கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீ நகுலாம்பிகை அருட்ஜோதி மலர் 1969

Page 1
ਟੈ। 上 ہے.
 
 
 
 
 
 

ਹੈ।
O ‘ရွှေ့ အီးစား வெளியிடு - 196

Page 2


Page 3
6). சிவசக்திய
பூரீ நகுலா அருட்ஜே
உலகிலா ருயிர்க ளெல்லாம் உ நிலவிய செல்வம் நல்கி நெஞ் நலமிகு சுகபோ கங்கள் நாடெ தலமெலாம் புரக்கு மன்னே தன
கீரிமலை நகுலாம்பிகாசமேத ந
அஷ்டோத்தர சகஸ்ர சங்காபிஷேக வைபவ
வெளியிடப்ப
196

DU LB
ாம்பிகை
ாதி மலர்
உளமகிழ் பூத்து வாழ சினிற் கவலை மாற்றி ாறும் அருளா லீந்து லட்சுமி சரணம் போற்றி.
தலேஸ்வரசுவாமி கோயில் ஜோதிர் மண்டல ந்தை முன்னிட்டு
டுகிறது.

Page 4


Page 5
6
சிவ
முன்
நகுலாம்பிகாதேவி அருட்ஜோதி ம6 கர்த்தா அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட
கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தின் சக்தி அஷ்ட இலக்குமிகளாகப் பரிணமித்து மக்களு என்பதைக் காட்டும் திரு உருவப் படங்கள்
அருட்கவி சீ. விநாசித்தம்பி அவர்கள் களையும் தரும்படி ஜோதிநாயகியாகிய நகு
சகஸ்ர ஜோதிர் மண்டல சங்காபிஷேச க்ஷேத்திரமாகிய நகுலேஸ்வர ஆலயத்தி பாலித்தமையால், இத்தலத்தின் வரலாற்று அவசியமே. பலநூற் பிரமாணங்களுடன்
ஜோதி வடிவில் அம்பிகையைப் பூசிக்கி விளையும் நற்பயன்களையும் சோதி என்னும் வர்ணித்துள்ளார்.
வீர இலக்குமி, விஜய இலக்குமி ஆகிய செ. சிவப்பிரகாசம் அவர்களும், பண்டிதை நூலில் தந்துள்ளார்கள். வீரம், விஜயம் செல்வங்கள் என்பதனைத் திருமுறைகள், முதலியவற்றிலிருந்து மேற்கோள்காட்டி யிருக்கிறர்கள்.
இலக்குமி என்பதன் பொருளையும், எ மாட்டாள் என்பதையும் சாஸ்திரோக்தமாக தரக்குருக்கள் அவர்கள் தெளிவாக விளக்கிய கூrத்தை வேண்டிநிற்கும் அன்பர்கள் தா இல்லங்களை எப்படிப் பேணவேண்டும் என்ற
சைவ உயர்பீடத் தலைவர் பிரம்மபூரீ ச. வழங்கியதன்படி நகுலேஸ்வரத்தில் நிகழு அடியார்களின் இம்மைக்கும் மறுமைக்கும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
அம்பிகை அருட்ஜோதி மலரில் நிறைந்து காற்றேடு பரவும் நறுமணம்போல எத்தின
மாவிட்டபுரம்.

D u u Lib
னுரை
ஸ்ர் என்னும் இந்நூலை நகுலேஸ்வர ஆதீன தின் பயன் கணக்கிலடங்காதது.
பீடத்தில் எழுந்தருளியிருக்கும் புவனேஸ்வரி ருக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருகின்ருர் முதற்கண் அமைந்துள்ளமை சிறப்பாகும்.
யாத்த தோத்திரத்தில், அஷ்ட ஐஸ்வர்யங் லாம்பிகாதேவியை வேண்டியுள்ளார்.
5ம் முதன்முறையாக ஈழத்தின் தலைசிறந்த ல் நடைபெற எம்பெருமான் திருவருள் ப் பெருமை இந்நூலில் இடம்பெறவேண்டியது
இக் கட்டுரை அமைந்திருக்கின்றது.
ன்ற மரபையும், அதனுல் ஆன்மாக்களுக்கு தலைப்பில் திரு. வி. சங்கரப்பிள்ளை அவர்கள்
வற்றைப் பற்றிய கருத்துக்களை பண்டிதர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களும் இந் ஆகியன மானுடருக்கு இன்றியமையாத சைவசித்தாந்த சாத்திரங்கள், நீதிநூல்கள் இருவரும் சிறப்புக்கட்டுரைகள் எழுதி
ங்கு அவள் வசிப்பாள், எங்கு நுழையவும் வேதாகம பூஷணம் பிரம்மபூரீ கு. பாலசுந் புள்ளார்கள். இலக்குமிதேவியின் கிருபாகடா ம் எப்படி வாழவேண்டும், தாம் வாழும் அறிவுரைகள் நிறைந்தது இவர்தம் கட்டுரை.
குமாரஸ்வாமிக் குருக்கள் அவர்கள் ஆசியுரை ம் சகஸ்ர ஜோதிர் மண்டல சங்கா பிஷேகம் பெரும் பயன் தரும் என்பதில் பூரண
சிந்தும் தேனினுமினிய தத்துவக் கருத்துக்கள், ! சயிலும் பரவிப் பக்தியை ஊட்டுவதாக,
1ம்.
து. சுந்தரமூர்த்தி ஐயர்

Page 6
சிவ
நன்றி
நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வர சு ளுக்கு சகஸ்ர ஜோதிர் மண்டல சங்காபிே மும் ஆகமமும் இணைந்த வழிபாட்டு முை கைக்கொண்டுள்ளோம். தேவியைத் தீப ( சங்குதீர்த்தத்தில் ஒடுக்கிப் பின் சங்கு முக்கிய அம்சமாக விளங்குகிறது.
தனம், தான்யம், வீரம், விஜயம், ச ஆகிய எட்டு சம்பத்துக்களும் உலகில் நி வாகிய புவனேஸ்வரி அஷ்ட இலட்சுமிகள பாலிக்கும் நகுலாம்பிகையை வழிபட்டு உ மென்று பிரார்த்திக்கும் வண்ணம் சகஸ்ர குருவாரமும், பூரணையும், சித்திரை மாத இச் சுபவேளையில் அம்பிகை வழிபாடு ந முறையாக இந்த விசேஷ ஆராதனை நட மான சுபவேளை அமையப்பெற்றது எம் பெருக்கினலாகும்.
சகஸ்ர ஜோதிர் மண்டல சங்காபிலே நின்ற எம்பெருமானைத் துதித்து; மனம், வ அந்தணப் பெருமக்களுக்கும், அலங்கார ! திரவியங்கள் முதலியன தந்தும் உதவிய மான நன்றியும் வாழ்த்துக்களும் உரிய கட்டிலிருந்து தூய அபிஷேக தீர்த்தம் எடு ஒழுங்கு முறைகளையும் கைக்கொண்ட ெ அங்கத்தவர்களையும் ஆசீர்வதிக்கின்ருேம்.
இந்த கூேrத்திரத்தின் புனித வரலாற்: யின் மகிமை, தேவி உபாசனை, தேவி தோ யும் மலரில் வெளிப்படுத்தும் வண்ணம் த மனப்பூர்வமான நன்றி உரியதாகுக.
இச் சகஸ்ர ஜோதிர் மண்டல சங்கா செய்தியை மக்களுக்கு அறியத்தந்தும், அ. இம்மலரைத் தயார்செய்து தந்தும் உதவிய எமது நன்றியையும் ஆசியையும் நல்குகின்
வருடந்தோறும் சிறப்பாக இந்த கருணையை வேண்டுகின்ருேம்.
Յ; t
8ifludðsv 15-69

ما
யுரை
வாமியின் திருவருட் செறிவினலே, அம்பா
ஷகம் செய்ய முற்பட்டுள்ளோம். வைதீக றயை நாம் இந்த அபிஷேக ஆராதனையில் ஜோதிகளில் ஆவாகித்து, ஜோதியிலிருந்து தீர்த்தத்தினுல் அம்பாளை அபிஷேகிப்பதே
ந்தானம், ஞானம், ஐஸ்வர்யம், ராஜ்யம் லபெற்று விளங்குவதற்காக, உலகமாதா ாக விளங்குகிருள். அங்ங்னமாக அருள் லகக்ஷேமத்திற்காகக் கருணை புரியவேண்டு ஜோதி வழிபாட்டை நடாத்துகின்ருேம். iமும் ஒருங்கே அமையப்பெற்று விளங்கும் டாத்துவது சாஸ்திரோக்தமானது. முதல் த்த முயற்சிக்கும்போது சாஸ்திரோக்த பெருமானின் பெருங்கருணைப் பேராற்றுப்
ஷகம் மங்களகரமாக நிறைவேறத் துணை 1ாக்கு, காயம் ஆகியவற்ருல் உதவி புரிந்த மண்டபம் அமைக்கவும், தீபம், அபிஷேகத் சைவ அடியார்களுக்கும் எமது மனப்பூர்வ நாகுக. நகுலேஸ்வர கண்டகி தீர்த்தக் ப்ெபதற்கு ஆகவேண்டிய பாதுகாப்பையும் தல்லிப்பழை கிராம சபைத் தலைவரையும்
றையும், ஜோதி வழிபாடு, அஷ்டலக்குமி த்திரப் பாமாலை, ஆசியுரை முதலியவற்றை பாரித்துத் தந்த பெரியார்களுக்கும் எமது
பிஷேகத்தின் மூலம் இங்கு நடைபெறும் தன் தத்துவார்த்தங்களை வெளிப்படுத்தும் சுன்னகம், திருமகள் அழுத்தகத்தாருக்கும் ருேம்.
வைபவம் நடைபெற அம்பிகையின்
ககுலேஸ்வர ஆதீனகர்த்தா

Page 7


Page 8


Page 9
சிவ
பூநீ நகுலாம்பிகா
புண்ணியங் டம்பரவு தண்ண
பூரணி பவானி ஜன பூதமைந் தாகிவரு முயி
பூத்தருளும் புவநே6 எண்ணெண் கலைக்கிறைவி இ இன்ப*தா நிய, *ன ஏத்து*செள ரிய,*வித்தி
*இராச்சியலட் சுமி பண்ணமைய நின்றுபணி கெ பரமநகு லேஸ்வர 6 பாகத் தமர்ந்துசிவ ஜோ பயிலரசு புரியுந் தா நண்ணுநின தன்புசுக செல்வ
நம்மவர்க் கீந்தருளு நலமேவு கீரிமலைத் தலே நகுலாம் பிகா தேவி
* அஷ்டலட்சுமிகள்

a.
DULu ub
தேவி தோத்திரம்
ருட் சத்திபரி
Toof
ராகி யண்டங்கள்
h) வரி
இகபர மிசைந்த*தந தரிய யா,*விஜய *கீர்த்தியொ(டு) எண் மரும் ாண்டன்பு பாலிக்கப்
விரிடப்
திநா யகியாகிப்
யே,
முயர் நிறைவாழ்வு
வாய்
மவு பேரழக
யே.
அருட்கவி சீ. விநாசித்தம்பி

Page 10
மகாமேரு மலைச்சாரலிலே சுத் கொண்டிருந்தார். அங்கே ஒரு ே செய்தான். அவனுடைய வாயிலுள் முகத்தில் விழுந்தது.
சுதர்ம முனிவர் வேடனை நோ முண்டாகுக' என்று சாபமிட்டார். யது. வேடன், 'முனிசிரேட்டரே, பொறுத்துக்கொள்ளும்' என்று சொ கினன். முனிவர், "வேடனே! நீ பய திரக் கரையிலே, *நகுலம் என்னும் பெருமானை வ்ணங்கி, விரும்பியவரங் வேட்ன் வணங்கித் தவஞ்செய்யுமாறு
அவன் வேதாரண்யத்தை அை நகுலம் என்னுந் தலத்தை அடைந்தா பல வருஷங்களாகப் பூசை, செபட டிருந்தான்.
சிவபெருமான் அவனுடைய மு நிலத்திலே விழுந்து வணங்கினன். சிவ என்று அழைத்தார். உடனே அந்த ( முகத்தைப் பெற்ருர். சிவபெருமான், " யென்னும் பெயரைப் பொருந்துக. நீ கள் எம்மை நகுலேசர் என்று அழைப் பூசித்து முத்தியடைவாய் ' என்று ச அங்கேயிருந்து சிவபெருமானை வழிபட் கீரிமலை) என்று தகழிண கைலாச புர பட்டதும், மூர்த்தி, தலம், தீர்த்தெ பெற்றதும், நகுலமுனிவர் முத்திய6 *(நகுலம் = ந + குலம், குலமில்லாத ம

l
மயம் ,
யுரை
நர்மமுனிவ ரென்பவர் தவஞ் செய்து வடன் ஒரு மரத்திலேறி நித்திரை rள நீர்த்துளியானது முனிவருடைய
க்கி, கோபித்து ** உனக்குக் கீரிமுக உடனே அவனுக்குக் கீரிமுகமுண்டா நான் அறியாது செய்தீகுற்றத்தைப் ால்லி அவருடைய பாதங்களை வனப் பப்படாதே. இலங்கைத் தீவின் சமுத் தலமிருக்கிறது. அங்கே போய், சிவ களைப் பெற்றுக்கொள்ளுதி’ என்ருர்,
புறப்பட்டான். S.
டந்து அங்கேயிருந்து மரக்கலத்மீறி, ான். தீர்த்தத்தில்ே ஸ்நானஞ் செய்து, ம் முதலியவைகளைச் செய்துகொண்
ன்னிலையிலே தோன்றினர். அவன் பெருமான் அவனை “நகுல முனிவனே’’ முனிவர் கீரிமுகம் நீங்கி அழகிய மனித இன்று முதலாக இந்த மலை நகுலிமலை அன்புடன் பூசித்தமையால் அடியார் பார்கள். நீ இங்க்ேயிருந்து எம்மைப் கூறி மறைந்தருளினர். நகுலமுனிவர் ட்டு முத்தியடைந்தார். (நகுலமலை - ாண"த்தில் விதந்தெடுத்துக் கூறப் மன்னும் மூன்று மொருங்கே யமையப் டைந்த தலமுமாகிய நகுலேசுரத்தில்
லை எனப் பொருள்படும்

