில் - உங்களது சொந்த மண்ணில் நடக்கும் விழாவுக்கு நீங்கள் வராவிடில் அந்த மாநாடு நிறை வான மாநாடாக அமையாது. நீங்கள் கட்டாயம் வர வேண்டும்" என்றேன். அப்போது திருமதி கார்த்திகேசு அம்மையாரும் அருகில் இருந்தார். "அம்மா நீங்களும் கொஞ்சம்ஸேருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்றேன். எனது வேண்டுகோள் பலித்தது. “சரி ஞானம் உங்களுக் காக நான் எப்படியாவது வருவேன்' என்றார் (8шупајlu fr.
மாநாட்டின் வெற்றிச் சங்கு அப்போதே ஊதப்பட்டுவிட்டது.
மாநாட்டின் தொடக்க விழா ஊர்வலத்துடன் ஆரம்பமாகியது. ஊர்வலத்தில் இடம்பெற்ற ஊர்தியில், பூகோளம் அதன் மேல் விரித்துவைக்கப்பட்ட புத்தகம், அதன்மேல் பேனா, சூழவர ஐம்பெருங்காப்பியங்கள். திருக்குறள், சீறாப்புராணம் ஆகியவற்றின் முன் அட்டைப்படங்களும் சர்வதேச தமிழ் எழுத்தாளர்விழா எனப் பொறிக்கப்பட்ட வளைவும் இலச்சினையும் பொருத்தப்பட்டிருந்தன. ஊர்தி மேளவாத்தியங்கள் சகிதம் நகர்ந்து செல்ல பேராளர்களும் பேரறிஞர்களும் பிரமுகர்களும் அதனைத் தொடர்ந்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில் சிறுமிகள் நடனமாடியபடி முன் சென்றனர். காலிமுகத் தெருவிலிருந்து 6ஆம் திகதி காலை ஆரம்பமான ஊர்வலம் உருத்திரா மாவத்தை யூடாகத் தமிழ்ச்சங்கத்தை அடைந்ததும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
ஜீவநதி -O

தொடக்கவிழா தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் அரங்கில் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, ஆகியவற்றைத் தொடர்ந்து ஜின்னாஹ் ஷரிபுத்தீன் இயற்றிய மாநாட்டுக் கீதத்தை கலாவித்தகர் திருமதி மதுரா பாலச்சந்திரன் இசைத்தார். எமதுநாட்டின் முதுபெரும் அறிஞரான பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களின் வாழ்த்துச் செய்தியுடன் மாநாடு ஆரம்பமாகியது.
பேராசிரியர்காசிவத்தம்பி மாநாட்டில் கலந்த கொண்டமை பற்றி கலாநிதி துரை மனோகரன் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
"இச்சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் கலந்து கொண்ட வாழ்த்தியமை, மாநாட்டிற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். சிவத்தம்பி அவர்களைச் சாட்டாகக் கொண்டு மாநாடு தொடர்பாக முதலைக்கண்ணிர் வடித்தவர்களும் உளர். ஆனால் அந்தக் கண்ணிரை சிவத்தம்பி அவர்கள் வற்றச் செய்தமை அவருக்கும் பெருமை, மாநாட்டுக்கும் பெருமை."
நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் எமது நாட்டிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கலைஞர்கள், ஊடகவிய லாளர்கள், புத்திஜீவிகள் பத்திரிகை ஆசிரியர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டு ஆய்வு அரங்க நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்கு களிலும் பேராசிரியர்கள் பன்னிருவர், கலாநிதிகள் பதினொருவர் உட்பட 200க்கும் அதிகமானோர் பங்கு பற்றியுள்ளனர். பங்குபற்றிய யாபேருக்கும் மாநாட்டு இலச்சினை பொறித்தசான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆய்வரங்குகளுக்கு எமது நாட்டுத் தமிழறிஞர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. இவற்றில் 13 ஆய்வரங்குகளும் 3 கருத்தரங்குகளும் இடம்பெற்றன. ஆய்வரங்குகளில் பங்கு பற்றுவோர் தமது ஆய்வு களைச் சமர்ப்பிக்க நவீன மல்ரிமீடியா தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பங்குபற்றிய இந்த ஆய்வரங்குகளில், "தொல்காப்பியக் குறியிடமும் குறுந்தொகைக் குறியிடமும் முதல்'கணினி யுனிகோட் தமிழ் மொழியில் ஏற்படுத்திய தாக்கங்கள் வரை 71 ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. ஒரே சமயத்தில் மூன்று வெவ்வேறு அரங்குகளில் இடம்பெற்ற ஆய்வரங்குகள் ஒவ்வொன்றிலும் இணைப்பாளர் ஒருவர், இணைத்தலைவர்கள் இருவர், ஆய்வு மதிப்பீட்டாளர் இருவர், கலந்துகொண்டு ஆய்வரங்கு களை ஆற்றுப்படுத்தினர், ஆய்வரங்குகள் யாவும் புலமைசார் உயர்மட்டத்தில் இடம்பெற்றன.
இதழ் 29

Page 36
மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர் களுக்கு மாநாட்டு இலச்சினை பொறித்த பொதி வழங்கப் பட்டது. இதில்ஃபைல் பேனா, மாநாட்டுமலர், கட்டுரைக் கோவை, நிகழ்ச்சிநிரல் விஜீவகுமாரன் தொகுத்தளித்த சர்வதேச எழுத்தாளர்களின் புலம்பெயர்வு பற்றிய சிறுகதைத் தொகுதி-முகங்கள், மகிழ்வுடன் நூல், பட்ஜ் ஆகிய பொருட்கள் அடங்கியிருந்தன.
பேராளர்கள் உணவு, தேநீர் ஆகியவற்றைப் பெறுவதற்குரோக்கின் முறை பாவிக்கப்பட்டது.
மாநாட்டின் இலச்சினை பொறிக்கப்பட்ட ரீ சேட் வாயிலில் விற்பனைக்கிருந்தது. அதனை மாநாட் டுக்கு வருகைதந்த பலர் வாங்கி அணிந்து கொண்டனர். மாநாட்டினையொட்டி இலங்கையின் முன்னணிச் சிற்றிதழ்களான "ஞானம்,'ஜீவநதி,"படிகள், செங்கதிர் ஆகியவை சிறப்பு மலர்களை வெளி யிட்டிருந்தன. மலையகத்திக் பதிய வரவான நிகர் சஞ்சிகையும் மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டது. அச்சிறப்பு மலர்களும் மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இந்த மாநாட்டு நிகழ்வுகளை உலகெங்கிலும் உள்ளவர்கள் கணினியில் கண்டுகளிக்க வீரகேசரி நிறுவனத்தினர் அவற்றை "Online"கணினி இணைய வலையமைப்பு மூலம் ஒளிபரப்புச் செய்தனர்.
ஆய்வரங்குகளில் பங்குபற்றிய அத்தனை பேருடனும் நான் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களது பங்களிப்பை உறுதி செய்த பின்னரே அவர்களை நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொண்டேன். ஆய்வரங்குகளை ஒழுங்கமைத்து நிகழ்ச்சிநிரலைத் தயாரிக்கும் வேலையை எனது மகன் பாலச்சந்திரன் மேற்கொண்டார். அஷ்ரஃப் சிஹாப்தீன் உறுதுணை வழங்கினார்.
மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அவற்றில் இசைக்கச்சேரி, வீணைக்
கேள்
ஏன்? எப்படி? எதற்காக?
கேள்விகள் எழட்டுமே எப்போதும் தடுமாறும் மனங்களும் தத்தளிக்கும் எண்ணங்களும் சற்று தேடிப் பார்க்கட்டுமே இவற்றின் விடைகளை.
தெளிவான சிந்தனைகள் வினாக்களின் அணிவகுப்பிலே முழுமை பெறுகின்றனவே
ஜீவநதி

கச்சேரி, திப்புசுல்தானின் மனிதாபிமானம்(கவிதை நாடகம்), பூதத்தம்பி (இசை நாடகம்), பரத நாட்டியம், மேடை நாடகங்கள், எழுத்தாளர் ஜெயகாந்தன் பற்றிய ஆவணப்படம் குறுந்திரைப்படங்கள், சொற்பொழிவுகள் ஆகியவை இடம்பெற்றன.
இந்த மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் தொடர்ந்து ஒருவார காலம் ஒலி ஒளி ஊடகங்கள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், இணைய வலைப்பின்னல்கள் யாவும் மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரபல்யப்படுத்தின.
நிறைவுநாள் நிகழ்வு கொழும்பு இராம கிருஷ்ண மண்டபத்தில் பேராசிரியர் கைலாசபதி அரங்கில் இடம்பெற்றது.
சர்வதேச மாநாட்டின் நிறைவுநாள் நிகழ்வில் எனது நிறைவுரையின் இறுதிப்பகுதி இவ்வாறு ക്രങ്ങഥg:
"இந்த மாநாட்டின்மூலம் உலகத் தமிழ் மக்களுக்கு நாம் ஒரு செய்தியைச் சொல்ல விரும்பு கிறோம். மலையே வந்தாலும் நாம் நிலைகுலைய மாட்டோம். யுத்தம் நடந்து முடிந்த இந்த மண்ணில் இருந்து கொண்டு உலகின் முதலாவது சர்வதேச எழுத்தாளர் மாநாட்டை திறம்பட நடத்திக்காட்டியிருக் கிறோம். மற்றவர்கள் சிந்திக்காததை நாம் சிந்தித்திருக் கிறோம் மற்றவர்கள் செய்யாததை நாம் செய்து காட்டி யிருக்கிறோம். இதுதான் எங்களது பலம், இலங்கை தமிழ் பேசும் மக்களது பலம். எழுத்தாளர்களின் ങ്ങഥ, " சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு மிகச்சிறப்பாக - எதிர்பார்த்ததைவிட அமோக வெற்றியுடன் நடந்தேறியுள்ளது. இந்த மாநாட்டின் வெற்றிக்குப் பின்னால் பலர் இருந்திருக்கிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சி. எனது இலக்கியத்தட்த்தில் எனது பங்களிப்பை மட்டுமே இங்கு பதிவுசெய்துள்ளேன். (இனி அடுத்த இதழில்)
Κ 0X
நாழும் கேட்டுப் பார்ப்போம் எமை சரியா? தவறா? எம்பயணங்கள்.
சிந்திப்போம். சிதறாமல் முடிவெடுப்போம் வழமான வாழ்வு
40
எமக்காக காத்திருக்கும்
- கே.எஸ்.சுபாஸ்
65up 29

Page 37
SP 605 ઈી
60T
LDIT"
எவ்வழி?
கேஎஸ் சிவகுமாரன்
கிடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக உலக சினமா படங்களைப் பார்பதற்காக ஒவ்வொரு வருடமும் நான் இந்திய மாநில தலைநகரங்களுக்கும் அண்மைக்காலமாக கோவா, கேரளா மாநிலங்களின் தலைநகரங் களுக்கும் போய் வருகிறேன். அப்படங்களைப் பார்த்து திறனாய்வு சார்ந்த இரசனை குறிப்பு களையும் ஈழத்து நாள் இதழ்களிலும் வார இதழ் களிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வந்துள்ளேன். சில ஆங்கில மொழியில் இந்திய பிரிட்டிஷ் ஏடுகளில் வெளிவந்துள்ளன.
நமது நாட்டில் இப்பொழுது எம்.கே.முரு கானந்தம், ச.முருகானந்தம் போன்ற குறிப்பிடத் தகுந்தவர்களும், ஏனையோரும் பிறமொழிப் படங்கள் உட்பட தமிழ் படங்கள் பற்றியும் அருமை ஆக திறனாய்வு சார்ந்த விபரக் குறிப்புகளை தந்திருக்கிறார்கள். இலங்கைத் திரைப்படம் சம்பந்தமான வரலாற்றுச் செய்திகளை அழகாகத் தொகுத்து தம்பிஐயா தேவதாஸ் தந்திருக்கிறார். இந்த நிலையில் புதிய திறனாய்வாளர் களுக்கு இடம் விட்டு தமிழ் படங்கள் தொடர்பாக எழுதுவதைத் தவிர்த்து பிறமொழி படங்கள் பற்றியே இப்பொழுது கவனம் செலுத்தி வருகிறேன். முன்னர் - ஐம்பது வருடங்களுக்கு முன்னரிலிருந்து- வாரத்துக்கு இருமுறை மறைந்த முரளிதரனும் நானும் இலங்கை வானொலியில் தமிழ் படங்கள் உட்பட உலக சினமா பற்றி ஒலி பரப்பி வந்தோம். பின்னர் வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளில் திரை மறைவில் இசை ஜீவநதி

