கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓலை 2010.05

Page 1

ள் கண்ணுள் வாங்கி Eந்த பென்னாள்

Page 2
அநாமதேயங்களாக இருந்தோர் அறியப்பட்ட இலங்கையில் முதலாளித்துவܡ ܢ ܘ ܂ வத்தின்
கலாநிதி குமாரி ஜயவர்த்தன - மொழி
பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்ை கூறுகின்றது. நவீனகால வரலாற்றில் கவனி முதலாளித்துவ வளர்ச்சியின் படிநிலைகை
இந்நூல் சாதியைவிட வர்க்கம் மு காட்டுகின்றது. பல் சாதிகள், பல்வேறு இை
ாரப் படியில் உயர்வதை இந்நூல் விளக்கி .:)... | " " தி ஆதது: ஃ
ISBN 9 7 8 955-65 - (15 Ι.
ஈழத்துப் பழைய இலக்கியங்கள் வ பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை முன்னாள் தமிழ் பேராசிரியர், யாழ்ப்
ஈழத்துப் பழைய இலக்கிய வரலாறு இ அந்தப் பழைய இலக்கிய வரலாற்றுக்கான
தமிழகத்தையும் ஈழத்தையும் உ புரிந்துகொள்வதற்காக இந்திய-இலங்ை அண்மைக்காலத்திலே பிரபலமடைந்துவ பயன்பட்டுள்ளன.
擂、
தமிழியல் ஆய்வுக் கட்டுரைகள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் வாழ்நாட் பேராசிரியர், யாழ்ப்பாணம் புறநானூறு காட்டும் தமிழர் சால்பு, பழந்: இலக்கியங்கள் புலப்படுத்தும் நல்லிணச் அணிநயம், கிறிஸ்தவத் தமிழ் இலக்கிய 6 உட்பட பேராசிரியர் அ. சண்முகதாஸ் அ தொகுப்பு இந்நூல்.
ISBN 978-955-659-220-7
சீனா-இந்தியா பொருளாதார அபிவி கலாநிதி செ. சந்திரசேகரம் முதுநிலை விரிவுரையாளர், பொருளி இந்நூல் சீனாவினதும் இந்தியாவினது ஆராய்கின்றது. இரு நாடுகளதும் வ போக்கில் சீனா எவ்விதம் இந்திய என்பதையும் இந்தியாவினதும் சீன போக்குடையது என்பதையும் அவ அரசியல் உறுதிப்பாடு தேசியவி விபரிக்கின்றது. இவ்வகையில்
பயனுள்ள ஒர் ஆய்வு நூலாகும்.
를 중- -
墅一立
 
 
 
 
 
 
 
 
 
 

lifest resent தோற்றம் பெயர்ப்பு க. சண்முகலிங்கம்
கையில் முதலாளிவர்க்கம் எழுச்சி பெற்ற வரலாற்றை இந்நூல் க்கப்படாத விடயமான இந்த முக்கிய விடயத்தை கூறும் இந்நூல் 1ள விவரிக்கிறது. pதலாளித்துவ மாற்றத்தில் முதன்மை பெறுவதை எடுத்துக் ாக்குழுமங்கள், சமயப் பண்பாடுகளை பின்னணியாகக் கொண்ட (ES அறியப்பட்டவர்களாக (SOME BODIES சமூக பொருளாச் செல்கிறது.
Galesana 350.00 Luisasijaitsi: xxwi + 150
ரலாறு தேடல்
பாணப் பல்கலைக்கழகம்
என்னும் நன்கு தெளிவுபடாத நிலையிலேயே காணப்படுகிறது.
தேடலே இந்த நூலிலே உள்ள கட்டுரைகள்,
ள்ளடக்கிய பழைய "தமிழ் கூறும் நல்லுலக த்தைப் கை அரசியல் பண்பாட்டு இலக்கிய வரலாறுகளும் நம் தொல்லியல் கல்வெட்டியல் செய்திகளும் இந்தத் தேடலுக்குப்
விலை 300.00 பக்கங்கள் Wi + 112
பல்கலைக்கழகம்
தமிழர் வாழ்வியலில் நிலம், சங்க இலக்கியப் பாடல் மரபு பக்தி கம், கம்பனின் சந்தமும் சந்தர்ப்பமும், கண்ணன் பாட்டில் வளர்ச்சி, ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் போன்ற கட்டுரைகள் வர்களினால் எழுதப்பட்ட 14 தமிழியல் ஆய்வுக்கட்டுரைகளின்
ఛాప్టాపు £50,00 பக்கங்கள் 1 + 186
விருத்தி: ஓர் ஒப்பீட்டு ஆய்வு
ரியல் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தும் பொருளாதார அபிவிருத்திச் செயற்பாட்டை ஒப்பீட்டு பிரைவான பொருளாதார வளர்ச்சியூடாக அபிவிருத்திப் வினின்றும் வேறுபட்டவகையில் செயற்பட முடிந்தது ாவினதும் நுகர்வு சேமிப்பு முதலீடு என்பவை எவ்வித ற்றினை தீர்மானித்த காரணிகளில் முதன்மையானதாக ழிப்புணர்வு என்பவை இருந்துள்ளதையும் இந்நூல் வேறுபட்ட அரசியல் முறைமைகளின் பொருளாதார பற்றிய இவ் ஒப்பீட்டு ஆய்வானது தமிழ்மொழியில்
விலை 800.00 பக்கங்கள் xx + 306

Page 3
சங்க வா
வாழியளம் தமிழ்ச்சங்கம் 6
ஆழிதழும் இலங்கைதனில்
ஏழிசைபோல் தமிழ்மொழிய
இயலிசை நாடகமோடின் க
அழகொழுகும் வனப்புகளு
பழகுதமிழ் பயின்றமுதம் ெ
பல்லோரும் பணியாற்றப் ப
தொல்லுலகில் புகழ்மணக்க
முச்சங்க முழுப்பணியை மு
எம்சங்கம் தமிழ்ச்சங்கம் எ
சங்கொடுதாமரைஏடும் சிறர்
மங்கலநல் அறிவாய்மெய்ப்
கவியாக்கம் :
த.கன
 

Aasihachd satuşi
O O () pg535UUIs
பளர்ந்தெழுக தமிழ்மொழியே
அழகுதுறை நகர்கொழும்பில்
பும் இசைகொண்டு வாழியவே
லைபலவும் இசைந்தொலிக்க
ம் இளமையொடு இனிமைதரப்
பாழிந்துநிதம் பொலிந்திடவே
ரிந்தேற்றி வளம்பாய்ச்சித்
த் தொழுதேத்தும் தமிழணங்கே
ழுவுலகும் முழங்கவைக்கும்
ன்றென்றும் வாழியவே
திடுமெம் இலச்சினையே
பொருள்கண்டு வளருதியே
பனர்மொழிப்புலவர் கரத்தினம்

Page 4
கொழும்புத் தமிழ்ச்சங்கம்
திருவள்ளுவர் ஆண்டு : 2040 இதழ் 52 வ்ைகாசித் திங்கள் 2010 ஒலை
மதியுரைஞர்கள்:
பேராசிரியர் சோ.சந்திரசேகரன் பேராசிரியர் சபா ஜெயராசா ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி ச.பாலேஸ்வரன்
ஆசிரியர் குழு :
வைத்திய கலாநிதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன் திருமதி பத்மா சோமகாந்தன் திருமதி வசந்தி தயாபரன் கலாநிதி வ.மகேஸ்வரன் திரு.ஜி.இராஜகுலேந்தரா
தொகுப்பாசிரியர்:
ஆ.இரகுபதி பாலறிதரன்
ஒருங்கிணைப்பு:
செல்வி சற்சொரூபவதி நாதன் டபிள்யூ.எஸ்.செந்தில்நாதன் மா.சடாட்சரன் த.சிவசுப்பிரமணியம்
வடிவமைப்பு:
செல்வி.சி.சத்தியஜோதி
முகப்பு அட்டை
குளோபல் கிராபிக்ஸ்
தொ.மேசி : 011 2363759 தொ.நகல் : 011 2361381
S60600Tuliss6Tub : WW, Colombotamilsangam.Com L66örsorsj56b : tamisangam(G)Sltnet. Ik
ஓலையில் வெளிவருமி படைப்புக்கள்
யாவற்றுக்கும் அவற்றைப் படைத்த இலக்கியச்
சிற்பிகளே பொறுப்பாகின்றனர் என்கின்ற
கம்பீரமான கோட்பாட்டுப் பலத்தைச் சார்ந்து இவ்விதழ் எழுகின்றது.
(02

G_GirSun.
* ஆசிரியர் பக்கம்
* கட்டுரை
அமரர் தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி (BLITTársului FLUIT GguuJTFIT பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம்
X
இலக்கியம் அ.முகம்மது சமீம்
* சங்கப்பதிவேடுகளிலிருந்து
* அஞ்சலிப்பா
ஜின்னாஹற்
O
* கவிதை
அகளங்கன் தாமரைத்தீவான்
* கண்ணிர் அஞ்சலி இணுவை இரகு
O
* சிறுகதை
மட்டுவில் ஞானக்குமரன் ராஜராஜி
இதயராசன்
* நூல்நயம் காண்போம்
இணுவில் மாறன் முனைவர் இ.இரா.சங்கரன்
* நூல் வெளியீடு
சி.பாஸ்க்கரா
ஈழத்துத் தனித்துவம் பேனும் வகையில், படைப்பாளி களிடமிருந்து தரமான ஆக்கங்கள் வரவேற்கப்படு கின்றன. ஆசிரியர்குழுவின் செம்மைப் படுத்திலின் பின்
‘ஓலையில் அவை பிரசுரமாகும்.
அனுப்பவேண்டிய முகவரி : ஆசிரியர் ‘ஓலை’
7, 57வது ஒழுங்கை, கொழும்பு - 08, இலங்கை
வைகாசி)

Page 5
ஜி.
ஆசிரியர் பக்கம்:
“எண்ணிய முடி எண்ணல் திண்ணிய நெஞ் தெளிந்த
9
கலை இலக்கிய
கொழும்புத் தமிழ்ச் ச ஐம்பத்திரண்டாவது இதழை தவழவிட்டுள்ளோம்.
தவிர்க்க முடியாத காரணங் வெளிவந்தாலும் தரமாக முயற்சிகளையும் எடுத்துள்ளே
தமிழவேள் க.இ.க.கந்தசு புதிய, வாசகர்களுக்காக கொ கால நிகழ்வுகளை 'சங்கப் ட பகுதி மூலம் அறிமுகப்படுத்தி
இப்புதிய பகுதி உங்க பெறுமென நம்புகிறோம். உ ஆவலாயுள்ளோம்.
ஈழத்தில் ஒரு இலக்கிய ஏ படைப்பாளிகள், விமர்சகர்க
ஆகியோரது பங்களிப்பு இன்றி
அப்பங்களிப்பு ‘ஓலை’க்கு பல்கிப் பெருகவேண்டும் என்ப
6).
aparasitef

3ல் வேண்டும் - நல்லவே
வேண்டும்
சம் வேண்டும்
நல்லறிவு வேண்டும்” - பாரதி
5)6O
மேம்பாட்டுத் திங்கள் ஏடு
ங்க வெளியீடான ‘ஓலை’யின் உங்களது அன்புக் கரங்களில்
களினால் ஓலைசற்றுத் தாமதித்து வெளிவர எம்மாலான சகல TLD.
வாமி அவர்கள் நினைவாக எமது ழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கடந்த பதிவேடுகளிலிருந்து' என்ற புதிய யுள்ளோம்.
ள் அனைவரதும் வரவேற்பைப்
உங்கள் கருத்துக்களை அறிய
டு தரமாகத் தொடர்ந்து வெளிவர ள், வாசகர்கள், விளம்பரதாரர் யமையாததாகும்.
நிறையவே இருந்தாலும் அது தே எமது அவா!
ணக்கம்!

Page 6
முன்னுரை
ஈழத்து நடுகல் வழிபாடுகளைப் பொது வாகவும் இளந்தாரி நடுகல் வழிபாட்டைச் சிறப்பாகவும் தமிழுலகிற்கு உணர்த்துதல் இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
நடுகல் வழிபாட்டு மரபுகளும் அதன் வளர்ச்சியும்
நடுகல் வழிபாடு பண்டைத்தமிழர் பண் பாடுகளுள் ஒன்றாகும். இவ்வழிபாட்டின் தொன்மை, இதன் நோக்கம், வழிபாட்டு முறை,வகைகள் ஆகியவற்றைப் புறநானூறு முதலிய சங்க நூல்களும் தொல்காப்பியம் புறப்பொருள் வெண் பாமாலை முதலிய இலக்கண நூல்களும், சிலப்பதிகார காவியமும், தமிழக நடுகற் சாசனங் களும் உணர்த்துகின்றன. அறிஞர் பலர் இவ்வழிபாடு பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதியுள்ளனர்.
மக்களின் உயர் பண்புகளுள் ஒன்றாக வீரத்தைப் பண்டைத்தமிழகம் போற்றியதனாற் போரில் இறந்த வீரர்க்கும் தலைவர்க்கும் அரசர்க்கும் அவர்கள் இறந்த இடத்திலேனும் அவர்களுக்குத் தொடர்புள்ள வேறோர் இடத்தி லேனும் அவர்களின் கூட்டத்தவர் கல் நட்டு வழிபட்டனர் எனவும், இதேபோல உயர் குறிக் கோள்களுக்காக உயிர் நீத்தவர்களுக்கும் அருளாற்றல் மிக்க பெரியார்க்கும் கல்நாட்டி வழிபட்டனர் எனவும், தொல்காட்பியர் காலத்திற்கு முன்பே தோன்றிய இந்நடுகல் வழிபாடு தமிழினத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியைக் கட்டிக்காத்து வந்திருக்கிறது எனவும் நடுகல் வழிபாடு' என்னும் நூலில் அதன் ஆசிரியர் கூறி யுள்ளார். நடுகல் வழிபாட்டிற்குத் தொல்காப்பியப்
04
 

ஈழத்து நடுகல் வழிபாடு
தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி முன்னைநாள் பொதுச்செயலாளர், கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கை
புறத்திணையில் இலக்கணம் வகுத்துள்ளதும், சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் இலக்கியமாக அமைந்துள்ளதும் தமிழகத்தில் இவ்வழிபாடு பெற்றுள்ள முதன்மையை உணர்த்தும்.
பண்டைத் தமிழகத்துத் தோன்றிய சிவலிங்க வழிபாடு, ஆவி வழிபாடு ஆகியவற்றோடு பொது வான அமைப்பு முறைகளையும் நம்பிக்கை களையும் இந்நடுகல் வழிபாடு பெற்றுள்ளது. சில நடுகல் வழிபாடுகள் நாளடைவில் வளர்ச்சி அடைந்து சிறுதெய்வ வழிபாடுகளாகத் தமிழர் வாழும் இடமெங்கும் பரந்துள்ளன. கண்ணகி, ஐயனார், காத்தவராஜன், கண்ணன், மாரியம்மன் ஆகிய தெய்வ வழிபாடுகள் நடுகல வழிபாடுகளின் வழிவந்தனவேயாம் என டாக்டர் மொ.அ.துரை அரங்கசாமி, புலவர் வெ.இராசு, பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் க.கைலாசபதி ஆகிய அறிஞர்கள் தம் கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நடுகற் தெய்வவழிபாடுகள் பண்டைச்சங்க இலக்கியங்களிற் கூறப்படும் மக்கள் வழிபாட்டு முறைப்படி இன்றும் நடைபெறுவதனாலும், நடுகற் தெய்வங்கள் அருளாற்றல் உள்ளன: வழிபடுபவர் களைத் துன்பம் நோய் பகை முதலியவற்றி லிருந்து பாதுகாக்கின்றன என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளதனாலும் இவ்வழிபாடுகள் மக்கள் மத்தியிற் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றன.
ஈழநாடும், யாழ்ப்பாண அரசும்
சங்க இலக்கியங்களிலும், திருமுறைகளிலும்
ஈழநாடு குறிப்பிடப்பெற்றுள்ளது.கடல் கொண்ட தமிழகத்தின் எஞ்சிய பகுதி ஈழநாடு எனத்
வைகாசி)

Page 7
ஜி.
தமிழறிஞர் ந.சி.கந்தையாப்பிள்ளை பழந்தமிழர் என்னும் தம் நூலிற் (பக்கம் 115) குறிப்பிட் டுள்ளார். பண்டைத் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஈழத்துப் பூதந்தேவனார் என்னும் புலவரும் ஒருவர். பண்டைக்காலத்தில் நாகர்குல அரசர்கள் ஈழநாட்டை ஆட்சி செய்தனர்.அநுராதபுர அரசின் எழுச்சியினால் நாகர்குல அரசர்களின் ஆட்சி நிலைகுலைந்தது. எனினும் தமிழரசர்கள் இடையிடையே ஈழநாட்டை ஆண்டனர். இடைக் காலத்திற் சிங்கை அரசும் அதன்பின் யாழ்ப்பாண அரசும் வடபால் எழுச்சியுற்றன. 13ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண அரசு வலிமையிலும் வளத்திலும் நல்லாட்சியிலும் சிறப்புற்று விளங்கியது. பண்டைய பாண்டிய மன்னர்களைப்போல யாழ்ப்பாண அரசர்கள் தமிழ்ச்சங்கத்தை நிறுவினர். இவற்றின் பேறாகத் தமிழ்மொழியும் தமிழ்ப்பண்பாடுகளும் ஈழத்தில் பெரிதும் வளர்ந்தன. ஈழத்துத் தமிழினம் உலகிற் தனிச்சிறப்புள்ள இனமாக விளங்கு கின்றது. ஈழத்துத் தமிழறிஞர் தமிழ் வளர்ச்சிக்குப் பெரும்பணி ஆற்றியுள்ளனர். உலகில் தமிழ் வளத்தில் தமிழகத்திற்கு அடுத்த நிலையில் ஈழநாடு விளங்குகின்றது.
எல்லாளன் நடுகல் வழிபாடு
எல்லாளன் என்னும் தமிழ் மன்னன் கி.மு. 145-101 ஆண்டுகளில் அநுராதபுரத்திலிருந்து ஈழநாட்டு இராசரட்டைப் பகுதியை அனைவரும் பாராட்டும் வண்ணம் நல்லாட்சி செய்தான். ஈழத்தின் தென்பால் உள்ள உறுகுணைரட்டைப் பகுதி அரசனான கைமுனு என்பவன் பெரும் படையொடு அநுராதபுரம் சென்றான். கைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் நிகழ்ந்த பெரும்போரில் எல்ல இறந்தான். கைமுனு
எல்லாளனைப் பெரி இடத்தில் முறைப் செயப் வித்து அா அமைப்பித்து அத கட்டளையிட்டான். இ நூல் (அத்தியாயம் 1 இன்றும் அவ்வழிச் செய்வதாக "இலங்
தித்து அவன் இறந்த நகணக்கிரியைகளைச் நினைவுச் சின்னம் வழிபாடு செய்யும்படி ா மகாவம்சம் என்னும் நி 73-74) கூறுகின்றது. வர் அதற்கு வழிபாடு
சரித்திரம்' என்னும்
(வைகாசி

நூலில் (பக்கம் 41) அதன் ஆசிரியரான ஜி.ஸி.மெண்டிஸ் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றின்படி ஈழத்தில் அமைந்த முதல் நடுகல் வழிபாடு இதுவே எனலாம். போரில் இறந்த ஒருவருக்கு அவர் கூட்டத்தவர் நடுகல்வழிபாடு அமைத்தலே நடுகல் வழிபாட்டு மரபு. இங்கு போரில் இறந்த எல்லாள மன்னனுக்கு அவனை எதிர்த்துப் போர்புரிந்த கைமுனு அரசன் நடுகல்வழிபாட்டை அமைப்பித் தான். நடுகல் வழிபாட்டின் வரலாற்றில் இந்நடுகல் வழிபாடு புதிய ஒரு மரபைத் தோற்றுவித்துள்ளது எனலாம். தம்கூட்டத்து வீரர்க்கு மட்டுமல்லாமல் பகைவர், படைவீரர் களுக்கும் கூட நடுகல் நடப்பட்டிருக்கிறது எனத் தொல்பொருள் ஆய்வியல் அறிஞர் நா.வானமாமலை அவர்கள் நடுகற்களும் நம்பிக்கைகளும்' என்னும் தம் ஆய்வுக்கட்டுரை யில் (ஆராய்ச்சி மலர் 4 இதழ் 1) குறிப்பிட்டுள்ளார்.
கண்ணகி நடுகல் வழிபாடு
அறநெறி தவறித் தன் கணவனைக் கொல்வித்த பாண்டிய மன்னனையும் அவன் நகரையும் எரியூட்டிச் சேரநாடு சென்று வான் புகுந்த தெய்வக் கண்ணகிக்குச் சேரன் செங்குட்டுவன் எடுத்த நடுகல் விழாவுக்குச் சென்ற இலங்கை மன்னன் கசபாகு என்பவன்(கி.பி.174196) தெய்வக் கண்ணகியின் அருள்பெற்று ஈழநாட்டிற் கோயிலமைத்துப் பெருவிழா எடுத்தான். ஈழநாட்டில் அமைந்த இரண்டாவது சிறந்த நடுகல் வழிபாடு இது ஆகும். கசபாகு மன்னனைப் பின்பற்றி ஏனைய அரசர்களும் மக்களும் கண்ணகி வழிபாட்டை மேற் கொண்டனர். நாடெங்கும் இவ்வழிபாடு பரவி யது. கண்டியரசர்கள் கண்டிமாநகரிற் கண்ணகிக்குக் கோயில் அமைத்து வழிபட்டனர். கசபாகு மன்னனைப் பின்பற்றி ஆண்டுதோறும் ஆடித் திங்களில் நடைபெறும் 'பெர85ார’ என்னும் விழாவிற் கண்ணகி வழிபாடு இடம்பெற்றுள்ளது. நாட்டைக் காக்கும் நாற்பெருந் தெய்வங்களுட் கண்ணகித் தெய்வமும் ஒன்றெனப் பெளத்தர்கள் நம்புகின்றனர். டெளத்தர்கள் பத்தினித் தெய்வம் எனவும் இந்துக்கள் கண்ணகி அம்மன் எனவும் கூறுகின்றனர். இவ்வழிபாடு சிறுதெய்வ வழிபாடாக வளர்ந்துள்ளது. இலங்கையிற் பல
05)

Page 8
ஜி.
இடங்களிற் சிறந்த பல கண்ணகி கோயில்கள் உள்ளன. கண்ணகித் தெய்வத்தை வழிபட்டால் நோய்கள் நீங்கும்; மழைபெய்யும் என மக்கள் நம்புகின்றனர்.
இளந்தாரி நடுகல் வழிபாடு
ஈழநாட்டின் வடபால் இணுவில் என்னும் ஊர் உளது. யாழ்ப்பாண அரசு, தொடக்க காலத்திற் கொண்டிருந்த பன்னிரு பேரூர்ப் பகுதிகளுள் இப்பகுதியும் ஒன்று எனவும் தமிழகத்துத் திருக்கோவலுர்ப் பேராயிரவன் என்பவன் தலைவனாக இருந்தான் எனவும் இணையிலி என்னும் பெயர் அக்காலத்தில் வழங்கியது எனவும் சோழப் பேரரசின் படைத்தலைவனாக ஈழநாடு வந்த கருணாகரத் தொண்டமான் இவ்வூரிற் தங்கியிருந்தான் எனவும் யாழ்ப்பாணச் சரித்திரம்', 'யாழ்ப்பாண வைபவமாலை', 'கைலாயமாலை முதலிய நூல்கள் தெரிவிக் கின்றன. பரராசசேகரன் என்னும் ஆரிய குலத் திறை அரசு வீற்றிருந்த தென்னினுவை என்னும் திருநகர் எனப் பஞ்சவன்னத் தூது நூல் கூறுகின்றது. இத்துணைச் சிறப்பு மிக்க இவ்வூரில் இளந்தாரி கோவில் என ஒரு கோவில் உண்டு. இளந்தாரியர் என்னும் கடவுளுக்கு இங்கு வழிபாடு நடைபெறுகிறது. இங்கு படிக்கப் பெறும் பஞ்சவன்னத் தூது நூலையும் இவ்வூர்ச் செவி வழிச் செய்திகளையும் ஆராய்ந்த பெரும்புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரும் கலாநிதி க.செ.நடராசா அவர்களும் இவ்வழிபாடு, ஒரு நடுகல் வழிபாடு எனவும் ஈழநாட்டிற்குச் சிறப்புத் தரும் வழிபாடு எனவும் கூறியுள்ளனர்.
காலிங்கராயன் கைலாயநாதன் 6L60III./
பேராயிரவன் என்னும் தலைவனின் பின் காலிங்கராயன் என்பவனும் இவனின்பின் இவன் மகன் கைலாயநாதனும் இணுவைப் பேரூர்த் -தலைவர்களாக இருந்தனர் எனப் பஞ்வசன்னத்தூது நூல் தெரிவிக்கின்றது. காலிங்கராயன் என்னும் பெயர் சோழர் காலக் கல்வெட்டு ஒன்றிலும் மூவருலாவிலும் பொய்யாமொழிப்புலவர் வரலாற்றிலும் கொங்குநாட்டுக் கால்வாய் ஒன்றிலும் உள்ளது. சோழப் பேரரசுப் படைத்
(06

தலைவருள் காலிங்கராயன் ஒருவன் எனவும் சோழப் பேரரசர் கலிங்க நாட்டை வெற்றிபெற இவன் உதவியதனால் இவ்விருதுப் பெயர் இவனுக்கு வழங்கப் பெற்றிருக்கலாம் எனவும் இவன் தொண்டை நாட்டினன் எனவும் வரலாற்றறிஞர் சதாசிவபண்டாரத்தார் கூறியுள்ளார். இவன் அல்லது இவன் மரபினன் இணுவைப் பேரூர்த் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கலாம். பேராயிரவன் திருக்கோவலுTரினன் என யாழ்ப்பாணச் சரித்திரமும் காலிங்கராயன் திருக்கோவிற் பதியினன் எனப் பஞ்சவன்னத் தூதுநூலும் கூறுவதனால் இருவரும் உறவு முறையினராதல் வேண்டும். இவனைக் கங்கை வமிசத்தான்' எனவும், "காரை நாடன்' எனவும் இத்தூதுநூல் கூறுகிறது.
காலிங்கராயன், கைலாயநாதன் என்னும் இருவரையும் பஞ்சவன்னத்துாதுநூல் பேரரசர் நிலையில் வைத்துக் கூறுகின்றது. இவர்களுக்கு வன்னிய முதலிமார் அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் விளங்கினர். வீரம், கொடை, கடவுள் வழிபாடு, நல்லாட்சி ஆகியவற்றிற் சிறந்து விளங்கினர். காலிங்கராயன் சிதம்பரத்துச் சிவகாமியம்மையிடம் பெரும்பற்றுள்ளவன், "இந்திராதிபர் போற்றுங் காலிங்கராச பூபதி, எத்திசையும் உலகோர் மதித்திடும் காலிங்கன், காவலரை ஏவல் கொள்ளும் காலிங்கேந்திரமால், சேரன் சோழன் குபேரன் நிகர்க்கும் காலிங்க அதிதுரன், 'கொடைச் செங்கைக் காலிங்கராயன், "இந்நில மக்கள் தம் காவலனி’, ‘பூச்சக்கர வாளத்தைத் தன் சக்கரம் மேவச் செய்தாண் டோன்', 'சிவகாமசுந்தரி பொன்னடி அனுதினம் பூசனை புரிவோன், நித்தம் ஆயிரவர்க்கு அன்னம் நியமமோடளித்தவன்', 'தெய்வக் காலிங்கராயன், "ஒராசனத்தில் இரவியாய் உதித்தோன்’ எனப் பஞ்சவன்னத்துாது நூல் இவன் சிறப்புகளைக் கூறுகின்றது.
காலிங்கராயனும் கைலாயநாதம் சகோதரர் எனச் செவிவழிச் செய்தி கூறுகிறது. ஆயினும் "காலிங்க மன்னவன் நற்றவத்தாற் பெற்றசுதன்' எனப் பஞ்சவன்னத்துது நூல் கூறுதலின் கைலாயநாதன் காலிங்கராயனின் மகன் என்பது தெளிவு. கைலாயநாதன் என்பது சிவனின் பெயர்.
வைகாசி )