Page 11
- 3
எழுந்தருளியிருக்கும் நகுலேசுரப் பெரு பிஷேகமும், நகுலாம்பிகாதேவிக்கு ே மும், அட்டலட்சுமி பூசையும் கோ நகுலேசுவரக்குருக்களது தளரா ஊக்க நிகழும் செளமிய வருஷம் சித்திரை மா கிழமை சித்திராபூரணையிலன்று செய்
கடவுளுக்குச் சங்காபிஷேகம் செய் கூறுதும் பூரண ஆயுள், செல்வம், பகை நீக்கம், தருமம், அர்த்தம், காப புருஷார்த்தம், புத்திர பெளத்திர 6 வற்றுள் அவ்வவ் அடியார்கள் விரும் என்று “ அம்சுமான் ' என்னும் சிவாச சங்காபிஷேகத்தைச் சித்திரா பூரணை ளவர்களுக்கு மெய்ஞ்ஞான்மும் , ஐசுவி கடாக்ஷமும் மேன்மேலு முண்டாகத் வல்ல இற்ைவனைப் பிரார்த்தித்து ஆ
இவ்விபிஷேகத்திற் பங்குபற்றிய நன்மைகளுமுண்டாக ஆசீர்வதிக்கின்ே

நமானுக்கு அட்டோத்தர சத சங்கா Fாதிர் மண்டல சகஸ்ர சங்காபிஷேக "யில் ஆதீனகருத்தர் பிரமழறி. கு. த்தினுல் சைவாபிமானிகளும் சேர்ந்து தம் 19ஆந் திகதி (1-5-69) வியாழக் வதற்கு நிச்சயித்துள்ளார்கள்.
பவர்கள் பெறும் பயன் யாதெனில், அவமிருத்துஜயம், வியாதி நீக்கம், 0ம், மோக்ஷம் என்னும் நால்வ்கைப் விருத்தி, ஆணவமல நீக்கம் என்ப பிய விரும்பிய பலனைப் பெறுவார்கள் 5மம் செப்புகின்றது. இந்தச் சகஸ்ர யிலன்று நடாத்தி வைக்கும் குருக்க பரிய ஆதிக்கமும், நித்திய மங்கள குரு திருவருள் பாலிக்குமாறு எல்லாம் ஆசீர்வதிக்கின்ருேம்.
சிவனடியார் அனைவர்க்கும் எல்லா ருேம்.
器。 குழாரசீவாமிக் குருக்கள்
சைல் உயர்பீடத் தலைவர்

Page 12
சிவட
கீரிமலை நகுலேஸ்னி
ஆ. சிவறே
கங்கையொடு திகளராச் மங்கைநகு லாம்பிகை கீரிமலை வாசர் கிளருந வாரிசத்திற் கன்புசெய்
ஈழத்திலேயுள்ள வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்தனவும் புராண பாரம்பரியங்களைக் கொண்டனவுமா கிய தலங்களுள் கீரிமலை நகுலேஸ்வர திருத்தலமும் ஒன்ருகும். இவ்வால யத்தின் புராதனத்தை நிர்ணயிக்கும் புறச்சான்றுகள் எவையும் இன்று இல்லை. இவை யாவும் அன்னியர் ஆட்சி காரணமாகச் சிதைவுபட்டுப் போயின. இன்றைய ஆலய அமைப் பும் மற்றும் சின்னங்களும் ஆங்கிலேய ஆட்சிக்குப் பிந்தியன எனலாம். எனினும் அகச்சான்றுகளாக வர லாற்று ஏடுகளில் உள்ள செய்திகளும் புராண மரபும் மற்றும் பிற்கால நூற் செய்திகளும் அமைந்துள்ளன. இக் கட்டுரைக்கு ஆதாரமாகக் கைலாய மாலை', 'யாழ்ப்பாண வைபவம், ம. க. வேற்பிள்ளையால் எழுதப்பட்ட "ஈழ மண்டல சதகம்’, அப்பாசாமி ஐயர் அவர்களால் எழுதப்பட்ட நகுலகிரிப் புராணம், “யாழ்ப்பாணச் சரித்திரம்" ஆதியன அமைந்துள்ளன.
விஜயனும் நாற்பெருங் கோவில்களும்
வரலாற்று ஏடுகளில் முக்கிய மான யாழ்ப்பானவைபவம்” கீரிமலை வரலாற்றை விஜய மன்னனுடன் தொடர்புபடுத்துகின்றது. கீரிமலை யின் வரலாற்று மரபு விஜயன் வருகை

�.
Dullf
வர ஆலய வரலாறு
நச
5
ச்செல்வன்
காட்டுஞ் சடைமுடியார்
யை வைத்தவிடப் - பங்குடையார் கு லேசரடி
கு
6AfTíb.
யுடன் ஆரம்பமாகின்றது. " கீழ்த் திசைக்குத் தம்பலகாமத்துக் கோணே சர் கோவிலை நிறுத்தி மேற்றிசைக்கு மாதோ ட்டத்திற் பழுதுபட்டுக் கிடந்த திருக்கேதீச்சரச் சிவாலயத் தைப் புதுப்பித்து தென்திசைக்கு
மாத்துறையிற் சந்திரசேகரேச்சுரன்
கோவிலை எழுப்பி வடதிசைக்குக் கீரிமலைச் சாரலிலே திருத்தம்பலை என்னும் பதியிலே திருத்தம்பலேச் சுரன் திருத்தம்பலேஸ்வரி கோவில் களையும் கட்டுவித்து .' என யாழ்ப்பாண வைபவ மாலை"யில் வரும் செய்தி வரலாற்றுப் புராத னத்தை நினைவுறுத்துகின்றது. 18ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவருக்கு ஆதாரமாக விருந்த நூல்கள் எவை எனத் தெரியவில்லை. * கைலாயமாலை', 'வையாபாடல் செய்திகளுடன் புராணமரபும் கர்ண பரம்பரையான செய்திகளும் துணை யாக விளங்கின எனலாம். * திருத் தம்பலேச்சுவரன் கோவிலையும் அதன் அண்மையில் உள்ள கதிரையான டவர் கோவிலையும் கட்டுவித்த
விஜயன் அவ்வாலயங்களுக்குப்பூசனை
நிகழ்த்தும்படி காசிப்பிராமணராகிய நீலகண்டா சாரியரின் மூன்றுவது குமாரன் வாமதேவாசாரியரையும் அவர் பத்தினியாகிய விசாலாட்சி

Page 13
அம்மையாரையும் நியமித்தான்' எனவும் கூறப்பட்டிருக்கின்றது. கோவில் தோன்றிய காரணத்தினலே இவ்விடம் கோவிற்கடவை எனப் பெயர்பெற்றது. மாவிட்டபுரம், காங்கேசன்துறை, கீரிமலை என்று இன்று வழங்கும் பகுதி முழுவதும் கோவிற் கடவை என்ற பெருங் குறிச் சியாக வழங்கியது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
நகுலமுனிவரும் கீரிமலையும்
நகுலமுனிவருக்கும் கீரிமலைக்கும் உள்ள தொடர்பு விஜயன் காலத் துடன் இணைந்ததாக யாழ்ப்பாண வைபவமாலை'யிற் கூறப்படுகிறது. புராண வரலாற்றுடன் இணைந்த நகுலமுனிவரின் பூர்வம், மகா பாரதம் அஸ்வமேத பர்வணியிற் காணப்படுகின்றது. பிருகுமுனிவரின் சாபத்தால் ஜமதக்கினி முனிவரே நகுலமுனிவர். ஆயினுர், ஜமதக்கினி தனது தந்தையின் சிரார்த்தத்தைச் செய்வதற்குத் தமது குலகுருவாகிய பிருகுமுனிவரை ஒருகால் அழைத் தார். சிரார்த்த தினத்தன்று எதிர் பாராதவிதம்ாக வியாசமுனிவரும் வந்திருந்தார். வியாசரும் உயர் குரு வாக இருந்தமையினுல் இருவரில் எவரைச் சிரார்த்த குருவாக ஏற்பது என்று கவலை கொண்டு மனங் குழம் பினர். நாழிகையும்?கீழிய சிரார்த்த வைபவமும் தாதம் அடைந்தது. இதன் விவரத்ஜதப் பிருகுமுனிவர் கீரிவடிவங்கெண்டு, ஜமதக்கினியின் மனை சென்று அறிந்தார். கோபங் கொண்ட பிருகுமுனிவர் உணவுப் பதார்த்தங்களை எச்சிற்படுத்தி அலங் கோலஞ் செய்தார். பிதிர்களும் கோபங்கொண்டு ஜமதக்கினியைக்

குலமற்றுப் போகும்படி சபித்தன. இதனல் மனங்கவன்ற ஜமதக்கினி, பிருகு முனிவரை அடைய அவர் கோபங்கொண்டு " " கீரிமுகம் உடைய வணுய் அலைவாய்' எனச் சபித்தார். ஜமதக்கினி தன் நிலையை விபரமாகக் கூறி மீண்டும் இரந்ததன் பயணுகப் பிருகுமுனி சாபவிமோசனம் அளித் தார். ** இலங்கையின் வடபாலுள்ள திருத்தம்பலேச்சுரத்தின் அருகே உள்ள கற்பாறையிலிருந்து பெருக் கெடுத்தோடிச் சங்கமமாகும் அந்த வாவியில் மூழ்கின் விமோசனம் அடையலாம் ' என அருளினர். அவ்வண்ணமே ஜமதக்கினி சாபம் நீங்கினர். புராண மரபின்படி கூறப் படும் இச் சாபவிமோசனக் கதை மரபு "யாழ்ப்பாண வைபவமாலை"யிற் காணப்படவில்லை. "யாழ்ப்பாண வைபவமாலை'யில், "இங்குள்ள மலைச் சாரலிலே ஒரிருடி தங்கியிருந்து தீர்த்தமாடித் தமக்கேற்பட்ட அங்க வீனம் நீங்கிப் போனது கண்டு அத் தல விசேடத்தையும் தீர்த்த மகிமை யையும் குறித்து மலைமுளைஞ்சிலே வாசஞ் செய்துகொண்டிருந்தார் ‘’ என்று கூறப்படுகின்றது. விஜயன் சிவாலயம் கட்டுவித்த பின்னர் நகுல முனி அவ்வாலயங்களிலே தங்கி வழி பாடு நடாத்திவந்தார். இதன் காரணமாகக் கோவிலை நகுலேச்சுரம் எனவும், ஆங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனை நகுலேச்சுரன் நகுலாம் பிகை எனவும் வழங்கி வந்தனர். நகுலகிரி, நகுலாசலம் எனும் சிறப்புப் பெயர்களும் இவ்விடத்திற்கு வழங்கின.
தொடர்ந்து விஜயன் சகோதரன் மரபிற் பிறந்த உக்கிரசிங்கன் நகு லேசர் கோவிலைத் தரிசித்து நகுல

Page 14
- €
முனிவர் ஆசியும் பெற்ருன், மாருதப் புரவீக வல்லியின் வருகையுடன் இணைத்து நகுலேச்சுரத்தின் புரா தனம் யாழ்ப்பாண வைபவமாலை யிற் கூறப்படுகிறது. குன்மநோயும், குஷ்டமும், குதிரைமுகத்தையொத்த முகத்தையுங் கொண்ட இளவரசி சாந்தலிங்க முனிவரின் ஆலோசனை யுடன் வளவர்கோன் பள்ளத்திற் றங்கி விரதம் அனுட்டிக்கும்போது நகுலமுனிவரைச் சந்தித்துத் தன் துன்பத்தைக் கூறினுள். நகுலமுனிவர் மாரு தப்புரவீகவல்லியை ஆசீர் வதித்துத் தலவிசேடத்தையும் தீர்த்த விசேடத்தையும் உரைத்தார் எனக் கூறப்படுகிறது. நகுலமுனிவரும் மாருதப்புரவீகவல்லியும்
* யாழ்ப்பாண வைபவமாலை " ஏட்டுப்பிரதிகள் சிலவற்றில் நகுல முனிவாயிலாக மாருதப்புரவீகவல்லி தலவிசேடமும் தீர்த்த மகிமையும் உணர்ந்தமை விரிவாகக் கூறப்பட் டுள்ளது. "உதயதாரகை என வெளி வந்த பிரதியிலும் திரிகோணமலை தி.த.கனகசுந்தரம் பிள்ளையின் பிரதி யிலும் இச்செய்திகாணப்படுகின்றது. முதலியார் குல. சபாநாதன் இதனை அடிக்குறிப்பாகக் குறிப்பிடுவதைக் காணலாம் இக்கதை மரபுபலபுராண ரீதியான சம்பவங்களை நகுலேஸ்வர வரலாற்றுடன் தொடர்பு படுத்து கின்றது. கிரேதா யுகத்திலே முசுகுந்தச் சக்கரவர்த்தியுடன் தான் வந்து நீராடியமையையும் அத் தீர்த்தத்திற்குக் 'கண்டகி தீர்த்த மெனப் பெயர் இருந்தமையையும் குறிப்பிடுகிருர். இத்தீர்த்தம் பார்வதி தேவி நீராடுவதற்காக பரமேஸ்வர மூர்த்தி இம் மலைச்சாரலில் எழுந்

