கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2011.03

Page 1


Page 2


Page 3
றதியினுள்
கவிதைகள்
எம்.கே.முருகானந்தனர் பேருவளை றபீக் மொஹரிடீ பெரிய ஐங்கரனர் குறTபணி மனினுTரானர் ஷிஹார் த.ஜெயசீலன் வெதுவத்யந்தனி தாட்சாயணி ஆரையூர்த் தாமரை தெ.இந்திரகுமார் அரிசெகனர்
சிறுகதைகள்
யோகேளப்வரி சிவப்பிரகாச அஷ்ரப் சிஹாப்தீன் க.நவம் உ.நிசார் காதவபாலன்
கட்டுரைகள்
U. ott CD 627 கல்வயல் வேகுமாரசாமரி பிரகலாத ஆனந்த் யுகாயரினி தி. ஞானசேகரனர் தவராஜா வசந்தனி
நூல் விமர்சனம் கே.ஆர்.டேவிட் நூல் அறிமுகக் குறிப்புகள்
அர்ச்சுனனி
கலை இலக்கிய நிகழ்வு
 


Page 4
ஜீவநதி
2011 பங்குனி இதழ் - 30
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேலி துஷ்யநீதனி வி
ug5hiurafAfhuuñr FF
கலாநிதி த.கலாம60ரி G8 u Tu'i 6 தொடர்புகளுக்கு: இவ்வாறு
· ඝන60 ඌlඝlර් அவற்ை சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி சிரமங்க అఖీఎr வடமேற்கு தொடர்கி அல்வாய் கொள் இலங்கை, காளஞ துககான ஆலோசகள் குழு: (ԼՔԼջեւ In 5
திரு.தெனியான் திரு.கி.நடராஜா
6600) வதாலைபேசி: 0775991949 தளங்கள்
0212262225 1. கல்வி
2. பிரதே E-mail :jeevanathy(aiyahoo.com
இ Fax: 021226.3206 Uuj6t UC
வாங்கித் தொடர்புகள் உருவா K. Bharaneetharan மாணவ Commercial Bank பெறுவர்
Nelliady A/C - 810802 1808 CCEYLKLY களுக்குட விற்பதிலு இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து" a பொதுவ ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் . . அவற்றை எழுதிய ஆசிரியர்களே ઊકe)); பொறுப்புடையவர்கள். பிரசுரத்திற்கு இந்நிை விநியே
ஏற்றுக் கொள்ளப்படும் படைப்புகளைச்
செம்மைப்படுத்த ஆசிரியருக்கு 99
2 flooLD 2 6oiGB. ஏற்படுத்
- ஆசிரியர்
ઈ6!!6ઠ્ઠી

ஜீவநதி (கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
கலை இலக்கியச் சிற்றிதழ்களின் நியோகமும் எதிர்காலமும்
ழத்தில் தமிழில் வெளிவந்து இடையில் நின்று ட்ட சஞ்சிகைகளின் எண்ணிக்கை கணிசமானது. நின்று போய்விட்டமைக்கான பிரதான காரணம் றத் தொடர்ந்து விநியோகிப்பதில் எதிர்கொண்ட ளே ஆகும் என வரலாறு கூறும். இந்த நிலைமை றது. கணினி வலையமைப்பைக் குறித்து சிலாகித்துக் ம் நாம், கலை இலக்கியச் சிற்றிதழ்களின் விநியோகத்
வலையமைப் பொன்றை உருவாக்கிக் கொள்ள வர்களாக உள்ளோம்.
ஞ்சிகைகளின் முறையான விநியோகம் தொடர்பான மைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு இரு பிரதான
26T6T60. நிறுவனங்கள் - பிரதானமாக பாடசாலைகள் ச சபைகளின் கீழுள்ள நூலகங்கள்
}ந்த இரு தளங்களையும் சரியான முறையில் }த்திக் கொண்டால் விநியோக வலையமைப்பு கிவிடும். இவ்விநியோக வலையமைப்பினுாடாக ர்களும் ஆசிரியர்களும் பொதுமக்களும் பயன்
னித்தனியாக ஒவ்வோர் இதழையும் பாடசாலை b பிரதேச சபை நூலகங்களுக்கும் கொண்டு சென்று றும் அவற்றுக்கான பணத்தைப் பெற்றுக்கொள்வதிலும் த சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ாகவே, வாசிப்புக் கலாசாரம் இன்று அருகிக்கொண்டு ாகப் பலர் குறைப்பட்டுக் கொள்கிறார்கள். bமையில் கலை இலக்கியச் சஞ்சிகைகளின் சீரான ாகத்துக்கான வலையமைப்பொன்றே சாத்தியமான ழிமுறையாகும். இந்த வலையமைப்பை யார் 5(ԼՔԼջեւկլի?
க.பரணிதரனர்
பரிரதம ஆசிரியர் ) Söp 3O

Page 5
UT-8togi
gDIOGUInfGib INLu நபரிடூழ
(நா.வானமாமலையின் ! தொகுதியினை முன்ன
பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள், கலைகள், மருத்துவ முறைகள் எனஅம்மக்களின் முழு வாழ்க்கையையும் பற்றிய ஆய்வுகள் அனைத்துமே அடங்கும். நாட்டுப் புறங்களில் வாழும் மக்களைப் பற்றிய ஆய்வுகளே நாட்டுப்புறவியல் எனக்கருதின், அது எவ்வளவுதூரம் பொருத்தப்பாடுடையது என்பதும் நோக்கத்தக்கது. இன்றைய நாட்டுப்புற ஆய்வுகளில் நகர்ப்புறங்களை அண்டிய,சேரிப்புறங்களில் வாழும் மக்களைப் பற்றிய ஆய்வுகள் இடம்பெறுகின்றன. இதற்கு இவர்கள் தனித்துவமான பண்பாட்டினையும் தமக்கெனகுறிப்பிட்ட வாய்மொழிமரபினையும் கொண்டுள்ளமை காரண மாகும்.இவைதவிர, நகர்ப்புற பொது மலசலகூடங்கள் முதலானவற்றில் காணப்படுகின்ற கொச்சைப் பாசைகளும், வரிவடிவங்களும் நாட்டுப்புறவியலில் ஆய்வுசெய்யப்படுகின்றன.இங்குதான்நாட்டுப்புறவியல் குறிக்கும் 'களம் தொடர்பான சிக்கல் நிலை தோன்று கிறது. இச்சிக்கலினை நிவர்த்தி செய்யவே, இவற்றை நாம் நகர்ப்புறம் சார் நாட்டுப்புறவியல் என்று பாகு படுத்திக் கொள்கின்றோம். வாய்மொழிமரபில் வழங்கிவரும் நாட்டுப்புற இலக்கியங்களை, நாட்டார் பாடல்கள்,நாட்டார்கதைகள், பழமொழிகள்,விடுகதை கள் எனப் பொதுவாக வகைப்படுத்திநோக்கமுடியும். இவை அனைத்துமே தமக்கென சில தனித்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.
ஆக்கியோன் பெயர் தெரியாதிருத்தல் * நாட்டுப்புற இசை வடிவத்தினைக் கொண்டிருத்தல் திரும்பத்திரும்ப வரும் சில அடிகளைக் கொண்டு
இருத்தல் ஒரேவிதஅமைப்பினைக் கொண்ட பாடல்கள், அதே உணர்வினையே வெவ்வேறு பிரதேசங்களில் அப்பிர தேசத்தின் சூழலுடன் இணைந்த வகையில் பிரதேசச் છ6pઠ્ઠી

ấGaffâd ffîTIGfò சிகுமுதாயரிற்
தமிழர் நாட்டுப் பாடல்கள் ரிறுத்திய ஒரு பார்வை)
சொற்களையும், சொற்றொடர்களையும் கொண்டு வெளிப்படுத்தல்
நாட்டுப்புறச்சொற்பிரயோகங்களைக் கையாள்தல் * இலகுவில் பொருளுணரக்கூடியதாக, கேட்பதற்கு எளிமையும் இனிமையும் கொண்டதாக இருத்தல்
*நாட்டுப்புற இலக்கியங்களில், செவ்விய இலக்கியங்கள் நாகரிகமற்றவை எனக்கருதிவிலக்கும் கருத்துக்களும், சொற்களும், சொற்றொடர்களும் இடம்பெறுவதைக்காணலாம்.
நாட்டுப்புற இலக்கிய வடிவங்களில் ஒன்றான நாட்டார் பாடல்களைப் பொதுவாக, தாலாட்டுப் பாடல்கள், சிறுவர் விளையாட்டுப் பாடல்கள், தொழிற் பாடல்கள், காதற் பாடல்கள், வழிபாட்டுப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள் என வகைப்படுத்தமுடியும்,
மேற்கூறிய வகைப்பாட்டில் தாலாட்டுப் பாடல் களை அடிப்படையாகக் கொண்டு நாட்டுப்புறச்சமுதா யத்தினை இனங்கண்டு கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்
தாலாட்டு என்பதுதால் + ஆட்டு எனப் பிரிந்து பொருள்கொள்ளப்படும்தால்என்பதுநாக்கு தொட்டில் எனும் பொருள்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. எனவேதான்,தாலாட்டுஎன்பதுநாக்கை ஆட்டிப்பாடும் பாடல் எனவும், தொட்டிலை ஆட்டிப் பாடும் பாடல் எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது. இவை தாயி னால் மட்டுமன்றி, பாட்டிமார்,சகோதரிகள்போன்றோர் களனும் பாடப்படுகின்றன. இத்தகுதாலாட்டுப்பாடல்கள் குழந்தையின் அழுகையினை நிறுத்துதல், குழந்தை யை தூங்கவைத்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டிருப்பினும், இவற்றையும்கடந்து அப்பாடல்கள் மூலமாக நாட்டுப்புறச்சமுதாயத்தினை எம்மால் இனங் கண்டுகொள்ள முடியும், இவை குழந்தையைக் கருவியாகக் கொண்டு தன்னைச்சூழ்ந்திருக்கும்சமுதா யூத்தினைப்படம் பிடித்துக்காட்டுவனவாகஉள்ளன.
85p 3O

Page 6
தமிழரின் தாய்வழிச் சமுதாயத்தில் தாய்
மாமன் முக்கிய உறவுநிலையாக விளங்குகிறான். குழந்தை பிறந்தது முதல் நாமம் கட்டல், மொட்டை யடித்தல், (பெண்பிள்ளையானால் காதுகுத்தல்) தொட்டில் செய்தல் எனத் தொடங்கி, அப்பிள்ளை வளர்ந்து பெரியவளாகி திருமணம் செய்தல் ஈறாக அனைத்துச் செயற்பாடுகளிலும் மாமனே முக்கியம் பெறுகின்றான். (சீர்வரிசை முதலானவைகள்)இதுவே தாய்வழிச் சமுதாயத்தில் பின்பற்றப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை வழங்குவதாக தாலாட்டுப் பாடல்கள் விளங்குகின்றன.குழந்தையின்காதுகுத்தல் வைபவத்துக்கு மாமன் சீர்வரிசை கொண்டு வரல், குழந்தைக்காகத் தொட்டில் செய்தல், மாமனின்மடியில் குழந்தையை இருத்தி, மொட்டை போடுதல் போன்ற விடயங்களை தாலாட்டுப் பாடல்கள் புலப்படுத்து கின்றன.
"மாம்பரிஞ்சு கொண்டு
மதுரைச் சிமிக்கி கொண்டு
காது குத்த வாராக
கனகமுடி உங்களம்மாண்”
(வாணமாமலை.நா. (1984) தமிழர் நாட்டுப் பாடல்கள், ப.101) எனும் பாடலடியின் மூலம், மாமனே காது குத்து வைபவத்தில் முதன்மை பெறுவதனையும்,
"பால் குடிக்கக் கிர்ைணி
பழந்திங்க சேணாடு
நெயப் குடிக்கக் கிர்ைனி
príkapuló Lumpjaišasas asezwieszowme
கொணர்டைக்குக் குப்பரி
கொண்டு வந்தான் தாய்மாமன்"
(வானமாமலை.நா. (1964) தமிழர் நாட்டுப் பாடல்கள், ப.82) என்ற பாடலின்மூலம் குழந்தைக்குத்தேவையானசகல பொருட்களையும் மாமனே பெற்றுக் கொடுக்கிறான் என்பதும் புலப்படுத்தப்படுகின்றது. நாட்டுப்புறச் சமுதாயத்தில் மாமன் என்ற உறவுநிலை முக்கியம் பெற்றமையினாலேயே, தாலாட்டுப் பாடல்களும் அவ்வாறான நிகழ்வுகளைச் சுட்டிச் செல்வதனையும், மாமனின் பெருமைகளை விதந்துரைப்பதனையும் காணமுடியும். இன்னும் சில பாடல்களில் மாமனைப் போலவே, தனது மகனும் இருக்க வேண்டும் என எண்ணுதலையும்காணமுடியும் சிலபாடல்கள்மாமனின் வீரதீரச் செயற்பாடுகளைச் சுட்டிக் காட்டுவதாகவும், அவனது செல்வங்களைச் சுட்டிக் காட்டுவதாகவும் அமைந்து, மாமன்பெருமைகளை எடுத்தியம்புகின்றன. இவ்வாறு மாமனை முதன்மைப் படுத்தி, தாலாட்டுப் பாடல்கள் விளங்குவதற்கு நாட்டுப்புறச்சமுதாயத்தில் மாமன் பெற்றிருந்த முக்கியத்துவமே காரணமாகும். இன்றைய நிலையிலும்தாய்வழிச்சமுதாயத்தில்மாமன் முக்கியத்துவம் பெறுவதும் நோக்கத்தக்ககது. છspઠ્ઠી -

நாட்டுப்புறச்சமுதாயம் கற்புக்கு ஓர் உன்னத அந்தஸ்தினை அளித்துவந்துள்ளது. அவ்வாறு கற்புக்கு முதன்மை அளிக்கும் அச்சமூகத்திலே பல தாரமணம், பரத்தமை ஒழுக்கம் என்பனவும் வழங்கிவந்துள்ளது. உலகியல்வாழ்க்கையையே சிறப்பாகக்கருதிவாழ்ந்த சங்க காலத்திலும் இப்பரத்தையர் ஒழுக்கம் கடிந் தொதுக்கப்பட்டாத நிலைமையே காணப்பட்டது. பரத்தையர் ஒழுக்கம், பல தாரமனம் முதலானவை நாட்டார் சமூகத்தில் நிலவியது என்பதனையும் அவை வெறுத்தொதுக்கப்படாத, கண்டிக்கப்படாத தன்மை யினையும் சில தாலாட்டுப் பாடல்கள் புலப்படுத்து கின்றன.
தங்கக் குடை பிடிச்சு தாசிமாரை முன்னேவிட்டு - உன் மாமன் தாசிக்கே விட்ட பணம் - ரெண்டு தங்க மடம் கட்டலாமே வெள்ளிக் குடை பிடிச்சு வேசிகளை முன்னே விட்டு - உன் மாமன் வேசிக்கே விட்ட பணம் - ரெண்டு G66raf toLLb a5'LL6OTCBto"
(வானமாமலைநா. (1964) தமிழர் நாட்டுப் பாடல்கள், ப.91) எனும் பாடல்பரத்தமை ஒழுக்கத்தினைக்கடிந்துபாடுவ தாக இல்லை. மாறாக, தாசிமார்க்காகவும், வேசிமார்க் காகவும்அவன்அதிகளவு செல்வத்தினை செலவு செய்து உள்ளான்எனக்காட்டுவதன்மூலம்மாமனின் பெருமை யினையே இது சுட்டிநிற்கிறது. இதிலிருந்து நாட்டுப்புறச் சமுதாயத்தில் பரத்தமை ஒழுக்கம் என்பது இழிவான ஒழுக்கமாகவோ, வெறுத்தொதுக்கும் தன்மையிலோ பெரிதும் வழங்கப்படவில்லை என்பது புலப்படுகிறது.
இல்லற வாழ்வு முழுமை பெறுவது குழந்தைப்பேறினூடேயாகும். குழந்தையைப் பெற்றுக் கொள்ளமுடியாத பெண்களை,சகல சமுதாயங்களும் பலவாறாக வஞ்சிக்கும். அவளை 'மலடி எனப் பெயர் சுட்டி, அவள் தொட்டதெல்லாமே திறம்பட அமையாது போய்விடும் எனக் கருதுவதனைப் பெரும்பாலான சமுதாயங்களில் காணமுடியும். இன்றைய நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக, பெரும்பாலான பெண்களால் குழந்தைகளைப் பிரசவிக்கக் கூடிய நிலைமை ஏற்பட்டு மலடி எனும் நிலையினைப் பெரும்பாலானோர் கடந்துவிட முடிகிறது. எனினும், நவீனத்துவம் படியாத நாட்டுப்புறச் சமுதாயத்தில் மலடியினைப் பற்றிய தாக்ககரமான கருத்துக்கள் நிலவியுள்ளன, நிலவிவருகின்றன.
இவை பற்றிய பல தகவல்களை தாலாட்டுப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. தாலாட்டுப் பாடல்கள் பெரும்பாலும்தாயினாலேயே பாடப்படுவதனால்அவள் தான் இதுவரை காலமும் அனுபவித்த, அனுபவித்து வருகின்ற கொடுமைகளை தனது மனழுத்தத்தின் &pp 3O

Page 7
வெளிப்பாடாக தாலாட்டுப் பாடல்கள் வடிவில் புலப் படுத்துகிறாள். தான் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள இயலாதிருந்தகாலத்தில் அச்சமூகம் தன்னை நடத்திய விதத்தினையும், தன்னைப் பலவாறாக வஞ்சித்தமையையும் தாலாட்டுப் பாடல்களில் பதிவு செய்கிறாள். எடுத்துக்காட்டாக,
*GGTšsśl6ó 6T6I G6PTu'i GBL Teo வெந்துருகி நிக்கயில கலத்திலிட்ட பால் போல கைக்குழந்தை தந்தாரே Lo6Dę Lo6Dę 6reig மானிடர்கள் ஏசுகிறார் மலட்டுக் குலமதையே - நீ மறப்பிக்க வந்தவனோ" {வானமாமலைநா. (1964) தமிழர் நாட்டுப் பாடல்கள், ப.93) எனும் பாடலில் மலடி என்பதால், அவள் சமூகத்தினால் இம்சிக்கப்பட்ட விதமும், அவற்றால் அவள் அடைந்த வேதனைகளையும் வெளிப்படுத்துகிறாள். “விளக்கி லிட்ட எண்ணெய் போல” என்ற உவமை மூலம் அவள் அனுபவித்த கொடுமை சிறப்பாக எடுத்துக் காட்டப் படுகிறது.இது கற்பனையின்வடிவாய்த்தோன்றியதல்ல. அவள் அனுபவித்த கொடுமையின் வெளிப்பாடுதான் என்பதும்நோக்கத்தக்கது.இங்குதாலாட்டுப்பாடலானது தான் இதுவரை அனுபவித்த பல்வேறு கொடுமைகளை எடுத்து விளக்கும் கருவியாகப் பயன்படுவதனைக் 5T600 (pigth
தமிழர் சமுதாயத்தில் தொன்று தொட்டு புரையோடிக்காணப்படும் ஒரு குறைபாடு சாதியமைப் பாகும். இச்சாதியமைப்பே சமூக முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் தடையாக விளங்குகிறது. மேலெழுந்த வாரியாக நாட்டுப்புறச் சமுதாயம் சாதிபேதங்களை மறந்து ஒற்றுமையாக வாழும் சமுதாயம் எனக் கருதி னாலும் அச்சமுதாயத்தில்சாதியம்சார்உயர்வு-தாழ்வு கள் இடம்பெறுகின்றமையும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே. இதனைதாலாட்டுப் பாடல்கள் பதிவுசெய்கின்றன.
"வாசலிலே வன்னிமரம் வம்மிசமாம் செட்டி கொலம் செட்டி கொலம் பெற்றெடுத்த சீராளா நீ தூங்கு" (வானமாமலை.நா. (1954) தமிழர் நாட்டுப் பாடல்கள், ப.85) எனும் பாடல் குழந்தையின் அருமையினையும், உயர் வினையும் பாடுவதனையே நோக்கமாக் கொண்டது. ஆயினும் தமது வம்சமான செட்டி குலம் ஓர் உயர்வான குலம் எனவும் அக்குலத்திலே பிறந்த குழந்தையும் உயர்வானது எனவும் இப்பாடல் விளக்கமுற்படுகிறது. இதன் மூலம் சமுதாயத்தில் சாதியமைப்பிலே தமது குலம் ஓர் உயர்ந்த இடத்தைக் கொண்டது எனப் புலப்படுத்த வருகிறாள். கிராமியச் சமுதாயம் சாதிய ઈ6pઠ્ઠી

ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்விதப் பாகு பாட்டையும், உயர்வு தாழ்வையும் கொண்டிராத தென்றால் இவ்வாறு தனது குழந்தையின் அருமை யினையும் உயர்வினையும் எடுத்துக்காட்டஏன்குலரீதி யான பாகுபாட்டைக் கூறவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதிலிருந்து நாட்டுப்புறச் சமுதாயத்திலும் சாதியமைப்பின்செல்வாக்கு இருந்திருக்கிறது என்பது புலனாகும். மேலும்,
“பாப்பாரா வீதிக்கு - எங்க பொன்னு பந்தாடப் போனாலும் பாப்பராப் பொன்னு கண்டா பந்தெடுத்து மறைச்சிடுவா செட்டித்தெரு வீதிக்கு செண்டாடப் போனாலும் செட்டிச்சிப் பொன்னு கண்டா செண்டெடுத்து மறைச்சிடுவா” (வானமாமலைநா. (1964) தமிழர் நாட்டுப் பாடல்கள், ப.98) எனும் பாடலில் தமிழர் சமுதாயத்தில், உயர் நிலை யினைப் பெற்றிருந்த பார்ப்பார்களும், செட்டியார்களும் தாழ்த்தப்பட்ட சாதிகளை அடிமைப்படுத்திய நிலைமை யினைப் பதிவுசெய்கின்றது. பிள்ளையின் பந்தினையும், செண்டினையும் பார்ப்பார் பொன்னும், செட்டிச்சிப் பொன்னும் மறைத்து விடுவார்கள் என்று கூறுவதன் வாயிலாகத் தம்மை, அவர்கள் அடிமைப் படுத்தி வைத்துள்ள தன்மையினை வெளிப்படுத்துகிறாள். இவ்வடிமைநிலையினை நேரடியாக எதிர்க்க முடியாத நிலையில் குழந்தையின் எதிர்காலச் செயல்களை எண்ணி இன்பங்கொள்ளும் பாங்கில் அமைத்துக்
காட்டுகின்றார்.
கிராமியச் சமுதாயத்தில் திருமணம் ஆனது பெரும்பாலும் நெருங்கிய உறவுகளுக்கிடையே இதழ் 30

Page 8
இடம்பெறுவது இயல்பு மாமன்மகன் - அத்தை மகள் முதலானோர் பிள்ளைகள் முறை மாப்பிள்ளை, முறைப் பெண் எனக்கருதுவதுண்டு. இம்முறைமை நாட்டுப்புறச் சமுதாயத்தில் நிலவி வருகிறது. இதற்கு நெருங்கிய உறவுகளுக்கிடையேயான திருமணத்தின் மூலம் சொத்துக்கள்பாதுகாக்கப்படும்என்றளண்ணமும் உறவு முறைகளுக்கிடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற அவாவும் காரணங்களாகும். இதனையும் தாலாட்டுப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.
கடலையே திண்ணுக்கிட்டு கடவீதி போனாலும் கடகெட்ட அத்தமவன் கடவாயே முத்தமிட்டான் வெல்லத்தே திண்ணுகிட்டு வீதியிலே போனாலும் வெக்கங் கெட்ட அத்தமவன் வெறும் வாயே முத்தமிட்டான். (வானமாமலைநா. (1964) தமிழர் நாட்டுப் பாடல்கள், ப.98) எனும்பாடல்தாய்,தனதுகுழந்தையைப் பார்த்துப்பாடும் தாலாட்டாகும். தாய் தனது குழந்தை யின் எதிர்காலத்தைப் பற்றிய கற்பனையிலேயே இதனைப் பாடுகிறாள். இப்பாடலின் மூலம் தனது மகள் அவளது அத்தை மகனையே திருமணம் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை வெளிப்படுத்து வதனைக் காண முடியும். இவ்வெண்ணம் அத்தாய்க்கு இல்லாதிருந் திருந்தால் இப்பாடல் எழுந்திருக்காது. இவ்வாறான எதிர்பார்ப்பு ஏற்படுவதற்குக் காரணம், தான் வாழ்ந்த சமுதாயத்தில் பெருவழக்கிலிருந்த இத்தகு திருமண நடைமுறையேயாகும்.
நாட்டுப்புறச் சமுதாயம்பல்வேறு நம்பிக்கை களையும், சடங்குகளையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இவர்களின் சமய ரீதியான வழிபாட்டு மரபில்மேனிலையாக்கம் பெற்ற வழிபாட்டு மரபுகளை காணமுடியாது. இதனால், ஆகமம் சார் வழிபாடு இவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கினைப் பெறவில்லை. இவர்களது வழிபாட்டு மரபு கிராமியத் தெய்வ வழிபாடாகவேயுள்ளது. இவ்வழிபாடு சடங்கு ரீதியாகவே மேற்கொள்ளப்படுகிறது. இச்சடங்கின் போதுதீக்குளிப்பு, பலியிடல் முதாலானவழிபாட்டுமரபு களும் இடம்பெறுகிறது. இத்தகு கிராமியத் தெய்வங் களையும், வழிபாட்டு மரபுகளையும் பல தாலாட்டுப் பாடல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன. எடுத்துக் காட்டாக,
"செங்கல் அறுத்து துரோபதைக்கு சிமிழ் போல் வீடு கட்டி பாக்கு மரமறுத்து துரோபதைக்கு
ஜீவநதி

பல்லக்கலங்கரிச்சு” (வானமாமலை.நா. (1964) தமிழர் நாட்டுப் பாடல்கள். ப.10) எனும் பாடலில், கிராமியத் தெய்வமான திரெளபதை வழிபாடு சுட்டப்படுகிறது. இங்கு "சிமிழ் போல் வீடு கட்டி" எனும் வரியின்மூலம் திரெளபதைக் கான ஆலய அமைப்பு ஆகமம் சாராதது என்பதும் புலப்படுகிறது. இது கிராமியத் தெய்வங்கள் யாவற்றுக்கும் பொதுவானதேயாகும்.
நாட்டுப்புற மக்கள் பல்வேறு நம்பிக்கை களைத் தம்மகத்தே கொண்டுள்ளனர். குழந்தையின் அழகில் பலரும் ஈடுபாடு கொண்டு குழந்தையைப் பலவாறு ரசித்துவிட்டால், குழந்தை நோய்க்குட்பட்டு விடும் என்ற நம்பிக்கை நாட்டுப்புற மக்களிடத்தில் காணப்படுகிறது. இந்நம்பிக்கை பழந்தமிழர் சமுதாயத்தினையும், பண்பாட்டினையும்அறிய உதவும் காலத்தால் முற்பட்ட சான்றுகளில் ஒன்றாகிய சங்க இலக்கியங்களிலும்பதிவுசெய்யப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, குறமகள் ஒருத்தி கண்ணுறு படுவதால் ஏற்படும் ஊறுகளைத் தவிர்ப்பதற்கு நெய்யுடன் வெண்சிறுகடுகையும் தூவியதாகக்கூறும் 'நெய்யொடு ஐயவியப்பி எனவரும்திருமுருகாற்றுப்படையின் 228 ஆம் வரியினைக்குறிப்பிடமுடியும். இதனைதாலாட்டுப் பாடல்கள் மூலமாகவும் அறியமுடிகிறது.
"கண்ணுக்குக் கண்ணெழுதி - உன் கடைக் கண்ணுக்கு மையெழுதி கண்ணான கண்ணுக்கு என் ஐயா! உனக்குக் கண்ணேறு தையாமல் சுண்ணாம்பு மஞ்சளும் சுத்தியெறி கரியர்க்கு” (வானமாமலை.நா. (1964) தமிழர் நாட்டுப் பாடல்கள், ப.102) எனும்பாடலில்கண்ணுறுபட்டதனால் குழந்தை நோய்க்குட்பட்டு விடும் எனக் கருதியமையையும், சுண்ணாம்பையும், மஞ்சளையும் கொண்டுதலையைச் சுற்றி வெளியே வீசி விட்டால் நோய் அகன்று விடும் எனும்நம்பிக்கையைக்கொண்டிருப்பதனையும் நோக்க முடியும் இவைதவிர்ந்த வேறுசிலநம்பிக்கைகளையும் நாட்டுப்புற மக்கள் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய கருத்துக்கள் யாவுமே நாட்டுப்புறச் சமுதாயம் எத்தகு நிலையில் இயங்கி வருகிறது என்பதனைப் புலப்படுத்தும். மேலும், தாலாட்டுப் பாடல்களை மட்டும் தனித்து நோக்காமல், நாட்டார் பாடல்கள் யாவற்றையும் ஒருசேர நோக்கும்போது நாட்டுப்புறச் சமுதாயம் தொடர்பான முழு வரைபடத்தையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். அந்தளவிற்கு நாட்டார் பாடல்கள் அவர்களது
சமுதாயத்தினைப்படம்பிடித்துக்காட்டுகின்றன.
- SS þ 30

Page 9
தபால் ஊழியர் தந்துவிட்டுச்சென்ற கடிதம் என்னவாகவிருக்கும்? பிரித்துப் பார்த்தபோது சிரிப்புத் தான் வந்தது. மகளிர் தின நிகழ்வில் உரையாற்றவேண்டு மென ஒரு வேண்டுகோள்.
மகளிர்தினமும் ஆண்டுதோறும் மறக்காமல் வந்து கொண்டிருக்கிறது. நாங்களும் ஆண்டாண்டு காலமாகப் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டு மிருக்கிறோம். இம்முறை பேசாதுவிட்டால் என்ன? கடிதத்தை மேசைமீது போட்டுவிட்டு என் வேலைகளைப்பார்க்கவெனச் சென்றபோது மனம் கணக்குப் போடத் தொடங்கியது. இவ்வளவு காலமும் நாம் பேசுவதாலும் எழுதுவதாலும் ஏதாவது சாதித்திருக்கிறோமா?
இல்லையென்று கூறமுடியாதுதான். நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உதாரணத்திற்கு சோதியையே எடுத்துக்கொள்ளலாமே. அவளுக்கு இந்தத் துணிச்சல் வந்தது இவற்றினாலேதானே.
அவளைச் சந்திப்பதென்று காலத்தைக் கடத்துகிறேன். இன்றாவது போய்ப் பார்த்துவர வேண்டும். சோதியை எப்படியும் இன்று போய்ப் பார்த்துவிடவேண்டும் என்ற ஓர் ஆர்வம் கைகளைப் பரபரக்க வைத்தது. காலை நேர வேலைகள் விறுவிறுவென நடந்தேறின. வீட்டில் எவருமில்லை. ஒருவர் பணியகத்திற்கு மற்றிருவர் பாட சாலைக்கு என்று சென்றுவிட்டார்கள். வீட்டைக் கவனமாகப் பூட்டிக்கொண்டு வெளியே
છopBઠ્ઠી
 

