கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து ஒளி 2010.08

Page 1


Page 2
( அமரர் வே. பாலசுப்பிரமணியம்
s T
அமரர் வே. பாலசுப்பிரமணியம் நிழற்படத்திற்கு
திருமதி சாந்தி பாலசுப்பிரமணியம் அவர்க
| 8 X - X × × —
மேலும் பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறப்பிதழாக வெளிவந்த பா உறுப்பினர் நிரு.தே. ப. சுவாமிநாதன் அவர்கள் பிரபல தொழிலதிப கலந்துகொண்ட மாமன்றத் தலைவர் மனிதநேயர் வி.கயிலாசபிள்ளை, திரு. வயி. நாராயணசாமி, திருமதி சாந்தி ப
T
調_
செயலாளர் நிரு. கந்தையா நீலகண்டன் அவர்களுக்தம், பொருளாளர் திரு. அட்டேப் படத்தின் மேற்பகுதி அருள்மிகு நல்றைக் கந்தன் ஆன கீழ்ப்பகுதி கொழும்பு மாநகரிலுள்ள கொம்பனித்தெரு அருள்மிகு தோற்றமும், முருகப் பெருமான் தங்கத்தேரில் ஆரோகணித்து வீதி
 
 
 
 
 

மன்றக் காலாண்டிதழான ஆந்து ஒளியின் பிரதியை பாராளுமன்ற ர் திரு. பப்சி கனகரத்தினம் அவர்களுக்கு வழங்குவதையும் நிகழ்வில்
பிரதித் தலைவர் திரு.மா. தவயோகராஜா, கலாநிதி க. நாகேள்வரன், LOLTTTLTTTT TuTTLTTLLT Y LLLLLL LL LTS
பத் தலைவர் திரு. வயி. ITIJIs அவர்கள், பான்றப் பொதுச்
வே. கந்தசாமி அவர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்குவதை காraார். பத்தின் எழில்மித தோற்றமும், தவத்திருபோகர் சுவாமிகளும்.
Fleist"I'lly Llanfill Hill III fill (EIIL'ili இராஜகோபுரத்தின் எழில்மிகு 31. esii TIJsti EIIL flui.

Page 3
ooSoo:oosooos
பஞ்சபுராணங்கள் திருச்சிற்றம்பலம் தேவாரம்
(திருநாவுக்கரசு நாயனார் அருளியது)
மந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை
மதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும் é9yöğöyTop InGODGoöBL-gpj LomrGOTTGör gp6óT6ODGOT
யதியரைய மங்கை யமர்ந்தான் றன்னைக் கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்
கடிமலர்கள் பலதுாவிக் காலை மாலை இந்திரனும் வானவரும் தொழச்செல் வானை
யேழையே னான்பண் டிகழ்ந்த வாறே
திருவாசகம் (மாணிக்கவாசக சுவாமிகள் அருளியது)
ஆயநான் மறையவனும் நீயே யாதல்
அறிந்துயான் யாவரினும் கடையன் ஆய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டும்
நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய்
அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர் பேயனேன் இதுதான்நின் பெருமை அன்றே
எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே!
திருவிசைப்பா (திருமாளிகைத் தேவர் அருளியது)
(8&BIT606in (8Loooooo 6III6OTolfr (385IT(361
குணங்குறி யிறந்ததோர் குணமே காலமே கங்கை நாயகா வெங்கள்
ömrGoatsmrGomr ab ITLO BITFIT ஆலமே யமுதுண் டம்பலஞ் செம்பொற்
(885ITuneo65IIodor LIILoloto or(360T ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே
O () திருப்பல்லாண்டு (சேந்தனார் அருளியது) சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
துய்மனத் தொண்ட ருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சில தேவர்
சிறு நெறி சேராமே வில்லாண்ட கனகத் திரள்மேரு
விடங்கன் விடைப் பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே! M
திருப்புராணம் (சேக்கிழார் அருளியது)
கற்பனை கடந்தசோதி கருணையே யுருவமாகி யற்புதக் கோலம்நீடி யருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பரவி யோமமாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று பொர் 56ਲiਉoਕੀ ங்கழல் போற்றி போற்றி!
 
 
 

g தீபம் - 14 -- O4 فلمجالها விகிர்தி வருடம் ஆவணித்திங்கள் 5*நாள் وله كلها
亨 21,08, 2010
நல்லூரான் சிறப்பும் நல்லூரின் ຄບgaoD)
“நல்லூரான்திருவடியைநான்நினைத்தமாத்திரத்தில்எல்லாம் மறப்பேனடி’ என்று சொன்ன யோகர் சுவாமிகள், “நல்லூரான் வீதியில் வந்தொருகால்விழுந்து கும்பிட்டால்வில்லங்கம் எல்லாம் இல்லாமற் போகும்” என்றும் நம்பிக்கையூட்டியிருக்கிறார்.
இலங்கையிலுள்ள கந்தகோட்டங்களுள் முதன்மை பெற்றுத் திகழும் நல்லைக் கந்தன் ஆலயம் அமைந்திருக்கும் நல்லூர்ப் பிரதேசம் வரலாற்றுப் பெருமையும் ஆன்மீகச் சிறப்பும் கொண்டது.தமிழ் அரசர்களது ஆட்சிக்காலத்தின்போது நல்லூர் இராசதானியாக அமைந்திருந்தது. தமிழ்த் தெய்வமாகப் போற்றப்படும் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தைச் சூழ்ந்துள்ள நிலையில் மேலும் பல திருக்கோயில்கள் அமைந்திருப்பதும், அத்தகைய புனிதமான பிரதேசத்திலிருந்து ஒலிக்கும் ஆலய மணியோசை இந்து மக்களுக்கு எந்நேரமும் இறைசிந்தனையைத் தோற்றுவிப்பதும் தெய்வீகமானது என்றே சொல்ல வேண்டும்.
ஐந்தாம் குரவராகப் போற்றப்படும் சைவத்தையும் தமிழையும் வளர்த்த பெருமகனார் நாவலர் பெருமான் அவதரித்த பெருமைக்குரியது நல்லூர். யாழ்ப்பாணத்து சித்தர் பரம்பரையில் தோன்றிய கடையிற்சுவாமிகள் நடமாடியபுண்ணியபூமி.இவரது சீடரான செல்லப்பா சுவாமிகள் நல்லூர் தேரடியில் வாழ்ந்தவர். அவரது சீடரான யோகர் சுவாமிகளும் நல்லைக்கந்தன்திருவருள் பெற்றவர். இத்தகைய ஞானபரம்பரையினருக்கும் நல்லூருக்கும் இடையிலான தொடர்பு மேன்மையானது; மகத்துவமானது. இத்தகைய தனித்துவமிக்கநல்லூரிலே அன்றுநாவலர் நினைவாக மணிமண்டபமொன்று தோற்றம் பெற்றது. இலங்கையின் ஒரேயொருசைவ ஆதீனமானநல்லை திருஞானசம்பந்தர்ஆதீனம், துர்க்கா மணிமண்டபம் உட்பட மற்றும் பல சமய, கலாசார மண்டபங்கள்என்பனநல்லூருக்குநற்சிறப்பைஏற்படுத்துகின்றன. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனையும் நல்லூர்ஆலய சூழலில் அமைந்திருக்கிறது.இங்கு நிறுவப்பட்டுள்ள சைவப் பிரசாரகர் பயிற்சி நிலையமும் சைவ ஆராய்ச்சி நூலகமும் மிக விரைவில் செயற்படவிருக்கிறது என்பதையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இதன் ஊடாக சைவப் பெருமக்கள் பெரிதும் பயனடைய முடியும்.
அண்மைக் காலத்திலிருந்து மாமன்றத்தின் சமய, சமூகப் பணிகள் வடபகுதிக்கும் விஸ்தரிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.இது சம்பந்தமான செய்திக்குறிப்புக்கள்“இந்து ஒளி” சஞ்சிகையிலும், மாமன்ற செய்திமடல் ஊடாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. யாழ். பணிமனை ஊடாக மாமன்றத்தின் சேவைகளை மேலும் சிறப்பாகச் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறோம்.
மாமன்றத்தின்சேவைகளுள்ஒன்றாககாலாண்டிதழாகமலரும் “இந்துஒளி'தனதுவளர்ச்சிப்பாதையில்பதினான்குவருடங்களை நிறைவு செய்து கொள்ளும் வேளையில் நல்லைக் கந்தன் மகோற்சவ சிறப்பிதழாக வெளியாவது பெருமகிழ்ச்சிக்குரியது. நல்லைக் குமரன் புகழ்பேசி மணம்வீசும் இம்மலரை நல்லூரான் திருவடிகளுக்குசமர்ப்பித்துவணங்கிநிற்கிறோம்!
1. விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 4
இந்தச் சுடரில்.
0 பஞ்ச புராணங்கள்
9 நல்லை ஆதீன முதல்வரின் ஆசிச் செய்தி 3
9 நல்லைக் கந்தன் மகோற்சவச் சிறப்பு
- கலாநிதி கு. சோமசுந்தரம் 4 கந்தன் அருட்புகழ் 7 9 நல்லூர் இராசதானியின் வரலாறு
- கலாநிதி க. நாகேஸ்வரன் 8 நல்லூரான் திருப்பாதம் பிடிப்போமே! o நல்லைக் கந்தன் சரணம் சரணம்
- கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி
9 நல்லருள் புரியும் நல்லைக் கந்தன் 1.
- சுப்பிரமணியம் கனகரெத்தினம் நல்லூர்த் தேரடி 1s 9 நல்லூரின் பெருமை 2( 9 நல்லூர்க் கந்தனின் மகோற்சவப்
பெருவிழா 2 அருள்தரும் நல்லூர்/ நல்லூரான் குறள் 2. . தொல்லை வினை தீர்க்கும்
நல்லைக் கந்தன் - இராசையா முரீதரன் 2
• நல்லை நகர்க் கந்தன் திருவூஞ்சல் 2. 9 சிறுவர் ஒளி - சிந்தனைக் கதைகள் 2. 0 மாணவர் ஒளி- பெரியபுராணக் கதைகள் 2 9 மங்கையர் ஒளி - மகளிர் திருத்தொண்டில்
சந்தனத்தாதியாரின் கடமையுணர்வு
- முனைவர் திலகவதி சண்முகசுந்தரம் 2 9 தவத்திரு யோகர் சுவாமிகள் 2 0 சுவாமி விபுலானந்தர் 3 நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் 4 . மாமன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனை 4 பதினான்கு ஆண்டுகளை நிறைவுசெய்யும்
இந்து ஒளி - அ. கனகசூரியர் 4.
அடுத்த சுடர் விகிர்தி வருடம் seůuál - LDITřasý)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க! வெற்பைக் கூறுசெய் தன்னிவேல் வாழ்க குக்குடம் வாழ்க! செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க! யானைதன் அணங்கு வாழ்க! மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியாரெல்லாம்!
இந்து ஒளி
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி இதழ் ஆவணித் திங்கள் 05 நாள் 2OB2O
ஆசிரியர் குழு :
பேராசிரியர் அ. சண்முகதாஸ் கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் சிவபூநீ ம. பாலகைலாசநாத சர்மா திரு. கந்தையா நீலகண்டன் திரு. த. மனோகரன்
ஒரு பிரதியின் விலை ரூபா 3OOO வருடாந்தச் சந்தா (உள்நாடு) ரூபா 12OOO
x- (தபாற் செலவுதணி) வருடாந்தச் சந்தா (வெளிநாடு) US டொலர் 10.00
அகில இலங்கை இந்து மாமன்றம் A.C. H. C. 5üşLüb 915,சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு-2, இலங்கை. இணையத்தளம் : http:/www.hinducongress.lk மின்னஞ்சல் : hinducongress Ogmail.com தொலைபேசி எண் : 2434990, தொலைநகல் : 2344720
இந்து ஒளியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளில்
தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஆக்கியோன்களுடையதே.
HINDU OL
Aadi - Puraddathy Issue of AL CEY ON HINDU CONGRESS 21 August 2010 Editoria Board
Prof. A. Shanmugadas Dr. Kumarasamy Somasundaram SivaSri M. Balakailasanatha Sarma Mr. Kandiah Neelakandan Mr. D. Manoharan
Price : Rs. 30.00 Per copy 8 Annual Subscription (inland) Rs. 120.00
(Postage Exclusive) Annual Subscription (Foreign) U. S. $ 10.00 (including Postage)
ALL CEYLON HINDU CONIGRESS A-C-H.C. Bldg91/5, Sir Chittampalam A. Gardiner Mawatha Colombo - 2, Sri Lanka. Website : http://www.hinducongress.lk E-Mail: hinducongress@gmail.com Telephone No.: 2434990, Fax No.: 2344720
Next SSue : Aipasi - Markazhi
Views expressed in the articles in Hindu Oli are those of the contributors.
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 5
நல்லைக் கந்தன் ம
தமிழ்த் தெய்வமாகப் ே ஆறுபடை வீடுகளுக்
“அருவமும் உருவுமாகி அநா பிரமமாய் நின்ற ஜோதிப் பிழ
ØA ஒருதிரு முருகன் வந்தாங்கு 2 என்கிறது கந்தபுராணம். இவ்வாறு தோற்றம்பெற்ற மு CA இடங்களில் கோயில்கொண்டு எழுந்தருளி அருள்ப МУ யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள முப்பெரும் பை கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் முருகப்பெரு கொண்டிருக்கிறது. ஆடி அமாவாசையை தொடர்ந் வழக்கம். அந்தவகையில் இவ்வருட மகோற்சவம் ஆரம்பமாகியிருக்கிறது. எதிர்வரும் 07.09.2010 செவ்வ
தீர்த்தோற்சவமும் நடைபெறுகிறது.
பதினான்கு ஆண்டு நிறைவாக சுடர்விட்டு - நல் “இந்து ஒளி”யை எழில்மிகு விழாக்கோலம் காணும் சமர்ப்பித்து வண
முவிரு முகங்கள் போற்றி முக ஏவருந் துதிக்க நின்ற ஈராறு மாவடி வைகும் செவ்வேள் ம சேவலும் மயிலும் போற்றி திரு
SLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
நன்னை திருஞானசம் முறிருைநீ சோமசுந்தர தேசிக ஞானசம்
ஆசிச்
ஈழத்திருநாட்டின் வரலாற்றில் முதன்மை ெ என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் 1 பெருங்கோயிலாக விளங்கி, பின் அன்னி எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. திருவழு
终 அற்புதமானது. சித்தர்கள் யோகிகள் முத 2N பெருமைப்படுத்தும் பண்பாடு தொடங்கியது. கா N அலங்காரக் கந்தன் என அனைவராலும் அன நல்லூரின் சிறப்பு அம்சம். நல்லூர்க் கந்தன் அ S r, r. : .ஒளிபரப்பும் தெய்வீக பீடமாகக் காட்சி தரும் حیح பாடிப்பரவும் பக்தர்களும் எல்லையில்லாத ஆன W நல்லைக் கந்தன் பெருந்திருவிழாவை முன்
then காலாண்டிதழான “இந்து ஒளி’யை மகோற்ச xx விடயம். இந்து மாமன்றத்தின் இந்த மகோ /N/N இதழாகவும் சிறப்புப் பெறுகிறது. காலத்துக்குக
சைவமக்களின் உயர் அரணாக விளங்குவது மாமன்ற பிராந்திய நிலையம் அமைக்கப்பட்டு ச1
விடயமாகும். எல்லாம் வல்ல நல்லைக் கந்த ~ கிடைக்க வேண்டி நல்லாசி கூறி அமைகிறோ
. . . . . . L.
(இந்து ஒளி
 
 
 
 
 
 
 
 

کھکھیلاS$Xیخ
ாற்றப்படுபவன் முருகன். கு அதிபதியானவன்.
தியாய் பலவாய் ஒன்றாய் ப தோர் மேனியாகி கரங்கள் பன்னிரண்டும் கொண்டு உதித்தனன் உலகமுய்ய’ >ருகப்பெருமான் இலங்கைத் திருநாட்டிலும் பல்வேறு லித்து வருவது சிறப்புக்குரியது. டவீடுகளில் ஒன்றாக விளங்கும் நல்லையம்பதியில் மானுக்கு இப்போது மகோற்சவப்பெருவிழாநிகழ்ந்து துவரும் சஷ்டி திதியில் மகோற்சவம் ஆரம்பமாவது 15.03.2010 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ாய்க்கிழமை இரதோற்சவமும், 03.09.2010 புதன்கிழமை
லைக் கந்தன் மகோற்சவ சிறப்பிதழாக ஒளிவீசும் அருள்மிகு முருகப் பெருமானின் பாதங்களில் ாங்கி நிற்கிறோம்.
கம்பொழி கருணை போற்றி தோள் போற்றி காஞ்சி லரடி போற்றி அன்னான் தக்கைவேல் போற்றி போற்றி!
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLiiLLLiLLLLLLL பந்தர் ஆதீன முதல்வர்
gigs uyruostarfadhau சுவாமிகள் அவர்களது செய்தி
பறும் பெருங்கோயில் நல்லைக் கந்தன் ஆலயம் மன்னர்களின் ஆட்சியில் இத்திருக்கோயில் பர் வருகையால் அழிவுற்று, மீளவும் கட்டி நட் சிறப்புமிக்க நல்லை முருகனின் சிறப்பு ல் நல்லைக் கந்தனுக்கு பாமாலை பாடிப் லந்தவறாத பூசை சிறப்பாகச் சொல்லத்தக்கது. ழக்கப்படும் வார்த்தைக்குரிய அழகுக் கோலம் ஆலயத்தில் கொடியேறிவிட்டால் நாடே புனிதம் வட்டம் நல்லூரை நாடிவரும். நல்லூர் வீதி ஞான ருேநீற்றுப் பொலிவும், தெய்வீகக் காவடிகளும், ந்தம் தரும் காட்சிகள். விரிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம், தனது வ சிறப்பிதழாக வெளியிடுவது பாராட்டுக்குரிய சவ சிறப்பிதழ் பதினான்கு ஆண்டு நிறைவு ந்த நற்கருமங்களை ஆற்றும் இந்து மாமன்றம் நாம் செய்த பெரும் பேறாகும். நல்லூரில் இந்து ய, சமூகநலப் பணிகள் தொடர்வது திருப்திதரும் னின் கடாட்சம் அனைவருக்கும் நிறைவாகக் ) l
A.
تحصیN-سمہمعمحمحS-محیحدسمبرہمصحصہ۔
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 6
ரெலாற்றுப் புகழும், திருவருட் பொலிவும், அழகுச் செழிப்பும், தூய்மை உணர்வும், ஆன்மிகச் சூழலும், ஆலய பரிபாலனச் சீர்மையும், உரிய நேரங்களில் நித்திய நைமித்தியக் கிரியைகள் நடைபெறும் பாங்கும், அன்பர் திருக்கூட்டமும், கந்தரபுராண கலாசார மேன்மையும், தேரடி ஞானியரின் மகிமையும், தெய்வசாந்நித்யமும், கந்தன் கருணையும் நிரம்பப் பெற்ற சிறப்புனையுடையது, நல்லைக் கந்தன் ஆலயம். கந்தன் கோயில் கொண்டு அருளாட்சி புரிவதனால், அந்த ஊர், நல்லூர் எனும் திருப்பெயரைப் பெற்றது.
“நல்லையாஞ் செல்வ நகரிடைத் தொல்லையோர் போற்றத் துலங்கு வேலவனே' என நல்லைக் கந்தனின் பெருமையை அடியார் ஒருவர் போற்றுகிறார்.
“எந்நாளும் நல்லூரை வலம் வந்து வணங்கினால் இடர்களெல்லாம் போமே” என்றும், "சார்ந்தவர்க்குச் சாகா வரங்கொடுக்கும் நல்லூரை வீழ்ந்து எழுந்து கும்பிடுவாய் விரைந்து” என்று கூறி, எம்மையெல்லாம் கூவி அழைக்கிறார் சிவயோக சுவாமிகள். தேவலோகத்தில் இந்திரன் விரும்பி உறைகின்ற இடம் அமரவாதி எனப்படுகிறது. கலியுக வரதன் கந்தன் விரும்பி உறைகின்ற நல்லூர், பொன்னமராவதி எனப் போற்றப்படுகிறது. என்றும் இளமையுடன் திகழ்பவன் என்பதால் குமரன் என்றும், குன்றாத அழகுடன் விளங்குவதால் முருகன் என்றும் கந்தன் அழைக்கப்படுகிறான். முருகு என்றால் அழகு. முருகன் அழகன். இவன் பிரபஞ்சம் முழுவதிலும் நீக்கமற நிறைந்துள்ளான். ஆதலால் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் அழகு மயம் ஆக உள்ளது. அந்த அழகு இயற்கையின் மூலம் எமக்குத் தரிசனம் தந்து கொண்டிருக்கிறது. அது அழியா அழகு. எல்லோராலும் விரும்பப்படுவது அழகு. எனவே அழகு வாழ்வில் பேணப்பட வேண்டியது இன்றியமையாதது.
அழகு எங்குள்ளதோ அங்கு ஒழுங்கும் உள்ளது. செம்மையே அழகு, அழகே செம்மை; உண்மையே அழகு, அழகே உண்மை, நன்மையே அழகு, அழகே நன்மை. சத்தியம், சிவம், சுந்தரம் எனும் தத்துவம் உண்மை, நன்மை, அழகு என்பவற்றை விளக்கி நிற்கின்றது. இம் மூன்றினதும் இணைப்பே இறைவன்.
அழகுதான் உண்மையும் நன்மையும் ஆனது. அழகுக் கடவுட் தத்துவம் தான் முருக தத்துவம் என நம் முன்னோர் கொண்டனர். முருக தத்துவத்திற்கு முதுமையே, மூப்போ, உதிர்வோ இல்லை. எனவே முருகன் எஞ்ஞான்றும் குமரனாகவே விளங்குகின்றான். முருக தத்துவமே அழகு தத்துவம் எனும் போது, எல்லாமே அழகாக- சீராக- செம்மையாக - ஒழுங்காக- நீதியாக- உலகில் இருக்க வேண்டும் என்பதை அத் தத்துவம் உணர்த்துவதாக உள்ளது. ஒழுங்கு, செம்மை, உண்மை, நீதி என்பவற்றை நிலை நாட்டி உலகினை அழகு செய்பவன் முருகன். முருகனின் தோற்றத்தின் நோக்கமும் அதுவேயாகும். வாழ்க்கையின் அடிப்படையான மூலதத்துவம் அழகு தத்துவமான முருக தத்துவம் தான.
(இந்து ஒளி
 

6 கந்தன் வச் சிறப்பு
"முந்தொரு காலத்தில் மூவுல கந்தன்னில் வந்திடு முயிர்செய்த வல்வினை யதனாலே அந்தமின் மறையெல்லாம் அடிதலை தடுமாறிச் சிந்திட முனிவோருந் தேவரும் மருளுற்றார்"(கந்தபுராணம்) உலகில் நிலவிய அத்தகைய ஒழுங்கு கெட்ட, "அடிதலை தடுமாறிய, அவலம் சூழ்ந்த நிலையிலேயேதான், உலகில் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டி முருகனின் தோற்றம் இடம் பெற்றது.
“அருவமும் உருவும் ஆகி, அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக்
ஒரு திருமுருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய” vr (கந்தபுராணம்) உலகினை ஒழுங்கு செய்வதற்கும்-அழகு செய்வதற்கும், அதன் வழி உலகத்தவரை உய்விப்பதற்குமே முருகன் தோன்றினான் என்கிறது கந்தபுராணம். சூரசங்காரம் நிகழ்த்தப்பட்டது; அழகும் ஒழுங்கும் மீண்டும் உலகில் நிலைபெறலாயிற்று.
கந்தபுராணம் கோடிட்டுக் காட்டும் அந்தக் காலத்திலும் மிக மோசமான காலம் தற்காலம். உலகம் “அடிதலை தடுமாறி” அவலப்படுகின்ற, தவிக்கின்ற காலம் இன்றைய காலம். கெடுபிடிகள், ஊழல்கள், வன்செயல்கள், வல்லார் ஆதிக்கம், கொடுமைகள் போன்ற அசுரத்தனங்கள் இன்றைய உலகில் மேலாதிக்கம் செலுத்துகின்றன. வழிகாட்டிகள் இன்றி, உலகத்தவர் புன்னெறியில் செல்கின்றனர். இந்த நேரத்தில், இந்த அவலநிலையை நீக்குதற் பொருட்டு, முருகப்பெருமானின் திருவருளை வேண்டித் தவம் செய்ய வேண்டியுள்ளது.
உலகத்தில் ஒழுங்கினை மீளவும் நிலைநாட்டி, அழகு செய்யக்கூடிய வல்லமை முருகப் பெருமானுக்கே உண்டு. ஆகவே, நல்லூர் முருகனின் மகோற்சவ காலத்தில், நாம் முருகனை நோக்கித் தவம் இயற்றவேண்டும். ஒவ்வொருத்தரும் தம்மை ஆராயவேண்டும். மனத்தை ஒரு நிலைபடுத்தி, நடுவுநிலை நின்று, தம்மிடமுள்ள நிறைகள், குறைகளை ஆராய வேண்டும். குறைகளைத் தவிர்த்து மீண்டும் அவ்வாறான குறைகள் குற்றங்கள் ஏற்படாத வண்ணம் தம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் புன்னெறியதனிற் செல்லும் போக்கினை மாற்றி மேலாம் நன்னெறியதனில் நின்று நல்லமுறையிலே வாழ வேண்டும் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த உறுதிப்பாட்டினை இறுதிவரை கடைப்பிடிக்க வேண்டும். “உன்னைத் திருத்தி விடு, உலகம் திருந்தி விடும்" என்கிறார் ஓர் அறிஞர். ஒவ்வொரு அடியவரும் இந்த மகோற்சவ காலத்தில், தன்னை ஆய்வுக்குட்படுத்தி, தம்மிடமுள்ள உட்பகைவர்களை வெற்றி கொண்டு, களங்கங்கள், தீய குணங்களைப் போக்கினால் உடல்நலம், உயிர்நலம், மனவளம், அமைதி, மகிழ்ச்சி என்பனவற்றைப் பெற்றுச் சிறந்து வாழமுடியும். உலகியல் வாழ்வு ஆனது, ஆன்மிகத்துடன் இணைந்தும் இசைந்தும் செல்லும் போதே மனித வாழ்க்கையில் வளமும் நலமும் பெருகுகின்றன.
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 7
பேராசை, சினம், கடும்பற்று, முறையற்றபால் கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ' என்பவைகளே மனிதரிடம் குடிகொண்டுள்ள உட்பகைவர்கள். வெளிப்பகையை விட உட்பகை மிக மோசமானது. வெளிப்பகையை ஏற்படுத்துவதும், தீவிரமடையச் செய்வதும் கூட, இந்த உட்பகைவர்களின் தூண்டுதலேயாகும். குறித்த உட்பகைவர்களை வெற்றிகொள்வதை, இந்த மகோற்சவ காலத்தில் விரதமாகக் கொள்ள வேண்டும். “காப்பது விரதம்” என்பது, முது மொழி. தன்னையும் பிறரையும் உட்பகைவர் களிடமிருந்து காத்துக் கொள்வதை விரதமாகக் கொள்ளுதல் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு”(திருக்குறள்) எனவே, விரதம், தவம் மூலம் பெறப்படும் ஆற்றலால், மனிதர்கள் தத்தம் உட்பகைவர்களை வெற்றி கொள்ளமுடிகிறது. “விரதமாவது, மனம் பொறிவழிப்போகாது நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும், சுருக்கியேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேஷமாக வழிபடுதல்” என்று நாவலர் பெருமான் விரதம் என்பதற்கு வரைவிலக்கணம் கூறியுள்ளார்.
மன அடக்கம், புலனடக்கம் ஆகிய இரண்டையும் எய்துவதற்குத் தம்மை வழிபடுத்தும்படி கடவுளை வேண்டுதல் செய்தல்-வழிபடுதல், விரதமாகும், என்பது இவ்வரைவிலக் கணத்திலிருந்து பெறப்படும் கருத்து எனலாம். வழிபாட்டில், தனித்திருத்தல், பசித்திருத்தல், விழித்திருத்தல் நிபந்தனையாகும். இம்மூன்றினதும் உட்கருத்துக்களை ஆராய்ந்தறிந்துகொண்டால், நம்முடைய உட்பகைவர்களை வெற்றி கொள்கின்ற வழிமுறைகள், திறன்களை அவை நமக்கு வழங்குவதைத் தெரிந்து கொள்ளலாம். “மணம் முதலிய அகக் கருவிகளையும், மெய், வாய், கண், மூக்கு, செவிகளாகிய அறிகருவிகளையும், கை, கால் முதலிய தொழிற் கருவிகளையும் இறைபணி செய்யச் செலுத்துவதே வழிபாடாகும்” என்று பெரியோர் கூறி வைத்துள்ளனர். “மக்கள் சேவையே மகேஸ்வரன் சேவை"என்னும் சான்றோர் கூற்றுப்படி, இறைபணி என்பது கைம்மாறு கருதாது மக்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் ஆற்றப்படும் சேவையையும் உள்ளடக்கு வதாகக் கொள்ளப்பட வேண்டும். இறைபணியில் ஈடுபடும் போது, தற்பற்று, தன்முனைப்பு, பொருட்பற்று என்பவற்றிலிருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, இறைவனுடன் பற்று வைக்க வாய்ப்பாக அது அமைகிறது. மகோற்சவ காலத்தில் இவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் இறைபணியில் ஈடுபடவும் முயற்சிகளை மேற்கொள்ளல் விரதமாகக் கொள்ளலாம்.
விரதம் என்பது உணவினை ஒருநேரம் மட்டும் உண்பது என எண்ணிச் செயற்படுபவரே பலர் உள்ளனர். உபவாசம் என்பது பசித்திருத்தல் மாத்திரமே என நினைப்பவர் பலர் உளர். உபவாசம் என்பதன் பொருள் கடவுளோடு உடன் உறைதல் ஆகும். கடவுளை மனத்தில் இருத்தி உடனுறையும் போது தீயவை எம்மைத் தீண்டமாட்டா. மனத்தில் உள்ள் கசடுகள், அழுக்குகள் நீக்கப்பட்டு மனந்துாய்மை ஏற்பட்டு விடும். மனம் மாசுக்கள் இன்றி இருத்தலே அறம் என்பர் வள்ளுவப் பெருமான். அறம் கைவரப் பெற்றால் வாழ்க்கை வளமும் நலமும் பெற்றுவிடும். தனக்கு உற்ற துன்பங்களைப் பொறுத்துக்கொள்ளல், பிற உயிர்களுக்குத் துன்பங்கள், தொல்லைகள் செய்யாமை விரதத்தின் அங்கங்கள் என வள்ளுவர் கூறுவர். எனவே மகோற்சவம் நடைபெறுகின்ற இருபத்தைந்து நாட்களும் விரதம் அனுட்டிப்பவர்கள், விரதம் என்பதற்கான பொருளை உணர்ந்து, அகப்புறத்தூய்மையராய் இறைபணிநிற்றல் என்பதைக் கடைப்பிடித்து வாழ்தல் உத்தமமாகும்.
மகோற்சவ காலத்தில் பெற்ற ஆன்மிகப் பயிற்சி, அனுபவங்கள் என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும்
(இந்து ஒளி

நன்னெறியில் வாழத் தலைப்படுதல் அவசியமாகும். சமயம்ஆன்மிகம், வாழ்க்கைநெறி என்பதைக் கருத்திற் கொள்ள வேண்டும். முருக அடியார்கள், தம் வாழ்க்கையை அழகு செய்தல், ஒழுங்கு செய்தல் என்பவற்றில் ஈடுபாடு கொள்ளும் போதே, முருகனைப் பற்றிப் பிடித்தவர்கள் ஆவர். சித்தம் அழகியர் ஆக மிளிர்வேண்டும், முருகனை உபாசிப்பவர்கள். நல்லூர் முருகன் ஆலயத்திற்கு வருகின்ற இலட்சக்கணக்கான பக்தர்களுக்கும்; தூலமாக வரமுடியாது, மானசீகமாக முருகனை வணங்கி வருகின்ற, உலகின் பல இடங்களில் பரந்து வாழ்கின்ற எண்ணற்ற முருக அன்பர்களுக்கும் இது சமர்ப்பணம். முருகனை வணங்குவது சித்தம் அழகியர் ஆவதற்கே என்பதை உணர்ந்தவர்களுக்கு ஒரு பொல்லாப்பு மில்லை; இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை; பிறவிப் பயன் ஆகிய முத்தியும் சித்திக்கும். முழுதும் உண்மை.
நல்லைக் கந்தன் அழகுக் கந்தன் ஆக அமர்ந்து அடியார்களுக்கு அருள்புரிகின்றான். இதன் தாற்பரியம் உணரப்படும் போதே, உலக அமைதி சாத்தியம் ஆகும். நல்லூரில் அழகுப் பாரம்பரியம் நன்கு நிலையூன்றியுள்ளது. இந்த அழகுப் பாரம்பரியத்தையே நாவலர் பெருமான் கந்தபுராண கலாசாரம் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த அழகு மிளிர் கந்தபுராண கலாசாரம், நல்லையம்பதியில் ஊற்றெடுத்து நாநிலம் முழுவதும் பரவிற்று. வாழ்வில் செம்மை, உண்மை, நீதி, ஒழுங்கு, கட்டுப்பாடு பேணப்பட்டு வந்தன. “தருமம் என்றொரு பொருள் உளது” என்பதில் அசையாத உறுதிப்பாடு மக்களிடம் இருந்து வந்தது. சமூக நீதிக்கும் தெய்வ நீதிக்கும் மக்கள் மதிப்பளித்து வந்தனர். “மேன்மை கொள் சைவ நீதி’ அழகுப் பண்பாட்டின் அடித்தளம்; கந்தபுராண கலாசாரத்தின் கருப்பொருள். இவ்விடயம் பற்றி மகோற்சவ காலத்தில் சிந்திக்க வேண்டும்.
மகோற்சவம் நைமித்திய பூசைகளுள் அடங்கும். கோயில்களில் ஆண்டு தோறும் மகோற்சவம் நடைபெறுகிறது. நித்தியபூசைகளில் தெரிந்தோ தெரியாமலோ, மந்திரலோபம், கிரியாலோபம் முதலிய குறைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மகோற்சவம் செய்யப்படுகிறது என அறிஞர் கூறுவர். திருக்கோயிலுக்கு நாள் தோறும் சென்று வழிபடுவதே முறையாகும். எல்லோருக்கும் இது இயலக்கூடியதன்று. மகோற்சவ காலங்களிலாவது ஆலயவழிபாடு செய்ய வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாகவும் மகோற்சவம் விளங்குகிறது. திருவிழாக்களை கேளிக்கை வைபவங்களாகவோ, களியாட்டங்களாகவோ ஆக்கிவிடக்கூடாது. குளிக்கப் போய் சேறு பூசிய கதையாக இருக்கக்கூடாது. சமூக ஒற்றுமைக்கும், சமூக சேவைக்கும், சமூக நலன்களுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதாகவும் மகோற்சவம் விளங்குகிறது. அந்த வகையில், திருவிழாக்கள் சமய வழிபாட்டுக்கும் சமூக அபிவிருத்திக்கும் பயன்படுகின்றன.
உற்சவம் என்பது மேலான யாகம் எனக் கூறப்படுகிறது. அவிசொரிந்து வேட்டல் யாகம். அங்கு அரும் பெருஞ்சோதியாக இறைவனைக் காண்கிறார்கள். உற்சவ காலங்களில் செய்யப்பட வேண்டிய மற்றொன்று தியாகம். தீமையானவற்றை, தீங்கு பயப்பனவற்றைத் துறத்தல் தியாகம். பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம் முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு போன்றவற்றை தியாகம் செய்யப்பட வேண்டியவை. ஒன்றைவிட வேண்டும் என்றால் மற்றொன்றைப் பற்ற வேண்டும். யாகக்கினியில் ஆகுதியாக இடப்படவேண்டியவை மும்மலங்கள். "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு”(திருக்குறள்) முருகன் பற்றற்றவன். முருகனில் பற்று வைத்து, மனம், மொழி, மெய்த் தூய்மையுடன் அவனை இறுகப் பற்றிக் கொள்ளுதலே, ஏனையகேடு தரும் பற்றுக்களை விட்டொழிப்பதற்கேற்ற வழியாகும். நான் எனது எனும் அகந்தை,
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 8
மமதைகளைத் தியாகம் செய்தல் ஒருவகை உத்தம யாகம் ஆகும். யோகம் என்பது நாம் கடவுளுடன் தொடர்பு கொள்ளும் முறை. அட்டாங்க யோகம் பற்றித் திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் இயமம், நியமம் என்பன மகோற்சவ காலங்களில் மட்டுமன்றி, தொடர்ந்தும் வாழ்க்கையில் மேற்கொள்ளப்பட வேண்டியன.
இயமம் பற்றித் திருமந்திரம் கூறும் பாடல் பின்வருமாறு: "கொல்லான் பொய் கூறான் களவிலான் எண்குணன் நல்லான் அடக்கம் உடையான் நடுச் செய்ய வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இயமத்து இடையில் நின்றானே.” இயம ஒழுக்கங்களாவன: கொல்லாமை, திருடாமை, பொய் பேசாமை, நற்குணங்களை மேற்கொள்ளல், அடக்கம்-பணிவுபொறை உடைமை, சமனோக்குடைமை, பகிர்ந்துண்ணல், எவ்விதகுற்றமுமில்லாமை, மது அருந்தாமை, காமம் வயப்படாமை ஆகும்
நியமம் "தூய்மை அருள் ஊண் சுருக்கம் பொறை செவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்ற இவை காமம் களவு கொலை எனக் காண்பவை நேமி ஈர்ஐந்து நியமத்தன் ஆமே”(திருமந்திரம்) அகப்புறத்தூய்மை, அருள், உணவில் அளவு பேணல், பொறுமை, செம்மை, வாய்மை, நல்லனவற்றை வளர்த்தல், காம இச்சை அற்று இருத்தல், கொலை களவு செய்யாதிருத்தல் நியமங்கள் ஆகும். மேலும் நியமங்களாகத் திருமந்திரம் கூறுபவை:
‘தவம் செபம் சந்தோடம் ஆத்திகம் தானம் சிவம் தன் விரதமே சித்தாந்தக் கேள்வி அகம் சிவபூசை ஒண்மதி சொல் ஈர்ஐந்து நிவம் பல செய்யின் நியமத்தன் ஆமே”(திருமந்திரம்) தவம், நாம செபம், ஆனந்தம், இறைநம்பிக்கை, தானம், விரதம், இறை ஞானத்தைத் தேடல், அகப்பூசை செய்தல், ஞானத்தை வளர்த்தல், இறைவனோடு உடனுறைதல், என்பன நியமத்தின் அம்சங்கள்.
நீதி வழுவா நெறிமுறையில் தம் வாழ்க்கையை இட்டுச் செல்வோர் இயம நியம ஒழுக்கங்களைப் பேணிவருபவர்கள் ஆவர். யாகம், தியாகம், யோகம் என்பவற்றின் உண்மைப் பொருளை விளக்கி, மகோற்சவ காலங்களிலும், தொடர்ந்தும் அவற்றை வாழ்க் கையில் கடைபிடித்து வந்தால், வாழ்வில் அமைதி, ஆனந்தம், நிறைவு என்பன உறுதியாகிவிடும்.
மகோற்சவம் இறைவன் உயிர்கள் மீது அளப்பருங் கருணை கொண்டு, அவற்றின் ஈடேற்றத்திற்காகவும், உய்விற்காகவும், பிறப்பு - இறப்பு சுழற்சியிலிருந்து அவற்றை விடுவித்துப் பேரானந்தப் பெருவாழ்வினை அளிப்பதற்காகவும் நடத்தும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் (சிருஷ்டி, திதி, சங்காரம்,திரோபவம், அநுக்கிரகம்) எனும் இறைவனின் ஐந்தொழில்களை (பஞ்சகிருத்தியம்) உணர்த்துவதாக அமைகின்றது. மகோற்சவத்தின் தத்துவ விளக்கம் இவ்வாறு கூறப்படுகிறது.
உற்சவம் போக மோட்சங்களைக் கொடுப்பது எனவும் பொருள் கொள்ளப்படுகிறது.
உற்சவங்களை முன்னின்று செய்பவர்கள், செய்வித்தவர்கள், செய்ய உதவியவர்கள், தரிசித்தவர்கள், மற்றும் உற்சவத்தின் போது தொண்டு புரிபவர்கள் யாவரும் எல்லா நலன்களையும் வளங்களையும் சுகங்களையும் இம்மையில் அனுபவித்து, நித்தியானந்தப் பெரும் பேற்றினையும் அடைவர்கள் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
நல்லைக் கந்தன் மகோற்சவம், ஆண்டு தோறும், ஆடி மாத அமாவாசையைத் தொடர்ந்து வரும் ஆறாம் நாள் சட்டித் திதியில், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இருபத்தைந்து நாட்கள் நடைபெற்று, தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
(இந்து ஒளி

