கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.05

Page 1
50வது ஆண்டை நோக்கி.
ÄR LID6SI6
நெடுந் தொலைவி பிறந்த மண்ணை வி
60- 2011
 

வாழ்ந்தபோதும் - நஞ்சார நேசி
茵!
UU625 S.
6ýcapov - 4o/

Page 2
5. வருடத்திருமணசேவை நிறைவினை முன்னிட்டு
அழுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு
GlJub:
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், சுயதெரிவுமுறை
ருத்துநர் குரும்ப கிழயூர், மாயெழ வேல் அமுதறுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, சனி, நாயிறு நண்பகலி லேயோ தயங்காது தொடர்புகொள்ளலாம்
DEE() fci.
%ᏃX ۔۔۔۔۔
துரித சுலப மணமக்கள் தெரிவுக்குச் ແລະ சிறந்த முறை சுயதெளிவுமுறையே ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழுவேல் அமுதனே!
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
SOMERMUM SEGM6NMEB6fisio 22. siRSMRð
Gl sögyth B-tr-16Uff Mii · னை நிலை கண்டு துள்ளுவர்
உலகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திர
ான் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா டப் பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இட பற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் சிகை மல்லிகை, இதனை நாடாளுமன்ற திவேடான ஹன்ஸ்ார்ட் (04, 7, 2001) பதி சய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்கா ஆவணப்படுத்தியுமுள்ளது- அத்துட உலக வரலாற்றில் முதன் முதலில் சலு: னுக்குள் இருந்து வெளிவந்த இலக்கிய சஞ்சிகையும் மல்லிகையே தான்!
80 - കൃഖയ്യ കൃത്രL நோக்கி.
Ꮬ864
ல்லிகை அர்ப்பணிப்பு உணர்வுடன் வெளி ரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல- அ ர் ஆரோக்கியமான இலக்கிய இயக்
LDHಿಕ್ರಿà,
ல்லிகையில் வெளியாகும் எழுத்துக்களு கு எழுதியவர்களே பொறுப்பானவர்கள்!
201/4, Sri Kathiresan St, Colombo - 13. Te: 232O721
mallikaiJeeva@yahoo.com
மல்லிகையின் சந்தாதாரர் என்ற பதிவு வரலாற்று இலக்கியப் பதிவாகும்!
பலருக்கு - மல்லிகையின் தொடர் வாசகப் பெருமக்களுக்கு - இன்னமும் மல்லிகையின் அடிப்படைச் சிரமங்கள் புரியமாட்டாமலே இருந்து வருகின்றது.
மல்லிகையின் தனிமனித அசுர உழைப்பினாலும் தன்னம்பிக்கையினா லும் தளராத இலக்கிய நேசிப்புடனும் கடந்த 46 ஆண்டுக் காலங்களாக மலர்ந்து வரும் ஒரு மாத இதழாகும். அதுதான் அதனது மிகப் பெரிய பலமுமாகும்.
இதை மல்லிகைச் சுவைஞர்கள் புரிந்துகொண்டதாகவோ அல்லது தெரிந்து கொண்டதாகவோ தெரியவில்லை.
மல்லிகையின் ஆரம்பம் தொட்டே அதனது சந்தாதாரனாக இருந்து வந்துள்ள வனாக்கும்' எனத் தங்களது பிற்சந்ததியி னருக்குச் சொல்லிப் பெருமைப்படத்தக்க தற்காலச் செயல்களில் ஒன்றுதான் இந்தத் தொடர் பிணைப்பு என்பதை மல்லிகை யின் இன்றைய சந்தாதாரர்கள் தெளி வாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்தப் பாரிய நவீன இலக்கியப் போராட்டத்தைச் சரிவரப் புரிந்துகொள்ளாத சிலர், இடைநடுவே மல்லிகையின் முகவரி யையே மறந்துபோய் விடுகின்றனர். அதற் கும் ஓர் அடிப்படைக் காரணமுண்டு என் பதையும் நான் தெளிவாகவே புரிந்தும் தெரிந்தும் வைத்துள்ளேன்.
அவசர யுகம். பலருக்கோ வேலைப் பளு. இன்னும் சிலருக்கு நேரம் கிடைப்ப தேயில்லை. இன்னும் சிலருக்கோ மல்

Page 3
லிகை இதழ் கையில் கிடைக்கும்போது தோன்றும் ஆரோக்கியமான எண்ணங் களை நடைமுறைப்படுத்த முடியாத வாழ்க்கைச் சிக்கல். நல்ல நினைவுகள் நினைவுகளாகவே நெஞ்சில் நிலைத்துப் போய்விடக் கூடிய துர்ப்பாக்கிய நிலை நினைப்பதைச் செயற்படுத்த முடியாத அவசர நிலை.
- இத்தனையும் எனக்குத் தெரியும். ஏனெனில் இத்தகைய அவலச் சூழ்நிலைக் குள் உட்பட்டுத்தான் நானும் தினசரி மல்லி கைக்காக இயங்கி வருகின்றேன். அவலச் சூழ்நிலையையும் நேரமின்மையையும் சொல்லிக் கொண்டே நாம் நாட்களைக் கடத்திவிட முடியாது.
நாம் நமக்கு கிடைத்த வாய்ப்பு வசதி களைப் பயன்படுத்தி, அடுத்த தலைமுறை யினருக்கு ஏதாவது ஆக்கபூர்வமானதைச் செய்து வைத்துவிட்டுப் போக வேண்டும். - இல்லாது போனால் வரலாறு நம்மையெல் லாம் மன்னிக்காது.
இந்த வருங்கால ஆரோக்கியமான இலக்கியத் திசைவழியை மனதில் ஆழ மாக இருத்திக் கொண்டே, இன்று வரைக் கும் மல்லிகை தனது வேலைத் திட்டத்தை நிறைவேற்றி வருகின்றது.
மல்லிகையின் இலக்கியப் போராட் டத்தை மனதார நம்புகின்றவர், அதனை நெஞ்சார நேசிப்பவர்கள் ஒன்றைத் தெளி வாகப் புரிந்துகொள்ள வேண்டும். சகல வழி களிலும் தனிமனித உழைப்பையும், அர்ப் பணிப்புச் செயற்பாட்டையும் உள்வாங்கி, உள்வாங்கிக் கொண்டுதான் மாதா மாதம் சல்லிகை இதழ்கள் ஒழுங்காக மலர்ந்து வருகின்றன.
இந்த இலங்கைத் திருநாட்டைக் கலை
இலக்கிய நல்நிலமாக ஆக்கியே தீர வேண் டும், இந்த மண்ணைச் செப்பனிட்டு, வளர்த் தெடுத்து, அடுத்த சந்ததியினரின் கரங் களில் மனப்பூரிப்புடன் கையளிக்க வேண் டும் என்ற பாரிய நல்நோக்கத்துடன்தான் உழைப்பு என்ற நல்நீர் பாய்ச்சப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நமது நல்நோக்கத்தை நெஞ் சாரப் பலரும் புரிந்து, தெரிந்துகொண்டுதான் இதுவரை காலமும் மல்லிகைச் செடிக் நீர்வார்த்து வருகின்றனர்.
- இந்த ஆத்மார்த்திக உழைப்பைத் தெளிவாகப் புரிந்துகொண்டவர்கள் புரிந்து கொள்ளலாம். புரிந்துகொள்ள இயலாதவர் களைப் பற்றி நாம் என்றுமே கவலைப் பட்டது கிடையாது.
30-களில் தமிழகத்திலிருந்து மணிக் கொடி என்றொரு இலக்கிய இதழ் வெளி வந்தது. அந்த ஆரம்பகால இலக்கிய இத ழுக்கு ஏற்படாத பல அடிப்படைச் சிக்கல் கள் மல்லிகையின் தொடக்க காலத்தில் ஏற்பட்டதுண்டு. அந்த நெருக்கடியான யுத்த கால அவலத்தில் இருந்து கொஞ்சம் கொஞ் சமாக விடுபட்டு, தலைநகருக்குக் குடி பெயர்ந்து வந்து, இன்று நிலைத்து விட்டது. இங்கோ வேறுபல வாழ்க்கைச் சிக்கல் கள் இருந்தும் தனது ஆரோக்கியமான உள்நோக்கத்திலிருந்து மல்லிகை தடம் புரண்டு போனது கிடையாது.
மொத்தமாகச் சொன்னால், மல்லிகைச் சந்தாதாரராக நீங்கள் இன்று உங்கள் நாமத்தை பதியும்போது, உங்களையும் எதிர்காலத் தலைமுறையினருக்கு ஒர் ஆவணமாகப் பதிவு செய்தவர்களா கின்றீர்கள்.
- ஆசிரியர்

දැරණිමීණිමීළාé éල්ගdඒé ඉතිග්‍රdl
இந்த ஆண்டு ஏப்ரல் மாத நடுப்பகுதியில் நான்கு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற கம்பன் விழாவில், மகத்தான பாராட்டு வைபவம் ஒன்று நடைபெற்று, எல்லோரினதும் நெஞ்சங்களையும் அப்படியே கொள்ளை கொண்டு விட்டது.
நடனக் கலாவல்லி செல்வி பத்மா சுப்பிரமணியம் அவர்களை நமது நாட்டுக் கலைஞர்கள், பொதுமக்களின் சார்பாக பாராட்டிக் கெளரவித்த நிகழ்ச்சியை நிகழ்வில் கலந்துகொண்ட சகல மக்களும் மனங்குளிர, நெஞ்சு நெகிழ வாழ்த்தி வரவேற்றனர். அதைப் பார்த்த சகலரும் மெய்மறந்து, மன நெகிழ்ச்சியுடன் கரகோஷம் செய்தனர். இதன் மூலம் இந்தப் பாரிய கலைப் பாராட்டு நிகழ்ச்சியில்தான் மக்களினது உணர்னிவ மனதாரக் கண்டு களிக்க முடிந்தது.
பத்மா மாபெரும் தமிழகக் கலைக் குடும்பத்திலிருந்து உதித்தெழுந்தவர். கோகில வாணி, எம்.எஸ்., பாகவதர், சின்னப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், ரி.ஆர்.ராஜகுமாரி போன்ற சினிமா நட்சத்திரங்களை அந்தக் காலத்திலேயே உருவாக்கி, புகழடைய வைத்து இன்று வரைக்கும் அவர்களது நாமங்களை சினிமா உலகில் மறையாமல் நிலைநாட்டியவர். அத்தகைய சிறப்பும் ஆளுமையும் கொண்டவர்தான் அந்தக்காலத்து இயக்குநர் கே.சுப்பிரமணியம் அவர்கள்.
அன்னாரது புதல்விதான் இந்தப் பத்மா அவர்கள். தான் மனதார நேசிக்கும் நடனக் கலையின் மீது கொண்ட ஆழ்ந்த நேசிப்பின் காரணமாக, இறுதிவரை திருமணமே செய்து கொள்ளாமல், இன்றுவரையும் செல்வியாகவே வாழ்ந்து வருகின்றார்.
இத்தகைய ஆழமான கலைக் குடும்பப் பின்புலத்தைக் கொண்டு கலைக்காகவே வாழ்ந்து வரும் செல்வி பத்மா சுப்பிரமணியம் அவர்களைத் தேர்ந்தெடுத்து இந்தப் பெரும் கலை இலக்கிய விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியில் இலங்கைக் கம்பன் கழகம், நமது நாட்டுத் தமிழ் மக்களினது சார்பாக பாராட்டி மகிழ்ந்தது. அர்ப்பணிப்புக் கலைஞருக்கு இத்தனை பெரிய விழா எடுத்துக் கெளரவித்ததே, அது ஒன்றே போதும் - போதும்

Page 4
இலக்கிய ஆளுைை இக்க புனைகதைப் படைப்பவிை வவுலியூர் இற ைஉதயணன்
- தம்பு சிவா
தமிழ் இலக்கியச் சூழலில் தனித்துவம் மிக்க படைப்பாளியாக முகிழ்ந்து நிற்கின்றார், வவுனியூர் இரா உதயணன். தாம் வாழ்ந்த மண்ணின் மாந்தர்களை கதாப்பாத்திரங்களாகக் கொண்டு, அவர்களின் வாழ்க்கைக் கோலங்களை எழுத்தில் வடித்துள்ளார். லண்டன் மாநகரில் உயர்பதவியை வகித்துக்கொண்டு வாழ்ந்த போதிலும், பிறந்த மண்ணின் மேல் கொண்ட பற்றுறுதியின் காரணமாக, அங்கு வாழும் மக்கள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், துன்பதுயரங்கள், சடங்குகள் சம்பிரதாயங்கள், கலாசாரப் பண்பாடுகள் போன்ற இன்னோரன்ன அம்சங்களை உள்வாங்கி அவற்றைப் புனைகதைகளாகத் தந்துள்ளார் எழுத் தாளர் இரா. உதயணன். இலக்கியத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. படைப்பின் நோக்க மும் அதன் தன்மையும் படிப்பவர் நெஞ்சம் அகலாதபடி நகர்த்திச் செல்லும் விதமும்தான் அந்தப் படைப்புக்குக் கிட்டும் வெற்றியாகும். இந்த வகையில், தமது படைப்பின் மூலம் வாசகர் மனத்தில் இடம்பிடித்து வெற்றியும் கண்டுள்ளார் எழுத்தாளர்.
பல்வேறுபட்ட இலக்கியப் பங்களிப்புகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட போதிலும், புனைகதைத்துறையில் தடம் பதித்து ஓயாது எழுதிவருகின்றார். இதுவரை அவரது ஆறு நூல்கள் வெளிவந்துள்ளன. மாறுபட்ட சூழலில், வேறுபட்ட மனிதர்கள் என்ற ஒரேயொரு சிறுகதைத் தொகுதியைத் தவிர மற்றைய ஐந்தும் நாவல்களே.
சிறுகதை வாழ்க்கையின் சாளரங்கள். ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு சம்பவத்தை எடுத்துக் கூறுவது என்கிறார் சிறு. கதை மன்னன் புதுமைப்பித்தன். மாறும் என்கிற விதியைத் தவிர, மற்றவையெல்
மல்லிகை மே 2011 & 4

லாம் மாறிக்கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார் கார்ல் மார்க்ஸ். இலக்கியம் என்பது வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி என்று சொல்லுவார்கள். அந்த வகை யில் இரா. உதயணன் அவர்கள் தாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் வாழ்க்கையில் கிடைத்த சில அனுப வங்களை, நெஞ்சத்தில் பொதிந்து வைத்திருந்த நினைவுகளை, அநீதிக் கும் அக்கிரமத்திற்கும் எதிரான எண்ண அலைகளை தம் சிறுகதை களில் வடித்துத் தந்துள்ளார். அவரது கதைகளின் கதாபாத்திரங்கள் யாவும் உயிர்த்துடிப்புள்ள ஜீவன்கள். சமுதா யத்தில் அன்றாடம் தரிசித்த மனிதர் கள். கதைகளில் பேசப்படும் சம்பவங் கள் யாவும் நேரில் கண்ட காட்சிகளாக விரிகிறது.
மாறுபட்ட சூழலில் வேறுபட்ட மனி தர்கள், மனிதனாகப் பிறந்த நாங்கள் மாறுபட்டவர்கள். வேறுபட்ட சூழலில் எங்கள் சிந்தனைகளும், நோக்கங் களும் வித்தியாசமானவையாகவே இருக்கும். இந்தச் சிறுகதைத் தொகுப் பில் ஒவ்வொரு சிறுகதையிலும் மாறு பட்ட மனிதர்களை நீங்கள் சந்திக்கப் போகின்றீர்கள். இவ்வாறு ஆசிரியர் தனது உரையில் முன்னிறுத்தியுளார். இரா உதயணின் சிறுகதைகள் தமிழ்ச்சிறுகதை உலகிற்கு ஒரு புதிய வடிவத்தை வழங்கும் என்பது எனது நம்பிக்கை’ என்று நூலின் வெளியீட்
டாளர் அருணா செல்லத்துரை கூறியி ருப்பது ஒரு ஆரோக்கியமான நோக் காகும்.
மாறுபட்ட சூழலிலும் வேறுபடாத ஒரு மனிதநேய மிக்க எழுத்தாள னால்தான் மாறுபட்ட சூழலில் வேறு பட்ட மனிதர்களின் பெருமைகள் - சிறுமைகள் - உணர்வுகள் - உணர்ச்சி கள் - வக்கரித்த எண்ணங்கள் - வறட் டுக் கெளரவங்கள் போன்றவற்றை எழுத முடியும். இரா உதயணன் இலக் கியத்தைத் தொடர்ந்து படைத்து வரு கின்றார் என்றால், அவர் சமூகத்தின் மீது கொண்ட பிரிக்க முடியாத நேசிப்பே காரணமாகும். இந்த நேசிப்பு வெளிப்பாட்டின் ஒர் அங்கமே இந்தச் சிறுகதைத் தொகுப்பாகும். என்று நூலின் முன்னுரையில் பா.மனோ கரன் விளக்கியுள்ளார்.
இரா உதயணின் எழுத்துக்கள் பற்றி நோக்காளர்களின் கருத்துரை களை நோக்குமிடத்து, எழுத்தாளரின் நேர்மையும், அவரது இலக்கிய ஆளு மையும் பட்ட வெளிச்சமாகப் பிரகாசிக் கின்றது. எனவேதான் அவரை தமிழ் இலக்கியச் சூழலில் தனக்கென ஒரு தனித்துவம் கொண்ட எழுத்தாளராகத் தரிசிக்க முடிகிறது.
இவருடைய முதல் நாவல் சுருதி பேதமடைகிறது. 2008ஆம் ஆண்டு வெளிவந்து, அவரை ஒரு நாவல் எழுத் தாளராக வாசகர்களுக்கு அறிமுகமாக
மல்லிகை மே 2011 & 5

Page 5
வைத்தது. விதி வரைந்த பாதை யிலே. என்ற அவரது நாவல் அவருக் குப் பெருமையைத் தேடிக் கொடுத்தது. இந்த நாவலும் 2008இல் வெளிவந்து, இலங்கை அரச சாஹறித்திய மண்டலப்
பரிசினைப் பெற்றுக்கொண்டது. இலக்
கிய வரலாற்றிலே, ஈழத்து மண் வாசனையுடன் தமது படைப்புகளை வெளியிட்டு, பலரின் பார்வைக்கு உட் படுத்தப்பட்ட ஒரு எழுத்தாளராக இரா. உதயணன் தோன்றுகின்றார். விதி வரைந்த பாதையிலே மனித அவலங் களை சமுதாயத்தின் கண் தாம் தரி சித்த தரிசனங்களை யதார்த்தமாக வெளிக்காட்டுவதில் வெற்றிகண்ட ஆசிரியரின் கதாபாத்திரங்கள் எம் மனக்கண் முன் தோன்றி நீங்காத இடத்தைப் பெற்று நிற்கின்றன. அவரது உள்ளத்து உணர்வுகள், அவர் பிறந்து வளர்ந்த மண்ணையே வட்டமிட்டபடி உலா வருகின்றன. சாதாரண வாச கனும் புரிந்துகொள்ளக் கூடிய எளிய உரைநடையில் அவரது படைப்புகள் அமைந்துள்ளன.
அவருடைய இந்த நாவலில் வவுனியாவையும், அதனைச் சூழ்ந் துள்ள சில கிராமங்களின் அழகையும் எடுத்துக் காட்டுவதோடு, வவுனியா, சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங் களில் நடைபெற்ற சம்பவங்களையும், ஏமாற்றுக்காரர்களினால் ஏமாற்றப்பட்ட ஒரு அபலைப் பெண்ணின் கதையை முன்னெடுத்துச் செல்லுகின்ற விதம்
யதார்த்தமாகவே அமைந்துள்ளதைக்
ST600T6)Tib.
அவள் வாழ்க்கையிலும் எத்தனை சோதனைகள், ஜீரணிக்க முடியாத உண்மைகள்; நடந்து முடிந்த நிஜங் கள். ஒருகட்டத்தில் அவள் வாழ்க்கை யும் கூட, இடி விழுந்து கருகிப்போன தென்னைமரம் போல, சிதறிக் கிடந்த குருத்தோலைகள் போல, இளம் ஷிவ் தில் சிதறிப்போன அந்த மறக்க முடி யாத அத்தியாயங்களை மீண்டும் ஒரு தடவை நினைக்கத் தொடங்க கண் களிலிருந்து சொட்டாக நீர்த்துளிகள் வழிந்து, அவளது கன்னங்களை வரு டிச் சென்றன என்று முதல் ஆரம்பத்தி லேயே கருவுக்குக் கட்டியம் கூறிய துடன், உவமானங்களையும் முன் வைத்து கதையை நகர்த்தியுள்ளமை அலாதியானது.
தன் சாதி விட்டு வேறு சாதிக் காரனை விரும்பி அவனுடன் ஒடிவிட்ட பெண்ணின் நிலையும், அதனால் பெற் றோர் அவளை ஒதுக்கி வைப்பதைக் கதையில் கூறவந்த ஆசிரியர், சாதி என்ற சாபக்கேடு சமுதாயத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். இலக்கியம் வெறும் பொழுதுபோக்குக் கருவியல்ல. நயம் பார்த்து ரசித்துக் கொண்டிருக் கக்கூடியதுமல்ல. மக்கள் வாழ்க்கைக் குத் தேவையானவற்றைக் கருத்திற் கொண்டு உருவாக்க வேண்டியதே
மல்லிகை மே 2011 & 6

இலக்கியம் என்ற நிலையில் நின்று தமது இலக்கியப் படைப்புகளை இரா. 2 - 5ш6oот 6йт மேற்கொண்டு வரு கின்றார்.
வவுனியா மாவட்டம் விவசாயப் பூமியாகச் செழிப்புடன் இருந்த கால கட்டத்தில், வவுனியாவில் வாழ்ந்த இராமகிருஷ்ணா - கமலநாயகித்ம்பதி களின் சிரேஷ்ட புத்திரராக 1960இல் பிறந்த உதயணன், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் ஆகிய கல்வி நிறுவனங்களில் கற்று, மேற்படிப்புக் காக லண்டன் சென்றார். அங்கு வர்த் தக முகாமைத்துவ முதுநிலைமாணி, கணக்கியல் முதுநிலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்று நிதிப்பணிப்பாள ராகச் சேவையாற்றி வருகின்றார். இத் தகைய பொறுப்பு வாய்ந்த பதவியை வகித்துக்கொண்டு, இலக்கிய ஆர்வம் காரணமாக எழுத்துத்துறையில் கால் பதித்து ஒரு முன்னிலை எழுத்தாளராக முத்திரை பதித்து நிற்கின்றார்.
5ԼՕ5] இலக்கிய மேலோங்க உந்து சக்தியாக இருந்த முன்னாள் தினகரன் ஆசிரியர் அமரர் கலாசூரி சிவகுருநாதன் மதிப்புக்குரிய வர் என்பதை, அவர் சொல்லக் கேட்டி ருக்கின்றேன். மேலும், தமது எழுத் தாற்றலை வளர்க்க, பலவகையிலும்
ஆர்வம்
உதவிய முன்னாள் ஈழநாடு வார இத ழின் ஆசிரியர் சசிபாரதி சு.சபாரத் தினம் அவர்களை மதித்துத் தமது சிறு
கதைத் தொகுதியை அவருக்குச் சமர்ப் பணமாக முன்வைத்துள்ளார். மூத்த பத்திரிகையாளரும், இலக்கியவாதியு மாகிய, புதினம் ஈ.கே. ராஜகோபால் தமது இலக்கியத்துறை வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக இருப்பதையும், தமது ஆக்க இலக்கிய படைப்புகளை அருணா வெளியீட்டகம் ஊடாக வெளிக்கொணர்ந்து, முதன்மைப்படுத் தும் அருணா செல்லத்துரையின் சேவையையும் நன்றியுடன் நோக்கு கிறார். மேலும், உலகளாவிய ரீதியில் பல எழுத்தாளர்களை நண்பர்களாகக் கொண்ட ஒரு படைப்பாளி என்ற வகை யிலும் எழுத்தாளர் இரா. உதயணன் மதிக்கப்படுகின்றார்.
எழுதுவதில் எனக்கு எதுவித சிரம மும் இல்லை. ஏன் என்றால் எனக்குத் தெரிந்தவற்றைத்தான் நான் எழுதுகின் றேன். எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி நான் ஒருபோதும் எழுதுவ தில்லை' என்று மாக்ஸிம் கார்க்கி என்ற எழுத்தாளன் கூறியதற்கு அமை வாக, நாவலாசிரியர் இரா உதயணன் தமக்குத் தெரிந்தவற்றையே படைப் பாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
இவருடைய நூல் அறுந்த பட்டங் கள் என்னும் நாவல் 2009இல் வெளி வந்து, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருதினைப் பெற்றுக் கொண்டது. நாவல் வரிசையில் இரா உதயணனின் நான்காவது நாவல் இது. இதைத் தொடர்ந்து 2010ஆம்
மல்லிகை மே 2011 & 7

Page 6
ஆண்டு இரு நாவல்களை நூலாக வெளிக்கொணர்ந்துள்ளார். பனிநிலவு என்னும் நாவல் பற்றி ஆசிரியர் பின் வருமாறு கூறுகின்றார். ‘இன்றைய கால கட்டத்தில் தமிழ் மக்களாகிய நாம் எம்மைப் பற்றி மட்டுமே சிந்திக் காமல், எமது சமுதாயத்தில் பல இடர் களுக்கும், துயரங்களுக்கும் மத்தியில் வாழும் எம்மவர்களைப் பற்றி சிந்தித்து, எம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முற்பட்டால் அதுவே எமது சமுதாயத் திற்கு நாம் செய்யும் அளப்பரிய பணி யாகும்' என்கிறார்.
இவரின் உயிர்க்காற்று நாவல் இன்றைய சூழ்நிலையில் நடக்கின்ற நமது சமுதாயத்தில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. நாம் மறக்க நினைத்த சம்பவத்தைக் களமாகக் கொண்டு மீண்டும் கண்களில் கண்ணிர் வர வைக்கிறார். காலத்திற்கேற்றவாறு கற்பு என்பதற்கான வரைவிலக் கணத்தை இந்நாவலில் மீளாய்வு செய் séprir.
தமிழ்நாட்டிலிருந்து வெளிவரு கின்ற இனிய நந்தவனம் என்னும் சிற் றிதழின் ஆலோசனைக் குழு உறுப்
பினராகவும் இருந்துகொண்டு, இலக்
கியப் பணியாற்றுகின்றார். கொழும்பில் நடைபெற்ற உலகச் சிற்றிதழ்கள் சங்க மாநாட்டுக்குச் சிறப்பு அதிதியாக வருகை தந்து சிறப்பித்ததுடன்,
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்ற சர்வதேச எழுத்தாளர் மாநாட் டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு, தமது ஆணித்தரமான கருத்துக்களை யும் உரையில் முன்வைத்துள்ளார். மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலா சாலை மண்டபத்தில் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய தமிழியல் விருது வழங்கும் வைபவத்” தில் சிறப்பு விருந்தினராகக் கலந் சிறப்பித்தார். எழுத்தாளர் அந்தனி ஜீவாவின் 'அமைதி கோர்ட் நடந்து கொண்டிருக்கிறது!’ என்னும் நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ்ச் சங் கத்தில் நடைபெற்றபோது சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற இரா. உதயணன் கெளரவிக்கப்பட்டமை சிறப்பு நிகழ்ச்சியாகும்.
படைப்பிலக்கியத்துறைக்குப் பெருமை சேர்த்துள்ள இவர் எழுத் தாளர்களை ஊக்குவிப்பது, அவர் களுக்கு ஆதரவு வழங்குவது என்ற வகையில் தமது பணியை விசாலப் படுத்தியுள்ளார். மாநாடுகள், விருது விழாக்கள், நூல் வெளியீடுகள் என்று பலவகைப்பட்ட இலக்கிய நிகழ்வுகள் எந்த நாட்டில் நடைபெற்றாலும் தவறாது பங்கு பற்றிச் சிறப்புச் செய்யும் பண்பாளன். அத்தகைய ஒரு இலக் கியப் படைப்பாளி, இலக்கிய வரலாற் றில் நிலைத்து நின்று அரும் பணி யாற்ற வேண்டும் என்று இலக்கிய நெஞ்சங்கள் வேண்டி நிற்கின்றன.
மல்லிகை மே 2011 & 8