வழங்குவோர் உட்பட தமிழ் திரை படங்கள் பற்றி எழுதிவந்தேன்.
பன்னிரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா விலுள்ள பூனே திரைப்படக் கல்லூரியில் திரைப் பட ரசனை தொடர்பான பயிற்சியை மேற் கொண்ட போது உலக சினமா பற்றிய விழிப்பு என்னிடம் ஏற்பட்டது. அதன் பின்னரே உலக சினமா தொடர்பாக அக்கறை காட்டி வந்தேன். இப்பொழுது அலுத்துப் போய்விட்டது. இனி படம் பார்க்க இந்தியா செல்லப் போவதில்லை. இது ஏன்?
உலக சினமா இப்பொழுது பெரும்பாலும் தொழில் நுட்ப வேடிக்கைகளுக்கு முதலிடம் கொடுத்து சத்தான கதைகளை படம்பிடிக்க முயல்வது அருமையாகவே இடம்பிடிக்கிறது.
உலக சினமாவில் மேற்கு, கிழக்கு ஐரோப்பிய படங்களே பெரும்பாலும், அமெரிக்க, கனேடிய, படங்கள் சில வேளைகளிளும் உன்னத மாக நான்கு தசாப்தங்களுக்கு முன்னரில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் இப்பொழுது ஹோலிவூடின் தாகம் காரணமாக அத்தகைய படங்கள் கலைதன்மையையும் இழந்துவிட்டன. ஆயினும் இப்பொழுது சமுக, தனிமனித சிக்கல்கள் பற்றிய நுன்னிதமான பார்வைகளை வெளிப் பாடாகவே சித்திரிக்கும் படங்கள் சில ஐரோப்பா, மற்றும் தென்னாசியா, தென் கிழக்கு ஆசிய, தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் இருந்தும் வரத்தொடங்கி இருப்பதை நாம் மறுப்பதுக்கு இல்லை.
சுருங்கச் சொன்னால் உலக சினமா இப்பொழுது செல்லும் வழி சமுக, பொருளாதார மாற்றங்களினாலும், பிற விழுமிய பிறழ்வு களினாலும் காலத்தின் தேவை கருதி மாற்றத்துக்கு உட்பட்டு வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. பின்னர் தனிமனித விருப்புடைய ஒருவன் என்ற முறையில் எனது ரசனைக் குறிப்புகளை உலக சினமா தொடர்பாக எழுத முனைகிறேன்.
நிற்க, சுய விளம்பரம் என்று நீங்கள் கருதினாலும் கூட என்னுடைய இரண்டு தமிழ் நூல்கள் உட்பட (அசையும் படிமங்கள் , சினமா, சினமா: ஓர் உலகவலம்) தமிழ் நாட்டில் வெளிவந்துள்ள சினமா தொடர்பான நல்ல விமர்சன நூல்களையும் படித்துப் பாருங்கள். நல்லசினமா இலக்கியம் போன்று அதனுடன் தொடர்பும் கொண்டது. உத்தி சிறப்புகளின் சிக்கன மான முறையிலும் கலை அம்சம் புலப்படும். உருவமும் உள்ளடக்கமும் ஒன்றி பிணைவதை s சினமாவில் நாம் காணலாம்.
இதழ் 29

Page 38
மூடநாரையும் 8
ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு சி மழைக்காலம் முடிந்து மெல்ல மெல்லக் குளத்து கொண்டிருந்தது. நாரைகள் போதிய மீனைப் பிடி குளக்கரையிலேயே நீண்டநேரம் காத்திருக்க வேண் மீன்பிடிக்கக் காத்திருக்கும் பெண்நாரைகளைக் தன்தேவைகளைத் தீர்க்கும் வழக்கமுடைய ச புதர்களினிடையே பதுங்கியிருந்தது.
நாரைகள் பெரும்பாலும் கோடிகோடியாக மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அவற்றுள் ஒ நாரையைக் குறி வைத்துக் கீரிப்பிள்ளை அதைக்கண்டு அதன் சோடி சத்தமிட்டு எச்சரிக்கவே ( எழுந்து பறந்து விட்டது. கீரிப்பிள்ளை ஏமா பற்றைக்குட் பதுங்கிக் கொண்டது. வரண்டு கெ குளக்கரையில் பழுப்பும் மஞ்சளும் கலந்து காணப் அதனை உரு மறைப்புச் செய்து கொண்டன.
நாரைகளைப் பிடிக்க எத்தகைய வழிமு கையாளலாம் என்று சிந்தித்துக் கொண்டிருந்த கீ களில் தனிமையிற் சோகமே உருவாக மீனுக்காகக் அழகிய இளம் நாரை தென்பட்டது. கீரிப் பிள்ளைக்கு தொடங்கிவிட்டது. பதுங்கிப் பதுங்கி மெல்ல அத சென்றது. ஒருமுறை செருமிப்பார்த்துத் தன்குரல் இ உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டது.
"அழகிய இளைய நாரையே, வயது நாரைகளே சோடியா நின்று மீன் பிடித்துக் கொ இந்தக் குளக்கரையில் நீ மட்டும் தனித்திருக்க என்ன? உன் துணைவன் எங்கே? உன் சோகே நிலைமைக்குக் காரணம் என்ன?"
"நானும் என் துணைவனுடன் இந்தக் சந்தோசமாக மீன்பிடித்த காலம் ஒன்று இருந்தது நள்ளிரவில் வந்த வேட்டைக்காரனின் துப்பாக் பலியாகிவிட்டார். அதன் பின் என் வாழ்க்கை இ ஓடிக்கொண்டிருக்கிறது."
"கொடுமை கொடுமை வேட்டைக்காரர்க இவ்வளவு கொடுமையாக நடந்து கொள்கிறார்க வில்லை. நீ இப்போது தன்னந்தனியாகவா இருக் "இல்லை மூன்று குஞ்சுகளை என் ( விட்டுவிட்டுத்தான் அவர் போயிருக்கிறார்."
"ஐயோ! பாவமே உன் துயரநிலையை நிை அழுகையாக வருகிறது. இவ்வளவு அழகான ஐ
ஜீவநதி (

ரிப்பிள்ளையும்
D.LITT. DESITGúhrsfleib
ரியகுளம். தனிமையிலே வீணாவது ஒருபக்கம் நீர் வற்றிக் எந்த உதவியும் இன்றி மூன்று ப்பதற்காக குஞ்சுகளையும் வளர்க்கும் பொறுப்பு ஐயிருந்தது. இன்னொரு பக்கம். குஞ்சுகளுக்கு கொண்டு இரைதேடப் போவாயா? அல்லது ரி ஒன்று அவற்றுக்கு பாதுகாப்பாக இருப் பாயா? தனித்துத் துன்பமடையும் வே நின்று அபலைகளுக்கு உதவி செய்யும் ரு பெண் நல்லமனம் படைத்தவர்கள் இந்த பாய்ந்தது. உலகத்தில் u Tft இருக்கப் பெண்நாரை போகிறார்கள்?" ற்றத்தோடு "உண்மைதான் இந்தக் குளக் ாண்டிருந்த கரையில் என் துன்பத்தை அறிந்து பட்ட புற்கள் மனதுக்கு ஆறுதலாகக் கதைத்தவன் நீ ஒருவன்தான் . என்துணைவன் இறந்த சிறையைக் ஷடன் என் இனத்தவர்கள் எல்லாம் தம் ரியின் கண் தொழிலில் ஈடுபட்டு என்னை மறந்து காத்திருந்த விட்டனர். கீரிப்பிள்ளைகள் நாரை } எச்சிலுறத் களை அழித்துவிடும் என்று சொல்வார் ன் அருகிற் கள். நல்ல கீரிகளும் உலகில் னிமையாக உண்டென்பதை உன்னைப் பார்த்த
பின்தான் உணர்ந்து கொண்டேன்" முதிர்ந்த இரண்டொரு நாட் கலந்துரை ண்டிருக்கும் யாடலின் பின் கீரிப்பிள்ளை நாரை க் காரணம் யின் கூட்டிற்கே சென்று வாழத் ம வடிவான தொடங்கியது. இரண்டுமே சேர்ந்து இரை தேடத் தொடங்கியதால் எல்லோ குளத்திலே ருக்கும் வயிறார உணவு கிடைத்ததும் ஒருநாள் கீரி தந்த புதிய உறவுடன் அமைந்த சிக்கு அவர் பாதுகாப்பு உணர்வும் நாரைக்கு |ப்படித்தான் வாழ்க்கையையே GFITsirises f
ஆக்கியது. ர் ஏன்தான் இந்த வேளையிலேதான் 1ளா தெரிய நாரையின் மூத்த பெண் குஞ்சின் கிறாய்?" அபரிமிதமான வளர்ச்சி கீரிப்பிள்ளை பாறுப்பில் யின் கண்ணிற் பட்டது. மெத்தென்ற பஞ்சுபோன்ற உடலும், கூரிய ாக்க எனக்கு சொண்டு அசையாமல் இருக்க ன் இளமை வளைந்து நெளிந்த கழுத்தின் அழகும், () இதழ் 29

Page 39
பருவமாற்றங்களோடு சேர்ந்ததான இனிமையான கீரிப் பிள்ளையைக் கிறங்க வைத்தன.
நாரையே இவ்வளவு நாளும் இருவரும் உ செல்வோம் ஒருவருக்கொருவர் உதவியாக இ வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாகப் போய்க் கொ இப்போது அந்த மகிழ்ச்சிக்கும் முடிவு வந்து விட்டது "முடிவு வந்து விட்டதா? என்ன சொல்கிறீர்க "ஆம் பல கீரிகள் பசி எடுத்து இந்த வீட்டைச் தொடங்கிவிட்டன. எம்குஞ்சுகளை இனிக் க பார்த்துக் கொள்ள வேண்டும்."
“கீரிகளா? எங்கே நான் ஒரு காணவில்லையே?"
“அவை வெளிப்படையாகத் திரியாது பற்ை பதுங்கிப் பதுங்கித்தான் திரியும் அதுதான் நீ கா6 எனினும் என்னால் அவற்றின் வாசனையை அறிந்து Փpւջպւb."
"அப்படியானால் என் உயிர்க்குஞ்சுகளைக் என்ன வழி?"
"ஒருவர் உணவு தேடிச் செல்ல மற்றவ இருப்பதுதான் ஒரே வழி, நீ காவல் இரு நா6 தேடிவருகிறேன்"
"நீங்கள் உண்மையிலே நல்லவர்தா குஞ்சுகளிலும் என்னிலும் எவ்வளவு அக்க இருக்கிறீர்கள்"
"நீ சொல்வது உண்மைதான் எனினும் ஒரு பிரச்சினை இருக்கிறது. நான் உணவு தேடிச் போது கீரிகள் வந்தால் நீ எவ்வாறு குஞ் காப்பாற்றுவாய்? கீரிகளுடன் சண்டையிட
=> நான்
'gnai' Adigil gasng Gakui என்னால் தான் இதுவும் என்றிடுவர் 'ரான் என்ற ஆணவம் எவ்வாறெல்லாம் அரசோச்சி ஆள முனைகிறது? - எனினும்
'5AIGł UAf' Gig? Gógg2 ABS SeLihtilgi? e ulflur? எந்த உள்ளத்தில்? புரியவில்லை - அழிவற்ற "நான் எங்கே? என்பதைத் தேடின் காண்பதற்கில்லை.
'pngi 2Leóleð slag eflfld aafldi soulangs esLó satélub stúlk seftalið saflið gaflóð seiland ques? உயிரும் உள்ளமும் கண்ணால் காண் ஆகாதன
ஜீவநதி -G

குரலும்.
ாவு தேடச் 5ந்தோம், τιρΦίbΦΦ.
i? சுற்றிவரத் பனமாகப்
போதும்
களுக்குட் ாவில்லை கொள்ள
காப்பாற்ற
ர் காவல் ர் உணவு
it. ଗtତit
கறையாக
சின்னப் செல்லும் சுகளைக் உன்னால்
(tptջակւ0ո?"
"உண்மைதான் நான் உணவு தேடிச் செல்கிறேன். நீங்கள் குஞ்சுகளுக்குக் காவலாக இருங்கள்" இந்த நடைமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டுத் தொடர்ந்து நடை பெற்று வந்தது. நாரை தன் மூத்த பெண் குஞ்சின் உடலிலும் பழக்க வழக்கங்களிலும் சில மாற்றங்களைக் கண்டபோதும் அது எதையும் புரிந்து கொள்ளவில்லை ஒரு நாள் படுக்கை யறையில் சில இறகுகள் உதிர்ந்து கிடப் பதைக் கண்டு கீரியிடம் வினாவியது. "எம்குஞ்சு வளரும் வயதில் அதற்குச் சத்தான உணவுகள் கிடைக் காததுதான் இதற்குக்காரணம் நீ அவசரப்பட்டு வீட்டுக்கு வராமல் இன்னும் நிறைய உணவு தேடிக் கொண்டு வா. எல்லாம் சரியாகி விடும்."
இதை அப்படியே நம்பிய நாரை மிகநீண்டநேரம் உழைத்துத் தினந் தோறும் அதிக உணவு கொண்டு வரத் தொடங்கியது. ஒரு நாள் வேலை முடிந்து மூட நாரை வீடு திரும்பிய போது சின்ன வயதிலேயே அந்தக் குஞ்சு முட்டையிட இடம் தேடிக் கொண்டிருந்தது.
எனது 3=
assassyth saxarth SIGriflesh grai என்றென்றும் இருந்திடவேண்டுமே
log slugih suigmu "Bud" ga se užíšů CJálů Guganue Glasgů57
LihĜU sluqih og subph உண்மை இஃது உறுதி ஆதலின் OLbqdis “g5Yahoo GaGaliĝp UIDEOGRA5 Ĝĝ5GORGOJKAJT? 'surat' agrib Saarh GGrgib tara.
'gra’ unranu Gaflað GG4g எனது என்பதும் ஏற்க முடியாதது நான் யாயை வெற்று மொழி ஆயின் Gang Grag Gua agsanib?
- வெலிப்பன்னை அத்தாஸ்
)-
இதழ் 29

