கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2010.05

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
ஜி கொழும்ட 堂。 ଓରtଅFL
வெளியீடு : 08 மாதம் : ை
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்தி "செய்தி மடல்’ என்பதன் பிரசுர வடிவம் இட இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். 360600Tug556Tib:WWW.colombotamilsangam.com தொலைபேசி இல . 2363759 தொலைநகல் 2361381
கொழும்புத்
S நடாத்தும் 2010 R விவாதக்களம் -
கொழும்புத் தமிழ்ச் சங்க கான விவாதப் போட்டியின் சேர்ந்த பத்து பிரபல கல்லு 2 முதற் சுற்றிலிருந்து இறு 2 செய்யப்பட்ட கொlறோயல் | ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு சுற்றுக் களம் எதிர்வரும் 18. பிற்பகல் 5.30 மணியள | மண்டபத்தில் இடம் பெறவு
கொழு tôt, தமிழ்ச் சங்க செய்தி மடல்
 
 
 
 
 
 

புத் தமிழ்ச் சங்கம்
Üg5 UDL6ü
வகாசி ஆண்டு :
2010
ல் "எம்மைப் பற்றி” எனும் பகுதியிலுள்ள ம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
Ló660, 6536): tamilsangamcolombosayahoo.com
info(a)colombotamilsangam.com
தமிழ்ச் சங்கம்
ம் ஆண்டுக்கான சிறப்பு நிகழ்வு
ம் நடாத்திய இவ்வாண்டுக் ல் மேல் மாகாணத்தைச் ாரிகள் பங்கு கொண்டன. திச் சுற்றுக்குத் தெரிவு கல்லூரிக்கும் கொ/புனித நம் இடையிலான இறுதிச் 07.2010 ஞாயிற்றுக்கிழமை வில் சங்கரப் பிள்ளை
புள்ளது.

Page 2
நிகழ்வுகளி
வைகாசி மாதம் நடைபெற்ற சாங்க நிகழ்வுகள்
அறிவோர் ஒன்றுகூடல்
05-05-2010
அன்றைய அறிவோர்ஒன்றுகூடல் நிகழ்வில் "இலங்கையில் தமிழர் பாரம்பரியம்” என்னும் தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் திரு.என்.கே.எஸ்.திருச்செல்வம் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு சங்கத்தின் கல்விக்குழுச் செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். தலைவர் தனது உரையில் பேச்சாளர் பற்றிய விபரங்களை ச்பையினருக்குத் தெரிவித்தார். இவர் இந்துக் கோவில் பற்றிய பல கட்டுரைகளை தினக்குரல் பத்திரிகையில் எழுதி வந்தவர். இன்னும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையில் பட்டம் பெற்றவர் என்றும் தெரிவித்தார்.
பேச்சாளர் தனது உரையில் தமிழர் பாரம்பரியம் 12ம் நூற்றாண்டுக்குத் தள்ளப்பட்டுள்ளது. எமது பாரம்பரியம் பற்றி தமிழர்கள் ஆகிய நாம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இவற்றைப் பற்றி எமக்குக் கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்தே நாம் ஆராயவேண்டும் என்றார்.
முதலாவதாக தொல்பொருள் ஆதாரத்தை நோக்கினால் இலங்கையில் உள்ள புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு என்னும் இடத்தில் 8000 ஈமத்தாளிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற் றுக்கும் ஆதிச்சநல்லூர் ஆய்வுமையத்தில் காணப்பட்டவற்றுக் கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.
அடுத்ததாக 1500க்கு மேற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திஸ்ஸமகராம பகுதியில் காணப்படும் அக்குறுகொடை என்னு மிடத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் பெறப்பட்டன. இங்கு சிற்றரசர்களாக இருந்த தமிழ் மன்னர் களால் இவை பயன்டுத்தப்பட்டுள்ளன எனலாம்.
கந்தரோடை, பூநகரி, உருத்திரபுரம், மாந்தை, அநுராதபுரம், பொம்பரிப்பு, பொலன்னறுவை போன்ற இடங்களில் தமிழர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன.
இலக்கியங்களை ஆராயும் போது மகாவம்சத்தில் தமிழர் இலங்கையின் பல பாகங்களிலும் பரவி வாழ்ந்த செய்தி களைக் காணலாம். சுமார் 3000 ஆண்டுகளுக்குமுன் தமிழ் மன்னர் இலங்கையை ஆண்டுள்ளனர்.
 