அவுஸ்திரேலியாவில் அரங்கேற்றங்களுக்குக் குறைவில்லை. ஒவ்வொரு வாரமும்
இந்நாட்டில் ஏதாவது ஒரு மாநிலத்தில் பரதநாட்டிய, மிருதங்க, அல்லது வாய்ப்பாட்டு அரங்கேற்றம் நடந்து கொண்டுதாணிருக்கிறது. குறிப்பிட்ட மூன்று கலைத்துறைகளிலும் எம்மவர்களின் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கவும், பயிற்சி வழங்கவும் ஆசிரியர்கள் பல்கிப் பெருகிவிட்டனர். இந்த அரங்கேற்றங்களில் சில சமயங்களில் நாம் தமிழைத் தேடும் அபாக்கியவாதிகளாகி விடுவோம்.
பரதநாட்டிய அரங்கேற்றத்துக்குத் தயார்ப்படுத்தப்படும் எம்மவர்களின் பிள்ளைகளில் எத்தனை பேர் தொடர்ந்தும் ஆடுவார்கள் என்று நாம் கேள்விகேட்கக் கூடாது. அவர்களின் இல்லங்களில் அங்கேற்றப் படங்களின் தொகுப்பான அல்பமும் பதிவான இறுவட்டும் இருக்கும். விருந்தினர்கள் வந்தால், பார்த்துக் கேட்டு ரசிக்கலாம்.
அரங்கேற்றத்திற்காக அனுப்பப்படும் அழைப்பிதழிலும் நிகழ்ச்சியன்று தரப்படும் வண்ணமயமான சிறிய மலரிலும் தமிழைத் தேட வேண்டும். இது பற்றி யாரும் குறை சொல்லக் கூடாது. சொன்னால், நிகழ்ச்சிக்கு வரும் எம்மவரின் குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்பார்கள். அல்லது அவுஸ்திரேலியா வெள்ளை இனத்தவர்களுக்கும் கலா ரசிகர்களான வேற்று மொழி பேசும் இந்தியர்களுக்கும் தமிழ் தெரியாது என்பார்கள்.
கங்காரு நாடிருக் காகிதம்
esa of 6ao claiáságsti.
ජී6ඥාණීතෝෂිර් Coráෂීෂීc>{Tගණි ஆளை ஆளை Cார்க்கிறார்.
-முருகபூபதி கடந்த ஆண்டு இறுதியில் மெல்பனில் நடந்த தமிழ்- சிங்கள- ஏனைய இனத்த வர்கள் கலந்து கொண்ட ஒன்றுகூடலில் நான் சிங்கள மொழியில் பேசினேன். எம்மவர்களில் பலருக்கு ஆங்கிலம் தெரிந்த அளவுக்கு, சிங்களமும் தெரியும் என்ற நம்பிக்கையில் சிங்களத்தில் பேசினேன். அத்துடன் தமிழ் பேசத் தெரியாத சிங்களவர் களுக்கு, "இதோ பாருங்கள் நான் உங்களது மொழியை எனது சகோதர மொழியாகக் கருதிப் படித்துப் பேசுகிறேன். அதுபோன்று நீங்களும் எமது மொழியைப் பேசிப் பழகுங்கள்’ என்று உணர்த்துவதற்காகவும் அப்படிப் பேசினேன்.
மல்லிகை மே 2011 தீ 9

Page 7
சில தமிழ்க் கொழுந்துகள் அதனால் அதிருப்தியுற்றதாகப் பின்னர் அறிந் தேன். ஆனால், காலம் காலமாக இந்தக் கடல் சூழ்ந்த கண்டத்தில் எம்மவரின் அரங்கேற்றங்களில் நாம் தமிழைத் தேடு கின்றோமே என்று எவரும் கவலைப் படவும் இல்லை. அதிருப்தி தெரிவிக்க வும் இல்லை.
இந்த அரங்கேற்றங்கள் பற்றி சொல் வதற்குப் பல சுவாரஸ்யங்கள் இருக் கின்றன.
அதில் ஒன்றை மாத்திரம் சொல்லி விட்டு, நான் முக்கியமாகக் குறிப்பிட்ட வந்த விடயத்துக்கு வருகின்றேன்.
'வசதியிருக்கும் போது எங்கட பிள்ளையின்ற அரங்கேற்றத்தை வெளி நாட்டுச் சொந்த பந்தங்கள் புடைசூழப் பார்த்துவிடுவோம். பிறகு, இந்த நாட்டில் பிள்ளை தனக்குத் துணையாக யாரைக் கொண்டு வருமோ தெரியாது”
"எங்கட விருப்பப்படி கலியாணங்கள் நடக்குமா? என்பதும் நிச்சயமில்லைத் தானே. அதுதான் எங்கட கைக்குள்ள இருக்கேக்கையே, எங்கட விருப்பப்படி அரங்கேற்றச் சடங்கை வைச்சிடுவோம். கலியாணச் சடங்கு எங்கட கையில இருந்தால் சரி. இல்லாட்டில் கடவுள் விட்ட வழி”
இந்த அரங்கேற்றங்களுக்காகத் தமிழகத்திலிருந்து புகழ்பெற்ற மிருதங்க, வயலின் வித்துவான்கள் பாடகர்கள், பாடகிகள் அழைக்கப்படுவார்கள். வந்த
வர்களும் அரங்கேற்றம் முடிந்தவுட னேயே விமானம் ஏறமாட்டார்கள். அவர் களுக்காக மற்றுமொரு மண்டபத்தில் மற்றுமொரு நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப் படும். அதற்குச் சில சமயம் அனுமதிக் கட்டணமும் வசூலிக்கப்படும். பச்சைத் தண்ணிரில் பலகாரம் பொரிக்க முடியாது g5TC360T.?
தமிழகக் கலைஞர்களுக்காக நடத் தப்படும் பிரத்தியேக நிகழ்ச்சியிலும் நாழி தமிழைத்தான் தேடிக் கொண்டிருப் போம். நிகழ்ச்சி அறிவிப்பிலிருந்து கலைஞர் அறிமுகம் வரையில் 26 எழுத்து சர்வதேச மொழிதான் உதிரும்.
ஆனால், எம் எழுத்துலக பிரம்மாக் களுக்கு முன்மாதிரியான விடயம் ஒன்றை இந்நிகழ்வுகளில் என்னால் காண முடிந்தது. நடன, மிருதங்க, வாய்ப்பாட்டு, அரங்கேற்றங்களில் இந்தத் துறை சார்ந்த அனைத்து ஆசிரியர்களை யும் காணலாம். அவர்களுக்குள்ளி ருக்கும் மனநிலை பற்றி எம்மால் எதுவும் சொல்ல முடியாது. ஆனாலும் அவர்கள் சக ஆசிரியர்களின் மாணவர்களின் அரங்கேற்றங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார்கள். அரங்கேற்றம் முடிந்த பின்னர் நடத்தப்படும் பிரத்தியேக நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள் கிறார்கள். கலைக்குடும்பத்தின் சங்க மத்தை இதிலே அவதானிக்க முடிகிறது.
ஆனால், அளவுக்கு அதிகமாக சுய பெருமை பேசும் எழுத்தாளர்கள் அறி
மல்லிகை மே 2011 & 10

வுலகம், சார்ந்தாவது ஒன்று கூடுவது அபூர்வமாகத்தான் நடக்கிறது.
எமது அவுஸ்திரேலிய தமிழ் இலக் கியக் கலைச்சங்கம் வருடந்தோறும் எழுத்தாளர் விழா நடத்தும்போது, எழுத் தாளரர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் பலரை மண்டபத்தில் காண முடியாது. பக்கத்தில் நடந்த எழுத்திாளர் ஒன்றுகூடலுக்கு வரமாட்டார்கள். ஆனால், சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை மலேசியாவில் நடத்துங்கள் தமிழ்நாட்டில் நடத்துங்கள் என்று வானொலி ஊடகத்தில் பிதற்றுவார்கள்.
மெல்பனிலும் சிட்னியிலும் தமிழக எழுத்தாளர் ஜெயமோகனும் இலங்கை எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பும் கலந்து கொண்ட இலக்கியச் சந்திப்பு நடந்தது. எத்தனை எழுத்தாளர்கள் இச் சந்திப்பில் கலந்து கொண்டார்கள் என் பதை என்னால் விரல்விட்டு எண்ணிச் சொல்ல முடியும்.
பல வருடங்களுக்கு முன்னர் எனது மூன்று நூல்களின் வெளியீடு சிட்னி யில் நடந்தது. அச்சமயம் தமிழகத்தி லிருந்து கவிஞர் அறிவுமதி வந்திருந் தார். சிட்னியின் நீண்டகாலம் வசிக்கும் ஒரு எழுத்தாளர். (நூல் வெளியீட்டு அழைப்புக் கிடைத்தும்) அவரை அந்தக் கூட்டத்துக்கு அழைத்து வரா மல் சிட்னி சுற்றிக் காண்பிக்க கூட்டிச் சென்றுவிட்டார்.
பின்னர் அறிவுமதி மெல்பனுக்கு வந் ததும் அவருக்காக நான் ஒரு சந்திப்பை ஒழுங்கு செய்ய நேர்ந்தது.
குறிப்பிட்ட சிட்னி எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி வந்திருந்தபோதும் (தகவல் தெரிந்திருந்தும் எனக்கு தகவலை கசியவிடாமல்) மெளனம் காத்தார். பிறகு நான் எப்படியோ தகவல் அறிந்து அவரை மெல்பனுக்கு அழைத் துச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்தேன்.
இப்படியும் இருக்கிறார்கள் எமது எழுத்தாளப் பிரம்மாக்கள்.
இலங்கையில் கடந்த ஜனவரியில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மா நாட்டிலும் சிலரை இனம் காண முடிந்தது. வீடு தேடிச்ச சென்று அழைப்பிதழ் கொடுத்த சில எழுத் தாளர்கள், அந்தப் பக்கமும் எட்டியும் பார்க்கவில்லை. அமைப்பாளரான என் னுடனோ அல்லது மாநாட்டு அமைப்புக் குழுவினருடனோ கருத்தியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தாலும், அதில் கலந்து கொண்ட இளம் தலைமுறை யினருக்காகவாவது வந்திருக்கலாமே என்ற பெருமூச்சுத் தான் வந்தது.
எழுத்தாளர்கள் தனித்தனி தீவு களாகி விடுகிறார்களோ?
"ஆளை ஆளைப் பார்க்கிறார். ஆட்டத்தைப் பார்த்திடாமல் ஆளை ஆளை பார்க்கிறார்’ என்ற பாடல் இவர்களுக்கும் பொருந்தும்.
மல்லிகை மே 2011 & 11

Page 8
இழவிழுந்த வீட்டிலே கள்ளிச்செழகள்
பூக்காதா..?
விருத்தங்கள்
எழுத முடியாத அளவுக்கு
வருத்தங்கள்
கவிதைகளுக்கு சிறகு பொருத்த முடியவில்லை அப்படி இருக்கையிலே மனிதனுக்கு எப்படிப் பொருத்துவேன்.?
கண்ணிர் தின்று உடலைக் கொன்று வளரும் மிருகம் யார் சொல்லையும் கேட்காது.
தோள்களில் சிறகு பூட்ட நினைத்தவனின் கால்களிலே சிலுவைகள்
ஆனாலும் இடி விழுந்த வீட்டிலுருந்தும் கூட கள்ளிச்செடிகள் பூக்க நினைக்கிறது.
மதங்களுக்கு முதலிலே மருத்துவம் பார்ப்போம்.
மதங்களுக்கு மதம் பிடித்திருப்பதினால் மதங்களுக்கே
முதலில் மருத்துவம் பார்க்க வேண்டும்.
பாங்கோசை
கோயில் மணி
பன்சாலை வேதம் தேவாலய கீதம் எல்லாம் செவிகளிலே கூடிவாழக் கூடும் போதிலே மனிதா நீ மட்டும் கூடிவாழக் கூடாதா..?
மரங்கள் பட்டையைக் கழற்றலாம் நீங்கள் மனிதாபிமானச் சட்டையைக் supfibribson LDIT?
கண்களில்
கருணை பொங்கலாம் a56öibT6osaßfñr GALurTrÄas6vorTLomr?
ஆலயங்களிலே பாலாறு பாயலாம்
இரத்த ஆறுகள் பாயலாமா?
மனித நேசம் இருக்கலாம் மனித வேசம் இருக்கலாமா?
உடலிலே ஒடவேண்டிய குருதி
தெருக்கடலிலே ஒடலாமா?
சுண்டல்காரன் கைஅகப்பட்ட சட்டப்புத்தகம்
போல மனிதநேயம் வீணாகியே போகிறது.
- பிரகலா ஆனந்த்
மல்லிகை மே 2011 & 12

தெரிவு
- ப. ஆப்டீன்
பெனிதுடுமுல்ல றோட் திரும்புற வழியில நின்றுகொண்டு முன்னுக்கு பாக்கிறன்; எந்தநாளும் பாக்கிற கட்டடம்தான். இன்றக்கி அது சென்ற் மேரிஸ் முஸ்லிம் மகா வித்தியாலயமாகத் தெரிது. அது ஒரு காலத்தில, அரசாங்கம் பொறுப்பெடுப்பதற்கு முன், ஒரு பேர்போன றோமன் கத்தோலிக்க ஸ்கூல். ஆயிரக்கணக்கானவங்கள படிப்பிச்சி நல்ல வழிகள காட்டி உருவாக்கி விட்டு எந்தவித பெருமையுமில்லாம கம்பீரமா நிக்கிது அது.
". அந்தக் காலத்தில் நகரத்தின் இன்னொரு எடத்தில இருந்து சென்ற் மேரிசின் கொன்வென்ட்ல படிச்ச பிள்ளதான், மருமகள் குமாலா.
இங்கிலிஷ் மீடியம், தமிழ் மீடியம் இருந்தும் அவ படிச்சது சிங்கள மொழி மூலந்தான் அரைகுறையாகப் படிச்சி, வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடியாமல் இடைநிறுத்தம் செய்தவ.
அரசாங்க ஸ்கூல்ல திரும்பவும் இங்கிலிஷ் தொடங்கணும்னு சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. ஆனா, அடிப்படை வசதிகள் வேணுமே?. எப்ப தொடங்குறது.? இங்கிலிஷ் மீடியம் பிரைவேட் ஸ்கூல்ல தொடங்கியிருக்கிறாங்க. எவ்வளவு சொன்னாலும் இந்த குமாலாவுக்கு வெளங்குதில்லை. மகள் பிறேவேட் ஸ்கூல்ல இங்கிலிஸ் படிக்கணும்னு ஒத்த கால்ல நிக்கிறா பிரைவேட் ஸ்கூல்ல படிக்கிறது எங்கள பொறுத்த மட்டும் பெரிய செலவு, மகன் சலீம்ட சம்பளத்தில இதெல்லாம் செய்ய ஏலுமா..?
"இங்கிலிஷ். இங்கிலிஷ். ஒரே இங்கிலிஷ் மீடியம்."
"என்ன மீரான் அங்கிள். சென்ற் மேரிஸ் கொலஜை பாத்துக்கிட்டு. ஒரே யோசனையா இருக்கே இன்னொருக்கா போய் படிக்கவா..?"
சுப்பர் மார்க்கட்டில் ஒரு பை நிறையச் சாமான்கள் வாங்கித் திரும்பிக் கொண்டிருந்த நிசார் நானா கேட்டார்.
மல்லிகை மே 2011 & 13

Page 9
"எத்தனையோ மலாய் சமூக பிள்ளைகள உருவாக்கியிருக்கு இந்த ஸ்கூல். அவங்க எல்லாம் பெரிய பெரிய உத்தியோகத்தில இருக்கிறாங்க. அதான் நன்றியோட பாத்துக் கொண்டி ருக்கிறன். நாளக்கி என்ட பேரன சேர்க் கிறத்துக்கு இன்டர்வியூ. மருமகள் குமாலாதான் போக இருக்கிறா. சரி நிசார் நானா, இப்ப சென் மேரிஸ்ல இங்கிலிஷ் மீடியம் தொடங்கிட்டாங் களா..?"பதில் சொன்னதோடு அவரும் ஒரு கேள்வியைத் தொடுத்தார்.
"அது தெரியாது மீரான் அங்கிள். நாளக்கி போனா விசாரிச்சி பாக்க லாமே. புள்ளக இப்ப இங்கிலிஷம் சிங்களமும் படிச்சி என்ன செய்ய? பள்ளிவாசல்ல வெள்ளிக்கிழமைக்கு ஒரு கொத்துபா பிரசங்கத்தக் கேட்டு விளங்கிக் கொள்ள ஏலுமா..?"
ஒரு மலாய்ப் பிள்ளைக்குத் தமிழ் மொழி மூலம்தான் விமோசனமுண்டு என்று தெளிவாக இருக்கும் மிஸ்கின் அங்கிளுக்குச் சாதகமாகத் தலையில் மற்றுமொரு காரணத்தைத் திணித்து விட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினார், நிசார் நானா சுமையுடன்.
2
குமாலா நேர்முகப் பரீட்சைக்குப் போக ஆயத்தமானாள். மகன் சிரானும் வெள்ளை சேர்ட்டும், நீல காற்சட்டை யும், வெள்ளை மேஸ் ஜோடியும்.
கறுப்புச் சப்பாத்தும் அணிந்து தான் ஆயத்தமாகிவிட்டதை "மம்மி ஐ ஆம் ரெடி" என்று பிரகடனப்படுத்தினான். பாடசாலை, வீட்டிலிருந்து பதினைந்து நிமிட் நடைதூரம்தான்.
குமாலா இரண்டு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரத்தில் உள்ள வேறு பாட சாலைகளுக்கும் விண்ணப்பித்திருந் தாள். ஆனால், இன்னும் ஒரு பதிை யும் காணவில்லை.
குமாலாவின் கணவர் சலீம் நகரில் இல்லை. அட்டனில் ஒரு பிரபல தேயிலைத் தோட்டத்தில் பீல்ட் சுப்ப வைசர் தொழிலில் மாய்ந்து கொண்டி ருப்பதற்கே அவருக்கு நேரமும் கால மும் சரி. அடிக்கடி லிவு அனுமதிக்காத நிர்வாகம். இப்போதெல்லாம் வரு மானப் பெருக்கத்திற்காக ஒவர் டைம் வேலை செய்தேயாக வேண்டும். புத் தாண்டு தொடங்கினால், மகன் சிரானுக்குப் புத்தகங்கள் மற்றும் கற் பதற்கான உபகரணங்கள் வாங்க வேண்டும். வரவில் இது ஒரு மேலதிகச் செலவு. வருடாந்த போனஸ் கிடைக் குமோ? கிடைக்காதோ?
ஆனால், மனைவி குமாலா கெட்டிக்காரி. சமாளித்துவிடுவாள். வீடு குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்து வெளி வேலைகளையும் அவளே செய்து முடிப்பாள். நகர சபையில் மாதாந்தத் தண்ணிர் கட்டணம், மின் சாரக் கட்டணம், இப்படி எல்லா அலு
மல்லிகை மே 2011 & 14

வல்களையும் கன கச்சிதமாக செய்து (pgüшт6іт.
வீட்டில் ஒரு பழைய சிங்கர் மெஷின் இருக்கிறது. ஒய்வு நேரங் களில் லொடலொடவென்று இரைச்சல் பெரிதாக இருக்கும்.
குறைவு.
வருமானம்
வீட்டில் அனைத்து அலுவல்களுக் கும் ஆலோசனைகள் வழங்கும் பவர் சலீமின் வயதான தகப்பனார் மீரான் அங்கிள் அவர்களுக்கே உரியது. அவர் நீரிழிவு நோயாளி. அதிகமாக நடப் பதைத் தவிர்ப்பவர். ஒரு காலத்தில் லிந்துல தேயிலைத் தோட்டத்தில் பீல்ட் ஒபிசர்.
பெனிதுடுமுல்லயில் அவருக்கு ஒரு சொந்த வீடு. அவருக்குக் கிடைத்த ஊழியர் சேமலாப நிதியத்திலிருந்து வாங்கியது. ஒரு பகுதியை வாடகைக் குக் கொடுத்திருக்கிறார். பெரும்பகுதி யில் அவரும், சலீம் குடும்பமும்.
நேற்றிரவு அவர் மிகக் கவனமாக சிரானின் பிறப்புச் சான்றிதழ், கிராம சேவகர் வழங்கிய உறுதிப் பத்திரம். என்று எல்லாவற்றையும் பரிசீலித்து, கோவைப்படுத்தி. பைல் அப்பித்தான் (பைல் கவனம்) என்ற எச்சரிக்கை யுடன் குமாலாவிடம் கையளித்தார்.
அப்புறம் பேரன் சிரானை
அழைத்தார்.
"சிரான் பேசொனா ஸ்கூல்ன மஸ்பி, பிரின்சிபல் அர்தாஞபடனா புத்துல்னா இங்கிலிஷ்டரி தாக்குத் தரானா மசோமொங். தவ்சி." (சிரான் நாளைக்கு பாடசாலைக்குப் போக ணும். அதிபர் கேட்கிற கேள்வி களுக்குச் சரியாக ஆங்கிலத்தில் பயப்படாமல் பேசவேண்டும் சரியா.)
மீரான் அங்கிள் பேரனுக்கு அறிவுரை வழங்கினார்.
சிரான் எல்லாவற்றிற்கும் உம் கொட்டினான்.
அதைத் தொடர்ந்து அவர் அவனுக்கு ஒரு சின்ன ஒத்திகை நடத்தினார்.
"வட் இஸ் யுவர் நேம்.?"
"மை நேம் இஸ் துவான் சிரான் சலீம்."
"ஹவ் ஒல்ட் ஆர் யூ.?" "fபய்யியர்ஸ் ஒல்ட்."
இப்படியாகச் சில கேள்விகள்.
மீரான் அங்கிளுக்கு அந்த ஒத்திகை முழுமையான திருப்தி. ஆனால், மீடியம்தான் அவர் தலை யைப் போட்டுக் குடைந்து கொண்டி ருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் மீரான் அங் கிள் அவருக்குப் பிடித்தமான பால போதினி என்னும் தமிழ்ப் பாட நூலை வாங்கிக்கொண்டு வந்து பேரனுக்கு
மல்லிகை மே 2011 & 15

Page 10
என்று தொடங்கப் போய், அவரது ”ہ9“
வீட்டோ பவர் காற்றில் பறந்தது. சலீ
மும் குமாலாவும் தலையிட்டு ஆங் கிலம் படிக்கிற பிள்ளைக்கு இப்பவே தமிழும் சிங்களமும் தேவையில்லை என்று முற்றுப்புள்ளியைப் போட்டு விட்டனர்.
3
சென்ற் மேரிஸ் கொலேஜ் அலுவலகத்தைச் சுற்றிப் பத்துப் பதினைந்து பெற்றார்கள் குழுமி நிற்கின்றனர். குமாலாவும் மகனுடன் போய் அவர்களுடன் சேர்ந்து கொண் டாள். அவளது கைக்கடிகாரம் காலை ஒன்பதே முக்கால் பிந்தி விட்டிருப் பதைக் காட்டியது.
சரியாகப் பத்து மணிக்கு அலு வலக ஊழியர் வந்து நீள்சதுர வடிவமான முன் அறையில் நாற்காலி களை வரிசைப்படுத்தியதும் எல்லாரும் அமர்ந்தார்கள்.
நாற்காலிகள் போடப்பட்ட இரைச் சலைக் கேட்டதும், தேவாலயத்தோடு ஒட்டினாற் போல் உள்ள தலை வாசலில் நின்று கதைத்துக் கொண்டி ருந்தவர்களும் உள்ளே வந்து இருக்கைகள் தேடினார்கள்.
சரியான நேரத்திற்கு நேர்முகப் சந்திப்பு தொடங்கிவிட்டது.
முதலாம் தரத்திற்குப் பிள்ளை களைச் சேர்ப்பதற்குத் தகுதி கண்டு
கொண்டிருந்தது, நிர்வாகம். 1.
யூசுப் அதிபருக்குப் பக்கத்தில்
இரண்டு மூத்த ஆசிரியைகள். முத
லாம் வகுப்புகளில் கற்பித்து நிறைய
அனுபவம் பெற்ற ஆசிரிய மணிகள்.
புறம்பான ஒரிடத்தில் சான்றிதழ் களை மூலப் பிரதிகளுடன் ஒப்பு நோக்கிக் கொண்டிருந்தார், ஓர் ஆசிரி யர். பிறந்த திகதியும், இடமும் மிக் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டி யது அவசியம். ஏனைய அலுவல்களை எழுதுவினைஞர்கள் நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
வெளியில் ஒரு மெல்லிய கசமுச உரையாடல்.
"குமாலா எப்படி..? மகனை சேர்க்கவா?" சேலம்பிரிட்ஜிலிருந்து பிர சன்னமாகியிருக்கும் கைருன்னிசா, குமாலாவுக்குப் பழக்கமானவள். சும்மா ஒரு பேச்சுக்காகக் கேட்டிருப்பாள்.
சேக்கத்தான் கைரூன். இங்கே இங்கிலிஷ் மீடியம் இருக்கா..? மகன் சிரானுக்கு இங்கிலிஷ் தவிர வேறு எந்த லங்வேஜம்ை பேச வராது. இங் கிலிஷ்லதான் சேக்கனும்."
அப்படியா? எதுக்கும் விசாரிச்சிப் பாருங்க. நாங்க தமிழ் மீடியத்தில தான் சேர்க்கப் போகிறம். எங்கவர்ட
விருப்பப்படி,"
நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.
மல்லிகை மே 2011 & 16

"மிஸிஸ் குமாலா சலீம்."
கிளார்க் அழைத்ததும், அவள் பர பரப்புடன் கைக்குட்டையால் முகத் தைத் துடைத்துவிட்டு, நுழைந்தாள்.
உள்ளே
"பிளிஸ், சிடவுன்."
அனைத்துச் சான்றிதழ்களையும் பரிசீலனை செய்து உறுதிப்படுத்திய பின், அதிபர் பேசினார்.
o O o நீங்கள் கொன்வென்ட் பழைய மாணவியா?"
"யெஸ் சேர்."
"நாங்க இப்போ இங்கிலிஷ் மீடியம் தொடங்குற நிலையில இல்ல."
"அது பிறகுதான் சாத்தியப்படும். நீங்க ஒண்டு செய்யலாம். இப் போதைக்கு வேறு மீடியம் மூலம் தொடங்கினால், பிறகு நாங்கள் தகுதி கண்டு இங்கிலிஷ் மீடியத்தில் சேர்த்து விடுவோம். அவசியம் இல்ல."
ւսաւնւսւ- (36,6ծTւջա
"அதெப்படி சேர்? இங்கிலிஷ் மீடி யத்துக்குத்தானே அப்லிகேசன் கேட்டி ருந்தீங்க. நாங்களும் புள்ளய சின்ன வயசிலிருந்தே இங்கிலிவழிலதான் தயார்படுத்தியிருக்கிறம்."
குமாலா மூளையைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள்.
". அப்படியாயிருந்தா, இப்ப எதில சேர் சேக்கலாம் எண்டு சொல்றீங்க?"
அதிபரும் உதவி ஆசிரியர்களும் பரிசீலனை செய்தனர்.
சிரானின் ஆங்கில அறிவையும், பேச்சையும் பரிசீலனை செய்தனர்.
"ஹீ இஸ் குட் இன் இங்கிலிஷ்" என்று குறிப்பெழுதினார்.
"தமிழ் மீடியம் புள். மேலதிகமாக இரண்டு புதிய வகுப்புகளாகப் பிரித்தும் ஒரு வகுப்புக்கு நாற்பது பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலதிகமாக ஒரு பிள்ளையையாவது சேர்க்க முடியாத நிலை. ஆனா, இங்கிலிஷ் மீடியம் கேட்டு அப்ளிகேஷன் போட்டிருப்பவர் களுக்குச் சிங்கள மூலம் ஒரு ஸ்பெசல் வகுப்பை ஏற்படுத்தியிருக்கிறம். மிக முக்கியமாக ஆங்கிலம் விசேட பாட மாகக் கற்பிக்கப்படும். உங்க மகனை அதில சேர்க்கலாம். எதிர்காலத்தில இங்கிலிஷ் மீடியம் தொடங்கத்தான் இந்த ஏற்பாடு"
"எதுக்கும். நா வெளியில போய் வந்து சொல்றன். கொஞ்சம் ரைம் வேணும். ஒரு மணித்தியாலத்தில வந்துடுறன்."
"சரி. சரி. இண்டக்கி மூன்று மணிக்கு அப்ளிகேஷன் குளோஸ்.
மல்லிகை மே 2011 & 17

Page 11
அதுக்கு முந்தி வந்து சொல்லலாம். இல்லாட்டி அதிலும் இடமில்லாம போகும். இந்த வகுப்பில இருபத்தஞ்சி புள்ளகள மட்டுந்தான் சேர்ப்போம்."
குமாலா பரபரப்புடன் கல்லூரியின் முன்வாசலுக்கு வந்தாள். கையடக்கத் தொலைபேசியில் விரல்கள் அங்கு மிங்கும் அழுத்தின.
எதிர்முனையில் கணவர், சலீம்.
அட்மிசன் விடயமாக நடந்த விடயங்களை விரிவாக எடுத்துக் கூறினாள். •
"அப்படியா? மீடியம் மாத்துறது விளையாட்டல்ல. மொன்ரசொரியில் ஆங்கிலத்தில் படித்து, வீட்டிலும் ஆங்கிலம் மட்டும் பேசிப் பழகி. இப்ப மட்டும் தமிழ், சிங்கள மீடியம் என்றால், கல்வியும் மிகப் பின்தங்கிய நிலையில் தான். சிங்களம் அல்லது தமிழ் பிரிவில் சேர்க்கப்படும் பிள்ளைகள் நூற்றுக் கணக்கான சொற் பரிச்சயத்தோடுதான் வருவார்கள்.
சிரான் போன்ற பிள்ளைகளின் சொல்வளம் பூஜ்யம்தான்."
"இப்ப என்ன செய்றது.?"
"இங்கிலிஷில் படிப்பிக்கும் வேறு பாடசாலைகள் கிடைக்குமா..?"
"சொல்ல ஏலாது."
"நாங்க முதல்லே யோசிச்சிருக் கணும். இப்ப டூ லேட். பிரின்சிபல்
இல்லாட்டி..?
சொல்ற மாதிரி விசேஷ சிங்களப் பிரி வில் சேர்க்கவும். இங்கிலிஷ் மீடியம் பிறகு ஒழுங்கு செய்யப்படும் என்பது உறுதிதானே? . சொல்றார்?"
அங்கிள் என்ன
"அவர் பழைய கேஸ். அவருடைய பேச்சு சரிவருமா..?"
"ஓ.கே அவருக்குப் பிறகு கோல் எடுக்கிறன்."
"சரி சரி அப்ளிகேஷன் போட்ட மத்த ஸ்கூல்களையும் பாக்கிறன்.
குமாலாவுக்கு பெரும் குழப்பமாக இருந்தது. பாடசாலை தலைவாசலைத் தாண்டி வீதிக்கு வந்தாள்.
ஒரு முச்சக்கர வண்டியைப் பேசி இரண்டு மைல் சுற்று வட்டாரத்தில் விண்ணப்பித்திருந்த வேறு பாடசாலை களைத் தேடினாள்.
நல்லவேளை, அலுவலகங்கள் திறந்திருந்தன. இங்கிலிஷ் மீடியம் இல்லாததினால் போட்ட விண்ணப் பங்களுக்கு பதில் போடவில்லையாம்.
கட்டிட வசதிகள் இல்லை.
"ஆசிரியர் தட்டுப்பாடு." "பிரைவேட் சர்வதேச பாடசாலை களில் சேர்க்க முடியும்."
டொனேசன் கட்டணும்.
இவைதான் கிடைத்த பதில்கள். குமாலாவின் முகம் வாடிவிட்டது. பட்
மல்லிகை மே 2011 & 18