Page 40
நூல் அறிமுகக் குறிப்பு
அரங்கியலுக்கு புதி பங்க (சி.மெளனகுருவின் மட்டக்க
லெனின்
மட்டக்களப்பு மரபுவழிநாடகங்கள் என்ற நூல் 1983 ஆம்ஆண்டு பேராசிரியர் சி. மெளனகுருவினால் தமது கலாநிதி பட்ட படிப்பிற்காக யாழ்.பல்கலை கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடாகும். 1998ஆம் ஆண்டில்இவ்வாய்வேடுநூலாக வெளிவந்தது.இந்நூல் வெளிவந்து 12 ஆண்டுகள் ஆகின்றன. இக்கால இடைவெளியில் இந்நூல் குறித்து உருப்படியான விமர்சனங்கள் ஏதும் வெளிவந்ததாக தெரியவில்லை. இன்றைய சூழலில் பாரம்பரிய மரபுகளிலிருந்து முற்போக்கான அம்சங்களைப் பெற்று அவற்றினை காலத்துக்கேற்றவகையில் மாற்றம் செய்து நமக்கான நாடக மரபொன்றினை உருவாக்க வேண்டியுள்ளது. அந்தவகையில் இந்நூல் பற்றிய ஆய்வுகளும் மதிப்பீடுகளும் அவசியமாகின்றன. அத்தகைய ஆய்வுகளுக்குஅரங்கியலின் தோற்றம் குறித்ததெளிவு அவசியமானதாகின்றது.
நாடக அரங்கியல் வரலாற்றை ஊன்றிக் கவனிக்கின்ற போது ஒரு உண்மை தெளிவாக தெரியவரும். மனித சமுதாய வரலாற்றில் மனிதர்கள் தங்கள் செயல்களை பாவனை அல்லது பிரதி செய்ய முற்பட்டப்போது நடிப்பு தோன்றியது என்பர். புராதன சமுதாயத்தில் வேட்டையாடிய மனிதன் வேட்டைக்கு செல்வதற்கு முன்னர் அவர்கள் அதனை பாவனை செய்ய முற்பட்டனர். இத்தகைய மனித நடத்தை களினூடாகவும் மற்றும் தெய்வ நடவடிக்கைகளின் மூலமாகவும்நாடகம்தோன்றியது.
இவ்வாறாக ஆரம்ப கால முதலாகவே நாடக அம்சங்கள் மனித வாழ்க்கையில்முக்கியத்துவம் பெற்று வந்திருப்பினும் அதனை ஆவணப்படுத்துவதற்கான முயற்சிகள் பிற்காலத்திலேயே தோன்றின. இவ்வடிப் படையில் தமிழ் நாடக இலக்கிய வரலாற்றினை நோக்குகின்ற போது நாடக அம்சம் நிறைந்த கூத்து நூல்கள் நாயக்கர் காலத்திற்கு பின்னரே தோன்றி யுள்ளன. பள்ளு, குறவஞ்சி போன்ற நாடக இலக்கியங்கள் இவற்றிற்குதக்க எடுத்துக்காட்டுகளகும் இந்தப்பின்னணியிலே ஈழத்துநாடக இலக்கிய நூல்கள் குறித்து நோக்குகின்ற போது கதிரைமலைப் பள்ளு (1478-1519) என்ற நூலே முதல் நூலாக கொள்ளப்படுகின்றது. ஜீவநதி O

ய பார்வை, புதிய ளிப்பு
ாப்பு மரபு வழி நாடகங்கள்)
திவானம்
பிற்பட்டகாலங்களில் கணபதிஐயர், இணுவை சின்னத்தம்பி புலவர், கீத்தாம் பிள்ளை, மாதகல் மயில்வாகனம்,சுந்தரம்பிள்ளை, குமாரசாமிபுலவர் என இப்பட்டியலை நீட்டிச் செல்லலாம். இத்தகைய நாடக முயற்சிகள் யாவும் ஈழத்து அரங்கியல் துறையில் ஏற்பட்ட ஆரம்ப முயற்சிகளாகவே காணப்படுகின்றன. அரங்கியல் கோட்பாடுகளோ அல்லது ஆய்வுகளோ விருத்தி பெற்றிராத நிலையில் இவ்வாறான ஆரம்ப முயற்சிகள் கூட பெரும் சாதனைகளாக இருந்தன. சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஆங்கில கல்வியின் தாக்கம், ஜனநாயகம், தேசிய சிந்தனைகள் காரணமாக ஏற்பட்ட பொது மக்கள் நலநாட்டம் என்பனவற்றின் தாக்கத்தை அரங்கியலிலும் காணக் கூடியதாக உள்ளது. இக்காலச் சூழலில் கிங்ஸ்பரி எழுதிய மனோன்மணி, சந்திரகாசம் முதலிய நாடகங்கள் அரங்கியல் துறையில் செல்வாக்கு செலுத்துவனவாக அமைந்து காணப்பட்டன. புராண இதிகாசமரபுகளை துணையாகக் கொண்டு அவற்றில் சமூகம் சார்ந்த அம்சங்கள் புகுத்தப்பட்டன. இதன் இன்னொரு பரிணாமமாகவே பேராசிரியர் க.கணபதி பிள்ளையின் வரவு அமைந்திருந்தது. இவரது நாடகங் களில் யாழ்பாண பேச்சு வழக்கு சிறப்பாகவே கையாளப்பட்டுள்ளமை அரங்கியல்துறையில் முக்கிய சாதனையாக அமைந்திருந்தது.
1950களுக்கு பின், உலகளவில் தோன்றிய மக்கள் எழுச்சிகளினதும் சிந்தனைகளினதும் பின்னணியில்தேசியம்,தேசிய இலக்கிய கோட்பாடுகள் என்பன தத்துவார்த்தபோராட்டங்களாக முன்னெடுக்கப் பட்டன. இத்தகைய பின்னணியில் அரங்கியல் சார்ந்த தமது பார்வையை செயற்பாட்டை பட்டைத் தீட்டிக் கொண்டவர்பேராசிரியர்சு.வித்தியானந்தன், அரங்கில் தமது செயற்பாடுகளை முற்போக்கான திசையில் முன்னெடுத்துச்சென்றதுடன்"கலைக்கழகதமிழ்நாடகக் குழு" என்ற அமைப்பின் மூலம் புதிய தலைமுறை யினரை அமைப்புசார்ந்த செயற்பாடுகள் நோக்கி அமைப்பாக்கம் செய்தமை இவரது மிக முக்கியமான பங்களிப்பாகும்.
இத்தகைய சிந்தனையின்பின்னணியில்தம்மை பிணைத்துக் கொண்ட அதேசமயம் சரித்திரவியல்
8Ꭰ இதழ் 29

Page 41
கண்ணோட்டத்திலும் சமுதாய கண்ணோட்டத்திலும் அரங்கியலை ஆய்வு செய்த முதல் தமிழறிஞர் (Bugiraffluj 85IT. fossibil S6igg Drama in Ancient Tamil Society' 6T6pg|TodpiluuLDITGOTGST6rprigsb. அரங்கியல் வரலாற்றை தமிழ் நாடக இலக்கிய வரலாற்றுநோக்கில் ஆய்வுசெய்வதாகவே இவ்வாய்வு காணப்படுகின்றது.
அண்மைகாலத்தில் ஆய்வுலகில் அறிமுகமான சொற்களில் , அரங்கியலும் ஒன்றாகும். தமிழ் நாடக இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட புதிய பரிமாணங் களையும் நோக்குநிலைகளையும் தொகுத்துக்காட்டும் நிலையில் அச்சொல் அமைந்துள்ளது.
மேனாட்டுகல்விமுறைநம்மிடையே பரவியதன் பயனாக பொதுவாகவே உலகில்வேகமாக பரவிவரும் அறிவியல் துறைகளின் செல்வாக்கு தமிழ் நாடக துறையிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாக இருந்தது. அத்துடன்தமிழர்சமூதாயத்தில் ஏற்பட்டஅரசியல்,சமூக, கலாசார இயக்கங்களின் விளைவாகவும் தமிழ் அரங்கியல் துறையின் பரப்பும் பெருகி வந்துள்ளது. இத்துறையில்குறிப்பிடத்தக்கசாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் குழந்தை சண்முகலிங்கம்.
இவ்வாறானதோர் சூழலில் பேராசிரியர் சி.மெளனகுரு அரங்கியல் பேராசிரியர், அரங்க ஆய்வாளர், இயக்குனர், பிரதி ஆக்குனர், என பல்துறை சார்ந்த ஆளுமையுடன் அரங்கியல் துறையில் தமது சுவடுகளைப் பதிக்கின்றார். இந்தபின்னணியில் மட்டக் களப்புமரபுவழிநாடகங்களை சமுதாயகண்ணோட்டத் துடனும்அரங்கியல்நோக்குடனும்ஆய்வுசெய்துள்ளார். சடங்கிலிருந்து எவ்வாறு கூத்துக்களும் பின் அவை நாடகங்களாகவும் விருத்தி பெற்றுவந்துள்ளன என்பதுபற்றிதக்க ஆதாரங்களுடன் விளக்கும் இந்நூல் மட்டக்களப்பு மரபு வழி நாடகங்களான வடமோடி, தென்மோடி கூத்து மரபுகளை கள ஆய்வில் பெற்ற தகவல்களினடிப்படையிலும் முதல் நிலை இரண்டாம் நிலை ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களின டிப்படையிலும் தமது ஆய்வினை முன்வைக்கின்றார். யாவற்றுக்கும் மேலாக இன்று மருங்கிவருகின்ற கூத்துகளான மகுடிகூத்து, பறைமேளக்கூத்து, வசந்தன் கூத்துக்கள் தொடர்பிலும் இவ்வாய்வு கவனம் செலுத்துகின்றது. இக்கூத்துக்கள் சமூக இருப்புகாரண மாகவும் மற்றும்கல்விப் புலத்தில்அவை புனரமைக்கப் படாததன் காரணமாகவும் அவை எவ்வாறு நகைப்புக் குரியதாக மாறி மருங்கி வருகின்றது என்பதும் எடுத்துக்காட்டப்படுகின்றது.
பிரதிஆக்கம் செய்வதனாலோ அல்லது பாடப் படுவதனாலோ மட்டும் அது நாடகம் என்ற வடிவத் தினைப் பெற்று விடாது. நாடகம் என்பது நிகழ்த்திக் காட்டப்படும்நிகழ்கலையாகும்என்ற அரங்கியல் கோட் பாட்டின்அடிப்படையில்மட்டக்களப்பு மரபுவழிநாடகங்
ஜீவநதி

கள் குறித்து ஆய்வுசெய்கின்றது இந்நூல். இந்த ஆய்வு பார்வை ஆய்வின் ஆரம்பத்தி லிருந்து இறுதிவரை தொடர்ச்சியாக வளர்ச்சிபெற்றுவந்திருப்பது இந்நூலின் தனித்துவமான சிறப்பாகும். இவ்வாய்வில் பல்வேறு விதமான நாடக மரபுகள்- குறிப்பாக கிரேக்க ஆசிய மரபுகள்பற்றிசுட்டிக்காட்டப்பட்டிருப்பினும்மட்டக்களப்பு நாடக மரபு எவ்வாறு அச்சூழலுக்கு ஏற்றவகையில் எத்தகைய தனித்துவமான அம்சங்களுடன் விளங்கு கின்றனஎன்பது குறித்தும்அதன் பொதுமைகள்குறித்தும் நூலாசிரியர் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
வடமோடி தென்மோடிகூத்துக்களின் தோற்றம் வளர்ச்சி அமைப்புமுறை, கையாளப்படும் உத்திகள், ஆட்டக் கோலங்கள், உடைகள், ஒப்பனைகள் என்பன வற்றினை ஆய்வுக்குட்படுத்திமட்டக்களப்புக்கான நாடக மரபொன்றினை உருவாக்க முனைகின்றது இந்நூல்.
மேலும் இந்நூல், நாடகங்களுக்கும் ஏனைய துறைகளுக்கும் இடையிலான உறவு பற்றியும் ஆய்வு செய்கின்றது. புவியியல், சமூகவியல், மெய்யியல், உளவியல், சரித்திரவியல் முதலிய துறைகளையும் தமதாக்கி அதன் ஒளியிலேயே மட்டக்களப்புமரபுவழி நாடகம் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டுள்ளமை இந்நூலுக்குமேலும்பலம்சேர்ப்பதாக அமைந்துள்ளது. மட்டக்களப்பில் தொழில் முறையான அரங்கியல் கலைஞர்கள் தோன்றாத நிலையில் அரங்கியல்துறையில் ஏற்பட்டுவருகின்ற மாற்றங்களை உள்வாங்காத அல்லது புனரமைக்கப்படாத நிலையில் பராம்பரிய மரபுவழி கூத்துகள் அழிந்து விடக் கூடிய அபாயம்உள்ளது. எடுத்துக்காட்டாக பறைமேளக்கூத்து மேற்குறித்த மாற்றங்களை உள்வாங்கத் தவறியதன் விளைவாக நகைப்புக் குரிய கூத்தாக மாறி மறைந்து வருவதனையும் காணலாம். அரங்கியல் துறையில் இத்தகைய முரண்பாடுகளை இனங்காண்கின்ற நூலாசிரியர் அவற்றினை கல்விப் புலத்தில் ஆய்வு செய்வதன் ஊடாக எத்தகைய மாற்றங்களையும் விரக்திகளையும் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் சுட்டிக்காட்டத்தவறவில்லை.
எமது கழலில் ஏற்படுகின்ற சமுதாயமாற்றங் களும் புதிய போக்குகளும் பராம்பரிய கூத்துக்களிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாக அமையும். அத்தகைய விருத்திகளும் மாற்றங்களும் எப்போதும் மானுட மேம்பாட்டை மையமாக கொண்டிருக்கும் எனக் கொள்ளவேண்டியதில்லை. அதனை சமூகமாற்றத்திற் குரியதாக மாற்றியமைக்க வேண்டியது தேசிய ஜனநாயக முற்போக்கு மார்க்சிய சக்திகளின் கடமையாகும். இத்தகைய கலை இலக்கிய பிரவாகத்தில் சங்கமம்கொள்கின்றஒர்ஆய்வாளரின் முயற்சியாகவே இந்நூலாக்கம் அமைந்துள்ளது.
நூலில் இணைக்கப்பட்டுள்ள வரைப்படங்கள், இவ்வாய்வினை வாசகர் இலகுவாக புரிந்துக்கொள்ளக் இதழ் 29

