கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.02

Page 1
சங்க உறுப்பினர்களுக்கு மட்டும்
༼ ༽ கொழும்பு செய جیسے வெளியீடு : 016 மாதம் :
கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத்தில் "செய்தி மடல்” என்பதன் பிரசுர வடிவம் இம் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள். g6060Tug556Tib:WWW.colombotamilsangam.com தொலைபேசி இல . 2363759 தொலைநகல்: 2361381
எங்கும் முழ
செங் கரும்பின் க தேர்ந்த நறுஞ் சு 'சங்கத்தமிழ் ஒன எங்கள் தமிழ்ச்சங்
உங்கள் கைகளி பொங்கு தமிழ் வ சங்கம் மூன்றாக்க எங்கும் தமிழ் வ
சங்காரம் செய்தா சிங்காரித் தெழுந் ‘மங்காத தமிழெ எங்கள் காதுகள்
தமிழென்றும் அழி அமிழ்தென்ற பெ பேச்சோடு நின்றி மூச்சோடு மூச்சா
* ‘சங்கத்தமிழ் சஞ்சிகை 18.03.2011
 
 
 
 

த் தமிழ்ச் சங்கம்
ப்தி மடல்
LDITðf ஆண்டு : 2011
"எம்மைப் பற்றி” என்னும் பகுதியிலுள்ள மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
6ó6016,36t): tamilsangamcolomboGDyahoo.com
info(a)colombotamilsangam.com
ங்கிடும் ‘சங்கத்தமிழ்”
ாறெ டுத்து
வை சேர்த்து ாறு தரமாகத் தந்திட ங்கம் எடுக்கும் முதல்முயற்சி
ல் உவந்து விளையாடி 1ளர புத்தூக்கம் தந்திடுவீர்! கி சரித்திரம் படைத்தநாம் ளர்க்க ஏனோ மறந்திட்டோம்
லும் தமிழ்வேர் அழியாது து சீரிளமைத் திறன்பெறுவாள் ன்று மாகவி பாடிவைத்தான். இன்னும் செவிடாமோ?
யாது சாகா வரமதற்கு பருண்டு அதுவும் திகட்டாது ட்டால் பெறும்பயன் ஏதுமிலை 5 முத்தமிழும் வெளிவரட்டும்
ஆக்கம்:- கந்தசாமி மகாதேவா
அன்று வெளியிடப்படுகிறது.

Page 2
மாசி மாதம் தமிழ்ச் சாங்கத்தில்
இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய
forumriginal
அறிவோர்ஒன்று கூடல் - 448 02.02.2011 அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் தலைமையில் ‘இலக்கியக் கலத்தொடு புலம்பெயர்ந்து வருவோர்' என்ற தலைப்பில் கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் உரையாற்றினார். திருமதி வசந்தி தயாபரன் இன்றைய பேச்சாளர் பற்றிக் கூறுகையில், சிறுகதை எழுத் தாளராகிய இவர் எமது மேடைகளில் பல முறை தோன்றியவர். மனிதாபிமான விசித்திரங்களை சிறுகதைகளாக வடிக்கும் இவரது சிறுகதைகள் விருது பெற்றவை என்றார். 27ஆம் திகதி அவரது கவிதைத் தொகுதி ஒன்று வெளியிடப்படவுள்ளது. “சிறகு முளைத்த போது’ என்ற தலைப்பில் இடம் பெறும் புலம்பெயர் தமிழர்களின் இலக்கியப் பணி பற்றி காரசாரமாக கட்டுரைகள் எழுதியவர். கவி நலம் பொருத்திய தலைப்பில் உரையாற்ற இவரை அழைத்து அமர்ந்தர்.
கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் தமதுரையில் “திரை கடலோடி யும் திரவியம் தேடு' என்ற பழமொழிக்கு இணையாக வாழ்வாதார வசதிகளுக்காகக் கனடா, ஜெர்மனி, பிரித்தானியா போன்ற பற்பல நாடுகளிலும் தஞ்சம் புகுத்துள்ள தமிழர்கள் எமது நாட்டில் தாம் விட்டுச் சென்ற இலக்கியப் பணிகளைத் தொடர்ந்தும் அங்கே மேற் கொள்வது பாராட்டுக்குரியதாயினும் தமிழ்மொழி, கலாசாரம் என்பவை அங்கே வளர்க்கப்படுகின்றனவா? என்பது கேள்விக் குறியே என்று கூறினார். ஜேர்மனியில் 14 ஆண்டுகளும் கனடாவில் 4 மாதங்களும் வாழ்ந்திருந்த அவர் எமது நாட்டுச் செய்திகளை அங்கே தரும்போது முரண்பாடுகள் காணப்படுகின்றன. வியாபார நோக்கங்களுக்காக புத்தக வெளியீடு, பத்திரிகைத் தொழில் நடாத்தப்படுகின்றன. கனடா வில் 24 பத்திரிகைகள் வெளிவருகின்றன. அவை தமிழ் வளர்ச்சிக்காக குறிப்பாக எதையும் செய்யவில்லை. சினிமா, விளம்பரம் போன்றவை முதலிடம் பெறுகின்றன. கனடாவில் அடுத்த பரம்பரை தமிழ் மொழிக்கு தொண்டு செய்யுமா? என்பவும் கேள்விக் குறி என்றார். தமிழர் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் தமிழுக்கு இடமில்லை. தென்னிந்திய ஊடகவியலாளர் சினிமாக்காரர்களுக்கு முதலிடம், எமது நாட்டு எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தவிர்க்கப்படுகின்றன. எமது எழுத்தாளர் கெளரவிக்கப்படுவது குறைவு என விசனப்பட்டார்.
 

