கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.03

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
கொழும் ல் அது Goar
6616ffiuB : 017 மாதம்
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத் "செய்தி மடல்' என்பதன் பிரசுர வடிவம் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள் SÅ696337 LigiöEāTILö: WWW, colombotamilisangam.com தொலைபேசி இல . 2363759 தொலைநகல் 2361381
நிறுவன நாளி விழா
2011ம் ஆ சாங்கச் சான்றோர்ை
அகில இலங்கை இ ஆலய அறங்காவலர் ச கைலாயபிள்ளை அவர் உறுப்பினராவார். தமின கொண்ட இப்பெரியார் வேண்டிய அனைத்து உ அந்தப் பெரியவருக்கு மனிதநேயனர் அளித்து கொழும்புத் த விசுவநாதர் கயிலாசபிள்ளை
பழம்பெரும் எழுத்த தமிழ்ச் சங்கத்தின் நீண்ட காக கடந்த 50 ஆண் நாவல், சிறுகதை, கட்டு என பல்துறைப்பட்ட இ6 களை வெளியிட்டவர். எ தற்போது வாழ்ந்தாலும் " : ` ፳›( ̇• ﷽ வரும் இந்த மூத்த முற் 'சங்கச் சான்றோன்' கணேசலிங்கன் சங்கம் பெருமையடைகி
திரு.சரவணமுத்து நீண்டகால உறுப்பினரா6 செய்த பணிகளுக்காக அ பட்டம் அளிக்கப்பட்டது திரு.சரவணமுத்து இல{ 2011ம் ஆண்டுக்கான கொழும்புத் தமிழ்ச் சங்
சர்வுணமுத்துக் இலகுப்பிள்ளை
 
 
 
 
 
 

புத் தமிழ்ச் சங்கடம்
Lig5 UDLGio
: LD(TfféF - ஆண்டு : 2011
தில் "எம்மைப் பற்றி” என்னும் பகுதியிலுள்ள இம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
LÉó6) Eb56ð: tamilsangamcclor:bO(ayahoo.com
infococolombotårtilsang: m, corr
- 2011 - 06.05. 2011. பூண்டுக்கான
விருது பெறுபவர்கள்
ந்துமாமன்றத்தின் தலைவரும் திருக்கேதீஸ்வர பைத் தலைவருமான மனிதநேய்ன் விசுவநாதர் கள் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகால ழயும், சைவத்தையும் தமது இரு கணக்களாகக் அனர்த்தங்களினால் பாதிக்கப்டும் மக்களுக்கு தவிகளையும் செய்யும் ஒரு மனிதநேய ஆர்வலர், 2011ம் ஆண்டு 'சங்கச் சான்றோன்' விருதை மிழ்ச் சங்கம் பூரிக்கிறது.
ாளர் செல்லையா கணேசலிங்:ன் கொழும்புத் கால உறுப்பினர் ஆவார். ஈழத்து தமிழ் வளர்ச்சிக் டு காலமாக எழுதி வருபவர் இவர். அன்னார் }ரை, சிறுவர் இலக்கியம், சஞ்சிகை விமர்சனம் 0க்கிய வடிவங்களுக்கூடாக 75 மேற்பட்ட நூல் மது நாட்டுச் சூழ்நிலை காரணமாக தமிழ்நாட்டில் 'குமரன் பதிப்பகம் மூலம் தமிழ்த்தொண்டாற்றி போக்கு எழுத்தாளருக்கு 2011ம் ஆண்டுக்கான
விருது வழங்குவதால் கொழும்புத் தமிழ்ச் D35.
இலகுப்பிள்ளை அவர்கள் தமிழ்ச் சங்கத்தின் பர். அன்னார் தமிழ்ச் சமூகத்திற்கும் சமயத்திற்கும் வருக்கு தமிழ் பேசும் மக்களினால் 'சமூகஜோதி எமது துணைத் தலைவர்களுள் ஒருவரான நப்பிள்ளை அவர்களின் சேவைகளைப் பாராட்டி 'சங்கச் சான்றோன்” விருது வழங்குவதால் கம் பெருமையடைகிறது.

Page 2
வெற்றி தந்து விடைபெறும் விகிர்தி பற்றிப் பணிந்தோம் பாரினில் ஒளியே
கரவரு ஆண்டும் கன்னித்தமிழ் வளர்க்க
| வரவிரு நாட்களில் வளம்பல தந்திடுமே
மாசி மாதம் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய
மீள்பார்வை
அறிவோர்ஒiன்று கூடல் - 452 02.03.201. அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர்
திரு.க.ஞானசேகரன் தலைமையில் சிவராத்திரி தினமாகிய இன்று "மெய்ப்பொருள் காண்பதறிவு" என்னும் தலைப்பில் திரு.சி.சொர்ன லிங்கத்தின் உரை இடம்பெறுவது மிகச் சிறப்பாகும். தலைவர் தன துரையில் திரு.சொர்ணலிங்கம் சிவத்திரு மன்றச் செயலாளர், சர்வ தேE Lாடசாலையின் பட்டதாரி ஆசிரியர் என அறிமுகம் செய்தார். மெப்ப்பொருள் காண்பதறிவு என்பது யாது? மெய்ப் பொருள் என்னும் போது சமயம் சித்தாந்தம் பற்றி தொட்டுச் செல்வது தவிர்க்க முடியாது. திருவள்ளுவர் மெய்பொருள் சகல மதத்தினருக்கும் பொது வானது என்றார். உலகில் தத்துவங்கள் பொதுவானவை. செய் விப்பவன் யார்? அந்த வஸ்துதான் மெய்ப்பொருள் சமயம் வேறு வாழ்க்கை வேறு எனப் பிரிக்க முடியாது என்றார். மெய்ப்பொருள் செப்பொருள், உயர் பொருள் எனவும் அறியப்படும் என்றார். முப்பொருள் உளன்மை இறை, உயிர், பாசம் அல்லது பதி, பசு, பாசம் எனப்படும். காப்ேடம் நேரம் யாவும் மெயப்ப்பொருள் எனலாம். பிறப்பு என்பது துன்பத்திற்கே வழிவகுக்கும்.
'பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு" - என்ற (358)ஆவது குறளை மிகப் பொருத்தமாக எமது பொதுச் செயலாளர் இந்நிகழ்வுக்காக தெரிவு செய்தமையைப் பாராட்டினார். மெப்ப்பொருளை காண வைப்பதே மெய்யுணர்தல் ஆகும்.
குறளையும், கீதையையும் சித்தாந்த வாதிகள் முதன் நிலைப் படுத்துவது குறைவு. வள்ளுவர் துறவறத்தைக் கூறிய, பின்பு தான் மெப்யுணர்தல் பற்றிக் கூறினார். சரியை, கிரியை, யோகம்,ஞானம் என வரிசைப்படுத்தினார். திரநாவுக்கரசரை பிறநாட்டார் அடையாளம் கண்டு போற்றினர்.
மனிதனின் வேறுபட்ட நடைமுறையினைக் கண்டும் காணாமலும் இருக்கும் இறைவன் அறிவு இல்லாதவனா? என்ற கேள்வியையும் எழுப்பி சிந்தனையையும், பகுத்தறிவினையும் தூண்டும் பேச்சை
 
 

சங்கு ஒலியெழ தாமரை மணம்தர
திங்கள் தோறுமே தீந்தமிழ் செழித்திடும் சங்கத் தமிழ்வளர் சான்றோர் அமைப்பினில் எங்கள் தமிழ்ச்சங்க மென்றென்றும் வாழ்கவே. :
ப.க. மகாதேவா
ம
-- يسيسيسيr==="""""" -- - - - - - - -جميع عي
யில் கருத்துரை வழங்கினர். தலைவர் பேச்சாளருக்கு அனபளிப்பு அளிக்க நிகழ்வு தமிழ் வாழ்த்துடன் நிறைவெப்தியது.
இலக்கியக்களம் 45
O4.C. 2011
இன்றைய இலக்கியக்களம் நிகழ்வுக்கு நிலையமைப்புக் குழுச் செயலாளர் திரு.மா.சடாட்சரம் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் கொழும்புத் தமிழ்ச சாகம் 5: வருடகால வரலாற்றைக் கொண்ட ஒரு சங்கம். இன்றைய நிர்வாகத்தில் பல பாரிய பணிகள் இடம்பெற்று வருகின்றன. அறைகள் கட்டுதல், மின்துக்கி அமைக்கும் முயற்சி என்பன அவசரமாக மேற்கொள்ளப் பட்டபோதும் சுவைஞர்களுக்கான இலக்கிய நிகழ்வுகளும் இடம் பெற்றே வருகின்றன. இன்று திரு.தேவசபா தனுக்டின் அவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர் சுபத்திரன் பற்றி உரை யாற்றவுள்ளார். சுபத்திரன் ஒரு மார்க்சீயவாதி. கவிதை எழுதுவது மட்டுமல்ல அவர் தான் சொன்னபடி வாழ்ந்து காட்டியவர் என்றும்
கூறி பேச்சாளரை உரையாற்றுமாறு அழைத்தார்.
தேவசபா தனுஷன் பேராதனையில் பட்டப்படிப்பை நிறைவு செய்த பின் தற்போது களனிப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் தனது முதுமாணிப்பட்டத்துக்கான ஆய்வினை மேற்கொள்வதாகக் கூறினார். அத்துடன் தேசிய கலை இலக்கியப் பேரவையின் கொழும்புக் கிளைச் செயலாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறினார்.
"எல்லாம் வல்ல மனிதனே உன்னை வெல்வதற்கு எந்த பிரபஞ் சத்திலும் எதுவுமேயில்லை எழுக எழுக' என்ற கவிஞர் சுபத்திரனின் கவிதை வரிகளுடன் தனது உரையைத் தொடங்கினார். நன் ஒரு இலக்கிய மாணவன். சுபத்திரனது கவித்துவம் எவ்வாறு இளந்சந்ததி யினரை ஆட்கொண்டுள்ளது எனப் பார்க்க ஆசைப்படுகிறேன். எழுத் தானானது உணர்வை வெளிப்படுத்துவது இலக்கியமாகும். 'த்தனை காலம் சென்றாலும் அழியாதது. இவ்வரிசையில் பாரதியின் கவிதை களைக் கூறலாம்.
'இன்னல், உழைப்பு, ஏழ்மை இவற்றைப் பாடுங்கள் என்று மகாகவி கூறியது போல் உள்ளடக்கம் உண்மையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
கவிஞர் சுபத்திரன் 16.04.1935இல் பிறந்து 30.10.1975இல் மறைந்தார். 50களில் இருந்து இலக்கியம் படைக்கத் தொடங்கி 70கள் வரை கவிதை எழுதினார். இக்காலம் முற்போக்குச் சிந்தனை எழுச்சி பெற்ற

