கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் மீது ஆயுதமோதலின் தாக்கம்

Page 1
Impact of Armed Conflict on Children
Report of Graca Machel, Expert of the Secretary-General Of the United Nations
Selected Highlights
ED NATons unicef
ל איסל ל-35%.
 

355 Teče

Page 2

சிறுவர்மீது ஆயுதமோதலின் தாக்கம்
கிறேஷா மஷேலின்
அறிக்கை
ஐக்கிய நாடுகள் செயலாளர் - நாயகத்தின் நிபுணர்
தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பாகங்கள்
Impact of Armed Conflict on Children
Report of Graca Machel,
Expert of the Secretary-General of the United Nations
Selected Highlights
UNITED NATIONS Department of Public information
இ
unicef
United Nations Children's Fund

Page 3

१
பொருளடக்கம்
(pergedy --------------------------------
பிள்ளை வளர்ச்சிமீது ஆயுதமோதலின் தாக்கம் -------------.
செளக்கியமும் போஷாக்கும் --------------------------------------
உளவியல் மீட்சியை மேம்படுத்தலும் சமூக ஒருங்கிணைப்பும் ------
கல்வி : சிறுவர்களின் எதிர்காலத்தின்மீது முதலீடு செய்தல் ------swar
விசேட அக்கறைகள் --------------------------
போராளிச் சிறுவர்கள் : மனிதகுலத்துக்கு ஓர் அவமானம் ---------
ஓட்டம் பிடிக்கும் சிறுவர்கள் அகதியும் உள்நாட்டில்
GLüb6)Luiritz afigyelíteelbűn ""-----
பால் அடிப்படையிலான வன்முறை : ஒரு யுத்த ஆயதம் ------------------
நிலக்கண்ணிவெடிகள், வெடிக்காதுள்ள வெடிப்பொருட்கள் ஏற்படுத்தும் நாசம் "
aunasugasarit : oit 2 asTafa0iULL gbQup -----------------------------
சிறுவர்களது மனித உரிமைகளை மேம்படுத்துதல் --------------
சர்வதேச சட்டமும் ஆயுத மோதலில் சிறுவரைப் பாதுகாத்தலும்
சிறுவர்களைப் பாதுகாத்தல் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பு
விடயங்களுக்கும் முன்னிடம்
சிறுவர் உரிமைகளுக்காக வாதாடுதல் ஒவ்வொருவருக்குமுரிய
செயல்கள்
04
08
09
7
24
24
28
32
37
41
46
46
48
49

Page 4

GA6036D.

Page 5
鶯
 

முன்னுரை
"மோதல், யுத்தம் ஆகியவற்றின் மூல காரணங்கள் முறைகேடானவை, ஆழமானவை. அவற்றைக் கண்டறிதற்கு, மனித உரிமைகள், அடிப்படைச் சுதந்திரங்களைப் பெரிதும் மதிப்பதற்கும். பரவலான ஐஸ்வரியத்துக்கான நீடிக்கும் பொருளாதார, சமூக வளர்ச்சியை மேம்படுத்தற்கும். துயரைக் களைதற்கும். பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதையும் பயன்படுத்துவதையும் தடுப்பதற்கும் எங்களது ஆகக்கூடிய முயற்சி வேண்டியிருக்கும். ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் பூட்றொஸ் பூட்றொஸ் - காலி, சமாதானத்துக்கான ஒரு நிகழ்ச்சிநிரல், 1995
ஆயுத மோதல், வேறெந்த சக்தியிலும் பார்க்க கோடிக்கணக்கான சிறுவர்கள் பெண்களது வாழ்வை மாற்றம் அடையச் செய்துள்ளது. சிறுவர்களும் அவர்களது குடும்பங்களும் பரிமாறும் துப்பாக்கி வேட்டுகளுக்கு நடுவில் சிக்கிவிடுகிறார்கள் என்பது மாத்திரமல்ல, பலர் குறிவைக்கவும்படுகிறார்கள். எதுவுமே விட்டுவைக்கப்படுவதில்லை, புனிதமாகக் கொள்ளப்படுவதில்லை அல்லது பாதுகாக்கப்படுவதில்லை. எமது காலத்தில் நிகழும் ஆயுத மோதலின் தனித்த குணவியல்பு சிறுவர்கள் மிக அதிகப்படியாகத் துன்புறுவதேயாகும்.
கடந்த பத்தாண்டு காலத்துக்குள்ளே மாத்திரம் இருபது இலட்சம் பிள்ளைகள் ஆயுத மோதலில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்று மூன்று மடங்கினர் பாரதூரமாகக் காயப்பட்டோ நிரந்தரமாக ஊனமுற்றோ உள்ளார்கள். எண்ணற்றவர்கள் இவற்றைப் பார்க்குமாறு அல்லது பயங்கர வன்முறைச் செயல்களில் ஈடுபடுமாறு கூட பலவந்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். இப்புள்ளி விபரங்களே அதிர்ச்சி தரப்போதுமானவை, ஆயினும் அவற்றிவிருந்து கண்டுகொள்ளக்கூடிய முடிவுகள் மேலும் திடுக்கிடச் செய்வன: தார்மீக வரட்சி நிலவும் சூனியத்தினுள், மிக்க அடிப்படையான மனித விழுமியங்கள் இல்லாத் நிலப்பரப்பினுள், சிறுவர்கள் கொல்லப்படும், கற்பழிக்கப்படும், உடல் ஊனப்படுத்தப்படும் நிலப்பரப்பினுள், சிறுவர்கள் படைவீரர்களாக, பட்டினி போடப்பட்டு, கொடுமையான மிருகத்தனத்துக்கு ஆளாக்கப்பட்டு வதைக்கப்படும் நிலவெளியினுள் உலகம் அதிகம் அதிகமாகத் தள்ளப்படுகிறது.
சிறுவர் மீதான தாக்குதல்களை நிறுத்தக் கோரிக்கை
இன்றைய ஆயுத மோதலின் குணவியல்பாக இருக்கும் கட்டுப்பாடின்மை, நிலைதடுமாற்ற உணர்வு, குழப்பம் போன்றவற்றுக்கான காரணிகள் பலவாக இருக்க முடியும். பரவலான வறுமை, பொருளாதார சீர்கேடு போன்றவை நிமித்தம் வளங்களைக் கட்டியாள்தற்காக ஏற்படும் அரசியல் குத்துக்கரணங்களும் போராட்டங்களும் இவையாகும். பாரம்பரிய சமூகங்களைச் சின்னாபின்னப்படுத்தியுள்ள சமூகப் புரட்சிகளின் இயற்கையான பெறுபேறாகவே நவீன புத்தங்களது முரண்டுத்தனம் இருக்கலாம். ஆயினும், காரணங்கள் எதுவாக இருந்தபோதிலும், நிறுத்துங்கள் எனக்கோரும் நேரம் வந்துவிட்டது. சர்வதேச சமூகம், சிறுவர் மீதான தாக்குதல்கள், சகிக்க முடியாதவை, ஏற்கமுடியாதவை எனப் பிரகடனஞ் செய்ய வேண்டும்.

Page 6
சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் குழு செய்த விதப்புரைகளின் விளைவாக சிறுவர்கள் மீது ஆயுத மோதல் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்தற்கு ஒரு நிபுணரை நியமிக்குமாறு பொதுச்சபை 1993 இல் செயலாளர் நாயகத்தைக் கேட்டுக்கொண்டது. இரண்டு வருட ஆய்வு, கள விஜயங்கள், உசாவுதல்கள் ஆகியவற்றின் பின்னர், இவ்விடயத்தில் 65uarian நாயகத்தின் நிபுணரும், மொசாம்பிக் நாட்டின் முன்னைநாள் கல்வி அமைச்சருமான கிறஸா மஷேல், 1996 இல் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு “சிறுவர்கள் மீது ஆயுத மோதல் ஏற்படுத்தும் தாக்கம்” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். (ஆவணம் ஏ/51/306 உ-ம் அனு, ! உ-ம்) யுத்தநிகழ்வில் சிறுவர்களுக்கு எந்தப்பங்குமே கிடையாது என்பதே அறிக்கையின் மிக அடிப்படையான நிலைப்பாடாகும். உலகனைத்தும் நிகழும் ஆயுத மோதல்களில் சிறுவர் தொடர்புபடுவதை முழுமையாகத் தெளிவுபடுத்துவதோடு, அரசுகள், ஐக்கிய நாடுகள் அமைப்பின் தாபனங்கள், அரசுகளுக்கிடையிலான, பிரதேசங்களிலான நிறுவனங்கள், பொதுமக்கள் சமூக தாபனங்கள் தனிநபர்கள் ஆகியோரை நோக்கிற்கொண்டு, அவ்வறிக்கை அது கண்டறிந்தவற்றையும் விதப்புரைகளையும் முன்வைக்கிறது. சிறுவர் மீது எல்லா வகையான ஆயுத மோதல்களும் ஏற்படுத்தும் தாக்கத்தைப்பற்றி இயன்றவரையில் மிகப் பரவலான மக்கள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தலை இச்சிறு நூல் குறிக்கோளாகக் கொண்டது. அறிக்கையின் முக்கிய விதப்புரைகளைச் செயற்படுத்தற்காகக் கவன ஈர்ப்புச் செய்துள்ளது. சிறுவர் மீது ஆயுத மோதலின் தாக்கம் பற்றிய அறிக்கைக்கான ஆய்விலிருந்து பெறப்பட்டவையே இவ்வெளியீட்டில் உதாரணங்களாகத் தரப்பட்டுள்ளன.

பிள்ளை வளர்ச்சிமீது ஆயுதமோதலின் தாக்கம்

Page 7
驚
NPhoto 86.794 saac
 

“அபிவிருத்தியில் முதலீடு செய்யக்கூடிய வளங்கள் ஆயுத உற்பத்திக்குத் திசைதிருப்பப்படுதலினால், கோடிக்கணக்கான சிறுவர்கள் ஒரு துப்பாக்கியை ஒருபோதும் கண்டிராதபோதிலும், அவர்கள்யுத்தங்களினால் துன்பப்படுகிறார்கள். அநேகமான யுத்தங்கள் அவற்றை நிகழ்த்தற்கு ஆகக் குறைந்த அளவிலேனும் நிதிவளமற்ற நாடுகளிலேயே நடக்கின்றன என்பது எமது காலத்தில் துன்பகரமான யதார்த்தங்களுள் ஒன்றாக இருப்பது என்னவோ உண்மைதான்.” “உலகச் சிறுவர்களது நிலைமை ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) 1996,
ஆயுத மோதல் சிறுவர்மீது ஏற்படுத்தியபுண்கள். அவை உடல்ரீதியான காயமாக, பால்ரீதியான வன்முறையாக, உளரீதியான துயரமாக இருந்த பகிரங்க அவமானங்களே சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தை உத்வேகம் கொள்ளச் செய்த இயல்புகளாகும். பிள்ளை வளர்ச்சியின் சகல அம்சங்களையும் -அவை உடல்ரீதியான, உளரீதியான, உணர்வுரீதியான எதுவாயினும் அவை எல்லாவற்றையும் ஆயுத மோதல் பாதிக்கிறது. அத்தகைய விளைவுகள் ஒன்றுதிரண்டு அவற்றிடையே மேலும் பாதிப்பைக் கொண்டுவருகின்றன. வழங்கப்படும் உதவி உருப்படியாக இருப்பதற்கு இத்தகைய பாதிப்பு விளைவு ஒவ்வொன்றையும் கருத்திற்கொள்ள வேண்டும். பெண்கள் மீது, குடும்பங்கள் மீது ஏற்படும் தொடர்புபட்ட விளைவுகளையும், பாதுகாப்பு வழங்கும் சமூக ஆதரவு அமைப்புக்களையும் அபிவிருத்திக்கான பாதுகாப்புள்ள சூழலையும் உற்று நோக்காது, ஆயுதமோதலின் தாக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாது. குடும்பத்தின் மூலமாகவும், உள்ளூர் பண்பாட்டு மரபை அடியொற்றிய சமூக அடிப்படையிலான தீர்வுகள், சிறுவர் வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஆகியன மூலமாகவே சிறுவர் நல்வாழ்வு உன்னதமாக உறுதிப்பட முடியும்.
உணவு வழங்கல்கள் தடைப்படுதல், பயிர்களும் கமத்தொழில் உட்பட்ட அமைப்புகளும் நாசமடைதல், குடும்பங்களும் சமூகங்களும் சின்னாபின்னப்படுதல், மக்கள் தொகை இடம்பெயர்தல், கல்வி, சுகாதார சேவைகளும், தண்ணிர், செளக்கிய அமைப்புகளும் அழிந்துபோதல் போன்ற எல்லாமே சிறுவர்களை வெகுவாகப் பாதிக்கின்றன. சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் 39-வது ஷரத்தில் சொல்லப்பட்டிருப்பது - எந்த வகையான புறக்கணிப்பு, கரண்டல் அல்லது துர்ப்பிரயோகம், சித்திரவதை அல்லது குரூரமான, மிருகத்தனமான கண்டிப்பு அல்லது தண்டனை அல்லது ஆயுதப் பிணக்குகள் எவற்றினாலேனும் பாதிக்கப்பட்ட பிள்ளை உடலாலும் உள்ளத்தாலும் குணமடைந்து சமுதாயத்தில் மீளவும் இணைந்துகொள்ளச் செய்வதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளுைம் பங்காளி நாடுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறான குணமடைதலும் மீளச்சேரலும் பிள்ளையின் ஆரோக்கியம், சுயகெளரவம், கண்ணியம் ஆகியவற்றைப் பேணுகின்ற சூழலில் அமைதல் வேண்டும். பிள்ளைகளின் உடல்ரீதியான, உளரீதியான மீட்சியையும் சமூகத்துடன் ஒன்றிணைவதையும் உறுதிப்படுத்துவதற்குச் சிறந்த வழிமனிதத்தன்மையான ஆதரவாகும். இதன் முதன்மையான அம்சங்கள் செளக்கியத்தையும் போஷாக்கையும் உறுதிப்படுத்தல், உளரீதியான சமூக ரீதியான நல்வாழ்வு, கல்வி ஆகியனவாகும்.

Page 8
செஊக்கியமும் போலூக்கும்
ஆயுத மோதல் உதாசீனஞ் செய்யப்பட முடியாத ஒரு பாரிய பொதுச் சுகாதாரத் தொல்லையாகும். பிள்ளைகளுக்கு அத்தகைய பெருமளவில் கேடுவிளைக்கும் எந்த நோயும் மிக முற்பட்ட காலத்திலேயே பொதுச் சுகாதார நிபுணர்களது அவசர கவனத்தை ஈர்த்திருக்கும். ஆயுத மோதல் படை வீரர்களிலும் பார்க்க அதிக சிறுவர்களைக் கொல்லும்போதும் ஊனமடையச் செய்யும்போதும், குரல் எழுப்புதற்கான விசேட கடப்பாடு சுகாதாரத் துறைக்கு உண்டு.
கத்திக்குத்துக் காயங்கள், துப்பாக்கிச் சன்னங்கள், குண்டுகள், நிலக்கண்ணி வெடிகள் போன்றவற்றின் நேரடிப் போராட்டத்தின் விளைவாக ஒவ்வொரு வருடத்திலும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மடிகிறார்கள். ஆயினும், ஆயுத மோதல்கள் காரணமாக ஏற்படும் அல்லது பெருகும் போஷாக்கின்மையாலும் வியாதியாலும் மேலும் அதிகம் சிறுவர்கள் மாழ்கின்றார்கள். மொசாம்பிக்கில் மட்டும் 1981 ஆம் ஆண்டுக்கும் 1988 ஆம் ஆண்டுக்கிடையிலும் ஆயுத மோதல் நிமித்தம் 454,000 சிறுவர் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. உலகின் மிக வறுமைப்பட்ட நாடுகள் சிலவற்றிலேயே இன்றைய ஆயுத மோதல்களில் பல நிகழ்கின்றன. இந்நாடுகளில் சிறுவர்கள் ஏலவே பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்கள்.
செளக்கிய,ே சேமவாழ்வு ஆறுவற்றிற்கு ஏற்படும் கூட்டுத் தாக்குதல்களினால் சிறுவர்களே பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சோமாலியாவில் ஏற்பட்ட மோதலின் உச்சிக் கட்டத்தின்போது சில இடங்களில் ஏற்பட்ட சிறுவர் மரணங்களில் பாதிக்கு மேற்பட்டவை சின்னமுத்து நோயினால் ஏற்பட்டவையாகும் வயிற்றோட்டம் மற்றொரு சாமானிய, ஆனால் கடுமையான உயிர்கொல்லி வியாதியாகும். வங்காள தேசம், கென்யா, மலாவி, நேப்பாளம், சோமாலியா, சயிறே நாடுகளின் அகதிமுகாம்களில் கண்டவாறு பேதி வியாதி (கொலரா) ஒரு நிரந்தர பயமுறுத்தலாகும். அகதி முகாம்களில் உள்ள சன நெருக்க நிலைமைகள் கிருமித்தொற்றுக்கள் பரவக்கூடிய இடங்களாக இருப்பதால், உலகின் அகதிகளில் அரைவாசிப்பேர் காச ரோகத்தினால் பாதிக்பபட்டிருக்கலாம் என உலக சுகாதார தாபனம் (டபிள்யூ.எச்.ஓ) மதிப்பிடுகிறது. மலேரியாவும், நிமோனியாவும் உட்படக் கடும் சுவாசத் தொற்றுக்களும் பல உயிர்களைப் பலிகொள்கின்றன.
குழம்பிய செளக்கிய சேவைகளும் உணவு வழங்கல்களும்
அநேகமான யுத்தங்களில், சர்வதேச மனிதவியல் சட்டத்திற்கு நேர் விரோதமாக செளக்கிய வசதிகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. மோதல் ஒன்றின்போது திறந்த நிலையில் உள்ள அவ்வசதிகள் அடிக்கடி கொள்ளை அடிக்கப்படுகின்றன, அல்லது பலவந்தமாக மூடிக் கிடக்கச் செய்யப்படுகின்றன. எஞ்சியவற்றுக்குச் சென்றடைதல் ஊரடங்குச் சட்டம் காரணமாகச் சிலசமயங்களில் சிரமமாக உள்ளது. பிரயாணக் கட்டுப்பாடுகள் கூட மருந்து விநியோகம், மற்றும் மருத்துவ வழங்கல்களைத் தடைப்படுத்துகின்றன. இதனால்

