கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்புத் தமிழ்ச் சங்கம் செய்தி மடல் 2011.04

Page 1
unwatwg
': உறுப்பினர்களுக்கு மட்டும்
கொழும்
Ꮆh8=
வெளியீடு : 018 LDITg5tb கொழும்புத் தமிழ்ச் சங்க இணையத்தளத் "செய்தி மடல்’ என்பதன் ! வடிவம் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யுங்கள் Saifugis:Fb:www.colombotamilsangan.com தெலைபேசி இல . 2363759
தெலைநகல் : 236.1381
வைகாசி,
(SP 17.05.2011 அன்று
நிகழ்வில் மா6 பெண்கள் கல்வி
U6aff கலாநிதி செல் உரையா
Gş- ஆனி மாதம் 2 திருக்குறள் ம1 "திருக்குறள்" ம
(s- அடுத்த நிகழ்வுக ' கட்டி முடிக்கப்பட்ட ஐ கோலாகலமாகத் :
CS இலக்கியத் தெ ஐந்து நாட்களு
மு.கதிர்காமநாதன் ஆ.இரகுபதி
··Ni Kuy·ga
தலைவர் பொதுச்ே
 
 

புத் தமிழ்ச் சங்கம்
() O
uiligi5 IDIL6ld
சித்திரை ஆண்டு : 2011
தில் "எம்மைப் பற்றி” என்னும் பகுதியிலுள்ள இம்மடலாகும். மேலும் விபரங்களுக்கு எமது
மின்னஞ்சல்: tamilsangamcolombocayahoo.com
info@colombotamilsangam.com
“அற்றைத்திங்களி' லை 6.00மணிக்கு ஆய்வு நிறுவனத்தின்
US 6 வி திருச்சந்திரன் ற்றவுள்ளார்.
4, 25ம் திகதிகளில் ாநாடு நடைபெறும். லரும் வெளியிடப்படும்.
Marras G&LD6tbUDruguaiosb
ஐந்து புதிய அறைகளும் நிறந்து வைக்கப்படும்.
ஜெயராஜின் ாடர் சொற்பொழிவு நக்கு இடம்பெறும்.
தி பாலழறீதரன் செ.திருச்செல்வன்
LLSSTSeSLS செயலாளர் நிதிச் செயலாளர்

Page 2
இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றிய
xf86M"mrri ISANGAN
(SG)issu disas. In 48 O1,04.20
இன்றைய இலக்கியக்களம் நிகழ்வுக்கு துணைத்தலைவர் கலாநிதி வ.புகேஸ்வரன் அவர்கள் தலைமை தாங்கினார். 'தமிழியலாய்வில் பிறதுறைகளின் பங்களிப்பு" என்னும் தலைப்பில் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் உரையாற்றினார். தலைவர் தனது தலைமையுரையில் “மொழி என்பது தொடர்பாடல் ஊடகம் என்ற தளத்தில் இருந்து தாண்டும்போது பல்வேறு வித மாற்றம் ஏற்படுகிறது. மொழி இயங்க இயங்க மொழியின் பன்முகப்பட்ட அம்சங்கள் வெளிவரும். நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்ட மொழி ஊடாடும் போது எவ்வாறு இயங்கி வந்தது. தமிழ் தன்னை அகலித்தபோது தமிழும் பிறமொழியும் என்ற ஓர் ஆய்வு தேவைப்படு கிறது. தமிழ் நவீனமயமாக்கப்பட்டிருக்கிறது. அறிவியல் பூர்வமாக வெளிவருகிறது என்று நண்பர் நாகேஸ்வரன் உங்களுக்கு உரை யாற்றுவார். நாகேஸ்வரன் சமயப்பண்பாட்டுச் சூழல் அடையாளத்தின் ஊடாக வெளிவந்தவர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகவுள்ளார். விரைவில் பேராசிரியராகவரவுள்ளார்” என்றார்.
நாகேஸ்வரன் உரையாற்றும் போது திருமந்திரக் கூற்றான "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்ற ஆரம்பத்துடன் தொடங்கினார். இலக்கிய ஆய்வுக்கு பிறதுறைகளின் பங்கு தவிர்க்க முடியாதது என கைலாசபதி கூறியுள்ளார். தமிழ் என்றால் அறிவு எனலாம். வடமொழிக்கும் சிங்கள மொழி மூலத்துக்கும் தொடர்புண்டு. தமிழ்மொழிக்கு அற்புதம் செய்யும் ஆற்றலுண்டு. சமயங்கள் பக்தி இலக்கியமாகியது. இனம், மொழி, சமuம் பற்றிய ஆய்வை தமிழியல் பற்றி ஆய்வு செய்த பன்மொழியைச் சார்ந்தவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என கைலாசபதி கூறி யுள்ளார். தமிழ்க் கவிதை மூலம் எழுச்சி, புரட்சி, சிந்தனை முதலிய வற்றை 19ம் நூற்றாண்டில் பாரதி வெளிக்காட்டினார். தமிழில் நுட்பங்களைக் கொண்டு வரவேண்டும். தமிழ் பற்றிய கருத்து ரஷ்ய மொழியில் எழுதப்பட்டது. உலகளாவிய சிந்தனை மரபு தமிழில் உண்டு. தெலுங்கு மொழி தமிழர்களைத் தனக்குக் கிட்டே இழுத்தது. அரசியல் சமூகப் பின்னணியால் தமிழ் மொழியில் ஆர்வம் ஏற்பட்டது. பிற துறைகளைப் படிக்கும் போதெல்லாம் அவை தமிழில் உண்டு என்பதை உணர முடிகிறது. தத்துவம், சாத்திரம், சமயம், மொழிக் கலப்பு ஏற்படும்போது புதுப்புதுத் துறைகள் தமிழியல் வரலாறாயிற்று. "அணுவுக்கு அணுவாக உள்ளது மெய்ப்பொருள் என்று ஒளவையார் கூறியுள்ளார். சட்ட நூல்கள் தமிழில் உண்டு.
சட்டத்துறை இலக்கியத்துக்கு வரலாயிற்று. ஆரம்ப காலத் தமிழ் நாவல்கள் சட்டத்தோடு சம்பந்தப்பட்டனவாக இருந்தன. சமுதாயச்
 

