கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாணிக்கவாசகம்

Page 1
I
 


Page 2


Page 3

gw WS மெளனத்தின் ஞானசிகரம்
எங்கள் குருநாதன்
திருவடிகள் காணிக்கை எங்கள் கண்ணிரே

Page 4

மலரின் உள்ளே. பக்கம்
அருள்ஞானவுரை O1 முகவுரை 02 மதிப்புரை 04 ஆசியுரை 05 பூரீராமஜெயம் 06 விநாயகருக்கும் காரைக்கால் அம்மையாருக்கும் பேரானந்தப் பேறளித்த மாம்பழத்தின் மகிமை O7 கொடிக்கவி 10 தில்லையும் திருவாசகமும் திருக்கோவையாரும் 13 திருவாதிரையும் தில்லை நடனமும் 15 பூரீ திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை சைவத்தின் மூலவேராகப் போற்றுதல் வேண்டும் 17 “மனித்தப் பிறவியும் வேண்டுவன் யான்” என இறைவனை இறைஞ்சிய நாவுக்கரசர் 21 சுந்தரருக்கு நந்தம ஊரனென்று நவிலரும் பேறளித்தான் 26 பொய்யில் கிடந்து புரளாதே போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உண்டயான கழல் புகவே 30 குன்றமெறிந்த குமரனுக்கு குவலயமெங்கும் புகழ் சேர்த்தார் 34 வேலை வற்ற வேல் விடுத்த வேலவன் தாள் பணிந்தார்க்கில்லை இடர் 39 மிக்க வேதியன் வேதத்தின் உட்பொருள்” 43 “சுவர்க்க வாசல்”ழரீவைகுண்ட ஏகாதசி 46 பூரீராமஜெயம் 50 பூபாரம் தீர்க்கப் பிறந்தான் புயல் வண்ணன் 55 நாராயணன் நல்லாசி வழங்கிய வைகுண்ட ஏகாதசி 60 நவராத்திரி பூஜை ஆரம்பமான வரலாறு 64 கந்தன் அருள்பெற கந்தசஷ்டி 69 வைச வைஷ்ணவ பேதம் 72 சிவயோக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நற்சிந்தனையின் சாரமாக விளங்கிய பாடல் 74 தாயாகி தந்தையாகிப் போற்றி 76 nator.g.U.Pope MA DD 556). Tafsh 79
சனி விரதம் 82

Page 5
அருள்ஞானவுரை
நூலறிவுடை வாலறிவன் நற்றான் தொழுவார்கள். இந்நூலில் வரும் விடயங்கள் நூல்களில் கூறப்பட்டிருப்பினும் வாசிப்போர் உள்ளங்களில் நன்கு பதியக்கூடிய முறையில் இலகுவாகவும், விளக்கமாகவும் வந்துள்ளன.
ஆன்மீக தத்துவங்களை அனைவரும் எளிதில் விளங்கத் தக்கனவாயும், உள்ளங்களில் பதிக்கத்தக்கனவாயும் ஆசிரியர் இலகு வாக்கி அமைத்துள்ள தன்மை யாவரையும் இன்புறச் செய்கின்றன. காரைக்காலம்மையார் வரலாறும், நான்கு சமய குரவர்கள், குரு பூசையும் சிவனடிக் கன்மை மேன்மேலும் செலுத்தவும்.
நாயன்மார் குருபூசை வேளைகளில் படித்துச் சுவைக்க உதவியாக அமைந்த அடியார் வரலாறுகள் நம்மாழ்வார், நவராத்திரி பூசைகளும் மிகச் சிறப்புற அமைந்துள்ளன. பாமரரும் படித்து விளங்கக்கூடிய நடையில் யாதம் அமைந்தது போற்றுதற்குரியனவே.
அடியார் உறவும் அரன்பூசை நேயமும் அன்றி இவ்வுலகில் ஆன்மாக் களுக்கு வேறு பணியுமுளதோ. எனவே இவ்விரண்டு பண்புகளையும் இப்படியான நூல்களை வாசிப்பவர்களுக்கு எளிதில் கைவரும் என்பதில் சற்றேனும் ஐயமுளதோ?
ஆசிரியர் முயன்று வடித்தெடுத்துத் தந்த நுண் பொருள்களை
யாவரும் படித்துப் பயன் பெறுவார்களாக. சைவ வைஷ்ணவ மக்கள்
இறையுணர்ஆன்மீக முன்னேற்றம் அடைவார்கள்.
01

முகவுரை
காலத்துக்குக் காலம் 'வலம்புரி நாளிதழில் நான் எழுதி வந்த தெய்வீகக் கட்டுரைகளைத் தொடர்ந்து நூல் வடிவில் வெளியிட்டால் சைவ, வைஷ்ணவப் பெருமக்களுக்கு பெரும் பயன் விளைவிப்பதாக அமையுமென வாசகர்கள் பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அக்கட்டுரைகளைத் தொகுத்து "மாணிக்க வாசகம்" என்ற பெயரில் நூல் வடிவில் சைவ வைணவ பெருமக்களின் பார்வைக்காகச்
சமர்ப்பிக்கின்றேன்.
காலம் உண்டாக காதல்வெய்து உயமின், கண்ணை துயிர் அவலத்தை போக்காதே
என்ற திருவாசகத்தை சொல்லி பக்தி இலக்கியங்களின் சுவையையும் அவை கூறும் தத்துவக் கருத்துக்களையும் மக்கல் மெல்ல மெல்ல மறந்து திரைப்படம், தொலைக்காட்சி, திரைப்படப் பாடல்கள் என்பவற்றில் ஈடுபாடு கொண்டுவரும் இக்காலகட்டத்திலே அத்தைகையோர் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற பெருவிருப்புடனேயே நான் இக்கட்டுரையை எழுத திருவருள் முன்னின்றது.
இச்சிறு நூலிலே சமய குரவர்கள், நம்மாழ்வார், அருணகிரிநாதர், தேவி வழிபாடு, பாரதகிருஷ்ணர் அறிவுரைகள், வைகுண்ட ஏகாதசி முதலியன பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இந்நூல் ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய அரும் பொக்கிஷம். இந்நூல் உங்கள் கையில் இருந்தால் நேர்மையான வாழ்வு, அறிவு, உண்டாகும். பகைகள் நீங்கும். பிறந்ததன் பயனைப் பெற்று நிறைவான பெருவாழ்வு கிட்டும். சிந்தனையில் மாற்றங்களை உண்டாக்கும். பத்தி இலக்கியங்களைத் தேடிப் படிக்க வேண்டுமென்ற
ஆவல் பிறக்கும்.
lo2

Page 6
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை வலம்புரி யில் வெளியிட்ட நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்ற திரு. ரங்கநாதன் ஜீவராஜா அவர்கள், லிங்கம் கிறீம்ஹவுஸ் உரிமை யாளர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்கள், வி.எம்.கே.ஜுவலர்ஸ், நியூகல்யாணி ஜீவல்லஸ், நியூ ஸ்ரார் ஜிவலர்ஸ், பூனிமுருகன் ஜுவல்லர்ஸ், வேணி களஞ்சியம், ஈ.எஸ்.பேரம்பலம், கே.கே.கந்தையாபிள்ளை அன்சன்ஸ் ஆகியோர்களுக்கு நன்றிக் கடனுடையேன். அவர்களது ஆசியும் அருளுரையும் இல்லா விடில் இத்துறையில் நான் ஈடுபட்டிருக்கவே (Upt qu'ITol.
எனது கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதியைப் படித்து, செதுக்கி செப்பனிட்டுதவிய - வலம்புரி நிர்வாக உத்தியோகத்தர் பொன்.இராசதுரை அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடப்பாடுடை யேன். அவரவர்தமதம அறிவறி வகை வகை அவரவர் இறைவர் என அடைந்திடுவர் அவரவர் இறைவர் குறைவிலர் இறைவன் அவரவர் விதிவழி அடைய நின்றனரே
(திருவாய்மொழிநம்மாழ்வார்)
திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் பேராசிரியர் ஜி.யு.போப்-ஐயர் அவர்களாலே திருவாசகம் மேற்கு நாடுகளிற்கும் பரவியது.
சைவத்தின் பெருமையாய் விளங்கும் திவ்விய பிரபந்த உரை ஆசிரியரும் திருப்புகழ் ஆய்வாளரும் திருவாய்மொழி உபவாசகரும் திருவாசக மணி கந்தசாமி மாணிக்கவாசகர்.
ஜி.U.Popeவுடைய உரையும் இந்நூலில் அடங்கியுள்ளது. இதில் குற்றம் குறையிருந்தால் அதை பொருட்படுத்தாமல் இருக்கவும்.
I03

மதிப்புரை
"மாணிக்க வாசகம்” ஆன்மீக கட்டுரைகளின் மதிப்பற்ற ஒரு தொகுப்பாகும். வாசகர்களிடம் இந்து மதத்தின் பால் மிகவும் ஆர்வத்தை தூண்டக் கூடிய அற்புதமான கருத்துக்களையும், வரலாற்றுச் சிறப்புக்களையும் அநுபூதி மான்களின் திவ்வியமான பாடல்களையும் தன்னகத்தே கொண்டது. திருவாசக மணி, மாணிக்க வாசகர் ஒரு மூத்த பழுத்த இறை பணியாளரும் பக்தனுமாவார். இவரின் கருத்துக்கள் சைவத்திற்கும் வைஷ்ணவத்திற்கும் ஒரு நல்ல பாலமாக அமைந்து இந்து மதத்திற்கு சிறப்புச்சேர்க்கின்றன.
அவர் மாணிக்கவாச சுவாமிகளின் அபிமானியும் சீடருமாவார். அதேவேளை நம்மாழ்வாரின் அடியாரும் பக்தருமாவார். மதுரகவி ஆழ்வார் தான் நம்முடன் வாழ்ந்து நம்மாழ்வாரின் திருவாய் மொழியினை சிறப்புடன் உரைக்க திருவாசக மணியார் அவதரித் துள்ளாரோ என்று வியக்கும் அளவு நம்மாழ்வாரின் மீதான இவரின் பக்தி சொல்லிஉரைக்க முடியாதது எல்லாம் புகழும் இறைவனுக்கே.
கலாநிதி சிவக்கொழுந்து முநீசற்குணராஜா தலைவர், கணித புள்ளி விபரவியற்துறை யாழ்.பல்கலைக்கழம்.
lo4

Page 7
ஆசியுரை
திருவாய் மொழி உபாசகரும் திருப்புகழ் ஆய்வாளரும் திருவாசகமணி கந்தசாமி மணிக்கவாசகர் அவர்கள் எழுதியதும் தொகுத்ததுமாகிய மாணிக்கவாசகம் என்னும் நூல் இந்துசமய ஆய்வுக் கட்டுண்ரயாகும். இதில் சமய குரவர்களுடைய குரு பூசையும், வைஷ்ணவ நம்மாழ்வார் ஐயந்தி கட்டுரையும் கிருஷ்ண பரமாத்மா ஐயந்தியும் வைகுந்த ஏகாதசி விஷயங்களையும் நவராத்திரிபூஜையின் மகிமையையும், கந்தசஷ்டி விரதத்தின் மகிமையையும் தில்லை திருவாசகம், திருக்கோவை யார் அதோடு திருவாதிரையும் தில்லைக்கூத்தன் நடனமும் மாம்பழத்தின் வரலாறும் விநாயகரும், காரைக்கால் அம்மை மகிமையும் அடங்கும். ஆதியும் இறுதியுமாகிய பூஞரீ ராம நாமத்தின் ரா வென்ருவும். நமச்சிவாய மந்திரத்தின் மவும் நாராயண நாமத்திய உருவாகிய நாமம் பூரீராம நாமம். தியாகராச சுவாமிகள் எவரெனி என்ற கீர்த்தனையில் இதை குறிப்பிட்டு இருக்கிறார். இந்து சமயம், வைஷ்ணவ சமயத்தையும், சைவ சமயத்தையும் பேதமின்றி ஒருங்கிணைத்தது. இந்த நூலை அடியார்கள் படித்தால் அறிவு பெருகும். முத்தியும் அடையலாம். இந்நூல் சிறப்புறவும், அவரின் ஆயுள் மேம்படவும் நான் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கின்றேன்.
தலைவர் வட பிரதேச இந்துப்பேரவை லயன் சு.நித்தியானந்தன் (சமாதான நீதவான்)
|05

(C)

Page 8

பூநீராமஜெயம்
எனது வாழ்நாளில் நான் எண்ணி வந்த வயது முதிர்ந்த பெரியார்கள் பலரைச் சந்தித்துள்ள போதிலும் அவர்களுள் ஒருவரா வது பெரியார் க. மாணிக்கவாசகரைப் போல திருவாசகத்துக்கும், திவ்ய பிரபந்தத்துக்கும் பாமரர்கள் கூட விளங்கக் கூடிய வகையில் விளக்கம்
கூறுபவர்களாக அமையவில்லை.
இவர் நம்மாழ்வாரின் திருவாய்மொழிகளை கரைந்த பாடமாக மனனஞ் செய்ததோடல்லாமல் அவற்றுக்கு விளக்கம் சொல்லக்கூடிய வருமாவார். இவர் பிறப்பிலே சைவராக இருந்தாலும் வைணவ சம்பிரதாயங்களைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால் வைணவ
சமூகத்தினராலும் மதிக்கப்படும்பேறுபெற்றவர்.
இவர் காலத்துக்குக் காலம் "வலம்புரி" பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள் "மாணிக்கவாசகம்" என்ற பெயரில் நூல் வடிவில் வெளிவருவதையிட்டுப் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். இந்நூல் சமய அறிவைத் தேடும் அனைவருக்கும் சிறந்த கைநூலாக விளங்கும் என்பது என் கருத்து. இந்நூல் மாணவர்களின் அறிவு விருத்திக்கு உறுதுணையாக நிற்கும். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்ற பெரியார். மாணிக்கவாசகர் யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, மத்தியகல்லூரியின் பழைய மாணவர் என்பதும் எனது தந்தையுடன் சேர்ந்து கல்வி கற்றவர் என்பதையறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
மாணிக்கவாசகரின் சேவை நாட்டுத் தேவை எனக் கூறுவதுடன்
அவரது மாணிக்கவாசகம் என்ற நூலை ஒவ்வொரு சைவ, வைணவ
சமயத்தவர்களும் படித்துப் பெரும் பயனடைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
முத்துக்குமாரசாமி சிவலோகநாதன்
முன்னாள் தலைவர்.
வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்.
lo6

Page 9
விநாயகருக்கும் காரைக்கால் அம்மையாருக்கும் பேரானந்தப் பேறளித்த மாம்பழத்தின் மகிமை
ஒரு மாம்பழம் "கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய கும ரனை" கோவனாண்டியாக்கியது. இன்னொரு மாம்பழம் கணவனைக் கண்கண்ட தெய்வமாகப் போற்றியொழுகிய காரிகை ஒருத்தியை பேயுருவம் கொண்ட பக்தையாக மாற்றியது என்ற சம்பவங்களைச்
சைவப் புராண வரலாறுகளில் காணக் கூடியதாக இருக்கிறது.
நாரத முனிவரால் கையில் கிரிக்குக் கொண்டுவரப்பட்ட மாம்பழத்தை எலிவாகனனுக்கா அல்லது மயில்வாகனனுக்கா கொடுப்பது என்று ஏற்பட்ட சர்ச்சையில் உலகை முதலில் சுற்றி வருபவருக்கே மாங்கனி என எடுக்கப்பட்ட முடிவையடுத்து வேலவன் மயிலில் ஏறிப் புறப்பட, ஆனைமுகத்தோன் எலியிலேறி மயிலை வெல்ல முடியுமா என்று அரற்ற, அம்மையப்பனை வலம் வருவது உலகைச் சுற்றுவதற்குச் சமன் என்ற நாரதர் உபதேசத்திற்கமைய தாய் தந்தையரை வலம் வந்து மாங்கனியைப் பெற்று அதனைச் சுவைத் துண்ணத் தொடங்கினார். அப்பொழுது உலகை வலம் வந்து திரும்பிய வேலவன் மாங்கனி விநாயகன் கையிலிருப்பதைக் கண்டு வெகுண்டு தன் ஆடை, ஆபரண அலங்காரங்களைத் துறந்து கோவனாண்டியாக பழனிமலையில் உறைந்திருந்தார். நீயே பழமாக இருக்கிறாய் பழம் நீ அல்லவா, உனக்கு ஏன் பழனியில் ஆண்டிக் கோலம் என உமாதேவியார் இரந்து கூறியும் முருகனின் கோபம் ஆறவில்லை என்பதும் பின்னர் ஒளவையாரின் முயற்சியால் அவர் கோபம் தணிந்தது என்பதும் ஒரு மாங்கனியால் ஏற்பட்ட புராணக் கதை.
நல்லூர்த் திருவிழாக் காலத்தில் ஒருமுகத்திருவிழாவும் சப்பரத் திருவிழாவுக்கு முதல் நாள் மாம்பழத் திருவிழாவன்று பகல் பழனி ஆண்டவர் உற்சவம் நடைபெற்று வருவது இதற்கு ஆதாரபூர்வமான அத்தாட்சியாகும்.
107

காரைக்கால் பதியிலே பிறந்த புனிதவதியார் என்ற பெண்ணிற்கு அவ்வூரைச் சேர்ந்த பரமதத்தன் என்ற வணிகனை மணந்து இல்லறமாம் நல்லறத்தை மேற்கொண்டிருந்த காலத்தில், ஒரு நாள் பரமதத்தன் தனக்குக் கிடைத்த இரு மாம்பழங்களை மதிய உணவின்போது உண்பதற்காக புனிதவதி யாரிடம் சேர்ப்பித்தான். புனிதவதியாரின் தெய்வபக்தியையும் பதிபக்தியையும் உலகுக் குணர்த்த விரும்பிய தில்லைக்கூத்தன், முதிய சிவனடியார் உருவில் புனிதவதியார் இல்லம் சென்று பசிக்கு உணவிடுமாறு கூற, உணவு தயாராக வில்லையே எனப் புனிதவதியார் வருந்தினார். உனது கணவன் அனுப்பிய மாம்பழங்களில் ஒன்றை எனக்கு ஈந்தால் என் பசி தீரும் எனச் சிவனடியார் கூற இப்பழங்களில் தனக்கு ஒன்று என்ற எண்ணத்துடன் புனிதவதியார் ஒரு பழத்தை சிவனடியாருக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.
மதிய உணவுக்காக வீடு திரும்பியதனதத்தன் மனைவி அளித்த மாம்பழத்தை உண்டு அதன் சுவையால் கவரப்பட்டு மற்றப் பழத்தையும் கொண்டு வரும்படி கூற, உண்மையைக் கணவனிடம் கூற முடியாத நிலையில் புனிதவதியார் இறைவனைப் பிரார்த்திக்க அவனருளால் இன்சுவை மாம்பழமொன்று அவன் கரத்தை வந்தடை ந்தது. அப்பழத்தை உண்டு அதன் சுவையில் பேரானந்தமடைந்த பரமதத்தன் இது நான் அனுப்பிய மாம்பழம் அல்ல எனக் கூற, புனிதவதியார் உண்மையை விட்டுரைத்தார். அதனை நம்பாத பரமதத்தன் அப்படியானால் அவனருளால் இன்னொரு பழம்பெற்றுத் தா என, அவ்வாறே பெற்ற பழம் அவன் கரத்தில் கொடுக்கப் பட்டதும் மறைந்தது இறையருள் கண்ட பரமதத்தன், தனது மனைவி ஒரு தெய்வப் பெண்; இவளுடன் இல்லறம் நடத்துவது பாவம் எனக் கருதி அவளைவிட்டகன்றான்.
தனது கணவனுக்கென அர்ப்பணிக்கப்பட்ட எனது தேகம் எனக்குத் தேவையில்லை; எனக்கு பேய் உரு அருள் என இறைவனை வேண்டி பேயுரு அடைந்தார். திருவாலங் காட்டிலே இறைவனது திரு நடனத்தைக் கண்டு மகிழ வேண்டுமென தலையாலே நடந்து சென்ற I08

Page 10
புனிதவதியாரை இறைவன் அம்மையே என அழைத்து தனது பக்கத்தில் இருக்கும் பேற்றை அளித்தார். இதனை சேக்கிழார் பெரிய புராணத்திலே,
"இறவாத இன்ப அன்பு வேண்டியபின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் இறைவா நீ ஆடும் போது உன் அடிக்குள் இருக்க.
எனக் கூறியுள்ளார்.
Io9

கொடிக்கவி
திருவிழாக் காலங்களிலே கொடியேற்று வைபவம் இந்து சமய ஆலயங்களிலே கொடிக்கவி பாடுவது வழக்கமாக இருந்தது. இப்போது கொடிக்கவி சில கோயில்களில் தான் பாடி வருகின்றன. இதனுடைய வரலாற்றை நாம் உற்று பார்க்கும் போது முதன்முதலாக கோயில்களுக்கெல்லாம் தலைமையான சிதம்பரத்தில் கொடிக்கவி பாடப்பட்டு, தானாகக் கொடியேறிய அதிசய சம்பவம் நடைபெற்றது. இதனுடைய வரலாற்றை அறியவேண்டிய கடமை எனக்குண்டு.
தில்லை மூவாயிரர் காலத்திலே உமாபதி சிவாச்சாரியார் பூசைக்கு உகந்தவராக எல்லோரும் நியமித்தனர். இவர் ஒருமுறை பூசை முடிந்து பல்லக்கில் ஏறி, ஆலவட்டம், தீபம் என்பவற்றுடன் கொற்றங்குடி என்னும் தனது இருப்பிடத்துக்கு செல்லும் போது சந்தானகுரவர் ஆகிய மறைஞான சம்பந்தர் இந்தக் காட்சியை கண்டு "பட்டகட்டையில் பகல் குருடு போகுது” என்று சொன்னார் இதைக் கேட்ட உமாபதி சிவாச்சாரியார் உடனே பல்லக்கை விட்டு இறங்கி மறைஞான சம்பந்தர் பின் சென்றார். அங்கே தாகம் ஏற்பட்ட போது நூலுக்கு கஞ்சி காய்ச்சும் இடத்திற்குச் சென்று தண்ணீர் தாருங்கள் என மறைஞான சம்பந்தர் கேட்டார். அப்போது அவர்கள் நூலுக்கு போடும் கஞ்சிதான் உண்டு என்றனர். அதையேனும் தாருங்கள் என்று கேட்டு இரண்டு கையாலும் குடிக்க அவரது முழங்கையால் ஒழுகிய கஞ்சியை உமாபதி சிவாச்சாரியார் அருந்தினார். அவரது உபதேசம் பெற்றார்.
இதையறிந்த தில்லை மூவாயிரர் தங்களது தகைமைக்கு கீழ்ப்பட்ட குருவை சேர்ந்ததால் இவரைத் தமது பூசை நியமனத்தில் இருந்து நிறுத்தினார்கள். உமாபதி சிவாச்சாரியார் தமது இடமான கொற்றங்குடிக்கு போய்ச்சேர்ந்தார்.
இப்படியாக இருக்கும் கால் தில்லை மூவாயிரர் சிதம்பரத்துக்கு முதன்முதலாக கொடியேற்றி திருவிழாச் செய்ய வேண்டும் என தீர்மானித்தனர். அவர்கள் திருவிழாவை நடத்தும் போது கொடியேற முடியாத அதிசயத்தை கண்டார். தில்லை
|10