இலங்கையின் தென் கிழக்குப் பகுதியில் இராவணன் ஆட்சி செய்தமை பற்றிய குறிப்புகளுண்டு.
இவ்வாறான பல செய்திகளைக் கூறி தனது பேச்சை சிந்தைக்கு விருந்தாக்கி வைத்த திரு.எஸ்.கே.எஸ்.திருச்செல்வம் அவர்களது பணி வளர எமது வாழ்த்துக்கள்.
இலக்கியக்களம் - பேராசிரியர் சு.வித்தியானந்தனி
07-5-2010
கொழும்புத் தமிழ்ச் சங்கமும் பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுக் குழுவும் இணைந்து நடத்திய பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரையும் நூல் வெளியீடும் 07.05.2010 வெள்ளிக்கிழமை தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி இந்த நினைவு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழ், சைவப்பண்பாட்டிலிருந்து வந்தது என நோக்கப்பட்டதை மாற்றி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களையும் உள்வாங்கியவர் பேராசிரியர் வித்தி அவர்கள். அவரது பல நூல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று நினைவுக் குழுவின் சார்பில் வரவேற்புரை நிகழ்த்திய திரு.தெ.மதுசூதனன் அவர்கள் குறிப்பிட்டார்.
தலைமையுரையாற்றிப் பேசிய பேராசிரியர் சோசந்திரசேகரன் அவர்கள் தனது உரையின் போது, பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களது நிகழ்வுக்குத் தலைமை வகிக்க நான் தகுதி பெற்றவன் என்று கூறினார். நான் அவரது மாணவன். இன்று 65000 மாணவர்கள் வரை பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்றனர். அன்று கிட்டத்தட்ட 200 பேர் வரையில் தான் பயின்றனர். ஒரு சிலரே தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றனர். பேராசிரியர் தமிழை விரும்பிப் படித்துப் பாண்டித்தியம் பெற்றவர். தமிழில், தமிழ் மண்ணில், தமிழர்பால் அன்பு கொண்டவர். போரசிரியர் வித்தி இங்கிலாந்து சென்று பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு செய்தார். "தமிழர் சால்பு” என்ற நூலை எழுதினார். தங்கக்கோபுரம் என வர்ணிக்கப்பட்ட பல்கலைக் கழகத்திலிருந்து ஆய்வு செய்து, மட்டக்களப்பிலிருந்து கலைஞர்களை அழைத்து வந்து நாட்டுக்கூத்து பயிற்றுவித்தவர் வித்தி. வித்தி அவர்கள் தமிழாராய்ச்சி மகாநாட்டை, பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் நடாத்திக் காட்டினார். உலகத் தமிழர் அனைவரும் இவரது பணியை உணர வேண்டும் என்று இதனை நடத்துகின்றோம். நூல்களையும் வெளியிடு கின்றோம். சேமமடு பொத்தகசாலை இப்பணியில் ஈடுபட்டுள்ளது. வித்தி இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி தனியாக எழுதி யுள்ளார். 'பிறையன்பன்' என்னும் புனைபெயரில் எழுதியுள்ளார் என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