வந்தேன். கால்கள் சோதி வீட்டைத் தேடி விரைந்தன. அவற்றை முந்திக்கொண்டு மனம் அவளிடம் சென்று நின்றது.
சோதி, அவளின் பெயர் ஆனந்தசோதி, அவளை முன்பு நான் ஆனந்தி என்று தான் அழைத்து வந்தேன். அவள் தான் தன்னைச் "சோதி என்று கூப்பிடுமாறு கேட்டுக் கொண்டாள். ஏன் அப்படி ஆசைப்படுகிறாய்? என்று கேட்ட போது தான் அவளுள்ளே நிறைந்துகிடந்த தீவிரம் எனக்குப் புரிந்தது.
"பெண்கள் முன்னேற வேண்டும். முன்னேற, வேண்டும்" என அடிக்கடி கூறும் என்னிடமே அப்படி எந்த ஒரு தீவிரமும் கிடையாது. ஆனால் அவள்? உண்மையில் சுடர் விட்டாள். ஆம், நான் ஆனந்த மாக இருப்பதைவிட சோதியாகச் சுடர்விடவே விரும்புகிறேன்" என அவள் கூறியபோது நான் பிரமித்துவிட்டேன்.
எனது பிள்ளைகளைவிட அவள் எனது கருத்துகளை அதிகமாக உள்வாங்கிக்கொண்டாள். எனது பேச்சு எங்கு நடந்தாலும் அவளை முன் வரிசையில் காணலாம். எனது கட்டுரையேதாவது வெளிவந்தால் போதும் அதையும் தூக்கிக்கொண்டு என்னிடம் வந்து, அதுபற்றி அரைமணி நேரமாவது கருத்துக் கூறாவிட்டால் அவளுக்குத் திருப்தி யேற்படாது.
"அம்மா, பார்த்து நடவுங்கோ"
இதழ் 30

Page 10
எதிரே வந்த முச்சக்கரவண்டிக்காரன் தன் வாகனத்தை முந்திய சிற்றுார்திக்கு இடம் விட்டபோது, சிந்தனை யோடு வீதிமருங்கைவிட்டு சற்று நடுவே நடந்துகொண்டிருந்த எனக்கு மிக அருகாக வரநேர்ந்ததால் கோபத்துடன் எச்சரித்தது கேட்டு சுயநினைவிற்கு மீண்டேன்.
சோதி என்றால் இப்படித்தான் நான், சுற்றுச்சூழலை மறந்து.
அதுசரி. ஆட்டோவுக்குள் ஆர்? மயிலர் போல இருக்கிறதே. அவர் அப் பொழுதே எச்சரித்தார். நான்தான் மறுதலித்தேன். அவர் சொன்னது சரியாகி விட்டது. இனிமேல் காணும்போது நிச்சயமாக "நான் சொன்னது சரி தானே. நேசனை நம்பி இந்தப் பெட்டை சோதி ஏமாறப் போகுதெண்டனான் தானே. இப்ப ஏமாத்திப் போட்டான் பாத்தியோ?" என்று கேலி செய்யப்போகிறார்.
நேசன் மிகவும் நல்லவன் என்று தான் நான் முற்றுமுழுதாக நம்பினேன். அவன் சோதியின் மேல் உயிரையே வைத்திருப்பவன் போலத் தான் அவளுக்காக உருகியுருகித் திரிந்தான்.
அவன் எப்படி மாறினான்? சீ. இந்த உலகத்தில் நல்லது கெட்டதைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.
அவனுடைய முகத்தில் காறி உமிழ வேண்டும் போன்ற வெறி சீறி எழுந்தது.
ஆனால் பெருமூச்சொன்று தான் விட முடிந்தது.
எனக்கே இப்படியிருக்கும்போது சோதிக்கு எப்படி இருக்கும்?
இதோ சோதி வீடு வந்துவிட்டது. இதுவரை பரபரத்த கால்கள் மெல்லத் தயங்கித் தடுமாறின. கண்டவுடன் கட்டிக்கொண்டு அழுவாளோ? எப்படித் தேற்றுவது?
சிந்தனையுடன் உள்ளே சென்றேன். "சோதி, சோதி" குரல் கேட்டு எட்டிப்பார்த்த அமிர்தா - சோதியின் அம்மா- பட்டென உள்ளே செல்வது கண்ணிற்பட்டது. என்னைக் கவனிக்கவில்லையா? பார்த்தது போலிருந்ததே.
"அமிர்தாக்கா,அமிர்தாக்கா" தலையை மட்டும் வெளியே நீட்டிய அமிர்தாவின் முகம் இருண்டிருந்தது.
"ஏன் கூப்பிட்டனிங்கள்? வீட்டை வந்தவை யோடை சண்டை போடக்கூடாது எண்டு தான் உள்ளே போனனான். உங்களோடை கதைச்சுக் கதைச்சு சோதி தன்ரை வாழ்க்கையையூே

கெடுத்துப்போட்டாள். இன்னும் என்ன செய்யப் போறியள்?"
சமாதான காலமென்றிருக்கையில் எறி கணை வந்து வீழ்ந்ததுபோல் நான் திகைத்து நின்றேன்.
"எ. எ. என்ன சொல்லுறீங்களக்கா? "ஏன் நடந்ததொண்டும் தெரியாதோ?” "தெரிஞ்சுதான் வந்தனானக்கா. நேசன் இப்பிடிச் செய்வனெண்டு நான் நினைச்சே இருக்கேல்லை. தறுதலைக்குச் சோதி நல்ல பதிலடி கொடுத்திருக்கிறாள்"
"சோதி யாருக்கு அடி குடுத்திருக்கிறாள்? நேசனுக்கோ? தனக்கோ?"
அமிர்தாக்காவின் குரல் பரிகாசமாக ஒலித்தது. எனக்கு அவளின் பேச்சு விளங்க வில்லை. அவளை உற்று நோக்கி எதையாவது புரிந்துகொள்ள முடியுமாவெனப் பார்த்தேன். என்னால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
“எனக்கு நீங்கள் சொல்லுறது விளங் கேல்லை அக்கா"
என் இயலாமையை வாய்விட்டே அவளுக்குப் புலப்படுத்தினேன்.
"உங்களுக்கு இதுகள் விளங்காது. உலகத்துக்கு ஏறுமாறாய் ஏதாவது சொல்லுற தெண்டால் தெரியும். அவளின்ரை வாழ்க்கையே என்னவாகப் போகுதோ தெரியேல்லை, நான் இதைப்பற்றி யோசிச்சு யோசிச்சே எனக்கு விசர் வரப்போகுது. உங்களுக்கு அவளைப் பற்றி ஏதேனும் அக்கறை இருக்கே? இன்னும் தூண்டிவிட வந்து நிற்கிறியள். யோசிச்சுப் பாருங்கோ. அவன் போனால் போறானெண்டிருந்தால் நாளைக்கு வேறொரிடத்திலையெண்டாலும் செய்து வைக்கலாம். இப்பிடி அவனோடை முண்டிப்போட்டு ஊருலகமெல்லாம் நாறின பிறகு ஏதும் செய்யேலுமே?”
அமிர்தா குமுறினாள். "நான் பேசாமலிருக்க, கொஞ்ச நாளை யாலை ஆரோ ஒருதன்ரை தலையிலை என்னைக் கட்டி விட்டிடுவீங்கள். உங்கடை பொறுப்பு அதோடை ஒழிஞ்சுது. நான் பிறகு சந்தோசமாய் இந்த உலகத்திலை வாழ முடியுமோ? என்னைப் பார்த்துச் சொல்லுங்கோ. நித்தம் நித்தம் என்னைச் சித்திரவதை செய்வான்களோ? மாட்டாங்களோ? நெஞ்சிலை கையை வைச்சுச் சொல்லுங்கோ புயலாக வந்து நின்றாள் சோதி "நல்லவனொருதனும் இந்த உலகத்திலை
"
இதழ் 3O

Page 11
“சமுத்திரத்திலை வலை போட்டுத் தேடவேணும்"
தாயின் கேள்விக்கு சோதியின் பதில் இது. யாருக்கு எதைக் கூறி எப்படிச் சமாதானஞ் செய்வதென எனக்குப் புரியவில்லை. அந்தக் கணத்தில் எல்லாத் திறமைகளும் என்னை விட்டகன்றிருந்தன.
"அன்ரி, அவன் வேணுமெண்டு தான் என்னை ஏமாத்தினவனாம். பெரிய பெண்ணியம் பேசுகினம், அவளுக்குச் சரியான பாடம் படிப்பிக் கிறன் பார் எண்டு சவால் விட்டுத்தான் செய்த 660TTub"
“ஆரும் பொய்க் கதைகட்டி உங்களைப் பிரிக்கப் பார்ப்பினம்"
என் சந்தேகத்தை அவளுடைய பேச்சின் இடையே புகுந்து நான் தெரிவித்தேன்.
"ஆரும் சொல்லி நான் சொல்லேல்லை. நான் நியாயம் கேட்டுப் போன போது அவனே சொன்னவன்"
கடவுளே, இப்படி ஒரு பழி வாங்கலா? வேதனையும் வெறியுணர்வும் என்னுள்ளே கட்டிப் புரண்டன.
எனக்குச் சோதியின் உள்ளுணர்வுகளை இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நேசனை நீதிமன்றிற்கு இழுக்கும் சோதியின் செயற்பாடு மிகமிகச் சரியானதென எனக்குள் முடிவுசெய்தேன்.
ஆனால் மற்றவர்கள்.? பேச விரும்பாது அமிர்தா உள்ளே சென்று விட்டாள்!
அங்கிருந்து அதற்கு மேல் பேசுவது சரியானதாகத் தோன்றாததால் நான் வீடு திரும்புவதே நல்லதென்று முடிவு செய்தேன். சோதி அழவில்லை. தளரவில்லை. எனக்கு அது போதும், அவளை அனைத்துக் கொண்டேன். அவள் என் முகத்தை சிறிது நிமிர்ந்து பார்த்தாள். மெல்லிய
golji čr
தனிபிரதி - 60/= ஆண்டுச்சந்தர -
மணியோடரை அல்வாய் தபால் நிலையத்
அனுப்ப வேண்டி
K .Bharaneetharan, Kalaiah
வங்கி மூலம் சந்தா
KBhara
Commercial Bank
A/C No. 810802
ஜீவநதி -

ஒரு முறுவல் அவளது உதட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்தது. நானும் முறுவலித்தபடியே அவளது முதுகில் இதமாகத் தட்டிக்கொடுத்தேன். திரும்பி வீடு நடந்தேன்.
நான் மீண்டும் அங்கு வந்தேயாக வேண்டும். அமிர்தாக்காவுடன் இன்னும் நிறையப் பேசவேண்டும். மனதினுள் திடமானதொரு தீர்மானத்துடன் தான் நான் நடந்தேன்.
எனது வீட்டிற்கு முன்னே என் மகன் நின்று கொண்டிருந்தான்.
"இண்டைக்கு மாறன் வீட்டை போறதுக்காக மத்தியானம் வருவனெண்டனான். மறந்திட்டி யளே? வீட்டைப் பூட்டிக்கொண்டு எங்கை போட்டு வாறியள்?"
"சோதி வீட்டை போட்டு வாறன்" தன் வினாவிற்கு நான் அளித்த பதிலைக் கேட்டதும் மகனின் முகத்தில் ஓர் ஏளனப் புன்னகை"
“என்னடா சிரிக்கிறாய்?" “சிரிக்காமல் என்ன செய்கிறது? நேச னோடை அவ கோடு வரைக்கும் போய்ச் சண்டை பிடிக்கிறாவாம். ஒரு பெட்டைக்கு என்ன துணிச்சல்?"
என் கை பூட்டைத் திறக்கவில்லை. அப்படியே நின்றுவிட்டது. தலை அவன் பக்கம் திரும்ப கண்கள் அவனை ஏறிட்டன.
என் மகன் சொல்கிறான். பூட்டைத் திறக்க முடியாது சிறிது நேரம் கை தவித்துத் தடுமாறுகிறது.
வீதியில் வேண்டாம். உள்ளே சென்றதும் மகனுடன் நிறையப் பேசவேண்டும்.
அதற்கு முதல் அந்தக் கடிதத்திற்குச் சம்மதம் தெரிவித்து பதில் அனுப்பவேண்டும்.
உறுதியான தீர்மானமொன்றுடன் அவள் உள்ளே நுழைகிறாள்.000
ந்தா விபரம்
OOO/F Goofsir - S35U.S ல் மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும்.
பெயர்/முகவரி m, Avai North west, Alvai. சலுத்த விரும்புவோர்
2etharan
Nelliady Branch
308CCEYLKLY
- &þ 3O

Page 12
ஆரம்பக்கல்வி கற்கின்ற மாணவர்களுக்குத் தாய்மொழிப் பாடத்திட்டம் ஒன்று வகுக்கப்படும்போது ஒரு பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தினைவகுக்கின்ற கவனத்தை விடவும் மிகுந்த அனுபவஞ்சார் கவனஞ் செலுத்தப்படவேண்டியது அவசியமானதொன்றாகும். குழந்தைகளுக்கானதாய்மொழிக்கல்வியில் காட்டப் படுகின்ற அவதானமும் அக்கறையும் முன்னெடுப்பும் தான்அடுத்ததலைமுறைக்கானஅத்திவாரம், அத்துடன் குழந்தைகளுக்கான ஆரம்ப கல்வி அவர்களின் தாய் மொழியிலேயே கற்பிக்கப்பட வேண்டுமென்ற கல்வி உளவியலாளரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கவோ இயங்கவோ முடியாது. எனவே ஆரம்பக் கல்விபயிற்றுதலுக்கான வாய்ப்புகள் சரியான முறை யிலே பயன்படுத்தப்பட வேண்டுமானால், குழந்தை இலக்கியம்பற்றிய புரிதல் மிகமிகவேண்டிய ஒன்றாகும்
குழந்தை இலக்கியத்தைக் கற்பித்தலுக்கான செயற்பாடுகளுக்குப் பாடத்திட்டம், கற்றல், கற்பித்தல் முறை, ஆசிரியகுழாத்தின் தகுதியும், தகுதி பேணலும், சூழலும்சமூகஉறவும் தேர்வும்தகுதிகான்முறைகளும் ஊக்கிகள், போட்டிகள் முதலியன பற்றி முன் எச்சரிக்கையுடனான நுண்மாண் நுழை புலமும் கவனமும் அவசியமாகும். ஆரம்பக்கல்விக்காக வகுக்கப்பெறுகின்ற பாடத்திட்டம்தான் குழந்தைகளது தாய்மொழிப் போதனைக்கான அடித்தளம். அவர்கள் தாம் வாழ்கின்ற சூழலையும் வாழ்வியலையும் விளங்கிக்கொள்வதன்ஆரம்பம்.குழந்தைகளின்வயது, உடல் -உளவளர்ச்சிஎன்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அதேவேளை பியாஐே அவர்கள் கூறியது போல் சமூகத்தில்குழந்தை என்ற எண்ணக்கருபற்றிய சிந்தனையும் அவசியமானதே. அதாவது, குழந்தைகள் தங்கள்வாழ்க்கையில்கழல்பழக்கத்தின்மூலம்தங்கள் அகம் சார்ந்த ஆற்றலை வளர்ப்பர். அங்கே நற் பழக்கத்தை வளர்க்கச் செய்வது என்பதே பியாஜேயின் சமூகத்தில் குழந்தை என்ற எண்ணக்கரு, அதாவது குழந்தையைத் தன் சூழலுடன் பொருத்தப்பாடடையச் છ6pઝી
 

செய்தலையே அதுமுதன்மைப்படுத்துகின்றது. ஆகவே இங்குகுழந்தை இலக்கியம்மிகவும்நிதானிப்படைகிறது. குழந்தையின் விளங்கிக் கொள்ளும் திறன் பழமைக்கருவும்புதுமைஉருவும் சேர்புதுநெறி புதுமை போற்றும் பண்பு, உள்ளம் நெகிழும், நெகிழ்த்தும் மென்மை, மறுமலர்ச்சியின் ஊற்றுக் கண்ணைத் திறக்கும் ஆற்றல், மன வளர்ச்சிக்கும், மாண்பு வளர்ச்சிக்கும் ஆற்றுப்படுத்தும் நேர்த்தி, உலகு அறிந்துணர்ந்தஅறிவினைப்பகுத்தளிக்கும்பணிதொடர்
ஆக்கங்களே குழந்தை இலக்கியமாகின்றன.
இதிலிருந்து விளங்கிக்கொள்வது யாதெனில் குழந்தைகளுக்காக எழுதுவது என்பது மிகுந்த அவதானத்துடனும் மிக நுட்பமான நுண்மாண் நுழை புலத்துடனும் மேற்கொள்ளப்படவேண்டிய தொன்று என்பதாகும். ஆனால் எம்மில் பலரும் இதையோர் சாதாரண செயலாக அல்லது விளையாட்டாகக்கருதிச் செயற்படுவதையே காணமுடிகிறது. உயர் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிப்பதைவிட ஆரம்பக்கல்வி வகுப்புமாணவர்களுக்குகற்பிப்பதற்குமுன்ஆயத்தமும் தனித்துவமான பயிற்சியும் பொறுமையும்.திறமையும் வேண்டும். இதுபோலவே குழந்தைகளுக்காக எழுதுவ
தற்கெனத் தனித்திறமையும் சிறப்பான பயிற்சியும்
கூர்மையான அவதானமும் இருத்தலோடு குழந்தைக் கல்வி உளவியல், கற்பித்தல் தொடர்பான ஆழ்ந்த புலமையும் அவசியமாகின்றது. தமிழிலே குழந்தை
இலக்கியம் தொடர்பான அல்லது குழந்தை இலக்கியம்
பற்றிய ஆழமான, தெளிவான பரந்துபட்ட சிந்தனை ஆய்வுரீதியான முறையில் இன்னமும்முன்வைக்கப்பட வில்லை என்றே கூற வேண்டும். அருட்டுணர்வில் மருட்டும் படைப்புகளே அதிகம்
மேலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிவந்துள்ள நூல்களும், கூட குழந்தை இலக்கியம் பற்றிய அறியாமையையும் வறுமையையுமே இனங் காட்டுவனவாக உள்ளன. குழந்தை எழுத்தாளனுக்கு
இதழ் 30

Page 13
இருக்க வேண்டிய அத்தியாவசியமான கவனக் குவியமும் அவதானமும் குழந்தைகளின் வாழ்க்கைச் சூழலோடுஇணைந்ததொன்றாக இருக்கும் அதேவேளை அவர்களின் விருப்பு, வெறுப்பு, பருவத்துக்கேற்ற நடத்தைக் கோலங்கள், மொழிவுகள், மொழிநடை சொற்களஞ்சியம், காட்சிப்புலன், உணர்வுடனான மெய்மைத்தொடர்பு மொழிப் பயன்பாடு- பிரயோகம் பற்றிய எண்ணக்கரு, அனுபவப்புலத்துடனான ஆக்கம் இன்னோரன்னவற்றுடன் தொடர்பான குறைந்தபட்சப் பரிச்சயமும்மிகமிக அவசியமாக அமைகின்றன.
இன்று குழந்தை இலக்கியம் என்ற பெயரில் வெளியிடப்படும் படைப்புகளை உற்று நோக்குவோ மாயின் அங்கே தேவையற்ற சிந்தனைகளும், சிறுவர் பாலர்களின் வயதுக்கும் வரம்புக்கும் நினைப்புக்கும் மீறியவரட்டுத்தனமான கருத்துகளும் கொண்ட படைப்பு களே பெரிதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தமிழில் குழந்தை இலக்கியம் பற்றிய ஆரோக்கியமான ஆய்வுமுறையிலான கருத்துப் பஞ்சம் இன்று வரை நீடித்து வருவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். வெறும் சொரியலான சொற்சோர்வுபட்ட கருத்துகளை ஆங்காங்கே வாய் பொருமும் நுனிப்புல் மேய்ச்சல் பழக்கத்தினின்றும் விடுபட்டுக்கொண்டு உண்மையும் வாழ்வியல் யதார்த்தமும் சூழலும் இருட்டடிப்புச் செய்யப்படாத பொறுப்புணர்ச்சியோடு செயலாற்றும்போதுதான்செம்மை நலம்வாய்ந்த சீரிய கருத்துக்களை முன்வைக்க முடியும். குழந்தை இலக்கியங்களை படைக்கமுடியும் அனுபவச்செறிவற்ற கூற்றுக்களை வெறுமனே தெரிவிப்பதனாலே எந்த விதமான நல்ல பயனும் கிட்டுவதுமில்லை. கிட்டப்போவதுமில்லை.
இங்கே குழந்தை, குழந்தை இலக்கியம் எனச் சுட்டும்போது மேலைநாட்டு ஆய்வியல் அறிஞர்கள் குழந்தைகளை அவர்களது வயதின் அடிப்படையிலும் எழுத வாசிக்கத் தெரிந்த பிள்ளைகள் என்ற அடிப்படையிலும் தான் பாகுபடுத்துகின்றனர். ஆனால் ஒருசிலரைகழல் சற்றே மிகைப்படுத்திவிடுவதையும் கருத்தில் எடுத்தல் வேண்டும். சில குழந்தைகள் வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சியும், இன்னுஞ் சிலர் மித மிஞ்சிய அழுத்தங்கள்திணிக்கப்பட்டசுமையும் இன்னும் சிலர்எதுவுமற்றவெறுமையான மந்தபுத்தியும் கொண்டி ருப்பர். பாலர் முன்பள்ளி பருவத்தினரையும், ஆரம்ப கல்விபயில வரும் பருவத்தினரையும் தான் குழந்தை கள் என்று இங்கே உளவியல் அறிஞர் கருத்துப்படி குறிப்பிட்டாலும் பத்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கருத்தில் கொள்வதே பொருத்தமானதாகும்.
ரூசோ பிள்ளைகளுக்கு வெற்றுரை மூலம் கருத்துக்களைக்கற்பித்தல் ஆகாதுகாட்சிப்பொருட்கள்
ஜீவநதி -

மூலம் பெறுகின்ற அனுபவங்களே குழந்தைகளுக்குச் சிறந்த இலக்கியங்களாக அமையும் என்றார். இங்கே புலன்களுக்கான பயிற்சிஇயற்கை நிகழ்வை அறிதல்அறிய உதவுதல் என்பவற்றைத்தரவல்ல படைப்புகளே குழந்தை இலக்கியங்களாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடியன என்பது தெளிவாகின்றது.கருத்துரை - அறிய முடியாத சொற்சுமைகளை குழந்தைகளில் திணிப்பதன்று குழந்தை இலக்கியம். கருத்தற்ற வெறுஞ் சொற்குவியல்களை வரையறையின்றிக் குழந்தை களிடம் கொண்டு வந்து கொட்டிவிடுவதனால் மட்டும் அவை குழந்தை இலக்கியங்கள்ஆகிவிடமாட்டா. புலன் அனுபவங்களுடன் இணைந்த அழகுக்கோலக்காட்சி இலகுவானதோர் சின்னஞ்சிறு அனுபவப் பகிர்வு படைப்புக்குள்ளே இடம்பெறவேண்டும் என்பார்தந்தை பெஸ்ரலோசி
குழந்தையின் புலன் அனுபவத்திற்கும் புலப்பயிற்சிக்கும் முக்கியம் அளித்தல், முதன்மை அளித்தல் (priority), சுற்றுப்புறச்சூழல் புறப்பொருட் களை உற்று நோக்கல், வேறு பிரித்து அறிதல் தொகுத்தறிதல், பருமன், உருவம், அளவு அறிதல், உணர்தல் தொடர்பான சொல்லாட்சியில் எடுக்க வேண்டிய அவதானம் குழந்தை இலக்கியம் என்ற விடயத்தில் பாரிய பொறுப்புக்குரியது.
எளிமையும் தெளிவும் காட்சிப் புலனுக்குள் சிற்கக்கூடிய சொற்பிரயோகமும், மொழிதலில் நிதானமும், குழந்தைகளின் நித்திய வாழ்வியல் நிகழ்வுகளின்கலாம்சம்மிக்கதொகுப்பாகவும் குழந்தை இலக்கியம் அமைதல் வேண்டும். சொற்கள் மூன்று நான்கு அல்லது ஐந்து எழுத்துக்களுக்கு மேற்படாதனவாகவும் அதேவேளை சிக்கனமான முறையிலும் கையாளப்பட்டிருந்தல் வேண்டும் கையாளப்படும் சொற்கள், பொருட்பேறுகளைக் குழப்பத்துக்குள்ளாகாத வகையில் அவற்றின் இருப்பு அமைய வேண்டும். இன்று குழந்தை இலக்கியம் என்ற பெயரில் வெளிவரும் படைப்புகளை அவதானிக்கும் போது அவை கற்றவர்களுக்கும், ஏன் பெரியவர் களுக்கும்கூடப் பொருள் புலப்படாத அரும் சொற்களை யும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ள வேண்டிய இடக்குமுடக்கான தொடர்புகளையும் கொண்ட இருண்மை மிக்கவாகவே தென்படுகின்றன. பதிலாக கடுமையும் இனிமையின்மையும் வரட்சியும் தான் மிஞ்சிக் காணப்படுகின்றன. இத்தகைய இடர்பாடுகளி லிருந்து விடுபட்ட படைப்புக்களை தேடித் தெரிந்து எடுத்துப் பக்குவப்படுத்தித்தரக்கூடிய தகுதிப்பாடு மிக்க ஆசிரியர்கள் தாம் எத்தனை பேர் எம்மிடையே இருக்கின்றார்கள் என்பதும் ஓர் நியாயமான கேள்வியே.
85up 3O

Page 14
காலை ஆறு மணிக்கே அவன் வந்து நிற்பான் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
T அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து விடும் வழக்கமுள்ளவர் அவர் தெளிவானசிந்தனையுடனான எழுத்துப் பணிக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் *அமைதியான காலை வேளை மிகவும் பொருத்த *மானது. காலைத் தேநீரோடு எழுத்தையும் 'வாசிப்பையும் அவர் எட்டு மணிவரை மேற்கொண்ட பிறகு தான் அடுத்த வேலைகளைக் கவனிக்கப் பழகியிருந்தார்.
அவனது வருகையால் அவருக்கு மிகவும் விருப்பமான அந்த இரண்டுமணிநேரம் இழக்கப்பட்டு விட்டது என்று எண்ணிக் கொண்டார். வீட்டுக்கு வந்தவரை வாசலில் நிறுத்த முடியுமா? அவனை -ക്ക്
s
w
米※※
"நம்மால் கடந்த காலங்களில் கைவிடப் :பட்டவற்றை மட்டுமே அருகிவரும் கலைகள் எனக் 'கருதிவருகிறோம். இந்தக்கருத்தே பிழையானது. ஆய :கலைகள் அறுபத்துநான்கு என்று சொல்லப்படுகிறது. அவை என்னவென்று கூட நாம் தெரிந்து வைத்திருக்கவில்லை" என்றார் பேச்சாளர்.
"வசியக் கலை பற்றி நீங்கள் ஓரளவு அறிந்து வைத்திருக்கிறீர்கள். அது குறித்து நானும் பல விடயங்களைப் படித்திருக்கிறேன். இதற்கு மாந்திரீகம் என்றும் சொல்லப்படுகிறது. வாராந்திரிகளில் ; இக்கலையை 9 gü tu 6odu u Tassis 65mtesso L 6o விளம்பரங்களை நீங்கள் பார்க்க முடியும். இந்த விடயத்தில் எனக்கும் ஓரளவு பரிச்சயம் உண்டு. |$ဒွါး။ பெண்களில் யாராவது ஒருவர் முன்வருவாராக இருந்தால் நான் எனது பேச்சை முடித்துச் செல்லுகையில் அவரை என்பின்னால் வரச் செய்யளன்னால் இயலும்"
வயதான பெண்கள் நான்கு பேர் ஆங்காங்கே {{உட்கார்ந்திருந்தார்கள். பேச்சாளரின் வயதொத்த /முப்பது பேரளவில் ஆண்கள் அங்கிருந்தார்கள்.
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவர்களில் சிலர் அப்பெண்களை ஒருமுறை சின்னச் சிரிப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். பேச்சாளரையே பார்த்தபடி இருபத்தேழு அல்லது முப்பது வயது மதிக்கத் தக்க இளைஞன் ஒருவன் தனியே பின்னால் அமர்ந்திருந்தான்.
சவால் விட்டு அவர் பின்னால் போக வேண்டி வந்தால் மானக் குறைவாகிவிடும் என்ற பயத்தில் அல்லது தனது பேச்சுக்குச் சுவையூட்டப்
അപ്പു குசும்புத் தனம் பண்ணுகிறார் என்ற எண்ணத்தில் எதுவுமே காதில் விழாதது போல் பெண்கள், அமர்ந்திருந்தார்கள். N
பேச்சாளரேஅறுபத்தைந்துவயதுதாண்டியவர், இவர் பின்னால்போனால் என்னபோகாவிட்டால் என்ன, என்ற எண்ணம் கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். பேச்சாளர் தொடர்ந்தார்.
"அனிமா மகிமா இலகிமா
அரிய கரிமா பிராத்திமலப் பிணிமாசுடையோர்க்கடைவரிய
பிராகாமியமிசத்துவமெய் துணிமா யோகர்க் கெளியவசித்
துவமென்றெட்டா மிவையுளக்கண் an மணிமாசறுத்தோர் விளையாட்டின் k
வகையாமவற்றின் வகையுரைப்போம்" என்று திருவிளையாடற் புராணத்தில் ஒரு பாடல் வருகிறது. இந்தப் பாடல் சொல்வது என்ன? இந்தப் \ பாடல் அட்டமா சித்திகளைப் பற்றிப் பேசுகிறது. இந்த N எட்டுச் சித்திகளும் மாபெரும் கலைகள். 'அணிமா என்பது பூதவுடலை அணுப் போன்று சிறியதாக்குதல். 'மகிமா” என்பது உடலை மலை போன்று பெரியதாக்குதல். ‘இலகிமா என்பது காற்றைப் போல இலகுவாக்குதல். "கரிமா என்பது பளுவாக்குதல்.
V محسیمN
65p 3O

