கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்

Page 1


Page 2

தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
டாக்டர் வே. அந்தனிஜான் அழகரசன். எம். ஏ., பிஎச்.டி
தத்துவத்துறை, இந்தியத்துறைப் பேராசிரியர் புனித பிரான்சிஸ் சவேரியார் குருத்துவக் கல்லூரி, கொழும்புத்துறை, யாழ்ப்பாணம் இலங்கை.
தங்கம் பதிப்பகம் 51, ஊரணி, மட்டுநகர் இலங்கை,

Page 3
G வேதமணி சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அந்தனிஜான் அழகரசன் (1938)
முதற் பதிப்பு : ஜனவரி 1984
THANINAYAKA ADIKALIN VAAZHVUM PANIUM
கிடைக்குமிடங்கள் : சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-108. சி. எல். எஸ். புக்ஷாப், சென்னை-3. குட்பாஸ்டர் புக்ஷாப்,
அரண்மனைக்காரன் தெரு, சென்னை-1 தமிழ் இலக்கியக் கழகம், திருச்சி-1.
og 25-OJO
அப்பர் அச்சகம், சென்னை-108.

பதிப்புரை
தமிழ்மொழியின் மாண்பும், தமிழினத்தின் தணிப் பண்பும் உலகமெலாம் பரவும் வகை செய்த தனிப்பெருமை நம் மதிப்புக்குரிய திருத் தந்தை தனிநாயக அடிகளாரையே சாரும். தமிழ்நாடு என்னும் ஓர் எல்லைக்குள் நின்ற தமிழ்க் கலை, நாகரிகம், பண்பாடு ஆகியவற்றை உலக நாடுகளில் பரவச் செய்த பெருமையும் உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில், உலகின் பல்வேறு நாடு களில் மாநாடுகள் கூட்டி உலகளாவி வாழும் தமிழ் இனத்தை ஒன்று கூட்டிய பெருமையும் தனிநாயக அடி களார்க்கே உரித்தாகும்.
அடிகளார் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையில் பயிலும்போது தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அளப்பில. வரலாற்றில் இடம் பெறத்தக்க இத் தமிழ்ப் பெரியாரின் வரலாற்றினை உலகத் தமிழர்கள் அத்துணை பேரும் படித்துப் பயன் பெறுதல் வேண்டும் என்னும் பேராவல் கொண்டு டாக்டர். வே. அந்தனிஜான் அழகரசன் அடிகளார் 'தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்" என்னும் இந் நூல் உருவாக்கியுள்ளார்.
இதில் அடிகளாரின் தமிழ்ப் பணிகளையும், வாழ்வாங்கு வாழ்ந்த வகையினையும் ஒருவாறு தொகுத்துத் தந்துள்ளார். இப் பணியினைப் பாராட்டு முகத்தான் அணிந்துரை, கருத்துரை, பாராட்டுரை ஆகியன வழங்கிப் பெருமக்கள் பலர் இந் நூலுக்குப் புகழ் சேர்த்துள்ளனர். அவர்கட்கும், எமது விருப்பத்திற்கிசைந்து இந் நூலினை அச்சிட்டுத் தரும் பொறுப்பினை ஏற்று, இதனைச் சிறந்த முறையில் அச்சிட்டுதவிய, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சியாளர் உயர்திரு. இரா. முத்துக்குமாரசாமி, எம். ஏ. பி. லிப். அவர்கட்கும் அப்பர்

Page 4
fv
அச்சக்த்தார்க்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளு கிருேம்.
தமிழ் அன்பர்கள் இந் நூலினை வாங்கி உலகெங்கும் பரவும் வகை செய்வார்களாயின் அதுவே, தனிநாயக அடிகளார்க்குத் தமிழினம் செலுத்தும் நன்றிக் கடப்பாடாகும் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிருேம்.
பதிப்பகத்தார்.

காணிக்கை
அவையத்தில் முந்தியிருக்கச் செய்த என் அன்புத் தந்தை வேதமணி சின்னத்தம்பி கணபதிப்பிள்ளைக்கு தனயனின் அன்புக் காணிக்கையாக இந் நூல் நன்றியுடன் படைக்கின்றேன்.
DEDICATION
A humble dedication
to my beloved Father Vethamoney Sinnathamby Kannapathy Pillai Who is Celebrating his first Birthday in heaven on 7-1 - 84.

Page 5

FOREWORD
Dr. R. E. ASHER
Professor of Linguistics, University of Edinburgh
I count myself as fortunate in the fact that my acquaintance with Father Xavier S. Thani Nayagam began thirty years ago, at the very beginning of my involvement with Tamil studies. From that time on until the onset of the illness that finally took him from us, he was a constant source of encouragement. I had the good fortune of opportunities to meet him at quite frequent intervals in one country or another-England, Scotland, France, India, Malaysia, Ceylon (as we knew it at the time). Each contact was a pleasurable one, whether it was by mail, in person or by long-distance telephone, and whether we were concerning ourselves with such severely practical matters as the marking of examination scripts or enjoying ourselves in a discussion of interests that we shared and which were a matter of deep concern to us. Always when one met him one was captivated by his charm, his warmth of personality, his wit, his good humour. Always he had some entertaining experience to relate, some challenging experience to relate, some challenging idea to discuss, some stimulating proposal for the development of Tamil studies.
Where most of us struggle to succeed in a single chosen vocation, he seemed effortlessly to succeed abundantly in two. This is not to say that he made no effort, but rather that he was able to avoid any outward sign of toil or stress. The exceptional energy and resourcefulness were nevertheless there to be seen by those who cared to look. So he was able to serve

Page 6
viii
God fully as a member of the priesthood while making an unparalleled contribution to Tamil studies.
In the spreading within and outside its homeland of an appreciation of Tamil culture, there have been gaany memorable names during the last three centuries or so, a good number of them Europeans-Ziegenbalg, Fabricius, Beschi, Caldwell, Pope, Arden, Vinson, Filliozat, Zvelebil...Yet it would be difficult to sustain a claim that the contribution of any of these or others whom one might name equalled in range that of Father Thani Nayagam. He published outstanding books and articles on classical and modern literature. He made better known the contribution of earlier scholars, both through reprints of almost forgotten books (such as Antao de Proenca's Tamil-portuguese Dictionary of 1679) and through bibliographical and editorial work (such as his A Reference Guide to Tamil Studies and Tamil Studies Abroad: a Symposium). He founded and edited an international journal devoted solely to Tamil, with the happily chosen title Tamil Culture. He occupied with great distinction the Foundation Chair of Tamil Studies in the University of Malaya. He fostered the work of a large generation of younger scholars whose devotion to the cause of Tamil owes almost everything to his early guidance. He travelled far and wide to spread the appreciation of Tamil both by personal contact and in public lectures, speaking in Italian in Rome and Naples and in French in Paris, where he was appointed to the Chair reserved for distinguished foreign professors at that most prestigious of institutions, the College de France. On top of all this and most importantly, he was the inspiration behind the foundation of the International Association of Tamil Research in 1964. Without this, and without Father Thani Nayagam, there would have been no First International Conference-Seminar of Tamil Studies in Kuala Lumpur in 1966 and no succeeding International Conferences in Madras, Paris, Jaffna and Madurai. What had seemed an impossible dream

ix
was realised in a splendid fashion. Nor was the impact of his efforts and his genius felt in the field of Tamil studies alone : scholars, in and lovers of other Indian languages-Sanskrit, Hindi, Malayalam, Telugu - were inspired by his achievements to organise international conferences celebrating their languages.
Father Thani Nayagam’s accomplishments and the fascination the story of his life holds are such that a biography is clearly most opportune. I am happy, therefore, that Father Antony John Alaharasan has found the time and energy to do this valuable service on behalf of his subject's many admirers The ones among these who are not fluent readers of Tamil will await with impatience the subsequent appearance of an English version.
Edinburgh
1983
September, R. E. Asher

Page 7
PREFACE
Dr. M. B. EMENEAU
Professor emeritus of Sanskrit and General Linguistics
University of California, Berkeley, U. S.
Dear Father Anthony John Alagarasan,
With all best wishes for success in yout venture, which will help to preserve the memory of our friend Father Thani Nayagam.
Father Thani Nayagam was known to me only in the most superficial way, but the impact of his personality was profound.
met him first at Kuala Lumpur, where, as Dean of the Faculty of Arts at the University of Malaya and Joint Secretary of IATR, he organised and ran in the most successful way the 1st International Conference - Seminar of Tamil Studies in April 1966. My admiration for his executive skill in what must have been difficult circumstances was unbounded, and was only increased by what I saw of his capabilities, again in difficult circumstances, and his hospitality at the Paris Conference. It is not too much to say that his was a very major share in the initiation and continuation of the outstanding series of Conference, of Tamil Studies and in the continuous background work of the IATR.
His scholarly work on Tamil culture, history, and literature is outstanding, His volume of readings, Tamil Culture and Civilization which I know best, is a brilliant and wide-reaching anthology, which must have had a great impact on the students for whom it was first put together and on the wide circle of readers which I am sure it has continued to reach.

Χί
It was a privilege to introduce him to the library on the Berkeley campus where he did some of his research while he was in this country, and to the Faculty Club where he lived and had what I think was a mutually very happy association with other residents of the Club.
During his Berkeley stay he dined with my wife and me at Fishermen's Wharf in San Francisco. He spoke nostalgically about his childhood in similar seaside surroundings in Sri Lanka. On viewing the sunset over the Golden Gate, he (with his beautiful voice) and my wife amused themselves by recalling apposite verses from English literature.
His perfect and beautiful mastery of the English language and its literature was matched, to the astonishment of his Western friends, by his equal mastery of so many of the West's languages and literatureLatin, French, Italian, and who knows what more. That this enhanced his studies in Tamil literature goes without saying.
He was one of the most well-endowed and civilized men that I have ever known, and his accomplishments were great. We can only regret and mourn that he was taken from us so early.

Page 8
APPRECIATION
Rt. Rev. Dr. B. DEOGUPLLA Bishop of Jaffna, Sri Lanka (Ceylon).
I read through with great pleasure the manuscript of the book entitled the life and work of Rev. Fr. S. X. Thani Nayagam”, written by Rev. Fr. Antony John Alagarasan, M. A., Ph. D., of Batticaloa. I congratulate the author for the great pains he has taken to collect as much information as possible about Fr. Thani Nayagam's life and work, by interviewing his many relatives, friends and acqaintances both in and outside. Sri Lanka, and from books, Reviews and Newspapers. The author has brought out very clearly the many qualities of mind and heart and the great achievements of Rev. Fr. Thani Nayagam in his efforts to make Tamil, Tamil Literature and Tamil Culture better known and appreciated in the World.
had the good fortune of knowing Fr. Thani Nayagam quite intimately for many years. From his younger days he was quite conscious of the linguistic and literary talents that God had given him and he cultivated them well in order to use them in the service of God and men. As a priest he made a deep study of the Tamil Language and Literature in order to equip himself better for his ministry among the Tamil -speaking people of South India and Sri Lanka. Since he was well versed in many European Languages and their literatures, he was able to blaze a trail in the comparative study of Tamil Literature with the Literatures of European Languages. In this field he definitely had an advantage over other Tamil scholars and he excelled in this field.

Χii.
in the midst of all his international activities for the acknowledgement of the antiquity, richness and beauty of the Tamil language and Literature, he remained always a devoted priest of God.
May The life and work of Rev. Fr. S. X. Thani Nayagam' be an inspiration to our younger generation to follow the path opened up by him and thus do service to our Mother-tongue and Culture.
Jafna, 1st October 1983 B. Deogupillai

Page 9
பாராட்டுரை
திரு. இரா. முத்துக்குமாரசாமி, எம் ஏ. பி. லிப். செயலாளர், 5ஆம் உலகத்தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கு, மதுரை.
இந்தியாவின் தென் கோடிப் பகுதியில் தனிப் பெருந் தீவாகத் திகழ்வது கடல்சூழ் இலங்கை. இதன் வடபகுதி யாழிசையொப்ப இன் தமிழோசை பயிலப்பெறும் யாழ்ப் பாணம். இதன் வடமேற்குப் பகுதியிலுள்ளவை ஏழு குட்டித் தீவுகள். அவற்றில் ஒன்று நெடுந்தீவு. அதில் தொண்டை மண்டலத்தைச் சார்ந்த கலைதெரி காஞ்சி மாநகருக்குரிய முதலியார்களின் இனத் தோன்றலான இருமரபும் துய்ய தனிநாயக முதலி இற்றைக்குச் சில நூற்ருண்டுகளுக்கு முன் குடியேறிஞர். அவருடைய வழித்தோன்றலே தரணி முழுவதும் தமிழ் பரப்பிய தவத்திரு. தனிநாயக அடிகளார். அவர் தோன்றியபோது அவருக்கு வீட்டாரிட்ட பெயர் சேவியர் என்பது. அகவை முதிர்ந்தபின் தம் முன்ஞேர் பெயரையும் தம்முடன் இணைத்துக்கொண்டு சேவியர் தனிநாயகம் ஆனுர். இதுவே அடிகளாரின் பெயர் வரலாறு.
தமிழ்த்தாயின் தவமகளுக இலங்கையிற் பிறந்து, இத்தாலியிலும் இங்கிலாந்திலும் இறையியல் பயின்று, இந்தியா வந்து இறைபணி தொடங்கி, தமிழ்மேல் கொண்ட காதலால் தமிழை அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் முறை யாகப் பயின்று, இலங்கையில் தமிழ் பயிற்றுவித்து, தொடர்ந்து மலேசியாவில் அப்பணியை முதிர்வித்து, இடை யிடையே உலகநாடுகள் அனைத்திற்கும் தமிழ்த்தூது சென்று தமிழ் அறிவையும் உணர்வையும் உலகோர்க்கு ஊட்டி, தமிழுக்கு உலகப்பெருமை தேடித்தந்த உலகத் தமிழ்க் குடிமகன் தவத்திரு தனிநாயக அடிகளார்.
திறமான புலமையெனில் அதைப் பிறநாட்டார் வணக்கம் செய்தல் வேண்டுமென்ருர் மகாகவி பாரதி. தமிழ்ப் புலவர்களின் திறமான புலமையைப் பிறநாட்டார் வணக்கம் செய்யப் பெருங்காரணமாக இருந்தவர் அடிகளார்.

xy
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டுமென்று பாடிஞனல்லவா அந்த மகா கவி? அவன் கண்டது கனவு. அதை நினைவாக்கித் தமிழோசை தரணி முழுவதும் கேட்கச் செய்தவர் அடிகளார்.
அடிகளார் பணி பலதிறத்தது. சமயப்பணி. தமிழ்ப் பணி, தமிழ் இதழ்நடத்துதல், தமிழ் பயிற்றுவித்தல், சொற் பொழிவு நிகழ்த்துதல், தமிழ்த்தூதுப் பயணம் மேற் கொள்ளல், தமிழ்பற்றி ஆங்கிலத்தில் அரிய நூல்கள் எழுதுதல், பழைய அரிய நூல்களைப் பதிப்பித்தல், கட்டுரைகள் எழுதுதல், இவ்வாறு பல்வேறு பணிகளில் அடிகளார் தலைசிறந்து விளங்கிஞர்.
இவை அனைத்திற்கும் மேலாக, மணிமுடிபோல் அமைந்தது, உலகளாவிய அளவில் தமிழுக்கு மாநாடு கூட்டியதாகும். ஒரு மொழிக்கு முதன்முதலாக மாநாடு கூட்டிய பெருமை அடிகளாரையே சாரும். தமிழ்நாட்டில் தோன்றிய தமிழர் பலரிருக்கையில் இலங்கையில் தோன்றிய அடிகளாருக்கே இவ்வரிய வாய்ப்பு கிடைத்தது. அதைப் பார்த்தபின் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்டுக் கொண்டது போல இன்று எத்தனை மொழிகளுக்கு உலகளாவிய மாநாடுகள் நடைபெறுகின்றன. அவற்றில் ஒன்ருவது ஐந்து தமிழ் மாநாடுகள் ஒன்றுக்காவது ஈடாக முடியுமா? இவை அனைத்திற்கும் வித்திட்டவர் அடிகளார் என்பதை எவரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.
இத்தகு அரிய பணிகள் ஆற்றிய அடிகளாரின் அருமை பெருமைகளைத் தொகுத்துத்தரும் பணியை இந்நூலின் வழி ஆசிரியர் தவத்திரு அந்தோனிஜான் அழகரசன் அவர்கள் மேற்கொண்டுள்ளார். நூலின் முற்பகுதியில் அடிகளாரின் வரலாற்றைத் திறம்படத் தீட்டியுள்ளார். அவர் சென்ற பல் நாடுகளுக்கும் நேரில் சென்று அவர் வாழ்ந்த இடங்களைப் பார்த்து, அவருடன் பழகிய அன்பர்களுடன் உரையாடி கிடைத்தற்கரிய பல சுவையான செய்திகளைத் தொகுத்துத் தந்துள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பல்வகை களில் தமிழைப்பரப்பிய அடிகளார் வயது முதிர்ந்த காலத்தில் இலங்கையில் நோயுற்ற நிலையில், பார்வை மங்கி, தளர்ந்து போன நிலையில் வாழ்ந்த நிலையை ஆசிரியர் வடித்துக்காட்டி யுள்ள பகுதி படிப்பவர் கண்களைக் குளமாக்குகின்றது.

Page 10
xvi
ஆசிரியரின் எளிய, இனிய இயல்பான தமிழ் ந்டை அடிகளாரைப்பற்றிய செய்திகளைத் தருவதில் தங்கு தடையற்று உணர்ச்சிப் பெருக்கெடுத்தோடச் செய்கிறது. எழுதவேண்டுமே என்று எழுதாது, இயல்பான வாழ்வை எழிலுற எடுத்துக் கூறவேண்டுமே என்ற வேகம் ஆசிரியரிடம் காணப்படுகிறது.
நூலின் பிற்பகுதியில் அடிகளாரின் எழுத்தோவியங் களில் காணப்படும் ஆழ்ந்த கருத்துக்களைக் கடலுள் ஆழ்ந்து முத்தெடுப்பது போல நூலாசிரியர் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ளார். அடிகளாரின் பல்வேறு வகையான சிந்தனை வளத்தை அறிவதற்கு அவை பெருந்துணையாக இருக்கின்றன.
அடிகளாரைப் பற்றிய ஆய்வு நூலைச் செம்மையான முறையில் படைத்துள்ள தவத்திரு அந்தனிஜான் அழகரசன் அவர்களின் அருமுயற்சியைப் பாராட்டுகிறேன். வாழ்க அவர் தொண்டு.

பாராட்டுரை
LirdLif S. GigTF u UTg
துரத் தலைவர், மலேசியத் தமிழர் பேரவை ஈப்போ, மலேசியா,
தமிழ் கூறும் நல்லுலகில் மட்டும் அல்லாமல் தரணி எங்கும் தமிழ் மணம் வீசவேண்டும் என்ற வற்ருத தாகத் தால் தமிழுக்கும் தமிழ் அன்னைக்கும் அரிய பல தொண்டினே ஆற்றிய தமிழஅறிஞர் தனிநாயக அடிகளார் ஆவார். தமிழ் வளரவேண்டும், தமிழ் இனம் தழைக்கவேண்டும், தமிழ்ப்பண்பாடு சிறப்புறவேண்டும் என்ற எண்ண அல களால் தாக்கப்பட்டு தம்மையே முழுக்க அர்ப்பணித்த ஆண்டவனின் அருளாளர் அவர். எங்கெல்லாம் தமிழை வளர்க்கவேண்டுமோ அங்கெல்லாம் தன்னலம் கருதாது, அயராது உழைத்துத் தம்மையே வருத்திக்கொண்டு தமிழ் அன்னைக்கு எல்லையில்லா சேவை புரிந்தவர் அடிகளார் என்ருல் அது மிகையாகாது. அடிகளாரின் தொண்டிற்குச் சான்று பகருவது முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடாகும். அடிகளாரின் தன்னல அாப்பணிப்பின் விளை வாகத் தமிழ் நெஞ்சங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார் அடிகனார்.
அறிஞர் தனிநாயக அடிகளின் வாழ்க்கையிஞலும், பணியிஞலும், சிந்தனை ஒட்டத்தினுலும் கவரப்பட்ட அறிஞர் அந்தனி ஜான் அழகரசன் அடிகள் நான்கு ஆண்டுகளாக அயராது உழைத்து 'தனிநாயக அடிகளின் வாழ்வும் பணி பும்" என்ற ஓர் அரிய நூலைப் படைத்துள்ளார். காலத்தை வென்று வாழும் நூலாக இந்நூல் அமையும் என்பது திண்ணம். அடிகளாரின் சீரிய வாழக்கையைப் பல கோணத் திலே இருந்து அலசிப்பார்க்கின்ருர் அழகரசன் அடிகள். தமிழை, தமிழ் இலக்கியத்தை, தமிழ்ப்பனபாட்டை அறிய விரும்பும் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இருக்கவேண்டிய ஒப்பற்ற நூல் இந்த நூலாகும்.
a-l

Page 11
Кvi
இந்நூலின்கண் அழகரசன் அடிகளார் ஆங்கில மோகம் கொண்ட காலகட்டத்திலே எவ்வாறு தனிநாயக அடிகளார் தமிழின் தொன்மையால், பண்பாட்டுச் சிறப்பால் தாக்கப்பட்டுத் தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப் படித் தார் என்று அழகாக எழுதியுள்ளார். இன்று நம்மில் பலர் பெயரளவில்தான் தமிழர்களாக இருக்கின்ருேம். நம் முடைய பாரம்பரியப் பெருமையை, இலக்கியச் சிறப்பை அறியாதவர்களாக வாழ்கின்ருேம். தமிழ்மொழி பேசிஞல் தரம் குறைந்தவர்களாக எண்ணப்படுவோம் என்ற தப்பான எண்ணம் கொண்டு தமிழ்மொழி பேச வெட்கப்படுகின்ருேம். நம் கலாசாரத்தைக் காற்றிலே பறக்கவிடுகின்ருேம். இத் தகைய போக்கை மாற்றித் தமிழின் சிறப்பை உணர முற்படு வோம். தமிழ்மொழியை வளர்ப்போம்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு-நம்மில்
ஒற்றுண்ம நீங்கின் அண்வரிக்கும் தாழ்வு"
என்ற பொன்மொழிக்கேற்ப தமிழன் தனிமரமாக நில்லாமல் தோப்பாக நின்று தமிழ்மொழியை, தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கவேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை கண்டவர் தனிநாயக அடிகள். அவரின் மனப்பாங்கு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கவேண்டும். அடிகளாரின் இத்தகைய சிறப்புக்கூறு தளையெல்லாம், அழகாக, இனிய தமிழில் அழகரசன் அடிகள் நமக்கு இலக்கிய விருந்தாகப் படைத்துள்ளார். இவ்வரிய நூலை யாத்த அழகரசன் அடிகளைப் பாராட்டுகின்றேன். தமிழ்கூறும் நல்லுலகம் இந்நூலைப் படித்து எழுச்சிபெற வாழ்த்துகின்றேன். வாழ்க தமிழ் வளர்ச தனிநாய்க அடிகளின் புகழ் م -

அறிமுகவுரை
வடவை தமிழ்த்தீபம் அன்னக்கிளி இராசையா
ஈப்போ, மலேசியா,
"இமீழ்கடல் வைத் திலங்கு வெழிக்குவி
அமிழ்தமே பாகும் தமிழ்"
என்பதும்,
அந்த அமிழ்தத் தமிழே உலகில் வழங்கும் மொழிகட் கெல்லாம் மூத்த மொழி என்பதும்,
மூத்த மொழியெனினும் முதுமைக்கோலம் பூணுமல் கன்னிக் கோலம் பூண்ட மொழி என்பதும்,
மொழிகளைச் சுவைத்து அவற்றின் குணக் கூறுகளை ஆய்ந்தறிந்து வகைப்படுத்தும் பன்மொழி நூலார் நிறுவும் உண்மை
இத்தகு முத்ததும், இனியதும் நிரந்தர இளமைத் தன்மை கொண்டதும் இன்ன பிற சிறப்புக்கள் நிறைந் துள்ளதுமான தமிழ்மொழியின் சரிதையில் மொழிக்கென்று உலகளாவிய நிலையில் விழாவெடுத்ததும், மாநாடு கூட்டிய தும் ஆராய்ச்சி நடத்தியதும் முத்ன் முதலில் தமிழுக்குத் தான் ! t
அதுவும் மொழி வரலாற்றின் நீண்ட ஆயுள் காலத்தில் அது நடந்தது இந்த நூற்ருண்டில்தான்.
தமிழர்கள் தாங்கள் வாழும் இடத்துக்குள்ளேயே ஒன்றுபட்டு உருப்படியான ஒரு செயலைச் செய்வதென்ருலும் அதற்கு ஓராயிரம் எதிர்ப்புக்களும் சிக்கல்களும் வந்து குறுக் கிட்டு பிரச்சினைகளை ஏற்படுத்தித் தடைசெய்யுே
அப்படியிருக்க,
உலகின் திக்கெட்டும் பாவி வாழும் பைந்தமிழ் அறிஞர் பெருமக்கன் ஒன்று கூட்டி, விழாவெடுத்து ஆராய்ச்சி மாநாடு நடத்துவதென்ருல் அது சாதாரணமாய்ச் செய்ய epudia qui a faunar ?

Page 12
அதற்குக் குறுக்கீடாக வரும் கருத்து வேறுபாடுகள், எதிர்ப்புகள் தேவைமிக்கதாயுள்ள அரசாங்க ஒப்புதலடங்கிய ஒத்துழைப்புகளைப் பெறுவதில் சிரமங்கள் பேராளர்களின் பயண ஏற்பாடுகள், பயணச் செலவுகள் இப்படி எத்தனை எத்தனையோ பிரச்சினைகளிருக்குமே!
ஆஞல் அப்படிப்பட்ட இடைஞ்சல்கள் வந்தபோது, அவற்றைக் கண்டு மலைக்கவோ மகுண்டுஎடுத்தகருமத்தைச் செய்யாது விட்டுவிடவோ அல்லது செய்வதற்குச் சாக்குப் போட்டு, காலதாமதம் செய்யவோ செய்யாமல்,
'erairau gpay-asas Gafar Gut"
என்பதற்கிணங்கத் தம் திறமையெல்லாம் ஒன்ருய்க் கூட்டி நன்ருய்க் காட்டித் தம்மோடு கூடிய அறிஞர் பெருமக்கள் பலரின் துணைகொண்டு தடைகளனைத்தையும் உடைத் தெறிந்து அந்த முதல் மாநாட்டை நடத்தித் தமிழ் மொழியை, உலக அரங்கில் அரியாசனமேற்றி வைத்தார்,
தமிழ்த்தூதுவர் தவத்திரு தனிநாயக அடிகளார்." தமிழ் கூறு நல்லுலகில் என்றும் அழியாப்புகழுடன் வாழும் தமிழ் வளர்த்த பெரியார்களின் வரிசையிலே இடம்பெறத் தக்கவரான அந்த அருமந்த மனிதரின் வாழ்வையும் பணி கண்பும் அப்படியே பிரதிபலித்துக் காட்டும் கண்ருடியாய் விளங்கும் பொன்னேடே இந் நூல்
தெள்ளு தமிழ் உரைநடையாக்கமான இப் புத்தகத்தை ஆகுவாக்கியவர், டாக்டர், அந்தனிஜான் அழகரசன் syssurarrafserrari.
சங். தனிநாயக அடிகளாரும் சங். அந்தனிஜான் அழகரசன் அடிகளாகும் ஒரே நாட்டில் பிறந்து வளர்ந்து பயின்று குருத்துவ அந்தஸ்தை மேற்கொண்டவர்க. arraBriassir.
இருவரும் சில சந்தர்ப்பங்களில் ஆலயக் குருமனைகளில் ஒன்ருய்த் தங்கி, பழகி நட்புறவு கொண்டு வாழ்ந்து வந் திருந்ததால் ஒருவரைப்பற்றி ஒருவர் எல்லா வகையிலும் நன்கு தெரிந்திருந்தார்கள்.
சங்கைக்குரிய தனிநாயக அடிகளார் இறைவனடி Garitisgå,
“Jaapallige Garama Gardasafar arasarado

ki
என்னும் சக்தி வாக்குக் கொப்ப, அடிகளார் தமிழுக்குச் செய்த மாட்சிமிக்க சேவைகளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை நூல் வடிவில் அமரகாவியமாக்கும் பணியை மேற்கொண்டார் அழகரசன் அடிகளார்.
ஏற்கெனவே அவர் தனிநாயக அடிகளாரையும் அவரது சிறப்புகளையும் தெரிந்திருந்தாலும் தனிநாயக அடிகளாரைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் இன்றைய தமிழுலகம் ஒப்பத் தக்கதாய் எழுதும் வகையில் அவரைப்பற்றி எல்லாம் சரிவரத் தெரிந்திருக்க நியாயமில்லையே!
ஆகவே,
“Judë star ardë Eudafirët asadë.p
சிறந்தார்க்குச் செவ்வ னுரைப்ப-சிறந்தார்
Spisao var varůd sa QasrairG” என்னும் சிந்தியல் வெண்பாவுக்கொப்பத் தனிநாயக அடிகனார் பற்றிய சிறப்புக்கள் செறிந்துகிடக்கும் நாடுகள் பலவற்றிற்குப் பயணம் மேற்கொண்டு ஆங்காங்கு அவர் தொடர்பிருந்த இடங்களையும், தமிழ்த் தொண்டர்களையும் தேடிக்கண்டுபிடித்து முடிந்த அளவு அவர்பற்றி நூலெழுதத் தக்க செய்திகள் சேகரித்ததுடன் தமக்குச் செல்ல அவகாச மில்லாத சில நாடுகளுக்கு மடல் வழி தொடர்பு கொண்டு செய்திகளை அறிந்தும் முறையாய் அமைத்து இந் நூல் யாத்திருக்கின்ரூர் டாக்டர். அந்தனிஜான் அழகரசன் அடிகளார். பல நூற்ருண்டுகளுக்கு முன்பே தமிழரின் பெருமை கூறும் பல ஆதாரங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி, காட்டப்பட்டிருந்திருக்கின்றதென்னும் உண்மை யைச் சான்றுகளுடன் துலக்கிக் காட்டியுள்ள தனிநாயக அடிகளாரின் தமிழ் ஆய்வு கண்டுபிடிப்புச் செய்திகள் இந் நூலில் அடங்கியிருப்பது தமிழுக்குச்சாற்றும் புகழாகும்.
இந் நூல் ஆளுவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வெளியிடத் தீர்மானித்திருப்பது நூலின் தகுதிக்குப் பொருத்தமானதாகும்
நம் நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் பிறமொழியில் பெயர்த்தல் வேண்டும் என்னும் பாரதியின் வாக்குக்கொப்ப தேன் மதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்த தமிழ்த்தூதுவரின் "வாழ்வும் பணியும்" என்னும் இந் நூல் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு உலகின் பிறமொழி அறிஞர்

Page 13
kk
பெருமக்களும் படிக்கத் தக்கதாய்ச்செய்வது நூலுக்கு மேலும் சிறப்பாகும்.
தமிழுலகம் போற்றும் சங். தனிநாயக அடிகள்ார் தமிழகத்தில் முதன் முதலில் (ஆங்கில ஆசிரியராகப் பணி புரிய வந்ததும், தமிழ்மொழியை முறையாகக் கற்றதும் வடக்கன்குளம் என்னும் ஊரில்!
தமிழுக்குப் புகழணியாய் விளங்கும் தேம்பாவணி யாத்த வீரமாமுனிவர்" இந்தியாவில் வந்திறங்கி முதன்முதலில் சென்று சமயப்பணியாற்றி அரிஓம் (ஹரிஓம்)என எழுத்தாணி எடுத்துத் தமிழ் கற்றதும் வடக்கன்குளத்தில்தான் அந்தச் சரித்திரப் புகழ்வாய்ந்த ஊராளாகிய நான் இந்த மலேசியா வில் தமிழுக்குத் தொண்டுபுரிகிறேன் என்பதை அறிந்து மகிழ்ந்து எனக்கு இந்தச் சிறப்பான நூலில் அறிமுகவுரை எழுத வாய்ப்பளிதத ஞானத்தந்தை அழகரசன் அடிக ாாருக்கு எனது மனமார்ந்த நன்றியைக்கூறி,
“(sagistras Gserápdisra
ஆவலம் ஓடி சேவை புரிவோம்"
என்னும் தமிழ்த்தூதுவர் தனிநாயக அடிகனாரின் விருது வாக்கின்படி சேவைகள் செய்து தேவனிடத்தில் சமா தானமும் மக்கள் சமுதாயத்திடையே நிலைத்த புகழும் பெற வாழ்த்துகிறேன். வணக்கம் !
1-12-1983. esirakað DramaFUI.u.

வாழ்த்துரைகள்
"தனிநாயக அடிகளின் வாழ்வும்-பணியும்" என்ற ஆய்வு நூலப் பல ஆண்டுகளாக எழுதி இப்பொழுது அச்சுவாகனம் ஏற்றிய டாக்டர் வே. அந்தனிஜான் அழகரசன் அடிகளாரை "வாழ்த்துவதில் பெருமை அடைகின்ருேம். அடிகளாரின் பணி அறுந்துபோகாமல் அவரின் அடிச்சுவட்டைத்தொட்டு கிறிஸ்த வத்துக்கும், தமிழுககும் தொடர்ந்து பணிசெய்து வருகின்ற அழகரசன் அடிகள் நீண்ட நெடுங்காலம் வாழ வாழ்த்து desirgests.
S. லூர்துசாமி குடும்பத்தினர் இலக்கம் 17, புதுக்கிராமம், ஜெலப்பாங், ஈப்போ,
மலேசியா,
கிறிஸ்தவமும்-தமிழும் தழைக்க, சிறக்கப் பணிபுரிந்த தனிநாயக அடிகளின் முழு வாழ்க்கை வரலாற்றை முதன் முதலாக எழுதி வெளியிடுகின்ற அழகரசன் அடிகளாசை நாங்கள் வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகின்ருேம்.
தமிழ் கிறிஸ்தவ மக்கள்
கம்போங் செக்கடி
ஈப்போ, மலேசியா,
தனிநாயக அடிகளின் வாழ்க்கை மறந்துவிடக்கூடிய ஒரு வாழ்க்கை அல்ல. அவருடைய வாழ்க்கை பொன் எழுத்துக் களால் பொறிக்கப்படவேண்டிய ஓர் இலட்சிய வாழ்க்கை யாகும். அந்த இலட்சிய வாழ்க்கைக்கு இலக்கிய வடிவம் கொடுத்துள்ளார் டாக்டர் அந்தனிஜான் அழகரசன் அடிகள். *தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்” என்ற நூல் மூலம் அடிாளார் என்றும் தமிழ் உலகில் உலா வருவார். இச் சிறந்த் பணியைச் செய்த அழகரசன் அடிகளை தாங்கள் உளமார வழுத்துகின்ருேம்.
பத்துக்காஜா வாழ் தமிழ்ப் பெருமக்கள்
மலேசியா.

Page 14
XXiν
"முயற்சி தன் மெய் வருந்தக் கூலி தரும்" என்பது வள்ளு வனின் வாக்கு. இவ் வாக்குக்கு வாய்மை கூட்டுவதுபோல் அமைந்து இருந்தது தனிநாயக அடிகளின் தன்னலமற்ற வாழ்க்கை.
கிறிஸ்தவ குருவாக விளங்கிய அவர் தமிழ்த்தாயை அரவணைத்து, அதன் பயணுக அத்தாயின் சேவையைச் சிறப் பாகச் செய்து முன்னேறிஞர். அத்தகைய சிறப்பு மிக்க வாழ்க் கையை அழகரசன் அடிகளார் 'தனிநாயக அடிகளின் வாழ்வும்பணியும்" என்ற நூல் வழியாக நமக்குத் தந்துள்ளார்.
தனிநாயக அடிகளார் தம் தமிழ்த்தாயின் சேவைப் பாதையில் சென்றுகொண்டிருந்த சமயம் இடையிடையே சப்போவுக்கு வருகை புரிந்திருக்கின்ருர். அன்று இருந்த அகில மலேயா தமிழர் சங்கத்தின் தலைவன் என்ற முறையில் அடியேன் அடிகளாரோடு தொடர்பு கொண்டிருந்தேன். அடிகளார்பற்றிய இந்நூலில் வாழ்த்துக்கூற எனக்கு வாய்ப் பளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அவர் தொண்டனுகிய அழகரசனுக்கும் நன்றி.
is al. (p. மகாலிங்கம்,
அறங்காவலர்; பாபாஜியோக சங்கம்
சப்போ, மலேசியா
அறங்காவலர்” மலேசியா இந்து சங்கம்,
பேராக், மலேசியா.
தலைவர்: பேராக் இந்திய வணிகர் சங்கம்,
பேராக், மலேசியா.
எங்கள் ஊராகிய வடக்கன்குளத்தில்தான், உலகம் போற்றம் உத்தமர். தனிநாயக அடிகளார், முதன்முதலாக சமயப்பணியும்-தமிழ்ப்பணியும் செய்தார் என்று கூறுவதில் நாங்கள் பெருமை கொள்கின்ருேம். அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் முதன்முதலாக எழுதி வெளியிடுகின்ற அழகரசன் அடிகளை எங்களால் வாழ்த்தாமல் இருக்கவே முடியாது. இப்பணியைச் சிறப்பாகச்செய்த டாக்டர் வே. அந்தணி ஜான் அழகரசன் அடிகளாருக்குத் தமிழ்கூறும் நல்லுலகமும், சிறப்பாக அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றமும், அனைத் துலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், அனத்துலகத்தமிழ்

Σ ΚΟΚΑ
ஆராய்ச்சி மாநாடுகளும் பெரிதும் கடமைப்பட்டிருக்கின்றன. அழகரசன் அடிகளின் பணி சிறக்க எங்கள் இதயம்கனிந்த வாழ்த்துக்கள்.
AS. K. M. Pada UGT, திரு. K. M. ஜான் சேவியர்
சகோதரர்கள்,
வடக்கன்குளம்,
தனிநாயக அடிகளை நான் நினைக்கும்பொழுது அவரை ஒரு தனிமனிதளுக நினைக்கவில்லை. அவரை இயேசு கிறிஸ்துவின் உண்மைத்தாசனுகவும், தமிழ் உலகமாகவும் கருது கின்றேன். அவர் பணி உலகளாவப் பரந்து விரிந்து சிறந்து விளங்கியது. அவருடைய பணிகளின் சிறப்புக்கள் காலச் சக்கரத்தில் சுழன்று, சிதைந்து, வேற்றுரு எடுக்காமல் இருக்க அழகரசன் அடிகள், தனிநாயக அடிகள் இறந்து நான்காண்டுக் குள் உண்மை நிகழ்ச்சிகளை வைத்து 'தனிநாயக அடிகளின் வாழ் -வும் பணியும்" என்ற ஓர் ஒப்பற்ற ஆய்வு நூலைத் தமிழ் உலகுக்குத் தந்துள்ளார். அவருக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது. தனிநாயக அடிகளின் பணிபோன்று அழகரசன் அடிகளின் பணியும் சிறக்க வாழ்த்துகின்றேன்.
வடிவை திரு. மரியதாஸ், பத்துக்காஜா, மலேசியா.

Page 15
என்னுரை
கிழக்கையும், மேற்கையும் இணைத்த பாலம் தனிநாயகமாகும். "தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற தேசியக்கவிஞன் பாரதியின் கனவை நன வாக்கிய தமிழ்மக்களின் நம்பிக்கை நங்கூரம் தனிநாயகமாகும் தாள் சென்ற நாடுகளிலெல்லாம் தமிழின் அருமை பெருமை யெல்லாம் அழகாக எடுத்துரைத்து, தமிழ் இலக்கியத்தின் இனிமை, தொன்மை மேன்மை எல்லாம் எடுத்துக்காட்டி உலகிலே தலைசிறந்த ஒரு பண்பாட்டிற்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்று பறைசாற்றி, அந்நாட்டு மக்களிடையே தமிழ்ப் பற்றையும், ஆர்வத்தையும், எழச்செய்த எழுச்சிமிக்க தலைவன் தனிநாயகமாகும். உலகமெலாம் தமிழ் மணம் மணக்கச் செய்த ஓர் அற்புத மலர் அவர். உலகமெலாம் தமிழ் ஒலிக்கச் செய்த ஓர் ஒப்பற்ற ஒலிபெருக்கி அவர். வடமொழியின் பெருமையை மட்டும் அறிந்திருந்த மேற்கத்திய மக்களுக்குத் தமிழின் கவின் மிகு சிறப்புக்களை எடுத்தோதிய இருபதாம் நூற்ருண்டுக் கபிலர் அவர். வெளிநாட்டார்களையும் தமிழ் இயல் ஆராய்ச்சியில் ஈடு படுத்திய் தனிப்பெரும் தமிழ்ச் செல்வம் அவர்.
தமிழ்மொழி தெரிந்தால் மட்டும் தமிழ்ஆராய்ச்சி செய்யலாம் என்ற நிலையை மாற்றி, தமிழ் தெரியாதவர்களும் தமிழ் ஆராய்ச்சி செய்யலாம் என்ற புதுக்கொள்கையைத் தமிழ் ஆராய்ச்சியில் புகுத்தி வெற்றி கண்ட தமிழ் ஆராய்ச்சித்தந்தை அவர்.
உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம்!
உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள்! ypš69ắassir svG “Tamil Culture” இப்படி இன்னும் எத்தனை, எத்தனையோ அழியாச்சின்னங்கள், அடிகளின் தமிழ்ப்பணியைப் பறைசாற்றும் நினைவுச்சின்னங்கள். இத்தனை சிறப்புக்கும் உரிய தமிழ்த்துரது தனிநாயக அடிகளாரின் வாழ்க்கை மறந்து விடக்கூடிய ஒரு வாழ்க்கையா ? சொல்லுங்கள், இல்லவே இல்லை; "தமிழுக்குத்தொண்டு

V
TLTLTL LT LTTTLGeeeS LTTTLTL TLLTTTLLLLLLL LLLLLLLTLTLTS ஆம்! அடிகளாருடைய வாழ்க்கையின் விருதுவாக்கும்-திரு. மூலகுடைய வார்த்தைக்கு வடிவம் கொடுத்த வாழ்க்கையாகும்.
“arcarðar gapapavar sargrasŮ uaouas salurað Ascăråkar sairas iš sud AaFůy unrao”
எனவே அவருடைய தமிழ் வாழ்க்கை மகத்தான சாதனைகள் மிக்க பெருமை மிக்க வாழ்க்கையாகும். அவருடைய வாழ்க்கை வாழ்ந்து முடிந்துவிட்ட ஒரு வாழ்க்கை அல்ல; வாழ்க்கைக்குத் தனிமுத்திரை பதித்த வாழ்க்கையாகும். தமிழ் ஆராய்ச்சியில் அவருக்கு ஒரு தனியான இடம் உண்டு என்பது மறுக்க முடியாத மறைக்கமுடியாத ஒரு வரலாற்று உண்மை.
இத்தகைய சிறப்புமிக்க வாழ்க்கை நடத்திய தனிநாயக அடிகள் தமிழைத்துறக்காத கிறிஸ்தவ துறவி. அவர் கிறிஸ்துவைத் தம் கடவுளாக, வாழ்க்கையின் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். என்றும் வாழும் கிறிஸ்துவின் மலரடிகளில் என்றும் வாடாத ஒரு தனிப்பூவாகப் பூத்துக்கொண்டே இருப்பார். அவர் கன்னித்தமிழின் காவலன். எனவே, தமிழ் உள்ளவரை அவரும் வாழ்ந்துகொண்டே இருப்பார்.
இப் பெருந்தகையுடைய வாழ்க்கை வரலாற்றை “தனி நாயக அடிகளின் வாழ்வும் பணியும்" என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதி வெளியிட முயன்றேன். கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டேன். அடிகளார் தரணி எங்கும் தமிழ்த் தூது சென்றவர் அல்லவா ? அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாற்றை எழுத முற்பட்ட அடியேன், அடிகளாரின் ஒரு சில நூல்களை மட்டும் படித்துவிட்டு இந் நூல் எழுத விரும்பவில்ல். அடிகளாரைப்போன்று, அவர் விட்டுச்சென்ற அடிச்சுவட்டைப் பின்பற்றி, அடிகளார் சென்று பணிபுரிந்த ஒரு சில நாடுகளுக்குச் சென்றேன். அவர் பணிபுரிந்த பல்கலைக்கழகங்கள், கல்விக் கூடங்கள், கோயில்கள், இலக்கியமன்றங்கள், போன்ற வற்றிற்குச் சென்று குறிப்புக்கள் எடுத்தேன். அடிகளாரின் உறவினர்கள், நண்பர்கள், மாணவச்செல்வங்கள், குருக்கள், பேராசிரியர்கள், வாழ்க்கையின் பல்வேறு தில் வில் உள்ளவர்கள் அடிகளாருக்கு அறிமுகமான பலரையும் கண்டும், கேட்டும் குறிப்பெடுத்தும் இந் நூலை உருவாக்கியுள்ளேன். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு நேரடியாகச் சென்றும், அடிக்ளார் தமிழ்த்தூதாகச்சென்ற சில மேற்கத்திய

Page 16
xxvili
தாடுகளில் வாழும் தமிழ் அன்பர்களோடு கடிதத்தொடர்புகள் கொண்டும், செய்திகள் சேகரித்தும் இந் நூல் யாத்துள்ளேன்.
அடிகளாரின் மலேசியத்தமிழ்ப்பணியை ஆழ்ந்து அறி வதற்குப் பெரிதும் உதவிபுரிந்த நண்பர் செபஸ்தியான் வேத நாயகத்திற்கு அடியேன் என்றும் கடப்பாடுடையேன். மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறையில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்ற திரு. இராஜ கிருஷ்ணன் அடிகளாரின் கோப்புகளைக் (Files) கொடுத்து உதவிஞர்கள். அவருக்கும் அடியேனின் நன்றி உரித்தாகுக.
மலாயப் பல்கலைக்கழக நூலகத்தாருக்கும், அடிகளார் தமிழ் நேசனுக்கு எழுதிய கட்டுரைகளைப் பார்க்கவும், படிக்கவும், குறிப்பெடுக்கவும் உதவிய தேசிய மலேசிய ஆவணக்காப்பகத் தாருக்கும் என் நன்றி உரித்தாகுக.
இந்நூல் விரைவில் அச்சுவாகனம் ஏறவேண்டும் எனத் துடியாய்த் துடித்த மலேசியாவில் உள்ள ஈப்போ தமிழ் அன்பர்கள் நான்குபேரை இங்கு குறிப்பிடாமல் என்ஞல் இருக்கமுடியாது அவர்கள் முறையே ஈப்போ தமிழர் பேரவைத்தலைவர் டாக்டர் S. ஜோசப் ராஜா, அவரது அன்புத்துணைவியார் சுசி ஜோசப் ராஜா, திரு, இராசையா, அவரது துணைவியார், வடவை தமிழ்த்தீபம் அன்னக்கிளி இராசையா, என்பவர்களே இந்த நான்குபேரும். இவர்கள் செய்த அளப்பரிய உதவிகளுக்கு அடியேன் என்றும் கடப்பாடுடையேன்.
மேலும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிச் சிறப்பித்த டாக்டர் ஜோசப் ராஜாவுக்கும், அழகுமிக்க அறிமுகவுரை எழுதிய மலேசியாவில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் வடவை தமிழ்த் தீபம் திருமதி அன்னக்கிளி இராசையாவுக்கும் அடியேன் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
எனது தமிழ்ப்பணியில் அக்கறை எடுத்து, ஆக்கமும் ஊக்கமும் கொடுத்துவருகின்ற, இலங்கைத்தமிழ்த் தலைநகரான, யாழ்மறைமாவட்டத்தின் ஆயராக இலங்குகின்ற டாக்டர் -வ. தியோகுப்பிள்ளை அவர்கள் மனம் உவந்து இந்நூலுக்கு அழகியதொரு முன்னுரை வழங்கியிருக்கிள்ளுர்கள். அவருக்கு
அடியேன் இருகைகூப்பி நன்றி தெரிவிக்கின்றேன்.
எ டின் பேக் பல்கலைக் கழகத்தின் மொழியியல்துறைம் பேராசிரியர் டாக்டர் R. E. ஆசர் அடிகளாரை நன்கு அறிந்

xxx
ஆர். அவர் இந்நூலுக்கு முன்னுரை ஒன்று தந்ததுமூலம், இந்நூலுக்கு ஏற்றம்.தந்துள்ளார்.அன்னுருக்கு என் உள்ளத் தின் ஆழத்தில் இருந்து நன்றி நவில்கின்றேன்.
கலிபோனியாப் பல்கலைக்கழக, முன்குள் மொழியியல் துறைப் பேராசிரியர்-டாக்டர் M. B. எமஞே அவர்களும் நல்லதொரு முன்னுரை வழங்கி நூல் அணி செய்துள்ளார். அவருக்கு நன்றி.
எனது கெழுதகை நண்பரும், ஐந்தாம் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டின் பொதுச்செயலாளருமான உயர்திரு. இரா. முத்துக் குமாரசாமி அவர்கள் அன்புடன் என் நூலைப் படித்துப்பார்த்து, வேண்டிய திருத்தங்களைச் செய்தும் சிறப்பானதோர் அணிந்துரை அளித்து நூலைச் சிறப்பித்துள்ளார்கள். அன்ஞருக்கு மிக்க. நன்றி. வாழ்த்துரைகள் வழங்கிய எல்லா நண்பர்களுக்கும் நன்றி.
தனிநாயக அடிகளாரைப்பற்றிப் பேசுவதற்கும், அவர் பற்றி அறிவதற்கும், மலேசிய வாஞெலியிலும், மலேசிய தொலைக்காட்சியிலும் அடியேன் உரையாற்றுவதற்கு வாய்ப் புக்களை உருவாக்கித்தந்த டாக்டர் S. சைனுதீன் அவர்களுக்கு அடியேனின் இதயம்கனிந்த நன்றி.
'தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்" என்ற நூல் வெளிவருமுன்னரே அந்நூலுக்கு ஆதரவு திரட்டித்தந்த 'Strai Times" என்ற மலேசிய ஆங்கிலச் செய்தித்தாளுக்கும், தமிழ் நேசன், தமிழ் ஓசை, தினமணி ஆகிய தமிழ்ச் செய்தித்தாள் களுக்கும் நன்றிகள் பல நவில்கின்றேன்.
நூல் விரைவில் நூலேறத் துணைசெய்த கோலாலம்பூர், சிரம்பன், மலாக்கா, ஈப்போ வாழ் தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!11
சிரம்பன் S. செல்வத்துரை மலாக்கா ஜோசப் வேந்தர்க். கோன், கோலாலம்பூர் அழகரத்தினம், மறைத்திரு S. அமல நாதன் அடிகள், ஜோக்கிம் செபஸ்தியான், வலண்டைன், போன்ற நண்பர்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
இந்நூல் வெகு சிறப்புடன் அச்சேற்றித்தந்த அப்பர் அச்சகத்தாருக்கு என் உளமார்ந்த நன்றி உரித்தாகுக

Page 17
arah piyamL-au Casatrapidsráfurü Lumpurb Apờo gaunua தற்குக் காரணர்களாக இருந்து பல்லாற்றலும் துண்செய்த சிங்கப்பூர் லூர்துமாதா பங்குத்தந்தை அலோசியஸ் துரைசாமி அடிகளாருக்கும், திருமதி எஸ்தர் & அந்தோணிக்கும் எனது அன்பு கலந்த நன்றி உரித்தாகுக. எல்லாவற்றிற்கும் மேலாக బ్లాస్టో* எழுத அடியேனுக்குத் திருவருள் புரிந்த இயேசுவுக்கு
56r
தனிநாயக அடிகளrரின் நூலப் படியுங்கள். அவர்போல் தமிழ் உணர்வு பெறுங்கள். தனிநாயக அடிகளின் நாமம் வாழ்க! அவர் புகழ் ஓங்குக.
@=
il--1984 வே. அந்தனிஜான் அழகரசன் அடிகள்س-

l.
4.
உள்ளுறை
பக்கக்
கரம்பென்னில் பூத்த கனகாம்பரப்பூ
(அ) ஆரம்பக் கல்வி, (ஆ) துறவறத்தில் நாட்டம். (இ) திருவனந்தபுரத்தில் அருட்செல்வன் சேவியர், (ஈ) கழகமும் வத்திக்கான் வானுெலியில் முழக்கமும், (உ) தனிநாயகம் என்ற பெயர்க் காரணம், (ஊ) தனி நாயக அடிகள் மேற்கொண்ட வாழ்க்கையின் விருது வாக்குகள்
உரோமையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு
தூத்துக்குடி - வடக்கன் குளத்தில் ஆசிரியர், குருத் துவப் பணி.
அன்னுமலைப் பல்கலைக்கழகத்தில்
அண்ணுமலைப் பல்கலைக் கழக வாழ்க்கை. தூத்துக்குடியில் சமய இலக்கியப் பணி
தமிழ் இலக்கியக் கழகம் - கத்தோலிக்க இலக்கியத் திங்களின் தலைவர் - கத்தோலிக்க சஞ்சிகைகளின் கட்டுரையாளர் - அடிகளின் சமயப் பணி - முத்திங்கள் ஏட்டின் முதல்வர் - கத்தோலிக்க தமிழ் எழுத்தாளர் மகாநாடு - பயண இலக்கியத்தின் முன்னுேடிகளில் ஒருவர். இலக்கியத்திங்களைத் தோற்றுவித்தவர் - தூத்துக்குடி மேற்றிராசனத்தின் குரு.
மனிதனை மனிதனுக மதித்த மாணிக்கம்
அடிகளுக்குப் பணிவிடை புரிந்த மிக்கேல் - மனித தலம் பேணி வாழ்ந்தவர்.
6
27.

Page 18
6.
9.
0.
ll.
XXxii
பக்கம்
அடிகளின் மாதா பக்தி
st-asafler aflustrar avăduia (Marian Litera - ture) - தேம்பாவணியும், தனிநாயகமும்,
Saanslóð segsfür Luar
தனிநாயகம் பேசிற்று - தமிழ் உலகமே பேசிற்று - தணி நாயக அடிகளாரின் ஆறு ஆசைகள் - இலங்கையில் அடி களின் பணி. நான்கு கட்டங்களில் -முதல் கட்டம் 19521955 வரை-இலங்கையில் அடிகளின் பணி-இரண்டாவது கட்டம் (1957-61) - நடமாடும் நூலகமும் S, H. ஜெப தேசன் அடிகளும் - புத்தகக் கண்காட்சி - சத்தியாக்கிரகத் தில் பங்கெடுப்பு.
Defur Grší starafů u aurà
தமிழவேள் கோ. சாரங்கபாணியும் தனிநாயக அடிக னாரும் - மலாயப் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறையும் அடிகனாரின் வருகையும் - இந்திய மொழிப்பகுதிக்குரிய நூலகம்.
மனபப் பல்கலைக் கழகத்தில் பேராசியப் பதவிக்குப்
பெருமை சேர்த்த பேராசான்
தனிநாயக அடிகளின் கற்பிக்கும் முறை தனியானது - தமிழ்மொழியும் - பிற மொழிகளும் - முத்தமிழ் வளர்த்த வித்தகர் - தமிழ் ஒளியில் தனிநாயகத்தின் ஒளி.
மலேசியத் தமிழ் இல்க்கிய வளர்ச்சிக்கு அடிகளின் மகத்
தான பங்கு
மலாயப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கல்கிக் கருத்தரங்கு
தனிநாயக அடிகளின் தாய்மட்டும் கேட்டிருந்தால்!!!
தனிநாயக அடிகள் - ஓர் இராஜயோகி -முதல் உலகத்
தமிழ் ஆராய்ச்சி மாநாடுபற்றிய பேச்சு - உலகுக்கு ஏதாவது செய்யவேண்டும்.
2.
28
37
54

2.
3.
4.
15.
6.
17.
18.
xxxiiı
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முன்னுேடியாக விளங்
கியது அடிகளாரின் தூது
மறைந்த தமிழ்நூல்களைக் கண்டுபிடித்த மாணிக்கப் பேரொளி - பிற நாடுகளில் மறைந்து கிடந்த தமிழ்ப் பண் பாட்டைக் கண்டுபிடித்த இருபதாம் நூற்றண்டுக் கொலம்பஸ் - தமிழ்பற்றி இருநூறு விரிவுரைகள்.
கீழ்த்திசைக் கலைகளின் மாநாட்டில் அடிகள்
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் குழு (International Association of Tamil Research) 960LD552) th (passis கூட்டமும்.
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் (1. A.T. R.)
கொள்கை
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக்கழகத்தின் கொள்கை பற்றி அடிகள்.
தனிநாயக அடிகளாரின் நீண்ட நாளைய நினைப்பு
தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணியின் உச்கக்கட்டம்முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு - முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் ஏன் நடத்தப்பட வில்லை ? - மாநாடு உருவெடுத்த பாங்குபற்றி அடிகள் - மாநாட்டின் ஏற்பாடுகள்பற்றி அடிகளார்.
59
69
72
ஓ! மலேசியாவே! நீ எல்லா நாடுகளையும்விட மாண்பு பெற்றப் 75
கண்டிப்பும் கனிவும் கொண்டவர் அடிகளார்.
இரண்டாம், மூன்ரும், நான்காம் உலகத் தமிழாராய்ச்சி
மாநாடுகளில் அடிகளின் பங்கு
இலங்கையில் யாழ்ப்பரணத்தில் அடிகளார் தொடங்கி வைத்த அவரது இறுதி மாநாடு.
தனிநாயக அடிகளாரும் அனைத்துல தமிழாராய்ச்சி
நிறுவனமும்
S.--
82
94.

Page 19
19.
20.
2.
22.
23.
24.
x3Xiv
இலங்கையில் அடிகளின் மூன்றும் கட்டிப் பணி 99.
இலங்கையில் உள்ள வளலாயில் ஆயர் தியோகுப்
பின்னேயின் நண்பர் - பண்டத்தரிப்பு - தியான இல்லத்தில்
அடிகளின் இறுதி நாள்கள் (1979 சூலை முதல் 1980 செப்டம்பர் முதல் நாள் வரை)-தனிநாயக அடிகளின் இறுதி நிகழ்ச்சிகள் - தந்தை செல்வநாயகத்தின் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்துதல் - நெடுந்தீவின் நீண்ட மகனின் நீண்ட துயில் - தமிழ் உலகம் கண்ணிர் விடல்.
பேரீச்சம்பழம் முடிய வாழ்க்கையும் முடிந்துவிட்டிதே!! O9.
நகையும் நட்பும் கொண்ட நாயகம், தனிநாயகம்
தனிநாயக அடிகளும் குருத்துவமும் 3
ரோச் ஆண்டகையும் - தனிநாயக அடிகளும்.
தனிநாயகத்தின் தனிப் பண்பாடு 8.
தமிழ்மொழியால், தமிழ்மொழிக்குச் சமயத் தொண்டுபணியுமாம் என்றும் பெருமை.
தனிநாயக அடிகளும் ஒப்பியல் இலக்கியமும் 22
தனிப்பட்ட ஆர்வம் - தமிழுக்குப் பொதுநிலை ஒலிப்புத் தேவை - தமிழ் பக்தியின் மொழி; தமிழ்க் கலைகள் பக்தி யின் கலைகள் - வானுெலியில், தொலைக்காட்சிகளில், செய்தித் தாள்களில் தனிநாயகம் - தம் உலகப் பயணங்கள் பற்றி அடிகள் கூறுவது.
பல்கலைக்கழகங்களுக்கு வெளியே அடிகளின் பணி 27
பிரதம ஆசிரியர் பணி - சொர்ணம்மாள் உடைமைகள் விரிவுரைகள் - மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் - அடிகளின் எழுத்தோவியங்கள் : தமிழ்க் கலக் களஞ்சியத்தில் கட்டுரை - செய்தித் தாள்களில் கட்டுரைகள் - அடிகளின் நூல்கள் - அடிகளார் வெளியிட இருந்த படைப்புகள்

25.
26.
始
6.
0.
XXXVo
பக்கம்
தனிநாயக அடிகளும் தமிழக வாழ்வும்
தமிழ்நாட்டு நண்பர்கள்பற்றி அடிகள் - சென்னைப் பல்கலைக்கழகம்.
அடிகளுக்கு அறிஞர்களின் புகழாரம்
uT 85íb II
தனிநாயக அடிகளின் உரைகளிலிருந்து சில் கருத்துக்
குவியல்கள்
*வயதும்-படிப்பும்”
தமிழுக்குரியதைத் தமிழுக்குக் கொடுங்கள்
தமிழைக் கற்பித்தல்
ஆரம்பப் பாட நூல்களின் சொற்ருெகையும் உள்ளுறையும்
தமிழர்கள் பூக்கள்கொண்டு எல்லாம் சொல்லிவிட்டிார்கள்
தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் தனிநாயக அடிகளும்
ஆரம்பகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் கல்விமான்கள்
கல்விமான்களாக விளங்கிய பழந்தமிழ்ப் புலவர்கள்
(pipagay
39
4.
45
52
55
6
168
174
182
188
96
206

Page 20

“ 鞘
தவத்திரு. டாக்டர். தனிநாயக அடிகளார் (1913-1980)
* 岷

Page 21

*
:17
|

Page 22
*
「
* 麗 壓
拂 * * 疊嘯 *僵、
இனிய விருந்தொன்றில் அடிகளார்
 
 

閭
ليبيا | .
|TF=
閭
“
閭
臀
Entst
"■
影
}
鹭 上

Page 23
토
크
- | 드 크 조 .
 

H "का
|||"FFFA || FHF ||
■ *
* “ * “ |TT ■ T. ", ,
கோலாலம்பூரில் நடைபெற்ற டாக்டர். வி. சாமிநாதன்-டெய்சி கமலா அவர்களின்
திருமணத்தை -ಡಾ.ಅ அடிகளார்
閭 蠱
閭
-
馬 、
■闇蠶
மலாக்காவில் வதியும் திருவாளர் S. S. மணியம் அவர்கள் புதல்வியின் திருமண வரவேற்பில் அடிகளார்

Page 24
!
帕
 ܼ ܼ ܼ ܼ ܼ ܼ | | ■ |
T
இறைவழிபாட்டில் அடிகளார்
।
轟 蠱 A. Aikai. 豔. 上
ိုးမျိုး ழ், மேற்றிராசன குப்பிள்ளே
EGITT If அடிகளாரின் இறுதிச் சடங்கின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
1. கரம்பொன்னில் பூத்த கனகாம்பரப்பூ
அஃது ஒரு நெய்தல் நிலம். கடலும் கடலைச் சார்ந்த நிலம் இயற்கை எழில் கொஞ்சும் அழகுமிக்க நிலம், மாலுமி களும், வணிகர்களும் அடிக்கடி வந்துபோகும் இடம். அன்று ஈழத்திருநாட்டின் முக்கிய துறைமுகப்பட்டினங்களுள் ஒன்ருகப் பேரும் புகழும்பெற்று விளங்கியது. அத்தகைய சீரும் சிறப்பும் மிக்க ஊர்தான் ஊர்காவல் துறையாகும். (ஊர்காவற்றுற்ை. இவ்வூரை இன்று ஆங்கிலத்தில் 'கயிட்ஸ்' (Kayts) என்று அழைப்பர். தமிழில் இதனைக் காவலூர் என்றும் அழைத்து மகிழ்வர். இத்தகைய சிறப்புகள்மிக்க-அலைகள்வந்து மோதும் கடல் அருகே ஓர் ஊர் உண்டு. அது பொன்னகரம் என்ற கரம் பொன் என்ற சிற்றுாராகும். இங்கு 1913ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் இரண்டாம்நாள் தானிபோந்தும் குழந்தை ஒன்று பிறந்தது. இக் குழந்தையின் தந்தை பசுந்தீவு என்னும் பழம் புகழ்பெற்ற நெடுந்தீவைச் சேர்ந்தவர். இவர் நெடுந்தீவில், மக்களால் மிகவும் போற்றப்பட்டவர் மதிப்புப்பெற்றவர். மக்கள் இவரை 'தலைமைக்காரர்' என்று மதிப்புக்கொடுத்து அழைப்பர். நெடுந்தீவில் இவர் ஒரு முக்கியமான புள்ளியாய் இருந்தபடியால் இப்படி அழைத்தனர். இவர் பரம்பரையாகச் சைவ சமயத்தைச் சேர்ந்தவர். இவர் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவுமுன் நாக நாதன் கணபதிப்பிள்ளை என அழைக்கப்பட்டார். இவர் கத்தோலிக்க சமயத்தைத் தழுவியதும் ஹென்றி (Henry) ஸ்ரனிஸ்லாஸ் (Stanislaus) என்ற பெயருடன் திருமுழுக்கும் பெற்ருர், தரணிபோற்றும் இக்குழந்தையின் தாய் கரம்பொன் ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவர். பரம்பரையாகக் கத்தோலிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். சிசில் இராசம்மா வஸ்தியாம்பிள்ளே என்றழைக்கப்பட்டாள். ஹென்றி ஸ்ரனிஸ்லாசுக்கும், சிசில் இராசம்மா வஸ்தியாம்பிள்ளைக்கும் முதல் குழந்தையாகப் பிறந்த

Page 25
2 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
வர்தாம் உலகம் போற்றும் தனிநாயக அடிகளாவர். இவர் பிறந்து இருபது நாட்கள் சென்றபின் ஊர்காவற்றுறையிலுள்ள புனிதமரியாள் தேவாலயத்தில் 1913ஆம் ஆண்டு ஆகஸ்டுத் திங்கள் இருபத்தியோராம் நாள் சேவியர் (Xavier) என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்றர். தொடக்க காலத்தில் தனிநாயக அடிகளை "சேவியர்' என்றே அழைத்துவந்தனர். அதுவே அவருடைய கத்தோலிக்கப் பெயராகும். சேவியருடைய தந்தை ஆசிரியராகப் பணிபுரிந்தார். சேவியருக்குப் பாலசிங்கம், என்ற ஒரு தம்பியும், திருமதி நாகநாதன், திருமதி தெரேசா பிலிப்புப்பிள்ளை என்ற இரு தங்கைகளும் உடன்பிறப்புகளாவர். சேவியருக்குப் பன்னிரண்டு அகவை முடியு முன்னர் தம் தாயை இழந்தார். இவருடைய தம்பி 1958ஆம் ஆண்டில் இறைபதம் அடைந்தார். சேவியருடைய இரு தங்கைகளும் உயிருடன் இருக்கின்றனர்.
(அ) ஆரம்பக்கல்வி
சேவியர் என்ற சிறுபையன் தன்னுடைய ஆரம்பக் கல்வி யைத் தனது ஊரான ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் பாடசாலையில் 1920ஆம் ஆண்டுமுதல் 1922ஆம் ஆண்டுவரை மூன்ரும் வகுப்புவரையும் படித்தார். சிறுவயதிலிருந்து ஊர்ப் பற்று அவரது உள்ளத்தில் ஊற்றெடுத்தது. புனித அந்தோனி யார் பாடசாலையில் வெளியாகும் சஞ்சிகையில் தமது ஊராகிய ஊர்காவற்றுறையின் சிறப்புபற்றி ஒரு சிறு கவிதை வெளி glliri. sydiassissisir Guuit (Poetry of Kayts) oarf காவற்றுறையின் கவிதையாகும்.
யாழ்ப்பாணத்தில் புகழ்மிக்க கல்லூரி புனித பத்திரிசியார் (St. Patrick's College) assispirifure5th. Gssfui Atiqpsolu இடைநிலைக் கல்வியையும் கலலூரிப் படிப்பையும் 1923 முதல் 1930 வரையும் புனித பத்திரிசியார் கல்லூரியில் பயின்ருர், இக்கல்லூரியில் கல்வி பயிலும் காலத்தில் அயர்லாந்தைச் சேர்ந்தவரும் கேம்பிரிஜ் பட்டதாரியுமாகிய வணலோங் (Long) அடிகளாரின் அபிமான மாணுக்களுக விளங்கிஞர். E.S.I.C. பரீட்சையை 1928ஆம் ஆண்டில் எடுத்து அதில் முதல் வகுப்பில் சித்தியடைந்தார். 1930ஆம் ஆண்டு கேம்பிரிஜ் (Cambridge) பரீட்சையில் ஆங்கிலத்திலும், வரலாற்றிலும் திறமையுடன் வெற்றிபெற்ருர். இக்கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆங்கி லத்தில் தலைசிறந்த பேச்சாளராக விளங்கிஞர். தங்கப் பதக்கத் தையும் தட்டிக்கொண்டார். புனித பத்திரிசியார் கல்லூரியில் வெளிவந்து கொண்டிருந்த (Bottled Sunshine) என்ற கல்லூரி

கரம்ரென்னில் பூத்த கனகாம்பரப்பூ
சஞ்சிகையின் ஆசிரியராகச் சேவியர் பணியாற்றிஞர். இவர் படிக்கும்போது ஆங்கிலம், தமிழ், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களில் பரிசுகள் பல பெற்றர்.
அன்று அக்கல்லூரியின் அதிபராக இருந்த சாள்ஸ் சுப்றி மத்தியூஸ் அடிகளார் அவர்கள் அங்குள்ள மாணவச் செல்வங் களுக்கும் ஆசிரியர்களுக்கும் சேவியர் என்ற தலமாணுக்கனை அறிமுகம் செய்துவைத்தார். இலத்தீன் மொழியை ஆறே மாதத்தில் படித்து மெற்றிக்குலேசன் (Matriculation) தேர்வில் அதிவிசேட விதத்தில் வெற்றிபெற்ருர் என்ருர் சாள்ஸ் அடிகள்.
புனித பத்திரிசியார் கல்லூரியில் படிக்கும்போது ஜேக்கப் ஆசிரியரின் கீழ் இலத்தீனும், பாரதமும் படித்தார். சிறு வயதில் மிகவும் குறும்புக்காரனுக இருந்தார். படிப்பில், பேச்சில் சிறந்தவராக விளங்கினர். ஆனல் விளையாட்டில் நாட்டம் கொள்ளவில்லை. விவாதம், தர்க்கம் என்பவற்றில் கெட்டிக் காரர். எதற்கும் நியாயம் கேட்பார்.
ஆே) துறவறத்தில் நாட்டம்
சேவியர் தமது 15ஆம் அகவையில் உலகப் чафаиддо டால்ஸ்ரோயின் 'உயிர்ப்பு" அல்லது "sáairarth' (The Ressurection by Tolstoy) srsärp நூலப் படித்தார். இந்நூலின் தாக்கத்தாலும், தாயின் தூண்டுதலினலும் துறவறத்தில் நாட்டம்கொண்டு குருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
சிறிய குருமடத்திலே சேராமல் பொறளையில் உள்ள புனித பேரூட் பெரிய குருமடத்தில் மேத் திங்கள் முதல்நாள் 1931ஆம் ஆண்டுசேர்ந்து, 1934ஆம் ஆண்டுவரை மெய்யியல் (Philosophy) பயின்ருர். அங்கே மானிடவியல், சமய splitusi (Comparative Religion) சிங்களம் தமிழ் என்பன கற்ருர். பெரிய குருமடத்தில் படிக்கும்பொழுது தாம்சன் (Thompson) என்ற கவிஞர் எழுதிய 'விண்ணகத்தின் வேட்டை நாய்" (Hound of Heaven) என்ற கவிதையை விவிலியத்திலுள்ள ஒரு பகுதியோடு ஒப்பாய்வு செய்து சிறந்ததோர் ஆங்கிலச் சொற்பொழிவை நிகழ்த்திருச். அன்று அவர் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவை இன்னும் பலரும் பாராட்டி மகிழ்கின்றனர்.
(இ) திருவனந்தபுரத்தில் அருட்செல்வன் சேவியர்
அருட்செல்வன் சேவியர் புனித பேணுட் குருத்துவக்
கல்லூரியில் இருந்து யாழ் நகரிலுள்ள புனித பத்திகியோர்

Page 26
甚 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
கல்லூரியில் ஒரு சில மாதங்கள் ஆசிரியப்பணியை மேற் கொண்டார். இக்கால கட்டத்தில் தென்இந்தியாவிலுள்ள திருவனந்தபுரத்தின் திருமறை ஆயர் மார் இவானியுஸ் (Mar Ivanios) ஈழநாட்டிற்கு 1984ஆம் ஆண்டு வந்திருந்தார். அவ்வமயம் அருட்செல்வஞய் (Brother) இருந்த சேவியர், ஆயர் (Bishop) அவர்களை அழைத்துக்கொண்டு இலங்கையின் இயற்கை எழில்மிக்க காட்சிகளைச் சுற்றிக்காட்டிஞர். அருட் செல்வன் சேவியரின் ஆங்கிலப்பேச்சு நடையை ஆயர் மார் இவானியுஸ் பெரிதும் விரும்பினுர், ஆயர் அவர்கள் திருவனந்த புரத்திற்குச் சென்றபின், அவருடன் தொடர்பு கொண்டு திருவனந்தபுரத்து மறைமாவட்டத்தில் (Diocese) சேவியர் சேர்ந்தார். பின்னர் மார் இவானியுஸ் ஆயரால் உரோமை நகருக்கு இறை இயல் (Theology) பட்டப்படிப்பிற்காக 1934ஆம் ஆண்டு அனுப்பப்பட்டார். அக்காலத்தில் ஆசியாக்கண்டத்தில் இருந்து உரோமாபுரிக்கு மேற்படிப்புக்குச் செல்வது அரிதாக இருந்தது; மிகவும் திறமைசாலிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் படுவர். உரோமை நகரிலே உள்ள விசுவாச மறைபரப்புப் LusibasaaväšaspasišÁSGGM) (Pontifical Urban University), gewop இயல் கல்வி பயின்ருர், அங்கே இருந்தபொழுது கத்தோலிக்க திருமறையின் புனிதர் சிப்பிரியனைப்பற்றியும், அவர் காலத்துத் Ascoldenpasir absolutilibiuyi (The Carthaginian Clergy) ஓர் அருமையான ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றர். அக்காலத்தில் அப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்கின்ற வர்கள் இலத்தீன் மொழியில்தான் தங்கள் ஆய்வுகளை எழுது வார்கள். ஆளுல் அருட்செல்வன் சேவியர் ஆங்கிலமொழியில் தம் ஆய்வுகளை எழுதினர். இங்கும் ஒரு புதுமையை, ஒரு மறு மலர்ச்சியைத் தோற்றுவித்தார் சேவியர். சேவியர் உரோமையில் இருந்தபோது எபிரேயம், கிரேக்கம், இத்தாலியம் போன்ற மொழிகளை பெரு விருப்புடன் கற்ருர். ஐரோப்பியக்கல், தொல் பொருள் ஆராய்ச்சித் (Archaeology) துறையிலும் அதிகம் நாட்டம் காட்டிஞர்.
( ) கழகமும் வத்திக்கான் வானுெலியில் முழக்கமும்
உரோமை நகரில் இருந்தபொழுது 1934ல் அருட்செல்வன் சேவியர் தன்ஞேடு கல்வி பயின்ற எட்டு நண்பர்களைச் சேர்த்து வீரமாமுனிவர் கழகத்தை நிறுவிஞர். அத்தோடு வத்திக்கான் வானெலிவாயிலாகத் தமிழோசை உலகெங்கும் பரவிட வழி முறைகளை வகுத்தார்.

கரம்பொன்னில் பூந்த கனகாம்பரபழ 5
(உ) தனிநாயகம் என்ற பெயர்வரக காரணம்
தனிநாயகம் அடிகள் பிறந்தபொழுது தனிநாயகம் எனற பெயர் அவருக்குச் சூட்டப்படவில்லை. தனிநாயக அடிகள் உரோமையில் இறை இயல் பயிலும்போது, இலங்கையை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து வந்தார்கள். அக்காலம் ஆங்கில மொழிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த காலமாகும். ஒருவர் தம்முடைய நாட்டைவிட்டு வெளிநாட்டில் வாழும் போதுதான் தம்முடைய நாட்டின்மேல் அதிகம் பற்றும் பாசமும் உண்டாகின்றது. ஒருவர் தம்முடைய தாய்மொழி பேசுகின்ற இடத்தைவிட்டு வேற்று மொழி பேசுகின்ற இடத்தில் வாழும்போதுதான் தம்மை அறியாமலே தாய்மொழிமேல் தணியாத தாகம் உண்டாகின்றது. ஆம்! தனிநாயக அடிகளும் தம்முடைய நாட்டைவிட்டு இத்தாலி நாட்டில் வாழ்ந்தபோது தான் நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் அவர் உள்ளத்தில் பற்றி எரிந்தது. அவரோடு உரோமையில் கல்வி பயின்ற பலநாட்டினர் ஆண்டுதோறும் தங்களுடைய தேசிய நாள் ஒன்றைக் கொண் டாடிவருவது வழக்கம் (National day). அப்பொழுது இலங் கையை ஆங்கிலேயர் ஆண்டுவந்ததால் இத்தகைய தேசிய விழாவை அருட்செல்வன் சேவியர் ஸ்டனிஸ்லாசால் கொண்டாட முடியவில்லை. அவருடைய உள்ளத்தில் தேசிய உணர்வு கொழுந்துவிட்டு எரிந்தது (National Spirit). அப்போது தனித் தமிழ்ப்பெயர் ஒன்றைத் தமக்குச் சூட்டிக்கொள்ள விரும்பினுர், *'தனிநாயகம் முதலி" என்ற வம்சத்தைச் சேர்ந்தவராக இருந்த படியாலும் தகப்பன் வழியில் வந்த பெயராக அப்பெயர் இருந்த படியாலும் தனிநாயகம் என்ற பெயரை விரும்பித் தமக்குச் சூட்டிக் கொண்டார். எனவே இவரைத் தமிழ் உலகம் அன்றுதொட்டு இன்றுவரை தனிநாயகம் என்றே அழைத்து மகிழ்கின்றது. இவர் 1988ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 19ஆம் நாள் இறைவனின் குரு வாகத் திருநிலை செய்யப்பட்டார். இவருக்குக் குருத்துவச்சடங்கு நடத்திவைத்தவர் ஆயர் திறக்கிளியா (Tragia) என்பவராவார்.
(ஊ) தனிநாயக அடிகள் மேற்கொண்டி வாழ்க்கையின் விருதுவாக்குகள்
தனிநாயக அடிகள் 1938ல் உரோமைநகரில் குருப்பட்டம் பெற்றபொழுது தம்வாழ்க்கையின் விருதுவாக்காக, மேல்வரிச் சட்டமாக ஆங்கில நாட்டறிஞர் ட்ருமாண்ட் (Dumond) என் பவரின் பொன்மொழிகளைத் தெரிந்துகொண்டார்; அதன்படி வாழவும் உறுதி பூண்டார்.