Page 11
மூவாயிரர்கள் கொடியேறாததற்கு எதாவது தோஷம் இருக்குமோ என நினைத்தனர். இப்படியாக எல்லோரும் மனம் தளர்ந்து கலங்கி போன நிலையில் ஓர் அசரீதியாக ஓர் வாக்கு கேட்டது. அதாவது உமாபதி வந்தால் மட்டுமே கொடியேறும் எனக் கேட்டது.
இவர்கள் தில்லை மூவாயிரர் தங்களது பிழைகளை உணர்ந்து பல்லக்குடன் கொற்றங்குடிக்கு சென்று உமாபதி சிவாச்சாரியாருக்கு மன்னிப்புக் கேட்டு. அசரீதி வந்ததைக் கூறி அவரை அழைத்து வந்து சிதம்பரத்தில் கொடியேற்றி வைத்தனர். உமாபதி சிவாச்சாரியார் உள்ளம் உருகி, மெய்தான் அரும்பி. விதிவிதித்து உள்ளம் எங்கு புழாகிதம் அடைந்து கைதான் தலைவைத்து கண்ணிர் அரும்பி, தில்லைக்கூத்தனை இதயத்தில் வைத்துக் கொடிக்கவி பாடினார். ஒரு விருத்தமும், மூன்று வெண்பாவும் பாடினார் கொடிக்கவி பாடி முடிந்தவுடன் கொடியேறிய வைபவத்தைக் கண்டு எல்லோரும் வியந்தனர். எல்லோரும் உமாபதி சிவாச்சாரியாரின் திருவடியை வணங்கி ஆனந்தக் கண்ணிர் வடித்தனர்.
-கொடிக்கவி1) ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் ஒன்று மேலிடில் ஒன்று ஒளிக்கும் எனினும் இருள் அடராது உள்ளுயிர்க் குயிர் திகந்துள்ளதேனும் திருமணத்தால் குளிக்கும் உயிர்க்கு அருள் கூட்டும் படிகொடி கட்டினனே.
2) பொருளாய் பொருளேது போதேது கண்ணே இருளாம் வெளியே இரவேது கண்ணே - அருளாள நீ புறவா வையம் எல்லாம் அறியக் கட்டினேன் கோபுர வாசல் கொடி
3) வாக்காரும் மிக்கமனத்தாகும் எக்காரும் தக்கதுணர்வறிய தன்மையினை - நோக்கி புறித்தறிவு தன்மை பிரியாமை தானே குறிக்கும் அறிநல்கக் கொடி
4) ஐந்தெழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும் - நெஞ்சலுத்தி பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும் கூசாமல் கட்டக் கொடி
111

மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகத்தில் திருத்தசாங்கத்திலே பெருமானுக்கு பத்தம்சங்களில் கொடியினுடைய திறமையை பாடியுள்ளார். அதாவது,
சோலைப்பசுங்கிளியே தூர் நிர்பெருந்துரைக்கோன் கோரம் பொரியும் கொடி கூறாய் - சாலவும் ஏதிலார்தின்னென்ன மேல் விளங்கியேர் காட்டும் கொதிலா ஏறாங்கொடி
இவ்விதமாக கொடியேற்று வைபவத்தில் கொடிக்கவி பாடி கொடியேற்றினால் நாட்டிலுள்ள பிணி, வறுமை, எல்லாம் நீங்கி மக்கள் சுபீட்சமாக வாழலாம் என்பதை கொடிக்கவி உணர்த்து கின்றது. இது நாம் உமாபதி சிவாச்சாரியாருக்கு செய்யும் நன்றி பிரதி உபகாரமாகும்.
மேலும் திருமூலநாயனாரின் காலத்தில் அவர் அருளிய திருமந்திரத்தில் கொடியேற்ற நிகழ்வை ஞான நிலையில் வைத்து பார்த்துள்ளார். இதில் குண்டலசக்தி, மூலாதாரம் தொடங்கி சுவாதித்தானம் மணிபூரமம், விசித்தி, ஆஞ்ஞை, சகஸ்ரம் இதை ஆங்கிலத்தில் (Surpent Power) என்று அழைப்பார். இதற்கு அவர் அருளிய திருமந்திரம்.
மேலைநிலத்தில் மேதகு பெண்ணே மூலநிலத்தில் முலைத்திடும் ஜோதியே. ஏல எழுப்பிஇசைந்து இசைந்து சந்திக்க பாலரும் ஆவார்பானந்தியானையே.
இதை நோக்குமிடத்து கொடியேற்ற திருவிழா தொடங்கி இறுதியான தேர் தீர்த்தத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது. இப்பாடல் மேலும் உமாபதி சிவாச்சாரியார் அருளிய கொடிக்கவியையும் மனனம் செய்து வாக்காலும் மனத்தாலும் இறைவனை வேண்டிக் கொண்டு, திருமூலரின் திருமந்திரத்தையும் ஒக்க நோக்குக.
12

Page 12
தில்லையும் திருவாசகமும் திருக்கோவையாரும்
தில்லை பாதி திருவாசகம் பாதி என்று அறிஞர்கள் சொல்வதுண்டு. ஏனெனின் ஐம்பத்தொரு திருவாசகப் பதிகங்களிலே பாதிப் பதிகங்கள் தில்லைக்கும் மறுபாதி திருப்பெருந்துறை உத்தரகோசங்கை, தோணிபுரம், திருவண்ணாமலை, திருவாரூர், திருக்கழு குன்றம், திருக்க முறையும் ஆகிய ஆலயங்களுக்கும் பாடி யவை இவ்வளவு பாடல்களும் தில்லையிலையே முற்றுப்பெற்றன. திருக்கோவையார், பாவை பாடிய வாயால் கோவைபாடுக என்ற தனாலே மாணிக்கவாசக சுவாமிகள் தில்லைச்சிற்றம்பல கோவையாக 25 இன்ப நிலை பதிகங்கள் அமைந்துள்ளது. இதை தலைவன் தலைவியாக 25 பதிக்கைகளையும் பாடிய பேரின்ப வெள்ளத்தில் அமையப் பெற்றது. இந்த தில்லை தலம் 51 ஏக்கர் நிலத்திலே அமைந்துள்ளது. நான்கு பெரும் கோபுரங்களும் 13 நிலைகளைக் கொண்டது. இக்கோபுரத்தை அரசர்கள் கட்டி வித்தார்கள். கிழக்கு கோபுரம் கட்டிய கிருஷ்ண தேவர் கணக்கு பார்த்துவிட்டார் என்றமையால் இறைவன் அக்கோபுரத்தினால் தன்னை கொண்டு செல்ல வேண்டாமென்று அர்ச்சகரிடம் கனவில் வந்து கூறினார். இப்பொழுது பக்கத்து சுவர்களின் இடைப் பாதையில்தான் இறை வனைக் கொண்டு செல்வார்கள். தில்லை நடராஜர் இருக்கின்ற சிற்சபை பாரந்தச்சோழனால் கட்டுவிக்கப்பட்டது. இதிலே 21,600 பொன் ஒடுகளும் 7200 தங்க ஆணிகளும் மேயப்பட்ட அந்த சிற்சபை இப்பவும் ஒளிமயமாக இருக்கின்றது. இதில் 64 திராந்திகளும் 9 கலசங்களும் அமைந்துள்ளது. இதில் 64 திராந்திகளும் 64 கலைகளை குறிக்கின்றது. ஒரு நாளைக்கு ஒவ்வொருவரும் விடும் மூச்சு 21600 ஆகவும் 7200 நரம்பு நாடிகளும் அமைவதாக இது அமைந்துள்ளது. இனி இதிலேகோயிலுக்கு கிழக்கு வாசலால் செல்லும் படிக்கள் 21ஆம் நடுவிலே தாமரைப்பு அமைந்த தோற்றமும் காணப்படுகின்றது. ஏனெனில் திருவாசகத்திலே 21ஆவது பதிகம் கோயில் மூத்த திருப்பதிகம் அத்துப் பதிகம் முழுவது பொன்னம்பலத்தையே
I13

சுட்டிக்காட்டி பாடப் பெற்றுள்ளது. இங்கு ஆறுபெரும் அபிஷேகங் கள் நடைபெறும். இதில் முக்கியமாக ஆனி திருமஞ்சனமும், ஆரூத்ர அபிஷேகங்களும் முக்கியமானவை. நினைத்து பார்க்க முடியாதவாறு அபிஷேகங்கள் அமைகின்றன. குடம் குடமாக பாலும், தேனும், மலைபோல இளநீருமாக இருக்கும்.
இதைத்தான் சிதம்பரத்தில் முத்தி என்பார்கள் இந்தக் காட்சியை திருநாவுக்கரச நாயனார் ‘குனித்த புருவம்.” என்ற தேவாரத்தில் விளக்கியுள்ளார்.
இங்கு கட்டுத்தேர்கள் காணப்படும். இங்கு ஆயிரங்கால் மண்டபங்களும் உள்ளன. இந்த தலத்திற்கு நான்கு சமயகுரவர்களால் பாடல் பெற்ற தலமாகும்.
சுந்தரமூர்த்திநாயனார் தனது திருத்தொண்டர் தொகையிலே "தில்லை வாழ் அந்தணர் தம். அடியாருக்கு அடியார்.” என்று தேவாரத்தை முதலில் தொடங்கியுள்ளார்.
திருவாதிரை நாளில் தான் திருநாளைப் போவார் என்கின்ற நந்தனார் தீக்குளித்துமுத்திபெற்றவர்.
தில்லைச்சிற்றம்பல தலத்தில் இரணியவர்மன் என்கின்ற வருக்கு குஷ்ரரோகம் இருந்தது.அவரது நாய்க்கும் இருந்தது.இவர் ஒரு தடவை தில்லைக்கு போனபோது நாய் தவறி சிவகங்கையிலே வீழ்ந்த போது குஷ்ரரோகம் மாறப்பெற்றது. இவரும் வீழ்ந்து குஷ்ரரோகம் மாறப்பெற்றார். இதனால் தில்லைச்சிற்றம்பலத்தை தோற்றுவித்தார்.
குகநாதச்சிவாயாரது சீடன் குரு நமச்சிவாயர் அவரும் தில்லைச் சிற்றம்பலத்தில் திருப்பணி செய்தவர்கள். இதனாலே தில்லைச்சிற்றம் பலம் தமிழருக்கு கோயிலாக விளங்குகின்றது. இந்தக் கோயிலுக்கு உமாபதி சிவாச்சாரியார் கொடிக்கவி Lπιg. முதன்முதலாக கொடி யேறிய தலம் தில்லைச்சிதம்பரம் ஆகும்.
114

Page 13
திருவாதிரையும் தில்லை நடனமும்
ஒவ்வொரு வருடத்திலும் மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற் காலமாகும். இந்தக் காலத்திலே மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம், திருக்கோவையாரில் திருவெண்பாப் பதிகம் முக்கிய மானது. விடிவதற்கு முன்னர் கன்னிப் பெண்கள் ஒவ்வொருவரும் எழுந்து தமது தோழிகளை தட்டி எழுப்பி ஒன்று சேர்ந்து நீராடி தில்லைச் சிற்றம்பலனை எப்பொழுதும் வணங்குவதுண்டு. தில்லைக் கும் திருவண்ணாமலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றமை யால் மாணிக்கவாசகர் திருவெம்பாவையை அருளிச் செய்துள்ளார்.
இதில் தில்லையும் திருவண்ணாமலையும் முக்கிய இடம்பெறுகின்றது.
மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் கன்னிப் பெண்கள் நீராடச் செல்வதைக் கண்டு ஆனந்தமுற்று திருவெண்பா வையை அருளிச் செய்துள்ளார். திருவெண்பாவையில் புகுத்திய கருத்துக்கள் (ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருந் சோதியே) (கண்ணைதுயின்று அவமே காலத்தை போக்காதே) (ஆடியான் அன்புடமை அமாறும் இவ்வாறோ ஒடி முதல்வனை நின்ற ஒருவனே) (அர்த்த பிறவித் துயரிட நாம் அர்தாகும் தீர்த்தன் நற் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாகும். கூத்தன் இவ்வானும் குவலயமும் காற்றும் படைத்தும் காத்தும் விளையாடி) பேரித்து நம்மை வளர்த்தெடுத்த பேய்வளை) (அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிரைஞ்சும் விண்ணோர் முடி போற்றி அருளுதவிர் ) என்னும் பதிகமும் எங்கள் வாழ்வுக்கு அருங்கருத்தை தழுவியது.
தில்லைச்சிற்றம்பலத்திலே மார்கழி மாதத்திலே திருவாதிரை நாளில் தில்லை நடராஜரை தரிசிப்பது பேரின்ப வெள்ளத்தில் மூழ்கியதாக இருக்கும்.
115

இந்தக் காட்சியை திருநாளைப் போவாராகிய நந்தனார் தன்னை அடிமையாக்கிய வேதியரிடம் (மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகிறது. ஐயே மனதை புண் ஆக்காமல் ஒருதரம் போய்வா என்று சொல் ஐயே கட்டை இருக்கேல் நான் சிதம்பரம் காணவேண்டும் ஐயே) என்று நந்தன் விண்ணப்பிக்க வேதியர் மாடுதின்னும் புலையா உனக்கு சிதம்பரம் என்று சொல்லப்படுமோடா! என்று கோபமாக பேசினார். அப்பொழுது நந்தனார் ஐயே மெத்தக் கடினம் என்று சொல்ல நாற்பது வேலி பூமி இருக்கிறது. அதை விளைவித்து தொலைந்து போடா! என்று பேசினர் அன்று இரவு தில்லைச்சிற்றம்பல நடேசர் நந்தன் கனவிலே உன்னுடைய நாற்பது பூமி விளைந்து அறுவடைசெய்து கட்டியிருக்கிறேன் நீசொல்லிவிட்டு
வாஎன்றார்.
விடிய எழும்பிய உடனே வேதியர் திகைத்துப் போனார். தான் செய்தது தவறு என மன்னிப்பு வேண்டி அவனை வழியனுப்பினார். நந்தனார் ஆனந்தக் கடலிலே மூழ்கி தில்லைச்சிற்றம்பலத்திலே சோதியுட்கலந்தார்.
இந்த தில்லை நடராஜருடைய திரு நடனத்தை வியாக்கிரக
பாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் மாணிக்கவாசகரும் தில்லைக் கூத்தர் நடராஜருடைய கூத்தைக் கண்டுமெய்மறந்தார்கள்.
16

Page 14
பூநீ திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரை சைவத்தின் மூலவேராகப் போற்றுதல் வேண்டும்
வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க பூத பரம்பரை பொலிய புனிதவாய் மொழிற்தெழுத சீதவள வயல் பொலி ஞானசம்பந்தன் பாதமலர் பரவி சைவ நெறி போற்றுவோம்.
சொற்கோபம் தோணிபுரத்தோன் என் சுந்தரனம் சிற்கோலி பாதவூர் தேசிகனும் முற்கோலி வந்தினனேன் நீறு எங்கே மாமரை நூல் எங்கே ஏந்தபிரான் ஐந்தெழுத்தெங்கே.
எழாம் நூற்றாண்டிலே திருமுருகன் திருஅவதாரம் ஆகிய திருஞானசம்பந்தர் அவதரித்தார். இவருடைய சரித்திரம் முழுவதும் எல்லா சைவர்களுக்கும் உணர்த்தப்பட்டு உள்ளதாக தெளிவாக விளங்குகிறது. இவர் காலத்திலே திருநாவுக்கரசு நாயனார், முருக நாயனார், திருநீலயாழ்ப்பாண நாயனார், நீலக்க நாயனார் ஆகியோர் வாழ்ந்தார்கள்.
இவருடைய காலத்திலே சமண மதம், புத்த சமயம் இந்நாட்டிலே தீவிரம் அடைந்த சமயத்திலே சிவபெருமானுடைய திருவருளினாலேயே சமணம், புத்தத்தை நீக்குவதற்காகவும் சைவசமயத்தை சமயாதீனப் பரம்பொருளை விளக்க அவதாரம் செய்தார்.
இவருடைய காலத்திலே பாண்டியமன்னன் ஆகிய கூன் பாண்டியன் இராணி மங்கையற்கரசி சமண சமயத்திற்கு அடிமையாக விளங்கியமையால் மங்கையற்கரசியின் அழைப்பினை ஏற்று வருகை
17

தந்த திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனுடைய வெப்புநோயை நீத்தருளினார். மற்றும் அவருடைய கூனை நிமிர்த்தி சமணர்களுடன் வாதிட்டு வாதத்தின்பின் தோற்றுப் போய் 8000 சமணர்களும் களுவேறினார்கள் (தோற்று நின்றார்கள்). மங்கையற்கரசியாரும் திருஞானசம்பந்தரினைப்பின்பற்றி அவரும் ஒருநாயனார்.ஆனார்.
சமணர்களை சந்திக்க முன் திருநாவுக்கரசர் அவரைத் தடுத்த போது வேயுறு தோளி பங்கன் பாடி அவரைச் சமாதானப் படுத்தி அவரிடம் இருந்து விடைபெற்றுச் சென்றார். வெப்பு நோயைத் தீர்க்க திருநீற்றுப் பதிகம் பாடி அவருடைய வெப்பு நோயைத் நீத்தருளினார். இவருடைய தேவாரங்களில் வேயுறுதோளி பங்கன், மந்திரமாவது நீறு போன்றன முக்கியமானதிருப்பதிகங்கள் ஆகும்.
இவருடைய காலத்தில் சிவனேச செட்டியார் அவர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அதிபதியாய் இருந்தார். தனது புத்திரி பூம்பாவை மணப்பருவம் எய்தியபின் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருக்கு திருமணம் நடத்த உறுதியளித்தார். ஏதோ ஒரு விதியின் பயனாக பூம்பாவை விசம் தீண்டி இறந்தார். சிவனேச செட்டியார் அதிர்ச்சியுற்றவராய் இவருடைய அதாவது பூம்பாவையின் அஸ்தியை ஒரு குடத்தினுள் அடைத்துவைத்திருந்தார்.
இப்படியாய் இருக்கும்கால் திருஞானசம்பந்தர் கபாலி சுரத்திற்குச் சென்றார். அப்போது சிவனேச செட்டியார் அவருடைய அஸ்தியை அவரிடம் காட்டினார்.அப்போதுமட்டிட்டபுன்னை என்ற பதிகத்தைப் பாடி உயிர் பெறச் செய்தார். சிவனேச செட்டியார் பூம்பாவையை தாங்கள் மணம் செய்ய வேண்டும் எனக் கூறினார். அப்போது அவளைத் தம் மகளாக எண்ணிய திருஞானசம்பந்தர் முத்தியைக் கொடுத்தார்.
திருஞானசம்பந்த பெருமானுக்கு முத்துப்பல்லக்கு தாளம், அடியார் கூட்டம் எல்லாம் இறைவனால் கொடுக்கப்பட்டது. இவர் செய்த அற்புதங்களில் திருமருகல் என்ற இடத்திலே விசம் தீண்டி 18

Page 15
இறந்தவரை எழுப்பித்தார். விசம் தீண்டி இறந்தவரின் மாமனார் ஆறு பெண்ணில் ஒருத்தி இவருடன் சென்றார். அப்போது திருமருகல் என்ற ஊரில் உள்ள ஒரு கிணற்றில் நீர் அள்ளியபோது அரவம் தீண்டி இறந்தவேளை அவருடைய மனைவியின் அழுகைக்குரல் கேட்டு அங்கே சென்ற சம்பந்தர் அவரை உயிர் பெறச் செய்து இருவருக்கும் மணம் செய்து அதற்கு சாட்சியாக கிணறு, வன்னிமரம், கோயில் சாட்சியாக வைத்து வாழ்த்தி விடைபெற்றார்.
திருப்பதிகம் பாடி கதவைத் திறக்க வைத்தார். திருமறைக் காட்டிலே திருநாவுக்கரசர் சதுர்மறை என்ற தேவாரம் பாடி பல வருடங்களாக மூடியிருந்த கோயில் கதவை திறக்கவும் மூடவும் செய்து அற்புதம் நிகழ்த்தினார். இதில் திருஞானசம்பந்தரின் செயலைப் போற்றினார்.
இவர் பூவுலகம் வந்து 3 வயதிலேயே சிவகாமியின் ஞானப் பாலினை உண்டதனால் தகப்பன் அவரை அதட்டிய போது வானத்தைப் பார்த்து தோடுடைய செவியன் என்ற பாடலை முதன் முதலாகப் பாடினார்.
இவர் இப்பூவுலகில் 16 வயது மட்டும் இவ்வுலகிலே வாழ்ந்து, சைவத்தின் திறவுகோல் ஆக விளங்கிய இவரை அருணகிரிநாத நாயனார் தனது திருப்புகழில் சமணரை கழுவினில் என்ற திருப்புகழில் இவரை திருமுருக அவதாரம் என்று போற்றிப்பாடினார்.
இவருடைய திருமணம் முற்றுப்பெற்ற பதிகம் திரு நல்லூர்ப் பதிகம் இவர் திருநல்லூர்ப் பதிகம் பாடி சொக்கி என்ற மணப் பெண்ணை திருமங்காதாரம் செய்த வேளை ஒளிப் பிழம்பு ஒன்று தோன்றி அதனுள் திருஞானசம்பந்தரும் சொக்கியும் மற்றும் முருகன் அடியார் அனைவரும் தீயினுள் புகுந்து பேரின்பத்தை அடைந்தனர். இவரின் இறுதிப்பதிகம் திருநல்லூர்திருமணப் பதிகம்.
|19