Page 15
'பிராப்தி என்பது அனைத்தையும் ஆளுதல் வசித்துவ என்பது யாரையும் வசியப்படுத்துதல். 'பிராகாமிய ?என்பது கூடுவிட்டுக் கூடு பாய்தல்."ஈசத்துவம் என்ப
விரும்பிய எதையும் செய்து அனுபவித்தல்.
இதிலே வசித்துவம் என்பதைத்தான் நா முதலில் பேச்சுக்குச் சுவாரஸ்யமாக இருக்க வேண்டு என்பதற்காகச்சொன்னேன்.தவிர வசியம்என்பதை நா இன்றும் நம்புகிறோம். இன்றைய மக்கள்சமூகம்அதை பற்றி அறிந்து வைத்திருக்கிறது. அதற்குக் காரண ஆசை. அடைய முடியாததை அல்லது சிரமப்பட் அடைய வேண்டியதை இலகுவாக அடைந்து விடு பேராசை. வசியம் செய்வதாக இன்றும் பல பிரகடனப்படுத்திக்கொண்டு காசுபார்த்துவருகிறார்க அது சாத்தியப்படுகிறதா இல்லையா என்பதல்ல, என தலைப்புக்குரியது. இவ்வாறான அற்புதமான கலைக 'அன்று இருந்தனஎன்பதுதான்"
இம்மாதிரித் தலைப்புக்களில் வெ அபூர்வமாகவே உரைகள் இடம் பெறுகின்றன என் 'அவனுக்குத் தோணியது. தன்னைத் தவிர இளை வயதுக்காரர்கள் யாரும் இக்கூட்டத்துக்கு வருை தராதது அவனுக்குக் கவலையாக இருந்தது.
அவர் தொடர்ந்தார்.
k: “பாருங்கள். எப்பேர்ப்பட்ட உன்னதமா ! கலைகள் இவை, இலகுவில் யாருக்கும்சித்திக்காத6ை இவற்றைப் பெற்றுக் கொள்ள மிகுந்த பிரயாசையு அர்ப்பணிப்பும் தியாகமும் உழைப்பும் தேவை. சக் வாய்ந்த எதுவும் மிகச் சாதாரணமாக மனிதனுக்கு {{! கிடைத்துவிடுவதில்லை.
i ༡ உலகத்தில் எதைவேண்டுமானாலும் சாதித்து
INSNS
Ꮷ
' கொள்ளக் கூடிய அற்புதமான சக்தியுள்ள கலைக இவை பொறாமை, காழ்ப்புணர்வு, பேராசை மற்று /எல்லாம் தன்வசமே இருக்க வேண்டும் என்கி ஆதிக்கவுணர்வு ஆகியவற்றை அடியோடு அகற் விட்டுத்தான் இக்கலைகளைப் பெற்றுக் கொள்ள போராடவேண்டும்.தனது புலன்களை அடக்கி ஒடுக் , புலன்களாலும் உணர்வுகளாலும் ஆட்டிப் படைக்க படாத மனதைப் பெற்றுக் கொண்டே இவற்றையடை முயலவேண்டும்"
அவன் கூட்டத்தின் பின்னாலிருந்து எழுந் கையை உயர்த்தினான்.
பேச்சாளர், "என்ன என்பது போல் அவனை பார்த்தார்.
"புலன்களை அடக்கி விட்டு உலோகாயு 'ஆசைகளை ஒழித்து விட்டு இக்கலைகளைப் பெற்று 'கொள்வதில் என்ன லாபம் இருக்கிறது?" அவ
கேட்டான்
f "நல்ல கேள்வி. நீங்கள் இன்னும் இன்றை 'உலகத்தில்-ஆசையும், வன்மமும் கொண்ட உலகத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் நின்றபடி இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். இந்தக் ம் கலைகளைப் பெற்றுக் கொள்வது பிறன் மனை y து நாடலுக்கோ, தனக்குப் பிடிக்காதவனை நோவினை செய்வதற்கோ, நாட்டை ஆள்வதற்கோ, உலகத்தின் செல்வங்களையெல்லாம் நாமே வைத்து அனுபவிப்பதற்கோ அல்ல.
தன்னலம் அறுத்து மற்றோருக்கு அன்பும் கருணையும் செய்வதற்காக. அதுவே நித்தியமானது. உன்னதமிக்கது. சாஸ் வதமானது. மட்டற்ற சந்தோஷத்தைத்தருவது ஆத்மாவின்அளவிடமுடியாப் பசியைத்தீர்க்க வல்லது. (s
'S NSS గ్రీ
குறுக்கு வழியில் மனிதன் இவற்றை அடைந்துது விட முடியாது. அவ்வாறு உலோகாயுத சுய 以 நன்மைகளுக்காகக் குறுகிய வழியில் இவற்றைப் பெற முடியுமாக இருந்தால் பலரும் இவற்றை அடையப் பெற்றிருப்பார்கள். எல்லோரும் குட்டிக் கடவுள்களாக உலா வருவார்கள். அப்படியானால் இன்றைய மனித குலத்தின் கதிஎப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்."
அவன் அமர்ந்தான். பேச்சாளர் தொடர்ந்தார்.
"இந்தக் கலைகளில் வசியக் கலை பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்பதால்அதைப் பற்றிப் பேசுவது ஓர் அற்ப எதிர்பார்ப்பை மனதுக்குள் ஏற்படுத்தக் / கூடியது.நம்மால் செய்யச்சாத்தியப்படாததைநாம் யார் ஆண் மூலமாவது பெற்றுக்கொள்ளவிழைகிறோம். இதனால், இக்கலையின் பெயரால் பலர் ஏமாற்றப்படுகிறார்கள். 以 நான் முன்னர் குறிப்பிட்ட மற்றைய கலைகளைக் கொண்டு யாரையும் ஏமாற்றமுடியாது. அவை மக்கள் கண்முன்னே நேரடியாகச் செய்து காட்டவேண்டியவை N என்பதால் இவற்றைப் பற்றிப் பேசுவாரில்லை.
தாயுமான சுவாமிகளின் பாடல் ஒன்றை இந்த இடத்தில் நான் எடுத்தாள விரும்புகிறேன். அவர் சொல்லும் விடயங்களை அவதானியுங்கள். கந்துகமதக்கரியை வசமா நடத்தலாம்
கரடி வெம்புலிவாயையுங் i கட்டலாம் ஒருசிங்கமுதுகின்மேற்கொள்ளலாம் J கட்செவியெடுத்தாட்டலாம் வெந்தழலின் :ܚ இரதம் வைத்து ஐந்துலோகத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம் வேறொருவர் காணாமல் உலகத்துலவலாம் ༢
சந்ததமும் இளமையோடிருக்கலாம் மற்றொரு சரீரத்திலும் புகுதலாம் \
சலமேல்நடக்கலாம் \
5 கனல்மேல் இருக்கலாம்
亦 தன்னிகரில் சித்திபெறலாம்
சிந்தையை அடக்கியேசும்மா இருக்கின்ற
திறன் அரிதுசத்தாகியென் i) சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
3. இதழ் 30

Page 16
if W y / ܠܶV ܢ")܄ "/ ܐܶ") fè VN . v/\ VN v
(853 FTLDujmorps(3LD! இங்கே குறிப்பிடப்படுகின்ற செயல்கள் ; எவையும் வெறுங்கற்பனைகள் அல்ல. ஒரு காலத்தில் நடந்தவை.தற்போதும் இவற்றில் ஏதாவது ஒன்று வெகு ಟ್ವಿತಿದ್ದಾರೆ ಎಂಗ நடந்து கொண்டிருக்கலாம். நமது 'கண்காணா இடத்தில் சித்தர்களும் யோகிகளும் தமது புலன் அடக்கியாளும் வல்லமையால் இவற்றை அடைந்திருக்கலாம்.
பிராகாமியம் என்ற கூடுவிட்டுக் கூடு பாய்தல் t ஒருசுவாரஸ்யமான விடயமாக இருக்கிறது. இறந்த ஒரு ' உடலில் தனது ஆத்மாவையும் உயிரையும் உட்புகுத்தி நடமாடுவதைக் கூடுவிட்டுக் கூடுபாய்தல் என்று அழைக்கிறார்கள். திருமூலநாயனார் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தார் என்று வரலாறு சொல்கிறது." பேச்சாளர் தொடர்ந்தார். நிகழ்ச்சிமுடிந்ததும் பலரும் அவரைச் சூழ்ந்து கைலாகு செய்தார்கள். சிலர் சின்னச் சின்னக் கேள்விகளைக் கேட்டார்கள். பதிலிறுத்துக் கொண்டே கலைந்து செல்பவர்கள் மீது பார்வையைச் செலுத் * தினார் பேச்சாளர். பெண்கள் வேகமாக வெளியேறி யதை அவதானித்ததும் அவர் தனக்குள் சிரித்துக்
米米本
தனது ஜோல்னாப்பையைத் தோளில் அணிந்து
கொண்டு வெளியேற எத்தனித்த போது அவரது கையைப் பிடித்து சேர் என்றான் அவன்.
"கூடு விட்டுக் கூடு பாய்தல் உண்மையெண்டு
நம்புகிறீங்களா?" என்று கேட்டான்.
ஆமா என்று சொன்னவர்"நாமநடந்துக்கிட்டே" ܪ 'பேசுவமா?" என்று அவனைக்கேட்டார்.
'' "சரி என்றான், அவன்.
i; "நீர் மேல் நடக்கிறது, நெருப்புக்கு மேல நடக்கிறது. மிருகங்களைக்கட்டுப்படுத்துறது எதிரியை நிலைகுலைய வைக்கிறதெல்லாம் நடந்திருக்கு. வயசானவங்கதங்கடகாலத்திலநடந்த எத்தினையோ கதைகளச் சொல்லியிருக்காங்க. நான் அவகளுக்கிட்ட
.யிருந்து கேட்டிருக்கன். அப்பிடியெண்டா இதுவும்
நடந்திருக்கும் என்றார்.
r. "அறிவுவிருத்திகண்ட இந்தக்காலத்துல யாரும் ; இந்த விடயங்கள்ல ஏன் சேர் கவனம் செலுத்தல்ல?"
t "இதுவேகமானகாலம்தம்பிஎல்லாமே உடனடி
வாழ்க்கையாப்போயிட்டது.இந்தக்கலைகளக்கற்கிறது லேசான வேல இல்ல. முதலாவது நல்ல ஒரு குருவக் :கண்டுபிடிக்கணும். இப்ப குருவுக்கு எங்க போவம்? 'அப்பிடியே ஒருத்தரக்கண்டாலும்அவருநல்ல குருவா 'போலிக்குருவா என்கிறது வெளங்குறத்துக்கே அஞ்சு வருஷம் போகும். அதுமட்டுமில்லாம வருஷக் கணக் అవి புலன்கள அடக்கிவாழஇந்தக்காலத்தில யாருமே
ஜீவநதி
 
 
 
 
 
 

t '» , V A. پلا w y /4 . N VN v \ vv S.
"விஞ்ஞானரீதியாக இந்த விடயத்தை யாரும் N அணுகவில்லையா?"
"அந்த அளவுக்கு நான் தேடல்ல. ஆனா, உளவியல்ரீதியாகப் பாத்தால்நாம்காணும்கனவுகளும் கூட ஒரு வகையில் கூடுவிட்டுக் கூடு பாய்தலின் ஒரு சிறு அங்கந்தானோ என்டு எனக்கு ஒரு சந்தேகம்
“எனக்கு விளங்கல்ல." “சில வேளைகள்ல விசித்திரமாக் கனவு காணுறமில்ல. உதாரணமா. எப்பவோ எங்கேயோ கண்ட ஒரு அழகான பெண்ணோட சம்பந்தப்படுத்தி (
இல்லயெண்டா விசித்திரமான செயல்கள்ல நாம் ஈடுபடுறமாதிரி. வெளியே சொல்ல முடியாதஉள்ளக் கிடக்கைகள்தான் இப்பிடிக்கனவா வாறதா உளவியல் அறிஞர்கள் சொல்றாங்க. இதெல்லாங்கூடகடுவிட்டுக் கூடு பாய்றத்தோட சம்பந்தப்பட்டதோ என்று எனக்கு தனிப்பட்ட முறையில ஒரு சந்தேகம் இருக்கு."
அவரது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டவன், இது பற்றித் தொடர்ந்தும் கதைக்க விரும்புவதாகச் சொல்லியபடி விலகிப் போனான்.
米米率
ஐந்து தினங்களுக்குப் பின் அவரது தொலை பேசிக்குத்தொடர்புகொண்டு பேசினான். هم திருமூல நாயனார் இடையனின் உடலுக்குள் அவுை நுழைந்ததைப் படித்ததாகச் சொல்லிவிட்டு இடையனின் . மனைவியை ஏன் அவர் மனைவியாகக் கொள்ள ( வில்லை என்று கேட்டான்.
"அப்படி அவர் செய்திருந்தால் அவர் \ திருமூலநாயனாராக இருக்க முடியாதே" என்று சொல்லிச்சிரித்தார்.
நேற்றிரவு கனவில் நடிகை ஏஞ்சலினா ஜூலி தன்னை ஆரத் தழுவி அழைத்துச் சென்றதாக அவன் சொன்னபோது அவர்சத்தமிட்டுச்சிரித்தார்.
"அப்பிடியெண்டா நீங்க கூடுவிட்டுக்கூடு பாய ஆரம்பிச்சிட்டீங்க" என்று அவனைக் கிண்டலடித்தார். அவன் மலர்ந்து சிரிப்பதை அவனது சிரிப்புச்சத்தத்தில்
அவரால் உணர முடிந்தது.
米米率
# உள்ளேவருமாறுபலமுறை அழைத்தும்அவன் எதுவும் கேட்காதவனைப் போல் நின்றிருந்தான். Ꮩ! அந்த அதிகாலையிலும் அவன் மேலுடை\
V
效
V
வியர்வையால் நனைந்திருந்தது.
அவர் படியிறங்கி அவனைத் தட்டி அழைத்த போது,
பதட்டத்துடன், "சேர். நான் நேற்றிரவு செத்துப் போனேன்" என்றான்.
■一 இதழ் 30

Page 17
மொழியினால் தத்துவத்துக்குள் ஊடுருவிச் சென்ற கருத்தியல் கட்டுமானங்கள் தான் இன்றைய உலகின் சகல பிரச்சினைகளுக்கும் காரணம் என பின்நவீனத்துவவாதிகள் பகர் கின்றனர். இதனால் தான் தத்துவங்களின் கட்டுடைப்பும், மொழியின் மீள்வாசிப்பும் ஏகாதிபத்தியத்திலிருந்தான மீட்சிக்கு வழி சமைக்கும் என கருதுகிறார்கள்.
தத்துவ கோட்பாடுகளுக்கு அடிநாதமாக இருந்து செயற்படுவது, இருப்பு குறித்த அனுபூத வியல் தான். இது மொழியின் மூலமே தத்துவத்
துக்குள் நுழைந்தது. இருப்பு குறித்த அனுபூதவியல் என்பது, அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஏகாதிபத்தியம் செய்யும் ஒரு ஆதிக்க கருத்தியலாகும். இது தான் மையம் என்பதை உருவாக்கி பெரும்பான்மையோரை விளிம்புக்குத் தள்ளி அடக்கியாள வழி வகுக்கிறது. எனவே அனுபூதவியலைத் தகர்க்காமல் ஆண்டான் அடிமை நிலையை வேரறுக்க முடியாது என பின்நவீனத்துவவாதிகள் கருதுகின்றனர்.
தத்துவவியலை தகர்க்க முயற்சித்த மெய்யியல் விமர்சனம், மனம் குறித்த விமர்சனம், கடவுள் மறுப்பு போன்றவை மொழியின் வட்டத்துக்குள் சிக்கியே தோல்வியடைந்தன. மொழியின் சூழல் என்பது வினோதமானது. அது அனுபூதவியல் வரலாற்றிற்கும், அதன் தகர்ப்புக்கும் இடையேயான உறவை விளக்குகிறது. இது மையத்தைத் தகர்க்க எடுக்கப்படும் முயற்சியை மீண்டும் மையத்துக்குள்ளேயே தள்ளிவிடுகிறது. (ஆட்சியாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வென்ற வர்கள் ஆட்சியாளர்களோடு சங்கமிப்பது போல) உண்மையிலேயே மொழி தனக்குள்ளேயே தன்னை விமர்சித்துக் கொள்ளும் கூறுகளைக் கொண்டது. இதை முதலில் தெளிவுற புரிந்து கொள்ளவேண்டும். எழுத்துமொழி என்பது
છ6pBઠ્ઠી
 

நிரந்தரமான மையத்தை கேள்வி கேட்பதன் மூலம் மையத்தினால் பின்னப்பட்டிருக்கும் பிரச்சினை களைப் புட்டுக் காட்டி கிழித்தெறிவதே மையத் தகர்ப்பு ஆகும். மையம், விளிம்பு என்ற இருநிலை இருப்பை இல்லாதொழிப்பதே இதன் நோக்க மாகும். எழுத்துருவாக்கங்கள், அறிவு எனும் ஆடுகளத்தில் சிந்தனையின் விளையாட்டை நிகழ்த்துவதால் இதை சாத்தியமாக்குகிறது. கட்டுடைத்தல் மூலம் நாம், பல்வேறுபட்ட பண் பாட்டு வாழ் உலகம் சந்திக்கும் தாக்கங்களையும், அவை எவ்வாறு நம்மைத் தாக்குகின்றன
என்பதையும் புரிந்து கொள்கிறோம்.
கட்டுடைத்தல் செயன்முறை மூலம் ஒருவிதமான மீள்வாசிப்பு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. முதலில் மையமான சொல்லா டலில் மையத் தன்மை கண்டறியப்படுகிறது. அடுத்து மையத் தகர்ப்புக்கான முயற்சி ஊக்குவிக்கப்படுகிறது. மொழி எதை மையப் படுத்துகிறது. எதை விளிம்புக்குத் தள்ளுகிறது. என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி முரண்பாடு களைக் கட்டவிழ்த்து வெளிப்படையாக்கி மேலாதிக்கம் செலுத்திய மையத்தைப் புறம் தள்ளிவிட்டு, விழிப்பை மேற்கொண்டு வருகின்றது.
மார்க்சிய சிந்தனையிலும் இவ்வாறான ஒத்ததான நிலையை அவதானிக்க முடிந்தாலும், பின்நவீனத்துவவாதிகளின் கருத்துப்படி மொழி யின் ஆதிக்கத்தைத் தகர்க்க தத்துவத்தால் முடியாது என்ற கூற்று மூலம் மார்க்சியம் புறம் தள்ளப்படுகிறது. இதற்கான காரணம், மொழியியல் என்னும் புலம் தத்துவத்துள் இணைந்த பின்னர் தத்துவத்தால் சார்பு நிலையின்றி இயங்க முடியாமையே என்கின்றனர். எனினும் தத்துவத் திற்கு வெளியே செல்லும் போது மீண்டும் அனுபூதவியலுக்குள் சிக்கிக் கொள்ளும் நிலையும் அச்சுறுத்துகிறதல்லவா?
65up 3O

Page 18
பின்நவீனத்துவவாதி டெரிடா, கட்டு டைத்தல் தத்துவ வரைமுறைகளை மீறிச் செல்லும் முறைபற்றி பின்வருமாறு விளக்குகிறார். கட்டு டைத்தல் முதலில் தத்துவ அமைப்புக்குள் ஊடுருவி பின்னர் அதன் கட்டுமானத்தைச் சிதைக்கிறது. ஆனால் அதை அழித்தொழிக்கவில்லை. சிதைத்ததை மறுபடி புதிதாய் கட்டமைப்பதன் மூலமே மையவிளிம்பு பேதத்தை நீக்க முடியும் என்பது அவரது கருத்தாக உள்ளது. இதனால் கட்டுடைத்தல் நிகழ்வு சமூக அரசியல் களத்திற்கு இட்டுச் செல்லப்படுகிறது. இதன்மூலம் நடைமுறையிலுள்ள அரசியல் தத்துவங்களும், அதன் பாரம்பரியங்களும் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. தத்துவத்தைக் கேள்விகேட்க தத்துவமில்லாத களம் உருவாக்கப்படுகிறது. இதனாலேயே பின்நவீனத்துவத்தை ஒரு தத்துவமோ அல்லது கோட்பாடோ என்று முற்று முழுதாக வகைப்படுத்த முடியாதுள்ளது.
நாம் எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தை ஏற்றுக்கொண்டு அதன் கொள்கை யோடு இணைந்து கொள்கிறோம். அது மட்டுமே சரி என நினைக்கிறோம். ஏனைய எல்லா சிந்தனைகளையும் மறுக்கிறோம். இது தவறு என்கிறது பின்நவீனத்துவம். ஐனநாயக அமைப்பு அரசியலே சரியானது என்று பலரும் நம்பிய நிலை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ஐனநாயக அமைப்பு இப்போது புதிய சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறதல்லவா? மார்க்சியம் சிறந்த தொரு தத்துவமாக ஏற்கப்பட்டாலும், அதனால் ஆண்டான் அடிமை நிலையை மாற்ற முடிய வில்லையே. மார்க்சியம் பேசி ஆட்சிக்கு வந்தவர் கள் அடக்கு முறையாளர்களாக செயற்படுகிறார் கள். அடக்குமுறை அரசுகளுக்கு ஆதரவு அளிக்கின் றார்கள். சீனாவும் ருசியாவும் இன்று இலங்கையின் இனவாத யுத்தத்திற்கு துணை போனமை இதற்கு ஒரு உதாரணம். எனவே பின்நவீனத்துவம் ஒற்றைத் தன்மையை மறுத்து பன்முகத் தன்மை யை வலியுறுத்துகிறது. கூடவே தொடர்ச்சியான மீள்வாசிப்பு பற்றி வலியுறுத்து கிறது. இதனால் தான் பின்நவீனத்துவம் நிலையான ஒற்றைத் தன்மையுடையதாக நிலைக்காதிருக்கிறது.
பின் நவீனத்துவம் என்பது பிற தத்துவங்
நூல் அறிமுகத்திற்கு தங்கள் நூல்க
இரு பிரதிகளை
ઈ6ujBઠી -

களையும் சிந்தனைகளையும் மறுவாசிப்பு செய்வது தான். எனவே தான் அது எப்போதும் எதிலும் விவாதங்களை எழுப்புவது என்ற போக்கில் உள்ளது. எனவே தான் இதன் கட்டுடைத்தல் போக்கு என்பது ஓர் ஆய்வோ விமர்சனமோ, செயற்பாடோ இல்லை. இது ஒரு நிகழ்வு ஆகும். அது தன்னைக் கூட கட்டுடைத்துக் கொள்ளக் கூடியது.
மொழியின் மூலம் தத்துவத்துக்குள் நுழைந்த அனுபூதவியலின் உயிர் நாடியைத் தட்டிப் பார்ப்பதன் மூலம் அதனுள் உறைந்து கிடக்கும் கருத்தியல் ஏகாதிபத்தியத்தை வெளிப்படையாக்கு கிறது பின்நவீனத்துவம். இதனால் அது தத்துவ மேலாதிக்கத்தைத் தகர்க்கவல்ல தத்துவம் கடந்த கருத்தியலாக இது மிளிர்கிறது. எனினும் இதை தத்துவத்திற்கு எதிரான முயற்சியென்றோ, தத்துவ பங்களிப்பை மறுக்கும் முயற்சியென்றோ, சிந்தனை களை கண்மூடித்தனமாகச் சிதைக்கும் நிகழ்வென் றோ புரிந்து கொள்ளலாகாது. தத்துவத்தை மொழி யியலிலிருந்தும் அனுபூதவியலிலிருந்தும் காத்துக் கொள்ளும் முயற்சியாகவும் நோக்க முடியும். அதாவது தத்துவ நிலைப்பாடுகளிலுள்ள சிக்கல் களை சரி செய்யும் முயற்சியே பின்நவீனத்துவ நிகழ்வாகும். பின்நவீனத்துவம் விழிப்பை மைய மாக்கி புதியவொரு மையத்தை உருவாக்குகிறதா என்று நியாயமான கேள்வியும் எழாமலில்லை. ஆனால் கட்டுடைத்தல் என்பது முற்றுப் பெறாமல் இயங்கியல் அடிப்படையில் தொடரும் போது இதற்கான சாத்தியம் அற்றுப் போகிறதல்லவா?
இன்று பின்நவீனத்துவமும் தோல்வி கண்ட ஒரு நிகழ்வாக கூறப்பட்டாலும் இக்கூற்றானது மையத்திலுள்ளவர்கள் தமது கோட்பாடுகளைக் காத்துக் கொள்ளும் நிமித்தமாக ஏற்படுத்தும் புனைவே, பின்நவீனத்துவ நிகழ்வுகள் அசாத்திய D660685 ஆக்கப்படுதலும் இதன் வெளிப்பாடேயாகும்.
உலகில் உள்ள அனைத்துமே ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருப்பதாக அறிவியல் உலகம் கூறுகிறது. இது தத்துவங்களுக்கும், கோட்பாடுகளும் உரைகளுக்கும், நிகழ்வுகளுக்கும் கூட பொருந்தும் போலிருக்கிறது. பின்நவீனத்
துவம் பின் தள்ளப்படுவதும் இவ்வாறான நிகழ்வு
5.T(360TFr?
ளை அனுப்புபவர்கள் தங்கள் நூலின் அனுப்ப வேண்டும்
6- 85up 3O

Page 19
மதிலோர சிறு கம்பில் மாநகர மின்விளக்கு அதன் ஒளிவெள்ளம்
மறுகம்பம் நீளது அரைத் தொலைவில் வலுவொடுங்கி மங்கிவிடும். ஆனாலும் வானோங்க உயர்ந்திருந்து வையமெல்லாம் கதிர் சிதறும் மதியொளியை, நானவைக்கும் தன் அருகிருப்பால், நள்ளிரவில் துயில் கலைந்து நரக்குருதி தீய்ந்தெழ மூச்சடங்கிப் பறவையினம் சிறகடித்து விலகி ஓடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடுவெயில் சுட்டெரிக்க நிறைவிழிகள் உறைந்திருக்க சுடுகுழல் பேச்சொடுக்கிப் பெற்ற முதல் சுளுவாக மடி சேரும், பனைமட்டை பெரும் கொட்டன் சுடுகம்பி இவையனைத்தும் பெருந்திமிரில் உள்வீதி உலாவரும். கடிவாளப் பிடியிறுக்கி தளராது அரசோச்ச அதிகார நடுப்புள்ளி நழுவாது அழுங்காகப் பிடித்தாள் அருகாக வந்து ஒளிசெறியக் கற்றிடுவாய் வான்மதியே.
-எம்.கே.முருகானந்தன்

Page 20
リ%リー。ーリ
3/:N سميf
2 GST fiରା உண்மைத் தடங்கள்
அந்தரங்கங்கள் யாவும் அவிழ்த்து விடப்பட்ட நிலையில்
பகிரங்கமாகவே
வினாக்களுக்கு விடை தேடி
வெற்றி பெறுவதற்காக
எண்ணங்கள் அநாதையாகி
விதியின் வடிவங்களாயினர்
அதன் உணர்வுகளுக்குள்ளும்
தோற்றுக் கொண்டேயிருக்கிறது உணர்வுகளின் உண்மைத்தடங்கள் S
சிந்தனைகள் பிரக்ஞையற்று
வார்த்தைகளின் வடிவங்களும் விரக்தியடைந்து விட்டன
இயற்கை கூட செயற்கையாகவே சிந்திக்கிறது :பிரிகள் ஒனசFuாட்டம் மரணத்தினர் மடியில் இறுகிக் கிடக்கிறது
மூச்சு விடுவதும்
மூச்சை விடுவதும்
மூர்ச்சையாகிப் போவதும்
வாழ்தலென்பது பூச்சியம்தான் உயிரணுக்களுக்குள்ளும்
விதியின் ஊடுருவல்கள்
வாழ்தலுக்குரிய வினாவையேந்தி அதற்குரிய விடையைத் தேடி அமானுழ்ேபமான ஓர் உலகில் பகுத்தறிவும் பட்டறிவும்
தம் அறிவிழந்து
உயிரிழந்துபோக அறியாமை அந்தகாரத்தில் ஆட்சியமைக்கிறது.
ז'iiiT
விடையை மென்று வென்றுவிட மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் அஞ்ஞானத்திற்குள்
ஐக்கியமாகி விடுகிறது இந்நிலையிலும் ஞானத்தைத் தேடி ஓரினா பணிக்கிறது முகமூடியணிந்த நிலையில் அதன் பின்னே
விடை தொடருகிறது.
- பேருவளைறபீக் மொஹிடீன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதை எது பக்கம் எது ஒன்றுமே புரியவில்லை கரை எது நடு எது எதுவுமே புரியவில்லை எல்லோரையும் குருடாக்கி விடுகிறது நில்லாமல் ஓடும் வெள்ளம்,
மரக்கறிக்கடை வாசலில் மாடு கிடக்கிறது நகைக்கடை வாசவில் நாய் கிடக்கிறது ஆடைக்கடை வாசவில் ஆடு கிடக்கிறது (ரளிகைக்கடை வாசலில் மானர் கிடக்கிறது 3 UCILife, கடைகளின் வாசல்களில்
ரிருகங்களைக் கிடத்திவிட்டுப் போகிறது வெள்ளம்
3. வீட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து ஆடையணிகளையும் புத்தகங்களையும் சிறுகச் சிறுகச் சேமித்த சொத்துக்கி:Tபும் சித்திரப் பாவைகளையும் சொந்த நிலத்தையும் தின்று தீர்த்து விட்டு இன்னும் அடங்காப் பசியுடன் அறைக்குள் அலைந்து திரிகிறது இராட்சச வெள்ளம்
இப்போதைக்கு ஏதாவது அனுப்பி விே என்று என்னைக் கேட்காதே தாராளமாகவே அனுப்பி வைத்து விடுவேன்
வெள்ளத்தை - GUflu segi

Page 21
சத்தத்தைக் குறைச்சு வைச்சும் ஃபோ சின்னதாகச் சிணுங்குகிறது
"ஹலோ." சே. அலுப்புக் களைப் பெண்டு ஒ( கொஞ்ச நேரம் நித்திரைகொள்ள விடாதுகள்
"ஹலோ. ஹலோ . . . ஆர். சுபாே கதைக்கிறது?"
ஏதோ புதுசா இண்டைக்குத் தான் இவ என்ரை குரலைக் கேக்கிறார்!
"ஒமோம். சொல்லுங்கோ நட அண்ணை. சுபா தான் கதைக்கிறன். ஏன் குர தெரியேல்லையே?"
பாசாங்குக்குக் கதைக்க, எனக்கு நல்லாப் பழக்கிப் போட்டாங்கள்.
"மகள் கதைக்கிறா எண்டு நினைச்சு போட்டன். ரெலிபோனிலை குமரி மாதிரியெல்ே உம்மடை குரல் கேக்குது. ஹி. ஹறி. ஹி"
சிலேடையும் சேட்டையும் சேர்ந்த, நரி சிரிப்பு போனுக்குள்ளாலை தெளிவாக் கேட்குது ஆள் நல்ல வடிவா வழியது
"இண்டைக்குப் புதன் கிழமையெல்லே நடா அண்ணை? சுஜி ஸ்கூலுக்குப் போயிருப்ப ளெண்டு உங்களுக்குத் தெரியுந்தானே.?"
புலுடாப் பண்ண மட்டும் நல்லா தெரியுது. இதுகளுக்கு.
"சும்மா உம்மோடை ஒரு பகிடி கெல்லோ சொன்னனான்,சுபா. . ."
பகிடிவிட நான் என்ன இவருக்கு பெண் சாதியோ, சிநேகிதியோ. இல்ை இவற்றை. வைப்பா. வாற எரிச்சலுக்கு.
"சரி சரி. சொல்லுங்கோ நடா அண்ணை விட்டால் தொடர்ந்து இழுபடும். பிலா பால் மாதிரி.
"ஒண்டும் விசேசமாயில்லை. அருளை கண்டு ஒரு கிழமையாப் போச்சு. ஒருக்கா
ઈ6pઠ્ઠી
 

பாக்கவேணும் எண்டு சோட்டையாக் கிடக்கு. வீட்டிலை ஆள் நிக்கிறாரே?"
ஓ..! அருளிலை அன்பு மழை பொழியுது "என்ன நடா அண்ணை கதைக்கிறியள்? வெள்ளென விடியக் காத்தாலை வெளிக்கிட்டால், அவருக்கு ஐஞ்சு மணிக்கு வேலை முடியும். அதுக்குப் பிறகு உந்த ஊர்த் துளவாரம் எல்லாம் பாத்து முடிச்சுப் போட்டு, பத்துப் பதினொரு மணிக்குத் தான் கட்டைக்குத் திரும்பிறது. நானே மனிசனை ஒழுங்காக் காணக் கிடைகிறதில்லை. எல்லாந் தெரிஞ்சுகொண்டும் புதினமாக் கேக்கிறியள்?"
இது வேறை ஒண்டுமில்லை, கள நிலவரம் அறியிற கள்ளக் குணம்
"ஒமோம். தெரியுந் தெரியும். உங்கடை குடும்பமும் எங்கடை குடும்பமும் ஒண்டுக்கை ஒண்டு மாதிரி எண்டபடியாலைதான் கேக்கிறன், குறை நினையாதையும், சுபா."
அதென்ன ஒண்டுக்கை ஒண்டு.? “சீ. சீ. உங்களை நான் குறை நினைப்பனே? சொல்லுங்கோ நடா அண்ணை. .." கை நீட்டி வாங்கின கடன் காசை உடனை தாவெண்டு இவன் பாவி கேட்டுப்போட்டால்?. ஐயோ. கடவுளே. இப்ப நானெங்கை போவன். "நீர் நைற் ஷிப்ற் எண்டு இரவிரவாக "கிளினிங் வேலைக்குத் திரியிறீர். அருள் என்னெண்டால் உந்தக் கண்டறியாத "டெலிவறி வேலையெண்டும், தேலையில்லாத இலக்கியம், எழுத்து அது இதெண்டும், பிறகு சிநேகிதக்காற ரோடை சேந்து பாட்டியெண்டும் தண்ணியெண்டும் இரவு பகலாக றோட்டளந்தபடி"
நக்கல் நளினம் மட்டும் ஒரு நாளும் விட்டுப் போகாதே!
“என்ன செய்யிறது நடா அண்ணை? எல்லாம் தலை விதி"
இதழ் 30