Page 3
காபம். அத்துடன் அரசியல் சிந்தனையும் வெளிப்பட்டது. இவர், மரபிலிருந்து விடுபட்டு ஒரு கவிதை வடிவை வெளிப்படுத்தினார். இடதுசாரிப் போக்குடைய இவர் பேச்சோசையைப் பயன்படுத்தினார். உணர்வு மிக்க கவிதைகளைப் படைத்தவர். சாதியின் பெயரால் இரண்டுபட்ட சமூகத்தில் அவற்றுக்கெதிராகப் போராடினார். இவரை ஒரு போராட்டக் கவிஞர் என்பர். தங்கவடிவேல் என்ற இயற்பெயர் கொண்ட இவர் ஒரு ஆசிரியராவார். மட்டக்களப்பை மட்டுமல்ல மலையகம், வடக்கு பற்றியும் பாடியுள்ளார்.
1969இல் வடக்கில் ஏற்பட்ட சாதி எதிர்ப்பு, சுபத்திரன் கவிதைகள், கவிஞர் சுபத்திரன் என்று 3 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். "எதிலும் திரிகரண சுத்தியுடன் ஈடுபட்டவர்" என மெளனகுரு கூறி புள்ளார். இன்று எம்மத்தியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டி ருக்கின்றன. இதைத்தான் எல்லாம் வல்ல மனிதன் என்று அன்று சுபத்திரன் கூறினார்.
"சாதித்திமிருடன் வாழும் தமிழனோ ஒரு பாதித் தமிழனெடா" என்று பாடியுள்ளார். "பலாத்காரம் பலாத்காரம் ஆகாதென்பாய் கூடையிலே எமக்கு அவற்றை விற்கிறாய்.” எனப்பாடிய அவர் மக்களோடு இணையாத போராட்டம் வெற்றி பெறாது என்றார். சாதிக் கொடுமை, இனவாதம் என்பவற்றைச் சாடினார்.
"சங்கானை மன்னே வணக்கம் சரித்திரத்தில் உன் நாமம் மறையாது" எனப்பாடியவர் குறுங்கவிதைகளும் பாடியுள்ளார்.
"பாடையிலே போவதற்கு முன்பு இங்கு புகழ்குவித்து வைப்பதற்குப் பாடவில்லை" மாணவர்கள் வரவு இடாப்பில் வரவுக்கு 1 அடையாளமும் வராமைக்கு 0 194டையாளமும் இடுவது வழக்கம். இது பற்றிப் பாடும்போது, "ஈட்டியும் கேடயமும் பாசறையில் தேங்கிக் கிடக்கின்றன"(மாணவர்) என்று பாடுகிறார். "சித்திரத்தைத் தீண்டாதே அழுக்காகப் போகும்.' எனப் பாடினார். "அடிமை விலங்கறுப்போம்" என்றார். தேசிய கீதம் பற்றிப் பாடும் போது அடிமைகள் அடிமைகளை அடிமைப்படுத்து கிறார்கள் என்கிறார்.
தனது திரிக்குறளில் - 'பகர முதல் நினைப்பதெல்லாம் பாராளுமன்ற முதற்றே உலகு"
என்றார். சாதிக்கோர் சண்டை, இனத்துக்குள் சண்டை, வர்க்கச் சண்டை வாழும் உரிமை எங்கே உண்டு.
ரஷ்ய விடுதலைச் சிற்பி லெனின் பற்றிப் பாடியுள்ளார். இவ்வாறு சுபத்திரனின் பல்வேறு பார்வைகளையும் தொட்டுக் காட்டித் தனது உரையை நிறைவு செய்தார். சபையோர் பல்வேறுபட்ட கோணங்களில் கருத்துக் கூறினர். அரசியல் சாரவில்லை எனச் சிலர் கூறினர். எப்படியிருந்தபோதும் சுபத்திரன் அவரது காலத்தில் வாழ்ந்த ஒரு நல்ல கவிஞர் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டனர்.
 

நூலகம் சிேறுவர் பகுதி)
05:3:2011 'கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் செல்வி.த.சுறேக்கா கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
சிறப்பு கலை நிகழ்ச்சி 05:3.2011 ஐதரபாத் இசை நடன அக்கடமியின் சிறப்புக் கலை நிகழ்ச்சி மாலை 5.00 மணியளவில் ஆரம்பமாகியது. இச்சிறப்பு நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.
மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. திருமதி சுவர்ணலதா பிரதாபன் தமிழ் வாழ்த்து இசைத்தார். சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமையுரையாற்றுகையில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த ஓர் அன்பர் இந்நிகழ்ச்சியைச் செய்ய முன் வந்துள்ளார். ஏறத்தாழ 16 பேர் இந்நிகழ்வில் பங்கு பற்றவுள்ளமை கூடிய நிகழ்வு தமிழிலேயே இடம்பெறுகிறது. மிகுதி தெலுங்கு, திருப்பதி தேவஸ்தானத்தில் சுமன் என்பவர் ஒலிப்பதிவுத்துறையில் சேவையாற்றி வந்தவர். இவரே இந்நிகழ்வை முன் நின்று நடாத்து கின்றார். இசையில் பலரும் மயங்குவர். கால நிலை மாற்றத்தால் கூடிய பார்வையாளர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்றார். திரு.சி.பாஸ்க்கார அனைவரையும் வரவேற்று தனது வரவேற்புரையை ஆற்றினார்.
துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கர்நாடக சங்கீதம் தமிழ்ப் பிரதேசத்துக்கே உரித் தானது என சுப்புடு அவர்கள் கூறியுள்ளார். காரைக்காலம்மையார் ஆரம்பித்தது இதுவென சாகரம் ஏப்பரஹாம் அவர்கள் கூறுவார். சுவாமி விபுலானந்தரும் இது பற்றி எழுதியுள்ளார். பரதநாட்டியம் தேவர் அடியார்களால் ஆடப்பட்டது. கிருஷ்ணஐயர் பரதநாட்டியத்துக்கும் பரத முனிவருக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்றார். சாத்தனார் கூத்து நூல் பற்றிக் கூடக் குறிப்பிடவில்லை. பரத முனிவர் அது பற்றி ஆராய்ந்தார். தமிழரசு கலையை ஆந்திர மக்களும் எங்களுடன் இணைந்து காப்பாற்ற வேண்டுமெனக் கூறி நிகழ்வினை வாழ்த்தி அமர்ந்தர்.
மெளனிகா, மேகனா ஆகியோர் வரவேற்பு நடனத்தையும், சுகன்யா, அபிவிப்ஷா ஆகியோர் மகா கணபதி என்ற பாடலுக்கு விநாயகர் நடனத்தையும் ஆடிக் காட்டினார். சிவானந் "அலமேலுமங்கை என்னும் நடனம் ஆடினார். பெண்களை விட தோற்றத்திலும் நடனத்திலும் சிறந்து விளங்கினார் என்றே கூற வேண்டும். அதைத் தொடர்ந்து இனிமையான கீர்த்தனைக்கு ஏனைய நடன மணிகளும் சேர்ந்து நடனமாடி மகிழ்வித்தனர். மீனவ நடனம் இரு நாட்டுக்கும் பொது வானது. இந்திய மக்களிடையே பிரபல்யமானது. - இந்நடனத்தை வழங்கிய பவன்குமார் அக்கடமியின் செயலாளராகவும் விஜயவாடா கலாஷேத்திராவின் ஆரம்ப கர்த்தாவாகவும் இருந்து வருகிறார்.
i
Fl mu
இழந்த தமிழ்சங்க திெல்
- .. - '

