கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வீரசைவ மரபியல்

Page 1


Page 2

சிேய நூல. Lafay .
ಶಿಸ್ತಿ” கிரீசிசு சேவை ש"י , , ,"rhr חשד
சோ.பரமசாமி, B. Sc.
is
ད། シク C/

Page 3
*
முதற் பதிப்பு: 1995
உரிமை ஆசிரியருக்கே
வீரசைவ மரபியல் ஆசிரியர் : சோ. பரமசாமி, B. Sc. முகவரி : “ பாக்கிய வாசம்'
இணுவில் தெற்கு,
இணுவில். (இலங்கை) வெளியீடு : திருநெறிய தமிழ் மறைக் கழகம்
பூரி பரராஜசேகரப்பிள்ளையார் கோயில்,
இணுவில்.
அச்சுப் பதிப்பு : திருமகள் அழுத்தகம், சுன்னாகம்.
விடு) OEDW = 26 | =
FF" FEL Y El 1995 All Rights Reserved
WEER ASATWA MARAPYAL
Author: S. Parama Santiny, B. Sc. Address: Packiya Wasa”
Inu will South,
Inuvil. (Sri Lanka) Publishers :: Thiruneriya Thamil Marai Kazhagam
Sri Pararajasekara Pillaiyar Temple,
Inuwi.
Pyrifers: Thiru makal Press,
ChLIII1a.ka TIni,
Prirg . O-I &');

*
தேசிய நூலகப் பிரிவு மாநகர நூலக சேள்ை
' ' 'If
சமர்ப்பணம்
இம்மண்ணில் தவழவிட்டு வாழ்வு மலர முன்னே தனியாக விட்டுப் பிரிந்த எனதருமை முன்னறி தெய்வங்களுக்கு
அன்புக் காணிக்கை.
- GEFF W. L.

Page 4
உள்ளடக்கம்
முன்னுரை அணிந்துரை
விர சைவ மரபியல்
வீர சைவம் வளர்த்த சான்றோர் 1. அல்லமாப்பிரபு தேவர் i வசவதேவர் i சிவப்பிரகாசர்
iv. சாந்தவிங்க சுவாமிகள்
7. பூீ குமாரதேவர்
wi. திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
வீர சைவக் கிரியை இயல் 1. பூர்வக் கிரியை
1. சிவதிட்சை 2. சிவலிங்கதாரணம் 3. திருமணம்
1. சமாதிக் கிரியை
சமாதி வைத்தல் மூன்றாம் குழிக் கிரியை மோட்ச தீபக் கிரியை
உசாத்துணை நூல்கள்
5.
56
ዕ2
7()
74
79 83
87
92
05
I(M) (5.
YOS
II 4

முன்னுரை
சைவப் பண்பாட்டு மரபியல், வடமொழி வேத சிவா கமங்களை அடிப்படையாகக் கொண்டது. வேத சிவாகமங் களின் சாரமாகச் சைவத் திருமுறைகளும், சாத்திரங்களும் அமைந்துள்ளன. அவை தமிழ் மொழியில் இருப்பதால் தமிழ்வேதம் என்பர். இவை யாவும் வைதிக சமயத்தின் ஓர் இறுக்கமான கட்டுக் கோப்பில் வளர்த்துள்ளன. இந்த வைதிகப் போக்கில் ஈடுபட்ட மக்களைப் பக்திநெறி மூலம் இறை இன்பங் காணச் செய்யும் சமய நெறியே வீர சைவம் ஆகும்.
வீரசைவம் பழைமையானது. இறை அன்பில் திளைக்க வைக்கும் இந்நெறி தனித்துவமாய்த் தழைத்துள்ளது. இது சைவசமயத்தின் ஒர் அங்கமாய்க் கொள்ளப்படுகிறது.
இந்நெறி முறை மக்கள் சமுதாயத்தில் நீண்ட கால மாக நிலவி வருவதால் இது ஒரு மரபாக மதிக்கப்படு கிறது. பாரதத்தில் தோன்றிய இம்மரபு கன்னட மாநிலத் நிற் பெருமளவு வேரூன்றி, அங்கிருந்து தமிழகம் உள்ளிட்ட மத்தியப் பிரதேசம், வட மாநிலங்களுக்கும் பரந்து, அதற்கும் அப்பால் கடல் கடந்த நாடுகளிலும் விரிவடைந்துள்ளது. ஓரிடத்து நடைமுறை இன்னோரிடத்திற் பின்பற்றும் பொழுது, அவ்விடத்துப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப மாறுதலடைதல் தவிர்க்க முடியாததாகும்.
பிரசார வேலைகளிற் காலம் போக்காத வீரசைவம் /கடவுள் வழிபாட்டிற் கவனம் செலுத்துவதால், இது பற் றிய அறிவை ஒரு பகுதியினர் மட்டுமே தெரிந்து வைத் துள்ளனர். ஈழத்தில் இந்நெறியைப் பின்பற்றுவோர் ஒரு சமூகமாகக் கருதப்படுகின்றனர். ஆயின், தாய்த் தமிழ கத்தை நோக்குவோர்க்கு இது ஒரு சமூகத்தவர்க்கு மட்டும் உரியதன்று என்பது தெரியவரும்.

Page 5
wi
மறுமலர்ச்சியும் புத்துணர்வும் மேலோங்கிவரும் இத் நாளில், பலதுறை சார்ந்த கற்கை நெறிகளும் ஆய்வுகளும் உயர்கல்வி மட்டத்தில் திேற்கொள்ளப்படுகின்றன. இந் நோக்கிலே பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகம் ஒரு பாட மாசுப் போதிக்கப்படுகிறது. அதன்ால் கல்லூரிகளில் உயர் தர வகுப்புக்கு இந்து நாகரிகம், இந்து சமயம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதற்குரிய பாட விதானத்தில் வீரசைவம் ஓர் அம்சமாக இடம் பெற்றிருத் தல் வீரசைவ நெறிக்குப் புத்தூக்கம் அளிக்கின்றது.
பண்பாட்டுச் சிந்தனை வளர்ந்து வரும் இக் கால கட்டத்தில், வீராகமம் போன்ற வீரசைவ நூல்களைப் பெறு தவ் அரிதாயிருப்பதால், அந்நெறியின் விவரங்களை அறி வதற்குப் பல மாணவர்கள் எம்மிடம் வருவதுண்டு.அவர் களுடன் கலந்துரையாடிய போது, அறிந்தவற்றைப் பிற ருக்கும் உதவும் வகையில் நூலாக வெளியிடுமாறு பவரும் தூண்டினர். அவர்கள் தந்த ஆாக்கமே இம்முயற்சியிற் சுவ னத்தைத் திருப்பியது.
காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு இந்நூல்ை எழுதுகையில் மாணவர்கள் மாத்திரமன்றிப் பொது வாச கர்களையும் சிந்திக்க வேண்டி இருந்தது. எனவே, வீரசைவம் பற்றிய பொதுத் தகவலுடன் இந்நாட்டில் அது பேணப் படும் பாங்கினை தள்ளடக்கி வீரசைவ மரபியல், வீரசைவம் வளர்த்த சான்றோர், வீரசைவக் கிரியை இயல் என மூன்றாக வகுத்துச் சுருங்கிய வடிவில் இந்நூல் ஆக்கப்பெற்றுள்ளது. விரிவான ஆய்வுகளுக்கு இதுவொரு முன்னோடி முயற்சி
என்iாம்,
இந்நூலில் ஈழத்து வீரசைவப் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளைச் சுட்டிக் காட்டுதல் பொருத்த மெனத் தோன்றியது. ஆகவே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரசைவர்கள் பற்றிச் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக்

Wii
கல்லூரி முன்னாள் அதிபர் வி. சிவசுப்பிரமணியம் B, A, B, S, P. .ே T. அவர்களுடனும், தம்பட்டைக் கிராமத்தைச் சேர்ந்த திரு. சோ. கணேசமூர்த்தி அவர்களுடனும் உரை பாடியதன் மூலம் பெற்ற தகவல்கள் இங்கு குறிப்பிட உதவியாயின. அத்துடன் வடபுலத்தில் வதிவோர் பற்றி பும் வீரசைவக் கிரியை இயல் பற்றியும் எழுதுவதற்கு உரும்பிராய் வீரசைவக்குரு, பண்டித வித்துவான் இ. நவரத்தினக் குருக்கள் பல வகையில் உதவியுள்ளார். இன்னும் சிலர் பயனுறத் தக்க நூல்களைத் தந்து ஆதர வளித்தனர்.
இதற்கு மேலாக, இச்சிறுநூலுக்கு யாழ். பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறைத் தலைவரான பேராசிரியர், கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கிய அணிந்துரை இதனை அணிபெறச் செய்கின்றது.
இவ்வாக்கம் நூலுருப்பெற வேண்டுமெனச் சிலர் நினக்சு மளித்தபோது, சண்டிலிப்பாய் பிரதேச செயலகச் சமூக சேவை உத்தியோகத்தர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் ஏற்ற ஆலோசனை வழங்கினார். மேலும், இதற்கான அட்டைப் படத்தை ஒவியர் இ. கணேசன் அவர்களும், அச்சு வேலையைச் சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தினரும் அழகுறச் செய்துள்ளனர்.
பல வகையிலே இந்நூலின் சிறப்புக்கு உதவிய அனை வருக்கும் அன்பார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
இந் நூல் இணுவில் திருநெறிய தமிழ்மறைக் கழக வெளியீடாக வெளிவரத் தோன்றாத் துணையாய் இருந்த பூரு பரராஜசேகரப் பிள்ளையாரின் திருவடிகளை உளமாரப் பிரார்த்திக்கின்றோம்.
இணுவில். சோ. பரமசாமி
it

Page 6
L அணிந்துரை பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ணன் அவர்கள்
தலைவர், இந்து நாகரிகத் துறை, பாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
மேன்மை கொள் சைவ நீதி" உலகெங்கனும் வாழும் சைவ மக்களிடையே விளங்கி வருகின்றது. தொன்மையும் பெருமையும் வாய்ந்த இச் சமயம் சமயாதீதப் பழம் பொரு ளாய சிவனை முமுமுதற் கடவுளாகக் கொண்டது. இச் சமய மரபில் உள்ள பல்வேறு பிரிவுகளுள் வீரசைவமும் ஒன்றாகும். இச் சமய மரபுக்கு "வீர" என்ற அடைமொழி இடம் பெற்றுள்ள சிறப்பு உய்த்துணரற்பாலது. சிவனது திருவிளையாடல்களில் "அட்டவீரட்டங்கள்' முக்கியத்துவம் பெறுவன. "முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளுக்கு" வீர அம்சம் சிறப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. வீரசைவ மரபுக்குத் தனி வரலாறு உண்டு வழிபாட்டு மரபுகளும் உள்ளன. வீரசைவம், இலிங்காயத சமயம் எனவும் வழங்கப் படுகிறது. இலிங்கத்தை எப்போதும் உடலில் அணிந்திருப் பதினால் உடலிலுள்ள மாசுகள் எரிக்கப்பட்டு விடும் என்பது இச்சமய நம்பிக்கை. ஆகமங்களுள் வீராகமம் இச்சமய மரபோடு நெருங்கிய தொடர்புடையது.
திரு. சோ. பரமசாமி அவர்களது ஆக்கமான" வீரசைவ மரபியல்" என்ற இந்த நூல், இச்சமய மரபின் பல்வேறு அம்சங்களை எளிமையாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூற முற்படுகிறது. தாம் சார்ந்துள்ள ச ம ப ம ர பு பற்றிய தெளிவினைப் பலரும் அறிய வேண்டும் என்ற நோக்கிலே

"ETETE ETT BEFA ELI LITTTTT
"நிகர நரக நேர
எழுத்தில் கொண்டு வந்துள்ள ஆசிரியரின் முயற்சியைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகின்றோம். வீரசைவம் பற்றிப் பலரும் எழுதியுள்ளன்ர். ஆசிரியரின் இம்முயற்சி ஈழத்து வீர சைவ மரபு பற்றி விசேடமாக ஆராய முற்படுகின்றது.
இந்நூலின் முதற் பகுதி வீரசைவ மரபு பற்றியது. இதில் வீரசைவத்தின் தொன்மை, வளர்ச்சி, அதன் மூன் ஆசாரியர்கள், வீர சைவத் தின் மூவகைத் துறைகளாகிய பஞ்சாசாரம், அட்டாவரணம், சடுத்தலம் ஆகியவை பற்றி விபரிக்கின்றது. தொடர்ந்து ஈழத்தில் வீரசைவம் பற்றி எடுத்துக் கூறுகின்றது. வீர சைவ ர் களது வாழ்க்கை முறை, அவர்கள் வாழும் பிரதேசம், அம்மரபின் மேம் பாட்டிற்கு உழைத்த பெரியார்கள் ஆகியவை விபரிக்கப் பட்டுள்ளன.
அடுத்த பகுதியிலே வீரசைவம் வளர்த்த சான்றோர் வரிசையில் ஆறு பெரியார்களின் வரலாறு இடம் பெறுகின் றது. இறுதியாக வீரசைவக் கிரியை இயலில் பூர்வக் கிரியை மற்றும் சமாதிக் கிரியை போன்ற விபரங்கள் இடம்பெறு கின்றன. வீரசைவம் பற்றிய ஒரு பரிமாணத்தை அறிய இத்தகைய அம்சங்கள் வகை செய்கின்றன. இந்நூலில் இடம் பெறும் சில கருத்துக்கள் மேலும் விரிவான ஆராய்ச் சிக்குரியவை.
இந்நூலின் ஆசிரியர் திரு. சோ, பரமசாமி விஞ்ஞானப் பட்டதாரியாவார். இவர் அரச திணைக்களத்தில் பட்டதாரி மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவராயினும், சமயத் துறையில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவர். கொழும்பில் இயங்கும் ஈழத்துத் திருநெறித் தமிழ் மன்றத்தின் ஆதரவில் வெளிவந்த " மெய்கண்டார் நெறி' என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்குண்டு. சமயத்

Page 7
துறையில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவப் பேறாக ஆசிரியரின் வீரசைவ மரபியல் என்ற நூல் வெளி வருவது அனைவராலும் வரவேற்கப்பட வேண்டிய நன் முயற்சியாகும். வீரசைவம் பற்றி அறிய விரும்பும் அனை வருக்கும் இந்நூல் சிறந்ததொரு அறிமுகமாக அமைகின்றது. அத்துடன் வீரசைவ மரபினருக்குத் தாம் சார்ந்துள்ள சமய மரபின் தோற்றம், வளர்ச்சி, சிறப்பு என்பன பற்றி அறிவ கற்கும் இந்நூல் துணை செய்கிறது. மக்களுக்கு இத்துறை சார்ந்த ஒரு விளக்கத்தையும் தெளிவையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஆசிரியர் எழுதி வெளியிடும் இந் நூலை அனைவரும் வரவேற்பர் என்பதில் ஐய Lńliga St.
திரு. சோ. பரமசாமி அவர்கள் மேலும் இது போன்ற சமயத்துறை சார்ந்த பல்வேறு ஆக்கங்களைத் தமது அனுபவத்தின் பெறுபேறாக எழுதி வெளியிட்டுச் சைவ உலகுக்கு நற்பணியாற்றச் சகல நலன்களும் கிட்டும் வண்ணம் எல்லாம் வல்ல பூரிபார்வதி சமேத பரமேசுவரனின் திருவருள் பொலிவதாகுக.
(17 - O3 - 1995 ப. கோபாலகிருஷ்ணன்

al
வீரசைவ மரபியல்
அறிமுகம்:
நிாணனும் நான்முகனும் தேடிக் காணமுடி பாத கடவுள், சிவபெருமான். அவர் முன்னைப் பழம்
கடந்த தொல்லோன்; அநாதியே மலபந்தம் இல்லாத மாமணிச் சோதி அன்பே வடிவான சிவன் துன்பர் அகத்தினில் கோயில் கொள்ளும் அருங்குணம் படைத்தவர். அன்பினால் அடியார் உள்ளத்தில் இடம் கொண்ட இறைவனுக்குச் செய்யக் கூடிய கைம்மாறு யாதொன்றும் இல்லை என்பது திருவா சகம் பாடிய மணிவாசகரின் சிந்தனைத் தெளிவு.
ஆங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமா லங்கும் சிவனை அடைந்து முத்தி பெறுதலே மானிடப் பிறப்பின் நோக்கமாகும் செழுஞ் சுடர்ச் சோதியான சிவபரம் பொருளைச் சேரும் நெறி பினைச் செப்பும் சமயம் சைவ சமயம் இதனைச் சிவ சமயம் என்றும் கூறுவர் சிவனுக்குப் பரத் துவம் (இறைமை) கூறும் சைவம் இந்து சமயத்தில் தொன்று தொட்டு வழங்கி வரும் வைதிக சமபங்கள் (சைவம் வைஷ்ணவம், சாக்தம் காணபத்தியம் கெளமாரம் செளரம் ஆகிய) ஆறினுள் ஒன்றாகும்.
பொருட்கும் முன்னைப் பழம் பொருள்; சொற்பதங்

Page 8
2
சைவ சமயம் :
ஊரும் பேரும் இல்லாத ஒப்பற்ற சிவனைப் பரம் பொருளாகக் கொண்ட சமயமே சைவ சமயம் அணைத் தோரைக் காக்கின்ற அரனார் திருவுருவை மனம், மொழி, மெய்களால் வணங்குபவர் சைவ சமயத்தவர். முதலும் ஈறும் இல்லா முழுமுதற் கடவுளைச் ' செழுஞ் சுடர்க் குன்று' எனத் திரு முறை இயம்பும். அவ்வருட் கடவுளின் பேராற் ரைேலக் கூறவந்த திருமூலர் " சிவன் பெருத் தன்மை ' என்ற சொற்றொடர் மூலம் சுட்டிக் காட்டி
புள்ளார்.
" கோளில் பொறியிற் குணமிலவே எண்குனத்தான்
தாளை வனங்காத் தலை " என்பது வள்ளுவர் வேதம்.
சமபாதிதப் பழம் பொருளாய சிவனை முழு முதல் தெய்வமாகக் கொண்ட சைவ சமயம் இராசாங்கத்தில் அமர்ந்தது எனத் தாயுமானவர் கூறுவர். ' அயர்வுறச் சென்னியில் வைத்து இராசாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம்' எனத் தம் பாடலிற் குறிப்பிட்டுள்ளார். அதனாலேயே சந்தான கற்பகம் போல் அருளைக் காட்டத்தக்க தெரிவித் தெறியேதான் ' என்று வைதிக நெறி பின் செம்மையைத் தாயுமானார் அறுதியிட்டுத் சுடறியமை நோக்குதற்குரியது.
சிவன் பெருந்தன்மையை உலகெங்கி லும்
உள்ள மக்கள் இன்று உணரத் தொடங்கி விட்டனர். அதனால் சிவனை வழிபடுவோர் உலகின் எல்லா

- 3 -
நாடுகளிலும் உள்ளனர். அகச் சமயம் ஆறினுள் சைவ சமயம் மிகமுக்கிய சமயமாகக் கருதப்படு கிறது. சைவ சமயத்தின் பிறப்பிடமான பாரதத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சைவர்கள் பரந்து வாழ்கின்றனர். நேர்பாளத்தில் உள்ள பசு பதிநாதர் ஆலயம் முதல் திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயம் வரை இந்தியா முழுவதும் சிவாலயங்கள் பரவியுள்ளன.
சைவத்தின் பிரிவுகள் :
சைவாலயங்களும் சைவ சமயத்தவர்களும் பாரத தேசம் முழுவதும் பரவியுள்ள போதிலும், சைவ சமயத்தை அனுட்டிப்போர் இடத்துக்கு இடம் சிற்சில வேறு பாடுகளுடன் அதன் கோட்பாடு
களைக் கடைப்பிடித்து ஒழுகுகின்றனர். சைவ சமயமே சமயம் ' என்றும் சமயாதிதப் பழம் பொருள் ' என்றும் சைவத்தின் மேற் சமயம்
வேறில்லை' என்றும் பேசப்படும் சைவத்தில் ஆறு நெறிகள் உண்டு. பாசுபத சைவம், காஷ்மீர சைவம், கோரநாத் சைவம், சிவ அத்வைதம், சுத்தாத்வைத சவ சித்தாந்தம், விரசைவம் ஆகிய ஆறுமே уг Wty" (Роулубттай.
பாசுபத சைவம்:
சைவ தர்மங்களிலே மிகப் பழைமையானது
பாசுபத சைவம், இந்தச் சமயத்தைச் சார்ந்தவர்கள்
ரக்குறை 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
இமாலயப் பகுதிகளில் தவமியற்றி வந்தனர் என
வரலாறு கூறுகின்றது. சைவ சமயப் பற்றுடைய
lit. . . . . . .

Page 9
- 4 -
சாதுக்கள் சிவக் கோவம் தாங்கிக் கடு விரதங் காத்த இச்சமயத்தவர், எல்லோரையும் பேதமின்றித் தம்முடன் சேர்த்து வாழ்ந்தனர். வடஇந்தியாவில் வேதியர் பலர் இதிற் சேர்ந்து பிரமச்சரியம். சைவ உணவு ஆகிய பழக்கங்களைப் பேணி வந்தனர். அத்துடன் இபமம், நியமங்கள் தவறாது துரப்மையைக் காத்து ஒழுகினர்.
இப்பிரிவினரின் முக்கியமான ஆலயம் குஜராத் தில் உள்ள சோமநாதர் ஆலயமாகும். ஏறக்குறைய 2200 ஆண்டுகட்கு முன் வாழ்ந்த லகுவீரர் என்னும் சிவனடியார் இம்மாநிலத்தில் சைவம் தழைக்கச் செய்தார். இம்மதக் கோட்பாடு கி. பி. 08 ஆம் நூற்றாண்டில் நேர்பாளத்துக்கும் பரவியது என வரலாறு மூலம் தெரியவருகின்றது.
காஷ்மீர சைவம் !
கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டில் காஷ்மீர் பகுதியில் தொடக்கப் பெற்ற சைவ சமயம் காஷ்மீர சைவம் ஆஸ் ஸ் து பிரதியாபிக்ஞான தரிசனம் ã TốữT{} {2} & Jtự vĩ பெற்றது. இச்சமயம் மக்க ளி  ைடயே நன் மதிப்புப் பெற்றதால் விரிவடைந்து நேர்பாளத் துக்கும் அதனை அடுத்துள்ள பகுதிகளுக்கும் பரவலா னது. உலக நாடுகளில் சிவனைப் பரம் பொருள் 萤T மதிக்கும் சைவசமயமே அரச சமயமாகக் கொண்டுள்ள நாடு நேர்பாளம் ஆகும்.
காஷ்மீர் அரசரான ஆவந்திவர்மன் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் சிவபிரானின் அருளைப் பெற்றார். இறைவனது அருளுக்கு ஆளான மன்னர்

- 5 -
சைவ ஆகமங்களுக்கு விளக்கம் நாடிப் புறப்பட்டார்.
செல்லும் வழியிலே மகாதேவ மலையில் வாழ்ந்த வாசுகுப்தர் என்பவரைச் சந்தித்து, அவர் வாயிலாக விளக்கங்களை அறிந்து கொண்டார். இவ்வாறு
உருவான சிவ துத்திரங்களே இந்தப் பிரிவின் அடிப்
படைக் கோட்பாடுகளாக விளங்குகின்றன.
இந்தவகையில் நோக்குமிடத்து காஷ்மீர சைவத்தின் முதலாசிரியர் வாசுகுப்தர் என்பதும் சிவன் அருளால் உருவான சிவ சூத்திரங்கள் என்ற நூலைக் குப்தர் தமது சீடர்களுக்கு உபதேசித்தார் என்பதும் காஷ்மீர ஆசாரிய பரம்பரை இவரி விருந்தே தொடர்ந்து வருகின்றது என்பதும் அறியற்பாலது.
வாசுகுப்தரின் சீடரான கல்லாடர் என்பவர் ஸ்பந்தகரிகா என்ற நூல் மூலம் சிவ சூத்திரங்களுக்கு விளக்க உரை எழுதியுள்ளார். அவரின் இன்னொரு சீடரான சோமானந்தர் சிவ திருஷ்டி என்ர நூலை எழுதியுள்ளார். இவை காஷ்மீர சைவத்தின் தத்துவ நூல்களாக விளங்குகின்றன. சிவஞானம், சிவ பக்தி இரண்டுமே இந்தத் தத்துவத்தின் இரு முக்கிய அம்சங்களாகும்.
காஷ்மீர சைவம் மொகலாயர் படை யெடுப் /க்குப் பின் ஒதுக்கப்பட்டிருந்தது. அண்மைக் காலத்தில் இது இந்தியாவின் பிற பகுதிகளி yள்ள சிவனடியார்கள் மூலம் புத்துயிர் பெற்

Page 10
- 6 .
றுள்ளது. இதனைப் பிரபலமடையச் செய்தவர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பாபா முக்தானந்தா சுவாமிகளாகும்.
சுவாமி வாசுகுப்தரின் பரம்பரையில் வந்த குருநாதராகச் சுவாமி லக்ஷ்மன்ஜி விளங்குகிறார். கடுமையான கட்டுப்பாட்டுக்கும் தீவிர சிவபக்திக்கும் சான்றாக விளங்கும் காஷ்மீர சைவத்துக்கு இன்று அமெரிக்காவிலும் ஏராளமான பக்தர்கள் உளர்.
கோர நாத் சைவம் :
பத்தாம் நூற்றாண்டில் இமாலயப் பகுதியில் தோன்றிய கோரநாத் சைவம் என்ற மதம் நாத சம்பிரதாய முறைப்படி அமைந்த ஆதிநாதர் பரம் பரையில் வந்த அமைப்பாகும். சித்த சித்தாந்தப் பத்ததி என்னும் சாத்திர நூலை எழுதிய கோரநாத் என்ற சிவயோகி சித்துகள் செய்வதில் மிகவும் வல்லமை படைத்தவர். இவர் நேர்பாளத்தைச் சேர்ந்த மத்ஸ் யேந்திர நாதரிடம் ஏறக்குறையப் பன்னிரண்டு ஆண்டுகள் தாதயோகத்தை முறைப்படி பயின்றவர். காஷ்மீர் முதல் காசிவரை பாத்திரைகளை மேற் கொண்டவர். சக்கரங்கள் (யந்திரங்கள்) மூலம் சிவபிரானை வழிபட்டு அபூர்வ சித்திகள் கைவரப் பெற்றவர். தாம் பெற்ற சித்திகளை மக்கள் நல னுக்காகப் பயன்படுத்திய பெரியாருமாவர்.
இவர் வடஇந்தியாவில் பன்னிரண்டு விதமான சைவ வழிபாட்டு முறைகளை உருவாக்கி, மக்களி đog_Gự y J.Jợ Ở cý"đặT/7/i. sut. இந்தியாவிலுள்ள சிவனடி பார்கள் காவி உடுத்து, சடாமுடி தரித்து, உருத்திராக்கம்

- 7 -
அணிந்து, நீறு பூசிய மேனியராய்த் திகழ்வதற்கு வழிவகுத் தவர் கோரநாத் சுவாமிகளே ஆவர். எந்நேரமும் சிவவேட தாரியாய்த் திகழும் சிவனடியார் இடைவிடாது ஓங்கார மந்திரம் செபிக்க வேண்டுமென ஏற்பாடு செப்தவரும் இவராவர்.
இந்த நாத் மரபினர் சிவபெருமானை உள்ளும் புறமும் வியாபித்துள்ள பரம்பொருளாக எண்ணி வழிபாடு செய்வர் ஆத்ம நாதராகச் சிவபெருமா னையும் அகில நாயகியாக உமையவளைபும் பூசிப் பவர்கள். ஆலய வழிபாடு மூலமாகவும் தல யாத் திரைகள் வழியாகவும் பரமானந்த நிலையை எப் தலாம் என்பது இவர்களுடைய கோட்பாடு. அத் துடன் " காயத்திரி ' ஒதுவதன் மூலம் தேக ஆரோக்கியத்தையும் குன்றாத இளமையையும் நீண்ட ஆயுளையும் பெறும் முறையை இவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
இந்தியாவில் பல இலட்சக்கணக்கான மக்கள் இன்று இம்மதத்தைப் பின்பற்றுகிறார்கள். காதில் குண்டலம் அணிவது இவர்களுடைய மதச் சம்பிரதாயம். வட இந்தியாவிலும் நேர்பாளத்திலுமே இந்நெறியைச் சார்ந்த பலர் உள்ளனர். பதினாறாம் நூற்றாண் டில் உருவான ஹதயோக தீபிகை என்ற நூல் இவர்களின் முக்கிய சாத்திர நூலாக விளங்குகின்றது.
சிவ அத்வைதம் :
கி. பி. 12 ஆம் நூ ற் றாண் டி ல் தோன்றிய ரீகாந்தர் என்ற சைவப் பெரியார் இம்மத நெறியைத் தோற்றுவித்தார். அவர் அளித்த பிரம்ம சூத்திரங்

Page 11
- 8 -
தளரின் விளக்கங் கொண்ட நூல் இன்றும் பாராட் இக்குரியதாகத் திகழ்கின்றது. இவருடை ப சைவ நெறி பேருண்மையும் (பிரமமும்) பேருலகமும் ஒன்று என்பதாகும். சிவபெருமான் பேருலகமாகச் சித்த சக்தி மூலம் வடிவெடுத்து திரைபவர் என்பது அவரது நெறி யாகும். அதாவது சிவன் சொரூப (குணம் குறிகள் கடந்த) நிலையிலிருந்து தடத்த (குணம் குறிகளுடன் கூடிய) நிலைக்கு வருதலாம்.
சிவபெருமான் தனியான ஆன்மிக உருவில் சிவலோகத்தில் இருப்பதாகவும் தவம், தியானம் ஆகியவற்றின் மூலம் படிமுறைகளிலே அவரை அடை பலாம் என்பது பரீகாந்தரின் தத்துவமாகும். இதனை அடைவதற்கு அமைதி, நம்பிக்கை, பற்றில்லாமை ஆகியவை முக்கிய அம்சங்களாக வேண்டப்படு கின்றன. (மனத்துள் இரு க்கு ம் சிவபெருமானை ஆகாய வடிவமாக வழிபடுவதே இவர்களுடைய நெறி/சிவபெருமானின் அருளாலேயே ஆன்மாவைக் கட்டுப்படுத்தும் பற்றுக்களை அறுத்து, முத்தி அடைய வேண்டுமே பன்றி, நற்கருமங்கள் செய்தால் மட்டும் போதாது என்பது இவர்களுடைய நம்பிக்கை.
கி. பி. 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பைய தீட்சிதர் இந்த வழிபாட்டு முறையைச் சார்ந்தவர். இவரின் உரைகள் மக்கள் மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்தின. அப்பைய தீட்சிதர் பூரீகாந்தரின் உரை களுக்கு விளக்கமாக (பாஷ்யமாக) நூற்று நான்கு நூல்கள் எழுதியுள்ளாரென அறியவருகிறது.