Page 9
ജ്, bahwasgais
இறைவனின் பெயரை மக்களுக்கு இடுதல் தமிழர் வழக்கம். கைலாயன், கைலாயநாதன் என்னும் பெயர்கள் கோவில்களினதும் மக்களதும் பெயராக ஈழநாட்டில் வழக்கில் உள. கிழந்தா னோர் போதும் கிட்டுறாமையினால் 'இளந்தாரி என்னும் இயற்பெயர் தாங்கி', 'இளந்தாரி கைலாய நாததுரை’ ‘மணிவீதி வந்தார் இளந்தாரி' எனப் பஞ்சவன்னத்துாதுநூல் கூறுதலின் கைலாயநாய னுக்கு இளந்தாரி என்னும் பெயர் நிலைபெற்று விட்டது. இளந்தாரி என்னும் பெயர் சென்னை எலெக்சிகன் அகராதியிலும் நாட்டார் பாடலிலும் இடம் பெற்றுள்ளது.
கைலாயநாதன் ‘பத்துடன் ஆறுகலை பயின்றோன்’ எனவும் , “அந்தரத்தானை வெல்சுந்தரத்தானி, கமலையம் புயந்தான் எனவும், ‘காருலாவு கொடைக்கர அண்ணல், ‘கரந்தை ஆடி அருள்புரி உத்தமன்’ எனவும், 'காலையிற் கடன்முறை கழித்து, சாலவேபுட்ப சாதிகள் ஆய்ந்து சேல்விழிப் பரையொடு சிவனை அர்ச்சித்து' எனவும், கறையடி கரமொரு கைகொடு அறைபட அடித்தடல் முடித்தும், கரும்பனை நிகர்த்த காமர் புயத்திற் பெரும்பனை தாங்கிப் பெரும்புகழ் விளைத்தும் எனவும் ‘கங்கர் துலுக்கர் வடகர் குடகர் சிங்கர் முதற் பல திக்குறு மிக்கவர் தேடரு நிதித் தொகையொடு மாடமுதற் கடைவாயில் முற்றிட ‘அருமறை முனிவர் ஆசிகள் கூறிடப் பொருதிறல்வீரர் புடையெலாம் ஆழ அரியணை மீது, அரசு வீற்றிருக்கும்' எனவும், 'பெருமலை கரங்கால் பெற்று வந்தனைய மத்தகக் களிற்றின் இவர்ந்து, கேதன நிரைகள் அசைய, கதிகொள் பரியில் வன்னிய முதலிமார் வர, எண்டிசை அரசர்கள் விரவுகொண்டிட, வச்சிரம் முதற் பல்படை வீரர் ஏந்திட, பனை முதற் பதினெண்பல்லியம் இயம்ப, தேவர் மகிழத்திசையுளோர் புகழ, மந்திர மணிவீதி வந்தார் எனவும், நவகண்டங்கள் துதிக் குந் துங்கமிகுகைலாயன்’ ‘அம்புலி மதிக்கும் வீரன்’, ‘சத்துருக்களைப் புறம்பண்ட வயத்தான் ‘சிங்கையாரியர் போற்றும் இளந்தாரி' "கொங்கர் மகதரொடு கங்கர் கருடர் சீனர் குடகர் கவுடர் அங்கர் கோசலர் தெலுங்கர் கருநடர் மராடர் முதல் நூறாயிரங்களம் கண்டோன்', 'ஆதி மன்னரில் இணை சொலற்கரிய இறைவன்’
(வைகாசி

இந்திரனோ ஏறுமயில் வாகனனோ எனவரும் மன்னன், 'திக்கெலாம் வியக்கத் தேவுரு வானவன்' எனவும், பாருறை தேவிளந்தாரி', 'பத் தசனர்" வாழ நிறைவாக் கரியம் தந்தாட்கொள்ளும்வேள் தஞ்சமென்றடைந் தோரைத் தாபரிக்கும் 'கடவுள் கறிையார் கண்டன் அருள்பெற்ற தெய்வம், 'அமரர் யாரும் தொழும் கைலாய நாததோன்றல்’ எனவும் , கைலாயநாதனது தோற்றம், நாட்கடமை, அரசு வீற்றிருக்கை, அற்புதங்கள், ஊர்வலம் வருகை கொடை, தெய்வ இயல்பு ஆகியவற்றைப் பஞ்சவன்னத் தூது நூல் கூறுகிறது. இவனது ஊர்வலத்தில் விநாயகர், உமை, கந்தவேள், ஐயனார் ஆகிய தெய்வ உருவங்கள் முன்னணியில் வந்தன என இத்தூது நூல் புதுமையான செய்தியைத் தெரிவிக்கின்றது. கலிங்கராயன் காலம், 12:14 நூற்றாண்டு ஆதலின் கைலாயநாதனது காலமும் இக்காலப் பகுதியே 616GT6)Tib.
இவ்வழிபாட்டின் தொடக்கமும் வளர்ச்சியும்
கைலாயநாதனது பெருவீரம், அருளாற்றல், நல்லாட்சி ஆகியவற்றால் மக்கள் அவனைத் தெய்வமாகப் போற்றினர். உலகு நீத்தலை இவன் முன்பே அறிந்திருந்தான் எனவும், உணவு உண் பதற்கு நீராடி வருவதாகக் கூறி அண்மையில் நின்ற புளியமரத்தில் ஏறி மறைந்தான் எனவும் கைலாயநாதன் உருக்கரந்து வான் சென்றதை அறிந்த மக்கள் அவனது அரண்மனையிற் கூடியிருந்தனர் எனவும் அப்போது கைலாயநாதன் அவர்முன் தோன்றி அவர்களை என்றும் காப்பாற்றி அருள் புரிவதாகக் கூறினான் எனவும், அன்று முதல் அவன் வான் புகுந்தநாளில் அவனது அரண்மனையில் மக்கள் ஆண்டுதோறும் பெருவிழா எடுத்து வழிபட்டு வருகின்றனர் எனவும், ஏனைய நாட்களில் அங்கு விளக்கேற்றி வழிபட்டு வந்துள்ளனர் எனவும், செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இவன் புளிய மரத்தின் வழி வான்புகுந்தமை கண்ணகி வேங்கை மரத்தின் வழி வான் புகுந்தமையை நினைவூட்டுகிறது. அரண்மனையில் ஆண்டுதோறும் நிகழ்ந்த ஆண்டுப் பெருவிழாக்களில் அதன் ஒரு பகுதியாக கைலாயநாதன் அங்கிருந்து உருக்கரந்த
07)

Page 10
سپنگ؟ ata
புளியமரத்திற் காலடிக்கு நீர்வார்த்தல் என்னும் வழிபாடு நிகழ்ந்து வந்தது. அதனால் பிற் காலத்தில் இப்புளிய மரத்தின் கீழ், சிறு மண்டபம் அமைக்கப்பெற்று அங்கும் ஆண்டுப் பெருவிழா தொடங்கியது. இந்நிலையம் ஒரு வீதி ஓரத்தில் இருப்பதால் நாள்தோறும் வீதிவழியே செல்பவர் கள் பெரும் பயபக்தியோடு காணிக்கைகள் இட்டுவழிபட்டனர். நாள்தோறும் இங்கு மாலை வேளைப் பூசை தொடங்கியது. இவற்றால் இங்கு இந்நடுகல் வழிபாடு வளர்ச்சி அடைந்து ஒரு கோயில் வழிபாடாக விளங்குகின்றது. பழைய அரண்மனை சிதைந்து விட்டது. உருக்கரந்த இடத்து வழிபாட்டு வளர்ச்சியினால் அரண்மனை நிலையம் இருக்கிறது. உருக்கரந்த இடத்து அமைந்துள்ள கோயில் மூலமண்டபம் , நடுமண்டபம், வெளிமண்டபம், பொங்கல் மண்டபம் என்னும் பகுதிகளை உடையது. மூலமண்ட பத்துள் தலவிருட்சமான புளியமரத்தின் அடிப் பகுதி இருக்கிறது. அதன் முன்பாக விளக்குகள் கற்கள் சில நடப்பெற்றுள்ளன. இவற்றின் முன்பாக விளக்குகள் வைக்கப்பெற்றுள்ளன. பிரதான அபிடேகங்களும் பூசைகளும் படையல் களும் இங்குதான் நிகழ்கின்றன. இளந்தாரியர் மரபில் வந்த ஒருவரே பூசகராகவும் கோவிற் பரிபாலகராகவும் உள்ளார். இப்போது கோயிற் புறத்தே காலிங்கர் கைலாயநாதன் திருவுருவங் களை வைத்துள்ளனர்.
ஆண்டுப் பெருவிழா வழிபாடு
இங்கு நடைபெறும் ஆண்டுப் பெருவிழா மிகச் சிறப்பானது. கைலாயநாதன் வான்புகுந்த நாள் நினைவாக ஆண்டு தோறும் சித்திரைப் புத்தாண்டு நாளுக்கு முன்வரும் செவ்வாய் நாள் இரவு நடைபெறுகிறது. இது பெருமடை அல்லது முதல் மடை எனப் பெயர் பெறும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே இதற்கான பணிகள் தொடங்கும். முன்றிலில் வெண்மணல் பரப்பிப் பந்தல் இட்டு வெண்துகில் விதானம் அமைத்துக் குலைவாழை களை நடுவர். மகரதோரணங்களாலும் பூச்சரங் களினாலும் பந்தலையும் மண்டபங்களையும் அலங்கரிப்பர். விழாநாள் மாலை பல இடங்களிலு மிருந்தும் மக்கள் வருவர். பூசகர் மூல மண்டபத்தில் தலைவாழையிலை வைத்து நெல்
(0s

பரப்பி நிறைகுடம் வைத்து விளக்கு ஏற்றுவர். பெருமுரசு ஒலிக்கும். பூசகர் புதிய பானையில் நீர் நிறைத்துப் பொங்கலைத் தொடங்குவர். இதற்கு வழுந்து கட்டல் எனப் பெயர். இதனைத் தொடர்ந்து ஆலய முன்றிலில் மக்கள் தங்கள் நேர்த்தியாகப் பொங்கலிடுதலிலும் தாவர ஊன் உணவுவகைகள் ஆக்குவதிலும் ஈடுபடுவர். நடு மண்டபத்திற் பஞ்சவன்னத்தூது நூற்படிப்பு நிகழும். இடையிடையே ஆடலும் நிகழும். நள்ளிரவு வரை படிப்புநீடிக்கும். படிப்பு நிறைவானதும் கைலாயநாதன் வழிபாடு செய்த சிவகாமி அம்மை, கொற்றவை ஆகிய கடவுளர்க்குப் படையல் கொண்டு செல்வர். இதனை அம்மனுக்குச் சோறு கொண்டுபோதல் என்பர். இதில் அனைவரும் பங்குபற்றுவர். பெருமுரசு முழங்கும், ஆடலும் பாடலும் வாழைக்குலையைத் துண்டுகளாக வெட்டி நாற்புறமும் வீசித் தேங்காய்களை உடைத்துக் கற்பூரம் கொளுத்துவர். இதனை வழிவெட்டிவிடல் என்பர். கொற்றவை சந்நிதியில் படையல் வழிபாடு நிறைவானதும் மீண்டும் கோவிலை அடைவர்.
இதன் பின் இளந்தாரிக் கடவுளுக்குச் சிறப்பு வழிபாடு நிகழும். மூலமண்டபத்துள் நீண்ட பதினாறு வாழை இலைகள் வைத்து உணவுகள், பழங்கள் என்பன படைப்பர். இவற்றைக் கல்லை வைத்தல் என்பர். எங்கும் விளக்குள் ஒளிரும். மக்கள் தாம் ஆக்கிய உணவு அனைத்தையும் கோயில் முன்றிலிற் படையல் செய்து வணங்கி நிற்பர். நறும்புகை எங்கும் நிறையும், பெருமுரசு முழவு சேகண்டி சங்கு தாளம் என்பன ஒலிக்கும். பூசகர் தூபதீபம் காட்டிப் பூசை புரிவர். மக்கள் பாடிப் பரவுவர். பூசை உச்சநிலையாகும்போது பூசகர் தெய்வ உருவந்து ஆடுவர். ஒரு கையிற் பிரம்பும் அடுத்த கையில் வேப்பிலையும் வைத்திருப்பர். பூமாலை 5 அணிந்திருப்பர். கற்பூரம் கையில் எரியப் பாடல்களைப் பாடுவார். நீண்டநேரம் நிகழும். இவ்ஆடலின் போது பூசகர் தெய்வவாக்குகள் கூறுவர். இவை செங்குட்டுவன் எடுத்த விழாவிற்குச் சென்றிருந்த அரசர்க்குக் கண்ணகித் தெய்வம் கூறிய வாக்குகளை நினைவூட்டுவன ஆகும். இதன் பின் பூசகர் நிறைகும்பத்தை எடுத்துக் கோயிலை வலம்வர ஏனையோரும் அவர்பின் செல்வர். பூசகர்
வைகாசி )

Page 11
ഴ്ച
sail
கும்பநீரைத் தலவிருட்சத்தின் புறத்தே ஊற்றி வழிபடுவர். இதனைக் காலடிக்கு நீர் வார்த்தல் என்பர். இதன் பின் பஞ்சவன்னத்துது நூலில் உள்ள கைலாயநாதன் பதிகப் பாடல்களைப் பூசகரும் தூதுநூல் படிப்பவர்களும் படிப்பர். இவற்றுள் முதற் பத்துப்பாடல்கள் மக்கள் குறைகளை நீக்கியருளும்படி கைலாயநாதனை வேண்டுவனவாகவும் மிகுதி இருபாடல்கள் இக்கடவுளை வாழ்த்துவனவாகவும் உள்ளன. இவை முறையே சிலப்பதிகாரத்து வரும் வரந்தருகாதையையும் வாழ்த்துதற்காதையையும் நினைவூட்டுவன.
இவற்றின் பின் பூசகர் அனைவர்க்கும் விபூதி தீர்த்தம் நிவேதனம் என்பவற்றை வழங்குவர். இவற்றை அனைவரும் மிகப் பயபக்தியோடு பெறுவர். இவை நோய், பிணி, பகை, கவலை என்பவற்றை நீக்கும் அருளாற்றல் உள்ளன என மக்கள் நம்புகின்றனர். நோய் துன்பம் உள்ளவர்களுக்குப் பூசகர் சிறப்பாக விபூதி இட்டு வாக்குகள் கூறுவர். படையல் செய்த கல்லை களை உரிமையாளர்க்கும், பணிசெய்தவர்க்கும், முரசு அறைந்தவர்க்கும், தூதுநூல் படித்த வர்க்கும் பூசகர் வழங்குவர். ஆனிரைகளை வெற்றிகொண்ட வெட்சியரசன் அவ்வெற்றிக்கு உதவிய அனைவர்க்கும் அவ்ஆனிரைகளைப் பங்கிட்டுக் கொடுத்ததை இது நினைவூட்டுகிறது. இவ்வழிபாட்டு அனைத்து நிகழ்ச்சிகளும் ஆனந்தத்தையும் பத்தியுணர்வையும் ஊட்டுவன. இப்பெருவிழாக்காலத்தில் மக்கள் எவரும் வெளியே செல்லார். ஊர்வலம் நிகழும்போது எதிராகவும் வரார். முதல்மடைக்கு எட்டாம் நாள் இன்னொரு வழிபாடு நிகழும். இது இரண்டாம் அல்லது எட்டாம் மடை என்பர். இது சிறிய அளவில் நிகழும்.
இந்நடுகல் வழிபாட்டிற் படிக்கப்பெறும் பஞ்சவன்னத்துது நூல் பல வகைச் சிறப்புக்கள் உள்ளது. இந்நூல் தெய்வ அருள் நூலாகப் போற்றப்பெறுகிறது. இதுகோவிலிற் படிக்கப் பெறுவதேயன்றி வீடுகளிற் படித்ததற்கு உரியது அன்று எனக் கூறுவர். இந்நூலாசிரியர் ஒல்லாந்தர் ஆட்சியிற் தோம்பு எழுதுநராக இருந்தவர். சிவகாமியம்மை அருள் பெற்றவர் என இவர்
(வைகாசி

வரலாறு தெரிவிக்கின்றது. கைலாயநாதனைத் தெய்வமாக வைத்தே இந்நூலை இவ்வாசிரியர் பாடியுள்ளார். ஐந்து தூதுப் பொருள்களை உடையது ஆதலின் இப்பெயர் பெற்றது. அகத் திணைத்துறைகளும் புறத்திணைத் துறைகளும் விரவியது இந்நூல். தலைவனிடம் மாலை வாங்கிவர என்பதனோடு ஏனைய தூது நூல்கள் நிறைவு பெற, இந்நூல் தலைவனிடம் தோழி சென்று தலைவியின் நிலை கூறி அவனது இணக்கத்தைப் பெற்று அதனைத் தலைவியிடம் தெரிவித்து நிறைவு பெறுகிறது. இத்தூதுநூல் நாடக அமைப்பில் உள்ளது. பாடல்கள் இசைப்பாடல்கள். இவற்றிற்கு இராகமும் தாளமும் குறிப்பிடப்பெற்றுள்ளன. நூலின் ஈற்றிற் கைலயாநாதனது மெய் கீர்த்தி அமைப்பான அகவற்பாவும் கைலாயநாதனைத் துதிக்கும் பதிகமும் உள்ளன. இறைவனை அடைய விரும்பும் உயிரை அருட்சத்தி இறைவனிடம் சேர்ப்பிக்கும் மெய்யியற் கருத்து இந்நூலின் உட்பொருள் ஆகும். சிலப்பதிகாரத்தின் பின் எழுந்த சிறிய முத்தமிழ் காப்பியம் இந்நூல் எனலாம். பொதுவாக ஈழநாட்டினதும் சிறப்பாக யாழ்ப்பாண அரசினதும் உயர் சிறப்புகளை உணர்த்தும் ஒப்பற்ற நூலாக இந்நூல் உள்ளது. அறம்பொருள் இன்பம் வீடு ஆகிய நாற்பயனும் தரும் அமைப்பு உள்ளது.
இந்நடுகல் வழிபாட்டின் சிறப்பு
இவ்வழிபாடு ஏனைய கோவில் வழிபாடுகள் போலச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. பல இடங்களில் உள்ளவர்களும் இங்கு வழிபாடு செய்கின்றனர். இளந்தாரியார் கண்கண்ட தெய்வம் எனவும் தங்கள் நோய் துன்பம் ஆகியவற்றை நீக்கி என்றும் எங்கும் தங்களுக்குத் துணையாக உள்ளார் எனவும் மக்கள் பெரிதும் நம்புகின்றனர். நாட்பூசையொடு ஏனைய கோவில்களிற் போலச் சமய விஷேட நாள்களிலும் இங்கு விஷேட பூசைகள் நடைபெறுகின்றன. பண்டைய மக்கள் வழிபாட்டு முறையாக இவ்வழிபாடு நிகழ்ந்து வருகின்றது. பஞ்சவன்னத்துதுப்பாடல்களோடு திருமுறைப்பாக்களும் இங்கு பூசை நேரங்களில் ஒதப் பெறுகின்றன. தமிழக வரலாற்றுத் தொடர்புள்ள நடுகல் வழிபாடாக விளங்குவது
09)

Page 12
ഴ്ച
இவ்வழிபாடே எனலாம். கண்ணகி வழிபாடு தமிழகத்திற் சங்ககாலத்திற் தோன்றியது இவ்வழிபாடு ஈழநாட்டிற் பிற்காலத்திற்கு தோன்றியது. தமிழரசர் எவரும் கைலாயநாத மன்னனைப்போலக் கடவுளாக வழிபடும் நிலையைப் பெற்றிலர் எனலாம். தமிழுலகில் இவ்வழிபாடு ஒரு சிறப்புவகை வழிபாடு ஆகும் அநுராதபுரத்துக் காலவீவாப் பகுதியிற் காவற் தெய்வமாக இளந்தாரி தெய்யோ வணங்கப் பெறுகிறார் என இலங்கையிற் சிங்கள ஆரியக்கோட்பாடு' என்னும் நூலில் (பக்கம் 34) அதன் ஆசிரியர் சாமுவேல் லிவிங்ரன் என்பவர் எழுதியுள்ளார்.கைலாய நாதனுக்கும் வன்னிய முதலிமாருக்கும் உள்ள தொடர்பினால் இவ்வழிபாடு அங்கு அமைந்திருக்கலாம்.
முதலியார் வழிபாடு
வன்னிய முதலிமார் மேலே குறிப்பிட்ட கைலாய மன்னனுக்கு அமைச்சராகவும் படைத்தலைவராகவும் மக்களின் நன்மதிப்பைப் பெற்றுச் செல்வாக்கோடு விளங்கினர் என்பதைப் பஞ்சவன்னத்துாது நுால் உணர்த்துகிறது. கைலாய நாதன் வான் புகுந்தபோது நடுகல் நட்டு வழிபாடு மேற்கொண்ட மக்கள் இவனது முதலிமார்க்கும் நடுகல் நட்டு வழிபட்டனர் எனலாம். ஆண்டுதோறும் கைலாயநாதனுக்கு நடைபெறும் வழிபாட்டில் முதலிமாருக்கும் வழிபாடு நடைபெறுகிறது. முதலிமார் வழிபாடு நிகழ்ந்த பின்பே கைலாயநாதன் விழா நடைபெறுதல் மரபாக உள்ளது. கைலாய நாதனது ஆண்டுப் பெரு வழிபாடு நிகழ்தற்கு ஒரு வாரத்தின் முன் முதலியர் வழிபாடு நடைபெறும் பலர் பொங்கிப் படைத்து வழிபடுவர். கைலாயநாதன் மனைக்கு அண்மையில் உள்ள இடத்தில் இவ்வழிபாட்டிற்காகப் பெரிய கல் நடப்பட்டிருந்தது. இப்போது இந்த இடம் அழிந்து விட்டது. அதனால் இப்போதுள்ள இளந்தாரி கோவிலுக்கு முன்பாக இவ்வழிபாடு நடைபெறு கிறது. ‘முதலிகள் கோயில்கள் பல இடங்களில் உள்ளன எனவும் இவ்வணக்கம் வீரவணக் கத்தைச் சேர்ந்தது எனவும் பூவரசமரங்களுக் கடியில் கல்லுகள் வைத்து நீரும் பூவும் வில்வமும் இட்டுவணங்குவர் எனவும் கரவெட்டி
10

~~ ങ്ങബ് 2 大ー、
முதலிய இடங்களில் இவ்வழி பாடு இன்றும் நடைபெறுகிறது’ எனவும் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை 'ஈழத்து வா >வும் வளமும்’ என்னும் நூலில் (பக்கம் 53) எழதியுள்ளார்.
அண்ணமார் வழிபாடு
மேற்குறிப்பட்ட கைலாயநாத மன்னனின் காவ லராக அண்ணமார் இருந்தார் எனவும் கைலாயநாதன் வான் புகுந்து அறிந்து அண்ணமார் அண்மையில் உள்ள ஆலமரத்தில் ஏறி மறைந்தார் எனவும் அன்று முதல் அங்கு அவருக்கு வழிபாடு நடைபெற்று வருகின்றது எனவும் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. கைலாயநாதனுக்கு ஆண்டு தோறும் நிகழும் ஆண்டுப் பெருவிழாவில் கொற்றவைக்குப் படையல் வைத்து வழிபட்டபின் அண்ணழாருக்குப் படையல் வைத்து வழிபடுதல் மரபாக இருந்து வருகிறது. கைலாயநாதன் ஆண்டு மடை நடைபெற்றபின் அண்ணமாருக்கு ஆண்டுதோறும் முதல் மடை, இரண்டாம் மடை என்பன நடைபெறும். பொங்கியும் ஊன் உணவு முதலியன ஆக்கியும் படையல்கள் படைத்து வழிபடுவர். ஏனைய நாள்களில் விரும்பியவர்கள் தேங்காய் உடைத்துக் கற்பூரம் கொளுத்தி வழிபடுவர். சில விசேட சமய நாள்களிலும் பொங்கல் பூசை என்பன நடைபெறும் . இவ் வழிபாடு சிறு தெய்வ வழிபாடாக யாழ்ப்பாணப் பகுதியில் பல இடங்களில் உண்டு. இவ் வழிபாட்டிற்கு ஆல மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன. இவ்வழிபாடு கொங்கு சாட்டிலும் இருப்பதாகப் புலவர் வெ.இராசு அவர்கள் நடுகல் வழிபாடு' என்னும் கட்டுரையில் எழுதியுள்ளார்.
நாச்சிமார் நடுகல் வழிபாடு
யாழ்ப்பாண அரசு வீழ்ச்சியடைந்த பின் வன்னி நாடு சுதந்திர அரசாக ஒரு நூற்றாண்டு நீடித்து நிலைத்து விளங்கியது. அடிக்கடி வன்னிநாடு ஒல்லாந்தரின் படையெழுச்சிகளுக்கு ஆளாகியது. போரில் வன்னியரசர் இறக்க அவரது மனைவியர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினர். வன்னிய அரசின் மனைவியர் நாச்சிமார் எனப் பெயர்
வைகாசி )

Page 13
ہے؟
பெற்றனர். ஒருமுறை ஒல்லாந்தர் நடத்தியபோரில் வன்னிய நாச்சியர் படை தோல்லியடைந்தது அந்நியருக்கு அடிமைப்படவிரும்பாமல் வன்னிய நாச்சியர் தம் உயிரைத்தாமே மாய்த்து இறந்தனர். இவர்களது வீர உணர்வை மக்கள் மதித்து இவர்க்கு நடுகல் நட்டுவழிபட்டனர். இவ்வழிபாடு இப்போது யாழ்ப்பாணப் பகுதியிலும் வன்னிப் பகுதியிலும் பல இடங்களிலும் நடைபெறுகிறது. இவைகளைப் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை அவர்கள் ஈழத்துத் தமிழர் கிராமியத் தெய்வ வழிபாடு என்னும் கட்டுரையில் (ஈழத்து வாழ்வும் வழிபாடும்) எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்திற் புகழ்பெற்ற நாச்சிமார் கோயில் இருக்கிறது. உயர் நோக்கத்திற்காக உயிர் நீத்த ஆடவர்க்கும் பெண்டிர்க்கும் நடுகல் நட்டு வழிபடும் வழக்கம் தமிழ் நாட்டில் இருந்ததாக நடுகல் வழிபாடு நூல் ஆசிரியர் 'வரலாற்றில் நடுகல்" என்னும் பகுதியில் எழுதியுள்ளார்.
ஏனைய நடுகல் வழிபாடுகள்
மேலே குறிப்பிட்ட வழிபாடுகளைவிட ஐயனார், காத்தவராயர், பெரியதம்பிரான், முனியப்பர், பூதராயர் ஆகிய வழிபாடுகள் சிறு தெய்வ வழிபாடுகளாக ஈழநாட்டிற் பல இடங்களில் உள்ளன. இவை நடுகல் வழிபாட்டின் வழிவந்தனவே ஆகும். இவற்றுள் ஐயனார், காத்தவராயர் வழிபாடுகள் தமிழகத்தில் இருந்து இங்குவந்தன. இவ்வழிபாடுகள் அனைத்தும் பணி டைய வழிபாட்டு முறைகளையே கொண்டுள்ளன. இவ்வழிபாடுகளில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. இப்போது இவ்வழக்கம் குறைந்து விட்டது. பொங்கல் செய்து வழிபடும்முறை வளர்ந்துள்ளது. சமுதாய வளர்ச்சிக்கேற்ப இவ்வழிபாட்டு நிலையங்களின் அமைப்புகளும் வழிபாட்டு முறைகளும் சிறப்பாக அமைந்து வருகின்றன எனலாம். அருளாளர்களின் சமாதி என்னும் நடுகல் வழிபாட்டு நிலையங்கள் பல, ஈழநாட்டிற் பலவிடங்களில் உள்ளன.
நிறைவுரை
பழந்தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் இன்று காட்டும் ஒளிப்படமாக விளங்கி நிற்பன
( ഞഖക്കfകി

நடுகல் வழிபாடுகளேயாம். அவற்றின் தெய்வீகச் சிறப்புக்காக நாமும் வணங்குவோம். நடுகல்லைக் கண்டுணர்வோம். நல்ல வரலாறு காண்போம் எனப் புலவர் வெ.இராசு அவர்கள் நடுகல் வழிபாடு என்னும் கட்டுரையில் எழுதியன இங்கு நிறைவுரையாக அமைதற்கு உரியன. ஈழத்தின் வருங்கால வளர்ச்சியும் சிறப்பும் ஈழத்து நடுகல் வழிபாடுகளின் வளர்ச்சியிலும் சிறப்பிலும் தங்கியுள்ளன. வளர்க ஈழத்து நடுகல் வழிபாடுகள், உயர்க தமிழ் உலகு!
ஆழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே
(மகாகவி பாரதி)
துணை நூல்கள்
01. தொல்காப்பியம் பொருளதிகாரம் -
புறத்திணையியல் (கழகப் பதிப்பு) 02. புறப்பொருள் வெண்பாமாலை - பொதுவியற் படலம் (டாக்டர் உ.வே.சாமிநாதையர் பதிப்பு) 03. நடுகல் வழிபாடு - வெகேசவராஜ், எம்.ஏ 04. நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி
மகாநாடு ஆய்வுக் கட்டுரைத் தொகுதி - நடுகல் வழிபாடு. புலவர் - வெ.இராசு 05. ஈழத்து வாழ்வும் வளமும் - ஈழத்துத் தமிழர்
கிராமியத் தெய்வ வழிபாடு பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை 06. தமிழர் சால்பு - தமிழ் மக்களுக்குச் சிறப்பான கோட்பாடுகளும் வழிபாட்டு முறைகளும்
(கலாநிதி சு.வித்தியானந்தன்) 07. பழந்தமிழர் வாழ்வும் வழிபாடும்
வீரவணக்கம் - பேராசிரியர் க. கைலாசபதி 08. சிலப்பதிகாரம் - வஞ்சிக் காண்டம்
Φαδίας
மொறிசியசில் நடைபெற்ற உலகத் தமிழராய்ச்சி ஏழாவது மகாநாட்டில் தமிழவேள் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டத.
11 )

Page 14
ഴ്ച asaluMidak
குலக்குழு நிலை, அவற்றிலிருந்து எழுந்த குறுநிலை அரசுகள், அவற்றின் விரிவாக்கமாக அமைந்த சேர சோழ பாண்டிய அரசுகள் முதலியவற்றோடு இணைந்ததாகத் தமிழகக் கல்விச் செயற்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல், பாலை என்ற வாழ்விட இயற்கை இயல்புகளும் கல்வியிலே செல்வாக்குச் செலுத்தின. சொத் துரிமையைச் சார்ந்து வரன்முறையான கல்வி வளர்ச்சியுற்றது. சொத்துரிமை உடையோரே அரசர்களோடிணைந்து சமூக அடுக்கமைப்பின் உயர் நிலையில் வாழ்ந்தனர். சமூகத்தின் அடி நிலை மாந்தரிடத்து வரன்முறைசாரா நாட்டார் கல்வி மரபுகள் வளர்ச்சியடைந்திருந்தமையை கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்துத் தமிழ்க் கல்வி வளர்ச்சியிலே கண்டு கொள்ள முடியும்.
தமிழகத்து தனிச் சொத்துரிமை வளர்ச்சியின் ஒரு தவிர்க்க முடியாத கல்வி எடுப்பாகப் போர்க் கல்வி அமைந்தது. உலகின் தொன்மையான நாகரிகங்கள் என்று கருதப்படும், கிரேக்க, ரோமக் கல்வியிலே போர்க்கலை சிறப்பிடம் பெற்றி ருந்தமை குறிப்பிடத்தக்கது. தொன்மையான தமிழகக் கல்வியிலும் அதே பண்பு காணப்பட்டது.
புறநானூற்றில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பல போரின் சிறப்பையும், இளைஞர் அதில் ஈடுபட வேண்டிய கடமையையும் வற்புறுத்து கின்றன.
அரசுக்கும் கல்விக்குமிடையே காணப்பட்ட இணைப்பையும், கல்வி பற்றிய தீர்மானங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இயல்பையும் தமிழக வரலாற்றில் கண்டு கொள்ள முடியும். “மன்னனுயிர்த்தே மலர் தலையுலகம்” என்ற புறநானூற்று அடி(கஅகூ) அரச அதிகாரத்தின் விரிந்த பண்புகளைச் சுட்டிக்காட்டுகின்றது.
12