சீரழிவை கனகி புராணம் கூறும், அழகியல் துறைக்கு புத்தகம் வெளிவந்துள்ளது. நுண்கலை தமிழில் வந்துள்ளது. சமையற்கலை தமிழில் உண்டு. சுவாமி விபுலானந்தர் விஞ்ஞானப் பட்டதாரி, யாழ் நூல் எழுதினார். சைவசமய ஆசிரமங்களில் உணவு பரிமாறப்படுகிறது. இது ஒரு மாக்சிய சிந்தனையாகும்.
சாசனம், இலக்கிய ஆவணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சாசனம், விண்ணியல், வானியல், மானிடவியல் நூல்கள் தமிழில் உண்டு. பரத நாட்டியக்கலைகளில் ஒலி, ஒளி போறவை உண்டு. வைத்தியத்துறைக்கு யாழ்ப்பாணத்தில் தோன்றிய பரராசசேகரம், செகராசசேகரம் போன்ற மருத்துவ நூல்கள் உண்டு. பஞ்சாங்கம் சரியாகக் கணிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத் தமிழ் இலக்கியம். மண்ணை விளித்துப் பாடியது. வேறு மொழிகளில் இந்த நோக்கு இல்லை. அரசியல், அறம் பேசிற்று. வைத்தியத்துறை நாடி சாஸ்திரம், மூச்சுப் பயிற்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. சோதிடம் தமிழ் குகைக் கல்வெட்டு, வெகுசனத் தொடர்பு சாதனம் போன்றவை தமிழில் உண்டு. தொலைபேசி இது ஒரு புதுத்துறை. தமிழியல் ஆய்வில் இவை வர வேண்டும். துறைசார்ந்த ஆராய்ச்சியாளர், சிந்தனையாளர், கலைஞர்கள் எமது நாட்டிலுண்டு. தென்னிந்திய அறிஞர்கள் தேவையில்லை.
நூல்மரபு, மொழிமரபு, அரசியல் பண்பாடு, கலை, இலக்கியம்,
பெண்ணியில் பற்றிய நூல்கள் தமிழில் உண்டு. பிறதுறைகளில் உள்ள
நூலகம் C2 (4, 2011.
வற்றை தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கூறி தனதுரையை நிறைவு செய்தார். தலைவர் தனது தொகுப்புரையின் போது தமிழியல் என்பது மொழி பற்றிய ஆய்வுதான். தனியே இலக்கணமல்ல என்று கூறி நிறைவு செய்தார்.
(சிறுவர் பகுதி)
“கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி.சுமதி
பாலரீதரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க
கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அறிவோ'ர்ஒண்று கூடல் - 454
C-6, 6:14, 201 ]
அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் சமூகஜோதி திரு.ச.இலகுப்பிள்ளை அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இன்றைய தலைப்பு "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதாகும். கணியம் பூங்குன்றனார் அவர்களின் கவிதை வரிகள் அவை. உரைஞர் நீர்வழங்கல் வடிகாலமைப்புப் பொறியி யலாளர் திரு.சிவகுரு விபுலானந்தன் அவர்கள். சைவமும் தமிழும் செழித்துள்ள சுதுமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். "யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தரவாரா' என்பதன் அர்த்தத்தினை பலரும் பலவிதமாக கூறுவர். தமிழக அரசியல் வாதிகள் தமது அரசியல் சுலோகமாகக் கொள்வார்கள். உலகம்

Page 3
கூட தமது பாடலொன்றில் "மானிலம் எல்லாம் நம்மில்லமே! மக்கள் நம் சொந்தமே! காணும் நிலம் யாவும் தமிழ் கூறும் மனமே! உலகம் நமதாகுமே என்று பாடியுள்ளார். சங்ககால இலக்கியத்தின் வரிகள் இன்றும் உயிர்வாழ்கின்றன. சிவனை வழிபட்டு பாடல் மூலம் தனது உரையினை தொடங்கினார் திரு.விபுலானந்தன், ஒளியிலிருந்து இருளை நோக்கிச் செல்லும் அந்திப்பொழுதில் இருளில் இருந்து மீண்டும் ஒளிக்குத் திரும்பும் விருந்தாகவும், மருந்தாகவும், அமிர்த மாகவும் தமிழர்களுக்கு இந்த வரிகள் துலங்குகின்றன. ஐந்தாம் ஜோர்ஜ் மன்னன் இந்திய பிரதிநிதிகளுக்கு தென்னிந்திய உணவு பரிமாற எண்ணி தஞ்சாவூரில் இருந்து வாழை இலைகளையும் மற்றும் இடங்களிலிருந்து சமையல் பொருட்களையும் வரைவழைத்து கதை கூறி, ஆங்கில நாட்டு சமையல்காரன் பப்படத்தை விட்டுவிட்டு அதைச் சுற்றி வந்த கடதாசியை எண்ணெயில் பொரித்ததாகக் கூறினார்.
எனவே ஏட்டில் இருந்ததை மட்டும் கொண்டு இலக்கியம் படைக்க முடியாது. இனமுரண்பாட்டின் உச்சக் கட்டத்தில் தென்னிந்தியாவில் இருந்து வந்து தீர்த்த யாத்திரை செய்த தமிழனை திசமகாராமவில் அடித்துக் கொன்றனர். தமிழர்கள் மட்டும் குறைந்தவர்களல்ல? சில்லையூரான் கூறியபடி "தாவாரம் இல்லையடி! தேவாரம் ஏதுக்கடி" (தனக்கென ஒரு வீடு இல்லாத போது பக்தி எங்ங்ணம் வரும்) என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியவர்கள் என்பவர்களைப் பாராட்டியும் சிறியோரை இகழவும் செய்யாதே என்பதை இந்த வரிகள் காட்டி நிற்பது தான் உண்மை. யேசுவை இறைமகன் என்று கூறி அவரை மனிதகுலம் என்று ஏற்றுக் கொள்ளாத போதும் யேசு மனிதகுலத்தில் பிறந்தது இந்த மண்ணிற்கு பெருமையடா! என்றும் பாடினார் ஒருவர். உயிருடன் இருக்கும் போதே மனத்திலிருந்து விடுதலை பெறவேண்டும் என்ற வகையில் சிந்தையைத் தூண்டும் பேச்சாக அமைந்தது.
66 bisas šasirib 49 08.04.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்விற்கு ஆட்சிக்குழு உறுப்பினர்
திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். "ஈழத்து சிறுகதை இலக்கியத்தின் வளர்ச்சிப் போக்கு" என்னும் தலைப்பில் திருமதி பவானி முகுந்தன் அவர்கள் உரையாற்றினார். தலைவர் தனது அறிமுக உரையில் திருமதி பாவணி முகுந்தன் இந்துக் கலாசார அலுவல்கள் திணக்களத்தின் உயர் அலுவலராகப் பணிபுரிகின்றார். தமிழ்த் துறையில் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வு களை மேற்கொள்ளும் பட்டதாரியாவார் என்றும் கூறினார். தலைவர் ஒரு சிறுகதை இலக்கியவாதி என்ற வகையில் தமது அனுபவங் களையும் நவீன இலக்கியத்தில் சிறுகதையின் பங்கு பரிணாம வளர்ச்சி பற்றியும் கூறினார். சிறுகதை, குறுங்கதை, நிமிடக் கதை, நெடுங்கதை என பலவகைப்படும். தொடக்க காலத்தில் சிறுகதை எழுத்தாளர்கள் தென்னிந்திய பாணியில், மொழி நடையில் எழுதினார்கள். 197இல் மறுமலர்ச்சி ஏற்பட்டது. எமது நாட்டு மொழி நடை, கலாசாரம்,
 