- 9 -
ஒட்டு மொத்தமாக இந்தச் சமய நெறிக்கும் குறிப்பான அமைப்போ பின்பற்றுவோரோ இன்று இல்லை. எனினும், வேதாந்த சித்தாந்த முரைகளைச் சமப்படுத்தும் அமைப்பாக இது போற்றப்படுகிறது.
சுத்தாத்வைத சைவ சித்தாந்தம்
சைவ சமயப் பிரிவுகளிலே மக்கள் (மனத்தை மிகக் கவர்ந்தது சுத்தாத்வைத சைவசித்தாந்தமாகும். தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் இதைப் பின்பற்றும் சைவர்கள் பலராவர். யாழ்ப்பாணத்தில் சைவம் என்றால் அது சைவ சித்தாந்தம் என்றே பலர் கருதுகின்றளர். பிசிபி ஆகம முறைகளைப் பரப்பும் ஒர் அமைப்பாகவே
இது திகழ்கின்றது.
சைவ சித்தாந்தக் கருத்துக்களை வெளிப்பிடும் முதலாவது தமிழ் நூல் தமிழ் மூவாயிரம் என வழங் கும் திருமந்திரம். இதனை நந்திநாதர் பரம்பரை யைச் சேர்ந்த சுந்தரநாதர் என்பவர் திருமூலர் என்ற பெயரைத் தாங்கி ஆக்கியுள்ளார். இச்சிவ யோகியார் திருநந்திதேவரின் திருவருளைப் பெற்ற சிவயோகியருள் ஒருவர் என்பது வரலாறு. வட மொழியிலுள்ள சிவாகமங்களின் கருத்துக்கள் தி ரு ம ந் தி ர த் தி ற் கூறப்படுவதால் அதனைத் தமிழ் ஆகமம் பிே'
திருமூலரைத் தொடர்ந்து தமிழகத்தில் தோன் றிய சமய குரவர்கள் அருளிய தேவாரமும் திரு வாசகமும் சைவசித்தாந்தத்தின் முக்கிய தோத்திர நூல்களாகப் போற்றப்படுகின்றன. இவை பன்னிரு
2 தேே Effect, in

Page 12
- O -
திருமுறைகளிலுள்ள முதல் எட்டுத் திருமுறைகளு மாம். நாயன்மார்களின் பின்வந்த சந்தான குரவர் நால்வரும் சைவ சித்தாந்தத்தின் சாத்திர நூல்களை ஆக்கியுள்ளனர். சந்தான குரவருள் முதலாவது குரவர் மெய்கண்டதேவர். அவர் அருளிய நூல் சிவஞான போதம். இது சைவ சித்தாந்தக் கருத்துக் களை மிகச் சுருங்கிய அளவிலே பன்னிரண் டு சூத்திரங்களில் தொகுத்துக் கூறுகின்றது
6ιρανσουτ σήών άρ υσώνα» σμύθου ιοσων ஞான சம்பந்தர் நூல் ஒன்றும் செப்போது மெளன நெறி நின்று இறைவனை அடைந்தவர். இன்னொரு வர் மெய்கண்டாரது தந்தையாரான அச்சுதகளப் பாளரின் குலகுருவான அருணந்தி சிவாசாரியர். இவர் ஒருமுறை மெய்கண்டாரிடம் அவரின் பக்குவ நிலை அறியாது ஆணவத்தின் வடிவம் கேட்டார். அதன் உண்மையை எடுத்துக்காட்டு மூலம் மெய் கண்டார் உணர்த்தினார் : அன்று முதல் மெய்கண் டாரைத் தமது குருவாக ஏற் றுக் கொண் டார். அருணத்தி சிவாசாரியர் இரு நூல்களும், நான்கா மவரான உமாபதி சிவாசாரியர் எட்டு நூல்களும் செய்துள்ளனர். சித்தாந்த சாத்திரங்கள் பதினான் கில் முடிமணியாய் விளங்குவது சிவஞானபோதம். இதனை ஆக்கியவர் மெய்கண்டதேவர். இதனால் சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கைப்பும் மெய்கண்ட சாத்திரங்கள் சிபி 17,
சித்தாந்த சாத்திரங்களின்படி பதி, பசு, பாசம் ஆகிய மூன்றும் நித்தியமானவை. மும்மலங்களி னாற் பிடிக்கப்பட்ட ஆன்மா அவற்றிலிருந்து விடு

- || -
பட்டுச் சிவன்முத்தர் நிலையடைந்த போதிலும், த னரி த் துவ மாக நிற்குமேயன்றிச் சிவ ணி ன் தொழில்கள் எதையும் செய்யமாட்டாது. இக்கருத்து மக்கள் மனதில் ஊன்றிப் பதிந்து விட்டது. மெய்கண் டாருக்கு முன்னர் வேத, உபநிடதங்களின் கூற்றுக் களில் இருந்த ஒருமைத்தத்துவம்-அத்துவித தத்துவம்அவருக்குப் பின் இருமை நிலைகளாகக் கருதுவர். இதன் விளைவாகவே வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம் என்ற நிலை ஏற்படலானது.
சைவ சித்தாந்தம் ஆலய வழிபாட்டையும் சிவா சாரியர்களின் பூசை முறைகளையும் ஆதினங்கள் மூலம் சமய தத்துவங்களைப் பரப்பும் குரு, சிட பரம்பரை முறைகளையும் தமிழ் நாட்டில் நிலை பெறச் செய்துள்ளது.
காண்டற்கரிய கடவுளைச் சிவன் எனக் கண்டு தெளிவதற்கு நல்லார் இணக்கமும் இதை பூசை, நேசமும் வேண்டும். இந்த வகையிலே மன ஒருமை புடன் சிவனை வணங்குதல்) உண்மைச் சைவ சமபியின் அடையாளமாகும். முப்புரம் எரித்த விரி ச டைக் கடவுளை விரதிவம் எனப் புகழ்ந் துரைப்பர். சிவனைச் ' செம் பொருள் துணிபு ' எனச் சிறப்பித்து வணங்கும் மரபு ஒன்றுண்டு. குன்றாத பக்தியும் குல்ையாத உறுதியும் கொள்கை பாய்க் கொண்ட சைவ சமயத்தில் 'விர' என்னும் அடைமொழியைச் சேர்த்து வீரசைவம் என்ற சமயம் உதயமானது.

Page 13
- 12 ー
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருந்தன் மையனான சிவனை வியந்திடும் விரசைவம் பழமையானது. பின்னாளில் வைஷ்ணவமும் சமண மும் பாரதத்தில் மேலாதிக்கம் செலுத்தியதால் சைவத்தின் சிறப்பு மரைக்கப்பட்டிருந்தது. அவ் வேளை பில் சைவத்துக்கு மாறாப் நடந்தவர்க ளுக்கும் பழைய மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்தவர்களுக்கும் மாறாகக் கன்னட நாட்டில் தோன்றிய வசவதேவர் பண்டு தொட்டுப் பழகி வந்த வர்ணாச்சிரம தர்மங்களைத் துணிவுடன் எதிர்த்தார். அவரின் தளராமுயற்சியாலும் அவ் வியக்கம் விரசைவம் என்னும் பெயர் பெற்றது எனப் பேராசிரியர் சாக்லுேறர் கூறுவர்.
புத்துரக்கமும் புதிய பிரசாரமும் மக்கள் மனத்தில் புத்துணர்ச்சியைத் துரண்டியதால் வசவதேவரின் புதிய பாதையில் பலர் தொடரலாயினர். வசவரின் செயல்திறனும் அரசவையில் அவருக்கு இருந்த செல்வாக்கும் அவரது துணிவும் அவரின் நற் கருமங்களை மேல் நிலையடையச் செய்தன. வச வரின் செல்வாக்கு மேலோங்குவதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் அவருக்கு எதிராக அர சனுக்குக் கோள் சொல்லிய போதிலும், தெய்வ அணுக்கிரகம் வசவர் பக்கம் இருந்ததால், வசவேசர் விரத்துடன் மேற்கொண்ட வீரசைவப் பணி கன் னட நாடு முழுவதும் பரவியது. ஆப்பினும் விர சைவம் வளர்ந்துள்ள அந்நாட்டில் மூல ஆசாரியர் களான பஞ்சாசாரியர் மரபு, வசவ மரபு என

- 13 -
இருவகை மரபுகள் இன்றும் கன்னட மாநிலத்தில் நிலவி வருகின்றன எனப் பேராசிரியர் கலாநிதி வை. இரத்தினசபாபதி அவர்கள் தமது விரசைவம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சிவன் பெருந்தன்மை செப்புதற் கரியது. அவர் ஊரிலான் பேரிலான்; குணம் குறியிலான்; பார்க்கும் இடம் எங்கும் நீக்குமர நிறைகின்ற பரி பூரணானந்தம் என்று போற்றுவர் சிவதொண்டர். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவனின் அருள் தன்மையை வி பத் தி டூ ம் விர சைவ ம் மிகத் தொன்மை வாய்ந்தது. செம்பொருள் துணிவெனச் செப்பிடும் சிவனின் குறியாக அப்பெருமானின் அரு பி/ருவத் திருமேனியாகிய சிவலிங்கப் பெருமானை நினைபுத் தொறும், காண் தொறும், எப்போதும் அனைத்து எலும்பும் உள்நெகத் தொழும் தொண்டர் விரசைவர். அதனாற் போலும் சிவலிங்கப் பெரு மானைப் பிரிந்திருக்க மனமில்லாத விரசைவர் அப்பெருமானைத் தமது அங்கத்தில் கட்டிக்கொள் குளும் வழக்கம் ஏற்படலாயிற்று.
வீரசைவ மூல ஆசாரியர்கள்
ஆதியில் விரசைவத்தைத் தோற்றுவித்த ஆசாரி பர்கள் ஐவர். அவர்களைப் பஞ்சாசாரியர்கள் என்பர். இப்பஞ்சாசாரியர்கள் பற்றி மரபு வழிப் uri nya ayag) ஒன்றுண்டு. இரேணு காசாரியர், மருளாராத்திரியர், ரகோராமராத்திரியர், பண்டித ராத்திரியர், விஸ்வாராத்திரியர் ஆகிய ஐந்து மூல ஆசாரியர்களும் பரமசிவத்தின் ஐந்து முகங்களிறி ருத்து தோன்றி, வீரசைவத்தை வளர்த்துப் பல்வேறு

Page 14
- 14 -
இடங்களில் விரசைவ மடங்களை நிறுவியுள்ளனர் என்பது மரபு வழிச் செய்தி.
இரேணுகாசாரியர் என்பவர் இரேவணாத் திரியர், இரே
ji
iii
வனாசித்தர் என்றும் சொல்லுவர். இவர் கன்னட மாநிலத்தில் கொல்லிப்பாகை என்னுமிடத்திலுள்ள சோமேசுவர இலிங்கத்தின் சத்தியோசாத முகத்திலிருந்து வெளிப்பட்டு, இந்தியாவின் பல பாகங்களிலும் ஈழத்திலும் விரசைவத்தை உபதேசம் செய்தார்.
இராவணனின் தம்பியாகிய விபீடணன் இவரி டம் விரசைவ உபதேசம் பெற்று மூன்று கோடி இலிங்கங்களை ஈழத்தில் அமைத்தான் என்பது பழைய செய்தியாகும்.
இரேணுகர் வழியில் பிருங்கி மரபு தோன்றியது, இவர் தோற்றிய மடம் ஏம்பா புரி யில் உள்ளது.
மருளாராத்திரியர் என்பவர் மருளர் என்றும் தாருகள் என்றும் அழைக்கப்பெற்றார். இவர் இந் தி யா வின் மத்தியப் பிரதேசத்தில் சித்தலிங்கத்தில் இருந்து வெளிவந்தவர். இவரது வழியில் வீரமரபு தோன் றியது. இவர் தோற்றிய மடம் ஒன்று உஜ்ஜையினி பில் உள்ளது; மற்றொன்று பெங்களூரில் உள்ளது.
ஏ கோ ராமராத் திரியர் என்பவர் சங்கு கன்னர் என அழைக்கப்பெறுவர். இவர் ஆந்திரப் பிரதேசத்தில் மல்லிகார்ச்சுன இலிங்கத்தில் இருந்து தோற்றிய வர். இவரது மரபினர் திருப் பருப்பத மலை அதாவது பூர் தலம் என்னும் இடத்திலுள்ள மடத்திலிருந்துவெளி வந்தவராவர். இவரைக் கந்த மரபினர் என்பர்.

- 15 -
iv பண்டிதராத்திரியர் என்பவர் வட இந்தியாவிலே கேதாரநாத்தில் இராமநாத இலிங்கத்தில் இருந்து வெளி வந்தவர். இவர் வழியில் நந்தி மரபு தோன்றியது. இவர் தோற்றிய மடம் கேதாரநாத்தில் உள்ளது
1. விஸ்வாராத்திரியர் என்பவர் உத்தரப் பிரதேசத்திலே காசிப் பகுதியில் அதாவது வாரணாசியில் விசுவேசு வர இலிங்கத்தில் இருந்து தோன்றியவர். இவர் நிறுவிய மடம் வார னா சி யில் உள்ளது. இவரை விசுவர் என்றும் சொல்லுவர். இவர் வழிவந்தவர் ஹிந்தி மரபினர் என அழைக்கப்பெற்றனர்.
பஞ்சாசாரியர்களால் காலம் தோறும் (பூகம்
தோறும்) தோற்றி வளர்க்கப்பெற்ற விரசைவம்
காலங்கடந்த தொன்மையானது.விரசைவம் என்பது
பிடும் பெருமையும் துணிவும் தனித்துவமும் கொண்ட
ஒரு சமயம் என முன்னர் கண்டோம். மேலும், விரம் என்னும் ஆகமத்திற் கூறியுள்ள சைவ நெறியே வீரசைவம் என இதனை விளக்கலாம். அத்துடன்
சைவ சமயத்திலுள்ள இருபத்தெட்டுச் சிவாகமங்
களில் இறுதிப் பகுதிகள் விரசைவக் கொள்கை களையும் சடங்குகளையும் கூறுவதால், விரசைவம்
என்பது ஆகமாத்தத்தின் ஓர் அமிசம் எனலாம். இது சைவ சமயத்தின் உயர் நிலையாக இருந்த போதி லும், தனி இயல்புடைய ஒரு சமயக் கொள்கை யைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பஞ்சாசாரியர் களால் தாபிக்கப் பெற்ற இந்த விரசைவம் யுகத் தோறும் இருந்து வருவதால் சனாதனத்துவம் உடை பதும் வேத நெறியைத் தழுவி இருப்பதனால் சிறந்த பாதுகாப்புடையதுமாய் விளங்குகின்றது.

Page 15
- 16 -
கி. பி. 12ஆம் நூற்றாண்டில் சமணமும் வைஷ் னவமும் உயர்வடைந்து, சைவம் விழ்ச்சியடைந் திருந்தது. அக்காலத்தில் கன்னட மாநிலத்தில் தோன்றிய வசவதேவர் சைவக் கருத்துக்களைக் குறுகிய காலத்தில் புரட்சியுடையன வாக்கினார்; வருணாச்சிரம முறைகளில் உள்ள குறைகளை நீக் கினார்; அவருடைய முயற்சி மிகவும் வீரம் வாய்ந் தது நற்பயனும் விளைந்தது. கருனாடக அரசனின் முதலமைச்சரான வ ச வ ரி ன் விரம் நிறைந்த சைவக் கொள்கை காலத்துக்கு ஏற்றதென அம்மா னிலத்தில் இருந்தவர்களை மனம் கவரச் செய்தது. அங்கலிங்கியான வசவேதரின் விரக் கொள்கை பில் உளம் படிந்த மக்கள் அவரைப் போலவே தாமும் விரசைவர்கள் ஆயினர். அதன் பேராக விரசைவம் புத்துயிர் பெற்று, மற்றைய மாநிலங் களுக்கும் பரவத் தொடங்கியது.
சிவபெருமானை மாத்திரம் முழுமுதல் தெய்வ மாகக் கொண்ட சைவசமயத்தில் சிவபெருமானைச் சிவலிங்க உருவத்தில் பரதெய்வமென வழிபடுவது சைவத்துக்கும் விரசைவத்துக்கும் பொது வா ன கொள்கையாகும். ஆயினும், சைவமும் விரசைவ மும் வழிபடக் கையாளும் முரைகள் வேறுபடுவன. சைவர்கள் இலிங்கத்தைக் கோயிலிலும் பேடகத் திலும் வைத்து வழிபடுவர்; விரசைவர் அதனைக் கைத்தலத்தில் வைத்து வழிபடுவர். சைவ சமயம் தத்துவங்கள் முப்பத்தாரையும் உலக உற்பத்தித் துறையில் விளக்குகிறது; விரசைவம் அவற்றை உளவியல் முறையில் காட்டுகிறது.

- 17 -
பிரபஞ்சத்திற் காணப்படும் நிகழ்ச்சிகளுக்குச் சிவசக்தி எந்த அளவு காரணமோ அந்த அளவு ஆன்மாக்களின் செயல்கள் காரணமெனச் சைவ சமயத்தினர் குறிப்பிடுவர். சிவன் காரணமாக இருப்பதற்கும் ஆன்மாக்களின் செயல்களுக்கும் தொடர்பில்லை என்று சைவ சித்தாந்தப் பிரி வினர் கூறுவர். விரசைவம் அல்லது இலிங்காயத பிரிவினர் சிவசக்தியே பிரபஞ்சத்தையும் ஆன்ம கோடிகளையும் அருட்சக்தியாக நின்று ஆட்டுவிக் கின்றது என வலியுறுத்துகின்றனர். அதனால் விர சைவத்தைச் சக்தி விசிட்டாத்வைதம் எனக் கூறு வதும் உண்டு.
சைவ சமயக் கொள்கையையும் விரசைவக் கொள்கையையும் வேறுபடுத்துவதற்காகவே 'வீர' என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டிருக்கிறது. 'வீர' என்ற சொல், வி + ர எனப் பிரித்து, வி-வித்தை எனவும் ர - ரமித்தல் அதாவது திளைத்தல் எனவும் பொருள் தருவதால், இவ்வடைமொழி சிவ சிவ ஐக்கிய வித்தையில் திளைக்கின்ற சைவம், விர சைவம் என்ற பொருளை உணர்த்தும்.
கடவுள் நிலை அமிசத்தையும் அசைவு அமிசத் தையும் இணைப்பதைச் சக்தி எனக் கொள்ளும் விசிட்டாத்வைதமே விரசைவத்தின் உட்பொருள். இதனை,
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்,
எனத் திருவருட்பயன் கூறும்.

Page 16
- 18 -
உடம்பில் இலிங்கத்தை அணிந்து கொண்டு ஒன்றான கடவுளை வழிபடுமாறு கூறுவதே வீர சைவத்தின் வெளிப்பொருள். வீரசைவம் ஆடம்பரச் சடங்குகளைச் சிறப்பாகக் கொள்வதில்லை. அதன் முக்கிய சடங்குகளெல்லாம் பிரக்கும் போது ஒவ் வொரு குழந்தைக்கும் குரு செய்யும் இலிங்க திட்சை ஒன்றில் அடங்கும். இத்திட்சை கற்பலிங்க தாரணத்தின் ஒர் அம்சமாகக் கொள்ளப்படுகிறது. ஒருவர் அங்க இ லிங் கி யா ன தன் பின்னரே விரசைவர் ஆகலாம் என்பது மரபு.
சிவனைத் தவிர வேறு தெய்வத்தை வழிபட மறுக்கும் பக்தியே விரசைவத்தின் தலையாய கோட்பாடெனக் கூறுவர். கி. பி. 200-500 வரைப்பி லுமுள்ள பல்லவர் காலம் முழுவதும் நாயன்மார் களின் சிவபக்தி மேலோங்கி இருந்தது. அதனைத் தொடர்ந்து பின்வந்த நாயன்மார்களும் சிவபக்தி பைப் பெருகச் செய்தனர். இத்தகைய பக்தியை வேதச் சடங்குகளிலும் சிறந்ததாக அக்கால மக்கள் கருதினர். அவர்களைப் புராதனர் என வசவேசர் கூறிப் போற்றுகின்றார்.
வசவண்ணா போதித்த வீரசைவத்தை இலிங் காயத சமயம் என்று சாதாரணமாகக் கூறுவ துண்டு. இலிங்கத்தை எப்போதும் உடம்பில் அணித் திருப்பதால் உடம்பிலுள்ள எல்லா மாசுகளும் எரிக் கப்பட்டுவிடும் என்பது இச்சமய நம்பிக்கை. இத் நம்பிக்கையின் விளைவாக இவர்கள் பிற வேற்று மைகளைப் பாராட்டுவதில்லை. அத்துடன் பிறப்பு, இறப்பு, பிறரைத் திண்டுதல், சேடம் உண்ணல்,

19
பெண்களின் மாதவிலக்கு ஆகிய தாவேகைத் திட் டுக்களும் இவர்களுக்கு இல்லை யெனக் கலாநிதி வை. இரத்தினசபாபதி அவர்கள் தமது விர சைவம் ' என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார்.
மூவகைத் துறைகள் :
வீரசைவத்தின் முடிமணியாய் விளங்கும் நெறி முறைகள் மூன்று. அவை ஐவகை ஒழுக்கம் என்னும் பஞ்சாசாரம் எண்வகைக் காப்பு என்னும் அட்டாவரணம்: அறுவகை இணைப்பு என்னும் சடுத்தலம். விர சைவத்தின் வளர்ச்சியை நோக்குமிடத்து, சமூ கத்தை மையமாக வைத்து அன்பு, அறம், அறிவு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு அதன் மேம்பாட்டுக்கான பண்பையும் பணிகளையும் முன் னெடுத்துச் செல்லுதல் வேண்டற்பாலது.
1. பஞ்சாசசரம் :
இலிங்காயதர் அனைவரும் ஒரே குடும்பத்தினர் போல் நடப்பதற்கான நெறிகளைக் காட்டும் ஐந்து நெறிகள் பஞ்சாசாரம் எனப்படும். அவை இஜிங்கர
சாரம், சதாசாரம், சிவாசாரம், பிருத்தியாசாரம், கனரா சாரம் என்பனவாம்.
1 இலிங்காசாரம் என்பது குருவானவர் அதுக்கிர கித்துக்கொடுத்துள்ள இலிங்கத்தை அணிந்து கொண்டு நாள்தோறும் ஒரு காலமோ, இரு காலமோ அல்லது மூன்று காலமோ அதைப் பக்தி பூர்வமாகத் தொழுதல்;
i சதாசாரம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒரு தொழிலை அறவழியிற் செப்து
"சிடி . .

Page 17
- 20 -
கொண்டு நன்னெறியில் நிற்றல், அத்துடன் ஏழைகளை ஆதரித்து, எப்பிராணிகளையும் துன்பப்படுத்தாது வாழ்தல்; i சிவாசாரம் என்பது சிவனடியார்களான இலிங் காயதர்களுக்குள் வேறுபாடின்றி விரசைவர் எல்லோரும் சிவசொரூபிகள் என்றுணர்ந்து, வீரசைவ சிலங்கள் நிறைந்தவராய் வாழ்தல்;
iy பிருத்தியாசாரம் என்பது கடவுளிடத்திலும் அடியார் களிடத்திலும் பணிவுடையராப் இருந்து, உலகத்தார்க்கு உதவி வாழ்தல்;
V கனாசாரம் என்பது fäfueu /T (U நிரூபணத் தத்துவ மாகும். அதாவது தனி அறத்தையும் பொது
அறத்தையும் விரசைவ நெறிபிரழாமல் ஒற் றுமையாகப் பேணிப் பாதுகாத்தல்.
2. அஷ்டவரர்னம் :
அ.தாவது ஆன்மாவை அவித்தை (மாயை) பின் தாக்குதலின் நின்றும் காத்து, மோட்சத்துக்கு நடத்திச் செல்லும் எட்டுக் கோட்டைகளாம். அவை குரு, இலிங்கம், சங்கமம், பாதோதகம், பிரசாதம், விபூதி, உருத்திராக்கம், மந்திரம் என்பன οι Τιό, இவற்றை எண்வகைக் கர்ப்பு அல்லது கோட்டை எனக் கூறுவர். இவற்றுள்,
1 குரு என்பது கு+ரு எனப் பிரித்து, கு = பாசம், ரு = நீக்குதல்; அதாவது இறைவடிவான குரு பாசத்தை நீக்குபவர் எனப் பொருள்படும். மேலும் இதனை விளக்குமிடத்து, சீடனைப்
 
 
 

- 21 -
பிடித்துள்ள மும்மலங்களை நயன திட்சையின் போது குருவானவர் தனது அருட் பார்வை யினால் நீக்குவர் என்பது தெளிவாகும்.
குருவாய் உள்ளவர் அழுக்காறு, அவா . வெகுளி, இன்னாச் சொல் இன்றி உயிர்களி டத்து இரக்கம் உள்ளவரா பப் இருத்தல் வேண்டும். பொருள் பற்றிச் செய்கின்ற பூசனையில் மனம் கொண்டு, வைதிகக் கிரியைக்காக ஆசாரி யராவோர் ஆன்மாக்களை நல்வழிப்படுத்த இயலாது. அத்தகையோர் குருடனுக்குக் குருடன் வழிகாட்டும் குருட்டாட்டக்காரருக்கு ஒப்பாவர். குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் ஆாள்வர் குருடுங் குருடுங் குருட்டாட்ட மாடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே. எனத் திருமந்திரம் செப்பும், அஞ்ஞானத்தை நீக்கவல்ல குருவினைக் கொள்ளாதோர் மெய்ப் பொருளை அறியும் முயற்சியில் விளையாடு தல் கருக்குழியில் வீழ்தற்கு ஏதுவாகும். Taoy (Sali தக்காரிடம் சென்று உண் மைப்பொருள் அறிந்து நன்னெறி கடைப்பிடித்தல் வேண்டும்.
உண்மை நெறியில் ஈடுபட்டுழைக்கும் குரு விடமே ஒப்பற்ற பண்புகள் குடி கொண்டி ருக்கும்.
பலன்கள் வேண்டிய பரிசெலாம் படைத்திடும்
பரம தத்துவ ஞானி நலங்கொள் நாமமாம் மந்திரம் செபித்திடின்
நயந் தவர் நீராடும்

Page 18
- 22 -
சலங்கொள் தீர்த்தமாம் சரீரமே அவனுரு
சரதம் மற்றவர் செவ்வாய் |- மலர்ந்த வாசகம் மயற்பிணி யகற்றிடும்
வன்மை சேர் மருந்தாகும். என்று ஞானவாசிட்டம் நவில்கின்றது. ii இலிங்கம் என்ற வடமொழிச் சொல் சிவபெரு மானுடைய சதாசிவத் திருமேனியின் அடை பாளத்தைக் குறிக்கும். வடமொழியில் லிங்கம் என்பது லி + கம் எனப் பிரித்து, ' லி' என்பது ஸ்பதே என்ற வினைப் பகுதியாகவும் லயப் பட்டு ( ஒடுங் கி) ப் போதல் என்பதாகவும் பொருள் தந்து, ' கம்' என்ற வினை மூலத்தை விகுதியாகக் கொண்ட வினையடிப் பிறந்த பெயர் ஆகும். இந்த வகையில் லி = ஒடுங் குதல், கம் = தோன்றுதல் எனப் பொருள் படும். அதாவது ஆன்மாக்களும் உலகங்களும் ஒடுங்குதற்கும் தோ ன்று தற்கு ம் காரண மான உண்மைப் பொருளை உணர்த்தும் வடிவ மாகும். இது ஆன்மாவைப் பிணித்துள்ள மல பந்தங்களை ஒடுக்கி, நலன்களைத் தோற்று விக்கும் எனப் பொருள்தரும். - Goωνώ, * σαλασσα που 33ου στεύουσό μ3 σί, களும் எங்ஙனம் ஒடுங்குகின்றனவோ அங்ஙனமே சிருட்டி காலத்தில் யாவும் தோ ற் ற ம் பெறு கின்றன எனச் சுப்ரபேதம் என்ற வடமொழித் திருப்பள்ளியெழுச்சி செப்புவதும் கீலிங்கம் бубйт. பதன் பொருளை உணர்த்துகின்றது.
* லயங் கச்சந்தி பூதானி எபிங்ஹாரே நிகிலம் யத /
ஸ்ருஷ்டி காலேததா ஸ்ருஷ்டிஸ் தஸ்மால் லிங்க
முதாஹ்ருதம் |
- சுப்ரபேதம்.