இருபத்தாறாம் நாள் பூங்காவனம் எனும் திருக்கல்யாண உற்சவமும், மறுநாள் வைரவப் பெருமான் உற்வசமும் நடைபெறும். பிரதான உற்சவங்கள் ஆக இடம்பெறுபவை, கொடியேற்றம், பத்தாம் திருவிழா மஞ்சம், கார்த்திகை உற்சவம், சந்தான கோபாலர் உற்சவம், கைலாசவாகனத் திருவிழா, கஜவல்லி மஹாவல்லி உற்சவம், வேல் விமானம், தெண்டாயுதபாணி உற்சவம் (மாம்பழத் திருவிழா); சப்பரம், தேர், தீர்த்தம், பூங்காவனம் என்பன.
கொடியேற்றம் படைத்தல் தொழிலையும்; வாகனத் திருவிழாக்கள் காத்தலையும், தேர்த்திருவிழா அழித்தல் தொழிலையும், மெளனத்திருவிழா மறைத்தலையும்; தீர்த்தோற்சவம் அருளலையும் குறிக்கின்றன.
கொடிமரம், பதியையும்; கொடிசீலை, பசுவையும், திருப்பைக் கயிறு, பாசத்தையும்; கொடி வெண்கயிறு, திருவருட் சக்தியையும் குறிக்கின்றன. ஆன்மாக்கள் மலபந்தம் உடையவர்கள். மலங்களாவன ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றும் ஆகும். பாசம் என்றும் அவற்றைக் கூறுவர். கொடிமரத்தில் ஆறு ஆதாரங்களை ஆசனமாகக் கொண்டு, அதன் உச்சியில் இருப்பவன், இறைவன். இறைவனைத் திருவருட்சத்திமூலம் ஆன்மா(பசு) அடைதல் எனும் உயர்தத்துவத்தை விளக்குவதாகக் கொடியேற்றம் அமைகிறது.
சுவாமி வாகனங்களில் எழுத்தருளி திருவீதி உலாவருதல் காத்தல், தொழிலைக் குறிப்பதாக உள்ளது. காத்தல் ஆவது, படைக்கப்பட்ட தநு, கரண, புவன, போகங்களை நிலைநிறுத்துதல் ஆகும். எனவே மகோற்சவ காலங்களில் சுவாமி வீதிவலம் வரும் போது தரிசனம் செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்.
இரதோற்சவம் அல்லது தேர்த்திருவிழா இறைவனின் ஐந்தொழில்களில், அழித்தல் அல்லது சங்காரம் என்பதைச் சுட்டுவதாகச் சைவநூல்கள் கூறும். சிவபெருமான் தேரேறிச் சென்று திரிபுரதகனம் செய்தமை என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அழித்தமையைக் குறிப்பதாகத் திருமந்திரம் கூறுகின்றது. அழிக்கப்பட வேண்டியவை மலங்களும் அவற்றோடு தொடர்புபட்ட தீமைகளும் ஆகும். அசுர சக்திகள் அழிக்கப்படும் போதே, ஆக்கச் சக்திகள் இடையூறுகளின்றி வளர்ச்சி பெற வாய்ப்பு ஏற்படும்.
திருக்கோயிலுக்குட் சென்று சுவாமி தரிசனம் செய்ய இயலாதவர்கள் மற்றும் நோயாளிகள், கர்ப்பிணிகள் என்போர் வெளி வீதியில் உற்சவமூர்த்தியைக் கண்ணாரக் கண்டு நேரில் தரிசனம் செய்யும் வாய்ப்பினை இரதோற்சவம் அவர்களுக்கு வழங்குகிறது. சிவதீட்சை பெறாதோர், தேரிலே உற்சவமூர்த்தியைத் தரிசிப்பதால் சாம்பவ தீட்சையைப் பெற்றுக் கொள்ளும் அரிய சந்தர்ப்பம் கிட்டுகின்றது.
நல்லைக் கந்தனின் தேரின் வடம் பிடிப்பது என்பது மிகப் பெரிய புண்ணிய காரியம்; வடம் பிடிப்பவர்கள் முருகப் பெருமான் திருவடிகளில் இடம் பிடித்தவர்கள் ஆகின்றனர்.
"உடம்பிடிச் செங்கைக் குமரேச வள்ளல் உருள் நெடுந்தேர் தடம்பிடித் தோங்குந் திருநல்லை வீதிதனில் வருமால் வடம்பிடித்துஈர்த்திட வம்மின்கள், வம்மின்கள் தொண்டரெலாம் இடம்பிடித்திட்டிருப்பீர் வீடு நல்கும் இணையடிக்கே”
நல்லையந்தாதி நவாலியூர் சோமசுந்தரப் புலவர்) என, நல்லைத் தேரின் வடம் பிடித்து இழுப்பதனால் கிடைக்கப்பெறும் பெரும் பேற்றினைக் குறிப்பிடுகிறார், புலவர் அவர்கள்.
இருபத்தைந்து நாட்கள் நடைபெறுகின்ற மகோற்சவத் திருவிழாக்களின் போது, தேர்த்திருவிழாவன்றுதான் ஆறுமுகப் பெருமான், கஜவல்லி மகாவல்லி சமேதராக எழுந்தருளித் தேரின் மீது இவர்ந்து, வீதி உலா வந்து அடியார்களுக்கு அருள் புரிகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 9
"நாம் இருக்கப் பயமேன்” என அபயமளித்துக் காத்து வருபவன், எமக்கு அறுதல் அளிப்பவன் ஆறுதலையுடைய ஆறுமுகன்.
ஆறுமுகப் பெருமான் பச்சை சாத்தித் தேரிலிருந்து இறங்கி வருகின்ற அற்புதக் காட்சி, பசுமையும் அழகும் நிறைந்த தெய்வீகக் காட்சியாக விளங்கும். பச்சை சாத்தி எழுந்தருளுவதன் மூலம் எல்லா உயிரினங்களுக்கும் பசுமையும், குழுமையும், செழிப்பும், தண்ணளியும் நிறைந்த வாழ்வினைத் தருகின்ற சதாசிவமூர்த்தியும் தானே என்பதை உணர்த்துவதாக உள்ளது.
பிறந்து, இறந்து உழலும் உயிர்களை, மலபந்தத்தினால் ஏற்படுகின்ற துன்பங்களின்றும் விடுவித்து ஒடுக்குவதாலே, சங்காரகிருத்தியம் உயிர்களுக்குத் தீது ஆகாது; அது நம்மையேயாகும். உயிர்கள் மீது இறைவன் கொண்ட எல்லையற்ற கருணையினால் சங்காரத்தொழில் நிகழ்த்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லூர் தேரடியின் மகிமை அளவிடற்கரியது. யாழ்ப்பாணம் கடையிற் சுவாமியார், செல்லப்பாசுவாமியார், யோகர் சுவாமிகள் ஆகியோர் உலாவிய இடம்; யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்த புனித இடம், புண்ணிய பூமி, நல்லூர்த் தேரடியாகும். தேரடியில் அமர்ந்து யோக நிஷ்டையில் ஆழ்ந்து, முருகனின் திருவருட்கடாட்சம் பெற்றவர்கள் பலர் உள்ளனர்.
தீர்த்தோற்சவம் இறைவனின் அருளல் தொழிலைக் குறிக்கின்றது. நல்லூர் தீர்த்தோற்சவத்தில் விநாயகர், முருகப் பெருமான், வள்ளி அம்மன், தெய்வானை அம்மன், சண்டேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் எழுந்தருளி அடியார்களுக்குத் திருவருள் பாலிப்பர்.
எண்வகையான சிவமூர்த்திகளுள், பவன் என்னும் திருநாமம் கொண்ட சிவமூர்த்தியின் சக்தியாகிய 'சியேட்டை சலரூபமாக அமைந்துள்ளது. தன்னை வந்தடைந்து, தரிசித்து, ஆசமித்து, ஸ்நானம் செய்யும் அடியார்களின் பிறவியாகிய வெப்பத்தை நீக்கித் தன்னிடத்தில் அமிழ்ந்தச் செய்து தத்துவாதீதராய் விளங்கும் சிவத்திடம் கூட்டும். சிவனும் முருகனும் வேறல்லர், இருவரும் ஒருவரே என்பது கந்தபுராணம் தரும் செய்தியாகும்.
கொடியிறக்கம் ஐந்தொழில் முடிவையும் ஆன்மாக்கள் பிறவிப்பயனை எய்துதலையும் குறிப்பதாக அமைகின்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற வகையில் தீர்த்தமும் விசேடம் பெற்றுத் திகழ்கிறது. இதனாலேயே அருளல் நடைபெறுகின்ற தீர்த்தோற்சவத்தன்று தவறாது சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்று கூறப்படுகிறது.
பூங்காவனம் என்றழைக்கப்படும் திருக்கல்யாண உற்சவம் உலகியல் நோக்கிலும் ஆத்மீக நோக்கிலும் பொருள் நிறைந்தது. உலகியல் வாழ்க்கையில் திருமணத்தின் தேவையும் இல்லறத்தின் சிறப்பினையும், புனிதத்தினையும் உணர்த்துவதாக அமைகிறது. அந்த வகையில் அது இறைவனின் போக நாடகம். அதே வேளை ஆன்மிக நோக்கில், பசு ஆகிய ஆன்மா பதியுடன் இணைவதான உயர்நிலையினைக் குறிப்பதாகவும் அது விளங்குகிறது. அது இறைவனின் யோக நாடகம். ஆன்ம ஈடேற்றத்தை உணர்த்துகிறது.
நல்லைக் கந்தனின் திருவருளால் முருக தத்துவம் என்பது அழகு தத்துவம் என்பதையும், அழகு தத்துவம் என்பது வாழ்க்கை ஒழுங்கு தத்துவம் என்பதையும் தெளிந்து, வாழ்வில் சீரான ஒழுங்குபேணி வாழ்வாங்கு நல்ல வண்ணம் வாழ்ந்து இக, பரசுகங்களை அடைவோமாக!
"மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”
(இந்து ஒளி

திருநல்லூர்க் கந்தன் அருட்புகழ்
(ஞானவித்தகர் அருட்கவி சீ. விநாசித்தம்பி)
பஞ்சக் கொடுமையி லஞ்சிப்பிறர்தமை இரவாதே - ர் சொந்தத்தினரென மதியாே
சங்கத்தமிழிசையன்பிற்புனைபணிஅருள்வாயே நெஞ்சைக்கிளறியமஞ்சுக்கிரிதரன்மருகோனே
நிந்தைச்செயலினர்வந்தித்திடுபணி இகழ்வோே O ப்பருகியசெம்பொற் வினர்புதல்வேே
நம்பற் ம்ேமல் ተሩ శ్రీ ர்பெருமாளே!
Ꭸ : དང་བཅས་གསར་ རྗེ་
fluu Lor த்தீர்த் umä 3OHT
O ர்மேவிக்கூர்ச் 86tri s வே
இருவினையினிருணண்ணித்திரிவேனே தருணமழைஎனநெஞ்சிற்குளிராக
சரணமலரிணைதன்னைத்தருவயே கருணைவழிபயிலன்பர்க்கினியனே
அருணகிரிபுகழ்சொல்லைப்புனைவோனே
அருள்பெருகுதிருநல்லைப்பெருமாளே!
Na Alesale
}
7 விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 10
சிறப்புக் கட்டுரை
யாழ்ப்பானத்துநல்லூர்
கலாநிதி கனகசபாபதி
ම_9ල_9ල_9ල_9ල_9ම_9ල_9ල_9 முதுநிலை விரிவுரை
சப்ரகமுவ பல்கலைக் க
( ( ( ( ( ER 9
யாழ்ப்பாண அரசின் இராசதானியாகத் திகழ்ந்த சிறப்பு நல்லூருக்குண்டு. முறையான நிர்வாக நடவடிக்கைக்குரிய மத்திய இடமாகவும் நல்லூர் அமைந்திருந்த செய்திகளை வரலாற்று நூல்கள் தந்து நிற்கின்றன. நகர அமைப்புக் கொண்டதாயும் மந்திரிமனை, பிரதானிகளது இருக்கைகளைக் கொண்டதாயும் சமுதாயக் கடமைகளுக்கென இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட குலங்களினதும் குடிகளினதும் வதிவிடங்களைச் சூழ அமையப்பெற்றதாயும் நல்லூர் விளங்கியுள்ளமையும் அவ்வூரின் முதன்மைக்கு காரணங்களாயின. இன்றும் பல்வகையிலுஞ் சிறப்புப்பெற்று விளங்கும் இந்நல்லூரின் தனிப்பெருஞ் சிறப்புக்கு அங்கு அமைந்துள்ள கந்தசுவாமி கோவில் பிரதானமானதொன்றாகும். இக்கோவிலின் காலம், அதன் சூழமைவு, சிறப்புக்கள் என்பனவற்றுடன் மூர்த்தி விசேடங்குறித்து நோக்குவதும் இங்கு பொருத்தமானதாகும்.
யாழ்ப்பாண வரலாற்றையெடுத்துரைக்கும் கைலாயமாலை வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களும் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, முதலியார் செ. இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர், டானியல் ஜோன், மெஸ். க. வேலுப்பிள்ளை, பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, ஆ. வேலுப்பிள்ளை, கார்த்திகேசு இந்திரபாலா, சி. பத்மநாதன், வி. சிவகாமி, சி. க. சிற்றம்பலம், பொ. இரகுபதி, செ. கிருஷ்ணராசா, ப. புஷ்பரத்தினம், கலாநிதி க. குணராசா, முதலியார் குல. சபநாதன், பொ. ஜெகந்நாதன் ஆகியோரது வரலாற்றாய்வுகளும், குவைறோஸ் 56. ITL6856floit The Temporal and Spiritual Conquest of Ceylon என்ற நூலும், நல்லூர்க் கந்தசுவாமி கோவிலைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. இவற்றைவிட பூநீலழரீ ஆறுமுகநாவலர் எழுதியுள்ளனவும், இலக்கிய, நாவல் எழுத்தாளர் செங்கையாழியான்’ எழுதியுள்ள கட்டுரைகளும், நாவல்களும் நல்லூர் பற்றிய ஆய்விலே பிரதான இடம் பெறுகின்றன. The Ceylon Antiquary and Literary register gi) Ge; i. அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்ரனின் ஆவணத்திலிருந்தும் இக் CSIT650Gui gigsgyóhuggépg| A Memory of Mrs. H.W. Winslow Combining a sketch of Ceylon mission 6TGirp BTGö6505igh நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் திருவிழாக்களிலும், பூசைகளிலும் நிகழ்ந்த தேவதாசிகளின் நடனம், தேரிழுப்பின் போது ஆடு பலியிடல், பறை வாத்தியம் முழக்கம் போன்ற விவரங்களை அறியலாம்.
1. பூர்வீக நல்லூர்
நல்லூர் முன்னொரு காலத்திற் சிங்கைநகர் என்னும் பெயருடன் இருந்திருக்கலாம் என்ற சர்ச்சையும் உள்ளது. சிங்கை நகர் வேறு நல்லூர் வேறு என்ற கருத்தினையும் ஆய்வாளர் நிறுவ முயன்றுள்ளார். இலக்கிய வரலாற்று நோக்கிலும், நாணய
இந்து ஒளி
 

×୍ତ୍ତି இராசதானியின்வரலாறு
BIr(8856fooyor, M.A., Ph.d
பாளர், மொழித்துறை, மூளுஅமூளுட9மூமூஅமூஅமூ9 ழகம், பெலிகுல்லோயா.
& 9
வரலாற்று நோக்கிலும், சமூக, சமய, அரசியல் வரலாற்று நோக்கிலும் சிறப்பாய்வுகளைப் பேராசிரியர்கள் சி. பத்மநாதன், கா. இந்திரபாலா, வி. சிவசாமி, ஆ. வேலுப்பிள்ளை, பொ. இரகுபதி, ப. புஷ்பரத்தினம், துரை. மனோகரன், வி. செல்வநாயகம், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், திருமதி மனோன்மணி சண்முகதாஸ், எம். ஏ. நுஃமான், சி. தில்லைநாதன், ப. கோபாலகிருஷ்ணன், மா. வேதநாதன், சிவபூரீ கிருஷ்ணானந்தன் போன்றோரும் பேராசிரியர் சி. சிவலிங்கராகவும் விவரித்துள்ளார். இக்கட்டுரையாளர் சிறப்பாக “நல்லூர் மாவிட்டபுரத் திருத்தலங்கள் மீதெழுந்த பிரபந்த இலக்கியங்கள்” என்னும் பொருளிலே தமது முதுகலைமாணி (M. Aப் பட்டத்திற்கான ஆய்வேட்டினைப் பேராசிரியர் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளையின் மேற்பார்வையிலே 1988இல் சமர்ப்பித்துத் தமது பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார். அவ்வாய்வேடு 2005ஆம் ஆண்டு “யாழ்ப்பாணத்துப் பிரபந்த இலக்கியங்கள்” என்னும் மகுடத்திலே கொழும்பு விவேகானந்த சபையின் வெளியீடாகக் கொழும்பிலே வெளியிடப்பட்டது. இவ்வெளியீட்டுக்குப் பெரும் உதவி புரிந்த பெரியார் கொழும்பு விவேகானந்த சபையின் கெளரவ செயலாளராயும், சிவஞானச் செல்வராயும் மிளிர்ந்த க. இராஜபுவனிஸ்வரன் அவர்களாவர். இக்கட்டுரையாளர் மேற்கொண்ட கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வும் யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாற்றோடும், நல்லூரின் வரலாற்றோடும் பெரிதும் தொடர்புடைய ஆராய்ச்சியாகும். பேராதனைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த் துறையின் முன்னாட் தலைவராயும் பெரும் ஆய்வறிஞராயும், கல்விமானும், கலாகிர்த்தியும் ஆன பேராசிரியர் சி. தில்லைநாதன் அவர்கள் “சுதேச மருத்துவ இலக்கியங்கள்” என்னும் தலைப்பிலே இவ்வாய்வை நிகழ்த்துமாறு பணித்தார். டாக்டர் பட்டத்திற்கான இவ்வாய்வின் மேற்பார்வையாளர்களாகப் பேராசிரியர்கள் சி. பத்மநாதன் அவர்களும், கலாநிதி. க. அருணாசலமும் நியமிக்கப்பட்டனர். இத்தகவல்கள் இக்கட்டுரைப் பொருளுக்கும், இக்கட்டுரையாளருக்குமிடையேயுள்ள விடயப் பொருத்தப் பாட்டினை விளங்கிக் கொள்வதற்கென்றே எழுதப்பட்டது. இத்தகு மேதகு வித்துவப்புலமையை இக்கட்டுரை மூலம் தமிழ் கூறு நல்லுலகிற்கு வழங்க வேண்டும் என்று ஊக்குவித்துப் பிரசுரித்துப் பரப்பிய பெருமை அகில இலங்கை இந்து மாமன்றத்திற்கு உரியது.
2 O. O. னஅரசு- O O O O OO O
யாழ்ப்பாணத்தை ஆண்ட சக்கரவர்த்திகளை ஆரியச் சக்கரவர்த்திகள் என்றே அழைப்பர். ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் பட்டத்துடன் அரசாட்சி புரிந்தனர் என்று அழைக்க முடிகிறது. நல்லூர்த் தலைநகரம் சிங்கைநகர் என்றும் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்
s விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 11
சக்கரவர்த்திகள் பொதுவாகச் சிங்கை நகரத்தின் ஆட்சியாளர் என்றே வர்ணிக்கப்பட்டனர். சிங்கையாரியன் சிங்கை தங்கும் ஆரியர் கோமான் என்று பலவகைப்பட்ட விருதுகளும் - பட்டங்களும் இம் மன்னர்களுக்கு இலக்கியத்திலும், சாசனங்களிலும், வரலாற்று நூல்களிலுங் கொடுக்கப்பட்டுள்ளன. சிங்கை என்ற பெயர் வட இலங்கை இராச்சியத்திற்கும் அதன் தலைநகருக்கும் வழங்கியிருக்க முடியுமோவென்ற கேள்விக்கு ஆரியச்சக்கரவர்த்திகள் எனும் விருதுகள் இடமளிக்கின்றன. செகராசசேகரம் என்ற மருத்துவ நூலிலே “செயம்பெறு சிங்கை நாடன் செகராசசேகரன்” என மன்னன் வருணிக்கப்பட்டான். ஆகவே சிங்கை அல்லது சிங்கை நாடு என்ற பெயர் வட இலங்கை இராச்சியத்தின் ஒரு பெயராக விளங்கியிருக்க வேண்டுமென்பது இச்சான்றின் மூலம் தெரியவருகிறது. பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் அரசர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர் என்பது யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறாகும். யாழ்ப்பாணத்து அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இலக்கியவரலாறு வெகு சுவாரஸ்யமானது. வரலாறு, மருத்துவம், சோதிடம், பண்பாடு, நாணயங்கள், சமயப் பணிகள் பற்றிய செய்திகள் விரிக்கிற்பெருகும். குறிப்பாகச் சேது நாணயங்களும், யமுனா ஏரி, சங்கிலியன் தோப்பு, இரகுவம்சம், பரராசசேகர நூல், செகராசசேகர நூல் என்பன யாழ்ப்பாண இராச்சியத்தினதும், நல்லூர் இராசதானியினதும் பழைய - உண்மை வரலாற்றை அறிய பேருதவி புரிவனவாகும். பேராசிரிரியர் கலாநிதி பரமு புஷ்பரத்தினம் அவர்கள் குறிப்பாக சேது நாணயங்களது சான்றுகளுடன் அண்மையிலே நூல் வெளியீடுகளைச் செய்துள்ளார். முனைவர் கனகசபாபதி நாகேஸ்வரன் பேராதனைப் பல்கலைக்கழகத்திலே இலக்கிய வரலாற்றாய்வைத் தமது கலாநிதிப் பட்டத்தின் மூலம் நிகழ்த்தியுள்ளார். நல்லூரினது வரலாற்றை - பன்முகப்பட்ட வளர்ச்சிநிலைகளைப் புரியவும், தெளியவும் அண்மைக்கால ஆய்வுகள் பெரிதும் துணைபுரிவனவாயுள்ளன.
வட இலங்கை இராச்சியத்தின் தலைநகரின் பெயர் சிங்கை அல்லது சிங்கைநகர் எனச் செகராசசேகர மாலை, செகராசசேகரம், தகூழிணகைலாய புராணம் ஆகிய நூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாண வைபவ மாலையிலும், கைலாயமாலையிலும் ஆரியச் சக்கரவர்த்திகளின் முற்பட்ட தலைநகர் நல்லூர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே யாழ்ப்பாண மன்னர்களுடைய முதலாவது தலைநகர் சிங்கைநகர் என்றும், 15ஆம் நூற்றாண்டிற் செண்பகப் பெருமாள் நடத்திய படையெடுப்பிற்குப் பின்பு இரண்டாவது தலைநகராக அமைக்கப்பட்டிருந்தது என்றும் விளக்கங் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்திற் சிங்கைநகர் எனப் பெயர்பெற்றிருந்த தலைநகர் பிற்பட்ட காலத்தில் நல்லூர் எனப் பெயர் பெற்றது. சிங்கை நகர், சிங்கை நல்லூர் என்னும் தலைநகர்ப் பெயர்கள் நிலவிய காலத்தினையும் அவை இடம்பெற்றுள்ள சான்றுகளையும் அட்டவணையொன்றின் மூலம் பேராசிரியரும், கலாநிதியும், இக்கட்டுரையாளருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தைக் கற்பித்தவருமான பேராசிரியர் கலாநிதி கார்த்திகேசு இந்திரபாலா நிரற்படுத்தியுள்ளார்.
". இவ்வாறு கால முறைப்படி நோக்குமிடத்து பதினான்காம் பதினைந்தாம் நூற்றாண்டுகளிலே சிங்கை நகரும், 15% நூற்றாண்டிலே யாழ்ப்பாணப் பட்டினமும், பதினாறாம்
(இந்து ஒளி

நூற்றாண்டில் நல்லூரும் வடஇலங்கை மன்னர்களுடைய தலைநகரங்களாக இருந்தனவென்று தோன்றலாம். பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கீசர் யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது அங்கு ஒரேயொரு நகரத்தையே அதாவது நல்லூரையே கண்டனரென்று அறிகின்றோம். இது சம்பந்தமாகக் குவைறோஸ் பாதிரியார் கூறியுள்ள கருத்துக் கவனிக்கத்தக்கது.”
“நல்லூரை விட (Nallur) வேறு நகரம் ஒருபோதும் அவர்களுக்கு இருக்கவில்லை. இது போர்த்துக்கீசருடைய பட்டினமும், அங்காடியும் அமைந்துள்ள இடத்திலிருந்து அரை லீக் (ஏறக்குறைய ஒன்றரைமைல்) தூரத்தில் இருக்கிறது. குவைறோஸ் குறிப்பிடுகின்ற போர்த்துகீசருடைய யாழ்ப்பாண நகரமாக மாறியவை இவ்விடத்திலிருந்து ஏறக்குறைய மூன்று மைல் தூரத்திலே நல்லூர் இருக்கிறது"
சிங்கை நகர் (சமஸ்கிருதம் - ஸிங்ஹ நகர) என்ற பெயர் கலிங்கநாட்டு நகரங்களுள் ஒன்றாகிய ஸிங்கபுரத்துடன் தொடர்புடைய பெயர் என்று கொள்ள இடமுண்டு. கலிங்கநாட்டு வம்சங்களுள் ஒன்று கி. பி. 5ஆம் நூற்றாண்டு தொடக்கம் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையாவது ஸிங்கபுர என்ற தலைநகரிலிருந்து ஆட்சி நடத்தியது என அறிகிறோம். (The Classical ase, ed. R. C. Majumdarpp. 212-213). Saor5605öö வந்த நிஸங்கமல்ல(ன்) போன்ற கலிங்கமன்னர் இங்கிருந்தே வந்தனர். மாதனும் அவனுடைய சகாக்களும் ஸிங்கபுரத்திலிருந்தே வந்திருக்க வேண்டும். அவ்வாறு வந்த கலிங்க வம்சத்தவர் வடக்கே ஒரு புதிய தலைநகரைத் தாபித்து ஆட்சியை நடத்தியபோது, அந்நகருக்குத் தங்கள் தாய்நகரின் பெயரையொத்த ஒரு பெயரை இட்டிருந்தனர் என்று தோன்றுகின்றது. ஸிங்கபுர என்ற இடப்பெயர் இந்தியாவிலும், தென்கிழக்காசியாவிலும் பல இடங்களிலே இடைக்காலத்தில் வழக்கிலிருந்தது. எக்காரணத்தினால் இப்பெயர் இப்படிப் பயன்படுத்தப்பட்டது என்று கண்டுகொள்வது கஷ்டம். ஆகவே, சிங்கநகர்’ என்ற பெயர் கலிங்கத் தொடர்பைக் காட்டுவதாகக் கொள்வது ஒர் ஊகம் மட்டுமே”என்று மேலும் கூறுவர் பேராசிரியர், கலாநிதி கா. இந்திரபாலா., dł ፰'ጫ፻፷ یtو مغایت ق
[56) GITT نمه. چ ற்றாண்டிலேதான் அமைக்கப்பட்டது என்பது பலரிடையே தற்காலத்தில் நிலவுகின்ற ஒரு கருத்தாகும். பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தைத் தாக்கிய கேரட்டை இராச்சியத்து இளவரசனாகிய செண்பிக்ப்ப்ெருமாள் (அல்லது ஸபுமால் குமாரயா) என்பவன் இப்புது நகரை அமைத்தான் என இக்கருத்தைத் தெரிவித்தவர்கள் கூறியுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டியம் அக் கோவிலையமைத்தவனாக பூரீ சங்கபோதி புவனேகபாகு என்பவனைக் குறிப்பிடுகின்றது. (சி. இராசநாயகம், ப. 332). இவன் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆண்ட பின்னர் கோட்டையின் மன்னனாக புவனேகபாகு என்ற பெயருடன் ஆட்சி நடத்திய (1470-1478) செண்பகப் பெருமாளே என அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுள்ளான் என்பர் சி. இராச நாயகம்.
நல்லூர் கந்தசுவாமி கோவிலைக் கட்டியவனாக யாழ்ப்பாண வைபவ மாலையிலே குறிப்பிடப்படுபவன் புவனேகபாகு என்ற பெயருடையவனே. இவன் நல்லுரரின் வெளிமதில்களை
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 12
அமைத்தான் என்றும் யாழ்ப்பாண வைபவமாலையிற் (ப. 31-32) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இவன் ஒர் அமைச்சனாக விளங்கிய பிராமணன் என வருணிக்கப்பட்டுள்ளான்.
கைலாயமாலையுடன் வெளியிடப்பட்டுள்ள ஒரு பழைய தனிச் செய்யுளிலே நல்லூர்க் கந்தசுவாமி கோவிலும், யாழ்ப்பாண நகரியும் புவனேகபாகு என்பவனால் அமைக்கப்பட்டன என்ற செய்தி காணப்படுகின்றது. இத்தகவலை வைத்தே நல்லூர் பதினைந்தாம் நூற்றாண்டிலே செண்பகப்பெருமாளாலே கட்டப்பட்டது என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் கட்டியத்திலே புவனேகபாகுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பூரீ சங்கபோதி என்னும் விருதை நோக்குமிடத்து அவன் சிங்கள இராச்சியத்தைச் சேர்ந்த 605 மன்னனாக இருந்திருக்க வேண்டுமென்று வெளிப்படுகின்றது. ஏனெனில் பூரீ சங்கபோதி என்ற விருது சிங்கள அரச வம்சத்தவர்களாலேயே ஒரு சிம்மாசனப் பெயராகப் பயன்படுத்தப்பட்டது."
நல்லூரிலே நண்ணிய புவனேகபாகு, யாழ்ப்பாணத்தை வென்று அடக்கிய ஸப்புமால் குமாரயா" என்று செண்பகப் பெருமாள் என்ற பூரீ சங்கபோதி புவனேகபாகு ஆகிய இருவரையும் ஒருவரெனக் கொண்டதும் நல்லூர்க் கந்தசுவாமி கோவிற் கட்டியத்துக்கு முதன்மை தந்ததும் ஈழத் தமிழர் வரலாற்றிற் சங்கிலித் தொடர்பான குழப்பங்களை ஏற்படுத்தின" என்ற கருத்து மனங்கொள்ள வேண்டியதொன்று.
நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் தலவரலாறு குறித்த ஆய்வுகளை மதிப்பிடும்போது சில தெளிவான முடிவுகள் கிடைக்கின்றன. ஆயினும், கோவில் எப்போது, யாராற் கட்டப்பட்டது என்பது குறித்துக் கருத்துமுரண்பாடுகள் காணப்படுகின்றன.
கி. பி. 1248ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தின் முதலாவது ஆரியச்சக்கரவர்த்தியான சிங்கையாரியரின் முதன்மந்திரிபுவனேகபாகுவால் குருக்கள் வளவு என்ற இன்றைய கோவிலுள்ள இடத்தில் அமைக்கப்பட்டதென்ற கருத்தொன்று உண்டு. இந்நிகழ்வுக்கான வரலாற்றாதாரமாகக் கைலாய மாலையிலுள்ள தனிப்பாடலொன்றைக் கொள்ளலாம். கோவில் கி. பி. 870ஆம் ஆண்டிலா 948ஆம் ஆண்டிலா 1248ஆம் ஆண்டிலா முதன்முதற்கட்டப்பட்டது என்பது குறித்து ஐயப்பாடுகள் உள்ளன. யாழ்ப்பாண வைபவமாலையிற் கி. பி. 10ஆம் நூற்றாண்டிற் புவனேகபாகு என்பவனால். என வருகிறது. இன்னோர் சாரார் 15ஆம் நூற்றாண்டின் மத்தியில் கி. பி. 1450இல் கோட்டையில் இருந்து வந்த செண்பகப்பெருமாள் என்பவனாற் கட்டப்பட்டது என்று கூறுவர். எனினும் யாழ்ப்பாண இராச்சியம் நிலை பெற்ற 13ஆம் நூற்றாண்டில் இக் கோவிலமைக்கப்பட்டது எனக் கொள்வதே சிறப்பானது என்பது ஆய்வாளர் கருத்து. யாழ்ப்பாண வைபவ விமர்சனம் என்ற சரித்திர நூலின் ஆசிரியரான நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரும் இவ்வாறே கருதுகிறார். கலிங்கமாகனே முதலாவது சிங்கை ஆரியனென யாழ்ப்பாணச் சரித்திரத்தின் ஆசிரியரான முதலியார் செ. இராசநாயகம் குறிப்பிடுகின்றார். இக்காலம் கி.பி.1210 என இவர் காண்கிறார். பேராசியர்கள் சி. பத்மநாதன், கா. இந்திரபாலாவும் யாழ்ப்பாண இராச்சியம் 13ஆம் நூற்றாண்டிலே தான் நிலைத்ததெனக் கொள்கின்றனர். கலிங்கத்து மாதனை முதலாவது சிங்கையாரியனாகச் சுவாமி ஞானப்பிரகாசர்
இந்து ஒளி

இனங்காண்கிறார். எனவே முதலாவது ஆலயம் 1248இல் அமைக்கப்பட்டதென்று முடிவு செய்ய ஆதாரங்க்ளுள.
நல்லூர் இராசதானியானது கி. பி. 1450ஆம் ஆண்டின் பின்னரே என்பதும், சூரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தில் அரசு தொடங்கியது கி. பி. 13ஆம் நூற்றாண்டிலென்பதும் வரலாற்றாசிரியர்கள் முடிவு என்கிறார் கலாநிதி கே. எஸ். நடராசா கி. பி. 1450ஆம் ஆண்டு முதலாவது கந்தசுவாமி கோவில் 'சபுமால் குமாரயா" என்ற செண்பகப் பெருமாள் எனும் பூரீ சங்கபோதி புவனேகபாகுவால் அழிக்கப்பட்டது. யாழ்ப்பாண இராச்சியத்திலுள்ள கிராமங்கள் தென்னிலங்கைப் படைகளால் அழிக்கப்பட்டமையைக் கோகில சந்தேஸ என்ற சிங்கள நூல் 6Suflé,56iro5. The Ceylon Antiquity and Literary register (Vol 1916-1917) என்ற ஆவணத்திற் கோகில சந்தேஸவின் ஆங்கில மொழிபெயர்ப்புள்ளது.
கி. பி. 1450க்கும் கி. பி. 1467க்கும் இடையில் முத்திரைச் சந்தியில் இன்று கிறிஸ்தவ தேவாலயம் இருக்குமிடத்தில் பூரீ சங்கபோதி புவனேகபாகுவால் மீண்டும் கந்தசுவாமி கோவில் அமைக்கப்பட்டது. தனது படையெடுப்பால் அழிந்து போன கந்தசுவாமி கோவிலைத் தான் புரிந்த பாவத்திற்குப் பரிகாரமாக மீண்டும் கட்டுவித்தான். இதற்கு ஆதாரங்களாக நல்லூர்க் கந்தசுவாமி கோவிலின் கட்டியத்தையும், விசுவநாத சாஸ்திரியார் சம்பவக் குறிப்பு என்னும் பிரசுரிக்கப்படாத ஏட்டிற் காணப்படும் ஒரு பாடலையும் கொள்ளலாம். இரண்டாவது ஆலயம் முத்திரைச் சந்தியில் இன்று கிறிஸ்தவ தேவாலயம் இருக்குமிடத்தில் அமைக்கப்பட்டதென்பதற்கு குவைறோஸ் பாதிரியாரின் TheTemporal and spiritual conquest of Ceylon 6Tsirl) BITg)th, UITs (Lush) LT5futflair Atrue and exact description of Great Island Ceylon என்ற நூலும் ஆதாரங்களாகி உள்ளன.
கி. பி. 1621ஆம் ஆண்டு நல்லூர்க் கந்தசுவாமி கோவில் போர்த்துக்கீச தளபதியான பிலிப் த ஒலிவேரா என்பவனால் அத்திவாரத்தோடு கிளறியழிக்கப்பட்டது. கி.பி. 1620ஆ° ஆண்டு யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது போர்த்துகீசரின் இறுதிப்படையெடுப்பு நிகழ்ந்தது. பிலிப் த ஒலிவேரா என்பவன் படையை நடத்திவந்தான். அவன் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை முற்றாக அழித்துச் சிதைத்தான். இதற்கு யாழ்ப்பாணச் சரித்திரத்தை விபரிக்கும் நூல்களும், இலங்கை வரலாற்று நூல்களும் ஆதாரங்கள். குவைறோஸ் பாதிரியாரும் பால்டேயஸ் பாதிரியாரும் எழுதிய நூல்களும் சான்றுகளாக வுள்ளன."
தற்போது நல்லூர்க் கந்தசுவாமி கோவில் இருக்குமிடத்தில் கோவிலை அமைத்தவர் யார் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. புராதன கோவிலை, பிராமணரின் பரம்பரையினைச் சேர்ந்த கிருஷ்ணையர் சுப்பையர் என்பவர் கி. பி. 1793* ஒல்லாந்த அரசின் அனுமதி பெற்று ஒரு சிறு கொட்டிலாக அமைத்து அதில் வேல் வைத்துப் பூசை செய்து வந்தார் என ஒரு சாரார் கூறுகின்றனர். கிருஷ்ணையர் என்பவர்தான் முதன் முதலில் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை ஆதியிற் கட்டினார் என்றும், அவரின் மகன் சுப்பையாதான் முதன்முதலிற் கட்டினார் என்றும் இருசாரார் இக்கோவிலின் தோற்றங்குறித்து செய்திகளை முன்வைப்பர். இன்னுஞ் சிலர் தொன் ஜூவான் இரகுநாத மாப்பாண முதலியார் கி. பி. 1734இல் தற்போதுள்ள இடத்தில் ஆலயத்தை அமைத்தார் என்பர், ஆதிக்
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 13
கந்தகவாமி கோவிலில் நிறுவப்பட்டதென்ற கருத்துமொன்றுண்டு. இன்றைய நல்லூர்க் கந்தசுவாமி கோவில் கட்டப்பட்ட ஆண்டு தொடர்ச்சியாகப் பார்க்கும் போது ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியிலேயே மதச்சுதந்திரம் கொடுக்கப்பட்டதென்ற காரணத்தினாலேயே கி. பி. 1793ஆம் ஆண்டிலேயே கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
இன்றைய கோவிலையமைத்த பெருமை கிருஷ்ணையர் சுப்பையார் என்ற பிராமணருக்கும், தொன்ஜூவான் மாப்பாண முதலியாருக்கும், அவர் மகன் இரகுநாத மாப்பாணருக்கும் உரியது. மடாலயமாக யமுனாரிக்கு அருகில் இருந்ததைக் குருக்கள் வளவில் நிறுவக் கிருஷ்ணையர் சுப்பையரும் வேறு சைவசமயிகளும் விரும்பினர். ஆட்சியாளருக்கு விண்ணப்பித்து நிலமும் அனுமதியும் பெற்றனர். அதற்கு அக்காலத்திற் சிறாப்பராகக் கச்சேரியிலிருந்த தொன்ஜூவான் மாப்பாண முதலியார் உதவினார். கோவிலை நிறுவியபோது கிருஷ்ணையர் சுப்பையாரும், இரகுநாத மாப்பாணரும் கூடிய ஆர்வஞ் செலுத்தினர். கோவிலின் பிரதம குருவாகக் கிருஷ்ணையர் சுப்பையரும் ஆலய கர்த்தாவாக - தர்மகர்த்தாவென - இரகுநாத மாப்பாணரும் இடம் பெற்றனர். கோவிலின் உரிமை இவ்விருவருக்கும் இருந்தது. இதற்கு ஆதாரமாக 1810ஆம் ஆண்டளவில் கிருஷ்ணையர் சுப்பையரின் பேரருக்கும் இரகுநாத மாப்பாணரின் வழிவந்த ஆறுமுகமாப்பாணருக்கும் நடந்த வழக்கொன்றுள்ளது.
இப்போதுள்ள கந்தசுவாமி கோவிலின் தாபகர்களிலொருவரான கிருஷ்ணையர் சுப்பையர் ஆலயத்தின் பிரதமகுருவாகத் தெரிவானதால் ஆலயக் கட்டியத்தில் அவர் பெயர் இடம் பெற முடியாது போயிற்று என்றும், அதனால் அந்தக் கெளரவம் இரகுநாதமாப்பாண முதலியாருக்குக் கிடைத்தது என்ற கருத்துமுண்டு. தொன் ஜூவான் மாப்பாண முதலியாரும் இரகுநாதமாப்பாண முதலியாரும் ஒருவரெனக்கூறுவதும், இரகுநாத மாப்பாண முதலியார் மட்டுமே நல்லூர்க் கந்தசுவாமி கோவிலை நிறுவினார் எனக் கொள்வதும் பொருத்தமற்றவை என்ற வாதமும் இவ்வாலய வரலாற்றிலே உண்டு."
முதலியார் குல. சபாநாதன் மேல்வருமாறு எழுதுகிறார். மேற்கோள் வருமாறு:
"கனகசூரியன் நல்லூர் நகரைச் சிறந்த இராசதானியாக்கப் பெரு முயற்சி செய்தான். இராசவீதிகளும், அரண்மனைகளும், அவற்றைச் சூழ்ந்து குதிரைப்படை, யானைப்படை கொட்டாரங்களும், சிங்காரவனமும், பட்டாலும் பருத்தியாலும் நுண்ணிய தொழில்புரி மக்கள் இருக்கைகளும், தச்சர், கொல்லர், ஒவியக்காரர், பொன் செய்வினைஞர், இரத்தினவணிகர், புலவர், பாணர் இவர்களுக்கு வெவ்வேறிருக்கைகளும், வேதமோதும் அந்தணர் மந்திரங்களும், மருத்துவர், சோதிடர் வைகும் வளமனை வீதிகளும் அமைத்து நல்லூரை நல்ல ஊராகப் பிரபல்யமுறச் செய்தான். வெவ்வேறு தொழிலாளர் வாழ்ந்த வீதிகள் அவர்களின் பெயரால் இன்றும் வழங்கப்படுகின்றன. மேலும் இவர்களுக்கெனப் பல குளங்களும் தலைநகரில் அமைக்கப் பெற்றன. அடியார்க்கு நல்லார் குளம் அல்லது கன்னாதிட்டிக் குளம், அம்மைச்சி குளம் அல்லது அம்பச்சி குளம், அஞ்சு தேவன் குளம் அல்லது வட்டக் குளம், ஆரிய குளம், இலந்தைக் குளம், இளம்பிள்ளையார் கோயிற் குளம், உப்புக்குளம், கற்குளம், சின்னக்குளம், தாமரைக்குளம், தேவரீர் குளம், (தாராக் குளம்), நரியன் குண்டுக் குளம், நாயன்மார் குளம், நெடுங்குளம்,
(இந்து ஒளி

பண்டாரக்குளம், பூதராயர் அல்லது கல்லவிராய குளம், பரவைக் குளம், பாற்குளம், பிரப்பங்குளம், பிராமண கட்டுக்குளம், புல்லுக் குளம் அல்லது புளுக்குளம், மணிக்கூட்டுக் கோபுரத் தடிப்புல்லுக் குளம், மக்கிக் கிடங்குக் குளம், மக்கியக் குளம், மறவக் குளம், முதலிக் குளம், மூன்று குளம், யமுனாரி, வண்ணான் குளம், (இப்பெயருடன் மூன்று குளங்கள் உள்ளன.) முதலிய குளங்கள் ஆங்காங்கே வாழும் மக்களுக்கு நீர் வசதிகளை அளித்து வந்தன.”
1.3 சிங்கைப் பரராசசேகரன்
கனகசூரியனுக்குப் பின் அவன் மகன் சிங்கைப்பரராசசேகரன் எனும் நாமத்தோடு கி. பி. 1478ஆம் ஆண்டளவில் அரசனானான். இவன் தந்தையினும் சிறந்தவனாய் நல்லூர் இராசதானிக்கு வடபாலில் சட்டநாதர் கோயிலையும், குணபாலில் வெயிலுகந்த பிள்ளையார் கோயிலையும், தென்பாலில் கைலாயநாதர் ஆலயத்தையும் குடதிசையில் வீரமாகாளியம்மன் ஆலயத்தையும் கட்டுவித்துத் தன் தலைநகரை முன்னையிலும் அணிபெற விளங்கவைத்தான்."
“கந்தசுவாமி கோயிலுக்கண்மையிற் பகர வடிவினதாய ஓர் ஏரி அமைப்பித்து யமுனா நதியின் திவ்ய தீர்த்தத்தைக் காவடிகளிற் பெய்வித்து, அதனை யமுனை ஏரி (யமுனாரி) எனப் பெயர் தந்தழைத்தான். இந்த முப்புடைக் கூபம் இப்பொழுது நல்லூர் கிறிஸ்தவ தேவாலயத்துக்கு அண்மையில் உள்ளது. இதுவே தீர்த்தக் கேணியாக உபயோகிக்கப்பட்ட தெனக் கருதப்படுகின்றது." முன் செண்பகப் பெருமாள் வெற்றி கொண்ட போது சிதைந்த தமிழ்ச் சங்கத்தை மீண்டும் தாபிக்க விரும்பி, இவன் புலவர்களை ஒருங்கு சேர்த்து முன்போற் கழகம் நிறுவி, வித்துவான்களுக்கு வேண்டிய சன்மானங்கள் செய்து, தமிழ்மொழியைப் பொன்போற் பேணி வளர்த்து வந்தான். இவன் அவையில் இவன் மைத்துனரும், வடமொழி, தென்மொழியாகிய இருமொழிகளிலும், வல்லி புலவருமாகிய அரசகேசரி இரகுவம்சம்' என்னும் நூலை வடமொழியிலிருந்து பெயர்த்துத் தமிழாக்கி அரங்கேற்றினார். இவர் நல்லூரிலேயே வாழ்ந்து வந்தார். (இதுபற்றிய தகவல்களை மேலும் அறிவதற்குப் பேராசிரியர், கலாநிதி. ஆ. வேலுப்பிள்ளை எழுதிய “அரசகேசரியின் இரகுவம்சமும், அது எழுந்த காலச் சூழலும்” (தொடக்கப் பேருரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு) என்ற கட்டுரையைப் படிக்கவும்). பரராசசேகரன் உலாவும் இவ்வரசன் காலத்திலே(யே) தான் ஆக்கப்பட்டது. நீர்வேலியிலுள்ள அரசகேசரிப் பிள்ளையார் கோயிலும், நல்லூரிலுள்ள அரசகேசரி வளவும், இப்புலவரின் பெயரை எங்களுக்கு இன்றும் ஞாபகப்படுத்தும் சின்னங்களாகவுள்ளன. இந்த அரசகேசரி எதிர்மன்னசிங்கம் பரராசசேகரன் காலத்தில் (16ஆம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர் என்பது சுவாமி ஞானப்பிரகாசர் கருத்தாகும். சிங்கைப் பரராசசேகரனுக்குப் பின் ஆண்ட யாழ்ப்பாணத்தரசர்களும் இக்கோயிலின் பரிபாலனத்தில் அக்கறை எடுத்துவந்தனர். பெரியார் குல. சபாநாதன் தமது நூலிலே தரும் சில தகவல்களை நல்லூர் இராசதானி பற்றிய ஆய்வில் ஈடுபடும் ஆய்வறிவாளர்களுக்காக ஈண்டு நோக்குவோம். கொழும்பிலிருந்த போர்த்துக்கீசத் தேசாதிபதி கொன்ஸ்தந்தீனு தெசா என்பவன் பிலிப்த ஒலிவேறா எனும் வீரசூரத் தளபதியை யாழ்ப்பாணத்துக்கனுப்பினான். இவன் யாழ்ப்பாணத்தரசனைச்
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 14
சிறைப்படுத்தி 1621ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆந் திகதி நல்லூரைத் தனது உறைவிடமாக்கினான். இவன் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலைத் தரைமட்டமாக்கி அது இருந்த இடமுந் தெரியாமல் அத்திவாரத்தையுங் கிளறிவரும்படி கட்டளையிட்டான்.
ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை மேல்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: “நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை இடிக்குமுன் அதன் மெய்காப்பாளனாயிருந்த சங்கிலி என்னும் சைவப்பண்டாரம் அக் கோயில் விதானங்கள் வரையப்பட்டிருந்த செப்புச் சாசனங்களையும், திருவாபரணங்களையும் கொண்டு மட்டக்களப்புக்கு ஓடினான். அங்கிருந்த சிலா விக்கிரகங்களை எல்லாம் அக்கோயிற்குருக்கள்மார் பூதராயர் கோயிலுக்குச் சமீபத்திலுள்ள குளத்தில் புதைத்துவிட்டு நீர்வேலிப்பகுதிக்கு ஓடினர்.”
1658ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் வசமாயிற்று. புரொட்டஸ்தாந்த கிறிஸ்தவ மதத்தினரான இவர்கள் நல்லூர்க் கந்தசுவாமி கோயில் இருந்த இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் அமைத்தனர்.
ஈழநாட்டிலுள்ள கந்த கோட்டங்களுள் தலைமையிடம் வகிப்பது நல்லூர்க் கந்தசுவாமி கோயில் என்பது யாவரும் நன்கறிந்ததொன்று. பண்டைக் காலத்தில் புலையர்கள் அறையும் பறையொலியோடு குமிழஞ்சூள் வெளிச்சத்தில் திருவிழா நடைபெற்ற கோயிலிலே அநேக திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டுவந்து, காலநேரந்தவறாமற் பூசை நடைபெறும் ஒழுங்கினை முதன்முதற் கையாண்ட பெருமை பூரீ ஷண்முகதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் உயர்திரு இரகுநாத மாப்பாண முதலியாரையே சாரும், சாதுரிய புத்திவாய்ந்த இப்பெரியார் சிறிது சிறிதாகப் பல திருத்தங்களைக் கையாண்டதுடன் கோயிற் பூசகர்களையும், பணியாளர்களையுந் திருப்திப்படுத்தி நடத்துவதில் தலை சிறந்தவராகவும் விளங்கினார். இப்பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றியே உயர்திரு. ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் மேன்மேலும் பல திருப்பணிகளை நிறைவேற்றியதுடன், பல திருத்தங்களையும் நடைமுறைக்குக் கொண்டுவந்தார்.
வரலாற்றுமேன்மைச் சிறப்பும், பழம்பெருமையும் வாய்ந்த நல்லூர்க் கந்தசுவாமி கோவிலைத் திறமையாக நிருவகித்த பெருமை பூரீமான் ஷண்முகதாஸ் மாப்பாண முதலியாருக்குரியது. இவருடைய காலத்தில் ஆலயத்தில் நடைபெற்ற திருத்தங்கள் பல. பழனியாண்டவர் கோயிலுக்கு முன்புள்ள ஷண்முகதீர்த்தத்தைத் திருத்தி நான்கு பக்கமும் விசாலமான மண்டபம் அமைந்தமை, கைலாசவாகனம் செய்வித்தமை, கோயிற் சுற்றுமதிலை உயரமாக அமைத்தமை,1964ஆம் ஆண்டு மகோற்சவத்துக்கு முன்னர் புதிய தேரினை அற்புதமான முறையிற் செய்வித்தமை போன்ற பல திருப்பணிகள் புரியப்பட்டன. கோவிற் பூசைகளையும், உற்சவங்களையும், குறித்த நேரத்துக்குச் செய்வித்தல் ஆதியாம் சீரிய முறைகளை இவர் கையாண்டுவந்தார். இராசதானிக்குரிய மன்னர்க்குரிய கோவிலாகவும், நேரந்தவறாமையெனும் நிர்வாக முறைமையோடு இணைந்ததாயும் இக்கோயில் அமைந்தமையால் இன்றும் ஆகமமுறைமரபும், வேதாகமக் கிரியை மரபும், கலை கலாசார மங்கள வாத்திய முறைமைகளும் (ஆங்கிலேயரது நேரக் கடிகாரம் பிழைத்தாலும்) நல்லூரிலுள்ள, உற்சவ மூர்த்தி, தேர் தீர்த்த நேரமும் ஒருபோதும் பிழைக்காது என்னுமளவிற்கு நல்லூரிலே திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
(இந்து ஒளி

