கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஹிந்து மதத்தினருக்கு அறைகூவல்

Page 1
6OOI6OL shUL-6C
தொண்டும் து
S=======
 
 
 
 
 
 
 

மதத்தினருக்கு 3 ປີ) 6.6)
பொதுசன நூலகம் யாழ்ப்பானம்
வாமி விவேகானந்தர்
தி
= = रूल रूल = == = = = रूरू त्यस रू நாம் வாழ்ந்திடுவோம்! நூறவும் போற்றிடுவோம்

Page 2

ஹிந்து மதத்தினருக்கு
அறை கூவல்
சுவாமி விவேகானந்தர்
எழுமினி விழிமினி குறிசாரும் வரை
நீலிலாது உழைமினி!
தொகுப்பாசிரியர் பெ. சு. இராஜேந்திரன்

Page 3
(s இதயம் கனிந்த நன்றி.
பதிப்பாளர் அஷ்டலஷ்மி பதிப்பகம் த. பெ. இல. 1 கண்டி வீதி, கைதடி, இலங்கை.
எழுமின்! விழுமின்!! (விவேகானந்த கேந்திரம், கன்னியாகுமரி)
The East and the West (The Complete Works Vol V)
ஒலி BIT LIT (Uரீ ராமகிருஷ்ண மடம் சென்னை)
சுவாமி விவேகானந்தரின் 136வது பிறந்த நாளினை நினைவு கூர்ந்து 25-01-1998 அன்று இந்நூல் முதற் பதிப்பாக வெளியிடப்படுகின்றது.
பிரசார விலை இலங்கை. 15
இந்தியா:- 7/50

பதிப்புரை
சுவாமி விவேகானந்தர் எந்த நேரமும் கொழுந்து விட்டெரியும் ஆன்மீக நெருப்பாக இருந்தார். அவர் திருவடிகளும் சொற்களும் பட்ட இடங்களிலெல்லாம் தெய்வீகம் கொழுந்து விட்டு எரிந்தது.
யத்யத் விபூதி மத்ஸத்வம் Uமதுார்ஜிதமேவ வா தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்சஸம்பவம்
(10:41)
எவையெல்லாம் பேராற்றலும் எழிலும் திறமையும் வாய்ந்து விளங்குகின்றனவோ, அவையனைத்தும் எனது புகழ் ஒளியின் ஒரு கதிரிலிருந்து தோன்றியவை என்று உணர்ந்து கொள் என்று கீதையில் ரீ கிருஷ்ணர் உபதேசிக்கிறார்.
தெய்வீகத்தின் வெளித்தோற்றத்திற்கான ஓர் அறிகுறியாகவும் அருட் பெருஞ்சோதியின் ஒரு பொறியாகவும் சுவாமி விவேகானந்தர் திகழ்ந்தார்.
நமக்குள்ளே மறைந்து கிடக்கின்ற சக்திகளையும் நற்பண்புகளையும் முழு மலர்ச்சியடைந்திட வழிகாட்டினார். நமக்குள் ஒளிந்து கிடக்கும் தெய்வீகம் விழிப்படைய வேண்டும். சரியான பற்றுறுதி நம்பிக்கை நம்மை ஊக்குவித்து மனித முயற்சி என்ற பாதையில் முன்னேறிச் செல்ல சுவாமி விவேகானந்தரின் திவ்ய ஞான கருத்துக்கள் தூண்டட்டும்.
1893, செப்டம்பர் 11ஆம் நாள் சுவாமிஜி சர்வமத மகாசபையில் பேசினார். அன்று தொடங்கியது ஒரு புதியயுகம். சுமார் நான்கு ஆண்டுகள் உலகில் பல நாடுகளுக்கும் சென்று இந்து சமயத்தின் வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டார். தாயகம் திரும்பும் வழியில் 1897 ஜனவரி 15ம் நாள் கொழும்பு வந்து சேர்ந்தார். அவர் வெற்றி வீரராக இலங்கைத் திருநாட்டிற்கு வந்து சென்று நூற்றாண்டு நிறைவின் ஓராண்டு கொண்டாட்டங்கள் நிறைகின்ற காலக்கட்டத்தில் நிற்கிறோம் நாம்.
சர்வேஸ்வரனான இறைவன் அளிக்கும் வரங்களைப் பயன்படுத்துவதற்கு வாமி விவேகானந்தரின் வாழ்க்கைத் தத்துவம் இன்றியமையாதொன்றாகும்.
ஹிந்து சமயத்தினருக்கு அவர் விடுத்த அறை கூவலை சிந்தித்து, *ண்டும் நம்மை அதற்கு அர்பணித்துக் கொள்ள வேண்டிய வேளை இது.
பெ. சு. இராஜேந்திரன் தொகுப்பாசிரியர் ந்தாஸ். 6, செட்டியார் தெரு, கொழும்பு 11.

Page 4
m m m m m m . m m m m m m m m m m m m m
விவேகானந்தரின் கொடியை ஏந்தி R தியாகத்தின் உருவாய் விளங்கிடுவோம்.
விவேகானந்தரை நினைத்திடுவோம் விவேக வழியில் வாழ்ந்திடுவோம் தெய்வீகம் மனிதனின் இயல்பென்போம்! தெய்வத் தொண்டில் சிறந்திடுவோம் விவேகானந்தரின் நெறியில் நின்றே, ஆண்மையுடன் நாம் வாழ்ந்திடுவோம் தொண்டும் துறவும் போற்றிடுவோம்! இதயத்தைக் கோவில் ஆக்கிடுவோம் விவேகானந்தரின் குரலை முழங்கி, சிங்கமென நாம் சிலிர்த்திடுவோம் சுயநலம் களைந்தே வாழ்ந்திடுவோம்! பொது நலம் பேணி உழைத்திடுவோம்! விவேகானந்தரின் கொடியை ஏந்தி தியாகத்தின் உருவாய் விளங்கிடுவோம் முனிவர்கள் பரம்பரை நாமென்போம் பக்தியும் முக்தியும் சேர்த்திடுவோம் விவேகானந்தரின் படையாய் விளங்கி,
மங்கலம் எங்கும் சேர்ந்திடுவோம்.

ஓம் சுவாமி விவேகானந்தரின்
தெய்வீகச் செய்தி நான் கூறுவதைக் கவனத்திற் கொள்க:
“ஹிந்து" என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள்ளே சக்தி மின் அலையைப் போலப் பாய வேண்டும். அப்பொழுதுதான் - அப்பொழுது மட்டுமே - நீங்கள் "ஹிந்து" ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதன், எந்த நாட்டினனாயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவனாகவும் இனியவனாகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுதுதான் அப்பொழுது மட்டுமே - நீங்கள் "ஹிந்து" ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் - அப்பொழுது மட்டுமே - நீங்கள் "ஹிந்து" ஆவீர்கள்.
மகா புருஷனான குரு கோவிந்த சிங்கனைப் போல ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும் பொழுதுதான் - அப்பொழுது மட்டுமே - நீங்கள் “ஹிந்து" ஆவீர்கள். ஹிந்து சமயப் பாதுகாப்புக்காகத் தனது ரத்தத்தைச் சிந்தியபிறகும், தனது குழந்தைகள் போர்களத்தில் கொல்லப்படுவதைக் கண்ட பிறகும்-ஆகா! அந்த மகா புருஷனான குருவின் உதாரணந்தான் என்னே! யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கை விட்ட பிறகும்கூட - அவர், அந்தப் படுகாயமுற்ற சிங்கம் களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய நன்றி கெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக்கூட அவர் தப்பித்தவறியும் வெளியிடவில்லை.
உங்களது மதத்துக்கு நன்மை செய்ய நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்தசிங்கனாக ஆக வேண்டும். உங்களது மக்களிடையே ஆயிரக்கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து இரத்தத்தைக் கவனியுங்கள். உங்களைத் தாக்கிப் புண்படுத்த அவர்கள் நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிப்ாட்டிற்குரிய தெய்வங்கள், அவர்களில் ஒவ்வொருவரும் உங்களை நோக்கிச் சாபமாரி பொழிந்தாலும் நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையே திருப்பியளிக்க வேண்டும். உங்களை அவர்கள் வெளியே துரத்தினால் மகா சக்திசாலியான அந்தச் சிங்கத்தைப் போல குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய லட்சியத்தையே நாம் எப்பொழுதும் நம் முன் வைத்திருப்போமாக.
நம்மிடையேயிருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையிலும் இந்த அபாரமான அன்புணர்ச்சி அலையைப் பரப்புவோம்.
*சாது ஹிந்து
நமது தாய் நாட்டிடம் உலகம் பட்டுள்ள கடன் அபாரமானது. ஒவ்வொரு நாடாக எடுத்துப் பார்த்தால் எந்த நாடும் பொறுமையான "சாது ஹிந்து" விடம் பட்டுள்ள கடனைப் போல இந்தப் பூமியிலுள்ள எந்த ஓர் இனத்திடமும் கடன்படவில்லை. “சாது ஹிந்து" என்ற சொல் வசைச் சொல்லாகச் சில சமயங்களில் பயன்படுத்தப் பெறுகிறது. ஆனால் ஒரு நிந்தனைச் சொல்லில் எப்பொழுதாவது அருமையான ஓர் உண்மை மறைந்திருக்குமாயின், அப்படிப்பட்ட