தொல்சீர் தமிழகக்கல்வி
- பேராசிரியர் சபா ஜெயராசா -
புலவர் என்ற எண்ணக் கரு புலமைமிக் கோரைக் குறிப்பிட்டது. வரன் முறையான கல்வி அவர்கள் வழியாக முன்னெடுக்கப்பட்டது. "அறமுரைத்தல்” என்ற செயற்பாடு கல்வியின் சிறப்பார்ந்த குறிக்கோள் ஒன்றினைக் குறிப்பிட் டுள்ளது. கல்விச் செயல்முறையில் “அவை” சிறப்பிடம் பெற்றிருந்தது. அவைகள் “பொதியில்" என்றும் அழைக்கப்பட்டன. (மதுரைக்காஞ்சி 161) “பொதியில்” என்பதன் பொருள் “பொதுவான இல்லம்’ என்பதாகும். கற்றல் கற்பித்தல் ஆகியவை பலருடன் இணைந்த பொதுவான கூட்டு வினைப்பாடாக அமைந்த இயல்பை, அந்த எண்ணக் கரு புலப்படுத்தும்.
தொன்மையான கல்விச் செயல்முறையிலே “மரநிழற்’ பள்ளிக்கூடங்கள் அல்லது மரவடிப் பள்ளிக்கூடங்கள் என்ற அமைப்புக் காணப்பட்டது. இன்றும் காட்டு வாசிகளிடத்து இந்த அமைப்புக் காணப்படுகின்றது. "இரத்தி நீடிய வகன்றலை மன்றத்து’ என்ற தொடர் புறநானூற்றிலே காணப்படுகின்றது. (புறம் நச) இரத்தி என்ற மரத்தின் கீழே கற்றலும் பயில்வும் நிகழ்ந்த மையை அது சுட்டிக் காட்டுகின்றது. மரங்களின் கீழிருந்து நிகழ்த்தப்பட்ட அறிவுசார் கூடலே “மன்று” என்ற எண்ணக்கருவாக மேலேழுந்தது.
தமிழர்களது வழிபாட்டு முறைகளுக்கும் அறிவுக்கையளிப்புக்குமிடையே நெருங்கிய தொடர்புகள் காணப்பட்டன. “வெறியாட்டு” என்பது உடற்றொழிற்பாடுகள் வாயிலாக உள நலத்தை எட்டும் செயற்பாடாக அமைந்தது. ஒருவிதத்திலே சுயகருத்தேற்றம், சுயகற்றல் முதலிய செயற் பாடுகளின் உந்தல் வெறி யாட்டிலே இடம் பெற்றது. மேலும் வழிபாடுகளுடன் இணைந்த அந்தணரும் முனிவரும் அறிவுக்கையளிப்போடு தொடர்புபட்டிருந்தனர். முனிவர்களிடத்துக் காணப் பெற்ற அறிவுப் பெருக்கு “கற்றோரறியாவறிவினர்”
வைகாசி )

Page 15
്,
என்ற திருமுருகாற்றுப் படைத்தொடரால் (33) விளக்கப்படுகின்றது.
கல்வியின் இலக்குகளுள் ஒன்றாக 'விரிச்சி’ அமைந்தது. ‘விரி’ என்ற எண்ணக் கருவுடன் தொடர்புடையதே விரிச்சியாகும். பொருளை விரித்துரைத்தல், ஆற்றலை விரித்துரைத்தல் அறிவைப் பயன்படுத்தி நிகழவிருப்பதை விரித்துரைத்தல் முதலியவை விரிச்சியில் உள்ளடங்குகின்றன. நற்சொல் கேட்டல் என்ற கல்விச் செயற்பாட்டையும் விரிச்சி சுட்டி நிற்கின்றது. “திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப” என்ற தொடர் நற்றிணையிலே காணப்படுகின்றது. (நற்றிணை ச0, 4)
வரலாற்று வளர்ச்சியயூடே கல்வியின் பன்முகமாகிய விரிவான செயற்பாடுகளும் இடம்பெறத் தொடங்கின. தொன்மையான கல்வி மரபுகள் வான நூற் கல்வியைப் பலநிலை களிலும் முன்னெடுத்தன. இயற்கையைச் சமய வழிகளால் விளங்கிக் கொள்ளலும், கணித வழிகளால் விளங்கிக் கொள்ளலுமான அறிகைத் தொழிற்பாடுகள் மேலெழுந்தன. ஞாயிறு செல்லும் வழியும், இயக்கமும், ஆகாயப்புலமும் அவற்றை அளவிடலும் தொடர்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. (புறநானூறு ந0)
கல்வியின் ஒரு சிறப்பார்ந்த செயற்பாடாக அமைவது சமூக அசைவியத்தை (MOBILITY) அல்லது சமூக நகர்வை ஏற்படுத்து தலாகும்.
“கீழ்ப்பா லொருவன் கற்பின் மேற்பா லொருவனு மவன்கட்படுமே”
(புறநானூறு கஅங்) சமூகத்தின் அடிநிலை நிலையில் வாழும் மக்கள் அறிவால் சமூக நிலையில் மேலுயர முடிந்தது. அவ்வாறான கருத்து கிரேக்க மரபிலும் காணப்படுதலை பிளேட்டோவின் எழுத்தாக்கங் களிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.
அறிவின் பரிமாணங்களாக எழுத்து வழி ஆக்கங்களும் எண் வழியான ஆக்கங்களும் மேலெழுந்தன. பிற்கால வளர்ச்சியிலே எண்ணும் எழுத்தும் கண்களுக்கு ஒப்புமையாக்கப்பட்டன.
(வைகாசி

கணித்தல் என்பது என் வழியான தருக்கத்தோடு இணைந்திருந்தது. அதன் வளர்ச்சிக் கோலங் களாகக் கேத்திர கணிதமும் அட்சரகணிதமும் முகிழ்ந்தன. கணிதக் கல்வியில் ஈடுபட்டவர் கணியன்’ என்றும் ‘கணியர்’ என்றும் அழைக்கப்பட்டனர். அவர்கள் பற்றிய செய்திகள் புறநானூற்றிலே இடம்பெற்றுள்ளமையைக் காணலாம்.
கல்வி ஏற்பாட்டின் கூறுகளாக ஓவியமும் சிற்பமும் அமைந்திருந்தன. அழகும், ஓவியமும் பயன்பாடும் ஒன்றென இணைக்கப்பட்டிருந்தன. “ஒவியத் தன்ன விடனுடை விரைப்பின்” என்ற (புறநானூறு, உருக, 1) தொடர் இங்கே இணைத்து நோக்குதற்குரியது. பொருண் மியவளர்ச்சியோடிணைந்த ஒரு தோற்றப் பாடாகக் கட்டடக்கலையும் அதனோடிணைந்த கல்வியும் வளரலாயிற்று. “நிரை நிலை மாடம்’ (பெரும்பாணாற்றுப்படை, 405) என்ற தொடர் இருநிலைப் பொருள் சுட்டி நின்றது. ஒழுங்கு படுத்தப்பட்ட அறிவின் வழியாகத் தோற்றம் பெற்றமாடம் என்பது ஒரு பொருளாகும். அதாவது கட்டடக்கலை விதிகளின் ஒழுங்குமுறை அங்கே பின்பற்றப்பட்டுள்ளது என்பதாகும். இருநிலையின் இரண்டாவது பொருள் - அடியாதாரம், இடை நிலை, நிலைக்குத்து மற்றும் கிடைத் தொடுப்புகள் அமையப் பெற்றுள்ள கட்டட ஆக்கத்தின் புலப்பாடு ஆகின்றது.
அழகியற் கல்வியிலே கூத்துக்கள் சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றிருந்தன. வரன்முறையான கல்வியோடிணைந்த ஆடலும் கூத்தும் பற்றிய செய்திகளைச் சிலப்பதிக்ாரத்திலே காணமுடியும். வேத்தியல் பொதுவியல் என்ற பாகுபாடு வரன்முறையான கூத்துக் கல்வியின் இயல்பைப் புலப்படுத்தும் வேளை சமூக அடுக்கமைப்புக்கும் கூத்துக்கல்விக்குமுள்ள தொடர்பையும் நேரடியாக வெளிப்படுத்துகின்றது.
தொன்மையான கல்விச் செயற்பாடுகளில் இசை கற்பித்தலும், கற்றலும் சுவைப்பும் இடம் பெற்றிருந்தமை அகிலப் பொதுப் பண்பாகக் காணப்படுகின்றது. சமூக அற வொழுக்க
13)

Page 16
ஜி. amwadhapa
அறிவுறுத்தல்களுக்கும் இசைக்கல்வி கருவியாக் கப்பட்டது. அதனாற் கொடுந் தொழிலைக் கைவிடுவர் என்ற கருத்துப் பதிவு பொருநர் ஆற்றுப்படையில் இடம்பெற்றுள்ளது. (21-22)
இசை, மற்றும் நடனக் கல்வியில் ஈடுபட்டோர் தனித்துவமான பெயர்களால் அழைக்கப் பட்டமை அறிவேற்றத்தின் வளர்ச்சியைப் புலப்படுத்தும் சுட்டியாகவுள்ளது. பாணர், கூத்தர், பொருநர், வயிரியர், கோடியர், விறலியர் முதலிய எண்ணக் கருக்கள் அவ்வகையிலே சுட்டிக் காட்டப்படத் தக்கவை. இசை வளர்ச்சியிலே கருவியிசை ஒரு சிறப்பார்ந்த கூறாக அமையும். பேரியாழ், சீறியாழ், பறை, முழவு, முரசம், பதலை, ஆகுளி, தடாரி, எல்லரி, தட்டை, குழல் பாண்டில், சங்கு முதலாம் இசைக் கருவிகளைக் கற்றலும் ஆற்றுகை செய்தலும் நிகழ்ந்து வந்தன.
கல்வி வளர்ச்சியோடு இணைந்த செயற்பாடு களாக பட்டம் வழங்கல், விருது வழங்கல், சிறப்புப் பெயர் ஆட்டல், பரிசில் வழங்கல் முதலியவை அமைந்தன. கல்வி அடைவின் சான்றுகளாக அவை அமைந்தன. அரச நிர்வாக ஆற்றுகையோடு இணைந்த புலமையாளருக்கு “காவிதி” என்ற பட்டம் வழங்கப்பட்ட செய்தியை மதுரைக் காஞ்சி (494-9) வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. காவல் செய்வதற்குரிய மதியுரைக் கல்வியை ஈட்டியோர் அந்தப் பட்டத்தைப் பெற்றனர்.
அழகியற் கலை வல்லவர்களுக்குத் "தலைக்கோலி” என்ற பட்டம் வழங்கப்பட்ட செய்தியை சிலப்பதிகாரத்தின் வழியாக அறிய முடிகிறது. புலவர் என்பதும் புலமையை உணர்த்தும் பட்டமாயிற்று.
வரலாற்று வளர்ச்சியோடு கல்வி வளர்ச்சியும் மேலோங்கிச் சென்றமையைத் திருக்குறள் வாயிலாகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். கல்வி, கல்லாமை, கேள்வி, கல்விசார்ந்த ஒழுக்கம், அறிவுடைமை, அறிவுள்ளம் போன்ற பல்வேறு எண்ணக்கருக்கள் திருக்குறளிலே எடுத் தாளப்பட்டுள்ளன. திருக்குறள் அறநூலாகவும் கல்வி நூலாகவும் மேலெழுந்துள்ளது.
14

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் பின்னர் இடம்பெற்ற சோழப் பெருமன்னர் ஆட்சிக் காலத்திலே வரன்முறையான கல்விச் செயற் பாடுகள் மேலும் எழுச்சி கொள்ளலாயின. பொதுக் கல்வி, சிறப்புக் கல்வி. நூலாக்கம், பனுவல் களைத் தொகுத்தல், முதலிய செயற்பாடுகள் வளர்ச்சியடைந்தன. அரச சபையினையும் பெருங்கோயில் களையும் அடிப்படையாகக் கொண்ட உயர்கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. உயர் கல்வி யோடிணைந்த தத்துவக் கற்கைகளும் எழுச்சியுற்றன். கோட்பாடுகளை வடிவமைப் பதற்குரிய தருக்க நெறிமுறைகளை உருவாக்குதலும் வளர்த் தெடுத்தலும் சோழப் பெருமன்னர் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றன.
தமிழர்களது கல்வி வளர்ச்சியில் இடம்பெற்ற ஒரு முக்கிய நிகழ்ச்சியாக சமஸ்கிருத மொழிப் பயில்வு இடம் பெற்றது. அம்மொழியில் உள்ள அறிவுக் கருவூலங்களை மொழி பெயர்த்தலும், எடுத்தாளலும் இடம் பெறலாயின.
மடாலயங்கள், கோயிற்பள்ளிகள், குருகுலங் கள், திண்ணைப் பள்ளிகள், காவிய நிலாப்பள்ளி கள், உடற் கல்வி நிலாப்பள்ளிகள், பட்டறைப் பள்ளிகள் என்றவாறு கல்வி நிறுவனங்களும், கல்வி ஒழுங்கமைப்புக்களும் வரலாற்றுத் தொடர்ச்சியோடு வளரலாயின. தமிழர்களின் பொருளாதார வாழ்வோடு இணைந்த பண்பாட்டுத் தொடர்ச்சியோடு நிறைந்த கூறாகக் கல்விச் செயற்பாடு இடம் பெற்றுவந்துள்ளது.

Page 17
சங்
சைவமும் தமிழும் தழைத்த பதிதான் இணுவில். அதுதான் தமிழவேளின் பிறந்த இடம். அதனாலேதான் அவர் தமது சொந்தப் பெயராகிய கந்தசுவாமியோடு ஊர்ப்பெயரையும் இணைத்துக் கொள்வார். அவரது புனைபெயரிற் கூட வேள் - முருகன் என்பதனையும் இணைத்தே தமிழவேள் என வழங்கி வந்தார். தமிழையே உயிராகக் கொண்டவர். இறக்கும் வரை தமிழுக்காகவே பாடுபட்டவர். தமிழை வளர்க்கும் தமிழ்ச் சங்கத்தையே கட்டிக்காத்தவர் என்ற செயல் களைத் தமிழறிந்த உலகமே போற்றி நிற்கும் இவ்வேளையில் ‘தமிழவேள்’ என்ற நாமம் எவ்வளவு பொருள் பொதிந்த பெயராக விளங்குகிறது என்பதை உணர்கின்றோம்.
அவர் பிறந்த ஊருக்குச் செய்த தொண்டும் அளப்பரிது. அவ்வாறே தாம் கற்ற பாடசாலை கற்பித்த கல்லூரி ஆகியவற்றுக்கும் ஆற்றிய பணிகள் பல. அண்மையில் (2007இல்) கனடா இணுவைத் திருவூர் ஒன்றியம்’ எடுத்த பாராட்டு விழா ஒன்றே அவற்றைப் பறைசாற்றும்.
கொழும்பில் ஆசிரியராகவும் இளைப்பாறிய காலத்திலும் ஆற்றிய சாதனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அவர் வாணாள் முழுவதும் தமிழுக்காகவும் தமிழ்ச் சங்கப் பெருவளர்ச்சிக்காவும் ஆற்றிய பணிகள் பலப்பல. கொழும்புத் தமிழ்ச் சங்கக் கட்டடவளர்ச்சி, நூலக வளர்ச்சி, தமிழ் மொழி வளர்ச்சி, நிதிவளர்ச்சி (பரிசில் நிதி உட்பட) என்பனவற்றை எடுத்துக் கொண்டாலே அவரது சாதனைகள் அளப்பரியனவன்றோ!
அவர் தமிழுக்காகவே குடும்ப சுகத்தைத் துறந்தவர் - பிரம்மச்சரியம், மெளனவிரதம்,
(ഞഖകfകി
 

கம் வளர்த்த தமிழவேள் க.இ.க.கந்தசுவாமி
பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் பி.ஏ
உண்ணாவிரதம், தியானம் என்பவற்றை இறுக்கமாகக் கடைப்பிடிப்பவர். இவரது ஆன்மிக பலத்தாற்றான் இத்தனை அருஞ்சாதனை களையும் செய்தார் என்பது திண்ணம்.
தமிழவேள் சிறந்த சாதனையாளர். சாதனைகள் பலவெனினும் வேதனைகளும் சில இருந்தன. ஆனால், இவர் அவற்றைத் துச்சமாக மதித்தார். இன்று வாழும் எம்போன்ற சிலருக்குத் தான் அவை நினைவில் இருக்கும். அவருக்கு ஏற்பட்ட சோதனைகளும் பல. அவற்றில் அவர் வெற்றிபெற்றார் என்றே சொல்ல வேண்டும். இவைகளும் பதிவேட் டில் பதிவுபெற வேண்டியனவே. தமிழவேள் 1963ஆம் ஆண்டில் கொழும்புக்கு ஆசிரியராக வந்த காலந்தொடக்கம் இறக்கும் வரை (45 ஆண்டுக் கால) நீண்டகாலத் தொடர்பு எம்மிடையே உண்டு. இதனையறிந்தே நினைவு மலராசிரியரும் இக்கட்டுரையை வரையுமாறு கேட்டுக்கொண்டார். தமிழவேள் கொழும்பிற்கு ஆசிரியராக இடம்மாறி வந்த போது இசிபத்தன கல்லூரியில் யானும் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பின்னர், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூற் பகுதியில் எழுத்தாளராக, பதிப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலப் பகுதியில் ஆலோசனை சபை உறுப் பினராகத் தமிழவேளையும் சேர்த்துக் கொண்டேன்.
க்குக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தொடர் 1959ஆம் ஆண்டிலிருந்தே இருந்து வருகிறது. அக்காலத்தில் பண்டிதர் கா.பொ "இரத்தினம் அவர்கள் சங்கத் தலைவராக இருந்தார். அக்காலத்தில் சங்கக் கூட்டங்கள் ஒரு பழைய வீட்டிற்றான் நடைபெற்றுவந்தன. 1963இல் கொழும்புக்கு வந்து சேர்ந்த தமிழவேளும்
15)

Page 18
: MabadwiÁ*å
அக்காலச் சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார். இவரது காலத்தில் கணக்காளர் நாயகம் மு.வைரவப்பிள்ளை தலைவராக இருந்தார். இவர்தான் சங்கமேல் மாடிக் கட்டடத்திற்கு கால்கோள் எடுத்த பெருந்தலை வராவர். இவர் 1963-65, 1975-77 ஆகிய காலப்பகுதிகளில் சங்கத்தின் தலைவராக விளங்கியவர். இவருடைய தலைமைத்துவத்தில் முற்பாக முதலிருமாடிகளும் 1975இல் நிறைவாகின. (இதனை எமது சங்கக்கட்டட வரலாற்றுக் கவிதைகளிலும் காணலாம்) சங்கக் கட்டடவரலாற்றில் முக்கியத்துவம் பெறும் மு.வயிரவப்பிள்ளை அவர்களுக்கு நினைவு விழாவாக ஆவன செய்யப்படவில்லையென்ற ஆதங்கம் தமிழவேளுக்கு இருந்தது. தமிழவேளும் 1975இல் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தார். அன்றிலிருந்து இருபது (20) வருடகாலம் தொடர்ந்து பொதுச்செயலாளராக் கடமையாற்றிய பெருமையும் அவருக்குண்டு. யானும் அவருடன் நீண்டகாலம் துணைச் செயலாளராகக் கடமையாற்றியமையால் அவரது செயல்திறமைகளைக் கண்டு வியந்தேன். சங்கவரலாற்றை “பொன்விழாப் போற்றிசையிலும் (1942-1992) இலக் கரியச் செபம் மல் செ.குணரத்தினம் அவர்களும் கவிதை வடிவிற் பதிவு செய்துள்ளார்கள். இவர் சங்கத்தில் பத்துவருடகாலம் தலைவராக விளங்கிய சிறப்புப்பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
தலைநகரில் தமிழ்ச் சங்கத்தைக் கட்டிக் காத்த பெருமைக்குரியவர் மட்டுமன்றி தமக்குமுன் சங்கத்தைத் தாபித்தவர்களைப் பெருமைப் படுத்திய பண்பாளரும் தமிழவேள் ஆவார். 1942ஆம் ஆண்டில் தமிழ்ச் சங்கத்தை ஆரம்பித்தவர் பொன்னம் பல முதலியார் என்பவராகும். இதனை ஆதார பூர்வமாக நிறுவவேண்டியுமிருந்தது. பொன்னம் பல முதலியார் ‘பனைநூறு பாடிய சிறந்த புலவருமாவர். இவரைப் பற்றிய தகவல்களை அறிவதில் தமிழவேள் ஆர்வம் காட்டினார். இதற்கு எமது உதவியையும் நாடினார். அக்காலத்தில் பொன்னம்பல முதலியார் கொழும்புத்துறையில் வாழ்ந்து பொண்டிருந்தார்.
16

were
அந்நேரத்தில் கண்பார்வையிழந்தவராகவும் இருந்தார். அவரது நேரடி இனத்தவரான மங்கை ஒருவர் சைவமங்கையர் கழகத்தில் ஆசிரியை யாகக் கடமை ஆற்றிக் கொண்டிருந்தார். அவருடன் எமது துணைவியார் திலகவதி கனகரத்தினமும் ஆசிரியையாகப் பணி செய்து கொண்டிருந்தார். அவர் வாயிலாகப் பொன்னம்பல முதலியாரின் விபரங்களைப் பெற்றேன். அவற்றைத் தமிழவேளிடமும் குறிப்பிட்டேன். எமது தகவல்களுடன் தமிழவேள் யாழ்கொழும் புத்துறைக்குச் சென்றார். கண் பார்வையின்றி இருந்த பொன்னம்பல முதலியாரை நேரில் சந்தித்தார். அவருடன் உரையாடி, சங்க ஆரம்பகால வரலாற்றினைத் தெரிந்து கொண்டார். மீண்டும் கொழும்பு வந்த தமிழவேள் அவரது பனைநூறு என்ற நூலை அச்சிட்டு அறிமுக விழாவொன்றையும் சிறப்பாகச் செய்தார். அவ்விழாவில் பொன்னம்பலமுதலியாரின் இனத் தவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். இந்நூலில் எமது வாழ்த்துக் கவிதைகளும் இடம்பெற்றன. தமிழ்ச் சங்க நிறுவுநர் தினத்தை வருடந்தோறும் தமிழவேள் கொண்டாடி வந்தார். சங்கத் தலைவர் கள் தமிழறிஞர்கள் கொடை வள்ளல்கள் ஆகி யோரையும் போற்றினார்கள் தமிழவேள். அவர் களது நிழற்படங்களையும் சங்க மண்டப முகட்யில் தொங்கவிடும் ஏற்பாடுகளையும் செய்தார்.
1983 இனக்கலவர காலத்தில் ሪቻHjölffigD6ፂ)
1983 இல் ஏற்பட்ட இனக்கலவர காலத்தில் தமிழ்ச் சங்கத்தையும் நூலக நூல்களையும் காப்பாற்றிய பெருமை தமிழவேளுக்கே உரியது. தமிழ் மக்கள் உடைமைகளையும் இருப்பிடங் களையும் இழந்த காலகட்டம் அது. சங்கத்தின் சுற்றாடல் அயல் வீடுகள் தீக்கிரையாகின. தமிழ்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடிவிட்டனர். பலர் கப்பலில் யாழ்ப்பாணத்திற்கும் சென்றுவிட்டனர். பொதுச் செயலாளர் தமிழவேள் உயிரைப் பணயமாக வைத்து சங்கத்தைக் கட்டிக்காத்தார். உணவு உண்ணாது நீர்மட்டும் அருந்தி சங்கவளவிலேயே இரு மாதங்கள் இருந்தார். இறையருளால் சங்கமும் தீ வாய்ப் படாது காப்பீாற்றப்பட்டது. பண்டா என்ற காவலாளியின் பணியும் போற்றப்பட வேண்டிய
வைகாசி )

Page 19
ஜி.
தாகும். எமது வீட்டுத் திருத்த வேலைகள் மேசன் வேலைகள் செய்து வந்தவர்தான் பண்டா. அவரையும் தமிழவேளுக்கு அறிமுகங் செய்து வைக்க காவலாளியாகப் பலவருடங்கள் நியமிக்கப்பட்டவர். சிங்களவர் எனினும் விசுவாச மாகக் கடமையாற்றியவர். சங்கத்திலேயே தங்கி நின்று இறக்கும் வரை தமிழவேளுக்கு வேண்டிய உதவிகள் எல்லாவற்றையும் செய்தவர்.
இனக்கலவர காலம் தமிழவேளுக்கு ஏற்பட்ட ஒரு சோதனைக்காலம். இரண்டாவது சோதனை காலம் தான் சங்கப் பின்வளவில் தற்காலிகமாகக் குடியிருந்த ஒரு குடும்பத்தின் 20 வருடகால வழக்கு. அக்குடும்பம் வெளியேற மறுத்தது. இப் போதிருக்கும் சங்கச் செயலகம் சங்கரப்பிள்ளை மண்டபம் எதனையும் போடமுடியாதிருந்தது. மாவட்ட நீதிமன்றத் தீர்ப்பும் அவருக்கே வாய்ப் பாக இருந்தது. பீட்டர் கெனமனின் குடியிருப்பு வாடகைச் சட்டமும் அவருக்கே அனுசரணை யாக இருந்தது. சி.இரங்கநாதன் கியூ.சி., எஸ்.நடேசன் கியூ.சி. சட்டவல்லுநர்கள் பேருதவிபுரிந்தனர். சங்க வரலாற்றிலேயே இது ஒரு பெருநிகழ்வு. இந்த இரண்டாவது சோதனை யிலும் தமிழவேள் வெற்றிபெற்றார். இக்கால கட்டத்தில் கலாநிதி.க.செ.நடராசா (ஒலிபரப்புக் கூட்டுத் தாபனப் பணிப்பாளர்) சங்கத் தலைவராக இருந்தார்.
தமிழவேளின் சமரச ஞானம், விசால ID607th IIT6760DID
அவர் இனமத வேறுபாடின்றிப் பணிசெய்தார். தமிழறிந்த முஸ்லிம் அறிஞர்களையும் ஆட்சிக்குழுவில் இணைத்துக் கொண்டார். முஸ்லிம் வள்ளல்களும் சங்கக் கட்டடத்திற்கு நிதியுதவி செய்தார்கள். கட்டடவளர்ச்சிக்கு ஒப்பந்தகாரர் ஜனாப்லாபீர், நூலக வளர்ச்சிக்கு நூலக அறிஞர் எஸ்.எம்.கமால்தீன் ஆலோசனை வழங்கச் செய்தார். பொன்விழா ஆண்டு ஆட்சிக் குழுவில் எஸ்.எம்.ஹனிபா. கவிஞர்.டாக்டர் ஜின்னாஹற் ஷரிப்புத்தீன் (இலக்கியச் செயலர்) ஆகியோரையும் இணைத்துக் கொண்டார். ஏ.எம்.நகியா சங்கச் சான்றோனாகப் 'பொன்விழாப் போற்றிசையில்’ இடம்பெறுகிறார். சிங்கள ஆசிரியராக விளங்கிய என்.டி.பீரிஸ் அவர்கள்
(வைகாசி

முற்பக்க முதலிரு மாடிகளின் ஜன்னல் சட்டகங்களை அமைக்கப் பேருதவி புரிந்தார். அதற்கு முந்தல் அன்ரனி என்பவர் அவற்றை அமைத்துக் கொடுத்தார். இதற்காக இவரது பிள்ளைகள் கல்விகற்கச் சங்கமும் நிதி உதவவும் வகை செய்தார். பலரின் நிதியுதவி யாற்றான் முற்பக்க மேல் மாடிகள் அமைந்தன. தமிழவேள் தமிழ்ப்பற்று மிக்கவர். எனினும், அனைத்து மொழிகளையும் இனங்களையும் மதிக்கும் பண்பாடு உள்ளவார்.
சங்கக் கட்டட வளர்ச்சி
தமிழவேள் கொழும்பிற்கு வந்த காலத்தில் சங்கக் காணியில்(40பேர்ச்) ஒரு பழைய வீடும் வாழைத் தோட்டமுமே இருந்தன. அவரது 40 காலச் சங்கப் பணியின் பயனாக இன்றைய நிலைக்குச் சங்கக் கட்டடங்கள் வளர்ந்திருக் கின்றன. இன்று 3 மாடிகள் கொண்ட முற்பக்கக் கட்டடம் அழகு செய்கிறது. பின்பக்கத்தில் சங்கரப்பிள்ளை மண்டபம், நூல் நிலைய மண்டபம் (1ஆம் மாடி), நவரட்ணசிங்கம் மண்டபம்(2ஆம் மாடி), சுப்பிரமணியம் மாலதி மண்டபம்(3ஆம் மாடி), தங்கும் அறைகள் (2ஆம், 3ஆம் மாடிகளில்), நிலத் தட்டில் விநோதன் கேட்போர் கூடம், சங்க அலுவலகம் என்பன அமைந்திருக்கின்றன. தமிழவேளின் வாணாட் காலத்திலேயே(1975இல்) அவர் எடுத்த கட்டடப் பணி 2006இல் நிறைவு பெற்றது. இவரது சேவை நலத்தைப் பாராட்டிய சங்கமும் இக்கட்டடத் தொகுதியில் ஓர் அறையில் இவரைக் குடிய மர்த்தி வைத்தது. இறக்கும் வரை சங்கத்திலேயே குடியிருந்தார். 89 வயதில் இறந்தபோதும் சங்க மண்டபத்திலேயே மரணச் சடங்கை விமரிசையாக நடத்திவைத்தது தமிழ்ச் சங்கம். அவரது நினைவாக சங்க முற்பக்க மண்டபம் தற்போது தமிழவேள் இ.க.கந்தசுவாமி மண்டபம் எனப்பெயரிடப்பட்டு தலைநிமிர்ந்து நிற்கிறது.
சங்கக் கட்டடம் ஒரு நாளில் எழுந்தது அன்று; Rome was not built in a day 56(3u 956)ist பணத்திலோ ஒருவர் முயற்சி யாலோ எழுந்ததும் அன்று. பலரின் நிதியுதவியால் - பலரின் கூட்டு முயற்சியால் எழுந்தது என்பதனையே கண்டோம். ஆனால், இவற்றிற்கு அச்சாணியாக விளங்கியவர்
7Z}

