கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அளவையியற் போலி

Page 1

யியற் போலி
புகபாலசிங்கம்

Page 2

அளவையியற் போலிகள் LOGICAL FALLACES
126872
Car. was so failsi), B. A. (HoNS), M.A. (Phil)
Dip-in-Ed.
ܬܣܛܪ. 青 తో 大六 ★青青 F్చ. ★大女★ ళ్మీ"
8ܨ ஆ இ
S.
W T1은
இஇஇ

Page 3
வெளியீடு: ? ) ■。
முதற்பதிப்பு: 1998
சகல உரிமைகளும் ஆக்கியோனுக்குரியது.
60салбrРиЯ03Gбvлт :
மெய்யியற் கல்வி அகம்
Academy of Philosophy كمو
,கொழும்புத்துறை வீதி ,46/2 خلاما N சுண்டிக்குளி,
யாழ்ப்பானம்,
பட்டப்படிப்புகள் கல்லூரி,
ി ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்,
தொடர் பு:
யா/பரியோவான் கல்லூரி, யாழ்ப்பாணம்
அச்சுப் பதிப்பு :
திருமகள் அழுத்தகம், SersJTTS.
விரலு sof

1990-07-08ல் நடந்த விமானக்குண்டு வீச்சுக்கு இரையான நண்பன் GL irisir. Grison ur argir, M. A. Dipo-in - Ed.
அவர்களுக்கு இவ் ஆக்கம்
சமர்ப்பணம்
நான்
அரசியலின் நடித் துடிப்பாய் அராஜகத்தின் விளைநிலமாய்
அரைவேக்காட்டுச் சிந்தனையில் நெறியிழந்து போனதனால்
அரக்கர்களின் வேள்விக்கு
ஆகுதியாகி விட்டாப் உடன் நினைவு நிலைத்திருக்க
இந்த இயலாமை இவ்வளவு
தான்.

Page 4
அணிந்துரை
பல் துறைச் சிந்தனைப் பரப்பினுள் மெய்யியலா னது ஆதிக்கம் செலுத்தும் வகையில் அறிவாராச்சி யல் நாட்டம் கொண்டதாக அமைகின்றது. குறிப்பாக மெய்யியலின் கிளையெனக் கொள்ளுந் தரத்தில் அளவையியலானது சிறப்பிடம் பெறுகின்றது. பொது வில் சிந்தனையின் வளப்பத்தினை அளவையியலானது ஒழுங்குபடுத்தி நெறிமுறைப்படுத்திச் செல்கின்றது. இவ் வகையில் அளவையியல் அடிப்படையான பல்துரைக் கற்கை நெறிகளிலும் விரிந்து செல்வது குறிப்பிடத்தக்க தொன் ரகும்.
அளவையியல் பாடநெறியைக் கல்விப் பொது உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்கள் அதிக அளவில் உள்ள போதிலும் தெளிவுற அறிந்து கொள்வதற்கு போதிய நூல்கள் தமிழில் வெளிவராமை குறைபாடான தொன்று, ஆங்கில நூல்களுடாக இத்தேர்ச்சியைப் பெர வல்ல மாணவர்களும் குறைவாக இருப்பதனால் தமிழில் இப்பாட நூல்கள் வரவேண்டியது வரவேற்க வேண்டிய தொன்றாகும். வரும் நூல்கள் அத்துரை யில் வல்லமை பெற்ற ஆசிரியர்களால் எழுதி வெளி யிடப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ் வகையில் அளவையியற் போலிகள் பற்றி எழுதி வெளிவரும் திரு. வே. யுகபாலசிங்கம் அவர்களின் முயற்சி பாராட்டப்பட வேண்டிய தொன்றாகும். பல் கலைக்கழகத்தில் மெய்யியலைச் சிறப்பு நெறியாகக் கற்று அதே துரையில் முது மெய்யியல் மாணிப்பட்டத் தையும் பெற்றவராவர். அத்தோடு இத்துரையில் நிண்டகாலப்பரீட்சயமும் அறிவும் கொண்டவர் என்பது

- 5 --
வெளிப்படையாகும், தொடர்ந்து அத்துரையில் கலா நிதிப்பட்டத்திற்கான ஆய்விலும் ஈடுபட்டிருக்கின்றார். வெளிவாரியாக மெய்யியல் கற்கும் மாணவர்களுக்கு இத்துறை சார்ந்த கல்வியைச் சிறப்புடன் போதித்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறியீட்டு அளவையியல், விஞ்ஞானமும் விஞ் ஞான முறையும், மேலைத்தேய அளவையியல் ஒர் அறிமுகம், பொது அறிவும் பொது உளச்சார்பும் பொது உளவியல் ஒர் அறிமுகம். சில மெய்யியற்பிரச்சினை கள் என்பன இவரால் முன்னர் வெளியிடப் பெற்ற ஆக்கங்களாகும்.
அைைவயியல் கற்கும் மாணவர்கள் போவிகள் பற் றிய அறிவில் எழும் குழப்பங்களைத் தெளிவுரக் களைந்து கொள்வதற்கு இவ் ஆக்கம் உதவுமென்பதில் சந்தேகமில்லை. இலகுவான தமிழில் தகுந்த உதாரணங் களையும் இணைத்து அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்க தொன்றாகும். இதுபோன்ற பணி மேன் மேலும் தொடர
வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
பேராசிரியர் நா. ஞானகுமாரன்
(தலைவர் மெய்யிற்துறை)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, Քց - Ա5 - 199E

Page 5
என்னுரை
அளவையியற் போலி என்ற இவ் ஆக்கம் தமிழ் மொழியினூடக வெளிவரும் முதல் நூல். இந்நூல் சமூக அறிவியல் நோக்கில் மேலைத்தேய தத்துவம், தர்க்கத் துரைகளில் இனங்கானப்பட்ட போலிகளைத்தொகுத்து ஒழுங்குபடுத்தி எமது சமூகக் கலாச்சாரத்திற்கும் பொருத் தமான உதாரணங்களோடு ஆக்கப்பட்டுள்ளது.
மனிதன் அறிந்தோ அறியாமலோ விடுத் தவறுகள் பல ஒருவரோடு ஒருவர் உரையாடும் போது, கருத் தொன்றை வலியுறுத்தும் போது, மேடையில் பேசுகின்ற போது, அறிக்கைகளை வெளியிடும் போது, கருத் தொன்றை ஏற்றுக்கொள்ளுகின்ற போது, விடுத்தவறு களையே தர்க்கப் போவிகள் விளக்குகின்றன. உண்மை போன்று பாசாங்கு காட்டி, மக்களை ஏமாற்றும் போலி வடிவங்கள் பல இருப்பதை இந்நூல் எடுத்துக்காட்டு கின்றது.
இந்நூலின் முக்கிய நோக்கங்கள்
எம்மைச்சூழ எல்லா மட்டத்திலும் நடக்கும் சமூகச் சீரழிவுக்குரிய போ வி.க  ைஎா இன்ங் கண்டு துணிவோடு எதிர்க்கும் நேர்மைத்தனம் ஒன்று உளது என்பதை உணர்த்துவது
அறிவினைத்தேடும் வாசகனுக்கு இக் கலையை அறிமுகஞ் செய்து வைப்பதனூடாக தர்க்கத்தை, தத்துவத்தை அறியும் ஆர்வத்தைத் துரண்டுவது
தர்க்கத்தை, தத்துவத்தைப் பயிலும் மானவர் களுக்கு கை நூலாக அமைவது

-- 7 .. -------
கி. மு 4ஆம் நூற்றாண்டுக்காலத்தைச் சேர்ந்த அரிஸ்டோட்டில் போன்ற கிரேக்ககால தத்துவ ஞானிக ளால் இனம் காணப்பட்ட தர்க்கப்போலிகள் பல இன் றைய சமூகத்திற்கும் பொருந்துவது நோக்கத்தக்கது வரலாற்று ரீதியான இச்சமூக ஒருமைப்பாட்டை, சமூக ஆய்வாளர்கள் பலர் இனங்காணத்தவறிவிட்டதை, அறி வுத்தேடலில் ஆர்வமுடையோர் அறிவர்.
இவ்வாக்கத்தில் இடம் பெறும் நியமில்போலி வடி வங்கள் எல்லா வாசகர்களுக்குமுரியது நியமப்போலி வடிவங்கள் தர்க்கம், தத்துவத்தை பயிலும் மாணவர்க ளுக்காகச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.
இவ்வாக்க முயற்சிக்கு நீங்கள் தரும் ஆதரவே இந்தியத்தத்துவம், தர்க்கத்தில், இடம் பெறும் போலி களை வெளிக்கொணர எடுக்கும் எனது அடுத்த முயற் சிக்குத் துரண்டுகோலாக அமையும்.
நன்றி
27-03-1999 ஆசிரியர்
Sབུ་
截

Page 6
நன்றி
எனது முயற்சியை வரவேற்று இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய நண்பர், யாழ். பல்கலைக் கழக மெய்யியற்றுறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி நா. ஞானக்குமாரன் அவர்களுக்கு முதற் கண் நன்றி நவில்வதோடு,
இந் நூலை அழகுற அச்சிட்டு உதவிய சுன்னாகம் திருமகள் அழுத்தகத்தினருக்கும், நூலின் மேல் அட்டையை அச்சிட்டுதவிய யாழ்ப்பாணம் செட்டியார் அச்சகத்தினருக்கும் எமது முயற்சிகளுக்கு ஊக்கமளித்துவரும் நண்பர் செ. கதிர்காமத்தம்பி ஆசிரியர் அவர்களுக்கும்,
என் ஆக்க முயற்சிகள் அணியிட என்றும் கனமாக அமையும் பட்டப் படிப்புகள் கல்லூரிக் கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி

பொருளடக்கம்
Fish
அளவையியல் ஓர் அறிமுகம் அளவையியலும் தர்க்கப் போலியும் 2 தர்க்கப்போலி வகைகள் 5 நியமமில் போலி 7 - 7
1. அறியாமை நியாயப்போலி
கெளரவ நியாயப்போலி, அஞ்ஞானவாதப்போலி, பரிவு நியாயப்போலி, மாக்கள் நியாயப்போலி, பக்திவாதப்போலி, தடியடிவாதப்போலி, அதிகாரப் போலி, தடத்தற்போலி, சமுதாயப்போலி, பிரிப்புப் போலி, முறையற்ற பொதுமையாக்கப்போலி.
2. முடிபு மேற்கோடற் போலி IS - 20
மூடிபின் கூறுமேற்கோடற்போலி, சக்கரநிரூபணப் போவி, பொருந்தா முடிபுப்போலி
3. அசித்தப்போலி s 20
காகதாலியப்போலி వ్యో 2I நியமப் போலி ళ్మీ22-31 நியமப்போலி வடிவங்கள் ప్రళ్యీ) 22 1. அனுமான வடிவப்போலி ' 23 27
உடன் அனுமானமுரண்பாட்டுப் போலி, வழிப்பேறு வடிவம்போலி, வழிப்பேற்றின் வடிவப்போலி, மறு தலைவடிவப்போலி, முறையற்ற எதிர்மரைப்போலி முறையற்ற எதிர்வைக்கைப்போலி. முறையற்ற நேர்மாற்றப் போலி
ஊடக அனுமானப்போலி 24 - 27

Page 7
- O -
அறுதிநியாயத்தொடையில் எழும் நாற்பதப்போவி, இரட்டுருப்போலி, நடுப்பதம் வியாத்தியடையாப் போலி, சிறுபதச்சட்ட விரோதப்போலி, பெரும் பதச்சட்டவிரோதப்போவி, 25 கலப்பு நிபந்தனை நியாயத்தொடைசார் காரண மறுப்புப்போலி, காரிய மறுப்புப்போலி 25 கலப்பு உறழ்வு நியாயத்தொடைசார் த வி ர்ப் பு நிலைப்போலி தழுவுநிலைப் போலி வரைவிலக்கண முரையில் எழும்போவி 27 - 31 கவர்ப்பொருட்பாட்டுப் போலி, அ தி வி ய Tத் திப் போலி, அவ்வியாத்திப்போலி வரைவிலக்கணச் சக்கரப்போவி, ஒருங்கிசையாப் பண்புகளை உட் படுத்தும் எண்ணக்கருப்போலி வரையில் கூற்றிலி ருந்து வரைவுடைய கூற்றைப் பெறும்போலி, வரைவுடைய கூற்றிலிருந்து வரையில் கூற்ரைப் பெறும்போலி, சொல்லணிப்போவி
அளவைசியல் பிரிப்புமுறைப்போவி 32 அளவையியல் வகையீட்டு முறையில்
ஏற்படும்போவி 3B சொற்போவி శ్లో _39
இலக்கணத் தெளிவின்மையால் ஏற்படும்போவி பல்வினாப்போலி, நீயும் அப்படித்தானே எனும் போலி, தொடர்பின்மை நியாயப்போவி, காலக் கொடையால் எழுந்தகுதி நிர்ணயப்போலி, விரைந்த பொதுமைப்பாட்டுப்போலி