Page 3
அதைத் தொடர்ந்து “வித்தியின் தமிழியற் பதிவுகள் என்னும்நூலை சேமமடு பொத்தகசாலை அதிபர் திருசதபூபத்மசீலன் அவர்கள் வெளியிட்டு வைத்தார். முதற் பிரதியை திரு.ஏ.எம்.சுப்ரமணியம் அவர்களும், சிறப்புப் பிரதியை வைத்தியகலாநிதி சி.அனுஷ்யந்தன் அவர்களும் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்கள் புறநிலையில் நின்று ஆய்வுசெய்வதற்கான அடித்தளத்தை அமைப்பதில் உதவினார். அமைப்பு ரீதியாக யாழ் பல்கலைக்கழகத்தை வளப்படுத்தியவர். தமிழ் மொழி மூல ஆய்வுக்கு உதவினார். துணைவேந்தராக இருந்ததோடு ஆய்வுகளையும் மேற்பார்வை செய்து வந்தார். மொழி ஆற்றல் மிக்க பயனுள்ள நூலைத் தந்துள்ளார் எனக் கூறித் தனது வெளியீட்டுரையை நிறைவு செய்தார் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள்.
கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டத்துறைத் தலைவர் திரு.வி.ரீ.தமிழ்மாறன் அவர்கள் “உயர் தொழில்துறைக் கல்வி யில் தமிழின் பயன்பாடு” என்னும் தலைப்பில் நினைவுப்பேருரை ஆற்றினார். மாணவர் - ஆசிரியர் உறவு உளவியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். இந்த வகையில் பேராசிரியர் வித்தி பல அரும்பணிகளை ஆற்றியுள்ளார் என்றார்.
நிறைவாக, தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் திரு.எஸ்.பாஸ்க்கரா நன்றியுரை ஆற்றினார். சங்க கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது. (விரிவான கட்டுரை தினக்குரல் பத்திரிகையில் வெளியானது)
99
0.
நூலகம் (சிறுவர் பகுதி)
08-05-2010
“கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி பி.கலாஜினி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர் ஒன்றுகூடல்
12-05-2010
அன்றைய அறிவோர் ஒன்றுகூடலில் “மனிதனைக் காண.” என்னும் தலைப்பில் வடகோவை பூ.க.இராசரத்தினம் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் கலாநிதி மா.கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கினார்.
பேச்சாளர் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபராக இருந்ததோடு கோப்பாய் கிராம சபைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
பேச்சாளர் தனது உரையினை ஆற்றத் தொடங்கிய பொழுது, தான் ஒரு சங்கம் அமைத்துள்ளதாகவும் அச்சங்கம், "மதியின் துணை கொண்டு நட” என்பதை வற்புறுத்தி வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
 

மனித நேயம் விதைக்கப்படவேண்டும். விதைப்பது என்பது வேறு புதைப்பது என்பது வேறு. மனிதனைக்கான இலக்கியங்களைப் பயன்படுத்தலாம்.
ஒழுக்கநெறி வெளியிலிருந்து வருவதல்ல. நற்பயணு டையது. இதைக் கற்கலாம். கற்பிக்கப்படலாம். ஒழுக்கம் ஒரு மரபு வழிச் செயலானது.
மனிதனின் அடிப்படை மனோபாவம் மாறாதவரை கல்வி அபிவிருத்தியிலோ பொருளாதார வளர்ச்சியிலோ நிரந்தரமான ஒரு மாற்றத்தையோ அமைதியையோ ஏற்படுத்த முடியாது. சிந்தனை வீச்சு விசாலிக்க வேண்டும். பேச்சாளர் இத்தகைய பல நல்ல கருத்துக்களைக் கொண்ட உரையை ஆற்றினார்.
இலக்கியக்களம் நிகழ்வு - 17
14-05-2010
அன்றைய இலக்கியக்களம் நிகழ்வுக்கு, தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், எமது கலாசாரம், தொன்மை, பண்பாடு பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டிய வேளையில் மிகப் பொருத்தமான தலைப்பில் இன்றைய உரை இடம்பெறு கின்றது எனக் குறிப்பிட்டார்.
கலாசூரி ஆ.சிவநேசச் செல்வன் அவர்கள் "பண்டைய இலங்கையில் மதப் பாரம்பரியம்: ஓர் இலக்கியத்தேடல்" என்னும் தலைப்பில் விரிவான உரையை ஆற்றினார். அவர் பேசும் போது, சேக்கிழார் கூறிய “பண்டைய காலத்தின் பழுதிலாத் திறன்” அழிந்து கொண்டிருக்கின்றது. “கல்பொரு சிறு நுரைபோல்” மெல்ல மெல்ல எங்கள் பண்பாடு அழிகிறது, என்று குறிப்பிட்டார்.
வரலாற்றுப் பேராசிரியர்களான இந்திரபாலா, பத்மநாதன், சிற்றம்பலம், பரமுபுஷ்பரத்தினம் போன்றோர் தமிழர் வரலாற்றைத் தேடுகிறார்கள்.
இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் பல அரிய பணிகளைச் செய்து வருகின்றது. இந்து கலைக் களஞ்சியம் வெளியிடுவதில் பேராசிரியர் சி.பத்மநாதன் பெரும் பங்கு வகிக்கிறார், என்பதையும் சுட்டிக்காட்டினார். இங்ங்ணம் பல கருத்துக்களைக் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
“கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் செல்வி வரதா குகபாலன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
15-05-2010