והיו
- 23 -
i சங்கமம் என்பது சிவனடியார் கூட்டத்தைக்
குறிக்கும். உலக விசாரத்தை விட்டவர் சங்க மர் எனப்படுவர். இவர்கள் சிவ சிவ ஐக்கி
யத்தை அறிவிக்கும் ஞான மூர்த்திகளாவர். 'தொண்டர் தம் பெருமை 6λισσού συσιγιό பெரிதே' எனப் புறப்பாடல் புகழ்ந்துரைக்கும்;
பாதோதகம் என்பது குரு, இலிங்க, சங்கமர்
களின் திருவடிகளை நீராட்டிய நிரே (திர்த் தமே) அதாவது பாத திர்த்தமே பா தோதகம்
எனப்படும். வீர சைவக் கோட்பாட்டின்படி விர சைவர் பாதோதகத்தை மிகக் கவனமாக அருத்திப் பேணிப் பயன் கொள்வதன் மூலம்
ஆன்ம சாந்தி பெறுவர்;
பிரசாதம் என்பது குரு, இலிங்க, சங்கமர்களுக்கு
அர்ப்பணம் செப்பப் பெற்றவை எல்லாம் பிர
சாதமாகும். வீரசைவர் ஒவ்வொருவரும் தாம் உபயோகிக்கும் எப்பொருளை (பும் குரு, இலிங்க சங்கமர்களுக்கு அர்ப்பணம் செய்த பின்னரே உபயோகிக்க வேண்டும்:
விபூதி என்பது சுத்தமான பசுவின் சாணத்தை
நீராக்கி. மந்திர பூர்வமாக எடுக்கப்பெற்ற
வெண்மையான திருந்றே விபூதியாகும் திடு நீறு திராத நோய்களைத் தீர்த்து, காண்
பதற்கு அழகையும் அணிபவர்க்குப் பெருமை யையும் சேர்க்கும் எனச் சம்பந்தப்பெருமானும் நாவுக்கரசரும் கூறிப்போந்தனர்;
உருத்திராக்கம் இது üü] (ሸI ஆக்கமணி என்றும் சொல்வர். உலக உயிர்கள் படும் துயர் கண்டு இறைவன் உகுந்த கண்ணிரே உருத்

Page 19
- 24 -
திராக்கம் அல்லது அக்கமணி ஆயிற்று. இவ் வுருத்திராக்கத்தைச் சிவமணி என்றும் கூறுவர். சிவனடியார் இம்மணியைக் கோத்துத் தமது கழுத்திலும், தலையிலும் மாலையாக அணி வர். நீராடும்போது கழுத்தில் அணிந்த உருத்தி ராக்க மாலையிற் படிந்த நீர் உடம்பிற் செறிவ தால், உடம்பிலுள்ள நோய் நீங்கும் என்பது சமய நம்பிக்கை;
vi மந்திரம் என்பது மனதுக்கு உறுதியைத் தருவது எனப் பொருள்படும் பிரண்வத்துடன் கூடிய பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதால் மாறாத நோய் களை மாற்றி, மனத்துக்கு உறுதியும் தியா னத்துக்கு உதவியும் நல்கிச் சிவ பக்தியை வளர்க்கிறது. மந்திரம் மனனம் செய்பவரைக் காப்பாற்றுகிறது என்ற பொருளும் தரும்.
மேலே குறிப்பிட்டுள்ள எண்வகைக் காப் பினுள் குரு, இலிங்கம், சங்கமம் ஆகிய மூன்றும் வழிபாட்டுக்குரியவை விபூதி, உருத்திராக்கம், மந்திரம் ஆகிய மூன்றும் வழிபாட்டுக்குப் பயன் படுபவை பாதோதகம், பிரசாதம் இரண்டும் வழி பாட்டின் பயன்கள் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.
.ே சடுத்தலம் :
சிவான்மா சிவபரம் பொருளுடன் இணைதல் சடுத்தலம் எனப்படும். இதனை வீரசைவநெறி எனப் பொதுவாகக் கூறுவதும் உண்டு. விரசைவர்க ஞடைய தலை சிறந்த குறிக்கோள் இலிங்காங்க

- 25 -
சம்பன்னராய்ச் சிவைக்கியமாதல் ஆகும். அதனை அடையும் முறையே சடுத்தலம் என்று கூறுவர். இந்நெறியில் சாதகர்கள் ஆறு மனோ தத்துவ நிலைகளைப் படிமுறையிலே ஒன்ரன் பின் ஒன்றா கக் கடந்து சென்றால், மோட்ச நிலை எய்துவர் என்பது கோட்பாடு, வீரசைவர் தமது வாழ்வில் ஐவகை ஒழுக்கங்களால் வெற்றியிட்டி, எண்வகைக் காப்புக்களால் துரப்மை பெற்று, இறைவனோடு இணைவதற்கு உதவுவதே சடுத்தல நெறியாகும்.
சடுத்தவ நெறியில் பக்தித் தலம், மகேசத் தலம், பிரசாதித் தலம், பிராணலிங்கத் தலம், சரணத் தலம், ஐக்கியத் தலம் என ஆறு வகையான இணைப் புக்கள் உண்டு. ஈண்டு தலம் என்பது ஞானத்தை அடிப் படையாகக் கொண்ட வளர்ச்சி முறை நிலையைக் காட்டப் பயன் படுத்தப்படும் சொல் எனலாம்.
பக்தித் தலம் என்பது உணர்ச்சி நிரம்பிய மெய் புணர்வு பெறுதல் : மகேசத் தலம் என்பது சீவான்மா இறைவனுடன் இணைவதற்கு முயற்சி செய்தல் ; |i பிரசாதித்தலம் என்பது இறைவனுடன் இணை வதற்குத் தன்னை ஈயும் அறிவு தொழிற்படுதல் : i பிராணலிங்கத் தலம் என்பது சிவா ன் மா வின் இயற்கை உணர்வு விஞ்சி அகத்திற் களித்தல்; சரணத் தலம் என்பது சீவான்மாவின் செயல் இணையும் நிலையாதல் ; ஐக்கியத் தலம் என்பது சிவான்மா பரமான்மா வுடன் ஒன்றுபட ஒருப்படுதல்.

Page 20
- 26 -
இந்த வகையில் பக்தித் தலத்திலும் மகேசத் தலத்திலும் நிற்பவர் சிவபக்தர்; பிரசாதித் தலத்தி லும் பிராணலிங்கத் தலத்திலும் நிற்பவர் பஞ்சப் புலன்களை அடக்கிய சங்கமர் (சிவனடி யார் ) : சரணத் தலத்திலும் ஐக்கியத் தலத்திலும் நிற்பவர் குரு என்னும் நல்லாசான்களாவர்.
வைதிகக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் உட் பட) துதணித்துவமாய் இயங்கிய விரசைவம் இந்தியா ழுமுவதும் பரவியுள்ளது. தமிழ் நாட்டில் இராமேசு வரம், கும்பகோணம், மதுரை, காஞ்சி, திருப்பரங் குன்றம், சென்னை, சேலம், திருச்சி, தஞ்சை, கோவை, புதுவை முதலிய இடங்களில் வீரசைவ மடங்கள் உள்ளன. கும்பகோணத்திலுள்ள மடம் பெரிய மடம் என்று வழங்கப்படுகிறது. அம்மடம் கும்ப கோணம் (குடந்தை) மாமாங்கக் குளத்துக்கு அண் மையில் உள்ளது. அங்குள்ள வீரசைவ அடியார்களை வீரமாஹேரஸ்வரர் GTso Ll. அந்த மடமும் அதைச் சேர்ந்த வீரபத்திர சுவாமி கோயிலும் சோழ மன்னர்களாற் கட்டப் பெற்றவை.
விரசைவ சிவாசாரியர்கள் புரானப் பிரசித்த மான காசி முதலிய சேத்திரங்களிலுள்ள சோதி லிங்கங்களை ஆதரித்து, அங்கிருந்த அரசர்களாற் பூசிக்கப் பெற்றுத் தாபித்த குரு பிடங்கள் வடநாடு உள்ளிட்ட பல இடங்களிலும் இன்று வரை காணப் படுவதே அவற்றின் தனித்துவத்துக்கும் சிறப்புக்கும் சான்ராகும்.

- 27 -
ஈழத்தில் வீர சைவம் :
பாரத நாட்டின் எல்லா மாநிலங் களி லும் பரவிய விரசைவம் ஈழத்திலும் விபீடணன் காலத் திலிருந்து நிலைபெற்று வந்துள்ளது. மேலும் குளக் கோட்டு மகாராசா வினால் திருக்கோணேச்சரம், திருக்கோயில் (மட்டக்களப்பு) போன்ற இடங்க ருக்கு இந்தியாவிலிருந்து வீரசைவ சிவாசாரி பர்கள் அர்ச்சகர்களாக அழைத்து வரப்பட்டனர் எனக் கர்ண பரம்பரைக் கதை யொன்று உளது.
ஈழத்தைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரே வீரசைவத்தைப் பின்பற்றி வருகின் ரனர் குறிப்பிட்ட ஒரு பகுதியினரே இதனை ப் பின்பற்றுவதால் அப்பகுதியினரின் வளர்ச்சிக்கு ஏற் பவே வீரசைவமும் இங்கு வளர்ச்சி பெறுகின்றது. இச்சமய நெறிமுறை ஒரு சமூகத்தினருக்கு மட்டும் உரியதொன் றல்ல என்பது ஆய்வாளர்களின் கருத் தாகும்.
அந்த வகையில் திருகே ர ன மலையிலும் மட்டக்களப்பிலும் வாழும் வீரசைவர் ஆதிக் குடிகள் என்று கொள்ளமுடிகிறது. அவர்கள் ஆசாரசிலர் களாப் வாழ்ந்ததனால் திருக்கோணேச்சரத்திலுள்ள மலைக் கோயிலுக்கு விரசைவர் பரம்பரை அர்ச்ச கர்களாக இருக்கும் வாய்ப்பினைப் பெற்றிருந்தனர்.
திருக்கோணேசர் ஆலயம் உரியமுறையிற் பூசிக் கப்படாத காலத்தில் சிவத்திரு ஐயாமுத்துக் குருக் கள், அவரது மகன் வைத்திஸ்வரக் குருக்கள் ஆகிய விரசைவக் குருமார் மலைக்கோயிலில் இருந்த

Page 21
- 28 -
சிவலிங்கப் பெருமானுக்கு வெள்ளிக் கிழமைகள் தோறும் தவறாது பக்தி பூர்வமாகப் பூசை செய்து வந்தனர். அவர்களுக்கு அநுசரணையாகச் சிவத் திரு ஏரம்புக் குருக்கள், அவரின் மகன் விசுவலிங்கக் குருக்கள், சிவத்திரு சபாபதிக் குருக்கள், சிவத்திரு சிவஞான தேசிகர் ஆகியோரும் குருத்துவப் பணி யாற்றி விரசைவ மரபினைப் பேணினர். இன்றும் அவர்களின் ம ர பி ன ர் விரசைவத்துக்கும் தமிழ் மொழிக்கும் தம்மாலான பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.
பொதுவாக நோக்குமிடத்துப் பழங்குடிகளான வீரசைவர் தொழில் காரணமாக ஓரிடத்தில் தரித் திருக்காது வேறுார்களுக்குச் சென்று வாழ வேண் டியவர்களாகின்றனர். மட்டக்களப்பில் வீரசைவர் செறிந்து வாழும் பகுதியைக் குருக்கள் குடி எனக் கூறுவர். அக்கரைப்பற்று, பழுகாமம், களுவாஞ் சிக்குடி, தம்பிலுவில், தம்பட்டை ஆகிய ஊர்களில் விரசைவர் நிரந்தர வதிவிடமாகக் கொண்டு வாழ் கின்றனர்.
இவ்வூர்களில் நிரந்தர வாசிகளாய் வாழும் வீரசைவரைப் பகுதியினர் என்றும் திருமணம் முதலியவற்றால் ஊர்மாறி வாழ்வோரைத் தேசார் திரி என்றும் சொல்வர். இவர்கள் விவசாயத்தைத் தமது வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். விவசாயத்துக்கு உதவியாகக் கரவைப் பசுக்களை யும் எருமைகளையும் வளர்க்கின்றனர். இம்மக்கள் தம்மை இனம் க n ன் ப த ற் கு வசதியாகத் தாம் வளர்க்கும் விலங்குகளுக்குச் சூலக் குறி அடை

-- .29 -
யாளம் இடுவர். அவ்வடையாளச் சூலத்தின் தடுப் பகுதியின் மேலும் கீழம் இரு வேறு அடையா ளங்கள் இட்டு இனங்காரைச் செய்வர்.
ஈழத்துத் திருச்செந்தூர் என அழைக்கப்படும் திருக்கோயில் என்னும் ஊரிலுள்ள சித்திர வேலா புத சுவாமி கோயில் அவ்வூருக்குப் பெரும் புகழ் ஈட்டிக் கொடுப்பதை அனைவரும் அறிவர். அப் பெருமான் கோயில் கொண்டுள்ள ஊரையடுத்த தம்பட்டைக் கிராமத்தில் சிவத்திரு நல்லதம்பிக் குருக்களும் அக்கரைப்பற்றில் சிவத்திரு முருகக் குருக்களும் பழுகாமத்தில் சிவத்திரு ஞானசேகரக் குருக்களும் தம்பி லு விவில் சிவத்திரு தில்லைக் குருக்கள், சிவத்திரு ஆறுமுக தேசிகர் ஆகிய விர சைவக் குருமாரும் இருந்து வீரசைவத்துக்கு நற்பணி ஆற்றியுள்ளனர்.
இவர்களைப் போன்றவர்களின் முயற்சிகளால் முன்னர் குறிப்பிட்ட ஊர்களில் வாழும் விரசைவர் இலிங்க தாரணம் பெற்றுக் கோயிற் பூசைகளிலும் அலங்காரக் கலைகளிலும் தம்மை ஈடுபடுத்தி இறை பணி ஆற்றுவதோடு அறிநெறி நின்று பிற முயற்சி களும் செய்கின்றனர். அவ்வாறே பிற்காலத்தில் இந்தியாவின் தென்னகத்தில் வாழ்ந்த இம்மரபினர் இங்கு வந்து ம ன ல ய கத் தி லும் பரந்து வாழ் கின்றனர்.
இன்னும், வீரசைவப் பழங்குடி மக்கள் ஈழத்தின் வடக்கே யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்து வருவதை யாவரும் அறிவர். யாழ்ப்பாணத்து வி ர  ைசிவ ர்

Page 22
- 30 -
விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு வந்து கு டி பே ரி ன ர் என ஈழத்தில் தமிழ்ப் பண்பாடு (Tamil Culture in Ceylon by M. D. Raghawan) G7 Gör go gwŷ GCF) av ஆதாரம் காட்டி யாழ்ப்பாணத்து வீரசைவர் என்ற நூலிற் குறிப்பிட்டுள்ளார் பல நூல்களின் ஆசிரியரான த. சண்முகசுந்தரம், B, A, அவர்கள்.
யாழ்ப்பாணத்திலே வண்ணார்பண்ணை ஐய னார் கோயிலடி, பெருமாள் கோயிலடிப் பகுதிகளி லும், இணுவில், கே 7 எண் டா வி ல், உரும்பிராய், சுன்னாகம், மானிப்பாய், மல்லாகம், அளவெட்டி, பண் டத் த ரி ப் பு, சண் டி லிப் பாய், கீரிமலை, காங் கே ச ன் து  ைர, மயிலிட்டி, ஏழாலை, நாவற்குழி, மரவன்புலவு, கைதடி, சரசாலை, புலோ லி, கொடிகாமம், கிளிநொச்சி ஆகிய ஊர்களிலும் இம் மரபினைச் சார்ந்த விரசைவர்கள் வாழ்கின்றனர்.
வண்ணார்பண்ணை ஐயனார் கோயிலடியைச் சேர்ந்த வீரசைவர்கள் குருத்துவப் பணியிலும் தம்மை ஈடுபடுத்திவந்தனர். அவர்களின் பரம்பரை பினரான சிவத்திரு கபிலாசதேசிகர் எனத் திட்சா நாமம் கொண்ட சிவ ஐயம்பிள்ளைக் குருக்கள் சம்ஸ்கிருதம், தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் அறிவு பெற்றவர். இவர் கீரிமவைழில் பூரீ இரேணு காச்சிரமம் அமைத்து வீரசைவ நெறிமுறைகளைப் பேணுவதிற் பெரிதும் உளக்கம் காட்டி உழைத் துள்ளார். அவரது சேவை மரக்கற்பாற்றன்று.
அவருடைய காலத்தில் மற்றொரு வீரசைவ சிவாசாரியர் சுன்னாகத்தில் இருந்தார். அவர் பெயர் சி. மாணிக்கத்தியாகராஜா. சுன்னாகத்தைப் பிறந்த

- 31 -
கமாகக் கொண்ட பண்டிதர் மாணிக்கத்தியாக ராஜக் குருக்கள் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர். இவர் சுன்னை ஆ. குமாரசுவாமிப் புலவரின் மான வராய் இருந்து, அவரிடம் வடமொழி, தென்மொழி களைத் துரைபோகக் கற்றவர். பண்டிதர் சி. மாணிக்கத்தியாகராஜக் குருக்க விளின் தமிழ் ப் புலமைக்கு அவர் இயற்றிய வண்ணைச் சிலேடை வெண்பா என்ற நூல் சான்ராகும். தமிழ்ப் புலமையும் சமய சாத்திர தோத்திரங்களின் அறிவும் நிரம்பப் பெற்றி ருந்ததால் நல்லைநகர் நாவலர் மரபினையொட்டிச் சமயப் பிரசங்கத் திறமையும் இவர் பெற்றிருந்தார்.
மேலும் இலங்கைவாழ் மக்களாற் போற்றப் பட்டவரும் பிரித்தானிய மன்னரால் மதிக்கப் பெற்ற வருமான சேர். பொன். இராமநாதன் அவர்கள் சிவத்திரு மாணிக்கத்தியாகராஜக் குருக்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்தார். அதனால் இராமநாதன் அவர்கள் எழுதிய இறுதி உயிலில் தமது உயிர் பிரிந்த பின்னர் உடலை இருத்திச் சமாதி வைக்க வேண்டும் என்றும் சமாதிக் கிரியையை விர சைவக் குரு சி. மாணிக் கத்தியாக ராஜ பண்டிதரைக் கொண்டே செய்விக்க வேண்டும் என்றும் குறிப் பிட்டிருந்தார். அதன்படியே அவரது சமாதியும் கிரியையும் இடம்பெற்றன.
கல்விமான்களாலும் சேர் பொன். இராம நாதன் போன்ற கண்ணியவான்களாலும் மதிப் பளித்துப் போற்றப்பட்டவர் விரசைவக் குரு சி. மாணிக்க த்தியாக ராஜ பண்டிதர். கன்னாகம்

Page 23
- 32
மாணிக்கப் பண்டிதர் என்று சுருக்கமாக எல்லோரா லும் அழைக்கப்பெற்ற இப்பெரியார் விரசைவ சமயச் சார்பான சடங்குகள், கிரியைகள் செய்வதி லும் வல்லவர் அவரது உத்தம சீடர் உரும்பிராய் பொ. கந்தையாக் குருக்கள்.
சிவத்திரு பொ. கந்தையாக் குருக்கள் சமயக் கிரியைகள் தொடர்பான சம்ஸ்கிருத அறிவுடன் தமிழ், ஆங்கில மொழிகளிலும் அறிவு பெற்றிருந் தார். ஆங்கில அறிவு பெற்றிருந்த காரணத்தால் காலியிலே நெடுஞ்சாலைத் திணைக்களத்தில் 'ஒ வ சி ய ர்' ஆகச் சில கால ம் அரச பணி யாற்றினார். ஆயினும், அவரின் குலதெய்வமான உரும்பிராய் ஞான வயிரவ சுவாமி மீது கொண்ட பெரும்பக்தி அவர் ஆற்றிய பணியைத் துறக்கச் செப்துவிட்டது.
குருவின் வழிகாட்டலைப் பின் தொடர் ந் த சிவத்திரு பெர். கந்தையாக் குருக்கள் சமயக் கிரியைகள் செய்வதில் பொதுமக்கள் மனதைக் கவர்ந்தமை ஊரறிந்த உண்மை. அவரின் முன்னோர் களால் தாபிக்கப்பெற்று வழிபட்டுவந்த உரும்பிராய் ஞானவயிரவர் கோ பி ற் பூ  ைசக  ைள் நியமத் தவறாது செய்வதிலும் அதனை நன்கு நிருவகிப் பதிலும் குருக்கள் கண்ணும் கருத்துமாப் இருந்தார். வயிரவப் பெருமானிடம் வைத்திருந்த நம்பிக்கை பால் அப்பெருமான் உரையும் திருக்கோயிலை வைரக்கல்வினால் புதுக்கி அமைப்பித்ததோடு ஆலயத் தின் மகாமண்டபத்தில் நடேசருக்கான கோயிலும்

- 33 -
கட்டுவித்துப் பெருஞ்சாந்தி செய்து மகிழ்வுற்றார். தெற்குநோக்கிய வாயிலில் கோயில் கொண்டிருக் கும் நடேசப் பெருமானைத் தெருவிதி வழியே செல்
வோர் பார்க்கும் பொழுது,
சாட எடுத்தது தக்கன்றன் வேள்வியிற் சந்திரனை வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் தேட எடுத்தது தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம் ஆட எடுத்திட்ட பாதமன் றோநம்மை ஆட்கொண்டதே.
என்ற அப்பர் திருப்பாடலே அவர்களின் நினைவுக்கு ஓடிவரும்.
அல்லும் பகலும் வயிரவப் பெ ருமா னின் பேரருளை வேண்டிய குருக்கள் ஐயா, பக்தி பூர்வ மாகப் பூசைகள் செய்ததுடன் நிர்வாகத் திறமையி னால் பல புண்ணிய கைங்கரியங்களும் செய் துள்ளார். அவர் வழிபாடாற்றிய ஞானவயிரவர் கோயிற் பூசைகளை இன்றும் அவரது சந்ததி பினரே செய்து வருகின்றனர்.
சிவத்திரு பொ. கந்தையாக் குருக்கள் ஜிவந்த ராப் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த விரசைவரான திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் யாழ்ப்பாணத்துக்கு வரும்பொழுதெல் லாம் உரும்பிராய்க்கு வந்து, குருக்கள் ஐயாவை
ஒருமுறை பார்த்து விட் டே தமிழகம் மீள்வது வழக்கம்.
இந்தவகையில் மேற் குறிப்பிடப்பட்ட மூவரும் யாழ் மாவட்டத்தில் மாத்திரமன்றி, அதற்கு அப்பா லுள்ள மாவட்டங்களிலும் தமது சேவைகளை
5

Page 24
- 34 -
ஆற்றியுள்ளனர். இம் மூவருடன் கீரிமலைச் சிவத் திரு தற்பரானந்த (தற்பர)க் குருக்கள், சிவத்திரு த. செல்லையாக் குருக்கள், யாழ்ப்பாணம் கந்த மடத்தைச் சேர்த்த சித்தாந்த பண்டிதர் சிவத்திரு. சி. பரமேஸ்வர (தம் பிமுத் து) க் குருக்கள், சரசாலை சிவத்திரு வே. கந்தையாக் குருக்கள் ஆகியோரும் கல்வி, கேள்விகளிலும் கருத்துப் பரி மாறல்களிலும் தம்மாலான பங்களிப்பை ஈந்து விரசைவ மேம்பாட்டுக்கு உழைத்துள்ளனர்.
ஈழத்தின் வடக்கிலும் கிழக்கிலும் மலையகத் திலும் வாழும் ஆயிரக்கணக்கான விரசைவர் களின் நடைமுறைகள் இந்நாட்டில் பண்டு தொட்டுப் பேணி வந்த பழக்கங்களாகும். இவை கன்னட நாட்டுக் கலாசாரத்திலிருந்து சிறிது வேறுபட்டிருந்த போதிலும், நெடுங் காலமாய் இருந்து வந்த நடைமுறைகள் இந்நாட்டின் தனித்துவத்தை எடுத் துரைப்பனவாம்.
இங்கு வாழும் வீரசைவர்கள் கல்வி ஞான மும் கலை ஞானமும் மிக்கவர்கள் சுருங்கச் சொல்லின் இசை, நடனம், கூத்து இவற்றில் இவர் களுக்கு அதிக ஈடுபாடு உண்டு. கிராமியக் கலை, கலாசாரம், சமயச் சடங்குகள் என்பனவற்றை எளிமையுடன் வளர்ப்பதற்கு இவர்கள் பெரிதும் உதவுகின்றனர். இவர்களிற் சிலர் ஆலயங்களுக்கு அர்ச்சகர்களாகவும்,அலங்காரக்கலைஞர்களாகவும் சிவநெறித் தொண்டு செய்வதுடன் வேளாண்மை, வாணிகம் முதலிய அறவழித் தொழில்களும்

-35 -
ஆற்றுகின்றனர். அவை மட்டுமன்றி ஆசிரியப் பணி, அரசசேவைப் பணிகளிலும் முன்னின்றுழைத்துச் சமூகத் தொண்டுகள் செய்வதிலும் ஊக்கம் காட்டி வருகின்றனர்.
தீத் தெய்வ வழிபாடு (அக்கினி காரியம்)
தித் தெய்வ வழிபாடு மிகத் தொன்மையானது. இன்புறு தமிழின் இலக்கணம் வகுத்த தொல்காப் பியர் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ் நாட்டில் இது நிலவி வருகிறது. கொடிநிலை, கந்தழி, வள்ளி பெண் மூவித வழிபாடு இருந்த தெனத் தொல் காப்பியர் தமக்கு முன்னே வாழ்ந்த மக்களின் மரபு முறைகளை ஏற்று, அதற்க மைய நூல் செய்தவர். ஆதலின் அவர் ஆக்கிய தொல்காப் பியச் சூத்திரங்களில் தமது கருத்தாகச் சொல்லு மிடத்து ' என்மனார் புலவர் ' எனக் குறிப்பிடு
கின்றார். இங்கு கந்தழி என்பது தித் தெய்வ வழி
பாட்டை க் குறிப்பிடுகின்றது.
கொடி நிலை என்பது கீழ்த் திசைக் கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர் (துரிய) மண் டிலம் என்றும் வள்ளி' என்பது தண்கதிர் (சந்திர) மண்டிலம் என்றும் இவ்விரண்டுக்கும் இடையே புள்ள 'கந்தழி என்பது ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித் தானே நிற்குத் தத்துவங் கடந்த பொருள் என்றும் நச்சினார்க்கினியர் பொருளுரைப்பர். மேற்கூறிய மூன்றுக்கும் நடுநின்ற கந்தழி என்ற சொல் கந்து+அழி எனப் பிரிக்கப்பட்டு, தன்னைப் பற்றுவனவற்றை அழிக்கும் தன்மையுடையது எனப் பொருள்படும். தியானது தன்னைச் சேர்ந்தவற்றை

Page 25
- 36 -
அழிப்பதால் ஆன்மாவைப் பிணித்துள்ள மும்மலங் களையும் எரித்து, அதற்கு விடுபேற்றைக் கொடுக்க வல்ல மாசிலா அருவான பொருள். எனவே "கந்தழி என்பது ஈண்டு தீயைக் குறிக்கின்றது. இதன்? லேயே இறைவனுக்குக் கொடுக்கும் அவிப்பாகத்தை அக்கினியில் இடும் வழக்கம் நீண்ட காலமாய் இருந்து வருகின்றது.
ஆகவே பழந் தமிழர் பண்பாட்டை ஒட்டியும் சமயச் சடங்குகளைத் தழுவியும் ஆசாரியர் சீடனு டைய ஆணவம், கன்மம், மாபை ஆகிய மும்மலங் களையும் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என்னும் மூவித தத்துவங்களையும் அவற்றுக்குரிய சுத்தியின் போது எரித்து நாசம் செய்யும் படி மந்திராக்கினி இடத்தே வேண்டுதல் வழக்கம்.
விரசைவர் இலிங்க தாரணம் செப்பும் பொழுது தித் தெய்வ வழிபாடு செய்தே தாரனம் செய்யப்படுகிறது. அவ்வாறு தாரண திட்சை பெற்ற விரசைவருக்குரிய கிரியைகளில் அக்கிணி வழிபாடு வேண்டிய தன்று. ஆயின், இலிங்காய தரல்லாத சாமானிய விரசைவர்கள் மேற் குறிப் பிட்டவற்றின் சுத்தியின் பொருட்டு அது வேண்டிய தாகும். பொது விதியையும் சிறப்பு விதியையும் ஒன்றாகக் கருதி இடர்ப்படாது, மேற் சொல்லிய தீட்சை நிலை பெற்றவர்கள் அதற்கேற்றவாறு செய்து கொள்ளலாம்.

- 37 -
விரசைவ மரபினர் பூர்வக் கிரியையிலும் சமா திக் கிரியையிலும் அக்கினி வளர்த்தல் மேற் போந்த காரணங்களினாலேயே செய்ய ப் படுகின் ர து என்பதை மனதிற் கொள்ளுதல் மயக்கம் தீர்ப்ப தாகும்.
வெண்ணுரல் (உபவீதம்) அணிதல் வேதமோதி வெண்ணுால் பூண்டு வெள்ளையெருதேறிப் பூதஞ் சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார் நாத வெனவு நக்கா வெனவு நம்பா வெனநின்று பாதத்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.
எனப் பழனநகரத்தில் எழுந்தருளிய பரம்பொருளின் திருக்கோலத்தை அழகொழுகப் பாடியுள்ளார் ஆளுடையபிள்ளையார். உமை அம்மையின் ஞானப் பால் உண்ட ஞானக் குழந்தை வெண்ணுால் எனக்கூறு வது சிவபெருமான் அணிந்திருக்கும் பூணுரலையே குறிக்கின்றது. மார்பிலே வெண்ணுரல் அணிந்து, அரையிலே புலித்தோல் உடுத்து, வாயிலே வேதம் ஒலித்திட வெள்ளை எருதேறிப் பூதம் புடைதழப் பொலிவுடன் எழுந்தருள்பவர் பழனநகரத்து ஆபத் சகாயர். அப்பெருமானின் அருட்கோலத்தை நயமு ரப் படமாகக் காட்டுகின்றது ஞானசம்பந்தரின் நற்றமிழ்ப் பாடல்.
வெண்ணுரலைப் பூணுரல், முப்புரி நூல் எனத் தென்மொழியிலும் உப வித ம், யஜ்ஞோபவிதம் என வடமொழியிலும் குறிப்பிடுவர். உபநயனர் சடங்கின் போதே உபவிதம் அணியப்படுகிறது. வடமொழியில் உபநயனம் என்பதை உப-- நயனம்

Page 26
- 38 -
எனப் பிரித்துப் பொருள் கொள்ளுமிடத்து, உதவிக் கண் என்று பொருள்தரும். மனிதருக்கு இற்கையாய் உள்ள புறக்கண்களோடு அகக் கண்ணாகிய ஞானக் கண் பெறுதல் என்பதே உபநயனமாம். அந்நிகழ் வில் பூணுரல் அணிதல் இடம்பெறும். பூணுரல் என் பது முப்புரிகளாலானது. ஆன்மாவுடன் கூடிய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கி, வெள்ளை உள்ளம் உடையவராக்குதல் என்ற பொருளைத் தருவதே பூணுரல் அணிதலின் திரண்ட கருத்தாகும்.
சனாதன தருமத்திலுள்ள நான்கு வருணங் களில் முதல் மூன்று வருணத்தவரும் முப்புரிநூலை எப்பொழுதும் அணிந்திருக்கலாம். நாலாம் வருணத் தவர் பூர்வ, அபரக் கிரியைகள் செய்யும் பொழுது மட்டுமே அணிவர். விரசைவர் சிவவேடந் தாங்கி, சிவபிரான் அணிபவற்றைத் தாமும் அணிந்து, தம்மைச் சிவக்கோலத்தில் வைத்திருந்து வாழும் இயல்புடையர்; ஆதலின் அவர்கள் எப்பொழுதும் அணிந்திருக்கும் வழக்கம் ஏற்படலாயிற்று.
விரசைவக் கிரியைகள் யாவும் பூர்வக் கிரியை களாகக் கொள்ளப்படுவதால், சிவலிங்க ஐக்கிய மான ஒருவரின் உடல் குருவினால் சிவருபம் ஆக்கப் பெற்று, அதற்குச் செய்யப்படும் சமாதிக் கிரியைகள் பூர்வக் கிரியைகளாகும். கிரியை செய்யும் பொழுது கர்த்தா (உரிமைக்காரர்) பூணுரல் அணிந்திருக்க வேண்டும். கர்த்தா பூணுரல் அணித் திருக்கையில் குருவும் அணிந்திருப்பதே முறை.