பூரீமான் ஷண்முகதாஸ மாப்பாண முதலியார் தகுதியான வேலையாட்களை நியமித்துக் கோயிற் பணிகளைப் புரிந்துவந்தார். தமது காரியாலயத்திலிருந்த வண்ணமே சகல வேலைகள்ையும் கண்காணித்து வருவார்.
1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று அறங் காவலர் பதவியேற்ற குகழரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள் கோயில் திருப்பணிகளில் தம் முழுக் கவனத்தையுஞ் செலுத்தி வருகிறார்கள். 1965* பழைய வசந்த மண்டபம் இருந்த இடத்தில் விசாலமான புதிய மண்டபத்தை நிர்மாணித்தார். கோயிற்றிருப்பணிகளை செவ்வனே நிறைவேற்றி வருவதிலும் நித்திய நைமித்தியங்கள் காலந் தவறாது நடைபெறச் செய்வதிலும் விழிப்புடனிருந்து தொண்டாற்றிவருகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
1.4 நல்லூர் மந்திரிமனை
“கி. பி. 1478ஆம் ஆண்டு சிங்கைப்பரராசசேகரன் என்பவன் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாகினான். சப்புமல் குமாரயாவினால் அழிவுற்ற கோயில்கள், கட்டிடங்கள் என்பவற்றினை இவன் புனருத்தாரணம் செய்தான். பல புதிய கட்டிடங்கள் அமைத்து நல்லூரை மேலும் சிறப்புமிக்க நகராக்கினான். அவன் காலத்திலேயே இந்த மந்திரிமனை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பரராசசேகரனின் பின்னர் தனது மூத்த சகோதரர்களைக் கொன்றழித்த மன்னனாகிய சங்கிலி செகராசசேகரன் 1517இல் யாழ்ப்பாண அரசின் அரியணையில் அமர்ந்து கொண்டான். தனது தமையனாராகிய பரநிருபசிங்கனைத் தனது பேச்சாலும், பலத்தாலும் அடக்கித் தனக்கு மந்திரியாக்கிக் கொண்டான். மந்திரியாகிய பரநிருபசிங்கன் வகித்த மாளிகைதான் இந்த மந்திரிமனையாகும்."
“கி. பி. 1851இல் கோயில் அர்ச்சகராயிருந்த பிராமணர் தேசாதிபதியின் கைச்சாத்துடன் தங்கள் முன்னோருக்கு அதிகாரச் சீட்டுக் கொடுத்திருந்தனரென்றும் தங்களுக்கும் அவ்வித சீட்டுக் கிடைக்கவேண்டுமென்றும் தேசாதிபதிக்கு விண்ணப்பித்தனர். அதற்குக் கண்டி ஆதீன புத்த கோயில்களிலுள்ள குருமார்க்கன்றிப் பிராமணருக்கு அவ்விதசீட்டுக் கொடுப்பதில்லையென்றும், அவர்களுள் வியாச்சியமிருந்தால் டிஸ்திரிக் கோட்டில் வழக்குத் தொடுத்துத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அரசாட்சியார் உத்தரவிட்டனர். அப்படியே வழக்குரைக்கப்பட்டது. உடனே அக்காலத்தில் இருந்த கோயிலதிகாரியாகிய இரகுநாத மாப்பாண முதலியார் பிராமணருக்கு அவ்வித அதிகார நியமனம் கொடுப்பதற்கு அரசினர்க்கு எதுவித சுதந்தரமுமில்லையென்றும், இருந்தால் அரசினரே அதனை வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேசாதிபதிக்கு விண்ணப்பஞ் செய்தனர். டயிக் ஏசண்டர் அவ்விண்ணப்பத்தைப்பற்றி விசாரித்துச் செய்த அறிக்கையினால் அரசாட்சியார் அக்காரியத்திற்கு பிரவேசியாது நெகிழவிட்டனர்.”
(இராசநாயகம், 1933) எனவே யாழ்ப்பாணக் கலெக்டரின் இச்செயலினால் கிருஷ்ணையர் சுப்பையரின் பரம்பரையினர் நல்லூர்க் கந்தசாமி ஆலயவுரிமையை இழந்தனர். மாப்பாணர் குடும்பத்தினர் ஆலயத்தில் ஏகபோக உரிமையைப் பெற்றனர்.
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 15
1.5 நல்லூர்க்கோவிலில் ஆதியில் வழங்கிய வழக்கம் “55 திருவிழாக்கள் வருடந்தோறும் நடைபெறும், ஆறுகாலப் பூசை, மகோற்சவம் ஆடி ஆவணியில் 25 நாட்களுக்கு நடைபெறும். சுவாமியை மக்கள் தோளிற் காவிக்கொண்டு நடந்தும், வாகனத்தில் வைத்தும் வீதிவலமாகச் சுற்றி வருவார்கள். கிழக்கு வீதியும், வடக்கு வீதியும் கோயிற்றெரு, மேற்கு வீதி, பருத்தித்துறை றோட்டிலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் தெரு தெற்கு வீதி, பருத்தித்துறைத் தெரு, மகோற்சவக் காலத்தில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலுமிருந்து 1000 தொடக்கம் 2000 யாத்திரிகர் சமுகமளிப்பர்’ என வடமாகாண ஏசெண்டாக இருந்த சேர். வில்லியம்ஸ் குறொஸ்ரன் துவைனம் தனது குறிப்பில் எழுதியுள்ளதாகக் குல. சபாநாதன் குறிப்பிட்டுள்ளார்." யாழ்ப்பாணம் நல்லைநகர் ஆறுமுகநாவலரவர்கள் 1875ஆம்
ஆண்டு மேல்வருமாறு எழுதியுள்ளார்.
“ஆதியில் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் திருவிழா இன்றைய கால வேளைகளில் நிகழும் திருவிழாக்கள் போன்று நிகழவில்லை. அறையும் பறையொலியோடு குமிழஞ்சூழ் வெளிச்சத்தில் திருவிழா நடந்து, பின்பு நானாவித வாத்தியவொலியோடு தீவர்த்தி வெளிச்சத்தில் திருவிழா நடந்தது. மேலும் தேர்த்திருவிழாவின் போது சுவாமி எழுந்தருளப் பண்ணும் தேரின் உருளையில் வைரவருக்குப் பிரியமென்று ஆடுபல்லியிட்டே தேரினை இழுத்தார்கள். சாயங்காலப் பூசைக்கும், இரண்டாங்காலப் பூசைக்கும் இடையே வசந்தமண்டபத்தின் எதிரே பொதுப்பெண்களின் நடன சங்கீத நிகழ்ச்சிகள் நடந்தன.” Miron Winslow, 1835இல் தமது குறிப்பொன்றில்
மேல்வருமாறு கூறுகிறார்:
“திருவிழாக் காலங்களில் தேவதாசிகள் நடனமாடுவது
சாதாரணமான நிகழ்ச்சியாக இருந்துள்ளது. அழகிய கோயில் பெண்கள் ஏராளமான நகைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டு சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த தேரின் முன் நடனமாடினார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் அரை நிர்வாணமாகப் புழுதியிற் பிரதிஷ்டை செய்தார்கள் என மிறன் வின்ஸ்லோ எழுதியுள்ளார்.”
1.6 நல்லூரும் நாவலரும்
நல்லைநகர்க் கந்தவேளுக்கும், நல்லைநகர் ஆறுமுகநாவலருக்கும் இடையில் நெருங்கிய பிணைப்புள்ளது. நல்லூர்க் கந்தசாமி கோயிலைச் சிவாகமங்களுக்கும், குமார தந்திரத்திற்கும் இணங்க மாற்றியமைக்க வேண்டுமென அவர் விரும்பினார். “இந்த நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தூபி இல்லையே? தூபியில்லாதது கோயிலாகாதே. இக் கோயில் ஒரு சிறிதேனும் விதிப்படி கட்டப்பட்டிருக்கவில்லை” என அவர் கூறினார். இது மடாலயம் ஆதலாலும், சமாதிக் கோயில் ஆதலாலும் விதிமுறைகளுக்கு இணங்க அமையவேண்டுமென்ற நியதியில்லை என்பர்."
“1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதி இக்கோயில் பொதுவென்றும், கோயிலதிகாரி கோட்டுக்குக் கணக்குக் காட்ட வேண்டுமென்றுந் தீர்ந்த டிஸ்திரிக்
(இந்து ஒளி

கோட்டுத் தீர்மானம் நாவலர் அவர்கள் தொடங்கிய வழக்கின் பெறுபேறேயாகும். (சிவராமலிங்கம், க, 1995)"
“இக்கோயிலுக்குப் பெயர் யாது? கந்தசுவாமி கோயிலில் இருக்கின்ற மூர்த்தி கந்தசுவாமியா? - இல்லை வேலாயுதம். கந்தசுவாமி வடிவம் வேலாயுதமா? - அது அவன் கைப்படைக்கலம். அவரேவல் செய்யும் அடிமை” என நாவலர் கூறினார்.
“தீட்சை பெறாத பிராமணர் பூசை செய்வதும்,
தேவதாசிகள் நடமாடுவதும், தேர்த் திருவிழாவின் போது
தேர்க்காலில் ஆடுவெட்டிப் பலிகொடுத்திருப்பதும் ஆகமவிதிகளுக்கு முரணானவை (என நாவலர் கருதினார்). ஆதலால் அக்காலத்தில் கோயிலதிகாரியாக இருந்த கந்தையா மாப்பாணருடன் பெரும் சச்சரவுப்பட்டுப் பிரிந்தார். ஒரு கட்டத்தில் இருபத்தைந்து வருட காலம் நல்லூர்க் கோயிலுக்குப் போகாதிருந்தார்.”*
நாவலருக்கும் மாப்பாணருக்கும் விரோதம் இருந்துள்ளதை
நாலவரின் “நல்லூர்க் கந்தசுவாமி கோயில்” என்ற கட்டுரையிலிருந்து அறியமுடிகிறது.
“எப்படியாயினும் ஆகட்டும், இங்கே அருள் விளக்கும் இருக்கிறது என்பதை நாவலரும் ஏற்றுக்கொண்டார். கி. பி. 1248இல் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி கோவில் சைவமக்களின் வழிபாட்டிடமாகவும், தமிழ்மக்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்த பெருங்கோயிலாகவும் கடந்த பலநூறு ஆண்டுகளாக விளங்கி வருகிறது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆயிரமாண்டுகள் நீண்ட பாதையில் கந்தவேள் ஆலயம் வரலாறு படைத்துள்ளது.*
அடிக்குறிப்புகள்
1.
இந்திரபாலா, கா. (1969), “யாழ்ப்பாண இராச்சியம் தோன்றிய காலமும் சூழ்நிலையும்' இளங்கதிர், தமிழ்ச்சங்க வெளியீடு, பேராதனைப் பல்கலைக் கழகம், ப. 42, 49, 51 (எ+டு) நாகேஸ்வரன், க. (2005), யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பிரபந்த இலக்கியங்கள், (யாழ். பல்கலைக்கழக முதுகலை மாணிப்பட்ட இலக்கிய ஆய்வு), கொழும்புவிவேகானந்த சபை வெளியீடு, யூனி ஆட்ஸ் பிரின்டர்ஸ், கொழும்பு, ப. 5. மேலது. (எ+டு), ப. 55. ஞானப்பிரகாசர், சுவாமி, (1928), யாழ்ப்பாண வைபவ விமர்சனம், ஞானப்பிரகாச இயந்திரசாலை, யாழ்ப்பாணம், uö. 106-107. Pathmanathan, S., (1978), The Kingdom of Jaffna, Part I, First Edition, Ceylon Newspapers Ltd, P282. திருமதி வள்ளியம்மை முத்துவேலு நினைவு வெளியீடு, “முத்துராசகவிராசரின் கைலாயமாலை” (26.02.1983) Jilujuh, Li. XI-XII. (With Commentary and Symposium by Mrs. R. Ganesalingam and a Translation by A. Mootootamby pillai). நடராசா, க. செ., (1982), ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, (14ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டிறுதி வரை), கொழும்பு தமிழ்ச் சங்க வெளியீடு, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், ப.8. நாகேஸ்வரன், க, (2005), (எ+டு) நூல், ப.10.
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 16
10.
11.
12.
3.
4.
15.
16.
17.
8.
19.
20.
21.
மேலது. ப.11. சபாநாதன், குல. (1971), இலங்கையின் புராதன சைவாலயங்கள் - நல்லூர்க் கந்தசுவாமி, நல்லூர் தேவஸ்தான வெளியீடு, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், பக். 1-12.
மேலது, ப.12.
மேலது. ப.12.
மேலது, ப.16. குணராசா, க. (2004), “நல்லூர் மந்திரிமனை” நல்லூர்க் குமரன் மலர்-12, (பதிப். நல்லையா விஜயசுந்தரம்), பிள்ளையார் அச்சகம், நல்லூர். ப. 11)
மேலது, ப.107.
மேலது, ப.107.
மேலது. ப.108.
மேலது, ப.108.
மேலது, ப.108.
மேலது, ப.109.
மேலது, ப.109.
மேலது, ப.10.
உசாத்துணைநூல்கள்
1. கைலாயமாலை, (1939), சா. வே. ஜம்புலிங்கம்பிள்ளை பதிப்பு. 2. யாழ்ப்பாண வைபவமாலை, (1949), குல. சபாநாதன் பதிப்பு
சுன்னாகம். 3. யாழ்ப்பாணச் சரித்திரம், (1882), எஸ். ஜோன், யாழ்ப்பாணம். 4. யாழ்ப்பாண வைபவ விமர்சனம், (1928), சுவாமி
ஞானப்பிரகாசர், அச்சுவேலி. 5. யாழ்ப்பாணச் சரித்திரம், (1933) முதலியார் செ.இராசநாயகம்,
யாழ்ப்பாணம். 6. யாழ்ப்பாணச் சரித்திரம், (1933), ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை,
யாழபபாணம. 7. “யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்,’ (1972), கா. இந்திரபாலா, யாழ். தொல்பொருளியற் கழக வெளியீடு, கண்டி, 8. “நல்லூர்க் கந்தசுவாமி கோயில்’, (1875), ழரீலழரீ
ஆறுமுகநாவலர், 9. நல்லூர்க் கந்தசுவாமி, (1971), குல. சபாநாதன், நல்லூர், 10. நல்லைநகர், (1987), கலாநிதி க. குணராசா, யாழ்ப்பாணம். 1 ஈழத்துவரலாற்று நூல்கள்’ (1970), பேராசிரியர் சி.
பத்மநாதன், பேராதனை. 12. “நல்லூரும் தொல்பொருளும்” (1974), வி. சிவசாமி, (off
print) 13. "நாவலரும் நல்லூரும்" (1995), க. சிவராமலிங்கம், நல்லைக்
குமரன் மலர், நல்லூர். ב 14. Subbarayalu, Y., (1973), Political geography of the chola Country. Tamil Nadu state development of Archacology., p.90. (இவ்வாய்வுக் கட்டுரையைத் தந்துதவியவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள்) 15. வேலுப்பிள்ளை, ஆ, (1968)“திருச்செந்தூர்க் கல்வெட்டு”, இந்து தருமம் (வெள்ளிவிழா மலர்), இந்து மாணவ சங்க வெளியீடு, பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை ப.19
(இந்து ஒளி

6.
17.
8.
19.
2O.
21.
கைலாசபிள்ளை, த, (1954) (பதிப்), ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, இரண்டாம் பாகம், மூன்றாம் பதிப்பு, சென்னை பட்டணம் வித்தியாறுபாலன இயந்திரசாலை, ப. 147. குலரத்தினம், க. சி, (1982) “நல்லைநகர் வளர்த்த சமயம்", ஆத்மஜோதி, உலக இந்து மாநாட்டுச் சிறப்புமலர், ப.132. சிவசாமி, வி. (23-1-1973), “காலத்தால் முந்திய நல்லூர்ச்
சிலைகள்” கலைக்கண், (மறுபிரசுரம்), வட்டுக்கோட்டை,
u.3. வளவர்கோன், (பொ. இரகுபதி), (1974), “வரலாற்றுப் பின்னணியில் நல்லூர்’, சங்கமம், சைவப்பிரகாச அச்சியந்திரசாலை, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், U. 18. கிருஷ்ணராசா, செ, (30-1-1986 - 07-12-1986) "நல்லூர் சட்டநாதேஸ்வரம் ஆலயம் பஞ்சஈஸ்வரங்களில் ஒன்றா? சட்டநாதர் ஈஸ்வரமா? ஜனநாத ஈஸ்வரமா?", வீரகேசரி வார வெளியீடு, கொழும்பு. Sethuraman, N., (16-02-1984), "Temple cars referred to in the inscription” Kumbakonam, pp.7-9. (gilóla) மொழியில் எழுதப்பட்ட இவ்வாய்வுக் கட்டுரையை எனது பார்வைக்குத் தந்துதவியவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை) ra
மலர்கள்
1.
ஆத்மஜோதி, சிறப்புமலர் (1982) உலக இந்து மாநாடு, ஆத்மஜோதி அச்சகம், நாவலப்பிட்டி, இளங்கதிர், (1969/1970), தமிழ்ச்சங்க வெளியீடு, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை. நாவலர் நூற்றாண்டு மலர் (1979), ழநீலழரீ ஆறுமுகநாவலர் சபை, கொழும்பு, யாழ்ப்பாணம். தமிழோசை (1986), தமிழ்மன்ற வெளியீடு, யாழ் பல்கலைக் கழகம், திருநெல்வேலி. சிந்தனை, தொகுதி II, இதழ் 1, (1983), கலைப்பீட வெளியீடு, யாழ். பல்கலைக்கழகம், மஹாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, சுன்னாகம். இந்துதருமம், (1980), கும்பாபிஷேக மலர், இந்து மாணவர் சங்க வெளியீடு, பேராதனைப் பல்கலைக்கழகம், பேராதனை. World Hindu conference Souvenir (1982), Ministry of regional development, Hindu religious, Hindu Culture and Tamil affairs, Asian Printers, Madras.
நல்லூர் தேர்த் திருவிழா
செல்லூர் பொதிய மலைதா னகத்தியன் செந்தமிழின் சொல்லூ ரமுதஞ் சுவைத்திட வேவந்த தோற்றமென்ன பல்லூ ரவரும் பராவும் பலவலங் காரமுடன் நல்லூ ரிரதம் வருங்காட்சி காண்பவர் ஞானிகளே!
திருநல்லூரலங்காரம் - புலோலி தியாகராசபிள்ளை
உடம்பிடிச் செங்கைக் குமரேச வள்ள லுருள்நெடுந்தேர் தடம்பிடித் தோங்குந் திருநல்லை வீதி தனில்வருமால் வடம்பிடித் தீர்த்திட வம்மின்கள் வம்மின்கள் தொண்டரெலாம் இடம்பிடித் திட்டிருப் பீர்வீடு நல்கும் இணையடிக்கே
நல்லையந்தாதி - சோமசுந்தரப் புலவர்
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 17
ငွ•အေ့•အေ့•အရှေ့မ္ယား••ကေး•အေ့•အရှေ့ဇု႔ေၾ C நல்லூரான் திருப்பாதம்
úlgúGum GID! ஊரெழு சபா. கதிரவேலு
(கதிரைமலையான்)
& 98.9999
திருவானான் என்நெஞ்சில் திகழ்ஞானப் பழமானான் தித்திக்கும் அமுதானான்
தீந்தமிழின் மெய்ஞ்ஞான
உருவானான் தழைத்தோங்கு உலகநெறி
தணைவளர்க்கும் உறவுமானான் உள்ளன்பின்
உணர்வானான் மதுகரமாய் மருவுமடி யார்க்கெல்லாம் மதுவுமானான்
மாநிலத்தில் மருள்கொண்டபோலியர்க்கே
மாதாகி மருந்துமானான் தருவேப்பம் நிழற்கீழே தங்கவடி
-என்புள்ளே ஓடுகின்ற என்நரம்பில் ar
உறைவானை எறிகடலின் அலையாகிக் *ళిష్ట్రా
கரைசேர்க்கும் எறிவேலைக் கன்மவினை களைந்தாளுங் கதிர்வேலைக்
கடம்பவனக் காவரசாம் நல்லூரான்
கவின்பாதம் பிடிப்போமே!
ஐந்தாகி ஒன்றாகி ஆனந்த
மயமாகி ஐந்துக்குள் ஒளித்தாடி
அவற்றுக்கும் அப்பாலே விந்தாகி நாதமுமாய் வேண்டுபவர்
விளக்காகி விகம்பெல்லாம் மீனாகி
விதிர் விதிர்ப்பார் நெஞ்சாகிப் பந்தாகி நாமுருகப் பக்குவமுந்
தந்தாகிப்பத்தருளக் குளத்தாடும்
பரமாகிக் காவடியின் சிந்தாகிக் கந்தமுறு சினைவேம்பின்
பந்தர்க்கீழ்ச் சிரித்தாளும் நல்லூரான்
சீர்பாதம் பிடிப்போமே!
(இந்து ஒளி
 

நல்லூர் கந்தசுவாமி கோயில்)
சிழநாட்டின் வரலாற்றுப் புகழ்மிக்க முருகவழிபாட்டுத் தலங்களுள் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயமும் ஒன்றாகும். நல்லூர்க் கந்தனை அலங்காரக் கந்தன் என்று சிறப்பாகக் கூறுவர். இவ்வாலயத்தில் முருகனைத் தேரடிச்சித்தர் செல்லப்பா சுவாமிகள், யோகர்சுவாமி முதலியோர் வழிபட்டு வீதிகளில் உலாவி வந்திருப்பது இங்கு உள்ள மக்களுக்குப் பெருமை சேர்க்கின்றது. இத்தகைய சித்தர்கள் வழிபட்ட ஆலயத்தில்
நடைபெறும் வழிபாட்டு முறையினைச் சற்று நோக்கும்பொழுது
நித்திய நைமித்தியக் கிரியைகள் காலம் தவறாது நடைபெறுகின்றன. இங்கு ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. மகோற்சவ காலங்களில் தங்கரதம், கயிலாயவாகனம், வேல்விமானம், மஞ்சம், சந்தான கோபாலர் உற்சவம், கஜவல்லி மகாவல்லி உற்சவம், பழனியாண்டவர் உற்சவம், கார்த்திகைத் திருவிழா என்பன ஏனைய ஆலயங்களைவிட இங்கு சிறப்பாக நடைபெறுவதைக் காணலாம். மேலும் கந்தசஷ்டி விரதம் சிறப்பாக இவ்வாலயத்தில் அனுட்டிப்பதைக் காணலாம். இக்காலத்தில் கந்தபுராணபடலம் நடைபெறுவதையும் கந்தசஷ்டி கவசம் பாடப்படுவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதனாலேயே யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் எனப்பெயர் பெறக் காரணமானதுவும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தில் மூலஸ்தானத்தில் வேல் வைக்கப்பட்டுள்ளது. பரிவாரத்தெய்வங்களாக சூரியமூர்த்தி, பிள்ளையார், கஜவல்லி, மகாவல்லி, சந்தானகோபாலர், அம்மன், வைரவர், பழனியாண்டவர் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இப்பரிவாரத் தெய்வங்களுக்கு மகோற்சவ காலங்களில் சிறப்பான வழிபாட்டு முறை நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. மேலும் நேரம் தவறாது பூஜைகள் இடம்பெறும் ஒரு ஆலயம் இது என்று கூறினால் மிகையாகாது. இங்கு ஆகம முறைப்படி வழிபாடு,
பூஜைகள் இடம் பெறுவதைக் காணலாம்.
-திருமதி. ஞா. கணேசநாதன்
(அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பொன்விழா சிறப்புமலரில் வெளியாகிய “இலங்கை இந்து மதத்தில் முருகன் வழிபாடு” என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி இது)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS நல்லூரிற் கந்தப்பா போற்றி!
ஆண்ண்முகற் கிளையவனே போற்றி போற்றி அம்பலவா னன்மகனே போற்றி போற்றி ‘வானவர்கள் அறியாத மணியே போற்றி
மருவுமடி யார்க்குதவும் மருந்தே போற்றி தேனமுதத் தமிழ்தந்த செல்வா போற்றி
தெய்வகுஞ் சரிவள்ளி கணவா போற்றி ஞானமறை தந்தருளும் நாதா போற்றி
நல்லூரிற் கந்தப்பா போற்றி போற்றி!
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 18
O O
e_ඊළු_පංඥා පඥා පළ ඊළ ඊළ ඊළ ඊළු_පඥ වෛ_ප[taglibuffffff|naff ඇsuffff|# 5
அடுண்டுதோறும் ஆடிமாதம் பிறந்துவிட்டால் நல்லைக் கந்தனுடைய மகோற்சவ நினைப்பு சைவ மக்களுக்கு வந்துவிடும். உலகெங்கும் பரந்து வாழும் யாழ்ப்பாண சைவ மக்கள் கரங்குவித்து வரம்வேண்டி நிற்கும் தெய்வம் நல்லூர்க் கந்தப்பெருமான். முத்தர்களும் சித்தர்களும் ஞானிகளும் ஒரே முகமாக ஆடிப்பாடி நிற்பது இவ்வாலயத்தின் மகத்துவமாகும். “நீ ஆலயத்துக்குள்ளே போக முடியாவிட்டால் கவலைப்படாதே; வெளிவீதியிலே பரப்பி இருக்கும் மணலிலே உருண்டு விட்டுவா, உனக்கு எல்லாம் கிடைக்கும்” என்று திருவாய் மலர்ந்தவர் கொழும்புத்துறை யோகர் சுவாமிகள் ஆவர். சுவாமிகளின் அபிமான ஷேத்திரம் நல்லூர் என்றால் அதில் மிகையொன்றுமில்லை.
"வரங்கொண்ட உமைமுனைப்பால் மனங்கொண்ட செவ்வாய் பரங்கொண்ட களிமயிலும் பன்னிரண்டு கண்மலரும் சிரங்கொண்ட மரைஇரஞ்சும் சேவடியும் செந்தூரன்
o R * ዘነ s கரங்கொண்ட வேலும் எந்தன் கண்னை விட்டு நீங்காதே
அற்புதமான இந்தப் பாடலை ஆயிரம் தரம் பாடிப்பாடி ஆனந்தமடைவது முருகபக்தர்கள் கடனாகும். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக போற்றப்படுபவன் முருகப் பெருமான். “முருகா” என்ற அந்த நாமத்திலேயே தோஷங்கள் நீங்கும் சக்தியுண்டு. “முருகு” என்ற சொல்லிலேயே மூன்று உகரம் வருகிறது. முகரம் என்பது காத்தல் என்ற தத்துவத்தைக் கொண்டது. எனவே செய்தபிழை, செய்கின்ற பிழை, செய்யும் பிழை ஆகியவற்றை ஒருசேர மன்னித்து அருளுபவன் முருகப்பெருமான் ஆவர். சிறையில் அடைக்கப்பட்ட நக்கீரர் பாடிய “திருமுருகாற்றுப்படை” இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககால இலக்கியத்தைச் சேர்ந்தது. பத்துப்பாட்டில் முதற்பாட்டாக பேசப்படுவது திருமுருகாற்றுப்படையே. இங்கே நக்கீரர் முருகப் பெருமானை அறிமுகம் செய்து வைக்குமிடம் அற்புதமானது.
“உலகமுவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு ஒவற இமைக்கும் சேன்விளங்கவிழ் ஒளி உறுநர்த்தாங்கும் மதனுடை நோற்றாள் செறுநர்த் தேர்ந்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வானுதல் கணவன்” என்று முருகப்பெருமானை அறிமுகம் செய்து வைக்கிறார் நக்கீரர். அதிகாலையில் கிழக்குத் திசையில் உதித்து எழுகின்ற சூரிய பகவானை உவமையாகக் காட்டுகிறார்.
அத்துடன் தன்னை அண்டினோரை அறியர்மை போக்கி ஆட்கொள்ளும் திருவடிகளை பகைவர்களை அடக்கி ஆளும் திருக்கரங்களையும் குற்றமற்ற கற்பினையுடைய தெய்வயானை அம்மையாரின் பெருமைசேர் கணவர் என்பதையும் நூலின் முதலிலேயே எடுத்துக் காட்டும் திறன் அற்புதமானது. தொடர்ந்து ஆறுபடை வீடுகளிலும் முருகப்பெருமான் எழுந்தருளி அருள்புரியும் திறன் விரிவாகக் காட்டப்பட்டுள்ளது. முருகன் அடியார்கள் இந்நூலைப் படித்து பயனடைய வேண்டும் என்று அன்பாக வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறு சங்கத்தமிழில் முருகன் அருட்பிரவாகத்தை காண முடிகிறது.
(இந்து ஒளி

சரணம் சரணம்
filඅsihInIS එIIILIIrèෂI'I9.}_ෂඥ_ෂඥ_ෂඥ_ෂඥ_ෂඥ_ෂඥ_ෂඥ_ෂඥ වෛ_ෂඥ_9
அடுத்து புராணத் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியார் காட்டும் திறன் படிப்போர்க்கு சுவை பயப்பதாகும். மேலும் பிள்ளைத்தமிழில் முருகப்பெருமானை அருள் ஒழுகக் காண்கிறோம்.
“பொய்யா வழமை தரும் பெருமைப்
பொருநைத் துறையில் நீராட்டி பூட்டும் கலன்கள் வகை வகையே பூட்டி எடுத்து முலையூட்டி மெய்யால் அணைத்து மறுகுதனில்
விட்டார் தம்மை வெறாமல் உனை வெறுக்கவேறு வகையுமுண்டோ
விரும்பிப் பாலைக் கொழித்தெடுத்து கையால் அமைந்த சிற்றிலைநின்
காலால் அழித்தல் கடலைகாண். காப்பான் அழிக்கத் தொடங்கில்
எங்கள் கவலைஇனியாரோடு யுரைப்போம். ஜயா உங்கள் வழி யடியோம்
அடியோம் சிற்றில் அழியேலே அலைமுத் தெறியும் திருச்செந்தூர்
அரசே சிற்றில் அழியேலே
இவ்வாறு தமிழ் இலக்கியங்கள் புராணங்களில் அற்புதக் கந்தனின் அருட்பெருக்கை காண்கிறோம். நல்லைக் கந்தனை சரணம் சரணம் எனத் தொழுது தொழுது அமைதி பெறுவோம்!
(நன்றி அருள் ஒளி - ஆடி 2006)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLTLTLLLLLLLLLLLLTLLLLLLLLLLLTTLLLLLLLLL
வல்வினை களைந்திடுவாய்
Ι ισοσοσή நல்லையின் நாயகனே நாடியுனைச் சரணடைந்தோம் எல்லையில்லாக் கருணை எமக்கருள் புரிந்திடுவாய்
ന്ദ്രങ്ങാണു. அனுபல்லவி அல்லலைப் போக்கிடவே அனுதினமும் பணிந்தோம் வல்வினை களைந்தெம்மை வாழ்விப்பாய் வாழ்த்துகின்றோம்
p666).) ағртохитh வேலினைக் கையிலேந்தி வெவ்வினை களைந்திடுவாய் வேல்வடிவில் அமர்ந்தே வேதனை தீர்த்திடுவாய் நாலாபுறமும் பக்தர் நாவாரப் பாடியாட காலமாறு பூசையிலும் கண்குளிர கொலுவிருப்பாய்
p6്യോബ്.)
நன்றி:யாழ்ப்பாணதிருத்தலங்கள்மீதுபாடப்பட் விசைப்பாடல்கள்)
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 19
நல்லருள்புரியும்
தெய்வத் தமிழிசைச் செல்வர் நயினை
“நல்லூரான் திருவடியை நான் நினைத்தமாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி” என்கின்றார் மகாஞானி யோகசுவாமி அவர்கள். மூலவராக வேல் கிழக்குநோக்கி அருள்மழை பொழிய, தென்முகமாக வேண்டியவர்கட்கு இல்லை என்னாது அவரவர் குறையை தீர்த்தபடி ஆறுமுகனும், வடதிசை நோக்கி நிர்வாண தத்துவத்தை உணர்தியபடி பழனி ஆண்டவரும் காட்சி கொடுக்க, அழகிய சிற்பங்களுடன் வானுலாவிய கோபுரமும், முன்னே மணி மண்டபமும், அருகே மணிக் கோபுரமும் நிறைந்து, பக்தர்கள் நித்தம் நித்தம் கூடி நிற்க மணிஓசையால் கவலைகளை மறக்கச் செய்யும் ஆலயம் நல்லூர் என்றால் மிகையாகாது.
முருகன் வழிபாடு இயற்கையில் இருந்து ஏற்றுக் கொண்ட முதல் வழிபாடாகும். தண்ணிர் முதற்படைப்பு. அதிலிருந்து மலை, அதனைச்சார மண், மண்ணில் மற்றவையெல்லாம் விளைந்தன என்பது உலகத் தோற்றத்தைப் பற்றிக் கூறுகின்ற கருத்து. இதிலிருந்து மக்கள் தோன்றிய இடமும், வாழ்வு தொடங்கிய இடமும், மலைச்சாரல் என்பது தெரியவருகிறது. மனிதவாழ்வின் அறிவுநிலை கடவுட் கொள்கை என்பர். கடவுள் கொள்கையில் முதலில் தோன்றியது முருகவழிபாடு. தமிழ் நாட்டில் முருகவழிபாட்டிற்குத் தோற்றமாயிருந்தது வேலன் வெறியாடல். இது ஒர் இனக்கரு வழிபாட்டு முறை என்பர். மரபு வழிபாடும் வேல் வழிபாடும் உருவ வழிபாட்டிற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியன என்பதை மானிடவியலார் விளக்கியுள்ளனர்.
மலை நிலக் கடவுளான முருகன் அல்லது வேலன் வேலைப் போர்க்கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டவன். கி. மு. நாலாயிரத்துக்கு முற்பட்ட ஆதிச்சநல்லூர் புதை பொருட்களில் இரும்பு வேல்களும் பித்தளையாற் செய்யப்பட்ட சேவல்களும் கிடைத்துள்ளன. இவை முருகவழிபாடு பழைய காலத்திலிருந்தே தென்னாட்டவர்க்குரியது என்பதை மெய்ப்பிக்கின்றன. மலைப்புறங்களிலுள்ள குகைகளில் இவ்வழிபாடு தொடக்க காலத்தில் இருந்ததால் குகைகளில் இருந்த தெய்வமானதால் குகன் என முருகனுக்கு பெயர் ஏற்பட்டது.
அத்தோடு போர்புரிவதில் சேவல் சிறந்த பறவை ஆதலின், போரில் வல்ல முருகனுக்கு சேவலைக் கொடியாகவும், குறிஞ்சிக் கடவுள் ஆனதினால் குறிஞ்சி நிலத்து மலராகிய கடம்ப மலரை முருகன் விரும்பும் மலராகவும், அந்நிலத்து மயிலை முருகனின் வாகனமாகவும் கொண்டு பண்டைத் தமிழர் போற்றினர். ஆதிச்ச நல்லூர் திருச்செந்தூருக்கு அண்மையில் உள்ளது. திருமுருகாற்றுப்படை சுட்டும் முருகன் கோயில்கள் பல பாண்டி நாட்டிலேயே அமைந்துள்ளன. பாண்டி நாட்டின் பழைய தலைநகரான கொற்கை நம் இலங்கைத் திருநாட்டிற்கு அண்மையில் அமைந்து இருப்பதால் நம் . நாட்டிலும் பண்டைக்காலம் தொட்டே முருகவழிபாடு சிறப்புற்றிருந்ததாக டாக்டர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் “திருக்கோவில் வழிபாடு” நூலில் (பக் 75, 81) குறிப்பிட்டிருக்கிறார்.
இலங்கையில் முருகவழிபாடு ஆங்காங்கே செறிந்து காணப்பட்டாலும் வடக்குத்திசையில் வேல்வழிபாடு பல இடங்களில் காணப்படுகின்றன. ஆதியிலிருந்து நல்லூர், மாவிட்டபுரம், செல்வச்சந்நிதி, நயினை ஆகிய இடங்களில் வேல் வழிபாடே சிறந்து நிற்கின்றது. கொழும்பிலும் பூரீ கதிரேசன் வீதியில் அமைந்துள்ள கதிரேசன் ஆலயத்திலும் வேல் தான்
(இந்து ஒளி

:
நல்லூர்க் கந்தன்
சுப்பிரமணியம் கணகரெத்தினம்) 98 அ& அ& அe_98_அ&அமூ&_9
மூலமூர்த்தியாக மிளிர்கின்றது. கொழும்பு ஜிந்துப்பிட்டி ஆலயத்திலும் தொடக்கத்தில் வேல்வழிபாடு ஆரம்பமாகி, இப்போ கருவறையில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் காட்சி தருகின்றார். ஆதிவேல் பித்தளையால் செய்யப்பட்டு அரசமரத்தின் கீழ் இருக்கும் சித்திவிநாயகருக்கு முன் இன்றும் காணக் கூடியதாக இருக்கிறது. நக்கீரர் திருமுருகாற்றுப் படையில்,
"வீரவேல் காரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செல்வேன் திருக்கை வேல் வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்த வேல் உண்டே துணை’ என்பதிலிருந்து வேலின் பெருமை எத்தகையது என்றுணரலாம்.
1955ஆம் ஆண்டில் புத்தளம் மாவட்டத்திலே நிகழ்ந்த புதைபொருள் ஆராய்ச்சியின் பயனாக திருநெல்வேலி, ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்களிலே கிடைத்தவை போன்ற ஈயத்தாழிகளும் சேவற்சிலை முதலியனவும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இலங்கையில் கதிர்காமம், செல்வச்சந்நிதி, மண்டூர், திருக்கோயில் ஆகிய பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் எல்லாம் வாயைத் துணியாற்கட்டி மெளன பூசை செய்யும் முறை காணப்படுகின்றன. ஆகமமுறைக்கும் மடாலய முறைக்கும் இடைப்பட்ட பூசை, கிரியைகளே நல்லூரில் நடைபெறுவன. பூநீலழரீ ஆறுமுகநாவலர் அவர்கள் இவற்றை ஆகமமுறையில் வழிபடுத்த முனைந்தும் இஃது நடைபெறவில்லை. இவற்றை நோக்கும் போது,
".காடும் காவுங் கவின் பெறு துருத்தியும் யாறுங் குளணும் வேறு பல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினு
9.
வேண்டினர் வேண்டியாங் கெய்தினர்வழிபட என்ற திருமுருகாற்றுப் படை அடிகள் எமது நினைவுக்கு வருகின்றன. (கதிர்காமம் பிரபந்த தத்துவங்கள் பக். 8-9).
நல்லூர் ஆலயத்தில் ஆடி அமாவாசை தினத்திலிருந்து ஆறாம் நாள் கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி இருபத்தைந்தாம் நாள் தீர்த்தோற்சவம் நடைபெற்று மறுநாள் பூங்காவனத்தோடு திருமணத்திருவிழா முடிவடைகிறது. ஆடி பிறந்து விட்டாலே அகிலமெல்லாம் முருகனின் பேரொளி வீசத் தொடங்கி, ஆடிச் செவ்வாய் விரதமனுட்டித்து முருக வழிபாட்டில் மக்கள் தோய்ந்து நிற்பர். கதிர்காமத்தில் ஆடியில் திருவிழா தொடங்கி ஆடிப் பூரணையோடு கூடிய திருவோணத்தில் தீர்த்தோற்சவமும், மாவிட்டபுரத்தில் ஆடி அமாவாசையில் தீர்த்தோற்சவமும், செல்வச்சந்தியில் ஆவணிப் பூரணையில் தீர்த்தோற்சவமும், நல்லூரில் ஆவணி அமாவாசையில் தீர்த்தோற்சவமும் நடைபெறுவது வழக்கம்.
இப்படியாக பெருமை கொண்ட நம் முருகன் ஆலயங்களில் என்றுமே அடியார் கூட்டத்திற்கு குறைவில்லை. ஆதியில் மாவிட்டபுரத்தில் மாமரமொன்றின் கீழ் வேல் ஒன்றினை அடையாளமாகவே வைத்து வழிபடத் தொடங்கி, எட்டாம் நூற்றாண்டில் இவ்வழிபாடு பெருங்கோயிலாக்கப்பட்டது.
7. விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 20
மாவிட்டபுரக் கந்தனை அபிஷேகக் கந்தனென்றும், செல்வச்சந்நிதிக் கந்தனை அன்னதானக் கந்தனென்றும், கதிர்காமக் கந்தனைக் காவடிக்கந்தனென்றும் போற்றுவர். இதற்குச் சான்றாக கதிர்காம உற்சவ காலத்தில் தீர்த்தோற்சவத்திற்கு முன்தினம் கொழும்பு முதலாம் குறுக்குத் தெரு முருகன் ஆலயத்தில் இருந்து வெள்ளவத்தை மாணிக்க விநாயகர் ஆலயம் செல்லும் இரதத்தை காவடி என்றே அழைப்பர். முருகனின் புகழ் மணக்கும் ஆடிமாதத்தில் கொழும்பில் வேல்விழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. எதை எடுத்தாலும் “வேல்” என்றே செப்பி மகிழும் பெருமை முருகனுக்கு உரித்தாகிறது. “சிக்கலிலே வேல் வாங்கித் திருச்செந்தூரில் சூரசங்காரம்” என்பது முதுமொழி.
இவ்வாலயங்களில் கந்தசஷ்டியும் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இக்காலத்தில் கந்தபுராணம் வாசித்தல், பொருள் கூறுதல், கந்தர் அநுபூதி, கந்தரலங்காரம் இசைத்தலும் சிறப்பாக நடைபெறுகிறது. எல்லா ஆலயங்களிலும் ஆறுநாள் கந்தசஷ்டி நடைபெற்றாலும் சிக்கல் சிங்காரவேலன் ஐந்தாவது நாளில் தேரில் வலம் வந்து முகத்தில் வியர்வை சிந்த அம்பிகையிடம் வேல்வாங்கி திருசெந்தூருக்குச் செல்வது வழக்கமாகவுள்ளது.
இப்படி பெருமைமிகு முருகனுக்கு ஆடியில் தொடங்கி ஆவணி வரை நடக்கும் திருவிழாக் காலங்களில் கோயில் வீதியில் பஜனைகள், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்து வணங்குதல், கற்பூரச்சட்டியெடுத்தல், பால்காவடி, செதில் காவடி தூக்குக்காவடி, துலாக்காவடி என்று எத்தனையோ நேர்த்திக்கடன்களை அடியார்கள் இரவு பகலாக செய்து பரவசம் அடைவார்கள்.
நல்லூர் முருகனின் திருவிழா ஆரம்பகாலத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சைவமக்கள் மாமிச உணவைத் தவிர்த்து ஒரு நேர உணவுடனேயே விரதமனுஸ்டிப்பர். ஆடிமாதத்தில் இருந்தே ஒரு சிலர் விரதமிருந்து சிரத்தையோடு நல்லூரானின் பூங்காவனம் வரை முருகனைப் போற்றிமகிழ்வர்.
நல்லூர் முருகனை யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியன் குலதெய்வமாகப் பூசித்து வந்துள்ளான். மேலும் அம்மன்னனால் போற்றி வழிபாடு செய்யப்பட்ட நல்லூர் கந்தசாமி ஆலயம் முத்திரைச் சந்தைப் பகுதியில் இப்போது காணப்படும் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள இடத்தில் இருந்ததாகவும், போர்த்துக்கேயரின் யாழ்ப்பான ஆக்கிரமிப்பின் போது இவ்வாலயமானது அழித்தொழிக்கப்பட்டு, பின்னர் புவனேகபாகு என்னும் சிங்கள மன்னன் ஆட்சிகாலத்தில் இப்பொழுதுள்ள இடத்தில் புனரமைக்கப்பட்டதென்றும் வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்வாலயத்தில் நேரம் தவறாத பூசையும் திருவிழாக்களும், ஒரு ரூபாவுக்கே அர்ச்சனையென்பதும், எந்த அரசனென்றாலும் மேல் சட்டைகள் அகற்றி பயபக்தியுடன் வழிபட்டு வரும் முறையும் உலகப் பெயர் பெற்ற செய்தியாகும்.
இவ்வாலய மகோற்சவ காலங்களில் யாழ்ப்பாண வீதிகள் எங்கும் தண்ணிர் பந்தல் போட்டு, வெள்ளைகட்டி, வாழைகள் தென்னோலை, மாவிலைத் தோரணங்கள் கட்டி அலங்கரித்து அடியார்களுக்கு தண்ணிர், மோர், சர்க்கரைத் தண்ணிர், ஊறுகாய்த் தண்ணிர் என்பன வழங்குவதும் சிறப்பம்சம். எங்கும் ஒலிபெருக்கி கட்டி முருகன் பக்திப்பாடல்கள் முழங்க சைவமக்கள் சைவமரபிற்கமைய ஆடைகள் அணிந்து செல்வதைக் காண முருகன் அருள் சிந்தும்.
(இந்து ஒளி