Page 20
ഴ്ച
s Asaspillau
தான் தமிழவேள். அவருக்கு ஆன்மசக்தியும் இறைசக்தியும் இருந்ததென்பதையே அவர் வரலாற்றில் கண்டோம்.
நூலக வளர்ச்சியும் தமிழவேளும்
1963இல் இருந்த ஆட்சிக்குழு சிறு நூலகப் பொறுப்பைத் தமிழவேளிடம் கொடுத்திருந்தது. சிறிய அறையில் (வித்வான் வ.மு.கனகசுந்தரம் காலத்தில் சேர்த்து வைத்த) 100 நூல்களுடனும் ஓர் அலுமாரியுடனும் இவர் ஆரம்பித்தார். அன்பளிப்பாகவும் விலையாகவும் நூல்கள் சேர்ந்தன. அக்காலத்தில் தலைவராக (1963 - 65) இருந்த பிரதிக் கணக்காளர் நாயகம் மு.வயிரவப்பிள்ளை இவர் பணிக்குப் பெரிதும் உதவினார். நூல்கள் அதிகமாகிப் பெரிய அறைகளில் இடம்பெற்றன. தமிழவேளின் தொடர்ந்த முயற்சியாற்றான் நூலகம் வளர்ந்தது. முற்பக்கக் கட்டட வேலை பூர்த்தி யானதும் மூன்றாம் மாடியில் இந்த நூலகம் மிக முக்கியமான நூல்களைக் கொண்டிருந்தது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாட நூல்களை எழுதுவதற்கு யானும் பாடநூல் எழுத்தாளர்களும் இந்நூல்களைப் பெரிதும் பயன்படுத்தினோம். நூலகத்திலிருந்த உசாத் துணை நூல்களும் எமக்குப் பயன்பட்டன. தமிழ்நாடு அரசும் ஏராளமான நூல்களை வழங்கி நூலகம் வளர உதவியது. இதற்கும். தமிழவேளின் முயற்சியே காரணம். அவர் காலஞ்சென்ற எம்.ஜி.இராமச்சந்திரனைச் (M.G.R) சந்தித்து அவரது உதவியைக் கேட்டிருந்தார். அதன் பயனாகவே பல நூல்கள் வந்து சேர்ந்தன. நூலகமும் வளம்படுத்தப்பட்டது. சங்க நடுப்பகுதி முதலாம் மாடியில் அமைந்த நூலகத்தின் திறப்பு விழா சட்டத்தரணி சோ.தேவராசா தலைவராக இருந்த வேளையில்(2002) இடம்பெற்றது. புதிய கட்டடத்தில் தமிழவேளுக்குச் சங்கத்தின் பூரண அனுமதியுடன் வசிப்பிடத்தை ஒதுக்கிக் கொடுக்கச் செய்தவர்கள் இவரும் நூலகச் செயலாளராக இருந்த க.குமரன், அன்றைய பொதுச்செயலாளர் ஆ.இரகுபதி பாலழரீதரன் அவர்களுமேயாகும். நூலகம் வளர்ந்து சட்டத் துறை, சிறுவர் நூலகப் பகுதி, இலக்கியத்துறை, உசாத்துணைப் பகுதி, சஞ்சிகைப் பிரிவு போன்ற பலதுறைகளையும் உள்ளடக்கிய பெரிய நூலகமாகி இன்று திகழ்கிறது. நூலகத்தில்
18

45,000 நூல்கள் உள்ளன. இலங்கையிலேயே முதல்தரமான நூலகமாகவும் விளங்குகிறது எனின் மிகையாகாது.
முன்னைநாள் தலைவராகிய இலக்கியச் செம்மல் செ.குணரத் தினம் அவர்களின் வேணவாவின் படி, இத்தமிழ்ச் சங்கத்திற்குரிய பொறுத்த கடன்பாடு உண்டு. தமிழ்ச் சங்க நூலகத்திற்கு தமிழவேள் இ.க.கந்தசாமி நூலகம் எனப் பெயரிடப்படல்வேண்டுமென்பதே அது வாகும். இந்நூலகத்தைத் தாங்கிநிற்கும் மண்டபத் தூண்கள் இவர் 10வருடகாலம் தலைவராக இருந்த காலத்திலேயே நாட்டப்பட்டன. இவரும் இச்சங்கக் கட்டடப் பணிக்காகச் சொந்தப் பணம் ரூபா ஒரு இலட் சத்து முப் பத் து ஐயாயிரம் (135,000) வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்விப் பணி
தமிழவேள் இன்றைய ரியூட்டரி கல்வி முறைக்கு முழுமாறானவர். "இலவசமாகக் கல்வியைப் பிள்ளைகளுக்கு வழங்கவேண்டும்” என்ற கொள்கையுடையவர். அவர் செயலிலும் இதனை நிலை நாட்டினார். இவர் பயிற்சி பெற்ற சிறந்த ஆசிரியர்; றோயல் கல்லூரியிலும்(Primary) கல்வி கற்பித்து இளைப்பாறி யவர். ஆரம் பத்திலும் சங்கவளவில் இலவச மாகவே தமிழ், சமயம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பித் தார். 1983இற்குப் பின் உயர்தரவகுப்புகளுக்கும் இந்துப் பண்பாடு, தமிழ் வகுப்புக்களை ஏற்பாடு செய்தார். யானும் அவரும் இலவசமாகவே அவ்வகுப்புக்களை நடத்தினோம். பின்னர், பாலபண்டித பண்டித வகுப்புக் களையும் நடத்தினோம். எல்லாம் இலவச வகுப்புகளே.
பண்டித வகுப்புக்களை நடத்துவதற்குப் பண்டிதர் க.உமாமகேசுவரன் பண்டிதர்(கசின்) சிவகுருநாதன். பண்டிதர் சுப்பிரமணியம். பண்டிதர் ஆ.பொன்னையா போன்றோர்களும் எமக்கு உறுதுணையாகவிருந்தார்கள்.
தமிழவேள் சங்கத்தில் சிங்களம் கற்பிப்பதற்கு என்.டி.பீரிஸ் அவர்களை ஏற்பாடு செய்திருந்தார். அவர் நோயுற்ற பிற்காலத்தில் எமது சிபாரிசின்படி எமது நண் பர் டி. பே ம தாச தமிழ்
வைகாசி )

Page 21
ജി,
மாணாக்கர்களுக்குச் சிங்களம் கற்பித்து வருகிறார். தமிழவேளின் இனமத மொழி வேறுபாடின்றிச் செயற்பட்டமைக்கு இவைகள் அருஞ்சான்று களன்றோ!
விழாக்களும் வெளிநாட்டுத் தொடர்புகளும்
தமிழ்நாட்டிலும் பிறநாடுகளிலும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் புகழைப் பரப்பியவரும் தமிழவேளே. நெடுஞ்செழியன் தமிழ்நாட்டில் மந்திரியாக இருந்தபோது அவரைச் சங்கத்தில் சொற் பொழிவாற்ற வைத்தார். அவர் வாயிலாகத் தான் எம்.ஜி.ஆரின் தொடர்பும் ஏற்பட்டது; நூலகத்துக்குத் தொகையான நூல்களையும் தமிழ் நாடு வழங்கியது, காமராஜ் பல்கலைக் கழகப் பேராசிரியர் தமிழாகரர் டாக்டர் சாம்பசிவனாரை ஒருமுறை தொல்காப்பியச் சொற்பொழிவுக்கு (1995இல்) அழைத்திருந்தார். அவரின் தமிழ்மாருதம்' என்ற இலக்கிய இதழ் வாயிலாகவும் தமிழ்ச் சங்கப் பணிகளும் தமிழ் நாட்டிலும் பாராட்டுப் பெற்றன. தமிழவேள் சிவபதமடைவதற்குச் சிலநாள்கள் முன்பும் நடந்த சிலப் பதிகாரப் பெரு விழாவிற்கும் தமிழ்நாட்டிலிருந்து 4 பேராசிரியர் களை அழைத்திருந்தார். 1989இல் நடந்த மோரிசியசு ஏழாவது உலகத் தமிழ் நாட்டிலும் கலந்து கொண்டு கட்டுரை படித்தார். தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தலைவர் செ.குணரத்தினம் செயலர் தமிழவேள் என்பவர்களும் யானும் கலந்து கொண்டு கட்டுரைகளும் படித்தோம். 1989ஆம் ஆண்டில் மலேசியாவில் நடந்த ஆறாவது உலகத்தமிழ் நாட்டில் கலந்து கொண்டு யான் ஆராய்ச்சிக் கட்டுரை படித்தேன். அப்போதும் தமிழவேளும் பார்வையாளராகக் கலந்து கொண்டார். கீழைக் கரையில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் மாநாட்டிற் கூடத் தமிழவேள் பார்வையாளராகக் கலந்து கொண்டார்.
இவற்றிற்கு மேலாக, தமிழ்ச் சங்கத்தில் அவர் ஏற்பாடு செய்து விழாக்களை வரிசைப்படுத்திப் பார்ப்போம். இவற்றில் தமிழ் நாட்டு அறிஞர்களை யும் பேராசிரியர்களையும் கலந்து கொள்ளவும் வகை செய்தார். தமிழையும் சங்கத்தின் புகழையும் எட்டுத் திசையும் ஒலிக்கச் செய்தார்.
( வைகாசி

தமிழ்ச் சங்கப் பொன்விழா (1992) திருக்குறள் விழா (2000) தொல்காப்பியவிழா (2004) கற்பிட்டியில் சைமன் காசிச்செட்டி
நினைவுவிழா - சிலை நிறுவல் (2007) 5. சிலப்பதிகாரப் பெருவிழா (2008) ஆகிய பெருவிழாக்கள் அவரது ஆளுமையையும், தமிழிலும் தமிழ்ப்புலவர் களிலும் அவர் கொண்டிருந்தபற்றையும் உலகத்திற்கு எடுத்துக் காட்டுவனவாக அமைந்தன. ஈழத்துப் பூதந்தேவனாரின் பெயரில் ஒரு சங்கம் அமைத்தும் விழாக்கள் எடுத்தார்.
தமிழவேள் இறக்கும்வரை தமிழை நேசித்தார். தமிழையும் தமிழ்ச் சங்கத்தையும் உச்சநிலைக்கு வளர்த்தார். தமிழ்ச் சங்கத்தின் புகழை எட்டுத் திசையும் பரவச் செய்தார். தம்மையே இவற்றிற்காக அர்ப்பணித்தார். அவரது பெயர் என்றென்றும் நிலைக்க்ச் செய்ய நாமும் தமிழ்ச் சங்கமும் செய்யப் போவதென்ன? தமிழவேளின் ஆன்மா சாந்தி அடைவதாக.
தமிழவேளின் வாணாளில் பூரணமாக நிறைவேறாத இரு ஆசைகள் இருந்தன. ஒன்று தமிழ்ச் சங்கத்தின் தலைமையகம். தமிழர் பகுதியான மாங்குளத்தில் ஈழத்துப் பூதந்தேவனார் காணியில் அமைய வேண்டும்; இதற்குரிய விசாலமான காணியை (30ஏக்கர்) கொழும்புத் தமிழ்ச் சங்கம் பல ஆண்டுகளுக்கு (1983இல்) முன்பே வாங்கியுள்ளது. இதற்குரிய ஏற்பாட்டைச் செய்தவரும் அவரே. அத்தோடு ஈழத்துப் பூதந்தேவனார் புலவர் கழகத்தையும் அமைத்து விட்டார். சங்கமென்றால் புலவர்களும் அறிஞர்களும் கூடும் இடமாக இருக்கவேண்டு மென்பது அவரது கொள்கை.
இரண்டாவது ஆசை சிறுவர்களிடையே தமிழைப் பரப்புவது; வளர்ப்பது. அதற்காகத் தமிழ்ச் சங்கம் அவர்களது கல்வி விடயத்திலும் அக்கறை காட்டவேண்டும்; தமிழ்ச் சங்க வகுப்புக்களைத் தமிழ்ச் சங்கமே பொறுப்பெடுத்து நடத்தவேண்டும்.
தமிழவேளின் ஆன்மா சாந்தியடைய ஆவனசெய்வோமாக:
19)

Page 22
அற இலக்கியப்
ஒரு சமூக அமைப்பின் அடிப்படையே அக்கால இலக்கியத்தின் வடிவங்களையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கிறது என்பது மார்க்சியரின் கருத்து. சமூக அமைப்பு மாறும் போது, இலக்கியத்தின் வடிவமும் உள்ளடக் கமும் மாறுகின்றது. சங்க காலத்திற்குப் பிறகு தமிழ் நாட்டில் அமைதிகுன்றியது. குறுநில மன்னர்களிடையே போர். சமுதாயத்தில் அமைதி யின்மை. எங்கும் கொலையும் கொள்ளையுமாக இருந்தது. களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தார் ஆட்சி செய்தனர். இக்காலத்தை இலக்கிய ஆய்வாளர் கள் சங்க மருவிய காலம் என்று கூறுகிறார்கள்.
சங்க காலம் மக்களின் இயற்கை வாழ்க்கையை பிரதிபலித்தது. காதல் வாழ்க்கை யையும் போரின் பெருமிதத்தையும் சங்க இலக்கியங்கள் பாடின. இனக்குழுக்களாக வாழ்ந்தபோது மக்களிடையே ஏற்றத்தாழ்வு இருக்கவில்லை. வேட்டை ஆடுவதும், மந்தை மேய்ப்பதும் தான் அவர்களுடைய தொழிலாக இருந்தது. பொதுவுடைமைச் சமுதாயமாக வாழ்ந்த இம்மக்களிடையே ஈகை, விருந்து பகிர்ந் துண்ணுதல், அன்பு போன்றவை பழக்கமாக இருந்தன. களவு மணத்தைக் கூடப் புலவர்கள் போற்றினர். தனி உடைமையும், அரசும் ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியதும் சங்க இலக்கியத்திற் கான தேவையில்லாமல் போய்விட்டது. திருக்குறள் போன்ற அற நூல்களுக்குத் தேவையேற்பட்டது. சமூக மாற்றங்களுக்கேற்ப இலக்கியங்கள் தோன்றின. சங்க மருவிய காலத்தை அறநூற் காலம் என்று ஆய்வாளர்கள் கூறுவர்.
சங்க மருவிய காலத்தில் அறம் முதன்மைப் பொருளாக மாறியதற்குரிய காரணங்கள் எவை? நாம் ஏற்கனவே கூறியது போலக் குறுநில மன்னர்களிடையே ஏற்பட்ட போர்களினால் மக்கள்
20

தமிழில் தோன்றிய ) வர்க்கச் சார்புடையது
அ.முகம்மது சமீம்
பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். வறுமை தாண்ட வமாடியது. உற்பத்தி குறைந்தது. சமாதானமற்ற நிலையினால் மக்கள் தங்கள் உயிரையே காப்பற்றிக் கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. மக்கள் ஒருவரையொருவர் அடித்தும் கொன்றும் தம் வாழ்க்கையை நடத்தினர். ஒரு சிலர் தங்கள் அதிகாரத்தைச் செலுத்துவதற்கும், கொள்ளை யடிப்பதற்கும், சொத்துச் சேர்ப்பதற்கும் கூலிப் படைகளை வைத் திருந்தனர். இவர்கள் நிலத்தைத் தங்கள் உடைமையாக்கியதோடு வாணிபத்திலும் ஈடுபட்டுப் பொருள் சேர்த்தனர். இந்த வர்க்கத்தினர் மக்களை ஏழைகளாக, அடிமை நிலையில் வைத்திருப்பதற்காக, விதியைப் பற்றியும், தர்மத்தைப் பற்றியும், நீதியைப் பற்றியும் போதிக்கத் தலைப்பட்டனர்.
அறநூற்காலம் கி.பி.3ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலம் என்ற எஸ்.வையாபுரிப் பிள்ளையின் கணிப்பை மார்க்சியர்களும் ஏற்றுக் கொண்டனர். தொல்காப்பியர் அறத்தைப் பற்றிப் பல இடங் களில் கூறுகிறார். இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு (தொல்-1038) அறம்புரி நெஞ்ச மொடு(தொல் 1093). சங்கம் மருவிய காலத்தில் அறம் முதன்மைப் பொருளாகியது. பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் இவை ஆறோடு அகம் பற்றியவை ஆறு நூல்கள். இவை ஆறோடு புறம் பற்றிய நூல்களான திருக்குறள், நான் மணிக்கடிகை போன்ற நூல்களும் அறம்பற்றியே பேசுகின்றன. இவ்வற நூல்கள் தோன்றுவதற்குச் சமுதாயத்தில் ஏற்பட்ட மாறுதல்களே காரணம் என்பர் மார்க்சியர்கள். சமூக மாற்றங்களுக் கேற்பக் கருத்துக்களும் மாறுபடுகின்றன. சில அறநூல் கருத்துக்கள் நிலையானவை என்று சொல்ல முடியாது. ஆனால், சில அறக் கருத்துக்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை. உற்பத்தி உறவுகளின் அடிப்படையில்
வைகாசி)

Page 23
ஜி.
எழும் சில அறக் கருத்துக்கள் நாம் ஏலவே கூறியது போல, ஆளும் வர்க்கத்திற்குச் சார் பானவையாகத் தான் அமையும். சங்க மருவிய காலத்தில் தோன்றியது தான் திருக்குறளும். காமத்துப்பாலைத் தவிர்த்து ஏனைய இன்பத்துப் பால், அறத்துப்பால் ஆகிய பாகங்களைப் பார்த்தால் திருக்குறள் ஆளும் வார்க்கத்திற்குச் சார்பாக எழுந்த நூல் என்று கூறலாம். மதம் என்ற போர்வையில் மக்களை அச்சப்படுத்தி அடிமைப்படுத்தி வைத்திருந்தது என்ற மார்க்சியக் கொள்கைக்கேற்ப குறள்கள் அமைந்திருக் கின்றன. கடவுளொடு மன்னனையும் இணைத்து மக்கள் மனதில் நிலப் பிரபுத்துவத்தின் தலைவனை நிலைப்படுத்துகிறார் வள்ளுவர்.
"முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப்படும்.” வள்ளுவர் மக்களை நிலப்பிரபுத்துவ அரசியலின் ஆதிக்கத்தின் அடித்தளத்துக்குத் தள்ளிவிடுகிறார் என்கிறார் க.இராசாமணி. பொதுவாக, வள்ளுவர் ஆதிக்க வர்க்கச் சார்போடுதான் குறளைப் படைத்துள்ளார் என்பது மார்க்சிய வாதிகளின் கருத்து. தனியுடை மையைப் போற்றி, அரசு என்னும் அமைப்பைப் பாதுகாப்பதே அவருடைய நாட்டமாக இருந்தது. "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற குறள். தனியுடைமையை வாழ்த்தி மக்களைப் புறக்கணிக்கிறது. நிலவுடைமைக் காலத்தில் அரசு என்ற நிறுவனம் தோன்றிவிட்டது. ஆகவே, நிலவுடைமையையும் அரசையும் காப்பாற்றத் தோன்றிய நூலே திருக்குறள். நிலவுடைமைச் சமுதாயத்தைப் பேணுவதற்கு திருக்குறள் இலக்கண நூலாக விளங்குகிறது என்பது சிலரின் கருத்து. வணிக வர்க்கத்துக்குச் சார்பாகப் பேசியவர் வள்ளுவர் என்பது வேறு சிலரது கருத்து. அரசுக்கும் நிலவுடைமைக்கும் வணிக சமூகத்திற்கும் ஆதரவாக வள்ளுவர் செயல்பட்டுள்ளார் என்பது இவர்களின் கருத்து.
சில இடங்களில் வள்ளுவருடைய குறளைப் பார்க்கும்போது அவர் வர்க்கப் போராட்டத்தைத் தடுக்கவும் கூர்மழுங்கவும் செய்தார் என்று எண்ணத் தோன்றுகிறது. “உழைப்பாளி உரிமை
( வைகாசி

பெறத் துடிப்பது நிலவுடைமையாளரின் இலாபத்தைக் குறைக்கும் முயற்சியாகும்" என்று கூறுகிறார். பிறிதோரிடத்தில், "நிலச் சொந்தக் காரன் நிலத்தில் கண்ணுங் கருத்துமாயிருந்தல் வேண்டும். உழைப்போர்களை நம்பி விட்டுவிடக் கூடாது. இப்படி விட்டுவிட்டால் நிலத்தின் விளைவு குன்றும்” என்றும் கூறுகிறார்.
“செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும் (1039)
ஆனால், மார்க்சிய வாதியான கைலாசபதி மார்க்சியர்களின் இக்கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். “தனியுடைமையை வள்ளுவர் ஆதரித்தவர் என்று கூறுவதற்கும் இடமில்லை. தனியுடைமையை மாற்றிப் பொதுவுடைமையை அமைக்க வேண்டும் என்னும் அடிப்படையிலான இயங்கியல் பார்வை அவருக்கிருக்கவில்லை. கைலாசபதியின் பார்வை மார்க்சிய இயங்கவியல் தத் துவத்துக் குப் பொருந்தவில் லை. திருக்குறளைப் பற்றிய ஆய்வில் கைலாசபதி இறங்கவில்லை. பொதுவான சில கருத்துக் களையே கூறுகிறார். "மற்றைய நூல்களிலும் சிறந்தது என்பதனால் குறளுக்கு உலகப் பொதுமை வராது. மற்றைய அறநூல்களிற் காணப்படும் பண்புகளே திருந்திய வடிவத்தில் காணப்படுகின்றன.” என்று கூறுகிறார்.(ஒப்பியல் இலக்கியம் -பக்கம் 14)
திருவள்ளுவர் காலத்தில் வடமொழியினதும், பார்ப்பனர்களினதும் செல்வாக்கு இருந்தது என்பதற்குக் கெளடில்யவின் அர்த்தசாஸ்திரத்தி லுள்ள கருத்துக்கள் குறளிலும் இருந்தன என்பதற்கு ஆதாரமாகப் பேராசிரியர் கா.சிவத்தம்பி இருநூல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். அர்த்தச் சாஸ்திரத்தில் அரசன் ஒரு சர்வவல்லமை பொருந்தியவனாகக் காட்சியளிக் கிறான். ஆனால், திருக்குறளில் அரசன், அரசுரி மையின் பிரதிவிம்பமாகக் காட்சியளிக்கிறார் என்பது சிவத்தம்பியின் கருத்து.
பார்ப்பனர்களின் யாகம் போன்ற வழக்கங் களைச் சமணமும் பெளத்தமும் எதிர்த்தன. மந்தை மேய்க்கும் சமூகத்தில் மிருகங்களைக் கொல்வதால் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்
21 )

Page 24
്
பட்டது. அதனாற்றான் திருக்குறள் புலால் உண்பதை எதிர்த்தது. வேதநூல்களில் உள்ள கருத்துக்களைப் பெளத்தமும் சமணமும் எதிர்த்தன. இக்கருத்துக் களைத் திருவள்ளுவர் எதிரொலித்தார். வணிக சமூகத்திற்குச் சார்பாக வள்ளுவர் குரல் எழுப்பினார் என்ற கருத்தும் மார்க்சியர்களிடையே உண்டு. கொடுங்கோல் மன்னனை எதிர்த்த வரை சமுதாயத்தின் குரலாகவும் குறள் ஒலித்தது.
சங்க மருவிய காலத்தில், பெளத்தமும் சமணமும் தமிழ் மக்களிடையே பரவியிருந்தன. இக்காலப் பகுதியில்தான் வணிகருடைய எழுச்சியைக் காண்கிறோம். சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் வணிக சமுதாயத்தைப் பிரதிபலிப்பன என்று கைலாசபதி கூறுகிறார். அரசனுக்கு ஒப்பானவன் மருத்துவன் என்ற கருத்தை இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் வைக்கிறார். இளங்கோ அடிகளின் காலத்தில் பேரரசுகள் தோன்றி விட்டன. தனிப்பாடல்களாக, குழுத்தலைவனைப் புகழ்ந்து பாடிய கவிதைகள் காப்பிய வடிவுக்கு இடம் கொடுத்தன. இப்படித் தோன்றிய காவியங்களில் சிலப்பதிகாரமும் ஒன்று. உதிரிப்பூக்களாக இருந்த தமிழ்ச் செய்யுள்கள் நீள் கவிதைகளாகப் பரிணமிக்கத் தொடங்கின. குறுநில மன்னர்கள் மறைந்து பேரரசுகள் தோன்றிய சூழலில்தான் காவியம் தோன்றுகிறது. அரசர்களும், பிரபுக்களும் உயர் குடிப்பிறப்பினரும்தான் காவியத்தின் தலை மக்களாய் அமைந்தனர். ஆனால், வரை விலக் கணம் , சிலப் பதகாரத் திற்கும் , மணிமேகலைக் கும் பொருந்தாமல் போய்விடுகிறது. கிரேக்க இலக்கியத்தில் EPC என்ற காப்பிய வடிவமும், வடமொழியில், இராமாயணமும் மகாபாரதமும் தோன்றிய கால கட்டத்தில் தான் சிலப்பதிகாரத்தைத் தமிழில் இளங்கோ எழுதினார் என்பது பலரது கருத்து. காவியம் நிலமான்ய சமுதாயத்தின் விளை பொருள். உயர்வகுப்பினரின் ஆசை அபிலாஷை களைப் பேணுவதையும், பிரபுத்துவ வர்க்கத்தைப் பிரதிபலிப்பதாயும் அமைந்தது என்பது நுஃமான் போன்றோரின் கருத்து. “உலகம் என்பது உயர்ந் தோர் மாட்டே” என்பது பிரபுத்துவக் கோட்பாடு. இதற்கு அமையவே காவியங்கள் படைக்கப்பட்டன.
22

சிலப்பதிகாரம் தோன்றிய காலத்தில் மதங்களின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. அரசுக்கும் வணிகச் சமூகத்திற்குமிடையே நடந்த போராட்டத்தைத் தான் சிலப் பதிகாரம் பிரதிபலிக்கிறது என்பது மார்க்சியரின் கருத்து. அரசுக்கும் வணிக வர்க்கத்திற்கும் நடந்த மோதலில் இளங்கோ வணிகர்கள் பக்கம் நிற்கிறார்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது உம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந் தூட்டும் என்பது உம் ஆழ்வினைச் சிலம்பு காரணமாகச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்
என்று இளங்கோ தன் நோக்கத்தைக் கூறுகிறார்.
இதை மார்க்சியக் கண்ணோட்டத்தில் கைலாசபதி பின்வருமாறு விளக்குகிறார்.
“மன்னனை முதலாகக் கொண்டு அதன் மூலமாகத்தமது வர்த்தகச் செயற்பாட்டை நடத்துவரேனும் மன்னனைக் கட்டுப்படுத்தவும் கண்டிக்கவும் தயங்கமாட்டார் என்பதை இருநூல்களும் காட்டும். அறங்கள் கூறுவதாயின் அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும் என்னும் கோஷத்திற்குப் பின்னால் வணிகரின் வலிய கரங்களைக் காணலாம்.’’ என்று 'கைலாசபதி பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலில் கூறுகிறார்.
மணிமேகலை என்ற காப்பியத்தை எழுதிய சாத்தனார் பெளத்த சமயத்தைச் சேர்ந்தவர். புத்த மதத்தின் வீழ்ச்சிக் காலத்தில் எழுந்த ஒரு கற்பனைக் காவியம் தான் மணிமேகலை. புத்தமதம் பல நாடுகளிலும் பரப்பப்பட வேண்டுமென்றால், அரசர்கள் இந்நாடுகளில் தம் ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டும். புத்த சமயத்தைக் கடைப்பிடித்தால் சிற்றரசன் பேரரசன் ஆவான் என்றும் இது அரசர்களுக்கு அறிவுரை கூறுகிறது. இது ஒரு சமூகச் சீர்திருத்த நூல் என்றும் கூறலாம். பசிப்பிணியைத் தீர்ப்பது துறவிகளின் கடமை என்றும் கூறுகிறது. இதனால் தான் "அமுதசுரபி' என்று ஒரு உணவுவற்றாத பாத்திரத்தையும் படைத்தது. புத்தசமயப்
வைகாசி)