டென்று அவளுக்கு அடிமன உந்துதல். எப்படியாவது ஒரு தரமான இன்டர் நெஷனல் ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். கைப் பையைத் திறந்து பார்த்தாள்.
ஆட்டோவுக்குப் போதிய பணம் இருந்தது. ஆட்டோ மிக வேகமாகப் பறந்துகொண்டிருந்தது.
சற்றுத் தூரமாக இருந்தாலும், நகர ஒதுக்குப் புறத்தில் ஒரு தரமான சர்வ தேசப் பாடசாலையின் முன்னால் வண்டி நின்றது.
அலுவலகப் பொறுப்பாளருடன் சில நிமிடங்கள் உரையாடினாள்.
ஆங்கில மொழியில் மகன் சிரா
னுக்கு ஒரு சிறு தகுதிகாண் எழுத்துப் பரீட்சை,
தகுதி கண்டதும், படிவங்களும், பாடசாலை ஒழுங்கு விதிகளும் கை யளிக்கப்பட்டன.
அவற்றை நிரப்பி இரண்டு நாட் களில் டொனேசன் பணத்துடன் முத லாம் தவனைப் பாடசாலைக் கட் டணத்தையும் செலுத்தி முதலாம் தரத் திற்கு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
மகன் சிரானுடன் மிகுந்த அவசரத் தில் முன்றலில் வந்திறங்கிய குமாலா, ஆட்டோவுக்குப் பணத்தைக் கொடுத் தனுப்பி விட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
அலுமாரியைத் திறந்து, எதையோ துழாவி எடுத்து கைப்பைக்குள் திணித் துக் கொண்டாள்.
"அங்கிள் சிரானை பாத்துக் குங்க. நா டவுணுக்குப் போய் வாறன்."
மீரான் அங்கிளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
சிரான் உடை மாற்றிக்கொண்டு மேசையில பரத்திக் கிடந்த பரிஸ் ஹோட்டல் உணவை சாப்பிட்டுக் கொண்டே, டி.வியில் கார்ட்டுன் காட்சி களை ரசித்துக் கொண்டிருந்தான்.
அன்று மாலை மீரான் அங் கிளுக்கு மகனிடமிருந்து மிகுந்த ஆர் வத்துடனான தொலைபேசிக் குரல் ஒலித்தது.
"அட்மிசன் எப்படி முடிஞ்சதுன்னு தெரியாது. குமாலா ஸ்கூல்ல இருந்து வந்ததும் டவுனுக்குப் போயிருக்கிறா. இப்ப வந்திடுவா."
"செடங் மாதவ்னா. ஸ்கரங் அத்துக்கே மகிஜ்ஜனா. தராச் சாரஜோ அர்முர்த்தி." (எனக்குத் தெரிகிற மாதிரி இப்ப சிங்கள மீடியம் தவிர, வேறு ஒன்றும் செய்ய முடியாது என்றுதான் விளங்குது.)
தொடர்ந்து மலாய் தாய் மொழியில் தன் சொந்தக் கருத்துக்களை ஆணித் தரமாக வெளிப்படுத்தினார், மீரான் அங்கிள்.
மல்லிகை மே 2011 & 19

Page 12
"பிரைவேட்ல படிக்கிறதுக்கு நெறய செலவுதான். டொனேசன் வேற. சலீம் இது உன்ட வருமானத்துக்கு ஒத்துவராது. உன்னால யோசிச்சுப் பார்க்கவே ஏலாது. விரலுக்கு ஏத்த மாதிரி அரசாங்க ஸ்கூல்ல ஒன்றிலா சேர்த்து. தமிழ் மீடியத்தில படிப்பிச்சா இங்கிலிஷம்ை இருக்குதானே! ஆனா, கவனமா சிங்களத்தை டியூசன் மூலமா உயர்தரத்துக்கு கொண்டு வரணும். அப்படிச் செய்தா, மலாய் சமூகத்துக்கு இருக்கும் எடியுகேசனல் புரொப்லம்ஸ் களுக்கு விடிவு கிடைக்கும். மார்க் கத்தில பற்றுள்ளவனாகவும் வளர முடியும். ஏதோ நா சொல்லிட்டன். இதுதான் எப்பவும் என்னுடைய சொந்த முடிவு"
"பிள்ளைய எந்த ஒரு மொழியில யும் சேர்க்கிறதாயிருந்தாலும், அந்த மொழியின் அடித்தளத்தை மொன்ர சொரியிலிருந்தே திட்டம் போட்டு உறுதியா போட்டிருக்கனும். அதான் பிள்ளைய படிப்புக்கு தயார்படுத்தி ஸ்கூலுக்கு அனுப்பச் சொல்லி நா கத்திக்கிட்டு இருந்தது. இப்ப என்ன நடக்கப் போகுது, தெரீமா? முன் யோசன இல்லாமக்கி இங்கிலிஷ். இங்கிலிஷ் எண்டு இருந்திட்டு. இப்ப எப்படிச் சரி எதிலயாவது படிச்சா போதும் என்ட முடிவுக்கு வரவேண்டி யிருக்கு. பிள்ளயின் எதிர்காலத்த ஸ்கூல் தலைவாசல்ல தீர்மானிக்க வேண்டியிருக்கு. வீ ஆர் டெமேஜிங்
அவர் சைல்ட்ஸ் எடியுகேஷன். . எனக்கு இதில விருப்பமில்ல. எல்லாம் நஸிபா..? (விதியா) நான் அப்படிச் சொல்ல மாட்டன்."
"இப்ப ஸ்கூல்ல என்ன நடக்கப் போவுது தெரிமா..? வகுப்பில மத்த புள்ளகள் முன்னேறிக் கொண்டிருப் பாங்க. எங்கட சிரான் போன்ற பிள்ளை கள் மொழிச் சொற்கள தக்கித் தக்கி ஆரம்பிக்கப் போறாங்க."
"அப்பிடி ஒரு நிலம வராது அங்கிள். நா நாளக்கி சிரான பிரை வேட் இன்டர்நெஷனல் ஸ்கூல்ல சேர்க்க. ஒழுங்கி செஞ்சிட்டன்." என்று சொல்லும் போதே, மகனின் தொலைபேசித் தொடர்பு அறுந்து விட்டது.
"ஆப்பா லுரபீலங் குமாலா?" (நீ என்ன சொல்லுற குமாலா?)
鳍
ELDT - - நனை நட்டுகள ஈடு வச்சிட்டுத்தான்
டொனேஷன் கட்ட
இது வாறென். பிள்ளையின் படிப்புக்கு இல்லத நகை நட்டு எதுக்கு எனக்கு?"
இதைக் கேட்டதும் மீரான் அங் கிளுக்கு பெரும் அதிர்ச்சி. அதற்குமேல் அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. மெளனியாகி விட்டார்.
சிரானை இன்டர்நெஷனலில்
அனுமதித்து மூன்று மாதங்கள் கடந்து விட்டன.
மல்லிகை மே 2011 & 20

இப்பொழுதெல்லாம் குமாலாவின் தையல் மெஷின் ஓயாமல் சுழன்று கொண்டிருந்தது.
பெரும்பாலும் மீரான் அங்கிள் தனது கடமைகளைச் சலசலப்பின்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஒருநாள் மாலைப் பொழுதில் வழக்கம் போல், முகம் கைகால் அலம்பிவிட்டு படிப்பதற்காக மேசையில் இருந்து புத்தகங்களைப்
GG 99 (5LDIT6 on 6T66T60T Q6AD6ioLITLDnt...?
"ஆ.மா. அங்கிள்.”
‘நீதான் என்ன செய்வ.? உனக்கு இங்கிலிஷ் சரிவரத் தெரியாதே. நல்ல மாஸ்டரை ஒழுங்கு செய்து ரியூசன் குடுக்க நமக்கிட்ட வருமானம் இல்லயே.”
"ஆமா அங்கிள் பணமில்ல.”
"அதைச் சுட்டித்தான் நான் சொன்
புரட்டிக்கொண்டிருந்தான், சிரான். னது, கவண்ட்மெண்ட ஸ்கூல்ல
போடுங்க என்டு.
தமிழும் படிப்பான். இங்கிலிசையும்
அங்கெண்டா
G
மம்மி கம் ஹியர். ஹெல்ப் மீ. ஐ ஹேவ் சம் இங்கிலிஷ் ஹோம் வேர்க்.”
மம்மி.
படிச்சிடுவான். நம்மட வருமானத் துக்கும் கட்டுப்படியாகும்.” குமாலா புத்தகங்களை. எடுத்து விரித்துப் பார்த்தவாறே பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தாள்.
"சொறி அங்கிள் நான்தான் பிழை செஞ்சிட்டன்.”
பேராசிரியர் கி. விசாபரூபன் சம்பந்தன் விருது பெறுகின்றார்.
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் சமீபத்தில் நடைபெற்ற சம்பந்தன் விருது விழாவில் விருது பெற்ற பேரா சிரியர் கி.விசாகரூபன் அவர்களுக்குப் பேராசிரியர் வேதநாயகம் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கின்றார். பக் கத்தே செங்கை ஆழியான் காட்சி
தருகின்றார்.
மல்லிகை மே 2011 & 2

Page 13
விது என்ற சிறுவன் ஒருவனைச் சுற்றி நகரும் விது திரைப்படம் வாழ்வில் எதிர் நீச்சலடித்து போராடும் உத்வேகத்தைத் தருகின்றதுடன், சம்பவங்களை அழகாகக் கோர்த்து, ஒரு மலர் மாலை போல கவித்துவமாக நகர்கின்றது. எந்தவித தொய்வு மின்றி விறுவிறுப்புடன் நகரும் இந்தத் திரைப்படம் நிகழ்கால அரசியலையும், அரசியல் வாதிகளையும் சிறுவனின் வாழ்வோடு இணைத்து விமர்சிப்பதாக அமைந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
சேரிச் சிறுவனும், அவனது அதீத திறமையும் ஸ்லம்டொக் மில்லியனர் என்ற ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படத்தை நினைவூட்டுவது தவிர்க்க முடியாவிட்டாலும், விது திரைப்படம் முற்று முழுதாக எமது தேசத்தின் பின்னணியில் சிறுவனின் வாழ்வின் ஊடாக, நாட்டில் நாறிப்போயிருக்கும் அரசியல் கள நிலைகளை அலசுவ தால் தனித்துவமாக மிளிர்கின்றது.
சிங்களத் திரையுலகம் லெஸ்தர் ஜேம்ஸ் பீரிசின் காலம் தொட்டே ஏற்றமான இலக்குகளை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. தமிழ்த் திரையுலகில் இப்போதுதான் துளிர்த்தெழும் விடயங்கள் முன்னதாகவே சிங்களத் திரையுலகில் கால் பதித்தமை யினால், அவை சர்வதேச கவனிப்பையும் அதிகம் பெற்றன. தொழில்நுட்ப ரீதியில் இந்தியத் திரைப்படங்களை விட, பின்தங்கிய நிலையில் இருந்தாலும், அந்த நிலை யில் கூட ஆரோக்கியமான மாற்றங்களை அண்மைக்காலமாக தரிசிக்க முடிகிறது.
சிங்களத் திரைப்படங்கள் யதார்த்தத் 6 ரைப்படம் பற்றிய ர்ை திற்கு மிகவும் நெருக்கமானவையாக இருப் இரசனைக் குறிப்பு பதும், இயல்பான காட்சியமைப்பு, இசை, காட்சிப்படுத்தல் என்பவற்றாலும் தமக்கென శీర్వశ్రీడాgశ్రీ ஒரு தனித்துவத்தைக் கொண்டதாக அமைந் துள்ளன. தமிழ் திரையுலகிலும் அரசியலை குெடூைல் விமர்சிக்கும் படங்கள் பல வந்திருந்தாலும், அவை யதார்த்தமின்றி அதீதமானவை சீல்களத் யாகவே சித்திரிக்கப்பட்டன. தனி ஒரு நாய தீஞையுலகக்
கனின் அசகாய சூரத்தனத்தால் அனைத்
தையும் வெல்வதாக சித்திரிப்பார்கள். - ச. Wமுருகானந்த命
விது திரைப்படத்தை ஒரு அரசியல் திரைப்படமாகக் கொள்ளலாம் எனினும், வெகு இயல்பாக ஒரு ஏழைச் சிறுவனினதும், பாடசாலையினதும் பின்னணியில் படம் இயல்பாக நகர்த்தப்படுகின்றமை சிறப்பாக உள்ளது. இயல்பாக மனதைத் தொடவும் செய்கிறது. பல காட்சிகளில் உருகிப் போகின்றோம்.
மல்லிகை மே 2011 தீ 22

பிறப்புச் சாட்சிப் பத்திரம் இல்லாத மையினால் ஒன்பது வயதாகியும் பாட சாலையில் சேர முடியாத சேரிச் சிறுவன், அவனைப் படிக்க வைக்க வேண்டும் என்று துடிக்கும் தாய், பாடசாலை செல்லாவிட்டாலும், அவனிடம் இருக்கும் அறிவு என தொடக்கம் முதலே படத் தோடு ஒன்ற வைத்ததில் இயக்குநர் அசோக ஹந்தகம வெற்றி பெற்றுள்ளார்.
எனது உலகின் கதாநாயகன் என்ற கவி வரிகளுடன் தலைப்புப் பாடல் எம்மை ஈர்க்கிறது. பாடசாலையில் சேர் வதற்காக பாடசாலைக்கு வரும் விதுவை அழைத்து வரும் தாயார், அங்கு காலைக் கூட்டம் நடை பெறுவ தால் அங்கேயே நிற்கிறாள். அதிபர் தனது உரையை முடித்துக்கொண்டு யாராவது ஒரு மாணவனை ஆங்கிலத் "தில் உரையாற்ற வரும்படி அழைக் கிறார். மிக பிரபலங்களின் பிள்ளைகள் படிக்கும் அப்பாடசாலையிலிருந்து ஆங் கிலத்தில் பேசிட யாரும் மேடைக்கு வர வில்லை. அடுத்த வாரம் தயார்படுத்திக் கொண்டு வருமாறு பணிக்கிறார்.
சேரிப்புறத்தில் வாழ்ந்தாலும், பாட சாலைக் கல்வி வாய்ப்பு கிட்டாது விட் டாலும் விதுவுக்கு உல்லாசப் பயணி களுடன் கதைத்துப் பழகியதால் ஆங் கிலம் பேச முடியும். எனினும், அவன் பாடசாலை மாணவன் அல்லவே. அடுத்த வாரம், கடற்கரையில் பாட சாலை மாணவன் ஒருவனின் சீருடை, பாதணி என்பவற்றை எடுத்து அணிந்து
கொண்டு பாடசாலைக்கு வரும் விது காலைக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசி அனைவரையும் அசத்த வைக் கிறான். இதனால் அவனுக்குப் பாட சாலையிலும் இடம் கிடைக்கிறது.
இவனது பேச்சு வன்மையை
தனது அரசியல் வெற்றிக்குப் பயன்
படுத்த அரசியல்வாதி ஒருவர் பெரும் தொகையான பணத்தைத் தர முன் வந்தும், தாய் மறுக்கிறாள். அரசியல் வாதி எப்படியும் அவனைப் பேசவைக்க பிற வழிகளை நாடுகின்றார். இதனி டையே வரும் காட்சிகளில் அரசியல் வாதிகளின் கபடத்தனங்களும், போலி முகங்களும் புட்டுக் காட்டப்படுகின் றன. இறுதியில் பாடசாலை நிகழ் வொன்றில் விது உரையீாற்ற இருந் ததைக் குழப்பி அவனைத் தனது அரசியல் கூட்டத்தில் பேசவைக்க முயல்கிறார், அரசியல்வாதி. இது முறியடிக்கப்பட்டு பாடசாலைக் கூட்டத் தில் விது உரையாற்ற வருவதுடன் படம் நிறைவடைகிறது.
தாயார் பாத்திரமும், மூன்று சிறு வர்களின் பாத்திரமும், அரசியல்வாதி பாத்திரமும் நிஜமான பாத்திரங்களா கவே மாறி, நடிப்பது தெரியாமலே நடித் துள்ளமை குறிப்பிடத்தக்கது. இயக்கம், ஒலி, ஒளி, நடிப்பு, இசை எதுவுமே சோடை போகவில்லை. மனதுக்கு நிறைவு தந்த நல்லதொரு திரைப்படம் விது.
மல்லிகை மே 2011 & 23

Page 14
வெளிநாட்டு இலக்கியத் தகவல்கள்
பிரான்ஸ் நாட்டில் தமிழ்ச் சிற்றிதழ்கள் - பத்திரிகைகள்
- விரி இளங்கோவ்ன் (பிரான்ஸ்)
அறிமுகம் !
“பிரான்ஸ் இன்றேல், உலகமே தனித்துவிடும்” என்றார் விக்ரர் ஹியுகோ.
சுதந்திரம் - Liberté, சமத்துவம் - Egalité, சகோதரத்துவம் Fratermité என்பன பிரெஞ்சுப் புரட்சியின் சாசனங்கள்.
வரலாற்றில் பிரசித்தி பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம், மனித உரிமைகளை நன்கு மதிக்கும் முதல் நாடு என்னும் நிரந்தரப் பெயரைப் பிரான்சுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. பண்பாட்டுப் பாரம்பரியம், செல்வந்த அநுபவம், நல்ல வாழ்க்கை, உயர்ந்த மனப்பான்மை முதலானவற்றில் ஊறியவர்களாக பிரெஞ்சு மக்கள் விளங்குகிறார்கள் என்பர்.
கலை இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல் இன்பங்கள், சுற்றுலாத்துறை முதலானவற்றுக்கு உலகின் வரவேற்புத் தலைவாசலாகவும் பாரிஸ் நகரம் விளங்குகிறது.
* உலக மொழிகளில் பிரெஞ்சு மொழிக்கே இலக்கியத்திற்கான அதிக நோபல் பரிசுகள் (12) கிடைத்துள்ளன.
* திருக்குறளுக்கு 9 பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் உண்டு.
* பஞ்சதந்திரக் கதை பிரெஞ்சு மொழித் தழுவல் எனப்படுகிறது. தமிழில் காகத்தின் வாயில் இருப்பது வடை, பிரெஞ்சில் காகத்தின் வாயில் பாற்கட்டி
ik (g55fi60fl - Cuisine, J6)j60ôt l' -Ronde, Q95(85|T(86bT6ï - Eau - de - Cologne எனத் தமிழில் பேசப்படும் சொற்கள் பிரெஞ்சுச் சொற்களாகும்.
மல்லிகை மே 2011 & 24

* பிரெஞ்சு மொழியில் வழங்கப் U (6 LD RiZ - 9 JT 3'), Tek - தேக்கு, Catamaran - கட்டுமரம் என்பன தமிழ்ச் சொற்களாகும்.
* பிரெஞ்சு அறிஞர்களில், பிபெர்ஓ, ஜூலியன் வன்சன், மார்த்தினே, போலே போன்றோர் தமிழ் இலக்கண, இலக்கிய நுால்களை பிரெஞ்சில் எழுதி யும், மொழிபெயர்த்தும் உள்ளனர்.
* பிரெஞ்சு மொழியிலிருந்து விக்ரர் 6ìmộu (35[T6i6öI Les Misérables, 6IL666 (3 g (T 6) T 6). 601' Thé rése Raquin, Germinal, LDjö(BJLb U6ögTá, மோப்பாசான், வோல்த்தெயர், மோலிஎர், துமாஸ், ஜூல்வேர்ன் ஆகியோரின் படைப்புகள் தமிழுக்கு வந்துள்ளன.
* பிரெஞ்சு மொத்த சனத்தொகை யில் 75 வீதம் கத்தோலிக்கர், 7 வீதம் பிற மதத்தினர், 18 வீதம் மதம் அற்ற வர்கள், இங்கு மதம் தனி ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக வலுவிழந்து வரு கிறது.
“பிரான்ஸ் சம்பந்தப்பட்ட அனைத் தும் பெருமையானவை, அருமை யானவை. இதற்கு ஒப்பாக எந்த நாடும் இல்லை” என்றார் கோல்ட் சிமித்,
பிரான்ஸ் நாட்டில், முன்னர் அவர் களது ஆளுகைக்குட்பட்டிருந்த பாண் டிச்சேரி, காரைக்கால் போன்ற இடங் களைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் களும், ரியூனியன் தீவு - மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெயர் கொண்டவர்களும் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட வர்கள் வசித்த போதிலும் அவர்
களிடத்து தமிழில் தொடர்புகள், பேச்சு - உரையாடல், செயற்பாடுகள் மிக அரி தாகவே இருக்கிறது எனலாம். அவர்கள் பிரெஞ்சு மொழியிலேயே தமது தொடர்பு களைக் கொண்டிருக்கிறார்கள். மூத்த பரம்பரையினர் தமிழ் அறிந்தவர்களாக இருந்தபோதிலும் அவர்களது அடுத்த சந்ததியினர் தமிழில் உரையாட முடி யாதவர்களாக இருக்கின்றனர்.
சில குடும்பத்தினர் மாத்திரம் தமிழ்ப் பற்றுள்ளவர்களாகவும், தமிழகத் துடன் தொடர்புகளைப் பேணுபவர்களா கவும் இருக்கின்றனர். இவர்களது தமிழ் வாசிப்பு தமிழக வார, மாத சஞ்சிகை களும், சினிமா ஏடுகளாகவும் இருக் கின்றன.
பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழக புகுமுக - உயர்தர வகுப்புப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற தமிழையும் ஒரு பாடமாகப் படித்துக் கொள்ளலாம்.
உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பாரிஸ் மாநகரில் பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது தெரிந்ததே.
இலங்கையில் 1979ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே. ஆர். அரசின் கெடு பிடிகள், பயங்கரவாதச் சட்டம் அமுல் மற்றும் காரணங்களால் இளை ஞர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயரத் தொடங்கினர். ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகள் வழியாக அன்று பலரும் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்தனர். அதில் சிலர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழையத் தொடங்கினர். 1983 இனக்கலவரத்தின் பின்னர் பல்லாயிரக்கணக்கில் இடம்
மல்லிகை மே 2011 & 25

Page 15
பெயரத் தொடங்கிய மக்களில் கணிச மானோர் பிரான்ஸ் நாட்டிற்கு வந்தனர்.
பின்னர் பிரான்சுவா மித்திரோன் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அகதி அடைக்கலம் கோரி விண்ணப்பித்த தமிழர் பெரும்பாலா னோர் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் என லாம். இன்று சுமார் ஒரு லட்சத்திற்கு
மேற்பட்ட இலங்கைத் தமிழர் பிரான்சில்
வசிக்கின்றனர் எனலாம். இதில் ஆயிரக் கணக்கானோர் பிரெஞ்சுக் குடியுரிமை யும் பெற்றுவிட்டனர்.
பிரான்சில் புகலிடம் பெற்ற மக்
களின் பிள்ளைகளது நலன் கருதி தமிழ்ப் பாடசாலைகள் தனிப்பட்டவர் களால் ஆரம்பிக்கப்பட்டன.
ஆயுதப் போராட்ட இயக்கங்களின் ஈர்ப்பினால் புகலிடத்திலும் எம் மக்கள் பலரும் குறிப்பாக இளைஞர்கள் ஒவ் வொரு இயக்கங்களின் ஆதரவாளர் களாகக் காட்டிக் கொண்டனர். செயற் பட்டனர் என்றே கூறலாம்.
அவ்வாறு செயற்பட்ட ஒவ்வொரு பிரிவினருள்ளும் கலை இலக்கிய அரசியல் நேசிப்பு - தேடல் மிகுந்த ஒரு சிலர் தமது குழுவினர்க்குச் சார்பான தாகச் சஞ்சிகைகள், பிரசுரங்களை வெளியிடத் தலைப்பட்டனர்.
சஞ்சிகைகள் - பத்திரிகைகளின் தோற்றம்
1982-ம் ஆண்டளவில் (காலஞ் சென்ற) சபாலிங்கத்தின் முயற்சியில் ‘எரிமலை’ சஞ்சிகையும், (காலஞ்
சென்ற) உமாகாந்தன் முயற்சியில் தமிழ்முரசு' சஞ்சிகையும் வெளிவரத் தொடங்கின. இவை இலங்கை அரசியல் பிரச்சினைகளை முக்கியத்துவப்படுத்து வனவாகச் செய்திகளையும் கட்டுரை களையும் பிரசுரித்தன. கதை, கவிதை களும் இடம்பெற்றன.
மகளிர் அமைப்பின் சார்பில் லட்சுமி யின் முயற்சியில் ‘கண்' சஞ்சிகையும், புங்குடுதீவு நீர்வள அபிவிருத்திச் சபை வெளியீடாகப் புதுவெள்ளம் சஞ்சிதை யும் ஒரு சில இதழ்கள் வெளிவந்தன.
இலக்கிய நேசிப்பும், தேடலும் மிக்க இளைஞர்களான அருந்ததி, மனோ ஆகியோரின் முயற்சியில் 1989ல் "தேடல்’ அரசியல், இலக்கிய விழிப் புணர்வுச் சஞ்சிகையென வெளிவந்தது. ஆற்றல் மிக்க செயற்பாட்டாளரான (காலஞ் சென்ற) கலைச்செல்வன் மற்றும் சுகன் ஆகியோரின் முயற்சியில் பள்ளம் 1989ல் வெளிவந்தது.
யாழ், 'ஈழநாடு’ பத்திரிகையில் பணி யாற்றிய எஸ்.எஸ்.குகநாதனை ஆசிரிய ராகக் கொண்டு 'பாரிஸ் ஈழநாடு 1991ல் வாரப் பத்திரிகையாகத் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியது. எஸ்.கே. காசிலிங்கம், இ. கந்தசாமி, எஸ். பாலச் சந்திரன் ஆகியோர் அதில் பங்களித தனர்.
மனோ முயற்சியில் ‘ஓசை' சஞ் சிகை தரமானதாக 1990 முதல் வெளி வரத் தொடங்கியது. இச்சஞ்சிகை 1994 வரை முத்திங்கள் இதழாகத் தொடர்ந்து வெளிவந்து இளம்படைப்பாளிகளுக்குக் களமாக அமைந்தது.
மல்லிகை மே 2011 & 26

இலங்கைக் கலையகத்தின் வெளி யீடாக 1991ல் ‘கலையமுதம் வெளியா கியது.
பாரிஸ் மாநகரில் அக்காலப்பகுதி யில் வாழ்ந்த மூத்த எழுத்தாளர் எஸ்.
அகஸ்தியர் இலக்கியத் தாகம் கொண்ட
இளைஞர்களின் ஆதர்ஸமாக விளங்கி ஆற்றுப்படுத்தினார் எனச் சொல்லலாம். அக்காலத்தில் சஞ்சிகையாளர் பலரும் அவரிடமிருந்து ஆக்கங்களைப் பெற் றனர். ஒரே சஞ்சிகையில் பல புனை பெயர்களில் எழுதிப் பக்கங்களை நிரப் பினார் என்றும் கூறுவர். மார்க்சிச விளக் கங்களைப் பெறவும் இளைஞர்கள் அவரை அணுகியதுண்டு.
ஆரம்ப காலத்தில் கையெழுத்துப் பிரதியாகவும், பின்னர் தட்டச்சு செய்யப் பட்டும் வெளியிடப்பட்டன. அவற்றுள் சிலவற்றின் அட்டைகள் மாத்திரம் போட் டோக் கொப்பி எடுக்கப்பட்டுக் கலரில் பிரசுரிக்கபட்டன.
1990 காலப்பகுதியில் சு. கருணா நிதி, உதயகுமார் ஆகியோரின் முயற்சி யில் ‘சிந்து' என்ற சஞ்சிகை வெளி
uJIT60Tg5.
ரயாகரன் முயற்சியில் 'சமர்’ என்ற சஞ்சிகை அரசியல் கோட்பாடுகளை மேலோட்டமாக விளக்கும் வகையில் வெளிவரத் தொடங்கியது.
1992 காலப் பகுதியில் துரைஸ் முயற்சியில் 'சிரித்திரு நகைச்சுவை இதழ் வெளிவரத்தொடங்கியது.
அண்மையில் காலஞ் சென்ற பவன் கணபதிப்பிள்ளை முயற்சியில் ‘கதலி’
சஞ்சிகை 1995 காலப் பகுதியில் வெளி வரத் தொடங்கியது.
நண்பன்' என்ற பல்சுவை இதழும் வெளிவந்தது. நோர்வே நாட்டில் வெளி வரத் தொடங்கிய ‘சர்வதேசத் தமிழர் சஞ்சிகை ஒரு இதழைப் பிரான்சில் வெளியிட்டது.
1992ல் "ஐரோப்பா முரசு’ பத்திரிகை வி.ரி. இளங்கோவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.
1993ம் ஆண்டளவில் ‘தமிழன்’ பத்திரிகை வெளிவந்தது.
1993 - 1994 காலப்பகுதியில் கி.பி. அரவிந்தன் தொகுப்பில் 'மெளனம்" கலை இலக்கிய சஞ்சிகை சில இதழ் கள் வெளிவந்தன.
1996 காலப்பகுதியில் பாலம்' சஞ் சிகை அரசியல் முனைப்புடன் வெளி வந்தது.
1997-ம் ஆண்டளவில் மனோவின் முயற்சியில் 'அம்மா’ என்ற சஞ்சிகை வெளிவரத் தொடங்கியது. இச்சஞ்சிகை யில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல படைப்பாளிகளின் ஆக்கங்கள் பெறப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. இச்சஞ் சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
1998 முதல் எக்ஸில்' என்ற முத் திங்கள் சஞ்சிகையும் வெளிவரத் தொடங்கியது. பல நாட்டுப் படைப்பாளி களின் படைப்புகள் இதில் இடம் பெற்றன.
மல்லிகை மே 2011 & 27