அருணகிரிநாதர் கந்தர் அநுபூதியில் “நாதா குமராநம, என்று அரனார் ஒதாய் என ஒதியது எப்பொருள்தான் வேதாமுதல் விண்ணவர் சூடும் மலர்ப் பாதா குறமின் பதசேகரனே’ என்று பாடுகிறார். அதாவது அனவரதமும் அடியார்களால் வணங்கப் பெறும் அரனே! நாதா குமரா நம என்று நாமங்களைக் கூறி குகப் பெருமானைத் துதித்தார் என்றால் அந்த ஆறுமுகமான பொருள் எத்தனை பெருமை வாய்ந்தது என்பதும் தெரிகிறது.
நல்லூர் கந்தனின் வீதியிலே எத்தனையோ மகான்களும், சித்தர்களும், ஞானியரும், பக்தர்களும் பண்ணோடு இசை பாடி அவர்களுடைய பாதம் பதிந்த பெருமை உடையது. அதைவிட முருகப் பெருமான் வலம் வந்த வீதியல்லவா இது. இந்த வீதியிலே உருண்டு புரண்டு ஆடியும் பாடியும் வலம் வந்தால் நமது பாபங்கள் பறந்தோடும். இந்த வீதியில் நிறைந்திருக்கும் மண் பண்ணோடு இசைபாட வல்லமையுடையது. அத்தனை அடியார்களும் பண்சுமந்த திருமுறைகளைப் பாடிப் பாடி வலம் வந்ததால் அந்தமண் பண்பாடும் திறமையுடையது.
நல்லை முருகன் ஞானப்பழம். தொல்லைகள் தீர்த்தருளும் சண்முகமணி. அவனுடைய தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கானோர் கூடி ஆடியும் பாடியும் கண்ணிர் சிந்துவதைக் கண்டால் மெய்சிலிர்க்கும்.
முருகனுடைய வாகனம் நீலமயில். நீலமயில் ஓங்காரம்; ஓங்காரமே பிரம்மம். ஒம் என்ற சப்தத்தால் எல்லா சப்தங்களும் அடங்கி ஒடுங்குகின்றன. அகர, உகர, மகர ஒலிகள் உள்ளடக்கியது தான் ஓங்காரம். அகர சப்தம் எங்கும் பரந்து மற்றெல்லாச் சப்தங்களையும் தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தத்துவம்தான் முருகன். முருகா என்று மெய்யுருகி ஒரு முறை சொன்னால் போதும். அவன் தண்டை சிலம்பணிந்த சேவடிக் கமலங்களை கிண்கிணி ஓசையுடன் நமது தலைமீது வைத்துத் திருவருள் புரிவான். சரவணபவா என்னும் சடாகூடிர மந்திரத்தை மனதிலே தியானித்த மாத்திரத்திலே மால் மருகன் மயில் மீது எழுந்தருளி நமக்கு பட்டாபிஷேகமே செய்து வைக்கிறான். “சிவாயநம ஓம்’ என்று கூவி அழைத்தால் போதும், முருகன் வேல் ஏந்தி ஓடி வந்து வினைதீர்ப்பான். சண்முகா என்று சப்தம் எழுப்பினால் போதும், வள்ளி தெய்வயானை சமேதராய் ஆறுமுகத்துடனும் பன்னிரு கரங்களுடனும் காட்சி தருவான்.
இப்படிப் பேரருள் நல்கும் முருகப் பெருமானை திருப்புகழ் அமிர்தத்தால் அபிஷேகம் செய்தார் அருணகிரிநாதர். அழகு தமிழால் ஆராதித்தார் அகத்தியர். கன்னித் தமிழால் கனகாபிஷேகம் செய்தவர் கச்சியப்பசிவாச்சாரியார். கொஞ்சு தமிழில் குமரனைக் கொண்டாடியவர் குமரகுருபரர். வாய்பேசாமல் ஊமையாய் இருந்த குமரகுருபரனைப் பேசவைத்த செந்தில்நாதன் அல்லவா. சுப்பரமண்ய புஜங்கத்தால் சரவணனைச் சந்தோஷமடையச் செய்தவர் ஆதிசங்கர பகவத்பாதர். குகப் பெருமானை குமார சம்பவ காவியத்தால் புகழ் பாடியவர் காளிதாஸர். இக் கலியுகத்தில் முருகப் பெருமானைப் போற்றி அவன் புகழ் பாடிய தவச் செம்மல் பாம்பன் சுவாமிகள். பகைவனாகிய சூரபத்மனுக்கு போர்க்களத்திலே காட்சி கொடுத்து அருள்பாலித்தவன் முருகப் பெருமான். பகைவருக்கும் பாரபட்சமின்றி அருள் பாலிப்பவன் கந்தசாமி. வேல் பகைவரை அழிப்பது; ஆனால் கந்தவேல் பகைவனுக்கும் பக்தர்கட்கும் மெய்ஞானத்தை உணர்த்துவது.
வேலில் இருப்பது வெற்றிமுனை, அதை எந்நாளும் தொழுவோர்க்கு நல்லதுணை. வேல் உண்டு வினைதீர்க்க, மயிலுண்டு எனைக்காக்க, பாரில் பயமேது என்று யாழ்ப்பாண மக்கள் என்றும் சொல்லிச் சொல்லி மகிழ்வர்.
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 21
நல்லூர்த் தேரடி
ஆத்மஜோதி நா. முத்தையா
கொடியேற்றித் தேர் இழுக்கும் கோயில்களில் எல்லாம் தேர் உண்டு. ஆண்டில் ஒரு நாளைக்கு மாத்திரமே தேரோட்டம் நிகழும். மற்றைய நாள் எல்லாம் தேர் நிற்பதற்கு ஒரு கட்டிடம் இருக்கும். அதற்குத் தேர்முட்டி என்று பெயர். மற்றைய இடங்களுக்கு இல்லாத சிறப்பு நல்லூர்த் தேரடிக்கு மாத்திரம் எவ்வாறு வந்ததென்று ஒரு கேள்வி? செல்லப்பா சுவாமிகள் அவரது சகாக்கள் யோகர் சுவாமிகளைப் போன்றோர் நல்லூர்த்தேரடியைத் தமது வாசஸ்தானமாகக் கொண்டமைதான் காரணமாகும். கடையிற் சுவாமிகள் பெரும்பாலும் நல்லூருக்கு வந்து ஒட்டமாகவே உள்வீதியைச் சுற்றி புறவீதியையும் சுற்றிவிட்டுத்தன் வழியே போய்விடுவார்.
திருநெல்வேலியில் ஒரு பெண்மணிக்கு ஒரு கை நோயுற்று வழங்காநிலையிலிருந்தது. எந்தப் பரிகாரத்தினாலும் அது தீரவில்லை. கடையிற் சுவாமிகளின் அருளினாலாவது இது மாறாதா என்பது அப்பெண்மணியின் ஏக்கம். நல்லவேளையாக ஒரு வெள்ளிக்கிழமை அவர் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் போயிருந்தார். யாரோ ஒருவர் கோயிலின் வாசலை நோக்கி ஓடிவரக் கண்டார். அங்கு நின்ற மற்றவர்கள் கடையிற்சாமி, கடையிற்சாமி என்றனர். அதைக் கேட்டு அப்பெண்மணியும் சுவாமி பின்னாலே ஒடினார்.
சுவாமிகள் கோயில் உள்வீதி சுற்றியோடி மறுபடியும் வாசலில் வரும் போது கோயில் ஐயர் பூத்தட்டுடன் அங்கு நின்றார். சுவாமிகள் ஐயரிடம் திடீரென்று கையை நீட்டவே, ஐயர் தட்டத்திலிருந்த செவ்வரத்தம் பூக்களிற் சிலவற்றை அள்ளிச் சுவாமிகள் கையிலிட்டார். சுவாமிகள் அவ்வளவையும் தம் வாயிலிட்டுக் குதப்பிக் கொண்டோடவே அப்பெண்மணியும் தொடர்ந்து ஒடிக்கொண்டிருந்தார். சுவாமிகள் கோயிற் புறவீதியில் ஓரிடத்தில் திரும்பிநின்று கைநீட்டும்படி பெண்மணிக்குச் சைகைகாட்ட அவரும் அவ்வாறே கைநீட்டிப் பரிந்து நின்றார்.
சுவாமிகள் திருவாய் திறந்து நன்கு மெல்லப்பட்ட செவ்வரத்தம்பூக் குதப்பலை உமிழ்ந்து விடவே 'தனம்பெரிதும் பெற்றுவந்த வறியவன் போல மகிழ்ச்சியில் மலர்ந்து நின்றார். சுவாமிகள் பின்பு நிற்கவில்லை ஒடிவிட்டார். அம்மையார் அதனைத் தன்கையிற்றடவிய மாத்திரத்தே கைநோயும் தீர்ந்து மெய்நெறிக்கும் அருகதை உடைவராயினார். சீவன் முத்தர்களின் உச்சிட்டம் அருள் அமிழ்தம். அதுவே மருந்து, தீராதநோய் தீர்த்தருளவல்லது. மெய்யடியார் அதனைப் பெறத் தவங்கிடப்பார்கள். இந்த அருளாடல் நல்லூர்த் தேரடியில் நிகழ்ந்ததாகும். கடையிற் சுவாமிகள் வீதியைச் சுற்றி ஓடிவந்த காலத்தில் ஒருவர் தேரடியில் உட்கார்ந்திருந்தார். கண்கள் விழித்திருந்தாலும் அவரது மனம் எங்கோ மிகமிக உயரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஒருநாள் கடையிற் சுவாமிகளுடைய தரிசனம் இவருக்குக் கிடைத்தது. இவர்தான் செல்லப்பா சுவாமிகள்.
செல்லப்பா சுவாமிகளுக்குக் கடையிற் சுவாமிகளைப் பார்த்த உடனேயே இவர்தான் தன்னுடைய குருவாக வரக்கூடியவர் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டார். இதனைப் பரிசீலனை செய்தும் பார்த்தார். செல்லப்பர் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு கடையிற் சுவாமிகளுடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கடையிற் சுவாமிகளைக் கண்டதும் எலுமிச்சம்பழத்தோடு ஓடினார். கடையிற் சுவாமிகள் இவரது வருகையை உணர்ந்து சிறிது தாமதித்தார்.
(இந்து ஒளி
 
 
 

அந்த நேரத்தில் இருகைகளாலும் எலுமிச்சம்பழத்தை நீட்டினார். கடையிற் சுவாமிகள் பெற்றுக்கொண்டதோடு சுவாமிகள் செல்லப்பரை ஒரு பார்வை பார்த்தார். அப்பார்வை செல்லப்பரை என்னமோ செய்தது. விண்ணும் மண்ணும் தெரியாத ஒரு மயக்கத்தில் அன்று முழுவதும் மூடப்பட்டுக்கிடந்தார்.
தனது குருநாதன் இருக்குமிடந்தேடி ஒருநாள் செல்லப்பர் சென்றார். இவரைக்கண்டதும் பக்கத்திலுள்ள கடலைக்காரியிடம் கடையிற் சுவாமிகள் ஒரு வெள்ளி ரூபா வாங்கி வெற்றிலையில் மடித்துக் கொடுத்தார். செல்லப்பருக்கு இதிலும் தோல்விதான். கொடுக்க நினைத்த வெள்ளிரூபாவைக் குருநாதன் தனக்குக் கொடுத்து விட்டாரே என்று செல்லப்பர் மனதுள் ஆனந்தங் கொண்டார். அத்தருணத்தில் கடையிற் சுவாமிகள் தனது பக்கத்தில் இருந்த குடையை எடுத்து செல்லப்பருடைய தலையில் வைத்து அசைத்து தம்கைகளைத் தட்டி ஒடடா என்று சொல்லிவிட்டார். அந்தக் கணப்பொழுதிலேயே பூலோகந் தெரியாத நிலை செல்லப்பருக்கு உண்டானது. அந்தநிலை பதினைந்து நாட்கள் வரை நீடித்தது. அப்பதினைந்து நாட்களும் நல்லூர் தேரடியிலேயே செல்லப்பர் ஆழ்ந்த சமாதியில் இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மேல் செல்லப்பர் உலகம் போற்றும் உத்தம ஞானியாகிவிட்டார்.
தேரடியில் குந்தியிருந்த செல்லப்பர் ஊர் அடங்கிய பிற்பாடு நல்லூரான் சந்நிதியில் நின்று முருகனைப் பிதாவே பிதாவே என்று அழைப்பார். இவரது நிலையை அறியாதார் விசரன் என்றே பட்டம் சூட்டினர்.
யோகநாதன், தனது நண்பர்கள் திருஞானசம்பந்தர், இராமலிங்கம் ஆதியோருடன் செல்லப்பர் சுவாமிகளைப் பார்க்க நல்லூர்த் தேரடிக்குச் சென்றிருந்தார். செல்லப்பரைக் கண்டதும் யோகநாதன் தன்வசம் அழிந்தார். மனதிலே குருவாகக் கொண்டார். யோகரைக் கண்டதும் செல்லப்பர் 'ஆராடாநீ? என்றார். மலைத்து நின்றார் சீடன். “தேரடாவுள்' என்றார் செல்லப்பர். அதற்கடுத்து தீரடா பற்று என்றார்.
ஆரென்று ஆராய்வதற்கு உள்ளே தேட வேண்டும். உள்ளே தேடுமுன் பற்றுக்கள் பாசங்களை நீக்குதல் வேண்டும். மலைத்து நின்ற சீடனை மனமகிழ்ச்சியோடும் கருணையோடும் நோக்கிய குருநாதன் ‘உன்னைத் தான் பார்த்திருந்தேன், உனக்கே பட்டஞ்சூட்டப் போகின்றேன் வாவா’ என்று அருகிலழைத்து அன்போடு அருள் கலந்த அறவுரைகளை அகம்மலரவும் புறம் புளகாங்கிதம் கொள்ளவும் கூறியருளினார்.
செல்லப்பா சுவாமிகள் சிரித்துச் சிரித்துச் சொன்னவை எல்லாம் சீடனுள்ளத்தில் தொகுதி தொகுதியாய்ச் சென்று படிந்தன. அவர் மனதிற் படிந்து பதிந்தவையாவும் பிற்காலத்தில் நற்சிந்தனைப் பாடல்களாக வெளிவந்தன.
தன்னை யறியத் தவமுளுற்றும் மாதவரை அன்னை யைப்போலாதரிக்கு மாறுமுகன் - சந்நிதியில் தேரடியிற் தேசிகனைக் கண்டு தெரிசித்தேன் தேரடாவுள் என்றான் சிரித்து. மூன்று பெரிய மகான்களுடைய திருவடிபெற்ற இடம் நல்லூர்த் தேரடியாகும். செல்லப்பருடைய சமாதியும் பக்கத்திலே பொருந்தியுள்ளது. இன்றும் நல்லூர்த் தேரடியில் அருளலை வீசிக்கொண்டே இருக்கின்றது. அதனால்தான் பல சிவனடியார்கள் அந்த இடத்தில் தினமும் ஒன்று கூடுகின்றனர். நற்சிந்தனைப் பாடல்கள், திருவாசகம், கந்தபுராணம், திருப்புகழ்ப் பாடல்கள் போன்றவை தினமும் அந்த இடத்திலே ஒலிக்கின்றன. அங்கு ஆன்மீக அலையோடு திருமுறை அலைகளும் திருமந்திர அலைகளும் வீசிய வண்ணமே இருக்கின்றன. இவையெல்லாம் முருகன் ஆடலே.
(நன்றி: கனடா, மொன்றியல் திருமுருகன் கோயில் மகா கும்பாபிஷேக சிறப்பு மலர் - 2006)
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 22
நல்லூரின் பெருமை : (
BIT. (pdb60)85ul III, ஆசிரியர், ஆத்மஜோதி
நில்லூர் நல்ல ஊர். யாழ்ப்பாணத்து நல்லூர், தமிழ்நாட்டு திருவெண்ணெய் நல்லூர், ஆதித்த நல்லூர் போன்ற அரும் பெருஞ் சிறப்பு வாய்ந்த பழைய நகர். நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆரியச்சக்கரவர்த்திகள் அகன்ற பெருநிலப் பரப்பை அரசு செய்தபோது தமிழ்நாட்டு இராமேஸ்வரத்தையும் பரிபாலித்து சேதுகாவலர் என்னும் சிறப்புப் பட்டமும் பெற்றிருந்தார்கள்.
தமிழ் தெய்வமாம் முருகனுக்குத் தமிழ் மக்கள் வதியும் இடமெல்லாம் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. முருகனுக்கும் தமிழருக்குமிடையில் உள்ள தொடர்பு வரலாற்றுக்கும் அப்பாற்பட்டதெனலாம். நமது நாடாகிய இலங்கையில் கருணைக்கடலாகிய முருகன் கதிர்காமத்திலும், நல்லூர், செல்வச் சந்நிதி, கந்தவனக்கடவை, மண்டூர், சித்தாண்டி, வெருகல், மாவிட்டபுரம் முதலிய புண்ணிய தலங்களிலும் கோயில் கொண்டிருக்கின்றான்.
செந்தமிழும் சைவ நெறியும் தலையெடுத்த நல்லூரின் பழைய அரசிருக்கைக்கு அருகிலமர்ந்த நல்லூர்க் கந்தனாலயத்தைச் சூழ நாற்றிசையிலும் காவற் கோயில்கள் அமைந்திருந்தன. கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோயில், தெற்கில் கைலாசநாத சிவன் கோயில், மேற்கில் வீரமாகாளி அம்மன் கோயில், வடக்கில் சட்டநாத சிவன் கோயில் அமைந்திருந்தன. அரசர்கள் நந்திக் கொடியும் நந்தி முத்திரையும் கொண்டவர்களாய்ப் பரிபாலனம் செய்தனர்.
கல்வளை அந்தாதி பாடிய சின்னத்தம்பிப் புலவர், அவரது தந்தையாராகிய வில்லவராய முதலியார், ஆறுமுக நாவலர் போன்ற அறிஞர் பெருமக்களும் நல்லூரின் பெருமைக்குக் காரணராயிருந்தனர்.
இத்தகைய புகழ் புத்த நல்லூரின் அருமை பெருமைகள் யாவற்றையும் பதினேழாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் போர்த்துக்கேயர் என்னும் பறங்கியர் பாழ்படுத்தி தரைமட்டமாக்கி விட்டனர். பின்னர் ஒல்லாந்தர் என்னும் உலாந்தாக்கள் அரசாட்சி செய்த காலத்தில் சைவ மறுமலர்ச்சி விடிவெள்ளிபோல் மெதுவாக ஒளி வீசியது. புலவர்கள் பலர் பக்திப் பிரபந்தங்கள் பாடுந் தகைமையுடையவர்களாய்த் தலை எடுத்தார்கள்.
பண்டைய நல்லூர்க் கந்தசுவாமி கோயிலை பறங்கியர் பாழ்படுத்தி, அத்திபாரத்தையும் கிளறிவிட்டபின் மறுமலர்ச்சிக் காலத்திலே 1734 ஆம் ஆண்டளவில் ஒல்லாந்தர் ஆட்சியின் போது, யாழ்ப்பாணக் கச்சேரியில் உயர்ந்த உத்தியோகம் வகித்த பூரீமத் இரகுநாத மாப்பாண முதலியார் என்னும் பெரியார், அதிகாரிகளிடம் உத்தரவு பெற்று ஒரு வேற்கோட்டம் அமைத்து, வேல்வைத்து வழிபடுவதற்கான முறையை ஆரம்பித்தார். மக்கள் வழிபட்டுய்யும் வகையில் சிவத்திரு சுப்பையாக் குருக்கள் என்னும் செம்மனச் செல்வர் பரார்த்த பூசையை முட்டின்றிச் செய்து வந்தார். நல்லூருக்குக் கிழக்கில் இருந்த மடத்தில் சிவத்திரு கங்காதரக் குருக்கள் கந்தபுராண படனஞ் செய்து பக்தி நெறியைத் தூய்மைப்படுத்தி வந்தார்.
ஈழத்துச் சித்தர் பரம்பரையில் முன்னோடியாகவும் முதல்வராகவும் திகழ்ந்த முத்தியானந்தர் என்ற பெயரையுடைய கடையிற் சுவாமிகளுடைய நடமாட்டம் ஏற்பட்ட பின் நல்லூரில் ஒரு தெய்வீக அலை வீசத் தொடங்கியது. நாள் தோறும் வளர்ந்து வந்த
(இந்து ஒளி
 
 
 
 

நல்லூரின் சிறப்பு, வனப்பு புகழ் பெற்றனவாயின. கிழக்குப் புறத்தில் அமைந்த தேரடிக்குத் தனிச்சிறப்பு உண்டாகியது. அங்கே காவல் தெய்வமாய் வைரவக் கடவுளின் ஆனந்த கோலாகல அருள் வீச்சும், அதனால் கவரப் பெற்ற அடியார் கூட்டமும் கருங்கல் மனத்தையும் கரையப்பண்ணின. கற்பூர வரிசையும் காவடிகள் வரிசையும், கந்தன் மீது பக்திப் பாடல்கள் வரிசையும் தேரடியைத் தெய்வலோகம் ஆக்கின.
"ஒரு பொல்லாப்பு மில்லை. நாமறியோம், ஆரறிவார்? எப்பவோ முடிந்த காரியம் முழுதும் உண்மை. 99 என்ற மகா வாக்கியங்களை யோகர் சுவாமிகளுக்கு உபதேசம் செய்து ஆட்கொண்ட செல்லப்பா சுவாமிகள் தேரடியில் இருக்கத் தொடங்கிய பின் அந்த இடத்தில் ஒர் ஆத்மீக அலை வீசத் தொடங்கியது.
செல்லப்பர் தேரடியிற் குந்தியிருந்து சிந்திக்கத் தொடங்கிய காலத்திலேயே அடியார்கள் பலர் அவரிடம் ஏதோ அற்புத சக்தி உண்டென்று அனுமானித்து, அவரைச் சூழ்ந்து மொய்க்கத் தொடங்கினார்கள். அதே வேளையில் அவர் தமக்குள்ளே சிந்தனைப் பேச்சுக்களை முணுமுணுக்கக் கண்ட சிறுவர்கள், “விசரன்” என்று கூறிக் கல் எறியவுந் தொடங்கினர்.
பகல் முழுவதும் விசர்க்கோலம் கொண்டிருக்கும் செல்லப்பா சுவாமிகள், இரவில் அர்த்த சாமம் பூசை நிறைவுற்று எல்லோரும் அகன்ற பின் மெதுவாக இருக்கை விட்டெழுந்து கோபுர வாசற் பக்கம் சென்று முருகனைத் தேடுவார் போல் “பிதாவே பிதாவே!” என்று கூவி அழைத்து, அவருடன் சொல்லெதிர் பெற்றும் பெறமாலும் உரையாடி வந்தார்.
அவரின் உள்ளத்தில் முத்துப் போன்ற சிந்தனை வாக்கியங்கள் உருண்டு திரண்டு வெளிவரக் காத்திருந்தன. பக்குவமுள்ள சீடன் ஒருவன் வருவான் அவன் காதில் இந்த மகா வாக்கியங்களை வார்த்து விடலாம், அவன் மூலம் இவ்வாக்கியங்கள் சுருதியென எல்லோருக்கும் கேட்கும், எங்கும் கேட்கும் எனக் கருதினார். அம்மகா வாக்கியங்களை முன்பு பார்த்தோம்.
செல்லப்பர் நல்லூர்த் தேரடியில் வாழ்ந்தவர். தவத்திரு யோகர்சுவாமிகள் நல்லூரிலேயே அரிய தவங்கிடந்து ஞான தீட்சை பெற்றவர். அவர் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடல்களில் எல்லாம் நல்லூர்க் கந்தனின் கடாட்சம் தொனிக்கிறது. உலகம் உய்ய உதித்த இந்த ஞான பரம்பரையினர் மூலம் நல்லூர்க் கந்தன் அருள் மழை பொழிந்து வருகின்றான்.
ஒரு காலத்தில் நல்லூர்க் கோயில் நிர்வாகம் இப்போதிருப்பது போல் சிறப்பாயில்லாதபோது, “செல்லப்பா சுவாமிகள் தெய்வ வாக்காக ஒரு வெள்ளைக்காரன் வருவான். அதன் பின்னர் கோயில் கருமங்கள் செவ்வனே நடைபெறும் என்று சொன்னார் என அவருடைய சீடர்களுள் ஒருவரான கொழும்புத்துறை விதானையார் காலஞ்சென்ற திரு. திருஞானசம்பந்தர் வாயிலாகக் கேட்டிருக்கிறோம்.
நல்லூர் மேலை வீதியில் நல்லூருக்கு மேலும் பெருமை தேடிக் கொடுத்துக் கொண்டிருப்பது நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் என்றால் அது மிகைப்படுத்திக் கூறுவது ஒன்றல்ல. இந்தியாவிலுள்ள ஆதீனங்கள் எல்லாமே பல பெரிய கோயில்களைப் பரிபாலனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. அதேபோன்று கந்தப்பெருமான் திருவருளால் இந்த நல்லை ஆதீனமும் வளர்ந்து இலங்கை முழுவதற்குமே சைவத் தலைமைப்பீடமாக அமைந்து, பணியாற்ற வேண்டுமெனப் பிரார்த்திப்போமாக!
(நன்றி: ஆத்மஜோதி - ஆவணி 2006)
0. விகிர்தி வருடம் ஆடி -- புரட்டாதி)

Page 23
நல்லூர் கந்தனின் D
நில்லூரிலுள்ள செங்குந்த மரபினர் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் நடைபெறும் கொடியேற்றத் திருவிழாவுக்குத் தேவையான கொடிச்சீலையை அழகிய விமானத்தில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கொடுத்து வருகின்றனர்.
முதலாம் தினத்தன்று கொடியேற்றத் திருவிழா ஆரம்பமாகி நடைபெறும். பத்தாம் திருவிழாவன்று அழகிய மஞ்சத்திலமர்ந்து முருகப் பெருமான் அடியார்களுக்குக் காட்சிகொடுத் தருளுகின்றார்.
பதினேழாம் திருவிழாவன்று முத்துக்குமாரசுவாமியும் வள்ளியம்மனும் மயில்வாகனங்களிற் பூச்சப்பரத்தில் வீதிவலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்கள். இது ஒரு முக்கிய திருவிழாவாகும்.
பத்தொன்பதாம் திருவிழாவன்று முருகன் கைலாய வாகனத்தில் எழுந்தருளிக் காட்சிகொடுத்தருள்கின்றார். தசக்கிரீவன் தன் இருபது கரங்களாலும் கைலாசகிரியைப் பெயர்க்க முயன்றபோது, அவனது உடலம் மலையின்கீழ் நசுங்கியதையும், பின்னர் பரம தயாநிதியாகிய பரமசிவன் அவனுக்கு அருள்புரிந்ததையும் ஞாபகமூட்டும் பாவனையில் அமைந்த கைலாச வாகனத்திலே அமரர் இடர் தீர அசுரர் அடல் தீரச் சமர வடிவேலெடுத்த முருகப்பெருமான் வீதி வலம் வந்து பக்தர்களும் அருள்புரியும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். இருபத்திரண்டாம் திருவிழா தண்டாயுதபாணி உற்சவமாகும். இதனை மாம்பழத் திருவிழா என்றும் அழைப்பர். இக்கோயிலில் இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆதலால் இதனைக் காண்பதற்குப் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள்.
இருபத்துமூன்றாம் நாள் இரசு சப்பரத் திருவிழா நடைபெறும். மூன்று வாசலுள்ள அழகிய பெரிய சப்பரத்தில், வேற்பெருமானும் வள்ளியம்மனும் தெய்வயானையம்மனும் மூன்று வெள்ளை இடபவாகனங்களில் எழுந்தருளி வீதிவலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தருளுவார்கள்.
இருபத்துநான்காம் நாள் தேர்த் திருவிழா நடைபெறும். தூரத்து இடங்களிலிருந்து சப்பரத் திருவிழா பார்க்கவரும் அடியார்கள் அடுத்தநாட்காலை நடைபெறும் தேர்த்திருவிழாவின் போது ஆறுமாமுகப் பெருமானைத் தொழுது செல்வதற்காகக் கோயில் வீதிகளிலும், மடங்களிலும், அண்மையிலுள்ள வீடுகளிலும் தங்குவது வழக்கம். முருகன் ஆலயத்துக்கு அண்மையிலுள்ள வீடுகளெல்லாம் மடங்கள் போலவே காட்சியளிக்கும்.
விடியற்காலையில் நானாதிசையிலிருந்தும் பக்தர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயத்தை நோக்கி வந்து சேருகிறார்கள். சிலர் தம் நேர்கடனைத் தீர்க்கும் பொருட்டு வீட்டிலிருந்தே அங்கப் பிரதட்சணம் செய்துகொண்டு முருகன் சந்நிதானத்தை யடைகின்றனர். பெண்கள் அடியழித்துக் கொண்டு வருவார்கள். கோயில் வீதிகள் எங்கனும் சன சமுத்திரமாகவே காணப்படும்.
காலையில் பூசை, அபிஷேகம் முதலியன காலக்கிரமந் தவறாது நிறைவேறியபின்னர், நல்லூர் ஆலயத்திலுள்ள ஆறு அசையாமணிகள் ஒருங்கே ஒலிக்க, முருகப்பெருமான் தேரேறி வீதியுலா வருவதற்கு புறப்படுவார்.
தேர் வீதிவலம் வரும்பொழுது பக்தர்கள் அங்கப்பிரதட்சணஞ் செய்து கொண்டும் பெண்கள் அடியழித்துக் கொண்டும் பின் றொடர்வார்கள். தேர்வடத்தைத் தொட்டிழுப்பதிற் பலர் கலந்து
(இந்து ஒளி V− {k 浮。 ہو(شے * . f ته

T6 66 67
கோற்சவப்பெருவிழா
கொள்வர். வீதியில் எந்த மூலைமுடுங்கிலாவது நின்று தேரில் உலாவரும் ஆறுமுகப் பெருமானை ஒரு முறையாவது கண்ணாரக் கண்டு தொழ அன்பர்கள் முந்திக் கொள்வதையே நான்கு வீதிகளிலும் காணலாம்.
தேர் வீதிவலம் வந்து பின்னர் சண்முகப் பெருமான் பச்சை சாத்திதேரிலிருந்து திருக்கோயிலுக்குத் திரும்பும் காட்சி, பக்தர்கள் மனதை உருக்கும் அற்புதக் காட்சியாக இருக்கும். சுவாமிக்கு பச்சை நிற ஆடை அணிவித்து, பச்சை நிற மாலைகளால் அலங்காரம் செய்யப்படும்
இரவு வேற்பெருமான் வள்ளி தெய்வானை அம்மையார் சமேதராக பெரிய இடப வாகனத்தில் வீற்றிருந்து தேரடி பார்க்கும் பாவனையில் வீதிவலம் வருவார்.
இருபத்தைந்தாம் தினத்தன்று தீர்த்தோற்சவம் நடைபெறும். விநாயகப் பெருமான் வெள்ளி எலிவாகனத்திலும், வேற்பெருமான் தங்க மயில்வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், தெய்வயானையம்மன் வெள்ளி மயில் வாகனத்திலும், சண்டேசுரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் தீர்த்த மண்டபத்திற்கு எழுந்தருளுவது வழக்கம். ஐந்து மூர்த்திகளும் ஐந்து வாகனங்களில் ஆரோகணித்து ஒரே சமயத்திலே புறப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்து தெப்பக்குளத்துக்குச் செல்லும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
அடுத்தநாள் மாலை, கோயில் நந்தவனத்தில் நடைபெறும் பூங்காவனத்தில் நடைபெறும் பூங்காவனத் திருவிழாவைக் கண்டு தொழுவதற்கும் பெருந்தொகையான மக்கள் வந்து சேர்வர். திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறும். இத்துடன் நல்லைப் பெருமானின் மகோற்சவம் இனிது நிறைவெய்தும் (நன்றி: இலங்கையின் புராதன சைவாலயங்கள் (குல.சபாநாதன்)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLTLTLLLLLTLLLLLLLLMS
அமரர் பாலா நினைவுப் பேருரை
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவர் வே. பாலசுப்பிரமணியம் அவர்கள் அமரத்துவமெய்திய பதினெட்டு வருட நிறைவையொட்டி மாமன்றம் ஏற்பாடு செய்திருந்த நினைவுப் பேருரை வைபவம் கடந்த ஜூலை மாதம் 18ஆம் திகதியன்று காலை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
மாமன்றத் தலைவர் மனிதநேயர் வி. கயிலாசபிள்ளை தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புதுச்சேரி பன்னிரு திருமுறை மன்றத் தலைவர் திரு. வயி. நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சப்ரகமுவ பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் “சைவாலயங்களில் திருமுறையின் முக்கியத்துவமும் அவற்றை ஒதும் முறைமைகளும்” எனும் பொருளில் நினைவுப் பேருரையாற்றினார். அமரர் பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் மாமன்றக் காலாண்டிதழான “இந்து ஒளி’யும் இந்த நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
மேற்படி வைபவத்தின் இறுதியில் திருமதி. சாந்தி பாலசுப்பிரமணியம் அவர்களது ஏற்பாட்டில் மதிய போசனம் வழங்கப்பட்டது.
ங்கம் விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 24
h A 4. ہوگی
பண்டிதர் சி. கார்த்திகேசு (Gajలియా)___
நல்லுயர் சிந்தையர் நற்றவ வாழ்வினர் பல்லுயர் கொள்கையர் பாத்துனும் பண்பினர் எல்லையில் அன்பினர் என்றுமே கந்தனை சொல்லியே வாழ்பவர் துயநல் லுரதே!
விண்ணமர் தேவர்தம் வெஞ்சிறை மீட்கவே கண்ணுதல் தீயெழு கண்களிற் றோன்றியோன் மண்ணினில் வாழ்வுறு மக்களம் நாம் தொழ அண்ணலாய்க் கந்தனாய் ஆளிடம் நல்லையே!
கல்லெனும் நெஞ்சின ராயினுங் காக்கவும் சொல்லவும் எண்ணவும் தோன்றாநற் றோன்றலாய் மெல்லிய வாரொடும் மேவுவார் கும்பிட நல்கதி நல்கிட நல்லதெம் நல்லையே!
அன்புகொள் நெஞ்சின ராகவும் ஆவலில் என்புரு கத்தினம் எம்முரு காவென நின்றுரு கிக்கரம் தன்தலை கூப்பியே சென்றடை வாரிடர் தீர்ப்பது நல்லையே!
ஆறுடைச் செஞ்சடை அண்ணலார் அருளிய ஆறிரு தோளுடை ஐயனே தேவரின் மாறுகொள் சூரனை மாய்த்ததும் மண்ணுளோர் பேறென ஏத்தவும் பெற்றதெம் நல்லையே!
மாலினை மாமனாய்ப் பெற்றதன் மகிமையால் சேலிளம் கண்ணியர் யானையும் வள்ளியும் மாலறத் தீரவும் மாண்மணஞ் செய்தவர் வேலொரு கையுடன் மேவிடம் நல்லையே!
ஊழிதோ றுபூழிகள் தாமவை மாறினும் ஆழிநேர் அல்லவில் ஆழ்ந்திட நேரினும் மாழுடல் வீழ்ந்துயின் வந்துதான் தோன்றினும் வாழநாம் வைத்திடும் வான்புகழ் நல்லையே!
ஆறுதாழ் நீள்சடை ஐயணின் கண்ணருள் ஆறுடைச் செம்முக ஐயனாயத் தோன்றியோன் ஏறிடு மாமயில் மேல்வரு காட்சியால் ஆறுதல் பெற்றிடச் செய்திடும் நல்லையே!
சுண்ணவெண் நீறணி வோன்தரு தோன்றலாய் விண்ணமர் தேவர்தம் வெஞ்சிறை மீட்டவன் மண்ணவர் விண்புகு வாழ்வினை ஆக்கவும் திண்ணமாய்க் கும்பிடச் சேர்ப்பது நல்லையே!
யாருமே மெச்சிடும் எம்திரு நல்லையில் நேரமே கண்ணதாய் என்றுமே நித்தமும் சீர்மிகச் செய்திடு திவ்விய பூசைமற்
றுரினில் எங்குமே பார்ப்பதோ ரையமே!
(நன்றி : திருநல்லைப் பதிற்றுப் பத்து)
(இந்து ஒளி
 
 
 

10.
11.
12.
13.
14.
15.
16.
17.
8.
19.
நல்லூரான் நல்லருளான் நன்மனமே நல்லூரான் நல்லூரான் என்றே நவில்.
நவில்வோர்க்கு நல்லூரான் நற்பாத இன்பம்
புவிமேலே நல்குவான் போற்று.
போற்று மடியார்கள் பொற்பாத இன்பமே ஏற்று மகிழ்வார் இனிது.
. இனிதாய நல்லூரான் இன்னடிகள் போற்றி
நனிவாழ்க என்றும் நயந்து
நயந்துநாம் நல்லூரான் நற்பதத்தை உன்ன நயந்தருள்வான் நல்லூரான் நன்கு.
. நன்குநாம் நல்லூரான் நல்லருள்தா என்றலுமே
இன்பா ரருளிவான் ஏற்று.
ஏற்றில் வருகின்ற எங்களிறை தன்மகனே
போற்றுநல்லூர் வாழ்வான் புகழ்.
புகழ்ந்தேநல்லூரான் புனிதவடி வாழ்த்த
உகந்தே அருள்வான் உரை.
. உரைக்கும் உணர்வுக்கும் எட்டாநல் லூரான்
விரைப்பாத மேநி விரும்பு.
விரும்பிநல்லூரான் விரைமலர்த்தாள் போற்றத் தரும்நற் சிவஞானந் தான்.
தானே மறைப்பொருளைத் தந்தைக் குபதேசத் தாலே உரைத்தானே தான்.
தானென்று நானென்று தன்மைவே றாகாது
தானென்றே நின்றான் சரண்.
சரண்நீ எனஏத்தத் தக்கநல் லூரான் சரணிவான் சார்தல் தலை.
தலைதாளிற் சேரவே தானருளும் நல்லூர்த் தலைவனையே சார்தல் தலை.
தலைமே லடிவைக்குஞ் சங்கரனார் பாலன் தலைமே லடிவைப்பான் தான்.
தானே தருமின்பம் தக்கோர்கட் கென்றுமே தானே தருமுத்தி தான். தானாகி என்னையுந் தன்னுள்ளே வைத்தருள்வான் கோணாய நல்லூரிற் கோ.
கோவாய நல்லூரான் கோகனதப் பாதமே தேனாகித் தித்திக்குந் தேர்.
தேர்ந்தறிய வல்லார்க்குச் சிற்சுகமே எப்போதும் தேர்ந்தீய வல்லான் தெளி.
20.தெளிநீநல் லூரான் திருவடியே பற்றாய்
நளினமலர் நல்குவான் நன்கு.
(நன்றி : சிவதொண்டன் - ஆவணி 1978)
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 25
ဒူးအရော့•အရှေ့အရေး၊ தொல்லை வினை தீர்
சிவநெறிக்கலாநிதி
உலகெலாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரம் பொருளாக, பரங்கருணைத் தடங்கலாக, கைதொழுவார்க்கருளும் கந்தனாக நல்லையிலே வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகியுள்ளது. தொல்லை வினை தீர்க்கும் நல்லைக் கந்தன் தம்மை வழிபடும் அடியார்களின் துயர் நீக்க இங்கே வேற் பெருமானாக எழுந்தருளுகின்றார். முருகன் என்றால் அழகன் என்று பொருள். அழகே ஒருருவெடுத்தாற் போன்று அலங்காரக் கந்தனாக இங்கே முருகன் எழுந்தருளியிருக்கின்றார். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணானந்தரான முருகன் இந்த நல்லையம்பதியிலே கந்தனாக வீற்றிருக்கின்றார்.
ஈழவளநாட்டிலேயுள்ள முருகன் தலங்களுள் அலங்காரக் கந்தன் என்று வர்ணிக்கப்படும் குமரன் குடியிருக்கும் இந்த நல்லூர் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு புனிதத் தலமாகும். முன்னர் அரசாண்ட தமிழ் மன்னன் சங்கிலியன் இந்த நல்லூரையே இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்திருக்கின்றான். பூரீ சங்கபோதி புவனேகபாகு என்ற மன்னவனால் கட்டப்பெற்ற இந்த நல்லூர்க் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணத்திலே பருத்தித்துறை வீதியிலே அமைந்துள்ளது.
பூரீ வீரமாகாளி அம்மன் கோயிலுக்கும் பூரீ கைலாசநாத பிள்ளையார் கோயிலுக்கும் பூரீ சட்டநாதசிவன் கோயிலுக்கும் பூரீ பண்டாரக்குளப் பிள்ளையார் கோயிலுக்கும் நடுவிலே நடுநாயகமாக எழுந்தருளி வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஆண்டவனாகக் கந்தன் காட்சியளிக்கின்றான். கலியுகவரதனான கந்தன் குடியிருக்கும் இந்த நல்லூர்க் கோயில் மிக விசேடமானது. எத்தனையோ முருகன் கோயில் இருந்தும் இந்த நல்லூரில் மட்டும் அடியார் கூட்டம் அலைமோதக் காரணம் என்ன? முண்டியடித்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று அன்பர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு கை தொழ வரும் காரணம் என்ன? இந்த நல்லையம்பதியிலே மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருக்கும் வேல் ஒரு தனிச்சக்தி வாய்ந்தது. தெய்வீகமான ஓர் ஈர்ப்புச்சக்தி இந்த வேலுக்கு உண்டு. அந்த வேல் வீரவேல்; வெற்றிவேல், வேதனை தீர்க்கும் சக்திவேல். அடியார்க்கருளும் அன்புவேல்; அருட்சக்திவேல். அதனால்தான் இந்த நல்லூரிலே அடியார்வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அது மாத்திரமன்றி இந்த நல்லையம்பதியிலே வீற்றிருக்கும் கந்தன் பக்தர்களின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து அந்த நேர்த்திகளையெல்லாம் பூர்த்திசெய்து அருள்மாரிபொழிகின்றான். பக்தர்கள் அனைவரும் முருகனைப் பக்தியுடன் பாடிப்பரவிப் பணிந்து வணங்குவதில் பேரின்பம் அடைகின்றார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நல்லூரிலே நேரந் தவறாத பூசை நியமங்கள் நடைபெறுவதால் வாழ்க்கையில் வசந்தம் வீச வாய்ப்பாக இருக்கிறது. அதிகாலை நான்கு மணிக்கே அடியார்கள் இங்கு வந்து விடுவார்கள். முருகப் பெருமானை திருப்பள்ளியெழுச்சிபாடி மூலஸ்தானத்திற்கு எழுந்தருளச் செய்து நடைபெறுகின்ற ஆனந்தமயமான பூசையைப் பார்ப்பதற்கு அன்பர்கள் படும்பாடு சொல்லிமுடியாது; பக்தி மயமான உள்ளத்தை மகிழவைக்கும் பூசை இது இந்த விழா நாள்களில் நல்லை வீதியெங்கும் விழாக்கோலம் பூண்டு புனித நகராகக் காட்சி தரும். எங்கு திரும்பினாலும் 'அரோகரா கந்தனுக்கு
(இந்து ஒளி

y
க்கும் நல்லைக் கந்தன் ඕJTගrum Auffiżjör}_රූ පොප් පොජ්‍ය වෛ රඳා පෙඳ පොවේ)
அரோகரா’ என்ற கோஷம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். அங்கப்பிரதட்சணம் செய்கின்ற அடியார்கள் திருவீதியில் உருண்டு வருங்காட்சி உள்ளத்தைத் தொடவல்லது. பெண் அடியவர்கள் விழுந்து விழுந்து கும்பிட்டுக் கொண்டே “முருகா! முருகா!” என்று சொல்லியவண்ணம் பக்தியோடு வலம்வருவது மெய்சிலிர்க்க வைக்கும்.
நாலாபக்கமும் பஜனைக் கோஷ்டிகள் முருகன் புகழைப் பாடிய வண்ணம் வருவதை இங்குதான் காணமுடியும். இஃது ஒருபுறமிருக்க காவடிகள் தூக்கியவண்ணம் காலில் கையில் உடம்பெங்கும் செதில், அதாவது சிறிய வெள்ளிவேல் குத்தியிருக்க ஆடிக்கொண்டே அடியவர்கள் முருகனை வாழ்த்தி வணங்கும் காட்சி வேறெங்குமே காணமுடியாது; ஆனந்தம் தரும் அற்புதக் காட்சி இது
இந்த நல்லைக் கந்தனுடைய விழாக்காலத்தில் அடியார்கள் அனைவரும் நெற்றியில் நீறு துலங்கவும், கழுத்தில் உருத்திராட்சம் தரித்தும் பக்திக் கோலத்துடன் பண்ணிசை பாடிவரும் அழகு தனியழகே.
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் நல்லூர் நல்விழாப் பொலிவு காண அன்பர்கள் இங்கு கூடுவதால் ஜனநெருக்கடி இருந்து கொண்டேயிருக்கும். ஆலய சூழலில் தாகசாந்தி நிலையங்களும் அன்னதான மண்டபங்களும் செவ்வனே செயற்படுவதால் அடியார்கள் வழிபாடு செய்து ஆர அமர உட்கார்ந்து ஆறுதலும் தேறுதலும் பெறுவர். வயிற்றுப்பசி தீர்க்கப்படுவதோடு செவிக்குணவும் வழங்கப்படுகிறது. தினந்தோறும் தெய்வீக இசைச் சொற்பொழிவுகளும் சங்கீதக் கச்சேரிகளும் பண்ணிசைக் கச்சேரிகளும் இன்னும் பல கலை நிகழ்வுகளும் பாங்காக நடைபெறுகின்றன. அடியார்கள் பாடு கொண்டாட்டந்தான்!
இத்தனை சிறப்புக்கள் பொருந்திய நல்லூர் திருவிழாக் காட்சிகள் காண்பதற்குப் பூர்வஜென்ம புண்ணியஞ் செய்து கொடுத்து வைத்திருக்க வேண்டும். வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்தது எதற்காக? இறைவனைக் கண்டு களிப்பதற்கே. அழகன் முருகன் முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பவன். அவனது பேரழகைக் காண நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான் முகனே' என்ற அருணகிரிநாதரின் வாக்கு எவ்வளவு உண்மை என்பது இந்த நல்லூர் திருவிழாவிலேதான் புலனாகின்றது. வாருங்கள்! முருகனைக் கண்டு மகிழுங்கள்
LLLLLLLLLLYYLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
Ah நயந்து நம்பால் வரக்கூவாய்
கல்லுங் கனியக் கூவியுளம்
களிக்கும் குயிலே கற்றுணர்ந்தோர் சொல்லும் பொருளுங் கடந்தானைத் தூய ஞானச் சுடர்விளக்கை அல்லும் பகலும் அடியார்கள்
அழுதும் தொழுதும் அருள்வேண்டும் நல்லூர்க் கந்தப் பெருமானை
நயந்து நம்பால் வரக்கூவாய்!
- வித்துவான் க. வேந்தனார்.
3. விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 26
நல்லைநகர்க்க
காப்பு திருமேவு மணிமார்பத் தவனும் வேதச்
செங்கமலத் தயனாலுந் தேடற் கெட்டாப் பெருமானுந் துயர்தவிர்த்தே அடிமை கொண்ட பேராளன் சீராளன் பிறப்பில் லாதான் பொருகசூரன் உடல்பிளந்து நல்லை மேவும்
புலவனுக்கே ஊஞ்சலிசை போற்றிச் சொல்ல ஒருகோட்டுத் தழைசெவியக் களிற்றுப் பிள்ளை
உபயமல ரடியகத்தே யுன்னல் செய்வாம்.
ஊஞ்சல் நிரஞ்சனமாஞ் சத்திசிவங் கால்க ளாக
நிகரில்பரா பரமணியேநல் விட்ட மாக பரந்தகலை ஞானமா கமங்கள் சாத்திரம்
பன்னுபரா னங்கள்முறு கிளைய தாக அரந்தையகல் நால்வேதங் கயிற தாக
அழகொழுகு பொற்பலகை குடிலைய தாக நரந்தநிறை அட்டதிக்குக் கமழுந் நல்லை நகர்மேவு கந்தரே யாடீ ரூஞ்சல்!
அம்பரம்பீதாம்பரம்நல் விதான மாக
அலருடுக்கள் நவமணியின் மாலை யாக செம்பதும நாயகனும் மதியத் தேவுந்
திருமிகுத்த கண்ணடியின் னிறைய தாக நம்புசுடர் ஞானமே விளக்க மாக
நாதவிந்து மங்கலவா லாத்தி யாக 2. uhLI6T6o6OTö öğ6BLIðfů LIITIQ. umTL
உயருநல்லை நற்கந்தரே யாடீ ரூஞ்சல்!
முக்குணமுங் கவிகையே யாகி யோங்க
மொழியுமறம் பொருளின்பம் வீடே நான்கும் LiščB6lor(6 atmooguílór Libš5 u IIrasů
பகர்மோட்ச மொளித் தீபமாக மிக்கவன்பு மலராலே அயனும் மாலும்
வேண்டுவரம் பெறுவதற்கே பூசை செய்ய நக்கணரன் புதல்வரே யாடீ ரூஞ்சல்
நல்லைநகர்க் கந்தரே யாடீ ரூஞ்சல்
கனக முடியாறும் பிரபை வீச
நல்லகட் செவியானும் கிருபையை நாட்ட பனகமணிக் குண்டலமீ ராறுந் திவ்ய
பானுவொளி தனிக்கிரணம் பரிந்து வீச புனையுமனிக் கலனாட முறுவ றோன்றப்
புதுமதிய முகமாறும் பொதிதல் செய்ய அநககுரு பரமுதல்வா ஆடீ ரூஞ்சல்
அழகுநல்லைக் கந்தரே யாடீ ரூஞ்சல்
அந்தமிலா நீலமணி மயிலு மாட
அழகியபொற் சதங்கைகலின் கலினென் றாட
செந்திருவார் பரிபுரங்கள் தானு மாடச்
செம்பொளியி னுடையசைந்து சிறப்பா யாட
(இந்து ஒளி