Page 25
ஜி.
பிரசாரத்துக்காக எழுதப்பட்டது மணிமேகலை என்பதை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வர்.
அடுத்து பக்தி இலக்கியத்தைப் பற்றிய கைலாசபதியின் கருத்துக்கள் புதிய பார்வை யைக் கொடுத்தது. ஆறாம் நூற்றாண்டு தொடக்கம், ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் தமிழ் நாட்டில் நாயன்மார்களும், பிறகு ஆழ்வார்களும் தோன்றி, சைவத்தையும், வைஷ்ணவத்தையும் வளர்த்தார்கள் என்பது வரலாறு. இக்காலப் பகுதியில் தமிழ் நாட்டின் பெரும்பகுதியை ஆண்டவர்கள் தமிழர்களல்லாத பல்லவர்கள். பல்லவர்களின் ஆட்சியில் முற்பகுதி யில் சமணர்களின் செல்வாக்கு தமிழ் நாட்டில் மேலோங்கி இருந்தது. சமண சமயத்தைச் சார்ந்த வனான மகேந்திரவர்மனை சைவத்திற்கு மாற்றிய பெருமை திருநாவுக்கரசரைச் சாரும். இதன்பிறகு தமிழ்நாடெங்கும் சைவம் பரவுவதற்கு பல்லவ அரசர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. அரச ஆதரவு பெற்ற மொழியாக இருந்த ‘பிராகிருதம் ஒதுக்கப்பட தழிழ் அரியாசனத்தில் ஏறியது. பல்லவர் காலத்தில் தான் சமண சமயத்துக்கும் சைவசமயத்திற்குமிடையே பலத்த போராட்டம் நிகழ்ந்தது. இந்த மதப்போராட்டம் உண்மையில் ஒரு வர்க் ககப் போராட்டமே என்பது மார்க்சியர்களின் கருத்து.
"மதத்திற்குள்ளும், மதங்களுக்குமிடையேயும் நடைபெறும் போராட்டங்கள் என்பன உண்மை யில் வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்கள். மதம் என்னும் போர்வையை விலக்கிப் பார்த்தால் அடியில் நடக்கும் வர்க்கப் போராட்டம் தெரியும்” என்று கூறுகிறார் எங்கல்ஸ். கி.பி.5ம் நூற்றாண் டளவிலிருந்து, 7ம் நூற்றாண்டு வரையில் சமணம் பொருளாதார அடிப்படையில் வலிமை மிக்கதாக விளங்கியது. பெளத்தம் தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. வணிக வர்க்கத்தின் தத்துவமாகச் சமணசமயப் பிரதிபலித்தது. இதைக் கைலாசபதி பின்வருமாறு விளக்குகிறார். "அறம் என்ற போர்வைக்குள் அளவற்ற செல்வத் தைக் குப்பையாகக் குவித்தனர். இதுதான் பல்லவர் காலச் சமுதாயத்திற்கும் வணிக வர்க்கத்தினருக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு என்று தோன்றுகிறது. பாழடைந்த கோவில்களைத் திருத்தும் போர்வையில் சமணர்கள் கோயில்
(வைகாசி

நிலங்களை மன்னர் ஆதரவுடன் ஆக்கிரமித்துப் பெருவாரியான நிலங்களை வைத்திருந்தனர். படைத்தளபதி களுக்கு வெகுமதியாக நிலங்கள் மன்னர்களால் கொடுக்கப்பட்டன. ஆகவே, இந்த நிலக்கிழார் களுக்கும் சமணசமயத்தை ஆதரித்த வணிகர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. நாயன்மார்கள் ஒவ்வொரு கோயிலாகச் சென்று பதிகம்பாடி, கோயில் திருத்தி, கோயில் நிலங் களை வளம்படுத்தியதனால் சமுதாயத்தில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. சிவபெருமானைப் புகழ்ந்தும், சைவத்தைப் பாராட்டியும் பாடிய நாயன்மார்கள் ஏன் சமணர்களைக் கடுமையாகச் சாடினார் என்பது பலருக்கும் புரியாமலிருந்தது. இதற்குரிய காரணத்தை கைலாசபதி கூறுகிறார். பஞ்சமும் பசியும் தாண்டவமாடிய சமுதாயத்தில் விவசாயத்தை ஊக்குவித்த நாயன்மார்களின் இந்த பக்தி இயக்கத்தை ஒரு விவசாயப் புரட்சி ustasis (Peasant Revolution) as Tsoir aspirit கைலாசபதி "வைசியூ குலத்தினருடன் வணிக வர்க்கத்தினருக் கெதிராக வேளாளர் சாதியின ராகிய நிலவுடைமை வர்க்கத்தினர் தொடுத்த பொருளாதாரப் போரானது தத்துவ வடிவில் சமணத்திற்கும் சைவத்திற் குமிடையே ஏற்பட்ட போராக மாறியது.” என்பது கைலாசபதி யின் கருத்து. ஆகவே, வணிகரின் வீழ்ச்சியின் மீது நிலப் பிரபுக்களின் செல்வாக்கு எழும்பியது. சுருங்கக் கூறின், வணிக வர்க்கமும் நிலவுடைமை வர்க்கமும் தோன்றிவிட்ட "சமூக அமைப்பை உடையது” அக்காலகட்டம். இவ்விரு வர்க்கங் களுக்கு இடையே தோன்றிய முரண்பாடே பெளத்த - சமண மதங்களுக்கும் பக்தி இயக்கத்திற்கும் தோன்றிய முரண்பாடு என்று மார்க்சியர்கள் கருதுவர்.
பல்லவர் காலத்தில் சமண சமயத்திற்கும் சைவசமயத்திற்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் சைவ சமயத்தின் வெற்றியில் முடிந்தது. சைவத்தை ஆதரித்த நிலச்சுவாந்தாரர்களின் வெற்றியாக மாறி, பல்லவர்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி செய்த சோழப்பேரரசின் காலத்தில் நிலவு டைமைச் சமுதாயம் உச்ச நிலையை அடைந்து சோழப்பேரரசின் பெருந் தத்துவமாக சைவ சித்தாந்தம் மிளிர்ந்தது என்பது கைலாசபதியின் (plg6).
23 )

Page 26
ഴ്ച
சங்கப்பதிவேடு
"
ج: مہ طرقیبہ بندی، ہبہf مسسسسس عليه أمه وجعتكم شته. " عن عسؤى ****'(< ' .sival( & مارهٔ
༈ ༢༠྾་་་་་་་། citry ونڈی
لیم شحمت ختم ہو لہب یہ ضیم زمہ ༧༠༦༠་ ༧༠ ལྷ་དང་ཀོ་ཊི་ཛི་༧༠༠་་་་་་་་་་་་་ { ( مه%,* ۶۶ به چهارشخطے
فة منه بينهش معه 5 . خطر%شه- 30 ام و نماد نیز نام هند قیامها و نیمه نه به روز سrژی . «بلو خم شده بوده لر نوازدوازم
8 عده، خط «نامهریور ثم يقيم. a . ፕ,Ø **** بیم‘‘میم
.. ' 24 نہ کسی مدہوشمنہ :*... عدسہ ఫ్ట్కు44 **** హో
... 3
v. شمہ ‘‘ ۂ خ؟
象 。
季 *
*** ** **
8
as
等 * 、 » • } : ' ఖజ్, وية ، بما
\
நான் இன்று இந்த கொழும் கூட்டத்தில் பங்கு பெற்று 'முத்தமி பேறுபெற்றேன்.
சங்கம் பல ஆண்டுகளாக அறிவேன். 1957இல் இங்கு வந்த அறிந்து சொற்பொழிவு நிகழ்த்திே
மொழிப்பற்றுள்ள நன்மக்கள் நடத்துகின்றனர். இலங்கை வாழ இச்சங்கம் மொழிப்பற்றை ஊட்டில் உரியது.
இச்சங்கம் மேன்மேலும் வளர்ச் சிறப்படைய வேண்டும் என முழு
திருச்சி.8 17.11.1968
C24

களிலிருந்து.
s. * ۔نو نہ خ1 ملی۔ ’’عہ حدہ Šኧን う *గత ہرہ، خاصہ "* وہ وہ ب’’ 43 ~-22 " جَرِي ٹمه وم» فه
":"" *. *ణళ్ళిడ ༢ མ་ཧ.ས་ ༡༦༧ ཅ་ཚ
(ty به ه...سهمهها و به "م" مسیر سه کې له /+ پگی ستون جهت همه برای رنست ۹
$్యశAశాre ***--
: ويومهنية) « همراه مساوه بر میدهد سوئز و مورد †~ዕ . بہانہ بگٹی نمونه ؤ .ام sei is at
· "აr:{ لغ ۴ "پیر لعمر المتحدة مهنة *. .5 ثم
~' ' '·': ارس. مجمو,
گاه فنی و برای دس. شمش ** * چشمسين په.*ہ 44 ه. ممكنة و كرقمشة محو وہ 4 فیشن
1.247డ్ర wns ví ጻ ነ*”tዅ•
" فایفر، ۲۹ روزبه فه نوه
攀。达·必 రోగి, $', ' ఖ******* ** ** **
i 3 ہیلمہ شبیلجئم ہو ? آدھی ، "ہمی ، بہت زلأقل. .. "లోرغ : عجة
புத் தமிழ்ச் சங்கத்தின் சிறப்புக் ழ்' என்னும் பொருள்பற்றிப் பேசும்
தமிழ்ப் பணி செய்து வருவதை போதும் இச்சங்கத்தின் பணியை னன்.
பலர் முன் நின்று இச்சங்கத்தை தமிழ்மக்கள் அனைவருக்கும் பருவது பெரிதும் பாராட்டுதலுக்கு
சியடைந்து அருந்தொண்டு செய்து னதோடு வாழ்த்துகிறேன்.
தங்களன்புக்குரிய கி.ஆ.பெ.விசுவநாதம்
வைகாசி )

Page 27
அஞ்ச
புண்ணாகிப் போனதுள்ளம் சே புலனைந்தும் அடங்கி ‘கண்ணாகத் தமிழ்காத்த தமிழ் காலன்றன் கைகொண் மண்ணிலுயிர் வாழுமட்டும் தய முற்றுந்தன் உடல்பொ புண்ணியத்தைச் செய்தமகான் புவியுள்ள வரைநெஞ்சு
தலைநகரில் தமிழோங்கச் ை சான்றோர்கள் தோற்று நிலைபெறுத்தத் துயிலழிந்து ( நன்றிகொல்லா மக்கள் வலிந்துன்றன் வாழ்வுதனை அ
வரலாறு சாற்றுகின்ற சலியாது பாடுண்ட தமிழன் சr சரித்திரத்தில் வேறில்ை
மண்குடிலுள் தொடங்கியதாம்
மாடங்கள் பலகொண்ட இன்றுள்ள நிலைமைக்குத் தே இதயசுத்தி கொண்டவ விண்புகழின் காரணமும் நீதா6
வரலாறும் நீயேதான் கண்மறைந்து போனாலும் கா: கந்தசுவாமி எனும்நாம
கல்விக்குத் தொண்டுசெய்தாய் கல்விஞானம் பெருகெ தொல்பெருமை கொண்டதமிழ் தொடக்கிவைத்தாய் நு இல்லாது போகாது என்றும் வ இயலிசையும் நாடகமு வல்லகல்வி ஞானத்தோர் தோ வழிசமைத்த காரணத்
தமிழவேளே! சான்றோனே! த தாங்காத மனங்களொ எமைவிட்டுப் போகின்றாய் இய
எய்தியது என்றாலும் சுமைபெரிது நீசுமக்கும் புகழை சக்தியதற் குண்டாமே தமக்கென்று வாழாத சான்றே சாவில்லை சத்தியமே
ஜின்ன
துணை கொழு
(வைகாசி

லிப் பா
தி கேட்டுப் பபோல் உணர லானோம் pவேளைக் டான்' சேதி கேட்டே ழ்த்தொண்டிற்கு ருளை ஆவி ஈந்த
கந்தசுவாமி ாள் வாழு வாரே.
ஈவம் ஓங்கச் வித்த தமிழ்ச்சங் கத்தை சேவை செய்தாய்
நாம் நினைவில் கொல்லோம் ர்ப்பணித்தாய் உண்மை உன்போல்
ங்கச்
லை தமிழவேளே!
சங்கம் அன்று - கட்டிடங்கள் ாற்றுவாய்நீ ர்கள் ஏற்கும் உண்மை स्रो छाBl5 மறுப்பாருண்டோ லமெல்லாம் ம் அழியமாட்டா.
கற்போர் தம்மின் வனத் தமிழ்ச்சங் கத்தில்
நூல்கள் சேர்த்துத் நூலகத்தை உன்றன் நாமம் ாழும் ம் (தமிழ்) வாழ்தல் போல ‘ன்றுதற்கு தால் வாழ்வாய் ஐயா!
மிழின் செல்வா! ன்றிக் கண்ணிர் பெய்ய பற்கை வெற்றி என்றும் மங்காச் p மாய்க்குஞ்
தோற்றே போகும் ார்க் கென்றுஞ்
துயரில் தோய்ந்தோம்.
ாஹற் ஷரிபுத்தீன் த் தலைவர் ம்புத் தமிழ்ச் சங்கம்
25

Page 28
இன்று ஒ
6
உடைஉடுக்க உயிர்ப6 ஊரூராய்ச் செய்திக நடைநடந்து களைக்கா நாடெல்லாம் சுற்றிவ படை நடாத்தப் பல்லா பறந்துசென்று சந்திர விடைகாணா வினாக்க விரைந்தின்று கல்வி
தடையின்றி மனிதகுலச் சஞ்சலமில் லாதமன அடைவதற்கு ஒருகல்வி அநியாயக் கல்வியிே மடையர்களாய், மனித
மதிக்காத மூடர்களா கடைவைத்து ஆயுதங்க கற்பழிக்கும் கொடுை
ஒருநெல்லில் ஒருநூறு
ஒருமரத்தில் இன்னெ இருதயத்தை எடுத்துவி இலகுவிலே பொருத் கருமுகிலை மழைபொ!
கதிரினொளி வீழாத அருமையாய்க் கண்ணா அமைத்தங்கு ஒளிெ
கருவறையில் இல்லாம கருவாக்கி உருவாக் இருக்கின்ற குழந்தைக் இனிதாகச் செய்துஉ பெருமையாய், இறந்தவ பிள்ளைகளைப் பிறட் எருமைகளும் ஒற்றுமை ஏன்கல்வி ஒற்றுமை6
(26

ரு புது உலகம் டப்போம்
கவிஞர் அகளங்கன்
டைக்க உதிரம் மாற்ற ளை ஒளிபரப்ப து விமானம் ஏறி ர, ஆகாயத்தில் யிரம் மைல்கள் தாண்டிப் னில் கால்பதிக்க ரூக்கு விடையுங்காண தனைக் கற்றுக் கொண்டோம்.
சமாதானத்தைச் ச் சந்தோசத்தை கற்றோமில்லை லே அறிவிழந்து தல மகத்துவத்தை ய், மண்ணில் இன்று கள் விற்று மண்ணைக் மைகளைச் செய்கின்றோமே.
நெல்லுண்டாக்க ான்றை ஒட்டிவைக்க ட்டு இன்னொன்றைத்தான் திஅதை இயங்கச் செய்யக் ழியச் செய்யச் ஆரியக் நாட்டில்கூட ாடி ஆகாயத்தில் வள்ளம் பரவச்செய்ய
ஸ் குழந்தை தன்னைக் கக், கருவறைக்குள் கும் அறுவைச்சிகிச்சை யிர் பிழைக்கச்செய்யப் ரின் கலத்தைக் கொண்டு பிக்கக் கற்றுக்கொண்டோம் யாய் வாழும், ஆனால் யைத் தரவேயில்லை
வைகாசி )

Page 29
அணுக்குண்டை நாம்படைத் அலைகின்ற போர்விமான கணக்குவழக் கின்றிநாம் செ
கனரகமாம் வாகனங்கள் பிணக்குகளைத் தீர்ப்பதற்கா பெருஞ்சண்டை பிடிக்கின் உணக்கிடந்த உணவாக மr உழைத்தோமே உருப்பட
நீதியென்றும் நேர்மையென்று நிலைத்திருப்ப தொன்றெ6 ஆதியிலே அநியாயம் பாவப அதற்குரிய தண்டனையை ஒதிவைத்த சாத்திரங்கள் ஒரு ஓராயிரம் தத்துவங்கள் எ நாதியற்ற மனுக்குலத்தின் மி நாமிவற்றில் எவற்றைத்தா
ஒரு பழத்தில் ஓராயிரம் விை உலகத்திற்கு உபகரித்தா ஒரு குண்டால் உலகத்தை
உலகுயிரை அபகரிக்கும் கருமுகிலைக் கடல்மலையை கனிமரத்தை நதிகுளத்தை அருமையிலும் அருமையென அவற்றையெல்லாம் அழித்
எம்நாட்டில் மட்டுமல்ல எந்த இருக்கின்ற மனிதரெல்லா தம்பாட்டில் நிம்மதியாய் இன்
தன்மானம் சுதந்திரத்தை பண்பாட்டு விழுமியங்கள் டே
பல்வேறு பெருமைகளும் விண்நாட்டுச் சொர்க்கசுகம் { விளைந்திடவே வாழும்நிை
(வைகாசி

தோம் ஆகாயத்தில் ம் அனைத்தும்இன்று Fய்துவிட்டோம் ஆயுதங்கள் ப்ச் செய்துவைத்துப் றோம், உலகேயுத்தம் றிப்போக வா இவற்றைச்செய்தோம்
ரம் உலகில்எங்கும் ன்றே கற்றோம் நாங்கள் ம் என்றும்
அடைவார் என்றும் நநூறுண்டு ங்கும் உண்டு ட்சிக்காக ான் கடைப்பிடித்தோம்
தையைவைத்து ர் கடவுள், நாமோ வதைவதைத்து
இயமனானோம் பக் கணக்கில்லாத க் காற்றையெல்லாம் ாப் படைத்துவைத்தான் ந்தொழிக்கும் அற்பரானோம்.
நாட்டும் ம் இனிமேலாச்சும் பம் பொங்கத் உயிராய்க்கொண்டு 1ணிக்காத்துப் பெற்றுவாழ்ந்து இந்தமண்ணில் லை விரைவில்வேண்டும்.
27)

Page 30
്,
கானுே
கதிர் வந்து புவிவந்து, கனல்மாறிக் கும அதி ஏழேழ் நாடுகளும், ஆறுகளும், ப6 முதல் மாந்தன் உயிர் வந்து, முத்தமின் வதிகையிலே கடல் கோள்கள் வந்தழிக்
தப்பியவர் சிந்துவரை தாம் சென்றார், ெ அப்போதில் வந்தனவே அரப்பாவாய், ச, தப்பாமல் அகழுங்கால் தமிழ்மாந்தன், ! அப்பியது கண்டாரே அகிலத்தார், ஆரிய
எல்லமொடு சுமேரியமும், எகிப்தோடு, ப நல்ல திராவிடருடைய நாகரிக மூப்பி6ை பொல்லாத ஆரியரின் பொய்புரட்டுக் கை வெல்லாமல் போனதிலே வேதனைகள்
பாவாணர் வழியினிலே பன்னூல்கள் தந் நாவாரக் கற்றெமது நல்லவரலாற்றிவார்
ஆவாரா விழித்தோராய், அருந்தமிழர் ஆ காவாரா தனிப்பழமை, காசினியில் முன்
/*
‘ஓலை’ பற்றிய கருத்துக் வரவேற்கப்படுகின்றன.
“உங்கள்
என்ற ப அவை வெளியிடப்ப( பெருமக்களுக்கு அ எனவே உங்கள் கருத்துக்க
-ܓܠܠ
(28

mrr mr?
தாமரைத்திவான்'
ரியாம் கண்டம் வந்து, ாமலையாம் அடுக்கும்வந்து ழக் கழகத்தில் முறையாய்க்காத்து கப் போயினவே, வாழ்வும் நாடும்!
டமதுரைதனையும் கண்டார்! தரோவாய் அணிநகர்கள்! நாகரிகம் தரணி முற்றும் பரோ ஆயவொட்டார்!
பிலோனும், எல்லாநாடும் னயே நயமாய்ப் பெற்றார்! தயெல்லாம் போலியாகி கிடையாது, வேடிக்கையே!
தையர் படைத்தபோதும்,
நால்வர்தானோ? ரியம்விட்டகலுவாரா? னேற்றம் காணுவாரா?
ཡོད། கள் வாசகர்களிடமிருந்து அடுத்த இதழிலிருந்து.
விருந்த”
ததியில்
மென்பதை வாசகப் நியத் தருகின்றோம். ளை தவறாது எழுதுங்கள்.
- ஆசிரியர் குழு -
Z
வைகாசி )

Page 31
கொழும்புத் தமி கண்ணிர்
கலாபூஷணம், கலாமான்ய
இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல திரு.க.சண்முகம்பிள்ளை அவர்கள் கொழும்பி அவர் கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் சங்கத்தின் கலை நிகழ்ச்சிகளில் முன்வரிசை
அமரர் க.சண்முகம்பிள்ளையின் மறைவு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
மிக இளம் வயதிலேயே தம்மை மிருதங் இந்தியாவிலும் பெரிய, பெரிய இசைக்கச்சேரி அமரர் க.சண்முகம்பிள்ளை அவர்கள் இலங் கோஷ்டியில் நிரந்தர மிருதங்கக் கலைஞராகப் ப சிறுவனாக இருந்தபோது, இணுவில் கந்தசுவா வழங்கிப் பாராட்டியது. தொடர்ந்து இந்தியால் பாராட்டுகளையும் பெற்றார். இலங்கை அரசின்
தமிழின் மூத்த படைப்பாளிகளும் தகைசான் வளர்ந்த பண்பாட்டுச் சூழல், தொடக்க காலப் எழுகைகள் கலை அனுபவங்கள் ஆகியவற்ை நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் தலை6 அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமரர் எவ்வித குறிப்புமின்றி சரளமாகத் தெளிவான நிகழ்த்தினார்.
மேலும், அன்னார் 08.05.2010, 09.05.2010 தி இசைநிகழ்ச்சியில் முன் வரிசையிலிருந்து தா காட்சியாகும்.
அமரரின் குடும்பமே கலைக் குடும்பமாகும். விஜயலஷ்மி இவரது மனைவியார் ஆவார். மகன் திரு.விஸ்வநாதன் ஒலி, ஒளிபரப்பாளராவர். பிரபலமான நாட்டியக் கலாமந்திர் அதிபர் ஆவா அமரரின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் கொள்கிறது.
(வைகாசி
 

ழ்ச் சங்கத்தினர் அஞ்சலி
திரு.க.சண்முகம்பிள்ளை
மிருதங்க வித்துவான் கலாபூஷணம், கலாமான்ய ல் தமது 92வது வயதில் காலமானார். நீண்டகாலமாக நெருங்கிய தொடர்புடையவர். யில் அமர்ந்து கலந்து சிறப்பிப்பார். கலை உலகிற்கும், தமிழ் உலகிற்கும் ஈடு
கக் கலையில் ஈடுபடுத்தி, இலங்கையிலும் களில் வாசித்துப் புகழ்பெற்றார். கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் வாத்தியக் ல ஆண்டுகள் பெரும் பணியாற்றி ஓய்வுபெற்றார். மி கோவில் அவருக்கு முதன்முதலாக விருது விலும், இலங்கையிலும் பல விருதுகளையும் பல விருதுகள் அவருக்குக் கிடைக்கப்பெற்றன. *ற ஆளுமை படைத்தோரும் தாங்கள் பிறந்து படைப்பு முயற்சிகள், கலை இலக்கிய நட்பு றப் பகிர்ந்து கொள்ளும் “அற்றைத் திங்கள் வர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் சண்முகம்பிள்ளை ஏறத்தாள ஒரு மணி நேரம் தமிழில் ஒரு அருமையான சொற்பொழிவை
னங்களில் சங்கத்தில் நட்ைபெற்ற "ஆலாபனா' ளம் போட்டு இரசித்த காட்சி கண்கொள்ளாக்
இசை நடன ஆசிரியை காலஞ்சென்ற திருமதி மூத்தமகள் பிரகதாம்பாள் நடன ஆசிரியை.
மகள் திருமதி கலாதுரி வாசுகி ஜெகதீஸ்வரன் ர். இன்னுமொரு மகன் கனடாவில் வசிக்கிறார். தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்
"இணுவை இரகு’
29 )

Page 32
ഴ്ച
நீதி மன்றத்திலே நிறுத்தப்பட்டிருந்த பதினேழு வயதேயான றமேக்காவும் இருபத்தியொரு வயதான அருணும் நீதிபதியின் தீர்ப்புக்காக காத்திருந்தார்கள். காதல் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக ஒரு கூட்டமும் தங்கள் சாதி சனம் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக இன்னொரு கூட்டமும் அங்கே நின்று கண்களால் மோதிக்கொண்டிருந்தார்கள். தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது என்பதை அறிவதற்காகவே நீதிமன்றத்துள்ளே அதிகளவான M 360Taisdin Lib.
காதலை கடத்தல் ஆக்கி அருணின் மீது வழக்குப் போட்டிருக்கிறது றெமேக்காவின் தகப்பன் தரப்பு.
கூண்டிலே நின்று கொண்டிருக்கும் அவளுக்கும் கூட தான் ஒரு வக்கீலாக எதிர்காலத்தில் வரவேண்டும் என்பதே கனவாக இருந்தது. ஆனால் அவளது முன் கோபமும் தகப்பனின் முட்டாள் தனமான முடிவுமே அவளைக் குற்றவாளிக் கூண்டிலே ஏற்றியிருக்கிறது.
“நீ சட்டப்படி பராயம் அடையாதவள் என்பதால் கேட்கிறேன் உன்னை இவன் கடத்திக் கொண்டு போனான் என்பது 96ö6oLDuT. ...?”
நீதிபதி அவளைப்பாத்துக் கேட்டார்.
“இல்லை சேர் நானாகத்தான் விரும்பி அவனோடை போனனான்.” அவளின் முகத்தில் எந்த விதமான சலனமும் இருக்கவில்லை.
(30
 

சாதி மல்லிகை .
மட்டுவில் ஞானக்குமரன
“அவன் உனக்கு பிள்ளையைத் தந்திட்டுப் போயிடுவான். அதுக்குப்பிறகு றோட்டிலை நிக்கப் போறியா ..?” கடுமையான குரலிலே அவளைப்பார்த்து நீதிபதி கேட்டார்.
பதில் ஒன்றையும் அவள் சொல்லவில்லை
ஒரு பக்கத்திலே நின்று ஒவ்வொன்றையும் மெளனமாக அவதானித்துக் கொண்டிருந்தான் பாலன். இங்கிலாந்திலை இருந்து
விடுமுறைக்காக பாட்டி வீட்டுக்கு வந்திருந்தவனுக்கு இங்கு
5Luu606)l56T எல்லாமே ஆச்சரியமாகவும் :அசிங்கமாகவுமே
இருந்தது.
அருணையும் பார்வையினாலே அளவெடுத்தது. அருணுக்குப்பின்னாலே அவள் பதுங்கியதைப் பார்க்கையிலே பிராந்துக் கூட்டத்திடமிருந்து தப்புவதற்காக தாய்க் கோழியின் சிறகுக்குள்ளே பதுங்கும் குஞ்சைப் போல இருந்தது. அவனின் கைளை பலமாகப் பிடித்தபடிக்கு கடைக்கண்களால் அவள் தனது தகப்பனைப் பார்த்தாள். பல்லை நறுக்கியபடி அவர்களையே முறைத்துக் கொண்டிருந்தான் பற்குணம்.
நினைக்க நினைக்க பாலனுக்கு கோபமாக வந்தது. தாங்கள் இன்னும் வேடுவர் காலத்திலே இருக்கும் மனிதர்களா என்று கூட அவனுக்கு எண்ணத்தோன்றியது. பள்ளிக்கூடப் புத்தகத்திலே ஒரு கடிதம் இருந்ததிற்காக கையிலே சூடுவைப்பார்களா ..?
வைகாசி )

Page 33
waka
கடவுள் போல வெளி வேசம் போடும் மனிதனுக்குள்தானே அமைதியாக ஒரு மிருகம் துாங்கிக் கொண்டிருக்கிறது. இதைத்தான் இப்போது அவன் ஒப்புக் கொண்டான்.
றெமேக்காவுக்கு அப்பிடியொண்டும் அருணோடு அவசரமாகப் போகவேண்டிய தேவை இருக்கவில்லை. பிறகெதற்கு அவள் அவன் கூட ஒடிப்போனாள். ஒன்று அவர்கள் குடுத்த தண்டனை பற்றிய ஆத்திரம். மற்றையது தனக்குத் தண்டனை வழங்கியவருக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற பழி உணர்ச்சி. இவை இரண்டுமே அவளை அப்படிச் செய்வதற்குத் தூண்டியது. அதைத் தான் அவள் கோட்டிலே சொல்லியிருந்தாள்.
தனது மோட்டார் சைக்கிளிலே றெமெக்காவின் தகப்பனின் மரக்காலைக்குப் பாலன் போனான். அவர் தனது சாய்வு நாற்காலியிலே ஓய்வெடுத்தபடி வெத்திலை போட்டுக்கொண்டிருந்தார். பாலனின் பாட்டியை அவருக்கு நன்றாகத் தெரியும். இம்முறை நடந்த பள்ளிக்கூட விளையாட்டுப் போட்டியிலே பாலனே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தான். பழைய மாணவனான அவன் இந்தப் பள்ளிக் கூடத்திலேயே படித்துப் பொறியியலாளரா கினவன் என்பதால் அந்த ஊரே அவனிலை மதிப்பு வைத்திருக்கிறது.
விறுக்கென்று அவர் முன்னே போய் நின்றவன்.
“அய்யா பெரியவரே . ஒரு கடிதம் கிடைச்சா கூப்பிட்டுக் கொஞ்சம் புத்திமதி சொல்லலாம், மாட்டுக்குக் குறிசுடுறதைப்போல ஒரு சின்னப்பிள்ளைக்குச் சுடுறதா .?”
எந்தவிதமான அறிமுகமும் செய்யாமல் அவர் முன்னே நின்று சினத்துடன் பேசத்தொடங்கினான்.
(வைகாசி