Page 16
பத்மா இளங்கோவனை ஆசிரிய ராகக் கொண்டு 1999ல் பரிசு' என்ற பெயரில் சிறுவர்க்கான சஞ்சிகை வெளி வரத் தொடங்கியது.
காத்திரமான படைப்புகளைத் தாங்கி வெளிவந்த 'உயிர் நிழல்' சஞ் சிகை கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னரும் இன்றுவரை லட்சுமியின் முயற்சியில் முத்திங்கள் இதழாக வெளி வருவது குறிப்பிடத்தக்கது.
'ஆதங்கம்' என்ற சஞ்சிகையை வாசுதேவன், மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.
அண்மையில் காலஞ்சென்ற, ரமேஷ் சிவரூபன் முயற்சியில் 'வான்மத என்ற சஞ்சிகை 1999ல் வெளிவரத் தொடங்கியது. இக்காலத்தில் 'சுட்டு விரல்' என்ற சிறிய செய்தி இதழும் வெளியாகியது.
2000ம் ஆண்டில் ‘சங்கப்பலகை கவிமஞ்சரியும் வெளியிடப்பட்டது.
"ஈழமுரசு’ என்ற பத்திரிகையும் வாரந்தோறும் வெளிவரலாயிற்று.
வணக்கம், விளம்பரம் என்ற பெயர் களில் விளம்பர இதழ்களும் வெளி வந்தன.
பாரதி அச்சகத்தினர் தாமரை என்னும் சஞ்சிகையை இடைக்கிடை வெளியிட்டு வருகின்றனர்.
பாரிஸ் கம்பன் கழகத்தினர் கம்பன்’ என்ற திங்கள் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
பாரிஸ் ராகவேந்திரா சமூக நலச் சங்கத்தின் வெளியீடாக 'தீபச்சுடர்' சஞ் சிகையும் 2005ம் ஆண்டளவில் ஆன்மீக விடயங்களோடு பல்சுவை இதழாக வெளிவரத் தொடங்கியது.
திருமறைக் கலாமன்றத்தின் பிரான்ஸ் கிளையினர் முற்றம்' என்ற பெயரில் செய்தி இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
அசை என்ற பெயரில் அரசியல் கோட்பாடு விளக்கச் சஞ்சிகை இரு இதழ்கள் வெளிவந்தன.
கதம்பம், உறவுகள், வெகுமதி என்பனவும் சில இதழ்கள் வெளிவந்தன. வணிணை தெய்வத்தின் வண்ணை’ என்ற கலை இலக்கியச் செய்தி இதழும் இடைக்கிடை நினைத்த நேரத்தில் வெளிவரும் சஞ்சிகையாகப் பிரசுரமாகிறது.
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் பிரான்ஸ் கிளையினரது வெளியீடாக "வடு' என்ற செய்தி ஏடும் சில இதழ்கள் 2007ம் ஆண்டளவில் வெளிவந்தன.
வேலணை மத்திய மகா வித்தி யாலயம், மகாஜனாக் கல்லுாரி ஆகிய வற்றின் பழைய மாணவர் சங்கங்களின் வெளியீடாக ஆண்டுதோறும் மலர்கள் வெளியிடப்படுகின்றன.
நிலா என்ற சஞ்சிகை 2001 முதல் இடைக்கிடை வெளிவருகிறது.
இன்று உயிர் நிழல், நிலா, முற்றம், கம்பன் போன்றனவே தொடர்ந்தும் வெளிவருகின்றன எனக் கூறலாம்.
மல்லிகை மே 2011 & 28

90களில் சிற்றிதழ்கள் பல பிரான்ஸ் நாட்டில் வெளிவந்தன. சர்ச்சைகளை ஏற்படுத்தின. விவாதிக்கபட்டன.
தொடர்ந்து இலக்கியச் சந்திப்பு கள், கலை இலக்கிய நிகழ்வுகள் நடந்தன. அக்காலம் விழிப்புணர்வுக் காலம் எனச் சிலர் குறிப்பிடுவர். சிற்றிதழ்கள் - பார்வை * சிற்றிதழ்களின் வெளிப்பாட்டுக்குத் தனிநபர் சார்ந்த ஆளுமை, விருப்பு மாத் திரமல்ல, அரசியல் - பண்பாடு விருப்பு களும் காரணங்களாகின்றன. * சிறு சிறு குழுவினராகவும், அமைப்புகளாகவும், ஒன்று சேர்ந்தும், பிளவுற்றும் முயற்சித்து வருகின்றனர். * சிற்றிதழ் வெளியிடுவோர் அதிக மானோர் தாயகத்தில் அவற்றில் அனு பவமோ, இதழியல் கற்கை நெறியைக் கற்றவர்களோ அல்ல. * முதலில் கையெழுத்துப் பிரதிகளா கவும், தட்டச்சு செய்யப்பட்டும், பின்னர் போட்டோக் கொப்பி செய்யப்பட்ட இதழ் களாகவும் வெளியிடப்பட்டன.
சிற்றிதழ் - விடயதானங்கள்
* அரசியல் நிலைப்பாடு விளக் கங்கள் - முரண்பாடுகள் - சர்ச்சைகள் * இலங்கை அரசுக்கெதிரான முறைப் பாடுகள்-வன்முறைகளின் விளக்கங்கள் * இந்திய அரசுக்கெதிரான அமைதிப் படை காலம் முதல் இன்றுவரை - விளக்கங்கள் * தமிழர்க்கான அரசியல் அதிகாரம் கோரல் - வரலாற்று விளக்கங்கள்
* தமிழ்மொழி - பண்பாடு - பெருமை கள் - வரலாற்றுத் தொன்மை * சாதிப் பிரச்சினைகள் - போராட்டப் பதிவுகள் * புகலிட வாழ்வின் துயரச் சுமைகள், குடும்பப் பிறழ்வுகள் * பெண்கள் மீதான அடக்கு முறைகள் - கொடுமைகள் * சீதனப் பிரச்சினைகள் - விடுதலை * புலம்பெயர்ந்துவரும் வழிகளில் ஏற் படும் தொல்லைகள் - ஏஜன்சிக்காரர் சிலரின் கொடுமை, ஏமாற்று * கவிதை, கதைகளில் புதிய வடி வங்களை மேற்கொள்ளல் * போராட்டக் குழுக்களின் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல்கள், யாழ்ப் பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கில் கொலைகள் ஆகியன சம்பந்தமாக முக் கிய ஆயுத அமைப்பின் மீது விமர் சனங்கள் * பெண்ணிய அரசியலை முன் னெடுக்கும் மனோபாவம் பெண் எழுத் தாளர்களிடம் முனைப்பு * ஓசை, அம்மா, எக்ஸில், உயிர் நிழல் என்பன புதிய வடிவங்களைப் படைப்புகளிலும் அமைப்பிலும் பரீட் சார்த்தமாக மேற்கொண்டன. விமர்சனங் களை எதிர்கொண்டன. * பின்நவீனத்துவம், தலித்தியம், பெண் ணியம் என்பன கவனத்தி லெடுக்கப்பட்டன. விமர்சிக்கப்பட்டன.
இத்தகைய முயற்சிகளின், விடயங் களின் களமாக சிற்றிதழ்கள் விளங்கின.
மல்லிகை மே 2011 & 29

Page 17
கடந்த சில வருடங்களாக இணை யத்தளங்கள் சிற்றிதழ் வெளியீடுகளின் இடத்தை கபளிகரஞ் செய்துவிட்டன எனக் கூறலாம். இன்று சிற்றிதழ் வெளி யீட்டாளர், படைப்பாளிகள் பலர் அத் துறையிலிருந்து ஒதுங்கி விட்டனர் என்றே கூறவேண்டியுள்ளது. சிலர் மாத் திரம் இணையத்தளங்களில் இடைக் கிடை எழுதி வருகின்றனர்.
இணையத்தளங்களில் பின்னுாட் டம் எழுதுபவர்கள், தமிழைப் பிழை யின்றி எழுத முடியாதவர்கள் எல்லாம் இன்று தாங்களும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று கூறிக்கொள்ளும் சூழ்நிலைதான் எங்கும் காணப்படுகிறது.
எங்கள் தலைமுறையோடு சிற் றிதழ் வாசிப்பு அற்றுப் போய்விடுமா என்ற ஏக்கமும் ஏற்படுகிறது. புகலிடத் தில் அடுத்த சந்ததி தமிழ் இலக்கியப்
படைப்பில் ஈடுபடுமா என்பது கேள்விக்
குரியது.
புகலிட நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் அடுத்த சந்ததியினர் ஒரு சிலர் படைப்புகளைத் தரலாம். எவ் வளவுதான் தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்து தமிழ் புகட்டினாலும் அவர் களது சிந்தனா மொழியிலேயே படைப்பு களைத் தரலாம் என்பதுவே உண்மை.
எனவே புகலிட இலக்கியப் பரப்பி இது சிந்திக்கப்பட வேண்டிய விடய் மாகும்.
இத்தகைய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நல்லதொரு சந்தர்ப் பத்தை ஏற்படுத்தியுள்ளது. (சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் சிற்றிதழ்கள்' அரங்கிலி இடம்பெற்ற
உரையின் சுருக்கம்)
A. R. R. HAIR DRESSERS
89. Church Road, Matakuliya,
Colombo - 15. Tel: 0112527219
முற்றிலும் தளிரூட்டப் பெற்ற சலூன்
மல்லிகை மே 2011 * 30
 

துண்பங்கள் உன் நெஞ்சில் முட்டுகின்றதா? துயரங்கள் உன் கதவைத் தட்டுகின்றதா?
இதயமே இடிந்து போனதாய் சாய்ந்து விடாதே! எதுவுமே கிடைக்காதது போல் ஓய்ந்து விடாதே!
FLoanó asis/Isó இமயமும் உன் காலடியில். இறைவனின் நாடினால் நீ புரளலாம் கோடிகளில்!
உடைந்து போனால் உன் மனமும். கிடந்து அழும் அனுதினமும்!
தோல்விகள் வெறும் சம்பவம் தாண். துணிந்திடு தோழா, வெற்றி சரித்திரம் தான்!
همکاريخ
لايم
\یک نامه ان کی
- வெலிகம
سمكره
ரிம்ஸா முஹம்மத்
நிலா உனக்கு பண்னிர் தூவும். விண்மீன்கள் வாழ்த்துரைக்கும்!
கானகப் பூக்கள் உண்ணைக் கண்டு தலையாட்டும். விடியலில் உனக்கு விலாசம் வரும்!
நீ வாழ்வது புற்களில் என்றால் பின் எப்படி
சுவர்க்கம் தெரியும்?
மல்லிகை மே 2011 தீ 31

Page 18
தைரியம் கொண்டு நீயிருந்தால் இண்பக் கனவுகள் ஓடி வரும். கோழையாக வாழ்ந்திட்டால் காணாத கவலைகள் தேடி வரும்!
Lomas - ongjoy சிறந்திடத்தான் அண்பை இறைவன் படைத்துள்ளான். பண்பாய் வாழ்ந்து agflasmz ug சிறந்திடச் சொல்லி
அவன் சொண்னான்!
Gummz Luomaw
உன் வாழ்வு பூந்தோட்டங்களாய் மாறட்டும். வெற்றிகள் என்றும் உன் வாழ்வில் புதுமையாக ஆளட்டும்!
தில் சட்டங்கள்
வண்ணி நகரில் நடந்த வண்செயல்களின் கொடுரத்தில். இடம்பெயர்ந்தலைந்தேன் தாங்காத சோகத்தில்!
போர் மேகங்கள் ஒன்றுகுழ்ந்து பொழிந்தன அன்று குண்டு மழைகள். ஈவிரக்கம் துளியுமின்றி துண்டாடப்பட்டன அப்பாவிகளின் தலைகள்!
தடுப்புக்காவலில்
தாளாத
சோகர் கண்டவர்கள் இன்றும் கூட எண்ன ஆனார்களோ?
பதுங்குக் குழிக்குள் பதுங்கியே பாதி வாழ்க்கை முடிந்தாச்சு. பயத்துடன் வாழ்ந்த காலம் இப்போதுகளில் தான் முடிவாச்ச!
புருஷனையும் புள்ளைகளையும் இழந்து இந்த ஏழை படும் பாட்டை Ampom. எங்களைப் போன்றே வாழ்விழந்த அனைவரும் தான் இதை அறிவார்.
வேதனை வாழ்வு வுெறுத்த நிலையில் கூடி வந்தன மீள்குடியேற்றும் திட்டங்கள்.
சொல்லுங்கள் ஐயா, எதுவென்றாலும் எண் குடும்பத்தை மீட்டித்தருமா இந்த புதிய சட்டங்கள்?
மல்லிகை மே 2011 & 32

ழ்ெநாளில் ஒருதடவையாவது யாழ்ப்பாணம் சென்று பார்க்க வேண்டும் என்ற எனது நீண்ட நாளைய ஆசை சமீபத்தில் நிறைவேறியது. அந்தப் பயண அநுபவங்கள் உங்களையே எனக்கு அதிகம் நினைவூட்டின. எனவே, அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று எண்ணுகின்றேன்.
நீண்ட பஸ் பயணம்; போரடிக்கும், ஜனரஞ்சகமற்ற வீதிகள். மிக நீண்ட காலமாகப் புனரமைக்கப்படாத அவ்வீதிகள் ஏதோ பழைய காலத்துக்குள் எம்மைக் கூட்டிச் செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தின. யாழ்ப்பாணத்தை நெருங்கும்வரை தரிசாகக் கிடந்த நிலங்கள். யாழ்ப்பாணம் வந்துவிட்டது என்பதை உணர்த்திய இடிந்த வீடுகள். தலையற்று, உடல் கருகிக் கிடந்த பனைகள். தென்னைகள்.
"ஏம்மா, இந்த வீடெல்லாம்
(தறிந்த இப்படிக் கிடக்கு?” என்று எனது ஆறு வயது கடைக்குட்டி கேட்டாள். "இங்க புலி பிரச்சினை இருந்ததும்மா.
O voprona.Ožo. அதனாலதான்.” என்றேன். “இங்க
புலி, சிங்கம் கூட உண்டா அம்மா?”
@కీపీ@a என்று திருப்பிக் கேட்டாள்.
கிளிநெச்சியை அடைந்தோம். ?)ヘを2小あ முன்பு ஒன்பதாயிரம் குடும்பங்களை வாழவைத்த, 32 கிலோமீற்றர் நீளமான அணைக்கட்டைக் கொண்ட இரணை கெகிறாவ Oெறொலினா மடு நீர்த்தேக்கம் பாசிப்படர்ந்து காய்ந்து கிடந்தது. அந்த மண்ணுக்கே செழிப் பூட்டிய அந்தப் பாரிய நீர்த்தேக்கம் பற்றிய தகவல்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின, அது காய்ந்து வரண்டு கிடந்ததைக் காண்கையில்.
பாழடைந்த அந்தக் கிராமத்தின் நடுவே இடிந்து கிடந்த, விடுதலைப் புலி களின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த, தமிழ்ச்செல்வனின் வீடு, பங்கர் என்றால் என்ன என்பதை எமக்கு கண்முன்னால் விளங்கிய ஒரே உதாரணமாகத் தோன்றிற்று. எல்லாரும் தாம் வாழ்நாளில் இதுவரை கண்டிராத பதுங்கு குழிகளை மிகுந்த அதிசயத்துடன் பார்க்க, எனக்கோ அந்தக் கிராமத்தின் முன்னொரு காலத்து கலகலப்பான வாழ்வு காதுகளில் ஒலித்தது; எப்போதும் புன்னகை வீசும் மல்லிகை மே 2011 & 33

Page 19
தமிழ்ச்செல்வனின் வசீகரமும் கண் களில் தெரிந்தது.
செவ்வரத்தை மரவேலிகளைக் கொண்ட அகலமான காணிகளும், பனையோலையை அழகாக நறுக்கிக் கட்டப்பட்டிருந்த வேலிகளும், செம் மண் வீதிகளும் ஒரு பழைய கனவு போல எம்மைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்க, அந்தக் காணிகளின் நடுவே தனித்துக் கிடந்த கிணறுகள் மட்டும் அங்கே ஒரு காலத்தில் வாழ்க்கை செழித்துக் கிடந்தது என் பதற்கு சாட்சியாக நின்றன.
மனதை என்னவோ செய்கிறது; முன்பு யாருடையதாகவோ இருந்த, இப்போது இழந்து கிடக்கும் அந்த வீடுகள்!
கல்யாண்ஜியின் கவிதை நெஞ் சில் அலைமோதிற்று. இதுவரை கண்ட எந்தக் காட்சியுமே ஒரு உல்லாசப் பிர யாணத்தில் வழக்கமாக ஏற்படுகின்ற குதுாகலத்தையும், ஆனந்தத்தையும் தரவில்லை. சில காணிகளில் குடும் பங்கள் வந்து குடியேறிய தடங்கள் தெரிந்தன. முன்பு ஒருகாலத்தில் பங் களாக்களாகக் காணப்பட்ட அவ்வீடு கள் தலையற்ற முண்டங்களாகக் கிடக்க, அந்த வீடுகளின் பின்புறமாக சில தகடுகள் அடிக்கப்பட்டு வாழ்க்கை யின் மெல்லிய தளிர்கள் தெரிந்தன. சிங்களத்தில் புதிதாக எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளும், ஆங்காங்கே
புதிதாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளும், பளிச்சென்று வெளிசாக் கப்பட்ட நிலங்களில் புதிதாகக் கட்டப் பட்ட குடியிருப்புகளின் நடுவே இரா ணுவ வீரர்களின் நடமாட்டமும் எனக்கு சொல்லாத சில சேதிகளைச் சொல்லித் தந்தன.
வீதிகளெங்கும் விடுதலைப் புலி களின் யுத்த விமானங்கள், புல்டோசர் களின் சிதைவுகள் ஆகியவற்றை புரா? தனச் சின்னங்கள் போல காட்சிக்கு வைத்திருந்தார்கள். நோர்வே அரசாங் கத்தின் உதவியால் கட்டிக் கொடுக்கப் பட்டிருந்த பிரமாண்டமான நீர்த்தாங்கி மீண்டும் புனரமைக்கப்பட்டுக் கொண்டி ருந்தது. புலிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றபோது அதைத் தகர்த்து வீழ்த்தி விட்டுச் சென்றதாக பக்கத்தில் இருந்த வர்கள் சொல்லிக் கொண்டார்கள்.
ஆனையிறவில், 1991 ஜூலையில் மிக இளம் வயதில் நாட்டிற்காக உயிர் துறந்த, தியாகி எனும் பட்டம் பெற்ற கோப்ரல் குலரத்னவின் ஞாபகமாக வைக்கப்பட்டிருந்த பெரிய உருவப் படமும், அவர் மோதியழித்த யுத்த டங்கியின் சிதைவுகளும் பாதுகாக்கப் பட்டுக் காணப்பட்டன. மக்கள் அவ் யுத்த டாங்கிக்குப் பூச்சூடி, காணிக் கைகள் செலுத்தி கெளரவம் வழங்கி யிருப்பதைக் காணமுடிந்தது. அவ் வாறே, ஊர்காவற்றுறையின் கண் குளிரவைக்கும் காட்சிகளூடு 1992
மல்லிகை மே 2011 & 34

ஆகஸ்டில் புலிகளின் குண்டுத் தாக்கு தலுக்கு இலக்கான இராணுவ அதி காரி டென்சில் கொப்பேகடுவ, மற்றும் அவரது சகாக்களுக்கான ஞாபகச் சின் னங்களை மக்கள் ஆழ்ந்த கவலை தோய்ந்த முகங்களுடன் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.
வெள்ளை மணல் - மண்கும்பான் பிரதேசம் இருபது வருடங்களாக மெளனத்தில் உறைந்து கிடந்த பின் னர், தற்போதுதான் குடியேறிய ஐந்து குடும்பங்களுடன் ஜீவகளை கொண்டி ருக்கிறது. கால் புதையும் மணற்பரப் பில் கைவிடப்பட்ட நிலையில் காணப் பட்ட பள்ளிவாசலும், இடிந்து கிடக்கும் சின்னச் சின்ன வீடுகளும் யுத்தத்தின் கதைகளைத் தம்முள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன. எனினும், மக்கள் எதைப் பற்றியும் வாய் திறப்பதா யில்லை. தம்முள் மூழ்கியிருக்கும் சோகமான ஞாபகங்களையும், விடு தலை மீதான கெளரவத்தையும் குறிப் பினால் உணர்த்தினாலும், ஏதும் பேசப் பயப்படுகிறார்கள். மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும் மக்களிடம் ஏற்கனவே நான் கண்டு விளங்கிக் கொண்ட ஒருவகையான உறங்கு நிலை, இங்கே அதிர்ச்சி எனும் போர்வை போர்த்து மிகுந்து கிடக் கிறது.
நல்லூர் முருகன் கோயிலில் பூஜை புனஸ்காரங்கள் வழக்கம்
போல, நடைபெற்றுக் கொண்டிருக் கின்றன. சிங்களவர்களும், தமிழர் களும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி தமது சட்டைகளையும், மேல் துண்டு களையும் கழற்றிவிட்டு வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். அந்தக் காட்சி இந்த நிகழ்காலம் இறந்தகாலத்திலிருந்து உருவாகியிருக்கக் கூடாதா? என்ற கேள்வியாக என்னுள் தொக்கிக் கொண்டேயிருக்கிறது. கோயிலின் உள்ளே சூழல் குளிர்ச்சியாகவும், அழ காகவும் இருக்கிறது, அந்த மக்களின் உள்ளங்களைப் போலவே.
யாழ். ஒல்லாந்தர் கோட்டைக்கு எதிரே - அழிவின் பின்னான மீட்சியாக - பொது நூலகம் காட்சிதருகிறது. வெள்ளை நிறப்பூச்சின் இடையில் தீயின் சுவடுகள் இன்னும் தெரிவது போல எனக்குக் காட்சி தருகிறது. அது எனது பிரமையா, உண்மையாகவே அப்படி எல்லோருக்கும் தோன்றுகின் றதா என்து இந்தக் கணம் வரை எனக்குத் தெரியவில்லை.
அதே வருடம் ஜூன் மாதம் (1981) யாழ்ப்பாண நூலகம் ஒரு லட்சம் புத்த கங்களோடு எரியூட்டப்பட்டது. நாங்கள் கூட்டம் கூட்டமாகப் போய் எங்கள் நூலகத்தின் வெந்து தணியாத சாம்
பலில் கண்ணிர் சிந்திக்கொண்டிருந்
தோம். சற்றுத் தள்ளி துரையப்பா மைதானத்தில் எங்கள் நூலகத்தை எரித்த சிங்களப் படை, கிண்டலாகக்
மல்லிகை மே 2011 & 35

Page 20
கூச்சலிட்டபடியே பைலா பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருந்தது. அன்று தான் எங்களில் பலர் இதற்கு ஆயுதப் போராட்டத்தின் மூலம்தான் பதில் சொல்ல முடியுமென்கிற தீர்மானத் துக்கு வந்தோம். நாங்கள் ஆயுதத்தை எடுத்தது போலவே, அந்தச் சம்பவத் தால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர் சுஜா தாவும் பேனாவை எடுத்திருக்கிறார். எனினும், என்னுடைய தமிழக நண் பர்கள் சிலர், அவர் பிராமணர் என்ற காரணத்தால் அவரது பங்களிப்பைக்
கண்டுகொள்ள மறுத்தார்கள் என்ற வ.
ஐ.ச.ஜெயபாலனின் சுஜாதாவுக்கான இரங்கலுரை என்னுள் தொனிக்க, யாழ். நூலகம் எரிகின்ற காட்சியைத் தனது வீட்டின் மாடியிலிருந்து கண்டு அதிர்ச்சியடைந்து அக்கணமே தனது இன்னுயிரை நீத்த வண.பிதா தாவீது அடிகளின் ஞாபகமும் நெஞ்சில் விரி கின்றது.
யாழ்ப்பாணம் மூர்வீதியில், இடிந்த வீடுகளின் முற்றத்தில் குவிந்து கிடக் கின்ற, கைவிடப்பட்ட வீட்டுச் சாமான் அவற்றின் நடுவே அந்த வெள்ளை நிற பென்சர் கார். இவை இறந்தகாலத்தின் சந்தோஷச் சுவடு களைத் தம்முள் அசைபோட்டுக்
கள்...!
கொண்டிருக்கின்றனவா?
என்னதான் பயப்பிராந்தி பரவிக் கிடந்தாலும், யாழ்ப்பாணம் மார்க்கட் டில் முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து - பக்கம் பக்கமாக -
இருந்து உற்சாகமாக வியாபாரம் செய் வதைக் காணமுடிகிறது. யாழ்ப்பாணத் தின் ஸ்பெசல் தயாரிப்புகளை முண்டி யடித்துக்கொண்டு வாங்குகிறது சனம். ஒரு மர இடியப்ப உரல் ஆயிரம் ரூபா விற்கு விற்கிறது.
ஸ்டான்லி வீதி, கே.கே.எஸ். வீதி, கஸ்தூரியார் வீதி, பூபாலசிங்கம் புத்தக சாலை என்பன மல்லிகையின் அனுF பவ முத்திரைகளை எனக்கு ஞாபக மூட்டியவண்ணமிருக்கின்றன.
மீனின் நாற்றம் சுமந்து வீசும் யாழ்ப்பாணக் கடற்காற்று மீன் மார்க் கட்டில் உற்சாகமாய் சுழன்றோடு கின்றது.
நிலாவறையின் காணமுடியாத ஆழத்தைப் பார்ப்பதற்காக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சனக் கூட்டம் காத்திருக்கிறது.
திரும்பி வரும்போது சின்ன மகளை மடியில் போட்டுக் கொண்டே, தூங்கி விட்டேன். இடையில் பஸ்ஸை நிறுத்தி எல்லோரும் தேனிர் அருந்த, வீதியோரத்தில் பழக்கடைக்குப் போய் தோடம்பழம் வாங்கித் தரும்படி தூக்கம் கலைந்த மகள் நச்சரிக்கத் தொடங் கினாள். தூக்கக் கலக்கத்துடன் பஸ்ஸை விட்டிறங்கி பணத்தைக் கொடுத்து, ஒரு தோடம்பழம் கேட் கிறேன். கடையில் நின்றிருந்த மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கிறார்
மல்லிகை மே 2011 & 36

கள். நேரம் நள்ளிரவை நெருங்கியி ருந்தது. அவர்களுள் வயதான ஒருவர் இந்தப் பணத்தை நாங்கள் எடுப்பது பாவம் அம்மா என்று கூறி, பணத்தைத் திருப்பித் தருகிறார். விழித்துப் பார்க் கிறேன், ஒ! நான் இருபது ரூபாய் என்று நினைத்து ஐந்நூறு ரூபாயை நீட்டி யிருக்கிறேன்.
மீண்டும் பையைத் துழாவி, இருபது ரூபாத்தாளொன்றைத் தேடிக் கொடுக்கிறேன். அந்த நள்ளிரவிலும் அவர்களது முகங்கள் பளிச்சென்று விளங்குகின்றன. அதைப் பெற்றுக் கொண்ட கடைக்காரர், "இது புனித மான இடம் அம்மா. நாங்கள் உங்கள் பணத்தை எடுத்திருந்தால், கடவுள் எம்மைத் தண்டித்திருப்பார்” என்றார்.
“இது எந்த இடம்?’ நான் வினாவு கிறேன்.
"முறிகண்டி’ என்கிறார்.
எனது கண்கள் பனிக்கின்றன.
eைடக்களப்பில்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைக் கண்டேன். ஒரு பொது நிகழ்ச்சியில். எங்கேயென்று கேட் கிறீர்களா? எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் மட்டக்களப்பில் நடாத்திய தமிழியல் விருது நிகழ்ச்சியில், வவுனியூர் முறி இராமகிருஷ்ணா -
கமலநாயகி தம்பதிகள் பெயரில் வழங் கப்படும் தமிழியல் வித்தகர் பட்டம் பெறுவதற்காக நீங்கள் வந்திருந்தீர்கள். அதே விழாவில் புரவலர் நளிம் ஹாஜியார் பேரில் வழங்கப்படும் தமிழியல் விருது தங்கை ஸைைலஹா வின் பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும் எனும் மொழிபெயர்ப்பு நூலுக்கும் கிடைத்திருந்தது.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் கவிஞர் பாண்டி யூரான் தமிழியல் அரங்கில் நடைபெற்ற அவ்விழாவில், வரமுடியாத ஒன்றிரண்டு பேதைத் தவிர, அனைவருமே கலந்து கொண்டிருந்தனர். மண்டபம் நிறைந் திருந்தது. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத் தின் மேலாளர் திரு. ஓ.கே.குணநாதன்,al Correct குணநாதன் என்பதற்கொப்ப அனைத்து விழா ஏற்பாடுகளையும் கன கச்சிதமாகச் செய்திருந்தார். மண்டபம் நிறைந்த அவ்விழாவில் காணப்பட்ட ஒரே முஸ்லிம் குடும்பம் எங்களுடையதுதான். மேலும், பத்துக்கு மேற்பட்ட இன நல் லுறவு நூல்களை எழுதிய சிட்னி மாக்கஸ் டயஸ், வண.பிதா சந்திரா அடிகளார் பெய ரால் வழங்கப்படும் தமிழியல் விருதைப் பெறுவதற்காக - இன நல்லுறவு இலக்கி யத்திற்காக வழங்கப்படும் விருதைப் பெறு வதற்காக வந்திருந்தார்.
விழாவில் பேசிய - சிறப்பு விருந்தினர் உரையாற்றிய - வவுனியூர் இரா. உதயணன் மிகச் சுருக்கமாக லண்டன் வாழ். தமிழ் மக்களின் கலா சாரம் மெல்ல மறைந்து வருவது பற்றிக்
மல்லிகை மே 2011 & 37