அளவையியல் ஒர் அறிமுகம்
தத்துவம்எல்லாம் அறிவியற்துரைகளுக்குகந்ததாய் தர்க்கவியல் அவளின் முதற் குழந்தை, தர்க்க வியலை அறியத் தத்துவ அறிவும், தத்துவத்தை விளங்கிக் கொள்ளத்தர்க்க அறிவும் அவசியம், தர்க்கவியலை, வாதவியல், அனுமானவியல், தர்க்க சாஸ்த்திரம், அள் வையியல் என்றும் அழைப்பர். இம்மறு பெயர்கள், தர்க்கவியலின் அடிப்படை இயல்பை விளக்குவதாக அமைகின்றது தர்க்கித்தல் அல்லது வாதித்தல் என்பது ஏற்புடைய பொது வான முடிபொன்றை அடைவதற் கான முயற்சியாகும். தர்க்கவியலுக்கான நவீன வரை விலக்கணமும் இதுவே, ஒரு விடயத்தைப்பற்றி நான்கு பேர் தர்க்கிக்கின்றார்கள் என்றால், அம்முயச்சியின் நோக்கம் என்ன? ஒருவருக்குகொருவர் முரண்பட்டுக் கொண்டு, முகத்தைத் திருப்பிக்கொண்டு வாழ்வதற்கா கவா, வாப் வல்லமையுடய ஒருவர் தான் பிடித்த முய லுக்கு மூன்றுகால் தான் எனவாதிட்டு, மற்றவர்களை அதை ஏற்குமாறுவலிந்து துணைசேர்ப்பதற்கல்ல குறித்த விடயம் பற்றி நால்வருக்குமிடையில் ஏற்றுக்கொள் ளக்கூடிய ஒரு பொது முடிபுக்கு வருவதே இதனாற் தான் தர்க்கவியலை, ' எல்லோராலும் ஏற்றுக்கொள் எக்கூடிய பொதுவான நியாயத்தால் முறையைக் கற்றுத் தரும் அறிவியல், என வரைவிலக்கணஞ் செய்வர். பொதுவான நியாபித்தல் முறை என்ர வகையில், தர்க்கம் விஞ்ஞான அறிவோடுந் தொடர்பு கொள்கின் றது. விஞ்ஞானம் ஒழுங்குபடுத் தப்பட்ட (3) GF FGCT) ac y TG237 விளக்கம் ஒன்றைப் பொது முடியாகப் பெற்றுத்தருகிரது தர்க்கம் அவாறான பொது முடிபொன்றைப் பெறுவதற் கான தியாயத்தல் வழிகளை வகுத்துத்தருகின்றது. இத்தர்க்கமுறையை, ஒழுங்குபடுத்திச் செம்மையாக வடி வமைத்துத் தந்தவர் கிரேக்க மெய்யியலாள ரா ன அரிஸ்டோட்டில் ஆவர். சிந்தனை வலிமையுடையதாய் அமைவதற்கு ைேண்டிய இலக்கணங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல் ' என்ற முன்னுரையோடு தர்க்க வியலை அறிமுகஞ் செய்தார்.

Page 8
- 2 -
இந்தியத்தத்துவத்திலும் தர்க்கவியலின் அவசியம் நன்கு உணரப்பட்டுள்ளது. வைதிகதரிசனங்களில் ஒன் ரான நியாய தரிசனம், தத்துவத்தைச் சரியாக விளங் கிக் கொள்ள தர்க்க அறிவு அவசியம் எனக்கூறுகின் றது. சைவசித்தாந்தத்தின் மெய்ப்பெருளை அறிய உத வும் மெய்கண்டசாத்திரம் இதற்குப் போதிய ஆதாரம் சிவாக்கியோகியின் கருத்துப்படி, ' இசைப் பயன் கிட்ட வேண்டுமாயின் இராகத்தை அறிதல் வேண்டும், தராதர மறிய வேண்டுமாயின் சத்காரியவாதத்தை அறிந்திருத் தல் வேண்டும், அவ்வாறே மெய்யறிவு துய்த்தலுக்கு அளவை அறிவு அவசியம்' என்றார். இந்தியத்தத்துவ ஞானிகள் கிரேக்கசிந்தனைக்கு முன்பே இவ் அறிவு பற்றித் தெளிவான சிந்தனையைக் கொண்டிருந்தார் கள். தர்க்கரீதியாக எண்ணக்கருக்களைப் பகுத்து ஆராய்வதிலும், அறிவாராச்சியியல் நோக்கில் அவர் றின் ஏற்புடைமையை விளக்குவதிலும் இந்திய அளவை மூரை சிறப்பான ஆற்றலைப் பெற்றிருந்தது. பிற்காலத் தில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார சமூகப்பண் பாட்டு மாற்றங்கள், மேலைநாட்டவரின் கருவூட்டங்கள் இவ்வளவை முறையின் முக்கியத்துவத்தை நீண்டகாலம் இனங்காண்ாதிருக்கவைத்துவிட்டது அண்மைக்காலங் களில் இந்தியத் தத்துவம் தர்க்கம் தர்க்கப்போவிகள் பற்றி அறியவரும் போது பெரும் புதையலைக் கண்டு வியப்பது போன்ற மனோபாவம். கீழைமேலை நாட்டுத் தத்துவஞானிகளிடையே எழுவது மிகைப்படுத்தப்பட்ட உண்மையன்று. இந்தியத்தர்க்கஞானிகளால் இனங் கண்டு வகுத்து விளக்கப்பட்ட தர்க்கப் போ விகள், அரிஸ்டோட்டலின் தர்க்கப் போவிகளிலும் பார்க்க விரிவானதே.
அளவையியலும் தர்க்கப்போலியும் :
எமக்கிடையே ஒரு பொதுவான நியாயத்தைப்
பெறுவது அதனை மற்றவர்கள் புரிந்து கொள்ளுமாறு
விளக்குவது எப்பொழும் இலகுவானதன்று, தாம் பொது

- 3 -
வான தியாயங்கள் என அறிந்து கொண்டிருப்பவை, ஏற்றுக் கொண்டிருப்பவை, ஏற்குமாறு மற்றவர்களால் பணிக்கப்படுபவையாவும் எப்போதும் தர்க்கரீதியான கருத்துக்களாகத் தீர்ப்புக்களாக அமைவதில்லை. இவர் ரையே தர்க்கப் போலிகள் விளக்குகின்றன நாம் சிந் திக்கும் போது இபற்றும் அல்லது இயற்றக் கூடிய தவறுகளை வழுக்களையே தர்க்கப்போலிகள் உணர்த் துகின்றன. நெகல் (Nege) எனும் முறையியலாளர் அறிவியலில் தர்க்கரீதியான நிபந்தனைகளை விதி களை கோட்பாடுகளை மீறும் போது மீறும் கருத்துக் களை போலிகள் எனலாம்' என்றார் டீமொனாகன் தனது இடைநிலை அளவையியல் என்ற நூலில் எம்மைச் சூழ நடக்கும் பல நிகழ்வுகளை கருத்துப்பரிமாற்ரங் களை நன்கு அவதானிப்பவர்களால் இதனை எளிதில் இனங்கண்டு கொள்ளலாம் அளவையியலைக்கற்பதால் கிடைக்கும் மறைமுகமான பயன் இதுவே. சிந்தனை வலிவுடையதாய் அமைவதற்கு வேண்டிய இலக்கணங் களைத் தெளிவாக அறிந்து கொள்ள அளவையியல் உதவுகிரது விமர்சனம் கண்ணோட்டத்தைப் பெறு வதற்கு, சிந்தனையில் ஏற்படும் போவிகளைக் கண்டு பிடித்தற்கு இது உதவுகின்றது என்கின்றார்.
எம்மைச் சூழ நடக்கும் பல நிகழ்வுகளை, கருத்துப் பரிமாற்றங்களை நன்கு அவதானிப்பவர்களால் இதனை எளிதில் இனங்கண்டு கொள்ளலாம்.
தர்க்கப்போலிகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்து விளக்குவது பொதுவான மரபு தர்க்கத்துள் எழும் போலிகள், தர்க்கவியல் இனங்காட்டும் போவி கள் என ஆரம்பகாலத்தில் பிரித்து விளக்கினர். பிற் காலத்தில் போலிகளை, நியமப்போலிகள், நியமமில் போவிகள் எனப்பிரித்தனர். விதிகளைக் கோட்பாட்டை மீறுகின்ற போவிகளை நியமப் போலிகள் எனவும், வாழ்முறையில், சமூகநடத்தையில், அறியாமை காரண மாக எழும் போலி வடிவங்களை நியமமில் போவிகள்

Page 9
- 4 -
என்றும் கொண்டனர். பொருட்போலி வடிவங்களும் சொற்போலி வடிவங்களும் இதற்குள் உள்ளடங்கும் டீ மொன்கள் இவற்றை தர்க்கப்போலிகள் என்ற பெதுப் பிரிவுக்குள் உள்ளடக்கி விளக்குகின்றார் பிராட்லி என்ற அளவையியலாளரும் இவ்வாறே வகுத்து விளக்குவர். அண்மைக் காலத்தில் Madsen Pirie என்ற மெய்யி tugust 67 Gir sus. The Book of the fallacy G. Gary W. G.5a. போலிகளை ஐந்து வகையாகப் பிரித்து விளக்குகின்றார்.
மனிதன் தெரிந்தோ தெரியாமலோ அறிந்தோ அரி யாமலோ பல தவறுகளை இழைக்கின்ரான், உறுதி யான ஆழமான கருத்தாக எமக்கு முன்வைக்கப்படும் வாதங்களைச் சற்று நிதானமாக அவதானிக்கின்ற போது, உள்வீடு எதுவுமற்ற வெறும் சொற்களின் தொகுப்பாக அவை அமைந்திருப்பதைக்கான முடிகிறது பலத்த ஆரவாரங்களுக்கு மத்தியில், கரகோஷங்களுக்கு மத்தியில் மேடைகளில் முன்வைக்கப்படும் கருத்துக் களை செவிமடுத்துப் பின்பு மெல்ல அசை போட்டுப் பாருங்கள் அவை தர்க்கரீதியான தொடர்பு எதுவுமற்ற வாக்கியங்களாகதொடர்பேதுமற்றசொற்கூட்டங்களாக இருப்பதை உணரலாம். உதரணங்களை கையாளுகின்ற போதும் உவமைகளைக் கையாளுகின்ற போதும் இதனை அவதானிக்கலாம் மேல் எழுந்தவாரியாக, கேட்கின்ற அவ்வேளை, பொருத்தமானது போல் தென்படும். ஆனால் அவற்றைப் பதிவு செய்து மீட்டுப்பார்க்கும் போதுதான் சொற்களின் தந்திரங்கள் புரிகின்ரன. அழகு மொழி கள் அடுக்கு மொழிகள் எளிதாக எம்மை ஏமாற்றி விடு கின்றன. மனிதனின் மென்மையான உணர்வுகளை இவை வசப்படுத்தி பகுத்தறிவு நிலையிலிருந்து படிஇறக்கி விடுகின்றன. மறுபுரம் புத்திபிவிகளைப் போல் பாசா ங்கு காட்டுவதற்காக, தொழில்நுட்பச் சொற்களை, மொழி பெயர்ப்புக்களை சாதாரண மக்கள் மத்தியில் பிரயோகிப்பதன் மூலம் தம்மைப் பிரபலப்படுத்திக் கொள் கின்றனர். இவற்றையே தற்கப் போலிகள் விளக்குகின் ரன. சுட்டிக்காட்டுகின்றன.

5 -
தர்க்கப் போலிகளை இரண்டு பெரும் og for SC பிரித்து விளக்குவது பொதுவான மரபு. ஆரம்ப காலத் தில் அளவையியல் தர்க்கத்துள் எனும் போலிகள், தர்க் கவியல் இனங்காட்டும் போலிகள் என பிரித்து விளக் திரர்,
தர்க்கப் போலிகள் :
நாம் இப்போலிகளை இலகுவாக இனங்கான வருமாறு பிரித்துக் கொள்வதே பொருத்தமானது.
1. நியமப் போலி 2. நியமமில் போவி (இதனைப் பொருட்போலி
என்றும் அழைப்பர்)
1. நியமப் போலி:
1. உய்த்தறி அளவைசார் நியமப் போலி 2. தொகுத்தறி அளவை சார் நியமப் போலி
உய்த்தறி அளவைசார் நியமப் போலி
வரைவிலக்கண்ப் போவி பிரிப்புமுறைப் போலி வகையிட்டு முறைப் போலி அனுமானப் போலி
தொகுத்தறி அளவைசார் நியமப் போலி
1, நோக்கற் போலி
ஒப்புவமைப் போலி ஒருபாற்கோடற் போலி முற்றிர்ப்புப் போலி முடிபுதுணியாமைப் போலி கோடால் புள்ளிவிபரப் போலி
2. பொருட்போலி :
அறியாமை நியாயப் போவி முடிபுமேற் கோடற் போவி அசித்தப் போலி