சபையோர் கருத்துரையில் திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் பேச்சாளரின் கூற்றினை மறுத்து புலம்பெயர் தமிழர்கள் எமது கலாசாரத்தை பாது காப்பதாக கூறினார். சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் பேச் சாளருக்கு பரிசளித்துக் கெளரவித்தார். பயனுள்ள ஓர் உரையை நாம் கேட்க முடிந்தது.
s எழுதுவதற்கும் அதைப் புத்தகமாக வெளிபடுவதற்குN
இ
டையில் நிறைய இடைவெளி இருப்பது எனக்குத் தெரியும். நிகோலோய் கோகொல்" எண்ற ரஷிய எழுத்தாளர் தானி எழுதியதைப் படித்து திருப்தரியடையாமலி அடிக்கடி எாத்து விடுவார் என்று கேள்விப்பட்டிருக்கரிறேனர். ஆனாலி எனக்கு புத்தகத்தை வெளியிட வேண்டிய ஒரு கட்டாயம் இருந்தது. சமீபத்தில் பொஸ்டனில் ஒரு புத்தகக்கடையில் பெண்மணி ஒருத்தர் புத்தகம் எழுதிய ஆசிரியரினர் வயதை உறுதி செய்த பரிண்னரே புத்தகத்தை வாங்குவதைக் கண்டேன். ஏன் என்று கேட்டேன். புத்தகத்தை எழுதும்போது இருந்த ஆசிரியரின் வயதிலும் பார்க்க படிப்பவரினர் வயது அதிகமாக இருக்கவேண்டும் எண்றார்.
அ.முத்துலிங்கம் )நன்றி. அகில உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்( -ܓܠ
இலக்கியக்களம் 41 04.02.2011 இலக்கியக்களம் நிகழ்வில் “கோதையின் திருப்பாவை’ என்னும் பொருள் பற்றி கவிஞர் ஆதித்தன் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமை தாங்கினார்.
அறிமுக நிகழ்வில் மூத்த எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் தமது இலக்கிய அறிவின் செழுமையுடன் தலைமையுரையாற்றினார். தமது மாணவனாக கவிஞர் ஆதித்தனை அறிமுகப்படுத்தி திருப் பாவை பற்றிய விளக்கத்தையும் கொடுத்தார். மதுரைக்கு அருகே ரீவில்லிபுத்தூர் என்னுமிடத்தில் வாழ்ந்த விஷ்ணுசித்தரின் பக்தித் தொண்டினைப் பற்றிக் கூறி, கோதை என்ற ஆயர்பாடி சிறுமி பற்றிக் கூறி அவர் பாடிய 30 பாசுரங்கள் கொண்ட திருப்பாவையின் சிறப்பினையும் கூறினார்.
கவிஞர் ஆதித்தன், தமது உரையில் மதம் சார்ந்த கருத்துக்

Page 3
களுக்கு அப்பால் திருப்பாவை பற்றி ஆய்வு செய்வதாகக் கூறினார். கோதை என்ற சிறுமி குழந்தைத்தனமான பிடிவாதம் கலந்த தொனியில் கண்ணனைத் தனது காதலனாக கருதி இப்பாசுரங்களைப் பாடினார். நப்பின்னையை மனைவியாகக் கொண்ட கண்ணன், அவருடன் துயிலும் போது அதிகாலையிலேயே அவனைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணனைத் துயில் எழுப்ப அந்தக் கோதை கையாளும் நுட்பங்கள், தந்திரங்கள் என்பன பாசுரங்களில் மிளிர்கின்றன. தமிழர் களால் அக்காலத்தில் போற்றப்பட்ட "பறை" என்ற இசைக்கருவியை கண்ணனுக்கு கொடுக்க வேண்டும்; பாரிய கதவைத்திறவுங்கள் என்று கண்ணனின் மனைவியைக் கோருகிறாள். உண்மையில் அவரது நோக்கம் கண்ணனைக் காண்பது தான். இந்த நிலையினை அழகாக இயற்கையான பான்மையுடன் உணர்வூட்டும் வகையில் எமது பேச்சாளர் எமக்கு விளக்கி எம்மை மெய்சிலிர்க்க வைத்தார். அதுவும் அந்த 26 வயது இளைஞர் ‘தமிழ் இனிச் சாகாது” என்று எம்மை நம்பிக்கை கொள்ள வைத்தார்.
தலைவர் திருமதி சோமகாந்தன் இவரை எண்ணிப் பெருமை கொள்வதாகக் கூறினார். திரு சுந்தரமூர்த்தி அவர்களும் வாழ்த்தி கருத்துரை வழங்கினார். தலைவர் பேச்சாளருக்கு பரிசளித்துக் கெளரவித்தார்.
நூலகம் (சிறுவர் பகுதி)
05.02.2011 “கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் செல்வி ஹேமலதா கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 449 09.02.2011 இன்றைய அறிவோர்ஒன்றுகூடல் நிகழ்வுக்குத் தலைமைதாங்கி நடாத்த இருந்த திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் சுகவீனம் காரணமாக சமூகம் தரவில்லையாதலால் பொதுச்செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழறீதரன் தலைமை தாங்க சட்டத்தரணி சோ.தேவராஜா அவர்கள் “சில்லையூர் செல்வராஜாவின் கவிதைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தலைவர் தமது உரையில், “இன்றைய பேச்சாளருக்கு அறிமுகம் தேவையில்லை; அன்னார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு அங்கத்தவராக, பொதுச்செயலாளராக, தலைவராக பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்தார். இன்று தேசிய கலை இலக்கியப் பேரவை அமைப்பாளராக பெரும் தொண்டாற்றி வருகிறார். இவர் நல்ல கவிஞர்;
 