குறிப்பு:
இவரின் குருபூசை வைகாசிமூலம் இதற்குரிய வெண்பா
சித்தரைய சதயம் அப்பர் சிறந்த வைகாசிமூலம் ஞானசம்பந்தர் ஆனியாமகத்தில் அந்த அருள்வாதாவூரர் அத்தமாம் சோதி நாளில் சுந்தரர் கையிலை சேர்ந்தார்.
இவர்கள் நால்வரில் மூவரும் தேவாரப் பதிகம் பாடினர். மற்றையவர் மாணிக்கவாசக நாயனார் திருவாசகம் திருகோவையாரை
திருவாய் மலர்ந்தருளினார்.
உலகத்தில் 4 பேர் சொன்னபடி இவர்களுடைய தேவார திருப்பதிகங்களைப் பாடிபிறவி நோயினைத் தீர்த்தருளுங்கள்.
20

Page 16
"மனித்தப் பிறவியும் வேண்டுவன் யான்" என இறைவனை இறைஞ்சிய நாவுக்கரசர்
ஆலவாய் அழகன் திருவடி அடையும் பேறே பேரின்பம். மனிதப் பிறவி இனி வேண்டியதில்லையெனப் பலரும் பிரார்த்தனை செய்யும் நேரத்தில், மனிதப் பிறவி ஒரு தடவை அல்ல, பல தடவைகள் வேண்டும் என்கிறார் நாவுக்கரசர். அதற்கும் அவர் ஒரு நிபந்தனையும் விதிக்கிறார்.
குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமுண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!
அப்பனே! உன்னுடைய அழகிய திருக்கோலத்தைக் கண் குளிரக் காணும் பாக்கியம் கிடைக்குமானால் எத்தனை முறையும் மனிதப் பிறவியெடுக்க ஆயத்தமாக இருக்கிறேன் என நெக்குருகக் கூறுகிறார் அவர்.
திருநாவுக்கரசு நாயனாருடைய குருபூசை இன்று செவ்வாய்க் கிழமை சதய நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகின்றது.
"சித்திரைச்சதயம் அப்பர்
சிறந்தவைகாசிமூலம்
அத்தரைப்பணியும் சம்பந்தர்
ஆனிமா மகத்தில் அந்த
முத்தமிழ் வாதவூரர்
அத்தமம்
வோதிநாளில் சுந்தரர்
கைலை சேர்ந்தார்"
121

வாக்குக்கு அருணகிரி
வாதவூரர் கனிவில்
நோக்குக்குநக்கீரன்
தாக்கத்துக்கு
ஞானசம்பந்தர்
நயத்துக்குச்சுந்தரர்,
சொல்லுறுதிக்கு
அப்பர் என்று அறி
என்ற பாடலின் மூலம் சொல்லழகும் பொருளழகும் நிறைந்த தேவாரப் பதிகங்கள் நாவுக்கரசர் நாவிலிருந்தே பிறந்தன என்பது விளங்குகிறது.
ஞானசம்பந்தரின் ஒரு பாடலுக்கு திறந்த திருக்கதவும் நாவுக்கரசரின் பல பதிகங்களுக்கும் மூடப்படாமல் இருந்தற்குக் காரணம், சிவபெருமான் நாவுக்கரசரின் பாடலில் மயங்கிப்போனதே எனவும் கூறுவர்.
திருநாவுக்கரசு நாயனார் என அழைக்கப்படும் அப்பர் சுவாமிகள் 7ஆம் நூற்றாண்டில் திருமுனைப்பாடியில் சீருடையதாய் தந்தை யர்க்குத் தவப்புதல்வனாக அவதரித்தார். திலகவதியார் இவருடன் பிறந்த தமக்கையார். பல்லவ சேனாதிபதியான கலிப்பகையாருக்கும் திலகவதியாருக்கும் திருமணம் செய்யப் பெற்றோர் முடிவுசெய்த நேரத்தில், சாளுக்கியர் படையெடுப்பால் ஏற்பட்ட யுத்தத்தில் கலிப்பகையார் இறந்து விட, திலகவதியாரும் உடன் கட்டை ஏறத் தீர்மானிக்கிறார். தான் இறந்தால் தம்பி தனியனாகத் தவித்துப் போய் விடுவானோ என்ற எண்ண்த்தால் துறவுபூண்டு தம்பியை வளர்த்து
வரலானார்.
தனது உடன்பிறந்தாளின் வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்பட சைவசமயமே காரணம் என்று எண்ணியதால் நாவுக்கரசருக்கு சைவசமயத்தில் வெறுப்பு ஏற்பட, அந்நாளில் பெருவளர்ச்சி பெற்றிருந்த சமண சமயத்தில் சேர்ந்து சமண நூல்களை கற்றுத்தேறி
தருமசேனர் என்ற பெயருடன் பெருவாழ்வு வாழத்தொடங்கினார்.
|22

Page 17
தம்பியார் சமண சமயத்தைச் சார்ந்ததால் மன வேதனையடைந்த திலகவதியார் அவனைத் தடுத்தாட்கொள்ளும்படி திருவீரட்டான த்தில் எழுந்தருளியுள்ள எம்பிரானிடம் முறையிட ஆண்டவன் அருளால் அவரை சூலைநோய் பற்றிக் கொண்டது. சமணர்களது மணி, மந்திர, ஞளடதங்களுக்குக் கட்டுப்படாத சூலை நோயினால், "குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன்" என அரற்றியபடி தமக்கையாரின் காலடியில் உயிரைவிடும் எண்ணத்துடன் வந்த நாவுக்கரசரை உன் நோயைத் தீர்க்கும் அருமருந்து அதோ இருக்கிறது என திருவீரட்டானத்து ஈசனைக்காட்டி அவன் மீது பதிகம்பாடு நோய்தீரும் எனப்பணிக்கிறார் திலகவதியார்.அவரது வாயிலிருந்து,
கூற்றாயின ஆறுவிலக்ககலி" என்ற பதிகம் பிறக்கிறது. பதிகம் பாடி சூலை நோய் நீங்கிய நீ அவர் தனது இளமைப் பெயரான மருள்நீக்கியார் என்ற பெயரையும் சமணர்களால் சூட்டப்பட்ட தருமசேனர் என்ற பெயரையும் துறந்து ஆண்டவன் கட்டளையால் நாவுக்கரசர் ஆகின்றார்.
நாவுக்கரசரது மனமாற்றத்தையும் மத மாற்றத்தையும் கண்டு வெகுண்ட சமணர்கள் அவருக்கு பல தண்டனைகளை விதித்தார்கள். சுண்ணாம்புக் காள்வாயில் போட்டார்கள். மதயானையை ஏவி அவர் தலையை இடறவைக்க முயன்றார்கள். இம் முயற்சிகள் அனைத்தும் தோல்வியுற அவரை கல்லிலே கட்டிக் கடலிலே இட்டார்கள். கடலிலே மூழ்கிய அப்பர்,
சொற்றுனை வேதியன்" என்ற பதிகத்தைப் பாட கல் தெப்பமாக மாறி அவரைக் கரைசேர்த்தது. அவ்விடம் இன்றும் கரையேறிய குப்பம் என அழைக்கப்படுகிறது.
ஆலய வீதிகளில் முளைத்திருக்கும் புல் பூண்டுகளை செதுக்கிச் சுத்தம் செய்யும் திருப்பணியை இவர் செய்யும் போது இவரது உழவாரம் பட்ட கற்கள் எல்லாம் மாணிக்கக் கற்களாக மாறின. "ஒடையும் பொன்னையும் ஒப்பவே நோக்குவார்" என்ற வாசகத்துக்
|23

கிணங்க மாணிக்கக் கற்களையெல்லாம் கூழாங்கற்களாகக் கருதி உழவாரத்தால் ஒரு புறத்தே ஒதுக்கிவிட்டுத் தன் திருப்பணியைத் தொடர்ந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்திலேதான்"பண்டுசெய்த பழவினையின் பயன் கண்டுகண்டுகளித்திகாண்நெஞ்சமே வண்டுலாவிய செஞ்சடை அம்பலவன் தொண்டனாய் திரிவாய் தயர்தீரவே"
என்ற பதிகம் பிறந்தது.
81 வயதுவரை வாழ்ந்த இவர், இத்தள்ளாத காலத்திலும் என்னை ஆட்கொண்டருளத் திருவுளம் இரங்கவில்லையா என முறையிட்ட தற்கு நாவுக்கரச நின் பதிகங்களைக் கேட்டுக் கேட்டுச் சுவைக்க வேண்டுமென்ற ஆசையால் தான் உன்னை நீண்டகாலம் வாழ வைத்தேன்' என இறைவன் அருளியதாக வரலாறு கூறுகிறது.
இவருடைய காலத்திலே வாழ்ந்த அப்பூதியடிகள் என்பவர் நாவுக்கரசு நாயனார்மீது கொண்ட பக்தியால் தனது மகன், வீடு, தான் நடத்திய தண்ணீர்ப்பந்தல் அனைத்துக்கும் நாவுக்கரசர் என்று பெயரிட்டு மகிழ்ந்து வந்தார். தனது ஊருக்கு வருகை தந்த நாவுக்கரசரை தனது வீட்டில் உணவுண்ண அழைத்த அப்பூதியடிகள், வாழையிலை நறுக்கி வரும்படிமகனை அனுப்ப, அவன் அரவம் தீண்டி மரணமடைகிறான். மகன் மறைந்த செய்தி அறிந்தால் நாயனார் தனது வீட்டில் உணவுகொள்ள மாட்டாரே என்ற அச்சத்தால் அவனுடலை மறைத்து நாயனாரை உணவுண்ண அழைக்கிறார் அப்பூதியடிகள். நிகழ்ந்த சம்பவத்தை ஞானதிருஷ்டியால் அறிந்த நாவுக்கரசர் உனது மகனையும் என்னுடன் உணவுண்ண அழை எனக்கூற, அப்பூதியார் நிகழ்ந்ததைக் கூறி வருந்தி நிற்க, நாயனார் ‘ஒன்றுகுலாம் எனும் தேவாரத்தைப்பாடி இறந்தவனை உயிர்பெற்றெழச் செய்தார். இவ்வாறு இவர் செய்த அற்புதங்கள் பல.
பாலறாவாயர் எனப் பெயர் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமையை நாவுக்கரசர் நன்கு அறிந்தவர். தள்ளாமை காரணமாக
|24

Page 18
செயலாற்றும் சக்தியை இழந்தவரும் தமக்குப்பின் சமணத்தை ஒழித்து சைவத்தை நிலைநாட்டப் போகிறவர் ஞானசம்பந்தரே என்பதை உணர்ந்த அவர், கூன்பாண்டியனது வெப்பு நோய் தீர்க்க ஞான சம்பந்தர் மதுரை புறப்பட்ட பொழுது சமணர்கள் சூதுமிக்கவர்கள், வஞ்சனை செய்வார்கள் என அவனைத் தடுக்கிறார்.
"பாணலவாயொருபாலனிங்கிரு என்று நீ பரிவெய்திடேல் ஆனைமாமலை ஆதியாய இடங்களிற் பல அல்லல்சேர் ஈனர்கட்கு எளியேன் அல்லேன் திருஆலவாயன் அருள் நிற்கவே"
என்று கூறிய ஞானசம்பந்தர் கோளாறு பதிகம் பாடி நாவுக்கர சரைத் தேற்றினார்.
"எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனா" என்ற தேவாரப் பதிகத்தைப் பாடியவண்ணம் இறையடி சேர்ந்த இவரது குரு பூசை தினத்தில் இவரை நினைத்து வழிபட்டால் தனம் வரும், செல்வம் வரும், சகலசெளபாக்கியங்களும் வரும் என ஆன்றோர் கூறியுள்ளனர்.
இவர் திருவாய் மலர்ந்தருளிய திருத்தாண்டகத்தை சைவர்கள்
அனைவரும் மனனம் செய்து பாராயணம் செய்து பயன் பெற வேண்டும்.
25

சுந்தரருக்கு நந்தம ஊரனென்று நவிலரும் பேறளித்தான்
திருக்கைலாயத்திலே சுந்தரமூர்த்தி சுவாமிகளைச் சிவபிரான் வரவேற்ற இன்றைய தினமே அவருடைய குருபூசை தினமாகும். தம்பிரான் தோழர் எனப்பெருமையுடன் பேசப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் ஏழாந் திருமுறைத் தேவாரப் பதிகங்கள் முற்றுப்பெற்ற இடம் திருக்கைலை என்பது தெளிவு.
திருக்கைலையிலே அவர் திருவாய் மலர்ந்தருளிய பதிகம் திருநொடித்தான் மலைப்பதிகமாகும். இந்தத் திருப்பதிகத்திலே ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய கருத்துக்கள், அறிவுரைகள் பரந்து காணப்படுகின்றன.
சுந்தரர் தனது பதிகங்களிலே தனது குற்றம், குறைகள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக அனுபவித்துத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு எல்லோருக் கும் வியப்பளிப்பதாகும். மற்றைய நாயனார்கள் சிவனைப் பாடிப் பணிந்து பணி செய்தார்கள். ஆனால், சுந்தரருக்கு சிவபிரானே ஓடோடி வந்து உதவி செய்தார் என்பது வரலாறு. சுந்தரர் சிவனுடன் பக்தனாகப் பழகவில்லை. ஒரு தோழனைப் போலவே பழகினார். அதனாலேயே அவர் “தம்பிரான் தோழர்” என அழைக்கப்பட்டார்.
ஒவ்வொருவரினது பிறப்பு, இறப்பு, திருமணம் ஆகியன வெல்லாம் சிவலோகத்திலேயே நிச்சயிக்கப்படுகிறது என்பதைச் சுந்தரர் திருவாய்மலர்ந்தருளிய பதிகங்களிலே விளக்கியிருக்கிறார்.
திருக்கைலையிலே ஆலால சுந்தரர் என்ற நாமத்துடன் சிவ கைங்கரியம் செய்து வந்த இவர், ஒரு தினம் சிவ பூஜைக்காக
|26

Page 19
மலர்களைப் பறிக்க மலர் வனம் சென்றபோது அநிந்திதை, கமலினி ஆகிய இரு சூக்குமப் பெண்களைக் கண்டு மனம் பேதலித்ததால் சிவபூஜைக்குச் செல்லவேண்டிய நேரம் தாமதமானது.
சிவபூஜைக்கு நேரமானதன் உண்மைக் காரணத்தை அறிந்த சிவபிரான் ஆலாலசுந்தரரையும், அநிந்திதை, கமலினி ஆகிய சூக்குமப் பெண்களையும் பூவுலகில் பிறந்து தங்களது ஆசாபாசங் களை நிறைவேற்றுமாறு சாபமிட்டார்.
இதனால் மனம் வருந்திய ஆலாலசுந்தரர் சிவன் தாள் பணிந்து தனது குற்றத்தைப் பொறுக்குமாறு மன்றாடியதுடன் பூவுலகில் பிறக்கும் நான் மாயையில் சிக்கித் தடுமாறாமல் என்னைத் தடுத்தாற் கொள்ள வேண்டுமென இரந்து வேண்ட, அவ்வாறே செய்வதாக சிவனும் வாக்களித்தார்.
இதற்கமையவே திருவெண்ணெய் நல்லூரில் சுந்தரரின் திருமணநாளன்று வயோதிப வேதியர் வடிவில் சென்று சுந்தரன் எனது அடிமை என வாதிட்டு, அதனால், சுந்தரரிடமிருந்து 'பித்தா பேயா என்ற வசை மொழிகளையும் ஏற்று, ஈற்றில் அவரைத் தடுத்தாட் கொண்டார்.
பித்தா' என நீ அழைத்த அச்சொல்லைத் தலைப்பாகக் கொண்டு என்னைப் பாடு எனச் சிவபிரான் பணித்ததற்கமையவே அவர், "பித்தா, பிறைசூடி, பெருமானே, அருளாளா என்ற தேவாரத்தைப் பாடினார்.
சிவன் சாபப்படி, திருவாரூரிலே பரவையார் என்ற பெயருடன் பிறந்த அநிந்திதையாரையும், திருவொற்றியூரிலே சங்கிலியார் என்ற பெயருடன் பிறந்த கமலினியாரையும் திருமணம் செய்து, அவர் களாலே சில இடையூறுகளை அனுபவித்து, சத்தியவாக்கைத் தவற விட்டதனால், இரு கண் பார்வையையும் இழந்து குருடாகி சிவனருளால் மீண்டும் பார்வை பெற்றார்.
27

சிவஸ்தலங்கள் தோறும் எம் பெருமான் மேல் பதிகம் பாடி அவன் அருளாலே திருப்புக்குடியூரிலே முதலையுண்ட பார்ப்பனச் சிறுவனை உயிருடன் மீட்டு, பல அற்புதங்கள் புரிந்து சேரமான் பெருமாள்நாயனாரோடு உறவுகொண்டிருந்தார்.
சுந்தரர் தமது 18ஆவது வயதில் இகபோக வாழ்க்கையை யெல்லாம் அனுபவித்து, திருவுஞ்சைக் களத்திலே பெருமானை வணங்கி,
"வெறுத்தேன் மனைவாழ்க்கை”
என்ற பதிகத்தைப் பாடினார்.
சிவபெருமான் இவரது பக்குவநிலை அறிந்துதேவர்கள் மூலம் வெள்ளை யானையை அனுப்பி அவரைக் கைலைக்கு அழைத்து
வருமாறு பணித்தார்.
அவர் வெள்ளை யானையிலேறி ககன மார்க்கமாக கைலை செல்லும்போது திருநொடித்தான்மலைப்பதிகம் பாடினார்.
அப்பதிகங்களின் கருத்துக்கள் மெய்சிலிர்க்க வைக்கும் தன்மை கொண்டன.
"தானெனை முன் படைத்தான்
அது அறிந்துதன் பொன்னடிக்கே" "மந்திரமொன்றறியேன் மணவாழ்க்கை
மகிழ்ந்தறியேன் சுந்தர வேடங்களால் துரிசு
“செய்யும் தொண்டன் எனை" "மண்ணுலகில் பிறந்தும்மை வாழ்த்தும்
வழியடியார் பொன்னுலகம்பெறுதல் இன்று
கண்டொழிந்தேன்” என்பன போன்ற கருத்தாழம் கொண்ட பதிகங்களைச் சுந்தரர்
திருவாய்மலர்ந்தருளியிருக்கிறார்.
28

Page 20
பூனி சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கைலையில் வெள்ளை யானையிலிருந்து இறங்கியபொழுது திருமால், பிரமன், இந்திராதி தேவர்கள் எல்லாம் அவரை எதிர்கொண்டு வரவேற்றார்கள். அப்பொழுது அங்கிருந்த மந்திரமாமுனிவர் இவர் யார்? சிவபிரானிடம் கேட்க, வந்து இறங்கியவர் எமது ஊரவன் என்றார்.
இந்த நிகழ்வைப் பின்வரும் பதிகத்தின் மூலம் தெளிவாக்கு கிறார் சுந்தரர்.
"இந்திரன் மால்பிரமன்
எழில்மிகு தேவரெல்லாம் வந்தெதிர்கொள்ள என்னை மத்தயானை அருள்புரிந்து மந்திரமாமுனிவர் இவர் யாரென
எம்பெருமான் நந்தமஊரன் என்றான்
நொடித்தான்மலை உத்தமனே" பூனி சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுகமாக கைலை வந்து சேர்ந்ததை வருணபகவான் மூலம் திரு அஞ்சை அப்பருக்கு அறிவித்தார்.
இவர் மணம் முடித்த பரவையாரும், சங்கிலியாரும் சிவ லோகம் அடைந்து முன்பிருந்த நிலையைப் பெற்றார்கள்.
குறிப்பு:உலகிலே வரவேற்புகளும், உபசாரங்களும் அதிகம். சிெங்கம்பள வரவேற்பு, கெளரவ வரவேற்பு (Guard ofhonour) எனப் பலவிதமான வரவேற்புகள் இருக்கின்றன. ஆனால் கைலையிலே சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குக் கிடைத்த வரவேற்புப்போல யாருக்கும் கிடைக்குமா?
ஆடிச் சுவாதியிலே சுந்தரர் கைலை சேர்ந்த தினம் பெருமை மிக்கது. புகழ்ச்சிக்குரியது. போற்றுதற்குரியது.
129