Page 10
- 6 -
1. அறியாமை நியாயப் போலி:
கெளரவ நியாயப் போலி ஆள் நியாயப் போலி மர்க்கல் நியாயப் போலி அஞ்ஞான வாதப் போவி பக்திவாதப் போலி பரிவு நியாயப் போலி தடி படிவாதப் போலி தடத்தற் போவி
2. முடிபுமேற் கோடற் போலி :
1. முடிபின் கூறுமேற் கோடற் போலி 2. சக்கர நிரூபணப் போலி 3. பொருந்தா முடிபுப் போலி
3. அசித்தப் போலி :
இப்போலி வடிவங்களிற் சில ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை. ஓரிடத்தில் பொருட் போவிக்குப் பொருந்தும் போலி மற்றோர் இடத்தில் சொற் போலிக் குப் பொருந்தும். உதாரணமாக இரட்டுறு மொழிதர் போலி, கவர் பொருட் போலி, பிரிப்புப் போவி, சமூ தாயப் போலி போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதே போல் நியமப் போலிக்குரியவை நியமில் போலிக்குரிய வடிவமாக மற்றோர் இடத்தில் அமையலாம். வரைவி வக்கனப் போலி, சொல்வனிப் போவிகள் போன்றன இவ்வாறு அமைந்து வரக்கூடியவையாகும். உதாரண மாக வரைவிலக்கனச் சக்கரப் போலி, கவர்ப் பொருட் போவி வடிவங்கள் இத்தன்மையினவாம் அறிவியற் போவிகளான காட்சிப் போலி, ஒப்புவமைப் போவி, ஒரு பாற் கோடற் போலி போன்றன. உய்த்தறி அளவை சார் போலி வடிவமாகவும் இனங்காணப்படலாம். ஓரி டத்தில் விதியை மீறுவதாக இனங்கணப்படும் போலி மற்றோர் இடத்தில் பொருளை மீறும் போலியாகவும்,

7 i
சொற்போலியாகவும் உதாரணப்படுத்தப்படலாம் தனி மனித நடத்தை சமூக நடத்தை மொழியின் பிாயோகம் என்பவற்றை தனிப்பிரிவுகளாகப் பிரித்து நோக்க முடி யாது. அவ்வாறு கருதுவது ஒரு தர்க்கவழுவே மொழி வேறு மனித நடத்தை வேறு அல்ல. விகன்ஸ்ரைன் என்ற மொழி மெய்யியலாளரின் கருத்துக்களுக்குப்பின் இவ் வாறு பேசுவதே சிறுகுழந்தைத்தனமன்ரோ, ஒவ்வொரு பதத்திற்குப் பின்னாலும் ஒரு உரையாடல் உலகு உளது. இவ் உலகு திடீர் எனத் தோன்றியதல்ல. செயற்கை பாக உருவாக்கப்பட்டதுமல்ல மானிட நாகரீக வளர்ச் சியோடு இணைந்துள்ள உயிர்ப்புள்ள தொடர்பாகும். அதனாற்தான் தர்க்கப் போவிகள் இடம், பொருள் எவ லைப் பொறுத்து தொடர்புபட்டன் போன்றும் வேறுபட் பன போன்றும் அமைகின்றன. வாழ்வின் பல்வேறுபட்ட அனுபவங்களோடு தொடர்புபட்டவர்கள் இதனை எளிதில் கண்டு கொள்கின்றனர் ஒரு நகைச்சுவைத் துணுக்கு ஒரேமாதிரி எல்லோராலும் விளங்கிக் G2a (T6 GTJ Gil தில்லை. ஒரேமாதிரி எல்லோருக்கும் எளிதிற் புரிந்து விடுவதுமில்லை. மனிதனின் படிப்பறிவைப் பொறுத்து வேறுபடுமன்றோ
அறியாமை நியாயப் போலி
1. ஆள் நியாயப் போலி :
கருத்தொன்றைக் கருத்தினாலோ, கொள்கை ஒன் ரைக் கொள்கையினாலோ எதிர்த்து வாதிட்டுத் தனது கருத்தை நிறுவுவதற்குப் பதிலாக, அவனுடைய சொந் தக் குணநலன்களை வாழ்க்கையைத் தரக்குறைவாக இழிவுபடுத்திக் கூறுவதன் மூலம் அவனுடைய கருத்தை வலிந்து மறுப்பது, அவனுடைய கருத்துக்களை ஏற்க வேண்டாம் என்வாதிடுவது, ஆள் நியாயப் போலி ஆகும். பாமர மக்களிடையே, அரசியல் வாதிகளிடையே, இஸ்க் கிய வாதிகளிடையே, மத வா தி களிடையே நிகழும் வாதங்களில் இதனை அவதானிக்கலாம். உதாரணமாக

Page 11
- 8 -
x மீது பொறாமை கொண்ட Y, x பெண்விடுதலை பற்றி பேசியபோது, அவருக்குக் கிடைத்த வற்வேற்பை ாொறுக்க முடியாத நிலையில் தான் பேசும் போது,
' எனக்கு முன் பேசியவர் பெண் விடுதலை பற்றி பெரிதாகப் பேசினார். நீங்கள் அவர் கூற்றை மெய்யென நம்பி பெரிதாக வரவேற்றிர்கள். ஆனால் அவருக்கு அதைப்பற்றிப் பேச என்ன உரிமையுளதுஎன்று கேட்கின்றேன். மனைவியை விவாகரத்து செய்தவர், தன் பெண் சகோதரங் களுக்கு உதவி செய்ய மறுத்தவர். பெண்களின் நடத்தைகளைக் கண்டித்தவர். இன்று பெரிதாகப் பெண்விடுதலை பற்றிப் பேசுகிறார் என்று கூறும் போது இங்கு ஆள் தியாயப் போலி எழுகிறது.
இதே போன்று தமிழ் ஈழமக்களின் உரிமைப் போராட்டம் நியாயமானது. அதற்காக அவர்கள், அவர் களை ஆளும் அரசைத் தட்டிக் கேட்பதில் தவறேதுமில்லை எனக் கருக்துத் தெரிவித்த ஒருவரைப் பற்றி மற்றொரு வர் பின்வருமாறு கூறுகின்றார்.
தமிழ்மக்களின் உரிமை பற்றிப் பேச இவனுக்கு என்ன உரிமையுள்ளது. அவர் படித்ததோ வெளி நாட்டில், திருமணஞ் செய்ததோ சிங்கள இனத் தவரை, பிறந்த மண்ணைவிட்டுத் தலைநகரில் வாழ்பவர், இன்று பெரிதாக தமிழ்மக்கள் உரிமை, விடுதலை பற்றிப் பேச வந்துவிட்டார். இவர்களை நாம் நம்பக்கூடாது என்று கூறும் போது, இப் போவி எழுவதை அவதானிக்கலாம்.
2. கெளரவ நியாயப் போலி
கெளரவத்துக்குரிய மக்களால் உயர்வாக மதிக்கும் மதிப்புக்குரிய பெரியார் ஒருவரின் கருத்தினை கூற்றை அல்லது அவரது வாழ்க்கையை மேற்கோளாக எடுத்துக் கூறுவதன் மூலம் தான் செய்தது, சொல்வது சரி என

- 9 -
வலிந்து நியாயப்படுத்துவதையே கெளரவ நியாயப் போலி என்பர் தான் செய்வது சொல்வது சரியென எம்மத்தியில் மதிப்பிற்குரிய, பேற்றுதற்குரிய ஒருவர் கருத்தை மேற் கோளாக முன்வைத்து தன்னை அல்லது தனது கருத்தை ஏற்குமாறு பணிப்பதுமுண்டு ஏற்றுக் கொள்வார்கள் எனக் கருதி, தனது வாதத்தை வளர்த் துச் செல்வர். அரசியல் வாதிகள், இலக்கிய வாதிகள் ஆன்மீகவாதிகள், பேச்சாளர்கள் மத்தியில் இவ்வாறான போலி ஏற்படுவதை அவதானிக்கலாம்.
உதாரணமாக, உரிமைக்காக, சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களை, இளைஞர்களை, எதேச்சதிகார வழியில் அடக்கி, ஒடுக்குகின்ற அரசியல் வாதி ஒரு வன். தான் செய்வதை நியாயப்படுத்தப் பின்வருமாறு கூறுகின்ரான் "உண்மையான ஜனநாயகவாதி, ஜனநாயகத்தினைப் பாதுகாக்க தீவிரமாக செயற் பட வேண்டும்' என்று மகாத்மா காந்தியே கூறி புள்ளார். நானும் அதையே செய்கின்றேன், நீங்கள் அதை விளங்காது என்னைக் கொலைகாரன் இன வாதி என்று தூற்றுகின்றீர்கள். ஜனநாயகத்தைப் பாதுகாப்பது கடைமையன்ரோ
ஆபாசக்கதைகளை எழுதிக்குவிக்கும் ஒரு எழுத்தானின் தான் செய்வதை நியாயப்படுத்தப் பின்வருமாறு கூறு கின்ரான் 'நீங்கள் உயர்வாகப் போற்றும் வள்ளுவன் கூட காமத்துப்பால் என்ற அதிகாரத்தை எழுத வில்லையா அவர் எழுதாதையா நான் எழுதிவிட் டேன். இலக்கிய அறிவே இல்லாதவர்கள் திட்டுவதை நான் பொருட்படுத்த மாட்டேன் '
என இங்கு மகாத்மா காந்தியையும், வள்ளுவன் ' கு? ளையும் மேற் கோளாகக் காட்டுவதன் மூலம் நாம் செய் வதை வலிந்து நியாயப்படுத்த முயல்வதையே கெளரவ நியாயப் போலி என்பர்.

Page 12
- 10 -
அஞ்ஞான வாதப்போலி :
இப்போலி மக்களின் அறியாமையை நேரடியாக, தமக்கு சாதகமாக்கிக் கொள்வதைக் குறிக்கின்றது. மக்கள் அறிந்திருக்கமாட்டார்கள், அவர்களுக்குத் தெரி பாது என்பதால், தாம் கூறுவதை நம்புவார்கள், ஏற் றுக் கொள்வார்கள் எனக்கருதி, தமது வாதத்தைக், கருத்தை வலிந்து நியாயப்படுத்துவர் உதாரணமாக, ஒரு அரசியல் வாதி தமது கட்சி வேட்பாளரைப் பின் வருமாறு மக்களுக்கு அறிமுகஞ் செய்கிறார்.
" அன்பார்ந்த மக்களே, இம்முறை எமது கட்சியின் சார்பில் போட்டியிடுபவர் சிறந்த சமூகத்தொண்டர். தம் வாழ்நாட்களை முற்றாக அர்ப்பணித்தவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மகாத்மா காந்தியோடு சேர்ந்து உழைத்தவர். வியட்னாம் விடுதலைக்காக கோசிமின்னுடன் பாடுபட்டவர். ஏன் அடிமைகள் ஒழிப்பு போராட்டத்தில் ஆபிரகாம்லிங்கனுக்கு உதவிய வர் எமது விடுதலைக்காக காலிமுகத்திடலில் கல் வெறிபட்டவர். அப்படிப்பட்ட ஒருவரையே எமது கட்சி
பின் சார்பில் நிறுத்தியுள்ளோம்"
என்று கூறும் போது இப் போலி ஏற்படுகின்றது ஏன் எனில் மேடைபிவிருப்பவர் ஒரு நாற்பது வயதுக்கார ராக இருப்பார். அவர் கூறிய காலங்களை ஒப்பிட்டால் 200 வருடங்களாவது வரும் ஆனால் மக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தை அறிந்திருக்கமாட்டார்கள் கேள்வி ஞானமாகப் பெயர்களைத் தெரிந்திருப்பார்கள், என் பதை தமக்கு சாதமாக்கிக்கொண்டு இவ்வாறு கூறும் போது இப்போவி எழுகிறது.
சட்டத்தரணி ஒருவர், தமது நீண்டகாலக்கட்சிக் காரர் ஒருவரிடம் பின் வருமாறு கூறுகின்றார்.
'ஐயா, கவலைப்படாதீர்கள், 3ώειρουρο στόμφανώ உமது வழக்கை வென்று தருவேன். ஈ. பி. கோ,

- 11 -
360 ஆம் சட்டப்படி நிட்சயம் எதிரியை உள்ளுக்குள் தள்ளுகிறேன்,நீங்கள் ஒன்றும் யோசிக்கவேண்டாம்"
என்று, இங்கு ஏதோ சட்டமிருக்கு என்பது தான் குடி மக்களுக்குத் தெரியும் மற்றும்படி, அதன் விபரம் இலக் கம் அப்படி ஒன்று சட்டநூலில் உண்டா என்பதெல் லாம் தெரியாது அன்றோ அதை அவர் தமக்கு சாதக மாகப்பயன்படுத்தும் போது இப்போலி எழுகிறது
பரிவு நியாயப்போலி:
இதனை இரக்கப் போலி எனவும் அழைப்பர் தன் மீது தனது கருத்தின் மீது கொள்கை மீது, கட்சியின் மீது இரக்க உணர்வை ஏற்படுத்துவதன் மூலம் வலிந்து நியாயப்படுத்திக் கொள்ளும் போது இப் போவி எழுகின்றது தம்மீது தமது கட்சி அல்லது கொள்கை மீது பரிவை ஏற்படுத்தி அதன் மூலம் நிலைப்படுத்திக் கொள்ள முயல்வதையே இப்போலி குறிக்கின்றது நீதி மன்றுகளில் தமது கட்சிக்காரரைத் தண்டனையிலிருந்து தப்பவைப்பதற்காக வாதிடுவோர் அவர்மீது பரிவு ஏற் படுமாறு அவரைப்பற்றி நீதிபதியிடம் எடுத்துக்கூறு வது இவ்வகைப் போவிக்கு எளிய எடுத்துக்காட்டா கும் உதாரணமாக, கொலைக்குற்றம் சுட்டப்பட்டதன் கட்சிக்காரர் பற்றி ஐயா, இவன் மிகவும் வறியவன், நோயாளி ஒன்பது குழந்தைக்கு தந்தை, மனைவியும் நோய்வாய்ப்பட்டவள் குடியிருக்கக்கூட வசதியற்றவன் தனது ஏழ்மை காரணமாகவே இவ்வாறு நடந்து கொண்டான் அவன் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்று சட்டத்தரணி வேண்டும் போது இப்போலி எழுதி றது. பலதடவை அரசியலில் தோல்வியுற்ற ஒரு அரசி யல் வாதி, மீண்டும் மக்களிடம் பின்வருமாறு கூறுகின் ரார். ' எனது அன்புக்குரிய மக்களே கடந்த ஐந்து முறை தேர்தலில் நின்று தோற்று விட்டேன். இம்முறை யும் உங்களை நம்பியே தேர்தலில் போட்டியிடுகின் ரேன். எனது சொத்து, சுகம் அனைத்தையும் உங்