Page 4
அறிவோர் ஒன்று கூடல்
19-05-2010
தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திருடபிள்யூஎஸ்செந்தில்நாதன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றுகையில், இன்றைய பேச்சாளர் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1999ஆம் ஆண்டு சட்டத்துறைப் படிப்பை நிறைவு செய்தார் எனத் தெரிவித்தார். அதன் பின்னர் பங்களுர் பல்கலைக்கழகத்தில் தனது முது மாணிப்பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இப்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார் என்று கூறி அவரை உரையாற்றுமாறு அழைத்தார்.
“இந்தியாவிலுள்ள புலம்பெயர் இலம்பாடுடை யோர்க்கான உதவிகளும் உரிமைகளும் என்னும் தலைப்பில் சட்டத்தரணி யசோதரா கதிர்காமத்தம்பி அவர்கள் தனது உரையை ஆற்றினார். புலம்பெயர்ந்த மக்களை அகதி கள் என்று சொல்வது அவர்களைப் புண்படுத்தும் என்பதால் “இலம்பாடுடையோர்” என்ற சொல்லை இங்கே பிரயோகிக் கிறேன் என்று கூறினார்
இலம்பாடுடையோருக்கு எவ்வாறு உதவலாம்? இலங்கை யிலிருந்து புலம்பெயர்ந்த இலம்பாடுடையோருக்கான இந்தியா வின் பங்கு, கடப்பாடு என்ன? என்ற வினாக்களை எழுப்பி அவைகுறித்துத் தனது சிந்தனைகளை பேச்சாளர் முன் வைத்தார். இலங்கை அரசுக்குத் தமது மக்கள் பற்றிய ஒரு கடப்பாடு உண்டு. இரு நாடுகளும் இணைந்து ஒரு தீர்வு எட்டப்படவேண்டும். பிரஜாவுரிமை வழங்குவதா? திருப்பி யனுப்புவதா? எனச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், என நல்ல பல கருத்துக்களைக் கூறி தனது உரையை நிறைவு செய்தார். (உரையின் விரிவாக்கம் தினகரன் செய்தித்தாளில் வெளியானது)
அறிவோர் ஒன்றுகூடல்
20-05-2010
அன்று நடைபெற்ற அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் "தமிழ் நாடக அரங்கில் நடிகவேள் லடீஸ் வீரமணி” என்னும் தலைப்பில் கொழுந்து சஞ்சிகை ஆசிரியர் அந்தனிஜீவா அவர்கள் உரை யாற்றினார். தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தலைமை தாங்கினார். அவர் பேசும் போது லடீஸ் வீரமணி பற்றி சிறந்த ஒரு அறிமுகத்தை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து உரையாற்றிய அந்தனி ஜீவா அவர்கள் லடீஸ் வீரமணிக்கு அ.ந.கந்தசாமி, ரஹ்மான் போன்றோரது நட்புக் கிடைத்தது. அவர்கள் மூலம் மகாகவியின் தொடர்பு ஏற்பட்டது. "கண்மணியாள் காதை", வில்லுப்பாட்டு
 