கலைத்துவம் பேணப்பட்டது என்று கூறி பேச்சாளரை உரையாற்ற அழைத்தார்.
உரைஞர் தனதுரையில் தமிழ் நாட்டில் 1930இல் சிறுகதை வளர்ச்சி யில் மணிக்கொடி குழுவின் பங்கு பற்றிக் கூறினார். யாழ்ப்பான வழக்கு 1950இன் பின்னர் சிறுகதையில் பேணப்பட்டு 1960இல் தமிழ் நாட்டு இலக்கியத்தின் தாக்கத்தால் சில சொற்களின் பயன்பாடு மாற்ற மடைந்து எமது சொற்பிரயோகங்கள் ஏற்படத் தொடங்கின. இதற்கு முன்னோடியாக டொமினிக் ஜீவா, டானியல், கணேசலிங்கன் சிறுகதை கள் விளங்கின. 1970களில் படித்த சமூகம் சிறுகதை இலக்கியத்தில் பங்கு பற்றியது. 1980களில் போர்க்கால ஆழ்நிலைகளில் தனிமனித சகஉளைச்சல்கள், அனுபவங்களைக் கூறும் பண்பு வளர்ச்சியடைந்தது. மார்க்சிய சிந்தனை வாதிகள் தேசிய அடிப்படையில் சிந்தனை வயப் பட்டு சீர்திருத்தக் கருத்துக்களைக் கொண்ட சிறுகதைகளைப் படைத்தனர். ஞானம், மல்லிகை, இருக்கிறம் போன்ற இன்றைய சஞ்சிகைகளும் பலதரப்பட்ட நவீன இலக்கிய வளர்ச்சிக்காக பறைசாற்றி வருகின்றன. நவீன இலக்கியம் என்னும் போது இன்றைய சூழலுக்கேற்ப மனோநில, உளவியல் தத்துவார்த்த ரீதியில் சிந்தனை வயப்படுத்தும் கதைகள் தோற்றம் பெற்றன. எழுத்தாளர்களின் படைப்பாளுமை, மொழி நடை என்பன முக்கியமானவை. சிறுகதைப் படைப்பு இலகுவானதல்ல; ஒரு குழந்தையைப் பிரசவிப்பது மாதிரியானது. செம்பியன் செல்வன், செங்கை ஆழியான், முத்துலிங்கம், பெனடிக்ற் பாலன், என்.கே.ரகுநாதன், ஞானம், தம்பு சிவா, தெளிவத்தை ஜோசப், மாத்தளை சோமு மற்றும் எண்ணிலடங்கா முஸ்லீம் எழுத்தாளாகளின் சிறுகதை இலக்கி யங்கள் மிகவும் பேசப்பட்டவை. மாணவர்களிடையே எழுத்துக் கலா சாரத்தை மேம்படுத்துவதில் முஸ்லீம் பெற்றோர் தமிழர்களை விட முன் நிற்கின்றனர் என்றார். தலைவர் தனது தொகுப்புரையின்போது “இலங்கையர் கோன் நினைவுச் சிறுகதைப் போட்டிக்கு 300 சிறுகதை கள் கிடைத்துள்ளதாகவும் அவற்றுள் 60 சதவீதமானவை முஸ்லீம் எழுத்தாளர்களிடம் இருந்து கிடைத்தவை” என்று கூறியதோடு கூட்டம் இனிதே நிறைவெய்தியது.
அரிவோ'ர்ஒன்று கூடல் 453 13.04.2011 அறிவோர் ஒன்றுகூடல் நிகழ்வில் "நாம் யார்?' என்னும் தலைப் பில் திருமுறைவித்தகர் க.சிவசுப்பிரமணியம்(ஞானி) அவர்கள் உரை யாற்றினார். உறுப்பாண்மைச் செயலாளர் ப.க.மகாதேவா அவர்கள் இந்நிகழ்வுக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, மனத்திற்கும் பிரானனுக்கும் பிறப்பிடம் ஒன்றே நினைவே மனத்தின் சொரூபம். அதுவே அகங்காரம், அகங்காரம் எங்கிருந்து உற்பத்தியாகிறதோ அங்கிருந்து தான் மூச்சு கிளம்புகிறது. ஆகையால் மனம் அடங்கும் போது பிராண்னும் பிரானன் அடங்கும் போது மனமும் அடங்கும். மனதில் தோன்றும் நினைவுகள் எல்லாவற்றிலும் 'நான்' என்னும் நினைவே முதல் நினைவு. நான் யார் என்னும் விசாரணையிலேயே

Page 4
மளம் அடங்கும். “நான்யார்?’ என்ற நினைவு மற்ற நினைவுகளை யெல்லாம் அழித்து முடிவில் தானும் அழியும் என்ற வேதாந்திரி மகரிஷியின் கருத்தையும், இறைநிலை உணர்ந்த தெளிவில் தான் ஆசை ஒழுங்குறும் எல்லாமே நானாக இருக்கும் நிலையையும் உணர்ந்து மறவாமல் இருக்கும்போது எதன் மீது பற்று வைப்பது? எல்லாமே நாமாகிறோம் என்ற ரமண மகரிஷியின் கருத்தையும் கூறினார்.
பேச்சாளர் சிவசுப்பிரமணியம் அவர்கள் கொழும்பு இந்து சமய கலை கலாசார வளர்ச்சிப் பணிமன்றத்தின் செயலாளராகவிருந்து பல அரிய பணிகளை ஆற்றி வருகிறார். திருமூலர் பெருமான், மெய்ப்பொருள் என்ற கையேடுகள் உட்பட 12 கையேடுகள் வரை வெளியிட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார்.
கொழும்பிலுள்ள பல இந்து ஆலயங்கள், கல்லூரிகளில் வருடந் தோறும் திருமுறை முற்றோதல், நாயன்மார் குருபூசை என்பனவற்றை நடத்திவருகின்றார். இவரது பணிகளைப் பாராட்டி பொன்னம்பலவா னோசர் ஆலய அறங்காவலர், குருக்கள் ஆகியோர் ஞானி’ என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தனர். அவர் இப்போது உரை ឃវារ៉ាហ្វ្រ6វff.
கிறிஸ்தவர்களுக்குப் 'பைபிளும் இஸ்லாமியர்களுக்கு "குர்ஆனும் பெளத்தர்களுக்கு திரிபிடகமும் இருப்பதுபோல் திருமந்திரம் சைவ சமயத்தவர்களது முதல்நூலாக விளங்குகிறது என்றார்.
நவீன விஞ்ஞானமும் முழுப் பிரபஞ்சமும் ஒரே சக்தியின் அதிர்வு தான் என்று சொல்கிறது. மனிதனின் புரிதலில் பிரிவு இருக்கிறது. ஒரு யோகி என்பவன் ஆராய்ச்சி முடிவுகளையோ அல்லது நம்பிக்கை களையோ ஏற்பதில்லை. அவர் அறிந்து கொள்ள விரும்புகிறார். சிறந்த அனுபவம் மனிதனை யோகி ஆக்குகிறது.
நாம் யார் என்பதை அறிந்து கொண்டால் நாம் எடுத்த பிறவிப் பயனை அடையலாம். இதையே திருமூலர் பின்வருமாறு கூறுகின்றார்.
'தன்னை அறிய, தனக்கு ஒரு கேடு இல்லை, தன்னை அறியாமல், தானே கெடுகின்றான். தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே' சிவம் என்பது ஆவது அழிவதில்லா மெய்ப்பொருள். ஞானம் என்பது அம்மெய்ப்பொருளாகிய சிவத்தை அறிதல். போதம் என்பது அவ்வறிவை அனுபவத்தில் கண்டு தெளிதல்.
உலக அனுபவ முடிவில், உலகத்து உயிர்கள் எல்லாம் பேரின்ப மாகிய பேரானந்தத்தை அடைந்து தான் விடுதலையடைகின்றன. அதுவரையும் பிறவியில் சிக்கி உழலுகின்றனர். பிறவியிலிருந்து விடுபடுவதற்கு மெய்யுணர்வு பெறவேண்டும். இந்நோக்கம் கொண்டே பண்டைய காலம் தொட்டு சங்கங்களையும், சன்மார்க்க சபைகளையும் அமைத்து சன்மார்க்க நெறியினை முன்னோர்கள் கைக் கொண்டனர். புலன்களால் அறியும் அறிவே சுட்டறிவு மெய்யுணர்தல் குண்டலினி
 