Page 4
இந்நடனத்திற்கு தாளம், சுருதி, வசனம் பின்னணி மிகவும் பிரமாத மாங் இருந்தது. மீனவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி துன்பம் என்வற்றை அழகாக சித்தரித்தார். மெளனிகா - மேகனா இருவரும் இணைந்து சபையினரைக் கவரும் வகையில் குச்சுப்புடி நடனம் வழங்கினர்.
இடைவேளையின்போது குழுவினருக்கான பாராட்டுப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
மெல்லிசை நிகழ்வில் (Semi classical) 'தாயே யசோதா உன்தன் ஆர்குலத் துதித்த' என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். மொனிகாவுடன் சிவா நடனத்தில் மேகனாவும் இணைந்து கொண்டார். 11 வயதேயுடைய சிறுமியான மேகனாவின் நடனம் பலராலும் பாராட் டப்பட்டது. அதைத் தொடர்ந்து விஷ்ணு தோத்திரம் இடம் பெற்றது. அடுத்தாக றிசக்கர ராஜ சிம்மாசனேஸ் வரி என்ற பாடலுக்கு பெண் னசியான ஆண் ஆடி அசத்தினார். அவர் வக்கீல் தொழில்
நடாத்தும் சிவானந்தாகும்.
பவன்குமாரும் மெளனிகாவும் இணைந்து 'மின்சாரப் பூவே" என்னும் சினிமாப் பாடலுக்கு ஆழகாக ஆடினார்கள்.
நிறைவாக விறுவிறுப்பான பாடல் ஒன்றுக்கு எல்லோருமாக சேர்ந்து ஆப சபையையே ஆட வைத்து விட்டனர். நிறைவாக பொதுச் செயலாளர் இரகுபதி பாலறிதரன் அவர்களின் நன்றியுரையுடன் அன்றைய சிறப்புக் கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
சர்வதேச மகளிர் தினம் 09.03.2011 கொழும்புத் தமிழ்ச் சங்க கல்விப்பணிக்குழு ஆதரவில் சர்வதேச
மகளிர் தின விழா இன்றைய தினம் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பெண் விடுதலைக் கீதங்கள் றஜனி சந்திரலிங்கம் அவர்களால் இசைக்கப்பட்டது. அடுத்ததாக சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மகளிருக்குத் தமிழ்ச் சங்கத்தில் உரிய இடம் வழங்கப் பட்டுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக சென்ற ஆட்சிக்குழுவுக்குப் போட்டியிட்ட அனைத்துப் பெண்களும் வெற்றி பெற்றுள்ளனர். இன்று அமைப்பாளர்கள் 50இற்கு 50 என்னும் வில்லுப்பாட்டிசைக்கவுள்ளனர். இங்கு வந்திருக்கும் பார்வையாளர்களில் ப்ே வீதம் ஆண்களே உள்ளனர். இதன் மூலம் ஆண்கள் உங்களுக்குரிய இடத்தை வழங்கத் தயாராகவேயுள்ளனர் என்பது புலனாகின்றது என்று கூறினார். சங்க துணைத்தலைவர் செல்வி சற்சொரூபவதி நாதன் அவர்கள் தலைமையுரையாற்றுகையில் இவ்வருடம் சர்வதேச மகளிர் தினம் 100ஆவது ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. இக்கால எல்லைக்குள் நாம் எதைப் பெற்றிருக்கின்றோம்? இன்று கெளரவமாகத் தொழிற்படக் கூடியதாகவுள்ளது. பெண்களுக்கென தனியான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்ற நீதிபதியாகவும் பெண்கள் உள்ளனர். இந்த விகிதாசாரம் தனியார் நிறுவனங்களில் குறைவாகவே காணப்படுகின்றது. வங்கிகளில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவிகளில் பெண்கள் குறைவு.
GSE 臀
E. 臀 臀 థ్రో 葱 கொழுப்புக் சிங்:திதி:
 

மத்திய கிழக்கில் துஷ்பிரயோகங்கள் இடம் பெற்று வருகின்றன. இதற்கு இரு பகுதியினரும் பொறுப்புக் கூற வேண்டும்.
தலைமையுரையைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி இராஜ மனோகரி புலேந்திரன் உரையாற்றினார். தனதுரையில் எனக்கு செல்வி நாதன் அவர்களுடன் நீண்ட நாள் தொடர்புண்டு வானொலி மூலமும் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி விமர்சனங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டுள்ளேன். அத்துடன் வானொலி நிகழ்ச்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் பலரை நன்கு அறிந்திருந்தேன். ஆண்களை நாங்கள் குறை கூறக் கூடாது. பல ஆண்கள் தாய்மையைப் போற்றி சமூகத்தை வழி நடத்துகிறார்கள். ஊதியம் வழங்குவதில் ஆண், பெண் வேறுபாடு காட்டுகிறார்கள். இதை வைத்துக் கொண்டு பெண்கள் ஆதங்கப்படுகிறார்கள். பெண் கள்தான் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்குக் காரணம், சில மாமி மார் மருமகளைத் தன் மகள்போல் நடத்துவதில்லை. எந்தத் தாயும் பெண்களை வஞ்சிக்கக் கூடாது. வாழ்த்துக் கூறுங்கள். அந்த வாழ்த்து எம்மை வளர்க்கும். பெண்களைத் தூற்றும் ஆண்களும் உண்டு. அதற்குரிய காரணத்தை அறிந்து வாழப்பழக வேண்டும். அன்பினால் பெண் குடும்பதை வழி நடத்த வேண்டும் போன்ற கருத்துக்களை முன்வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இவரது உரையைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கண் வைத்திய நிபுணர் திருமதி மரீனா தஹா றெபாய் அவர்கள் உரையாற்றினார். "மகளிர் மீதான துஷ்பிரயோகம்" என்னும் தலைப்பில் பேசும்போது இன்று இந்தச் சபையில் நிறைய பெண்கள் தான் இருப்பார்கள் என்றெண்ணி எனது உரையை தயார் செய்திருந்தேன். ஆனால் சபையில் அரைப்பங்குக்கு மேல் ஆண்களே இருக்கிறார்கள். இதுவே பெண்களுக்கு ஒரு பெருமைதான். ஏன் பெண்கள் தினத்தைக் கொவன்டாட வேண்டும். ஆண்களுக்கு என்றொரு தினம் ஏன் இல்லை. 100 வருடங்களாகக் கொண்டாடுகிறோம். இதுவரை என்ன சாதித் தோம். எமக்காக உதவிய ஆண்கள் இருக்கிறார்கள். இத்தினங்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படவேண்டும். விண்ணுக்குச் செல்லும் மனிதன் வீட்டுக்குள் இருக்கும் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. இன்று பெண்கள்மீது துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது. இது எமக்கு மத்தியில் மட்டுமல்ல. சகல நாடுகளிலும் சகல இனங்களுக்குமிடையிலு முண்டு. 101ஆவது மகளிர் தினம் கொண்டாடுவதற்கிடையில் என்ன செய்யப்போகிறோம் என்பதைத் தீர்மானிப்போம். பெண்கள் நினைத்
பெண் வயிற்றி லுருவாகிப் பின்னும் அந்தப் 影 பெண் கொடுத்த பாலுண்டே வளர்ந்து மேலும் பெண் துணையால் வாழ்கின்ற பெருமை கண்டு பெண்மையிடம் பெரு மதிப்பு அறிஞர் கொள்வார்
IInin IIn
som en man
இந்தி:

Page 5
தாள் எதையும் சாதிக்கலாம். ஒரு தலைமுறையை உருவாக்கும் சக்தி ஒரு பெண்ணுக்குண்டு. எங்கள் தவறும், எங்கள் செயல்களுமே இவற்றுக்கெல்லாம் காரணம். வீட்டுப் பெண்மணியாக கல்வி அறி வுள்ளவளாக உருவாகவேண்டும் (Total characterized Lady),
எவரும் அடிமைகளல்ல. அடிப்படைக் கல்வி அறிவு வேண்டும். விசேடமாக வாழ்க்கைக் கல்வி அறிவு வேண்டும், எமது துயரங் களுக்கு காரணத்தைத் தேடிச் சென்றால் பெண்களே காரனம் என்று விடை கிடைக்கிறது. ஆபாசமான விளம்பரங்களைப் பெண்கள் கொடுக்கிறார்கள். குடும்பமாகப் பார்க்கக் கூடியவாறு சினிமாப் படங்கள் இல்லை, பெண்களை விலைப் பொருட்களாக் காட்டுகிறார்கள். இவற்றை நாம் புறக்கணிக்க வேண்டும். தீமை செய்பவன் கோழை, அதைப் பார்த்து மெளனமாக இருப்பது அதை விடக் கோழைத்தனம். வரதட்சனை கொடுக்கவோ வாங்கவோ கூடாது. இது எனது அசைக்க முடியாத கொள்கையும் கூட. வருங்கால சந்ததி நல்வாழ்வு பெற நாம் போராட வேண்டும். சரியானவற்றைச் சாதிக்க வேண்டும், தீது நடப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும். சூழலை மாற்றவேண்டும் என்ற சக்தியத்தை எடுப்போம். நாம் இணைந்தால் வெல்லலாம் என்று பல செய்திகளைக் கூறி கனதியான தனது உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக "சர்வதேச மகளிர் தின தொனிப்பொருள் விளக்கம்" என்றும் கலந்துரையாடலில் ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்களும் திருமதி தேவகெளரி சுரேந்திரன் அவர் களும் கலந்து கொண்டனர். 1784இல் பெண்கள் அடிமைப்படுத்தப்படு கிறார்கள் என்று தொழிலாள வர்க்கத்தினர் பிரான்சில் கிளர்ச்சி செய்தனர். ஆரம்பத்தில் ஆண் பெண் பால் வேறுபாடு, ஊதிய முரன் பாடு என்பவற்றில் தொடங்கி இன்று அது மனித உரிமை மீறல் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்து 1910இல் கோபன்கேஹனில் கூட்டப்பட்ட மகா நாட்டில் ஜெர்மன் நாட்டு எதிர்க் கட்சித் தலைவி கிளாரா செற்கின் (Zetkin) மார்ச் 8ஆம் திகதியை சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டுமென்ற பிரேரணையை முன்வைத்தார். இது ஐ.நா.சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தொனிப் பொருளில் இது கொண்டாடப்படு வருகின்றது. இவ்வருடம் கல்வி, பயிற்சி, தொழில்நுட்பம், விஞ்ஞானம் இவற்றைப் பெற சமவாய்ப்பு என்றும் தொனிப்பொருளில் கொண் டாடப்படுகிறது. இவற்றை அடைய எவ்வாறு செயற்படுவோம் எனச் சிந்திப்பது எமது கடமையாகும் என்று கூறி நிறைவு செய்தனர்.
ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா நன்றி உ6ரயின்போது இம்மகளிர் தினம் உருவாகப் போராடிய அனை வருக்கும் நன்றி தெரிவித்ததோடு இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். உலக சனத்தொகையில் 70%மான பெண்கள் இருக்கையில் 10%மான வருமானத்தையே பெறுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டார்.
மொத்தத்தில் இன்றைய உரையை நோக்கும் போது இலங்கையில்
'இகேதிச்சக்திசெய்தி:)
 