Page 5
சொல்தான் இந்தச் “சாது ஹிந்து" என்ற சொல் எப்பொழுதுமே “சாது ஹிந்து" கடவுளின் அருள் பெற்ற குழந்தை ஆவான்.
முற்காலத்திலும், இக்காலத்திலும், மிக்க பெருமை வாய்ந்தகருத்துக்கள் வலிமை வாய்ந்த பெருமை மிக்க இனத்தவரிடமிருந்து தோன்றி வந்துள்ளன. முற்காலத்திலும் இக்காலத்திலும் ஆச்சரியமான கருத்துக்கள் ஓர் இனத்திலிருந்து மற்றோர் இனத்துக்குக் கொண்டு சேர்க்கப்பட்டு வந்துள்ளன. முற்காலத்திலும், இக்காலத்திலும் பேருண்மைகள், சக்தி ஆகியவற்றின் விதைகள், முன்னேறிச் செல்லும் தேசிய வாழ்க்கை அலைகளால் வெளிநாடுகளில் விதைக்கப்பெற்றன. ஆனால் நண்பர்களே, கவனியுங்கள்! அக்கருத்துக்கள் யுத்த பேரிகைகளுடன், அணிவகுத்துச் செல்லும் போர்ப் படைகளின் துணையுடன் சென்று பரவின. ஒவ்வொரு கருத்தையும் இரத்த வெள்ளத்தில் ஊற வைக்க வேண்டியிருந்தது. அந்தக் கருத்துக்களின் ஒவ்வொரு சொல்லையும் லட்சக்கணக்கானவர்களின் புலம்பலும், அநாதையாக்கப்பட்டவர்களின் அலறலும், விதவைகளின் கண்ணிரும் பின் தொடர்ந்து சென்றன. முக்கியமாக மற்ற நாடுகளின் வரலாறு இதனைக் கற்பிக்கின்றது.
கிரீஸ் என்ற நாடு உண்டாவதற்கு முன்பே, ரோம் நாட்டைப் பற்றி எவருமே சிந்திக்காதபொழுதே, இப்பொழுதிருக்கும் ஐரோப்பியர்களின் மூதாதையர்கள் காடுகளில் வசித்து, தமது உடலில் நீல நிறம் தீட்டி வாழ்ந்த பொழுதே இங்கு உயர்ந்த நாகரிகம் இருந்தது. அதற்கும் முன்னரே, சரித்திரம் எட்டிப்புக முடியாத அவ்வளவு பழங்காலத்திலிருந்து, அன்று முதல் இன்றுவரை, ஒன்றன் பின் ஒன்றாகப் பல உயர்ந்த கருத்துக்களும் எண்ணங்களும் பாரத நாட்டிலிருந்து அணி வகுத்து வெளியே சென்றன. ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆரம்பத்தில் சாந்தியும் முடிவில் வாழ்த்தும் சேர்த்துக் கூறப்பட்டது. நாம் ஒரு போதும் பிற நாடுகளைப் பலாத்காரமாகப் பிடித்ததே இல்லை. அதன் காரணமாகவே பேரருள் பெற்று வாழ்கின்றோம்.
ஹிந்து சாஸ்த்திரங்களும் பெளத்தர்களும்:
“வாழ்க்கையில் மோட்சத்தைத் தவிர மேலானதாக விரும்பத்தக்கது வேறு எதுவுமில்லை. நீங்கள் யாராயினும் சரி, அனைவரும் வந்து அதனைப் பெறுங்கள்" என்று பெளத்தர்கள் அறிவித்தனர். அது எப்பொழுதாவது நடக்கக்கூடிய காரியமா என்று நான் கேட்கிறேன். "நீ குடும்பஸ்தன், மோட்சம் போன்ற விஷயங்களைப் பற்றி நீ கவலைப்படக் கூடாது. நீ உனது ஸ்வதர்மத்தைச் செய்” என்று ஹிந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆம் அப்படித்தான் கூறுகின்றன. ஒரு அடிகூட எடுத்துவைத்து நடக்கமுடியாதவன் ஒரே தாவாகக் கடலையே தாண்டிக் குதிக்கப் போகிறான் போலும் இது பகுத்தறிவுக்கு உகந்ததா? உன்னால் உன் குடும்பத்திற்கே உணவளிக்க முடியவில்லை. மற்றவர்களுடன் சேர்ந்து இணைந்து பொதுநன்மைக்காக ஒரு சிறு வேலையைக் கூட உன்னால் செய்ய முடிவதில்லை. நீ முக்தியை நோக்கி ஓடுகிறாய். "தர்மத்தைவிட பல மடங்கு உயர்ந்தது மோட்சம் என்பதில் சந்தேகமில்லைதான். ஆனால் முதன் முதலில் தர்மத்தை முழுவதும் முடித்துவிடவேண்டும்" என்று ஹிந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த இடத்தில்தான் பெளத்தர்கள் குழப்பமடைந்து எல்லாவிதமான விஷமங்களையும் செய்தார்கள். அஹிம்சை சரியானதுதான். ‘தீமையை எதிர்க்காதே’ என்பது பெரிய விஷயம் தான். உண்மையாகவே இவை மகத்தான தத்துவங்கள்தான். ஆனால், சாஸ்திரங்கள் சொல்கின்றன. "நீ ஒரு குடும்பஸ்தன். யாராவது ஒருவன், உன்னைக் கன்னத்தில் அறைந்தால், நீ அவனைக் கண்ணுக்குக் கண், பல்லுக்குப்துல் எனத் திருப்பி தாக்காது போனால் உண்மையில் பாவியாகி விடுவாய்."
குரும் வா பாலவிருத்தெள வா பிராம்மணம் வா. பஹச்சருதம் ஆததாயின மாயாந்தம் ஹன்யாதேவாவிசாரயர்ை.
(மனு, 8.350)
"உன்னை ஒருவன் கொல்ல வந்தால், அவன் எந்த விதப் பிராமணனாயினும் சரி, நீ அவனைக் கொல்வதில் எந்தவித பாவமும் இல்லை" என்று மனு கூறுகிறார். இது மிக மிக உண்மையானது. இந்த விஷயத்தை மறப்பதற்கில்லை.

து ஸ்வதர்மத்தைச் செய் - வே உண்மைகளில் பேருண்மையாகும்:
வீரர்கள்தான் உலகில் இன்பம் அனுபவிக்கிறார்கள். உனது வீரத்தைக் காட்டு. சாம ான பேத தண்டம் என்ற நால்வகை உபாயங்களையும் சந்தர்ப்பங்களுக்குத் தக உபயோகப்படுத்தி, னது எதிரியை வென்று, உலகில் இன்பம் அனுபவி. அப்பொழுதுதான் நீ தார்மிகன் ஆவாய். ப்படியில்லாமல் யாராவது ஒருவன் தன் மனதில் தோன்றியபடி உன்னை உதைத்து மிதித்தால், அந்த அவமானத்தைச் சகிப்பாயானால் அவமானகரமான வாழ்க்கையே வாழ நேரும். வ்வுலகில் உனது வாழ்க்கை சரியான நரக வாழ்க்கை ஆவதுடன் மறு உலக வாழ்வும் அவ்வாறே ஆகும். சாஸ்திரங்கள் இதைத்தான் கூறுகின்றன. "உனது ஸ்வதர்மத்தைச் செய்துவா; இதுதான் உண்மை, உண்மைக்கெல்லாம் உண்மை" உனது மதத்தைச் சார்ந்தவர்களே! உங்களுக்கு நான் கூறும் ஆலோசனை இதுதான். ஆனால் ஒன்று: எவருக்கும் தீங்கு செய்யாதீர்கள். எவரையும் துன்புறுத்தவோ, கொடுமைப் படுத்தவோ கூடாது. உங்களால் முடிந்த வரையில் பிறருக்கு நன்மை செய்யப் பாருங்கள். ஆனால் இல்லறத்தானாக இருப்பவன் பிறர் செய்யும் தீமைகளுக்குத் தலை வணங்குவானாயின், அது பாவமாகும். அவன் அப்பொழுதே அந்த இடத்திலேயே பதிலுக்குப் பதில் திருப்பித் தர வேண்டும். இல்லறத்தான் பெருமுயற்சி செய்து, உற்சாகத்துடன் பணம் ஈட்டவேண்டும். அதைக் கொண்டு தனது குடும்பத்துக்கும் பிறருக்கும் ஆதரவு தந்து, வசதிகளைச் செய்வதுடன் முடிந்த வரை நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும். உட்ன்னால் அவ்வாறு செய்ய முடியாது என்றால் மனிதன் என்று உன்னை எப்படி அழைத்துக் கொள்கிறாய்? நீ சரிய்ான கிருகஸ்தன் ஆகமாட்டாயே? உனக்கு மோட்சம்கிடைப்பதுபற்றி என்ன சொல்வது?
இரண்டு விதமான சுபாவங்களுக்கு வெவ்வேறுபாதை:
இப்பொழுது பின்பற்ற வேண்டிய நல்ல பாதை எது? மோட்சத்தை (விடுதலையை) விழைகிற மனிதனுக்கு உகந்த பாதை ஒன்று, தர்மத்தை விரும்புகிறவனுக்கு உகந்த பாதை மற்றொன்று; இந்தப் பேருண்மையைத்தான் கீதாசாரியனான பகவான் ரீ கிருஷ்ணன் கீதையில் விளக்க முயன்றார். இந்தப் பேருண்மையின் மீதுதான் வர்ணாசிரம அமைப்பு, ஹிந்துசமாஜத்தின் ஸ்வதர்ம தத்துவம் முதலியனவெல்லாம் நிறுவப்பட்டுள்ளன.
அத்வேவர்டா ஸர்வபுதானாம் மைத்ர: கருண ஏவ ச நிர்மமோ நிரஹங்கார எமதுக்க எலக சுரம"
(கீதை - அ. 12. சு. 13)
“எதிரியற்றவன், எல்லோரிடமும் நட்பும் தயையும் வாய்ந்தவன்; ‘நான், எனது' என்ற உணர்ச்சிகளிலிருந்து விடுதலை பெற்றவன், துக்கத்திலும் சுகத்திலும் சமமான மனநிலை கொண்டவன், பொறுமை வாய்ந்தவன்.” இதுவும் இதுபோன்ற மற்ற அடைமொழிகளும் மோட்சத்தைக் குறிக்கோளாகக் கொண்டவனுக்கே பொருந்துவன.
கிலைப்யம் மா லம கம: பார்த்த நைதத்தீவய்யுபபதியதே
கூத்ரம் ஹர்ருதயதெளர்பல்யம் தீயக்திவோத்திஷ்ட பரந்தப
(கீதை - அ. 2, சு 3.)
“ஆண்மையின்மைக்கு இடம் கொடாதே. பிருதாவின் குமரனே! அது உனக்குப்
பொருந்தாது. மனத்திலுள்ள இந்த இழிந்த பலவீனத்தை உதறிவிட்டு எழுந்து நில், எதிரிகளைப் பொசுக்குவோனே!"
தளம்மாத் த்வமுத்திஷ்ட யசோ லபலவ ஜித்வா சத்ரூனி புங்கூர்வ ராஜ்யம் ஸ்ம்ருத்தம் மயைவைதே நிஹதா : பூர்வமேவ நிமித்தமாதிரம் பவ ஸ்வியஸாசினர்!
(கீதை - அ. 11, சு 33)

Page 6
*ஆகவே நீ எழுக! புகழ் பெறுவாயாக! உனது எதிரிகளை வென்று வளமான அரசாட்சியை அநுபவிப்பாயாக! உண்மையில் என்னால் இவர்கள் முன்னரே கொல்லப்பட்டுவிட்டனர். ஸவ்யஸாயே (அர்ஜூனா), நீ கருவியாக மட்டும் இருப்பாயாக!"
சாத்விக அமைதிக்கும் தாமசகுனத்தின் மந்த நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு
வெளியிலிருந்து பார்த்தால் நீ இருப்பது சத்துவ குண நிலையிலா அல்லது தாமச குன் நிலையிலா என்று நமக்கு எப்படிப் புரியும்? எல்லா இன்ப துன்பங்களுக்கும் அப்பாற்பட்டு, எல்லாவிதச் செயல்களையும் வேலைகளையும் கடந்து சாத்விகமான அமைதி நிலையில் நாம் இருக்கிறோமா அல்லது உயிரற்று, செயலற்று, ஜடப் பொருள் போல நம்மிடம் வேலை செய்யச் சக்தி இல்லாததால் வேலை எதுவும் செய்யாமல் இருந்துகொண்டு அமைதியாக, படிப்படியாக உளுத்துப்போய், உள்ளுக்குள்ளே இழிகுணம் சூழ்ந்து, மட்டரகமான தாமச நிலையில் இருக்கிறோமா? இந்தக் கேள்வியை நான் உண்மையாகவே கேட்கிறேன், பதில் தரவேண்டும் என்று வற்புறுத்திக் கேட்கிறேன். உனது சொந்த மனத்திடமே கேள். உண்மை எதுவென உனக்குத் தெரியும்.
சாத்விக அமைதி - மகத்தான சக்திகளின் உறைவிடம்:
ஆனால், பதிலுக்காகக் காத்திருப்பதற்கு என்ன அவசியம்? மரத்தை அதன் பழத்திலிருந்து அறியலாம். சத்துவ நிலையில் ஒரு மனிதன் இருக்கும் பொழுது நிச்சயமாகவே செயல் புரியாமல் அமைதியாக இருப்பான்! அந்தச் செயலின்மை மகத்தான சக்திகளை ஒரு முனைப்படுத்திக் குவித்ததன் விளைவாக ஏற்பட்டதாகும். அந்த அமைதி அபார சக்தியின் பிறப்பிடம் ஆகும். மிக உயர்ந்த சாத்விக நிலையிலுள்ள அந்த மனிதன் நம்மைபோல் கைகளாலும் கால்களாலும் இனிமேல் வேலை செய்ய வேண்டியதில்லை. மனத்தால் நினைத்தாலே எல்லா வேலைகளும் உடனே மிகச் செம்மையாக நிறைவேறிவிடும். சத்துவ குணம் மேலாதிக்கம் செலுத்தும் அந்த மனிதன்தான் அனைவராலும் வணங்கப்படுகிற பிராம்மணன். (பிரம்மத்தை அறிந்தவன் என்பது பொருள்.) வீட்டுக்கு வீடு போய்த் தன்னை வணங்கும்படி மற்றவர்களை அவன் கெஞ்சிக் கேட்க வேண்டுமா? சர்வ சக்தி வாய்ந்த உலக அன்னையானவள் தனது சொந்தத் திருக்கரத்தால், பொன்னெழுத்துக்களில் அவனது நெற்றியில், "இந்த மகானை, என் புதல்வனை, அனைவரும் வழிபடுக” என்று எழுதுகிறாள். உலகம் அதனைப் படிக்கிறது, கவனிக்கிறது, பணிவுடன் அவன் முன் தன் தலையைத் தாழ்த்தி வணங்குகிறது. உண்மையில் அந்த மனிதன்,
அத்வேஷட்ா ஸர்வுபூதானார் மைத்ர, கருண ஏவ ச
நிர்மமோ நிரஹங்கார, ஸமதுக்க ஸ'க கூடிமீ
(கீதை - 12, 13)
("எதிரி அற்றவன்; எல்லோரிடமும் நட்பும், தயையும் வாய்ந்தவன். நான், எனது' என்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை பெற்றவன். துக்கத்திலும் சுகத்திலும் சமமான மனநிலை கொண்டவன், பொறுமை வாய்ந்தவன்.”)
தாமச குணம் வாய்ந்த மந்த நிலை - மரணத்தின் சின்னம்:
கோழைகள், பெண்தன்மை வாய்ந்தவர்கள், மூக்கால் முணு முணுத்து வார்த்தைகளைக் கடிந்துப் பேசுகிறவர்கள், ஒருவாரகாலமாகப் பட்டினி கிடப்பவனைப் போல மெல்லிய இழைந்த குரல் உடையவர்கள், இழிந்த கிழிந்த ஈரமான துணிபோல் தெம்பற்றவர்கள், எதையும் கண்டிக்காமல், யார் உதைத்தாலும் கோபமடையாதவர்கள். இது மட்டகரமான தாமசகுணம் வாய்ந்தவர்களின் சின்னம். சத்துவ குணத்தின் அறிகுறியல்ல; சாவின் சின்னமாகும். முழுவதும் இழிகுணமும், நாற்றமும் நிறைந்தவர்கள் அர்ஜுனன் இத்தகையவர்களின் கோஷ்டியில் விழ இருந்தான். அதற்காகவே தான் பகவான் விஷயங்களை இவ்வளவு விரிவாக விளக்குகிறார். இது தான் உண்மையல்லவா? பகவானின் திருவாக்கிலிருந்து வெளிப்பட்ட முதற் சொல்லைக் கவனியுங்கள்.

“க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த்த நைதத் த்வய் யுபபத்யதே" (ஆண்மையற்ற குணத்துக்கு இடங்கொடாதே, பார்த்தனே! அது "உனக்கு அழகல்ல) அதன் பின்னர் தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யசோ லபஸ்வ’ (ஆகவே நீ எழுந்து நில், புகழ் பெறு") என்றார்.
கடந்த ஆயிரமாயிரமாண்டுகளாக நாட்டு மக்கள் ஆகாயம் முழுவதையும் பகவானின் பெயரால் நிரப்பி வருகிறார்கள்; பிராத்தனை செய்து வருகிறார்கள். கடவுள் ஒருபோதும் அதற்குச் செவி சாய்கவில்லை. மூடனின் ஒலத்தை மனிதனே ஒரு போதும் கேட்பதில்லையே, கடவுளா கேட்பாரென நினைக்கிறீர்கள்? இப்பொழுது கடைத்தேற ஒரே வழிதான் உண்டு. அது கீதையில் பகவான் கூறியுள்ள சொற்களைக் கவனித்துக் கேட்டு நடப்பது - க்லைப்யம் மா ஸ்ம கம; பார்த்த (பார்த்தனே! ஆண்மையற்ற தன்மைக்கு இடங்கொடாதே) தஸ்மாத் த்வமுத்திஷ்ட யசோ லபஸ்வ (ஆகவே நீ எழுந்து நில், புகழ் பெறு!)
விதியின் பெரிய வேடிக்கை:
இதிலிருக்கிற வேடிக்கையைக் கவனியுங்கள். ஐரோப்பியர்களின் தெய்வமான ஏசுகிறிஸ்துபோதித்தர் - "எதிரியே உனக்கு இருக்கக் கூடாது. உன்னை சபிக்கிறவர்களை நீ ஆசிர்வதி, உன் வலது கன்னத்தில் அறைந்தால் , நீ இடது கன்னத்தையும் காட்டு; உனது வேலைகளனைத்தையும் நிறுத்திவிட்டு மறுஉலகுக்குச் செல்ல ஆயத்தமாகு; உலகமுடிவு மிக நெருக்கத்தில் உள்ளது" என்றார். ஆனால், கீதையில் நமது பகவான் , எப்பொழுதும் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்; உனது எதிரிகளை அழித்து உலகத்தை அநுபவி’ என்றார். ஆனால் கடைசி முடிவில், கிறிஸ்துவும் கிருஷ்ணனும் உட்பொருளாக எதைக் குறிப்பிட்டார்களோ அதற்கு நேர் எதிரிடையான முடிவு ஏற்பட்டது. ஏசுகிறிஸ்துவின் சொற்களை ஐரோப்பியர் ஒரு போதும் கருத்துடன் கவனித்து ஏற்கவில்லை. எப்பொழுதும் சுறுசுறுப்பான பழக்க வழக்கங்களுடன், அபாரமான ராஜஸ குணங்கள் வாய்ந்து, துணிகரமாக, இளமைத் துடிப்புடன் உலக நாடுகள் (லவற்றிலிருந்தும் சுகபோகங்களையும், வசதிகளையும் திரட்டிச் சேர்த்து, மனம் அலுக்கும் வரை அவற்றை அனுபவிக்கிறார்கள். நாமோ மூலையில் உட்கார்ந்துக் கொண்டு இரவு பகலாகச் சாவைப்பற்றி நினைந்து,
*நளிநீ தலகத ஜலமதிதரலம் தத்வஜ்ஜிவனமதிசயசபலம்"
(தாமரை இலைமீதுள்ள தண்ணீர் நடுங்குகிறது, நிலையில்லாதிருக்கிறது; அதுபோல் மனிதனின் ஆயுள் அற்பமானது, அநித்தியமானது") என்று பாடுகிறோம். அதன் விளைவாக நமது ரத்தம் உறைந்துபோய், நமது உடலின் மாமிசம் மரண தேவனான யமனின் பயத்தால் அஞ்சிக் கெஞ்சுகிறது. அந்தோ! யமன்கூட நமது சொல்லையே சரியென நம்பிவிட்டான் போலும் பிளேக் நோயும் மற்றும் பல நோய்களும் நமது நாட்டினுள் நுழைந்து விட்டன. கீதை உபதேசத்தைப் பின்பற்றுவோர் யார்? ஐரோப்பியர்கள்! ஏசு கிறிஸ்துவின் விருப்பப்படி நடப்பவர்கள் யார்? ரீ கிருஷ்ணனின் சந்திகள்! இதனை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
புத்த சமயம், வேத சமயங்கள் ஆகியவற்றின் குறிக்கோள்கள் ஒன்றேதான். ஆனால் புத்த சமயத்தவர்கள் கடைப்பிடித்த வழி முறைதான் சரியில்லை பெளத்தர்களின் வழிமுறை சரியாக இருந்திருக்குமானால் ஏன் மீண்டும் ஈடேற முடியாதபடி அழிந்து குலைந்துபோகிறோம் நாம்? காலவெள்ளம் இயற்கையாக இதனை விளைவித்து விட்டது என்று கூறினால் போதாது, காரண - காரிய சட்டங்களை மீறிக் காலத்தால் செயல்பட முடியுமா?
ஆத்மாக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்
வேத சமயங்கள்தான் வழிமுறைகளைப் பற்றிக் கவனித்து, மனிதன் எய்த வேண்டிய நான்கு நிலைகளான அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றுக்கான சட்டதிட்டங்களை வகுத்து வைத்துள்ளன. பாரததேசத்தில் குமாரிலபட்டர் “கர்மம் மட்டுமே பாதை” என்ற கர்ம மார்க்கத்தை மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார். சங்கரரும் ராமானுஜரும் தக்க அளவில் அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை இணைத்து, சம நிலைப்படுத்தி அநாதியான

Page 7
வேத சமயத்தை உறுதியாக நிலைநாட்டினார்கள். இவ்வாறாக நமது ராஷ்டிரம் இழந்த தனது வாழ்க்கையை மீண்டும் எய்துவதற்கான பாதைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் பாரத நாட்டில் முப்பது கோடி ஆத்மாக்களை விழிப்படையச் செய்யவேண்டியிருப்பதால், இந்தக் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. முப்பது கோடி மக்களை எழுப்புகிற பணியை ஒரே நாளில் செய்துவிட முடியுமா?
நாம் ஹிந்துக்கள்:
நாம் ஹிந்துக்களாவோம். ஹிந்து என்ற சொல்லைத் தப்பான அர்த்தத்தில் நான் பயன்படுத்தவில்லை அல்லது அதற்கு ஏதாவது மோசமான பொருளுண்டு, என நினைக்கிறவர்களின் கருத்தை நான் ஏற்கவுமில்லை. பழங்காலத்தில் அச்சொல் சிந்துவுக்கு மறுபுறம் வசிப்பவர்கள் என்று மட்டும் பொருள்பட்டது. இன்று நம்மை வெறுப்பவர்களில் பெரும்பாலனவர்கள்அதற்குத் தவறான விளக்கம் தரலாம் என்றாலும் பெயரைப்பற்றி நீாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஹிந்து என்ற பெயர் உயர்ந்த லட்சியங்கள் அனைத்தையும், ஆன்மீகத் தொடர்புடைய அனைத்தையும் குறிக்கும் சொல்லாக விளங்குமா அல்லது நிந்தனைச் சொல்லாக, நசுக்குண்டவர்களை, உதவாக்கரைகளை, பாவிகளைக் குறிப்பதாக விளங்குமா என்பது நம்மைப் பொறுத்த விஷயமாகும். தற்பொழுது "ஹிந்து" என்ற சொல் இழிவான எதையாவது குறிப்பதனால் கவலைப்பட வேண்டாம். எல்லா மொழிகளிலும் இருக்கக்கூடிய எந்த ஒரு வார்த்தையைக் காட்டிலும், இதை உயர்ந்த பொருளுடையதாக ஆக்க நமது செயல்மூலம் முற்படுவோம்.
என்னுடைய முன்னோர்களைக் குறித்து வெட்கப்படாமலிருக்க வேண்டும் என்பது எனது வாழ்க்கையின் கொள்கைகளில் ஒன்று, உலகில் தோன்றிய பெருமை மிக்க மாந்தரில் நான் ஒருவன். ஆனால் வெளிப்படையாக உங்களுக்குக் கூறுகிறேன். நான் எனக்காகப் பெருமைப்படவில்லை. என் மூதாதைகளின் காரணமாகவே பெருமை கொள்கிறேன். பழமையைப் படிக்கப் படிக்க, பின் நோக்கிப் பார்க்கப் பார்க்க இந்தப் பெருமை இன்னும் அதிகரிக்கிறது. அது எனக்கு வலிமையும், வீர நம்பிக்கையும் தருகிறது. பூமியில் புழுதியாகக் கிடந்த நிலையிலிருந்து அது என்னை மேலே உயர்த்தியுள்ளது; பெரியோர்களான நமது முன்னோர்களின் மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அது என்னை வேலை செய்ய வைத்துள்ளது. தொன்மைப் புகழ் வாய்ந்த அந்த ஆசிரியர்களின் புதல்வர்களே! இறைவனருளால் உங்களுக்கும். அதே பெருமிதம் உண்டாகட்டும். உங்களது முன்னோர்களிடம் இருந்த இந்த நம்பிக்கை உங்கள் உதிரத்தில் கலக்கட்டும்; அது உங்கள் வாழ்க்கையோடு பிரிக்க முடியாத பகுதியாக விளங்கட்டும். அது உலகை உய்விக்கத் தொண்டு புரியும்படி உங்களைத் தூண்டட்டும்.
துறவும் தொண்டும் உடையவர்களே இன்றைய தேவை:
துறவு, தொண்டு இவைதான் பாரதத்தின் தேசிய லட்சியங்கள் ஆகும், அந்தப் பாதைகளில் பாரத நாட்டு மக்களின் உணர்ச்சிகளைத் தீவிரப்படுத்துங்கள்; மற்றவை தாமே நடக்கும். ஆத்மீகக் கொடிழினை இந்த நாட்டில் எவ்வளவு உயரக்கில் ஏற்றினாலும் அது பொருத்தமேயாகும். அதில்தான் நீம் நாட்டின் விமோசனம் உள்ளது.
நான் வேண்டுவது இரும்பினையொத்த தசைநார்கள்; எ.கினையொத்த நரம்புகள்; இவற்றினுள்ளே இடியேறு போன்ற வலிமையுள்ள மனம், பலம், ஆண்மை, க்ஷத்திரிய வீர்யம், பிரம்ம தேஜஸ் ஆகிய இவையே நான் வேண்டுவது. நமது அழகான, நம்பிக்கையுள்ள இளைஞர்களிடம் இவையெல்லாம் உள்ளன. ஆனால் லட்சக்கணக்கில் அவர்கள் திருமணம் என்று அழைக்கப்படுகிற பலிமேடையிலே பலியாக்கப்படுகிறார்களே! இறைவனே! எனது ஒலத்துக்குச் செவி சாய்ப்பாயாக!
சிலுபேர் மட்டும் தனித்து நின்று இறைவனுக்காக வாழ்ந்து, உலக நன்மைக்காக நமது சமயத்தைப் பாதுகாக்கட்டும். உண்மையில் மாயைகளுக்கு நீ காரண பூதனாக, மூதாதையாக இருந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஜனகரைப் போல இருப்பதாகப் பாசாங்கு பண்ணாதே. (ஜனகர் என்ற சொல்லுக்கு மூதாதை என்று பொருள் இந்தப் பெயர் தாங்கிய மன்னர் தமது மக்களின் நலத்துக்காத அரசாட்சியை நடத்தி வந்த போதும் எல்லாவற்றையும் மனத்தால் துறந்து விட்டார்) யோக்கியனாக இருந்து கொண்டு, “ எனது லட்சியம் எனக்குத் தெரிகிறது. ஆனால் நீான் இன்னும் அதனை நெருங்கவில்லை" என்று சொல்லுக. எதையும் நீ துறக்காத

போது துறப்பதாகப் பாசாங்கு பண்ணாதே. ஒருமுறை துறவு பூண்டால் உறுதியாக நில் போரில் உன் தரப்பினர் நூறுபேர்கள் மடிந்து வீழ்ந்தாலும் அவர்களிடமிருந்து கொடியைப் பிடுங்கி உன் கையில் எடுத்துக் கொண்டு முன்னேறிச் செல். யார் வீழ்ந்தாலும் சரி, இறைவன் சத்திய வடிவானவன். வீழ்கின்றவன் மற்றொருவனது கையில் கொடியைத் தரட்டும். அவன் அதை ஏந்திச் செல்வான். ஒரு போதும் கொடி கீழே விழாது.
தூய்மையின் காரணமாக உற்சாகத் தீ கொழுந்து விட்டெரிய, இறைவனிடம் குன்றாத பக்தியெனும் கவசமணிந்து, சிங்கத்தின் தைரியம் நரம்புகளில் துடிக்க, நூறாயிரம் ஆண்களும் பெண்களும் முன்வருவார்கள். அவர்களது உள்ளத்தில் ஏழைகளிடமும் தாழ்ந்தோரிடமும் ஒடுக்கப்பட்டவர்களிடமும் கருணை பொங்கும். அவர்கள் நாட்டின் மூலை முடுக்கொங்கும் அலைந்து, முக்திக்கான உபதேசத்தை, ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து வாழவேண்டுமென்ற உபதேசத்தை, சமூக எழுச்சியின் உபதேசத்தை, சமத்துவத்தின் உபதேசத்தைப் பிரசாரம் செய்வார்கள்.
இறைவனின் தொண்டர்களாகக் களத்தில் இறங்குங்கள்:
நமது பாரதத்தாய் பல தடவை மயங்கி வீழ்ந்திருக்கிறாள். அப்பொழுதெல்லாம் பாரதத்தின் மகாப் பிரபுவான இறைவன் தமது அவதாரங்களின் மூலம் அவளை மூர்ச்சை தெளிவித்திருக்கிறார்.
இறந்தவர்கள் மீள்வதில்லை. கழிந்த இரவு திரும்புவதில்லை; எழுந்து மறைந்த அலை புதிதாக மீண்டெழுவதில்லை. அது போலவே மனிதன் ஒரே உடலில் மீண்டும் வசிக்க வருவதில்லை. ஆகையால் மாந்தர்களே! செத்தொழிந்த பழமையை வழிபடுவதை விடுத்து உயிருடனிருக்கும் இக்காலத்தை வழிபட உங்களை நாம் அழைக்கிறோம். நடந்து போன செயல்களைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தை கலங்கி வருந்துவதை விட்டுவிட்டு, இக்கால நடவடிக்கைகளில் ஈடுபட அழைக்கிறோம். இழந்து போன, இடிந்து தகர்ந்து போன பாதைகளைத் தேடிக் கண்டு பிடிப்பதில் சக்தியை வீணடிப்பதை விடுத்து, அருகிலே உள்ள அகலமான, புதிய நெடுவழிப்பாதைக்கு வருமாறு உங்களைத் திருப்பி அழைக்கிறோம். அறிவுள்ளவன் எவனோ அவன் புரிந்து கொள்ளட்டும்.
அந்த மகாசக்தியின் முதல் துடிதுடிப்பின் மூலம் உலகின் திக்கெட்டிலும் தூரத்து எதிரொலிகள் எழுந்துள்ளன என்றால் அந்தச் சக்தி முழுமைபெற்றுக் காட்சி தரும் பெருநிலையைக் கற்பனை செய்துபாருங்கள் அடிமைப்பட்ட, மக்களிடம் இருக்கக் கூடிய இழி குணங்களான அர்த்தமற்ற தவறான கருத்துக்களையும் பலவீனத்தையும் பொறாமையையும் ஒழித்துக் கட்டிவிட்டு வாருங்கள். இந்தப் புதிய தெய்வீக அமைப்பாகிற சக்கரம் சுழலுவதற்குத் துணை புரியுங்கள்.
நாங்கள் இறைவனின் தொண்டர்கள்; அவரது புதல்வர்கள்; அவரது விருப்பங்களை ஈடேற்றுவதில் துணை புரிகிறவர்கள்" என்ற திடநம்பிக்கை, பணி புரியும் களத்தில் புகும் போது உங்களது உள்ளத்தில் உறுதியாக வேரூன்றியிருக்கட்டும் சக்திகளை கையாளும் திறமை சக்திகளை ஒழுங்குற அமைத்துக் கோப்பது, சிறு விஷயங்களைக் கொண்டு மகத்தான லாபங்களை அடைவது இவற்றை இன்னுங் கொஞ்சம் கற்க வேண்டும்.
பிறரை போல நடிப்பது நாகரீகமாகாது:
மற்றவர்களைப் பின்பற்றி நடிப்பது நாகரிகப் பண்பு ஆகாது. நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு பெரிய பாடம் இது. நான் ஓர் அரசனைப்போல் உடையுடுத்தி என்னை அலங்கரித்துக் கொள்ளலாம். அதனால் அரசனாகி விடுவேனா? சிங்கத்தின் தோல் போர்த்த கழுதை சிங்கமாகிவிடாது. கோழைத்தனமாகப் பிறர் போல் நடிப்பது அவர்களைப் பின்பற்றுவது, ஒரு நாளும் முன்னேற்றத்தைத் தராது. ஒரு மனிதனின் பயங்கரத் தாழ்வுக்கு அது கண்கூடான அறிகுறியாகும். ஒரு மனிதன் தன்னையே வெறுக்கத் தொடங்கி விட்டான் என்றால் அவன் ஒழிந்து போனான் என்று கொள்க.
ஹிந்து என்பதில் பெருமிதம் கொள்க:
ஒருவன் தனது முன்னோர்களைப் பற்றி அவமானப்படுவானாயின் அவனுக்கு முடிவு