ந்தன் திருவுஞ்சல்
எந்தனகத் திருந்தருளும் பாத மாட
எவ்வுயிர்க்குந் தானவனா யிருந்தே யாட
நந்தலிலாப் பரம்பொருளே யாடீ ரூஞ்சல் நல்லைநகர்க் கந்தரே யாடீ ரூஞ்சல்
பன்னிருகை பொலிந்தாடச் சூரன் மார்பைப்
பகிர்ந்தவயில் வெகுபராக் கிரமத்தாடச் சொன்னபல வாயுதமுந் துலங்கி யாடச்
சுந்தரமாம் பொற்புரிநூல் மார்பி லாட சென்னிறச்சூட் டுச்சேவற் கொடியு மாடத்
தெளிவுறுபொற் கங்கணங்கள் சீரா யாட நன்னதிசே யானவரே யாடீ ரூஞ்சல்
நல்லைநகர்க் கந்தரே யாடீ ரூஞ்சல்
கள்ளர்ந்த கடம்பமலர் மாலை யாடக்
கதிகெழுவு ரத்னமணிக் கவச மாட உள்ளார்ந்த வரைஞானுங் கச்சு மாட
உறுநர்துயர் தீர்த்திருந்த வுடைவா ளட எள்ளார்ந்த தெய்வவடி வான மாத
ரிருபேரு மிருபக்கத் திருந்தே யாட நள்ளாற்று வேலவரே யாடீ ரூஞ்சல்
நல்லைநகர்க் கந்தரே யாடீ ரூஞ்சல்
தாயாயெவ் வயிர்க்குந் தானாய் நின்று
தண்ணளியைப் புரிபவரே யாடீ ரூஞ்சல் மாயோன்றன் மருகனே யாடீ ரூஞ்சல்
வானவர்சே னாபதியே யாடீ ரூஞ்சல் சேயேசட்சமய பராபரரே யாடீ ரூஞ்சல்
தேவாதி தேவரே யாடீ ரூஞ்சல் நாயேனைத் தொண்டுகொண்டா யாடீ ரூஞ்சல்
நல்லைநகர்க் கந்தரே யாடீ ரூஞ்சல்
திரிபுவன கர்த்தாவே யாடீ ரூஞ்சல்
சிவஞான போதகரே யாடீ ரூஞ்சல் வறுமைதவிர்த் தாள்பவரே யாடீ ரூஞ்சல்
வரையெறிந்த சேவகரே யாடீ ரூஞ்சல் அறிவகத்தே ஆக்கியவா யாடீ ரூஞ்சல்
egu roog IgöF6looõLIT ue egbarõ) நறியமணங் கமழ்புயனே யாடீ ரூஞ்சல்
நல்லைநகர்க் கந்தரே யாடீ ரூஞ்சல்
on IT) அன்புபொருந் தடியவர்கள் வாழி வாழி
அழகியநல் லைச்சனங்கள் வாழி வாழி பொன்புரளு மஞ்ஞைகுக் குடமும் வாழி
புகழ்தெய்வ குஞ்சரியும் குறமின் வாழி துன்புதவிர் வீரவேல் வாழி வாழி
சொல்லுமற்று மாயுதங்கள் வாழி வாழி நன்குதரும் நல்லைநகர்க் கந்தர் வாழி
நாதாந்த வேலவரெந் நாளும் வாழி!
(திருவூஞ்சல் பாடல்கள் சேனாதிராய முதலியார் அவர்களால் இயற்றப்பட்டது)
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 27
இது சிறுவர்களுக்கான சிறப்பு தருகிறோம். பெற்றோர்கள் த அதன் தத்துவத்தை விளக்குவ
பிரார்த்தனையின் பலம்
(முனிவரும் அவருடைய சீடரும் ஒரு சமயம் காட்டின் வழியே சென்று கொண்டிருந்தனர். பொய்கை ஒன்றைக் கண்ட முனிவர் அதில் குளித்துவிட்டு பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். சீடனும் குருவைப் பின்பற்றினான். அப்பொழுது அங்கே ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்கவே, சீடன் பயந்துபோய் ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். குருவோ ஏதுமறியாது பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். சிங்கம் அவர் அருகில் வந்து பார்த்துவிட்டு ஒன்றும் செய்யாமல் வந்த வழியே சென்றது. பிரார்த்தனை முடிந்ததும் முனிவர் தன் சீடனுடன் ஊரை அடைந்தார். அப்போது ஒரு காளை மாடு வேகமாக ஒடி வந்தது. அதைக் கண்டு அஞ்சி விலகிப் போனார் முனிவர். அதைப் பார்த்த சீடன், “காட்டில் சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டும் பிரார்த்தனையிலேயே மூழ்கி இருந்த நீங்கள் இப்பொழுது கேவலம் ஒருகாளை மாட்டிற்கு அஞ்சுகிறீர்களே”என்று கேட்டான். முனிவர் அமைதியாக “அப்பொழுது நான் பிரார்த்தனையில் கடவுளின் அருகில் இருந்தேன். இப்பொழுதோ மனிதனுடன் மாயையில் இருக்கிறேன்!” என்றார்.
OOT
எது பிரச்
*ஒய்வு ஒழிச்சல் இல்லை. மனம் எண்ணற்ற பிரச்சன்ைகளினால் என்னை அலைக்கழிக்கிறது. அமைதி வேண்டும். தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும்” என்று குருவைப் பணிந்தான் சீடன் ஒருவன்
குரு, ஒரு சிறுபாத்திரத்தில் நீரில் கைப்பிடி உப்பைப் போட்டு நன்றாக கலக்கி, அவனை அருந்தச் சொன்னார். உப்பின் கரிப்பு தாங்காமல், முகம் சுளித்தான் சீடன்.
பிறகு ஊற்று நீர் பொங்கி வரும் சுனைக்கு அவனை அழைத்துச் சென்றார் குரு. கைப்பிடி உப்பை, சுனை நீரில் போட்டு அந்தச் சுனை நீரை அருந்தச் சொன்னார்.
உப்பின் கரிப்பு மறைந்து விட, அந்த நீரைப்பருகினான் சீடன். குரு சொன்னார், “பிரச்சனை உப்பில் இல்லை. அது இருக்கும் பாத்திரத்தில்தான். பாத்திரம் பெரிதானால் பிரச்சனை மறைந்து விடும்”
முதலில், உன்னை விட்டு வெளியில் வந்து பிரச்சனைகளைப் பார். பிரபஞ்சத்தில் துளியாக உன்னை எண்ணிக் கொள். பெரிய பாத்திரமான பிரபஞ்சமாக நீ மாறி விடு. பிரச்சனைகள் கரைந்து போகக் காண்பாய்” குருவின் பதிலைக் கேட்ட சீட
என்கிறார்களே, ஏன்? கன்றோடு சேர்ந்த பன்றி திருந்த வாய்ப்பில்லையா?” என்று ராமகிருஷ்ண பரமஹம்ஸரை ஒருவர் கேட்டார். அதற்கு பகவான் ராமகிருஷ்ணர், “பாலோடு சாக்கடை நீர் சேர்ந்தால் பால்தான் கெடும். இரண்டில் எது எதோடு சேர்ந்தாலும் தீயவைதான் நல்லவையை ஆட்கொள்ளும். இனிய புல்லாங்குழல் ஓசையை மரண சங்கு வென்று விடும். ஒரு குடம்
இந்து ஒளி
 
 
 
 
 
 
 

ப் பகுதி. சிறுவர் சிந்தனைக் கதைகள் சிலவற்றை இங்கு ங்கள் பிள்ளைகளுக்கு இக்கதைகளைப் படித்துக் காட்டி து கடன்,
தனைக் கதைகள்
பாலை ஒரு துளி விஷம் கெடுத்து விடும். ஒர் அறிஞரின் அறிவுரையை ஒரு முட்டாளின் கூச்சல் நாலுபேர் அறியாமல் செய்து விடும்” என்றார் அமைதியாக,
"அப்படி என்றால் தீமையை நன்மையினால் வெல்வது எப்படி?” என்றார் கேள்வி கேட்டவர். “ஒரு நாய் உன்னைப் பார்த்துக் குரைக்கும் போது கல்லை எறிந்தால் மேலும் மேலும் குரைக்கும். அதற்கு ஒரு ரொட்டித் துண்டைப் போட்டால், உன்னைப் பார்த்து வாலாட்டும். இதுவே தீமையை வெல்லும் தந்திரம்” என்றார், பரமஹம்சர்.
வேண்டியிருந்தது. அவன் தன் குருநாதரின் ஆற்றல் மீது அபார நம்பிக்கை கொண்டவன். எந்தச் செயல் செய்தாலும் குருநாதர் நாமத்தைச் சொல்லிய பிறகே செய்வான். எனவே கொஞ்சம் கூட தயக்கம் கொள்ளாமல் தன் குருநாதரின் திருநாமத்தை உச்சரித்தவாறே தண்ணிர்மீது நடந்து சென்றே ஆற்றைக் கடந்து விட்டான். இந்த விஷயம் குருநாதருக்குத் தெரியவந்தது. ‘என் நாமத்துக்கே இவ்வளவு சக்தி இருப்பதை நான் அறியாமல் போனேனே. அப்படியானால் குருவாகிய நான் எவ்வளவு ஆற்றல் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று கர்வம் கொண்டார். மறுநாள் குரு நான் நான் நான்’ என்று சொல்லிக் கொண்டே ஆற்றின் மீது நடக்கத் தொடங்கினார். நீந்தத் தெரியாத அவர் நீரில் மூழ்கிப் போனார்.
நம்பிக்கையினால் அற்புதங்கள் நிகழும்; ஆனால் கர்வமும் தற்பெருமையும் அழிவைத்தான் தரும் என்பதை இது
அபூர்விமான தாமரைப்பூவை பறித்தான். அதை அரண்மனையில் நல்ல விலைக்கு விற்றுவிட எண்ணிப் போய்க் கொண்டிருந்தபோது, எதிரே ஒருவன் இறைவனைத் தரிசிக்கப்போய்க் கொண்டிருந்தான். அவன் தாமரைப் பூவைப் பார்த்து, “இறைவனுக்கு அர்ப்பணிக்க இது வேண்டும், நீ கேட்கிற விலையை தருகிறேன்” என்றான். தோட்டக்காரன், ஒரு பொற்காசு தந்தால் தருகிறேன்' என்றதும், ஒரு பொற்காசை எடுத்து நீட்டினான் அவன். அதற்குள் அரண்மனையிலிருந்து வெளியே வந்த அரசர் அந்த மலரைப் பார்த்து, இதனை இறைவனின் பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். பத்துப் பொற்காசுகள் தருகிறேன்’ என்றார் தோட்டக்காரன் ஆலயத்திற்குச் சென்று விற்றால் பெருத்த லாபம் கிடைக்கும் என்று எண்ணியவனாக “இந்தப் பூவை விற்கப் போவதில்லை” என்று சொல்லிவிட்டு, ஆலயத்தை நோக்கிப் போனான். இறைவனின் கண்களில் வீசிய ஒளி, அலங்காரச் சிறப்பு என்பன தோட்டக்காரனை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டின. உடனே அந்த அபூர்வ தாமரை மலரை இறைவனது பாதங்களில் சமர்ப்பித்து விட்டு வீழ்ந்து வணங்கினான். இந்த சமர்ப்பணம் ஆயிரம் பொற்காசுகளைவிட மேலானது என்று அவனது மனம் எண்ணியது
(நன்றி: குமுதம் பக்தி)
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 28
qALA LqLA LAqLLAASAALAA AAAAASLAqAAA qLLALALALAqLALAqA LqALLq0LqAALA qALAAqALAqAALqLALALAALAALASLLALAqALALLLALALALAALLqALASS
ඉද are- 3333333333333
ggggg
இது மானவர்களுக்கான Udsat5 b, வழமைபோல இடம்பெறுகின்றன. இது போன்ற விஷய எதிர்பார்க்கப்படுகிறது.
வரியபுராணக் ö6〔
அமர் செய்த வருவாயில் அழய
சிIழநாட்டில் திருநீரூர் என்னும் பதியொன்று உளது.
இது செல்வச் செழிப்பு கொண்டது. பிற சிறப்புகள் நிரம்பியது.
இங்கு வேளாளர் குலத்தில் தோன்றிய ஒருவர், சிவன்மீது சிந்தை தோய்ந்து திருத்தொண்டுகள் செய்து வந்தார். இவர் போர்க்களம் சென்று, பகைவரை வெற்றி கொள்ளவதில் வல்லவர். இதைக் கொண்டு இவருக்கு முனையடுவார் என்னும் பெயர் ஏற்பட்டது.
போரில் தோல்வி பெறுவோர் இவர் துணையை நாடி வருவர். இவர் அவர்களுக்காக செருமுனை சென்று போர் புரிந்து வெற்றி பெற்றுக் கொடுப்பார். அவ்வெற்றியில் நலமும் மகிழ்வும் பெற்ற அவர்கள், இவருக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளிக் கொடுப்பார்கள். அவற்றை இவர் தம் வகைக்குப் பயன்படுத்திக் கொள்வாரோ? இல்லவே இல்லை. அவர்கள் நல்கும் பொருளெலாம் சிவனடியார்களுக்கு இவரால் அமுது செய்வதில் செலவு செய்யப்படும். அவ்வடியார்கள் விருப்பத்தை நிறைவு செய்வதில் இவர் கருத்து மிகக் கொள்வார். இவ்வாறு இவர் நீண்ட நாட்கள் சிவத்தொண்டு செய்து இறைவர் திருவடி சேர்ந்தார்.
தம் உயிரைப் பற்றிச் சிறிதும் எண்ணாது போர் செய்து, அதில் வரும் பொருள் பெற்றுச் சிவனடியாரைப் போற்றிய திருவுள்ளம் பெற்றவர் முனையடுவார் என்பதை இவ்வரலாற்றால் தெரிந்து கொள்கிறோம்.
நாயனார். இவர் வடநாட்டு மன்னரை வென்று வெற்றி வாகை சூடிய சிறப்பினர். இவர் நாளும் சிவப்பணி புரிந்துவந்த சிவபக்தர். இவரது ஆட்சியில் சைவம் தழைத்துவந்தது. நன்மை பெருகித் தீமை நலிந்தது.
திருப்பதிகள் தோறும் சென்று இறைவரை வழிபட்டு வருவது இவரது வழக்கம். ஒரு முறை இவர் தமது மனைவியாரோடு திருவாரூர் சென்று தியாகேசப் பெருமானை வணங்கி வழிபட்டார். அரசியார் திருக்கோயிலைச் சுற்றி வரும்போது மண்டபத்தின் அருகே மலர்ந்த புதுப்பூ ஒன்று விழுந்து கிடந்ததைக் கண்டார். அரசியார் அறியாதவராக அதை எடுத்து மோந்துவிடுகிறார்.
இந்நேரம் அங்கே திருத்தொண்டு செய்து நின்ற செருந்துணை நாயனார், அம்மையார் செய்கையைப் பார்க்கிறார். இச்செயலைப் பொறுத்துக்கொள்ள இயலாத அவர் ஓடிவந்து மோந்த மூக்கை அறுத்து விடுகிறார். அம்மையார் மூக்கினின்று குருதி பாயந்து கொண்டிருந்தது. வேதனையைத் தாங்க முடியாத அம்மையார் தரையில் விழுந்து புலம்பித் துயருற்றார்.
மன்னர் கழற்சிங்கர் அங்கே வந்து செய்தியை அறிகிறார். வேதனை கொள்கிறார். மலரை எடுத்த கையையே துண்டிக்க வேண்டும்' என்று சொல்லி வாளை உருவி மனைவியார் கையைத்
(இந்து ஒளி
 
 
 
 
 
 

淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡淡
) பெரிய புராணக் கதைகள் ங்கள் மாணவர்களிடமிருந்து
தைகள்
துணித்தார். இவ்வருஞ் செயலைக் கண்ட அடியார்கள் வியப்புற்றனர். வானவர்கள் மலர்மாரி பொழிந்தனர். இவ்வாறு திருத்தொண்டுகள் செய்த அரசர் கழற்சிங்கர், நீண்ட நாட்கள் செங்கோலோச்சி முக்கண்ணர் திருவடி அடையும் பேறு பெற்றார். இறைவர் திருப்பணிக்கு இடையூறு செய்தது தம் மனைவியார் என்பதை அறிந்தபோதும், கொடுத்த தண்டனை காணாது என மேலும் கடுந் தண்டனை கொடுத்த அரசர் கழற்சிங்கரின் இந்த வரலாறு அவரது ஆழமான சிவபக்தியைத் தெரிவிக்கிறது.
in
நெல்லைக் கொடுத்து jura
பணி செய்தவர்
சிறப்புமிக்க சோணாட்டின் தலைநகர் கொடும்பாளூர். இங்கு ஆலயப் பணிகள் செய்தவனும் அரும் ஆற்றல் படைத்தவனுமாகிய ஆதித்தன் மரபில் தோன்றிய மன்னர் இடங்கழியார். இவர் சைவ நெறியில் ஒழுகியவர். அரனார் ஆலயங்கள் சிறப்புடன் நடக்க வேண்டும் எனப் பொருளுதவி வழங்கியவர்.
இவர் ஆட்சிக்காலத்தில், கங்கையைச் சடையில் வைத்த முக்கண்ணரின் அடியார்களுக்கு அமுதளிக்கும் அடியார் ஒருவர் இருந்தார். இவர் செய்துவந்த இத்திருப்பணிக்கு இடையூறு ஏற்படும் நிலையில் ஒருநாள் இவரிடம் பொருள் இல்லாது போயிற்று. அடியார்களுக்கு அமுது செய்தாக வேண்டுமே என் செய்வார்?
நெஞ்சுரனோடு இவர் அன்று இரவில் மன்னர் அரண்மனையில் புகுந்தார். அங்குள்ள நெல்லை அள்ளி எடுத்தார். இந்நேரம் காலவர்கள் இவரைப் பிடித்துக் கொண்டனர். அரசர் முன் இவர் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்.
அரசர் கள்வரைப் பார்த்து “நெல்லை ஏன் திருடினாய்?” எனக் கேட்டார். அடியார், தாம் சிவனடியார்களுக்கு அமுதுசெய்யும் வழக்கத்தைக் கூறி, அன்று பொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் திருட நேர்ந்தது எனத் தெரிவித்தார்.
செய்தியைக் கேட்ட மன்னர் உள்ளத்தில் இன்பம் ஊற்றாகச் சுரந்தது. அவர், “இவ்வடியாரன்றோ உண்மையான பக்தர்! அடியார்க்கு அமுது செய்யும் இவரது பணிக்குத் தடை வந்தது என்னாலேயே யாகும்” என்று அவ்வடியாரை விடுதலை செய்தார். பின்னர் தமது நெற்களஞ்சியத்தையும் 660)6OTL பொருட்சாலைகளையும் திறந்து வைத்து, அடியார்களை எடுத்துக் கொண்டு போக அறிவித்தார். அவர்கள் அவ்வாறு கொண்டு செல்வதைப் பார்த்துப் பார்த்து ஆனந்தப் பேருவகை கொண்டார் அரசா.
இவர் நீண்டகாலம் நெறிமுறை தவறாது நாட்டினை ஆண்டு, இறைவர் திருவடி சேரும் பேறுபெற்றார்.
களவு செய்த அரனடியாரை விடுவித்ததோடு, தமது பொருட்களையெல்லாம் தெய்வநெறி ஒழுகும் திரு அடியார்கள் எடுத்துக் கொண்டுபோக இசைவளித்த இடங்கழி நாயனாரின் இணையற்ற சிவபக்தியை இவ் வரலாறு தெரிவிக்கிறது.
26 விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 29
#
ਢੰਡ
ਢੰ
ܛܕ݂
華
#
#
ਢੰ
ཚོ་
놀
ਵੰਡ
놀
జ్ఞా
IDB56f
சந்த
5 L60) D
மங்கையர் ஒளி
ഗ്രത سماعی :
பெரியபுராணத்தில் பெண்கள், மனைவி, தாய், சகோதரி, மகள், அரசி, தேவராட்டியர் என்று பலநிலைகளில் இருந்தும் தொண்டாற்றிய திறம் பேசப்படுகிறது. அவற்றுள் பணிப்பெண் நிலையிலிருந்து தொண்டாற்றிய சந்தனத்தாதியார் பற்றியும், அவர்தம் பக்தித்திறம் பற்றியும், அதன் தனிச் சிறப்புப் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. மேற்காண் பலநிலைகளில் தொண்டாற்றிய பெண்களைவிட, பணிப்பெண் நிலையிலிருந்து உரிய முறையில் கடமை செய்து, தொண்டராகி, பக்தியின் மேம்பாட்டினால் இறைவன் திருவடிசார்ந்து கயிலாயத்தில் என்றும் இருக்கும் பேறுபெற்றவர் சந்தனத்தாதியார். தம் பணியில் கடமை தவறாதவர்; மன உறுதியுடன் செயலாற்றும் திறம் மிக்கவர். ஒரு பணிப்பெண்ணை 'ஆர்' என்ற உயர்வுச் சிறப்பு விகுதியைச் சேர்த்து, சந்தனத்தாதியார், சந்தனத்தார், தாதியார் என்று சேக்கிழார் பெருமான் கூறுகின்றார். எத்தனை பெரிய செயற்கருஞ்செயலைச் சிறுத்தொண்ட நாயனாரும் வெண்காட்டு நங்கையாரும் செய்திருந்த போதும் அடியவராக வந்தவர் கேட்ட நேரத்தில் தலைக்கறியைச் சமைத்து வைத்திருந்ததை எடுத்துக் கொடுத்து, அவர்தம் திகைப்பைப் போக்கி மகிழ்வித்து, அவர்தம் பிறவிப்பயனை அடைய வழிவகுத்தவர் சந்தனத்தாதியார் என்றால் மிகையாகாது. வந்த அடியவரின் தோற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டே அவர் இத்தகையவர் என்றுணர்ந்து, ஏற்றபடி சமைக்கும் திறமை மிக்கவர் சந்தனத்தாதியார். அதனால்தான் யாருக்குக்கும் கிட்டாத பேறு இவருக்குக் கிட்டியது. இறைவனோடு இருக்கப் பெற்றார்.
சந்தனமாந்தையலார் சிறுத்தொண்டர் இல்லத்தில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஆவார். இவர் சிறுத்தொண்டரும் அவர்தம் துணைவியார் திருவெண்காட்டு நங்கையாரும் மேற்கொண்டொழுகிய, அடியார்க்கு அமுதூட்டும் திருப்பணிக்குத் துணை நின்றவர். தம் தலைவி, தலைவரின் குறிப்பறிந்து ஒழுகும் பண்புடையார்.
சிறுத்தொண்டர் தம் இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அவர்தம் குறிப்பறிந்தும் குணமறிந்தும், அமுதூட்டத் தம் தலைவி வெண்காட்டு நங்கையாருக்கு மிகவும் உதவுபவர். 88 பாடல்கள் கொண்ட சிறுத்தொண்ட நாயனார் புராணத்தில் ஐந்து பாடல்களில் இவர் பேசப்படுகிறார். சந்தனமாந்தையலார் என்றும் (பாடல் 37); மடவரல் (பாடல் 38) என்றும்; சந்தனத்தார் (பாடல் 65) என்றும்; சந்தனத்தார் எனும் தாதியார் (பாடல் 75, 87) என்றும் சேக்கிழாரால் அழைக்கப்படுகின்றார்.
சேவகம் செய்யும் பெண் சேக்கிழாரால் மிகவும் உயர்வு கொடுத்துப் பேசப்படுகிறார். சிறுத்தொண்டநாயனாருக்கும் அவர்தம் துணைவியாருக்கும் கிடைத்த இறைவனது திருக்காட்சி
(இந்து ஒளி
 
 

{ሱ Šጳ አ () )
8 & 8 & 亨亨亨克 亨亨
을
M
*
吉
ፅ ፅ ዕ ሴ ፅ ዕ ዕ ፅ 可弼 碳声亨亨亨安”警”亨
8 亨亨型
ர் திருத்தொண்டில் நனத்தாதியாரின் உணர்வும் உறுதியும்
ாவர் திலகவதி சண்முகசுந்தரம்)
போல் வேறெந்த அடியாருக்கும் கிடைக்கவில்லை. அத்தகைய பெரும் பேற்றுக்கு, சந்தனமாந்தையலாரின் சேவையும் இன்றியமையாத காரணமாக அமைகிறது.
வேலைக்காரர்களின் தன்மைகளை நாம் பலவாறான நிலைகளில் நாளதுவரை கண்டும், கேட்டும், அனுபவித்தும் வருகிறோம். ஆனால் முற்றிலும் அவற்றுக்கெல்லாம் மாறுபட்டு உயர்ந்த நிலையில் விளங்குகின்றார் சந்தனத்தாதியார். தம் குடும்பத் தலைவர்க்கும், தலைவிக்கும் வரும் இன்பதுன்பம், தமக்கு வந்ததாகக் கருதி உடனிருந்து ஒன்றாக அனுபவித்தும், தன்னையே அவர்களுக்காக அர்பணித்து வந்தவர் இவர். தம் இல்லத்திற்கு வருகின்ற அடியார்களின் நோக்கையும், கோரிக்கையையும் நன்கு உணர்ந்தவராக இருந்து அவரவர்க்கு ஏற்ற வகையிலே பணிசெய்தும், உபசாரம் செய்தும் வந்தவர்; குறிப்பறிந்து ஒழுகும் திறத்தார்.
சிறுத்தொண்டரது இல்லத்திற்கு, வந்த சிவனடியாரது திருவடிகளை வணங்கி. −
அந்தமில் சீர் அடியாரைத் தேடி அவர் புறத்தனைந்தார் எந்தமை ஆளுடையவரே அகத்துள் எழுந்தருளும் என்று வரவேற்றார். அடியார் வணக்கம் அவருள் ஊறிப் போயிருந்த நிலையை இதன் மூலம் உணர முடிகிறது. அடியார்களின் பெருமை முடிவற்றது என்பதையும் நாள்தோறும் கண்டு, அடியார்களைத் தொழுது உடன்பயின்ற பேறு பெற்றிருக்கிறார் என்பதையும் உணரமுடிகிறது.
அதிலும் குறிப்பாக, தமது தலைவர், நாள்தோறும் அடியார் ஒருவருக்கு அமுது படைத்து அவர் உண்டபின் தான் உண்ணும் தன்மையர், இன்று ஒருவரையும் காணாமல், தேடிச் சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் வராது வந்த மாமணியாக அடியார் இல்லத்தில் எழுந்தருளியிருக்கின்றார். அவரை அன்போடு வணங்கி இருக்கக் செய்தல் தம் தலையாய கடமை. எனவே சிறுத்தொண்டர் இதோ! இப்போது வந்துவிடுவார். எம்மை ஆளுடையவரே! இல்லத்திற்குள் எழுந்தருளியிருப்பீராக! என்று தம் தலைவரின் வழிபாட்டிற்கு உரிய வகையிலே, அடியவரோடு பேசுகின்றார். “எங்கள் அனைவரையும் ஆட்கொள்பவரே!” என்ற அழகு மிக்க தொடரை எடுத்தாள்கிறார். பின்நடப்பதை முன்கூட்டியே உணர்ந்து சொல்லும் அறிவின் மிக்காராக விளங்குகிறார் தாதியார். தாம்பணிபுரியும் வீட்டின் தலைவர், தலைவி, குழந்தை ஆகியோரது இயல்பையும், பண்பையும், பழக்க வழக்கங்களையும் நன்கறிந்தவர் சந்தனத்தாதியார். தம்மையும் அத்திறத்திலேயே இணைத்துக் கொண்டவர். வந்துள்ள அடியாரைக் கண்டால் சிறுத்தொண்டரும், நங்கையாரும் மிக மகிழ்வர் என்பதையும், அவர் அமுது செய்வதே
27 விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 30
தமக்குக் கிடைத்த பெரும் பேறு என்பதையும் கருத்தில் கொண்டே இறைவன் அடியவரைப் பாதம் வணங்கி, ‘எந்தம்மை ஆளுடையவரே என்றழைத்தார். எந்தம்மை என்பதில் தம்மையும் உட்படுத்திக் கூறும் திறம் மிகவும் நுட்பமானது.
வீட்டிற்கு வந்த அடியவர் வடதேசத்தைச் சேர்ந்த பைரவர் கோலம் தாங்கி வந்துள்ளார். சூலத்தையும் கபாலத்தையும் ஏந்திவந்துள்ளார். இந்தக் கோலத்தைக் கண்டவுடனே, இந்த அடியார் தலைக்கறியையும் விரும்பி உண்பார் என்று அறிந்து கொண்ட மதிநுட்பமுடையராக விளங்கினார் சந்தனத் தம்மையார்.
அமுதுக்கு ஆகாது எனத் திருவெண்காட்டு நங்கையார் விலக்கிய இறைச்சியினை, இவர் சமைத்து வைத்து, அடியவர் கேட்ட உடனே கொணர்ந்து படைத்து நங்கையாரின் திகைப்பைப் போக்கினார் தாதியார்.
“அந்தத் தலையிறைச்சி வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்றே முந்தி அமைத்தேன் கறியமுது” என்று இறையடியார்க்குப் படைக்க எடுத்துக் கொடுத்தார்.
சிறுத்தொண்டருக்கும், நங்கையாருக்கும், தாம் சிந்தை கலங்கித் திகைத்து அயரப் போகிறோம் என்று தெரியாது. "அறுத்த தலையின் இறைச்சி திருவமுதுக்கு ஆகாது” என்ற ஒரே முடிவு இருவருக்கும் இருந்ததால், அதைக் கழித்து மறைந்து நீக்கிவிடும்படி சந்தனத்தார் கையில் கொடுத்துவிட்டார் நங்கையார். அத்தோடு அதைநினைக்க வேண்டுவதில்லை என்றாற்போல இருந்து விட்டார். பின்னால் அக்கறி வேண்டப்படும் என்று சிறிதும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் வந்த அடியவரோ கேட்டுவிட்டார். என்ன செய்வார்? மிகவும் திகைத்தனர் இருவரும். தக்க சமயத்தில் துணைபுரிவதும், சேவகம் செய்துவதும்தானே தாதியின் கடமை?
அதிக நேரம் வருத்தத்தில் விட்டுவிடாமல் உடனே தாதியார், தாம் சமைத்து வைத்திருந்த தலை இறைச்சியைக் கொணர்ந்தளித்தார். வண்டி ஒடுவதற்கு அச்சாணி இன்றியமையாதது. வண்டியை விட அச்சாணி மிகவும் சிறியதும் என்றாலும் அது இல்லையேல் வண்டி எப்படி ஒடும்? குடும்பம் என்ற வண்டிக்கு அச்சாணி போல இருந்து சிறிய உதவி செய்தபோதும், தங்களின் வழிபாட்டிற்கும், வாழ்க்கையின் குறிக்கோளுக்கும் எத்தனை பெரிய உதவியாக அமைந்தது இது என்று இருவரும் மிகவும் மகிழ்ந்தனர்.
உற்றவிடத்து உதவும் ஊன்று கோல் போலவும், உடுக்கை இழந்தவன் கைபோலவும், வேண்டும்போது அந்த இடத்தில் உதவும் நண்பர்கள், ஏவலாளர்களைப் பெற்றவர்க்கு எக்குறையும் வராது என்பதற்குச் சந்தனத்தாதியார் சான்றாகிறார். சிறுத்தொண்டரின் பக்திக் கொள்கைக்குத் துணை நின்று, அவர் பணி என்றும் குறைவுபடாமல் பக்தியுடன் காத்தார் தாதியார்.
“வந்த அடியவர் அமுது செய்யும் பொழுது, கண்டிப்பாகத் தலைஇறைச்சி கேட்பார் என்று எனக்குத் தெரியும். ஆதலால் தலை இறைச்சியைக்கழித்து மறைத்து நீக்கிவிடாமல், அதைமுன்பே சமைத்து வைத்தேன் என்று கூறுகிறார் சந்தனத்தார்.
வருகின்ற அடியார்கள் எத்தகையோர்? எந்த வகையான உணவுகளை அவர்கள் விரும்பி உண்கின்றனர் என்பதையெல்லாம் தம் கூர்ந்த மதி நுட்பத்தால் அறிந்து வைத்து, அதற்கேற்றவாறு உணவு சமைக்கும் திறனைக் கொண்டவராக விளங்கியுள்ளார் என்பது புலனாகின்றது. அத்தோடு, அடியவர்களை உபசரிக்கும்
(இந்து ஒளி

பாங்கும் புலனாகின்றது. அத்தோடு அடியவர்களை உபசரிக்கும் பாங்கிலே தம்மையும் மறந்து ஈடுபாடு கொண்டவர், பக்தி கொண்டவர் என்பதும் வெளிப்படையாகின்றது.
தொண்டருக்குத் தொண்டராக இருக்கும் பேற்றையே அடியார்கள் மிகவும் விரும்புவர். தொண்டருக்குப் பணி செய்யும்திறத்தால் சந்தனத்தாதியாரும் சிறந்த தொண்டர் ஆகிறார். சிறுத்தொண்டரும், நங்கையாரும் செய்த சிவபுண்ணியங்களில், அவர்கீழ் நின்று பணிசெய்த புண்ணியப் பேற்றினால் தாதியாரும் புண்ணியம் பெற்றவராகிறார்.
இத்தகு பெருமையினுக்கு உரிய செயலைத் தமது தலைவியார் சொல்லிச் செய்யவில்லை; குறிப்பினாலும் செய்யவில்லை. தம் மதியூகத்தினால் மட்டுமே செய்தார். இடத்திற்கும், சூழலுக்கும், வந்துள்ள பைரவர் கோலம் கொண்ட அடியார்க்கும் ஏற்றபடி தாமாகவே செய்தார்.
அடியவரை முதன் முதலில் கண்டவுடனேயே, இவர் மாதவத்தார் என்று புரிந்து கொள்கிறார். முன்வந்து தாள் வணங்கி, இல்லத்துள் இருக்கும்படி உபசரிக்கின்றார். முதலில் எதிர்ப்பட்டு வரவேற்பவர் இவரே. அடியவரை வரவேற்றுப் பழகியிருந்த காரணத்தாலும், பணிசெய்து ஒழுகிய காரணத்தாலும் பல்வேறு நிலைப்பட்ட அடியார்களின் இயல்பை அறியும் அறிவை இயல்பாகவே பெற்றிருந்தார்.
இத்தகைய சிறப்பினாலேயே, நாயனாரும், நங்கையாரும், சீராளனும் பெற்ற அப்பேற்றினையே இவரும் உடன்பெற்றார். இறைவனோடு என்றும் பிரியாது இருக்கத் திருக்கையிலைக்கு உடன் செல்லும் பேறுபெற்றார்.
வேலைக்காரர்கள் பற்றிப் பாரதியார் கூறும் போது, உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்தே உரைப்பார் எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார் என்று பாடுவார். உலகத்தில் உடன்பாடில்லாத பிள்ளைக்கறி சமைத்த கொடுஞ்செயலை ஊரெல்லாம் சொல்லக்கூடியது வேலைக்காரர்களின் பண்பு. ஆனால் சந்தனத்தாதியார் அவ்வாறில்லாததோடு, வந்த அடியவர் தலைக்கறி கேட்பவர்; அப்படிக் கேட்கும் போது தன் தலைவி தயங்கி, மயங்கி, வருந்த நேரிடுமே என்று முன்னெச்சரிக்கையாகச் சமைத்து வைத்து எடுத்துக் கொடுத்து மகிழ்ச்சியூட்டினார். பிசிராந்தையாரும், யாண்டுபலவாக நரையில்லாமைக்குத் தன் மனைவி, மக்களோடு, வேலைக்காரரும் தமக்கு நன்கு அமைந்து, குறிப்பறிந்து பணிசெய்ததே காரணம் என்று கூறுகிறார். இதனை இங்கே நினைந்து பார்க்க ஏதுவாகிறது.
ஐந்தே இடங்களில் பேசப்பட்டாலும், சந்தனம் போல மணந்து, தாம் பணிசெய்த இல்லத்தார் பெற்ற பேற்றையே தாமும் பெற்ற பெருந்தகையராகி இறைவன் திருவடியில் வீற்றிருக்கிறார் சந்தனத்தாதியார். இவரே சந்தனமாந்தையலார்.
கொன்றை வேணியார் தாமும், பாகம் கொண்டகுலக் கொடியும் வென்றி நெடுவேல் மைந்தரும்தம் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ் நின்ற தொண்டர் மனைவியார் நீடு மகனார் தாதியார் என்றும் பிரியாதே இறைஞ்சி இருக்க உடன் கொண்டு ஏகினார்.
(இக்கட்டுரை இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் சிதம்பரத்தில் நடைபெற்ற பன்னிரண்டாவது உலக சைவ மாநாட்டின் போது வெளியிடப்பட்ட “ஆய்வுக் கோவை’ நூலிலிருந்து நன்றியுடன் பெறப்பட்டது)
28 விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 31
தவத்திரு யோ
நல்லூர் தேரடி சித்தர் என சைவப் பெருமக்களால் போற்றப்பட்ட செல்லப்பா சுவாமிகளின் சீடராக இருந்தவர் யோகர் சுவாமிகள். இவர் ஓர் உன்னத ஞானியாக - ஆன்மீகப் பேரரொளியாகத் திகழ்ந்தவர். இவரும் சைவப் பெருமக்களல் பெரிதும் போற்றி மதிக்கப்பட்டவர். நல்லூர் கந்தன்மீது அளவிலாத பக்தி கொண்டிருந்தவர். ஒரு சீடர் பரம்பரையே உருவாகுவதற்கு வழிகாட்டியாகவிருந்த
மகான் என்றும் சொல்லலாம்.
போகர் சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்கள்
ஏராளமானவை. “நல்லூரான் திருவடியைப் பாடு நாமே நாம் என்று சொல்லி நாடு” எனத் தொடங்கி நல்லூர் கந்தன் மீது பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.
“நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப்போய் நல்ல மனத்தோடு நாம்பணிந்தால் நல்லமயில் ஏறிவந்து காட்சி கொடுப்பான் எழில்முருகன் தேறிவிடும் சிந்தை தெளி”
சிவயோக சுவாமிகளின்
ஒப்புயர்வற்ற உன்னத ஞானியாகிய யோகர்சுவாமிகள் இலங்கையின் வடபகுதியில் தொன்மை மிகு கந்தக்கோட்டம் என விளங்கிய மாவிட்டபுரத்திலே சைவ வேளாள குலத்தில் அம்பலவாணர் என்பவருக்கும் சின்னாச்சியம்மையாருக்கும் 1872ஆம் ஆண்டுமே மாதம் 29ஆம் திகதி அவிட்ட நட்சத்திரத்தில் தவப்புதல்வராகத் தோன்றினார். பெற்றோர் சூட்டிய இயற்பெயர் சதாசிவம். இளமையிலே துறவு மனப்பான்மை இவருக்கு மேலோங்கிக் காணப்பட்டது.
ஆன்மீக நாட்டம் கொண்ட இவர் யோகர், யோகநாதன் எனவும் அழைக்கப்பெற்றார். ஞானப் பேரொளியாக விளங்கிய நல்லூர் முருகன் கோயில் தேரடியில், செல்லப்பா சுவாமிகளால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சரணாகதி அடைந்தார். குருவின் வழிகாட்டலின்படி கடும் சாதனைகளோடு தவமியற்றி, திருவருளும் குருவருளும் பெற்று ஞானியானார்.
ஆசான் அருளால் ஆசானாகிய யோகரை - சதாசிவஞான தேசிகனை “யோகர்சுவாமிகள்” என மக்கள் போற்றி வந்தனர். சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் உள்ள கொழும்புத்துறை என்னும் ஊரில், ஒரு சிறு குடிசையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து, அவரை நாடிவந்த மக்களின் அல்லல்களைத் தீர்த்து, ஆன்மீக அறிவையும் ஊட்டிவந்தார். பல்வகைப்பட்ட மக்கள் இக் குடிசையை நாடி வந்தனர். சுவாமிகளுக்குப் பல அருளாற்றல்களும் சித்திகளும் கைவரப்பட்டிருந்ததால் அவரின் அகக் காட்சியிலிருந்து எவரும் எதையும் மறைக்க முடியவில்லை. அவர் தனது ஆற்றல்களை அன்பர்கள் விளம்பரப்படுத்தி அதற்கு முக்கியத்துவமளிப்பதை முற்றாக விரும்பவில்லை.
“இங்கு நான் ஒரு குறையும் வைக்கவில்லை” எனத் திருவாய் மலர்ந்து, 1964ஆம் ஆண்டு பங்குனி மாதம் ஆயிலிய நட்சத்திரத்தில் மகாசமாதி எய்தினார். அவருடைய விருப்பத்தின் படி, அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது. அவரின் அஸ்தி கொழும்புத்துறை ஆச்சிரமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. திருவடி வழிபாடு, திருமுறை ஒதுதல், சிவதொண்டு, சிவதியானம்,
(இந்து ஒளி