எழுத்தாளர்; நாடகங்கள் நடிப்பவர்; தொழிலால் சட்டத்தரணி. எத்தனையோ வேலைப் பழுக்களின் மத்தியில் இன்று இங்கு சொற் பொழிவாற்ற வந்திருப்பது எமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது” எனக் கூறி பேச்சாளரைப் பேச அழைத்தார்.
பேச்சாளர், சில்லையூரார் கவிஞர் எழுத்தாளர்; நாடக, சினிமா நடிகர் என்றெல்லாம் பாராட்டப்படும் பல்கலைவேந்தர் என தான் “சில்லையூர் செல்வராஜாவின் கவிதைகள்” என்ற தலைப்பில் பேசு வதாக தலைப்புக் கொடுத்த போதும் “தான் தோன்றிக் கவியராயர் எழுதிய ஊரடங்கப் பாடல்கள்” பற்றியே உரையாற்றப் போவதாக ஒரு பீடி கையுடன் தனது பேச்சை சுவாரசியமாக ஆரம்பித்தார். எனினும் பேச்சாளர் தொடர்ந்து உரையாற்றிய போது தான்தோன்றிக் கவிராயர் தான் கவிஞர் சில்லையூர் செல்வராசன் என்பது சபையோருக்குப் புரிந்தது. சில்லையூர் செல்வராசன், தனக்குள்ளேயே தான் தோன்றிக் கவிராயர் என்பதைப் படைத்து, தனக்குத் தானே ஒருவகை விமர்சனம் செய்து புதுமை படைத்தார். ஈழத்து தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர் சில்லையூர் செல்வராசன் என்று கூறி தான்தோன்றிக் கவி ராயரின் ஊரடங்கப் பாடல்களுக்கு தானே பல்கலைவேந்தர் சில்லையூர் செல்வராசன் என்ற பெயரில் முன்னுரை எழுதி திரைப்படங்களில் கதாநாயகர் இரட்டை வேடங்கள் தாங்குவது போல் செய்தவர் சில்லையூர் என்று கூறி, அந்நூலில் இருந்து சில சுவையான கவிதை களையும் தந்தார் பேச்சாளர் - உதாரணத்திற்கு இரண்டு:
(1) solrø Suðplft
சுத்த வீரர் சுந்தரமூர்த்தி! இரத்தம் சிந்தவோ இம்மியும் தயங்கார்! எவரும் ஐயம் இருந்தாற் சென்றவர் சவரம் செய்கையிற் காணலாம் உண்மையை!
(2) (synujGugf71
ஈச்சமுனை ஏரம்பர்க்கு எப்பொழுதும் சோம்பல்! மூச்சுவிடச் சோம்பலினாற் போச்சுதுயிர் சாம்பல்!
ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் தமது படைப்புகளை வெளியிட்டு தமது கைகளைச் சுட்டுக் கொண்ட வேளையில், சில்லையூரான் தனது ‘தணியாத தாகம்’ நாடக நூலை இரண்டு தடவை பதிப்பித்து சாதனை படைத்தார் என்று கூறி பேச்சை முடித்தார்.

Page 4
தலைவர் தமது முடிவுரையில், பேச்சாளர், சில்லையூர் செல்வராசனை வேறொரு கோணத்தில் பார்த்ததற்கு நன்றி கூறி தான்தோன்றிக் கவிராயரின் சோம்பேறிக் கவிதைக்கு ஒப்பான மகாகவியின் குறும்பா ஒன்றையும் சோம்பேறிக்காரனின் கதை ஒன்றையும் சுவையாகக் கூறி நிகழ்வை முடித்துவைத்தார்.
“பென்சனிலே வந்தழகக் கோனார்
பெருங்கதிரை மீதமர லானார்.
அஞ்சாறு நாள் இருந்தார். அடுத்த திங்கள் பின்னேரம்
பஞ்சியினாலே இறந்து போனார்.” - மகாகவி
கதை சோம்பேறி ஒருவனிடம் ஒருவர் வந்து உலகத்திலேயே “சிறந்த சோம்பேறி என்ற பரிசு உனக்குக் கிடைத்துள்ளது; ஜனாதிபதி வந்து பெற்றுக் கொள்ளட்டுமாம்” என்று கூறினார். சோம்பேறியோ “எனக்கு பஞ்சியாக இருக்குது; பரிசை நீ வாங்கிக்கொண்டு வந்து என்னிடம்
99
தா” என்றானாம்.
இலக்கியக்களம் 42
11.02.2011 இன்றைய வெள்ளிக்கிழமை இலக்கியக்களம் நிகழ்வுக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி சுகந்தி இராஜகுலேந்திரா அவர்கள் தலைமை தாங்கினார். “திரு.க.சரவணமுத்துப்பிள்ளை அவர்களின் தத்தை விடுதூதும் அதன் பெண்ணியக் கருத்துக்களும்” என்ற தலைப்பில் கவிஞர் மயூரன் உரை நிகழ்த்தினார். தலைவர் தமது உரையில், 1865இல் பிறந்து 1902வரை வாழ்ந்த திரு.க.சரவணமுத்துப்பிள்ளை தமக்கு ஏற்பட்ட காதல் தோல்வியினைக் கருத்தாகக் கொண்டு படினார். பெண்களின் உரிமை, பெண் விடுதலை பற்றி பாரதி கொண்டிருந்த கருத்தியலை அவருக்கு முன்பாகவே “தத்தை விடுதூது" என்ற தலைப்பிலான 33 பாடல்களில் ஆணித்தரமாக இடித்துரைத்தார் என்றுகூறி இலக்கியக்களத்தினுள் கவிஞர் மயூரனையும் பார்வை யாளர்களையும் அழைத்துச் சென்றார். கவிஞர் மயூரன் தமது உரையில் ஈழத்து தமிழ் இலக்கியத்துறையில் இன்றைய உலகத்திற்கு பொருத்தமான அம்சங்களை 120 ஆண்டுகளுக்கு முன் திரு.க.சரவணமுத்துப்பிள்ளை தமது கவிதைகளில் கூறியுள்ளதாக மொழிந்தார். முதலில் மயூரம் வேதநாயகம்பிள்ளையே பெண் அடக்குமுறைக்கு எதிரான கருத்துக் களை முன்வைத்தார் என்றும் 11 வயது சிறுமியான சிவகாமியுடன்
 