தருளி இருந்தபோது அழைத்து வைத்ததெனவும் கூறப்படுகிறது. இஃதன்றியும் முருகப் பெருமான் சூரசங்காரம் செய்யக் கதிரமலைக்குச் செல்லும் வழியில் நகுல கிரியிலே தங்கி இருந்தார். அவர் தங்கி இருந்த இடத்திலேயே கலிகாலத்தில் விசய ராசனல் கதிரை ஆண்டவர் கோயில் அமைக்கப்பட்டதென்றும் குறிப் பிடப்படுகின்றது.
மேலும் கீரிமலை, காந்தருவ நக ரெனவும் வீணுகானபுரம் எனவும் அழைக்கப்பட்டது எனக் கூறப்படு கின்றது. ' இரண்டாம் யுகத்திலே இராவணன் தானுெருவனேயன்றி வேருெருவரும் இராவண வீணையைத் தொடவும் படாதென்று உறுதியான கட்டளை பண்ணியிருந்த பொழுது சித் திராங்கன் என்னும் ஒரு கந்தருவன் தானும் அவ்வீணையை வாசிக்க நெடுங்காலம் பேராசை கொண்டிருந்தவன், தசரத இராம னல் அவ்விராவணனுடைய இருபது கைகளும் அறுந்து விழுந்த சமயத் திலே அவ்வீணையைக் கவர்ந்து கொண்டு கீரிமலையில் வந்திறங்கி அவ்வியாழைப் பிரபலப்படுத்தினன். இக் கதைமரபு கீரிமலையின் பழமை யைச் சுட்டுகின்றது. இராமாயணக் கதையுடன் கீரிமலை வரலாறு இணை வதையும் காணலாம்.
நளமகாராசனும் நகுலாசலமும்
மூன்ரும் யுகத்திலே நிடதநாட்டி லிருந்து அரசுபுரிந்த நளன் எனும் சூரிய குலத்தரசன் சூதாடி அர சிழந்து வனவாசம் செய்து திரிந்த போது தனக்கேற்பட்ட கலியை நீக்கத் தலயாத்திரை செய்து வருநாளில்

Page 15
一 4
கோணேசர் தலத்திற்கு வந்தான். அங்குள்ளோர் சொற்படி நகுலாசலத் திற்கு வந்து கலியிடர் நீங்கினன். நகுலேசர் பிரசன்னமாகி அவனை நோக்கி அருள் செய்து மறைந்தார். தான் அணிந்திருந்த சர்ப்பத்தையும் அக்கினியையும் நோக்கிக் கலியிடரை நீக்கிவரும்படி இறைவன் பணித்தார். இவ்வண்ணமே நான் செல்லும் பாதையில் அக்கினி யெரிய சர்ப்பம் அதனுள் விழுந்து வருந்துகின்ற பாவனையிற் துடிக்க அதனைக் கண்டு நளன் சுவாலையினின்று விலக்கி விட்டான். விலக்கிவிட்டவுடன் அச் சர்ப்பம் சினந்து பாய்ந்து அவனைக் கடித்தது. அப்பொழுது அவன் தேகம் முழுவதும் குட்டை பிடித்தது; அவனழகு கெட்டது. இதனல் நளன் மனம் கவன்று வருந்தும்பொழுது சர்ப்பம் பிராமணவுருக் கொண்டு "நான் நகுலேசர் அணிந்திருக்கும் சர்ப்பாபரணம்; நகுலேசர் நீ செய்த வழிபாடு கண்டிரங்கிக் 'கலியின் குறை நீக்கி வாருங்கள் எனப் பணித்தார்" எனக் கூறிய பின்னர் அவ்வுரு மாறும் வகையினையும் சில காலத்திற் கலி நீங்கும்** எனவும் கூறி சர்ப்பமும் அக்கினியும் நகுலேசர் சமூகத்தை அடைந்தன. இக்கதை மரபு நள வெண்பாவிற் காணப்படாதது. மேலும் நகுலகிரிப் புராணத்திலும் நளன் யாத்திரை குறிப்பிடப்படு கின்றதே யொழிய இவ்வாறு கதை மரபு கூறப்படவில்லை. இப்புராண மரபுக் கதையும் நகுலமுனிவரால் மாருதப்புரவீக வல்லிக்குக் கூறப் பட்டதாக அமைகின்றது. இக்கதை மரபு தட்சணகைலாய மான்மியத்தி லும் காணப்படுகின்றது.

மேலும் அர்ச்சுனன் தீர்த்த யாத் திரை செய்தக்கால் தென்றிசையை நோக்கி வரும்போது இங்குள்ள கண் டகி தீர்த்தத்திலாடி நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரர் அருள்பெற்று ஏகினன் என்ற செய்தியும் தொடர் பாக அமைகிறது. மேற்குறிப்பிட்ட கதை மரபுகளைக் கூறி நகுலமுனி மாருதப்புரவீகவல்லியை வழிப் படுத்தியதாக அமைகிறது.
திருத்தம்பலேச்சுரமும் போர்த்துக்கேயர் காலமும்
யாழ்ப்பாண இராச்சிய வரலாற் றின் பின்னைய செய்திகளுடன், இணைந்த பகுதியில் கீரிமலை திருத் தம்பலேச்சுரம் பற்றிய விசேட செய்திகள் அதிகம் காணப்படவில்லை. * யாழ்ப்பாண வைபவ மாலை'யிலும் * யாழ்ப்பாணச் சரித்திரத்திலும் கோவிலை மன்னர் ஆதரித்த செய்தி கள் உள. போர்த்துக்கேயர் சிவா லயங்களை இடித்துச் செல்வங்களைக் கவர்ந்ததுடன் தமது கோட்டைகளைக் கட்ட அக் கற்களைப் பயன்படுத்தி ஞர்கள். பறங்கிகள் ஆலயங்களை இடிக்கப்போகின்றர்கள் என்ற செய்தியை முன்னருணர்ந்த பூசகர் கள் விக்கிரகங்களையெல்லாம் மண் ணுல் தூர்த்துவிட்டு அவ்விடங்களை விட்டு அகன்றனர். பரராசசிங்கன் என்ற மன்னன் இறக்கும் வரையில் பறங்கிகள் அவன் பொருட்டாகக் கீரிமலையிலிருந்த திருத்தம்பலேஸ் வரன் கோவிலையும் நல்லூர்க் கந்தசாமி கோவிலையும் இடிக்காது விட்டிருந்தார்கள். அவன் இறந்த வுடன் அவைகளையும் இடித்தொழித் தார்கள். அவர்கள் இடிக்குமுன்னர் அக்கோயிற்குருக்களாகிய“பரசுபாணி

Page 16
- 8
ஐயர் கீரிமலையில் இருந்த விக்கிரகங் களை அக்கோயிற் கிணற்றிலிட்டு மண்ணுற் தூர்த்துவிட்டு அவ்விடத்தி னின்றும் நீங்கினர். இப்பிராமணுேத் தமரது சந்ததியார் இன்றும் உளர். இக்காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை கோவில் செவ்வனே அமைக்கப் பட முயற்சிகள் நடந்தும் அக்கால அரசியல்நிலை இடமளிக்கவில்லை.
நாவலர் காலமும் ஆலய அமைப்பும்
சென்ற நூற்ருண்டின் இறுதிப் பகுதியிலே யாழ்ப்பாணம் பூரீலயூரீ ஆறுமுகநாவலரவர்கள் புராதன ஆலயங்களின் புனருத்தாரணத்தைத் தமது பல்வேறு சமயப் பணிக ளிடையே நினைவுறுத்தி வந்தார்கள். ஏறக்குறைய 1880ஆம் ஆண்டு வரையில் மாவிட்டபுரத்திலே இருந்த பிரசித்திபெற்ற ஆதி சைவராகிய சபாபதி தேசிகருடைய மரபிற் பிறந்த சற்குண சம்பன்னராகிய பூணூரீலபூரீ காத்திகேயக் குருக்களும் புத்திரரிருவரும் ஆலயமமைக்கும் பணியினை ஆரம்பித்து வைத்தனர். புத் திரர்களாகிய பிரம்மபூரீ சபாபதிக் குருக்கள், தியாகராஜாக் குருக்கள் என்போர் தமது உடல் பொருள் ஆவி அத்தனையையுமே கோவிலின் எழுச்சியை வேண்டி அர்ப்பணித்தனர். ஆரம்புத்திலே தம்பொருள் கொண்டு அதற்குரிய நிலம் வாங்கிக் கட்டிடவேலையை ஆரம்பித்து வைத்தார்கள். விடா முயற்சியும் அயரா உழைப்பும் கொண்டு திருவருள் வழிநின்று உழைத்ததன் பயணுக விக்கிரம வருடத்திலே ஆரம்பித்த திருப்பணி மன்மத வருடத்திலே ஓரளவு நிறை வேறியது. சமஸ்கிருதம் தமிழ் ஆகிய

வற்றில் பாண்டித்தியம் பெற்ற அதி விற்பன்னர்களாகிய பிராமணுேத் தமர்கள் இருவரும் மூலஸ்தானம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், பிரகாரம் ஆதியனவற்றை வேதாகம விதிப்படி நிருமாணிப்பித்தனர். நகுலாம்பிகாசமேத நகுலேஸ்வரப் பெருமானின் திருவருளினல் அம் மன்மதவருடம் ஆனி மாதம் (1895) அட்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக் கும்பாபிஷேக விஞ்ஞாபனத்திலே, நகுலேஸ்வரத் தில் எழுந்தருளிய நாயகன் பெயரும் நாயகி பெயரும் சொல்லப்படு கின்றன.
* மறையொலி முழக்கம் எழுகடல் முழக்கம்
வட்கிட வோங்குநா குலத்தில் கறையறு செம்பொன் திரித்துவிட் டனைய கதிர்சடைப் பிரான்நகு லேசன் நிறைமணங் கான்றுக டைகுழன் றிருண்டு
நெரித்துநெய்த்தமைந்துதண் ணென்று நறுமலர்ப் பிணையல் சுமந்தொளிர் கூந்தல்
நாயகி திருப்பெயர் நகுலை ?
நித்திய பூசைகள் செவ்வனே நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள். பொருள் கொண்டோர் உதவி கொண்டும், வேண்டிய விடத்துத் தம் பொருள் கொண்டும் சிறப்பாக அமைக்கப்பட்டன. பழைய திருத் தம்பலேச்சுரம் அமைந்த இடத்திலே யன்றித் தாம் பொருள் கொண்டு பெற்ற நிலத்திலே புதிய ஆலயம் அழகுற அமைக்கப்பட்டது குறிப்பிட வேண்டிய தொன்ருகும்.
பிரமயூரீ தியாகராஜாக் குருக் களின் குமாரராகிய குமாரசாமிக் குருக்கள் தந்தையார் பணியைத் தொடர்ந்து ஆலயத்தின் அமைப்பினை மேலும் விஸ்தரித்தார். சமஸ்கிருதம்,

Page 17
| مست.
தமிழ்மொழி, ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் அதிவிற்பன்னராகிய குருக்களவர்களின் காலத்திலே புனருத்தாரண வேலைகள் அதிகம் நடைபெற்றன. பொதுமக்கள் ஆதர வும் குருக்களவர்களுக்குப் பெரிதும் துணைபுரிந்தது.
முன்னேர் அடிச்சுவட்டின் வழி யொழுகும் இன்றைய ஆதீனகர்த்தர் பிரமழீ தி. கு. நகுலேஸ்வர க் குருக்கள் ஆலயத்தின் உயர்வு வேண்டிப் பல்வேறு துறைகளிலும் உழைத்து வருகிருர்கள். தம்மா லியன்றளவு திருப்பணி வேலைகளைத் தம் பொருள் கொண்டும் உபகாரிகள் பொருள் கொண்டும் இயற்றி வருகின் ருர்கள். நித்திய நைமித்தியங்கள் செவ்வனே நடைபெற்று வருகின்றன. குருக்களவர்களின் பெருமுயற்சியால் இற்றைக்கு 15 ஆண்டுகளின் முன்னர் புனருத்தாரணஅட்டபந்தன மகா கும்பாபிஷேகம் செய்யப் பட்டது. மேலும் இவர்களின் பிர யாசத்தின் பயணுகப் பன்னிருமாத சோமவார உற்சவங்களும், வரு

-
டாந்த மகோற்சவங்களும்,பிரதோஷ உற்சவங்களும் சிறப்புற நடாத்தப் படுகின்றன.
ஆலயத் திருப்பணியையே தமது குறிக்கோளாகக் கொண்ட குருக்க வளர்க்ளின் ஆர்வம்நிறைந்த பக்தியை இன்றைய ஆலய வளர்ச்சியையும், ஒழுங்கு முறையையுங் கொண்டே தெளிந்துகொள்ளலாம். ஆலயத்தின் வருமானம் முழுவதையும் திருப் பணிக்காகவே அர்ப்பணித்துள்ள குருக்களவர்களின் பணி மேலும் சிறப்பதாக, சைவ அன்பர்கள் புரா தனப் பெருமைவாய்ந்த இத் திருத் தலத்தின் உயர்வை முன்னிருத்தித் திருப்பணிக்கு உதவிபுரிந்து நகுலாம் பிகா சமேத நகுலேசுவரப் பெரு மானின் அருள் பெற்றுய்வார்களாக. தேவர்தொழுங் கீரிமலைச் சிவன்கோயிற்
றிருப்பணியைச் செய்விப் போரும் ஆவலொடும் பலபொருள்க ளளித்ததன்சீர்
வளர்த்திடற்கே யகங்கொண் டோரும் பூவனிதை பாவணிதை போற்றுநகு
லாம்பிகையைப் புணரு மெங்கோன் சேவடியாம் பெருவாழ்விற் றிளைத்துமகிழ்ந்
திடுவரிது திண்ணந் தானே.