குறியோ . ! வெட்டிக்கூறு போட்டிருப்பன் மறிச்சிட்டாள் மனிசி. அதுசரி இதைக்கேக்க நீர் ஆர்?’ அலட்சியமாகவே அவரும் பதில் சொன்னார்.
“மனிசன்” சமூக அக்கறையுள்ள மனிசன். ஆத்திரத்தை மூட்டை கட்டி வச்சிட்டு அறிவாப் பேசிப்பாருங்கோ. கண்டிப்பா கேப்பாள். என்னைவிட உங்களுக்குத்தான் உங்கடை மகளிலை அக்கறை இருக்கும். “
“தம்பி நீங்கள் படிச்ச ஆக்கள், விளங்கும் எண்டு நினைக்கிறன். மானம் மரியாதை எங்களுக்கு முக்கியம். எங்கடை ஆக்கள் எண்டிருந்தாலும் கட்டிக்குடுத்திருப்பன். போயும் போயும் அவங்களா .? நினைக்கவே கஷ்டமா இருக்கு .’ அவனைப்பார்த்து நக்கலாகச் சிரித்தார்.
இந்த சமூகத்தின் இரத்தத்திலே ஊறினதை யாராலையும் மாத்த ஏலாது எண்டு அவனுக்கு விளங்கி யிருக்க வேணும் போல, சைக்கிளை எடுத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிப் போனான்.
வயிரவர் கோவில் மடை என்பதால் அந்த இடம் விழாக்கோலமாக இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் பொங்கலும் படையலும் என்று ஒரே புகைமண்டலமுமாக தோன்றியது. பலாப்பழங்களை வெட்டிக் கொண்டிருந்த பற்குணத்திட்டை பக்கத்திலை நிண்ட பிறைசூடி பேச்சுக் கொடுத்தான்.
“என்னண்ண நீ வயிரவருக்குப் பொங்கிப்படைச்சு வடை மாலை சாத்திறா. ஆனா உன்ர பெட்டை என்னடா எண்டா கழுத்திலை சிலுவையை தொங்கப்போட்டுக் கொண்டு திரியிறாள்.”
அவன்ரை பேச்சிலே கிண்டல் தெரிந்தது.
“எனக்கு அதிலை பிரச்சனையில்லை யடா. ஏன் எண்டா அந்த மதத்திலை
31)

Page 34
ഴ്ച
சேர்றவங்கள் பொய் சொல்ல மாட்டாங்களாம். ஆதனாலை என்ர பெட்டை களவு செய்யமாட்டாள் எல்லே.”
“அப்ப நீங்கள் எல்லாம் என்ன பொய்யே பேசிக்கொண்டு திரியிறியள்.” தலையிலை ஆணி இறங்கியது போல இருந்தாலும் அதை அவர் காட்டிக்கொள்ளவில்லை
“அதைவிடு நான் ஊருக்குள்ளை தலை நிமிந்து நடக்க வேணும். சமயத்தை விட எனக்கு சாதிதான் முக்கியம். .”
S0LSLS0L LLSLLSLL0LLLSLLLLCSLLSLLL0L0L LLSLLSL LLSLSS 0SCLLL0S0LLLLS0LLS S S SLLSCLCCLLLCLC0SLCLLCCCCC CL L0 CCLCLC0CCL0LSLL0LLSL
றெமேக்காவின் பெரியப்பா மகன் குணா அவசர அவசரமாக அலுமாரிக்கான கதவுகளைப் பொருத்திக் கொண்டிருந்தான். கொழும்புக்கு அனுப்புவதற்காக புதிதாகச் செய்து கொண்டிருந்த அந்த அலுமாரியின் மேலேயே அவனது முழுக்கவனமும் இருந்தது. மோட்டார் சைக்கிளிலே வந்த பாலன் மாமரத்துக்கு கீழே அதை நிறுத்திவிட்டு குணாவுக்குக்கிட்ட போனான்.
“குறை நினைக்காத மச்சான் பச்சை மரத்தைக் கோடலி போட்டு தறிக்கிறதைப் போல மனசைத்தறிக்கலாமே”
“ஏன் அப்பிடிச்சொல்லுறா”
“மென்மையான உணர்வுகளை மதிக்கத் தெரியேல்லையே. அது சரி ஆடு புத்தி சொன்னா அருவா கேக்குமா ..? அவங்கள் இரண்டு பேரும் ஒடிப் போயிட்டாங்கள் எண்டதுக்காக எதுக்கு பொலிஸ் அருணின்ரை அம்மா அப்பா சகோதரங்களை கொண்டு போய் வச்சிருக்குதுகள்.”
“றெமேக்கவை கடத்திட்டு போயிட்டாங்கள் எண்டு வழக்கு போட்டாத்தானே அவளை விடுவாங்கள்.”
“சரி அப்பிடியே வந்தாலும் 12 நாள் அவனோடை கூட இருந்திட்டு வாறவளை சனம் என்ன சொல்லும்?”
(32

“அப்பன் . மனசுக்குப்பிடிச்சிருந்தாச் சரி யாரை வேணுமெண்டாலும் காதலிக்கலாம் ஆனா கலியாணம் செய்யவேணுமெண்டா நிறைய மனுசருக்குப்பிடிச்சிருக்கோணும்”
”அப்பிடிச் சொல்லாதை ஒருத்தி தன்ரை உடம்பிலையும் கையிலையும் ஒருத்தன்ரை பெயரை பிளேட்டாலை வெட்டியிருக்கிறாள் எண்டது சும்மாவோ”
”அந்த அடையாளமே தெரியக்கூடது எண்டதுக்காகத் தானே கையிலை அசிற் ஊத்தி அழிச்சனாங்கள்.”
“கையிலை இருக்கிறதை அசிற் ஊத்தி அழிக்கலாம். ஆனா மனசிலை இருக்கிறதை எந்தக்கடப்பாறையைக் கொண்டு அழிப்பாய்..?”
SCCLCSLLLSL0C LLLL LLLSLLLLCCLSLLLLL00CC00SSL 0L S LLL LLSLCLCCCL CLLCL LCLL LLLLSLLSSL LSLLSLSLLLLCL
தனக்கு முன்னே கூண்டிலே நின்ற றெமேக்காவையும் அருணையும் தனது கண்ணாடியை உயர்த்திப்பாத்தபடி நீதிபதி தீர்ப்பினைக் கூறினார்.
“காதல் என்பது வழுக்கும் பாறையிலே நடனமாடுவதைப் போன்றது. பராயமடையாத பிள்ளையை திருமணபந்தத்திற்கு உட்படுத்துவது என்பது சட்டப்படி குற்றமாகும். எனவே அருணின் வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்த பட்ச தண்டனையாக மூன்றுமாதச் சிறைத் தண்டனை அளிப்பதுடன் அதன் பின்னர் றெமேக்காவின் பாதுகாப்பினைக் கருத்திலே கொண்டு அவளுக்கு 18 வயது ஆகும் வரை வாரம் தோறும் காவல் நிலையத்திலே சென்று அருண் கையெழுத்திட வேண்டும் என்று நீதி மன்றம் தீர்ப்பளிக்கிறது.
இரண்டு வருடங்களின் பின்னரான ஒரு மாலைப் பொழுதிலே செல்வச்சன்னதி கோவிலின் வெளிவீதியில்
வைகாசி )

Page 35
്,
எப்ப யேர்மனிலை இருந்து வந்தநீ றெமேக்கா ..? எதேச்சையாகத் தான் அவளைக் கண்டு கொண்டாள் சர்மிலா.
“ஏய் சர்மிலா . படிக்கேக்கை இருந்த மாதிரி அப்பிடியே இருக்கிறா. போன கிழமை தான் வந்தனான் தங்கச்சின்ரை கல்யாண வீட்டுக்கு”
“இது .?” அருகிலை நின்ற பருமனான ஒருவனைக் காட்டிக் கேட்டாள். சர்மிலா
“சேகர் . என்ர புருசன்.”
"அப்ப அருணை மறந்திட்டியா” .? அவளின்ரை காதுக்குள் இரகசியமாகக் கேட்டாள்.
ஒரு நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தாள். றெமேக்கா சிலவேளை அது ஏமாற்றத்தின் வெளிப்பாடாகவும் கூட இருந்திருக்கலாம்.
“காதல், சாதி ஒழிப்பு, ஏழை பணக்காரன் எண்ட தாழ்வுகளை உடைக்கிறது. இதெல்லாம் கதைக்கிறதுக்கு நல்லா இருக்கும். எங்கள் இரண்டு பேரையும் இந்த ஊரே சேர்ந்து எதிர்த்தா எப்பிடி வாழுறது ..? அதை விடவும் அவன்ரை உயிரைப்பாதுகாக்கவும் தான் இந்த முடிவை எடுத்தனான். பெரு முச்சொன்றை எறிந்துவிட்டு தொடர்ந்தாள்.
“அவன் என்ன செய்யிறான்?
"ஆட்டோ ஒட்டிறான்.”
"கலியாணம் செய்திட்டானா .?”
“இன்னும் இல்லை ஆனா நல்லாக் குடிக்கிறான்.”
சைக்கிளிலே வந்து கொண்டிருந்த அருணை அவனது பெரியம்மா மகன் ரவி மறித்தான் “என்ன ரவி?”
(வைகாசி

“அருண் . நீ வந்து யதாரத்தத்தைப் புரிஞ்சு கொள்ள வேணும். சரியோ பிழையோ றெமேக்கா வந்து வேறை ஒருத்தனைக் கலியாணம் பண்ணிட்டாள். அவளை மறந்திட்டு வாழப்பழகிக் கொள்ளனடா.” ஆதரவாக அவன் தோளைத் தொட்டான்.
“இல்லை அண்ணை கடைசியா நான் அவளின்ரை முகத்தை ஒரு தரம் பாக்கோணும் . கேக்கோணும் . ஒண்டு கேக்கோணும்.”
“இந்தப்பிரச்சனைக்குப்பிறகு தான் அவளை கைதடியிலை கொண்டு போய் சிறுவர் பராமரிப்புப் பள்ளியிலை சேர்த்தவங்கள். அதுக்குப் பிறகும் என்னோடை போன்லை கதைச்சவள். கதைக்கேக்கை உன்னைவிட்டா என்னாலை வாழ ஏலாதெண்டு ஏன் நாடகம் போட்டவள்.?
அவளைக்கலியாணம் செய்யப்போய் என்ர அம்மா அப்பா அக்கா தங்கச்சி எல்லாரும் பொலிசிலை 12 நாள் சிறை இருந்தும் கூட அர்த்தமில்லாமப் போட்டுதே.’ அவன் இப்பொழுது அழத்தொடங்கி விட்டான்.
“அருண் எங்கடை தமிழ் சமுதாயம் மல்லிகைக்கே சாதிபாக்கிறதுகள். மனுசனிலை பாக்க மாட்டாதுகளா ..? காவியக்காதலுக்கு வணக்கமும் சினிமாக்காதலுக்காக கண்ணிரும் சொட்டிற எங்கடை ஆக்கள் . பாவம் உனக்காக யாரும் குரல் குடுக்க வரேல்லையே . இனி வரவும் மாட்டாங்கள்.”
அந்த வயல் வெளியின் இருளுக்குள்ளே இப்போது இருவரும் கரைந்து போனார்கள்.
33 )

Page 36
ഴ്ച
வாகைப் பூக்கள் சொரியும் கல்லிருக்கைகளில் அமர்ந்து கதை பேசிய இனிமையான நாட்கள் அவை. அந்த இருக்கையில் இடம் பிடிக்கவென விரிவுரை மண்டபத்தின் வாசல் இருக்கைகளில் அமர்ந்து விரிவுரையின் இறுதி விடயங்களைக் கூட குறித்துக் கொள்ளாமல் விரைந்து சென்று இடம் பிடித்தது கதைகள் பேச மட்டுமல்லால் அழகான அந்த மஞ்சள் மாலைப் பொழுதை ரசிக்கவும் மனம் மகிழக் கதைக்கவும் தேனீர் பருகவும் அன்றாட மைதான நிகழ்வுகளோடு ஒன்றிப் போகவும் தான்.
இந்த இனிமையான அனுபவங்களால் காலை யில் எங்களை வளாகத்திற்கு அனுப்பிவிட்டு எங்களுக்காக காத்திருக்கும் அம்மாவின் தனிமை மறந்து விடுகிறது. மாலையில் ஏதோ பிள்ளை படித்துக் களைத்து வருவது போல் அப்பா வீட்டு வாசலில் காத்திருந்து சைக்கிளை வாங்கி அதன் இருப்பிடத்தில் விடும் போதுதான் என் மனதுக்குள் ஏதோ நெருடும். எட்டு மணி விரிவுரைக்கு ஏழு மணிக்கு நித்திரையால் எழுந்தால் கூட அந்த வாகைப்பூச்சொரியும் கல்லிருக்கையின் நினைவில் மனம் உந்த நேர்த்தியான அழுத்திய உடையணி வதில் அதிக நேரம் போக அங்கும் இங்குமாக ஒடித் திரிந்து புத்தகப்பையில் இருந்து செருப்பு வரை ஒவ்வொன்றாக பொறுக்கி புறப்படுவதற் கிடையில் காலை உணவை கையோடு கொண்டு வந்து எனக்கு பின்னாடியே தானும் ஒடித் திரிந்து "இந்தா பிள்ளை ஒரு வாய் பிடி பிள்ளை” என்று பாசமும் ஏக்கமுமாய் ஊட்டும் அந்த கனிவுக்கு “உங்களுக்குச் சமைத்ததை எனக்கு ஏன் திணிக்கிறியள்?” என்று கோபமாக திட்டித் திட்டி வயிறு முட்ட சாப்பிட்டதும் அந்த நாட்களில் தான்.
வழமை போல வளாக நாட்கள் முடிய எல்லோரும் எங்களுக்கேயுரித்தான தேடல் களுடன் பிரிகிறோம். நான் விருப்பத்துடன் சிறுவயதில் வாழ்ந்த ஊருக்கு ஆசிரியையாகச் சென்றேன். ஒரு நாள் பாடசாலை விட்டு மாணவர்கள் வீடு நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கடுமையான வெய்யில். கட்டிட நிழலில் உள்ள பாடசாலைக் குந்தில் அமர்கிறேன். இதற்கு முதல் சந்தித்திராத ஆசிரியர்களுடன் அன்றாட வாழ்வியல் பற்றி
34

வெறுமை - ராஜராஜி -
கதைத்துக் கொண்டு இருந்தோம். அப்போது ஒரு ஆசிரியை ‘மகள் கிளாசால் வந்துடுவா ரீச்சர்” என்று சொல்லியபடி நடக்க ஆரம்பிக்கிறார். “எக்ஸ்கியூஸ்மி நான் ஈவினிங் அம்மாவோட சொப்பிங் போகவேனும்” என்று சொல்லியபடி இன்னொரு ஆசிரியை சைக்கிளை எடுக்கிறார். “அம்மா பாவம் சாப்பிடாமல் பார்த்துக் கொண்டு இருப்பா” என்றபடி அடுத்தவரும் வேகமாக நடக்க ஆரம்பிக்கிறார். நானும் எழுந்து வீடு போவம் என்று நினைக்கிறேன்.அப்போது எனக்குள் சில வினாக்கள் “நான் எதுக்காக வீட்டை போக வேணும் ?’ “யார் எனக் காக காத்து இருக்கிறார்கள்?” தனிய வீடு சென்று உடை மாற்றி சாப்பிட்டு மறுநாள் பாடசாலை செல்லும் மட்டும் பழக்கம் இல்லாத மனிதர்களுடனான வழமையான கதை; ஏனோ மனதிற்கு கஷ்டமாக இருந்தது. முதன் முதலில் தனிமையின் கொடுமையை உணர்ந்தேன்.
எனக்கு வீடு செல்வதில் அக் கறை இருக்கவில்லை.
சற்று நாட்களின் பின் நகர்ப்புற பாடசாலை ஒன்றிற்கு வேலைக்கு செல்கிறேன். எனக்கோ வழமை போல் வீடு செல்ல பிடிக்கவில்லை. ஆனால் அங்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் பாடசாலை மணி அடித்து பிரார்த்தனை முடிந்து மாணவர்கள் ஒரளவு சென்ற பின்பு தான் ஆசிரியர்கள் செல்ல வேண்டும் என பாடசாலை நிருவாகம் சொல்லி இருந்தும் கூட அதைப் பொருட்படுத்தாமல் எல்லோரும் ஒடிக்கொண்டி ருப்பதுதான். பாடசாலை நேர வாகன நெரிசல், பஸ்நெரிசல், இவைகளையும் பொருட்படுத்தாமல் எங்கு இவர்கள் செல்கிறார்கள்? யாரோ இவர்களுக்காக காத்து இருக்கிறார் கள் போலும் என நினைத்துக் கொள்வேன்.
ஒரு நாள் நானும் பாடசாலைவிட அவர்களைப் போல் வாகனநெரிசல், பஸ் நெரிசல் எல்லாவற்றையும் சந்தித்து அவர்களை எல்லாம் சந்தோசப்படுத்தும் அந்த் ஆச்சரியத்தை நானும் சந்திப்பம் என்று வீடு நோக்கி வந்தேன்! எனக்காகக் காத்திருந்தது நானே திறப்பு போட்டு திறப்பதற்கான கதவு!
வைகாசி )

Page 37
Makuma
தீச்சுவாலை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. பக்கத்திருந்த நெடிய மரங்களும் சேர்ந்து பற்றி எரிந்தன. தூரத்தில் நின்று பார்ப்பதற்கு என்ன நடக்கிறது என்பது விளங்கவில்லை. ஏதோ ஒரு விபரீதம் நடந்து விட்டது. யாருடைய வீடோ, வைக்கோற் போரோ எரிவதாக அனுமானிக்க முடிந்தது. ஆறுமுகம் சற்றுமுன்தான் வீட்டிற்கு வந்து, நன்றாகக் குறட்டைவிட்டு நித்திரையில் மூழ்கியிருந்தான்.
“டேய் தம்பி எழும்படா, கொம்மான் வீட்டுப்பக்கமாய் வானம் முட்ட நெருப்பெரியுது”, ஆறுமுகத்தின் தாய்க் கிழவி, அவனது தேர்ள்களை உலுப்பி எழுப்புகின்றாள்.
திடுக்கிட்டு எழும்பிய ஆறுமுகம் ‘என்னனை இப் பதானை கொஞ்சம் கண்ணயர்ந்தனான். அதுக்குள்ள என்ன அவசரம்”
என்று கண்களைக் கசக்கியபடி எழுந்த ஆறுமுகம் கிழக்குப்பக்கம் தீச்சுவாலை உயர்ந்து, உயர்ந்து தாழ்வதைப் பார்த்து விட்டான். துடித்துப்பதைத்து மாமன் வீட்டை நோக்கி ஓடத்தொடங்கினான்.
வீதியின் இருமருங்கும் கிழடுகளும், குமரிகளும், சிறுவர்களும் கூடி நின்று தமக்குள் குசுகுசுத்துக் கொண்டிருந்தனர். அவற்றினை எல்லாம் பார்க்கும் அவகாசம் ஆறுமுகத்திற்கு இல்லை. அவனுடைய மாமன் தம்பர் வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.
நேற்றுக் காலையில் மாமன் வீட்டை போனபோதுதான்
"இரவைக்கு மட்டக்களப்பு மாந்திரீகர்மார் வருகினம் ஒரு கழிப்பு கழித்துப் பாப்பம், நீ மறந்திடாமல் பொழுதுபடேக்க வந்திடு”
என்று மாமன்காரர் சொன்னவர். அதில இருந்து, ஆறுமுகம் அங்கதான் நின்று எல்லா
(வைகாசி

“செய்வினை”
- இதயராசன்
வேலைகளையும் ஒடியாடிப் பார்த்துக் கொண்டிருந்தான். விடிவெள்ளி எழுந்து, கோழியும் கூவியபிறகுதான் வீட்டுக்கு வந்தவன். எல்லாம் நல்லாத்தானே இருந்தது. என்ன நடந்தது என்று, அவனது மனம் அன்று காலையிலிருந்து நடந்த சம்பவங்களை மீட்டுப் பார்த்தது.
கழிப்புக்கு வேண்டிய சாமன்கள் எல்லாம் ஏற்கனவே வாங்கியாயிற்று. ஆனால் வெள்ளைச் சேவலும், சிகப்புச் சேவலும்தான் வாங்கவில்லை. அவர்கள் அலையாத இடம் இல்லை. அப்படி இருந்தாலும் இடையில் வேறு நிறச் செட்டைகள் கலந்திருப்பது, பெரிய பிரச்சனையாக இருந்தது. கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம் மாந்திரீகர், சுத்தமான வெள்ளை, சிகப்புச் சேவல்கள்தான் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் பூஜை பலிக்காமல் போய்விடும் என்று. ஆறுமுகத்திடம் இவ்வேலை ஒப்படைக்கப்பட்டது.
சைக்கிளை எடுத்துக்கொண்டு தெல்லி தெல்லியாகச் சுற்றி, வட்டக்கச்சி சந்தியில் இருந்து உள்ளுக்குள்ள முஸ்ஸிம் வீடொன்றில் வெள்ளைச் சேவலும் அங்காலே கட்சன் வீதியில் உள்ள கட்டைப்பரியாரியார் வீட்டிலை சிகப்புச் சேவலும் கிடைத்தது. ஆனால் தேடிவந்ததால அறாவிலைக்கே கிடைத்தது. இரண்டும் வாங் கிமுடிய பின்னேரம் 5 மணிக்குப்
பிந்திவிட்டது.
காலையிற் புறப்பட்ட ஆறுமுகம் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய் இரண்டு சேவலுடனும் வெற்றிப் பெருமிதத்துடன் மாமன் வீட்டுக்குச் சென்றான். இவனுக்குக் கிடைத்த வரவேற்புக்கு மட்டில்லை, மாலை ஆறுமணி யளவில் மட்டக்களப்பு மாந்திரீகர்கள் இருவரும் சீடர்கள் நால்வரும் உள்ளுர் பூசாரி ஒருவருமா ஏழுபேர் கொண்ட குழுவொன்று ஏபோட்டிக்காரில் வந்து இறங்கினர்.
முற்றத்தில் நின்ற மாமரத்துக்குக் கீழே உள்ள வண்டிற் கொட்டில் துட்பரவு செய்யப்பட்டு,
35)

Page 38
ஜி. mabueixo
சாணிகொண்டு மெழுகப்பட்டிருந்தது. அதுதான் பூஜை நடத்துவதற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும், பாய் விரிக்கப்பட்டு, பூஜைச் சாமான்கள் எல்லாம் பரப்பி வைக்கப்பட்டி ருந்தன. பூஜைக்கான ஏற்பாடுகளில் சீடர்கள் நால்வரும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மாந்திரீகர் இருவருக்கும் வைக்கோற்போருக்குப் பக்கத்தில் மறைவாக நின்ற வேப்பமரத்தின் கீழ் "ஈசிச்சேர் போடப்பட்டு, ஊர்வழக்கப்படி ஒன்றும் பிசகாமல் அனைத்து வகையறாக்களுடனும் கவனிக்கப்பட்டது.
இரவு எட்டுமணியளவில் தொடங்கியது பூஜை, பூசனிக்காய்கள் வெட்டப்பட்டு குங்குமம் பூசப்பட்டிருந்தது. அதைப்பார்க்கும் போது இரத்தம் வழிவதுபோல் இருந்தது. தேசிக்காய்கள் வெட்டப்பட்டு அதுவும் குங்குமத்துள் சங்க மித்தன. மாந்திரீகர் இருவரும் மந்திர உச்சாடனத்தில் ஈடுபட்டனர். உடுக்கின் நாதம் சும் மாய் நிற்போரையும் ஆடவைக்கும் சக்திவாய்ந்ததாய் இருந்தது. சிறிது நேரத்தில் மாந்திரீகரில் ஒருவர் உருவேறி ஆடத்தொடங்கி விட்டார். அவரது வாயிலிருந்து மலையாளம் பிரவாகமெடுத்தது. அந்தமொழியில் குரலை தணித்தும் ஏதோ ஏதோ எல்லாம் உளறிக் கொட்டிக் கொண்டே இருந்தார். ஆட்டத்தின் உச்சத்தில் ஆடாமல் நின்ற மாந்திரீகர் தனது வெலிற்றினை எடுத்து ஓங்கி அடித்து,
"நீ யார்? என்ன வேணும்?” என்று தமிழிலும் மலையாளத்திலும் கேட்டார்.
"நான்தாண்டா காட்டுக்கறுப்பன், இந்த வீட்டையே சங்காரம் பண்ண வந்தனான். கிழக்கு மூலையிலை செய்வினை செஞ்சு ஏவப்பட்டனான். என்னை யாராலும் ஒண்டும் பண்ண முடியாதடா.”
என்று மிக உறுதியோடு கூறியது. எல்லோர் முகங்களிலும் மரணப் பீதி, அசைவற்று நின்றனர்.
“டேய் உனக்கு என்னடா வேனும், நீ கேக்கிறதெல்லாம் தாறம் இந்தவீட்டைவிட்டுப் போயிடு”
(36

மறுபடியும் தனது வெலிற்றினால் அடித்து, அதட்டுகிறான் மாந்திரீகன். சற்றுநேரம் ஆடிவிட்டு,
“எனக்கு இரத்தப்பலியும் மடையும் வையுங்கோ நான் போறன்,”
உடுக்கடியின் வேகம் அதிகரித்தது. அப்படியே பூஜைக்குப் படைக்கப்பட்டவற்றோடு, மறக்காமல் சேவல்களையும் கொண்டு போனார்கள். சுடலைக்கு வேறுயாரும் போகக் கூடாது என்பதால் ஆறுமுகம் போகவில்லை. அப்படியே வீட்டுக்குச் சென்று படுத்துவிட்டான்.
ஆறுமுகம் தம்பர் மாமன் வீட்டை நெருங்கிவிட்டான். மாமனின் நாற்சார வீடு, கொட்டில், வைக்கோற்போர் என எல்லாமே பற்றி எரிந்து கொண்டிருந்தது. ஊரவர்கள் கூடி எடுத்த முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போய், ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு நின்றனர். அவர்களை விலக்கிக் கொண்டு சென்ற ஆறுமுகம் திகைத்துப் போய் நின்றான்.
மாமன் தம்பர் , மாமரி மரகதம் , மச்சாளவை எல்லோரும் பேயறைந்தது போல் நின்றனர். அவர்களோடு மூன்று மாதத்துக்கு முன்பு வந்து ஒட்டிக்கொண்ட கோமளா மட்டும் எரிகின்ற நெருப்பினை வெறித்துப்பார்ப்பதும், தனக்குள்ளே சிரிப்பதுமாக நின்றாள். அவளைப் பார்த்த ஆறுமுகத்தின் மூளையில் மின்னலென ஒரு பொறிதட்டி மறைந்தது.
நீளமான முகத்திற்கு ஏற்ப அமைந்த கிளிமூக்கு, சுருட் டைத் தலைமுடி அக்கறையின்றிப் பின்னி விடப்பட்டிருந்தது. கையில்லாத கவுண் முழங்காலுக்குச் சற்றுக் கீழ் வரை நீண்டிருந்தது. உருண்டை விழிகள் எதிலுமே பிடிப்பின்றிச் சுழன்றுகொண்டிருந்தன. சற்றுப்பருமனான உடல் வாகு ஆனாலும் பருமனுக்கு ஏற்ற உயரத்தினால் பார்வைக்குப் பருமனாகத் தெரியவில்லை. இத்தனை இலட்சணங்களுக்கும் சொந்தக் காரிதான் கோமளா, அவுள், மரகதம் மாமியின் தங்கையின் மகள். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல்யமான
வைகாசி )

Page 39
ഴ്ച
பெண்கள் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் படிக்கின்றாள். பரீட்சை எழுதிவிட்டு, மாமிவிட்டில் நிற்கின்றாள். இவ்வளவு தகவலுமே ஆறுமுகத்துக்குத் தெரியும்.
ஆறுமுகம் மச்சாள் மாருடன் கதைத்துச் சிரிக்கும் போதெல்லாம் முகத்தை உம்மென்று வைத்துக் கொள்வதும், ஆறுமுகத்தைக் காணும்போதெல்லாம் ஒருவிதமான அலட்சியப் போக்குடன் ஒரு வெட்டு வெட்டிப் போவதும் அவனுக்குப் புரியவில்லை. சிலவேளை யாழ்ப்பாணத்துப் பொட்டையள் பட்டிக்காட்டா ரோடை இப்படித்தான் பழகுவார்களோ என்று சிந்தித்ததும் உண்டு. ஆனால் அதற்குமேல் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை ஆறுமுகம். அவனுக்கென்று பல சோலிகள் இருந்தன அவற்றோடு அவன் பொழுது சரியாகிவிடும்.
போனகிழமை கல் மடு பத்தேக்கர் காணிக்குள் இருந்த வாடிவீட்டில் ஆறுமுகத்தின் மச்சாளவையும் கோமளாவும் தங்கிவிட்டு வந்தபோது, வாடி எரிந்ததையும் இப்பொழுது வீடு எரிவதையும் பொருத்திப் பார்த்தான் ஆறுமுகம். வீடு எரிகின்ற சோகத்தில் மாமன், மாமி, மச்சாளவை நிற்க கோமளா மட்டும் திருவிழாவில் வேடிக்கைபார்ப்பது போல் நிற்பதுவே, அவனுக் குச் சந்தேகம் எழக்காரணமாயிற்று.
மாமன் தம்பருக்கு அருகிற் சென்ற ஆறுமுகம் எதுவும் போசாமல் அவரது கரங்களைப் பற்றிக்கொண்டான். ஒரு சாவீட்டில் துக்கம் பகிர்வதுபோல் அது இருந்தது.
"தம்பி நீ போனாப்பிறகு கழிப்பு முடிஞ்சு வந்தவையையும் அனுப்பீட்டு, கொஞ்சநேரம் கண்மூடியிருப்பன் சட சட என்று சத்தம்கேட்டு எழும்பிறன் வீட்டுமுகடு பற்றி எரியது. s
அதுக்குமேல் தம்பருக்கு வார்த்தைகள் வரவில்லை. சிறுபிள்ளைபோல் மூக்கைச்சீறி தேம் பிக் கொண்டிருந்தார் . 96l 60) y அமைதிப்படுத்துவது ஆறுமுகத்திற்குப் பெரும்பாடாகிப் போய்விட்டது. போட்டிருந்த உடுப்போடு ஆக்கள் மட்டுமே மிஞ்சி நின்றனர். இத்தனைகாலமும் சேர்த்துவைத் திருந்த
(வைகாசி