Page 13
- 2 -
களுக்காகவே இழந்து விட்டேன். இம்முறையாவது என் னைத் தெரிவு செய்யாவிட்டால் எனது குடும்பம் என்னை உயிரோடு பார்க்கமாட்டீர்கள் என்று வேண்டும் போது பரிவு நியாயப் போவி எழுகிறது.
மாக்கள் நியாயப் போலி :
மக்களைத் தன்வயப்படுத்துவதன் மூலம் தமது கருத் தி  ைன கொள்கையினை வலிந்து நியாயப்படுத்தும் போது இவ்வகைப் போலி σ7ρφάν 3). மக்கள் இயல்பா கவே எதன் மீது அதிக பற்றுவைத்திருக்கின்றார்களோ அது பற்றி புகழ்ந்து வியந்து பேசுவதன் மூலம் அவர் களைத் தம்வசப்படுத்தி, தம் கருத்துக்களை ஏற்கத் துரண் டுவது இப்போலியின் பாற்படும். அரசியல் வாதிகளின் மேடைப் பேச்சுக்களை அவதானித்துப் பாருங்கள், மக்கள் எதன் மீது அன்பு பற்று வைத்திருக்கி ன் றார்களோ, அதனை அவரைப் புகழ்ந்து மிகைப்படுத்தி அழகுமொழி அடுக்குமொழியால் உவமைகளால் விதந்துரைத்து பாமர மக்களை வயப்படுத்தி விடுவார்கள். உதாரணமாக தமிழ் மக்கள் இயல்பாகவே தாய்மொழி மீது பற்றுடைபவர் கள், அதனால் ஒரு அரசியல்வாதி பின்வருமாறு பேசு கின்றார்.
எனதருமைத் தமிழ்க் குலமே தமிழ் அன்னை பெற் ரெடுத்த தமிழ்மரவர்களே, இமயம் முதல் குமரிவரை, பனைமுனை தொட்டு தெய்வேந்திரமுனை வரை தமிழ் கொடி பறக்கவிட்ட திராவிடத்தின் தவப்புதல்வர்களே, தாய்க்கொரு துன்பமென்றால் தரித்திருப்பானா தன பன், புரப்படுங்கள், தமிழுக்கு உயிர்கொடுக்கப் புறப் பட்ட எங்களுக்கு வாக்களித்து வழியனுப்பி வையுங் கள்,
என்று கூறுவதன் மூலம் மக்களைத் தம்வசப்படுத்தி தம்மை வலிந்து நியாயப்படுத்தும் போது இப் போலி நிகழ்கி றது. இதே போன்றே சில மதவாதிகள் மக்களைத் தம் அணியில் சேர்க்கும் பொருட்டு, பல வற்புதச் செயல்

- 13 -
களைப் புனைந்துரைப்பதன் மூலம், வியப்பூட்டும் தகவல் களைச் சோடித்துக் கூறுவதன் மூலம், அந்த ஆத்மீகப் பெரியாரின் நாமத்தை உச்சரித்தாலே போதுமெனக் கூறி, மக்களை வசப்படுத்துவதும் இப் போலிக்குரியதே.
பக்திவாதப் போலி !
தனி நபர், கட்சி, கொள்கை மீது அதிதீவிரமான பற்றுவைத்து எல்லா நிலைகளிலும் அவர், அக்கட்சி, கொள்கை, கருத்தே மேலானது, உயர்வானது, வணக் கத்திற்குரியது என வலிந்து நியாயப்படுத்துகின்ற போது இப்போலி நிகழ்கிறது. கண்மூடித்தனமான பற்று எனச் சிலர் கூறுவதைக் கேட்டிருப்பிர்கள், இது கெளரவ நியாயப் போலியிலிருந்து வேறுபடுவதை அவதானித் துப் பாருங்கள். அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் இலக்கியவாதிகள்மீது, சாதாரணமக்கள் மோகம் கொள் வதை அவதானிக்கலாம். சினிமா நடிகர்களுக்கு கோயில் கட்டிக் கும்பிடுவது போன்ற நடத்தை இத்தகையதே. உதாரணமாக கட்சித் தோழர் ஒருவர் தம் தலைவர் பற்றி பின்வருமாறு பேசுகின்றார்,
எங்கள் தலைவர் மகாதீர்க்கதரிசி, மக்களை வாழ் விக்கவந்த அவதாரபுருஷர், அவருடைய கருத்துக்கள் வேதவாக்குகள் அவர் பாதம் பணிந்து தொண்டு செய் வதே பெரும்பேறு, எந்தநிலையிலும் அவர் வாக்கை மீறி நாம் செயற்படக் கூடாது. அவர் தலைவர் அல்ல நாம் கண்கண்ட தெய்வம். என்று கூறும் போது இப் போவி நிகழ்கிறது.
தடியடிவாதப் போலி :
இது அதிகாரப் போலி வடிவங்களில் ஒன்று. தனது தான் சார்ந்த கட்சியின், குழுவின், அதிகாரத்தை, வலி மையை செல்வாக்கை, பணம், ஆட்பலத்தை, நேரடியா கவோ, மறைமுகமாகவோ வெளிப்படுத்துவதன் மூலம் தன்னை தனது கட்சியைக் கொள்கையை ஏற்குமாறு

Page 14
- 4 -
மற்றவர்களை வலிந்து பணியவைக்கும் போது இப் போலி எழுகிறது. உதாரணமாக ஒரு அரசியல்வாதி பின்வருமாறு பேசுகின்றார்,
இம்முறை இப்பகுதியில் வாழும் மக்கள் அனைவருக் கும் ஒரு அன்பான வேண்டுகோள், எமது கட்சி இத் தொகுதியில் போட்டியிடுவதை அறிந்திருப்பிர்கள் கடந்த தேர்தலில் எம்மை ஆதரிக்காத மக்களுக்கு நடந்த கதியை அறிவீர்கள். அந்நிலை உங்களுக்கும் ஏற்ப டக் கூடாது என்பதே எனது அன்பார்ந்த வேண்டு கேரள்
உயர் அதிகாரி ஒருவர் தனக்குக் கீழ் கடமை புரியும் ஊழியர்களைப் பார்த்துப் பின்வருமாறு கூறுகின்றார்,
என்ன, எனக்கெதிராகச் சிலர் செயற்படுவது போல் தெரிகிறது. ஏதோ உங்கள் நன்மைக்காகத்தான் இதை கூறுகின்றேன் வருடமுடிவில் பதவிஉயர்வு, சம்பள் அதிகரிப்பு போனஸ் அது இது என்று பல பொறுப் புக்கள் எனக்கிருக்கு அதனால் என்னுடைய நடவடிக் கைகளில் தலைப்பிடாது இருந்தால் சரிதான்.
அதிகாரப் போலி:
இப் போலி நியமப் போலிக்கும் ப்ொருந்தும், விஞ் ஞான விளக்கத்தில் இதைச் சுட்டிக் காட்டுவர் குறித்த துறைசார்ந்த அறிவு, அநுபவம் எதுவுமற்ற ஒருவர், அத்துறை பற்றி நன்கு அறிந்தவர் போல் உரையாடும் போது அத்துரைசார்ந்தவர்களின் துறைசார் கருத்தை வலிந்து மறுத்துரைக்கும் போது இப் போலி எழுகிறது. உதாரணமாக தத்துவத்தைப் பயிலாத, அறியாத, அப் பக்கமே தலைவைத்துப்படுக்காத ஒருவர் பின்வருமாறு கூறுகின்றார்.
மெய்யியலைக் கற்பதால் என்ன பயன் மெய்யியல் சோறுபோடுமா எல்லாவற்றுக்கும் குறுக்கு நியாயம்

- 15 -
பேசிக் கொண்டு திரியத்தான் சரி, வேறு ஒரு பய னுமில்லை அதைக் கற்றால் சித்தியடைவதும் கடினம் என்று போதிக்கும் போது இப்போலி எழுகிறது.
விஞ்ஞானத்துறைசார் அறிவு, அநுபவம் எதுவுமற்ற ஒரு அரசியல்வாதி விஞ்ஞான மகாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றும் போது பின்வருமாறு பேசுகின் 2 тrf
" நாம் உயிர்க்கருவில் உள்ள D, N A R N A, பில் மாற்ரங்களை ஏற்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் ஒரு மொழி, ஒரு இனமாக மாறக் கூடிய கரு அணுவை ஏன் உருவாக்க முடியாது. பிறப்புரிமைக் கோட்பாடு ஒருவருக்கா சொந்தம்"
என்று கூறும் போது இப் போலி எழுகிறது. இவ்வாறு அதிகாரப் போலி வடிவங்கள் பல இருப்பதாக அளவை
பியலாளர் குறிப்பிடுவர்
தடத்தற் போலி
இதனை பொருந்தா எடுகோற் போலி என்றும் மொழி பெயர்ப்பர் விதி, சட்டம், ஒழுங்கை வலியுறுத்தும் போது அதன் தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைப்பவர் இவ்வாறான போவிக்கு ஆட்படுவ துண்டு. சிலவேளைகளில் நடைமுறைக்குப் பொருந்தாத ஒன்றைப் பொருந்துவதாகக் கருதி வாதிடுவர் ஒழுங்ை சட்டத்தை விதியை மீறிவிட்டதாகக் கருதி ஒருவர் மீத் குற்றம் சாட்டும் போது அல்லது அதனைப் பின்பற்று மாறு வேண்டும் போது அவ்விதிக்கும் குறித்த நடத்தைக் குமிடையே யதார்த்தமான தொடர்பு பொருத்தம் இல்வா விட்டால் அந்நிலையைத் தடத்தற் போலி என்பர் இதில் இரண்டு வடிவங்கள் உள்ளன
அ உடன் பாட்டுவடிவிலமையும் தடத்தற் போலி ஆ. எதிர்மறை வடிவிலமையும் தடத்தற் போலி

Page 15
- 16 -
உதாரணமாக முதியோரை மதியாது நடப்பவர்கள், அவர்களை அடித்து உதைத்து துன்புறுத்துபவர்கள் ஒழுக்கக்குறைபாடுள்ளவர்களாவர் ஒழுக்கம் பண் பாடு அறியாத இத்தகையவர்கள் தண்டனைக்குள் ளாக வேண்டியதே.
என்றுவாதிடும் போது அவ்வாறு நடந்து கொண்ட வர், மூன்று, நான்கு வயதுப் பாலகராக இருப்பின், இவ்வாதம் பொருந்தாதாகி விடுகின்றது இது உடன்பாட்டு ரீதியில் அமையும் தடத்தற்போலி இதே போல் ஒரு ஆசிரியர் பின்வருமாறு அதிபரிடம் கூறுகின்றார்.
அமைதியான துரக்கம், உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை அளிக்கும் கிரகிக்கும் ஆற்றலை அதிகரிக்க உதவும் எனக் கல்வி உளவியலில் கற்றுள்ளேன், அதனார்தான் வகுப்பரையில் மாணவர்களை நன்கு துரங்கு மாறு அனுமதித்தேன்.
என்று இதனை எதிர் மரைவடிவிலமையும் தடத்தர் GUTo 676 f.
சமுதாயப் போலி:
தனி ஒருவருக்குரிய அல்லது தனியன் ஒன்றுக் குரிய சிறப்பினை பண்பு, குணநலங்களை அவர் சார்ந்த சமூகத்துக்குமுரியதாக, தனியன் சார்ந்த வகுப்பிற்கு முரியதாக வலிந்து வாதிடும் போது ஏற்படுவதே சமுதா யப்போலியாகும், இதற்கும் பிரிப்புப்போலிக்குமிடையே தலைகீழான தொடர்பிருப்பதை வாசகர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக,
பாலன் பட்டதாரியானவுடன் தான் நேசித்த மாலா வைக் கைவிட்டு விட்டான் பார்த்தீர்களா பல்கலைக் கழக மாணவர்கள் எவரையும் பெண்கள் நம்பக் கூடாது என்று கூறும்போதும்,