- 39 -
விர  ைச வ க் கிரி யை எ து வா யி னு ம், அது பூர்வக் கிரியையாகவே கொள்ளப்படுதலின், சமாதிக் கிரியையில் கர்த்தாவானவர் பூணுரலை இடது தோளிலேயே அணிதல் வேண்டும். கர்த்தா வாகிய சீடன் பூணுரலை அணிந்திருக்கையில் ஆசாரியரும் அதணிந்திருத்தல் வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.
சாமானிய விரசைவருக்கு மும்மல நீக்கத்தின் அடையாளமாகிய இஷ்டப் பிராண பாவலிங்க தாரணத்தின் போது நூலை மாலையாகப் போட்டு, அதில் இட்டலிங்க பந்தனம் செய்ய ப் படு ம் இ லி ங் கா ப த ர் குருத்துவம் (ஆசாரிய அபிடே கம்) பெறும் பொழுது வெண்ணுரலை இடது தோளில் அணிந்து வலப்புறமாகத் தொங்கவிடுவர். அவ்விதம் அணிந்துள்ள நூலில் இட்டலிங்கத்தைப் பந்தனம் செய்யலாம். அவ்வாறு பந்தனம் செய்த இலிங்கத்தைக் கொப்பூழின் கீழ் தாழவிடாது கவனித்தல் அதனை அணிந்திருப்பவரின் கடமை ஆகும் இட்டலிங்கம் அணிந்திருக்க வேண்டிய இடங்களுள் நாபியும் (கொப்பூழும்) ஒன்றாதலின் வெண்ணுரலிற் பந்தனம் செய்த இட்ட்லிங்கத்தைக் கொப்பூழில் தாங்கி வைத்திருத்தல் வேண்டும்.
விரசைவ சமாதிக் கிரியைபில் கர்த்தா வெண் ணுரல் அணிவது விரசைவக் கிரியை ஒழுங்கு முறை யும் பழைய மரபுமாகும். அதனால் கிரியைசெய்யும் பொழுது குருவும் சிட்னும் வெண்ணுரலை அணிந்

Page 27
- 40 -
திருத்தல் வேண்டும். இதுவே முன்னாளில் தமிழ் நாட்டு ஆசாரம். விரசைவ ரொருவர் தோற்றத்திற் சிவனை ஒத்திருப்பர் என்பதைத் திருமந்திரம் முதலிய வற்றின் வாயிலாக அறியலாம். வடமொழியில் சிவபெருமானின் தோற்றத்தைக் குறிப்பிடுகையில், அப்பெருமானின் திருத் தோளில் இலங்கும் நூல் * சுக் கில ய ஜி ஞோப வித ம். ' என்று சிவபெருமானின் தியான சுலோகத்திற் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் ' ஞான திஷ்டா ஞான பஜ்ஞோப விதிந; ' என்றும் ' பிரம்ம பாவமிதம் சூத்திரம் தாரயேத் ' என்றும் இ லிங் கே 7 ப நிடதத்தில் பூணுரல் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது.
மேற் குறிப்பிட்ட உபநிடத சூத்திரங்களின் தமி ஜாக்கத்தை ஈண்டு கவனிப்போம்: "இதம் பிரம்ப பாவம் சூத்திரம் தாரயேத்' - முதன்மைத் தன்மையைக் குறிக்கும் முப்புரி நூல் (குரு-ஆசாரியர் - அ னரி ந் தி ரு த் த ல்
வேண்டும்). "ஞான சிஹிநோ ஞானதிஷ்டா ஞான பேஜ்ஞோப விதிந:' - ஞானமாகிய குடுமியும் ஞானத்
தைக் கொடுக்கும் நிட்டை (சமாதி) கூடலும் (ஞான நிலைக்கு ஆளாக்கும்) கிரியைக்குரிய உபவிதமும் (குரு அணிந்திருத்தல் வேண்டும்). 'துவி ஹஸ்தம்ம்ேஸ்தஞ்ச சுக்கில யஜ்ரோப விதிந:' - இருகைகளோடும் பத்ம (தாமரை) ஆசனத்திலிருந்து கிரியைக்குரிய வெண்ணிற உபவிதமும் (குரு அணிதல் வேண்டும்).

- 41 =
பலூறிர் சூத்திரம் தியஜேத் வித்வான் போகமுத்தம மாஸ்திதம் ' பஹறிர் - வெளியே, தத்திரம் - பூணுரல், தியஜேத் - விடுதல், வித்வான் - ஞானி, ஆஸ்தி - செல்வம்,
ஞானியாய் உள்ள வன் வெளிப்படையாக அணிகின்ற பூணுரலைத் தவிர்த்து விடுவான். அவனுக்கு யோக நெறியே உத்தமமான செல்வம் ஞானி பூணுரல் அணிவதைத் தவிர்த்து விடுவான் என்பதால் ஏனைய ஆசாரியர் நூல் அணிவர் என்பது அருத்தாபத்தி
இவ்வாறு வெண்ணுரல் அணிந்திருத்தல் பற்றிய பொருள் பொதிந்த கருத்துக்கள் இலிங்கோப நிடதத்திற் குறிப்பிட்டிருத்தல் நோக்கத்தக்கது.
இன்னும், கற்றறிந்தடங்கிய சாண்றாண்மை புள்ள ஆசாரியர் இறை பக்தியும் உயிர்களிடத்துக் கருணையும் கொண்டவராவர். உயிர்களிடமுள்ள அன்பின் மிகுதியை வெளிக்காட்டும் தண்ணளி உடையவரை அந்தணர் எனக் கூறுதல் ஆன்றோர் ճւ Քք 3, .
" அந்தனர் என்போர் அறவோர்மற் றெல்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்' என்பது வள்ளுவர் வாக்கு இக்குறட்பாவில் வரும் அந்தணர் ' என்ற சொல்லுக்கு உயிர்கள் மாட்டு அழகிய தண்ணளி உடையவர் எனப் பரிமேலழகர் பொருள் கூறுவர். அன்பும் அறமும் பண்பெனக் கொண்ட அந்தணரின் வடிவத்தைக் குறிப்பிடவந்த தொகாப்பியர்
தேசிய திரிகைப் ,ெ

Page 28
- 42 -
' அந்த னாளர்க் குரியவும்.'
(தொல், பொருள். மரபியல்)
என்ற தத்திரத்தில் அந்த ண 7 எார் க்கு உரியன வென்பது முந்நூலும் மணியும் போல்வன என்பர் பேராசிரியர். மேலும் ஆசாரியரின் தோற்றப் பொலிவைக் கூறுமிடத்து
" தேசிகர்க்குச் சின்னமு மைந்துண்டு; திருந்றொன்
றாசரிக்குங் கண்டிகையுமொன் றாகும்."
事 非 事
" உரித்துப விதமு முத்தரியந் தானு
முரித்துட்டி னிடந்தா னும் '
தேசிகர் -ஆசாரியர், கண்டி-உருத்திராக்கம், உபவிதம் பூனூல். உட்டிணிடம்-உஷ்ணிஷம் என்ற வட சொல்லின் திரிபு, தலைச் சிலையைக் குறிக்கும். அதாவது விதிப்படி செய்யப்பட்ட தலைப்பாகை எனப் பொருள்படும்.
ஈண்டு ஆசாரியர் இலக்கணம் கூறுமுகத்தால் ஆசாரியருக்கு உரிய மூத்திரைகள் ஐந்து; அவை திருநீறு, கண்டிகை, பூணுரல், உத்தரீயம், தலைச் சீலை (தலைப்பாகை) என்பனவாம். இவற்றைக் குறிப்பிடும் மேற்போந்த குறட் பாக்கள் சைவசமயநெறி என்ற நூலிலுள்ளன. இதனை ஆக்கியவர் சிதம்பரம் மறைஞானசம்பந்த நாயனார். இதற்கு நாவலர் பெருமான் எழுதிய புத்துரையின் தெளிவையே மேலே கண்டோம். இதிலிருந்து ஆசாரியர் அணிந் திருக்க வே ண் டி ய வ ற் று ன் வெண்ணுரலும் ஒன்ரென்பது போதரும்.

- 43 -
விரசைவர் வெண்ணுரல் அணிவதை மாற்றத் துணிந்தவர் வசவதேவர். அவர் கன்னட நாட்டு வேதியர் குலத்தவர். மக்கள் வாழ்க்கை பல்வேறு நிலையிலும் செழிக்கவேண்டு மென்று வசவண்ணா விரும்பினார். அவரது காலத்திலே நாட்டில் நிலவிய வருணாச்சிரம முறைகளை முற்றாக வெறுத்தார். தனது குல ஒழுக்கத்துக்கு அடையாள மாய் இருந்த முப்புரிநூல் அணிதலும் காயத்திரி செபம் செய்தலும் வேண் டுவ தி ல் லை என்று விடுத்தார். ஆயினும், சிவ வழிபாட்டைக் கைவிட வில்லை. அதனால் பக்திநெறியில் முன்னின்று ஒழுகும் விரசைவத்தைச் சார்ந்து, இட்டலிங்க வழிபாடாற்றினார். விர  ைச வத்தில் விருப்பம் கொண்ட வசவதேவர் அதனைப் பல துரையிற் புனரமைத்துள்ளார்.
வசவதேவரின் விரசைவ கலாசாரம் கன்னட நாட்டில் நன்கு கைக்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னைய ஆசாரியர்கள் கடைப்பிடித்த விதிமுறை களும் ஆங்குண்டு. வசவரின் ஆக்கப் பணிகள் காலத்துக்கு ஏற்றதெனக் கருதியதால் விழிப்புற்ற விரசைவ சமயாசாரம் தமிழ் நாட்டிலும் பரவலா பிற்று அக்கலாசாரத்தைத் தமிழரது பண்பாட்டுக்கு ஏற்பச் செம்மை செய்து வாழ்ந்தனர் தமிழகத்து бу?дубоg-буу үї.
ஈழத்து விரசைவர் தமிழ் நாட்டுக் கலாசா ரத்தை அடியொற்றிப்பும் ஈழத்தில் பலகாலமாய் நடை முறையில் இருந்தவற்றைப் பின்பற்றியுமே தமது சமய ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக் கின்றனர்.

Page 29
سس- 44 ---
திருப் பொற்சுண்ணம் :
சூர்னோத்சவம் என்னும் சுண்ணம் இடித்தல் இறைவன் திரு ஷு ரு r க்கு மஞ்சனம் ஆட்டுதற்கு வேண்டிய மஞ்சள், அறுகு முதலியவற்றை உரலி விட்டுப் பொடி (சூரணம்) ஆக்குதற்குச் செய்யப் படுகிறது. பண்டைத் த மி ழ க த் தி ல் இவ்வாறு பொற்சுண்ணம் இடிப்பதைக் கண்ணுற்ற மாணிக்க வாசகர் அதனை இடிக்கும் மங்கையரை நோக்கி இரை புணர்வுடன் பெருமான் புகழ்பாடி இடிக்குமாறு அறிவுரை கூறுகின்றார்:
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந்து அம்பவளம் துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடி தேடுமின் எம்பெருமா னைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு
ஆடப்பொற் கண்ணம் இடித்துநாமே.
என்பது திருப்பொற் சுண்ணப் பாடலாகும். இது சிந்தையும் செயலும் புரவழிச்செல்லாது, தானன்றி நிற்றலாகிய ஆனந்த மனோலயத்தில் நின்று பாடப் பெற்றதாகும்.
இத்தகைய இரை இன்பஞ் சொட்டும் இனிய பாடலைக் கேட்டுப் பழகிவந்த மக்கள் இன்றும் அவ்வாறான நடைமுறைகளைச் செய்து வருகின்ற னர். விரசைவரின் சமாதிக் கிரியையில் குருவான வர் சிவலிங்க ஐக்கியமானவரின் உயிர் நித்த உடலை முதலிற் சிவரூபமாக்குவார். அதனைத்

- 45 -
தொடர்ந்து அதற்கு நீராட்டுச் செய்தலான அபி டேகத்துக்குரிய மஞ்சள், அறுகு முதலிய பொருள் களை உரலில் இட்டுப் பொடி செய்யப்படுகிறது.
சிவைக்கியமானவரின் உடல் சார்ந்த தது, கரணம், புவனம், போகம் ஆகிய பற்றுக்களை இடித்து நொருக்கி இல்லாமற் செய்தல் என்னும் பாங்கில் பொற்சுண்ணம் இடித்தல் அமைகிறது. உடல் தொடர்பு நீக்கப்பட்ட ஆன்மா சிவலோகஞ் சேரத் தகுதியாகும் வேளையில் அவ்வான்மாவுக்கு அங்கு (சிவலோகத்தில்) வரவேற்பு நிகழும். அத் நிகழ்வை வெளிப்படுத்தும் ஒசையும் பொருள் விளக்கமும் திருப்பொற் சுண்ணப் பாடல்களிற் பொதிந்துள்ளன. அதனால் இறையுணர்வு செறிந் துள்ள அப்பாடல்கள் பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது படிக்கப்படுகின்றன.
பொற்சுண்ணம் இடித்தல் உயிர் நீத்த உடலுக்கு நீராட்டுவதன் முன் செய்யாமற் பின்னர் செய்யும் வழக்கமூழ் உண்டு. அவ்வாறு நிகழ்தல் அவ்வுடல் த n நீ கிருந்த ஆன்மாவின் மும்மல நாசத்தைக் குறிக்கும் வகையிற் செய்யப்படுகிறது.
இவ்விரண்டு முறைகளுள் உடலை நீராட்டு தற்கு முன் பொற்சுண்ணம் இடித்தல் (புத்தி, அணுப வங்களுக்கு இயைவதாகும். அவ்வாறன்றிப் பின்னர் செய்வது அலங்காரத்துக்கு முதன்மை அளிப்பதாக அமைகின்றது. இதனை ஒருமனதாக, ஒத்த கருத் துடன் சமூக ரீதியாக இணைந்து செய்தல் நன்று.

Page 30
- 46 -
இலிங் கா ப த ருக்குத் தாரண திட்சையின் போது விசேட கிரியைகள் இடம் பெறுவதால் அத் திட்சை பெற்றவர்களின் சமாதிக் கிரியையிலே பொற் சுண்ணம் இடித்தலாகிய நிகழ்வு வேண்டிய தில்லை. அவர்கள் காயத்துள் மென்மேலும் இறை பின்பம் காண்பவர். மற்றையோர் மாயையினால் மூடப்பட்டு அதன் மறைப்புக்கு உள்ளாவதுண்டு. அத்தகைய இயல்பினருக்கு இலிங்காயதருக்கான கிரியையைச் செய்தல் அவசியமன்று.
அச்சூழ்நிலையில் ஒடிமீள்கென ஆடல் பார்த் திருக்கும் இறை வடிவாகிய குருவானவர் தாரண திட்சை பெறாதோர் மீது கொண்ட இரக்கத்தால் அவர்களைப் பக்குவர் ஆக்குதற் கேற்ற கிரியையைச் Qaróoró。
அதற்கமைவாகவே யாழ்ப்பாணம் ஐயனார் கோயிலடியைப் பிறந்தகமாகவும் கிரி ம ன ல யை வாழ்வ க மாக விy ம் கொண் ட சிவத்திரு சி. ஐயம்பிள்ளைக் குருக்கள், அவரது முன்னோராகிய சிவத்திரு சிவ சித ம் ப ரக் குருக்கள், சிவத்திரு நாகமுத்துக் குருக்கள் ஆகியோர் சமாதிக் கிரியை பில் அக்கினி காரியம், தர்னோத்சவம் என்பவற் ரைச் செய்தே தமது கிரியைகளை நடத்தினர்.
பின்னாளில் சிவத்திரு ஐயம் பிள்  ைள க் குருக்கள் கன்னட நாட்டுக்குச் சென்று, அங்கு வசவேசர் ஏற்படுத்திய விரசைவ கலாசாரத்தைக் கண்டு அதனைத் தழுவித் தாம் முன்னர் நடந்து கொண்ட முறைகளை மாற்றிக் கொண்டார்.

- 47 -
தமிழக விரசைவருக்குத் தமிழ் நாட்டிலுள்ளோர் அனுசரித்து வந்த வீரசைவ கலாச ரமே வேண்டிய தாகும். ஈழத்தைப் பொறுத்த வரையில் தமிழக விரசைவ கலாசாரத்தை அனுசரித்து நடப்பதோடு இங்கு ப ல் லா எண் டு களாக நடைமுறையிலுள்ள கலாசாரத்தைக் கடைப்பிடித்து வருவதும் கவனிக்கத் திமிக்கி தி.
வீர சைவர்களிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் :
விர சைவ நெறியின் அடிப்படை உண்மையை நோக்குமிடத்து, அது ஒரு தன்னலம் பேணும் நெறி பன்று; அத்துடன் கொடுக்க ஏற்கும் அல்லது கேட்டு வாங்கும் நெறிப்பும் அன்று விரசைவ நெறி சமூக நலத்தை நோக்காகக் கொண்டது. விரசைவர் நாள் தோறும் சிவ விங் க வணக்கம் செய்ய வேண்டும் அ த் து உ என் அறவழியில் ஈட்டிய செல்வத்தைத் தக்காருக்கு ஈந்து, சங்கம வழிபாடு செய்வதிலும் கருத்துடையராப் இருத்தல் அவசிய மாகும். விரசைவத்தைச் சார்ந்தவர்கள் உண்மை பேசி, உறுதியுடன் உரைத்து, நெஞ்சுக்கு நீதியாக நடந்து கொள்ள வேண்டும். அங்கலிங்கியாய் இருந்து கொண்டு மனச்சான்றுக்கு மாறானவற்றில் ஈடுபடுதல் ஏற்றதன்று.
" தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்,
தன்நெஞ்சே தன்னைச் சுடும். "
半 事
" புறந்தூய்மை நீரான் அமையும் அகந்துய்மை
வாய்மையால் காணப் படும்"

Page 31
- 48 -
என்பர் செந்நாப்போதார். அதாவது ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லக் கூடாது. பொய் சொன்னால், அதைக் குறித்துத் தன் செஞ்சமே தன்னை வருத் தும் மேலும் புறத்தே துரப்மையாக விளங்குதல் நீரினால் ஏற்படும்; அதுபோல், அகத்தே துரப்மை யாக விளங்குதல் உண்மை பேசுதலால் உண்டாகும் என்பதைத் தெய்வ நீதியாகக் கொண்டொழுகுதல் சால்பாகும்.
வீர சைவ நூல்கள் :
விரசைவம் பற்றித் தமிழிலே விரிவாகக் கூறும் நூல்கள் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் செப்த பிரபுலிங்க விலை, சித்தாந்த சிகாமணி ஆகிய இரண்டும் முக்கியமானவை. அத்துடன் வசவ புராணம் என்ற ஓர் அரு மை பா ன நூலும் உண்டு அதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. வட மொழி பிலே சிவயோகி சிவாசாரியாரின் வீரசைவ சித்தாந்த சிகாமணி, மொக்கப்பா மா பிதேவரின் அநுபவ சூத்திரம் அத்துடன் இலிங்கோபநிஷதம் என்பவை குறிப்பிடற்
լ է Till եւի :
மேலும், அண்மைக் காலத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும் சென்னைப் பல்கலைக் கழ கத்திலும் மெய்யியல்துறை விரிவுரையாளராய் இருந்த வீரசைவ சிலரான கலாநிதி வை. இரத்தின சபாபதி M. A. Ph.D. அவர்களால் தொகுக்கப்பட்ட வீரசைவம் என்ற ஆய்வு நூலும் விரசைவம் பற்றிய
பல செய்திகளை வெளிப்படுத்துகின்றது.
 

- 49 -
தமிழ் வேதமாகிய பன்னிரு திருமுறைகளிலே வீர சைவ நெறி முறைகளின் உண்மைகள் தொடர் பாக மணிவாசகரின் திருவாசகத்திலும் திருமூலரின் திருமந்திரம் - ஏழாம் தந்திரத்திலும் குறிப்பிடப் பட்டிருப்பது கவனிக்கத் தக்கது.
கன்னட மொழியில் விரசைவம் சார்ந்த நூல்கள் பலவுண்டெனச் சொல்லப்படுகின்றது. அவை தமிழில் மொழிபெயர்க்கப் பெற்று வெளி வருதல் வேண்டும்.
பொதுவகையிலே விரசைவ இயக்கத்தின் உயர் பிyக்குத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள், குமாரதேவர், சாந்தலிங்க சுவாமிகள், திருப்பேதர் சிதம்பர சுவாமிகள் போன்ற சான்றோர் எழுதிய தமிழ் நூல்கள் வாயிலாகத் தலையாய தொண் டுகள் செய்துள்ளனர். இவர்கள் நிறுவிய மடங்கள் இன்றும் தமிழகத்தில் உள்ளன.
வீர சைவ மடங்கள்:
இப்பொழுது தமிழ் நாட்டிலுள்ள விர  ைச வ மடங்களில் முக்கியமானவை புதுவையை அடுத்த பொம்மை புரத்திலுள்ளதும் திருக்கோவலுரர் ஞானி யார் மடமும், திருக்குடந்தையிலுள்ள பெரியமட மும் ஆகும். அத்துடன் கன்னட மாநிலத்தில் ‘பெங்க ரிலும் மைசூரிலும் விரசைவ மடங்கள் நிறுவப் பற்றுள்ளன. இவ்வாறு ஈழத்திலும் பொது நோக் குடன் மடங்கள் நிறுவி, வீரசைவ மரபினைப் பேணுதல் விரும்பற்பாலது.
நிறைவுரை:
சிவபெருமானைப் பரமபதியாகப் போற்றிடும்
நெறியினைக் கொண்டது விரசைவம். சக்தியை விட்டு வேறாகாத சிவபிரானின் குறியாக அமைந்
سیاه و با این انقلال آنها را

Page 32
- 50 -
திருப்பது சிவலிங்கம். இதனைச் சதாசிவத் திருமேனி என்று சொல்வர்(சிவபெருமானை அல்லும் பகலும் அனவரதமும் தொழுபவர் வீரசைவர்) அவர்கள் அப்பெருமானைப் பிரிந்திருக்க மனமின்றித் தமது அங்கத்தில் அணிந்திருப்பர். அவ்வாறு இலிங்கதாரி களாய் இருப்போர் இலிங்காயதர் ஆவர்.
இலிங்காயதர் நின்றும் இருந்தும் கிடந்தும் நடத் தும் சிவசிந்தனைசெய்பவர். சிவநினைப்பன்றிப் பிறி தொன்றும் நினையாத வீரசைவர் வைதிகக் கட்டுப் பாடுகளுக்குள் முற்றும் அமையாதவர்.
செய்யும் தொழில் எதுவா (பினும் அதனைச் சிவப் பணியாக மதித்து நடப்பதே வீரசைவக் கோட்பாடு. ' தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலி பூர் அரனே ' என்ற நோக்குடன் பஞ்சாசாரம், அட்டாவரணம், சடுத்தலம் ஆகிய படிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகுதல் விரசைவக் கொள்கை ஆகும்.
விரசைவர் சிவ ஐக்கியமாதலை (சாமரஸ்ய முத்தியை)க் குறியாகக் கொண்டு ஒழுகுதல் வேண் டும். அவர்கள் தனி அறமும் பொது அறமும் பேணி உலக நன்மைக்காக இறைவனைத் துதிக்கும் இயல்
9.
'தரிக்கிலேன் காய வாழ்க்  ைக ச ங் க ரா போற்றி ' எனப் பணியும் சீரிய பண்பு விரசைவத் தி ல் அழுத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சிவநெறிக்குச் செம்மை சேர்க்கும் விர சைவர் அனைவரும் தமது மரபினை ஐக்கியத்துடன் பேணுதல் கடனாகும்.

வீரசைவம் வளர்த்த சான்றோர் 1. அல்லமாப்பிரபு தேவர்
ஆன்மாக்கள் அனுபவிக்கும் உலகியல் இன் பத் தினையும் அடைய வேண்டிய முத்திப்பேற்றினையும் அளிப்பவர் பரம் பொருளா வார். அவரை இறைவன் என்று உலகோர் எத்துவர். அவ்விறைவன் மானிடச் சட்டை தாங்கி அல்லமதேவர் என்ற பெயருடன் புவனியில் திரி ந்து வீரசைவத்தை வளர்த்துள்ளார் என விரசைவம் சார்ந்த நூல்கள் இயம்பும். கண்டோர் காமுறும் கட்டழகு, இளமை, பொலிவு அனைத்தும் திரண்ட வொரு மானி ட வடிவமே அல்லமதேவர் ஆவார். அவரது காலம் கி. பி. 12ஆம் நூற்றாண்டு ஆகும்.
அல்லமதேவர் தோன்றிய வரலாற்றை ஆயும் போது உலகம் உய்யத் தோன்றிய முருகனின் வரலாறே நினைவுக்கு வரும். அதாவது அரக்கர் ஆதிக்கத்தில் அமரர் நலிவுற்றிருந்த வேளையிலே சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து முருகப் பெருமான் தோன்றினார் என்று கந்தபுராணம் கூறும். அவ்வாறே விர  ைசவ மதம் சோர் வுற்றிருந்த போது தென்னகத்தில் வள்ளிகாவை என்ற உள்ளில்ே நிராங்காரன், சுஞ்ஞானி என்ற இரு வரும் இல்லறம் நடத்தி

Page 33
- 52
" மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு '
என்ற வகையில் கொஞ்சி மகிழக்குழந்தைச் செல்வம் வேண்டி இறைவனிடம் முறையிட்டனர். தமது எண் ணம் நிறைவெய்தற்பொருட்டு நிராங்காரன் மனதை ஒருவழிப்படுத்தினார். அத்துடன் அவரின் சிந்தனை இறைவனிடம் பதிய ஒன்பது திங்கள் சிவயோக சமாதியில் இருந்தார்.
நிராங்காரனின் கடுந்தவம் காரணமாக அவரது நெற்றியில் இருந்து ஒளி திரண்டு குழந்தை வடிவிலே வெளியில் வந்து கிடந்தது. அச்செல்வக் குழந்தையே அல்லமாப்பிரபு எனப் பிரபுலிங்கலீலை கூறும்
அல்லமாப்பிரபு என்ற தெய்வக் குழந்தை தோற்றுவிக்கப் பெற்றதிலிருந்து ஒர் உண்மை புலனாகின்றது. அதாவது இறைவனால் மட்டுமே முருகன் போன்ற தொரு குழந்தையைத் தோற்று விக்கலாம் என்பதோடல்லாமல், மானிடராலும் அவ் வாறு ஒரு குழந்தையை அளிக்க இயலும் என்பதற்கு அல்லமாப்பிரபு தோற்றுவிக்கப் பெற்ற வரலாற்றி லிருந்து தெரிய வருகின்றது.
கி. பி. 12ஆம் நூற்றாண்டிலே விரசைவ வளர்ச் சிக்காக உழைத்தவர்களுள் அல்லமதேவரும் வசவ தேவரும் குறிப்பிடத் தக்கவர்களாவர். அவர்கள் இரு வரும் ஊரூராப்த் திரிந்து வீரசைவ மேன்மை களை மக்கள் மனதிற் பதியச் செய்துள்ளனர்.

- 53 -
விரசைவ மரபின்படி சங்கம வழிபாடும் மகேசுர பூசையும் விரசைவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மூக்கிய நடை முறைகளாம்.
இவற்றில் சங்கமர் வழிபாட்டைப் பொன்னே போல் போற்றியவர் அல்லமதேவர். சிவனடியார் களான சங்கமரை மகேசுரர், மாகேசுரர் என்றெல் லாம் கூறுவதுண்டு. மகேசுர பூசையின் சிறப்பை நேராக நின்று விளக்கிக் காட்டியவர் அல்லமதேவர். இவ்வுண்மையை அவர்காலத்தவரான வசவதேவர் மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.
ஒரு முறை வசவர் மாளிக்கைக்கு அல்லமதேவர் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற் கமைய விருந்தாளியாக வரும் அல்லமருக்கு மாத் திரமன்றிச் சங்கமர் பலருக்கும் அங்கு உண வு தயாரிக்கப் பெற்றிருந்தது. குறித்த அந்நாளன்று அல்லமதேவரின் வரு கை தாமதமானது. அவர் வருகையை எதிர்பார்த்திருந்ததால், அங்கு கூடி பிருந்த சங்கமர் பசியால் வருந்துவதை வசவர் பொருட்படுத்தவில்லை. அல்லமர் வந்ததும் அவரை வரவேற் பதிலேயே அன்ை வரும் கவனம் செலுத்தினர். அதனைக்கண்ட சங்கமர்கள் கோபங் கொண்டு உணவு அருந்தாமல் வெளியே சென்று GF: GÖTT? .
அல்லமதேவர் அதனை அறியாது தமக்கு அளிக் கப்பட்ட உணவை உட்கொண்டார். பின்னர், அங்கு
நிகழ்ந்த செ ய் தி அ வருக்கு த் தெரியவந்தது. உண்ணாம ல் கென் ர வர்களை உள்ளே அழைத்து

Page 34
- 54 -
வருமாறு அயலே நின்றவர்களிடம் அல்லமர் சொன் னார். அதன்படி வெளியே சென்ற சங்கமர்களை அழைத் தபோது, ' கை, வாப் தொடாமல் உணவு அருந்திவிட்டோம் ' என்று அவர்கள் கூறினர்.
என்னே புதுமை செந்தியிலிட்ட அவியுணவு தேவருக்கு அமுதம் ஆனாற் போல் சங்கமருக்காகச் சமைத்த உணவு அல்லமர் உண் டதும் தமது வயிறு பூரித்து விட்டதாகச் சங்கமர்கள் கூறினர். அவ்வாறு அவர்களின் வயிறு பூரித்தமை அல்ல மாப்பிரபு தேவரின் அதிதீவிர பக்குவத்தையே காட்டுகிறது.
' உலகி லொருவன் சிவயோகி உண்டதம்ம சராசரங்கள்
அசிகி லுயிர்களெலாமுண்ட தாகும். எ ன் று பிரபுலிங்கலீலை சிறப்பித்துக் கூறும் இதனை
" அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரஞ் செய்து முடிக்கிலென் பகரு ஞானி பகலூண் பலத்துக்கு நிகரிலை என்பது நிச்சயந் தானே " எனத் திருமந்திரமும் அறுதியிட்டுக் கூறுதல் கவனிக் கத் தக்கது.
ஆண்டவன் அன்பர் களின் பக்தி வலை பிற் படுபவர்; அத்துடன் மெய் யடி யார் களின் துன்பம் களைப்புத் தூய்மையர். அவர் மக்களை ஆட் கொள்வதற்காக மனித வடிவில் மண்ணில் தோன் றுவார் என்பது சமய நூல் துணிபு.