தமக்கு ஏற்பட்டிருந்த காதலை மறுத்தவர்கள் அந்த சிறுமியை இரு மடங்கு வயது கூடிய ஒருவருக்கு மணமுடித்து வைத்த கொடுமையைச் சாடி, சமூகம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற வகையில் தமது தூது இலக்கியத்தை திரு.க.சரவணமுத்தப்பிள்ளை அவர்கள் எழுதினார். இவரது கருத்துக்களை ஒட்டி அவரது உறவினரான பாலேஸ்வரி அவர்கள் எமது காலத்தில் எழுதிய கதைகளில் திரு.க.சரவணமுத்தப்பிள்ளை அவர்களின் எண்ணக்கருத்துக்களைப் பிரதிபலித்துக் காட்டினார் என்றும் ‘தத்தை விடுதூது’ இலக்கியத்தை முழுமையாக வெளியிட ஆவன செய்யவுள்ளதாகவும் கூறினார். திரு.மயூரனின் உரையினையொட்டி தலைவரும், பார்வையாளர்களில் இருவரும் வழங்கிய கருத்துக்களில் இருந்து அவரது சிறப்பினை அறிந்து கொள்ளக் கூடியதாகவிருந்தது. இளம் கவிஞர்களை ஊக்கு விக்க எமது தமிழ்ச் சங்கம் களம் அமைத்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கை மிளிர இலக்கியக்களம் இனிது நிறைவெய்தியது. மனித இனத்தில் 50%மான பெண்களை எவ்வாறு சமூகம் புறக்கணிக்க முடியும்? என்ற கேள்வியை கவிஞர் மயூரன் எழுப்பியது குறிப்பிடத் தக்கதொரு விடயமாகும்.
நூலகம் (சிறுவர் பகுதி)
12.02.2011 *" கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில்
திருமதி எஸ்.பாலசுந்தரம் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்கயான கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 450
16.02.2011 அன்றைய அறிவோர் ஒன்றுகூடலில் முன்னாள் கொழும்புத் தமிழச் சங்கத் தலைவர் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்களின் மறைவையொட்டிய “நினைவுப் பரவல்" என்னும் நிகழ்வு சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. நிகழ்வு செல்விகள் உமாஜினி, தர்சிக்கா ஆகியோரின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமாகியது. தலைவர் தமதுரையில் , 1914இல் பிறந்து 2010 வரை 96 வருடங்கள் வாழ்ந்து தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்த அவர் 1960இல் தமிழ்ச் சங்க ஆண்டு மலரான “முருகு” என்ற நூலை வெளியிட்டார். “கற்பக மலர்”, “இமயத்தின் உச்சியில்” என்பவை ஏனைய நூல்களில் சில என்று கூறி, அவரது வழியில் தமிழ்ச் சங்கத் தலைவராக இருப்பது தமக்கு பெரும் பாக்கியம் என்றார். தொடர்ந்து இடம் பெற்ற நினைவு உரைகளில் திரு.மகாலிங்கம், கா.பொ. அவர்கள் 30000 சொற்கள் கொண்ட

Page 5
கலைச்சொல் அகராதிக்கு வித்திட்டவர். 18 ஆண்டுகால பாராளும்ன்ற
உறுப்பினர் பதவியில் தமிழ் மொழி அமுலாக்கத்திற்காக முன்னின்று போராடினார் எனவும் கூறினார். வேலணை நூலக சபை செயலாளர் திரு.ச.மாணிக்கவாசகர் தமது நீண்ட உரையில் இவர் மலேசிய பல் கலைக்கழக பேராசிரியராக விளங்கி, அருட்பிதா தனிநாயகம் அடிகளா ருடன் இணைந்து முதலாவது தமிழாராய்ச்சி மகாநாட்டினை கோலாலம்பூரில் நடாத்தி வெற்றி கண்டவர். ம.பொ.சி, மு.வ, ஞானசம்பந்தன், கல்கி ஆகியோருடன் இணைந்து தமிழ் மறைக் கழகத்தை உருவாக்கினார். 1980 இல் கம்பன்கழகம் இவருக்கு “தமிழ் மறைக்காவலன்” என்ற பட்டத்தை வழங்கியது. இவருக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் ‘சங்கச் சான்றோன் விருது’ வழங்கி கெளரவித்தது. இந்துமாமன்றச் செயலாளர் மூத்த சட்டத்தரணி திரு.க.நீலகண்டன் அவர்கள் திரு.கா.பொ.இரத்தினம் எமது இனம் பெற்றெடுத்த ‘தமிழப்பெருமகன்’ என்றார். தமிழ்க் கவிதைகள் மூலம் பதிலளிக்கும் ஆற்றல் வாய்ந்த பண்டிதர் அவர்களின் கவிதை வரிகளை தமதுரையில் நினைவு கூர்ந்தார். நாம் ‘நாவலர் பரம்பரை' என்று கூறுவதில் பெருமை கொண்டார். திருக்குறளை மேற்கோள் காட்டி அமைச்சர்கள் திரு.பீலிக்ஸ் மற்றும் திரு.சிறில் மத்தியூ ஆகியோரை வாயடைக்க வைத்தார். கா.பொ. அவர்களின் கவிதைகளை மறுபதிப்பு செய்ய வேண்டும்; எல்லா தமிழ் ஊர்களிலும் திருக்குறள் மகாநாடுகள் நடாத்தினார் என்றார். கல்விக்குழு செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் கா.பொ. அவர்கள் கிளிநொச்சி, ஊர்காவத்துறைத் தொகுதிகளுக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூர்ந்தார். ‘நூற்றாண்டுகளில் தமிழ்” என்ற நூலில் தமிழின் தனித்து வத்தைச் சுட்டிக் காட்டினார். “மரணத்தினால் மனிதன் மறக்கப்படுவ தில்லை” என்ற விவிலிய நூலின் கருத்தை மேற்கோள்காட்டி இது கா.பொ.இரத்தினம் அவர்களுக்குப் பொருந்தும் என்றார். தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.மாவை.சேனாதிராஜா அவர்கள் தமதுரையின்போது, கா.பொ.அவர்கள் ஊர்காவற்றுறையில் “ சாட்டி’ என்ற ஊரில் நன்னீர் ஊற்றுக்கு அருகில் தமிழ்ச் சின்னங்கள் இருப்பதை அறிஞர்கள் கலாநிதி புஷ்பரத்தினம், நீதியரசர் விக்னேஸ்ரவன் ஆகியோரை வைத்து ஆய்வு நடத்த வைத்தார். ஆங்கில மோகம் கொண்ட எம்மவர் மத்தியில் பாராளுமன்றத்தில் தமிழில்தான் உரை யாற்ற வேண்டும் என்று கொள்கையை வகுத்தார். புலவர் கனகரத்தினம் அஞ்சலிக் கவிதை மழை பொழிந்தார். பொதுச் செயலாளர் திரு.பாலழறீதரனின் நன்றியுரையைத் தொடர்ந்து தமிழ் வாழ்த்துடன் நிகழ்வு இனிதே நிறைவுவெய்தியது.
 