Page 22
ஓமோம். இப்பிடியெல்லாம் கதை கேட்க வேணுமெண்டு விதிதானே!
"எனக்கிருக்கிற கவலை என்னெண்டால், நீங்கள் ரெண்டுபேரும் இந்த மாதிரி இருந்து கொண்டு எப்பிடிக் குடும்பம் நடத்திறியள் எண்டது தான்”
அது சரி. அது சரி. இந்த ஓநாய்க் கவலை எல்லாருக்கும் வராதுதான்!
“எனக் கென்னவோ, அருள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளுறார் போலை கிடக்கு, சுபா, காசு பணம் ஒரு பக்கம் கிடக்கட்டும். அது வரும் போகும். ஆனால் புருசன் பெண்சாதிக் கிடையிலை அன்பு, பாசம், பிணைப்பு எண்டது எப்பவும் இருக்கவேணும். உமக்கென்ன வயது போவிட்டுதே? கேக்கிறன் எண்டு குறை நினை யாதையும் சுபா. உம்மைத் தன்னிலும் அவர் ஒழுங்காக் கவனிக்கிறாரே.?"
அனுதாபம் ஆடுகளிலைதானாக்கும் எண்டு நினைச்சன். அது பிழை. மறியாட்டிலை மட்டுந்தான் மனிசனுக்குக் மாறாத கவலை!
“கொஞ்சம் பொறுப்பீனமும் ஊதாரித் தனமும் உங்கடை சினேகிதருக்கு இருக்குத்தான், நடா அண்ணை. ஆனால் எனக்குச் சீலை சட்டை வாங்கித்தாறார். கோயில் கொண்டாட்டங் களுக்குக் கூட்டிக்கொண்டு போய் வாறார். இடைக்கிடை வுட்சைட் சினிமாவிலை தமிழ்ப் படத்துக்குக் கூட்டிக்கொண்டு போறார். பிறகென்ன அன்பில்லாமலே?"
மடத்தனமான மறுமொழியெண்டாலும், பிடிகுடுக்காமல் கதைக்கத் தெரியுதெனக்கு
“நீர் மனிசனை விட்டுக் குடுக்கக்கூடா தெண்டு மூடிமறைக்கிறீர். அருள் என்னட்டைக் கடன் பட்டிட்டாரே எண்டு நீர் கவலைப்படத் தேவை யில்லை, சுபா. நானென்ன பிறத்தியே? உம்மடை உந்த முகத்துக்காத்தான் காசை உடனை வையெண்டு அருளை நான் நெருக்கிறதில்லை. விளங்குதே? உமக்கேதாவது பேர்சனலாகக் காசுகீசு தேவைப்பட்டால் அசுக்கிடாமல் என்னைக் கேளும். என்ன தேவையிருந்தாலும் என்னட்டை எப்பவும் நீர் உரிமையோடை கேக்கலாம், சுபா. நான் சொல்லுறது உமக்கு விளங்குதே?"
வெள்ளை மனசுக்காறனெண்டு, அச் சொட்டாக நிறுவிப்போடவேணுமண்ட அவசரம்.
“உங்கடை நல்ல மனம் எனக்குத் தெரியாதே. தாங்ஸ் நடா அண்னை, போனிலை ஒரே இரைச்சலும் சத்தமுமாக் கிடக்கு. எங்கையிருந்து பேசிறியள்?"
છ6pઠ્ઠી

வெட்டி விடுறதைத் தவிர வேறை வழியில்லை.
நான் உம்மடை வீட்டுக்குக் கிட்டத்தான், "மல்வேர்ன் மோல், பேய் போன் ஒண்டிலை யிருந்து கதைக்கிறன்."
அதுதானே இங்கை "அண்ணோணி நம்பர் எண்டு விழுகிது.
"சரி நடா அண்ணை, நான் இப்ப கொஞ்ச நேரம் படுத்தால்தான் பிள்ளையஸ் ஸ்கூல் முடிஞ்சு வாறநேரம் எழும்பச் சரியாய் இருக்கும். இண்டைக்கு அருளைக் கண்டால் நீங்கள் கோல் எடுத்ததெண்டு சொல்லிவிடுறன். அப்ப சரி. நான் வைக்கிறன் நடா அண்ணை. சரியே. ஒகே. பாய் நடா அண்ணை"
பதிலுக்கென்று காத்திருக்காமல் வெடுக்கென்று வெட்டிவிடுகிறேன்.
கட்டிலில் படுத்திருந்தபடியே ஃபோனை வைத்துவிட்டு, முழு உடலையும் போர்வைக்குள் புதைக்கின்றேன். கண்களை இறுக மூடிக்கொள் கிறேன். தூக்கம் விழிக் கோளங்களுக்குள் சுமையாகக் குவிந்து கிடந்து துன்புறுத்துகிறது. ஆனாலும் தூக்கமுடியவில்லை - குழம்பிவிட்டது! நெஞ்சிலிருந்து மூக்காலும் வாயாலும் பீறிட்டு வெளியேறும் அனல் காற்று போர்வையை நிரப்பிக்கொள்கிறது. மூச்சுத் திணறுகிறது!
தலை மூடியிருந்த போர்வையின் மேற்பகுதியை விலக்கிக்கொண்டு மறுபக்கம் திரும்பிச் சுருண்டு படுக்கிறேன்.
மனம் தூங்க மறுத்து அடம்பிடிக்கிறது! கனடா பற்றிய நினைவுகள் கானடா ராகம் மாதிரி இனிப்பாயிருந்த ஒரு காலம் இருந்ததுதான். என்னைப் பொறுத்தவரைக்கும் "அது வெறும் கானலடா என்றாகிப் பத்து வருசங்களுக்கு மேலாகிவிட்டன. ஏன் கனடாவுக்கு வந்தாய்? என்று இப்போதெல்லாம் என்னையே நான் அடிக்கடி கூண்டிலேற்றிக் குறுக்கு விசாரணை செய்துகொண்டிருக்கிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பட்டமெடுத்த கையோடு எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்திருந்தது. அதிஷ்டவசமாக ஒரே * பாடசாலையில் படிப்பிக்கும் வாய்ப்பு. ஆசிரியத் தொழிலானாலும், சுளை சுளையாகப் பெரிய சம்பளம். குடும்பச் சுமையென்று பெரிதாக ஒன்றுமிருக்கவில்லை. செளகரியமாகத்தான் வாழ்ந்து வந்தோம்.
ஒருசில வருடங்களின் பின்னர்
யக்கங்களினதும் இராணுவத்தினதும் இதழ் 30

Page 23
கெடுபிடிகள் அதிகரித்தன. பாதுகாப்பும் சுதந்திரமும் பறிபோயின. இனியும் நிம்மதியாக வாழமுடியாது என்ற நிலை ஏற்ப்பட்டது. இவர் எப்படியோ ஒரு ஏஜென்ஸியின் காலைக் கட்டிப் பிடித்துக் கனடா வந்து சேர்ந்தார்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு, எங்களை 'ஸ் பொன்ஸர்' பண்ணும் வாய்புக் கிடைத்தது. அதைக் கைவிட இவருக்கு விருப்ப மில்லை. ஊரை விட்டு வெளிக்கிட எனக்கு விருப்ப மில்லை. எவ்வளவோ நான் சொல்லிப் பார்த்தேன். என்னுடைய கதை எடுபடவில்லை. கடைசியில் இவரது விருப்பத்தின்படி ஊரிலுள்ள சொந்த பந்தம், சொத்து சுகம் எல்லாவற்றையும் அப்படியே கைவிட்டுவிட்டு வெளிக்கிட்டேன். அப்போது ஆறு வயதாயிருந்த சுஜியையும், நாலு வயதாயிருந்த சுகந்தனையும் அள்ளிக் கட்டிக்கொண்டு நாங்களும் கனடா வந்து சேர்ந்தோம்.
இவர் இங்கு வந்து ஒரு கெளரவமான உத்தியோகம் பார்த்துக் காசுழைக்கவில்லை. கல்லில் நார் உரித்துத்தான் எங்களைக் கனடாவுக்குக் கூப்பிட்டார். வந்து சேர்ந்த பிறகுதான் எனக்கு இந்த உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் கசியலாயின.
நாங்கள் இரண்டுபேரும் சுயபாஷைப் பட்டதாரிகள். அடிச்சுப் போட்டாலும் ஆங்கிலம் வாயுக்குள்ளை நுழையுதில்லை, எங்களாலை ஊரிலிருந்து கொண்டுவர முடியாதது, கனடியன் எக்ஸ்பீரியன்ஸ்' என்கின்ற இன்னொரு கறுமம். கக்கூசு கழுவாத குறையாகக் கழுவித் துடைக்கிற வேலைதான் எனக்குக் கிடைச்சுது. அவருக்கும் அண்டண்டாடு ஆக்கித் தின்னுறதுக்கு மட்டும் போதுமான வருமானமுள்ள வேலை.
இந்த லட்சணத்திலை இரண்டு பிள்ளைகள், இரண்டு கார், வீடு, வீட்டுக்குத் தளபாடம், தட்டுமுட்டுச் சாமான், ஊரிலை சகோதரங்களுக்கு காசுதவி, எல்லாத்துக்குமெனப் பட்ட கடன். அது இதெண்டு எல்லாத்தையும் சம்பளத்தாலை எப்பிடிச் சமாளிக்கிறது?
கழுத்திலை சுருக்குக் கயிற்றைக் கட்டி, நடுக்கினத்துக்கை இறக்கி வைச்சிருக்கிறது மாதிரி அச்சுறுத்தி, கிறடிட் காட் கொம்பனிகள் நாங்கள் உழைக்கிற காசை மாசம் மாசம் கறந்தெடுத்தபடி நினைக்க நெஞ்சு படபடக்குது உடம்பு கொதிக்குது கொஞ்சம் குளிரான தண்ணீர் இதமாயிருக்கும். கட்டிலை விட்டெழும்ப நினைக்கையில். 'கோலிங் பெல் அடிக்கிறது!
ઈ6pઠ્ઠી -

இந்த நேரத்தில் யாராக இருக்கும்? எந்தக் கடன்காரனோ? மேற்கொண்டு எதையும் சிந்திப்பதற்கு முன்னர் மீண்டும் மணி ஒலிக்கிறது. மெதுவாக எழுந்து, மாடியிலிருக்கும் படுக்கையறை யன்னலின் திரைச் சீலையை ஒரு சொட்டுப்போல விலத்தி, கண்ணாடி யன்னலூடாக வெளியே வீட்டின் முகப்பைப் பார்க்கிறேன்.
"புளு ஜேய்ஸ் தொப்பிதான் கண்ணில் படுகிறது. உற்றுப் பார்க்கிறேன். மயிர் உதிர்ந்த மண்டையை மறைக்கத் தொப்பி போட்டபடி, வீட்டு வாசலின் முன்னால் நடா அண்ணர்
"இந்த மனுசனுக்கு எத்தினைதரம் சொல்லுறது?
ஓசையெழுப்பாமல் பூனைபோல மெதுவாக அடியெடுத்து வைத்துப்போய், மீண்டும் கட்டிலில் படுத்துப் போர்வைக்குள் என்னைச் சுருட்டிக்கொள்கிறேன்.
முகப்பு மணி மூன்றாம் முறை அடிக்க வில்லை. அது பெரிய நிம்மதி. ஆனாலும் சினம் அடங்கவில்லை!
பல்லுக்காட்டக் கூடாதவங்களிட்டை யெல்லாம் இளிச்சாச்சு. கை நீட்டிக் கடன் பட்டாச்சு. இந்த நரகல் எல்லாத்தையும் நான் சகிக்கத்தானே வேணும் பட்டு உத்தரிக்கிறன்!
இந்த நடா அண்ணருக்கு மனிசி மக்கள் மருமக்கள் பெறாமக்களெண்டு கனடாவிலை பெரிய குடும்பம். அவ மனிசிக்கு ஒரு நல்ல ஒஃ பீசிலை கனகாலம் வேலை, ஒவரைம் அது இதெண்டு இராப்பகலாக உழைச்சுழைச்சு, பாவம், மனிசி ஓடாப் போச்சுது.
இந்தாள் இப்பவும் புதுசா அவிச்சுத் தள்ளின புட்டுக்கட்டி மாதிரி மொழுமொழு வெண்டு, மனுசன். ஆனால் வேலை வெல்லட்டிக்குப் போறதில்லை.
அழுது விழுது மாசாலங் காட்டி, அரசாங்கத்திட்டையிருந்து கறந்தெடுக்கிற "வெல் ஃபெயர் காசு ஒரு பக்கம். மைம்மல் பொழுது களிலை தமிழ் வீடுவீடாப் போய் ஊரிலை போர் எண்டு தந்திரமாய்ச் சொல்லி - சில சமயம் சத்தம் போட்டு - அதுவும் சரிவாராவிட்டால் சண்டித்தனம் காட்டிக் கலெக்ற் பண்ணிற காசு இன்னொரு பக்கம். என்னென்ன வழியிலெல் லாம் இந்தாளுக்குக் காசு வசியமாகுது
வட்டிக் காசை வைச்சுக் கொண்டு வாழ்க்கையை அந்தமாதிரி அனுபவிக்கிறார். அவருக்கென்ன குடுத்து வைச்சவர்! ஊரவை
65up 3O

Page 24
யின்ரை காசிலை நல்லாத் திண்டு குடிச்சுக் கொண்டு சனம் தினவெடுத்துத் திரியது.
நீதி நியாயம் நேர்மையோடை வாழ நினைக்கிற எங்களுக்குத்தான் எல்லாக் கஷ்டங்களும் கவலையளும் சீ. என்ன சீத்துவக்கெட்ட வாழ்க்கை
மனம் நெஞ்சாங்கூட்டை விட்டு வெளியேறி அலைந்துலையத் தொடங்கி நெடுநேரமாகிவிட்டபோது -
தொலைபேசி மீண்டும் முனகிச் சினக் கிறது. இம்முறையும் "அண்ணோண் நம்பர் தான்! எடுக்கவா, விடவா? . தயங்கியபடி தொலைபேசியைத் தூக்குகிறேன்.
"ஹலோ." என்னவோ ஏதோ என்ற ஏக்கத்துடன் குரல் கொடுக்கிறேன்.
“ஹலோ சுபா. நீர் என்ன, வீட்டிலை &66D6DC8urt?"
நடா அண்ணர்தான் மறுமனையில். "என்ரை வீட்டு போன் நம்பருக்குத்தானே நீங்கள் இப்ப அடிக்கிறியள்?"
"இல்லை. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னம் நான் வந்து பெல் அடிச்சனான். நீர் கதவு
சிதைக்கப்பட்ட நிறங்கள்
ዕ6õÖ6ፅ/
எனக்கேயான நெருடலில் முகங்கள் வற்றிப்போகும் குருரகணங்களாய் இன்னமும் அந்த நினைவுகள் பல பொழுதுகளை கழற்றி எறிகிறது.
நீ சபித்ததற்கான எந்தவிதக்குறிப்பும் இல்லாதவனாய் காணாமல்போனவர்கள் பட்டியயில் தேடுகிறேன்.
நிறங்கள் சிதைக்கப்பட்ட ஒரு வன்மப்பொழுதில் உனது அவலக்குரல் கேட்டதாக மனிதமனங்கள் தமக்குள் முனகிக்கொண்டதாம்.
உன் இறகுகளைப்பிடுங்கி
நிர்வாணத்தின் மீது
எவனெவனோ
ஆண்மையைப் பாய்ச்சியிருக்கிறான்.
குறபேன்
છ6gBઠ્ઠી -

திறக்கயில்லை. அதுதான் வீட்டிலை இல்லையோ எண்டு கேட்டன் ."
"அவர் வீட்டை இல்லை எண்டு சொன்னனாலெல்லே, நடா அண்ணை"
"அது தெரியுமெனக்கு, சுபா" "ஒ. வட்டிக் காசு இம்முறை கொஞ்சம் பிந்தப் போகுது, நடா அண்ணை. அவர் சொல்லியிருப்பாரெண்டு நினைச்சன் ."
"அதுகும் தெரியுமெனக்கு . நான் சும்மா உந்தப் பக்கம் வந்தனான். கொஞ்சம் தாகமா யிருந்திது. அதுதான்."
"மல்வேர்ண் மோலுக்கை ஒரு கூல் ட்றிங் வாங்கிக் குடிச்சிருக்கலாமே நடா அண்ணை, அப்பிடித் தாகமாயிருந்தால்!”
"நான் சுபா, அந்த. அ. அந். அந்தத் தாகத்தைச் சொல்லயில்லை ."
ஒரேயொரு கணம் தான்! சினம் சிரசேறிச் சுழன்றடித்தது ஃபோனைப் படாரென்று அடித்து வைத்தபோது, சிரசேறிய வெஞ்சினத்தின் நாராசம் வீடு முழுவதும் ஓங்கியொலித்தது -
“வையடா போனை. பொறுக்கி"
துரத்தும் சுயநலம்
நீண்டதூரப் பயணமும் நீயில்லாச் சயனமும் எனக்குள் சோர்வைத் தந்தாலும், எழுத்தாளர் மாநாட்டில் எழுந்த கோஷங்கள் என்னைத் தூக்கி நிறுத்தின. சமுதாய நலம் பேண ஏதேனும் எழுதுவோமென்று புத்துணர்ச்சி கொண்டு பேனாவைப் பிடிக்கிறேனர், அப்போதும்கூட சுயநலமாய் வருகிறது உன் பற்றிய கவிதை!
மன்னூரான் ஷிஹார்
- இதழ் 30

Page 25
நாமோர் கணக்கை நமக்கேற்றபடி போட தானோர் கணக்கைத் தனக்கேற்றபடி காலம் போடுவதைக் கண்டும் புரியாத மாதிரியாய்க் கற்பனைக் கோட்டைகள்
கட்டிக்கொண்டிருக்கின்ற அற்பர்கள் நாங்கள் ?VO இதை யாரும் உணர்ந்தோமோ ۰ر
அதிகாரம் நெஞ்சில் ஆணவம் வளர்க்க
&g) எதையுமே செய்யவல்ல
罗 இருகை கால் தினவெடுக்க
Ꮘ விதியையும் மாற்றி எழுதும் O
மிகுதுணிவில் இறைவனுக்கு நிகரென்று எழுந்து Gig நினைத்தவாறு தலையெடுப்போர் தங்கள்
F856856ft 6666) DU6) எமனணுக ஏலா இடமிருந்து தி குதுாகலிக்க எமனின் சிரிப்பவரின் G இதயத்துள் கேட்குமென்றால். காலத்தின் நடுநிலைதவறாக் கணக்காய்வுனி காலத்தின் அறத்தீர்ப்பு, காலத்தின் முடிவு, வி
慈
w à யாருக்கும் சாராமல்
நடக்கும் அதன்இயல்பு, 2.
இ இம்மியும் பிசகாது
泛 தொடரும் அதன் நியாயம் Ĝi:
G புரிந்திடணும் உங்களுக்கு
இயற்கையுடன் மோதாமல் வி காலத்தைஏய்க்காமல் ' காலத்தைப் பகைக்காமல் ба, காலத்தின் வழியோடிநாம் கணக்குப்
போட்டுவாழ்ந்தால் G: அதைக் காலம் ஏற்றுவிடும் வாழ்ந்திடலாம் பெருவாழ்வு வி
ஜீவநதி
 
 
 

விதைத்தும் அறுத்தும் நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்! நேற்றுவரை சோள விதைகளென நிறையவே பாவம் பழியையெல்லாம் பரபரப்பு ஏதுமின்றி காட்டுகிற கண்ணசைவால் நீவிதைத்தாய். ஜஅவற்றுக்கு
அப்பாவிகளினுதிரம் அள்ளி இறைத்துவிட்டாய். நீவிதைத்ததெல்லாம். நிருமூலம் ஆனதென்றும், எவையும் வருநாளில் முளைக்கமுடியாமல் மூடிப் புதைந்ததென்றும், முடிந்தது துயரமென்றும், பாடிப் பறந்துபோனாய். போன மரத்தடியில். நீபுதைத்து முளைத்தவற்றின் நினைவுகள் வளர்ந்துணையே வளைத்து இறுக்கியும் மரியாதை முளைமுறித்தும் எழுந்துமே துள்ளினவாம்! விழுந்தெழுந்து நீமீண்டாய். Aa நேற்று விதைத்ததையே iska நீ இன்றறுத்தெடுத்தாய்! நேற்றுவிதைத்தவைகள். நியாயத்தின் விதைகளாகும் நேற்று விதைத்தவைகள் அநியாய விதைகளெனின் அவையுன்னை வரவேற்று வாழ்த்திமகிழ்ந்திருக்கும் ళ

Page 26
SzíIsösor
வேளை
மாபைகளின் சிருவர்டிப்பு பார்த் G நிறைந்துவிட்ட எங்களுக்கான இவ்வுலகில்
இப்போது உன்னைப்பற்றி பேசுவதிலேயே மனிதம் குறியாயிருக்கிறது இறைவா.
மனித சிந்தனையின் வெளிப்பாட்டிற்கு முரணானவன் _j Tធ இறுமாப்பில் உன்னை கேள்விச்சரங்களினால் சூடிக்கொண்டிட என் நெஞ்சம் விளைந்து கொள்கிறது இறைவா.
பிறப்பு, இருப்பு, இறப்பு என்ற வழமையாகிப் போன மனித வாழ்வில் உன் இருப்பில் மட்டும் ஏன் இத்தனை ஐயப்பாடுகள்: நீ விந்தையானவனா? உண்மைகளின் உற்பவிப்பில் - எம்
சிந்தனையில் அழியாத
தெய்வமாய் இருப்புப் பெற்றிருக்கிறாயே : தான்.
உன் மெளனத்தின் புரிதல்கள் மட்டும்
இன்னும் புரியப் டாமலேயே,
\உள் உருவம் இன்னும் கண்களுக்குள் புகுந்து கொள்ளாமையினால் எத்தனை எத்தனை நச்சரிப்புக்கள் இங்கு. நீயில்லா வேளையில் புதிதாப் முளைவிடும் வேதாந்தங்கள்
அரங்கேற்றம் கொள்கிறது. உத்தன் நாமத்தின் பெயரால் எத்தனை வாதப்பிரதிவாதங்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 

உன்னை நேர்ந்து உன்னிலிருந்து அருள் சுடாட்சம் பெற்ற மனித கூட்டம் கூட
நடன்னை தூற்றிக் கொள்கிறது நாள்திகம் பேசிக்கொள்ளும் நாள்தினர்களின் ஈனங்களால் உள்னைப் போற்றிப் பாடிய தேவார திருமுறைகள் கூட இப்போது கறையான்களிற்கு இரையாய்
உன்னைக் கல் என்கிறார்கள் நீ ஜடம் என்கிறார்கள் நீ இல்லை என்று கூட உரைக்கிறார்கள் இறைவா இப்படி
நாளுக்கு நாள் உன்னைப் பற்றிய ஜாகங்கள் இன்னும் இன்னுமாய் தொடந்த படியே தாள்.
தூற்றுவோன் தூற்றட்டும் உந்தன் பெயரால் உன்னை நினைந்து உருகிடும்
பல லட்சம் பக்த கோடிகளுக்காகவேனும்
முழுமையாய் வராவிடினும் உன் இருப்புக் குறித்த கேள்விக்கு பதில் தாராயோ எல்லாம் வல்ல
இறைவா? ■
- வெ.துஷயந்தன்
இதழ் 30

Page 27
மின்மினிகளின் ֆի Մhկ
இருட்டு வார்த்திருந்த வெளியெங்கும் தம் வெளிச்சப் பொட்டைத் தேடியலைகின்றன.
5. இரசாயனங்கள்
இதுவரை கடந்த வெளிகளில் கழனிறு ஒழுகி முடிவுற்றுப் போயின.
இன",
வாழ்வதற்கு இல்லை ஆதாரம் அவற்றிடம்.
ஏதோ ஒரு
கறுப்புயராகப்
பறந்து கொண்டிருக்கிறது.
அதனி நிறமும் இனினதெனிறு கண்டு படிக்கமுடியவில்லை இந்த இருட்டில்.
ஒளி ஒழுகும் இரவுகளில்
இனி நிலவிடம்தான்
கட்னர் வாங்க வேண்டும் வழியினர் தடம் அறிய.
கரிய பூதங்கள் நிறைந்திருக்கும் இரவில் ஒரு சிர்ைனத் துளி
ரிஜிர் ரிஜிரிக்கேஜர் இரக்கரில்வாது போயிற்று கடவளிடம் .
நாகர் நீ அவனர் வாழலாம் எனர்றால் அதற்கு மட்டும் எதற்காக இந்த உரிமைப் பறரிப்பு.? இருட்டு வார்த்த வெளியெங்கும் தம் வெளிச்சப் பொட்டைத் தேடியலைகினர் றன trofiř roč3 roz5ř“
自
கரு
ճմ:
άλμπές if
ஒன் உே தே: தம்
உ.ை ஏறி:
酗』『芒
تقليلا ଥ୍ରିଣ୍ଟୀ }iFقبیلے
5յք (): பறே பறக்

நாட்சாயணியின்
இரு கவிதைகள்
கிய சடலங்களிலிருந்து
ந்து முடித்து ாப்டரில் முடியும் தம் மதி:ர்ப் போகும் ஐபி முடிந்து.
Աål). --
த நினைத்து..?
ចារណារួចចាការ வாழாத
芭 யே சடலங்களிலரிருந்தான நிறு ILIJ LII
ாத வாழ்க்கை குறித்தா..? க்காத கடமைகள் குறித்தா:
பரிட்டபடியே னக் குழந்தைகள்.
புட்னர் வயோதிபர்.
Eலா இள்ைஞர்கள்.
: வாழாது துயரம்
டிEர் மரங்களில் 5) Tifling.
ய மரங்கள் றோடு ஒன்று ாஞ்சத் த்துக் கொள்கின்றன கண்ணீரை
ந்த தெருக்களின் ரந்த குருதியினர் மேல் # செல்கின்றன் |-
உதறித்தள்ளும் யுேம், துரீசும்
ஒது எரிப் பறக்கின்றன.
த்தில் வகள் வானைக்கீரிப் கின்று போது
இடையே தடங்குகின்றன் அந்தரத்தில் அனுப்பும் ஆத்மாக்களிடம்.
தரக்குள் புலம்பரியபடி அலைகிறது காற்று படிப்பரில் வாதபடி.
வெயிலில் வறுபட்ட இலைகள் காற்றரில் உதிர்கினர்றன கரகரப் போடு
காலைச் சூரியனும் க்ஸ் கவரப் பரிப் பேர்றதுே வந்து போகிறானர்' வயிற்றுக்கு மட்டும் வஞ்சரைன் செய்யாமல்.

Page 28
அது ஒரு ம6
புளொக். புளொக்" புளொக். புளொக்" வாசலரின் முனர்னே காசேதும் வாங்காது இலவசமாக மாசில்லா மேகங்கள் நிகழ்த்தும் ஜலதரங்க கச்சேரி. இந்த மேகங்களின் தன்னலமற்ற சேவைகள் சினேகங்கள் எதற்காகவோ?
@- *
பூரி மடியில் மேகங்களினர் பேரக்குழந்தைகள் தவழ்கின்றனவோ? நீரலையில் விழும் மழைத்துளித் தாளத்திற்குள் குழைந்தாடிச் செல்லும் காகிதக் கப்பல்களில் - எனி புளகாங்கிதப் பயணங்கள் மழைமேகங்களை வியந்தபடியே. ஒருபுறமோ அம்மனி கோவிலில் தெய்வ உருவேறி ஆடும் பெண்ணாப் கிளைகள் சுழன்று சுழன்றடிக்க வேலியோரத்து வேப்ப மரம் - காற்றின் வேகத்தோடு போராடியபடி, s இறுங்கு மரத்தில் மாங்காய்கள் காய்த்துத் தொங்குவது போல் தலைகீழாய் மழைத்துளி அருந்தும்
மரகதக் கிளிகள்
ப்ரிட்ஜூக்குள் வைத்த புதுவதக் கீரை வகைகளாட்டம் "ஜூல்லெனர் நரிருக்கும்
 

ழைக்காலம்
புல்பூண்டுக் கூட்டம் மழையிருட்டும் மரினர்வெட்டும் மாறிமாரி வீட்டுக்குள் கும்ரியடிக்க - மணினெண்ணெய்க் குப்பவரிளக்குகளினர் சாம்ராஜ்ஜியம் வீடு முழுவதும் சிரித்தபடி ஒடுக்குள் இருக்கும் ஆமைபோல் போர்வைக்குள்ளிருக்கும் எங்களுக்கு ஒரு மண்பானை நிறை மரவள்ளிக்கிழங்கவியலும் இன்னொரு மண்சட்டி வழியவழிய سر ایال (آیسی rtال ஆவி பறக்கப்பறக்க மாங்காய்க் கடையலும் அத்தோடு அம்மம்மாவின் அர்ைபுப் பரிமாறல்களும். சுற்றாUEப்பை சுகமான போர்வைதான் S மார்கழி மழைக்கு !இதோ "كتلة ,அதே மழைக்காலம் نکالاکی 鲇 அதே மழைக்காட்சிகள், ஆனால். இரவின் நடுவே அம்மம்மா என்னும் ஒரு பழுத்த நிலவரின் ஒளியுரில்லை மேகத்தினர் மழைப் பொழிவு போன்று அணிபு வழியும் பரிமாறல்களுமில்லை. மழைவிட்டும் விடாத தூவானமாய் மனதில் தூறும் கன்ாக்காலமாய்ப் போன் அது ஒரு மழைக்காவம்'

Page 29
uasmhílaíl
இன்றைய பெண்ணுக்கு
ஏது குறை ஒற்றைப் பார்வை
இன்று பெண் வியத்தகு வகையில் முன்னேறி விட்டாள். எல்லா உரிமைகளையும் பெற்று விட்டாள். இன்னும் அவளுக்கு என்ன வேண்டும்? ஏன் பெண் விடுதலை வேண்டுமென கூச்சலிடுகிறார்கள்.இன்னமும் இந்த பெண்ணியவாதிகள்?
எனதுநண்பர் ஒருவர்கேட்டகேள்விதான்இது அதுவும் பெண் நண்பர்! எனக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. இன்று சாதியம் அழிந்து விட்டது ஏன் இன்னமும்சாதிபற்றிபேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றசாதிமான்களின்கேள்விக்கு ஒப்பான கேள்விதான் இதுவும். ஆம் எதுவும் அதை அனுபவிப்பவர்களுக்குத் தான் புரியும் பெண்தான்அனுபவிக்கும் அவலங்களை அடிமைத் தனங்களைப் புரிந்து கொள்ளாதவளாக இருப்பது தான் வேதனை. இன்று பல பெண்கள் விழிப்புற்றுள்ளார்கள். கல்வி ஞானம் அவர்களது மூன்றாவது கண்ணைத்திறந்துள்ளபோதிலும் இன்னும் பல பெண்கள் தம் தாழ்வு நிலையை உணராமல் இருக்கிறார்கள். கல்வியறிவு குறைந்த பெண்கள் மாத்திரமன்றிபடித்தபெண்களில்கணிசமானோரும்கூட இன்றைய பெண் விடுதலையடைந்து விட்டதாக கருதும் நிலை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இந்த மாதிரியான எண்ணத்தை தோற்றுவித் தவைஎமதுபாரம்பரியகலாச்சாரஅம்சங்களும்மதமும் தான் என்றால் அது மிகையாகாது. நிலவுடமைச் சமுதாயம் உருவான பின் சொத்துரிமை தமது பரம்பரைக்கு சேரவேண்டுமென்பதால் குடும்ப அலகு உருவாக்கப்பட்டதுடன். அதில் பெண்ணின் அங்கம் தாழ்வு நிலைப்படுத்தப்பட்டது. பெண் என்பவள் ஆணுக்கானவள் என்ற உருவாக்கம், அவளை அடிமை நிலைக்குஇட்டுச்சென்றதுடன்அதையும்தாண்டி போகப் பொருளாக்கியது எனலாம். பெண்ணை இரண்டாம் பட்சமாக வைத்திருக்க அவள் உணராதவகையில் மொழி, மதம் என்பவற்றுாடாக ஆணாதிக்கம் நிலை நிறுத்தப்பட்டது. பாரம்பரிய பண்பாட்டு அம்சங்களின் ஊடாக பெண்என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டு, அதைக் கட்டிக்காக்கும் முகமாக தியாகியாகவும் கற்புக்கரசியாகவும், குடும்
'பத்தை சுமக்கும் ஊதியமற்ற வேலைக்காரிபோலவும்
அவள் உணராத வண்ணம் கட்டமைக்கப்பட்டாள்.
ஜீவநதி -