Page 27
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
'நான் இவ்வுலகில் ஒருமுறைதான் பயணம் செய் வேன். எனவே மரணம் வந்து என்னைத் தழுவுமுன் என்னுல் ஆன எல்லா நல்ல செயல்களையும் செய்ய முனை வேன். ஏனெனில் இந்த உலக வழியாக நான் மீண்டும் இன்னுெரு தடவை வரப்போவதில்லை."
“I shall pass this way but once. Therefore, before I die let me do all the good I can, because I shall not pass this way again.' (Drumond)
இந்த விருதுவாக்குடன் திருமூலரின் "என்னை நன்ருக இறைவன் படைத்தனன் தன்னை நன்ருகத் தமிழ் செய்யுமாறே" என்ற பொன்மொழியையும் தம் வாழ்க்கையின் விருதுவாக்காகச் சேர்த்துக்கொண்டார்.

2. உரோமையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு
தனிநாயக அடிகள் திருவனந்தபுரத்தின் மறைமாவட்டத் திற்கே குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு 1939ல் திருவனந்த புரத்திற்கு வந்தார். அங்கு வந்ததும் அங்குள்ள புனித ஞானப் பிரகாசியார் சிறுவர் குருமடத்தில் இலத்தீன்மொழி கற்றுக் கொடுக்குமாறு பணிக்கப்பட்டார். தனிநாயக அடிகள் இந்தப் பணியை விரும்பவில்லை. அங்கிருந்தபோது மகிழ்ச்சியாகக் காணப்படவில்லை. அவர் உயர்ந்த காரியத்திற்காகப் படைக்கப் பட்டவர். அங்கு இருந்தபொழுது இன்னும் மேல்படிப்புக்குப் போக விரும்பிஞர். ஆயர் உத்தரவு கொடுக்கவில்லை. ஆகவே உரோமை மாநகருக்கு மீண்டும் சென்ருர், அவர் அங்கு போனதும் ஆயர், மார்இவானியுஸ் உரோமையில் உள்ளவர் களோடு தொடர்புகொண்டு அடிகளாரை மீண்டும் திருவனந்த புரத்திற்கு அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அவர் பணிவுடன் திருவனந்தபுரம் திரும்பினுர். திருவனந்தபுரத்தில் சீரியக்மொழி யைப் படித்துத் திருப்பலி நிறைவேற்றவேண்டும். மலையாளத்தில் மறையுரை ஆற்றவேண்டும். தமிழில் ஆர்வம் கொண்டவரை, தமிழ்ப்பற்று மிக்கவரை இப்படி வேற்றுமொழியில் திருப்பலி நிறைவேற்றவும், மறையுரை ஆற்றவும் கட்டாயப்படுத்தினுல் அவருடைய மனுேநிலை எப்படி இருந்திருக்கும் என்று சற்றுச் சிந்தித்துப்பாருங்கள். இப்படி அங்கிருந்தபோது மகிழ்ச்சி யில்லாமல் இருந்ததற்கு நியாயம் இருக்கிறது. 1940ஆம் ஆண்டு உரோமிடம் இருந்து உத்தரவுபெற்று, தூத்துக்குடி ஆயர் பிரான்சிஸ் திபூர்த்தியுஸ்ரோச் ஆண்டகையின் மறை மாவட்டத்தில் பணிபுரியச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
(அ) தூத்துக்குடி-வடக்கன் குளத்தில் ஆசிரியர், குருத்துவப்பணி
மறைபரப்புப்பணி செய்யவும், தமிழ் பயிலவும் திருநெல்வேலி மாவட்டத்துக்கே டாக்டர் ஜி. யூ. போப் போன்ற வெளி நாட்டறிஞர்கள் சென்ருர்கள். அத்தகைய சிறப்புமிக்க திருநெல்வேலி மாவட்டத்திற்குரிய வடக்கன் குளத்தை "சின்ன

Page 28
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
உரோமை என்று அழைப்பார்கள். அங்குதான் புதிதாகக் குருப் பட்டம்பெற்று இளங்குருவாக வெளிவந்த தனிநாயக அடிகளாரை மேதகு ஆயர் ரோச் ஆண்டகை ஆசிரியப்பணி செய்யும்படி அங்குள்ள புனித தெரேசாள் உயர்நிலைப்பாட சாலைக்கு அனுப்பினுர். ஏற்கெனவே ஆசிரியர் பயிற்சிக்குரிய தகைமைகளைப் பெற்றிருந்தபடியால் அங்கு ஆசிரியராக எளிதில் நியமிக்கப்பட்டார்.
அங்கே தனிநாயக அடிகள் 1940ஆம் ஆண்டு தொடக்கம் 1945ஆம் ஆண்டுவரை ஆசிரியப்பணி ஆற்றிஞர். அவர் அங்கு இருந்தபோது ஆங்கிலம், தமிழ், வரலாறு ஆகிய பாடங்களைச் சொல்லிக்கொடுத்து வந்தார். அவர் 9ஆம் வகுப்பிற்கும், 4ஆம் வகுப்பிற்கும் ஆங்கில ஆசிரியராக இருந்திருக்கிருர். இவர் 10ஆம் வகுப்பிற்குச் சமயபாடமும் சொல்லிக் கொடுத்திருக்கிருச். அவர் ஆசிரியராக அங்கிருந்தபோது பாடசாலை மாணவர்களுக்கு 'தேவனுக்காக தேசத்துக்காக" என்ற தலைப்பில் ஒரு பாடல் இயற்றி, பழக்கிக்கொடுத்து பாடசாலையின் ஆரம்ப கீதமாகப் பாட வைத்தார் என்ருர் மலேசியப் பெண் எழுத்தாளர் திருமதி அன்னக்கிளி இராசையா அவர்கள். இன்றும் தனிநாயகம் அடிகள் இயற்றிய அதே பாடலைப் பாடசாலையின் தொடக்க கீதமாகப் பாடி வருகிருர்கள். தனிநாயக அடிகள் மாணவர் களுக்கு எனப் பாடசாலைப் பாதுகாவலரான புனிததெரேசாளை மையமாகவைத்து 'சிறு மலர்' என்ற பெயரில் ஒரு பாடசாலை மலரை வெளியிட்டு அதன் ஆசிரியராகத் திகழ்ந்தார் என்றும் திருமதி அன்னக்கிளி இராசையா கூறிஞர். இவர் அங்கு பணியாற்றியபொழுது இவரை 'உரோம் சுவாமி" என்று அழைத்துவந்தார்கள். காரணம் அந்தக் காலத்தில் உரோமை செல்வது அரிது. ஆணுல் இவர் உரோமையில் இருந்துவந்த படியால் உரோம் சுவாமியார் என்று அழைத்தார்கள். மேதகு ஆயர் ரோச் ஆண்டகை இவரைத் தமது மேற்றிராசனத்தில் ஏற்றுக்கொண்டபடியினுலும், இருவருக்கும் இடையே நிலவிய நட்புறவிஞலும் தனிநாயக அடிகளார், ஆசிரியர்களும், குருக் களும் தங்கியிருந்த பாடசாலைக் கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு 'திபூட்சியானு' என்ற ஆயரின் பெயரைச் சூட்டிஞர். இச் செய லிஞல் அடிகளாருக்கும் ஆயருக்கும் இடையே உள்ள உறவு எத்தகையது என்று நமக்குத் தெரிகிறது அல்லவா? அவர் ஆசிரியப்பணியை மேற்கொண்டிருந்தபோது மாணவர்களின் சிறந்த பண்புகளை வெளியே கொண்டுவரும் உளவியல் வல்லுந ராகவும், அறிவுரை வழங்கும் ஆசாளுகவும், வழிகாட்டும் ஆன்மீகத் தலைவராகவும், உத்தம குருவாகவும் விளங்கினுர்,

உரோமையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 9.
ஆசிரியராகப் பணிபுரிந்தபோது மாணவச் செல்வங்களுக்குத் திருப்பலி (Holy Mass) நிறைவேற்றி மறையுரைகளும் ஆற்றி agosiasirgi. Lysofs aGrersir (St. Theresa's High school) உயர்நிலைப் பாடசாலையில் இருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள சிறிய குருமடத்துக்குச் சென்று திங்கள்தோறும் ஒரு நாளை ஒதுக்கி"அந்தர்ள் முழுவதையும் தியானத்தில் செலவிடுவார். மாணவச் செல்வங்கள் அடிகளாரைப் பெரிதும் விரும்பினர். அவருடைய ஆளுமையாலும், ஆன்மீகத் தொடர்பாலும் மாணவர் சிலர் குருவாக வர அடிகளார் காரணராக இருந்திருக் கின்ருர். எடுத்துக்காட்டாகச் சொல்லப்போஞல் தூத்துக்குடி மறைமாவட்டத்தைச் சேர்ந்த கபிரியேல் அடிகளாரையும், பின்னர் ஏரேமியாஸ் அடிகளாரையும், குறிப்பாகக் கூறலாம். அடிகளார் வடக்கன்குளத்தில் ஆசிரியப்பணியை மேற்கொண் டிருந்தபோது மாணவச் செல்வங்கள் மத்தியிலே திருப்பலிப் Lidiaspuujib (Devotion to Holy Mass) LITEurrifGubs sysir aduujuh (Love for the Pope) averrissiri. o எப்பொழுதும் இல்லாத அளவுக்குப் பாப்பரசர் தினத்தை (Pope's day) அப் பாடசாலையில் மிகச் சிறப்பாகக் கொண்டாடச் செய்தவர் தனிநாயக அடிகளே என்ருர் கபிரியேல் அடிகள்.
வடக்கன் குளத்தில் அவருடைய மாணுக்கர்களாக இருந்த இலங்கையின் தீவிர இடதுசாரிக் கட்சித் தலைவர் ருேசாறியோ வின்சன் டி பவுல், பிரபல நாள் இதழ் வீரகேசரி உரிமையாளர் M. G. வென்சஸ்லாஸ், சென்னை R. R. பிரிண்டஸ் உரிமை யாளர் R. J. K. சேவியர். பம்பாய் தமிழர் தன்மான இயக்கப் பொதுச் செயலாளர் N. தேவதாஸ் ஆகியவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். தனிநாயக அடிகள் அன்று அடித்தளமிட்ட *தியூட்சியானு' இன்று வடக்கன்குளத்தில் பிரபலமான கிறிஸ்தவக் கன்னியர்கள் நடத்தும் மருத்துவமனையாகத் திகழ்கிறது.
அடிகளார் வடக்கன்குளத்தில் ஆசிரியப்பணி மேற்கொண் டிருந்தபோது அங்கே சிதம்பரத்தில் இருந்துவந்து தங்கியிருந்த பண்டிதர் குருசாமி சுப்பிரமணிய ஐயர் அவர்களிடம் நான்கு ஆண்டுகள் தமிழ் பயின்ருர். இவ்வாறு தமிழ் பயின்றபின் தூத்துக்குடி ஆயர் ரோச் ஆண்டகையின் அனுமதிபெற்றுச் சிதம்பரத்திலுள்ள அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M. A.) பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார்.

Page 29
3. அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில்
அன்று அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராய் விளங்கியவர் பேராசிரியர் இரத்தினசாமி என்பவர் ஆவர். இவர் இந்தியாவின் அரசியல் சட்டம் 'The Constitution of India" என்ற நூல் எழுதிப் புகழ்பெற்றவர். இவர் ஒரு கத்தோலிக்கர். பழகுவதற்கு இனியவர். நல்ல பண்பாளர் அடிகளார்மேல் தனி மதிப்பும், நட்பும் கொண்டிருந்தார். அடிகளாருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும், வசதிகளையும் செய்து கொடுத்திருந்தார் பேராசிரியர் இரத்தினசாமி. காலப் போக்கில் இவர் பேராசிரியர் இரத்தினசாமி அவர்களின் குடும். பத்தில் ஒருவராஞர். இரத்தினசாமி குடும்பத்தினர் அடிகளாரை மதித்துப் போற்றினர். அடிகளாரும் அவர்கள்மேல் அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்.
(அடிகளார் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த போது தமிழ்மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் ஐயந்திரிபற கசடறக் கற்றர். அவருடைய முதுகலைப் படிப்பிற்குத் தமிழை முக்கிய பாடமாக எடுத்துக்கொண்டார். ஆங்கிலமொழியையும், ஆங்கில இலக்கியத்தையும் துணைப்பாடமாக எடுத்துக் கொண்டார். அவர் அங்கிருந்தபோது தமிழையும் ஆங்கிலத் தையும் ஒப்பாய்வதில் விருப்புக்கொண்டார். தமிழ்மொழியைப் பல மொழிகளோடு இணைத்துப் பார்த்துத் தமிழின் சிறப்பிலே மோகங்கொண்டார். தனிநாயக அடிகள் முதுகலைப்படிப்பை 1945ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டுவரை இரண் டாண்டுகள் படித்து இரண்டாம் பிரிவில் சித்தியடைந்தார். 'பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை" என்ற பொருளில் (M. Litt.) எம். விட் பட்டத்துக்கு ஆய்வு செய்தார். 1949ல் சிறந்த முறையில் எம். லிட். பட்டம் பெற்றர். (அ) அண்ணுமலைப் பல்கலைக்கழக வாழ்க்கை
தனிநாயக அடிகள் அண்ணுமலையில் சேர்ந்தபோது முதிர்ந்த ஆங்கில அறிவும், மேற்கத்திய மெய்யியல் (Philosophy),
இறை இயல் (Theology) துறைகளில் பட்டங்களும் பெற்றிருந் தார். இந்தச் சிறப்புகளின் காரணமாக, ஏனைய மாணவர்களைப்

அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் 1. İki
cursi, p. “Inter arts' assiuroGal B.A. (Hons) Garbus தகுதி பெற்றிருந்தார். இவ்வாறு அடிகளின் திறமைக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பத்தை மாணவர்கள் பலர் ஈழத்து மாணவர் ஒருவருக்குத் தமிழ் அறிஞர் தெ. பொ. மீனுட்சிசுந்தரஞர் அளித்த சலுகையாகவே கருதினர். இதஞல் மாணவ சமூகத் திற்கும் அடிகளாருக்கும் இடையே நிலவிய உறவில் சிறு தாக்கம் ஏற்பட்டது. அத்துடன் அன்றைய இந்திய பல்கலைக்கழகங் களில் இருந்த சூழ்நிலைகளும் அடிகளின் சமூக வாழ்வைப் பெரிதும் பாதித்திருந்தன.
1. சுதந்திரமடையாத இந்தியா, 2. கொந்தளிக்கும் அரசியல், 3. கட்சிப் பிளவுகள், 4. காந்திய எதிர்ப்பு இயக்கங்கள்,
போன்றவை அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தையும் பெரிதும் பாதித்தமையால், குழம்பிய அரசியல் சாக்கடைக்குள் தம்மை அமிழ்த்த அடிகளார் விரும்பவில்லை.
பலர் தமிழை ஒதுக்கிய காலத்தில், அடிகள் சிறப்புப்பாட மாகத் தமிழ்மொழியைக் கற்றதன் காரணம் தமிழ்மொழியின் சொற் செழிப்பு, தமிழ் இலக்கியங்களில் பொதிந்துகிடந்த வாழ்க்கைத் தத்துவங்கள், தமிழ்ப்புலவர்களின் இயம்பும் தன்மைகள் போன்ற வையாகும். தமிழ் அறிஞர் தெ.பொ. மீ. அடிகளின்மேல் விருப்புக் கொண்டிருந்தார். அதற்குக் காரணம் அடிகளார் பெற்றிருந்த ஆங்கில அறிவு, தமிழ்மேல் கொண்டிருந்த காதல், தமிழ்ச் சொற்களை அவர் இரசித்த சிறப்புகள் ஒரு சிலவாகும்.
அண்ணுமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்-திரு. இரத்தினசாமியுடன் அடிகள் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். பல நாட்கள் அவர் இல்லத்தில் விருந்தினராகத் தங்கி இருந்தார். மாலை நேரங்களிலும், ஒய்வு வேளைகளிலும் உயர்திரு. இரத்தினசாமி குடும்பத்தினருடன் "Tennis” விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார். கத்தோலிக்க மாணவர் களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும், விசேட நாட்களிலும் துண்ை வேந்தர் இரத்தினசாமியின் இல்லத்தில் திருப்பலிகளும், செப வழிபாடுகளும் நிறைவேற்றுவார்.
அடிகளார் விருந்தினர் விடுதியின் மேல்மாடியின் முதல் அறையில் தங்கி இருந்தார். அடிகளாரது அறையில் கட்டில்

Page 30
19 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
மெத்தை பத்தைமேனிப் பாய் என்பவை இருக்கும். இரவு 10 மணிக்கு துயிலச்செல்வார். அதிகாலை 4 மணிக்கு எழும்பி விடுவார்.
தனிநாயக அடிகள் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் *ஈழநாட்டு இளைஞர் மன்றத்தில்” ஒரு முக்கிய உறுப்பினராக விளங்கிஞர். மன்ற அங்கத்தவர்களின் பிணக்குகளை நடுநாயக மாக நின்று தீர்த்துவைப்பதில் தனிநாயகம் ஒப்பற்று விளங்கினுர்,
அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் 26ஆம் இலக்க அறை யில் தமிழ் அறிஞர்கள் பலரின் உருவப்படங்கள் காணப்படு கின்றன. குறிப்பாக ஈழநாட்டுத் தமிழ் அறிஞர்கள் பலரின் படங்கள் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளன. இவர்களில் ஆறுமுக நாவலர்,நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர், விபுலாநந்த அடிகள் போன்ருேர் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வாறு *ஈழநாட்டு இளைஞர் மன்றம்” அரும்பணியாற்ற அதற்கு உறுதியும், ஊக்கமும் கொடுத்துச் செயல்படுத்தியவர் அறிஞர் தனிநாயக அடிகளாவர்.
ஈராஸ் (Heras) அடிகள் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவு ஆற்றியபோது தனிநாயக அடிகளும் அங்கு இருந்தார். இருவருக்கும் இடையே இலக்கியத் தொடர்பு *ஏற்பட்டிருக்கவேண்டும். ஈழநாட்டிலுள்ள காரைத்தீவைச் சேர்ந்த விபுலாநந்த அடிகள் அண்ணுமலையில் யாழ்நூலைப் பற்றிச் சொற்பெருக்காற்றியபோது நமது அடிகளும் இருந்தார்.
இன்றைய தென் இந்திய அரசியல்வாதிகளான பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், திரு. மதியழகன் போன் ருேர், அடிகளாரின் சமகாலத்து மாணவர்களாவர்.
ஈழநாட்டில், பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் *வதியும் வித்துவான் க. வேலன் என அழைக்கப்படும் திரு. இரத்தினவேல் அவர்கள் யாழ்ப்பாணத்தில் தலைசிறந்த தமிழ் ஆசிரியர் ஆவார். இவர் 1947 ஆம் ஆண்டு அண்ணுமல்லப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது, அடிகளும் அங்கு பயின்று வந்தார். வேலனைவிட அடிகளார் இரு வருடங்கள் முந்திய வகுப்பில் கற்ருர், இருப்பினும் வித்துவான் வேலனிடம் அடி களுக்கும், அடிகளிடம் வித்துவான் வேலனுக்கும் இருந்த ஈடு ாட்டினுல் இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர். அடிகளாரின் இலக்கிய நண்பரான வித்துவான் க. வேலணை என்னுடைய

அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் 3.
அருமை மாணவர் அருட்செல்வன். F. X, அன்ர்ன் என்பவருடன் அவருடைய இல்லத்தில் கண்டு அடிகளாரைப்பற்றிப் பல செய்தி கனச் சேகரித்தேன். அடிகளாரால் கவரப்பட்ட வித்துவான் வேலன் அவருடைய ஆளுமையால் கவரப்பட்டதாக என்னிடம் கூறிஞர். அடிகனாரது வகுப்பில் ஆண்களும் பெண்களுமாக சுமார் இருபத்தைந்து மாணவர்கள் கல்வி பயின்றனர். பல்கலைக் கழக நிர்வாகத்தாலும் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது தல் பீட்டால் ஈழநாட்டு மாணவர்கள் பலர் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றனர், ஆளுல் அடிகள் தமது செல்வாக்கால் பட்டம் பெறவில்லை. கடினமாக உழைத்தே பட்டம் பெற்ருர், தமிழ்மொழியைக் கற்கும் ஆரம்பநிலைகளிலே அடிகளாருக்குத் தாழ்வுமனம் ஏற்படவில்லை. பிறநாட்டுத் தமிழ் அறிஞர்களாகிய வீரமாமுனிவர், டாக்டர், G, U போப் போன்றவர்கள் அவரில் ஏற்படுத்திய பகிவே அவர் கொண்ட தளரா உழைப்புக்கு அடிப் படையாகும்.
அடிகள்ார் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்குங்கால் கலித்தொகையில் பாலைக்கலியைப் பெரிதும் விரும்பிப் படித்தார். சிவஞான முனிவரின் இலக்கிய நடையில் ஆழ்ந்த ஆர்வம் காட் டிஞர். புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல் விருத்தியுரை போன்றவை அடிகளாருக்கு அன்று கடினமாகத் தோன்றின. இருந்தும் தளராமுயற்சியால் அவற்றில் புலமை பெற்ருர், அடி கனார் சீவக சிந்தாமணியில் அதிக ஆர்வம் காட்டவில்லை. காரணம் அது காதல் இலக்கியமாகும். அங்கு அதிக தத்துவங் கனக் காண்பது அரிது என்பது அடிகளாரின் கருத்து என அடி கனாரின் பல்கலைக்கழகத் தோழர் வித்துவான் க. வேலன் என் னிடம் தெரிவித்தார்.
டாக்டர் வ. சுப. மாணிக்கம், மாணிக்கம் செட்டியார் போன்ற வர்கள் அடிகளாரின் ஆசிரியப் பெருந்தகைகளாவர்.
அடிகளார் இசையிலும் நாட்டம் கொண்டவர். சிந்தையைக் கவரும் சித்திரச் சிலப்பதிகாரத்தின் கானல்வரி அடிகளாரைப் பெரிதும் கவர்ந்த வரிகளாகும். இதற்குக் காரணம் அடிகளாருக்குச் சிலப்பதிகாரத்தைக் கற்றுக்கொடுத்த ஆசிரியர் திரு. A. சிதம்பர நாதச் செட்டியார் ஆவார். உள்ளம் உருகும் விதத்தில் சிலப்பதி கார வகுப்புகளை நடத்துவாராம். (செட்டியாரும் செட்டியார் வம்சம், கண்ணகியும் செட்டியார் வம்சம்) எனவே அதிக ஈடுபாடுகொண்டு சிலப்பதிகாரத்தை நடத்துவாராம். கானல் வரிகளைத் தம்மையே மறந்து பாடுவாராம். கொலேக்களக் காதையில் கோவலனின்

Page 31
4. தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
அவல நிலையை நினைத்துச் செட்டியார் கண்ணிச் சிந்தி அழுவாராம்.
மேலும், பல்கலைக்கழகத்துக்கு அருகே இசைக் கல்லூரி இருந்தமையால், அவருக்கு இசையில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. தமது ஓய்வு நேரங்களில் இசைக் கல்லூரியில் கற்றுக்கொண் டிருந்த சீனிவாசன் என்னும் மாணவனை அழைத்து, பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பாடச்சொல்லிக் கேட்டு மகிழ்வார்.
*வெண்ணிலாவும் வானும்போல வீரனும் கூர்வாளும்போல."
என்ற பாரதிதாசன் பாடலிலும்,
"துன்பம் நேர்கையில் யாழெடுத்து' என்ற பாரதிதாசன் பாடலிலும் அடிகள் விருப்புடையவர்.
தமிழ்த் திரைப்படங்களிலும் அக்கறை காட்டிஞர்.
ஒருமுறை ஞானசவுந்திரி திரைப்படம் பார்த்தபின் அதைப் பற்றி வேலனிடம் விமர்சனம் செய்தாராம். அப்போது அதில் நடித்த கையில்லாப் பெண்ணுன ஞானசவுந்திரி பாத்திரம் தம்மக் கவர்ந்ததாக அடிகள் குறிப்பிட்டாராம்.
ஒருமுறை அடிகள் நீலகிரிக்குச் சென்றபோது அங்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப் பூவைக் கொண்டுவந்து, தமது பத்துப்பாட்டு நூலின் குறிஞ்சிப் பாட்டினுள் வைத்தாராம்.
தமிழில் உரையாற்று முன் அதை எழுதிச் சத்தம் போட்டு வாசிப்பார். உச்சரிப்புகளை நன்கு கவனிப்பார். பெரும்பாலும் அவரது அறையில் இருக்கும் 6:Book Stand: தாம் படிக்கும் ஆாலவைத்து நின்றுகொண்டே அதைப் ulůUTř. syassarriř சிந்தனைத் தெளிவு உடையவர். எனவே அவரது எழுத்தும் தெளிவாகவே இருக்கும். அடிகளார் ஒரு நூலக் கற்கும்போது அதில் கோடிட்டு, பக்கத்திற்குப் பக்கம் சுருக்கக் குறிப்பெழுதியே படிப்பார்.
“Lurih prðuvanoa”
என்னும் பாடல் அடிகளார் அடிக்கடி கூறி, தமது உண்மைக் கொள்கையைத் தெளிவாக எடுத்துரைப்பார். elyig servi al-auri வால் உயர்ந்தவர். இதஞல் அவரைப் பலரால் அறிந்துகொள்ள

அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் 15
முடியவில்லை. அடிகளாரிடம் பெண் இயல்புகளாகிய சாந்தம், கருணை, அடக்கம், பொறுமை பரிவு ஆகிய நற்பண்புகள் நிறைய இருந்தன என வித்துவான் வேலன் என்பவர் அடிகளாரின் கல்கலைக்கழக வாழ்க்கையைக் கூறி முடித்தார். தமிழை உலகறியச் செய்யவேண்டும் என அடிகளாரின் மனத்தில் உறுதி பூணச் செய்த கலைக்கூடம், நீறுபூத்திருந்த ஆவலைத் தூண்டி விட்ட பல்கலைக்கழகம் அண்ணுமலைப் பல்கலைக்கழகமே. அடிகளார் அண்ணுமலையில் படித்த காலத்தை நன்றியுடன் நினைவுகூர்வார்.
தனிநாயக அடிகள் தாம் அண்ணுமலையில் பயின்ற காலத்தை நினைவுகூர்கையில் இவ்வாறு கூறுவார் :
"நான்காண்டுகள் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. சிறப்புப்பட்டமும், எம். லிட், ஆராய்ச்சிப்பட்டமும், பெற்றேன். செட்டி நாட்டரசர் சர் முத்தையா நான் மாணவர் விடுதியில் இருக்காமல் விருந்தினர் விடுதியில் தங்கியிருக்க வசதிகள் ஏற்படுத்திஞர். தமிழ்க் கலைகளில் மூழ்கியிருந்த நான் அக்காலத் திலேயே நம் ஒப்பற்ற இலக்கியத்தைப்பற்றி உலகு அறியவேண்டுமென்று ஒரு சிறிதாகுதல் உழைக்க உறுதிபூண்டேன்” என்பார் தனிநாயக அடிகள், ஆம், விருந்தோம்பலுக்குப் பேர்பெற்ற தமிழ்நாடு, அடிகளை மாணவர் விடுதியில் தங்கவைக்காமல், விருந்தினர் விடுதியில் தங்கவைத்தது பெருமைக்குரியதாகும்.
அடிகளார் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்திலேயே, அவர் உள்ளத்தில் நம் ஒப்பற்ற தமிழ் இலக் கியத்தின் சிறப்பை உலகறியச் செய்யவேண்டும், அதற்காக உழைக்கவேண்டும், பாடுபடவேண்டும் என்ற எண்ணம் தம் மனத்தில் மலர்ந்ததாகக் கூறுகிருச் அடிகள். அன்று, அடிகனார் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் கண்ட கனவுதான் இன்று நனவாகி அடிகளாரின் முயற்சியால் தமிழ் உலக அரங்கில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அடிகளாரின் தமிழ் பரப்பும் நோன்பு பாராட்டிற்குரியது. எண்ணித்துணிந்தார் அடிகள். வெற்றியும் கண்டார். அடிகளாரின் இந்தத் தமிழ் பரப்பும் பணிக்கு வித்திட்ட அண்ணுமலைப் பல்கலைக்கழகமும், அங்கு அப்போது அடிகளுக்கு விரிவுரைகள் நிகழ்த்திய விரிவுரையாளர் களும், பேராசிரியர்களும் போற்றுதற்குரியவர்களே.

Page 32
4. தூத்துக்குடியில் சமய இலக்கியப்பணி
(1) தமிழ் இலக்கியக் கழகம்
துரத்துக்குடியில் தனிநாயக அடிகள் சமய இலக்கியப் பணிகளை மேற்கொண்டார். அவர் ஆங்கிலநாட்டில் ஆங்கிலப் புலமையும் கத்தோலிக்க சமயத்தில் பற்றும் உள்ள 'சீட்டும் உவோட்டும்" (Sbeed and Ward) என்பவர்கள் எப்படி ஆங்கில இலக்கியம் மூலம் கிறிஸ்தவக் கொள்கைகளைப் பரப்பிஞர்களோ அதேபோன்று தனிநாயக அடிகளும் கத்தோலிக்க சமயப்பற்றும் தமிழ் இலக்கியப்புலமையும் மிக்கவராக விளங்கி இவை மூலம் கத்தோலிக்க சமயக் கொள்கைகளைத் தமிழகத்தில் பரப்ப விழைந்தார். எனவே தமிழ் இலக்கியத்தை ஒரு கருவியாக்ப் பயன்படுத்த முனைந்து ஒரு கிழகத்தை நிறுவிஞர். அக் கழகத்தின் பெயர் தமிழ் இலக்கியக் கழகமாகும். (Tamil literature Society). அவரின் நுண்மாண் நுழைபுலத்தைப் பார்த்து வியந்து நிற்கின்ருேம். அவர் தமது கழகத்தைக் கத்தோலிக்க அல்லது கிறிஸ்தவக் கழகம் என்று கூருமல் வெறும் 'தமிழ் இலக்கியக் கழகம்” என்று பெயரிட்டது குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்கர் அல்லது கிறிஸ்தவர்கள் என்று சொல்லும்போது ஒரு சாராரையே குறிக்கும்; ஏனையோர் அதிலே இடம்பெறுவது தடையாக இருக்கும். ஏனையோரையும் தமிழ் இலக்கியக் கழகத்திலே ஈர்ப்பதற்காக, இழுப்பதற்காகவே தமிழ் இலக்கியக் கழகம் என்ற ப்ெயரை உலகப் புகழ்பெற்ற தனிநாயக அடிகள் சூட்டிஞர். தொடக்க காலத்திலே பல்வேறு சமயத்தவர்களையும் அங்கத்தவர்களாக ஏற்றுக்கொண்டார் தனிநாயக அடிகள். எடுத்துக்காட்டாக ரோச் ஆண்டகை, கபிரியேல் அடிகளார், நீண்ட நெடுங்காலமாக அடிகளாரோடு தொடர்புகொண்டு தமிழ் இலக்கியக் கழகத்திலே பணியாற்றிய மிக்கேல் போன்ருேச் கத்தோலிக்கர்கள். எஸ். நடராசன், இவர்'ஒரு இந்து. போல் நாடார், இவர் புரட்டஸ்டண்டு. இவர்கள் போன்ற பல சமய அறிஞர்களைச் சேர்த்துக்கொண்டார்.
மேலும் இந்தத் தமிழ் இலக்கியக் கழகத்தைத் தொடக்கத்தில் திராவிட இலக்கியக் கழகம் என்று அழைக்க இருந்தார். பின்னர்

தூத்துக்குடியில் சமய இலக்கியப் பணி 7
அதனைக் கைவிட்டார். காரணம் தமிழ்நாட்டிலே திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கழகங்கள் இயங்கிக்கொண்டிருந்ததால் மக்கள் மத்தியில் பெயர்க்குழப்பம் ஏற்படும் என்பதேயாகும். எனவே ரோச் ஆண்டகையின் துணையும், ஆதரவும்கொண்டு 1948ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நியு கொளணி (New Colony) என்ற இடத்தில் தனிநாயக அடிகளார் முதன்முதலில் தமிழ் இலக்கியக் கழகத்தைத் தோற்றுவித்தார்.
இக்கழகத்தின் மூலமாகப் பல சமயத்தவர்களை அழைத்து உரையாடல்களை நிகழ்த்தி, சமயப் பொறையை உண்டு பண்ணிஞர். தமிழ்ப் பண்பாட்டிற்கியையத் தரையிலே அமர்ந்து கூட்டங்களை நடாத்திஞர் அடிகளார். தமிழ் இலக்கியக் கழகத் தின் மூலம் சமய இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ரோச் ஆண்டகை எழுதியுள்ள "ஆயரின் குரலொலி” என்ற நூல. வெளியிட்டு அதற்கு முன்னுரையும் வழங்கியுள்ளார் அடிகளார் இயேசுநாதர் என்ற நூலை வெளியிட்டுள்ளார். தனிநாயகம் எழுதிய தமிழ்த்தூது’ என்ற நூலும் இன்னும் பல நூல்களும் தமிழ் இலக்கியக் கழகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
அன்று தூத்துக்குடியில் அமைந்து இருந்த தமிழ் இலக்கியக் கழகத்தை இன்று திருச்சிக்கு மாற்றி உள்ளனர். அன்று தமிழ் இலக்கியக் கழகம் அமைந்திருந்த இடத்தை, திருச்சிலுவைக் கன்னியர்கள் வாங்கி இப்பொழுது மனையியல் வகுப்புகள் நடாத்துகிருர்கள்.
கழகம் இருந்தால் பொருள்தேவை ஏற்படும் அல்லவா ? எனவே அடிகளார் பொன்னு சுவாமி வில்லுவராயர் என்ற நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு தூத்துக்குடிக் கட்ை களில் ஏறி இறங்கிப் பொருள்சேர்க்கும் படலத்தை ஆரம்பித் தார். இப்படி அடிகளார் கழகத்திற்காக நிதி திரட்டிக்கொண்டு செல்லுகையில் மக்கள் அடிகளாரைப் பார்த்து இவ்வாறு கிண்ட லும் கேலியும் செய்வார்கள் :
'இது தமிழ் இலக்கியக்கழகம்அல்ல தமிழ் இலக்கியக் கலகம்."
தமிழ் முனி தனிநாயகம் இவற்றை எல்லாம் பொருட்படுத் தாது தமது இலக்கியப் பயணத்தை மேற்கொண்டார். மேலும் தமது கழகததின் நிலையை உறுதிப்படுத்த, நிதி திரட்ட
سه که

Page 33
18 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளை நிகழ்த்தித் தமிழ் இலக்கியக் கழகத்தை வளர்த்தார். எனவேதான் தனிநாயக அடிகளார் தமிழ் இலக்கியக் கழகத்தின் தந்தை எனப் போற்றப்படுகின்ருர்,
(2) கத்தோலிக்க இலக்கியத் திங்களின் தலைவர்
தனிநாயக அடிகளார் தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பணியாற்றியபோது மாசித்திங்களைக் கத்தோலிக்க இலக்கிய மாதமாகக் கொண்டாட வழி வகுத்தார். தனிநாயக அடிகளாரின் முயற்சியாற்ருன் தமிழ் உலகத்தில் மாசிமாதத் தைக் கத்தோலிக்க இலக்கியமாதமாகக் கொண்டாடுகின்ருர்கள். கத்தோலிக்க இலக்கிய மாதத்தை வித்திட்ட முதல் வித்தகர் இவரே.
(3) கத்தோலிக்க சஞ்சிகைகளின் கட்டுரையாளர்
தனிநாயக அடிகள் தூத்துக்குடியில் இருந்த பொழுது அங்கிருந்து வெளியாகும் * ஞான தூதன்” என்ற கத்தோலிக்க மாதசஞ்சிகைக்குப் பல சமயக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இக்காலப்பகுதி 1942ஆம் ஆண்டு தொடக்கம் 1954ஆம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியாகும். ஞானதூதனுக்கு எழுதிய கட்டுரை களில் ஒன்று குறிப்பிடத்தக்கது. பெலவேந்திரர் வாழ்க்கையை (Life of St. Andrew) "Brer sist of AugGao' GTsir D sofi தமிழ்த் தலைப்புக் கொடுத்து எழுதிய கட்டுரையை மக்கள் இன்று கூடப் பாராட்டுகின்றனர். மதுரையில் இருந்து திங்களுக்கிருமுறை வெளியகிய கத்தோலிக்க சேவை” என்ற நூலிலே பல கத்தோ லிக்க சமயக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சென்னையில் இருந்து வெளிவந்த (New Leader) நியுஸ்டர் என்ற ஆங்கில வாரப்பத்திரிகையிலே பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
(4) அடிகளின் சமயப்பணி
தனிநாயக அடிகள் தூத்துக்குடியில் 1949ஆம் ஆண்டு தொடக்கம் 1951ஆம் ஆண்டு வரை சமயப்பணியில் தீவிரமாக ஈடுபட்டார். தூத்துக்குடியில் உள்ள நியுகொளணி என்ற ஊரிலுள்ள புனிதசாள்ஸ் தேவாலயத்தில் ஞாயிறுதோறும் திருப்பலி நிறைவேற்றி மறையுரை ஆற்றி வந்திருக்கிருர், அங் குள்ள சிறுவர்களுக்கு மறைக்கல்வி வகுப்புகளும் நடாத்தி இருக்கின்ருர்,

தூத்துக்குடியில் சமய இலக்கியப் பணி 19
செங்குருதி சிந்தி, செகத்தை மீட்ட சேசுவைக் கண்டு உள்ளம் உருகுவதற்காக அவர் பொறுப்பாய் இருந்த புனித சாள்ஸ் தேவாலயத்தின் மூலத்தானத்தில் சிவப்புத்திரையிலே சிலுவையைத் தொங்கவிட்டு அழகு பார்த்து உள்ளம் உருகிஞர்.
தூத்துக்குடி பனிமயமாதா கோயிலில் பத்துநாள் மறையுரை நிகழ்த்தினர், பெரிய வெள்ளிக்கிழமை ஒன்றில் அடிகளார் ஆற்றிய மறைஉரையை இருபத்தைந்து முப்பது ஆண்டுகள் ஆகியும் மறவாமல் இன்றும் கூட மக்கள் எடுத்துக் கூறக் கூடியதாக இருந்ததை நான் கேட்டுப் பேருவகை அடைந்தேன். 'ஆண்டவர் வெள்ளியில் இறந்தபோது ஞாயிறும், திங்களும் வெள்ளியும் மறைந்தன." என்ற இலக்கிய நயமிக்க அடிகளாரின் ஒர் அடியை அடியேனுக்கு எடுத்துக் கூறிஞர்கள். 'ஆண்டவர்
கிழமையில் இயேசு பெருமான் இறந்தார் என்பதைக் குறிக்கும். கிறிஸ்து பெருமான் இறந்த நேரமோ நண்பகல் வேளை. மூவுலகிற்கு ஒளியாகிய கிறிஸ்துபெருமான் இறந்து மறைந்து விட்டாரே என்பதை உணர்ந்த உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியணுகிய ஞாயிறு, தன்னுெளி இழந்து தரணிவிட்டு மறைந் தது. ஆகவே பகல் இரவாகியது. காரிருள் எங்கும் பரவியது. இரவிலே உலகிற்கு ஒளி கொடுக்க வேண்டியவன் திங்களாகிய சந்திரன். ஆளுல் இந்தச் சந்திரன் சூரியனிடமிருந்து ஒளிக் கதிர்களைப் பெற்று உலகிற்கு ஒளி கொடுக்கிருன். சூரியன் மறையவே சந்திரன் ஒளி இழந்து உணர்வு இழந்து இரவிலே கார் என்ற கருமையைச் சேர்த்துக் காரிருளாக மாற்றிவிட்டான். ஒளிக்கு ஒளியாகிய கிறிஸ்துவும், ஞாயிறும், திங்களும் மறைய வெள்ளியாகிய நட்சத்திரம் உற்ருரை உறவினரை இழந்தேன். இனி இங்கு மாண்டோம் என எண்ணி மறைந்தான். அடிகளா ரின் இந்த அழகிய நடைக்கு மேற்கூறியவாறு நான் விளக்கம் காண்கிறேன்.
அடிகளார் பனிமயமாதா கோயிலில் உள்ள விண்ணேற்ப மாதா சபையினருக்கு ஆங்கிலத்தில் மூன்று நாள் ஞான ஒடுக்கம் நடத்தினர். அன்று அவர் ஆங்கிலத்தில் நடாத்திய சொல்லோ வியத்தின் ஆங்கில நடையை மக்கள் பாராட்டி இப்படிப்பட்ட நடையைத் தங்கள் வாழ்க்கையிலே கேட்டதில்லை என்று கூறிஞர்கள். இவ்வாறு அடிகளார் எங்கு சென்ருலும் தமிழ்ப் பணியிலே சமயப்பணியை மறவாமல் கிறிஸ்து பெருமானின் அருளொளி விளங்க அருந்தொண்டாற்றி, சமயத்தைக் கட்டிக்
காத்தார்.

Page 34
20 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
5ே) முத்திங்கள் ஏட்டின் முதல்வர்
தூத்துக்குடியில் இருந்தபொழுது உலகமக்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டின் மேம்பாட்டையும், சிறப்பையும் தமிழ் இலக் கியத்தின் இனிமையையும் அறிய வேண்டும் என்பதற்காக அடிகளார் 'தமிழ்ப்பண்பாடு" "(Tamil Culture)" என்னும் ஆங்கில முத்திங்கள் ஏட்டை உருவாக்கி அதன் நிறுவன ஆசிரிய ராகப் பணியாற்றிஞர். உலகில் உள்ள பல பல்கலைக்கழகங் களுக்கு இந்த முத்திங்களேட்டை அனுப்பித் தமிழின் புகழ் மணக்கப் பாடுபட்டார். முத்திங்கள் ஏட்டின் ஆசிரியராக 1952 ஆம் ஆண்டு தொடக்கம் 1967ஆம் ஆண்டு வரை பதினைந்து ஆண்டு காலமாகப் பணி புரிந்தார். இம் முத்திங்களோடு தூத்துக் குடியில் இருந்த தமிழ் இலக்கியக் கழகம் மூலம் வெளிவந்தது. பதினைந்து ஆண்டுகளாக வெளிவந்த இந்த 'தமிழ்ப் பண்பாடு" என்னும் முத்திங்களோடு பன்னிரண்டு தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன.
(6) கத்தோலிக்க தமிழ் எழுத்தாளர் மகாநாடு
தூத்துக்குடியில் அடிகளார் இருந்த காலத்தில் தமிழ் நாட்டி லும், ஈழத்திலும் உள்ள கத்தோலிக்க தமிழ் எழுத்தாளர்களை அழைத்து, தூத்துக்குடியில் கத்தோலிக்க தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை ஆரம்பித்து வைத்தார். அந்த மகாநாட்டில் ஈழத் தில் இருந்து பண்டிதர் ஆசிநாதன் அவர்களும் கலந்து கொண் டார். மீண்டும் இம்மகாநாட்டை இரண்டாம் முறை கோயமுத் தூரில் கூட்டி இரண்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடிஞர். இந்த இரண்டாம் கத்தோலிக்க எழுத்தாளர் விழாவிலே மட்டு நகரைச் சேர்ந்த F. X, C. நடராசா அவர்கள் கலந்துகொண் டார். இவ்வாறு கத்தோலிக்க தமிழ் எழுத்தாளர்கள் எங்கிருந் தாலும் அவர்களை அழைத்து ஊக்குவித்து அவர்கள் மத்தியிலே ஒரு விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தார்.
(T) பயண இலக்கியத்தின் முன்னுேடிகளில் ஒருவர்
அடிகளார் பயண இலக்கியத்தின் முன்னுேடிகளில் ஒருவ ராகவும் திகழ்கின்ருர், சுற்றுலாக் கலையைச் செழிக்கச் செய்த செம்மல் இவராவர். இன்று பயண இலக்கியம் நன்ருக வளர்ந் திருக்கின்றது. "இதயம் பேசுகிறது" என்ற இதழின் ஆசிரியர் மணியன், சோமலே போன்ற அறிஞர்கள் பயண இலக்கியத்தை வளர்க்கிருர்கள். ஆளுல் இவர்களுக்கு முன் 25, 30 ஆண்டு களுக்கு முன் உலகின் பல நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு

தூத்துக்குடியில் சமய இலக்கியப் பணி 21
தம் பயணத்தின் அனுபவங்களை ஒன்றே உலகம்' என்ற நூலில் வடித்துத் தந்து தமிழ் உலகில் பயண இலக்கியத்திற்கு வித்திட்ட வித்தகர்களில் ஒருவர் அடிகளாராவார். தனிநாயக அடிகள் 5 ஆண்டுகள் ஐரோப்பாவிலும் 2 ஆண்டுகள் இங்கிலாந்திலும் 2 ஆண்டுகள் வடதென் அமெரிக்காவிலும் 10 ஆண்டுகள் இந்தியா விலும் பயணம் மேற் கொண்டிருக்கிருர், யப்பானிலும், தென் கிழக்கு ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் வட மத்திய ஆபிரிக்கா விலும் நிறையப் பயணம் மேற்கொண்டு இருந்தார். ரஷ்யா தொடக்கம் உலகிலுள்ள எல்லாப் பாகத்திலுமுள்ள பல்கலைக் கழகங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் தாம் பயின்று இருப்ப தாகத் தம்முடைய வாழ்க்கைக் குறிப்பில் தனிநாயக அடிகள் குறிப்பிட்டுள்ளார்.
இலக்கியத்திங்களைத் தோற்றுவித்தவர்
தமிழகத்திலும், ஈழத்திலும் பிப்ரவரி மாதம் இலக்கிய மாத மாகக் கொண்டாடப்படுகின்றது. யார் இதற்கு வித்திட்டார் ? என நம்மில் பலருக்குத் தெரியாது. பிப்ரவரித்திங்களை இலக்கிய மாதமாக முதல்முதலில் உருவாக்கிய பெருமை தனிநாயக அடிகளாரையே சாரும். தனிநாயக அடிகள் தூத்துக்குடியில் குருத்துவப் பணி செய்துகொண்டிருந்தபோது பிப்ரவரி மாதத்தை இலக்கிய மாதமாக உருவாக்கிஞர்.
தூத்துக்குடியில் தாம் நிறுவிய தமிழ் இலக்கியக் கழகம் மூலம் 'தமிழ்த் தூது" என்ற தம் இலக்கியச் செறிவுள்ள நூல் 1952ல் வெளியிட்டார்.
தூத்துக்குடி மேற்றிராசனத்தின் குரு
தனிநாயக அடிகள் 1940ஆம் ஆண்டு ரோச் ஆண்டகை தூத்துக்குடி மறை மாவட்டத்தின் ஆயராக இருந்தபோது அம் மறை மாவட்டத்தில் குருத்துவப்பணி செய்யச் சென்ருர். அடிகள் இலங்கையிலும், மலாயாவிலும், பல்வேறு நாடுகளிலும் சமய - இலக்கியப்பணிகள் செய்துகொண்டிருந்தாலும், அவர் தம் இறுதி மூச்சுவரை தூத்துக்குடி மேற்றிராசனக் குருவாகவே விளங்கிஞர். எங்கு பணியாற்றினுலும் தம்மைப் புறக்கணித்த தாயகத்தை அடிகளார் மறக்கவில்லை. தம்மால் முடிந்த அளவுக்குத் தம் தாய்த்திரு நாட்டிற்குத் தொண்டுகள் பல செய் தார். இறைவாக்குனருக்குத் தம் சொந்த நாட்டைத் தவிர மற்ற நாட்டிலெல்லாம் மதிப்பு உண்டு என்ற இயேசுவின் கூற்று தனி நாயக அடிகளின் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமாகும்.

Page 35
5. மனிதனை மனிதனுக மதித்த மாணிக்கம்
தூத்துக்குடியில் அடிகளார் பணிபுரிந்தபோது அவருக்கு அறிமுகமாக இருந்த மூவரைச் சந்திக்கும் வாய்ப்பு அடியேனுக் குக் கிட்டியது. ஒருவர் அடிகளாரால் தூண்டப்பட்டு, குருவாக வந்த கபிரியேல் அடிகளார். அடுத்தவர் அடிகளார் வடக்கன் குளம் புனித தெரேசாள் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரிய ராகப் பணி புரிந்தபோது அவரின் கீழ் கல்வி பயின்ற மாணுக்கன் பெர்நாந்து. இன்னுெருவர் அடிகளாருக்குப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாகப் பணிபுரிந்த மிக்கேல் என்பவராவர்.
மூன்று ஆண்டுகளுக்குமுன் தூத்துக்குடி பனிமயமாதா கோயிலின் பங்குத் தந்தையாக (Parish - Priest)ப் பணிபுரிந்த கபிரியேல் அடிகளாரைச் சந்தித்து, தனிநாயக அடிகளாரின் பண்பு நலன்கள் சிலவற்றைக் கேட்டறிந்தேன். அடிகளார் தம் எண்ணங்களையும், நூல்களையும், பொருள்களையும் பிறருக்குக் கொடுப்பதில் பெருமகிழ்ச்சி கொள்வாராம். (He took great pleasure in giving things, thoughts, and books to others) அடிகளார் தங்கி இருந்த அறைக்குச் சென்று, "பாதர், இப் புத்தகம் நன்ருக இருக்குமா?" என்று சொன்னுலே போதும், சரி அந்நூல் எடுத்துக்கொண்டு போ' என்பார். தனிநாயக அடிகளிடம் உள்ள எந்த நூலே எடுத்துக்கொண்டாலும் அவற் றில் பென்சிலால் கோடிட்டிருப்பார். அடிகளார் நேரத்தைப் பொன் போல மதித்தவர் என்ருர் கபிரியேல் அடிகள்.
அடுத்து, அடிகளின் மாணுக்கன் பெர்நாந்து என்பவரைச் சந்தித்தேன். அவர் அடிகளாரின் நன்றியுள்ளத்தை வெகுவாகப் பாராட்டிஞர். அந்த நன்றியுள்ளத்தை தம் மாணுக்கன் உள்ளத் திலும் நன்கு விதைத்தரராம். 'எதைச் செய்தாலும் ஆண்ட afsir Désolddisitas' (“To the honour of our Lord). Gruiu வேண்டும் எனத் தம்மிடமும், ஏனைய மாணவர்களிடமும் அடிக் கடி அடிகள் கூறி வந்ததாகப் பெர்நாந்து என்னிடம் கூறிஞர். என்னிடம் உரையாடும்போது பெர்நாந்து 'நன்றி உள்ளம்" கொண்டவராகக் காணப்பட்டார்.

மனிதனை மனிதனுக மதித்த மாணிக்கம் 23
அடிகளுக்குப் பணிவிடை புரிந்த மிக்கேல்
*மிக்கேல்" என்பவருக்குத் தனிநாயக அடிகளை 20, 25 வருடங்களாகத் தெரியும். தமிழ் இலக்கியக் கழகத்தின் வாயிலாக 'தமிழ்ப் பண்பாடு" (Tamil Culture) வெளிவருவதற்கு அடி களோடு சேர்ந்து பலகாலம் துணைபுரிந்தவர் இந்த 'மிக்கேல்" என்ற நல்லுள்ளம் படைத்த நண்பராவர். இவர் “ஞான தூதன்' என்ற சஞ்சிகைக்கும் உதவி செய்துகொண்டும் அடி களாரின் பல்வேறு சேவைகளுக்கும் பலகாலம் உதவி செய் துள்ளார். அவரிடம் தனி நாயக அடிகளைப்பற்றிக் கேட்டபோது இவ்வாறு கூறிஞர் : "யாராவது பிரச்சினைகளோடு இருந்தால், அவற்றைக் குறிப்பால் உணரும் தன்மை கொண்டிருந்தார். யாராவது முக வாட்டத்துடன் தம்மிடம் வந்தால், அதற்குரிய காரண காரியத்தை அறிந்து உதவி செய்ய முன் வருவார்' என்ருர் மிக்கேல்.
பேணியாட்களை நம்பும் பண்பாளர்” தனிநாயக அடிகள் என்றர் மிக்கேல், தங்களுக்குக் கீழ் வேலை பார்க்கின்றவர்களை நம்பாத இவ்வுலகப் பெரியவர்களுக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்கிஞர் அடிகள். தமக்குக்கீழ் பணிபுரிந்தோரிடம் முழு நம்பிக்கை வைத் is rif (He had full faith in Servants) glassir. 56f நாயக அடிகள் தூத்துக்குடியில் இருந்த காலத்தில் ரோச் ஆண்டகையின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். இவர் எண்ணத் திலும், எழுத்திலும், செயலிலும் ஏனைய குருக்களைவிடக் கொஞ்சம் தீவிரவாதியாய் இருந்தபடியால் இவருக்கு எதிராகப் பொருமை கொண்டவர்கள் பல மொட்டைக் கடிதங்களை அடிகளாருக்கு எழுதிஞர்கள் என்ருர் மிக்கேல், தம்மைப் பொறுத்தவரையில் தமக்குப் பல உதவிகள் புரிந்தார். தம் இரு பிள்ளைகளையும் படிப்பித்துத் தம்மை ஆளாக்கிய பெருமை அடிகளாரையே சாரும். எந்தக் கூட்டத்தில் இருந்தாலும், எந்தப் பெரியவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தாலும், சிறியவர்கள் அங்கு சென்ருல், அவர்களைக் கண்டு உரையாடி அவர்களை மதிப்பது தனிநாயக அடிகளின் சிறந்த பண்பு என்ருர் மிக்கேல். மிக்கேல் 25 ஆண்டு களாகத் தம் வீட்டில் வைத்துப் பாதுகாத்து வந்த அடிகளின் புகைப்படம் ஒன்றை என்னிடம் தந்தார். இம் மூவரையும் பேட்டி காணத் துணையாய் இருந்தவர் தூத்துக்குடி மேற்றி ராசனத்தைச் சேர்ந்த லிகோரி அடிகளாவர். அந்த இனிய குருவுக்கு நன்றி.

Page 36
2 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
மனித நலம் பேணி வாழ்ந்தவர்
சான்ருேர்கள் சமுதாயத்தின் ஆணிவேர் போன்றவர்கள். அன்பின் ஆற்றலை உருவாக்கித் தங்கள் தியாக வாழ்க்கையிஞல் மன்பதையை மகிழ்வூட்டும் மாந்தருள் மாணிக்கங்கள் இவர் களாவர்.
இத்தகைய தூயவர்களை நாம் அடிக்கடி நினைப்பதால் உலக மக்களிடையே நட்பும், அமைதியும் நல்லுறவும், நல்வாழ்க்கையும் உண்டாகின்றன.
தனிநாயக அடிகள் பிறர் அன்பைப் பறைசாற்றிய பண் பாளர். தமிழ்ப் பண்பாட்டின் தூதுவர்.
தனிநாயக அடிகளின் வாழ்க்கை அவருடைய இறுதி மூச் சோடு முடிந்துவிடவில்லை. அவர் விட்டுச்சென்ற பாரம்பரியமும், பனுவல்களும் வரும் தலைமுறையினருக்கு ஓயாத மந்திரங்களாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
அடிகளார் அறிவுக் கூர்மையும், அன்பும், பண்பும் மிக்கவ ராவர். கீழைத் தேச, மேற்கத்திய தலைசிறந்த சிந்தனைகளின் மொத்த வடிவம் இவராவார்.
பன்மொழி, பல நாட்டு இலக்கியங்கள் தெரிந்திருந்தபடியால் பரந்த மனம் கொண்டிருந்தார். இவருடைய பல நாட்டுப் பயணம் இவருடைய ஆளுமையை வளர்த்து, உருவாக்கியது என்று கூறிஞல் அது மிகையாகாது.
இவர் முழுக்க, முழுக்க ஒரு பண்பாளர். அடுத்தவனின் உள்ளத்தைப் புண்படுத்தாத அருளாளர். அவர் சென்ற இட மெல்லாம், சந்தித்த மக்களை எல்லாம் தம் நாட்டவர்களாக, தம் மக்களாகக் கருதிஞர்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங் குன்றஞரின் கொள்கையில் ஊறியவராவர்.
பிறர் நலத்துக்காகத் தன்னை அர்ப்பணிக்கின்றவன், தன் திறமைகளை, தன் பொன்ஞன நேரத்தை, தன் முயற்சிகளை யெல்லாம் மனித நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய் கின்ருன். மனித நல மேம்பாட்டிற்காக மனிதனை மகிழ்விக்கும் பல துறைகளில் ஈடுபடுகின்றன். தனக்கென வாழாமல் பிறருக் காக வாழ்கின்றன்.
தனிநாயக அடிகளாரின் வாழ்க்கையை நாம் அலசிப் பார்க் கும்போது மேலே கூறிய அரிய பண்புகள் நிறைவாகப்பெற்ற சால்பு படைத்தவராக விளங்குகின்ருர்,

மனிதனை மனிதனுக மதித்த மாணிக்கம் 25
அடிகளார் மனுக்குலத்துக்கும், திருமறைக்கும், தமிழுக்கும் அரும்பணிபுரியத் தம் வாழ்க்கையைத் துறவியாகத் தியாக பீடத் தில் கட்டி எழுப்பிஞர்.
மக்களின் மேம்பாட்டிற்காகப் பல்துறைகளில் நாட்டம் கொண்டிருந்தார்.
கிறிஸ்துவை தமிழ் இலக்கியத்தை, தமிழ்ப் பண்பாட்டை முன்னே வைத்து, தம்மைப் பின்னே வைத்தார்.
*ஒருவன் என்க்காகத் தன் உயிரை இழந்தால் அதனை மீண்டும் கண்டடைவான்" என்ற இயேசுவின் பொன்மொழியின் படி வாழ்ந்த புனிதர் தனிநாயக அடிகளாார்.
ஆம், தனிநாயகத் தென்றல் கிறிஸ்துவின் தியாகமும், தமிழ் மணமும் கமழச் செய்யத் தம் நேரத்தை, திறமைகளை, முயற்சிகளைச் சமுதாயத்துக்காக அர்ப்பணித்தார்.
அவர் மக்களை அறிந்தார். காலத்தின் தேவைகளை உணர்ந் திருந்தார். காலத்தின் அறிகுறிகளை அறிந்திருந்தார். அவரு டைய வாழ்க்கைத் தத்துவம் . 'மனித நலக் கோட்பாடு” அல்லது மனிதாபிமானமாகும்.
தனிநாயக அடிகள் பிறர் அன்பின் சீடராக விளங்கிஞர். தம் எண்ணங்களை பனுவல்களை, பொருள்களைப் பிறருக்குக் கொடுப்பதில் இன்பம் கண்டவர் இவர்.
கிறிஸ்துவைப் போன்று, நான் பெறுவதற்காக வரவில்லை; கொடுப்பதற்காக வந்தேன் என்று கூறுவார்.
அடிகளார் நண்பர்களை நேசித்தார். நகைச்சுவை மிக்கவ ராயும் விளங்கிஞர்.
அடிகளார் மனிதத் தன்மையும், மனிதாபிமானமும் மிக்கவர் அவர் ஓர் அறிஞர்; ஒரு புனிதர், அவர் ஒரு சான்றேர்: ஒரு
Jerrari.
அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என் பதில் பெருமை அடைகின்ருேம்.

Page 37
6. அடிகளின் - மாதாபக்தி
தமிழ் வளர்த்த தனிநாயக அடிகள் இறைவனின் தாய் மரியாள்மேல் தனிப்பட்ட அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். அவருடைய வாழ்வில் மரியாள் ஒரு தனிநாயகியாகவே விளங் கினுள். வடக்கன்குளத்தில் புனித தெரேசாள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப்பணியை மேற்கொண்டிருந்தபோது அருகில் உள்ள பரலோக மாதாகோயிலில் பணிவிடைகள் பல புரிந்தார். தூத்துக்குடியில் பனிமய மாதாகோயிலில் பல தடவைகள். மரியன்னைபற்றி மறையுரைகள் ஆற்றிஞர். அதே கோயிலில் a lairer of airGooriblu drast Faduugar(5i.e5 (Sodality of our Lady of ASSumption). மூன்று நாட்கள் ஆங்கிலத்தில் ஞான ஒடுக்க மறையுரைகளை நிகழ்த்தினுர்,
aegyp.56fisör LD ñuusir 2ar 3a)ääßuuŭo (Marian Literature)
வீரமாமுனிவர் போன்று, மரியன்னையைப்பற்றி 'திருக் காவலூர்க் கலம்பகமோ," வேதநாயகம்பிள்ளை போன்றுதேவமாதா அந்தாதியோ’ அடிகளார் நூல்கள் படைக்கா விட்டாலும், அவர்கள் யாத்த நூல்களைத் தம் வாழ்க்கையில் நன்கு பயன்படுத்தியுள்ளார். தம் தமிழ்த்துரதில் மரியாள் வணக்கம்பற்றி அடிகள் இவ்வாறு கூறுவார்: "வீரமாமுனிவர் காலம் தொடங்கித் தமிழில் கன்னிமரியம்மையார்மீது மிகவும் உருக்கமான இலக்கியப் பாடல்கள் பாடப்பெற்று வந்திருக் கின்றன. தமிழிற்குச் சிறப்பான இப் பக்திப் பாடல்கள் கத்தோலிக்குத்தமிழ் இலக்கியத்திலும் அதன் இளமையிலேயே நன்கு பொருந்தியுள்ளன. மரியன்னை இலக்கியம் (Marian poetry) எனக் கத்தோலிக்கு நாடுகளில், கடவுளன்னைமீது உள்ள இலக்கியத்தைத் தொகையிடுவர். இத்தாலியத்திலும், ஆங்கிலத்திலும் அவ்விலக்கியம் பெருந்தொகையாய் உள்ளது. ஆயினும் தமிழ்மொழியில் கடவுளன்னையைப்பற்றிய பாடல்கள் சென்ற மூன்று நான்கு நூற்ருண்டுகளிலேதான் இயற்றப் பெற்றவையாயினும், ஐரோப்பிய மரியன்னை இலக்கியத்திற்கு அளவிலோ சுவையிலோ வேறு எவ்வகையிலுமோ குறைந்தில’ என அடிகளார் தம் தமிழ்த்துரதில் கூறுவார். மரியன்னையின்

அடிகளின்-மாதா பக்தி 27
பக்தி மணக்க, புகழ்கமழ வாழ்ந்தவர் தனிநாயக அடிகள். எப்படி பாரதிக்கு ஒரு பராசக்தியோ அதுபோல தனிநாயகத் துக்கு ஒரு மரியாள்.
தேம்பாவணியும்-தனிநாயகமும்
வீரமாமுனிவர் இயற்றிய தித்திக்கும் தேம்பாவணி என்ருல் அடிகளாருக்குத் தேனுக இனிக்கும். தேம்பாவணியில் இருந்து அடிகளைக் கொள்ளைகொண்ட அடிகள் பல. அதில் ஒன்று இது:
“அறக்கடல்நீயே அருட்கடல்நீயே
அருங்கருணுகரன் நீயே
திறக்கடல்நீயே திருக்கடல்நீயே திருக்துளம் ஒளிபட ஞான
சிறக்கடல்நீயே சிகர் கடந்துலகின்
éláva f Blu9q5i da srair
பெறக்கடல்ரீயே தாயுமீ எனக்குப்
பிதாவு அனைத்து மீ அன்ருே"
கடல் கடந்து வந்த வீரமாமுனிவர் கடவுளை அறக்கடவுளாகக் காண்கின்ருர்,
திருக்காவலூர்க் கலம்பகத்திலுள்ள சில பாடல்களை அடிக்கடி அடிகளார் எடுத்தாள்வார்:
"பார்மேவும் பழிப்ேபப் பகர்ந்தடங்காப் பரிவுள்ளிச்
சீர்மேவும் திருவுளத்தைத் தெளிந்தமார் உளம்பனிப்ப
உருவில்லான் உருவாகி உலகில்ஒரு மகனுதிப்பக் கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தாய் ஆயினேயே’
கன்னித்தாயையும், உருவில்லாத கடவுள் உருப்பெற்றதையும் வீரமாமுனிவர் அழகாகப் பாடி மகிழ்வார். "அருவணுன கடவுள் மக்களது பாவப்பழியைப் போக்கச் சொல்லில் அடங்காத அன்பினுல் நினைந்து, வானவர் அத் திருவுளச் செயலுக்கு உள்ளம் நடுங்கவும், உருவம் உள்ளவராகி இவ்வுலகில் ஒரு மக ணுகப் பிறக்க, இவ்வுலகியலின்படி கொள்ளும் கருவில்லாது கருக் கொண்டு கன்னித்தாய் ஆயினை' என்பது இதன் கருத்துக்
தம் வாழ்நாள் முழுவதும் மாதாபக்தி உள்ளவராக விளங் கினுர்.

Page 38
7. இலங்கையில் அடிகளின் பணி
1951ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய தமிழ் விழாவில் *சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு பற்றிச் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை தலமையில் சொற்பொழிவு ஒன்றை அடிகளார் நடாத்திஞர். இக் கூட்டத்திற்குத் தலைமைதாங்க இருந்த சொல்லின் செல்வர் வருவதற்கு நேரம் தாழ்த்தவே, அடிகளார் தம் பேச்சை ஆரம்பித்தார். கொஞ்சநேரம் கழித்துக் கூட்டத்திற்கு வந்த சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை அடிகளாரை இவ்வாறு பாராட்டிஞர்.
"தனிநாயகத்துக்கு ஒரு சபர்நாயகம்
தேவையில்லை; அவர் ஒரு தனிநாயகம்”
என்ருர்,
அதே கூட்டத்தின் முடிவுரையில் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை இப்போது 'தனிநாயகம் பேசிற்று” என்று இன்ஞெரு குண்டை மக்கள் மத்தியில் தூக்கிப் போட்டார். மக்கள் மத்தியில் இன்னும் பரபரப்பு பரவியது. "என்ன இவர்! தமிழ் அறிஞர் ஒருவரைப் பார்த்து உயர்திணையில் மரியாதை யாகக் கூருமல், அஃறிணையில் கூறி அவமானப்படுத்துகின்ருரே' என்று மக்கள் பேசிக்கொண்டனர். இதனை அறிநத சொல்லின் செல்வர் தம் கூற்றை விளக்கத் தொடங்கிஞர்:
*தனிநாயகம் பேசிற்று-தமிழ் உலகமே பேசிற்று”
'தனிநாயகம் பேசிற்று" என்ற என் கூற்றில் தவறு கிடையாது. ஏனெனில் தனிநாயகம் பேசிற்று என்று கூறிஞல் தமிழ் உலகமே பேசிற்று என்று பொருள்படும். தமிழ் உலகின் சின்னம் தனிநாயகம் என்று விளக்கி அங்கிருந்தோரை ஆனந்தத்தில் மிதக்கவைத்தார் சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை.
தனிநாயக அடிகளாரின் ஆறு ஆசைகள்
1. ஹோமரின் ஒடிசியையும், வெர்ஜிலின் இனியதையும் (Odyssy and Aenid) மக்கள் போற்றுவதுபோல்

இலங்கையில் அடிகளின் பணி 29
இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்தையும் உலகம் போற்றுமாறு செய்யவேண்டும். 2. கன்பூசியஸ், செனக்கா முதலாய நீதிநூல் ஆசிரியர் களை உலக மாந்தர் எங்ங்ணம் அறிந்து படிக்கின்ற னரோ அங்ங்ணமே திருவள்ளுவரையும் அவர்கள் அறிந்து படிக்குமாறு நாம் செய்வித்தல் வேண்டும். 3. சாபோ, எலிசபத் பிரெளனிங், சேக்ஸ்பியர் முதலா ஞேரின் காதற்பாக்களை மக்கள் காதலித்துப் படித்து இன்புறுவதேபோல் நம் அகத்துறை இலக்கிய நூல் களையும் படித்து இன்புறும் புதியநாள் தோன்ற வேண்டும். 4. உலக இலக்கியத்திரட்டு (World classics) என்னும் பெருந்தொகை நூல்களில் நம் இலக்கிய நூல்களும் இடம்பெறும் பெருமை அடைவித்தல் வேண்டும். 5. ஆங்கிலத்தில் B. B. C-ன் ஒலிப்புப் பொதுநில விதியாயிருத்தல்போல தமிழிற்கும் யாதானுமொரு பொதுநிலை ஒலிப்பு வேண்டும். 6. மேற்றிசைக்கண்ணும் கீழ்த்திசைக்கண்ணும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் தமிழ்க்கலைகளின் தனித் தன்மையை உலகிற்கு உணர்த்துமாறு செய்வித்தல் வேண்டும்.
இலங்கையில் அடிகளின் பணி-நான்கு கட்டங்களில்
ஈழத்தில் அடிகளாரின் பணியை நான்கு பாகங்களாக
அல்லது கட்டங்களாக வகுக்கலாம்.
முதல் கட்டம் : 1952 முதல் 1955 வரை. இரண்டாம் கட்டம் : 1957 முதல் 1981 வரை. மூன்ரும் கட்டம்: 1969 முதல் 1972 வரை. நான்காம் கட்டம் : 1972 முதல் 1980 வரை.
இங்கு முதல் இரண்டு பகுதிகளைக் சற்றுக் காண்போம். நூலின் இறுதியில் கடைசி இரு கட்டங்களையும் நோக்குவோம்.
இலங்கையில் அடிகளின் பணி-முதற் கட்டம் 1952-1955 வரை
தமிழகத்தில் சில ஆண்டுகள் இருந்தபின் ஒரு முறை தாம் இலங்கைக்குச் சென்றபோது கோப்பாய் பாராளுமன்ற

Page 39
80 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
உறுப்பினர் கதிரைவேற்பிள்ளையின் தந்தை சட்டத்தரணி. எஸ். சிவசுப்பிரமணியம் ஐயா, தாம் இலங்கையில் பணியாற்றி குல் நலமென்று கருதியதால் பேராசிரியர் மயில் வாகனத்தின் துணையுடன் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையில் விரிவுரையாளராக இடம் பெற்றதாக அடிகள் கூறுகின்றர்.
முதல் கட்டத்தில் அடிகளார் இலங்கைப் பல்கலைக்கழகத் தில் கல்வித்துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமை ஆற்றிஞர். அடிகள் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த போது அங்குள்ளவர்கள் சிலர் அடிகளாருக்குத் தமிழைப்பற்றி என்ன தெரியும் என்று கேலி செய்தார்கள். அப்படிக் கூறிய வர்கள் அவரது தமிழ் விழுமியங்களைப் பலவீனங்கள் என நினைத்தார்கள். பலர் அவரை வெறுத்திருக்கலாம். ஆளுல் அவர் யாரையும் வெறுக்கவில்லை. தீமையை எதிர்த்தால் அது அதிக சக்தி பெறும். எனவே நன்மையால் அதை மேற் கொள்ள வேண்டும் என்று வாழ்ந்தவர் அடிகள். இதுவே தனிநாயக அடிகளார் தம் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கை யிலும், பல்கலைக்கழக வாழ்க்கையிலும் கடைப்பிடித்த தாரக மந்திரமாகும். அதே பல்கலைக்கழகத்தில் 'கல்விக் கொள்கைகள்' பற்றியும், 'தமிழ் மொழியைக்கற்பிக்கும் முறைகள்" பற்றியும் விரிவுரைகள் பல நடத்தினர்.
லங்கைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக இருந்துகொண்டே இலங்கையின் பல்வேறு இடங்களில் சமயஇலக்கியத் தொண்டுகள் பல புரிந்தார். கத்தோலிக்க சேவையில் (Catholic Action) ஈடுபாடு கொண்டவராக விளங்கிஞர். புத்தளத்தில் 'கத்தோலிக்க சேவை" பற்றிப் பல சொற் பொழிவுகள் நிகழ்த்தினர். இவர் ஒரு மாதாபக்தர் என முன்னே கூறியுள்ளோம்.
இவர் கொழும்பில், பொரளையில் உள்ள (All Saints Church) சகல புனிதர்கள் தேவாலயத்தில் புதன்கிழமை தோறும் மாலையில் நடைபெறும் சகாய மாதாவின் நவநாட்களில் (Novena) கலந்துகொண்டு மறையுரைகள் நிகழ்த்தியிருக்கின்ருர். கொழும்பில் அடிகளார் எங்கிருந்தாலும், சகல புனிதர்களின் தேவாலயத்தின் பங்குத் தந்தையாக இருந்த மறைத் திரு ஏராத் (Fr. Herat. O. M. I.) அவர்களுடன் தொலைபேசிமூலம்
e இங்கு-க சே, கத்தோலிக்க இயக்கத்தைக் குறிக்கும்.

இலங்கையில் அடிகளின் பணி 3.
தொடர்புகொண்டு மரியன்னைபற்றி மறையுரைகள் நிகழ்த்த வாய்ப்புத் தருமாறு கேட்பாராம். இது அவரது மாதா பக்தியை மிகத்துல்லியமாக நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
1952ல் அடிகளார் 'தமிழர் பண்பாட்டுக் கழகத்தை"க் கொழும்பில் உருவாக்கிஞர். அதன் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டார். இதே ஆண்டில் நல்லூர் சுவாமி ஞானம் பிரகாசர்பற்றி எழுதும் நூலுக்கு ரூபா 1000 பரிசு வழங்க ஒரு திட்டத்தையும் உருவாக்கிஞர். நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரை அடிகளார் போற்றி மதிப்புக்காட்டியிருக்கிருர் என்பதைக் கிறித்தவ தமிழ்ப் பண்பாட்டுக்கழகத்தினர் 1980ஆம் ஆண்டு சுவாமி ஞானப்பிரகாசருக்கு எடுத்த 105ஆம் ஆண்டு விழாமலரில் அடிகளாரின் ஆசியுரையில் நாம் காணலாம்:
'சுவாமி ஞானப்பிரகாசர் திருமறைக்காகவும், தமிழுக்காகவும் உழைத்த மனப்பான்மையை அறிஞரே நன்கு உணர்வார்கள். தம் இளைஞர்கள் அவர் நூல்களைப் படித்துப் பயன் பெறுதல் வேண்டும். பேராசிரியர் சேதுப்பிள்ளை இயற்றிய திருக் காவலூர்க் கோவில்' என்னும் நூலுக்கு சுவாமி ஞானப்பிரகாசர் அழகிய முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்நூலை இலங் கையிற் பதிப்பித்துப் பரப்ப வேண்டும் என்பதே என் பேரவா".
அடிகளார் இலங்கையில் பல இடங்களுக்குச் சென்று தமிழ்பற்றியும், தமிழர்நிலைபற்றியும் தமிழரின் கவின்கலகள் பற்றியும் பேசியும், எழுதியும் வந்திருக்கின்ருர்கள். 1953ஐப்பசிமாதத்தில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்த ஆண்டு விழாவில் பேசி இருக்கின்றர்கள். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு இந்து வாலிபர் சங்கம் 1954 ஆம் ஆண்டு சித்திரைத்திங்கள் எடுத்த தமிழ் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த் திஞர்கள். அடிகளார் அன்று பேசிய பேச்சின் கருப்பொருள் தமிழ் மக்கள் கவின் கலைகள்” என்பதாகும்.
1955ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள தமிழர் பண்பாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த விழாவொன்றில் இலங்கையில் தமிழ்ப் பண்பாடு, அன்றும, இன்றும், என்றும்” என்பதுபற்றி ஓர் அருமை யான ஆங்கிலச் சொற்பொழிவு நிகழ்த்தினுர். “Tamil Culture, Its past, its present, its future with special reference to Ceylon”. 1955 முதல் 1957 வரை இலண்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள கல்வி நிறுவனத்தில் 'கல்வி பற்றிய ஓர் ஒப்பாய்வு' என்பதுபற்றித் தமது டாக்டர் பட்டத்துக்காக இரண்டு ஆண்டுகள் ஆய்வுகள் மேற்கொண்டார்.