- 17 =
இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி பத்துவருடங்களாக எது வித பழுதுமின்றி இயங்குகின்றது. எந்தத் தடங்களும் ஏற்படவில்லை. இது யப்பானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகவே யப்பானில் தயாரிக்கப்படும் எந்தப் பொருளையும் பயமின்றி வாங்கலாம். இதைப் போல் நீண்ட காலம் உழைக்கும் என்று கூறும் போதும் இப் போலி எழுகிறது.
பிரிப்புப் போலி:
சமூகம் ஒன்றிற்குரிய அல்லது ஒரு வகுப்புக்குரிய பொதுவான குணநலன்களை பண்புகளை அச்சமூ கத்தைச் சார்ந்த தனி நபருக்கும் அல்லது அவ்வகுப் பைச் சார்ந்த தனியன் ஒன்றிற்கும் பொருந்தும் என வலிந்து வாதிடும். போது பிரிப்புப் போலி ஏற்படுகிறது. உதாரணமாக, தமிழர் பண்பாடு ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வதே. அந்த உயர்ந்த பண்பாட்டைச் சார்ந்த மாலா வெளிநாட்டில் வேறு ஒருவரை மறுமணம் செய்து விட்டாள் என்று நீர் கூறுவதை ஏற்கமாட் டேன். அப்படி ஒருபோதும் நடவாது அவள் தமிழ் பண் பாட்டைச் சார்ந்தவள் என்று வலிந்து வாதிடும் போது இப்போலி ஏற்படுகிறது.
பொதுவாக யப்பானில் செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தையில் நல்ல மதிப்புண்டு. எல்லாப் பொருட்களும் நீடித்து உழைக்கக் கூடியவை. அதனாற்தான் கூறு கின்றேன். நீர் வாங்கிய தொலைக்காட்சிப் பெட்டி இவ்வளவு விரைவாகப் பழுதடைந்து விட்டது என் பதை நப்ப முடியாது என, என்று வாதிடும் போது போலி எழுகிரது.
முறையற்ற பொதுமையாக்கப் போலி:
இது நியமப் போலிக்குள்ளும் உள்ளடங்கும் ஒரு ஆதாாத்தின் மீது கொண்டுள்ள அபரிதமான மதிப்புக் காரணமாக எப்போதும் ஏற்புடையதே என்ற உவர்

Page 16
18
எண்ணத்தினால் தரப்பட்ட கூற்றுக்கு ஆதாரமாகவும், எதிராகவும் முன்வைக்கப்பட்டுள்ள வாதங்களை ஆரா பாது விடும் போது இப்போவி எழுகிறது, பக்திவாதப் போலி, கெளரவப் நியாயப் போலியிலிருந்து இது வேறுபடுவதைவாசகர்கள் அவதானிக்கலாம் மேல்எழுத்த வாரியாக அவதானிக்கும் போது பக்திவாதம் போல், கெளரவ நியாயம் போல், தென்படுவதால் பலர் அது வென மயங்கி விடுகின்றனர். அவற்றுக்குத் தரப்படும் விளக்கத்தை அவதானித்துப் பாருங்கள்.
உதாரணமாக, நியூட்டனின் கோள்களுக்கிடையிலான ஈர்ப்பு விதிகள் தொடர்பான கருத்துக்கு எதிராக சாதகமாக அக்காலத்தில் முன்வைக்கப்பட்ட கருத் துக்களை எவரும் நியூட்டன் மீது வைத்துள்ள மதிப் புக்காக அவதானிக்கவில்லை ஐன்ஸ்ரைன் சார்பு நிலைத் தத்துவத்தை முன்வைத்து தெளிவுபடுத்திய போதே, இதனைக் கண்டு ''। (2) முடிபு மேற்கோடற் போலி:
திட்சயமான ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தொன்றை முன்வைத்து அதனடிப்படையில் வாதங்களை முன்வைப் பர்-வளர்த்துச் செல்வர். எடுகோடுகளாக முன்வைக்கப் பட்ட கருத்து நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருக்கும். அதன் வழியாக நிறுப்படும் முடிபு தர்க்கப்பெறுமான முடையதாக இருக்கும். ஆனால் நடைமுறையில் அவ தானித்தால் பல வாதங்கள் இவ்வாறு அமைவதில்லை. பெரிய எடுப்போடு தொடங்கப்பட்ட அறிவுரைகளை, ஆய்வுகளை நோக்கினால் இதனை இனங்கானலாம். நிருபிக்கப்படாமலேயே, நிரூபிக்கப்பட்ட பொது உண்மை போல், முதல் எடுகோள்கள் அமைந்திருக்கும். திருபிக் கப்படவேண்டிய கருத்து ஒன்று, நிரூபிக்கப்படாமலேயே நிரூபிக்கப்பட்ட கருத்துப்போல் முன்வைக்கப்பட்டிருப்பு தையே இப்போலி வடிவம் குறிக்கின்ரது. முடிபு எே கோளுக்குள்ளேயே பொய்யாகி விட்டது என்பதையே

-- 19 --
முடிபு மேற்கோடல்" என்ற பதம் குறிக்கின்றது. அறிவு ரைகளை வழங்குகின்ற போது, பொன்மொழிபோன்று கூற்றுக்களை முன்வைத்து தனது கருத்தை வளர்த்துச் செல்லும்போது நிதானமாக அவதானித்துப் பாருங்கள் இப்போலி புலப்படும். உதாரணமாக எல்லா அனுபவங் களின் தொகுப்பே நல்லறிவு அதனால் எல்லா அணுப வங்களையும் அனுபவிக்க நாம் குழந்தைகளை அணு மதிக்கவேண்டும் அப்போதுதான் அவர்கள் தற்பிரஜை களாக வளர்வர் என்று கூறும்போது எல்லா அணுப வங்களின் தொகுப்பே நல்லறிவு என்ற எடுகோள் திரு பிக்கப்பட்ட உண்மை போல் முன்வைக்கப்படுகிறது. இதற்குள் மூன்று வடிவங்கள் உள்ளடங்கும்.
1) முடியின் கூறுமேற் கோடற் போலி: (i) சக்கர நிரூபணப் போலி : (i) பொருந்தாத முடிவுப் போலி:
சில சந்தர்ப்பங்களில் கூறியது கூறலாகவும் கருத் துக்கள் அமைந்துவிடும். எடுகோளின் ஒரு பகுதியையே மீண்டும் முடிபாக முன்வைப்பர் இதனை முடியின் கூறு மேற்கோடற் போலி என்பர். உதாரணமாக, இசை இரசிப்பவர்களை இசை இசையவைக்குந்தன்மையது. ஏன் எனில் இசைக்கு நபப்பவர்களைத் தன்வசப்படுத் தும் தன்மை உளது.
காந்தம் இரும்பைக் கவருந்தன்மையது ஏன் எனில் காந்தத்திற்கு இரும்பை ஈர்க்கும் சக்தி உள்து என்று கூறும்போது முடியின் கூறு மேற்போவி இடம்பெற் றிருப்பதை அவதானிக்கலாம். இதே போல், ஒரு விடயத் தையே திரும்பத் திரும்பக் கூறுவதுபோல அமையும் வாதவடிவங்களும் உளது. இதனை சக்கர நிருபனப் போலி என்பர். எடுகோளும், முடியும் திரும்பத் திரும்ப ஒரு கருத்தையே முன்வைப்பதாக அமையும்.

Page 17
- 20 -
உதாரணமாக எமது அரசின் எல்லாத் திட்டங்களும் நன்மையானவை. கல்வித்திட்டம் நன்மை தரும் பொரு ளாதாரத்திட்டமும் நன்மை தரும், சுகாதாரத்திட்டமும் நன்மைதரும், ஆகவே எமதரசின் எல்லாத்திட்டங்களும் நன்மை தருவனவே.
முடிபு மேற்கோடற் போலிக்குள் பொருந்தா முடிபுவாதம் என்ற போலி வடிவமும் உளது. எடுகூற்றுக்களுக்கி டையே தொடர்பு இருப்பது போல் இருக்கும். ஆனால் நன்கு அவதானித்தால் அது பொருந்தா முடியாக அமைத் திருக்கும் உதாரணமாக, கலைகள் அனைத்தும் சமூகத்திற்கு நன்மையளிக்கும். கலைஞர்களே கலைகளை உருவாக் கித் தருபவர்கள். அதனால் கலைஞர்கள் சமூகத்திற்கு நன்மையளிப்பவர்களாவர்.
இவ்வாறு முடிபு மேற்கோடற் போலி வடிவங்களை வாசகர்கள் இனங்காணலாம். சமூகத்தில் பொதுக் கருத்துக்களாக, வாதங்களாக முன்வைக்கப்படும். நியா பங்களைத் தர்க்கரீதியாக அவதானித்துப் பார்த்தால் இவ்வகைப் போஜிகளை இனங்காண்லாம்
(3) அசித்தப் போலி :
முன்வைக்கப்படும் கருத்துகளுக்கிடையே தர்க்கரீதி யான தொடர்பு எதுவும் காணப்படாத போது எழுவதே அசித்தப்போலியாகும். வாதங்களை முன்வைக்கும்போது ஒன்றோடு ஒன்று தர்க்கரீதியான தொடர்பு எதுவும் காணப்படாதமையும் வாதவடிவங்கள் உள்ளன. தான் முக்கியமான அறிவுரையைக் கூறுவதுபோல் கருத்துக் களை அடுக்குவர், முன்வைத்து வாதிடுவர் ஆனால் அக் கருத்துகளிடையே தர்க்கரீதியான தொடர்பு காணப்பு டாததைக் கண்டு கொள்ளார்கள் உதாரணமாக,
நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் கொலைகளும், கொள்ளைகளும், வன்செயல்களும் அதிகரித்து விட் டன. மக்கள் முன்புபோல் நிம்மதியாக வாழ முடிய

வில்லை ஆதலால் தனியார் கல்லூரிகளின் எண் னிக்கை அதிகரிப்பதை நாம் கட்டுப்படுத்த வேண்டும். எங்கு பார்த்தாலும் பிரத்தியேக வகுப்புக்களும் கல்வி நிலையங்களும் மலிந்து காணப்படுகின்றன. என்று கூறும்போது இங்கு அசித்தப்போலி ஏற்படுவதை அவ தானிக்கலாம் தனது இளமைக்காலத்திலும், பல்கலைக் கழக வாழ்க்கையிலும் உயர் இலட்சியங்களுக்காக வாழ்ந்தவர் சீதனக் கொடுமைகளைக் கண்டித்தவர்
தனது பிற்கால வாழ்க்கையில் கொழுத்த சீதனத்தை வாங்கி வாழும், பிரபுத்துவ வாழ்வு பற்றி அவர் நண்பர் விசாரித்தபோது, அவர் பின்வருமாறு கூறு கின்றார். "அதெல்லாம் கொள்கை ரீதியாகச்சரி, ஆனால் நடைமுரைக்குப் பொருந்தாது ' இவ்வாறு தப்பித்துக் கொள்ளும்போது இப்போவி ஏற்படுகிரது.
காகதாலியப் போலி
காரணகாரியப் போலி வடிவங்களில் இதுவும் ஒன்று நியமப்போலி வடிவங்களில் ஒன்றாகவும் கொள் வர். 'இதனால் இது' என வாதிடும் போலி வடிவம் என்றும் குறிப்பிடுவர் குறித்த நிகழ்ச்சிக்கும் விளைவிற் குமிடையே எவ்வித தொடர்பும் காணப்படாத போதும் தொடர்பிருப்பதாக வலிந்து வாதிடும்போது இப்போவி எழுகிறது. இந்தியத்தத்துவத்திலும் இப்போலி தொடர் பான விளக்கங்கள் உள்ளன. உதாரணமாக,
காகம் இருந்ததினால்தான் பனம்பழம் வீழ்ந்தது.
என வாதிடுவதையே இப்போலி குறிக்கின்றது. காகம் இருந்தது ஒரு நிகழ்ச்சி பனம்பழம் வீழ்ந்தது மற்றுமோர் நிகழ்ச்சி ஆனால் வாதிடுவோர் இதனாற் தான் இது நடந்தது என வலிந்து வாதிடுவர். சாதா ரண மக்கள் தொட்டு ஆய்வாளர்கள் வரை இவ்வாறான வழு/ெக்கு ஆட்படுவதை அவதானிக்கலாம். உதாரணமாக தனது நண்பர் பாலன், விபத்துக்குள்ளாகியதை கேள் விப்பட்ட போது அவர் கூறினார், "அவர் புறப்படும் போது அவர் மனைவி தலைவிரி கோலமாக நின்ற

Page 18
- 22
போதே நான் நினைத்தேன், பாலனுக்கு ஏதாவது நடக்கப்போகுது என்று. எனக்கூறும்போது இப்போலி எழுகிறது.
நாட்டு வைத்தியர் கைபிடித்துப் பார்த்ததே அவர் இறந்ததிற்கு காரணம், அல்லது அவர் நீண்ட நாட் கள் வாழ்ந்திருப்பார்' என்று கூறுவதை அவதா னித்திருப்பீர்கள்.
auLLDL (3LITGS
இதனை அமைப்புப் போலி என்றும் கூறுவர். விதி பினை, அமைப்பினை, ஒழுங்கினை மீறும் போது ஏர் இம் வழுக்களையே நியமப் போலி என்பர் துறைகள் சார்ந்து எழும் நியமப் இாறிகளை அவ்வத் துரை சார்ந்த அறிவுடையவர்களினாலேயே இனங் கண்டு கொள்ளப்படும் அளவைமுறைக்குள் எழும் நியமப் போலிகளை இரண்டு பெரும் பிரிவாகப் பிரித்து விளக்
E TE „
1. உய்த்தறி அளவை சார் நியமப் போலி 2 தொகுத்தறி அளவைசார் நியமப் போலி
உய்த்தரி அளவை சார் நியமப் போலிக்குள் பின் வரும் வடிவங்கள் உள்ளடங்கும்.
அனுமான வடிவப் GTS வரைவிலக்கண முறைசார் போலி பிரிப்பு முறைசார் போலி வகையிட்டு முறைசார் போலி
2 தொகுத்தறி அளவை சார் நியமப் போலி
7. 96/3s (0. முறைசார் நியமப் GT 2 சான்று முறைசார் நியமப் GGS