கர் சுவாமிகள்
இவரது வரலாறும் அற்புதங் களும் மிகவும் விரி
இவை நூலாகவும், ஆய்வுக் கட்டுரைகளாகவும் வெளி oubgj6iroITGOT.
நல்லைக் கந்தன் மகோற்சவ சிறப்பிதழாக மலரும் “இந்து ஒளி", (8u IIT Bňr சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கத் தையும், சுவாமிகளைப்பற்றி தெய்வத்திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் மலேசியா சுற்றுப்பிரயான சொற்பொழிவில் எடுத்துச் சொன்ன விடயங்களையும் இங்கு தருகிறது.
ன் திருச்சரிதச் சுருக்கம்
சைவ உணவுப் பழக்கம் ஆகியவற்றை மேற்கொள்ளுமாறு அடியார்களை ஊக்குவித்துத் தானும் அவற்றைக் கடைப்பிடித்தார். யோகர் சுவாமிகள் அருளிய திருப்பாடல்கள் தொகுக்கப்பட்டு நற்சிந்தனை” என நூல்வடிவில் தமிழிலும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் வெளிவந்துள்ளன. சுவாமிகள் வாழ்ந்த காலத்தில் வண்ணார்பண்ணையில் “சிவதொண்டன்’ என்னும் மாத இதழையும் தொடக்கி வைத்தார். மேலும் மட்டக்களப்பில் உள்ள செங்கலடியில் “சிவதொண்டன்’ நிலையம் அமைய அருள் செய்தார்.
யோகசுவாமி வாழ்ந்த காலத்தில், அவருடைய அடியாரான மார்க்கண்டு சுவாமிகளைக் கைதடி ஆச்சிரமத்தில் வசிப்பதற்கு வழி செய்தார். யோகர்சுவாமிகளின் மற்றுமொரு சீடரான செல்லத்துரை சுவாமிகள், யாழ்ப்பாணச் சிவதொண்டன் நிலையத்தையும், செங்கலடிச் சிவதொண்டன் நிலையத்தையும் பராமரித்து வந்தவர். சாந்தாசுவாமிகள் என்ற தீட்சாநாமத்தை யோகர்சுவாமிகளிடம் பெற்ற கெளரவ சோல்பரிப் பிரபுவின் புதல்வரான ஏள் (Earl) இராம்ஸ்போதம் என்பவர் இங்கிலாந்தில் சிவதொண்டாற்றி வந்தவர்.
பிரசித்திபெற்று விளங்கிய ஹாவாய் குருதேவ் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளும் யோகசுவாமிகளின் சீடரேயாவார். இவர் பல துறவிகளுடன் ஹாவாயில் ஆச்சிரமம் அமைத்து வாழ்ந்ததோடு உலகின் பல பாகங்களிலும் வாழும் இந்து மக்களுக்கும் சமயப் பிரசாரம் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மகான்கள் மறைவதில்லை. சிவயோக சுவாமிகளின் அருளாற்றல் எங்கும் பரந்துள்ளது. இலங்கையிலும் உலகின் பல பாகங்களிலும், வாழும் யோகர்சுவாமிகளின் அன்பர்கள் அவர் காட்டிய வழியில் நின்று, தாம் வாழும் இடங்களில் எல்லாம் சிவதொண்டாற்றி வருகின்றனர்.
(சிவயோக சுவாமிகள் - அன்பர்களின் அனுபவங்கள்” என்ற நூலிலிருந்து நன்றியுடன் பெறப்பட்டது.)
ဦ9] விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 32
ତ୍ରିଂଶତ୍ நடமாடுந் தெய்வமாக வா
என்னைஎனக் கறிவித்தான் எங்கள் குருநாதன்
இணையடியென் தலைவைத்தான் எங்கள் குருநாதன் அன்னைபிதா குருவானான் எங்கள் குருநாதன்
அவனியெல்லாம் ஆளவைத்தான் எங்கள் குருநாதன் முன்னைவினை நீக்கிவிட்டான் எங்கள் குருநாதன்
மூவருக்கும் அறியவொண்ணான் எங்கள் குருநாதன் நன்மை தீமை அறியாதான் எங்கள் குருநாதன்
நான்தானாய் விளங்குகின்றான் எங்கள் குருநாதன்
நிர்மது ஈழ நாட்டிலே நமது கண்முன்னே சீவன்முத்தராக வாழ்ந்து 1964 ஆம் ஆண்டு இறைபதமடைந்த யோகர் சுவாமிகளை நினைவுகூருவது பெருந்தவப்பேறாகும். சுவாமிகள் ஒரு நடமாடுந் தெய்வமாக நம்நாட்டில் (ஈழத்தில்) காட்சியளித்தவர். வாழ்வின் முற்பகுதியை அரசாங்க உத்தியோகத்திற் கழித்த போதிலும் ஒய்வு நேரத்தைத் தியானத்திலும் மெளனத்திலும் செலவு செய்தார். இவருடைய குரு செல்லப்பா சுவாமிகள் என்பவர். நல்லூர்த் தேர் மண்டபத்தில் தம் குருவின் மேற்பார்வையில் சுவாமிகள் நாற்பது நாள் தவமிருந்தார். இதன் பின்னர் இருப்பை மரத்தடியில் நிட்டையில் இருந்தார். தம்மைத் தரிசிக்க வருவோருக்கு உபதேசம் செய்வதும், அவருடைய ஐயங்களைத் தாமாகவே உணர்ந்து தீர்த்து வைப்பதும் அவர் கடமையாக இருந்தது. அத்துடன் “சிவதொண்டன்” என்னும் மாத இதழ் மூலம் மக்களுடைய கருத்துக்களுக்கு நல்விருந்தளித்தார். சுவாமிகள் அடிக்கடி கூறும் மந்திரங்களை நாம் சிந்தையில் இருத்தல் வேண்டும்; "சும்மா இரு", “எப்பவோ முடிந்த காரியம்”, “நாம் அறியோம்”, “முழுவதும் உண்மை”, “ஒரு பொல்லாப்புமில்லை”- இவற்றின் உண்மைகள் நினைந்து நினைந்து இன்புறுதற்குரியவை.
இவருக்கு இளம் பிராயத்தில் கிறீஸ்தவ பாடசாலையிலே கல்வி கற்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. ஆனால், நாவலர் பெருமானைப் போன்று அந்தச் சூழலிலேதான் சமய விழிப்புணர்ச்சி பெறக்கூடிய மனப்பாங்கும் ஏற்பட்டது. பெற்றோரை இளவயதில் இழந்தவரானபடியால் வாழ்க்கையைப் பற்றிய அல்லல்களும் துன்ப அனுபவமும் சேர்ந்து இன்பவழிக்கு அவரை இழுத்துச் சென்றது. அவர் தமக்குமுன் வரும் துன்பம் மீதூரப் பெற்றவர்களை ஆதரித்து அறிவுகூறி இன்பவழியைக் காட்டிவைத்தார். அறியாதவனுக்கு அறிவைக் கொடுத்தும் இருட்டறையில் இருந்தவனுக்கு ஒளியைக் காட்டியும் நற்பணி புரிந்தார். இவரை நோக்கிப் பலதரப்பட்ட மக்கள் படையெடுத்தனர். பிரபுக்கள், மந்திரிகள், பட்டதாரிகள், பண்டிதர்கள், பாமரர்கள் எல்லோரும் இவரிடஞ் சென்று அருட்பார்னவக்கும் நல்வாக்குக்கும் தவம் கிடந்தனர். தவறு செய்தவர்கள் கூட அவர் முன்னிலையில் தம் தவறுகளைக் கூறி மனச்சாந்தி அடைந்தனர். வழிபடுவோர் கூட்டத்திற்கு அவர் காட்டிய வழிபாட்டு நெறி மிக இலகுவானதாகும். உங்கள் மனதில் ஆண்டவன் எப்படிக் காட்சியளிக்கிறானோ அந்த நிலையிலேயே வழிபடுங்கள் எனக் கூறினார்.
இவருடைய இளமைக்காலம், ஆத்மீகத்துறைக்குப் பல வழிகளையும் ஆக்கிக் கொடுத்தது. நீர்ப்பாசன இலாகாவில்
(Sög ஒளி

)
ாழ்ந்த யோகர் சுவாமிகள்
)
கடமைபுரிந்த இவர் கடமையின் இடையிலே தோத்திரங்களையும் சாத்திரங்களையும் நன்றாகப் பயின்று வந்தார். அவர் உள்ளத்தை ஈர்த்த சிறந்த நூல் பெரியபுராணம். இதற்கு மேலாக, செல்லப்பா சுவாமிகளின் ஞானத் தொடர்பு வாழ்வை முழுமையடையச் செய்துவிட்டது. செல்லப்பா சுவாமிகள் தமது சீடரை நாடோறும் பரீட்சித்து அவர் பக்குவ நிலையைக் கண்டு ஞானத்தை உணர்த்தத் தொடங்கினார். ஆண்டி வேடத்தில் நல்லூர் வீதியில் காட்சியளித்த அவர், யோகர் சுவாமிகளுக்கு ஞானம் உணர்த்தும் குருவாக அமைந்தமை திருவருட் செயலே. இந்த நிலையை நற்சிந்தனையிலே சுவாமிகள் பாடியுள்ளார்.
நல்லூர் வெளியிலே பொதுநடம் புரிகிறான்
எங்கள் குருநாதன் எங்கும் பிரகாசன்
எல்லாரையுந்தன்னிடத்திலே காண்பவன்
இமயநியமங்களில் எள்ளளவு மோபிசகான்
பொல்லாப்பிங் கில்லையென்று போதனை செய்வான்
புகழ்ச்சியு மிகழ்ச்சியு மொன்றாகக் காண்பவன்
செல்லப்ப னென்னுந் திருப்பெயருடையான்
சிங்கார நடையொடு சிரிப்பினை யுடையான்
ஆரறிவா ரென அடிக்கடி சொல்லுவான்
தேரடிப் படியிலே சிங்காரமாய்க் கிடப்பான்
பேரறிவா எனெனப் பிறரெவரு மோவறியார் பித்தனென்றுலகோர் பேசுவா ரேசுவார்.
தனது குருவினிடமிருந்து தான் பெற்ற அனுபவத்தை தன்னை வந்து அடைபவர்களுக்கு வழங்க வேண்டும் என்று முன்வந்தார். அவரிடம் தரிசனத்துக்குச் சென்றவர்கள் அனலிலே காய்ச்சப்பெற்ற பொன்போலப் புத்தொளி பெற்றே வீட்டுக்குத் திரும்புவார்கள். இறைவனையும், இறைவனை வழிபடும் அடியவர்களையும் வழிபடவேண்டும் என்பதையே திரும்பத் திரும்பக் கூறுவார். ஆண்டவன் எம்மை விட்டு அகலாமல் இருக்கிறான் என்றும், அதே நேரத்தில் நாம் ஆண்டவனைப் புறக்கணித்து அகலச் செல்ல உலக பாசம் எம்மை இழுக்கிறது என்றும் சொல்வார்.
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற் கரிய பிரானடி பேனார் பெறுதற் கரிய பிராணிக ளெல்லாம் பெறுதற் கரிய பேறிழந் தாரே என்பது திருமந்திரம். எனவே மானிடப் பிறவி மகத்துவம் அடைய வேண்டுமானால் சிவத் தியானமும் சிவத் தொண்டும் முக்கியமாகும். மாணிக்கவாசக சுவாமிகள் குருந்தமர நிழலில் குரு உபதேசம் பெற்று ஞானநெறியை உலக்குக்கு காட்டியது போல் யோகர் சுவாமிகளும் தான் பெற்ற அனுபவ இன்பத்தை உலகுக்கு வழங்கினார். சிவபுராணம் பாடிப் பரவுதலும், தன்னடியவர்களைப் பாட வைப்பதும் அவருடைய தினாந்தர கடமையாக இருந்தது. நேரங்கிடைக்கும்போதெல்லாம் வேதாகம உண்மைகளை உணரக் கூடியவர்களுக்கு விளக்குவார். ஒருமுறை மகாத்மா
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 33
காந்தியடிகளை இரு ஐரோப்பியர்கள் தரிசித்துவிட்டு யோகர் சுவாமிகளையும் தரிசிக்க வந்தார்கள். அவர்களுடைய நல்வாக்குக்காகக் காத்திருந்தார்கள். “காந்தியடிகள் என்ன சொன்னார்” என்று கேட்டார் சுவாமிகள். “ஒன்றே குலம் ஒருவனே கடவுள்” என்றார் எனச் சொன்னார்கள். “ஆம் இதனைவிட நான் வேறு எதனைக் கூறுவது” என்றார் யோகர் கவாமிகள். இவர்களின் ஞான பக்குவத்தை நோக்கியே இலங்கைத் தேசாதிபதி சோல்பரிப் பிரபுவின் மகன் பிரதம சிஷ்யராகி இவர்வழி நின்றவர்.
மதம், இனம், மொழி என்ற பேதம் நோக்காது தன்னிடம் யார் யார் வருகை தந்த நேரத்திலும் அவ்வவர் மனக் கருத்தை அறிந்து ஆவன கூறிவிடுவார். ஒரு சமயம் பூரீ ரிக்கிரிபண்டா திசநாயக்கா என்ற பேருடைய புத்தசமய பிரமுகர் ஒருவர் முதல் முறை இவரைச் சந்திக்கச் சென்றார். சுவாமிகள் கையில் தும்புத்தடி கொண்டு கூட்டிக்கொண்டு நின்றார். வந்தவரைக் கண்டவுடன் திசநாயக்கா வாருங்கள் என்று அழைத்தார். அடுத்து “நீ உன்னை நினைத்துக் கொள், ஆண்டவனின் இராச்சியம் உனக்குள்ளேயே இருக்கு, சும்மா இரு” என்றார். மனிதனின் எண்ணங்களை ஊடுருவி அறிவதில் இவர் பேராற்றல் படைத்தவர். அவருடைய உபதேசங்கள் கேட்டாரது உள்ளங்களைப் பிணித்துவிடும். எத்தனையோ சித்துக்கள் கைவரப் பெற்றவராக இருந்த போதிலும் அவற்றையெல்லாம் அவர் வெளிக்காட்டவில்லை. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சுவாமிகள் பின்னிப் பிணைந்து விட்டார். நோய் நொடிகளுக்கு எல்லாம் அவர் ஏற்ற மருந்து சொல்லிக்கொடுப்பார். வைத்தியர்களால் மாற்ற முடியாத கொடியவியாதிகளையெல்லாம் இவர் மாற்றியுள்ளார். உடல்நோய், உளநோய், உயிர்நோய் யாவையும் மாற்றிவிடும் பெருவைத்தியர் இவர்.
சுவாமிகளின் தெய்வத் தோற்றம் பார்த்தாரைப் பரவசப்படுத்தும். வால் நரைமுடியும், அருளொழுகும் கண்களும், சிரித்த முகச் செவ்வியும் கண்டார் நெஞ்சைக் கவரக்கூடியன. எத்தனையோ முனிவர்கள், இருடிகள் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நாம் கண்கண்ட ஒரு பெரும் முனிவர்தான் கொழும்புத்துறை யோகர் சுவாமிகள். கல்லைப் பிசைந்து கனியாக்கி என்று பாடினார் மாணிக்கவாசக சுவாமிகள். அதே போன்று இரும்புதரும் நெஞ்சங்களை, பதவிமோகம் பிடித்த உள்ளங்களை, பணம்படைத்த இறுமாப்புடன் வாழ்ந்தோர் இதயங்களை ஈர்த்து ஈர்த்து உருக வைத்தவர் இந்த முனிவர். மக்கள் எல்லோரும் சிந்தையிற் கடவுளும் செயலிற் தூய்மையும் கொண்டு ஒழுக வழிகாட்டினார். இன்று அவர்களின் சிஷ்யர்கள் பலர் நம் நாட்டில் சமயம் வளர்க்கும் பெரும்பணியைப் புரிந்து வருகிறார்கள்.
சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைச் செய்யுள்கள் அற்புதமானவை. படிப்போர் உள்ளத்தைப் பரவசப்படுத்துபவை.
“காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டா காரசிவ போகமென்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித்ததும்பிப்பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது ஐயோ இன்புற்றிட நாமெடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்திரே” என்றார் தாயுமான சுவாமிகள். எங்கள் யோகர் சுவாமிகளும் நற்சிந்தனைப் பாடல்களின் மூலம் எம்மை ஆண்டவன் திருவருள் பெற அழைக்கின்றார்.
வறுமைப் பிணிக்கு மருந்தொன்றிருக்குது
வந்து பாருங்கள் நல்லூரில் வந்து மருந்தை அருந்திய மாதவர் .
வாழ்ந்தார் வாழ்ந்தார் வாழ்ந்தாரே
(இந்து ஒளி

நல்லூர்ப் பதியில் குரு தரிசனம் பெற்றவராகையால் அப்பதியைக் குறித்து அதிகமான நற்சிந்தனைப் பாடல்கள் பாடியுள்ளார். பாடல்கள் முழுவதிலும் வேதாந்த சித்தாந்தக் கருத்துக்கள் நிறைந்து மிளிர்கின்றன. சுவாமிகளின் உள்ளம் திருவாசகத்தில் திளைத்திருந்தமையை அவர் பாடல்கள் சிறப்பாகக் காட்டுகின்றன.
“பொறிவழியே போய்ப்புகுந்து புலம்பித் திரிவேளை நெறிவழியே நிறுத்தி நீயேநா னென்று உரைத்த பெரியவனைப் பித்தனெனப் பிறர்பேசும் பெருமானைச் செறிபொழில் சூழ்நல்லைநகர்த் தேரடியிற் கண்டேனே' இது கண்டபத்து என்ற பகுதி, குரு தரிசனங் குறித்துப் பாடியதாகும். மாணிக்கவாசக சுவாமிகள் தில்லையிலே பாடிய கண்டபத்தை இது ஞாபக மூட்டுகிறது.
நாயன்மார்கள் எல்லோரும் நிலையிலாப் பொருளை எடுத்துக் காட்டி அவ்வழி நாட்டம் செலுத்தாது நிலையான பொருளாகிய பரம்பொருளை நாடவேண்டும் என்றே வழிகாட்டினர். “நீ நாளும் நல்நெஞ்சே நினை கண்டாய்” என்றும் “புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்’ என்றும் பாடிப்பாடி அறிவுறுத்தினார்கள். அந்த வழியிலே சுவாமிகளின் அறிவுறுத்தலைப் பார்ப்போம்.
“சென்றன சென்றன வாழ்நாள் அனைத்தும் குன்றின குன்றின செல்வமும் இளமையும் ஒன்றிய வகையால் உஞற்றுக அறனைக் கன்றிய காலன் கணத்தினில் வருவான் ஆதலில் நின்றும் இருந்தும் நடந்தும் நினைமின்
இலகுவான முறையில் எம்மை உணரவைக்கும் திறனை இங்கு காணலாம். குருவாசகங்களாக அவரருளிய ஞான மொழிகளை எமது சிந்தையில் இருத்தல் வேண்டும். “எதை நீ பாவனை செய்கின்றாயோ அது நீ யாவாய்” என்பதும், “எப்பவோ முடிந்த காரியம்” என்பதும், “ஒரு பொல்லாப்புமில்லை” என்பதும் என்றும் சிந்திக்கச் சிந்திக்கத் தெவிட்டாத பொன்மொழிகளாகும்.
யாழ்ப்பாணமும் ஈழநாடும் செய்த தவப்பயனாக்த் தோன்றிய அவரது எண்ணங்களும் அருள் வாக்குகளும் என்றும் எம் இதயத்தை விட்டு நீங்கா. அவர்களின் ஞாபகமாக விளங்குகின்ற சிவ தொண்டன் சஞ்சிகையைப் போற்றி ஆதரிப்பது சைவ மக்களாகிய எமது பெருங்கடனாகும்.
வேண்டில் வேண்டாமை வேண்டிட வேண்டுமே
மிக்க அன்பருள் வாழ்ந்திட வேண்டுமே மாண்டு மாண்டு பிறந்திட நேரினும்
மாத வமனம் மற்றொரு பற்றின்றி ஊன்று பாதத் துறங்கிட வேண்டுமே
ஒம்சி வாய நமவென வேண்டுமே ஈண்டெ னக்கொரு சொல்லா லுணர்த்திய
என்கு ருபர புங்கவ சிங்கமே!
(நன்றி சித்த யோக சுவாமிகள் -கனடா சைவ சித்தாந்த மன்ற வெளியீடு - 2003)
1. விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 34
நல்லூர் வீதியில்
யேகர் சுவாமிகள்
Ι ισοσοσή எந்நாளும் நல்லூரை வலம்வந்து வணங்கினால் இடர்கள் எல்லாம் போமே.
அநுபல்லவி அந்நாளில் ஆசான் அருந்தவம் செய்தஇடம் அதுவாதலாலே அதிசயம் மெத்த உண்டு.
(எந்நாளும்)
σιμασΟΤΙή வேதாந்த சித்தாந்தம் கற்றதனால் என்ன வேடிக்கைக் கதைகள் பேசினால் என்ன வீதியில் வந்தொருக்கால் விழுந்து கும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற் போமே.
(எந்நாளும்)
சத்தியம் பொறுமை சாந்தம் அடக்கம் நித்தியா நித்தியந் தெரியும் நிபுணர் மத்திசெய் உத்தமர் பரவும் நல்லுரில் நித்தியம் வந்துபார்த்தமல் முத்தி நிச்சயமே.
(எந்நாளும்)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
விவேகானந்த சபையின் ஸ்தாபகர் தினம், சுவாமி விபுலானந்தரின் நினைவுதின வைபவம்
கொழும்பு விவேகானந்த சபையின் 108வது ஸ்தாபகர்தின விழாவும், சுவாமி விபுலானந்தரின் நினைவு தின வைபவமும் கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதியன்று மாலை, விவேகானந்த சபை மண்டபத்தில், சபைத் தலைவர் திரு. ஏ. ஆர். சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பூசை வழிபாட்டைத் தொடர்ந்து, இரத்மலானை விடுதி மாணவிகளது திருமுறைப் பாடல் இடம்பெற்றது. இந்து மாமன்ற பிரதித் தலைவர் திரு மா. தவயோகராஜா அவர்களும், விவேகானந்த சபை உப தலைவர் கலாநிதி இராமஜெயம் தம்பதியினரும் மங்கள விளக்கேற்றி வைத்தார்கள். கலாநிதி ஐயப்பதாஸ் சாம்பசிவ சிவாச்சாரியார் அவர்களது ஆசியுரையைத் தொடர்ந்து, இந்து மாமன்ற பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இதன் பின்னர் தலைமையுரை இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் போது சிறப்பு அம்சமாக சட்டத்தரணியும், கவிஞருமான திரு. ந. காண்டீபன் தலைமையில் “வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல” என்ற தலைப்பில் கவியரங்கம்
(இந்து ஒளி
 

நல்லைக் கந்தன் வழிபாடு
நில்லை வ்ாழ் ஆறுமுகனின் திருச்சந்நிதியிலும் கோயில் வீதியிலும் அடியார் செய்யும் வழிபாடு அற்புதமானது. காவடியெடுப்பர் சிலர்; பாவடி தொடுப்பர் சிலர்; காய் பசி யடக்கி யொரு முக்காலமு மிருப்பர் சிலர், வேல! முருகப்ப பிணி காயென உரைப்பர் சிலபேர்; சேவடி துதிப்பர் சிலர்; சாமரை யெடுப்பர் சிலபேர்; தீபநிரை வைப்பர் சிலர்; தூபமுறை யுய்ப்பர் சிலர்; சீரமுதளிப்பர் சிலபேர்; நாவடி படப் பிறவி வேரற படக் கருணை நாமமதிசைப்பர் சிலர், என்று பக்தர்கள் புரியும் தொண்டுகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் முருகபக்தியில் திளைத்த நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள். தாம் பாடிய நல்லூர்க் கந்தப் பதிகத்தில் நல்லை ஆறுமாமுகன் அருட் சந்நிதியில் வந்தபேர்கள் எவ்வகையான அருளைப் பெறுகிறார்கள் என்று பாடியுருகுகின்றார் சோமசுந்தரப்புலவர் அவர்கள்.
தில்லைநடராசனருள் சேயேயு னற்புதத் திருமுன்றில் வந்த பேர்கள் தீராத பிணிதீர்வ ரோரா யிரம்பிறவி
செய்தபா வங்க ளொழிவார் எல்லையில் லாவின்ப மெய்துவார் மலடிமார்
இனியமக வீன் றெடுப்பார் இருகனுங் குருடான பேர்கள்வாள் விழிபெறுவ
ரில்லார் இராச ராவர் சொல்லையறி யாமூடர் ஞானப்ர சங்கமழை
சொரிவர்நாள் கோள் துயர் கெடும் துன்மரண மகலுமா லென்னுடைய பழவினைத்
தொடர்பறா வகையென் னையோ வல்லையெனை யாளவுன் மனமினி யிரங்குவாய்
வளமேவு நல்லை நகர்வாழ் மங்கையுமை பாலனே செங்கைவடி வேலனே
மயில்வா கனக் கடவுளே.
(இலங்கையின் புராதன சைவாலயங்கள்’ என்ற நூலிலிருந்து)
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இடம்பெற்றது. இரத்மலானை இந்துக் கல்லூரி மாணவர்களான செல்வன் இ. தேவரட்ணம், செல்வன் க. சஹிந்தன், செல்வன் கு.வினேஸ், செல்வி செல்வநிதி செல்வநாயகம், செல்வி லவண்யா தெய்வேந்திரன் ஆகியோர் கவியரங்கில் கலந்து கொண்டார்கள். விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் வழங்கிய பேச்சும் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வின் போது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மாமன்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு திருமுருகன் "விவேகானந்தர் முதல் விபுலானந்தர் வரை” என்ற பொருளில் சொற்பொழிவாற்றினார்.
நிகழ்வின் இறுதி அம்சமாக விவேகானந்த சபை மாணவிகள் வழங்கிய நடன விருந்தும் இடம் பெற்றது. விவேகானந்த சபையின் உப தலைவர் திரு. க. ஜெகதீசன் வழங்கிய நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றன.
2 விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 35
இந்து மக்களால் பெரிதும் போற்றி மதிக்கப்பட்டவர் முத்தமிழ் நினைவு தினமாகும். இதனையொட்டி சிறப்புக் கட்டுரைக6ை
* சுவாமி விபுலானந்தர் ်--ဗေးဖd தம்பு சிவசு
தமிழ்க் கல்வியை உயர்நிலையில் கற்பிக்கும் பணியை ஏற்றவர் மரபுவழித் தமிழ்க் கல்வியையும் பயின்ற சுவாமி விபுலானந்தராவார். ஆறுமுகநாவலரை முன்மாதிரியாகக் கொண்டு அவருடைய வாழ்வை அடியொற்றித் துறவுபூண்டு தமிழுக்கும் இந்து சமயத்துக்கும் தொண்டாற்றிய விபுலானந்த esses, six: அடிகளாரை கிழக்கிலங்கையின் ஆறுமுகநாவலர் என்பர். இவரை ஆறுமுகநாவலரின் மறுபிறவியாகக் கொண்டு விபுலானந்த நாவலர் என்றும் அழைப்பதுமுண்டு என்கிறார் பேராசிரியர் சு. வித்தியானந்தன். ஆறுமுகநாவலரிடத்து விபுலானந்த அடிகளாருக்கிருந்த மதிப்பினை நாவலர் மீது அவர் பாடிய நாவலர் மெய்க்கீர்த்தி மாலை' என்னும் நூலில் இருந்து அறியலாம்.
அண்ணாமலைப்பல்கலைகழகத்திலே தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றித் தமிழையும் சைவத்தையும் வளர்த்தவர் அடிகளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்க் கல்லூரி மண்டபத்தை ஆறுமுகநாவலரது திருவுருவப்படமும், விபுலானந்த நாவலரின் திருவுருவப்படமும் அலங்கரிக்கின்றன. விபுலானந்த அடிகளார் இளமையிலே திருக்குறள், நன்னூல், சூடாமணி முதலிய நூல்களைப் பயின்றதோடு புராணங்களையும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வியைக் கல்முனை மெதடிஸ்த பாடசாலையிலும், மட்டக்களப்பு மைக்கேல் கல்லூரியிலும் பயின்றார். பயிற்றப்பட்ட , ஆசிரியரானபின் மைக்கேல் கல்லூரியிலும், யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். விபுலானந்த அடிகளார் இலண்டன் கேம்பிரிட்ஜ் சீனியர் தேர்விலே தேர்ச்சி பெற்றார். பின்னர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிற் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியரானார். சம்பத்திரிசியார் கல்லூரியில் விஞ்ஞான ஆசிரியராக இருந்த காலத்திலே இலண்டன் பி. எஸ்சி தேர்விலே தேர்ச்சியடைந்தார். மேலும் மதுரைத் தமிழ்ப் பண்டிதராகவும் விளங்கினார். அடிகளார் இவ்வாறு பெற்ற விஞ்ஞான, தமிழ்ப் பேறுகளே அவர் பிற்காலத்தில் பலதுறைப்பட்ட ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு வழிகோலிக் கொடுத்தது.
மேலும் ஆறுமுகநாவலருடைய கல்விசார்ந்த திட்டங்கள் விபுலானந்தரைப் பெரிதும் கவர்ந்தன. “கல்விச்சாலைகள் பல நமது நாட்டிலிருக்கின்றன. இவற்றுட் பெரும்பாலானவை புறமதத்தாரால் நடத்தப்படுவன. புறமதத்தாருடைய முதல் நோக்கம் தமது மதத்தைப் பரப்புவது. அதற்குக் கல்விச்சாலைகள் கருவியாகவும் நிலைக்களமாகவும் இருக்கின்றன. ஆதலால் நமது சிறுவரை நமது சமய நெறியிற் பயிற்றுவதற்கு நமக்கென்று கல்விச்சாலைகள் வேண்டுமென்பதை முதன் முதல் எடுத்துக் கூறியவரும் அதற்காக வேண்டுவனவற்றைச் செய்தவரும் காவலரும் பாவலரும் புகழும் பெருந்தகைமையும் வாய்ந்த பூரீலழரீ
(இந்து ஒளி
 

வித்தகர் சுவாமி விபுலானந்தர். ஜூலை 19 ஆம் திகதி இவரது ாயும் சிறப்புக் கவிதைகளையும் “இந்து ஒளி' தருகிறது.
O ஒரு பல்கலைக்கழகம் 3
ஆறுமுக நாவலரேயாவார். அவர் காட்டிய நன்முன்மாதிரியைக் கடைப்பிடித்தே நமது நாட்டிற் சைவத் தமிழ் வித்தியாலயங்களும் ஆங்கில வித்தியாலயங்களும் எழுந்தன” என்று விபுலானந்தர் கூறியுள்ளார்.
நாவலரின் வழியிலே விபுலானந்த அடிகள் கிழக்கிலங்கையிற் பல பாடசாலைகளை நிறுவினார். திருகோணமலை இந்துக் கல்லூரியும், கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலயமும் இவரது முயற்சியாற் சிறந்த கல்வி நிலையங்களாகத் திகழ்ந்தன. காரைதீவு,கல்முனை, ஆரையம்பதி, கொக்கட்டிச்சோலை முதலிய இடங்களிலும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆறுமுக நாவலரின் அடிச்சுவட்டில் விபுலானந்த அடிகள் கல்விப்பணி ஆற்றியபோதும், அவரது கல்விப் பணிக்கு இராமகிருஷ்ண மிசனின் பண உதவியும் நிறுவனப் பலமும் இருந்தன. அவர் பணி இராமகிருஷ்ண சங்கத்தின் ஊடாகவே செயற்பட்டது. விபுலானந்தர் துறவியாவதற்கு முன் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமையாசிரியராக 1920ஆம் ஆண்டிலிருந்து கடமையேற்று, வடபகுதி மக்களின் சமயக் கல்விக்காகப் பெரிதும் உழைத்தார். அத்துடன் யாழ்ப்பாண ஆரிய திராவிடப் பாஷாபிவிருத்திச் சங்கத்தைச் சீரான முறையில் அமைத்தார். அதன் பின்னர் திருகோணமலை இந்துக் கல்லூரித் தலைமையாசிரியராக சிலகாலம் தொண்டாற்றினார். திருகோணமலையில் கல்விப் பணியாற்றியபின் மத்திய மாகாணத்தில் ஒரு சைவ மகாசபையை நிறுவி அங்கும் சைவசமயக் கல்வியைப் பரப்பிய பெருமை அடிகளாருக்குரியது.
1943ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்கு முதன் முதலாகப் பேராசிரியர் பதவியை ஏற்படுத்தியபோது, அதனை ஏற்கும்படி விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக் கொழும்பிலிருந்து தமிழ்ப்பணி செய்ய அடிகளார் வந்தார். இவ்வாறு விபுலானந்த அடிகளாரது கல்விப்பணி மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி, கொழும்பு ஆகிய பிரதேசங்களில் செறிந்து ஈழம் முழுவதிலும் பரந்திருந்தது.
மயிலாப்பூரில் இருந்து வெளிவந்த “இராமகிருஷ்ண விஜயம்” என்னும் தமிழ்ச் சஞ்சிகைக்கும், ‘வேதாந்த கேசரி’க்கும் ஆசிரியராக இருந்தமையும், 1939ஆம் ஆண்டில் இமயமலைச் சாரலிற் பிரபுத்த பாரதம்' என்னும் சஞ்சிகைக்கு ஆசிரியராக நியமிக்கப் பெற்றமையும், அண்ணாமலையிலும் இலங்கையிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் முத்தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றியமையும் கல்விபற்றிய அவரின் சிந்தனையை விசாலமாக்கின.
விபுலானந்த அடிகளாரது நூல்களில் மொழிபெயர்ப்பு நூல்களாக ஐந்து காணப்படுகின்றன. அவை விவேகானந்த சுவாமிகளின் ஆக்கங்களின், தமிழ்மொழிபெயர்ப்புகளாகும். அவரது இன்னொரு நூலாகிய மதங்க சூளாமணி’ என்னும் நாடகத் தமிழ்நூல் முக்கியமானது. அது ஆங்கில, வடமொழி
3. விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 36
நாடகங்களின் மொழிபெயர்ப்பாகத் தமிழ் நாடக இலக்கண நூலாக விளங்குகின்றது. யாழ்நூல் அடிகளாரின் பல்லாண்டு ஆராய்ச்சியின் பயனாக வெளிவந்துள்ள தலை சிறந்த இசைவரலாற்று ஆராய்ச்சி நூல்.
அடுத்து விபுலானந்த அடிகளாரின் கட்டுரைகள் பல்துறைப்பட்டவை. இவற்றை இசையாராய்ச்சிக் கட்டுரைகள், சமயம் சார்ந்த கட்டுரைகள், மொழியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள், கல்விக் கொள்கைகள் பற்றி கட்டுரைகள், அறிவியற் கட்டுரைகள், மறுமலர்ச்சிக் கருத்துடைய கட்டுரைகள், தலயாத்திரைக் கட்டுரைகள் எனப் பலவாறு வகுத்துக்கூறலாம். பெரும்பாலான கட்டுரைகள் இந்தியாவிலுள்ள இலக்கியத்தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன என்பதும் கவனத்தில் கொள்ள முடியும். உதாரணமாகச் சுதேசமித்திரன், செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப் பொழில், சரஸ்வதி, விவேகபோதினி, கலைமகள் போன்ற தமிழகச் சஞ்சிகைகளைக் குறிப்பிடலாம். இவற்றில் அடிகளாரது உரைநடை, இலக்கியச்சுவை பயப்பதாய், சில வேளைகளிற் செய்யுள் நடைபோல் அமைந்ததாய், பொருட்செறிவு, ஆற்றொழுக்கான போக்கு, தெரிந்தெடுத்தமைந்த சொற்கள் ஊடான விடய விளக்கம் என்பவற்றைக் கொண்டதாய்க் காணப்படுகின்றது.
விபுலானந்த அடிகளார் மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தை தமிழ்ச் சங்கம், சைவ சித்தாந்த சமாசம் போன்ற சங்கங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் இயல், இசை, நாடகம் பற்றியும் சொற்பொழிவாற்றியிருக்கின்றார். இச் சொற்பொழிவுகள் இனிய சொற்றமிழ்ப் பேராசிரியர்கள், மகாவித்துவான்கள், ஆராய்ச்சியாளர் போன்றோர் கூடிய அவையில் இடம் பெற்றவையாகும். இதனால்தான் இவர் முத்தமிழ் வித்தகர்என்று போற்றப்பட்டார். விபுலானந்தர் தமது ஆக்கங்களின் ஒப்பியல் நோக்கில் பழமையையும், புதுமையையும் மேற்றிசைச் செல்வத்தையும் கீழைத்தேயப் பண்பாட்டையும் ஆழமாக ஆராய்ந்து, அவற்றிலே உயிர்துடிப்புடன் உள்ளவற்றை எடுத்துக் காட்டிச் செம்மை சேர்த்தார்.
வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, ஆங்கிலேயரின் காலணித்துவ ஆட்சிக் காலத்தில் எமது நாட்டின் மொழி, சமயம், கலை கலாசாரம், பண்பாடுகள் எதிர்நோக்கிய சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்து அவற்றைப் பாதுகாக்கும் பெரும்பணியினை முன்னெடுத்த எம்மூதாதையர்களை நன்றியுடன் நோக்குகின்றோம். அவர்கள் ஆற்றிய தன்னலங்கருதாப் பணிகள் தமிழ் கூறும் நல்லுலகத்தில் இன்றும் மதித்துப் போற்றப்படுகின்றன.
அந்த வகையில் ஈழநாட்டின் தமிழின் ஞாயிறாக உதித்த பெருந்தகை - அருந்தமிழும், ஆங்கிலமும் திருத்தமுறப் பயின்று எண்ணுால், பூதநூல், வேதநூல் என்னும் பல்கலையும் தேர்ந்து, இமயம் முதல் ஈழம்வரை தமிழ்தொண்டுடன், சமயத் தொண்டும் செய்தருளிய வித்தகச் செம்மல் விபுலானந்த அடிகளார் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழின்பால் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார். தமிழ் மரபு பற்றிய அவருடைய தெளிநிலைப் பார்வைகள் அவரது பணிகளின் நெறிமுறைகளிலே பெரிதும் காணமுடிந்தது.
விபுலானந்த அடிகள் கிழக்கு மாகாணத்திலுள்ள காரைதீவு என்னும் இடத்தில் சாமித்தம்பி-கண்ணம்மையார் தம்பதியினரின் புத்திரராக 1892ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் இருபத்தியாறாம் திகதி பிறந்தார். மயில்வாகன் என்று அழைக்கப்பட்டவர் 1924இல் இராமகிருஷ்ணமிசனில் சேர்ந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். சமூகத்தைத் துறந்து, தனித்திருந்து இறைவழி பாட்டிலே ஈடுபடும் பண்டைய துறவற வாழ்க்கை முறைக்கு மாறாக, சமூகத்தில் மக்களோடு இணைந்திருந்து, அவர்களுக்கு ஆற்றும்
(இந்து ஒளி