Page 42
கூடிய திறனை வழங்குகின்றது. புதிய துறைகள் உருவாகின்றபோது அவற்றோடு நேரடி தொடர்புடைய வர்களுக்குமட்டுமே பயன்பாடுஉடையதாக தோன்றும் ஆனால் காலக்கிரமத்தில் அவை பற்றிய தகவல்களும் செய்திகளும்பரவுகின்றபோது அவை பொதுமக்களின் ஆர்வத்தை தூண்டுவதாகவும்அமையும். இவ்வகையில் அரங்கியல் குறித்தகாத்திரமான ஆய்வுநூல்கள் மிகக் குறைவு. அவ்வாறு செய்யப்பட்ட ஆய்வேடுகள் கூட பல்கலைகழகத்தினிலே முடங்கிவிட்டன.
அவை வெறுமனே ஆய்வாளர்களுக்கும் நிபுணர்களுக்கும் பயன்படும் வகையிலே அமைந்து உள்ளன. இக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்வதாக இந்நூல் அமைந்துள்ளது.
இதுவரை வெளிவந்த அரங்கியல் தொடர்பான ஆய்வுகளை ஒப்புநோக்குகின்றபோதுமூன்றுவிதமான போக்குகளை அடையாளம் காணலாம். முதலாவது
assow 500
1) அவை (Forum) கலை இலக்கியவட்டத்தின் அன்று இடம் பெற்றது. இந்நிகழ்விற்கு நாடறிந் வருகையாளராக இந்திய பிரபல நாவலாசிரியர் பற்றிய அனுபவப் பகிர்வுகளை கூறினார். அறிமுக உரையை கலாநிதி த.கலாமணி நல்கினார். க கதர்மதேவன், க.சின்னராஜன், சி.பரஞ்சோதி, இ.இ
GBuörb é
(1) "அனைத்துலகத் தமிழ் எழுத்தாளர் ஒன்றி நாடகம் பிரமாதம். ஜீவநதி ஆசிரியர், உதவி ஆசிரி நன்றாகவே நடித்தார்கள். நாடகத்தின் இயக்குநரா பல்கலைக்கழக விரிவுரையாளருமான திரு.த.க வெற்றிக்கு மூலகாரணம் என்பதைப் புரிந்து கொள்ள சிறப்பாக நடைபெற்றது என்பதில் எவ்வித சந்தேக
2) சர்வதேச எழுத்தாளர் மாநாடு சிறப் வெளிவந்துள்ளது. பாராட்டுக்கள். இ.இராஜே ஆகியோரின் சிறுகதைகள் பிஞ்சு உள்ளங்களி சித்திரிக்கின்றன. இப்படி நூற்றுக்கணக்கான எம் கு ஸ்ரலின் அவர்களது சிறுகதை நல்லதொரு ஆசி சொல்லியிருக்கிறது. கவிதைகள், கட்டுரைகள் எ கவனமெடுங்கள்.
ஜீவநதி -G

பகுதியினர் குறித்ததொரு கூத்து மரபை எடுத்துக் கொண்டு அதன் வடிவத் தூய்மை கெடாதவாறு புதிய உள்ளடக்கத்தை புகுத்தினர். இரண்டாவது பிரிவினர், பல கூத்து மரபுகளிலிருந்து பல்வேறுப்பட்ட ஆடல் பாடல், அளிக்கை முறைகளை கவனத்திலெடுத்து அதனூடாக புதிய உள்ளடக்கங்களை புகுத்தினர். மூன்றாவது பிரிவினர் நமது கூத்து மரபுகளுடன் உலக நாடக மரபுகளையும் இணைத்த புதிய உள்ளடக்கங் களை புகுத்தினர். தமிழர் சமுதாயம், பண்பாடு என்பன வற்றில் மாற்றம் ஏற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து - மாற்றத்தின் இயக்கவியலை உணந்து அதனடிப்படையில்தமிழ்நாடகமரபை புனரமைத்ததில் சி.மெளனகுருவின் சாதனை முக்கியமானதாகும். அந்தவகையில் ஆய்வாளர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
க்கில் நிகழ்வ
32 ஆவது ஒன்று கூடல் கலைஅகத்தில் 14.01.2011 த எழுத்தாளர் தெணியான் தலைமைவகித்தார். சின்னப்ப பாரதி கலந்து கொண்டு தனது நாவல்கள் 5 உரையை வே.ஐ.வரதராஜன் நிகழ்த்தினார். நன்றி ருத்துரைகளை மு.அநாதரட்சகன், ஐ.வரதராஜன், ராஜேஸ்கண்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.
நிதயங்கள்
பத்தின்" மாநாட்டின் போது நடைபெற்ற பூதத்தம்பி பர் ஆகியோரின் நடிப்பு அபாரம் ஏனைய நடிகர்களும் கச் செயற்பட்ட ஜீவநதியின் பதிப்பாசிரியரும், யாழ் லாமணி அவர்களின் கைவண்ணமே நாடகத்தின் ா முடிந்தது.அவருக்கும் எனது பாராட்டுக்கள் மாநாடும் மும் இல்லை.
- காதவயானைர் (பேராதனை)
பிதழ் பல கனதியான ஆக்கங்களைச் சுமந்து ஸ்கண்ணன், பா.தனபாலன், அ.விஷ்ணுவர்த்தினி ல் போர் ஏற்படுத்திய வடுவை உணர்வு பூர்வமாக நழந்தைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே. ரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை சிறப்புற ன்பனவும் சிறப்பாக உள்ளன. வடிவமைப்பில் கூடிய
- சி.இராஜநாயகம் (மூதூர்)
இதழ் 29

Page 43
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க
ஆறாவது மாநாடு பற்றிய ஓர் இரசனைக் குறிப்பு
எஸ்.நிமலன்
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கம் 2005ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் நாள் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டது. ஒவ்வொரு வருடமும் இதன் மாநாடு பெரியள வில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. 2006ஆம் ஆண்டில் காரைக்கால், 2007இல் திருச்சி, 2008இல் புதுச்சேரி 2009இல் கோயம்புத்தூர், 2010இல் குற்றாலம் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இவ்வகை யில் ஆறாவது மாநாடு 05.01.2011 அன்று கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ஓர் ஆர்வலன் என்ற வகையில் கலந்து கொண்டேன்.அங்குநடைபெற்ற சில விடயங்களையும் அனுபவங்களையும் வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பியதன் பயனாக இந்த இரசனைக் குறிப்பு அமையப் பெறுகின்றது.
இம்மாநாட்டுநிகழ்ச்சிநிரலானதுஆரம்பநிகழ்வு பொதுக் குழு அமர்வு, சிற்றிதழ்கள் குறித்த கலந்துரை யாடல், பாராட்டும் கெளரவிப்பும் என்ற வகையில் அமையப் பெற்றது. ஆரம்ப நிகழ்வானது உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க இலங்கையின் கிளையின் தலைவரான திருமதி பத்மா சோமகாந்தன் தலைமை யில் நடைபெற்றது. தமிழ்த் தொண்டாளர் புரவலர் ஹாசிம் உமர், பேராசிரியர் சபா.ஜெயராசா, "மல்லிகை" டொமினிக் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலை 10.30 மணியளவில் வரவேற்புரையை உதசி. சங்க இலக்கைக் கிளையின் செயலாளரான அந்தனி ஜீவா நிகழ்த்தியதன் பின்பு மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பித்தன. தலைமையுரையை அடுத்து சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து செங்கதி ரோன்தகோபாலகிருஷ்ணன் அவர்கள் நிகழ்த்தினார்.
அடுத்து, தேநீர் இடைவேளையின் பின்னர் பொதுக் குழு அமர்வு உதசி. சங்கத் தலைவர் வதிலை பிரபா தலைமையில் நடைபெற்றது. பின்னர் ஆண்ட றிக்கையை உதசிசங்க பொதுச் செயலாளர் சொர்ண பாரதி வழங்க பொருளாளர் அறிக்கையை நந்தவனம் தசந்தி ரன்வழங்கினார். இதன்பின்னர் சிற்றிதழ்கள் ஜீவநதி -C

ஆசிரியர்களின் அறிமுகம் நடைபெற்றது. குறிப்பாக மல்லிகை, ஞானம், ஜீவநதி, செங்கதிர், நீங்களும் எழுதலாம், கதிரவன், கவிஞன், இருக்கிறம், படிகள், சுவைத்திரள், காந்தியம், தென்றல், செங்கரும்பு, சிராங்கூன் டைம்ஸ்,குறளருவிபோன்ற இன்னோரன்ன சிற்றிதழ்களின் ஆசிரியர்கள் தமது சிற்றிதழ் குறித்தான செயற்பாடுகள் குறித்தும்இரத்தினச்சுருக்கமாக கூறினர். இத்தனை சிற்றிதழ் ஆசிரியர்களையும் நேரே காணக் கூடியதாயிருந்தமை ஒரு வரப்பிரசாதமே.
மேலும்அடுத்த மாநாடு எங்கே நடாத்துவது என்ற கேள்வியும் சபையில் விடுக்கப்பட்டபோது திருச்சியில் நடாத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன்போது அந்தனி ஜீவா "இலங்கையில் இத்தகைய தொரு மாநாடு நடாத்துவதற்குரிய நடைமுறைச் சவால் களையும் இடரையும் குறிப்பிட்டு அடுத்த மாநாடு திருச்சி யில் நடைபெறுவது தமக்கு மகிழ்ச்சிக்குரியது" என்றார். மதிய இடைவேளையின் பின்னர் - “பாராட்டும் கெளரவிப்பும்" பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமை யில் நடைபெற்றது. 2010 / 2011இற்குரிய விருதுகள் வழங்கப்பட்டன. அவ்வகையில் பாரதிஇலக்கிய விருது, வல்லிக்கண்ணன் விருது, அவ்வை இலக்கிய விருது, செங்கதிர் இலக்கிய விருது, கவிதை உலகம் இலக்கிய விருது, கல்வெட்டு பேசுகிறது இலக்கிய விருது, இனிய மணா இலக்கிய விருது, அருகதவேலி இலக்கிய விருது, மணவாளன் இலக்கிய விருது, பரமசிவன் இராமசாமி இலக்கிய விருது, நாகம்மாள்நினைவு இலக்கிய விருது, சிகரம் இலக்கிய விருது ஆகிய விருதுகள் முறையே நாவலாசிரியர் குசின்னப்பபாரதி, டொமினிக் ஜீவா, பத்மா சோமகாந்தன், க.பட்டாபிராமன், "நீங்களும் எழுதலாம்" எஸ்.ஆர்.தனபாலசிங்கம், "சுவைத்திரள்" ஆசிரியர், படிகள் ஆசிரியர், காந்தியம் ஆசிரியர், தென்றல் ஆசிரியர், சிராங்கூன் டைம்ஸ் ஆசிரியர், செங்கரும்பு மாதஇதழ்,குறளருவிமாதஇதழ்ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதன் பின்னர் நன்றியுரையினை ஜீவநதியின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணிதரன் வழங்கினார்.
பாராட்டும் கெளரவிப்பையும் அடுத்து மாநாடு இனிதே நிறைவு பெற்றது. இம்மாநாட்டில் மேற்குறித்த விடயங்களிற்கும் மேலாக படைப்பாளிகள், இலக்கிய ஆர்வலர்கள், ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி தங்களுக்குள் நட்புணர்வுடன் கதைத்து மகிழக் கூடிய சந்தர்ப்பமும் வாய்க்கப் பெற்றதுடன், அண்மையில் வந்த பல சிற்றிதழ்களை அதனதன் ஆசிரியர்கள் வருகை தந்திருந்த அனைவருக்கும் இலவசமாக வழங்கி தமது அன்பை தெரிவித்துக்கொண்டனர்.உண்மையில்உலகத் தமிழ்ச்சிற்றிதழ்ச்சங்கம் ஆறு மாநாடுகளை வெற்றிகர மாக நடாத்தி முடித்துள்ளது. இது இச்சங்கத்தின் தொடரான செயற்பாடுகளிற்கும் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குமான ஒரு கட்டியங் கூறுகின்ற தொன்றாகவே அமையப் பெறுகின்றது.
O- இதழ் 29