அத்தனையும் நெருப்பினிலே ஆகுதியாகிக் கொண்டிருந்தன.
ッ ஆறுமுகம் பத்தாம் வகுப்புடன் படிப்பு ஏறாது என்று, பாடசாலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டான். ஆனாலும் எதனையும் காரண காரியத்துடன் ஆராயும் விஞ்ஞானப் பார் வை கொண் டவன் . அத் தோடு பெளத்தறிவுவாதியான சின்னத்தம்பியருடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தான். போன வருடம் பிலிங்கதேவன் முறிப்பில் ஒரு வீட்டில் பல அற்புதங்கள் அடுக்கடுக்காய் நடப்பதாகக் கேள்விப்பட்டதும், பேய் பிசாசு என்ற க  ைத  ெய ல ல |ா வ ற, ற  ைன யு ம’ பொய்யாக் கியமையையும் நினைத்துப் பார்க்கின்றான்.
சம்பவம் நடந்தவீட்டில், இளம் தம்பதிகள் கைக் குழந்தையுடன் சுமுகமாகவே வாழ்க்கையினை ஒட்டிக்கொண்டிருந்தனர். ஆனால் குடும்பத்தலைவியின் தங்கை ஒருத்தி வந்து ச்ேர்ந்ததல் இருந்து, வீட்டிற் குறளிவித்தைகள் நடக்கத் தொடங்கிவிட்டன. சமைத்த கறிச்சட்டியில் செங்கட்டி கிடக்கும், வீட்டிற்குமேல் கற்கள் வந்து மழைபோற் பொழியும் இப்படிப் பல அதிசயங்கள் அடுக்கடுக்காக நடந்தபோது, மாந்திரீகரைக் கூட்டிவந்து காட்டிச் சாந்திபூஜையும் நடத்திப் பார்த்தனர் அன்றுமட்டும் ஒன்றும் நடக்காது. மறுநாள் பழையகுருடி கதவைத் திறவடி என்றகதையாகவே இருந்தது.
ஒருநாள் பிள்ளைக் குப் பால் மா கரைக்கும்போது, சூடாக இருக்குதென்று பாலை ஆற்றும்படி கூறியபோது, இவள் தண்ணிர்ச் சட்டியில் வைத்துப்பிடித்தாள். அப்படிச்செய்ய வேண்டாம் தண்ணீர் கலக்கும் என்று எவ்வளவோ சொன்னபோதும் கேட்கவில்லை. இறுதியில் பாலில் தண்ணிர் கலந்தேவிட்டது. இப்படி ஒரு சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்திருந்த குடும்பத் தலைவன் மனைவியின் தங்கையைப் பிடித்து நாலு சாத்துச் சாத்தி,
37)

Page 40
ஜி. Marpa
"நீ தானடி கல்லெறிஞ்சனி, பிசுங்கான் போட்டனி.”
என்று அடுக்கடுக்காகக் கேட்டதற்கு ஓம் என்று பதிலளித்தாள். அத்துடன் அடிப்பதை நிறுத்திவிட்டான். மீதியை அக்காள் தொடர்ந்தாள். அன்றுடன் குறளிவித்தையும் நின்றது. ஆனால் ஏன் அப்படி நடந்தது என்பதைச் சின்னத்தம்பியர்தான் உளவியல் அடிப்படையில் அணுகியபோது, திருமணவயதான போதிலும் ஆகாமல் ஆசைகளை அடக்கிவைத்திருந்ததும் அவளுக்கு இரண்டு வயது மூத்த தமக்கை தனது கணவருடனும் பிள்ளையுடனும் சந்தோசமாக வாழ்வதும் ஏக்கத்தினையும் பொறாமையையும் ஏற்படுத்திவிட்டது. அதன்பேறாக உளப்பிளவு (Schizophrenia) எனும் மனநோய்க்கு உள்ளாகி இருந்தது தெரியவந்தது. உரிய வைத்தியரிடம் சிகிச்சைபெற ஆலோசனையும் வழிகாட்டலும் செய்தமை நினைவுத் திரையில் ஓடி மறைந்தது.
கல்லெறிவிழுந்த கதைபோல இச்சம்பவமும் ஏதாவது சம்பந்தம் உள்ளதுபோலவே ஆறுமுகத்தின் எண்ணத்திரையில் தோன்றியது. கோமளத்தின் பூர்வீகம் பற்றி அறிந்தால் மட்டுமே இதற்குத் தீர்வுகாணமுடியும் யாரிடம் விசாரிப்பது, மாமா மாமி அவர்கள் சரிவராது பழைய பஞ்சாங்கம் எனது பெளத்தறிவு வாதத்திற்குத் துணைபோக மாட்டார்கள். சின்ன மச்சாள்தான் பொருத்தமான ஆள், எப்படியும் பட்டர்பண்ணி கதைவிட்டுக் கதைகேட்கவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான் ஆறுமுகம்.
மாமன் தம்பர் வீட்டில் அடுக்கடுக்காய் பல சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. போன மாதம் நித்திரைப்பாய் தீப்பிடித்து எரிந்தது, இன்னொருநாள் வீட்டில் உள்ள உடுப்புகள் எல்லாம் எரிந்தது, வாடிவீடு தீப்பிடித்து எரிந்தது, வெங்காயக் கொட்டில் திட்பிடித்தது, நெல்லுப்போர் எரிந்தது என அடுக்கிக்கொண்டே போகலாம். அதிலும் அதிசயம் என்ன வென்றால் வெங்காயக் கொட்டில் எரியுது என்று அதை அணைத்துக் கொண்டிருக்கத் தூரத்தில் இருந்த நெற்போர்
(38

தீப்பிடித்து எரிந்ததுதான். இதுவெல்லாம் கொள்ளிவால் பேயின் வேலையென்று பார்க்காத மாந்திரீகர் இல்லை, பூஜை வழிபாடென்று எல்லாம் பார்த்து, இறுதியாகத்தான் மட்டக்களப்பில் உள்ள மலையாள மாந்திரீகரகளை அழைத்து, ஒரு குறையும் இல்லாமல் பேயோட்டிய பின்புதான் வீடே பற்றியெரிந்து கொண்டிருக்கின்றது.
அடுத்தநாள் காலையில் ஆறுமுகம் சின்னமச் சாளிடம் மெல்ல கதைவிட்டுப் பார்த்தான். அவன் கஷ்டமாக நினைத்த விடயம் மிக இலகுவாகியது. சின்னமச்சாள் கோமளத்தின் பூர்வீக முடிச்சினை அவிழ்த்தாள்.
“மச் சான் கோமளம் ஆரோ ஒரு பொடியனைக் காதலித்தவளாம். அவனைக் கலியாணம் கட்டப்போறாள் எண்டுதான் இங்கை ஒளிச்சுக் கொண்டுவந்து வைச்சிருக்கினம். அவள் எப்படியும் அவனைத்தான் கட்டுவாளாம். இல்லாட்டில் நஞ்சு குடிப்பன் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள்.”
என்று சொல்லி முடித்தாள் சின்னமச்சாள். ஆறுமுகத்திற்குக் கதை எப்படிப் போகிறது என்று விளங்கிவிட்டது. ஆனால் கையும் மெய்யுமாகப் பிடிபடும் மட்டும் யாரும் நம்பமாட்டார்கள் என்பதும் தெரிந்ததால் பொறுமையுடன் அவதானித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் கோமளத்தின் கவுணில் தீப்பிடித்தது, அவள் கத்திக்கொண்டு வீட்டுக்கு வெளியில் ஓடிவந்ததும். பின்பு தீ அணைக்கப்பட்டதும் சின்னமச்சாள் மூலம் கிடைத்ததகவல். அவனது சந்தேகத்தினை உறுதிப்படுத்து வதாகவே அமைந்திருந்தது.
ஆறுமுகம் தனது பகுதி தறிவு வழிகாட்டியான சின்னத் தம்பியரைச் சந்தித்து, நடந்தவற்றினைக் கூறிக் கலந்துரையாடிய பொழுது பல விதமான சந்தேகங்கள் எழுந்தன. கோமளம் விஞ்ஞானக்கல்வி உயர்தரத்தில் பயின்றபடியால் எதாவது இரசாயனங்களைத் தூவி ஒட்சிசனுடன் கலக்கும் போது நெருப்பு எரியவைத்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்திருந்தது.
வைகாசி )

Page 41
ہے؟
ஆறுமுகத்தின் மாமன் வீட்டில் நடக்கும் வலங்களைக் கேள்விப்பட்ட கோமளத்தின் த்தப்பா யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து லைமையினைக்கண்டு திடுக்குற்றார். அவரிடம் றுமுகம் மெல்ல மெல்ல நடப்பவற்றினையும், வை கோமளத்தின் நடமாட்டப் பிரதேசத்தி Uயே நடப்பதன் ஒற்றுமையினையும் எடுத்து வளக்கினான். ஆனால் அவர் அதனை முழுமை யாக நம்பியதாகத் தெரியவில்லை. இருப்பினும் அவள்மீது ஒருகண்வைத்திருக்க வேண்டும் என்பதை மனதுக்குள் நினைத்துக்கொண்டார்.
தம்பர் மாமனின் வீடு எரிந்தபின் தோட்டத்தில் போட்டிருந்த காவல் கொட்டிலில் எல்லோரும் தங்கினார்கள். எல்லோருக்கும் அது போதுமான வசதியில்லாவிட்டாலும் பக்கத்தில் ஒரு ஒத்தாப்புப் போட்டுக்கொண்டு தங்கியி ருந்தனர். அங்கேயும் சிறு சிறு நெருப்பு எரிப்புச் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. கோமளம் அதில் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங் கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒருநாள் இரவு எல்லோரும் கதைத்துக்கொண்டிருக்கும் வேளை யில் விளக்கு நூர்ந்துவிட்டது. தீப்பெட்டியைத் தேடிக்கிடைக்காத சந்தர்ப்பத்தில், கோமளம் தனது ரவிக்கைச் சட்டையிலிருந்து தீப்பெட்டியை எடுத்துக் கொடுத்தாள். கோமளத்தின் சித்தப்பா விற்கு அவள்மீதுள்ள சந்தேகம் உறுதி யான நிலையில், அவளது பின்னலைப்பிடித்து அதட்டி விசாரித்தபொழுது, அவள் கூறிய செய்தி எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தியது.
நெருப்பினைத் தான்தான் வைத்ததாகவும், வைக்கும் பொழுது தனக்கு சுயநினைவு இல்லை என்று கூறினாள். அவளை மேற்கொண்டு அடிப்பதில் பயனில்லை என்று விட்டுவிட்டனர்.
தகவல் அறிந்த ஆறுமுகம் தனது பகுத்தறிவுத் தந்தை சின்னத்தம்பியருடன் சென்றான். சின்னத்தம்பியர் தனக்கே உரிய ஆழ்ந்த புலமையுடன் மிக அமைதியாகவும்
( வைகாசி
 

தெளிவாகவும் கோமளத்திற் கு ஏற்பட்ட நிலைமையினை எடுத்து விளக்க னார்.
"கோமளத்தின் ஆழமா காதலைப் பிரிச்சு, எதுவுமே செய்யமுடியா ல் காவலில் வைத்ததின் மூலம் அவளது ஆழ் னதில் பெரிய வடுவினை ஏற்படுத்திவிட்டீர்கள். உண்மையில் வீட்டுக்காவலில் இருந்து விடுதலை பெறு வதற்கான உபாயமாகவே இத்தனையும் செய்தாள். அப்படிச் செய்வது அவளுக்குத் தெரியாது. இது மேலும் தொடர்ந்தால் தன்னையே எரித்துக்கொள்வாள். உடனடியாக ஒரு உளவள ஆலோசகரை நாடுவதே சிறந்த வழி.”
என்று ஒரு குட் டிப் பிரசங் கமே நிகழ்த்தினார் சின்னத்தம்பியார். மேற்கொண்டு கோமளத்தினை விட்டுவைப்பது ஆபத்தானது என்பதைப் புரிந்துகொண்ட அவளது சித்தப்பா, மறுநாள் யாழ்ப்பாணம் அழைத்துச் செல்வதாக முடிவெடுத்தார்.
உளநலமுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த கோமளத்தின் காதல் வாழ்க்கையைப் பலவந்தமாகப் பறித்தெடுத்து, அவளை மனநோயாளியாக்கிப் பில்லி, சூனியம், செய் வினை என்று பல ஆயிரங்கள் இலட்சங் களை இழந்து எதிர்கால சந்ததியினரையும் பார்வைக் குருடாக்கும் சமூகநோய்க்கு மருந்தென்ன?
தமது குல மேம்பாட்டிற்காகவும், அந்தஸ்திற்காகவும், அயலவர்களின் போலிப் புகழாரங்களுக்காகவும் தமது பிள்ளைகளின் நியாயமான ஆசைகளை, அவர்களின் வாழும் உரிமையினைப் பறித்தெடுக்கும் வரட்டுத் தனத்தால் எல்லாமே இழந்து நிற்கும் மனிதர் களை நினைத்து, வேதனைப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாத கையறுநிலையில் நின்றான் ஆறுமுகம்.
39)

Page 42
பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா அவர்கள் கல்வியியல், உளவியல் துறைகள் சார்ந்த பல நூல்களைத் தமிழில் எழுதி அத்துறைகளின் விருத்திக்காக முதன்மையான பங்களிப்புக்களை ஆற்றிவருகின்றார். கலை இலக்கியம் சார்ந்த புலன்களுடன் ஈடுபாடு கொண்டுள்ளவர். மொழிபெயர்ப்புத் துறையில் கணிசமான பங்களிப்பை வழங்கிவருகின்றார். அதுமட்டுமன்றித் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். அத்தகைய பன் முகப் பரிமாணங்களைக் கொண்ட அறிஞர் “இசையும் சமூகமும்” என்னும் நூலைத் தந்துள்ளார்.
“இசை” பற்றிய இந்திய மரபுவழி ஆய்வுகள் ஒற்றைப் பரிமாண நிலையில் முன்னெடுக்கப் பட்டு வந்துள்ளன. அதாவது "இசைக்காக என்பதற்குக் கொடுக்கப்பட்டு வரும் முக்கியத்து வம் அதன் சமூகப் பரிமாணம், உளவியற் பரிமாணம், கல்விப் பரிமாணம் முதலிய வற்றுக்குக் கொடுக்கப்படுதல் அரிதாகவே உள்ளது. வங்கத்திலே விடுதலைக் காலத்திலே முகிழ்ந்த கல்வி மறுமலர்ச்சி இசையின் சமூகப் பரிமாணங்கள் தொடர்பான ஆய்வுகளை மீள வலியுறுத்தினாலும் தமிழகத்தில் அத்துணை செறிவு ஏற்படவில்லை. ஆயினும் தமிழகத்திலே குவிந்தெழுந்த தமிழிசை இயக்கம் மாற்று வகையான சிந்தனைகளைத் தூண்டியது.
"இசை இசைக்காக’ என்ற கருத்தியலின் மேலோங்கல் அதன் சமூகத் தளத்தைத் தகர்ப்புக்கு உள்ளாக்கிவிட்டது. இந்தியாவின் செவ்வியல் இசைமரபில் "இசை இசைக்காக என்ற அணுகுமுறை மேலோங்கியிருக்க, நாட்டார் இசை மரபரில் மட்டும் இசைக் கும் சமூகத்துக்குமுள்ள இணைப்புக்கள் வலிதாக
(40
 

இசையும் சமூகமும்
- இணுவில் மாறன் -
நூல் - இசையும் சமுகமும் ஆசிரியர் - பேராசிரியர் சபா ஜெயராசா வெளியீடு - சேமமடு பதிப்பகம் விலை - ரூபா 250.00
வுள்ளன. அதுவே நாட்டார் இசைக்குரிய பலமும் வலிமையுமாகின்றது” என்று நூலாசிரியர் உரையில் விளக்கியுள்ளார்.
இந்த அடித்தளத்தில் நின்றுகொண்டு 'இசையும் சமூகமும்’ என்னும் நூலை நோக்கு வோம். ஆசிரியரின் புலமைத்திறன், அதனோடு கூடிய ஆய்வு, அனுபவம் என்பவற்றின் வாயிலாக முகிழ்த்தெழுந்த படைப்பே இந்தநூல். செவ்வியல் இசை மரபுக்கும் நாட்டார் இசை மரபுக்கும் உள்ள இடைவெளிகள் வர்க்கம் சார்ந்த சமுதாய அமைப்புடன் ஒன்றியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
மனித சமூகம் நாகரிகச் சமூகமாக மாறுவதற்குப் பல்வேறு பண்புகள் காரணமாக அமைந்துள்ளன. அவற்றுள் இசையும் ஓர் அங்கமாக இருப்பதைக் காணமுடியும். இசை பற்றிய ஆய்வுகள் ஆபிரகாம் பண்டிதர் சுவாமி விபுலானந்தர் காலந்தொடக்கம் மேற்கொள்ளப் பட்டு வந்துள்ளன. "யாழ்' பற்றிய ஆய்வின் காரணமாக யாழ்நூல் வெளிவந்தது. இன்று சமூகம் சார்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'இசையும் சமூகமும்’ என்னும் நூலில் பேராசிரியர் பதின்நான்கு கட்டுரைகளைத் தந்துள்ளார். இசைமரபினை சமுதாயத்துடன் ஒட்டியதான ஆய்வுடன் இக் கட்டுரைகள் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்.
"இசை, மொழி, சமூகம் ஓர் உறவாடலின் வெளிப்பாடு' என்னும் முதலாவது கட்டுரையில் "இசை என்பது ஒரு புரிதல் முறைமை, வாழ்வின் இருப்பையும் அதிலிருந்த மீண்டெழும் மன வெழுச்சி வெளிகளையும் இசை வழியான புரிதல் முன்னெடுக்கின்றது. இந்நிலையில் ஒருவரின்
வைகாசி )

Page 43
ہونگی؟
adapt
பட்டறிவோடு இணைந்த தாய் மொழியை நிராகரித்து இசைவழியான புரிதலை முன் னெடுக்க முடியாது. இசையின் ஒரு சிறப்பார்ந்த பரிமாணம் அதன் தொழிற்பாட்டுப் பண்பாடும். சுவைப்போரின் அறிகைத் தேவைகள், மன வெழுச்சித் தேவைகள், உளவியல் தேவைகள், பண்பாட்டுத் தேவைகள் முதலியவற்றை நிறைவேற்றும் தொழிற் பாட்டினை அது மேற்கொள்ளுகின்றது. இசை ஓர் அமைப்பியல் முறையாகும். ஒலியின் சேர்மானங்கள் மட்டுமன்றி, பண்பாட்டுச் சேர்மானங்களையும், சமூகச் சேர்மானங்களையும் உள்ளடக்கிய அமைப்பியல் விதிகளுக்கு அது உட்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.
இசையும், மொழியும் சமூகத் தொடர்பாடல் என்ற அடிப்படையில் ஒன்றிணைகின்றன. அடிப்படையான தொடர்பாடலில் இருந்து உயர் நிலையான தொடர்பாடல் வரை அவற்றின் பரிமாணங்கள் மேலெழுகின்றன. மொழியின் ஒலிவடிவான புலக் காட்சியும் இசையின் ஒலிவடிவப் புலக் காட்சியும், மொழிவழி இசையிலே ஒன்றிணைந்து மேலோங்கியிருப்ப தால் சமூகத் தொடர்பாடலில் மொழிவழி இசை தனித்துவம் மிக்கதாக மேலெழுகின்றது. தமிழிசை இயக்கம் தனித்த ஒர் எண்ணக்கரு சார்ந்த ஒற்றைப் பரிமாணம் கொண்டதன்று. அது காலம் விளைவித்த சமூகத்தேவை யாகவும், அதேவேளை சமூகத்தின் அடிநிலை மாந்தரைக் குவியப்படுத்திய முனைப்புடைய தாகவும், மக்கள் தழுவிய பண்பாட்டு மலர்ச்சியின் குறியீடாகவும் அமைந்துள்ளது.
நாட்டார் பாடல்களின் இசைவளம்' என்னும் கட்டுரை “எழுத்துருவின் உதவியின்றி உருவாக் கப்பட்டும், செவி வழியாக கையளிக்கப்பட்டும் வந்த இசையே நாட்டார் இசையாகின்றது. தமிழகத்து மேட்டுக்குடியினர் இதனைக் கேள்வி ஞானத்தின் வழி பாடுதல்’ என்பர். செவ்வியல் இசை அல்லது அறிவுப் புலமையோடு தொடர் புடைய இசை வாய்மொழிக் கையளிப்பிலே தங்கியிருந்தாலும், அதன் அமைப்பு வரன்றை யான கல்விச் செயற்பாட்டோடும், ஒன்றிணைக் கப்பட்ட நியமங்களுடன் தொடர்புபட்டு நிற்கின்றது” என்று கூறியுள்ளது.
(வைகாசி

'இசையும் செவ்வியல் நெறியும் - “செவ்வியல் அல்லது தொல்சீர்வாதம் கிரேக்க சிந்தனை மரபுகளை அடியொற்றி இசையாக்கங்கள் மீது செல் வாக்குச் செலுத்தும் கோட்பாடாக விளங்குகின்றது. இசையும் சொற்களும் வேறு பிரிக்க முடியாத இணைப்பின் வடிவத்தையே சங்கீதம் (MUSIC) என்ற எண்ணக் கரு புலப்படுகின்றது. கிரேக்கத்தின் தொன்மையான வளமான சிந்தனைகளை வெளிப்படுத்திய பிளேட்டோ, இசைக்கல்வி இறைமை பொருந்தியது என்று குறிப்பிட்டார். கிரேக்க சிந்தனைகளே செவ்வியலின் முதல்நிலை ஊற்றுக்களாயின.” கர்நாடக சங்கீதத்துடன் இணைக்கப்பட்டுள்ள பரத நாட்டியமும் செவ்வியல் மரபுகளுக்கு உட்பட்ட வகையில் பாதுகாக்கப்பட்டு வரு கின்றது. அதன் வடிவம் மட்டுமன்றி அதன் உள்ளடக்கமும் மீறப்பட முடியாத கட்டுமானமாக் கட்பட்டுள்ளது. உணர்ச்சிகள் பாவங்கள் வழியாக வெளிப்படுத்தப்படுதல் வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகள்ைத் தழுவியே மேற் கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட உணர்ச்சியைக் குறிப்பிட்டவாறு தான் வெளிப்படுத்தல் வேண்டுமென்ற நியதிகள் மீறப்படலாகாது. 'அடவு சுத்தம், அங்க சுத்தம் முதலிய தொடர்கள் வரையறுக்கப்பட்ட கட்டுமானங்களின் முக்கியத்து வத்தைப் புலப்படுத்துகின்றன. இவ்வாறாக கர்நாடக இசையும், பரதநாட்டியமும் செவ்வியலின் ஒப்புவித்தலாக இருத்தலைத் தமிழகத்தின் கலைவரலாறு தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.
அடுத்த கட்டுரை - "இசையும் உளக்கவர்ச்சி யியலும். “பதினெட்டாம் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளின் ஐரோப்பியக் கலைச் சிந்தனைகளில் மேலெழுச்சி கொண்ட கோட் LITLITB s 6Tiss6)i&idulu6) (ROMANTICISM) அமைந்தது. மனித உள்ளத்தின் மேன்மையினை யும், கற்பனை மலர்ச்சியின் எல்லை கடந்த விஞ்சு வலுக்களையும் முதன்மைப்படுத்தும் கருத்தியலை உளக் கவர்ச்சியியல் வலியுறுத்தியது. உள்ளார்ந்த மனத்தின் உறவாடலின் முக்கியத் துவம் உளக்கவர்ச்சியியலின் முதன்மைப் பொருளாயிற்று” என்று கூறி நிற்கின்றது.
இசையும் பின்னவீனத்துவமும், இசை உள்ளிட்ட கதைமரபு, இலங்கையின் கீர்த்தனை இலக்கியம், இசையும் உளப்பகுப்பு உளவியலும்,
41 )

Page 44
ہے؟
சமூக அடித்தள மக்களும் தவில் நாகசுரமும் ஆகிய கட்டுரைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. நாயனம், நாகசுரம், நாகஸ்வரம், மங்கலக்குழல் என்ற பலபெயர்களைக் கொண்டு உருப்பெற்ற இசைக்கருவி தமிழகத்துப் புவியியல் மற்றும் பண்பாட்டுச் சூழலில் உருப்பெற்ற இசைக் கருவியாகும். நாதசுரத்துக்குரிய தாள வாத்தியமாக 'தவில் அமைகின்றது. தவிலுக்கு 'இறைபேரிகை’ என்ற பெயரும் வழங்கப்படு கின்றது. நாகசுரத்தைப் போன்றே தவிலும் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாற் கூறு களையும் உள்ளடக்கிய முழு வாத்தியமாகும்.
“அறியாதவற்றை நோக்கிய அழகியற் பரிமாணம்’ என்னும் கட்டுரையில் கலை இலக்கிய ஆக்கங்களின் கருத்தியற் பரிமாணங் களை ஆழ்ந்து வலியுறுத்திய மார்க்சிய வழித்திறனாய்வாளர்களின் இரண்டாம் கட்டப் படிமுறை வளர்ச்சியில் அழகியற் பரிமாணங் களின் அதீத வலியுறுத்தல் இடம்பெற்றமை, உளவியல் ஆய்வுகளில் எறிக்புறோமுக்குப் பின்னர் நிகழ்ந்த நிலைமாற்றம்’ எனலாம். திறனாய்வில் எல்லோராலும் 'ஏகமனதாக வலியுறுத்தப்படும் பரிமாணமாக அழகியற் கூறு அமைந்தாலும் சமகால அறிவை வளர்ச்சித் தளத்தில் அழகியற் பரிமாணம் என்பது தெளிவாகவும் திட்டவட்டமாகவும் விளக்கப்படாது திணறும் பதகளிப்பு நிலை காணப்படுகின்றது.
‘ஓலை’ ~ சஞ்சிகை
இலங்கை : தனிப்பிரதி ரூபா 60
இந்தியா : ஒரு வருடம் இந்திய
ஏனைய நாடுகள் : ஒருவருடம்
சநதாககாராகள தங்கள சநத
Colombo Tamil Sangam So கணக்கு இல ; 1100014906 Commercial Bank Gaugrismr
செலுத்
42

'தொன்மங்களும் இசையும்’, ‘பொதுவியல் இசை, என்னும் கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இசையில் மட்டுமன்றி ஏனைய கலை வடிவங்களிலும் வெசனப்பாடு அல்லது பொதுவியற் பண்புகள் தொடர்ச்சியாக வளரத்தொடங்கியுள்ளன. கருத்தியலைப் பொறுத்தவரை பொதுவியல் இசையின் எழுச்சியானது மக்கள் மயப்பாட்டை மீள வலியுறுத்தி நின்றாலும், அதன் வர்த்தக அனுகூலங்களையும் எதிர் நலன்களையும் பல் தேசியக் கம்பனிகளே மிகை இலாப மீட்டலுடன் பயன்படுத்தி வருகின்றன. இதை நாம் தெரிந்தும் தெரியாமல் இருப்பதே அவர்களுக்குச் சாதகமாக அமையும் காரணமாகும். 'ஆடலில் இசை, மேலைப்புலத்திலும் தமிழகத்திலும் இசை அறிகைப் புலப்பாடுகள் ஆகிய கட்டுரைகளும் உள்ளன. சமூக வாழ்க்கையே இசையின் தோற்றுவாய்க்குரிய தளமாக அமைந்தது. அகிலப் பொதுமை வாய்ந்த தொடர்பாடல் வடிவமாகவும், சமூக இடைவினைகளின் வடிவமாகவும், இசை வளர்ச்சி பெறலாயிற்று. மொழியும் இசையும் தொடக்க காலத்தில் உடலசைவுகளுடன் இணைந்த ஊடகங் களாயின. உடலசைவுகள், மனவெழுச்சி வெளிப்பாடுகள் இசை ஆகிய மூன்றுக்கு மிடையே செறிவுமிக்க தொடர்புறும் இணைப்புகள் உள்ளன.
பின் சந்தா விபரம்
= ஒரு வருடம் ரூபா 900/-
ரூபா 750/=
30 அமெரிக்க டொலர்
ifᎢᏛᏛhᏛlu
ciety Ltd.
வத்தை என்ற கணக்கில்
தும் வண்ணம் வேண்டுகிறோம்.
s
வைகாசி )

Page 45
இடைக் காலத் தமிழக வரலாற்றில் கோயில்களுக்கும் சமூகத்திற்கும் இடையிலான இயக்கத்தினை அறிந்துகொள்ள கல்வெட்டுச் சான்றுகளையும் பக்தி இலக்கியங்களையும் முதன்மைச் சான்றுகளாக் கொள்வதுடன் கோயில்களில் நிகழ்த்தப்படும் விழாக்களின் கூறுகளையும் ஆய்தல் வேண்டும். கோயில்களில் நிகழ்த்தப்படும் ஒவ்வொரு நிகழ்விற்கும் ஒரு சமூகக் காரணி உண்டு. தமிழகத்து ஊர்க் கோயில்களில் காப்பு கட்டும் நிகழ்விற்குப் பிறகு நிகழும் சமூகப் போக்குகளை மானிடவியல் பின்புலத்தில் அறிதல் நலம். காப்பு கட்டுதல் மூலம் ஓர் ஊரின் உறுப்பினர்கள் ஊரினைவிட்டு வெளியேறாமல் இருத்திவைத்தல் என்பது Working forces தக்க வைத்துக் கொள்ளப்படு வதனையும் உள்ளுர்க்குள்ளேயே relations of productions உறுதிப்படுத்தப்படுவதனையும் காட்டுகிறது. இடைக்காலத்து நிலவுடைமைச் சமூகம், கோயில் நிறுவனங்களின் மூலம் வரைந்த இவ்வெழுதாச் சட்டம் இன்று வரைக்கும் நடைமுறையில் செயல்படுவதனை Oriental Culture ன் ஒரு கூறு எனலாம். கோயில்விழா நடைமுறைகளில் கோயில்களுக்கும் சமூகத் திற்கும் இடையிலான அதிகாரப் பகிர்வு சடங்குகளில் பதியப்படுகிறது. இதுபோன்ற நடப்புகள் கோயில் ஒழுகு என்ற நூலில் ரீரங்கம் கோயிலின் வரலாறு பதியப்பட்டுள்ளது. பலவகைச் சான்றுகள்ைக் கொண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் அன்றாட நடைமுறையினை மானிடவியல் பின்னணியில் புல்லர் ஆய்ந்தார். கே.கே.பிள்ளையின் சுசீந்திரம் கோயிலாய்வு தருக்க முறையில் அமையவில்லை
(வைகாசி
 

கலாநிதி வல்லிபுரம் மகேஸ்வரனின் சோழர் காலத்துக் கோயிலும் சமூகமும்
முனைவர்கிஇரா.சங்கரன் Cupg5!pilo6 6flfootu IT67Tif A. VC (56.6/Tif, losionabl fig6), மயிலாடுதுறை, தமிழ்நாடு
யென்றும் கோயில் நிர்வாகம் பற்றிய தொடக்க நிலை ஆய்வுகளில் குறிப்பிடத்தக்கது. பி.சுரேஷ்ட பிள்ளையின் தஞ்சைப் பெருவுடையார் கோயில் பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தே அக்கோயிலின் சமூக இருப்பினை நா.வானமாமலை, ஜார்ஜ் டபிள்யூ.ஸ்பென்சர் போன்றோர் ஆய்வினை மேற்கொண்டனர். சோழர்காலக் கோயிலின் சமூக ஊடாட்டத்தினை தனியொருவர் முழுமையாக ஆயவியலாது. சோழர்களின் தொடக்கக் காலக் கோயில்கள் சோழ நாட்டின் விளிம்புநிலைப் பகுதிகளான புதுக்கோட்டை, திருச்செந்துறை, பழுவூர் போன்ற இடங்களில்தான் அமைந் துள்ளன. நேர்த்தியாகக் கட்டப்பட்ட இவற்றை விடவும் தலைநகர் கோயில்களான தஞ்சை வெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழ புரத்துக்கோயில், இராஜராஜபுரத்து கோயில்கள் போன்றன அரசு நிறுவனங்களாகவே பெயர் பெற்றன.
தமிழகத்தில் பல்லவர், பாண்டியர் எழுச்சி யினை ஒட்டி எழுந்த கோயில்கள் அரசியல் சடங்கு ஊடகங்களாக செயல்பட்டன. காஞ்சி கைலாசநாதர் கோயிலின் முடிசூட்டு விழாவினைக் காட்டும் புடைப்புச் சிற்பம் கோயில்கள் அரச நிறுவனங்கள் என்பதனை செதுக் கிச் சொல்கின்றன. தமிழகத்தில் சில புகழ்பெற்ற கோயில்களின் அருகிலேயே அதேபெயரில் பிறிதொரு பழங்கோயில் வழிபாட்டில் இருப்பதை நம்மால் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக, பாடல் பெற்றத் தலமான திருக்கடையூர் கோயிலின் அருகிலேயே மூன்று கி.மீ. தொலைவில் பழங்கோயில் ஒன்றுண்டு. புதுக்
43 O.

Page 46
്,
கோட்டை வட்டாரத்தில் இது போன்ற போக்கினை வெகுவாகக் காணலாம். திருக்கோகர்ணம், நார்த்தாமலை, குடுமியான்மலை, சித்தண்ண வாசல் போன்ற இடங்களில் இரண்டு சதுர கி.மி. பரப்பளவிற்குள்ளேயே குகைகோயில்களும், கட்டுமானக் கோயில்களும், குமிழி-மடைகள் கொண்ட பாசனக் குளங்களும், ஊரிருக்கைகளும் அமைந்துள்ளன. இவற்றினருகிலேயே மரப்பு தர்களிடையே மக்கள் வழிபடும் தெய்வக் கூட்டங் களும் உள்ளன. ஒட்டு மொத்தமாக இவற்றை தொல்குடிகளின் வழிபாட்டுத் தலங்கள் எனலாம். காவிரிச் சமவெளியில் தொல் குடிகளின் வழிபாட்டுத் தலங்களாக இருந்து பாடல் பெற்ற பக்தி இயக்கத்தலங்களாக மாறிய பெரும்பாலான கோயில்கள் இன்றைக்கும் வழிபாட்டு நிறுவனங் களாக உள்ளன. மன்னர்கள் விருப்பத்திற் கேற்றபடி மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தலைநகர் கோயில்கள் இன்றைக்கு சுற்றுலாத் தலங்களாக மாறிப்போயின. காரணம், அவை பாடல் பெறாத தலங்கள் என்பதால் மட்டுமல்ல, அவை தொல்குடிகளின் வழிபாட்டுத் தலங்களாகவும் இருந்ததில்லை என்பதாலும் தான்.
மேற்சொன்னக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டோமானால் வல்லிபுரம் மகேஸ்வரன் ஆய்ந்து எழுதிய சோழர் காலத்துக் கோயிலும் சமூகமும் என்ற நூலினை புரிந்து கொள்வது எளிது. இடைக்காலத் தமிழக வரலாற்றினைப் புரிந்து கொள்ள தமிழறிஞரும் வரலாற்றறிஞரும் போட்டி போட்டுக்கொண்டு முயன்றுள்ளனர். தொட்டால் பட்டியல் நீளும். சென்ற நூற்றாண்டின் கடைக்கூற்றில் புதிய புதிய நோக்குடன் சோழர் காலத்து சமூகத்தினையும், அரசியலையும் நாம் பார்ப்பதற்கு அறிஞர் பலர் கற்றுத் தந்துள்ளனர். தா.த.கோசாம்பி தொடங்கி வைத்த புள்ளிவியல் முறைக்குப் புத்துயிர் தந்து இடைக்காலத் தமிழர் சமூகத்தினை அணுகுதற்கு புதுவழி வகுத்தவர் நொகரசிமாவும், எ.சுப்பராயலுமாவர். இப்பரம்பரை வரிசையில் வரும் இந்நூலாசிரியரும் புள்ளியியல் முறையினை ஒர் உத்தியாக்கி ஆய்வினை மேற்கொண்டுள்ளார். பலனாக சில புதிய முடிவுகளுக்கு வருகிறார்.
(44

சோழர் காலத்து சமூகப் போக்குகளைக் கண்டறிய பரந்து விரிந்து சோழர் நிலப்பரப்பின் வெவ்வேறு திணைகளில் அமைந்த குறுநில வட்டங்களைத் தெரிவு செய்து அவ்வட்டங் களிலுள்ள கல்வெட்டுக்களை பகுப்பாய்வு செய்து கருத்துக்களைப் பெறுவது ஆய்வு முறையில் ஓர் உத்தியாகும். இம்முறையினை முதலில் அறிமுகப்படுத்தியவர் நொ.கரசிமா ஆவார். காவிரிபாயும் நிலப்பரப்பின் இருவேறு திணைப் பகுதிகளிலுள்ள கல்வெட்டுக்களை ஒப்பாய்வு செய்து ஆசிய உற்பத்திமுறை என்ற கோட் பாட்டினை தம் நூலில் சோதித்துள்ளார் (1984). இதே ஆய்வு முறையினைப் பயன்படுத்தி கும்பகோணம், திருச்சிராப்பள்ளி, திருக்கோயிலூர், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை என்ற வெவ்வேறு திணைகளில் கிடைக்கும் சோழர் கல்வெட்டுக்களை தொகுத்தாய்வு செய்து சோழர் கால உற்பத்தி முறையினை ஜேம்ஸ் ஹெய்ட்ஸ்மன் ஆய்ந்தார்(1997). இவ்வரிசையில் சோழர் காலத்துப் பெண்களின் நின்ல பற்றி ஆய்ந்த லெஸ்லி ஓர் வெவ்வேறு திணைகளில் அமைந்த ஏழு குறுநிலவட்டங்களைத் தெரிவு செய்துள்ளார்(2002). இங்கு வல்லிபுரம் மகேஸ்வரன் காவிரியின் வளமை கொழிக்கும் மையப் பகுதிகளிலிருந்து (திருவாரூர், திருவையாறு, திருவிசலூர், வேதாரண்யம், திருவிடைமருதூர்) கல்வெட்டுத் தரவுகளை ஆய்ந்துள்ளார். நொ.கரசிமா, எ.சுப்பராயலு வகுத்த காலப்பிரிவினை அடியொற்றி தடம் பிறழாமல் சில முடிவுகளைத் தருகிறார்.
கல்வெட்டுக்களை முதன்மைச் சான்றுகளாகக் கொண்டு வரலாற்றை ஆய்வோருக்கு தமிழ் இலக்கியத்தில் நேரிய பயிற்சி இருக்குமாயின் அவர்கள் ஆய்வில் எப்படி பரிணமிப்பர் என்பதற்கு ஆவேலுப்பிள்ளை நல்லதோர் முன்னுதாரணம். அவரிடம் பயின்ற இந்நூலாசிரியருக்கும் அத்திறம் உள்ளது. இலக் கியச் சான்றுகளையும் , கல்வெட்டுச் சான்றுகளையும் பயன்படுத்திய கோயில் என்ற சொல்லாய்வு இவரின் தனித்திறம். ஆனால் சங்க காலத்தின் பரத்தையர் பின்னாட் களில் தோன்றப்போகும் தளிச்சேரிப் பெண்டு களுக்கு முன்னோர் என்று சொல்லத் துணியும்
வைகாசி )

Page 47
ஜி.
கருத்தினை மீளாய்வு செய்ய வேண்டும். இது பரத்தையரையும், கோயில் பெண் டிரையும் இழிவாகப் பார்த்ததன் வெளிப்பாடு. வெகுண் டெழுந்த நிலவுடைச் சமூகத்தின் உடனிகழ்ச்சி யாக தாய்வழிச் சமூகததின் எச்சசொச்ச கூறாக இல்பரத்தையர், சேரிப்பரத்தையரைப் பார்க்க வேண்டும். சங்க காலத்தில் புறக்கணிக்கப்பட்டது போல் இடைக்காலத்தில் இத்தாய்வழிச் சமூகததின் செல்விகளைப் புறக்கணிக்க முடியாமலே அவர்களை அரசர்கள் மணந்ததும் அவர்களின் உரிமைச் சுற்றம் கோயில் பெண்டி ரானதும். சோழர் காலத்துக்குள்ளே இவர்களின் பொருளியல் அந்தஸ்து தளர்ச்சியுற்றது என்று வல்லிபுரம் மகேஸ்வரன் முடிவு காண்கிறார். சரிதான், ஆட்சிப்படியிலிருந்து நெகிழ்ந்து வெளி வந்தனர் என்பதனை சமூக இறுக்கத்தின் ஒரு வகையான தளர்ச்சி என்று கொள்ளவோம். தளிச்சேரிப் பெண்டுகளுக்கும், கோயில்களுக்கும் இடையிலான உறவினை மானிடவியல் பின்னணியிலும் பார்க்கலாம். திருவாரூர், திருவிடைமருதூர், திருவையாறு போன்ற ஊர்களின் தளிச்சேரிப் பெண்டுகள் என்பன தேங்கியிருந்த தாய்வழிச் சமூகத்தின் நிறுவனங்கள் எனலாம். இடைக்காலத்தில் எந்தெந்த ஊர்களின் கோயில்களிலெல்லாம் தளிச்சேரிப் பெண்டுகள் இருந்தார்களோ (தலைநகர் கோயில்களைத் தவிர்த்து) அவ்வூர் களிலுள்ள கோயில்களை களஆய்வு செய்கை யில் அக்கோயில்கள் வழிபாட்டுத் தளங்கள் என்பதனையும் தாண்டி இன்றைய சமூக நடைமுறைகளையும், குறிப்பாக மருத்துவம், கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அண்மைக் காலம்வரை தேவதாசி முறைக்குப் பெயர் போன மூவலூர் என்ற ஊரிலுள்ள கோயிலில் யானை பிரசவிக்கும் காட்சி சுற்றாலைச் சுவரில் புடைப்பச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனைத் தாய்வழிச் சமூகத்தின் அடையாளம் என்றே கொள்ளலாம். பிரசவ தைலத்திற்குப் பெயர்போன திருக்கருகாவூர் கோயில் காற்றோட்டமுள்ள 6905 architybal LD (5g5 g56 LD60) 60 (3. T6oi qBi தோற்றமளிக்கிறது. திருநீறு மருந்திற்குப் பெயர் போன வைத்தீஸ்வரன் கோயில் தேவதாசி முறைக்கு பெயர்போன ஒன்று. 1970களில்
(வைகாசி

அவ்வூரின் சில தெருக்களில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டு விட்டது என்ற விளம்பர பலகைகள் இருந்தன. ஆடல் சிற்பங்கள் உள்ள அனைத்து கோயில்களிலும் கோயில் பெண்டிர் இருந்திருப்பர். அங்கு பெண்களே பூசாரிகளாகவும் இருந்திருப்பர். திருவானைக்கா கோயிலின் ஆண்பூசாரி உச்சி காலைபூசையினை பெண்வேடமிட்டு நடத்துகிறார். சீர்காழியில் ஒரு தேவி கோயிலின் பூசனை வேலைகளை தலைமுறை தலைமுறையாக பெண்களே செய்கின்றனர். நடனச் சிற்பங்களைக் கொண்டுள்ள தில்லையம்மன் கோயில் பூசனை களை அண்மைக்காலம் வரை பெண்தான் நடத்தி வந்திருக்கிறார்.
கோயில் பெயர்கள், கடவுள் பெயர்கள் பற்றிய இவரின் ஆய்வு தொடத்தொட வளரும் போலுள்ளது. இப்பகுதி புதிய தரவுகளைத் தருகின்றன. இளங்கோயில் என்பது கோயில் வகைகளில் ஒன்றைக் குறிக்குமா? வேறு பொருளுண்டா? என்று ஆயலாம். புதுக்கோட்ட்ைப் பகுதியில் கோனாடு, இளங்கோனாடு என்று நாட்டுப் பிரிவுகள் உண்டு. சார் என்றொரு ஊரும், இளஞ்சார் என்று பிறி தொரு ஊரும் இருந்துள்ளன. சித்தன்னவாசல் கல்வெட்டில் இளையர் என்ற சொல் உள்ளது. சிததண்ணவாசலுக்கருகே, அண்ணவாசல் என்றொரு ஊரும் உண்டு. இனக்குழு உடைபட்டு இளைய குழு புதியதொரு ஊர்ப்பகுதியினை வரலாற்றுக் காலங்களில் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படி உருவான குழு தமக்கென்று இளங்கோயில் ஒன்றினையும் உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்புண்டு. ஆகமமுறைப்படி கோயில்கள் கட்டப்படவில்லை என்பது தெரிந்த ஒன்று.
கோயிலும் இடையரும், கோயிலும் நிர்வாகமும் என்று தலைப்பிட்ட இயல்கள் புதிய புதிய முடிவுகளைத் தருகின்றன. பூரீகார்யம் பற்றி தரப்பட்டுள்ள பட்டியல்கள் அத்துறையில் ஆய்வோர்க்கு பயனுள்ளது. சான்றுகளை இவரே தேடித்தந்துள்ளார். கோயிலும் நிர்வாகமும் இயலில் (கோயில்கள் ஆட்சி மன்றங்கள் போன்றன) அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலான மேநிலைச் சமூகங்களினது
45)

Page 48
καμία
2Air Aalsme maa
சங்கமமாகவும் இவ்வமைப்புகள் இருந்தன என்பதில் முக்கால் பங்கு உண்மையுள்ளது. போர்க்குலத்தவரையும் சேர்க்கும்போது முழு உண்மையும் கிட்டும். போர்க்குலத்தவரான பாடிகாவல் வரி வசூலிப்பவரை அப்பர் சாடியதாக அண்மையில் ர.பூங்குன்றன் சுட்டியுள்ளார்(2008).
ஆள் பெயர்கள் இடப்பட்டுள்ள பட்டியலில் கஞ்சன், குப்பை என்பவனவற்றை இழிந்த பெயர் என்று நூலாசிரியர் குறிப்பிடுதல் சரியன்று. கஞ்சன் என்ற சொல் பொன்னை உடையவன் என்று பொருள்படும். குப்பை என்ற பழந்தமிழ்ச் சொல்லிற்கு தானிய குவியல், செல்வநிதி என்றும் பொருண்டு. நெற்குப்பை, உளுத்துக் குப்பை என்று ஊர்ப்பெயர்கள் தமிழகத்தில் உண்டு.
சோழர் காலத்தில் கோயில்கள் என்ற இயலில் சமூகத்திலும், அரசாட்சியிலும் பலநிலைகளிலும் இருந்துவந்த கடவுளரைப் பற்றி ஆய்ந்துள்ளார். கல்வெட்டுக்களில் பரவலாக பிடாரி கோயில்கள் இவரால் சுட்டப்படுவதனை ஆய்வுக் களத்திற்கு இழுக்க வேண்டும். புறநிலையில் அரச கட்டமைப்பிற்கு வெளியில் நின்று இதுபோன்ற கோயில்கள் மக்களுடன் இயைந்து வருகின்றன. இதுபோன்ற கோயில்கள் போர்க்குலத்தவர் கணிசமாக வாழும் பகுதிகளிலேயே இயங்குவன. தஞ்சாவூர் மாரியம்மன்கோயில், சமயபுரம் மாரியம்மன்கோயில், திருவெட்பூர் மாரியம்மன் கோயில் வேளாண்கன்னியாக இருந்து அன்னையாக மாறியதாகச் சொல்லப்படும் வேளாங்கண்ணி மாதாகோயில் போன்றவற்றை இப்பின்னணியில் பார்க்க வேண்டும். இங்கெல்லாம் ஆட்சியாளர்கள் பணியவேண்டியிருந்தது. பிடாரிகளைக் கண்டு குனிய வேண்டியிருந்தது.
பள்ளிப்படை கோயில்கள், அரசுக்கோயில்கள் இரண்டின் இருப்பினையும் தெளிவாக்கி விளக்கியி ருக்கிறார். கடவுள், அரசன் பற்றிய வாதங்களுக்கு இது நல்லதோர் முன்னோடி இந்தியாவின் வட புலத்தில் இறைவனே அவதாரமெடுத்து அரசனாகி ஆளுதல் வேண்டும் என்று எண்ணப் பட்டது. அதனால்தான் விஷ்ணு என்ற கடவுளின் அவதாரமாக இராமன் அரசனாக
(46

வரவேற்கப்பட்டான். இந்திரனின் தன்மை கொண்ட நர அரசனான தசரதன் மடிய நேர்ந்தது. அங்கு, தேவன் அரசனாக வேண்டுமென்று எதிர்பார்க் கப்பட்டது. தமிழகத்தில் ராஜன் இந்திரனாக அதாவது கடவுளாக மாற வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவேதான் இங்கு இராஜேந்திரன். வடக்கில் தேவன் இராஜனான்; தெற்கில் இராஜன் தேவனான். எனவேதான் கோயில் அரசனின் இருப்பிடத்தினையும் சுட்டுகிறது. ஆண்டவனின் இருப்பிடத்தினையும் சுட்டுகிறது. என்றாலும், ஆண்டு மாண்டுபோன மன்னர்களுக்குச் கட்டப்பட்ட பள்ளிப்படைக் கோயில்கள் தத்துவ வறட்சி கொண்ட அகப்புறச் சமயத்தளத்தில் வைக்கப்பட்டன. அரசகட்டமைப் பில் அங்கம் பெறமுடியவில்லை. இந்தஇயல் சமயத் தத்துவங்களை உய்த்துணரவும் மேலாய் விற்கும் வழிகாட்டும்படியாக அமைந்துள்ளது.
தம்மிடம் பயின்ற மாணவரின் நூலிற்கு பேரா.எ.சுப்பராயலு அணிந்துரை வழங்கியுள்ளார். வல்லிபுரம் மகேஸ்வரன் தம் ஆய்வில் கண்டு சொன்ன அரசிற்கும் வணிக நகரங்களுக்கும் இருந்த முரண்பாட்டினை ஊன்றிப்பார்க்க வேண்டும் என்று பேரா.எ.சுப்பராயலு அறிவுறுத்து கிறார். கல்வெட்டாராய்ச்சியின் மூலம் கண்ட இம்முடிவினை பல்லாண்டுகளுக்கு முன்பே பேரா.க.கைலாசபதி தம் சிலப்பதிகாரச் சிந்தனை கள் என்ற கட்டுரையில் "வணிகவர்த்தகத்துக்கும் அரசுக்கும் ஏற்பட்ட கூர்மையான முரண்பாட்டை நாம் கண்டு கொண்டாலன்றி இளங்கோவடிகள் வற்புறுத்தும் தமிழர் அடையாளங்களை இனம் காண முடியாது” என்கிறார் சிலப்பதிகாரச் சிந்தனைகள் (1970). இதே கருத்தினை தொ.மு.சிதம்பர ரகுநாதன் கூறுகையில்(1984) கிண்டலடிக்கப்பட்டார்.
இந்நூலாசிரியரின் ஆய்வுமுறையில் தமிழாய்வு, வரலாற்றாய்வு என்பதனைவிடவும் சமூகவியல், நாட்டாரியல் ஆய்வுக்கூறுகள் ஆங்காங்கே தலை தூக்குகின்றன. தமிழர் சமூகத்தில் கோயில் உரு வாக்கம் என்ற இயலினை இவ்விதமான ஆய்வுக் கூறுகளைக் கொண்டு விரித்துப் பெருக்கின் நூலாசிரியரின் ஆய்வுப் புலமை வளர்பிறையாகும்.
வைகாசி )

Page 49
கொழும்
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 25.04.2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடத்திய நூல் வெளியீடு புதுமையான அம்சங்களைக் கொண்டிருந்தது. மற்றைய நூல் வெளியீடுகளைப் போல் அல்லாமல் பன்மொழிப் புலவர் த.கனகரத்தினம் அவர்கள் தாம் எழுதிய நூலின் ஒரு தொகுதியைத் தமிழ்ச் சங்கத்திற்கு இலவசமாகக் கொடுத்துதவினார். தமிழ்ச் சங்கம் புத்தக வெளியீட்டை மேற்கொண்டு வெளியீட்டால் பெறப்படும் பணம் முழுவதையும் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரியில் வன பிதா யேசுதாசன் அடிகளார் அவர்களால் பராமரிக்கப்படும் 109 கிறிஸ்தவ, இந்து மாணவச் செல்வங்களின் வாழ்க்கை செளபாக்கியத்துக்கு வழங்க முன் வந்தமை மிகப் பெரிய மனித நேய நிகழ்வாகவே காண முடிகின்றது. இம்மாணவர்களில் 71 பேர் இடர்அனர்த்த முகாங்களில் இருந்தும் மற்றையவர்கள் சுனாமியாலும் தாய் தந்தைர் இருவரையும் அன்றேல் தாய், அல்லது தந்தையை இழந்து கல்வியையும் வாழ்க்கையையும் முன்னெடுக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். இந்த நூல் வெளி யீட்டிற்குப் பலரது ஒத்துழைப்பும் கிடைத்தமை எமது இனத்தில் இப்படி இடர்ப்படுவோரின் வளர்ச்சிக்கு எமது சமூகம் செய்யும் உதவி ஓர் புத்துணர்ச்சியாகவே காணப்படுகின்றது.
“செந்தமிழ் வளம்பெற வழிகள்” பாடசாலை மாணவர்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவி யலாளர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் மிகப் பயனுடைய நூலாகக் காணப்படுவதுடன் பாடநூல்கள், பத்திரிகைகள் பகிரங்க அறிவுறுத்தல்கள் என்பவற்றிலே காணப்படும் பிழைகளையும் எவ்வாறு திருத்துதல்,
(வைகாசி
 

"செந்தமிழ் வளம்பெற வழிகள்" த் தமிழ்ச் சங்கத்தால் நடத்தப்பட்ட ஒரு மனித நேய நூல் வெளியீடு
- சி.பாஸ்க்கரா -
மொழிபெயர்ப்பு இடர்ப்பாடுகள், கலைச் சொல்லாக்கம், சிங்கள தமிழ்மொழி ஒற்றுமை வேற்றுமைகள் என்ற, தற்காலத்திற்கு ஏற்ற பல விடயங்களைத் தாங்கியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இவற்றையெல்லாம் நயவுரை ஆற்றிய திரு.வி.ஏ.திருஞானசுந்தரம் (ஆலோசகர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்திாபனம்) கலாபூஷணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்கள் விரிவாக எடுத்துக் காட்டி னார்கள். வரவேற்புரை ஆற்றிய திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி (தமிழ்ச் சங்கப் பொதுச்செயலாளர்) வாழ்த்துக் கவிதை வழங்கிய வைத்திய கலாநிதி ஜின்னாஹற் ஷரிபுத்தீன் (கொழும்பு தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்) தலைமை உரை யாற்றிய தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரன், ஆசியுரை வழங்கிய தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா, வெளியீட்டுரை வழங்கிய பேராதனைப் பல்கலைக்கழகச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி வ.மகேஸ்வரன், முதற் பிரதியைப் பெற்றுக் கொண்ட அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர் திரு.வி.கைலாயப்பிள்ளை ஆகிய பெருமக்கள் நூல் வெளியீட்டு விழாவின் நோக்கத் தையும் நூலின் சிறப்பையும் எடுத்துக் கூறி புத்தக வெளியீடு சிறப்பாக நடை பெற வழிவகுத் தனர். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் எடுத்தி யம்பப்பட்ட செய்தி கள் சகல சமயப் பொது ஸ்தாபனங்கள் கொடை வள்ளல் கள் உதவியுடன் மாணவச் செல்வங்களின் வாழ்க்கை சிறப்படையுமானால் போற்றுதற்குரிய நிகழ்ச்சியாகவே காணப்படும்.
47 )

Page 50
கொழும்புத் தமிழ்ச் சங்கச் செயலாளர் நிகழ்த்துவதையும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங் ஆற்றிய கலாபூசணம் சைவப்புலவர் சு.செல்லத்துை திரு.வி.ஏ.திருஞானசுந்தரம், வாழ்த்துக் கவிதை ஷரிபுத்தீன், ஆசியுரையாற்றிய பேராசிரியர் சபா சோ.சந்திரசேகரன், நூலாசிரியர் பன்மொழிப் புலவர் கலாநிதி வ.மகேஸ்வரன், முதல்பிரதி பெற்ற திரு.வி.கைலாயப்பிள்ளை மற்றும் பத்மறி ஈஸ் கென்றியரசர் கல்லூரி அதிபரினால் அனுப்பிவை சங்கத் துணைச் செயலாளர், இளவாலை புை நிகழ்ச்சித் திட்ட செயலாளர் சி.பாஸ்க்கரா வா நூலாசிரியர் கெளரவிக்கப்படுத்து வதையும் அரு ஜெயராசா, சி.பாஸ்க்கரா ஆகியோர் நிற்பதையு
~ விளம்ப
ஒலை
பின் அட்டை வெளிப்புறம் முன் அட்டை உட்புறம் பின் அட்டை உட்புறம் உட்பக்க விளம்பரம் (முழு) உட்பக்க விளம்பரம் (அரை) விளம்பரதாரர்களே! ‘ஓலை’ கை ஏட்டின் வளர்ச்சிக்கு விளம்பரங்க
 
 
 
 
 
 
 

*్య#్క
திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி வரவேற்புரை கிய செல்வி சற்சொரூபவதி நாதன், நயவுரைகளை ரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆலோசகர் யை இசைத்த வைத்திய கலாநிதி ஜின்னாஹற் ஜெயராசா, தலைமையுரையாற்றிய பேராசிரியர் த.கனகரத்தினம், வெளியீட்டுரையினை நிகழ்த்திய 9 அகில இலங்கை இந்துமாமன்ற தலைவர் வரக்குருக்கள் மேடையில் அமர்ந்திருப்பதையும் க்கப்பட்ட நன்றிக் கடிதத்தை, கொழும்புத் தமிழ்ச் ரித கென்றியரசர் கல்லூரி கொழும்புக் கிளை சித்து வழங்குவதையும். பேராசிரியர் அவர்களால் கில் பத்மறி ஈஸ்வரக்குருக்கள், பேராசிரியர் சபா ம் படங்களில் காணலாம்.
ாக் கட்டணம்
ரூபா 5,000/= (நான்கு கலர்)
ரூபா 4,000/- (தனி ஒரு கலர்
ரூபா 3,000/= (தனி ஒரு கலர்
ரூபா 2,500/=
ரூபா 1,500/= ல இலக்கிய மேம்பாட்டு ள் தந்து உதவுங்கள்.
வைகாசி

Page 51
இலை தொந்து வெளிவர எமது வாழ்த்துக்கள்.
சேமமடு பதிப்பகத்தி
Տ ՏեԾԻ : Տացին: 를 in this ook Wasba Ronito Read
U.G.50 People's 24.2362 Rac1248324 E-maich
 

அளவிடும் மதிப்பிடும்
X|Deļ3 SSƏDOud equƏ6eW SSƏpoud ue/Á
Wveoletto ooz/L/900's idoo'gal eleme33

Page 52
Sktt LtttLLLLLLLtttttttLLLLLLLtttttttLtttLLtLLL tttLLLLLLLtttLL
சிறியோர் முதல் பெரிே உகந்த ச
γγιαννίαct
ANNA INDUST T.P.: O2, 1-2
 
 
 
 

"RY, INUVIL.
22,356S