தன்னலமற்ற தொண்டையே இறைவழிபாடாகக் கொண்டு உய்யும் புதிய துறவு மார்க்கத்தை இன்றைய காலத்தின் தேவையாக அமைத்தவர் சுவாமி விவேகானந்தர். இப்புதிய துறவு மார்க்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள் விரும்பும் துறவிகளின் அமைப்பாக 'இராமகிருஷ்ண மிஷன்' அவரால் தோற்று விக்கப்பட்டது. இந்த மிஷனின் பெருமைமிகு மூத்த துறவிகளில் ஒருவராகவும் முதலாவது தமிழ்த்துறவியாகவும் சுவாமி விபுலானந்தர் மதிக்கப்பட்டார்.
முத்தமிழ் வித்தகர்' எனத் தமிழ் உலகம் பெரிதும் போற்றும் வகையில் சுவாமி விபுலானந்தரின் இலக்கிய ஆழுமை ஆழ்ந்தும் விரிந்தும் காணப்பட்டது. அத்தகைய இலக்கியப் பணிக்கு மத்தியிலும், சமூகத் தொண்டுக்கு அதுவும் குறிப்பாகக் கல்வித் தொண்டுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டார். இலக்கியப் பணியும் சமூகப் பணியும் அவரது ஆளுமையின் இரு பரிமாணங்கள் எனலாம். பல்கலைக் கழக நிலைக் கல்வி பற்றியும் முறைமை பற்றியும் போதனா மொழி பற்றியும் அவரது கருத்துக்கள் மிகவும் முக்கியமானவை. தமிழ் ஆய்வின் இக்கால விரிவுக்கு வேண்டிய வித்துக்களை அவரது புலமை ஈடுபாடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழ் இலக்கியத்தினூடே வெளிவருகின்ற சிந்தனை மரபு பற்றிய அக்கறையை விபுலானந்தரிடம் காணலாம். இயற்கை அறிவியல் நோக்கு முறையினை உள்வாங்கிய ஒவ்வொரு வகையிலும் அதேவேளை ஆத்மார்த்த அழகியல் துறையில் ஈடுபாடு கொண்டவர் என்றவகையிலும் தமிழ்ப் பண்பாடு பற்றிய பல விடயங்களையும் பன்முகப் படைப்பாக்கும் ஆற்றலுடையவராக விளங்கினார். r
விபுலானந்தரின் தமிழ் நாடக ஈடுபாடு தமிழிசை ஆய்வு ஆகியவற்றை நோக்கும்போது அவரால் எழுதப்பட்ட மதங்க சூளாமணி என்னும் நாடக நூலும், இசை ஆய்வின் வெளிப்பாடாகத் தோன்றிய யாழ்நூலும் மிகவும் முக்கியம் பெறுகின்றன. பொதுவாகச் சுவாமி விபுலானந்தர் பற்றிக் கூறும் போதும், எழுதும்போதும் பெரும்பாலானோர் அவரது தமிழ்த்தொண்டினையும் அரும்பெரும் பொக்கிஷமாகத் தமிழ் இசையுலகத்திற்கு வழங்கிய யாழ் நூலையும் குறிப்பிடத் தவறமாட்டார்கள்.
சுவாமி விபுலானந்தரைப் பற்றி நோக்குவோமானால் அவர் ஒரு பல்கலைக் கழகமாகவே இருந்து செயற்பட்டார் என்பது புரியவரும். ஆசிரியராக, தமிழ்ப் பண்டிதராக, விஞ்ஞான்ப் பட்டதாரியாக, கல்விக் கூடங்களின் அதிபராக, பாடசாலைகளின் முகாமையாளராக மட்டுமன்றி பல்கலைக்கழகங்களின் (இலங்கைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம்) தமிழ்த்துறைப் பேராசிரியராக, எழுத்தாளராக, பேச்சாளராக, பல்சுவைக் கவிஞராக (வெள்ளை நிறப் பூவுமல்ல, வேறெந்த மலருமல்ல, உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது) பதிப்பாசிரியராக, பல சஞ்சிகைகளின் ஆசிரியராக, மொழியியல் ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக விற்பன்னராக, ... யாழ் - இசைக்கருவி பற்றிய ஆய்வாளராக இன்னோரன்ன பல்கலைப் பரிமாணங்களைக் கொண்டவராக வாழ்ந்து காட்டினார்.
தமது பிறந்த ஆண்டின் பெருமையையும், தமது ஆய்வு நூல் தோன்றுவதற்கு வித்திட்ட சிலப்பதிகாரத்தின் மகிமையையும், யாழ் நூலில், நூல்தோன்றிய வரன் முறையும் அவையடக்கமும் நூற்பயனும் என்ற பகுதியில் சுவாமி விபுலானந்தர் பின்வருமாறு இயம்பியுள்ளார்:
“தமிழ்நாடு செய்த தவப்பயனாகத் தோன்றி, சங்க நூற் செல்வத்தை தமிழுலகிற்கிந்த அறிவுக் கொடை, பெரு வள்ளலும், பெரும் பேராசிரியர், தென்னாட்டுக் கலைச் செல்வர், எழுத்தறி புலவர் எனும் சிறப்புப் பெயர்களுக்குச் சிறப்பளித்த சாமிநாதையர்
34. விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 37
அவர்கள், சிலப்பதிகாரத்தை முதன் முதலாக அச்சிட்டது.1892ஆம் ஆண்டிலாகும். அந்த ஆண்டிலேயே யானும் பிறந்தேனாதலினாலே பள்ளியிற் படிக்கும் காலத்திலே மூத்தோர் கையிலே அந்நூற் பரிதியிருக்கக் காண்பதும் என் கையில் அதைத் தீண்டுவதும் எனக்குப் பேருவகையைத் தரும் செயல்களாக இருந்தன.”
கல்வி மூலம் ஆழ்ந்த அறிவின் மூலம் நாமாகவன்றித் தாமாகவே பட்டம் பதவிகளும், பேரும் புகழும் ஒருவரைச் சென்று சேரும் என்ற உயரிய கருத்தினைக் கொண்டவராகிய சுவாமி விபுலானந்த்ர்.
"இருக்குமிடந்தேடி என்பசிக்கே யன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தாலுண்பேன்’ என்ற கருத்தமைவாகக் கூறி, “தொண்டு புரிவதையே குறிக்கோளாகக் கொண்டு இரவு பகல் ஓய்வற்றுக் கல்வியைப் பெருக்கிப் பொதுக் கழகங்களில் விரிவுரையாற்றுதல், நூலெழுதுதல், திங்கள் வெளியீடுகளிலே ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுதல் என்றித்தகைய தமிழ்த் தொண்டுகளைச் செய்து கொண்டு வந்தால், வேண்டிய உயரிய இடமெல்லாம் தானாகவரும்” என்கிறார்.
ஆராய்ச்சித் துறையில், முன் மாதிரியான பணிகளில் ஆர்வத்துடன் சுவாமி விபுலானந்தர் செயற்பட்டு வந்துள்ளார். இத்தகைய முயற்சிகளின் சிகரமாக விளங்குவது பன்னெடுங்கால ஆராய்ச்சியின் விளைவாக அடிகள் ஆக்கியளித்திருக்கும் யாழ் நூல்' எனும் அரும் பெரும் பொக்கிசமாகும். தமக்கிருந்த தமிழ்ப் பற்றும் பண்டைய இலக்கிய ஈடுபாடும் காரணமாக, அவர் ஏற்கனவே பெற்றிருந்த பூதநூலறிவையும், கணித நூலறிவையும் துணை கொண்டு பண்டைய தமிழரின் இசைக் கருவிகளைத் துருவித் துருவியாராய்ந்து பண்டையாரின் வரலாறு, அமைப்பு முறை போன்ற அரிய விடயங்களையெல்லாம் திரட்டித் தொகுத்துத் தம் ஆராய்ச்சி முடிபுகளை யாழ் நூல் வாயிலாக வெளிக் கொணர்ந்தார். விபுலானந்த அடிகளாரது இலக்கிய இலக்கணப்புலமை, மற்றையோர்க்கு எட்டாதவாறு கருகலாய்க் கிடந்த சிலப்பதிகாரத்து அரங்கேற்றுக் காதைக்கு விளக்கந் தந்தது. பழந்தமிழ் இசைக்கருவிகளான சகோட யாழ், பேரியாழ், சீறியாழ், மகரயாழ் என்னும் இசைக்கருவிகளெல்லாம் அடிகளாரது அகச்செவியில் இன்னிசை பொழிவதை உணர்ந்தார். முத்தமிழ் இலக்கியமாம் சிலப்பதிகாரம் காட்டிய அந்தப் பழம்பெருஞ் செல்வத்தை விபுலானந்த அடிகளார் விஞ்ஞானக் கண்கொண்டு நோக்கினார். அவரது விஞ்ஞான ஆளுமையும் கணிதப் புலமையும் இலக்கியச் செல்நெறியும் அத்தகைய ஆய்வை மேற்கொள்ள வழிசமைத்தன. தமிழிசை அமைப்புகளுக்குரிய நீண்ட வாய்ப்பாடுகள் யாவும் அவருள்ளத்தே தோன்றிய 'நீருள்ளிருந்தெழுந்து நின்ற மடநல்லாராக ஏழிசைகளையும் உருவகம் செய்து யாழ் நூல் படைக்கலாயினர்.
பாயிரவியல், யாழுறுப்பியல், இசை நரம்பியல், பாலைத் திரிபியல், பண்ணியல், தேவாரவியல், ஒழியியல் என்னும் ஏழு இயல்களாக வகுக்கப்பெற்ற பழந்தமிழ் இசைச் செல்வம் யாழ் என்னும் பெயரோடு தரணிக்குத் தரப்பட்டது. அன்னைத் தமிழின் சிறப்புக்கு யாழ்நூல் மகுடம் சூட்டியது. இந்த யாழ்நூல் வெளிவருவதற்கு முன்பு சென்னைப் பல்கலைகழகத்தின் சார்பில், கழக மன்றில் சுவாமி விபுலானந்தர் தொடர்ந்து எட்டு நாட்கள் பண்டைத் தமிழிசைபற்றி நான்கு சொற் பொழிவுகளும், தமிழ்க்கலையும் சிற்பமும், தமிழும் அறிவியல் ஆராய்ச்சியும் பற்றி இரு சொற்பொழிவுகளும் ஆற்றியிருந்தார்கள்.
அச்சொற்பொழிவின்போது “சங்க இலக்கியங்களிலே விலை மதிக்கவொண்ணாத பொக்கிசங்கள் இருக்கின்றன.
(இந்து ஒளி

அப்பொக்கிசங்களால் தற்காலத்துத் தமிழ் மக்கள் பயனடையவில்லை. அவற்றை அறிவுமேம்பாட்டிற்காக உபயோகித்துக் கொள்ளவுமில்லை. எனவே தற்கால வாழ்க்கை அதிகப்படியான பலன் தருவதாகச் செய்ய உதவியான படிப்பினைக்காகவே நாம் பழமையான நூல்களையும் வாழ்க்கை முறைகளையும் ஆராய்கின்றோம்” என்று சுவாமி விபுலானந்தர் ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியுள்ளார்.
“ஐயிரண்டு ஆண்டுகளாக நேரங்கிடைக்கும் போதெல்லாம் முயன்று குருவருளினாலும் தமிழ்த் தெய்வத்தின் நோக்கினாலும் இவ்வாராய்ச்சி நூலினை ஒருவாறு எழுதி முடித்தேன். இசை ஆராய்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவாகிய கணக்கு முறைகளையும், பிறவற்றையும் மாணவர்கள் படித்துப் பயனடைவார்களாக” என்று ஆராய்ச்சியின் நோக்கம் வருங்கால சமுதாயத்தைச் சென்றடைய வேண்டும் என்பதை உணர்த்தி நிற்கின்றதாக அமைகின்றது.
1947ஆம் ஆண்டு ஆனித்திங்கள் 20ஆம் நாள் சென்னை மாநிலக்கல்வி மந்திரி அவிநாசலிங்கம் செட்டியார் அவர்கள் தலைமையில், கரந்தைத் தமிழ்ச்சங்க ஆதரவில் திருக்கொள்ளம் புத்தூரில் அறிஞர் பேரவையின் முன்யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது. ஆராய்ச்சித் திறனும் இசைக் கருவி வரலாற்றையும், அமைப்பினையும் ஆராய்ந்துவெளியிட்டமுடிபுகளும், கருத்துக்களும் இசைக் கல்வியில் நாட்டங் கொண்டோருக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. தமிழுக்கு உரமூட்டும் வகையில் அவர் ஆக்கிய யாழ் நூல் மறைமுகமாகக் கல்வித் துறைக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளமை சிறப்பே.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS அருணகிரிநாதர் அருளிய நல்லூர் கந்தன் திருப்புகழ்
பூத்தார் சூடுங் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலுங்கட்கமு மதன்விடு போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் விடுதூதும் போற்றாய் நாளுங்கைப்பொருளுடையவர் மேற்றாளர்தம் பற்றிடு ப்ரமையது பூட்டா மாயங்கற்றமை விழியினர் அமுதூறல் வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரகியர்
நோற்றே நூலின் சிற்றிடையிடைபடை வாட்டாய் வீசுங்கள்ப்புரம்ருகமதம் அகிலாரும் மாப்பூணாரங்கச்சணி முலையினர்
வேட்பூனாகங்கெட்டனணுனதுமெய் வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட அருளயோ ஆத்தாள் மால்தங்கைச்சிகரிைகையுமை
கூத்தா டானந் தச்சிவை திரிபுரை யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி புவனேசை ஆக்கா யாவும் பற்றியெதிரிபுற
நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை யாட்டா லீசன் பக்கம துறைபவள் பெறுசேயே ஏத்தா நாளுந்தர்ப்பண செயமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர யாப்பா ராயுஞ் சொற்றமிழருள்தரு முருகோனே ஏற்போர் தாம்வந் திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்பரபை நெடுமதிள் யாழ்ப்பா னாயன் பட்டின மருவிய பெருமாளே!
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 38
తీ சுவாமி விபுலானந் சிறப்புக்க
சுவாமி விபுலானந்தரின் நினைவு தினத்தையொட்டி கொழு மண்டபத்தில் நடத்திய நிகழ்வின்போது கவிஞரும், சட்டத்த நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ” என்ற பொருளில் கொழும்பு இந்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் சுவாமி 6 a56film6Moirat56ir Booooo:
ஆன்மீகப் பணி
செல்வி செல்வநிதி செல்வநாயகம்
ஈழத்தில் புகழ் வளர்த்திடும் கிழக்கினில் இலங்கிடும் காரை தீவில் இந்த ஞாலத்தில் உயர்நிலை பெற உழுதிடும் உழவர் மரபில் கார் காலத்திலே விழும் மழையென முத்தமிழை கவினுறச் செய்யும் வகையில் வளர் சீலத்திலே உயர் விபுலானந்தரெனும் எம் மலரடியார் வந்துதித்தார் வையத்தில்
பேரினிலே மயில்வாகனன் என்று தம் பெற்றோர் அழைத்து மகிழ அடிவேரினிலே பழுத்ததோர் பலாவென விவேகத்தில் உயர்ந்து விளங்கி எழில் ஊரினிலே சிறந்தோங்கிய மதுரையினில் ஒளிவளர் தமிழ்ச் சங்கமதில் கல்விப் பேரினிலே நற் பண்டிதராய் நின்றார் மண்ணின் பெருமை ஓங்க
சங்கத்திலே - அவர் பண்டிதரான பின் தன் மனம் மிகவும் அடக்கி மிளிர் வங்கத்திலே - புகழ் வாய்ந்த சிவானந்தா மாமுனி அவர்கள் அருளல் வளர் அகிலத்திலே சுகங்கள் துறந்து குடத்தங்கத்திலே ஒளிர் விபுலானந்தர் என்னுமோர் தரமிகு பெயரை அடைந்தார் இந் ஞாலத்திலே!
அறிவியல் உன்னைப் பாங்காய் அரவணைத்து விஞ்ஞானப் பட்டத்தை அழகாய் அணிவிக்க செம்மையுறும் அறநெறியை அன்புருவாய் போற்றி நன்மையிலே பெரும் நன்மையாற்றி ஆன்மீகம் மேலோங்க வழிகாட்டிட இந் ஞாலத்தில் ஞானியாய் எம் உள்ளத்தில் என்றென்றும் நிலையான இடம் பிடித்தாய்!
பண்டிதன் பன்மொழி வித்தகன் பேராசான் எனப் பல பட்டங்கள்
(இந்து ஒளி

தர் நினைவுதினம் తీ வியரங்கம்
ம்பு விவேகானந்த சபை 2010.07.25 ஆம் திகதியன்று சபை ரணியுமான திரு. ந. காண்டீபன் தலைமையில் “வெள்ளை இடம்பெற்ற கவியரங்கில் கலந்துகொண்ட இரத்மலானை, விபுலானந்தரின் பல்வேறுபட்ட பணிகளைப் பற்றி வழங்கிய
உனை நாடி வந்தாலும் பார் போற்ற - பற்றற்ற துறவியாய் பதவியேற்று ஈரநெஞ்சமொடு - வீரத் துறவியாய் இணையற்ற புகழ் பெற்றாய்! உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது என உண்மையன்பினை மாந்தருக்குப் பறைசாற்றி இறைபோதத்திலே சிறப்புற்றதோர் ஞானியாய் அறநெறியை இறையருளால் புரிந்து எண் திசையினிலே - சமய மாநாடு. கருத்தரங்கு என சமயப் போதனை ஆற்றி சாதனை புரிந்தாய்! ஈசன் உவக்கும் இன்மலர் கோயில் oro IIg moof மாலைகள் என பல மாலைகள் இயற்றி சமயச் சொற்பொழிவாற்றி வேதாந்த மரபிற்கு முன்னோடியாகி அரனடி சேர்ந்தாய்
இாமகிருஷ்ண பரமஹம்சர் வழிநடந்து இராமகிருஷ்ண சங்கத்தின் துணைகொண்டு எங்கும் மாணவர் இல்லங்களை அமைத்து இந்து சமயம் பாரெல்லாம் ஓங்கிடச் செய்தாய்! திண்மையிலே - மதி உண்மையிலே மிகத் தெளிவுடன் சேவை புரிந்து மனத் தன்மையிலே - பரிபாலனம் ஆற்றி Loofbboir மாணிக்கமாய் மங்காத கீர்த்தியனாய் அன்புறும் ஆன்மீக நெறியினை தழைக்கச் செய்தாய் - அண்ணலே! உன் புகழ் அண்டம் முழுவதும் ஓங்கட்டும்
உன் மலர்ப்பதம் வாழி வாழி!
LLLLLLLLTLLTLLLLLTLLLLLTLLLLLTLLLLLTLLLLLLLLLLLTLLL
கலைப் பணி
செல்வி லவண்யா தெய்வேந்திரன்
மட்டுநகர் மாநகரின் மண்னதிலே காரேறு மூதூராம் காரைதீவு தந்த சீராளன் மயில்வாகனன் எனும் செல்வன் பேராறுபோல பெரும்பணிகள் செய்த பெருமைதனை உரைப்பேன்
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 39
பொறுமையுடன் கேட்பீர் தன்னை வளர்த்தவனே தரணியை வளர்த்திடுவான்!
சின்ன வயதினிலும் சீரிளமைப் பருவத்திலும் வண்ணத் தமிழ்மொழியின் இலக்கணமும் இலக்கியமும் வட மொழியும் ஆங்கிலமும் நல்ல பல ஆசான்கள் வழிகாட்டக் கற்றார் ஆங்கில ஆசிரியராய் வடமொழி விற்பன்னராய் வல்ல தமிழ்ப் பண்டிதராய் வாண்மையுற்று விளங்கியவர் பேச்சினாலும் மூச்சினாலும் தாய்மொழிக்கு பணியாற்றும் தகைமைதனை தான் கொண்டார்
இராமகிருஷ்ணர் போதனைகளை ஏற்று பிரபோதசைதன்யராகி பிரமச்சரியம் காத்து சுவாமி விபுலானந்தர் எனப் பெயரும் கொண்டார் அண்ணாமலை பல்கலைக்கழகத் தமிழ் பேராசிரியர் மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் கலைச்சொல் ஆராய்ச்சிக் கழகத்தவர் என தமிழகத்தில் பதவியல வகித்த அனுபவஸ்தர் எத்தனை பெருமை எத்தனை திறமை கல்விப்பணி சமூகப்பணி, சமயப்பணி என பற்பல பணிகள் - எல்லாவற்றுக்கும் மகுடமாய் விபுலானந்தப் பெரியார் தம் கலைப்பணி இன்று தலை சிறந்து நிற்கிறது!
இலங்கைப் பல்கலைக்கழகம் பெற்ற முதல் தமிழ்ப் பேராசானாய் விளங்கி நின்ற வேளை தன்னிலே துலங்கும் தமிழை துறைபோக கற்று முதுகலை மாணி வித்துவான் தேர்வுகள் நடத்தும் முயற்சியை முன்னெடுத்தவரே!
கலைச்சொல் ஆராய்ச்சிக் கழகமதில் இணைந்து புதிய கலைச்சொல்லாக்கம் பணிதன்னில் அயராதுழைத்த அண்ணலே இவர் கணிதமொடு வேதிநூல், பூதநூல் பூகோளம், விலங்கு நூல் உயிரியல் தன்னில் புதிய பல கலைச்சொற்கள் உருவாக்கித் தந்தார்!
சுருக்கம், விளக்கம் தெளிவுதனைக் கொண்டு தமிழுருவம் பொருத்தமுற புதுவடிவம் கொடுத்தாள் வாய்த்தபொழுது வடமொழியும் பயன்படுத்தி வகை வகையாய் கலைச்சொற்கள் வந்ததுவேதமிழில் வண்ணமுறக் கலைச்சொல் அகராதி நூலும்- சென்னை தமிழ்ச் சங்கமதில் வெளியிட்டு வைத்தார்
இசைத் தமிழில் ஈடுபாடு கொண்டதனால் அவரும் இனிய நற்கவிதைகளை எழுதிவைத்தார் பல்வேறு பாவகைகள் கையாண்டு நல்ல ஓசைநயம் பொருள்நயம் ஒப்பற்று விளங்க
uolorg goయశాuld660 ప్రయతాundry) ప్రuold6000
இந்து ஒளி

என்ற கொள்கை துலங்க காலத்துக்கேற்ற கவிதை பல தந்தார் புதுக்கவிஞன் பாரதியின் புகழ்பரப்ப என்றே தமிழகத்தில் பாரதி கழகமதை அமைத்து - அவன் புகழ் மணக்க பலவாறு பிரசாரம் செய்தார்.
ஆண்டு பதினான்கு காலம் ஆராய்ச்சி செய்தே அருங்கலை நிதியமெனும் யாழ்நூலை தந்தார். மும்மொழிப் புலமை நூலறிவு விஞ்ஞான விளக்கம் சங்கீதப் புலமை சேர்ந்தமைந்த அறிவால் விதைமதிப்பற்றதொரு விளைபொருளய் ஆங்கே பிறந்ததொரு யாழ்நூல் பெருமையுடன் நன்றே! தமிழர் தம் தொன்மை மிகு தூய இசைக் கருவி யாழின் வகைகண்டு துலங்கும் இசை அமைப்பதனை வகுத்து வழிகாட்டி வண்ணமுறும் யாழ் நூலின் வரவதனால் இசையும் புதுப் பெண்ணெனவே பொலிந்து புதிய நடை போட்டாள்!
அழகியல் கல்விக்கு அடித்தளம் எனவே இசையொடு சித்திரம் இணைந்து நல்கல்விச் சிந்தனையாக கலைத்திட்டம் வகுத்தார் கடல்மீனும் கவிபாடும் காற்றோசை கீதமெழும் மருதமும் நெய்தலும் மருவிடும் மட்டுநகள் இசையிலே சிறந்தோங்க இவர் பணிதான் வித்தாகி விருட்சமென நிற்கிறது!
நாடகத் தமிழுக்கு நல்லாரம் போலே மதங்களுளமணி மகுடமென படைத்தார் நாடகத்தின் உத்திகளை நவின்றிடும் நூலாக காட்சி களம் பாத்திரங்கள் அமைப்பு முறை கூறும் ஆங்கில இலக்கியத்தின் அடியொற்றி நல்ல நாடக இலக்கியத்தை நமக்களித்துச் சென்றார்!
இயல் இசை நாடக வல்லுனராகி முத்தமிழ் வித்தகர் என்றே விளங்கிய புத்திரன் தன்னை தமிழன்னை பெற்றாள் ஓசை நயமும் உணர்ச்சி வெளிப்பாடும் உரைநடை தன்னில் விரைந்திடச் செய்தே விஞ்ஞானக் கட்டுரை மொழிபெயர்ப்பாக எத்தனை நூல்கள் எழுந்தன கண்டோம் தமிழர் தம்பெருமை தனித்தனியாக கட்டுரை வடிவில் கண்டோம் கண்டோம்! மக்களை நேசித்த மனித நேயமும் ஏழைகள் அநாதைகள் குறைகளையகற்றி இராமகிருஷ்ணமிஷனின் வழியால் எடுத்த பணிகளின் தொடரும் சிறப்பும் முத்தமிழ் சிறக்க முயற்சிகள் மேற்கொண்ட வித்தகர் விபுலானந்தர் செத்திலர் என்பர் இத்தினம் அவர் பணிகள் போற்றி இசைக்கின்றேன் வாழி அவன் பாதம் வாழி!
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 40
அறிவியற் பணி
செல்வன் சஹிந்தன் கருப்பையா
மண்ணிலே வந்துதித்த மாணிக்கம் மயில்வாகனன் மலரடி பணிந்து அண்ணலின் வியத்தகு அறிவியற் பணிதனை அடியேன் முன் வந்து பகர்கின்றேன்!
செப்புகின்றேன் செம்மலின் அரும்பணிதனை செந்தமிழில் அவையோர் வியக்கும் வண்ணம் இயல் இசை நாடக முத்தமிழ் பணியோடு - இங்கு அறிவியியற் கலைக்கும் அர்த்தம் புகட்டினார்!
துங்காத சிந்தையில் நீங்காத ஆர்வம் துறந்தார் சோம்பலை புதியன படைக்க தேடிக் கற்கும் ஆர்வம் ஓங்க தெளிக்க சிந்தையுடையோராய்
புதியன கண்டு அறியாமை நீங்க புதுமைகள் புரிந்தார் ஆய்வுகளில் கற்கும் மாணவர் உலகிற்கோர் கலங்கரை விளக்காய் உதயமாகினார்!
இதமாய் இரசாயன சேர்வைகளை இலகுவாய் கற்க வழியமைத்தார் சாலவும் மிக்க சாதனை படைத்து சான்றோர்களாக்க சங்கற்பம் கொண்டார்
பிரவாக ஊற்றாய் விரிவுரைகள் பிழையறா வண்ணம் ஜீவநதியாய் மகிழ்ந்து கற்க மாணவர் உலகம் மகத்தான பணியில் தன்னை இணைத்து முகவரியில் அதிபர் பதம் பதித்து qpomp.DuIITes LDIT60Or6omt p56ooör (3LIGOOT மாணிப்பாய் இந்துக் கல்லூரியில் நிறுவினார் நிறைவான ஆய்வு கூடந்தனை
மேலை நாட்டு விஞ்ஞான நூல்களை, மேற்குலகு வியக்கும் வண்ணம் தாய்மொழியில் படைக்க தானே தலைமையேற்று உருவாக்கினார் சொல்லாக்க கழகமொன்றை
செயலாக்கம் பெற அயராது நாளும் செயலுக்கம் கொடுத்து செம்மையான கலைச் சொல் அகராதி ஒன்று மலர்ந்தது கல்வி யுலகில் நிலைக்கும் வண்ணம்
புகழ் பூத்த புரவலரின் நற்பணிகள் பூவுலகில் ஆழமாய் விழுதுகள் பாய்ந்து அறுகுபோல் வேரூன்றி எங்கும் பரந்து ஆலவிருட்சமாய் இங்கு பயன் தருவாய்
(இந்து ஒளி

விஞ்ஞான டிப்ளோமா பட்டமும் விரிவுரையாளர் பதவியும் இன்னும் விஞ்ஞான ஆசானாய், அதிபராய் விளங்கி வளமான களமமைத்தார் கல்வித் துறைக்கு
வியத்தகு விஞ்ஞான விந்தைக்கு வித்திட்டு தூரநோக்கில் கண்ட கலையை தெட்டத்தெளிந்த கலையாய் எம் முன்னே கிட்டத்தந்த பெருமை அடிகளாருக்கே
iLLTLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLTL
یکم கல்விப் பணி
செல்வன் இ.தேவரட்னம்
கல்வியிற் பெரியோன் விபுலானந்தன் கல்வியிற் பெரியோன் ஆசிரியப் பயிற்சி கொண்டு - மதுரை தமிழ்ப் பண்டிதனாம் பட்டம் ஏற்று விஞ்ஞானமானி எனும் விருதும் பெற்றோன் நுழைமாண் நுண்புலக் கல்வி கற்றோன்!
கல்விப் பணிக்கு களமாயமையும் ஆசிரியப் பணியை அணி செய்தோன் மானிப்பாய் இந்துவின் தலைமை ஆசானாய் நற்பணி தந்தோன்!
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து பேராசிரியராய் பெரும் பணி செய்தோன் ஈழத்து முதற்தமிழ்ப் பேராசிரியராய் பெயர் பெற்றோன் - ஆற்றல்மிகு மாணவர் பரம்பரையை உருவாக்கி தமிழ்ப் பேராசிரியர் மரபு நீள அரும்பெரும் சேவை தந்தோன்!
நாவலர் வழிநின்று - திருகோணமலை, கல்லடி, காரைதீவு, கல்முனை என்றே கிழக்கிலங்கை யெங்கனும் பள்ளிகள் பல அமைத்தோன்!
அறிவுவேட்கை கொண்டோர்க்கு பெருவிருந்தாய் கட்டுரைகளும் நல்லறிவு நூல்களும் - அருஞ் சொற்பொழிவுகளும் தந்தோன்!
யாழ்நூல் எனும் அரும் பொக்கிஷமாம் ஆராய்ச்சி நூலும் - மதங்க சூளாமணி எனப் பெயர்பெறு நாடக இலக்கண” செப்பிடு நூலும் - விபுலானந்தர் புகழ் பேசிடிடும் படைப்புக்கள்!
38 விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 41
ஈழமணித் திருநாடு பெற்றெடுத்த அருமுத்து மீன்பாடும் தேன்றாடு தந்த, அருஞ்சொத்து விபுலானந்தன் கல்விப் பணிகள் வியப்போம் விபுலானந்தன் நற்புகழைத் துதிப்போம்!
uuuuuuuuuuuuuuuuuuuuuu
பத்திரிகைப் பணி
செல்வன் வினேஸ் குமாரகுலசிங்கம்
சீர்பெற்றிலங்கும் திருநாடாம் இலங்கைதனில் கார்பெற்று பொன் விளையும் கவின்மிகு குண திசையில் கலைமகள் ஏர் பூட்டத் தமிழ் விளையும் இனிய நல்லூராம் மட்டுநகரின் பெயர் விளங்க வந்துதித்த வித்தகனே உன் பொன்னடிக்கு பாமாலைதனை ஆட்டி பரவுகின்றேன் என் கவியினிலே
அண்ணலே நீ ஓர் ஆச்சரியம் கன்னித் தமிழின் கவின்மிகு இசையும் வியந்து போற்றும் விஞ்ஞானமும் ஆழ்கடலாம் ஆன்மீகமும் - உன் சொல்லுக்கடங்கி சுருதி மீட்டும் விந்தை யென்ன?
கங்கையெனக் கரை புரண்டோம் - கலை வெள்ளமதை அகத்தில் அடங்கிய அகத்தியனே பொங்கி பிரவகித்தது இலக்கியப் பேராறு இன்று நீ ஓர் வரலாறு
பார்புகழும் பத்திரிகை ஆசிரியப் பணியில் நீ பதித்தாய் முத்திரை பங்குவமாய் சொல்ல வந்தேன் பசுவைமிக்க உன் யாத்திரை
கல்வி என்னும் கருத்தனத்தை கருத்துடனே அடைவதற்கு பத்திரிகை கைவிளக்கு கைகொடுக்கும் என அறிந்து கையேற்றாய் பத்திரிகை ஆசிரியப் பணிதனை ஆரம்ப காலங்களில் ஈழத்து இதயங்களிலே இந்தியரே ஏற்றவர் ஈன்ற எண்ணத்தை இல்லாமல் ஆக்கிய ஏந்தவரே நீ எம்மவர்க்கு முன்னோடி!
மயிலாப்பூரின் இராமகிருஷ்ண மடம் உன் துறவுப் பயிற்சிக்கு உயர்ந்த களமான வேளைதனில் உன்னை அழைத்தது இராமகிருஷ்ணமடம் இதயமாய் ஈந்த இதழாசிரியர் எனும் இனிய பணிதனை நீ ஏற்றதனால் பண்பட்ட இரு இதழ்கள் மலர்ந்தது மணம் கமழ்ந்தது!
(இந்து ஒளி

ஆங்கில மொழியில் அணிபெற அமைந்தது வேதாந்த சேகரி என்னும் மாதாந்த இதழ் ஒன்று இலங்கை மாதாவின் இனிய புதல்வனே- நீ தமிழ்த் தாயின் தத்துப் பிள்ளையல்லவா தமிழ்த் தாயின் மனம் குளிர இராமகிருஷ்ண விஜயம் எனும் திங்கள் இதழும் உன் பணியால் பத்திரிகைத் தோட்டத்தில் பாங்காய் மலர்ந்தது! இராமகிருஷ்ண சங்கத்தின் தொல்லிதழாம் “பிரபுத்த பாரதா” தன்னில் ஆசிரியப் பணியாற்ற ஆவலுடன் அழைத்ததினால் இயமமலைச் சாரலை நோக்கிய உன் இந்தியப் பயணத்தின்போது- ஈழத்து அறிஞரெல்லாம் வந்திருந்து வாழ்த்துரைத்து வழியனுப்ப இனிதே தொடர்ந்தது உன் பயணம்
வேற்று மொழிதனை கற்றுவிட்டு வம்பு கொண்டு எம்மொழியை விலைபேசி விற்றிட்ட வீணர்களுக்கு - ஐயனே நீ ஒரு வழிகாட்டி ஆங்கில மொழியிலே ஆழப் புதைந்து அமிழ்தினும் இனிய தமிழ்மொழி மறந்த பேதையர்க்கு நீ ஒரு வழிகாட்டி
தேன் மதுரத் தமிழோசை உலகெலாம் பரவும்வகை செய்ய - நற்றமிழ் உண்மைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அச்சேற்ற நீ செய்த அரிய பணி அளவிட முடியாத பெரும் பணியானது
தமிழ் இலக்கியப் பரப்பும் ஈடில்லா சிறப்பும் பண்பாட்டுக் கோலமும் - பிரபுத்த பாரதா இதழில் ஆங்கில வடிவில் அழகுமிகு ஒவியமாய் அயல் மொழியினரும் போற்றுகின்ற காவியமாய் கனிந்தது உன் கரங்களால்தான்!
தமிழ் நிதியை தரணி வாழினமும் அனுபவித்து களிகூர நாலாயிரதிவ்வியபிரபந்தமும் உன் பணியால் ஆங்கில வடிவாகி அந்நியர் நெஞ்சங்களில் ஆச்சரியம் விளைத்தது
கார்ள் மாக்ஸின் பொருளாதார சிந்தனையின் அருமைதனை உணர்த்த நீ ஆக்கிய கட்டுரைகள் - பிரபுத்த பாரத இதழில் பிரபல்யம் பெற்று பிரகாசித்தது!
பாரதத்திலும் ஈழத்திலும் பாங்காய் நீ செய்த பத்திரிகை ஆசிரியப் பணி
அறியாமை SUBSsir விலக்கும் அகல் விளக்காய் அகிலமெங்கும் ஒளிபரப்பும் என்பதில் ஐயமில்லை!
89. விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 42
க. நிரோமி NA *
(தரம்- 7) கமு/கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலை
الاس கல்முனை ܢܬ
இலங்கை மணித்திரு நாட்டின் கிழக்கே, மீன்பாடும் தேனாடம் மட்டக்களப்பின் தெற்கே காரைதீவு எனும் ஊரில் ஆயிரத்து எண்ணுாற்று தொண்ணுாற்று இரண்டாம் ஆண்டு பங்குனித் திங்கள் பதினாறாம் நாள் திரு, திருவாட்டி சாமித்தம்பி கண்ணம்மை தம்பதியினருக்கு அருந்தவப் புதல்வராய் அவதரித்தார் சுவாமி விபுலானந்தர்.
மயில்வாகனன் எனப் பிள்ளைத் திருநாமம் சூட்டப்பட்ட இவர் ஈன்றோர்க்கினிய மகனாயிருந்து கல்வியைச் சிறப்பாகக் கற்றுத் தம் பத்தாம் வயதிலேயே பலரும் வியக்கும் வண்ணம் கணிதத்தில் சிறந்து விளங்கினார். பதினாறாம் வயதில் கேம்பிறிச் உயர் பரீட்சையில் முதற்தரச் சித்தி பெற்றார். இருபதாம் வயதில் பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரான இவர் கொழும்பு பொறியியற் கல்லூரியில் விஞ்ஞான உயர்தேர்ச்சி சான்றிதழை பெற்றார். மதுரை தமிழ்ச் சங்கத்தில் பண்டிதர் பரீட்சையிலும் சித்தி பெற்றார். பின் இலண்டன் பல்கலைகழக விஞ்ஞான பட்டதாரி ஆனார்.
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயம், யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியப் பெரும் பணி புரிந்த அவர் அதிபர் பணியிலும் ஈடுபட்டார். அன்பு, நீதி, நேர்மை, அறிவு, சமயப்பற்று, சமத்துவம் என்பவற்றில் இமயத்தின் சிகரத்தையும் வென்றார். செந்தமிழுக்கும், இந்து மதத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் வானைப் போல் விரிந்தது எனல் மிகையாகாது.
தமிழ், ஆங்கிலம் வடமொழி மூன்றிலும் பாண்டித்தியம் பெற்று பன்மொழிப் புலவராக, பைந்தமிழ் வல்லுனராக, மூதறிஞராக, முத்தமிழ் வித்தகராக மிளிந்தார். தம் தூய உள்ளம் துறவறம் நாடவே தமிழ் நாடு சென்று இராமகிருஷ்ண சங்கத்தில் ஞான உபதேசம் பெற்று ஆயிரத்து தொளாயிரத்து இருபத்து நான்காம் ஆண்டு முழுத் துறவியாகி "சுவாமி விபுலானந்தர்” எனும் தீட்சா நாமம் பெற்றார்.
தமிழிற்கும், சமயத்திற்கும் பணி செய்யும் முகமாக பாடசாலைகள், கல்லூரிகள், ஏழைச் சிறுவர் இல்லங்கள், இராமகிருஷ்ண நிலையங்கள் போன்றவற்றை நிறுவினார். மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயம், காரைதீவு சாரதா வித்தியாலயம், திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகியன அடிகளாரின் தூய தொண்டிற்கு இலக்கணமாய் விளங்குகின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ் பேராசிரியராகவும் கடமையாற்றி பல அறிஞர்களை உருவாக்கினார். இலங்கை பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராய் திகழ்ந்து மட்டக்களப்பு மண்ணிற்கு மட்டுமன்றி ஈழநாட்டிற்கே அரும் புகழ் சேர்த்தார். இவர் பண்டைய தமிழ் இசை நூல்களை ஆய்ந்து “யாழ் நூல்” எனும் அரிய படைப்பையும்
(இந்து ஒளி
 

“மதங்கசூளாமணி” “ஆங்கிலவாணி’ போன்ற பல நூல்களையும், கட்டுரைகள், கவிதைகள் போன்ற ஆக்கங்களையும் தமிழுலகுக்கு அள்ளி வழங்கினார்.
இவ்வாறாக பல பதவிகள் வகித்து, தமிழிலக்கியம் எனும் சோலையில் புகுந்து, தமிழ் எனும் அமுதத்தை நுகர்ந்து, இன்பக் களிப்பெய்தி ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” எனும் தொனிக்கு இலக்கணமான அடிகளார், ஆயிரத்து தொளாயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டு ஆடித்திங்கள் பத்தொன்பதாம் நாளன்று இறையடி எய்தி பொன்னுடல் நீத்து புகழுடல் சேர்ந்தார். தமிழும், இந்து மதமும் நிலைக்கும் வரை இவர் புகழ் உலகெலாம் ஓங்கி ஒலிக்கும் என்பது வெள்ளிடைமலை.
“வெள்ளைநிற மல்லிகையோ வேறெந்த மா மலரோ வள்ளல் அடியினைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது” எனும் அடிகளாரின் கவிவரிகள் என்றென்றும் மறக்க முடியாதது
LLLLLLLLLLLLLGLLGLCLLLLLLLLLLLLLL
|சுடராய் ஒளிதருவாய்) :
ஈழம் முதல் இமயம்வரை R ! இன் தமிழ் சிறக்க வைத்த 料
ஈழக் கரிகாலன்; எம் இளைய நற்குடியின்; யாழ் இசைத் தமிழ் வல்லோன் ஏற்றுமிகு பேராளன்! வாழும் வரை நூலாய்ந்து 排 வான்புகழ் கொண்ட
வித்தகனே! விபுலாநந்தத்தேனே! 捻 சூழும் கடலுள்ள வரை 8.
சுடராய் ஒளிதருவாய்! ! பாடும்மீன் வாவிபுகழ் 将 பாரறியச் செய்த வள்ளல்.
ஏடுபல நூலாய்ந்து; அரங்கு ஏற்றிவைத்தாய் யாழ் நூலை! வாடுகின்ற வறியோர்க்கு ! வாழ்வளித்த உத்தமனே!
நீடு புகழ் கொண்ட ஈசனே! இன் மலர்கவி மூன்று ஈந்த பாவலனே! 群
சூடுகிறோம் பாமாலை, ஈழச்
சுடரொளியே முத்தமிழாய் ஒளிர்ந்திடுவாய்
Hasdoqpodor Sprrarıhınır
நால்வர் கோட்டம்
6ഗ്രാഞ്ഞങ്ങT
LLLLLLLLLGLLLLLLLLGLLLLLLLLLLLL
8 p. . .. 8 61/2, யாட் றோட், கந்தசாமி சதுக்கம்
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 43
镑
நல்லை திருஞான
நல்லை ஆதீன முதல்வர் 2006ஆம் ஆண்டில் பொன்வி வெளியீடான “அருள் ஒளி'
திருமுருகன் அவர்கள் எழுதியி
Fழத்திருநாட்டில் சைவ சமய மரபில் தோன்றிய ஒரேயொரு ஆதீனம் நல்லூர் திருஞான சம்பந்தர் ஆதீனம். இவ் ஆதீனத்தைத் தோற்றுவித்த பெருந்தகை பூரீலழறீ சுவாமிநாத தேசிக பரமாச்சாரிய சுவாமிகள். இப்பெருமகனார் தனது நாவன்மையால் ஈழத்தில் மட்டுமன்றி இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சைவப்பிரசங்கங்களைச் செய்து உன்னத சமயப்பணியாற்றியவர். ஈழத்தில் சைவ ஆதீனம் இல்லாத குறையைப் போக்குவதற்கு தன் வாழ்வை அர்ப்பணித்தவர். அவர் தன் வாழ்வில் தனக்குப் பின் ஆதீனத்தை வழி நடத்துவதற்குப் பொருத்தமான இளவரசைத் தேடினார். இறையருளால் ஆதீனத்தில் தினமும் திருமுறை பாராயணம் செய்ய வந்த சிறுவர்களில் ஒருவரை சுவாமிகள் அடையாளம் கண்டார். அச்சிறுவனைத் தனது கதாப்பிரசங்க நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று சுருதிப் பெட்டியை வாசிக்கப் பணித்தார். அச்சிறுவன் இளைஞனாக நிமிர்ந்த வேளை எனக்குப் பின் இவ் ஆதீனத்தை நீயே பொறுப்பேற்க வேண்டுமெனக் கட்டளையிட்டார். ஆதீன சம்பிரதாயங்களை விளக்கினார். நைஷ்டிக பிரமச்சரிய வாழ்க்கையே ஆதீன மரபு என்பதை எடுத்துரைத்தபோது மிகுந்த பக்குவத்தோடு அவ்விளைஞன் தன் வாழ்வை ஒப்படைக்க முன்வந்தார். சுந்தரலிங்கம் என்ற பிள்ளைத் திருநாமமுடைய இளைஞன் தன் வீடு மறந்து உலகியல் மறந்து காவி வஸ்திரம் தாங்கி இளவரசானார். 1981ம் ஆண்டு பங்குனி மாதம் முதலாவது குருமகா சந்நிதானம் திடீரென சமாதி அடைந்தார்கள். இளவரசாகப் பதவி ஏற்ற சின்னச் சுவாமிகள் ஆதீன குரு முதல்வராகப்
நல்லைப் பெருமான
நில்லைப் பெருமானை நாடோறும் வழிபட்டு வந்தவர்களுள் இருபாலைச் சேனாதிராயமுதலியாரும் ஒருவர்.நல்லூர்க்குமரமூர்த்தி வள்ளிநாயகி தெய்வயானையம்மையார் சமேதராக மயில்வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரியும் காட்சியைக் கண்டு தம் உள்ளத்தை பறிகொடுத்தார். இவர் கண்ட அற்புதக் காட்சியையாமும் கண்டுருகுமாறு சொல்லோவியத்தில் தீட்டியுள்ளார்.
கொடிவளரு மணிமாடக் கோபுரஞ்சூழ்
நல்லூரிற் குமர மூர்த்தி
அடியருளத் திருளகல வமரர்முக
மலரவர வணிமா னீன்ற
(இந்து ஒளி
 
 
 
 

சம்பந்தர் ஆதீனம்
நீலழரீசோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் ழா கண்டபோது பூரீ துர்க்கா தேவி தேவஸ்தான மாதாந்த 1 ஈஞ்சிகையில் அதன் ஆசிரியரான செஞ்சொற்செல்வர் ஆறு. ந்த குறிப்பை “இந்து ஒளி” இங்கு தருகிறது.
பட்டாபிஷேகம் செய்யப்பட்டு பதவி ஏற்றார்கள். பலரும் திகைத்தார்கள். மிக வயது குறைந்த இளைஞன் ஆதீன முதல்வராக பதவி ஏற்கிறார். இப்பணி மிக மிகப் பக் குவமான நிலையில் அர்ப் பணிப் போடு தொண்டாற்றுகின்ற சேவை. இரண்டாவது குருமகா சந்நிதானம், எப்படி ஆதீனத்தை நிர்வகிப்பாரோ என ஏங்கினர். மும்மொழிப் பாண்டித்தியம், நாவன்மை, அனுபவஞானம் நிறைந்த பெரிய சுவாமிகளின் இடத்தை நிரப்பத்துணிந்த இரண்டாவது குருமகா சந்நிதானம் தனது அயராத முயற்சியால் ஆதீனத்தை சீரிய முறையில் வழிநடத்தத் தொடங்கினார். பலரும் வியந்து பாராட்டத் தொடங்கினர். முதலாவது குருமகா சந்நிதானம் சமாதி அடைந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. இந்த இருபத்தைந்து ஆண்டுகளும் தன் துறவுப்பணியில் அயராது தொண்டாற்றி சைவ மக்களின் தலைமகனாக போற்றப்படும் நிலையில் இன்று பூரிலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஒப்பற்ற நிலையில் சிறப்புற்று விளங்குகிறார். பல ஆயிரக்கணக்கான ஆலய கும்பாபிகே வைபவங்கள் முதல் சமய விழாக்கள், பொது வைபவங்களில் நல்லாசியுரைகளை வழங்கி வருவதோடு சைவ சமயத்துக்கு ஆபத்துக்கள் வந்தபோதெல்லாம் குரல் கொடுத்துக் காப்பாற்று பவராக எம்மத்தியில் இன்று விளங்குகிறார். நல்லை ஆதீனத்தில் புதிய கலா மண்டபத்தைத் தோற்றுவித்ததோடு தினமும் ஆலய குருமூர்த்தி பவனில் இருநேரப் பூசைகளை நடாத்தி அருட்பணியாற்றி வருகிறார். இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் நடைபெற்ற உலக இந்து மாநாடுகளில் இந்திய ஆதீனங்களுக்கு ஈடாக எமது நாட்டு ஆதீன சுவாமிகள் கலந்து கொண்டு ஆற்றியவுரைகள் அற்புதமானவை.
O O ரின் அற்புதக்காட்சி
கொடியினொடும் பிடியினொடுங் குலறும் பிடியொடுங்கோ தண்ட மேந்தி
மிடியகல மயிலேறி விடியவந்த
தினகரன்போல் மேவி னானே!
(மானின்ற கொடி-வள்ளிநாயகி;பிடி-தெய்வயானையம்மை; உடம்பிடி - வேற்படை, கோதண்டம் - வில்; மிடி - துன்பம்;
தினகரன் - சூரியன்.)
நன்றி : இலங்கையின் புராதன சைவாலயங்கள்)
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 44
அகில இலங்கை இந்து ம பணிமனையின் செயற்பாடுகளு
அகில இலங்கை இந்து மாமன்றம் அண்மைக் காலத்தில் வடபகுதியிலும் தனது சேவைகளை விஸ்தரித்திருப்பது அனை வரும் அறிந்ததே. இதற்கு முன்னோடியாக, யாழ்ப் பாணத்தில் நல்லூர், கோயில் வீதி 2117 ஆம் இலக்கத்திலுள்ள திருமதி பேரம்பலம் அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 2.9 நிலப்பரப்பு காணியில்
சில வருடங்களுக்கு முன் மாமன்றத்தின் பிராந்திய 激 பணிமனை யொன்று அமைக்கப்பட்டது. நிலத்தளம் மற்றும் இரண்டு மேல் 2 மாடிகளைக் கொண்ட இந்தப் பணிமனை கடந்த வருடம் (2009) ஜனவரி 9ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாகத் 激 திறந்துவைக்கப்பட்டது. சைவ ஆராய்ச்சி நிலையம், சைவப் பிரசாரகர் பயிற்சி நிலையம் என்பனவும் இங்கு 8 நிறுவப்பட்டன.
இவ்வருடம் (2010) ஜனவரி 16ஆம் திகதியன்று இங்குள்ள சைவ ஆராய்ச்சி நிலையத்தில் நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டது. மாமன்றத் தலைவர் மனிதநேயர் வி. கயிலாசபிள்ளை அவர்கள் இந்த நூலகத்தை 8 திறந்துவைத்தார். அதே தினத்தன்று கணினி பயிற்சி * நிலையமொன்றும் இங்கு திறந்துவைக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் நா. சண்முகலிங்கன் இதனை திறந்துவைத்தார். இங்குள்ள சைவ ஆராய்ச்சி நூலகத்திற்கு லண்டன் வெஸ்டர்ன் ஜுவலர்ஸ் 8 நிறுவனத்தின் உரிமையாளர் திரு. வே. சிவசுந்தரம் பத்து லட்சம் ரூபா பெறுமதியான நூல்களை அன்பளிப்புச் செய்துள்ளார். இதில் ஆறுலட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் இந்தியாவிலிருந்து இங்கு வந்து சேர்ந்துவிட்டன. ; மிகுதியாகவுள்ள நான்கு லட்சம் ரூபா பெறுமதியான நூல்கள் விரைவில் நூலகத்திற்கு வந்து சேரும். இவரது அன்பளிப்பின் ஒரு தொகுதி நூல்களை ஜனவரி 16ஆம் 8 திகதி நடைபெற்ற நூலகத் திறப்பு விழாவின் போது யாழ். பல்கலைகழக உபவேந்தர் பேராசிரியர். நா. சண்முகலிங்கன் அவர்கள், மாமன்றத் தலைவர் மனிதநேயர் வி. கயிலாசபிள்ளை தம்பதியினரிடம் கையளித்திருந்தார்.
s 8.
8. 激
மாமன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனை அமைந்துள்ள 29 நிலப்பரப்புக் காணியை மாமன்றத்திற்கு அன்பளிப்பாக வழங்கிய திருமதி பேரம்பலம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இவரது பெரும் கைங்கரியத்தை இந்துப் பெருமக்கள் என்றென்றும் நினைத்துப் போற்றும் வகையிலும் ஒரு அடையாளச் சின்னமாக இவரினதும், இவரது கணவரான அமரர் பேரம்பலம் அவர்களினதும் நிழற்படங்கள் யாழ். பிராந்திய பணிமனையில் ஜனவரி 16ஆம் திகதியன்று இங்கு நடைபெற்ற சிறப்பு நிகழ்வின் போது திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டன.
 