சக்தி எனப்படும். இதுவே தத்துவ விளக்கத்தின் கருத்தாகவும் உள்ளது. இதனால் உயிர் அனுபவம், அருள் அனுபவம் கை கூடும். பக்தி வேண்டும்; அப்பொழுதுதான் தத்துவநிலையாகிய மெய்ப் பொருளை காணலாம். அதுவே ஆரோக்கிய வாழ்வின் வேர்.
இதையே வள்ளுவமும் திருமுறைகளும் பின்வருமாறு கூறுகின்றன.
"எப்பொருள்யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” என்றார். மேலும் வள்ளுவர்
"அறிவு அற்றங் காக்கும் கருவி' 'மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு” 'அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்’ (திருமுறைகள்) "எவ்வதுறைவது உலகம் உலகத்தோடு அவ்வதுறைவது அறிவு' "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்" எமது உயிர்ச் சக்தியைப் பேணிக் காத்து உள்ளே சென்று நாம் யார் என்ற ஆத்ம விசாரணை செய்யும் போது எமது அகங்காரம் அழிந்து உலக மக்கள் அனைவரும் ஒன்றே என்ற பேருண்மையை அறிவதோடு பிரபஞ்ச இரகசியத்தை உணர்ந்து உயிரறிவை உள் ளுணர்வாகப் பெற்று மகிழ்வோடு வாழ்வோம் என்று கூறி நிறைவு செய்தார். கருத்தாடலில் பலரும் கலந்து கொண்டபின் தமிழ் வாழ்த்துடன் நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.
66 balsasu Básasserů) 60 15.04.2011 இன்றைய இலக்கியக்களம் நிகழ்வில் "விழுமிய பொருள் பற்றி தரும் செழுமையான இலக்கியம் புறநானூறு' என்னும் பொருள் புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன் அவர்கள் உரையாற்றினார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.க.இரகுபரன் அவர்கள் உரையாற்றும் போது திருமதி பூரணம் அவர்கள் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். மரபுக் கல்வியில் ஈடுபட்டு புலவர், பண்டிதர் பாரம்பரியங்களோடு இணைந்து தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றி வருகிறார் எனக் கூறி அவரை உரையாற்று மாறு அழைத்தார். இன்றைய தலைப்பு மிகவும் பரந்த பரப்பைக் கொண்டது. சில சிறப்புக்களை மட்டும் கூறவுள்ளேன் என்று தன துரையை ஆரம்பித்தார் திருமதி பூரணம் அவர்கள். புறநானூற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் மக்களின் கலை, கலாசார விழுமியங்களைக் காணலாம். பாவலரது பெருமையும் புலமையும் மிகச் சிறந்தது.
புறம் என்றும் புறப்பாட்டு என்றும் கூறப்படும் புறநானூறு 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். இதனைத் தொகுத்தோர்; தொகுப்பித்

Page 5
உட்பட 157க்கு மேற்பட்ட பலரால் பாடப்பட்டுள்ளது. இவை ஒரே காலத்தவையல்ல. 1ஆம், 2ஆம், 3ஆம் சங்க காலங்களில் பாடப்பட்ட வையாகும். 400 பாடல்களில் 598 பாடல்கள்தான் கிடைக்கப் பெற்றன. அவற்றுள் சில பாடல்களின் எழுத்துக்கள், வரிகள் தெளிவாக இல்லை. இப்பாடல்களில் சோதிடம், வரலாறு, சகுனம் என்பனவுண்டு. கல்வி, வறுமையின் கொடுமை, உயர்ந்த உள்ளம் கொண்ட மன்னரது அறிவுரையோடு, அரிய மானிடராக வாழ்வதற்கு இயலாதவர் பற்றியும் பாடியுள்ளனர். அறநெறி காட்டும் அறநூல்களுக்கு இணையாக இவை திகழ்கின்றன. நுண்மான் நுழைபுலத்துடன் கற்கப்படவேண்டியவை. புறநானூற்று பாடல்களில் அறம், பொருள், இன்பம் வலியுறுத்தப்படு கின்றன. 2000 வருடங்களுக்கு முன் இருந்த அரசர்களது கருத்துக் களை ஏற்றால் அனைத்து மக்களும் முன்னேறலாம். கல்வி எவ்வாறு கற்க வேண்டும் , எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் என்று எடுத்துரைத்தான் பாண்டியன் நெடுஞ்செழியன். கல்வியில் சிறந்தோர் நன்கு மதிக்கப்பட்டனர். அறிவுடை நம்பியின் 'குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும்.” என்ற பாடல் வள்ளுவரது 'அமிழ்தினும் ஆற்ற இனிதே தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்” என்ற குறளை நினைவூட்டுகிறது. உள்ளதை உள்ளவாறு கூறும் பண்பு இருந்தது. பெருஞ்சித்திரனார் வறுமை பற்றிப் பாடியுள்ளார். பாரி வள்ளல் உயிர் துறந்த பின் அவர் இருந்த குன்றினை நோக்கி கபிலரும் பாரிமகளிரும் செல்கின்றனர். அப்போது அக்குன்றினை நோக்கி அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் தாம் மகிழ்ந்திருந்த வற்றை எண்ணி தனது மனக்குமுறலைப் பாடுகின்றார்.
புலவர் நல்ல கருத்துக்களை மன்னருக்கு இடித்துரைத்தனர். இதனால் நல்லாட்சி மலர்ந்தது. கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தை யரும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே உயிர் நண்பர்களாக இருந்தனர். கோப்பெருஞ்சோழன் இவ்வுலக வாழ்வை முடிக்கு முன் பிசிராந்தையர் வரவேண்டும் என்று விரும்பினார். எப்படியோ அது தின்ைனிய எண்ணமாக இருந்ததால் அவர் உயிர் துறந்த வேளை பிசிராந்தையர் அங்கு வந்து தனதுயிரையும் நீத்தார். கெழுமிய நட்புக்கு இது ஒரு இலக்கணம். பாரி முல்லைக்குத் தேர் கொடுத் ததும் அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததும் பாரிமகளிரைக் கபிலர் கண்கலங்காது காப்பாற்றியதும் சேரன் இரும்பொறை மோசிக் கீரன் எனும் புலவனுக்குப் பணி செய்ததும் கிள்ளிவளவனிடம் தோற்ற சேரமன்னனது குழந்தைகளை தேர்க்காலில் நெரித்துக் கொல்ல முயன்ற வேளை புலவன் அரசனுக்கு புத்திமதி கூறி விடுவித்ததும் புறநானூற்றுப் பாடல்களில் காணப்படும் உண்மைச் சம்பவங்களாகும். "மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்பதற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தனர். எக்காலத்துக்கும் பொருந்தும் பொதுவான உளன்மைகளோடு அறக்கருத்துக்களும் வலியுறுத்தப்படுகின்றன என்று கூறி தனதுரையை நிறைவுசெய்தார். சபையோர் கருத்துரையின்
பின் தலைவர் தனது தொகுப்புரையின்போது, இன்றைய தலைப்பு
Gastrapiji ( ('
 