பயிற் கூறப்படும் கற்பனா சொரூபி ஆகிய அல்லம
- 55 -
* பக்தி வலையிற் படுவோன் காண்க."
என்பது திருவாசகம்,
இந்தவகையில் மண்ணுலக மாந்தரை ஆட்கொள்வதற் காகத் தோற்றிய வடிவமே அல்லமாப்பிரபு தேவர் எனச் சிவப் பிரகாச சுவாமிகள் கூறுவர். பிரபு லிங்க லீலை
தேவர், மாயாதேவிக்குக் கட்டுப்படாது மத்தளிகனாக வும் அக்கமாதேவியின் பக்திக்குக் கட்டுப்படும் ஞானி பாகவும் தம்மைக்காட்டிக் கொண்டார். இங்கு கூரப் படும் அக்கமாதேவியின் பக்தி தி ருத்தொண்டர் புராணத்திற் பேசப்படும் காரைக்கால் அம்மையாரின் பக் திக்கும் நம்மாழ்வார் வரலாற்றில் இடம் பெறும் ஆண்டாள் நாச்சியாரின் பக்திக்கும் ஒப் பா னது என விரசைவர் புகழ்ந்துரைப்பர்
கன்னட நாட்டு வசவண்ணருக்கும் அவ ர து காலத்திலிருந்த விர  ைச வ மெய்யடியார்களுக்கும் அல்லமதேவர் காட்சிகொடுத்துள்ளார். அல் ல மர் மெய்யடியார்களின் அன்புக்குக் கட்டுப்பட்டும் போற் றப்பட்டும் தேடப்பட்டும் அவர்களை நல்வழிப்படுத் தியும் மானிலத்தில் உலாவியும் வந்துள்ளார்.
அல்லமாப்பிரபு மாயையை வென்ற திறமும் மகேசுர
பூசையை மெச்சிய மாண்பும் அன்பர்க்கு எளிய
ராப்த் தோன்றிய சிறப்பும் இங்கு சுருக்கமாகக்
குறிப்பிடப்பட்டுள்ளன.
ஈ எண்டு அல்லமாப்பிரபு எ ன் ற சொல்  ைல அல்ல + மா + பிரபு என மூன்றாகப் பிரித்து, பின் வருமாறு பொருள்கொள்வோம்:

Page 35
- 56 -
அல்ல - மாயையை அல்லவென - தி லை ய ர் ர பொருளென - மறுக்கப்படுவது.
மா - பெரிய, மகத்துவமான,
பிரபு - செம்மை சான்ற முதற் பொருள்.
அதாவது மாயையை அல்லவென மறுக்கும் மகத்துவ முதற் பொருளே அல்லமாப்பிரபு எனப்பொருள்படும்
ஆகவே தொட்டியின் நீரில் தோன்றும் சந்திரன் அதற்குள் கட்டுப்பட்டுக் காட்சி ய எளி ப்பினும், சீவாத்மா மாயையினிடத்தும் மாயை வடிவங்களிடத் தும் அகப்படுவது போல் தோற்றி, அதற் க ப் பா லுள்ள வானத்துச் சந்திரனைப் போல் அவற்றை நிலையற்றன வென்று காணச் செய்து, கடந்து நிற்கும் மகத்துவமான இலிங்கமாகிய செம்பொருளே அல்லமதேவர் என்பது உணரற்பாற்று. விரிவைப் பிரபுலிங்கலீலை, வசவ புராணம் முதலிய வற்றில் եյ միմյ եմ. -
| வசவதேவர்
விரசைவத்தின் வளர்ச்சிக்கும் அதன் மேம்பாட் டூக்கும் உழைத்துசான்றோர் வரிசையில் வசவதேவர் மிக முக்கியமானவர். அவர் பழைய மூடப் பழக்க வழக்கங்களையும் வர்ணாச்சிரமக் கோட்பாடுகளை பும் இறுகப் பிடித்து வந்த மக்க எளிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். மக்களைப் புதிய பாதையில் ஈடுபடச் செய்தற்குத் துணிவையே

- 57 -
துணையாகக் கொண்டார். அத்துடன் தனது செயற் பாடுகள் அனைத்தையும் செயல் முறையில் காட்டி வாழ்ந்த திறமையும் அவரிடம் இருந்தது.
சைவநெறியில் வீரம் செறிந்தபோதனைகளைச் சாதனைகள் மூலம் வெளிக்காட்டிய வசவதேவரை வசவேசர், பசவர், வசவண்ணா, வசவையா என் ரெல்லாம் வாய் இனிக்கச்சொல்வதில் அவர்காலத்து மக்கள் பெருமகிழ்ச்சி எய்தினர்.
வசவதேவர் கர்னாடக மாநிலத்திலே 12ஆம் நூற்றாண்டில் மாதரஸா என்ற வேதியச் சிவனடி யாருக்கும் மாதலாம்பிகா அம்மையாருக்கும் தவப் புதல் வராகப் பிறந்தார். பெற்றோர் இவரின் இயல் பான குணத்தினை அறியாது அன்பாக வளர்த் தனர். அவர்கள் வசவருக்கு எட்டு வயதானதும் வேதியர் குலத்துக்கு அடையாள மாகிய முப்புரி நூல் அணிவதற்கு ஏற்பாடு செய்தனர். அப்பொழுது அந்நூல் தனக்கு வேண்டியதில்லை எனக் கூறி, அதனை அணியாது விட்டார்.
வர்ணாச்சிரம தர்மம், சமய சம்பிரதாயங்கள், ஆண் - பெண் வேறுபாடுகள், ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத் தாழ்வுகள், தீட்டுத் - து ட் க்கு கள், சாதிப் பிரிவுகள் யாவும் சமூகத்தில் இருப்பதை வசவதேவர் முற்றாக வெறுத்தார். அதே வேளையில் புதிய சமுதாயம் ஒன்றை உருவாக்க வேணவாக் Gatão Tri,
8

Page 36
- 58 -
சாதி ஒழிப்பும் க ம த ர் மக் கொள்கைகளும் மூளை கொள்ளு முன்னரே வசவண்ணா அவற்றைக் கையாளத் தொடங்கி னா ர். எனினும், எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளைத் தன் அகத்திலும் புரத்திலும் அவர் நேசித்தார். அதனால் சிவலிங் கத்தைத் தனது அங்கத்தில் அணிந்து கொண்டு, விரசைவ சமயியாக வாழ விரும்பினார்.
சிவஞானம் காணவிழைந்த வசவதேவர் ஈசான்ய குரு என்ற குருநாதரிடம் திட்சை பெற்று, அங்கலிங்கி ஆகினார். அந்நாள் முதல் விரசைவத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, அதனை வளர்ப்பதில் தம்மாலான பணிகளை எல்லாம் செய்தார்.
வசவதேவர் கல்வி அறிவும் மதிநுட்பமும் நிரம்பப் பெற்றவர். அவரிடம் செயற் திறமையும் ஆளு மையும் அறிவுக் கூர்மையும் இயல்பாய் இருந்தன. அவரது ஆற்றல் விச்சல மன்னனின் செவிக்கு எட்ட வானது. வசவதேவரின் மா ம ன "ரான பலதேவர் மறைந்ததும் அவர் வகித்த அமைச்சர் பதவி வசவ தேவரைத் தேடிவந்தது. தொண்டுள்ளம் கொண்ட வசவருக்குக் கிடைத்த முதலமைச்சர் பதவி அவரது செயற்பாடுகளை மேலோங்கச் செய்தது.
விரசைவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிறுவ விரும்பிய வசவேசர் அவரது காலத் தில் வாழ்ந்த அல்லமாப்பிரபு என்ற சிவனடியாரைத் தமக்குத் துணைவராகச் சேர்த்துக் கொண்டார். வீரசை வத்தின் வளர்ச்சிக்காக அவர்கள் இருவரும் கூறிய மொழிகள் இன்று வீரசைவ தத்துவ நூல்களாக

ட 59 -
விளங்குகின்றன. விரசைவத்தின் முக்கிய அங்கங் களான குரு, இலிங்கம், சங்கமம், குருபாதம், பிர சாதம் விபூதி, உருத்திராக்கம், பஞ்சாட்சரம் ஆகிய வற்றைக் கைக்கொண்டு சங்கம வழிபாடு நடத்து வதிலும் பேரார்வம் காட்டினார்.
ச மத்துவம், சகோதரத்துவம், அன்புடைமை என்பன மக்கள் மனத்தில் மலரவும், உண்மை, பக்தி, ஞானம் ஆகியவற்றை வளர்க்கவும் தற்புகழ்ச்சி, இகழ்ச்சிகளை இல்லாதொழிக்கவும் வசவர் அரும் பாடு பட்டார். இவர் எல்லாரிடத்திலும் அன்பும் கருணையும் காட்டினார். பசுவைக் களவாட வந்த கள்வன் ஏழ்மை காரணமாகவே களவாடினான் என்று இரங்கி, அவனை மன்னரித்த மாண்பும் அவரிடம் இருந்தது.
அதே வேளையில் வீர சைவத்துக்கு மாறான வழிகளில் ஈடுபடுவோரை விரத்துடன் எதிர்த்து விர சைவத்துக்குப் புத்துயிர் அளித்துள்ளார். இதனால் ஒரு கோடிக்கு மேற்பட்ட மக்களைக் கொண் ட கன்னட மாநிலம், ஆந்திரப்பிரதேசம், வடஇந்தியா, தமிழ் நாடு, ஈழம், வட அமெரிக்கா போன்ற நாடு களிலெல்லாம் வீரசைவத்தைச் சா ர் ந் த மக்க ள் பரவி வாழ்ந்து, அம்மதக் கோட்பாடுகளை இன்றும் பேணி வருகின்றனர்.
வைதிக நெறியிலே ' சாதி, குலம், பிறப்பு என்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறி ' மக்கள் அல்லற் பட்ட காலத்தில் வீரசைவ மதக் கொள்கைகளைத் துடிப்புள்ளதாக விளங்கச் செய்ய வசவர் விரும்

Page 37
- 60 -
பினார். பழமையில் ஊறிய மக்கள் ஆடம்பரக் கிரியைகளுக்காகக் காலம் கழிப்பதை அவர் கண்டித் தார். ஏழை, எளிய மக்களிடையே தாமும் கலந்து கொண்டு மனித குலம் ஆத்மஞானம் பெறவேண்டும் எனப் போதித்தார்.
வ ச வையர் மாளிகையில் சங்கமர்களுக்கு மகேசுர பூசை நடைபெற விருந்த தை இரண்டு கள்வர்கள் ஒரு நாள் அறிந்து கொண்டனர். அங்கு கூடியிருந்த சங்கமர்களின் கழுத்தில் ஏதோ கட்டித் தொங்க விட்டிருப்பதை அவதானித்தனர். சங்கமர்க ளின் கழுத்தில் தொங்குவது இன்னதெனத் தெரியாத கள்வர் வழு துணங்காயை (கத்தரிக் காயை) த் துணியிற் கட்டித் தமது கழுத்தில் தொங்க விட்டுக் கொண்டனர். சிறிது நேரத்தின் பின், பகல் உணவுக்கு அழைப்பு வந்ததும், ஆட்களோடு ஆட்களாக க் கள்வர் இருவரும் உள்ளே சென்று பந்தியில் இருந்து கொண்டனர். உணவு பரி மாறத் தொடங்கி பாயிற்று வசவேசர் உள்ளே நுழைந்தார்.
உடனே சங்கமர்கள் தாம் அணிந்திருந்த அங்க லிங்கங்களைக் கையில் எடுத்துக் கொண்டனர். அவர்களின் இட்டலிங்க பரசிவ பூசையை நிறை வேற்றத் தொடங்கினார் வசவேசர். அவர்களுக்குத் துரப, திப ஆராத்திகளை எடுத்து வழிபாடு செய்த வசவண்ணா கள்வர் இருந்த இடத்தை நெருங்கி வந்தார். கள்வர்கள் தமது அடாத செயலை எண்ணி நடுக்கமுற்றனர். அவர்களை அணுகிய வசவேசர் அவர்களின் இட்டலிங்கத்தை வெளியே எடுக்கச் சொன்னார்.

- 61 -
அவர்கள் ஏக்கமுற்று விழித்தனர்! கள்ள வேடதாரி களின் உண்மை நிலையை உணர்ந்த வசுவேசர், அவர்கள் கட்டியிருந்த கத்தரிக்காய்களை இட்டலிங்க மாக மாறிடத் திருவருள் நோக்கம் செய்தார்.
என்ன அதிசயம்! கள்வர்களின் கழுத்தில் தொங்க விட்டிருந்த துணியை அவிழ்த்துத் திறந்த பொழுது, அவர்கள் கட்டிய கத்தரிக்காய்களைக் காணவில்லை. பதிலாக இஷ்டலிங்கமே இருந்தது. இச் செயற்கருஞ் செயலை -
வெள்ளவேனிப்பெருந்தகைக்கு யாம்செய் அடிமை மெய்யாக கள்ளவேடம் புனைந்திருந்த கள்வரெல்லாங் களங்கமறும் உள்ளமோடு மெய்யடியாராக உள்ளத்துள்ளும் அருள் வள்ளலாகும் வசவேசன் மலர்த்தாள் தலையால் வணங்குவாம்" எனத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவா ரி தீர் பிரபுலிங்கலீலையில் போற்றித் துதித்துள்ளார்.
பழமையில் தோய்ந்திருந்த மக்களை வறுமை -செல்வம், உயர்வு - தாழ்வு என்ற பாகுபாடுகளுக்கு உட்படுத்தாது, இலிங்கதாரிகளாய் வா ழ் ந் தோர் அனைவருக்கும் தம்மாலான தொ ன் டு க ைஎ ச் செய்தவர் வசவண்ணா விச்சல மன்னனின் முத லமைச்சராய் இருந்த இவர், தமது உள்ளத்தில் சரியானதெனத் தெரிந்தவற்றைச் செய்வதில் ஒரு போதும் தயங்கியது கிடையாது. அதனால் அவரே வி ர  ைசவத்தை த் தோற்றுவித்தவர் என்று சிலர் உரைப்பதுண்டு. அது தவறான கருத்தாகும். ஆனால் கோர்வுற்றிருந்த விரசைவத்துக்குப் புத்துயிரளித்த பெருமை வகவரையே சாரும்: -

Page 38
- 62 -
எடுத்த முயற்சியில் வெற்றியிட்டுதற்குத் தமது இஷ்ட தெய்வமான கூடலசங்கம தேவராகிய சங்க மேஸ்வர சுவாமியை வேண்டிக் கொள்வார். 'கூடல சங்கமதேவா "என முன்மொழிந்தே எப் பணியையும் வசவர் செய்தார். அத்துடன் வீரசைவம் பற்றிய தனது பிரசாரங்களைக் கன்னட தேசத்தவர் அனை வருக்கும் விளங்கக்கூடிய கன்னட மொழியிலேயே செய்தார். வசவையரின் பணி மக்களிடையே நன் மதிப்பைப் பெற்றது. இதனால் வீரசைவம் விழுப்பம் எய்தி, விறு நடைபோட உதவியதை எவரும் மறுக்க வியலாது. இவரின் சில கொள்கைகள் இவரது சிவப்பேற்றின் பிறகு மாற்றமடைந்து விட்டதாகப் பிந்திய செய்திகள் வெளியிடுகின்றன.
l. சிவப்பிரகாசர்
விரசைவத்தின் சிறப்பை அழகொழுக எழுதிப் பரப்பியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இவரது காலம் கி. பி. 17 ஆம் நூற்றாண்டு என்பர். இவர் வடமொழி, தெ ன் மொழி இரண்டிலும் நிறைந்த புலமை பெற்றவர். இவரது நூல்களில் எளிமை, இனிமை, கற்பனை யாவும் கலந்திருக்கும். அதனால் இவரைக் கற்பனைக் களஞ்சியம் எனக் கற்றறிந் தோர் போற்றுவர்.
சிவப்பிரகாச சுவாமி கள் காஞ்சிமாநகரில் தொண்டைமண்டல மரபினருக்குக் குருவாய் இருந்த குமாரசுவாமி தேசிகரின் தலைமகனாவார். இறை

63 -
பயன்பு மிக்க சிவப்பிரகாசருக்கு வே  ைல ய ர், கருணைப்பிரகாசர் என்ற இரு தம்பியரும் ஞானாம் பிகை என்ற ஒரு தங்கையும் இருந்தனர்.
இவர்களின் தந்தையான குமாரசுவாமி தேசிகர் நியமத் தவறாது சிவபூசை செய்பவர். இவர் ஒருமுறை திருவண்ணாமலைத் திருக்கார்த்திகை விழாக்கான பாத்திரை செய்தார். அங்கு செல்லும்
வழியிலே பகற் காலப் பூசையை முடித்த பின்னர்
சாயங்காலம் திருவண்ணாமலையைச் சென்றடைந் தார். அத்தலத்திலிருந்த ஈசான தீர்த்தத்தில் நீராடி, அநுட்டானங்களை முடித்துக் கொண்ட தேசிகர், சிவபூசைக்கான பெட்டகம் எங்கே யெனவினவினார். அன்று பகற் பூசை செய்த இடத்தில் அதனைத் தவறுதலாக வைத்து விட்டு வந்ததாகத் தெரிய வந்தது.
கலக்கமுற்ற தேசிகர் தமது ஆத்மார்த்த தெய் வத்தைப் பிரிந்திருக்க நேர்ந்ததை எண்ணி இரவு முழுவதும் விழித்திருந்தார். அவரது நிலைக்கு இரங் கிய அண்ணாமலைப்பர், ஒர் அடியவர் வடிவத்தில் தோன்றி ' அங்கம் வேறு, இலிங்கம் வேறு என்ற வகையில் வழி பட்டு வந்ததாலேயே இவ்வாறு பிரியலாயிற்று. அதனை அங்கத்தில் அணிந்து கொண்டால், பிரிய நேரிடமாட்டாது ' எனக் கூறி ' மறு நாட்காலையில் பெட்டகம் வந்து சேரும் ' என்றும் அருளுரை பகர்ந்தார்.
அன்னவரின் அருள்வாக்கின்படி மறுநாட்காலை பயிற் பூசைப் பெட்டகம் வந்து சேர்ந்தது. தேசிகர்

Page 39
- 64 -
அளவற்ற ஆனந்தம் அடைந்தார். அடிப்பவரின் அரு ஞரைக்கு அமைய அவ்வாலயத்துக்குத் தெற்கு விதியில் இருந்த குருதேவரிடம் சென்று தாரண திட்சை பெற்றார்.
சிவலிங்க தாரணம் செய்து கொண்ட பின்னரே சிவப்பிரகாசர் முதலிய நான்கு பிள்ளைகள் இவருக் குக் கிடைக்கப் பெற்றனர். இவர்கள் இள வயதின ராப் இருந்த பொழுது தந்தையார் சிவைக்கியம் ஆகிவிட்டார். இதனால் மூத்தவரான சிவப்பிரகாச ருக்கே குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஏற்படலாயிற்று. 置
அவர்கள் நால்வரும் அருணாசலத்தில் தங்கி இருந்த காலத்தில் அண்ணாமலை அப்பன் மீது சோணசைல மாலை என்ற தோத்திர நூலைச் சிவப் பிரகாசர் செய்தருளினார்.
சிவப்பிரகாசர் தமது புலமையை வளம்படுத்து வதற்கு இலக்கணப் பயிற்சியின் அவசியத்தை உணர்ந்தார்.அதனால் அருணாசலத்தை விட்டுத்துரை மங்கலத்துக்குச்சென்றார். சுவாமிகள் தனது சகோத ரர்களுடன் அங்கு வந்திருந்த வேளையில், அண் ணாமலை ரெட் டி யார் என்ற குருலிங்க சங்கமரின் தொடர்பு ஏற்படலானது. அக்காலத்தில் ரெட்டியாருக்குச் சிவப் பிரகாசர் சன்மார்க்கங் களைப் போதித்துவந்தார்.
துறைமங்கலத்திலே நல்ல முரையில் நேரம் கழித்த போதிலும், இலக்கணப் பயிற்சி பெற வேண்டும் என்ற ஆவல் சிவப்பிரகாசருக்குத் தணிய

- 65 -
வில்லை. எனவே, அங்கிருந்து திருநெல்வேலிக்குச் சென்றார். சுவாமிகள் அவ்விடத்தில் தங்கி இருந்த போது, தருமபுர ஆதினத்தைச் சேர்ந்த வெள்ளியம் பலத் தம்பிரானைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. தம் பிரான் சுவாமிகளின் இலக்கணப் புலமையை அறிந்த சிவப்பிரகாசர், அவரிடம் சென்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.
அதனைக் கேட்டறிந்த தம் பிரான், அவரது இலக் கியப் பயிற்சியை அறிதற் பொருட்டு 'கு' என்று எடுத்து, இடையிலே ' உளருடையான் என்று ' வைத்து, 'கு' என்று முடிப்பதாக வெண்பா ஒன்றைப் புனைபுமாறு கேட்டார். உடனே,
"குடக்கோடு வாளெயிறு கொண்டார்க்கும் கேழன் முடக்கோடு முன்ன மணிவார்க்கு - வடக்கோடு தேருடையான் றெள்வுயிர்க்குத்தில்லைத்தோள் மேற்கொள்ளல் ஊருடையான் னென்னு முலகு. "
என்ற வெண்பாவைச் சிவப்பிரகாசர் பாடி முடித்தார்.
பொருள் பொதித்த அவரது பாடலைத் தம்பிரான் வியந்தார். மட்டற்ற மகிழ்ச்சியுற்றுத் தமது ஆசனத் துக்குச் சமமாக அவரை இருக்கச் செய்தார். பின்னர் சிவப்பிரகாசரின் தம்பியர்களுக்கும் ஐந்திலக்கணங் களையும் கற்பித்து அவரது ஆவலை நிறைவேற் υδαστσή.
தம்பிரான் சுவாமிகள் குரு தட்சனை எதனையும் ஏற்றுக் கொள்ளவில் வை. பதிவாகத் தமக்கு எதிராகத் திருச்செந்தூரில் தமிழ்ப் புலவர் ஒருவர்

Page 40
- 66 -
இருப்பதாகச் சொல்லி, அவரைக் கல்வியினால் வென்று, தம்மிடம் வர ச் செய்யுமாறு கேட்டுக் GasTGT i.
அதற்கிணங்கிய சிவப்பிரகாசர் திருச்செந்துர ருக்குச்சென்றார். ஆங்கு செந்தூர் முருகனை வணங் கிவரும் நாளில், தம்பிரான் சுவாமிகள் சொன்ன புலவரைச் சந்திக்கலானார். சிவப்பிரகாசரின் ஆற் ர லை அறியாத அப்புலவர் அவரைச் சோதிக்க விரும்பினார். நீரோட்டக யமகம் ஒன்று பாடு மாறு கேட்டு, அதனைப் புனைவதில் யார் வெற்றி பெறு கின்றாரோ, அவர் மற்றவருக்குப் பணிதல் வேண்டும் என நிபந்தனை இட்டார்.
சிவப்பிரகாசர் திருச் செந்தினிரோட்டக யமகவந்தாதி என்ற நூலைக் கலித்துறையில் தோத்திரமாகப் பாடி முடித்தார். தமிழ்ப் புலவருக்கு ஒரு பாடலும் நிரம்ப வில்லை. புலவர் தமது தோல்வியை ஒப்புக் கொண் டார். கல்விச் செருக்கிழந்த அப்புலவரைச் சிவப்பிர காசர் தம்முடன் அழைத்துச் சென்று தம்பிரானுக்குப் பணியச் செய்வித்தார்.
இறை இன்பத்தில் மூழ்கி இருந்த சிவப்பிரகாச சுவாமிகள் துறைமங்கலத்துக்கு மீண்டு வந்தார். அங்கு சிலகாலம் தங்கியிருந்த சுவாமிகள் வேங்கை மாநகரத்திற் கோயில் கொண்டிருந்த பழமலைநாதர் மீது வேங்கைக் கோவை, வேங்கைக் கலம்பகம், வேங்கை உலா, வேங்கை அலங்காரம் என்னும் நான்கு பிரபந்தங்களைச் செய்தருளினார். பின்பு விருத்தாசலம் சென்று பழமலைநாதர் மீது அந்தாதி, பிட்சாடன நவமணிமாலை

- 67 -
கொச்சக் கலிப்பா நூல்களும் பெரியநாயகி அம்மை பேரில் கவித் துறையும், கழிநெடில் விருத்தமும் பாடிய ტი;fმეტ7/Ti.
பின்னர் பேரூரிலிருந்த சாந்தலிங்க சுவாமிக ளைச் சிவப்பிரகாசர் சந்திக்க நேர்ந்தது. அங் கிருந்தபோது சாந்தலிங்கரின் விருப்பப்படி பாலைய சுவ, நிதர் பூேரில் தாலாட்டு, நெஞ்சுவிடு தூது, கலம்பகம் ஆகிய நூல்களை ஆக்கிச் சன்னிதானத்தில் அரங் கேற்றினார். அதன் பின் தமது தங்கையாகிய ஞானாம்பிகையைச் சாந்தலிங்கருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
சிவப்பிரகாசர் மணப் பருவம் எய்திய காலத்தும் அதனை விரும்பாது துறவற வாழ்வையே விரும்பி னார். அவர் மணவாழ்வைத் துறந்த போதிலும், அவரது தம்பியர் இருவரையும் இல்லறத்தில் இருக்கச் செய்தார்.
கடவுள் பக்தியில் திளைத்த சுவாமிகள் உறுதி கொண்ட உள்ளம் படைத்தவர். மானிடர் மாயையை வெல்லுதல் இயலும் என்பதை வெளிப்படுத்தும்
பிரபு லிங்க லீலை என்பது பிரபு + லிங்க + லீலை எனப் பிரிக்கின், இலிங்கமாகிய ஆன்மாவின் திருவிளையாடல் எனப் பொருள்தரும். ஈ பிண் டு, இறைவி மாயையின் வல்லமையால் இறைவனாகிய அல்ல ம தே வ  ைன த் தன்வயப்படுத்த முயன்ற

Page 41
- 68 -
போதிலும், அல்லமதேவன் தனது திருவிளையாட் டினால் மாயையை வென்று, தனது ஆற்றலை வெளிக்காட்டுவதாக இக் காவியம் புனையப்பட் டுள்ளது. இந்நூல் படிப்போர் நெஞ்சங்களைக் கொள்ளை கொள்ளும் ஒரு செஞ்சொற் காவிய (07.5 (d.
மேலும் வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்த சித்தாந்த சிகாமணி என்ற இவரது நூல் வீரசைவக் கோட்பாடுகளையும்" அதனை வளர்த்த சிவாசாரியார்களையும் செம்மையுறச் செப்புகின் 2து. அடுத்து இவர் ஆக்கிய வேதாந்த சூடாமணி, சிவப்பிரகாச விகாசம், தர்க்க பரிபாஷை, நிரஞ்சன மாலை, கைத்தல மாலை, அபிஷேக மாலை, இட்டலிங்கப் பெருங்கழி நெடில், குறுங்கழிநெடில், நன்னெறி, சிவநாம மகிமை, நால்வர் நான் மணி மாலை என்னும் நூல்களைச் செய்துள்ளார். சிவலிங்க வழிபாட்டிலும் சாத்திர, தோத்திர நூல் களை ஆக்குவதிலும் அக்கறை கொண்டிருந்த சுவாமிகள் நாற்பத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களை ஆக்கி யுள்ளார்.
இவரைப் போலவே இவரது தம் பி ய ர ன வேலையா சுவாமிகள் நல்லூர்ப் புராணம், இஷ்ட லிங்கக் கைத்தல் மாலை, கும்பகோணம் சாரங்க தேவரின் வரலாறு கூறும் வீரசிங்காதன புராணம், குருநமசிவா ரின் வரலாற்றைச் செப்பும் நமசிவாய விலை, கிருஷ்ண பரிசாத லீலை, மயிலத் திரட்டை மணி மாலை ஆகிய பிரபந் தங்களைச் செய்துள்ளார்.
அவ்வாறே கடையவரான கருணைப்பிரகாசர் இஷ்டவிங்க அகவல், திருக்காளத்தி புராணத்தில் - சீகாளத்திச்

-- f5] --
சருக்கம் வரையிலுமுள்ள பாடல்களைப் பாடியுள்ளார். இப்புரா
னம் முற்றுப்பெறு முன்னர் தமது 18ஆவது வயதிலே வேங்கை மாநகரத்தில் சிவலிங்க ஐக்கியமாய்ச் சமாதியாகினார்.
கருணைப்பிரகாசர் எழுதி, முற்றுறாதிருந்த புராணத்தில் கண்ணப்பர் சருக்கமும், நக்கீரர் சருக்கமும் சிவப் பிரகாசர் செய்தருளிய வேளையில், நல்காத்துரரி லுள்ள பாலைய சுவாமிகளால் விடப்பட்டிருந்த மடத் தில் சிவலிங்க ஐக்கியமாகினார்.
மீந்திருந்த திருக்காளத்தி புராணத்தைச் சிவப்பிரகாச ரின் இளவலான வேலைய சுவாமிகள் முற்று வித்துத் தமது எழுபத்திரண்டாவது வயதிலே பெருமத்தூர் மடத்தில் சிவலிங்க ஐக்கியம் ஆகினார்.
செந்தமிழ் நாட்டில் சிவப்பிரகாச சுவாமிகளும் தம்பியரும் தந்தையாரும் வீரசைவத்தைப் பேணி வளர்த்துள்ளனர். அத்துடன் தமிழ் மொழிக்கும் தம் மாலான பெரும்பணி ஆற்றியுள்ளனர் என்பதில் மிகையொன்றுமில்லை.
தமிழ் இலக்கியப் பரப்பில் சிவப்பிரகாச சுவாமி களின் நூல்கள் அருமையான இடத்தைப் பெற்றுள் ளன. பின்வரும் வெண்பா அவரின் செஞ்சொல் நயத்துக்கும் புலமைச் சிறப்புக்கும் நல்லதோர் உதா ரனமாகும்
எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன் மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடீஇ நின்று பயனுதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றும் உதவுங் கனி. - நன்னேறி

Page 42
IV. சாந்தலிங்க சுவாமிகள்
சாத்தலிங்க சுவாமிகள் தமிழகத்தின் நடு நாடாகிய தொண்டை நாட்டிலே வீரசைவ மரபில் வந்தவர். இவர் இளமைக் காலத்திற் கலைகள் அனைத்தையும் பயின்றார். கற்றாரைக் கற்றார் கா முறு ம் குண இயல்பினால் துறைமங்கலம் (துரை பூர்) சிவப்பிரகாச சுவாமிகளின் கல்வி அறிவை மெச்சி, அ வரி ட ம் ஞானோபதேசமும் பெற்றார்.
சிவப்பிரகாச சுவாமிகளிடம் சா ந் தவிங்கர்  ைவத் தி ரு ந் த அன்பின் மிகுதியால் அவரின் த ங் கையான ஞானாம்பிகையை மணந்து கொள் எாவும் இசைந்தார். ஞானாம்பிகையின் பக்குவ நிலை உணர்ந்த சுவாமிகள் அவரைப் பொம்மது பாளையம் பூரீ சிவஞானபாலைய தேசிகரிடம் ஆற் றுப்படுத்திப் பாடம் கேட்கச் செய் தா ர். சாந்த லிங்கர் சங்கம வழிபாட்டில் அதிக ஆர்வம் கொண் டவர். அதனால் தமக்கென ஒரு மடம் அமைத்து, அங்கிருந்து அறப்பணி ஆற்றினார்.
சாந்தலிங்கரின் மடம் கொங்கு நா ட்டை (கோவை மாவட்டத்தை) அடுத்த மேலைச் சிதம்பரம் என்னும் பேருரில் இருக்கிறது. இது காஞ்சிமா நதிக் கரையிலுள்ளது. இந்த மடாலயத்திலேயே ரீ சாந்த லிங்க சுவாமி க ளின் சமாதிகொண்ட நினை வாலயமும் அமைந்துள்ளது.