Page 44
பயணக் கட்டுரை
இந்தியப் அருள்திரு இராே
கார்த்திகை மாதக் கடைசிக் கிழமையி லிருந்து மார்கழி முதற் கிழமைவரை இந்தியாவில் கழித்தேன். முதற் கிழமை மயிலாப்பூரிலுள்ள தியான ஆச்சிரமத்தில் பிரபல பைபிள் பேராசிரியர் அருள்திரு இராசா அவர்களின் ஆன்மீக நெறிப்படுத்தலில் நானும் எனது நண்பன் அருள்திரு அன்ரன் மத்தயாஸ் அவர்களும் தியானம் மேற்கொண்டோம். ஆன்மீக நெறிப்படுத்துநர் காலை 9 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்குமாக இரண்டு ஆன்மீக உரைகள் நாள்தோறும் வழங்கினார். எஞ்சிய நேரம் தனிச்செபம், சுயவாழ்வுத் தியானம், திருப்பலி ஒப்புக்கொடுத்தல், பைபிள் வாசித்தல், ஆன்மீகப் புத்தகம் வாசித்தல் என நாட்கள் விரைவாகக் கழிந்தன. பயனுள்ள அனுபவமாக அமைந்தது; என்னுள்ளே சென்று என் ஆளுமை, வாழ்வுபற்றிய பல புதிய உண்மைகளை அறிந்துகொண்டதோடு புதிய தீர்மானங்களும் எடுக்க முடிந்தது. அவை இன்றும் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருப்பதை உணர்கின்றேன்.
அதே ஆச்சிரமத்தில் எதிர்பாராதவிதமாக அருள்திருதம்பிராஜாவோடு கதைக்க நேர்ந்தது. அவர் வர்ணாசியில் இடம்பெறும் கிறிஸ்து பக்தி இயக்கம் (Krist Bhakti Movement) uppili dalami. 8ћg சகோதரர்களின் மைய நகரமான வர்ணாசியில் இந்துக்களுக்கு எவ்வாறு இயேசுவின் ஆளுமை, பொன்மொழிகள், போதிக்கப்படுகின்றது என்பதை விபரித்துக்கொண்டிருந்தார். இதில் ஈடுபட்டுள்ள குருக்கள் எவரும் சமயம் மாற்றும் முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.இந்து சகோதரர்கள் ஆயிரக்கணக்கில் வந்து இயேசுவின் வாழ்வு போதனை அன்றாட வாழ்வியலுக்கு வழங்கும் நெறிகள் பற்றி அறிவதில் ஆர்வமாக உள்ளனர். இங்கு சாதி வேறுபாடின்றிப் பலர் கலந்துகொண்டுஉணவுபரிமாறிக் கொள்கின்றனர். தியானம், வழிபாடு, போதனை, குணமாக்கல் என்பனவற்றில்கலந்து பயனடைகின்றனர். மாதம் ஒரு தடவை 8 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரையான இந்து சகோதரர்கள் பல கிலோ மீற்றர் தொலைவிலிருந்து வந்து இரவில் விழித்திருந்து சற்சங் (மறையுரை) கேட்பதிலும் செபிப்பதிலும்கழிக்கின்றனர். வர்ணாசியில் இது நடப்பதைகேட்க எனக்கு வியப்பாக இருந்தது. எனக்கும் அவருக்குமிடையே இந்து மதத்திலுள்ளநல்ல அம்சங்கள், இயேசுவின் தனித்துவம் என்பன பற்றிய சுவாரஸ்யமான கலந்துரையாடல் இடம்பெற்றது. பகவற்கீதை, உபநிடதக் கருத்துகளும் கத்தோலிக்க திருச்சபையின் போதனைபற்றியும்
ஜீவநதி (

பயணம்
சந்திரம் ஸ்ரலின்
பகிர்ந்து கொண்டோம். இருவரது சிந்தனைகளையும் கிளறுவதாக இது அமைந்தது. இதுபற்றி ஒரு கட்டுரை எழுதவும் தீர்மானித்துள்ளேன்.
தியானத்தின் பின்னர் அருள்தந்தை அன்ரன் மத்தயாசும் நானும் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி கோயில்பட்டிக்குச் சென்று அங்கிருந்து இருவரும் பிரிந்தோம். கோயில்பட்டி முற்றிலும் புதிய இடம். எந்த பளம் எங்கு எடுப்பது என்று அறியாநிலை. ஒரு வயோதிபரிடம் கேட்டபோது அவரே கூட்டிச்சென்று பஸ்சைக் காண்பித்தார். அவ்வாறே தாப்பாத்தியி லிருந்து மதுரை செல்லும்போது இரண்டு பஸ்கள் எடுக்கவேண்டும். பஸ்நடாத்துநரிடம் நான் ஊருக்குப் புதிது உரிய இடத்தில் இறக்கிவிடச் சொன்னேன். இறங்கும்போது என் அடுத்த பயணத்திற்கான வழிகாட்டலையும் தந்தார்கள். அப்போது இம்மாதிரி யான சம்பவங்கள் சில நினைவில் தோன்றின. இத்தாலியிலுள்ள பலர் மோவிலிருந்து மிலானுக்கு பிளேனில் வந்திறங்கி, இரயில் நிலையத்திற்குச் செல்லவேண்டும். கண்ட இத்தாலியர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. விலகிச் சென்றார்கள். ஒரு இளம் பெண் உயர்பதவிவகிப்பவர் என அவரது உடைஉணர்த்தியது. நான் குரு என்று ஆங்கிலத்தில் அறிமுகம் செய்தேன். அவர் இரயில் நிலையத்திற்குக் கிட்டவரை கூட்டிவந்து காட்டிவிட்டுச் சென்றார். இவர் தன் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தவர். தனக்கு வேலைக்கு நேரம் சென்றுவிட்டது என்று மரியாதையாச் சொல்லிச் சென்றுவிட்டார். நன்றிதெரிவித்தேன்.
ஆனால் இங்கிலாந்தில் நிலக்கீழ் இரயில் நிலையங்களில் இடம்தெரிந்தவர்கள் துணையின்றிப் பயணம் செய்வது மிகக் கடினம். அங்கு யாரிடம் உரிய மேடையை அடைய வழிகேட்பது எந்த இரயிலில் ஏறுவது என்று அறியாது விழிக்கும் நிலை. உதவிகேட்டு அணுகியபோது விலகிச் சென்றனர். நான் கறுப்பாக இருந்ததும், அங்கு வழிப்பறி, குற்றச் செயல்கள் இடம்பெறுவது காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மணிலாவில் யாரிடம் வழிகாட்டக் கேட்டாலும் தமது நேரம் அசெளகரியங் களைப் பாராது எம்முடன் நடந்து வந்து உதவுவார்கள். ஒரு தடவை ஒரு ரைக்சி ரைவர் இறங்கி என்னோடு வந்து இடம்காட்டிவிட்டுச் சென்றார். இலங்கைத் தமிழர்கள் பெரும்பாலும் நின்றநிலையில் எப்படி உரிய இடத்தை அடைவது என்று அறிவுறுத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள், அல்லது அந்த இடத்தில் விசாரியுங்கோ காட்டுவினம் என்று கூறிவிட்டுத் இதழ் 29

Page 45
தம்பாட்டில் சென்றுவிடுவர்.கிராமப் புறங்களில்உதவும் மனப்பாங்கு அதிகம் என்றாலும், கூடவந்து உதவும் மனப்பாங்கு பெரும்பாலோரில் குறைவு. இதில் நாம் வளர இருக்கு.
நான்எட்டயபுரத்துக்கு (பாரதியாரின்கிராமம் எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளதாப்பாத்திக்குச் சென்றிருந்தேன். அங்குதான் இலங்கைத் தமிழருக்கான முகாம் ஒன்று இருந்தது. காய்ச்சல், பயணக் களைப்பினால் அன்றே திரும்ப முடியவில்லை. இரவு தங்கியிருக்க வேண்டிய நிலை. தங்குவதாயின் பதிவு செய்ய வேண்டும், அது பெரிய விசயமில்லை என்று நான் தங்கியிருந்த வீட்டு நண்பன் சொன்னார். பாஸ்போட் கொண்டு வரும்படி கேட்டார். அது என்னோடு இருக்கவில்லை. இலங்கையில் அடையாள அட்டைகேட்பதுபோல் அங்கு யாரும் கேட்க மாட்டர்கள், அங்கு தொலைந்தால் இலங்கை திரும்பி வருவது தொல்லையாகும், என நினைத்து அதை சென்னையில் வைத்துவிட்டு பாஸ்போட் வீசா போட்டோப் பிரதியுடன் மட்டும் சென்றேன். பதிவு என்று நான் நினைத்தது புலனாய்வுத் துறையின் விசாரணை என்பதை கேட்கப்பட்ட கேள்விகளிலிருந்து புரிந்து கொண்டேன். பின்னர் தாம் யார் என்பதைச் சொன்னார்கள். சென்ற இடமெல்லாம் பாஸ்போட் கொண்டு செல்ல வேண்டிய அவசியத்தைஅப்போது புரிந்து கொண்டேன்.பாஸ்போட் பெற்ற திகதி காலவதியாகும் திகதி வீசா பெற்ற நாள் முடிவடையும்நாள், வீசா இலக்கம், இந்தியாவந்தநாள், தங்கிய இடங்கள், ஈடுபட்ட செயற்பாடுகள் என்பனவற்றை முக்கிய தகவல்களாக பதிந்து கொண்டார்கள். தங்குபவர்கள் விசாரிக்கப்படுவது எல்லா இலங்கைத் தமிழர் முகாம்களிலுள்ள நடைமுறை என்பதை வேலூர் தமிழர் முகாம் சென்றபோதுதான் உறுதிப்படுத்த முடிந்தது.
புலம்பெயர் இலங்கைத் தமிழர் வீடுகள் ஒலை வேயப்பட்ட மண்வீடுகள்தான். வசதியுள்ளவர் கள், வெளிநாட்டுப் பணம் பெறுபவர்கள், தம் வீட்டை மண்வீட்டை விட ஓரளவு சிறப்பாக அமைத்துள்ளனர். தாப்பாத்தி, எட்டயபுரப் பகுதியில் வாடகைக்கு வீடு கிடைக்கும் நிலையிலில்லை. அவ்வளவிற்குப் பின்தங்கிய கிராமங்களாகவே காணப்பட்டன. சென்னை-கன்னியாகுமரி வீதி மட்டும் சிறப்பாக இருந்தது. நமது ஆண்கள் வர்ணம் பூசுதல், கரி உண்டாக்கி விற்றல், கருங்கல் சூளையில் வேலை செய்தல் எனத் தாப்பாத்தியில் பார்த்தேன். நண்பனின் தந்தையார் எட்டயபுரத்தில் ஸ்ரூடியோ நடத்திக் கொண்டிருந்தார். அதற்கு எதிரில் இன்னொரு இலங்கைத் தமிழ் வயோதிபர் தேத்தண்ணிக் கடை நடாத்திக் கொண்டிருந்தார். அங்கு முயற்சியுடை யோராய் இருப்பது மகிழ்ச்சியாக இருந்தது. தமக்கு இந்திய மக்களைவிட மலிவான விலையில் அரிசியும் ஏனைய சில பொருட்களும் தரப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு 400 இந்திய ரூபாவும், வளர்ந்தோருக்கு ஜீவநதி

300 ரூபாவும் சிறுவர்களுக்கு 150 ரூபாவும் மாதாந்தம் வழங்கப்படுவதாகக் கூறினார்கள். வேலுர் முகாமிலுள்ளோருக்கு இப்படி இந்திய அரசுஉங்களைக் கவனிப்பதற்கு நன்றியாக இருங்கோ என்றேன். பலர் சிரித்தார்கள். அர்த்தத்தைப் புரிந்து கொண்டேன்.
பாடசாலையில் சாதிப்பிரச்சினைபற்றி இலங்கைத் தந்தை ஒருவர் தெரிவித்தார். இவரது பிள்ளை படிப்பில் சிறந்த புள்ளிகள் பெற்றவர். தூத்துக் குடியிலுள்ள ஒரு பாடசாலையில் தன் பிள்ளையைச் சேர்க்க முயன்றார். தகுதிஅனைத்தும் இருந்தது. ஆனால் என்ன சாதி என்று கேட்டபோது உண்மையைச் சொன்னார்."நீங்கள் உயர்ந்த சாதி இதுதலித்துகளுக்கு மட்டும்தான். வேறு பாடசாலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று மறுத்து விட்டனர். தலித்துகள் எழுச்சிபலமாக உள்ளது. ஆனால் இது எதிர்த்திசையில் செல்வது போன்று எனக்குத் தோன்றியது. சமநிலையை அடையும் நிலை என்றோ ஒரு நாள் வரும் என்று நினைத்துக் கொண்டேன்.
மறுநாள் வேலூருக்குப்புறப்பட்டேன். மதுரை பஸ்நிலையத்திலிருந்து இரயில் நிலையத்திற்கு அவசரமாகச் சென்றுகொண்டிருந்தபோது பழைய புத்தகசாலை ஒன்று தென்பட்டது. இரயில் பயணம் எட்டு மணித்தியாலம் என்பதால் ஐந்து புத்தகங்களை வாங்கினேன். பின்னர் கடைகளில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பன வாங்கினேன். அவற்றைப் படித்தபோது தமிழ் மொழிப் பிரயோகத்தில் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கண்டேன். வடமொழிச் சொற்கள் தவிர்க்கப்படுகின்றன. உதாரணம் கெளரவம் என்ற சொல்லுக்குப் பதிலாக கவுரவம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல. இந்தியர்கள் காசு கொடுத்து வாசிக்கிறார்கள் என்பது நல்ல விடயம், பத்திரிகைகள், சஞ்சிகைள் வாங்கிப் படிக்கின்றதை இரயில் பயணங்களில் காணமுடிகின்றது.
வேலூரிலுள்ள எனது நண்பன் அருள்திரு றோய் சென்னைப் பல்கலைக்கழக முனைவர் நிலை விரிவுரையாளர். அத்தோடு இவர் வேலூரிலுள்ள வேப்பூர் பகுதியில் பாடசாலை ஒன்றின் அதிபராக விளங்குகின்றார். அதிபரை அங்கு தொடர்பாளர் (correspondent) என்றே அழைக்கின்றனர். மேலும் இவர் பெற்றோரற்ற பெண்பிள்ளைகளுக்கான சிறுவர் இல்லத்தின் இயக்குநராகவும் விளங்குகின்றார். இயல்பாகவே நட்போடு பழகுவர். இரக்க சுபாவமும் உதவுவதில் தாராள மனமும் கொண்டவர். புத்தாக்கச் சிந்தனைகள் நிறைந்தவர். இவரோடு கழித்த நாட்கள் பல்வகையில் பயனுள்ளதாக அமைந்தது.
மறுநாள் காலை தனது பாடசாலையில் நிகழ்வு ஒன்றுக்கு அழைத்திருந்தார். அன்று அங்கு பகிர்வுதினம் (Charity Day). இப்பாடசாலை வகுப்பாசிரியர்கள், மாணவர்கள்,நிதிதிரட்டிசிலகிலோ மைல் தொலைவிலுள்ள வசதிகுறைந்த பாடசாலைக்கு அந்த நிதியைக் கொடுக்கும் தினமே அன்றைய தினம்.
s). இதழ் 29