மூலம் பிரபலமானார். வில்லிசைக்கோர் வீரமணி எனப் பாராட்டப்பட்டார். “கப்பலோட்டிய தமிழன்” வில்லிசைப் பாடலும் இவருக்கு புகழிட்டித்தந்தது. 1983ல் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண ஆழ்நிலையால் தமிழ்நாடு சென்று அங்கிருந்து தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளுக்கும் சென்று தனது வில்லிசை மூலம் புகழ்பெற்றார்.
நடிகர் வைரமுத்துவின் பாராட்டைப் பெற்றவர். “நாடோடிகள்” என்னும் நாடகத்தை தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் வெள்ளவத்தையில் அரங்கேற்றினார்.
மேலும் இவர் மறைந்த இம்மாதத்தில் அவரைப் பற்றிய சில செய்திகளைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறி, பேச்சாளர் தனது உரையை நிறைவு செய்தார்.
இலக்கியக்களம் நிகழ்வு - 18 21-05-2010 அன்றைய இலக்கியக்களம் நிகழ்வில் “ழரீஇராம அவதாரம் - இலக்கிய நோக்கு” என்னும் பொருளில் சைவப்புலவர், கவிமணி, மரபுக் கலைச்சுடர், கலைஞானச் சுடர், சிவநெறிக் கலாநிதி இராசையா றிதரன் அவர்கள் உரையாற்றினார்.
கொழும்புத் தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.க.உதயகுமார் தலைமை தாங்கி, பேச்சாளர் பற்றிய சிலகுறிப்புக்களை முறையாகக் கூறி இந்நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பதற்கான அவதாரமே இராமாவதாரம் என்று கூறி உரையை ஆரம்பித்த பேச்சாளர், இராமனது பாத்திரம் தனித்துவமானது எனவும் எடுத்துரைத்தார். ஒருவன் இப்படித்தான் வாழவேண்மென்று காட்டியவன் தான் இராமன்.
உண்மை, இன்சொல், புறங்கூறாமை இவற்றைக் கடைப் பிடித்த இராமனது அழகை "மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ’ என வர்ணிக்கிறார் என்று கூறினார். இசை கலந்த அவரது உரை சுவையாக அமைந்தது.
நூலகம் (சிறுவர் பகுதி)
22-05-2010 "கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி ப.சுதர்ஷினி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அற்றைத் திங்கள்
28-05-2010 இந்நிகழ்வில் முது பெரும் நாடக நடிகர் கலைச்செல்வன்
அவர்கள் பங்கு கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் அவர்கள் தலைமை தாங்கினார்.