-- 71 -
திரம்பிய கல்வி அறிவும் விரசைவ ஆசாரமும்
கொண்டிருந்து சாந்தவிங்கர் விரசைவ அநுட்டா
னங்களைத் தவறாது கடைப்பிடித்து ஒழுகினார். விரசைவத்தின் வளர்ச்சிக்குத் தம்மாவான பணி களை அவர் ஆற்றியதோடு நூல்கள் வாயிலாகவும் தொண்டு செய்துள்ளார். அவர் இயற்றிய நூல்கள்
வைராக்கிய சதகம், ன வ ராக்கிய தீபம், அவிரோத வுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது முதலியனவாகும்.
இவரிடம் காணப்பெற்ற கலைஞானமும் ஒழுக்க விசேடமும் தி ரு ப் போருர் சிதம்பர சுவாமிகளை
இவரின் மாணவராகச் செய்தன. சாந்தலிங்கரின்
கருத்தாழம் மிக்க கவிதை நூல்களைப் பாராட்டிய சிதம்பர சுவாமிகள் அந்நூல்களுக்கு உரையெழுதிச் சிறப்புச் செய்துள்ளார்.
பூரீ சா ந் த லிங்கர் மனைவியோடிருப்பதைக் கண்டு ஐயுற்ற மாணவர்கட்கு உமா சகிதராகக் காட்சி கொடுத்து, இறைவராத் தன்மையை விளக் கினார். சுவா மிக ளின் அருங்குணம் கண்ட மாணாக்கர் அவரைப் பணிந்து தம்மை மன்னித் தருள வேண்டினர்.
சிவபக்தியும் அடியார் பக்தியும் மேலோங்க, வீர சைவத்தை விளக்கமுறச் செய்து பெரியார் களை நோக்குமிடத்து, சாத்தலிங்க சுவாமிகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். இவர் விரசைவ நெறிமுறைகளை நூல்கள் வாயிலாகச் சிறப்புரச் செப்த பெருந்தகை ஆவார். சாந்தலிங்கர் விரசைவ நடைமுறைப்படி முதலிலே சிவதீட்சை

Page 43
72 -
பெற்றார். பின்பு சிவலிங்க தாரணம் செய்து இட்டலிங்க நிஷ்டாபரராய் (நியம நிட்டை தவறாத வராய்) தமது மரபினர்க்கு ஒரு வழிகாட்டியாக бл?бүтлу?бутгт7.
வடநூற் கடலை நிலைகண்டுணர்ந்து, தென்ற மிழ்ச் சுவையை நன்கு சுவைத்தவர் சாந்தலிங்கர். தான் கற்றவற்றைத் தமது மாணாக்கர்கட்குக் கர வாது உதவும் பேராசிரியராயும் திகழ்த்தார். இப் பெரியார் கற்றாரைக் காணுமிடத்துப் பெருமதிப்புச் செய்யும் பெருங்குணம் படைத்தவர். அதனாலேயே திருத்துறையூர் (துறைமங்கலம்) சிவப்பிரகாசரின் கல்வியறிவை மெச்சி, அவரின் அன்புக்கு ஆளாகி னார். அத்துடன் நின்றுவிடாமல் சிவப்பிரகாசரின் சிவானுபவ சிலத்தைக் கண்டு அவரைத் தமது ஞானாசாரியராகவும் ஏற்றுக் கொண்டார்.
கருணை உள்ளம் கொண்ட சாந்தலிங்கர் விருத் தாசலம் பூரீமத் குமாரதேவ சுவாமிகளின் பக்குவம் உணர்ந்து அ வருக்கு ஞானோபதேசம் செய்ய இசைந்தார். மேலும் திருப்பேஞ்ர் சிதம்பரசுவாமி களையும் தமது மாணவராகச் சேர்த்துக்கொண்டு அவருக்கு நல்லருள் சுரந்தார்.
கல்வி, கேள்விகளிற் சிறந்து விளங்கிய சாந்த லிங்க சுவாமிகள் தாம் கற்ற கல்வியைப் பலருக்கும் பயனுறச் செய்த பண்பினர். பெறுதற்கரிய மானி டப் பிறவியைப் பெற்ற மக்கள், விட்டின் பத்தினை நுகர்வதற்கு வழிகாட்டியாக நற்றமிழ் நூல்களைச் செய்துள்ளார். அவர் ஆக்கிய முக்கிய நூல்கள்

- 73 -
ஐந்தும் அறிஞர் பலராலும் பாராட்டப் பெறு கின்றன. சுவாமிகளின் நூல்கள் விரசைவர்கட்குச் சிறப்பு நூலாகவும் ஏனையோருக்குப் பொது நூலா கவும் விளங்குகின்றன. கொலை மறுத்தலைப்பற்றி நூல் செய்த ஆசிரியர்களுள் இப்பேரூர்ப்பிரானே தலைசிறந்து விளங்குகிறார். புலாலுண்ணாமை யைத் தெளிவுறக் கூற வந்த வள்ளுவரும் 'ஒன்றாக நல்லது கொல்லாமை' என்றே கொலை மறுத்திலை வலியுறுத்தியுள்ளார்.
'உயிர்த் தோற்றத்தில் உயர்வு தாழ்வு எங் ஙனம் உண்டாகியது?' என ஒருவர் சுவாமிகளை வினவிய போது, ' பல்லுயிருள்ளும் மக்கட் பிறப்பே உயர்ந்ததெனவும், அதனுள்ளும் உயிர்க் கொலை புரியாதோர் உயர்ந்தோர்' எனவும் கூறி, 'கொலைக்கு மேற்பட்ட பாவமும் கொல்லாமைக்கு மேற்பட்ட புண்ணியமும் வேறில்லை ' என்று விளக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
அறிஞருக்கு அறிஞராப், ஞானியருக்கு ஞானி யாப் வாழ்ந்த சாந்தலிங்கரின் காலம் பதினெட் டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். சுவாமிகளின் குருபூசை அவரது சமாதி அமைந்துள்ள பேருர் மட்த்தில் ஆண்டுதோறும் கொண்டாடப் பெறுகிறது.
தில்லைச்சிவன் உமையாளுடன்
சாந்தலிங்கருக்குத் தோன்றியமை
பிரானே திருத்தில்லை புளாய் அன்றிப் பேதையேன்முன் ஓரானே நிவர்த் தம்பிகை யோடெளி தோடி வந்த்ாய் வரானோ வினம் எம்பிறை என்றுணை நாடி இTபு இரா.நா படியேற் கெதிர் தோன்றிலை இன்றிதென்னே.
- வைராக்கிய சதகம்
置。晶_。上 . . .

Page 44
V பரீ குமாரதேவர்
கன்னட நாட்டைப் பிரந்தகமாகக் கொண்ட குமாரதேவர் அரச வாழ்வைத் துர ந் து, சங்கம வழிபாட்டை ஏற்ற செம்மனத்தராவார். இவர் அரசுக் கட்டிலில் இருந்த காலத்தில் பே  ைர பூர் (பேரூர்) சா ந் த லிங் க சுவாமிகளின் அறப்பணிகளையும் அறிவாற்றலையும் கேள்வியுற்றுத் தனது அர ச இன்பத்தை விடுத்துச் சாத்த லிங் க ரி டம் வந்து சேர்ந்தார்.
இவரை மாணவராக ஏற்றுக்கொள்ளச் சாந்த லிங்கர் முதலில் விரும்பவில்லை. காலப்போக்கில் குமாரதேவரின் பக்குவநிலை கண்டு தமது சீடனாக ஏற்றுக்கொண்டு, விருத்தாசலத்துக்குச் செ ல் லு மாறு கட்டளையிட்டார்.
அதற்கிசைந்த குமாரதேவர் விருத்தாசலம் சென் றார். அவரது வருகைக்காகக் காத்திருந்த திருமுது குன்றம் பெரியநாயகி அம்மை இளைப் புற்றிருந்த குமாரதேவரின் தலையைத் தனது மடிமீது வைத்துப் பசுவின் பாலை அருத் தி னா ர். ஆபாசம் திர்ந்த அடியவர் விழித்துப் பார்த்தபோது தனது இளைப் பைத்திர்த்த கருணைத் தெய்வம் பெரியநாயகி என்ப தைத் தெரிந்து கொண்டார். குமாரதேவர் ஆனந்தம் எ ய் தி ய வேளையில் அன்னையின் திருவுருவம் மறைந்துவிட்டது. செய்வதறியாத குமாரதேவர் அம்பிகையைத் தோத்திரஞ் செய்து வணங்கினார்.

- 75 -
அன்னையின் அருளுக்குப் பாத்திரரான குமார
தேவர் பூர்வ சென்மத்துத் தொடர் பினால் சில சித்துக்கள் கைவரப் பெற்றவரானார். அவர் செய்த அற்புதங்கள் வருமாறு:
.
விருத்தாசலத்திலே மணிமுத்தா நதிக் கரையில் நின்ற அரசமரத்தின் மேல் இருந்த சடாமுனி என்பவரின் சாபம் தீர்த்து, நல்வழி காட்டினார்.
ஒரு நாள் அன்னம் யாசித்துச் சென்ற குமாரதேவருக்கு குடும்பத்தர் ஒருவர் மாமிசம் கலந்த உணவைக் கொடுத் தார். அதனைத் தெரிந்து கொண்ட குமார தே வர் அயவிலுள்ள குளத்துக்கு அருகிற் சென்றதும் அவரது உணவிற் கலந்திருந்த மாமிசம் உயிர்பெற்றுக் குளத்திற் குதித்துப் போய்விட்டது.
தொழு நோயினால் துன்புற்ற ஒருவன் குமாரதேவரிடம் வந்து முறையிட்டபொழுது அவனுக்குத் திருநீறுவழங்கி, நோய்தீர வகை செய்தார்.
திருவாரூர் தேர்த் திருவிழாவிலே தியாகேசப் பெருமான் தேரேறி மாடவீதியில் வந்த பொழுது பெருமானைப் பார்த்துக் குமாரதேவர் வணங்கினார். அதனைக் கண்ட இருவர் குமாரதேவரை வீரசைவ மருளென விகட மாசுக் கூறினர்.
அதனைக் கேட்ட குமாரதேவர் ' வீரசைவம் மரு Gyrrir aš", "" (jf EEPERT Pfaff; } இல்  ைவ ய ர பின், நிக்க' என்றார். தேர் நின்று விட்டது. காரணம் தெரியாது பலரும் கலக்கமுற்றனர். ஈற்றில் விடயம் அறிந்த தஞ்சை மன்னன் குமாரதேவரிடம் அணுகி, தேர் நகர்வதற்கு வழிசெய்யும் படி வேண்டினான். அவன் மீது இரக்கம்
கொண்ட குமாரதேவர் " வீரசைவம் அருளுடையதா

Page 45
- 76 -
பின் தேர் ஆரர்க மருளுடைய தாயின் நிக்க " எனக் கூறியதும் தேர் நகரத் தொடங்கியது. இன்றும் அவ் வீதியில் தேர் வந்ததும் வீரசைவ சிவாசாரியர்கள் வந்து வடம் தொட்டு விடுவதாகக் கூறுவர்.
இவை போன்ற வேறும் அற்புதங்கள் செய்த குமாரதேவர் வீரசைவக் கோட்பாடுகளை உள்ளடக் கிய பதினாறு சாத்திரங்களைத் தமிழில் ஆக்கி, விரசைவத்தை விளக்கமுறச் செய்ததோடு திருப் போரூர் சிதம்பரசுவாமிகளைத் தமது சீடனாக ஏற்றுக்கொண்ட பின் சிவஐக்கியம் ஆனார்.
V. திருப்போரூர் சிதம்பரசுவாமிகள்
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளை முத லாகக் கொண்ட வீரசைவ குரு சந்தானமரபில் வந்தவர் ரெட்டி - சிதம்பரசுவாமிகள், மதுரைப் பகுதி பினரான இவர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். இவர் துரவு நெறியை மேற்கொள்ள முன்னர் சிதம்பரக் கவிராயர் எனப் பெயர் பெற்றிருந் தார். வீரசைவக் கோட்பாடுகளில் விருப்பங் கொண்ட இக்கவிராயர் விருத்தாசலத்தில் வீரசைவ மடம் அமைத்துச் சமயப் பணியாற்றிய பூரீ குமார தேவரின் தொடர்பினால் சாந்தலிங்க சுவாமி களின் சி ர ப் பி ய ல் புகளை க் கேள்வியுற்றார். அதனால் குமாரதேவரின் துணையுடன் சாந்த லிங்கரிடம் சென்றார்.

- 77 -
கவிராயரின் பக்குவ நிலையை உணர்ந்த சாந்தலிங்கர் வீர சைவ நெறிமுறையிலான விர விசேஷம், விரதிரா பரம் முதலிய திட்சைகளை அவருக்கு வழங்கிச் சமாதிகூட்டுவித்தார். இதன் பிறகே சிதம்பரக் கவிராயர் சிதம்பர சுவாமிகள் என அழைக்கப்பட்டார்.
ஆன்மிக நெறியில் சிதம்பரசுவாமிகள் மன நிரைவு கொள்ளாமையை அறிந்த சாந்தலிங்கர் அவரைச் சீடனாக ஏற்றருளுமாறு குமாரதேவரிடம் பணித்தார். குமாரதேவர் அதற்கிசைந்து அருள்
வளமார் மதுரை மீனாட்சிஅம்மை மீது மீனாட்சி அம்மை அணுக்கிரகார்த்தக் கலிவெண்பா என்ற நூலை இயற்றி புள்ளார். ஆலய வழிபாட்டில் அக்கரை மிகுந்த சுவாமிகள் திருப்போரூரில் தங்கியிருந்து,அங்குள்ள முருகன் ஆலயத்துக்குப் பல பதிகங்கள் பாடியரு எரினார். சுவாமிகள் இயற்றிய திருப்போரூர்ச் சந்நிதி முறையில் செந்தமிழ்ச் சாறு சொட்டும். இவர் சாந்த லிங்கர் மீது வைத்த பேரன்பினால் அவர் ஆக்கிய நூல்களுக்கு அருமையான உரையெழுதிச் சிறப்பித் துள்ளார்.
சிதம்பரசுவாமிகளின் செந்தமிழ் சுவை நிரம்பிய திருப்போரூர் சந்நிதிமுறை படிக்கும் தொறும் இன்பம்

Page 46
- 78 -
பயக்கும். மேலும் சுவாமிகள் தமது ஞான குரவ ரான குமார தேவர் மீது பாடிய நெஞ்சுவிடு தூது முதலியன குரு பத்தியை வெளிப்படுத்தும்.
சோமகிரணப் பெருங்கருணை சுரந்த
முகங்கள் ஓராறும் சுருதி வழுத்தும்
பன்னிரண்டு தோளும் நீபத் தொடைமர் ர்பும் காமணிறச் செம்பட்டாடை மருங்குஞ்
சிறுசதங்கை கவித்த உபயத் திருத்தாளும் கடையேன் துதிக்கப் பணியாயே சேமநிதியே சுரர் பதியே தெய்வத் தருவே !
மலர்மகுவே செறிபூரணமே ஆரணமே !
சிறியே னுயிருக் கோருயிரே ! பூமனறியாப் பிரணவத்தின் பொருளைப் பகரும்
பூங்கிளியே போற்று மடியார்க் கோரருளே r
போரூர் முருகப் பெருமானே .
- திருப்போரூர்ச் சந்நிதி முறை
சற்குமரதேவன் றருங்குவளைமாலை நெஞ்சே யிற்பெறவே வாங்கிவா வின்று.
串 事
து தி எவ்வுயிர்க்குந் தாயா யிருந்தின் பமுதளிக்குஞ் செவ்விதரு சற்குமர தேவன்பா - லவ்வியந்தீர் நெஞ்சமே செங்குவளை நீண்மாலை வாங்கிவரச் செஞ்சவே தூதாகிச் செல்.
- நெஞ்சுவிடு துரது
 

வீரசைவக் கிரியை இயல் 1. பூர்வக் கிரியை
பொது விளக்கம்
சைவத்தின் ஒர் அங்கமான விரசை வ த் தி ல் வைதிக சமயத்தவர் கடைப்பிடிக்கும் நெறிமுறைகள் முற்றாகப் பின்பற்றப்படுவ தில்லை. வீரசைவர் சிவனைப் புறத்திலே வைத்துப் பூசிப்பதில் மன நிறைவு கொ ள் ளா து, அ த ன் குறியாகிய சிவலிங்கத்தைத் தமது அங்கத்தில் தாங்கி வழிபடுவ திற் பேரின்பம் காண்பர். இத்தகைய கோட்பாட்டை
வளர்த்தவர்கள் ஐவர். அவர்களை மூலாசாரியர்கள் என்பர்.
அதனால் வீரசைவர் தமது சொந்தக் கிரியை களின் போது மேற் குறிப்பிட்ட மூ லா சாரி பர் ஐவாையும் முன்னிலைப்படுத்தும் பாவனையாகப் பஞ்ச (ஐந்து) கும்பம் வைத்துச் செய்வது வழக் கம். அவ்வழக்கத்தைக் கொண்டே ஆக்கிரியை விர சைவக் கிரியை என்று தீர்மானிக்கலாம்.
விரசைவர்களின் பூர்வக் கிரியை, சமாதி க் கிரியைகளில் மேற் சொன்னவாறு பஞ்ச கும்பம் வைத்துச் செய்வது மரபு. இந்த நெறிமுறை இவ் வாறிருக்க, தாரண திட்சை பெறாத சாமா னிய
வீரசைவர் விடயத்தில் மாற்று நடை முறையாக
ஸ்நபன (ஒன்பது) கும்பம் வைத்துச் செய்யும் வழக்
கமும் உண்டு.
பெற்றுள்ளன.
இவ ற் றின் விவரங்கள் பின்னால் விவரிகப்

Page 47
— 8 (0 —
ஐந்து கும்பம் வைத்தல்
வேதோக்தமாகச் செய்யும் கிரியைகளில் பரம் பொருளை முன்னிட்டுச் செய்யும் கருமங்களே உத்தம பலனைத் தருவனவாம். பரமேஸ்வரன் ஈசானம் முதல் சத்தியோசாதம் ஈராகிய பஞ்ச மூகங்களை உடையவராய் இருந்து, ஐந்தொழில்களைச் செய் கின்றார். ஈசா னா தி பஞ்ச முகங்களிலிருந்து தோன்றிய வடிவமே பூரீ இரேணுகாசாரியர் முதலிய மூல பஞ்சாசாரியர் ஆவர்.
அவர்கள் குருவடிவாய்த் தோன்றிக் குவலயத்தை அணுக்கிரகம் செய்தனர் என்பது வீரசைவக்கோட் பாடாகும். இதனால் விரசைவர் தமது மரபுவழிச் சடங்குகளில் ஐந்து கும்பம் வைத்துக் கருமங் களை ஆற்றுதல் முறையாகும்.
விரசைவ மரபினைப் பேணும் எல்லா வைப வங்களும் மற்றையோர் கடைப்பிடிக்கும் கிரியை முறைகளிலிருந்து சிறிது வேறுபடடிருக்கும், விர சைவர்களுக்குச் சிறப்பு விதி ஒன்று தனியாகப் பேணப்பட்டு வருகின்றது. திருமணம், திக்ஷோப நயனம், அந்திம காலம் போன்றவற்றில் ஐந்து கும்பம் வைத்துக் கிரியைகள் செய்தல் வேண்டும்.
இலிங்காங்கி ஆகிய ஒவ்வொரு வீரசைவரும் இவ்விதியை மிக ஊக்கத்துடனும் பேரன்புடனும் கைக்கொண்டு பூசித்தற்கு உரியவர்களாகின்றனர்.

- 81 -
இறைவன் பக்குவான்மாக்களுக்குக்குருவடிவாய் வந்து அருள்புரிவார் என்பது சிவாகமத் துணிபு. இதனாலேயே இறைவன் குருந்த மரநிழலில் தெட்சணா மூர்த்தியாய் இருந்து சனகாதி நால்வருக்கு உப தேசம் செய்தார் எ ன ப் புராணங்கள் கூறு ம். மேலும்,
' குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந் தெனக் கருளி'
எனக் குருவருளின் சிறப்பை விநாயகர் அகவலில் ஒளவையார் குறிப்பிட்டுள்ளார். எனவே, குரு விங்க சங்கம வழிபாட்டில் ஆழமான நம்பிக்கை கொண்ட வீரசைவர் பஞ்சாசாரியர்களைப் பணி வதில் வியப்பேதும் இல்லை.
அருவுருவத் திருமேனியாகிய சதாசிவன் ஐந்து முகம் கொண்டு ஐந்தொழில்களைச் செய்கின்றார். பஞ்ச முகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி இருக்கும்.
ஈசான முகம் (கீழ் நோக்கியவாறு)-வட கிழக் கையும், தற்புருஷ முகம் - கிழக்கையும், அகோர மூகம்-தெற்கையும், சத்தியோசாத முகம்-மேற்கை பும், வாம்தேவமூகம்-வடக்கையும் நோக்கிப்புள்ளன. இம்முகங்களைக் குறிப்பதாகிய பஞ்ச கும்பங்கள் வைக்குமிடத்து, ஈசான கும்பத்தை நடுவனாகக் கொண்டு ஏனையவற்றை அவ்வத் தி  ைசகளி ல் வைத்துக் கிரியை செய்தல் மரபு.
இவற்றுள் ஈசான முகமாக நின்று வழி படு வோர் எல்லாப் பேறுகளும் பெறுவர்; சத்தி
1. தேசிய நTEதுப் பிரிது
LLLLLL uuu S u u S SS S L T TTAAA AAAA A SAAS S L S uu T S

Page 48
- 82 -
யோசாத முகமாக நின்று வழிடுவோர் ஞானம் ஒன்றையே பெறுவர். வீரசைவர் சத்தி யோசாத மு கத்து ப் பூசையையே ஏற்றுக் கொள்வர்.
மேலே சொல்லிய பஞ்ச முகங்களில் இருந்து பரமேசுவர வடிவமே பூரீ இரேணுகாசாரியர் முதலிய பஞ்சாசாரியர்களாக புகந்தோறும் அவதார ம் செப்து, பஞ்ச பிடங்களை நிறுவினர். இவர்கள் விரசைவ தருமத்தை நிலை நாட்டினர் என்று ஸ்வாயம்பு, சுப்பிரபேதம், வாதுளம் ஈராகிய சிவா கமங்கள் செப்புகின்றன.
பரமேசுவரனே ஆசாரியர்களாக அவதரிப்ப தனால் ஆசாரிய பூசையே சிவபூசையாகக் கொள் விளப்படுகிறது. இதனால் மூக்கியமான காலங்களில் விரசைவக் கிரியை செய்யும் சிவாசாரியர்கள் தமது ஆசாரியர்களை வழிபடும் முகமாக ஐந்து கும்பம் வைக்கின்றனர்.
இந்த ஐந்து கு ம் ப ங் க ளி வே நடுவண் - பூரீஇரேணுகாசிரியர், கிழக்கில்-மருளாராத்திரியர் (தா ரு கர்), தெ ர்கி ல் - ரகோராமராத்திரியர், மேற்கில்-விஸ்வாராத்திரியர், வடக்கில் - பண்டிதா ராத்திரியர் ஆகிய மூலாசாரியர்களை அவற்றில் ஆவாகனம் செய்வதாகப் பாவனை செய்வர்.
பரசிவ வடிவமான பரமாசாரியர்களை வேத மந்திரங்களினால் முதலில் ஆவாகனம் செய்தபின்பு பக்தியுடன் பூசித்து ஆசாரிய கிருபையைப் பெறுவர். இந்த முறைமை இப்படியிருக்க, சிலர் பல கும் பங்கள்  ைவ த்து அலங்காரமாகக் கி ரி யை கள் செய்வதும் வழக்கிற் புகுந்து கொண்டது.

1. சிவதீட்சை
கான வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி பணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மானந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு சேனந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே.
- திருஞானசம்பந்தர்
'மனிதனை விலங்கில் நின்றும் பிரிப்பது சமயம்' என்று கூறுவார் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள். ஆன்மாவின் அறியாமையைப் போக்கி, ஆண்டவன்பால் மனதை ஈடுபடச் செய்வதே சமயம். எத்தகைய பட்டம் பதவியை ஒருவர் பெற்றிருந் தாலும் அவருக்குச் சமய அறிவு இல்லாவிடின் அத் தகைய பதவிபினாலும் புகழினாலும் யாதொரு பய னும் இல்  ைல. ஆன்ம ஈடேற்றத்துக்கு உதவாத கல்வியும் அறிவும் மனிதனிடத்தில் அசுரத் தன்மை யையே வளர்க்கும். எனவே, மாநிலத்திற் பிறந்த மானிடர் அனைவரும் தம்மைச் சமய வாழ்வில் ஈடுபடுத்துதல் அவசியமாகின்றது.
இந்த வகையிலே விரசைவ பரம்பரையிற் பிறந்த ஒருவர் தாம் சார்ந்த சமயக் கருத்துக்களை ஓரளவேனும் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். சமய அறிவு மேன்னிலை எய்தும் பொழுதே பண்பும் பணிவும் தோன் றும் 'பனி யு மா ம் என்றும் பெருமை' என்பது பொய்யாமொழி, சமய அறிவு உள்ளத்திற் பதியும் பொழுதே சமய அனுட்டான மும் தானாக வளர்கின்றது.

Page 49
- 84 -
ஆகவே சமய அறிவை ஆசிரியரிடம் இருந்தோ சமய குருவிடம் இருந்தோ இளமையிற் பெற்றுக் கொள்ளுதல் வே ஃ டு ம். 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கமைய வீரசைவக் கோட்பாடுகளைக் கற்றுக் கொண்டவர் அம்மதத்திற்குரிய இலிங்க தாரணம் செய்து கொள்ளல் வேண்டற்பாலது. வீர சைவ மரபைச் சார்ந்த ஒருவர் சிவலிங்க தாரணம் செய் பும் வரை அ வ  ைர ச் சாமானிய விரசைவர் என்றே கூறுவர்.
வீரசைவர் தமது மரyக்குரிய முறையில் முத லிலே சமயப் பி ர வே ச ம் செய்தல் வேண்டும். சமயப் பிரவேசம் செய்கையில் ஒருவருக்கு முதன் முறை செய்ய ப் படும் திட்சை, சிவதீட்சை அல்லது சமயதீட்சை எனப்படும். வீரசைவர் இதனை விரசாமானியம் என்பர். அதனைத் தொடர்ந்து வீரவிசேடம், வீரநிராபரம் என இரண்டும் சேர்த்துமூவகை முக்கிய திட்சைகள் விரசைவத்தில் உண்டு.
இவற்றுள், விரவிசேட திட்சையாவது இலிங்க தாரணம் செய்து, பிராணலிங்க பூசையில் ஈடுபடு வோருக்குச் செய்யப் பெறுவது எனவும், விர நிரா பரம் அல்லது விரநிராபாரமாவது பற்றுக்களைத் துறந்து, சிவசிவ ஐக்கியத்தில் மனதைச் செலுத்தித் துறவு நெறியில் நிற்பவர்களுக்குச் செய்யப் பெறு வது எனவும் சுருங்கச் சொல்லலாம்.
திகூைடி என்ற வட சொல் (தி+ கூழா எனப் பிரித்து (தி= ஞானம், கூழா = கெடுப்பது) பொருள் கூறின் ஞானத்தைக் கொடுத் துப் பாசத்தைக்
கடுப்பது எனப் பொருள்படும்.
 