பொய்யில் கிடந்து புரளாதே போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உண்டயான கழல் புகவே
ஒரு வாசகத்திற்கும் உருகாதார் மனதையும் உருக வைக்கும் திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் திருவாய் மலர்ந்தருளிய மாணிக்கவாசக சுவாமிகளின் குருபூசைத்தினம் இன்றாகும். (10.07.2005) ஆனிமாதம் மகாமகத்தில் மாணிக்கவாசகர் தில்லைக் கூத்தனோடு அத்துவிதக்கலப்பெய்திய அற்புத நிகழ்ச்சி திருவாதவூரர் புராணத்தில்,
"நின்ற புகழ் புகவியூரார் நேர்மையுடன் புடைசூழ
சென்றருளுக்கிடமான செம்பொன்னின் அம்பலமெய்தி
ஒன்றிய இத்தமிழ் மாலையின் பொருள் இவரென உரைசெய்து
மன்றில் கடிதேகிமறைந்தார் காண்பவர் காண" என்னும் பாடலும்,
"செய்காட்டும் கமுகடவித் தில்லையுளார் பொருட் கேட்க கைகாட்டித் தன் உருவம் காட்டா மறைந்தாரை பைகாட்டும் பேரரவப் பூணுடையோன் தமக்கன்பு மெய்காட்டி பாலுடன் மேவிய நீராக்கினார்" என்னும் பாடலும் எடுத்துக் காட்டுகின்றன.
திருவாசகமும், திருக்கோவையாரும் மாணிக்கவாசகர் சொல்லத் தில்லைக் கூத்தர் எழுதிய பெருமையும் பெருஞ்சிறப்பும் கொண்ட நூல்களாகும். "பாவை பாடிய வாயால் கோவை பாடுக" என தில்லை நடராஜன் பணிக்க மணிவாசகர் பாடினார் என்பதைத் திருவாதவூரடிகள் புராணத்தில்,
மெய்த்தவவாதவூரர் விரும்பி எழுதும் இப்புத்தகம்
மன்றில் ஆடல் புரிந்தவன் எழுத்தாம் என்று
முத்தியை உதவும் கோவை முடிவிடத்து பின்னர்
சித்திர மலர்க் கையாலே திருத்தமைக் காப்பும் செய்தார்" என்ற பாடல் எடுத்துக் காட்டுகின்றது.
திருவாசகம் 51 பதிகங்களைக் கொண்டது. சிவபுராணம் முதல் அச்சோபபதிகம் வரையான 51 பதிகங்களையும் மனனம் செய்பவர்கள் மரண பயம் இல்லாமல் பெருவாழ்வு வாழலாம். சைவ சமயத்
130

Page 21
தலைவர்களாக இருப்பவர்கள் திருவாசக நிறைவு பெற்றிருத்தல் அழகாகும்; அவசியமும் ஆகும். "சைவனுக்கு அழகு திருவாசகம் படித்தல்; அது ஏழேழு பிறவிகளுக்கும் உறுதுணையாக நிற்கும்" எனச் சுழிபுரம் விக்டோரி யாக் கல்லூரி முன்னாள் அதிபர் அமரர் சிவபாதசுந்தரனார் திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
திருவாசகத்தின் 51 பதிகங்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் திவாசகத்தின் பெருமையை அவனியெங்கும் பரப்பியவர் ஜி.யு. போப் பாதிரியார் ஆவார். அவரது திருவாசக ஆங்கில மொழி பெயர்ப்பு வெளிவந்த பின்னரே எமது சைவத் தமிழர்கள் திருவாசகத்தின் பெருமையை உணர்ந்து அதனைப் படிக்க ஆரம்பித்தார்கள் என்றும் கூறுவர்.
திருவாசகத்தை நன்றாக, அனுபூதி மார்க்கமாக அனுபவித்தது மாத்திரமல்லாமல் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாடும் பணி செய்தவர் அவர். அவரது பணியால் மேற்கத்திய நாடுகளுக்கும் திருவாசகத்தேன் ஒலி பரவியது. திருவாசகத்திற்கு அவர் ஆங்கிலத்தில் அளித்துள்ள விளக்கம் ஆணித்தரமானது.
"There are a few poems in any Language that can surpass. Thiruvsagam, the holy word of Lord Manickvasagar in profoundity of thoughts. simplicity inj feeling child like admosphere finally finds its shelter."
சிவனும் சீவனும் - தலைவனும் தலைவியும் - பேரின்ப புணர்ச்சியில் திளைத்தல் பற்றிய சிறப்பியல்புகளை விளக்குவதாக அமைந்துள்ள திருக்கோவையார் 25 பதிகங்களைக் கொண்டது. இயற்கைப் புணர்ச்சி தொடங்கி பரத்தைப் பிரிவு வரை இது அமைந்துள்ளது. இவற்றில் முக்கியமானது 19 ஆவது பதிகமான மணம் சிறப்புரைத்தலாகும். திருமணம் வாழ்க்கைக்கு உகந்தது போலப் பேரின்ப நிலை உடைத்ததாக அதனை அமைத்திருக்கிறார். திருமணச் சிறப்பு9 பிரிவுகளாக சீராக்கப்பட்டுள்ளது.
31

மனம் முரசு கோரல், மகிழ்ந்துரைத்தல், வழிபாடு, வாழ்க்கை நலம் கூறல், காதல் கட்டுரைத்தல், கற்பறிவித்தல், காதலர் கண் மருகுதல், கல்வி உரைத்தல், ஆகிய ஒன்பதும் நலமிகு மணமிசை யாங்குகாலே
பேரின்பப் புணர்ச்சி இன்பத்தைக் கூறும்போது ஈருடல் ஒருயிர் என்பதைத் தெளிவாக்கியிருக்கிறார். 'ஆனந்த வெள்ளத்தில் அழுந்துமோர் ஆருயிர் ஈருருக்கொண்டு ஆனந்தவெள்ளத்திடைதிழைத்தார் ஒக்கும் அம்பலம் சேர் ஆனந்த வெள்ளத்தறை கழலோன் அருள் பெற்றவர் ஆனந்த வெள்ளம் வற்றாது முற்றாது இவ்வணிநலமே!
மாணிக்கவாசகருக்கு நாம் செய்யும் கைமாறு திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களை அனுபவித்து சிவானுபூதியார் களாக வாழ்வதேயாகும். அதன் மூலம் பேரின்ப நிலையை அடைந்திடலாம்.
வள்ளலார் இராமலிங்கசுவாமிகள் திருவாசகத்தையும், திருக்கோவையாரையும் ஆழ அகல கற்றுணர்ந்தவர். அழுதால் உன்னைப் பெறலாமே என்ற மணிவாசகரின் கூற்றின் உண்மையை உணர்ந்தவர். திருவாசகத்தை அதன் உள் அர்த்தகத்தில் கலந்து பாடவேண்டும் என்கிறார்.
'வான் கலந்தமாணிக்கவாசகநின்மணிவாசகத்தை நான் கலந்து பாடுங்கால்நற்கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து நெய் கலந்துதித்திக்கும் பால் கலந்து ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே "வாதவூரனை மதித்தொருகால் ஒரு குருக்கள் என ஞானபாதம் வெளியிட்டுநரியிற் குளுவை வாதியாம் எனநடத்துபவை அரசர் அன்புக்காக மாடை ஆடை தரபற்றி முன்நகைத்து
132

Page 22
வைகை ஆற்றின் மீது நடமிட்டு மண்ணெடுத்து மகிழ்மாதுவாணியொரு பிட்டமுது பித்தனருள் நுகர் கந்தவேளே!-அருணகிரிநாதர்" திருவாசகத்தில் 45 ஆம் பதிகம் யாத்திரைப்பத்து. இதனை சைவ சமயத்தவர்கள் ஒவ்வொரு வரும் மனனம் செய்யவேண்டும். பூவார் சென்னி மன்னனும் புயங்கப் பெருமானும் என்று தொடங்கும் பதிகம் பிறவிப் பயனை அடைய பெருமானிடம் யாத்திரை செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.
இந்த யாத்திரைப்பத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போப் பாத்திரியார் அதனைக் கிறிஸ்தவ தேவாலயங்களிலே அகமகிழப் பாடி பேரானந்த வெள்ளத்தில் திழைத்தார் என்பதை அவரது வாழ்க்கை வரலாற்றில் இருந்து அறியக் கூடியதாக இருக்கிறது.
யாத்திரைப்பத்திலே,
'விழுமின் வெகுளி வெளுத்த நோய் மிகவோர் காலம் இனி இல்லை' என்ற பாடலைக் கீழ் வருமாறு ஆங்கிலத்திலே அழகாகக் கூறியுள்ளார்.
Free ye your souls from pains of wrath and lust, hensforth the time shall not be long drawnout. Beneath our mate feet with glad and acclaim. And that we in one may go in one combine.
Even in sivan's town shall refuge find whose flower wreath gates shall not be closed. And that weineclacy shall sing glowers of our pugayan king.
51 பதிகங்களைக் கொண்ட திருவாசகத் தேனை மாந்தி மகிழ்ந்துதில்லைக் கூத்தன்திருவடி அடைய முயல்வோமாக!
அத்துவிதப் பொருள் காப்பான் எனக்கானந்தமான பராபரன் காப்பான். சிற்றரும் தேவரும் காப்பான் என் சித்தத்திரங்கிய திரு வாசகம் என்னும் தேன் காப்பான் பொய்யிற் கிடந்து புரளாதே போவோம் காலம் வந்தது தான் பொய்விட்டு உடையான் கழல் புகவே
என்ற யாத்திரைப்பத்தை ஒதி உணர்ந்தவர்களைச் சாராது இடர்.
33

குன்றமெறிந்த குமரனுக்கு குவலயமெங்கும் புகழ் சேர்த்தார்
தென் நாட்டிலும், இலங்கை, மலேசிய முதலியா நாடுகளிலும் மட்டுமன்றி அகில உலகம் முழுவதிலுமே முருகவழிபாட்டுக்கு வித்திட்ட பெருமைக்குரிய அருணகிரிநாத சுவாமிகள், இற்றைக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், திருவண்ணாமலைத் திருப்பதியிலே, புரட்டாதி மாதம் செவ்வாய்க்கிழமை உத்தர நட்சத்திரம் தனு லக்கினத்திலே திருவவதாரம் செய்தார். ஆனிப் பெளர்ணமியே இவரது பிறந்ததினம் எனக் கூறுவாரும் உளர். இவர் பிரபுடதேவமகாராஜகாலத்தவர் என்று வரலாறு கூறுகிறது.
தாய் தந்தையரை இழந்து தமக்கையாரின் அரவணைப்பிலே வளர்ந்த இவர், இளவயதிலேயே விலைமாதர் மையலில் மயங்கி, பொன், பொருள், செல்வங்கள் அனைத்தையும் இழந்து பதிலுக்கு குட்டம் முதலிய பாலியல் நோய்களைப் பரிசாகப் பெற்று, நோயின் கொடுமை தாங்காது தற்கொலை செய்யத் துணிந்தார்.
திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜா கட்டிய கோபுர உச்சியிலேறித்தற்கொலை முயற்சியை மேற்கொண்டார்.
பூர்வ புண்ணிய வினைப் பயனாலும், இவர் மூலமாக முருக வழிபாட்டைக் குவலயமெங்கும் பரப்ப வேண்டுமெனக் குன்றம் எறிந்த குமரக் கடவுள் திருவுளம் கொண்டதனாலும் கோபுர உச்சியிலிருந்து நிலத்தில் குதித்த இவரைக் கருணைக் கடலான கந்தவேள் கரத்திலேந்தி ஞானோபதேசம் செய்து இவரது நாவில் அட்சரம் பொறித்தார்.
முருகனின் கரம்பட்ட மாத்திரத்தே இவரது வினைகள் மறைந்தன. கடந்த கால நிகழ்வுகள் கனவுகளாயின. புடம் போடப்பட்டபொன் போல ஞானரூப சொரூபியாகநின்றார்.
134

Page 23
அன்பினால் என்புருக அடிபணிந்த அருணகிரியாரை என் புகழ் பாடு என ஆணையிட்ட ஆறுமுகன் "முத்தைத் தரு பத்தித் திருநகை" என முதல் திருப்புகழுக்கு அடியெடுத்துக் கொடுத்தார்.
கந்தபுராணம் பாடக் கச்சியப்பருக்கு "திகழ் தசக்கர என அடியெடுத்துக் கொடுத்தது போல, முருகப் பெருமான் அருணகிரி நாதருக்கு "முத்தைத்தரு பத்தித் திருநகை" என அடியெடுத்துக் கொடுத்ததும் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம் போல அவரது நாவிலிருந்து முப்பதினாயிரம் திருப்புகழ்கள் வெளிவந்தன.
திருமுருகன் திருப்பாதங்களுக்கு இவர் சமர்ப்பித்த முப்பதினா யிரம் திருப்புகழ் பாடல்களும் நாலடி, எட்டடி, பதினாறடி, இருபத்து நான்கடி, நாற்பத்தியெட்டடி, எழுபத்திரெண்டடி தொண்ணுாற்றாறடி எனப் பரந்து விரிந்து காணப்படுகின்றன.
இவர் அருளிய திருப்புகழ் பாடல்களில் பொருளாழமானதும் வேகம் மிக்கதுமான96 அடித்திருப்புகழாகும்.
"காசியில் இறக்க முத்தி, கருணையை நினைக்க முத்தி, சேதுவாம் சிதம்பரத்ைைத தரிசிக்க முத்தியாமே" என்பதைப் போல, நினைக்கும் தோறும் முத்தியளிக்கும் திருவண்ணாமலைக்கும் தரிசிக்க முத்தி யளிக்கும் சிதம்பரத்துக்கும் 96 அடித்திருப்புகழ் மூலமும் குமார வயலூருக்கும் விராலிமலைக்கும் 72 அடித் திருப்புகழ் மூலமும் பெருமை சேர்த்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்சோலை, குன்று தோறாடல், சுவாமிமலை, திருத்தணி, பழனி ஆகிய ஆறுபடை வீடுகளுக்கு 48 அடி, 24அடி, 16 அடி, 8 அடி4 அடி திருப்புகழ்கள் மூலம் புகழாரம் சூடியிருக்கிறார். சொற்சுவை, பொருட்சுவை, அருட்சுவை மிக்க சந்தக் கவிகளான திருப்புகழ், முருகப் பெருமானுக்குப் பிரீதியான வழிபாட்டு மாலையாகத் திகழ்கின்றது.
135

அருணகிரிநாதர் திருப்புகழ் மூலம் முருகன் பெருமையைச் சாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் தன்னுடன் வாதிட்டுத் தோற்றவர் களுடைய காதைக் குறடு கொண்டு குறும்பி அளவாகத் தோண்டி வெட்டும் தன்மை கொண்ட வில்லிப்புத்தூரார் என்ற புலவர் இவரை வாதுக்கழைத்தார்.
இதற்கு அருணகிரிநாதர் முதலில் மறுப்புத் தெரிவித்த போதிலும் ஈற்றில் பக்தர்களுடைய வேண்டுதலுக்கமைய ஒப்புக்
கொண்டார்.
அருணகிரியார் பாடும் திருப்புகழ் பாடல்களுக்கு வில்லிப்புத்துாரார் பொருள் சொல்லப் போட்டி ஆரம்பமானது. அவரது ஒவ்வொரு பாடலுக்கும் வில்லிப்புத்துாரார் பொருள் கூறிக்கொண்டேவர, களைப்படைந்த அருணகிரியார் முருகப் பெருமானை நினைத்துருக முருகன் கைவேல் அவர் நாவில்பட்டது. கந்தன் கருணையால் அவன் புகழ் கூறும் கந்தர் அந்தாதி பாடத்
தொடங்கிய அருணகிரியார்,
"திதத்தித்தத் திதி தாததை தித்தத் திதிதா" எனத் தொடங்கும் கந்தர் அந்தாதி 54 ஆவது பாடலைப் பாட ஆரம்பித்ததும் அப்பாடலுக்குப் பொருள் கூறத் தெரியாமல் வில்லிப்புத்தூரார் திகைத்தார். கந்தன் கருணை அவரது கண்களைத் திறக்க வைத்தன. பொருளுரைக்க முடியாமல் தோற்றுப் போன அவர், அருணகிரியார் தாள் பணிந்து தனது தோல்வியை ஒப்புக் கொண்டு, அது காலபரியந்தம் தோற்றவர் காதை அறுக்கும் தனது குறட்டையும் அவரிடம் ஒப்படைத்தார்.
கருணையினால் அவரை ஆட்கொண்ட அவர் இச் செயலி னால் "கருணைக்கு அருணகிரி" எனும் நாமம் பெற்றார்.
அருணகிரிநாதரது பக்தியிலும், கருணையிலும், கவித்து வத்திலும் பொறாமை கொண்டவனும் அரசரிடத்தில் செல்வாக்கு மிக்கவனும்ாகிய சம்பந்தாண்டான் என்ற புலவர், அருணகிரியாரை
36

Page 24
வலிந்து வாதுக்கழைத்து, புலமைப் போட்டியில் அவரை வெல்ல முடியாது என்பதுணர்ந்ததால் சூழ்ச்சியால் வெற்றி கொள்ள எண்ணி உம்பருலகிலுள்ள பாரிஜாதமலரைக் கொண்டுவருபவரே போட்டியில் வெற்றிபெற்றவராகக் கருதப்படுவார் என அறிவித்தான்.
அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அருணகிரியார் தனது உடலை இராஜகோபுரத்தில் பத்திரப்படுத்திவிட்டு கிளி உருவில் தேவருலகம் சென்று பாரிஜாதமலருடன் திரும்பினார்.
அவர் வருவதற்கிடையில் அவர் இறந்துவிட்டாரென வதந்திபரப்பிய சம்பந்தாண்டான் அவருடலைத் தகனம் செய்து
விட்டான்.
மலருடன் திரும்பிய அருணகிரியார் தனது உடல் தகனம் செய்யப்பட்டதை அறிந்து மலருடன் இராஜகோபுர உச்சியில் கிளி உருவில் இருக்க, மலரின் வாசனையால் உண்மையை உணர்ந்த மன்னன் சம்பந்தாண்டானைச் சிறையிட்டு, அருணகிரியார் பதம் பணிந்து மன்னிப்புக் கோரினான். தனது இறுதிக்காலம் வரை கிளி உருவில் இருந்தபடியே கந்தரலங்காரம் முதலிய நூல்களைப் பாடியருளியுள்ளார். முருகபக்தரான அருணகிரியார் முருகனின் வலது கரத்தில் கிளி உருவில் இருக்கும் நற்பேறு பெற்றார். அருணகிரியாரின் பெருமையை தாயுமானவர் சுவாமிகள்,
"ஐயா அருணகிரி உன்னைப் போல், ஒருசொல் விளம்பினவர்.ஆர், கந்தரனுபூதி பெற்று கந்தரனுபூதி சொன்ன எந்தை யருணையடி இருக்கும் நாள் எந்நாளோ" எனப் புகழ்ந்தேத்தியுள்ளார்.
கேட்டால் காது இனிக்கும், சொன்னால் வாய் இனிக்கும், நினைத்தால் உடம்பு சிலிர்க்கும் திருப்புகழுக்கு மயங்காதவர்கள் யாருமே இவ்வுலகில் இல்லையெனக் கூறலாம்.
பூணி அருணகிரி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் அந்தாதி, மயில் விருத்தம், 37

வேல்விருத்தம், சேவல் விருத்தம், திருவகுப்பு திருஎழு கூற்றிருக்கை முதலியனமுருக வழிபாட்டுக்குரிய முக்கியநூல்களாகும்.
"வாக்குக் கருணகிரி, வாதவூரர்கனிவில் நோக்குக்குநக்கீரன்,நயத்துக்குச்சுத்தரர் தாக்கிற்கு ஞான சம்பந்தன் சொற் றுறுதிக்கு அப்ப ரென்றற" என்ற பாடல் அருணகிரிநாதர் பெருமைக்கு அத்தாட்சியாகும்.
அன்னாரது பெருமையை உணர்ந்து தமிழ் நாட்டிலேயுள்ள முருகன் திருக்கோவில்களில் அருணகிரிநாதருக்குச் சிலை அமைத்து வழிய வருகிறார்கள் ஆனால் முருக வழிபாடு தழைத்தோங்கியுள்ள ஈழத்திருநாட்டிலுள்ள எந்தவொரு முருகன் ஆலயத்திலும் அருண கிரியார் உருவச்சிலை இல்லாதிருப்பது முருகபக்தர்களுக்கு மனத் துயரளிக்கும் சம்பவமாகும்.முருகன்திருவருளால் இக்குறைவிரைவில் தீரும் என எதிர்பார்ப்போமாக!
O
138

Page 25
வேலை வற்ற வேல் விடுத்த வேலவன் தாள் பணிந்தார்க்கில்லை இடர்
புரட்டாதி மாதம், செவ்வாய்கிழமை உத்தர நட்சத்திரத்தில் திருவவதாரம் செய்த, முருகப்பெருமானின் வாரிசாகிய, திருப்புகழ் அருணகிரிநாதருடைய குருபூசை தினம் அனேக ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டு அதே மாதம், அதே திகதி, அதே நட்சத்திரத்தில் வருவது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.
புரட்டாதி மாதம் 12 ஆம் திகதியாகிய இன்றைதினம் அருணகிரிநாத சுவாமிகளுடைய பிறந்த தினமாகும். இத்தினத்தை நினைவுகூர வேண்டியது சைவப் பெருமக்களின், குறிப்பாக முருக பக்தர்களின் தலையாய கடமையாகும்.
ஆனால் அறுபத்துமூன்று நாயன்மார்கள், ஈழத்துச் சித்தர்களான கடையிற் சுவாமி, செல்லப்பா சுவாமி, சிவயோக சுவாமி, குடையிற் சுவாமி மற்றும் ஆறுமுக நாவலர் போன்றோர் மகான்களின் குருபூசை தினத்தை நினைவு கூர்ந்து கொண்டாடும் சைவப் பெருமக்கள், முருக வழிபாட்டில் புதுமையானதோர் விரிவாக்கத்தை ஏற்படுத்த திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, மயில் விருத்தம், சேவல் விருத்தம், வேல் விருத்தம் முதலிய திருப்பாடல்களைத் திருவாய் மலர்ந்தருளிய அருணகிரிநாத சுவாமிகளை அன்னாரது ஜனன தினத்தில் நினைவு கூர்வதில்லை யென்பது மனவேதனையை மட்டுமல்ல; தலைகுனிவையும் ஏற்படுத்து வதாகும். முருக வழிபாட்டுக்கு ஆணிவேராக விளங்கும் நாமம்
"சரவணபவ இதனை,
"சரணகமலாலயத்தில் அரைநிமிட நேரமட்டில்
தவமுறை தியானம் வைத்து அறியாது" என்ற திருப்புகழிலே அழகுறக் கூறியுள்ளார்.
139

முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தை மூவருக்கு மாத்திரமே உபதேசித்திருக்கிறார். தேவர்களில் சிவனும் முனிவர்களில் அகத்தியரும், மனிதர்களில் அருணகிரிநாதரும் பிரணவ மந்திர உபதேசம் பெற்ற பெரும் பேற்றாளர்கள். இப்பெரும் பேறுபெற்ற பெருமையை,
திருபகுருபரமகுமராஎன்றென்று பக்தியொடுபரவ, அருளிய மெளனமந்திரம் தனை பழைய நினது வழிபடும் அடிமையும் விளங்க இனிது உணர்த்திஅருள்வாயே"
என்ற திருப்புகழ் மூலம் நெஞ்சம் கரைய எடுத்தோதியுள்ளார். அருணகிரியார் அருளிய பாடல்களின் பெருமையை வெறும் வார்த்தைகளால் எடுத்தியம்ப இயலாது. இவருடைய திருப்பாடல்கள் யாவும் முருகப்பெருமானது திருவடிப்படன என்பதை
"தாவடியோட்டும் மயிலிலும் தேவர் தலையிலும் என் பாவடி ஏட்டலும் பட்டதன்றோ படி" எனக் கந்தரலங்காரத்திலே
கூறியுள்ளார்.
பட்டினத்தடிகள் உடற்கூற்று வண்ணத்தில் இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை என்பன பற்றிக் கூறியுள்ளது போலவே அருணகிரிநாதர் சிதம்பரப் பதியிலும் திருவண்ணா மலையிலும் அருளிச் செய்த 96 அடிகள் கொண்ட திருப்புகழிலே விளக்கமாக விபரித்திருக்கிறார். சிதம்பரத்தில் பாடிய 96 அடித்திருப்புகழில்,
செவியொடுஒளிவழிமறைய மலசலம் ஒழுக, பலவுரைகுறைதடிகொடுதெத்திப்பித்தமும் முற்றித் தற்செயலற்று"சிச்சீஎனத் துக்கப்படசிலர்கள் முதுவிட உவரிநிறமுடைதமனும் உயிர்கொள
|40

Page 26
செப்பற்றுப்பிணமென்று ஒப்பித்துப் பேரிட்டு பொற்பறை கொட்ட செப்பிடு ஜனன மிதவென அழுத முகமிசை அறைய எடுமன தடலையில் சற்றுக் கிரையிட்டுநித்தத்துக்கமெடுத்து இப்படிச்சடம் உழல்வேனோ" என்றும், திருவண்ணாமலையில் பாடிய96 அடித் திருப்புகழில்,
தன்கைத்தடியொடுகுந்திக் கவியென உந்திக் கசன மறந்திட்டுளமிக சலித்து உடல் சல மிகுத்து மதிசெவி விழிப்புமறைபட கிடத்தி மனையவள் சம்பத்துறை முறையண்டச் சண்டக் கருநமன் அண்டிக் கொழுகையில் எடுத்துவிசை கொடுபிடித்து உயிர்தனை வதைப்ப தனிவழியடித்து கொடுசெல சந்தித்தவரவர் பங்குக் கழுதுவி இரங்க பிணமென வென்றிட்டு அறையறை தடிப்பசுடலையில் இறக்கி விறகொடுகொழுத்திஒருபிடிபொடிக்கும் இலையெனும் உடலாமோ?" என்றும் நரை, திரை, மூப்பு, பிணிகளை விளக்கியிருக்கிறார்.
அமரர் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் முருக பக்தர், அருணகிரிநாதரின் பெருமையையும், திருப்புகழின் அருமையையும் முருக வழிபாட்டின் மகிமையையும் உலகடங்கிலும், பட்டி கிருபானந்தவாரியார் என அழைக்கப்பட்டார். இவர் செய்த ஆலயத்திருப்பணிகள் எண்ணிலடங்கா.
அறுபடை வீடு ஆலயங்களிலும் விராலி மலையிலும், குமரவயலிலும் பிரகாரச் சுவர்களில் சலவைக் கல்லிலே திருப்புகழ் பாடல்களைப் பொறித்ததன் மூலம் முருக பக்தர்களின் மனங்களிலும்
141

பதியச் செய்திருக்கிறார். அருணகிரிநாதரின் திருப்புகழை முற்றாக ஆழ்ந்து ஆராய்ந்து அனுபவித்த பெருமையுடையவர். தான் பெற்ற இன்பத்தை வையகமும் பெறவேண்டுமென்ற பெருவிருப்பில் திருப்புகழமிர்தம்' என்ற பத்திரிகையையும் திறம்பட நடத்தியவர். புரட்டாதி மாத உத்தர நட்சத்திரத்தில் மானசீகமாக அருணகிரிநாதர் குருபூசையை அனுட்டித்தவர்.
There is not and there never was on this earth so well deserving as Saint Arunagirinather devinely endowred by lord Murugan whose poetic telented genious of his holy utterances of Thirupukal, kanthar Alangaram, Kanthar Anupoothy, Kanthar Anthathy, Thiruvakupu, My Virutham, Vel Virutham and Seval Virutham payed the way ofworship of lord Murugan in Kaliyugam. In return of his Contributions of holy Uttarances as a mark of respect. We must perform the Spritual Guru pooja in September in the day of Uttara Nadchathra.
"உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய்மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய்குகனே"
42

Page 27
“மிக்க வேதியன் வேதத்தின் உட்பொருள்”
பூணி வைஷ்ணவ சமயத்தின் மூலவித்தாகிய பூனிநாராயண னின் திருஅவதாரமாகிய பூணிநம்மாழ்வார்.
ஜெயந்தி-01.06.2004
கலியுகம் துவங்கி 43ஆம் பிரமாதி வருஷம் வைகாசி மாதம் 12ஆம் நாள் பெளர்ணமி வெள்ளிக்கிழமை கற்கடக லக்கினத்தில் திருக்குடி நம்பி பூனிமந் நாராயணனின் திரு அவதாரமாகிய பூஞரீ நம்மாழ்வார் அவதரித்தார்.
இவருடைய மூதாதையர்கள் எட்டு தலைமுறைகள் திருவழுதி வளநாடர், அறந்தாங்கிய சக்ர பாணியர், அச்சுதர், செந்தாமரைக் கண்ணர், செங்கண்ணர், பொற்காரியார், காரியார் ஆவார்கள்.
இவர்கள் எல்லோரும் பூனி நாராயணனை வழிபட்ட வர்கள். இவர்களுக்கு கைமாறாக, பிராயச்சித்தமாக இக்கலியு கத்தில் நாராயணனின் 11ஆவது திரு அவதாரமாகிய பூரீ நம்மாழ்வார் 9ஆவது தலைமுறையாக காரியாருக்கும் உதய நங்கையாருக்கும் திருமகனாகப் பிறந்தார்.
பூனிநம்மாழ்வார் 16 வயது மட்டும் கண், வாய் திறவாமல் திருக்குரு கூர் திருப்புளியாரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்.இந்த நிலையில் இவருடைய கண்ணும் வாயும் திறந்தவர் பூரீமதுரகவி ஆழ்வார் ஆவார். இது இவருடைய சரித்திர வரலாறு.
பூரீ நம்மாழ்வார் கண், வாய் திறந்தது முதல் வேத வாக்கியங் களைச் சொல்லத் தொடங்கினார்.
இவர் நாலு வேதங்களாகிய இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் வழியே "திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி"முதலியவற்றை திருவாய் மலர்ந்து அருளிச்செய்திருக்கின்றார். 143

இவருடைய நான்கு வேதப்பாடல்களையும் பூரீ மதுரகவி யாழ்வார் தனது நெஞ்சில் நிறுத்தி பின்பு வெளிப்படுத்தினார்.
பூரீமதுரகவியாழ்வார் தனது "கண்ணின்நுண் சிறுத் தாம்பு" என்ற பதிகத்தில் நம்மாழ்வாரைப் புகழ்ந்திருக்கிறார். அதில் சில பாடல்கள் எம்மையெல்லாம் பரவசமாக்குகின்றன. அதில் சில
பாடல்களின் கருத்துமுக்கியமானது.
“அருள் கொண்டாடும் அடியவரின் புற அருளினான் அம்மறையின் பொருள்” என்றும், “மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள் நிற்கப்பாடி என் நெஞ்சில் நிறுத்தினான்" என்றும், "அன்பன் தன்னை அடைந்தவர் அன்பன்" என்றும் அமுதச் சொற் களை பூனிமதுரகவியாழ்வார் வழங்கினார்.
சைவ சமயத்திற்கு திருவாசகம், திருமுறை இருப் பதுபோல் வைஷ்ணவத்திற்கு திருவாய்மொழி, அந்தாதித்தேன் அமைந்
திருக்கிறது.
சுவர்க்க வாசல் வைகுண்ட ஏகாதசியை அவரது திருவாய் மொழி 10ஆம் பத்து 9ஆவது பதிகத்தில் சூள் விசும்பு அருளியிருக் கின்றார்.
பூரீஇராமானுஜர் அவர்கள் நம்மாழ்வாரின் திருவாய் மொழியை நன்குணர்ந்து அதன் மூலம் 108 திருப்பதிகளை (வைஷ்ணவ) அமைத்த நியதிபூணீநம்மாழ்வாரையே சாரும். "திருமாலிருஞ்சோலைமலையே,திருப்பாற்கடலே, என் தலையே திருமால் வைகுந்தமே, தான் திருவேங்கடமே, எனது உடலே அருமாயாத் தென் உயிரே, மனமே, வாக்கே, கருமமே ஒருமா நொடியும் பிரியான் என் ஊழிமுதல்வன் ஒருவனையே" என்றும், "ஒருவனே உலகெல்லாம் ஊழிதோறும் தன்னுள்ளே படைத்துகாத்து கொடுத்துள்ளான் ஆழிவண்ணன் எம்மான் அந்தன திருமாலிருஞ்சோலை
144

Page 28
வாழி மனமே கைவிடான் திருவாய்மொழி உடலும் உயிரும் அங்க வொட்டே, பூனிநாம்மாழ்வாருக்கு வேறு நாமங்களாவன மாறன்,
சடகோபன், வருளாபரணா, பராங்குசர்.
குறிப்பு:பொன்னாலை பூனிவரதராஜப்பெருமாள் ஆலயத்தின் வடபால் உள்ள புளியமரத்தின் கீழ் நம்மாழ்வார் சிலை அமைத்து வழிபட்டு
வருகின்றார்கள்.
வண்ணை பூனிவெங்கடேசப் பெருமாள் கோவிலில் பூஞரீரங்க
நாதர் கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் பூனிநம்மாழ்வார், பூனிமதுரகவி
ஆழ்வார், பூனிஇராமானுஜர் ஆகியோரது சிலைகள் அமைந்துள்ளன.
நம்மாழ்வார்திருவடியினையே சரணம் ஒம்பூனிவேதகர்ப்பாயநமக.
45

"சுவர்க்க வாசல்" பூநீவைகுண்ட ஏகாதசி
பூஞரீ திருக்குறுங்குடி நம்பி பூணிமன் நாராயணனின் திரு அவதாரமாகிய பூg நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவாய் மொழியின் பத்தாம் பத்துவில் 9ஆம் பதிகத்தில் "வைகுண்ட ஏகாதசியின் சிறப்பியல்புகளை "அர்ச்சிராது மார்க்கம்" நேரில் திருக்குருகூர் திருப்புளிய மரத்தின் கீழ் அமர்ந்து, பூனிமான் நாராயண மூர்த்தி திருப்பாற் கடலினின்று அறிதுயில் விழித்து திருவைகுண்டம் ஏகாதசி நாளில் புகுந்த வைபவத்தைக் கண்டு கொண்ட அற்புத காட்சிகளை அருளிச் செய்திருக்கின்றார்.
இந்த அற்புதக் காட்சியை எல்லோரும் பாடிப் பணிபுரியும் வண்ணமும் பூஞரீமன் நாராயணனோடு வைகுந்தத்தில் இருக்கும் பேறு உடையவர்களாக விளங்குவார்கள். பாசுரங்கள் பின்வருமாறு:-
திருவாய்மொழிபத்தாம்பத்து 9ஆம் சூழ்விசும்பு பதிகம் : திருப்பாற் கடலில் நிலைப்பேறுகள். இராகம்:கல்யாணி 1. சூழ்விசும் பணிமுகில் துரியம் முழங்கின
ஆழ்கடலலைதிரை கையெடுத் தாடின ஏழ்பொழிலும் வளமேந்திய என்னப்பன் வாழ்புகழ்நாராயணன் தமரைக் கண்டுகந்தே.
நிறைகுடங்களும் தோரண நிரைகளும் 2. நாராயணன் தமரைக் கண்டுகந்து நன்னீர்முகில்
பூரண பொற்குடம்பூரித்ததுயர் விண்ணில் நீரணிகடல்கள் நின்றார்த்தன நெடுவரைத் தோரணம் நிரைத் தெங்கும் தொழுதனருலகே
அறிதுயிலிருந்து எழுப்புதலும் வைகுந்தம் செல்வதற்கு வழியும்
146

Page 29
தொழுதனருலகர்கள் தூபனநல் மலர்மழை பொழிவனர் பூமியன்றளந்தவன்தமர்முன்னே எழுமினென்று இருமருங்கிசைத்தனர் முனிவர்கள் வழியிது வைகுந்தற்கென்று வந்தெதிரே
தேவர்கள் வைகுந்தத்தில் இருப்பிடம் அமைத்தல் எதிரெதிரிமையவர்(கள்) இருப்பிடம் வகுத்தனர் கதிரவரவரர் கைநிரை காட்டினார் அதிர்குரல் முரசங்களலைகடல் முழக்கொத்த மதுவிரிதுழாய்முடி மாதவன்தமர்க்கே
பூரீமன் நாராயண வைகுந்தம் புகுவதற்கு வேதங்களும் ஒத கீதங்களும் வேள்வியும் நடைபெற்றன
மாதவன் தமரென்று வாசலில் வானவர் போதுகமினெம்திடம் புகுதுக வென்றலும் கீதங்கள் பாடினர்கின்னரர் கெருடர்கள் வேதநல்வாயர் வேள்வியுள் மடுத்தே
ஒமகுண்ட யாகங்கள் நறும் புகைகள் எங்கும் நிரம்ப வலம்புரி சங்குநாதங்களும் இசைத்தனமடந்தையர் வாழ்த்துதலும் . வேள்வியுள் மடுத்தலும் விரைகமழ் நறும்புகை
காளங்கள் வலம்புரி கலந்தெங்கும் இசைத்தனர் ஆழ்மின்கள் வானகம் ஆழியான் தமரென்று வாளொண்கள் மடந்தையார் வாழ்த்தினர் மகிழ்ந்தே
மடந்தையர் வாழ்த்தலும் தோத்திரம் சொல்லுதலும் பூரீநாராயணனின் பிரகாசம் பொருந்திய மணிமுடிவைத்தலும் மடந்தயர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்தெங்கும் தோத்திரம் சொல்லினர் தொடுகடல் கிடந்த வெங்கேசவன் கிளரொளி மணிமுடி குடைந்தையெங்கோவலன் குடியடியார்க்கே ழரீமன் நாராயணன் வைகுந்தம் புகுவதற்கு முடியுள்தேவர்கள் எதிர்கொண்டு 147

10.
நெடுமதில் புடைய கோபுரவாசலுக்கு அழைத்தனர் குடியடியாரிவர்கோவிந்தன்தமதென்று முடியுடைவானவர் முறைமுறையெதிர்கொள்ள கொடியணிநெடுமதில் கோபுரம் குறுகினர்
வடிவுடைமாதவன் வைகுந்தம்புகவே
றுரீமன் நாராயணன் வைகுந்தம் புகும்நேரம் முனிவர்கள் தேவர்கள் வியப்பு எய்தினர் மண்ணில் சீலர்களுக்குமுதல்வழிவைகுந்தமே வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர் வைகுந்தன்தமரெமரெமதிடம் புகுதென்று வைகுந்தத் தருமம் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
றுரீமன் நாராயணனின் பாதங்களை நல்வேதியர்கள் கழுவினார்கள் வைகுத்தம் புகுந்த பின் நிதியும் நற் கண்ணமும் மதிமுக மடந்தையர் நிறைகுட விளக்கும் எடுத்தார்கள்
விதிவகை புகுந்தன் ரென்று நல்வேதியர் பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர் நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் மதிமுகமடந்தையர் ரேந்தினர் வந்தே
றுரீமன் நாராயணன் வைகுண்டத்தில் உள்ள மா மண்டபத்தில் இருந்த அடியார்களுக்கு அருள் பாலித்தல் வந்தவரெதிர்கொள்ள மாமணிமண்டபத்து அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்தமை கொத்தலர் பொழில்குருகூர்கசடகோபன் சொல் சந்தங்களாயிரத்திவை வல்லார்முனிவரே
சாற்றுக்கவி
48

Page 30
12. சூழ்ந்துநின்றமால் விசும்பில் தொல்லைவழிகாட்ட ஆழ்ந்ததனைமுற்றும் அனுபவித்து வாழ்ந்தங்கு அடியருடனே யிருந்தவாற்றை உரைசெய்தான் முடிமகிழ் சேர்ஞான முனி.
பூனிமன் நாராயணன் வைகுந்தத்தில் மாமணிமண்டபத்தில் இருந்து அடியார்களுக்கு அருள் ஆசி வழங்கின காட்சியை பூணூரீநம்மாழ்வார் அக மகிழ இப்பாசுரமான "வைகுண்ட ஏகாதசி" திருவாய்மொழியில் அருளிச் செய்திருக்கிறார். இப்பேற்றினை பூனிநம்மாழ்வார் அனுபவித்த தனை நாமும் அனுபவிக்கவேண்டும் என பூணீமன் நாராயணனுக்கே இப் பதிகத்தை பாடிமகிழ்வோம்.
தொகுத்தவர்; திருமால் அடிமை, திவ்வியப்பிரபந்த ஆய்வாளரும்,
திருவாய்மொழி உபாசகருமான திருவாசகமணி க. மாணிக்கவாசகர் அவர்களால் தொகுக்கப்பட்டது.
49

பூநீராம ஜயம்
பூனிமந் நாராயணனின் 11ஆவது திருஅவதாரமாகிய பூனி நம்மாழ் வாரின் ஜெயந்தி நாள் (23.05.2005) வைகாசி விசாகப்பெருநாளை முன்னிட்டு அவர் திருவாய் மலர்ந்தருளிய திருவாய்மொழியில் 10ஆம் பத்துவில் 10ஆவது பதிகம் மிகவும் முக்கியமானதாகும். இப்பதிகத்தை முன்னாள் இந்திய தேசாதிபதியாகிய வைஷ்ணவ பூணி தத்துவ ஞானியுமாகிய பூரீசக்கிரவத்தி இராஜகோபாலசாமியர் அவர்கள் இப்பதிகத்தை பாராயணத்துடன் மனனம் செய்ய வேண்டும் என்பதை பக்தி மாலையாக அறிவுறுத்தியிருக்கிறார். இந்தப் பதிகம் -அற்றது பற்று-உற்றது வீடு எனும் சிறந்த கருத்தைத் தழுவியது.
10. одбоfiću எம்பெருமான் வந்து தோன்றி ஆழ்வாரின் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை நீக்கி அடியார்களின் கூட்டத்தில் கொண்டு சேர்த்தான். தாம் செய்யவேண்டியதைச் செய்துமுடித்தவராய் அவா அற்றுப் பெருவீடு பெற்றபடியை ஆழ்வார் இத்திருவாய்மொழியில் கூறுகிறார்.
திருமாலை தாம் அடைந்த பான்மையை ஆழ்வார் உரைத்தருளுதல் கலி நிலைத்துறை திருமாலே நின்னைச் சிக்கெனப் பிடித்தேன்
முனியே! நான்முகனே! முக்கண் ணப்பா, என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கட்கரு
மாணிக்கமே! என் கள்வா, தனியேன் ஆருயிரே! என் தலை
மிசையாய் வந்திட்டு, இனிநான் போகலொட்டேன் ஒன்றும்
மாயம்செய்யேலென்னையே. (O1)
150

Page 31
Salon8ol Lonuh 6rium(3:5 : &000ufi GöLGör
மாயம்செய்யேலென்னை உன் திரு
மார்வத்து மாலை நங்கை, வாசம்செய் பூங்குழ லாள்திரு
வாணைநின் னாணை கண்டாய், நேசம் செய்துன்னோடென்னையுயிர்
வேறின்றி ஒன்றாகவே கூசம்செய்யாதுகொண் டாயென்னைக்
சு.விக்கொள்ளாய்வந்தந்தோ! (O2)
Innr036ol fiu Ioőrnól orori ற்றுக்கே 6660
கூவிக்கொள்ளாய்வந்தந் தோ! என்பொல்
லாக்கரு மாணிக்கமே, ஆவிக்கோர் பற்றுக்கொம்பு நின்னலால்
அறிகின்றி லேன்யான், மேவித் தொழும்பிரமன்சிவ
னிந்திரனாதிக்கெல்லாம், நாவிக் கமல முதற்கிழங்
கே! உம்பர் அந்ததுவே (O3)
ghabLoII8ool oIoirotocoráis crosofi]-IBob
உம்பரந்தண் பாழேயோ!
அதனுள்மிசை நீயேயோ, அம்பர நற்சோதி!அதனுள்
பிரமன் அரள் நீ, உம்பரும் யாதவரும் படைத்த
முனிவன் அவன் நீ, எம்பரம் சாதிக்கலுற்றென்னைப்
போரவிட் டிட்டாயே. (04)
151