Page 5
கலைச்செல்வன் அவர்கள் அரைநூற்றாண்டு காலம் கலைத்துறையில் பயணித்த பதிவுகளை சபையோருடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் எனக் கூறித் தனது உரையை ஆரம்பித்தார். நான் 1943ஆம் ஆண்டு பிறந்து 1949ஆம் ஆண்டு கொழும்பு 13ல் உள்ள பாடசாலையில் எனது கல்வி யைத் தொடங்கினேன். 1952இல் ஒரு கிறிஸ்தவ பாடசாலையில் சேர்ந்து பயின்றேன். நாடகம், அரசியல் என வாழ்க்கை ஓடியது. திரு அபுசாலி அவர்கள் 1953ஆம் ஆண்டு வானொலி சிறுவர் நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். குஞ்சிதபாதம் மாமா, சரவணமுத்து மாமா ஆகியோரது நெறி காட்டலில் நிகழ்ச்சி களில் கலந்து கொண்டேன்.
எதிர் நீச்சல் என்றொரு நாடகம் எழுதி நடித்தேன். அந.கந்தசாமி அவர்கள் அதைப் பார்த்து விட்டு “கலைச்செல்வன், நாடகம் பற்றித் தெரிந்திருக்கிறாய் நாட்டின் நடப்புப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. நாடகத்தின் முடிவை மாற்று” என்று கூறினார். அவரது பாதங்களைப் பணிகின்றேன். பேராசிரியர்கள் வித்தியானந்தன், கைலாசபதி, தில்லைநாதன் ஆகியோர் நடுவர்களாக இருக்க 6 பரிசில்கள் பெற்றேன்.
லடீஸ் வீரமணியுடன் "யாருக்காக அழுதான்’ நாடகத்தில் நடித்தேன். எனது தேடலும் வாசிப்பும்தான் எனது நாடகங்கள் உயிரோட்டமாக வரக் காரணமாயிருந்தன.
அந்தனி ஜீவாவின் நாடகத்தை இயக்கிப் பரிசு பெற் றோம். கலையரசு, லடீஸ், சானா போன்றோரோடு சேர்ந்து நடித்துள்ளேன்.
"நான் உங்கள் தோழன்’ படத்தில் நடித்தேன். சேக்ஸ்பியர் நாடகம் போட்டேன்.
“ஒரு கலைஞனின் கதை” என்னும் புத்தகத்துக்காக எனக்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. என் படைப்பு என்னை எனக்கு அடையாளம் காட்டியுள்ளது. தொடர்ந்து அம்முயற்சியில் ஈடுபட்டு சமூகத்துக்கும் என்னை அடையாளம் காட்ட விரும்புகிறேன் எனக் கூறி, தனது உரையை நிறைவு செய்தார். (விரிவான பேச்சு தினகரன் செய்தித்தாளில் பிரசுரமானது)
நூலகம் (சிறுவர் பகுதி)
29-05-2010 “கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி வயலற் சந்திரசேகரம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
தமிழிசை
29-05-2010 அன்று நடைபெற்ற தமிழிசை நிகழ்வில் சுப்பிரமணிய பாரதியார் பற்றிய உரையையும் பாடல்களையும் இசைக்கலைமணி, கலா
வித்தகர் திருமதி ஜெயதாம்பிகை கிருபானந்தமூர்த்தி B.A,
 

(கல்வி டிப்ளோமா) அவர்கள் நிகழ்த்தினார். வி.சுப்பிரமணியக் குருக்கள் (வயலின்) ஏ.ஜி.சுவாமிநாதன்சர்மா (மிருதங்கம்) ஆகியோர் அணிசேர் கலைஞர்களாகக் கலந்து கொண்டனர்.
அவரது உரை பாரதியின் வாழ்வில் நடந்த சம்பவங் களையும் பாரதியாரின் பெருமைகளையும் தொட்டுச் சென்றது. பாடல்கள் எழுந்த சந்தர்ப்பங்களையும் மிக விரிவாகப் பாடகர் எடுத்துரைத்தார். மேலும் பாரதி பாடல்கள் பலவற்றின் சில வரிகளைப் பாடிக் காட்டினார். பாரதியார் 39 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தது தமிழர்களுக்கெல்லாம் ஒரு பேரிழப்பு. தண்ணொளி வீசிய கவிஞர் பாரதி புகழ்பாடுவோம் என்று நிறைவு செய்தார்.
ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடலில்
30-05-2010
அன்று நடைபெற்ற ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரை யாடலில் “உணவு ஒவ்வாமையும் தவிர்க்கும் வழிமுறைகளும்”. சங்கத் துணை நிதிச் செயலாளர் வைத்திய கலாநிதி சி.அனுஷ்யந்தன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். அவர் தனது உரையின் போது உடலில் உயிர் இருக்கும்வரை அந்த உடல் சிவமாக இருக்கிறது. அந்த உயிர் பிரிந்ததும் அது சவமாகின்றது. அத்தகு பெறுமதி மிக்க உயிரை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும். எமக்கு ஒத்து வராத ஒன்றை எமது உடலை ஏற்கச் செய்ய முயற்சித்தோமானால் அது மரணத்தை விளைவிக்கும். ஒவ்வாமையால் மரணமும் சம்பவிக்கும் என்பதை வலியுறுத்தவே இதை நான் குறிப்பிடு கிறேன் என தனது தொடக்க உரையை ஆற்றி அமர்ந்தார்.
அடுத்து உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.எஸ்.நச்சினார்க்கினியன் அவர்கள் ஒவ்வாத உணவு சாப்பிடும் போது எமது உடலிலுள்ள கலன்கள் அவற்றை எதிர்த்துப் போராடும். போராட்டம் வெற்றி வராத போது பக்க விளைவுகள், மரணம் என்பன ஏற்படும். எனவே இவைபற்றிய விழிப்புணர்வு வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அடுத்து வைத்திய கலாநிதி வைதர்மேந்திரா அவர்கள் தனதுரையில் சில வாசனைகளால் ஒவ்வாமை ஏற்படும். ஒவ்வாமை என்னும் போது ஆஸ்துமா முக்கியமானது. காலநிலை மாற்றம், சில வகைப் பூக்களின் மகரந்தங்கள் காற்றுடன் கலப்பதாலும் ஒவ்வாமை ஏற்படுகிறது என்று பல தகவல்களைக் கூறினார்.
இவரைத் தொடர்ந்து வைத்திய கலாநிதி எஸ்.எஸ்.அருளானந்தம் அவர்கள் உரையாற்றினார். நிகழ்ச்சி களை உளநல ஆலோசகர் கா.வைத்தீஸ்வரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். அன்றைய நிகழ்வு ஒரு பயனுள்ள கருத்தரங்காக அமைந்தது.