 
 

பெரிய தலைப்பு, வீரம், கல்வி, அறம், விஞ்ஞானம், தத்துவம், மருத்துவம் என பல்வேறு தலைப்புகளில் வேறுபடுத்திச் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களது 'தமிழர் சால்பு' என்னும் நூல் இவை பற்றி விரிவாகக் கூறுகிறது. ஏதாவது சந்தேகம் இருந்தால் அந்நூலைப் பயன்படுத்தலாம். கி.மு. 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் 3ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு புலவர்களால் வெவ்வேறு காலங் களில் பாடப்பட்ட பாடல்கள் வளர்ந்த ஒரு சமுதாயத்தின் வெளிப் பாடாகும். சபையோர் கருத்துரையின் போது பேச்சாளரது உரையைத் திரும்பச் சொல்லாது சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவது நல்லது எனக் கூறி நிகழ்வை நிறைவு செய்தார்.
அறைத்திங்கள் திரு.வி.ஏ.திருஞானசுந்தரம்
7(4, 2011
சித்திரை திங்களின் ஆற்றைத் திங்கள் நிகழ்வுக்கு தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் தலைமை தாங்கினார். இன்றைய நாயகனான திரு.வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் தலைவரினால் அறிமுகப்படுத் தப்பட்டார். திரு.வீ.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் 55 வருட ஊடக அனுபவம் மிக்கவர். 1980இல் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்
தில் உதவிப் பணிப்பாளராக இணைந்து, தமிழ்ச் சேவைப் பணிப்
பாளராக பதவி உயர்வு பெற்று இறுதியில் 1997 இல் பிரதிப் பணிப் பாளர் நாயகமாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடக்க காலத்தில் வீரகேசரியிலும் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலும் பணி யாற்றியவர். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகால உறுப்பினராக சங்கப் பணிகளில் பங்குபற்றிவருவர். இவரது ஊடக சேவைக்காக 2011ஆம் ஆண்டு கம்பன் கழக விழாவில் இவர் பாராட்டிக் கெளர விக்கப்படவிருக்கிறார் என்றார். திரு.வி.ஏ.திருஞானசுந்தரம் அவர்கள் ' மனோலயம்', 'சிவலயம்' என்ற இரண்டு நூல் களை
வெளியிட்டுள்ளார். பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருக்
கின்றார். 'உண்மைத் திறனுக்கும் நேர்மைக்கும் இடைஞ்சலாக உள்ளவர்க்கே இன்று காலம் என நவயுக காலம் என்ற தனது சகோதரனின் வார்த்தைகளை மனோலயம் நூலில் நினைவு கூர்ந்துள்ளமை நெஞ்சை உருக்குகிறது என்றார் தலைவர்.
வீ. ஏ.திருஞானசுந்தரம் உரையாற்றுகையில் துன்னாலையில் 1937இல் பிறந்த நான் 1956இல் வீரகேசரியில் செய்திப்பணியாளராக இணைந்து 1962இல் தேசிய மயமாக்கப்பட்ட காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தில் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்து 'காப்புறுதிக் காவல் கலசம்', 'தேன்கூடு” போன்ற நிகழ்வுகளையும் நடாத்தினேன் என்றார். மரகதம்’ என்ற பெயரில் ஆக்கங்களையும் எழுதினேன். வீரகேசரியில் பணியாற்றும் போது, ஜாக்பொட்டில் கிடைத்த 17ரூபாவை வைத்துக் கொண்டு சென்ட்ரல் திரையில் 'அடுத்த வீட்டுப் பெண்’ படம் பார்த்ததை நினைவு கூருகிறேன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில்
வளரும் பயிர்', 'இளைஞர் மன்றம்’ நிகழ்ச்சிகளையும் நடாத்தினேன்.

Page 6
1987இல் எனது 25 வருட பூர்த்தி விழா ஜெயந்தி நகரில் வி.ரி.வி. தெய்வநாயகம்பிள்ளையின் தலைமையில் இடம் பெற்றதை நினைவு கூருகிறேன். 'கலைஞர்களை மதிக்கும் கனவான்’ என மல்லிகை ஆசிரியரினால் பாராட்டப்பட்டேன். கலாபூஷணம், "பூரிலங்கா திலக” (ஜனாதிபதி விருது) கலாஆரி ஆகிய பட்டங்களையும் பெற்றேன். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கான உத்தியோக பூர்வ விஜயங்களையும் மேற்கொண்டிருக்கிறேன் என்றார்.
பேச்சாளர் தனது இரண்டாம் கட்ட உரையில் சுதந்திரன் வார இதழ் எஸ்.டி.சிவநாயகம் அவர்களை நினைவுகூர்ந்து, "குயுக்தியார் என்ற கேள்வி பதில் பகுதியில் பணியாற்றியதுடன் தாயாரின் மறைவின் பின் கொழும்பு வந்து வீரகேசரியில் திரு.வி.பி.ஆதித்தன், எஸ்.எம்.கோபலரத்தினம், ராமையர் ஆகியோருடன் பணியாற்றினேன் என்றார். வீரகேசரியில் கலையரங்கம் பகுதியை 'கலாமதி என்ற பெயரில் நடாத்தினேன். காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திலும், பின்பு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் சம்பளப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தபடியால் எனது நிர்வாகத் திறமையினைப் பாராட்டி பதவி உயர்வுகளை வழங்கினார்கள். கே.எஸ்.நடராசன், 'சானா', வி.பி.தியாக ராஜா ஆகிய வானொலி கலைஞர்களின் மதிப்பைப் பெற்றேன். மும்மொழி ஆளுமை என்னைப் பிரபல்யப்படுத்தியது. எனது கடமை தவறாத சேவையை அரசியல் மயப்படுத்தியவர்களும் உண்டு. ஏ.ஆர்.பி.அமரசிங்க, திரு.விஜேரத்தின போன்ற உயர் அதிகாரிகளையும் நினைவு கூருகிறேன் என்று கூறி நிறைவுசெய்தார். தமிழ் வாழ்த்துடன் நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.
அறிவோர்ஒrறு கூடல் 455 2004.201. அறிவோர் ஒன்று கூடல் நிகழ்வில் "தூற்றுதல் கலாசாரம்
-ஒரு மீள்பார்வை” என்ற தலைப்பில் திருமதி தேவகுமாரி அவர்கள் உரையாற்றினார். நிகழ்வுக்கு தலைமை வகித்த ஆட்சிக்குழு உறுப் பினர் திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் தனது அறிமுகவுரையில் ஒரு தமிழ் சிறப்புப் பட்டதாரியான தேவகுமாரி தினக்குரல் பத்திரிகையின் தொடக்க கால ஆசிரிய பீடத்தில் பணியாற்றி தற்பொழுது ஊடகவியல் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றும் மக்கள் அறிந்த ஒரு ஊடகவி யலாளர். 1980இல் மல்லிகையில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியவர். சிறுவர் இலக்கிய கர்த்தா. பெண்ணியவாதி. மிகுந்த எதிர்பார்ப்பினை இவருக்கான தலைப்பு ஏற்படுத்தியுள்ளதாக கூறினார், “மன்னவனும் நியோ வளநாடும் உன்னதோ” என்று கம்பன் பாடியதை நினைவூட்டிய துடன் தூற்றுதல் கலாசாரம் பல வடிவங்களில் நம்மிடையே பரவி யுள்ளது என்றார். ஒருவரைப் பற்றி பேசும் போதோ, எழுதும் போதோ அவதூறு செய்தல், பழித்துரைத்தல் என்பது பழந்தமிழ் இலக்கியங் களிலும் உண்டு. ஆனால் காரணம் இல்லாமல் வேண்டுமென்றே பொய்யாக அவதூறு விளைவித்தல் ஆபத்தானது என்று கூறி எமது பேச்சாளாரை உரையாற்றுமாறு அழைத்தார்.
 