செளக்கிய அமைப்பின் உசாவற் சேவைகளும் பண்டங்கள் கிட்டவைப்பதும் சீரழிகின்றன. ஒரு நாட்டின் பல சுகாதார சேவைகள் பல காயப்பட்ட படைவீரர்களது தேவைகளுக்காகத் திசைமாற்றி விடப்படுகின்றன. நோயாளர்களது வழமையான கவனிப்பை உதாசீனஞ்செய்யுமாறு அல்லது அவர்களைச் சுகாதார நிலையங்களுக்கு மாற்றிவிடுமாறு வைத்தியசாலைகள் பலவந்தப்படுத்தப்படுகின்றன. இராணுவ தேவைகளைக் குவித்தல் காரணமாக மோதலின்போது காயப்பட்ட சிறுவர்கள் செம்மையான சிகிச்சையை அல்லது மீள்வாழ்வைப் பெறமுடியாதிருக்கலாம். வலதுகுறைபாடான சிறுவர்களுக்கு ஏதேனும் ஆதரவு கிட்டினாலும் அது குறைவாகவே இருக்கும். சிறுவர்களுக்கு நோய்த் தடுப்பு மருந்துகள் வழங்கும் ஒரு நாட்டின் சுகாதார வசதிகள் மோதல்களின்போது குழம்புதல் ஒரு பயங்கர சுட்டாகும்.
Ο 2 Ο 参 சிறுவர்கள் “சமாதான வலயங்கள்" போன்றவர்கள்
மனித இரக்க நிவாரண நிகழ்ச்சித் திட்டங்களின் முக்கிய கருதுகோளாகச் சிறுவர்களை "சமாதான வலயங்களாகக்”கொள்ளப்படுகிறது. இக்கோட்பாட்டின் கடைப்பிடிப்பையுத்தம் புரியும் கோஷ்டிகள் யாவும் வெவ்வேறு விதமாகப் பின்பற்றியுள்ளன. எல்-சல்வதோர் நாட்டில், 1985 தொடக்கம், "மூன்று நாள் அமைதியை’கடைப்பிடிப்பதெனவும், அதற்குள் 250,000 பிள்ளைகளுக்கு வாதநோய் (போலியோ) சின்னமுத்து, தொண்டைக்கரப்பான் மற்றும் நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்து கொடுப்பதெனவும் அரச படைகளும் புரட்சிப் படைகளும் உடன்பட்டன. இந்த நடைமுறை சிவில் யுத்தம் முடியும்வரை , ஆறு வருடங்களுக்கு வருடாந்தம் திரும்பத் திரும்பக் கடைப்பிடிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில், 1988 - 1989 ஆம் ஆண்டுகளின்போது அரசிடமும் புரட்சிவாதிகளிடமும் இருந்த இரு பகுதிகளுக்கும் செளக்கிய குமுக்கள் சென்று செயற்பட அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக சில பகுதிகளில் தடைஊசிப் பிரயோகம் 80 சதவீதத்துக்கு மேலாக உயர்ந்திருந்தது. "சுடான் ஜீவநாடி செயற்பாட்டு” (ஒப்பரேஷன் லைவ்லைன் சுடான்) விடயத்தில் "சமாதான ஒருங்கு வழிகளை" ஏற்பாடு செய்திருந்தனர். இதன் பயனாக மோதல்கள் ஓரளவு தணிந்திருந்த நேரங்களில் நிவாரணப் பொருட்களும் நோய்த்தடை மருந்துகளும் எடுத்துச் சென்று வழங்கப்படக் கூடியதாக இருந்தன.
உணவுப்பொருள் வழங்கல்கள் தடைப்படுதலே ஆயத மோதலில் உடனடியாக நிகழும் விளைவுகளுள் ஒன்று. கமக்காரர்கள், அநேகமாகப் பெண்களாகவும் வளர்ந்த பிள்ளைகளாகவும் இருப்பதால், தங்கள் வீடுகளிலிருந்து வெகுதொலைவில் உள்ள நிலங்களுக்குச் சென்று வேலைசெய்யப் பயப்படுகின்றனர். அவர்கள் கமஞ்செய்யும் நிலத்தைக் குறைத்துக் கொள்கின்றனர். அத்தோடு, நீர் வளங்கள், பாசன, வெள்ளத்தடுப்பு அமைப்புகள் போன்றவையும் சேதப்படலாம். நடமாட்டத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பதனால் விதை, உரம் போன்றவற்றைப் பெறுதல் மட்டுப்படுகிறது. கமக்காரர்கள் தங்கள் உற்பத்திளைச் சந்தைக்குக் கொண்டுசெல்வதைத் தடுக்கிறது. 6) கமக்காரர்களது விடுகள் உட்பட, வளரும் நாடுகளில் பெரும்பாலான வீடுகள் தங்கள் உணவுத்
10

Page 9
தேவைகளுக்குச் சந்தைக் கொள்வனவுகளையேநம்பியிருக்கின்றன. பொருளாதாரச் சீர்கேடு வேலையின்மையைப் பெருக்கி,மக்களுக்குள்ள உணவுப்பொருட் கொள்வனவுச் சக்தியைக் குறைக்கிறது.
சிலசமயங்களில் உணவு உற்பத்தி வேண்டும் என்ற்ே நாசப்படுத்தப்படுகிறது. உதாரணமாக, எதியோப்பிய நாட்டில் 1980 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அரசினது நில வரட்சிக் கொள்கைகள் இலட்சக்கணக்கான ஏக்கள் உணவுப் பயிர் நிலங்களை அழித்தன. பல நாடுகளில் நிலக்கண்ணி வெடிகள் கம நிலப் பாவனையைத் தடுக்கின்றன. சர்வதேசச் சட்டத்துக்கு மாறாக யுத்தம்புரியும் கட்சியினர் நிவாரண வழங்கல்களைத் தடுக்கலாம் அல்லது தம் சொந்தப் பாவனைக்காகத் திசைதிருப்பலாம். பிள்ளைகளுக்கும் பாதிப்புக்கு உள்ளாகும் குழுவினருக்கும் என நிறுவப்படும் உணவுப் பங்கீட்டு நிலையங்கள் அடிக்கடி குண்டு வீச்சுக்கு உள்ளாகலாம் அல்லது தாக்கப்படலாம்.
யுத்தநிகழ்வு கால்நடைகளையும் பலயெடுக்கின்றன. தம் அடிப்படை உணவின் ஒரு பாகமாக பாலை நம்பியிருக்கும் இளம் பிள்ளைகளுக்கு இந்நிலை குறிப்பிடத்தக்க பிரச்னைகளைத் தோற்றுவிக்கின்றது. சூடான் நாட்டின் கொங்கர் பகுதியில் கால்நடை அழிவு அவற்றின் எண்ணிக்கையை 1 5இலட்சத்திலிருந்து ஐம்பதினாயிரமாகக் குறைத்துவிட்டது.
உணவுப் பொருள் விநியோக முறையிலும், பிள்ளைகளுக்கு உணவூட்டும் விதத்திலும், சுகாதாரமான வளர்ப்பு, பிள்ளைகளைக் கவனித்தற்குப் பெற்றோருக்குள்ள நேரம் ஆகியவற்றிலேயே போதிய போஷாக்குத் தங்கியுள்ளது. போஷாக்கின்மை எல்லாப் பிள்ளைகளையும் பாதிக்கும் என்றாலும் அது ஆகக்கூடிய மரணத்தையும், வியாதிநிலையையும் இளம் பிள்ளைகளுக்கிடையே, குறிப்பாக மூன்று வயதுக்குட்பட்டவர்களுக்கும் ஏற்படுத்துகின்றது. சிசுக்களுக்குரிய சிறந்த போஷாக்கைத் தாய்ப்பால் வழங்குகிறது, தொற்றுவியாதிகள் ஏற்படுவதையும் அவற்றின் கடுமையையும் அது குறைப்பதுடன், பெண்களது செளக்கியத்துக்கும் துணைபுரிகிறது.
மோதல்களின்போது, தாய்மார் பசி, களைப்பு, துயர் போன்றவற்றை அனுபவிக்கக் கூடுமாதலால், அவர்களது பிள்ளைகளைக் கவனிக்க அவர்களுக்கு அதிகம் இயலாதிருக்கலாம். தனக்குப் பால் உற்பத்தி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை இழந்த தாயினால் தாய்ப்பாலூட்டல் அச்சுறுத்தப்படுகிறது. கிரமம் பொதுவாகக் குழம்புவதனால் தாய்மாரைப் பிள்ளைகளை நீண்டகால எல்லைகளுக்குப் பிரித்து வைக்க முடியும்.
மோதல்கள் நீடிக்கும்போது, சமூக அமைப்புகளும் தொடர்பு இணைப்புகளும் சிதறிவிடுகின்றன. தாய்ப்பாலூட்டல் பற்றிய அறிவு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குப் புகட்டப்படலாம். ஆனால் மக்கள் ஓடி அைைலயும்போதும், குடும்பங்கள் சின்னாபின்னப்படும்போதும் இத்தகைய அறிவு கிட்டாதுபோகக்கூடும். இருந்தபோதிலும்,
11
 

எப்போதுமே ஆபத்தான செயற்கை உணவூட்டல், நிலையற்ற சூழ்நிலைகளில் இன்னும் அதிக ஆபத்தானதாக இருக்கும். போஷாக்கின்மை தீவிரமாக இருந்தாலே தவிர களைப்புக் கடுமையாக இருந்தாலும் தாய்மார் போதியதாகப் பாலூட்டலாம். ஆயுதமோதல்களின்போது, பாலூட்டும் தாய்மாருக்குப் போதிய சாப்பாடு வழங்கி, பிள்ளைகளிடமிருந்து பிரிக்கப்படாது உறுதிசெய்வதன் மூலம் பெண்களது பாலூட்டும் சக்தியை வலுப்படுத்தல் அவசியமாகிறது.
மகப்பேற்றுச் சுகாதாரம்
ஆயுதமோதல்களின் விளைவுகள் - அவையாவன குடும்பத்தையும் சமூகத்தையும் துண்டாடுதல், துரித சமூக மாற்றம், ஆதரவு வழங்கும் அமைப்புகளின் சிதைவு, பால்ரீதியான அதிகரித்த சுரண்டலும் கற்பழிப்பும், போஷாக்கின்மை, மகற்பேற்றுக்கு முன்னைய கவனிப்பு உட்பட போதாதிருக்கும் செளக்கிய சேவைகள் - இவை மகப்பேற்றுச் சுகாதார கவனிப்புக்கு ஆகக்கூடிய முதன்மை கொடுக்கப்படுதல் அவசியமாகிறது. கற்பழிக்கப்பட்ட அல்லது பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களுக்கும் யுவதிகளுக்கும் குறிப்பாக, சுகாதார கல்வி, கவனிப்பு, ஆலோசனை வழங்குதல் ஆகியன முக்கியமாகும். எச்ஐவி/எயிட்ஸ்நோய் உட்பட,பாற்தொடர்பினால் பரவும் நோய்கள், மோதலின்களின்போது அபரிமிதமாகப் பெருகும் வாய்ப்பினைத் தன்னகத்தே கொண்டுள்ளன. சுகாதாரச் சேவைகள் சிதைவுறுதலும் எச்ஐவி/எயிட்ஸ் நோயைப் பரிசோதித்தற்கான ஆற்றல் இரத்தம் ஏற்றும் சேவைகளுக்கு இல்லாதிருப்பதும் இந்நோய்கள் பரவத் துணைபுரிகின்றன.
யுத்த பாதிப்பு ஏற்பட்ட மக்களிடையே மகப்பேறும் சிறார்களும் த்ொடர்பான சுகாதாரச் சேவைகள் அநேகமாகக் கிடைப்பதில்லை. அத்தகைய சுகாதாரச் சேவைகளில் அநேகமாக வெளிநாட்டினர் அல்லது அபயம் அளித்தநாட்டினர் ஆதிக்கம் செலுத்துவதனால் அது அவசரநிலைமைகளின்போது சுகாதார சேவைகளை முழுமையாகப் பாவித்தலுக்குத் தடையாக உள்ளது. இதன் விளைவாக, பல பெண்களும் யுவதிகளும் பண்பாடு அல்லது மத காரணங்களுக்காக, தங்கள் செளக்கியத்துக்கு ஆபத்துக்கள் இருந்தும் சுகாதாரச் சேவைகளைக் குறைவாகப் பயன்படுத்துகின்றனர். இத்தடையை நீக்குதற்குள்ள ஒரு வழி, கிடைக்கக்கூடிய பெண் சுகாதார, பேணல் உயர் ஊழியர்களை நியமித்தலாகும்.
செயற்பாட்டுக்கான ப்பாைகள்
家 அடிப்படைச் சுகாதார அமைப்புக்கள், சேவைகள், நீர்வழங்கல் போன்றவற்றை
மோதலில் பங்குகொள்வோர் நிலைநாட்டுதலைக் கடப்பாடாக்க வேண்டும்.
本 ஆரம்ப சுகாதார கவனிப்புக்கும், நீடித்த அல்லது கடும்நோய் நிலையில் உள்ள சிறுவர்களைக் கவனித்தற்கும் விசேட கவனம் செலுத்தப்படல் வேண்டும். காயப்பட்ட அல்லது நிரந்தரமாக ஊனமுற்ற பிள்ளைகளுக்குச் செயற்கை உறுப்புக்களை வழங்கி, போதிய மீள்வாழ்வை மேற்கொண்டு, இயலக்கூடிய அளவு முழுமையான சமூக ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
12

Page 10
本 சிறுவரை முனைப்பாகக்கொண்ட சுகாதார தேவைகளைக் கணிப்பீடு செய்தல். இதற்காக உள்ளூர் உயர் ஊழியர்களையும் இளைஞர்களையும் சமூகங்களையும் ஈடுபடுத்தி, மோதல் சூழ்நிலைகளில் இயங்கும் நிறுவனங்கள் துரிதமாக அத்தகைய கணிப்பீடுகளை நிறைவேற்றுதல். அத்தோடு உணவு, சுகாதாரம், பேணல் போன்ற காரணிகளையும் கவனத்திற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களினால் பயன்படுத்தப்படக் கூடிய செயலுபாயங்கள் பற்றியும் முடிவெடுத்தல்,
冰 மோதல்களின்போது, அடிப்படை சிறுவர் சுகாதார ஏற்பாடுகளையும், கருணை நிவாரணப் பண்டங்கள் ஒப்படைப்பை உறுதிப்படுத்தற்கு அரசுகளும், அரச சார்பற்ற தாபனங்களும் “அமைதி நாட்கள்” அல்லது ‘சமாதான ஒதுக்கு வழி” போன்ற வசதிகளைச் செய்துகொடுக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
来源 உணவு வழங்கலும் உற்பத்திச் சக்தியும் சீர்குலைவதைக் குறைப்பதற்காக மோதலில் பங்குபற்றுவோர் உணவுப் பயிர்கள், நீர் வளங்கள், கமத்தொழில் உட்பட்ட அமைப்புகள் ஆகியவற்றை நாசப்படுத்தாது இருக்கவேண்டும்.
* தம்மை நம்பிய நீடித்த அடிப்படையில் குடிமனைப் பாதுகாப்பைச் சீர்ப்படுத்தற்கான உள்ளூர் சக்திகளைப் பெருக்குதற்கு கமத்தொழில், கால்நடை வள்ப்பு, மீன் வளர்ப்பு வசதிகள் போன்றவற்றை மீளமைத்தற்கும் வேலைவாய்ப்பு அல்லது வருவாய் தோற்றுவிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் அவசரநிலை நிவாரணம் கவனஞ்செலுத்த வேண்டும்.
本 சுகாதார உயர் அலுவலர்கள் சிறுவர் உரிமைகளுக்காக வாதாடுபவர்களாக இருக்க வேண்டும். உலக சுகாதார தாபனம் உயர் அலுவலர், மனித இரக்க, மனித உரிமை நிறுவனங்களுடன் இணைந்து, சிறுவர் உரிமைகள் பற்றிய தகவலைப்பரப்புதற்கும், அவர்களது பணியின்போது கண்ட உரிமை மீறல்களை அறிக்கையிடுதல்களுக்கும் சிறார் மருத்துவர்களும், ஏனைய எல்லா மருத்துவர்களும், சுகாதாரப் பணியாள்களும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.
உளவியல் மீட்சியை மேம்படுத்தலும் சமூக ஒருங்கிணைப்பும்
வரலாற்றுரீதியாக, ஆயுத மோதலின்போது நிலவும் சிறுவர்களின் நிலைமையில் அக்கறை காட்டியவர்கள் சிறுவர்களது உடல்ரீதியான பாதிப்பிலேயே கவனஞ் செலுத்தியுள்ளார்கள். எனினும், பிள்ளை ஒன்று அனுபவித்த இழப்பு, கவலை, அச்சம் போன்றவையும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். யுத்தத்தில் சிக்கியுள்ள நாடுகளில் பெருந்தொகையான சிறுவர்களுக்குப்பிள்ளைப் பராயம் ஒரு சிம்மசொப்பனமாகியுள்ளது. ஆயுத மோதல் வீடுகளை அழிக்கிறது; குடும்பங்களைப் பிரிக்கின்றது; சமூகங்களைச் சிதறடிக்கிறது; மக்கள்
கொண்டுள்ள விசுவாசத்தைச் சிதைக்கிறது. சுகாதார, கல்விச் சேவைகளைச்
13

சீர்குலைக்கிறது. சிறுவர் வாழ்வின் அடித்தளத்தையே நாசமாக்குகின்றன. பிள்ளையின் அபிவிருத்திக்கு உள்ளமைவாகவுள்ள உளவியல் அக்கறைகள் கருத்திற் கொள்ளப்பட வேண்டும். தங்கள் பெற்றோர் அல்லது ஏனைய முக்கிய பெரியவர்கள் பாதிப்புறுவதைப் பார்க்கையில் சிறுவர்களது நம்பிக்கை கடுமையாகத் தாக்கமுற்று அவர்களது அச்ச உணர்வைக் கூட்டுகின்றது. இத்தகைய அனுபவங்கள் மோசமாக இருப்பதைப்போலவே, அதிகமான பிள்ளைகள் தங்கள் பெற்றோர் சித்திரவதைக்கு உள்ளாவதை, கொலை அல்லது கற்பழிப்புக்கு ஆளாவதைக் கண்டிருப்பதோடு, அவர்களே கொலைப் பயமுறுத்தலுக்கு உள்ளாகியுமிருக்கிறார்கள்.
ருவாண்டாவில் 1995 ஆம் ஆண்டிலே யுனிசெப் 3030 பிள்ளைகளிடையே நடத்திய அளவீடு ஒன்றின்படி, ஏறக்குறைய 80 சதவீதத்தினர் தங்களது உற்ற குடும்ப உறுப்பினர்களை இழந்திருப்பதுடன், அவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் கொலைகளை உண்மையாகவே
யுத்த காலங்களில் பிள்ளைகள் மன அதிர்ச்சிதரும் நிகழ்வுகளை அல்லது ஏனைய சம்பவங்களை அவர்கள் அனுபவிக்கும்போது, தங்கள் குடும்பங்களிலிருந்து தாங்கள் பிரிக்கப்பட்டுவிடலாம் என்ற துயருடன் கலந்த கவலை அதிகரிப்பினால் துன்புறலாம் அல்லது நித்திரை இல்லாத தொல்லையால் பாதிக்கப்படலாம். அவர்கள் விளையாடுதல், சிரித்தலை நிறுத்திவிடக்கூடும். சாப்பிடும் ஆவலை இழக்கக்கூடும். அத்துடன் மற்றவர்களுடன் தொடர்புகொள்வதிலிருந்து விலகியிருக்கவும்கூடும். இளம் பிள்ளைகள் பாடசாலையில் கவனத்தைக் குவிக்கக் கஷ்டப்படுவார்கள். சற்று வயதான பிள்ளைகளும் வாலிபர்களும் துயர்தோய்ந்த கவலை கொண்டவர்களாக அல்லது மனம் இடிந்துபோனவர்களாக வரக்கூடும், எதிர்காலத்தில் நம்பிக்கையற்றவர்களக இருக்கக்கூடும் அல்லது வன்முறைப்போக்கு உடையவர்களாக வரக்கூடும்.
மீட்சிபெறுவதற்கான சிறந்த நடைமுறைகள்
ஆதரவுகாட்டும் கவனிப்பாரும் பாதுகாப்பான சமூகங்களும் இருக்கையில், அநேகமான பிள்ளைகள் சுகமடையும் உணர்வைப் பெறுவார்கள் என்பதை அனுபவம் காட்டியுள்ளது. யுத்த பாதிப்புக்கு உட்பட்ட பிள்ளைகள் தங்கள் சொந்தப் பலத்தையும், முன்னைய நிலையை மீள எய்துவதையும் விருத்தி செய்தற்கு,நம்பிக்கைவாய்ந்த கவனிப்பாருடன் சேர்ந்து உதவினால், அது சுகப்படுத்தும் படிமுறையில் ஒரு முக்கிய செயலுபாயமாகும். பிள்ளை வளர்ச்சி பற்றிய நவீன அறிவையும் சிறுவர் உரிமைகளையும் உள்நாட்டுக் கருதுகோள்கள் நடைமுறைகளுடன் ஒருங்கிணைத்தால் சிறுவர் தேவைகள் அதிக செம்மையாகவும் நீடித்ததாகவும் இருக்கும். துயர அறிகுறிகள் பல அகிலக் குணயவில்புகளைக் கொண்டிருந்தபோதிலும், மக்கள் தம் துயரை எவ்வாறு வெளிபடுத்துகிறார்கள், தாங்குகிறார்கள், தம் துயருக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் என்பது சமூக, பண்பாட்டு, அரசியல் சூழ்நிலைகளிலேயே பெரிதும் தங்கியிருப்பதுடன், வெவ்வேறு நம்பிக்கைப் போக்குகளையும் அடிப்படையாகக் கொண்டன.
14