Page 6
உடல் இயக்கத்தில் உள்ள நுட்பம்
நமது உயிருக்கும் உடலுக்கும் ஒத்த உறவு, இனிமையான உறவு இருக்கும் வரையில் தான் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப் பெறும். இந்த உறவானது நீடித்து இருப்பதற்கு இரத்த ஓட்டம், வெப்ப ஒட்டம், காற்று ஓட்டம் இவை மூன்றும் சரியாக இருக்கவேண்டும். அளவிலே முறையிலே இவை சரியாக இருந்தால் தான் உயிருக்கும், உடலுக்கும் ஒரு தொடரியக்கம், நட்பு, உறவு சீராக இருக்கும். எந்தக் காரணத்தினாலோ இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்று ஓட்டம் இந்த மூன்றிலே ஒன்று தடுக் கப்பட்டாலும் , திசை மாறினாலும், வெளியேறினாலும், அளவிலே குறைந்தாலும், ஓட்டத்திலே குழப்பம் அடைந்தாலும், அந்த ஓட்டத்தில் அணு அடுக்கு சீர் குலைவு எற்படும். அது இரத்த ஓட்டத்திலோ, வெப்ப ஓட்டத்திலோ, காற்று ஓட்டத்திலோ எதனாலே வந்தாலும் சரி, மற்றை இரண்டும் கூட ஓட்டத்திலே தடையாகிவிடும். அந்த குழப்பத்தை நீக்குவதற்கு அங்கே இருக்கக்கூடிய மின்சக்தி போதாது. அதனாலே அதிகமான மின்சக்தி அங்கே சேரவேண்டியதாகின்றது.
அவ்வாறு அங்கே சேரும் போது ஏற்கனவே அங்கு தொகை (Puncture) ஆகியிருக்கிறது. அளவுக்கு மேலாக காந்தசக்தி மின்சக்தியாக மாறும்போது அந்த இடத்தில் நிச்சயமாக மின்குறுக்கு (Short circuit, earthing) s 60örLITGib. 9.gblgb(T66 6.165uJITE 6 (bib. இந்த மின்குறுக்கு சிறிது நேரம் இருந்தால் அது வலி என்றும், அது இடத்தாலே விரிந்தும் காலத்தாலே நீடித்தும் இருந்தால் அது நோய் அல்லது வியாதி என்றும் கூறப்படுகிறது. அதற்கும் மேலாக உடலிலுள்ள ஜீவகாந்தச் சக்தி எல்லாம் அதிகமாக செலவாகி, வருவதற்கும் போவதற்கும் மத்தியிலுள்ள இருப்பை ஜீவகாந்தம் வெகுவாகக் குறைக்குமானால் அதனை ஈடுசெய்ய முடியாமல் போகும். ஈடுசெய்யும் முயற்சியில் உயிர் ஆற்றல் தோல்வியடையும். உடலை நிர்வாகம் செய்வதற்கும் போதிய காந்த சக்தி, ஜீவகாந்த சக்தி, உற்பத்தி செய்ய முடியாமல் தோல்வியடையும். அந்த தோல்வியிலே தானே குறைவுபட்டு அது தன்னாலே ஏற்படக் கூடிய வெப்பத்தினாலே அதனுடைய மின்கலம் (Battery) என்று செல்லக்கூடிய விந்துநாளத்தை தகர்த்தெறிந்துவிட்டு அதைத் தாங்கி நிற்கக்கூடிய விந்துவையே அல்லது நாளத்தையே உடைத்துக்கொண்டு வெளியேறிய பின்னர் அதைத் தாங்கி நிற்கும் உயிர் உடலில் இருந்து பிரிந்து விடும். இதுவே மரணம். இதுதான் உடல் இயக்கத்தில் உள்ள ஒரு நுட்பம்.
- வேதாத்திரி மகரிஷி -
 