Page 40
32 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
“Ancient European and Indian Systems of Education Compared with special reference to ancient Tamil Education” என்ற பொருளில் டாக்டர் பட்டம் பெற்ருர்,
இலண்டனில் இருந்த காலத்தில் 1955ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்களில் ஆக்ஸ்பட்டில் வாடம் கல்லூரியில் (WADRAM College) நடந்த "ஆங்கில இலக்கியத்திறனுய்வு'க், கருத்தரங்கில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ருர்,
தனிநாயக அடிகள் இங்கிலாந்தில் இருந்தபொழுது தாய்நாட்டுப்பற்று மிக்கவராகக் காணப்பட்டார். இதை என்னைப் போல அவரோடு நெருங்கிப்பழகினவர்களே அறிவார்கள் என உயர்திரு. ஜெயரத்தினம் உவில்சன் போன்றவர்கள் கூறு வார்கள். 1955ஆம் ஆண்டிலும், 1956ஆம் ஆண்டின் தொடக்க காலத்திலும் அடிகளார் பெல்ஜிய நாட்டிலே உபயோகத்திலுள்ள இரட்டை மொழிகளின் உபயோகத்தை ஆய்ந்துகொண்டிருந் தார். கனடாவிலும் அங்கு பேசப்படுகின்ற ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய மொழிகளின் உபயோகம்பற்றி ஆய்வு செய்யும்படி தம்மைக் கேட்டுக்கொண்டதாக டாக்டர் உவில்சன் கூறுகின்றர். (பிரதம ஆசிரியர் டாக்டர் வே. அந்தனிஜான் அழகரசன். 'தொண்டன்' சிறப்பிதழ் - தனிநாயக அடிகள் - பக்கம் 6) இத்தகைய ஆய்வு களிஞல் 1956ஆம் ஆண்டு வெளிவந்த நூல்தான் அடிகளாரின் இலங்கையில் மொழியும் சுதந்திரமும்" என்ற நூலாகும். (Language and liberty in Ceylon).
இலங்கையில் இருமொழிகள் ஆட்சியில் இருக்கக்கூடும் என நம்பிக்கை கொண்டார் அடிகளார். ஆணுல் 1955ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் S.W.RD. பண்டார தாயக்கா இலங்கையின் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதும் நிலைமை மாறியது. சிங்களமொழி மட்டும்தான் ஆட்சிமொழி யாக இருக்கக்கூடும் என நம்பினவர் பிரதமர் S. W. R. D. பண்டாரநாயக்கா அவர்கள். தனிநாயக அடிகள் அப்போது பிரதமராய் இருந்த S. W. R. P. பண்டாரநாயக்காவைப் பேட்டி கண்டார். சிங்களமும் - தமிழும் - ஆகிய இருமொழிகளும் ஆட்சிமொழிகளாக இருக்கமுடியும் என்ற வாதத்தை பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்கர் முன் வைத்தார். ஆளுல் பிரதமரோ தனிநாயக அடிகளாரைப் பார்த்து-"அடிகளார் அவர்களே, இக் கொள்கையை ஏற்றுக்கொள்வதைவிட வாளைக் கொண்டு நான் ஒரு முடிவுக்கு வருவேன்' என்ருர், 'Father, I would rather have this decided by the sword' assir

இலங்கையில்-அடிகளின் பணி 33
பின்னர் தனிநாயக அடிகள் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு சிங்களத்தேசியம் உருவாகுவதை உணர்ந்தார்.
1956ஆம் ஆண்டு சிங்காமொழிச் சட்டத்தை எதிர்த்துத் தமிழ்த் தலைவர்கள் கொழும்பு காலிமுகத்திடலில் அறப்போரில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது முகிலக் கிழித்துச்செல்லும் சூரியனைப்போன்று, மக்கள் கும்பல் மத்தியிலே துறவியின் அங்கி யுடன் நிதானமாக நடந்துவந்து போராட்டத்தில் துணிந்து தாமும் பங்குகொண்டார். அறவழியில் போராட்டத்திற்கு ஆன்மவலியைச் சேர்த்த அடிகளைத் தமிழ் வரலாறு மறக்காது.
1956-ன் பின் சிங்களமொழிச் சட்டம் பாராளுமன்றத்தில் அமுலாக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற எதிர்ப்புப் பிரசாரக் கூட்டம் ஒன்றில் 'சமஷ்டி அரசியல்" என்ற தலைப்பில் தயங்காமல் சொற்பொழிவு நிகழ்த்தித் திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தின் உணர்ச்சியை விழிப்படையச் செய்த விந்தை மனிதராக இவர் விளங்கிஞர்.
இலங்கையில் அடிகளின் பணி-இரண்டாவது கட்டம் 1957-1961
அடிகனார் இங்கிலாந்தில் இருந்து இலங்கைப் பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்தார். கல்வித்துறையில் விரிவுரை யாளராகக் கடமை ஆற்றிஞர். கல்வித்துறைவில் முதுகலைப் பட்டம் (M.A.) பெறும் மாணவர்களுக்கு விரிவுரைகள் நிகழ்த் திஞர். இப் பல்கலைக்கழகத்தில் அடிகளார் கல்விக்கொள்கைகள் பற்றியும், தமிழ்மொழி கற்பிக்கும் முறைகள்பற்றியும், சமூகக் கல்வி பற்றியும் விரிவுரைகள் நடாத்திக்கொண்டு வந்தார்.
நடமாடும் நூலகமும் S.H. ஜெபநேசன் அடிகளும்
தனிநாயக அடிகள்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அவர் எழுதிய 'தமிழ்த் தூது’ என்ற நூலப் படித்திருந்தேன். ஆளுல் அவரை நேரில் பார்த்ததே கிடையாது. ஆளுல் ஒருநாள் எதிர் பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில், எதிர்பாராத நேரத்தில் சந்தித்தேன். 1988 ஆம் ஆண்டு இலங்கையிலுள்ள கண்டி தேசிய குருமடத்தில் நான் மெய்யியல் முதலாண்டு மாணவருகப் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது, வியாழக்கிழம்ை தோறும் எங்களுக்கு விடுமுறை நாளாகும். ஒரு வியாழக்கிழமை மால் 4 மணியளவில் என் அருமை நண்பரான அருள்திரு. 8: siSosa OguGprair (Hilary Jebanesan) syajiasgueir syä
AF.ー3

Page 41
ba தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
பிட்டியாவிலிருந்து கண்டிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தேன். கண்டி நகரைச் சுற்றிப் பார்த்துவிட்டு நாங்கள் இருவரும் அம் பிட்டியா தேசிய குருத்துவக் கல்லூரியை நோக்கி நடந்துகொண் டிருக்கும்போது அவ்வழியே காரிலே தனிநாயக அடிகள் வந்து கொண்டிருந்தார்கள். காரை நிறுத்தி எங்கள் இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டார்கள். எங்கே போகிறீர்கள் ? என எங்கள் இருவரையும் பார்த்துக்கேட்டார். நாங்கள் இருவரும் குருத்துவக்கல்லூரிக்குப் போகின்ருேம்" என்ருேம். 'நானும் அங்கேதான் போகின்றேன்" என்ருர் தனிநாயக அடிகள்.இது வரையம் எனக்கு இவர் யார் என்று தெரியவில்லை. என் நண்பர் அருட்செல்வன் S. A. ஹில்லறி ஜெபநேசனிடம் இவர்பற்றி விசாரித்தேன். 'தெரியாதா? இவர்தாம் உலகப் புகழ்பெற்ற தனிநாயக அடிகள்' என்ருர், நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந் தேன். அதன் பின்னர் அடிகளார் நேராக எங்கள் குருத்துவக் கல்லூரியின் நூலகத்துக்குச் சென்ருர், நூல்கள் சிலவற்றை எங்கள் நூலகத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதன் பின்னர் அங்குள்ள சில நூல்களைப் புரட்டிப் பார்த்துக்கொண் டிருந்தார்.அந்த நடமாடும் நூலகம். அப்பொழுது அருட்செல் வஞய் இருந்த அருள்திரு. ஹில்லறி (Hiary) ஜெபநேசன் அந்த நூலகத்துக்கு என்னை அழைத்துச்சென்று அந்த நடமாடும் நூல கத்திடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அன்றுமுதல் தனிநாயக அடிகள்மேல் எனக்கு ஒருவித பற்றும் பாசமும் உண்டாகியது.
இந் நிகழ்ச்சி நடந்து ஓர் இரு மாதங்களுக்குப் பிறகு தமிழ் மாணவர்களுக்கென இயங்கிய நல்லூர் சுவாமிஞானப் பிரகாசர் தமிழ்க் கழகத்தின் அன்றைய்த் தலைவராகத் திகழ்ந்த அருட் செல்வன் S, H. ஜெப நேசனின் அழைப்பை 6:rgbgpy, “ The Catacombs" பற்றி ஓர் ஆங்கிலச் சொறபொழிவை நிகழ்த்த வந் திருந்தார். தமிழ் தெரியாத சிங்கள சகோதரர்களுக்காக ஆங் கிலத்தில் ஒரு சொற்பொழிவு ஆற்றிர்ை. அச் சொறபொழிவைப் போன்று தாம் என்றும் கேட்டதில்லையென்று அமெரிக்க நாட்டவ ராகிய குருத்துவக் கல்லூரி அதிபர் கூறிஞர்.
f I never knew that there is a Ceylonese who could speak English much better than an English man'.
புத்தகக் கண்காட்சி
22-2-1958ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகக் கல்விப் பகுதி ஆசிரியர்களின் துணைகொண்டு புத்தகக் கண்

gSaudiansoddio syn, safleolir Lynmoff 85.
காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்று புத்தகக் கண் காட்சி இலங்கைக்கே ஒரு புதிய நிகழச்சியாய் இருந்தது. அடி களாரோடு நெருங்கிப் பழகிய அமுது (அடைகக்லமுத்து) என் பவர் அடிகளாரைப் பார்த்து, "புத்தகக் கண்காட்சி ஒன்றைப் பேராதனைப் பலகலைக் கழகத்தில் வைக்கவேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்குத் தோன்றியது" என்று கேட்டபோது புத்தகங்களை நாங்கள் வாசிக்காவிட்டாலும், புத்தகங்களின் மட்டைகளையாவது நாம் பார்க்க இதுபோன்ற நூல் கண்காட்சி நமக்குச் சந்தர்ப்பங்களைத் தருகிறது" என்ருராம் அடிகள்.
பேராதனைப் பல்கலைகழக்கத்தில் பேராசியராகப் பணியாற்றிய போது, பேராதனை, கத்தோலிக்கக் கோயிலைச் சார்ந்த அறை ஒன்றில் வசித்து வந்தார். அதன் பின்னர் "மகா கந்த" என்ற இடத்தில் வசித்து வந்தார். 1959 ஆம் ஆண்டு நீர்கொழும்பு ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்த விழாவில் 'பாலர் வகுப்பு நூல் களிற் சொல்லாட்சி" பற்றி அடிகளார் ஒரு சொற்பொழிவை நிகழ்த்திஞர்கள்.
சத்தியாக்கிரகத்தில் பங்கெடுப்பு
1961ஆம் ஆண்டு தமிழ்மக்கள் மத்தியில் ஒரு கொத் நளிப்பு ஏற்பட்ட ஆண்டு. வடக்கு, கிழக்கிலும் சிங்களமொழி ஆதிக்கத்தைத் தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டிருந்தது. அதை எதிர்த்து, தமிழர் தலைவர் தந்தை செல்வநாயகம் முன்னின்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் சத்தியாக்கிரகம் நடத்திக்கொண் டிருந்தார். அந்த நேரம் தனிநாயக அடிகள் பெட்டிப்பாம்பாக ஒதுங்கிக்கொள்ளவில்லை. அவர் சத்தியாக்கிரக இயக்கத்துக்கு ஆதரவு திரட்டித் திரிந்துகொண்டிருந்தார். தமிழர் உரிமையை யும், சிங்கள மக்களின் மேம்பாட்டிறகாகத் தமிழர்கள் ஆற்றிய பணிகளையும் விளக்கி ஆங்கிலத்திலும், தமிழிலும், சிங்களததிலும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். 1904 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் சேர். பொன். இராமநாதன் கொழும்பு ஆனந்தாக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிங்கள மக்கள் சிங்களமொழியைக் காக் வேண்டிய அவசியம்பற்றி நிகழ்த்திய உரையின் பிரதி s தேவராசனிடம் இருந்தது. அவர் அடிகளிடம் கொடுத்தார். அடிகள் அதனைத் துணடுப் பிரசுரமாக வெளியிட்டார். Fáéurá கிரகத்துக்காகப் பணம் சேர்த்து, சத்தியாக்கிரகம் நடந்த இடங் களுக்குச் சென்று பணம் வழங்கித் தெம்பூட்டிஞர். தமிழ்த் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். தடுப்புக் காவ

Page 42
S6 A5afsrua ayahair arjasti usufugij
வில் வைக்கப்படுவதற்குப் போலீஸ் குற்றத்தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டவர்களில், தனிநாயக அடிகளின் பெயரும் பட்டியலில் இருந்ததாக நம்பகமான தகவல் கிடைத்தது.
இப்படிப் போலீசார் தனிநாயக அடிகளைத் தேடுகையில் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறைப் பேராசிரியராகப் பதவி ஏற்கும்படி அடிகளாருக்கு அழைப்பு வந்தது. அடிகளார் மலேசியா செல்வதற்குமுன் அடிகளாருக்கு வரும் கடிதங்களை யெல்லாம் அரசாங்கத்தார் திறந்துபார்க்கத் திட்டமிட்டிருந்தனர். அதே நேரத்தில் அடிகளார் இருந்த இடத்திற்கு இன்ஞெருவர் வந்து தங்க இருந்தார். இதற்கிடையில் அடிகளாருடன் 20 ஆண்டுகளுக்குமேல் நெருங்கிப்பழகிய பேராசிரியர் கு. நேசையா என்பவருக்கு அடிகளார் ஒரு கடிதம் எழுதிஞர். யாரும் அறியா திருப்பதற்காகக் கடிதத்தை எழுதிய பின்னர் *எக் நாயக்கா? எனக் கையொப்பம் இட்டிருந்தார். *எக் நாயக்கா' என்ருல் சிங்கர மொழியில் தனிநாயகமாகும். என்ளே! என்னே அடி களின் சமயோசித புத்தி தாம் எழுதிய கடித மூலம் அடிகளார் தாம் இருந்த பங்களாவைப் பூட்டி-சாவியைப் பேராசிரியர் நேசையாவிடம் ஒப்படைத்திருந்தார். அடிகளாரின் பங்கள்ாாவில் குடியேற இருந்தவருக்குத் தம் பங்களாச்சாவி எப்படிப் பேராசி சியர். கு. நேசையாவிடம் வந்து சேர்ந்தது என்று தெரிய dDುಖ,

8. மலேசியா நோக்கி விமானப் பயணம்
இப்படி அரசாங்கத்தார் தனிநாயக அடிகளைத் தேடித்திரியும் பொழுது, அடிகளார் மலேசியப் பல்கலைக் கழகத்தின் இந்தியத் துறைப் பேராசிரியராக நியமனம் பெற . விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அடிகளார், யாழ் சத்தியாக்கிரக முறியடிப்புக்கு மறு நாள் விமானம்மூலம் இந்தியா சென்று, அங்கிருந்து மலேசியா சென்ஞர். இது நடந்தது 1961ஆம் ஆண்டில். ஆணுல் அடிகளார் மலேசியாவிற்குப் புதியவரல்லர். அவர் ஏற்கெனவே 1954ஆம் ஆண்டு சனவரித் திங்கள் முதல் ஏப்ரல் வரையும் மலேசியா எங்கும் இலக்கியச் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
கமிழவேள் கோ. சாரங்கபாணியும் தனிநாயக அடிகளாரும்
அன்று மலேசிய-சிங்கப்பூர் தமிழ்மக்களின் தன்னிகரற்ற தலைவராக கோ. சாரங்கபாணி விளங்கிஞர். இவரை கோ. சா. எனச் செல்லமாகத் தமிழ்மக்கள் அழைத்து மகிழ்வர். இவர் இங்கு வாழ்ந்த தமிழ்மக்களை விழிப்படையச் செய்தார். “மது மலர்ச்சித் தந்தை” எனப் போற்றப்படுகின்ருர்.
எழுத்திலும், பேச்சிலும் தூய தமிழ் பேணப்பட வேண்டும் எனச் சங்க நாதம் புரிந்தார். 'தமிழ் முரசு’ என்ற செய்தித் தாள்மூலம் நல்ல தமிழை நாடெங்கும் பரப்பிஞர். "தமிழ் முரசில்" குழந்தைகளுக்கெனப் 'பாலர் அரங்கம்” ஒன்றை ஏற் படுத்திஞர். தமிழ்மக்களின் பண்பாடு சீர்கெட்டுச் சிதைந்து விடாமல் இருக்க மலேசியா எங்கும், சிங்கப்பூர் எங்கும் "தழர் திருநாள்” கொண்டாட ஆவன செய்தார். 1952ஆம் ஆண்டில் தமிழர் திருநாள் ஆரம்பிக்கப்பட்டது. தமிழர் திருதாவின்போது தமிழ் நாட்டில் இருந்து தமிழ் அறிஞர்களைக் கொண்டுவந்து, தமிழின் இனிமை, பெருமை, தமிழ் இலக்கியத்தின் சிறப்பு, தமிழ்ப் பண்பாட்டின் மேம்பாடுபற்றியெல்லாம் பேச வைத்தார். கோ. சாரங்கபாணி இந்தத் 'தமிழர் திருதாளின்? இலக்கியக் கூட் டங்களில் தனிநாயக அடிகளைப் பேச வைத்து மலேசிய மக்

Page 43
88 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
களுக்கு இவரை அறிமுகம் செய்து வைத்த பெருமை தமிழவேள் கோ. சாரங்கபாணியைச் சாரும். 1954ஆம் ஆண்டிலும், 1958 ஆம் ஆண்டிலும் தனிநாயக அடிகள் "தமிழர் திருநாள்’களில் கலந்துகொண்டு, மலேசியாவின் பல பாகங்களில் இலக்கியக் கூட்டங்களில் பேசிஞர். கேர். சா. எங்கு சென்ருலும், அங் கெல்லாம் தனிநாயக அடிகளைப் பேச வைத்து மகிழ்ந்தார். கோ. சா. வுக்கும், தனிநாயக அடிகளுக்கும் இடையே இலக்கிய நட்பு அரும்பி, மலரத் தொடங்கியது. 'தமிழர் திருநாள்" தைத் திங்களில் கொண்டாடப்பட்டு வந்தது. நாடெங்கும் ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட 'Bell Club” மணி மன்றங்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த மணி மன்றங்கள் ஒழுங்கு செய்த இலக்கியக் கூட்டங்களில் அடிகளார் இலக்கியச் சொற் பொழிவுகள் நிகழ்த்தி வந்திருக்கின்ருர்,
அடிகளார் கலந்துகொண்ட தமிழர் திருநாள் இலக்கியக் கூட்டங்களைப்பற்றி ஈப்போவில் உள்ள மூசுமணி என்பவரிடம் கேட்டபோது அவர் சொன்னுர்: "அடிகளார் கூட்டங்களுக்கு நேரம் தாழ்த்தாமல் வருவார். குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்டி செயல்களைச் செய்தால், நமக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் நல்லது' என்று அடிகள் தம் இலக்கியக் கூட்டங்களில் அடிக்கடி கூறு வாராம். 'ஒரு சிலர் தமிழை வைத்து வாழ்கின்றனர்; ஆனுல் அடிகள் தமிழைத் தமிழாகக் கண்டார்” என்ருர் மூசுமணி.
அடிகள் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்த்தும்போது அடி களின் தகைச்சுவைகூடத் தமிழ்மொழியை அடிப்படையாக tல்வத்தே தகைச்சுவை அமைந்து இருக்கும். ஒருமுறை அடிகள் கூறிஞராம், "நம் தமிழ் மக்களுக்கு கள்ளுக்கும், கல்லுக்கும் சொல்: லில் வித்தியாசம் தெரிவதில்லை, ஆனுல் கள்ளையும், கல்லையும் காட்டும் போது பொருளில் வித்தியாசம் தெரிகின்றது." இன்ஞெரு தடவை இலக்கியக் கூட்டத்தில் கம்பராமாயணத்தைப்பற்றிப் பேசும்போது, 'நல்ல தமிழ் படிக்க விரும்புகின்றவர்கள் கம்பனைப் படிக்க வேண்டும்" என்ருராம். 'குகன் கடலில் கலத்தை ஒட் டும் காட்சியை அழகோவியமாகக் கம்பன் கையாண்டிருக்கின்றன். கடல் அலைகளில் ஒடம் தள்ளாடும் காட்சியை அப்படியே தாலாட்டு மொழி கொண்டு எழுதியிருக்கின்றன் கம்பன். அப்ப்ப்ப்ா ! எவ்வளவு அழகு தமிழ் கம்பன் தமிழ்” என்று அடிகள் இலக்கியக் கூட்டங்களில் கம்பனைப் பாராட்டுவாராம்.
sylaserril 1958sh airG “Strait Times' neiro, மலேசிய ஆங்கிலச் செய்தித்தாளுக்குப் பேட்டி கொடுத்திருந்தார். அப்பேட்டியில் தாம் இந்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்வதாக

u6Gæálarr:Qsráé sátarsvrú Lausærið 89
anyth SfawrGay, “Teach Yourself Malay” Gravp ardd y avè siri மலேசிய மொழியைக் கற்றுக்கொண்டு இருப்பதாக அடிகளார் கூறியிருந்தார்.
மலாயப் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறையும் அடிகளாரின்
வருகையும் மலாயப் பல்கலைக் கழகத்தில் இந்தியத்துறையைத் தொடங்க ஏற்பாடுகள் நடந்த வண்ணம் இருந்தன. சென்னையி லிருந்து வந்த நீலகண்ட சாத்திரியார், 'இந்தியப் பகுதியில் வழக்கிழந்த வட மொழிக்கே முதன்மை இடம் அளிக்க வேண் டும்" என்று பரிந்துரைகள் செய்தார். இந்தப் பரிந்துரை மலேசியாவிலுள்ள தன்மானத் தமிழர்கள் நடுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழவேள் கோ. சாரங்கபாணியின் தலைமையில் ஒரு போராட்டம் ஆரம்பமாகியது. 'தமிழ் எங்கள் உயிர் நிதி" என்ற அமைப்பின் கீழ் இந்தியத்துறையில் தமிழுக்கே முதல் இடம், முக்கிய இடம் கொடுக்கப்படவேண்டும் என்ற போராட்டம் வெற்றி பெற்றது. நீலகண்ட சாத்திரியின் பரிந் துரைகள் தவிடு பொடியாயின. மலாயப் பல்கலைக் கழகத்தின் இந்தியத் துறையில் தமிழ் அன்னை அரியணை ஏறிஞள். இந்தப் பொறுப்புமிக்க இந்தியத்துறைக்கு யாரைத் தலைவராக நியமிப்பது. என்ற பேச்சு வார்த்தை தலை தூக்கியது. தனிநாயக அடிகளா ரின் பெயரே தமிழவேள் கோ. சாரங்கபாணியின் மனத்தில் உதய மாகியது. (அடிகளார் தமிழர் திருநாள்மூலம் மலேசிய நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாலும், மலேசியத் தமிழ்மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றிருந்ததாலும் கோ.சாரங்கபாணியின் மனத்திற்குப் பிடித்திருந்ததாலும், அறிஞர் தனிநாயக அடிகள% ரையே இப் பதவிக்கு நியமிப்பது என்று விரும்பிஞர்-தமிழவேள் -கோ. சாரங்கபாணி. இதற்கிடையில் அடிகளாரின் வருகை கிடைக்கும் மட்டும் தற்காலிகமாக 1960ஆம் ஆண்டு முத்து இராசரக்கண்ணஞர் இந்தியத் துறையின் தலைவராஞர். 1961 ஆம் ஆண்டு மேத்திங்கள் அடிகளார் மலாயப் பல்கலைக்கழகத் தின் இந்தியத்துறைக்குத் தலைவராக வர கோலாலம்பூர் வந்து சேர்ந்தார். தனிநாயக அடிகளார் இந்தியத்துறைக்குத் தாம் வந்ததை இவ்வாறு எடுத்துக் கூறுவார் :
"மலாயப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கட்டிலுக்கு முதற் பேராசிரியராகச் செல்ல வேண்டும் என்று சாரங்கபாணி போன்ற தமிழ்ப்பற்றுடையோர் விரும்பினர். இந்த வாய்ப்பை நானும் வரவேற்காமல் இருக்கவில்லை" என்பார் அடிகள்.

Page 44
《ö Asawfistus ayakasafar ar rayi uJakufupi
அடிகனார் மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறைக்குத் தல்வராக வந்தபோது, இலங்கையைச் சேர்ந்த எல்லிசர் மலாயப் பல்கலைக்கழகத்தின் தற்காலிகத் துணைவேந்த yrs (Deputy Vice Chancellor)ayb, gypefaudios anpudsir asaval ராகவும் பொறுப் பேற்றிருந்தார். இவர் தனிநாயக அடிகள்ா! ரைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் வரவேற்ருர். அடிகனார் இந்தியத்துறையின் தலைவராக வந்தபோது அது கடுகுமணி போன்று மிகவும் சிறியதாய் இருந்தது. அடிகளாரின் அயரா முயற்சியிஞல் அது ஒரு பெரிய ஆலமரமாக ஒன்பது ஆண்டுகளில் வானளாவ உயர்ந்தது. அடிகனார் உலக அரங்கில் பேரும் புகழும் பெற்றிருந்தட்டியால் இந்த இந்தியத்துறை உலகப் பல் கலைக்கழகங்கள் மத்தியில் அறியப்பட்டது. இந்தியத்*துறை யைப் பல்லாற்ருனும் விரிவாக்க அயராது உழைத்தார். உலகின் பல நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்களையும் தமிழ் தொடர்பான துறைகளில் ஈடுபட்டவர்களையும் இந்தியத் துறையில் பணியாற்ற அழைத்திருந்தார்.
இந்திய மொழிப் பகுதிக்குரிய நூலகம்
தனிநாயக அடிகள் இந்தியத்துறைக்குரிய நூலகத்தைச் சிறந்த முறையில் விரிவுபடுத்திஞர். இந்திய நாட்டின் தத்துவம், சமயம், பண்பாடு, மொழிகள், வரலாறு ஆகியனபற்றி அறிவிக் கும் ஆங்கில நூல்களும், பிரெஞ்சு நூல்களும் அடிகளாரின் பெரு முயற்சியால் பெருமளவு நூலகத்திற்கு வருவிக்கப்பட்டன. அடிகனார் வெளி நாட்டறிஞர்களின் ஆதரவுடனும் தமிழவேள் கோ. சாரங்கபாணியின் உதவியுடனும் நூலகத்தை விரிவுபடுத் Áspř.

9. மலாயப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியப் பதவிக்குப் பெருமை சேர்த்த பேராசான்
அடிகளார் தலைசிறந்த ஒரு மாணுக்கன். எனவே தலே
சிறந்த ஒரு பேராசிரியராக விளங்கியதில் வியப்பில்லை. அடிகாா ரிடம் கல்வி பயின்ற மாணவர்கள் பலரைக் கண்டு அவருடைய
விரிவுரைகளின் விசாலத்தையும், புலமையின் ஆழத்தையும் அவர்கள் வியந்து போற்றுவதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந் தேன். நான் சந்தித்த அடிகளாரின் பிரமாணிக்கமான மாணவச் செல்வங்கள் இருவரை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். ஒருவர்
செபஸ்தியான் வேதநாயகம்; மற்றவர் தற்போது மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறையில் விரிவுரையாளராகப் பணி யாற்றுகின்ற டாக்டர் தேவ பூபதி நடராசா என்பவர்களாவர். டாக்டர் தேவபூபதி நடராசா என்னிடம் கூறிஞர்கள் : அடி
களார் 1961ஆம் ஆண்டில் இந்தியத் துறைக்குப் பொறுப்பாசிரிய
ராக வந்தபோது தாம் இரண்டாம் ஆண்டு தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருந்ததாகக் கூறிஞர். (B. A. Honours),
அடிகளார் இந்தியத் துறைக்குப் பொறுப்பாக வந்தபோது இரண்டாம் ஆண்டு தமிழ்ச்சிறப்புப் பாடம் எடுத்தவர்கள் நான்கு பேர்கள். வேலுப்பிள்ளெ, றிச்சட் ஜோன்சன், போன்றவர் களாவர். மூன்ரும் ஆண்டில், எஸ். எம். பொன்னேயா, செல்வி ஹயசிந்து (Hyacinth) திருமதி-சந்திரசேகர், சுசிலா நாயர்,
ஜகுர்த்தனம் போன்ருேர் பயின்று வந்தனர். இவர்களுக்கெல் லாம் அடிகனார் இந்தியத் துறையில் கல்வி கற்றுக்கொடுத்தார்.
தனிநாயக அடிகளின் கற்பிக்கும் முறை தனியானது
*அவர் எங்கள் வகுப்பை எடுத்த முறை இருக்கின்றதே அது அலாதியானது, அழகானது' என்ருர் திருமதி டாக்டர் தேவபூபதி நடராசா அவர்கள். அவர் ஒரு கவிதையை எடுத்துக் கொண்டால் அதை அரைகுறையாக நடத்தமாட்டார். முழுக் கவிதையையும் எடுத்து விளக்குவார். அக் கவிதை உணர்த்தும் உணர்வுகளை அப்படியே வெளிக் கொணர்வார். புறநானூற்றில்

Page 45
2 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
இருந்து ஐம்பது பாடல்களை எடுத்து விரிவுரை நிகழ்த்திஞர். அவை 51 முதல் 100 வரையும் உள்ள பாடல்களாகும். சிலப் பதிகாரம், அகநானூறு, குறுந்தொகை போன்ற தமிழ் இலக்கிய நூல்களை எடுத்து அழகுபடக் கற்பித்தார். ‘ஒப்பிடும் முறை" மூலம் வகுப்பு நடத்துவது அவர் தனித்தன்மையாகும்.
குறுந்தொகையிலுள்ள் 18-வது பாடலை அவர் நடத்திய முறை இன்னும் தம் நெஞ்சில் பசுமையாக இருப்பதாக, தற்போது மலாயப் பல்கல்க்கழகத்தின் இந்தியத் துறையில் விரிவுரையாளராகப் பணி புரியும் திருமதி டாக்டர் தேவபூபதி நடராசா என்னிடம் கூறிஞர்கள்.
விலத்தினும் பெரிதே வானினும் உயர்ர்தன்று கீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருக்திேன் இழைக்கும் காடனெடு கட்பே'
--(தேவகுலத்தார்) இந்தப் பாடல் நடத்தும்போது பிரொணிங் (BROWNING) arapau “How do you love thee”? GTsip sa i&a)& scies னுடைய பாடலுடன் ஒப்பிட்டு வகுப்பு நடத்தியது மிக இனிமை யாக இருந்தது. இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அடிகளா ருடைய வகுப்புக்கள் இன்னும் தேளுக இனிப்பதாகக் கூறி சூறர்கள். அடிகளாரிடம் இருந்து தமக்கு ஒப்பியல் இலக்கியத்தில் ஈடுபாடு ஏற்பட்டதாக டாக்டர் தேவபூபதி நடராசா அவர்கள் கூறிஞர்கள்.
விட்மனும் பாரதியையும் பற்றிய டாக்டர் பட்டத்து ஆய்வும் பட்டத்துக்குப் பரிசோதகராக (EXAMINER) அடிகள் இருந்) தார். ஒப்பாய்வு மூலம் வகுப்புக்களை எளிமைப்படுத்திஞர். சைவ சமயப் பாடல்களாகிய திருவாசகம் நடத்தும்போது அவர் எவ்வளவு சுவையாக நடத்தினுள் என்ருல், அவர் ஒரு கத் தோலிக்க குரு என்பதையே நாங்கள் மறந்துவிட்டோம். அவ்வளவுக்கு அருமையாக வகுப்புக்களை நடாத்திஞர்.
வகுப்பறைக்கு வெளியே அவர் ஒரு நண்பராகப் பழகிருச். சிறப்பு B. A. (இளங்கலை) மாணவர்களும், பேராசிரியர்களும் சேர்ந்து காபி (Coffee) அல்லது தேநீர் வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் எடுத்துக் கலந்துரையாடும் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி, ஆசிரியர்கள் மாணவர்கள் இடையே உள்ள a-papal arguGaseof. He was friendly and not கcademic. மாணவர்களின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை

tonórdió uaibasabdiagnóAdlib. Qurrarrir
எடுத்த்ார். அவரிடம் செல்ல நாங்கள் பயப்படவில்லை. அச்ச உணர்வு எங்களை ஆட்கொள்ளவில்லை. அவர் தங்கி இருந்த பல்கலைக் கழகப் பேராசிரியர்களுக்கென ஒதுக்கப்பட்ட இல்லத்தில் நாங்கள் தாராளமாகப் போய்வர அனுமதி தந்தார். அவர் இல்லத் தில் யாராவது வந்தால் விருந்து வைத்து எங்களையும் அழைப்பார் என்ருர் அடிகளின் அபிமான மாணவி டாக்டர் தே. நடராசா,
தனிநாயக அடிகளால் மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறை உலகப்புகழ் பெற்றது. (t got World Stature because of Fr. Dr. X. S. Thaninayagam). 56 fistus. அடிகள் நிதி திரட்டிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் (Master's thesis) முதுகலை ஆய்வு நூல்களை இந்தியத்துறையால் வெளியிடப் பெரிதும் உதவினுர்,
நான்கு ஆய்வு நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அவை பின்வருமாறு :
1. பண்டைத் தமிழ் சமுதாயத்தில் பெண்கள் நிலை
டாக்டர் திருமதி தே. நடராசா.
2. திருவாசகமும்-திருஅருட்பாவும்-செல்வி ஜெயதேவி.
3. மலாயாவில் இந்தியக்கல்வியின் வரலாறு-திரு. ச.
uor. Quirir vreur.
4. இருபதாம் நூற்குண்டின் நவீனம்-செல்வி. ஹய
சிந்தா லியோ. av banos Qasr-fjögu “Women on modern Literature -Loganayaki Nanni thamby’’ Aue Blšburg da
ரசனையுள்ள தொடர்களை எடுத்துக்காட்டுவார். சில உவமை punisher. GTGáspá st-Gavrit. (Comparisons and phrases are his special characteristics) gravasášáŝaö as úbepGUpLULU (35 ráš, தின் பெரும்பகுதியைச் செலவழிப்பார். "தமிழ் மொழிப் பேரவை மூலம்" பழைய மாணவர்களுக்கு விருந்து வைப்பார். இதஞல் பழைய மாணவர்களுக்கும், புது மாணவர்களுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்கள் இந்தியத்துறையையும், பல்கலைக் கழகத்தையும் விரும்பிடச் செய்யும் ஒரு சூழ்நிலையை உரு வாக்கிஞர்,
இங்கு இந்தியத்துறையின் தலைவராக அடிகளார் பன்னி யாற்றியபோது இந்திய மொழிப்பகுதியில் ஆராய்ச்சித்துறைக்குச் சிறந்த இடத்தை அடிகனார் கொடுத்தார். ஐரோப்பிய அறிஞர்

Page 46
44 aisarus ayasafair airpai tawflags
களின் தமிழ்த் தொண்டு, சிறப்பாக டாக்டர் ஜி. யூ. போப் ஐயர் அவர்களின் தமிழ்த் தொண்டு, தமிழ்த்தென்றல் திரு. வி. க. அவர்களின் தமிழ்ப்பணி போன்றவற்றில் இந்தியத்துறையின் பட்டதாரிகள், விரிவுரையாளர்கள் பலர் ஆய்வு செய்யத் தூண்டி ஞர் அடிகள். சுருங்கக் கூறின் மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறை தனிநாயக அடிகளின் சேயாகும். தமிழ்ப்பண் பாட்டுக் கூறுகளை அறிந்துவர, தாய்லாந்து நாட்டிற்கு அடிகளார் டாக்டர். சிங்காரவேலுவை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
தமிழ்மொழியும்-பிறமொழிகளும்
மலாய நாட்டில் ஆங்கில மொழியின் தரம் உயர்ந்து விளங்கு கின்றது. மலாயாவில் வழங்கும் பிறமொழிகளில் தமிழ் இலக் கியம், பண்பாடுபற்றிய நூல்கள் எழ வேண்டும் என அடிகளார் விரும்பிஞர். மலாய் சீன மொழிகளிலுள்ள இலக்கியங்களைத் தமிழ்மொழியிலும், தமிழிலுள்ள இலக்கியங்களை அம் மொழிகளி லும் பெயர்த்து எழுதும் பணி சிறந்தது என்ருர், அடிகளாரின் முயற்சியால் 1965ல் திருக்குறள் மலாய, சீன மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. திரு. செங் இசி (CHEng HSI) என்பவரைக் கொண்டு சீன மொழியில் திருக் குறளை மொழி பெயர்க்கத் தூண்டிஞர் அடிகள். திரு. இஸ்மாயில் குசேயின் (ISMAIL HUSEN) என்பவரைக் கொண்டு திருக் குறளே மலாய மொழியில் மொழி பெயர்க்கத் தூண்டிஞர் அடிகள். அஃதோடு நின்றுவிடாமல் அந்நூலுக்கு ஓர் அழகிய அணிந்துரை யும் கொடுத்துச் சிறப்பித்தார்.
முத்தமிழ் வளர்த்த வித்தகர்
அடிகளார் இந்தியத்துறையில் பணியாற்றியபோது இயல், இசை, நாடகம்மூலம் முத்தமிழை வளர்த்தார். ஜெயதேவி பொன்னுத்துரை போன்றவர்களைக் கொண்டு பரத நாட்டியத்தை இந்தியத்துறைமூலம் நடாத்தித் தமிழ் நாடகக்கலைக்கு மெகுகு ஊட்டிஞர். இலக்கியங்களிலுள்ள இசைச் செய்யுள்களை ம்ான வர்களைக் கொண்டு மனனம் செய்ய வைத்துப் பொதுமேடை களில் பாடும்படி செய்தார்.
திருவாசகம் தேவாரம் போன்ற பக்திச் செய்யுள்களே, இரண்டு மூன்று முறை பல்கலைக் கழகப் பொது மண்டபத்தில் படிக்கும் மாணவர்களைக் கொண்டு இசை மழை பெய்யச் செய் 萄 (He introduced the recital of classical music from
iterary verses for public.)

மலாயப் பல்கலைக்கழகத்தில்.பேராசான் 45
தமிழ் அறிஞர்களைக் கொண்டு இலக்கியப் பேருரைகள் நிகழ்த்தியிருக்கின்ருர், குறிப்பாக அறிஞர் அண்ரூ, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் கல்கி, டாக்டர் மு. வ. போன்ற வர்கள் குறிப்பிடத்தக்கவர்களாவர்.) உலகமெங்கும் தமிழ்த்துது சென்றிருந்தபடியால், பல நாட்டறிஞர்களை அடிகளாருக்குத் தெரியும். எனவே மலேசியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங் களுடன் தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் இருந்து இந்தியத் துறை சார்பாக வெளிநாட்டு அறிஞர்கள் வநதால் அவர்களைக் கொண்டு இலக்கியப் பேருரைகள் பல்கலைக்கழகத்தில் நடத்த ஒழுங்குகள் செய்திருந்தார். தம் கடமையைக் கண் எனக் கருதி ஞர். தமிழ்மொழிக்கு ஏற்றத்தையும், புகழையும் கொண்டு airi. He popularized the Tamil language. Daru பில்கலைக் கழகத்தின் இந்தியத் துறையில் பணிபுரிந்த காலத்தில் தம்முடைய இயற்கைப் பாக்கள் (Nature poetry) என்ற நூலத் திருத்திப் பதிப்பித்தார். போர்த்துக்கீச-தமிழ் அகர முதலியைப் பதிப்பித்தார். ஒன்றே உலகம், முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆராய்ச்சிக் கட்டுரைத் தொகுப்புக்களை வெளியிட்டார்
பொதுவாக ஒரு புதிய விரிவுரையாளரோ அல்லது பேராசின் யூரோ ஒரு துறைக்கு வந்தால் தாம் பொறுப்பெடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்குள் தம்முடைய துறைக்குத் தொடர் பான ஒரு தலைப்பில் பல்கலக் கழகத்தின் புதிய ஆண்டின் gripsi Osiri-diaayadr (Inaugural address) 9drp 6abis, வது மரபு. அந்த மரபின்படி தனிநாயக அடிகள் 1969 ஆம்
aard “Indian thought and Roman Stoicism” (ASau சிந்தண்பும் உரோம ஸ்டொயிக் வாதிகளும்) என்பதுபற்றித் TTTTLTTLLCLS TTTTETLTTTTS S STLLCL LTTTTLYLG LLLLLLS LLLLLL இறுதியில் அடிகாார் கூறிய கருத்துக்கள் அவருடைய பண் படைந்த உள்ளத்தைக் காட்டுவதோடு, ஒவ்வொரு மனிதனும், சிறப்பாக ஒவ்வொரு தமிழறும் தன் நெஞ்சில் பதிய வைக்க வேண்டிய பொன்னெழுத்துக்களாகும். இதோ! அந்த அரிய கருத்துக்கள் :
To forgive enemies is culture but to forgive friends ís a higher culture. To return good to those who have been bad to you is culture. To be accesssible and friendly with the lowly is culture. Culture includes the learning whicle considers itself inadequate. The service which expects no reward. The greatness which ever is humble, the largeness which forgives the gentlemanliness which never inflicts

Page 47
A6 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
pain, the purity of intention and the spotlessness of mind which are born of truth and justice and the expansiveness which comes of not harbouring petty thoughts resulting in the shrivelling of personality. Culture is fostered by learning by the critical search for knowledge in books, by association with the learned by the art of conversation which includes as well, the art of listening by the eloquence which should be able to express lucidly one's subtlest thoughts and by friendships which provide the opportunity to give and to receive. Culture includes the humanism which enjoys humour and laughter. To those who are unable to laugh it is pitch állat k even amidst the blaze of noon’’. Culture is fed oa ideals. The man without ideals is a corpse. Culture cannot, be an ideal which only a Hellenocentric world possesses.
*தமிழ் ஒளியில் தனிநாயகத்தின் ஒளி"
மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் தமிழ்ப்பேரவையால் 4தமிழ் ஒளி” என்ற பெயரில் ஒரு சஞ்சிகை தொடங்கப்பட்டது. இந்தியத்துறைத் தலைவர் இச் சஞ்சிகைக்கு வாழ்த்துரை வழங்கு வது மரபாகும் முத்து இராசாக்கண்ணஞர் தலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டது. இவரின் தலைமையில் ஓர் இரு இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. அதன் பின்னர் இந்தியத்துறையின் தலவராகத் தனிநாயக அடிகளார் 1961ல் பொறுப்பேற்றவுடன் இரண்டாவது இதழான "தமிழ் ஒளி' வெளிவந்தது. தமிழ் ஒளிக்கு அடிகளார் வாழ்த்துரை வழங்கி இருந்தார். முறைவே 1962, 1963ஆம் ஆண்டுகளில "தமிழ் ஒளி” வெளிவந்தது.
மலாயப் பல்கலைக்கழக இந்தியத்துறையின் பேரவையால் ஏற்படுத்தப்பட்ட "காதல் எங்கே 1” என்ற நாடகத்தைப் பாராட்டி, தமிழ்ப் பேரவையினரை ஊக்குவித்து 1963ல் (அக்டோபர்) வெளி வந்த தமிழ் ஒளிக்கு” வாழ்த்துச் செய்தி எழுதியிருந்தார் அடிகளார்; இதல்ை நாடகக்கலையில் அடிகளாருக்கு இருந்த ஈடுபாட்டை அறிகின்ருேம். தனிநாயக அடிகளார் 1965 -1966 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த 'தமிழ் ஒளிக்கு" எழுதிய வாழ்த் துக்களை இங்கு அப்படியே தருவது மிகப் பொருத்தம் என நினைக் கின்றேன் :
தம் மாணவர் சென்ற ஆண்டில் ஆற்றிய பல்வேறு தொண்டுகளின பொருட்டு, நான் அவர்களைப் போற்றக் கடமைப்

மலாயப் பல்கலக்கழகத்தில்.பேராசான் Ο
பட்டுள்ளேன். தமிழ்மரபில் தோன்றியவர்களும், தமிழர் அல்லாதாரும் இவ்வாண்டில் ஒன்று சேர்ந்து பேரவை நிகழ்ச்சி களில் ஈடுபட்டுள்ளனர். தாம் அரங்கேற்றிய கல் நிகழ்ச்சி களின் வழி உலகத் தமிழறிஞர் மாநாட்டிற்கென நிதி திரட்டி அம் மாநாட்டிற்கு, ஈழநாட்டிலும். இந்திய நாட்டிலும் இருந்து மாணவர் வருவதற்கெனப் பொருள் தந்த இம் மாணவர்ககு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
நம் இந்தியப்பகுதி இத்தகைய ஒரு மாநாட்டினைக் கூட்டு வதற்கும் கலையிலும், ஆராய்ச்சியிலும் வளர்வதற்கும். மாணவரும் விரிவுரையாளரும் கல்வியெனும் பெருந்துறையில் ஒத்துழைத்து ஈடுபடுவதே காரணமாகும். மாணவரின் நற்பணியின்றி ஆசிரிய சின் தொண்டு வளர்வது அரிது. இந் நற்பண்பு நம் இந்தியத் துறையிலும், நம் பல்கலைக் கழகத்திலும் உயர்ந்த முறையில் அமைந்திருப்பதைக் கண்டு பேருவகை கொள்கின்றேன்.
'நம் மாணவர் வெவ்வேறு தமிழ் அறிவு படைத்த நிலைகளி லிருந்து வந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயில்கின்றனர். இவர்கள் அனைவர்க்கும் ஒரே நிலையில் பாடங்கள் நடத்துவது எளிதன்று. ஒவ்வொரு மாணவனுக்கும் ஏற்றவாறு நம் விரிவுரை யாளர் தமிழறிவை ஊட்டி வருவது அவர்களிடம் இருந்து வரும் முயற்சிக்கும், கடமை உணர்ச்சிக்கும் சான்ருகும்.
*உலகின் பல பாகங்களிலிருந்தும் தமிழ்த்துறைப் பகுதிகள் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு பயிறகியிலும் ஆராய்ச்சி ஆயிலும் ஈடுபடுவதே இயல்பு. மலாயப் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டங்கள் மலைநாட்டின் பண்பாட்டமைப்பிற்கும் சூழ் நிலைக்கும் வருங்கால நலத்திற்கும் ஏற்றவாறு வகுக்கப்பட்டுள் ளன. எனவே விரிவுரையாளரைப் பணியாற்றத் தேர்வு செய்யும் பொழுது விரிவுரையாளரிடம் சிறந்த அறிவையும், பரந்து கொள்கைகளையும், உயர்ந்த கல்விச் சான்று களையும், ஒப்பியல் ஆராய்ச்சி வன்மையையும் எதிர்பார்ப்பர் பல்கலைக்கழக அதி
முறைகளை நன்கறிந்த மாந்தர் போற்ருமல் இரார்.
பல்கலைக்கழகப் பயிற்சியும், ஆராய்ச்சியும் சிறப்பறிவு பெற்ற அறிஞரின் ஆருந்துறை. ஆதலால் பல்கலைக்கழகத்தின் நோக்கங்களும் பயிற்சி முறைகளும் எல்லாாக்கும் எளிதில் புலம் படுமென்று பல்கலைக்கழகத் தார் என்றும் எதிபார்ப்பதே Qb&o,

Page 48
48 sofruas agindsafsir Gafurghsyi. Rofanyies
“தமிழ்ப் பேரவையின் தலைவர், செயலாளர் பேராளர் அனே வகுக்கும் என் வாழ்த்தும் நன்றியும் உரித்தாகும். மலை நாட்டில் தமிழ் மணம் பரவத் தமிழ்ப் பேரவையினர் தொடர்ந்து தமிழ்ப் பணி ஆற்றுக,
× சே. தனிநாயகம்
தலைவர்,
இந்திய மொழிப் பகுதி தலைவர்,
கலையியல் துறை,
மலாயப் பல்கலைக்கழகம்.'

10. மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அடிகளின் மகத்தான பங்கு
மலேசியத் தமிழ் இலக்கியத்தின் முன்னேற்றத்துக்கும், ஆக்கத்துக்கும், ஏற்றத்திற்கும் பெரும் தொண்டு செய்தவர் அடிகளார் ஆவார். மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்ததுமட்டுமின்றி, பெரியோர்களின் ஆதரவையும் திரட்டிக் கொடுத்தவர் அடிகளார் ஆவார். எழுத் தாளர் சங்க வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அடித்தனமாக விளம் பரமின்றி அரும்பணி செய்தார் அடிகள் என்ற கருத்தை அடியேன் கோலாலம்பூரில் கலந்துகொண்ட யூசுப்கல்கா என்ற பாவலர் திலகம் சாரங்க பாஸ்கரளுரின் நூல் வெளி யீட்டு விழாவின்போது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் எம். துரைராஜ் கூறிஞர். சங்கத்தின் நிதியை வலு வாக்க ஆயுள் உறுப்பினர்களை நாடு முழுவதும் திரட்டுங்கள். தேவையெனில் என்னையும் அழையுங்கள், உடன் வந்து சிபாரிசு செய்கின்றேன் என்று அடிகளார்தாம் முதன்முதலில் ஆலோசனை கூறி முதலாவது ஆயுள் உறுப்பினராகவும் பதிந்து கொண்டார். அடிகளார் அன்று சொன்ன ஆலோசனையின் படி எழுத்தாளர் சங்கத்திற்கு நாடு முழுவதும் ஜோகூரிலிருந்து கெடாவரை வாழும் நல்ல தமிழ்ப் புரவலர்கள் ஆயுள் உறுப்பினர் களாக அணி செய்கின்றனர் என்று மலேசியத் தமிழ் எழுத் தாளர் சங்கத்தலைவர் எம். துரைராஜ் தனிநாயக அடிகளாருக்கு மலேசியத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அஞ்சலி என்ற தம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மலாயப் பல்கலைக் கழக நிலையில் தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு முதலில் அங்கீகாரமும் பெருமையும் தேடித்தந்த புகழும் தனிநாயக அடிகளாரையே சாரும.
தமிழ் எழுத்தாளர் சங்கம் பிலால் உணவகத்தில் (அம்பங் சாலையில் கோலாலம்பூரில் உள்ளது) ஒழுங்கு செய்த விருந்துக்
Af.-4

Page 49
50 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
கூட்டத்தில் தனிநாயக அடிகள் ஆற்றிய சிறப்புரை *மலேசியா வில் தமிழ் எழுத்தாளரும் அவர்களின் பணியும்” என்பதாகும். அடிகளாரின் அப் பேருரையை மலேசிய வானுெலி முக்கியத் துவம் கொடுத்து ஒலி பரப்பியது. மலேசியாவில் புகழ் பெற்ற நாளேடான 'தமிழ் நேசன்’ முதல் இடம் கொடுத்து அதனை வெளியிட்டது. அப் பேருரைக்குச் செவிமடுத்தவர்கள் இன்று கூட அப் பேச்சைப் பாராட்டுகின்றனர். அப் பேருரையின் சில பகுதிகளை அடியேனல் தராமல் இருக்க முடியாது:
'ஏனைய கழகங்களுக்கு இல்லாத ஒரு செல்வாக்கும் பயனும் எழுத்தாளர் சங்கத்திற்கு இந்நாட்டில் சுரக்கும் என்பது திண்ணம், தமிழ் எழுத்தாளர்க்குத் தென் இந்திய நாட்டிலும் ஈழநாட்டிலும் கிடையாத வாய்ப்புக்கள் இந்நாட்டில் உள. வேறெந்த நாட்டிலும் இந்நாட்டிற்போல மேற்றிசைப்பண்பாடு களும், கீழ்த்திசைப்பண்பாடுகளும் பண்டமாற்றம் செய்வதில்லை. இந்நாடு சீன, இந்திய, மலாய, அரேபிய, ஐரோப்பிய மொழி களுக்கும் பண்பாடுகளுக்கும் அவற்றுடன் தோன்றிய சிறந்த உலக சமயங்களுக்கும் நிலைக்களமாக இருக்கின்றது. எனவே தமிழ் எழுத்தாளர் புதிய புதிய முறைகளைக் கடைப்பிடிப்பதற்கும் வளர்ச்சிபெறுவதற்கும் பல வாய்ப்புகள் உள. இந்நாட்டின் வ்ருங்கால நலத்திற்காகவும், தமிழ்மக்களின் முன்னேற்றத்திற் காகவும், தமிழ் இலக்கியத்தின் விரிவிற்காகவும், இச் சங்கத்தின் எழுத்தாளர்கள் இவ் வாய்ப்புக்களைப் பயன்படுத்துமாறு வாழ்த்து கின்றேன்.
'வரலாற்று நாவல்கள் இதுகாறும் அரச குடும்பங்களின் கதைகளாகவே அமைந்துள்ளன. வருங்காலத்தில் அரண்மனை யைத் துறந்து வரலாற்று நூல்கள் வெவ்வேறு காலத்தின் பொதுமக்கள் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டுதல் வேண்டும். பொதுப் பொருட்களைக் கொண்ட நூல்கள் பெரும்பாலும் ஆங்கில நூல்களைத் தழுவிய சுருக்கங்களாக இருக்கின்றன. கடல், அரசியல், கடிகாரம், வான ஆராய்ச்சி எனும் பொருள்பற்றித் தோன்றும் நூல்கள் அடிப்படை அறிவைப்பயக்கும் நூல்களாக வில்ல. ஆசிரியரின், பதிப்பாளரின் வயிற்றை வளர்க்கும் கருவிகளாகவே இருக்கின்றன. இவ்வாறு கூறுவதால் தமிழில் அரிய நூல்கள் இந்நூற்றண்டில் தோன்றவில்லை என்பது அல்ல என் கருத்து. சங்க இலக்கியமும், சிலப்பதிகாரமும், பக்திப் பாடல்களும், பெரிய புராணமும், கம்பராமாயணமும் உரிய நூற்ருண்டின் உலக இலக்கியங்களுடன் நிகராக அமைவது போல, இந் நடு நூற்ருண்டின் தமிழ் இலக்கியமும் இதர உலக

மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு.பங்கு 51
இலக்கியங்களுடன் நிகராக இருத்தல் வேண்டும் என்பதே என் விண்ணப்பம். அத்தகைய உயர்ந்த நிலையை இலக்கியத்தில் எதிர்பார்க்கும் உரிமை தமிழ்நூல்களைப் படிப்போர்க்கு உண்டு. அத்தகைய உயர்ந்த நிலையையடைந்த நூல்களையே வெளியிடும் கடமை எழுத்தாளர்க்குண்டு. இன்றேல், ஒருவன் தான் விரும்பும் கல்விக்குத் தாய்மொழி வேண்டிய அளவு உதவாததால் தாய்மொழியினைத் துறந்து பிறமொழிகளைப் பயில்வான்.
*ஒருவன் ஆங்கிலத்தில் இருபதாயிரம் அல்லது முப்பு தாயிரம் சொற்களை அறிந்திருத்தல், வேண்டும். ஐந்து ஆண்டுகள் படைத்த சிறுவர் ஏறக்குறைய மூவாயிரம் சொற்கஜன அறிவர். இக் கூற்று பலருக்கு வியப்பை உண்டாக்கும். ஆளுல் தன் உண்மையை நன்கு புலப்படுத்தலாம். வின்ஸ்டன் சர்ச்சில் 30,000 தனிச் சொற்களைத் தம் உரைகளில் கையாண்டுள்ளார்.
"தமிழில் நன்கு கற்றவரும் இருபதாயிரம் வெவ்வேறு சொற்களையேனும் அறிந்திருக்கவேண்டும் என்று நம்புவதற்குச் சான்றுகள் உன. இச் சொல்வளத்தைப் பெறுவதற்கு ஒருவன் பலதுறைகளில் தோன்றும் நூல்களைப் பயில்தல் நன்று. Tஇவ் இருபது முப்பதாயிரம் சொற்களின் ஆட்சியில் தேர்ச்சிபெறுவ தற்கு ஒருவர் படிக்கவேண்டிய நூல்கள் எத்தனை? மொத்தம் 50 இலட்சம் சொற்களின் தொடர் தொகையை வெவ்வேறு நூல்களிற் பத்தாண்டுகளில் படித்தால், நமக்கு வேண்டிய இருபதாயிரம் தனிச்சொற்கள் அவற்றில் விரவிவருவதால் அவற்றின் சொல்லாட்சியைப் பெறுவர் என்று கணக்கிட்டிருக் கின்ருர் தோண்டைக்' எனும் உளநூல் வல்லுநர். பிறநாட்டு நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது போலத் தமிழ்நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் ஆங்கிலத்தில் இருந்து சீனத் திலும், மலாயிலும் வேறு மொழிகளிலும் பெயர்ப்பதற்கு வாய்ப் புகள் ஏற்படும்' என்பதை அடிகளார் சுட்டிக்காட்டிஞர். 'எனவே இருபதாம் நூற்ருண்டின் சிறந்த தமிழ்நூல்களை நாம் ஆங்கிலத் தில் மொழிபெயர்க்க வேண்டும் ஐம்பதுபேர் ஐம்பது நூல்களை மொழிபெயர்த்தால் இருபதாம் நூற்ருண்டின் தமிழ் இலக்கியம் உலகிற்கே பொது இலக்கியமாகிவிடும்.
"எழுத்தாளர் எழுத்தை வளர்க்க வேண்டுமாயின் பதிப் பாளர் எழுத்தாளர்களுக்கு நல்ல வருவாய் கொடுத்தல்வேண்டும். வறுமையே எழுத்திற்கும் புலமைக்கும் இருப்பிடம் என்ற காலம் சென்றுவிட்டது. நல்ல நூல்களைப் பரப்புவது எழுத்தாளர் சங்கத்தின் மற்ருெரு பணியாக இருக்கும். இந்த நாட்டில் தமிழ்நூல்களை விலக்குப் பெறுவது அரிதாக உள்ளது. எனவே

Page 50
52 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
எழுத்தாளர் சங்கம் இந்நாட்டில் மலிவுப் பதிப்புகளைப் பதிப் பித்தும், பலபேரூர்களிலும், சிற்றுார்களிலும் நூற்கூடங்களை நிறுவியும் கூட்டியல் முறையில் புத்தக விற்பனைக்கடைகளை நடத்தியும் வான்களைவைத்து நூல்களை வர் ஊராகவும், தோட்டம் தோட்டமாகவும் விற்பனை செய்தும் நற்பணி ஆற்றலாம். தமிழின் பாதுகாப்புச் சங்கமாக நமது எழுத்தாளர் சங்கம் அமையவேண்டும்" என்று அடிகள் அறைகூவல் விடுத்தார்.
மலாயப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கல்கிக் கருத்தரங்கு
கல்கியின் எழுத்தோவியங்கள் குறித்து மலாயப் பல்கலைக் கழக இந்தியப்பகுதியும் தமிழ் எழுத்தாளர் சங்கமும் இணைந்து பல்கலைக்கழக மண்டபத்தில் மாபெரும் கருத்தரங்கை நடத்த முன்நின்று உழைத்தவர் தனிநாயக அடிகளார் ஆவார். அம் மாபெரும் கருத்தரங்கிற்கு அடிகளாரோடு இணைந்து கூட்டுச் செயலாளர்களாகப் பணிபுரிந்தவர்கள் தற்போதைய மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறையின் தலைவர் டாக்டர் எஸ். சிங்காரவேலும், தற்போதைய தமிழ் எழுத்தாளர் சங்கத தலவர் எம். துரைராஜாவும் ஆவார்கள்.
மலேசியத்தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடுகளில் ஒரு புத்துணர்வை உண்டாக்கி மலேசியத்தமிழர்களின் வரலா றில் மணக்கும் வாடாதமலராகத் தவத்திரு தனிநாயக அடிகளார் வணங்கப்படுவது திண்ணம் என்பது வெள்ளிடைமலை,
அடிகளார் செய்யுள் துறை, ஆராய்ச்சித்துறை, ஒப்பியல் துறை, கவிதை நாடகம் போன்ற துறைகளில் எல்லாம் தம் ஈடுபாட்டைக் காட்டி இருந்தார். நெஞ்சில் நிறைந்த நபிமணி" என்ற நூலுக்கு அணிந்துரை அளித்துச் சிறப்பித்துள்ளார். அடிகளார் கவிதைகள் பிற்காலத்தில் எழுதாவிட்டாலும் சிறு auuuásö gåráflavišÁ96öd “the poetry of Kayts” GT6ărgy si ஊரின் சிறப்பைப்பற்றிக் கவிதை யாத்துள்ளார். மலேசியாவில் இருந்தபோது அடிகளார் மலேசியக்கவிஞர்கள் கவிதைத் தொகுப் பிற்கு (Anthology) ஒரு முன்னுரை வழங்கிச் சிறப்பித்துள்ளார். மலாய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட 'திருக்குறள்" நூலுக்கும் ஓர் அழகிய அணிந்துரை எழுதித் தம் பல்துறை ஆற்றல் வெளிப்படுத்தியுள்ளார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் ஒழுங்கு செய்திருந்த விருந்துக் கூட்டத்தில் அடிகளார் உரையாற்றும் போது எழுத்

மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு.பங்கு 53
தாளர்கள் வெறும் சமூகத் தொடர்பான நாவல்களோடு நின்று விடாமல் வரலாற்றுத் தொடர்பான கதைகளையும் எழுதச் சொன்னுர், வரலாற்றுக் கதை எழுதும்போது அந்தக் கால கட்டத்துக்குரிய நிகழ்ச்சியை வெளிக் கொணரவேண்டும் என அடிகளார் கேட்டுக்கொண்டார். அடிகளார் எடுத்துக்காட்டாகத் தாம் ஒளவையார் படத்தைப் பார்த்ததாகவும், ஒளவையார் குழந்தையாய் இருந்தபோது அவர் தொட்டிலை பலூன்கள் அலங்கரித்ததாகவும் கூறிஞர். ஒளவையார் வாழ்ந்த காலத்திலே பலூன்கள் இருக்கவில்லை. அந்தக் கால கட்டத்துக்குரிய நிகழ்ச் சியைக் காட்டவேண்டும் என்று வரலாற்று நாவல்கள், வரலாற்று நாடகங்களை எழுதுகின்றவர்களை அடிகளார் கேட்டுக் கொண்டதாக மலேசிய வானுெலியில் திரைக்கதை தொடர்பான நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளரான சந்திரகாந்தன் என்பவர் என்னிடம் கூறிஞர். நாடகத்துறையிலும் அடிகளார் எவ்வளவு தூரம் அக்கறை காட்டிஞர் என்பதை இந்நிகழ்ச்சி மூலம் அறிகின்ருேம்.

Page 51
11. தனிநாயக அடிகளின் தாய் மட்டும் கேட்டிருந்தால்!!!
மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறையில் அடிகளார் பணி புரிந்தபோது பலர் அவரின் நண்பர்களாயினர். அவர் களுள் திரு. திருமதி P. நவரத்தினம் குடும்பத்தினர், திரு. திருமதி செல்வநாயகம் குடும்பத்தினர், திரு. திருமதி வேத நாயகம் குடும்பத்தினர் முக்கியமான நண்பர்களுள் ஒரு சிலராவர்.
திருமதி. P. இலக்குமி நவரத்தினம் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது தனி நாயக அடிகளாரோடு இணைந்து செயலாற்றினவர். மாநாட்டின் விருந்தோம்பல் குழு adies (Chairman of the Hospitality committee)s sausaurs. இருந்தவர். அடிகளார்மேல் பெரு மதிப்பும் பக்தியும் கொண்ட வர். திரு. நவரத்தினம் குடும்பத்து நண்பர் அடிகளார் ஆவர். தமது ஓய்வு நேரங்களை இவர்களுடன் கழிப்பார். அடிகளார் தமிழ்ப் பண்பாட்டின்மேல் கொண்ட பற்றை வெகுவாகப் பாராட் டினர். குத்து விளக்கு ஒவ்வொரு தமிழர் வீட்டிலும் இருக்க வேண்டும் என விரும்புவாராம். வலம்புரிச் சங்கின் காது ஏன் வெளியே அமைந்திருக்கின்றது? அது ஒலியைக் காந்த சக்தி போன்று இழுக்கின்றது. விசும்பின் அலைகளை அது உள்ளே gepáésirpg51. “It attracts the sound, ether waves come oat of it' எனவே வலம்புரிச் சங்கின் காது வெளியே, வலப் பக்கத்தை நோக்கி இருப்பதாக அடிகளார் விளக்கி, நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னரே இப் பெரும் உண்மையை நம் தமிழ் மக்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்று கூறிப் பெருமிதம் அடைவாராம் அடிகள். அடிகளாரின் நகைச்சுவை எல்லாம் உயர்ந்தவையாகவே இருக்குமாம். His jokes were very often academic" என்ருர் திரு. நவரத்தினம். அவர் நன் மையை நன்மைக்காகச் செய்தார். தூய்மையை விரும்பினுர். உள்ளும் புறமும் தூய்மையைக் கடைப்பிடித்தார். மற்றவர் களிடமும் அதை எதிர்பார்த்தார். அவருடைய பொழுதுபோக்கு கோல்ப் (golf) விளையாடுவதாகும் என்ருர் திரு. நவரத்தினம். திருமதி இலக்குமி நவரத்தினம் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி

தனிநாயக அடிகளின் தாய் மட்டும் கேட்டிருந்தால் 55
மாநாட்டின்போது தனிநாயக அடிகளாரின் பேச்சைத் திருமதி: எல்லீசருடன் கேட்டு இரசித்துக் கொண்டிருந்தபோது, தம் காதருகே திருமதி எல்லீசர் இவ்வாறு கூறிஞராம் : “f only his mother was here to listen to his speech, she would have been the proudest of mothers.” “soyoussou struiù ut "Gå இந்தப் பேச்சைக் கேட்டிருந்தால், தாய்மார்களுக்குள்ளே அவள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பாள் ; பெருமை அடைந்திருப் பாள்" என்ருராம்.
தனிநாயக அடிகள்-ஓர் இராஜயோகி
தனிநாயக அடிகளின் நெருங்கிய நண்பர்களுள் இன்னுெரு வர் திருவாளர். V. செல்வநாயகம் என்பவராவார். அடிகரார் அழகாக உடுப்பார். கம்பீரமாகக் காட்சி அளிப்பார். அவ ருடைய தோற்றம், பேசும் தொனி எல்லாம் எடுப்பாக, எழிலாக இருக்கும். எனவே திரு. V. செல்வநாயகம் அடிகளாரை ஓர் இராஜயோகி என அழைத்து மகிழ்வார்.
முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாடுபற்றிய பேச்சு
உயர்திரு. V. செல்வநாயகம் முதல் உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்குப் பொதுச் செயலாளராக இருந்தது இங்கு குறிப் பிடத்தக்கது. அடிகளார் மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையின் தலைவராக 1961ஆம் ஆண்டு பொறுப்பேற்று ஒர் இரு நாள்கள் கழிந்தபின் பேராசிரியர் எல்லீசரின் வீட்டிற்கு வருகை புரிந்திருந்தார். அங்கு திரு. V. செல்வநாயகம் அடிகளாரைச் சந்தித்தார். இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். உரை யாடலின்போது திரு. V. செல்வநாயகத்தைப் பார்த்து அடிகனார், *கோலாலம்பூரில் முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த முடியுமா?” எனக் கேட்டாராம். முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு.வித்து இட்ட பேச்சு (Informal thought 0r Seminal thought) போன்று இது அமைந்து இருந்தது என்று தம் கணவரும், தம் தந்தையும் கூறினதாகச் செல்வநாயகத் தின் மனைவியும், மகளும் என்னிடம் கூறினர் முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தவேண்டும் என்ற எண்ணம் அடி களாரின் ஆழ் மனத்திலே நீண்ட நெடுங்காலமாக இருந்த ஒரு சிந்தனையாகும் என்பதை அடிகளாரின் இக் கூற்றின் மூலம் நாம் யூகிக்கலாம். உயர்திரு. V. செல்வநாயகம் அக்காலத்தில் N. E. D. C. (National Education Development Council). Gsdays கல்வி முன்னேற்றக் குழுவின் செயலாளராகவும், பொறுப்பு

Page 52
每6 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
வாய்ந்த பதவியில் இருந்தபடியாலும் நேர்மைமிக்கவராய் இருந்த படியாலும் அடிகளார் அவர்மேல் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார். மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தலாம் என்று சொல்லித் தெம்பை திரு. V. செல்வநாயகம் அடிகளாருக்குக் கொடுத்திருந்தார். இதன் பின்னரே 1964 ஆம் ஆண்டில் புது தில்லியில் நடந்த கீழைத்தேச அறிஞர்கள் மாநாட்டில் அடி களார் கலந்துகொண்டார்.
உலகுக்கு ஏதாவது செய்யவேண்டும்
செபஸ்தியான் வேதநாயகம் என்பவர் அடிகளாரின் மான வர்களுள் ஒருவர். அடிகளாரை நன்கு புரிந்து வைத்தவர்களுள் ஒருவராவர். அடிகளாரைப்பற்றி இவ்வாறு கூறிஞர் : “மற்ற வர்கள் என்ன சொன்ஞர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், உலகுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதே அவர் சிந்தனை யாய் இருந்தது." செபஸ்தியான் வேதநாயகத்தின் தந்தை கூறிஞர் : லேயோன் உரிஸ் (Leon Uris) எழுதிய 'Exodus” (யாத்திரகாமம்)என்ற நூலைப்படிக்கும்படி அடிகளார் நண்பர்களைத் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்வாராம்.
யாத்திரகாமம் (Exodus) என்ற நூல் இருபதாம் நூற்ருண் டின் அற்புதமான நூல். மனித வரலாற்றின் ஈடு இணையற்ற நிகழ்ச்சியைக் கொண்ட நூலாகும். இரண்டாயிரம் ஆண்டு களாகச் சிதறிக்கிடந்த இனத்தை ஒன்று சேர்த்த, ஓர் இனத்தின் மறுமலர்ச்சியைக் கூறும் நூலாகும். யூதர்கள் பல நூற்ருண்டு களாக அனுபவித்த அவமானம், துன்பம், கொலை, சித்திரவதை களுக்குப் பின் அவர்கள் கண்ட புது வாழ்க்கையைப்பற்றி, புது யுகத்தைப்பற்றிக் கூறும் ஒப்ற்ற்ற நூல் இதுவாகும். இந்நூல் 1958ல் முதல் வெளியானது.
அடிகளார் பல்கலைக்கழகத்தோடு மட்டும் நின்றுவிடவில்லை, பல்கலைக்கழகத்துக்கு அப்பாலும் சென்று தமிழ்ப் பணி செய்தார். கீழ் மட்டத்தில் உள்ளவர்களை மேலே உயர்த்த அவர் வெகுவாகப் பாடுபட்டார். மலேசியாவில் உள்ள பட்டிதொட்டிக ளெல்லாம் சென்று தமிழ் வளர்த்தார். மலாயப் பல்கலைக்கழகத் தில் பணிபுரிந்தகால அடிகளார் 1964ஆம் ஆண்டு மே 12ஆம் நாள் ஹம்பக் பல்கலைக்கழகத்தின், தத்துவத்துறையில் "இந்திய இயலின் ஆராய்ச்சியில் திராவிடப் பண்பாட்டின் இடம்" பற்றி ஓர் அருமையான சொற்பெருக்காற்றினுர்.

தனிநாயக அடிகளின் தாய் ம்ட்டும் கேட்டிருந்தால் 5?
(“Place of Dravidian Culture in Indological Research' at the University of Hamburg at the department of Philosophy).
அடிகளார் பல்கலைக்கழகத்துக்குள்ளும், வெளியேயும் செயற் கரிய சாதனைகளைச் செய்தார். மலாயப் பல்கலைக்கழகத்தில் 1961 தொடக்கம் 1969 வரையும் பணிபுரிந்தார்.
(அ) மலாயாவில் உயர்வகுப்புக்களின் தமிழ்ப் பாடப் பிரதம பரீட்சகராக 1961-1969 வரையும் கடமை ஆற்றிஞர்.
(ஆ) 1981 தொடக்கம் 1964 ஆம் ஆண்டுவரையும், மலாயப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கல்விக் குழுவின் உறுப் 9ary irsd: Garua)risei, Member, Board of studies of the School of Education (Until 1964) University of Malaya].
(இ) கல்விக்குழுவின் உறுப்பினர்: (உளவியல், மானிடவியல், சமூக இயல், மெய்யியல், அரசியல் ஆட்சியியல், மொழி இயல் போன்ற துறைகளுக்கு 1963-1964 வரையும் இக் குழுவின் உறுப்பினராய் இருந்தார்.
(ஈ) 1961 தொடக்கம் 1963 வரையும் இஸ்லாமியக் கல்வி சார்பான குழுவில் உறுப்பினராய் இருந்தார்.
(உ) 1961 தொடக்கம் 1966 வரையும் ஆசிரியர் குழுவின் - agùGarrTiù gc555ri. (Member, Academic Staff Commi
ttee. (Until 1966).
(ஊ) 1961 தொடக்கம் 1966 வரையும் நூற்கூடக்குழு உறுப்பினராய் இருந்தார்.
(எ) 1961 தொடக்கம் 1968 வரையும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியக் குழுவின் முக்கிய உறுப்பினராகப் பணி -ஆற்றிஞர்.
(ஏ) மலாயக் கல்வித்துறை மதியுரைக்குழு ஆலோசகராக இருந்து பணி ஆற்றிஞர்.
(ஐ) கல்வித்துறையின் கலப் பிரிவுக்குரிய குழுவின் உறுப் பினராய் 1984 ஆம் ஆண்டு வரையும் கடமையாற்றிஞர்.
(ஒ) "கீழைத் தேசத்தவரின் மலேசிய சமூகம்’ என்ற இயக்கத்தின் துணைத்தலைவராக 1984 தொடக்கம் 1967 வரையும் கடமை ஆற்றிஞர்.