Page 46
என்னை உரையாற்றும்படி கேட்டபோது இயேசுவின் முக்கிய அருள்மொழிகளில் ஒன்றான “பெற்றுக் கொள்வதைவிடக் கொடுப்பதிலேயே அதிக இன்பம் உண்டு" என்ற மையக் கருத்தில் உரையாற்றினேன். பகிர்ந்து வாழ்வதே ஒருவரது வாழ்வை அர்த்த முடையதாக்கும் என்று முடித்தேன். ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் மாணவரும் தமக்குரிய முறையில் தாமே முதலிட்டு நிதி சேர்க்க பரிந்துரை வழங்கியிருந்தார் அதிபர். தாம் பயன்படுத்திய முதலை எடுத்துக்கொண்டு இலாபத்தைமட்டும் கொடுப்பதோ, அல்லது இரண்டையும் கொடுப்பதோ ஆசிரியர்கள், மாணவர்களைப் பொறுத்தது என்று சுதந்திரம் கொடுத்திருந்தார். ஒவ்வொரு வகுப்பினரும் சிறு சிறு உணவுக் கடைகள் போட்டிருந்தார்கள், உடனுக்குடன் சமைத்துக் கொடுத்தார்கள். விளையாட்டுகள் நிகழ்த்தியும் நிதி சேகரித்துக் கொண்டிருந்தார்கள். வறிய பாடசாலை அதிபரும் மாணவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். அப்பாடசாலைச் சிறுவர்கள் இவர்களை மகிழ்விக்க நடனமாடினர். பின்னர் சேர்க்கப்பட்ட தொகைப்பணம் வறிய பாடசாலை அதிபரிடம் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இப்படி இலங்கையிலுள்ள வசதி படைத்த அரச மற்றும் தனியார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வறிய பாடசாலைகளின் வளர்ச்சிக்கு பகிர்வு தினத்தைக் கொண்டாடினால் எவ்வளவு நல்லது என்று நினைத்தேன். கனடா சென்றிருந்தபோது அங்குள்ள பாடசாலைமாணவர்கள, முதியோர் இல்லம்,சிறுவர் இல்லம் போன்றவற்றிற்குச் சென்று சேவை செய்ய ஊக்குவிக்கப்படுகின்றனர். கொடுக்கும் மனப்பாங்கையும், ஏழைகள் துன்புறுவோரின் நிலையை உணர்ந்து அவர்களுக்குப் பங்களிப்புச் செய்யும் மனப்பாங்கையும் வளர்க்கும். அந்த வகையில் சமூகத்தை மேம்படுத்துபவர்களாக மாணவர்களை உருவாக்கும் என்று நினைக்கின்றேன். நண்பன் றோயின் பாடசாலை முகாமைத்து வத்தின் திறமையையும் பிற சமயத்தவர் மட்டிலுள்ள நல்ல பரந்த மனப்பான்மையையும் பல விடயங்களில் காணக்கூடியதாக இருந்தது. அப்பாடசாலையில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் அனைவரோடும் அதிபர் அன்போடு பழகுவதைக் காணமுடிந்தது. நாம் இருவரும் பிற சமயத்தவர்மட்டிலுள்ள மனப்பாங்கில் ஒத்திருப்பதை உணர்ந்தேன். பாடசாலை முற்பகுதியில் ஒரு மண்டபம், அதில் எல்லா மதத்தினதும் முக்கிய நூல் ஒவ்வொன்று கண்ணாடிப் ப்ெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. மேற்சுவரில் ஒவ்வொரு சமயத்தின் அடையாளச் சின்னங்களும் அவற்றிற்கான அர்த்தங்களும் பிறேம் பண்ணப்பட்டிருந்தன.
பாடசாலையில் அழகிய படங்களுடன், அறிவுட்டும் வார்த்தைகள் என்பன பல இடங்களில் காணப்பட்டன. அத்தோடு முயல்போன்ற உருக்கொண்ட அழகிய வண்ண வண்ணக் குப்பை வாளிகள்

பொருத்தமான இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. வகுப்பறைகள், வளவு என்பன துப்பரவாகக் காணப்பட்டன. மாணவ மாணவிகளும் துப்பரவாகக் காணப்பட்டனர். அங்கு பிள்ளைகள், ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் உரையாடும் திறமை கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இப்பாடசாலையில் கற்ற மாணவிறம்மியா அன்றைய நிகழ்வுக்கு வந்திருந்தார். தற்போது இவர் சென்னையில் கொம்பியூட்டர் துறையில்கலைமாணிப் படிப்பில் ஈடுபட்டுள்ளார்.தான் முதுமாணிப்பட்டம்வரை படிக்க உள்ளதாகவும், இதற்கு அருள்தந்தையின் நெறிப்படுத்தலே காரணம் என்று சொல்லி மகிழ்ந்தார். பகிர்வு தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. நிகழ்வு முடிந்து சிறுவர்களும் வீட்டிற்குப் போவதாக இருந்தால் அதிபருக்கு அடுத்துப் பொறுப்பாக இருக்கும் அருள்சகோதரி(கன்னியாஸ்திரியிடம்) அனுமதி பெறவேண்டும் பெற்றோர் அல்லது பெற்றோர்அனுப்பும் சாரதிவந்து பொறுப்பேற்றால் மட்டும் வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும். மாணவர்கள் கடத்தப்படுதல் இடம்பெறுதல் இந்நடைமுறைக்குக் காரணமாக இருக்கலாம். பெற்றோர், அவர்களது சாரதிகளின் தொலைபேசி எண்கள் எல்லாம் அருள்சகோதரி பணிமனையில் இருந்தது நல்ல அம்சமாக இருந்ததை அவதானித்தேன்.
இவர் நடாத்தும் சிறுவர் இல்லம் இரண்டு மாடிக் கட்டடமாக அமைந்துள்ளது. அழகாகவும், துப்பரவாகவும்காணப்பட்டன. இப்படியல்லா இலங்கை யில் சிறுவர் இல்லங்கள் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். இங்குள்ளசிறுவர் இல்லப் பொறுப்பாளர் களுக்குப் பிரதி செய்து கொடுப்பதற்காக இவ்வில்லத் தின் அன்றாட செயற்பாடுகள் பற்றிய வீடியோக்கள் இருந்தால் தரும்படி கேட்டேன். ஆனால் அவ்வாறு தயாரித்துவைத்திருக்கவில்லை. அங்கு அதற்கு நேரடிப் பொறுப்பாளராக அருள்சகோதரி அலிஸ் இருந்தார். இங்கு பிள்ளைகள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். அருள்தந்தையோடும் அருள்சகோதரியோடும் பாசத் தோடுபழகினார்கள் என்நண்பன்இச்சிறுமிகளைத்தன் மகள்மார் என்று சொல்லிப் பெருமைப்படுவார். இங்கு கம்பியூட்டர் அறையிருந்தது, ரீவீ. இருந்தது. இம் மாணவர்களுக்கு ரியூசன் கொடுக்கும் இரண்டு ஆசிரி யைகள் தங்குவதற்கு அறை இருந்தது. சிற்றாலயமும் இருந்தது. அச்சிறுமிகளுக்கு மாலை திருப்பலி ஒப்புக் கொடுத்தேன். இலங்கைச் சிறுவர்களின் நிலை பற்றிச் சொன்னபோதுஉணர்வுபூர்வமாக ஒன்றித்திருந்தார்கள். பாடசாலை பகிர்வு தினத்திற்கு திரேசா (Theresa), 6 (Anne) 6T6th D &Dator (6 (38 studer யுவதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். விற்பனை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும் பின்னரும் பல அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டோம். ஜேர்மன் நாட்டில் பத்தாம் ஆண்டு முடித்து உயர்தரம் படிப்பதற்கு முன்னர் ஆறு மாதங்கள் ஒன்றில் இராணுவத்தில் இதழ் 39

Page 47
சேர்ந்து வேலைசெய்யவேண்டும் அல்லது சமூகசேவை செய்யவேண்டும் என்பது நடைமுறை. இவர்கள் இருவரும் சமூகசேவை செய்யவென இந்தியா வந்து ஒரு பின்தங்கிய கிராமப் பாடசாலையில் ஆங்கில ஆசிரியைகளாகப் பணியாற்றுகின்றனர். ஆங்கிலம் சரளமாகப் பேசினார்கள். சுடிதார் அணிந்து அழகாகக் காணப்பட்டனர். இந்திஉணவுகளை விரும்பிஉண்டனர். தம் பெற்றோருக்கும் இந்தியப் பெற்றோருக்கு மிடையேயுள்ள ஒரு முக்கிய அம்சத்தைக் குறிப்பிட்டனர்.ஜேர்மன் நாட்டில் ஒரு வளர்ந்த பிள்ளை எங்காவது சென்றால் தாம் போய்ச் சேர்ந்துவிட்டோம் என்றோ, அடிக்கடி தொலைபேசி எடுத்து எப்படி இருக்கின்றோம் என்று அவர்களுக்கு அறிவிக்கத் தேவையில்லை. தாம் தொலைபேசி எடுக்காவிட்டால் தாம் சுகமாக இருப்பதாக அவர்கள் புரிந்து கொள்வார்கள். தாம் தமது வாழ்வைச் சரியாகக் கையாள்வோம் என்று பெற்றோர் நம்புகின்றனர். ஆனால் இந்தியாவில் ஒரு பிள்ளை எங்காவது போனால் போய்ச் சேர்ந்ததை அறிவிக்க வேணும், அடிக்கடி சுகம் தெரிவிக்க வேணும் அல்லது பெற்றோர்களே அடிக்கடிஎடுப்பார்கள் என்றார். தமக்குப் பெற்றோர் நிறையச் சுதந்திரம் தருவதால் தாம் இளம் வயதில் முதிர்ச்சியடைவதாகவும் இந்தியாவில் பிள்ளைகள் பெற்றோரிலேயே அதிகம் தங்கி வாழ்கின்றனர் என்றும் தமது அவதானிப்பைத் தெரிவித்தனர். வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது நம்மையறியாமலே அந்நாட்டு அம்சங்கள் பலவற்றை நம் நாட்டு விடயங்களோடு ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்த்தல் இயல்பாக நடைபெறும் ஒன்று. அந்த வகையில் புதிய அறிவு கிடைக்கின்றதே பயணங்களின்முக்கியஅம்சமாகின்றது. என் நண்பன் அருள்திரு றோய் மறுநாள் ஞாயிறு திருப்பலியை தமது ஆலயத்தில் ஒப்புக்கொடுக்குமாறு கேட்டார். அந்த ஞாயிறுதினத்தை வருடம்தோறும் தலித்துகளின் சமத்துவத்துவதினமாக தமிழ்நாட்டுக் கத்தோலிக்கத்திருச்சபைகடைப்பிடித்து வருகின்றதை அறிந்து மகிழ்ந்தேன். எனவே அடுத்த நாள் மறையுரையை இயேசுவும் சாதிய சமத்துவமும் என்ற மையப்பொருளில் ஆயத்தம் செய்து கொண்டி ருந்தேன். வந்திருப்போருக்குப் பொருத்தமான செய்தி சொல்லும் நோக்கோடு, திருப்பலிக்கு வருபவர்கள் தலித்துகள் மட்டும்தானா வேறு ஆட்களும் வருவார் கள என்று நண்பனிடம்கேட்டேன்.கலந்து இருப்பார்கள் என்றார். எனவே இரு சாராருக்கும் இயேசுவின் செய்தியைச்சொல்லஅயத்தம்செய்திருந்தேன். ஆனால் அதைப் பயன்படுத்தும் வாய்ப்பு நழுவியது.
அன்றிரவு இலங்கைத் தமிழ்க் குடும்பம் ஒன்றிற்கு இராவுணவுக்கு என்னை அழைத்துச் சென்றபோது தமது முகாமிற்கு வந்து திருப்பலி ஒப்புக்கொடுக்குமாறு கேட்டனர். யாழ்ப்பாணத்தமிழில் திருப்பலியில் பங்குபற்ற அவர்களுக்கு ஆசை, ஜீவநதி