Page 11
எல்லா அவசரநிலை,மீளமைப்பு உதவி நிகழ்ச்சித் திட்டக் கட்டங்களும், வேறான உளவியல் சுகாதார நிகழ்ச்சித் திட்டங்களைத் தவிர்க்கையில், உளவியல்ரீதியான சமூகரீதியான அனுசரணைகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய திட்டங்கள், குடும்பம் பிரிவதைத் தவிர்த்தல், பால்ரீதியான வன்முறைகளைத் தவிர்த்தற்கு நடைமுறை சாத்தியமான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல், தனிப்படுத்தப்படுதல், நிறுவனங்களில் சேர்ப்பதனால் ஏற்படக்கூடிய இழிவுணர்வு போன்ற வேதனையான அனுபவங்களைத் தவிர்த்தல் போன்றவற்றுக்கு முன்னிடம் கொடுக்க வேண்டும். சுகப்படுத்தற் படிமுறையிலும், செளக்கிய மீட்சியிலும் பிள்ளைக்கு ஏற்பட்ட வன்செயல் அனுபவத்தையும் அப்பிள்ளையின் வாழ்வில் அந்த அனுபவம் எத்தகைய அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்பதையும் ஆராய்வது முக்கியமாகும். பலவிதமான வெளிப்புற உதவி உளவியல் சமூக மீட்சியை மேம்படுத்த உதவும். எனினும், அத்தகைய ஆராயவுகள் பிள்ளையுடன் ஸ்திரமான, தொடர்ச்சியான உறவுகளைப் பூண்டுள்ள கவனிப்போரால் நிலையான, ஆதரவான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒழுக்கநெறி விடயங்களும் அந்தரங்கத் தன்மையும் வெகு கவனமாகக் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். எழுத்தாள்கள் அல்லது ஆய்வாளர்கள் "பயங்கர நிகழ்வுகளை”விவரிக்குமாறு பிள்ளையை ஊக்கப்படுத்தும்போது, அத்தகைய நேர்முகச் செவ்வி பழைய புண்களைத் திறந்துவிட்டு, பிள்ளையின் பாதுகாப்புகளையும் சிதறடித்துவிடும். புகைப்படம் எடுக்கப்பட்டு, பெயர் குறிக்கப்பட்டு இனங்காணப்படும் பிள்ளைகள் மேலும் சங்கடத் தாக்கத்துக்கு ஆளாவார்கள்.
சுகப்படுத்தும் படிமுறையில் உதவ விரும்புபவர்கள், தாங்கள் பணிபுரியும் சமூகத்தைப் பற்றி மிக ஆழமாகப் புரிந்தும் மதித்தும் இருத்தல் வேண்டும் என்பது முக்கியமாகும். பிள்ளையின் வளர்ச்சி, அது உள்ளூரில் எவ்வாறு விளங்கிக்கொள்ளப்படுகிறது என்பவை பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்திருப்பது நீங்கலாக, வளர்ச்சியுறுதல், வாலிபப் பருவம் அடைதல், மற்றும் மரணம், அடக்கஞ் செய்தல், துக்கம் அனுசரித்தல் உட்பட உள்ளூர் பண்பாடு,நடைமுறைகள் ஆகியவற்றையும் அறிந்திருத்தல் வேண்டும்.
10 வயதான ஓர் ஆபிரிக்கப் பெண் பிள்ளை அதன் தாய் கற்பழிக்கப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் கண்கூடாகப் பார்க்க வைக்கப்பட்டதோடு, புரட்சிப் படைவீரர்களுக்கு இரண்டு வருடகாலம் ஒரு வைப்பாட்டியாக இருந்து பணியாற்றப் பலவந்தப்படுத்தப்பட்டாள். இறுதியாக அவள் தப்பித்துக்கொள்ள முடிந்த பின்னர், மாகாண வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற அவள் சென்றாள். அப்பிள்ளையில் குறிப்பாக ஏதோ கோளாறு இருப்பதை ஒரு தாதி உணர்ந்தாள். பாலுறவுமூலம் பரவும் தொற்றுநோய் ஒன்றுக்கு அவள் ஆளாகியிருந்ததோடு, அவள் ஒதுங்கியும் சோகத்துடனும் இருந்தாள். தாதியின் மென்மையான, அனுதாபத்துடன்கூடிய சிகிச்சையினால் உற்சாகம்பெற்ற அப்பெண் பிள்ளை தன் கதையைச் சொல்லத் தொடங்கினாள். பின்னர் அவள் அதனை ஒரு சமூகப் பணியாளருக்குச் சொன்னாள். அதனால் ஆதரவு காட்டும் ஒரு வளர்ப்பு இல்லத்துக்கு மாற்றப்பட்டாள். அங்கு அவள் வளர்ப்புத் தாயுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டாள். அப்பெண் பிள்ளையின் விருப்பப்படி அவளுக்கு நிகழ்ந்த அடாத காரியங்களைப் பரிசுத்தப்படுத்த மரபுவழிப்படி ஒரு சடங்கு நடத்தப்பட்டது.
15

தொடர்ச்சியாக வன்முறைகளுக்கு ஆளாகிய பிள்ளைகள், மற்றவர் மீதுள்ள அடிப்படையான நம்பிக்கையை இழப்பது உட்பட, ஏறக்குறைய எப்போதுமே அவர்களது விசுவாசங்கள், மனப்பான்மைகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அனுபவிக்கிறார்கள். முன்னர் அயலவர்கள் அல்லது நண்பர்கள் எனக் கருதப்பட்டவர்களால், ருவாண்டாவிலும் முன்னைய பூகோஸ்லேவியாவிலும் நடந்ததைப் போன்று. தாக்கப்பட்டு அல்லது அவதூறுக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள் விடயத்தில் இது விசேடமாக உண்மை. மோதல்கள் கிளம்பியுள்ளபோது நம்பக்கூடிய ஆற்றலை மீளவும் விருத்தி செய்தல் அகிலfதியான அறைகூவலாகும். ஆயினும் சிறுவர்களது நாளாந்த வாழ்வில் ஒரு பாகமாக உள்ளவர்களுக்குக் குறிப்பாக இது முக்கியமாகும்.
ஒரு குறிக்கோள் உணர்வை, தன்மதிப்பை, தன்னையே யார் என இனங்கண்டு கொள்ளுதலை பிள்ளைகளில் வளர்த்துக்கொள்வதன்மூலம் பல காரியங்கள் சுகப்படுத்தலுக்குத் துணையாக இருக்கும் என இனங்காணப்பட்டுள்ளன. இவற்றுள் அடங்கக்கூடியன. பாடசாலைக்குப் போதல், உணவு சமைத்தல், துணி தோய்த்தல், வயலில் வேலைசெய்தல் போன்ற வாராந்த நியமங்கள், சிறு நாடகம், விளையாட்டுக்கள், ஓவியம், நாடகம், கதை சொல்லுதலைக்கொண்டு உயர் அறிவு, உணர்வு போன்றவற்றுக்கான தூண்டுதலைக் கட்டமைந்த கோஷ்டிச் செயற்பாடுகளினால் பிள்ளைகளுக்குக் கொடுத்தல்; வயதுவந்தவர்களுடன் ஏற்படும் நிலையான, அக்கறைகாட்டும், பேணும் தன்மைகொண்ட உறவிலிருந்து தோன்றும் சொல்லிக்கொள்ளல், பற்றுப்பாசம் காட்டுதல்,நம்பிக்கை வைத்தல் போன்றவற்றுக்கு வாய்ப்பளித்தல்,
பெற்றோர், ஆசிரியர்கள், சமூக செளக்கிய பணியாளர்கள் உட்பட நடுநாயகமாக அக்கறை காட்டுவோருக்குப் பயிற்சியும் விழிப்புணர்வும் ஏற்படுத்துவதன்மூலம், பிள்ளைகளுக்கும் பாதிப்புக்கு உள்ளகக்கூடிய கோஷ்டியினருக்கும் உதவிடச் சமூகத்துக்கு உள்ள ஆற்றலைப் பலதரப்ப்ட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் ஓங்கச் செய்ய முடியும். பிள்ளையின் உணர்வுரீதியான காயங்களில் கவனஞ்செலுத்துவதைவிட, சுகப்படுத்தும் படிமுறைக்கும், சகஜநிலை உணர்வை மீள ஏற்படுத்தற்கும் துணைபுரியும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறியாகக் கொண்டிருத்தல் வேண்டும்.
பிள்ளைகளைப் பேணுதற்கும் பாதுகாத்தற்கும் குடும்பம் அத்தியாவசியமாகும். அது பிள்ளையின் விருத்தியில் ஒரு முக்கிய சமூக, பொருளாதார, பண்பாட்டுக் காரணியாக விளங்குகிறது. ஆயினும், குடும்பங்கள் உடல்ரீதியான, உணர்வுரீதியான மோதல்களினால் குடும்பங்கள் அநேகமாகத் தேய்ந்துபோகின்றன, அதிக வறுமைநிலைக்குத் தள்ளப்படுகின்றன. பிள்ளைகளது வாழ்வின் மீட்சிக்குரிய அதி செம்மையான, நீடித்த அணுகுவழி தற்போதுள்ள சமூக பேணல் அமைப்பைக் கட்டி எழுப்புதலேயாகும். ஓர் அகதி சமூகத்தை ஒன்றுதிரட்டி, துணை இல்லாத பிள்ளைகளைப் பேணுதற்கு, ஆதரவளிக்கும்
16

Page 12
தகுந்த குடும்பங்களுக்கு அல்லது விரிவான குடும்பங்களுக்கு உதவச் செய்யலாம். வலுவான சமூகங்களக ஒன்றிணைந்த உற்றுநோக்கும் குழுக்களாக வாழும் ஏற்பாட்டின்கீழ் அக்கறைகாட்டிப் பேணுதல் மற்றொரு மாற்றுவழி அணுகுவழியாகும். நிறுவன ரீதியான அணுகுவழிகள் தனிமைக்கும் இழிவுக்கும் வழிவகுப்பதோடு செம்மையற்றது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
6)zizbăta colo alătugorecii
本 வேறான உளச்செளக்கிய நிகழ்ச்சித் திட்டங்களைத் தவிர்க்கும் அதேவேளை, அவசரநிலை, மீளமைப்பு உதவி நிகழ்ச்சித் திட்டங்களது சகல கட்டங்களும் உளரீதியான, சமூகரீதியான அனுசரணைகளைக் கருத்திற் கொள்ள வேண்டும். அவை மேலும் வேதனை அனுபவங்களைத் தவிர்ப்பதற்கு முன்னிடம் கொடுக்க வேண்டும்.
ஒரு பிள்ளையினது உணர்வு ரீதியான காயத்தின்மீது கவனத்தைக் குவிப்பதிலும் பார்க்க, சுகப்படுத்தும் படிமுறைகள் மீது திட்டங்கள் அக்கறை காட்டுவதோடு, வழமைநிலை உணர்வை மீளவும் ஏற்படுத்த வேண்டும்.
率 சமூக ரீதியான, உளரீதியான நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களில் உள்ளூர் பண்பாடு, சிறுவர் விருத்தியின் அறிவுணர்வு, அரசியல் சமூக யதார்த்தங்களைப் புரிந்துகொள்ளுதலும், சிறுவர் உரிமைகளும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும். சமூக பேணல் பிணைப்புகள்ை அச்சிறுவர்களைச் சூழ ஒன்றுதிரட்ட வேண்டும்.
se அரசுகள், கொடையாள்கள், நிவாரண நிறுவனங்கள் ஆகியன சிறுவர்களை நிறுவனங்களில் சேர்ப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிறுவர் படைவீரர்ககளக ஆக்கப்படக்கூடிய ஆபத்தின்போது, சிறுவர் கோஷ்டிகள் a 37L aeusors, செலுத்தற்காகப் பிரித்துத் தனிமைப்படுத்தும்போது, அவர்களது நீண்டகால ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்தக்கூடியதாக, அது சமூகத்தின் பூரண ஒத்துழைப்புடன் செய்யப்பட வேண்டும்.
மோதல் சூழ்நிலையிலும் மோதலுக்குப் பின்னைய சூழ்நிலையிலும் உள்ள பிள்ளைகளது தேவைகளையும் நிறைவேற்றுவதில் கல்வி ஒரு முக்கிய தடுப்புப் பாகத்தையும் மீள் வாழ்வளிக்கும் பாகத்தையும் கொண்டுள்ளது. கல்வி சிறுவர் வாழ்வுக்கு உருவையும் கட்டமைப்பையும் கொடுப்பதுடன், சமூக விழுமியங்களைச் செறிய வைப்பதுடன்,நியாயத்தை
17
 

மேம்படுத்தி, மனித உரிமைகளைக் கண்ணியப்படுத்தி, சமாதானம், ஸ்திரம்தன்மை பலரும், ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்வதையும் உயர்த்துகிறது.
துரதிருஷ்டவசமாக, ஆயுத மோதலின்போது பாடசாலைகள் தானும் தாக்குலிலிருந்து காக்கப்படுவதில்லை. கிராமப் பகுதிகளில் பாடசாலைக் கட்டிடமே ஒரு கணிசமான நிரந்தர அமைப்பாக இருக்கும். அதனால் அது "ஷெல்" தாக்குதலுக்குப் பெரிதும் இலக்காகுதல், மூடப்படுதல் அல்லது குறையாடப்படுதல் சாத்தியமாகும். உள்ளூர் ஆசிரியர்கள் அநேகமாகக் குறிவைக்கப்படுகிறார்கள். காரணம், சமூகத்தில் அவர்கள் முக்கிய உறுப்பினர்களாக இருத்தல் அல்லது அவர்கள் பலமான அரசியல் கருத்துக்களைக் கொண்டவர்களாக இருத்தலாகும். ஆயுத மோதலினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குள்ள அபிவிருத்திப் பின்னடைவுகளில் பாரியதொன்று பாடசாலை இணைப்புக்களை நாசப்படுத்தலாகும். இழக்கப்பட்ட கல்வி, தொழிற்கல்வித் தேர்ச்சிகளை மீளவும் இட்டு நிரப்புதற்கு ஆண்டுகள் பல பிடிக்கும். இதனால், யுத்தத்துக்குப்பின்னைய ஒட்டுமொத்தமான மீட்டுயிர் பெறும் பணியை மேலும் கடினமாக்குகிறது.
ஆசிரியர்களின் எண்ணிக்கை போன்று நான்கு மடங்கான படைவீரர்களை நாடுகள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்துமானால், கல்வியும் சமூக அமைப்புக்களும் தொய்ந்தநிலையிலும் போதா நிலையிலும் இருக்கும். அத்தோடு அரசுகள் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின்மூலம் உறுதிசெய்த வாக்குறுதிகளைச் சிதைத்து, பிள்ளைகளுக்குத் தொடர்ந்து தவறு இழைத்த வண்ணம் இருக்கும். சிறுவர்மீது ஆயுத மோதல் ஏற்படுத்தும் தாத்தம், ஐக்கிய நாடுகள் 1996.
ஆயுத மோதலின்போது, அச்சமும் குழப்பலும் படிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தற்கு இடையூறாக இருப்பதோடு, ஆசிரியர்கள் மாணவர்களது மனவுறுதியும் தாழ்வானதாகவும் இருக்கக்கூடும். மோதல்கள் மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் இழுபட்டுக்கொண்டு போகும்போது, பொருளதார, சமூக நிலைமைகளும் பாதிக்கப்படுவதோடு, கல்வி வாய்ப்புக்களும் மட்டுமட்டாகும் அல்லது அறவே இல்லாதுகூடப் போகக்கூடும். சில சமயங்களில், யுத்தப் பாதிப்புள்ள பகுதிகளில் கல்வி வாய்ப்புக்கள் இருந்தும்கூட, பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயங்கக்கூடும். பிள்ளைகள் பாடசாலைக்குப் போய்வரும்போது அல்லது வகுப்பறையில் இருக்கும்போது அவர்களுக்குப் பாதுகாப்பில்லை எனப் பெற்றோர் பயப்படக்கூடும். தாய்மாரும் தந்தைமாரும் தங்கள் பிள்ளைகள் வயல்களில், கடைகளில் அல்லது வீடுகளில் மற்றச் சிறுபிள்ளைகளைக் கவனித்தல் போன்ற வேலைகளைச் செய்யவேண்டும் என நினைக்கலாம்.
கல்விச் செயற்பாடு சகல மனிதாபிமான உதவியிலும் ஒரு தலையாய அம்சமாகக் கொள்ளப்பட வேண்டும். பிள்ளைகள் தங்கள் வீடுகளைக் கைவிட்டுச் செல்லப் பலவந்தப்படுத்தப்பட்டு, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் திரண்டிருக்கையில், இயன்றவரையில் விரைவாகப் பாடசாலை அமைப்புகளை நிறுவிக்கொண்டால், ஓரளவு
18

Page 13
ஸ்திரத்தன்மையும், குடும்பத்துக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் சகஜ பொறுப்புக்களும் உறவுகளும் மீண்டும் ஏற்பட்டுள்ளன என்று ஒவ்வொருவரும் நிச்சயப்பட்டுக்கொள்வர்.
சர்வதேசச் சட்டத்தில் வகைசெய்யப்பட்டவாறு, அபயமளித்த நாடுகளில் அகதிப்பிள்ளைகள் சில கிரமமான பாடசாலைகளுக்கும் செல்ல முடியும். ஆனாலும் வெகுசிலருக்கே இப்படியான வாய்ப்புக் கிடைக்கிறது. அகதிப் பிள்ளைகளுக்குக் கல்வி ஒழுங்கினைத் தாம் செய்துகொடுக்கவோ அல்லது - சர்வதேச முகவர்களை அவ்வாறு செய்ய அனுமதிக்கவோ சில நாடுகள் மறுக்கின்றன. மோதலினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வித்தேவைகளை நிறைவேற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் தாபனங்கள், ஏனைய நிறுவனங்களது முயற்சிகளுக்குக் குறிப்பிடத் தக்கவகையில் அதிக ஆதரவு தர வேண்டும்.
ஆயுதமோதல் சூழல்களின்போதும் கூட, எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் பிள்ளைகளையும் இளைஞர்களையும் தொடர்ந்து படிப்பித்துக்கொண்டிருப்பது முக்கியமாகும். கல்வி அவர்களது உளரீதியான, சமூகரீதியான, உடல்ரீதியான நல்வாழ்வை மேம்படுத்துகிறது. பிள்ளைகளில் மனக்கலவரத்தின் அறிகுறிகளை இனங்காணவும், அவர்களது சொந்தப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிலச் சுரங்க வெடிகளின் ஆபத்துக்கள் போன்ற விடயங்களில் தப்பித்துக் கொள்ளுதற்கான முக்கிய தகவலைப் புகட்டுவதற்கும் ஆசிரியர்களுக்கு முடியும். அவர்கள் சகிப்புத்தன்மை, மனித உரிமைகளை மதிக்கும் தன்மை போன்றவற்றையும் மேம்படுத்தலாம். பாடசாலைகள் இராணுவத் தாக்குதலுக்கு இலக்காகக் கூடும் என்பதரல், 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் எறிரியாவில் செய்யப்பட்டதுபோல, மாற்று வகுப்பறைகளை நிறுவலாம். அங்கு அப்போது மரங்க்ளுக்கு அடியிலும், குகைகளிலும் தடிகள் இலைகளைக் கொண்டு மறைக்கப்பட்ட குடிசைகளும் அமைக்கப்பட்டன.
முன்னைய பூகோஸ்லேவியாவில், பல இடங்களில் கடுமையான சண்டைகள் நடந்தபோது இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அங்கு மக்கள் வீடுகளின் பண்டசாலை அறைகளில் மெழுகுதிரியின் உதவியுடன் வகுப்புகள் நடத்தப்பட்டன.
யுனெஸ்கோவும் யுனிசெவ்தாபனமும் அவசரநிலைகளில் உள்ள பிள்ளைகளைப்படிப்பிப்பதற்கு ஒரு முக்கிய உத்தியை விருத்தி செய்தன. அது ஆசிரியரது அவசரநிலைப் பெட்டி அல்லது "பெட்டிப் பள்ளிக்கூடம்" என அழைக்கப்பட்டது. இப்பெட்டியில் அடிப்படையாகத் தேவைப்படும் பொருட்கள் உள்ளன. தூரிகைகளும் வர்ணங்களும், வெண்கட்டி, கடதாசி, பேனாக்கள், பென்சில்கள், அப்பியாசக் கொப்பிகள் ஆகியன. இத்தகைய பெட்டிகள் தன்சேனியாவின் இங்காரா என்னும் இடத்தில் வோன்டன் அகதிகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அங்கு பிள்ளைகள் மாற்று அடிப்படையில் முகாம்களில் நடந்த ஆரம்ப பாடசாலைகளுக்குச் சென்றனர்
19
 