Page 53
158 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
(ஓ) மலேசியப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறைக்கு அக்டோபர் தொடக்கம் டிசம்பர் வரையும் 1965ல் தற்காலிகத் தலைவராய் இருந்து பணிபுரிந்தார்.
(ஒள) மலாயப் பல்கலைக் கழகத்தின் கலைத்துறைக்குத் தலைவராக 1966 ஆம் ஆண்டு முதல் 1967 ஏப்ரல் வரை கடமை யாற்றிஞர். 1967ல் கடல் கடந்து வாழும் தமிழ் இனத் தாரைப்பற்றி ஆய்வுசெய்ய ஆபிரிக்கா, மொரிசியஸ், மேற்கு. இந்திய நாடுகளுக்குச் சென்ருர்,

12. உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முன்னுேடியாக விளங்கியது அடிகளாரின் தூது
தமிழ்த் தூதாகிய செம்மையான தொண்டின் சிறப்பைப் பற்றி அடிகளார் இவ்வாறு கூறுவார்: "இத் தொண்டு இக் காலத்து இன்றியமையாது வேண்டுமோவெனில் இன்றியமை யாது வேண்டும். உலக மொழிகளின் பிறப்பைக் கண்டும், அவை சிதையவும் மாறவும் வழக்கொழியவும், தான் இன்றும் தன் இளங் கன்னித் தன்மையைக் காத்துவருகின்ற தமிழ் அன்னைக்கு இன்று இடுக்கணும் இடும்பையும் நேர்ந்துள. தமிழ்அன்னைமீது பல்வேறு பகைவர்கள் அறிந்தும் அறியாதும் படை எடுத் துள்ளனர். இப் பகை எல்லாவற்றையும் புறங்காணும் கருவி தமிழ்த்தூது முரசின் ஒலி ஒன்றே என நம்புகிறேன்.'
அடிகளார் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தோற்று விக்க, முன் அவருடைய உலகப் பயணம் எவ்வாறு அவருக்குத் துணை செய்தது என இங்கு அலசிப்பார்ப்பது மிகப் பொருத்த மாகும். 1934-1939ஆம் ஆண்டுவரையும் உரோமை மாநகரத்துக் குருத்துவப் பல்கலைக்கழகத்திற் படித்துக்கொண்டிருந்தபோது, அங்கு உலகெங்கும் இருந்து பன்னுட்டுக் குருத்துவ மாணவர் களோடு தொடர்பு உண்டாகியது.
இத் தொடர்பு அடிகளாரின் உலகத்தமிழ்த் தூதுக்கு மிகவும் பேருதவியாக இருந்தது. மேலும் அவர் கத்தோலிக்க குரு என்ற முறையிலும் அவரின் உலகச் செலவு மிகவும் வசதியாக இருந்தது. எவ்வித இடருமின்றிப் பலநாடுகளுக்குச் செல்ல ஏனையவர்களைவிட அடிகளாருக்கு வாய்ப்பு அதிகம் இருந்தது. அடிகளார் தமது தமிழ்த்தூதின் முதற்படியாக, 1950ஆம்,1951ஆம் ஆண்டுகளில் வட, தென் அமெரிக்கா நாடுகளிலும், யப்பானிலும் சொற்பொழிவுச் சுற்றுலாவை மேற்கொண்டார். 1954ஆம் ஆண்டு முதன்முதலாக மலேயா, சிங்கப்பூர் நாடுகட்குத் தமிழ்த் தூதாகச் சென்ருர்.
மீண்டும் 1954, 55ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும், தென்கிழக்காசிய நாடுகளான மலேயr

Page 54
6) தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
சிங்கப்பூர். இந்தோனேசியா, கம்போடியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் கல்விச் சுற்றுலாக்களையும், தமிழ்த்தூதையும் மீண்டும் மேற்கொண்டார். 1960ஆம் ஆண்டில் வளர்ந்தோர் கல்விமுறைகளைப்பற்றி ஆராய்வதற்காக ஐக்கிய அமெரிக்கா, கனடா, செர்மனி, இத்தாலி, ஸ்கண்டிநேவியா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குக் கல்விச்சுற்றுலா மேற்கொண்டார். 1964ஆம் ஆண்டு 'செர்மன் கல்விப்பரிமாற்றச் சேவை" என்ற சங்க ஆதரவில் செர்மன் நாட்டில் சுற்றுப்பயணச் சொற்பொழிவுகள் மேற்கொண்டார்.
அடிகளாரின் உலகச்செலவு வெறும் பொழுது போக்காக அமையவில்லை. தமிழ்மொழியின் பண்டைய சிறப்பு, இலக்கியச் செறிவு, உலகக்கண்ணுேட்டம், தமிழ்ப்பண்பாட்டின் மேம்பாட்டின் சிறப்பைப் பாரெங்கும் பரப் புவதாகவும் அமைந்திருந்தது. தேமதுரத் தமிழே ஈ  ைச உலகெல்லாம் பரவச்செய்தார். அடிகளாரின் 'ஒன்றே உலகம்," என்ற நூலில் அடிகள் தமிழ்த் தூதாகச் சென்ற 25 நாடுகளில் தாம் கண்டதையும், கேட்டதை யும், சிறப்பாகத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளிலே தங்கள் தமிழ்ப்பண்பாட்டை இன்றுவரையும் எவ்வாறு காப்பாற்றி வருகின்ருர்கள் என்பதை நமக்குச் சுவைபட எடுத்துத்தருகின்ருர், வேற்றுமொழிகளுடனும், நாடுகளுடனும், மக்களுடனும் தொடர் புடைய அடிகள் தமிழ்மொழி, நாடு, இனம் ஆகிய மூனறின் மாண்பை ஒப்புநோக்கி அறிந்து பிறருக்குக் கூறிய தனிப்பெரும் பண்பாட்டுப்பகலவனுக விளங்கிஞர். தமது உலகச் சுற்றுப் பயணத்தின்போது மறைந்துபோன தமிழ்நூல்களைக் கண்டு பிடித்து தமிழ் உலகுக்கு உவதையூட்டிய வானம்பாடியாக அடிகள் விளங்கினுச்.
மறைந்த தமிழ்நூல்களைக் கண்டுபிடித்த மாணிக்கப் பேரொளி
தமிழில் அச்சேறிய ஏடுகளுள் கொல்லத்தில் 1578ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் நாள் அச்சான 'தம்பிரான் வணக்கம்" அமெரிக்க நாட்டு 'Harvard' பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றிருப்பதைக் கண்டுபிடித்து தமிழ்மக்களுக்குச் சொன்றர். 1579ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 14ஆம் நாள் கொச்சி அம்பலக் காட்டில் அச்சிடப்பட்ட "கிரிசித்தியானி வணக்கம்" பிரான்சு நாட்டிலுள்ள பாரிசு நூலகத்தில் இருப்பதைக் கண்டு பிடித்துத் தமிழ் உலகுக்குச் சொன்ஞர். 1586ஆம் ஆண்டு புன்னைக்காயலில் பதிப்பிக்கப்பெற்ற 'அடியார் வரலாறு" (Fos Sanctorum) என்ற நூலக் கண்டுபிடித்து அது வத்திக்கான்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்.தூது 6
நூலகத்தில் இடம் பெற்றிருப்பதை உலகத்தமிழ்மக்களுக்கு. எடுத்துக்கூறி எழுச்சியூட்டிஞர்.
பிறநாடுகளில் மறைந்து கிடந்த தமிழ்ப்பண்பாட்டைக் கண்டுபிடித்த
இருபதாம் நூற்ருண்டுக் கொலம்பஸ்
தாய்லாந்து நாட்டு அரசர்கள் முடிசூட்டு விழாவில் திருவெம் பாவையின் முதலிரு பாடல்கள் பாடப்படுவதைக் கேட்டு உலகுக்குப் பறை சாற்றினவர் தனிநாயக அடிகளார். இந்தோனேசியத் தீவுகளுள் ஒன்ருன சுமத்திராவில் காரோபட்டக்கு என்னும் இனத்தார் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவேந்தர் பெயர் களுடன் அழைக்கப்படுவதைக் கண்டுபிடித்துத் தமிழ் உலகுக்கு அறைந்தார். சம்பா, கம்போடியா ஆகிய இடங்களிலும், டுரேனில் உள்ள கலைக்கூடத்தில், இந்தோனேசியா, இந்தோ -சீனுவில் முன்னெருகால வழக்கத்தில் இருந்த சைவசித்தாந்த சமயநெறிகளில், சீயமில் (Siam) உள்ள வெண்கலச் சிற்பங் களில் எல்லாம் தமிழர்களின் சாயம், செல்வாக்கு பரந்து காணப் படுகின்றன என்பார் அடிகள். பாலியிலும் (Bali) கம்போடி யாவிலும் உள்ள நடனங்களில் பாரத நாட்டியத்தின் சாயல் உண்டு என்பார் அடிகள். "Dieng Plateau” வில் உள்ள கோயில்களிலும், வியட்நாமில் உள்ள Po-Nagar (Anghor Thom) ஆகிய கோயில்களில் உள்ள சிற்பங்களில் தமிழர்களின் செல்வாக்கை அறியலாம். அடிகளார் கொண்ட தமிழ்ப்பணியின் விளைவாகவே செக்கோஸ்லவாக்கியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்கள் கூடத் தமது பெயர்களைக் கண்ணகி, செம்பியன், ஐங்குன்றன் என மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது
இந்த உலகச் சுற்றுலா மூலம், தனிநாயக அடிகளார் உலகெங்கும் சிதறிக்கிடந்த தமிழ் அறிஞர்களுடன் தொடர்பு கொண்டும், தமிழர்கள் மத்தியிலும் தமிழ் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். தமிழ்நாடு, இலங்கை, மலேசியா ஆகிய மூன்று நாடு களிலும் வாழ்ந்த தமிழரிடையேதான் முன்பு ஒற்றுமை உணர்வு காணப்பட்டது. ஆனல் தனிநாயக அடிகளார் உலகின் மூல முடுக்குகளில் வாழும் தமிழரைப்பற்றி ஆய்வுநடத்தி, அங்கெல் லாம் சென்று தமிழ்உணர்வைப் பரப்பி உலகத்தமிழர்பற்றிய அறிவை வளர்த்து ஓர் ஒற்றுமை உணர்வைக் கொண்டுவந்தார்.
மேலும் உலகப் பல்கலைக்கழகங்களில் இந்திய இயல்
அல்லது இந்திய படிப்புக்கள் என்ருல் வடமொழியாகிய சமஸ்கிருதத்தையே குறித்தன. தனிநாயக அடிகள் உலகில்

Page 55
w82 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்குச் சென்று தமிழின் சிறப்பைக்கூறி, உலகப் பல்கலைக்கழகங்களில் 'திராவிட இயல"ப் பாடமாக ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தி வெற்றியும் கண்டார்.
இந்திய வரலாற்றை"ப்பற்றி எழுதிய வரலாற்ருசிரியர்கள் வட இந்தியாவை மையமாக வைத்தே இந்திய வரலாற்றை எழுதிஞர்கள். தென் இந்தியாவை இருட்ட்டிப்புச் செய்து விட்டார்கள். எனவே இந்தியாவின் முழுவால்ாற்றை எழுத விரும்புவோர் கங்கைக்கரையோடு நின்றுவிடாமல் காவிரிக் கரையோடு தொடங்கவேண்டும் என வரலாற்ருசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினர் அடிகள். மாக்ஸ் முல்லர் (Max Muler) போன்ற அறிஞர்கள் காளிதாசனின் 'மேகதூது" போன்ற வட இந்திய இலக்கியங்களைப் படித்து என்ன அருமை யான இலக்கியம் என்று பாராட்டியிருக்கின்றனர். ஆனல் அவர்கள் கொஞ்சம் தென்னகத்துக்கு வந்து நக்கீரர் போன்ற தமிழ் அறிஞர்கள் எழுதிய "நெடுநல்வாடை" போன்ற தமிழ் இலக்கியப்பனுவல்களைப் படித்துப் பார்த்திருந்தால் அப்போது திராவிடர்களின் இலக்கியச் சுரங்கத்தின் அருமை பெருமைகளை உணர்ந்திருப்பார்கள் எனச் சிம்மக்குரல் கொடுத்தார் தனிநாயக அடிகள்.
தமிழ்மொழி கிரேக்கத்தைப்போன்று, இலத்தீனைப் போன்று, சமஸ்கிருதத்தைபோன்று வளமிக்க மொழியாகும். ஆளுல் இலத்தீனும், கிரேக்கமும், சமஸ்கிருதமும் காலவெள்ளத் தில் மாறி, சிதைந்து, இறந்த மொழிகளாய் இருக்க, தமிழ்மொழி *உயிருள்ள, ஆக்கமுள்ள, இளமையும், புதுமையும் கலந்த மொழியாய் இருக்கிறது. பழைய மொழிகளுக்குள்ளே இன்றும் இளமையோடு இருக்கும் ஒரே மொழி தமிழ்மொழியாகும்" என்பார் அடிகள். தமிழ்மொழியின் இலக்கியச் சுவையும், பல கையறுநிலப் பாடல்களும் தமிழில் ஏராளமாய் இருப்பதுபோல் வேறு எந்த இந்திய மொழியிலும் இல்லை.
பல சமயங்களின் வீரகாவியங்கள் தமிழில் இருப்பதுபோல் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இலத்தீனில் இல்லை. சமஸ்கிருதத்தில் இல்லை. "ஆங்கிலத்தை வாணிபத்தின் மொழி என்பர்; பிரெஞ்சைத் துர்தின்மொழி என்பர்; இலத்தினைச் சட்டத்தின் மொழி என்பர்; ஜெர்மனைத் தத்துவத்தின் மொழி என்பர்; இத்தாலியனைக் காதலின் மொழி என்பர். ஆஞல், தமிழையோ பக்தியின் மொழி என்பர். தமிழில் இரங்குவது போல் வேறு எந்த மொழியிலும் இரங்கமுடியாது" எனத்

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின். தூது 63
தமிழின் இனிமையைப் பாரெங்கும் பறைசாற்றிஞர். இதோ! காலம் கனிந்துவிட்டது. இறையரசு நெருங்கிவிட்டது என்று இயேசுபெருமான் நற்செய்தி கூறியதுபோல, தமிழுக்கு உலக அரங்கில் தனி இடம் கொடுக்க, காலத்தையும், நேரத்தையும் இடத்தையும் நோக்கிக் காத்திருந்தார் தனிநாயக அடிகள்.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்றுப் புலவன் பூங்குன்றஞரின் உள்ளப்பாங்கை, தமிழ்ப்பாங்கை, தம் மனநிலையாக மாற்றித் தமிழுக்கு உலக விழா எடுக்கக் காத்திருந் தார் அடிகள். ஏற்கெனவே அடிகளார் 'தமிழ்ப்பண்பாடு" என்ற சஞ்சிகை மூலம் உலக அறிஞர்களையும், உலகப் பல்கலக் கழகங்களையும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குப் பக்குவப் படுத்தியிருந்தார்.
தமிழ்பற்றி இருநூறு விரிவுரைகள்
ஐக்கிய அமெரிக்காவில் ஓராண்டில் தமிழைப்பற்றி இருநூறு விரிவுரைகள் நிகழ்த்தியிருக்கின்ருர், நியுயார்க்கில் இருக்கும் Querituatibá. Lusirefláial-issi (Berlitz school of languages) அடிகளை ஆசிரியராக அமர்ந்து பணியாற்ற விழைந்து கேட்டனர். பல நாடுகளிலும் விரிவுரையாற்றும் கடமையை மேற்கொண் டிருந்தபடியால் அடிகனாரால் இப் பொறுப்பை ஏற்கமுடியவில்லை. ஒருமுறை நியூயார்க் மேரிநோல் குருத்துவக் கல்லூரியில் சொற் பொழிவாற்றிய ஐந்து அனைத்துலகப் பேச்சாளர்களில் அடிகளும் ஒருவராவர்.

Page 56
13. கீழ்த்திசைக்கலைகளின் மாநாட்டில் அடிகள்
1964ஆம் ஆண்டு சனவரி 6ஆம் நாள் முதல் 10ஆம் நாள் வரையும் புதுதில்லியில் கீழ்த்திசைக் கல்களின் 26-வது மாநாடு நடந்தது. இம் மாநாட்டிற்கு மலாயா, இங்கிலாந்து பிரான்சு, செக்கோஸ்லாவாக்கியா, செர்மனி, ரூசியா, அமெரிக்கா, இலங்கை போன்ற 15 நாடுகளிலிருந்து அறிஞர்கள் கலந்துகொண்டனர். இத்தகைய மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்ப துண்டு. இதற்கு முன்பு நிகழ்ந்த கீழ்த்திசைக்கலைகளின் 25-வது மாநாடு மாஸ்கோவில் 1960ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தியாவில் இத்தகைய மாநாடு நடந்தது இதுவே முதல் தடவையாகும் என்று கூறிஞர் தனிநாயக அடிகள். இந்த 26-வது கீழ்த்திசைக்கலைகளின் மாநாட்டில் தனிநாயக அடிகள் கலந்துகொண்டார். இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி உலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழு ஒன்றை நிறுவவேண்டும் என அடிகளார் விரும்பினுச். ஏற்கெனவே இந்தத் திட்டத்தை அடிகளார் சென்னை மாநிலத் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் கூட்டத்தில் 1963ஆம் ஆண்டு சூலை மாதம் 26ஆம் நாள் கூறியிருந்தார். அக் கூட்டத்தில் கலந்துகொண்ட சென்னை மாநிலக் கல்வி அமைச்சர் திரு. எம். பக்தவத்சலம் பெரிதும் வரவேற்ருர், (தமிழ்நேசன், கோலாலம்பூர் 17-8-1963).
அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக்குழு (International Association
of Tamil Research) அமைத்தலும் முதல் கூட்டமும்
தனிநாயக அடிகளின் திட்டத்தின்படி புதுதில்லியில் நடந்த 26.வது கீழ்த்திசைக்கலைகளின் மாநாட்டின் பின்னணியில் 1964ஆம் ஆண்டு சனவரித் திங்கள் ஏழாம் நாள் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழு தோற்றுவிக்கப்பட்டது. தனிநாயக அடிகளும், பேராசிரியர் V. 1. சுப்பிரமணியமும் கூட்டாகச் சேர்ந்து கூட்டத்துச் செயலாளர் மூலம் கீழ்க்கண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள் :

கீழ்த்திசைக் கலைகளின் மாநாட்டில் அடிகள் 65
XXVI. International Congress of Orientalists.
Indology (Modern Indian Languages and linguistics) Section.
Special Meeting of Scholars in the Field of Tamil Studies. There will be an informal meeting of scholars interested in differant fields of Tamil Studies on Tuesday, 7th January 1964 at 12 noon in Committee Rooma
(1st Floor).
Sgd. Xavier. S. Thani Nayagam
Sgd. V. I. Subramaniam
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழு தொடங்கப்பட்ட போது முதல் கூட்டத்திற்கு சமூகம் அளித்தோர் பெயர் பின்வருமாறு:
1. பேராசிரியர் தெ. பொ. மீனுட்சிசுந்தரம், அண்ணு
மலைப் பல்கலைக்கழகம். பேராசிரியர் ஜின் பீலியோசா, பாரிஸ். பேராசிரியர் மு. வரதராசன், சென்னைப் பல்கலைக் கழகம். 4. பேராசிரியர் T. பரோ, ஆக்ஸ்பட் பல்கலைக்கழகம். 5. பேராசிரியர் F. B. J. கீயூப்பர், லேடன் பல்க3லக்
கழகம். 6. பேராசிரியர் A. C. செட்டியார், சென்னைப் பல்கலைக்
கழகம். 7. பேராசிரியர் K. கணபதிப்பிள்ளை, இலங்கைப் பல்கலைக்
கழகம்.
8. பேராசிரியர் V. 1. சுப்பிரமணியம், கேரளா பல்கலைக்
கழகம். 9. பேராசிரியர் M. A. துரை அரங்கசாமி, சென்னைப்
பல்கலைக்கழகம்,
10. பேராசிரியர். சேவியர். S. தனிநாயகம், மலாயப்
பல்கலைக்கழகம். 5-بس۔-,5

Page 57
66, தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
11. டாக்டர். கமில் கலபில், செக்கஸ்லவாக்கியா.
12. கா. பொ. ரத்னம், மலாயப் பல்கலைக்கழகம். 13. K. ஆறுமுகம், தில்லி பல்கலைக்கழகம்.
14. டாக்டர். S. சங்கர் ராஜ்நாயுடு, சென்னைப் பல்கலைக்
கழகம் 15. சாள்ஸ் T. பியுவெசி (Feuvvest) சென்னைப் பல்கலைக்
கழகம், ஹார்வட் பல்கலைக்கழகம். 16. ஹறல்டு S. பவர்ஸ், பெனிசில்வானியா பல்கலைக்
கழகம். 17. டாக்டர். R. E. ஆசர். S. O. A. S. இலண்டன்
பல்கலைக்கழகம். 18. A. K. இராமனுஜன், சிகாகோ பல்கலைக்கழகம். 19. செல்வி. வவுடேவில்லே, எப்பேயோ, பாரிஸ். 20. டாக்டர். K. மகாதேவ சாஸ்திரி, பூரீ வேங்கடேஸ்வரா
பல்கலைக்கழகம், திருப்பதி.
21. M. R. ஜம்புநாதன், பம்பாய். 22. R. சண்முகம், தில்லி பல்கலைக்கழகம். 23. டாக்டர் சாலை இளந்திரையன், தில்லி பல்கலைக்கழகம். 24. இளம் கனக சவுந்தரி, தில்லி பல்கலைக்கழகம். 25. மறைத்திரு. S. இராசமாணிக்கம், புனித சவேரியார்
கல்லூரி, பாளையங்கோட்டை.
26. R. பார்த்தசாரதி, தில்லி பல்கலைக்கழகம்.
இக் கூட்டத்திற்குப் பேராசிரியர் தெ. பொ. மீனுட்சி கந்தரம் தலைமை தாங்கினர். டாக்டர். பேராசிரியர் தனிநாயக அடிகள் தமிழ் இயலில் ஆர்வமிக்கவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட காரணத்தை விளக்கிப் பேசிஞர். அடிகளார் அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் குழுவின் அவசியத்தை முன் மொழிந்தார். டாக்டர் கமில் சுலபில் அதனை வழி மொழிந்தார். டாக்டர். சங்கர ராஜ் நாயுடு, சென்னைப் பல்கலைக்கழகம், *அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழு" என்று கூருமல், அனத்துலகத் திராவிடி ஆராய்ச்சிக்குழு" என்று அழைத்தால் நல்லது

கீழ்த்திசைக் கலைகளின் மாநாட்டில் அடிகள் 6?
என்று தம் கருத்தைத் தெரிவித்தார். கூட்டத்திற்கு வந்திருந்த வர்கள் அவர் கருத்தை ஏற்க மறுத்தார்கள். திட்டவட்டமாகத் தமிழியலைப் பரப்பும் நோக்கத்துடன் இக் கூட்டம் கூட்டப்பட் டிருக்கிறது. தமிழியலில் ஆர்வம் உள்ளவர்களுக்கே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது என்று கூறினர். "அனைத்துலகத் தமிழா ராய்ச்சிக் குழு’ (IATR) அன்று தேர்ன்றியது.
இக் குழு எப்படிப்பட்ட செயலில் இறங்கும், தமிழ் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்யும் விளைநிலம் எவ்வளவு அகல மானது என்பதுபற்றி யெல்லாம் பேராசிரியர் பீலியோசா, பேராசிரியர் தோமாஸ் பரோ, பேராசிரியர் F. B. J. கியூப்பர், பேராசிரியர் தெ. பொ. மீனுட்சிசுந்தரம், டாக்டர் கமில் கலபில் போன்ருேர் உரையாற்றினர். பேராசிரியர் டாக்டர் தனிநாயக அடிகள், 'தில்லியில் அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக்குழு தொடங்கப்பட்டவுடனே, அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஒன்று கூட்ட இருந்தோம். உடனே அது சாத்தியமாகவில்லை. இருந்தும் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கூட்டுவதே, இந்த அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக்குழுவின் நோக்கமாகும்" எனத் தனிநாயக அடிகள் விளக்கிப் பேசிஞர். தமிழ் ஆராய்ச்சி பற்றிய செய்திகளைத் 'தமிழ்ப்பண்பாடு” (Tamil Culture) என்ற முத்திங்கள் ஏட்டின் வழியாகவும், செய்திபற்றிய மடல் (News letter) மூலமாகவும் அறிவிக்க வேண்டும் என்ற கருத்து கூட்டத்தில் எழுப்பப்பட்டது. இக் கூட்டத்தில் அனைத் துலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழுவின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழுவின் தலைவராக, பேராசிரியர் தெ. பொ. மீனுட்சிசுந்தரஞர், பேராசிரியர் ஜின் பீலியோசாவின் பெயரை முன்மொழிந்தார். ஒரே மனதாக எல்லோரும் அவரைத் தலைவராகத் தெரிந்தெடுத்தனர். துணைத் தலைவர்களாகவும், செயலாளர்களாகவும் இவர்கள் தெரிந் தெடுக்கப்பட்டனர்.
துணைத்தலைவர்கள்
பேராசிரியர் தோமாஸ் பரோ, (ஆக்ஸ்பட்). பேராசிரியர் M. B. எமஞே, (பேர்க்கினி). பேராசிரியர் F. B. J. கியூப்பர், (லேடன்). பேராசிரியர் தெ. பொ. மீஞட்சிசுந்தரம், (மதுரை). பேராசிரியர் மு. வரதராசன், (சென்னை).

Page 58
68 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
செயலாளர்கள்
பேராசிரியர் கமில் சுலபில், (பிரேக்). பேராசிரியர் சேவியர் S. தனிநாயகம், (கோலாலம்பூர்.)
பேராசிரியர் V. 1. சுப்பிரமணியம் நன்றி நவிலக் கூட்டம் இனிதே முடிந்தது.
திரு. ஆ. சுப்பையா பொருளாளராகவும், கோலாலம்பூர் மாநாட்டிற்கு முன் தெரிந்தெடுக்கப்பட்டார்.
உயர்திரு. H. W. தம்பையா, கோலாலம்பூர் மாநாட்டின் இறுதிக் கட்டத்தில் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக்குழு' (IATR) தோன்றியது பற்றி-ஒரு
சில விளக்கம்.
*அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக் குழுபற்றி அறிய விரும்புவோர் தனிநாயக அடிகள் வெளியிட்ட முத்திங்கள் stLiter Tamil Culture' Gas resis. 1. (1952) Luis 320: தொகுதி 4 (1955) பக். 99. பார்க்கவும்.

14. அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் (I.A.T.R.) கொள்கை
இக் கழகத்தைப் பற்றித் தனிநாயக அடிகளார் இவ்வாறு
கூறுவார்:
சங்க இலக்கியத்திற் கூறிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் கொள்கையையும், இந்த நூற்ருண்டிற் பாரதியார் கூறிய *திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" எனும் கோட்பாட்டையும் அடிப் படைக் கொள்கைகளாகக் கொண்டிருப்பது அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம். இந்தக் கழகம் ஆற்றிவரும் தொண்டுகள் பல. உலகில் உள்ள தமிழ் அறிஞர் பலரையும் ஒன்று சேர்ப்பதும், அவர்களை அறிமுகப்படுத்துவதும், அவர்கள் ஆராய்ச்சியை வெளிப்படுத்துவதும் இந்தக் கழகத்தின் சிறப்புப் பணிகள். இக் கழகம் ஓர் ஆராய்ச்சிக் கழகம், அதுவும் பல்கலைக் கழக நிலையிலுள்ள ஆராய்ச்சிக் கழகம். உலகில் எங்கு தமிழ்த் துறைகளில் ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றதோ அங்குள்ள அறிஞரை ஒன்று சேர்ப்பது இக் கழகத்தின் நோக்கம். மேலும் இக் கழகத்திற்குப் பொருந்திய ஆராய்ச்சி, இலக்கணம், இலக்கியம்பற்றிய ஆராய்ச்சிமட்டுமல்ல; தமிழ்த்துறைகளோடு தொடர்புள்ள எல்லாத்துறைகளையும் ஆராய்ச்சிக்களமாகக் கொண்ட ஆராய்ச்சி இக் கழகத்திற்குரியது. தமிழ்மக்களுடைய வரலாறு, தமிழ்மக்களுடைய மனித இயல், தமிழ்மக்களுடைய சமயங்கள், தத்துவங்கள், தமிழ்மக்கள் வாழும் நாடுகள், தமிழ் 1மக்கள் பிற இனத்தாரோடு கொண்ட தொடர்புகள், தமிழர் பண்பாடு, தமிழ்க்கலைகள், தமிழ்மொழி இயல்-இன்ஞேரன்ன துறைகளில் நிகழும் ஆராய்ச்சி எல்லாம் தமிழ் ஆராய்ச்சியாம். இத்துறைகளில் ஈடுபடும் அறிஞர் சிலர் நன்கு தமிழைப் பேசவும் எழுதவும் அறிந்திலரெனினும், வரலாற்று அடிப்படையிலும், மொழியியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் இவர் ஆற்றும் தொண்டோ பெரிது. ஆக்ஸ்பட்டு பல்கலைக்கழகத் திலும், பேர்க்லி பல்கலைக்கழகத்திலும் உள்ள பேராசிரியர் பருேவும், எமெனுேவும் தமிழில் உரையாடும் ஆற்றலைப் பெற்றிலர்; ஆயினும், அவர்கள் பதிப்பித்த திராவிடமொழிகளின் ஒப்பியல்

Page 59
70 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
அகரவரிசை எத்துணைச் சிறந்தது இபபடி உலகம் அறிய வேண்டுமென்று ஆங்கிலத்தில் வெளியிடப்படும் ஆராய்ச்சி ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துகொண்டே வருகின்றது. ஆதலால் நம்மவரும் தம் ஆராய்ச்சியை ஆங்கிலத்தில் வெளியிடுவதற்குக் காரணம் அதனை உலகம் அறியவேண்டுமென்பதேயாகும்" “to encourage and to coordinate the efforts of individuals or small institutions scattered throughout the world, very often isolated but sharing a common interest in Tamil' The Aim of I. A. T. R.
அடிகளார் மலாயாவில் இந்தியத்துறையின் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் சென்னையில் வெளியாகும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்" பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தார்கள். அப்பேட்டி 1961ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் வெளியாகியது. இதோ அந்தப் பேட்டி :
6 Tamil studies had great need to be modernized as any other arts group or modern European language' He has been to Annamalai University as well as to the Tamil Research and Development Council in Madras, and had suggested an Annual Conference of University heads of departments of Tamil, so that common problems of courses, methods of teaching, and items of research might be discussed. Professors of Tamil in Ceylon, Malaya, and even in London, Paris and Prague would be interested in participating in such conferences. It was for a Tamil University in Tamil Nadu to imitate such a move' he said.
*ஏனைய கலைத்துறையைப் போன்றே, அல்லது தற்கால ஐரோப்பிய மொழியைப்போன்ருே, தமிழியலையும் நவநாகரிகப் படுத்துவது மிகவும் தேவையானதொன்ருகும் (என்று அடிகள் சொன்னுர்), அண்ணுமலைப் பல்கலைக்கழகத்துக்கும், சென்னை யிலுள்ள தமிழ் ஆராய்ச்சியும் முன்னேற்றக் கழகத்துக்கும் அடிகளார் சென்றிருந்தார். அங்கு அடிகளார், பொதுவான பாடத்திட்டங்கள் பற்றிய பிரச்சினைகளையும், கற்பிக்கும் முறைகள் பற்றியும், ஆராய்ச்சி தொடர்பான விடயங்கள்பற்றியும் கலந்துரை பாட, பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர்கள் ஆண்டு தோறும் சந்திக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் இலங்கை, மலாயா, இலண்டன், பாரிஸ், பிரேக் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர்கள், இப்படிப்பட்ட மாநாடுகளில் பங்குபற்ற விருப்பம் தெரிவித்திருக்கிருர்கள் என்றும், இதற்குத் தமிழ்

அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின்.கொள்கை 71
நாட்டில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகமே முன்நின்று செயலாற்ற வேண்டும்" எனத் தனிநாயக அடிகள் கூறினுள்
இக்கால கட்டத்தில் பேராசிரியர் தனிநாயக அடிகள் சென்னையிலுள்ள 'தமிழ் ஆராய்ச்சியும், முன்னேற்றச்சங்கமும்" -என்றஇயக்கத்தில் ஓர் உறுப்பினராக இருந்தார். இத்தகைய மாநாட்டைத் தமிழ்நாட்டில் கூட்டுவதுதான் மிகப் பொருத்தம் என அடிகளார் தொடக்கத்தில் நினைத்திருந்தார். எனவே அடிக ளார், ஆதரவுபெற அப்போது அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியராய் இருந்த பேராசிரியர் தெ. பொ. மீஞட்சி சுந்தாரூரின் உதவியை நாடிஞர். அடிகளார் இதுபற்றிச் சென்னை மாநிலத்தின் அமைச்சராய் அன்று இருந்த உயர் திரு. C. சுப்பிரமணியத்துக்கு உத்தியோகபூர்வமாக ஒரு கடிதம் எழுதிஞர். அக் கடிதத்திற்குக் கூட்டாகத் தனிநாயக அடிகளாரும், பேராசிரியர் தெ. பொ. மீனுட்சிசுந்தரமும் கையொப்பம் வைத் திருந்தார்கள்.
இதற்கிடையில் உயர்திரு. C. சுப்பிரமணியம் மத்திய அரசின் அமைச்சராக மாற்றலாகி, புது தில்லி சென்றுவிட்டார்.
இவ்வேளையில் தனிநாயக அடிகள் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு எங்கே வைக்கலாம் என்பதுபற்றி ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார். தேசிய கல்வி முன்னேற்றச் சங்கத்தின் (National Education (Indian Schools) Development Council செயலாளர், உயர்திரு. V, செல்வநாயகம் மலேசியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்த வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டியவர் தம்முடைய இல்லத்தில் 1962ஆம் ஆண்டு ஆகஸ்டு 12ஆம் தேதி நடந்த ஒரு கூட்டத்தில் மலாயாவில் தமிழ்க்கல்வியின் முன்னேற்றம் குறித்துச் சில கருத்துப்பரி மாற்றம் செய்வதற்காகத் தனிநாயக அடிகளுக்கு அழைப்புக் கொடுத்திருந்தார். மலேசியாவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துவதைத் தேசிய கல்வி முன்னேற்றச்சங்கத்தின் தலைவராய் இருந்த மதிப்பிற்குரிய V. மாணிக்கவாசகமும் பெரிதும் வரவேற்ருர். மதிப்பிற்குரிய V. மாணிக்கவாசகம் மலாயப்பல்கலைக் கழகம் அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு முயற்சிகளை எடுத்தால் தேசிய கல்வி முன்னேற்ற சங்கம் அம்முயற்சியை ஆதரித்து நிதி உதவியும் செய்யும் என்று D -golf Gorg asa-gisepii. (NEDC Minutes of meeting August 12th 1962 at 25 Maxwell Road. Kuala-Lumpur)

Page 60
15. தனிநாயக அடிகளாரின் நீண்ட நாளைய நினைப்பு
உலகத்தமிழ் அறிஞர்கள் மாநாடு ஒன்றைக் கூட்ட வேண்டும் என்பது பேராசிரியர் தனிநாயக அடிகளின் நீண்ட நாளைய நினைப்பாகும் என்று ஆகஸ்டு 17ல் வெளியான தமிழ் தேசன் பத்திரிகை 'உலகத்தமிழ் அறிஞர்கள் அடுத்த ஆண்டு (1964) சென்னையில்" பல்கலைக்கழகப் பேராசிரியர் தனிநாயக அடிகள் தகவல்-என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை தமிழ் நேசன் வெளியிட்டது. தொடர்ந்து அக் கட்டுரையில் சனவரி 11, 12ஆம் தேதிகளில் சென்னையில் ஓர் 'உலகத் தமிழ் மாநாடு” நடத்த வேண்டும் என்றும், இயலுமாயின் அம் மாநாட்டிற்கு இந்தியக்குடியரசின் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர் களைத் தலைமை தாங்க அழைப்பதெனவும் பேராசிரியர் தனி நாயகம் கொண்டு வந்த தீர்மானத்தைத் தமிழ் வெளியீட்டுக் கழகம் அங்கீகரித்தது (தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் உறுப் பினர்களுள் ஒருவராய் அடிகள் இருந்தார்.)
தொடர்ந்து தமிழ் நேசன் அக் கட்டுரையில் எழுதியதாவது: உலகத் தமிழறிஞர்கள் மாநாட்டை மலாயாவில் நடத்தும் சாத்தியம் குறித்து ஏற்கெனவே கோலாலம்பூரில் சிந்தித்தோம். ஆணுல் அத்தகைய மாநாட்டின் தொடக்க விழாவைத் தென் இந் தியாவில் நிகழ்த்துவது சிறப்புடையதாக இருக்கலாம்" என்று பேராசிரியர் தனிநாயக அடிகளார் சென்ற ஆண்டில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் டாக்டர் மு. வரதராசனுருக்கு அனுப்பியிருந்த குறிப்பில் கூறியிருந்தார்.
(நன்றி : "தமிழ் நேசன்.” கோலாலம்பூர். ஆகஸ்டு 17, 1963)
பல காரணங்களை ஒட்டிச் சென்னையில் இடம் பெறவேண்டிய முதல் தமிழ்மாநாடு சென்னையில் இடம் பெறவில்லை. தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணியின் உச்சக்கட்டம் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு
1964ஆம் ஆண்டு சனவரி ஏழாம்நாள் புதுதில்லியில் அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கப்பட்ட நாள்

தனிநாயக அடிகளாரின் நீண்ட நாளைய நினைப்பு 78
முதல், தனிநாயக அடிகளார் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்துவதற்காகப் பம்பரம்போல் சுழன்று பணி யாற்றிஞர். மாநாடு நடத்துவதுபற்றிப் பல நாடுகளுக்குப் பயணமாஞர். பல நாட்டின் பல்கலைக்கழகத் துணைவேந்தர் களைச் சந்தித்தார். பல அரசியல் தலைவர்களோடு உரை யாடிஞர். மாநாட்டை எங்கே நடத்துவது? எப்போது நடத்துவது? யார்யாரை மாநாட்டிற்கு அழைப்பது? யார் மாநாட்டைத் திறந்துவைப்பது போன்ற சிந்தனைகளில் மூழ்கிஞர். இரண்டு ஆண்டுகள் கடுமையாக மாநாட்டிற்காக ஏற்பாடுகள் செய்தார்.
முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் ஏன் நடித்தப்படி
ග්lගීඨි 7
இதற்குரிய காரணத்தை அடிகளார் விளக்கி ஒரு கட்டுரை தமிழ்நேசனில் எழுதியிருந்தார்:
'இக் கருத்தரங்கு நடைபெறவேண்டுமென்று 1963ஆம் ஆண்டு சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் சென்னை முதல் அமைச்சர் பக்தவத்சலம் தலைமைதாங்க இக் கருத்தை நான் முன்மொழிந்தபொழுது முதலமைச்சரும் பேராளரும் இதனை வரவேற்றர்கள். ஆணுல், இந்திய நாட்டின் எல்லப்புற நிகழ்ச்சிகள் காரணமாகச் சென்னையில் இதனை 1964ஆம் ஆண்டு தைத்திங்களில் எண்ணியவாறு நடத்த இயலவில்லை." (தமிழ்நேசன், கருத்தரங்குச் சிறப்புமலர். சனிக்கிழமை, ஏப்ரல் 16. 1966-கட்டுரை) “தமிழ்த்துறைகளின் உலகக் கருத்தவை'- தனிநாயக அடிகளார்.
மாநாடு உருவெடுத்த பாங்குபற்றி அடிகள்
'மலைநாட்டில் அமைச்சர் மாணிக்கவாசகம் அவர்களைத் தலைவராகவும் தமிழ்க் கல்விக்கென அரும்பாடுபடும் வி. செல்வ நாயகம் அவர்களைச் செயலாளராகவும் கொண்ட இத் தேசியக் கல்வி (இந்தியப்பள்ளிகள்) வளர்ச்சிக் கழகத்திற்கு இந்திய நாட்டிலோ மலைநாட்டிலோ இத்தகைய உலகப்பேரவை ஒன்றை நடத்தவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தேன். தாமே சான்ருேர் அவையைக் கூட்ட நினைத்திருந்த பெரியோர் இருவரும் இவ் வேண்டுகோளை வரவேற்றனர். அந்நாளன்றே இக்கருத்தரங்கு உருவெடுத்தது.' ('தமிழ்த்துறைகளின் உலகக் கருத்தவை"-தனிநாயக அடிகளார். தமிழ்நேசன், கருத் தரங்குச் சிறப்புமலர். சனிக்கிழமை, ஏப்ரல் 16. 1966).

Page 61
74 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
மாநாட்டின் ஏற்பாடுகள்பற்றி அடிகளார்
"இக்கருத்தரங்கு ஒருவர் இருவருடைய செயலென்று நினைப்பது தவருகும். மலாயப் பல்கலைக்கழகத்தின் தூண்டு தலும், சென்னையிலிருக்கும் குழுவினரின் பேராதரவும், திருவாளர் ஆ. சுப்பையா அவர்கள் சென்ற 15 ஆண்டுகளாக வள்ளல் தன்மையோடு தமிழை ஒம்பவேண்டும் என்று ஆற்றிவரும் அரும்பணியும், என் நண்பர் சுலபில் சுப்பிரமணியம் போன்ருேளின் தூண்டுதலும், ஈழத்தில் உள்ளோரின் எழுச்சியும், மலாயப் பல்கலைக்கழக இந்தியப் பகுதியிலுள்ள விரிவுரையாளர்கள் மாணவருடைய ஆற்றலும் ஒத்துழைப்பும், மலைநாட்டுக் குழு வினரின் திருத்தொண்டும் இக் கருத்தரங்கின் ஏற்பாடுகள் நன்கு அமைவதற்குக் காரணமாக இருந்துள்ளன." (தமிழ்த்துறைகளின் உலகக் கருத்தவை. - தனிநாயக அடிகளார். தமிழ்நேசன், கருத்தரங்குச் சிறப்புமலர். சனிக்கிழமை, ஏப்ரல் 16. 1966) மக்களின் ஆதரவும் தூதரகங்களின் ஆதரவும் அடிகளுக்கு நிறை யக் கிடைத்தன.
தேசியக் கல்வி வளர்ப்பு நிறுவனம் (National Education Development Council), glass stip Tirtilda LDoirpth (IATR), மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறை, இம் மூன்று நிறுவனங்கள் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறப்பாக நடந்தேற அடிகளாருக்குப் பெரிதும் உதவின. அடிகளார் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இணைச்செயலாள ராகவும், முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் துணைத் தலைவராகவும் இருந்து பணியாற்றிஞர்.
முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக மலேசியா தோறும் பல கிளைகளை அமைத்து நிதி திரட்டிஞர் அடிகள். அமைச்சர்கள் மாணிக்கவாசகம், சம்பந்தன் போன்ருேர் திரட்டும் பணியில் அடிகளாருக்குப் பெரிதும் உதவினர். மலாயப் பல்கலைக்கழக இந்தியத்துறையும் கல் நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டினர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள்கூட ஐந்து காசு முதல் ஐம்பது காசுவரை உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு நிதி வழங்கினர். 'மலேசியர்களே! தமிழ்மொழி பேசுவோரே! தமிழ் மொழியிடத்து அக்கறை கொண்டோரே! முன்வந்து முடிந்த அளவு வாரி வழங்குங்கள்' என்று தொழிலாளர் அமைச்சரும், மாநாட்டு நிதிக்குழுத் தல்வருமான திரு. வெ. மாணிக்கவாசகம் வேண்டுகோள் விடுத்தார்.

16. ஓ! மலேசியாவே! நீ எல்லா நாடுகளையும்விட மாண்பு பெற்ருய்
தமிழ்மொழி பேசப்படுகின்ற நாடுகள் பல இருக்க, தமிழ் மக்கள் வாழ்கின்ற நாடுகள் பல இருக்க, ஒ மலேசியாவே, உன் திலெநகரான கோலாகலமான கோலாலம்பூரில்தான் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்தது. 1966ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் முதல் 23ஆம் நாள் வரையும் உலகின் 22 நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்களும், தமிழில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் பலரும் தமிழ்அன்னையின் புகழை உலக அரங்கில் ஒலிக்கவந்து கூடிஞர்கள். 140 பேராளர்களும் 40 பார்வையாளர்களும் கலந்துகொண்டார்கள். தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடுபற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்தார்கள். இப்படிப்பட்ட மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்த மூல காரணராக இருந்தவர், விழாநாயகனுக விளங்கியவர் தனிநாயக அடிகளார் ஆவார்.
இவ்விழாபற்றி அடிகளார் தமிழ்நேசனுக்கு இவ்வாறு எழுதி இருந்தார்: "சென்ற சில ஆண்டுகளாகத் தமிழறிஞர் சிலரும் தமிழ்ப்பற்றுடையோர் சிலரும் இரவும் பகலும் திட்டமிட்டுள்ள தமிழ்த்துறைகளின் உலக ஆராய்ச்சிக் கருத்தவை உருவாகி நடைபெறப் போவதைக்கண்டு மகிழாத உண்மைத் தமிழர்கள் இலரென்று நம்புகின்ருேம். இருபத்தைந்து நாடுகளிலிருந்து 180 அறிஞர் ஒன்றுகூடி முதன்முறையாகத் தமிழ்த்துறைகளில் இதுகாறும் அறிஞர் நிகழ்த்திய ஆராய்ச்சிகளையும், வருங் காலத்தில் தமிழ்த்துறைகளில் அறிஞர் செயலாற்ற வேண்டிய் திட்டங்களையும் ஆய்வு செய்யப்போகின்றனர். பாரதியாரின் தமிழ் மறுமலர்ச்சித் திட்டம் பொருத்தமான முறையில் இயங்கி வருகின்றது.
"திறமையான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும்' என்ற வாழ்த்து பயனுடைய தாகுவதற்கு இக் கருத்தவையும் ஒரு வழியாகும். தமிழ்ச் சங்கங்களை இலக்கிய வரலாற்றில் ஊருணியாகக்கொண்ட தமிழ் மக்களுக்கு இத்தகைய கருத்தவை ஒரு வியப்பைத் தரவேண்டிய

Page 62
*76 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
தில்லை. அறிஞர் அவை கூடுதலும் சான்றேர் உவப்பத் தலைக் கூடி உள்ளப்பிரிதலும் தமிழ் மரபேயாகும்.
'இவ்வகையில் இன்றைய சுருங்கிய உலகத்திற்கு ஏற்ற வாறு நம் முன்னுேர் அறியாத பல நாடுகளில் இருந்து அறிஞர் வருவது பெரும் மகிழ்ச்சியைத்தரும் செய்தியாகும். கலைஞர் ஒன்று கூடி ஆய்வதால் கலையும், கல்வியும், வளர்வது இயல்பு. அத்தகைய வளர்ச்சிக்கு இக் கருத்தரங்கு அடிப்படையாக இருத்தல் கூடுமென்ற எண்ணமே இக் கருத்தரங்கை நடித்தும் செயற்குழுவினரின் சிறந்த நோக்கமாகும்.” (தமிழ்த்துறை களின் உலகக் கருத்தவை-தனிநாயக அடிகளார். தமிழ்நேசன், கருத்தரங்குச் சிற்ப்புமலர், சனிக்கிழமை, ஏப்ரல் 16, 1966).
மாநாட்டைச் சிறப்புற நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவர் கெள்ரவ. டத்தோ. வி. தி. சம்பந்தன். துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சேவியர் தனிநாயகம். செயலாளர் திரு. வ. செல்வநாயகம். அமைச்சர் மாணிக்கவாசகம், முருகு சுப்பிரமணியம் போன்ருேர் அதன் உறுப்பினர்களாக இருந்தனர். உருவாட்சிக்குழுத் தலைவர் பொது மராமத்து தபால்-தந்தித் துறை அமைச்சர் டான் பூரீ வீ. தி. சம்பந்தன் வரவேற்புரை நிகழ்த்திஞர். அவர்தம் பேச்சில் இம் மாநாடு நடத்துவதற்கு மூலகாரணராக இருந்த தனிநாயக அடிகளையும், இம்மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்துவதற்கு அடிகளாரோடு துணைநின்று உதவிய அனைவரையும் பாராட்டிச் சிறப்பாக அமைச்சர் மாணிக்க வாசகத்தையும், செயலாளர் V. செல்வநாயகத்தையும், பீலியோ சாவையும், அமைச்சர் சம்பந்தன் பாராட்டினுர்,
* I would like to congratulate Pref. Jean Filliozat, President of the I. A. T. R. and his Colleagues. Prof. Xavier S. Thani Nayagam, Head of the department of Indian Studies and his Colleagues and Yang Berhormat Enche W. Manickavasagam, Chairman of the N. E. D. C. of Malaya and his Colleagues for the decision to have this Conference.' The main burden of implementing and Co-ordinating the work has been borne by the Secretary, Enche V. Selvanayagam and his Co-workers.” (Address of Welcome Tan Sri. V. T. Sambanthan, Chairman, Organizing Committee).
மாண்புமிக்க துங்கு அப்துல் ரகுமான், மலேசிய முதல் அமைச்சர் மாநாட்டைத் தொடங்கிவைத்து அடிகளாரை

ஓ! மலேசியாவே நீ எல்லா நாடுகளையும்விட. பெற்ருய் 77
வெகுவாகப் பாராட்டிஞர். மலேசியப் பிரதமரை 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழ்ப் பொன்மொழியைப் பேசவைத்த பெருமை தனிநாயக அடிகளாரைச் சாரும் அடிகளாரைப் பாராட்டுகையில் இவ்வாறு புகழாரம் செலுத்தினுள் மலேசியப் பிரதமர்
• ‘The department of Indian Studies is fortunate inhaving as its Head a person who is not a narrow specialist but one who Commands a knowledge of several languages. I refer to Professor Thani Nayagam, Dean of the Faculty of Arts. No doubt his leadership has been one of the reasons for your choice of the University of Malaya as the Venue for your Conference'.
"எமது பல்கலைக்கழகத்தின் இந்தியத்துறை பன்மொழிப் புலமைபெற்ற பரந்த மனப்பான்மைகொண்ட ஓர் அறிஞனைத் தலைவனுகப் பெற்றது இப் பல்கலைக்கழகத்தின் பெரும் பேருகும். இங்கு நான் பேராசிரியர் தனிநாயக அடிகளையே குறிப்பிடு கின்றேன். அவருடைய தலைமைதான் இந்த மாநாட் ை, இந்தப் பல்கலைக்கழகத்தில் கூட்டுவதற்கு வழி சமைத்ததாகும்? (opening address. Tunku Abdul Rahman, Prime Minister. of Malaysia—IATR Proceedings. p. XXxiii - xxxiv)
முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் M. பக்தவத்சலமும் தனிநாயக அடிகளாரை வெகுவாகப் பாராட்டிஞர். "மலாயப் பல்கலைக்கழகம் இந்த மாநாட்டை முன்னின்று நடத்துவதையிட்டு நான் மகிழ்ச்சி யடைகின்றேன். அத்துடன் அருள்திரு தனிநாயக அடிகளின் விடாமுயற்சியும், பெரும் உழைப்புமே இன்றைய தினத்தை நனவாக்கியதொன்ருகும்' என்று புகழாரம் செலுத்தினுர்,
“Iam glad that the University of Malaya and the National Education (Indian Schools) Development Council of Malaya have taken the lead in Convening the Conference, and I note with pleasure that Rev. Father Thani Nayagam has pursued the proposal Vigorously and made it a fait accompli today.'
(Sri. M. Bhaktavatsalam Chief Minister of Madras.
Greetings in the name of Delegates. IATR Proceedings. p. XXXvii..)

Page 63
ግ8 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்,
தமிழ்நேசன் -தன் ஆசிரியர் தலையங்கத்தில் அடிகளாரை இவ்வாறு பாராட்டியது:
'உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தாரும் சிறப்பாக அம் மன்றத்தின் செயலாளரான பேராசிரியர் தனிநாயக அடிகளாரும் இப்படி ஒர் உலகக் கருத்தரங்கு நடத்த முடிவெடுத்தது அவர் களின் பரந்த முன்னுேக்கையும் எண்ணவலிமையையுமே புலப் படுத்துகிறது. ஏற்கெனவே உலகின் பல நாடுகளுக்குத் தமிழ்த் தூது சென்று பெருமைபெற்றவர் அடிகளார். ஆகவே, அடிகளாரின் சிந்தனையில் இத்தகைய உலகக் கருத்தரங்குத் திட்டம் முகிழ்த்ததில் வியப்பில்லை." (தமிழ்நேசன்-ஆசிரியர் தலையங்கம். 17.4-1966)-ஞாயிறு பதிப்பு. இந்த முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சிங்கள அறிஞர்களும் கலந்து கொள்ளவேண்டும் என அடிகளார் விரும்பிஞர். அப்படியே இருவர் கலந்துகொண்டனர்.
அடிகளார் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்திய தால் சிதறிக்கிடந்த தமிழர்களை இணைத்தார். தமிழர்கள் இடையே ஒரு விழிப்புணர்ச்சியைத் தோற்றுவித்தார். அன்று தமிழர்களிடையே ஒற்றுமை நல்ல முறையில் அமைந்திருக்க வில்ல. தமிழர்களுக்குள்ளே இந்தியத்தமிழன், இலங்கைத் தமிழன், சிங்கப்பூர்த்தமிழன், மலேசியத்தமிழன் என்ற குறுகிய மனப்பான்மைகொண்ட தடைச்சுவர்களைத் தகர்த்தெறிந்தார். முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசியநாட்டில் நடத்திக் காட்டியதன் மூலம் அடிகளார் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாக விளங்கிஞர். பழைய தமிழ்ப் பண்பாட்டிற்குப் புது வடிவம் கொடுத்த தமிழ் மறுமலர்ச்சிச் சிற்பியாகவும், தமிழ் ஆராய்ச்சித் தந்தையாகவும் விளங்கிஞர். முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற தமிழரின் பரந்த நோக்குக் கொள்கையை விருது வாக்காகத் தெரிந்தெடுத்தது அடிகளாரின் விரிந்த உள்ளத்தைக் காட்டுகின்றது.
கண்டிப்பும் கனிவும் கொண்டவர் அடிகளார்
முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருக்கும் வேண்யில் அடிகளார் கண்டிப்பாக ந்டந்துகொண்டாராம் எனச் சந்திரகாந்தனும், செல்வராசாவும் (அமைச்சர் சுப்ராவின் செயலர்) என்னிடம் கூறினர். அடி கனாரின் கண்டிப்பைத் தம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது

ஓ! மலேசியாவே! நீ எல்லா நாடுகளையும்விட.பெற்ருய் 79.
srörgu Fišáras Tössär (Malaysia-Radio Cinema artist) என்னிடம் கூறிஞர்.
'கடமையில் வைராக்கியம் கொண்டவராக அவர் விளங் கினர். கட்டுப்பாடு, செயல்திறன், ஒரு செயலைச் செய்யும் முறை இருக்கிறதே இத்தகைய பண்புகளை ஒருவர் அடிகளாரிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும்" என்ருர் மலேசிய வாஞெலி சினிமாத்துறைக்குப் பொறுப்பான சந்திரகாந்தள் என்பவர்கள். தமிழ்நேசனில் பணிபுரிகின்ற புலவர் சேதுராமனைச் சந்தித்த போது அவர் கூறிஞர் :
'அடிகளார் மலாயப் பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறை யில் பணியாற்றியபோது அவர் தம்மை ஓர் அந்நியனுகக் கருதாமல் தம்மை ஒரு தமிழனுகவே கருதிஞர். அவர் தம்முடைய துறை யோடு நின்றுவிடாமல், தம்முடைய துறைக்கு அப்பால் சென்று தமிழை வளர்த்தார். பல்கலைக்கழகத்திலுள்ள ஏனைய துறை களோடு நல்ல உறவு முறைகளை வளர்த்தார். அந்திய நாட்டில், இந்த முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்திக் காட்டியது, அடிகளாரின் துணிவையும், நம்பிக்கையையும் காட்டு கின்றது. தமிழ் தழைத்தோங்கும் தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ முதல் தமிழ் மாநாட்டை ஆரம்பிக்காமல், மலேசிய மண்ணில் உள்ள கோலாலம்பூரில் ஆரம்பித்தது அவரது அசைக்க முடியாத நம்பிக்கையையும், தளரா முயற்சியை யும் காட்டுகின்றது. அப்படிப்பட்ட அந்த உலக மாநாட்டைத் தனிநாயகத்தால்தான் கூட்டமுடியும்" என்ருர்,
தென்கிழக்காசியாவின் செய்தித்தாள்களெல்லாம் இம் மாநாட்டிற்கு மிகமுக்கியத்துவம் கொடுத்திருந்தன. இந்திய, இலங்கை, மலேய, சிங்கப்பூர் பத்திரிகைகளெல்லாம் மாநாடு பற்றி முதல் பக்கத்தில் கட்டுரைகள் எழுதியிருந்தன. மலேசியா வில் வெளியாகும் தமிழ்நேசன், சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் முரசு போன்ற வெளியீடுகள் மாநாடுபற்றி மக்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்டின. 'தமிழ்நேசன்" மட்டும் மாநாட்டு நிதிக்காக M$ 12,468,58-வெள்ளியைச் சேர்த்தது. மலேசிய வானுெலியும், தொலைக்காட்சியும் மாநாட்டின் முக்கிய நிகழ்ச்சிகளை வெளியிட்டன. மாநாட்டைப்பற்றித் தேசிய மலேசிய சினிமாத் துறை 20 நிமிட அளவில் ஒரு திரைப்படமும் எடுத்தது.
முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பொதுச் செயலாளர் V. செல்வநாயகம் கூறுகின்ருர்: "தனிநாயக அடிகளார் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைச்

Page 64
80 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
சிறப்புடன் நடத்திக்காட்டியதன் மூலம் ஏனைய உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளுக்கு ஒரு முன்னுேடியாக விளங்குகின்ருர்" asTaurů spr sruh GFS2ğš5Jé66ö7 (giř. “Through thae efforts of Rev. Thaai Nayagam this Meeting at Kuala Lumpur became the forerunner of subsequent international Venues for Tamil Scholars successively at Madras (1968), Paris (1970) and Sri Lanka (1976).
(Condolence meeting held in honour of the late Rev
Dr. X. S. Thani Nayagam at Vivekananda Ashrann Kuala. Lumpur 15 September 1980 J.K.W.)
அகில இந்திய வானுெலியும், இலங்கை வானெலியும் மாநாட்டின் நிகழ்ச்சிகளையும், உரைகளையும் ஒலிபரப்பின.
தமிழ்மொழியின் பழம் பெருமையை மீண்டும் கொண்டுவந்த மாநாடு இது என்ருல் அது மிகையாகாது. உலகமெல்லாம் தமிழ் மணக்கச் செய்த மாநாடு இது என்ருல் அது வெறும் புகழ்ச்சியல்ல-அது உண்மையாகும்.
• The greatness of his achievement lay in that he paved the way for the periodic meeting of scholars Connected with all aspects of Tamil studies, through the inauguration of the 1st International Conference-Seminar of Tamil Studies in the University of Malaya, Kuala Lumpur Particularly impressive was his unique undertaking to publish and translate the Thirukural into Malay and Chinese.” (V. Selvanaygam tribute to Rev. Dr. Thani
Nayagam. K. L. 15 Sept. 1980)
"மலாயாவில் நடந்து முடிந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வழியாகத் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்த வும், அடிக்கடி அறிஞர்கள் சந்தித்து ஆய்வு செய்யவும் வழியைச் சமைத்துவிட்டோர் தனிநாயக அடிகளார். இதுவே அவர் பணி யின் உச்சக்கட்டமாகும். திருக்குறளை மலாய மொழியிலும், சீன மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்ட தனிச் சிறப்பு அவ ருடையதாகும்" எனப் புகழ்மாலை சாற்றினர் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் பொதுச் செயலாளர் திரு. V. செல்வ நாயகம்
1980ஆம் ஆண்டு ஏப்ரல் 26, 27ஆம் தேதிகளில் யாழ் மாநகரசபை வரவேற்பு அளித்து அடிகளாரைக் கெளரவித்த

ஓ! மலேசியாவே நீ எல்லா நாடுகளையும்விட.பெற்குய் 8助
போது -அவ் வரவேற்புக்கு நன்றி நவிலும்போது அடிகளார் முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைப்பற்றிக் கூறிய கருத்து இங்கு மேற்கோள் காட்டத்தக்கது: "மலாயா சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் நண்பர் பலர் என்னுடன் ஒத்துழைத் தனர். அக்காலத்தில் மலாயப்பல்கலைக் கழகத்தில் ஆங்கில அறிஞர்தாம் தலைமை தாங்கிஞர்கள். என் நண்பர் பேராசிரியர் எலியேசரும் அங்கு இருந்தார். ஆங்கிலேய அறிஞர்கட்கு ஆராய்ச்சியில் எப் போதும் ஈடுபாடுண்டு; ஆதலால் இந்தியத்துறையில் நூல்களைப்பதிப் பிக்கவும், உலகத்தமிழ் ஆராய்ச்சிமாநாட்டை நடத்தவும் நல்ல ஆதரவு அளித்தனர். மலாயா சிங்கப்பூரில் இருந்த தமிழ் இனத்தார் அனைவரும் தமிழ் அமைச்சர்கள் உட்பட இந்தியத்துறைத் திட்டங்களை வர வேற்றனர். '(நன்றி. சுதந்திரன்'-7-9-80).
முதலாவது தமிழ் ஆராய்ச்சிமாநாடு தமிழ் ஆராய்ச்சிக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். அடிகளார் முதலாவது தமிழ் ஆராய்சசி மாநாட்டின் ஆராய்ச்சிக் கட்டுரைகளை இரு அழகிய தொகுதிகளாக வெளியிட்டிருக்கிருர்கள்.
முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்குப் பிறகு அடிகளார்இலங்கையிலிருந்து மலேயாவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழர்களின் ஒற்றுமை உணர்வை வளர்க்கப் பெரிதும் பாடுபட் டார். மேலும் மலேசியாவில் இருந்துகொண்டு சென்னைக்கு அடிக்கடி சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களுடன்சிறப்பாக தி. மு. க. தலைவர்களுடன் தமிழர்களின் நிலை பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்ருர், தமிழகத்தின் அரசியல் தலைவர்களின் நண்பராகவும் இருந்திருக்கின்ருர், அவர் ராஜாஜியின் நெருங்கிய நண்பராகவும் இருந்திருக்கின்ருர்,

Page 65
17. இரண்டாம், மூன்ரும், நான்காம் உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகளில் அடிகளின் பங்கு
தனிநாயக அடிகள் யாருமே நினைத்துப்பார்க்காத வேளை யில் முதல் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை மலேசியாவில் நடத்திக்காட்டி உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தந்தையாக விளங்குகின்றர். அவருடைய ஆலோசனையில், வழிகாட்டலில் நான்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் சிறப்புடன் நடந்து முடிந்து இருக்கின்றன. ஐந்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு மதுரையில் நடக்க இருந்த ஒரு சில மாதங்களுக்கு முன் அடிகளார் நம்மை விட்டுப் பிரிந்தது தமிழ் ஆராய்ச்சிக்குப் பெரிய இழப்பாகும்.
1968ஆம் ஆண்டு சனவரி 3 முதல் 10 வரையும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நடந்த இரண்டாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு அதை நடத்துகின்றவர்களுக்கு வழி காட்டியாக இருந்தார். இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பொதுச்செயலாளர் V. கார்த்திகேயன், மாநாட் டிற்கு முன் அடிகளாரைப்பற்றிக் கூறிய கருத்துக்கள் இங்கு மேற் கோள் காட்டத்தக்கவை;
Meeting of the Academic advisory Committee. Apríl 2, 1967.
Introductory Remarks by the Secretary General of the III nd International Conference V. Karthikeyan.
“Iam also happy that Prof. S. Thani Nayagam, Foun. der of Secretary General of the International Association of Tamil Research, which is sponsoring this Conference Jointly with the government of Madras and Mr. Justice H. W. Tambiah, President of the Ceylon branch of the I. A. T. R. found it possible to fly to Madras specially to attend this meeting and the meeting, of the steering

இரண்டாம் மூன்ரும், நான்காம்.அடிகளின் பங்கு 8粤
committee tomorrow. Being part of the organization I
should not perhaps embarrass them by making any compli
mentary references but one thing I cannot help saying is that, if today Tamil has been placed on the world map as it. were and international scholars are taking an ever growing: tnterest in Tamil studies, it is due entirely to the broad Vision
and the pioneering efforts undertaken by Prof... Thani
Nayagan, undeterred by the many obstacles which like every
pioneer he had to face and overcome.'
இரண்டாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் பொதுச் செயலாளர் V. கார்த்திகேயன் தனிநாயக அடிகளாரைப்பற்றிக் கூறிய கருத்துக்கள் இங்கு குறிப்பிடத்தக்கவை.
*அனைத்துலகத் தமிழாராய்ச்சிக்கழகத்தின் ஸ்தாபகரும், பொதுச் செயலாளருமான பேராசிரியர் தனிநாயக அடிகளாரும், திரு.H.W. தம்பையா, அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகத்தின் இலங்கைக் கிளைத்தலைவரும், இன்றும் நாளையும் நடக்க இருக் கும் மாநாட்டுத்தொடர்பான கூட்டித்தில் கலந்துகொள்ளச் சென்னைக்கு வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
*அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் ஆதரவுடன் தமிழக அரசு இம் மாநாட்டைக் கூட்டுகின்றது. நிறுவனத்தின் அங்கமாக அவர்கள் இருப்பதால் அவர்களைப் பாராட்டுவதால் அவர்களுக்குத் தர்மசங்கடமான ஒரு நிலையை நான் ஏற்படுத்தக் கூடாது. ஆளுல் சில கருத்துக்களை என்னுல் சொல்லாமலும் இருக்க முடியாது. இன்று தமிழ்மொழியானது உலகப் பூகோளப் படத்தில் ஓர் இடத்தைப் பெற்றிருக்கிறது என்ருல், அனைத்துலக நிலையில் அனைத்துலக அறிஞர்கள் தமிழ் இயலில் என்றும் ஆர்வம் காட்டுகின்றர்கள் என்ருல் இதற்கெல்லாம் மூலகாரணம் பேராசிரியர் தனிநாயக அடிகளாரின் பரந்த நோக்கும், அவர் முன்னுேடியாக நின்று எடுத்த முயற்சிகளுமாகும். எப்படி ஒவ் வொரு முன்னுேடியும் பல இடையூறுகளைத் தாண்ட வேண்டுமோ, அப்படியே அடிகளாரும் இந்த அனைத் துலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தைத் தோற்றுவிப்பதில் பல இடையூறுகளை நேரடியாகச் சந்தித்து வெற்றி கொண்டார்."
இரண்டாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு அடிகளார் மலேசியப் பேராளர்களோடும், பார்வையானச் களோடும் வந்திருந்தார்கள்.

Page 66
8. saufsrauas yasEffair arþSyaib ulawufanyib
அடிகளாரின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்து இரண் டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் நிகழ்ச்சிகள் சில நடந் திருக்கின்றன என்பதற்கு ஆ. சுப்பையா அடிகளாருக்கு எழுதிய கடிதம் மூலம் நாம் அறிகின்ருேம். இதோ அக் கடிதத்தின் விரதியை இங்கு வெளியிடுகின்ருேம் :
II INTERNATIONAL CONFERENCE - SEMINAR OF TAMIL STUDES
(JANUARY 3 TO 10, 1968)
Tamil Conference Secretaria,
27-A, Choudhury Colony,
Madras - 34. India. 11th December, 1967
Prof. Xavier S. Thani Nayagam, Head of the Department of Indian Studies, University of Malaya,
Kuala Lumpur,
Malaysia.
My dear Father Thani Nayagam,
With reference to your letter of November 5, E Confirm that scholars only are accepted as participants (i.e., delegates who present papers and observers who participate without presenting papers). In view of the misunderstanding at your end, the rest of the dele - gation from Malaysia will be given the status of special invitees, with guest facilities as a special case. We will also endeavour to include them in the cultural tour, if possible.
I agree with your suggestion to invite the Chief Minister to present copies of the Proceedings of the First International Conference' as well as of Tamil Studies Abroad' as souvenir gifts by the Government of Madras. The Chief Minister is giving a farewell banguet on January 1, 1968 and it would be a suitable occasion for the presentation.

இரண்டாம், மூன்கும், நான்காம்.அடிகளின் பங்கு
We are upto the neck with work; fortunately Dr. Zvelebil and Mr. Filipski have relieved me of the burden of looking after the academic side of the work, which they are attending to in a most exemplary manner. Mrs. Punitham Tiruchelvam has also arrived and is assisting me on the non academic side. Three Ministers from Ceylon, Mr. Tiruchelvam, Mr. M. H. Mohamed and Mr. I. M. R. A. Triyagolla will be attending. I wonder who will attend from Singapore.
With kindest regards,
Very sincerely, (A. SUBBIAH) Convenor
1968ஆம் ஆண்டு சனவரித்திங்கள் நான்காம் நாள், இரண் டாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து அடிகள் உரை நிகழ்த்தி இருந்தார். கருத்தரங்குக்குத் தலைமை தாங்கினதோடுமட்டும் நின்று விடாமல், 1968ஆம் ஆண்டு சனவரி ஐந்தாம் நாள், மாநாட்டின் மூன்ரும் நாள் அடிகளார், "மேல்நாட்டு நில இயல் நூல்களும் சங்க கால ஆராய்ச்சியும்" என்ற தலைப்பில் ஒர் ஆய்வுக் கட்டுரை தமிழில் படித்தார்.
அதே மாநாட்டில், சனவரி 8ல் 1968ஆம் ஆண்டில் அடி setti Tamil migrations to Guadalupe and Martinique. 1859-1896" என்ற தலைப்பில் ஒர் ஆங்கிலக் கட்டுரை படித்தார். இன்னும் பல்வேறு விதத்தில் இரண்டாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றிக்காக அடிகளார் மிகவும் உழைத்தார்.
மூன்ரும் உலகத்தமிழ் ஆராய்ச்சி பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரத்தில் 1970ஆம் ஆண்டு சூலை மாதம் 15ஆம் நாள் முதல் 18ஆம் நாள் வரையும் நடந்தது. இம் மாநாடும் அடிகளாரின் பெரும் முயற்சியால் நடந்தது. ஏறத்தாழ 180 பேராளர்கள் பதிவு செய்தார்கள். அடிகளார் பாரிஸ் நகரத் தில் இருந்து தம்முடைய நண்பரான ஆ. சுப்பையாவுக்கு எழுதின கடிதம் மூலம் அறிகின்ருேம். மாநாடுபற்றி பீலியோசாவுடன் தாம் நடத்திய உரையாடல்பற்றியெல்லாம் இக்கடிதத்தில் குறிப் பிட்டிருக்கின்ருர். இதோ அக்கடிதத்தின் உண்மைப்படிவம் :

Page 67
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
Paris, March 25, 1970,
My Dear Mr. Subbiah,
I flew into Paris at 10-30 A.M. yesterday, and was in prof. Filliozat's Office by 12 noon. We have formu lated the second Announcement which he hopes to mail to prospective participants and Registrants by March 31. Quite a lot of work has been done in preparation for the Conference.
On March 29, Prof. Filliozat and I are meeting the Unesco officials, Mr. Bammate and Mr. Kohno to discuss further concerning Unesco aid. The French Ministry also will be giving some subsidy. The Conference is, therefore, on, and I am sure it will be a great success. About 180 have already registered.
I shall write to you after the meeting with the Unesco officials.
Kind regards to everyone. Please ask people to be patient. There will be full activity from the first week of June.
Very sincerely yours, X. S. Thani Nayagam
அடிகளாரின் கடிதத்துக்குத் திரு. ஆ. சுப்பையா பதில் அனுப்பி இருந்தார். மூன்ரும் மாநாட்டிற்காக அடிகளார் எடுக் கும் முயற்சியையெல்லாம் பாராட்டுகின்ருர், அடிகளார் மூன்ரும் மாநாட்டைப்பற்றிக் கூறும் வார்த்தையை ஆவலாகக் கேட்கத் தமிழ்கூறும் நல்லுலகம் எவ்வளவு தூரம் காத்திருந்தது என் Lusodas “your assurance that (3rd International Tamil Conference) it will be a great success will be Welcome news to every one here.'” 6T69T g... es Soluuur eqds IGTITG5iżieb 6TGpÁlu கடிதம் மூலம் குறிப்பிடுகின்ருர். இதோ திரு. ஆ. சுப்பையr அடிகளாருக்கு எழுதிய கடிதத்தின் உண்மைப் படிவம்:

இரண்டாம் மூன்ரும், நான்காம். அடிகளின் பங்கு Šፃ”
INTERNATIONAL ASSOCATION OF
TAMIL RESEARCH
hamiliakan Sterling Road, Madras-34. India 30th March 1970.
Prof. Xavier S. Thani Nayagam, Care of Angelo Rasanayagam,
| 2, Rue Argand, Geneva 1201,
Switzerland.
My dear father Thani Nayagam,
III International Tamil Conference at Paris
Thank you very much for your letter of March 25. It is most heartening to hear that the preparations for the Third Conference are going apace and that already 180 scholars have registered. Your assurance that it will be a great success will be welcome news to every one here.
We note that the Second Announcement will be mailed by March 31.
Very sincerely yours, (A. SUBBIAH)
மூன்ரும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதி திகழ்ச்சிகளுக்குத் தனிநாயக அடிகளார் தலைமை தாங்கிஞர். மாநாட்டின் இறுதியில் அடிகளார் தமிழ்நாட்டின் தலைநகரான Gafsir 2-orussi) “stituydig of 9 poisorb' (Institute of Tamil Studies) நிறுவ வேண்டும் என்ற தீர்மானத்தை அவையோர் முன் வைத்து பிரெஞ்சு தேசிய குழு யுனஸ்கோவிடம் சிபாரிசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அடிகளாருடைய இத் தீர்மானத்தை அவையோர் வெகு ஆரவாரத்தோடு வர வேற்றனர். அதன் பின்னர் அடிகளார் 'அனைத்துலகத் தமிழி us) isgaarth' (International Institute of Tamil Studies) என்ற திட்டத்தை நனவாக்க ஆ. சுப்பையா எடுத்துக்கொண்ட விடாமுயற்சியையும், தொலைநோக்குப் பார்வையையும், செயலூக் கத்தையும் வெகுவாகப் பாராட்டிஞர்:

Page 68
88 saufstruas syn Safsir arayib uauflayu
f The Concluding session was presided over by Prof. X. S. Thani Nayagam, who said that the first item of the agenda was a very pleasant one, since he was requesting the Conference to pass by acclamation a resolution recome mending to the French National Commission to place before. Unesco at its forth coming session in the autumn of 1971, a resolution supporting the proposal of the National Commission of Unesco of India to found an institute of Tamil Studies in MADRAS. The resolution was carried by acclamation, after which the Chairman thanked Mr. A. Subbiah, whose initiative, vision and perseverance had been entirely responsible for making the project of an International Institute of Tamil Studies a reality. (3rd International Tamil Conference PARIS 1970. Concluding SESSION by Rev. Dr. X. S. Thani Nayagam).
இறுதியில் அடிகளார் நன்றி நவின்ருர். மூன்ரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் வெற்றிக்காக ஒத்துழைத்த தனி நபர்களையும், நிறுவனங்களையும் பாராட்டி நன்றி கூறுவது தம் கடமையும், பெருமையும் என்று கூறினுர், அடிகளார் யுனஸ் கோவையும் டாக்டர் மால்கம் ஆதிசேசையா, சிப்ஸ், பேராசிரியர் பீலியோசாவையும் அவரது சகாக்களையும். எபேயோ, ஒட்டொல்லி, மில், றெயிசன், பிரெஞ்சுக் கல்லூரியின் இரு நண்பர்கள், பேராசிரியர் பீலியோ சாவுக்குத் துணைபுரிந்த இனப் பொதுச் செயலாளர்களான டாக்டர் ஆசரையும், பேராசிரியர் சுலபிலையும் பாராட்டி நன்றி கூறிஞர் தனிநாயக அடிகள்.
“After a number of other observations and suggestions had been made, Prof. Thani Nayagam stated that it was his duty and privilege to thank all the organisations and individuals which had Collaborated in making the third wonference such a success. He thanked Unesco and Malcohn Adiseshiah, and Cipsh, Professor Filliozat and the members of his office. the EFEO, Madame ORCOL and MLLE, Raison, the College de France, and his two colleagues, Joint Secretaries General, Dr. Asher and Prof. Zvelebil, who had helped Prof. Filiozat.” (Dr. Thani Nayagam, 3rd International Tamil Conference, Concluding sessions).

இரண்டாம், மூன்ரும், நான்காம். அடிகளின் பங்கு 8)
இறுதியாக, பேராசிரியர் தனிநாயக அடிகள் பிரெஞ்சு நாட்டிற்கும், தமிழ் பேசும் நாடுகளுக்கும் இடையே நிலவிய நெருங்கிய உறவுமுறைகளைக் கோடிட்டுக்காட்டி பிரெஞ்சு நாட்டறிஞர்கள் தமிழ்மொழிக்கும், கல்விக்கும் ஆற்றிய பெரும் பங்கைப் பாராட்டிப் பேசிஞர்.
*1974ஆம் ஆண்டில் இலங்கையில் நடக்க இருக்கும் நான்காம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் உங்கள் அனைவரையும் ஒருமுறை சந்திப்பேன்" என்று கூறியதும் மூன்ரும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு இனிதே நிறைவு பெற்றது. பாரிசில் தனிநாயக அடிகளின் இறுதிப்பேச்சில் அவர் சொன்ஞர் : "நான் ஒருமுறை உங்கள் அனைவரையும் இலங்கையில் நடக்க இருக்கும் நான்காம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சந்திப்பேன்’ என்ற கூற்றில் 'ஐந்தாம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடக்கும்வரையும் நான் உயிரோடு இரேன், நான்காம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடே எனது இறுதி மாநாடாய் இருக்கும். ஐந்தாம் மாநாட்டை விண்ணுலகில் இருந்து பார்ப்பேன்" என நயமாக அடிகளார் கூறுகின்றர் :
Prof. Thani Nayagam finally said that he would like to recall the close ties which had existed between France and the Tamil speaking Countries, and the Contribution made by French Nationals to Tamit scholarship and Education. He hoped to meet all the participants once in Ceylon in 1974' (3rd International Tamil Conference Dr. X. S. Thani Nayagam, Concluding session).
இலங்கையில், யாழ்ப்பாணத்தில் அடிகளார் தொடங்கிவைத்த அவரது
இறுதி மாநாடு
நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழர்களின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு சனவரித் திங்கள் மூன்ரும் நாள் தொடங்கப்பட்டது. அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தலைமையுரை நிகழ்த்திஞர். தம் உரையில் தனிநாயக அடிகளின் தமிழ்ப்பணிகளைப் பாராட்டிப் பேசினர். அனைத்துலகத் தமிழாராய்ச்சிக் கழகம் (IATR) வெளி நாட்டார்கள் மத்தியிலே தமிழ்ப்பற்றும், தமிழ் ஆராய்ச்சியும் பரவப் பெரும் பங்கை வகித்தது. இப்படிப்பட்ட பணியைச்

Page 69
90 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
செய்வதற்கு இம் மன்றத்தின் ஆரம்பத் தலைவர்களுள் ஒருவரான தனிநாயக அடிகளை நாம் பாராட்டாமல் இருக்கமுடியாது. இவர் தமிழ்மொழியின் தூதுவராவர். இவர் உலக இன்பத்தைத் துறந்தாலும், தமிழ்ப்பற்றை இவரால் துறக்கமுடியவில்லை. இவர் உலகின் எந்த பாகத்துக்குச் சென்றலும் அங்குள்ள் மக்களுக்குத் தமிழ்மொழியின் தொன்மைச் சிறப்பு, அதன் பெருமையெல்லாம் தம் சொற்பொழிவுகள், கட்டுரைகள் வாயிலாகவும், வானுெலி மூலமாகவும் வலியுறுத்தி வந்திருக் கின்ருர். இவர் முத்திங்கள் ஏடான 'தமிழ்ப்பண்பாடு" இதழின் ஆசிரியராக இருந்து, இதன் மூலம் தமிழ்மொழியின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றினர். இதற்குமேல் ஐரோப்பா, ஆபிரிக்கா, ஆசியா எங்கும் உள்ள தமிழ் அறிஞர்களையெல்லாம், அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ்க் கொண்டு வந்தார்.
*அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம் தனிநாயக அடிகளின் மூளையில் உருவான ஒரு குழந்தையாகும். கடந்த பத்து ஆண்டுகளாக அவரின் அன்புப்பாதுகாப்பிலே வளர்ந்தது. இன்று (1974) வெளி நாட்டு நல்லறிஞர்கள் பலர் முன் னிலையில் அது பத்தாவது பிறந்த ஆண்டு விழாவைக் கொண் டாடுகின்றது. ஒரு குழந்தையைப் பேணி வளர்ப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல என்பதை நீங்கள் எல்லோரும் நன்கு அறிவீர்கள். இது தன் பத்தாவது ஆண்டின் இறுதியில் துன்பச் சோதனைக்கு ஆளானது. இந்த முக்கிய கட்டத்தில் தனிநாயக அடிகளார் இக் குழந்தையைக் கைவிட்டுவிட்டார் என மக்கள் அவர் மேல் குற்றம் சுமத்தினர். இவர் காட்டிக் கொடுக்கும் தன்மை தெரியாத குழந்தைகளைப் போன்ற மனம் கொண்டவர். தமிழ்ப் பண்பாட்டின் பாதுகாவலர் அவர். இதனுலன்றே இக் குழந்தையைக் காப்பாற்றுவதற்கு எங்களோடு சேர்ந்து கடினமாக அடிகளார் உழைத்தார். இந்த நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைப்பதற்கு அடிகளார் விருப்பம் தெரிவித்ததின் மூலம், இக் குழந்தையின் வளர்ச்சியிலே தம் இலட்சியம் இருப்பதாகக் காட்டியுள்ளார். அவருக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.’’ (பேராசிரியர். சு. வித்தியானந்தன். - தலைமை உரை. தலைவர் அனைத் துலகத்தமிழ் ஆராய்ச்சிக்கழகம்-இலங்கைக் கிளை)
* As we recapitulate the role Played by this association in fostering, Tamil research and love for Tamil among foreigners one cannot help praising one of its founders Fr.