அற்றைத்திங்கள் - திருப்பணித் தவமணி திரு.சி.தியாகராசா
17.02.2011 மாதா மாதம் நோன்மதி நாளில் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திவரும் தனித்துவம் மிக்க இலக்கிய நிகழ்வில் இம்முறை உழைப்பால் உயர்ந்த தொழிலதிபரும், சமூக சேவையாளரும், இறை தொண்டரும், S.TR என பலராலும் அறியப்பட்ட திருப்பணித் தவமணி திரு.சி.தியாகராசா அவர்கள் உரையாற்றினார். அன்னார் தமது குடும்பத்துடன் நிகழ்வில் கலந்து கொண்டார். தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தமது அறிமுக உரையில் STR தொழிலதிபர் மட்டுமல்ல அரசியலிலும் ஈடுபட்டவர். யாழ் மாநகரசபை உறுப்பினராகவிருந்தவர். ஆளுமை மிக்க இவர் மிகவும் எளிமையானவர். ஏராளமான நண்பர்களைத் தேடிக் கொண்டவர். சினிமாத்துறையில் இவர் சந்திக்காத பிரமுகர்கள் இல்லை. ஈழத்து திருநெறித் தமிழ் மன்றத்தின் தலைவராக சமயத் தொண்டு, தமிழ்த்
தொண்டு ஆற்றி வருகிறார் என்று கூறினார்.
திரு.சி.தியாகராசா அவர்கள் தமதுரையில் தாம் நயினாதீவினை பிறப்பிடமாகக் கொண்டு வறுமை நிலை காரணமாக கல்வியை தொடர முடியாமல் முதலில் யாழ்ப்பாணத்தில் தமையனாரின் கடையில் வேலை பார்த்து பின்னர் சிறுவியாபாரம் செய்து என்னை நிலைநிறுத்திக் கொண்டேன். சிறுவயதில் சிறுவர்களுக்கு “பாயஸ்கோப்" படம் காட்டி அந்த துறையில் மேன்மையடையும் நாட்டம் கொண்டு அதைச் செயலிலும் காட்டினோன் என்று கூறினார். STR அவர்கள் சினிமாத்துறையில் தாம் பெற்ற அனுப வங்களையும், நெருக்கடிகளையும் விளக்கினார். 3 பெரிய சினிமாக் கம்பனிகளுடன் போட்டியிட்டு அவர்களின் எதிர்ப்பினையும் பொருட்படுத் தாமல் தமிழகம் சென்று பெரும் வெற்றிப் படங்களான “காவல்காரன்”, “ஒளிவிளக்கு’ போன்ற திரைப்படங்களைப் பெற்று யாழ்நகரில் ஆகக் கூடுதலான நாட்கள் ஒட வைத்து ச்ாதனை படைத்தேன். தமிழ்ப் பகுதி களில் 5 திரையரங்குகள் நடாத்தினேன். அவற்றுள் இன்றும் 4 அரங்குகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன. என்னை எதிர்த்தவர்கள் தாமாகவே என்னை அணுகி தொடர்பு கொள்ளும் வண்ணம் நடந்து கொண்டேன். தமிழக திரைப்பட விற்பனையாளர்கள், எம்.ஜி.ஆர் போன்றவர்களை நண்பர்களாக்கிக் கொண்டேன். அதுமட்டுமன்றி கர்நாடக இசைத்துறையில் நாட்டம் கொண்டு திரு.டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் அவர்களுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் இசை விழாக்களை நடத்தினேன். கி.வா.ஜெகநாதன், கிருபானந்தவாரியார், காமராஜர் போன்றவர்களையும் சந்தித்து உரை யாடியிருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் யோகர்சுவாமிகளை தரிசித்து அவருடன் தொடர்பினை ஏற்படுத்தினேன். சபாரத்தினசுவாமிகள் என்னுடன் அன்பு கொண்டு தம்முடன் இணைந்து கொள்ளும் வண்ணம் என்னை வற்புறுத்தினார். திருக்கேதீஸ்வர ஆலய அறங்காவலர் திரு.நவசிவாயம்,