எனக்கு நல்ல கணவன், என்னை நன்றாகக் கவனிக்கும் கணவன், ஒத்துப்போகும் கணவன் கிடைத்துள்ளார். இதை விட வேறென்ன வேண்டும்? பெண்ணியம் என்பதெல்லாம் பம்மாத்து. படித்த உயர்பதவி வகிக்கின்ற பெண் ஒருத்தி என்னிடம் கூறினார். ஒருபடி மேலாக இலக்கிய வாதியான பெண் ஒருத்திநான் பெண்ணியம் பற்றிஎழுதவதில்வை. எனது கதைகளிலும் பெண்ணியம் ஒலிப்பதில்லை என்று பெருமையாகக்கூறினார்.
மேற்படி இருவரினதும்கூற்றையும் கேட்டபோது எனக்குச் சிரிப்பு வந்தது. இருவரும் சீதனம், ரொக்கம் கொடுத்துத்தான் திருமணம் செய்தவர்கள். அதிலும் முதலாமவர் காதலித்து மனம் புரிந்த போதிலும் கூட சீதனமாக பணம் கொடுத்தே நிறைவேற்ற முடிந்தது. உலக வழமை இப்படித்தான். என்ற எண்ண உருவாக்கத்தில் மூழ்கியுள்ளதனால் தான் இவர்கள் தமது பெண்ணடிமை நிலையை உணரவில்லை என்பதைபுரிந்து கொண்டேன்.
சமுதாயத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள அம்சங்கள் அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புநிலையை உணரவிடாமல் பெண்களை தன்னிலை உணராதவர்களாக வைத்துள்ள ஆபரணங்கள் ஆடை அணிகள் என்பவை கூட பெண்ணை மயக்கநிலையில் வைத்துள்ளது.
ஆணாதிக்கம் என்பது கணவனினால் அல்லது குடும்பத்தினால் மட்டும் அடக்கியாளப்படும் விடயம் மட்டுமல்ல. சமூக மட்டத்தில் பெண்ணின் நிலை, இன்னமும்பரந்தநோக்கில் பார்த்தால்தேசிய மட்டத்தில் சர்வதேச மட்டத்தில் பரவியிருக்கும் கோளாறு. பெண்ணிய மேம்பாட்டின் மூலம் இவை புட்டு வைக்கப் படும்போது பலபெண்கள் இதைஉணர்ந்து கொள்கிறார் கள், உணர்ந்த போதிலும் கூட கணிசமானோர் அதற்கெதிராக போர்க்கொடி தூக்க முடியாதவர் களாகவே உள்ளார்கள். கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் என்பவற்றில் மேம்படுவதுடன் பாலியல் ரீதியிலான பாகுபாடு உணரப்படும் போது தான் பெண்ணியம்செயலூக்கம்பெறும் பாலியல்ரீதியிலான சுதந்திரம் என்பது ஒழுக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கு வதாக சிலர் எண்ணுகிறார்கள். கீழ்ப்படிவு, பணிவு, ஒருதலைப்பட்சமானகற்பு என்பதெல்லாம் ஆணாதிக்க சமுதாயத்தால்கட்டமைக்கப்பட்ட விடயங்களே.
பெண்ணின் அடிமை நிலையை புரிந்து ஏற்றுக் கொள்கின்ற பக்குவநிலை முதலில்உருவாக வேண்டும். இன்றைய பெண்ணுக்கு ஏதுகுறை என்ற ஒற்றைப் பார்வையிலிருந்து விடுபட்டு, பெண்ணின் தாழ்வு நிலையை ஏற்றுக் கொள்ளும் வரை பெண்விடுதலை கிட்டப் போவதில்லை, சகல விடயங்களிலும் சமத்துவ மான ஒரு நிலை பிறப்பிலிருந்து இறப்புவரை ஏற்படும்
ாளே உண்மையான பெண்விடுதலை நாளாகும்.
SSup 30

Page 30
ரிஸானாவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்புமாரியத்தும்மாவுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபுறம் கவலையாகவும் இருந்தது.
"அல்லா போதுமானவன், அவனறியாம எதுவும் நடக்காது”
அவள் மனதைத் தேற்றிக் கொள்ள முயற்சி எடுத்த வண்ணம் கதிரையொன்றில் அமர்ந்து ଗ8itଗୋil_ITର୍ଗt.
'உம்மாநான்வந்துட்டேன்." “என்ன ரஸானா போன கைக்கு திரும்பி வந்துட்டாய்?"
“உம்மா இன்டெய்க்குகுக்கரிகிளாஸ்டிச்சருக்கு சொகமில்லியாம் அதனாலகுக்கரிகிளாஸ்நடக்க இல்ல. நான்திரும்பிவந்துட்டேன். போதுமா, விபரம் இன்னும் வேணுமா?"
“ஒனக்கு எல்லாம்தமாஷாத்தான் ஈக்கு, தாத்தா சவுதில ஈந்து கோல் பண்ணியீந்தா. அவளுட்ட ஈந்து அந்த விஷயத்த கேட்டத்துலிந்து சிரிச்சிறதா, அழுகுறதா எண்டு எனக்கு வெளங்க இல்ல."
"சரிசரிசுத்தி வளச்சாம, நாங்களும் அறிஞ்சி கொள்ள தாத்தாட விஷயங்கள செல்லுங்கே உம்மா இனி"
"நீஇன்னம்சின்னப்புள்ள, எப்பிடி உம்மாநான் இந்த விஷயத்த ஒனக்கிட்ட செல்ல.?”
மாரியத்தும்மா அவ்வாறு சொன்னாலும் ரிஸானா சொன்னவிஷயங்களை சொல்லி,அதன்குறை நிறைகளை அலசி ஆராய்ந்து, மனதைத் தேற்றிக் கொள்வதற்குத் தகுந்தவள் ரஸானா மட்டும் தான் இருக்கிறாள் என்பதைஉணர்ந்து கொண்டு பக்கத்தில் இருந்த வெற்றிலைச் செப்பை எடுத்து தனது மடியில் வைத்துக்கொண்டாள்.
ஜீவநதி
 

ramصج٠٣
ரஸானா எனக்கு அழவேணும் போலவும்" حك ஈக்கும்மா. சிரிச்ச வேணும் போலவும் ஈக்கும்மா. ரிஸானாதாத்தாவுக்கும்அரபிஒண்டுக்கும்போனமாசம் கலியாணம் நடந்திச்சாம்"
“ஏண்ட உம்மண்டே, ரிஸானா தாத்தா செஞ்சீக்குற வேல"
"இந்த விஷயத்த கேட்டதுலீந்து ஏன்ட மனசு பொறுக்கெல்ல மகளே”
மாரியத்தும்மா வெற்றிலைச் செப்பிலிருந்த பாக்கொன்றைத்தெரிந்துஅதைஅரியத்தொடங்கினாள். "அது சரி ரிஸானா தாத்தாவுக்கு இன்னும் சக்கலத்திகளும் ஈக்குராளுகளமா.?
"அதுநான்கேக்கஇல்லஅரபிகள்என்டாரெண்டு கலியானம், மூனுகலியாணம், நாலுகலியாணம் எண்டு செஞ்சி கொள்ரத்தால சக்கலத்திகளும் ஈப்பாளு களாக்கும். ரஸானா, எப்பிடியும்மா நாங்க இந்த விஷயங்கள மூடிமறைச்சிர".
'உம்மா எனக்கென்டா ஒன்டுமே வெளங்கஇல்ல. அங்கால அன்சார் மச்சானும் தாத்தா எப்ப வார, எப்ப வார எண்டு கேட்டுக்கேட்டு ஈராரு."
“அன்சார்மச்சானுக்குஇது கேள்விப்பட்டா,அவர் உசிரமாய்ச்சிக் கொள்வாரோ தெரியா இன்னுமொரு பக்கத்துக்கு அந்த நேரம் அவர் தொழில் தோத்திர மொன்டுககுப் பெய்த்து தாத்தாவக் கலியாணம் கட்டியீந்தா எங்களுக்கு இந்தப் பிரச்சினயொன்டும் வந்தீக்காதானே.
"அது இல்ல உம்மா, அரபீட்ட ஈந்து தாத்தாக்கு என்னத்தயாலும் தப்புத்தவறு நடந்தீக்குமா உம்மா?"
"அதுப்பத்திநான் அவளுட்டதிருப்பித்திருப்பிக் கேட்டேன். அப்பிடி ஒன்டும் நடக்க இல்ல என்டுதான் அவள் செல்லுறாள். அரபி அவளோட நல்ல ஒகப்பாயீந்ததாலதானம் இந்தக்கலியாணம் நடந்தது"
“தாத்தா நல்ல மனசோடுதானே சவுதிக்குப் போனாள். அல்லா அவளக்காப்பாத்துவான்."
28 இதழ் 30

Page 31
பின்னப் பின்ன, வாப்பாவும் இல்லாம ஆறு பொம்புளப் புள்ளகளோட நான் தவிச்ச தவிப்புப் பாத்துட்டுதங்கச்சிமார் அஞ்சிபேரயும்கர சேக்கோணும் என்ட நோக்கத்திலதானே அவள் சவுதிபோனது. நீ சென்னதுபோல அல்லா அவளுக்கு தொண நிப்பான்,
"தாத்தாதிரும்பிவாரத்தப் பத்திஎதுவும் செல்ல E6io6OLLIT 2 Lb4 DIT"
"ஏஇல்லாம? ஒண்டகலியாணத்துக்கு கட்டாயம் வாரதாச்சென்னாள்.அரபிதாத்தாவுக்குநாப்பதுஅம்பது பவுனுக்கு நக நட்டு செஞ்சி குடுத்தீறாராம். அதோட ஒண்ட கலியானச் செலவு எல்லாத்தையும் அரபி பொறுப்பெடுத்திட்டாராம். ஒனக்கும் இருபத்தஞ்சி முப்பது பவுனுக்கு நக செஞ்சிதாரதா அரபி வாக்குக் குடுத்திட்டாராம்"
மாரியத்தும்மா அரிந்த பாக்கை வெற்றிலை யொன்றில் வைத்து அதில் சுண்ணாம்பும் தடவி புகையிலை ஒரு துண்டையும் வைத்து மடித்து வாயில் போட்டுக்கொண்டாள்.
"தாத்தாவப்பாக்க எனக்கு ஆசயா ஈக்கும்மா." “எனக்கும் அவளப் பாக்க ஆசயாத்தான் ஈக்கு. அவள் சின்ன வயசுல நானும் ஆமினத்தும்மா மாமியும் ரிஸானாக்கு அன்சார்தான் மாப்புள, அன்சாருக்கு ரிஸானா தான் பொண்” என்டு செல்லிச் செல்லி வளத்தோம். இப்பவும் அன்சாரும் ரிஸானாவும் என்னச் சுத்திச்சுத்திவெளயாடினது என்டகண்ணுக்குள்ளபோல Fमर्फxg5"
ரிஸானாவின் திருமணம் விடயமாக ரஸானாவுடன் கதைத்ததனால் மாரியத்தும்மாவின் மனதுக்குப் பெரியதோர் ஆறுதல் ஏற்பட்டது.
"ஒன்னோட கதச்சது என்ட மனசுக்கு ஒரு ஆறுதலா ஈக்கு. ஆனா நடந்தீர விஷயத்தப் பத்தி ஆரிட்டயும் எதுவும் கதைக்காம ஈந்தாத்தான்நல்லம்"
தாயும் மகளும் அவ்வாறு அன்று கதைத்து முடிவெடுத்தாலும் ஒருநாள் அன்சாரின்தாய் ஆமினத் தும்மா, மாரியத்தும்மாவை தேடி வந்தாள். வந்ததும் வராததுமாக அவள் கேட்க வேண்டியதைக் கேட்டு விட்டாள்.
"மாரியத்து மதினி, ரிஸானாவ அரபியொன்டு கலியாணம் முடிச்சிட்டாரு என்டு ஊரெல்லாம் கதயா ஈக்கு. அது உண்ம பொய்ய நான் அறிஞ்சி கொள்ள வேணும். அதுக்கு எனக்கு உரிம ஈக்கு."
"ஆமினத்துமதினி ஒங்களிட்டசென்னா என்ன? விஷயம் உண்மதான். சரி ஆரென் இது ஒங்களிட்ட
86ങ്ങ.?
"மாரியத்து, நாங்களும்இந்தஊருலகத்துலதான் ஈக்குரோம் அதனால்எங்களது நடந்தாலும்ளங்களுக்கும் அதுகள் கேள்விப்படத்தான் செய்யும். நேத்து அக்கரேல
ઈopઝી

ஈரஆரியாதான் இந்த விஷயத்தஎன்டகாதுலவச்சிட்டுப் போனாள். மாரியத்து இதக் கேள்விப்பட்டத்தில ஈந்து அன்சார்தின்னாமக் குடிச்சாம பட்டினியா ஈக்குறான்.
"ஆமினத்து, ரிஸானாவும் இப்ப கண்காணாத தேசமொண்டுல இங்கFக்குருநாங்க என்னதான் இனிச் செய்ய அல்லாடநாட்டம் என்டு ஒண்டு ஈக்குறதல்லென். ரஜானா மகள்டகலியாணத்தையும்நாங்கஅடுத்தமாசம் வச்சிக்கொள்வோம். அதுக்குப்பொரகுஎனக்கு ஈரநாலு பொம்புளப்புள்ளகளால ஒண்டஅவனுக்குகட்டிவெச்ச ஏழாதென்"
"மாரியத்து நல்ல கதகதச்சிறாய். ஏன்ட மகன் ஆம்புள, அவன்ட நெஞ்சீல ரிஸானா மேல ஈக்குர அன்பாதரவநிகொச்சப்படுத்திப் பேசாதே. ஒனக்கு இப்ப அரபிமாப்புளேடகாசி பணம்தான் பெரிசுபோல ஈக்கு. சரிசரிநீவேண்டியத்தச் செஞ்சிக்கோ, நான் போறேன் போறத்துக்கு" m
"உம்மா, மாமிகோவிச்சுட்டுப்போறாபோல." "மன வருத்தத்துல ஆயினத்து மாமி அப்பிடி போனத்துக்கு ஒருநாளும் அவளங்களகையுடமாட்டா
Dior."
வந்த ஆவேசத்தில் ஆமினத்தும்மா ஒட்டமும் நடையுமாகதனது வீடுவந்து சேர்ந்தாள்.அங்கேஅன்சார் தனது வியாபாரக் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
“உம்மா இங்க ரெண்டு லட்சம் ரூபாகாசு ஈக்கு. இதப் பத்திரமாஅலுமாரிலஎடுத்துவச்சிட்டு இரீங்கோ" காசைப் பெற்றுக் கொண்ட ஆமினத்தும்மா, அறைக்குள் சென்று அதை அலுமாரியொன்றுக்குள் வைத்துவிட்டு மீண்டும் அன்சாருக்குப் பக்கத்தில் வந்து கதிரையொன்றில்அமர்ந்து கொண்டாள்.
"மகென் ஊருல கதச்ச விஷயமெல்லாம் சரி ரிஸானா அரபியக்கலியாணம்முடிச்சகதஉண்ம என்டு மாமிஒத்துக் கொண்டுட்டா."
"உம்மா, அப்பரிஸானா என்னஏமாத்திட்டாள்" "நீகவலப்படாதே மகென். ஊருலகத்துல அவள் மட்டுமா பொம்புள.நான்ஒனக்குஅழகான கொணமான, அதுபுள்ள பொண்ணொன்டப் பேசித் தாரேன். நீ ஒன்டுக்கும்யோசிச்சாதேவாப்பா"
'உம்மாசின்ன வயசுல ஈந்தெரிஸானா என்ன விரும்பினாள். நான் ரிஸானாவவிரும்பினேன். அவள வச்சிப் பாத்த எடத்தில இன்னுமொத்திய வச்சிப் பாக்க எனக்கென்டா ஏழா. அதனால நீங்க எனக்கு வேற கலியாணங்கள் பேசத் தேவ இல்ல. வாழ்க்க பூராநான் தனிமரமாவேஈந்துட்டுப்போறேன்.உம்மாஎன்னப்பத்தி கவலப்பட வானாம்."
"மகென் மவுத்தாப் போன ஒன்டவாப்பா கூட ரிஸானாதான் இந்தஊட்டுக்கு மருமகளாவர வேணும் 85up 3O

Page 32
என்டு விரும்பினாரு. ஆனா ஊரு தேசமுட்டுச் சென்டவள் எங்க எல்லாருட மொகத்திலயும் கரியப் பூசிட்டாள்"
"உம்மா ரிஸானா நல்ல புள்ள. அவள் எனக்கு சொந்தமதினியும்கூடநான் அவளுக்குக் கொற செல்ல இல்ல. நான்தான் பிழ உட்டுட்டேன். இப்ப நான் கை நெறையக்காசுபணம்சம்பாரிச்சாலும் அவள்சவுதிக்குப் போனநேரம் எனக்குசரியான தொழில் ஒன்டு ஈக்கவும் இல்ல. அப்பிடிதொழிலொன்டு ஈந்திருந்தாஅவளஅந்த நேரமேகலியாணம் கட்டிசந்தோஷமாக ஈக்கேந்திச்சி"
"அடுத்தமாசம்ரஸானாடகலியாணமும்ஈக்காம் அவள்ட களியாணச் செலவெல்லாத்தையும் அரபிதானாம் செய்யிரதென்டு வெளியிலே கேள்வி"
ரிஸானா பாவம் உம்மா, வாப்பா இல்லாத தங்கச்சிமாருட பொறுப்பு அவள அந்த நெலக்கிதள்ளி ஈக்கும். அரபிஅதப்பயன்படுத்திக் கொண்டிருக்குறான் (3 JT6)."
"நடந்தகதகளப் பேசி வேல இல்ல.இனி நடக்க ஈரதுகளப் பத்தியோசிமகென"
இனிநடக்க இருக்கும் விடயங்கள் அன்சாருக்கு சூன்யமாகவே தென்பட்டன.அவனால்ரிஸானா இல்லாத வாழ்க்கையொன்றை கற்பனை செய்துகூடப் பார்க்க (pguj6)dig06).
வெளியே வந்த ஆமினத்தும்மா, மாமரத்தில் இருந்து கூவும் ஒற்றைக் குயிலை விரட்டி விட்டாள்.
"எந்த நாலும் மால மஹற்ரிபுக்கு இந்த ஒத்தக் குயில் வந்து என்னத்துக்குத் தான் கூவுதோ எனக்குத் தெரியா"
நாட்கள்உருண்டோடினரலானாவின்திருமண நாளும் நெருங்கிவிட்டது.சவுதிப்பணம் எக்கச்சக்கமாக வந்துசேர்ந்ததனால் திருமணத்தை தடயுடலாக நடாத்த மாரியத்தும்மா (p 26 செய்திருந்தாள். ஆமினத்தும்மாவின் உதவியும் அவளுக்குக் கிடைத்ததுடன் அன்ஸாரின் மேற்பார்வையிலேயே அங்குசகல விடயங்களும் நடந்தேறின.
திருமணத்துக்குமுதல்நாள்ரிஸானா வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். திருமணத்தன்று அங்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் போல மணமக்களைப் பற்றிகதைப்பதைவிட்டுவிட்டுரிஸானாவைப் பற்றியும் அவளுடன் வந்திருந்த அரபியைப் பற்றியுமே கதைத்த வண்ணம் இருந்தனர்.
"கண்ணுறு இல்ல, ரிஸானா மகள் அரபிப் பொம்புளயொன்டப் போல அழகா ஈக்குறா"
"அரபிக்குஅவ்வளவு வயசும் இல்லபோல ஆகக் கூடினா முப்பது வயசுதான் ஈக்கும்"
"அரபியோடவந்தீரமத்தப் பொம்புளரிஸானாட
ઈopઠ્ઠી -

"சக்களத்திகள் ரெண்டு பேரும்தாத்தா, தங்கச்சி மாதிரிஈக்குராளுகள். அதுமட்டுமல்ல ரெண்டுபேரயும் அரபி ஒரே மாதிரி நக நட்டுகளால் குளிப்பாட்டி ஈக்குறாரு”
"அரபிக்கு ரெண்டாவதுதாரமாகப் போனாலும் rfano TGOTT LurrësefulusFT655 resör"
ரிஸானா திருமண மண்டபத்தில் வைத்து அன்சாரை ஓரக்கண்ணால் பார்த்துப்பார்த்து அவனுடன் உரையாட எத்தனையோ முறை முயற்சி எடுத்தாள். இருந்தும் அவளின் பார்வையைதவிர்த்துக்கொள்வதில் அவன் கண்ணும் கருத்துமாக இருந்தான். இன்னொருத்தனுக்கு வாழ்க்கைப் பட்டவளுடன் தனக்கென்ன உறவு என அவன் நினைத்திருக்க
ഖങ്ങ
ரஸானாவின் திருமணம் வெகு விமர்சையாக நடந்தேறியது.திருமணத்திற்கு அடுத்தநாள் ரிஸானா திரும்பிப்போவதற்கு ஆயத்தமானாள். அதனால் அவள் தனது குடும்பத்தாருடன் மிகவும் சந்தோசமாகக் காலத்தைக்கழித்தாள்.அவர்களுக்காக அவள்ஏகப்பட்ட பொருட்களும், நகைகளும், பணமும் கொண்டு வந்திருந்தாள். அவள் அவற்றைப் பங்கு வைத்துக் கொடுக்கும் போது மாரியத்தும்மாவின் உள்ளம் பெருமிதம் அடைந்தது.
நேரம் சுழன்று கொண்டிருந்தது. ரிஸானா பிரிந்து செல்லும் நேரமும் நெருங்கிவிட்டது. அவளிடம் எந்தச் சலனமும் தென்படவில்லை. அவள் நெருங்கிய உறவினர்களிடம் சென்று உருக்கமாக விடைபெற்றுக் கொண்டாள். இறுதியில் அவளின்கண்கள் அன்சாரைத் தேடின. அவன் சிறிது தூரமாக நின்று அவளை அவதானித்த வண்ணம் நிற்பதை அவள் கண்டு கொண்டாள்.அவளின் கால்கள் அவளையுமறியாமல் அவனை நோக்கிநடந்தன.
"LoveFTGirolaire0YLD66fisiisassissiC35T." தயக்கத்துடன் கதைத்த அவளின் கண்களில் இருந்து உதிர்ந்தகண்ணீர்த்துளிகள்கன்னங்கள்வழியே வடிந்து சென்றன.
"செய்ய வேண்டியதெல்லாதையும் செஞ்சி போட்டுஇன்னம்மன்னிப்பும் கேட்டுவந்திட்டியா?"
அவனின் முகத்தில் எள்ளல் ஒன்று உதித்து மறைந்துசென்றது.
"மச்சான்,நான் நொந்து போனபொம்புள நீங்க இன்னம் என்ன நோகிச்ச வானாம். நான் சவுதிக்குப் போனது ஏனென்டு ஒங்களுக்குத் தெரியும் தானே. வாப்பவும் இல்லாத ஆம்புளப்பொறவிஒன்டும்இல்லாத என்டமனசுலஈக்கும் ஒரு விஷயத்தஓங்களிட்ட செல்லி ஆருதல் அடையத்தான்நான் ஒங்களத்தேடி வந்தேன். ந்த விஷயத்த என்னப் பெத்தஉம்மாட்டயாவது நான் 85p 3O

Page 33
செல் இல்ல. நான் செல்லு: இந்த விஷயத்த ஓங்கட மனசுல மட்டும் வச்சிக் கொள்றதாாந்தா செல்லுறேன் பில்லாட்டி நான் வந்த வழியே பெய்த்திடுறேன்
"ரியானா, நீ.பாவம் ஒன்ட நெலம் எனக்கு வெளங்குது ஒன்டமனசுல எதுTந்தாலும் செல்லு நான் கேக்கத்தயாரா ஈக்குறேன்."
என்றும்போல அவளின் குரலில் இருந்த பரிவும் பாசமும் ரிஸான்ாவைக் கவர அவள் தொடர்ந்தாள்.
"மச்சான், என்னோட வந்த அந்த அரபி என்ட புருடிைனென்டும். அவருக்குப் பக்கத்துல ஈக்குர அந்த அரபிப் பொம்பு என்டசக்கEாத்தி என்டும் தான் இங்க எல்லாரும் நெனச்சிக் கொண்டு ஈக்குராங்க என்ட உம்மாவும் தங்கச்சிமாரும் கூட அப்பிடித்தான் நெனச்சி சந்தோசப்படுறாங்க ஆனா அது உண்மையல்ல."
ரிஸானா அப்ப எது உன்ம. "மச்சான் என்னக்கலியாணம் கட்டிக்கொண்டது எழுது வயசுல ஒரு கெழ அரபி படுத்தபடுக்கயா அவர் கட்டிலில்தான் கெடக்கிறார். நேர காலத்துக்கு அவருக்கு மருந்து மாத்திரம் குடுக்கிறதுதான் என்டவே, அதோட அவருக்கு ஒதவி ஒத்தாச செய்யிற ஒரு நர்ஸ் ஆகத் தான் நான் அங்க வே ைசெய்யிறேன்.அதோடஎழுத்தில மட்டும் தான் நான் அவருக்கு மனைவியா ஈக்குறேன். மத்தப்படி எந்த ஒறவும் எசேக்கும் அவருக்கும் எடயில் இt"
"ஏன்ரினானா நீஇந்த நேE0மக்கிஆளாகாய்" "ஏன்ட உம்மா. தங்கச்சிறார். ஏன்ட குடும்ப நெலம இதுகளாலதான் மச்சான் நான் அந்த முடிவுக்கு வந்தேன்."
"அப்ப என்ட நெலமயப் பத்தி நீ யோசிக்க இவ்விபு."
அவளின் அந்தக் கேள்வி faபானாவை சுட்டொப்பதுபோல் இருந்தது.
"யோசிச்சேன்மச்சான்யோசிர்சேன்,நானும் ஏன்ட குடும்பத்தில் உல்லாரும் பொன்னாப் பொறந்தவங்க நீங்க ஒரு ஆம்புள ஒங்களுக்கு பொன் தாரத்துக்கு நான் நீ என்டு இந்த ஊருல ஆக்கள் இருப்பாங்க. ஏன்ட தங்கச்சிமாருக்கு அப்பிடியாரும் முன்வருவாங்களா மச்சான். காசு பனம், நக நட்டு, ஊடு வாசல் சீதனம் டெஸ்ா அவர்கள் எதிர்பார்க்கிறாங்க. அதனாலதான் மச்சான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். ஏன்ட அஞ்சு தங்கச்சிமாரையும் கரசேக்க அரபியும் அரபீடருடும்பத் தாரும் ஒத்துக் கொண்டிருக்குறாங்க, அதனால் தான் மச்சன்நான் இந்த முடிவுக்கு வந்தேன்.ஒங்களுக்குநான் செஞ்சது தவறு தான். நீங்க அதுக்கு என்ன மன்னிச்சிக்கோங்க அதோடநான்சென்ன விஷயங்கள அமானிதமா வெச்சிக்கோங்கோ. ஓங்களுக்கு அல்லாட காவல் நான் பெய்த்திட்டுவாறேன். ஜீவநதி

ரிஸ்ானா கொஞ்சம் இரி, எப்பவும் நீ பொய் பேசாத புள்ள அதனாலநீசென்னதுஎல்லாத்தையும் நான் உண்ம எண்டு நம்புறேன்.நீவிரும்பம் என்டாச் செல்லு இந்தப் பயணத்தநான் ஒடனே நிப்பட்டுறேன். அதுக்குப் பொறகு அரபிய பஸ்ஹி செய்ய வச்சுறேன். அதுக்கு பொறகு நான் ஒன்னக் கலியானம் கட்டி சந்தோசமாக் குடும்பம் நடத்திக்காட்டுறேன். ஒன்டதங்கச்சிமாருக்கும் என்னால் ஏன்டஒதவிய செஞ்சிகலசேத்தி உடுறேன்."
"மச்சான் என்ன மறந்திடுங்கோ, அந்த அரபி ஹயாத்தோட ஈக்கும் வரக்கிம் அவருக்கு ஊழியம் செய்நதாநான் வாக்கு குடுத்திட்டேன்மச்சான்,
"எழுபது என்பது வருஷம் வாழ்ந்த அந்த அரபி இன்னம் மிச்சம் காலம் வாழ மாட்டாரு அவரு எப்பசரி மெளத்தாப்போவாரு தானே. அப்பவாவது நீவா, அது வரக்கிம் நான்காத்துக்கொண்டீக்குறேன்.அப்போ எந்தக் கோலத்துல நீ வந்தாலும் நான் ஒனக்குத் தான் நீ எனக்குத் தான் எமது எண்ணம்தான் எமக்கு வாழ்வாக அமையவேனும்
ரிஸானா தன் கண்களில் வழிந்த கண்ணீர் துளிகளை முந்தானைத் தலைப்பால் துடைத்தவாறு சரிந்த முக்காட்டைச் சரி செய்து தலையை மூடிய வண்ணம், பணிந்த பார்வையுடன் அன்சாரிடமிருந்து மெளனமாக விடைபெற்றுக்கொள்கிறாள்.
இதழ் 30

Page 34
திருவாளர் தில்லைநாதன் வெள்ளவத்தை LLLTLLT. நடத்திவருகின்றார். அன்று ஒரு தனிப்பட்ட அலுவல் காரணமாக இவரைநான்சந்திக்கப்போயிருந்தேன். நாம் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது சுமார் அறுபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் தில்லைநாதனைச்சந்திக்க வந்தார். வந்தவர் "வணக்கம் ஐயா" என்றார். அவர்கள் அலுவல் பார்ப்பதற்கு வசதியாக நான் சிறிது தள்ளி இருந்து அன்றைய தினக்குரல் பத்திரிகையைப் புரட்டத்தொடங்கினேன். தில்லைநாதன்
வணக்கம் ஐயா வந்த விஷயத்தைச் சொல்லுங்கோ என்று கூறிமுடிக்க முன்னரே"என்ரை பேர் ஏதாம்பரம், ஊர் உரும்பிராய் என்ரை மகன் ஒரு டாக்டர்.இவருக்கு ஒரு கலியானமொண்டு பாக்கவேணும். நீங்கள் ஒரு திறமையான திருமண் ஆலோசகர் என்டு கேள்விப் பட்டன். அதுதான் உங்களைத் தேடிவந்தனான்" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தார். இலவசமாக நற்சான்றிதழ் கிடைத்தது பற்றி உள்ளுர மகிழ்ச்சி யடைந்த தில்லைநாதன், "மகன்றை சாதகப் பிரதியும் போட்டோவும் இருக்கா?" என்று கேட்டார். எல்லாம் தயாராக வைத்திருந்த ஏகாம்பரம் உடனே அவற்றை எடுத்து நீட்டினார். தில்லைநாதன் போம் ஒன்றை ஏகாம்பரத்திடம் கொடுத்து அதை நிரப்பித் தரச் சொன்னார். அதில் மணமகனின் குழுப்பெயர் பிறந்த திகதி பிறந்த இடம் வசிக்கும் இடம் நிறம், உயரம்,
கல்வித்தகைமை, உத்தியோகம், சாதிசமயம், போன்ற
விபரங்கள் கோரப்பட்டிருந்தன. மனமகன் பெயர்
ஏகாம்பரம்பிரதீபன், பிறந்ததிகதி 1.10.1980 பிறந்த இடம்
உரும்பிராய் வசிப்பிடம் கொழும்பு நிறம் சிவலை, உயரம் 58"கல்விMBBS, உத்தியோகம்பாக்டர் வேலை செய்யுமிடம் கொழும்பு சாதிஉயர் வேளாளர், சமயம் சைவசமயம் என்றவாறு போமை நிரப்பி அதனைத் தில்லைநாதனிடம் நிரப்பிக் கொடுத்தார் ஏகாம்பரம், தில்லைநாதன் 1000.00 ரூபாவைப் பதிவுக்கட்டண்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாகப் பெற்றக்கொண்டு போமில் கொடுக்கப்பட்ட விபரங்களைச் சரி பிழை பார்க்க தொடங்கினார்.
அந்த இடைவேளையைப் பிரயோசனமாகப் பயன் படுத்த எண்ணிய ஏகாம்பரம் நான் கையில் வைத்திருந்த பத்திரிகையின் தலைப்புச் செய்தியை நோட்டமிட்டு அதனை உரத்து வாசித்தார். "புதுக்கு? யிருப்பில் கடும் சண்டை இருதரப்பிலும் நூற்றுக்கன கானோர் பவி" என்பதே அன்றைய தினக்குரலில் தலைப்புச் செய்திஆகும் தலைப்புச் செய்தியைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ஏகாம்பரம் "குடாநாடு பூரண அரச கட்டுப்பாட்டிலை இருக்கு அங்கை ஆட்சேர்ப்பு செய்ய ஏலாது, கிழக்குப் பொடியளும் பிரிஞ்சு போட்டுதுகள் இப்ப வன்னிப்பொடியள் மட்டுந் தான் நீண்டு புடிக்குதுகள்பாவம், ஆனால் ஒன்டு மட்டும் நிச்சயம் பொடியள் கடைசிமட்டும் விடாங்கள் வெளிநாடுகளும் தலையிடத்துவங்கிவிட்டுது. இந்த முறை எப்பிடியும் ஒரு தீர்வு வரும். பொடியள் பட்ட பாட்டுக்கு ஒரு பலன் கிடைக்கும்" என்றார் ஏகாம்பரம், முன்பின் தெரியாத ஆளோடை ஏன் அரசியல் கதைப்பான் என்றெண்ணிய நான் அபிப்பிராயம் ஒன்றும் சொல்லவில்லை. அம்ம அவர் சொன்னதைக் கேட்டதற்கு அடையாளமாப் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு இருந்தன். இதனிடையேதில்லைநாதன் குறுக்கிட்டார்.
"ஐயா இந்தாருங்கோ உங்கடை பதிவு இலக்கம் அடுத்தமுறை வரேக்கை இதைக் கட்டாயம் கொண்டு வாங்கோ, அப்பதான் உங்கடை"பைலை தேடி எடுக்கிறது சுலபம்" என்று கூற ஏகாம்பரம் இவர் முறையாகத்தான் வேலை செய்கிறார் என்று மனதில் எண்ணியபடி திருப்தியுடன் தலையை ஆட்டினார். "ஐயா கொஞ்ச இருங்கோ" என்று கூறிவிட்டு "பைல்களைக் கிண்டிக் கிளறி நட்சத்திரமும் வயதும் பொருந்தத்தக்கதாக ஒரு பட்டதாரி ஆசிரியையின் பைஸை வெளியே எடுத்தார். சாதகம் இரண்டையும் மேலோட்டமாய்ப்பார்த்தபோது ஒரளவு சரிவரும் போல இருந்தது. "இந்த பைலை ஒருக்கால் பாருங்கோ" என்று அதை ஏகாம்பரத்திடம் நீட்ட அவர் எல்லா விபரங்களையும் படித்துப் பார்த்து விட்டு இறுதியாகபோட்டோவைப் பார்த்தார். "ஐயா