- 23 -
3. ஒப்புமை முறைசார் நியமப் போலி 4. ஒருபாற் கோடற் போலி 5. முற்றீர்புப் போலி பி. முடிபு துணியாப் போலி 7. கோடற் புள்ளிவிபரப் போலி 8. கருதுகோற் போலி
அனுமான வடிவப் போலி:
தர்க்கவியலில் அனுமானம் அதிகமுக்கியத்துவம்பெறு கின்றது, மேலை, கீழை நாட்டுத்தத்துவங்களில் அறி வினைப் பெறும் வாயில்களில் அனுமானம் ஒன்றாக அமைவதால், அளவையியலாளர்கள் இதில் அதிக ஆர் வம் காட்டினர். அனுமானத்தை ஒரு வடிவமாக இனங் கண்டு அதனைப் பிரித்து அவற்றுக்கான விதிகளை அமைத்துத் தந்தமை அரிஸ்டோட்டிவின் முக்கிய முயற் சிகளில் ஒன்று அனுமானப் போலிகளை பின்வருமாறு 2ngみaró。
1 உடன் அனுமானப் போலி வடிவம்
2. ஊடக அனுமானப் போலி வடிவம்
உடன் அனுமானப் போலி 1. எடுப்பு முரண்பாட்டு அனுமானப் போலி
(ஆ) திரை விதி எடுப்பு மெய் எனின் குறைவிதி எடுப்பும் மெய் என அனுமானித்தல் வழிப்பேறு வடிவப் போலி. (ஆ) குறைவிதி எடுப்பு உண்மைஎனின் நிறைவிதி எடுப்பும் உண்மை என அனுமானித்தல் வழிப் பேற்றின் வடிவப் போலி. (இ) நிரை விதி எடுப்பு பொப் எனின் நிறைமறை
எடுப்பும் பொய் என அனுமானித்தல் மஜதலை வடிவப் போலி. リ

Page 19
- 24 -
2. பல்வினாப் போலி என்பது பல வினாக்களுக் கூடாக ஒரு பதிலை பெறுவதற்கான எத்தனமாகும். குறுக்கு விசாரணை செய்யும் சட்டத்தரணிகளிடம் இதனை அவதானிக்கலாம். உதாரணமாக, மதுஅருந்துவதை இப்போதெல்லாம் நிறு
த்தி விட்டாயா? அங்கு, போவதெல்லாவற்றையும் இப்போது நிறுத்தி SlfCe_frtur F
3. முறையற்ற எதிர்மாற்றப் போலியில், இரு நிலை
ஆள் உள்ார எடுப்பின் பண்புசார் நிலையில் ஏற்படும் போவி எழுவாய் பயனிலைசார் நிலையில் ஏற்படும் போலி
4. மூரையற்ற எதிர்வைக்கைப் போலி 5. முறையற்ற நேர்மாற்றப் போலி
இவ்வாறு உடன் அனுமான வடிவங்களுக்குரிய விதி களை மீறும் போது ஏற்படும் போலிவடிவங்கள் பல 5.GTCTöT.
ஊடக அனுமானப் போவி வடிவம்
ஊடக அனுமானத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம் 1. தூய அறுதி நியாயத்தொடை வடிவம் 2. கலப்பு நியாயத்தொடை வடிவம்
(அ) கலப்பு நிபந்தனை நியாயத்தொடை
(ஆ) கலப்பு உறழ்வு நியாயத்தொடை (இ) இருதலைக்கோள் நியாயத்தெயடை
தூய அறுதி நியாயத்தொடை வடிவம் ஆறு பிரதான விதிகளையும், மூன்று கிளை விதியையும் அடிப்படை யாகக் கொண்டுளது. இவ்விதிகள் மீறப்படும் போது அவ்விதியை மீறும் போலி ஏற்படும்.

- 25 -
உதாரணமாக :
தளபதி நாட்டை ஆள்கிறான் தளபதியின் மனைவி தளபதியை ஆள்கிறாள் ஆகவே தளபதியின் மனைவி நாட்டை ஆள்கிறாள் இங்கு இரண்டாவது அமைப்பு விதியாகிய, ஒரு வாய்ப் பான வாதம் மூன்று பதங்களைக் கொண்டிருக்கவேண் டூம் என்ற விதி மீறப்படுவதால், நாற்பதப்போலி ஏற் பட்டுள்ளது.
நூல்கள் யாவும் அறிவைத்தருவனவாகும்
பருத்தி ஒரு நூல்
ஆகவே பருத்தி அறிவைத்தரும் இங்கு ஈரடியியல்புப் போலி ஏற்பட்டுள்ளது. நூல் என்ற பதம் இரண்டு பொருளில் பிரயோகிக்கப்பட்டுள் ರಾ??:) :
கலைஞர்கள் அனைவரும் நடிகர்களாவர்
இரசிகர்கள் அனைவரும் நடிகர்களாவர்
ஆகவே கலைஞர்கள் இரசிகர்கள் தடுப்பதமானது எடு கூற்றுக்களில் ஓரிடத்திலாவது வியாத்தியடைந்திருக்க வேண்டும் என்ற முதலாவது அளவு விதி மீறப்பட்டதால் நடுப்பதம் வியாத்தியடை பாப்போவி ஏற்பட்டுள்ளது.
எல்லா மாணவர்களும் விவேகிகளாவர்
விவேகிகள் அனைவரும் கலைஞர்களாவர்
ஆகவே கலைஞர்கள் அனைவரும் மாணவர்களாவர் இவ்வாத வடிவத்தில் சிறுபதசசட்ட விரோதப் போலி ஏற்பட்டுள்ளது. எடுகூற்றுக்களில் வியாத்தியடையாத பதம் முடிபுக்கூற்றில் வியாத்தி அடைந்து வரக்கூடாது என்ற விதி இங்கு பிரப்படுகின்றது. இதேபோல் பெரும் பதச்சட்டவிரோதப் போலி, பண்புவிதிகள், கிளைவிதி களை மீறுவதால் எழும்போலி வடிவங்கள் அறுதி நியாயத்தொடை வடிவங்களில் எழும் நியமப்போலி வடிவங்களாகும்.

Page 20
- 26 -
கலப்பு நிபந்தனை நியாயத்தொடை வடிவத்தில், இரண்டு விதிகள் முக்கியமானவை.
1. விதித்து விதித்தல் விதி
2. மறுத்து மறுத்தல் விதி இவ்விதிகள் மீரப்படும்போது காரண மறுப்பு போலி காரியமறுப்புப் போவியாகிய நியமப் போவிகள் ஏற் படுகின்றன.
உதாரணமாக
பாலன் நஞ்சுண்டால் பாலன் மரணமடைவசன் பாலன் மரணமடைந்துள்ளான் ஆகவே பாலன் நஞ்சுண்டுள்ளான். இவ்வாதம், காரிய விதிப்பிலிருந்து காரணவிதிப்பை முடிவாகப் பெறுவதால், காரணமறுப்புப் போலி ஏற் படுகின்றது.
பாலன் ந்ஞ்சுண்டால் பாலன் மரணமடைவான்
பாலன் நஞ்சுண்ணவில்லை
ஆகவே பாலன் மரணமடையவில்லை. இவ்வாதம் காரிய மறுப்பிலிருந்தே காரணமறுப்பைப் பெரவேண்டும் என்ர மறுத்து மறுத்தல் விதியை மீறி காரியமறுப்புப்போவிக்கு ஆட்படுகின்றது.
கலப்பு உறழ்வு நியாயத்தொடை வாதவம், இரண்டு விதிகளில் தங்கியுளது.
1. உடன்பட்டு மறுத்தல்
2. மறுத்து உடன்படல் இவ்விதிகள் மீறப்படும் போது எழும்போலி வடிவங்கள் நியமமில் போவிக்குரியதாகக் கொள்வதே பொருத்த மானது. ஏன் எனில் இங்கு நடைமுரை அனுபவம் அவதானிக்கப்படுகிறது என நவீன அளவையியலாளர் கள் குறிப்பிடுவர். மரபு வழி அளவையியலாளர் நிய மப் போலிக்குள் உள்ளடக்குவர்.

- 27 -
உதாரணமாக
மாலா பல்கலைக்கழகம் சென்றால் பட்டதாரியா வாள் அல்லது நடிகையாவாள் அவள் பட்டதாரியாகவில்லை ஆகவே அவள் நடிகையானாள் இவ்வடிவத்தில் தழுவு நிலைப்போலி ஏற்பட்டுள்ளது. ஒரு மாணவி ஒரே நேரத்தில் பட்டதாரியாகவும் நடிகை யாகவுமிருக்கலாமன்றோ.
மாலா தலையில் சூடியிருப்பது மல்லிகைப்பூ அல்லது ரோஜாப்பூ அவள் துடியிருப்பது ரோஜாப்பூ அல்ல ஆகவே அவள் மல்லிகைப்பூ துடியுள்ளாள். இவ் வடிவத்தில் தவிர்ப்பு நிலைப்போலி ஏற்பட்டுள்ளது மலர்கள் என்ற வகுப்பிற்குள் பல மலர்கள் உண்டு.
இருதலைக்கோள் வாத வடிவங்கள், கூட்டு நிபந்தனை எடுப்புக்களையும், ஒரு அறுதி எடுப்பை அல்லது உறழ் எடுப்பைக் கொண்டதாக அமைந்துவரும் முடிபுக்கூற்று அறுதி எடுப்பு வடிவமாகவோ, உறழ் வெடுப்பு வடிவமாகவோ அமைந்து வரலாம். இவ்வடி வத்தில் எழும்போலி வடிவங்களை நியமில்போலி வடி வமாகக் கொள்வதே மிகப் பொருத்தமானது என நவீன அளவையியலாளர் குறிப்பிடுவர். மரபுவழி அளவைகள் பியலாளர்கள் வடிவங்களில் தவறு ஏற்படுமாயின், நியமப்போவியாகக் கொள்வதே பொருத்தமான து
Tirui.
2. வரைவிலக்கண முறையில் எழும் போலி:
பதங்களின் கருத்துக்குறிப்பினை வரையறுக்கு முறையே வரைவிலக்கணமாகும். கருத்துக்களைத்தெளி வாக முன்வைப்பதற்கு எண்ணக்கருக்களைத் தெளிவாக வரைவிலக்கணம் செய்வது அவசியமாகும். இதேபோல் விஞ்ஞான விளக்கத்திலும் வரைவிலக்கணமுறை அவ ரியமாகின்றது. ஆப்வுப்பரப்பை திட்டவட்டமாக வை

Page 21
- 28 -
யறுப்பது ஆய்வாளனுக்கு அவசியமாகின்றது. ஒருவர் தான் கூறவிருக்கும் விடையத்தை முதலில் வரைவிலக் கனம் செய்வது தனது ஆய்வுப்பரப்பைத் தெளிவுபடுத்த உதவுமோர் நடைமுறையாகும். இவ்வாறு பதத்தின் கருத்துக்குறிப்பினைத் தெளிவுபடுத்த வரைவிலக்கண முறையைக் கையாளும்போது அவற்றுக்குரிய விதிகள் நிபந்தனைகள் மீறப்படுமாயின் நியமப்போலிகள் ஏற் படும் இவ்வாறு எழும்போலி வடிவங்களைப் பின்வரு மாறு பிரிக்கலாம்.
கவர்ப்பொருட்பாட்டுப் போவி அதிவியாத்திப் போலி அவ்வியாத்திப் போலி G). Er GEycLJGoofy GUTCS" வரைவிலக்கரைக் சக்கரப் பேர் வி ஒருங்கிசையாப் பண் புகளை உட்படுத்தும் எண்ணக்கருப்போலி 7 வரையில் கூற்றிலிருப்து வரைவுடைய கூற்றைப்
பெறும்போவி 8 வரைவுடைய கூற்றிலிருந்து வரையில் கூற்றைப்
பெறும் போலி
கவர்ப்பொருட்பாட்டுப் போலி :
ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தத்தைத் தரும் பதத்தைக் கையாழும்போது வரைவிலக்கணஞ் செய்யும் போது ஏற்படுவதாகும். ஈரடிபியல்புப் போலி வடிவங்கள் இதற்குள் உள்ளடங்கும். இரண்டுக்கு மேற்பட்ட அர்த்தங் களைக் குறிப்பால் உணர்த்துவனவாக அமையும் வழுக் களே இதற்குப் பொருத்தமானது 'சமூக விஞ்ஞானத் துரைகளில் நன்கு நிறுவப்பட்ட செம்மையான கலைச் சொற் தொகுதி யொன்றில்லையாதலால் இத்துறை களில் கவர்ப்பொருட்பாட்டுப் போலிகள் நிகழ்வதற்கு அதிகவாய்ப்புண்டு என்ற மொனாசுனரின் கருத்து நோக் கத்தக்கது.