விசேட சொற்பொழிவு
31-05-2010
அன்று "தமிழகத்துக் கலை இலக்கிய அனுபவங்கள்” என்னும் தலைப்பில் எழுத்தாளர் த.அகிலன் அவர்களின் உரை இடம் பெற்றது. தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் வைத்திய கலாநிதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். திரு.அகிலன் ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்து தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய "மரணத்தின் வாசனை’ என்னும் கட்டுரை ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளியாகி பரிசும் வழங்கப்பட்டது. தற்போது திரைப்படத்துறையிலும் ஈடுபாடு கொண்டு உதவி இயக்கு னராகப் பணியாற்றி வருகிறார் எனக் கூறி திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களை அறிமுக உரையாற்ற அழைத்தார். இவர் இந்தியர் களைக் கவர்ந்த ஒரு சிறந்த எழுத்தாளர். அத்துடன் நல்ல கவிஞர். இவர் ஒரு வருடத்துக்குள் ஆறு நூல்களை வெளியிட் டுள்ளார் என்று கூறி திரு.எழில்வேந்தன் அறிமுகத்தை நிறைவு செய்தார்.
திரு.அகிலன் பேசுகையில், கல்விக்காக, சுற்றுலாவுக்காக செல்வதை விட எனது அனுபவம் வித்தியாசமானது. தமிழ் நாட்டுக்கும் எமக்கும் தமிழ்தான் ஒற்றுமை. அங்குள்ள உணவுகள் கூட எனக்கு ஒத்துவரவில்லை. எனது கதைகளில் பேச்சு வழக்கு மொழியையே பயன்படுத்தியுள்ளேன். தமிழ் நாட்டில் சிறுவர் இலக்கியங்கள் கைவிடப்பட்டுவிட்டன. வாரம் ஒரு சிறுகதை எழுதினேன். தமிழ் நாட்டில் படைப்பாளியைக் கொண்டாடினர். புத்தகத்தைத் தேடிவருமாறு அவற்றை வெளி யிடவேண்டும். பாடலாசிரியர் யுகபாரதியுடன் தொடர்பு ஏற்பட்டது. எனது கவிதைகளைத் தொகுதியாக வெளியிட்டார். ‘வடலி’ என ஒரு பதிப்பகத்தை ஆரம்பித்தேன். "மரணத்தின் வாசனை" என்னும் கவிதைத் தொகுதிமூலம் என்னை அடையாளப்படுத் தினேன். தமிழகத்தின் மீதான பிரமிப்பு அகலும்போதே எல்லாம் இயல்பாகும் என தனது கலை இலக்கிய அனுபவங்களைக் கூறி நிறைவு செய்தார்.

Page 7
மெய்ப்பொருள் susashaighfar
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
க.பொ.த. உயர்தர மு பங்கு கொண்ட மாணவர்
- a. 13.06.2010 நடைடெ
 
 

)ன்னோடிப் பரீட்சையில் களின் ஒரு பகுதியினர்.
ற்ற விவாதக்களம்
கொழும்பு தமிழ்ச் சங்க செய்தி DL رفة(