Page 8
காலம் வந்துவிட்டது. ஹிந்து இனத்தில் நான் மிகச் சாதாரண மனிதன்தான். ஆனாலும் நான் எனது இனத்தைப்பற்றி பெருமைப் படுகின்றேன். (என்னை ஹிந்து என அழைத்துக் கொள்வதில் பெருமைபடுகிறேன்) உங்களுடைய தகுதியற்ற தாழ்ந்த ஊழியர்களில் ஒருவன் என்று நான் பெருமைப்படுகிறேன். முனிவர்களின் பரம்பரையினரான, உலகம் கண்ட மகரிஷிகளிடையே மிகக் கீர்த்தி வாய்ந்த ரிஷிகளின் சந்ததியினரான உங்களுடன் கூட இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் என்று பெருமையடைகிறேன்.
உன் மதத்தைக் காக்க எழுந்து நில். "ஆருயிர் நண்பனே! சின்ஹா! யாராவது உன்னுடைய தாயை அவமதித்தால் நீ என்ன செய்வாய்?”
“அவன் மீது தாவிப் பாய்ந்து நல்ல படிப்பினைப் புகட்டுவேன், சுவாமி”
“நன்றாகப் பதில் சொன்னாய். அது போலவே நமது உண்மையான தாயாகிய உனது சொந்தமதத்தைப் பற்றி அவ்வளவு மதிப்பு உனக்கு இருக்குமாயின், எந்த ஒரு ஹிந்து சகோதரனும் மதம் மாற்றப்படுவதை நீ ஒரு காலும் சகிக்க மாட்டாய். இருப்பினும் கூட தினந்தோறும் இது நடப்பதை நீ பார்க்கிறாய். பார்த்தும் பாராமுகமாக இருக்கிறாய். எங்கே உனது நம்பிக்கை? எங்கே உனது சமயபக்தி மாற்று மதத்தினர் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள், அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?”
ஆங்கில மோஸ்தரில் ஆழ்ந்த என் நாட்டுச் சகோதரர்களே!
முழுக்க முழுக்க ஐரோப்பிய மயமாகி, வெளிப்பழக்க வழக்கங்களிலும், சிந்தனை முறையிலும், கருத்திலும் ஐரோப்பியரைப் பின்பற்றி நடிக்கிற உங்களைத்தான் சொல்கிறேன்! இதை முற்றிலும் நன்கு புரிந்து கொள்ளுங்கள். எப்பொழுது பார்த்தாலும் அழுது, கண் சிவந்து, உம்மைக் காப்பாற்றும்படி ஐரோப்பியர்களிடம் முறையிடுகிறீர்கள்! “நாங்கள் தாழ்ந்து விட்டோம்; நாங்கள் காட்டுமிராண்டி நிலைக்கு இழிந்து விட்டோம். ஐயா, ஐரோப்பிய மக்களே! நீங்கள் தாம் எமது ரட்சகர்கள்! எங்கள் மீது கருணை காட்டுங்கள். இந்த இழிநிலையிலிருந்து கரையேற்றி விடுங்கள்” என்று பிரார்த்திக்கிறீர்கள். “கர்த்தருக்குத் துதி” என்று பாடுகிறவர்களே! நீங்களும் புரிந்து கொள்ளுங்கள். ‘ஏசு கிறிஸ்து பாரதத்துக்கு வருகிறார்” என்று கீச்சுக் குரல் எழுப்பிப் பாடுகிறீர்கள்! “நாளடையில் காலம் நிறைவெய்தும் பொழுது தெய்வீகச் சட்டம், நியாயத் தீர்ப்பு, பூர்த்தியாவதைக் காண்பீர்கள்” என்று கூக்குரலிடுகிறீர்கள். அன்பரே! ஐயா, வேண்டாம். ஏசுவோ ஜெஹோவாவோ வரவில்லை. வரவும் மாட்டார்கள். அவர்கள் இன்று தமது சொந்த வீடு வாசல்களைக் காப்பாற்றிக் கொள்ளதில் முனைந்திருக்கிறார்கள். நமது நாட்டுக்கு வர அவர்களுக்கு நேரமில்லை.
இந்நாட்டில் அதே பழைய சிவபெருமான் பழையபடி உட்கார்ந்திருக்கிறார். இரத்தம் தோய்ந்த அன்னை காளியை அதே பழைய ஆசார உபதேசங்களுடன் வழிபடுகிறார்கள். கிராமத்து இடைச் சிறுவனான அந்தக் கிருஷ்ணன், அன்பின் திருவுருவம், பழையபடியே குழல் வாசித்து வருகிறான். ஒரு காலத்தில் இந்தப் பழைய சிபவெருமான் தனது காளை வாகனத்தின் மீது ஏறிக் கொண்டு தனது உடுக்கையை அடித்து ஒலி எழுப்பிப்கொண்டே பாரதத்திலிருந்து புறப்பட்டு ஒரு பக்கம் சுமத்ரா, போர்னியா, செலிபஸ், ஆஸ்திரேலியா முதலிய நாடுகள் வழியே அமெரிக்கக் கடற்கரை வரை சென்றார். இந்தப் பழைய சிவனார் மறுபக்கம் தமது காளையைத் தட்டி விட்டு, திபெத், சைனா, ஜப்பான் வழியே மேலே சைபீரியா வரை சென்றார். இன்றும் அவ்வாறே செய்து வருகிறார். சீனாவிலும் ஜப்பானிலும் அன்னை காளி மக்களுடைய வழிபாட்டைப் பெற்று வருகிறாள். அவளையேதான் கிறிஸ்தவர்கள் உருமாறிக் கன்னி மேரியாக்கி கிறிஸ்துவாகிய ஏசுவின் தாயாக வழிபட்டு வருகிறார்கள்.

இமய மலையைப் பாருங்கள்! அங்கே வடக்கில் பழைய சிவனின் இல்லமாகிய கைலாசம் உள்ளது. அங்கே அவரது சிம்மாசனத்தைப் பத்துத் தலையும் இருபது கைகளும் கொண்ட ராவணனாலேயே அசைக்க முடியவில்லை. இப்பொழுது மாற்று மதத்தினர் அதை முயற்சிக்கப் போகிறார்களா? வாழ்க! இந்தப் பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக் கொண்டிருப்பார்; அன்னை காளி மிருக பலியுடன் வழிபடப்படுவாள். அன்புக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான் அவர்கள் இமயம் போல உறுதியாக நிற்கிறார்கள். மாற்று மதத்தினர் என்னதான் முயன்றாலும் அவர்களை அகற்ற (Մ?tԳԱմո5i. •
அவர்களை உங்களால் சகிக்க முடியவில்லை என்றால், தொலைந்து போங்கள்! 905 கைபிடியளவுள்ள உங்களுக்காக இந்தத் தேசம் முழுவதும் தனது பொறுமையெல்லாம் இழந்து, சாகும்வரை அலுத்துச் சலித்து வாழ வேண்டுமா? பரந்த உலகம் உங்கள் முன்னே திறந்து கிடக்கிறது. சுதந்திரமாக மேய்வதற்காக வேறு இடங்களில் நிலபுலன்கள் கிடைக்கும். நீங்கள் அங்கெங்காவது ஏன் போய்லிடக் கூடாது? ஆனால் இல்லை! அப்படி அவர்கள் செய்யவே மாட்டார்கள். அதைச் செய்வதற்கு வேண்டிய பலம் எங்கிருக்கிறது? பழைய சிவனின் உப்பைத் தின்று அவருக்கு துரோகம் பண்ணுவார்கள், மானபங்கப் படுத்துவார்கள். வெளி நாட்டு ரட்சகன் ஒருவனுடைய புகழ் கீதத்தை இசைப்பார்கள்.
அட கடவுளே. நமது நாட்டு மக்களில் சிலர் அன்னியரிடம் ப்ோய் நின்று கொண்டு விம்மியழுகிறார்கள். “நாங்கள் மிகத் தாழ்ந்தவர்கள், நாங்கள் கீழ்ப்பட்டவர்கள்; எங்களிடம் இருப்பதெல்லாம் பேய்த்தனமான விஷயங்கள்தாம்" என்று கதறுகிறார்கள். ஆம் அது உண்மையாகவே இருக்கலாம். முழுவதுமே உண்மைதான் ஏனெனில் நீங்கள் உண்மையானவர்களென உரிமை கொண்டாடுகிறீர்களே! உங்களை நம்பாமலிருக்க எவ்விதக் காரணமுமில்லை. “நாங்கள்” என்று பேசும்போது தேசம் முழுவதையும் உள்ளடக்கி, நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? ம்ன்றாடி கேட்கிறோம், ஐயனே! இது என்ன யோக்கியப் பொறுப்பை சேர்ந்தது?
* Extract from The East and the West' (The Complte Works, Vol.V)
ஆண்மை ஊட்டுதல்.
"தீப்பிழம்பு போன்ற இளைஞர்கள் நமக்குத் தேவை. புத்திசாலித்தனமும் தைரியமும் வாய்ந்து மரணதேவனின் வாய்க்குள்ளே துணிச்சலாக நுழைந்து செல்லுகிறவர்கள், கடலைக்கூட நீந்திக் கடக்க ஆயத்தமானவர்கள் தேவை. அதுபோன்று நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் தேவை, அவர்களைப் பெறுவதற்காக மட்டுமே முழு மூச்சுடன் முயலுக; வலது பக்கத்திலிருந்தும் இடது பக்கத்திலிருந்தும் புதிதாக ஆட்களைச் சேர்த்து மாற்றி, நமது தூய்மைப் பயிற்சி இயந்திரத்தில் அவர்களைப் பொருத்திப் பண்படுத்திப் பழக்குங்கள்.
இறைவனிடத்திலே தளராத நம்பிக்கையும் புனிதமான பணி செய்கிறோம் என்ற ஊக்கமும், ஏழைகளிடத்தும் வீழ்ச்சியுற்றோரிடத்தும் ஒடுக்கப்பட்டுள்ளவர்களிடத்தும் எல்லையற்ற பரிவும், அந்தப் பரிவு காரணமாக எதிர்த்து நிற்பதில் சிங்கத்தின் துணிவும் கொண்ட ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் இந்தப் பூமியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் செல்ல வேண்டும். நம்முடைய விமோசனத்துக்கான சமய அறிவுரைகளை, பரோபகாரம் என்ற நமது வேத தத்துவங்களை, சமூக முன்னேற்றத்துக்கான வழிகாட்டும் நற்செய்திகளை, சமத்துவம் என்கிறவேத நெறிகளை அங்கெல்லாம் கொண்டு சென்று மக்களிடையே பரவச் செய்யவேண்டும்.
எல்லா பலவீனத்தையும் முடநம்பிக்கையையும் கைவிடுக!
a a நான் உபதேசிக்கும், எல்லாவற்றிலும் முதல் தேவையாக ஒன்றைக் கூறுவேன். எது ஆத்மீகத்துக்கோ, அறிவுக்கோ, உடலுக்கோ பலவீனத்தை உண்டாக்குகிறதோ, அதை உங்கள் கால் கட்டை விரலால் கூடத் தொடாதீர்கள். சமயம் என்பது மனிதனிடத்தில் இயற்கையாக உள்ள வலிமையை வெளிப்படுத்துவதாகும். எல்லையில்லாத சக்திபடைத்த ஒரு "ஸ்பிரிங்" இந்தச் சிறிய உடலுக்குள்ளே சுருண்டு கிடக்கிறது. அந்த ஸ்பிரிங் மெல்ல விரிவடைந்துகொண்டே

Page 9
செல்லச் செல்ல, ஓர் உடலுக்குப் பிறகு மறு உடல் எடுத்து அவை ஒவ்வொன்றும் தகுதியற்றதாக ஆகும்பொழுது, அந்த உடலை எறிந்துவிட்டு, அதைவிட உயர்ந்த உடலை எடுத்துக் கொள்கிறது. இதுதான் மனிதனுடைய - சமயத்தினுடைய - நாகரிகத்தினுடைய வரலாறு ஆகும். இதுதான்
முன்னேற்றம் எனப்படும்.
சோதிடம், ரகசிய வித்தைகள் இவற்றையெல்லாம் நாடுவது பொதுவாக பலவீனமான மனத்தின் அறிகுறி என்பது உங்களுக்குத் தெரியவரும். ஆகவே நமது மனதில் இவை முக்கியமானதாக ஆகும்பொழுது நாம் போய் ஒரு டாக்டரிடம் உடம்பைக் காட்டி, நல்ல உணவு சாப்பிட்டு விட்டு, ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சோதிடரைப் பற்றிய பழைய கதை ஒன்று உண்டு. ஒரு நாள் அந்த மனிதர் ஓர் அரசனிடம் போய் “அரசே! நீங்கள் இன்னும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறீர்கள்” என்று சொன்னார். அரசன் நடுங்கிப் பயந்துபோய், அப்பொழுதே அங்கேயே அச்சத்தால் உயிரை விட்டுவிடுவார் போலிருந்தது. ஆனால் அவருடைய மந்திரி, புத்திசாலி. இந்தச் சோதிடர்களெல்லாம் அறிவிலிகள் என்று மன்னனிடம் மந்திரி கூறினார். ஆனால் மன்னனுக்கு இந்தச் சோதிடர்கள் அறிவிலிகள் என்பதை நிரூபிக்க வேறெந்த வழியும் புலப்படாமற் போகவே அரண்மனைக்கு அந்தச் சோதிடரை மீண்டும் ஒருமுறை மந்திரி அழைத்தார். இரண்டாம் முறை வந்தப்போது, “நீங்கள் போட்ட கணக்குகளெல்லாம் சரிதானா?” என்று சோதிடரை மந்திரி வினாவினார். எவ்விதத் தவறும் அதில் இருக்க முடியாது என்று கூறிவிட்டு, எதற்கும் தம்மையே திருப்திப் படுத்திக் கொள்வதற்காக, முழுக் கணக்கையும் மீண்டும் ஒருமுறை போட்டு பார்த்துவிட்டுப் பிறகு தமது முடிவு முற்றிலும் சரிதான் என்று பதிலளித்தார். மன்னனின் முகம் வெளிறிப் போய்விட்டது. மந்திரி சோதிடரைப் பார்த்து, "ஐயா, நீங்கள் எப்பொழுது மரணமடைவீர்கள்? என்று கேட்டார். "பன்னிரண்டு ஆண்டுகளில்" என்று சோதிடர் பதிலளித்தார். அந்தக் கணமே மந்திரி தமது வாளை உருவிச் சோதிடரின் உடலிலிருந்து கழுத்தைத் துண்டித்து வீழ்த்தினார். பிறகு மன்னனை நோக்கி, "இந்தச்சோதிடன் பொய்யன் என்பது தெரிகிறதா? இந்தக் கணமே இவன் செத்துக்கிடக்கிறான்” பாருங்கள் என்றார்.
கஷ்டங்களைத் தைரியமாக எதிர்த்து நின்று சமாளிக்க வேண்டும்:
.ஒரு தடவை நான் காசியில் இருந்தபோது அவ்வூரின் ஒரு பகுதியின் வழியே போய்க்கொண்டிருந்தேன். அங்கே ஒரு பக்கத்தில் பெரியதொரு குளமும் மறுபுறத்தில் உயரமான சுவரும் காணப்பட்டது. இடைவழியில் தரைமீது ஏராளமான குரங்குகள் இருந்தன. காசியிலுள்ள பருத்த உடலுள்ள மந்திகள் அவை சில சமயம் அவை வெறியுடனிருக்கும். அந்தத் தெருவழியே கடந்து செல்ல என்னை அநுமதிக்கக் கூடாது என்று அவற்றின் மனத்தில் பட்டு விட்டது போலும், ஆகவே நான் அவ்வழியாகப் போன போது அவை கூச்சலிட்டு, கீச்சிட்டுக் கத்திக்கொண்டே என் கால்களைப் பிடித்துக் கொண்டன. அவை நெருங்கிவர ஆரம்பித்ததும் நான் ஓடத் துவங்கினேன். நான் எனது வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க அவையும் வேகமாக ஓடி நெருங்கி வந்து கடிக்க ஆரம்பித்தன. தப்புவது அசாத்தியம் என்றே தோன்றிற்று. அந்தக் கணத்திலேயே அறிமுகமில்லாத யாரோ ஒரு புதிய மனிதர் ஒரு வரைச் சந்தித்தேன். அவர் “அந்த மிருகங்களை எதிர்த்து நில்” என்று என்னிடம் உரக்கக் கூவினார். நான் திரும்பிப் பார்த்து அந்தக் குரங்குகளை எதிர்த்து நின்றேன். அவை பின் வாங்கிவிட்டு இறுதியாக ஓடியே விட்டன வாழ்க்கை முழுவதற்கும் அது ஒரு படிப்பினை. கஷ்டங்களைக் கண்டு நாம் எதிர்த்து நிற்கும்போது, குரங்குகளைப் போல அவை பின் வாங்கி ஓடுகின்றன.
ஒவ்வொரு கடமையும் புனிதமானது தான்:
ஒவ்வொரு கடமையும் புனிதமானதுதான் கடமையில் பக்தியுடனிருப்பது தெய்வ வழிப்பாட்டில் மிக உயர்ந்த முறையாகும்.
நமக்கு மிக நெருங்கியுள்ள கடமையை, நாம் இப்பொழுது ஏற்றெடுத்துள்ள கடமையை செம்மையாகச் செய்யவதால் நம்மை நாம் மேலும் அதிகமாகப் பலப்படுத்திக் கொள்கிறோம். இவ்வாறாகபடி ப்படியாக நமது பலத்தை அதிகரித்துக் கொண்டேபோனால் நாம் . ஒரு பெரும்