- 85 -
சிவதீட்சை அளிக்கும் பொழுது குருவானவர் சிடனுக்கு நயனம், பரிசம், மானசம், வாசகம், சாத்திரம், யோகம் ஆகிய அறு வகைத் தீட்சை களைப் படிமுறையிற் செய்வது வழக்கம்.
சிவதீட்சைக் கிரியையில் வீரசைவக் குருவான வர் முதலில் புண்ணியாக வாசனம் ஆகிய சங் கற்பம், விக்னேஸ்வர பூசை, பஞ்சகவ்விய பூசை வருணகும்ப பூசை என்பவற்றைச் செய்து, சீடனை (நயனம், பரிசம் மூலம்) தூய்மைப் படுத்துவார். பின்பு பஞ்ச கும்ப பூசையும் அக்கினி காரியமும் (ஒளத் திரியும்) செய்து, அவற்றின் முன்னிலையிற் சாமா னிய விரசைவருக்குத் திரிபுண்டரம் தரித்தலாகிய திரியை செய்ய ப் படும். பின் பிரணவத்துடன் கூடிய நகாராதி பஞ்சாட்சர மந்திரோபதேசமும் (வாசக திட்சை) செய்து வைப்பார். மேலும் சைவ நெறியின்படி விநாயகர், உமை, முருகன், சூரியன் ஆகிய தெய்வங்களின் மூல மந்திரங்களும் உப தேசிக்கப்படலாம்.
மேற்குறித்த நிகழ்வில் வைக்கப் பெறும் ஐந்து கும்பங்கள் இரேணுகாதி பஞ்சாசாரியர்களைக் குறிப்பனவாகும். எரியோம்பலில் சீடனுடைய மும் மலங்களை நாசம் செய்யும் பாவனையில் அக்கி னியிற் செய்யப்படும் பூரணாகுதியுடன் இச்சமய திட்சை நிறைவுறும்.
சிவதீட்சை (விரசாமானியம்) நிறைவுற்றதும், குரு வானவர் சீடரைப் பார்த்து நாள் தோறும் செப்பும் அனுட்டான (சாத்திர திட்சை) ஒழுங்கு முறைகளை

Page 50
- 86 -
உபதேசிப்பார். அத்துடன் திட்சையின் மகிமையை பும் திட்சை பெற்றவர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் விளக்குவார். சீடர் அவ்வுபதேச மொழிகளைப் பொன்னே போல் போற்றி நடப்பது கடமையாகும்.
ஒருவர் சிவதீட்சை பெறுவதனால் மந்திரமும் தத்திரமும் மருந்துமான திருநீற்றை அணிவதுடன் பவக் கடலை நீந்தத் தெப்பமாய் உதவும் ஐந் தெழுத்து ஓதி உய்யவும் ஏதுவாகின்றது.
வெந்தநீ றருங்கலம் விரதி கட் கெல்லாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலம் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
- திருநாவுக்கரசர்
E. 車
நானேயோ தவஞ் செய்தேன்
சிவாயநம எனப் பெற்றேன் தேனாய் இன் அமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந்து எனதுள்ளம்
புகுந்தடியேற்கு அருள் செய்தான் ஊன் ஆரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே,
ட மாணிக்கவாசகர்

2. சிவலிங்க தாரணம்
சுந்தரற்குப் பெண்கொடுத்த சோதிவிங்கம் துரைசுவாமி தனையின்ற சொக்கலிங்கம் கந்தரத்தில் கடுநஞ்சை வைத்தலிங்கம் கருதுவார் தங்கருத்தில் வாழும லிங்கம் அந்தரத்தில் மால்வினடமேல் வந்தவிங்கம் அழுதபிள்ளை தனக்குப்பால் அளித்தலிங்கம் இந்தவளஞ் சேரிலங்கை வந்தவிங்கம் எனையாண்ட குருவிங்கம் என்றுங்காப்பே.
- சிவயோக சுவாமிகள்
வீரசைவ நெறியில் சிவலிங்க தாரனம் செய்தல் ஒரு முக்கிய செயல்முறையாகும். இம்முறைக்கு அமைய அணிந்த இலிங்கத்தை இட்டலிங்கம் என்பர். சாமானிய விரசைவர் சிவதீட்சை பெற்ற பின்னரே இலிங்க தாரணம் செய்தற்கு அருகராவர். அப்படி பான ஒருவர் விரசைவக் குருவை அடைந்து தமது விருப்பத்தைத் தெரிவிப்பார். அவ்வேண்டுகோளுக்கு உடன்பட்ட குருவானவர் அதற்கு வேண்டிய சாமக் கிரியைகளை (பொருள்களைத் தேடுவித்துக் கிரியா
ogo i Lost S/Song LL stri.
ஆங்கு புண் ணியாகவாசனம், பஞ்ச கும்ப பூசை, உருத்திர கும்ப பூசை, அ க் கி பிணி காரியம் ஆகிய கிரியைகள் முதலில் இடம்பெறும். அடுத்து திட்சா குரு அருவுருவ வடிவாகிய சிவலிங்கம் ஒன்றை எடுத்து அட்டபந்தனஞ் செய்வார். பின் காபூசை செய்யப்பெற்ற தமது இடது அங்கையில் அதனை வைப் பார். அங்கையில் எழுந்தருளச் செய்த அச்

Page 51
- 88 -
சிவலிங்கப் பெருமானுக்கு ஆசன பூசை, உருத்திரா பிடேகம், ஆவாகனாதிகள், நிவேதனம், அர்ச்சனை, திபோபசாரங்கள் ஆகியவற்றைச் செய்வார்.
தாரணம் செய்து வைத்தல் :
இலிங்கதாரணம் செய்து வைக்கும் விரசைவக் குரு வடக்கு முகமாக இருந்துகொண்டு சீடனைத் தன்முகமாக இருக்க வைப்பார். பின்பு சீடனுடைய உடம்பில் மந்திர நியாசம் செய்வார். அதனைத் தொடர்ந்து மலரால் இதய தாமரையில் இருக்கும் பிரான, பாவனா லிங்கங்களை மந்திர பூர்வமாக எடுத்துத் தனது அங்கையில் உள்ள இட்டலிங்கத்திற் பதிப்பும்படி (நியோகம் செய்து, சிவனுக்கும் சீடனுக் குமான தொடர்பை மானசீகமாக ஏற்படுத்துவார். இது சிவ சீவ (பிரான கலை இணைப்பாகும்.
இந்நிலையில் இந்த இட்டலிங்கமானது * இஷ்ட, * பிரான, * பாவனா லிங்கங்களின் சே ர் க் கை ப ா ப் (சையோகம்) அமைகிறது. அவ்வாறு அ  ைம ய ப் பெற்ற இட்டலிங்கத்தைச் சீடனுக்குத் தாரணம் செய் யக் குரு தயாராகுவார். அப்பொழுது குருவான வர் சீடனைப் பார்த்து -
* இஷ்டலிங்கம் :
தேர்ந்து எடுத்த சிவலிங்கத்தை அபிஷேகித்த பின்னர் அதில் சிவகலை யைக் கொண்டு வந்து இணைக்க வேண்டும். பின் அந்த லிங்கத்தில் சீடனுடைய (பிரா ணனில்) சிவகலையைக் கொண்டு வந்து இனணக்க வேண்டும். ஆகவே இட்டவிங்கம் என்பது சீடனிடத் தில் உள்ள சிவகலையும் சீவசனலயும் இணைத்த ஒன்று எனலாம்.

-- 89 --
" இவ்விலிங்கம் உன்னுடைய பிரா னன்ே ஆகும். ஆதலின் உனது உயிர் உள்ளவரையும் நீ அனுபவிப்பன எல்லாவற்றையும் இந்த இட்டலிங்கத்துக்கு அர்ப்பிக்க (கொடுக்க வேண்டும். இதனை ஒரு பொழுதும் இழக்கக் கூடாது. இழப்பின், உயிர்த் தியாகம் செய்ய வேண்டும். அன்றி அதனைத் தேடி எடுக்க முயற்சித்து, எடுக்கும் வரை மந்திர நாம செபம் செய்து கொண்டிருந்து, கண்டெடுக்கப் பெற்றபின், முறைப்படி தூய்மைப்படுத்திய இலிங்கத்தைப் பூசை செய்து அணிய வேண்டும். '
என அறிவுரை கூறிச் சீடனுடைய கரங்களில் சிவலிங்கத்தை அளிப்பார்.
கொண்ட குறியும் குலவரை யுச்சியும் அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும் எண்டிசை யோரும் வந்தென் கைத்தலத்தினுள் உண்டெனில் நாமினி உய்ந்தொழிந் தோமே.
- திருமந்திரம்
* பிரான விங்கம் :
சிவ சீவ கலைகளின் இணைப்பைப் பிரான வணில் (உயிரில்) இணைத்த பின்னர், சீடனுடைய உயிரும் அந்த உயிரில் தங்கி இருக்கிற சிவகலையும் சேர்ந்த இனைப்பே பிரானவிங்கம்.
* LITT FAJ ÉLEEGır :
இட்டலிங்கத்தைச் சீடனிடம் கொடுக்கும் போது குருவானவர் உன ர்த்திய வாறு சீடன் மனத்தில் பாவனை செய்து பார்ப்பது பாவலிங்கம்
இட்டலிங்க பூசை தூல தேகத்துடனான புறப் பூசையாகும் மற்றைய இரண்டும் சூக்கும தேகத்தில் மானசீகமான பிரான விங்க பூசையும் காரண தேகத்தில் சீவன் சிவனுடன் இணைவதான பாவலிங்க பூசையும் அகப் பூசைகளாம்.
12

Page 52
- 90 -
சீடன் அதனைப் பெற்றுத் தனது கண்களில் ஒற்றிக் கொண்டு, நெஞ்சிற் பதித்துக் கழுத்திலுள்ள நூலில் பந்தனஞ்செய்வார். ப ந் தனம் செய்த இட்டலிங்கத்தைத் தலை, கண்டம், மார்பு, தாபி (கொப்பூழ், வலப்புயம் ஆகிய இடங்களுள் ஒன்றில் அணிந்து கொள்வார். பந்தனம் செய்யும் நூல் ஒவ, சிவனுக்குள்ள இணைப்பைக் குறிப்பிடும். இந்த முறையில் அணிந்து கொள்வதே இலிங்க தாரணம் ஆகும்.
நித்திய சிவபூசை :
இலிங்கதாரணம் செய்யப்பெற்றவர் நித்திய சிவபூசை யி ல் ஆசாரசிலராய் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருந்து, முதலாவதாக அநுட்டானஞ் செய்தல் வேண்டும். அதனைத் தொடர்ந்து இடது கையில் பஞ்சப்பிரம்ம மந்திரங்களைப் பெருவிரல் ஆதியாக ஐந்து விரல்களிலும் பதித்து நடுவே சிவசக்தி மந்திரத்தை நியசித்தல் வேண்டும். பின் உள்ளங்கையில் பிரணவம் எழுதி, ஆசனம் கற்பித் தலாகிய கர பூசை செய்யப் படும். அதனைத் தொடர்ந்து மூலமந்திரத்தைச் சொல்லிக் கொண்டு இட்ட லிங்கப் பெருமானைப் பந்தனத்திலிருந்து எடுத்து முன்னர் கற்பித்த ஆசனமாகிய அங்கையில் கோமுகை (கோமுகி ஈசானத்தை நோக்கியவாறு வைத்து நீராட்டுதல் வேண்டும்.
அதனைத் தொடர்ந்து இலிங்காயதர் தனக்கு இடதுபக்கம் நோக்கி இட்டலிங்கத்தின் கோமுகை அமையவைத்த கையை நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு விபூதி, சந்தனம், அட்சதை, மலர் ஆகிய

- 91 -
வற்றைச் சார்த்தி நிவேதனம் அளித்து அர்ச்சனை செய்து துரபாதி உபசாரங்களோடு தோத்திரங் களும் செய்தல் வேண்டும்.
ஈற்றில் இலிங்காயதர் நகாராதி பஞ்சாட்சர செபம் செய்து கொண்டு தனது இரு கண்களுக்கு நேரே இட்டவிங்கப் பெருமானைப் பார்த்தபடி தியா னித்தல் வேண்டும். பின் அப்பார்வையில் நின்றும் கையைக் கீழே பதித்து, நெஞ்சுடன் அனைத்தவாறு இதய தாமரையில் சிவலிங்கப் பெருமானை ஒடுக்கிய தாகப் பாவனை செய்தல் வேண்டும். பின்னர் சிறிதளவு நீர் எடுத்து இட்டலிங்கத்தில் விட் டூ க் கீழேஒழுகும் நீரை வலதுகையில் ஏந்திப் பாதோதக மாக அருந்துதல் வேண்டும். பின்பு இட்டலிங்கத்தை முன்பிருந்தவாறு பந்தனத்தில் சேர்த்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். கடைசியிலே நந்தி பூசையுடன் நித்திய சிவபூசையை நிறைவுசெய்து கொள்வதே முறைமை திரைவுறும் போது -
நீதியாய் நினைத்த பேர்க்கு நினைத்தது கொடுக்கும் லிங்கம் பாதிமா மதியே சூடும் பராபரமான விங்கம் வேதியன் போற்றும் விங்கம் மேருவாய் வளர்ந்த லிங்கம் ஆதியாய் நின்ற விங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்.
- ஒரு பழையபாடல்
எனப் பாடிப் பரவுதல் பண்டையோர் மரபு.

Page 53
3. திருமணம்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.
::: 非 மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
- திருவள்ளுவர்
புதுமண வாழ்விற் புகும் ஆண், பெண் இருபா லாரும் தமது தனி வாழ்க்கையில் அனுபவித்த இன்ப, துன்பங்கள் திருமண வாழ்க்கையிலே மாற்றமடை வதைக் காண்பர். இல்லற வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் துணை நின்று வாழவேண்டும். திருமணத் தில் இணைந்து கொண்ட ஆண், பெண் இருவரின் வேறுபட்ட மனங்கள், ஒன்று மற்றொன்றில் அன் பினால் கரைந்து விடுகிறது; சுயநலம் மறைந்து, தியாகம் பிறக்கிறது. கணவன், மனைவி இருவரும் ஒருவர் மற்றவருக்காக விட்டுக் கொடுத்து, மனம் ஒன்றுபடுகிறது. துணிவும் தியாகமும் தயையும் ஓர் உருப்பெறுகின்றன. விருந்தி னர், சுற்றம், நலிந்தோர் முதலானோரின் நலனிலே மனம் நாட்டம் கொள்கின்றது. பிறர் மீது கொண்ட அன்பினால் இதயம் கனிந்து இன்முகமும் இன் சொல்லும் வெளிப் படுகின்றன. அவை இல்லறத்தை நல்லறமாக்க உதவு கின்றன.
தனி வாழ்விற் கண்ட இன்ப துன்பம் இரண் டும் இல்வாழ்விற் பகிரப்படுகின்றன. இதனா ல் இன்பம் இருமடங்காகவும் துன்பம் அரைப் பங்கா கவும் மாற்றம் அடைகின்றன. இத்தகைய சிறப் பினை நல்கும் திருமண வாழ்வு இன்பம் பெருக்கி இருள் கடிகின்றது. தெய்வம், குரு, சான்றோர்,

- 93 -
சுற்றம் ஆகிய அனைவரது நல்லாசியும் திருமண வாழ்வுக்கு உதவ வேண்டும் என்பதனாற் போலும் திருமணம் சமயச் சடங்குடன் இணைந்து விட்டது.
விரசைவர்களுடைய திருமண த் தி ல் பஞ்ச கும்பங்களும் சிவம் வர்த்தனி கும்பங்களும், சோம (சந்திர) கும்பமும், அரசாணி கும்பங்களும் (நான்கு) வைத்தல் முறையாகும்.
திருமணக் கிரியையில் முதலாவதாக ப் புண்ணியாகவாசனம் இடம் பெறும். அதனைத் தொடர்ந்து ம ன மக்கள் எவ்வித தீமைகளுக்கும் உள்ளாகாமல் இருப்பதற்குப் பாதுகாப்பின் அடை யாளமாகக் காப்புக் கட்டுதல் நிகழும்.
பின் மணமக்கள் பல்லாண்டு வாழவேண்டும் என்ற குறிப்பில் அங்குரார்ப்பணமாகிய பாலிகை போடுதல் நடைபெற்றுச் சோமகும்ப பூசையும் இடம் பெறும். பாலிகை போடுதலாவது புதுச் சட்டியில் துரப்மையான பசு மாட்டடி மண்ணை நிரப்பி, அதனைப் பன்னிரண்டு கோட்டங்கள் (சதுரங்கள்) ஆக்கித் துவாதச ஆதித்தர்களை (பன்னிரு சூரியர் களை) நியசித்து (பதித்து) நடுவே சோமனை (சந்திரனை)த் தியானித்துப் பாலில் ஊறிய நவ தானியங்களை மூன்று சுமங்கலிகளைக் கொண்டு இடுதல் வேண்டும்.
அதனைத் தொடர்ந்து சிவம் வர்த்தனி கும்ப பூசையும் பஞ்ச கும்ப பூசையும் நடைபெறும். அடுத்து அக்கினி வழிபாடாகிய ஓமக் கிரியை செய்யப் படும். இலிங் காயதருக்கு இவ்வழிபாடு செய்யப் படுவதில்லை.
tý?éöTóörs; கன்னிகாதானமும் திருமா ங் கல்ய பூசையாகிய இலக்குமி பூசையும் நடைபெறும் கன்னிகாதான நிகழ்வில் கோத்திரம் கூறும் பொழுது

Page 54
94 -
'வீரகோத்திரம்' என்று குறிப்பிட்டுத் தொடங்கு வதே வழமை. இந்நிகழ்வில் sy soðIT to i St. GŪT G7 உமா-மகேஸ்வரர் ஆகப் பெண்ணின் பெற்றோர் பாவித்துப் பூசிப்பர். இலிங்காயதருக்குச் செய்யப் படும் கிரியையில் சிவலிங்க பூசையும் இடம் பெறும்.
அடுத்து மணமக்கள் உடை கொடுத்து வாங்கல் செய்வர். பின்னர் திருமாங்கல்ய தாரணமாகிய தாலிகட்டும் வைபவம் இடம் பெறும் தொடர்ந்து மாலை மாற்றுதல், பால் பழம் அருந்துதல், அம்மி மிதித்தல், அரசாணி வலம் வருதல், அருந்ததி பார்த் தல் என்பன நடந்து, பூரணா குதி செய்யப்படும். பின் மணமக்களை வாழ்த்துதலும் குரு உபசாரமும் நிகழ்வதுடன் திருமணக் கிரியை நிறைவெய்தும்
திருமண வாழ்வில் தலைப்பட்ட தலைவன் தலைவியர் தெய்வ அனுக்கிரகத்தை வேண்டி நிற்பது சமயப் பற்றுள்ளவர்களின் சால்பாகும்.
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்ல கதிக்கு பாதுமோர் குறைவிலைக் கண்ணில் நல்லஃ துறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில் நல்லா ளொடும் பெருந்தகை இருந்ததே.
நல்ல குடும்பத்துக்கு அழகு அவ்வீட்டின் செயற் பாடுகள் யாவும் ஒழுங்காக நடைபெறுவதில் தங்கியுள்ளது. அவ்வாறான ஒழுங்கைக் கடைப் பிடித்தல் ஒரு தலைவனாலேயே இயலும். அவ்வாறே இல்லத்தில் மகிழ்ச்சியும் நின்மதியும் நிலவுவதற்கு அவ்வில்லத்தின் தலைவி நற்குணம் உள்ள்வரர்: இருத்தல் வேண்டும். ஆகவே இல்லற வாழ்வில் தலைவன் தலைவி இருவரும் ஒத்த மனமும் ஒத்த குணமும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வும் உட்ை பவராய் இருத்தல் தமிழர் சால்பாகும்.

11. சமாதிக் கிரியை
சமாதி என்னும் சொல் இரு வகையான பொருளை உள்ளடக்கியது. ஒன்று ஞானசமாதி: மற்றையது கிரியா சமாதி. இவற்றுள், ஞான சமாதி எனக் குறிப்பிடுவது மனத்தை ஒரு வழிப்படுத்திக் கடவுளிடத்தில் ஈடுபடுத்தலாகும் ' என்னை மறுத் திருந்தேன் இறந்தே விட்டது இவ்வுடம்பே' என்ற பக்குவ நிலை எய்துவது ஞான சமாதியாகும். இச் சமாதி இயமம் முதல் சமாதி ஈராகிய எட்டுப் படி முறைகளைக் கொண்டது.
கிரியா சமாதி என்பது ஆன்மா நீங்கிய உட லைத் துரப்மைப் படுத்திச் சிவரூபம் ஆக்கிய பின்னர் செய்யப்படும் சடங்கையும் அதனைத் தொடர்ந்து மண்ணிற் கல்லரை அமைத்து, அவ்வுடலை முறைப் படி சமாதி இருத்திப் பூமியிற் புதைப்பதைப்புங் குறிக் கும் ஈண்டு கிரியா சமாதி பற்றிக் கவனிப்போம்.
சைவத் தமிழ்ப் பாரம்பரியத்தில் ஒருவர் உயிர் நீத்தலை இயற்கை எய்தல் அல்லது சிவகதி எனக் கூறுதல் மங்கல வழக்கு. அந்த வகையில் வீரசைவ இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் இயற்கை எ பப் து வதைச் சிவலிங்க ஐக்கிய மாதல் என்பர் வீரசைவர் சிவஐக்கியமான பின் அவருடைய ஆன்ம நன்மைக் தாக அவரின் உரிமையாளரால் (கர்த்தாவால்) செய்யப்படும் அந்திமக் கிரியை, சமாதிக் கிரியை ஆதலின், அதனை அபரக் கிரியை (உயிர் நீத்தபின் செய்வதாகிய கிரியை) என்று கூறாது சமாதிக் கிரியை என்று கூறுவர்.

Page 55
- 96 -
விரசைவத்தைச் சார்ந்த ஒருவர் சிவ லிங்க ஐக்கியம் ஆனதும், அவரது உடலைச் சுற்றத்தார் துரப்மைப்படுத்துவர். பின்பு அவ்வுடலைச் சிவமா கப் பாவித்துச் சாய்வுக் கதிரையிலே பத்மாசனத்தில் இருத்துவர். அதன்மேல் அவ்வுடலுக்கு ஆடை உடுத்து, திருநீறு, உருத்திராக்கம் என்பவற்றை அணிந்து மல்ரினால் அலங்கரித்துச் சிவக்கோலம் ஆக்குவர். பின்பு அவ்வுருவத்தின் முன் கும்பம் ஒன்று வைத்து, குத்து விளக்கு ஏற்றித் திருமுறை ஓதப்படும்.
அதன் பின் விரசைவக் குருவை வரித்து (வர வழைத்து) சிவலிங்க ஐக்கியமானவரின் உடலுக் குரிய சமாதிக் கிரி யை  ைய சி செய்துதவும்படி உரிமையாளர் வேண்டிக் கொள்வார். அதற்கமைய அலங்கரிக்கப் பெற்ற கிரியா மண்டபத்திலே பஞ்சா சாரிய கும்பங்களும் சிவம் வர்த்தனி கும்பங்களும் வைக்கப்படும்.
சிவஐக்கியமானவர் சாமானிய விரசைவரா பின், அவருக்கான கிரியையில் பஞ்சா சாரிய (ஐந்து) கும்பங்களுக்குப் பதிலாக சிவனை நடுவ ணாகக் கொண்டு திக்குப் பாலகர் எண் மரை ச் சுட்டுவதான ஸ் ந ப ன (ஒன்பது) கும்பங்களை வைத்துப் பூசித்துக் கிரியை செய்வதும் உண்டு, அதற்கான விவரம் கேட்குமிடத்து, அது அவ்வூர்ப் பாரம்பரியம் எனக் கூறுப்படுகிறது, எது எப்படி இருப்பினும், நடைபெறும் கிரியை சமாதிக் கிரியை என்பதைப் பிரித்தறியும் வகையிற் பஞ்ச கும்பம் வைத்துச் செய்வதே முறையாகும்.

-97 -
கும்பத் தாபனம் செய்த பின்னர் ஆசாரியர் கர்த்தாவுக்குச் சங்கற்பம் செய்து, பஞ்சகவ்வியம் கொடுத்து, அவரைத் துரப்மைப்படுத்திய பின், * இடது தோளில் பூணுரல் அணிவிப்பார். பிறகு புண் னியாகவாசனம் முடித்து, சிவம் வர்த்தனி பூசை செய்து, சமாதியாய் இருக்கும் உடலையும் கிரியா மண்டபத்திலுள்ள கும்பங்களையும் தொடர்புறுத்துவ தாகிய நாடிசந்தானம் (நூலிட்டுத் தொடர்புறுத்தல்)
செய்யப்படும்.
சிவைக்கியமானவர் சாமானிய விரசைவரா பின், முதலில் கூடிணிக லிங்கமாகிய உருத்திராக் கம் ஒன்றை எடுத்து, அதற்கு அபிடேகாதிகள், அருச் சனைகள் செய்யப்படும். பின்பு அவ்விலிங்கத்தை நாடிசந்தான வழியே ஆசாரியர் கொண்டு சென்று சமாதியாய் வைக்கப் பெற்ற உடலருகே நின் று மந்திர நியாசங்களால் உடலைத் துரப்மைப் படுத்திய பின்னர், அதற்கு இலிங்கதாரணம் செய்து அதனைச்
சிவரூபம் ஆக்குவார்.
உடலைச் சிவக்கோலம் ஆக்கிய பின், ஆசாரி பர் கிரியா மண்டபம் மீண்டு, கும்ப பூசையும் ஒமாக்கினி வளர்த்தலும் ஆகிய கிரியைகளை நடத் துவார். மந்திரங்களினால் சிவருபம் ஆக்கிய உடலை ஊர் வழமைப்படி உரிமையாளரைக் கொண் டு நீராட்டுவிக்கப்படும். நீராட்டு இறுதியில் கிரியா மண்டபத்திலுள்ள பஞ்ச கும்ப அல்லது ஸ்நபன கும்ப நீரினால் அபிடேகம் செய்யப்படும். பின் ஆடை முதலியவற்றினால் அலங்கரித்த உடலைக் கிரியா மண்டபத்துள் கொண்டு வந்து வைப்பர்.
% வீரசைவ சமாதிக் கிரியை பூர்வக் கிரியைாகக் கொள்வது
வீர சைவ மரபு.
في 1 الخ؟ .霹-酮。、壹 it ۔۔۔۔۔ ۔۔۔

Page 56
- 98
உடலை நீராட்டுதற்கு முன் மஞ்சள், ஆறுகு முதலி பவற்றைப் பொடியாக்குதற்கு உரலிலிட்டு இடிக்கப் படும். இந்நிகழ்வு ஆன்மாவைப் பிடித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மல நாசத்தைக் குறிக் கும். திருப்பொற்சுண்ணம் இ டி த் த ல் ஆ கி ய துர்னோற்சவம், உடலை நீராட்டிய பின் செய்யும் வழக்கமும் உண்டு. இது இலிங்கதாரண திட்சை பெற் ரோருக்கு எச்சந்தர்ப்பத்திலும் வேண்டியதில்லை. இதற்கிடையில், சிவலிங்க ஐக்கியமானவரின் உடலை நீராட்டுதற்கு வெளியே எடுத்துச் சென்ற தும், புற்று மண்ணிற் செப்த இலிங்கம் ஒன்றைக் கொண்டுவந்து அவ்விடத்தில் வைக்கப்படும். பின் னர், அன்றிலிருந்து மூன்று நாட்கள் வரை அவ் விலிங்கத்துக்குப் பூசை, வழிபாடுகள் செய் த ல் முறையாகும்.
சமாதிக் கிரியைக்காகக் கிரியா மண்டபத்துக்கு உடலைக் கொண்டு வந்து வைத்த பின்னர், அவ் வுடலுக்குச் செய்ய வேண்டிய கிரியைகள் இடம் பெறும்.
பின்பு மலர்களினாலும் வண்ணக் கொடிகளி னாலும் அலங்கரிக்கப்பட்ட தேரின் உள்ளே பாது காப்பாக உடலை இருத்தி வைத்து, மு ன் ன ரே வெட்டி ஆயத்தம் செய்யப் பெற்ற சமாதிக் குழி பருகே கொண்டு செல்லும் பொழுது, அதன் கூடவே குருவினால் உரிமையாளரிடம் கொடுக்கப் பெற்ற உருத்திர கும்பமும் எடுத்து வரப்படும்.
* இதுபற்றிய விவரம் "திருப்பொற் சுண்ணம் இடித்தல்," என்ற தலைப்பின் கீழ் முன்னர் விவரிக்கப்பட்டுள்ளது.

- 99 -
நாலடிச் சதுரமும் உள்ளே குடையப்பட்டது மான குழி அருகிற் சென்ரதும், அதனை மும்முறை வலம் வந்த பின், தேர் கீழே இறக்கி வைக்கப்படும். பிறகு குழியின் அடியில் உப்பினைப் பரப்பிவிட்டு, விபூதி, நெல் மற்றும் தானியங்களும் ஒன்ரன் மேல் ஒன்றாக இடப்படும். அதன் பின்னர் சடலத்தை இருத் திய நிலையில் சமானிய விரசைவராயின், வடக்கு முகமாகவும், இலிங்கதாரியாயின் கிழக்கு முகமா கவும் சமாதி வைக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து கர்த்தாவானவர் சடலத்தை மூடுவதற்கு அடையாளமாக முதலில் ஒரு பிடிமண் எடுத்துக் குழியினுள் போட்டபின், உப்பு முதலிய வற்றுடன் பொடியாக்கிய செங்கற்களையும் ஒன் ரன் மேல் ஒன்றாகப் போட்டுக் குழி மூடப்படும். பின்பு அங்கு கொண்டு சென்ற உருத்திர கும்ப நீரி னால் சடலத்தின் உச்சியில் அபிடேகித்து, சிவார்ச் சனையும் திருமுறை ஒதலும் இடம் பெறும். குழி, மண்ணினால் நிரப்பப்பட்ட பின், சிரசிற்கு மேல் தடி ஒன்று நடப்படும். அதன் பின் சிவ ஐக்கிய மாணவரின் ஆன்மா நற்பேரெய்தும் பொருட்டுப் பிரார்த்தனையாகக் குருவும் கர்த்தாவும் விரசைவ பரமான இட்டலிங்கப் பெருமானை வேண்டுதல் செய்வதுடன் சமாதிக் கிரியை நிறைவெய்தும்.
" அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம் பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடுமட்டே பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே."
- பட்டினத்தார்.