எனக்கும் அது விருப்பமாக இருந்தது. தான் இதற்கான அனுமதியை அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான குருவிடம் அனுமதி பெற்றுத் தருவதாக நண்பன் கூறினார். மறுநாள் காலை 8.30க்குத் திருப்பலி ஆரம்பம், முன்பாகவே சென்றிருந்தேன். இப்பிரதேசம் மலைப் பாங்கானது. கடும் குளிர் தாங்க முடியவில்லை. சற்று நேரம் வந்திருந்த சிலரோடுகதைத்துவிட்டு, நேரம் வரும்வரை வானுக்குள்ளேயே இருந்தேன். திருப்பலியில் அங்கிருந்த யாழ்தமிழருக்குப் பொருத்த மான வேறொரு மறையுரை ஆற்றினேன். திருப்பலி முடிய காலை உணவு தந்தார்கள். இம்முகாமை அணைக்கட்டு முகாம் என்று அழைத்தார்கள். அங்கும் ஒலைவேய்ந்த மண் வீடுகள்தான்.
பின்னர் அவர்களுக்கு இலங்கை நிலைபற்றி எடுத்துரைத்தேன். இரண்டு முகாமிலுள்ளவர்களில் (தாப்பாத்தி முகாம் உட்பட) பலர் இலங்கைக்கும் கொழும்புக்குமிடையே கப்பல் ஓட ஆரம்பிக்கும்போது நாடு திரும்ப உள்ளதாகக் கூறினர். வேறு சிலர் தலை மன்னாருக்குக்கப்பல்வரும்போதுவருவோம் என்றனர். திரும்பப் பிரச்சினை வருமா? பிரபாகரன் உயிராய் இருக்கிறாரா? என்ற இரு கோள்விகளையே முகாமி லுள்ளவர்களும் இந்திய நண்பர்களும் கேட்டார்கள். இந்திய அரசு இலங்கையில் யுத்த மீள் குடியேற்றத் தமிழருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து விட்டது போன்ற கருத்தே இங்கும் சந்தித்த இந்தியரது கருத்தினும் நிலவியது. அரச சார்புப் பத்திரிகைகளின் செல்வாக்கு காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
கத்தோலிக்கர்கள், குருக்கள், அருள் சகோதரிகளிடையே, தீண்டாமை வேரூன்றியிருந் தாலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியமை நல்ல அம்சமாகத் தெரிகின்றது. தமிழ்நாடுக் கத்தோலிக்க திருச்சபை அங்குசாதியசமத்துவத்தைஉருவாக்கப் பல முயற்சிகளை மேற்கொள்கின்றது. சாதிய விழிப் புணர்வுக் கருத்தரங்கு, தலித்திய இறையியலாக்கம். எனப் பல புதிய அம்சங்களை காண முடிந்தது. தமிழ் நாட்டில் தலித் கத்தோலிக்கர்களிடமிருந்து நான்கு ஆயர்கள் உருவாகிஉள்ளனர். சாதிய சமத்துவ விழிப் ‘புணர்வு என்பதைவிட தலித்துகள் தம் உரிமையை வலியுறுத்துவதில் கடும்தீவிரம் அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இலங்கைத் தமிழ்த் திருச் சபையில் நேரடியாக அன்றி, மறைமுகமாகச் சமத்துவம் ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்ற போதும் கொள்கை ஒன்று வகுத்துத் திட்டமிட்ட வகையில் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்பதை ஒப்பிட்டுப்பார்க்க முடிந்தது.விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள்கூட இடம்பெறவில்லையென்றே கூற G6USö(Bib. (BagflödöÉSšGSITukd (Goldentemple) அழகானது கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று நண்பன்தன் வாகனத்தில் என்னை அனுப்பிவைத்தார். அக்காலம் ஐயப்ப சாமி காலம் என்பதால் நிறையப் பக்தர்கள் வந்திருந்தார்கள். உள்ளே சென்றால்
இதழ் 29

Page 48
வெளியே வர நான்கு அல்லது ஐந்து மணித்தியாலம் என்று அறிந்ததும் உள்ளே செல்லாது இடையில் வெளியேறினேன்.இங்கோயில்தங்கமுலாமிட்டுபார்க்க அழகாக இருக்கும் என என்னோடு வந்த இலங்கை ஆட்கள் கூறினார்கள். வெளியே வந்தபோது பிரபா கரனின் படம் போட்ட போஸ்ரர் இருந்தது. அவரோடு சேர்த்து இந்தியர் சிலரின் படங்களும் இருந்தது. தடைசெய்யப்பட்ட இயக்கப்படம் இவ்வளவு பிரபல்ய மான இடத்தில் போடப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. எப்படி இங்கு நடக்கின்றது என்று நண்பனிடம் கேட்டேன். அவர் இறந்துவிட்டார் படம்போடுவதால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று அப்படியே விட்டுள்ளார்களாக்கும் என்றார்.
வரும்போது நாயக்கர்களால் கட்டப்பட்ட கோட்டையைப் பார்த்தேன். அது யாழ் கோட்டையைப் போன்ற கட்டிட அமைப்பைக் கொண்டிருந்தது. நளினி சகாக்கள் இங்குதான் முதலில் சிறைவைக்கப்பட்டதாக அறிந்தேன். தற்போது இன்னொரு சிறையில் இருக்கிறார்கள், பயணித்த வண்ணம் பார்த்தேன். அச்சிறையின் மதில் கிட்டத்தட்ட இருபது அடி உயரம் இருக்கும். அதன் மேலே முட்கம்பி இருந்தது. ரஜீவ் கொலையின் பின்னர் இலங்கை விடயத்திற்கான ஆதரவு மக்கள் மத்தியில் அவ்வளவாக இல்லை என்பதை இந்திய நபர்களிடமிருந்து அறியமுடிந்தது.
மறுநாள் நண்பனோடு வானில் சென்னை புறப்பட்டேன். சென்னைப் பிரதேசத்தில் என் இன்னொரு நண்பன் அருள்திரு சவிரிதாஸ் வாழ்கின்றார். ஒரு சபையைக் கொண்டு நடத்துபவராக விளங்குகின்றார். துன்பங்களைக்கண்டு துவண்டுவிடாதவர். நட்பு என்பது மனம் விட்டுப் பேசக்கூடியதாகவும் உண்மைத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியானவர். தாராளமனம் கொண்டவர். பாடசாலை யில் கட்டுப்பாட்டோடு அன்பையும் பொழிபவராக விளங்குவதை அவதானித்தேன். தான் உருவாக்கிய பாடசாலையின் அதிபராக இருக்கின்றார். இது ஆரம்பப் பாடசாலை. இது வறிய கிராமம் என்பது தெரிந்தது. அங்குள்ள ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசினர். எப்பிடிநீங்கள் இவ்வாறு தேர்ச்சிபெற்றீர்கள் என்று கேட்டேன். அதிபரின் உருவாக்கம் என்றார்கள். அதிபர் ஆங்கிலத்திலேயே அனைவருடனும் பேசுவார். அதுமட்டுமல்ல ஆங்கிலப் புத்தகம் ஒன்றைத் தானே எழுதி வெளியிட்டுஅனைவரையும் கற்க வைக்கின்றார். தனியார் பாடசாலை என்பதால் ஆசிரியர்களை நிரந்தரமாகத் தக்க வைப்பது கடினமாக உள்ளதாகத் தெரிவித்தார். கூடுதல் ஊதியம் கிடைக்குமிடத்திற்குச் சென்று விடுகின்றனர்.அதனால்தான் கொடுத்த பயிற்சி தம் பாடசாலைப் பிள்ளைகளுக்குக் கிடைப்ப தில்லையே என்பது இவரது ஏக்கம், நண்பன் ஒரு குடும்பத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். அங்கு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி என்னோடு ஆங்கிலத்தில் பேசியது ஆச்சரியமாக இருந்தது, ஜீவநதி
C

இந்தியாவில் ஆங்கிலம் வளர்ந்த அளவிற்கு இலங்கையில் இல்லை என்பது உண்மை. ஆங்கிலத்தில் கல்வி இடம்பெற்றபோது இனத்துவேசம் காரணமாக சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவந்ததன் விளைவைக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு கழித்தே சிங்களத்தலைவர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
நண்பன்சுவாரஸ்யமானசம்பவம் ஒன்றைப் பகிர்ந்தார். கடவுள்கள் பைத்தியங்களாக இருக்க (Raj60sr(Sub (Gods must be crazy) 6T6irp spoup D ஆங்கிலப்படத்தை இவர் பாடசாலையில் காண்பித்தார். எனக்குப் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. விமானத்திலிருந்து வீசப்பட்ட ஒரு கண்ணாடிப் போத்தலை ஆபிரிக்கக் கிராம வாசி ஒருவர் எடுத்ததிலிருந்து அக்கிராமத்தில் ஏற்பட்ட பல மாற்றங்களை விபரிப்பதாகக் கதை அமைகின்றது. விஞ்ஞானத்தின் வரவும், ஆயுதக் கலாச்சாரமும் எவ்வாறு மனித உறவுகளையும் சமுதாயத்தையும் சின்னபின்னமாக்கிச் சிதைத்துவிட்டது என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட படம் இது. இது ஆபிரிக்க கிராமத்தைக் களமாகக் கொண்டதால் அரைகுறை ஆடையுடன் வரும் காட்சிகளுண்டு. இதைப் பார்த்தபிள்ளைகள்தம்ஊரில் அப்படம்பற்றிச்சொன்ன கதை யார் காதிலோ ஆபாசப் படம் போட்டுக் காட்டப் பட்டதாகத் திரிபடைந்தது. ஒரு கூட்டமே வெகுண் டெழுந்து திரண்டு வந்தது. கம்பியூட்டர் அறையை தாம் சோதிக்க வேணும் என்று வற்புறுத்தினார்கள். நண்பன் பொறுமையோடும் கனிவோடும் அனைவரையும் இருத்தி அந்தப் படத்தைப் போட்டுக் காண்பித்தார். அவர்கள் தம்பிழையை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுத் திரும்பினார்கள். நமது பாடசாலைகள்நல்ல அறிவூட்டும் படங்களைக் காண்பிப்பது எவ்வளவு நல்லது
நந்தலாலா படம்பற்றி இரண்டு சஞ்சிகைள் எதிர் எதிரான கருத்துகளை வெளியிட்டிருந்தன. பார்க்க விரும்பினேன். எதிர்பாராதவிதமாக என்நண்பன்றோய் ஒருநாள் இராவுணவின் பின் நல்ல படம், வாரும் பார்ப்பம் என்றார். அது நந்தலாலாதான். உண்மை யிலேயே நல்ல படம்தான்.தன் தாயைத் தேடி அலையும் உளநோயாளி, கைவிட்டுச் சென்ற தாயைத் தேடும் சிறுவன், வறுமையில் வாடும் இளம் விபசாரிப் பெண் என்ற மூன்று பாத்திரங்களைக் கொண்ட ஒரு பயணக் கதை, சலிப்பின்றி, யதார்த்தத்திற்குப் புறம்பான சண்டைகள், காதல் கற்பனைகள் இன்றி இயல்பாகக் கதை நகர்கின்றது. தாய்க்கான ஏக்கம் ஒரு புறம் வலியுறுத்தப்படுகின்றது, மறுபுறத்தில் உளநோயாளிகள் வைத்தியசாலையிலா? சமூகத்திலா? எனச் சிந்தித்து முடிவெடுங்கள் என்று கூறுவதுபோன்று படம் அசைகின்றது. மனிதத்துவத்தின் உச்சங்களை உளநலம் குன்றியோரிலும், உடல்நலம் குன்றியவர்களிலும், கொடூரத்தின் உச்சங்களை சமூகத்தில் உளநோயாளர் கள் எனப் பச்சை குத்தப்படாத நலமானவர்கள எனச் சாதாரணமாகக் கருதப்படு வர்களிலும் காண ඕඹ්ජ් 89

Page 49
அழைக்கின்றார் கதாசிரியர். பணக்கார வீட்டில் வசதியோடு வளர்ந்தும் தன் தகப்பனை ஏக்கத்தோடு தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு இளைஞனைப் பற்றிய கதை கொண்ட ஒரு ஆங்கிலப் படத்தை பல வருடங்கள் முன் பார்த்த ஞாபகம்.
ஈரோட்டிலிருந்து வேலூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஏழைப் பெண் ஒருத்தி இருவகைப் பழங்களை விற்றுக்கொண்டிருந்தார். இலங்கையில் காணாத பழம்தான் ருசித்துப் பார்ப்போம் என்று ஒரு வகைப் பழத்தை மட்டும் வாங்கினேன். பத்து ரூபாவுக்குப் பத்துப் பழம், ருசியாக இருந்தது. இரண்டு காய்கள் பழுக்காதிருந்தன. இப்படி விற்பது அநியாயம் என்று அவவுக்குச் சொல்ல வேண்டும் என்று என் மியைான நீதியுணர்வு ஒரு பக்கம் பொங்கியெழுந்தது. சா. இந்தப் பழத்தை விற்கிற இந்த அம்மா ஒரு ஏழை. இதை விற்ற காசைக்கொண்டுபோய்த்தான் சமைப்பா. பாவம் என்று இரக்ககுணம் வெற்றிகொண்டது. காய்கள் பற்றி அவவிடம் எதுவும் சொல்லகூடாது என்று மெளனமாக வெளியே எறிந்தேன்.
பொதுவாக, இந்தியாவில் துப்பரவு நிலை பேணல் இன்னும் எவ்வளவோ வளர்ச்சியடைய இடம் உண்டு. ஆனால் நான் ஆறு வருடங்களுக்கு முன்னர் சென்றதைவிட தற்போது முன்னேற்றம் உண்டு. புகையிரத நிலையத்தில் வெற்றிலை துப்பினால் 500 ரூபாவும், புகை பிடித்தால் 200 ரூபாவும் தண்டப்பணம் என்று எழுதப்பட்டிருந்தது. வெற்றிலைத் துப்பலையோ புகை பிடித்தலையோ காண முடியவில்லை. ஆனால் துப்பரவு, அழகு பேணல் உண்டு என்பதும் உண்மை.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருள்தந்தை றொசான் சென்னையில் பிரபல்யமான லோயலாக் கல்லூயில் ஊடக முதுகலைமாணி கற்கின்றார். அவரோடு அங்கு சென்றிருந்தேன். அங்கு புற்கள் பதித்து, பூங்கன்றுகள் வைத்து. கட்டடங்கள் அழகுற வர்ணம் பூசி, துப்பரவாகக் காட்சி தந்தது. நுழைவாயிலில் நிலப்படம் காணப்பட்டது. ஒவ்வொரு துறைக்குமான பெயர்கள் வருவோர் இலகுவில் அடையாளம் காணக்கூடியதாக பெரிதாக இருந்தது. நமது பல்கலைக் கழகங்கள் அந்நிலையை எப்போது அடையுமோ என்ற ஏக்கம் என்னைக் கவ்விக்கொண்டது.
உள்ளே நுழையும்போது பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளே செல்வதுபற்றி வினாவினார். அன்று விடுமுறை நாளாக இருந்தும் குருக்கள் என்றதால் உள்ளே விட்டுவிட்டார். பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்கலைக்கழகங்கள், அலுவலகங்களில் உள்ளே செல்லும்போது பாதுகாப்பு அலுவலரிடம் அடையாள அட்டை அல்லது பாஸ்போட் ஒப்படைக்க வேண்டும். திரும்பி வரும்போது மீள ஒப்படைக்கப் படும். பெயர், விலாசம், உள்ளே செல்வதன் நோக்கம், உள்ளே செல்லும் நேரம் என்பன பதிவு செய்யப்படும். கையொப்பம் இடவேண்டும். மாணவர்கள் பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் இலத்திரனியல் அடையாள அட்டையின்றி உள்ளே நுழைய முடியாது. உள்ளே
ஜீவநதி -C