கல்வி “தொலைப்படிப்பு'ப் போன்ற நெகிழ்வான அமைப்புக்களையும் கொண்டிருக்கலாம். முன்னர் தொகுதியாக்கப்பட்ட கல்விச் சாதனங்களையும் இவற்றை நிறைவுசெய்யும் ஒலிபரப்பு மற்றும் ஊடகங்களும் வீடு அல்லது கோஷ்டியாக நடக்கும் கல்விப் போதனையின்போது கையாளப்படும். பெற்றோர் தம் பெண்பிள்ளைகளை வீடுகளிலிருந்து அதிக தூரம் அனுப்பத்தயங்குகையில், இந்த ஏற்பாடு பெரிதும் சிறந்தது.
பலதரப்பட்ட சமூக மார்க்கங்களிலும் கல்வி பலப்படுத்தப்படலாம். சியரா லியோனில், தாய்மார்கள், வாலிபர்கள் உட்பட மரபு சாராத ஆசிரியர்களும் பயிற்றப்பட்டு நியமிக்கப்பட்டனர். பொதுத்துறை முகவர் தாபனங்கள் இல்லாதபோது அல்லது கடுமையாக வலுவிழந்து இருக்கும்போது, அவை பிள்ளைகளைப் பள்ளிக்கூடங்களில் வைத்திருப்பதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு சமூகக் குழுக்களும், அரச சார்பற்ற (NGOs) நிறுவனங்களும் உள்ளூர் கல்வி நிர்வாகத்தர்களுக்கு ஆதரவு கொடுக்கலாம். உதாரணமாக, இலங்கையில் நடக்கும் சிவில் யுத்தத்தில் பெற்றோர் இருவரையும் அல்லது ஒருவரை இழந்த சிறுவள் குழு ஒன்றுக்கு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. ஏனெனில், அவர்களிடம் பிறப்புச் சான்றிதழ்களும் இல்லை, புதுச் சான்றிதழ்கள் வழங்குதற்குக் கோரப்பட்ட அதிக தொகைக் கட்டணப் பணமும் இல்லை. அந்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மேற்படி நிலைமையை தேசீய சிறுவர் உரிமைகள் நிறுவனத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தது. அந்நிறுவனம் இதனைக் கல்வித்துறையினருக்குத் தெரிவித்தது. இதனையடுத்து, பிள்ளைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ்களும் கிடைத்தன, பாடசாலையிலும் சேர்ந்துகொண்டனர்.
Ο I SLDITSIISOISS!&&II60 &6ÖGal LðL(bS56
சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயம் போன்ற சர்வதேச சட்டத் தரத்துடன் மரபுசார்ந்த ஒத்துழைப்பு விழுமியங்களை மத, சமூக தலைவர்கள் மூலமாக ஒருங்கிணைத்து, “ஒழுக்கநெறிக் கட்டமைப்பை” நிறுவுதற்கு சமூகத்தின் சகல பிரிவினரும் ஒன்று சேரவேண்டும். இதற்கான ஆரம்ப ஆயத்த வேலைகள் சில பாடசாலைகளிலேயே செய்யப்பட்டலாம். கல்விக்குரிய பொருளடக்கம், படிமுறை இரண்டுமே சமாதானம், சமூக நீதி, மனித உரிமைகளுக்கான மரியாதை, பொறுப்பை ஏற்கும் பண்பு போன்றவற்றை வள்த்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துதல், சிக்கல் தீர்த்தல், சீர்தூக்கிச் சிந்தித்தல், தகவல் பரிமாறுதல் போன்ற தேர்ச்சிகளைப் பிள்ளைகள் பயில வேண்டியதுடன், அவர்களுக்கு அவை வன்முறையை மேற்கொள்ளது மோதல்களைத் தீர்த்துக்கொள்ளும் ஆற்றலையும் கொடுக்கின்றன. இக்குறிக்கோள்களை எய்துவதற்கு, பல நாடுகள் ஏற்கனவே சமாதானக் கல்வித் திட்டங்களை மேற்கொண்டுள்ளன. 1989 இல் லெபனான் அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள், இளந் தொண்டர்கள், யுனிசெப் ஆகியன சேர்ந்து நிறுவிய சமாதானத்துக்கான கல்வித் திட்டம் இப்போது ஆயிரக்கணக்கான சிறுவர்களுக்கு நன்மை தருகிறது. லைபீரியாவின் மாணவர் 'பலவர் மோதல் முகாமைத் திட்டம், பாடசாலைகளில் மோதல்களைத் தீர்த்தற்கும் மத்தியஸ்த நடவடிக்கை எடுத்தற்கும் வாலிபர்களை ஈடுபடுத்துகிறது.
20

Page 14
இலங்கையிலே, மோதல் தீர்க்கும் கல்வித் திட்டம் ஒன்று ஆரம்ப, உயர்நிலைப் பாடசாலைக் கல்வியுடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்துக்கு வெளியே உள்ள பிள்ளைகளையும் சமூகத்தின் ஏனைய துறையினரையும் பல்வேறு பொது ஊடகங்களை இத்திட்டம் பயன்படுத்தல் ஓர் உத்தியான அம்சமாகும். இத்தகைய முன்முயற்சிகள் எப்போதும் வெற்றியளிக்காதபோதிலும், சிதறிய சமூகம் ஒன்றை மீளமைத்தற்கு அவை இன்றியமையாதவையாகும்.
செயலுக்கான சில விதப்புரைகள்
求 மோதல்களின்போது கல்வி அமைப்புக்களை நிலைநாட்டுதற்குச் சாத்தியமான எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். மோதல்களில் ஈடுபட்டுள்ள அரச அல்லது அரச சார்பற்ற கோஷ்டிகள் கல்வி வசதிக்கூடங்களைக் குறிவைக்கக் கூடாதெனவும், அத்தகைய சேவைகளைத் தீவிரமாகக் காப்பபாற்றுதலை மேம்படுத்த வேண்டுமெனவும், சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.
சமூக வசதிக்கூடங்களைப் பாவித்து, முறைசார்ந்த பாடசாலைக் கட்டிடங்களுக்குப் புறத்தேயும் கல்வியை நீடித்தற்கும், பலதரப்பட்ட சமூக மார்க்கங்களைப் பயன்படுத்திமாற்றுக் கல்வியை வலுப்படுத்தவும் ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
本 கல்விக்கான உதவியை உட்படுத்தக்கூடியவாறு அவசர நிலை நிதிவழங்கும் எல்லைகளைக் கொடையாள்கள் விரிவாக்க வேண்டும். கருணை உதவியின் முதன்முக்கிய அம்சமாக, போதனா துணைப்பொருட்கள், அடிப்படைக் கல்விப் பொருட்கள் வழங்குதல் உட்பட கல்விச் செயற்பாட்டை நிறுவுதல்.
率 அகதிகள் அல்லது உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்கள் நிறுவப்பட்டதும், கல்விக் கருமங்களுக்காகப் பிள்ளைகளும் இளைஞர்களும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும். கல்விபெற வருவதற்கான தூண்டுதல்களும் ஊக்கப்படுத்தப்படவேண்டும். உதாரணமாக பாதுகாப்பையும் காவல் நிலைமையையும் மேம்படுத்தும் ஏற்பாடுகள்.
率 மோதல், மோதலுக்குப் பிந்திய சூழ்நிலைகளின்போது கல்வியை மீள நிறுவித் தொடர்தலுக்கு ஆதரவு வழங்குதல் கொடையாளர்களுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் ஒரு முதன்மையான செயலுபாயமாகும். பிள்ளைகளை மோதல் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்றப்பட வேண்டும். அத்தோடு, நிலச் சுரங்க வெடிகளிலிருந்து பிழைத்துக் கொள்ளும் முக்கிய தகவலையும், சுகாதாரம், மனித உரிமைகளுக்கான கண்ணியத்தை மேம்படுத்தல் போன்றவற்றையும் பிள்ளைகளுக்குப் புகட்ட வேண்டும்.
2

விசேட அக்கறைகள்
22

Page 15
છેલ્જ
jlyisÉlet99ESE985égiaeagnetfüggé
 

விசேட அக்கறைகள்
யுத்தத்தினால் பிள்ளைகள் பாதிப்புறுபவர்களாக வேண்டிவரும், எப்பொழுதெனில் இதனைத் தடுக்க வேண்டும் என்ற மனவுறுதி இல்லாதபோது மாத்திரமே. பிள்ளைகளைப் பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவிடவும் அசாதாரண செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன, மேற்கொள்ளப்பட முடியும் என்பதை டசின் கணக்கான மோதல்களில் கிட்டிய அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன’ உலகச் சிறுவர்களின் நிலைமை, யுனிசெப், 1996,
சுகதாரத்தையும் போஷாக்கையும், நல்வாழ்வையும் கல்வியையும் மேம்படுத்துதற்கு வகுக்கப்பட்ட உதவித் திட்டங்களுள், ஆயுதமோதலினால் ஏற்பட்ட விசேட நிலைமைகளுக்கும் கவனஞ் செலுத்தப்பட வேண்டும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான பிள்ளைகளும் அவர்களது குடும்பங்களும் தங்கள் வீடுகளைவிட்டு ஓடுதலை வலுக்கட்டாயப்படுத்தல், தங்கள் நாடுகளுக்குள்ளேயே இடம்பெயர்தல் அல்லது நாட்டு எல்லைகளைத் தாண்டி அகதியாதல் ஆகியனவும் அடங்கும். C 5 மோதல்களின்போது பிள்ளைகளும் பெண்களும் கற்பழிக்கப்படுதல், பால்ரீதியான இழிவுபடுத்தல், விபசாரம் மற்றும் பால் அடிப்படையிலான வன்செயல்கள் போன்ற கடும் ஆபத்துக்களையும் எதிர்நோக்குகின்றனர். இவை, புத்தத்தின் அபாக்கியமான ஆனால் தவிர்க்க முடியாத புற விளைவு என சொல்லி நசுக்கிவிடப் பார்க்கிறார்கள். சிறுவர்கள் யுத்தத்தில் பெருமளவில் போராளிகளாகப் பங்குபற்றுகிறார்கள். அவர்கள் வேண்டும் என்றே அரசினால் அல்லது புரட்சிப் படைகளினால் திரட்டப்படுகிறர்கள். மோதல்களின்போதும் அதற்குப் பின்னரும், நிலச் சுரங்க வெடிகள், குண்டுகள், ஷெல்கள், கைக்குண்டுகள் போன்ற வெடிக்கத் தவறிய வெடிப்பொருட்களின் ஆபத்துகளுக்குச் சிறுவர்கள் முகங்கொடுக்கிறார்கள். மோதலின்போதும், மோதலை அடுத்து அவர்களது சமூகங்களை மீளமைக்கும்போதும், வாலிப வயதினரின் விசேட அக்கறைகள் அநேகமாகக் கைநழுவவிடப்படுகின்றன.
ஒரு பிள்ளை உயிர்வாழ்தலுக்கும் வளர்தற்கும் அவசியமான குடும்ப உதவி அமைப்புக்கள், யுத்தத்துக்கு முன்னர் அல்லது யுத்தம் நடைபெறும்போது அநேகமாக நிகழும் துரித சமூக மாற்றங்களினால் துண்டிக்கப்படுகின்றன. மற்றும் வகையான பாதுகாப்பும், குறிப்பாக அரசினாலும் சமூகத்தினாலும் தரப்படும் உதவி ஏற்பாடுகளும் வழுவிப்போய்விடுகின்றன.
போராளிச் சிறுவர்கள்
O
s IT
மிகப் பயங்கரமான போக்குகளில் ஒன்று சிறுவர்களையும் ஆயுத மோதலையும்
தொடர்புபடுத்துவதும், அவர்கள் தீவிர போராளிகளாகப் பங்குகொள்வதுமாகும். 8 6.JLEl இளமையான சிறுவர்கள் வலுக்கபட்டாயமாகப் படைக்குச் சேர்க்கப்பட்டு, வற்புறுத்தி,
24

Page 16
தூண்டுதல் கொடுத்துப் போராளிகளாக உருவாக்கப்படுகிறார்கள். பெரியவர்களது சூழ்ச்சித் திட்டத்தினால், சிறுவர்கள் வன்செயலுக்குள் இழுக்கப்படுகிறார்கள். அதனை எதிர்க்கவோ அதன் பின்விளைவுகளைக் கற்பனை செய்து பார்க்கவோ முடியாத அளவுக்கு அவர்கள் வயதில் மிக இளையவர்கள். வறுமைப்பட்ட, ஒதுக்கப்பட்ட பின்னணிகளிலிருந்து அல்லது
தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்த சிறுவர்களே போராளிகளாகப் பெரிதும் வரக்கூடியவர்களாக உள்ளர்கள். பணக்கார அல்லது அதிக படித்த குடும்பத்துப் பிள்ளைகள் அநேகமாகக் குழப்பாது விடப்படுகிறார்கள் அல்லது பெற்றோர்
அவர்களுக்காகப் பணயஞ்செலுத்தி மீட்டுவிடுகிறார்கள்.
போராளிச் சிறுவர்கள் வெவ்வேறு பல வழிகளில் திரட்டப்படுகிறறர்கள். சிலர் படையில் சேர்க்கப்படுகிறார்கள். மற்றவர்கள் ஒட்டுமொத்தமாக இழுத்துப்போட்டுக் கடத்தப்படுகிறார்கள். இன்னும் சிலர் அவர்களது குடும்பங்களைப் பாதுகாப்பதற்காக படையில் சேருமாறு பலவந்தப்படுத்தப்படுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில் படையில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் ஒருதலைப்பட்சமாக வீதிகளில் பிடிக்கப்படுகிறார்கள், அல்லது பாடசாலைகள், அநாதை இல்லங்களிலிருந்துகூடப் பிடிக்கப்படுகிறார்கள். அந்நேரங்களில் ஆயுதம் ஏந்திய போராளிகள், பொலிசார் அல்லது இராணுவ உறுப்பினர் விதிகளில் சுற்றித் திரியும்போது, அவர்கள் சந்திப்பவர்களைப் பிடித்துக்கொள்கிறார்கள். பசியும் வறுமையும் போராட்ட சேவைக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பப் பெற்றோர் தூண்டப்படலாம்; படையினர் சிறுவர் போராளியின் வேதனத்தை நேரடியாக அவரது குடும்பத்துக்கே செலுத்தவும்கூடும். தவிர, பெண்பிள்ளைகளின் திருமண வாய்ப்புக்கள் குறைவாக இருந்தால், பெற்றோர் தாங்களே அவர்களைப் போராளிகள் ஆகுமாறு உற்சாகப்படுத்தவும்கூடும்.
சிலசமயங்களில், சிறுவர்கள் உயிர்பிழைத்திருப்பதற்காகப் போராளிகளாகிறார்கள். படைக்கூறு ஒன்று ஒருவித வளர்ப்புக் குடும்பமாக, அடைக்கலத் தலமாகவும் இருக்க முடியும். படையில் சேர்ந்தால் ஒழுங்கான சாப்பாடு, உடுப்பு, வைத்திய வசதிகள் ஆகியன கிடைக்கும் என நம்புவதாலும் சிறுவர்கள் படையில் சேர்கிறார்கள்.
சமையற்காரர், சுமைதூக்குநர், தூதுசெல்வோர், ஒற்றர் பணி போன்றவற்றுக்கும் சிறுவர் போராளிகள் உதவுகிறார்கள். இவை அதிகம் கெடுதி இல்லாதவை போலத் தோன்றியபோதிலும், எல்லாச் சிறுவர்களையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்க வேண்டிய கஷ்டத்தையும் ஆபத்தையும் கொண்டிருக்கும். அதிக இளம் பிள்ளைகள் கூட ஆபத்தானவர்கள் என்ற சாட்டில் அவர்களை இராணுவத்தினர் வேண்டுமென்றே கொலைசெய்த அறிக்கைகளும் தெளிவுபடுத்துகின்றன. பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரையில்கூட, அவர்கள் பாலுறவுச் சேவைக்குப் பலவந்தப்படுத்தப்படும் நிலைக்கு ஆளாகிறார்கள். ஆண், பெண், சிறுவர்கள் இரு சாராரும் மறைமுகமான துணைப் பணிகளில் தொடங்கியபோதிலும், விரைவில் போராட்டம் சூடுபிடிக்கையில், அவர்களது அனுபவக் குறைவும், பயிற்சி இல்லாதமையும் அவர்களைக் குறிப்பாகப் பாதிப்புக்கு உள்ளக்குகின்றன.
25

13 வயதில், நான் மாணவர் இயக்கத்தில் சேர்ந்தேன். நிலைமைகள் மாறுவதற்கு நான் உதவவேண்டும், அப்போதுதான் பிள்ளைகள் பட்டினியில் வாடமாட்டார்கள் என்ற ஒரு கனவைக் கொண்டிருந்தேன்.பின்னர் ஆயுதப் போராட்டத்தில் சேர்ந்தேன். ஒரு சிறுபெண்ணுக்குள்ள எல்லா அனுபவக்குறைவுகளும் அச்சங்களும் எனக்குமிருந்தன. போராளிகளின் சோகத்தை நீக்குதற்கு அவர்களுடன் பெண்பிள்ளைகள் பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டிய கடப்பாடும் உண்டென்பதையும் அறிந்தேன். எங்களுக்குத் தெரியாத எவருடனோ போனபின்னர் எங்களுக்குள் ஏற்படும் சோகத்தைக் குறைப்பவர்கள் யார்? இவை எல்லாவற்றையும் நான் நினைத்துப் பிர்க்கையில் என்னுள்ளேயே ஒரு பெரும் வேதனை ஏற்படுகிறது. நான் ஈடுபாடு காட்டியபோதிலும்கூட, அவர்கள் என்னைத் தூஷனைப்படுத்தினர், எனது மனித கெளரவத்தை ஏறி மிதித்தார்கள். எல்லாவற்றையும்விட, நான் ஒரு சிறுமி என்பதையும் எனக்கும் உரிமைகள் உண்டு என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை (ஒரு ஹொன்டியூராஸ் நிகழ்வு ஆய்விலிருந்து எடுக்கப்பட்டது)
போளிச் சிறுவர்களை படைநீக்கஞ் செய்வதும் மீள ஒருங்கினுைப்பதும்
ஆயுதப் படைகளிலிருந்து 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொருவரையும் படைநீக்கஞ் செய்தல் ஓர் அவசர முதன்மையாகும். சமமான உடன்படிக்கைகள் யாவற்றிலும் சிறுவர்கள் பங்குபற்றுதலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான்,மீள ஒருங்கிணைத்தற்கான திட்டங்களைச் செம்மையாக வகுத்திட முடியும்.
சிறுவர் வாழ்வில் புதிய அத்திவாரத்தை நிறுவிட ஒருங்கிணைப்புப் படிமுறை உதவிட வேண்டும். முன்னைய போராளிச் சிறுவர்கள் உடல், உணர்வு, அறிவுரீதியான வள்ச்சிக்குள்ள வழமையான பல வாய்ப்புக்கள் இல்லாதிருந்தவர்கள். அவர்கள் குடும்பத்துடனும் சமூகத்துடனும் தொடர்பை மீண்டும் ஏற்படுத்துதல் முக்கியமாகும். முன்னைய போராளிச் சிறுவர்களுக்குக் கல்வி, தொழிற்கல்வி வாய்ப்புக்களை அளிப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் படையில் சேர்வதைத் தடுப்பதாகவும், அதேசமயம் அவர்களது பொருளாதார பாதுகாப்பைச் செம்மைப்படுத்துவதாகவும் இருக்கும். முன்னைய போராளிச் சிறுவனுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மார்க்கத்திலும் கூடியதொன்றாகும். அது வாழ்வைச் சகஜமாக்குதற்கும், பட்டாளத்தானிலிருந்து வேறுபட்ட ஒரு அடையாளத்தை விருத்திசெய்யவும் உதவும். முன்னைய போராளிச் சிறுவர்கள் பாடசாலை வகுப்புக்களில் பிற்பட்டிருப்பதும், வகுப்புக்களில் அதிகம் வயதுகுறைந்த பிள்ளைகளுடன் விடப்பட்டிருப்பதும் எதிர்நோக்கவுள்ள ஒரு சிக்கலாக இருக்கலாம். முன்னைய போராளிச் சிறுவர்களுக்குச் சிறப்பு வகுப்புக்களை நிறுவுதல் போன்ற குறிப்பிட்ட ஏற்பாடுகளும் தேவைப்படலாம். அத்தகையவர்கள் பின்னர் கிரமமான பாடசாலைகளில் L8aTë 3&ftë astruLeoTh.
கடும் வன்செயல்களில் இளைஞர் முன்னேறிச் செல்லும் ஈடுபாடு வேதனை பற்றிய உணர்வை, அவர்களுக்கு இல்லாது செய்துவிடுகிறது. இந்த அனுபவம் சிறுவர்களையே
26