Page 21
குறிப்பிட்டார். கடந்த இருபத்தைந்து வருடங்களாக இங்கிலாந்தில் வசித்து வருகின்ற இவர், கணக்கியல் துறை யில் முதுமாணிப் பட்டமும், நிர்வாக முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்ட மும் பெற்றவர். எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் நிகழ்ச்சியில் அவர் சொன்ன இந்தக் கருத்தை, தமது பிரதம விருந்தினர் உரையில், மட்டக் களப்பு - கல்முனை மேல் மன்ற நீதிபதி கெளரவ பாலேந்திரன் சசி மகேந்திரன் தனது மழலைத் தமிழால் அழகாக
மறுத்துப் பேசினார். இந்தக் கலாசாரச்
சீரழிவுக்கு நாங்களே காரணம் என்று கூறிய அவர், இன்று தனியார் ஊடகங் களால் கட்டவிழ்த்து விடப்படும் கட்டுப் பாடற்ற நிகழ்ச்சிகளும், தொலைக் காட்சி நாடகங்களும் இலங்கையில் அதிகமான குற்றங்களுக்குக் காரண மாக இருக்கின்றன என்றும் கூறினார். எனவே, எழுத்தாளர்களாகிய நீங்கள் இச்சீரழிவிலிருந்து சமூகத்தைக் காப்ப தற்காகப் போராடுங்கள். உங்களுக்கு அதற்கான சக்தி உண்டு என்று அவர் கூறியபோது, பலத்த கைதட்டல் எழுந்து ஓய்ந்தது. பின்னால் இருந்த ஒருவர் - எம்முடன் சிநேகயூர்வமாக உரையாடிக் கொண்டிருந்தவர் - நேற்று ராத்திரி உட்கார்ந்து 10 பக்கங்களுக்கு மேல் எழுதிக் கொடுத்தேன். ராத்திரி ரெண்டு மணிவரை உட்கார்ந்து பாட மாக்கினான். இப்ப எல்லாத்தையும் மறந்துட்டான் பாருங்க என்று முணு
முணுத்தார். அத்துடன் நீதிபதி சசி மகேந்திரன் தனது சகோதரன் என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, விருது பெறுவதற்காக மேடையேறிய நீங்கள் தலைப்பாகை யுடன் சரிகை மினுங்க மேடையில் நின்றிருந்தபோது, எவ்வளவு அழகாக இருந்தீர்கள்! விருது பெறுபவர் சார்
பாக நிகழ்த்தப்பட்ட ஏற்புரையில்
நீங்கள் எனது பெற்ற குழந்தைகள் பரிசு பெற்றது போல, எனது மூத்த மகளின் திருமணத்தன்று மகிழ்ந்ததை விட அதிகமாக மகிழ்ந்தேன் என்று கூறினிர்கள். என்னதான் மூப்பினால் தள்ளாடினாலும், பேச்சு ரொம்ப உஷா ராகத்தான் இருந்தது. உங்களைக் கண்டது பெரிய சந்தோஷமே!
புத்தாண்டுச் சந்தா செலுத்தி ○
allelefielTT C
புதிய ஆண்டு பிறந்துவிட்டதுE) தயவு செய்து தமது சந்தாக்க ளைப் புதுப்பித்துக் கொள்ளவும். CD
மனந் திறந்து மல்லிகையுடன் | 8pégչյ60»քպոA856i. ஏனெனில்)ே
மல்லிகை உங்கள் ஒவ்வொருவ ரினதும் இலக்கியக் குரலாகும்.
அசட்டை செய்வோருக்கு முன்னறிவித்தலின்றி இதழ்)ே
SD. நிறுத்தப்படு ق ہو۔gur
மல்லிகை மே 2011 率 38
 

சர்வதேசத்
எழுத்தாளர்
மாருாரு
2O11
- நடேசன் -
எனது நோக்கு :
“நாளைக்கு நான் செத்தாலும் சந்தோசமாகச் சாவேன்’ இது போன்ற நிகழ்ச்சிகளை வழக்கமாக யாழ்ப்பாணத் தவர்தான் நடத்தி முடிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை ஒரு நீர்கொழும்பான் (லெ.முருகபூபதி) நடத்திவிட்டது எனக்கு மனச்சந்தோசமாக இருக்கு என்று கண் களில் கண்ணிர் திரையிட மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா என்னிடம் கூறினார்.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் மா நாட்டின் இறுதி நாள் மாலை, கலை நிகழ்ச்சி வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடந்தபோது, மண்ட பத்திற்கு வெளியில் நான் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டு நின்ற போது, அவர் அப்படிச் சொன்னார்.
கடந்த ஜனவரி மாதம் நடந்த நாலு நாள் நிகழ்வை விளக்கி கூறுவதற்கு வேறு வார்த்தைகளை நான் தேடத் தேவை யில்லை.
அப்பொழுது பக்கத்தில் நின்ற ஞானம் மாத இதழின் ஆசிரியரும் மாநாட்டின் இலங்கை இணைப்பாளருமான டாக்டர். ஞானசேகரன், இலங்கைத் தமிழர்கள் நடத்தி முடித்தார்கள் எனச் சொல்லுங்கள் என்றபோது அதை நான் ஆமோதித்தேன். உணர்வுகளின் போதையில், நான்கு நாட் களும் கால்கள் நிலத்தில் பாவாமல் சஞ் சரித்த டொமினிக் ஜீவாவிடம் எங்கள்
மல்லிகை மே 2011 & 39

Page 22
வாதம் எடுபடவில்லை. மீண்டும் ஞான சேகரன் சொன்னார், "ஜீவா உங்கள் பலநாள் கனவு நனவாகி உள்ளது.”
தமிழ் இலக்கியத்தை மட்டுமே வாழ்க்கை எனச் சீவிக்கும் அந்த மனி தரிடம் மெளனமே பதிலாக வந்தாலும், அந்த ஆன்மாவின் அலைமோதும் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிந் தது. மழையிலும், வெயிலிலும், போர்க் காலத்திலும், சமாதான சூழலிலும் நாட்டை விட்டு ஓடாமல், அதேவேளை யில் - விடுதலைப் புலிகளின் பொட்டு அம்மான் அனுப்பிய பிடிவிறாந்தையும் சட்டை செய்யாமல் அரை நூற்றாண்டு களாக தமிழ் இலக்கியம் வளர்த்த இந்த ஒரு மனிதனின் சந்தோசம் மட் டுமே இந்த மாநாட்டின் சன்மானமாக எனக்குப் போதுமானதாக இருந்தது.
மாநாட்டுக்கு எதிர்ப்பாக வெளி நாட்டில் பொய் சொல்லி அகதியாகிய வர்களின் கூச்சலை நான் அந்தக் காலத்தில் புகைத்த சிகரட்டுப் புகை யாக ஊதித் தள்ள இதுவே போது மானது. இதற்கு அப்பால் ஒரு உச்ச மும் இந்த மாநாட்டிற்கு தேவை யில்லை.
தமிழ்த் தேசியமென்று வெற்றுக் கோசத்தால் பிரிக்கப்பட்ட மலையக எழுத்தாளர்கள், இஸ்லாமிய எழுத் தாளர்கள் அந்த நான்கு நாட்களும் தமிழுக்காக தேனிக்களாக உழைத் தார்கள். சந்தோசத்தை அள்ளித் தந்த
இரு விடயங்கள் பற்றி இங்கு குறிப்
பிட்டேயாக வேண்டும்.
1. அறுபது வருட காலமாக தமிழரை மூன்றாகப் பிரித்த எந்தவொரு அர சியல்வாதிகளும் இம்மாநாட்டிற்கு அழைக்கப்படாதது இனிமையான பழி வாங்கலாக இருந்தது.
2. மாலைகள், பொன்னாடைகள் மா நாட்டுக்குள் வரவேயில்லை. "மாலை கள் இல்லாமலும் மாநாடு நடத்த முடியும்” என்று கொழும்பில் ஒரு பிரபல
தமிழ் ஊடகம் எழுதியிருந்தது.
கடந்த வருடம் (2010) ஜூன் மாதத் தில் உலக மிருக வைத்தியர்கள் மா நாடு ஜெனிவாவில் நடந்தபோது அதில் பங்குபற்றியதால், ஒரு மாநாட்டை சர்வ தேச மட்டத்தில் எப்படி நடத்த முடியும் என்ற அனுபவத்தை அளவுகோளாக வைத்து எனது கருத்துக்கள் இங்கே பதியப்படுகிறன.
ஆரம்ப நாளான ஜனவரி 6ம் திகதி யன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சுமார் ஐநூறு பேர் பங்குபற்றிய போது, இடம் போதாமல் இருந்தாலும், அது ஒரு குறையாகத் தென்படவில்லை. அதைத் தொடர்ந்த நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் ஒரே சமயத்தில் மூன்று மண்டபங்களில் நடந்ததால் இடநெருக் கடி தவிர்க்கப்பட்டது. மேலும் பலரது ரசனைக்கேற்ப அரங்கங்களில் பங்கு பற்ற முடிந்தது. கடைசி நாள் மாலை யில் இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்
மல்லிகை மே 2011 & 40

தில் நடந்த கலை நிகழ்ச்சிகள் மிகத் தரமாக இருந்தன.
முக்கியமாக நாட்டிய நாடகம் பல ரால் பாராட்டப்பட்டது. அன்றைய தினம் ஜோர்ஜ் ஓவலின் விலங்குப் பண்ணை’ நாவலின் தமிழாக்கத்தை மாநாட்டுக்கு வந்த இளைஞர்களிடம் விநியோகித்துக் கொண்டிருந்தேன்.
இந்த மகாநாட்டினை முருகபூபதி ஒழுங்கமைத்த போதிலும், நடத்திய முறையில் பாராட்டுகள் சேர வேண்டி யது ஞானம் ஆசிரியர் டாக்டர். ஞான சேகரன் அவர்களின் தலைமையில் இயங்கிய குழுவினருக்கே. அவரது குடும்பத்தினர் மிகவும் கடுமையாக உழைத்திருந்தனர். இவர்களை நான் குறிப்பிடும்போது உழைப்பை நான் குறைத்து மதிப்பிட வில்லை.
மற்றவர்களின்
பலர் நினைத்துப் புழுங்குவது போல, முக்கியமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ப.ஜெயப்பிரகாசம் என்பவர் முட்டாள்தனமாக கற்பனை செய்தது போலன்றி, எந்த ஒரு அரசாங்கத் தினதும் உதவியில்லாமல் வெறும் இரு பதினாயிரம் அமெரிக்க டொலர் மட்டுமே இந்த மாநாட்டிற்கு செலவு செய்யப்பட்டது. நாலாயிரம் அமெரிக்க டொலர்கள் துண்டு விழுந்ததாக அறி கின்றேன். இங்கு செலவாகிய ஒவ் வொரு சதமும் தனிப்பட்ட மனிதர் களால் கொடுக்கப்பட்டது. கனடா,
அவுஸ்திரேலியா, ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் அன்பர்கள் சிலரும் இலங்கை அன்பர்கள் பலரும் இம்மாநாட்டிற்காக நிதியுதவி வழங்கி யிருந்தார்கள். இங்கே உடல் உழைப் பும், சிறந்த ஒருங்கிணைப்பும் பொருள் விரயத்தைத் தவிர்த்திருக்கிறது.
மாநாட்டின் கனதியை ஒருவரும் குறை நிறை முற்றாகச் சொல்ல முடி யாது. நான் பங்குபற்றிய நாலு நாட் களிலும் நான் விரும்பிய நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டேன். இலங் கையில் இலக்கியக் கர்த்தாக்கள் மற் றும் தமிழ்க் கல்விமான்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களின் உச் சத்தை வெளிப்படுத்த அரங்கமைத்தது தான் இந்த மாநாடு. இதனை மாநாட்டு ஒருங்கமைப்பாளர்கள் திறம்படச் செய் திருந்தார்கள்.
இதேவேளையில், இந்த மாநாடு இலங்கையின் தமிழ் மொழியியலாள்ர் களின் பலவீனங்களையும் வெளிக் காட்டியது. சிங்கள, ஆங்கில படைப்பு களை படைத்த இலக்கிய அல்லது கல்விமான்கள் அழைக்கப்பட்டிருக் கலாம். இலங்கையின் தமிழ்மொழி வளர்வதனால் அது தனித்து பரி சோதனைக் குழாயில் வளர்வது போல் வளரமுடியாது. இலங்கையில் பேசப் படும் சிங்களம் மற்றும் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் இலக்கியம் படைப்பவர்களிடம் இருந்தும் படித்துக் கொள்ள ஏராளம் உள்ளது.
மல்லிகை மே 2011 & 41

Page 23
அறிந்தவற்றைப் பகிர்தல் தமிழர் கள் இடையில் மட்டும் நடப்பது இல்லை. மேல் சட்டை போட தமிழன் கற்றுக்கொண்டது, ஐரோப்பியரிடம் இருந்துதான். கோவணம் கட்டிய தமி ழன் கெல்வின் கிளான் அண்டவெயர் போடுவதற்கு பழகியதும் மேற்கில் இருந்துதான்.
ஈழத்து தமிழ் இலக்கியவாதி களின் மேல், மேலாதிக்கம் செலுத்தும் தமிழ்க் கல்விமான்கள் முக்கியமாக மறைந்த பேராசிரியர் கைலாசபதி பின்பு பேராசிரியர் சிவத்தம்பி என ஒரு வித பயங்கரவாத மனப்பான்மை இன் னும் தொடர்கிறது. மாநாட்டை எதிர்த்த பேராசிரியர் சிவத்தம்பி வந்து மா நாட்டை ஆசீர்வதிக்க வேண்டிய நிலை யில் இருந்தது. இதில் கலந்துகொண்ட அந்தப் பேராசிரியர் மகாநாட்டுக்கு எனப் புதிதாக ஒரு பேச்சைத் தயாரிக் காமல் வந்து 2010ஆம் ஆண்டு ஜனவரி யில் நடந்த மாநாட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய புலம்பெயர்ந்தவர் இலக்கியம் என்ற அதே தலைப்பில் மீண்டும் பேசிவிட்டுச் சென்றார். அரசி யல்வாதி ஒருவர் அப்படிச் செய்தால் மன்னிக்க முடியும். ஒரு பேராசிரியர் இப்படிச் செய்வது?
இதைவிட நான் அவதானித்த முக்கியமான விடயம், இலங்கையில் தமிழ்த் தேசியத்தை ஒருபுறம் வைத்து விட்டுப் பேசினாலும், முற்போக்கு வாதம் என்பது இன்னமும் அட்டை
யாக ஒட்டிக்கொண்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் காணாமல் போன பொருள் முதல்வாத கருத்துக்களை வைத்து இலங்கை இலக்கியத்துக்கு சிவப்பு விளக்கை காட்டுவதற்கு சில கல்விமான்கள் இன்னும் தயாராக இருப்பதாகத் தெரிந்தது. ஈழத்து இலக் கியம் முற்போக்கு என முப்பது வருடங் களும் தமிழ்த் தேசியம் அடுத்த முப்பது வருடங்களும் போட்ட விலங்கை உடைத்துக் கொண்டு வெளியில் வர ஈழத்து இலக்கியம் தயாரில்லாத் தன்மை தெரிந்தது.
இதே மாதிரி ஈழத் தமிழ் ஊடா கங்கள் தமிழ்த் தேசியம் என்ற இரும் புக் கோவணத்தைக் கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் உலாவுவதும் தெரிந்தது.
தமிழ் இலக்கியப் பரப்பில் செவ்வித் தாக்கம் இந்த மாநாட்டு மேடையில் பேசப்பட்டது நல்ல விடயம். இலங்கையில் பத்திரிகை, வானொலி மற்றும் ஊடகங்களில் படைப்பு இலக் கியத்திற்கு தேவையான இந்த விட யத்தை இலங்கைத் தமிழ் ஊடகங் களோடு சம்பந்தப்படாத ஒருவர் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தால் பொருத்த மாக இருந்திருக்கும். நோயாளிகள் பலர் என்ன மருந்து தேவை என்பது பற்றி பேசுவது நல்லது. ஆனால், நல்ல டொக்டரும் அவர்களுடன் இருந் திருக்க வேண்டும்.
மல்லிகை மே 2011 & 42

தமிழகத்தில் இருந்த வந்த எழுத் தாளரில் தோப்பில் முகம்மது மீரானின் பேச்சு கேட்கச் சுவையாக இருந்தது. அவரை சிறப்பு பேச்சாளராக்கி மேலும் ஆழமாகப் பேசும்படி கேட்டிருக்கலாம்.
பல தமிழ் நூல்களை மொழிப் பெயர்த்த மடுள்கிரியே விஜயரத்தின, மொழிபெயர்த்தலை பாடநெறியாக்கி, அதில் புலமை பெற்றவர். அவரது உரையில் பல விடயங்களை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
நான் சுட்டிக் காட்டிய விடயங் களுக்கு அப்பால் இந்த மாநாடு சாதித் தவைகள் ஆத்மா சம்பந்தமானவை.
இலங்கையில் விடுதலைப் புலி களின் பயங்கரவாதம் தோல்வியடைந் ததும், இலங்கைத் தமிழன் சரித்திரம் முடிந்து விட்டது எனக்காட்ட சகல விடுதலைப்புலி ஆதரவாளர்களும் முயற்சித்தார்கள். அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள். ஆனால், தமிழ் மொழி பேசுபவர்கள் இலங்கையின் நாலாபக்கத்திலும் உள்ளார்கள். அவர் கள் அனைவரும் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண் டிய தேவை அவர்களுக்கு உள்ளது.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு இந்த மாநாட்டை நடத்த வேண்டாம் என எத்தனை பேர் கூக்குரல் போட்ட போதிலும், எதை இலங்கையில் நடத் துவது அல்லது நடத்தாமல் விடுவது
என்பதை தீர்மானிக்கும் தனித் தன்மையை நிலை நிறுத்தியது இந்த LDrt BirG.
ஆயுதத்திற்குப் பயந்து முப்பது வருடமாக இருந்த பல எழுத்தாளர் களைத் தட்டி எழுப்ப உதவியது. பல இளைஞர்கள், யுவதிகள் பல்கலைக் வந்திருந்த நாளைய ஈழத் தமிழ் இலக்கிய உல கத்தில் நம்பிக்கை கொள்ள வைத்தது.
கழகங்களிலிருந்து
இந்த மாநாட்டுக்காக வெளிவந்த புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறு கதைத் தொகுப்பான 'முகங்கள் டென் மார்க் ஜீவகுமாரனால் தொகுக்கப் பட்டது. இது பல தரமான கதைகளைக் கொண்டது. புலம்பெயர்ந்த வாழ்வின் குறுக்குவெட்டாகச் சிறுகதைகள் இருந் தன. முக்கியமாக ஆங்கிலம் பேசும் நாடுகளான கனடா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவில் வாழ்பவர் களுக்கும், ஐரோப்பிய நாட்டில் வாழும் தமிழர்களுக்கும், அவர்கள் வாழும் முறையிலும், அனுபவத்திலும் பல வித்தியாசங்கள் இருப்பதை இத் தொகுப்பின் கதைகளில் புரிந்து கொள்ள முடிந்தது.
மாநாட்டு மலரிலும், கட்டுரைக் கோவையிலும் பல படைப்புகள் 另巩 மாக இருந்தன. மொழிபெயர்ப்பு அரங் alsi) Geussusliyull Open A live நூலில் அவுஸ்திரேலிய தமிழ்ப் படைப் பாளிகளினால் எழுதப்பட்ட சில கதை
மல்லிகை மே 2011 & 43

Page 24
களை சியாமளா நவம் (கனடா) நவீனன் ராஜதுரை (அவுஸ்திரேலியா) ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்தார்கள். இம்மாநாட்டில் பல குடும்பத்தினரது கடும் உழைப்பை நேரில் பார்த்தேன். அப்பொழுது ஒரு உண்மையையும் புரிந்துகொண்டேன்.
தமிழர் பலரிடம் இருக்கும் ஒரு குணம் வைக்கோல் பட்டறையில்
உள்ள நாயின் இயல்புக்கு ஒத்த
தானது. தமக்குப் பிடிக்கவில்லை என் றால் ஒதுங்கி நின்று மற்றவர்கள் செய் வதை பார்க்கும் ஜனநாயகப் பண்பை இலங்கையில் உள்ள கலை இலக் கியப் பிரிவை சேர்ந்தவர்களிடம் பார்க்க முடிந்தது. ஆனால் பா.ஜெயபிரகாசம், காலம் செல்வம், பத்மநாப ஐயர் போன்ற பெரிய மனிதர்கள் இவர் களைப் பின்பற்றி வயதுக்கு வர வேண்டும்.
சிறியதொரு விடயத்தை எந்த ஆதாரமும் இல்லாமல் கொழுத்தி எரியவிட்ட எஸ்.பொ.வுக்கும் தான் செய் தது ஒரு விழல் விளையாட்டு என்பது இப்போது புரிந்திருக்கும்.
ஈழத்தில் ஒரு தனி இலக்கிய சமூகம் வளர்வதற்கான அத்திவாரம் இந்த மாநாட்டின் மூலம் உருவாக்கப் பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நிரு மாணிப்பது வருங்காலத்தினரைப் பொறுத்தது.
Tel: 2526345
HAPPY
PHOTO
Excellent Photographers Modern Computerized Photography For Wedding Portraits & Child Sittings
S
Photo Copies of
Identity Cards (NIC), Passport & Driving Licences
Within 15 Minutes
300, Modera Street, Colombo - 15.
மல்லிகை மே 2011 & 44
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருவியிலிருந்து நீர் கொட்டுகின்ற ஓசை, தாளந் தப்பாது கேட்டுக் கொண்டிருந்தது. குருவிகள், அந்தத் தாளத்துக்கேற்றபடி வெவ்வேறு சுரபேதங்களுடன் கூட்டிசை பாடின. ரம்மியமான மாலைப் பொழுது
எப்போதுமே கால்களை எட்டிவைத்து வேகவேகமாய் நடந்துவரும் அங்கம்மா. இன்று, தளர்நடை போட்டு மெதுவாக வந்து கொண்டிருந்தாள். அவளின் முகம் வீங்கிப்போயிருந்தது. சேலைத் தலைப்பால் கண் களைத்
துடைத்துக் கொண் டாள். திடீரென, ஆறு மாதங் களின் முன்பு செத்துப்போன கணவனின் நினைப்பு எட்டிப் பார்த்தது. V
- வசந்தி தயாபரன்
"சங்கம் சங்கம்னு ஓடி ஒடி, போய்ச் சேர்ந்திட்டாரு. அவரு மட்டும் இருந்திருந்தா.” அழுகை இன்னும் வேகமாகப் பொங்கி வந்தது.
“ஏம்புள்ள அழுவுற.” பாதையோரத்தில் உட்கார்ந்திருந்த மாரியாயிக் கிழவி கேட்டாள். அங்கம்மா அவளருகே உட்கார்ந்து கொண்டாள். மூக்கைச் சீறி எறிந்து கையைப் புடவையில் தேய்த்தாள்.
“இந்தா. மொதல்ல இந்த வெத்தலய போடு”
வெற்றிலையைப் போட்டபடி அங்கம்மா தூரத்தே வெறித்துப் பார்த்தாள். மலைகளில் இருள் பரவத் தொடங்கியிருந்தது. வீடு திரும்பும் இளம்பெண்களின் கலகலவென்ற சிரிப்பொலியில், வீசும் காற்றுக்கும் உயிர் வந்தது.
அங்கம்மாவின் மனது நிலைகொள்ளாது தவித்தது. நாளைக்கே போகனுமாமில்ல.
“எதுக்கு இப்பிடி உம்முன்னு இருக்கே? வேலு சம்சாரம் திட்டிச்சா..?’ கிழவி வெற்றிலைச் சாறு தெறிக்காதபடி அண்ணாந்துகொண்டு பேசினாள்.
“இல்லை. ஆயா. அவ திட்டினாலும் நாங் கண்டுக்கிறதில்லை”
"அப்படீன்னா..?”
"கொழும்புல வீட்டு வேலைக்குப் போவணுமா.பொறப்படுன்னு தம்பி கண்டிசனா சொல்லிப்புட்டான். எம் மவ. ஒண்ணே ஒண்னு அத விட்டுப் புட்டு நா.” மீண்டும் கண்ணிர்.
மாரியாயிக் கிழவி திரும்பி வெற்றிலையைத் துப்பினாள்.
மல்லிகை மே 2011 & 45

Page 25
‘நம்ம எல்லாரூட்டு தலவிதியும் ஒண்ணுதாண்டி. ஒருவாய் வெத் தலக்கு எம்மருவகிட்ட நா வாங்காத ஏச்சா..?”
ܪ6ܐܗ ܪ5ܐܲܗ ܪ6ܐܘ
தம்பி சாப்பிட்டு முடிக்கும்வரை அங் கம்மா காத்திருந்தாள். அவளது செல்ல மகள் புத்தகத்தை விரித்து வைத்தபடியே தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். அங் கம்மா குனிந்து அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்தாள்.
"லெச்சணமா வளந்திட்டா. கண்ணு படப்போவுது” தாய்க்கே உரிய பாசத் துடன் அங்கம்மா அவள் தலையை வருடினாள்.
“யம்மோவ்’ என்ற முனகலுடன் அவள் சரிந்து தாயின் மடியில் படுத்துக் கொண்டாள்.
"ஏங்க்கா துணிமணியெல்லாம் எடுத் துக்கிட்டியா? காலம்பறவே கெளம்பணும்.”
ஏப்பம் விட்டபடி தம்பி வேலு வந்து படியில் உட்கார்ந்தான். அவன் மனைவி மீனாட்சி கதவில் சாய்ந்து கொண்டாள்.
'தம்பி. நா கொளும்புக்கு வரல் லடா.” அங்கம்மாவின் குரல் தயங்கித் தயங்கி ஒலித்தது.
வேலு திடுக்கிட்டு நிமிர்ந்தான். “என் னக்கா சொல்லுற.?”
“ஆமா அவங்க நெனச்சு நெனச்சு சொல்லுவாங்க கேளுங்க..” மீனாட்சி
கழுத்தை ஒரு வெட்டு வெட்டினாள்.
அங்கம்மா வேலுவைக் கெஞ்சுமாற் போலப் பார்த்தாள்.
'தம்பி. பெத்த அப்பனும் போய்ச் நானும் இல்லேன்னா
יין
சேர்ந்திட்டாரு. எம்மவ ஏங்கிப் போயிடும்பா.
“அது என்ன கொழந்தயா? பன் னெண்டு வயசாவுதில்ல!’ வேலுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. “ரெண்டு காசு ஒழச்சி அனுப்பினா என்னவாம்? இங்கிட்டு என்ன கொட்டியா கெடக்கு.” மீனாட்சி ஒத்து ஊதினாள்.
அங்கம்மா தலையைக் குனிந்து கொண்டாள்.
“எந்தலவிதி இவகிட்ட ஏச்சுப் பேச்சு கேக்கணும்னு எழுதியிருக்கு’ வேலு எழுந்து அங்கம்மாவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தான்.
"ஏங்க்கா ஒன்னோட சம்பளம் ஓங்க சாப்பாட்டுக்கே பத்தல! நீ மட்டும் கொளும் புக்குப் போ. ஒம்புள்ளக்கு நல்ல சாப்பாடு பண்ணிப் போடலாம். வேனுங்கறத வாங் கிக்கலாம். கழுத்தல காதில ஏதும் பண் ணிப் போடலாமில்ல!”
அங்கம்மா மடியில் உறங்கிக் கொண்டிருந்த மகளைப் பார்த்தாள். மலரத் துடிக்கும் வயது. தாயின் பழைய சேலை யைச் சுற்றிக்கொண்டு, புழுதிப் படிந்த சித்திரம் போல அவள் ஒட்டுப்போட்ட சட்டை, எண்ணெய் காணாத தலை.
& w
ஒம்பொண்ணை ராசாத்தியாட்டம்
வளக்கலாங்கா’ வேலு ஆசை காட்டி 60TTeõT.
‘நெசமாவா சொல்லற தம்பி?’ அங்கம்மாவின் கண்கள் விரிந்தன.
மல்லிகை மே 2011 & 46