போரவிட் டிட்டென்னை நீபுறம்
போக்கலுற்றால், பின்னையான் ஆரைக்கொண் டெத்தையந்தோ!
எனதென்பதென் யானென்பதென்,
தீர இரும்புண்ட நீரது
போலவென் ஆருயிரை ஆரப் பருக, எனக் காரா
வமுதா னாயே. (05)
ஏன் அன்பே என்னை முழுவதும் விழுங்கி விடு
எனக்கா ராவமு தாய்என
தாவியை இன்னுயிரை, மனக்கா ராமைமன்னியுண்டிட்டா
யினியுண் டொழியாய், புனக்கா யாநிறத்த புண்டரீ
கக்கட் செங்கனிவாய், உனக்கேற்கும் கோல மலர்ப்பாவைக்
கன்பா! என் அன்பேயோ! (06)
கோல மலர்ப்பாவைக் கன்பா
கியவென் அன்பேயோ, நீல வரையிரண்டு பிறைகல்வி
நிமிர்ந்த தொப்ப, கோல வராகமொன்றாய்நிலங்
கோட்டிடைக் கொண்ட எந்தாய், நீலக் கடல்கடைந் தாயுன்னைப்
பெற்றினிப் போக்குவனோ? (07)
52

Page 32
முதல் தனி வித்தே! உன்னை அடைந்தேன்; இரிை விடேன்
பெற்றினிப் போக்குவனோவுன்னை
என் தனிப் பேருயிரை, உற்ற இருவினையாய் உயிராய்ப்
பயனாய் அவையாய், முற்றவிம் மூவுலகும் பெருந்
தூறாய்த் தூற்றில்புக்கு, முற்றக் கரந்தொளித் தாய்! என்
முதல்தனி வித்தேயோ? (08)
முடிவில்லாதவனே உன்னை நூன் எப்பொழுது கூடுவேன்?
முதல்தனி வித்தேயோ முழுமூ
வுலகாதிக் கெல்லாம், முதல்தனி யுன்னையுன்னை எனைநாள்
வந்து கூடுவன் நான், முதல் தனி அங்குமிங்கும் முழுமுற்
றுறுவாழ் பாழாய், முதல் தனி சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த
முடிவி லீயோ! (09)
சூழ்ந்தகன் றாழ்ந்துயர்ந்த முடிவில் பெரும்பா ழேயோ,
சூழ்ந்தத னில் பெரிய பரநன்
மலர்ச்சோ தீயோ,
சூழ்ந்தத னில்பெரிய சுடர்ஞான
வின்ப மேயோ,
சூழ்ந்தத னில்பெரிய என்னவா
அறச் சூழ்ந் தாயே! (10)
153

அவாவறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி, அவாவற்று வீடுபெற்ற குருகூர்ச்
சடகோபன் சொன்ன, அவாவிலந்தாதிகளால் இவையா
யிரமும், முடிந்த அவாவிலந்தாதியிப் பத்தறிந்
தார்பிறந்தார்உயர்ந்தே. (11)
முனிமாறன் முன்புரைசெய் முற்றின்பம் நீங்கித், தனியாகி நின்று தளர்ந்து-நனியாம் பரமபத்தியால்நைந்து பங்கயத்தாள் கோனை,
ஒருமையுற்றுச் சேர்ந்தான் உயர்ந்து. (100)
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
குறிப்பு:- பொன்னாலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் வடபால் திருப்புளியமரத்தடியில் நம்மாழ்வார் சிலைக்கு விசேட பூசையும் இத்தினத்தில் நடைபெறும். திருக்குருகூர் ஆழ்வார் பூரீ நகரியிலும் நம்மாழ்வாருக்கு இத்தகைய சிறப்பும் நடைபெறுகின்றது. வைஷ்ணவ தேவஸ்தானங்களில் பூனி நம்மாழ்வாருக்கு இத்தினத்தில் விழாக்கள் நடைபெறுகின்றது. வண்ணை வெங்கடேஸ்வரர்ஆலயத்தி லும், வல்லிபுரஆழ்வார்கோவிலிலும் விழாக்கள் நடைபெறும்.
தொகுத்தவர். திருமால் அடிமை
54

Page 33
பூபாரம் தீர்க்கப் பிறந்தான் புயல் வண்ணன்
ஆவணி ரோகிணியில் அவதரித்த பூனி கிருஷ்ண பரமாத்மா வினது பூனி கிருஷ்ண ஜெயந்தி நாள் இன்றாகும். பூனிமத் நாராயண மூர்த்தியின் தசாவதாரங்களில் இராம அவதாரமும், கிருஷ்ண அவதாரமும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகும். இந்த அவதாரங்களை விபஅவிதாரங்கள் எனக் கூறுவர்.
கிருஷ்ண பரமாத்மா அருளிச் செய்த பகவத்கீதையின் நான்காவது அத்தியாயமான ஞானகர்மஸ ந்யாச யோகத்தில் 7ஆவது 8ஆவது சுலோகங்கள் சிந்திக்கக் கூடியன.
யதா யதாஹிதர்மஸ்யகலானிர் பகவதிபாரத
அப்புத்தானாம் மதமர்ஸ் ததாத்மானம் ஸ்ருஜாம் யஹம
எப்பொழுதெல்லாம் அறம் அழிந்து மறம் எழுகின்றதோ
அப்பொழுதெல்லாம் என்னைநான் பிறப்பித்துக்கொள்கிறேன்" என்பது இதன் பொருள்.
'பரீத்ராணாய ஸாதுனாம் வினாசஸ் தாஷ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனாத் தாயஸம்பவாமியுகே யுகே" "நல்லவரைக் காப்பதற்கும் கெட்டவரைக்கரந்தொடுக்குவதற்கும் யுகம் தோறும் நான் அவதரிக்கிறேன்" என்பது இதன் பொருள்.
பூனிநம்மாழ்வார், பூனிநாராயண மூர்த்தியின் அவதாரங்களில் ராம, கிருஷ்ண அவதாரங்களை சிறப்பித்துப் பாடியருளியுள்ளார். திருவாய்மொழியில் 3ஆம் பத்து,10ஆம் பதிகம் முதல் பாசுரத்தில்
ஜென்ம கர்மசமே திவ்யமேவம் யோவேத்தி தத்வதஸோர்ஜுன் தீயக்த்வா தேஹம் புனர்ஜன்மனேகதிமாவேதி இதன் பொருள், அர்ச்சுணா இங்ங்ணம் எமது திவ்யப் பிறப்பையும் சொல்லையும் உள்ளபடி அறிபவன உடலைத் தந்து மறு
55

பிறப்பு எய்துவதில்லை என்னையே,அடைகிறான்.
சன்மம் பலபல செய்துவெளிப்பட்டு சங்கு சக்கரம் வில் ஏண்மையுடைய உலக்கையொன்வாள் தண்டுகொண்டுபுள்ளுர்ந்து வன்மையுடைய அரக்கர் அசுரரை மானப்படை பொருத நன்மையுடையவன் சீர்பரவார் பெற்றநானோர்குறைகிலேனே" என்றும் திருவாய்மொழி 6ஆம் பத்து5ஆவது பதிகம் 10ஆவது
பாசுரத்தில்
மண்மிசைபெரும்பாரம்நீக்கவோர்பாரத மாபெரும்போர்பண்ணி மாயங்கள் செய்துசேனையைப் பாழ்படநாற்றிட்டுபோய் விண்மிசைத்தான் தர்மமே புக மேலிய சோதிதன்தாள் நண்ணிநான் வணங்கப்பெற்றேன் எனக்கார்பிறர்நாயகரே"
என்றும் அருளிச் செய்திருக்கிறார் பூரீ கிருஷ்ண பரமாத்மா, தேவகியின் மணிவயிற்றிலே தானோர் உருவே ஒரு தனிவித்தாய் உருவாகி ஆவணிரோகிணியில் அன்னாரது எட்டாவது திருக்குழந்தை யாகத் திருவவதாரம் செய்தார். இவரது காலம் துவாரகயுகத்தின் கடைப்பகுதியெனக் கருதப்படுகிறது.
கம்சனது காராக்கிரகத்திலே சிறைவைக்கப்பட்டிருந்த தேவகி யின் திருமகனாக அவதரித்த அந்த இரவிலேயே திருவருள் முன்னிற்க, ஆயர் பாடியிலேயசோதையின் வளர்ப்புமகனானார்.
தேவகியின் வயிற்றிலே அவதரிக்கும் ஒவ்வொரு குழந்தையை யும் பிறந்தவுடனேயே கொலை செய்யும் தேவகியின் மூத்த
156

Page 34
சகோதரனான கம்சனது கொடு வெறிக்கு ஆளாகாமல் இவரைக் காக்க இவரது தந்தையாராகிய வாசுதேவர் இவரைப் பிறர் அறியாவண்ணம் ஒரு கூடைக்குள் வைத்துச் சுமந்து சென்று ஆயர் பாடியில் யசோதையிடம் ஒப்படைத்து அவள் வயிற்றில் பிறந்த பெண் குழந்தையுடன் சிறைச்சாலையை அடைந்தார்.
தேவகி வயிற்றில் உதிக்கும் எட்டாவது ஆண் குழந்தை யினாலேயே தனது உயிருக்கு ஆபத்து என்பதை அசரீரீ வாக்குப்படி அறிந்திருந்த கம்சன் பிறந்தது பெண் குழந்தையென அறிந்ததும் மனச் சாந்தி பெற்றான்.
ஆயர் பாடியிலே ஆய்ச்சியர்கள் அனைவரதும் அன்புக்குப் பாத்திரமான கிருஷ்ண பரமாத்மா,தீராத விளையாட்டுப் பிள்ளையாக வெண்ணெய் திருடியும், மண்ணை உண்டு உலகைக் காட்டியும், புன்னை மரத்தில் ஏறி கோவியர் ஆடைகளை, ஒழித்தும் கன்று குணிலாகக் களிறு எறிந்தும் பற்பல வேடிக்கைகள் செய்தும் மாயா ஜால விளையாட்டுக்கள் நடத்தியும் கம்சனது கொலைமுயற்சி களிலிருந்து தப்பித்து வந்தார்.
கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்து ஆயர்பாடி மக்களைப் பெருமழையிலிருந்து காப்பாற்றியும், குடிநீர்த் தடா கத்திலே குடி கொண்டிருந்த காளிங்கன் எனும் கொடிய நாகத்தின் தலைமீது நர்த்தனம் புரிந்த அவன் செருக்கடக்கியும் ஆயர்பாடி மக்களுக்கு உற்ற நண்பனாகவும் விளங்கினார்.
சாந்தீப முனிவரிடம் இளமையில் கல்வி பயின்ற காலத்தில் குசேல முனிவருக்கும் கண்ணபிரானுக்கும் ஏற்பட்டிருந்த நட்பை ஞாபகப்படுத்தி, தமது வறுமைப் பிணியை நீக்க, துவாரகை மன்னனான அரசோச்சும் கிருஷ்ண பரமாத்மாவிடம் உதவி பெற்று வருமாறு குசேலரை அவரது மனைவி சுசீலை அனுப்பிவைத்தார்.
ஒருவரைக் காணச் செல்லும்பொழுது வெறும் கையுடன் செல்லக் கூடாது என்ற மரபுக்கமைய கந்தல் துணியில் முடிந்த அவல் 157

முடிச்சுடன் துவாரகையில் கண்ணனைக் குசேலர் கண்டார்.
குசேலரை அன்புடன் வரவேற்று அரவணைத்த கண்ணன் எனக்கு என்ன கொண்டு வந்தீர் எனக் கேட்டு வாங்கி அவலில் இரண்டு பிடியை உண்டபின், மூன்றாவது பிடியைக் கையிலெடுக்க அருகிருந்த திருமகள் அதனை உண்ணாவிடாது தடுத்தார்.
காரணம், முதலில் இரு பிடிகளை உண்டபோதே குசேலருக்கு சகல பாக்கியங்களும் செல்வமும் கிடைக்க அருளிய கண்ணன், மூன்றாவது பிடியை அவருக்கு அடிமையாகிவிடுவான் என்பத னாலேயே மகாலட்சுமி அதனைத்தடுத்தார்.
பூபாரம் தர்க்க பிறந்தவனாகிய புயல் வண்ணன், பாண்டவர் பக்கம் சேர்ந்து அம் முயற்சியில் ஈடுபடுகிறார். பாண்டவர் சார்பில் துரியோதனனிடம் தூது சென்றார். துரியோதனனது சிறிய தந்தையாகிய விதுரன் வீட்டிலே தங்கியதன் மூலம் அவர்களுக் கிடையில் மனக்கசப்பை ஏற்படுத்தி 'உனக்காக வில் ஏந்த மாட்டேன்' என விதுரனது அற்புதமான சிவதனுசை முறிக்க வைக்கிறார். கபடநாடக மூலம் அஸ்வத்தாமன்மீது துரியோதனனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தினார். இதன் பயனாக கிருஷ்ணன் தூது தோல்வியில் முடிந்தது.
பாரதப் போர் ஆரம்பமானது. கண்ணன் பார்த்தனின் தேர்ச் சாரதியானர். முதல் நாள் போர் அன்று செருமுகத்தில் பிதாமகர் பீஷ்மர், குலகுரு துரோணர், கிருபர், நெருங்கிய நண்பன் அஸ்வத்தாமன், மற்றும் நண்பன் அஸ்வத்தர்மன், மற்றும் உற்றார் உறவினர்களைக் கண்ட அர்ச்சுனன் வில் எடுக்க விரும்பவில்லை. மண்ணுக்காக என் சுற்றத்தாரைக் கொன்றொழிப்பதா என வியாகூலமடைந்த பார்த்தனுக்கு கீதோபதேசம் செய்தார். கீதை உரைகேட்டு மனம் தேறிய விஜயன் தனது காண்டீபத்தை கையில் எடுத்தான்.
பாரதப்போர் 18 நாட்கள் நடந்தன. சகல சேனைகளும் அழிந்தன. பூமியின் பாரமும் தீர்ந்தது . பாண்டவர்களுக்கு நாடு
கிடைத்தது.
158

Page 35
போர் தோல்வியில் முடிந்ததும் துரியோதனனது மாமனாகிய சகுனி தற்கொலை செய்ய முயற்சித்த போது கிருஷ்ண பரமாத்மா அவனைத் தேற்றி நீ ஏன் தற்கொலை செய்து கொள்ளவேண்டும். எனது வேலையை நீயே செய்தாய் எனக் கூறி அவனுக்கு மோட்சம்
அளித்ததாக ஒரு வரலாறு உண்டு.
பூபாரம் தீர்க்கும் பணியை முடித்த கிருஷ்ண பரமாத்மா தனது கடமைகளை எல்லாம் முடித்துக் கொண்டு ஒரு தினம் அரச மரக்கிளையொன்றில் சயணித்துக் கொண்டிருக்கையில் புதர் மறைவில் நின்ற வேடன் ஒருவன் அவரது பாதத்தை மான் என்று எண்ணி அம்பு விடுகின்றான். உண்மையை அறிந்த வேடன் மனம் கசிந்து உருகிய போது ராம அவதாரத்தில் வாலியாகிய உண்மை அன்பினால் மடியச் செய்தேன். அந்த வினை நீ எய்த அம்பால் தீர்ந்தது' என அவனைத் தேற்றி அவனுக்கு மோட்சம் அழித்து தாம் முன் நாராயண ஜோதியில் கலந்தார்.
குறிப்பு:- உலகத்திலே ஆவணி ரோகிணி நட்சத்திரம் மேன்மைக்குரியது. இந்த நட்சத்திரம் தான் பூபாரம் தீர்க்கப் பிறந்த புயல் வண்ணனின் திருவவதார நாண். அன்றைய தினத்திலே தான் இலங்கையின் வடபால் பொன்னாலையில் அமர்ந்த வரதராஜப் பெருமானின் தேர்த்திருவிழாவும் உறியடித்திருவிழாவும் அமைகிறது. ஆவணி ரோகிணியில் உலகிலே எந்தவொரு வைஷ்ணவத் திருத்தலத்திலும் தேர்த் திருவிழாவும், தேர் இருப்புக்கு வந்ததும் உறியடித் திருவிழாவும் நடைபெறுவதில்லை. பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலின் தனிச்சிறப்பு இதுதான்.
ஆவணி ரோகிணிக்கு அடுத்த நாள் வண்ணை வெங்கடேசப் பெருமாள் கோவிலில் உறியடித்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
I59

நாராயணன் நல்லாசி வழங்கிய வைகுண்ட ஏகாதசி
இற்றைக்கு 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூரீமத் நாராயணனின் திரு அவதாரமாகிய நம்மாழ்வார் கலியுகம் துவங்கி 43ஆவது வருஷம் பிரம்மாதி ஆண்டு வைகாசி மாதம் 12ஆம் திகதி கர்க்கடக இலக்கினம் விசாக நட்சத்திரத்தில் ஒரு பெளர்ணமி தினத்தன்று ஒன்பதாவது தலைமுறையாகக் காரியாருக்கும் உதய நம்பியாருக்கும் புத்திரனாகத்திருவவதாரம் செய்தார்.
இவர் திருக்குருவூர் திருப்புளிய மரத்தின் கீழ் கண்வாய் திறக்காமல் 16 வருஷங்கள் நிஷ்டையில் இருந்தார். திருக்கோவூரில் அவதரித்த மதுரகவி ஆழ்வார் காசி நோக்கி யாத்திரை சென்றபோது வழியில் வானில் தோன்றிய ஒரு ஒளிப்பிளம்பைக் கண்டார். அந்த ஊரில் ஏதோ அதிசயம் நிகழ்வதற்கடையாளமாகவே தம் கண் முன் அந்த ஒளிப் பிளம்பு தோன்றியது என நினைத்த மதுரகவி ஆழ்வார். காசி யாத்திரையைத் தொடராமல் திரும்பினார். வழியில் திருக்குருவூரில் சந்தித்த வழிப் போக்கர்களிடம் இந்த ஊரில் ஏதாவது விசேடமுண்டோ எனக் கேட்டபோது, திருக்குருவூரிலுள்ள புளிய மரத்தின் கீழ் கண்வாய் திறக்காமல் ஒரு பிண்டம் நீண்ட காலமாக நிஷ்டையில் ஆழ்ந்திருக்கிறது. இதுதான் விசேஷம் என்று சொன்னார்கள். அந்த இடத்துக்கு மதுரகவி ஆழ்வார் சென்றபோது, நம்மாழ்வார் இருந்த நிலையைக் கண்டு ஒரு சிறிய கல்லையெடுத்து அவன் முன்போட்டார். கல் விழுந்த ஓசை கேட்டதும் நீண்ட நாட்களாக நிஷ்டையில் இருந்த நம்மாழ்வார் மெல்லக்கண்விழித்தார். நம்மாழ்வாரை நோக்கிய மதுரகவி ஆழ்வார். அவரால் பேசமுடியுமா என்பதை அறிய “செத்ததின் வயிற்றிலே சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்ற கேள்வியைக் கேட்டார்.
அதற்குப் பதிலாக நம்மாழ்வார், "கானலோடிய காட்டிலே சிறியது பிறந்தால் அத்தைத்தின்று அங்கே கிடக்கும்" என்றார்.
60

Page 36
உடனே மதுரகவி ஆழ்வார் நல்லறிவு பெற்று அவரது திருவடிகளிலே விழுந்து தம்மை ஆட்கொள்ள வேண்டுமென இரந்து கேட்டார். உடனே நம்மாழ்வார் நாலு வேதங்களுக்கும் இணையாகத் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி முதலியவற்றைத் திருவாய் மலர்ந்தருளினார்.
நம்மாழ்வார் 35 வருடகாலம் புளியமரத்தினடியில் இருந்து மங்களாசனம் செய்து மறைந்தார். 35 வருட காலம் புளியமரத்தினடி யில் இருந்தபடியே தேக உபாதைகளின்றி நாராயண உணர்வு அலைகளால் ஆட்கொள்ளப்பட்டு நாராயணன் நாமத்தைச் செபித்த படியே இருந்தார்.
இந்த நிலையை ஆங்கிலேய அறிஞரான ஜி.யு.போப். The food wave of lord narayana-entered in to the abdominal calumn of Namalvar and mathurakavi Alvar evaded hungerthurst and chewing.
இதை நம்மாழ்வார் தமது திருவாய்மொழியிலே.
"உண்ணுஞ்சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்”
எனக்குறிப்பிட்டிருக்கிறார்.
வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி நம்மாழ்வார் காலத்திலேதான் ஆரம்பித்த தாக வரலாறு கூறுகிறது. இத்தினத்தை திருவாய்மொழியில் பத்தாம் பத்து, ஒன்பதாவது பதிகமான "தூளவிசும்பு” என்ற பதிகத்திலே மிகத் தெளிவாக விளக்கியிருக்கின்றார். இதில் பூனிமத் நாராயண திருப்பாற் கடலிலிருந்து வைகுந்தம் புகுந்த காட்சியையும், வைகுந்தத்தில் உள்ள மணிமண்டபத்திலே அடியார்களுக்கு அருளாசி வழங்கிய காட்சியை யும் எடுத்துக்கூறியிருக்கிறார்.
ஏகாதசி தினத்தன்று திருப்பாற்கடலிலே ஆதிசேஷனாகிய பாம்பணையின் மீது அறிதுயிலிருந்த பூனிமத் நாராயணனை ஏத்தித்
l61