Page 18
o מש86u
(;; ଏF
வி. சங்கரப்பிள்
கீலக ஆண்டு பங்குனித் திங்கள் இரு னது சோதி உச்சநிலை யடைந்திருக்கும் நண்ட கு. நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள் எ தினத்தன்று சகசிர, சோதி மண்டல சங்கா திருவருள் பாலித்திருக்கின்றதென்றும், அ6 தென்றும், அம் மலரில் ** சோதி ' என்ற இடம்பெற வேண்டுமென்றுங் கற்பித்தார். வாற்றலுக்கு அப்பாற்பட்ட விடயமாக வி கின்றேன் ; சிந்தனை சரிவரின் சமர்ப்பிக்கி றேன். சரிவரும் என்று ஆசி தந்து சென்
ஆதீனம் அவர்கள் சென்றபின் அருள களில் எடுத்து ஆண்டுள்ளார்கள் என எ6 * சோதியே சுடரே சூழொளி விளக்கே சோதியே ', ' ஒளிவளர் விளக்கே ", ! பிளந்து விளக்கினையேற்றி", "உடம்பெனு ** இல்லக விளக்கது இருள் கெடுப்பது" என்ற அருள்மொழி அடிகள் திருவருட்டுணை என் அச்சம் ஒருவாறு அகன்றது : துணி
சோதி - தீபம் - விளக்கு - ஒளி - வெளிச்சம் - சுடர் என்னுஞ் சொற்கள் ஒரே கருத்துடையன. இறைவனது திருவடிவம் சோதிவடிவ மாதலை அருளாளர்கள் பலருங் கண்டனர். ஆகையால், அவர்கள் மேற்கூறிய திருவடிகளிற் சொல்லப் பட்டவாறு கூறி வழிபட்டனர். சூரியன், சந்திரன், அக்கினி என்ப வற்றின் ஒளியும் இறைவனது திரு மேனியின் ஒளியே யென் ப ைத, ** தேசமார் ஒளிகளெல்லாம் சிவ னுருத் தேசது' எனச் "சிவஞான சித்தியார் கூறுகின்றது. ஒளி இரு ளைப் போக்குவது உலகின்கண் நாம் கண்டறிந்ததாகும். அந்த ஒளி வடி வினனுக இறைவன் போற்றப்படுவ தால் அவனும் இருளை அகற்றுபவ

шић
ாதி
ளை, பன்னுலை
பத்தாரும் நாள் மங்கலவாரத்தன்று சூரிய கல், கீரிமலை நகுலேஸ்வர ஆதீனம் பிரம்மபூரீ ன்னைச் சந்தித்து, வரும் சித்திராபூரணைத் "பிஷேகம் பூரீ நகுலாம்பிகைக்குச் செய்யத் தையிட்டுச் சிறப்பு மலரொன்று வெளியிடுவ ற பொருள் பற்றி உமது கட்டுரையொன்று கள். கேட்டதும் அச்சமுற்றேன். என் அறி ருக்கிறதே திருவருட்டுணைகொண்டு சிந்திக் ன்றேன். சரிவராவிடின் விடுகின்றேன் என் றனர்.
ாளர்கள் சோதி பற்றி எவ்வாறு அருள் நூல் ன் சிந்தையைக் கிளறலுற்றேன். அப்போது, ', 'ஆதியுமந்தமுமில்லா வரும்பெருஞ் * பாசுபதா பரஞ்சுடரே ', ' விளக்கைப் ம் மனையகத்துள் உள்ளமே தகளியாக ** , **நல்லக விளக்கது நமச்சிவாயவே** யால் ஞாபகத்துக்கு வரலாயின. இவற்ருல் வும் பிறந்தது. )
னதல் வேண்டும். உலகவிருளைப் போக்குவதற்குச் சூரியன், அக்கினி முதலானவையே போதும் என்பது வெளிப்படை. ஆகவே இறைவன் போக்குவது உலகில் நாம் நன்கறியும் இருளையன்று ; வேறு இருளேயென் பது தெளிவுபடுகின்றது. அவ்விருள் எது? அதுதான் அகவிருள் : அஃதா வது அறியாமை - அஞ்ஞானம். அஞ்ஞானம் ஞானத்தாலே போக்கப் படுமாதலின், அஞ்ஞானமாகிய அக விருளைப் போக்கும் ஒளியாக இறை வன் உள்ளான் என்பதற்கு ஞானவடி வாய் இயங்குகிருன் என்பதே பொரு ளாகும். ஆகவே, சோதியே சுடரே' என்பன முதலாகச் சொல்லப்படும் சொற்களுக்கெல்லாம் ஞானம் அல் லது அறிவு என்பது பொருளாயிற்று.

Page 19
- 1
ஞானம் அல்லது அறிவு என நாம் இவ்வுலகில் அறிவனவெல்லாம் அறியாமைக்குப் பின் தோன்றுவன வாயும், தோன்றியபின்பும் அறியா மையால் மறைக்கப் படுவனவாயு முள்ளன. ஆகையால், அனைவரது அறிவுக்கும் ஆதி அந்தமுண்டு. இறை வனது அறிவு அவ்வாறின்றி என்றும் ஒரு பெற்றித்தாய் விளங்குவது. இத ஞல் இறைவன் ஆதியு மந்தமு மில் லாத சோதியாவன்.
உயிர்களுடைய அறிவுக ளெல் லாம் சிலவற்றையேயறியும் அறிவே யல்லாது எல்லாவற்றையும் முற்ற அறியும் அறிவல்ல. இறைவனது அறிவு அவ்வாறின்றி எல்லாவற்றை யும் ஒருங்கேயறிந்தாங் கறிந்து நிற் கும் முற்றறிவாம். அதனல், உயிர் கள் சிற்ருெளியின; இறைவன் பேரொளியினன். ஆகையால், பரஞ் சோதியெனப்பட்டான். ஆதியு மந்தமு மில்லாத பரஞ்சோதியை ஆதியு மந்தமு முடைய சிற்றறிவு அறிதலென்ருல் அஃது எளிதான செயலா? எளிதென வெண்ணியதா லேயே பிரம விஷ்ணுக்கள் இடருற் றனர். அவனருளே கண்ணுகக் கொண்டு காணும் அருளாளர்களே காணமுடியும்.
உலகத்தார் மகிழ்ச் சியோடு போற்றும் மங்கலப் பொருள்களில் விளக்கு முதன்மையானது. எந்த வொரு மங்கலச் செயலும் விளக் கேற்றிச் செய்வதே நம் நாட்டு வழக்கம். நம்மவர்களுக்கு விளக்கில் ஏன் இவ்வளவு நாட்டமெனில் ஆண் டவனது பல வடிவங்களில் ஒளியே அவனுக்குச் சிறப்பு வடிவமாதல் பற்றியேயாம். மக்கள் தங்கள் வீடு

-
களுக்குப் பலவகை விளக்குகளையும் ஏற்றி மகிழ்வர். அம் மகிழ்வு பூரண மானதன்று. ஆகையால், மற்ருெரு விளக்காகிய அக விளக்கையு மேற்ற வேண்டுமென்று திருமூலர் கூறுகின் றர். யாவரும் புறவிளக்குகளை எளி தில் ஏற்றி வைக்கின்றனர். புறவிளக் கைத் தகளியில் ஏற்றி வைக்கின்ற னர். தகளியும் விளக்கென்று ஆகு பெயராகக் கொண்டு சொல்லப்படு வதை நாம் அறிவோம். தகளியும் விளக்கு; அதில் ஏற்றப்படும் ஒளியும் விளக்கென்றல், விளக்கில் விளக்கை ஏற்றுஞ் செயல்தான் நடைபெறு கின்றது.
புறத்தேபோலவே அகத்திலும் விளக்கில் விளக்கை ஏற்றவேண்டு மென்கிருர் திருமூலர். அஃது உயிரி னுடைய அறிவாகிய விளக்கில் ஆண் டவனது அருளாகிய விளக்கு ஏற்றப் படல்வேண்டு மென்பதாம். விளக்கு என்பது அறிவு இருளென்பது அறி யாமை. உயிர் அறிவுடைப் பொரு ளாயினும் ஆணவ இருளால் மூடப் பட்டிருப்பதால் அது தகளிபோல ஒளியற்றுக் கிடக்கின்றது. அஃது உண்மையில் ஒளிபெறவேண்டுமாயின் அதன்கண் இறைவணுகிய விளக்கு ஏற் றப்படல்வேண்டும். அவ்வாறு இறை வணுகிய விளக்கை உயிர்கள் ஏற்றி விட்டால் அது ஞானமாகிய ஒளியை வீசிக்கொண்டிருக்கும். ஏற்றிய விளக் கைத் தூண்டவும் வேண்டும். அப் போதுதான் அது பேரொளி கொடுக் கும். அதுபோல உயிர்களில் ஏற்றப் பட்ட இறைவனது விளக்குந் தூண் டப்படல்வேண்டும். அப்போதுதான் பேரானந்தப் பெருவாழ்வாம் திரு வடிநிலை உயிர்க்குக் கைகூடும்.

Page 20
- 1
* விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினத் தூண்டி விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு விளக்குடை யான்கழல் மேவலு மாமே ”.
என்பது, திருமூலர்தம் திருமந்திரத் தில் நமது இருள் போக ஏற்றி வைத்த விளக்காகும்.
விளக்கு என்பது அறிவாக்ை யால் சிற்றறிவாகிய ஆன்மாவையும், பேரறிவாகிய இறைவனையும் திரு மூலர் விளக்கு என்றே குறிப்பிடு கின்ருர், "அறிவினுள்ளே அறிவுதனை அருளினுல் அறியாதே அறிந்து’ எனச் "சிவஞானசித்தியார்’ கூறு வதும் இதுவே.
' உடம்பெனும் மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி இடம்படும் ஞானத் தீயால்
எரிகொள இருந்து நோக்கின் கடம்பமர் காளை தாதை
கழலடி காண லாமே ' என்ற திருப்பாட்டில் அப்பர் சுவா மிகள் உயிரும் அதன் அறிவுமென இரண்டாகப் பிரித்து உயிரைத் தகளி யென்றும், அறிவைத் திரியென்றும், அறியாமையால் உண்டாகின்ற நான் என்னும் முனைப்பை நெய் யென்றும் வைத்துத் திருமந்திரக் கருத்தைக் கூறுகின்ருர்,
விளக்கு கண்டம், அகண்டம், கண்டாகண்டமென மூவகைப்பட்டு, கண்ட விளக்கு வீட்டு விளக்காயும், அகண்ட விளக்கு சிவஞானப் பிரகாச விளக்காயும், கண்டாகண்ட விளக்கு சூரிய சந்திர அக்கினி யென்னும் முச்சுடர் விளக்காயும் நிலைபெறு வனவாய்த் தத்தம் தன்மைக்கேற்ற

வாறு பலவிதமாய் இருளினையோட்டு கின்றன.
**இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே", என்ற அப்பர் சுவாமிகளின் நமச்சி வாயத் திருப்பதிகப் பாசுரம் யாவ ராலும் நோக்கத்தக்கது.
நாம் நாள்தோறும் வீடுகளில் ஏற்றுகின்ற விளக்கு இல்லக விளக் காகும் ; அது புறவிருளை மட்டுமே போக்கும் ; அகவிருளைப் போக்கும் விளக்கு வேறுள்ளது ; அதுதான் சிவனது திருநாமமாகிய திருவைந் தெழுத்தாகும். அதை முதலில் அரு ளாசிரியரின் அருள் மொழியால் செவியில் ஏற்றி, பின் நாவில் ஏற்றி, அதன்பின் உள்ளத்திலேற்றி, இறுதி யாக உணர்வில் ஏற்றிவிட்டால் அக விருள் முற்ருக நீங்கி ஆனந்த வெள் ளம் உண்டாகும்.
இறைவனைச் சோதி வடிவிற் கண்டு வழிபடும் சிறப்பு நாள் திருக் கார்த்திகை நாளாகும். இந் நாளில் எல்லாக் கோயில்களிலும், இல்லங் களிலும் விளக்குகளை வரிசை வரிசை யாக நிறைய ஏற்றி வைத்து வழிபா டியற்றுவர். இதை விளக்கீடென்றுங் கூறுவர்.
நகுலேஸ்வர ஆதீனமவர்கள் சோதி வடிவிற் சொக்கியமையாற் போலும் நம் நாட்டிற்குப் புதிதான சகசிர சோதி மண்டல சங்காபிஷே கத்தை பூரீ நகுலாம்பிகைக்குச் சித் திரா பூரணைத் தினத்தன்று செய்ய, பங்குனி உத்தர தினத்தன்று அவர்க ளிடம் திருவருள் உணர்த்தியிருக்