வேலு மீனாட்சியைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
ܪܐܘ ܪ5ܐܗ ܪ5ܐܗ
சமையலறைத் தரையைத் துடைத்து நிமிர்கையில் அங்கம்மாவின் இடுப்பு விண் விண் என்று வலித்தது. பசியும் வயிற்றைக் கிள்ளியது.
"அம்மோவ். எல்லா வேலயும் முடிச் சுப்புட்டேன். சாப்பிடட்டுங்களா?”
“ம். ம். கெதியா சாப்பிட்டுட்டு வா.” அம்மா தொலைக்காட்சியில் மூழ்கியிருந் தாள்.
ஆறிப்போன தோசையைப் பிய்த்து வாயில் போடுகையில் மகளின் ஞாபகம் வந்தது.
“அதுக்கு தோசைன்னா ரொம்பப் புடிக்குமே. அத நல்லபடியா வளத்துப் பிடணும்”
அன்று மாலை வேலு வந்திருந்தான். அம்மா கொடுக்கிற பழைய சேட், காற் சட்டையில் வேலுவின் தோற்றமே மாறி இருந்தது. அங்கம்மாவின் சம்பளக் காசினை மொத்தமாக வாங்கிப் பத்திரமாக பொக் கற்றுள் வைத்துக் கொண்டான்.
“தம்பி எம்பொண்ணு எப்பிடிப்பா இருக்கு?” அங்கம்மா ஆவலோடு கேட்டாள்.
"ம். இருக்கா இருக்கா ஆமா நல்ல பொடவ கட்டியிருக்கியே, அம்மா குடுத் தாங்களா? ம், மீனாச்சியும் ரொம்ப நாளா பொடவ ஒண்டு கேட்டுக்கிட்டே இருக்கா எங்க. ம்..”
அங்கம்மா உள்ளே போய் புடைவை மாற்றிக்கொண்டு வந்தாள்.
“இந்தா தம்பி. மீனாச்சி உடுத்திக் கட்டும். எம்பொண்ண நல்லா பாத்துக்க
சொல்லுப்பா'
ܪ5ܐܗ ܪ5ܐܗ ܪܐܗ
அந்த வீடு ஒரு கனவுலகம் போலக் காட்சி தந்தது. அங்கம்மா சுற்றும்முற்றும் பார்த்து வியந்தாள். உயர்தரத் தளபாடங்கள், திரைச்சீலைகள், பளிங்குத் தரை.
“யப்பாடி எம்புட்டு அளகா இருக்கு”
அம்மாவின் தோழி வீட்டில் விருந்து அமர்க்களப்பட்டது. பெண்களின் ஒப்பனை யும், பளிச்சிடும் நகைகளும். அங்கம்மா ஆவென்று பார்த்துக்கொண்டிருந்தாள். புன் னகை, கை குலுக்கல், தழுவல். இவற்றின் நடுவே, அம்மாவின் குழந்தை அடிக்கடி சிணுங்கியது.
“இந்தா அங்கம்மா. பபாணிவ வெளி யில தோட்டத்தில வைச்சிரு.” அம்மாவின் உத்தரவு பிறந்தது.
தோட்டத்தைப் பார்த்த குழந்தை அழு கையை மறந்தது. புற்றரையில் அங்குமிங் கும் ஒடி விளையாடியது. மரங்களில் ஏறு வதும் இறங்குவதும், மதிலில் பாய்வதுமாய் வேடிக்கை காட்டிய அணில்களைப்
பார்த்துக் கைகொட்டிச் சிரித்தது.
அங்கம்மா தரையில் உட்கார்ந்திருந் தாள். இந்த ஆடம்பரமான சூழலில் அவளது மனம் ஒட்டாமல் அந்நியப்பட்டு நின்றது. சீரா கக் கத்தரித்து விடப்பட்ட செடிகள், தேயி லைச் செடிகளை நினைவூட்டின. மலைச் சரிவுகளில் நடந்து, பீலியில் ஆனந்தமாகக் குளித்து, எத்தனையோ மாதங்களாகி விட்டனவே.
மல்லிகை மே 2011 & 47

Page 26
"தீவாளிக்கு வீட்டுக்குப் போவணும். எம்புள்ளயப் பாத்து எம்புட்டு நாளாச்சு.” அங்கம்மாவின் சிந்தனையை இடை மறித்து ஒரு குரல்.
'இத பபாவுக்கு ஊட்டச் சொன் னாங்க.” கையில ஒரு தட்டுடன் நின்றாள் அந்த வேலைக்காரச் சிறுமி.
தன் மகளின் வயதையொத்த அவள் மீது இனம்புரியாத பரிவு அங்கம்மாவுக்கு
"ஏம்மா. ஒம்பேரு என்னா?” கேக் துண்டை எடுத்தபடி அங்கம்மா கேட்டாள்.
"சரோசா” காற்றில் மிதந்து வந்த சிரிப் பொலிகள் சரோசாவின் குரலை அமுக்கின.
66 o e yy ஒன்னை நல்லா பாத்துக்கிறாங்களா..?
சரோசாவின் ஏக்கந் தோய்ந்த விழிகள், கேள்விக்கெனவே காத்திருந்தாற் போல, கண்ணிரால் நிறைந்தன. அங்கம்மா சரோசா வின் நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி னாள்.
"அடிப்பாங்களா..?” சரோசா விம்மத் தொடங்கினாள்.
ஏந்தாயி இங்க இருக்கே? ஒங்க அம்மாகிட்ட போயிடு.?”
"அப்படின்னா
சரோசாவின் விம்மல் அழுகையாய்
வெடித்தது. செத்துப் போயிட்டாங்க!”
66
எனக்கு அம்மா இல்ல.
அங்கம்மாவின் இதயம் வலித்தது. சரோசாவைத் தேற்ற வழியறியாது திகைத் தாள்.
"நா போறேன். திட்டுவாங்க.” கண் களைத் துடைத்தபடி சரோசா போய் விட்டாள்.
“சின்னப் புள்ளங்கள வேலைக்கு
வச்சுக்கிட்டா குத்தம்னு அம்மாவுபூட்டு ஐயா சொல்லிக்கிட்டிருந்தாரே இந்தப் புள்ள பாவம். பெத்தவ இல்லாததிலே இப்பிடி சீரழியிது!’
அங்கம்மா குழந்தைக்குக் கேக்கை 26DLLq60TT6t.
பக்கத்து லயத்து லெச்சுமியின் பத்து வயது மகள் வேலைக்குப் போய் சடலமாய் வந்த காட்சியை திடீரென நினைத்து, அங்கம்மாவின் உடல் ம்ெல்ல நடுங்கியது.
a3, 63 ek
பஸ் மலைப்பாதையில் சுற்றிச் சுற்றி ஏறியது. நகரத்தின் சந்தடிகள் அடங்கி, பச்சைத் துகிலுடுத்த மலைக்கன்னியின் மயக்கும் அழகு தெரியத் தொடங்கியது. விடிந்தும் விடியாத அந்தப்பொழுதில் மலை கள் பனிப்போர்வைகளை உதறி எழில் காட்டின. மகளுடன் கொண்டாடப் போகும் தீபாவளியை நினைத்து அங்கம்மாவின் மன தில் உற்சாகம் முகத்தை நீட்டியபடி பக் கத்து சீட்டில் இருந்த வேலுவைப் பார்த்தாள்.
"என்னாச்சு இவனுக்கு? அம்மா மறு படி மறுபடி சொன்னப்புறம் பிரியமில்லாம கூட்டிட்டு வர்றான். மீனாச்சி கூட சண்டை போட்டானோ?” அங்கம்மா தனக்குள் முணு முணுத்துக் கொண்டாள்.
லயத்து ஒரமாக நின்றிருந்த மீனாட்சி அங்கம்மாவைக் கண்டு திடுக்கிட்டாற் போல இருந்தது.
“நல்லா இருக்கியா மீனாச்சி?’ சந் தோஷமாகச் சிரித்தபடி அங்கம்மா வீட்டுக் குள் நுழைந்தாள்.
"ஆமா. இவ எங்கிட்டு போயிட்டா காலங்காத்தால?” கண்கள் மகளை ஆவ லோடு தேடின.
மல்லிகை மே 2011 & 48

வேலுவும் மீனாட்சியும் ஒருவரை ஒரு வர் பார்த்துக் கொண்டனர். அங்கம்மாவின் அடிவயிறு கலங்கியது.
"ஏன் பேசாம இருக்கே மீனாச்சி. எம்
பொண்ணுக்கு எதனாச்சும் GgFMT 5
மில்லயா..?”
வேலு தொண்டையைச் செருமினான்.
“சும்மா கத்தாதே, அவள கொழும்பில
வேலைக்குப் போட்டிட்டேன்.”
அங்கம்மாவின் கையிலிருந்த பெட்டி கீழே விழுந்தது. ஆசை ஆசையாய் வாங்கி நிறைத்த பொருள்கள் தரையில் உருண் டன. அங்கம்மா வேகமாக வேலுவினருகே போனாள். கோபத்தில் அவளுக்கு மூச் சிரைத்தது.
"இப்ப புரிஞ்சு போச்சுடா எல்லாம். ஓம் பேச்ச நம்பி எம் புள்ளய தனிய விட்டுப் புட்டு இந்தப் பாவி போனேனே...!” அங்கம்மா பொத்தென்று கீழே இருந்தாள். அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
அவள் மனக்கண்ணில் கொழும்பில் விம்மி அழுத சரோசா வந்து போனாள்.
“எம்புள்ள யாருகிட்ட ஒதபடுதோ. என்ன நெனச்சு அழுவுதோ. ஐயோ நா என்ன செய்வேன்.” அங்கம்மாவின் புலம் பலைக் கேட்க மீனாட்சிக்கு எரிச்சலாக வந்தது. "இந்தா சும்மா ஒப்பாரி வச்சி ஊரைக் கூட்டாதே. ஒரு பொட்டப் புள்ளக்கு இந்த அழுகை அழுவுறியே”
அங்கம்மாவின் அழுகை நின்றது. மீனாட்சியை நிமிர்ந்து பார்த்தாள், அவள். மீனாட்சியின் புதுச்சேலையும், கழுத்தில் மின்னிய சங்கிலியும் அங்கம்மாவைப் பார்த்து நகைத்தன. தலைமுடியை அள்ளி முடிந்துகொண்டு விருட்டென எழுந்தாள்.
“பொட்டப்புள்ளன்னா என்னடி? எம் புள்ளடி அது டேய் இன்னிக்கே போயி எம் புள்ளய கூட்டிட்டு வந்திடு. இல்லேன்னா.”
வேலு அலட்சியமாகப் பார்த்தான். சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே புறப் பட்டான். “இல்லேன்னா. என்ன பண்ணிப் பிடுவே? சும்மா கெடப்பியா.”
அங்கம்மாவின் உடல் பதறியது. அவளது உரமேறிய கரிய கைகள் வாசலை மறைத்தன. “என்ன பண்ணுவேனா? சின் னப் புள்ளய வேலைக்கு அனுப்பி வைச் சேன்னு போலிசுகிட்ட போயி சொல்லுவேன். என்னா நடக்குமின்னு தெரியுமில்ல.”
வேலு இந்தப் புதிய அங்கம்மாவைக் கண்டு மிரண்டுபோய் நின்றான்.
“ஏண்டா. பொண்ணாய் பொறந்தா எளப்பமாயிடிச்சோ? கங்காணி, ஒதாரன்னு பயந்து பயந்தே எங்க ஆத்தா காலம் முடிஞ்சு போச்சு. வாயை மூடுடின்னு என்னை அடக்கி அடக்கி வைச்சு எம் புருசன் அநியா யமா உசுரையே விட்டாரு! இப்ப எந்தம்பி நீ. நீயும் என்னை ஏமாத்திப் புட்டே காலம் பூரா ஏமாத்துவீங்க இல்ல.” அங்கம்மா உரு வந்தவள் போல் சத்தம் போட்டாள்.
"போடா போயி எம்பொண்ண கூட்டிக் கிட்டு வா. அவளைப் பெத்தவ உசிரோடதா இருக்கேன். அவ நாதியத்துப் போகல. மொதல்ல போயி கூட்டிக்கிட்டு வாடா, அம் புட்டும் நா இதிலேயே ஒக்காந்திருப்பேன்.”
வாசல்படியில் குந்தியிருந்த அங்கம்மா வின் தோளில் ஆதரவாய் இருகைகள் படிந் தன. அங்கம்மா திரும்பிப் பார்த்தாள். பத்து வயது மகளை வேலைக்கனுப்பிப் பறி கொடுத்த லெச்சுமி அவளின் பின்னால் நின்றாள்.
மல்லிகை மே 2011 & 49

Page 27
கலாமணிபரணிதரனின்
இரு நூல்கள்
- திக்குவல்லை கமால்
கலாமணி பரணிதரனின் இரண்டு நூல்கள் இவ்வாண்டு முற்பகுதியில் வெளியாகி யுள்ளன. ‘இலக்கியமும் எதிர்காலமும்' என்ற கட்டுரைத் தொகுதியும், 'மீண்டும் துளிர்ப்போம்' என்ற சிறுகதைத் தொகுதியுமே அவை. 'ஜீவநதி வெளியீடாக பல நூல்கள் வந்துகொண்டிருப்பது நம்பிக்கை தரும் முயற்சியாகும்.
ஒலக்கியமும் எதிர்காலமும்
இத்தொகுதியில் பத்துத் தலைப்புகளி லான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பொதுவாக எல்லாமே சாதாரண இலக்கிய வாசகனுக்கும் பரிச்சயமான விடயங்கள் தான். ஒவ்வொரு தலைப்பின் கீழும் தற் போதைய நிலைப்பாடு, காணப்படும் குறை பாடுகள், குறைபாடுகளை நிவர்த்திப்பதற் கான பரிந்துரைகள் என்று சிக்கலில்லாத வகையில் எழுதி வரிசைப்படுத்துகிறார்.
"இலக்கியமும் எதிர்காலமும்' என்ற கட்டுரையில் இளைஞரிடையே இலக்கிய ஈடுபாடு குன்றியுள்ளதையும், நல்ல கல்வி முறையினூடாக இலக்கியம் அவர்களி டையே கொண்டு செல்லப்பட வேண்டு மென்றும், இளைஞர் படைப்புத்திறன் ஊக்குவிக்கப்பட வேண்டுமென்றும் தெரி விக்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில், இளைஞர்களை கதாநாயகர்களாக முன்னிறுத்தி, அவர்
மல்லிகை மே 2011 தீ 50
 

களது ஆற்றலையும் சாதிக்க வேண்டு மென்ற துடிப்பையும் சமுதாயத்தின் பக்கம் திரும்பும் விதமான ஆக்கங்கள் தமிழ்ச் சூழலில் பூச்சியமாகவே இருக்கின்றது. அயல் மொழியிலே மிகப் பெரும் துறை யாக அது வளர்ந்துள்ளதை சிந்தனைக் கெடுத்தல் வேண்டும்.
மாற்றங்கள் நன்மை தரவேண்டு மென்று சொல்ல வரும் நூலாசிரியர் இன்று எவ்வாறெல்லாம் எழுதுகிறார்களென்று பட்டியலிடுகிறார். அதில் விளங்காத எழுத்து பற்றி அவர் சுட்டிக் காட்டுவது மிக முக்கியமானது. விளங்காமையே வித்து வம் என்று சொல்லுகின்ற ஒரு கூட்டத் தினர் நம்மிடையே உண்டு. அத்தகைய எழுத்துக்களுக்கு கொடிபிடித்து ஆராவாரம் செய்வோருமுண்டு. இலக்கியத்தின் சமு கப் பயனை மறுத்து காட்சிப் பொரு ளாக்கும் தந்திரோபாயமே இதன் அரசிய லென்பதையும் மனிதநேய இலக்கிய வாதிகள் மறந்துவிடக் கூடாது.
பெண்களின் மீதான வன்முறையும், பெண்களின் மீட்சியும், ஈழத்து ஆக்க இலக்கியப் பெண் படைப்பாளிகள். என்ற கட்டுரைகள் ஒன்றோடொன்று தொடர்புபடு கின்றன. எவ்வாறான சூழ்நிலைகளில் அவர்களால் பெண்கள் மீதான வன்முறை கள் நிகழ்த்தப்படுகின்றன? இத்தகைய பெண் அடக்குமுறைகளைப் படைப்பாக் கம் செய்யும் படைப்பாளிகள் யாவர்? பெண் படைப்பாளிகள் பெண்ணியத்தைப் புரிந்துகொண்டு, தமது பொறுப்புணர்ந்து படைப்பாக்கம் செய்கிறார்களா? என்ற கேள்விகளையும் தேடலையும் இக்கட் டுரைகள் தாங்கி நிற்கின்றன.
பெண்கள் மீதான வன்முறைக்கு, பொதுவாக சமயங்கள் காரணமாகின்றன என்று சொல்லப்பட்டாலும், இந்தச் சமயங் களை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமுதாயமும் அதன் மேலா திக்கவாதிகளும் காரணமென்பதே பொருந்
S|D.
எமது பெண் படைப்பாளிகள் பெண் கள் மீதான வன்முறையை, ஒடுக்கு முறையை எந்தளவுக்கு தங்களது படைப் பிலக்கியங்களிலே கையாள்கிறார்க ளென்பது கேள்விக்குறியே. பெரும்பாலான வர்கள் பெண்ணடிமைத்துவத்திற்கு எதி ராக எழுதுவது போல் காட்டிக்கொள்ளவும் வேண்டும், சமூகத்தோடு சமரசம் செய்து கொள்ளவும் வேண்டுமென்ற நிலைப்பாட்
டைக் கொண்டவர்கள்.
இத்தொகுப்பில் வாசிப்பு தொடர்பான கட்டுரையொன்றும் காணப்படுகிறது. மூன்று விதமான வாசகர்கள் இருப்பதைச் சுட்டிக் காட்டி, சிறந்த நூல்களைத் தேடி வாசிப்பவர்களை முதன்மைப்படுத்துகிறார். தொலைக்காட்சி, கையடக்கத் தொலை பேசி, இணையத் தளங்களால் பெருமளவு வாசிப்புக் குறைந்துள்ளதென்றும், பாட சாலை ஆசிரியர், மாணவர் மத்தியிலும் வாசிப்பு வீழ்ச்சி காணப்படுவதையும் எடுத் துக் காட்டுகிறார். வாசிப்புக் குறைய வில்லை; வாசிப்பு முறை மாறியுள்ள தென்று கூறுவாரும் உண்டு.
மொழிபெயர்ப்பு பற்றி அருமையான தொரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. மொழி பெயர்ப்பு இரு மொழிகளையும், இரு இனங் களையும் இணைத்து வைக்கும் பால மாகும் என்றொரு மேற்கோள் எடுத்தாளப்
மல்லிகை மே 2011 & 51

Page 28
பட்டுள்ளது. இது எமது நாட்டைப் பார்த்துச் சொன்னது போலுள்ளது. .
இங்கு ஆக்க இலக்கிய மொழி பெயர்ப்பின் தேவை என்றோ உணரப்பட்ட போதும், இன்றுகூட அது சீராக நடை பெறுவதாக இல்லை. இதற்கானதொரு தேசியத் திட்டம் உருவாக்கப்படவில்லை. தனிப்பட்டவர்களதும், சில தனியார் நிறு வனங்களதும் தேவைக்கேற்ப சில நூல் கள் வெளிவருகின்றன. இதுவரை நடை பெற்றுள்ள மொழிபெயர்ப்பு வெளியீட்டு முயற்சிகள் பற்றிய தகவல்கள் கூட ஒழுங் காகத் திட்டமிடப்படவில்லை.
ஈழத்தில் தமிழில் வரும் கலை - இலக்கிய சஞ்சிகைகளின் மேம்பாட்டுக் கான திட்டம் தேவையென்பது சந்தேக மின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். சகாய விலையில் அச்சுத் தாள், அரச விளம்பரம் வழங்குதல், நூல கங்களுக்கு பிரதி கொள்முதல் செய்தல் போன்ற விடயங்கள் நீண்ட காலமாகவே பேசப்படும் சங்கதிகளாகும். எழுபதுகளில் வெளிநாட்டு தரமற்ற புத்தகம், சஞ்சிகை கள் கட்டுப்படுத்தப்பட்டபோது, வீரகேசரி நிறுவனம் மாதம் ஒரு நாவல் வெளியிட் டதையும் அக்காலகட்டத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட சஞ்சிகைகள் தோன்றியதையும் இதனோடிணைத்து சிந்திப்பது பொருத்த மானதாகும். இன்று ஒரு சில சஞ்சிகைகள் தொடர்ச்சியாக தரம் பேணிக்கொண்டு வெளிவருகிறதென்றால் அது அவற்றின் பொறுப்பாசிரியர்களின் விடாமுயற்சியின் பெறுபேறாகும்.
ஒப்பியல் இலக்கியம் பற்றிய கட்டுரை யும் இறுதியாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
நூலாக வெளிவராத போதும், எச்.எம். பி.முஹிதீன் கம்பனும் அல்லாமா இக் பாலும், பாரதியும் நஸ்ருள் இஸ்லாமும் போன்ற ஒப்பியல் கட்டுரைத் தொடர்களை எழுதினார் என்பதை தகவலுக்காகச் சொல்ல வேண்டியுள்ளது.
ஈழத்து இலக்கியங்கள் ஒப்பியல் ரீதி யில் ஒப்புநோக்கப்படுவதால் மேலும் செழுமையுறும் என்று நூலாசிரியர் தெரி விக்கிறார்.
மொத்தத்தில் யாவரும் அறிந்த தலைப்புகளைத் தெரிவு செய்து, யாவரும் அறியாத தகவல்களை நிறையவே அதற் குள் கொண்டு வந்ததன் மூலம் ஒரு சிந் தனைக் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மிக இலகு தமிழில், புரியும்படியான ஒழுங்குமுறையில் வாசகனாக, படைப் பாளியாக, படிப்பாளியாக, சஞ்சிகையாள னாக தன் பார்வையைப் படரவிட்டுள்ளார். வித்துவக் காய்ச்சலற்ற எளிய நடையே க.பரணிதரனின் வெற்றி.
இந்நூலுக்கு அறிமுக உரை வழங்கி யுள்ள உளவியல்துறை விரிவுரையாளர் அருள் திரு. இராசேந்திரன் ஸ்ரலின் "இலக்கியம் பற்றிய ஆய்வுகளில் துணை நூலாக இக்கட்டுரைத் தொகுதி அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் துளிர்ப்போம்
படைப்பாளிகள் சஞ்சிகை. பத்திரி
கைத்துறைக்கு வரும்போது, அவர்களது
படைப்பாற்றல் வற்றிப் போவதாகவும்,
படைப்பாக்கம் செய்வதற்கான வாய்ப்பு அற்றுப் போவதாகவும் சொல்லப்படுவ
மல்லிகை மே 2011 & 52

துண்டு. கலாமணி பரணிதரன் 'ஜீவநதி' யின் ஆசிரியராய் அமர்ந்து குறுகிய காலத் தில் அதனைத் தரமான சஞ்சிகையாய்க் கொண்டு வந்ததோடு, படைப்பாளியாகவும் செயற்படுவது வித்தியாசமாகத்தானிருக் கிறது.
இவரது பதின்மூன்று சிறுகதைகளை உள்ளடக்கியதாக மீண்டும் துளிர்ப்போம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் யுத்தச் சூழலில் பிறந்து வளர்ந்து படைப்பாளியாக வரும்போது, அதில் ஏதோ வகையில் அதன் வடுக்களும் தாக்கமும் ஏக்கமும் சம்பந்தப்படுமென்பதுதான் யதார்த்தம். பொதுவாக யுத்த காலக் கதைகளென்று பார்க்கும்போது, விரும்பியோ விரும்பா மலோ குறித்ததொரு வாய்ப்பாட்டுக்கு அப்பாற் செல்வது மிகவும் அரிதாகும்.
ஆனால், இத்தொகுப்பின் கதைகளில் யுத் தம் பற்றிப் பேசும்போது வலிந்து மிகைப் படுத்தலாக அமையாமை குறிப்பிடத் தக்கது.
அண்மைக் காலமாகப் புனைகதைப் பிரவேசம் செய்பவர்கள், உருவ உள்ளடக் கத்தில் காலத்தின் தேவையென்று சொல் லிக்கொண்டு, காலத்தின் கோளாறு களையே பிரசவிக்கின்றனர். இலக்கியத்தி லிருந்து சமுதாயத்தைப் பிரிக்கும் நடவடிக் கைகளைத் தெரிந்துகொண்டும், அற்றுப் போகாத யதார்த்தத்தின் தேவையை விளங்கிக் கொண்டும், பரணிதரன் படைப் பாக்கம் செய்வது, கருத்தியல் தெளிவினா லும் தொடர்புச் சூழலின் வழிகாட்டலி னாலுமாகும்.
இலக்கியத்தின் ஆதார சுருதியே வாழ்வின் மீதான நம்பிக்கை "ஊட்டுவ தாகும். உறவுகளும் உடைமைகளும் சிதைந்து போன சூழ்நிலையில், நம் பிக்கையூட்டுவதான ‘மீண்டும் துளிர்ப் போம் என்ற கதை, மகுடமாக அமைந் திருப்பது சிறப்பாக உள்ளது.
வடபுலப் படைப்பாளிகளால் சாதீயத் தைத் தவிர்த்து எழுத முடியாது என்று சொல்வது ஒரு பக்கமிருக்க, யுத்தத்தின் காரணமாக சாதிப் பிரச்சினை பெரும் பாலும் அற்றுப் போய்விட்டதென்று இன் னொரு சாரார் சொல்வதில் எந்த உண்மை யும் இல்லையென்பதை பரணிதரன் இன்னொரு தடவை உறுதிப்படுத்துகிறார்.
'உயிரினும் மேலானது' என்ற கதை யிலே குடும்ப வறுமை பொறுக்காது தொழில் நாடி வன்னி செல்லும் வாலிபன், ஏ-9 பாதை மூடியதால் வரமுடியாத
மல்லிகை மே 2011 & 53

Page 29
நிலைக்குள்ளாகிறான். அவனுக்குத் துணை அவசியமாகிறது. இளம் யுவதி களுக்கு திருமணமானால்தான் பாதுகாப்பு என்ற நிலைவேறு. சாதியில் குறைந்த போதும் கல்வி, பொருளாதாரத்தில் மேலோங்கிய குடும்பத்தில் அவனுக்குத் திருமணமாகிறது. இருந்தும் முகாம் வாழ்வுதான். வாலிபனின் தந்தை தொலை பேசியில் தொடர்பு கொள்கிறார். நிலை மையை விசாரித்தறிந்த அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்ல்ை. இறுதியாக, "எட நாயே. வன்னியிலேயே நீ செத்து, நான் குடமுடைத்து, கொள்ளியும் வைச்சு விட்ட தாய் நினைச்சுக் கொள்ளுறன்” என்கிறார்.
'பொய் முகங்கள்’ என்ற சிறுகதை யிலோ அனோஜாவின் பிறந்தநாள் வைப வத்திற்கு நண்பிகள் நால்வர் செல் கின்றனர். அவர்களில் இருவர் சாதியில் குறைந்தவர்கள். அவர்கள் அங்கு எவ்வாறு நடாத்தப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் துலாம்பரமாக வடித்துள்ளார். ஒரு கட்டத் தில் அவர்கள் வீட்டினுள்ளே செல்ல முற் பட்டபோது, "உள்ளுக்கு ஒரே நெரிசலாக் கிடக்கு. இதிலே இருங்கோடா, வாரன்’ என்று இரு கதிரைகளை முற்றத்திலே போடுகிறார்கள். இந்தப் பகுதி என்.கே.ரகு நாதனின் நிலவிலே பேசுவோம்' என்ற கதையை நினைவூட்டுவதாக உள்ளது.
புலம்பெயர் வாழ்வில் என்னதான் கொட்டிக் கிடந்தாலும், அதில் உண்மை யான மனமகிழ்ச்சி இல்லை. சுற்றமும் சூழ மும் இணைந்த சமூக வாழ்வு மேலான இந்த ஏக்கம் புலம் பெயர்ந்து வாழ்வோர் மத்தியில் காணப்படுவ தையும் "உறவுகள் எடுத்துக் காட்டுகிறது.
தென்பதையும்,
'ரொபோ, யதார்த்தம்’ போன்றன மிகச் சிறு கருப்பொருளை மையமாக வைத்துப் பின்னப்பட்டவையாகும். எதிர் பாராத முடிவைத் தருகின்றன. அவை மனதை சிலிர்க்க வைக்காது சிந்திக்க வைக்கின்றன.
பாடசாலை மாணவர் முதல் முதி யோர் வரை இன்று ஆலோசனை, வழி காட்டல், ஆற்றுப்படுத்தல் அவசியமாக உள்ளது. யுத்தமும் சுனாமியும் இதன் தேவையை மேலும் அதிகரித்துள்ளன. படைப்பாளி உளநலத்துறைசார் பயிலுந ராக இருப்பதனால் பல கதைகளில் அதன் தாக்கத்தைக் காணமுடிகிறது. மாறுதல், பகிடிவதை' என்பன அத்தகைய கதை களே. இக்கதைகளல் ஆசிரியர் அறியா மலேயே சில விடயங்கள் உட்புகுந்து கலைத்துவத்தைச் சற்றே குறைப்பது போல் தெரிகிறது.
பொதுவாக க.பரணிதரனின் இக் கதைகள் அன்றாட வாழ்க்கைக்கு மிக நெருக்கமான விடயங்களையே கருப் பொருளாகவும், தொனிப்பொருளாகவும் கொண்டுள்ளன. மொழிப் பிரயோகம் இயல் பானதே. வார்த்தை ஜாலங்கள் காணப்பட வில்லை. வசனங்கள் சிறியவை. தெளி வானவை. யாரும் விளங்கவில்லை என்று சொல்ல முடியாதவை.
எதிர்காலத்திற்குரிய ஒரு சிறந்த படைப்பாளியை இத்தொகுப்பு அடை யாளப்படுத்துவதை, பேராசிரியர் சபா ஜெய ராசா, தெணியான் ஆகியோரின் பதிவு களும் உறுதிப்படுத்துகின்றன.
dickwelle kamaldDgmail.com
மல்லிகை மே 2011 & 54