- 29 -
உதாரணமாக, இயற்கை முறைக்கல்வி குழந்தை களுக்கு உகந்தது எனக்கூறி, இயற்கை முறைக்கல்வி யை ஒருவர் வரைவிலக்கணஞ் செய்யும்போது இப் போவிக்கு ஆட்படுகின்றார்.
மாலா அவன் தொடர்பை விட்டுப் பிரிந்தாலும் அவளுடைய அன்பு நினலயானது' எனக் கூறவருட வர், நிலையானது என்பதற்கு தரும் விளக்கம் அவரை யறியாமலே இப்போலிக்குள்ளாவதைக் காட்டுகின்றது மரபுவழி அளவையியலாளர் தரும் ஒரு உதாரணத்தைப் பாருங்கள்
" ஓர் பொருள் முடிவடைவது அது பூரணமாகும் போது வாழ்க்கை முடிவடைவது மரணத்தில் ஆகவே வாழ்க்கை பூரணமாவது மரணத்தில் என்ற வாதத்தில் இடம்பெறும் முடிவடைதல்' என்பதன் பொருள் யாது.
அதிவியாத்திப் போலி:
ஒரு பதத்தின் கருத்துக்குறிப்பை வரைவிலக்கணஞ் செய்யும்போது அதன் கருத்தை அளவுக்கதிகமாக விப ரித்துச் செல்வதால் ஏற்படுவதாகும் உதாரணமாக, ஆளுமை' என்ற எண்ணக கருவை வரைவிலக்கணஞ் செய்பவர், 'ஆளுமை என்பது விவேகம், அறிவு,துணிவு தனித்து தீர்மானங்களைத் தெளிவாக எடுக்குமாற்றல் உயர்ந்த நற்பண்புகள் தலைமைத்துவப் பண்பு ஆரோக் கியம், அழகு, உடல்வலிமை போன்ற அனைத்துப்பண்பு களையும் கொண்ட தனித்திரனாகும் என விரித்துச் செல்லும் போது அதிவியாத்திப் போலி எழுகின்றது.
அவ்வியாத்திப் போலி:
ஒரு பதத்தின் கருத்துக் குறிப்பை வரைவிலக்கணஞ் செப்பும்போது அதன் கருத்தை மிகமிகக் குரைவாகத் தெளிவின்ரி வரைவிலக்கணஞ் செய்யும் போது நிகழ் கின்றது. உதாரணமாக, " விதவை ' என்ற பதத்தை

Page 22
- 30 -
வரைவிலக்கணஞ் செய்பவர் "விதவை என்பது கன வனை இழந்தவள்' எனச்சுருக்கமாக வரைவிலக்கனஞ் செய்யும் போது எழுகிறது:
வரைவிலக்கனச்சக்ரப் போலி:
பதத்தை வரைவிலககணஞ் செய்வோர், அப்பதத் திற்குச் சமமான ஒத்த மற்றுமோர் பதத்தை எடுத்துக் கூறுவதன் மூலம் வரைவிலக்கணஞ் செய்யும் போது ஏற்படுவதாகும். உதாரணமாக, "இல்லம் என்பது விடு ஆகும்" என்று கூறும்போது கூறியது கூறல் என்ர வழுவுக்கு ஆளாகின்றார். திரும்பத்திரும்ப அதே கருத்தே வந்து போகின்றது என்பதைக் குறிக்கின்றது.
ஒருங்கிசையாப் பண்புகளை உட்படுத்தும் எண்ணக் கருப்போலி:
பதங்களின் கருத்துக்குறிப்பை வரைவிலக்கனஞ் செய்யும் போது எண்ணக்கருக்களை விளக்குகின்ற போது இப்போவி ஏற்படுகின்றது. பதங்களின் கருத்தை தெளிவாக வெளிப்படையாக எல்லோரும் அறிந்திருப்ப தில்லை. கருததுத் தொடர்பான அர்த்தத்தைப் பிரயோ கிக்க வேண்டிய சந்தர்ப்பத்தை பிழையாக உணர்வர். இதனால் ஒன்றுக்கொன்று பொருந்தாத, இசைவுறாத, பதத்தைப் பிரயோகிக்கின்றபோது இப்போலி நிகழ்கிறது உதாரணமாக, "பிரிக்கப்பட முடியாத சடப் பொருட் பகுதி' "மரணிக்க முடியாத உயிரினங்களின் புதை குழிகளிலிருந்து எடுத்த எச்சங்கள்" என்ற கூற்றுக் களை அவதானித்துப் பாருங்கள். ஒருங்கிசையாத பண்பு களின் சேர்க்கையாக அமைகிறது.
வரையில் கூற்றிலிருந்து வரைவுடைய கூற்றைப்பெறும் போலி:
இப்போலியும் பதங்கள் தொடர்பான தெளிவின்மை யால் ஏற்படுவதே பதங்களின் கருத்தை நன்கு நிர் ணயிக்காது விடுவதால் இவ் வழு ஏற்படுகிறது.

126872 - 31 -
உதாரணமாக, திங்கு விளைவிப்பது எதுவும் தடை செ ப்ய ப் பட வேண்டும். சினிமா திங்கு விளைவிப் பது. ஆகவே அதனைப் பார்ப்பது முற்றாகத்தடை செய் யப்படவேண்டும். இங்கு எத்தகைய சினிமாப்படம் என்ற முக்கியமான விடையம் அவதானிக்கப் படவில்லை 'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்ற முதுமொழியை வைத்துக்கொண்டு இளம்வயதில் செய்ய முடியாதிருந்த காரியங்களை முதியவனான பின்னும் ஒருவனாற் செய்யமுடியாது என வாதிடும்போது இப் போலி எழுவதைக் கவனியுங்கள்.
வரையுடைய கூற்றிலிருந்து வரையில் கூற்றைப் பெறும் போலி :
இப்போலியும் முன்னதைப் போன்றதே பொதுவிதி களை பொது எடுகோளைப் பயன்படுத்தும்போது இவ் வழு நிகழ்வதற்கான நிலைகள் ஏற்பட்டு விடுகின்றன. நியமப்போலிக்குரிய தடத்தற் போவியை ஒத்ததாகத் காணப்படுவதால் சிலர் இரண்டையும் ஒன்றெனக்கருது வதுண்டு. உதாரணமாக, வேலையாட்களுக்கு வேலை கொடுத்தல் சமூகத்திற்கு நன்மை தரும். ஆதலால் வேலையில்லாதார்க்குப் பயனற்ற வேலையாயினும் கொடுத்தல் நல்லதே' என வாதிடும்போது இப்போவி ஏற்படுகின்ரது. எடுகூற்றில் கொடுக்கப்படும் வேலை பயனுள்ளதாயிருத்தல் வேண்டும் எனும் குறிப்பிருப்பது அவதானிக்கப்படவில்லை.
சொல்லணிப் போலி:
இப்போலி வடிவம் சொற் போலி வகைக்குள்ளும் உள்ளடங்கும். வரைவிலக்கண முறையில் நியமப் போலி வடிவமாக அவதானிக்கப்படுகிறது. பழந்தமிழ்ச் சொற்கள், அடுக்கு மொழிகள், அலங்கார மொழித ளைப் பயன்படுத்தும் போது இவ்வாரான போலி ஏற் படுகிறது. உதாரணமாக, பல்மா ன குடிவகைகள்ை அருந்துவது பலத்தைத் தரும். | 8

Page 23
- 32 -
"எழுந்தனன் எழுத்தோவியன் எழுதாக்கிழவியால்
பெயர்ந்தன ஏழ் உலகும்'
'பெருகுதல், பெருக்குதல், பெரிதாதல்' என அடுக் கிச் செல்லும் போது இப்போலி நிகழ்கின்றது.
அளவையியல் பரிப்பு முறையில் ஏற்படும் போலி.
ஒரு பதத்தின் அகலக் குறிப்பை வரையறை செய் பும் முறையே பிரிப்பு முறையாகும் பேரினத்தை ஒரு கொள்கையின் அடிப்படையில் சிற்றினமாகப பிரித்துக் செல்வதன் மூலம் அதன் பொருட் குறிப்பு தெளிவு படுத்தப்படுகின்றது. ஒரு வகுப்பில் உள்ளடங்கும் ஏனைய கீழ் வகுப்புக்கள் யாவற்றையும் கூறுதலே பிரிப்பு முறையாகும். அவ்வாறு பிரிக்கும் போது பின் பற்ற வேண்டிய நிபந்தனைகள் மீறப்படுமாயின் பிரிப்பு முறையில் போலிகள் ஏற்படும் ஒவ்வொரு திரிப்பு முறையும் ஓர் அடிப்படையை உடையதாயிருத்தல் வேண் ம்ே இம் முதலாவது நிபந்தனை மீறப்படும்போது, ஒழுங்கற்ற, திட்டமற்ற பிரிப்புப் போலி ஏற்படும். அக லக்குறிப்பின் ஒரு பகுதி ஒவ்வொரு கீழினத்திலிருந்தும் விடுபட்டுப் போவதாய் அமைந்து விடும் இதனைக் குறுகவான பிரிப்புப் போலி எனவும் குறிப்பிடுவர்.
இரண்டாவது நிபந்தனை, கீழ் இனங்கள் யாவும் சேர்ந்து முழுவதற்கும் இணையான விரிவை உடைய தாயிருத்தல் வேண்டும். இந்நிபந்தனை மீரப்படும்போது குறுகலான பிரிப்புப் போலி ஏற்படுகின்றது. ஒரு சாதி பில் உள்ள இனங்கள் அனைத்தையும் பூரணமாகச் கருத்திலெடுத்து பிரிக்கப்படாத வழு ஏற்படுகின்றது.
மூன்றாவது நிபந்தனை பிரிப்புத் தொடரும் போது படிப்படியாய் அமைதல் வேண்டும். ஒவ்வொரு படியும் கூடியவரை முந்தியதற்கு அணித்தானதாயிருத்தல் வேண் டும். இந்நிபந்தனை மீறப்படும்போது பிரிப்புப் பாய்தல் போலி ஏற்படுகின்றது.

- 33
அளவையியல் வகையீட்டு முறையில் ஏற்படும் போலி:
பரந்துபட்டிருக்கும் பதங்களில், கதம்பமாகக் காணப் படும் எண்ணக்கருக்களில் ஒன்றோடொன்று தொடர் புடைய பதங்களை ஒரு திட்டத்தினடிப்படையில் வகுப் பதே வரையிட்டு முறையாகும். உண்மையில் விஞ்ஞான வகைபிடும் அளவையியல் முறைப்பிரிப்பின் தத்துவங் களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. " உண் மைப் பொருள்களை முறையாக ஒழுங்குபடுத்தும் விஞ் ஞான முயற்சி' என மெலோன் என்ற அளவையிய லாளர் குறிப்பிடுகின்றார்.
இவ்வகையிட்டு மூரை இன்று அவசியமானதோர் முறையாக அமைகிறது. விஞ்ஞானத்துரைகள் எத்தனை உள்ளனவோ அத்தனை பொதுவகையீடுகள் உள்ளன. அறிவியலின் விருத்திகாரணமாக, வகையிட்டு முறை பின் தேவை அதிகரித்து வருகின்றது. வகையீடு செய் கின்ற போது கீழினங்கள் யாவும் ஒரு மேலினமாக அமையுமாறு தொகுக்க வேண்டும் இனங்கள் தவிர்க்கப் பட்டால் வகையிட்டு தவிர்ப்புநிலைப்போலி ஏற்படும் உதாரணமாக, 'தாவரவியல் பெளதீகவியல், விலங் கியல் யாவும் இயற்கை விஞ்ஞானமாகும்' என்ற வகை பீட்டில் பல இயற்கை சார்துரைகள் தவிர்க்கப்பட்டு விட்டன. இதே போல் வகையீடு செப்பும்போது கீழி னங்கள் ஒன்ரோடு ஒன்று தழுவுவனவாக அமைதல் கூடாது. அதனை வகையிட்டுத் தழுவுநிலைப் போவி என்பர். உதாரணமாக, "பொருளாதாரம், அரசியல், வர லாறு, உளவியல், கல்வி உள்வியல் பாவும் சமூக விஞ்ஞானமாகும்' என வகையீடு செய்யும் போது உள வியல் என்ற துரைக்குள் உள்ளடங்கும் ஒரு பிரிவே கல்வி உளவியலாகும். இவ்வாறு செம்மையாக கீழி னங்கள் அனைத்தும் உள்ளடங்குமாறு தவிர்க்கப்படாத வாறு தழுவுப்படாதவாறு, வகைபிடு அமைதல் வேண் (у й.
5

Page 24
3. சொற் போலி
சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றுவரும் போலி வடிவமாகும். இது நியமமில் போலி வடிவங்களில் ஒன்றாகக் கொள்ளப்பட்டாலும், நியமப்போ விக்குரிய தாகவும் அமையும். நியமப்போவியாகிய சொல்லணிப் போலி வடிவங்களும் இதற்குள் உள்ளடங்கும். 19ஆம் நூற்றாண்டுக்காலத்தர்க்கப் புலனெறி வாதிகளின் மெய் பியல் முயற்சிகளைத் தொடர்ந்து சொற்போலி வடிவங் கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மொழி மெய்பிய வின் வருகை, மொழிக்கும் மனித நடத்தைக்குமிடையி லான தொடர்பை உறவை உலகிற்கு உணர்த்திற்று. தமிழில் மொழி மெய்யியலுக்கு முன்னரே தொல்காப் பியர் இதனை இனங்காட்டியுள்ளார். ' எல்லாச்சொற் களும் பொருள் உடையனவே ' என்ற கூற்றினூடாகத் தொல்காப்பியர் பல இலக்கண வழுக்களை, சொற் போலிகளைக் காட்டியுள்ளார். மேலைத்தேய அளவை யியலாளர்கள் இனங்காட்டும் சொற்போலிகள் பல நன்னூற்காண்டியுரையில் இலக்கண வழுவாகக்காட்டப் படுவதையும் அவதானிக்கலாம். சொற்போலியில் உள் ளடங்கும் வடிவங்களில் பின்வருவன முக்கியமானவை.
1. இலக்கணத் தெளிவின்மையால்
ஏற்படும் போலி: சிந்தனையின் இலக்கணம் அளவை என்றும், மொழி யின் அளவை இலக்கணம் என்றும் கூறுவர். இலக்கணம் மொழியை நெறிப்படுத்துகின்றது. இலக்கண அமைதி மொழியின் பிரயோகத்தில் இயல்பாகவே வரவேண்டும் இலக்கணத்தை நன்கு கற்றறிந்த பண்டிதர் கூட இலக் கன வழுவிற்கு ஆட்படலாம். அதனால் இப்போலி எல் லாத்தரத்தினரிடமும் நிகழும் என்பதை விளக்குகின்றது.

- 35 =
உதாரணமாக, " எலி கொன்ற பூனை' இங்கு எலி பூனையைக் கொன்ரதா பூனை எலியைக் கொன்ரதா
'படை சிதறி ஓடியது' என்றே எழுதியும் கூறி பும் வந்துவிட்டோம்.
'படைகள் யாவும் சிதறி ஓடின' என்பதே இலக் கண வழுவற்ற பிரயோகமாகும். இலக்கண இரட்டுறு மொழிதற் போலியும் இதற்குள் அடங்கும்.
ε 3 (7/7.6007 (0,74%,
" நன்மை அவர்க்கில்லை உனக்கு ' " புவி கொன்ர பானை" " எலிமிச்சம்பழம் பவுத்திரம்"
2. உச்சரித்தற் போலி:
மொழியின் பிரயோகத்தில் கையாள்வோன் உச் சரிக்கும் நிலையைப் பொறுத்தும் போலி ஏற்படும். நண்பர்களுக்கிடையில் நிகழும் உரையாடல்களில் அவ தானிக்கலாம். சிலர் திட்டமிட்டும் உச்சரிப்பர்.
உதாரணமாக,
"நான் வரட்டா'
"நல்ல அழகு"
" நீ என் எதிரே தலைகாட்டாமல் மறைவாகத்
திரிந்தால் பிழைப்பாய்"
நீதிமன்றுகளில் விவாத அரங்குகளில் எதிரணியினரை உச்சரிக்கும் விதத்தால் சீண்டுவதை அவதானிக்கலாம்.
3. பல்வினாப் போலி:
இது பொருட்போலிக்குரியதாகவும் அமையும். உரை யாடுபவர், கேட்கும் நிலையைப் பொறுத்து ஐயம் அதி கரிக்கும். நீதி மன்றங்களில் நடக்கும் குறுக்கு விசாரனை களின் போது, விவாத மேடைகளில், இவ்வாறான போவி களை அவதணிக்கலாம்.

Page 25
36 -
' இப்பொழுதும் நீ மகிழ்ச்சியாக இருக்கின்றாயா ?
நீ உன் மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டாயா? இப்போதும் புகைபிடிக்கும் பழக்கமுண்டா ? நீ அவனை அடிக்க வில்லை என்று கூறும் பொய்யை அவனாக நம்பி விட்டானா ?
4. நீயும் அப்படித்தானே எனும் போலி:
இது பொருட்போலிக்குரிய தாகக் கொள்ளப்படும், சதாரண மக்கள் தொட்டு அறிஞர்கள் வரை இவ்வாறான வழுவுக்கு ஆட்படுவதுண்டு தான் செய்வதை நியாயப் படுத்த, நீயும் அப்படித்தானே, எனக்கூறுவதன் முலம் தன் தவரை நியாயப்படுத்துவர் சொற்களால் அழகு படப்பேசி சமாளிக்கவும் முயல்வர்.
" தான் கோவில் நிர்வாகத்தில், பொருளாளராக விருந்து திருடிய தாகப் பலபேரிடம் குறை கூறி கின்றாய், நீ மட்டு மென்ன பலநோக்குக் கூட்ரவுச் சங்கத்தில் தலைவராகவிருக்கவில்லையா. '
' என்னுடைய மகனைப்பற்றிப் பெரிதாய்க் குறை கூறுகின்றாய் உன்னுடைய மகன் மட்டுமென்ன திரமா"
5. தொடர்பின்மை நியாயப் போலி:
பயம் அறிவின்மை, அனுபவமின்மை, விவேக மின்மை, போன்ற காரணங்களால் ஒருவர் ஒதுங்கி வாழமுயல்வர். குறித்த சந்தர்ப்பத்தில் எதுவும் கூறாது தழுவப் பார்ப்பார். புன் முறுவல் காட்டி தான் எல்லாம் அறிந்தவர் போல் நடிப்பார். ஆனால் அதை அறிந்து கொள்ளாத அறிவிலிகள் கூறுவதுண்டு, பார்த்தாயா, அவர்நிரம்பத் தெரிந்தவராக இருக்க வேண்டும் அதிகம் பேசவில்லை "
' இவ்வளவுக்குப் பின்பும்" ஏன் என்று கேட்கா மல் மெளனமாக இருக்கிறார் எவ்வளவு பலசாலி"

37
'இவ்வளவு பேர் கதைத்தும் கூட, அவர் தனது அபிப்பிராயத்தைக் கூறவில்லை பார்த்தாய' அவருக்கு எல்லாம் தெரியும்.
6. காலக்கொடையால் எழுந்தகுதி
நிர்ணயப் போலி ! சமகாலத்தில் இப்போலிவடிவம் முக்கியத்துவம் பெறு கின்றது நியமில் போலி வடிவத்திற்குரியது. சொற்போலி வடிவமாகவும் கொள்ளப்படும். அதிகாரப்போலி வடிவங் களில் ஒன்றாகவும் இனங்காட்டப்படுகின்றது.
உதாரணமாக ஒரு x என எடுத்துக் கொள்ளுங்கள் இருபது இருபத்தைந்து வருட காலச் சேவைமுப்பு என்ற தகுதியால் உயர்பதவியை வகிக்கின்றார். முதுநிலை விரிவுரையாளராக, பேராசிரியராக, அரச அதிபராக, அலுவலகங்களில் உயர்நிலை நிர்வாகியாக அவர் விளங்குகின்றார். அவரின் வளர்ச்சிக்காலத்தில், சூழல் சமூக ஈடுபாடு எதுவுமற்றவர் ஆழ அகலக்கற்கும் ஆர்வமற்றவர். கலை இலக்கிய ஆர்வம், அரசியல் ஈடு பாடு பொதுத்தொண்டு மனப்பான்மை எதுவுமில்லை. ஏட்டுக் கல்வியை மட்டும் நம்பிப்பாடமாக்கியதால் உயர் கல்வித்தகைமையைப் பெற்றவர் தன் நலனிலேயே அதிக ஈடுபாடு எச்சந்தர்ப்பத்திலும், செயலிலும், தன் நலனை மட்டும் கருத்தாக்க கொண்ட பிரகிருதி. காலக்கொடை பால் அவர் உயர்பதவியை வகிப்பதால் அவரையே மக்கள் எல்லாப் பொது நிகழ்வுகளுக்கும் தலைமை தாங்க, கருத்துரை வழங்க அழைப்பார்கள் மக்களிடம் இயல்பாகவே குடிகொண்டிருக்கும் பாமரத்தனம் அவரின் உயர்பதவியை வைத்து, எல்லா அறிவும், அனுபவமும், நிரம்பப் பெற்றவர் அவர்தான் என்று கருதிப் பொது நிகழ்வுகள் எதுவாகவிருந்தாலும் அழைப்பார்கள் அவரும் மறுப்பின்றி தயக்கமேதுமின்றித் தலைமை தாங்குவர் ால்லாவற்றையும் பற்றித் திட்டமிட்டுத் தயார்படுத்தி வந்து கருத்துக்களை வழங்கிச் செல்வார். அவரை

Page 26
- 38 -
அழைக்ச் சென்றவர், சென்றவர்கள், வாழும் துழலியே அவ்விடையந் தொடர்பாக அறிவும் ஆர்வமுடைய பட்ட றிவு நிரம்பிய அருட்செல்வர்கள், பலர் வாழ்வர். அவர் களை இவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள்.
காலக்கொடையால் கிடைத்தஉயர்பதவி, சாதாரண மக்களை அவரை உயர்ந்த நிலைக்கு எண்ணவைத்து விடுகிறது. இப்போலி இதனையே குறிக்கின்றது. உதா ரணமாக மக்கள் விழாக்களுக்குத் தலைமைதாங்க, கருத்துரை வழங்க தம்மைச் சூழ உள்ள உலகத்தைப் புரக் கணித்து விட்டு பல்கலைக்கழகத்தை நோக்கி விழாக் குழுவினர் படையெடுக்கும் நடைமுறைகளை அவதானித் துப் பாருங்கள். மக்களின் அறியாமையே இப் போலிக்கு முக்கிய காரணம் என அரிஸ்டோட்டில் எடுத்துரைக் கின்றார்.
விரைந்த பொதுமைப்பாட்டுப் போலி:
அறியாமை காரணமாக விரைந்து பொதுமை
பாராட்டுக்கு வந்துவிடும்பாங்கு பலரிடம் உளது.
உதாரணமாக அரசியற் தீவிரவாதிகள் அனைவரும் பயங்கர வாதிகளே. இந்தியர்கள் அனைவரும் மதப்பற்றுடையவர்கள். கலைப்பட்டதாரிகள் அனைவரும் ஆங்கில மொழி யறிவு குரந்தவர்களே.
பொறுமையாக அவதானித்தால் இப்பொதுமைப்பாட்டில் உள்ள வழுவை அறிந்துகொள்வர். பாமரமக்கள் மட்டு மன்றிப் படிப்பறிவுள்ளவர்களும், இவ்வாறான பொது மைப்பாட்டு நிலைக்கு வந்து விடுவதை அவதானிக்க
RYTA

- 39 ட
இவ்வாறு பல போலி வடிவங்களைச் சொற் போலிக்குரியதாக அளவையியலாளர் வகுப்பர். உவ மைகளைக் கையாளும் போது அடுக்குமொழியை அழகு மொழியைக் கையாளும்போது ஏற்படும் வழுக்களைச் சொற்போலிக்குள்ளும் உள்ளடக்குவர். வரைவிலக்கண முறையில் இனங்காட்டப்படும் சொல்லணிப் போவி வடிவங்களும் சொற்போவிக்குமுரியதே.
மொழியின் விருத்தி-அறிவியலின் வளர்ச்சி காரண மாகப் போலி தொடர்பான கருத்துக்கள், வகைகள் அதிகரித்து வருகின்றன. மக்களின் உறவுகள் தொடர்பு கள் மொழியாடலின் தேவைகளை அறிவியல் நோக்கில் விருத்தியுற வைப்பதால் தர்க்கவியல் இப்போலி வடிவங் களை இனங்காணுகின்றன.
வாசகர்கள் மத்தியில் சில போலி வடிவங்கள் ஒன்றுபோல் மயக்கத்தைத் தரலாம். பொறுமையாக, நிதானமாக அவதானித்தால் அவற்றுக்கிடையேயான வேறுபாட்டைத் தெளியலாம். போலிகளை இனங்காண் பதற்கும் பட்டறிவுக்குமிடையே தொடர்புளது எம்மைச் ஆழநடக்கும் அன்றாடச் சமூகதிகழ்வுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள் சுவை புரியும். ஒரு நகைச்சுவைத் துணுக்கை வாசிப்பவர்கள் அதனை ஒரே மாதிரிப் புரிந்து கொள் வதில்லை. சிலர் வாசித்த கையோடு வாய்விட்டுச் சிரிப்பார்கள் சிலர் காலத் தாழ்த்தியே புரிந்து கொள் வார்கள், சிலர் ஒரு தகவலை அறிவது போல் நடந்து கொள்வார்கள். சிலர் மற்றவர் கூறிப் புரிய வைத்த பின்பே சிரிப்பார்கள் இவ்வாறு, அவரவர் அறிவு, பட் டறிவு, அழகியல் உணர்வு. விவேகம் என்பவற்றைப் பொறுத்து வேறுபடுமன்றோ.

Page 27
*
الناس
-40 - - " " لستة قليلة قLL L
உசாத்துணை நூல்கள்: Elements of Modern Logic - 1949
S. H. Mellone, M. A. (Lond,...) , D. Sc. (Edin University Tutorial Press, LTD., London.
The Principles of Logic - 1928
F. H. Bradley
Oxford University Press, London.
Logic for use - 1929
F. C. S. Schiller
G. Bell & Sons LTD. London.
இடைநிலை அளவையியல் மொழிபெயர்ப்பு
கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இலங்கை 1967 The Book of the Fallacy - 1985
A Training Manual för intellectual Subversiwes Madson Piric (Pirse) Routledge & Kegan Paul London Prier and Posterior Analytics
Asistote:
Edited and Translated John Worrington, Every Man's Library, New York, 1964.
Categories on Interprctation Prier Analytics
Aristotle - Translated H. R. Cooks, H. Trendemnick W.
Adeile Tam LTD., London. 1973.
மேலைநாட்டு அளவையியலும், அறிவு ஆதாரவியலும்
பெ. இராமாநுஜாச்சாரி. இ. அப்புள்ளாச்சாரி, இரா. பாலசுப்பிரமணியம்,
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1977,

Ilia III

Page 28
ஆசிரியரின் ஆக்
விஞ்ஞானமும் விஞ்ஞா6 குறியீட்டு அளவையிய6 பொது அறிவும் பொது பொது உளவியல் ஓர் சில மெய்யியற் பிரச்சி விஞ்ஞானிகளும் விஞ்ஞான முறையிலான ஊடக அனுமானம்
வெண்பட வரைமுறை
 

கங்கள்
எமுறையும்
து உளச்சார்பும் அறிமுகம்
னைகள்
ார்களும்