 
 

தேவகுமாரி தனதுரையில் எமது கலாசாரம் புனிதமானது. ஆனால் தூற்றுதல் என்பது எமது கலாசாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மீள்பார்வை அவசியம் மேலைத்தேய நாடுகளிலும் தூற்றுதல் உண்டு. "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பது நன்மை விளைவிக்கும் வார்த்தை, ஆனால் கேடு விளைவிக்கும் சொல்லாக துாற்றுதல் இடம் பெறும் போது அதைப் பற்றிய ஆய்வு தேவை. காளமேகப் புலவரும், ஒட்டக் கூத்தரும் சங்க இலக்கியம் மூலம் நையாண்டி செய்து பாடல்களைப் பாடினர். இரு பொருள்படக் கூறு வதும் உண்டு. நாட்டார் பாடல்களில் 1976இல் அம்மா பாடல்களில் மீனவர்களை வசை பாடுவதாக அமையும். சில பகுதி மக்களைப் புண்படுத்தும் பாடல்களுக்கு “கனகி’ புராணத்தைக் கூறலாம். மனித வாழ்வில் சுவாசிப்பது போல் வசை பாடுதலும் இயல்பானது மலையக தோட்டத் தொழிலாளிப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அவர்கள் பாடல்களாகப் பாடுவர். ஒப்பாரிப் பாடல்களிலும் இந்த வசை மொழிகளை காணலாம். 1960ஆம் ஆண்டுகளுக்குப் பின்பு இலங்கை யில் தூற்றுதல் கலாசாரம் இடம் பெறத் தொடங்கியது. முதலில் கெளரவமாக கையாளப்பட்டது. இனம், சாதி சார்ந்த தூற்றுதல்கள் மிகுந்த காலத்தில் டொமினிக் ஜீவா, டானியல் கதைகளில் பச்சை யாகவே அந்த மொழிகள் இடம் பெற்றன. 1980இல் எதிர்ப்பிலக்கி யத்தின் தோற்றத்தோடு அரசியல் தூற்றுதல்கள் தொடங்கின. மாற்றுக் கருத்துக்கள் கொண்டவரை வசைபாடி எழுதினார்கள். புலம்பெயர் இலக்கியங்களிலும் தொடர்ந்தது. தமிழ் தேசிய வாதிகளும் இதனைச் செய்தனர். தூற்றுதல் என்பது இயலாமையின் வெளிப்பாடும் கூட. இணையத்தளங்களையும் தற்போது பயன்படுத்துகின்றனர் என்றவர். யாழ்ப்பான கலாசார அழிவுக்கு இணையத்தளமும் ஒரு காரணம்” என்று கூறி நிறைவு செய்தார். நல்ல நிகழ்வினை இரசித்த மனநிறைவு ஏற்பட்டது.
நூலகம் (சிறுவர் பகுதி)
23.14,2011 'கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி.வித்தியா மதிதரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்க கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
அேேவார்ஒன்று கூடல் 455
27.04.2011 அறிவோர்ஒன்று கூடல் நிகழ்வில் "நானும் எனது காவியங் களும்' என்னும் தலைப்பில் கவிஞர் ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள் உரையாற்றினார். நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய சங்கத் தலைவர் திரு.மு.கதிர்காமநாதன் அவர்கள் உரையாற்றும் போது, இன்றைய உரைஞர் கவிஞர் ஆ.மு.ஷரிபுத்தீன் அவர்களது அருமை மகன் என்றார். ஜின்னாஹற் இதுவரை எழு காவியங்கள் படைத்துள்ளார். அவரது படைப்புக்கள் வெளிவரும் காலங்களில் ஏதாவது பரிசினைப் பெற்றுக் கொள்வது வழக்கம், அவர் எழுதிய திப்பு தல்தான் காவியம்

Page 7
இன்னும் இலங்கையில் வெளிவரவில்லை. இந்தியா, துபாய் ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டுள்ளன. சங்கத்தின் செயலாளராக, துணைத் தலைவராக, ஆட்சிக்குழு உறுப்பினராகப் பல பதவிகளை வகித்து அலற்றுக்குப் பெருமை சேர்த்துள்ளார். தமிழில் உள்ள தனது பாண்டித்தியத்தினால் தன்னை உயர்த்தியவர் என்று கூறி அவரை உரையாற்ற அழைத்தார்.
பேச்சாளர் உரையாற்றுகையில் என் காவியங்களை நான் எப்படிப் பேசுவது மற்றவர்கள்தானே பேச வேண்டும். ஏழு காவியங்களும் எழுத நான் எடுத்த முயற்சிகள், சிரமங்கள், மகிழ்ச்சி பற்றிச் சில வற்றைக் கூற விரும்புகிறேன் என்று தொடங்கினார். ஆரம்பத்தில் சின்னச் சின்னத் துணுக்குகளை எழுதி வந்தேன். 1970இல் தினபதியில் எனது கவிதையை எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் வெளியிட்டார். 1963இல் ஆரம்பித்த கவிதை எழுதும் என் முயற்சியை எனது தந்தை யா திருத்தி நெறிப்படுத்தினார். எனது கவிதைகளுக்கு இடம் தந்த திரு.எஸ்.டி.சிவநாயம் அவர்களது ஊக்கத்தினால் இலக்கணம் கற்று மரபுக் கவிதை படைக்க விரும்பி தந்தையாரிடம் இலக்கணம் கற்றேன். நான் எழுதிய கவிதைகளை எஸ்.டி.சிவநாயகம் அவர்களிடம் எடுத்துச் சென்று அவற்றைத் தொகுத்து வெளியிட அனுமதி கேட்டேன். அவரும் அனுமதி தந்தார்.
உங்கள் கவிதையில் பாரதிதாசனது கவிதைச் சாயலுண்டு. அவரது பாண்டியன் பரிசு காவியத்தைப் படித்து விட்டு ஒரு காவியம் செப்யலாமே என்று சொன்னார். கதை வேண்டுமே. நான் சிறிது தயங்கினேன். சாரண பாஸ்கரனது யூசுப் சுலைஹா', கவிஞர் கண்ண தானின் 'மாங்கனி போன்றவற்றை என் கவனத்துக்குக் கொண்டு வந்தார். வால்மீகி இராமாயணத்தைப் பின்பற்றி கம்பர் இராமாயணம் செய்தது போல் செய்யலாமே என்றார். இவர் கருத்தைச் சுமந்தபடி இந்தியா சென்றேன். அங்கே அப்துல் ரஹீமும், முஸ்தபா ஆகியோரும் காவியம் எழுதும்படி கேட்டனர். ஹசன் என்பவர் ஒரு நாவலைத் தந்தார். அதைப் படித்த என் துணைவியார் அந்நாவலை வைத்து காவியம் எழுதலாம் என்றார். நானும் அந்நாவலைமுழுவதும் படித்த பின் எழுத ஒப்புக் கொண்டேன்.
30 நாட்களுக்குள் எழுதி அகமத்திடம் கொடுத்து சரி பார்த்துக் கொண்டேன். 'மஹற்ஜயீன்” இந்தியாவில் பதிப்பித்து புதுக் கோட்டை சிற்றிலக்கிய மகாநாட்டில் வெளியிடப்பட்டது. சிலம்பொலி செல்லப்பா அவர்கள் தனது அணிந்துரையில், 'மனதில் பதியும்படி பாமரரும் படிக்கும்படி; சந்தங்கள் துள்ளும் கவிதை” என்று எழுதிய அடிகள் என் நெஞ்சைத் தொட்டன. காவியங்களுக்கு உரையெழுதியவர் களுண்டு. ஆனால் உரை நடைக்கு காவியம் எழுதியவர் நீங்கள்தான் என்று கூறி ‘முத்தமிழ் வித்தகர் ஜின்னாஹற்’ என்று வாழ்த்தியதை வரமாய்ப் பெற்றேன். புனித பூமியையும் காவியமாகத் தரவேண்டும் என்று சிலம்பொலி செல்லப்பா கேட்டுக் கொண்டபடி அதையும் எழுதி இரட்டைக் காவியமாக வெளியிட்டேன்.
 