Page 21
- 1:
கின்றது. அவ்வுணர்த்துதல் யாமன வரும் சோதிமய அபிஷேகக் காட்சி யைக் கண்டின்புற வாய்ப்பளிக்கின் றது. அச் சோதிமய அபிடேகம் எனக்குப் புதிகாக இருந்த காரண மாக ஆதீனம் அவர்களோடு உரை யாடிய வகையால் திருவருட்டுணை க்ொண்டு சிந்தனையிலெழுந்த சில வற்றைக் கூற முற்பட்டுள்ளேன்.
** சகசிர சோதி மண்டல சங்காபி ஷேகம் ' என்ற தொடர்மொழியை, சகசிரம் + சோதி + மண்டலம் + சங்கு + அபிஷேகம் எனப் பிரித்துப் பார்க்கும்போது, ஆயிரஞ் சோதி யுள்ள விருத்தாகாரத்தில் தாபிக்கப் பட்ட சங்குகளினல் அபிடேகித்தல் என்ற பொருளை அது தந்து நிற்கின் றது. எனவே, ஆயிரந்தகளிகளில் ஏற் றப்படும் ஆயிரம் விளக்குகளும் பல வகைப்பட்ட உயிர்களாகிய தகளி களிலே பரஞ்சோதியாகிய விளக்கை ஏற்றுவது போலாகவும், அவ்வொளி விருத்தாகாரமான அண்டங்கள் தோறும் பிரகாசித்துக் கொண்டு விளங்குவது போலவும் ஆகும். உயி ராகிய விளக்கிற் பரஞானமாகிய ஒளியை ஏற்றி அன்பாகிய நீரைப் பிர ணவ வடிவினதான சங்கிற் பாய்ச்சி

அம்பாளுக்கு அபிடேகித்தல் உயிர்கள் மாட்டுத் திருவருட் சத்தி பிரகா சிக்கச் செய்தலாகும். சிற்சத்தி பதி தல் என்றுங் கூறலாம். இச்சிற்சத்தி உயிர்களைச் சிவானந்தப் பெருவாழ் வில் ஆழ்த்தும். 'தன்னிலைமை மன் னுயிர்கள் சாரத் தருஞ் சத்தி '' என்ற திருவருட்பயன் ஆசிரியர் கருத்தும் இதுவே.
ஆகையால், அன்பர்களே ! வரும் சித்திரா பூரணை நற்றினத்தை ( 1-5-69 வியாழக்கிழமை ) எதிர் நோக்கி பூரீநகுலாம்பிகையின் சகசிர சோதி மண்டல சங்காபிஷேகத்தைக் கண்டு அம்பாளின் அருட்சோதியில் தோய்ந்து பேரின்பமுறுவோமாக.
இப் புதுமுறை அபிடேகத்தை நம் நாட்டவர் கண்டு திருவருட் சோதி பெறவும், அபிடேகச் சிறப்பு மலர் வெளியிடவும் ஏற்பாடு செய்த ஆதீனம் அவர்களுக்கு எனது உளங் கனிந்த வணக்கத்தைச் செலுத்து கின்றேன். இக் கட்டுரை இம் மலரில் இடம்பெறத் தூண் டிய மைக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தைச் செலுத்துகின்றேன்.
*" விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகும் ".
-- Փյմuf

Page 22
o சிவப
வீர இ
பண்டிதர் செ
* செங்கமலப் பொலந்தாதிற் றிகழ்ந்தொளிரு
மெழின்மேனித் திருவே! வேலை
அங்கணுல கிருள்துரக்கும் அலர்கதிராய்,
வெண்மதியாய், அமரர்க் கூட்டும்
பொங்கழலாய், உலகளிக்கும் பூங்கொடியே! நெடுங்கானிற், பொருப்பின், மண்ணில்,
எங்குளைநீ, அவணன்றே மல்லல்வளஞ்
சிறந்தோங்கி இருப்ப தம்மா !”
உலகத்து வாழ்கின்ற சீவகோடி கள் எல்லாவற்றையும் பெருது பெற்ற நித்திய கன்னிகையாக உள்ள வள், பராசத்தி. சித்தியும் சிவமும் எக் காலத்தும் ஒன்றித்தே இருப்பர். சிவமின்றிச் சத்தியில்லை ; சத்தியின் றிச் சிவமில்லை. அணுவுக் கணுவாய், அப்பாலைக் கப்பாலாய் நிற்பவர்கள், சிவமுஞ் சத்தியுமாவர். சத்தி என் பது, சிவத்தின் வேருகாத திருவருளா கும். அத்திருவருளின்றி உலகு நடை பெற மாட்டாது. உலகமெல்லாந் திருவருளின் விளக்கமேயாம். அத் திருவருளாகிய சத்தி, ஆன் மாக் களுக்கு அருள் செய்யும் பொருட்டு, சிவம், சத்தி, காதம், விக்கு, மகுேன்மணி, மகேஸ்வரி, உமை, இலக்குமி, சரஸ்வதி ஆகிய ஒன்பது பேதங்களாக நிற்கும். அவ்வொன்பது பேதங்களுக்கேற்பச் சிவமும், சிவம், சத்தி, காதம், விந்து, சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகிய ஒன்பது சிவபேதங் கொண்டு, பராசத்தியின் ஒன்பது பேதங்களுடனும் ஒன்றித்து நின்று, அருள் செய்வன். சிவபேதம்

யம் லக்குமி
சிவப்பிரகாசம்
ஒன்பதும் அருவம், உருவம், அரு உருவம் என மூவகைத் திருமேனிக ளாக அமையும். அவற்றுள் சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய நான்கும் அருவத்திருமேனி எனப்படும். மகேஸ் வரன், உருத்திரன், மால், அயன் ஆகிய நான்கும் உருவத்திருமேனி எனப்படும். சதாசிவன் அருவுருவத் திருமேனி எனப்படும். இம்மூவகைத் திருமேனிகளும் முறையே நிஷ்களம், சகளம், கிஷ்கள சகளம் என வும் அழைக்கப்படும்.
இவ்வண்ணம், அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூவகைத் திரு மேனிகளையும் சிவம், ஆன்மாக்கள் உய்யும்பொருட்டுத் தாங்கி அருள் செய்வார். அங்ங்னம் அருள்செய்யுந் திருமேனிகளுள், பூீ விஷ்ணு மூர்த்தி யாக நின்று அருள்செய்யும் திரு மேனியும் ஒன்ருகுமென்று மேலே கண்டோம். அவ் விஷ்ணு மூர்த்தி யின் சத்தியாக உள்ளவள் இலக்குமி. அவ்விலக்குமியே செல்வங்களெல்லா வற்றையுங் கொடுப்பவளாய் உள் ளாள். அதனுல் அவள், எப்பொருளை யுங் காண்பிப்பவளாய் இருக்கிருள். அன்றியும் எல்லோராலுங் காணப் படக் காரணமாயுள்ளவளும் அவளே! இதனுற்ருன், இலக்குமி என்னும் பதத்திற்கு, எப்பொருளையுங் காண் பிப்பவள் என்றும், காணப்படக் காரணமாயுள்ளவள் என்றும் பெரி யோர்கள் பொருள் கூறுவர்.

Page 23
- 1
இலக்குமிக்குத் திரு முதலிய பல நாமங்களுள. கடற்பிறந்த கோதை, மா, அரிப்பிரியை, செய்யாள், ஆக்கம், பொன், சீதேவி, அலர்மகள், பொருளின் செல்வி, தாக்கணங்கு, இளிையாள், பூமின், சலசை, இந்திரை முதலிய பெயர்களால் இலக்குமி அழைக்கப் படுவாள்.
அவ்விலக்குமி, எல்லோராலும் விரும்பப்படுபவள் திருப்பாற் கட லிலே பிறந்தவள் ; உலகமாதாவாக உள்ளவள் , திரவியங்க ளெல்லாம் உடையவள்; விட்டுணுவின் மனைவி யாயுள்ளவள்; செல்வ முடையவள்; பொ ன்னு  ைட ய வ ள் எல்லா ராலும் வணங்கப்படுகிறவள் செந் தாமரை மலரிலிருப்பவள் பொருட் செல்வமுடையவள்; எல்லாரிடத்துஞ் சென்று சேரும் பெண்ணுக உள்ள வள் ; பின் பிறந்தவள் , ஐசுவரியத் துடன் கூடியவள்.
இங்ங்ணமிருத்தலால், இன்பம் வேண்டி வாழும் எல்லா மனிதரும் இலக்குமிதேவியை மிக விரும்புவார் கள். விஷ்ணுமூர்த்திக்கும் இலக்குமி தேவிக்கும் மானச புத்திரளுக உதித் தவன், மன்மதன். அதனுல் அவனுக் குச் சித்தசன் என்றும் பெயர் வழங்கு கின்றது. அவன் எவர்களுக்கும் இச்சையை உண்டாக்குபவன். எல் லோராலும் பொருள் வேண்டி இச்சிக்கப்படுகின்ற இலக்குமிதேவி யின் மகனும் யாவருக்கும் இச்சையை உண்டாக்குகின்றன். ஆனல், இந்த இச்சைகளின் பொருள் வேறு. ஒன்று விருப்பம் ; மற்றையது காமம் . காமத்தை உண்டாக்குபவனுதலால் காமன் எனப்பட்டான். காமதகனம்
மிகப் பிரசித்தம் ! நிற்க,

இலக்குமி தேவிக்குரிய பேதங்கள் சிலஉண்டு. அவையாவன; மகாலக்குமி, ராஜலக்குமி, வீரியலக்குமி, நித்தியலக்குமி, கெஜலக்குமி, கோலக்குமி, அஸ்வலக்குமி, பூதகாருண்யலக்குமி, செளரியலக்குமி, கீர்த்தியலக்குமி, செளபாக்கியலக்குமி, சந்தானலக்குமி என்பனவாம். இப் பேதங்களை எட்டாகப் பகுத் து அட்டலக்குமி எனவும் வழங்குவர் : (அட்டம்-எட்டு). அவ்வட்ட லக்குமி களுள் மாந்தர்க்கு வீரத்தைக் கொடுப்பவள் வீரலக்குமியாவள். இவள் வீர்யலக்குமி எனவும் அழைக் கப்படுவள்.
கவராத்திரி காலங்களில் சத்தி வழிபாடு செய்வது மிகப் பிரசித்தம். ஒன்பது நாள்களிலும் ஒன்பது சத்தி களுக்கும் வழிபாடு உண்டு. அவ் வொன்பது சக்திகளும், மகேஸ்வரி, கெளமாரி, வராகி; மகாலக் குமி, வைஷ்ணவி, இந்திராணி; மகாசரசுவதி, காரசிம்மி, சாமுண்டி என அழைக்கப் படுவர். இவ்வொன்பது சத்திகளையும் சுருக்கி மூன்று சத்திகளாகவுங் கூறுவர். அவை : துர்க்கை, லக்குமி, சரசுவதி என்பனவாம். இம்மூன்று சத்திகளுள், துர்க்காதேவி வீரத்துக் குரியவளாகி முதல் மூன்று நாள்களுக் கும், இலக்குமிதேவி செல்வத்துக் குரியவளாகி நடு மூன்று நாள்களுக் கும் சரசுவதிதேவி கல்விக்குரியவ ளாகிக் கடைசி மூன்று நாள்களுக்கும் கொண்டாடப்படுவர். மக்களுக்கு வேண்டிய தலையாய இன்பங்கள், வீரமும் செல்வமும் கல்வியுமாகும். இவ்வீரத்தைத் தருபவளையே நாம் வீரலக்குமி என்று அழைக்கின்ருேம். இப்படியாகிய பெண் தெய்வ வழி பாடு பண்டைய சங்ககால இலக்கியங் களிலே பரக்கப் பேசப்படுகின்றன.