Page 6
STR அவர்களை தமது பணியில் இணைத்துக் கொண்டார். திருச்செந்தூரில் இருந்து முருகப்பெருமானின் கல்யாண கோலத்தில் அமைந்த சிலை யினை இங்கு வருவித்து யாழ்ப்பாணத்தில் கோவில் அமைத்து மக்கள் வழிபட ஏற்பாடு செய்தேன். சபாரத்தினசுவாமிகளுக்கு நினைவாலயம் அமைக்கும் பணியில் ஈடுபட்டேன். நல்லை ஆதீனம் இவரது பணிகளை பாராட்டிக் கெளரவம் வழங்கியது. திருநெறித் தமிழ் மன்றத்தின் தலைவராகவிருக்கும் STR அவர்கள் ஏனைய இந்து மத நிறுவனங் களுக்கும் வழிகாட்டியாக விளங்குகிறார். இவரது வரலாற்றுக்குக் குறிப்புகள் சுயசரிதையாக எழுதப்படவேண்டும் என்ற விருப்பினை தமிழ்ச் சங்கத் தலைவர் வெளியிட்டார்.
இலக்கியக்களம் 43 18.02.2011 இலக்கியக்களம் நிகழ்வு தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்கள் தலைமையில் தொடங்கியது. இன்றைய பேச்சாளர் கவிஞர் “அக்கரைச்சக்தி” சக்திதாசன் அவர்களை தலைவர் அறிமுகம் செய்தார். ‘டானியலின் பஞ்சமர் நாவல் பற்றிய விமர்சன” உரையாற்றவுள்ள திரு.சக்திதாசன் அவர்கள் மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி, கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்தவர். 175 இற்கு மேற்பட்ட கவிதை நிகழ்வுகளில் பங்குபற்றிய அனுபவம் மிக்க இவர் டானியல் அவர்களின் சாகித்திய அகடமி பரிசு பெற்ற “பஞ்சமர்” நாவல் பற்றி பேச்சாளர் பேசுவர் என்று கூறினார். 17-03-1973 அன்று அக்கரைப்பற்றில் விபுலானந்தர் சபையில் கவிதை வடிவில் தமது விமர்சனத்தைச் செய்து பாராட்டுப் பெற்றேன். டானியல் அவர்களின் "பஞ்சமர்” நாவலுக்கு எதிர்மறையான விமர் சனம் யாழ்ப்பாணத்தில் இருந்தபோதும் மட்டக்களப்பில் அப்படி இருக்க வில்லை. இருந்தபோதும் தம்புநாத போடியாருக்கும் அவரது மருமகன் சீலஞானமூர்த்தி ஆசிரியருக்குமிடையிலான கருத்தியல் போட்டி அங்கு காணப்பட்டது. நாவல் விமர்சனம் மருதூர்க்கனி என்ற எழுத்தாளர் தலைமையில் இடம்பெற்றது. 38 வருடத்திற்கு முன்னைய தமது கவிதை விமர்சனத்தை திரு.சக்திதாசன் படித்துக் காட்டினார். ஆனால் காலம் பெரிதளவில் மாற்றமெதனையும் கண்டுவிடவில்லை. யாழ்ப்பாணம் இப்பொழுதும் பிரிவு நிலையில் தான் இருக்கிறது. சமத்துவம் என்பது முழு அளவில் பேணப்பட வில்லை. வரட்டுக் கெளரவமும், வீண்பிடிவாதங்களும் மக்கள் மத்தியில் துலங்குகிறது. டானியல் அவர்களின் கருப்பொருள் (நாவலில்) உயர் வர்க்கம் என்று கூறிக்கொள்பவர்களின் மறை முகமான துர்நடத்தை, பொய்மை, சதிவேலை பற்றியதாகும். அதே
 

வேளை வறுமை நிலையில் உள்ள மக்களின் சீர்கேடுகள் பற்றியும் அவர் கூறத் தவறவில்லை. டானியலின் நாவலில் கற்கண்டன், சிரிசேனா, செல்லத்தம்பி போன்ற பாத்திரங்களும், கமலாம்பிகை, மாம்பழம் போன்ற பெண்பாத்திரங்களும் குறிப்பிடத்தக்கவர்கள். ஐயர் அண்ணர் என்ற பாத்திரம் (ராசா என்ற பெயரில்). உண்மையிலேயே நான் கண்டு கொண்ட சிறந்த பாத்திரமாகும். பாத்திரங்கள் பேசும் போது மொழி நடை மாற்றம் எதுவும் இன்றி அப்படியே கையாளப் பட்டது ஒரு சிறப்பாகும். டானியல் அவர்கள் “என்கதை’ என்ற நூலில் தமது சொந்த வறிய வாழ்வு பற்றி கூறியுள்ளார். இவரது கதை ஒரு நாவல் அல்ல. அது ‘சம்பவங்களின் கோவை’ என்று ஒரு விமர்சகரால் சொல்லப்பட்டது. ரஷ்ய நாவல் “தாய்” கதையில் வரும் தாய்ப்பாத்திரத்தை பஞ்சமரிலும் டானியல் காட்டுகிறார். மார்க்ஸிய வாதியான டானியல் ତଓ முற்போக்கு எழுத்தாளராவார். சக்திதாசன் தாம் ஒரு காந்தியவாதி என்று கூறினாலும் டானியலின் கதைகளை விமர்சிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு கவிஞர். தலைவர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி சக்திதாசன் கையாண்ட முறைகளை (விமர்சனம்) வரவேற்றார். திரு.பாலவைரவநாதன் கருத்துரை வழங்கினார். தலைவர் கவிஞருக்கு பரிசளித்து கெளரவித்தர். அத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
7 ஒரு நாவலிலே இடம்பெறும் பாத்திரங்களின் جمہ 13 سے\
களையும் உணர்ச்சி மோதல்களையும் அவற்றால் எற்படும் நிகழ்ச்சிகளையும் அந்நிகழ்ச்சிகளுக்கிடையேயுள்ள ஒழுங்கு முறையையும் கூறும் பொழுது உண்மைபோலத் தோன்றும் அவ்வாழ்க்கை சரிதத்திலே சுவையிருக்கலாம். படிப்பவரிடத்தே பல மெய்ப்பாடுகள் தோன்றலாம். சில சிந்தனைகள் கூடத் தோன்றலாம். ஆனால் அவை நாவலிலே வரும் பாத்திரங்களைப் படைதீத ஆசிரியனுடைய அகக் காட்சியாகவே இருப்பன. பாத்திரங்கள் வாயிலாக மனிதத்தையோ, மனித சமுதாயத்தையோ நன்கு உணர்ந்து கொண்டவராக மாட்டோம். அப்படியாயின் எவ்வாறு உண்மை நிலையை அறிந்து கொள்வது?
பேராசிரியர் க.கைலாசபதி நன்றி அகில உலக தமிழ் எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ ܓܠ