நுழையும்போது பாதுகாப்பு அலுவலர் அதற்கெனஉள்ள இலத்திரனியல் இயந்திரத்தில் போட்டு அது போலியானதல்ல என்பதை உறுதி செய்வார். பின்னர் மாணவரிடம் உடனே கையளிக்கப்படும். வெளியாட்கள் மாத்திரம் அடையாள அட்டையை ஒப்படைத்துவிட்டு, திரும்பும்போது மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நடைமுறைகள் இரண்டும் நமது பல்கலைக் கழகங்களில் கடைப்பிடிக்கப்பட்டால் எத்தனை பிரச்சினைகள் உருவாகாது தடுத்துவிடும்!
இயேசுவின் நெருங்கிய நண்பர்களான திருத்தூதர்கள் (அப்போஸ்தலர்கள்) இயேசுவின் இறப்பின் பின்னர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று இயேசுவைப்பற்றிப் போதித்தனர். அவர்களில் ஒருவரான புனித தோமையார் கேரளப் பிரதேசத்திற்கு வந்து பின்னர் சென்னைக்கும் வந்து வாழ்ந்தார். அவரோடு தொடர்பான மூன்று இடங்கள் சென்னையில் உண்டு ஒன்று மயிலாப்பூரிலுள்ள அவரது கல்லறையும் அதனோடுள்ள பேராலயமும், அவர் வாழ்ந்த குகை கொண்ட சின்ன மலை, பிராமணர் ஒருவர் இவரைக் கொலை செய்து பறங்கி மலை. இது மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ளது. இம்மலையில் அவர் தங்கியிருப்பதும் செபிப்பதும் உண்டு. அவர் தானே செய்து பயன்படுத்திய கருங்கல் சிலுவை ஒன்றும், இயேசுவின் தாய் மரியாளை லூக்காஸ் என்ற சீடர் தேமையாருக்கு வரைந்து கொடுத்த படமும் இம்மலை உச்சியிலுள்ள ஆலயத்தில் உண்டு. இவரது வாழ்வு பற்றிக் கட்டுரை எழுதியதால் பைபிளில் உள்ளதை விட அதிக விடயங்களை இவர்பற்றி அறிய முடிந்தது. இதனால் இவர்மீது எனக்கு தனிப் பக்தி உண்டு. எனவே அவரது மலைக்கு ஏறிப்போய் வந்தேன்.
வேளாங்கண்ணிக்குச் செல்வது பிரதான நோக்கமாக இருந்தாலும் பல தடவை முயற்சித்தும் போகவேண்டாம் என்று செபவேளையின்போது, உள்ளுணர்வு தடுத்தது. காரணம் புரியவில்லை. அதனால் திருச்சியிலுள்ள பூண்டி மாதா கோவிலுக் காவது செல்ல முயற்சித்தேன். அதுவும் கைகூடவில்லை. ஆனால் புனித தோமையாரின் திருத்தலங்களுக்குப் போனது எனக்கு ஆத்ம திருப்தி, இதையே இறைவன் விரும்பினார்போலும் என்று ஏற்றுக்கொண்டேன்.
இம்மலையில் நடந்த கொலை ஒன்றுபற்றிக் கேள்வியுற்று அதிர்ச்சியும் கவலையுமடைந்தேன். இந்துத் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிலர் இம்மலையில் தமக்கும் சிறிய இடம் தருமாறு குருவானவரிடம் கேட்டனர். அப்படிக்கொடுப்பது தன் அதிகாரத்துக்கு உட்பட்ட விடயம் அல்ல என்று மறுத்து விட்டார். இதனால் அவரிடம் பணிபுரிந்து ஒரு ஆலயப் பணியாளை அணுகி “நீ சொன்னால் அவர் கேட்பார். கேட்டு எங்களுக்குக் சிறு துண்டு வாங்கித்தா." என்றார்கள். குருவைப் போலவே அவரும் பதிலளித்தார். ஒரு நாள் இரவு குருவைக் கொலை செய்ய வந்தார்கள். அன்று குரு இருக்கவில்லை.
இதழ் 29

Page 50
ஏமாற்றமடைந்த அவர்கள் பணியாளை வெட்டிக் கொன்றுவிட்டுச் சென்றனர். புனித தேமையாரின் கொலையின் தொடர்ச்சி இது என்று நினைத்தேன். சமயத்துக்காகக் கொலை செய்பவர்கள், பிறசமய ஆலயங்களை அழிப்பவர்கள் மனநோயாளிகள் என்பதே என் கருத்து. அருள்சகோதரி ஒருவர் வட இந்தியாவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றைக் கூறக்கேட்டுப் புல்லரித்தேன். இந்துத் தீவரவாதிகள் கத்தோலிக்க குருவைக் கொல்வதற்கு இரவு சென்றார்கள். இவர்கள் வந்ததை அறிந்து அவர் இருளிலே நழுவிச் சென்று தப்பித்துக்கொண்டார். வந்தவர்கள் ஆலயத்தினுள்ளே இருந்த திருச் சுரூபங்கள், படங்களை உடைத்து நொறுக்கினர். ஒருவர் கோயிலின் மையப்பகுதியில் இருந்த நற்கருணைப் பேளையை உடைத்து அதனுள் இருந்த இயேசுவின் உடலை (வெள்ளை அப்ப வடிவில் இருந்தது) அதன்மேல் சிறுநீர் கழித்தார். ஒரு கிழமைக்குள் அவருக்கு திடீரென சிறுநீர் தொற்றுநோய் ஏற்பட்டு வேதனைப் பட்டார். அப்போது அங்குள் வைத்தியர்கள் சொன்னார் களாம்! நீ செய்த பாவத்துக்கு உனக்கு உடனே தண்டனை கிடைச்சிட்டுதுஎன்று. புதுக்குடியிருப்பில் பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் ஒன்று நினைவிற்கு வந்தது. ஒரு கத்தோலிக்க ஆலயத்தி லிருந்த திருச்சுரூவத்தின் கழுத்தை முறித்து அதன் தலையை வேறிடத்தில் ஒரு இந்து சகோதரர் போட்டு விட்டுச் சென்றாராம். சில வருடங்களின் பின்னர் அவர் கழுத்து வெட்டப்பட்டு தலை வேறாக எறியப்பட்டி ருந்ததாம்.
இந்துத் தீவிரவாதிகளால் ஆலயங்கள் சேதப்படுத்தல், கொலைகள் பற்றியும் அறிந்தேன். இத்தகைய பல சம்பங்களைக் கேள்வியுற்றபோது ஒரு கரையில் அறியாமையால் இவ்வாறு நடந்துகொள் கின்றனரே என்ற துக்கமும் மறுகரையில் குருக்களும் அருள் சகோதரிகளும் மக்கள் நலனுக்காக உயிர்துறக் கின்றனரே என்பது மகிழ்ச்சி தந்தது. இலங்கைத் தமிழர் மத்தியிலே சமயத்துவேசம் முற்றாக வேரனுந்துவிட வில்லையெனினும் இந்தியாவிலுள்ளது போன்ற வெறித்தனம் இங்கு இல்லை என்பது ஆறுதல் தரும் விடயம். அதற்கும் மேலாக, இங்கு இந்து சகோதரர்களே ஒளிவிழாவுக்கு இடமளிப்பதும் மனமுவந்து பங்களிப் புச்செய்வதையும் நேரடியாகக் கண்டு மகிழ்ந்திருக் கின்றேன். ஆனிமாதத்தில் இயேசுவின் திருவுடலை (வெண்ணிறக் கோதுமை அப்ப வடிவில்) ஊர்கள் வழியாகப் பவனியாகக் கொண்டு வருவதை அறிந்து இந்து, பெளத்த சகோதரர்கள் தம் வீட்டு முன்புறத்தைத் துப்பராவாக்கி அழகுபடுத்தி, குத்து விளக்குகள் கொழுத்தி வரவேற்பதை இன்றும் காணமுடிகின்றமை நல்ல அம்சம்.
அருள்சகோதரி ஒருவர் தேர்தலில் வாக்களிக்கும்போது பின்பற்ற வேண்டி அடிப்படைகள் எவை என்பது பற்றிக் கிராம மக்கள் மத்தியில் விழிப்
ஜீவநதி -C

புணர்வை ஏற்படுத்தினார். அதனால் நல்லவர் ஒருவர் தெரிவு செய்யப்பட ஊழல் நிறைந்த அரசியல்வாதி தோல்வியைத் தழுவினார். இதைப் பொறுக்காத அவர் அந்த அருள்சகேள்தரியை ஆட்கள் வைத்துக் கடத்தி உடலை நிர்வாணமாக்கிக் குரூரமாகக் கொலைசெய்து எறிந்திருந்தார். இன்னொரு சம்பவத்தில் ஏழை மக்களின் காணி உரிமைக்காகப் போராடிய ஒரு குருவின் கழுத்தை வெட்டி வேறு இடத்தில் எறிந்தனர். இலங்கையில் கருணாநிதிபற்றி எதிர்மய மான கருத்துகள் உண்டு. அங்கு "குடும்ப ஆட்சி நடக்கிறது என்ற குரலைக் கேட்கக் கூடியதாக இருந்தது. ஆனால் இன்னும் சிலர் அவரது ஆட்சியிலுள்ள நல்ல அம்சங்களைச் சொன்னார்கள். ஒன்று சிறப்பான வீதிகள் அமைத்துக் கொடுக்கின்றார். யப்பானை வரவழைத்து கார்க் கம்பெனிகள் இங்கு போடப்படுவதால் பலர் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர். இரண்டும் உண்மை. சிறப்பான பிரதான வீதிகள் எங்கும். வேலூரிலிருந்து சென்னைக்கான தூரம் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் தூரம். வவுனியா செல்ல இப்போது ஐந்து மணித்தியாலம் போதாது. ஆனால் நண்பன் றோயின் வானில் ஒன்றரை மணித்தியாலத்தில் வந்தோம், கடும் மழை, எல்லா இடமும் வெள்ளம். ஆனால் வந்த வீதியில் வெள்ளம் இருக்கவில்லை. காரணம் வீதிகள் உயர்வாகப் போடப்பட்டிருந்தன. ஆனால் சென்னை நகரிலுள்ள பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததை மறுக்க முடியாது. நோயாளருக்கான மருத்துவச் செலவின் ஒரு பகுதியை கொடுப்பது, அரிசி ஒரு ரூபாவுக்குக் கொடுப்பது, அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் ரீவி கொடுப்பது என்பன இவர் செய்வதாக ஒரு சாரர் மகிழ்கின்றனர். நான் சென்ற நேரம் சென்னையில் செம்மொழிப் பூங்கா திறப்பதற் கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பயணித்தவாறு அதனைப் பார்த்தேன். சென்னையில் கார்கள், வான்கள் தொகை அதிகம் பெருகி நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதும் அவதானிக்க முடிந்தது.
வடஇந்தியாவிலிருந்து மார்வாடிகள் தமிழ் நாட்டிற்கு வந்து வட்டிக்கடைகள் நடாத்துவதோடு காணிகளை வாங்கிக் கொண்டிருக்கின்றதாகவும், எதிர்காலத்தில் இப்பிரதேசம் அவர்களின் ஆட்சிக்குள் வந்துவிடும் ஆபத்து உள்ளது. இதைத் தமிழர்கள் உணருவதாகத் தெரியவில்லை என்றார் ஒருவர். அப்போது யாழ்ப்பாணத்துத் தமிழர் சிலர் பணம் நிறையக் கிடைத்தால் திருப்திஎன்று எண்ணிக்கொண்டு தமிழருக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்துகளை உணராது காணி விற்கும் செயல் பற்றி இலங்கை பத்திரிகைகளில் படித்ததை நினைவு கூரவைத்தது.
உடல்நலம் குன்றியிருந்தாலும் இப்பயணம் எனக்கு ஆன்மீகம், அறிவு வளர்ச்சி சார்ந்த வகையில் பல நன்மைகளைத் தந்தாக உணர்கின்றேன்.
S)- &B:ög 29

Page 51


Page 52
பியூஜி பிலிம் றோல், நட் P பட்டறிகள் போன்றவ லறையாகவும்
Digital C
விஸ்ட்டாவிஷன்
டிஜிட்டல் கலர் லாய்
52,பலாலி வீதி, யாழ்ப்பாணம். (இலுப்பையடிச்சந்தி அருகாமை)
astr. (Bu: 021 2225187
 
 
 
 
 
 
 
 
 
 

39]
JATI JoUL 1ற்றை மொத்தமாகவும் பெற்றுக்கொள்ள ங்கள்
O O Vision Dolour Lab
கிளை நிறுவனம்
விஸ்ட்டாவிஷன் டிஜிட்டல் கலர் லாய் 347,கே.கே.எஸ்வீதி, யாழ்ப்பாணம்.
(ஸ்டான்லி வீதி, கே.கே.எஸ் வீதி சந்தி அருகாமை) தொ.பே: 021 2228510