நிலையைக்கூட எய்திவிடக் கூடும். மிக விரும்பிப் போற்றுகிற, கெளரவிக்கிற கடம்ைகளைகூடச் செய்து முடிக்கிற நல்ல வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.
நாம் ஒவ்வொருவரும் எந்த இடத்துக்குத் தகுந்தவர்களோ அந்த இடத்தில்தான் இருக்கிறோம். ஒவ்வொரு பந்துக்கும் தக்கதொரு குழி உண்டு. ஒருவனுக்கு மற்றவர்களைவிட அதிகமான திறமை இருக்குமானால் உலகம் அதைக்கூடக் கண்டுபிடித்து விடும்.
ஏனெனில் இயற்கையிலேயே எங்கு பார்த்தாலும் ஒவ்வொன்றையும் பொருத்தமான இடத்தில் அமைக்கிற மாறுதல் நிகழ்ந்தே வருகிறது. ஆகவே முணுமுணுப்பதில் பயனில்லை. ஒரு பணக்காரன் தீயவனாக இருக்கலாம். இருப்பினும் அந்த மனிதனைப்பணக்காரனாக்கிய சில நல்ல குணங்கள் அவனிடம் இருந்தே தீரும். வேறொரு மனிதனுக்கும் அதே குணங்கள் ஏற்பட்டால் அவனும் பணக்காரனாக ஆகிவிடலாம். ஆகவே சண்டையிடுவதாலும், குற்றஞ் சொல்லிக் கொண்டிருப்பதாலும் என்ன பயன்? அப்படிச் செய்வதால் நமக்கு நல்ல நிலை ஏற்பட்டு விடாது.
உனது விதியைப் பற்றி முனுைமுனுைக்காதே; ஒவ்வொரு கடமையையும் சுவையுடன் செய்:
.ஒரு மனிதன் தனக்குக் கிடைத்துள்ள சிறு அளவு வேலையை எண்ணி முணுமுணுப்பானாயின், அவன் எல்லாவற்றுக்குமே முணுமுணுப்பான். முணுமுணுத்துச் சிடுசிடுத்து மிகுந்த துக்ககரமான வாழ்க்கையை அவன் நடந்துவான். அவன் செய்வதெல்லாம் தோல்வியிலேயே முடியும். ஆனால் தனது கடமைகளை மகிழ்வோடு செய்துகொண்டு, பணியாகிய ரதத்தின் சக்கரத்தில் தோள் கொடுத்துத் தள்ளுகிறவன், ஒளியைக் காண்பான். உயர்தரமான கடமைகள் அவன் பங்குக்குக் கிடைக்கும்.
பலனை எதிர்பார்த்து அதில் பற்றுக்கொண்டு வேலை செய்கிற மனிதன் தனக்கு கிடைத்துள்ள கடமையின் தன்மையைப் பற்றி முணுமுணுப்பான். ஆனால் பற்றற்ற ஊழியனுக்கு எல்லாக்கடமைகளுமே ஒரே மாதிரியானவை தான். எந்தக் கடமையானலும் அது சுயநலத்தையும், சிற்றின்பத்தையும் கொன்றுவிடவும், ஆத்மாவுக்கு விடுதலை தேடித்தரவும் திறமைவாய்ந்த கருவியாகவே அமையும்.
முணுமுணுக்கிறவனுக்கு எல்லாக் கடமைகளுமே சுவையற்றவை. எதுவும் அவனை ஒரு போதும் திருப்திப்படுத்தாது. அவனது வாழ்வு முழுவதும் தோல்வி மயமாக ஆவது திண்ணம் நாம் வேலை செய்துக்கொண்டே செல்வோம். நமது கடமையாக எது வந்தெய்கிறதோ அதனைச் செய்துக்கொண்டே செல்வோம். வேலையாகிற சக்கரத்தில் நமது தோள்களைக் கொடுத்துத் தள்ள எப்பொழுதும் ஆயத்தமாக இருந்து கொண்டிருப்போம் அப்படியிருந்தால் நாம் ஒளியைக் கண்டே தீருவோம்.
எந்த வேலையும் அற்பமானதல்ல. தன்னுடைய மனத்துக்குப் பிடித்தமான காரியத்தை ஒரு அடிமுட்டாள் கூடச் செய்துமுடித்து விட முடியும். ஆனால் எந்த வேலையையும் தனக்குப் பிடித்தமானதாக, சுவையுள்ள வேலையாக ஆக்கிக் கொள்கிறவன் புத்திசாலி யெனப்படுவான்.
படித்த இளைஞர்களை ஒன்று திரட்டி இணைக்க வேண்டும்:
படித்த இளைஞர்களிடையே பணிபுரியுங்கள். அவர்களை ஒன்று திரட்டி இணையுங்கள். மகத்தான செயல்களை, மகத்தான தியாகங்களின் மூலமாகவேதான் நிறைவேற்ற முடியும், .வேலை செய்யுங்கள், கற்பனையுள்ள கருத்தை, திட்டத்தை' நடைமுறைப் படுத்துங்கள். எனது வீரமிக்க, உயர்ந்த நல்ல ஆத்மாக்களே! சக்கரத்தில் உங்களது தோளைக் கொடுத்துத் தள்ளுங்கள். பெயர், புகழ் அல்லது வேறு எந்தப் பொருளற்ற விஷயத்தையும் எதிர்ப்ார்த்துத் திரும்பிப் பாராதீர்கள். நில்லாதீாகள் பரிபூரணமாக சமர்ப்பணமாகி வேலை செய்யுங்கள். "புல்லைக்கூடக் கயிறாகத் திரித்துப் பின்னி இணைத்தால் அதைக்கொண்டு மத யானையையும் கட்டிப் போட்டுவிட முடியும்" எனபதை நினைவிற் கொள்ளுங்கள்.

Page 10
ரீ ராமகிருஷ்னரிடம் எனது பிராத்தனை:
உலகக் குருவாகி, உலகமெல்லாம் ஒன்றுதான் என்ற இணைப்புச் செய்தியைப் பிரசாரம் செய்த முரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் உங்க. கி , கமலத்தில் வாசம் செய்ய வேண்டும்; அதன் மூலம் உங்களது விருப்பங்களெல. ஈடேறிய பின்னர் கலங்காத உள்ளத்துடன், மோகமென்னும் பயங்கரமான பெருங் கடலிலிரு. மற்ற மக்களை மீட்க முழு ஆற்றலுடன் நீங்கள் முயல வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
பராக்கிரமம் உங்களை ஆட்கொள்ளட்டும். வீரன்தான் முக்தியை எளிதில் எட்டிப்பிடித்து எய்த முடியும். கோழை அல்ல. வீரர்களே! வரிந்து கச்சை கட்டிக்கொள்ளுங்கள் ஏனெனில் உங்கள் முன் எதிரிகள் நிற்கிறார்கள். மோக வெறியாகிற பயங்கரப் படை முன் நிற்சி” "மகத்தான சாதனைகளுக்கு முட்டுக் கட்டையாக ஏராளமான இடையூறுகள் நிறைந்திருக்கும என்பது உண்மைதான்; சந்தேகமில்லை. இருப்பினும் குறிக்கோளை அடைய முழுச் சக்தியுடன் நீங்கள் முனைய வேண்டும்.
மேலே செல்லுங்கள்! முன்னேறுங்கள்!! வீரமிக்க ஆன்மாக்களே!!! விலங்குகள்: கட்டுண்டுக் கிடக்கிறவர்களை விடுதலை செய்ய, துர்ப்பாக்கியமான நிலையில் வாழ்கிறவர்களுடைய துயரச் சுமையைக் குறைக்க, அறிவீனம் நிறைந்த உள்ளங்களின் காரிருளை நீக்க, ஒளியூட்ட முன்னேறுங்கள் “அச்சமற்றிரு” என்று வேதாந்தக் கொள்கை முரசடித்து உணர்த்துகிறது பாருங்கள்! கம்பீரமான அவ்வொலி உலகில் வாழ்கிற எல்லா மக்களுடைய உள்ளங்களிலுமுள்ள முடிச்சுச் \iசடுக்குகளை அவிழ்த்து விடட்டும்.
ஹிந்துக்களே மயக்கந்தெளிந்து எழுங்கள்:
"உத்திஷ்டத ஜாக்ரத ப்ராப்ய வரான்னிபோதத" - "எழுந்திரு, விழித்திரு, குறிக்கோளை அடையும்வரை நில்லாதே" என்று ஒவ்வொரு ஆத்மாவையும் அறைகூவி அழைப்போம். எழுங்கள்! பலவீனமாகிற இந்த மனமயக்கத்திலிருந்து எழுந்திருங்கள். உண்மையில் எவனுமே பலவீனனல்லன். ஆத்மா முடிவில்லாதது; சர்வசக்தி தான், எல்லாம் உணர்ந்ததாகும். உங்கள் சுயசக்தியை வற்புறுத்துங்கள். உங்களுக்குள் உறைகிற தெய்வத்தை பிரகடனம் பண்ணுங்கள். அவரை மறக்காதீர்கள். அளவுக்கு மீறிய செயலின்மை, வரம்பு கடந்த பலவீனம் மிதமிஞ்சிய மோகன மயக்கம்-இவை நமது இனத்தவரிடையே சூழ்ந்திருந்தது; இன்றும் சூழ்ந்துள்ளது.
இன்றைய ஹிந்துக்களே! தாமாகவே மயக்கந் தெளிந்து எழுந்திருங்கள். அதற்கான வழி உங்கள் புனித நூல்களில் காட்டப்பட்டுள்ளது. உங்களது உண்மையான ஸ்வரூபத்தை நீங்களே கற்றுணருங்கள்; ஒவ்வொருவருக்கும் அவரவர்களது ஸ்வரூபத்தைக் கற்பியுங்கள். உறங்குகிற ஆத்மாவை அறைகூவி அழையுங்கள். எப்படித்தான் அது விழித்தெழுகிறது பாருங்கள்! உறங்குகிற இந்த ஆத்மா விழித்தெழுந்து வேலை செய்யத் தொடங்கினால் சக்தி புகழ் ஓங்கும்: நல்ல குணங்களெல்லாம் தோன்றும் மிகச் சிறந்தவையெல்லாமே வந்தெய்தும்.
மீண்டும் இளமைத் துடிப்புப் பெற்ற, புகழ் ஓங்கிய .
வருங்காலத்துக்குள் நான் புகுந்து பார்க்கவில்லை. அதில் எனக்கு அக்கறையுமில்லை. ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத்தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன். புராதனமான அன்னை மீண்டும் எழுந்து விட்டாள். தனது அரியணையில் அமர்ந்திருக்கிறாள். மீண்டும் இளமையெழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்து கொண்டிருக்கிறாள். சாந்தியும், அருளும் கலந்த மொழியால் உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்.


Page 11