துதித்த தேவர்களும் முனிவர்களும் எழுமின் என்று அவர் எதிரில் நின்று இறைஞ்சினர். பூனரீ வைகுந்தம் செல்ல இதுதான் வழி எனக் காட்டினர். பூரீ வைகுந்தம் செல்லும் அந்தப் பாதையிலே துழாய் மாலையணிந்த மாதவனை வரவேற்க நிறைகுடம், தோரணம் முதலியன வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. வேள்வியிலிருந்து எழுந்த புகையும், சாம்பிராணி முதலிய வாசனைப் பொருட்களில் இருந்து எழுந்த நறுமணப் புகையும் அப்பாதை முழுவதிலும் பரவியிருந்தது. சங்குகள் முழங்கின. கீதங்கள் ஒலித்தன. முடியுடை தேவர்கள் வைகுந்த வாசலிலே நாராயணனை வரவேற்கக் காத்துக் கிடந்தனர். நாராயணன் வைகுந்த வாசலை அடைந்ததும் வேத நல்வாயர் அவரது பாதங்களைக் கழுவினர். தேவ மகளிர் குடவிளக் கேற்றத் திவ்ய ஆசனத்தில் அமரச் செய்தனர். வைகுண்டத்திலே மணிமாட மண்டபத்திலே வீற்றிருந்த நாராயணன் வைகுண்ட ஏகாதசி தினத்தன்றுஅடியார்களுக்கு நல்லாசி வழங்கினார்.
திருப்பாற்கடலில் இருந்து நாராயண மூர்த்தி வைகுண்டம் சென்று அடியார்களுக்கு நல்லாசி வழங்கினார். திருப்பாற்கடலில் இருந்து நாராயண மூர்த்தி வைகுண்டம் சென்று அடியார்களுக்கு அருளாசி வழங்கியநாள்தான் வைகுண்டஏகாதசி.
திருக்குறுங்குடி நம்பி பூஞரீமத் நாராயணனின் திருவவதார மாகிய நம்மாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய திருவாய்மொழியின் பத்தாம் பத்துவில் 9ஆம் பதிகத்தில் வைகுண்ட ஏகாதசியின் சிறப்பியல்புகள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன.
திருப்பாற்கடலில் இருந்து அறிதுயில் விழித்து ஏகாதசி நாளில் நாராயணமூர்த்தி வைகுண்டம் புகுந்த அற்புதக் காட்சிகள் அப்பாடல் களில் அழகுறக் கூறப்பட்டிருக்கின்றன.
சூழ்விசும்பு பணிமுகில் துரியம் முழங்கின ஆழ்கடல் அலைதிரைகையெடுத்தாடின ஏழ்பொழிலும் வளமேத்திய என்னப்பன் வாழ் புகழ்நாராயணன்தமரைக் கண்டு உகந்தே
l62

Page 37
நாராயணன் தமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில் பூரண பொற்குடம்பூரித்து உயா விண்ணில் நீரணிகடல்கள் நின்றார்த்தன நெடுவரைத் தோரணம் நிரைத் தெங்கும் தொழுதனருலகே!
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர்மழை பொழிவனர் பூமியன்று அளந்தவன்தமர் முன்னே எழுமினென்று இரு மருங்கிசைத்தனர் முனிவர்கள் வழியிது வைகுந்தந் சென்று வந்தெதிரே!
வந்தவர் எதிர்கொள மாமணிமண்டபத்து அந்தமில்பேரின்பத்து அடியாரோடிருந்தமை கொத்தவர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் சந்தங்கள் ஆயிரத்திவை வல்லார் முனிவரே! சாற்றுக்கவி சூழ்ந்துநின்ற மால் விசும்பில் தொல்லை வழிகாட்ட ஆழ்ந்ததனைமுற்றும் அனுபவித்து வாழ்ந்தங்கு அடியருடனே இருந்த வாற்றே உரை செய்தான் முடி மகிழ் சேர் ஞானமுனி
சொர்க்க வாசல் வைகுந்த ஏகாதசி நாளிலே தேகவியோகமான வர்களும் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர்களும் பெரும் புண்ணியம் செய்தவர்களெனக் கருதப்படுவதோடு, நாராயணனின் நல்லருளையும் பெறுவார்கள் என்பது திண்ணம்.
இத்தினத்திலே பொன்னாலை பூணி வரதராஜப் பெருமாள்
ஆலய மருங்கேயுள்ள புளியமரத்தடியில் அமர்ந்திருக்கும் நம்மாழ் வாருக்கு விசேட பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
l63

நவராத்திரி பூஜை ஆரம்பமான வரலாறு
"உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்க மாததுளம் போதுமலர்க்கமலை ததிக்கின்ற மின்கொடிமென்கடிக்குங்குமதோயமென்ன வதிக்கின்ற மேனிஅபிராமி என்றன் விழுத்துணையே"
சைவ வைஷ்ணவப் பெருமக்கள் வாழ்கின்ற இடங்களிலெல்லாம் சிறப்பாகக் கொண்டாடப்படும் நவராத்திரிபூஜைஎப்பொழுது,எப்படி ஆரம்பமானது என்பதற்குச் சரித்திரச் சான்றுகள் எதுவுமில்லை. ஆனால் கர்ணபரம்பரையாக வழங்கிவரும் கதைகளையும், பண்டை இலக்கியப் பாடல்கள் சிலவற்றையும் பார்க்கும்போது நவராத்திரி பூஜை கவிச்சக்கர வர்த்தி கம்பர் காலத்தில் தான் ஆரம்பமானது என ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றபொழுதிலும் அதைச் சரியானது என்றோ, உண்மையானது என்றோ அறுதியிட்டுச் சொல்ல இயலாது. எனினும் சில பல அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது இப்படியும்இருக்கலாம் என்று எண்ணத்தோன்றுகிறது.
இன்றைக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்னர் சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் குறிப்பாகக் குலோத்துங்கசோழன் காலத்தில் - கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, சரஸ்வதியின் அவதாரமாகக் கருதப்பட்ட ஒளவையார் முதலியபெரும்புலவர்கள் வாழ்ந்தனர்.
குலோத்துங்கன் சபையிலே ஒட்டக்கூத்தருக்கு அடுத்தபடியாகப் பெருமையுடன் மதிக்கப்பட்ட கம்பரின் புலமையிலே அழுக்காறு கொண்டபுலவர்கள் சிலர் எந்தவிதத்திலாவது கம்பரின் பெருமையைச் சீரழிக்கவேண்டுமென்று சூழ்ச்சி செய்தனர்.அந்தக் காலத்திலே பேரும் புகழுமாக வாழ்ந்தவளும், சோழ சாம்ராஜ்யத்திலே பேரழகி எனப் புகழப்பட்டவளுமான பொன்னி என்ற நாட்டியப் பெண்ணின் உதவியைநாடிப்பெற்றனர்.
64

Page 38
தனது நளினத்தாலும், நாட்டியத்தாலும் கம்பரை மயக்கிய அப்பெண் தாசி பொன்னிக்குக் கம்பன் அடிமை' என முறியொன்றை எழுதி வாங்கிப் புலவர்களிடம் கையளித்தாள். அரச சபையிலே குலோத்துங்கசோழனிடம் அம்முறிச்சீட்டைக் கையளித்த புலவர்கள் ஒரு நாட்டியக்காரிக்குக் கம்பர் அடிமைச் சீட்டு எழுதிக்கொடுத்து விட்டார் என இகழ்ந்துரைத்தனர். "அம்பிகை" சரஸ்வதியைத்தான் பொன்னிஎனக் குறிப்பிட்டேன். அவருக்கு நான் என்று அடிமைதான்" எனக் கம்பர் உரைத்த சமாதானத்தை மன்னன் ஏற்றுக்கொள்ள வில்ல்ை. இதனால் மனமுடைந்த கம்பர் வெகுண்டெழுந்து,
"மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்? குரங்கேற்றுக்கொள்ளாத கொப்புண்டோ உண்டோ விதந்தேற்றுக்கொள்ளாதவேந்து" என்ற பாடலைப் பாடிவிட்டு, சோழநாட்டைவிட்டு நீங்கி சேரநாட்டையடைந்து தன்னை யாரென வெளிப்படுத்தாமல் சேரமன்னனின் அடப்பக்காரனாகப் பணியாற்றத் தொடங்கினார்.
ஒரு தினம் சேர மன்னன் சபையிலே புலவர்கள் மத்தியில் ஏற்பட்டி இலக்கியச் சர்ச்சையில் கம்பர் தலையிட்டுத் தக்கபதில் இறுத்து மன்னனின் மதிப்பைப் பெற்றதைக் கண்டு ஆத்திரமடைந்த புலவர்கள் ஒர் அடப்பக்காரன் எங்களுக்குத் தமிழ் கற்பிப்பதா எனக் கோபம் கொண்டு அவரை அவமானப்படுத்தித் திட்டமிட்டனர்.
சவரத் தொழிலாளி ஒருவரைக் கம்பரது சகோதரனென நடிக்க ஏற்பாடு செய்தனர். ஒருதினம் கம்பர் தெருவழியே சென்று கொண்டிருக்கையில் அத்தொழிலாளி ஓடோடி வந்து கம்பரைக் கட்டித்தழுவி அண்ணாவோ! அண்ணாவோ இத்தனை ஆண்டுகளாக எங்கு போயிருந்தீர்கள். வீட்டுக்கு வாருங்கள் என அழுதரற்றி ஆர்ப்பாட்டம் செய்தான். அவனது வற்புறுத்தலுக்கு இணங்க அவன் வீடுசென்ற கம்பர் தனக்கு ஏற்பட்ட அவமானம் தாங்காது சரஸ்வதி தேவியை நினைத்து அரற்றினார்.
lo5

கம்பரது துயர் நீங்கத் திருவுளம்கொண்ட சரஸ்வதிதேவி, கம்பர் முன்தோன்றி தனது காற்சிலம்பொன்றைக் கம்பரிடம் அளித்து, "இதனை சேர மன்னனிடம்கொடு. இச்சிலம்புகள் உங்கள் குடும்பச் சொத்து என்றும், உமது சகோதரன் என்று கூறியவனிடம் மற்றச்சிலம்பு இருப்பதாகவும் மன்னனிடம் தெரிவிப்பாயாக" எனத் திருவாய் மலர்ந்தருளினாள்.
தேவியின் கட்டளைப்படி மறுநாள் காலை சரஸ்வதிதேவிஅளித்த காற்சிலம்பை மன்னனிடம் கையளித்து, "அரசே இவை எமது குடும்பத்தின் பாரம்பரியச் சொத்து. எனது தந்தை இறக்கும்போது ஒரு சிலம்பை என்னிடமும் மற்றதை இதோ நிற்கும் என் தம்பியிடமும் அரசனுக்ககே உரியது என்றார். மறு சிலம்பைத் தம்பியிடம் பெற்றுக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்தார். சிலம்பின் அழகில் மனதைப் பறிகொடுத்த மன்னன் மற்றச் சிலம்பைக் கொண்டு வரும்படி அந்தச் சவரத்தொழிலாளிக்குக் கட்டளையிட்டார்.
புலவர்கள் கம்பருக்கெதிராகச் செய்த சூழ்ச்சி வெளியானது. சிலம்பின் வரலாறு அறிந்த மன்னன் சரஸ்வதிதேவியை நேரில் தரிசிக்கவேண்டுமென்ற தனது ஆவலைக் கம்பனிடம் வெளியிட்டான். கம்பர் சரஸ்வதிதேவியை மனதில் துதித்து "சீர்கொண்ட வெள்ளிதழ் பூங்கமலாசனத்தேவி எனத் தொடங்கி 30 பாடல்களைப்பாடி முடித்ததும் தேவி வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்தபடியே அரச சபையில் காட்சியளித்ததுடன் "கம்பா என் காற்சிலம்பு எங்கே" எனக் கேட்டுச் சிலம்பை வாங்கிக்கொண்டு மறைந்தருளினாள்.
இந்தவிதமாக சேர மன்னன் முன் சரஸ்வதி தேவி காட்சி யளித்த நாளிலிருந்தே சரஸ்வதி பூஜை என வழங்கும் நவராத்திரி பூஜை ஆரம்பமானது என்பர்.
கம்பரைப் போலவே அம்பாள் அருள் பெற்றவர் குமரகுருபரர். இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் அவதரித்த குமரகுருபரர் 5 l66

Page 39
வயதுவரை ஊமையாக இருந்து தேவி அருளால் ஊமைத்தன்மை நீங்கி கவிபாடும் ஆற்றல் பெற்றவர். இவர் இயற்றிய மீனாட்சியம்மன் பிள்ளைத்தமிழ் என்ற நூல் சோழமன்னன் அவையில் அரங்கேற்றப் பட்டபோது தேவி மீனாட்சி சிறு பெண்குழந்தை வடிவில் செம்பட்டுப் பாவாடை, அணி ஆபரணங்களுடன் வந்து சோழ மன்னன் மடியிலமர்ந்து பாடல்கள் முழுவதையும் தலையசைத்து ரசித்துக் கேட்டதுடன், அரங்கேற்றம் முடிந்ததும் மன்னன் கழுத்திலிருந்த மணிமாலை யைக் கழற்றிக் குமரகுருபரருக்கு அணிந்து மறைந்தாள் என்பது கர்ணபரம்பரையாக வழங்கிவரும் வரலாறு.
காசியிலே சைவர்களுக்கு மடம் அமைக்க காசி சென்ற குமர குருபரர் அப்போது காசியை ஆண்ட முகலாய மன்னனிடம் மடம் கட்டுவதற்கு நிலம் தரவேண்டுமெனக் கேட்டபோது, சைவர்களுக்கு நிலம் கொடுக்க விரும்பாத முகலாய மன்னன் மறுதினம் வரும்படி அவரை அனுப்பி வைத்தான் என்பதும், மன்னன் மனநிலை அறிந்த குமரகுருபரர் தேவியைத் தோத்தரிக்க, அவள் தனது வாகனமாகிய சிங்கத்தை அனுப்பி அதிலேறிச் சென்று நிலம் கேட்குமாறு குமரகுருபரரைப் பணித்தாள் என்பதும், சிங்கத்திலேறி அரசசபை வந்த குமரகுருபரரைக் கண்டு பயமடைந்த மன்னன் அவர் கேட்டபடிட் வானில் பறந்த பருந்து வட்டமிட்ட அவ்வளவு நிலத்தையும் மடம் கட்ட வழங்கினான் என்பதும் வரலாறு.
"அந்தரியெந்தை தணைவியென் பாசத்தொடரை யெல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினான் மகிடன் தலைமேல் அந்தரிநீலியழியாத கன்னிகையாரனித்தோன் சுந்தரிகைத்தத்தாள் மலர்ந்தாளென் கருத்ததுவே"
எனத் தோத்தரிக்கிறார் அபிராமிப்பட்டர். அபிராமியின் கடைக்கண்
பார்வை பட்டவர்களுக்கெல்லாம்
"தனந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
I67

இனந்தருநல்லனவெல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே" என்கிறார் அவர்.
"கொம்பனையாளைக் குவிமுலை மங்கையை வம்பவிழ் கோதையை வானவர்நாடியைச் செம்பவளத்திருமேனிச்சிறுமியை நம்பியென்னுள்ளேநயர்ந்துவைத்தேனே"-திருமூலர்.
l68

Page 40
கந்தன் அருள்பெற கந்தசஷ்டி
தமிழ் நாட்டிலே முருகவழிபாடு தோன்றிப் பரவ வித்திட்ட அருணகிரிநாத சுவாமிகள் காலத்திலேயே அதாவது இற்றைக்கு 1500ஆண்டுகளுக்கு முன்னர் கந்தசஷ்டி விரதம் ஆரம்பமானது என்பதை அவரது திருப்புகழ் பாடல்கள் மூலம் அறியக்கூடியதாக இருக்கிறது.
ஏறக்குறைய திருப்புகழ் பாடல்கள் அனைத்திலும் முருகப் பெருமானது வீரப் போர்ப்பிரதாபங்களே இடம் பெற்றுள்ளது. சூரன், சிங்கன், தாரகன் ஆகிய மூன்று அசுரர்களை அவர்களது கிளை களுடன் கொன்றொழித்த முருகப்பெருமானது பெருமையே திருப்புகழ் பாடல்கள் முழுவதிலும் விரவிக்கிடக்கிறது.
திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, குன்றுதோறாடல் ஆகிய ஆறு படை வீடுகளைப் பற்றியும் சந்தச் சுவையுடன் யுத்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றியும் கூறும் திருப்புகழ் பாடல்கள் படிப்பவர் உள்ளங்களைப் பரவுச படுத்தும் சக்தி வாய்ந்தன.
உதாரணமாக 48 அடி, 72அடி 96 அடித் திருப்புகழ்களிலே யுத்த நிலை ஆவேசமாகவும் உக்கிரமாகவும் சந்தச்சுவையுடன் பாடப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, பழனி பற்றிக் குறிப்பிடும் "இத்தாரணிக்குள் மனுவித்தாய் முளைத்தழுது” என்ற 48 அடித்திருப்புகழிலும், சிதம்பரப்பதி பற்றிக் குறிப்பிடும் மருவுகடல் முகிலனைய குழல்மதி என்ற 96 அடித்திருப்புகழிலும், திருவண்ணாமலை பற்றிக் குறிப்பிடும் "விந்துப் புளகித இன்புற்றுருகிட" என்ற96அடித்திருப்புகழிலும்,
குமாரவயலூர் பற்றிக் குறிப்பிடும், விகட பரிமள மருகதமக இம சல' என்ற 72 அடித் திருப்புகழிலும், விராலிமலை
169

பற்றிக்குறிப்பிடும், மதகஜ துரக ரதமுடைய’ என்ற 72அடித் திருப்புகழிலும், ஏனைய 4 அடி, 8அடி, 16அடி, 24 அடி திருப்புகழ்களிலும் வேலைவற்றி வரண்டு சுறீர் சுறீர் என வேல் விடுத்த வேலவன் புகழ்பற்றிச் சந்தச்சுவையுடன் பாடப்பட்டுள்ளது.
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையும் அறுத்து ஞானநிலை பெறும்பேற்றை விளக்குவதே சூரசம் ஹாரத்தின் உட்பொருளாகும்.
சூரசம்ஹாரம் திருச்செந்தூர்ப் பதியிலேயே நிகழ்ந்ததாக வும் திருச்செந்தூர் என்ற சொல் அவுணர்களது இரத்தம் ஆறாகப் பாய்ந் தோடிய இடம் என்ற கருத்தையே புலப்படுத்துவதாகவும், தமிழ் நாட்டிலே திருச்செந்தூரில் மாத்திரமே சூரசம்ஹாரவிழா நடைபெறுவது இதற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது என்றும் திருப்புகழ் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
விரதங்களில் கடுமையானதும் மகிமையானதுமான விரதம் கந்தசஷ்டிவிரதமாகும்.மற்றைய விரதிகள் காலை ஒருநேரம்மாத்திரம் உணவருந்தாமல் விரதமனுஷ்டிக்கிறார்கள். ஆனால் கந்தசஷ்டி விதரமனுஷ்டிப்பவர்களில் ஆறு தினங்களிலும் தண்ணிர்கூட அருந்தாமல் முருகன் திருவடிகளை நினைத்துக் கொண்டு இருப்பவர்களும், மூன்று மிளகும் மூன்று மிடறு நீரும் மாத்திரம் அருந்துபவர்களும், ஒரு நாளைக்கு ஒர் இளநீர் மாத்திரம் பருகுபவர்களும், இரவில் பாலும் பழமும் மாத்திரம் உண்பவர்களும் எனப் பலதரப்பட்டவர்கள் உளர்.
அழுக்காறு, அவா, வெகுளி, வேட்கைநோய் ஆசாபாசங்கள், ஆணவ உணர்வு, சிற்றின்ப நினைவு முதலியன உடல்நிலை ஆரோக்கியமாக உள்ள காலங்களிலேயே உக்கிர நிலையடைவது
வழக்கம்.
கந்தசஷ்டிவிரதம் அனுஷ்டிக்கும் ஆறுதினங்களும் ஊனினை உருக்கி, உடலினை இளைக்கச் செய்து ஆணவம், கன்மம், மாயை ஆகியமும்மலங்களையும் கருவோடழிப்பதுபோல உடலினைவருத்தி முருக நாமத்தையே நினைத்துக் கொண்டிருப்பதால் மனதில் முருகன் 170

Page 41
நினைவன்றி வேறு நினைவுகள் ஏற்படாது என்பதை "எனதற மனமற இருவினை மலமற வரவொடு செலவற மயலொடு மலமற இருளற இகபர மறவொடு முளைத்தெழும் சோதியை நினைமின்” என்ற திருப்புகழ் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
சூன்ம நோயினால் வருந்திய தேவராஜசுவாமிகள்,
"சஷ்டியை நினைக்க சரவணபவனார்” என ஆரம்பிக்கும் கந்தசஷ்டி கவசத்தை பாடி அந்நோய்ப்பிணி அகலப் பெற்றார் என்பதைக் கருத்தில்கொண்டே கந்தசஷ்டி விரத காலங்களில் ஆலயங்களிலும் வீடுகளிலும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது.
அமரர் இடர்தீர்க்க அமர்புரிந்த குமரன் அடியை நினைத்தால்
"துதிப்போர்க்கு வல்வினைபோம்துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும்" எனக் கந்தசஷ்டிக் கவசக் காப்புச் செய்யுள் கூறுகிறது. கந்தசஷ்டி என்றால் கந்தனை நினைக்கும் ஆறு நாட்கள் எனப் பொருள்படும்.
வந்து வயதுவரை ஊமையாக இருந்து கந்தனருளால் வாய்பேசும் பேறுபெற்று கந்தர் கலிவெண்பா பாடிய குமரகுரு பரருக்கு அருள்புரிந்ததும் கந்தசஷ்டிக் காலத்திலேயே எனக் கூறுவர். கந்தசஷ்டி விரத காலத்திலே கோவில்கள் தோறும் கந்தபுராணம் படிப்பது தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் வழக்கமாகும்.
"திகழ்தசக்கர செம்முகமைந்துளான்” என்ற கந்தபுராணக் காப்பின் முதல் அடியைத் "திகடசக்கர செம்முகமைந்துளான்” எனத் தொடங்குமாறு முருகன் அடியெடுத்துக் கொடுத்தது மதிகழ்தசக்கரம் என்பது திகடசக்கரம் என வருவதற்கு எந்த இலக்கணத்திலும் விதியில்லை எனப் புலவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த போது வீர சோழியம் என்ற இலக்கண நூலிலே அதற்கான விதி இருக்கிறது என முருகப் பெருமான் விளக்கியதும் கந்தசஷ்டி காலத்திலேதான் என்று கூறுவாரும் உளர்.
|71

வைச வைஷ்ணவ பேதம்
சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என வாதிட்டு பேதம் பாராட்டும் அன்பர்களுக்கு கீழே வரும் சம்பவத்தால் இருவரும் ஒருவரே என விளக்கலாம். அதாவது மகாபாரதத்தில் வரும் ஒரு சம்பவம் இது. பூனிகிருஷ்ணபரமாத்மாவுக்கு உறவினராகவும், நண்பனாகவும் தாசனாகவும் விளங்கிய அர்ச்சுனன் தன்னைத் தவிர தீவிரமான சிவபக்தன். வேறொருவருமில்லை என கொண்டிருந்த மமதையை தடுக்க விரும்பிய கண்ணபிரான் ஒருநாள் அதிகாலை அர்ச்சுனன் பூசைக்காக மலர் கொய்து கொண்டிருந்த வேளை அவன் முன்தோன்றி அர்ச்சுனா புறப்படு, இருவரும் ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசரப்படுத்தினார். அர்ச்சுனனோ, சுவாமி நான் இன்னும் சிவபூசை செய்யவில்லை என்று அதை முடித்துவிட்டு வந்து விடுகின்றேன் என தயங்கினான். கண்ணனோ இல்லை அவசரமாகப் போகவேண்டும் நீ பூசைக்காக கொய்த மலர்களை எனது காலடியில் போடு அது பூசையாகும். உடனே வா என்று கூட்டிக்கொண்டு, வடக்கு நோக்கிச் சென்றார். பகவான், அர்ச்சுனனோ இவர் இன்று எனது பூசையை குழப்பிவிட்டார் என்ன விபரீதம் நடக்கவிருகின்றதோ என்று மிகுந்த வேதனையுடன் அவர் பின்னே சென்றான். வெகுதூரம் நடந்த இருவரும் திருக்கைலாயம் அடைந்தனர். அங்கு சிவபெரு மானுக்கு வணக்கம் செலுத்திய பின் கிருஷ்ணர் அர்ச்சுனனை நோக்கி அர்ச்சுனா நாங்கள் புறப்பட்டபோது நீ எனது பாதத்தில் போட்ட மலர்கள் சரியாக இருக்கின்றனவா என சரிபார்த்துக் கொள் என்று சிவனுடைய சடாமுடியை காண்பித்தார். பார்த்த அர்ச்சுனன் திகைப்படைந்து வெட்கி தலைகுனிந்தான். இதைச்சுவாமி நம்மாழ்வார் தமது பாசுரத்திலே கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
"திர்த்தன் உலகளந்த” (திருவாய்மொழி 2ஆம் பத்து 8ஆம் திருவாய் 6ஆவது பாசுரம் 693ஆம் பக்கம்)
72ן

Page 42
ஏனெனில் அவன் காலையில் கண்ணனது காலடியில் போட்ட அத்தனை பூக்களும் அதே வடிவத்தில் சிவபெருமானின் திருமுடியில் இருக்கக் கண்டான். பேதம் பாராட்டும் அன்பர்களுக்கு இப்படியான உதாரணங்களைக் கொண்டு தெளிவுபடுத்த வேண்டும். எந்தவொரு உயிர்வாழியும் காற்றைச் சுவாசிக்காமல் ஒரு சில நிமிடங்கள் கூட வாழ முடியாது. ஆனால் உலக மக்கள் அத்தனைபேரும் காற்றைக் காற்று என்று கூறுவது இல்லை உலக மொழிகள் எத்தனை உண்டோ அத்தனை மொழிகளிலும் காற்றுக்கு ஓர் பெயர் உண்டு. அதேபோன்று இறையுணர்வு இல்லாமல் மனிதன் வாழமுடியாது. ஆகவே உலக மகா சக்தியாகிய இறைவனை ஏதாவது ஒரு பெயரால் அழைத்து அவனுக் குரிய அருளைப் பெறுவோமாக இதையும் சுவாமி நம்மாழ்வாரே ஒரு பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளார் இதை பார்க்கலாம்.
உணர்த்துணர்ந்திழிந்தகன்று உணர்ந்துருவியந்த இந்நிலைமை உணர்ந்துணர்ந்துணரிலிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள். உணர்ந்துணர்ந்து துரைத்துரைத்துஅரிஅயனரனெனும் இவரை உணர்ந்துணர்ந்து உரைத்துரைத்து இறைஞ்சுமின் மணப்பட்ட தொன்றே.
(திருவாய்மொழி33ஆம் திருவாய்மொழி 6ஆம் பாசுரம் 567ஆம் பக்கம்)
-நாராயணதாசன்.
திர்த்தன் உலகலந்த சேவடிமேல்பூந்தாமம் தேர்த்திவையே சிவன் முடிமேர் தான் கண்டு
பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துளாயான்பெருமை பேர்த்தும் ஒருவரால் பேசக்கிடந்ததே?
173

சிவயோக சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய நற்சிந்தனையின் சாரமாக விளங்கிய பாடல்
அடியார்கள் மனனம் செய்து சிந்தையில் நிறுத்தவேண்டும்.
அத்துவித பொருள் காப்பாம் எனக்கு அடியார்கள் என்றும் காப்பாம் இத்தரும் தேவரும் காப்பாம் என்றன் சித்தத்துள் திலங்கும் திருவருள் காப்பாம்.
(அத்து வித)
அட்ட வசுக்களும் காப்பாம் எனக்கு ஆனந்தமான பாரபரன் காப்பாம் எட்டுத் திசைகளும் காப்பாம் எங்கும் நிறைந்த சிவசக்தி காப்பாம்
(அத்து வித)
பிராணன் அபாணன் காப்பாம் என்னைப் பிரியாது இருக்கும் பிராணவம் காப்பாம் அரா பணிவேணியன் காப்பாம் எனக்கு அருளை அளிக்கும் குருபரன் காப்பாம்
(அத்து வித)
பஞ்ச புலன்களும் காப்பாம் என்னை பரவும் அடியார்கள் அனுதினமும் காப்பாம் குஞ்சர முகத்தவம் காப்பாம் நல்ல குழந்தை வடிவேலன் என்றென்றும் காப்பாம்
(அத்து வித)
74

Page 43
சந்திர சூரியர் காப்பாம் எங்கும் தங்கும் உயிர்கள் அனைத்தும் காப்பாம் மந்திரம் தந்திரம் காப்பாம் நான்கு மறைகளும் சிவாகமம் மானிலம் காப்பாம்
(அத்து வித)
சிந்தையாலும், சொல்லாலும், செய்கைகளாலும் நல்லூர் தேரடிப்ப்பிரான் சிவமாகிய செல்லப்பரையே தந்தை தாய் என்றே திருவடியடைந்தார். வெண்முடி மகிழ்தேர் சிவயோகஞான மாமுனி முந்தை ஆயிரத்துள் இவை திருவாய் மலர்ந்த நற்சிந்தனையில் சொன்ன செந்தமிழ் சொற்தமிழ் பாடும் பணிவுடையோர் சிவ
தொண்டர் எம்பிரானவரே.
I75
 

தாயாகித் தந்தையாய் போற்றி
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்டதாய் மகன்தன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தைச் சென்நோற்றன் கொல் எனும் சொல்.
போகின்ற காலங்கள் போய காலங்கள் போகு காலங்கள்தாய்தந்தையாய் உயிராகின்றாய். உன்னையான் அடைந்தேன்விடுவேனோ? பாகின்ற தொல்புகழ் மூயேழஆதிக்கெல்லாம் நாதனே பரமாதனிவெங்கடவா நறுந்துளாய் கண்ணிவேந்தே
நம்மாழ்வார்திருவாய்மொழி
சிவயோக சுவாமிகள் சொல்லுவார்,
நீ உடம்பன்று, புத்தியன்று சித்தமன்று, நீ ஆன்மா, ஆன்மா என்றும் அழியாது-சிறு மகான்களுடைய அனுபவ சித்தாந்தம். ஆனா நீ ஒன்று செய்யக்கடவது. அதாவது தரும நெறியில் பிசகாதே, கடவுள் உள்ளும் புறமும் உள்ளவர் உமாபதி சிவாச்சாரியர் போற்றி பஃறொடையில் "எப்பிறப்பும் முன் செய் இருவினையால் நிட்சயித்து. பொற்புடையதாய் தந்தையார் போகத்தினால் கெற்பமாகி என்றும் பூதனா சரீரம் போனால் புரி அட்ட ரூபம் தானே ஆதனா சரீரமாகி இன்ப துன்பங்களை தூயத்து கழித்து தீதில்லா அணுவாய்ச் சென்று சேர்ந்திடும் ஜீவர்கள் எல்லாம்பூணி,அருணகிரிநாதரும்,திருப்புகழில்
எருவாய்கருவாய்தனிலே உருவாய் இதுவே பயிராய்விளைவாகி
f76

Page 44
இவர் போய் அவராய் அவர் போய் இவராய் ஒருதாய், இருதாய், பல கோடியதாய் உடனே அவமாய் அழியாதே ஒரு கால் முருகா பரமாகுமரா உயிர்கால் அருள்தாராய்
என்ற கருத்தை விளக்கியிருந்தார்.
இதனாலே எங்கள் இரு வினை ஒப்பு மல பரிபாகம் வந்தால் ஒழிய பிறவிச் சங்கிலிக் கோர்வை போல, தொடர்ந்து கொண்டே யிருக்கும். அதனாலே பிறந்து பிறந்து இளைத்துப் போகுமட்டும் தாயின் கருவறையில் இருந்து ஜீவர்கள் வினைக்குத் தகுந்ததேகம் எடுத்தேயாக வேண்டும்.
ஒவ்வொரு பிறவியிலும் தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய பெற்ற கடனைச் செய்யவேண்டும். இவ்விதமாக பட்டணத்து அடிகள் எங்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். அவர் தன்னைப் பெற்ற தாய்க்கு இறுதிக் கிரியைகளில் திருவாய் மலர்ந்தருளிய பாடல்கள் எங்கள் நெஞ்சங்களில் பதிந்தே இருக்கும். ஊழிகாலம் வரையும் சிந்திக்கச்செய்யும்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்று பையல் என்ற போதே பரிந்தெடுக்கி செய்ய இறகைக் குறத்தில் ஏந்தி கனக முலை தந்தாழை
எப்பிறப்பில் காண்பேன்னி முந்தித்தவங்கிடந்து முன்னூறு நாள் சுமந்து அந்திபகலாய் சிவனே என்று ஆதரித்து
தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயர் தமக்கே எரியதணல் மூட்டுவேன் நெந்து சுமந்து நோகாமல் ஏந்தி முலை. வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்.
|77

முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே யானும் இட்ட தீ மூள்கவே இவ்விதமாகவே தாயின் பெருமை பாடி கடமை செய் திருக்கிறார். அவருடைய இறுதி யாரோடு அற்றது பற்று உற்றது விடு பெற்று திருவெற்றியூரில் லிங்க வடிவாய் அமர்ந்தார்.
நான்கு சமயகுரவர்கள் நம்மாழ்வார் ஜெககுரு சங்கராச் சாரியார், பூணி இராமானுஜர், கடையிற்சாமியார், செல்லப்பா சாமியார், சிவயோகசுவாமி தாய் வயிற்றி இறுதிக் கட்டமாக பற்றற்று பேரின்ப வெள்ளத்தில் திளைத்தார்.
இக்கருத்துக்களை மாறி மாறிப் பிறந்து இறந்து உன் அடியை அடைந்து உள்ளம் தேறி ஈற்றில் பேரின்ப வெள்ளம் மூழ்கினேன். பாறி பாறி பல் அசுரர் குழாங்கள் நீறென பாய் பறவை ஒன்று அறி வீற்றிருந்தாய் என்தாயே என்று தாய்தந்தையாய் உயிராகின்றாய் என்ற பெருமை சொல்லொணாதது எப்பொழுதும்நிலைத்திருக்கும்.
78

Page 45
6) I600T.g.U. Pope MADD Bob6). Tafsib
வண.ஜி.U.Pope ஐயா அவர்கள் 1820ஆம் ஆண்டு சித்திரை மாதம் 22ஆம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். இவர் Oxford கலாசாலையில், MA பட்டமும். DD பட்டமும் பெற்றார். இவர் Oxford கலாசாலையிலே உதவி அத்தியட்சகராக நியமிக்கப்பட்டவர். இவர் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக கிறிஸ்தவ மிஷனரியுடன் சென்னை வந்தடைந்தார். இவர் சென்னை துறைமுகத்தை வந்தடைந்த போது தர்மபுர ஆதீனத்தவர்கள் திருமுறைகளை யானையின் மீது ஏற்றி வலம் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது இவ் அற்புத காட்சியைக் கண்டு ஜி.U.Pope இது என்ன விடயம் என வினாவினார். அப்போது அங்கிருந்தவர்கள் சைவ சமய திருமுறைகளை யானையில் ஏற்றி சித்திரை மாதம் வலம் வருதல் வழக்கம் என்றனர். ஜி.U.Pope ஐயா இத்திருமுறைகளை நன்கு அறியவேண்டும் என்று தமிழ் மொழியை கற்க வேண்டும் எனத் துணிந்தார். அவர் நன்கு திரிபுரக்கற்று தமிழுக்கு பொற்கால் இலண்ணம் என எழுதினார். படிப்படியாக தமிழை நன்கு கற்றறிந்து திருக்குறள், நாலடியார் என்பனவற்றை முதன்முதல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்பு திருவாசகத்தையும் மொழிபெயர்க்கத் துணிந்தார்.
வயது முதுமை அடையும் போது நான் இந்த திருவாசகத்தை மொழி பெயர்ப்பேனா என சஞ்சலமடைந்தார். பின்பு இங்கிலாந்து சென்று மொழிபெயர்க்கலாம் என்று எண்ணினார். அவர் Oxford கலாசாலை அத்தியட்சகர் பேரியர் உடன் ஆலோசனை பகன்று வந்தார் பேரியர் ஜி.U.Pope க்கு நீங்கள் மனம் சஞ்சலமடையாமல் மொழிபெயர்ப்பீர்கள் என உற்சாகம் கொடுத்தார். எனினும் இவரது மனம் பேதலித்து நின்ற சமயம் ஓர் பூரண நிலாவில் ஒர் உருவத்தைக்
79

கண்டார். அந்த உருவம் எனக்கு முன் தோன்றி எனக்கு ஆசீர்வதித்து பின்புஅது மறைந்துவிட்டது என ஜி.U.Pope கூறியுள்ளார்.இவ்வுருவம் மாணிக்கவாசகசுவாமியாகத்தான்இருக்கவேண்டும் எனளண்ணிபின்பு திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.
திருவாசக மொழிபெயர்ப்பு பொருத்தமானதும், தகுந்த சொற்களையும் வைத்து அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருவாசகத்தின் சிவபுராணத்தில் இருந்து அச்சோ புராணம் வரை 51 பதிகம் இதன் வரிகளின் எண்ணிக்கை 3327 இனை மொழிபெயர்த்து முடித்தார். 51 பதிகங்களிலே 45ஆவது பதிகம் யாத்திரைப்பற்று இவ் யாத்திரைப் பற்றினை மிக முக்கியமாக தனது தேவாரத்தில் பாடும் போது 5ஆவது பாடலும் 6ஆவது பாடலும் முக்கியமானதாகும்.இதை I am big tetrameter பாடி ஆனந்த வெள்ளத்தில் அகமகிழ்ந்து தன்னுடைய தேவஸ்தானத்தில் இருந்துள்ளார். இவ்விரண்டு பாட்டும் தேவலோக யாத்திரையாக அமைந்துள்ளது.
யாத்திரைப்பற்றின் 5ஆவது பாடல்
விடுமின் வெகுளிவேட்கை நோய்
நிகர்வோர் காலம் இனி இல்லை உடையான் அடிக்கீழ் பெரும் சாத்துடன் போவதற்கு ஒரு படிமின் அடைவோம் நாம் போய் சிவபுரத்தை அணியார் கதவு அடையாமை புடைபட்டு உருகி போற்றுவோம் புயங்கனாழ் லான் பொன்னடிக்கே.
Free ye your souls. from pains of routh and lust Henforth. the time shall not belong drawn out benithourmasters feet with glad accleim end that we in one may goinone combine eveninsivan's townshall refudge find Whose flowered with gath shall not beclased There we enterdin exthey shall sing glowries only your bujungunking.
80

Page 46
6ஆவது பாடல் புகழ்மின் தொழுமின்பூப்புனைமின் புயங்கன்தாழேகுந்தி வைத்திட்டு இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடை அடையாமே திகழும் சிரார் சிவபுரத்துக்குச் சென்று சிவன் தாழ் வணங்கி நாம நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகிநிற்போமே.
Praies.ye adore bring beauty of flowers bujun's food, Plantye with in you Souls disp iee adversities of every form no kindrencebar your happy way to sivans town that filled with glory shined to sivan's foot go ye to wilshire there before the seints that their abide we shall move and stand in soul desolving rupture there
இவர் திருவாசகத்தை இவரது 80ஆவது பிறந்த தினத்தில் அதாவது 1900ஆம் ஆண்டு சித்திரை 22ஆம் திகதி வெளியுலகுக்கு காட்டினார். இதனால் சைவ மக்கள் என்றும் மறவாதிருக்க வேண்டும்
என்று இதை அருளினார்.
அதன் பிறகு திருவாய்மொழி இவர் தன் இறுதிக் காலத்தில் தன்னை அடக்கம் செய்யும் போது தமிழ் மகன் என்று தன்னுடைய கல்லறையில் பதிக்க வேண்டும் என்று விரும்பினார். தென்னிந்திய சைவ சித்தாந்த (திருநெல்வேலி) அவர்கள் தலவைக்கல்லிலே செந்தமிலும் மாணவன் இங்கே உறங்குகின்றான் ஜி.U.Pope தமிழ் மகன் என்று பதித்தார்கள். இதனால் சைவத்தின் பெருமை தமிழ் மொழியில் ஆர்வத்தையும் பிறப்புரிமையாகக் கொண்டவர்.
181

சனி விரதம்
திரேதா யுகத்திலே தென்னிலங்கையாண்ட இராவனேஸ் வரன் முதன் முதலாக சனிஸ்வரனிற்கு சனி விரதம் பிடித்தார். இதனுடைய வரலாறு சிவபெருமானுடைய பேரருள் இன்பம் பெற்ற மண்டோதரி அம்மையாரை இராவணேஸ்வரன் திருமணம் செய்தார். இவருடைய வாழ்விலே புத்திர பாக்கியம் இல்லாத காரணத்தால் இராவணேஸ்வரன் பெரும் தவம் செய்தார். இத் தவப்பலனால் சிவனருள் பெற்று புத்திர பாக்கியம் கிடைக்கும் என்று பெருமான் அருள் செய்தார். தனது மனைவியார் கற்பம் உற்ற காலத்திலும் பிரசவ காலத்திலே நவக்கிரகங்கள் எல்லாவற்றையும் பார்வையற்று இருக்கும் படி அடைத்தார். இதில் பிரசவ நேரத்திலே திரசு வெளிப்படுகின்ற நேரத்திலே சனிஸ்வரன் எழுந்து நிற்க அவரின் பார்வை அக்குழந்தையின் மீதுபட்டது. இத் தருணத்திலே இராவனேஸ்வரன் கடுங்கோபம் கொண்டு தனது தண்டாயுதத்தாலே சனீஸ்வரனின் காலை அடித்துமுறித்தார்.இவரது மகனிற்கு இந்திரசித்து என்று நாமம் சூட்டினார்.
சில காலங்களின் பின்னர் அவன் வளர்ந்து பெரியவனானான். இக்காலத்திலே இராம இராவண யுத்தம் தென்னிலங்கையில் நடைபெற்றது. இந்திரசித்து என்பவர் நச்சுப் புகை அடிப்பதில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். இதன் விளைவாக போரிலே இராமனும் இலட்சுமணனும் மயங்கினார்கள். இந்த நேரத்திலே ஆஞ்சநேயர் சஞ்சீவி எனும் மலையைக் கொண்டு வந்து பின்னர் நடைபெற்ற யுத்தத்திலே இந்திரசித்துவை சங்காரம் செய்தார். இதனால் இராவணன் கடன்பட்ட நெஞ்சம் போல்க் கலங்கினார். இராவனேஸ் வரன் சனி தோஷம் தீர்வதற்காக சனி விரதத்தை மேற்கொண்டார். இதன் மூலம் சனி விரதத்தின் மகிமையும் அவசியமும் புலப்படுகின்றது. புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமை விரதம் முக்கியமானதாகும். ஏழரைச் சனி காலங்களில் உள்ளவர்களும் மற்றவர்களும்
82

Page 47
சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் சனிதோஷங்களை நிவர்த்தி செய்யலாம்.
இந்தக் காலங்களில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி விருப்பத்தோடு நல்லெண்ணையும் எள்ளுப் பொட்டணியும் வைத்து சுட்டி விளக்கேற்றி சனிக்கும் மற்றைய கிரகங்களிற்கும் வழிபட்டால் பாரிய நன்மைகள் உண்டாகும். வாழ்விலே துன்பங்கள் தீர்ந்து நோய்களும் தீர்ந்து நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும்.
சிவ, வைஷ்ணவ ஆலயங்களில் ஏராளமான பக்தர்கள் பக்தி பூர்வமான நிகழ்ச்சிகளை இக்காலகட்டத்திலே காணக் கூடியதாக உள்ளது. மேலும் விரதம் இருந்து உணவு உண்ணும் முன் சனீஸ்வரனை "காகா” என்று அழைத்து அவற்றிற்கு (காகம்) உணவை வாழையிலையிலே வைத்து அவற்றிலே நல்லெண்ணெய் சேர்த்து அவற்றிற்கு படைத்த பிற்பாடு தாமுண்ணும் பழக்கம் தமிழ் மக்களிடையே அதிகமாக நிலவி வருகின்றது.
இந்த விரத காலங்களில் திருஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளிய “கோளறு பதிகம்" சிந்தையில் வைத்துப் பாடுதல் தோஷங்களை நீக்கும் மாபெரும் மருந்தாகக் காணப்படுகின்றது. இப் புரட்டாதி மாதத்திலே தான் அநேகமாக வைஷ்ணவ தேவாலயங்களில் வருடாந்த உற்சவ காலங்களிலே இந்த மாபெரும் பிரம்மாண்ட நிகழ்வு நிகழ்வது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்விரதத்தை அனுஷ்டித்தல் தோஷமுள்ளவர்களின் முக்கிய கடமையாகும்.
183


Page 48


Page 49