 
 

ாமன்ற யாழ். பிராந்திய ம் மாமன்றத்தின் சேவைகளும்
மாமன்ற யாழ். பிராந்திய பணிமனையின் நிர்வாக அலுவலராக திரு. வி. ஜெயசிங்கம் அவர்களும், கணிணி தொடர்பான செயற்பாடுகளுக்காக செல்வி தயாளினி குணரத்தினம், செல்வி லாவண்யா அமிர்தலிங்கம் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். மாமன்ற முகாமைப் பேரவை உறுப்பினரும், யாழ்ப்பாணத்தில் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றுபவருமான திரு. ஆ. பூரீஸ்கந்தமூர்த்தி யாழ். பிராந்திய பணிமனை இணைப்பாளராக சேவையாற்றி வருகிறார். மாமன்ற உப தலைவரான செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன் அவர்கள் யாழ். பிராந்திய பணிமனை ஊடாக மாமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு பெரிதும் உழைத்து வருவதை சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
யாழ். பணிமனையில் கணினிப்பயிற்சி
மாமன்றத்தின் யாழ். பிராந்திய பணிமனையில் இவ்வருடம் (2010) மார்ச் மாதத்திலிருந்து கணினிப் பயிற்சிநெறியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையியல், ஹோட்டல் முகாமைத்துவம் ஆகிய துறைகளுக்குத் தேவையான தொழில் நுட்பங்கள் மற்றும் சிறப்புத் தகுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வகையில் அமைந்த இந்தப் பயிற்சிநெறியில் யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் 81 மாணவர்கள் இணைந்து கொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இப்பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவிருக்கின்றன.
மேற்படி பயிற்சி நெறிக்காக இன்போஷர் கறன்ரீ 6Ö)L6)ü' GLü' (Infoshare Guarantee Limited) 6J fibö560T (86)J மாமன்றத்திற்கு 12 உயர்ரகமான கணினிகளை வழங்கியிருப்பதுடன் பயிற்சிக்கான ஏற்பாடுகளையும் செய்ய முன்வந்தது. கடந்த வருடம் (2009) ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று மாமன்றப் பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன், பொருளாளர் திரு. வே. கந்தசாமி ஆகியோர் கொழும்பில்வைத் மேற்படி நிறுவனத்துடன் இதுதொடர்பான ஒப்பந்தமொன்றை செய்து கொண்டனர்.
இந்தப் பயிற்சி நெறியில் பங்குபற்றி வரும் மாணவர்களுக்கான பயிற்சிகளை செல்வி தயாளினி குணரத்தினம், செல்வி லாவண்யா அமிர்தலிங்கம் ஆகியோர் வழங்கிவருகிறார்கள்.
ழ், பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியிருந்துவிட்டு வடக்கு, கிழக்குப் பகுதியிலுள்ள பல்கலைக்கழகங்களுக்குத் திரும்பிய பட்டதாரி மாணவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் நிதியுதவி செய்துள்ளது. வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவாக இவர்கள் ஒவ்வொருவருக்கும் 10,000/= ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா நலன்புரி முகாம்களிலிருந்து முதற்கட்டமாக யாழ். பல்கலைக்கழகம் வந்து சேர்ந்த மாணவர்களுக்கு, கடந்த வருடம் (2009) அக்டோபர் 4ம் திகதியன்றும், இரண்டாவது கட்டமாக வந்து சேர்ந்த மாணவர்களுக்கு

Page 45
季
گ
SS
§>ත්‍රිඳී
ප්‍රීව්‍රදී
ప్రాg
ప్రg
Sá
චිලිටරි
පිලීන්දු
அக்டோபர் 16ம் திகதியன்றும் நல்லூரிலுள்ள மாமன்ற யாழ். பிராந்திய பணிமனையில் வைத்து மேற்படி கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இதன்போது மொத்தமாக 154 மாணவர்கள் மாமன்றத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டார்கள். வவுனியா நலன்புரி முகாம்களிலிருந்து யாழ். பல்கலைக்கழகம் திரும்பிய மேலும் 128 பட்டதாரி மாணவர்களுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவாக ஒவ்வொருவருக்கும் ரூபா 10,000/- வீதம் வழங்கப்பட்டது. ஏற்கனவே கொடுப்பனவைப் பெற்றுக் கொண்ட 154 மாணவர்களுக்கும் இரண்டாவது தடவையாகவும் ரூபா 10,000 வீதம் வழங்கப்பட்டது.
இவ்வருடம் ஜனவரி 16ம் திகதியன்று மாமன்ற யாழ். பணிமனையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளின்போது இடம்பெயர்ந்த 344 பட்டதாரி மாணவர்கள் வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவை பெற்றுக் கொண்டார்கள்.
வவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியிருந்து விட்டு மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகம் திரும்பிய 27 பட்டதாரி மாணவர்களுக்கும், மட்டக்களப்பு தென்கிழக்கு பல்கலைக்கழகம் திரும்பிய 3 பட்டதாரி மாணவர்களுக்கும், யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் 9 பட்டதாரிமாணவர்களுக்கும் வாழ்க்கை } நிலைப்படுத்தல் கொடுப்பனவாக ஒவ்வொருவருக்கும் ரூபா
10,000 வீதம் மாமன்றம் வழங்கியிருக்கிறது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களது மேற்படி ; கொடுப்பனவுக்காக லண்டன் பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபையினர் பெருமளவு நிதியுதவி ; செய்திருப்பதையும், மனிதநேயர் வி. கயிலாசபிள்ளை அவர்களை தலைவராகக் கொண்ட மனிதநேய நிறுவனமும் அதிக நிதியுதவி செய்திருப்பதையும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடவே வேண்டும்.
இவ்வருடம் (2010) ஜனவரி மாதம் 16ஆம் திகதியன்று மாமன்ற யாழ். பிராந்திய பணிமனையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளின் போது லண்டனிலிருந்து வருகை தந்திருந்த பூரீ * கனகதுர்க்அைம்மன் ஆலய அறங்காவலர் சபையைச் சேர்ந்த திரு. அ. தேவசகாயம் தம்பதியினர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டதுடன் இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய கொடுப்பனவையும் வழங்கினார்கள். இந்த நிகழ்வின்போது மனிதநேய நிதியத்தின் கொடுப்பனவை மாமன்றத்தினதும் மனிதநேயத்தினதும் தலைவரான மனிதநேயர் வி. கயிலாசபிள்ளை தம்பதியினர் மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியிருந்துவிட்டு யாழ். பல்கலைக்கழகம் திரும்பியபட்டதாரி மாணவர்களுக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் தொடர்ந்தும் நிதியுதவி செய்து வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக நடந்த நிகழ்வின் போது 43 மாணவர்களுக்கும் அதன் பின்னர் 3 மாணவர்களுக்குமாக மொத்தம் 46 மாணவர்களுக்கு ரூபா. 10000/- வீதம் வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவு வழங்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகம் சார்பாக உதவிப் பதிவாளர் திரு. யோ. ஜெயக்குமார், விரிவுரையாளர்களான கலாநிதி கி. விசாகரூபன், திரு. அ. ம. கொன்ஸ்ரன்ரைன் ஆகியோரும், மாமன்றத்தின் சார்பாக மாமன்ற உப தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகன், மாமன்ற யாழ். பிராந்திய பணிமனை நிர்வாக அலுவலர் திரு. வீ. ஜெயசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
灣
இந்த நிகழ்வின்போது, வன்னியிலிருந்து இடப்பெயர்வுக்குள்ளாகிய யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து S.
OOeeekksskkesOesOssOeeOOOOeOOseOOsOesseOMTOeOeOeOeseeeOeOeOOeOsOOsOseO Oeeseee ܔܠ
 
 

வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவாக கட்டம் கட்டமாக
நிதியுதவி வழங்கி வரும் மாமன்றத்தின் நற்பணியை பலரும் பாராட்டியதுடன், எதுவித ஆடம்பரமும் இல்லாமல் அமைதியான முறையில் மாமன்றம் ஆற்றிவரும் இத்தகைய கைங்கரியம் வெகுவாகப் போற்றத்தக்கது என்றும் தெரிவித்தார்கள்.
நிதியுதவியைப் பெற்றுக் கொண்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக, செல்வி விக்னா கனகலிங்கம் நன்றியுரை வழங்கினார். இந்தக் கொடுப்பனவுக்குரிய நன்கொடையாக அவுஸ்திரேலியா, சிட்னி நகரிலுள்ள யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கிளையினர் 500, 950/= ரூபாவை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் 45 மாணவர்களுக்கு கடந்த மேமாதத்தில் வாழ்க்கை நிலைப்படுத்தல் கொடுப்பனவாக, ஒவ்வொருவருக்கும் ரூபா 10.0001 வீதம் வழங்கப்பட்டுள்ளது. மனிதநேய நிதியத்தின் நன்கொடையாகக் கிடைத்த 4,50,000/= ரூபா நிதியுதவியே மாமன்றத்தின் ஊடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
யாழ்.மக்களுக்கான அம்புலன்ஸ் வாகன சேவை
யாழ். மக்களின் நன்மை கருதி, மாமன்றத்தினால் 2006ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து யாழ். பிராந்திய பணிமனையில் அம்புலன்ஸ் வாகன சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டது. போர்க்காலச் சூழ்நிலைகளினால் சில மாதங்கள் வரை பாதிக்கப்பட்டிருந்த இந்த சேவை, இவ்வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள், மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு வரவேண்டிய தேவையேற்படும் போதும், பின்னர் அவர்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு திரும்பும்போதும் இந்த அம்புலன்ஸ் வாகன சேவையைப் பயன்படுத்த முடியும். இது தவிர யாழ். குடாநாட்டிற்கு உள்ளேயும் நோயாளர்கள் இச்சேவையைப் பயன்படுத்தலாம். குறைந்த கட்டணத்தில் இந்த அம்புலன்ஸ் வாகன சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 217, கோயில் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் அமைந்துள்ள மாமன்றத்தின் யாழ். பணிமனையுடன் (தொலைபேசி இல. 0212221075) அல்லது கொழும்பிலுள்ள மாமன்ற தலைமையகத்துடன் (தொலைபேசி இல. 011-2434990) தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
நல்லை ஆதீனத்திற்கு மோட்டார் வாகனம் அன்பளிப்பு
இலங்கையிலுள்ள ஒரேயொரு ஆதீமான நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர் யாழ். குடாநாட்டில் நடைபெறும் சமய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் பிரயாணங்களை மேற்கொள்வதற்கு வாகனம் இல்லாது சிரமப்படுவதை அவதானித்த மாமன்றம், 2001 ஆம் ஆண்டளவில் வாகனமொன்றை கொள்வனவு செய்து ஆதீன முதல்வருக்கு அன்பளிப்புச் செய்திருந்தது.
மாமன்றத்தினால் இது தொடர்பான ஒரு நிதியம் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாகக் கிடைத்த நன்கொடைகளுடன் வாகனம் கொள்வனவு செய்யப்பட்டது. தற்போது ஆதீன முதல்வரினால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மோட்டார் வாகனத்தின் பராமரிப்பு மற்றும் பாவனைச் செலவுகளுக்காக மாமன்றம் மாதந்தோறும் நிதியுதவி செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
L0eeLee0Leee0eeee0eeee0eLeLee0e0eeeeLeeeeee0eeee0LeLe0eeee0eeee0LeeeLeL0LeLeL0eLLe00eLe0LeLeL
rayaaaaaa LL LLL LLL LLL LLLLLLL k LLLLLL e LLLLLLLALLLL LLL LLLL L0 0L0 LLLLLLLLS e0LLG0LL0L0L00L00LLSL0LL0LTLLLY0LLLLL00LLL L00L0LLLL G GLGhhh
ՎՏ) 8 (Տի
圓リ
爵 S.
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 46
ஒரு வரலாற்றுப் பார்வை
பதினான்கு ஆண்டுக இந்து
மூe_அமூமூமூ9மூ9மூ9மூ9&அமூ98_அமூமூமூமூ&அ அ. க
Dமன்றத்தின் காலாண்டிதழாக சுடர்விட்டுப் பிரகாசித்து வரும் “இந்து ஒளி’ பதினான்கு ஆண்டுகளை நிறைவுசெய்து கொண்டு, பதினைந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் ஐம்பத்தாறாவது சுடரை இந்துப் பெருமக்களின் கரங்களுக்கு வழங்குவதில் மாமன்றம் பெருமகிழ்ச்சியும் பெருமையுமடைகிறது. பதினான்கு ஆண்டு நிறைவு இதழான இந்த “இந்து ஒளி” நல்லைக் கந்தன் மகோற்சவ சிறப்பிதழாக மலர்ந்துள்ளது.
“இந்து ஒளி” 1996ஆம் ஆண்டிலிருந்து கிரமமாக வெளிவந்து கொண்டிருப்பது ஒரு சாதனையாகவே பலராலும் பாராட்டிப் போற்றப்படுகிறது. இந்த வேளையில், “இந்து ஒளி’யின் வரலாற்றுப் பாதையை மீண்டும் நோக்குவது பொருத்தமாகவிருக்கும்.
மாமன்றத்தின் பணிகளுள் ஒன்றாக, சமய சஞ்சிகை யொன்றை வெளியிட வேண்டும் என்ற மாமன்ற உறுப்பினர்களது நீண்டகால விருப்பமும், வேண்டுகோளும் 1996ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவேறுவதற்கு திருவருள் துணை நின்றது. “இந்து ஒளி” என்ற பெயரில் காலாண்டு சஞ்சிகையாக உதயமான இவ்விதழ், தாது வருடம் கார்த்திகைத் திங்கள் 9ஆம் நாள் (24.11.1996) திருக்கார்த்திகைத் திருநாளில் முதலாவது தீபத்தின் முதலாவது சுடராக மலர்ந்தது.
“இந்து ஒளி'யின் முதலாவது சுடருக்கு ஆசிச் செய்தி வழங்கியிருந்த நல்லை ஆதீன முதல்வர் பூரீலழரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் “இந்து ஒளி எனும் சஞ்சிகை ஆழமான சமய தத்துவங்களை - மக்களுக்கு விளங்கக்கூடிய கருத்துக்களை முன்வைக்க வேண்டும்” என்று சொல்லியிருந்தார். கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் அன்றைய தலைவர் சுவாமிஜி ஆத்மகனானந்தா மகராஜ் அவர்கள் தனது ஆசிச் செய்தியில் “கடலைப் போன்று பரந்து கிடக்கும் இந்து சமயக் கருத்துக்களை மக்கள் அறியச் செய்யவும், அவர்களது சமய அறிவு வளரும் வகையிலும் மாமன்றத்தின் சஞ்சிகை வெளியீட்டு முயற்சி அமைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். தெய்வத் திருமகள் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் “இந்து ஒளி வெளியீடு பற்றி அறிந்து மகிழ்கிறோம். அந்த இதழ் சிறப்புற அமைய அம்பாள் துணை நிற்பாராக” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்து மதத் தலைவர்களினதும் பெரியார்களினதும் ஆசிகளுடனும் வாழ்த்துக்களுடனும் 1996ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தாது வருடத்தின் ஐப்பசி - மார்கழி இதழாக சுடர்விட்டு ஒளிவீசஆரம்பித்த “இந்துஒளி" மாமன்றத்தின் காலாண்டிதழாக உரிய காலங்களில் கிரமமாக வெளிவந்து பதினான்கு
(இந்து ஒளி

னை நிறைவு செய்யும் து ஒளி னகசூரியர் ఆఆ ఆఆ ఆఆ ఆఆ ఆఆ ఆఆ ఆఆఆ
வருடங்களை நிறைவு செய்திருப்பது வெற்றிகரமானதொரு சாதனை நிகழ்வு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
“இந்துஒளி' வெளியீடுகள் காலத்திற்குப் பொருத்தமான வகையில், அவ்வப்போது சிறப்பிதழ்களாகவும் வெளியிடப்பட்டு வந்துள்ளன. இந்தவகையில் 1997ஆம் ஆண்டின் ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 2, சுடர்: 1) கந்த சஷ்டி சிறப்பிதழாகவும், 1998ஆம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம்: 2, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும் வெளிவந்தன. தொடர்ந்து 1999ம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 3, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆணி இதழ் (தீபம் 3, சுடர் 3) பூரீமதி நித்தியழரீ மகாதேவன் இன்னிசை விருந்து சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம்: 3, சுடர்: 4) இரத்மலானை - கொழும்பு இந்துக் கல்லூரியூரீ கற்பக விநாயகர் மண்டலாபிஷேக பூர்த்தி சிறப்பிதழாகவும் ” வெளிவந்தன.
2000ஆம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 4, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம்: 4, சுடர் 3) இராமாயணம் நாட்டிய நாடகம் சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம்: 5, சுடர்: 1) கந்த சஷ்டி சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2001ஆம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம்: 5, சுடர். 2) மகா சிவராத்திரி சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம் 6, சுடர் 4) சுவாமி விபுலானந்தர் நினைவுச் சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம்: 5, சுடர்: 1) ஆறாவது ஆண்டு சிறப்பிதழாகவும் வெளிவந்தன. “இந்து ஒளி” தனது வளர்ச்சிப் பாதையில் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டு, ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த சிறப்பான நிகழ்வை நினைவூட்டும் வகையில் அந்த சிறப்பிதழ் வடிவமைக்கப் பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2002ஆம் ஆண்டில் வெளியாகிய தை - பங்குனி இதழ் (தீபம் 6, சுடர்: 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம் 6, சுடர்: 4) நவராத்திரி சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 7, சுடர்: 1) திருவெம்பாவை சிறப்பிதழாகவும் அமைந்திருந்தன.
2003ஆம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 7, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம் 7, சுடர் 3) இரண்டாவது உலக இந்து மாநாட்டு சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம் 7, சுடர்: 4) திருக்கேதீச்சரம் மகா கும்பாபிஷேக சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம்: 8, சுடர். 1) திருக்கார்த்திகை சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 47
2004ஆம் ஆண்டில் வெளியாகிய தை - பங்குனி இதழ் (தீபம்8, சுடர். 2) இரத்மலானை மாணவர் விடுதி ஆறாவது ஆண்டு நிறைவு சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம்: 8, சுடர்3) அமரர் ஆ. குணநாயகம் நினைவு தின சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம்: 8, சுடர்: 4) நவராத்திரி சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 9, சுடர்:1) திருவெம்பாவை சிறப்பிதழாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.
2005ஆம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 9, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம்:9, சுடர் 3) யாழ். இந்து மாநாடு சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம் 9, சுடர் 4) நவராத்திரி சிறப்பிதழாகவும் ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 10, சுடர்: 1) திருவெம்பாவை சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2006ஆம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 10, சுடர். 2) மகா சிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம் 10, சுடர்3) அமரர் வே.பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம் 10, சுடர். 4) பத்தாண்டு நிறைவுச் சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம் 11, சுடர் 1) பூரீலயூரீ ஆறுமுகநாவலர் நினைவுச் சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளன.
2007ஆம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் 11, சுடர். 2) துர்க்காபுரம் மகளிர் இல்லம் வெள்ளிவிழா சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம்: 11, சுடர் 3) அமரர் வே. பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறப்பிதழாகவும், ஆடி - புரட்டாதி இதழ் (தீபம்:11, சுடர். 4) கொம்பனித் தெரு பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம்: 12 சுடர்1) பூரீலழரீ ஆறுமுகநாவலர் நினைவுச் சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2008ஆம் ஆண்டின் தை-பங்குனி இதழ் (தீபம்: 12, சுடர். 2) மகாசிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம்:12, சுடர் 3) தெய்வத்திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி நினைவு அஞ்சலி சிறப்பிதழாகவும், ஆடி-புரட்டாதி இதழ் (தீபம் 12, சுடர். 4) நவராத்திரி சிறப்பிதழாகவும், ஐப்பசி - மார்கழி இதழ் (தீபம்:13, சுடர்: 1) ரீலரீ ஆறுமுகநாவலர் நினைவுச் சிறப்பிதழாகவும் வெளிவந்தன.
2009ஆம் ஆண்டின் தை-பங்குனி இதழ் (தீபம் :13, சுடர். 2) ஐம்பதாவது சுடராக - இரத்மலானை ழரீ கற்பக விநாயகர் மண்டலாபிஷேகப் பூர்த்தி சிறப்பிதழாகவும், மகா சிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம் : 13, சுடர்:3) முப்பெரும் சிறப்பிதழாகவும் (தெய்வத்திருமகள் கலாநிதிதங்கம்மா அப்பாக்குட்டி முதலாவது குருபூசை சிறப்பிதழ், அமரர் வே. பாலசுப்பிரமணியம் நினைவு அஞ்சலி சிறப்பிதழ், சிவஞானச்செல்வர் க. இராஜபுவனிஸ்வரன் நினைவு அஞ்சலி சிறப்பிதழ்), ஆடி - புரட்டாதி இதழ் (தீபம் 13, சுடர் : 4) தீபாவளி சிறப்பிதழாகவும், ஐப்பசி-மார்கழி இதழ் (தீபம் :14, சுடர் :1) பூரீலழரீ ஆறுமுகநாவலர் நினைவுச் சிறப்பிதழாகவும், 2010ஆம் ஆண்டின் தை - பங்குனி இதழ் (தீபம் : 14, சுடர் : 2) மகா சிவராத்திரி சிறப்பிதழாகவும், சித்திரை - ஆனி இதழ் (தீபம் : 14 சுடர் : 3) அமரர் வே. பாலசுப்பிரமணியம் நினைவுச் சிறப்பிதழாகவும் வெளிவந்துள்ளன.
(இந்து ஒளி

இதுவரையில் சமய அறிஞர்கள், சமய ஆர்வலர்கள், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் எனப் பலர் “இந்து ஒளி”சஞ்சிகைக்கு ஆக்கங்களை எழுதி வந்துள்ளனர். கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையிலான, அவர்களது பாடத்திட்டத்திற்கு அமைவான பல கட்டுரைகளை “இந்து ஒளி' சஞ்சிகையில் பல அன்பர்கள் எழுதி வருவதையும் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். “சிறுவர் ஒளி”, “மாணவர் ஒளி” என்ற தலைப்புகளில் அவரவர்களுக்குப் பயனுள்ள விடயங்களை வெளியிட்டு வருவதும் சிறப்பானதொரு அம்சமாகும். “இந்து ஒளி' சஞ்சிகையின் தீபம் 9, சுடர் 3 (2005) வெளியீட்டிலிருந்து “மங்கையர் ஒளி” என்ற புதிய அம்சமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக “இந்து ஒளி' சஞ்சிகையின் ஒவ்வொரு இதழிலும் நந்திக்கொடியின் சிறப்புகளை எடுத்துக் காட்டும் வகையிலான கட்டுரைகள் வெளியாகிவருவதும் சிறப்பான விஷயமாகும். பல அறிஞர்களும், அன்பர்களும் தாங்களாகவே முன்வந்து இது சம்பந்தமான கட்டுரைகளை தந்து உதவுகிறார்கள்.
இந்துப் பெருமக்கள் மத்தியில் நந்திக்கொடியின் மகத்துவத்தை அறியச் செய்யும் வகையில் இலவசமாகவே நந்திக்கொடிகளை விநியோகித்து வரும் மாமன்ற துணைத் தலைவரான விடைக் கொடிச் செல்வர் சின்னத்துரை தனபாலா அவர்கள், ஒவ்வொரு தடவையும் நூற்றுக்கும் மேற்பட்ட "இந்து ஒளி" சஞ்சிகையின் பிரதிகளை கொள்வனவு செய்து, தனது நண்பர்களுக்கும் அறிமுகமானவர்களுக்கும் இலவசமாகவே வழங்கிவரும் சிறப்பான கைங்கரியத்தை செய்து வருவதையும் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும்.
“இந்து ஒளி”இந்துப்பெருமக்களின் மத்தியில் பேரபிமானமும், பெருமதிப்பும் பெற்றிருப்பதற்கும், பதினைந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதன் ஊடாக ஐம்பத்தாறு சுடர்களை பிரகாசிக்கச் செய்வதற்கும் காரணமாகவிருக்கும் மாமன்றப் பொதுச் செயலாளரும் முகாமைத்துவமும் தரும் ஆதரவையும், ஒத்துழைப்பையும், ஊக்குவிப்பையும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். அதேவேளையில், “இந்து ஒளி' உரிய காலங்களில் தவறாது வெளிவரவேண்டும் என்பதில் பெரும் ஆர்வமும் உறுதியும் கொண்டிருக்கும் காரணத்தினால், ஆரம்ப காலத்திலிருந்தே மாமன்ற வெளியீடுகள் குழுவின் செயலாளர் பொறுப்பையும் மாமன்றப் பொதுச் செயலாளரே ஏற்று பெரும் பங்காற்றி வருவதும் இதற்கு ஆதாரமாகும்.
“இந்து ஒளி”யை ஆரம்ப காலத்திலிருந்தே சிறப்பாகவும், கவர்ச்சிகரமாகவும் அச்சுப் பதித்து வழங்கிவரும் யுனி ஆர்ட்ஸ் நிறுவனத்தினரை மாமன்றம் பெரிதும் பாராட்டுகிறது. குறிப்பாக நிறுவனத்தின் முகாமைத்துவ அதிபர் திரு. பொன். விமலேந்திரன் அவர்களுக்கும், சஞ்சிகையின் வெளியீட்டுக் கருமங்களுக்கு உதவிவரும் யுனிஆர்ட்ஸ் நிறுவன பணியாளர்களுக்கும் மாமன்றம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.
“இந்து ஒளி’ எதிர்காலத்திலும் சிறப்பாக சுடர்விட்டுப் பிரகாசிப்பதற்கு இந்துப் பெருமக்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் மாமன்றம் தொடர்ந்து எதிர்பார்க்கிறது.
விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 48
யோகர் சுவாமிகள்
நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி - கிளியே இரவு பகல் காணேனெடி,
ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்ன மொழி நான் மறந்து போவேனோடி - கிளியே! நல்லூரான் தஞ்ச மெடி,
தேவர் சிறை மீட்ட செல்வன் திருவடிகள்
önrodu6io GrooräistöIT 6 Ing. - áf6fGSuu! கவலையெல்லாம் போகுமெடி.
எத்தொழிலைச் செய்தாலென் ஏதவத்தைப் பட்டாலென் கந்தன் திருவடிகள் - கிளியே காவல் அறிந்தி டெடி.
பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களெடி - கிளியே ஆறுமுகன் தஞ்சமெடி.
சுவாமி யோக நாதன் சொன்னதிருப் பாட்டைந்தும் பூமியிற் சொன்னாலெடி - கிளியே! பொல்லாங்கு தீருமெடி
நல்லைக் குமரா
(ബ கலாநிதி இராசையா முரீதரன்
யாழ்ப்பாணம்
நல்லையில் உறைபவனே ஞான வடிவேலவனே குமரா
நானிலம் போற்றிடும் தேனினும் இனியவனே முருகா! கல்லை யொத்த மனமும் கசிந்துருகக் காட்சி தந்தே
காதலுடன் நீ வந்து அருள்புரிவாய் குகனே! இல்லையெனாது வரமீந்தருளும் முருகா முத்துக்குமரா
ஈசன் திருமகனே வள்ளி தெய்வானை மணாளனே தொல்லை வினை தீர்க்க நீ ஓடோடி வருவாய்
தோத்தரித்தோம் உனையே காத்தருளவேண்டும் ஐயா! டு)
(இந்து ஒளி
 
 

வண்டாடு தண்டலை கொண்டெழு நல்லை வளம்பதியிற் கண்டா மணியொலி கேட்கின்ற தன்பீர் கடுகவம்மின் தண்டா மலப்பிணிதீர்க்கு மமுதசஞ் சீவிதங்கும் பண்டார மூலந் திறந்தது வாரிப் பருகுமினே.
- நல்லையந்தாதி - சோமசுந்தரப் புலவர்
அடியவர் அல்லல் அனைத்துந் தவிர்த்தருளும் நல்லூர்க் கந்தன் கண்டாமணி நாதம் கணிர், கணிர் என்று அடியார்கள் செவியில் விழுகின்றது. ஒவ்வொரு நாளும் கேட்கும் மணியோசை இன்று விடியற் காலையில் ஆனந்த பரவசமூட்டும் அற்புத சக்தியுடன் கேட்பதற்குரிய காரணம் என்ன? நல்லையிற் கோயில்கொண்ட முருகப்பெருமானின் மகோற்சவம் எப்போது வரும், எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த குகனடியார் செவிகளில் நல்லூர் அசையாமணியின் நாதம் நவசக்தியுடன் புத்துணர்ச்சியுடன் நுழைவதில் வியப்பொன்று மில்லை.
நல்லுர்க் கந்தசுவாமி கோயில் மகோற்சவம் ஆரம்பித்து விட்டால், அதன் அதிர்ச்சி யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, இலங்கை முழுவதிலும் மாத்திரமல்ல, கடல் கடந்து வெளியூர்களில் வதியும் யாழ்ப்பாணத்தவர்களிடம் மாத்திரமல்ல, குகனடியார்கள் வாழும் உலகம் முழுவதிலுமே காணப்படுகிறது.
வளந்திகழ் நல்லைப்பதியிடங்கொண்டு பாரகமனைத்தும் கதிபெறு நடனங் காட்டிடு வள்ளல் என்பதற்கையமில்லை. திருவிழாநிகழுங்காலத்திலே நல்லூர்க் கோயில் பூலோக கைலாசமாகக் காட்சியளிக்கின்றது. தெரு வீதிகளெல்லாம் புனித வீதிகளாக மாறுகின்றன. திருவிழா வேளையில் எந்த மயமும் கந்த மயமாகவே காணப்படுகின்றது.
எல்லாவுரிலும் சிறந்த நல்லூரில் எழுந்தருளிய கந்தவேளின் மகோற்சவம் நடைபெறும் இருபத்தைந்து நாளும் தினந்தோறும் விரதம் அனுட்டித்து, திருக் கோயிலுக்குச் சென்று, அதனை வலம் வந்து, திருவிழாவிற் பங்குபற்றி, முருகன் அருள்பெற்று வீடுதிரும்பும் பக்தர்களின் தொகையை அளவிடல் முடியாது.
- குல. சபாநாதன். நன்றி :இலங்கையின்புராதன சைவாலயங்கள்)
{E_{i_{G}{(a_{i_C._{E_{i_jææææ68
கந்தனே கடம்பனே கார்மயில் வாகனனே முருகா!
கார்த்திகேயனே வள்ளி மணாளனே குகனே வா எந்தனது இடர்களைய ஏன் இன்னும் தாமதமோ?
ஏரகத்திருப்பவனே ஏரம்பன் சோதரனே முருகா உந்தனது அருள்மழையில் நாம் நனைய வந்தோம்
ஊரார் போற்றி நிற்க வேரோடு வினை நீக்கி பந்தவினையறுத்துப் பாங்காய் நாம் வாழ்ந்திடவே
தோத்தரித்தோம் உனையே காத்தருள வேண்டும் ஐயா! (2)
46 விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 49
நாவலப்பிட்டி இந்து மன்றம் முதலாம்
LDமன்றத்தின் அங்கத்துவ சங்கங்களுள் ஒன்றான நாவலப்பிட்டி இந்து மன்றம் 11.01.2009 ஆம் திகதி அமெரிக்க ஹவாய் ஆதீனத்தின் தலைவர் தவத்திரு ரிஷி தொண்டுநாதன் சுவாமிகள் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கெளரவ செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன், கெளரவ உபதலைவர் திரு. சி. தனபாலா, விவேகானந்த சபைச் செயலாளரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சமய விவகார குழுத் தலைவராகவுமிருந்த அமரர் திரு. க. இராஜபுவனிஸ்வரன், கலாநிதி க. நாகேஸ்வரன் ஆகியோரது நல்லாசியுடன் ஆரம்பிக்கப்பட்டு மன்றத்தின் மகுடவாசகமான “தொண்டு வழி நிற்போம்” என்ற இலட்சியத்திற்கு இணங்க கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக நாவலப்பிட்டி பிரதேசத்தில் குறிப்பாக அதன் அருகில் அமைந்த பெருந்தோட்டங்களில் பற்பல தொண்டுகள் ஆற்றி வந்தது. மன்றத்தின் முதலாம் ஆண்டு நிறைவுவிழா கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி நாவலப்பிட்டி தமிழ் கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாவலப்பிட்டி இந்து மன்றத் தலைவர் திரு. ஆர். இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவிற்கு முதன்மை அதிதியாக மாண்புமிகு மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாசார அமைச்சர் திருமதி அனுஷியா சிவராசா அவர்கள் கலந்து சிறப்பித்தார். கெளரவ அதிதியாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கெளரவ பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கெளரவ பிரதிச் செயலாளர் கலாநிதி மு. கதிர்காமநாதன் அவர்களும், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் கெளரவ உபதலைவர் திரு. ஆறு. திருமுருகன் அவர்களும், கலாநிதி க. நாகேஸ்வரன் (முதுநிலை விரிவுரையாளர், சப்ரகமுவ பல்கலைக்கழகம்), திருமதி அருந்ததி சத்தியேந்திரா (மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர்) நாவலப்பிட்டி பூரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு. அ. சண்முகம் மற்றும் நாவலப்பிட்டி இறைபணிச் செம்மல் திரு. எஸ் முத்தையாபிள்ளை ஆகியோர்
வீரகேசரி பத்திரிகையின் 80 வருடநி:
தமிழ் பேசும் மக்களின் பேரபிமானத்திற்கும் பெருமதிப்பிற்கு தனது வரலாற்றுப் பாதையில் 80 வருடங்களை நிறைவு செய்து ெ இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோ இலங்கையின் பத்திரிகைத்துறை வரலாற்றில் மூத்த தமிழ்ப் ட மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் வீரகேசரி, கடற் சிறப்புகளுக்கும் மத்தியில் தனது வெற்றிப் பயணத்தை மேற்கொன் வீரகேசரி தமிழ்பேசும்மக்களின் குரலாக மட்டுமல்ல, அவர்களது மெருகூட்டி வந்திருக்கும் அதேவேளையில் தமிழ் பேசும் மக்கள் பல்ே அவர்களது ஏக்கங்களை உலகிற்குபறைசாற்றி உலக மக்களின் கவ ஊடாக கடந்தகால வரலாற்றுப் பாதையில் பதித்த தடங்கள் என் இயலாத காரியம். எனினும் அந்த வரலாற்றுப் பெருமை பாரெல்லா கடந்த ஐம்பத்தைந்து வருடகாலத்திற்கும் மேலான அகில இ6 வழங்கிவந்த பேராதரவிற்கும் அனுசரணைக்கும் மாமன்றம் என்ெ நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்தும் மாமன்றத்திற் கொண்டுள்ளோம்.
எண்பது வருட நிறைவுபெற்றுள்ள இவ்வேளையில் வீரகேசரி விளம்பரப் பகுதி, விநியோகப் பகுதி, அச்சகப் பகுதி, நூலகம் கடமையாற்றும் அனைத்துப் பணியாளர்களுக்கும் எங்கள் வாழ்த்து எண்பது வருட நிறைவைக் கண்டுள்ள வீரகேசரி நடந்துவந்தப நூற்றாண்டை நோக்கிய அதன் வளர்ச்சிப் பாதையில் சிறப்பான வாழ்த்துகிறோம்.
வி. கயிலாசபிள்ளை (தலைவர்) e
இந்து ஒளி

ஆண்டு நினைவு விழா (24.07.2010)
உட்பட பெரும் திரளான பொதுமக்களும் கலந்து விழாவைச் சிறப்பித்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு நாலவப்பிட்டி பிரதேச தமிழ் பாடசாலைக்களுக்கிடையே இந்து சமய அறிவினை வளர்ப்பதன் பொருட்டு பலவகையான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு முதலாம் ஆண்டு நிறைவு விழாவின் போது ஊக்குவிப்புப் பரிசில்களும் கேடயங்களும், சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர். போட்டிகளில் முதலிடம் பெற்ற நிகழ்ச்சிகள் விழாவில் மேடையேற்றப்பட்டன. சிறப்பு நிகழ்ச்சிகளாக நாவலப்பிட்டி நிர்த்தியா கலாலயா நிறுவனத்தின் மாணவிகள், நாவலப்பிட்டி பர்வதா நர்த்தனாலய மாணவிகளின் சிறப்பு நடனங்களும் இடம் பெற்றன. இது தவிர இன்னிசை நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இந் நிகழ்ச்சியில் இசைக் கலைமணி செல்வி சு.விஜயராணி அவர்களின் பாராட்டும் இடம்பெற்றது. இதற்கு மிருதங்க வித்வான் திரு.பி. திருநாவுக்கரசு மிருதங்கம் வாசித்தார். இவ்விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்குவதற்கு அகில இலங்கை இந்து மாமன்றமும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், நாவலப்பிட்டி இறைபணிச் செம்மல் திரு. எஸ். முத்தையாபிள்ளை அவர்களும் மிகவும் பயன்பெறக்கூடிய நூல்கள், அப்பியாசபுத்தகங்கள் என்பவைகளை அன்பளிப்புச் செய்திருந்தார்கள்.
நாவலப்பிட்டி பகுதியில் மிக நீண்டகால இடைவெளிக்குப் பின் இத்தகைய ஆன்மீக விழா அரங்கு நிறைந்த மக்கள் கூட்டத்தோடு மிகச் சிறப்பாக நடைபெற்றமை பலராலும் பாராட்டப்பட்டதுடன், தொடர்ந்து இம்மன்றம் தனது “தொண்டு வாழ்வு வாழ்வோம்” என்ற அடிப்படைச் சிந்தனையிலிருந்து வழுவாது மலையக மக்களின் ஆன்மீக கலை இலக்கிய சமூக மேம்பாட்டிற்கு பாடுபடல் வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
(தகவல்: நாவலப்பிட்டி இந்து மன்றம்)
றவு - இந்து மாமன்றம் வாழ்த்துகிறது
குமுரிய வீரகேசரி பத்திரிகை இம்மாதம் (ஆகஸ்ட்) 6ஆம் திகதியன்று காண்டதையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பாக f). த்திரிகை என்ற பெருமையைப் பெற்றுத் திகழ்வதுடன், தமிழ்பேசும் தகால வரலாற்றுப் பாதையில் பல்வேறுபட்ட சாதனைகளுக்கும் ாடு வந்திருப்பது பாராட்டத்தக்கது.
அபிலாஷைகளையும் எதிரொலித்து அவர்களது எண்ணங்களுக்கும் வறு சோதனைகளையும் வேதனைகளையும் எதிர்நோக்கிய சமயத்தில் னத்தை ஈர்த்த பொறுப்பான கடமையையும் வீரகேசரிசெய்திருப்பதன் றென்றும் சிறப்பானவை. அவற்றை விபரமாக எடுத்துச் சொல்வது ம் வாழும் தமிழ் மக்கள் அறிந்த உண்மையாகும். ங்கை இந்து மாமன்றத்தின் வளர்ச்சிக்கும் சேவைக்கும் வீரகேசரி றன்றும் கடமைப்பட்டுள்ளது. இதற்காக மாமன்றம் இதயபூர்வமான கு இத்தகைய ஆதரவை வழங்கி வரும் என்பதிலும் மிகுந்த நம்பிக்கை
யின் முகாமைத்துவத்தைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரிய பீடம், ஆவணக்காப்பகம் உட்பட வீரகேசரி வெளியீடு தொடர்பாகக் க்கள் உரித்தாகுக. ாதையில் கண்ட வெற்றிகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும், உயர்வுக்கும் இறையருள் துணைநிற்க வேண்டும் என இனிதே
را
s கந்தையா நீலகண்டன் (பொதுச் செயலாளர்) 7 விகிர்தி வருடம் ஆடி - புரட்டாதி)

Page 50
விவேகானந்த சபை சுவாமி விபுலானந்தர் நி6ை
நிகழ்வுக்கு தவிப்பவசித்த சபைத் தவைர் திரு. ஏ. ஆர். திருமுருகன், சபையின் உப தலைவர் கனாநிதி இராமஜெயம்
அவர்கள் ஆசியுரை வழா
மாமன்ற பொதுச் செயலாளர் திரு. கந்தையா நீலகண்டன்
திருமுருகன் சிறப்புரையாற்றுவதையும், இவருக்கு மாமன் அணிவித்து கெளரவி
தலைமையிலான மாணவக் கவிஞர்கள்
N 莎
( இந்து ஒளி 範
 
 
 
 

பின் ஸ்தாபகர் தினம்,
DIGI 5 GOLlib (25. O7.2OIO)
கரேந்திரன், சிறப்பு விருந்தினர் செஞ்சொற்செல்வர் ஆறு. அவர்களையும், கலாநிதி ஐயப்பதான சாம்பசிவ சிவாச்சாரியார் ங்குவதையும் காணலாம்.
வரவேற்புரை நிகழ்த்துவதையும், செஞ்சொற்செல்வர் ஆறு. 1ற பிரதித் தலைவர் திரு. மா. தவயோகராஜா மரப்பாரை ETLJEзијцип напомагаопћ,
சபையின் உப தEைவர் திரு. க. ஜெகதீசன் நன்றியுரையாற்றுவதையும், நிகழ்வுக்கு வருகை ந்திருந்தவர்களுள் ஒருபகுதியினரையும் FEITOLOJITGLII). لار
விகிர்தி வருடம் ஆடி-புரட்டாதி

Page 51
நாவலப்பிட்டி இந்து மன்றம் முதல
நாவலப்பிட்டி இந்து பன்றத் தவிர் நிரு. ஆர். க்ராஜேந்திரன், 8 கதிர்காமநாதன், மான்ற உபதலைவர் செஞ்சொற்செல்வர் ஆ
E - மாமன்ற பொதுச் செயலாளர் திரு.கந்தையா நீலகண்டன், பிரதிச் செயலா ஆறு. திருமுருகன் ஆகியோர் போட்டிகளிள் வெற்
மாமன்றப் பொதுச் செயலாளர் திரு.கந்தையா நீலகண்டன் மாமன்றத்தின் திருதி அனுஷியா சிவராசா அவர்களுக்க வழங்குவதையும், அது அவர்களையும் முதலாவது படத்திலும், நிகழ்வில் கலந்துகொண்ட அகில உறுப்பினர்களுடன் ஒEணய பிரமுகர்களை
 
 
 
 
 
 
 
 
 

s
பின்பற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்குகிறார்கள்.
வெளியீடுகளை மத்திய மாகாண தமிழ் கல்வி அந்ந்து கலாசார அமைச்சர் :கே நா:விப்பிட்; ந்ேது மன்றத் தண்டர் திரு.ஆர். இராஜேந்திரன்
ஆலங்கை ந்ேது மாமன்றத்தினதும் நாவலப்ரிட்டி இந்து மன்றத்தினதும் ாயும் ரேண்டாவது படத்திலும் காணலாம்.
ற்ற இசை நடன நிகழ்ச்சிகள்.

Page 52

鬱