அந்தக் காலத்திலிருந்தே நான் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த சிற்றேடுகளை
வாங்கிக் கவனமாகப் பத்திரப்படுத்தி வந்திருக்கிறேன். இப்படி வாங்கிப் பத்திரப்படுத்திய இதழ்கள், உள்நாட்டு யுத்த நெருக்கடி காரணமாக நான் வீடு விட்டு வீடு மாறிய காரணத்தால் பத்திரப்படுத்த முடியாமல் அப்படியே தொலைந்து போய்விட்டன. அது இன்று வரைக்கும் எனக்கொரு பெரிய சோகம்.
ஒரு தடவை எனது பழைய இலக்கிய இதழ்களின் சேமிப்பை யார் மூலமாகவோ வாய் வழியாகக் கேள்விப்பட்ட ரஸிகமணி கனகசெந்திநாதன் ஒருதடவை எனது வீட்டிற்கே நேரில் வந்து அவற்றைப் பார்வையிட்டுள்ளார். பாராட்டி, சிறுகுறிப்பொன்றையும் தன் கைப்பட எழுதித் தந்துள்ளார். அந்தக் குறிப்புக்கூட இன்று எனது கைவசம் இல்லை. எனக்கது பெரிய இழப்புத்தான்!
வரதரையும், சிற்பியையும் எனக்கு மனசுக்கு ரொம்பப் பிடிக்கும். அடுத்து உங்களையும் இன்று வரைக்கும் நெஞ்சார நேசித்து வருகின்றேன். காரணம், அந்தக் காலத்திலேயே துணிந்து வடபிரதேசத்தில் சிற்றிலக்கிய ஏடுகளை நடத்தி வந்தவர்கள் இவர்கள். மறு மலர்ச்சி, ஆரம்பச் சிற்றிதழ். அந்தக்காலத்திலயே இலக்கியவாதிகளால் விதந்து பேசப் பட்டது. அடுத்தது கலைச்செல்வி. குறிப்பிட்ட காலம் சுன்னாகத்தில் இருந்து சிற்பி அவர்க ளால் வெளிக்கொணரப்பட்டது. இடையில் நின்று போனது. மிகப்பெரிய இலக்கிய நஷ்டமிது.
உங்களது மல்லிகையை நான் ஆரம்ப காலத்திலிருந்தே படித்து வருகின்றேன். சேமித்தும் வைத்திருக்கின்றேன்.
உங்களுக்கு ஞாபகமிருக்குமோ என்னமோ, தெரியாது. கஸ்தூரியார் வீதி, 60ம் எண்ணிலிருந்து மல்லிகை வெளிவந்த அந்தக்காலத்திலேயே அந்தக் கடைக்கும் வந்து உங்களது கையால் மல்லிகையை இருபது சதம் கொடுத்து வாங்கியுமிருக்கிறேன்.
மல்லிகை இடம் மாறிக் கொழும்பு சென்றதன் பின்னரும் வெள்ளவத்தையில் இன்று வாழ்ந்து வரும் எனது சகோதரனின் உதவியால் மாதா மாதம் பெற்று வருகின்றேன்.
மல்லிகை மே 2011 & 55

Page 30
பல ஆண்டுகளாக ஒழுங்காக மல் லிகை மாத இதழ்களைச் சேகரித்து வைத் திருப்பதுதான் எனது பொழுதுபோக்குகளில் ஒன்று. ஒரு சில ஆண்டு மலர்கள் எனது கைவசம் இல்லை. அவைகளையும் எதிர் காலத்தில் எனது சேகரிப்பில் சேர்த்து விட லாம் என நிச்சயமாக நம்புகின்றேன்.
நேரில் வந்து உங்களையும், மல்லி கைக் காரியாலயத்தையும் ஒருதடவை பார்த்துவிட வேண்டுமென்பது எனது நீண்ட நாள் ஆசை. வயது ஒரு காரணம். பிர யாணம் செய்ய முடியாத வசதியீனம் ஒரு sTigeot Tub.
மல்லிகை இதழ்களைத் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு நான் மனந்திறந்து ஒன்றைக்கூற விரும்புகின்றேன். மல்லிகை இதழ்கள் ஒவ்வொன்றையும் படித்ததன் பின்னர் அவற்றை அலட்சியமாக அங்கு மிங்கும் போட்டு விடாதீர்கள். அவற்றை ஒழுங்குப்படுத்திச் சேமிக்கப் பழகுங்கள். பிற் காலத்தில் அவை ஒர் இலக்கியச் சொத் தாகவே திகழும்.
கன்னாகம் க.வடிவேற்கரசன்
மல்லிகையைச் சில காலங்களாகத் தொடர்ந்து படித்து வருகின்றேன். இந்தக் கட்டத்தில் எனது யோசனை ஒன்றையும் சொல்லலாம் எனவும் நினைக்கின்றேன்.
இத்தனை ஆண்டுக் காலங்களாக - ஏன் நாலரைத் தசாப்தங்களுக்கு மேலாக நின்று நிலைத்துவரும் மாத சஞ்சிகை இது.
இந்தச் சஞ்சிகையை இன்னும் இன் னும் மக்கள் மத்தியில் சென்றடையக் கொஞ்சம் பாமர மக்களும் படித்தறியக்
கூடியதாக - உள்ளடக்கத்தில் சிறிது மாறு தல் செய்து, வெறும் இலக்கியச் சஞ்சிகை என்பதைக் கொஞ்சம் நெகிழ்த்தி - மல்லி கையை வெளியிட்டால் நல்லது போல என மனசிற்குப்படுகிறது.
யோசியுங்கள். மற்றும் சில பகுதி களுக்கு மல்லிகை போய்ச் சேருவதில்லை என்றொரு குற்றச் சாட்டுமுண்டு. இதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள்.
வாசகர் கடிதங்கள் வெகுசனச் சஞ் சிகைக்கு மிக மிக முக்கியம். எனவே, பரவலாக வரும் கடிதங்களை ஒழுங் காகப் பிரசுரித்து வாருங்கள்.
இன்று தேசமெங்கிலும் பல புதிய எழுத்தாளர்கள் தோன்றி வருகின்றனர். அவர்களையும் அரவணைத்து வளர்த் தெடுக்கத் தெண்டியுங்கள்.
உங்களைப் போன்ற இன்றைய எழுத்தாளர்களில் பலரும் ஒரு கால கட்டத் தில் ஆரம்ப எழுத்தாளர்களாகத்தானே உருவாகி வந்தவர்கள்? எனவே, புதுப் புதுப் பிரதேசங்களில் இருந்தெல்லாம் இளைஞர்களும், படித்த யுவதிகளும் இன்று இலக்கியத்துறைக்குள் உள் நுழைந்து எழுதிவருகின்றனர். இவர்களில் எல்லோரையும் அல்ல, வளர்ந்து வரக் கூடிய தரமானவர்களைத் தேர்ந்தெடுத்து மல்லிகையில் இடமொதுக்கி வளர்த் தெடுங்கள். பிற்காலத்தில் இவர்கள் மல் லிகை கண்டெடுத்த எழுத்தாளர்கள் எனப் பெயர் பெறக் கூடுமல்லவா?
எனது மனதுக்குச் சரி எனப்பட்டதை இங்கு எழுதி விட்டேன். இனிமேல் உங்கள் பாடு.
LDT6f'Lumruiu - பா.சிவலோசினி
மல்லிகை மே 2011 & 56

புதுப் புத்தக வெளியீட்டு விழாக்கள் கொழும்பு மாநகரில் மலிந்துபோய் நடக் கின்றன. w
30-40 பக்கங்களில் ஒரு சில பாட்டு களை எழுதிவிட்டு, புதுமைக் கவிதைத் தொகுதி என்ற பரபரப்புடன் வெளியீட்டு விழாக்கள் எல்லாம் சும்மா பணச்சடங்கு ஹோதாவிலே பற்பல மட்டங்களில் வெளி யிட்டு வைக்கின்றனர்.
இது ஒர் இலக்கியத் தொடர் நோயா
கப் பல்கி பெருகி விடுமோ? என மெய்
யாகவே எனது மனதில் அச்சம் ஏற்பட் டுள்ளது.
நானிருப்பது ஒரு தொங்கல். கொட் டாஞ்சேனை. விழா நடப்பதோ மறு தொங் கல். வெள்ளவத்தை. விழா முடிந்து வர, இரவாகி விடும். அதுவும் வெளியே மழை பெய்தாலோ பிரயாணமே சும்மா சப்பென் றாகி விடும். ஏன்தான் வந்தோம்? மனசு புறுபுறுக்கத் தொடங்கிவிடும்.
இதன் காரணமாகச் சமீபத்தில் மன சிற்குள் தீர்மானமொன்றை எடுத்துள் ளேன். இனிமேல் எந்தவிதமான அழைப் புக்கள் கிடைததாலும், போய்ப் பங்கு கொள்ளத்தக்க ஆக்கபூர்வமான கூட்ட மென்றால்தான் போவது. இல்லையென் றால், அக்கூட்டத்தில் கலந்து கொள்ளா மலேயே தவிர்த்து விடுவது என்றொரு முடிவுக்கு வந்துள்ளேன்.
என் மனசுக்குப் பிடித்தவரைக்கும் இதுதான் சரியான முடிவாக இருக்கும் எனவும் நம்புகின்றேன்.
மனச்சாட்சியைத் தொட்டு சொல்லட்
டும், இந்த இலக்கிய நண்பர்கள்! இப்போது சுடச்சுட நடைபெறும் புத்தக வெளியீடுகள் பணச் சடங்காக நடத்தப்படுகின்றனவா? அல்லது இலக்கிய வளர்ச்சிக்காக ஒழுங்கு செய்யப்படுகின்றனவா?
பணச் சடங்குக்காக நடத்தப்படும் தனிமனிதக் கொண்டாட்டம் என்றால், தத் தமது வீடுகளில் இனசனங்களை, நட்பு வட் டத்தினரை அழைத்து, தத்தமது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலா மல்லவா? வளரும் இலக்கியத்தின் பெய ரால் ஏனையோர்களையும் கூப்பிட்டு இத் தனை சிரமங்களையும் ஏன் எமக்குத் தரவேண்டும்?
கொட்டாஞ்சேனை ஆர். சிவநேசன்
ஐம்பதாவது ஆண்டை நோக்கிய மல் லிகையின் பயணத்தில் தங்களது சலிப் பற்ற தொடர் முயற்சி இளைய உள்ளங் களுக்கு எழுச்சியூட்டக் கூடியது. ஒவ் வொரு மாதமும் தரமான ஆக்கங்களைத் தெரிந்தெடுத்துப் பிரசுரிப்பதோடு, புதிய எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கும் தங்களின் இலக்கிய சாதனை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
அத்துடன் கடந்த ஏப்ரல் 2011இல் வெளிவந்த மூதூர் மொகமட் ராபியின் கரையெங்கும் முதலைகள் சிறுகதை தொடர்பான எனது மனப்பதிவையும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
எல்லாச் சிறுகதைகளும், எப்போதும் எல்லாரதும் மனங்களிலும் நின்று நிலைப்ப தில்லை. அவ்வாறு எல்லாரதும் கவனிப் பைப் பெறுபவை சில சிறுகதைகளே. எனி
மல்லிகை மே 2011 & 57

Page 31
னும் சில கதைகள் சந்தர்ப்பங்களைப் பொறுத்து, ஒவ்வொருவரதும் கருத்துக் களைப் பொறுத்து, அவரவர் ரசனையைப் பொறுத்து கவனிப்பைப் பெறுகின்றன. அவ்வகையில் எனது கருத்தையும், ரசனையையும் ஒருசேரக் கவர்ந்ததாக கரையெங்கும் முதலைகள் அமைந்ததை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன்.
யினை நகர்த்திச் செல்லும் விதமும், கதை யின் தலைப்பின் பொருத்தப்பாடும் சிறப் பாக அமைந்துள்ளன. கதையில் சொல்லப் பட்ட கருவோடு, பாத்திரங்களின் கருத்து கள் நடைமுறை யதார்த்தத்தை துல்லிய மாகப் பிரதிபலிக்கின்றன. இவ்வாறான சிறந்த ஒரு கதையைப் படைத்த மூதூர் மொகமட் ராபிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கதையில் வருகின்ற இரு பாத்திரங் சங்கத்தானை தாட்சாயணி களும் உரையாடல் பாங்கிலேயே கதை
s ཡོད༽ மல்லிகை ஆண்டுச் சந்தாதாரராகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
ஆண்டுச் சந்தா 600/- தனிப்பிரதி 40/-
estion C. Douf 200/-
ஒராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231- Hatton National Bank. Sea Street, Colombo - 11.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominie Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. காசுக்கட்டளை அனுப்புபவர்கள் Dominic Jeeva Kotahena, P.O. எனக் குறிப்பிட்டு அனுப்பவும். தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளையனுப்பியும் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முீ கதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721 一
மல்லிகை மே 2011 தீ 58
 

பின்காலனிய மனோபாவமும்
சுற்றுப் புறச்சூழலும்
ரஞ்சித் தர்மகிர்த்தியின் 'அஹஸ பொலவ லங்வெலா” (சங்கமம ) நாவலின் ஊடாக.
- மேமன்கவி
நவீன சிங்கள கலை இலக்கியப் பரப்பில் இளைஞர் இலக்கியம் என தனித்த அடையாளத்துடன் ஒரு பெரும் வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. அவ்வாறான இலக்கிய வகை தமிழில் அடையாளப்படுத்தப்படாத நிலையில் இது வரை காலம் சிங்கள மொழிலிருந்து தமிழுக்கு கிடைந்திருக்கும் இளைஞர் இலக் கியங்களை படித்ததன் வழியாக, இளைஞர் இலக்கியம் என்பது இளைஞர்களை மையப்படுத்தி அவர்களின் அனுபவங்களை, அவர் தம் பிரச்சினைகளை பற்றி பேசுகின்ற இலக்கியங்கள் என நம்மால் புரிந்துக் கொள்ளப்படுகிறது.
இளைஞர் இலக்கியம் என்று தனியாக அடையாளப்படுத்தப்பட வேண்டிய தேவை ஒன்று இந்த தேசம் கடந்த காலத்தில் எதிர்க்கொண்ட கசப்பான நிகழ்வு களின் காரணமாக ஏற்பட்டது. ஏனெனில் அத்தகைய நிகழ்வுகளில் எல்லா தலை முறையினரும் பாதிக்கப்பட்டாலும், அந்த நிகழ்வுகளில் குறிப்பாக இளையத்தலை முறையினர் அந்த நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டு இருந்தமையும், அதிக அளவில் பாதிக்கப்பட்டமையும் காரணமாக, அந்தந்த காலகட்டத்தைப் பற்றி பேசிகின்ற இலக்கியங்களை இளைஞர் இலக்கியம் என்று தனியாக பேசுதல் என்பது ஓர் அவசியம் இருந்தது போலும். தமிழ் பேசும் சூழலிலும் அத்தகைய இலக்கியங்கள் தோன்றிய பொழுதும், அவை ஏனோ தமிழின் இளைஞர் இலக்கியங்கள் என்று தனியாக அடையாளப்படுத்தப்படவில்லை. இடைக்கிடையே அபூர்வமாக இளைஞர் இலக்கியம் என்ற அடையாளத்துடன் ஒரு சில இலக்கியங்கள் தமிழில் வெளியிடப்
மல்லிகை மே 2011 & 59

Page 32
பட்டாலும், அதிக அளவில் கவனப் படுத்தப்படாதற்கான காரணத்தையும், ஒட்டு மொத்தமாக தமிழில் தோன்றிய இளைஞர்கள் சார்ந்த இலக்கியங்கள், தனியாக அடையாளப்படுத்தப்படாமைக் கான காரணங்கள் ஆராயப்பட வேண் டிய அவசியம் இருக்கிறது. இத்தகை யச் சூழலில் சிங்கள மொழி இலக்கி யத் துறையில், சுற்றாடல் சார் இளைஞர் நாவல் என்ற அடைமொழியுடன் சிங் கள மொழியில் வெளிவந்த அம்மொழி யில் மிக புகழ் பூத்த படைப்பாளியான ரஞ்சித் தர்மகிர்த்தி அவர்களின் ‘அஹஸ பொலவ லங்வெலா’ என்ற நாவல், நம் நாட்டின் முக்கியமான மொழிபெயர்ப்பாளரான எம்.எச்.எம் யாக்கூத் அவர்களின் மொழிபெயர்ப் பில் ‘சங்கமம்' என்ற பெயரில் ஆன மடுவ் தோதென்ன வெளியீடாக நமக்கு படிக்க கிடைத்திருக்கிறது.
இந்த நாவலை நாம் ஆழமாக படித்து முடிக்கும் பொழுது, இந்த நாவ லுக்கு இளைஞர் நாவல் என்ற அடை மொழி எந்த அளவுக்கு பொருந்தும்
என்ற கேள்வி எமக்குள் எழுகிறது.
வேண்டுமானால் இந்த நாவலை சுற் றாடல் சார் சிறுவர் நாவல் என்ற சொல் வது பொருந்தும் என எமக்கு தோன்றியது.
இனி நாவலுக்கு வருவோம். காடு கள் அழிக்கப்பட்டு நகரங்கள் உருவாக் கப்பட்டுக் கொண்டிருக்கும் (கிராமங்கள் மெல்ல மெல்லமாக நகரங்களளாக மாறுவது என்பது அபிவிருத்தியின் ஒர் அம்சமாக சொல்லப்படுவது என்றால்,
காடுகள் அழிக்கப்பட்டு கிராமங்கள்
உருவாகுவதற்கு பதிலாக உடனடி யாக நகரங்கள் உருவாக்கப்படுதல் என்பது துரித அபிவிருத்தியின் நவீன வடிவம் எனலாம்) சூழலில், பரம்பரை சொத்து வழியாக தனக்கு கிடைத் திருக்கும் வீட்டின் உள்ளக கட்டமைப் பையும் சரி, அந்த வீட்டின் சுற்றுபுறச் சூழலையையும் சரி, மாற்ற விரும்பாத, நடுத்தர வயதுமிக்க ஒரு ஓவியரான பியசேக்கர என்பவரின் ஐந்து வயது மக ளான மாலிக்கும், பியசேக்கர மாற்ற விரும்பாத சுற்றுப்புறச் சூழலின் காரண மாக, அங்கு உலாவும் ஒரு பெண் அணிலுடன் இடையில் ஏற்படும் உற வையும், பிணைப்பையும் இந்த நாவல் பிரதானமாக பேசுகிறது. அதேவேளை சமீப காலம் வரை சுற்றுப்புறச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அம்மாற்றங் களின் காரணமாக ஏற்பட்டுள்ள அழிவு களைப் பற்றியும், இழக்கப்பட்டுள்ள ரம்மியங்களையும் பற்றியும் இந்த நாவல் இடைக்கிடையே பேசிச் செல் கிறது.
இந்த நாவலின் சிறப்பு அம்சங் களில் ஒன்று எனச் சொல்வது என்றால், சுற்றுப்புறச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற் றங்களை பற்றி பேசும் பொழுதுதெலாம்
வெறுமனே கட்டுரைப் பாங்கான (அதா
வது கதை சொல்லியான படைப்பாளி யின் கூற்றாக ஒரு சில இடங்களில் மட் டும் வந்தாலும்) சொல்லப்படாமல், அந்த நாவலில் வரும் மாலியின் பாட்டி சொல் லும் கதைகள் வழியாகவும், மாலியின் தந்தை பியசேக்க சொல்லப்படுவதை குறிப்பிடலாம்.
மல்லிகை மே 2011 & 60

காடுகள் அழிப்பு என்பது வெறுமனே மரங்களின் அழிவாக இருப்பதில்லை. அக்காடுகள் சார்ந்த வாழும் நூற்றாக் கான ஜீவராசிகளின் அழிப்பாகவும் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அத்தகைய ஜீவராசிகளை பற்றிய அதிக அளவிலான கரிசனையை இந்த நாவல் வெளிப்படுத்துகிறது.
நமக்கு மத்தியில் பொதுவாக பாட்டிமார்கள் சொல்லும் கதைகள், குழந்தைகளையும் சிறுவர்களையும் சில வேளை ‘பாட்டிமார்கள் சொல்லும் கதைகள் பெரியவர்களையும் தூங்க வைத்து, விழிப்புணர்ச்சியற்ற நிலையை உருவாகுவது உண்டு. துங்க வைக்கத் தான் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பெரியவர்களை விட, சிறுவர்கள், சிறுமி யர்கள் புத்தசாலிகள். இன்றைய பாட்டி மார்கள் சொல்லும் கதைகள் புனைவு கள் என அவர்களுக்குத் தெரிந்து இருக் கிறது. அத்தகைய தெளிவுடன்தான் இந்த நாவலில் வரும் மாலி, அவளது பாட்டி சொல்லும் கதைகளை எதிர் கொள்கிறாள். ஒரு காலத்தில் அணில் களின் இராச்சியம் ஒன்று இருந்தது என ஆரம்பிக்கும் கதை புனைவு என தெரிந் திருந்தும், அக்கதை வழியாக காடுகள் அழிக்கப்பட்டு நகரங்கள் ஆக்கப்பட்ட தன் காரணமாக, அழிந்து போன ஜீவ ராசிகளை பற்றி அவள் கொள்ளும் கவலை நமது கவனத்தை கவர்கிறது. மாலியின் இந்த விழிப்புணர்ச்சியும் ஜீவ காருண்யமும், தன் தந்தை மாற்றம் செய்யாது இருந்திருக்கும் சுற்றுப் புறச் சூழலின் காரணமாக அணில் போன்ற ஜீவராசிகளுடன் அன்புச் செலுத்தவும்
உறவாடவும் வழி வகுக்கிறது. அத் தோடு மாலியோடு இணைந்து அவளது தந்தை பியசேக்கர அத்தகைய உணர்வு உள்ளவராகவே இருப்பதை மாலி அந்த அணிலுடன் கொள்ளும் உறவாடலுக்கும் துணை புரிவதோடு, இந்த நாவலின் உச்சகட்ட சம்பவம்
ஒன்றில் அந்த அணிலுக்காக அவர்
எடுத்துக் கொள்ளும் பிராயத்தனமும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மாலி பிணைப்பு கொண்டிருக்கும் அணில் கருவுற்றிருக்கும் ஒரு பெண் அணில். ஒருநாள் பியசேக்கர வைத் திருக்கும் “பழைய காரில் அவரது உறவினர் பையன் ஒருவனை அழைத்து வர விமான நிலையம் மாலியுடனும் அவரது உறவினர்களுடன் செல்லு கிறார். அந்த உறவுக்கார பையன் விமானத்திலிருந்து வரும் வரை விமான நிலைய கார்களின் தரிப்பிடத்தில் காத் திருக்க, அப்பொழுது காரின் உள்பகுதி யில் சில எலிக்குஞ்சுகள் இருப்பது போல் அவை எழுப்பும் வினோத சப்தத் தால் உணர்கிறார்கள். ஆனால் அந்த கூரைக்குள் இருப்பதோ சில அணில் குஞ்சுகள். இப்பொழுது அவர்கள் இரு வருக்கும் ஒர் உண்மை புரிகிறது. மாலி யின் சிநேகியான அணில் அம்மா ஈன் றெடுத்த குஞ்சுகள் அவையென புரி கிறது. இருவருமே கலவரம் அடை கிறார்கள். தாய் அணிலிடமிருந்து குஞ்சுகள் பிரித்துக் கொண்டு வந்து விட்டோமே என்ற குற்றவுணர்வுக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் அந்த அணில் குஞ்சுகள் பசியினால் ஒலி எழுப்புகின்றன என நம்புகிறார்கள்.
மல்லிகை மே 2011 & 61

Page 33
ஆனால், அப்பொழுது அந்த நேரத்தில் வெளியே கடுமையான வெயில் வேறு அடிக்கிறது. அதன் கராணமாக காரின் கூரை சூடேறி இருப்பதனால் உஸ்ணம் தாங்காது ஒலி எழுப்புகின்றனவோ எனவும் ஐயம் கொள்கிறார்கள். அதற் காக அக்கூரை மீது நீரை ஊற்றி குளிர வைக்க முயற்சிக்கிறார்கள். இவரது இச்செயல் கூட, அங்கு இருப்போர்கள் இவரை விசரன் என்று கூட கருத வைத்து விடுகிறது. அத்துணை தூரம் அந்த ஜீவராசிகளுக்காக அவர் பிரயத் தனப்படுகிறார். அது மட்டுல்லாமல் உடனடியாக அக்குஞ்சுகளை அணில் ஆழ்மாவிடம் சேர்ந்து விட வேண்டும் துடிப்புடன், நான் ஒட்டும் கார் மிக பழைய கார் என்பதையும் மறந்து மிக வேகமாக காரை ஒட்டி, ஒரு வழியாக அக்குஞ்சுகளை அணில் அம்மாவிடம் சேர்ப்பிக்கிறார்.
சிங்கள் நாவல்களில் குறிப்பாக இளைஞர், மற்றும் சிறுவர் நாவல்களின் ஒர் அத்தியாத்திற்கும் தலைப்பு இடுதல் சிற்சில நாவல்களில் பார்க்கக் கூடிய தாக இருக்கிறது. தமிழ் சூழலில் அத் தகைய ரொம்பவும் அபூர்வமாக அந்த முறைமை பின்பற்றப்படுவதுணடு. சங் கமம் என்ற இந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திற்கு தலைப்பிட்டு இருப் பது அந்த நாவலை படிப்பதில் சுவார சியத்தை ஏற்படுத்துவதோடு, ஒவ்வொரு அத்தியாயம் கொண்டிருக்கும் உள்ள டக்கத்தை அறிமுக வாசலாக இருக் கிறது.
அதேவேளை பாட்டி சொல்லும் கதை ஒன்றை ஒரு காலத்தில் அணில் களின் ‘இராச்சியம்’ ஒன்று இருந்தது என ஆரம்பிக்கும் பொழுது, நம் தேசத்து வரலாற்றில் ‘அழிந்து போன இராசதானிகளை' பற்றி குறியீடாக பேசு
碧 w
கின்றனவோ என்ற ஒரு ஐயமும் நமது
வாசிப் பின் பொழுதும் தவிர்க்க முடியாமல் நமக்கு எழுகிறது. இந்த ஐயத்திற்கு பலம் சேர்க்கிறது இந்த நாவலின் கடைசி அத்தியாயத்தின் தலைப்பான “இராசதானியின் அரச குடும்பம்’ எனும் தலைப்பு.
பாட்டிச் சொல்லும் அணில் இராச் சியத்தை கதை புனைவு என அறிந் திருந்தும் ஒரு “விழிப்புணர்ச்சி’யுடன மாலி போன்ற சிறுவர் சிறுமியர்கள் அக் கதைகளை எதிர்கொள்ளும் பொழுது தான், இன்றைய நமது இன்றைய சமூக அரசியல் சூழலில் முன் வைக்கப்படும் இராச்சியங்கள் பற்றிய வரலாற்றுப் பிரதி கள் கொண்டிருக்கும் ‘புனைவுகள்’ பற் றிய பெரியவர்கள் நாம் எந்த அளவுக்கு கேள்விகளை எழுப்பி இருக்கிறோம் என்றொரு ஐயமும் எமக்கு ஏற்படத்தான் செய்கிறது.
இந்த நாவல் பிரதியின் ஊடாக இன்னொரு அனுபவத்தையும் பெறு கிறோம். மாலியின் பாட்டியின் வரலாறு சம்பந்தமான கதையாடல்களிலும் சரி, அவர் சொல்லும் கதைகளிலும் சரி ஒரு சுதேசிய மனோபாவம் வெளிப்படுவதை காணக் கூடியதாக இருக்கிறது. இங்கு நாட்டின் சுற்றுப்புறச் சூழல் மாற்றங்கள் என்பது, இந்த தேசத்தை ஆண்டு சென்ற
மல்லிகை மே 2011 தீ 62

காலனியங்கள் ஏற்படுத்திச் சென்று மாற்றங்கள் என்றும், அந்த மாற்றங்கள் வெறுமனே காடுகளின் அழிவாக மட்டும் அமையாமல், இங்கு நாட்டின் நிலவிய இராசதானிகளையும் அழித்து, ஒட்டு மொத்தமான இந்த நேசத்தின் புவியி யல் அமைப்பை அதாவது இந்த தேசத் தின் வரைப்படத்தின் ஆதி நிலை யையே மாற்றி அல்லது அழித்து சென்று இருக்கின்றன என்பதை பாட்டி யின் வரலாறு சம்பந்தமான கதையாடல் களும், அவர் சொல்லும் கதைகளும் அழுத்திச் சொல்லுகின்றன.
இத்தோடு, பியசேக்கர என்ற மனி தரில் நிலவும் இரட்டைத் தன்மையையும் இந்த நாவலின் பிரதி நமக்கு இனங் காட்டு கிறது. சித்திரக் கண்காட்சி ஒன்றுக்காக மேலேயத்தேய நாடு ஒன்றுக்கு சென்று வந்தததன் காரணமாகவும், ஏலவே காலனியங்களின் சிறப்புகளை போற்றும் மனோபாவத்தின் காரணமாகவும், ஏற்பட் டுள்ள சுற்றுப்புறச் சூழல் மாற்றங்களால் இழந்து விட்ட ரம்மியங்கள் ஜீவராசிகளின் அழிவு, சீதோஸண நிலை மாற்றங்கள் போன்ற இழப்புகளுடன் காலனியங்கள் இந்த தேசத்தை ஆட்சி செய்த காலத் தில் இருந்த சிறப்புகளையும் இழந்து விட் டோம் என்றொரு ஏக்கமும் அவரில் இருக் கிறது. அதேவேளை இன்றைய நம் தேசத் தின் அபிவிருத்தி நிர்வாக முறைமை மீதான (குறிப்பாக நகர மயமாக்கல் என்ற மாதிரியான துறைகள்) மேலைத்தேய பார்வையில் அடிப்படையிலான விமர் சனத்தை முன் வைக்கிறவராகவும் அவர் இருக்கிறார். அதேவேளை தன் வீட்டு சூழலை இன்னும் காலனிய கால தன்மை களுடன் வைப்பதில் பிடிவாதமாகவும்
இருக்கிறார். இவ்வாறான இரட்டை மனோ பாவமிக்க ஒரு மனிதராகவும் நாம் பிய சேக்கரவை இனங்கண்டு கொள்கிறோம்.
இந்த நாவலின் பிரிதியில் இத் தகைய செய்திகளையும் அனுபவங் களையும் ரஞ்சித் தர்மகிர்த்தி சிறந்த ஆக்கத் திறனின் காரணமாக பெற்றுக் கொள்கிறோம். அதற்கு எம்.எச்.எம் யாக்கூத் அவர்களின் மொழிபெயர்ப்பு திறன் மிகவும் நமக்கு உதவி இருக்கிறது எனச் சொல்லாம். அத்தோடு இந்த நாவ லின் சிங்கள மொழி தலைப்பும் சரி, தமிழ் மொழிபெயர்ப்பு தலைப்பும் சரி மிக பொருத்தமாக அமைந்திருக்கின்றன என்பதை பின்வரும் கருத்து நிருபிக் கிறது. மொத்தத்தில் ரஞ்சித் தர்மகிர்த்தி யின் ‘அஹஸ பொலவ லங்வெலா? (சங்கமம்)எனும் இந்த நாவல் முதல் வாசிப்பில் ஒரு சிறுமிக்கும் ஒர் அணி லுக்கும் இடையில் ஏற்படும் உறவையும் பிணைப்பையும் பற்றி பேசுகின்ற, சுற் றாடால் சார் சிறுவர் நாவல் (இளைஞர் நாவல் அல்ல) என நம்மால் புரிந்துக் கொள்ளப்பட்டாலும் ஆழ்ந்த வாசிப்பபு பின்-காலனிய சூழலில், காலனிய மற் றும் சுதேசிய மனோபாவம் கொண்ட இரு தலைமுறையினரிடம் சுற்றப் புறச் சூழல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாக நிலவும் கருத்துகளின் சங்கமத்தை பதிவு செய்து, அதேவேளை ஆகாயமும் பூமியும் சங்கமிப்பதை போலான ஒர் உணர்வு நிலையை (நேர் எதிரான இரு தலைமுறையினர்களின் கருத்துகள் என்ற வகையில்) ஏற்படுத்தும் ஒர் ஆவணமாகவும் இந்த நாவல் திகழ் கிறது எனலாம்.
மல்லிகை மே 2011 & 63