Page 7
நூலகம் (சிறுவர் பகுதி)
19.02.2011 “கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில்
திருமதி அ.புவனேஸ்வரி கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோர்ஒன்று கூடல் - 451
23.01.2011 அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் “ஊடகத்துறையும் நானும்” என்னும் தலைப்பில் மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் மயில் வாகனம் சர்வானந்தா அவர்கள் உரையாற்றினார். கல்விக்குழுச் செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கினார். தலைவர் தமது அறிமுக உரையில் ஊடகத்துறை அச்சத்திற்கு உள்ளாகி உள்ள காலத்தில் ஒரு மூத்த ஊடகவியலாளரை வரவேற் பதில் மகிழ்வு கொள்வதாகவும் தமிழகத்தில் சினிமா ஊடகம் 1977 இல் ஆட்சியையே மாற்றியமைத்ததாகவும் அந்த பாதிப்பு இன்னமும் தொடர்வதாகவும் கூறி ஊடகம் என்பது கூரிய வாளில் நடப்பது போன்றது என்றார். மயில்வாகனம் சர்வானந்தா அவர்கள் பரியோவான் கல்லூரி பழைய மாணவர். 1980இல் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தில் சேர்ந்து அறிவிப்பாளர், கட்டுப்பாட்டாளர், தயாரிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்து ஓய்வுபெற்று தற்போது பணிப்பாளர் சபை உறுப்பினராக கடமை புரிகிறார். அறிவிப்பாளர் ராஜகுரு சோனாதிபதி கனகரத்தினத்தை தமது குருவாக நினைக்கிறார். கே.எஸ்.நடராசா, அப்துல் ஹமீட் போன்ற சிறந்த அறிவிப்பாளர்களுடன் பணியாற்றியவர். 50 நாடகங்களை எழுதி 100 நாடகங்கள் வரை தயாரித்தார் என்றார். திரு.ம.சர்வானந்தா தமதுரையில் பாடசாலை நாட்களில் இருந்தே ஊடகத் துறையில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இலங்கை வானொலிதான் அக்காலத்தில் மிகச் சிறந்த ஊடகமாகவிருந்தது. தமிழில் அழகாக பேசுவது, மொழி நடை, உச்சரிப்பு என்பவை வெகுவாக பேசப்பட்டது. சினிமா நடிகர்கள் வசனம் பேசுவது மாதிரியான பாணியில் ஒவ்வொரு வரும் வெவ்வேறு முறையினைக் கடைப்பிடித்தனர். பராசக்தி, மனோகரா பட வசனங்கள் தமக்கு பாதிப்பினை ஏற்படுத்தியதாகவும் கூறினார். அறிவிப்பாளராகவிருந்து பணிப்பாளராக உயர்ந்த வி.என்.மதியழன் சகல வகைகளிலும் தமிழ் உச்சரிப்பு என்பதில் அக்கறை கொண்ட வராக விளங்கியவர். ‘சிந்தனை முத்துக்கள்’ என்ற நிகழ்ச்சியை நடாத்தியதில் பெருமைப்பட்டார். இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பாராட்டையும் பெற்றேன். “பொதிகைத் தென்றல்” நிகழ்வில் S.K.பரராஜசிங்கம் ஆற்றிய பணியினை தாம் தொடர்ந்த தாகவும் ஆசிய சேவையில் தமது பாடல் தெரிவுகளுக்கான
 

விளக்கத்தைக் கேட்டு பின்னணிப்பாடகி P.சுசீலாவின் பாராட்டைப் பெற்றது பற்றியும், வானொலி நிகழ்ச்சிகளுக்கு ‘தினபதி பத்திரிகை ஆற்றிய பணி பற்றியும் நினைவு கூர்ந்தார். நாடகவியலாளர் ஜேசு ரத்தினம்; எஸ்.எஸ்.கணேசபிள்ளையுடன் பணிபுரிந்ததை பெருமையாகக் கூறினார். ஊடகவியலாளனுக்கு “ஒழுக்கம் மிகவும் முக்கியமனது” என்றும் வலியுறுத்திக் கூறினார். ‘இன்றைய வானொலியிலும் பல தனியார் ஊடகங்களிலும் நூற்றுக் கணக்கான அறிவிப்பாளர், தயாரிப் பாளர் இருந்தும் திரு.லோஷன் அவர்கள் சிறப்புடன் விளங்கும் இளைஞர்” என மனம் திறந்து கூறினார். திரு.போல் அன்ரனி, திரு.க.க.அருமைநாயகம், திருமதி.வசந்தி தயாபரன், திரு.ஆ.இரகுபதி பாலழறீதரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தலைவர் பரிசில் வழங்கி கெளரவிக்க நிகழ்ச்சி நிறைவெய்தியது.
இலக்கியக்களம் 44
25.02.2011 இலக்கியக்களம் நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் அவர்கள்
“தகழியின் படைப்பாளுமை” என்ற தலைப்பில், செம்மீன் நாவலை வாசித்த பொழுது நெஞ்சில் எழுந்தவை பற்றி உரை நிகழ்த்தினார். ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.கதிரவேலு மகாதேவா நிகழ்வுக்குத்
தலைமை தாங்கினார்.
தலைவர் தமது அறிமுக உரையில் முச்சந்தி இலக்கிய வட்டத்தின் செயலாளர் திரு லெனின் மதிவானம் அவர்களை அறி முகப்படுத்தும் பொழுது அவர் ஹட்டனைச் சேர்ந்தவர். ஹைலன்ஸ் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடத்தில் முதுமாணிப் பட்டம் பெற்று பின்னர் மலேசியாவில் சமூக அறிவியலில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றார் என்று கூறினார். தந்தை வழியில் சோசலிச சிந்தனை வயப்பட்டு இளைஞர்கள் மத்தியில் இரகசிய அமைப்புகளை ஏற்படுத்தி இலக்கிய வட்டத்தினை நடாத்தி வருபவர் என்று கூறினார். தகழி சிவசங்கரம்பிள்ளை பற்றிக் கூறுகையில் அவர் மலையாள தேசத்து முற்போக்கு இலக்கிய வாதி என்றும், அவரது செம்மீன் நாவல் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது என்றும் கூறினார். ‘தமிழில் சுந்திரராமசாமி மொழி பெயர்த்தார். காதலில் தோல்வி கண்ட மீனவ பெண் கருத்தம்மாவும், காதலனான முஸ்லிம் வர்த்தகர் பரிக்குட்டியும் முக்கிய பாத்திரங் களாகும். அப்பெண் இன்னொருவரை மணம் புரியச் சென்ற பின்பும்கூட அவர்கள் மீண்டும் சந்திக்கும் சூழ்நிலையில் இணைந்து கொள் வதினால் “கடல் அன்னை” அவருடைய கணவனையும் சேர்த்து மூவரையும் பலி கொள்கிறது என்பதுதான் கதை. மீனவ மக்களுடன்