|
இஸ்லாமிய கருத்துக்களுக்குப் புறம்பான காவியம் ஒன்றை எழுதும் படி எஸ்.டி.சிவநாயகம் ஐயா என்னைக் கேட்டுக் கொண்டார். கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய புலிப்பண்டாரஹ வன்னியன் நாவலைப் படித்தேன். எமது மண்ணின் மைந்தன் குறுநில மன்னனாகவிருந்து வெள்ளையரை எதிர்த்துப் போரிட்ட வீரன் அல்லவா? அதை எனது 5ஆவது காவியமாக எழுதினேன். வீரபுருஷனாக சித்திரித்தேன். பிறந்த மண்ணின் சுதந்திரத்துக்காகப் பலியானவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் என சமர்ப்பித்தேன். அக்காவியத்துக்கு ஒரு இலட்சம் ரூபா பணம் சாகித்திய மண்டலப் பரிசு, வடமாகாண இலக்கிய வட்டப்பரிசு, தமிழ்ச் சங்கப் பரிசு என்பன கிடைத்தன. இந்தியாவில் எனது காவியங்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
இலங்கைப் பல்கலைக்கழகங்களிலும் என் காவியங்களை ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற முனைகின்றனர். காவியமாமணி அகளங்கன் எனது இரட்டைக் காவியங்களை ஆய்வு செய்துள்ளார். என் கவிதை களை கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் வரும் பாடல்களுடன் ஒப்பிட்டுள்ளார் என்று கூறினார்.
இலக்கிய உலகில் சிவநாயகம் ஐயா என்னை வளர்த்தவர். கவிதைகளை காவியமாக எழுது. கதைகளை நாவலாக எழுது
என்றார். எனக்கு தந்தை போலிருந்து நெறிப்படுத்திய அவரை
நினைக்கும் போது நெஞ்சம் கணக்கிறது.
எனது முதல் வாசகி எனது துணைவிதான். சிலவற்றைப் படித்துத் திருத்துவார். எனக்கு உந்து சக்தியாயிருந்தவர். அவர் வெறுத்தி ருந்தால் எழுதியிருக்க மாட்டேன். 'முத்துநகை” என்ற கவிதை எனது துணைவி பற்றியது. அதில் "அவள் கண் விழித்தல் கண்டால் அது கண்டே வான் விழிக்கும் என்ற அடிகள் இன்றும் என் நினைவிலுண்டு. லுணுகலை ரீ எனது மகளாக இருந்து என் கவிதைகள் பற்றிய விபரங்களைச் சேகரித்து இதுவரை நான் 10,000 கவிதைகள் எழுதி யுள்ளதாகக் கூறுகிறார். அவற்றை விருத்தப்பா, ஆசிரியப்பா, வெண்பா என பல பிரிவுகளாக வகைப்படுத்தியுமுள்ளார். நபிகள் நாயகம் பற்றி 70 நாட்களில் காவியம் எழுதினேன். 1607 பாடல்களைக் கொண்ட "திப்பு சுல்தான் விரைவில் வெளிவரவுள்ளது. அண்மையில் துபாயி லிருந்த நாட்களில் ஒரு காவியம் எழுதியுள்ளேன். இன்றும் நிறைவு பெறவில்லை. சங்கச் செயலாளராகவிருந்த தமிழவேள் கந்தசாமி, குனரெத்தினம் ஆகியோர் எனக்குதவினர். "திப்பு சுல்தான் எழுத 3 முறை இந்தியா சென்று பல இடங்களை நேரில் பார்த்து வந்தேன். விபுலானந்தரிடம் தமிழ் கற்ற என் தந்தையரிடம் நான் தமிழ் கற்றேன். இன்று காவியம் எழுதுபவர்கள் குறைவு. புத்திஜீவிகள் இதைக் கருத்தில் கொள்ளவேண்டும், இளைஞர்கள் காவியம் படைக்க முன்வர வேண்டும். என்று கூறித்தமது உரையை முடித்தார்.
இன்று எமது மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்களுள்
தலை சிறந்த, மிகத் திறமை வாய்ந்த, மரபுக் கவிஞராக விளங்குபவர்,