இரண்டாம் மூன்ரும், தான்காம்.அடிகளின் பங்கு 9.
Thani Nayagam. He is the ambassador of the Tamil language. Although he has rejected material pleasures his love for Tamil remains. Wherever he went he gave speeches, wrote articles, spoke over the air and stressed to natives of those lands the greatnesss and antiquity of the Tamil language. He edited the quarterly “Tamil Culture' as a means of spreading the greatness of Tamil. Above and beyond this he brought together the Tamil scholars of Europe, Africa, and Asia on to a Common platform through the I. A. T. R.
Thus the I. A. T. R. is his brain child. For the last ten years it grow under his loving Care and now he celebrates its 10th birthday in the midst of many foreign scholars. The hazards of bringing up a child are not unknown to you. This Child was destined to face an acid test at the end of its 10th year. People accused Fr. ThaniNayagam of having deserted the Child at this crucial moment. He is a Custodian of Tamil Culture that knows not the betrayal of children. That is why he struggled with us to save this Child. By Consenting to inaugurate the 4th Conference he has proved that his ideals lie in the growth of this child. We are deeply indebted to him.' (Prof. S. Vithiananthan. President I. A. T. R. Sri Lanka National Unit Presidential Address).
தனிநாயக அடிகளார் நான்காம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆரம்ப உரை நிகழ்த்திஞர். அடிகளார் தம் உரையில் அனைத்துலகத்தமிழ் ஆரரய்ச்சிக் கழகத் தின் பணிகளை விளக்கிக் கூறிஞர். அதன் பின்னர் அனைத் துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் சாதித்தவை என்ன என்பதை விளக்கிக் கூறிஞர்.
"ஒரு காலத்தில் இந்தியப் பண்பாட்டை அறிவதற்கு வடமொழி அறிவிருந்தாற் போதும் என்று மேல்நாட்டார் நினைத் தனர். ஆளுல் இன்று திராவிடமொழிகளிற் சிறந்த தமிழ் மொழியை அறியாது இந்தியாவின் அடிப்படைப் பண்பாட்டையும் கலைகளையும் உணரமுடியாது என்றே, வடமொழியுடன் தென் மொழியையும் பயின்று வருகின்றனர் மேல்நாட்டு அறிஞர். எங்கு மேல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆழ்ந்த வடமொழிப்

Page 70
9. sarfestuus sy affair arbaryti ućufkub
பயிற்சியுண்டோ அங்கு தமிழையும் பயிலத் தொடங்கிவிட்டனர் இம் மாநாடுகளின் பயனை நாம் கணிக்கவேண்டுமாயின், சென்ற மூன்று மாநாடுகளின் தொகைநூல்களைப் (proceedings) படித்துப் பார்க்கவேண்டும். அந் நூல்களைப் பார்த்தால் தமிழா ராய்ச்சி எவ்வளவிற்கு முன்னேறி வருகின்றது என்பதை உணரக்கூடும். இம் மாநாட்டின் கட்டுரைகளும் நூலாக வரும் பொழுது அதை உணருவோம். (இப்போது அவை நூலாக வந்துவிட்டன).
'வெறும் புகழிற்காகவோ, காரணமின்றிப் போற்றுவதற் காகவோ நாம் தமிழாராய்ச்சியில் இறங்குவதில்லை. ஆராய்ச்சி யாளனின் நோக்கம் உண்மையைக் கண்டுபிடிப்பது; உண்மை யைப் புலப்படுத்துவது; மறைந்திருக்கும் உண்மைகளை அகழ்ந் தெடுப்பது. மொழிகள் எத்துணையிருக்கத் தமிழிற்கு மட்டும் இம் மாநாடுகளை நடத்தவும், உலகத்து அறிஞர் வரவும் காரணங்கள் இருக்கவேண்டும். இந்தியப் பண்பாட்டில் 75 விழுக்காடு திராவிடப்பண்பாடு என்று சுநிதி குமார் சட்டர்ஜி கூறியிருக்கின்ருர், இந்த உண்மையைத் தமிழ்த்துறைகளில் ஆராய்ச்சி நடத்துவோர் உணர்ந்துகொண்டே வருகின்றனர். சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்று எண்ணுகின்ற வர்க்குத் தமிழ்மக்களின் தொன்மையும், தமிழ்க் கலைகளின் தொன்மையும் நன்கு புலணுகும். சிந்துவெளி நாகரிகத்தைச் சங்க காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, அங்குள்ள தொடர்புகள் தெளிவாகின்றன. ஆதலால், இந்திய வரலாற்றைப் பயில்கின்றனர். அந்த வரலாற்றில் மாபெரும் பங்கு கொண்ட வர்களப்பற்றி ஆயந்தே தீரவேண்டும். பல்லவ மன்னரின் வெளிநாட்டுத் தொடர்புகள், உரோமப்பேரரசுடன் தமிழ்த் துறை முகங்கள் கொண்ட வணிகத் தொடர்புகள், சோழ மன்னரின் ஆட்சியும் பேரரசும் ஆகியன ஆசியாவின் வரலாற்றிலே பெரும் இடத்தைப் பெறுகின்றன. மார்க்கோ போலோ தென் இந்தியா வைப் பார்த்தபின் பாண்டிய அரசே இந்தியாவின் உயர்ந்த அரசென்று கூறியிருக்கின்றர்.
'வரலாறு எவ்வளவுக்குச் சிறந்திருக்கின்றதோ அவ்வளவுக்கு இலக்கியமும் சிறந்துள்ளது. வடமொழி நீங்கலாக மற்றெல்லா இலக்கியங்களும் இந்தியாவில் ஏறக்குறையப் பத்தாம் நூற்றண் டுக்குப் பின்புதான தோன்றின. ஆனுல் தமிழ் இலக்கியமோ கிறிஸ்துவுக்கு முன்னமே பெரும் மலர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் சங்க இலக்கியம் சமய இலக்கியம் மட்டும் அன்று; மக்களுடைய வாழ்க்கையைக் காட்டும் உலக இலக்கியமும் அது

இரண்டாம், மூன்றம், நான்காம்.அடிகளின் பங்கு 93
தொல்காப்பியமும், எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் இந்திய இலக்கியத்தில் மட்டும் அல்ல, உலக இலக்கியத்திலேயே பெரும் இடத்தைப் பெற்றுள்ளன. வள்ளுவருடைய திருக்குறளைப் போன்ற நூல் உலகில் இல்லையென்பது அல்பெட் சுவைட்சரின் துணிபு. நீதி இலக்கியத்தைப்போல் நம் பத்தி இலக்கியமும் சிறந்தது. நம்முடைய கலைகள், நம்முடைய கோயில்கள் சிறப்புப் பெற்றவை. மொழி அமைப்பிலும், வளத்திலும் தமிழ்மொழி உலகமொழிகளிற் சிறந்தது. தமிழின்தொன்மை, அதன்வளம், புகழ் மண்டிக்கிடக்கும் பண்பாடு, இவற்றையெல்லாம் ஆராய் கின்றவர்கள் மேலும் மேலும் அவற்றை ஆராய விரும்புவர். ஆதலாலேதான், தமிழ் ஆராய்ச்சி வளர்ந்துகொண்டு. வருகின்றது." (நான்காம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுஆரம்ப உரை-தனிநாயக அடிகள்)
நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் அடிகளார் விடுத்த இறுதி வேண்டுகோள்:
நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நாம் தொடங்கிவைக்கும்போது, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தப்படுவதால், ஐந்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நோக்கி நம் சிந்தனைகளெல்லாம் செல்லுகின்றன. அடுத்த மாநாடு (ஐந்தாவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு) மதுரைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் நடத்தப்படக்கூடும். ஆருவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தின் ஆதரவில் நடத்தப்படவேண்டும். பல்கலைக் கழகங்களின் தமிழ்த்துறைகளிடமே நாம் தமிழ்மொழியின் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். இம் மாநாடுகளைத் தொடர்ந்து நடத்துவதற்கு நம் பல்கலைக்கழகங்கள் முன்னுக்குவரும் என நம்புகின்ருேம். இத்தகைய மாநாடுகளே தமிழியல் வரலாற் றிற்கும், தமிழ் ஆராய்ச்சிக்கும் முக்கிய இடத்தை உறுதிப் படுத்தும்." (தனிநாயக அடிகள்-நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு-ஆரம்ப உரை).
எனவே அடிகளாரின் இறுதி வேண்டுகோளுக்கு இணைய, உலகெங்கும் உள்ள பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைகள் மூன்ருண்டுகளுக்கொரு முறை தொய்வில்லாமல் அடிகளார் ஆரம்பிதது வைத்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்து வதே அடிகளாருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்-காணிக் கையாகும்.

Page 71
18 தனிநாயக அடிகளாரும் அனைத்துலகத் தமிழாரய்ச்சி நிறுவனமும்
(Institute for International Tamil Research and Dr. Thani Nayagam)
சென்னை அடையாறில் உள்ள அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை நாம் எல்லோரும் கண்டிருக்கின்ருேம். சென்னை யில் நடந்த இரண்டாம் உலகத்தமிழ் ஆராய்ச்சிமாநாட்டின் போது இத்தகைய ஒரு நிறுவனம் சென்னையில் நிறுவப்பட வேண்டும் என்றும் இதன் தேவையைப்பற்றியும் இம் மாநாட்டில் பேசப்பட்டது. தனிநாயக அடிகளார் பாரிசில் நடந்த மூன்ரும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இறுதியில் ஒரு தீாமானம் கொண்டு வந்தார். சென்னையில் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறு வனம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ருர், அங்குள்ளோர் அனைவரும் இதனை ஒரே மனத்துடன் ஏற்றுக்கொண்டனர். சென்னையில் இந்த நிறுவனம் அமைக்கப்பட வேண்டும். இந்த எண்ணம் திரு ஆ. சுப்பையாவின் மனத்திலும் உதித்த ஒரு திட்டமாகும் என அடிகளார் பாரிசில், மூன்ரும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது கூறி அவரைப் பாராட்டினுர்,
(The Concluding session was presided over by Prof. X. S. Thani Nayagam, who said that the first item of the agenda was a Very pleasant one, since he was requesting the Conference to pass by acclamation a resolution recommending to the French National Commission to place before Unesco at its forth coming session in the autumn of 1971, a resolution supporting the proposal of the National Commission of Unesco of India to found an Institute of Tamil studies in madras. The resolution was carried by acclamation, after which the Chairman thanked Mr. A. Subbiah, whose initiative, Vision and perseverance had been entirely responsible for making the project of an

தனிநாயக அடிகளாரும் அனைத்துலகத்.நிறுவனமும் 95
International Institute of Tamil studies a reality. (Dr. X.S. Thani Nayagam. 3rd International Tamil Conference. PARIS 1970. Concluding session).
சென்னையில் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகளார் பல்வாருகப்பாடுபட்டார். பல தூதுவர்களை யுனஸ்கோவுக்கு அனுப்பி இருந்தார். இது தொடர்பாக உயர் திரு. ஆ. சுப்பையாவும் அடிகளாரும் கடிதத் தொடர்பு வைத் திருந்தார்கள். இதோ! அடிகளார் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் அமைக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளை விளக்கும் சில கடிதங்கள் :
11th October, 1968. Mr. A. Subbiah,
14/1 Sterling Road, Madras-34, South India.
My Dear Mr. Subbiah,
Enclosed are the letters which if you consider opportune may be mailed to the three persons along with the copies of the draft Constitution.
I expect to see the Minister of Education before he leaves for Paris to attend the UNESCO meeting. Yours very sincerely, (Xavier S. Thani Nayagam) Professor of Indian Studies
15th October, 1968. Hon’ble Inche Mohamed Khir Johari, Minister of Education, c/o Malaysian Embassy, 48 & 50 rue de la Faisanderie,
Paris 16E, France.
Dear Honourable Minister,
Further to our conversation last Sunday morning before you left Kuala Lumpur for Paris, I am sending

Page 72
96 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
you a copy of the draft proposals for an Institute of Tamil Studies to be located in Madras. You very kindly agreed to support the project and since you may be leaving Paris earlier than the closing of the UNESCO General Assembly, we shall be very grateful for all the support that the Malaysian Delegation would continue to give to this project.
With very kind regards and wishing you a pleasant stay in Paris.
Yours sincerely, (Xavier S. Thani Nayagam)
Professor of II. dian Studies,
Secretary General, International Association of Tam Research.
16th October, 1968 Hon'ble Mr. Ong Pang Boon, Minister of Education, c/o Singapore High Commission, 16 Northumberland Avenue, London W. C. 2, England.
Dear Hon’ble Minister,
I am enclosing the particulars of a Project which is to be sponsored by the Indian National Commission of UNESCO at this year's General Assembly, for setting up an Institute of Tamil Studies in Madras; the sponsors will seek the collaboration of member countries with an interest in Tamil Studies.
I attempted to see you in order to acquaint you with the particulars of the Project so that the Singapore delegation might also sponsor the project in the manner most suitable to Singapore, but was told you had left Singapore. As a State which promotes Tamil Studies, and as a State which includes Tamil in its

தனிநாயக அடிகளாரும் அனைத்துலகத்.நிறுவனமும் 97
official languages, we shall be grateful if Singapore could give its support to this project.
We hope some day to hold an International Conference of Tamil Studies in Singapore, as you your self have so kindly suggested.
With kind regards,
Yours sincerely. (Xavier S. Thani Nayagam)
Professor of Indian Studies. Secretary General, International Association of Tamil
Research.
16th October, 1968.
His Excellency, Mr. A. P. Rajah, High Commissioner of the Republic of Singapore, f6 Northumberland Avenue,
London W. C. 2,
Your Excellency,
I am enclosing the particulars of a Project which is to be sponsored by the Indian National Commission of UNESCO at this year's General Assembly for setting up an Institute of Tamil Studies in Madras; the sponsors will seek the collaboration of member countries with an interest in Tamil Studies,
I attempted to see the Hon’ble Minister for Education in order to acquaint him with the particulars of the Project so that the Singapore delegation might also sponsor the project in the manner most suitable to Singapore, but was told he had already left Singapore. As a State which promotes Tamil Studies, and as a State which includes Tamil in its official languages, we shall be grateful if Singapore could give its support to this project.
۶ -ست. و

Page 73
98 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
We shall be grateful if you could inform Mr. Ong Pang Boon concerning the Project. I enclose the copy of the letter I have addressed to him at UNESCO Headquarters.
I understand you are expected to go on leave. I met Mrs Rajah's parents at dinner the other day, and was told you are expected here in December.
A happy Deepavali.
Yours sincerely. (Xavier S. Thani Nayagam)
Professor of Indian Studies Secretary General, International Association of Tamil
Research
தனிநாயக அடிகளார் இலங்கையில் நடந்த நான்காம் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது, சென்னையில் உள்ள அனைத்துலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தைப்பற்றிச் சொன்ன கருத்து இங்கு மேற்கோள் காட்டத்தக்கவை:
“It was with the intention of promoting Tamil studies on an international scale that the International Association of Tamil Research sponsored with Unesco aid the foundation of an International Research Institute of Tamil studies in Madras. This project was sponsored also by the Government of Tamilnadu as well as the Indian National Commission of Unesco. This Institute has Commenced work in a small way, but there are hopes of the Institute developing into an International Institute. It is through such Institutions we shall be able to provide foreign scholars with the opportunities they seek- more and more. Universities will be busy with conferring degrees and research will be relegated to post graduate Institutes. That is why we are anxious that the Institute in Madras should succeed as an Institute truly International in character.” (Rev. Fr. Xavier S. Thani Nayagam 4th International Tamil Conference-Inaugural address)

19. இலங்கையில் அடிகளின் மூன்ரும் கட்டப் பணி
1969ஆம் ஆண்டு மலேயப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஓய்வுபெற்ருச். அதன் பின்னர் தம் தாயகமாகிய இலங்கைக்கு வந்தார். 1963 தொடக்கம் 1972 வரையும் அடிகளார் இலங்கையில் உள்ள கண்டியில் இருந்தார். பேராசிரியர் உவில்சனுடன் ஒரு வருடத்துக்குமேல் பேராதனையில் தங்கி இருந்தார். அப்போது பேராசிரியர் உவில்சனின் மனைவியும் பிள்ளைகளும் கொழும்பில் தங்கியிருந்தார்கள். கொழும்பில் உவில்சனின் குழந்தைகள் கல்வி கற்பதற்காகச் சென்றிருந் தார்கள். மனைவிக்குக் கொழும்பில் (Industrial Board) நூலகராக (Librarian) வேலை கிடைத்திருந்ததால் அங்கு சென்றிருந்தார். தம்மோடு ஒன்றரை வருடத்துக்குமேல் அடிகளார் பேராதனையில் தங்கி இருந்ததாகப் பேராசிரியர் ஜெயரத்தினம் உவில்சன் கூறுகின்ருர். இங்கிருந்துகொண்டு ஆசிய, அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்குத் aféFá5th Gupréfugiras (Visiting Professor) - Qafsir actis rif. கொழும்பில் புத்தகக் கண்காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
1970ல் பாரிசில், டிபிரான்சே என்ற கல்லூரிக்குத் தரிசிக்கும் பேராசிரியராகக் சென்றிருந்தார்.
கல்பேன்கியன் நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஐரோப்பிய நூலகங்களைப்பற்றி அறிய ஒரு படிப்பு தொடர்பான Lusorios Gudi) Gas Taricciari (Study tour of European libraries sponsored by the Gulbenkian Foundation,). விருந்தாளி விரிவுரையாளராக ஸ்ரொக்கோம் பல்கலைகழகத் துக்கும், உப்சலா, ஆசிய படிப்புகளின் ஸ்கன்டினேவிய நிறுவனத் துக்கும் சென்றிருந்தார். 1971ல் பாரிஸ், நேப்பிள்ஸ் முதலாம் பல்கலைக்கழகங்களில் தரிசிக்கும் பேராசிரியராகச் சென்றிருந்தார்.
ஒய்வுபெற்றிருந்த காலத்திலும், அடிகளின் பணியோ, தமிழ்ப்பற்ருே, ஆராய்ச்சி வேலையோ குறையவில்லை. உலகெங்கும்

Page 74
100 தனிநாயக அடிகளின் வாழவும் பணியும்
பரந்து இருந்த தம் அறிவுலக நண்பர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார். 1971ல் அமெரிக்கரும், மெதடிஸ்ட் சபைக் குரவரும், யாழ்ப்பாணத்தில் பெருங்கல்விமானுக விளங்கிய வருமான வண. பங்கர் நினைவுச் சொற்பொழிவுகளைத் தனிநாயக அடிகள் சிறப்புடன் நிகழ்த்திஞர்.
இலங்கையில் உள்ள வளலாயில் ஆயர் தியோகுப் பிள்ளையின் நண்பர்
'கற்ருரைக் கற்ருரே காமுறுவர்" என்ற மூதுரைக்கு ஏற்ப, தனிநாயக அடிகள்மேல் ஆழ்ந்த மதிப்பும், மரியாதையும் ஆயர் தியோகுப்பிள்ளை அவர்கள் வைத்திருந்தார்கள் ; அதேபோன்று ஆயர் தியோகுப்பிள்ளைமேல் ஆழ்ந்த அன்பும், நட்பும் வைத் திருந்தார் தனிநாயக அடிகள். மேலும் உரோமாபுரியில் தனி நாயக அடிகள் கல்வி பயின்ற காலத்தில், ஆயர் தியோகுப்பிள்ளை, கருணுகரன் அடிகள் போன்ருேர் அங்கே வந்து கல்வி பயிலக் கருவியாக இருந்தவர்களுள் தனிநாயக அடிகளும் முக்கியமான வர்களுள் ஒருவராவர். எனவே இவர்கள் உறவு நேற்று இன்று தோன்றியதல்ல; மிகப்பழமையானது. எனவே ஆயர் தியோகுப் பிள்ளை ஆண்ட கை எல்லா வசதியும் செய்து கொடுத்து வளலாய், ஆயர் விடுமுறை இல்லத்தில் நிரந்தரமாத் தங்கும்படி செய்தார். 1972ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் தொடக்கம் 1979ஆம் ஆண்டு ஆடி மாதம்வரையும் வளலாயில் வதிந்தார் தனிநாயக அடிகள். இக்கால கட்டத்தில் தனிநாயக அடிகள் தம் ஆன்மீக வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார். 'தாம் விட்ட தவறு. களுக்கு இறைவனிடம் மன்னிப்புக்கோரி இறைவன் தம்முடன் மிக நெருக்கமாகத் தம்மை இணைத்த காலம் இக்காலம் என அடிக்கடி கூறுவார். அடிகளார் இக்காலத்தில் ஓய்ந்து இருக்க வில்லை-கன்னியர்களுக்கும், குருக்களுக்கும், மாணவச் செல்வங் களுக்கும், ஆசிரியர்களுக்கும் சமயச்சார்பான சொற்பொழிவுகளை யும், ஞான ஒடுக்க மறையுரைகளையும் நிகழ்த்தி வந்தார். செய்தித் தாள்களுக்கும். கத்தோலிக்க பத்திரிகைகளுக்கும் எழுதி வந்தார். இலங்கை கத்தோலிக்க வாரப் பத்திரிகையாகிய பாதுகாவலனில் எழுதி வந்தார். ‘புலவர் வேதநாயகம் பிள்ளை' பற்றி, பாது காவலனில் 22-12-1973ல் ஒரு கட்டுரை எழுதியிருந் தார். 1973ல் பாரிசில் நடந்த கீழைத்தேசக்கல் வல்லுநர் மாநாட்டில் கலந்துகொண்டார். 1974ஆம் ஆண்டு நடந்த நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது யாழ்ப்பாணத்தில் நடந்த வன்செயல்களினல் அவரது உள்ளம் தாங்கொண்ணு வேதனை அடைந்தது. அதன் பின்னர் அடிகளார் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் இருந்து தம்மை

இலங்கையில் அடிகளின் மூன்ரும் கட்டப் பணி 16
விடுவித்துக்கொண்டார். நோயின் காரணமாகவும் ஒரு சில சொற்பொழிவுகள் ஆற்றவே ஒத்துக் கொள்வார். செபத்திலும், தியானத்திலும் தம் வாழ்க்கையைச் செலவிட்டிருக்கின்ருர்,
31-1-76ல் தம் வாழ்க்கைக் குறிப்பில் அடிகள் எழுது கின்ருர் :
'கடவுள் கொடுக்கும் ஒவ்வொரு நாளையும் அவரை நான் தேசிக்க அவர் கொடுக்கும் புது நாளாகக் கருதவேண்டும். எனக்கு எல்லா வசதிகளும் செய்து தந்திருக்கும்போது ஏன் நான் செத்துப் போவதற்குத் துடிக்கவேண்டும்? இப்படி இறப்பதற்கு ஆவல் கொள்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாளையும் கடவுள் தம்மைத் தொண்டு செய்வதற்குக் கொடுத்த வாய்ப்பாகக் கருத வேண்டும்.
* I should Consider everyday as a new day to love god. why should I be eager to die when everything is made Comfortable for me. Instead I must consider everyday as a new opportunity to serve god.'
'ஆத்மாக்களுக்கு அளவில்லாத நன்மை செய்வதற்காக நான் குருவாக வர விரும்பினேன். ஆஞல், என் வாழ்க்கையைப் பொறுத்தமட்டில், ஆத்துமங்களுக்குச் சேவை செய்ய எனக்கு அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே நான் செபம்மூலம் தொண்டு செய்வேன். எனது தனிமையைச் செபமாக ஒப்புக் கொடுப்பேன். மெளனசபையிலுள்ள ஒரு துறவி எப்படி தன்னுடைய தனிமையையும், எல்லாவற்றையும் திருமறைக்காக ஒப்புக்கொடுக்கிருனுே அப்படியே என்னுடைய தொண்டும் அமைந்திருக்கவேண்டும்.
“I wanted to be a priest to do everlasting good to souls. However, in my life I have had little opportunity for pastoral work. Hence I must do service by prayer ; by offering my loneliness etc. My service must be like that of the contemplative monk who in his loneliness offers every thing for the Church. (31-1-76-Thani Nayagamplan of Life)'
தனிநாயக அடிகள் தம் இறுதி நாட்களில் எவ்வளவு தூரக் தனிமையில் வாடி இருக்கின்றர். தம் வாழ்க்கையில் ஏற்பட்ட தவறுகளுக்கு இறைவனிடம் மன்னிப்புக்கேட்கும் அருள் நிறைந்த காலமாக இக்கால கட்டத்தைக் கருதி இருக்கிறர். அடிகளார்

Page 75
102 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
1975ஆம் ஆண்டு நடந்த- நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் நூற்ருண்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றிஞர். கொழும்பு, யாழ்ம்பாணம் ஆகிய இடங்களில் நடந்த நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரின் நூற்ருண்டு விழாக்களில் கலந்து கொண்டு இளம் கலைஞர்களையும், இளம் உள்ளங்களையும் ஊக்கு வித்திருந்தார்.
பண்டித்தரிப்பு-தியான இல்லத்தில் அடிகளின் இறுதி நாள்கள்
(1979 சூல் முதல் 1980 செப்டம்பர் முதல்நாள் வரை.)
திருக்குடும்பக் கன்னியர்கள் பண்டத்தரிப்பில் உள்ள தியான இல்லத்தைக் கண்காணித்து வருகின்றனர். இங்கு உள்ள ஓர் அறையில் தனிநாயக அடிகளைக் கண்காணித்து வந்தனர் திருக்குடும்பக்கன்னியர்கள். மலேசியாவில் பேராசிரிய ராக இருந்து ஓய்வு பெற்று இலங்கை வந்ததும், மலேசியப் பல்கலைக்கழகம் அடிகளாருக்கு ஒரு பெரிய கணிசமான பண முடிச்சைக் கொடுத்திருந்தது. அடிகள் அதனை இலங்கை வங்கி யில் போட்டு வைத்திருந்தார். அது ரூ. 2000/-க்கு மேற்பட்ட வட்டியைக் கொடுத்து வந்தது. அடிகளார் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் இருந்தபோது மேற்றிராசனம் தம் உணவுக் கும், தமக்குப் பணிவிடை செய்தவர்கட்கும் சம்பளம் கொடுப்பதை விரும்பவில்லை. தம்மைப் பார்த்த திருக்குடும்பக் கன்னியர்களுக் கும், வேலைக்காரர்களுக்கும் தம்முடைய பணத்தில் இருந்தே சம்பளம் கொடுத்துவந்தார். பிறர் உழைப்பில் வாழ மனம் இல்லாத அடிகளின் பெருந்தன்மைதான் என்னே!
அடிகள் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் இருந்தபோது கூடச் சும்மா இருக்கவில்லை. ஆங்கில அறிவு குறைந்த இளம் கன்னியர்களுக்கு ஆங்கில வகுப்புக்கள் நடத்திஞர். இளம் கன்னியர்களின் பயிற்சியில் அக்கறை காட்டிஞர். இளம் கன்னி யர்கள் நன்ருகப் படிக்க வேண்டும்; ஆழமான நூல்களைப் படிக்க வேண்டும் என விரும்பினுர். கன்னியர்களுக்கு ஆங்கில மொழியும், ஆங்கில இலக்கியமும் கற்றுக்கொடுத்தார். "Arts and the Man by Irwin Edman” (BursăTp 56ńsass&ITF சொல்லிக் கொடுப்பதில் இன்பம் கண்டார்.
கடைசி மூச்சுவரையும் தமிழ் இலக்கியத்தைப் படித்துக் கொண்டே இருந்தார். பண்டத்தரிப்பில் உள்ள இளம் பெண் களுக்குத் தமிழ் இலக்கிய வகுப்புக்களை தம் இறுதி மூச்சுவரை எடுத்துக்கொண்டே இருந்தார். இவ் இளம் பெண்களுக்குக்

இலங்கையில் அடிகளின் மூன்ரும் கட்டப் பணி 193
கல்வி, கல்வியின் நோக்கம் பற்றியும், உலக சமயங்கள்பற்றியும், திராவிடமொழிகள் பற்றியும், தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பற்றியும், சங்கங்கள், சங்க இலக்கிய நூல்கள் சங்க இலக் கியத்தின் இயல்புகள், சங்கம் மருவியகால இலக்கியம் பற்றி யெல்லாம் வகுப்புக்கள் எடுத்ததாக அங்குள்ள மாணவிகள் என்னிடம் கூறிஞர்கள். கடைசியாக அடிகளார் தங்களுக்கும் பாடிக் காட்டிய பாடல்கள் பாரதியாரின் இரு பாடல்களாகும். "செந்தமிழ் நாடென்னும் போதினிலே-இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே-எங்கள் தந்தையர் காடென்னும் பேச்சினிலே-ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே" என்ற பாரதியின் பாடலும்,
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எக்கும் காணுேம் பாமரராய் விலங்குகளாப் உலகனேத்தும் இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக்கொண்டு இங்கு வாழ்க் திடுகல் நன்ருே? சொல்விச் தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்"
'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல் இளங்கோவைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லெ alaišradua; Gavgayub Lysbě6Garfaðav ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்ருேம்; ஒரு சொற்கேளிர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் $löh epgkáld QFks GFllalf." அடிகனார் இறுதியாக இந்த இளம் பெண்களுக்குச் சொல்லிக்கொடுத்த இரு பாரதியின் பாடல்கள், அடிகளின் நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் காட்டுவதுமட்டுமின்றிஅவர் உலகெங்கும் தமிழ்த்தூதாகச் சென்ற பாங்கினையும் எடுத்துக்காட்டுகிறது அன்ருே
தனிநாயக அடிகளின் இறுதி நிகழ்ச்சிகள்
1979ஆம் ஆண்டு எட்டுத் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது யாழ்ப்பாணத்தில் ஊரடங்

Page 76
104 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
குச்சட்டம் அமுலில் இருந்தது. தமிழர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாவதைக்கண்ட அடிகள் 'நீதிக்காக நான் மேடையில் பேசி நீண்ட நெடுங்காலமாகின்றது. அதஞல் நம் உரிமையைப் பற்றிப் பேச ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யுங்கள்' என்று பேராசிரியர் கு. நேசையாவைக் கேட்டுக்கொண்டார்கள். அவர் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்நகர் மண்டபத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அடிகளார் நீதிக்காகக் குரல் கொடுத்தார். பல ஆணித்தரமான கருத்துக்களை மக்கள் முன் வைத்தார்.
தந்தை செல்வநாயகத்தின் நினைவுச் சொற்பொழிவுகளை நிகழ்த்துதல்
தந்தை செல்வநாயகத்தின் நினைவுச் சொற்பொழிவுகளை ஆற்றுவதற்கு யாரை அழைப்பது? தென்னகத்தில் இருந்து ஒருவரை அழைக்கவேண்டும் எனக் குழு தீர்மானித்தது. அதற்கு அடிகளார் மறுப்பு தெரிவித்து, தந்தை செல்வநாயகத்தையும், அவர் வாழ்க்கையையும் நன்கு தெரிந்த ஒருவரைக்கொண்டு திறப்பது நல்லது என்று கூறிஞர். அப்போது குழுவினர் டாக்டர் ஜெயரத்தினம் உவில்சனை அழைப்பது எனத் தீர்மானித் தனர். ஆணுல் பேராசிரியர் கு. நேசையா இவ்வாறு கூறிஞர்: "இந்த ஆண்டு (1980) தனிநாயக அடிகள் திறக்கட்டும். அவர் இப்போது தெம்போடு காணப்படுகிருர். அவர் இந்த நிலையில் நீண்டநாள் இருக்கமாட்டார் என யூகிக்கின்றேன். அடுத்த ஆண்டு (1981) செல்வா நினைவுச் சொற்பொழிவுக்கு டாக்டர் வில்சன அழைக்கலாம்" என்று கூறிஞர். குழு இக்கருத்தை ஏற்றுக்கொண்டது. தனிநாயக அடிகளைக்கொண்டு தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுகளை ஆற்றுவித்தனர்.
தந்தை செல்வநாயகம் நினைவுச் சொற்பொழிவுகளை 1980ஆம் ஆண்டு சித்திரைத்திங்கள் 28ஆம் நாளிலும், 29ஆம் நாளிலும் அடிகள் நிகழ்த்தினுர்,
முதல்நாள் நினைவுச் சொற்பொழிவு : 'Research in Tamil studies. Retrospect and Prospect' stipissipp ஆராய்ச்சி-அதன் வரலாறும், வருங்காலமும் என்ற சொற் பொழிவு ஆங்கிலத்திலும், இரண்டாம் நாள் நினைவுச் சொற் பொழிவு-'தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்" தமிழிலும் அடிகளாச் நிகழ்த்தினர். அடிகளாரின் இவ்விகு சொற்பொழிவுகளையும் கேட்ட அறிஞர்களும், மக்களும் 'இத் தகைய சிறப்பும், ஆழமும் வாய்ந்த சொற்பொழிவுகளை இவ்விதம் யாரால் நிகழ்த்தமுடியும் எனப் பாராட்டுத் தெரிவித்தனர்.

இலங்கையில் அடிகளின் மூன்றம் கட்டப் பணி 05
அடிகளாரின் கடைசிப் பணி
தனிநாயக அடிகளாரின் தமிழ்ப் பணிகளுள் அவர் கடைசி யாகச் செய்த பணி *தமிழ்மறை விருந்து” என்னும் நூல் வெளி யிட்டு வைத்தமையாகும். இந்நிகழ்ச்சி தமிழ்மறைக் கழகத் தலைவரும் ஊர்காவற்றுறைப் பிரதிநிதியுமான பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் எழுதிய இந்நூலை 1980ஆம் ஆண்டு வைகாசித்திங்கள் வேலணையில் நடைபெற்ற திருக்குறள் மாநாட் டில் அடிகளார் வெளியிட்டு முதற்பிரதியை மில்க் வைற் தொழி லதிபர் திருக்குறட் காவலர் திரு. கனகராசாவிடம் வழங்கிஞர். மதுரைப் பல்கலைக்கழக முன்னுள் துணைவேந்தர் முனைவர் வ. சுப. மாணிக்கம், காரைக்குடிப் பேராசிரியர் முனைவர் சாரங்க பாணி, திரு. மெய்கண்டார் முதலாயபேரறிஞர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர். இதுவே அடிகளார் கலந்துகொண்ட இறுதிப் பொது நிகழ்ச்சியாகும்.
நெடுந்தீவின் நீண்டமகனின் நீண்ட துயில்
1980ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 31ஆம் நாள் ஆயர் எல். ஆர். அன்ரனி அடிகளைச் சந்திக்கின்றர்கள். அப்போது அடிகளார் அவர்கள் அழகரசன் அடிகள் எங்கே என விசாரிக் கின்ருர், சென்னையில் இருப்பதாக ஆயர் அவர்கள் கூறுகின் ஆரர்கள். 'அழகரசன் அடிகள் நல்ல எழுத்தாளர். அவருக்குரிய இடத்தை உலகம் கொடுக்கும் என நினைக்கின்றேன்" எனத் தனிநாயக அடிகள் கூறுகின்ருர், மறுநாள் செப்டம்பர் முதல் நாள்-மால் 6-30 மணியளவில் அடிகளார் உலகச் செய்திகள் கேட்கின்ருர், அதன் பின்னர் வாந்தி எடுக்கின்றர். பக்கத்து அறையிலே இருந்த குரூஸ் அடிகள் அ. ம. தி. ஓடி வந்து திருச்சபையின் நோயில் பூசுதல்" என்ற அருட்சாதனத்தை வழங்குகின்ருர், தனிநாயக அடிகளின் உயிர் உடலை விட்டுப் பிரிகின்றது. அடிகளார் இயேசுவின் இனிய மலரடிகளே அடைந்து விட்டார். என்ன பொருத்தம் -உலகம் எங்கும் சென்று தமிழ்த்துTது அறைந்தவர்-உலகச் செய்திகேட்டு உயிர் விடுகின்ருர்,
தமிழ் உலகம் கண்ணிர் விடல்
அடிகளின் மறைவு கேட்டுத் தமிழ் உலகம் கண்ணிச் சிந்தி
யது. எங்கெங்கெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தார்களோ, அங்கெல் லாம் அடிகளின் இறப்பு கேட்டு மக்கள் அழுதனர். உலகத்தமிழ்

Page 77
O6 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
அறிஞர்கள் அடிகளாரின் மரணம் கேட்டு அஞ்சலிகள் யாழ் ஆயரின் இல்லத்துக்கு அனுப்பிக்கொண்டே இருந்தனர்.
1980ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி தொடக்கம் மூன்ரும் தேதி வரையும் அடிகளாரின் பூத உடல் யாழ் மேற்றி ராசன ஆலயத்தில் மக்களின் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட் டிருந்தது. பல்லாயிரக்கணக்கான அறிஞர்கள், அன்பர்கள், தமிழ் அபிமானிகள், துறவிகள். குருக்கள், கன்னியர்கள் தங்கள் தமிழ்த் தூதுவருக்குத் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர். செப்டம்பர் மூன்ரும் நாள் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தி யில் ஆயர் தியோகுப்பிள்ளை குருக்கள் பலருடன் கூட்டுப்பலி ஒப்புக் கொடுத்தார். மதுரநாயகம் அடிகள் மறையுரை ஆற்றிஞர். யாழ் புனித மரியாள் மேற்றிராசனத் தேவாலயத்துக்கு அருகே உள்ள சேமக்காலேயிலே அடிகளாரின் பூத உடலை அடக்கம் செய்தனர்.
அடிகளார் இறந்தபின் தமிழ்நாட்டில் இருந்து நான் 1980 ஆம் ஆண்டு செய்டம்பர் 4ஆம் தேதி இலங்கைக்கு வந்தேன். 5ஆம் தேதி யாழ்ப்பாணத்துக்கு வந்தேன். அடிகளாரைப்பற்றிய இறுதித் தகவல்களைப் பெறுவதற்காக-அருள்திரு. மல்கம் செல ருடனும், நாவண்ணனுடனும் பல பிரமுகர்களைச் சந்தித்தேன். அவர்களைப் பேட்டி கண்டேன். முதன் முதலாக, பண்டத்தரிப் பிலுள்ள தியான இல்லம் சென்றேன். அங்குள்ள கன்னியர் களையும், பணிவிடை செய்கின்ற பெண்களையும் கண்டு நான் சேகரித்த தகவல்கள் பின்வருமாறு :
தனிநாயக அடிகளாருக்கு உரோசாப் பூ என்ருல் நிறையப் பிடிக்கும். அவருடைய அறையிலே எப்போதும் உரோசாப் பூ இருப்பதையே அவர் விரும்புவார். அடிகளார் இறப்பதற்கு ஒருசில கிழமைக்கு முன் தம் கைப்பட ஒரு ரோசாச் செடியை நாட்டிஞர் என அவர் ரோசாப் பூவை நாட்டிய இடத்தை அங்குள்ள கன்னி வர்கள் எனக்குக் காட்டினுர்கள்.
அடிகள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தார். இயற்கை யில் இறைவனைக் கண்டார். அடிகள் மரியன்னைமேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தார். இங்கு பண்டத்தரிப்பில் இருந்த காலத் தில், நாள்தோறும் மால் வேளைகளில் கையில் செபமாலையுடன் பண்டத்தரிப்பு வழியாக நடந்து சென்று மாதாகெபியில் (grotto) செபமாலை சொல்லிவருவதைக் கண்ட பொதுமக்கள் அடிகளாரின் மாதா பக்தியைக் கண்டு வியப்புற்றனர். அடிகளார் மேற்கத்திய கர்ரூடக இசையை நன்கு விரும்பி இரசிப்பார். விவிலியத்திலுள்ள

இலங்கையில் அடிகளின் மூன்ரும் கட்டப் பணி 107
28ஆம் சங்கீதம் "ஆண்டவர் என் ஆயன்' அடிக்கடி பாடி மகிழ் வார். மற்றவர்களையும் பாடச் சொல்லி மகிழ்வார். இங்கு நாங்கள் எல்லோரும் அடிகளை நேசித்தோம். மிகவும் ஆழ்ந்த ஆத்மீக நிலையில் உள்ளவராகக் காணப்பட்டார். அவர்தாம். குருவாய் இருப்பதிலே மகிழ்ச்சி அடைவதாகக் கூறிஞர்.
தனிநாயக அடிகளிடம் ஒருவித உள்ளுணர்வு இருந்தது. ஒருவருடைய முகக் குறிப்பில் இருந்து ஒருவருடைய மன நிலையை யும், பண்பையும் அறியக் கூடியவராகக் காணப்பட்டார். அடுத்த, வர்களுடைய எண்ணங்களுக்கும், கருத்துக்களுக்கும் மதிப்புக் கொடுத்தார். அவரை நாங்கள் சந்திக்கப்போகும்போது அவருக்கு நேரம் முக்கியம் அல்ல, நாங்களே முக்கியம். (Time factor was not so important as the PERSON). Gouaudistrif களுக்கு அதிகம் இரக்கம் காட்டுவார்.
பண்டத்தரிப்பில் அடிகள் இருந்தபோது அடிகளுக்கு எந்தக் குறையும் இருக்கவில்லை. அவருக்குத் தம் (CAR-DRIVER) வாகனம் ஒட்டுகின்றவஞல்தான் தொல்லை. அடிகளுக்குப் புவி யியலில் அதிக ஈடுபாடு இருந்தது. அடிகளுக்குக் குழந்தைகள் என்ருல் அளவில்லாத விருப்பம், பண்டத்தரிப்பில் இருந்த போது குழந்தைகளால் நடத்தப்பட்ட ஒரு பொருட்காட்சி (Exhibition)யைப் பார்க்க அடிகளார் சென்றிருந்தார். அப்போது அடி களார் இப்படிச் சொன்னுராம்: "நான் இவ்வளவு நாளும் (Theoretician) மூளையைப் பயன்படுத்தி விரிவுரைகள் நிகழ்த்தி னேன். ஆளுல் குழந்தைகளிடமிருந்து கைகளைக்கொண்டு எவ்வளவோ செய்யலாம் என இப்போதுதான் அறிந்துகொண் டேன்" என்ருராம்.
அடிகள் படித்தவர்களோடும், எளியவர்களோடும், இனிமை யாகப் பழகுவார். அவருடைய பிரசன்னம் எங்களுக்குச் செப மாய் இருந்தது. அடுத்தவர்களைப்பற்றி அக்கறை கொண்ட வராய் விளங்கிஞர். அருட்செல்வி ஒலிவியா அவர்கள் கண் மருத்துவரிடம் தம் கண்னைப் பரிசோதிக்கச் சென்ருர்கள். 150 பேருக்குமேல் கண் பரிசோதிக்க இருக்கிருர்கள். இரண்டு மாதத்துக்குப்பிறகு கண் வைத்தியர் வரும்படி சொல்லி அனுப்பி விட்டார் என அருட்செல்வி அடிகளாரிடம் வந்து சொன்ஞர்கள். ஆணுல் அடிகள் முன் கூட்டியே மருத்துவரிடம் கண் பரிசோதனை அதற்குரிய பணம் எல்லாம் கட்டி எல்லா ஒழுங்குகளும் செய்த விற்பாடு அருட்செல்வியைப் பார்த்து, “நீர் மீண்டும்போய் அந்தக் கண் வைத்தியரைப் பாரும்" என்று சொல்லி அனுப்பி

Page 78
08 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
ரூர். 'நான் கண் வைத்தியரைப் பார்க்கச் சென்றேன். முதல் ஆளாக என்னை அழைத்துக் கண்ணைப் பரிசோதித்தார். கண் ரூடியும் பெற்றுக்கொண்டேன். முன்கூட்டியே எனக்கு என்ன தேவை என்று அறிந்து எல்லா ஏற்பாடுகளையும் அடிகளார் செய்துவிட்டார்."
வாழ்க்கையில் அதிகம் துன்பப்பட்டபடியால் துன்பப்பட்டவர் களோடு அதிகம் அனுதாபப்பட்டார். ஆம் அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழத்தில் சொற்பொழிவாற்றியபோது இவ்வாறு கூறி trict did aircus Trib : “Suffering, like a Cloud, passes away, but to have suffered does not pass away'' ''gy siruti GTsirugs மேகமூட்டம் போன்று மாறக்கூடியது; ஆனுல் துன்பப்பட்டோம் என்ற உணர்வு மாருது."
இவ்வாறு தனிநாயக அடிகள்பற்றி, பண்டத்தரிப்பில் உள்ள கன்னியர்களும், பணிப்பெண்களும் என்னிடம் கூறிஞர்கள். அடுத்து தனிநாயக அடிகளோடு முப்பது ஆண்டுகள் நெருங்கிப் பழகிய பேராசிரியர் கு. நேசையாவைச் சந்திப்பதற்காக நண்பர் மல்கம் செலர் அடிகளுடன் சென்றேன். தனிநாயக அடிகளின் உலக வாழ்க்கையின் இறுதி நிகழ்ச்சிகள் பற்றி விசாரித்தேன். அப்போது பேராசிரியர் கு. நேசையா கீழ்க் கண்டவாறு கூறிஞர் :
'அண்மையில் ஐரோப்பா சென்று வந்த அடிகள், யாழ் நகரில் சோமசுந்தர வீதியில் வதிந்துகொண்டிருந்த என்ன அடிக்கடி சந்திக்க வருவார். ஒருமுறை என்னிடம் அடிகள் இவ் வாறு கூறிஞர், ஐரோப்பா போன்ற நாடுகளைப் பார்த்துவிட்டு யாழ்ப்பாணத்துக்கு வரும்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது. இங்கு கிடுகு, ஒலை வீடுகளைக் காண்கின்றேன். ஆஞல், சோம சுந்தர வீதிக்கு வரும்போதுதான் பெருமை அடைகின்றேன்" 66š ri.
தமிழர்கள் வாழ்க்கை வசதிகள் எல்லாம் பெற்றுச் சிறந்து வாழவேண்டும் என்பது அடிகளாரின் பெரும் விருப்பமாகும்."

20. பேரீச்சம்பழம் முடிய வாழ்க்கையும் முடிந்துவிட்டதே!
தனிநாயக அடிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள சோமசுந்தர வீதியிலுள்ள பேராசிரியர் கு. நேசையாவைச் சந்திப்பதற்காகச் செவ்வாய்க்கிழமை தோறும் அவர் வீட்டிற்கு வருவதுண்டு. அடி களாருக்குச் சர்க்கரை வியாதி (Diabetic) இருந்தபடியால் பேரீச் சம் பழங்களை விரும்பிச் சாப்பிடுவார். அப்போது யாழ்ப்பாணத்தில் பேரீச்சம்பழம் கிடைப்பது அரிது. பேராசிரியர் எல்லாக் கடை களிலும் ஏறி இறங்கி ஒருவாறு 10 பேரீச்சம்பழங்களை வாங்கி வந்திருந்தார். தனிநாயக அடிகள் தாம் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்-அதாவது (1980ஆம் ஆண்டு ஆகஸ்டு 26ஆம் தேதி) பேராசிரியர் கு. நேசையாவைச்சந்திக்க வந்தார். அன்று தம் வீட்டு வாசற்படிகளைக் கடந்துவரக் கஷ்டப்பட்டார் அடிகள். எனவே பேராசிரியர் அடிகளை அழைத்து வீட்டு முற்றத்திலே உள்ள மரத்தடியில் உட்கார்ந்து உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது பேராசிரியரின் ஏழுவயதுப் பேரப்பிள்ளை ஒரு தட்டில் பத்துப் பேரீச்சம்பழங்களைக் கொண்டுவந்து அடிகளார் முன் வைத்தது. பத்துப்பழங்களையும் அடிகளார் சாப்பிட்டு முடித்தார். அடுத்த முறை அடிகள் வரும்போது சாப்பிடக்கொடுக்கப் பழங்கள் இல்லையே என்று பேராசிரியர் நினைத்துக்கொண்டிருந்தார். அதன் பின்னர், ஒவ்வொரு செவ்வாயும் வீட்டிற்கு வரும் அடிகள் அடுத்த செவ்வாயும் வரவில்லையே, பழங்களும் முடிய அடி களாரின் உலக வாழ்க்கையும் முடிந்துவிட்டதே எனத் தாம் வருந்தியதாகப் பேராசிரியர் கு. நேசையா என்னிடம் கூறிஞர்.
அடுத்து நான் தனிநாயக அடிகளின் மருமகள் வானதியைச் சந்தித்தேன். அடிகளைப்பற்றி விசாரித்தேன். தனிநாயக அடிகள் எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்ப தாகக் கூறினுள் வானதி. 'அங்கிள் இறப்பதற்கு முந்திய ஞாயிற்றுக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்தார். இறைவன் செய்த எல்லாச் செயல்களுக்கும் நன்றிகூறும் முகமாக இறைவனுக்கு ஒரு நன்றிச் செபத்தைச் சொன்னுச். எங்களோடு சேர்ந்து உண் பார். எங்களோடு இனிய இலக்கணத் தமிழில் உரையாடுவார்.

Page 79
10 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
*நான்' என்று சொல்வதற்குப் பதிலாக யான்' என்று சொல்லு வார்' எனக் கூறினுள் வானதி.
கடைசிக் காலத்தில் அடிகளார் யாழ் புனிதமரியாள் பேராலயப் பங்குத் தந்தை செல்வராசா அடிகளுடன் நன்கு பழகிஞர். அவரை நான் பேட்டி கண்டபொழுது செல்வராசா அடிகள் இவ் வாறு தனிநாயக அடிகளைப்பற்றிச் சொன்ஞர் : 'தனிநாயக அடிகள் குருக்களுக்கெல்லாம் ஒரு மேல்வரிச் சட்டம் போன்றவர். தொலைநோக்குக் கொண்டவர். அவர் 25 ஆண்டுகட்கு முன் சொன்ன சில கூற்றுக்கள் இன்று நிறைவேறுகின்றன. ஆர வாரத்தை விரும்பாதவர்-அடக்கமானவர், ஆழமானவர். இளங் குருக்களுக்கு அடிகளாரின் அறிவுரை என்னவெனில் ஆழமாக இருங்கள். ஆழமான நூல்களைப் படியுங்கள்' என்பதாம்.
“He is between the militant attitude of the youth and Conservatism" இளைஞரின் முற்போக்கு எண்ணங்களுக்கும், பிற்போக்கு நிலக்கும் இடைப்பட்டவர் தனிநாயக அடிகள்' என்ருர் செல்வராசா அடிகள்.
நகையும்-நட்பும்கொண்டி நாயகம் தனிநாயகம்
அடிகளார் நகைச்சுவை மிக்கவர். நட்பை வாழ்வில் நாடின வர். புன்னகை செய்யும் பண்பாளர். 1980 ஆம் ஆண்டு சித்திரை 28 ஆம் தேதி தனிநாயக அடிகள் செல்வநாயக் தினைவுச் சொற்பொழிவுகளை ஆற்றுவதற்காகத் தம்மைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார்.
புதிய செருப்புக்களை அணிந்துகொண்டு சென்ருர், வீரசிங்க மண்டபத்துக்குள் நுழையுமுன் தம் புதிய செருப்புக்களை வெளியே வைத்துவிட்டு உள்ளே சென்ருர். சொற்பொழிவு முடிந்து வெளியே வந்து பார்த்ததும், தம்முடைய சோடிசெருப்பில் ஒன்று போய்விட்டது. அதற்குப் பதிலாக இன்னென்று வைக்கப்பட் டிருந்தது. பண்டத்தரிப்புக்கு வந்ததும் (அடிகள் கடைசிக் காலத் தில் தங்கியிருந்த தியான இல்லம்) அடிகள் அங்குள்ள கன்னியர் களைப் பார்த்து, 'கன்னியர்களே! என்னுடைய கால் ஒன்று போய் விட்டது” என்று தம் செருப்பு இல்லாத கால் ஒன்றைக் காட்டினுராம் அடிகள்.
பண்டத்தரிப்பில் இருந்த கரலத்தில் அடிகளார் அங்குள்ள கன்னியர்களைப் பார்த்து-கால 9 மணிக்கு செவ்விளநீர், கால 10 மணிக்கு இளநீர், அதன் பின்னர் தண்ணிர் தரவேண்டும் srsirurrrib,

பேரீச்சம்பழம் முடிய வாழ்க்கையும் முடிந்துவிட்டதே ! 1丑置
அடிகள் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் வசித்து வந்த போது, திருக்குடும்பக் கன்னியர்கள் அவரைக் கண்காணித்து வந்தனர். ஒரு நாள் பகல் உணவு அடிகளுக்குக் கொடுக்கத் தாமதம் ஆனது. உடனே அடிகள் சமையல் அறைக்குள் செள் றர்கள். அங்கு சென்றதும், அங்குள்ள கன்னியர்களைப்பrர்த்து *நான் பலவும் படித்திருக்கின்றேன். தான் இனிப் படிக்க வேண்டியது ஒன்று இருக்கின்றது. அதுதான் சமையல்" என்று சொல்லிச் சிரித்தாராம் அடிகள்.
தூத்துக்குடி மறைமாவட்டத்தில் அடிகளார் பணியாற்றி வரும்போது, அம் மேற்றிராசனப் பொருளாளர் (Procurator Genera), தனிநாயக அடிகளுக்கு ஒரு கடிதம் எழுதி, கடிதத்தை முடிக்கும் போது “கிறிஸ்துவில் உன்னுடைய அடிமை” என்று எழுதி கையொப்பமிட்டிருந்தாராம். அக் கடிதத்திற்குப் பதில் எழுதும் போது தனிநாயக அடிகள் "கிறிஸ்துவில் என்னுடைய அடிமைக்குட என்று தம்முடைய கடிதத்தை ஆரம்பித்து இருந்தார்.
தனிநாயக அடிகளார் கூறுகின்ருர் மக்கள் நலப்பண்பில் சிரிப்பென்பது மக்களின் சிறந்த ஓர் இயல்பு. ஆதலால்தான் புலவர்கள் சிரிப்பைப் பற்றியும், நட்பைப் பற்றியும் எப்பொழுதும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அடிகளார், பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப்பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற்காலத்திலும் இருளில் கிடப்பதாம் என்று வள்ளுவர் கூறும் குறளை அடிக்கடி எடுத்தாள்வார்.
*ாகல்வல்லர் அல்லார்க்கு மாபீரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.' (குறள் -999)
ஈராயிரம் ஆண்டுகட்கு முன் எந் நாட்டுப் புலவரும் இவ்வாறு கூறியிருப்பரோ என்று ஐயப்படுகின்ருர் அடிகள்.
மதுரநாயக அடிகளாரை நான் சந்தித்தபோது, தனிநாயக அடிகளில் காணப்பட்ட சிறந்த பண்பு என்ன என்று கேட்டேன் அதற்கு மதுரநாயக அடிகள் சொன்ஞர் : "He was a thorough gentleman and He loved friends' sub, safetus glassir ஒரு பண்பாளர், நண்பர், நண்பர்களை விரும்பினவர். நான் சந்தித்த பலரும் தனிதாயக அடிகளின் நட்புக் கொண்டாடும் பாங்கினை வெகுவாகப் பாராட்டினர். தனிநாயக அடிகள் அடிக்கடி தம் எழுத்திலும், பேச்சிலும் எடுத்தாளும் ஆங்கிலக் கவிதை ஒன்று-அவர் எவ்வாறு நகையையும், நட்பையும் வாழ்வில் விரும்பினர் என நமக்கு எடுத்துக்காட்டுகின்றது. இதோ அந்த ஆங்கிலக் கவிதை:

Page 80
12 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
From quiet homes and first begining, Out to the undiscovered ends There's nothing worth the wear of winning But laughter and the love of friends'
தமிழ் விழாக்கள் நடாத்திய அனுபவத்தில் நரைகண்டு தளர்ந்திருந்த அடிகளாரை ஒரு சமயம் யாழ்ப்பாணத் தொல் பொருள் நிலையப் பொறுப்பாளர் எம். பி. செல்வரத்தினம் அவர்கள் கண்டு உலகத்தமிழ் ஆராய்ச்சி விழாவைப்பற்றிக் கேட்டபோது, தனிநாயக அடிகளார் தாம் மறுவுலகத்தைப்பற்றிச் &igiou5.5i safei. As Dr. Jeyaratnam wilson tells us, “The Tamils have lost a selfless leader. Many of us will miss a true and living friend' is, Lrdi Li sasissir கூறுகிறபடி அவர் ஓர் உண்மையான, உயிரூட்டமுள்ள நண்பர்தாம்.

21. தனிநாயக அடிகளும் குருத்துவமும்
தனிநாயக அடிகள் ஒரு நல்ல குரு தம் குருத்துவக் கடமைகளைக் கடைசிவரைச் சரியாக நிறைவேற்றியிருக்கின்ருர், அடிகளார் தம் குறிப்பொன்றில் தம்முடைய எல்லாச் சிறப்புக் ளும் தம் குருத்துவத்தில் இருந்து மலர்ந்ததாகக் குறிப்பிடு siri : “All my greatness blossomed from my priest hood. The whole world was before me but I was not put up by them.'
குருத்துவத்தில் எவ்வளவு அசையாத நம்பிக்கை வைத் திருந்தார் என்பதைத் தனிநாயக அடிகளார் 1945ஆம் ஆண்டு லோங் அடிகளாரின் வெள்ளி விழாவின்போது ஆற்றிய “escossaissair ibnosyth, LD&soldus' (The Power and the gory of Priesthood) என்ற மறையுரை மூலம் அறியலாம்.
• The Catholic Priest is a reservoir where in are stored the waters of grace... From this storage of' living waters' comes the power that moves the wheels of supernatural energy in society; from these cascading falls originate the lights that illumine the paths to heaven; from this dam proceed the anicuts that water the fields of God, the souls of men.”
இது அடிகளின் "குருத்துவத்தின் ஆற்றலும் மகிமையும்" என்ற நூலில் இருந்து ஒரு பகுதியாகும்.
“கிறிஸ்துநாதர்" நமது பீடங்களில் மெளனமாக இருக் கின்ருர், அவர் பேசுவதில்லை; அவர் போதிப்பதில்லை; அவர் ஆட்சி செலுத்துவதில்லை ஆளுல் இவை எல்லாவற்றையும் தம் குரு மூலம் செய்கின்ருர்."
“Christ is silent on our altars; He does not speak, He does mot teach, He does not rule. all this is done for
S سبک

Page 81
14 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
him by the God man's double-the Catholic Priest.' (The Power and the glory of Priesthood-Thani Nayagam. p. 2)
கிறித்தவமும் தமிழும் அடிகளாருக்கு இரு கண்கள் போன்றவை. இவர் இருபதாம் நூற்ருண்டின் வீரமாமுனிவர் ஆவார். அடிகளார் திருமறையின் அறிவுசார்ந்த தூதுவராகும். He is an apostle of thought of the Catholic Church. அடிகளின் மருமகன் இராஜன் பிலிப்புப்பிள்ளை கூறும் கூற்று இங்கு குறிப்பிடதக்கது.
"இயேசு சபைக்குரவர்களான, இத்தாலி ஈன்றெடுத்த டிநொபிலி, பெஸ்கி, ஜெர்மனியரான ஜோர்ஜ் குராமர், சுவிச்சர்லாந்து அளித்திட்ட ஜோசப் விஸ்கி, போர்த்துக்கேயரான கென்றிக்கெஸ், ஸ்பானிய அடிகளான கென்றி கெறஸ் (HERAS) செக்கோசிலவாக்கியச் செல்வமாகிய காறெல் பீரிஸ்க்கிலில் போன்றgரோப்பிய ஆராய்ச்சியாளரினதும், இலங்கைநல்லூரைச் சேர்ந்த மொழிவல்லுநர் ஞானப்பிரகாச அடிகளினதும் மரபில் நின்று உழைத்தவர் தனிநாயக அடிகள். ஆணுல் புகழ்மிக்க தமது முன்னேரின் சாதனைகளையெல்லாம் விஞ்சியவர் தனிநாயக அடிகள். கத்தோலிக்கத் திருச்சபைத் துறவியாக இருந்து அவராற்றிய சமயச் சார்பற்ற சமூக ஆராய்ச்சிப் பணிகள் இருபதாம் நூற்ருண்டுக் கீழைத்தேயக் கிறிஸ்தவத் துறவிகளின் வரலாற்றில் அவருக்குத் தனியொரு இடத்தை ஏற்கெனவே ஏற்படுத்திவிட்டன." (தொண்டன்-தனிநாயகச் சிறப்பிதழ். U. 26)
'திசை நோக்கிக் கோயிலையும், தமிழ்மொழியை எனக்குத் தாய்மொழியாகத் தந்த இறைவனையும் கைகூப்பி வணங்கினேன்" எனத் தம் தமிழ்த்துதில் தம் இரு நிலையையும் குறிப்பிடுவார்.
அடிகளார் குருவாக வருமுன் பல தொல்லைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் ஆளாளுர். 1931ஆம் ஆண்டில் கொழும்பு புனித பேணுட் குருமடத்தில் குருத்துவப் பயிற்சி பெறும் காலத் தில், குருமடத்தை விட்டு விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார். குருத்துவ அந்தஸ்துக்கு அழைத்தல் இல்லை எனக் கூறப்பட்டது. ஆளுல் அடிகளார் குருத்துவமே தமக்கு இறைவன் கொடுத்த அந்தஸ்து என்று அவர் உணர்ந்துகொண்டார். "தம் தலையணை கண்ணீரால் தோய அழுது அழுது, இறைவனுடன் தம் கவலை யையும், பிரச்சினைகளையும் எடுத்துக் கூருத இரவுகள் இல்லை" என்று அடிகளாரே தம் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். இந் நிலையில் இவருக்கு ஆதரவு கொடுத்த குருக்கள் வண. லோங்

தனிநாயக அடிகளும் குருத்துவமும் 15
வண. மத்தியூஸ் போன்ற அடிகளார்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அடிகளார் குருவாக வரத் துணை செய்த ஆயர்கள்-மார் இவானியுஸ், ரோச் ஆண்டகைகள் ஆவர்.
ரோச் ஆண்டகையும்-தனிநாயக அடிகளும்
ரோச் ஆண்டகை தனிநாயக அடிகளை விரும்பிஞர். தனி நாயக அடிகளும் ரோச் ஆண்டகைமேல் பற்றும் பாசமும் வைத் திருந்தார். தூத்துக்குடியில் எப்பகுதியிலாவது பங்குமக்கள் அமைதியின்றிக் குழப்ப நிலையில் இருந்தால் ரோச் ஆண்டகை தனிநாயக அடிகளைச் சமாதானத் தூதுவராக இப் பகுதிக்கு அனுப்புவது வழக்கம். ரோச் ஆண்டகையின் தூண்டுதலிளுல் தமிழ் படித்தார். யப்பானில் புனித சவேரியார் இறந்த 500 வது வருட விழா கொண்டாடப்பட்டபோது ரோச் ஆண்டகை தனி நாயக அடிகளை அங்கு அனுப்பிவைத்தார். தனிநாயக அடிகள் ரோச் ஆண்டகையைப் பற்றி இவ்வாறு கூறுவார் :
'இளங்குருவாக நான் முதல் பணியாற்றியது தமிழ் நாட்டின் மறைமாவட்டமாகிய தூத்துக்குடியில். அங்குள்ள ஆயர் மேன்மை தங்கிய ரோச் ஆண்டகை எனக்கு ஒரு தந்தை போல் இருந்து நான் தமிழ் பயில வேண்டு மென்ற கருத்துக்கு ஊக்கமும், ஆதரவும் அளித்தார். பண்டிதர் ஒருவரிடம் பாடம் கேட்டு வந்தபின் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையில் பயிலுவதற்காக ஆயர் எனக்குத் தம் உடன்பாட்டை அளித்தார்' என நன்றியுடன் நினைவு கூர்வார் தனிநாயக அடிகள். (தனிநாயக அடிகளாரின் தமிழ் வாழ்வு-சுதந்திரன், (80--9-س-7
1979ஆம் ஆண்டு, தனிநாயக அடிகள், ரோச் ஆண்டகை sisär gTiburgstăTG 62wo uDavfalio “Bishop Francis Tiburtius Roche” என்ற ஆங்கிலத் தலைப்பிட்டு ஆயர் அவர்களின் பண்பு நலன்களை எழுதிக்காட்டியுள்ளார். ஆயர் அவர்கண்ப்பற்றித் தனிநாயக அடிகள் எழுதிய முத்தான கருத்துக்களுள் சில:
"தூத்துக்குடியில் ஆன்மீகத் தலைவராகவும், தலைசிறந்த குடிமகளுகவும் விளங்கினுர். ஆன்மீக விழாவாகட்டும், அரசியல் விழாவாகட்டும், ஆயர் ரோச் இல்லாமல் அவ் விழாக்கள் முழுமை பெறுவதில்லை. தூத்துக்குடியில் வ. உ. சி. கப்பல் வந்தபோது ஆயர் அவர்கள் அழைக்கப்பட்டார். அவரோடு நின்று நிழல் படம் ஒன்று எடுக்க வருமாறு அன்று வைஸ்ராயாக இருந்த இராஜாஜி அவரை அழைத்திருந்தார். எல்லாவற்றையும்விட

Page 82
16 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
அவர் ஒரு கடவுள் மனிதன். ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் ஒரு தலைசிறந்த பேச்சாளர். இலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள குருக்களுக்கு ம்றையுரைகள் ஆற்ற அவர் பலமுறை அழைக்கப்பட்டிருந்தார்.
தனிநாயக அடிகள் ரோச் ஆண்டகையைப்பற்றிக் கூறும் இப் புகழாரம் அவருக்கும் மிகப் பொருத்தமாகும்.
Bishop Roche was an intellectual and a man of great Culture. He Combined in himself the best of East and west. He derived his Culture not only from the best of English and Tamil literature but also from French. His. motto was “noblesse oblige'. Hardly a harsh word escaped his lips. He was every inch a gentleman and a saint in the spiritual order. With delinquents, priests or people, he was extremely patient. He would often quote “Omaia Vide, multuma dissimula, pauca Corrige”.
0 0 e - Y - d e o O to a He was a Voracious reader and he wished his priests also to be of a high intellectual standard. His personality was built also partly by his travel. He was a great lover of Tamil Culture and cited often from the Tirukkural in his speeches and Sermons.'
ரோச் ஆண்டகை அறிவுக் கூர்மையும், பண்பாடும் மிக்கவ ராவர். கீழ் நாடுகளிலும், மேல் நாடுகளிலும் உள்ள சிறந்த பண்பாட்டுக் கூறுகளைத் தம்மகத்தே கொண்டவர். அவர் தம் பண்பாட்டை ஆங்கில, தமிழ் இலக்கியங்களிடமிருந்து மட்டும் பெறவில்லை; பிரெஞ்சு பண்பாட்டிலும் இருந்து பெற்றுக்
கொண்டர்ர்.
அவருடைய விருதுவாக்கு "மேன்மைக்குக் கடமைப் பாடுண்டு' என்பது. அவருடைய வாயில் இருந்து எந்தக் கடின சொல்லும் வந்ததேயில்லை. அவர் முழுக்க முழுக்க ஒரு பண் பாளர். ஆன்மீகத்துறையில் இவர் ஒரு புனிதர். தவறு செய் கின்றவர்களோடும், குருக்களோடும், மக்களோடும் பொறுமை மிக்கவர். அவர் அடிக்கடி கூறுவார் : "எல்லாவற்றையும் பார், பலவற்றை ஒதுக்கிவிடு, சிலவற்றைத் திருத்து' என்பார். அவர் நிறைய வாசிப்பார். தம்முடைய குருக்களும் சிறந்த அறிவு மிக்க வர்களாக இருக்க வேண்டும் என விரும்பிஞர். அவருடைய ஆளுமையின் ஒருபகுதி அவருடைய பயணத்தால் உருவாகியது.

தனிநாயக அடிகளும் குருத்துவமூம் 117
அவர் தமிழ்ப்பண்பாட்டை அதிகம் நேசித்தார். அவர் தம் முடைய பேச்சுக்களிலும், மறையுரைகளிலும் திருக்குறளை அதிகம் கையாண்டார்."
'குருக்களின் சொந்த முயற்சிகளுக்கு ஊக்கம் அணித்தார். நான் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்க முயன்ற போதும், தமிழ் இலக்கியக் கழகத்தை உருவாக்கியபோதும், பல்கலைக்கழகங்களில் பேராசிரியப் பணியை மேற்கொண்டபோதும் என்னை உற்சாகப்படுத்தினுர், குருக்கள் பலர் அவரில் சிறந்த நன்கொடையாளரையும், பாதுகாவலரையும் கண்டனர்."
*ரோச் ஆண்டகை ஒரு புனிதர். அன்புள்ளம் கொண்டவர். பண்பாளர். ஒருவருடைய உள்ளத்தையும் புண்படுத்தாத பெருந் தன்மை கொண்டவர். ஒருவருடைய இளமைக்காலங்களில் அவரோடு உறவாடி, நெருக்கமாக அறிந்திருப்பதும் அவரின்கீழ் பணிபுரிந்திருப்பதும் ஒருவருக்குக் கிடைத்தற்கரிய பேருகும்" என்று தனிநாயக அடிகள் கூறும் இச் சொல்லோவியங்கள் அவருக்கும் மிகப் பொருத்தமாகும்.

Page 83
22. தனிநாயகத்தின் தனிப் பண்பாடு
தனிநாயக அடிகள் கல்லூரியில் படித்தகாலத்தில் தமிழ் ஒரு கட்டாய பாடமாக இருக்கவில்லை. ஆங்கிலம்தான் மூக்கிய பாடம். எல்லாம் ஆங்கிலமயம். அக்காலத்தில் தமிழில் ஒரு நாடகம் நடித்துக்காட்டியதற்குத் தண்டிக்கவும்பட்டார். அக் காலத்தைப்பற்றிக் கூறுகையில் அடிகளார் இவ்வாறு கூறுவார் :
'அக்காலத்தில் நான் ஆங்கில இலக்கியத்திலேயே ஈடுபட்டு வந்தவன். ஆயினும் நான் அறியவந்த சில தமிழ்ச் செய்யுட்கள் என் கருத்தைக் கவர்ந்தன."
"என்னுடைய இருபதாம் ஆண்டில் இத்தாலி சென்று அங்கு பல நாட்டார் கல்விபயின்ற குருமடத்தில் ஐந்து ஆண்டு களாக இறை இயல் கற்றேன். பிறநாட்டில் நாம் வாழும்போது மொழிப்பற்றும், பண்பாட்டுப்பற்றும் வளர்வது இயல்பு. ஆதலால் நாடு திரும்பியதும் தமிழை நன்கு கற்கவேண்டு மென்று நினைத்தேன்' என்பார் அடிகள். தமிழறிஞர் பலரை நாம் கண்டிருக்கின்ருேம். ஆணுல் தனிநாயக அடிகள் அவர் களிடமிருந்து வேறுபட்டும், தனித்துவம்பெற்றும் விளங்குகின்ருர், ஆழமாக அறிந்து பேசும் பண்பாளர். பல மொழிகளையும், பல பண்பாடுகளையும் தெரிந்தவராகையால், பிறமொழிகளையும், பிற பண்பாடுகளையும் மதித்துப் பேசும் பண்பாளர். தனிநாயகம் ஒருமொழி வெறியச் அல்லர்; அவர் ஒரு தமிழ்மொழி பக்தர். பிறமொழிகளை நையாண்டி செய்தவர் அல்லர். தனிநாயக அடிகள் உலகெல்லாம் தமிழர் பண்பாட்டைப் பரப்பத் துணை செய்தது தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 'உலகக் கண்ணுேட்டம்” (உ-ம்.)
'யாதும் ஊரே, யாவரும் சேளிச்'
Every Country is my Country; Every man is my kinsman, "பெரிதே உலகம், பேணுகர் பலரே”
'யாதானும் நாடாமல் ஊராமால் என்னுெருவன்
சார்துணையும் சல்லாத வாறு'

தனிநாயகத்தின் தனிப் பண்பாடு 119
போன்ற புறநானூறு, திருக்குறள் கருத்துக்களாகும். அடுத்தது தமிழ் இலக்கியத்தில் காணப்படும் மனிதநலக் கோட்பாடு தனிநாயக அடிகளின் உள்ளத்தைக் கவர்ந்தது. 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளனுகும் தன்மை’ போன்ற புறநானூற்றுப் பாடல்கள் அவரின் உள்ளத்தைக் கவர்ந்தது.
தமிழ் இலக்கியத்தின் தனித்தன்மை, தனிநாயக அடிகளின் தனித்தன்மைக்குக் காரணமாய் இருந்தது என்ருல் அது மிகையாகாது.
அடிகளாரின் தனித்தன்மைகளுள் ஒன்று. 'எனது வயது ஐந்து குறிஞ்சி" என்பார். குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை மலரும். 12X5 : 60 வயது என்பார். இப்படிப் புதியமுறையில் பேசுவார்.
தமிழர்களுக்கு-நான்கு பற்றுகள் தேவை-அவை
மொழிப்பற்று
இனப்பற்று நாட்டுப்பற்று உலகப்பற்று என்பார்.
ஒருவரின் சோல்வளம் தமிழில்
ருவர் சொல்வளம் பெறக் கடைசி 10,000 சொற்களாவது தெரிந்து வைத்திருக்கவேண்டும் என அடிகள் குறிப்பொன் றில் எழுதிவைத்துள்ளார்.
தமிழ்மொழியால், தமிழ்மொழிக்குச் சமயத்தொண்டு
** என்னை நன் ருக இறைவன் படைத்தனன், தன்னை நன்ருகத் தமிழ்செய்யு மாறே" என்ற திருமூலரின் தாரக மந்திரமே அடிகளின் மூச்சும், பேச்சுமாகும்.
"வேர்ஜில் என்னும் இலத்தீன் புலவரை ஏந்திப்படித்துப் மகிழ்ந்துள்ளேன். எகிப்து நாட்டின் தொன்மை வாய்ந்த ஏடுகளையும் நாகரிகத்தின் சின்னங்களையும் புரட்டிப்பார்த்து வியந்துள்ளேன். அமெரிக்க இன்கா அஸ்தெக் பண்பிற்கு அறி குறிகளான கோட்டைகளையும் கட்டடங்களையும் கண்டுகளித் துள்ளேன். எனினும் தொல்காப்பியத்தை என் கைகளில் ஏந்தி விரிக்கும் பொழுது எனக்கு ஏற்படும் அத்தகைய உளக்

Page 84
2) தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
கிளர்ச்சி வேறு எந்நூலிலும் ஏற்படுவதன்று. நம் பண்டைத் தமிழ் நூல்களைத் தொட்டதும் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து பண்பில் வளர்ந்து திருந்திய இலக்கிய இலக்கணப் பயிற்சி நம் கண் முன் நிற்கிறது' என்பார் தனிநாயக அடிகள்.
பணியுமாம் என்றும் பெருமை
அடிகளார் டாக்டர். ஜி. யூ. போப் போன்று, என்றும் தமிழ் மானுக்களுய் இருக்கவே விரும்பினர். டாக்டர். ஜி. யூ. போப் தம்முடைய கல்லறையில் "நான் ஒரு தமிழ் மானுக்கன்" என்று பொறிக்கச் சொல்லியிருந்தார். அவ்வளவுக்கு அடக்கம். அவரைக் போன்று தனிநாயக அடிகளும் யாழ்ப்பாணத் தமிழ்த் திருநாளில் தம்மைப்பற்றி இவ்வாறு சொன்ஞர் :
'யான் ஒரு சொற்பொழிவாளஞே அன்றி ஒரு எழுத் தாளஞே அல்லன். ஆர்வமிக்க தமிழ் மாணுக்கனே ஆவன். எனவே தமிழ் அறிவிற் சிறந்த பெரியோர் பலர் கூடிய இப் பேரவையில் உரை நிகழ்த்துவதற்கு அதுவும், சங்க இலக்கியத் தில் சிறப்பியல்புகள்பற்றி உரை திகழ்த்துவதற்கு அஞ்சுகிறேன்" என்றர். தனிநாயக அடிகள் இவ்வளவு அடக்கமான அவை அடக்கம் சொன்ஞர்கள், இது அவை அடக்கந்தான். அவை அடக்கமே அன்றி வேறல்ல என்பதை அவர்தம் பேருரையைச் சேவிமடுத்தவர்கள் அறிந்தார்கள்.
'பண்பாடு என்ருல் இனிமையும், ஒளியும் கொண்டது" என்பார் மத்தியு ஆர்னல்டு என்னும் இலக்கியத் திறனுய்வாளர். (Culture is sweetness and light) Assafiruus syiqassir Sjögst பொருளில் பண்பாட்டை ஏற்றுக்கொண்டு தம் பேச்சிலும், எழுத் திலும் இதனைக் கையாண்டிருக்கின்ரூர், அவரும் இனியவராக ஒணியுள்ளவராக வாழ்ந்திருக்கின் ரூர். தமிழர் பண்பாட்டின் தலை சிறந்த களஞ்சியங்களாக விளங்கும் நூல்களாகத் தொல்காப்பியப் பொருளதிகாரம், புறநானூறு, குறுந்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம் இவற்றை அடிகள் குறிப்பிடுவார். பிற சங்க இலக்கியங்களும், பிற்காலத்தில் தோன்றிய நூல்களும் பண்பாட்டை விளக்கினுலும், இந்த ஐந்து நூல்களும், தமிழர் பண்பாட்டைக் கூறுவதில் நிகரற்றவை என்பார் அடிகள். தமிழில் உள்ள பக்தி இலக்கியங் களைப்போல் வேறெந்த மொழியிலும் நூல்களைக் காண்பது அரிது. பக்தியும் தமிழ்ப்பண்பாட்டில் சிறந்த அறிகுறி என்பது ஒருதலை என்பார். அடிகனார் தமிழர் பண்பாட்டின் முக்கிய கோள்கைகளாகக் கீழ்க்கண்ட பண்புகளை எடுத்துக் காட்டுவார்:

தனிநாயகத்தின் தனிப் பண்பாடு 121
1. பரந்த உலக மனப்பான்மை. இதில் இருந்து பிறப்பது
சகிப்புத்தன்மை (Tolerance).
விருந்தோம்பல். பிறரன்பு 4. பிறர்க்காக வாழும் கோட்பாடு அல்லது மக்கள் நலக்
கொள்கை 5. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற
உயரிய பண்பு. 6. என் கடன் பணிசெய்து கிடப்பதே, 7. அகத்திணை - புறத்திணை மரபு. 8. மானம் என்ருல் உயிரையும் கொடுத்துக் காப்பாற்றும்
வேட்கை.
9. மனத்தூய்மை, (ஒழுக்கம்) 10. விடாது முயலல் என்னும் கொள்கை, 11. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற உயர்ந்த
இலட்சியம். 12. நாட்டுப்பற்று-மொழிப்பற்று.
புறநானூற்றில் "உண்டாலம்ம (வ்வுலகம்" என்ற செய்யு
ளும், "இம்மைச் செய்தது மறுமைக்காமென' என்ற செய்யுளும் குறிப்பிடத்தக்கவை என்பார் அடிகள். (புறம் 182, 184)
போன்றவை ஒருசில என்பார் அடிகள்.
தமிழர்களின் பக்தி இலக்கியம் இணையற்ற செல்வம் என்று கூறும் அடிகள் மணிமேகலை என்னும் புத்த காப்பியத்திலும் தமிழ் பக்திச்சுவை மிளிர்கிறது என்று கூறுவார்.
ஏனைய நாடுகளில் தமிழ்ப் பண்பாடு காப்பாற்றப்படுமா என்பது ஐயம். ஆளுல் அது தொடர்ந்து வளரவேண்டுமாயின் அது ஈழத்திலும் தமிழ்நாட்டிலும்தான் இயலும் என்பது அடி களின் எண்ணம்.