Page 17
அதிக மூர்க்கமான செயல்களைச் செய்ய வைப்பதோடு, சமூகத்திலிருந்து அவர்கள் பிரிந்துபோவதற்கும் காரணமாகின்றன. வாலிபத்தின், குறிப்பாக ஆரம்ப காலத்தில், இலட்சியக் கவர்ச்சி வலுவானதாக இருக்கும். அப்போது இளம் பேர்வழிகள் தங்கள் சொந்த அடையாளத்தை விருத்தி செய்வதோடு, சமூக அர்த்த உணர்வு ஒன்றையும் நாடிக் கொண்டிருப்பார்கள். ஒருவரது குறிக்கோள்களை எய்துவதற்கு வன்முறை ஒரு சட்டரீதியான வழி என்ற எண்ணத்திலிருந்து விடுபடுதல் போராளிச் சிறுவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இளைஞர்களது சக்தி, எண்ணங்கள், அனுபவம் ஆகியவற்றை அவர்களது புதிய, மோதலுக்குப் பின்னைய சமுதாயத்தை உருவாக்குதற்கு உடன்பாடான வழிகளில் திசைதிருப்புதலே அரசுகளுக்கும் சிவில் சமூகத்துக்கும் உள்ள அறைகூவல் அல்லது சவாலாகும்.
இன்றைய தேதி வரை எந்த ஒரு சமாதான உடன்படிக்கையும் போராளிச் சிறுவர்கள் இருப்பதை முறையாக அங்கீகரித்ததில்லை. சிறுவர்கள் மீது ஆயுத மோதலின் தாக்கம், ஐக்கிய நாடுகள், 1996
O 豹 ஆயுத மோதலில் சிறுவர்களை ஏதிர்காலத்தில்
ன்ப se) 站
சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் கோட்டரீடுகளை வைத்து, ஆயுதப் படைகளுக்கு ஆள் சேர்த்துப் பங்குபற்றும் வயதை ஆகக்குறைந்தது 18 ஆக உயர்த்துவதற்கு பல நிறுவனங்கள் முயன்றுகொண்டிருக்கின்றன. இதனை எய்தற்கு சமவாயத்திற்கு இஷ்டக் குறிப்புப்பந்தி ஒன்றை விருத்தி செய்தற்கு 1994 இல் ஐக்கிய நாடுகள் செயற்குழு ஒன்று நிறுவப்பட்டது.
சிறுவர்களைப் போராளிகளாகப் பயன்படுத்தலைத் தடுப்பதற்கு அல்லது குறைப்பதற்குள்ள உள்நாட்டுச் சக்தியை வலுப்படுத்தக்கூடிய பல ஏற்பாடுகள் இனங்காணப்பட்டுள்ளன. உதாரணமாக, படையில் ஆட்சேர்ப்பதற்குள்ள வயது பற்றிய தேசீய, சர்வதேசீய சட்டங்கள் பற்றி உள்ளூர்ச் சமூகங்கள் அதிகம் அறிவுறுத்தப்படவேண்டும். சிறுவர்கள் ஆயுத மோதல்களில் பங்குபற்றுதல் ஏற்புடையதல்ல என்பதைக் காட்டும் ஒழுக்கநெறிக் கட்டமைப்புகளை நிறுவுதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள், குழுக்கள், மற்றும் சிவில் சமூகம் ஆகியன முக்கிய பாகம் வகிக்கலாம். பெரு நாட்டில் வட்டார தேவாலயங்கள் பலவந்தமாக படைக்கு ஆட்திரட்டுவதைக் கண்டித்த பின்னர் அத்தகைய முயற்சிகள் குறைந்துள்ளன. வயதுகுறைந்த போராளிகளை விடுவிக்க ஆட்சி அதிகாரத்தினருக்கு அழுத்தம் கொடுக்க, எல் சல்வதோர், கெளதமாலா, பரகுவே ஆகிய நாடுகளில் இனக் குழுக்களும் போராளிச் சிறுவர்களது தாய்மாரும் நிறுவனங்களை அமைத்துள்ளனர். அகதி அல்லது இடம்பெயர்ந்தோரது முகாம்களில் துணையின்றித் தனித்திருக்கும் பிள்ளைகளைத் துரிதமாகவும் வேளைக்கும் ஆவணப்படுத்தி, அவர்களது பூர்வீகத்தைக் கண்டுபிடித்தல் மற்றொரு முக்கிய தடுப்பு நடவடிக்கையாகும். மோதல் வலயங்களிலிருந்து தூரத்தே அகதி முகாம்களை அமைப்பதனாலும், சிறுவர்களைப் போராட்டக் குழுக்களுக்குச் சேர்த்தல் அல்லது ஈர்த்தல் போன்றவற்றுக்குள்ள வாய்ப்பும் குறையும்.
27

செயற்பாட்டுக்கான சில விதப்புரைகள்
率 18 வயதுக்குக் குறைந்த சிறுவர்களைப் போராளிகளாகப் பயன்படுத்துவதை நீக்குதற்கு சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் குழு, றெட் பார்னா, த குவெக்கர்ஸ், யுனிசெப், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஹை கமிஷனர் (UNHCR), சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், செம்பிறை இயக்கம் ஆகியவற்றின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்பட வேண்டும்.
求 சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயம், படைக்கு ஆட்சேர்ப்பதற்கும் பங்குபற்றுதற்கும் உள்ள வயதை 18 ஆண்டுகளாக உயர்த்தும் இஷ்டக் குறிப்புப் பந்தியை விரைவாகவும் வெற்றிகரமாகவும் பூர்த்திசெய்வதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
率 போராளிச் சிறுவர்களை உடனடியாகக் கலைத்துவிட்டு, சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தைக் கடைப்பிடித்தற்கு அரசுகள், அரசசார்பற்ற படைகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் ஆகியவற்றுடன் ஐக்கிய நாடுகள் முகவர் தாபனங்களும், சர்வதேச சிவில் சமூக காரியஸ்தர்களும் அமைதியான இராஜதந்திரத்தை மேற்கொள்ள வேண்டும்.
率 போராளிச் சிறுவர்களையும் அவர்களைக் கலைத்துவிட வேண்டியதன்
அவசியத்தையும் தகவல் ஊடகங்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.
家 போராளிச் சிறுவர் அமைப்புக்களைக் கலைத்து, அவர்களை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைத்தற்குரிய குறிப்பிட்ட ஏற்பாடுகளை எல்லாச் சமாதான உடன்படிக்கைகளும் கொண்டிருத்தல் வேண்டும். போராளிச் சிறுவர்களைப் படைநீக்கஞ் செய்து சமூகத்துடன் ஒருங்கிணைத்தற்கு வாதாடல், சமூக சேவைகள் உட்படத் திட்டங்களுக்குச் சர்வதேச சமூகம் ஆதரவு தரசேண்டிய அவசரத் தேவை உள்ளது.
ஓட்டம் பிடிக்கும் சிறுவர்கள் : அகதியும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த சிறுவர்களும்
ஆயுத மோதல்கள் எப்போதுமே மக்கள் இடம்பெயர்ந்து செல்வதை விளைவித்துள்ளன. ஆயுத மோதலின்போது, அண்டை நாடுகளுக்கு அகதிகளாக ஓடிப்போதற்கு அல்லது தங்கள் சொந்த நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்களாதற்குப் பலவந்தப்படுத்தப்படும் சிறுவர்கள் விசேட கவனத்திற் கொள்ளப்படவேண்டியவர்களாவர். மக்கள் மிருகத்தனமாக இடம்பெயர்க்கப்பட்டு, அவர்களது வீடுகளைவிட்டு ஓடுதற்குப் பலவந்தப்
28

Page 18
படுத்தப்படுகிறார்கள். எங்கெல்லாம் இப்படி நடந்தாலும், இடம்பெயர்தல் ஒரு பாரதூரமான உடல், உணர்வு, வள்ச்சித் தாக்கம் சிறுவர்களில் ஏற்படுவதோடு அவர்களது பாதிப்பு வாய்ப்பும் அதிகரிக்கிறது. உலக மதிப்பீட்டின்படியுள்ள 2 கோடி 70 இலட்சம் அகதிகளிலும், 3 கோடி இடம்பெயர்ந்துள்ள மக்களிலும் 80 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களுமாவர்.
மனித உரிமைகள் பற்றிய அகிலத்துப் பிரகடனங்களின் 25 ஆவது ஷரத்து. தாய்மாரும் பிள்ளைகளும் சிறப்புக் கவனதுக்கும் உதவிக்கும் உரித்தானவர்கள் என்பதை அங்கீகரிப்பதுடன், எல்லாப் பிள்ளைகளுக்கும் சமூகப் பாதுகாப்பு உரிமை உண்டெனவும்
கூறுகிறது.
மோதல் பகுதிகளிலிருந்து ஓடிப்போகும்போது, குடும்பங்களும் பிள்ளைகளும் பலதரப்பட்ட உடல் ரீதியான ஆபத்துக்களை எதிர்நோக்குகிறார்கள். அவர்கள் திடீர்த் தாக்குதல்கள், ஷெல் வீழ்ச்சி, பதுங்கியிருந்து சுடுதல், நிலக்கண்ணி வெடிகள் போன்றவற்றால் பயமுறுத்தப்படுகின்றனர். அநேகமாக, அவர்கள் மட்டான தண்ணிரும் உணவும் எடுத்துக்கொண்டு, நாட்கணக்காக நடந்துசெல்ல வேண்டும். அத்தகைய சூழ்நிலைகளில் பிள்ளைகள் தீவிர போஷாக்கின்மைக்கும், நோய்க்கும் ஆளாவதுடன், அவர்களே அநேகமாக முதலில் இறந்துபோகவும் செய்கிறார்கள். ஒடிச் செல்கையில் பெண்பிள்ளைகளே குறிப்பாகப் பால்ரீதியான வன்செயலுக்கு ஆளாகிறார்கள்.
அகதிகளுக்கு அல்லது உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள் பவுத்திரமும் உதவியும் கூடிய பாதுகாப்பான இடங்களாக இருத்தல் வேண்டும். ஆயினும், பழைய அதிகாரப் போராட்டங்கள் மீண்டும் நிகழ்த்தப்பட்டு, மரபு சார்ந்த சமூகப் பாதுகாப்பு நலிவடைந்துவிடுகிறது அல்லது முற்றாகச் சிதைந்துவிடுகிறது. கூடிய மட்டங்களில் வன்செயல், பொருட் துஷ்பிரயோகம், பாலியல் தாக்குதல், வீட்டு பலாத்காரம், கட்டாய ஆட்சேர்ப்பு ஆகியன அநேக அளவில் நடக்கின்றன. உணவு, தண்ணிர், பிளாஸ்ரிக் விரிப்பு போன்ற வளங்கள் விநியோகிக்கப்படும்போது, பெண்களும் பிள்ளைகளும் குறிப்பாகப் பாதிக்கப்படுதல் நிவாரணத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். வழமையாக ஆண்களே விநியோகத்திற்குப் பொறுப்பாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் அதிகாரத்தை இலஞ்சமும் பாலுறவு வாய்ப்பும் கேட்டுத் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இந்நிலை வீடுகளில் குடும்பத் தலைமைதாங்கும் பெண்களுக்கும் யுவதிகளுக்கும் குறிப்பிட்ட ஆபத்தை ஏற்படுத்துகிறது. "பாலியல் வன்முறையையும் பலியாதலையும் தடுக்கும் வழிகாட்டிகள்” என்ற யுஎன்எச்சிஆர் (UNHCR) வெளியீடு நடைமுறை சாத்தியமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. அவை: கவனமாகச் செய்யப்படும் விளக்கேற்றல்கள், மலசலகூடங்களை ஒழுங்குபடுத்தல், விறகு, தண்ணிர் போன்றவற்றைத் திரட்டுவதற்குக் குழுக்களை ஏற்பாடு செய்தல் போன்றவையாகும்.
29

d d d «Ο LLLLSLLLLLSSLLLLS S TSLMC LLCe LLTLTLSJTLTs STTLLL SSS LLTLLLLLT
தேவை
இடம்பெயர்ந்து, ஆனால் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கியுள்ள பிள்ளைகள், இறக்கக்கூடிய உயர் ஆபத்து 2. L'UL S-SILJETU5JLOT6TT சூழ்நிலைகளை எதிர்நோக்குகிறார்கள். ஆயுத மோதல். உள்நாட்டுச் சண்டை, மனித உரிமைகள் &ÉյԼՈԼՈriծ: மீறப்படுதல், அல்லது இயற்கை அல்லது மனிதன் தூண்டிய பேரழிவுகள் காரணமாகத் தங்கள் வீடுகளை விட்டுப் பெரும் எண்ணிக்கையில் புறப்பட்டு ஒடுதற்குக் கட்டாயப்படுத்தப்படும் மக்களே உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாவர். இவர்கள் தங்கள் சொந்த நாட்டு எல்லைகளுக்குள்ளேயே இருக்கிறார்கள. உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்குத் தேவைப்படும் பாதுகாப்பும் உதவியும் போன்ற தேவைகள் எல்லா விதங்களிலும் அகதிகளுக்குத் தேவைப்படுவது போலவே இருந்தாலும் அவர்களது நிலைமை மேலும் மோசமாக இருக்க முடியும். அகதிகளோ யுத்த வலயத்துக்குப்” புறத்தே சென்றுவிட்டிருக்கையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் வழமையாக மோதல் நடைபெறும் இடத்திற்குள் அல்லது மோதல் தளத்திற்கு அண்மையிலேயே தங்குகிறார்கள். அதனால் அவர்கள் அநேகமாகத் திரும்பத் திரும்ப இடம்பெயர வேண்டியது சாத்தியமாகும்.
சர்வதேச மனிதகருணைச் சட்டத்துக்கு மாறாக, கருணை உதவியை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பெறுதலை பல்வேறு ஆயுதக் குழுக்கள் குழப்பிவிடுகின்றன. அகதிகளுக்கு உதவி வழங்குவதில் அல்லது மனித உரிமை மீறல்களைக் கருத்திற் கொள்வதில் சில நிறுவனங்கள் குறிப்பிட்ட விதிமுறைகளைக் கொண்டிருந்தபோதிலும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிறுவன பொறுப்பு எதுவுமே இப்போது தெளிவாக இல்லை.
துணையற்ற சிறுவர்கள்
பெற்றோர் இருவரிடமிருந்தும் பிரிக்கப்பட்டு, சட்டப்படி அல்லது வழக்கப்படி அவர்களைப் பேணும் பொறுப்பை எடுத்துக்கொண்ட ஒரு பெரியவர் இல்லாத நிலையிலுள்ள பிள்ளைகளே துணையற்ற பிள்ளைகளாவர். துணையற்ற பிள்ளைகளது உயிர்பிழைத்தலையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நடைமுறைகளை மேற்கொள்ளுதல், எல்லா அவசரநிலைகளின் போதும் தலையானதாகும். அத்தகையவர்களை அவர்களது குடும்பங்களுடன் மீளச் சேர்த்துவிட முயலுதல் ஓர் முக்கியமான அனுசரணையாகும். சாத்தியமான இடங்களில் எல்லாம் துணையற்ற பிள்ளைகள் அவர்களது குடும்ப உறவினர்களால், அது சாத்தியப்படாவிட்டால், அயவலர்கள், நண்பர்கள் அல்லது ஏனைய மாற்றுக் குடும்பங்களினால் கவனிக்கப்பட வேண்டுமே தவிர நிறுவனங்களால் அல்ல.
30

Page 19
ருவாண்டாவில் ஏற்பட்ட மோதலுக்கும் அதனால் ஏற்பட்ட பாரிய பிராந்திய இடம்பெயர்வுக்கும் தீர்வாக, 1994 இல் உறவினர்களைக் கண்டுபிடிக்கும் ஒரு பெருந்திட்டம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யுஎன்எச்சிஆர், யுனிசெப், சிறுவூர் பாதுகாப்பு நிதியம், மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் நிறுவப்பட்டது. ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பதிவுசெய்யப்பட்டார்கள். 1996 மே மாதம் வரையில், இச் சிறுவர்களில் 33,000 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் திரும்பச் சேர்க்கப்பட்டனர்.
துணையற்ற சிறுவர்கள் எடுத்து வளர்ப்பதற்கு கிடைக்கக் கூடியவர்கள் என்ற கருத்து அநேகமாகத் தவறுதலாக நிலவுகிறது. எடுத்து வளர்த்தல் நிரந்தரமாகக் குடும்பத் தொடர்புகளை அறுத்துவிடுகிறது. மோதலின் உச்சக் கட்டத்தில் சிறுவர்களது உறவினர்களைத் தேடிக்கண்டு பிடித்தல் கஷ்டமாக இருக்கும் என்பதால், மோதலுக்குப் பின்னைய கட்டத்திலும் குடும்பங்களை மீள ஒன்றுசேர்த்தல் முடியாது போனாலே தவிர, துணையற்ற பிள்ளைகள் எடுத்து வளர்ப்பதற்குக் கிடைப்பார்கள் எனக் கருதப்படக்கூடாது. நாடுகளுக்கு இடையிலான பிள்ளை எடுத்து வளர்த்தல் பற்றிய சிறுவர் பாதுகாப்பும் ஒத்துழைப்பும் மீதான 1994 ஆம் ஆண்டின் ஹேக் சமவாயம் நிறைவேற்றிய ஒரு விதப்புரையினால் இக்கோட்பாடு பாதுகாக்கப்படுகிறது.
தங்கள் பிள்ளைகளை வெளியேற்றுதல் சிறந்த தீர்வாகப் பெற்றோருக்குத் தோன்றலாம், எனினும் அது அநேகமாக அப்படி இருப்பதில்லை. குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுதல், விபசாரத்துக்குக் கொண்டு செல்லப்படுதல், பாலியல் ரீதியாகக் சுரண்டப்படுதல், சட்ட விரோதமாக எடுத்து வளர்த்தல் போன்ற வேதனைகள் உட்பட, வெளியேற்றப்படுதல் பிள்ளைகளுக்கு ஒரு நீண்டகால ஆபத்தைக் கொண்டிருக்கும். வெளியேற்றம் அவசியமாக இருந்தால், முழுக்குடும்பமுமே ஒன்றாகச் சேர்ந்துபோக வேண்டும். அப்படி முடியாவிட்டால் பிள்ளைகள் தங்களது ஆரம்ப கவனிப்பாருடனும் பிள்ளைகளுடனும் சேர்ந்து போகவேண்டும். எந்த வெளியேற்றமும் தக்கபடி ஆவணப்படுத்தப்படுதலை உறுதிப்படுத்துவதில் பெருங்கவனஞ் செலுத்த வேண்டும். அத்தோடு பிள்ளைகளைத் தக்கபடி வரவேற்றுக் கவனித்தற்கு ஏற்பாடுகள் செய்வதையும், குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு வைப்பதற்கும் குடும்பத்துடன் மீளச் சேர்ந்துகொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் கவனிக்க வேண்டும். இவற்றின் அளவுகோல் வழிகாட்டிகள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், செம்பிறைச் இயக்கம், யுஎன்எச்சிஆர், யுனிசெப் ஆகியவற்றின் துணையைப் பெறுகின்றன.
செயலுக்கான சில விதப்புரைகள்
冰 துணையற்ற பிள்ளைகளின் உயிர்பிழைத்தலையும் பாதுகாப்பையும்
உறுதிப்படுத்தற்கு, எல்லா அவசர நிலைகளின்போதும் முதல்முக்கியமாக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
31

சாத்தியமான இடத்தெல்லாம் துணையற்ற பிள்ளைகள் அவர்களது உற்றார் உறவினர்களால் பேணிக்காக்கப்பட வேண்டும். இது சாத்தியமில்லை என்றால், அயலவர்கள். நண்பர்கள் அல்லது பதிலீடான குடும்பங்கள் பேணிக்காக்க வேண்டும் என்பதே தவிர நிறுவனங்கள் அல்ல. மோதலுக்குப் பிந்திய காலகட்டம் உட்பட்ட எல்லாக் கட்டங்களிலும் குடும்பத்தைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முடியும்வரை, எடுத்து வளர்ப்பதற்கான அனுமதி வழங்கப்படகூடாது.
அகதிகள், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வழங்கப்படும் உதவித் திட்டங்களில், பாலியல் வன்செயலைத் தடுத்தற்கு நடைமுறை சாத்தியமான ஏற்பாடுகள், நிவாரணப் பண்டங்களை வழங்குதலில் பாகுபாட்டைத் தவிர்த்தல், ஆயதப் படைக்குச் சிறுவர்கள் திரட்டப்படுவதைத் தடுத்தல் போன்றவற்றுக்கு முன்னிடம் தரப்பட வேண்டும். அத்தகைய ஏற்பாடுகளை வடிவமைத்தல், கையளித்தல், கண்காணித்தல் போன்றவற்றில் பெண்கள், இளைஞர்களையும் ஈடுபடுத்தல் வேண்டும். அத்துடன் சிறுவர் உரிமை மீறல்களையும் துஷ்பிரயோகங்களைப் பற்றி எடுத்துப் பேசுதற்கும் சமூக சேவைகள் வழங்குதற்கும் வாய்ப்பிருக்க வேண்டும்
அவசர நிலை ஒவ்வொன்றின்போதும், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களது பாதுகாப்புக்கும் உதவியளித்தற்கும் பொதுவாகப் பொறுப்பு வகிக்கும் ஒரு தலைமை முகவர் தாபனத்திடம் அவசரநிலை நிவாரண ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஐக்கிய நாடுகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடனும், மற்றும் கருணை முகவர் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்தும் ஒப்படைக்கப்பட வேண்டும். உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்புக்கும் உதவிக்கும் தலைமை முகவர் தாபனத்துடன் யுனிசெப் ஒன்று சேர்ந்து தலைமைத்துவம் தரவேண்டும்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களைப் பாதுகாப்பதற்கும் சிறுவர்களது குறித்த அக்கறைகள் பற்றிக் குறிப்பாக வலியுறுத்தற்கும் ஒரு பொருத்தமான சட்ட வடிவத்தை உருவாக்குவதில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு, மற்றும் பிராந்திய நிறுவனங்கள் ஆகியன உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான செயலாளர் நாயகத்தின் ஐக்கிய
நாடுகள் விசேடப் பிரதிநிதியின் பணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.
UT6 g9IglugoLuila)IGI Giglicy60):
ஒரு புத்த ஆயுதம்
யுத்த காலங்களில் குடும்பங்களும் சமூகங்களும் சிதறிப்போவதனால், பெண்களும், பெண் பிள்ளைகளும் குறிப்பாக வன்முறைக்கு ஆளாகக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
32