Page 8
வைத்திய கலாநிதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன் அவர்கள்தான் என்பது எனது கடைந்தெடுத்த கருத்தாகும் என்று எஸ்.டி.சிவநாயகம் அவர் கள் கூறியது ஜின்னாவைப் பொறுத்தவரை மிகவும் பொருத்தமானதே.
இலக்கியக்கலாம்
29.04.201
இன்றைய இலக்கியக்களம் நிகழ்விற்கு பொதுச் செயலாளர் திரு.ஆ.இரகுபதி பாலழறீதரன் அவர்கள் தலைமை தாங்கினார். "நானும் எனது நாவல்களும்” என்னும் தலைப்பில் தமிழ்நாட்டு பிரபல நாவலாசிரியர் திரு.கு.சின்னப்பபாரதி அவர்கள் உரை யாற்றினார். தலைவர் தனதுரையில் பேச்சாளர் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்கள்பற்றி எழுதி புகழ் பெற்றவர். கொங்குநாட்டு, கொல்லி மலை மக்கள் வாழ்க்கையைப் பற்றி அவர்களுடன் தங்கி வாழ்ந்து நாவல்கள் படைத்துள்ளார். ஈழத்து மலையக மக்களின் அவல வாழ்க்கை பற்றி அவர்களுடன் தங்கியிருந்து நாவல் படைக்க எண்ணியுள்ளார். மலையாளம், ஹிந்தி, சிங்களம் போன்ற மொழிகளில் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. நல்ல காத்திரமான சபையில் பேசவரு மாறு அன்புடன் அழைத்தார்.
உரைஞர் உரையாற்றும் போது, பாரதி சொன்னதுபோல் எமக்குத் தொழில் எழுத்து என்று தொடங்கினார். அதுவும் இன்று வியாபாரம் ஆகிவிட்டது. எனது ஆசான் நீ என்றும் எழுது, புகழ், பணம், விளம் பரத்துக்கு ஆசைப்படாதே எங்கள் மலிவுப் பத்திரிகைகளுக்கு நான் எழுதுவதில்லை. எழுதினால் அவர்கள் வழியில் செல்ல வேண்டிவரும், பிழையாக வேதமோதுவதைவிட செம்மையாக சிரைப்பவன் மேல் என்றான் பாரதி.
நான் சொல்வது தற்புகழ்ச்சியாயிருக்கக் கூடும். ஒரு நாவல் எழுத குறைந்த பட்சம் 8 ஆண்டு எடுக்கும். டால்ஸ்டாய் நாவல் எழுத 10 ஆண்டுகள் வர்ை எடுத்துள்ளார். 10,000 விவசாயிகளுடைய பண்பு, வளர்ப்பு, பண்பாடு பற்றி தெரிந்து எழுதியுள்ளார். மகாத்மா காந்தி அகிம்சைத் தத்துவத்தை டால்ஸ்டாயிடம் தான் கற்றுக் கொண்டார். எழுத்தில் நாணயம் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். கிராமத்தில் வாழ்ந்து அவற்றை முதலில் பதிவு செய்யவேண்டும் என காந்தி சொன்னார். எனது நாவலின் பிற்பகுதியில் அடிமை வாழ்வு பற்றி அறிய சேரிப்புறத்தில் தாங்கினேன். அவர்களது உணவைச் சாப்பிடு வதைப் பழக ஒரு வாரமானது. சிலர் மிருகத்தை விடக் கீழான நிலையில் வாழ்ந்தனர். இயற்கை, கடவுள், சடங்குகள், விழாக்கள் எல்லாம் எனது நாவலில் இருக்கும். மண் மணம் உணர்ந்தேன். சில பூக்கள், பறவைகள் வரும், பருவகால மாற்றங்களை அறிய வேண்டும். காதலுக்காக குரல் எழுப்பும் பறவைகளின் குரலை உாைர்ந்தேன். கதை; ஏழை வட்டிக்கு நிலத்தை வைத்து இழந்து வருகிறார். அதே ஏழை நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்து தலை வனாகின்றன். எனது நாவல் இலக்கிய உலகில் சலனம் ஏற்படுத்தியது. இந்தியாவில் 10 நாவல்கள் தெரிவு செய்யப்பட்ட போது எனது
 

நாவலும் இடம் பெற்றது. சித்தாந்தம், வர்க்க போராட்டம் இவற்றை உட்கொணர முடிந்தால் வெற்றி பெறமுடியும். வெறும் காதல் மட்டும் நாவலாகாது. கேரளத்தில் ஒரு பெண் சமூகத்துக்கு எதிராகப் போராடினாள். அடித்தால் திருப்பி அடிப்பேன். வாடி என்றால் வாடா என்பேன். நீ என்ன செய்ய வேண்டும் என்பதை எழுத்தில் எழுதுவது தான் இலக்கியம் என்பார் டால்ஸ்டாய்,
மக்கள் அவை உறுப்பினர் எனது நாவல்களைப் படித்து விட்டுப் பாராட்டினார். உழைப்பாளி பற்றி எழுத வேண்டும். நிலக்கரிச் சுரங்கம் பற்றி எழுதினேன். எனது நாவல் 1000 அடிக்குக் கீழ் இயங்கும் சுரங்கம் பற்றியது. மின்சாரமில்லை. நீரூற்றுண்டு. சிறிய வெளிச்சமே உண்டு. பிராணவாயு இருக்காது. நாவலின் கடைசி அதிகாரத்தைப் படிக்கும் போது படிக்க முடியாது கண்ணிர் வருகிறது என்றார்கள்.
சுயநலமற்ற வர்க்கம் உண்டு என்றால் அது தொழிலாளியே. நாவல் எழுதுவது என்பது ஒரு கட்டிடம் கட்டுவது போல, இலக்கியக் கட்டமைப்பு என வரும் போது எல்லாமே படைப்பாளி தான். படைப்பாளி காலத்தைச் செலவு செய்வது தவறல்ல. இந்திய எல்லையைத் தாண்டி சர்வதேசத்திலும் எனது நாவல் மதிக்கப்படுகிறது என்றால் நான் ஒரு போராளியாயிருப்பது தான் காரணம் போராளித் தொழிலாளர்களோடு சேர்ந்து எழுதினேன் எனக் கூறி தனது அருமையான அனுபவக் கருத்துக்களைக்கூறி நிறைவு செய்தார்.
Iritasib Cog|suri ută3) 30.04.2011 'கதை கதையாம் காரியமாம்” என்ற நிகழ்வில் திருமதி.சுமதி பாலழரீதரன் கலந்து கொண்டு சிறுவர்களுக்கான கருத்து மிக்கயான கதைகளைக் கூறி மகிழ்வித்தார்.
தொகுப்பாளர்; கந்தசாமி மகாதேவா - வடிவமைப்பு:- உறுப்பான்மைக்குழுச் செயலாளர் திருமதி.கு:சத்தியஜோதி

Page 9
கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல.07, 57ஆவது ஒழுங்கை கொழும்பு 5ே.
தமிழ்ச் சங்க 1. ஏறத்தாழ 30,000 தமிழ் 2. சிறுவர் நூலகம் 3. தினசரி தமிழ், ஆங்கில
- காலை 8.00 மணி 4. மாணவர்கள் கல்வி க 3. மூன்று மண்டபங்கள் -
6. தங்குவதற்கான ஆறு
(மேலும் 3ஆம் மாடியி உள்ளன. ஆழத் திங் 7. விரைவில் ஈழத்து எழு விற்பனை செய்யும் நவ திறந்து வைக்கப்படும். மு.கதிர்காமநாதன் ஆ.இரகு
தலைவர் பொது
 
 

த்தின் சேவைகள் * நூல்கள் கொண்ட நூலகம்
ப் பத்திரிகைகள் வாசிக்கும் அறை முதலி மாலை 6.30 மணி வரை ற்க வசதியாக படிப்பக மண்டபம்
1. சங்கரப்பிள்ளை மண்டபம் 2. விநோதன் மண்டபம் 3. சுப்பிரமணியம் மாலதி மண்டபம் அறைகள். லி ஐந்து அறைகள் அமைக்கப்பட்டு களில் பாவனைக்கு விடப்படும்.) 2த்தாளர்களது நூல்களினை னேப்படுத்தப்பட்ட விற்பனை நிலையம்
பதி பாலழறீதரன் செ.திருச்செல்வன் Gruesorem நிதிச்செயலாளர்