Page 8
நூலகம் 26.02.2011
வாழ்ந்து எழுதிய இக்கதை ஒரு “கலை உருவம்” என்று வர்ணித்தார். இதற்காக சாகித்திய விருதினைப் பெற்றார். இவரது “செம்மீன் 1965 இல் திரைப்படமாகி ஜனாதிபதியின் தங்கப்பதக்கம் பெற்றது.
லெனின் மதிவானம் தனது உரையில் தகழியின் மற்றொரு நூலான தோட்டியின் மகன் என்ற நாவல் விமர்சனத்தையும் தொட்டுச் சென்றார். செம்மீன் நாவல் பற்றி அவர் கூறுகையில் நேர்த்தியாக மொழி பெயர்க்கப்பட்டதென்றும், இந்திய விடுதலை இயக்கத்தோற்றம், ஏகாதிபத்திய பொருளாதார முறை, ஆணாதிக்கம், வெகுஜன விரோத பண்பாடு போன்ற புறச் சூழல்கள்தான் பாதிப்பினை ஏற்படுத்திய தென்று பாத்திரங்களின் படைப்பினை தனித்தனியாக ஆய்வு செய்தார். கருத்தம்மாவின் மீது பரிக்குட்டிக்கு ஏற்பட்ட நேயம் காதலாக மாறி பின்பு விபரீதமாக முடிகிறது. இளமை துள்ளி எழுந்து காதல் வென்றது. ஒரு பாடலையும் சுட்டிக் காட்டி மீனவன், உழைப்பினையே நம்பிவாழும் நிலையினையும் வேறுபடுத்தி அற்புதமான உரையை நிகழ்த்தினார். காதலை காவியமாக மாற்றும் மரபு, திருமணம் என்பது மனங்களின் இணைப்பினை விட, குடும்பங்களின் ஒப்புரவு என்ற கருத்தினையும் தகழி விளக்குகிறார். உழைக்கும் மக்களின் இன்பதுன்பங்களை வெளிக் கொன்ணர்வது தான் உண்மையான நாவல் இலக்கியம் என்றார். சபையோர் கருத்துரையில் திருதம்பு சிவா, ஜே.மனோசிதராஜ், லே.ராமர் உட்பட பலர் பங்கு கொண்டனர். தலைவர் பேச்சளாருக்கு பரிசளித்துக் கெளரவித்தார்.
(சிறுவர் பகுதி)
“கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில்
செல்வி க.ஹேமலதா கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து
மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
 

ஆரோக்கிய வாழ்வுக்கான கலந்துரையாடல்
27.02.2011 மாத இறுதி ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் ஆரோக்கிய
வாழ்வுக்கான கலந்துரையாடல் “சுகாதாரவிருத்தியில் சுவா சத்தின் பங்கு” என்ற தலைப்பில் கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமையில் குமாரசாமி விநோதன் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சி இணைப்பாளராக வைத்தியகலாநிதி சி.அனுஷ்யந்தன்
கடமையாற்றினார். இயல்பாக ஒருவர் சுவாசிக்கின்றார் எனின் அதன் நன்மை எவையாக அமையலாம்? நெஞ்சுப்படபடப்பு (Papitation) அதி இரத்த அமுக்கம், நியூமோனியா போன்ற நிலை ஏற்படக் காரணி யாது? சுவாசத்தின் மூலம் நோய் தோற்றுமா? சம்பவிக்கக் கூடிய நோய்கள் யாவை? இவைகளை எப்படித் தவிர்க்கலாம்? அமைதி பேணி சுவாசம் - எப்படியடையலாம்? யோகாசனம் கை கொடுக்குமா? பிராணாயாமம் - அதன் நன்மைகள் யாவை? காதின் மூலம் தொற்றுே ஏற்பட்டுச் சுவாசத்தைப் பாதிக்குமா? அஸ்மா போன்ற நோய்களுக்கும், சுவாசத்திற்கான தொடர்புகள், சுவாசம் தான் உயிர் - என்றால் என்ன? சுவாசம் - இயல்பாகச் சுவாசிப்பதற்கு நாம் கையாள வேண்டிய சுகாதார விருத்தி முயற்சிகள் யாவை? யோகாசனம் - ஆழச் சுவா சித்தல் என்ற தலைப்புகளில் வைத்தியகலாநிதிகள் சி.எஸ்.நச்சினார்க் கினியன், முரளி வல்லிபுரநாதன், சிவானந்தி இரகுபரன் மற்றும் யோகசனப் பயிற்சியாளர் பா.இராசேந்திரா ஆகியோர் உரையாற்றி அவையோரின் கேள்விகளுக்கும் தகுந்த பதில்கள் அளித்தார்கள். ‘மிகவும் பிரயோசனமான கருத்தரங்கு' என அவையோரால் பாராட்டப் பட்டது. திரு.சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின் தமிழ் வாழ்த்துடன் பகல் 12.00 மணியளவில் நிறைவெய்தியது.
தொகுப்பாளர்- கந்தசாமி மகாதேவா - வடிவமைப்பு:- உறுப்பாண்மைக்குழுச் செயலாளர் திருமதி.கு.சத்தியஜோதி

Page 9
eureGà09kusikagak Eacanisktặså
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
தமிழ்ச் சங்கத்
1. ஏறத்தாழ 50,000 தமிழ் 2. சிறுவர் நூலகம் 3. தினசரி தமிழ், ஆங்கில
- காலை 8.00 மணி மு 4. மாணவர்கள் கல்வி கற் 5. முன்று மண்டபங்கள் -
6. தங்குவதற்கான ஆறு அ (மேலும் 3ஆம் மாடியில்
வருகின்றன சித்திரைத்
மு.கதிர்காமநாதன் ஆ.இரகுப
 
 

தின் சேவைகள்
நூல்கள் கொண்ட நூலகம்
ப் பத்திரிகைகள் வாசிக்கும் அறை 2தல் மாலை 6.30 மணி வரை க வசதியாக படிப்பக மண்டபம்
1. சங்கரப்பிள்ளை மண்டபம் 2. விநோதன் மண்டபம் 3. சுப்பிரமணியம் மாலதி மண்டபம் D60soa56i.
ஐந்து அறைகள் அமைக்கப்பட்டு திங்களில் திறக்கப்படும்)
தி பாலறிதரன் செ.திருச்செல்வன்