Page 35
என்ரை மகன்ரை போட்டோவைப் பாருங்கோ எவ்வளவு Smart ஆக இருக்கிறான். இந்தப் பிள்ளை கறுப்பு வடிவும் இல்லை இதை எப்படித் தெரிவு செய்தனிங்கள் என்று ஒரு போடு போட்டார் ஏகாம்பரம் “சரி உங்களுக்கு விருப்பமில்லையெண்டால் வேறை ஒண்டைப்பாப்பம்" என்றார்தில்லைநாதன் அஞ்சுவயசு வித்தியாசத்திலை வடிவான பிள்ளையாக டொக்டர் அல்லது என்ஜினியராய் பாருங்கோ அப்ப நான்வரட்டே என்று குடையையும் எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினார் ஏகாம்பரம். "எல்லாரும் அழகிய சிவந்த மெல்லிய குடும்பப் பாங்கான பொம்பிளையும் வெள்ளவத்தையிலை வீடும்தான் எதிர்பாக்கினம், ஊருலகத்திலை எல்லாரும் சிவப்பு நிறமாய் இருக்கேலுமா? மற்றது எல்லாத்தமிழரும் வெள்ளவத் தைக்குள்ளை வந்து குடியிருக்கேலுமா?வாறபோற எல்லாரும் கொழும்பிலை வீடு கேட்டால் நான் இனி என்ரை வீட்டைத்தான் எழுதிக்குடுக்க வேண்டிவரும், போலை, கண்டறியாத தரகுவேலைக்கு வந்து நான் படுகிற பாடு"என்றுதில்லைநாதன்அலுத்துக்கொண்டார். "சரிநான் ஒருக்கா கொட்டஹேனக்கு போகவேனும் அப்ப நான் போட்டு வாறன்" என்று கூறி நான் விடைபெற்றுக் கொண்டேன். பின்னர் ஒரு அஞ்சாறு மாதம் அந்தப்பக்கம்போக வசதிவரவில்லை.
அன்றொருநாள்என்அண்ணரின்மகளுக்குஒரு கலியாணம்பேசதில்லைநாதனின்அலுவலகம்நோக்கிச் சென்றேன். காலை 9மணி இருக்கும். வாடிக்கையாளர் ஒருவரும் வந்திருக்கவில்லை. விபரங்களையும் ஆயிரம் ரூபாவையும் கொடுத்துப் பதிவிலக்கத்தைப் பெற்றுக்கொண்டேன். அப்போதுஎனக்கு ஏகாம்பரத்தின் ஞாபகம் வரவே, "அவருடைய மகனுக்குத்திருமணம் முடிந்துவிட்டதா" என்று தில்லைநாதனை கேட்டேன். "அதையேன் கேக்கிறியள்" என்று பீடிகை போட்டார் தில்லைநாதன்."ஏன் என்ன விஷயம்" என்று கேட்டேன் நான்எல்லாம்சரியெண்டால்“பொம்பிளைவடிவில்லை" என்கிறார். பொம்பிளை வடிவெண்டால் "சீதனம் காணாது" என்கிறார். இரண்டும் இருந்தால் “வயசு வித்தியாசம் போதாது பொம்பிளைக்கு அஞ்சு வயசு குறைவாய் இருக்க வேணும்" என்கிறார். அஞ்சுவயசு வித்தியாசத்திலை பாத்துக் குடுத்தால் சாதி குறை" என்கிறார். "கொழும்பிலை தான் வீடு வேணும் யாழ்ப் பாண வீடு வேண்டாம்" என்கிறார். "இவையஞக்குப் பொம்பிளை பாக்கிறதெண்டால் வலும் கஷ்டம்" என்று அலுத்துக் கொண்டார் தில்லைநாதன் இப்படி நாங்கள் கதைத்துக் கொண்டிருக்கச் சொல்லி வைத்ததுபோல ஏகாம்பரம் வந்து கொண்டிருந்தார். "ஏகாம்பரத்துக்கு ஆயுசு நூறு, இதோ வருகுது மனிசன்” என்றார் தில்லைநாதன். છ6pઠ્ઠી

ஏகாம்பரம் என்னை இனம் கண்டு கொண்டு "ஐயா வணக்கம்எப்படிச்சுகம் என்றார்.நான்"நல்லசுகம்" என்றேன். "வணக்கம் ஐயா இருங்கோ" என்றார் தில்லைநாதன்.ஏகாம்பரம் எனக்கு அருகில் அமர்ந்து கொண்டார். "உங்கடை மகனுக்குத்தோதாக ஒரு 'பைல் அம்பிட்டிருக்குது,இந்தாருங்கோபைலைப் பாருங்கோ என்று அதனை ஏகாம்பரத்திடம் கொடுத்தார் தில்லை நாதன்ஏகாம்பரம்பைலைப்புரட்டினார். பெயர் சங்கீதா MBBS கொழும்பில் டாக்டர் வேலை. வயது 27. நிறம் சிவப்பு உயரம் 5'3", தாய்தகப்பன் உயிருடன் இல்லை. ஒரேயொரு தமையன் கொழும்பில் என்ஜினியர். தகப்பனுடைய பெயர் விலாசத்தைப் பார்த்தார். ஞானராசா, கடற்கரை வீதி, முல்லைத்தீவு. "ஆ.நான் முல்லைத்தீவிலை நாலு வருஷமாய் வேலை செய்த னான்.இந்தஅக்களைத்தெரியும்சாதிகுறைஞ்சஆக்கள் வேண்டாம் வேறை பாருங்கோ, வலிகாமம் அல்லது வடமராட்சிப் பக்கத்திலை நல்ல சீதனத்தோடை பாருங் கோஏரியிழந்து வன்னிப்பக்கம் போகேலுமா, வேறை ஒண்டு நல்லதாய்ப்பாருங்கேர், அப்ப நான் அடுத்த கிழமை போலை வாறன்" என்று சொல்லி வீதியில் இறங்கி வேகமாக நடக்கத் தொடங்கினார். நேராக வீடு சென்று கதிரையில் தொப்பென்று உட்கார்ந்தார். முகமெல்லாம். வியர்வை ஒரேகளைப்பாக இருந்தது. வாஷ்பேசினில் முகத்தைக் கழுவி துவாயால் துடைத்தபின்சிறிது ஆறுதலாக இருந்தது.தேநீர்குடித்து முடியவிட்டு மனைவி ராஜலகூழ்மி கேட்டா போன விஷயம் என்ன மாதிரி என்று ஒண்டும் சரி வரேல்லையப்பாஎன்றார்.ஏகாம்பரம்,
"இஞ்சேருங்கோநிங்கள்போனபிறகுதான்தம்பி சொன்னான். தனக்குத் தெரிஞ்ச ஒரு டாக்டர் பொம்பிளையாம், கொழும்பிலை வேலை செய்யுதாம், தாய் தகப்பன் ஒரு வருஷத்துக்கு முதல் முல்லைத் தீவிலை ஷெல்பட்டுச் செத்துப் போச்சினமாம், அதுக்குப்பிறகு இது இடமாற்றம் எடுத்துக்கொழும்புக்கு வந்து தமையனோடை இருக்குதாம், நல்ல வடிவாம், போட்டோவும் தந்தவன் இந்தாருங்கோ பாருங்கோ என்று கொடுக்க ஏகாம்பரம் அதை வாங்கிப் பார்த்தார். தில்லைநாதனின் பைலில் பார்த்த அதே படம்,திரும்பி மற்றப் பக்கம் பார்த்தார். Drசங்கீதா ஞானராசா என்று இருந்தது.இது சரிவராதப்பாசாதிகுறைஞ்சஇடம் என்று ஏகாம்பரம் சொல்ல நீங்கள் இவ்வளவு காலமாய் கலியாணம் பேசினனிங்களாம், ஏலாமல் போச்சுதாம், அதுதான் தானே பாத்திட்டானாம், வாக்குறுதி குடுத்த படியால் இனிமாற முடியாதாம், தமையன் என்ஜினியர், இவன்ரைநீண்டநாள்சினேகிதனாம்" என்றுராஜலக்ஷமி சொல்லி முடித்தா, ஏகாம்பரத்துக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. R } இதழ் 30

Page 36
ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு 1 ஒரு தேசியப் பத்திரிகை தீட்
1994ன்ஆரம்ப நாட்கள். மலையகத்தின் பிரபல எழுத்தாளரும் ஆய்வாளருமான சாரலிநாடன், நான் தொழில் புரிந்து கொண்டிருந்த நியூபீகொக்' பெருந்தோட்டத்திற்கு தேயிலைத் தொழிற்சாலைப் பொறுப்பதிகாரியாக மாற்றலாகிவந்தார்.
குருதிமலை நாவல் எழுதியதன் பின்னர் நான் சிலகாலம் எழுத்துலகில் அஞ்ஞாதவாசம் இயற்றினேன். அவரது வரவு அந்த அஞ்ஞாத வாசத்தைத் துறக்கச் செய்தது. எனது இலக்கியச் செயற்பாடுகளில் ஓர்உத்வேகம் பிறந்தது.
தினமும்மாலை வேளைகளில்நான் அவரது இல்லத்திற்குச் செல்வேன், நாங்கள் இருவரும் எமது இலக்கிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வோம், சிலவேளைகளில் தர்க்கித்தும் கொள்வோம்.
எனது எழுத்து வன்மையில் அவருக்கு அபரிமித நம்பிக்கை இருந்தது. "குருதிமலை நாவலின் பின்னர் நீங்கள் நீண்டகாலமாக எதனையும் எழுதவில்லை. மலையகப்பின்னணியில்இன்னுமொரு நாவலை நீங்கள் எழுத வேண்டும்" என என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தார்.
ஒரு மலையக எழுத்தாளர், பிற மாநிலத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட என்னிடம் மலையக நாவல் ஒன்று எழுதும்படி வேண்டியது எனக்குப் பெருமையாக இருந்தது. சாரல் நாடன் மட்டுமல்ல, அந்தனிஜீவாவும் என்னைமலையக நாவல் எழுதும்படிதூண்டிக்கொண்டே இருப்பார்.
"மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்களால்தான்மலையக மக்களின்பிரச்சினை களை உயிரோட்டமாக வெளிக்கொணர முடியும். அவர்கள்தான் அந்த மக்களின் வலிகளை நேரடியாக உணர்ந்தவர்கள். பிற மாநில எழுத்தாளர்கள் வெறும் பார்வையாளர்களாக நின்று இலக்கியம் படைப்பவர் கள். அவர்களது எழுத்துக்களில் உயிரோட்டம்
ઈ6]Bઠ્ઠી -
 

தி.ஞானசேகரன்
படைப்பிலக்கியத்தின் வரவு குறித்து டிய ஆசிரியத் தலையங்கம்
இருக்காது” என்றொரு வாதம் இருக்கிறது. தலித் மக்களால் தான் தலித் இலக்கியம் படைக்க முடியும். ஏனையோர் தலித்துக்களைப் பற்றிப்படைக்கும் இலக்கி யங்கள் இலக்கியம்ே அல்ல.அவை"சீசன் எழுத்துக்கள். என்ற வாதத்தைப் போன்றதுதான் இதுவும்.
இத்தகைய வாதத்தை முன்வைப்பவர்கள் ஆளைப் பார்ப்பவர்கள். ஆட்டத்தைப் பார்ப்பவர் 8ബ്ബ്.
சாரல்நாடனோ அந்தனிஜீவாவோ ஆளைப் பார்ப்பவர்களல்லர். ஆட்டத்தைப் பார்ப்பவர்கள். அதனாலே தான் மலையக நாவலொன்றை என்னை எழுதும்படி தூண்டுகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்.
பல சந்தர்ப்பங்களில் தூண்டல்கள்தான் என்னை எழுத வைத்திருக்கின்றன. வீரகேசரிஞாயிறு இதழின் பொறுப்பாசிரியராக இருந்த பொன்.இராஜ கோபால் கேட்டதற்கு இணங்கவே "அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும்’ என்ற கதையை எழுதினேன். மலையகச்சிறுகதைத்தொகுப்பிற்கு சிறுகதையொன்று வேண்டுமென தெளிவத்தை ஜோசப் கேட்டதால்தான் சீட்டரிசி என்ற கதை பிறந்தது. இலண்டனில் இருக்கும் பத்மநாப ஐயர் தொகுத்த 'கண்ணில் தெரியது வானம் என்ற உலகளாவிய எழுத்தியக்கத் தொகுப்பிற்கு ஒரு கதைவேண்டுமெனஅவர் என்னைக்கேட்டதால் காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும் என்ற சிறுகதை உருவானது. இவை யாவுமே எனக்குப் புகழ் சேர்த்த சிறுகதைகள்.
இப்படியான ஒரு தூண்டுதலே என்னை 'லயத்துச் சிறைகள் என்ற நாவலை எழுத வைத்தது.
இந்த இடத்தில்லயத்துச்சிறைகள்பற்றிய ஒரு சிறு விளக்கம் அவசியமாகிறது.
'லயம் என்பது தோட்டத் தொழிலாளர்களின் இருப்பிடம். இதில் ஒரு கூரையின் கீழ் பத்துப் பன்னிரண்டு ‘காம்பராக்கள் இருக்கும். இந்தக்
虫}一 85p 3O

Page 37
காம்பராக்கள் ஒரு புகையிரதத்தின் பெட்டிகள் போல் ஒன்றன்பின் ஒன்றாக தொடராக அமைந்திருக்கும். இவை ஒவ்வொன்றும்பத்தடி நீள அகலம் கொண்டவை. ஒவ்வொரு காம்பராவிலும் ஒவ்வொரு குடும்பம் இருக்கும். இந்தக் குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக இருநூறு வருடங்களுக்கு மேலாக இந்த லயங்களில் வாழ்ந்து வருகின்றன.
இந்தத் தொழிலாளர்களுக்குத் தோட்ட நிர்வாகம் இருப்பிட வசதி, மருத்துவ வசதி, குடிநீர் வசதி, மலசலக்ஷட வசதி, பிள்ளைகள் கல்வி கற்கப் பாடசாலை வசதி ஆகியவற்றைச் செய்து கொடுத்திருக்கிறது. பதினாறு வயது வந்துவிட்டால் தோட்டத்தில் தொழில் வசதியும் கிடைக்கும்.
அப்புறமென்ன, தோட்டத்தொழிலாளருக்கு என்ன குறை? என்று தான் எவருக்கும் எண்ணத் தோன்றும்
உண்மையில் இந்த வசதிகள் எல்லாம் பெயரளவிலேதான்!
200 வருடப் பழமை வாய்ந்த கூரைத் தகடுகள் துருப்பிடித்த ஓட்டை விழுந்திருக்கும். மலைநாட்டில் மழைக்குக் குறைவிருக்காது. அதனால் காம்பராக்கள் எப்போதுமே நனைந்து ஈரலிப்புடன் இருக்கும். தோட்ட நிர்வாகம் இலாப நோக்குடன் இயங்குவதால் கூரையைத் திருத்துவதில் அக்கறை காட்டாது. மலையிலிருந்து வடிந்துவரும் ஊற்றுக்களில் ஒரு தகரத் துண்டையோ வாழை மடலையோ பொருத்திஓர் ஊற்றுப் பீலிஅமைத்து குடிநீர் பெற்றுக் கொள்வார்கள். அசுத்தமான குடிநீர்!
ஒரே கூரையின் கீழ் பல குடும்பங்கள் வாழ்வதால், லயத்தைச் சுற்றி எந்த நேரமும் குப்பை கூழங்கள்நிறைந்திருக்கும். லயத்தைச் சற்றிஅசுத்தநீர் தேங்கி வழியும். சிறுவர்கள் சிறுநீர் கழிப்பதும் மலங்கழிப்பதும் இந்தக்கான்களில்தான்.
கூரை ஒழுகினால் அதனைத் தொழிலா ளர்கள் திருத்தமாட்டார்கள். தோட்ட நிர்வாகம்தான் அதனைத்திருத்திக்கொடுக்கவேண்டும் லயத்தைச்சற்றி குப்பை கூழங்கள் நிறைந்தால் அதனைத் தொழிலாளர்கள்கூட்டித்துப்புரவு செய்ய மாட்டார்கள். தோட்டநிர்வாகம்தான்அதற்கு'வாசல்கூட்டி போட்டுத் துப்புரவு செய்ய வேண்டும். குடும்பத்தில் யாராவது சுகவீனமுற்றிருந்தால் அல்லது கர்ப்பிணித் தாய் பிரசவத்துக்குத்தயாரர்னால் தோட்டநிர்வாகம் தான் மருத்துவ வசதி செய்து கொடுக்கவேண்டும். தோட்ட நிர்வாகம்தான் இவர்களுக்கு மலசல கூடங்கள் அமைத்துக்கொடுக்கவேண்டும்!
இப்படியாக எதற்கெடுத்தாலும் தோட்ட நிர்வாகத்திலே தங்கியிருக்கிற ஒரு மனப்பான்மை
છ6pઠી

தோட்டத் தொழிலாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
W தோட்ட நிர்வாகத்திற்கு ஒரு மலிவான தொழிலாள வர்க்கம் தேவைப்பட்டது. எனவே சகல வசதிகளையும் இவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இவர்களை வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி ஒரு மூடிய கட்டமைப்புக்குள் வைத்திருக்க வேண்டி இத்தகைய ஏற்பாடுகளை தோட்ட நிர்வாகம் செய்து கொடுத்தது. இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பை பெருந்தோட்டங்களில் ஏற்படுத்தியவர்கள்ஆங்கிலேயர் கள். அவர்களே எமது நாட்டில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையை ஏற்படுத்தியவர்கள். ஆங்கிலேயர்கள் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திய சலுகைகளை பிற்பட்ட காலத்தில் தோட்ட நிர்வாகிகளாக வந்த சுதேசிகள் உதாசீனம் செய்யத் தொடங்கினர். தோட்டத் தொழிலாளர்களது உழைப்பை மலிவான விலையில் பெற்றுக் கொண்டு உச்சலாபம் பெறும் நோக்குடன் அவர்களுக்குச் செய்து கொடுக்கவேண்டிய சலுகைகளை அலட்சியம் செய்யத்தொடங்கினர்.
பெருந்தோட்டங்களில் பாடசாலைகள் தோன்றிய வரலாறு சுவாரஸ்யமானது.
ஆங்கிலேயருடைய காலத்தில் மலைகளில் தொழிலாளர்கள் தேயிலைச் செடிகளை நாட்டிச் செல்லும்போது அவர்களது பிள்ளைகள் விளை யாட்டாக அந்தச் செடிகளைப் பிடுங்கி வீசிவிடுவார்கள். மலைகளில் அவர்கள் விளையாடும்போது தேயிலைச் செடிகள் சிதைவடைவதுமுண்டு. இந்த விளையாட்டுப் பிள்ளைகளின்தொந்தரவுஅதிகரித்தபோது, அவர்களை ஓரிடத்தில் இருத்திவைத்து அவர்களைக் கவனித்துக் கொள்ள ஒருவரை நியமிக்கவேண்டி இருந்தது. அவ்வாறு ஏற்பட்டது தான் தோட்டப் பாடசாலை
pങ്ങpങ്ങഥ,
அந்தக்காலத்தில் இந்தத் தோட்டப் பாடசாலைகளுக்கு யாழ்ப்பான வாத்திமார் தான் நியமிக்கப்படுவார்கள். தெளிவத்தைஜோசப்சோதனை என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறார். அதில் இந்த யாழ்ப்பான வாத்திமார் எவ்வாறெல்லாம் இந்தத் தோட்டச்சிறார்களின்கல்வியை மழுங்கடித்தார்கள்என ஆக்குரோசப் பட்டிருக்கிறார்.
1971ஆம்ஆண்டில்தேயிலைத்தோட்டங்கள் யாவும் அரசுடமை ஆக்கப்பட்டன. அதற்கு முன்னர் தேயிலைத்தோட்டங்கள் இருந்த நிலைமையையே நான் மேலே விபரித்திருக்கிறேன்.
தேயிலைத்தோட்டங்கள் அரசுடமையானது ஒரு வரலாற்றுத்திருப்புமுனையாக அமைந்தது. இந்த வரலாற்றுத்திருப்புமுனையின்ஆரம்பக்காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளையும் தோட்டத்
S
இதழ் 30

Page 38
தொழிலாளர்களின் போராட்டங்களையும் சித்திரிக் கிறது எனது குருதி மலை நாவல் என்பதனை இத் தொடரின் பன்னிரண்டாவது அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
தோட்டங்கள்அரசுடமைஆக்கப்பட்டு இருபது வருடங்களின் பின்னர் மீண்டும் தோட்ட நிர்வாகம் கம்பனிகளின்கரங்களுக்கு கைமாறியது. தோட்டங்கள் அரசுடமையாக இருந்த காலத்தில் ஏற்பட்ட அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை உள்ளடக்கி எழுதப்பட்டதே'லயத்துச்சிறைகள் நாவல்.
வெளியுலகத் தொடர்புகள் அதிகமின்றி ஒரு மூடிய கட்டமைப்புக்குள் வாழ்ந்த தோட்ட மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் இக்காலப்பகுதியில் அரசும் அரசுசார்பற்ற வெளிநாட்டு நிறுவனங்களும் பலதரப்பட்ட முயற்சிகளை மேற் கொண்டன. வெளியார் பெருமளவில் தோட்டங் களுக்குள் உள்நுழையத் தொடங்கியது இந்தக் கால கட்டத்திலேதான்.
கல்வித்தரத்தை மேம்படுத்தவெனத் தோட்டப்பாடசாலைகள் 1977ல் சுவீகரிக்கப்பட்டு ஆசிரியத் தொழில், கல்வி நிர்வாகம் போன்ற துறை களில் இந்தியத் தமிழருக்கு சலுகை அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டன. பிரஜாவுரிமையற்ற யாவேருக்கும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டு சில நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் இவர்கள் அரசியலில் பங்கேற்கவும், அரசாங்க உத்தியோகங் களைப் பெற்றுக்கொள்ளவும் சொந்தத்தில் நிலம், வீடு போன்ற சொத்துக்களை வாங்கவும் சட்டரீதியாக வழிசமைக்கப்பட்டன.
இத்தகைய ஊக்குவிப்புகளுக்குப் பின்னரும் தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கைத்தரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதற்கு என்ன காரணம்? வாழ்வாதாரத்துக்குத் தேவையான எல்லா வற்றையும் தோட்டநிர்வாகமே செய்துதர வேண்டும் என்கிற தங்கி வாழும் மனப்பான்மையிலிருந்து இவர்களில் பெரும்பாலானோர் விடுபடவேயில்லை.
தோட்டத்துக்குச் சொந்தமான லயங்களில் இருக்கும் வரை தோட்டத்தில் தங்கி வாழலாம், சலுகைகளைப் பெறலாம் என்ற எண்ணம் இவர்களை விட்டு நீங்கவேயில்லை.
இந்த லயத்து வாழ்க்கை தான் இவர்களது முன்னேற்றத்திற்குத்தடையாக இருக்கிறது.இந்தலயத்து வாழ்க்கைச் சூழல் சிறார்களின் கல்வியைப் பாதிக்கும். அமைதியான வாழ்க்கையைப் பாதிக்கும். சுகாதாரத்தைப் பாதிக்கும். முன்னேற்றகரமான சிந்தனைகளுக்குத் தடையாக இருக்கும்.
છsujbઠ્ઠી

இளைஞர்களை தீய வழிகளில் சிந்திக்கச் செய்யும். இப்படி எத்தனை எத்தனையோ பாதிப்புக்களைக் (8öIItạử (Bö Q5mGör3_(8LJIT560mh.
இந்த லயத்து வாழ்க்கை மனப்பாங்கு இவர்களைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. இந்தச் சிறையிலிருந்து அவர்கள் வெளியே வரவேண்டும். இவர்கள் வேண்டுமானால் தொடர்ந்தும்தோட்டங்களில் தொழில்புரியலாம். ஆனால்லயங்களில் வாழக்கூடாது. இவர்கள் தமக்கென நிலபுலங்களை வாங்க வேண்டும். சொந்தமாக வீடுவாசல்களை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் தேசிய நீரோட்டத் தில் இணைவதற்கு வாய்ப்புண்டு. முன்னேறுவதற்கு வாய்ப்புண்டு என்ற கருத்தினை இந்த நாவல் கூறிச் செல்கிறது.
இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயங் களையும் எழுதிமுடித்தபின்சாரல்நாடனின் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாசிக்கக் கொடுத்து அபிப்பிராயம் கேட்பேன். அவரது மனைவியும் வாசிப்பு ஆர்வம் உள்ளவர். அவரும் உடன்வாசித்து அபிப்பிராயங் களைக் கூறுவார். இரண்டு மாதங்களில் நாவல் எழுதி ഡ്രാമ്ന,
இந்த நாவலுக்கான கரு எப்படி என்மனதில் உருவாகியது என்பதை இந்த இடத்தில்கூறவேண்டும். தோட்டங்கள் அரசுடமையானவுடன் அரசும் அரசு சார்பற்ற நிறுவனங்களும் தோட்டப் புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிகளை மேற் கொண்டனஎன்பதை முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.
இத்தகைய செயற்பாடுகளில் நியூபீகொக்" தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரத்துடன் கூடிய செயற்பாடுகள் எனது பொறுப்பில் இடம்பெற்றன.
தொழிலாளர்க்கான குடிநீர்வசதி மலசலகூட வசதி, குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு ஊசியேற்றல், கர்ப்பிணித்தாய்மார் பரிசோதனை, சிறுவர் பராமரிப்பு போன்ற செயல்திட்டங்கள் எனது நேரடிக் கவனிப்பின் கீழ் இடம்பெற்றன.
இந்த வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு குடும்பநல உத்தியோகத்தர், சிறுவர் நிலையத்தாதி ஆகிய புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டார்கள். இந்த நியமனங்கள் எனது சிபார்சின் பெயரிலேயே இடம்பெற்றன.
எனது பங்களாவின் முன் அறையொன்றைத் தோட்டத்து இளைஞர்கள் கல்வி கற்பதற்கு ஒதுக்கியிருந்தேன் என்பதையும் எனது பங்களாவில் வந்து கல்வி கற்போருக்கு அவர்கள் பாடசாலை யிலிருந்து நீங்கியதும் அவர்களது தகுதிக்கு ஏற்ற வகையில் தனியார் துறையிலொ அல்லது பெருந் தோட்டத்துறையிலோ நான்சிபாரிசு செய்து வேலை
- இதழ் 30

Page 39
வாங்கிக் கொடுப்பேன் என்பதையும் முன்னைய அத்தியாயமொன்றில் குறிப்பிட்டிருந்தேன்.
இவ்வாறு எனது பங்களாவுக்கு மாலை வேளைகளில் வந்து கல்வி கற்றவர்களில் ஒருவர் மாரிமுத்து என்ற இளைஞர். இவரே எனது'குருதிமலை நாவலை நான் சொல்லச் சொல்ல எழுதியவர். இந்த இளைஞருக்கு குடும்பநல உத்தியோகத்தர் என்ற தொழிலை எனது சிபாரிசின் பெயரில் பெற்றுக்
இவர் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரத்துடன்கூடிய செயற்திட்டங்களை நடைமுறைப் படுத்தினேன். அதேவேளை இவரூடாகச் சமுக முன்னேற்றம் தொடர்பான சிந்தனைகளையும் தொழி லாளர்களிடையே விதைப்பதில் ஈடுபட்டேன். முக்கிய மாக லயத்துச் சிறைகளிலிருந்து தொழிலாளர்கள் வெளியேறினால் தான் அவர்கள் சகலதுறைகளிலும் முன்னேற்றமடைய முடியும் என்பதை விளக்கினேன்.
லயத்துச் சிறைகள் நாவலின் கதாநாயகன் சுந்தரம் ஒரு குடும்பநல உத்தியோகத்தர். இந்தக் குடும்பநல உத்தியோகத்தர் தோட்டத் தொழிலாளர்க ளின் வாழ்க்கையை மேம்படுத்த எடுத்த முயற்சிகளே இந்த நாவலின் கதையம்சமாக விரிந்துள்ளது. இந்த நாவலின் குறிக்கோளும் அதுதான்.
இந்த நாவல் தோட்டத்து இளந்தலை முறையினரிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இவர்களில் கணிசமானோர் இந்த லயத்துச் சிறைகளிலிருந்து வெளியே வந்துள்ளனர்.
எனதுசிபாரிசில்சமூகநலஉத்தியோகத்தராக நியமனம் பெற்ற மாரிமுத்து என்ற இளைஞர், லயத்துச் சிறையிலிருந்து வெளியேறி புசல்லாவையில் சொந்த மாக வீடு வாங்கியுள்ளார். சமூகநல உத்தியோகத்தர் பதவியிலிருந்துகொண்டே பல வெளிவாரிப் பட்டப் படிப்புகளை மேற்கொண்டு படிப்படியாக உயர்வுபெற்று இன்று டிக்கோயா என்ற இடத்திலுள்ள "இன்ஜெஸ்றி என்ற பெருந்தோட்டத்தில் தோட்ட மருத்துவ உதவியாள ராகக் கடமையாற்றுகிறார். இவரது மனைவி ஒரு பட்டதாரிஆசிரியை. மூத்த மகன் ஒரு பொறியியலாளர். இளைய மகனும் மகளும் பி. எஸ்.ஸி. பட்டதாரிகள்
இந்த லயத்துச் சிறைகள் நாவலை நான் சொல்லச் சொல்ல எழுதியவர் எனது பங்களாவில் மாலை வேளைகளில் வந்து கல்விகற்ற ஆ.சந்திர மோகன். இவர் இரட்டைப்பாதைஎன்ற இடத்தில் சொந்த மாக வீடு வாங்கி அங்கு வாழ்ந்து வருகிறார். இவர் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டுகலைமாணிப் பட்டதாரிஆசிரியராகப் புசல்லாவையில் கடமையாற்று கிறார். இவரது மனைவி புசல்லாவை அரசாங்க மருத்துவ மனையில் மருத்துவத் தாதியாகக் கடமை புரிகிறார். ஜீவநதி -

மேலே நான் குறிப்பிட்ட இருவரும் லயத்துச் சிறைகளிலிருந்து வெளியேறி வாழ்க்கையில் முன்னேறியவர்களின் வகை மாதிரிக்கு நான் காட்டும் உதாரணர்கள்.
இவர்கள் லயத்துச் சிறைகளிலிருந்து வெளியே வந்தார்கள். தங்கி வாழும் மனப்பாங்கி லிருந்து விடுபட்டார்கள். தங்களது இருப்பை நிலை நாட்ட தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள். இவர்களது பெற்றோர்கள் லயத்திலே வாழ்கின்ற கல்வி அறிவற்ற ஏழைத் தொழிலாளர்கள்.இவர்கள் அடைந்த முன்னேற்றம் இவர்களது சமூகத்தைப் பொறுத்தவரை ஒரு பெரும்பாய்ச்சல் தான்.
லயத்துச் சிறைகள் நாவல் எந்த நோக்கத்துடன்எழுதப்பட்டதோஅந்த நோக்கத்திலநான் முழுமையாக வெற்றியடைந்தேனா என்பதைக்காலம் தான் சொல்லவேண்டும்.
லயத்துச் சிறைகள் நாவல் சமூக மேம்பாட்டு நோக்கில் எழுதப்பட்டது. பொதுவாக சமூக மேம்பாட்டு நோக்கில் எழுதப்படும் நாவல்கள் கலைத்துவம் குன்றியே காணப்படும். பிரச்சாரம் துருத்திக்கொண்டு தலைநீட்டும். லயத்துச்சிறைகள் இதற்கு விதிவிலக்கான தல்ல. நான் எழுதிய மற்ற நாவல்களோடு ஒப்பிடு கையில் கலைத்துவம் குறைந்து காணப்படுவது லயத்துச்சிறைகளில்தான்.
இந்த நாவல் எழுதி முடிந்ததும், அதனைத் தனது மலையக வெளியீட்டகத்தினூடாக வெளிக் கொணர முன்வந்தவர் நண்பர் அந்தனிஜீவா.
இந்த நாவலின் வெளியீட்டு விழாவை மலையகத்தின் தலைநகரம் கண்டியில் நடத்த விரும்பினேன்.
கண்டியில் எனக்கொரு வீடு இருக்கிறது. எனது மனைவி மத்திய மாகாண இந்து சமய பாட இணைப்பாளராகவும்ஆசிரிய ஆலோசகராகவும்கண்டி கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்தார். அவரிடமே விழா ஏற்பாட்டுக்கான பொறுப்பை ஒப்படைத்தேன்.
வெளியீட்டுவிழா27-11-1994அன்றுகண்டி இந்து சிரேஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலை வராக இருந்த பேராசிரியர் எஸ்.தில்லைநாதன்தலை மையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு அப்போதைய உதவி இந்தியத்தூதுவர் அகருப்பையா பிரதம அதிதி யாகக்கலந்துகொண்டார்.கலாநிதிதுரை மனோகரன், அந்தனி ஜீவா, சு.முரளிதரன், சாரல்நாடன், நா.சோம காந்தன்உட்பட பலர் இவ்விழாவில்உரையாற்றினர்.
இந்த நாவல் வெளியீட்டுவிழாவில் எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
&p 30

Page 40
திரு.சாரல் நாடன் தனது பாராட்டுரையில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டார். அவரது உரையின் ஒருபகுதிபின்வருமாறு அமைந்தது:
"இன்று கண்டியில் நடைபெறும் இவ்வெளியீட்டு விழாவைப் பற்றியும் எழுத்தாளர் ஞானசேகரனைப் பற்றியும் கொழும்பிலிருந்து வெளிவரும் ஒரு தமிழ்த் தேசியப் பத்திரிகையின் ஆசிரியர்தலையங்கம் தீட்டிக் கெளரவித்துள்ளார். இது ஒரு வரலாற்றுப் பதிவாகும். எழுத்தாளன் சமூகத்தில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதனை இத்தலையங்கம் எமக்கு உணர்த்துகிறது.(36)
அப்போதுதான் விழாவில் பங்கு பற்றியவர்களுக்கு அன்றைய தினசரியில் லயத்துச் சிறைகளின் வரவு குறித்த ஆசிரியத் தலையங்கம் வெளிவந்திருப்பது தெரியவந்தது. சாரல் நாடன் அன்றைய விழாவுக்குக் காலதாமதமாகியே வந்தார். வரும்போது அன்றைய தமிழ்ப் பத்திரிகைகளையும் வாங்கி வந்தார். தினகரன் பத்திரிகையிலே அந்த ஆசிரியத்தலையங்கம் வெளியாகியிருந்தது.
அன்றைய விழா குறித்த செய்திகள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளிவந்திருந்தன. அதன் பின்புலத்திலே தான் இந்த ஆசிரியத் தலையங்கமும் வெளியாகியிருந்தது.
தினகரன் பத்திரிகையின் தலையங்கம் பின்வருமாறு அமைந்திருந்தது:
"மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல் போன்று திஞானசேகரனின் "லயத்துச் சிறைகள் என்ற நாவல் தோன்றியிருக்கிறது. ஏறத்தாழப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மலையக வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இந்நாவல் வெளி வந்திருப்பதனால் மலையக இலக்கியத்தின் வளர்ச்சி நிலையை அறிந்து கொள்ள இது பேருதவியாக இருக்கும் என்பதே இலக்கிய ஆர்வலர்களின் கருத்து.
ஞானசேகரன் இலக்கிய உலகிற்குப் புதியவரல்லர். முன்னே பல நூல்களை இவர் தந்திருக்கிறார்.
இதுவரை மலையகத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ்நாவல்கள் 14 வெளியாகி யிருக்கின்றன. இவற்றோடு ஞானசேகரனுடைய இந்த நூலும் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பலாம். இலக்கியப் பெரியார் கனக செந்திநாதன், கூறியதற்கொப்ப "மலையக சமுதாயத்தில் புரை யோடியிருக்கும் அழுக்குகளைக் கலையம்சத்துடன் கதையாக வடித்துத்தருபவர் ஞானசேகரன் இந்நாவல் மலையகத் தமிழ் மக்களின் வாழ்விலும் முன்னேற்றத் திலும் இவர் கொண்டுள்ள பற்றைவிளக்கிநிற்கின்றது. நூலாசிரியர் ஞானசேகரன்30 ஆண்டுகளுக்குமேலாக
ஜீவநதி

மலையகத்தில் வாழ்ந்து வருகின்றார். வைத்திய அதிகாரியாகப் பணியாற்றியதனாலே ஏழைத் தொழி லாளியின் உள்ளத்தை நன்கு உணர்ந்தவர் இவர். யாழ்ப்பாணம் புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்தவ ராயினும் மலையக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் இவர்,
மலையக கலை இலக்கியப் பேரவையின் ஆதரவில் இந்த நூல் இன்று கண்டியில் வெளியிடப் படுகிறது.பேராதனைப்பல்கலைக்கழகத்தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சிதில்லைநாதன் தலைமை வகித்து விழாவைச் சிறப்பிக்கவிருக்கிறார். மலையக இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் ஆதரவு அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை"(37) எனஅந்தஅசிரியத்தலையங்கம்
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலரும் பிரபல எழுத்தாளருமான நா.சோமகாந்தன் தனது உரையில், 'ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு படைப்பிலக்கியத்தின் வரவு குறித்து ஒருதேசியப் பத்திரிகை ஆசிரியத்தலையங்கம் எழுதிக் கெளரவித்த நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும். வேறெந்தப் படைப்பு களுக்கும் இத்தகைய கெளரவம் கிடைக்கவில்லை." எனப் பாராட்டினார்.
மேற்குறிப்பிட்ட ஆசிரியத் தலையங்கத்தை வாசித்த பலர் தொலைபேசிமூலமும் நேரிலும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்த நாவலின் அறிமுகவிழா 17-12-94ல் கொழும்பில்இடம்பெற்றது. தினகரன்பிரதம ஆசிரியர் திரு.ஆர்.சிவகுருநாதன் அந்தவிழாவுக்கு தலைமை தாங்க வேண்டுமென நான் விரும்பினேன். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளர் பிரேம்ஜிஞானசுந்தரம்,வீரகேசரி இணைஆசிரியராக இருந்த கே. எஸ். சிவகுமாரன், ஆகியோர் முக்கிய பேச்சாளர்களாக இருந்தனர்.
அதன்பின்னர் 08-04-1995ல்தலவாக்கலை தமிழ்வித்தியாலயத்தில் ஓர் அறிமுக விழா இடம் பெற்றது. திரு.விரிசெல்வராஜ் அவர்களின் தலைமை யில் இடம்பெற்ற இவ்விழாவில் மலையக முன்னணி எழுத்தாளர்களான மு.சிவலிங்கம் மல்லிகைசிகுமார் ஆகியோர் கலந்து ஆய்வுரை ஆற்றினர்.
இந்த நாவல் குறித்த விமர்சனத்தை கே.எஸ்.சிவகுமாரன் எழுதியிருக்கிறார். அதில் பின்வருமாறுகுறிப்பிடுகிறார்.".தோட்டவாழ்மக்கள்படிக்கத் தெரிந்தவர்கள், மிக இலகுவான முறையில் அடிப்படை விஷயங்களை அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்குடன் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. எழுதியவர் வெளி மாகாணத்தைப் பிறப்பிடமாகக்
இதழ் 30

Page 41
கொண்டிருந்த போதிலும் பல ஆண்டுகள் மருத்துவப் பிரயோகம் செய்து வந்தமை காரணமாக, மலையக வாழ்க்கையை நன்குணர்ந்து அனுபவித்து வெளிப்பாடு செய்திருக்கிறார் எனலாம். அது மாத்திரமல்ல, அவர் அகவயப்படாமல் புறவய நிலைப்பாட்டிலிருந்து எழுதுவது காரணமாக உண்மையான பகுப்பாய்வு நாவலில் காணப்படுகிறது. இந்த ஆய்வு விழிப்புணர்வு பெற்றுவரும் தற்போதைய இளைஞர்களைச் சிந்திக்க வைக்கும். இந்த நாவலைத்தாமே படித்துப் பயனடைய முடியாத நிலையிலுள்ள தோட்டத் தொழிலாள மக்களுக்கு இத்தகைய இளைஞர்கள் நாவலிற் சொல்லப்பட்டவிஷயங்களை அவர்கள்புரியும் மொழி யில் எடுத்துக்கூறலாம். எனவேதான்நாவலாசிரியரின் நோக்கம் வெற்றிபெற்றதெனலாம்.
நாவலாசிரியர் வெறும் அறிவுரைகளை வழங்கவில்லை. அபிவிருத்தி ஊடகத்துறை (Developing journalism/broadcasting)ular GFugi) பாடாக ஒரு புனைகதையைத் தான் தந்திருக்கிறார். அப்புனைகதையில் செய்திகளைச்சிந்தாமல் சிதறாமல் 56(Dog LLDIT55 (Craftsmanship)5(tailpitfir,
வெறுமனே விவரணைகள், ஆசிரியர்கூற்றுக் கள், விபரிப்புகள் போன்றவையின்றி கதையூடாகவே
எட்டி எட்டி பார்க்கிறேனர் இன்னமும் தாண்ட முடியவில்லை வறுமைக் கோட்டு எல்லையை
வயிற்றுப்பசிக்கு ஏதோ ஒரு உணவு, மாற்றி உடுக்க ஒரு சில ஆடைகள், படுத்துறங்க ஒரு ஒலைக் குடிசை, இவை தவிர வேறு எதுவும் எனினிடம் இல்லை.
வேறு எதனையும்-நான் எதிர்பார்க்கவும் முடியாது என் ஏழைப் பெற்றோரிடம், என் பணப்பை எப்போதும் காலியாகவே இருக்கும்! இருப்பினும் இந்த வறுமையும் பிடித்திருக்கிறது எனக்கு
இந்த வறுமை தான் வற்றிய குளத்தில் கொக்குகளாய் வேசம் போடும் உறவுகளையும்
ஜீவநதி - R
 

செய்திகளைப் பரிவர்த்தனை செய்கிறார்.தோட்டவாழ் மக்களின் பேச்சு வழக்கிலேயே உரையாடல் மூலம் கதையைத் துரிதமாகச் சொல்லி முடிக்கிறார். சொல்லாமற்சொல்லும்பண்பும், விறுவிறுப்பும்ஓட்டமும் கதையைக்கலைநயமாகச் சொல்லவைக்கிறது.
இந்த நாவல் ஒரு சமூக யதார்த்த ஆவணம் எனலாம். படிக்கத் தெரிந்த சம்பந்தப்பட்டதோட்டவாழ் மக்கள் காரண காரியத் தொடர்புடன் புத்தறிவு பெறுவர் (38) என ஆய்வு செய்துள்ளார்.
இந்தநாவல் 1994ஆம்ஆண்டுக்கான மத்திய மாகாண சாகித்தியப் பரிசினைப் பெற்றது. அந்த ஆண்டில் வெளிவந்த சிறந்த நாவல்களின் ஒன்றென இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழையும் பெற்றுக்கொண்டது.
இந்தநாவலின் இரண்டாவதுதிருத்திய பதிப்பு 1998ல் வெளியாகியது.
(இனி அடுத்த இதழில்) உசாத்துணை (36)27-11-1994கினகரன்வாரமஞ்சரி- ஆசிரியத்
தலையங்கம்
(37)13-12-1994கினகரன்-பக்:4 (38) 8-1-1995 வீரகேசரிவார வெளியீடு
ஆம்பலாய் கூடவே இருக்கும் நண்பர்களையும் - எனக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
நிலையில்லா இந்ந உலக வாழ்க்கையின் அர்த்தத்தை அடிக்கடி எனக்கு நினைவூட்டுகிறது வறுமையினி கரங்களால் நசுக்கப்படும் ஒவ்வொரு தடவைகளிலும் எனினை நானே பட்டை தீட்டிக் கொள்கிறேன் ஆதலால் - எனி வறுமையே உனக்கு நன்றி
நிலைமாறும் உலகின் ஆடம்பர மோகத்தில் - நாணி திசை மாறிப் போகாமல் - எனி இலட்சியப் பாதையில் நேரே பயணிக்க - உன் துணை வேண்டும் எப்போதும்
எனக்கு/
தெ.இந்திரகுமார்
இதழ் 30

Page 42
நூல் விமர்சனம்
கவிஞர்தஜெயசீலனின் கைகளுக்குள் சிக்காத காற்று?
கவிதைத் தொகுதி ஒரு மேலோட்டமான பார்வை
கே.ஆர்.டேவிட் 2004 ஆம் ஆண்டு கவிஞர் ஜெயசீலன் அவர்களால் வெளியீடு செய்யப்பட்ட 'கைகளுக்குள் சிக்காத காற்று கவிதைத் தொகுதி ஏறத்தாழ ஏழு ஆண்டுகளின் பின் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப் படுகின்றது. 'கைகளுக்குள் சிக்காத காற்று என்ற இக்கவிதைத்தொகுதிகவிஞரின்கன்னிவெளியீடல்ல. ஏற்கனவே ஒரு கவிதைத் தொகுதியைப் பிரசவித்த 'பிரசவ அனுபவம் இவருக்குண்டு. கர்ப்பகால மசக்கைகள், நோக்காட்டுக்குத்து, பிரசவ வேதனை, தாலாட்டு, கற்பனைகள் எதுவுமே கவிஞருக்குப் புதியதல்ல என்ற தளத்தில் நின்றே இவரையும், இவரது கவிதைகளையும் நோக்க வேண்டிய பொறுப்பு இயல்பாகவே ஆய்வாளருக்கு ஏற்படுகின்றது.
ஏழு ஆண்டுகளின் பின்பு இக்கவிதைத் தொகுதிக்கு ஒருஆய்வு அவசியமாஎன்றொரு கேள்வி இயல்பாகவே எழுத்தான் செய்யும். ஏனெனில், நூல் பிரசுரமாகும் காலத்தையண்டி வெளியீட்டு விழா, அறிமுகவிழா என்பன நடைபெறுவதும்,அதன்பின்அந் நூல் பேசப்படாமல் விடப்படுவதுந்தான் இதுவரையில் இலக்கியப்பரப்பில்நடந்துவருகின்றநிகழ்வுகளாகும்
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் ஒரு படைப்பாளிதனது படைப்புகளை தொடர் மதிப்பீட்டிற்கு உட்படுத்துவது அவசியமானதென கருதுகிறேன். ஏனெனில் எனது இலக்கிய செல்நெறி பற்றிஎனக்குள் நானாகி சுயவிமர்சனம் செய்வதன் மூலம் இலக்கிய தளத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும், காலம் தரிப்பதில்லை, கருத்துகள் நிலைப்பதில்லை.
1977இல் முதன்முறையாக என்னால் எழுதப்பட்டு வீரகேசரியில் பிரசுரமாக வெளிவந்த நாவலை நான் இப்போதும் வாசிக்கின்றேன். அப்படி வாசிக்கும்போது எனது பலத்தையும், பலவீனத்தையும் என்னால்உணரமுடிகின்றது.
ஒரு படைப்பாளன் இறந்தகால வரலாற்றையும் சம கால யதார்த்த விஞ்ஞான இயங்கியலையும்,
છ6pઠ્ઠી
 

ாதிர்காலதீர்க்கதரிசனங்களையும் பெற்றிருப்பதோடு சிறந்த மொழி வாண்மையும். சமூக மேய்ச்சல் உள்ளவனாகவும் இருப்பது அவசியமாகும். இலக்கிய வடிவங்களுள் கவிதை இலக்கியம் மிகவும் நுணுக்க மானது மட்டுமல்ல மிகவும் காரமானதும் கூட எழுபது களுக்கு முற்பட்டகாலத்தில்கவிஞர்களும் எழுத்தாளர் களும் மிக அரிதாகவே காணப்பட்டனர்.அதேவேளை 85ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர் களத்தில் நின்ற போராளிகளுள் பலரும்,களத்திற்கு வெளியே நின்ற போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட பலரும் கவிஞர்களாகவும், எழுத்தாளர் களாகவும் மாறினார்கள். உயிரை உறைய வைக்கும் சம்பவங்கள் நிறைந்திருந்தமையும், படைப்பாளரின் உற்பத்திக்குமுக்கியகாரணியாக அமைந்திருந்தமையும் இங்குகவனத்திற்கொள்வது அவசியமாகும்.
அண்மையில் நடந்த ஒரு கவிதைநூல் வெளி யீட்டு விழாவில் கலந்தகொண்டு உரையாற்றிய ஒரு பேராசிரியரின் கருத்தை இங்கு பகிர்ந்து கொள்வது பயன்தருமென்றெண்ணுகின்றேன். அவரின் உரை பின்வருமாறு அமைந்திருந்தது."சமகாலப்படைப்பாளி களின் படைப்புக்களில் பெரும்பாலானவைகள் தரிசனங்களோடு மட்டும் அமைந்துவிடுகின்றன. விஞ்ஞான அடிப்படையிலான பொருளாதார நோக்கங்களையோ தத்துவார்த்த வெளிப்பாடு களையோகாணமுடிவதில்லை. புரிதலும் புரிந்ததைப் புரியவைப்பதிலும் சராசரிமனிதர்களைவிட எழுத்தாளன்முக்கியமானவனாக கருதப்படவேண்டும். உணர்வு கொப்பளிக்கும்பிரச்சினைகளுக்கான வடிகால் களையும் தொட்டுக்காட்டவேண்டியபெரும் பொறுப்பு எழுத்தாளர்களுக்குஉண்டு எனக்குறிப்பிட்டார்.
சபையில் எழுத்தாளர்களும் கவிஞர்களும் விமர்சகர்களும் நிறையப்பேர் இருந்தனர். ஆனால் பேராசிரியரின்கருத்துக்கு எதிர்வினையாக எவருமே கருத்துத்தெரிவிக்கவில்லை என்பதையும் இங்கு குறிப்பிடுவது அவசியமெனநினைக்கின்றேன்.
பேராசிரியரின் மேற்படி கருத்துவலை வீச்சுக்குள்கவிஞர் ஜெயசீலனின்'கைகளுக்குள்சிக்காத காற்று கவிதை நூல் சிக்கவில்லை என்பதை ஆய்வாளன் என்ற வகையில் மன நிறைவோடு
110 பக்கங்களைக் கொண்ட இக்கவிதைநூலில் 84 கவிதைகள் உள்ளடங்கியுள்ளன. அட்டைப்படத்தை ஓவியனாகவே பிறந்த கெளரவத்திற்குரிய திரு.ரமணி அவர்கள் வரைந்துள்ளார். நூலின் நுழைவாயிலிலும் பின்னட்டையிலும் கவிஞர் ஜெயசீலன் அவர்களின் குறிப்புக்களைத்தவிர வேறெந்த பிரபலங்களின் குறிப்புக்களும் இடம் பெறவில்லை என்பது கவனத்திற்குரியது. நுழைவாயிலில் உள்ள கவிஞரின் இதழ் 30

Page 43
குறிப்பில்தன்னைப்பற்றியும்கவிதைபற்றியும்தனக்கும் கவிதைக்கும் உள்ள தொடர்பு நிலைபற்றியும் குறிப்பிட்டுள்ளார். கூறப்பட்ட கருத்துக்கள் இயல்பான வைகளாக இருப்பினும் கூறப்பட்ட நுணுக்கமும் செட்டான மொழிப்பிரயோகமும் கவிஞரின்கூற்றுக்கு தனித்துவமானதொரு கெம்பீரத்தைக் கொடுக்கின்றது.
சொற்சிலம்பமாக இல்லாமல்பயிற்சியும்அனுப வமுமிக்க அடிமானம்தவறாத"சொல்வீச்செனலாம்.
கடைசிப்பக்கத்தில் அமைந்துள்ள கவிஞரின் குறிப்புகள் கவிஞரின் கருத்திறுக்கத்தையும் செட்டான கவித்துவ வாண்மையையும் சிக்கனமான மொழிப் பிரயோகத்தையும்கோடிட்டுக்காட்டுகின்றது.
பின் கவிதை شو سیسی۔ شحمی ۔۔۔۔۔ گء என்றானே தீக்கவிஞன் எனக்குத் தொழில்ை.ை எனக்கு அது உயிராம்! எனக்கவிஞரின்குறிப்புஆரம்பிக்கப்படுகின்றது. இக்கூற்றில் இரண்டு விடயங்கள் உள்ளடங்கி யுள்ளதனை அவதானிக்க வேண்டும்.
பாரதியைத் தீக்கவிஞன் என்று கூறிபாரதியை வானத்தை நோக்கிஉயர்த்துகிறார்கவிஞர் ஜெயசீலன், எனது இலக்கிய அனுபவத்தில் பாரதியை தீக்கவிஞன் என வர்ணித்த முதலாவது மனிதனாக கவிஞர் ஜெயசீலனையே காண்கின்றேன். பாரதியின் கவிதை வீச்சை வர்ணிப்பதற்கு தீக்கவிஞன் என்ற சொல்லைவிடவேறு சொற்கள்தமிழில்இருக்காதென்று கூடச்சொல்லலாம். இரண்டாவது, நமக்குத் தொழில் கவிதை என்றானே தீக்கவிஞன் எனக்குத்தொழிலன்.ை எனக்கு அது உயிராம்/ என்ற கவிஞர் ஜெயசீலனின் கூற்றில், பாரதியை வானத்தை நோக்கிஉயர்த்திய அதேவேளை
'எனக்குஉயிராம் என்றகற்றின் மூலம்கவிஞர் ஜெயசீலன் அவர்கள் பாரதியின் தலையில் ஏறிக் குந்திவிட்டதைஉஊகிக்க முடிகின்றது.
பாரதிக்கு கவிதை தொழில் தொழி ற்றலாம் அல் றுத்தலாம் ஜெயசீலனுக்கு கவிதைஉயிர் உயிரை மாற்றவும் முடியாது. நிறுத்தவும் முடியாது (நிறுத்தினால் அது மரணந்தான்) கவிஞர் ஜெயசீலன் தன்னை உயர்த்திக் கொண்டதில் எந்தத்தவறுமில்லை. பாரதியின் கவிதைகள் தான் கவிதை இலக்கியத்தின் எல்லைப்புள்ளியாக நியமப்படுத்தி இதுவரையில் யாரும்கூறவில்லை. அப்படிக்கூறவும் முடியாது.
'உலகத்திலேயே சிறந்த நாவலாசிரியர் છ6pઠ્ઠી

பெர்னாட்ஷா என்று பெர்னாட்ஷாவே ஒரு முறை கூறியுள்ளார். இக்கூற்றில் ஆணவமோ அகங்காரமோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.தனது படைப்பை நம்புகின்ற ஆத்மார்த்தமாக நேசிக்கின்ற ஒரு படைப்பாளனின் - பெர்னாட்ஷாவின் கூற்றாகவே இதனை நான்காண்கின்றேன்.
இதே குறிப்புத் தொடரின் இறுதியில் கவிஞர் குறிப்பிட்டிருப்பதையும் இங்கு நோக்குவது அவசியமாகும்.
இப்பிறவியினைக் கழித்திட என் கவிதையினைக் கருவியாகக் கைக்கொள்வேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.
இக்கூற்றுக்குள் உயிர்ப்பூச்சி துடிப்பதை உணரமுடிகின்றது. எனவே ஜெயசீலனிடமும்'செருக்கு இருப்பது தவிர்க்கமுடியாதது. அடுத்துச் சில கவிதை களைப் பார்க்கலாம் உறவு என்றொரு கவிதையில்,
வண்டிலிலேகனபாரம்
கொண்டிழுத்துச்சென்றுளன
இறைச்சிக்கடைக்கு வெகுவிரைவாய்” இவ்வளவுதான் கவிதை.
நாம் வாழுகின்ற இந்தச்சமுதாயத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை விளக்குவதற்கு கவிஞர் ஜெயசீலன் அவர்கள் எடுத்துக் கொண்ட உத்தி அற்புதமானது கவிஞரின் பார்வைக்கூர்கள் சமூகத்தளத்தை குத்தி ஆணிவேரின் வேர் முடியைக் குத்திநிற்கின்றது. கருத்துக் கவனம், உத்தி, கற்பனை, அனுபவம், மொழியாட்சிசகலதுமே சிறப்பாகஉள்ளன. மனிதனின் உணர்வுக்காக உச்சந்தலையில் அடித்து படுகொலை செய்யப்பட்டு, தோலும் குடலும் அகற்றப்பட்ட மாடு என்ற மிருகத்தின்தசைக்குவியலை வண்டிலில் ஏற்றி அதே மாடுகளைக் கொண்டு இழுப்பிக்கின்றான். மனிதன்
'மாட்டிறைச்சியைச் சமைத்துச் சாப்பிட்டு இந்த மக்கள் மகிழ வேண்டும் என்ற நல்லெண்ணம் இந்த மனிதனிடம் இல்லை. "பணம் பண்ணுகின்ற சுயநலந்தான்அந்தமனிதனிடமுண்டு
தக்காளிப்பழத்தின்வாளிப்பைத்தான்சாதாரண மனிதன் காண்கின்றான்.ஆனால் வாளிப்பான அந்தத் தக்காளிப்பழத்தினுள் துடிக்கின்ற புளுக்களைக் காண்பவன்தான்கவிஞன்.
அந்தப் புழுக்களைத்தான்கவிஞர் ஜெயசீலன் தனது கவிதையில்சுட்டிக்காட்டுகிறார்.தார் என்றொரு கவிதையில்,
'உருகியதாரின் குரூரம் என்னை வறுக்கச்
&pp 30

Page 44
செருப்பும் அற பொரிந்ததாரில் பதம் பொசுங்கி துடித்துப் பதைத்துத் தீமிதித்துப் புண்ணானேன்
ஐம்பத்தெட்டில் கொதித்ததார்ப்பீப்பாவில்
வலியினிலேநானும் இன்று கொஞ்சம் அனுபவித்த கொடுப்பினையில் நடக்கின்றேன்" உறவு உன்ற கவிதையில் இச்சமுதாயத்தின் ‘வெட்டுமுகத் தோற்றத்தை இரத்தமும் சதையுமாகக் காட்டிய கவிஞர் ஜெயசீலனின்தார் என்ற இக்கவிதை யில் தமிழரின் வரலாற்றில் பதிவான 58 கலவரத்தில் நடந்த ஒரு கொடூரமானசம்பவத்தின் வடுவின் தோலை உரித்துக்காட்டுகிறார்.58 கலவரம்தமிழர்களுக்கு ஒரு புதிய செய்தியல்ல. ஆனால் அந்த சம்பவத்தை உணர்த்துவதற்கு கவிஞர் கையாண்ட கற்பனையும் அனுபவமும்அருமையாக உள்ளது.
செருப்பு அற பொரிந்ததாரில் பதம் பொசுங்கிஎனக்கவிஞர் கூறுவதிலுள்ள சகலராலும் பரிந்து கொள்ளக்கூடிய பொதுமையான- இலகுவான உதாரணந்தான் இங்கு கவனத்திற்குள்ளாகின்றது.
"சமூகத்திலிருந்து கற்று - கற்றதை இலக்கிய கவிதை நெறிக்குள் புகுத்தி திரும்பவும் அதே சமூகத்திற்குக் கொடுப்பதுதான் இலக்கியம்-கவிதை" இக்கவிதையில் சம்பவ விபரிப்பு:சமூகச்செய்து உணர்வு வெளிப்பாடு கற்பனை மொழிப்பிரயோகம் யாவுமே மிகச்சிறப்பாக உள்ளன. அடுத்து "மறத்தல்' என்றொரு கவிதை
காயங்கள்காயங்களாகவே இல்லாமல் ஆறுவதில் வியப்பில்லை ஆனால் வடுக்களெல்லாம். சகாவரம் பெற்றுத்தழைக்கும் இது பொய்யில்லை" "வடுக்கள் என்ற குறியீட்டின்மூலம்நீண்டதொரு வரலாற்றையே சுட்டிக்காட்டியுள்ளார்.
உறவு' என்ற கவிதையில் சமுதாயம் என்ற பெரும்பரப்பின்வெட்டுமுகத்தோற்றத்தையும்தார் என்ற கவிதையில் தமிழர்களின் வரலாற்றுப்பதிவில் இரத்த நெடில்மனக்கும் ஒரு புள்ளியையும் தொட்டுக்காட்டும் கவிஞர் "மறத்தல்' என்ற கவிதை மூலம் 'மெளன, மொழியில் எங்களுக்குப் பலவற்றை கூறியுள்ளார்.
தீயினால்சுட்டபுண் ஆறும் ஆறாதுநாவினால்சுட்டவடு "மறத்தல் அற்புதமானகவிதை 'கடவுளுக்கு உரைத்தது' என்ற கவிதை - கவிதைநூலின் இறுதிக்கவிதை
1.ஞானாக்கினிஎம்மைச்சுட்டுப்புடம் போடட்டும் ઈopઠ્ઠી *