Page 20
கற்பழிப்பு எப்போதுமே நீடிக்கும் பயமுறுத்தல், அதேபோன்ற ஏனைய பால் அடிப்படையிலான வன்முறைச் செயல்களும். இவற்றுள் விபசாரம், பால்ரீதியான இழிவுபடுத்தலும் ஊறுபடுத்தலும், கடத்திச் செல்லுதல், வீட்டில் நடக்கும் தூஷனை போன்றவையும் அடங்கும். மரணம், குழப்பம், வறுமை போன்றவை குடும்பத்தினுள் நெருக்கடிகளைப் பெருக்குவதோடு, வீட்டுக்குள் நடக்கும் வன்செயலையும் தோற்றுவிக்கலாம். வீட்டிலும் சரி, ஊரைவிட்டு ஓடிப்போகும்போதும்சரி, அல்லது பாதுகாப்புக்காக ஓடிப்போய்ச் சேரும் முகாம்களிலும் சரி. எல்லாச் சூழல்களிலும் பெண்களும் பெண் பிள்ளைகளும் வன்முறை ஆபத்தை எதிர்நோக்குகிறார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவர் கற்பழிக்கப்படுவதைக் கண்டவர்களும், தாய் தாக்கப்பட்டதனால் ஒதுக்கப்பட்டவர்களும் பால் அடிப்படையிலான வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுள் அடங்குவர். ஆயுத மோதல்களின்போது நிகழ்த்தப்பட்ட பால் அடிப்படையிலான செயல்கள், குறிப்பாகக் கற்பழிப்பு, சர்வதேச கருணைச் சட்டத்தை மீறிய செயலாகும்.
öÖLIútjLlgöIIIGÖ elöl JCbő95üLILL– LISUL.
வன்செயல் பாதிப்புக்கும் பாலியல் தூஷணைக்கும் ஆளாகும் பிள்ளைகளுள் அநேகர் பெண் பிள்ளைகளாவர். எனினும் பையன்களும் பாதிக்கப்படுகிறார்கள். கற்பழிப்பு, மோதல் நிகழ்வுடன் ஒட்டியதல்ல. சமூகநெறி எல்லைகள் சீர்குலைவதாலும், படைவீரர்களுக்கும் போராளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அனுமதியாலும் கற்பழிப்பு இடையிடையேயும் கட்டுக்கடங்காத அடிப்படையிலும் நிகழ முடியும். ஆயினும் அநேகமாக இது ஏனைய சித்திரவதை முறைகளைப் போல, எதிரியாகக் காணப்படுபவனை இழிவுபடுத்தவும் அவனது மனவுறுதியைப் பலவீனப்படுத்தவும், மக்களைப் பயமுறுத்தவும், அல்லது பொதுமக்களை வெளியே கிளம்பி ஓடுவதற்குப் பலவந்தப்படுத்தவும் ஒரு யுத்த தந்திர ஆயதமாகப் பயன்படுத்தப்படுகிறது. வேண்டும் என்றே கர்ப்பிணியாக்கப்படுதலினால், இனத் தூய்மை உண்டாக்கும் நோக்குடனும் அநேக முறையாகக் கற்பழிப்பு நிகழ்கிறது. முன்னைய யூகோஸ்லேவியாவுக்கான ஐக்கிய நாடுகள் விசேட தூதுவர் இவ்வாறு நடந்ததை பொஸ்னியாவிலும் ஹேசிகோவினாவிலும் குறேஷியாவிலும் கண்டுள்ளார்.
ஒரு பெண் பிள்ளை மீது அல்லது பெண்ணின் மீது ஏற்படுத்திய கெடுதி அவளது குடும்பத்தின்மீதும் பண்பாட்டின்மீதும் ஏற்படுத்திய தாக்குதலாகும். யுத்தகால கற்பழிப்பு அநேகமாக ஒரு துன்பகரமான நீர் வட்டத்தின் விளைவுடையதாகும். அது கற்பழிப்பின் வேதனை, இழிவுக்கும் அப்பாற்பட்டதாகும். கற்பழிப்பில் பாதிக்கப்பட்டு கர்ப்பிணியானவர்கள் அநேகமாக அவர்களது குடும்பங்களாலும் சமூகத்தினாலும் ஒதுக்கி வைக்கப்படுவதோடு, அவர்களின் குழந்தைகளும் கைவிடப்படுகின்றன.
33

யுஎன்எச்சிஆரின் “பாலியல் ரீதியான வன்முறையைத் தடுத்தலுக்கும் ஈடுகொடுத்தற்குமான வழிகாட்டிகள்” என்ற நூலும் "வேதனையிலும் வன்முறையிலும் பாதிக்கப்பட்டவர்களை மதிப்பாய்வு செய்தற்கும் பேணுதற்குமான வழிகாட்டிகள்” என்ற நூலும் இருமுக்கிய முயற்சிகளாகும். இவை பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களது விசேட தேவைகளைக் கவனித்தற்காக நிவாரணப் பணியாளர்கள் கையிலிருக்க வேண்டிய உபகரணங்களாகும்.
விபசாரத்துக்கும் பாலியல் சுரண்டலுக்கும் ஆளான சிறுவர்கள்
ஆயுத மோதல் காலங்களின்போது, வறுமை, பட்டினி, கதியற்றநிலை பெண்களையும் யுவதிகளையும் விபசாரத்தில் ஈடுபட நிர்ப்பந்தித்தலோ, உணவுக்கோ தங்கும் இடத்துக்கோ, யுத்த வலயத்துக்கு ஊடாகப் பத்திரமாக அழைத்துச் செல்லப்படுதற்கோ அல்லது தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் பத்திரங்களைப் பெறுதற்கோ பாலுறவை வழங்குதற்கு அவர்கள் கடமைப்பட்டிருப்பார்கள். இராணுவ தரப்பினரை நிலைகொள்ளச் செய்வதனால், சில பகுதிகளில் தனி ஆண்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கின்றனர். இவர்களுள் அமைதி காக்கும் படையில் பணிபுரிவோரும் அடங்குவர். இத்தகைய காரணி, சிறுமிகளை வைத்து வர்த்தகரீதியில் நடத்தும் பாலுறவுப் பிழிவு பெருகியதற்குக் காரணமாகிறது.
பாலுறவுப் பிழிவு உடல்ரீதியான, உளரீதியான விருத்தியில் நாசகரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வேண்டப்படாத, பத்திரமற்ற பாலுறவு வேண்டப்படாத கர்ப்பங்கள், அல்லது பாலியல் ரீதியாகத் தொற்ற வைக்கப்படும் வியாதிகளுக்கும் எச்ஐவி/எயிட்ஸ் நோய்க்கும் இடமளிக்கும். பாலியல் பிழிவு வேதனைக்குப் பின்னர் பருவப் பெண்கள், தங்களைத் தாக்கியவர்களிடமிருந்து மீண்டும் தாக்கப்படலாம் எனப் பயந்தோ அல்லது தங்கள் குடும்பங்களினால் ஏற்க மறுக்கப்படலாம் என அஞ்சியோ அமைதியாகத் துன்பப்படுவார்கள். அவர்களே ஒரு மானக்கேட்டு உணர்வை, துயர்தோய்ந்த அச்சத்தை உணரலாம். இவை வேதனை, மறுதலிப்பு என்ற ஒட்டினுள் அவர்களில் பலரை உள் இழுத்துக் கொண்டிருக்கச் செய்கின்றன.
针 8 Ličió essors asssigol IIa) LIII.5. Lisboafter SB56) ÉLIUtó IBI bதல்
ஆயுத மோதலினதும் இனத் தூய்மைப்படுத்தலினதும் ஒரு கருவியாக கற்பழிப்பு பரவலாகக் கைக்கொள்ளப்படுதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டாக வேண்டும் என்பதோடு அதனை நிகழ்த்தியவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். மிக மோசமான தூஷணைகளைப் பொறுத்தவரையில், மனிதகுலத்துக்கு எதிராக முன்னைய யுகொஸ்லேவியாவிலும், ருவாண்டாவிலும் இனப்படுகொலை, யுத்தக் குற்றங்கள்
34

Page 21
போன்றவற்றை நிகழ்த்தியவர்களைத் தண்டிக்க சர்வதேச விசாரணை மன்றுக்கள் அவற்றின் குறிக்கோள்களை எய்துவதற்கு அதிக நிதி ஆதரவும், கூடுதலான உறுதிதளராத அரசியல் பக்கபலமும் பெற வேண்டியுள்ளன. முன்னைய யுகொஸ்லேவியாவில் யுத்தக் குற்றம்புரிந்தவர்கள் எனக் குற்றஞ் சாட்டப்பட்டவர்களை விசாரணை செய்ய நிறுவப்பட்ட மன்றுக்கள், பாதிக்கப்பட்டவர்கள் 20,000 பேர் என மதிப்பிடப்பட்டிருந்தும்கூட, எட்டுப் பேர்களை மாத்திரமே கற்பழிப்பு, தாக்குதல் போன்ற குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களில் குற்றவாளிகளாகக் கண்டுள்ளது. இந்த மட்டான பலன் சர்வதேச மனித உரிமைகளயும் கருணைச் சட்டத்தையும் பிரயோகிப்பதில் உள்ள சிரமங்களையும், தேசீய, சர்வதேசீய சட்டத் தொகுப்பில் விளக்கம் கொள்வதிலும் காணப்படும் சிரமங்களையும் கோடிட்டுக் காட்டுகிறது.
மோதல் சூழ்நிலைகளில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமைத் தூஷனை நிகழ்வுகளையும் விரிவையும் ஆவணப்படுத்தக்கூடிய மற்றொரு முக்கிய மன்றம் உண்மை ஆணைச் சபைகளாகும். இவை தவறான நிகழ்வுகளை வெளிக்காட்டுவதோடு, ஒருவருக்குள்ள் தனிப்பட்ட பொறுப்பையும் வலியுறுத்தும். தேசீய உண்மை ஆணைச் சபைகள் ஆர்ஜண்டினா, புறுண்டி, எல்-சல்வதோர், தென் ஆபிரிக்கா, உகண்டா, வியட்நாம் போன்ற நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன. மோதல் சூழ்நிலைகளின்போது மனித உரிமைத் தூஷனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இச்சபைகள் சுகப்படுத்தலை வசதிப்படுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச், சமூகங்களை, நாடுகளைச் சமரசப்படுத்தியும், மீள நிர்மாணித்தும் தருவதற்கு உதவுகின்றன. இச் சபைகள் மனித உயிரினது புனிதத்தின் அடிப்படை முக்கியத்துவத்தையும் கண்ணியத்தையும் மீள வலியுறுத்துவதோடு, தலைவர்களினதும் சிவில் சமூகத்தினதும் ஒழுக்க நெறி, தார்மீக, சட்ட, அரசியல்ரீதியான பொறுப்பையும் வற்புறுத்துகின்றன.
செயலுக்கான சில விதப்புரைகள்
米 பெண்களதும் பெண் பிள்ளைகளதும் தேவைகளான குடும்பக் கட்டுபாட்டுச் சேவைகளைப் பெறுதல், கற்பழிப்பின் விளைவாக ஏற்பட்ட கர்ப்பிணி நிலையின்போது கவனிப்பு, பால்ரீதியான துண்டிப்பு, மிக இளம் வயதில் பிரசவித்தல், பாலுறவினால் தொற்றும் எச்ஐவி/எயிட்ஸ் உட்பட்ட நோய்கள் போன்றவை உட்பட விசேட மகவுற்பத்தித் தேவைகளை மோதல் சூழ்நிலைகளில் எல்லாக் கருணைத் தீர்வுகளும் வலியுறுத்த வேண்டும். பால்ரீதியான வன்முறைக்கு ஆளான தாய்மார்களது உள ரீதியான சமூகரீதியான தேவைகளுக்கும் சம முக்கியத்தும் தரப்பட வேண்டும். அவர்களது பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்த்தற்கும் தேவையான நிலைமைகளையும் மேம்படுத்த உதவி வேண்டியிருக்கும்.
35

அமைதி காக்கும் ஆளணியினர் உட்பட எல்லா இராணுவ ஆளணியினரும் அவர்களது பயிற்சியின் ஒரு பாகமாக, சிவில் சமூகத்தின்பால், குறிப்பாகப் பெண்கள், பிள்ளைகள் பால், அவர்களுக்குள்ள பொறுப்புக்கள் பற்றிப் பணிப்புரை பெறவேண்டும்,
இராணுவ, சிவில் மக்கள் இரு சாராரிலும் எற்படும் பால்ரீதியான தூஷனைகளை அறிக்கையிட தெளிவான , இலகுவாக எட்டக்கூடிய ஏற்பாடுகள் நிறுவப்பட வேண்டும்.
இராணுவ, சிவில் மக்களிடையே ஏற்படும் கற்பழிப்பை ஒரு யுத்தக் குற்றமாகக் கணித்து, தெளிவுப்படுத்தி, அனுசரிப்பதோடு, அதற்கேற்றவாறு தண்டிக்கப்படவும் வேண்டும். குற்றத்தின் தன்மையையும் அதன் கெடுதியையும் பிரதிபலிப்பதற்கு, பொருத்தமான சட்ட, மறுவாழ்வைப் பரிகாரங்கள் கிடைக்கச் செய்தல் வேண்டும்.
பெண்கள், சிறுமிகளுக்கான பாதுகாப்பைச் செம்மைப்படுத்தும் வகையில், அகதிகளான, இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்கள் வடிவமைக்கப்பட வேண்டும். பெண்களும் முகாம் நிருவாகமும் தொடர்பான எல்லா அம்சங்களிலும் ஈடுபட வேண்டும். அதிலும் விசேடமாக, விநியோகத்தை ஏற்பாடு செய்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும். அதிகப்படியான பெண் ஆளணியினர் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் அறிவுரை வழங்குபவர்களாகவும் களத்தில் சேவைக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மோதலிலும், பாலுறவுத் தொல்லைக்கும், பால் அடிப்படையான வன்முறைக்கும் ஆளாகியவர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். பாதிப்புற்றவர்களது உரிமைகள் உட்பட, இவை அந்தரங்க அறிவுரைகளைப் பல விடயங்களில் கொடுக்க வேண்டும். அத்தகைய திட்டங்கள் கல்விச் செயற்பாடுகள், தேர்ச்சிப் பயிற்சி போன்றவற்றையும் வழங்க வேண்டும்.
36

Page 22
நிலக்கண்ணிவெடிகள், வெடிக்காதுள்ள வெடிப்பொருட்கள்
ம்பங்க்கம் நாசம்
ஆயுத மோதலில் சிக்கிய இலட்சக் கணக்கான பிள்ளைகளுக்குச் சொல்லொணாத் துன்பத்தை விளைவிக்கும் அதி நாசகரமான, தொடர்ச்சியான ஆபத்துக்களைக் கொண்டு விளங்குபவற்றுள் ஒன்றே நிலக்கண்ணி வெடிகள். மோதல் முடிவுற்ற நீண்ட காலத்துக்குப் பின்னர், அநேகமாக பல தசாப்தங்களுக்கு சுரங்க வெடிகள் அவற்றின் நாசகாரத்தைத் தொடர்ந்து அடக்கி வைத்துள்ளன. இன்று, குறைந்தது 68 நாடுகளில் உள்ள பிள்ளைகள், 11 கோடி நிலக்கண்ணி வெடிகள் நிலத்தில் புதைந்து கிடந்து, கவலையினமாகக் காலைத் தூக்கி வைப்பதைக் கவனித்துக்கொண்டிருக்கின்றன. இவற்றோடு வெடிக்காது கிடக்கும் இலட்சக்கணக்கான வகைகளையும் சேர்த்துக்கொள்ளலாம் - குண்டுகள், ஷெல்கள், வெடிக்காத கைக்குண்டுகள். நிலக்கண்ணி வெடிகளைப் போன்று வெடிக்காத வெடி பொருட்களும் அப்பாவியான, ஐயப்பாடு இல்லாத வழிப்போக்கள்களினால் தட்டிவிடப்படலாம்.
சிறுவர்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ளார்கள். அவர்கள் இயற்கையிலேயே புதினமான பொருட்கள் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டிருப்பர். வெடிப் பொருட்களில் பல விளையாட்டுப் பொருட்கள், அன்னாசி, வண்ணாத்திப் பூச்சி போன்றெல்லாம் இருக்கும். மிருகங்களை மேய்க்கும்போது, வயல்களில் வேலைசெய்யும்போது அல்லது விறகு தேடும்போது சிறுவர்கள் இத்தகைய வெடிப்பொருட்களைப் பொறுக்கி எடுக்கலாம் அல்லது ஏறி மிதித்துவிடலாம். நிலக்கண்ணி வெடிகளைப்பற்றி எச்சரிக்கை செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தாலும், சிறுவர்கள் அத்தகைய அடையாளங்களை இனங்காணவோ, வாசிக்கவோ இயலாதவர்களாக இருப்பார்கள். சிறுவர்களும் பெரியவர்களும் நிலக்கண்ணி வெடிகளுக்கு அவ்வளவு பரிச்சயமாவதால், அது பயங்கரமான ஆயுதங்கள் என்பதை அவர்கள் மறந்துவிடுவது ஒரு ஆபத்தாகும்.
4 வயது கூ யாவும், 6 வயது சியா யாவும் 1993 நவம்பரில் புல்வெளிக்கு எருமைகளை நடத்திக்கொண்டு போகிறார்கள். அப்போது அவர்கள் ஒரு கிடங்கினுள் ஒரு வட்டமான பொருள் கிடப்பதைக் கண்டார்கள். ஹிமொங் புதுவருட பண்டிகையின்போது பையன்களும் சிறுமிகளும் எறிந்து விளையாடும் பந்துபோல் அது இருந்தது. சியா யா அந்தக் குண்டை அவளது சகோதரனை நோக்கி எறிந்தாள். அது வெடித்து, அவ்விருவரையும் கொன்றதோடு, வழியால் போன ஒரு சைக்கிள் பேர்வழியையும் சாகடித்தது.
37