Page 57
சமாதி வைத்தல்
சமாதி வைத்தல் என்பது பஞ்ச பூதங்களினா லான மனித உடல் உயிர் நீங்கிய பின், பஞ்ச பூதங் களும் தன்னகத்தே கொண்ட பூகற்பத்தில் சமயா சாரப்படி இருந்த கோலத்தில் நல்லடக்கம் செய்வ தாகும். உயிர் நித்த உடலை மண்ணில் புதைத்தல் நெடுங்கால வழக்கம். இதற்கான வரலாற்றுச் சான் றுகளும் உண்டு.
முன்னாளில் அரசர்கள், பிரபுக்கள் போன் ரோர் உயிர் நீத்த பின் அவர்களின் உடலைப் பாது காத்துப் பேணும் பழக்கம் இருந்து வந்தது. அம் மாதிரியான பழக்கம் எகிப்திய நாட்டில் கி. மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது. உயிர் நீத்த அரசர்களின் உடலைத் தைலத்தில் இட்டுப் பாது காத்த பின்னர் அவற்றைப் புதைகுழியில் நல்லடக்கம் செய்துள்ளனர். அம்முறையிற் செய்யப் பெற்ற கல்லறைகள் பிரமிட்டுக்கள் என அழைக்கப்பட்டன.
அவ்வாறே பண்டைத் தமிழகத்திலும் போர் முனையில் வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கும் அரசர்களுக்கும் நினைவுச் சின்னம் எழுப்பி, விர வணக்கம் செலுத்தியுள்ளனர். மக்கள் நெஞ்சங்களில் இடங்கொண்ட சான்றோரைப் போற்றி, நடுகல் வழி பாடாற்றிய செய்தி பழந்தமிழ் நூல்களில் உண்டு. இவ்வாறான செய்திகளைச் செந்தமிழ்க் காப் பியங்களும் சங்கப் பாடல்களும் அழகொழுகச் செப்புகின்றன. நாட்டினைக் காத்த நற்றமிழ் மன்ன எனின் மர வலிமையைக் கூறவந்த திருவள்ளுவர்,

- O -
' என்னை முன் நில்லன் மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர் '
(ஐ-தலைவன்: தெவ்விர் -பகைவர்)
எனக் குறிப்பிட்டுள்ளார். 'பகைவரே " என்னுடைய தலைவன் முன் எதிர்த்து நிற்காதீர்கள். அவர் முன் எதிர்த்ததால் மடிந்து கல்வ டி வாய் நின்றவர்
பலர்' என்பது மேற் போந்த கு ர ட் பா வின் கருத்தாகும். மன்னனின் மரவலிமை அறியாது அவ ணுடன் போரிட்டுப் பலர் மடிந்து போயினர். அவ்வாறு மடிந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்பப் பெற்று அவர்களின் பெயரும் புகழும் அவற்றில் பொறித் துப் போற்றப்படுவதையே ' நடுகல் நாட்டல் ' எனப் புறப்பாடல் புகழ்ந்துரைக்கும்.
மேலும், போர் மறவர்களுக்கு நடுகல் நாட்டி வீரவணக்கம் செலுத்திய பாங்கைக் குறிப்பிடுகை
SG) -
" காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும் படை வாழ்த்தல் ' எனப் புறத்திணையியலில் தொல்காப்பியர் குறிப்
9 (67.67777.
உயிர் நீத்த விரரின் நினைவாக நாட்டுதற்குத் தெரிந்தெடுத்த கல்லை நீராட்டி, பெயர் பொறித்து, மாலை சூட்டி, நடுகல் நடுவதை
' அணிமயிற் பிலி சூட்டிப் பெயர் பொறித்து
இனிநட்டனரே கல்லும் "
எனப் புறனானூற்றிலும்,

Page 58
- 102 -
" ஆடவர் பிடும் பெயரும் எழுதி அதர்தொறும்
பீவி சூட்டிய பிறங்குநிலை நடுகல் ' என அகனானூற்றிலும் குறிப்பிட்டுள்ளமை நோக் கற் பாலது.
செயற்கருஞ் செயலில் முன்னின் று  ைழத்த மாவீரரின் நினைவுக் குறியாக நடுகல் நட்டு வழி பாடாற்றிய செய்தி பழந்தமிழ் இலக்கியத்திற் L/Té, Sé STööITC) f.
இந்த வகைபிற் பழக்கப்பட்ட மக்கள் சிவனடி பார் விடயத்திலும் கண்ணோட்டம் செலுத்தினர். சமய வாழ்வில் ஈடுபட்டுச் சிவசின்னம் அணிந்து ' மானிட யாக்கை வடிவு சிவலிங்கம்' என மதிப்பது விர சைவம், சிவத்தி ன் குறியாகிய சிவலிங்கத்தை அகத்திலும் புரத்திலும் வைத்து வழிபடும் சிவனடி பாரை விரசைவர் என்று சைவ உலகம் கூறும். இறைப்புணர்விற் குலையாத கொள்கையும் சலிபாத சிந்தையும் விரசைவத்தின் பண்புகளாகும்.
சிவலிங்கப் பெருமானைப் புரத்தில் வைத்துப் பூசித்து மனம் நிறைவுறாது, அங்கத்தில் அணிந்த விரசைவர் சிவனுக்கு ஒப்பாவர். வாழ்நாள் முழு வதும் சிவசின்னம் தாங்கிச் சிவனை மறவாச் சிந் தையுடன் வாழும் விரசைவரின் ஆன்மா, சிவமெ னவே கருதப்படுகிறது. அவ்வான்மா பிரிந்த உடல் சிவன் கோயிலுக்கு ஒப்பானது. சிவனைப் பிர திட்டை செய்த சிவன் கோயிலுக்கு பாரும் நெருப்பு வைப்பதில்லை. அவ்வாரே ஆகக்கோயிலில் சிவலிங்

- 103 -
கத்தைப் பூசித்த ஒருவரின் உடலுக்குத் தி வைத்தல் கூடாது. பஞ்ச பூதங்களினால் ஆகிய உடலை அப் பஞ்ச பூதங்களும் உள்ள பூமியிற் புதைத்தாலே பூதங்கள் ஐந்தும் அவ்வக் கூறுகளுடன் சேரும் என் பது அறிவியல் துணிபு. சமய நோக்கும் அறிவியல் நோக்கும் இசைவுற அமைந்ததே விரசைவரின் சமாதி வைக்கும் முறையாகும். விரசைவர் உயிர் நித்த பின்னர் அவர்களின் உடலுக்குத் தி மூட்டுவதும் அதனைத் தொடர்ந்து பிண்டோதகக் கிரியை செய் வதும் முறையன்று.
மானிடதேகம் சிவலிங்க வடிவம் என்பதை மன திற் கொண்டு சிவலிங்கதாரியாய் வாழ்பவர் சிவா லயத்துக்குச் சமமாவர். அகத் தி லும் புறத்திலும் சிவனைக் கொலுவிருத்தி மகிழும் சிவனடியாரின் உடல் புனிதமானது. சிவசிந்தனையும் சிவவேடமும் தாங்கியிருந்த அவ்வுடல் உயிர் பிரிந்த பின் அதற்குத் தி வைக்காது மண்ணிற் புதைப்பதே வழக்கமாயிற்று. விரசைவரான சிவனடியார் சிவத்துடன் ஐக்கியமா னதும் அவரது உடலை நீரினாலும் மந்திரத்தினாலும் துரப்மையாக்குதல் வேண்டும். பின்னர்
" அந்தமில் ஞானி யருளை யடைந்தக்கால் அந்த வுடறான் குகை செய்திருத்திடிற் சுந்தர மன்னரும் தொல் புவி யுள்ளோரும் அந்தமி வின்ப வருள் பெறுவாரே "
எனத் திருமந்திரத்திற் குறிப்பிட்டவாறு பூமியில் குகை செய்து, அதனுள் உடலைச் சமாதி வைத் தல் வேண்டும். மேலும்
தேஷாம் சமாதி சிவைக்கிய நிஷ்டானாம் தகனாதி கர்ம நிஷித் தத்தியாத் சமாதி கிரியை வகர்தும் யுக்தா |
சர்வகர்மா நிவிர்த்தஸ்ய தியான யோக ரதஸ்யச நதஸ்ய தகனம் கார்யம் நச பிண்டோதகக் கிரியா |

Page 59
- 104 -
என வீரசைவ அந்தியேஷ்டிகிரம நிரூபணம், வேதாத் தசார சிந்தாமணி, உத்தரகாண்டம், 20 ஆம் பிரக ானத்திற் குறிப்பிட்டவாறு உயிர் நீத்த உடலைச் சிவ ரூபமாக்கி, பூமியில் நல்லடக்கம் செய்தல் வேண் டும். அவ்வுடலுக்குத் தீ மூட்டுதலும் ஆன்ம ஈடேற்றத் துக்காகப் பிண்டோ தகக் கிரியை செய்தலும் ஆகாது.
உயிர் நித்த வீரசைவரின் உடலை அதிக செல வின்றிப் பூமியில் நல்லடக்கம் செய்வதாயின், பூமி பினுள்ளே நாலடிச் சதுரமாய்க் குடையப் பெற்ற கிடங்கினுள் அடியிலே உப்பைப் பரவிய பின், பத்மா சனத்தில் இருத்திய உடலை வலிமையுள்ள துணி பில் வைத்துக் கீழே இறக்கி, உரிய இ டத் தி ல் அதனைக் கொண்டுபோய் வைக்க வேண்டும். பின்பு உடலைச் சுற்றி உப்பு, நெல், விபூதி என்பவற் றால் கழுத்து வரை நிரப்புதல் வேண்டும். கண்டத் திலிருந்து தலைக்கு மேல் வரையிலாவது தனி விபூ தியால் மூடி, நிரப்பிய பின், அதன் மேல் சட்டியோ குண்டானோ கவிழ்த்துக் குழியை முற்றாக மூடி விடுதல் முறையாகும்.
அவ்வாறின்றி, புதை குழியில் நினைவுக் குறி பாகக் கட்டடம் ஒன்று அமைப்பதாயின், நிலத்திலே முக்கோண அமைப்பில் குழி ஒன்று வெட்டி அடி பிலே உப்புப் பரப்பப்படும். பின் முக்கோண வடி வாகத் துணியில் தைக்கப்பட்ட பையினுள் இருத்திய நிலையில் உடலை வைத்துக் கிடங்கினுள் கீ ழே இறக்குதல் வேண்டும். அவ்வாறு இறக் கி ய பின் உடலைச் சுற்றி மேற் குறிப்பிட்ட மாதிரி விபூதி,

- 105 -
உப்பு, நெல் முதலியவற்றால் நிரப்புதல் வேண்டும். அவ்விதம் நிரப்பப்பட்ட குழி மண்ணினாலும் சாத் தினாலும் மூடிக் கட்டப்படும். ச மா தி கட்டப்பட்ட உடலின் தலை உச்சிக்கு மேல் உயரமாக ஒரு பிடம் அமைக்கப்படும். அப்பிடத்தில் நினைவுக் குறியாக நடுகல், அல்லது சிவலிங்கம் ஒன்றை வைத்துப் பிர திட்டை செய்வது வழக்கம்.
இம்மாதிரி நினைவுக் குறியாக எழுப்பப்பட்ட விரசைவர்களின் சமாதிகள் யாழ்ப்பாணத்திலே மயிலிட்டி, அளவெட்டி, உரும்பிராய், கீரிமலை, சரசாலை ஆகிய இடங்களில் அ  ைம க் கப் பெற் றுள்ளன.
மூன்றாம் குழிக் கிரியை
சிவ சிந்தனையுடன் வாழ்ந்து உயிர் நித்த விரசைவரின் உடல் சிவசொரூபமானது. அதனால் அவ்வுடலைப் புதைத்த சமாதிக் குழியும் சிவசம்பந் தமானது. எனவே அச்சமாதிக் குழிக்குச் ச்ெய்யும் பூசை, வழிபாடுகள் விசேட சமயச் சடங்காகக் கொள்வது விரசைவர்களின் மரபாகும்.
சிவ ஐக்கியமான விரசைவர் ஒருவரின் உடலை மண்ணிற் சமாதி வைத்த மூன்றாம் நாள் சமாதிக் குழியிற் செய்யப்படும் கிரியை, மூன்றாம் குழிக் கிரியை எனப்படும். இக்கிரியை சிவ ஐக்கிய மாணவரின்
4.

Page 60
---- 10]6 -
ஆன்ம நன்மை கருதி, அவ்வான்மாவைத் தாங்கிய உடலைப் புதைத்த சமாதிக் குழியில் மூன்றாம் நாள் செய்யப்படுவதால் அத ை ைமூன்றாம் குழி என்று பொதுவாகக் கூறுவர்.
சமாதிக் கிரியை அன்று வீட்டில் வைக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு மூன்று நாட்கள் வரை தொடர்ந்து பூசை செய்யப்படும். மூன்றாம் நாள் அந்த இவிங் கத்தை நடுநாயகமாகக் கொண்டு அதனுடன் வேறும் நான்கு இலிங்கங்களைச் சேர்த்து, பஞ்சவிங்கங் களுடன் நந்தியந்தேவர், வயிரவர் ஆகிய தெய்வ வடிவங்களை உருவாக்கி அவ்வத் தெய்வங்களை அவற்றில் ஆவாகித்தற் பொருட்டுச் சாணம் முதலிய வற்றால் சுத்தப்படுத்திய விட்டில் புண்ணியாக வாசனம் முடித்து, உருத்திர கும்பத் தாபனம் செய் யப்படும். அப்பொழுது கர்த்தாவுக்கு " இடது தோளில் பூணுரல் அணியப்படுகிறது.
பிறகு உருத்திர கும்ப பூசை முடிந்ததும் அதனையும் மேற் சொல்லிய தெய்வச் சிலைகளையும் அபிடே கத் திரவியங்கள், நிவேதனப் பொருள்கள், பத்திர புட்பங்கள் ஆகியவற்ரையும் எடுத்துக் கொண்டு மணி, சேமக்கலம், சங்கு முதலிய வாத்தியங்கள் முழங்கப் பண்ணிசை ஒலியோடு விரசைவக் குரு கர்த்தாவுடன் சேர்ந்து சமாதிக் குழி அமைந்துள்ள இடத்துக்கு உரிமைக்காரர்கள் செல்வர்.
* வீரசைவ சமாதிக் கிரியையும் அதனுடன் தொடர்பு பட்ட ஏனைய கிரியைகள் எல்லாம் பூர்வபரக் கிரியை களாகக் கொள்வது வீரசைவ மரபு.

... 107 -
அங்கு குழியின் மேல் சதுர மேடை ஒன்று முதலில் அமைக்கப்படும். பிறகு தான (இடம்) சுத்தி செய்து, கோலமிடப்படும். கோலமிட்ட கோட்டத்தில் நான்குபெருந் திசைக்கும் நான்கு இலிங்கங்களையும் நடுவே நாயக இலிங்கத்தையும் கோமுகை வடக்கு நோக்கி இருக்கத் தாபனஞ் செய்தல் வேண்டும்.
? T+'';"
சாமதி கிழக்கு த் தி சை நோக்கியதாயின், ஈசான திசையில் வயிரவரையும் அக்கினி திசை யில் (தென் கிழக்கில்) நந்திய ந் தேவரையும் தாப னம் செய்ய வேண்டும்.
சமாதி வட திசை நோக்கியதாயின், வாயு திசையில் (வட மேற்கில்) வயிரவரையும் ஈசான திசையில் நந்தியத்தேவரையும் தாபனம் செய்ய வேண்டும்.
தெய்வச் சிலைகள் யாவும் தாபனம் செய்த பின்னர் அவற்றை நாயக இலிங்கத்துடன் நூலிட்டு நாடி சந்தானம் செய்யப்படும்
அதன்பின், திருவுருவங்களுக்கு நல்லெண்ணெய் பஞ்சகவ்வியம், அபிடேகத் திரவியங்கள், பஞ்சா மிர்தம், நெய், பால், தயிர், தேன், கருப்பஞ் சாறு, பழரசம, இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிடேகித்த பின்னர், உருத்திர கும்ப அபிடேகம் செய்யப்படும். பிறகு பட்டு, விபூதி, ச ந் த ன ம், அட்சதை, மலர் ஆகியவை அணியப்படும்."

Page 61
- 108 -
அலங்கா ராதிகள் யாவும் செய்த பின் நிவே தனம் படைத்து, அர்ச்சித்து, தீப துரபோபசாரங் கள் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து திருமுறை ஒதி, தானம் அளித்து, வாழ்த்துக் கூறி, இலிங்க ஐக்கியமானவர் நற்பேரடைய வேண்டு மெனப் பிரார்த்திக்கப்படும்.
ஈற்றில் குரு உபசாரத்துடன் இக்கிரியை நிறை விyறும்.
" மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றமென்னும் வினையுளே விழுந்த ழுந்தி வேதனைக் கிடமாகாதே கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகா ரோணத்தானை நினையுமா வல்லி ராகில் உய்யலாம் நெஞ்சினிரே "
- அப்பர் தேவாரம்,
மோட்ச தீபக் கிரியை
பத்தனாய்ப் பாடமாட்டேன் பரமனே பரமயோகி எத்தினாற் பத்திசெய்கேன் என்னை நீ இகழவேண்டாம் முத்தனே முதல்வாதில்லை அம்பலத் தாடுகின்ற அத்தாவுன் ஆடல்காண்பான் அடியனேன் வந்தவாறே.
- அப்பர் தேவாரம்
விர சைவர் களின் சமாதிக் கிரியையுடன் தொடர்புடைய இறுதியானதும் உயர்நிலையானது மான கிரி யை, மோட்ச தீபக் கிரியை ஆகும். சிவ ஐக்கிய மா ன ஆன்மாவாகிய சிவ சோதி பரமாத்மா வாகிய சிவசோதியுடன் கலந்து, கற்பூர சோதிபோல் எச்சமின்றி மரைந்து போவதைப் பாவனையாகக் காட்டுவது மோட்ச தீபக் கிரியை எனப்படும்.

- 09 -
சைவ சமயத்தில் தனித்துவமான கோட்பாடுக ளைத் தன்னகத்தே கொண்ட வீரசைவம் உலகத்தார் அனுட் டி க்கும் விதிமுறைகளிலிருந்து வேறுபட்ட நடைமுறைகளைக் கொண்டிருக்கும். இலிங்காயதர் களுக்கு உலகோர்கைக்கொள்ளும் ஆசௌச நியமம் இல் லை. ஆயினும், உலகாசாரப்படி அவர்கள் ( இலிங்காயதர் ) பதினொரு நாட்களும் ஏனையோர் பதினாறு நாட்களும் ஆசௌசம் காப்பர். இந்த ஆசௌச நாட்கள் ஜனன, மரண ஆசௌசங்கள் இரண்டுக்கும் பொருந்தும்.
விரசைவர் ஒருவர் சிவப் பேரெ ப் திய து தொடர்பிலான ஆசௌச முடிவிலன்று உலகோர் அத்தியேட்டி என்று சாதாரணமாகக் கூறும் மோட்ச தியம் வைப்பதாகிய முக்கிய நிகழ்ச்சி இடம் பெறும். இந்நிகழ்ச்சி சிவசோதி சிவசோதியுடன் ஐக்கிய மாதலைச் சுட்டுகின்றது.
மோட்ச தீபம் சார்ந்த கிரியை மற்றையோருக் தான கிரியைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக் கும். அக்கிரியை செய்தற்கு கிழக்கு முகமாக மண்டபம் வகுத்து, அதனை மாவிலை, மகர தோரணங்களால் அலங்கரித்து, அதன் நடுவே வேதிகையும் பஞ்ச கும்பங்களும் வைக்கப்படும்.
வேதிகைக்கு முன்னிலையில் நந்தி கும்பம், உருத்திர கும்பம், மோட்ச தீபக் கும்பம் என்பனவும் ஈசானத்தில் சிவம் வர்த்தனி கும்பங்களும் வைக்க வேண்டும் மண்டப வேதிகையைச் சுற்றி எட்டுத் திசைகளிலும் அ ட்ட தி க்கு ப் பாலகர்களுக்கான கும்பங்களுடன் நிருது திசைக்கும் வருண திசைக்கும்
15 தேசிய நூலகப் பிரி

Page 62
- 10 -
இடையே விஷ்ணு கும்பமும் ஈசான திசைக்கும் இந்திர திசைக்கும் இடையே பிரம கும்பமுமாகப் பத்துத் திசைகளுக்கும் தச ( பத்து) திக்குப் பாலகர் கும்பங்கள் வைப்பது வழக்கம்.
இக்கிரியை ஆரம்பமாவதற்கு முன் இதற்கென ஏற்பாடு செய்த விரசைவ சிவசாரியரைக் #PrifPercy T மண்டபத்துக்கு வெளியிலிருந்து அழைத்து வருதல் மரபு. மங்கள வாத்தியங்கள் ஒலிக்க,உபசாரத்துடன் குருவைக் கிரியா மண்டபத்துக்கு உரிமையாளர் அழைத்து வருவதைப் பள்ளையம் அழைத்தல் Taituri . அவ்வாறு எழுந்தருளி வந்த சிவாசாரியாருடைய திருவடிகளை நீராட்டி, துரப தீப ஆராத்திகள் எடுத்த பின்னர், திருவடி நீராட்டியபோது பெற்ற பாதோ தகத்தை ( பாத + உதகம் - திருவடி நீரை) உரிமை யாளரும் அவரது சுற்றத்தாரும் அருமருந்தென அருந்துவர்.
அதன்மேல் சிவாசாரியர் கிரியா மண்டபத்துள் புகுந்து, அவருக்கென அளிக்கப்பட்ட ஆசனத்தில் இருப்பார். பின்பு அன்றைய கிரியை ஆரம்பிக்கு முகமாக மணியை அடித்துச் சங்கற்பித்துப் புண்ணி யாக வாசனம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து இக்கிரியை பூர்வபரம் ஆன தால், * கர்த்தாவின் இடதுதோளில் பூணுரல் அணியப்படும்.
* வீரசைவர்களின் சமாதி, மூன்றாம் குழி, மோட்ச தீபக் கிரியைகள் மூன்றிலும் கர்த்தாவின் இடது தோளிலேயே பூணுால் அணிதல் வேண்டும். அத்துடன் கிரியா மண்டபத்துள் வலம்-இடமாகச் சுற்றி வருவதும் முக்கியமாகக் கடைப்பிடிப் பது வழக்கம்.

- l l l -
அடுத்து, தச திக்குப் பாலகர் கும்ப பூசை நடை பெற்று, யாக - யாகேஸ்வரி ஆகிய சிவம் வர்த்தனி கும்ப பூசையும் இடம் பெறும். பின்பு பஞ்ச கும்ப பூசை, உருத்திர கும்ப பூசை, மோட்ச தீப கும்ப பூசைகள் முறையே செய்யப்படும். பின்பு ஒமாக் கினி வளர்த்து, துர்னோத்சவம் நிகழும்,
பிறகு ஒற்றை எண்கொண்ட இலிங்காயதர் களை வரித்து, ஐவர்களாயின் ஈஸ்வர, மகேஸ்வர, சதாசிவ உருத் திர, ப ர சி வ மூர்த்திகளாகப் பாவித்து, முதலில் பாதgசை செய்தல் வேண்டும். ஐவருக்குமேல் பதினொருவராயின், அவர்களை * ஏகாதச உருத்திரர்களாகப் பாவித்து வழிபடுதல் வேண்டும். பின்பு அவர்கள் அணிந்திருக்கும் சிவ லிங்கப் பெருமானுக்குப் பூசை செய்து, சிவஐக்கிய மான ஆன்மாவுக்கு நற்பேறு கிட்ட அருள்செய்ய வேண்டுமென்று கர்த்தா வேண்டிப் பணிவார்.
இலிங்காயதர்கள் தமது இட்டலிங்கப் பெருமா னுக்கு அபிடேகப் பொருள்களினாலும் முன்னரே வைத்துப் பூசிக்கப் பெற்ற உருத்திர கும்ப நீரினாலும் முறைப்படி அபிடேகம் செய்வர். பின்பு பட்டு,
* ஏகாதச உருத்திரர் - பதினொரு உருத்திரர். அவர்களா வோர் வருமாறு : மகாதேவ ருத்திரன், சிவருத்திரன், உருத்திர ருத்திரன், சங்கர ருத் தி ர ன், நீலலோகித ருத்திரன், ஈசான ருத்திரன், விஜய ருத்திரன், பீம ருத்திரன், தேவதேவ ருத்திரன். பவோத்பவ ருத்திரன், கபாலீச ருத்திரன்.

Page 63
12 -
பத்திர ψρυά ασή சாத்தப்படும். அதனைத் தொடர்ந்து நிவேதனம், அருச்சனை, துரபாதி உபசாரங்களை
a Foo TT G) y Tri.
அப்பொழுது முன்னரே தயாரிக்கப் பெற்ற மாவினாலான நெய் விளக்கில் திரிபிட்டு, சிவபூசை பிற் காட்டப்பெற்ற கற்பூர சோதியிலிருந்து பிறி தொரு கற்பூரத்தைக் கொழுத்தி அந்நெய்விளக்கை உரிமையாளர் ஏற்றுவார். அதனையே மோட்ச தீப மாக எடுத்து, மோட்ச திப கும்பத்தின்மூன் அவரே வைப்பார். ஈற்றில் சிவபூசை செய்த சிவாசாரியர், மற்றும் இ விங் கா ப த ர் க  ைௗ உரிமையாளர் உபசரித்து வ ன ங் கி அவர்களின் வாழ்த்தைப் பெறுதல் கடனாகும்.
பின்னர் மண்டபத்தில் நிவேதனாதிகளைப் படைத்துச் சோடசோபசார பூசைநிகழும். அதனைத் தொடர்ந்து பஞ்சாசாரியர் தோத்திரமும் திருமுறை ஒதலும் நடைபெறும். அதன்பின் மோட்ச விளக்கைச் சிவாசாரியர் எடுத்துக் கர்த் தா வின் கையிற் 65, T(2) LTI.
கர்த்தா அதனை வாங்கிச் சுற்றத்தார் சூழத் தலைப்பிற் சுமந்துகொண்டு ஏதாவதொரு சிவாலயத் துக்குச் செல்வார்.
அங்கு அவ்விளக்கு எடுத்துவந்த செய்தியைக் கர்த்தா கூறுதலும், அதற்கான காரணம் என்ன வென வினவி, குருவும் சீடனும் உரையாடுவதாக அமைந்த மோட்ச தீபப் பாடல்களைப் படிப்பது ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஆகும்.

- 113 -
அதன்பின் அவ்வாலயத்தில் இருக்கும் மூலவரின் பாதத்தின் கீழ் அவ்விளக்கை வைக்குமாறு கர்த்தா குருவை வேண்டிக்கொள்வார். குரு அதற்கிணங்கி, விளக்கை வாங்கிச் சென்று மூலவரின் பாதத்தின் கீழ் வைத்துக் கற்பூர ஆராத்தி காட்டுவார்.
ஆலயத்தினுள்ளே விளக்கு வைப்பதும் கற் பூர ஆராத்தி காட்டுவதுமாகிய நிகழ்ச்சி சிவசோதி சிவசோதியுடன் கலந்து ஐக்கியமாதலை எடுத்துக் காட்டும். சிவசிவக் கலப்பைக் காட்டும் இந்நிகழ்வு மோட்ச திபக்கிரியையின் உச்சநிலையைக் குறிக் கின்றது. *" கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புவி யூர் அரனே. "
- அப்பர் தேவாரம்
சிவான்மா சிவகதி அடைதல் என்பதைச் சுட்டு கின்ற மோட்ச விளக்கு வைத்தபின், ஆசாரியருக்கு உபசாரம் செய்து வாழ்த்துப் பெறுவதுடன் இப் புண்ணிய கைங்கரியம் நிறைவுறும்.
விரசைவக் கிரியை எதுவாயினும் அதன் ஈற் றில் சங்கமர்களின் ஆசி வேண்டி வாழ்த்திசைப்பது s)) /.
" ஈசா னன்னே சரணம் சரணம்
இறைவா நிறைவா சரனம் சரணம் ஆசா ரியனே சரணம் சரனம்
* அபிடா க்ஷரமே சரணம் சரணம்
* மகுடா சுரமே என்றும் பாடம்,

Page 64
- 114 -
பேசா மொழியே சரணம் சரணம்
பேரின் பதுமே சரரைம் சரஐரம்
வாசா மனனே சரணம் சரனம்
வசவே சுரனே சரணம் சரணம் "
: 事
பாருல கத்தோர் வாழ்கப் பரமர்தன் அடியர் வாழ்க சீர்பெறும் அன்னை சுற்றம் திகழவே வாழ்க வாழ்க கூர் மழு வேந்துங் கையிற் குருமலர்ப் பாதம் போற்றி வீரசைவத்தோர் வாழ்க விண்ணவர் வாழ்கத் தானே பஞ்சமடம் பன்னிராயிர மகா மடத்துக்கும் குருவிங்க சங்கமத்துக்கும் அல்லமாப்பிரபு தேவர்க்கும்
சிவசரண சரணார்த்தி'
- பழைய பாடல்கள் 事 率
" மாரி பெய்க மநுநெறி யோங்குக
பாரி லொண்சிவ பக்தர்கள் மல்குக சீரின் மல்குஞ் சிவன் புகழ் வெல்குக வீர சைவம் விளங்குக வெங்குமே!'
- கவி விருத்தம்
டே உசாத்துணை நூல்கள்
1. வீரசை வம்
= மாதச் சஞ்சிகை, முசிரி, திருச்சி (மாவட்டம்),
1930, 1931
2. வீரசைவம்
= டாக்டர், புலவர் வை. இரத் தின சபா பதி, M. A, Ph, D. சென்னைப் பல்கலைக்கழகம்,
1977
3. வீரசைவம் அல்லது இலிங்காயதம்
- க. நவரத்தினம், 1950

11.
12 .
3.
1卓,
- 1:15 -
வீரசைவமும் சைவமும்
. நல், முருகேச முதலியார், சைவ சித்தாந்த நூற்
பதிப்புக் கழகம், சென்னை 1987 யாழ்ப்பாணத்து வீரசைவர்
- . Frprfiri, B. A. Dip. in Eld. |lont୍ ଈuff:
கந்தசாமி கோவிலடி, தெல்லிப்பழை, 1983
கலைக்களஞ்சியம்
-தமிழ் வளர்ச்சிக்கழகம், பிரபுலிங்க லீலை
ஒப்பிரகாச சுவாமிகள், தர்மகர்த்தத்துவ
வெளியீடு, 1934
வித்தாந்த சிகாமணி
- தமிழில், சிவப்பிரகாச சுவாமிகள், தர்மகர்த்
தத்துவ வெளியீடு வசவ புராணம்
-தமிழாக்கம் - பெயர் தெரியவில்லை, பூரீமத்
நாகிரெட்டியார் உரை, 1931 தொல்காப்பியம்
- பொருளதிகாரம் பாகம் I, II பதிப்பு,
8. வையாபுரிப்பிள்ளை, சென்னை, 1930
திருமந்திரம்
-T, o, பார்த்தசாரதி யோகியார் குறிப்புரை.
டுரன்னை, 1940
திருவாசக ஆராய்ச்சி
- சங்க நூற் செல்வர், சு. அருளம் பலவனார்,
காரைநகர், 1973
திருவருட்பயன்
- உரை, சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம்
B. A., 1978
சைவக்கிரியை விளக்கம்
- சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் B, A, 1978
"।

Page 65
- 116 -
15. சைவநெறி
- சிதம்பரம், மறைஞான சம்பந்தநாயனார்.
புத்துரை யா நல்லுரர் ஆறு முக நா வர வர் ஏழாம் பதிப்பு 16. ஞானபூமி
- மாதச் சஞ்சிகை, தமிழ்நாடு 17. ரீகுமாரதேவர் சாஸ்திரக்கோவை
- பி. நா. சி. பிரதர்ஸ், சென்னை, 1923
18. இவிங்கோப நிடதமும் தமிழ் தாற்பரியமும்
- வண்ணை சிவ ஐயம் பிள்ளைக் குருக்கள்,
கீரிமலை, 1985
19. தாயுமான சுவாமிகள் திருப்பாடற்றிரட்டு
- மூலமும் மெய்கண்ட விருத்தியுரையும்,
சென்னை, 1930 20. திருஞானசம்பந்தர் தேவாரம்
21. திருநாவுக்கரசுநாயனார் தேவாரம்
22. புறநானூறு 23. சிவறி ஐ செல்வரத்தினக் குருக்களவர்களின் = சிவைக்கிய ஞாபகார்த்த வெளியீடு,
உரும்பிராய், 1978.
率
இந்நூல் வெளிவர ஊக்கமளித்தவர்கள்
திரு து. கிருபாகரன் திரு. க. சபாரத்தினம்
திரு. சு. பரராசசிங்கம்
திரு. மு நாகராசா சிவத்திரு சோ. சந்திரசிகாமணிக் குருக்கள்
iي بي بي ب


Page 66

. . ܒܡܨܪ