Page 34
இடைவெளிநாட்கள்
- எல்.வளிமீம்அக்ரம்
உணர்வுகள் கழற்றி காயவைக்கப்பட்ட வெளியாகிக் கிடக்கின்றது
எனது நாட்கள்
இடைவெளிகளை நிரப்பமுடியாத தொலைவுகளை பொழுதுகள் காவுகின்றன
ஒரு கிலாபத்தை கடக்கின்றது பிரிதலின் வலிகள் மேவிய கணங்கள்
ஏகாந்தம் ஊறும் என்னுள் சாம்பிராஜ்ய போர் நடக்கின்றது
நெருங்க நினைக்கின்ற நேரங்கள் தோல்வியில் ஊசலாடுகின்றன
சோகத்தை உரைக்கின்ற சொற்கள் மரணத்தினைக் கட்டாயப்படுத்துகின்றது
வாழ்வின் நாடக மேடைகளில் உனது கடுர வசனங்களின் ஆயுதப் படையணி
உனக்கும் எனக்குமான இடைவெளியில் ஜப்பானில் சுனாமியும் நில அதிர்வும்
சிநேகம் துளிரும் என்னுள்
விரவிப்படுகின்றது
உனது அன்பு என்ற மாயம்
மல்லிகை மே 2011 & 64

தகவற் பெட்டி
- கே.எஸ்.சிவகுமாரன்
தேடல் முயற்சியில் நமது சிறார்கள் அதிகம் ஈடுபட முடியாத அளவிற்கு ரியூசன், களைப்பு, கணனி விளையாட்டுக்கள் போன்றவை அவர்கள் கவனத்தை ஈர்ப்பதனால், வாசிப்புப் பழக்கம் குறைந்து போகிறது எனலாம். ஆயினும், விபரங்களைத் தேடிப் படிக்க அவகாசம் ஏற்படாதிருக்கும் பட்சத்தில், அவர்கள் நலன் கருதி, எனது வாசிப்புக் காரணமாக நான் திரட்டிய கலை, இலக்கியச் செய்திகள் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இவற்றைப் படிக்க நேரும் ஏனையோரும் முற்குறிப்பிடப்பட்ட மாணவர்களும் ஏதோ விதத்தில் பயனடையக் கூடும் என்று நம்புகிறேன்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன் நான் தயாரித்த குறிப்புப் புத்தகத்தில் இவை இடம்பெற்றன.
* சோனல் ஷா என்ற இந்தியப் பெண் ஜனாதிபதி ஒபாமாவின் ஆலோசகர்களில் ஒருவர்.
* சந்திரகேசகரின் புதல்வி அணித்தா உதிப் அமெரிக்காவிலே திரைப்படத் துறையில் பயிற்சி பெற்றவர். 1am looking for a Bride' என்ற ஆங்கிலப் படத்தை நெறிப்படுத்தி யிருக்கிறாராம். ‘Guliver’sTravel என்ற படத்தையும் எடுத்திருக்கிறாராம். இப்பொழுது குளிர் என்ற தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறார்.
* ச. தமிழ்ச்செல்வன் எழுதிய ‘வெயிலோடு போய்' என்ற சிறுகதையைத் தழுவி, சசி என்பவர் பூ பூக்கும் ஓசை என்ற படத்தை படத்தை எடுத்திருக்கிறார்.
* அமரர் கல்கி கிருஷ்ணமுர்த்தியின் கட்டுரையில் ஓர் உரையாடல் : "அப்படி மரியாதையாய் சிலோனுக்குப் போய் வந்தேன் என்று சொல்லுங்களேன். இலங்கை இப்போது எங்கே ஸார் இருக்கிறது” என்றார்.
* ஆபிரிக்க அமெரிக்க முஸ்லிமான மல்கம் எக்ஸ் சுட்டுக் கொல்லப்பட்ட போராளி. 1965ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நியூயோர்க்கில் அவர் சுட்டுக் கொல்லப் பட்டார்.
* உடம்பில் சீனியைக் குறைக்கக் கூடியது நாவல் பழரசம்.
மல்லிகை மே 2011 & 65

Page 35
* ஜெமினி கணேஷனின் மகள்களுள் ஒருவர் டொக்டர் கமலா செல்வராஜ்.
* எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘கர்ன மோட்சம் என்ற கதையைத் தழுவி முரளி மனோஹர் நெறிப்படுத்திய குறும்படம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
* பூனம் பஜ்வா என்ற நடிகையின் தகப் பன் ஒரு பஞ்சாபி. தாய் தமிழ். இவருடைய அபிப்பிராயத்தில் அசின், ப்ரியா மணி, பார்வதி ஆகியோர் நல்ல நடிகைகள்.
* பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்டீபன் தேவஸி சிறந்த பியானோ வாத்தியக்காரர். ஹரிஹரன் குழுவினருடன் வெளிநாடு களில் பியானோ வாசித்திருக்கிறார். மஜா, தம்பி, மொழி, அபியும் நானும் போன்ற படங்களில் இவரின் பியானோ இசையைக் (8sis6)ITLD.
X Playboy stejó60 sussóTeófugits விருந்த ஹியூ ஹொப்னர் தமது 85வது வயதில் இளைப்பாறி தனது சுயசரிதையை வெளியிட்டிருக்கிறார்.
* கி.ராஜநாரயணன் எழுதிய கதவு என்ற கதை பற்றி அதிகம் பேசப்படுகிறது.
X Life is Beautiful 6T6örp LIL-ggest திரைக்கதையையுவன் தமிழில் தந்திருக் கிறார்.
* திருஞானம், திருநங்கைகள் பற்றிய ஆவணக் குறும்படத்தைத் தந்திருக் கிறார்.
* சுரேஷ் கிருஷ்ணா என்ற நெறியாளர் சத்யா என்ற படத்திலிருந்து இது வரை 40
படங்களை நெறிப்படுத்தியிருக்கிறார். சினிமா கிரிக்கெட் மாதிரி. எல்லோர் மன நிலையும் ஒத்துழைத்தால்தான் சிக்ஸர் சாத்தியம் என்கிறார்.
X Satilite epsoubs TsöT Cellphone Signal பரிமாறப்படுகின்றன.
X. Document Conversion, Image Conversion, Medical Transpiration, Clerical Work, Web Rage D-D6 itsissib போன்ற வேலைகளை வெளிநாட்டு நிறு வனங்கள் Onlineலிலேயே முடித்துத் தரும் Orderகள் கொடுக்கின்றன.
X Alfred Keynsey sIsölu6ufrgmsöl உலகில் முதன் முதலில் செக்ஸ் செயற் பாடுகள் பற்றி ஆய்வு செய்தவர்.
* உலக அழகிப் போட்டியில் இரண் டாவது இடத்தைப் பெற்ற பார்வதி ஒரு மலையாளப் பெண்.
* தங்கர்பச்சான் 15 வருடங்களாக எழுதி முடித்துள்ள நாவலின் பெயர் 'எமன்'
* இந்தியாவில் Re-mix தொடக்கி வைத்தவர் லெஸ்லி (Colonial
Couseins)
* ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, இந்திரா செளந்திரராஜன், ரமணிச்சந்திரன் போன்றவர்கள் தமிழ் நாட்டில் ஜனரஞ்சக எழுத்தாளர்கள். அவர் sel36olu usolussi “Thamil Pula Fiction என்ற பெயரில் வெளியாகியிருக் கின்றன. காவேரி, ரஷ்மிருத் தேவதாசன் ஆகிய இருவரும் இந்த வெளியீட்டைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
மல்லிகை மே 2011 & 66

ங்கை
aysaw
- வேல் அமுதன்
JuD6OOT6ởT 560Tg sŮLuir LDTňršQaseiņ6io gblög Lindt, Celebralions, Kitkat (Surtsiip gig Drtso, Qsmissé(36 oil, Fruit Pasiles, Wire Gums (Surtsiip (3pmeiosio வகைகளையும் அள்ளிக்கட்டிக் கொண்டு, தனது வீட்டிற்குப் பயணமானான். தனது ஆசை மனைவி மனோகரி விரும்பும்போது விரும்பும் இனிப்பு வகைகளைச் சுவைத்து மகிழட்டும் என்ற நல்லொண்ணம் அவனுக்கு.
நேரம் இரவு பதினொரு மணி.
வீட்டில் மனோகரி இல்லை வீடு பூராவும் தேடினான். அவளின் அசுமாத்தமே இல்லை. U.Kக்குப் புதியவள். ஊரிலிருந்து வந்து மூன்றே மூன்று நாள். அதனுள் எங்கே போயிருப்பாள்? ஆரை விசாரிப்பது.?
சுப்பர் மார்க்கெட்டில் அன்று வேலை ஜாஸ்தி. உளவியல் பட்டப் படிப்பு படித்தவனாக இருந்தும், சுப்பர் மார்க்கெட் நிர்வாகியாக - செய்யும் தொழிலே தெய்வம் என்ற உணர்வோடு மிகக் கடுமையாக உழைப்பவன், ரமணன். அன்றும் நேரம் போனது தெரியாது, நீண்ட நேரம் தொழிலைக் கவனித்துவிட்டுக் களைப்போடு வீடு திரும்பியவனுக்கு, இப்படி ஒரு பேரதிர்ச்சி
செய்வது ஏதென அறியாத அவன், சலிப்பு மீதியால் தனது சாய்வு நாற்காலியில் சாய்ந்தபோது, Side Cupboard மேல் ஒரு கடிதம் வைக்கப்பட்டிருந்தது கண்ணிற்பட்டது. கடிதத்தை விறுக்கென எடுத்துப் பார்த்தான்.
அன்பார்ந்த ரமணனுக்கு
அவசரம் அவசரமாக இக்குறிப்பை எழுதுகின்றேன். என்னை இனித் தேட வேண்டாம். நான் சேரவேண்டிய இடத்திற்கு மிகப் பாதுகாப்பாக வந்துசேர்ந்துள்ளேன்.
திகைப்பைத் தருகின்றேனா..? சொல்லுகிறேன்.
அனாதையான என்னை ஈன இரக்கம் சற்றும் இல்லாத எனது சித்தப்பாதான் வளர்த்தவர். என்னுடன் பல்கலைக்கழகத்தில் Computer Science படித்த
மல்லிகை மே 2011 தீ 67

Page 36
மாணவனும் நானும் உயிருக்கு உயிராக காதலித்தோம். அவன் சமூகத்தால் மறுக்கப்பட்டவன்
என்பதால் சித்தப்பா நான் அவனை மணமுடிக்க அனுமதிக்க வில்லை. மாறாக, வலுக்கட்டாயமாக உங்களுக்கு என்னைச் செய்து வைத்தார். எனது உயிர்க் காதலன் இன்று Student விசாவில் இங்கே மேற்படிப்பு (Phd) படித்துக் கொண்டிருப் பதாலும், வழி ஒன்றும் அறியாத நான் உங்களை மணந்து - உங்கள் இல் இங்கு வந்து, இன்று மிகப் பக்குவமாக அவனுடன் இணைந்துள்ளேன்.
நான் செய்தது மேலெழுந்தவாறு பார்க்கும்போது பாவம் - துரோகம் - கொடுமை என்று கூடச் சொல்லலாம் ஆனால், இதைவிட வேறு வழி ஏதும்
அறியாத அபலை நான் என்பதால்
என்னை மனமார மன்னிக்க இறைஞ்சி வேண்டுகின்றேன்.
தங்கள் உடன்பிறவாச் சகோதரி
LDC86Trrass
குறிப்பு : என்னால் ஏற்பட்ட முழுச் செலவையும் முடிந்தளவு கெதியாகத் தங்களுக்குச் செலுத்துவேன்.
உருக்கமான அக்கடிதத்தை படித்த ரமணனின் உள்ளம் மனோகரியின் அயரா துணிவையும், தன்னை மணந்த நேரம் முதல் இன்றுவரை தாம்பத்தி யத்தை தற்போதைக்குத் தள்ளி வைப்போம் எனச் சொல்லித் தற்காத்து வந்தமையையும் வெகுவாகவும், மெய் யாகவும் மெச்சியது.
கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு மாணவியர் மல்லிகைச் சிறுகதைகள் 2000 - 2010 என்ற தலைப்பில் ஆய்வு செய்கின்றனர். ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த செல்வி எம்.பிரியதர்சினி. இவர் மல்லிகைச் சிறுகதைகள் என்ற தலைப்பிலும், திருகோணமலை யைச் சேர்ந்த செல்வி த. வித்யா
சமர்ப்பிக்க உள்ளனர்.
கொண்டனர்.
என்பவர் மல்லிகைக் கவிதைகள் என்ற தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகள்
தங்களது ஆய்வுக்கான மல்லிகை இதழ்களைப் பெற்றுக்கொண்டதுடன் ஞாப கார்த்தமாக மல்லிகை ஆசிரியருடன் புகைப்படமொன்றும் எடுத்துக்
மல்லிகை மே 2011 & 68
 

ܓ݁ܶܗ ܟܙܘܗܶܳ
ஆர்வமும் இலக்கியத் துடிப்பும் மிக்க பல்கலைக்கழக மாணவர்கள், கலை இலக்கிய ஆர்வமிக்க புதிய எழுத்தாளர்கள், புத்தூக்கத் தகவல்களை கேட்டறிய அவாவுற்றிருக்கும் இளந்தலைமுறையினர் இந்தக் கேள்வி - பதில் பக்கத்தைப் பயன்படுத்தலாம்.
- டைாமினிக் ஜீவா
* மல்லிகை என்றொரு இலக்கிய இதழை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம்
உங்களுக்கு எப்படி உதித்தது?
சாவகச்சேரி ஆர்.சிவயோகன்
* இளம் வயதிலேயே எனக்கு இலக்கிய ஆர்வம் மிகையாக இருந்தது. காலஞ்சென்ற வரதர் பல வகையான வயர்களில் இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்த ஈழத்து இலக்கிய முயற்சிஎனக்கு ஆரம்பத்தில் உந்துசக்தியாக இருந்தது. அதேசமயம் தொட்டந்தொட்டமாக மாறிமாறிப் பல வயர்களில் இலக்கிய இதழ்களை நடத்தாமல், ஒரே பெயரில் நீண்டகாலம் ஓர் இதழை நடத்திவர வேண்டும் என எனது சின்ன வயதிலேயே திடசங்கற்பம் செய்துகொண்டேன். இன்று அதுமல்லிகையாக மலர்ந்து இலக்கியமணம்பரப்பி வருகின்றது. இதுதான் மல்லிகையின் வரலாறு.
இ தினக்குரல்விழாவுக்கு ஆனந்தவிகடன்மதன்வந்திருந்தாரே, சந்தித்தீர்களா?
CUFGoffrescrip
குருநாகல் எம்.குணநாதன்
* அவரைச் சந்தித்ததும் கைகுலுக்கிக்கொண்டோம். நானும் விழாப் பேச்சாளன். மேடைவரிசையில் ஒன்றாக இருந்தோம். முன்னொரு காலத்தில் எனது சரஸ்வதிகாலத்து நண்பர் ஜெயகாந்தன் என்னை
விகடனுக்கு அழைத்துப்போய், மதனுக்கு அறிமுகப்படுத்தியதையும் எனது உரையில் குறிப்பிட்டு ஞாபக மூட்டினேன்.
மல்லிகை மே 2011 & 69

Page 37
இ, தேசம் பூராவும் பரந்துபட்டு வாழ்ந்துவரும் உங்களுடைய பழைய
இலக்கிய நண்பர்களுடன் இன்றும்
LJGODрLU நல்லுறவைப் CLUGOJof GhubdisgirresqrTP
வவுனியா எம்.எஸ்.ரகுவரன்
* என்னால் முடிந்தவரைக்கும் பழைய ஆழ்ந்த இலக்கிய நட்பை வெகு கண்ணியமாக இன்று வரைக்கும் பேணிப் பாதுகாத்து வருகின்றேன். பலர், பல ஊர்களில் வாழுகின்றனர். இன்னும் சிலரோ நாடு கடந்தும் வாழுகின்றனர். கூடிய வரைக்கும் பழைய நட்பை இன்றும் பேணிப் பாதுகாத்து வருகின்றேன்.
இ இன்று தினசரிப் பத்திரிகைகளை விரித்துப் படிக்க முற்பட்டால் உங் களைப் பற்றிய செய்திகளும், படங் களும்தானே வெளிவந்த வண்ணமிருக் கின்றன. இந்த வெகுசனப் பிரபலம் ஓர்
எழுத்தாளனுக்குத் தேவையானதா?
வெள்ளவத்தை ஏ.சரவணன்
* ஒரு படைப்பாளியின் படைப்புக்களை மாத் திரம் வைத்து அவனது திறமையை எடைபோட வேண்டுமே தவிர, வெறும் பிரசாரப் பின்புலங் களை வைத்து அவனது திறமையை எடைபோடக் கூடாது இந்தத் திடீர் பிரபலங்களில் மயங்கிப் போய், தடம்மாறிவிடவும் கூடாது என்ற ஞானோ தயம் பேனா பிடித்த அந்தக் காலத்திலிருந்தே என் மனதில் ஆழமாகப் பதித்துக்கொண்டு, வாழ்ந்து வருபவன் இந்த மல்லிகை ஆசிரியன்.
இ உங்களிடம் எனக்குப் பிடித்த நல்ல குணம் என்னவென்றால், மல்லிகைக்
காக உழைக்கும் அச்சுக்கோப்பாளர்
களைக் காலத்திற்குக் காலம் அவர்
களினது திறமைகளை மல்லிகையில் பாராட்டி எழுதிவருவதுதான்.
முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வந்த மல்லிகையில் அச்சுக்கோர்த்த
J(F855Go UTlg. Urfab கொருத்துக் கெளரவித்துள்ளிர்கள். கடந்த மல்லிகையில் கொழும்பு மல்லிகையில் கணினிப் பிரதி செய்து உதவிய செல்வி சாந்தகுமாரிஸ்யப்
ULLb GUITU-bÜ UTDrLlgés GlasgrJGöáj தள்ளிர்கள். இந்த நல்ல குணத்தை ளங்கிருந்து பெற்றிர்கள்?
பேசாலை கே.கே. அற்புதன்
* நான் எனது இளம் வயதிலேயே நானாகவே வரித்துக்கொண்ட தத்துவத்தின் வெளிப்பாடுகள் தான் இவை. "உழைப்பவனை மதி உழைப்பவன் தான் நாளை உலகை ஆளுவான்’ என்ற தத்து வத்தை சர்வ தேசம் என் இளம் வயதில் என் நெஞ்சில் தூவியது. அதனது வளர்ச்சிப் பெறு பேறுகள்தான் இன்றைய எனதுநடவடிக்கைகள்.
இ. சமீபத்தில் இலக்கிய விழாவொன் றுக்காக மட்டக்களப்பிற்கு போய் வந் துள்ளிர்களே, வந்ததும் போனதுமாக இருந்ததே தவிர, அங்கு இரண்டொரு நாட்கள் தங்கி, இலக்கிய நண்பர்
களை, மல்லிகை எழுத்தாளர்களைச்
சந்தித்து, கலந்துரையாடி, கிழக்கு மாகாணத்தின் இன்றைய இலக்கிய நோக்குப் போக்குகள் பற்றி சஞ்சிகை ஆசிரியர் என்ற வகையில் அவர்
மல்லிகை மே 2011 & 70

களினது எண்ண ஓட்டங்களைப் பரிந்துகொள்ளலாமல்லவா? ஏன்தங்கி நின்று வருவதைத் தவிர்த்தக் கொண் Larresgirr
மட்டக்களப்பு கே.சிவசேகரன்
* என்னை விரும்பி அழைத்தவர்களின் அழைப் பினை மனசார ஏற்று, அந்த ஒருநாள் விழாவில் நான் மனநிறைவுடன் கலந்துகொண்டேன். நீங்கள் என்னை அங்கு இரண்டொரு நாட்கள் தங்கவில்லை என்று கேட்கின்றீர்கள். மெய் யாகவே மல்லிகையை நேசிக்கும் இலக்கியத் தோழர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு என்னைச் சிறப்பித்து, அவர்களாகவே என்னை இரண்டொரு நாட்கள் தங்களது மண்ணில் தங்கிப்போகும்படி கேட்டிருந்தால், நிச்சயமாக அவர்களது கோரிக்கையை ஏற்றுத் தங்கி வந்திருப்பேன்.
இ எனது ஆய்வுக்குச் சில மல்லிகை Oதழ்கள் தேவை. மல்லிகைக்காரியால யத்திற்கு நேரில் வந்தால், அவற்றைப் பெற்றுக்கொள்ள இயலுமா?
பதுளை எஸ்.எஸ். ராமதேவன்
* முன்னரே தொலைபேசியில் தகவல் தந்து விட்டு வந்தால் அது உதவியாக இருக்கும். உங் களுக்குத் தேவைப்படும் இதழ்களை நீங்கள் தேடித்தான் எடுக்கவேண்டி வரும். இதற்கு அவ சியம் அசாத்தியப் பொறுமை. சம்மதமென்றால் வந்து போங்கள்.
இ இந்த வயதிலும் இத்தனை திறமை யுடனும், அசாதாரண ஆர்வத்துடனும் காரியமாற்றி வருகின்றிர்களே, இதனது
elpUUGOLë agut atolib GTGöTGOTP
வவுனியா ஆர். கந்தவேள்
* சும்மா ஐஸ் வைக்காதீர்கள். இப்படியான பல வார்த்தைப் பாராட்டுக்களைக் கேட்டுக் கேட்டு வளர்ந்து வந்தவன், நான். இப்படி என்னைப் புழுகித்தள்ளுவதைவிட, மல்லிகைச் சந்தாதாரர் களில் ஒருவராகப் பெயரைப் பதிவு செய்து விடுங்கள். சந்தாப்பட்டியலில் உங்களது பெயர், முகவரியைத் துருவித்துருவித்தேடிப்பார்த்தேன். உங்களது முகவரி அதில் இல்லையே!
இ அன்று தினக்குரல் விழாவில்
GpGOLuJcó
சொன்ன கருத்து என் நெஞ்சைத் தொட்டது. எனக்கு மனசாரத் தெரியும் யாழ்ப்பாண நிருபர் செல்லத்துரையின் செய்திப் பலனாகப் பல அரசியல்
பேசும்போது நீங்கள்
தலைவர்கள் மக்கள் மத்தியில் தலை தாக்கிப் பிரபலமானது எனக்கு விளங் குத. இதற்கு மாற்று வழி என்ன?
வெள்ளவத்தை எம். சுந்தரேசன்
* தமது தலைப்புச் செய்தி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த பலர் இன்றும் இருக்கின்றனர். ஆனால், நிருபர் செல்லத்துரை யின் வயர் அன்னாரது மரணத்தில் கூட செய்தி யாக வெளிவரவேயில்லை. நாங்கள் அன்னாரது செய்திச் சேவையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது என்னமோ உண்மை.
அன்னாரது ஞாபகமாக இலக்கிய நண்பர் கள் ஒருங்கு சேர்ந்து, கொழும்பில் ஒரு ஞாப கார்த்த கூட்டத்தை ஒழுங்கு செய்ய ஏற்பாடு செய்துகொண்டிருக்கின்றோம்.
மல்லிகை மே 2011 & 71

Page 38
மல்லிகை மே 2011 & 72
இ எந்த அடிப்படையில் மல்லிகையில் é9*GoLÜ UL 205 GJ năJ65 GoGMTÜ Uglen செய்தத் திட்டமிடுகின்றிர்கள்?
ஹற்றன் என். கோபாலதாஸ்
* அறுபது ஆண்டுக்கால அநுபவம் எனக்கு வழிகாட்டியாக அமைந்து வழிகாட்டிவருகின்றது. நாற்பத்தாறு வருட மல்லிகை அநுபவங்கள் அட்டைப்படத் தேர்வுக்கு வழிசமைத்து வரு கின்றன. ஆக்கபூர்வமான, ஆத்மார்த்திகமான நண்பர்களுடன் கலந்துரையாடி, இறுதி முடிவு களை எடுத்து வருகின்றேன்.
நான் தொடர்ந்து செய்துவரும் இந்த மல்லிகையின் அட்டைப்பட பதிவுகளின் பாரிய பிரபல ஆழம் இன்று பலருக்குப் புரியாமல் கூட இருக்கலாம். நாளை என்றொரு நாள் வந்தே தீரும். அன்று தெரியும் அதனது அருமையும், பெருமையும்
அது பரவலாகப் புகழப்படும் வேளையில் நான் உயிருடன் இருக்கமாட்டேன்!
இ இன்று பல்வேறு நாடுகளில் UGolb
பெயர்ந்த வாழும் நம்மவர்களில் எழுத்தாளர்கள் மல்லிகையுடன் பழைய உறவைப் பேணி வருகின்றார்களா?
மட்டுவில் எஸ்.குணசீலன் * தனிப்பட்ட முறையில் அந்தக் காலந்தொட்டே என்மீது தனி அபிமானமும் சகோதரப் பாசமும் கொண்ட பல்வேறு மட்ட நண்பர்கள் இடைக் கிடையே என் சுகநலனையும், மல்லிகையின்
வளர்ச்சியையும் அடிக்கடி விசாரித்து மகிழ்
வார்கள். எனக்கு இன்றும் கூட, மனப் பெருமை ஒன்றுண்டு. அற்புதமான நெஞ்சங்களைக் கடந்த காலங்களில் நான் நட்பாகப் பெற்றிருப்பதுதான். அந்த இனிய நட்பு இன்றுவரையும் தொடர்கிறது.
இ இவ்வாண்டு ஆரம்பத்தில் கொழும் பில் நடந்தேறி முடிந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டைப் பற்றிய பின் விளைவுகள் என்னென்ன?
புத்தளம் எம்.தவமோகன்
* இந்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை முன் கையேற்று நடத்தியவர்கள் செய்த அர்ப் பணிப்புப் பிரபலத்தை விட, இம் மாநாட்டைக் கொச்சைப்படுத்தச்0 சர்வதேச மட்டத்தில் பல பிரபலங்கள் எடுத்துத் தோற்றுப்போன பின்னணி தான் இம்மாநாட்டின் சர்வதேசப் புகழ் என்பதே எனது கருத்தாகும்.
இ எந்தக் கட்டத்திலேயாவது ஏன் இந்த இலக்கியத்துறைக்கு வந்தேன்? என்று மனச்சலிப்பு உங்களுக்கு வந்ததுண்டா?
ஹற்றன் என். வரதன் * உண்மையை மனந்திறந்து சொல்லுகின் றேன். இந்த எழுத்துத்துறைக்குள் நான் அடி யெடுத்துவைத்திருக்காதுபோனால், நான் சிறந்த மேடைப் பேச்சாளனாக மலர்ந்திருக்கக்கூடும். அதன் மூலம் எனக்கு என் எழுத்தின் மூலம் இத்தனை பிரபலம் கிடைத்திருக்கவே முடியாது. எழுத்தாளனையும் மீறி,மல்லிகைச்சஞ்சிகையின் ஆசிரியர் என்ற இலக்கிய உலகப் பதிவுதான் காலம் காலமாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கும்.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

சுத்தமான, சுவையான, சுகாதார மூறைப்படி தயாரிக்கப்பட்ட சிற்றுண்டி வகைகளுக்கு கொழும்பு மாநகரில் பிரசித்தி பெற்ற
கலுறCCUS$ aiiOzurggó ĝobordŝij (Doiŝigialigis Oluj
WECETARIAN HOTEL
98, பாங்ஷால் வீதி, கொழும்பு 11. தொலைபேசி இல: 232472

Page 39
DATABASE PRINTING, BROCHURES, CATALOGUES, SOUVENIRS, BOOKMARKS, GREETING CARDS, NAME TAGS, CD/DVD COVERS, COLOUR BIODATA, STICKERS INVITATION CARDS, PROJECT REPORTS BOOK COVER, MENU CARDS, THANKING CARDS, CERTIFICATES, BOOKS, POSTERS, CD STOMER, PLASTIC CARDS, SCRATCH CARDS, VISTING CARDS.
HAPPY DICTA
Digital Colour Lab
No. 751/1, Sri Sumanat
Te: --94, 11 493 Web: Whdck.com,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ENTRE (PV) LTD
e Digital Oiset Press
sa Mawatha, Colombo - 12.
36, +94 11.7394592 -mail: happy2002Olive.com