விளையாட்டு வண்டிகளின் சக்கரங்களாக நிலக்கண்ணி வெடிகளைப் பாவிப்பது அறியப்பட்டுள்ளது. கம்போடியாவில் ஆளணியினருக்கு எதிரான பீ-40 சுரங்க வெடிகளை வைத்துச் சிறுவர்கள் விளையாடி இருக்கிறார்கள். மீன் பிடித்தல், தனிப்பட்ட ஆதனத்தைக் காத்தல், தனிப்பட்ட சச்சரவுகளைத் தீர்த்தல் போன்ற அன்றாட காரியங்களிலும் நிலக்கண்ணிகளும் மற்றும் கருவிகளும் ஒரு பாகமாகியுள்ளன. இத்தகைய நெருக்கமான பரிச்சயம் இக்கருவிகளது ஆபத்துப் பற்றிய விழிப்புணர்வையும் மழுக்கிவிடும்.
சமூகத்தின் மிக்க வறுமைப்பட்டோர் பிரிவினரிடையே தான் சுரங்க வெடிகளினால் பாதிக்கப்பட்டோர் நிறைந்திருக்கும் போக்குக் காணப்படுகிறது. ஏலவே வறுமையால் வாழுதற்குப் போராடிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் சுரங்க வெடி நிகழ்வுகளால் அநேகமாக நிதிரீதியாக நாசமுற்றுப் போகிறார்கள். அதிலும், பெற்றோருள் ஒருவர் சுரங்கவெடியில் பாதிக்கப்பட்டவர் என்றால், வேலைசெய்யும் ஆற்றலை அவர் இழந்துவிடுவதால், பிள்ளைகளுக்குள்ள கவனிப்பும் பாதுகாப்பும் பெரிதும் வலுவிழக்கின்றன.
நிலக்கண்ணிகளைத் துப்புரவாக்கும் பணி ஆபத்தானதும் செலவு பிடிப்பதுமாகும். ஒரு சுரங்க வெடியைக் கிளறி எடுக்க 300 டொலருக்கும் 1000 டொலருக்கும் இடைப்பட்ட செலவு ஏற்படும். ஆயினும் அதற்கு ஏற்படும் ஆரம்ப ஆகுசெலவு 3 டொலர்களேயாகும். சுரங்க வெடிகள் அதிகம் நிறைந்து காணப்படும் நாடுகள் பொதுவாக உலகிலேயே ஆகவும் வறுமைப்பட்ட நாடுகளாக இருக்கும். அவற்றுக்குச் சுரங்க வெடிகளை அகற்றவே கட்டுபடியாகாது.
செய்யப்படவுள்ள பணிச்சுமைகள்
சிறுவர்களையும் ஏனைய பொதுமக்களையும் நிலக்கண்ணி நாசத்திலிருந்து காப்பதானால் நான்கு முக்கிய துறைகளில் துரித முன்னேற்றமும், நிதி ஆதரவும் வேண்டியிக்கும்; நிலக்கண்ணி வெடிகள் மீது தடை, மனிதாபிமான ரீதியில் நிலக்கண்ணி அகற்றுதலும், அதன்மூலம் அப்பிரச்னையைப் போக்குதலும், நிலக் கண்ணி பற்றிப் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலும் அதன்மூலம் காயம் ஏற்படுதலைத் தவிர்த்தலும், பிள்ளைகள் பாதிப்பிலிருந்து மீட்சிபெறுதற்கு மறுவாழ்வளித்தல் ஆகியனவாம்.
நிலக்கண்ணிகளின் பாகுபாடற்ற தன்மை, அவை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் அளவுக்கு மீறிய துன்பங்கள். பாரிய சமூக - பொருளாதார தாக்கம், வரவுள்ள பல ஆண்டுகளுக்கு நிலக் கண்ணிகள் ஏற்படுத்தக்கூடிய சேதம் ஆகியன நிலக்கண்ணி உற்பத்தியைத் தடைசெய்வதற்கான சர்வதேச இயக்கத்தைத் தூண்டிவிட்டுள்ளன. 1992 இல் அரச சார்பற்ற நிறுவனங்களின் அகிலக் கூட்டு, நிலக் கண்ணிகளைத் தடைசெய்யும் சர்வதேச
38

Page 23
இயக்கம் ஒன்றை நிறுவியது. இதன் பின்னர் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது : ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் நிலக்கண்ணிக் கொடுமையை ஒழிக்கத் தீவிரமாகக் குரல் கொடுத்துள்ளார், அத்தோடு இத்தகைய ஆயதங்களைப் பாவித்தல், உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், திரட்டி வைத்தல் போன்றவற்றுக்கு எதிராகப் பல நாடுகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
நிலக்கண்ணி ஆபத்தை நீக்குதற்கு நீண்டகால சர்வதேச மனிதாபிமான அடிப்படையிலான நிலக்கண்ணி சுத்திகரிப்புக்கு ஈடுபாடு காட்டுதல் வேண்டும். புதிய கருதுகோளான மனிதாபிமான அடிப்படையிலான நிலக்கண்ணி சுத்திகரிப்பு மரபமைந்த இராணுவ அணுகுவழிகளிலிருந்து வேறுபட்டது. ஐக்கிய நாடுகள் சபையினது கூற்றின்படி, மனிதாபிமான ரீதியான நிலக்கண்ணி சுத்திகரிப்பு என்றால் ஒரு பகுதி 99.9 சதவீதம் நிலக்கண்ணியிலிருந்து விடுபட்டு இருந்தால்தான் அது பாதுகாப்புத் தரத்தை எய்துகிறது. உள்ளூரிலேயே பயன்படுத்தி நீடித்து நிலைக்கக் கூடியவாறு நிலக்கண்ணி நீக்கம் சரிக்கட்டப்பட வேண்டும்.
நிலக்கண்ணிகளையும் நிலக்கண்ணி புதைந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் பகுதிகளையும் அடையாளம் காணுதற்கு நிலக்கண்ணி பற்றிய விழிப்புணர்வுத் திட்டம் உதவுகிறது. அத்தோடு, நிலக்கண்ணி கண்டுபிடிக்கப்பட்டால் அல்லது வெடிப்பு ஏதேனும் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை உணரவும் அத்தகைய விழிப்புணர்வு உதவுகிறது. நிலக்கண்ணி பற்றிய விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் மட்டுமின்றி, பயிலும் நடைமுறையில் அவர்களையும் ஈடுபடுத்த முனைதலே நிலக்கண்ணி பற்றிய செம்மையான விழிப்புணர்வுத் திட்டமாகும்.
பங்குபற்றுவோரும் ஈடுபடுதல், பிள்ளை ஒன்று இன்னும் ஒரு பிள்ளைக்குச் சொல்லிக்கொடுக்கும் அணுகுவழி, பல ஊடகங்கள் மூலம் எடுத்து விளக்குதல், பாத்திரம் ஏற்று நடித்தல், உயிர் தப்பியவர்கள் விஷயம் புகட்டுபவர்களாக இருத்தல், பாதுகாப்பான விளையாட்டுப் பகுதிகளைத் தோற்றுவித்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு புதிய திட்டத்தை சிறுவர் பாதுகாப்பு நிதியம் வகுத்துள்ளது.
விசேட மருத்துவ கவனிப்பும், செயற்கை உறுப்புக்கள் பொருத்தலும். ஆண் பிள்ளைகளிலும் பார்க்கப் பெண்பிள்ளைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஓரளவு குறைவாகவே இருக்கும். நிலக்கண்ணிப் பாதிப்பு ஏற்பட்ட குடும்பங்களுக்கு, நீண்டகால மருத்துவ சிகிச்சை, மீள்வாழ்வு, நிலக்கண்ணிக் காயங்களுக்குத் தேவையான சமூக - உளரீதியான ஆதரவு ஆகியன செலவுமிக்கவை. அதனால் அவற்றுக்குச் சர்வதேச உதவி (8-5606.
39

செயலுக்கான சில விதப்புரைகள்
நிலக்கண்ணி வெடிகளை உற்பத்திச் செய்தல், பாவித்தல், விற்பனை செய்தல் ஆகியனவற்றைத் தடைசெய்தற்கு ஒரு விரிவான சட்டவாக்கம் அரசினால் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அத்தோடு அதன் அகிலத் தடைக்கான இயக்கத்துக்கும் ஆதரவுகொடுக்க வேண்டும். யுஎக்ஸ்ஓ பயமுறுத்தலைக் குறைப்பதற்காக குலைக் குண்டுகள், சிறுகுழல் ஆயதங்கள் போன்ற மற்றும் ஆயுதங்களும் சிறுவர்மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைக் கருத்திற் கொள்ளுதற்கும் அரசுகள் உருப்படியான பிரேரணைகளை முன்வைக்க வேண்டும்.
அரசுகள், இயல்பானவிடத்து, நிலக்கண்ணிவெடிகளைப் பாவித்தற்கு, விற்பதற்கு, கையிருப்பில் வைத்திருப்பதற்குத் தடைவிதிக்கும் சட்டவாக்கத்தை நிறைவேற்றுவதில் கண்ட முன்னேற்றத்தைப் பற்றி சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் குழுவுக்கு அனுப்பும் அறிக்கைகளில் குறிப்பிட வேண்டும். அவை, கண்ணிவெடிகளை அகற்றுதல் பற்றி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், சிறுவர்களது நிலக்கண்ணி வெடிபற்றிய விழிப்புணர்வுக்கான திட்டங்களையும், காயப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது பற்றியும் அறிக்கையிட வேண்டும்.
கண்ணி வெடிகளை அகற்றுதற்குள்ள தேசிய ஆற்றலை விருத்தி செய்யும் செயலுபாயங்களை அனைத்து, மனிதாபிமான அடிப்படையில் நிலக்கண்ணிகளை நீக்குதல் எல்லா சமாதான உடன்படிக்கைளினதும் அங்கமாக்கப்பட வேண்டும்.
நிலக்கண்ணி விற்பனையால் ஆதாயம் பெறும் நாடுகளும் கம்பனிகளும் சுரங்க வெடிகளை நீக்குதற்காகவும், கண்ணி வெடிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தற்காகவும் நிறுவப்பட்ட நிதிகளுக்குப் பணம் வழங்க வேண்டுமென விசேடமாகக் கோரவேண்டும்.
நிலக்கண்ணி வெடிகள் பெருகுவதையும், விற்கப்படுதலையும் குறைத்தற்கு, நுகர்வாளர் பகிஷ்கரிப்பு போன்ற நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனிதாபிமான அலுவல்கள் திணைக்களம், யுனிசெப், யுனெஸ்கோ, மற்றும் ஈடுபாடு கொண்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் நிலக் கண்ணி வெடி விழிப்புணர்வு பற்றி ஒரு தொழில்நுட்ப பயிலரங்கு நடத்த வேண்டும். இதில் படித்த பாடங்களைக் கணித்தல், சிறுவரைக் கருத்திற்கொண்ட கண்ணிவெடி விழிப்புணர்வுத் திட்டங்களின் சிறந்த நடைமுறைகளை மேம்படுத்தல், ஒருங்கிணைப்பு, கணிப்பீடு, மதிப்பாய்வு ஆகியவற்றையும் செம்மைப்படுத்தல்.
40

Page 24
வாலிபத்தினர் ஓர் உதாசீனப்பட்ட குழு
இளைஞர்கள் வாழும் சமூகங்களைத் தொடர்ந்து விருத்தி செய்தற்கு இளைஞர்களது கற்பனா சக்தி, இலட்சியங்கள், அவர்களது சக்தி ஆகியன அத்தியாவசியமாகும். வாலிபப் பருவம் மிக முக்கியமானதொரு கட்டம் எனவும், இதில் இளையவர்கள் எதிர்கால பாத்திர பொறுப்புக்களைப் பயின்று, தம் சமூகங்களின் விழுமியம் அல்லது பெறுமானங்களையும் நியதிப்பாட்டையும் இணைத்துக்கொள்கிறார்கள் என எல்லாக் கலாசாரங்கள் அல்லது பண்பாடுகளுமே அங்கீகரித்துள்ளன. ஆயுத மோதல்களின்போது, வாலிபர்கள் குறிப்பான சில பிரச்னைகளை எதிர்நோக்குகிறார்கள். பல உடல்ரீதியான, உணர்வுரீதியான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கைக் காலகட்டத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இருந்தும், யுத்தங்களின்போதோ அல்லது அவற்றுக்குப் பின்னரோ, இளைஞர்கள் ஏதேனும் விசேட கவனிப்பையோ உதவியையே பெறுதல் ඡ(156තLn.
ஆயுத மோதல்களின்போது, கல்வி வாய்ப்புக்கள் குறைவாக அல்லது இல்லாதே அதிகமாகக் காணப்படுவதால், வாலிப ஆண்களும் பெண்களும் அச்சமுற்றவர்களாக, சலிப்புற்றவர்களாக, விரக்திகொண்டவர்களாக ஆகிவிடுகிறார்கள். வறுமைப்பட்ட, ஒதுக்கப்பட்ட பின்னணிகளிலிருந்து வந்த குடும்பங்களிலிருந்து பிரிந்த பிள்ளைகளுக்குக் குறிப்பாக, இராணுவ வாழ்க்கை மிக்க கவர்ச்சியுள்ளதாகப்படுகிறது. இளைஞர்கள் அதிகாரத்தைப் பெறுவதற்கு ஆயுதங்களை ஏந்துகிறார்கள். மக்கள் அதிகார மற்றவர்களாக, அடிப்படைத் தேவைகளைக் கூடப் பெறுவதற்கு வழியில்லாத சூழ் நிலைகளில் அதிகாரம் ஒரு பலம் மிக்க ஊக்குவிப்பு சக்தியாகும். ஏனையவர்கள் தங்கள் விருப்புக்கு மாறாகப் படைவீரர் ஆகிவிடுகிறார்கள். மோதலின்போது, குறிப்பாக வாலிபப் பெண்கள் பால்ரீதியான வன்முறைக்கும், பாலியல் பிழிவுக்கும் ஆளாகிறார்கள்.
கடுமையான, நீண்டகாலம் நீடிக்கும் ஆயுத மோதல் நிலைமைகள் ஆளுமை வளர்ச்சியை ஊறுபடுத்தலாம். இதன் காரணமாக, பல வாலிபர்கள், குறிப்பாக, கடுமையாகத் துன்பப்பட்டவர்கள் தொலைநோக்கில் தங்களுக்கு எதிர்காலம் இருப்பதாகக் காண முடிவதில்லை. அவர்களது வாழ்வு எப்போதும் மங்கலாக இருப்பதாகவே காண்கிறார்கள். கடும் மனஉளைச்சலில் வாடுகிறார்கள் அல்லது தற்கொலைகூடச் செய்கிறார்கள். அவர்கள் மக்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்திருக்கலாம். குடும்ப சூழலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், பெற்றோரது மறைவுகள் அல்லது மரணங்கள் இளம் நபர்களுக்கு வழிகாட்டல், பார்த்துச் செய்தற்கு உரியவர்கள், ஆதரவு கொடுப்பவர்கள் கிடைக்காது போய்விடுகின்றனர்.
வாலிபர்களுக்கு விசேட தேவைகளும் விசேட சக்திகளும் உண்டு. அவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக அல்லது பிரச்னைகளாக மாத்திரம் காணப்படக்கூடாது; உயிர் பிழைத்தவர்களகவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணக்கூடியவர்களாவும் நோக்கப்பட
41

வேண்டும். அவர்களது தேவைகள் நிறைவுசெய்யப்படுதலை உறுதி செய்தற்கு சமூக அடிப்படையிலான நிவாரணம், மீட்சி, மீளமைப்பு போன்ற திட்டங்களில் இளைஞர் ஈடுபடுத்தப்பட வேண்டும். இவற்றை, உதாரணமாக, தொழிற்கல்வி, தேர்ச்சிப் பயிற்சி மூலமாகவும் எய்தலாம். இவை இளைஞர்களது வருமானத்தைக் கூட்டுவதுடன், அவர்களது உள-சமூக ரீதியான நல்வாழ்வை மேம்படுத்தும் விதத்தில் அவர்களது ஆளுமை, தன்மான உணர்வுகளையும் உயர்த்தற்கு உதவுகின்றன. சமூகத்திலுள்ள இளம் பிள்ளைகளுக்கான திட்டங்களை விருத்தி செய்து, நிறைவேற்றுதற்கும் அதன்மூலம் இளைஞர்கள் அர்த்தபுஷ்டியான இலட்சியபூர்வமான உணர்வைப் பெறுதற்கும் குறிப்பிடத்தக்க ஒரு செம்மையான வழி பிறக்கும்.
அதிக உபாதிப்புக்கு உள்ளாகக்கடிடகுடும்பக் கூற்றினைப்
Tsas 6)
பிள்ளையை முதல்வராகக் கொண்ட குடியிருப்புக்களில் சகோதர, சகோதரிகளைக் கொண்ட 'குடும்பக்கூறுகள்” அடங்கியிருக்கும். இவர்கள் பெற்றோரை இழந்தவர்களாக, அல்லது தங்கள் பெற்றோரிடமிருந்து தற்செயலாகக் கைவிடப்பட்டவர்களாக, பரந்த குடும்பப் பிள்ளைகளாக, உறவுமுறையில் இல்லாத பிள்ளைகளாகக் கூட இருக்கலாம். அத்தகைய குடியிருப்புக்கள் வழமையாக ஒரு 'மைனர்' யுவதியை முதல்வராகக் கொண்டிருக்கும். சிறுமியை முதல்வராகக் கொண்ட குடியிருப்புக்களின் தேவைகள் சட்ட, சமூக பாதுகாப்புக்குக் குறிப்பாகக் கடினமாக இருக்கும். அத்தகைய குடியிருப்புகள் தொழிற் சுரண்டலினாலும், விபசாரத்தினாலும், குறிப்பாகப் பாதிக்கப்படலாம். வளர்ப்புச் சாத்திய ஏற்பாடுகள் விடயத்தில் குறிப்பாக, பொருத்தமான கொள்கையையும் தீர்வுத்திட்டத்தையும் ஏற்படுத்துவதில் இருதலைக்கொள்ளி எறும்பு நிலைகள் எழுந்துள்ளன.
சிறுவர் உரிமைகள் சமவாயத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளவாறு, குடும்ப ஒருமைப்பாடு என்ற கோட்பாடே இப்பிள்ளைகளுக்கான எல்லா உதவிகளதும் அடிப்படையாக அமைதல் வேண்டும். பிள்ளையை முதல்வராகக் கொண்ட குடியிருப்பின் நல்வாழ்வை மேம்படுத்தற்கு ஒரு வழி, சட்டங்களை உருவாக்க அரசுகளுக்கு உதவுதல். இச்சட்டங்கள், பாதுகாப்பு, வாரிசு உரிமை, சொத்துரிமைகள் போன்றவற்றில் பிள்ளையை முதல்வராகக் கொண்ட குடியிருப்புகளுக்கு எதிராகவுள்ள பாகுபாடுகளுக்கு அறைகூவல் விடக்கூடியனவாக இருக்கும்.
செயலுக்கான சில விதப்புரைகள்
率 ஆயுத மோதல்களினால் பாதிப்புற்ற வாலிபர்களுக்குப் பொருத்தமான கல்வி, பொழுதுபோக்கு ஏற்பாடுகளை வழங்கும் திட்டங்களை விசேடமாக வலியுறுத்தல்.
42

Page 25
படைக் கலைப்பின் பின்னர் உள்ள வாலிபப் படைவீரர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவை சீவியத்துக்கான மாற்றுவழி காட்டும் திட்டங்களாக இருக்கலாம். அத்தோடு அவர்கள் சமூகத்துடன் ஒருங்கிணைவதையும் மேம்படுத்தல் வேண்டும். இளைஞருக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சித் திட்டங்கள் உட்பட மனித வள அபிவிருத்தி மேம்படுத்தப்பட வேண்டும்.
பாதுகாப்பு, வாரிசு உரிமை, சொத்துரிமை போன்றவற்றில் பெண்கள், சிறுமிகள், பிள்ளையை முதல்வராகக் கொண்ட குடியிருப்புக்கள் ஆகியோருக்குப் பாகுபாடு காட்டும் சட்டங்களுக்குச் சவால்விடும் சட்டங்களை இயற்ற அரசுகளுக்கு சகல அரசு சார்ந்த நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் முகவர் தாபனங்களும் ஏனையவையும் உதவ வேண்டும்.
பிள்ளையை முதல்வராகக் கொண்ட குடியிருப்புகளைக் காக்கவும் பேணவும் ஐ.நா. தாபனங்கள் மற்றும் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
43