பெண்களுக்குப் பாரிய பிரச்சினை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி யிருந்தாலும் அவற்றுக்குக் காரணம் பெண்களே என்று கூறினார். நிகழ்வில் ஆண்கள் கடுமையாக விமர்சிக்கப்படவுமில்லை.
ஆட்சிக்குழு உறுப்பினர் ரஜனி சந்திரலிங்கம் தலைமையில் 50க்கு 50 என்ற வில்லுப்பாட்டை பெண்கள் வழங்கியதோடு நிகழ்வு நிறைவுபெற்றது.
இங்கியக்களம் 46 11.03.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வில் "குறுங்கதையும் நானும்" என்னும் தலைப்பில் எழுத்தாளர் வேல் அமுதன் உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.அ.பற்குணன் அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். தலைவர் தனதுரையில் வேல் அமுதன் அவர்கள் குரும்பசிட்டியில் பிறந்து இடம்பெயர்ந்து இணுவிலில் வசித்து இன்று கொழும்பு வாசியாகி விட்டார் என்று கூறினார். இவர் இதுவரை அறுவடை, வைகறை என்ற நூற் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். சாகித்திய மண்டலப்பரிசும் பெற்றவர். அத்துடன் திருமண ஆற்றுகை பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டி அச்சேவையை திறம்பட ஆற்றி பலரை இல்லற வாழ்வில் இணைத்து வைத்துள்ளார் என்றும் கூறி பேச்சாளரை உரை யாற்றுமாறு அழைத்தார்.
'சிறுகதை ஒரு சாளரப் பார்வை. "குறுங்கதை" கதவில் பூட்டப்பட்டி ருக்கும் குழிவுக் கண்ணாடி மூலம் பார்க்கும் 'கூரிய பார்வை என்று ஒரு நல்ல வரைவிலக்கணத்தைக் கூறி திரு வேல் அமுதன் தனது உரையை ஆற்றத் தொடங்கினார். குறுங்கதை வீரியம் மிக்க ஒரு விருட்சம் என்று கூடச் சொல்லலாம். எனனுடன் கூடப்பிறந்தது வறுமை மட்டுமே. எனது தாயார் என்னை மிகுந்த கட்டுப்பாட்டுடன் வளர்த்தார்.
ஈழகேசரியின் முதல் ஆசிரியராகவிருந்த எழுத்தாளர் நாபொன்னையா அவர்களால் 1931இல் சன்மார்க்க சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. நானும் அச்சபையில் இணைந்து சமூகக் கொடுமைகளைக் கண்ணுற்று எனது இலக்கியச் செயற்பாடுகளை ஆரம்பித்தேன். சமூக சேவையுடன் குறுங்கதை, நாவல், சிறுகதை, கட்டுரை, விவரணம் எனப் பலவற்றையும் எழுத ஆரம்பித்தேன். எனது முதற் குறுங்கதை "வெற்றிமணி என்னும் சஞ்சிகையில் வெளிவந்தது. இலங்கையில் முதலில் வெளிவந்த சிறுகதைத் தொகுதி 'அகக்கண், கதவு திறந்தது போன்றவையாகும். "வைகறை' என்ற எனது கதையை வாசித்த ஏரி.பொன்னுத்துரை அவர்கள் அதை நாடகமாகத் தயாரிக்க என்னிடம் அனுமதி பெற்றார். "வைகறை" சிறுகதையாக வெளிவந்த போது அதைப் பாராட்டி திரு.கே.பி.ஹரன் அவர்கள் ஈழநாடு பத்திரிகையில் "சிட்டுக்குருவி என்ற பகுதியில் எழுதியிருந்தார். இதை ஒரு சிறந்த விருதாகக் கருதுகிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு மேலும் ஊக்கத்தைத் தந்தது. எனது குறுங்கதை மகாஜனன், தினக்குரல், செங்கதிர், மல்லிகை, ஞானம் என்பற்றில் வெளிவந்துள்ளன. திரு.மா.குலமணி
LLSLSLLLLLSL L LLL LSLSLSLSLLLSLSLS

Page 6
செங்கதிரில் வெளிவந்த எனது குறுங்கதைக்கு விமர்சனம் எழுதும் போது எஸ்.பொ. கவிஞர் காசி ஆனந்தன் வேலமுதனும் போன்று சிறந்த கருத்துக்களை எழுதியுள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
திரு.மா.குலமணி, கனடா நாட்டில் வாழும் திரு.கந்தவனம் போன்ற வர்களது பாராட்டு எனது ஆர்வத்தை மேலும் அதிகரித்தது. இது வரை 100க்கு மேற்பட்ட குறுங்கதைகள் எழுதியுள்ளேன்.
அநேகமான கதைகள் திருமணங்கள் பற்றியதேயாகும். "ஐங்குறுநூ, "குறுந்தொகை" போல் குறுங்கதைகuபும் வளர வேலன்டும். 'பரனரி, "துணிவு போன்ற கதைகளையும், மூலநட்சத்திரம் பற்றிய கதை யையும் "கிளிசல்', 'ஆளுமை', "தறுதலை’ போன்ற கதைகளையும் வாசித்துக் காட்டினார்.
குறுங்கதை வாசித்த முடிவில் அதிர்வையும் அதிர்ச்சியைபம் தரும் என்றார். குறுங்கதைக்கு பத்திரிகை, சஞ்சிகையில் வரவேற்புக் குறைவு. மதிப்பீட்டாளர்களும் இவற்றை மதிப்பீடு செய்வதில்லை என்று கவலைப்பட்ட பேச்சாளர் குறுங்கதைகள் வெறும் இடம் நிரப்பிகள் தானா? சிந்தனையைத் தூண்டவில்லையா? என்ற கேள்விகளை முன்வைத்து தனது சிறப்பான உரையை நிறைவு செய்தார்.
நூலகம் சிேறுவர் பகுதி)
12.03.2011 'கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் செல்வி.ஐ.ஹேமபிருந்தினி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்கயான கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 453 16.03.2011 அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் "எண்கணித மூலம் அதிாடி கரமான வாழ்வைப் பெறுவது எப்படி?” என்னும் பொருள்பற்றி நவீன எண்கணித நிபுணர் திரு.மொழிவாணன் உரையாற்றினார்.
இந்நிகழ்வுக்கு துணை நிதிச் செயலாளர் திரு.சி.பாஸ்க்கா தலைமை தாங்கினார். தலைவர் தனதுரையில் உரைஞர் அவர்கள் பிரபா கணேசன் அவர்களின் ஊடாகச் செயலாளராவர். அத்துடன் நாடகம், தொலைக்காட்சி நிகழ்வுகளிலும் பங்கு கொண்டு வருகிறார். இவர் 19 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் சிலவற்றினைச் சொன்னார். சொல்லும் வயது 18 என்ற நாவல் இந்தியாவில் வெளி வந்துள்ளது. 19 தொலைக்காட்சி நாடகங்களைத் தயாரித்து வழங்கி யுள்ளார்.
மொழிவாணன் தனதுரையின் போது எண்சோதிடத்தை அறிமுகப் படுத்தியவர் ரா.பி.சேதுராமன். நவீன எண்சோதிடம் அதிலிருந்துவேறு படுகிறது. பிறந்த திகதி 15 வருடமும் மாதம் 30 வருடமும் 10 வயதிலிருந்து 45 வரை வருட எண்ணும் பலன் செய்யும், 5ம் எண்ணில் பெயர் வைப்பதென்றால் எப்படி வைப்பது? என்பது தான் நவீன எண்கணிதம், விதி எண்ணைப் பார்த்தே பெயர் வைக்க வேண்டும். 2 மிகவும் பலவீனமானது. அடுத்து 6, 3 என்பனவாகும். அடுத்து பெயர் வைப்பது எப்படி? எதிர்மறையான அதிர்வில்(Wibrator) பெயர்
r
l
 