Page 85
23. தனிநாயக அடிகளும் ஒப்பியல் இலக்கியமும்
அடிகளார் தமிழ் ஆராய்ச்சி ஒப்பீட்டு இலக்கியம் போன்ற துறைகளில் தமிழுக்கு வலிவும் பொலிவும் ஊட்டினுர், அவர் எழுதிய 'சங்க இலக்கியப் பாக்களில் இயற்கையின் இடம்" என்ற தமிழ் ஆராய்ச்சி நூல் போன்று தமிழில் வேறு இல்லை என செக்கோஸ்லவாக்கிய தமிழ் அறிஞரான டாக்டர் கமில் சுலபில் குறிப்பிட்டுள்ளமை ஒப்பீட்டு இலக்கியத்துறையிலும் அவரின் படைப்புகள் சாகாவரம் பெற்றமை தெளிவானதாகும். இந்திய மேற்கத்திய கல்வி ஒப்பீடு, தென் கிழக்காசியாவின் கலைப்பண்பாடு பற்றிய ஆராய்ச்சி போன்ற துறைகளுடனும் உலக நாடுகளில் மக்கள் வாழ்ந்த கால கட்டங்கள் அப்போதைய நாகரிகம், பண்பாடுபற்றியும் அவர் ஒப்பீடு செய்துள்ளார்.
தனிப்பட்டி ஆர்வம்
தம்முடைய தனிப்பட்ட ஆர்வம் என்று கீழ்க்கண்ட வற்றை அடிகளார் குறிப்பிட்டுள்ளார் ; கீழைத்தேச-மேலைத் தேச பண்பாட்டுத் தொடர்புகள், ஒப்பியல் பண்பாடுகள், ஒப்பியல் இலக்கியங்கள், பயணங்கள், அனைத்துலகத்தன்மைகள் (Internationalism) சிறுபான்மையினரின் பிரச்சினைகள், மகிழ்ச்சிபற்றிய பிரச்சினைகள்-இவைகள்மேல் எல்லாம் தமக்கு ஈடுபாடு உண்டு என அடிகளார் தம் வாழ்க்கைக் குறிப்பேட்டில் எழுதியிருக் கின்ருர். இதஞல் அடிகளின் ஒப்பியல் இலக்கிய நோக்கு நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.
வென்டல் வில்கி (Wendel Wilkie) என்பவர் "வருங்காலத்
தில் நம் சிந்தனையெல்லாம் உலகநோக்குடையதாய் இருக்க
Gal argui' 'In future our thinking must be worldwide'
என ஒரே உலகம் (One World") என்ற நூலில் எழுதுவார். இதை வாசிக்கும் தனிநாயக அடிகள் இவர் இப்போதுதான்
இப்படி எழுதுகிருர்-ஆஞல் எங்கள் தமிழர்களோ இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே கூறிவிட்டார்கள் என ‘யாதும் ஊரே
யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுப்பாடலை எடுத்துக் காட்டுவார்.

தனிநாயக அடிகளும் ஒப்பியல் இலக்கியமும் 123
அடிகள் ஹோமர் 'Homer'ன் நூலைப் படிப்பார். அவர் தம் நூலில் 'புண்ணியத்தைப்" போற்றியிருக்கின்ருர் என்று படிக்கும்போது-ஆகா-அவ்வளவுதான-எங்கள் தமிழர்*புகழ்", 'மானம்" போன்ற பண்புகளைப் பாராட்டியிருக், கின்ருர்களே இதோ புறநானூறு, குறள் போன்ற நூல்களைப் பாருங்கள் என எடுத்துக்காட்டுவார் அடிகள். (உ-ம்.)
தோன்றிற் புகழோடு தோன்றுக’ என்ற குறளையும், *புகழ் எனின் உயிரும் கொடுப்பர்" என்ற புறநானூற்றுப் பாடலை யும் காட்டுவார்.
*உலகில் காணப்படும் பல மொழிகளில் எல்லாப் புண்ணியங் களையும் கொண்டவனைக் குறிக்க ஒரு சொல் கிடையாது; சுற்றி வளைத்துத்தான் கூற வேண்டும். ஆங்கிலத்தில் கூட எல்லாப் பண்புகளையும் கொண்டவனைக் குறிப்பிட "The Virtuous Man" என்றுதான் சொல்வர். ஆஞல் தமிழ்மொழியில் மட்டும்தான் எல்லாப் பண்புகளையும் குறிப்பிட ஒரு சொல் உண்டு. அதுதான் *சால்பு". எல்லாப் பண்புகளும் நிறைந்தவனேச் 'சான்றேன்" எனக் கூறுகின்ருேம் எனப் பெருமிதம் அடைவார் அடிகளார்.
ன்று சமயப் பொறையைப்பற்றி, சமய சகிப்புத்தன்மை யைப்பற்றிப் பேசுகின்றனர். குறிப்பாக Hyde Park Corner’ பல சமயத்தவர் ஒன்று சேர்ந்து தத்தம் சமயக் கருத்துக்களைப் பேசுகின்றனர். ஆளுல் 1800 ஆண்டுகட்கு முன்னரே-சமய வாதிகள் தத்தம் கொடிகள் நிறுவி -தங்கள் சமயக்கருத்துக் களைப் பேசினர் எனத் தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலை கூறுகிறது என்பார் அடிகள்.
மேல்நாட்டார் தாங்கள் பூக்களை அதிகம் விரும்புவதாகவும், உரோசாப்பூ ஆங்கிலநாட்டு அரச பரம்பரையைக் குறிக்கும், நெருஞ்சிப்பூ (Thistle) ஸ்காட்லாந்து அரச பரம்பரையைக் குறிக்கும், லில்லிப்பூ பிரெஞ்சுநாட்டு அரச பரம்பரையைக் குறிக்கும் எனப் பெருமிதம் அடைவர். இதற்குத் தனிநாயக அடிகள்- தமிழ் இனம் பூவோடு பிறந்த இனம்-தமிழ் இனம். பூக்கள் கொண்டு ஒழுக்கத்தைக் கற்பித்த இனம் தமிழ் இனம். பனம்பூ, ஆத்திப்பூ, வேப்பம்பூ-சேர, சோழ, பாண்டிய அரச பரம்பரையைக் குறித்த பூக்கள் எனக் கூறிப் பெருமிதம் அடை வார்.'பூக்கள் கொண்டு தமிழர்கள் சொல்லிவிட்டார்கள்," "The Tamils have said it with flowers' Tairo sysofsir 9,iian வாஞெலி உரை இங்கு குறிப்பிடத்தக்கது.

Page 86
124 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
அடிகள் உலக ஒழுக்க இலக்கியங்களைப் படித்துவிட்டு, శి தலைசிறந்த ஒழுக்க இலக்கியங்கள் உலகில் 6T6ör TT.
தமிழர்கள் எப்போதும் உயர்ந்தவர்களாக இருக்கவேண்டும். 'ஒப்பியல் அறிவு” தனிநாயக அடிகளுக்குமுன் அவ்வளவாகப் பரவலாக்கப்படவில்லை. தமிழ் அறிஞர்களின் ஒப்பியல் கண் களைத்திறந்தவர் தனிநாயக அடிகளார் என்ருல் அது மிகையாகாது.
தமிழுக்கு-பொதுநீலை ஒலிப்புத்தேவை
பல நாடுகளில் தமிழ் பலவாருகப் பேசப்படுவதை அடிகளார் நோக்கிஞர். ஓங்குபுகழ் ஆங்கிலம் போன்று தமிழ் தழைத் தோங்கத் தமிழ்மொழிக்கு "பொதுநிலை ஒலிப்பு” தேவை எனப் பறைசாற்றினுள் அடிகள். மலையாள நாட்டின் எல்லையில் இரும் போர் மலையாளம் பேசுவதுபோலத் தமிழை உச்சரிப்பர். சிங்கன நாட்டில் இருப்போர் சிங்களத்தைப்போலத் தமிழைப் பேசுவர். இவ்வாறே மலாயாவில் சீனமொழியைப்போலவும், அமெரிக்கத் தீவில் இருப்போர் ஆங்கிலத்தைப்போலவும் தமிழை ஒலித்து வருகின்றனர். எனினும், இத்தமிழ் ஒலிவேறுபாடுகளை நீக்கி, மேல்நாட்டு மொழிகளுக்கு உள்ளதைப்போன்ற பொதுநிலை ஒலிப்பு ஒன்றைப் பரப்புவது, தமிழ்ப் பாதுகாப்பிற்கும், பெரு நலத்தினைப் பயக்கும். நம் வெள்ளித்திரை நடிகர்களும், வானுெலி உரையாளர்களும் இப் பொதுநிலை ஒலிப்பைக் கடைப் பிடிப்பார்களெனில், இவ் ஒலிப்பு எங்கும் எளிதில் பரவிவிடும் என்ருர்,
தமிழ்-பக்தியின்மொழி; தமிழ்க்கலைகள்-பக்தியின் கலைகள்
அடிகளார், தமிழிசையும், ஓவியமும், கட்டடக்கலையும், உருவக்கலையும், நாட்டியக்கலையும், பண்பாட்டின் பெட்டகங்களாக விளங்கியதை உணர்ந்து போற்றி மகிழ்ந்தார். 'நம் கவின் கலேகள் (Fine arts) நம் பண்பாட்டின் சிறப்பியல்புகளைப் பளிங்குபோல் எடுத்துக்காட்டுகின்றன. நம் இலக்கியம் பெரும் பாலும் நம் சமயங்களுடன் தொடர்புடையது. எனவே, நம் கலைகளின் வளர்ச்சிக்கும் தமிழ்நாட்டில் பண்டுதொட்டுவரும் சமயங்களே காரணம். நம் இலக்கியத்துக்கும் மொழிக்கும் பக்திச் சுவை எவ்வாறு இயல்பாயுள்ளதோ, அவ்வாறே நம் கலைகள் பக்தியின் விளைவால் தம் அருங்கனிகளைக் கொடுத்திருக்கின்றன.

தனிநாயக அடிகளும் ஒப்பியல் இலக்கியமும் 12
தமிழ்மொழி பக்தியின் மொழியாயின், தமிழ்க்கலைகளும் பக்தியின் கலகளே. ஆறுவேறு சமயங்களாலும், தமிழ் வளர்ந்த பாங்கை எண்ணி இறும்பூது எய்திய அடிகளார், கிறித்தவத்தால் தமிழ் தழைத்தோங்கிய செய்தியைத் தம் எழுத்தாலும், பேச்சாலும், சுற்றுச்செலவாலும் உலக மக்களுக்கு உணர்த்தத் தவறவில்லை.
வானுெலிகளில்-தொலைக்காட்சிகளில்-செய்தித்தாள்களில் தனிநாயகம்
இலக்கியத் தொடர்பான பொருள்கள்பற்றி அடிகளார், பி. பி. சி. வத்திக்கான் வானெலி, இந்திய வாஞெலி (All India Radio), சிங்கப்பூர், மலேசிய வானுெலிகளில் உரைகள் நிகழ்த்தி இருக்கின்ருர், சிங்கப்பூர், மலேசியா தொலைக்காட்சிகளில் அடிகளார் தோன்றியிருக்கின்ருர்.
கல்வி, பண்பாடு தொடர்பான கட்டுரைகளை உலகத்தில் உள்ள பல செய்தித்தாள்களுக்கும் எழுதி இருக்கின்ஞர். இத்தாலி, அமெரிக்கா, இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, மலேயா போன்ற நாடுகளில் இருந்து வெளிவருகின்ற செய்தித் தாள்களுக்கும் அடிகள் எழுத்தோவியங்கள் படைத்திருக் கின்ருர்கள்.
தம் உலகப் பயணங்கள்பற்றி அடிகள் கூறுவது
ஐரோப்பாவில் 5 ஆண்டுகளும், இங்கிலாந்தில் இரண்டு ஆண்டுகளும், வட, தென் அமெரிக்காவில் இரண்டு ஆண்டு களும், இந்தியாவில் பத்து ஆண்டுகளும் இருந்ததாக அடிகள் கூறுகின்ருர், யப்பான், தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு வட(க்கு)மத்திய ஆப்பிரிக்கா, போன்ற நாடுகளுக்குப் பல முறை பயணம் மேற்கொண்டுள்ளதாக அடிகனார் கூறுவார். ரூசியா (Russia) தொடக்கம், உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பல்கலைக் கழகப் படிப்பு படித்துள்ளதாக அடிகள் கூறுகின்றர்.
தனிநாயக அடிகளுக்கு 1980ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் 29ஆம் நாள் யாழ்மாநகரசபை வரவேற்பு அளித்து கெளரவித்தபோது அடிகளார் நன்றி கூறிப் பேசினபோதுதம் உலகப் பயணத்தைப்பற்றி இவ்வாறு கூறிஞர்:
'நான் பல்கலைக் கழகங்களில் இருந்த காலங்களில் பிற நாட்டு அறிஞர்களும், தூதரகங்களும் தம் நாடுகட்குச் சென்று பல்கலைக் கழகங்களைப் பார்வையிடவும், விரிவுரைகளை நிகழ்த்தவும் கணக்கற்ற வாய்ப்புகளை அளித்தார்கள். ஆதலால் நான்

Page 87
126 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
ஏதாவது தமிழ்த் தொண்டினை ஆற்றியிருந்தால் அதற்கு இறை வணின் திருவருளே காரணம். என்னைப்பற்றி நான் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் என்னவெனில், இளம் அறிஞரும் இத் தகைய வாய்ப்புகளைப் பெற்ருல் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதே" (சுதந்திரன். 7, 9. 1980).
என்னே 1 அடிகளின் பணிவு. தனிநாயகத்தின் உள்ளம்தாழ்மையான நெஞ்சம் என்பதை அவரின் நன்றியுரை மூலம் அறிகிருேம் அல்லவா ?

24. பல்கலைக்கழகங்களுக்கு
(Sy)
()
(@)
(-ه)
(ear)
வெளியே அடிகளின் பணி
அனைத்துலகத்தமிழ் ஆராய்ச் சி நிறுவனத்துக்கு இணைச் செயலராகக் கடமை ஆற்றினுர் சென்னை மாநிலத்தில்.
குழந்தைகள்-வயது வந்தோர் இலக்கிய வெளியீட்டுக் குழுவுக்குத் தலைவராக 1964 வரையும் இருந்து கடமை ஆற்றினுர்கள். சென்னையில் உள்ள, தமிழ்க் பண்பாட்டுக் கழகத்துக்கு, துணைத்தலைவராக இருந்திருக்கின்ருர்,
Gersărar மாநிலத்தில் உள்ள தமிழ் ஆராய்ச்சி முன் னேற்றச் சங்கத்தின் உறுப்பினராக இருந்திருக்கின் ரூர் (1963 வரையும்).
சென்னைப் பல்கலைக்கழகத்தின், ஆங்கில தமிழ் அகர முதலிக் குழுவின் உறுப்பினராக 1988 வரையும் இருந் தார்.
இலங்கையிலுள்ள, சிறிலங்கா சாகித்திய மண்டலத்
தின் உறுப்பினராக 1961 வரையும் கடமை ஆற்றிருச்.
விரதம ஆசிரியர் பணி
1.
அடிகளார் தமிழ்ப்பண்பாட்டின் (Tamil Culture) பிரதம ஆசிரியராகப் பதினைந்து ஆண்டுகளாகப் பணியாற்றி ஞர். அவர் பிரதம ஆசிரியராக இருந்தபோது 12 தொகுதிகள் வெளிவந்தன.
1969s) Galafia is 'studio' (Journal of Tamil Studies) என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும்
பணிபுரிந்தார்.
'தமிழ் போர்த்துக்கேய அகரமுதலி' (1966)

Page 88
2
4.
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
"தமிழ்க்கலை வர்த்தமாணி' (1969) இதன் பிரதம பதிப்பாசிரியராகவும் பணிபுரிந்தார்.
சோர்ணம்மாள் உடைமைகள் விரிவுரைகள் CSornamenal Endowment Lectures)
1.
சென்னைப்பல்கலைக்கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட சொர்ணம்மாள் உடைமைகள் விரிவுரை நிகழ்த்துதல். 1961 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். தலைப்பு. "கீழைத் தேச படிப்புகளின் நூல்களில்-தமிழ் மனித நலக் கோட்பாட்டின் கண்ணுேட்டம்'. Aspects of Tamil Humanism in Annals of Oriental Studies'.
அண்ணுமலே பல்கலைக்கழகத்தால் ஒழுங்கு செய்யப் பட்ட சொர்ணம்மாள் உடைமைகள் விரிவுரை நிகழ்த்து தல். 1961 ஆம் ஆண்டு.
தலைப்பு. உலக ஒழுக்கவியலில் திருக்குறள் -கிரேக்க, உரோம, பெளத்த அறக்கொள்கைகளுடன் ஓர் ஒப்பாய்வு."
6Tirukkural in World Ethics Compared with Greek, Roman and Buddhist Ethics'. (Tamil).-gi-ariribGurga அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தால் 1967ல் நூல் வடிவில் வெளி
வந்தது.
மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள்
Papers submitted to Congresses Published in proceedings
1.
'தமிழ் இலக்கியத்தில் கத்தோலிக்க சமயத்தின் பங்களிப்பு”- இந்திய வரலாற்று மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. அண்ணுமலை நகர் 1946.
“ “The Catholic Contribution to Tamil Literature' in proceedings of the Indian Historical Congress, Annamalai nagar. 1946.
சோமனிசமும் கவிதையும்’-25ஆவது கீழைத்தேச அறி ஞர்களின் மாநாட்டில் மாஸ்கோ. 1960.
“Shamanism and Poetry'. In Proceedings
of the XXVth Congress of Orientalists, Moscow, 1960.

ல்கலக்கழகங்களுக்கு வெளியே அடிகளின் பணி 19
3.
புருெஎன்காவின் தமிழ் -போத்துக்கீச அகர முதலி. 1679, கீழைத்தேச அறிஞர்களின் அனைத்துலக மாநாடு, புதுதில்லி, 1964.
• Proenca's Tamil-Portuguese Dictionary. 1679.” în proceedings of the International Congress of Orientalists, New Delhi. 1964.
இந்தியாவுக்கும்-தென்கிழக்காசியாவுக்கும் இடையே யுள்ள பொதுப்பண்பாட்டுக் கூறுகள், கீழைத்தேச அறிஞர்களின் மலேசிய மாநாடு, கோலாலம்பூர் 1965.
66Cultural Elements Common to India and South East Asia.' In Proceedings of the
Malaysian Conference of Orientalists. Kuala Lumpur, 1965.
பொற்காலத்தில், தமிழக-உரோமைய வாணிபம், 27 வது கீழைத்தேச அறிஞர்களின் மாநாட்டில் சமர்ப்பிக் பட்ட கட்டுரை. ஆன் ஆர்போர் மிக்கிக்கன், 1967.
66 Tamil-Roman Trade of the classical Period." Paper submitted to the XXVIIth Congress of Orientalists. Am Arbor Michigan 1967.
"தமிழ் சமூகம்’ மூன்றவது உலகத்தமிழ் ஆராய்ச்சி
Lor Just - q. dö படிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை.
Lugrifia, 1970.
• Tamil Society" A Survey Paper submitted
to the Third International Conference of Seminar of Tamil studies. Paris, 1970,
டிகளின் எழுத்தோவியங்கள் தமிழ்க்கலைக் களஞ்சியத்தில் கட்டுரை
1.
ஜோசப் கொன்ஸ்டன்டைன் பெஸ்கி (வீரமாமுனிவர்) இத்தாலியத் தமிழ் அறிஞர், கவிஞர் (இறப்பு 1742) தமிழ்க்கலைக் களஞ்சியம். (தமிழில்) தொகுதி, இரண்டு. பக்கங்கள் 449.451, 1963.
多.ー9

Page 89
租30
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
1952ஆம் ஆண்டிலிருந்து அடிகள் எழுதிய கட்டுரைகள் (பல்வேறு
சஞ்சிகைகளுக்கு)
1.
தென் இந்தியாவில் சமயக்கலை" வழிபாட்டுக் கலையில். நியுயோர்க் 1953.
“Religious Art in South India' in Liturgical Arts. Newyork, 1953.
*ஐரோப்பிய நூலகங்களில் தமிழ்ச்சுவடிகள்" தமிழ்ப் பண்பாடு தொகுதி II. எண். 2. பக்கங்கள் 219-239。i954。
Tamil Manuscripts in European Libraries”, Tamil Culture, Vol. III, No. 2, pp. 219230, 1954.
தென்கிழக்கு ஆசியாவில் தமிழ்ப்பண்பாட்டின் தாக் கங்கள். தமிழ்ப்பண்பாடு. தொகுதி IV. எண். 3. பக்கங்கள் 203-220, 1955.
• Tamil Cultural influences in South East Asia” Tamil Culture Vol. IV. No. 3. pp. 203220, 1955.
இலங்கையில் தமிழ்ப்பண்பாடு, அன்றும், இன்றும், இனியும், (தமிழ்ப்பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப் பட்ட சிறுநூல்) கொழும்பு 1955.
Tamil Culture in Ceylon, Past, Present, and Future. (Booklet published by the Tamil Cultural society) Colombo, 1955.
பழைய தமிழ் இலக்கியமும்-பழைய இந்திய கல்விப் படிப்பினைகளும் தமிழ்ப்பண்பாடு. தொகுதி 5. எண். 1. பக்கங்கள் 1.15, 1956.
“Ancient Tamil Literature and the study of Ancient Indian Education.” Tamil Culture Vol. V. No. 1. pp. 1-15, 1956.
ஆரம்ப காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி மான்கள். தமிழ்ப்பண்பாடு-தொகுதி 5, எண். 2, பக்கங்கள் 105-119, 1956,

ல்கலைக்கழகங்களுக்கு வெளியே அடிகளின் பணி 13
10.
11.
12.
“The Educators of early Tamil society." Tamil Culture. Vol. V, No. 2, pp. 105-119, 1956.
இந்திய சிந்தனையின் ஆரம்பநிலை. தமிழ்ப் பண்பாடு.
தொகுதி. 6, எண் 1, 2, 1957.
“A Seminal period of Indian thought” Tamil
Culture, Vol. vii, No. 1 & 2, 1957.
பழைய தமிழ்க் கவிஞர்கள்-கல்விமான்கள். தமிழ்ப் பண்பாடு. தொகுதி. 8, எண் 4, பக்கங்கள் 272-285, 1957.
“Ancient Tamil poet Educators' Tamil Culture. Vol. vi., No. 4. pp. 272-285, 1957.
சங்க இலக்கியத்தில் தத்துவ நிலையின் வளர்ச்சி, தமிழ்ப்பண்பாடு தொகுதி, 7, எண் 1 பக்கங்கள் 1-15, 1958
The philosophic Stage of Development in Sangam Literature'. Tamil Culture. Wol, vii. No. 1 pp. 1-15, 1958.
தமிழில் அச்சேறிய முதல் நூல்கள்-தமிழ்ப் பண்பாடு
தொகுதி. 7 எண் 3, பக்கங்கள் 288 - 308, 1958.
6 The first books printed in Tamil' Tamil
Culture. Vol, vii. No. 3 pp. 288-308 1958.
தமிழ்நாட்டில் ஆரம்பகால சமண, பெளத்த போதனை கள். தமிழ்ப்பண்பாடு. தொகுதி 8, எண் 4. பக்கங்கள் 337-349, 1959.
“Earliest Jain and Buddhist Teaching in the Tamil Country” Vol. viii. No. 4 pp. 337.-349. 1957.
'வளர்ந்தோர் கல்வியின் இயல்பும்-குறிக்கோளும்? -இலங்கை, வரலாற்று, சமூக படிப்பினை இயல் தொகுதி 2. எண் 1, 1959,
The nature and seope of adult Education' Ceylon Journal of Historical and social studies Vol. 11, No. 1, 1959.

Page 90
32
13.
14.
15.
16.
17。
18.
19.
தனிதாயக அடிகளின் வாழ்வும் பணியும்
தமிழ் பாலர், முதலாம் வகுப்பினருக்கு உரிய சொல் லாட்சியும், உள்ளுரையும். தேசியக்கல்வி சமூக இயல்தொகுதி. எண் 2, 1959.
(The Vocabulary and Content of Tamil primers and first Readers' Journal of the National Education Society Vol. No. 11, 1959.
ஆசிரிய பயிற்சியின் தத்துவமும்-நடை முறையும். தேசியக் கல்வி சமூக இயல். தொகுதி 8, 1969.
6 The philosophy and Practice of Teacher Training' in National Education Society Journal Vol III, 1960.
டாக்டர். ஆர். பி. சேதுப்பிள்ளை தமிழ்ப்பண்பாடு.
தொகுதி. 9. எண். 3. பக்கங்கள் 217-230. 1961.
(Dr. R. P. Sethupillai' Tamil Culture. Vol.
IX, No. 3. pp. 217-230. 1961.
தமிழ்-கிரேக்க அறக்கொள்கைகள் ஒப்பாய்வு கலப் பூங்கா. இலங்கை இலக்கியக் கழகம். 1961. பக் கங்கள் 65-78.
“Tamil and Greek Ethics Compared”, în Kalaip punka, organ of the Ceylon literary academy. 1961. pp. 65-78.
இருபதாம் நூற்ருண்டு தமிழ் இலக்கியத்தில் மாநிலதேசிய மயம். தமிழ்ப்பண்பாடு. தொகுதி. 10, எண். 1. பக்கங்கள் 1-23, 1963.
“Regional Nationalism in twentieth Century Tamil Literature.' Tamil Culture. Vol X. No, 1. pp. 1-23, 1963.
சென்னை நகரத்து நாவலாசிரியர். தமிழ்ப்பண்பாடு,
தொகுதி. 10, எண். 2. பக்கங்கள் 1-18, 1963.
• The Novelist of the City of 'Madras.
Tamil Culture, Vol. X. No 2. pp. 1-18 1963.
திரு. வி. கலியாணசுந்தரரின் இயற்கையும் இயற்கை
இயலும். தமிழ்ப் பண்பாடு-தொகுதி. 10, எண். 4 1963.

பல்கலைக்கழகங்களுக்கு வெளியே அடிகளின் பணி 133
20.
21.
22.
2器。
24.
“Nature and the Natural in Kalyanasuadarar. Talaall Culture*. Vol. X. No. 4. 1963.
பழைய இந்தியக்கல்வியின் இயல்புகள். கல்வியின் வரலாறுபற்றிய அனைத்துலக சஞ்சிகை - பெடகொ ஜிக்கா கிஸ்டோறிக்கா" கென் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. தொகுதி. 2. 1963.
“The Typology of Ancient Indian Education' in Pedagogica Historica, international Review of the History of Education, published by the University of Ghent, Vol. 11, 1963.
'கல்வியின் நோக்கங்கள்” (தமிழில்) இலங்கைத் தேசியக் கல்வி சமூக இயலில்-1963.
The aims of Education (Tamil) in Journal ef the National Education Society of Ceylon. 1963.
'தமிழ்-போத்துக்கீச அகரமுதலிக்கு முன்னுரை 1879" முனைவர் எட்கார் சி. நொல்டன் துணையுடன் மொழி பெயர்ப்பு, தமிழ்ப்பண்பாடு. தொகுதி. 11. sraivir. 2. 1964.
Preface to the Tamil-Portuguese Diotio
nary 1679 Translation in Collaboration with Dr.
Edgar C. Knowlton, Taramil Culture. . Wol. XII. No. 2. 1964.
பூய்சி பேர்சின்ரான் இந்திய பூர்வா (மலேசியன்)
பென்னுலிஸ், ஒகொஸ்-திசம்பர் 1964,
“Puisi perchintaan India purba (Malay), în
Penulis, Ogos-December, 1964.
**தமிழில் பொற்காலத்துக் காதல் கவிதைகள்'-தென் கிழக்காசியப் படிப்பினைகள் என்ற தொகுதியில், சாயம் சமூகம், பங்கொக், 1965.
“ “Classical love poetry in Tamil’” in Felicitation wolumes of South East Asian Studies, Siam Society, Bangkok, 1965.
'பழைய தமிழ்க்கவிதைகள் "புதிய கொரிசனில், ஹொங் கொங், 1966,

Page 91
134
26.
27.
28.
29.
30.
S2.
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
Ancient Tamil Poetry' in New Horizon, Hong kong, 1966.
'தொல் இந்தியாவில் மாணவப் பருவத்தின் தன்மைகள்"-கென்ர் பல்கலைக்கழகம், கென்ட்.
“Patterns of Studenthood in Ancient India' in pedagogica Historica, University of Ghent Ghent.
'கடாரம்" என்பதை மதிப்பீடு செய்தல் முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் முதல் தொகுதியில், கோலா லம்பூர், 1966.
“The Identification of Kataram' in Proceedings of the First International ConferenceSeminar of Tamil studies, Vol. 1, Kuala Lumpur, 1966.
'தமிழ்ப்படிப்பினைகளைப்புரிந்து கொள்ளுதல்" முதல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இரண்டாம் தொகுதியில், கோலாலம்பூர், 1966.
“A perception of Tamil Studies' in Proceedings of the First International ConferenceSeminar of Tamil Studies, Vol. 11. Kuala Lumpur, 1966.
'தமிழில் அற இலக்கியத்தின் காலங்கள்". பிரத் தானும் பேராசிரியர் குய்ப்பர் நினைவாக மெளவுட்டன். 1967.
The period of Ethical Literature in Tamil' in Pratidanum. Studies presented to professor Kuiper, Mouton & Co, 1967,
இருபது வருடங்களில் தமிழ்ப் படிப்பினைகள்-தமிழியல்
தொகுதி. 1. 1969.
Two Decades of Tamil Studies', Journal of
Tamil Studies. Vol. 1. 1969.
மாட்டினிக்கு-தமிழர்களின் பயணம். தமிழியல், தொகுதி. 1. 1969,

பல்கலைக்கழகங்களுக்கு வெளியே அடிகளின் பணி 35
32.
“Tamil Emigration to the Martinique' in
Journal of Tamil studies Vo)- 1. 1969.
"தொல்காப்பியம்’-பழைய ஏடு. தமிழியல். தொகுதி. 1. எண். 1. 1973,
Tolkaapiyam-The Earliest Reeord. In Journal of Tamil Studies, Vol. 1. No. 1. (1973).
செய்தித்தாள்களில் கட்டுரைகள்
1.
சமயமும்-பண்பாடும்-*மலேயன் டைம்ஸ்' மலேசி யப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாச் சிறப்பிதழ். 1962.
“Religion and Culture' in Malayan Times, Special University of Malaya Convocation Supplement, 1962.
மலேசியாவில் தமிழ் எழுத்தாளரின் பங்கு தமிழ் நேசன், ஆனி 9, 1963.
“The Role of the Tamil writer in Malaya", in Tamil Nesan, (Tamil) 9th June, 1963.
கல்கியின் வரலாற்று நாவல்கள்-ஆசிரியர் கல்கியில் (நூல்) 1966,
The Historical Novels of Kalki in 'Asiriyar Kalki” (book) 1966.
இலங்கையில் மொழியுரிமை-சிறுநூலாக மறுபதிப்பு, இலங்கை அச்சகத்தார் 1956,
“Language and liberty in Ceylon' Reprinted as pamphlet Ceylon Printers, 1956.
தமிழ்ச்சொல் பிறப்பியல்-ஈழநாடு 1971.
Tamil Etymology-Eelanadu 1971.
புலவர் வேதநாயகம் பிள்ளை. பாதுகாவலன் 1973.
Pulavar Vethanayagam Pillai. PaathuKaavalan 1973,

Page 92
136
தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
அடிகளின் நூல்கள்
1.
2.
புனித சிப்பிரியன், பக்கங்கள் 112, இந்தியப் பதிப்பு
1942, அமெரிக்கப் பதிப்பு 1950.
The Carthaginian clergy, pp. 112, Indian ed.
1942, American ed. 1950.
தமிழில் இயற்கைப்பாக்கள்-பொற்காலம். சிங்கப்பூர் 1969, 158 பக்கங்கள்.
Nature Poetry in Tamil-the classical period. Dewana Bahasadan Kebudayaan Kebangsaan, Singapore 1963, p. XVII, 153 pp.
தமிழ்த்தூது-திறஞய்வுக் கட்டுரைகள். முதற்பதிப்பு 1951, மறுமதிப்பு 1962 (சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுகவகுப்பிற்குப் பாடநூல் 1962-1963 வரையும்) பக்கங்கள் 152.
Tamil Tutu (Tamil) Essays of Criticism. First published in 1951. Revised ed. 1962. (Prescribed text book for pre-University Course of the University of Madras 1962-63) 152 p.
ஒன்றே உலகம். பலநாடுகளில் பண்பாடு-பயணம் பற்றிய கட்டுரைகள். பாரிநிலையம், சென்னை 1966. பக்கங்கள் 224.
Onre Ulakam, One World (Tamil) Essays on travel and culture in different Countries, Paari Nilayam, Madras 1966. 224 p.
தமிழ்ப் படிப்புகளுக்கு ஒரு வழிகாட்டி-மலேசியப்
பல்கலைக்கழக அச்சகம், 1956. பக்கங்கள் 122.
Reference Guide to Tamil Studies-Books
University of Malaya Press 1966. VIII, 122 p.
பழந்தமிழ்க் கவிதையில் இயற்கை 1953-இதனை மாற்றி இரண்டாவது பதிப்பில் நிலப்பாகுபாடும்இயற்கையும், ஆசிய வெளியீட்டு இல்லம், பம்பாய் 1966, பக்கங்கள் 153.

பல்கலைக்கழகங்களுக்கு வெளியே அடிகளின் பணி 137
Landscape and Poetry, Revised ed., of No. 2, (Nature poetry in Tamil-the classical period), Asia publishing House, Bombay, 1966. 153 p.
வெளிநாடுகளில் தமிழ்ப்படிப்புக்கள்-தொகுப்பு நூல். (ஆசிரியர் : தனிநாயகம்)அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். கோலாலம்பூர், 1968, ப. 289.
Tamil studies Abroad. A. Symposium, (Editor). International Association of Tamil Research Kualalumpur 1968. 269 p.
தமிழ்ப்பண்பாடும் நாகரிகமும், (பொற்காலம்) தெரிந் தெடுத்து வெளியிடப்பட்டவை. ஆசிய வெளியீட்டு இல்லம், இலண்டன். VIII. ப. 233.
Tamil Culture and Civilization Readings. The classical period Selected and Presented by Asian Publishing House, London. VIII, 233 p.
அடிகளார் வெளியிடி இருந்த படிைப்புகள்
1.
கி.பி. 1825 வரையும் தமிழர்கள் வாழ்ந்த இடங்களைப் பற்றிய வரலாறு.
A History of Tamil Typo-graphy up to 1825 A.D.
தொடக்ககாலம் தொட்டு இக்காலம் வரையும் இத்தாலிக்கும், தென் ஆசியாவுக்கும் இடையே உள்ள உறவு முறைகள்.
Relations between Italy and South Asia from earliest times to the present day.
பிரெஞ்சு நாடுகளுக்குத் தமிழர்களின் குடிபெயர்ப்பு.
Tamil Migrations to the French Colonies.
இலங்கையில் தமிழர்கள்.
The Tamils in Ceylon.

Page 93
138 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
5. பொற்காலத்துப் புவியியலாளர்களும், தமிழ் நாடும்.
The classical Geographers and the Tamil Country.
6. தமிழ் வாணிபத்தின் சில குறிப்பிடத்தக்க காலங்கள்.
Select Periods of Tamil Trade. 7. மகிழ்ச்சியைத்தேடி.
The quest for happiness.

25. தனிநாயக அடிகளும்தமிழக வாழ்வும்
தனிநாயக அடிகள் தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகள் இருந்ததாகக் கூறுகின்ருர், அடிகளார் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் பயிலப் போனபோது, அங்கு அக்காலத்தில் துணைவேந்தராக இருந்த இரத்தின சாமி என்பவர் தம்முடன் ஒரு நண்பரைப் போல் பழகிஞர் என்றும், தமிழ்ச் சிறப்புத்துறைக்குத் தலைவராக இருந்த தெ. பொ. மீனுட்சிசுந்தரம்பிள்ளை அவர்கள் தம்மைப் பெருந்தன்மையுடன் வரவேற்ருர் என்றும் கூறுகின்ருர், அக்காலத்தில் தமிழ்த்துறையில் விரிவுரையாளர்களாக இருந்த வர்கள் அறிஞர்களான சிதம்பரநாதன் செட்டியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், பூவராகன்பிள்ளை, அருணுசலம்பிள்ளே போன்ற வர்கள். இவர்கள் மாபெரும் தமிழ் அறிஞர்கள் என்று அடிகள்
கூறுவார்.
தமிழ்நாட்டு நண்பர்கள்பற்றி அடிகள்
'நான் தமிழ்நாட்டில் தங்கியிருந்த காலத்தில் எனக்கு TTTTTTLL TTTT LLTTLT LLTLTLLLLLLL LLLLLLLLS S TTTT டி. கே. சிதம்பரநாதமுதலியார், பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை, ஒய்வு பெற்ற நீதிவான் மகாராஜன், தமிழ் வள்ளல் ஆர். சுப்பையா, பால் நாடிார் போன்றவர்களின் ஊக்கத்துடன் தமிழர் பண்பாடு என்ற முத் திங்கள் வெளியீட்டினை ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். அதற்கு உலகு எங்குமிருந்து பரந்த ஆதரவு கிடைத்தது" என அடிகளார் கூறுவார். மேலும் தமிழ்நாட்டில் அடிகளாரின் நண்பர்களாக விளங்கினவர்கள் மறைத்திரு. டாக்டர். வி. ம. ஞானப்பிரகாசம். இயேசுசபை அடிகள், மறைத்திரு. டாக்டர். இராசமாணிக்கம், இயேசு சபை அடிகள், மறைத்திரு. ஆ. ஜோ. அடைக்கலம் அடிகள், கத்தோலிக்க எழுத்தாளர். பி. ஏ. தாஸ் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ்நாட்டில் அடிகளின் உலகத்தமிழ் ஆராய்ச்சிப்பணிக்கு உதவிய அடிகளின் நண்பர்

Page 94
40 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
டாக்டர். V. 1. சுப்பிரமணியம் ஆவர். தற்போது அவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக விளங்குகின்றர். பேராசிரியர் ரம்போலா மாஸ்கஞரஸ் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.
சென்னைப் பல்கலைக்கழகம்
தனிநாயக அடிகள் பல்லாண்டுகளாகச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் Ph.D. முனைவர் பட்டத்துக்குரிய ஆய்வுரைகளுக்குப் பரிசோதகராக இருந்து வந்திருக்கின்ருர்,

26. அடிகளுக்கு அறிஞர்களின் புகழாரம்
தனிநாயக அடிகளின் ஆங்கில நடையை ஐரோப்பியர்கள் பெரிதும் விரும்பினர். அவரை இரத்தினச் சுருக்கமாக இவ்வாறு அழைப்பர் :
“A Short darkman with a polish of a diplomat and the accent of an Oxford scholar'
*ஓர் இராஜதந்திரியின் அழகுத்தோற்றமும் ஒக்ஸ்பட் பல்கலைக் கழகத்துப் பட்டதாரியின் உச்சரிப்பும் கொண்டு விளங்குகின்ற கருமை நிறமும், சிறிய வடிவமும் கொண்ட மனிதர்" என்பர்.
இராஜாஜி தனிநாயக அடிகளால் கவரப்பட்டார்
s I am always fascinated by the name Thani Nayagam'.
'தனிநாயகம் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம் நான் எப்பொழுதும் கவரப்பட்டுள்ளேன்." என்பார்.
தனிநாயக அடிகள் பெரியவர்களோடும் சிறியவர்களோடும், படித்தவர்களோடும், படிக்காதவர்களோடும் அன்பாகப் பழகும் பண்பாளர். கிப்பிளிங்ஸ் கவிஞரின் கவிதையிலிருந்து ஒர் அடியை எடுத்து அவருக்கு உதாரணம் காட்டுவார்ாள் அறிஞர்கள்.
• Thani Nayagam could walk with Kings and not lose the Common touch.
பேராசிரியர் கல்கி
யாழ்ப்பாணத் தமிழ்த் திருவிழாவில் பூஜ்யர் தனிநாயகம் எனனும் பாதிரியார் இனிய தமிழில் சொற்பொழுவு ஆற்றி வந்த போது எனக்கு மேற்கண்டவாறு தோன்றியது. இந்தப் பாதிரியார் யாழ்ப்பாணத்தவர். தூத்துக்குடியில் வசிக்கிருர். உலகமெல்லாம்

Page 95
142 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
சுற்றுப் பிரயாணம் செய்து எங்கும் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கிருர், அடடா! எவ்வளவு அழகாக ஒவ்வொரு சொல்லையும் நிறுத்து அமைத்து அழகிய தமிழ் நூல் எடுத்துக்காட்டுக்களுடன், அவர் சொற்பொழிவு ஆற்றிஞர்?
"உன்னே கன்முக இறைவன் படைத்தனன் தன்னே கண்முகத் தமிழ் செய்யுமாறே '
என்று அவர் சொற்பொழிவை முடித்த பாணி எவ்வளவு நன்ரு யிருந்தது." (பேராசிரியர் 'கல்கி"-"தெய்வ தரிசனம்" நூலில்).
ரோச் ஆண்டிகை
Thani Nayagam is a man of Vision. He plans things ahead. தனிநாயக அடிகள் தொலைநோக்குப் பார்வை கொண்ட வர். முன் கூட்டியே திட்டங்களை வகுக்கக்கூடியவர். ஒரு செய லில் இறங்குமுன் திட்டமிட்டுச் செயலாற்றுகின்றவர்.
டிாக்ர் மு. வ.
எங்கள் சிறப்பெல்லாம் தமிழ்நாட்டிற்குள் தான். தனிநாயக அடிகளின் சிறப்பெல்லாம் தரணியெங்கும் பரவி இருக்கிறது.
இலங்கையில் ஆயர் தியோகுப்பிள்ளை
Thani Nayagam knew many languages and literatures of the world. He is good at Comparisons. When he reads the literatures of the world, he sees the similar point found in Tamil literature and in bringing out this point he excells the others and he scores in this point over the others.
Nாக்டீர் ஜெயரத்தினம் உவில்சன்
He was a Cultivated Civilized human person. He enjoyed exercise. He loved reading. He often listened to western classical music and he frequented Tamil music festivals in Tamilnad and Sri Lanka. True to his gifts as a Versatile man, he was also dedicated to the study of languages which in a way made him a complete person. He

அடிகளுக்கு அறிஞர்களின் புகழாரம் 143
was fluent in more than eight languages. And his world Consequently was ever expanding in concentric circle'. (A Jeyaratnam Wilson, Fr. Xavier Thani Nayagam the dedicated Tamil patriot, The Ceylon Daily News. Sept. 16 1980).
பேராசிரியர் கைலாசபதி
He is prince among priests,
அறிஞர் அண்ணு
ஒரு முறை அறிஞர் அண்ணு பொங்கல் மலருக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் தனிநாயக அடிகளாரின் தமிழ் உணர்வை வெகுவாகப் பாராட்டியிருந்தார்.
*மலாயப்பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையில் பேராசிரிய ராக இருக்கின்ற தனிநாயக அடிகளைப்பார்த்து உங்கள் சமயம் எது? என்று கேட்டால்-கிறிஸ்தவம் என்பார். உங்கள் ஊர் எது என்று கேட்டால் யாழ்ப்பாணம் என்பார். உங்கள் மொழி எது என்று கேட்டால் தமிழ் என்பார். அவ்வளவுக்குத் தமிழ் உணர்வு கொண்டவர் அடிகளார். அந்தத் தமிழ் உணர்வு எல்லோருக்கும் வரவேண்டும் என்பார்'- அறிஞர் அண்ரு,
முத்தமிழ் வித்தகர் திரு. முருகு சுப்பிரமணியன் (மலேசியா)
'தவத்திரு தனிநாயக அடிகளார் தமிழகம்-ஈழம்மலையகம் ஆகிய இம் மூன்று நாடுகளையும் இணைக்கும் பாலமாக இருக்கின்ருர். சீனர், மலாயக்காரர் வீடுகளில் தமிழை நுழையச் செய்யும் அவரது பணியால் இந்நாட்டில் தமிழுக்குச் சிறந்த எதிர் காலம் உண்டு. பன்மொழிப் புலவராகிய அடிகளார் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று மொழி ஆராய்ச்சி செய்தவர். தமிழ்த்தூதுவராகிய அடிகனாரை நாம் அடிக்கடி பேச வைக்க வேண்டும். அவரது உரையை நாம் தலே வணங்கிக் கேட்க வேண்டும். நமது நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும்."
தனிநாயக அடிகளின் நண்பர் அதி, வணக்கத்துக்குரிய மதுரநாயகம்
அடிகளார் (இலங்கை)
'தனிநாயகம் பேசும்போதெல்லாம் தனிச்சிறப்பு வாய்ந்த பேச்சாகவும் நிகரற்ற உரையாகவும் இருக்கும். அவர் வகித்த

Page 96
144 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
மேடைகள் எத்தனை ஆற்றிய உரைகள் எம்மாத்திரம் இயற்றிய நூல்கள் எண்ணற்கரியன. தமிழ்த் தூதின்மூலம் கிறிஸ்தவ நற்செய்தியை எடுத்துச்சென்ற நாடுகள் பல. தாயகத்தில் வீரமாமுனிவர், தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு அவருக்கு வழிகாட்ட, ஈழத்தில் பல்கலைப்புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் இவருக்கு முன்னுேடியாயிருந்தார். இவர்கள் நம் நாடுகளிலே மாத்திரம் தொண்டு புரிந்தார்கள். ஆணுல் தனிநாயகம் நம் நாடுகளையும் கடந்து பிற நாடுகளுக்குச் சென்ருர். அவர் தாம் தனிநாயகம். இன்பமாய்ப் பேசுவார்; பண்புடன் பழகுவார்; பணிவுடன் தொண்டாற்றுவார்."

பாகம் II
1. தனிநாயக அடிகளின் உரைகளிலிருந்து சில கருத்துக்குவியல்கள்
1962ஆம் ஆண்டு மேத்திங்கள் தனிநாயக அடிகளார் மலாயப் பல்கலைக்கழகத்தில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினர். மாணவர்களுக்கும், சமுதாயத்துக்கும் இடையே நல்லுறவு நிலவவேண்டும் என்பதே. அவருடைய உரையின் பிழிவாகும்.
*Town wersus gown" என்ற தலைப்பில் ஓர் அருமையான ஆங்கிலச் சொற்பொழிவை நிகழ்த்தினர். அவ்வுரையில் இருந்து சில சத்தான கருத்துக்களை உங்கள் முன் படைக்கின்றேன்.
வரலாற்றுக்கண் கொண்டு பார்த்தால் பட்டதாரி மாணவர் களுக்கும், சமுதாயத்துக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டிருக் கின்றன. இதனுல் உங்களைச் சுற்றியுள்ள மக்களோடு மோதல்களை உண்டுபண்ணுவதற்கு என் எண்ணங்களும், சிந்தனைகளும் தூபம் காட்டுவதாக நீங்கள் நினைக்கக்கூடாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்ருல் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் இருந்தே பல்கலைக்கழக மாணவர்கள் அடிக்கடி பட்டணத்து மக்களுடனும் ஒழுங்கு, சட்டத்தைக் காப்பாற்றுகின்ற காவலர்களுடனும் சண்டை சச்சரவு செய்திருக்கின்ருர்கள். மத்திய காலத்திலே (In middle ages) பல்கலைக்கழகங்கள் ஏராளமான உரிமைகளை அனுபவித்த கால கட்டத்திலே பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டணத்து மக்க ளுக்கும் இடையே மிகவும் விரும்பத்தகாத மோதல்கள் ஏற்பட் டிருக்கின்றன. இறஸ்தல் (Rashdal) மேற்கத்திய பல்கலைக் கழகங்களின் மாபெரும் வரலாற்று ஆசிரியர் கூறுகின்ருர்: *ஆக்ஸ்பட்டில் உள்ள கிளசிக் உயர்வீதியில் இரத்தக்கறை படாத ஒரு சிறு இடமே இல்லை" என்பார்.
历一f0

Page 97
46 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
“Rashdall, the great historian of Western Universities, says that there is not a single yard of ground in any part of the classic High Street, in oxford, that has not been stained with blood.'
பட்டதாரி மாணவர்களுக்கும், பட்டணத்து மக்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் பொதுவாக மதுபானக் கடைகளிலேதான் தொடங்குவதுண்டு. ஆக்ஸ்பட்டில், பதிஞன் காம் நூற்ருண்டில் பட்டனத்து மக்களுக்கும், பட்டதாரி மாணவர் களுக்கும் இடையே ஒரு பெரிய மோதல் உண்டாகி, பட்டணத்து மக்கள் பட்டதாரி மாணவர்கள் சிலரைக் கொலை செய்தார்கள், அவர்கள் தங்கி இருந்த அறைகளைக் கொள்ளை அடித்தார்கள்; அவர்களுடைய நூல்களை நெருப்பில் எரித்தார்கள். முடிவில் ஆக்ஸ்பட் நகரமக்கள் ஒரு வருடத்துக்குமேல் நல்லொழுக் கத்துடன் வாழும்படி பணிக்கப்பட்டார்கள். இச் சண்டை மூண்ட தற்குரிய காரணம் என்னவெனில் மதுக்கடையில் பரிமாறப்பட்ட திராட்சை இரசம் தாக்குறைவானது கெட்டது என வாதிட்டனர் பல்கலைக்கழகத்துப் பட்டதாரி மாணவர்கள். மதுபானக் கடைக்காரன் தான் பரிமாறிய திராட்சை இரசம் நல்லதுதான்; தரமானதுதான் என வாதிட்டான். எனவே சண்டை மூண்டது. பல்கலைக்கழக மாணவர்களை எனக்குத் தெரியும். அவர்கள் காரணமில்லாமல் கோபாவேசம் அடிக்கடி காட்டுவதையும், கட்டுக்கடங்காமல் கோபம் கொள்வதையும் நான் அடிக்கடி கண்டிருக்கின்றேன். எனவே உண்மை எந்தப்பக்கம் இருக் கிறது என்பதை நான் அறிவேன். திராட்சை இரசத்தின் தரம்பற்றி இருதரப்பினரும் வாதாடினர். இழித்தும் பழித்தும் பேசினர். மதுபானக் கடைக்காரன் அக்கம் பக்கத்தில் உள்ளவர் களின் ஆதரவைத் திரட்டினன். வில்லும் அம்பும் கொண்டு மோதல் பல நாள்கள் நீடித்தது. பட்டதாரிகளைப்பற்றி உங்களுக் குத் தெரியும், முதன்முதலாக மோதலத் தூண்டினவர்களும் அவர்களே. அதே நேரத்தில் காவலர்களிடம் இருந்தும் பொது மக்களிடம் இருந்தும் பாதுகாப்பையும், உரிமைகளையும் முதன் முதலில் கோருகின்றவர்களும் அவர்களே!
பட்டதாரிகளுக்கும், பட்டணத்தார்களுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் பகைமை உணர்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு. குடிமக்கள் மாணவர்களிடம் இருந்து அவர்களுடைய உணவுக்கும், உறையுளுக்கும் அளவுக்குமீறிப் பணம் வசூலித்தார்கள். பல்கலைக்கழக நகரிலே வாழ்ந்து கொண்டிருந்த பணத்துக்கு வட்டி கொடுப்போர் சிலர் பல்கலைக் கழக மாணவரிடையே அதிகம் வட்டி வாங்கினர்.

தனிநாயக அடிகளின்..கருத்துக்குவியல்கள் 147
பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் சேரும் போது வீட்டில் இருந்து ஒரு புதிய சுதந்தரத்தையும் அதிகாரப் பிடிப்பிலிருந்து ஒரு விடுதலை உணர்வையும் தாங்கள் பெறுவதாக உணர்கின்றனர். முதிர்ந்த வயதின் வாசல் அருகே நிற்பதாக உணர்கின்றனர். ஓரளவுக்குப் பொறுப்பற்ற வாழ்க்கை நடத்து கின்றனர். எல்லாத் தடைக்கற்களையும் தகர்த்தெறிந்து முதிர்த் தோர் உலகில் சுதந்திரமாக வாழ நினைக்கின்றனர். ஒருமுறை வீட்டில் அதிகாரத்துக்குப் பணிந்து நடந்தவன், பல்கலைக் கழகத்தில் தான் சுதந்தரக்காற்றைச் சுவாசிப்பதாக உணர் கின்றன். ஆணுல் இச் சுதந்திரத்துக்கு இடையூறு உண்டாகும் போது அவன் தான் துன்புறுத்தப்படுவதாக நினைத்துப் பிடிவாத குணம் கொள்கின்றன், அல்லது அவன் தன்னுடைய குழந்தைப்பருவத்தையும், வாலிபப்பருவத்தையும் சீர்தூக்கிப் பார்த்து எப்படித் தன்னுடைய பெற்ருேரும், ஆசிரியர்களும் தன்னைத் துன்புறுத்திப் பணியச் செய்தபடியால் இப்போது அதிகாரத்துக்கு எதிராக எழுந்து பழிக்குப்பழி வாங்க நினைக்கக் கூடும். பட்டதாரி மாணவர்களின் சமூகவாழ்க்கை கடந்தகால வாழ்க்கைக்குப் பதில் அடியாகவும் பழிக்குப் பழிவாங்கும் படல மாகவும் பொதுவாக இருக்கக்கூடும். எனவே அவர்கள் சத்தியம் செய்வதற்கு உபயோகிக்கின்ற சொற்களின் தொகை; அவர்கள் உடை அலங்காரத்தில் மேற்கொள்ளும் நடிப்பு; தாடி வார்ப்பதில் அவர்கள் கையாளும் யுக்தி; இவையெல்லாம் மற்றவர்கள் தங்களைப் பாக்கவேண்டும்; கவனிக்கவேண்டும் என்பதற்காகத் தான். இந்த மனுேநிலைகளும், உணர்வுநிலைகளும்தாம் பட்டதாரி மாணவர்களுக்கும் பட்டணத்து மக்களுக்கும் இடையேயுள்ள திலைமைகளை நன்கு விளக்குகின்றன.
இதுமட்டுமன்று, பல்கலைக்கழகத்திலேயே, பட்டதாரிகளுக் கிடையேயும், பட்டதாரிகளுக்கும் பேராசிரியர்களுக்கும் இடை யேயும், சண்டை சச்சரவு மூளுவதும் உண்டு சில பல்கலைக் கழகங்களிலே, எடுத்துக்காட்டாக, பொலோரூ (Bologna) பாரிஸ் பல்கலைக்கழகங்களிலே, எவ்வளவு நேரம் விரிவுரைகள் நிகழ்த்தப்படவேண்டும், எந்த வேகத்தில் விரிவுரைகள் sboiul- desăr69ă srairpi lor-raitser durrèflui sără தங்கள் கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவந்திருக்கின்ருர்கள். பாடப்புத்தகங்களின் முதல் பாகங்கண் விளக்குவதில் அதிக நேரம் எடுத்தாலும், பாடநூல்களிலும் இறுதிப்பாகங்கனை விளக்கு வதில் குறைவான நேரம் எடுத்தாலும் பேராசிரியர்கள் தண்டிக் கப்பட்டார்கள். மாணவர்கள் விரிவுரையாளர்களின் விரிவுரை கண்க் கேட்டபின் அப்படியே குறிப்பெடுத்து அவர்களின் விரி

Page 98
148 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
ரைகளைப் படிவம் எடுத்து விற்பார்கள் என்ற பயத்தில் விரிவுரை விரைவாகத் தங்கள் விரிவுரைகளை நிகழ்த்தினுர்கள். பேராசிரியரின் விரிவுரைகள் விரைவாக நடத்தப்பட்டுக்கொண் டிருந்தால் அவரின் வேகத்தைக் குறைக்க மாணவர்கள் கல் வீச்சிலும் ஈடுபடுவதுண்டு. வகுப்பு முடிவதற்கு மணி ஒலித்ததும், பேராசிரியர் தம் விரிவுரையை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தாலும் அவர் தண்டிக்கப்படவில்லை. மாருக, மணி ஒலித்ததும் வகுப்பறையைவிட்டு வெளியே வராத மாணவர்களே தண்டிக்கப்பட்டார்கள்.
மனிதஞல் உருவாக்கப்பட்ட நிறுவனங்களிலெல்லாம் சுவை மிக்க படிப்பிண்யைத் தருவது, பல்கலைக்கழகங்களின் வரலாறு களையும், அவற்றின் தோற்றம் வளர்ச்சி பாரம்பரியம்பற்றி அறிவ தாகும். அதனுடைய வரலாற்றை நீங்கள் அறிந்தால், அதனுடைய பாரிய பாரம்பரியத்தைப் பெறுவதற்கும், இங்கு இருப்பதற்கும் இரட்டிப்பாகப் பெருமை அடையவேண்டும்.
கல்விகற்கும் உலகம் உலகெங்கும் ஒன்ருய் விளங்குகின்றது. இங்கு மலாயாவில், நாம் கன்பூசியசின் பாரம்பரியத்தையும், முஸ்லீம்களுடைய, அராபியர்களுடைய நாலந்த, தக்சில்ல காஞ்சிபுர, பிளேத்தவுனுடைய, அத்தன்சுடைய, பதுவையுடைய, பாரிசுடைய, ஆக்ஸ்பட்டினுடைய, கேம்பிரிஜ்ஜினுடைய கல்வி நிலையங்களிடமிருந்து அறிவுக் களஞ்சியங்களைப் பாரம்பரியமாகப் பெற்று வருகின்ருேம்.
அன்று கல்வி என்பது ஒரு குறிப்பிடப்பட்ட வகுப்பினருக்கு, வருணத்தாருக்கு, செல்வக்குடியினருக்குச் சொந்தமானது. அவர்களே உயர் கல்வி பெறுவதற்குத் தகுந்தவர்கள் என்ற நில இருந்ததால், பல்கலைக்கழகம் என்பது உலக விவகாரங்களி லிருந்து ஒதுங்கி இருக்கும், பொழுதுபோக்குக் கொண்ட வகுப் பினர்கள் கூடும் ஓர் இடமாகக் கருதப்பட்டது. இன்று நில மாறிவிட்டது. ஆகாயத்திலே உள்ள மாளிகை என்ற பல்கலைக் கழகம் இன்று ஆலமரத்தடிக்கு வந்துள்ளது. இன்று பல்கலைக் கழகம் சமுதாயச் சிந்தனையுடன் ஒட்டிச் செல்கின்றது.
இன்று சமுதாயத்துக்குப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு என்ன? சமுதாயத்துக்கும், பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும் இடையேயுள்ள உறவு முறைகள் எவை என்று பார்க்க வேண்டும். இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பல்கலைக் கழகப் பேராசிரியர் உண்மையைத் தேட வேண்டும், அதன் பொருட்டு எப்போதும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கவேண்டும்.

தனிநாயக அடிகளின். கருத்துக்குவியல்கள் 杜猩9
அவரது உண்மை தேடும் படலத்தில் மாணவர்கள் அவருக்குத் துணைபோக வேண்டும். இக்காலத்தில் இக் கருத்தை ஆதரிக் ésirpsuf Gurr&fui Susås sår fisso (Prof. Allison Peers as Bruce Truscot) என்பவர் ஆவார். இது முதல் கருத்து; இரண் டாவது கருத்து என்னவெனில், பல தரப்பட்ட பாடங்களைக் கற்பித்தலாகும். குறிப்பாகச் சொல்லப்போனுல் கற்பிப்பதே பல்கலைக் கழகத்தின் அடிப்படைப் பணியாகும். உண்மை எங்கே இருக்கின்றது என்ருல் இருவித கருத்துக்களையும் இணைப்பதில் தங்கி இருக்கின்றது. ஆராய்ச்சிப்பணியும், கற்பிக்கும் பணியும் இரண்டும் தேவையாகும்.
ஆராய்ச்சிமூலம் அறிவின் எல்லைகள் முன்னேற்றம் அடை கின்றன; அபிவிருத் தி அடைகின்றன. சமுதாயத்துக்குத் தேவையான அறிவு வளப்படுத்தப்படுகின்றன.
கற்பித்தல்மூலம் சமுதாயத்தில் உள்ள தலைவர்களும், உறுப் பினர்களும் அறிவையும், வழிகாட்டுதலையும் பெறுகின்ருர்கள் இவைமுலம் வருங்காலத்தில் சமூக, அறிவுள்ள, ஒழுக்கமுள்ள நாகரிகமுள்ள தலைமைத்துவமும், திட்டமிடப்பட்ட சமுதாயத் திற்குத் தேவையான நிர்வாகமும் கிடைக்கின்றன. கற்பித்தல் பல்கலைக்கழகத்தின் அடிப்படைப் பணியாகும். ஆராய்ச்சிக்குச் சாதகமாக இப்பணியைக் கைவிடலாகாது.
இக் கருத்தை சர் வோல்டர் மோபேர்ளி இந்நூற்றண்டில் கூறுவதுபோன்று, கடந்த நூற்றண்டில் வாழ்ந்த கருதினுல் நியூமன் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
நடைமுறைக்கு ஒத்த முடிவைக் கொண்டுள்ள பல்கலைக் கழகப் பாடத் திட்டத்தைக் குறிப்பிடவேண்டுமாயின், பல்கலைக் கழகம் சமுதாயத்தில் நல்ல குடிமக்களை உருவாக்கவேண்டும். இக் குறிக்கோளுடன் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவேண்டும் அதன் கலை, சமூகவாழ்வின் கலெயாகும். அதன் குறிக்கோள் மாணவர்களை உலகில் வாழ்வதற்குத் தகுதியைக் கொடுப்பதாகும். (கருதினுல் நியூமன்.)
“If then a practical end must be assigned to a University Course, I say it is that of training good members of society. Its art is the art of social life, and its end is fitness for the world.' (CARDINAL NEWMAN).
சமுதாயத்தில், நல்ல உறுப்பினர்களாக வாழப் பட்டதாரிகள் பயிற்சி பெறவேண்டும். கற்பித்தல், ஆராய்ச்சி செய்தல் மூலம்

Page 99
156 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
சமுதாயத்துக்குத் தேவையான பாடங்களில் அவர்கள் பயிற்சி பெற்ருல் மட்டும் போதாது; பல்கலைக்கழகச் சமுதாயத்துக்குள்ளே அவர்கள் பயிற்சிபெற்ருல் சமுதாயத்தின் முழுமையான நிறை வுள்ள உறுப்பினர்களாக விளங்குவார்கள். பல்கலைக்கழகச் சமுதாயம் உருவாகுவதற்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கூட்டாக வாழும் உறைவிடம் தேவைப் படுகின்றது. கூட்டாக வாழும் முறை பல்கலைக்கழக வாழ்க்கையின் தனிச்சிறப்பாகும். பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக வாழும்போது பொதுக்கட்டுப்பாடு மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களோடு சேர்ந்து வாழ்தல், பல்வேறு சுவையுள்ள, பல்வேறு அனுபவமுள்ள வாழ்க்கை வாழவும், மாணவர்களால் மாணவர்கள் கல்விபெறும் வாய்ப்புக்களும் உண்டாகும். இப்படிக் கூட்டாக வாழ்வதால் வரும் பயன் களையும், கல்வி புகட்டக்கூடிய முக்கியத்துவத்தையும் அறியலாம். எனவே, மாணவர்களுக்கும், சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவுமுறையானது இடையில் தற்செயலாக வந்த மோதலாகும். மாணவர்களின் கட்டுப்பாடற்ற போக்கைக் கண்டு நான் ஒருபோதும் குழப்பம் அடைவதில்லை, நாம் நமது பழைய நிலையை மறக்கக்கூடாது. மாணவர்களின் கட்டுப் பாடற்ற போக்கை நான் பார்க்கும்போது, நான் அவர்களில் நம்பிக்கை இழப்பதில்லை. கடந்த காலங்களிலே பல்கலைக்கழகங் களிலே நடத்தப்பட்ட அட்டூழியங்களையும், இக் கொடுஞ் செயல் களைச் செய்தவர்களோடும் உங்களை ஒப்பிடும்பொழுது நீங்கள் ஆட்டுக்குட்டிகள். பிற்காலத்திலே சமுதாயத்தைப் பண்படுத்தப் போகின்றவர்களுக்குக் கல்விபுகட்டுவதே பல்கலைக்கழகத்தின் அடிப்படைக் குறிக்கோளாகும். இப்போது பண்பு நலன்களையும் கல்வியையும், அழகு உணர்வுகளையும், கருத்துக் கருவூலங்களை யும் பெறுவதே பட்டதாரிகள் வருங்கால சமுதாயத்துக்குச் சேவை செய்வதாகும்.
'gssfi3að ' University srsörn GSM síðsásir Gaui அல்லது மூலக்கருத்து என்னவெனில் மாணவர்களும், பேராசிரியர் களும் சேர்ந்த ஒரு குழு அல்லது அவையாகும். 'யூனிவெர்சிப் டாஸ் வெஸ்திரு” என்ருல் "நீங்கள் எல்லோரும்” என்று பொருள் படும். 'பல்கலைக்கழகம்' (University) வரலாற்று ரீதியாகவோ, அல்லது வேர்ச்சொல்லில் இருந்து பார்த்தாலோ எல்லாக் கலைகளையும் சொல்லிக்கொடுக்கும் ஓர் இடமல்ல, பல நாட்டில் இருந்து கல்விகற்கும் நோக்கத்துடன் பலர் ஓர் இடத்தில் கூடும் இடம் என்று சொன்னுல் அது மிகையாகாது.
* Universitas Vestra.

தனிநாயக அடிகளின் .கருத்துக்குவியல்கள் 15
“I would like to refer you to the original and derivative sense of the word University' which really meant a guild or Corporation of students and Professors-Universitas Vestra which really meant all of you. The University does not historically or etymologically mean a place where all knowledge is taught. With more justification, it might be made to signify a place where people from different nations come together for the purpose of learning' (Dr. X. S. Thani Nayagam).
இத்தகைய சிறப்புமிக்க பல்கலைக்கழகம் மலாயப் பல்கலைக் கழகம் ஆகும். இங்கு பல உலகப் பண்பாடுகள் சந்திக்கின்றன, பல்கலைக்கழகத்துக்குரிய நல்ல பாரம்பரியப் பண்பாடுகளைக் கட்டிக்காக்கும்படி அடிகளார் இவ்வாறு மாணவர்களைக் கேட்டுக்
Nasaršrrdř,

Page 100
2. “வயதும்-படிப்பும்”
'வயதும்-படிப்பும்” என்ற தலைப்பில் தனிநாயக அடிகளார் 1965ஆம் ஆண்டு ரோட்டரிச் சங்கத்தினருக்குச்சொற்பொழி வொன்று நிகழ்த்திஞர். அதில் இருந்து சில பகுதிகள்:
மானிட அறிவும், தொழில்நுட்ப அறிவும் விரைவாக முன்னேறுகின்றன. எனவே ஒருவர் மகிழ்ச்சியுடனும் திருப்தி யுடனும் தற்கால உலகில் வாழ விரும்பினுல் ஒருவர் படிக்கும் பழக் கத்தை உருவாக்கவேண்டும். ஒரு துறையில் புலமை மிக்கவர் கள் கூட ஏனைய துறைகளில் நாட்டம் கொண்டால்தான் அவ ருடைய மனித வாழ்க்கை மனிதத்தன்மை உள்ள வாழ்க்கையாக நல்ல முழுமையான வாழ்க்கையாக, சமுதாயத்தில் பல செய்திகள் அறிந்த உறுப்பினராக வாழ்க்கை நடத்தமுடியும்.
இளம்வயதிலே ஒருவர் திறமைசாலியாக விளங்கிப் பல சாதனைகளைச் செய்தாலும், நாற்பது ஐம்பது, அறுபது எழுபது எண்பது வயதில்கூடப் பல சாதனைகளைச் செய்திருக்கின்ருர்கள். நாற்பது ஐம்பது வயதுக்குப் பிறகுகூடப் பலர் சிறந்த நாவல் களையும், நிறுவனங்களை நிறுவியும், தலைசிறந்த ஓவியங்களைத் தீட்டியும், தங்கள் நாட்டை அமைதிப் பாதையிலும், பொருள் வளத்திலும் நடத்திச் சென்றதையும் நாம் கேட்டிருக்கின்ளுேம். கண்டிருக்கின்ருேம். செய்தித்தாள்களிலும் படித்தும் இருக் கின்ருேம்.
H. C. லேமென் (Lehmen) கண்டுபிடித்திருக்கின்ஞர். நல்ல செய்யுள்கள் இருபது வயதுக்குள் எழுதப்பட்டிருக்கின்றன. சிறந்த உரைநடை நாற்பது வயதில் எழுதப்பட்டிருக்கிறது. சிறந்த ஒவியங்கள் இருபது, முப்பது வயதுகளில் தீட்டப்பட்டிருக் கின்றன. சிறந்த இன்னிசை இளம்வயதிலும், சிறந்த கணித நூல் இருபதிலும் நாற்பதிலும் எழுதப்பட்டிருக்கின்றன.
படைப்பு இலக்கியம் இளம்வயதில் தோன்றியிருக்கின்றது. சிறந்த தலைவர்கள், படைத்தளபதிகள், கல்வியில் முன்னணியில் நிற்பவர்கள், வாணிபத்தில், மருத்துவத்தில் தலைசிறந்தவர்களும், ஆங்கில நாட்டிலுள்ள பாராளுமன்றத்தில் தலைமை தாங்குகின்ற

வயதும்-படிப்பும் 1领$
வர்களும், சிறப்பும், புகழும் பெறுகின்றவர்களும் அறுபது வயதுக்குப் பிறகே இவையெல்லாம் பெறுகின்றனர். இவை யெல்லாம் பொதுவான அம்சமாகும். தனிப்பட்டவர்களின் வேறுபாடுகளையும் நாம் கவனித்தாகவேண்டும். மாபெரும் அலெக்சாந்தர், நெப்போலியன், இளம் பிட் (Youngel Pitt) போன்றவர்கள் இளம்வயதிலும், வின்ஸ்டன் சேர்ச்சில் எழுபது வயதுக்கு மேலேயும் கிளாட் ஸ்ரோன் எண்பது வயதுக்கு மேலேயும், இன்னும் பலர் வாழ்க்கையின் அந்திப்பொழுதில் சமுதாயத்துக்குப் பல தொண்டுகள் புரிந்திருக்கின்ருர்கள்.
சிறந்த படைப்பு இலக்கியங்கள் இளம் வயதில் படைக்கப் பட்டிருந்தாலும், இக் கூற்றுக்குக்கூட விதிவிலக்கு உண்டு. தலைசிறந்த படைப்புக்கள், சிறந்த படைப்புக்கள் கூட வாழ்க்கை யின் அந்திப்பொழுதில் தொடர்ந்து முழுமை பெறுகின்றது. (good work is maintained until late in life). Deš56 iš துறையில் தன்னிகரற்ற கண்டுபிடிப்புக்கள், தாவர இயலின் தலசிறந்த கண்டுபிடிப்புக்கள் பல எழுபது, எண்பது வயதுகளின் பின்னேதான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. டென்னிசனின் **காதைக்கடத்தல்" என்ற சிறந்த கவிதை அவருக்கு எண்பது வயதாகும்போதே எழுதப்பட்டது. (Tennyson's poem“Crossing the Ear' appeared at 80) agu' (flag தம்முடைய தலைசிறந்த கவிதையை 85 வயதில் எழுதிஞர். வேர்டி (Vedi) அழகிய நான்கு பக்திப்பாடல்கண் 88 வயதில் எழுதிஞர். இப்படி எத்தனையோ எடுத்துக்காட்டுக்கண் நாம் காட்டலாம். வயது ஏறஏறத் தத்துவம் பிறக்கிறது. வாழ்க்கையில் ஆழம் உண்டாகின்றது. மருத்துவத்தில், கல்வியில், தத்து வத்தில், வரலாற்றில் கண்டுபிடிப்புகள், பங்களிப்புக்கள் வாழ்க்கையின் முதிர்ச்சியில் தோன்றியிருக்கின்றன. இவற்றிற்கு விலக்காக சங்கரச்சாரியாவும், புனித தோமாஸ் அக்குவீனசும் விளங்குகின்ருர்கள்.
படிப்பாலும், கல்வியாலும், நாட்டை வனப்படுத்தி, மக்கள் மகிழ்ச்சியாக வாழலாம். உலகில் உள்ள தீமைகள் அகற்றப்பட வேண்டுமாயின், அறியாமை பூண்டோடு ஒழிக்கப்படவேண்டு மாயின், குற்றங்கள் குறையவேண்டுமாயின், பல வகுப் பினரிடையே உறவுமுறை ஏற்படவேண்டுமாயின், நட்பும் சகோதரத்துவமும் மலரவேண்டுமாயின், மாபெரும் உற்பத்தியும், பொருளாதாரமும் நிலைபெறவேண்டுமாயின், ஆத்மீக மதிப்பீஇ களும் இலட்சியங்களும் வலியுறுத்தப்பட வேண்டுமாயின் மனுக்குலத்துக்குத் தெரிந்த ஒரே கருவி, முதியோர் கல்வியைத்

Page 101
154 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
தவிர வேரூென்று இல்லை. முதியோர் கல்வியானது சமூகத் தினிடையே வாழ்நாள் முழுதும் படித்து ஒருவரை முழுமை படையச் செய்வதாகும். நல்ல பெரிய பாடசாலைகள் சமூகத்தில் இருப்பதற்கும், கல்வி புகட்டக்கூடிய சமுதாயம் இயங்குவதற்கும் உயர்ந்த முதியோர் கல்வித்தரம் அவசியமாகும். கல்வியின் தாக்கத்தைப்பற்றி ஜான் ஸ்டுவட்மில் சொன்ன கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது:
(Not only does education include’ he claimed, it whatever we do for ourselves and whatever is done for us. by others for the express purpose of bringing us nearer to the perfection of our nature; it does none; in its largest acceptation it comprehends even the indirect efects produced on character, and on the human faculties, by things of which the direct purposes are quite different, by laws, by forms of government, by the industrial arts, by modes of social life, may, even by physical facts not dependent on human will; by climate, soil, and local position.'
இலக்கியம் படிக்காமல் தம் வாழ்நாளெல்லாம் செலவழிக் கின்றவர், கலைகளில் ஈடுபாடு கொள்ளாதவர், கவிதைகளிலும், கற்பனைகளிலும் ஈடுபடாதவர், புற்றுநோய் பீடிப்பதற்குத் தயராய் இருக்கவேண்டும்.
புற்றுநோய் என்பது முத்தம் கொடுக்காத பழிக்குப்பழி வாங்கும் ஒரு செயலாகும். அது ஒர் எழுதாத கவிதையாகும். தீட்டாத ஓவியமாகும். கவனிக்கப்படாத இசையாகும். ஆடாத ஆட்டமாகும்

3. “தமிழுக்குரியதைத் தமிழுக்குக் கொடுங்கள்”
தனிநாயக அடிகளார் முத்திங்கள் ஏடான 'தமிழ்ப் பண்பாடு” என்ற சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரைகள், ஆசிரிய தலைப்புக்கள்பற்றி ஒரு கண்ணுேட்டம்.
தனிநாயக அடிகனார் பதினைந்து ஆண்டுகளாக முத்திங்கள் ஏடான 'தமிழ்ப்பண்பாடு" என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரிய ராகப் பணி ஆற்றிஞர். பன்னிரண்டு தொகுதிகளை வெளி பிட்டிருந்தார். நல்ல அருமையான ஆங்கில நடையில் தலைசிறந்த தமிழ்நாட்டு நல்லறிஞர்களைக்கொண்டும், வெளி நாட்டு அறிஞர்களைக்கொண்டும் நல்ல பல, தரமான ஆராய்ச்சிக் பட்டுரைகளை எழுதவைத்தார். அடிகளாரும் தமிழ்ப்பண்பாடு, தமிழ் இலக்கியம், தமிழ் வரலாறுபற்றியெல்லாம் அரும்பெரும் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். நல்ல ஆசிரியத் தலையங்கங் களும், கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1958ல் வெளியான *Tamil Culture"-ல் 'தமிழுக்குரியதைத் தமிழுக்குக்கொடுங்கள்" “Render unto Tamil the things that are Tamil' Taird. தலைப்பில் ஒரு நல்ல ஆசிரிய தலையங்கம் தீட்டியுள்ளார். வீயன் ரூவில் மானிடவியலும், இன இயலும்பற்றிய தான்காவது அனைத்துலக மாநாடு ஒன்று 1952ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது. அங்கு 'திராவிடப் பிரச்சினையில் புதிய sh (gLio” “New Aspects of the Dravidian problem" என்ற தலைப்பில் டாக்டர் கிறிஸ்தோப் வொன் புறேர் HoßGudsärGL fü (Dr. Christoph Von Fiuirer-Haimendorf) என்பவர் ஓர் ஆய்வுக்கட்டுரை படித்தார். இவர் இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஆசியாவின் மானிடவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகின்ருர். இவர் தம் ஆய்வின் முடிவில் திராவிடர்கள் தென் இந்தியாவுக்கு கி. மு. 300ஆம் நூற்றண்டில் வந்தனர் எனக் கூறிவிட்டார். இப் பேராசிரியரின் கூற்றுக்கு எதிராகத் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் வெளியாகின்ற ஆங்கிலச் செய்தித்தாள்களுக்கு கண்டனக் கடிதங்கள் பல வந்தன. இக் கடிதங்களைப்பற்றி இச் செய்தித்தாள்களெல்லாம்

Page 102
丁组56 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
கண்டனக்குரல் கொடுத்தன. தனிநாயக அடிகளார் சீறி எழுந்தார். தாய்த்தமிழை எவ்வளவோ நேசித்தார் என்ருல் தம்முடைய உலகப்புகழ்பெற்ற, உலகப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிற்குச் செல்கின்ற "Tamil Culture" என்ற ஆங்கில முத்தமிழ் ஏட்டின் மூலம் அப் பேராசிரியரின் கூற்றுக்குக் கண்டனம் தெரிவித்ததுமட்டுமின்றி, தக்க ஆதாரங்கள் காட்டி அவர் ஆய்வின் முடிவு சரியில்லை; நடுநிலை இல்லாதது. ஆய்வுக்குப்புறணுனது எனக் காட்டிஞர். மைசூர் மாநிலத்துக்கு வெளியே காணப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிபற்றியும், பழந் தமிழ் இலக்கியத்தின் தொன்மைபற்றியெல்லாம் இப் பேராசிரியர் அறியவில்லை. இப் பேராசிரியரின் கூற்று இதுவென்றல், இது தான் அவருடைய புதிய கொள்கை என்ருல், செய்தித்தாள்கள் வெளியிட்ட கருத்துக்கள் சரி என்ருல் அவரைக் கண்டிக்கின்ருேம் என அடிகளார் தம் ஆசிரியர் தலையங்கத்தில் எழுதினுர்,
மேலும் அடிகளார் தொடர்ந்து தம் தலையங்கத்தில் எழுதிஞர் : இப் பேராசிரியரின் ஆய்வைப்பற்றி நமக்கு எழுதிய நிருபரின் முடிவுரைகள் தமிழியலின் முன்னேற்றத்துக்குத் தொடர்பாக அமைந்துள்ளது. அந்த நிருபர் எழுதுகின்ருர் :
It was unfortunate' says the Correspondent, that none of our South Indian Scholars was present at this important congress which brought home to all present the inadequacy of our research work in South India and the importance of the problem'' suog5 f5ui QFrsig கின்ருர், மிகவும் முக்கியமான இந்த மாநாட்டிலே தென் இந்திய அறிஞர்கள் யாரும் சமூகம் கொடுக்கவில்லை. இங்கு வந்த எல்லோரும் தென் இந்தியாவில் ஆராய்ச்சி திருப்திகரமாகவில்லை யென்பதை உணர்ந்தார்கள் என்று முடித்தார். தென் இந்தி யாவில் ஆராய்ச்சி போதுமானதாக இல்லை- அது உண்மையாக இருக்கலாம். ஆராய்ச்சி போதுமானதாக இருக்க விரும்பினுல், பல்கலைக்கழகங்களும், பண்பாட்டு நிறுவனங்களும், அரசாங்கங் களும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் குறிக் கோளுக்காகப் பாடுபடவேண்டும் என்ருர் தனிநாயக அடிகள்.
மேலும் அடிகளார் கூறுகின்ருர் : இலண்டனில் உள்ள இந்தியத்தூதர் கூற்றின்படி பெரும்பான்மையான இந்திய மாணவர்கள் தொழில் நுட்பக் கல்லூரிகளிலும், கட்டடக் கல்லூரி களிலும், பபிலுகின்றனர். ஒரு சிலரே இலக்கியத் துறைகளில் ஈடுபட்டுள்ளனர். இன்ஞர்கள் அறிவியல் துறைகளில் ஈடு

தமிழுக்குரியதைத் தமிழுக்குக் கொடுங்கள் 157
படுவது நல்லது. இந்தியாவுக்கு இத்தகைய இளைஞர்கள் அறிவியல் துறைகளில் புலமை பெறுவது பாராட்டத்தக்க விடயம் தான். இருந்தும் கலைத்துறைகளையும் நாம் அசட்டை பண்ண முடியாது. இந்த இலக்கியத்துறைகளே, கலத்துறைகளே இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவும், மதிப்பிற் குரிய இடத்தையும் அதற்குத் தந்தது இேங்கிலாந்தில் மூவாயிரத் துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில் ஒருவர் கூடத் தமிழ் இயலச் சிறப்புப் பாடமாக எடுத்து ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை.
தென் இந்தியாவில் ஆராய்ச்சி குன்றி இருப்பதற்குக் காரணம் தகுதியும் திறமையும் வாய்ந்த அறிஞர்களை ஆய்வு செய்ய வைக்க ஒரு திட்டம் தென் இந்தியாவில் இல்லாதது இன்ஞெரு காரணமாகும். இலங்கைப் பல்கலைக்கழகம் வெளி நாடுகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொள்ளத் துணை விரிவுரையாளர்களை அனுப்புகின்றது. இத்தகைய வாய்ப்புக்கள் தென் இந்தியப் பல்கலைக்கழகங்களில் இல்லை. நம் தமிழ் அறிஞர்களுக்குத் தமிழ்மொழியும், தமிழ் இலக்கியமும் மட்டும் தெரிந்தால் போதாது. அதிகமாஞேர் கீழைத்தேசத் துறைகள் உள்ள வெளிநாட்டுப் பல்கலக் கழகங் களில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஹம்பேக் (HAMBURG) பொன் (BoNN). பாரிஸ், இலண்டன் போன்ற பல்கலைக்கழகங்களைக் குறிப்பிடலாம். வெளிநாடுகளில் தமிழ்மொழியையும், தமிழ் இலக்கியத்தையும் சிறந்த முறையில் படிக்கலாம் என்பதல்ல பொருள். ஆனல் வெளி நாடுகளில் உள்ள பல்கல்க்கழகங்களில் தற்கால உலகுக்கு ஏற்ற வகையில் புதிய முறைகள்மூலம் ஆய்வுகள் நடத்துகின்ருர்கள். அதோடு தற்கால மேற்கத்திய மொழிகளின் முன்னேற்றத்தையும் கவனிக்கலாம். இப்படி வெளி நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குச் செல்வதால் பல் வாய்ப்புக் களை ஒருவர் அறிய வரலாம். இப்படி வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லாதபடியால் தமிழ் தொல் பொருள ஆராய்ச்சியிலும், தமிழ் வரலாற்றிலும் தமிழ் இயலிலும், ஒப்பியல் ஆராய்ச்சியிலும் ஒரு சில தமிழர்களே புலமைபெற்றிருக் கின்றன்ர். வெளி நாட்டறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொள்வதற் காக இந்தியாவுக்கு வருகின்றனர்; சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப்பற்றியும், திராவிட மொழிகளான கோதா, பிராகி போன்ற மொழிகளை இங்கு வந்து ஆய்வு செய் கின்றனர். வட இந்தியப் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக்குப் பல வாய்ப்புக்களை உருவாக்கி, வெளி நாடுகளில் தொடர்புகளை

Page 103
乳葛8 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
உண்டாக்கினுல் ஏன் தமிழ் இயலுக்கு என்று உள்ள பல்கலைக் கழகங்கள் இத்தகைய வாய்ப்புக்களைப் பெற்றுத்தர முடியாது?
அனைத்துலகக் கூட்டங்களிலும், ஒப்பியல் கருத்தரங்கு களிலும் தமிழ் அறிஞர்கள் ஒதுங்கி நிற்கும் தன்மைகளால் தமிழ் அறிஞர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையே ஒருவித தாழ்வு மனப்பான்மையைக் கொண்டுவந்திருக்கின்றது. நமது பல்கலைக்கழகங்களில், தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்தவம் களிடையேகூட நவீன முறைகளுக்குச் சற்று எதிர்ப்புணர்ச்சி இருப்பதாகத் தோன்றுகின்றது. அவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்களுக்குள்ளே ஒரு தனித் தீவை உண்டுபண்ணுகிருர்கள்.
sisarrf B.O. L. M. O. L. பட்டங்களைச் சாடுகின்ருர். ஆங்கிலப் பல்கலைக்கழகங்கள் தங்கள் ஆங்கிலத்துறையை ற்ேகத்திய படிப்பினைகளின் துறை என்று அழைப்பதில்லை. மேற்கத்திய பல்கலைக்கழகம் ஐரோப்பிய மொழிகளை நவீன
மொழிகள்" என்றே அழைக்கின்றன. நாம் புவியியலின்படியும்
தொடர்பில்லாத கலச் சொற்களில் பெருமை கொண்டு நம்மைக் கீழைத்தேச அறிஞர்கள் என்று கூறுபடுத்திக்கொள்கின்ருேம், அடிகளார் இவ்வாறு எழுதுகின்ருர் ே
scIt is understandable for a University in Europe or America to have a faculty of Oriental studies as it would be Understandable for India to have faculties of occi dental studies, but designations like B. O. L. and M. O. L. only tend to relegate Tamil students in popular imagination to an unreal distance both in time and space. If Tami is to become more and more a medium of modern though and expression, that will depend not only on the adaptability and inherent powers of the Tamil language, but also on the awareness, out look, and Weltanshauung of Tam students, Tamil Writers and Tamil Scholars'
spasari நம் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சியின் போதாத் தன்மைக்கு இன்குெரு காரணமும் காட்டுகின்ருர்.
திறமையானவர்களுக்குக் கொடுக்கப்படும் மானியம் குறை வாகும். தென் இந்தியாவில் பல்கலைக்கழகப் பதவி ஒருவருக்குக் கொடுக்கப்பட்டால் இளம் விரிவுரையாளருக்குத் தங்கள் பிற்கால வாழ்க்கையை வனப்படுத்தக் கொடுக்கப்படுகின்ற வாய்ப்பாகக் கருதுகின்றனர்.