Page 24
- 1
கொற்றவை வழிபாடு, கொல்லிப்பாவை வழிபாடுகளை நமது பண்டைய இலக்கியங்களிலே ஆங்காங்குக் காண லாம். இதனல் பெண் தெய்வ வழி பாடு மிகப் புராதனமானது" என்பது நமக்கு நன்கு புலப்படுகின்றதல்லவா? வீரலக்குமி வழிபாடும்மிகமிகப் புராதன
மானதே !
வீரமானது, மாந்தர் எல்லோ ருக்கும் ஆண்பெண் என்ற பாகுபா டின்றி வேண்டப்படுவதாகிய ஒரு பண் பாகும். வீரமுள்ளவர்களையே எல்லோரும் விரும்புவர். வீரமுள்ள வர்களே எவற்றையுஞ் செவ்வனே செய்து நிறைவேற்ற வல்லவர்க ளாவர். இல்லற வாழ்க்கையில் வாழ் பவர்களாயினுஞ்சரி, துறவற வாழ்க் கையில் வாழ்பவராயினுஞ் சரி எவர்க ளுக்கும் வீரம் வேண்டும். சிவனடி யார்களின் பெருமையைக் கூற வந்த சேக்கிழார் சுவாமிகள் : "ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே
பாரம் ஈசன் பணியல தொன்றிலார், ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்னுல் விளம்புந் தகையதோ!" என்று விதந்து விளம்புகின்ருர், சிவ னடியாருடைய திருக்கோலத்தையும், திருத் தொண்டையும், திருவுள்ளத் தையும், நிறை வையும் விட, அச் சிவனடியார்களது வீரமே மிக மேலானது எனச் சேக்கிழார் சுவாமி கள் எடுத்துக்காட்டும் "வீரம் என் ஞல் விளம்புந் தகையதோ?’ என்ற பகுதி எத்துணைச் சிறப்புடையது என்பதைக் கற்றேர்கள் கண்டு இன் புறுவர். வீரம் அத்துணை மேலான சிறப்புடையது.
வீரம் மாந்தர் எல்லோரிடத்தும் உள்ளதாயினும், அம்மக்கட்கு உயி

6 -
ரென உரைக்கப்படுகின்ற அரச னிடத்தே தவருது இருத்தல் வேண்டும். வீரமாகிய திரு உள்ள அரசனை “இறை” என்று அழைப்பர் மேலோர். ஏனெனின், வீர முள்ள வழியே அரசன், தனது முறையாகிய அற நூலும் நீதிநூலும் சொல்லும் நெறி பிறழாது நின்று, தன் கீழ் வாழுங் குடிமக்களைக் காப்பாற்ற முடியும். அதனுலேயே திருக்குறள் தந்த செந். நாப் போதரும்,
" முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறைஎன்று வைக்கப் படும்"
என்று அருளிப் போந்தார்.
இன்னும், உலக பாலர் உருவாய் நின்று உலகங்காத்தலின் இறை என் முர். "திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேன் ' என வருந் திருவாய் மொழியாலும், அரசன் இறை என அழைக்கப்படுவது அறி யத்தக்கது. அரசன் வீரமுடையவ னக இருந்து, தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அறமல்லாத பாவங் கள் தன்னுட்டில் உண்டாகாமற் காத்து, வீரத்தின் வழுவாத மான முடையவனக இருத்தல் வேண்டும். * அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு." என்பது பொய்யா மொழியாகும். மறனிழுக்க மானம், வீரம் மிக்க அரசனுக்கு வேண்டியதாகும். வீரம் மிக்க அரசனின் கொற்றம், "மாண்ட -அறநெறி முதற்றே" ஆகும். “கடுஞ்சினத்த கொல்களிறும் கதழ்பரிய கலிமாவும் நெடுங்கொடிய நிமிர்தேரு
நெஞ்சுடைய புகன்மறவரும் என நான்குடன் மாண்ட தாயினு மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்."

Page 25
- I
என வரும் மருதனிளாகாகளுர் பாடிய புறகானூற்றுப் பகுதியும் இதனை நன்கு வலியுறுத்தும். மறனிழுக்கா மான முடைய அரசன்,
* வீறின்மையின் விலங்காமென
மதவேழமும் எறியான் ஏறுண்டவர் நிகராயினும்
பிறர்மிச்சிலென் றெறியான், மாறன்மையின் மறம்வாடுமென் றிளையாரையு மெறியான், ஆறன்மையின் முதியாரையும்
எறியான் அயிலுழவன்.” என விதந்து சொல்லப்படுபவனுக வாழ்வன். 'அழியுகர் புறக்கொடை அயில்வே லோச்சான்' என்பர் சீவக சிந்தாமணி ஆசிரியராகிய திருத் தக்க தேவர், அரசனது தன்மை இங்ங்னமாகிய மிக்க வீரமுடையதாக இருத்தல் வேண்டும். இவ்வீரமுடைய அரசனுக்கு வீரம்மிக்க படை மறவர் சுற்றமாயமைந்து காப்பர். அவர் தமக்கும் அரசனுக்கும் பேதங்காணுர். அஞ்சாமையுடையவராய் வாழ்வார். அதனல் அப்படை வீரர் மறம் மிகுந்தவராக வாழ்வர். அவர் பகை வ்ரது படையைச் சேர்ந்து தம்மாண் மையை எடுத்துரைப்பர். இதனை கெடுமொழிவஞ்சி என்பர் வெண்பா மாலையார். திருவள்ளுவரின் திரு வாக்கு அந்நெடுமொழி வஞ்சியை இயம்புகின்றது.
‘என்னமுன் நில்லன்மின் றெவ்விர்பல
ரென்னை முன்னின்று கன்னின் றவர்.” என்பது அவ்வாக்காகும். அப்படை வீரர் பேராண்மை மிக்கவர். அவர் பகைவர் மேற்கண்ணுேடாது செய்யும் மறத்தை உடையவராய், ஆண் டகைமை யுடையவராய் இருப்பர். தம் வாழ்நாள் முழுவதும் முகத்தினும்
3

மார்பினும் புண்ணுடையவராய் வாழ்வர். இவ்வாழ்வை விழுப்புண் னுடைய நாளென்பர். அவ்விழுப் புண் படாத நாள் களையெல்லாம் பயன்படாது கழிந்த நாள்களுள்ளே வைப்பர். தம்மை ஆண்ட வீரம்மிக்க அரசர், கண்கள் நீர்மல்கும்வகை போரிடைச் சாவப் பெறின், அச் சாக்காடு இரந்தாயினுங் கொள்ளுந் தகுதியை உடையது என எண்ணுவர். அவர் தாம் கூறின வஞ்சினம் தப்பா மற் பொருட்டுச் சென்று சாவவல்லவ ராவர். அவ்வித வீரமுடைய படை வீரரைப் பெற்ற அரசரே, முறை செய்து காப்பாற்றும் வீரம்மிக்க அரசராவர். அவ்வரசரிடத்து வீர லக்குமி எஞ்ஞான்றுங் குடிகொண்டே இருப்பாள். அவ்வரசருடைய வீரமும் விளம்புந்தகைய தன்றன்ருே !
வீரம்மிக்க அரசனிருந்து ஆளும் நாடானது எக்காலமும் நாடாவள முடையதாக இருக்கும். குன்ருத விளையுளைச் செய்வோரும், அறவோ ரும், கேடில்லாத செல்வமுடையோ ரும் கூடிவாழ்வதாக இருக்கும் அத ஞல் அந்நாட்டை இலக்குமி குடி கொண்ட நாடென எவரும் போற் றுவர். வீரலக்குமியுடன் செளரிய லக்குமியும் கோலக்குமியும் கீர்த்திய லக்குமியும் செளபாக்கிய லக்குமியும் எக்காலமுங் குடிகொள்வர். அதனல் மக்க்ள் எல்லோரும் இன்புற்று வாழ் வர். பசியும் பிணியும் பகையும் நோயும் அந்நாட்டை நலியாது. வள னெல்லாஞ் சுரக்கும் நாடு அந்நாடு என்று புலவர் பலர் பாடும் நாடாக அந்நாடு அமையும். அந்நாட்டு அர சனைப் பல்லாண்டு வாழும்படியாகப் பாவலர் பலரும் பாராட்டிப்பாடுவர்.

Page 26
- 1
புறாகானூறு முதலிய நூல்கள் இதற் குச் சான்ருகும்.
ஒரு நாட்டில் வாழும் மன்னவன் சிறந்த வீரமுடைய மன்னவற்கே தன் மகளைக் கொடுக்க ஒருப்படுவன். அத ஞலே சுயம்வரம் போன்ற மணமுறை களும் அமைந்தன. இம்மாதிரியான மணங்களிலே மிக்க வீரதீரமுடைய, ஒப்பாருமிக்காருமில்லாத ஒரு தலைவ னுக்கே மகட்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்படும். அப்படியான மணங் கள் பல பண்டைய தமிழ் நாட்டிலே பல்கி நடைபெற்றுள்ளன. சீதா கல் யாணம், திரெளபதி கல்யாணம், தமயந்தி கல்யாணம் முதலியன இதற்கு உதா ரணங்களாகும்.
ஒரு நாட்டில் வாழ்ந்த வீரர்களைத் தெய்வம்போலாக்கி வழிபடும் வழக்கம் மிகவும் பழைமையுடையது. பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத் திலே யுள்ள பொருளதிகாரம் அறுப தாம் சூத்திரத்தில் இவ்வழக்கம் கூறப்பட்டுள்ளது. * காட்சி கால்கோ னிர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை
வாழ்த்தல் என்று' என வரும் அச்சூத்திரப்பகுதியிலே, உருவமமைத்தற்கு வேண்டிய கல்லி னைக் காண்டலும், அக் கல்லில் உரு வத்தை அமைத்தலும், அவ்வுருவை நீராற் றுாய்மை செய்தலும், நீர்ப் படுத்திய கல்லை நடுதலும், அவ்வீர னது பெரும் புகழைப் பொறித்த லும், அக்கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ் சிறப்புச் செய்த லும், அக்கல்லைத் தெய்வமாக்கி வாழ்த்தலும் பண்டுதொட்ட பண் பாடான வழக்கமாகும் என்பது புலப் படுகின்றது. வீரர்களுள் தலைசிறந்த வீரனுக விளங்கிய இராமபிரானையும் அவரது வாழ்க்கைத் துணையாக

8 -
இருந்த கற்பின் செல்வியாகிய சீதா பிராட்டியையும் இவர்களுக்கு எக்கா லத்தும் உறுதுணையாக இருந்த சொல் லின் செல்வனும் வீரருள் வீரனு மாகிய அருமனையும் வழிபட்டுவரும் முறைமை யாவரும் அறிந்ததே யாகும். வீரபத்தினியாகிய கற்பின் செல்வி கண்ணகிக்குச் சிலைநாட்டி வழிபாடாற்றிய திறம் சிலப்பதிகாரக் காப்பியத்திலே பரக்கப் பேசப்பட் டுள்ளது.
இராமபிரான் இராவணனை யுத்த களத்திலே நோக்கி ' இன்று போய் காளை வா” என இயம்பிய வீரமே மேலான வீரம். படையிழந்த கை யுடைய இராவணனுக்குச் செய்த, நடைசிறந்த இராமபிரானின் இந்த நனிநாகரிகச் செயல், வீரத்தின் உச்சப்பகுதிக்குக் கொண்டு சென்று வைத்தது. வீரர்க்கழகு இவ்வீரமே. வீரருள் வீரன் இராமனேயென இராமாயணத்திற் பல இடங்களிலும் எடுத்தியம்புவதும் இப் பண்பட்ட வீரச் செயலாலேயேயாகும், மிதிலை யில் வில்முரித்த வீரத்திலும் இவ் வீரம் மேலானதன்றே ! கார்த்த வீரியார்ச்சுனனை வென்றமையும், மரா மரங்களை எய்தமையும், அரக்கர் கிளையை வேரனுத்தமையும் இராம பிரானில் வீரலக்குமி குடிகொண்டிருக் தமையானன்ருே !
பாண்டவர்க்கு வெற்றி ஈட்டிக் கொடுத்தது பாண்டவர் ஒவ்வொருவ ருடைய தனிப்பட்ட வீரம் மாத்திர மன்று. பூரீகிருஷ்ண பரமாத்மாவின் உறுதுணையுமன்று அருச்சுனனின் வில் வீரமே. அருச்சுனனின் வில்வீரமாகிய வீராக்கினி, பூgகிருஷ்ணபகவானின் சகாயமென்னும் பிரசண்ட மாருதக் காற்றுடன் பின்னிப் பிணைந்து ஒன்று பட்டுச் சென்று, கெளரவரது சேனை

Page 27
யைச் சாம்பராக்கியது. இதனல் பாண்டவர் வீரராயினர். கர்னனின் வில்வீரமாகிய மின்மினியானது அருச்சுன னின் வில்வீரமாகிய சூரியன் முன்னே ஒளிராததாயது. இதனலே பாண்டவ ருக்கு விஜயலக்குமியும் உடனுறைவா ளாயினள். வீரிய லக்குமியும் விஜய லக்குமியும் கீர்த்திய லக்குமியும் ஒன்று சேர்ந்து ராஜலக்குமியை அவர்களுக் களித்தன. அதனுல் அவர்கள் அற நெறி தவருத அரசர்களாயினர். அவர்களுடைய வீரலக்குமி என்றும் நிலையுடையவளாயினுள்.
வீரப் பெருங் காப்பியமாகிய
கந்தபுராணத்திலே கச்சியப்ப சுவாமி களாற் காட்டப்படும் வீரவாகுதேவர் முதலாய இலக்கத் தொன்பதின்ம ருடைய வீரமும், சூரபன்மன், சிங்க முகன், தாரகன் முதலிய அவுணர்களது வீரமும் யாவரும் அறிந்தனவே. சூரபன்மனுடைய வீரத்தின் முன்னே வீரவாகுதேவருடைய வீரம் எதிர் நிற்க முடியாது போயிற்று. ஆனல் வரம்பிலா வரம்பெற்றுயர்ந்தவனகிய சூரபன்மனின் வீரமோ மாயா செயல் களோ இவை யாவும் சிவசுப்பிர மணியப் பெருமானது வீரமாகிய பிரசண்ட மாருதக் காற்றின் முன்னே பூளைப்பூப்போலாயிற்று. சிவசுப்பிர மணியக் கடவுளின் மேலே கக்கீரதேவ ராற் பாடப் பெற்ற திருமுருகாற்றுப் படையிலே முருகனது வீரத்திறங்கள் பலபடித்தாகப் பாராட்டப்பட்டுள் GTGCGT. " ... மாற்றேர் கூற்றே ’’ 'வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ” "வாளுேர் வணங்குவிற் றனைத் தலைவ ’ * செருவி ஞெருவ! பொருவிறன் மள்ள ! ?? * வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ !
குன்றங் கொன்ற குன்றக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ ! ?
4

19 -
** மண்டமர் கடந்தநின் வென்ற டகலத்து ” *சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந. ”
எனவரும் இப்பாடற் பகுதிகளால் வீர லக்குமியோடு விளங்கிய குன்றக் கொற்றம் நன்கு புலப்படுகின்றதே ! இதனல் வீரலக்குமிக்கிருந்த விழுமிய மேன்மை வியப்படையத்தக்கவாறு வீறுபெற்றேங்குதல் வெள்ளிடை மலை. மனிதர், அரசர், தேவர் ஆகிய யாவருக்கும் வீரலக்குமி விழுமிய மேன் மை யை அளித்துள்ளாள். மக்கள் என்றும் வீரலக்குமியின் கடாட்சத்தினலேயே, உலகில் மறம் மாண்டு அறம் பூண்டு வாழ்பவர் ஆகின்றனர். அறந் தலை தூக்க வீரலக்குமியே உதவுபவளாவாள். அவளது அருள் பெறுவதற்குத் தகுதி யுடையவர்களாக வாழுதல் வேண்டும்.
ஆதிசத்தியாகிய பராசத்தியிலிருந்து தோன்றிய இலக்குமி வழிபாடும், அவ் விலக்குமியின் ஒரு கூருகிய வீர லக்குமியின் வழிபாடும், தமிழ்நாட்டின் கண்ணே பண்டுதொட்டே வழிவழி யாக வழங்கி வருகின்ற தலைசிறந்த தெய்வ வழிபாடுகளாகும்.
அவ்வழிபாட்டினைக் கீரிமலை பரீ ாககுலேஸ்வரப் பெருமானின் திருச் சந்நிதானத்திலே நாமும் வழிபடு கின்ருேம்.
அன்னை பராசத்தியின் பரங் கருணைத் தடங்கடலின் கண்ணே மூழ்கி இன்புறும் பேரானந்தப் பெரு வாழ்வு நெறியும் நமக்குச் சித்திப்ப தாக !
வீரஇலக்குமியின் திருவடிகளே சரணம் !

Page 28
ଘ} -
சிவம
விஜயலி
பண்டிதை, தங்கம்
* பொன்னரசி நாரணணுர் தேவி புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல்
மேனி அழகுடையாள்
அன்னையவள் வையமெலாம்
ஆதரிப்பாள் மரீதேவி
தன்னிரு பொற்றளே
சரண்புகுந்து வாழ்வோமே?
இறைவனது அருளாற்றலுக்கு சக்தி என்று வழிபட்ட மரபு சைவ மரபு.
* அருளது சக்தி யாகும்
அரன்தனக் கருளை யன்றித் தெருள் சிவ மில்லை அந்தச்
சிவமின்றிச் சக்தி யில்லை."
என்பது சைவசித்தாந்தம் கூறும் உண்மை. உமா என்ற சொல்லே முத்தொழிலையும் விளக்கும் அட்சரங் களாகிய அகரம், உகரம், மகரம் என்னும் மூன்று எழுத்துக்களையும் அடக்கி நிற்கிறது. வேண்டுவார் வேண்டுவதை ஈந்து அவர்க்கு அரு ளும் திறம்பற்றி அவ்வப் பொருள்கள் தோறும் வைத்து வேறு வேறு பெய ரால் சக்தி வழிபாடு ஆற்றுகின்றனர். அறிவும் செல்வமும் ஆற்றலும் மக் கள் வாழ்க்கையில் இன்றியமையாமல் அமையவேண்டியவை. இவ ற் றில் செல்வம் நடுநாயகமாய் அமைந் திருப்பதன் சிறப்பும் சிந்திப்பதற் குரியது. 'முனிவரும் மன்னரும் முன் னுவ பொன்னல் முடியும்’ என்பதும் பொருளிலார்க் கிவ்வுலகமில்லை யென்

Lub
ஸ்ட் சுமி
DIT அப்பாக்குட்டி
பதும் செல்வத்தின் அவசியத்தைக் காட்டுவன. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனர் கூட வேள்வி செய்யும் பொருட்டுதந்தையாருக்காக இறைவ னிடம் பொன் கேட்டுப் பெற்ருர் என்பர்.
“ஈவதொன் றெமக் கில்லையேல் இதுவோ
நமை யாளு மாறு ’’ எனக் கேட்டுப் பாடியது யாவரு மறிந்தது. இத்தகைய செல்வத்தை நமக்களிப்பது இ லட்சு மி யின் கடாக்ஷமே.
இலட்சுமி என்பது முயற்சியுடை
யவனைப் பார்ப்பவள் என்ற கருத் திலே அமைந்ததாகும். இலட்சுமீகரம் விளங்குமிடத்தில் இலட்சுமி வீற் றிருப்பாள். அவள் அட்ட ஐசுவரியங் களையும் அளிப்பாள். செல்வம் என்று குறிப்பிடும்போது பொதுவகையில் ஒன்றேயாயினும் சிறப்பு வகையில் அதனை எ ட் டு ப் பிரிவுகளாக்கிக் கூறுவர். அவையாவன: தனம், தானி யம், பூ, சந்தானம், செளபாக்கியம், வீரியம், விஜயம், தைரியம் என்பன. இவ்வெட்டினையும் தருதல் பற்றி திரு
மகளை ஒன்ருகக் கூருது தனலட்சுமி, தானியலட்சுமி, பூலட்சுமி, சந்தான லட்சுமி, செளபாக்கியலட்சுமி, வீரிய லட்சுமி, விஜயலட்சுமி, தைரியலட்சுமி எனக் கூறி வழிபடுவர். இவர்களை உலகியல்களை வழங்கும் சத்திகள் என்று கூறுவர்.

Page 29
- 2
* நாற்கரந் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்’
என்பது பாரதியார் கூற்று.
திரு என்பது பொருள், அழகு, வீரம், வெற்றி, தைரியம் என்பவை யாவையும் அடக்கும் பல பொருள் ஒரு சொல்லாகும். இவற்றில் வெற் றித் திருவாக விளங்குபவள் விஜய லட்சுமி. வீரம், தைரியம் ஆகியவை இருப்பினும் வெற்றி கிட்டாவிட் L-ITG) வாழ்வில் மகிழ்வெங்கே? ஒவ்வொரு உயிரும் வெற்றிக் காகவே துடிதுடித்து முயற்சி செய்கி றது. தொழிலிலே வெற்றி, போரிலே வெற்றி, இல்வாழ்விலே வெற்றி, துறவிலே வெற்றி, கல்வியிலே வெற்றி. இப்படியாக எந்தெந்தத் துறையிலும் வெற்றியையேவிழைந்து நிற்பவர்கள் நாம். எனவே வெற்றித் திருவாகிய விஜயலட்சுமியைச் சிந்தை யிலும் சென்னியிலும் மலர்வித்துப் பூசிக்கவேண்டிய கடமை நமக்குண்டு.
விஜயலட்சுமியின் திருத்தோற்றம் மூன்று கரங்களில் தாமரை கொண்டு ஒரு கரம் லம்பிதமாகக் கொண்டு விளங்கும் பான்மையில் அமைந்தது. போருக்குரிய வில், வேல், சக்கரம், தண்டு எவையுமின்றி இருப்பது சிந்திப்பதற்குரியது. ஏனெனில், போர் முடிவில் காணுகின்ற வெற்றித் திருக் கோலந்தான் இது. இத் தோற்றத் திலே வெற்றியின் களிப்போடு கூடிய ஒரு அமைதி காணப்படும். முயற்சி யும், ஆண்மையும், நீதியும் நிலவும் இடத்திலே வெற்றித் திருமகள் வீற் றிருப்பாள். வீரர்களின் மார்பும், புயங்களும், தொழிலாளர்களின் கரங் களும் இல்லக்கிழத்தியரின் வதனமும்,

-
புன்முறுவலும் அவளுக்குச் சிறந்த கமலாசனமாகும். இதற்கு மாருக, சோம்பலுள்ளவர்களையும் நீதியற்ற வர்களையும் முதுகுகாட்டி ஒடும் ஆண்மையற்றவர்களையும் விட் டு அவள் அகன்றுவிடுவாள்.
தோரணப் பந்தரிலும் பசுங்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும் வீரர்தந் தோளினிலும் உடல்
வெயர்த்திட உழைப்பவர் தொழில்களிலும் பொன்னிலும் மணிகளிலும் நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும் கன்னியர் நகைப்பினிலும் செழுங்
காட்டிலும் பொழிலிலும் கழனியிலும் முன்னிய துணிவினிலும் மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளாம்.
எனவே, நாம் உதாசீனம் செய்து தள்ளினுலன்றி அவள் நம்மை விட்டு அகன்று விடமாட்டாள். நமக்கு வெற்றி கிட்டவில்லையென்றல் அது நமது தவறேயன்றி வேறில்லை. மூத்தவற் குரித்தரசெனும் முறை மையை மாசுறச் செய்த கைகேயியின் நிலையை விளக்க வந்த கம்பர் அயோத்தியாபுரியிலிருந்து திருமகள் நீங்கப் போவதால் அந்த இடத்தை மூதேவி வந்து நிரப்புவதற்கு வந்து கிடந்தமையை ஒப்ப கைகேயி தன்னை அலங்கோலம் செய்துகொண்டு கிடந் தனள் என வர்ணிக்கிருர். எனவே எமது மங்களச் செயல்களாலும் வந்தனைகளாலும் பூசனைகளாலுமே திருமகள் நமக்குக் கடாட்சமளிக் கிருள் என்பதை நினைவிலிருத்தக்
கடவோம்.
வெற்றிதரும் விஜயலட்சுமியைக் "கொற்றவை” என்று தமிழ் நூல்கள் கூறும். கொற்றம் என்பது வெற்றி.

Page 30
- 2
**வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ' என்று முருகப்பெருமானைப் போற்றுகிறர் நக்கீரர். புறப்பொருள் வெண்பாமாலையில் "கொற்றவை நிலை ' என்று குறிப்பிடப்படுவதும் கவனிக்கத்தக்கது.
* ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலை
கூளி மலிபடைக் கொற்றவை - மீளி அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார் முரண்முருங்கத் தான்முந் துறும் '
போர் தொடங்கும் காலத்தில் அரசனுக்கு முன்னே தான் சென்று

வெற்றியை ஈட்டிக் கொடுக்கும் தன் மையை இப்பாடல் காட்டுகிறது.
பொன்னும் மெய்ப்பொருளும் போகமும் திருவும் புணர்ப்பவனுகிய இறைவன் தனது அருளாற்றலாகிய சக்தியைத் தாங்கியுள்ளான். அந்தச் சக்தியின் அம்சமாக விளங்குபவள் மகாலட்சுமி. மகாலட்சுமியின் அம்ச மாக விளங்குபவள் விஜயலட்சுமி. வெற்றிதரும் வாழ்வே இதுபோழ்து நமக்கு வேண்டற்பாலது. ஆகவே விஜயலட்சுமியைப் போற்றிப் பூசித்து உய்தியடைவோமாக.

Page 31
சிவப
திருமகளின் திருவருள் அ
கு. பாலசுந்தரக் கு
லசுஷ்மி என்னும் சொல் 'லக்ஷ' என்னும் வினையடியிலிருந்து பிறந் தது. 'லக்ஷயதி* உத்யோகினம் பஸ்யதி இதி. லக்ஷமி என்பது சொல் லின் பொருள். அதாவது முயற்சி யுடையவன் யா வனே அவனைப் பார்ப்பவள் என்பது கருத்து. முயற்சி திருவினையாக்கும் என்பதும் நோக் குக. இலகடிமி, பத்மாலயா, பத்மா, கமலா, பூரீ ஹரிப்ரியா, இந்திரா, லோகமாதா, மா, கூதிராப்தி தனயா, ரமா என்பன அவளுக்குரிய பரியாய நாமங்களுட் சில.
இத்தகைய திருமகளின் அருள் பெற விரும்பாதவர் இவ்வுலகில் எவருமிலர். திரும்கள் செல்வத்துக் கும் அழகுக்கும் அபிமான தேவதை. இவளது கடாக்ஷத்தைப் பெற்ற வர்கள் மற்றையோரிலும் பல்வேறு விதங்களிலும் சீரும் சிறப்பும் பெற்று விளங்குவது கண்கூடு. ஆனல் பெருஞ் செல்வம் படைத்தவர்களும் சிறந்த அழகு வாய்ந்தவர்களும் மட்டுமே இலட்சுமி கடாட்சத்துக்குரியர் என அறுதியிடுவதோ, ஏனையோர் அதைப் பெற உரிமையற்றவர் என்று நினைப் பதோ சரியன்று. பெரும் தனவந்தர் களும் காலப்போக்கில் சீர்குலைந்து, திருவற்றுப்போவதும், சாதாரணமா யிருந்தவர்கள் திடீரென அதிசயிக்கத் தக்க வகையில் செல்வமும் சீரும் படைத்தவர்களாகத் திகழ்வதும் கண்கூடு. இவ்வுண்மையைச் சைவ

பம் 1ல்லது லசுஷ்மி கடாகவும்
jäs35sir, B. A. (Hons.)
நாயன்மார்களும் வைணவ ஆழ்வார் களும் தம் பாடல்களில் பலவாறு கூறிப் போந்துள்ளனர். உண்மை யைக் கூறின் செல்வம், அழகு என்ப வற்றில் இன்று சிறந்திருப்பவர்கள் போல் ஏனையோரும் சீரும் சிறப்பும் பெற்று வாழும் உரிமை, வசதிகள் பெற்றவர்களேயாவர். காண்பதற் கினிய தோற்றமும், கவர்ச்சிகரமான தன்மையும், மனதுக்கினிய சுத்தமும் இருக்குமிடங்களில் எல்லாம், பூரீதேவியானவள் நித்திய சாந்நித் தியமாயிருப்பள்.
தன் உடல், துணிமணிகள், வீடு வாயில்கள் என்பவற்றைச் சுத்தமாய் வைத்திருப்பதும் மனச் சந்தோஷத் துடனும் திருப்தியுடனும் வாழ்வதும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையா தது. இவ்விதம் இருப்பவர்களையே சீரும் சிறப்பும் வந்தடைகின்றன. சதா சிடுமூஞ்சியுடன் உற்சாகமிழந்து நிற்பவனை விட்டு விரைவில் லக்ஷமி நீங்குவள். ஆதலின் நாம் முதலில் லசுஷ்மி கடாக்ஷத்தைப் பெறவேண் டும். பின்னர் அதைப் பேணிக் காத் தல் வேண்டும். இவற்றை மேற் கொள்ள வேண்டிய முறைகள் புராணங்களில் நிரம்ப உள்ளன. நமது முன்னுேர்களால் சிரத்தை யுடன் பேணப்பட்டு வந்த இவற்றுட் பல இன்னும் கைக்கொள்ளப்படுகின் றனவேனும், பல சிரத்தைக் குறை வினலும், பிறருடைய துர்ப்போதனை களாலும் புறக்கணிக்கப்படுகின்றன.

Page 32
இக்காலத்திலே "திருமகள் எங்கும் நிலைத்திராள்' என்றும், “செல்வம் சகடக்கால் போல வரும்’ என்றும் குறைகூறுவது சகஜமாகி விட்டது. திருமகளின் திருவருளைப் பெறுவது எப்படி? அதைத் தளரவிடாது பேணு வது எப்படி? அதற்கு வேண்டிய நடத் தைகள், குணங்கள், பொருள்கள் எவை? என்பனவற்றை நாம் ஞாப கத்தில் வைப்பதில்லை.
இவ்வுண்மைகள் புராண காலங் களில் மிகச் சிறப்பாகவும் தெளிவாக வும் கூறப்பட்டுள்ளன. இவற்றுள் பிரமவைவர்த்த புராணம், விஷ்ணு புராணம், இலிங்க புராணம் என்ப னவும் கல்பங்களும் பூரீ சூக்தங்கள் போன்றனவும் விசேடமாகக் குறிப் பிடப்படவேண்டியவை.
மகாவிஷ்ணுவே இலக்குமியைப் பார்த்து 'திருமகள் திருவருள் பெறு வது எப்படி?’ என்று கேட்பதும் அவள் எங்கு நிலைத்திருப்பாள் என்று விளக்கும் பகுதிகள் சில வேறு சில அலசுடிமியை விவாகம் செய்தவரா கிய துஸ்ஸஹமுனிவர் அவளுடன் வாழமுடியாது இன்னல்களை அணு பவித்த வரலாற்றை க் கூறும். அலசுஷ்மி ஆவாள் இலக்குமிக்கு மூத்தவள். தேவர்கள் திருப்பாற் கடல் கடைந்த காலத்திலே முதலில் ஆலகாலவிடந் தோன்றியது. அதன் பின் அமுதம் தோன்றுமுன்பு இவள் தோன்றினள். அதனல் இவள் மூத்த வள் அல்லது பெரியம்மை எனப் பட்டாள். இவளுக்கு ஜேஷ்டாதேவி என்று பெயர். "சேட்டை இந்திரைக்கு மூத்தாள்' என்பதுங் காண்க. அதன்பின் திரு மகள் தோன்றினுள். அவள் மகா

4 -
விஷ்ணுவை மணுளஞக வரித்தாள். அதனல் அவள் இளையாள் எனப் பட்டாள்.
மூத்தவளாகிய அலகழ்மியை துஸ்ஸஹ முனிவர் மணந்துகொண்டு இல்லறம் நடத்துபவராய் லோகசஞ் சாரம் செய்யலாஞர். அவருடைய மனைவியரோவெனில் பரமசிவன், மகாவிஷ்ணு இவர்கள் திருநாமங்கள் கோஷிக்கப்படு மிடம், வேதங்கள் ஒதப்படுமிடம், ஒமப்புகை கிளம்பு மிடம், திருநீறு, திருமலர் முதலிய வற்றைத் தரித்தவர்கள் வாழுமிடம் என்பவற்றை அணுகுங்கால் பயந்து நடுநடுங்கி இருகாதுகளையும் மூடிக் கொண்டு மிகவேகமாக அவ்விடங் களை விட்டகன்று ஒடத்தொடங் கினள்.
தன் மனைவியின் இவ் விசித்திர மான செயலைக் கண்ட அம் முனிவர் மனங்கலங்கி அவளுடன் காடு போந்து தவத்தில் இறங்கினர். கடும் தபத்தில் ஈடுபட்டிருந்தவராய்த் தன் மனைவியை இனி ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதி பூண்டு புலன்களை அடக்கி யோகத்தில் ஆழ்ந்தார். தற்செயலாய் அங்கு வந்த மார்க்கண்டேய மகரிஷியைக் கண்டு முறைப்படி வணங்கி தம் நிலையை எடுத்துரைத்தார். துஸ்ஸஹ முனிவர் மார்க்கண்டேய முனிவ ரிடம் பின்வருமாறு வினவினர் :
** பகவானே ! என் மனைவி என் னுடன் சிறிதும் ஒற்றுமையுடன் வாழ்கின்ருளில்லை. நான் யாது செய்யலாம்? இவளுடன் நான் எந்த இடத்திற் புகலாம் ? எந்த இடத்திற் பிரவேசிக்கக்கூடாது? தயைகூர்ந்து இவற்றை எனக்கு அருளிச் செய்க."

Page 33
- 2
மார்க்கண்டேயரும் அவர் நிலைக்கு இரங்கினர். அவரைப் பார்த்துப் பின்வருமாறு உபதேசம் செய்தார்:
*" துஸ்ஸஹ முனிவரே கேளும். உமது மனையாளாகிய மூத்தாள் அகீர்த்தி, அதுலா (இளையற்றவள்), அலட்சுமி என்னும் பெயர்களையுடை யவள். அவளுடன் நீர் பிரவேசிக்கத் தகாத இடங்கள் வருமாறு : 1. ஸ்ந்த இடத்தில் வாழும் ஜனங் கள் எக்காலமும் திருமாலைத் தொழுபவர்களோ வேதநெறி கடைப்பிடிப்பவர்களோ ; எந்த இடத்தில் ஜனங்கள் சிவபிரா னிடம் பக்தி செய்யும் மஹாத் மாக்களோ திருநீறு பரவப் பூசிய திருமேனியை யுடையவர்களோ அங்கெல்லாம் இம்மூத்தாளுடன் நீர் எக் காரணங் கொண்டும் நுழையக்கூடாது.
2. எங்கெல்லாம் ** நாராயணு, மாதவா, அச்யுதா, அநந்தா, கோவிந்தா, வாசுதேவா, ஜனுர்த் தன என்றும்; எப்பொழுதும் ருத்ரா, ருத்ரா என்றும்; சிவாய நம என்றும் : சிவதராய நம என்றும்; சங்கராயநம என்றும்; எப்பொழுதும் மஹாதேவா, மஹாதேவா, மஹாதேவா என்றும்:உமாபதயேநம என்றும்; ஹிரண்யபதயே நம என்றும்; ஹிரண்யபாஹ"வான உமக்கு வணக்கம் என்றும்; எருதுக் கொடியோனுக்கு வணக்கம் என் றும்; அன்னபிறவா றெல்லாம் பிராமண கூடித்திரிய வைசிய சூத் திரர்களும் மற்றவர்களும் தினந் தோறும் அனவரதமும் சந்தோஷ

மடைந்தவர்களாய்த் துதிப்பார் களோ அவர்களுடைய செல்வம், வீடு முதலியவற்றிலும், பூங்கா வனங்களிலும், மாட்டுத் தொழு வங்களிலும் நீர் பிரவேசிக்கக் கூடாது'.
எந்த வீட்டில் 'ஸ்வாஹா"" என் னும் கோஷங்களும் “வஷட்' என் னும் கோஷமும் உளவோ (இவை தேவர்களை உத்தேசித்துச் செய்யும் ஒமங்கள்) அதை விட்டு வேறு இடத் துக்குச் செல்லுவீராக.
எந்த இடத்தில் எக்காலமும் வேதமோதுவதையே முக்கியமாகக் கொண்டவர்களும், நித்திய கர்மங் களைச் சிரத்தையுடன் செய்து வருப வர்களும், பெருமானைப் பூசிப்பவர் களும் இருக்கிருர்களோ அவ்விடங் களை விலக்கல் வேண்டும்.
துஸ்ஸஹ முனிவரே! நித்தியமாக வும் நைமித்தியமாகவும் இருக்கிற யாகங்களினல் எவர்க்ள் இறைவனை வழிபடுகின்றனரோ அவர்களை விட்டு வேறிடம் செல்வீராக.
வேதங்களை நன்ருகக் கற்று ணர்ந்த அந்தணர்களும், ஆசிரியர் களும். அதிதிகளும், சிவனடியார் களும் எவர்களால் தினந்தோறும் பூசிக்கப்படுகிருர்களோ அவர்களை விட்டு விலகிவிடவேண்டும்.
அலகங்மியுடன் பிரவேசிக்கக்கூடிய
இடங்கள் சில
1. எங்கு தேவர்களுக்குத் தேவ ணுகிய பூரீ ருத்ரன் நிந்திக்கப் படுகின்ருரோ அங்கு நீர் இவ ளுடன் பிரவேசிக்கலாம்.

Page 34
- 26
2. எங்கு பெருமாள் பக்தி ஜெபம் ஹோமம் சதாசிவன் என்பன இல்லையோ அங்கு தடையின்றிப் பிரவேசிக்கலாம்.
எந்த வீட்டில் சந்தியா காலங் களில் மக்கள் திருநீறின்றி இருக் கின்ருர்களோ, எங்கு வேதவொலி இல்லையோ, குருபூசை முதலியனவும் இல்லையோ அங்கு நீர் மனைவியுடன் பிரவேசிக்கலாம்.
எங்கு பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய சடங்குகளை விட்டவர்கள், அறிவில்லாதவர்கள், கெட்ட எண் ணங்களை உடையவர்கள் உளரோ அங்கே நீர் அச்சமின்றிப் பிரவே சிக்கலாம்.
அமிதமான உணவு உட்கொள் ளும் மனிதர்கள், அதிகமாகக் குடிக் கும் மனிதர்கள், சூதாட்டம் வழக்கு முதலிய செயல்களில் இழிந்து அறி விழந்தவர்கள் என்பவர்கள் வீட்டில் நீர் பிரவேசிக்கலாம்.
உடனே துஸ்ஸஹ முனிவர் அவர் குறிப்பிட்ட இடங்களை அடைந்து வசித்துவந்தார். அவர் தமது மனைவி யாகிய மூத்தவளைப் பார்த்து, ' நீ இங்கேயே இரு. நான் பாதாள உல கம் சென்று நமக்கேற்ற இருப்பிடம் தேடிப் பார்த்து வருகிறேன் ' என் ருர். அதற்கு அவள் 'எனக்கு உணவு யார் கொடுப்பார்கள்’’ என்று வின வினள். அதற்கு முனிவர் 'பெண்கள் யாவரும் - நீ அவர்களிடம் நெருங்கா மல் விலகி இருத்தற்பொருட்டு பல

விதமான பலி உணவுகளாலும் புஷ் பங்கள் தூபதீபங்களாலும் பூசனை செய்வர். அவற்றை ஏற்று வழுதி * என்று கூறி மறைந்தார்.
இலிங்க மஹா புராணத்தில் இலக்ஷமி வரலாற்றைப் பற்றிக் கூறிய வற்றுள் மிகச் சிலவே இவை. விரி வஞ்சிச் சுருக்கிக் கூறினுேம்,
பிரும்ம வைவர்த்த புராணத்தில் இன்னின்ஞர் வீட்டில் நான் வசிப் பேன் எனவும் இன்னின்னர் வீட்டில் நான் ஒருபொழுதும் வசியேன் என வும் இலக்குமி கூறிய சில பகுதிகள் உள. அவற்றிற் சில பாரதிய வித்யா பவன் சஞ்சிகையிற் காலந்தோறும் வெளிவருகின்றன. விரிக்கிற் பெரு கும்.
புராணேதிகாசங்களின் உட்கருத் தையும் நோக்கங்களையும் உணராத இக் கலியுகத்தில் இத்தகைய சில வற்றைப் பத்தர்களுக்கு எடுத்துக் காட்டுவது முக்கியம்.
இன்னும் அட்டலக்குமிகளைப்
பற்றியும் அவற்றின் கடாட்சத்தை மக்கள் நாடவேண்டியதன் அவசியத் தையும் நாம் உணர்ந்து அவளின் பல்வேறு மூர்த்தங்களையும் உபா சித்து எல்லாவற்றையும் ஒருங்கு தன்னு ளடக்கி அருள் பாலிக்கும் நகுலேஸ்வரப் பெருமானின் சக்தி யாகிய நகுலாம்பிகையின் கிருபா கடாட்சம் பெற்று இஷ்டசித்திகளைப் பெற்று வாழ்வோமாக,
3. Lubl

Page 35


Page 36
s 穹@兮 ーリ குரும்பசிட்டி, திரு முக்ை கீரிமலே நகுலேஸ்வர ஆதினகர்த்தா பிரமங்கு நகுலேஸ்வரக்குரு
 
 
 

臺g =L斤方夸幻 * േn ஆள் அவர்களால் வெளியிடப்பட்டது. உ39-4159