சிறுவர்களது மனித உரிமைகளை மேம்படுத்துதல்
44

Page 26
UNICEF/5879#Roger Lernoyne
聽
瓣Y
 

சிறுவர்களது மனித உரிமைகளை மேம்படுத்துதல்
“பண்டங்களிலும் பார்க்க மக்கள் முக்கியமாக இருக்கக்கூடிய, பிள்ளைகள் மதிப்பிடற்கரிய செல்வங்களாக இருக்கக்கூடிய ஒருசமூகம் எங்களுக்கு வேண்டும்; அதிக மனிதத்தன்மை, அனுதாபத்துடன்கூடிய கவனிப்பு, இனிய பண்பு ஆகியவற்றைக் கொண்ட மக்கள் வாழும் உலகம் வேண்டும்” 1995 மே மாதம் 9 ஆம் திகதி நியூ யோர்க், டெறி டவுனில் நடைபெற்ற ஆயுத மோதலினால்
சிறுவர்களுக்கு ஏற்படும் தாக்கம் பற்றிய பிரபல பிரமுகர்கள் குழுவின் கூட்டத்தில் ஆர்ச் பிஷப் டெஸ்மண்ட் டுருவின் கற்று.
மோதல்கள் பயமுறுத்தும்போது மிகத்துரிதமாகச் செய்யப்பட வேண்டிய பணிப்பொறுப்புக்களுள் ஒன்று பிள்ளைகளைப் பாதுகாக்கும் வழிகளைக் கண்டறிதலாகும். பாதுகாத்தல் என்பதன் அர்த்தம் ஆக்கிரமிப்பிலிருந்து அவர்களைக் காத்தல் மட்டுமின்றி, அவர்களது சகல உரிமைகளும் தேவைகளும் மதிக்கப்பட்டு நிறைவெய்தலையும் உறுதிப்படுத்தலுமாகும். இப்போது ஏறக்குறைய எல்லா நாடுகளாலும் ஏற்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் மூலமாக சிறுவரது உரிமைகள் என்பது அவர்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் உரிமைகளையும் உள்ளடக்கியது என்பதை உலகம் அங்கீகரித்துள்ளது. ஆயினும், சர்வதேசச் சமூகத்தின் அதிசிறந்த சட்டங்களையும் மீறி, வயதுவந்தவர்களது மோதல்களினால் சிறுவர் தலைமுறைகள் கொல்லப்பட்டும், உடல், உளரீதியாகக் காயப்படுத்தப்பட்டும் விடுகிறார்கள்.
சர்வகேச சட்டாமம் மோதலில் சிறுவாைட்
காச் ԼՈ
மனித உரிமைகள் பற்றிய அகிலப் பிரகடனம், சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம், ஜெனிவா சமவாயங்கள், சர்வதேச மனிதாபிமான, மனித உரிமைகள் சட்டம் ஆகியனவற்றின் கோட்பாடுகள் மீறப்பட்டபோதிலும், இச்சட்டங்கள் உண்மையான சாதனைகளாக விளங்குவதுடன், செயற்பாட்டுக்கான ஓர் அடிப்படையையும் தருகின்றன. அவற்றை இயக்கும் நுட்பங்களும் கடைப்பிடிக்கச் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் இல்லாதிருத்தலே தெளிவாகத் தெரிகிறது. பிள்ளைகளைப் பாதுகாப்பதில் வேண்டியிருப்பது, மிகப்பரந்த அளவில் மனித உரிமைகள் துஷ்பிரயோகத்தைக் கண்காணித்தலும் அறிக்கையிடுதலுமாகும். மனிதாபிமான, மனித உரிமைகள் சட்டத்தை நடைமுறைப்படுத்தற்காக, குற்றம் புரிவோர் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆயுத மோதலில் ஈடுபடுபவர்கள் சிறுவர் உரிமைகளை நசித்திடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச சமூகம் பதிலடி கொடுத்தற்குக் குறிப்பாக முக்கியத்துவம்
46

Page 27
காட்டவேண்டும். ஆயுத மோதல்களின்போது ஏற்படும் சிறுவர் உரிமை மீறல்களை ஏதேனும் "சாந்தப்படுத்தும் சூழ்நிலைகள்” மூலம் நியாயப்படுத்த முனைந்தால் அவற்றைச் சர்வதேச சமூகம் வெறுக்கத்தக்கதாகவும், சகிக்கமுடியாதனவாகவும் கொள்ள (36 sor(5th.
ஐக்கிய நாடுகள் தாபனத்தினுள், மனித உரிமைகள் மீறல்களைக் கண்காணிக்கும் பிரதான பொறுப்பு மனித உரிமைகள் ஆனைக்குழுவுக்கே உண்டு. அது எந்தத் துறையிலிருந்தும் தகவலைப் பெறமுடியும் என்பதோடு, தரவுகளைத் திரட்டுவதிலும் தீவிர பங்காற்றலாம். நாடு ஒன்று, சிறுவர் உரிமைகள் சமவாயத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதிப்படுத்தும்போது, சமவாயத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அதன் தேசிய சட்டங்கள் இருப்பதை உறுதிப்படுத்தற்கு அச்சட்டங்களை மீளாய்வு செய்தல் வேண்டும். சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் குழு, தம் தனிப்பட்ட ரீதியில் பணியாற்றும் பத்து நிபுணர்களைக் கொண்டிருக்கும். இக்குழு, சிறுவர் உரிமைகளை மேம்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றம், சிக்கல்களைப் பங்காள் நாடுகள் எல்லாவற்றுக்கும் அறியத்
தருவதன்மூலம் சமவாயம் நிறைவேற்றப்படுதலை நித்தம் கண்காணித்து வருகிறது.
மோதல் வலயங்களில் பணியாற்றும் எல்லாச் சர்வதேச நிறுவனங்களும் அவற்றுக்கு எட்டும் மீறல்கள் பற்றி உடனடியாக, அந்தரங்கமாக, ஆக்கபூர்வமாக அறிக்கையிடுதற்கு நடைமுறைகளை நிறுவிக்கொள்ள வேண்டும். சிவில் சமூக நிறுவனங்கள் மனிதாபிமான, மனித உரிமைகள் சட்டத்தைத் தீவிரமாகப் பரப்ப வேண்டும், எடுத்துச் சொல்வதில் ஈடுபட வேண்டும், சிறுவர் உரிமை மீறல்களைக் கண்காணித்தல் வேண்டும்.
மோதல்கள் பயமுறுத்தும்போது பிள்ளைகள் பாதுகாக்கப்படுதல் ஓர் அடிப்படைத் தேவையாகும். அத்தோடு, அத்தகைய பாதுகாப்பு சர்வதேச மனித உரிமைகள், மனிதாபிமான சட்ட நிறைவேற்றத்தின் மூலம் அவர்களது உரிமைகள் நிறைவுபெறுதல் அவசியமாகும். ஆயத மோதல் சிறுவர் மீது ஏற்படுத்தும் தாக்கம், ஐக்கிய நாடுகள், 1996
சிறுவரைப் பாதுகாத்தல் ஒரு தேசீய விடயம் மாத்திரமல்ல. அது சர்வதேச சமூகத்தின் ஒரு சட்டரீதியான அக்கறையாகும். தற்போது தேசீய அரசு இயங்காதவிடத்து நிகழும் மோதல் சூழ்நிலைகளில் சிறுவர் உரிமை மீறல்களில் மிகப் பாரதூரமானவற்றுள் பல நடைபெறுவதால் இது குறிப்பாக முக்கியமானதாகும். மோதலுக்கான அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொள்ளவும், உள்நாட்டு வளர்ச்சியைப் பலப்படுத்தவும், பெண்கள், குடும்பங்கள், சமூகங்களுக்கு வாக்குப்பலம், அதிகாரபலம், சக்தி விருத்தி ஆகியவற்றை வழங்கக்கூடியதாக சிறுவர் உரிமைகளைப் பாதுகாத்தற்கான தேசீய, சர்வதேசீய செயலுபாயங்கள் அமைதல் வேண்டும்.
47

O
மனித உரிமைகள் பற்றிப் பயிற்றுதலும் புகட்டுதலும்
நீதித் துறையினர். பொலிசார் பாதுகாப்பு ஆளணியினர், படையினர், அதிலும் குறிப்பாக அமைதிகாக்கும் செயல்களிலும், மனிதாபிமான, மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புள்ளவர்களுக்கும் அரசுகள் பயிற்சியையும் புகட்டலையும் வழங்கவேண்டும். சிறுவர் தேவைகளைக் குறிப்பாகக் கவனிப்பதை அது ஒருங்கிணைத்திருத்தல் வேண்டும். இப் படிமுறையிலே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மனிதாபிமான நிறுவனங்களது ஆலோசனைகளையும் அனுபவத்தையும் நாடவேண்டும்.
மனித உரிமைகளும் மனிதாபிமான தரங்களும் அடிப்படையான மனித விழுமியங்களைப் பிரதிபலிக்கின்றன. சிறுவர்களே மனித உரிமைகளை அறிந்தும் புரிந்துகொள்ளவும் வேண்டும். சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் விழிப்புணர்வைக் கூட்டுதற்கான ஒரு செம்மையான வழி அத்தகைய உரிமைகளைப் புரியக்கூடிய விதத்தில் மொழிபெயர்ப்பதாகும். உதாரணங்களையும் மரபுகள், வழக்கங்களிலுள்ள கதைகளையும் மொழியையும் பயன்படுத்துவதாகும். அவை தகவல் ஊடகங்கள் மூலமாகவும், இசை, ஓவியம், நாடகம் போன்ற ஜனரஞ்சக காரியங்கள் மூலமாகவும் விரிவான முறையில் பரப்பப்பட முடியும்.
சிறுவர்களைப் பாதுகாத்தல் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பு
விடயங்களுக்கும் முன்னிடம்
மீளமைப்புத் திட்டங்களிலோ சமாதான உடன்படிக்கைகளிலோ, சிறுவர்கள் அருமையாகவே குறிப்பிடப்படுகிறார்கள். இருந்தபோதிலும் மனிதாபிமான, அமைதிகாக்கும், அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளின் கேந்திரமாகச் சிறுவர்கள் இருத்தல் வேண்டும். மனிதாபிமான, மனித உரிமைகள் சட்டம் பரவலாகத் தெரிந்திருக்க வேண்டும்; அது இராணுவத்தாலும் பாதுகாப்புப் படையினராலும் மனிதாபிமான நிறுவனங்களாலும் விளங்கிக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.
அமைதிக்கான தூதுக்குழுக்கள், சமரச மன்றங்கள், மற்றும் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் யாவும் பெண்களைப் பேச்சுவார்த்தைக் குழுக்களின் முக்கிய உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ளவேண்டும். பால்ரீதியான வன்முறையைத் தவிர்க்கும் முயற்சிகளில், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையினர் உட்பட இராணுவ ஆளணியினருக்கும் பயிற்சி கொடுப்பதும் சேர்க்கப்பட வேண்டும். சிரேஷ்ட அதிகாரிகள் சிலசமயங்களில் தம் கட்டளைக்குக் கீழ்வருவோர் புரியும் பால்ரீதியான குற்றங்களையிட்டுப் பராமுகமாக இருந்துவிடுகிறார்கள். எனினும் அவர்களுடைய சொந்த
48

Page 28
நடத்தைக்கும், அவர்கள் மேற்பார்வை செய்யும் ஆளணியினருக்கும் அவர்கள் பொறுப்பேற்றாக வேண்டும். அமைதிகாக்கும் படையினர் எல்லோரும், அவர்களது பயிற்சியின் ஒருபாகமாக, சிவில் ஐனசமூகங்களுக்கு, குறிப்பாக, பெண்கள், பிள்ளைகள் தொடர்பாகவுள்ள பொறுப்புக்கள் பற்றிய போதன்ாவுரைகளைப் பெறவேண்டும்.
அமைதிகாத்தல், படை கலைப்பு போன்றவற்றை ஏற்பாடு செய்கையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை சிறுவர் பாதுகாப்பினைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதஉரிமைகள் கடைப்பிடித்தலைக் கண்காணித்தல், பாதுகாப்பான பகுதிகளை நிறுவி நிலைநாட்டுதலும் மனிதாபிமானரீதியில் எட்டக்கூடியனவும் அதில் சேர்த்துக் கொள்ளப்படலாம்.
சிறுவர் உரிமைகளுக்காக வாதாடுதல் ஒவ்வொருவருக்குமுரிய செயல்கள்
மோதலின் சமூக-பொருளாதார மூலவேர்களைக் கருத்திற்கொண்டும், மோதல் வலயங்களுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படுவதைத் தடைசெய்தும், சண்டை மூள்வதைத் தவிர்ப்பதற்கு சர்வதேச சமூகம் அதனால் முடிந்த எல்லாவற்றையும் செய்தல் வேண்டும். மோதல்களைத் தீர்த்து, சமாதான உடன்படிக்கைகளை நிறைவேற்றும் எல்லாச் செயற்பாடுகளும் பெண்கள், பிள்ளைகளது தேவைகளுக்கு வலுவாகக் கவனஞ் செலுத்த வேண்டும். இது, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு மன்றமும் பொதுச் சபையும் அல்லது மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் பொறுப்புக்களுக்குக்-கீழ் விதிக்கப்பட்டுள்ள செயல்களுடன் ஆரம்பிக்கலாம். இதேசமயம், ஆயுத மோதல்களில் சிக்கிய பிள்ளைகளைக் காப்பதற்கு எல்லாமே செய்யப்பட வேண்டும். சிறுவர்களது உரிமை மீறல்களை அறிக்கையிடும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. அவற்றைத் தடுப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
சிறுவர்களது உரிமைகளைக் காத்து, மேம்படுத்தும் முயற்சிகளுக்கான வெற்றி அநேகமாக அத்தகைய செயல்களின் பெறுமதியை மற்றவர்கள் உணர்வதிலும் நெருக்கடி நிலை பற்றிய விழிப்புணர்வு பெறுவதிலும் தங்கியுள்ளது. எல்லாத் தனிநபர்களும், உயர்தொழில் புரிவோரும், சிவில் சமூக நிறுவனங்களும் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கலாம்.
米 சமூக அபிவிருத்திக்கான உலக உச்சி மகாநாட்டில் (கொப்பன்ஹாகன், 6-12 மார்ச் 1995) மனித பாதுகாப்புக்குரிய கருதுகோளை ஆதரித்தற்கு, ஆயுதங்கள் இராணுவ செலவுகள் போன்றவற்றுக்கான வள ஒதுக்கீடுகளை மனித, சமூக அபிவிருத்திக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதெனச் செய்துகொண்ட உறுதிப்பாடுகளைக் கெளரவிப்பதோடு, இராணுவமயப்படுத்தும் மட்டங்களையும் குறைத்தற்கு அரசுகள் ஊக்கப்படுத்துதல்.
49

சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயத்தின் நாட்டுப் பங்காளர்களாக இதுவரையில் வராத அரசுகளை அவ்வாறு செய்யுமாறு தூண்டுவதும், நாட்டுப் பங்காளர்களாகியுள்ள அரசுகள் சமவாயத்தை தேசிய சட்டவாக்கம், திட்டங்களில் இணைக்குமாறும் தூண்டுதல்.
சிறுவர்களைப் படைவீரர்களாகப் பயன்படுத்துவதற்கு எதிராகக் குரல் எழுப்புவதும், ஆயுதப் படைகளுக்கு ஆட்திரட்டுதற்காகவுள்ள வயதெல்லையை 15 லிருந்து 18 வரை ஆக்குவதென சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயத்தின் விருப்பு அரச குறிப்பை மேம்படுத்தல்,
மனித உரிமைகள் பற்றிய அகிலப் பிரகடனம், சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் போன்ற உள்நாட்டு, சர்வதேச மனித உரிமைகளின் தரங்கள், கருணைச் சட்டங்கள் ஆகியவற்றில் பெற்றோர், பாடசாலைகள், கொள்கை வகுப்போர் போன்றவர்கள் பரிச்சயமாக இருப்பதை உறுதி செய்வதற்கு பொதுமக்களுக்குத் தகவல் தரும் தீவிர இயக்கம் ஒன்றை மேற்கொள்ளுதல். சிறுவர் உரிமைகள் செயற்பாட்டுக்கு உதவும் சூழலைத் தோற்றுவித்தற்கு உதவுதல்.
முக்கியமாக பொதுமக்களைக் காயப்படுத்திக் கொல்லும் நிலக்கண்ணி வெடிகளையும் ஏனைய ஆயுதங்களையும் உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் போன்றவற்றை உலகனைத்தும் தடைசெய்தற்கான அகில இயக்கத்துக்கு ஆதரவளித்தலும், அத்தகைய ஆயுதங்களை உற்பத்தி செய்து விற்கும் கம்பனிகளைப் பகிஷ்கரித்தலும்,
பாதுகாப்பு, வாரிசு உரிமை, சொத்துரிமைகள் தொடர்பில் சிறுவருக்கும், பெண்ணை முதல்வராகக்கொண்ட குடியிருப்புக்களுக்கும் எதிராகவுள்ள பாகுபாட்டை நீக்குதற்கு சட்டங்கள் நிறைவேற்றுமாறு அரசுகளை வற்புறுத்தல்.
முக்கிய நிவாரணப் பண்டங்களையும் தடைஊசி மருந்துகளையும் கொண்டுசென்று கொடுத்தற்கு வசதியாக மோதல்களில் பங்குகொள்ளும்
எல்லாக் கோஷ்டிகளிடையிலும் சிறுவர் "சமாதான வலயம்” என்ற கோட்பாட்டை எடுத்துக்கூறி வாதாடுதல்.
சிறுவர் உரிமைகள் பற்றிய தகவலைச் சிறுபிள்ளை மருத்துவர்களும், ஏனைய மருத்துவர்களும், செளக்கிய பணியாளர்களும் பரப்புதற்கு ஊக்கமளிக்க வேண்டும். அத்தோடு அவர்கள் அறியவந்த மீறல்களையும் தெரிவிக்க வேண்டும். செளக்கிய உயர் அலுவர்கள் குரல் எழுப்புதற்கு ஒரு விசேட கடப்பாடு உள்ளது.
மோதல் காலத்திலும் மோதலுக்குப் பின்னைய சூழ்நிலைகளிலும் சிறுவர்களை நிறுவனங்களில் சேர்ப்பதை ஊக்கப்படுத்தக் கூடாது.
50

Page 29
冲 கற்பழிப்பை ஒரு யுத்தக்குற்றமாக்கி வழக்குப் போடுதற்காக ஆதரவு
திரட்டுதல்.
水 சிறுவர் உரிமைகளைக் காப்பதில் பெண்களின் பங்களிப்பை ஆகக் கூடுதலாக்கும் ஒரு வழியாக பெண்கள் நிறுவனங்களையும், தொடர் அமைப்புக்களையும் பலப்படுத்துதல். சமாதான தூதுக்குழுக்கள். சமரசப்படுத்தும் மன்றுகள் மற்றும் சமாதானத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கான பேச்சுவார்த்தைக் குழுக்களில் முக்கிய உறுப்பினர்களாகப் பெண்களும் பங்குபற்றுதற்கு ஆதரவளித்தல்.
本 சிறுவர் உரிமைகள் துஷ்பிரயோகங்களை மனித உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் ஆணைச் சபைக்கும் உள்நாட்டு - ஓம்ஸ்புத் மன்னுக்கும் அறியத் தரவேண்டும்.
率 சிறுவர் உரிமைகளை மேம்படுத்துவதிலும் காப்பதிலும் தகவல் ஊடகங்
களுக்குள்ள பொறுப்பினை அங்கீகரித்து ஊக்குவித்து உதவுதல்.
水 மத்தியஸ்தம் செய்தல், சக்தியைப் பெருக்கும் செயற்பாடுகள் போன்ற மோதல் தீர்க்கும், தடுக்கும் பணிகளில் ஈடுபடுதல். சமூக மட்டத்திலான சாதானத்தை வளர்ப்பதும், அடிமட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதலும்.
மனித உரிமைத் துஷ்பிரயோகங்களை எவ்வாறு தெரிவிப்பது :
நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் சிறுவர்களது மனித உரிமைத் துஷ்பிரயோகங்களை மனித உரிமைகள் நேரடித் தொலைபேசியில் அறிவிக்கலாம். இது 24 மணித்தியாலமும் இயங்கும் ஒரு தொலைத் தொடர்பாகும். இது ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் நிலையத்தை மனித உரிமைகள் மீறல் அவசரநிலைகளைக் கண்காணிக்கவும் துரித நடவடிக்கைக்கும் அனுமதிக்கிறது. மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உறவினர்கள், அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு நேரடித் தொலைபேசி வசதியுண்டு. அதன் பக்ஸ் (Fax) எண் -
ஜெனிவா + (41-22) 917-0092.
5

ჯ

Page 30


Page 31
čipovič5606Těj orogézt இவ்விதத்தில், சிறுவர் கூடாதெனவும், ー魏四空 விளைவுகளிலிருந்து சிறுவ மனிதகுலம் இறுதியில்
2Le GeFiliúLJ35 sió a STGOT நோக்கப்பற்றைச் சிறுவர் சிறுவருக்கான அகிலத்து துன்பத்தை விளைக்கும் பிர புதிய வாய்ப்புக்களைத் தரு ஒருமுகப்படுத்தல் மூலம் இராணுவம், அரச சார்பற் மோதலின்மூலம் Tee GTới LGO25uủ, இதன் அற்பமாக நயம் பெறுகிறா தொடங்குவார்கள் சிறுவர்
கிறேஷா மஷேல்
 

abilitiesgites: 6-straige more பராயம் அத்துமீறப்படக் மோதலின் கொடும் கள் விடுபட வேண்டும் எனவும் பிரகடனஞ் செய்யும். தனித்ததொரு as in கள் எம்முன் வைக்கிறார்கள்
அக்கறை அவர்களுக்குத் னைகளை எதிர்நோக்குதற்குப் கின்றன. சிறுவர்மீது கவனத்தை 三エa巫呂a エ。 நிறுவனங்கள் ஆகியன ஆயத Taoa Batomägõpmase ாரணமாக அவர்கள் எவ்வளவு கள் என்பதையும் கண்டறியத் ளைப் போஷித்துப் பாதுகாக்கும் மீளக் கிரஹித்தற்கு இந்த GJITLANTS. எமது தார்மீக reot 695 LéonTaf5 LOITíbpyGIGJITLAnomas. எமது பிள்ளைகளுக்கு உண்டு. ளையினதும் உரிமையாகும்.
நவம்பர் 1996
SUPREME PRINTERsrils
s