தமிழுக்குரியதைத் தமிழுக்குக் கொடுங்கள் 59
**as a spring-board for bettering their prospects.'
நம் பல்கலைக் கழகங்களில் பல சிரமங்களுக்கு இடையே பணியாற்றுகின்ற திறமையான பேராசிரியர்கள் பல மணி நேரம் விரிவுரைகள் ஆற்றுவதால் சோர்ந்து போகின்ருர்கள். அவர் களால் ஆராய்ச்சி செய்யவும், படிக்கவும் போதிய நேரம் கிடைப் பதில்லை.
நம் தமிழ்ப் பண்பாட்டைக் கிழக்கிலும், மேற்கிலும் போய்ப் பரப்ப நம் தமிழ்ப்பேராசிரியர்களுக்குப் போதிய ஆங்கில அறிவும் தேவைப்படுகின்றது. நம் இந்திய வரலாற்றைப்பற்றி நம் இந்திய அறிஞர்கள் எழுதும் ஆக்கபூர்வமான நூல்களை நாம் பாராட்டி தெம்பூட்டி வரவேற்க வேண்டும்.
தமிழியலின் போதாத் தன்மைக்கு இன்ருெரு காரணம்போதிய தமிழ் அறிஞர்களின் எண்ணிக்கை, அனைத்து இந்திய நிலையிலும் குறைவு.-அனைத்துலக நிலயை விடுங்கள்-1952ல் கூட நூல்களிலும் கலக்களஞ்சியங்களிலும் தென் இந்தியாவைப் பற்றியும், தமிழனப்பற்றியும் வரும் குறிப்புக்கள் மிகக் குறை வாகும். இந்தியாவின் அரசியல் திட்டம்பற்றிய நூல்களிலும் தென் இந்தியாவைப்பற்றியும், தமிழண்ப்பற்றியும் வரும் குறிப்புக்கள் மிகக்குறைவாகும். "இந்திய மக்களின் வரலாறும். பண்பாடும்" என்ற இரு தொகுதிகளாக வெளிவந்த நூல்களிலும் தென்னகம் சரியான இடத்தைப் பெறவில்லை. வெளி நாட்டார் இருட்டடிப்புச் செய்த உண்மைகளைக் கொண்டுவரக்கூடிய இந்திய வரலாறு ஒன்று எழுதப்படவேண்டும் என்று அடிகனார் தம் நீண்ட ஆசிரிய தலையங்கத்தில் எழுதியிருந்தார். பாரதீய வித்திய பவான் தலைவர் மேன்மை மிக்க டாக்டர் K. M. முன்சி தம் புதிய இந்திய வரலாற்று நூலின் முன்னுரையில் இவ்வாறு எழுதுகின்ருர் : நான் படித்து வந்த நூல்கள் வாயிலாக இன்று வரை வெளிவந்த இந்திய வரலாற்று நூல்கள் திருப்திகரமாக வில்லை. கடந்த பல வருடங்களாக இந்திய வரலாறுபற்றி நீண்ட விரிவான நூல் ஒன்று எழுத முற்பட்டு வருகின்றேன். இதஞல் இந்திய அறிஞர்களால் இந்தியாவின் கடந்த காலம் விளககப்பட வேண்டும். உலகம் இந்தியாவின் ஆண்மாவைப் பற்றி ஒரு கண்ளுேறட்டமும் பெறும்.
Lo susrf (Mr. R C, Majurandar) “Luangpu sáur" என்ற ஒரு நூல் எழுதியிருந்தார். அதில் தமிழைப்பற்றியும், இந்து சமயத்தைப்பற்றியும் தவருன கருத்துக்கள் பலவற்றைக் கூறியிருந்தார். தனிநாயக அடிகளார் அவரின் நூலைச் சரியாக

Page 104
69 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
விமர்சனம் செய்து, தவறுகளைச் சுட்டிக்காட்டி இவ்வாறு 'தமிழுக் குசியதைத் தமிழுக்குக் கொடுங்கள்” என்ற தலையங்கத்தை இவ்வாறு முடிக்கின்ருர்,
No linguistic Charvinism or regional patriotism or or attachment to a mythical Aryan superiority should falsify the new history. Let not the error of the foreigner give place to the error of the Compatriot.'

4. தமிழைக் கற்பித்தல்
தனிநாயக அடிகனார் 1954ஆம் ஆண்டு தமிழ்மொழியின் அவசியத்தைப்பற்றித் தமிழைக் கற்பித்தல் என்ற தலைப்பில்
அரிய பயனுள்ள ஆசிரியர் தலையங்கத்தைத் தீட்டிஞர். தமிழ்மொழி நவ நாகரிக சிந்தனையின் தகுந்த கருவியாக இருக்கவேண்டுமாயின் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் தமிழைக் கற்பித்துக் கொடுக்கும் ஆசிரியர்கள் தகுந்த பயிற்சி பெற்றவர்களாக விளங்கவேண்டும் என வலியுறுத்திருச்.
தமிழ் ஆசிரியர்கள் மத்தியிலே விரக்திமனப்பான்மை இரும் பதற்குக் காரணம் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் போதுமான தாக இல்லை. அதே நேரத்தில் தமிழைக் கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களுக்கோ விரிவுரையாளர்களுக்கோ நல்ல பயிற்சி அளிக்கப்படுவதில்லை. தாய்மொழியைக் கற்பித்தலின் அவசி பத்தை வற்புறுத்துகின்ற இக்காலத்தில் இலத்தீன் மொழியையோ, கிரேக்க மொழியையோ, ஆங்கில மொழியையோ கற்பிக்கின்றவர் களைப்போலத் தமிழ்மொழியைக் கற்பிக்கின்றவர்களும் நாகரிகம் உள்ளவர்களாக, பண்புள்ளவர்களாக, அதிக நூல்களைப் படித் தவர்களாக, பக்குவம் அடைந்தவர்களாக விளங்கவேண்டும். தமிழ்ப் பண்டிதர்கள் சொற் சிலம்பம், படாடோபம் செயற்கை முறையில் பேசுதல், பண்பில்லாத முறையில் நடந்துகொள்ளுதல், தற்கால உலகின் முறைகளை அறிந்துகொள்ளாத் தன்மை, எந்த முன்னேற்றத்துக்கும் தடையாய் இருக்கும் மனப்பாங்கை எல்லாம் நீக்க வேண்டும். பல்கலைக்கழகததில் பணியாற்றுகின்ற தமிழ்ப் பேராசிரியர்கள் தனித் தீவுகளாக ஒதுங்கி வாழ்ந்து, பொருட்காட்சிச் சாலையில் உன்ன காட்சிப் பொருளாக வாழ்ந்த காலம் மலையேறிவிட்டது.
இன்று தமிழ் கற்பிக்கும்போது புதிய நவநாகரிக முறை கனெத் தமிழ் ஆசிரியர்கள் கையான வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது நமது உரிமையாகும். பொது மேடைகளிலும், தனிப் THLLS SLLLL TCLL LLLLLL LTTTTTT TTT L STTkTTtTtLL பேசும்போது தங்கள் பேச்சுக்களுக்கு அதிகாரம் தேடுவதற்கு அடிக்கடி உய யோகிக்கப்படும் சில பொதுவான மேற்கோள்களைக்காட்டிமக்களுக் குச் சலிப்பை உண்டாக்கக் கூடாது. உயர்நிலைப் பாடசாலையின் குழு வெளியிட்ட அறிக்கையின்படி "எந்த ஆசிரியரும், எவ்
1f--هه

Page 105
162 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
வளவுக்குத் தரக்குறைவாகப் பயிற்சி பெற்றிருக்கின்ருரோ, அந்த ஆசிரியர் தாய்மொழியைக் கற்பிக்கத் தகுதி வாய்ந்தவரே" என்று அன்று கருதப்பட்டது. அதன்பின்னர் இந்நிலை மாறி யுள்ளது. 'நல்ல தரமான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தாய் மொழியைக் கற்பிக்கப் புறப்பட்டால், கல்வியின தரம் உயரும். முன்னேற்றம் காணப்படும்." இது பிறகு வந்த நிலையாகும்.
இலங்கையை எடுத்துக்கொண்டால், தமிழைக் கற்றுக கொடுப்பதற்குப் பயிற்சி பெருதவர்களும், எஸ். எஸ். சி. தேர்வில் (Senior School Certificate) Fr Hrssoruorsé Féßusol-ßSQ களுமே ஈடுபடுத்தப்படுகின்றர்கள். ஆணுல் பட்டம் பெற்ற பட்டதாரிகனோ வேறு பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்ருர்கள். தமிழ்மொழியை எப்படியும் கற்றுக் கொடுக்கலாம், எவரும் கற்றுக் கொடுக்கலாம் என்று பள்ளிக் கூடங்களின் தலைவர்கள் நினைக் கின்ருர்கள் போலும்.
ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்படுகின்ற பயிற்சியும், அவர் களுடைய தரமும் திருப்திகரமாக இல்லை. இக்கால சந்ததி வினருக்குக் தமிழ்மொழியின் மறுமலர்ச்சியில் நம்பிக்கை இல்லாமல் போகின்றது. ஆசிரியர்களின் கற்பிக்கும் கருவி களான பாடநூல்கள், பொது அறிவு நூல்கள், இவையெல்லாம் போதிய அளவுக்கு இல்லை. தசம் குறைந்தவையாகவும் இருக் கின்றன. பாட நூல்களைப்பற்றியும், நூலகத்தில் உள்ள பொது நூல்களைப்பற்றியும் (உயர்நிலப் பாடசாலையின் குழு அறிக்கை) குறிப்பிடுகையில் அறிவியல் கண்ணுேட்டத்துடன் இந் நூல்களைத் தொகுக்க வேண்டும், வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது. பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் உள்ள ஆசிரியாகளின் மனுே நிக்லயும் பெரும்பான்மையான பாடநூல் களின் தரம் திருப்திகரமாக இல்லை என்பதாகும். தனிநாயக அடிகளார் தாய்மொழியில் படசாலை நூலகங்களில் உள்ள துணை நூல்கள், குறிப்பு நூல்கள் (Reference books) எண்ணிக்கையில் குறைவுபற்றி வேறு ஒரு கட்டத்தில் குறிப்பிட் டிருக்கின்றர். இத்தகைய நூல்கள் மாநில மொழிகளிலும், அரச suo Quorsssfigyth (Official language of the Union) Gauss வர முயற்சி எடுக்காவிடடால் மாணவர்களின் மொத்த வளர்ச்சி பாதிக்கப்படும். ஆசிரியர்களுக்கும் தங்கள் மொழிகளில் போதிய அளவு நூல்கள் இருந்தால்தான் அவைகளால் அவர்கள் பயன் அடைந்து தங்கள் அறிவைக் காலத்துக்கு ஏற்றதாக ஆக்கிக் கொள்வார்கள். (Up to date). இவ் வேளையில், குழந்தைகளுக் கும், இளைஞர்களுக்கும் தேவையான நூல்களையம் வெளியிட

தமிழைக் கற்பித்தல்
வேண்டும் என்று கேட்டுக்கொள்ள விரும்புகின்ருேம். தற்போது இத்தகைய நூல்கள் இந்திய மொழிகளில் குறைவாகவே காணப் படுகின்றன. மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்களுக்குத் தேவையான நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டவேண்டும். நூல்களை வெளியிடும்போது தரத்தை மட்டும் பார்க்காமல் அச் சேற்றும் முறை, நூலைத் தொகுக்கும் முறை விளக்கவுரைகள் இவைபற்றி இன்னும் அக்கறை எடுத்தால் நலமாக இருக்கும். நல்ல நூல்களை வெளியிடும் அச்சகத்தாருக்கு ஆதரவை அரசு வழங்க வேண்டும். தரமான நூல்களை வெளியிடுவோருக்குப் பரிசுகளை வழங்கி ஆதரவையும், ஊக்கத்தையும் நல்க வேண்டும்.
தாய்மொழியைக் கற்பித்தலில் மறுபயிற்சி அளித்தாக வேண்டும். இளம் உள்ளங்களில் நுண் பொருள் தொட்ர்பான வரையறைகளையும் (Definition) இலக்கணச் சொற்ருெடர் களையும் மனனம் செய்ய மாணவர்களை வற்புறுத்துவதால் அவர்கள் உள்ளத்தில் மொழித்தொடர்பான பாடங்கள் என்ருலே அவ்ர்களுக்கு வெறுப்பு உண்டாகும் என்பது திண்ணம். சாதாரண உரைநடையே படிக்கத்தெரியாத இனம் சிருர்களுக்கு இப்படிச் செய்வதின்மூலம் விரக்தி மனப்பாங்கை நாம் உண்டு பண்ணுகின்ருேம். மொழியின்மேல் ஆர்வத்தையும், விருப் பத்தையும் அவர்கள் இதயத்தில் தோற்றுவிக்க எளிமையான கவையுள்ள நூல்களை வெளியிடவேண்டும்.
தாய்மொழியை அல்லது மாநிலமொழியை வலியுறுத்தும் வேளையில் கீழ்க்கண்டவற்றைக் கவனிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்ருேம் :
(அ) மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அம்மொழி கற்பிக்கும் முறைகள்பற்றிக் கற்பித்தல்.
(ஆ) பல்வேறு நிலையில் உள்ள மாணவர்கள் படிப்பதற் குரிய உரைநடை செய்யுள் போன்ற நூல்களைத் தரம் குறையாமல் வெளியிடுகின்றவர்களுக்கு நல்ல வாக்கம் அளித்திடல் வேண்டும்
இப்போது வெளிவருகின்ற பாடநூல்கள் திருப்திகரமாக இல்லை. இன்னும் பன்முறை முன்னேற்றம் செய்ய இடம் உண்டு. இப்போது வெளியிடப்பட்டுள்ள பாடநூல்களின் தாளின் தரம் மலிவானது; அச்சேறியநில மோசமானது; விளக்க வுரைகள் தெளிவற்றன; அச்சுப்பிழைகள் ஏராளம். இப்படிப்பட்ட நூல்களை மாணவர்களிடம் கொடுத்தால் நூல்களைப் படிக்க மான வர்களுக்கு விருப்பம் வருமா? அத்தகைய நூல்களைப் படிப் பதில்தான் இன்பம் வருமா ?

Page 106
1S தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
ஆங்கிலநாட்டிலே பத்து முதல் புதினைந்து ஆண்டு urLFrðvúLmúísir ósir (post-school reading) SGsigáSá தெரிந்திருக்கவேண்டிய சொல்லின் எண்ணிக்கை ஐந்து இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சராசரி முப்பதாயிரம் சொற்கள் கொண்ட நூற்று எழுபத்தைந்து நூல்களை ஒருவர் படித்தால் ஐந்து இலட்சம் சொற்களை ஒருவர் அறிந்துகொள்ளலாம். இது ஆங்கிலநாட்டுப் பாடசாலை மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் இடையே நடந்த ஒரு கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியாகும். ஆளுல் தமிழை எடுத்துக்கொண்டால் சராசரி பத்தாயிரம் சொற்களைக்கொண்ட ஒரு நூல் என்ற கணக்குப்படி மாணவர்கள் ஐநூறு (ஐந்துX நூறு) நூல்கள் படிக்கவேண்டும். பயணம், நாவல் காதல், வரலாறு, பொது அறிவு நூல்கள், அறிவியல், மர்மக்கதைகள், வாழ்க்கை வரலாறுகள், சமயம் போன்ற நானூறு நூல்கள் படித்தால் நாலு இலட்சம் சொற்களை பாவது ஒருவர் அறிந்திருப்பார். இப்படிப்பட்ட நூறு நூல்களை யாவது தமிழில் தெரிந்தெடுப்பது மிகவும் உன்னதமான செயலாகும். "ராபின்சன் குருசோ"வின் நூல்கள், பூச்சிகளைப் பற்றிய நூல்கள், பயணக் கண்டுபிடிப்புக்கள் தொடர்பான rல்கள், 'நிலாவுக்குப்பயணம்” போன்ற நூல்கள் ஏராளமாக இல்லை. இத்தகைய நூல்களை இளைஞர்களுக்கென மொழிபெயர்த்த வர்கள், மொழிபெயர்க்கின்றவர்கள் அப்படியே கதைகனைச் சுருக்கித்தருகின்றனர். மொழிபெயர்க்கும்போது செயற்கைச் சொற்களின் உபயோகத்தாலும், சொல் சிலம்பத்தாலும், மூல நூல்களில் உள்ள சில கல்விசார்பான கருத்துக்கள் அவற்றின் மதிப்பை இழக்கின்றன. மாணவர்கள் ஆர்வத்துடன் நூல்களைப் படிக்க வேண்டுமாயின், வாழ்க்கையோடு ஒட்டிய சுவையுள்ள அனுபவங்களைக்கொண்ட மூல நூல்களை வெளியிடவேண்டும். இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளையும், அழகுணர்ச்சிகொண்ட வாழ்க்கையைக் (Aesthetic life) கருவாகக் கொண்ட நூல்களையும் செய்யுள் நூல்கள் வாயிலாகவும் வெளியிடலாம்.
இன்று தமிழை விரும்பிப்படிக்க வருகின்ற இளைஞர்களுக்கு நாம் கொடுப்பது மூதுரைகள், சங்ககாலத்தில் இருந்து விளங்க முடியாத சில ஆழமான செய்யுள் பகுதிகள் போன்றனவாம். இவை தமிழைச் சிறப்புப் பாடமாக எடுத்துப்படிக்கும் மாணவர் களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய பகுதிகளாகும்.
ஆங்கில நூல்களைப் படிக்கின்றவர்களுக்குப் பல்சுவை நூல்கள் உண்டு. நகைச்சுவை இலக்கியங்கள், விநோதக்

தமிழைக் கற்பித்தன் 65
கதைகள் இப்படிச் சுவையான இலக்கியங்கள் பல உண்டு. இப்படிச் சுவையை ஊட்டுகின்ற நூல்கள் தமிழில் குறைவாகும். நாம் தமது தமிழ்ச் செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டாலும் அங்கும் ஏமாற்றம்தான், நம் மாணவர்கள் விரும்புகின்ற பல்சுவை யைத் தருவதில்லை. நம் தமிழ்ச் செய்தித்தாள்களில் சுருக்கம், துணுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றைக் காண்பது அரிது. தமது தமிழ்ச் செய்தித்தாள்களில் வெளிவருகின்ற வெளிநாட்டுச் செய்திகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. பலர் ஆங்கிலச் செய்தித்தாள்களிடம் இருந்தே அத்தகைய செய்திகளை அறிய விரும்புகின்றனர். ஆங்கிலச் செய்தித்தாள்கள் தரும் வாசிக்கும் விடயங்களைவிட நம் தமிழ்ச் செய்தித்தாள்கள் குறைவாகவே தருகின்றன. நம் தமிழ்மொழியில் சுற்றுலா இலக்கியம் வளர்ச்சி பெறுவதற்கு இன்னும் பல மைல்க்கல் தொலைவு நடந்தாக வேண்டும்.
நமது பாட நூல்களில் நுண்ணிய கருத்துக்களை வெளியிடக் கூடிய சொற்களைக் கையாள்வதிலேயே கவனம் செலுத்தப் பட்டிருக்கின்றதே ஒழிய மொழிஇயலின் சொல்லாட்சி (linguistic power) பற்றி அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை. அறிவியல் வகுப்பு நடத்துகின்ற ஆசிரியரிடம்கூடத் தம் பாட்டுதொடர்பான நுண்ணிய சொற்ருெடர்களை அறிந்து வைத்திருப்பார். ஆளுல் பேச்சுவன்மையுடன் சுவைபட வகுப்புக்களை நடத்துகின்ருரா என்பது ஐயப்பாடாகும். அதிகமான சொற்கள் தெரிந்து வைத்திருப்பதைவிட சொல்லாற்றல் மிக்கவராக விளங்குவதே சிறப்பாகும். இந்த இரண்டு விதமாகச் சொல்வதிலும் வேறுபாடு உண்டு அல்லவா? "அவன் கடைசியாகப் போக இருக்கும் இடத்தைப்பற்றி அவனுக்கு நிச்சயமாக இன்னும் தெரியாது." இப்படி ஒருவர் பேசுகின்ற கூற்றுக்கும், "தன் இறுதி முடிவைப் பற்றி இன்னும் அவனுக்கு நிச்சயமாகத் தெரியாது." என்று சொல்வதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? மொழி இயலின் ஆற்றலுக்கு அதிகமான சொற்களைக் கையாள்வது வேண்டத் தகாதது ஆகும்.
பள்ளிக்கூடங்களின் முதல்வர்கள் தாய்மொழியின் இலக் கணம், இலக்கியம் தெரியாதவர்களை, தாய்மொழியில் கற்பிக்கப் பணிக்கக் கூடாது.
இங்கிலாந்தில் ஆங்கில மொழியைப்பற்றிக் கூறின கூற்று, உலகில் உள்ள எந்தத் தாய்மொழிக்கும் பொருந்தும். ஹடோ அறிக்கை கூறுகின்றது. "சில குறிப்பிடப்பட்ட பருவங்களில்

Page 107
166 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
பாடசாலைகளில் தனிப்பட்ட பாடமாகச் சொல்லிக் கொடுக்கப்படும் ஒரு பாடமாக ஆங்கிலத்தைக் கருதக்கூடாது. தங்கள் பாடத் திட்டங்களில் தங்கள் கருத்தை வாய்மொழியாலோ அல்லது எழுத்து மூலமோ வெளிப்படுத்தப் பயிற்சி கொடுக்கவேண்டும். தெளிவாகவும், பொருத்தமான மொழியிலும் பேசப் பயிற்சி கொடுக்கவேண்டும். ஒவ்வொரு பாடத்திலும், ஆங்கிலமொழியின் உபயோகத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஜார்ஜ் சம்சன் வழக்கமாகச் சொல்லுவது போன்று 'கற்பிக்கும் ஒரு பாடமாக இருப்பதைவிடத் தாய்மொழி வாழ்க்கையின் ஒரு கட்டாயமாகும். (நிபந்தனையாகும்)" என்பார்.
The Hadow Report for instance, says. English should not be treated as a isolated subject confined to certain definite periods assigned to it in the time table. In every branch of the Curriculum pupils should be trained to express their ideas either orally or in writing in accurate and appropriate language. It will be therefore be advis sable to exercise a careful supervision over the use of English in every subject.' And George Sampson in his usual vigorous manner says that the mother tongue is a
condition of existence rather than a subject of instruction.'
ஆங்கிலப்ப்யிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குத் தாய்மொழியில் ஒரு கருத்தரங்கு வைப்பதின்மூலம் தமிழ்மொழியின் போதகு முறை செய்வதைப்பற்றி விளக்கிக் கூறலாம். ஆளுல் பாட நூல்களோ, துணை நூல்களோ குறைவாகவே காணப்படு கின்றன. இக் குறையைப் போக்குவதற்குப் பல்கலைக்கழகங்களோ அல்லது பயிற்சிக் கல்லூரிகளோ, மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும் பாடசாலைகளை நடத்த வழிகாட்டலாம். மத்திய நூற்ருண்டில் அசாபியர்களும், ஐரோப்பியர்களும் கிரேக்கச்களின் சிந்தனைகளைக் கற்றுக்கொள்ளவும், சீனர்களும், யப்பானியர்களும் இந்தியச் சிந்தனையைக் கற்றுக்கொள்ள இதே முறையைத்தான் பின்பற்றிஞர்கள். பள்ளிக்கூட நூல்களை எழுதுவதோ, மொழி பெயர்ப்பதோ அவ்வளவு எளிய செயல் அல்ல; சொல்பற்றிய அகர முதலியில் போதிய அளவு ஆராய்ச்சியில் ஈடுபட்டவராகவும் விளங்கவேண்டும். தமிழ்ப்பாட நூல்கள் மாணவர்களின் மொழி இயல் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தினதாகத் தெரிய வில்லை. இலங்கையில் உள்ள சில பாடசாலைகளில் ஆகும் வகுப்பிற்குரிய ஆங்கில மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட

தமிழைக் கற்பித்தல் 167
தமிழ்மொழிபெயர்ப்புக்கள், பல்கலைக்கழகத்தின் சில வகுப்புக் களில் நடத்தக்கூடிய பகுதிகளாக விளங்குகின்றன. ஆளும் வகுப்புக்குரிய மாணவர்களின் மளுேநிலையை மொழி இயல் தன்மையை விளங்கிக கொள்ளாமல் சங்க இலக்கியத்தில் தாங்கள் பெற்ற தமிழ் அறிவைக் காட்டப் பயன்படுத்தியிருக்கின்ருர்கள்.
பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் தமிழ் கற்பித்தல் இரண்டாம்தர நிலையிலேயே இருந்துவந்திருக்கின்றது. தமிழ் விரிவுரைய்ாளர்களாகவோ, ஆசிரியர்களாகவோ, நியமிக்கப்பட வேண்டியவர்கள் திறமைமிக்கவர்களாக இருக்கவேண்டும். அவர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படல்வேண்டும். அண்மைக் காலத்திலே மொழிதொடர்பாக நடத்தப்படுகின்ற ஆராய்ச்சி களில் ஈடுபட்டவர்களாக விளங்கவேண்டும். அப்போதுதான் தமிழ் வாழ்க்கையின் கட்டாயமாக விளங்கும்.
இப்படித் தனிநாயக அடிகளார் 'தமிழைக் கற்பித்தல்" என்ற ஆசிரியர் தலையங்கத்தில்- தமிழ் ஆசிரியர்கள் உயர்நது விளங்க வேண்டும். ஏனைய துறைகளில் உள்ளவர்கள் பொருமை கொள்ளும் அளவுக்குத் திறமைசாலிகளாக விளங்கவேண்டும். தகுந்த பயிற்சி பெறவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்ருர், பாடநூல்களின் தரம் தமிழ்மொழியில் சிறந்து விளங்கவேண்டும். ஆங்கில நூல்கள் ஆலமரம்போலப் பெருகிப் பலுகுதல்போல நம் தமிழ்மொழியிலும் நூல்கள் பல தரம் குறையாமல், பல சுவையுடன் வெளிவரவேண்டும் என விரும்புகின் ருர், நமது செய்தித்தாள் களும் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும. மொழி பெயர்ப்பு நூல்கள் மூலநூல்களோடு இணைந்து செல்லவேண்டும். இறுதியாகத் தமிழ் நம் வாழ்வோடு கலந்த ஒரு மொழியாக மலர வேண்டும் எனத் தம் தமிழ்ப்பற்றையே கொட்டிவிடுகின்ருர் தனிநாயக அடிகளார்.

Page 108
5. ஆரம்பப் பாடநூல்களின் சொற்ருெகையும் உள்ளுறையும்
(The Vocabulary and Content of Tamil Primers and First Readers)
தனிநாயக அடிகளார் ஒரு கல்விமான். உளவியல் மேதை கல்வியைப்பற்றிச் சிறந்த கொள்கை கொண்டவர். முதியோர் கல்வி, பாலர் கல்வியைப்பற்றியெல்லாம் பல ஆய்வுகளை மேற் கொண்டவர். குழந்தைகளின் கல்வியில் பெரிதும் அக்கதை எடுத்தவர். இந்தியாவிலும், இலங்கையிலும், மலாயாவிலும் பாலர்களுக்கென வெளியிடப்பட்ட பள்ளிநூல்கள்பற்றி முத் திங்கள் ஏடான "Tamil Culture" இதழுக்கு ஒரு திறஞய்வுக் கட்டுரை இருபத்தைந்து அல்லது முப்பதாண்டுகளுக்கு முன் எழுதியிருந்தார். அக் கட்டுரையில் இருந்து சில செய்திகளை நாம் தருகின்ருேம்.
ஆங்கில நாட்டில் இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு களுக்கு முன் குழந்தைகளுக்குரிய ஆரம்பப் பாடநூல்களை "ஒலி" (Phonic) கொண்டும், நெடுங்கணக்கு (Alphabetic) கொண்டும் அமைத்துக்கொண்டார்கள். இம் முறையையே நமது குழந்தை களுக்கென வெளியாகிய பாட நூல்களும் பின்பற்றின. தனி நாயக அடிகளார் மேற்கத்திய நாடுகளிலும், தமிழ்நாடு, இலங்கை, மலாயா போன்ற நாடுகளிலும் வெளியாகிய குழந்தை நூல்களை ஒப்பாய்வு செய்துள்ளார். குழந்தைகள் தமிழ் நூல்களை நன்கு படிப்பதற்கும், தமிழ்க்கல்வி நனகு வெற்றி பெறுவதற்கும் நல்ல கற்பிக்கும் முறைகளையும், தகுதியான பாட நூல்களையும் வெளியிட வேண்டும். அப்போதுதான் பாலர் வகுப்புக்கள் சுவை யானதாகவும், ஆசிரியர்-குழந்தை உறவு முறைகள் சிறப்பான தாகவும் அமையும், இரண்டு வகையான ஆரம்பப்பாட நூல்கள் சென்னை மாநிலக்கல்வித்துறையாலும், இலங்கை, மலாய கல்வித் துறைகளாலும் பாடநூல் குழுவினராலும் வெளியிடப்பட்டன.

ஆரம்பப் பாடநூல்களின் சொற்ருெகையும் உள்ளுறையும் 169
முதல் வகை ஆறு வெவ்வேருண ஆரம்பப் பாட நூல்கள். A, B, C, D, E, F, G, ஆறு வெவ்வேறு வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்டன.
இரண்டாவது வகை ஐந்து வெவ்வேறு ஆரம்பப் பாட நூல்கள் ஐந்து வெவ்வேறு வெளியீட்டாளர்களால் வெளியிடப் பட்டன. அவை, 1, 2, 3, 4, 5 என எண்ணிக்கையிடப் பட்டன.
56wfisaruas sya as aurri osi (5avam suurauw Uru-gurdidasåYTú பற்றியும் கூறும் குறை நிறைகளை இங்கு தொகுத்துக் காண் போம். தனிநாயக அடிகனாரின் கருத்துப்படி குழந்தைகள் 247 தமிழ் எழுத்துக்களைச் சொற்களில் கண்டு அறியும் வரையும், எல்லா 247 தமிழ் எழுத்துக்களையும், அங்கு ஒன்று, இங்கு ஒன்ரூகப் பார்த்தல் கேட்டல் முறைப்படி கற்றுக்கொடுத்தல் தவருகும்.
But it does not require much experiment to prove that it is injurious to Children's interests to teach the auditory and visual patterns of all the 247 Tamil Characters in isolation to children before they may begin recognising them in words.' M.
ஐரோப்பிய - அமெரிக்கப் பாடசாலைகளில் பாலர்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற எந்த ஒரு தனி முறையும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்று கூறமுடியாது. ஒலி (phonic) நெடுங் கணக்கு (alphabetic) முறைகள் ஒலிகள், சொற்கள் கொண்டு ஆரம்பித்து வாசிக்கும் திறனை உண்டுபண்ணுவதாகும். இம் முறைகளை எழுத்துக்களைக் கண்டுபிடித்தல் எனத் தமிழில் கூற லாம். சொல்லும் (Word) வசனமும் (Sentence) என்ற முறைகள் வாசிப்பதில் உள்ள பொருளை உணர்ந்துகொள்வதைக் குறிப் பிடும். முதல் முறையால் (ஒலி, நெடுங்கணக்கு) பயிலும் குழந்தைகள் அச்சில் உள்ள எழுத்துக்களையும், புதிய எழுத்துக் களையும் கண்டுபிடிக்கின்ருர்கள், ஆளுல் அவை உணர்த்தும் பொருளை அறிவதில் ஆர்வம் குறைகின்ருர்கள். இரண்டாம் முறையால் (சொல்லும், வசனமும்) பயிலும் குழந்தைகள் பொருளை உணர்வதில் (Contents) பெரிதும் ஆர்வம் காட்டு கின்ஞர்கள். ஆளுல் சொற்களைக் கண்டுபிடிப்பதில் வேகம்குறைந் தவர்களாகக் காணப்படுகின்ருர்கள், குழந்தைகளுக்கு இரண்டு) முறைகளையும் கற்பித்தல் நல்லது எனக் கருதப்படுகின்றது எந்த முறை நல்லது என்று கேட்டால் இரண்டு முறையும்
As

Page 109
: 170 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
E. செந்தோல் (Sendal) என்பவர் குழந்தைகளுக்கென எழுதிய ஆரம்பப் பாடநூலைப்பற்றிக் கூறுகையில் அடிகளார் சில தவறுகளை எடுத்துக் காட்டுகின்ருர், பள்ளிக்கூடத்துக்குச் செல்லாத தொடக்கநிலையில் உள்ள குழந்தைகளுக்கு ஒள, ஃ. என்ற எழுத்துக்களைச் சொல்லிக்கொடுப்பது பயனற்ற செயல், இக் குறியீடுகள் அக் குழந்தைகளின் தேவைகளுக்கும், அனுபவத் துக்கும் அப்பாற்பட்டவை என்பார் அடிகள். இக்கால கட்டத்தில் கிராமப்புற, நகரப்புற இடங்களில் வாழ்கின்ற எல்லாக் குழந்தை களுக்கும் பொதுவான ஒரு சொல் தொகையைக் கையாள வேண்டும் என்பார் அடிகள். ஐவர், ஒப்பந்தம் போன்ற சொற்கள் முதல் வகுப்பில் படிக்கின்ற குழந்தைகளின் சிந்தனைக்கு அப்பாற்பட்ட சொற்களாகும். ஈசன், ஒடம், ஒனவை. ஒளடதம், எஃகு, அஃது போன்ற சொற்கள் அசாதாரண சொற்களாகும். முதலாம் வகுப்பிற்குப் பிறகு இச் சொற்களைப் பயன்படுத்தலாம். உறி, எருது. ஏற்றம், இரதம், ஈச்சமரம் போன்ற சொற்கள் பட்டணத்துக் குழந்தைகளுக்குச் சாதகமான சொற்களாக இல்லை. ஒட்டகம், அன்னம் என்ற சொற்கள் கிராமத்துக் குழந்தைகளுக்குச் சாதகமான சொற்களாக இல்லை. மிருகக்காட்சிச் சாலைக்குப்பேய்ப் பார்த்திருந்தால்கூட இச்சொற்கள் பழக்கமான சொற்களாக இல்லை. குழந்தைகளுக் கெனப் பாடநூலில் உள்ள 91 சொற்களில் 24 சொற்கள் கேள் விக்குரியன. பாடநூலில் உள்ள சில சொற்களான ஈஞ்சு, ஆயுள், இல்லம், ஒற்றர், ஒலம், கெளதாரி, யெளவனம், ரெளத்திரி, லெளகீகம், செளக்கியம் போன்ற சொற்கள் குழந்தைகளின் அனுபவத்துக்கும், ஆர்வத்துக்கும் அப்பாற்பட்ட சொற்களாம். இந்தக் குழந்தைகளின் ஆரம்பப் பாடநூல்களில் தெரிந்தெடுக்கப் பட்ட சொற்களெல்லாம் பெயர்ச் சொற்களாகவே இருக்கின்றன. குழந்தைப் பருவத்தில் குழந்தைகளின் செயலை எடுத்துக்காட்டு கின்ற வினைப் பெயர்கள் குறைவாகும்.
இரு ஓடு, ஆடு, எறி, ஏறு போன்ற குழந்தைகளின் செயல் விளக்குகின்ற சொற்கள் பலவற்றை அடிக்கடி குழந்தைகளுக்கான பாட நூல்களில் சேர்க்கவேண்டும் என்பார் அடிகளார்.
குழந்தைகள் எழுத்துக்களைக் கண்டுபிடிப்பதற்காக அவற்றை அடிக்கடி சொல்ல வேண்டியதாக இருக்கும்.
ஆரம்பநூல்-'அ'
Primer. A அணில் அம்மி, ஆடு ஆணி, இலை, இறகு

ஆரம்பப் பாடநூல்களின் சொற்ருெகையும் உள்ளுறையும் 171
PrimeT. F அம்மா, அப்பா, அண்ணு ஆடு, ஆமை,
ஆணி இலை, இறகு இருல் இடையன்.
சொற்களைத் திருப்பிச் சொல்லுதல் நூலில் குறைவாகக் காணப்படுகின்றன. சொற்களைக் கண்டுபிடிப்பதற்கும், முதிர்ச்சி புள்ள வாசிப்புக்கும் குழந்தைகளைப் தயார்படுத்தப் புதிய சொற் களைப் பதினைந்து தடவை அல்லது இருபது முறை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்.
குழந்தைகளின் பேச்சு வழக்கில் அடிக்கடி வருகின்ற சொற்கள் இவையாகும்.
Primers i 2 3 4. 5
அம்மா S 2 4. O அப்பா 2 l 8 O அண்ரூற 2 O 2 O S. அக்கா 4. O 3 1. இல் 4 4 O 1. 9 1 1. 0 O
-մւ 2 O O O 0. aaréf 4. 3 0 1. ஊஞ்சல் 0 0. 2 1. 있 arG 3 2 0 O ஏறி 2 O O 0 O
குழந்தைகளுக்கு அறக் கருத்துக்களை நுண்பொருள்மூலம் சொல்லக்கூடாது. அவர்கள் காணும் பருப்பொருள்மூலம், அவர்கள் சந்திக்கும் ஆட்கள்மூலம், செயல்கள்மூலம், நிகழ்ச்சிகள் மூலம் உணர்த்தலாம் என்பார் அடிகளார்.
'The teaching of morals and good clear habits, through
abstract instruction and an anxiety to inculcate ethical terms and norms is almost overdone in the primers. The

Page 110
72 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
Compilers have not realised that at the age children use these primers, they learn ethical norms and ideas through concrete situations and through identifying them with particular actions and persons.'
(Dr. X. S. Thani Nayagam)
குழந்தைகளுக்கு வகுப்புக்களை வெற்றிகரமாக நடத்துவ தற்குக் கதைக்கூறுகளும், ஒருவருடைய தனிப்பட்ட சொந்தமான கதைகளும் நல்ல பலனைக் கொடுக்கும். இங்கு “எங்கள் வீடு” என்ற ஒரு பாடம் இருக்கிறது. நல்ல குழந்தை நூல்களை எழுது கின்றவர்களுக்கு இப் பாடம் ஒரு விளக்கமாகவும், எடுத்துக் காட்டாகவும் அமைந்திருக்கின்றது. எ-டு:
எங்கள் வீடு
இது எங்கள் வீடு. இங்கே அப்பா இருக்கிருர், நானும் அப்பாவும் அம்மாவும் இங்கே இருக்கிருேம். எங்கள் வீடு இது. எங்கள் வீட்டில் ஒரு நாய் இருக்கிறது. அது நல்ல நாங். எங்கள் நாய் கடிக்காது. "வள் வள்" என்று குலைக்கும்.
இச்சிறிய பாடத்தில் குழந்தை அடிக்கடி பேசும் சொற்களே கையாளப்பட்டிருக்கின்றன. வீட்டில் உள்ள பொருள்களை அடுக்கிக்கொண்டு போவதைவிடக் குழந்தையின் விருப்பத்துச் கேற்ற சொற்களும், பொருள்களும் இடம் பெற்றிருக்கின்றன. இப் பாடத்துக்குத் தனிப்பட்ட கதை கூறும் கூறுபாடு ஒரு தொடர்ச்சியை உண்டுபண்ணுகிறது.
கவிதை
குழந்தைகள் இசையில் பெரிதும் நாட்டம் கொண்டவர்கள். எதுகைமோனையில் விருப்பம் கொண்டவர்கள். எனவே எளிய இசையுள்ள கவிதையை அறிமுகப்படுத்தலாம். பாரதியாருடைய, தேசிக விநாயகம் பிள்ளையுடைய குழந்தைப்பாடல்களைச் சொல்லிக் கொடுக்கலாம். அம்புலிமான், நிலா, கைவீசம்மா போன்ற பாடல்களைச் சொல்லிக்கொடுத்து ஆடச்சொல்லலாம். கழகத்தால் வெளியிடப்பட்ட "என் தாய்” மழை" போன்ற கவிதைகள் அறக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், சிறு குழந்தைகள் தங்கள் பெற்ருேருக்குச் சொல்லிக் காட்டுவதையும் நான் கேட்டு மகிழ்ந்திருக்கின்றேன். நாய், சேவல், பசு, கன்று TTTTTLT 0TLL TTLLCTT TLLLLLTT TLTTTLLLLLLLLS LHLTTTLLLL குழந்தைக் கவிதைகள் எல்லாம் மிகப் பொருத்தமானவையாகும்.

ஆரம்பப் பாடநூல்களின் சொற்ருெகையும் உள்ளுறையும் 17.
இக் குழந்தைப் பாடல்களில் குழந்தை அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள், அவர்களுடைய உணர்வுகள், கற்பனைகள், அவர்கள் உலகம் எல்லாம் தத்ரூபமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. சொற்கள் குழந்தைகளின் மனத்திலே உருவகங்களைக் கொண்டு வரக்கூடியவை. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பசு", "கன்று" போன்ற கவிதைகள் எல்லாக் குழந்தைப் பாடநூல் களிலும் சேர்க்கப்பட வேண்டியவையாகும்.
GAsr al-ë sdb Guang Gauditarduas-ayd Gas துள்ளிக்குறிக்குது என்றுக்குட்டி முத்தம் கொடுக்குது வெள்ளைப்பகடி முட்டிக்குடிக்குது கன்றுக்குட்டி,
பாரதியாரும்,
சின்னஞ்சிறு குருவியோலே-சி Safis updap air Urdur. auairara) lupaavaårä aairG-d மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.
என்று பாடியிருக்கின்ருர்.
இப்படி அடிகளார் குழந்தைக் கல்வியில் ஈடுபாடுகொண்டு, பல குழந்தை இலக்கியம், குழந்தைப் பாடநூல்கள் பல இயற்று வதற்குப் பல்கலைக்கழகங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல ஆலோ சண்கள், அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் மூலம் குழந்தைக் கல்விக்கு ஆக்கமும், ஏற்றமும் தந்துள்ளார்.

Page 111
6. தமிழர்கள் பூக்கள்கொண்டு எல்லாம் சொல்லிவிட்டார்கள்
தனிநாயக அடிகளார் இயற்கையையும், சிறப்பாகப் பூக்கன் பும் நேசித்தவர் எனக் கண்டோம். அடிகளார் எழுதிய கட்டுரை களுள் இக் கட்டுரை மிகவும் சுவையான கட்டுரையாகும். *Tamil Culture” srsër po spišs seus surríř “The Tamils said it all with towers" என்று தலைப்பிட்டு இக் கட்டுரையை எழுதி இருந்தார். அடிகனார் இக் கட்டுரையில் தமிழர்கள் வாழ்க்கை யில் எவ்வாறெல்லாம் பூக்கள் இடம் பெற்றன என்பதை அலசிப் பார்க்கின்ருர். இங்கு அடிகளாரின் பூக்கள்பற்றிய சிந்தனைச் செல்வத்தை உங்கள் முன் வைக்கின்றேன். படியுங்கள். கவையுங்கள்.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களால் இயற்கையை நேசிக்காமல் இருக்க முடியாது. புலவர்களும் மக்களும் இயற்கை யைப் பெரிதும் விரும்பியும், அன்பு செய்தும் வந்தார்கள். இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்க்கை நடத்திய மக்களிடம் இருந்து புலவர்கள் வந்தார்கள். புலவர்கள் இயற்கையைப்பற்றி எழுதியதெல்லாம் படித்து மக்கள் இன்புற்ருச்கள்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே தமிழர்கள் பூக்களையும் செடிகளையும் விரும்பவும், நேசிக்கவும் தொடங்கினுர்கள். அன்று குழந்தை தன் வீரத் தந்தையை முதல் தடவையாகக் கண்டதும், அவர் கழுத்தில் போரைக் குறிக்கும் பூமால் அணிந்திருப்பதையே கண்டான். அரசர் போ ருக்கு ரிய ஆடை அணிகலன் களுடனும், பூக்களால் ஆன மாலைகளுடனும், தம் மகனுக்குத் தம்மைக் காட்ட வேண்டும். தன் தந்தை ஒரு வீான் என்பதைக் குழந்தை தன் முதல் பார்வையிலேயே உணர வேண்டும். அரச கட்டிலில் அமர இருந்த வாரிசு பிறந்த ஒர் இரு நாட்களின் பின் அரசன் தன்னை இப்படிக் காட்டிக்கொள்வது வழக்கமாயிருந்தது. பழந்தமிழர்கள் மத்தியிலே இத்தகைய வீர உணர்ச்சி இருந்து வந்தது. (புறம் 100) குழந்தைகளின் முன் உச்சி முடியில் கூட ஒரு சில பூக்கள் இருந்து அவர்க%ள அழகு செய்தன. தலைவன் தன் தலைவியைவிட்டு வேற்று நாடு செல்ல இருந்தான். அவள்

தமிழர்கள் பூக்கள்கொண்டு எல்லாம் சொல்லிவிட்டார்கள் 175
அவன் முன்னே சென்று அமைதியாக நின்ருள். அவள் இதழ் ஒரத்தில் இருந்து இயல்பாகப் புன்னகை வரவில்லை. அவள் கண்களெல்லாம் குணமாயின. அவள் எழில் முகம் அவர் தம் பயணத்தை மேற்கொள்ளக்கூடாது என்று சொல்லிக்கொண்டே இருந்தது. அவள் தன் கைக்குழந்தை2ைத் தன் மார்போடு அனைத்து அவன் முடியில் இருந்த மணமிக்க மலர்களை மணந் தாள் ; முகத்தாள். அவள் விட்ட ஏக்கப் பெருமூச்சிஞல் பூக்களே வாடின. அவ்வளவுக்கு அவள் விட்ட பெருமூச்சு வெப்பமாயிருந்தது என்பதை அகநானூறு ஐந்தாவது பாடல் அழகாகச் சிததிரிக்கின்றது. (அகம் )ே
இளஞ்சிருர்கள் தாங்கள் விளையாடிய பொம்மைகனோடு சேர்த்து, பூக்களால் செய்யப்பட்ட பொம்மைகளையும் சேர்த்து விளையாடிஞர்கள். பலதரப்பட்ட வயதைச்சேர்ந்த இளஞ் சிருர்கள் மரங்களின் நிழலின்கீழ் விளையாடிஞர்கள். மரங்களின் அடியின்கீழ்க் கிடந்த விதைகள், பழங்கள் இலைகள், செடிகள் எல்லாம் அவர்கள் விளையாடும் பொருள்களாயின. (குறுந் தொகை 48, நற்றிணை 3 ; 24; 79, 2-3 cf. தற். 68, 155. புறம். 176.) பூந்தோட்டங்களிலும், பூஞ்சோலைகளிலும் பூக்கண்ப் பறித்தும், இலகளைப் பறித்தும், மாலைகள் செய்தும், தாங்கள் உடுத்திக்கொள்ள இலைகளிலுைம் பூக்கனிஞலும் ஆடைகள் செய்தும் தங்கள் பொழுதுபோக்கையும், ஒய்வுநேரங்களையும் கழித்தார்கள். நெய்தல்நிலத்து மீனவர்கள், திறைத்திங்கள் நாட்களில் நெய்தல் நிலத்தில் காணப்படும் பூக்களைக்கொண்டு தங்களை அழகுசெய்து, கடற்கரையில் விளையாடியும், நண்டுகளைப் பிடித்தும், அலைகளோடு விளையாடியும், மண்ணுல் சிற்றில்கள் செய்தும் தங்கள் ஓய்வுநேரங்களைச் செலவழித்தார்கள் எனப் பட்டினப்பாலை கூறும. (பட்டினப்பாலே }; 85; 105).
அன்று நல்ல சூழ்நிலைகளைச்சுற்றித் தமிழர்கள் தங்கள் வீடுகளைக் கட்டிஞர்கள். நல்ல பூந்தோட்டத்தின் மத்தியிலே தங்கள் வீடுகளைக் கட்டிஞர்கள் செடிகொடிகளில்ை ஆன பந்தல்கள் இருந்தன. இந்தப் பந்தலின் நிழலின் கீழ்த் தல்வி அடிக்கடி விளையாடுவாள். இங்கு தலைவி செடியையோ, கொடியையோ, அயல்யோ நாட்டுவாள். நாட்டித் தன் கைகளினுல் நீர் பாய்ச்சுவாள். (நற்றிணை 179 : 1: "இல்லெமூ வயலை' 305 :4; வாடிய வயலை. அகம், 89 : 21) சில வேஜ களில் மட்பாண்டத்தில் செடி வளரும். (அகம், 165 : 1. தாழிக்குவளை வாடுமலர் சூட்டி). தலைவி தன் வீட்டிை

Page 112
1. தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
விட்டுத் தன் தலைவரூேடு சென்றுவிட்டால் (உடன்போக்கு) இவன் நாட்டி வளர்த்த இச் செடிகளே செவிலித்தாய்க்கு இவள் நினைவைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும். (நற்றிணை 110; 305).
தமிழ்ச்காதலில் இயற்கை அழகும், மலர்களும் முக்கிய இடத்தைப் பெற்றன. புலவர்கள் காதலர்கள் சந்திக்கும் இடங்களை அழகுபடக் கற்பனை செய்வார்கள். இறையஞர் அகப்பொருள் கூற்றுப்படி காதல் நாடகத்துக்கு இயற்கை ஒழுங்குமுறை (Nature's setting) மிகவும் முக்கியம். மிக அழகாகக் கூறப்படவேண்டும். இறையஞர் அகப்பொருள் கூறுமுன்பே இத்தகைய காதல் காட்சிகளைச் சங்க இலக்கியம் கூறியுள்ளது. வேங்கைப்பூக்களைத் தலைவி பறிக்கும்போது தலைவன் அவளைச் சந்திக்கின்ருன். தலைவி தன் தோழியர்களோடு திறந்த வெளியில் பூக்களைப் பறித்துக்கொண்டிருப்பாள். வேங்கை மரத்தைப் பார்த்து வேங்கை, வேங்கை அல்லது புலி, புலி என்று சத்தம்போட்டால் வேங்கை மரமானது குழந்தைகள் அதன் பூக்களைப் பறிக்கச்செய்யும் அளவுக்குத் தன் கிளைகளைத் தாழ்த்தும் என்பது குழந்தைகளின் நம்பிக்கையாகும். தலைவி தன் தோழிகளுடன் வேங்கை மரத்தின்கீழ் இவ் விளையாட்டை விளையாடுவாள். புலி புலி என்று சத்தம் போடுவாள். அங்கு வேட்டையாட வந்த இளம் தலைவன் இச் சத்தத்தைக்கேட்டு உண்மையான புலி என்று நினைத்து அவ்வழியே வருவான். புலி எங்கே? என்று கேட்டுக்கொண்டு தலைவன் வருவான். பெண்கள் (தோழிகள்) ஒர் ஆளுக்குப் பின்னல் ஓர் ஆள் ஒளித்துக்கொண் டிருப்பார்கள். உங்கள் வாய்களில் இருந்து பொய் வரலாமா ? என்று சொல்லிக்கொண்டு தலைவன் விாைந்துகொண்டிருக்கும் வேளையில் தலைவனின் கண்களும், தலைவியின் கண்களும் சந்திக் கும், பேசும். (அகம். 48 52)
வேங்கை மரம் குறிஞ்சி நிலத்துக்குரிய மரமாகும். இம் மரத்துக்கும் காதலுக்கும் தொடர்பு உண்டு. வேங்கைப் பூக்கள் ரங்க நிறமானவை. பார்ப்பதற்கு அழகானவை. நெருப்புத் தணலுக்கு ஒப்பிடுவார்கள். வேங்கைப் பூக்கள் மலைக்குமேல் கிடப்பது, புலி உறங்கும் காட்சியைப் புலவர்களுக்குப் புலப் படுத்தும். வேங்கை மரம் பூக்கும் காலத்துக்காகக் காதலர்கள் காந்து இருப்பர். வேங்கை மரம் பூத்தால், திருமணம் சீக்கிரம் நடக்கும் என்பது நம்பிக்கையாகும். (பரி. 14, 11-12; ayasub. 12).

தமிழர்கன் பூக்கள்கொண்டு எல்லாம் சொல்லிவிட்டார்கள் 177
வேங்கைமரம் மரங்களுக்குள்ளே மிகவும் நிழல் கொண்டதும், அழகுமிக்கதுமாகும். பூத்த வேங்கை மரத்தின் கீழ்தான் தொடக்கத்தில் திருமணங்கள் நடந்திருக்கவேண்டும். வேங்கை மலர்வது காதலர்களுக்கு நல்ல சகுனமாகும்:
வேங்கை பூத்துள்ளது- எனவே திருமணம் செய்யும்படி தலைவி தலைவனை வேண்டுவாள். தலைவி தோழியைப் பார்த்து இதோ வேங்கை பூத்துள்ளது. என் தலைவர் தம் பயணத்தை முடித்துவிட்டு வெகுவிரைவில் வந்து திருமணம் செய்து கொள்வார் என்பாள். (அகம். 2. கலி. 38; நற். 206; அகம், 378)
இளம் மணமக்கள் வேங்கைப் பூவால் தங்களே அழகுபடுத்திக் கொண்டு திருமணக்கோலத்துடன் காணப்படுவார்கள். திருமண நிகழ்ச்சிகள், நடனங்கள், கொண்டாட்டங்கள் வேங்கை மரத்தின் கீழ் நடைபெறும். (நற்றின. 313 ; கலி. 14 குறு. 241)
குறுந்தொகையில் ஓர் அழகிய உருக்கமான பாடல் உண்டு. வேங்கை பூக்கும் காலத்தில் தான் வருவதாகக் கூறிய தலைவன் வரக் காலம் தாழ்த்துகின்றன். ஆணுல் வேங்கை மரமோ உரிய காலத்தில் பூக்க மறக்கவில்லை. இக் காட்சியைக் காணும் தலவி தன்னை அறியாமலே அழுகின்ருள். (குறு.241) அல்லது (நற். 241)
தங்கள் களவுக் காலத்தில் வேங்கை மலர்களையே காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் கையுறையாகக் கொடுக்க விரும்பினர். வேங்கை மரத்தின் கீழ் மலர்மால்களைத் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர், (நற். 313) தலைவன் தான் கொண்டுவந்த பூக்களைக்கொண்டு தன் தலைவியின் கூந்தலில் சூடுவான். (குறு. 312. 5) 'கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்து'-குறு நிலமன்னர்கள் பூச்செண்டுகளையும், இலைகளால் ஆன ஆட்ை களையும், இடையில் அணியக்கூடிய இலையாலான இடை ஆடை களையும் அன்பளிப்புச் செய்தார்கள். (குறு. 214; cfr, குறு. 338, 842 : บเกิ• 6 ; 66 )
தலைவன் ஒருவன் தலைவிக்குத் தன்மலையில் இருந்து சில பூக்களை அன்பளிப்பாகக் கொண்டுவந்தான். தோழி தலைவனைக் கடிந்துகொள்கின்ருள். நீங்கள் வந்து போவதில் அக்கம் பக்கத்தில் அலர் உண்டாகின்றது. களவில் சந்திப்பதை நிறுத்தி விட்டு விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்வது சிறந்தது என்கின்ருள் தோழி. 'முருகனுக்குரிய எங்கள் மலைகளில்கூட இத்தகைய பூக்கள் பூக்கின்றன” என்று கூறித்
12 س-.'

Page 113
T தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
தலவிக்குத் தலைவன் கொண்டுவந்த பூக்களை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ருள் (குறு. )
தலைவி ஒருமுறை தலைவனைக் காதலிக்கத் தொடங்கிளுல் அவஞேடு தொடர்புள்ள ஒவ்வொரு பொருளையும் ஆவலோடு விருமபுகின்ருள். இயற்கைப்பொருட்கள். அவன் இருக்கும் மலைகள், அந்த மலைகள் மேல் செல்லுகின்ற மேகங்கள், அவன் இருக்கின்ற மலைகளில் இருந்து வருகின்ற தண்ணீரைக் கொண்டுவருகின்ற ஆறுகள் குளங்கள் மல் அருவியில் இருந்து ஓடிவருகின்ற செடிகளையும், கொடிகளையும் அவ்ன் பெரிதும் விரும்புகின்ருள். தலைவி தன் தோழியிடம் இவ்வாறு கூறுவாள்: ‘'இப்பொழுதுவரையும் அவர் இருக்கும் மலைகளைப் பார்த்து ஆறுதல் அடைந்தேன். ஆளுல் இப்போது மாலை நேரமாகின்றது. ஆழ்கடலில் கப்பலானது அமிழ்வதுபோல் மெல்லமெல்ல அவர் இருக்கும் மலை மறைகின்றது" என்கின்ருள் தலைவி. (குறு. 240) இன்னுெரு தலைவி சொல்கின்ருள்-நான் என் தலைவனுடைய மலைகளைக் கண்டுகொண்டேன். துன்பமும் மறைந்துவிட்டது என்பாள். (குறு. 249)
தலைவனின் பிரிவின்போது இயற்கையில் உள்ள பொருள்கள் அவனைத் தேற்றுகின்றன. தன்னுடைய தலைவளுேடு தொடர்பு கொண்ட மலையைத் தலைவி விரும்புகின்ருள் என்பதற்கு ஒளவை ஒர் அழகிய பாடலை நமக்குக் குறுந்தொகையின் தந்திருக்கின்ருள்.
o’Jaysayar Aastawr Ayesatar passar
மனவுக்கோப் பன்ன கன்னெடுங் கூந்தல் Jwas avait Les Gar Luw (94S tuAru-Giஇன்றும் பாடுக பாட்டே அவர் கன்னடுங் குன்றம் பாடிய பாட்டே." (குறு )ே
தலைவி தலைவனைப் பிரிந்து வாடுகின்ருள். தோழியர்கள் வந்து அடியேய் எப்படி நீ இத் துன்பத்தைத் தாங்கிக் கொண்டாய் என்று கேட்டபோது அவள் சொல்கின்ருள். தன் தலைவன் இருக்கின்ற மலையில் இருந்து இரவு பெய்த மழையினுல் காந்தள் செடி ஒன்று அடிபட்டு இங்கு வந்து விழுந்தது. நான் அதை எடுத்தேன். என் தலைவருடைய மலையில் இருந்து அது வந்த ால் அதைப் பலமுறை முத்தம் செய்தேன. அதை என்
ாம் மகிழ்ச்சி அடைகின்றேன். திருமண நாள்வரையும் காத் 3. கமுடியும். என் தாய் நான் ஆற்றில் இருந்து எடுத்து
 
 

தமிழர்கள் பூக்கன்கொண்டு எல்லாம் சொல்லிவிட்டார்கள் 1
வந்த செடியை என் தோட்டத்தில் நாட்டுவதைக் கண்டாம். அவள் ஒன்றுமே பேசவில்லை. அவள் ஒன்றும் பேசாமல் இருந்ததற்கு-அவள் நல்ல குனத்திற்கு அவளுக்கு விண்ண கத்தைக் கொடுத்தாலும் அது போதாது என்கிருள் தலைவி. (குறு. 361)
திருமணச் சடங்கின்போதுகூட பூக்களின் இதழ்களும், நெல்தானியங்களும் பயன்படுத்தப்பட்டன. மண அறைக்குள் மணப்பெண்ணை அழைத்துச் செல்லுமுன் குழந்தைப் பேறு கொண்ட நான்கு பெண்கள் பூக்களையும், தானியங்களையும் மணப்பெண்ணின் மீது தூவி இவ் வார்த்தைகளைக் கூறுவர் *கற்பில் நின்று தவருமல் நீ நன்மை செய்வாயாக கணவனுக்கு என்றும் நல்ல துணையாய் இருந்து அவரை என்றும் அன்பு செய்வாயாக." (அகம், 88) -திருமணச் சடங்கின்போது மலச் களாலான கடவுளின் உருவத்தைச் செய்து வேங்கைமலர்கள் புற்கள் நடுவே வைத்து வணங்கினர். (காண். அகம், 136)
காதலில் தோல்வி அடைந்த தலைவன் எருக்கமால அணிந்து மடல் ஏறிஞன். (குறு. 17 182; நற். 220)
தமிழர்கள் பூக்கள் கொண்டு தங்கள் அன்பை, காதல், நட்பை விருந்தோம்பல் வறுமையை தேவைகளைச் சொன் ஞர்கள். அந்கியர்கள் தங்கள் கிராமங்கள் வழியே தங்கள் பயணங்களை மேற்கொண்டால் அன்பின் நட்பின், அடையான மாகப் பூக்களை அன்பளிப்புச் செய்தார்கள். (saudsLriä 428)
மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரையும், ஏறத்தாழ நான்குமைல் தூரம் வரையும் உள்ள வீதிகள் மலர்களால் அணி செய்யப்பட்டிருந்தன. திருப்பரங்குன்றத்துக்குச் சென்ற திருப் பயண்ணிகள் தங்களை மலர்களால் ஒப்பனைசெய்து இருந்தனர். ஆண்களும், பெண்களும் சமய-சமூக நிகழ்ச்சிகளின்போது அதிகமாக மலர்மாலைகளை அணிந்து சென்றனர். (பரிபாடல் 19, 15-18) புலவர்களும் பானர்களும் அரசர்களின் குறுநில மன்னர்களின் புகழைப் பாடச் சென்றபோது யானைகளும், நிலங் களும், பட்டுப்பொருட்களும் மட்டும் பெறவில்லை; பொற்ருமரை களும் புெற்ருர்கள். பாணர்கள் தங்கள் இசைக்கருவிகளை பூவம் மால்களர்ல் அணி செய்திருந்தார்கள். (பொரு, 159-60)
"oaw Mauamas iš Saraw (Bafaq. Panou
கரியிரும்பித்தை பொலியச் சூட்டி

Page 114
10. Sauferuas. sepa-saffair arayui. usufanyi
(பெரும்பாளுற்றுப்படை 481-482. மலைபடுகடாம். 568-569; புறம். 12, 1; 29, 1; 89; 4-21; 126, 1-8; கலி. 55, 2; 85, 2 புறம், 11, 18. புறம் 242, 2-3 'வெள்ளி நாராற் பூப் பெற் நிசினே." 153, 7-8)
துக்கத்தின்போது மலர்களும், மாலைகளும் கொண்டு. தமிழர்கள் தங்களை அழகு செய்யவில்லை. சாத்தன் என்ற வள்ளல் இறந்துவிட்டான். எல்லோரும் எங்கும் துக்கம் கொண்டாடுகின்றனர். அப்போது முல்லைப் பூ கொல்லெனச் சிரித்துக்கொண்டிருந்தது. இக் காட்சியைப் பார்த்த நல்லாதஞர் என்ற புலவர்
'முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் காட்டே?” (புறம், 342) என்று பாடுகின்ருர்,
உள்ளத்தை உருக வைக்கும் பாடல்களுள் இப் பாடல் தலை சிறந்தது.
“g)&T Gaunt Geşt-irf alâkır Gurt Gasrü urf
கல்வியாழ் மருப்பின் மெல்ல வாங்கி பாணன் சூடான் பாடினி அணியாள், ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல்வேல் சாத்தன் மாய்ர்த பின்றை gada) ayub usaGauer aabanggit sa "GL” (山血山。248)
அக்காலத்தில் விதவைகளின் வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக் குரியதாய் இருந்தது. அவர்கள் கற்களால் ஆன கட்டிலில் உறங்கி ஆம்பல் மலரின் தானியங்களைச் சாப்பிட வேண்டும். ஒரு புலவர் சொல்கின்ருர்: இப்படிப்பட்ட வாழ்க்கை தடத்துவதை விடக் கணவளுேடு உடன் கட்டை ஏறுவது மேல். குளிர்ந்த ஏரி யில்உள்ள தாமரையின் குளிர்ச்சியைவிடக் கணவனின் மரணம் படுக்கையில் உள்ள தீ மேல் என்பார்.
"அணிய தாமே சிறுவெள்ளாம்பல்
இளைய மாகத் தழையா யினவே, இனியே, பெருவளக் கொழுநன் மாய்க்தெனப் பொழுதுமறுத் தின்னு வைகலுண்ணும் அல்லிப் படூஉம் புல்லா பினவே." (Apth. 248)
சேர, சோழ, பாண்டிய அரசர்களின் அடையாளப் பூக்களாக
ဖုံးခံ 凯 பணம் பூ ஆத்திப் பூ இருந்து வந்துள்ளன. (புறம் هو صسM4 : l

தமிழர்கள் பூக்கள்கொண்டு எல்லாம் சொல்லிவிட்டார்கள் 181
போர்க்காத்துக்குச் சென்றபோது அரசர்களும், போர் வீரர் கரும் மலர்கள் அணிந்து சென்ருச்கள்.
தமிழர்கள் மிருகங்களையும், பறவைகளையும் அதிகம் நேசித் தார்கள். பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தான். (புறம். 200, 9-11; 201, 2-3 ; சிறுபாணுற்றுப்படை 87-91)
கபிலர் குறிஞ்சிப்பாட்டு எழுதியிருக்கின்றர்.
தமிழர்கள் இயற்கையை அதிகம் நேசித்தார்கள். நுண் கல்களை நன்கு வளர்த்தார்கள். தமிழர்கள் இசையிலும், ஒவியத் திலும், கட்டடக் கலையிலும் இயற்கைக்கு முக்கிய இடம் கொடுத் தார்கள். 'இந்த இயற்கைமேல் கொண்ட அன்புதான் வீட்டி லும் வீட்டிலுள்ள பொருட்கள்மேலும் செடிகள், இலைகள் பூக்கள், மிருகங்கள், பறவைகள் போன்றவற்றைப் பயன்படுத்த -வும், அழகுக்கலைக்கு இவைகளைத் தமிழர்கள் உபயோகிக்கவும் காரணமாயிருந்தன என்பார் P. T. சிறீனிவாச ஐயங்கார். அடி கிளார் இயற்கையையும், பூக்களையும் தம் தனிப்பட்ட வாழ்க்க்ை யில் நேசித்ததை அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்.