 
 
 

வைத்தால் முன்னேற்றம் குறைவு. உதாரணம் ரணில், மனோ, என்னையும் கவனிக்க வேண்டும். பெயர் வைத்தால் மட்டும் போதாது. அதனை எழுதிப் பயன்படுத்த வேண்டும்.
எந்த எண்கள் பிரச்சனை தருவன? 1ல் 28ம் திகதி போராட்டத்துக் குரியது. 2ல் 29ம் திகதியும், 3ல் 30ம் திகதியும் பிரச்சினைக்குரியன வாகும் 4ல் 22ம், 13, 5ம் எண் நல்லது, 6ல் 24ம், 7ல் 23ம், 8ல் 26ம், 9ல் 27ம் கவனிக்கப்பட வேண்டியன. அதற்கேற்ப பெயரை அமைத்தால் பாதிப்பைக் குறைக்கலாம்.
9ம் திகதிக்காருக்கு 5 நல்லது. 5ம் என் காதலில் தோல்வி. 2ம் எண்காரரும் 8ம் எண்காரரும் அதிகமாக பேசுவர். 4ம் என் காரர் அமைதியானவர்கள். 6ம் எண்ணுக்குரியவர் வீட்டு நிர்வாகத்தில் சிறந்தவர்கள். 7ம் எண் பெண்கள் ஆட்சி கூடுதலாக இருக்கும். 7ம் எண்ணுக்கு பொருத்தமானது 5. 1ம் எண்காரர் தங்களுக்குத் தான் எல்லாம் தெரியும் என்பர். மற்றவர்களுக்கு அடிபணிந்து போகமாட்டார்கள். 3ம் எண் பிடிவாதமுடையவர். மற்றவர்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். கோபம் வந்தால் அடக்க முடியாது. பிறந்த திகதி மாதத்தில் 6 வந்தால் நல்லபடிப்பு வரும். 59, 41ல் வியாபாரத்துக்குப் பெயர் வைக்கலாம். முதலெழுத்துச் சேர்த்துச் சொல்லும் போதும் தனித்துச் சொல்லும் போதுப் பலன் வேறுபடும். எண்களில் இருக்கும் அதிர்வுகளுக்குப் பலனு:ண்டு.
நான் சொல்வதை நீங்கள் அவதானித்துப் பாருங்கள். யார் யாருக்கு அதிர்ஷ்டம் உள்ளது என்று அறிந்து கொள்வீர்கள்.
"சங்கத்தமிழ் 18.03.2011 சங்கத்தின் காலாண்டு சஞ்சிகையான "சங்கத்தமிழ்" வெளியீட்டு நிகழ்வு தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் தலைமையில் ஆரம்பமாகியது. முதலில் மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. தமிழ் வாழ்த்தினைத் தொடர்ந்து விருந்தினர்கள் பேடைக்கு அழைக்கப்பட்டனர்.
நிதிச் செயலாளர் செதிருச்செல்வன் தனது வரவேற்புரையின் போது தலைவர் உட்பட அழைக்கப்பட்ட விருந்தினர்களையும் சங்க உறுப்பினர்களையும் நடன விருந்தளிக்க வருகை தந்த அனை வரையும் வரவேற்றார். இரட்டைச் சிறப்பிதழ் வெளிவரக் காரணமாக விருந்த தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்களைப் பாராட்டி அவரை தலைமை உரையாற்றுமாறு அழைத்தார்.
தலைவர் தனதுரையில் தமிழ்ச் சங்கத்தின் மறுமலர்ச்சியாக இந்த சங்கத்தமிழ் வெளிவருகின்றது. கடுமையான முயற்சியின் பயனாக இன்று பல சிறப்பான கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றது. ஒவ்வொருவரும் வைத்துப் பேணப்பட வேண்டிய ஒரு பொக்கிஷமாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. சங்கத்தமிழ் வெளிவர உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார்.
பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தனது வாழ்த்துரையின் போது சஞ்சிகையை ஆங்கிலத்தில் Little Magazine என்பார்கள்.

Page 7
சஞ்சிகை மூலம் ஒரு மொழி வளர்ச்சியடைகிறது. விஞ்ஞானம், சமூகம், இலக்கியம் வளர்கிறது. சமூகத்தின் எல்லாத்துறைகளையும் ஊக்குவிப்பதோடு ஒரு தரமான சிந்தனையையும் வளர்க்கிறது. மலினமான சிறுசஞ்சிகைகளைப் படிப்பதன் மூலம் எமது மொழியை வளப்படுத்த முடியாது. இதனால்தான் சென்ற வருடம் நடைபெற்ற நிர்வாக சேவைப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் எவரும் சித்திபெற வில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. எழுதக் கூடியவர் களுக்கு உற்சாகமளிக்கவேண்டும். தரமானவற்றைப் பிரசுரிப்பதுதான் சிறுசஞ்சிகைக்குரிய விசேட பண்பாகும். இந்த வகையில் தமிழ்ச் சங்கம் கவனமெடுத்துள்ளது வரவேற்கத்தக்கது. அறிவை வளர்ப்பது மிக அவசியமாகும். சிக்கலான மட்டத்துக்கு அறிவுமட்டத்தை உயர்த்த வேண்டும் (Complex Formation). வாசிப்புப் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
நூல் வெளியீடு இடம்பெற்றபோது எஸ்.பி.சாமி, திரு.ஹாசிம் உயர் ஆகியோர் முதற் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதியைப் பலரும் பெற்றுக் கொண்டனர்.
எழுத்தாளர் தம்பு சிவாசுப்பிரமணியம் அவர்கள் நயவுரையை நிகழ்த்தினார். திரு.மு.கதிர்காமநாதன் அவர்களின் நீண்டகால முயற்சியின் பயனாக "சங்கத்தமிழ் வெளிவந்துள்ளது. தமிழ்ச் சிந்தனை ஊடாக எமது பண்பாடு, வளங்களை வளப்படுத்த வேண்டிய கடப்பாடுண்டு. இந்த தெளிவுடன் சங்கத்தமிழ் வெளிவரவேண்டும் என்ற நோக்குக்கமைய இதை நோக்குவோம்.
இலக்கியத்துக்குத் தான் இலக்கணம் கண்டனர் தமிழர். தொல் காப்பியம் இலக்கண நூலாக இருந்தபோதும் அது ஒரு இலக்கிய மாகவும் திகழ்கிறது.
பதிப்பிட்டு மற்றவருக்கு உணர்த்துவதே திறனாய்வாகும். சீரிய மதிப்புடன் இலக்கியத்தை தந்து அதனைப் பிறருக்கு உணர்த்த வேண்டும். தொல்காப்பியம் திறனாய்வுக் கொள்கையிலும் இலக்கியப் பார்வையிலும் செறிந்து விளங்குகிறது. பேராசிரியர் க.கைலாசபதியைப் பின்பற்றி தென்னிந்தியாவில் வானமாமலை திறனாய்வைக் கையாண்டார். இவர் தனது நயவுரையின் போது பின்வருவனவற்றை சுட்டிக் காட்டினார்.
எழுத்தாண்மை பற்றி பண்டிதர் திரு.நா.பார்த்தசாரதி கூறுகையில் கருந்தை எழுதுபவனுக்கு பொறுப்பும் குறிக்கோளும் முக்கியமானது. எழுத்தை எழுத்தத் தெரிந்தவர் ஆண்டால் எதையும் சாதிக்கலாம், இலக்கு இல்லாத இலக்கியத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நீர்வைப் பொன்னையா குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுகள் பல உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்று கூறி யுள்ளார். திருவிழாக்கள் என்பது சமூக அசைவுகளில் ஒன்றாகும் என்று தெ.பரமசிவன் அவர்கள் கூறியுள்ளார்.
பரதநாட்டியமும் தமிழ் அடையாளங்களின் அழிப்பும் என்ற கட்டுரை யில் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் ஆடல் தொடர்பான தமிழ் வளங்கள் வரன்முறையாக வெளிவரவில்லை. சமஸ்கிருதமே
 

மொழியாக கொள்ளப்பட்டிருந்தது. பரத சூடாமணி என்னும் நூல் தமிழ் பரத நூலின் வழிவந்த நூலாகலாம் என்றும் தெரிவித்துள்ளார். 'வாடைக்காற்று" என்னும் கட்டுரையில் "புரட்ட நினைத்தேன் அசைக்கத்தான் முடிந்தது என்று கட்டுரை ஆசிரியர் நாமம்மது கூறியது பாராட்டத்தக்கது.
"இன்மொழி அடையாளமாக முருகன்" என்னும் கட்டுரையில் கலாநிதி வ.மகேஸ்வரன் அவர்கள் தமிழ் நாட்டின் இலக்கியத்தின் தொன்மை வழிபாடாக முருக வழிபாடு இருந்து வந்தது என்று கூறு கிறார். தமிழ் முருகன் தமிழால் போற்றப்பட வேண்டும்.
வசனமும் செய்யுளும் ஒரு மொழியியல் நோக்கு என்னும் கட்டுரை யில் பேராசிரியர் நுஹற்மான் அவர்கள் தெளிவான கருத்தைத் தந்துள்ளார்.
கவிதைகளின் அணியமைப்பு பற்றி ஒளவை துரைசாமிப்பிள்ளை அழகாக விளக்கியுள்ளார்.
காளிதாசரின் பரிபாடற் பரிச்சயம் பற்றி க.இரகுபரன் குறிப்பிடு கையில் 'காஷ்மீரத்துச் சந்தனம், தாமிரவருணியின் முத்து, இமால யத்துத் தேவதாரு விருட்சங்கள், கலிங்கத்து வெற்றிலை, இந்து நதியின் மனல் என இந்தியாவின் பல திரைசகளிலுமுள்ள இராச்சியங் களின் பரிச்சயம் காளிதாசருடைய நூல்களிற் காணப்படுகிறது என்கிறார்.
பேராசிரியர் செ.யோகராசா வித்துவான் வேந்தனார் பற்றிய செய்தி களை அவதானிப்புடன் முன் வைத்துள்ளார். பாரதியாரின் அதிக செல்வாக்குக்குட்பட்ட கவிதைகள் இவருடையவை என்றும் குறிப்பிட் டுள்ளார். 'கூந்தல் அவிழ்ந்ததும் கொற்றம் கவிழ்ந்ததும்’ என்ற கட்டுரையை சைவப்புலவர் செல்லத்துரை அவர்கள் சிறப்பாக எழுதி புள்ளார். வளர்க சங்கம், கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்போம், நீலவாணன் கவிதை, ஜின்னாஹற் ஷரிபுத்தீனின் 'தேனுகர் வண்டு ஆகிய ஆக்கங்கள் சோதனை பலகண்டு இன்று சாதனை படைத்து 'சங்கத்தமிழ் வெளியிடுவதன் மூலம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பெயரை உயர்த்திய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
ஆரMIறதந்திங்கள் - மல்லிகை ஆசிரியர் திரு.டொமினிக் ஜீவா
92)
மாதா மாதம் நோண்மதி நாளில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் தனித்துவம் மிக்க இலக்கிய நிகழ்வில் இம்முறை மல்லிகை ஆசிரியர் திரு.டொமினிக் ஜீவா அவர்கள் உரையாற்றினார். தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமை தாங்கினார். ஜீவா அவர்கள் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் தன்னை அர்ப்பணித்துள்ளார். பல நாடுகள் பயணித்தவர். அதையே ஒரு நாவலாக வெளியிடலாம். மல்லிகை என்னும் சஞ்சிகையை 46வது வருடம் வரை வளர்த்துள்ளார்.
உரைஞர் பேசும்போது, நான் உங்கள் முன் உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை என்பதை உங்கள் முன் சத்தியம் செய்து கொள்கிறேன். பெயர் டொமினிக் ஜீவா, கத்தோலிக்கர்,
曹

Page 8
அம்மா நயினாதீவு அப்பா சரவணை, யாழில் பிறந்தேன்; யாழ் புகையிரத அதிபராகவிருந்தவர் ஒரு பிரஞ்சுக்காரர். அவரது பெயர் டொமினிக், அவரது வீர தீர செயல்களுக்காக பிரியாவிடை வைத்தனர் ஊர் மக்கள். அந்த நினைவாக எனக்கு டொமினிக் என பெயர் வைத்தனர். 85 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். எழுதிக் கொண்டிருக்கும் போதே நான் இறக்க வேண்டும். நான் ஒரு தனித்துவம் மிக்கவன். செம்மாதெருவில் ஜோசப் சலூன் வைத்தி ருந்தவன். யாழ்ப்பாணத்தில் முதலாவது Sal00ரி அதுதான். யாழ் சுன்னாகம் பஸ் ஓடியவர் என் அப்பா, குடியைத் தொடங்கிவிட்டார். சென்.மேரிஸ் பாடசாலையில் கல்வி பயின்றேன். கணக்கில் மிகவும் கெட்டிக்காரன். ஆசிரியரின் கணக்குப் பிழையென்று சொன்னதற்காக எனது அப்பாவின் தொழிலைச் சொல்லி பழித்துக் காட்டினார். அன்றி லிருந்து படிப்பை விட்டுவிட்டு தொழில் செய்யத் தொடங்கினேன். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் தொடர்ந்தேன். என்னை ஒரு பெண் காதலித்தாள். அவர் பெயர் லில்லி, மல்லிகைப் பந்தலின் கீழ் நிறுை கதைப்போம், 60ஆம் ஆண்டு சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுச் சென்ற வேளை என் நண்பர்களுடன் கீரிமலைக்குச் சென்றோம். நண்பர்கள் என்னைக் குடிக்கும் படி வற்புறுத்தியும் நான் குடிக்க மறுத்து "குடிப்பதில்லை" என சபதம் செய்தேன். லில்லியின் தாயார் அவரை மறக்கும்படி கேட்டார். நான் ஏற்றுக் கொண்டு பின் அக் காதலைத் தியாகம் செய்தேன்.
பாமா செய்த உதவிகளுக்கு கைமாறாக அவரின் மகளை எனது துணைவியாக ஏற்றுக் கொண்டேன். 2 பெண் பிள்ளைகளும் 1 ஆண் மகனும், எனக்கு எதுவித பிரச்சினையும் இல்லை. பலவற்றை இழந்து பலவற்றுக்கு விலைகொடுத்து வாழ்கிறேன். எனது மனைவி நோயுற்று இருந்தும் நான் அவரை வெறுக்கவில்லை, எஸ்.பொ. கணேசலிங்கம், டாளியல், இராமசாமி ஐயர், வைத்திலிங்கம் ஆகியோருடனும், கார்த்திகேசன் மாஸ்டருடனும் தொடர்பு இந்தியாவிலிருந்து ப.ஜீவானந்தம் யாழ் வந்தார். கார்த்திகேசன் மாஸ்டரோடு ஏற்பட்ட தொடர்பால் இடது சாரிப்போக்கில் ஈடுபட்டோம். எஸ்.பொ.என் மீது குற்றம்சாட்டுக் களை முன்வைத்தார்.
இவற்றையெல்லாம் வெளிக்கொணரவே "மல்லிகை என்ற சஞ்சி கையை 45 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தேன். சவரத் தொழிலாளி யொருவன் சஞ்சிகையை வெளியிட்டதாக வரலாறு இல்லை. கைலாசபிள்ளை, சிவத்தம்பி ஆகியோர் உதவினார்கள். தகைமை உள்ள பலர் எனக்கு உதவியுள்ளனர். தமிழ்ச் சங்க மேடையில் எனது தகவல்களையும் பதிவு செய்வது மிகப் பெரிய வாய்ப்பு என்றார். பொது வேலையிலிடுபடும் போது வெட்கப்படக்கூடாது. மல்லிகைதான் வாழ்க்கை அதுதான் என் உயிர் மூச்சு என்று கூறி கலந்துரை பாடலுக்கு இடம் கொடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
 

நூலகம் 9.20
சிேறுவர் பகுதி)
"கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில்
திருமதி சுமதி இரகுபதி பாலரீதரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்
கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அர்வோர்ஒன்று கூடல் - 454
፲ሄ3.I3,2[}l !
அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் 'இசையும் சிந்தனையும்" என்னும் தலைப்பில் இளைப்பாறிய அதிபர் திரு.ஜெ.மனோகிதராஜா அவர்கள் உரையாற்றினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திருடபிள்யூஎஸ்செந்தில் நாதன் அவர்கள் தலைமை தாங்கினார்.
தலைவர் தனது அறிமுக உரையில் இளைப்பாறிய அதிபர் மட்டக்களப்பில் பிறந்தவர். "இசையும் சிந்தனையும்" என்னும் போது இரு தலைப்புகள் உண்டு. இதுபற்றி பேச்சாளர் விபரமாக உரை யாற்றுவர். பேச்சாளர் தனது உரையில் நான் ஒரு இசை ஆசியரியன் அல்ல, இசை ஆர்வமுள்ளவன் சிந்தனையை நோக்கும் போது பாட்டி வடை சுட்ட கதையைக் கூறினார். இது எல்லோருக்கும் தெரியும்.
சிந்தனைக்கு ஏற்றவாறு இந்தக் கதையை மாற்றுகிறேன். ஏன் வடையை நரிக்குக் கொடுக்கவேண்டும். ஏன் பாடவேண்டும் என்று சிந்திக்கிறது. காலுக்குள் வைத்து விட்டுக் கா கா என்று பாடியது. சிந்தனையால் அறிவு வளரும், சிந்தனை ஒரு வகைத் தூய்மையாகும். சிந்தனை எங்கே உருவாகின்றது? நல்ல, கெட்ட சிந்தனைக்கேற்ப செயல் வேறுபடுகிறது. தாயின் சிந்தனை குழந்தை வலிமை பெறுதல் என்பது, 3வது சிந்தனை இசை, சந்நியாசிகள், யோகிகள் மூலம் இறைவனது வாக்கு அவர்களுக்குத் தெரிவிக்கப்படும். இது அவர் களது மாணவர்களுக்குச் சென்றடையும். இறைவன் சோதனையின் போது 'போகாதே’ என்று சொன்னால், மானிடர் விளங்கிக் கொள்வது இல்லை. சுனாமி வரும்போது ஒடுங்கடா ஒடுங்கடா என்று பல இடங்களில் கூறப்பட்டதாக செய்தியுண்டு. காதல் முகம் பார்த்த காதல், அம்பிகாபதி - அமராவதி இராமன் - சீதை. கண்களால் காணாத காதல் நளன் - தமயந்தி காதல், சிந்தனை வளர்கிறது. இம்மூன்று சிந்தனையும் வலிமை பொருந்தியவை.
அடுத்து இசை பற்றி நோக்கினால் அதிபராயிருந்த போது மாணவர்களுக்கிடையே இசைப் போட்டியை நடாத்தினேன். இசையை இசையாசிரியரே கற்பிக்க வேண்டும். இல்லையேல் தவறு ஏற்படும். இசைக்கு வயதில்லை. மொழி இல்லை. வாய்பாட்டுக்கும் ஒரு இசை உண்டு. இசையோடு படித்தால் நினைவில் நிற்கும் சமயப் பாடல்களில் இராகம் மாற்றக் கூடாது. சினிமாவில் மாற்றலாம்.
நாட்டார் பாடல்களுக்கு மெட்டு அமைக்கலாமா? மெட்டமைக்கப் பொருத்தமான சில பாடல்களைப் பாடிக் காட்டினார். திருக் குறளையும் இசையுடன் பாடலாம். இசையாசிரியர் மூலம் இவற்றை வளர்க்கவேண்டும்.
சினிமாவில் நாட்டார் பாடல் உண்டு. உதாரணமாக " ஊரார்

Page 9
உறங்கையிலே." எல்லா இலக்கியங்களையும் காப்பியங்களையும் இசையுடன் பாட வேண்டும் என்று கேட்டு உரையை நிறைவு செய்தார்.
இலக்கியக்களம் 47
25.3.201.
இலக்கியக்களம் நிகழ்வில் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான திரு.கே.விஜயன் அவர்களின் "காலமும் எழுத்தும்" என்ற உரை இடம் பெற்றது. நிகழ்வுக்கு எமது சங்கத்தின் உறுப்பாண்மைக்குழுச் செயலாளர் திரு.ப.க.மகாதேவா தலைமை வகித்தார்.
தலைவர் தனது அறிமுக உரையில் எழுத்தாளர் கே.விஜயன் அவர்கள் 108 சிறுகதைகளும் சில நாவல்களும் எழுதியதோடு 600இற்கு மேற்பட்ட மேடை நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார். மேடைகளில் காலமும் எழுத்து எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதில் அக்கறை கொண்ட ஒருவர் என்றும் கூறினார். இலக்கியம் என்பது காப்த்தின் கண்ணாடியாகும். இது சங்க காலத்திலிருந்து இன்றுவரை எவ்வாறு கையாளப்பட்டுள்ளது என்றும் கூறினார். கண்டியில் பிறந்த திரு.விஜயன் வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் ஆசிரியத் தலை யங்கங்கள் எழுதியுள்ளார். இவர் மலையாளத்தை தாய் மொழியாகக் கொண்டவர். மலையாள இனத்தில் பிறந்து தமிழை வாழ வைக்கும் ஒரு தமிழ் அபிமானி என்று கூறலாம். "எண்ணும் எழுத்தும் கண் ைொனத்தகும்’ என்ற வாக்கிற்கு இணங்க இவரது பணி அமைந் துள்ளது. ஞானம், மல்லிகை, செங்கதிர் போன்ற சஞ்சிகைகளுக்கு ஆக்கங்கள் எழுதி வருகிறர் என்று கூறி விஜயனை உரையாற்றுமாறு அழைத்தார்.
திரு.கே.விஜயன் தனதுரையில் நவீன இலக்கியம் மலிந்துள்ள இந்நாளில் கூட தொன்மை இலக்கியம் மறக்கப்படவில்லை. 40வருட கா: வரலாறு கொண்டது நவீன இலக்கியம். பல நாடுகளில் அங்கீகாரம் பெற்று வருகின்றது. புராண இலக்கியங்களை நம் தலை முறையினருக்கு அழகாகச் சொல்ல வேண்டும். காலத்திற்கு ஏற்ப இல்லாவிட்டால் அவர்கள் மறந்துவிடுவர். சிறுகதை, நாவல் இலக்கி யங்கள் மேலைநாடுகளில் இருந்து தமிழுக்கு வந்தவை. செய்யுள் எழுதும் போது பொருள், இலக்கண மரபு பேணப்பட வேண்டும். புதுக் கவிதையில் அந்த மரபு இருக்கிறதா? ஆனால் உள்ளதை உள்ள படியே சொல்லும் மரபு இப்பொழுது கடைப் பிடிக்கப்படுகின்றது. முன்பு இறைவனைப் பாடி பின்பு மன்னனைப் பாடி இப்பொழுது எல்லோருமே பாட்டுடைத் தலைவர்களாக விளங்குகின்றனர். பாரதி காலம் பக்தி இலக்கியத்தில் தொடங்கி "எத்தனை கோடி இன்பம் வைத்தாப் இறைவா?" என்று ஆரம்பித்து அரசியல், சமூக மாற்றங் களினால் "பெண் அடிமை, மாதரை இழிவுபடுத்தும் மடமையைக் கொழுத்துவோம்” என்ற வீராவேசப் பாடல் வரை சென்றது. ஆனால் பிரஞ்சு மொழியில் "காதல் என்பது ஒரு காவியமாக சித்திரிக்கப்பட்டது. காதலியைப் புதைத்த கல்லறையில் இன்னொரு வரை புதைக்க முடியுமா? என்ற கேள்வியுடன் செல்கிறது. டால்ஸ்டாப், தகழி சிவசங்கரம் பிள்ளையும் அதையே தமது ஆக்கங்களில் காட்டினர்.
 

நூலகம் ፳6.[3.2011
1950க்கு பின்னர் தமிழ்த் தேசிய வளர்ச்சியில் மாற்றம் ஏற்படத் தொடங்கின. சமுதாயத்தின் போலித் தன்மை உடைத் தெறியப்பட்டது என்றவகையில் விஜயனின் காலமும் எழுத்தும் சுவாரசியமாக அமைந்தது.
கலந்தாடலின் போது திரு.கே.எஸ்.சிவகுமாரன் பேச்சு மொழி பேசும் தன்மை, பேசும் திறன் பற்றி மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் என்றார். கொடுத்த தலையங்கத்துடன் பேசுவதில் விஜயன் வெற்றி யடைந்துள்ளார். ஆனால் அவரது நையாண்டி மொழி நடை ஏற்பு டையதல்ல என்றார். பேசுபவரை, திரண்டிருந்து கேட்பதன் மூலம் ஊக்கப்படுத்த முடியும், நாமும் பெருமை கொள்ள முடியும். பயன் பெற முடியும் என்றார். தமிழ் - மலையாள தொடர்பினையும் விளக்கினர். தலைவர் உரையாளருக்குரிய பரிசை வழங்கியதும் தமிழ் வாழ்த்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
(சிறுவர் பகுதி)
"கதை கதையாம் காரியமாம்" என்ற நிகழ்வில் கலா கதிரவேற்பிள்ளை கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல்
3.20.
இன்றைய நிகழ்வுக்கு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன்
தலைமை தாங்கினார். "உடற்பருமன் மூட்டுவாதம் கொழுப்பு சேருதல்" என்ற பொருள் பற்றிய விளக்கவுரையை வைத்திய கலாநிதி நச்சினார்க்கினியன் அவர்கள் வழங்கினார். மிகவும் முக்கியமான கருத்துக்களை அவர் கூறியதைத் தொடர்ந்து வைத்திய கலாநிதி விக்னவேணி அவர்கள் ஒருவரின் உயரத்துக்கும் வயதுக்கும் ஏற்றவாறு உடல் இல்லாவிடில் அது உடற்பருமன் எனப்படும். உணவை உட்கொள்வது எப்படி? உணவை எதற்காக, எப்படி, எப்போது உட்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் உடற்பருமன் கூடுவதற்கான காரணிகளையும் விளக்கி உரையாற்றினார்.
எமக்கு மிகவும் தேவையான உணவுகள் என்னும் போது நீர், சக்தி தரக்கூடிய புரதம், கொழுப்பு போன்றவையாகும். இவற்றில் நாம் ஒரு ஒழுங்கைக் கடைப் பிடிக்காவிடில் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு ஏற்படும், எலும்புகள் தேய்வு பற்றி நாம் கவனம் செலுத்துவ தில்லை. வயது போகும் காலத்தில் நீர்த்தன்மை கூடிய உணவை உட்கொள்ள வேண்டும், சக்தி விரயமாகும் அளவுக்கு மட்டும் உணவு எடுக்க வேண்டும். நாவுக்கு அடிமையாகாமல் அறிவும் மனமும் செயற்படவேண்டும்,
வைத்திய கலாநிதி சிவானந்தி அவர்கள் கொலஸ்ரோல் பற்றியும் அதனால் ஏற்படும் தீங்கு பற்றியும் உரையாற்றினார். அதிகம் சாப்பிடு கிறோம். அதற்கேற்ற பயிற்சியில்லை. இதனால் குளுக்கோசாக மாறும் உணவு கொலஸ்ரோலாகப் படிகிறது. உடற்பருமனோடு சுகாதாரம் பற்றியும் பேசினார்.
அவரது உரையைத் தொடர்ந்து திரு.இராசேந்திரம் அவர்கள்
இந்தி:

Page 10
திருமந்திரப் பாடல் ஒன்றைக் கூறி தனது உரையைத் தொடங்கினாT உணவும் சுவாசமும் உயிர் வாழ்வதற்கு முக்கியம். உணவிப்லால் சிறிது காலம் இருக்கலாம். ஆனால் சுவாசிக்காமல் இருக்கமுடியாது. எல்லோரையும் எழுந்து நின்று சிறிது நேரம் சிரிக்கும் படி கூறி சபையினருக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒரு வித்தியாசமான முறையில் ஆரம்பித்தது பார்வையாளரைக் கவர்ந்தது. நீங்கள் எல்லோரும் சரியாக கவாசிக்கிறீர்களா? நடக்கிறீர்களா? உட்காருகிiர் களா? என்று கேட்ட கேள்விக்கு எல்லோரும் ஆம் எனப் பதிலRத் தனர். ஆனால் விடை தவறு என்றார் அவர், உதாரணத்துக்கு நீங்கள் சரியாக நடந்தால் உங்கள் பாதணியில் ஒரு பக்கம் ஏன் தேய்கிறது என்று கேட்டார்.
உணவை நீர் போலும் நீரை உணவு போலவும் அசைபோட்டு உள் எடுக்க வேண்டும், சுவாசப்பையின் ஒரு பகுதி 3 பிரிவாகவும் மற்றைய பகுதி 2 பிரிவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. சுவாசிக்கும் முறை பற்றி படமுலம் விளக்கி உரையாற்றினர்.
மூச்சை 4 என்ற எண்ணிக்கையில் உள் இழுத்து 8 என்ற "ண்ணிக் கையில் வெளிவிடவேண்டும், தலையெழுத்து என்பது எத்தனை மூச்சு என்பதைப் பொறுத்துத்தான் கணிப்பிடப்படுகிறது. மூச்சை அமைநி பாக வெளிவிடுபவர்கள் நீண்ட காலம் வாழ்வர் மனதுக்கும் மூச்சுக்கும் நெருங்கிய தொடர்புண்டு நீண்ட மூச்சு மிகவும் பயனுள்ளதாகும் பிராணயாமப் பயிற்சி முறை பற்றி விளக்கிக் கூறி சிறப்பான உரைE L நிறைவு செய்தார், உளநல ஆலோசகர் திரு.காவைத்தீஸ்வரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
அறிவோர்ஒன்று கூடல் - 455
33.
அறிவோர்ஒன்று கூடல் நிகழ்வில் 'வானொலி நாடகமும் நானுப' என்னும் தலைப்பில் முன்னாள் வானொலி ஒலிபரப்பாளர் திரு.போப் ஜி.அன்ரனி அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்வுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் செல்வி சற்சொருபவதி நாதன் அவர்கள் தலைமை தாங்கினார். தலைவர் தனதுரையில் திரு.போப் ஜி.அன்ரனி அவர்கள் அறிவிப்பாளராக, அமைப்பாளராக இருந்து கல்விப்
பணிப்பாளராக, உதவிப் பரீட்சை ஆணையாளராக உயர்ந்து ஒப்பு
பெற்றார். தமிழ் நாடகத் தந்தையாக கலையரசு சொர்ணலிங்கமுL), வானொலி நாடகத் தந்தையாக "சானா' என்னும் சண்முகநாதனும் ஈழத்தில் விளங்கினர். பல தரப்பட்ட வானொலி அறிவிப்பாளர்களுடனும் நாடக எழுத்தாளர்கள் அராலி சுந்தரம்பிள்ளை, ஞானசேகரன், சில்லையூர் செல்வராஜன் ஆகியோருடனும் அவருக்கு ஏற்பட். பரிச்சயம் பற்றியும் கூறி அவரை உரையாற்றும்படி அழைத்தார்.
திரு.போல் ஜி.அன்ரனி தனதுரையில், மரிக்கார் ராமதாஸ், உபாபி செல்வசேகரன், அப்புக்குட்டி ராஜகோபால், அப்துல் ஹமீட், ஜோர்ஜ் சந்திரசேகரன் போன்ற கலைஞர்களுடன் தான் பணியாற்றியதாE கூறினார். திரு.சானா அவர்கள் 1980-1970களில் வானொலி நாடக அமைப்பாளராகவும் பின்னர் மு.ஆ.வாசகர் அவர்களும் பின்னர்
eeS YTYYTTkL LYYYkTT00LYLZL kYZYYS eT T TLLLLS LLLL e e L eeeeSLLyT
 

திரு.விக்னேஸ்வரன் அவர்களும் பணிபுரிந்ததாகவும் அவர்களில் சானா அவர்களின் நகைச்சுவை ததும்பிய குணவியல்பினையும் விளக்கினார். தென்னிந்திய வானொலி நாடகங்கள் பின் யாழ்ப்பாணத்து மண் வாசனையுடைய நகைச்சுவை நாடகங்கள் பின்பு வட்டார வழக்குடைய ஈழத்து பேச்சு மொழி வானொலி நாடகங்களும் வளம் பெற்றன. B.H.அப்துல் ஹமீட் ஒரு மணித்தியால நாடகங்களுக்கு பொறுப்பாகவிருந்த போது "வினைக்கொடியோன்" என்ற நாடகத்தில் இராவணனாக தாம் நடித்தமையை நினைவு கூர்ந்தார். நாடாளவிய ரீதியில் வானொலிக்கு "ஒரு வீடு கோவிலாகிறது" என்ற நாடகம் மகுடம் வைத்தது. இது சிவாஜிகணேசனின் பாராட்டைப் பெற்றது. 'அவிச்சமலர்' என்ற நாடகத்தை ஜெமினி, றிவித்யா அவர்கள் இல்லாமலே குரலை மட்டும் பதிவு செய்து வந்தது. அதனை எமது நாட்டுக் கலைஞர்களுடன் இணைந்து சாதனை புரிந்தார் திரு.அப்துல் ஹமீட் என்றார். நடிகர்களின் குரல் வளத்தைக் கொண்டு வானொலி நாடகத்தின் பாத்திரங்களின் தன்மை, வயது, கல்வியறிவு என்பவற்றை மக்களிடையே பிரபல்யம் பெறச் செய்த ஈழத்து வானொலி கலைஞர் களை திருச்சி, சென்னை வானொலியினரே பெரிதும் பாராட்டினர். தமிழ் கலைஞர்களைப் புறக்கணித்து சகோதர மொழி கலைஞர் களையே நினைவு கூர்ந்து கெளரவித்து அவர்கள் படங்களை வரவேற்பு மண்டபத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர் நிர்வாகிகள் என்று கவலைப் பட்டார் தலைவர். சபையோர் கருத்துக்களைத் தொடர்ந்து திரு.போல் ஜி.அன்ரனி அவர்களுக்கு தலைவர் பரிசு வழங்கிச் சிறப்பித்தார். தமிழ் வாழ்த்துடன் அறிவோர் ஒன்றுகூடல் இனிதாக அறிவோர் ஒன்றுகூடல் நிறைவெய்தியது.
H. H.H.P.
----
F. ங்கவேச்சிங்க?: நான் இரசித்த ஜோக்
L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLL LL
ன் அவர்களுக்கும்
... .. ۔۔ تعلم ت தொகுப்பாளர்: கந்தசாமி மகாதேவா = வடிவமைப்பு:-
உறுப்பாண்மைக்குழுச் செயலாளர் திருமதிது.சந்தியஜோதி

Page 11
ጳäፏፏቖ&ኔጶa፥‹‹ቇ(ጰ #4x38x
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
வெள்ள நி3
2011ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அனர்த்தத்தின் போது கொழும்புத் தமி பணி ஆரம்பிக்கப்பட்டு அது அப்பகுதி ம அது பற்றிய சுருக்கமான விபரங்கள் உ
பணமாக ரூ.ா.70,400/-வும், துணி
கொlவிவேகானந்தா கல்லூரி ஆசிரியர் உணவுப் பொருட்களும் கிடைக்கப் பெற்
எமது அனைத்து விநியோகங்களும் ஊடாக அவரின் வழிகாட்டுதலின்படி மே
கல்முனைக்கு ரூபா 12,000/=முப் திருக்கோவிலுக்கு ரூபா 9,000/=மும் பொருட்களுக்காகவும் அதைத் தொ அனுப்பப்பட்டது.
இவற்றைத் தவிர பொருட்கள் சேர்த் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும். அவர்கட்கும், கிழக்குப் பல்கலைக்கழக மு.கதிர்காமநாதன் ஆ.இரகுட
56267)6ՀիT பொதுக்
 
 

f*
வாரணப்பபணி
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள ழ்ச் சங்கத்தினால் உடனடியாக நிவாரணப் க்களுக்குக்கிடைக்க ஆவன செய்யப்பட்டன. ங்கள் கவனத்திற்குத் தரப்படுகின்றன. வகைகள், நிவாரணப் பொருட்கள் ஐடட்ப. மாணவர்களால் ஒப்படைக்கப்பட்ட உலர் ങ്ങ!,
பதிப்புத்துறை செயலாளர் திரு இரகுபரன் ற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்புக்கு ரூபா 18,000/=மும், உடனடித் தேவையான சமைத்த உணவுப் ர்ந்து செங்கலடிக்கு ரூபா 31,400/=மும்
து வழங்கிய கொlவிவேகானந்தக் கல்லூரி நன்கொடையாளார்களுக்கும், திரு இரகுபரன் மாணவர்களுக்கும் எமது நன்றிகள். தி பாலறிதரன் செ.திருச்செல்வன செயலாளர் நிதிச்செயலாளர்