ஈனம் அறுத்து இதந்தந்து வாழ்த்தட்டும் ബ്രf(ിഞ്ഞ് ബഞ്ഞu് ഉങ്ങ് நாதரூபம் காட்டட்டும் எனக்கவிதை முடிக்கப் பட்டுள்ளது. தீக்கவிஞன் பாரதி தமிழ்மக்களின் ஈன நிலைகண்டு பராசக்திக்கு முன்னால் நின்று இரத்தக் கண்ணிர் வடித்திருக்கிறான். பாரதி பராசக்தியின் (கடவுள்) பக்தன்.
தந்தை செல்வநாயகம் அவர்கள் அரசியலில் இருந்த காலத்தில் தமிழ் மக்களின் விடுதலை பற்றிக் குறிப்பிடும்போது தமிழ் மக்களை இறைவன்தான் காப்பாற்ற வேண்டுமென கூறியுள்ளார். அந்த வரிசையில் கவிஞர் ஜெயசீலன் அவர்கள் 2004ம் ஆண்டு தனது கவிதைநூலில்,
"அற்புதமே உந்தன் அருள்விழிகள்ளங்களினை நோக்கட்டும்உந்தன்நூண்ணதிர்வுஎம்இடரைச் சாய்க்கட்டும் சூழும்தடைதகர்த்துன்அபயக்கை காக்கட்டும்" எனத் தமிழ் மக்களின் துயரங்களையும் படி ஆண்டவனிடம்வேண்டுகிறார்.
கவிதையிலுள்ள ஒவ்வொரு அடியும் அர்ஜூன னின்பானங்களாய் இதயத்தைக்குத்துக்கின்றன. பாரதி செல்வநாயகம், ஜெயசீலன் மூவருமே ஒரு நேர் கோட்டில் கருத்து ரீதியாகச் சந்திக்கின்றனர். தமிழ் மக்களுக்கு 2009ல் அரசியலில் ஏற்பட்ட'கையறுநிலை யை 2004ல் கவிஞர் ஜெயசீலன்உணர்ந்துள்ளார்.
அரசியல் விடுதலை கோரி ஆண்டவனிடம் முறையிடுவதென்பது அரசியல் விஞ்ஞான இயங்கி யலுக்கு முரணானது என்பது நமக்குப் புரிந்தளவிற்கு கவிஞர் ஜெயசீலன்அவர்களுக்குபுரிந்திருக்காது என்று வாதிடமுடியவில்லை வாதிடவும் முடியாது.
தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றி அடக்கிவாசிக்க வேண்டிய தேவை - உயிர் உடமை அச்சம்கவிஞர் ஜெயசீலனுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழனுக்குமே இன்று உண்டு. அனைத்து எழுத்தாளர் களும்கவிஞர்களும்அதைத்தான்செய்கின்றனர். செய்ய வேண்டிய சமூக நிர்ப்பந்தம்"
ஒரு கவிஞனையோ எழுத்தாளனையோ அவனது சமூகச்சூழ்நிலையிலிருந்து வேறுபடுத்தி சூனியமானதொரு இடத்தில் வைத்து விமர்சிப்பது மிகவும்தவறானது. அந்த வகையில்கவிஞர் ஜெயசீலன் அவர்களும்'மக்கள்சக்தியை மறைத்துவைத்துள்ளாரே தவிர மறந்தவருமல்ல, மறுத்தவருமல்ல எனலாம்.
'கைகளுக்குள் சிக்காத காற்று கவிதைத் தொகுதி அற்புதமானது. தொடர்ந்தும் கவிஞர் எழுத வேண்டும்எனவாசகர்சார்பில்கேட்டுக்கொள்கின்றேன்
- இதழ் 30

Page 45
தவராஜா வசந்தன்
பேட்டோல் பிலிறவற்றின் காவிய அரங்க முறைமை
உலக அரங்க வரலாற்றில் பரிசோதனை முயற் கூடாக அரங்கு பல்பரிமாணம் உடையதாக வளர்த்தெடு பட்டு வருகின்றது. இந்த வகையில் ஜேர்மனி நாட்டைச் சே பேட்டோல் பிறெ&ற்றின் நாடகப் பங்களிப்பு காவிய அர (Epic theatre) மூலம் முன்னெடுக்கப்படுகின்றது. நூற்றாண்டில் மத்திய காலத்தில் செல்வாக்குப் ெ கோட்பாடாக காவிய அரங்கு காணப்படுகின்றது. இவ்வர வெளிப்பாட்டுவாதத்தினாலும், முன்னுள்ள அரங்க மு களாலும் சலிப்படைந்தவர்களின் எண்ணத்தால் உருவ தாகும். மனிதனது சிந்தனைகள்தூண்டப்படவேண்டும் என் இவ்வரங்கு வலியுறுத்தி நிற்கிறது. இவ்வரங்கின் கர்த்தா 'ஏர்வின் பிஸ் காட்டோர்’ சிறப்பு பெறுகின்றார். கா அரங்கைப் பிரசித்தமான கோட்பாடாக முன்னெடுத் பிறெக் ஆவார். கீழைத்தேச அரங்க முறைகளான ஜப்பானிய, இந்திய நாடுகளில் மரபு வழி அரங்குக செல்வாக்கினைக் காவிய அரங்கில் காணலாம். நடிப்பு என செயலில் ஈடுபடுவது என பிறைக்ட் நம்பினார். நாடகத் நடிகன் செய்து காட்டவேண்டுமேயொழிய பாத்திர மாறுவதில்லை என்கிறார். பிறெ&ற்நாடகத்தில் காவியப்ப தன்மையை ஏற்படுத்த பின்வரும் உத்திகை 6D8Euro(Beirermü.
துரப்படுத்தல் முறைமை, கதையானது ஆக்கப்ட பார்வையாளரை முடிவெடுக்க வற்புறுத்தும் தன்மை, நடிக விவாதத்துக்கூடாகவே கதை, கதை நகர்வு, செ முன்னெடுக்கப்படல், நடிகர், பார்வையாளர் நாடகத் புறவயத்தில் நின்று நோக்கும் திறனை வளர்த்தல், நா காட்சிகள் ஒவ்வொன்றும் தன்னிறைவு பெற்ற தன்மை, விளக்குகள், ஆடம்பர இருப்பிடம், அரங்கில் அமை நம்பகத்தன்மை அற்ற காட்சி அமைப்பு, மேடைப்பொருட்க யதார்த்தமற்ற தன்மை, படர்க்கை முறையான உரையாடல் எடுத்துரைஞர் முறை, நடிப்பு (கோரஸ்முறை), நாடகத்தில் தேவைக்கு இசையைப்பயன்படுத்தல்(கரு கதை, மனநிலை விளக்கல்), நிகழ்த்தல் மனப்பாங்கான தன்மை. மணி மாறக்கூடியவன், மாற்றக்கூடியவன் என்பதை வெளிப்படுத் நடிப்பு நுட்பங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
மேற்குறிப்பிட்ட உத்திகளை நாடகத் பிரயோகிப்பதன் மூலம் பார்வையாளர் எது நல்லது? கெட்டது எனத் தரம் பிரித்துப் பார்த்து உணர்வுடன் ஒன்ற அறிவுநிலையில் சிந்திக்க் வாய்ப்பளித்தது.
"நான் யார் என்பதல்ல.
நான் என்ன?."
"யார் இந்தச் செயலைச் செய்கிறார்?
என்பது அல்ல.
இந்த நிகழ்வு என்ன செய்யும்?. என நடிகர் பார்வையாளரை அறிவுபூர்வமாக சிந்திக்கது
வதே பிறைக்டின் காவிய அரங்கின் தனித்துவம் எனலா ઈ6ોpઠ્ઠી

reOff
ளக்
டல்,
யல்
தை உகக் ஒளி தல்,
கள்,
16 தன் தும்
தில்
r D6ö
அல்வாய் அபிவிசகனின் இரு கவிதைகள் வெளிவரும் தேசம்
என்னுள் ஒரு தேசம் ஒளிந்திருக்கிறது.
அது. வெளிவருவதும் வெளிவராமல் போவதும் "அவன்” செயல்
*syவர்ை? இருக்கிறானா?. இல்லையா?. என்பது தர்க்கத்துக்குரியதல்ல அவரவர் நட்புக்குரியது.
வெளிவந்துவிட்டால்!.
முள்ளிவாய்க்கால் அள்ளிப் போன உயிர்களினர் "தவம்” என்பேனி.
மனிதர் நடுவே மந்திகள்
எம் வாழ்வில் இரண்டு தாட்டான்கள் எங்கிருந்து எப்படி நுழைந்ததோ?. தங்களுக்கென்று இடத்தை தக்கவைத்துக்கொண்டு
காட்டுக்குள் வாழ வேண்டியது வீட்டுக்குள் வந்து வில்லங்கம் செய்கிறது பலத்தைக் காட்டி பலவந்தம் புரிகிறது.
விரட்ட வேண்டியதை வீணே அணைத்து வைத்து அலங்காரம் செய்கிறார்கள்!. அச்சம் ஏதுமின்றி.
குழந்தைகள் எல்லாம். எதிர்காலத்தில். குரங்காக?.
நல்லது தானி அணைக்கட்டும் மனிதனாய்ப் பிறந்து சொறிவதை விட குரங்காய் இருந்து சொறிவது அதிகமாய்ச் சொறிய அரிய சந்தர்ப்பம்.
இதழ் 30

Page 46
1) ஏ.இக்பாலின்
"ஏ.இக்பால் கவிதைகள் 100”
ஈழத்தின் மூத்த எழுத்தாளரான ஏ.இக்பாலின் "ஏஇக்பால்கவிதைகள் 100" என்னும்கவிதைத்தொகுதி சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது. தொழிலாளர்களை மையமாகக்கொண்டுவரையப்பட்ட ஓவியம்அட்டைப்படத்தைஅலங்கரிக்கின்றது. படிப்புரை யினைநீர்வை பொன்னையனும் பதிப்புரையினைசதபூ பத்மசீலனும் வழங்கியிருக்கின்றார்கள்.1963ம்ஆண்டு தொடக்கம் 2005ம் ஆண்டுவரை தொழிலாளி பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும், மலர்களிலும் ஏஇக்பாலினால்எழுதப்பட்ட 100 கவிதைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.
நூல் - ஏ.இக்பால் கவிதைகள் 1OO
(கவிதைத் தொகுதி)
வெளியீடு - சேமமடு வெளியீடு
விலை-28O/=
ஏ.இக்பாலின் கவிதைகளின் வளர்ச்சியையும் ஈழத்துகவிதை மரபின்மாற்றத்தையும், இத்தொகுப்பில் எழுதப்பட்டுள்ள கவிதைகளைக் கொண்டு மதிப்பிட முடிகின்றது. முற்போக்கு அணியைச் சேர்ந்த ஏ.இக்பாலின் இத்தொகுதியில் உள்ள கவிதைகள் அனைத்தும் தனித்துவமானவை இக்கவிதைகளின் உருவம், உள்ளடக்கமட் கருப்பொருள், சொல்லப்படும் விதம்,உணர்வுவெளிப்பாடுகள், செய்தீர்கள் என்பவை கவிதைக்குரியவீச்சோடுசமுகத்தைகருத்தில் கொண்டு வடிக்கப்பட்டவையாக உள்ளன.
இலகுவான மொழிநடையில் தொழிலாளர்கள் பெண்கள், பயண அனுபவங்கள், சமூக நோக்கு, நாட்டுப்பற்று, மனிதம், சமத்துவம், கல்வியின் முக்கியத்துவம், காதல், சமாதானம், மத ஒருமைப்பாடு, தமிழ்பற்று, மனிதஉணர்வுகள்,அரசியல்போன்றவற்றை தன் கருப்பொருட்களாக கொண்டு கவிதைகளை எழுதியுளன்ளனர். முதலாளித்துவ அராஜகங்கள்ை எதிர்த்து கவிஞர்பாடிய கவிதையின்சில வரிகள்,
ஒடுங்கியவர்களின் கைதான் இப்போதும் ஒங்கியிருக்கின்றது! ஒடுக்கப்பட்டவர்கள் இப்போதும் ஒடுங்கியவர்கள்தான்!
છopઠી
 
 

வீதத்தில் மிகக் குறைந்த முதலாளித்துவம்
வீதத்தில் மிதமிஞ்சியவர்களை இன்னும்
விரட்டியே வருகின்றது!
மிரட்டியும் வருகின்றது. ஏ.இக்பாலின் இத்தொகுப்பானது கவிதைகளை எழுத ஆரம்பிக்கும் இளம் எழுத்தாளர்களிற்கு பயன்பாடு மிக்கதாகஅமைவதோடு கவிதையின்வரன்முறைகளை சரியாக கவனத்தில் கொண்டு எடுழுதப்பட்டுள்ளது. ஏ.இக்பாலின் மொழிகவிதையிடப்பட்டவிதம் என்பன இந்நூலை சிறப்புறச் செய்துள்ளன. நூலாசிரியரின் பன்முக ஆளுமையை இந்நூல் மூலம் தரிசிக்க ഡ്രിങ്ങ്യg.
2) Gurfluu 8885g 6f6"
"இருபதாம் நூற்றாண்டுக் கவிதை"
அண்மைக்காலமாக எழுத்துத்துறையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திவரும் இளம் படைப்பாளியாகிய பெரியஐங்கரனின்ஞானம்ஜீவநதி நீங்களும் எழுதலாம், தினக்குரல் ஆகிய சஞ்சிகை களிலும் பத்திரிகைகளிலும் எழுதப்பட்ட கவிதை தொடர்பான கட்டுரைகள் மீரா பதிப்பகத்தின் 87ஆவது வெளியீடாக வெளிவந்துள்ளது.
நூல் - இருபதாம் நூற்றாண்டுக்கவிதை
(கவிதைத் தொகுதி) வெளியீடு - மீரா பதிப்பகம் 66060 - 20Of
கவிதையின்படிவம் தொடர்பானகருத்துகளை முன் வைத்து புதுக்கவிதையின் படிமவியல் என்னும் தலைப்பிலான கட்டுரையும், "பெண்மொழிக்கவிதை' என்னும்தலைப்பில் அண்மைக்கால பெண் எழுத்துக்கள் தொடர்பாகவும், பெண் படைப்பாளிகளின் கருப் பொருள், கவிதை மொழி என்பவை தொடர்பாக எழுதியுள்ளார். "கவிதையில் முரண்கோட்பாடுகள்" பற்றியும், "சோலைக்கிளியின்நாயோடு சம்பாசித்தல் நூல் தொடர்பான பார்வையையும்”நவீன கவிதையில் அஃறினைப் பெயர்கள் தொடர்பான ஆராய்ச்சியையும், மாணிக்கவாசகள்முக்கியத்துவப்படுத்தும்நாய் பற்றியும் அவர் தனது கவிதைகளில் அடிக்கடி நாய்' என்னும் 65up 30

Page 47
சொல்லை ஏன் பயன்படுத்தினார் என்பதற்கான விளக்கத்தை "மாணிக்கவாசரின் நாய்' என்னும் தலைப்பிலான கட்டுரையிலும், "பாரசிக கவிஞானி என்னும் கட்டுரைகளின்ஊடாக பாரசீக கவிதைகளை பற்றியும், தலையணை என்னும் தலைப்பின் ஊடாக குறியீட்டுதன்மையாகதலையணைகவிதைகளில் இடப் பெறுவது பற்றியும்,'புறநானூறு. எளிய அறிமுகம் நூல் தொடர்பாக தன் உள்ளத்தில் எழுந்தவற்றையும் உமர்கய்யாமீன்கவிதைகளை பற்றிய விரிந்த ஆய்வை உமர்கய்யாவின் ஒரு கவிதை என்னும் கட்டுரையிலும் இறுதிக்கட்டுரையாக இருபதாம் நூற்றாண்டுக்கவிதை என்னும்தலைப்பில்சிவசேகரத்தை மட்டும் முன்வைத்து தன் பார்வையைப் பதித்துள்ளர்.
வாசகர்களுக்கு கவிதை தொடர்பான விளக்கங்களை இந்நூல் கொடுப்பதுடன் பெரிய ஐங்கரனின் தேடலும், இலகு மொழியில்கட்டுரைகளை எழுதக்கூடிய அவரதுஆளுமையையும்இத்தொகுப்பின் ஊடாக அவரை சிறந்ததொரு இளம்படைப்பாளியாக இனம்காட்டுகின்றது.இருபதாம்நூற்றாண்டுக்கவிதை" "பெண் மொழி போன்ற தலைப்பிலான கட்டுரைகள் விரிவாக எழுதப்படவேண்டும். படைப்புக்களை வெவ்வேறுகோணத்தில்அணுகுவது பெரியஐங்கரனின் சிறப்பு இவரிடம் இருந்து இன்னும் பல நல்ல படைப்புகளை எதிர்பார்க்கலாம். 3) நந்தினி திலீப் உதயசுரேந்திரவின்
"கண்ணிர் முத்துக்கள்"
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை முத்தமிழ் மன்றத்தின் வெளியீடாக 32 கவிதைகளை உள்ளடக்கி நந்தினிதிலீப் உதயசுரேந்திரவின்"கண்ணிமுத்துக்கள் கவிதைதொகுதி வெளியாகியுள்ளது. நூலின் உள்ளே கவிதைகளுக்கு பொருத்தமான வகையில் ஓவியங்களை சேர்த்துள்ளார்.ஆசிரியர்வடிவமைப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கவிதைகளின் உட்பொருளாக, காதல், வலி, ஏமாற்றம், பிரிவுத்துயர், உள்ளக் குமுறல், பெண்ணியம், நட்பு, காத்திருப்பு, ஆன்மிகம்என்பனவற்றை கொண்டுள்ளது.
நூல் - கண்ணி முத்துக்கள்
(கவிதைத் தொகுதி)
வெளியீடு - முத்தமிழ் மன்றம்
6,6060-1OOf
கவிதைகள் அனைத்துமே குறுகிய கவிதை களாகவும், வாசகர்களுக்கு விளங்கக்கூடிய இலகு மொழியில் படைக்கப்பட்டு இருப்பதும் இக்கவிதைத் தொகுதியை தனித்துவம் மிக்கதாக காட்டுகின்றது. இவரது கவிதைகள் அனைத்தும் ஒருவருக்கு தன்
છopઠ્ઠી
 

உணர்வுகளை கூறுவது போன்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.உதாரணமாக,
உனக்காக உயிரையும்
தருவேன் என்றால்
சொன்னபதயே தந்துவிட்டாய்
உன் உயிரை என்வயிற்றில்
ஆனால்
நான் பார்ப்பதற்கு - உன்
உடலைத்தான்காணோம்
எங்குே சென்றாய்?
உயிரைக் கொடுக்கவா? கவிதைகளில் கூறப்படுகின்ற செய்திகள் சமூக விழிப்புணர்ச்சியை ஊட்டும் வகையில் படைக்கப் பட்டுள்ளது. கவிதையின் நடையில் இன்னும் கவனம் செலுத்துவாராயின் எதிர்காலத்தில் இன்னும் பல நல்ல கவிதைகளை இவரால் தரமுடியும்.
4) கே.எஸ்.சிவகுமாரனின்
"பண்டைய கிரேக்க முதன்மையாளர்
மீரா பதிப்பகத்தின் வெளியீடாக கே.எஸ்.சிவ குமாரனின் ‘பண்டைய கிரேக்க முதன்மையாளர் என்னும் பத்தி எழுத்துக்களின் தொகுப்பு வெளி வந்துள்ளது. ஈழத்தின் தலைசிறந்த விமர்சகரும், மொழிபெயர்ப்பாளரும், பத்தி எழுத்தில் முதலிடம் வகிப்பவரும் எழுத்தாளருமாகிய கே.எஸ்.சிவகுமாரன் வீரகேசரி, தினகரன், மல்லிகை என்பவற்றில் எழுதிய பன்னிரெண்டு பத்திகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. இந்நூலிற்கு பேராசிரியர் சபா.ஜெயராசா அணிந்துரை வழங்கியுள்ளார்.
நூல் - பண்டைய கிரேக்க
முதன்மையாளர்கள்
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 150/-
உலகநாகரிகங்களினதொட்டில்ன்னகறப்படும் கிரேக்கம் சார்ந்த பல தகவல்களை சாதாரண மக்கள் கூட வாசித்து அறியக்கூடிய வகையில் இப்பத்திகள் எழுதப்பட்டுள்ளன. கிரேக்கர்களது கலை ஈடுபாடு, அவர்களின் செயற்திறன்வீச்சு, ஆளுமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு 'பண்டைய கிரேக்கர் பெற்ற மதிப்பு என்னும் தலைப்பிலான பத்திஅமைந்துள்ளது. கிரேக்க பெளராணிககாலம், கிரேக்கபுராணங்களிலும் இந்து மதக்கடவுளர் போலப் பலர், கிரேக்க கடவுளரும் காவியங்களும், பண்டோராவின் பெட்டி போன்ற பத்திகளில் கடவுளின் தோற்றம், கோள்கள் - கடவுள் தொடர்பு இயற்கைவழிபாடுகடவுள்மீதானகிரேக்கரது நம்பிக்கை, இந்து மதக் கடவுளரை ஒத்த கிரேக்க
is H &j 30

Page 48
கடவுள்கள், சடங்குகள் என்பவற்றை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது.
மூத்த முதல் வரலாற்றாசிரியர் ஹெரோ டோட்டஸ் பற்றிய பத்தியும், தூஹிடிடெஸ் பற்றிய பத்தியும் தனி மனிதனைப் பற்றிய பத்திகளாயினும் அவற்றின்ஊடாக பல வரலாறு சொல்லப்படுகின்றது.
உளவியலில் பெரிதும் பேசப்படும் ஈடியஸ் கொம்ப்ளக்ஸ் பற்றிய விபரமான பத்தியாக ஈடியஸ் கொம்ப்ளக்ஸ் தலைப்பிலான பத்தி அமைந்துள்ளது. இதன் ஊடாக ஈடிபஸ் கதைச் சுருக்கம் சொல்லப் படுகின்றது. பாட்டாளிப்படைப்பு ஒன்றின் உந்நதத்தை கிரேக்க கவிஞன்'ஹெஸியோட் பற்றிய பத்திஊடாக அறியமுடிகின்றது. கிரேக்க துன்பியல் நாடகங்கள், துன்பியல்நாடகஆசிரியர்கள்பற்றிய பத்தியாககடைசி கட்டுரை அமைந்துள்ளது.
இத்தொகுதியானது உயர்தர, வரலாறு கற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கிடைத்த பொக்கிஷமாகக்கொள்ளத்தகுந்தது. எம்மவர்களுக்கு விளங்கக்கூடிய மொழியில் தன் மொழிபெயர்ப்புசார் புலமையால் நேர்த்தியாக இத்தொகுப்பைதந்தகே.எஸ் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டும்.
5) கே.எஸ்.சிவகுமாரனின்
"சொன்னாற் போல - of
மீரா பதிப்பகத்தின் 74ஆவது வெளியீடாக தினக்குரல் பத்திரிகையில் கே.எஸ்.சிவகுமாரனால் எழுதப்பட்ட 24 பத்தி எழுத்துக்களின் தொகுப்பாக சொன்னாற் போல-1 வெளிவந்துள்ளது.
தனிமனிதனது எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு (அசோக மித்திரன், சபா.ஜெயராசா, எஸ்.நஜிமுதீன், நீலாவாணன், என்.சண்முகலிங்கன், சிவகாமிசாந்தன்) அவர்களது படைப்புக்களைபற்றிய விமர்சனநோக்குடன், படைப்புகளைசிலாகித்துபேசும் பத்தினழுத்துக்கள் அடங்கியுள்ளன.
நூல் - சொன்னாற் போல of
(பத்தித்தொகுதி)
வெளியீடு - மீரா பதிப்பகம்
65606D - 15O/F
சினமா பற்றிபத்திஎழுத்துக்களாக தமிழ்படம்: பின்னோக்கு,"இலங்கையில் திரைப்படநுகருணர்வுஆரம்பநிலை, மீரா நாயர் படங்கள் போன்ற பத்திகள் அமைந்துள்ளன. 1970களில் மேடை நாடகம் கொழும்பில் எவ்வாறு இருந்தது பற்றிய பத்திபுகழ்பூத்த நாடகங்களையும் அவற்றினை நெறியாள்கைப்படுத்திய நாடக ஆசிரியர்கள் பற்றிய சிறிய தகவல்களையும் தந்துள்ளது.
ஜீவநதி -
 

சிறுகதைகளை அடிப்படையாக கொண்டு "ஈழத்துச்சிறுகதைத்தொகுப்புகள்-மதிப்பீடு,'முல்லை காட்டிலுள்ளோர் முகிழ்வித்த சிறுகதைகள் ஆகிய பத்திகள் எழுதப்பட்டுள்ளன.
புதிய விமர்சகர்களுக்கு கொடுக்கவேண்டிய மதிப்பு, ஊக்கம் பற்றிய புதிய விமர்சகர்களும் புதுச் சிந்தனைகளும்’ பத்தியும், "இலக்கிய வகைமை ஒப்பாய்வு ஒப்பிலக்கம் பற்றிய, பத்தியும் தமிழ் / பிரெஞ்சு இலக்கியங்கள் பற்றிய பத்தியும் இந்நூலில் அடங்கியுள்ளன.
இத்தொகுப்பின் ஊடாக பல்வேறுபட்ட இலக்கியம்சார்விடயங்களை நுகரக்கூடியதாகவுள்ளது. நூலாசிரியரின் பல்வேறு துறைகள் மீதான ஈடுபாடு இத்தொகுப்பின்வழி உணர முடிகின்றது. இலக்கிய ஈடுபாடுஉடைய அனைவரும்வாசிக்கவேண்டிய ஆரம்ப நூல் இது.
6) சூசை எட்வேட்டின்
"கருத்துக் கலசம்"
கவிஞரும்கிறுகதைஎழுத்தாளருமாகிய கசை எட்வேட்டின் கருத்துக் கலசம் என்னும் தெருக்குறள் தொகுதி அகில இலங்கை இளங்கோ கழகம் வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலிற்கு, பெரிய ஐங்கரன் முன்னுரை எழுதிஉள்ளர்.
நீங்களும்எழுதலாம் மல்லிகை, ஜீவநதிஆகிய இதழ்களில் வெளிவந்தவற்றோடு மேலும் பல தெருக்குறள்களைத்தொகுத்து 1030 தெருக்குறள்களை உள்ளடக்கிஇந்நூல் வெளிவந்துள்ளது.
நூல் - கருத்துக்கலசம் வெளியீடு - அகில இலங்கை
இளங்கோ கழகம் silodeo - 20OfF
சமூகத்துக்குச் சொல்லவேண்டிய நற்கருத்துக் களை, ஈரடியில் வெகு சிறப்பாகவும் நேர்த்தியாகவும் இலகுவான மொழிநடையில் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள் உட்பொதிந்தள்ளன. சமூகத்தை விழிப்படையச் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு இவற்றை ஆசிரியர் எழுதியுள்ளார்.இந்நூலின்ஊடாக ஆசிரியரின் சமூகம் மீதான அக்கறையும் பல்துறைசார் விற்பன்னமும் தெரிகின்றது. இளம் சமுதாயத்துக்கு நன்மை பயக்கக்கூடிய நூலாக இந்நூல் அமைந்துள்ளது. இவ்வாறான நூல்கள் பல ஈழத்தில் வெளிவர வேண்டியகாலமிது.
85p 3O

Page 49
கலை இலக்கி
(1) க.பரணிதரனின் மீண்டும் துளிர்ப்போ காலமும்(கட்டுரைத் தொகுதி) ஆகிய இரு 2011.02.08 அன்று மூத்த எழுத்தாளர் தெணியான் நிலை ஆசிரியர்களான திரு.க.கந்தசாமி, திரு.பா.3 திரு.ம.பாலேந்திரம், திருமதிஞா.உமா, திரு.வ.கந் ஆரம்பித்து வைத்தனர். ஆசியுரையினை அருட்தந்ள் யினை 'ஜீவநதி துண்ை ஆசிரியர் வெதுஷ்யந்தன் கல்லூரி விரிவுரையாளர்களான திரு.பா.தனபாலன் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராச கழக விரிவுரையாளர் திரு.இ.இராஜேஎம்கண் E திரு.என்.விஜயசுந்தரம் ஆகியோர் நல்கினர். ஏற்பு
மதிப்பீட்டுரை மநிப்பீட்டுரை AJ TIL FTIT .ேரோஜேஸ்கண்னன் என்.விஜயசுந்தரம் க.பரரீநாள்
(2) சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கி வெளியீட்டுவிழா நடைபெற்றது. புத்தக வென படைத்துவரும் நியூ சென்சுரிபுக் ஹவுஸ் நிறுவனத்த இலக்கியச் செம்மல்கள் (கட்டுரைத் தொகுதி) 15 நூல்களையும் பதிப்பித்து சென்னை புத்தகக்
நடத்தியுள்ளார்கள். நியூ சென்சுரி புக் ஹவுஸ் நிறு துரைராஜ் அவர்களின் தலைமையில் 09.01.2011 அ கலைஞரும் எழுத்தாளருமாகிய கaைமாமணி திரு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் கவிஞ முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டார்கள். நன்றி
 
 
 
 
 

யெ நிகழ்வுகள்
ம்."(சிறுகதைத் தொகுதி), "இலக்கியமும் எதிர் நூல்களின் வெளியீட்டுவிழா கலைஅகத்தில் தலைமையில் நடைபெற்றது. க.பரணிதரனின் ஆரம்ப வற்றிவேல், திரு.சீ.சாந்தநாதன், திரு.சீ.இராசநாயகம், தசாமி ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவினை த இராசேந்திரம் ஸ்ரவின் வழங்கினார். வரவேற்புரை வழங்கினார். நூல்அறிமுகவுரைகளை யாழ்.தேசியக் திரு.கே.ஆர்.கே.கமலநாதன் ஆகியோர் நிகழ்த்தினர். ா நிகழ்த்தினார். மதிப்பீட்டுரைகளை யாழ்பல்கலைக் ான். 'வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர்
-TTT.
நூதி அறிமுகவுரை நூல் அறிமுகைேர ELS “LEFT:
Li.ur(് கே.ஆர்.கே.நமதுநாதர்
Iல் எழுத்தாளர் தம்பு சிவாவின் இரு நூல்கள் ரியீட்டுத் துறையில் நீண்ட காலமாகச் சாதனை ார் இலங்கை எழுத்தாளர் தம்புசிவாவின் முற்போக்கு சாந்தங்கள் (சிறுகதைத் தொகுதி) ஆகிய இரண்டு கண்காட்சி அரங்கில் வெளியீட்டுவிழாவையும் றுவனத்தின் மேலாண்மைப் பணிப்பாளர் தோழர் ஜி. என்று நடைபெற்றது. பிரபல தென்னிந்திய திரைப்படக் த.ராஜேஷ் அவர்கள் நூல்களை வெளியிட பொதிகை ருமாகிய திருமதி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் புெரையை நூலாசிரியர் தம்புசிவா வழங்கினார்.
Iல் எழுத்தாளர் தம்பு சிவாவின் துவனவியார் ராதா, வில் பறுவதநாதன். திருமதி ஆன்டாள் பிரியதர்ஷினி, தம்பு களரவமாமணி ராஜேஷ், என்.சி.பி.எச். நிறுவனத்தின் LLLCu TLLMLLu uOuuTLLkekOLOTTmTTS LLLLLLLLuMLL LLuTOT TTLLTT ITsai ELTigi iTELITI,
7- இதழ் 30

Page 50
(3) 1940ஆம் ஆண்டிலிருந்து இபிசநாடகங் புகழ்பெற்ற ஆலயமாகிய அல்லாய் சாமனந்தறை : அனுசரனையுடன் இசைநாடக விழா 2011.02.12 கலாநிதி தகEாமரியின் அன்னாவியத்தில் அள் சாவித்திரி" யாழ்நாட்டார் வழக்கியற் கழி மேடையேற்றப்பட்டன. ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்க
சந்தியபோன் சாவித்
புதந்தம்பிநாட
|
 
 
 
 

Y L S SLSJuS YS S0 TaTT K SSLu SS S S S S S
LullTitle அன்று இடம்பெற்றது. இந்த இசை நாடக விழாவில் ாப் மனோகர கான் நாடக சபாவின் "சத்தியபோன்
ਹੁੰi L" | TLE 5ள் இந்நிகழ்வினைக் கண்டு களித்தனர்.

Page 51


Page 52
46, Kosthuruor Rood, Jளிma
 

- Rood, JoFFnd. 2228437