Page 115
7. தமிழில் அச்சேறிய முதல் நூல்களும் தனிநாயக அடிகளாரும்
தனிநாயக அடிகளார் தாம் மேற்கொண்ட தமிழ்த்துதின் போது பல உலகநாடுகளுக்குச் சென்ருர், அப்படிப்பட்ட உலகத்தூதின்போது ஹாவட் பல்கலைக்கழகம், பாரிஸ் நூலகம் வத்திக்கான் நூலகம் ஆகிய இடங்களுக்குச் சென்று தமிழில் அச்சேறிய முதல் நூல்களைக் கனடுபிடித்தார். அவை கடந்த நானூறு ஆண்டுகள்ாக மறைந்துகிடந்தன. கிரிசித்தியானி வணக்கம், தம்பிரான் வணக்கம், அடியார் வரலாறு என்ற O ano Ano 5 5 நூல்களைக் கண்டுபிடித்த இருபதாம் நூற்ருண்டுக் கொலம்பஸ் என்ற அதிகாரத்தில் படித்தோம். இக் கட்டுரையில் அடிகளார் இன்னும் ஒரு சில புதிய செய்திகளைத் தருகின்ருர். அதனை நோக்குவோம். Tamil Culture" என்ற Giglificio, 1954gh geirbreið *The first books printed in Tamil” என்று தலைப்பிட்டு இக் கட்டுரையை அடிகளார் எழுதியிருந்தார். இக் கட்டுரையில் காணக்கிடக்கும் புதிய செய்தி களை இங்கு தொகுத்துத் தருகின்ருேம்,
16ஆம் நூற்குண்டில் ஐரோப்பாவில் இருந்து இந்தியா வுக்கும், இலங்கைக்கும் கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பவந்த சமயத் தூதுவர்களின் கல்வித்திட்டத்தின் ஒருபகுதி கல்வி நிறுவனங்களை அமைப்பதும், அச்சுக்கலையை அறிமுகம் செய்துவைப்பதாகவும் இருந்தது. 16ஆம் நூற்றண்டின் தலைசிறந்த சமயத்தூதுவர்கள், புனித பிரான்சிஸ் சவேரியாரைப் போன்றவர்கள், ஐரோப்பா, Ura fisifo, GasrdušLurr (Coimbra), JFravuoscirasur (Salamanca), உரோமை போன்ற பல்கலைக்கழகங்களில் பயின்று பட்டங்கள் பல பெற்ற மேதைகளாவர். இவர்கள் தங்கள் நாடுகளில் நடந்த கல்வி மறுமலர்ச்சியைக் கண்டவர்கள் ஆவர். இத்தகையவர்கள் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் வந்தபோது ஐரோப்பாவில் தங்கள் காலத்தில் நிகழ்ந்துகொண்டிருந்த கல்வியில் புகுக்கப் பட்ட புதிய மாற்றங்களையும், யுக்திகளையும், புதிய முறைகளையும் அறிமுகம் செய்துவைத்தனர். சமயக்கல்வியையும், சமயம் சாராத கல்வியையும் பரப்ப அவர்கள் கையாண்ட முறைகளுள்

தமிழில் அச்சேறிய முதல் நூல்களும்.அடிகளும் 18s
று-கல்வி நிறுவனங்களாகிய பாடசாலைகள், கல்லூரிகளை றுவினதாகும். மறைக்கல்வி ஆசிரியர்களுக்குத் தகுந்த பயிற்சி அளித்தார்கள். தமிழை எழுதவும், படிக்கவும் பலமுறைகளைப் பின்பற்றிஞர்கள். தமிழை அறிவியல் கண்கொண்டு படிக்கும் முறையைத் தொடங்கிவைத்த பெருமை வெளிநாட்டறிஞரான, கிறிஸ்தவ சமயத் தொண்டரான, என்றிக் என்றிக்கஸ் (Henrique Henriques) என்பவரைச் சாரும். இவர் 1520 முதல் 1600 வரை வாழ்ந்தவர். இவர் தமிழில் நிறைய எழுதியிருந்தார். இவர் 1560ஆம் ஆண்டிலேயே தமிழ்ப் பல்கலைக்கழகம் இலங்கையில் உள்ள மன்ஞரிலேயோ, அல்லது தமிழ்நாட்டில் உள்ள புன்னக் காயிலிலோ நிறுவப்படவேண்டும் எனக் குரல் கொடுத்திருந்தார். இத்தகைய சிறப்புமிக்க வெளிநாட்டுக் கிறிஸ்தவத் தமிழ்த் தொண்டர்களின் பணி கல்வியைப்புகட்டும் புதிய முறைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. கல்வியைப்பரப்ப சமூகத் தொடர்பு சாதனங்களைப் (Massmedia) பயன்படுத்திஞர்கள். திரை அரங்குகளையும் (Theatre), அச்சுப்பொறிகளையும் (Printed Words) பயன்படுத்தினுர்கள்.
அச்சுக்கலை
கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பவும், எழுத்துக்கலையை வளர்க்கவும் வெளிநாட்டுக் கிறிஸ்தவ சமயத் தொண்டர்களுக்குத் துணைபோன சாதனம் அச்சுக்கலையாகும். இவர்களின் நினைவு அலைகள் சமயப்பணியாய் இருந்தபடியால், இவர்கள் இந்தியாவின், அச்சுக்கலைக்கும், இலக்கியத்துக்கும், எழுத்துக்கலைக்கும் செய்த வணிகளை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. இந்தியாவிலும் இலங்கையிலும் கிறிஸ்தவ சமயத்தூதுவர்கள் கல்விக்கும்; மொழிக்கும், மொழியியலுக்கும் அகரமுதலிக்கலைக்கும் (Lexicoக graphy) இலக்கியத்துக்கும் செய்த பணிகள் இன்னும் சரிவர மதிப்பீடு செய்யப்படவில்லை. அவர்களின் சிந்தனை எண்ணம் எல்லாம் ஒரு தனிப்பட்ட சமயத்தைப் பரப்புவதாகவும், காப்பு தாகவும் இருந்தபடியால், கல்விக்கும், இலக்கியத்துக்கும் அவர்கள் செய்த அளப்பரிய சேவையைத் தப்பாக எடைபோடுவது அழகல்ல என்பார் தனிநாயக அடிகளார்.
இந்திய மொழிகளுள் முதல் அச்சுவாகனம் ஏறிய மொழி-தமிழே இந்தியாவில் அச்சுக்கலையை அறிமுகம் செய்துவைத்ததே இந்திய சமூக-கல்வி வளர்ச்சியில் ஒரு மைல்கல்லாகும். 1586 ஆம் ஆண்டு இயேசு சபைக்குருக்கள் ஐரோப்பாவில் இருந்து கொண்டுவந்த இலத்தீன் எழுத்துக்கள் கொண்டு இந்தியாவில்

Page 116
1. தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
உள்ள கோவாவில் முதன்முதலாக அச்சகத்தை (printing Press) நிறுவிஞர்கள். இக்காலத்தில் கோவா அச்சகம் இலத்தி ளிலும், போர்த்துக்கீசத்திலும்தான் அச்சேற்றி வந்தது.
இந்தியாவில் அச்சுப்பொறி அறிமுகம் செய்து வைப்பதற்கு இரண்டு ஆண்டுகட்கு முன்பே, அதாவது 1554ஆம் ஆண்டில், லிஸ்பன் நகரத்தில் gpssb slips së së GFgSugj. (First Tamil Booklet) Që agj நூலில் (முக்கிய) தமிழ் மூலப்பகுதிகளை எடுத்துக்காட்ட உரோம எழுத்துக்களை உபயோகித்தார்கள். 1577ஆம் ஆண்டு கோவாவில் முதல் தமிழ் எழுத்துக்கள் அச்சுப்பொறி பெற்றன. ஆணுல் திருப்திகர மாக அமையவில்லை. அதன்பின்னர் 1578ல் குயிலோனில் இரண்டாம் முறையாக, திருப்திகரமான வகையில் தமிழ் எழுத்துக்கள் அச்சுப்பொறி பெற்றன. 1578ஆம் ஆண்டு அக்டோபர் இருபதாம் நாள் குயிலோனில் செபங்களும், மறைக் கல்வியும் உள்ளடக்கிய ஒரு நூல் வெளியிடப்பட்டது. இச் சிறு நூல் பதிஞறு பக்கங்கள் அடங்கிய 'தம்பிரான் வணக்கம்” என்ற சிறு நூலாகும். இந்நூல் மூலம் இந்திய-இலங்கை மொழிகளுக்குள்ளே தமிழ்மொழி முதல் அச்சுவாகனம் ஏறிய மொழியாக விளங்கியது 6Tsar syqesor të staggjasirgi. “with this booklet of 16 pages entitled Doctrina Christam or Tambiran Vanakkam’ (asti Gritsir ajaordish), Tamil became the first Indian and Ceylonese language in which books were printed.'
அச்சுக்கலையின் அறிமுகத்தாலும், இந்நூல்களின் வெளி யீடுகளினுலும் தமிழ்மக்கள் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவது இயல்பே. கிறிஸ்தவர்களும்- கிறிஸ்தவரல்லாதாரும் முதல் தமிழ்நூல்களை வாங்கி அளப்பரிய செல்வமாகப் போற்றி மகிழ்ந்தனர். கிறிஸ்தவரல்லாதார் முதல் தமிழ்நூல்களை வாங்கிப் போற்றினதுமட்டுமன்றி, அவர்கள் அறிஞர்கள் ஐரோப்பிய நூலாசிரியருடன் சேர்ந்து ஆரம்பகாலத்து கிறிஸ்தவ தமிழ் இலக்கியத்தின் மொழியையும், நடையையும் திருத்தி அமைக்க உதவினர்.
அச்சுவாகனம் ஏறிய உலகமொழிகள் பலவற்றுள்ளும் முதல் அச்சு வாகனம் ஏறிய சிறப்பு தமிழுக்கே உண்டு. தனிநாயக அடிகளார் கூறுகின்ருர்: தமிழ்நாட்டில் அச்சுக்கலை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டையும், நாளையும், ஏனைய உலக நாடுகளில் உள்ள மொழிகள் அச்சு வாகனம் ஏறிய ஆண்டுகளையும், நாள்களையும் ஒப்பிட்டுப்பார்க்கும்போது தமிழ்மொழி குறிப்பிடத்தக்க சிறப்பைப் பெறுகிறது. சீனநாட்டில் 1584ஆம் ஆண்டில்தான் அச்சுக்கல் முதன் முதலாக ஐரோப்பியர்களால் அறிமுகம் செய்து வைக்கப்

தமிழில் அச்சேறிய முதல் நூல்களும்.அடிகளும் 185
பட்டிது. யப்பான் தாட்டில் 1590ஆம் ஆண்டு அச்சுக்கலை முதன் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டில் 1593ஆம் ஆண்டில் அச்சுக்கலை அறிமுகமானது புதிய உலகமாகிய அமெரிக்காவில் உள்ள பேருவில் ஸ்பானிஸ் மொழி யில் அச்சுக்கலை 1584ஆம் ஆண்டு அறிமுகமானது. ஆப்பிரிக்க மொழியில் முதன் முதலாக அச்சுக்கலை அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 1624 ஆகும். ரூசியா நாடு தன் முதல் நூலை 1563ஆம் ஆண்டு அச்சேற்றியது. கொன்ஸ்தாந்திநோபிள் தன் முதல் அச்சகத்தை 1727ஆம் ஆண்டில் நிறுவியது. கிரேக்கநாடு தன் முதல் அச்சகத்தை 1821ல் தொடங்கியது.
கார்த்தில்லா (CARTILHA) என்ற சிறிய தமிழ்நூல் லிஸ்பன் நகரில் 1554ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் அச் சேறியது. இந்நூலைத்தொடர்ந்து 'தம்பிரான் வணக்கம்" என்ற தமிழ்நூல் பிப்ரவரி 20ஆம்நாள் 1577ஆம் ஆண்டில் குயிலோ னில் அச்சேறியது.
கிேரீசித்தியானி வணக்கம்” என்ற தமிழ்நூல் கெச்சினில் நவம்பர் 14ஆம் நாள்1579ஆம் ஆண்டில் அச்சேற்றப்பட்டது. *
“Seyiuuri Gursorgp” (FILOS SANCTORUM) GTsirge தமிழ்நூல் தூத்துக்குடியில் அல்லது புன்னக்காயிலில் 1586ஆம் ஆண்டு அச்சேறியது. 16ஆம் நூற்ருண்டில் ஐரோப்பாக்கண்டத் துக்கு வெளியேயும், அதன் சுற்றுப்புறத்திலும் மேற்கத்திய முறைப்படி அச்சுவாகனம் ஏறிய நூல்களுள் மிகவும் பழைமை யான நூல்கள் தமிழ்நூல்களே என்பார் தனிநாயக அடிகளார்.
தமிழில் அச்சேறிய முதல் தமிழ்நூல்கள் 1. Siits (Cartilha)
இந்நூல் பிப்ரவரி பதினுேராம் நாள் 1554ஆம் ஆண்டு லிஸ்பன் நகரில் அச்சேறியது. 38 பக்கங்களையுடைய சிறிய நூல். ஒரு கிறிஸ்தவன் மீட்படைய எதையெல்லாம் அறிய வேண்டும் என்பதைப்பற்றிக் கூறும் சிறுநூல். இந்நூல் எழுதும்படி பணித்தவர் மூன்ரும் டொம் ஜான் அரசர் (King Dom John II) என்பவராவர். இந்நூலைத் தமிழிலும், போர்த்துக்கீசமொழியிலும் எழுதும்படி அரசர் பணித்தார். தமிழில் விளக்கம் சிவப்பு எழுத்துக்களால் பொறிக்கம் பட்டிருந்தன. தமிழ் மூலப்பகுதிகள் நூல் முழுதும் உரோம -எழுத்துக்களால் அச்சேற்றப்பட்டிருந்தன. தனிநாயக அடிகனார்

Page 117
Asarfëruas egyanfair arripayah umfayah
ஜான் திங்கள் 1954ஆம் ஆண்டில் லிஸ்பனுக்குச் சென்று இந்நூலைப் பார்வையிட்டு இதன் சிறப்பைப் பறைசாற்றிஞர்.
2. தம்பிரான் வணக்கம்
இச் சிறு நூல் 16 பக்கங்களைக் கொண்டது. குயிலோனில் பிப்ரவரி இருபதாம் நாள் 1577ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது. இச் சிறு நூல் கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படை உண்மைகளை விளக்குவதாகும். கிறிஸ்தவ செபங்களையும் கொண்டதாகும். தனிநாயக அடிகளார் இச் சிறு நூல் ஹாவட் கல்லூரியின் நூலகத்தில் 1952ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். தனிநாயக அடிகள8ர் இச் சிறு நூடைப்பற்றிக் கூறுகையில் இவ்வாறு உரைப்பார்.
“This Harvard Copy is the earliest example of printing in the characters of one of the languages of India and the earliest available example of printing executed in India in an Indian language' stain uri.
3. கிரீசித்தியானி வணக்கம்
120 பக்கங்களைக்கொண்ட தமிழ்நூலாகும். நவம்பர் பதிஞன்காம் நாள் 1579ஆம் ஆண்டில் கொச்சினில் வெளியிடப் UL-53 வினு-விடைகொண்ட கிறிஸ்தவ மறையைப் போதிக்கும் நூலாகும். இந்நூல் "சோர்போன்" (Sorbonne) பல்கலைக்கழகத்தில் இருந்ததாகவும் இரண்டாம் உலகப் போரின் போது இந்நூலை "சோர்போன் பல்கலைக்கழகத்தில் இருந்து யாரோ எடுத்துவிட்டார்கள். நல்ல காலமாக அதன் பிரதியை இயேசு சபைக்குருக்கள் எடுத்து வைத்திருந்தார்கள். மறைத்திரு ஜார்ஜ் சூர்கமர் (Schuhammer) என்பவர் இதன் பிரதியை தூத்துக்குடி ஆயராய் அன்று இருந்த திபூச்சியாஸ் ரோச் ஆண்டகைக்குக் கொடுத்தார். ரோச் ஆண்டகை அவர்கள் தனிநாயக அடிகளாருக்கு அதனை அன்பளிப்புச் செய்தார்கள். இதே பிரதியைத் தனிநாயக அடிகளார் 1952ஆம் ஆண்டில் ஹார்வட் பல்கலைக்கழகத்திற்கு அதனைப் படித்துப் பார்ப்பதற் காகக் கடனுகக் கொடுத்தார். அதன் பின்னர் அந்நூல் தன் வசம் இருப்பதாகக் கூறியிருந்தார். 4. "அடியார்கள் வரலாறு" அல்லது புனிதர்களின் வரலாறு
(Flos Sanctorum)
இத் தமிழ்நூல் 1586ஆம் ஆண்டில் புன்னக்காயலில் அச்சேற்றப்பட்டது. ேேபக்கங்களைக் கொண்ட பெரிய நூலாகும்

தமிழில் அச்சேறிய முதல் நூல்களும்.அடிகளும் 187
தனிநாயக அடிகளார். 1954ஆம் ஆண்டு ஜான்மாதத்தில் வத்திக் கான் நூலகத்தில் இந்நூல் இருப்பதைக் கண்டுபிடித்தார். கத்தோலிக்க திருமறையின் புனிதர்களின் வரலாறு பற்றியதாகும், கடந்த நானூறு ஆண்டுகளாக கத்தோலிக்க தமிழ் இலக்கியத் தில் வெளிவந்த எந்தத் தனிநபர் நூலும் இந்நூலை வெல்ல முடியவில்லை என்பர் தனிநாயக அடிகளார்.
fAs a single work of considerations on the Principal feasts of the year, it does not seem that this work of 669. pages has been greatly surpassed in Catholic Tamil Literature during the last four hundred years." (Rev. Prof. Dr. K. S. Thani Nayagam).
தமிழ்மொழியில் அச்சேறிய முதல்நூல்களைக் கண்டுபிடித்து தமிழ்மொழியின் பெருமையைப் பறைசாற்றிய பெருமை அடிகளாரையே சாரும்.

Page 118
8. ஆரம்பகாலத் தமிழ்ச் சமுதாயத்தின் கல்விமான்கள்
தனிநாயக அடிகளார் மேற்கத்திய, கீழைத்தேச கல்வி திலைகளை ஆய்ந்தறிந்த தலைசிறந்த கல்விமான். 1956ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் "Tamil Culture" என்ற முத்திங்கள் -or libe, “The Educators of Early Tamil society' GTsirig தலைப்பில் ஓர் ஆழமான கட்டுரை எழுதியிருந்தார். இக் கட்டுரை யில் ஆங்காங்கே மேற்கத்திய கல்வி முறைகளோடு தமிழ்க் கல்வி முறையை ஒப்பிட்டு, தம் தமிழ்நாட்டுக் கல்விமான்கள் ஏனைய உலகக் கல்விமான்களைவிட எந்த விதத்திலும் சற்றும் குறைந்த வர்களல்லர் என்று கூறி, அன்று இருந்த ஆரம்ப காலத்துத் தமிழ்ச்சமுதாயத்தின் கல்விமான்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்த கல்விமான்களுக்கும் இடையே இருந்த ஒப்புமைக் கூறுகளை அழகுபடக் கூறுகின்ருர் அடிகளார். இக் கட்டுரையில் அடிகளாரின் சிந்தனைகள் சிலவற்றைக் காண்போம்.
சங்க இலக்கியமும், இரட்டைக்காப்பியமும் அன்று இருந்த தமிழ்ச்சமுதாயத்தை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவற்றின் காலம் கி. மு. 200 முதல் கி. பி. 300 என்று கருதப் படுகின்றது.
ஆரம்பசமுதாயத்தின் கல்விமான்கள் முதன்முதலாகப் பெற்றேர்களே. சிறப்பாகக் கூறவேண்டுமாயின் பாணர்கள், விறலியர்கள், கூத்தர்கள் புலவர்கள் போன்றவர்கள் ஆவர். இரட்டைக் காப்பியக்காலத்தில் சமய ஆசிரியர்கள், வேதகாலத்து பிராமணர்கள், சமண, பெளத்த துறவிகள் போன்றவர்கள் தமிழ் நாட்டில் மிக முக்கிய கல்விமான்களாகத் திகழ்ந்தார்கள். சங்க காலத்தின் தொடக்கத்தில் கல்விமுறை சமயச் சார்பற்றதாகவும், மரபுமுறைகள் இல்லாததாகவும் விளங்கின; சங்ககாலத்தின் இறுதிக்காலத்தில் கல்விமுறை சமயச் சார்புள்ளதாகவும், மரபு முறைகளுக்கு உட்பட்டதாகவும், இருந்தன. சங்க இலக்கியத்தின் கல்வி வளர்ச்சியின் சிறப்பு என்னவெனில் கிரேக்கம், வடஇந்தியா போன்ற பழம்பெரும் நாடுகளில் உள்ள கல்விமுறையை ஒத்தி

ஆரம்பகாலத் தமிழ்ச்சமுதாயத்தின் கல்விமான்கள் so
ருந்தது. சமுதாயத்திலுள்ள பொருளாதாரத் தேவைகளுக்கேற்ப கல்விமுறைகள் ஏற்படுகின்றன.
கல்வியானது சமயச்சடங்குகள், பாடல்கள், AB L-avriilassir, இறைவாக்கு (Prophecy) மந்திரக் கவிதை (Mantic poetry) இவற்றுடன் தோன்றுகின்றது என்பதை வேதமந்திரங்கள், கிரேக்க கல்வி முறையாலும் (MOLPE) அறிகின்ருேம். மத மந்திரங்கள் மூலம் தோன்றிய கல்வி, படிப்படியாக மனித ஆற்றல்களில் நம்பிக்கை வைத்த கால கட்டத்தை அடைகின்றது. மனிதனை மையமாக வைத்துத் தொடங்குகின்றது. வீரமனிதர் களின் செயற்கரிய செயல்களையும், புகழையும் பாடுகின்றவர்களே மூக்கிய கல்விமான்களாக இடம் பெறுகின்ருர்கள். இரண்டாவது நிலை இலக்கியத்திலும் கல்வியிலும் பாணர்காலம் (Bardic age) என அழைக்கப்படுகின்றது. மூன்ருவது நிலை பாணர்கள் காலம் அல்ல; மாருக, புலவர்கள் காலமாகும். இக்கால கட்டத்தில் இவர்களே நாட்டின் தலைசிறந்த கல்விமான்களாகப் புகழ்பெற் றனர். பழந்தமிழ்மக்களின் கல்வியின் வரலாற்றில் நான்காவது தத்துவஞானிகளும், சமயக்கல்விமான்களும் ஆவர். எல்லாச் சமுதாயத்திலும் இந்த நான்கு வகையினரும் இருந்து வருகின்றனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு வகையினர் மேலோங்கி இருந்தாலும், மற்றவர்கள் இல்லாமல் @తుడి,
பழங்காலத்தில் ஒருவர்மேல் எல்லா அதிகாரங்களும், ஆற்றல்களும் சுமத்தப்பட்டன. அவர் பல பணிகளைப் புரிந்தார். சமுதாயம் முன்னேற்றம் அடைய அடைய, இப்பணிகள் பலரிடம் பகிர்ந்து அளிக்கப்பட்டன. ஆரம்ப சமுதாயத்தில், அச் 4FCop:5Fruti தமிழாகவோ, இந்தோ ஆரியனுகவோ, கிரேக்கமாகவோ இருந் தாலும், குருத்துவம், இறைவாக்கு கவிதை, தத்துவம், கற்பித்தல் போன்ற பணிகள் ஒரு தனிப்பட்ட நபரில் தங்கி இருந்தன. காலப்போக்கில் பணிகளும், பணிகளைப் புரிந்தவர் களும் வேறுபட்டனர். அன்று ஒருவர் குருவாக, இறை வாக்குனராக, புலவராக, தத்துவஞானியாக, ஆசிரியராகம் uRoflyfissitif. (Five types: priest, prophet, poet, phile sopher and pedagogue repose in a single figure.) இன்றும் சைபீரிய மக்கள் மத்தியில் தனிநபர் பல பணிகளைப் புரிந்து assirogi. (Even today among the TATARS and other Siberian peoples, the Shamans and bakshas are described as “Singers, poets, musicians, diviners and doctors: the
guardians of popular religious traditions and the preserverg. of ancient legend):

Page 119
90 தனிநாயக அடிகளின் வாழ்க்யும் பணியும்
சக்தியுள்ள குருக்கள்
இவர்கள் ஆரம்ப சமுதாயங்களின் முதல் கல்விமான்கள். பல ஆற்றல்களைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் அதிகாரம் முழு தேரப் பணியாகவோ, மரபுவழி வந்ததாகவோ அமையவில்லை. பொதுவாக வயதில் முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். குருக்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் இருந்தார்கள். அவர்கள் முருகனுக்குக் காணிக்கைகளும், பலிப்பொருட்களையும் ஒப்புக் கொடுத்தார்கள். மக்களை வர இருக்கும் துன்பத்தில் இருந்து காப்பாற்ற வேண்டினர். ஆண்களும், பெண்களும், குழந்தை களும் ஒன்றுசேர்ந்து நடனம் புரிந்தார்கள். (காண். குறுந் தொகை 53 புறம் 258, 3 அகம். 22).
குருக்கள் சில சகுனங்களை விளக்குகின்றவர்களாகவும், இறைவாக்கு உரைப்பவர்களாகவும் விளங்கிஞர்கள். அவர்கள் பாடல்களும், உரைகளும் ஆரம்பகாலத்துக் கவிதையாகவும், வாய்மொழி இலக்கியமாகவும் விளங்கி இருக்கவேண்டும், சமுதாயம் அவற்றிற்குப் பெரும் மதிப்புக்கொடுத்து வந்திருக்க வேண்டும். தமிழ்க்கவிதையின் தோற்றம் இந்நிலையில் இருந்து arissoissal airsh, (From a Mantic Stage) easurisd சொல்லும் பெண்ணை 'அகவல் மகள்" எனக் குறுந்தொகை அழைக்கின்றது. அகவல் என்ால் கூப்பிடுவது; அழைப்பது ஆகும். கடவுள்களையும், ஆவிகளையும் கூப்பிடுவதால் இவன் 'அகவல் மகள்" என அழைக்கப்பட்டாள்.
ஆரம்பகாலத்துக் குருக்கள் (பெண்களும், ஆண்களும்) வருங்காலத்ை தப்பற்றிக் கூறுகின்றவர்கள்' எனக் கண்டோம். சமயச்சடங்கின்போது அவர்கள் தங்களை மறந்தநிலயில் மறைவான உண்மைகளை வெளிப்படுத்தினர். பின் நிகழப் போவதை முன்கூறினர். சிலப்பதிகாரத்தில் ஆயர்குலப் பெண்கள் ஆடும்போது சாலினி பின் நிகழப்போகும் நிகழ்ச்சி பற்றிக் கூறுகின்ருள். அதிகாரத்தொனியுடன் அவள் பேசு கின்ருள். எல்லோரும் வியப்புடன் அவள் சொல்வதைக் கேட்கின்றனர். ஆதிவாசி மக்களை அறிவதற்கும் மானிட இயல் அறிவதற்கும் சிலப்பதிகாரம் 12, 17, 24 அதிகாரங்கள் பெரிதும் துணைசெய்யும்,
கிரேக்க இலக்கியம் மூலம் ஆரம்ப கிரேக்க சமுதாயத்தில்
மந்திர சக்திகன் (Shamanism) இருந்ததற்குப் போதிய சான்றுகள்
ல்ல. கிரேக்கர்கள் பகுத்தறிவையும் சான்றுகளையும் விரும்பு கின்றவர்கள் அவர்கள் மந்திர தந்திரங்களை வெறுத்தார்கள்

ஆரம்பகாலத் தமிழ்ச்சமுதாயத்தின் assics.uoreirasar 1.
ஆளுல் அவைகளை ஒருமூலயில், பின்னணியில் தன்னி விட்டார்கள். இருந்தும் அவர்களுடைய முதல் கவிதைகளுக்கும் இவற்றிற்கும் தொடர்பு உண்டு. கிரேக்க கவிதைகளின் ஆரம்ப நிக்லயில பாட்டு இசை, நடனம் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றன. முதல் கவிதைகளின் ஆசிரியர்களான மியுசேயஸ், (Musaeus) i Guusiv (Orpheus) DjöÁST Söpdöser Quibíocë தார்கள். அப்போல்லோ, மியுசஸ் (Appole Muses) மந்திர சக்திகளை உருவாக்குகின்றவர்கள். டயனிசியுஸ் (Dionysius) இறைவாக்கை ஏவுகின்றவர். இவர் பழைய கோபதாபத்தைக் கண்டுபிடித்துப் பழிக்குப்பழி வாங்குகின்றவர். துன்பத்தையும் நோயையும் வரவழைக்கக் கூடியவர். இவர்கள் முருகனம் போன்ற கடவுள்கள் தமிழ் உலகில் இத்தகைய செயல்களை உண்டு பண்ணுவதற்கு ஒப்பிடலாம்.
சீசர், தயோதரஸ் (Diodurus) சிக்குளஸ் (Siculus) ஸ்டபோ (Strabo) போன்ற சிறப்புமிக்க எழுத்தாளர்களின் கூற்றுப்படி பிரான்சில் (Gaul) பிரித்தானியாவில் ஸ்கெரிட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளில் கல்வியின் வரலாறு ஆற்றல் மிக்க மந்திர சக்தியுள்ள குருக்களால் தொடங்கப்பட்டது. அவர்கள் சமுதாயத்தில் சமயச்சடங்குகள் நிகழ்த்துகின்ற வராகவும், புலவராகவும், சட்டம் செய்கின்றவராகவும், நடுவ ாாகவும், ஆசிரியராகவும் பல்வேறு பணிகள் புரிந்தார்கள்.
0ானர்களும்-இசைவாணர்களும்
தமிழ்ச் சமுதாயத்தில் கல்வியின் வளர்ச்சியில் இரண்டாவது நிலையில் உள்ளவர்கள் பாணர்கள் ஆவர். இவர்கள் இசை வாணர்கள், நடனம் செய்வோர், புகழ்ச்சிப்பண் பாடுவோர் ஆவர். புறநானூற்றுக் கவிதைகள் பல இவர்கள் பணியை விளக்கும். வீரர்கள் பாராட்டப்பெற்ருர்கள். புறநானூற்றில் வரும சில பாடல்களில் உடல் வளம், வீரம், பசுக்களைக் கொள்ளையடிப்போர் பாராட்டப்பெற்றனர். கொள்கிாயடித்த பொருள்களைப் பங்கிடுகின்ற தலைவர், போருக்காக ஆயுதங்களைச் செய்கின்ற கொல்லர்கள், வீர உணர்ச்சியைத் தூண்டுகின்ற முழவை முழங்குவோர், யாழின் இசை கொண்டு வீரர்களின் புகழைப்பாடுவோர் வீட்டிலும், நாட்டிலும் வீரதீரச் செயல்கள் செய்தோர் பெரிதும் பாணர்களால் பாராட்டப்பெற்றனர்.
கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களைப் பகிர்ந்து கொடுக்கும் தலேவனை மையமாக வைத்து ஒருவித குழு உணர்ச்சி வளர

Page 120
重多2 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
தொடங்கியது. பாணன் தன் பாடல்களில் கடந்தகால விரச் செயல்களையும், நிகழ்காலத்து ஆசைகளையும், நம்பிக்கைகளையும் வெளியிடுகின்ற குழுவின் குர்லாகத் திகழ்ந்தான். அவன் இனத்தின் பெருமையையும், சிறப்பாகத் தலைவனின் பெருமை யையும், வீர உணர்ச்சிக்கு உயிர் கொடுப்பவனுகவும், தலவனின் விருந்தோம்பல், ஈகைப்பண்புகளைப்பற்றிப் பாடுகின்றவஞகவும் பாணன் விளங்கிஞன். கிராமத்தில் உள்ள மன்றங்களில் கிராம மக்களை வரவேற்று அவர்கள் இன்பத்துக்காக இனத்தின் பெருமைகளையும், போர்க்களத்தில் மடிந்த வீரர்களின் சிறப்புக் களையும் உயிரோடு உள்ள தலைவர்களின் புகழையும் பாணன் பாடுவான்.
குருக்களிடம் இருந்த பணிசெய்யும் ஆற்றல் இப்போது பாணனிடம் வந்து தங்கியது. போரை மையமாகக்கொண்ட சமுதாயத்தின் (Martial Society) சிந்தனைகள், இலட்சியங்கள், ஆசைகள், நம்பிக்கைகள் சமயச் சார்பற்ற தலைவர்களிடம் இருப்பதே சிறந்தது என அக்காலச் சமுதாயம் விரும்பியது. எனவே பாணர்கள் முக்கிய இடத்தைப் பெற்ருர்கள். பாணனின் பணி, வீர உணர்வுகளைத்தட்டி எழுப்புவதும், மக்களின் பொழுது, போக்குக்குத் தன்னுடைய பாடகர் குழு (ஆண், பெண், சிருர்கள், இசைவாணர்கள், நடனம்புரிவோர்-பாணனிடம் இருந்தனர்) கொண்டு இன்பத்தையும் கொடுத்தான். தமிழ்நாட்டில் பாணர்கள் ஒரு வகுப்பிற்குச் சேர்ந்தவர்களாக, முன்ஞேர் வழிவந்த ஒரு பரம்பரைச் சொத்தாகப் படிப்படியாக வளர ஆரம்பித்தனர்.
பேண்" என்ற இசைக்கருவி அடியாக வந்த சொல்லே Lirarr raff. (sirar. Lib-lit, movement, dance) unlala: ur -- dio (Song with dance). &Gråšas protq; ad assa. Lபாடலுக்கும், ஆடலுக்கும் இசைக்கருவிகள் இன்றியமையாதவை களாகக் கருதப்பட்டன. பாணர்கள் தாங்கள் வைத்திருந்த இசைக்கருவிகளின் தன்மைக்கேற்ப வேறுபட்டனர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு வகையைச் சேர்ந்த பாணர் குழுவினர் இருந்தனர் போலும்,
தமிழ்நாட்டில் பாணர்கள் பாதுகாவலர்களைப் புரவலர்களைத் தேடி அலைந்தனர். வாய்மொழி இலக்கியம், ஏட்டு இலக்கியம், நுண்கல ஆகியவற்றின் வளர்ச்சியில் பாணர்கள் முக்கிய இடம் வகுத்தனர்.

ஆரம்பகாலத் தமிழ்ச்சமுதாயத்தின் கல்விமான்கள் 198
பாணர்கள் சமுதாயத்துக்குச் செய்த ச்ேவைகளுக்குப் பரிசு களும், அரசர்களின் ஆதரவையும் பெற்றனர். இப்படியே வெளிநாடுகளிலும் செய்தனர்.
The Huns, Celts and Saxons were used to give Presents of Jewels, bracelets, bags of gold and extensive lands being given by their Chiefs and kings to bards and minstrels. Princely Patronage was the bard's reward for his service to the Community,'
பாணர்களின் இலக்கியம் பற்றிய செய்திகள் எல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தவையே பாணர்கள் தங்கள் தலைவர். களைப் பற்றிப் பாடிய சில பாடல்களே.
பாணர்களுக்குப் பிறகு சமுதாயத்தில் முக்கிய இடம் பெற்றவர்கள் புலவர்களே. தமிழ்மொழியில் பாணர், புலவர் என்ற இரு சொற்பிரயோகத்துக்கும் வேறுபாடு உண்டு. கிரேக்க மொழியில் ஆயிடோஸ் (AOIDOS) என்ற சொல்லுக்கும், பொயிட்டஸ் (POIETES) என்ற சொல்லுக்கும் வேறுபாடு உண்டு. இந்தோ-ஆரிய சமுதாயத்தில் (SUTA) என்ற சொல்லுக்கும், கவி (KAVI) என்ற சொல்லுக்கும் வேறுபாடு உண்டு.
பிற்காலத்தில் பாணர்களைப் போன்று புலவர்களும் புரவலர் களேப் பாராட்டிப் புகழ ஆரம்பித்தார்கள்.
ஆற்றுப்படையில் புலவர் ஒருவர் கற்பனை இவ்வாறு செய்கின்ருச்: பாணன் ஒருவன் அரசன் ஒருவனிடம் பரிசுகள் பெற்றபின் ஒரு பாணர் குழுவைச் சந்திக்கின்றன். அவர்களைத் தனக்குப்பரிசுகள் தந்த அரசனிடம் ஆற்றுப்படுத்துகின்றன். (காண். புறம் 70)
பாணர்கள் சொல்லாற்றல் மிக்கவர்களாக விளங்கிருர்கள். காலப்போக்கில் புலவர்கள் முன்னணியில் இருந்தபோது பாணர் களின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. பானர்களைக் காதலில் ஈடுபடுகின்றவர்களின் தோழர்கள் என வர்ணிக்கத் தொடங்கிஞர்கள். குறுந்தொகையில், 33வது பாடலில் பாணன் ஒருவனின் பேச்சுவன்மையால் கவரப்பட்ட ஓர் இளம் பெண் இவ்வாறு கூறுகின்ருள். அந்நிய நாட்டிலே இந்தப் பாணன்
13-.sی

Page 121
194 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
இவ்வளவு பேச்சுவன்மையுடன் காணப்பட்டால் தன் சொந்த நாட்டில் எவ்வளவு அழகாகப் பேசுவானே? குறுந்தொகை. 33: 1-2.
'அன்ரூ பீவஞேரின மாளுக்கன்
தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ"
இளம் மானுக்கன்” (youthful Student) என்ற சொற் பிரயோகம் சங்க இலக்கியத்தில் மரபுக்குரிய மாணுக்கர் (formal student ship) நிலை இருந்து வந்தது என்பதற்கு ஒரு தலை சிறந்த எடுத்துக் காட்டாகும். பாணர்கள் பேச்சுவன்மை மிக்கவர்களாக விளங் படியால் அரசர்களும், குறுநில மன்னர்களும் போர்க்களத்துக்கும், அரண்மனைக்கும் செய்தி எடுத்துச் செல்கின்றவர்களாக விளங் கினுர்கள்.
இராமாயணமும், மகாபாரதமும் சமஸ்கிருத பானர் இலக் கியத்தில் இருந்தே வடிவமும், உருவமும் பெற்றன.
கிரேக்க நாட்டில் கூட கல்வி அதே முறையில் வளர்ச்சி அடைந்தது. சமயப்பாடல்களும், நடனங்களும் மனிதனை மையமாக வைத்து வளர்ந்தது. பாணர்களும் அவர்கள் குழுக் களும் கலை வளர்ப்பதில் மிக முக்கியமானவர்களாக விளங் கிஞர்கள். ஹோமர் கூட தன்ன விட மூத்த பாணர்கள் இருந் திருப்பதாகக் கூறுகின்றர். மியுசேயசும், ஒர்பேயசும் (Musaeue and Opheus) கட்டுக் கதைகளாக இருந்தாலும், சந்தேகமின்றி ஹோமரின் கவிதைகளுக்கு முன் பாணர்களின் கவிதைகள் இருந்திருத்தல் வேண்டும். ஒரு சிலர் பார்வை இழந்தவர்களாக வும் அரண்மனைகளிலும், திருவிழாக்களிலும் பாடியும், பேசியும் வந்திருக்க வேண்டும். ஹோமருக்கும் பிறகு "ஹோமரின் மக்கள்' என்ற பெயருடன் ஒரு குழு தோன்றியது. இவர்கள் ஹோமரின் பாடல்களைப் பொதுமக்கள் மத்தியல் பரவலாக்க முயன்ருர்கள். இவர்கள் சீயோசில் (CHIOS) வாழ்ந்தார்கள். ஹோமர் கிரேக்க நாட்டின் கல்விமானுக விளங்கிஞர்." கிரேக்க நாட்டின் தீரச் செயல்களைப்பற்றிக் கூறுவோர் ஹோமரின் காவியங்களிலிருந்து நாடக வசனங்களை கையாண்டார்கள். கிரேக்க நாட்டில் புலவர்களும், தத்துவஞானிகளும் சமுதாயத் தில் புகழ் பெற்றபோது பாணர்களின் செல்வாக்கு மங்கியது. ஆளுல் கிரேக்க நாட டின் தீரச் செயல்கள்பற்றி ஆங்காங்கே அக் காலத்தில் சொல்லி வந்தவர்கள் இருந்தார்கள். பிளாத்தோ வின் (Plato) "உரையாடல்" (Dialogue) கிரேக்க நாட்டின்

ஆரம்பகாலத் தமிழ்ச்சமுதாயத்தின் கல்விமான்கள்
தீரச்செயல்களின் இயல்பு செல்வாக்கு பற்றியெல்லாம் எடுத் துரைக்கின்ருர் பாணர்கள். .
இலக்கிய வரலாற்ருசிரியர்களும், திறனுய்வாளர்களும் பாணர் களின், இசைவாணர்களின் பணிகளை ஆய்ந்து வருவதுபோல் ஆரம்பகாலக் கல்வி மான்களைப்பற்றியும் அவர்கள் பணிகள்பற்றி யும் கல்வி மான்கள் மேலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

Page 122
9. கல்விமான்களாக விளங்கிய பழந்தமிழ்ப் புலவர்கள்
புலவர்கள் கல்விமான்களாக விளங்கிய காலம் முடியாட்சிக் காலமாகும். புலவர்கள் அரசர்களில் முழுக்க முழுக்கத் தங்கி இருந்தாலும் அரச வட்டாரத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந் தார்கள். அரசர்களுக்கு இடையே மோதல்கள் ஏற்பட்டபோது பிளவுகளை நீக்கி நட்புறவை உண்டு பண்ணிஞர்கள். புலவர்கள் உயர்ந்த, உலகக் கண்ணுேட்டம் கொண்ட கருத்துக்களுக்கு மிக முக்கிய இடம் கொடுத்தார்கள்.
“The poet is looked upon as the guest-friend of his patron, even at times when he is utterly dependent on him.' (ARNOLD HAUSER)
புலவர்கள் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசுகள் உழவுத் தொழிலையும், வாணிபத்தையும், படைபலத்தையும் முக்கியமாகக் கொண்டிருந்தன. தமிழ் அரசர்கள் மாற்ருர்களை நிலத்திலும் கடலிலும் சந்தித்தார்கள். கடற்படைகள் இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறும். (புறம். 66, 126, 130.
நெடுஞ்சேரலாதன் தரையிலும், கடலிலும் வெற்றி பெற்ருன். அவன் உரோமைநாட்டுப் போர்வீரர்களைச் சிறைப் பிடித்துப் பின்னர் விடுதலை செய்தான். (கி. பி. முதல் நூற்ருண்டில்) இக்காலத்தில் உரோமைப் பேரரசுக்கும் தமிழ் நாட்டு அரசுகளுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வாணிபம் நடந்தது. அக்காலம் போரை விரும்பிய காலமாக இருந்தாலும் சமணர்கள் சமயத்தின் சார்பில் தற்கொலை செய்ததுபோல், மானப்பிரச்சனை வந்தபோது மரணம்வரையும் நோன்புசெய்து தற்கொல செய்துகொண்ட நிகழ்ச்சிகளும் நடந்தன. (புறம். 65, 66, 236). பாணர் காலத்து கலைகளோடு, வீர ஒழுக்கவியலும், இசைவளர்ச்சியும், நன்னெறிச் செல்வமும், அறிவில் நிறைவும் பேணப்பட்டு வந்தன. வீர ஒழுக்கக்கோட்பாட்டிலிருந்து படிப் படியாக உயர்ந்த உலகச் சிந்தனைகள் வளர்ந்தன. கோசர்கள் போரை ஆர்வமுடன் விரும்பிய குலத்தைச் சேர்ந்தவர்களாவர்.

கல்விமான்களாக விளங்கிய பழந்தமிழ்ப் புலவர்கள் 197
அம்பானது தப்பாமல் குறிக்கோளில் படுவதுபோல், கோசர்கள் தங்கள் சொல்லில் தவறமாட்டார்கள். (புறம் 189, குறு. 18, 78)
பாணர்களுக்கும். புலவர்களுக்கும் இடையேயுள்ள வேறுபாடு -என்ன? பாணன் தன் குடும்பத்துடனும், தன் குழுவுடறும் கூட்டாகச் செல்வான்; புலவர் தனியே செல்வார். பாணன் தன் குழுவுடன் மகிழ்வூட்டுவான், நடிப்பான், பாடுவான், நடனம் புரிவான், இசைக்கருவிகளுடன் செல்வான்; ஆளுல் புலவரோ அறிவுபுகட்டுவான், அதிகாரம் பெற்றவன்போன்று அறிவுரை வழங்குவான். கல்வியில், அறிவில் சிறந்தும் கவியாற்றும் யுக்தி பெற்றவராகவும் விளங்குவான்; பாணன் சமூகத்தின் குரலாய் ஒலிப்பான்; புலவர் தன் சொந்தப்பேரின்கீழ் செல்வார்; அவருடைய பெரும்பாலான கவிதைகள் தன் சொந்த அனுபவங் களாயிருக்கும்; பொதுவாகப் பாணர்கள் மக்களுக்கு மகிழ்ச்சி யூட்டுகின்றவர்களாக இருப்பர்; புலவர்கள் பொதுவாக அரண் மனயில் காணப்படுவார்கள்; தன்னுடைய சகப்புலவர்களுடனும் அறிஞர்களுடனும் காணப்படுவார்; பாணன் புகழ்ந்து பாடுவ திலும், வீர அறிவுரைகளையும், வீர உணர்ச்சியைத் தூண்டுகின்ற செய்யுள்களையும் பாடுவான்; புலவர்கள் அரசர்களைப் புகழும் போதும் மனித ஒழுக்கத்துக்குச் சார்ந்ததாக, அறநெறிக்கு உகந்ததையே பாடுவார்கள். பாணன் படைவீரர்களுக்கு ஊக்கத்தை ஊட்டப் போர்க்களத்தில் காணப்படுவான். புலவ ருக்குப் போர்க்களத்தில் இடம் இல்லை ஆஞல் அமைதியின் தூதராக, அரசனின் நண்பன் என்ற முறையிலும், அரசனுக்குத் தம் பிரமாணிக்கத்தைக்காட்டும் முறையிலும் போர்க்களத்தில் காணப்படுவார். "பாணன்' என்ற சொல் இசை, நடனம், நாடகம் என்ற பொருள்களைக் குறிக்கின்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்ததாகும். புலவர் என்ற சொல், பொது அறிவு, பகுத்தறிவு, கல்வி, போன்ற பொருட்களைத்தருகின்ற வேர்ச் சொல்லில் இருந்து பிறந்ததாகும். பாணன், கூத்தன், விறறி என்ற சொற்களுடன் புலவன் என்ற சொல்லையும் ஒப்பிட்டுக்
565,
புலவர் காலம் பண்பாடு கல்விமிக்க காலம் என்பதை சங்க இலக்கியத்திலுள்ள எட்டுத்தொகை மூலம் அறிகின்ளுேம். சிலப்பதிகாரம்-மணிமேகலை காலத்தில் புலவர்கள் இடத்தை சமய ஆசிரியர்களும், தத்துவஞானிகளும் பிடித்துக்கொண் டார்கள். புலவர்கள் முன்னணியில் இருந்து மறைகின்றர்கள். தத்துவஞானிகள் கவிதைகளின் மொழியையும், மரபுகளையும் ஆகையாளுகின்ருர்கள். புலவர்கள் காலத்தில் அவர்களின்

Page 123
198 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
எண்ணிக்கையும் பணிகளும் மிகுதியாய் இருந்தன. புலவர் காலத்தில் புலவர்கள் சமுதாயத்துக்கு ஆற்றிய மரபுசார் கல்வியும் மரபு சார்பற்ற கல்வியும் ஏராளம். அவர்களுடைய மரபு சார்பற்ற கல்வி (Informal education) அறநெறி வழிகாட்டி களாகவும், சமுதாயத்தின் சட்டத்தை வழங்குகின்றவர் களாகவும், சமுதாயத்தின் ஆலோசகர்களாகவும் அமைந்தன. K. N. சிவராசாப்பிள்ளை கி.மு. 50 முதல் கி. பி. 200 வரையும், (அதாவது பத்துத்தலைமுறையில்) வாழ்ந்த புலவர்களின் எண்ணிக்கை நானூற்றி ஐம்பத்தொன்பது (459) என்பார். இருபத்தைந்து ஆண்டுகள் கொண்ட ஒவ்வொரு தலைமுறையிலும் நாற்பது புலவர்கள் என்பார். அரண்மனைகளில் கூடிய புலவர் களின் எண்ணிக்கையையும், அக்காலத்தில் கல்வி கற்கும்முறை கவிதைக்கலையாக இருந்ததையும் நோக்கும்போதும் ஒருதலை முறைக்கு நாற்பது . புலவர்கள் என்ற எண்ணிக்கை மிகக் குறைவாகும். சமகாலத்துப் புலவர்களின் படைப்பிலக்கியத்தின் பகுதிகள் பல அழிந்ததையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.
ஆண்பாற் புலவர்கள், பெண்பார் புலவர்கள், அவர்கள் பிறந்த இடங்கள் கிராமங்களாக, நகரங்களாக, பட்டிதொட்டி களாக, பலவேறுபட்ட ஊர்களாக இருந்திருக்கின்றன. அவர்கள் செய்த தொழில்கள் வேறுபட்டதாக இருந்திருக்கின்றன. புலவர்கள் அரசகுலத்திலிருந்தும், உழவுத்தொழிலிலிருந்தும், வணிக வகுப்பில் இருந்தும், பல்வேறுபட்ட தொழில் செய்கின்ற வர்களாகவும் விளங்கிஞர்கள். எட்டுத்தொகையில் உள்ள புறநானூற்றை மட்டும் எடுத்துக்கொண்டால் நூற்றி நாற்பத்து ஏழு (147) புலவர்கள் செய்யுள்கள் யாத்துள்ளார்கள். இவற்றுள் பதினைந்து புலவர்கள் பெண்பாற் புலவர்கள். பதிஞன்கு புலவர்கள் அரசர்கள் ஆவர். மருத்துவர்கள் தச்சர்கள் கொல்லர் கள், குயவர்கள், அரசர்கள் இப்படி பல்வகைத் தொழில் செய்வோர் கவிதைகள் யாத்தனர். (புறம் 30 : 1-6).
ஒளவையார் புலவர்களுக்குள்ளே சிறந்தவர். அரண்மனை களில் செல்வாக்குப் பெற்றவர் : அரசர்களுடனும், குறுநிலமன் னர்களுடனும் நட்புறவு கொண்டாடியவர். ஆவார். தமிழ்ச் சமுதாயத்தின் ஆற்றல்மிக்க கல்விமாளுகத் திகழ்ந்தார். ஆண்பாற் புலவர்களின், பெண்பாற் புலவர்களின் பெயர்களும், தொழில்களும் தமிழ்நாட்டில் கல்வியும், கவிதையும் ஒரு தனி வகுப்பினருக்கோ, தொழில் செய்கின்றவர்க்கோ, மட்டும் சொந்தம் அல்ல; ஆனுல் தங்கள் அறிவையும், சிந்தனையையும்

கல்விமான்களாக விளங்கிய பழந்தமிழ்ப் புலவர்கள்
உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்ற, ஏற்றுக்கொள்ளப்பட்ட aleators assálapsanuš absurovirLariř.
பாணர்களும், புலவர்களும் அரசர்களும், குறுநிலமன்னர் கன்யும் அடிக்கடி சந்தித்து தமிழ்நாட்டில் பண்பாடு, மொழி இலக்கிய ஒருமைப்பாட்டை உண்டுபண்ணிஞர்கள். புலவர்கள் தமிழக அரசர்கள்,குறுநில மன்னர்கள் இடையே ஒற்றுமையையும், புரிந்துணர்வையும், நிலையான அரசையும் உண்டாக்கப்பெரிதும் பாடுபட்டனர்.
தனக்கென சொந்த சமயங்களை தமிழ்ச்சமுதாயம் கொண் டிருந்தது. முருகன் சிவன், விஷ்ணு, சிறுபான்மைக் கடவுள்கள் ஆகிய தெய்வங்களை வழிபட்டதாக சங்க இலக்கிய எட்டுத் தொகை நூல்கள் கூறும். ஆணுல் இக்கால கட்டத்தில் இச் சமயங்களின் குருக்கள் மரபுவழி சார்ந்த சமயக்கல்வியை முறைப் படுத்திக்கூறியதாகக் குறிப்புகள் இல்லை.
சைவ தத்துவமும், தான் விரும்புகின்ற கடவுளின் மேல் பக்தியும் இருந்திருக்க வேண்டும். ஆஞல் வடஇந்திய சமூகம் போன்று தமிழ்நாட்டில் ஒரு தனிப்பட்ட செல்வாக்குள்ள குருத்துவகுலமோ, அல்லது நிலையாக நிறுவப்பட்ட துறவறமடங் களோ, முறையான சமயக்கல்வியை அளிக்கவில்லை. தமிழ்ச் சமுதாயத்தில் இறைவஞல் வெளியிடப்பட்ட நூலோ, மறை நூலோ (Revealed Scriptures) அறக்கொள்கையை, ஒழுக்கம் சம்பந்தமான சட்டங்களைப் பரப்ப இருக்கவில்லை. கிரேக்க நாட்டில் உள்ள புலவர் காலம் போன்று தமிழ்நாட்டிலும் இருந்தது. குருக்கள் அல்ல புலவர்களே நன்னெறியைம் போதித்தார்கள், ஒழுக்கத்தைப்பற்றிப்பேசிஞர்கள்.
புலவர்கள் சமுதாயத்தில் உயர்ந்த, கெளரவமான இடத்தைப் பெற்றிருந்தார்கள். அரசர்கள் புலவர்களுக்குரிய மதிப்பையும் பரிசுகளையும் கொடுக்காவிட்டால் புலவர்கள் அரசர்களைக் கடிந்து கொண்டார்கள். அரசன் ஒருவன் புலவர் ஒருவரை மதிக்கவில்லை. அவருக்குரிய பரிசுப்பொருளை வழங்கவில்லை. சீற்றம் கொண்ட புலவர் இன்னுெரு அரசனை (குறுநிலமன்னனை) தாடிஞர். அவர் அளித்த பரிசுப்பொருட்களையும், யானையையும் கொண்டு வந்தார். தன்னை அவமதித்த அரசருக்குரிய காவல் மரத்தில் அந்த யானையைக் கட்டிஞன். இப்படி யானையை அரசனுடைய காவல் மரத்தில் கட்டுவது அவனை அவமானப்படுத்தி போரில் சந்திக்க அவனைச் சவாலுக்கு அழைக்கும் ஒரு செயலுக்கு ஒப்பா கும். (புறம் 162) இன்னுெரு புலவர் இரு இளவரசர்களை சந்திக்

Page 124
29O தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
கும்போது ஒருவரை அணைக்கின்ருர், மற்றவரை அணைக்காமல் விடுகின்ருர். புலவருடைய அணைப்பைப் பெருத இளவரசர் புலவருடைய செயலுக்குக் காரணம் கேட்கின்ருர்,
'குறுநில மன்னன் வீட்டில் இல்லாதபோதும் நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்ருல் அவ் வீட்டில் உள்ள பெண்கள் வந்து எங்களுக்குப் பரிசுப் பொருள்களைத் தர அவன் ஏற்பாடு செய் கின்றன். அத்தகைய குடும்பத்தைச் சேர்ந்தவன் அவ் இளவரசன். நீயோ எங்களைக் கண்டதும் முகத்தில் கதவைச் சாத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவன். அன்று இருந்து உன் னுடைய மலைகளேத் தவிர்க்க நாங்கள் தொடங்கிவிட்டோம் (புறம் 151) என்ருர்.
கபிலர் என்ற புலவர் பாரி வள்ளலின் நண்பர். புலவர் களையும், பாணர்களையும் ஆதரித்தவர். மூவேந்தர்கள் பறம்பு மலையை முற்றுகையிட்டபோது, அவர்களுக்கு அறிவுரை கூறு கின்றர். யானைகளைக் கொண்டு அவன் நாட்டைப் பிடிக்க முடியாது. பாணர்களுடன் சென்று நீங்கள் அவன் பின்னே ஆடிப்பாடினுல் அவன் தன் நாட்டை தந்து விடுவான். (புறம். 109, 15-18).
ஒரு புலவரின் பாராட்டு விண்ணகத்துக்கு ஒப்பாகக் கருதப் பட்டது; அவருடைய சாபம் நகரின் அழிவுக்கு நிகராகக் கருதப் பட்டது. (புறம். 27, 202, 72).
எபிரேய இறைவாக்கினர்கள் ஒழுக்கத்தையும் சமூகநீதியை யும், உண்மையையும் நிலைநாட்டப் பெரிதும் பாடுபட்டார்கள். தமிழ் நாட்டுப் புலவர்களும் இத்தகைய பணிகளையே செய்து வந் தார்கள். இறைவாக்கினர்களின் பணியானது தொடக்ககாலத்து ஆற்றல் மிக்க குருக்களின் (Original Shamanism) பணி எபிரேய நாட்டில் வளர்ச்சி அடைந்ததற்கு ஒப்பிடலாம். ஆற்றல்மிக்க குருக்களின் பணி தமிழ்ச் சமுதாயத்தில் புலவர்களின் பணியாக வளர்ச்சி அடைந்தது.
தமிழ்ச் சமுதாயத்தில் தமிழ்ப் புலவர்கள் பெற்றிருந்த சிறப்பு இடங்களைச் சங்க இலக்கியம்மூலம் நாம் அறியலாம். அரண்மனை களிலும், விருந்துகளிலும் அவர்களை வரவேற்று கெளரவித் தார்கள். அரசியல் விவகாரங்களில் அடிக்கடி தலையிட்டார்கள். எதிரிகளின் படைவலிமை கண்டும், போரால் விளையும் தீமை கண்டும் போரைத் தடுக்கும்படி அரசர்களுக்கு அறிவுரை வழங் கிஞர்கள். தமிழ் ஒற்றுமைக்காகப் பெரிதும் உழைத்தார்கள்.

கல்விமான்களாக விளங்கிய பழந்தமிழ்ப் புலவர்கள் 20
அரசர்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்த்தார்கள். அதியாய விரிகளுக்கு எதிராகப் போர்க்தொடி பிடித்தார்கள். கொடுல் களுக்கும், சித்திரவதைகளுக்கும் ஆளான குடிமக்கள், புரட்சி செய்த மக்கள். குற்றமற்ற மக்கள் அனைவருக்காகவும் பரிந்து பேசிஞர்கள். (புறம் 43-47, 58, 92,95, 97, 102, 104, 109, 110, 148-145, 212-218, 246 336)
அரசர்களுக்கு ஆலோசனை கூற அமைச்சர் குழாம் இருந் தது. ஆஞல், அவுர்களைவிட அறிவுரை கூறவும், கற்பிக்கும் ஆற்றலையும் அதிகம் பெற்றிருந்தார்கள். பேகன் என்னும் குறு நில மன்னன் ஒரு கொடை வள்ளல். ஆளுல் அவன் குடும்ப வாழ்க்கையோ சிதைந்துகொண்டிருந்தது அவன் தன் மனைவி கண்ணகியைக் கைவிட்டு தனிமையில் வாடச் செய்தான். நான்கு புலவர்கள் இவனைத் திருத்தி நல்வழிப்படுத்த முயன்ருர்கள். அவர்களுள் அரிசில்கிழார் சிறந்தவராவர். (புறம். 146, 1431Ꮞ5 , 1Ꮞ7).
உழவர்களுக்கு எதிராக அரசன் பளுவான வரியைப் போட் டிருந்தான்-இதன புலவர் ஒருவர் கண்டித்து, அப்படிப்பட்ட வரிச்சுமையைக் குறைக்கச் சொல்லுகின்ருர், வெளிநாட்டு வாணிபம் பெருகத் தொடங்கியது. செல்வம் கொழிக்கும் நாடாக அரசனுடைய நாடு விளங்கியது, இதனுல் உழவுத் தொழிலின் சிறப்பை அரசன் மறக்கத் தொடங்கிஞன். புலவர் படைகளின் வலிமையைவிட உழவுத் தொழிலின் வலிமை உயர்ந்தது எனக் கூறுகின்ருர். (புறம். 35)
அரசர்களுக்கும், புலவர்களுக்கும் இடையே நிலவிய நட்பைப் பற்றிப் புறநானூறு பாங்குடன் பகரும். சில புலவர்கள் தங்கள் அரச நண்பர்களுடன் சேர்ந்து உண்ணுநோன்பு இருந்து வீர மரணம் அடைந்திருக்கின்ருர்கள். (புறம். 214-253),
கல்வியும் கவிதையும் இளம் மாணுக்கர்களுக்குப் புகட்டப் பட்டன. புலவர்கள் சிலர் பேர்பெற்ற ஆசிரியர்களாக விளங் கிஞர்கள். அவர்களுக்குப் புகழ்பெற்ற மாணுக்கர்களும் இருந் தார்கள். கல்வியும்-கேள்வியும் ஒரு மனிதனை முழு மனிதனுக்கும் என நம்பப்பட்டது. கல்வி என்பது, தனிப்பட்ட முயற்சியால் வரும் படிப்பாகும். கேள்வி என்பது ஒருவர் கற்பிப்பதை மாணுக்கன் கேட்பதாகும். கேள்வி என்பது-"கேட்டலாகும்." வாய்மூலமாகவும், காதுமூலமாகவும் படிப்பதைக் குறிக்கும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினதால் புலவர்கள் தங்கள் சமகாலத்தவர்களால் பெரிதும் பாராட்டப்பெற்ருர்கள். (புறம். 26,

Page 125
202 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
12, 53, 12, 72, 13) (காண். திருக்குறள் அதிகாரங்கள 40,42), கல்விகேள்விகளின் சிறப்பு என்னவெனில் சான்ருேர் அவையில், அழகாக, தெளிவாக, தர்க்கரீதியாக எடுத்துச்சொல்லும் ஆற்றல் பெற்றிருப்பதாகும். புலவர் காலத்தின் கல்வியின் இலட்சியம் நல்ல குடிமகளுக வாழ்வதற்கு ஒருவரை ஆயத்தம் செய்வதாகும். இக்காலத்தில் அறிவுவளர்ச்சி கிராம மன்றத்தில் இருந்து அரச அவைக்கும், அறிஞர்களின் சபைக்கும் மாறுகின்றது. கல்வி வாழ்வின் நோக்கம் சமூகத்துக்குச் சேவை செய்யவும், செல்வம் சேர்ப்பது வறுமையில் உள்ளவர்களுக்குத் தொண்டு செய்யவும், விருந்தோம்பலின் வளர்ச்சி அடைவதற்குமேயாகும்.
எட்டுத்தொகையில் நானூற் றி ஐம்பத்தியொன்பது புலவர்கள் செய்யுள்கள் யாத்துள்ளனர். அவர்களுள் இருபத்தி இரண்டு பேர்கள் பெண்பாற் புலவர்கள் ஆவர். இருந்தும் பெண்களுக்கென்று முறைசார்ந்த கல்வி அமைப்பு ஒன்று இருக்க வில்லை. ஆண்-பெண் இருபாலாரும் கடுமையாகப் பிரிந்து வாழவில்லை. ஒன்ருகச் சேர்ந்து நடனம்புரிந்தார்கள். பாசறை களில்கூடப் பெண்கள் பணிபுரிந்தார்கள். (முல்லப்பாட்டு 45-49). பழந்தமிழ் இலக்கியத்தில் பெண்களுக்கு முன்னுல் வைக்கப்பட்ட இலட்சியங்கள்-கற்பு, பிரமாணிக்கம், அன்பு போன்ற பண்புகளாம். செடிகளுக்கும், பூக்களுக்கும் உயர்ந்த மதிப்புக்கொடுத்த காலம்--அக்காலமாகும். செடிகளும், பூக்களும் அடையாளச் சின்னங்களாயின. முல்லைப்பூ பெண்ணின் கற்பின் அடையாளச் சின்னமாயிருந்தது. செவிலித்தாயும். தோழியும் காதலின் ஆழத்தை அறிந்த பாங்கை வெகு அழகுடன் சித்திரித். துக்காட்டுகின்ற உளவியல் மேதைகளாக (Psychologists) அக் காலத்துப் புலவர்கள் சிறந்து விளங்கிளுர்கள். (புறம். 116, நற்றிணை 159; 331; அகம். 190).
மனிதனை முழுமைப்படுத்துவதும், உலகத்தாரால் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்படுவதும் ஒருவர் பெற்ற கல்வியால் வருவ தாகும். புறம். 183வது பாடல் கல்வியின் பொதுத்தன்மையை sire softdiéds sirlGssir psy. (Puram 183 explains the universal value of formal education).
புறம் 183வது பாடல் கூறுகின்ற கல்வி, சமயக்கல்வி அல்ல. (மேலும் காண். 539) இக் கல்வி மனிதனை முழுமை யாக்குகின்றது. அவன் வாழ்க்கைக்குத் தேவையானதைச் சொல்லிக் கொடுக்கின்றது. சான்றேரின் அவையில் அவனுக்கு ஒரு தனி இடத்தை-சிறந்த இடத்தை அளிக்கின்றது. இக்கல்வி இவ்வுலகை வெறுக்கும் கல்வி அல்ல; இவ்வுலகையும், இவ்வுலக

கல்விமான்களாக விளங்கிய பழந்தமிழ்ப் புலவர்கள் 20
இன்பங்களையும் ஏற்றுக்கொள்கின்ற கல்வியாகும். மனிதனின் ஆற்றல்களில் நிறைவைக் காண்கின்ற கல்வியாகும். இக் கல்வி யானது குடும்பத்தையும், குழந்தைகளையும் நேசிக்கச் செய்யும் கல்வியாகும். வீடற்ற நிலையைப்பற்றிச் சிறிதும் அறியாத கல்வியாகும். (புறம். 188)
(The anthologies of love poetry and Tolkappiyam amply demonstrate this humanisan), a rasgadeth, Act, Devris துக்கும், பிறருக்காக வாழும் வாழ்க்கைக்கும் ஒருவரைத் தகுதி பெறச்செய்யும் கல்வி இக்கல்வியாகும். அக்காலத்து வீரன் ஆய் என்னும் வள்ளல்-இவர் புலவர்களின்-பாணர்களின் நண்பராவர். இவரைப் பாணர்களும், புலவர்களும் பாராட்டிப் போற்றுவதற்குக் காரணம் இவர் நன்மையை நன்மைக்காகவே செய்வார். நன்மை செய்வதால் ஏதாவது பிரதிபலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செய்வதில்லை. A. C. புக்கே (Bougue) *தன்னையே மறந்து பிறர்பணி செய்வது" என்பது ஆரம்பத்தில் இருந்து ஒரு கிறிஸ்தவ சிந்தனை என்று கூறுவதற்கு முழுக்க ஆதாரம் இல்லை என்பார் அடிகள். "பிறர்பணி செய்தல்" 'தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்தல்' 'மோட்சமே இல்லா விட்டாலும் ஈகை செய்தலே சிறப்பு." அறத்தை வாணிப நோக்கத்துடன் செய்யக்கூடாது எனப் புறநானூறு பகரும். (புறம், 134, 138, 20).
ல்பெட் சுவைட்சர் திருக்குறளில் 'நன்மை, ஈகை செய்தல் பற்றிக் குறிப்பிடுவார். குறளுக்கு முன்பே இத்தகைய கருத் துக்கள் சங்க இலக்கியத்தில் இருந்தன. மனிதநலக் கொள்கை சிறந்ததை நினைத்தல், பிறர்பணி போன்ற கொள்கைகள் (Humanism, optimism, altruism) Asvéßu 6r@ssiflsö sirsorÜ பட்டன. இவையே பழைய தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைப் பண்புகளாகும்.
தமிழர்களுடைய மனித நலக்கொள்கை நன்கு அறிவதற்குத் தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனைகளையும் அவற்றைப் பிரதிபலிக்கும் எட்டுத்தொகை நூல்களையும் ஒருவர் எடுத்துக்கொள்ள வேண்டும். காதல் இலக்கியமும், பாடாண்திணை இலக்கியமும் புலவர்களின் உளவியல் பாங்கின் ஆழத்தை எடுத்து இயம்பு கின்றன. தொல்காப்பியத்தில் உள்ள ஒலியியல், இலக்கணம், செய்யுளியல், மரபியல், உளவியல் எல்லாம் கவிதைகள் படைப்ப தற்கு வழிகாட்டிகளாய் அமைந்துள்ளன. வாழ்க்கை இனிமை யானது, மகிழ்ச்சியானது எனக் கருதப்பட்டது. இறப்பு ஒரு துன்ப முடிவாகும். மானம், புகழ், வீரம் போன்ற பண்புகள்

Page 126
204 தனிநாயக அடிகளின் வாழவும் பணியும்
போற்றப்பட்டன. முதுமையைப்பற்றிக் கவலைதோய்ந்த கவிதை கள் காணப்படுகின்றன ஈகை, அறத்தின் சிறப்பு பாராட்டப் ப்ட்டுள்ளன. மறுபிறப்புபற்றிப் பேசப்படவில்லை. நல்லவர் களுக்கு மரணத்தின் பிள்ளுல்வரும் வாழ்க்கை மகிழ்ச்சியான தாகக் காட்டப்பட்டுள்ளது. தீயவர்களுக்குத் துன்பத்தின் இருப்பிடமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. வீரத்துக்கும், பிறர் பணிக்கும் இவ்வுலகில் பெருமை உண்டு. இச் செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கே மறுமையில் இன்பம் உண்டு என்ற உயர்ந்த கருத்துக்களை எட்டுத்தொகை நூல்களில் நாம் காணலாம். (புறம். 50, 14, 18, 13, 21, 24, 84, 135.136. 165, 174, 179, 9; 206, 8).
காதல், திருமணம், குழந்தைகள், இவைகள் மனித வாழ்க்கையின் தேவைகளாகவும் ஒருவரின் ஆளுமையின் நிறை வாகவும் கருதப்பட்டன. எட்டுத்தொகையும், திருக்குறளும் கூறுகின்ற அரசியல், சாணக்கியம், ஒழுக்கம், வாய்மை, நீதி, சமத்துவம், நன்றியுணர்வு, அன்பு போன்ற இலட்சியங்களை நாம் கவுதிலியர், மானு, வத்சயனு போன்றவர்களின் இலட்சியங் களுடன் ஒப்பிடும்போது அவை மேலோங்கி இருப்பதைக் கண்டு வியந்து மகிழ்கின்ருேம்.
கவுதிலியர், மானு, வத்சயனு இவர்கள் கூறும் இலட்சியங் களும், ஒழுக்க, அறிவியல் தொடர்பான சிந்தனைகளும், மிகவும் தாழ்ந்துகிடக்கின்றன என்பார் ஆல்பட் சுவைட்சர்.
புலவர் காலத்தில் உயிரூட்டம் நிறைந்த, படைப்பாற்றல்
மிக்க சிந்தனைகள் பல. அவற்றில் ஒன்று இது. புறநானூறு 182ஆவது பாடலாகும்.
'அமிழ்தம் இயவைதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே. புகழெனின் உயீருல் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர். அன்ன மாட்சி பனேயராகித் தமக்கென முயல கோன்ருட் பிறர்க்கென முயலும் உண்மை யrனே. (புறம். 188)
(காண். -அகம், 55.) உயர்ந்த இலட்சியங்கள் அடிக்கடி வலியுறுத்தப்படுகின்றன.-காண். புறம், 69 : 5).
கிரேக்கநாட்டைப் போன்று தமிழ்நாட்டில் சமயச் சார்பற்ற GlaFiuyutasäa) (Secular poetic thought) p-U-6orlqurs (pag

கல்விமான்களாக விசங்கிய பழந்தமிழ்ப் புலவர்கள் 205.
தத்துவ நிலையாக மலரவில்லை-மாறவில்லை. சிலப்பதிகாரமும், மணிமேகலையும், திருக்குறளும், சமய, சமயச்சார்பற்ற பண் பாட்டுத் தொடர்புகளையும், பண்பாட்டு முரண்பாடுகண்பும் காட்டுகின்ற தத்துவ சிந்தனையின் காலத்தைப் பிரதிபலித்தன.
இவ்வாறு தனிநாயக அடிகளார் ஆரம்ப காலத்தமிழ்ச்சமு தாயத்தின் கல்விமான்களைப்பற்றி ஆய்வுக்கண் கொண்டு எழுதி யுள்ளார். இக் கட்டுரையைப்படிக்கும் ஒருவர் சங்க இலக்கியத்தைப் படிக்காமல் இருக்கமுடியாது. நாம் சாதரணமானது என்று கருதுவதை ஆழமாகப்பார்க்கும் திறன் அடிகளாருக்கு நிறைய உண்டு. சங்க இலக்கியத்தை நாமும் படிக்கின் ருேம். அடிகளாரும் படிக்கின் ருர், கல்வியைப்பற்றி, கல்விமான்களைப் பற்றி, உயர்ந்த இலட்சியங்களைப்பற்றி நாம் காணுத பல ஆழ்ந்த உண்மைகளைத் தனிநாயக அடிகளார் இக்கட்டுரையில் தந்துள்ளார். சங்க இலக்கியத்தை ஆழ்ந்து படியுங்கள். அடிகளார் போன்று தமிழ் உணர்வு பெறுங்கள்.

Page 127
10. முடிவுரை
தேம்பாவணி குறித்து அடிகள் இவ்வாறு கூறும் கூறறு அவருக்குப் பொருந்தும் : "மேலே நாட்டுக்கலையும், கீழை தாAடுக்கலையும் கலக்கும் ஏரி தேம்பாவணி' என்பார். ஆம் தனிநாயக அடிகளும், மேல்நாட்டுக்கலைக்கும், கீழைநாட்டுக் கலைக்கும் இடையே ஒரு பாலத்தை அமைத்த கலைஞராவார். göğı 34âu 456) r*FTrib (Indo-Asian Culture) Greirp முத்திங்கள் ஏடு வெளிவருவதற்குமுன், தமிழ்ப்பண்பாட்டை வெளியிட்ட பெருமை தனிநாயக அடிகளையே சாரும். நாயன் மார்கள், ஆழ்வார்கள் இப்போது நம் மத்தியில் இல்லை; தனிநாயக அடிகள் இருபதாம் நூற்றண்டின் நாயன்மாராக ஆழ்வாராக வாழ்ந்து-தமிழ்கொண்டு இறைவனைப் போற்றிய புனிதராக விளங்குகின்ருர். சங்க இலக்கியங்களிலும், சைவத் திருமுறைகளிலும் அதிகமாக ஈடுபட்ட அடிகள் அழகு இளமை, உண்மை, இறைமை போன்ற பண்புகளைத் தமிழ் இலக்கியத்தில் இருந்து வெளிக்கொணர்ந்தார். அடிகள் அடிக்கடி கையாளும் சங்க இலக்கியப்பாக்களுள் ஒன்று பரிபாடலாகும்.
“luruh இரப்பவை
பொன்னும் பொருளும் போகமும் அன்று சின் பால் அன்பும் அருளும், அறனும் இம்மூன்றும்" என்ற பாடலையும் அடிக்கடி கூறுவார்.
சேக்கிழாரின் செய்யுள் நடையில் தமிழ் பேசும் இயல்பினர். இவர் ஒரு குரு, கல்விமான், ஆசிரியர், ஆராய்ச்சி அறிஞர், பண்பாளர், திட்டமிட்டுச் செயலாற்றுகின்ற செயல்வீரர், தமிழ் கூறும் நல்லுலகத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர். இயற்கையையும் அதில் உள்ளவற்றையும் நேசித்த நல் இதயம் கொண்ட நண்பர்
அடிகளார் உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்ந்தவர். அவர் குறிப்பேட்டில் அடிக்கடி குறிக்கோளப்பற்றிய இவ் வாசகங்கள் காணப்படும்.

«қура ауамет 207
“பூட்கை இல்லோன் வாழ்க்கை போல"-
திருக்குறள் கூறும் உயர்ந்த குறிக்கோள்பற்றியும் அவர் குறிப்பேட்டில் காணப்படும் வாசகங்களாகும்.
1. 4உள்ளற்க உள்ளம் சிறுகுவ" 2. 'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்" 3. "பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்"
என்பனவாகும்.
தமிழ்த் தத்துவத்தைப்பற்றி அடிகளார் கூறுகையில் திராவிடி எண்ணத்தின் தலைசிறந்த கருவூலமே சைவசித்தாந்தம்" greiruti.
Tamil Philosophy “Saiva Siddhanta the Choicest product of the Dravidian intellect.'
கருதினுல் நியூமனத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்க pusir pauit. “Nationalist” (Burdir o Luav &auTQuuřasafaid செய்தித்தாள்களுக்குத் தொடக்க காலத்தில் எழுதி இருந்தார். குண்டுசட்டிக்குள்ளே குதிரை ஓட்டுகின்றவன் அல்லன் தமிழன்; உலகக் கண்ளுேட்டம் கொண்டவன் தமிழன் என முரசறைந் தவர். தொட்ட துறையெல்லாம் துலங்க வைத்த்வர் தனிநாயக அடிகளாவர்.
அடிகள் தம் குறிப்பொன்றில்-வருங்காலத்தைப்பற்றிச் சிந்தித்துச் செயலாற்றவேண்டும்-கடந்த காலத்தை நினைத்து அழுவதில் பயனில்லை எனக் கூறுவார்.
“One may go on digging for ever into the past one must forget it and plan for future.'
( Never think of the past Build for the future,'
அடிகளார் இன்று தரணிபோற்றும் தனிநாயகமாக விளங்கு கின்ருர். ஆணுல் அவர் நடந்துசென்ற பாதை முள் நிறைந்த பாதையாகும்- அஃது ஒரு சிலுவைப்பாதையாகும். துன்பம் என்ற ஏணியில் துவாாது ஏறி வெற்றிகொண்ட வாழ்க்கை அவரது வாழ்க்கையாகும்.
தனிநாயக அடிகளின் பொன்மொழிகளுள் ஒன்று செயல் திறம்மிக்கவர்கள் மிகவும் தியானத்தில் ஈடுபட்டவர்களாகவும்

Page 128
208 தனிநாயக அடிகளின் வாழ்வும் பணியும்
விளங்கி இருக்கிருர்கள். (உ-ம் கிறிஸ்து, புனித சின்னப்பர், புனித பிரான்சிஸ் சவேரியார், புனித அவிலா தெரேசாள். புனித பேணுட்."
(The most active people have been the most Coatemp lative-Christ, St, Paul, St. Francis Xavier St. Theresa of Avila, St. Bernard.”
அடிகளின் கல்விபற்றிய டாக்டர் பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 9i silââurub “Education according to KURAL” söst பற்றித் திருக்குறள் கூறும் கருத்துக்களாகும். கல்விபற்றி அடிகளார் கூறுகையில் நல்ல ஆளுமையைப் படைப்பது கல்வியின் நோக்கமாகும். நல்ல உடல், இயல்பூக்கங்கள், மனம் ஆகிய வற்றின் சிறந்த அம்சங்களை வெளிக்கொணரவேண்டும் மைக்கல் ஆஞ்சலோ மோயீசனின் சிலையை உருவாக்கியபின் அது உயிர் உள்ளதுபோல் தோன்றியது. அப்போது மைக்கல் ஆஞ்சலோ அந்த மோயீசனின் சிலையில் தம கையில் உள்ள சுத்தியலால் அடித்து ஏன் பேசமாட்டாய் என்று கேட்டானும்? அந்தச் சிற்பியைப்போன்று ஒவ்வோர் ஆசிரியனும், மாணவச் செல்வங்களிடம் உள்ள நல்ல பண்புகளை வெளியே கொண்டு வரவேண்டும் என ஆசிரியர்களை அடிகள் கேட்டுக்கொள்வார். "சிறந்த கல்விக்கு மாணவர், பெற்ருேர், ஆசிரியர்-இம்மூவரின் ஒத்துழைப்பு அவசியம்" என்பார் அடிகள். மாணவர்களுக்கு வாழ்க்கையில் இலட்சியம் இருக்கவேண்டும். தமக்கென nurgprưbáò topQ5&srs arQptổ Loanh Cossoa srcirurữ.
தனிநாயக அடிகளுக்கு நாம் செய்யும் கைம்மாறு அவர் விட்டுச்சென்ற பணியை நாம் செய்யவேண்டும். அவர் பெயரால் ஒரு கல்வி நிலையத்தைத் தொடங்கவேண்டும். அவர் போன்று நம் தாய்மொழியை நேசிக்கவேண்டும். அவர் போன்று பரந்த மணம் கொண்டவர்களாக நாம் விளங்கவேண்டும். அவர் போன்று பண்பாட்டுப் பெட்டகங்களாக நாம் இருக்கவேண்டும். தமிழ் இலக்கியத்தின் பெருமையைத் தமிழ் அல்லாதாருக்குச் சொல்லவேண்டும். தமிழில் புதிய பனுவல்கள் படைக்க வேண்டும். தனிநாயக அடிகள் போற்றிய மனிதநலக் கொள்கை வாழ்க! அடிகள் போற்றிய இனிய இயேசுவின் தாமம் வாழ்க!
தனிநாயக அடிகள் வாழ்க! தமிழ் வெல்க அவர் அமைத்து வைத்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் சிறப்புடன் தமிழ் ஒளி பரப்புக.


Page 129
பேராசிரியர் டாக்டர் ே
ề tự trởfìfìu lĩ L_T & Li G85\J. ஈழவளநாட்டைச் சேர்ந்தவர்.
தமிழ் பயின்றவர். இவர் சிறப்பு முதுகலை (M.A.) பட்டங்கள் :ெ * வள்ளுவமும் விவிலியமும்-ஒர் செய்து டாக்டர் பட்டம் பெற்றவர் திறனில் ஒரு பார்வை, நாட்டு மட்டக்களப்பு தமிழ் ஆராய்ச்சி உபாதைகள், ஐந்தாம் உலகத் ணுேட்டம். கிறிஸ்தவ தமிழ் யாத்துள்ளார். இவர் இலங்கை ராகவும், கொழும்புத்துறை ( துறையின் பேரா சி ரிய ராக வி இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், இலக்கியப்பேருரைகள் நிகழ்த்தி மறைவுக்குப்பின் அவர் பணிை அடிகளாரின் மறைவுக்குப்பின்
கூட்டங்களில் கலந்துகொண்டு கடந்த நான்கு ஆண்டுகளாக பணியும் ' என்ற நூலே எழு களுக்குப் பயணம் ஒன்றை மேற்
ܢ
 
 

வ, அந்தனிஜான் அழகரச6
அந்தனிஜான் அழகரசன் அ சென்னே பச்சையப்பன் கல்வி த்தமிழ் இளங்கலை (B.A.) சிறப்புத் bறவர். சென்னைப்பல்கலைக் கழக
ஒப்பாய்வு " என்ற தலைப்பில் . இவர் புரட்சிக் கிறிஸ்து, இலக் ப்புறப் பாடலும் பண்பாடும், இ
மாநாட்டின் மதிப்பீடு, சிலுை தமிழ் ஆராய்ச்சி மாநாடு-ஒரு த் தேனீக்கள் போன்ற நூ யாழ் பல்கலைக் கழகத்தில் பேர குருத்துவக் கல்லூரியிலும், | ம் பணியாற்றிக்கொண்டிருக்கி மலேசியா போன்ற நாடுகளில் பிருக்கின்றர். தனிநாயக அடி யத் தொடர்ந்து செய்து வருகி இலங்கை எங்கும்
* தனிநாயக அடிகளின் வாழ் துவதற்காகத் தென்காசிய கொண்டிருந்தார். s
அப்பர் அச்சகம், சென்&\: