கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயகம் 2011.01-03

Page 1


Page 2
அந்தப் பெண்
மோக முத்தங்களாலும் மதுக் கிண்ணங்களாலும் சூடேறிக்கொண்டிருந்த ஓர் உலகத்தில்
அவள்
குளிர்ந்த நிலத்தில் சலவை யந்திரங்களுக்கிடையே குளிரைத்தாங்கும் முயற்சியில் சுரண்டுபோய்க்கிடந்தாள் நட்பின்றி, வீடின்றி சுற்ற மேலங்கியின்றி வெப்பத்தை நாடி வந்தவள் விறைத்துக் கிடந்தாள்!
ஆடைகளைத் துவைப்பதற்காக கீழ்த்தளத்துக்கு நாங்கள் போனபொழுது எங்கள் வழியில் தான் இருந்ததற்காக வீடற்ற அப்பெண் நாணினாள்.
ஒருகால் அவளுக்கு உறவினர் யாரும் இல்லையோ? அல்லது பணமில்லையோ! அல்லது ஏமாற்றப்பட்டவளோ அல்லது போதைக்கு அடிமையானவளோ! மனித இனத்துக்குத் தப்பி குளிர் யந்திரங்களுக்கிடையில் ஒளிக்க விரும்பினாளோ!

தெலுங்கு மூலம் : ஏ.ஜெயப்ரபா ஆங்கில மூலம் : டி.கேசவராவ் தமிழில் : சோ.பத்மநாதன்
வாடித்துவண்ட தளிர்போல அவள் உறங்குகையில் அவள் துயிலையும் அமைதியையும் குழப்பாது குற்ற உணர்வோடு நாங்கள் திரும்பிவந்தோம் ஆனால் அவளுடைய மிரண்ட, சோக முகம் எம்மை
நாள் முழுவதும் முள்ளாய்க் குத்தியது அந்தத் தூரதேசத்தில்!

Page 3
புதியஜனநாயகம் புதியவாழ்வு புதியபண்பாடு
இலக்கிய சமூகவிஞ்ஞான இதழ்
ஜனவரி - மார்ச் 2011 இதழ் இல. 80
பிரதம ஆசிரியர் க. தணிகாசலம் தொ.பே. 021-2223629
ஆசிரியர் குழு சி. சிவசேகரம் குழந்தை ம. சண்முகலிங்கம் கல்வயல் வே. குமாரசாமி
சோ. தேவராஜா அழ. பகரதன் ஜெ. சற்குருநாதன் சி. இதயராஜா த. கோபாலகிருஷ்ணன்
பக்க வடிவமைப்பு (856 uēFLITT 569.g6ör
ஓவியங்கள் எஸ். டி. சாமி
முன், பின் அட்டைப் படங்கள் 'எல் நெக்றோ"கும்பேர்டோ ஹேர்னாட் மாரட்டின்ஸ்
கியூபா (1958-) அனுராதா காந்தி தொடர்பு : ஆசிரியர், ஆடியபாதம் வீதி,
கொக்குவில், 021-2223629 L566Orgb&F6): thayakam 10 yahoo.com அச்சுப்பதிப்பு: கெளரி அச்சகம் 011 2432477
விநியோகம் 152 -1/6, ஹல்ற்ஸ்டோப் வீதி, கொழும்பு - 12 Tel 011 238.1603
வெளியீடு தேசிய கலை இலக்கியப் பேரவை
 
 
 

ஆசிரியர் தலையங்கம்
நடக்காதென்றார் நடந்துவிட்டது
எகிப்திலோ, துனிசியாவிலோ ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முழுமையான அல்லது அடிப்படையான சமுதாய மாற்றங்கள் அல்ல. அவற்றின் மூலம் என்ன சாதிக்கப்படக்கூடும் என்று இன்னமும் உறுதியாகக் கூற இயலாது. ஆயினும் அவை உடனடியாகவே அரபு நாடுகளில் சவுதி அரேபியாவையும், எமிரேற்ஸ் எனப்படும் அரபு மன்னராட்சியைக் கொண்ட நாட்டையும் போல ஒருசிலவற்றைத் தவிர்த்ததால் எல்லா அரபு நாடுகளிலும் எழுச்சிகளைத் துTண்டியுள்ளன. அவை ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவராவிட்டாலும் சில நாடுகளிலாவது மக்களை அமைதிப் படுத்துவதற்காக சில சீர்திருத்தங்களையாவது கொண்டுவரலாம்.
அமெரிக்கா ஆட்சி மாற்றத்தை விரும்பிய சிரியாவில் அமெரிக்க முகவர்கள் தூண்டிவிட முயன்ற இணையத்தளப் புரட்சி எனக்கூடிய டுவிட்டர் புரட்சி எடுபடவில்லை. அவ்வாறே, ஈரானில் தூண்டிவிட முயன்ற கிளர்ச்சியும் அரசாங்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவால் மத்திய கிழக்கினதும் வட ஆபிரிக்காவினதும் எழுச்சிகளை நெறிப்படுத்த இயலாதுள்ளது என்னும் அமெரிக்கா, அதற்காகச் சும்மா இருந்துவிடப்போவதில்லை. மூடர்கள் திரும்பத் திரும்ப பாரிய கற்களைத் தூக்குவது தமது கால்களை நசுக்கிக்கொள்வதற்காகவே என்ற பாடம் அமெரிக்க ஆட்சியாளர்கள் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து கற்கத்தவறிய ஒரு பாடமாகும். லிபியாவில் ஏற்பட்ட ஒரு கிளர்ச்சியை ஊதிப் பெருப்பித்து அதையே காரணமாக்கி அங்கு படைகளை அனுப்பி ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கின்றன அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும். ஆனால் அவை எதிர்பார்க்கக்கூடிய வேகத்தில் அல்லது அவை உலகுக்குக் காட்ட விரும்பிய வேகத்தில் அங்கு அவர்கள் விரும்பிய மாற்றம் நிகழவில்லை. லிபியாவில் கடாபி ஆட்சி தனது அதிர்ச்சியில் இருந்து மீண்டுள்ளது. எனினும் லிபியா தொடர்ந்தும் ஒரு நீண்ட உள்நாட்டுப் போரை எதிர்நோக்கும் அபாயம் உள்ளது. அதனாலே தான், வெனிசுவேலாவின் சனாதிபதி சாவேஸ் சொல்வது போல மோதலைக் கூடிய விரைவில் முடிவுக்குக் கொணி டுவருவதற்கான 9D , 60) Juu T L 6ů தொடங்கப்படவேண்டும். அதை அமெரிக்காவும் அதன் ஐரொப்பியக் கூட்டாளிகளும் விரும்பவில்லை.

Page 4
ஆசிரியர் தலையங்கம்
ராகலை மோகன் பின்
G2
 

அவர்கள் ஒரு ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் கடாபி மேற்குலகுடன் மிகவும் சமரசமாகவே நடந்து வந்துள்ளார். எனவே இந்த ஆட்சிமாற்றம் ஏனர் எனர் பது கவனத்துக்குரியது. அது ஆபிரிக்காவை முழுமையாக மேற்குலகின் இராணுவ, பொருளா தார அதிகாரத்துக்கு உட்படுத்துவது அல்லாமல் வேறெதுவுமில்லை.
எனவே, எந்த ஆட்சிமாற்றமும் மக்கள் கொண்டு வரவேண்டிய ஒன்றே ஒளிய, அந்நியத் தலையீடுகள் அல்ல என்பதில் நாம் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டும்.
துனிசிய, எகரிப் திய ஆட்சிகள் கவிழ்ந்தவுடன், இங்குள்ள அவற்றை ஒத்த சர்வதிகார ஊழல் ஆட்சியும் கவிழலாம் என்று கனவு கண்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருமே இலங்கையின் மக்களை ஏகாதிபத்தியத்திற்கும், உலகமயமாக்கலுக்கும் எதிராகவோ, அந்நியக் குறுக் கீட்டுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராகவோ அணிதிரட்டக் கூடியவர்கள் அல்ல. தேசிய இனப் பிரச்சினையை போராக முன்னெடுப்பதற்கு ஒரு வகையிலோ, இன்னொரு வகையிலோ பங்களித்தவர்களான யு.என்.பியும், ஜே.வி.பியும் இந்த நாட்டை அந்நியத் தலையfட் டுக் கு உட் படுததரியோரில முக்கியமானவர்கள்.
எனவே ஆட்சிமாற்றம் பற்றிப் பேசும் எவரும், இந்த நாட்டின் உள் அலுவல்களில் குறுக் கிடுகின்ற அந்நிய நாடுகளுக்கும் , மேலாதிக்கம் செய்ய முயல்கின்ற நாடுகளுக்கும், பொருளாதார ரீதியாக நாட்டையும், மக்களையும் சுரண்டக் காத்துநின்றவர்களுக்கும் எதிராக மக்களை எச்சரித்து அணிதிரட்டட்டும். இந்த நாட்டின் தேசிய இனப் பிரச்சினையை அயற் குறுக்கீடு இன்றிச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்ப்பது பற்றி சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களிடையே பிரச்சார இயக்கம் ஒன்றுக்கு முன்வரட்டும்.
மக்களை ஒற்றுமைப் படுத்தாமல் , அரசியல் ரீதியாக அணி திரட்டாமல் ஆட்சி மாற்றம் பற்றிப் பேசுவது பயனற்றது.
ஆயினும், இனிமேற்கொண்டு உலகில் புரட்சியே வராது என்பவர்கட்கு அரபுலகு ஒரு மறுமொழியை வழங்கியுள்ளது. அதன் நல்ல பாடங்களை நாம் கற்போமாக.
- ஆசிரியர் குழு -
E6urajgi - ortja 9OI

Page 5
"மல்லிகைப் புரட்சி’
உலகெங்கும் அதிகார வர்க்க ஆட்சிகளு ஒன்றல்ல. வரலாறுதோறும் அவ்வப்போது உல: எங்கு உண்டோ அங்கு போராட்டம் உண்டு” இத்தகைய எழுச்சிகளுக்கு காரணமாக அமைகில நாடுகளில் நடைபெறும் மக்கள் எழுச்சிகள் வெ: இன்றைய உலகமய சந்தைப் பொருள வேலையின்மை, வறுமை, சமத்துவமின்மை, அடிப் ஒடுக்குமுறைகளுக்கும் காரணமாகிறது. அத்துடன் மத்தியில் சுயநல முனைப்பையும் சமூகநல அக்க பிறழ்வுகளையும் சகமனிதர்களிடையேயான உறவுச் மனங்களில் பெரும் பாதிப்பைச் செலுத்திவரும் வாழ்வின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் போது எதிராக மக்கள் எழுச்சிபெற்றுத் தெருவில் இற மக்களின் இயல்பான, நியாயமான இவ் தூரநோக்கும் உள்ள வழிப்படுத்தல்களால் ெ இவற்றிற் பல ஏகாதிபத்திய, பிராந்திய நாடுகள் அழுத்தங்கள் மூலம் தோல்வி அடைவதுடன், சிறு மாற்றங்களுடன் அவர்களது அதிகார நலன அரசுகளாகத் தொடர்ந்தும் தக்கவைக்கப்படுகின்ற வட ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதியில் f வேலையற்ற பட்டதாரி இளைஞன் தனக்குத்தானே தி புரிந்த சம்பவத்துடன் ஆரம்பித்த இம் மக்கள் லிபியா, மொரொக்கோ, அல்ஜீரியா எனப் பற்றி கிழக்கில் ஜோர்தான், யெமென், ஈராக், ஓமான் பல நாடுகளிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் சில பொருளாதார சீர்திருத்தங்களு உலக மேலாதிக்க நாடுகள் இவ் எழுச்சிக பின்னர் தமக்குச் சார்பான உலக நிறுவனங்களதும் தமக்குச் சார்பாக திசைதிருப்பும் நடவடிக்கைகளில தகவல் ஊடக ஆதிக்கமும், உலகமய கருத்திய அவைகளுக்குச் சார்பான சில மேற்கத்தைய ஊட பெயரிட்டதுடன் இவற்றை வெறும் ஜனநாயகத்துக் ஆனால் அவ்வெழுச்சிகளின் யதார்த்தப் போக அதிகாரத்துவ யுத்தப் பலிக்களங்களில் இருந்து

ஆசிரியர் தலையங்கம்
D மக்கள் எழுச்சியும்
ருக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவது புதிய கில் நிகழ்ந்து வருவதுதான். "ஒடுக்கு முறைகள் என்ற சமூக விஞ்ஞான விதியின் வெளிப்பாடு *றது. இதனையே வட ஆபிரிக்க, மத்திய கிழக்கு ளிப்படுத்தி நிற்கின்றன. ாதாரத்தின் தாக்கம் உலகநாடுகள் யாவற்றிலும் படை மனித உரிமை மறுப்புக்கள், எனப் பல்வேறு அதன் நுகர்வுக் கலாசாரத்தின் தாக்கம் மக்கள் றையின்மையையும் தோற்றுவிப்பதுடன், பண்பாட்டுப் சீர்குலைவுகளையும் ஏற்படுத்தி நிற்கிறது. மக்களின் இத் தாக்கங்கள் எல்லைகளை மீறி அவர்களது , இக் கொடுரமான சமூக அரசியல் அமைப்புகளுக்கு ங்கிப் போராட முனைகின்றனர்.
எழுச்சிகளில் சில, விடுதலைக்கான தெளிவும் வற்றிபெற்று அதன் இலக்குகளை அடைகின்றன. ரின் தலையீடுகள், அரசியல், ஆட்சி ர்களைப் பேணும்
6T.
ரியூனிசியா நாட்டில் முட்டித் தற்கொலை எழுச்சி எகிப்து, ப் பிடித்து மத்திய உட்பட, உலகின்
ாது. சில நாடுகளில் இவ்வெழுச்சிகளால் ஆட்சி ரும் ஏற்பட்டுள்ளன.
ளைக் கண்டு ஆரம்பத்தில் மிகவும் அச்சமடைந்தன. , உளவு ஸ்தாபனங்களின் உதவியுடனும் இவற்றைத் ) இறங்கின. அவைகளுக்கு இருந்த இலத்தரனியல் ல் ஆதிக்கமும் இதற்கு துணையாக அமைந்தன. கங்கள் இவ் எழுச்சிக்கு "மல்லிகைப் புரட்சி” எனப் கான பேராட்டமாக உலகுக்கு காட்ட முனைந்தன. $கு மல்லிகையின் நறுமண வாடையை அல்ல வீசும் இரத்த நெடிலையே வெளிக்காட்டி நின்றது.
Ꭰ 36Tajf - prijë 90

Page 6
ஆசிரியர் தலையங்கம்
இவ்வெழுச்சியின் போக்கு எவ்வாறு அமைந்த இருந்தும் விடுபடல் என்ற மானுடவிடுதலை உை அளவிலாவது சுடர்விட்டமை அவதானத்துக்கு உ சாதனங்களையும் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை அதிகம் உ
இலங்கையிலும் இவ்வாறான நாடு தழுவிய செலவின் உயர்ச்சியை எதிர்த்து நடாத்திய 1953ம பேதங்களின்றி இலங்கை மக்கள் அனைவரும் வ தேசம் தழுவிய இம் முதல் எழுச்சியைச் சரியாக ஆட்சி மாற்றங்களுடன் அது நின்று போனது. தை பிரதமர் டட்லி சேனநாயக்கா துறைமுகத்தில் த மக்கள் எழுச்சி பலமடைந்தது. இன, மத பேதமற்று மக்கள் வர்க்கரீதியாக ஒன்றுபடும் & போது உருவாகும் அசுர பலத்தை ஆளும் வர்க்கம் அனுபவரீதியாக அன்று அறிந்து கொண்டது. அதன் வெளிப்பாடாகவே இனவாத அடிப்படையில் மக்களைப் பிரிப்பதற்கு பேரினவாத அரசியலை முனைப்படுத்தி தனிச்சிங்களச் சட்டத்தை கொண்டுவந்தது. அறுபது ஆண்டுகளாக இதன் ஒருபக்க தீயவிளைவை நாடும் மக்களும் ஒருபுறம் சுமந்துவர, மறுபுறம் அதிகார வர்க்க ஆட்சியின் நலன்களும், அதனைப் பாதுகாக்கும் இனவாத அரசியலும் மிகவும் பாதுகாப்பாக இன்றுவரை இத்
மக்கள் சக்தி மகத்தானது எனினும் அவர்கள் பெறும்வரை தவறாக வழிநடத்தப்படுவதற்கு வாய இதுபோன்ற மக்கள் எழுச்சிகள் ஒடுக்குமுறைகளு நம்பிக்கையையும், புதிய பாடங்களையும் பெறுவத
உரிலிங்க பெத்தியின் ட ஆடு, கோழி, சிறுமீன் உண்பவரை மேல்சாதி மேல் சிவனுக்குப் பஞ்சாமிர்தம் சுரக்கும் பசுவைத் தின்பவ அவரெப்படிக் கீழ்ச்சாதி? உம் சாதி எப்படிக் கீழாகவி பிராமணன் உண்டது புல்லுக்கு ஆபரணமாக, நாய் பறையன் உண்டது புல்லுக்கும் பிராமணனுக்கும் ஆ அது எப்படி எனில் ஒன்று - நெய்ப்பை; மற்றது - நீர்ப்பை தோற்பை நெய்யும் நீர்ப்பைத் தண்ணிரும் சுத்தமே என்று குடித்தால் புத்தி கெட்ட பிராமணனுக்குத் தப்பாதய்யா மாநரகம்! உரிலிங்க பெத்தியின் அரசன் ஏற்கமாட்டான் அம்ம
* புண்யஸ்திரி - மனைவி (வெட்டவெளி 6
தாயகம் 80
 
 

லும், அனைத்து அதிகாரத்துவ ஒடுக்குமுறைகளில் ணர்வு, மீண்டும் சாம்பலைத் தட்டி விலக்கி சிறிய ரிய ஒன்றாகும். நவீன தகவல் தொழில் நுட்ப இவ்வெழுச்சிகளின் வெற்றி தோல்விகளில் இருந்து .ண்டு.
மக்கள் எழுச்சி, அரிசி விலையேற்றம், வாழ்க்கைச் ஆண்டு ஹர்த்தாலின் போது ஏற்பட்டது. இனமத ரலாற்றில் பெரும் எண்ணிக்கையில் ஒன்று திரண்ட வழிப்படுத்தத் தவறியமையால் சில சீர்திருத்தங்கள், யில் நிற்பதற்கே பாதுகாப்பற்று நாட்டின் அன்றைய த்து நின்ற கப்பலில் ஏறிக்கொள்ளும் அளவிற்கு
%
器
α.
AO=
ஒ
தன்மூலம் பேணப்பட்டு வரப்படுகின்றன.
தம்மை வழிப்படுத்தும் அளவுக்கு விழிப்புணர்வைப் ப்ப்புக்கள் எங்கும் நிறையவே உண்டு. அதனால் நக்கு உட்படும் மக்களுக்கு விழிப்புணர்வையும், நற்கு சிறந்த களங்களாக அமைகின்றன.
ஆசிரியர் குழு - ண்யஸ்திரி* காளவ்வை சாதி என்பர் னைப் பறையன் கீழ்ச்சாதி என்பர் ல்லை? நக்கிப் போனது. பூபரணமானது
பார்த்தைகள் - கன்னட பக்தி இலக்கியம்)
ஜனவரி - மார்ச் 20

Page 7
பவப் உள்ளவர்களது.
சுதாராஜ்
ங்ெகள் பண்ணையிலிருந்து ஒரு ஆடு காணாமற் போய்விட்டது எங்கள் என்று சொன்னால, அது எனக்கோ எங்கள் குடும்பத்தினர் யாருக்குமோ சொந்தமானது என்று அர்த்தமல்ல. நான் பண்ணையில் பத்துப் பன்னிரண்டு வருடங்களாக வேலை செய்பவன். மனேஜர் உத்தியோகம். அந்த வகையிற்தான் அது எங்கள் பண்ணை. இங்கு நிரந்தரமாகப் பணி புரியும் இருபத்தைந்து தொழிலாளர்களைப் பொறுத்தவரையிலும் அது ‘எங்கள் பண்ணை'தான். அந்த அளவிற்குப் பண்ணையில் ஈடுபாட்டுடன் வேலை செய்வார்கள். ஆனால் பண்ணை தனியார் ஒருவருக்குச் சொந்தமானது.
மனிதர்கள் யாராவது காணாமற் போனால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை! அவருக்கு என்ன நடந்திருக்கும் என ஓரளவிற்கு ஊகிக்கலாம். ஓரளவிற்கு என்ன, நிச்சயமாகவே ஊகிக்கக் கூடியதாயிருக்கும். ஆனால் பண்ணையுள்ளிருந்து ஆடு ஒன்று காணாமற் போவதென்பது நம்பமுடியாததாயிருந்தது. சுமார் நூறு ஏக்கர் பரப்பளவிலான பண்ணையைச் சுற்றவர முட்கம்பி வேலி போடப்பட்டிருக்கிறது. மேய்ச்சலுக்காக ஆடுகள் இந்த இடங்களைச் சுற்றி வந்தாலும் எந்த ஆட்டுக்கும் அந்த முள் வேலியைத் தாண்டிச் செல்லும் வாய்ப்பு இல்லை. மனிதர்களைப்போல ஆடுகள் ஒன்றை விட்டு ஒன்று வேறு வேறு பாதையிற் பிரிந்து செல்பவையுமல்ல!
மட்றுாப் இருந்தவரை எல்லாம் ஒழுங்காக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.
அன்றாடம் காலையில் ஆடுகளை மேய்ச்சலுக்காகப் பட்டியிலிருந்து திறந்து மேய்ச்சல்காரப் பையனிடம் ஒப்படைக்கும்போது, அவற்றைக் கணக்கெடுத்துக்கொண்டு விடுபவர் ம.. றுTப் . பணி ணையரிலுள்ள மாடுகளைப் பராமரிப்பதற்கென்று நியமிக்கப்பட்டவர்தான் அவர். வயதில் மூத்தவர். மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டுபோவது, மாட்டுத் தொழுவங்களைத் துப்பரவு செய்வது, மாடுகளைக் குளிப்பாட்டுவது, பால் கறப்பது போன்ற வேலைகளுக்குப் பொறுப்பானவர். எனினும் ஆடுகளைக் கவனித்துப் பராமரிக்கும் வேலைகளையும் தானாகவே எடுத்துக்கொண்டார் என்றுதான் சொல்லவேண்டும்.
G

சிறுகதை
ப் சில பாவங்களும்
ஆட்டுப் பட்டியின் கதவை ஓரளவுக்கு மட்டும் நீக்கி, ஒவ்வொரு ஆடாக வெளியே விடுவார். அவை ஒன்றன் பின் ஒன்றாக ஒழுங்கு முறைப்படி வெளியேறிப் போகும்போது அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிக் கணக்கெடுத்துக் கொள்வார். மாலையில் திரும்பவும் அவ்வாறே உள்நுழைய விடுவார். சுமார் இருநூறு முன்னூறு ஆடுகள் உள்ள பண்ணையில், இந்த வேலையைத் தினமும் சலிக்காமல் செய்கிறாரே என்று தோன்றும். குட்டி ஈன்ற ஆடுகளையும் குட்டிகளையும் வெளியே விடுவதில்லை. அவற்றுக்குத் தேவையான இலை குழைகளை நேரத்துக்கு நேரம் போட்டு, கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார். குட்டிகளைத் தடவிக் கொடுத்து, பால் குறைந்த ஆட்டின் குட்டிகளுக்குப் புட்டிகளிற் பாலூட்டி, பிள்ளைகளைப் போலப் பார்த்துக்கொள்வார். மிருகங்களிடம் மிகவும் பரிவு கொண்டவர். தனது வேலை நேரம் முடிந்தாலும், பொழுதுபட்டாலும் பட்டி தொட்டிகளெல்லாம் பார்த்து வேலைகளை முடித்து ஒழுங்கு செய்துவிட்டுத்தான் போவார். அவரது வீடும் பண்ணையிலிருந்து கூப்பிடு தூரத்திற்தான் இருந்தது. ம.றுாப் ஆடு மாடுகளைப் பரிவுடன் பராமரித்து வந்ததுபோலவே, அவையும் அவர் சொன்னபடி கேட்கும் அன்பைக் கொண்டிருந்தன.
ஆனால் பண்ணையிலிருந்த ஒரே ஒரு 35 T 6006ITLDT (6 LDL Guö 96ost (3D6ö 6) 6of LDLô கொண்டிருந்தது. அந்த மிருகத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகக் கஷ்டம். அதன் குழப்படிகள் தாங்காது, எந்த நேரமும் அதைக் கட்டிலேதான் போட்டிருப்பார் ம.'றுாப். சில வேளைகளில் அடியும் போட்டு அதை அடக்கவேண்டியிருக்கும். பசு மாடுகளை, அவற்றின் தேகத்தை உரஞ்சிக் கழுவிக் குளிப்பாட்டும்போதும் அவற்றில் அவர் பால் கறக்கும்போதும், அந்தக் காளை கட்டிலிருந்தபடியே கோபத்துடன் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும்; வேகமாக மூசி மூசி. கால்களை நிலத்தில் உதைத்தும் பிறாண்டியும் தனது சீற்றத்தைக் காட்டும். வழக்கம் போல ஒருநாட் காலையில் ஒவ்வொரு பசுக்களாகத் தொழுவத்திலிருந்து வெளியே கொண்டுவந்து கட்டி, பால் கறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ம..றுாப். காளைமாடு பெரும் மூச்செடுத்து ஒரு இழுவை இழுத்தது. கட்டு அறுந்துவிட்டது! அவ்வளவுதான். ஒரே பாய்ச்சலில் வந்தது காளை.
360T6յցՐ - ԱԶՈմd ջOI

Page 8
சிறுகதை
அதைக் கண்டு மட்றுாப் பதகழித்து எழுந்து ஓடுவதற்கு முற்பட்டார். அவரைத் தூக்கி எறிவதற்குக் காளைக்கு ஒரு நேரம் தேவைப்படவில்லை. தனது கோபத்தையெல்லாம் கொம்புக்குக் கூட்டி தலையை உன்னி ஒரே இடி! இடுப்பில் விழுந்தது இடி. பால் வாளி தரையிற் சிதற. ம."றுாப் முகம் குப்புற விழுந்தார். அவரது இடுப்பு முறிந்துவிட்டது. அதனால் அவரது பணியும் போய்விட்டது!
காலையில் நான் பண்ணைக்கு வந்ததுமே, ஆடு காணாமற் போன செய்தியைக் கொண்டுவந்தவன் காசிம் . நான் அந்தத் தகவலுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவசரக்காரன். சரியாகக் கணக்கெடுத்திருக்கமாட்டான் என்றே தோன்றியது. காசிம் ம."றுப்பைப்போல அக்குரேட் ஆன ஆளும் அல்ல. பண்ணையில் மெக்கானிக் ஆக வேலை பார்ப்பவன். ட்றைக்டரும் ஓடுவான். ம.”றுப் போனபின்னர் ஆடுகளைக் கணக்கெடுக் கும் வேலையையும் செய்து வருபவன்.
"காசிம் . நீங்க சரியாயப் செக் பண்ணியிருக்கமாட்டீங்க. இன்னொரு தடைவ பாருங்க..!"
"நல் லாப் பாதி தரிட் டன் (8g it ... காணாமற்போனது, அந்த பெரிய கறுப்புக் கிடாய்." "அப்பிடியா..?" - ஆடு காணாமற் போனதன் முக்கியத்துவம் அப்போதுதான் எனக்கு உறைத்தது. பல இன ஆடுகள் உள்ள பட்டியில் அந்த ஆடு இல்லாமற் போனால் இலகுவாகத் தெரிந்துவிடும். அந்தப் பட்டிக்கே அது ராஜாவாக இருந்தது. உயர்ந்த இன ஆடு. கலப்பின உருவாக்கத்திற்காகப் பட்டியில் சேர்க்கப்பட்டிருந்தது. அது காணாமற்போய்விட்ட தென்பது பெருத்த நஷ்டம்தான்.
"எங்க போயிருக்கும்? எல்லா இடமும் தேடிப் பாருங்க! வேலிக்கம்பியை எங்கையாவது வெட்டியிருக் கிறாங்களா பாருங்க!"
பண்ணையின் பின் புறமாக முட் கம்பி வேலியை ஊரவர்கள் அவ்வப்போது வெட்டிவிடுவ துண்டு. விறகு பொறுக்குவதற்கோ, தங்களது ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்கோ உள்ளே வருவார்கள். பண்ணையில் மா, பலா, தோடை, எலுமிச்சை, வாழை, முருங்கை கொய்யா போன்ற மரவகைகள் காய்கனிகளுடன் உள்ளன. ஏனைய காய்கறிவகைகளும் பயிர் செய்யப்பட்டுள்ளன. சிலர் அவற்றைக் கையாடுவதற்காகவும் வேலியை வெட்டிவிடுவதுண்டு. இரவில் முயல் வேட்டைக்காகவும் சிலர் உள்ளே வருவார்கள்.
மா, பலா, தோடை, எலுமிச்சை, வாழை, முருங்கை கொய்யா போன்ற மரவகைகள் காய்கணிக ளுடன் உள்ளன.
 

ஏனைய காய் கறிவகைகளும் பயிர் செயப் யப் பட்டுள்ளன. சிலர் அவற்றைக் கையாடுவதற்காகவும்வேலியை வெட்டிவிடுவதுண்டு. இரவில் முயல் வேட்டைக்காகவும் சிலர் உள்ளே வருவார்கள்.
இதற்காக, முள் வேலி ஒழுங்காக இருக்கிறதா அல்லது யாராவது உடைத்துவிடு கிறார்களா என்பதைப் பொழுதெல்லாம் கவனிப்பதற் கென்றே சில பணியாட்கள் இருக்கிறார்கள். அதையும் மீறி அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிக்கொண்டிருப்பார்கள். எனினும் அப்படி வருபவர்கள் யாரும் ஒருபோதும் ஆடு மாடுகளைக் களவு கொண்டுபோனதில்லை.
பகுதி பகுதியாகப் பயிர் செய்யப்பட்டிருந்
தாலும் பண்ணையிற் பெரும் பகுதி பற்றைகள் நிறைந்து காணப்படுகிறது. ஆடுகளை மேய்ச்சலுக்
காக இந்தப் பகுதிக்குத்தான் கொண்டு செல்வதுண்டு. பற்றைகளுக்குள் ஆடு சிக்கிக் கொண்டுமிருக்கலாம். அல்லது வேலி வெட்டப் பட்டிருந்தால் ஆடு அதனுாடு வெளியே போயிருக்குமோ? பொதுவாக ஆடுகள் மந்தையை விட்டுப் பிரிந்து போகாதெனினும் வெளியே வேறு ஒரு மறியை மோப்பம் பிடித்துக்கொண்டு போயுமிருக் கலாம். இது
கிடாய்தானே, மனிதர்களிடமே உள்ள சபல புத்தி
மிருகசாதிக்கு இல்லாமற் போய்விடும் என்று எப்படி நம்பலாம்?
"போய்ப் பற்றைகளுக்குள்ளயெல்லாம் தேடுங்க. வெளியில ஊருக்குள்ளயும் போய்ப் பாருங்க!"
"சேர்! ஆடு காணாமற் போகயில்ல, களவு போயிட்டிது!"எனக் கதையைத் திசை திருப்பினான்
காசிம்.
இவன் எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறான் என அவனது முகத்தைக் கேள்விக் குறியுடன் பார்த்தேன்.
"களவெடுத்த ஆளையும் எனக் குத் தெரியும்.!"
- அது யாரென்று கேட்கமுதலே பெயரையும் கூறினான்
"இம்தியாஸ்"
- இம் தியாஸ் முன்னர் இந்தப்
பண்ணையில் வேலை செய்தவன். ம."றுப்பின் மகன்.
அவனை பண்ணையில் வேலைக்குக் கொண்டுவந்து சேர்த்ததே மட்றுாப் தான். மற்றவர்களை விட வயதிற் குறைந்தவனானாலும், தனது திறமையாலும் ஆற்றலாலும் சீக்கிரமே மேற்பார்வை அதிகாரி என்ற நிலைக்கு உயர்ந்தவன்.
E360T6յցՐ - Աontjծ ջOI

Page 9
TaæM't
அவனது கல்வித் தகமையையும் கருத்திற் கொண்டே அப் பதவி வழங்கப்பட்டிருந்தது.ஏனைய தொழிலாளர்களுக்குரிய பணிகளை கொடுத்து, அவர்களை அயரவிடாது வேலை வாங்குவதில் வல்லவன். அவனது உயரமான தோற்றமும் கடும் குரலும் மற்றவர்களை மறுகதை பேசாது சொன்னபடி கேட்கவைக்கும். இதனால் பண்ணையிற் பல காலம் பணியாற்றிய அனுபவமுள்ள காசிம் போன்ற ஒருசிலருக்கு இம் தியாஸ் மீது அதிருப்தியும் ஏற்பட்டிருந்தது. சில சமயங்களில் இம்தியாஸிற்கு எதிராக முறைப்பாடுகளும் கொண்டுவருவார்கள். விசாரித்துப் பார்த்தால், அவை அர்தி தம் ஏதுமற் ற சோடிக் கப் பட்ட முறைப்பாடுகளாக இருக்கும். இம்தியாஸின் சுறுசுறுப்பான சுபாவமும் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்தும் சாதுர்யமும் என்னை ஈர்த்திருந்தன. எனினும் ஒரு சந்தர்ப்பத்தில் அவனை வேலையிலிருந்து இடைநிறுத்தும் நிலைமையும் ஏற்பட்டது. 8
பண்ணையிலுள்ள தண்ணீர்ப் பம்புகள், ! ட்றக்டர், டோசர் போன்ற இயந்திரங்களின் பாவனைக்குத் தேவையான டீசல் பரல்களில் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். ஐந்து பரல்களில் ஆயிரம் லீட்டர் வரை கொள்வனவு செய்து கொண்டுவந்து வைத்தால், அன்றாடம் தேவையான டீசலை எடுத்துக்கொண்டு மீதி அளவைக் குறித்து வைப்பவன் காசிம்.
தாயகம் 80
 
 
 
 

ஒருநாள் , டீசல் ஐம்பது லீட்டர் குறைந்திருப்பதாகவும், அதை முதல் நாள் இரவு களவாடியது இம்தியாஸ்தான் எனவும் முறையிட்டான். விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இம்தியாஸிற்குத் தெரியாமல் டீசல் வெளியே போயிருக்காது. கான்களில் டீசலை நிரப்பி, பிக்அப் வாகனத்தில் இரவு கொண்டு சென்றிருக்கிறான் என காசிம் தெரிவித்தான். தேவை கருதி அவன் வீட்டுக்குப் போய்வரலாமாயினும், மேற்பார்வையாளன் என்ற ரீதியில் அவனது தொழில் ஒப்பந்தப்படி பண்ணையில் வதிவிடம் கொடுக்கப் பட்டிருந்தது. இரவிலும் அவன் பண்ணையிற் தங்கியிருக்கவேண்டும். இரவுக் காவலாளியிடம் விசாரித்ததில், பண்ணையின் ஏனைய பகுதிகளைத் தான் ஒரு சுற்று வந்த நேரத்தில் பிக்அப் வாகனம் வெளியே போய் வந்தது எனத் தெரிவித்தான். குற்றம் சரியாக நிரூபிக்கப்படவில்லை. எனினும் இதற்குப் பொறுப்பான பதில் இம்தியாசிடமிருந்து கிடைக்காத தால் அவனே பொறுப்பேற்கவேண்டுமென வேலையி லிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தினேன். மகனை வேலையிலிருந்து நீக்கியபோது, ம.”றுாப் மிகவும் கவலையடைந்தார்.
"அவன் களவு செய்யிற ஆளில்ல. நான் அந்தமாதிரிப் புள்ள வளக்கயில்ல"
"எனக்குத் தெரியும், ம.”றுப் கொஞ்ச நாள் பொறுங்க, திரும்ப எடுக்கலாம்"
"கெட்ட பேர் வந்தது வந்ததுதானே” - ஒரு தந்தை என்ற ரீதியில் அவரது கவலை எனக்குப் புரிந்தது.
3606fl – on jd 20

Page 10
சிறுகதை
"விசாரணை செய்து சரியான ஆளைக் கண்டுபிடிச்சிடுவன், பொறுமையா இருங்க!"
இம்தியாஸ் போனபின், ம."றுாப் அவனது வேலைகளையும் கவனித்துக்கொண்டிருந்தார். இப்போது மறுப்பும் இல்லாத நிலையில் காசிமுக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
காசிம் கூறுவதுபோல இம்தியாஸ், ஆடு ஒன்றைக் களவாடும் அளவிற்குக் கீழ் நிலைக்குப் போயிருப்பானா என எண்ணிப் பார்த்தேன். நேர்மையாக உழைத் தவன் . காலையில் வரும்போதுகூடக் கவனித்தேன். எனது வாகனத்தைக் கண்டதும் எழுந்து ஒரு பாவமும் அறியாத தோற்றத்துடன் நின்றான். பண்ணைக்கு நான் வந்து போகும்போது முன்னே உள்ள கடை வாசற் கட்டிலோ வீதி ஓர மதகுக் கட்டிலோ அவன் அமர்ந்திருப்பதைக் காணமுடியும். இம்தியாசைப் பற்றிய கவலை என் நெஞ்சிலும் இருந்தது.
"இம்தியாஸ் இப்ப வேலையில இல்லயே. எப்பிடி உள்ள வந்திருப்பான். எப்பிடி ஆட்டைக் களவெடுத்திருப்பான்?" - காசிமைச் சமாளித்தேன். "அதுதான் சேர் காரணம் வேலையிலயிருந்து நிப்பாட்டின கோபம்! ஆடுகளை மேயவிட்டிட்டுப் பொடியன் புளியமரத்துக்குப் பணியப் படுத்திடுவான். ஆடுகள் எங்க போகுது வருகுது ஒண்டும் அவனுக்குத் தெரியாது. இம்தியாஸ் அந்த நேரம்தான் பின்பக்கமாய் வேலியை வெட்டிக் கொண்டு வந்து ஆட்டைக் கொண்டு போயிருக்கிறான்!"
"அன்வரை வரச்சொல்லு.!" என்றேன். அவன்தான் ஆடு மேய்க்கும் பையன். காசிம் அவனைக் கையோடு கூட்டிவந்தான்.
அன்வரிடம் கேட்டேன்; "என்ன நடந்தது? ஆடு எங்க போச்சுது?"
அன்வர் கண்கள் பிதுங்கப் பதில் பேசாது நின்றான்.
"சொல் லடா, இல் லாட்டா தோலை உரிச்சிடுவன்" - உறுக்கலுடன் அவனது காதைப் பிடித்து முறுக்கினான் காசிம்.
"விடு, காசிம். விடு அவனை! என்ன நடந்தது சொல்லு அன்வர்?"
"எனக்குத் தெரியாது சேர்" - சிணுங்கினான். "சொல்லடா, நீ ஆடுகளைப் பாக்கிறனியா, மரத்தடியில படுக்கிறதுக்குப் போறனியா? அந்த ஆட்டின்ட விலை என்ன தெரியுமா? காசைக் கொண்டுவந்து கட்டியிட்டுத்தான் நீ வேலைக்கு வரலாம் சொல்லு! இம்தியாஸ் மத்தியானம் வரயில்லையா? உனக்குத் தெரியாம நடந்திராது!" - காசிம் மேலும் அவனை மிரட்டினான்.
அன்வர் அழத்தொடங்கிவிட்டான்.
தாயகம் 80
 

சிறுவன். பாடசாலைக்குப் போகவேண்டிய வயது. யுத்தக் கொடுமைகளால் சொந்த வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து வந்து முகாம்களிலும் குடிசைகளிலும் வசித்து, சாப்பாட்டுக்காக வெயில் காய்ந்து வேலை செய்யும் பரிதாபம்.
"சரி, நீ போ!" - நான் கூறியதை நம்பாதவன் போல, என் னைத் திரும் பரிதி திரும் பரிப் பார்த்துக்கொண்டே போனான் அன்வர்.
"காசிம், நீங்க போய் வேலையைப் பாருங்க. நான் விசாரிக்கிறன்!" என காசிமை அனுப்பி வைத்தேன்.
எனினும் நான் பெரிதாக விசாரணை ஏதும் மேற்கொள்ளவில்லை. ஏனைய தொழிலாளர்களின் நடமாட்டங்களையும் தோரணைகளையும் சற்று உன்னிப்பாக அவதானித்தேன். ஆறப்போட்டால் விஷயம் யார்மூலமாகவோ வெளிவரலாம் என்றும் தோன்றியது. காசிம் மட்டும் கரிசனையுடன் தினம் ஒரு தகவலைக் கொண்டுவந்தான்.
"இரவு, அன் வரும் இம் தியாசும் பேசிக்கொண்டிருந்தாங்க. என்னைக் கண்டிட்டு ஒழிச்சிட்டாங்க. இவங்கள் ரெண்டு பேருக்கும் கூட்டு இருக்கு"
"ஊருக்குள்ள விசாரிச்சுப் பார்த்தன். அணி டைக் கு, ஒரு ஆடு அடிச் சுப் பங்கு போட்டிருக்கிறாங்கள்.!"
"பொலிசில சொல்லுங்க சேர். அவங்களைப் புடிச்சு விசாரிச்சாத் தான் உம்மை தெரியவரும்" - தற் காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் இம்தியாசை நிரந்தரமாக வேலையிலிருந்து நீக்குவதற்கு காசிம் திட்டம் போடுகிறானோ என்று தோன்றியது.
அவ்வப்போது ஏதாவது சமாதானம் கூறி அவனைச் சமாளித்துக் கொண்டிருந்தேன். இம்தியாசை மேலும் இம்சைப்படுத்த எனக்குச் சம்மதமில்லை. அவர்களது குடும்ப நிலைமையையும் யோசித்துப் பார்த்தேன். ம.றுாப்பும் வேலை செய்யமுடியாத நிலையிலிருக்கிறார்.
இத் தருணத் திற் தான் பணி ணை உரிமையாளர் அலெக்ஸ் வருகை தந்திருந்தார்.
கொழும்புவாசியான அவர், மாதத்தில் ஓரிரு தடவைகள் வந்து கவனித்துப் போவார். பண்ணையின் வரவு செலவுகள், இலாப நஷ்டங்கள், பிரச்சனைகள் பற்றியெல் லாம் இவ் வேளைகளிற் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும்.
அவரைக் கண்டால் காசிம் துள்ளிக்கொண்டு நிற்பான். குறுக்கு வழிகளில் எதற்குள்ளும் தலையைச் செலுத்தும் சுபாவம் கொண்டவன்.
Ꭰ 36076յմՐ - ԱՕՈtjժ ջOI

Page 11
அவரைக் கண்டால் காசிம் துள்ளிக்கொண்டு நிற்பான். குறுக்கு வழிகளில் எதற்குள்ளும் தலையைச் செலுத்தும் சுபாவம் கொண்டவன்.
தனக்கு மேலுள்ளவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக, அதனால் ஏதும் சலுகைகள் பெற்றுக்கொள்வதற்காக. இவ்வாறான பலவீனத்தை அவன் கொண்டிருந்தான். அது என்னிடத்தில் எடுபடுவதில்லை. ஆனால், அது மிஸ்டர் அலெக்ஸிடம் எடுபட்டுவிட்டது!
"இவ்வளவும் நடந்திருக்கு. நீங்கள் ஒரு அக்ஷனும் எடுக்கயில்லையா..?"
அந்தக் கேள் விக்கு நான் பதில் கூறாமலிருந்தேன்.
"இப் பிடிச் சும்மா விட்டிட்டிருந்தால், எங்களைப் பல் இல்லாதவங்கள் என்றுதான் நினைப்பாங்கள். இப்ப ஒரு ஆடு போச் சுது. நாளைக்குப் ஃபாமையே கொள்ளை கொண்டு போயிடுவாங்கள் . ஏன் பொலிசில றிப்போர்ட் செய்யயில்ல?"
"அவன்தான் களவெடுத்ததென்று ஒரு ஆதாரமும் இல்லையே"
"ஆதாரம் தேவையில்ல. அவன்தான் என்று சந்தேகம் இருக்குதுதானே? அது போதும், பொலிசில பிடிச்சு உதைச்சு விசாரிச்சால் எல்லாம் தெரியவரும். எடுங்க ஜிப்பை"
நான் மறுபேச்சின்றிக் கட்டளைக்குட்பட்ட இயந்திர மனிதனைப் போலச் சென்று வாகனத்தை எடுத்தேன். அவர் ஏறிப் பக்கத்தில் அமர்ந்துகொண்டார். பண்ணைக்கு வந்து போகும் வேளைகளில் அவர் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சில சந்தோஷங்களும் செய்வதால், அவருக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. பொறுப்பதிகாரியிடம் விஷயத்தைக் கூறி, முறைப்பாட்டைக் கொடுக்குமாறு என்னைப் பணித்தார். பொலிஸ்காரர் ஒருவர் முறைப் பாட்டை எழுதிக் கொண்டார். வேறு காரணத்துக் காக பொலிஸ் ஜீப் வெளியே போய் விட்டதாகவும், வந்தவுடன் அனுப்பரி இம்தியாசைக் கொண்டுவருவதாகவும் கூறினார் நிலையப் பொறுப்பதிகாரி. ஆனால் அலெக்ஸிற்கு உடனே காரியம் ஆகவேண்டியிருந்தது; "எங்கட ஜிப்பில போகலாமே" என்றார்.
அது ஏற்றுக் கொள்ளப்பட்டு மூன்று பொலிஸ் காரர்கள் வந்து வாகனத் தரில் ஏறிக்கொண்டார்கள். துப்பாக்கிகள் சகிதம் ஐயையோ நான் இப்போது பொலிஸ்காரனாகவும் ஆகியிருந்தேன்! அலெக்ஸ் இங்ஸ்பெட்டரைப் போல முன் சீற்டில் அமர்ந்துகொண்டார். இம்தியாசின் வீட்டை நோக்கி வாகனத்தைச் செலுத்தினேன்.
தாயகம் 80
 

சிறுகதை
வீட்டின் முன் பாதையோரமாக ஜீப்பை நிறுத்தினேன். பொலிஸ்காரர்கள் இறங்கி, நான் கை காட்டிய திசையில் வீட்டை நோக்கி விரைந்து, நடந்தும், ஒடியும் போனார்கள். ட்றவைர் சீற்டில் இருந்தவாறே வீட்டுப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தேன். வேலிக்கும் அப்பால் வீட்டையும் முற்றத்தையும் காணக்கூடியதாயிருந்தது. இம்தியாஸ் வீட்டில் இருக் கரிறானோ - இல் லையோ இல்லாமலிருந்தால் நல்லது என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அடுத்த காட்சியாக முற்றத்தில் இம்தியாசைப் பொலிஸ்காரர்கள் பிடித்துக்கொண்டிருக்கும் காட்சியைக் கண்டேன். இரண்டு பெண்கள் - ஒருவர், இம்தியாஸின் மனைவியும் மற்றவர் அவனது தாயுமாக இருக்கலாம். அவனது கையைப் பிடித்துக்கொண்டு, விடமாட்டோம் என்பதுபோல நின்றார்கள். பொலிஸ்காரரிடம் மன்றாடுவதும் தெரிந்தது. ம.'றுாப்பை அவ்விடத்திற் காணவில்லை. வெளியே போயிருப்பாரோ. அல்லது இன்னும் நடக்கமுடியாது வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறாரோ! பொலிஸ்காரர் இம்தியாசை இழுத்துக் கொண்டு வந்தார்கள்.
இரண்டு சிறுவர்களும் ஒரு சிறுமியும் சற்று இடைவெளி விட்டு பிறகால் தயங்கித் தயங்கி வந்தார்கள். இம்தியாசை ஜிப்பினுள் ஏற்றும்போது அழுவதற் குதி தயாரான துக் கதி துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஜீப்பை ஸ்ரார்ட் செய்ததும் சிறுவர்களின் அழுகை வெடித்தது.
இம்தியாசை நடுவில் இருத்தி பொலிஸ்காரர் இரு பக்கமும் அமர்ந்தார்கள். நான் திரும்பிப் பார்க்கவில்லை. நேருக்கு நேர் இம்தியாசைப் பார்க்கும் முகத்தை நான் இழந்து விட்டிருந்தேன். பின்பார்க்கும் முன் கண்ணாடியினுாடு நோட்டம் விட்டேன். இம்தியாஸ் தலையைக் குனிந்து கொண்டிருந்தான். விசுவாசமாக, நான் இட்ட கடமைகளைச் செய்து கொண்டிருந்த ஒருவனை இப்போது நானே குற்றவாளியாகக் கொண்டு போகிறேன்! இது எப்படி நேர்ந்து முடிந்தது?
பொலிஸ் நிலையத்தில், ஒரு கூடு போன்ற சிறிய அறையுள் ஏற்கனவே நின்ற சிலருடன் இம் தரியா சும் 6)flւ (6ւ] புட்டப் பட் டான் . பொறுப்பதிகாரியிடம், "ஈவினிங் வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டு அலெக்ஸ் வந்து ஜிப்பில் ஏறினார். ஈவினிங் அவர் எதற்காக வருவார் என்ற சந்தோஷமான விபரம் அவர்களுக்குத் தெரியும்!
வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, இம்தியாசின் நிலைமை, இளைஞனான அவனது எதிர்காலம், அவனது குடும்ப நிலை பற்றிய நினைவுகளில் மனம் குமைந்துகொண்டிருந்தேன்.
ஜனவரி - மார்ச் 2OI

Page 12
சிறுகதை
நல்லதொரு பொறுப்பான தொழிலாளியாக இருந்தவன், ஏதோ குறுக்குப் புத்தியில் தவறு செய்யும் நிலைக் குப் போயிருக் கறான்! இப் போது இம்தியாசைக் குற்றவாளியாக சந்தேகிக்கும் உணர்வு எனக்கும் ஏற்பட்டிருந்தது. பொலிஸ் பிடித்து, இழுத்து வந்து, ஜீப்பில் ஏற்றி, உள்ளே தள்ளும்வரை அவன் மெளனமாகவே இருந்தான்! மெளனம் சம்மதத்திற்கு அறிகுறிதானே! தான் களவு செய்யவில்லை, குற்றவாளியல்ல என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லையே!
வாகனத்தில் என் பக்கத்திலிருந்த அலெக்ஸ், "நீங்கள் இந்த அளவுக்கு மகாத்மாவாக இருக்கக்கூடாது!" என்றார். அவர் என்ன கூறினாலும் நான் ஏதும் பேசாமலிருந்தேன். அந்த அளவிற்காவது எனது அதிருப்தியைக் காட்டவேண்டும்போலிருந்தது. இம்தியாசிற்கு என்ன நடந்திருக்கும் என்ற ஆதங்கத்துடன் எனக்கு ஓரிரு நாட்கள் கடந்தன. காசிம் கூட தகவல் எதுவும் கொண்டு வரவில்லை. மூன்றாம் நாட் 560) 6) பணி ணைக் கு வந்துகொண்டிருந்தபோது வீதியோரக் கடையின் வாசற் கட்டில் இருந்த இம்தியாஸ் , எனது வாகனத்தைக் கண்டதும் எழுந்தான். நிற்பதா, போய்விடுவோமா,' என எண்ணிக் கொண்டே வாகனத்தை மெதுவாக, வீதிக்குக் குறுக்காக சற்றுத் தாண்டியவாறு நடந்து கிட்ட வந்தான். வாகனத்தை நிறுத்தி அவனைப் பார்த்தேன்.
அவனது வலது கையிற் பத் துப் போடப்பட்டிருந்தது. முழங்கையுடன் மடித்து, கை 3), LT LD65 Ꮿl 60Ꭰ 8 u ] IᎢ ᎥᏝ 6ᏙᎼ கழுத் தில் தொங்கவிடப்பட்டிருந்தது. கன்னமும் ஒரு கண்ணின் மேற் புருவமும் வீக் கமடைந்து அவனது முகத்தோற்றம் கோணலாகிப் போனது போலிருந்தது. சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதுவும் பேசமுடியவில்லை. இம்தியாசும் பேசவில்லை. "அடிச்சாங்களா?" "ம்ம்" -தலையை மெல்ல அசைத்துப் பதில் கூறினான். அப்போது சட்டென அவன் கண்களிற் கண்ணிர் முட்டியது. அது என் கண்களையும் கலங்கச் செய்தது. நான் அவ்விடத்தை விட்டுக் கிளம்பினேன்.
넷
மழைக் காலம் நெருங் கலி வந்து கொண்டிருந்தது.
ஓரிரு தடவை மழை பெய்து நிலம் ஈரமடைந்திருந்தது. பண்ணையில் ஒரு பகுதியில் உழுந்து பயறு போன்ற தானிய வகைகளைப் பயிரிட்டால் மழைக் காலம் முடிய நல்ல அறுவடை பெற்றுக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
தாயகம் 80
 

மேற்பார்வை அதிகாரியாக உயர்வு பெற்றிருந்த காசிம் இருபது ஏக்கர் நிலத்தைப் பண்படுத்திப் பயிரிடும் பொறுப்பை எடுத்திருந்தான். பற்றைகளைத் துப்புரவு செய்து உழவடிக்கும் வேலை ஆரம்பமாகியது. ட்க்ைடரில் ஏறினால் துல்லியமாக உழவடிக்கக் கூடியவன் காசிம்.
துப்பரவாக்கும் வேலைகள் மும்முரமாக நடந்துகொணி டிருந்தன. வேலைகளைக் கவனிப்பதற்காக நானும் நேரத்துடன் பண்ணைக்கு வந்துவிடுவதுண்டு. காலையில் எனக்காக வாசலிற் காத்திருந்தான் காசிம்.
நான் வாகனத்தை விட்டு இறங்கமுதலே ஓடி வந்து "ஆடு ஆடு" எனப் படபடத்தான்.
"சரிதான்! இன்னொரு ஆடு தொலைஞ்சுதா?” எனச் சினத்துடன் ஜீப்பை விட்டு இறங்கினேன்.
"இல்ல சேர், காணாமல் போன ஆடு! கண்டுபிடிச்சாச்சு வாங்க, காட்டிறன்!"
எனக்கு ஆச்சரியமாயிருந்தது. இவ்வளவு நாட்களுக்குப் பிறகா?
பற்றைகளைத் துப்பரவு செய்யும் போது, அதற்குள் கண்டிருக்கிறான். அடுத்தநாள் நான் வரும்வரை அதை அப்படியே விட்டு என்னை அழைத்துப் போய்க் காட்டினான் காசிம்!
ஆட்டின் எலும்புக்கூடும் கறுத்த மயிர்களும் அப்படியே படிமங்களாக விழுந்தவாக்கிற் கிடந்தன! வியப்புடன் காசிமைப் பார்த்தேன். அவன் விளக்கமளித் தான் : "பற்றைக் குள்ள மேய வந்திருக்கும். பாம்பு கடிச்சிருக்கு, விஷமேறிச் செத்துப்போச்சு!"
----
༽தாயகம் ཡོད། ك ஆக்கங்களை வரவேற்கிறது
தாயகம் சஞ்சிகைக்கான சிறுகதை, கவிதை, கட்டுரை, முன் அட்டை, பின் அட்டைகளுக்கான ஓவியங்கள் ஆகியவற்றைப் படைப்பாளர்களிடமிருந்து வரவேற்கிறோம். ஆசிரியர் குழுவினால் தகுதரி கண்டு பிரசுரிக்கப்படும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-
Editor, க. தணிகாசலம் Thayakam பிரதம ஆசிரியர் # 152-1/6, ஆடியபாதம் வதி, Hulftsdorp Street, 6.5 Colombo -12
காக்குவில்
T.P. 011 5024358,
011 2381,603 -/
དང་མི་ཀྱT་ (3L. 0212223629
0) B360Tragf? — som sjáë 20

Page 13
இனி என்ன?
அவன் இன்பியல் நாடகத்தைத் துன்பியலாக்குகிறான் துன்பியலிலிருந்து பெருமிதத்தைக் கைகழுவுகிறான் பின்னர் கொக்கரிக்கிறான்: இனி என்ன?
என் உலகம் வெறுமையானது
‘இனி என்ன?
வீடுகளுள் அடைந்துள்ளது
அவன் ஒரு நாள் மீண்டு
உலகின் கன்னங்கள் உயிர்பெற்றால்
அச்சத்தின் ஒளி வீச்சுக்கள்
அவற்றின் நிறங்களை மங்கச் செய்யும்,
இடி இருமும்:
இனி என்ன?
என் வேனிற் காலங்கள் வெறிதானவை என் குளிர்காலங்கள் கொடுங்கனவுகள் என் வாழ்க்கை அவற்றினுாடு கூவிக் கடந்து செல்லும் ஒரு புகைவண்டி
காலைக் கோப்பி
இனி என்ன?
வேலையில்
இனி என்ன? எழுதும் தாள்களை நோக்குதல் அல்லது படுக்கையில்
இனி என்ன? இங்கோ அங்கோ எல்லாம் ஒன்று தான் இனி என்ன?
அவன் பகலின் உளியைச் சப்புகிறான் இனி என்ன?
நாளைக்கென அதில் எதையும் எஞ்ச விடான் வீடுகளிலும் தோட்டங்களதும் நேற்றின் சிதைவுகளைப் போற்றுகிறான் ‘இனி என்ன?
என்பதற்காக இல்லாவிடின்.
‘இனி என்ன?’வில் நான் என் நாட்களை எரித்து விட்டேன்.
தெள.பிக் ஸயிக்
(Thufiq Sayigh) சிரியா நாட்டவர்
 

மொழிபெயர்ப்புக் கவிதை
தெளUக் ஸயிGPக்கு
மழையில் நீங்கள் செய்வது போல என் சட்டைப் பைக்குள்
என் அடையாள அட்டையைத் தேடினேன் அதைத் தொலைத்து விட்டேனா எனக்
கவலையில்லை
ஏனெனில் எனக்கு ஒரு நாடிருந்தது
வெய்யிலில்
என் தொழில் அனுமதி அட்டையைத்
தேடுகிறேன்
ஏனெனில் உங்களைப் போல நானும் நாட்டைத் தொலைத்து விட்டேன்.
றியாட் அல்-றய்யெஸ் (Riyad al-Rayyes) சிரியா நாட்டவர்
தாயகம N சந்தா விபரம்
இலங்கை ஒரு ஆண்டு ரூபா 300.00 இரண்டு ஆண்டு 5ust 600.00 மூன்று ஆண்டு ரூபா 900.00
55 L ஒரு ஆண்டு டொலர் 20.00 இரண்டு ஆண்டு டொலர் 40.00 மூன்று ஆண்டு டொலர் 60.00
பிரித்தானியா ஒரு ஆண்டு - ஸ்ரேலிங் பவுண் 8.00 இரண்டு ஆண்டு - ஸ்ரேலிங் பவுண் 15.00 மூன்று ஆண்டு - ஸ்ரேலிங் பவுண் 20.00
ஐரோப்பிய நாடுகள் ஒரு ஆண்டு H@gm 1000 இரண்டு ஆண்டு F(3y T 20.00 மூன்று ஆண்டு F(BJा 30.00
அவுஸ்திரேலியா ஒரு ஆண்டு AA டொலர் 20.00 இரண்டு ஆண்டு டொலர் 40.00 ་་p ஆண்டு டொலர் 60.00 ノ
ஜனவரி . மார்ச் 20

Page 14
கட்டுரை
கூலிக்குமாரடிக்கும் ஒப் அறியப்பட வேண்டிய அ
தெணியானி
கிராமங்கள் தோறும் வாழ்ந்து வந்த சாமானிய மக்களால் ஓசையுடன் பாடப்பட்டு வந்த பாடல்களே நாட்டார் பாடல்கள். இங்கு நாடு என்னும் சொல் கிராமத்தையும் நாட்டார் என்னும் சொல் கிராமிய மக்களையும் சுட்டி நிற்கின்றன. இப் பாடல்கள் நாட்டுப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், பாமரர் பாடல் களெனப், பல வேறு பெயர்களால் , கிராமத்துடனும் கிராமிய மக்களுடனும் தொடர்புபடுத் தி அழைக் கப்படுகின்றன. வாய்மொழிப் பாடல்களாக வழக்கில் இருந்து வந்த இவற்றின் இலக்கியச் சிறப்பினை உணர்ந்து செம்மொழி இலக்கியங்களுக்குச் சமமாகக் கருதி நாட்டார் கவிதைகள், மக்கள் இலக்கியங்கள் எனவும், ஏட்டில் எழுதாது வாய்மொழியாக வழங்கி வந்தமையால் எழுதாக் கிளவிகள் எனவும் தற்பொழுது உயர்வாகப் பேசப்பட்டு வருகின்றன.
கிராமங்களில் வாழ்ந்து வந்த, கல்வி அறிவற்ற பாமர மக்கள் தமது வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தமது உணர்வினைப் பாடல் களாக ஓசையுடன் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். மக்கள் உள்ளங்களில் இருந்து இயல்பாகவே பெருகி வந்தவை தாம் இந்தப் பாடல்கள். அதனால் தான் செயற்கைத் தன்மையோ வரட்டுக் கற்பனையோ இடம்பெறாத உணி மையினி வெளிப் பாடாக இவை விளங்குகின்றன. இலக்கியத்தில் இன்று பேசப்படும் யதார்த்தம் என்பது நாட்டார் பாடல்கள் மூலம் என்றோ வெளிப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம். aw
நாட்டார் பாடல்களை உறவு சார்ந்த பாடல்கள், தொழில் சார்ந்த பாடல்கள், பொழுதுபோக்குப் பாடல்கள் என மூன்று பெரும் பிரிவுகளாக வகுக் கலாம். இந்த மூன்று பிரிவகளையும் மேலும் பல உப பிரிவுகளாகப் பகுத்து நோக்கலாம். இன்னொரு வகையில் பகுத்து நோக்கும் போது சில பாடல்கள் பெண்களால் பாடப்பட்டவைகளாகவும், சில பாடல்கள் ஆண்களால் பாடப்பட்டவைகளாகவும், வேறு சில பாடல்கள் ஆண்களும் பெண்களும் பாடியவைகளாகவும், இன்னும் சில பாடல்கள் சிறுவர்களால் பாடப்பட்டவைகளாகவும் இனங்
தாயகம் 80
 

ாரிப் பாடல்களுக்கூடாக டிநிலை மக்கள் வாழ்வு
கண்டு கொள்ளலாம். இவைகளுள் தாலாட்டு, கும்மி, ஒப்பாரி, ஊஞ்சல் பாட்டு என்பன பெண்களால் மாத்திரம் பாடப்பட்டு வந்தன. ஒப்பாரி பெரும்பாலும் மரண வீடுகளில் பெண்களால் பாடப்பட்டு வந்திருக்கிறது. மரணம் ஒன்று நிகழாத சமயத் திலும் பெண் களர் சிலர் தமது உள்ளத்திலுள்ள பெருந் துயரத்தினை ஒப்பாரியாகச் சொல்லி என்றோ இறந்து போனவரை நினைத்து அழுவதன் மூலம் மனதை ஆற்றிக் கொள்வார்கள். இவ்வாறு ஒப்பாரி வைக்கும் சமயங்களிலும் தமக்கு மிக நெருக்கமான இறந்து போன உறவுகளையே நினைவு கூருகின்றார்கள்.
மரண வீட்டில் வந்து கூடும் பெண்களும், அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களும் சேர்ந்து இறந்து போனவரைக் குறித்துப் பாட்டு வடிவில் பலம்பி அழுவதே ஒப்பாரி எனப்படுகின்றது. இழவு வீட்டில் துக்கம் விசாரிக்க வந்திருக்கும் பெண்களும், இறந்தவரின் மிக நெருக்கமான உறவுக்காரப் பெண்களும், சடலத்துக்கருகே வட்ட வடிவில் சுற்றி அமர்ந்து கைகளைத் தூக்கி, பறப்பது போல அகல விரித்து, அருகில் இருப்பவரின் தோள் மீது போட்டு தலையைத் தாழ்த்தி ஓசையுடன் ஒப்பாரி பாடுவார்கள். இவ்வாறு ஒப்பாரி பாடுவதை ஒப்பாரி சொல்லுதல், ஒப்புச் சொல்லுதல் எனக் குறிப்பிடும் வழக்கமும் இருந்து வருகின்றது. இறந்தவருக்கு மிக நெருக்கமான உறவினராக இருக்கும் தாய், மனைவி, பிள்ளைகள் என்போர் அவர் பிரிவை எண்ணிப் புலம்பி அழும் ஒப்பாரி அவர்கள் உணர்வுகளின் வெளிப்பாடாகவும், கேட்போர் உள்ளங்களை நெகிழவும் செய்யும். ஒப்பாரிப் பாடல்களைக் கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கும் போது, ஒப்பாரி பாடுகின்றவரின் உறவுமுறை வெளிப்படும். இருவருக்குமிடையே இருந்து வந்த பிணைப்புத் தெரியவரும். இறந்தவரின் குண நலன்கள் பெருமைகள் சிலாகித்துப் பேசப்படும். உறவினர்கள் உள்ளத்தில் பொங்கி எழும் துயரத்தின் வடிகாலாகவும் ஒப்பாரிகள் அமையும். அந்தச் சமயம் சத்தியத்துடன் இதயத்தில் இருந்து ஒப்பாரிப் பாடல்கள் பிரவாசிக்கும்.
இத்தகைய ஒப்பாரிப் பாடல்களுக்கு எடுத்துக்காட்டாகத் தாய் ஒருத்தியின் பாடல்களை நோக்கலாம்.
ஜனவரி - மார்ச் 2OI

Page 15
“குளிகை கரைக்க முன்னம் - உன்
குணமோ திரும்பியது மருந்து கரைக்க முன்னம் - உன்
மணமோ திரும்பியது
அரைத்த மருந்தோ - இங்கே
அம்மிபாழ் போகுதெனை உரைத்த மருந்தோ - இங்கே
உருக்குலைந்து போகுதெணை’
கணவனினி இறப் பரிணி போது பெண்ணொருத்தி பின்வருமாறு புலம்புகின்றாள்;
‘பொன்னான கட்டிலிலே - நீங்கள்
பொய்யுறக்கம் என்றிருந்தேன் பொய்யுறக்கம் கொள்ளாமல் - நீங்கள்
பொன்னுலகம் போனதென்ன
தாலிச் சரடிழந்தேன் - நான்
தங்கப்பொன் மாற்றிழந்தேன்; முத்துச் சரடிழந்தேன் - நான்
முருக்கம்பூப் பட்டிழந்தேன்
ஒடியல்லோ வந்திடுவேன் - உங்கள் ஒழுங்கை தெரியாது பாய்ந்தெல்லோ வந்திடுவேன் . உங்கள்
படலை தெரியாது” உள்ளம் நெகிழ்ந்து கசிந்து கண்ணிர் சிந்தும் இத்தகைய ஒப்பாரிப் பாடல்கள் மரண
 

கட்டுரை
வீடுகளில் பாடப் பெற்று வந்த சமுதாயத்தில், இப் பாடல்களில் இருந்து வேறுபட்ட உறவு நிலையிலும், சூழ்நிலையிலும் ஒப்பாரிப் பாடல் சில எழுந் திருக்கின்றன. கூலிக்கு மாரடிக் கும் பெண்களால் பாடப்பட்ட ஒப்பாரிப் பாடல்களே அவைகள். கூலிக்கு மாரடித்தல்’ என்னும் மரபுத் தொடர் ஒன்று தமிழில் வழங்கி வருகின்றது. நிலவுடைமைச் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும் கூலிக்கு மாரடிக்கும் நடைமுறையின் அடியாகவே இந்த மரபுத் தொடர் தோன்றி இருக்க வேண்டும். ஒருவன் அல்லது ஒருத்தி தான் செய்யும் வேலையுடன் மனம் ஒன்றி, மனப்பூர்வமாக அதனைச் செய்யாது, கூலி பெறுவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு ஏனோ, தானோ என்று செய்யும் வேலையே கூலிக்கு மாரடித்தல் எனப்படுகின்றது. -
இழவு வீடுகளில் மாரடிக்க வரும் பெண்களுக்குக் கூலி கிடைத்ததோ, என்னவோ! ஆனால் ஏனையவர்கள் போல அவர்கள் உள்ளத்தினால் ஒன்றிச் செய்யாத காரியம் என்பதனைக் கூலிக்கு மாரடித்து ஒப்பாரி பாடும் செயல் உணர்த்துகின்றது. கூலிக்கு மாரடித்தல் என்பதன் இன்னொரு வடிவம் ‘குடமுதுதல்’ எனப் பெயர் பெற்றது. தமிழர் சமுதாயத்தின் ஆதிக்க சக்தியாக விளங்கி மேட்டுக் குடியினர், சமூக வலுவற்ற ஏழை மக்களைக் தமக்குக் கீழ் அடிமை குடிமையாக வைத்திருந்து ஆண்டு அனுபவித்து வந்திருக்கின்றனர். அடிமை, குடிமைகளின் உழைப்பினைச் சுரண்டியே தமது வாழ்வினை
36076)gf – ofijół 20

Page 16
கட்டுரை
வளப்படுத்திக் கொண்டனர். அது மாத்திரமல்லாது தமது மேட்டிமையை, ஆதிக்கத்தை, சமுதாயத்தில் வெளிப்படுத்தவும் நிறுவிக் கொள்ளவும் அந்த அடிமை குடிமைகளைக் கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டனர். மேட்டுக் குடியினர் இல்லங்களில் இடம்பெற்ற நிகழ்வுகளின் போது, அடிமை குடிமைகளாக இருந்து வந்த ஏழை மக்கள் தவறாது செய்து முடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகளைச் சாதி ரீதியாக விதித் து வைத்திருந்தனர்.
சமூக மேலாதிக்கச் சக்தியாக விளங்கிய ஒருவன் இல்லத்தில் மரணம் ஒன்று நிகழ்ந்து விட்டால் அடிமை குடிமைகள் தமக்குரிய கடமைகளை வரன்முறை தவறாமல் செய்து முடிக்க வேண்டும். எஜமானுக்குத் தொண்டு செய்வதில் ஆண், பெண் வேறுபாடு என்பது இருக்கவில்லை. மரண வீடுகளில் செய்து முடிக்க வேண்டிய தொண்டுகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறாக வகுக்கப்பட்டிருந்தன. அடிமைகளாக இருக்கும் பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு தொண்டே மாரடித்தல், அதாவது மார்பில் அடித்து ஒப்பாரி சொல்லி அழுதல். உறவு முறையில் நெருக்கமாக இல்லாதவர்கள் வந்து மார்பில் அடித்து அழுவதனால் அது கூலிக்கு மாரடித்தல் எனப்பட்டது, பெண்கள் தமக்குரிய தொண்டுகளைச் செய்வது போல, ஆண்கள் சாதி அடிப்படையில் தத்தமக்கென விதிக்கப் பெற்ற தொண்டுகளைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாய நிர்ப்பந்தம் இருந்து வந்திருக்கின்றது.
கூலிக்கு மாரடிக்கும் பெண்கள் இழவு வீட்டுக்குச் சென்று, அவர்களுக்கென்று ஒதுக்கப் பட்ட ஓரிடத்தில் வட்டமாக அமர்ந்து குடுமியை அவிழ்த்து, கூந்தலை விரித்து தலையிலும் மார்பிலும் அடித் தடித்து ஒப்பாரி சொல்லி அழுவார்கள். கைகளில் ஒவ்வோர் மண் குடத்தை ஏந்தி, வாய்க்குடத்துள் தமது வாயை வைத்து ஒப்பாரியை ஓசையுடன் பாடி வித்தியாசமான ஒலியை எழுப்புவார்கள். பின்னர் அந்தக் குடங்களை மேலே எறிந்து லாவகமாக ஏந்தி ஒரு வித்தை போலக் காட்சித்து, தொடர்ந்து இவ்வாறு ஒப்பாரி பாடுவதைக் குடமுதுதல்’ என்பார்கள். கூலிக்கு மாரடிப்போரின் செயல்முறையின் இன்னொரு வடிவமாகவே இது அமைந்தது.
கூலிக்கு மாரடிக்கும் பெண்களுக்கும் இறந்து போனவருக்கும் எவ்வகையான உறவின் நெருக்கமும் இருப்பதில்லை. ஒப்பாரி பாடுதல் அல்லது ஒப்பாரி சொல்லுதல் என்பது மரண
G.

வீட்டில் இறந்து போனவரை நினைந்து உள்ளக் குமுறலுடன் கண்ணிர் சிந்திப் புலம்பி அழுதல். இறந்தவரின் உறவினர்களான பெண்களின் அநிச்சையான நிகழ்வு, கூலிக்கு மாரடிக்கும் பெண்கள் ஒப்பாரி பாடும் பொழுது இத்தகைய நெருக்கத்தையும் உணர்வு வெளிப்பாட்டினையும் அவர்களிடத்தில் எதிர்பார்க்க இயலாது. அவர்கள் வந்திருந்து பாடும் ஒப்பாரி வெறும் ஒப்புக்குத் தான். இறந்தவரின் ஆதிக்கத்துக்கு ஆட்பட்டு வாழ்பவர்கள் என்பதால் அவரின் பெருமைகளை, அவர் பிறந்து வாழ்ந்த குடும்பத்தின் பெருமைகளை எடுத்துச் சொல்லி ஒப்பாரி பாடி இருக்கக் கூடும். அதனையே அவர்களை அடக்கி ஆண்ட ஆதிக்க சக்திகள் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.
கூலிக்கு மாரடித்துப் பாடப்பெற்ற ஒப்பாரிப் பாடல்களில் ஏனைய ஒப்பாரிப் பாடல்களில் இருந்து பேசும் பொருளாலும் உணர்வு வெளிப்பாட்டாலும் வேறுபட்டவைகளாக இருந்திருக்க வேண்டும். உள்ளத்தில் இருந்து பாடல்கள் வெளிப்படாது ஒப்புக்கு வந்து ஒப்பாரி பாடுகின்றவர்களுக்கும், g5 LD5 குலப் பெருமையையும் மேலாதிக்கத்தினையும் வெளிப்படுத்துவதற்காக, ஒப்பாரி பாட வைத்திருக்கின்றவர்களுக்கும் இடையே இருந்து வந்திருக்கும் முரண் நிலைகள் இயல்பாக வெளிப்பட்டிருக்க வேண்டும். இரு பகுதியாருக்கும் இடையே இருந்து வந்திருக்கும் வர்க்க வேறுபாடு, சமூக ஏற்றத்தாழ்வு, சாதிய முரண்பாடு, கூலிக்கு மாரடிக்கும் அடிநிலை மக்கள் அவலம் என்பன கூலிக்கு மாரடிக்கும் பெண்களின் ஒப்பாரிப் பாடல்களுக்கு ஊடாகத் தெரிய வந்திருக்க வேண்டும்.
மலையக மக்களின் நாட்டார் பாடல்களில் தொழிலாளர் சமூகத்தின் வர்க்க நிலைமை வெளிப்படுவதனைக் கண்டு கொள்ளலாம்.
“கோணக்கோண மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையிலே ஒத்தப்பழம் தப்பிச் சென்னு
ஒதைச்சானையா கங்காணி”
மலையக மக்களின் இத்தகைய பாடல்கள போன்று கூலிக்கு மாரடிக்கும் பெண்களிடம் இருந்து ஒப்பாரிப் பாடல்கள் தோன்றி இருக்க வேண்டும். அவ்வாறு தோன்றாமைக்குச் சமூக ஒடுக் குமுறை ஒருவேளை காரணமாக இருந்திருக்கலாம். அக் காலத்தில் அடிமை குடிமைகளின் குரல் மேலெழாத வண்ணம் தடுக்கப்பட்டும் இருக்கலாம். சமூக நிர்ப்பந்தம்
E)

Page 17
காரணமாக, ஒரு சடங்காக சம்பிரதாயத்துக்காக ஒப்பாரி பாடியிருக்கலாம்.
இந்த இடத்தில் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுவது பொருத்தப்பாடு உடையது எனக் கருதுகின்றேன். எழுபதுகளின் பிற்பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. உயர்சாதியரெனப்படும் பதியைச் சேர்ந்த ஓர் ஆசிரியரின் மரணச் சடங்குக் குச் சென் றிருந்தேனி . அவரது சடலத்துக்குக் குளிப்பாட்டி, ஐயரால் செய்யப்படும் அபரிக் கிரியைகள் யாவும் முடிந்த பின்னர், உள் வீட்டுக் குளிர் ஊடாடித் திரியும் உரிமை வழங்கப்பட்டிருக்கும் குடிமகள் ஒருத்தி பாத்திரம் ஒன்றில் தண்ணிர் எடுத்து வந்து சடலத்தில் கால்களை அந்த நீரினால் கழுவிக், கழுவித் தலையை இடம் வலமாக அசைத்தசைத்து ஒப்பாரி பாடி அழுதாள். அந்தப் பெண்ணின் அழுகை செயற்கையானதாகவே தோன்றியது. கூலிக்கு மாரடிக்கும் பெண்கள் தீண்டத் தகாதவர்கள் என்று சொல்லப்படும் சாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மேட்டுக் குடியினரின் கால்களில் தொட்டுக் கழுவுவதற்கான உரிமை இல்லை. ஆனால் கூலிக்கு மாரடிக் கும் முறைமை இனி று நடைமுறையில் இல்லாது ஒழிந்து போன பிறகும், உள் வீட்டுப் பெண்ணாகப் புழங்கும் குடி மகள் வழியாகச் ∂ ፬ ፵] ஆதிக் கம் நிலை நாட்டப்படுகின்றது. மாரடிக்கும் பெண்கள் வந்து மாரடித்த காலத்திலும்இத்தகைய நிகழ்வு இடம் பெற்றிருக்கலாம். அல்லது பிற்காலத்தில் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கலாம். சடலத்தின் கால்களைக் கழுவி ஒப்பாரி பாடும் பெண்களின் ஒப்பாரிப் பாடல்களில் இருந்து அப் பாடல்கள் வேறுபட்டவைகளாக இருந்திருக்க வேண்டும். அப் பாடல்களுடாக வெளிப்பட்ட சமூகச் செய்தி என்ன?
கூலிக்கு மாரடிக்கும் சமூக நடைமுறை காலப் போக்கில் அருகிப் போக ஆரம்பித்த பின்னர், குறிப்பிட்ட சில கிராமங்களில் மாத்திரம் தொழில் முறைக் கலைஞர்களாகக் கூலிக்கு மாரடிப்போர் சிலர் இருந்திருக்கின்றனர். அவர்கள் தான் உணி மையில கூலிக் கு மா டிரப் போராக வாழ்ந்திருக்கின்றனர். இவர்கள் இறந்தவரின் முகமறியாதவர்கள். இவர்களின் ஒப்பாரிப் பாடல்கள் ஏனையவர்களின் ஒப்பாரிப் பாடல்களில் இருந்து மாறுபட்டவைகளாகவே இருந்திருக்கும்.
கூலிக்கு மாரடிக்கும் பெண்கள் வாழ்வின் அவல நிலை இலக்கியங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆங்கில எழுத்தாளர் அழகு சுப் பிரமணியம் ஒரு சிறுகதை
தாயகம் 80
 

கட்டுரை
படைத்துள்ளார். அச் சிறுகதையினை ராஜ ரீகாந்தன் “கூலிக்கு மாரடிப்போர்” ஆகத் தமிழில் மொழிபெயர் தி துத் தந்துள்ளார். பிரபல நாவலாசிரியர் கே. டானியல் தமது நாவல் ஒன்றில் கூலிக்கு மாரடிக்கும் நிகழ் வினைப் பதிவு செய்துள்ளார். இவ்வாறு கூலிக்கு மாரடித்தல் இலக்கியங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனவே அன்றி, அது பற்றி, கூலிக்கு மாரடிக்கின்றவர்கள் பாடும் ஒப்பாரிப் பாடல்கள் பற்றி முழுமையான ஆய்வுகள் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
ஒப்பாரிப் பாடல்கள் நாட்டார் பாடல்கள் ஒரு பகுதியாக இனங்காணப் பெற்று வரிவடிவில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒப்பாரிப் பாடல்கள் அனைத்தும் பொதுவான ஒன்றாக நோக்கப் படுவது பொருத்தமான ஆயப் வு நோக் காகாது. தமக்கு இரத்த உறவுள்ள சொந்தங்களின் இறப்பின் போது புலம்பி அழும் ஒப்பாரிப் பாடல்கள் ஒருவகை. ஒருவனின் சேவகத்துக்குரிய கூலிக்கு மாரடிக்கும் பெண்கள் தமது எஜமானின் மரணத்தில் சொல்லி அழுவது இன்னொரு வகை. கூலி பெறுவதை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு மாரடிப்போர் பாடும் ஒப்பாரி வேறாரு வகை. சடலத்தின் காலைக் கழுவும் பெண்ணின் ஒப்பாரி பிறிதொரு வகை. இந்த வகையான ஒப் பாரிப் பாடல் கள் எவையெவையென இனங் காணப் பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் நிலவுடைமைச் சமுதாயம் சார்ந்த பல உண்மைகள் வெளிக் கொண்டு வரப்படும். தமிழர் சமுதாயத்தில் வாழ்ந்த அடி நிலை மக்கள் பற்றிய மறைந்து கிடக்கும் அரிய தகவல்கள் பல அறியக் கிடைக்கும். நாட்டார் இலக்கியங்கள், குறிப்பாக நாட்டார் பாடல்கள் பற்றிய ஆயப் வினை மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் முன் இவ்வாறு பகுத்து நோக்கும் பொறுப்புக் காத்துக் கிடக்கின்றது. / தாயகம்
வாசகர் வட்டங்கள் தாயகம் வாசகர்களை ஒன்றிணைப் பதற்காகவும் ஆக்கபுர்வமான விமர்சனங்களை வெளிப்படுத்தி பரந்தளவில் தாயகம் சஞ்சிகையைப் பிரபல்யப் படுத்தவும் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் இலக்கிய ஆர்வலர்களையும் அவர்கள் வாழும் பகுதியில் பத்துப் பேருக்கு உட்பட்டதாக வாசகர் வட்டங்களை அமைக் கவும் அவற்றிடையே இணைப்பினை ஏற்படுத்தவும் தாயகம் ஆசிரியர் குழுவுட னி தொடர் பு கொள்ளும் படி
\ಿಷ6ಕ್ಕೆ ಆಗ್ರಹಿ -ஆசிரியர் குறு 5)

Page 18
மொழிபெயர்ப்புச் சிறுகதை
பொடிெ
சிங்கள மூலம் : பியதாஸ் வெலிகன்னகே தமிழாக்கம : திக்குவல்லை . கமால்
தலையணைக்கு நோகாமல் மெல்லத் தலை உயர்த்தினாள் பொடிமெனிகே. அதைவிட மெல்லப் போர்வையைக் கலைத்து விட்டுக் கட்டிலிலே அமர்ந்து கொண்டாள். வெளியிலிருந்து கேட்கின்ற சத்தங்கள் என்னவென்று மிகக் கூர்மையாக் காது கொடுத்துக் கேட்டாள். இருந்திருந்து அங்குமிங்குமாகச் செல்லும் வாகன ஒலியையும், கடலின் இரைச்சலையும் விட்டால், முழு உலகமும் ஆழ்ந்த நித் திரையில் அடங்கித்தான் போயிருந்தது.
எந்தச் சிறு ஒலியும் எழாதபடி மெல்ல எழுந்து அடிமேல் அடிவைத்துச் சென்று யன்னல் சீலையைச் சற்றே அகற்றி அதனுாடாக வெளியே பார்த்தாள் அவள். மங்கிய மஞ்சள் வீதி விளக்குகளால் அந்தக் குறுகிய பாதை ஒளி பெற்றிருந்தது. வயதாளியான காவற் காரன் விபரித்தபடி, அந்தப் பாதையினூடாக ஒரு மீற்றர் அளவு தூரம் அவள் போக வேண்டியிருந்தது. மிகுந்த தேவைப்பாட்டுடன் சற்று நேரம் அந்தப் பாதையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
'ரொம்ப கவனமாயப் போகணும். எப்படியாவது பெளத்த சீலப் பெண்களின் ஆசிரமத்துக்குப் போய்விட முடியுமென்றா நீ தப்பி விடுவாய். அங்க இருக்கிற ஒரு பொம்பிளையிட்ட நான் உன்னைப் பத்தி சொல்லியிருக்கன். நாளைக்கு விடியக் காலம் நீ ஊருக்குப் போக அவ உதவி செய்வா. எஸலின் நோனா என்ற பெயர நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்” முதல் நாள் மாலை அவர் மிக ரகசியமாகச் சொன்னதை அவள் நினைவு மீட்டிப் பார்த்தாள்.
அருகேயிருந்த மணிக் கூட்டுக் கோபுரத்திலிருந்து இரவு ஒரு மணி ஒலிப்பது அவளுக்குத் தெளிவாகக் கேட்டது. அவள் யன்னலருகில் இருந்து விலகி, கட்டிலுக்குக் கீழ் மறைவாக வைத்திருந்த பொதிப் பையை இடது தோளில் போட்டுக் கொண்டாள். அருகிருந்த தொட்டிலில் சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் தூக்கி மார் போடணைத்துக் கொண்டு, நடுங்கும் இதயத்துடன் அந்த இருளுக்கூடாகச் சுற்றுமுற்றும் பார்த்தாள்.
தாயகம் 80
 

00ീേ
இங்கிருந்து வெளியேறும் வரையில் என் தங்கமே நீ அழாதே நீண்ட பெருமூச்சு விட்டபடி தன் மனசுக்குள்ளால் வேண்டுகோள் விடுத்தாள். பிள்ளை அதிக அசைவாட்டத்துக்கு உள்ளாகாதபடி, அவள் மேல்மாடியிலிருந்து மிகக் கவனமாகக் கீழே . கீழே இறங்கினாள். பாதுகாப்புக் கிராதியை ஒரு கையால் பிடித்தபடி மிகுந்த சிரத்தையுடன் அடிமேல் அடி வைத்தாள். சாலையைத் தாண்டி விறாந்தைக்கு வருவதற்கு அவளுக்கு அதிக நேரமெடுத்தது. இருளுக்குள் எங்காவது முட்டி மோதிக் கீழே விழுந்து விடக் கூடுமெனப் பலமுறை நினைத்தான். அவ்வாறு நடக்குமாயின் தனது முயற்சி யாவும் விழலுக்கிறைத்த நீராகி விடுமென்பதையும் அறியாதவளல்ல.
பயத்தால் துடிதுடிக்கும் இதயத்துடன் தான் பொடிமெனிகே விறாந்தைக்கு வரும் கதவைத் திறந்தாள். அப்போது வெளிப்பக்கமிருந்து கடற்காற்று உடலை விறைப்படையச் செய்து கொண்டு உள்ளே பாய்ந்தது. குழந்தை அங்குமிங்குமாக முறுகுவது தெரிந்தது. "ஐயோ என்ட தங்கம் அழாதடா’ அவள் வேண்டி நின்றாள். ‘கேற் கொஞ்சம் திறந்திருக்கு. கவனமாய் போ.” முற்றத்தில் நெடிதுயர்ந்து வளர்ந்திருந்த பாம் மரத்துக்குள் மறைந்தபடி வயதான காவலாளி தாழ் குரலில் சொன்னது பொடிமெனிகேயிற்குத் தெளிவாகக் கேட்டது. இருந்தும் பதில் சொல்லிக் கொள்ள ஏற்ற சந்தர்ப்பமாக அது அமையவில்லை.
கேற்றுக்கு வெளியே வந்த பொடிமெனிகே சற்றே திரும்பிப் பார்த்தாள். அப்போது அந்த மரத்தடியில் நின்ற வயதாளிக் காவலாளியின் சாயல் இருளுக்கூடாக அவளுக்குத் தெரிந்தது. ‘நான் போறன் அங்கிள்” “சீக்கிரமாகப் போய்விடு. எஸலின் நோனா பெயர மறந்திடாத" என்று தாழ் குரலில் சொல்லி, கையாலும் வேறு சமிக்ஞை செய்தார்.
அந்த இடத்திலிருந்து சிறு பாதை வழியாக அங்குமிங்கும் பார்த்தபடியே அவள் நடந்தாள். திடீரென்று எந்த நேரத்திலும் எதுவும் நடந்து
360T6յՈՐ - ԱoՈtjժ ջOI

Page 19
விடலாமென அவள் மிகமிகச் சங்கடப்பட்டாள். தான் அங்கிருந்து வெளியேறியமை தெரிய வந்தால் , பொறுப்பாளர் இரணி டொரு சகபாடிகளோடு மோட்டார் சைக்கிளில் விரைந்து வரக் கூடுமெனி பதையும் , அவர் களினி தேடுதலுக்குள் சிக்கிக் கொண்டால் என்ன நடக்குமென்பதையும் அவள் தெளிவாகவே அறிந்திருந்தாள். இந்த எல்லாவற்றிலுமிருந்து தப் புவதற்கான ஒரே வழி விரைவாக ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்வது தான். இருந்தும் பயணத்தை அதற்கு மேல் வேகப்படுத்த அவளால் இயலவில்லை. குழந்தை விழித்துக் கத்தத் தொடங்கினால் எல்லாமே பிழைத்துப் போய் விடும். அதனால் மிகவும் களைத்துப் போனவளாக மெல்ல மெல்லவே நடந்தாள். சீதளக் காற்று எவ்வளவு தான் வீசிய போதும் அவளது முகத்திலிருந்து வியர் வை துளித் துளியாயப் வழிந்து கொண்டேயிருந்தது.
பயணத்தின் பாதி தூரத்தைப் பூர்த்தி செய்திருந்த வேளையில், குழந்தை திடீரெனக் கத்தத் தொடங்கிய போது, பொடிமெனிகே குழப்பத்துக்குள்ளானாள். பாதையருகே மர நிழலால் இருண்ட பகுதிக்கு உடனே பாய்ந்து சென்ற அவள் “ஐயோ என் தங்கமே! இன்னும் கொஞ்சம் பொறு’ என்று முணுமுணுத்தபடி, சட்டையை விலக்கி மார்புக்காம்பைக் குழந்தையின் வாயில் திணித்தாள். அதனால் பிள்ளையை அமைதிப்படுத்திக் கொள்ள முடிந்த போதிலும், அவளது மனதை அமைதிப்படுத்த என்னவோ முடியவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டு, அருகருகேயுள்ள வீடுகளிலிருந்து யாராவது வெளியே வந்து விடுவார்களோ என று படபடப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
* உனக்காகத் தான் தங்கமே நான் இவ்வளவு துன்பப்படுறன் அவள் தனக்கே சொல்லிக் கொண்டாள்.
கடலின் இரைச்சலைத் தவிர வேறெந்த ஒலியும் இல்லாமலிருந்தமை அவளைச் சற்று ஆறுதல் படுத்தியது. சற்று நேரம் மரத்தடியில் நினி றதால நடைக் களைப் பும் சற்றே விலகியிருந்தது. முன்பை விடப் பெரிய சுகம் தெரிந்தது.
‘அவர் சொன்னபடி இன்னும் அதிக தூரமில்லை” என்று மெல்லச் சொல்லிக் கொண்ட பொடிமெனிகே, மரக் கிளைகளுக் கூடாக வானத்தைப் பார்த்தாள். அங்கே ஒரேயொரு நட்சத்திரத்தைக் கூடக் காணக் கிடைக்கவில்லை. மாலையிலிருந்து மழைக் குறி காட்டிக்
G

மொழிபெயர்ப்புச் சிறுகதை
கொண்டிருந்த வானம் அதற்காகத் தயாராவது போல் தெரிந்தது.
வலது தோளில் தொங்கிக் கொண்டிருந்த சிறு பொதியைக் கையை உயர்த்திச் சரி செய்து கொண்டு, சற்று முறுறும் பார்த்து மீண்டும் பாதைக் கிறங்கத் தயாரானாள். இருந்தும் நாலைந்து அடிக்கு மேல் அவளுக்குப் போகக் கிடைக்கவில்லை. இடைப் பாதையொன்றுக்கு ஊடாகத் திடீரென்று வந்த ஜிப் வண்டியொன்று அவளருகே சடாரென்று நிறுத்திய போது அவளது கண்கள் பற்றி எரிவது போலிருந்தது.
‘என்ன சாப்பாடு தேடிப் போறியா? ஏறு ஏறு’வாகனத்துக்கு உள்ளிருந்து வெளிப்பட்ட தடித்த குரலொன்று பொடிமெனிகேயை அதிரச் செய்தது. “யார்ட பிள்ளையோ தெரியல. ஒருவேள களவெடுத்துக் கொண்டு தான் போறாளோ?” கூடவே எழுந்த இன்னொரு உயர் தொனியால் அவள் தடுமாறிப் போனாள். என்ன செய்வதென்று புரியாமால் புலனடங்கிப் போனாள்.
6
b... 6ple...” “ஐயோ..”
‘ஏறச் சொன்னன்’ பொடிமெனிகேயிற்கு எதுவும் சொல்ல இடமளிக் காம ல முனினே பாயம் நீத பொலிஸ் காரனொருவனி சத்தமிட் டானி , அதற்கிடையில் குழந்தையும் அழத் தொடங்கியது. செய்வதென்னவென்று தெரியாத அவளது கண்களிலிருந்து கண்ணிர் பெருக்கெடுத்தது.
'ஏறச் சொல்றன்டீ.” மிக நெருங்கி வந்த பொலிஸ்காரன் அவள் கழுத்தைப் பிடித்து ஜிப்பினுள் தள்ளினான். ‘புண்ணியம் கிடைக்குமையா. என்னைப் போக விடுங்கோ.”
‘போய் யாரோட படுக்கிறதுக்கு?” பொடிமெனிகே எதுவும் பேசவில்லை. நெஞ்சுக்கூடு இறுகி வார்த்தைகள் வர மறுத்தன. குழந்தையைக் கவனமாக அணைத்துக் கொண்டு மிகுந்த சிரமத்தோடு ஜீப் வண்டியினுள் ஏறினாள். ‘இவளுக் எய்ட்ஸோ தெரியல்ல. எதுக்கும் கொஞ்சம் இந்தப் பக்கமா இருப்பது நல்லது”
வண்டியின் முன் இருக்கையில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் சிப்பந்தி, பின் பக்கமாக ஏறிய . சக பொலிஸ்காரனுக்குச் சத்தமாகச் சொல்லிச் சிரித்தார்.
‘‘துT, கேடுகெட்ட நாய்’ அவள் மனதுக்குள் கருவிக் கொண்டாள்.
இன்னும் பல குறுக்குப் பாதைகளில் சுற்றியடித்த ஜீப் வண்டி இறுதியாகப் பொலிஸ்
変) 8360T6յՈՐ - ԱDՈԹ Ժ ՋOI

Page 20
மொழிபெயர்ப்புச் சிறுகதை
நிலையத்தில் போய்ச் சேர்ந்தது. அதற்கிடையில் பொடிமெனிகே நன்றாகவே களைத்துப் போய் விட்டாள்.
‘அந்த வாங்கில இரு” வாகனத்திலிருந்து இறங்கி பொலிஸ் நிலையத்துக்கு ஏறும் போதே, அருகிலிருந்த வாங்கைக் காட்டிச் சொன்னான் பொலிஸ்காரன் ஒருவன்.
சற்றே இருளான இடமொன் றில காணப்பட்ட அந்த வாங்கின் ஒரு பக்கமாக இன்னொரு பெண் சுருண்டபடி அமர்ந்திருப்பதைக் கண்ணுற்ற போது அவளுக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது. பொடிமெனிகேயும் அந்தப் பெண்ணருகே அமர்ந்து கொண்டாள். அங்குமிங்கும் பார்த்து 29H (LP 5[ கொணி டிருந்த பிள்ளையைک மார்போடணைத்துச் சட்டையை விலக்கினாள்.
சாலையின் மத்தியில் போடப்பட்டிருந்த மேசையின் எதிரே அமர்ந்திருந்த, வெண் முடியும் முள் மீசையும் பருத்த உடலுமான பொலிஸ் அதிகாரி சோம்பல் மிகுந்தவராகப் புத்தகம் புரட்டிக் கொண்டிருந்ததை, பயத்துடனும் சந்தேகத்துடனும் பொடிமெனிகே பலமுறை பார்த்தாள். அவரது கண்களிலிருந்து வழிவது தூக்கக் கலக்கமா? மது மயக்கமா? என்பதை அவளால் தீர்மானிக்க முடியவில்லை.
அவ்வப்போது பொலிஸ் சிப்பந்திகள் வந்து அவரிடம் என்னதான் கூறுகிறார்களோ என்று அவளுக்கு விளங்கா விட்டாலும் கூட, அவர்களது சப்பாத்து ஒலிகள் ஒவ்வொன்றும் அவளது காதுகளை உராய்த்துத் துளைக்காமலில்லை. அவள் நெடு மூச்சு விட்டபடி அருகிலிருந்த பெண்ணை உற்றுப் பார்த்தாள். அவளும் மிகுந்த ஆவலோடு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனித்தாள்.
‘ஐயோ எங்கள என்ன செய்வாங்களோ தெரியல” பொடிமெனிகே பயந்தவளாகத் தாழ்ந்த குரலில் அந்தப் பெண்ணிடம் வினவினாள்.
‘ம் எய்ட்ஸ் நோய்க்கு இருக்கிற பயத்தால எங்களுக்கு ஒன்னும் செய்ய மாட்டாங்க . முன் பெல் லாம் உண்னைப் போல இளம் பெண்களுக்குக் கடும் கஷ்டந்தான். இப்பிடிப் பிடிச் சுக் கொணி டு வாறவங்களை விட மாட்டாங்கள்’ தாழ்ந்த தொனியில் சொன்னாள். அவள் சொனி ன அர்தி தம் பொடிமெனிகேயிற்கு உடன் விளங்கவில்லை. வியப் போடு அவளது வாயைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘பிடிபட்டது முதல் தடவையா..?”

G
ம். எனக்குப் பயமா இருக்கு” 'பயப்பட ஒன்றுமில்லை. நாளக் கி கோட்டுக்கு கூட்டிப் போய் அங்கிருந்து எங்காவது அனுப்புவாங்கள்’
‘எங்காவதென்னா..?” ‘முதல்ல டொக்டரிட்ட. நன்னடத்தை அதிகாரியோ யாரோ என்று சொல்லுவாங்க. அங்க.”
‘விட்ட போக விடமாட்டாங்களா?” ‘‘அதெல்லாம் இனி டொக்டர் மார், நீதிமன்றத்தில உள்ளவங்க சொல்றபடிதான்’ அலட்டிக் கொள்ளாமல் அனுபவப்பட்டவளாக அந்தப் பெண் சொன்னாள்.
பொடிமெனிகே பெருமூச்சு விட்டாள். 'பெரேரா எங்க அந்தப் பெண்?” சாலை நடு மேசை பொலிஸ் அதிகாரியின் அதிகாரக் குரலில் முழுக் கட்டிடமும் அதிர்ந்து நின்றது.
அவள் பயப் பீதியால், என்ன நடக்குமென்று சிந்திக்க முடியாதவளாக, அவர்கள் பக்கம் நடுங்கும் மனதோடு பார்த்துக் கொண்டிருந்தாள். ‘இங்க வா’ இடி விழுவது போல் பொலிஸ்காரனின் குரல்.
‘என்ன பிரச்சின?” 'நள்ளிரவில் வீதியில் நடமாடியது” "எங்கிருந்து பிடித்தீங்க?” “ஸி பீச் றோட்டில்..” என்று சொன்னபடியே திரும்பி, ' சீக்கிரம் இங்க வா’ என்று பொடிமெனிகேயைப் பார்த்துக்க் கத்தினான் அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள்.
“ஸேர், இவள் வயதுக்கு மீறின முரட்டுத் தனம். ஏழெட்டு முற சத்தம் போட்டுத் தான் ஜீப்பில ஏற்றினம்’ அங்கு நின்ற இனி னொரு பொலிஸ் காரணி , அவளது தயக் கதி தை சாதகமாக்கிக் கொண்டு கத்தினான்.
“பெயரச் சொல்லு?” மேசையருகே வந்த பொடிமெனிகேயிடம் கடுப் போக்கில் கேள்வியெழுப்பினார் அந்த அதிகாரி.
“சத்தமாகப் பேரச் சொல்லு” 'எச்.எம். பொடிமெனிகே ஸேர்’ 'எச். எம். என்றால்.’ “ஹேரத் முதியான்சலாகே’ “வயது” 'இருபத்தொன்று” ‘எங்க இருக்கிறாய்?” பொடிமெனிகே மேலும் கீழும் பார்த்தாள். இருந்த இடத்திலிருநுது தப்பியோடி வந்து விட்டு,
D B36076յցՐ - ԱOՈtjd 2OI

Page 21
வதிவிடத்தைச் சொல்வதென்னபது, அவளுக்குக் கடுமையான சிக் கலைக் கொடுத்தது. விடை தேடுபவளாக அவள் சுற்றுவடடாரத்தைப் பார்த்தாள் ‘ஊரெல்லாம் சுத்திறவளுக்கு வீடு வாசல் இருக்குமோ ஸேர் ?’ இடையில் 9 (EE பொலிஸ்காரனின் கூற்று.
“இது யாருடைய பிள்ளை?” ‘என்ர ஸேர்” ‘'பொய் சொல்லாதே. களவெடுத்துக் கொண்டு விற்கப் போறியா?”
‘ஐயோ. இல்ல ஸேர். இது என்ர தங்கம் 'பிள்ளையின் அப்பா எங்க?” அதிகாரியின் இந்தக் கேள்வியால பொடிமெனிகே மேலே போய்க் கீழே வந்து விழுந்தாள். அவளது கண்கள் உடைப்பெடுத்துக் கண்ணிர் கக்கியது. இரு உதடுகளும் முறுக்குண்டு வாய்திறக்க முடியவில்லை. அவளை அறியாமலேயே விம்மல் வெடித்தது. பதில்தான் வரவில்லை.
* கிடைக்கிறவங்களோட போறவளுக்கு அப்பாவென்று ஒருவனை எப்படி ஸேர் சரியாகக் சொல்ல முடியும்!” இந்த உலகத்தில் எந்த ஆணுக் கோ பெண் ணுகி கோ, தெரியாத விடயமொன்றை மிகவும் சிரமப்பட்டுத் தேடியெடுத்து வெளிப்படுத்துவது போல் மிகுந்த வீம்புடன் ஒரு பொலிஸ் சிப்பந்தி சொல்லிச் சிரித்தான்.
‘இல்ல ஸேர் பிள்ளைக்கு அப்பா இருக்கு பொலிஸ்காரனை முறைத்தபடி கூறினாள்.
 

மொழிபெயர்ப்புச் சிறுகதை
பருத்த உடல்வாகு கொண்ட பொலிஸ் அதிகாரி, மிகுந்த எதிர்பார்ப்போடு தன்னையே அவதானித்துக் கொண்டிருப்பது அவளுக்கு விளங்கியது.
‘ஸேர். நீங்களெல்லாம் நினைப்பது போல பொம்பிளயில்ல நான். பின் தங்கிய தூரக் கிராமத்திலிருந்து பல உயிர் கள வாழ வைப் பதற்காக வந்த ஏழைப் பெணி . கஷ்டத்துக்குள் இழுத்து விடப்பட்ட அப்பாவி’ மிகவும் தெளிவான தொனியில், சரியான மொழியில், கண்கள் வழிய வழிய, ஒரே மூச்சில் சொல்லிச் சென்றாள் பொடிமெனிகே.
அந்தப் பொலிஸ் அதிகாரி இதுவரை தான் கேட்டிராத கதைக்குக் காது கொடுப்பது போல், அவளையும் அருகிருந்த பொலிஸ்காரர் இருவரையும் மிகுந்த ஆவலோடு பார்த்தார்.
'பல உயிர்கள வாழ வைப்பதற்காக. ம். நல்ல விஷயம்’ என்றபடி சற்றே தலை சரித்த அதிகாரியின் அடுத்த கேள்வி, முன்பைவிட இதமாகவும் பணிவாகவும் அமைந்தது.
‘ படித்தவள் போல தெரியுதே?” திட்டமிட்டுப் பேசாத போதும் தனது சொற்கள் அவரது மனதை உசுப்பியிருப்பதை அவள் தெரிந்து கொண்ட போது, கூடவே தைரியமும் எழுந்தது.
ஸேர் நான் ஏ எல் பாஸ் பண்ணியிருக்கன்’
9) ஜனவரி - மார்ச் 2O

Page 22
மொழிபெயர்ப்புச் சிறுகதை
“எந்த ஊர்?” ‘முவன்தெனிய’ “முவன்தெனிய?’ “ஓம். மாத்தளைக்கு அப்பால” “எந்தப் பாடசாலையில படித்த நீ?” ‘முவன்தெனிய மகா வித்தியாலயம்’ 'கொழும்புக்கு எப்படி?” “அது கொஞ்சம் நீண்ட கதை ஸேர்” "பரவாயில்லை சொல்லன்” அவள் தனது வாழ்வின் கதையைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல் லத் தொடங்கினாள்.
“ஸேர். என்ர அப்பா ஒரு தேயிலத் தோட்டத்தில வேல செய்தவர். எனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் இருக்கிறாங்க. நான் எட்வான்ஸ் லெவல் எழுதி ஒரு கிழமையில பாம்பு கடித்து என்ட அப்பா செத்துப் போனார். அப்புறம் எங்களுக்கு எந்த வசதியும் இல்லாமல் போய் விட்டது. அம்மா தேயிலத் தோட்டத்தில உதிரி வேலைக்குப் போய் கிடைத்த வருமானத்தில தான் காலத்த ஒட்டினோம். இந்தக் குடும்பச் சுமையை அம்மாவால மாத்திரம் இழுக்க முடியாதென்று எனக்கு விளங்கியது. அதனால நானும் அம்மாவோட வேலக்கிப் போனன். ஆனால் கிழமையில இரண்டொரு நாளுக்கு மேல வேல கிடைக்கல. அப்போது தம்பி சாதாரண தர வகுப்பில படித்தான். தங்கை எட்டாம் தரம். எங்கட பணக் கஷ்டத்தப் பார்த்து தூரத்து உறவினர் ஒருவர் கட்டுநாயக்கா தையல் மொழிற்சாலை ஒன்றிலை வேலை பெற்றுத் தந்தார். அங்க பெரிய சம்பளமொன்றும் கிட்டவில்லை. இருந்தும் மாதாந்தம் நானுறு ஐநூறு அம்மாவுக்கு அனுப்பினன். அதனால தம்பி தங்கையின்ர கல்வியில பார்த்துக் கொள்ள முடிந்தது. என்னால கால் வைக்க முடியாமப் போன அந்த உலகத்தில அவங்களத் தக்க வைப்பதே என்ர எண்ணமாக இருந்தது. அப்பிடியான ஏழெட்டு மாதங்கள் சென்றன ஸேர்’
சுகமான முறையில் போர்வையை ஒழுங்குபடுத்திக் குழந்தையை அணைத்துக் கொண்ட பொடிமெனிகே மிகவும் களைத்துப் போன நிலையில் உதடுகளை நனைத்தபடி அங்குமிங்கும் பார்த்தாள்.
'பெரேரா ஒரு வாங்கு கொண்டு வந்து போடுங்க. குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்பது கஷடந் தானே’ அதிகாரியின் நல்லலெண்ணம் சற்றே வெளிப்பட்டது.

பாடசாலையில் கல்வி கற்கும் போது நூற்றுக் கணக்கான மாணவ மாணவிகளும், முப்பது நாற்பது ஆசிரியர்களதும் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டு கதைக்கும் வல்லமை பெற்றிருந்தவளுக்கு, இரண்டொரு பொலிஸ் அதிகாரிகளை ஈர்த்து அனுதாபம் கொள்ளும் வகையில் கதைப் பது ஒன்றும் பெரிய விஷயமில்லைத் தான். அவர்கள் தன் மீது பரிவு காட்ட முனைந்தமை அதை உறுதிப்படுத்தியது. அதனால் அவளுக்கிருந்த பயம், தடுமாற்றம் எல்லாம் மெல்ல மெல்ல விலகிச் சென்றது. வாங்கில் அமர்ந்து தன் செல்வத்தை அணைத்துக் கொண்ட அவள் தன் வாழ்க்கைப் பயணத்தில் படிந்து விட்ட அழுக்குகளை பயப்பீதியின்றி வெளிப்படுத்த முனைந்தாள்.
“ இப் பிடியாகக் காலம் போய் கி கொண்டிருந்தது ஸேர். ஒரு நாள் தொடர்ச்சியான மழை. அன்று நனைந்து நனைந்து தான் எல்லோரும் வேலைக்கு வந்து போயப் க் கொண்டிருந்தாங்க. குடையால் தாக்குப் பிடிக்க முடியல்ல. நானும் நனைந்து நனைந்து தான் தங்குமிடத்துக்குப் போய்க் கொண்டிருந்தன்”
‘எங்க தங்கியிருந்தது?”
'யடியனயில’
‘ஆ. மினுவாங்கொடப் பக்கம் என்ன?”
“ஓம் ஸேர்”
‘இனி.”
‘இனி ஸேர். காரொன்று வந்து நின்றது. பொடிமெனிகே ஏறுங்க. திரும்பிப் பார்த்தன். அவர் எங்கள் வேலைத் தளத்தில் இரண்டாம் மெனேஜர். நான் மிகவும் இக்கட்டான நிலைக்கு ஆளானன். முடியாது. என்றால் முகத்துக்கு ஓங்கிக் குத்தியது போலிருக்கும். அப்படிச் சொல்லி விட்டு அடுத்த நாளைக்கு எப்பிடி அவரது முகம் பார்க்க முடியும்? எப்பிடி அங்க வேலை செய்யலாம்? இன்னொரு பக்கம் ஒரு ஆம்பிளயோடு தனியாக எப்படிக் காரில் ஏறிச் செல்வது..?”
"அவருக்கு எத்தின வயதிருக்கும்?”
'முப்பது”
“என்ன பெயர்?”
'ஜயந்த பெரேரா”
‘ம். அப்புறம்?”
“ஜயந்த ஸேர், பொடிமெனிகே. என்று என்னைத் திரும்பவும் அழைத்தார். அந்தக் குரலில் கூட தனக்கு கெளரவக் குறைச்சல் ஏற்பட்டு விட்டதான பாங்கு தெரிந்தது. அங்க நின்றவங்கெல்லாம் அவரையும் என்னையும்

Page 23
ஆர்வத்தோட பார்த்தாங்க. வேறொன்னும் செய்ய முடியாத நிலையில பின் சீட்டில ஏறி அமர்ந்தன
‘எங்காவது கூட்டிட்டுப் போய..?” ‘இல்ல ஸேர். நான் தங்கியிருந்த இடத்துக்கே கூட்டிட்டுப் போய் விட்டார்’
‘அப்படியா?” அவர் எதிர்பார்த்த விடை கிடைக்காததாலோ என்னவோ, பொடிமெனிகேயின் முகத்தை வியப்போடு பார்த்தார்.
அவள் தன் கதையை விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்.
‘அப்படிப் போய்க் கொண்டிருக்கும் போது குடும்ப விபரங்கள் கேட்டார். ரொம்பவும் அனுதாபப்பட்டார். இரண்டு கிழமைக்குப் பிறகு, முன்பை விடக் கொஞ்சம் கூடச் சம்பளமுள்ள பிரிவொன்றுக்கு மாற்றினார். பல தடவை தங்குமிடத்துக்குக் கொண்டு போய் விட்டார். இப்பிடியான நடவடிக்கைகளால கொஞ்சம் விலகி நடக்கணுமென்று தீர்மானித்தன்” “ஏன் அப்படி?” ‘' மற்றவங்க ஒவ்வொரு விதமாகக் கதைக்க ஆரம்பித்திட்டாங்க. ஒரு காருக்கு ஏறச் சொன்னப்போ நான் மறுத்திட்டன்’
‘அப்போது.” “ஏன் மறுக்கிறீங்கென்று கேட்டார். கதை சொல் றாங்களே ... எனிறேன் . உங்க
குடும்பத்திலயும் பிரச்சினயேற்படும் என்றும் சொன்னன்’
"ஐயோ கடவுளே. அவன் கல்யாணம் செய்தவனா?” பொலிஸ் அதிகாரியிடமிருநுது அந்தக் கேள்வி ரி-56 ஐ விட வேகமாக வெளியேறியது. அவர் அமைதியிழந்து போய் சற்றே தடுமாறினார். குதிரை அந்தப் பக்கமாகவும் இந்தப் பக்கமாகவும் சுழன்றது.
பொடிமெனிகே பயந்த கண்களுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இனி இனி’ சற்று நேரத்தின் பின்னர் சுமுக நிலையை முகத்தில் ஏற்படுத்திக் கொண்டு, பொடிமெனிகேயின் கையிலிருந்த குழந்தையை கூர்மையாக அவதானித்தார்.
‘‘ம் . அந்தக் காரணத்தால் வர முடியாதென்று சொன்ன போது அவர் சத்தமிட்டுச் சிரிக்கத் தொடங்கினார்’
‘* பொடிமெனிகே பயப்படாம ஏறு அதெல்லாம் நான் சமாளிக்கிறன். வேறொன்றும் செய்ய முடியாம ஏறினன் ஸேர், ஆனா அன்னக்கி என்னை என்ர விடுதிக்குக் கூட்டிப் போகல.”
‘‘அப்போ’
தாயகம் 80
 

மொழிபெயர்ப்புச் சிறுகதை
“நீர்கொழும்புப் பக்கம் ஓரிடத்துக்கு”
“முன்பும் அங்க போயிருக்கியா?”
'இல்ல ஸேர். அன்னக்கித்தான் முதற் தடவ’
‘அப்புறம்?”
‘நடக்கக் கூடாதது நடக்கப் போவது எனக்குத் தெரிந்து விட்டது. காரை நிறுத்தியதும் அதிலிருந்து பாய்ந்து ரோட்டுப் பக்கம் ஓடி வந்தேன். இருந்தும் என்னால் ரொம்ப தூரம் ஓடக் கிடைக்கல. அவர் யாரையோ அழைப்பது கேட்டது. இரண்டு பேர் என்னைப் பிடித்துப் பலாத்காரமாக இழுத்துச் சென்றனர்.
‘சத்தம் போட்டிருக்கலாமே”
‘போட்ட நான் தான். அது யாருக்குத் தான் கேட்கப் போகிறது? அந்த முரடர்கள் என் வாயையும் பொத்தித்தான் இழுத்துக் கொண்டு போனாங்கள். அன்னக்கித் தான் ஸேர் நான். கெடுக்கப்பட்டன். அன்றைக்குப் போல நான் வாழ்க்கையில என்னைக்குமே அழுததில்ல. கவலை, வேதனை சுமையோடு பிறந்து வளர்ந்த எனக் கு, உயிர் மூச்சு பிரியும் வரை, அதையெல்லாம் தலைமேல் சுமந்து கொண்டு தான் வாழ வேண்டுமென்பது உறுதியாகி விட்டது. தற்கொலை செய்து கொள்ளக் கூட நினைத்தேன் ஸேர். ஆனா அம்மா தம்பி தங்கைமாரை வாழ வைக்க வேண்டுமென்பதற்காக, அவ்வாறு செய்து கொள்ளவில்லை. அதற்குப் பிறகு ஜயந்த ஸேர் என்னோட அவரது இரண்டாம் மனைவி போல் தான் நடந்து கொண்டார். இந்தக் குழந்தை கர்ப்பமானதும் என்னை வோெறரு இடத்தில் நிறுத்தினார்’
‘ஆ. அதெங்க?”
‘‘கடுநேரியாவில அவரது நண்பர் ஒருவரின் வீட்டில்”
‘‘அப்போ வேலைக் குப் போக 96)606)uilt?”
'இல்லை. அவர் எனக்குச் செலவு செய்தார். நான் முன்பு போல் வீட்டுக்கும் காசு அனுப்பினன். குழந்தை கிடைத்ததும் மனைவிய விவாகரத்துச் செய்திட்டு என்னக் கட்டிக் கொள்றதாகவும் சொன்னார். சொல்றதயெல்லாம் கேட்டபடி இருப்பதத் தவிர எனக்கு வேறெதுவும் செய்யக் கூடிய சூழல் இருக்கல. எப்பிடியோ இந்தக் குழந் தயும் கிடைத்து விட்டது. குழந்தை கிடைத்ததும் வேறொரு இடத்துக்குக் கூட்டிச் சென்றார். இந்த நடு இரவில அங்கிருந்து தப்பியோடி வந்தன்”
“ஏன் ஓடி வரணும்?”

Page 24
மொழிபெயர்ப்புச் சிறுகதை
இந்தக் கேள்வி பொலிஸ் அதிகாரியிடமிருந்து வெளிப்படுவதோடு, பொலிஸ்காரர் இருவரும் பொடிமெனிகேயை வியப்புடன் கண்களை அகல விரித்துப் பார்த்தனர். “ஏன் ஓடி வரணும்?” திரும்பவும் அதே கேள்வி கரகரத்த குரலில்.
“அது குழந்தைகளை விக்கிற இடமாம். வெளிநாடுகளுக்கு...”
‘அப்பிடி யார் சொன்னவங்க” அந்தக் கேள்வி அவளைத் திகைக்க வைத்தது. வயதாகிப் போன காவல்காரனின் அனுதாபப் பார்வை அவள் கண்களுக்குத் தெரிந்தது.
‘உன்னைப் போல எனக்கும் ஒரு மகளிருக்காள் பாரு. நீ சரியான ஆளுக்குத் தான் அகப்பட்டிருக்காய்” என்று தனது விபரங்களைக் கேட்டறிந்த பின் காவல்காரன் கடும் கவலையோடு சொன்ன வார்த்தைகள் அவள் காதுக்குள் எதிரொலித்தன.
* அங்க பிள்ளைங் கள வெளி நாட்டவங்களுக்கு விக்கிறதா யார் சொன்னாங்க பொடிமெனிகே?” பொலிஸ் அதிகாரி மீண்டும் அக் கேள்வியைக் கோபத்தோடு அடிமனதுள் அடக்கிக் கொண்டு கேட்டார்.
‘அங்குள்ள. வயது போன காவலாளி தான் சொன்னவர். ஐயோ ஸேர் அவருக்கு ஒரு தொல்லையும் செய்யாதீங்க. அவர் தான் அந்த மரணக் குழியிலிருந்து தப்பி வர எனக்கு உதவியவர்”
‘உன்னைப் போல இன்னும் தாய்மார்கள் அங்க இருக்காங்களா?”
“ஓம். இன்னும் பத்துப் பன்னிரண்டு பேர் போல இருக்காங்க. வெவ்வேற அறைகளில இருக்காங்க. ஒருவரோடொருவர் கதைக்க விட மாட்டாங்க”
'தப்பி வந்தது சரி. இந்த நேரத்தில எங்க
போறதுக்கு?”
'வீட்டுப் பக்கந்தான்” ‘இந்த இரவில்.’
“ஓம் ஸேர். பகல் நேரத்தில வெளியேற முடியாததாலை தான் இரவில வந்தன். பெளத்த சீலப் பெண்களின் ஆசிரமத்துக்குப் போக வந்தன். விடியும் வரையில அங்கிருந்திட்டு, மாத்தளைக்குப் போய யோசித்தன்”
‘' அங்க தெரிந்த வங்க யாரும் இருக்காங்களர்?’
@;

'இல்ல ஸேர். அந்த காவல்காரனுக்குத் தெரிந்த பெண்ணொருத்தி அங்க இருக்காங்க. அவர் தான் கதைத்து ஏற்பாடு செய்து தந்தவர்” ‘ம். அந்த வீடு எங்கிருக்கு?” ‘அங்க நான் வந்த வீதியில மூன்றாம் ஒழுங்கைக்குத் திரும்பிற இடத்தில ஸேர். அந்த வீட்டுக்கு முன்னால பருத்துயர்ந்த பாம் மரமொன்றிருக்கு. முற்றம் நிறைய அழகான பூமரங்கள்’
“ஐஸே, யாருடைய வீடது?” அதிகாரி மிகுந்த கோபத்தோடு கர்ஜித்தார். பொலிஸ்காரரின் முகங்களை அழுத்தமாகப் பார்த்தார்.
அதற்குப் பதில் சொல்வதற்குப் பதிலாக அவர்கள் குழம்பிப் போனவர்களாக அங்குமிங்கும் தடுமாறினர்.
“பண்டா யாருடைய வீடது?” மீண்டும் சிங்கக் குரலெழுப்பினார்.
‘நாங்க நாளைக்குத் தேடிப் பார்ப்பம் ஸேர்”
“நாளைக்கல்ல. அவங்கள இப்போதே கைது செயப் யணும் . இடி விழுகிற அநியாயமில்லையா இது”
“ஸேர். இந்த தங்கச்சிக்கு காலமே வீட்டுக்குப் போக ஒழுங்கு செய்து கொடுப்பம். அந்த வீட்டுக்குள்ள தொடர்பு என்னவென்று எனக் குத் தெரியும் ஸேர் ’ பொலிஸ் உத்தியோகத்தர் பண்டா கீழே பார்த்தபடி மிகக் கவனமாக வார்த்தைகளைக் கோர்த்தார்.
' ' աn (5ւ եւ வீடு եւ T (5 L- Աl தொடர் பென்னுதான் கேக்கிறன்?’ பொலிஸ் அதிகாரியின் கோபம் கிஞ்சித்தும் குறையவில்லை. எதுவும் சொல்லிக் கொள்ள முடியாமல் பண்டா மிரள மிரள விழித்தார். கீழுதட்டைக் கடித்தபடி சுவரில் பொருத்தப்பட்டிருந்த, மிகவும் பிரபலமான முன்னணி அரசியல்வாதியின் உருவப் படத்தில் அவரது கண்கள் குத்திட்டு நின்றன. வெள்ளைத் தேசிய உடையில் வாய் நிறையச் சிரிப்புதிர்க்கும் அந்த அழகிய உருவம்..!
“இங்க இந்தப் பிள்ளைக்குக் குடிப்பதற்கு ஏதாவது கொண்டு வந்து கொடுங்க” என்ற அதிகாரி பற்களை நறநறத்தபடி, நெருப்புக் கண்களுடன் கொஞ்ச நேரம் அந்த உருவப் படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
டக்கென்றெழுந்து கதிரையைப் பின்னே தள்ளிவிட்டு, எவரையும் சாட்டை செய்யாமல் நடந்து முற்றத்துக்கிறங்கி இருளுக்குள் மறைந்தார்.
D e36.orolgf” - ottjét 90l.

Page 25
"oldfL
கொழும்பு கலாசுரபி மண்டபத்தில் நடைெ வெளியீட்டு விழாவின் போது கலைவாதிக
மன்னாரைச் சேர்ந்த நாவலாசிரியர் எஸ்.ஏ. உதயன் எழுதிய “வாசாப்பு” என்ற இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சியின் ஒரு முக்கிய கால கட்டத்தில் வெளிவந்திருக்கும் நாவல் என்று கூறி வைக்கலாம்.
நான் அறிந்த வரையில் நாட்டுக்கூத்தைப் பகைப் புலமாக வைத்து ஈழத்தில் எழுந்த முதல் நாவல் இது தான் என்பேன்.
ஏற்கனவே இரண்டு நாவல் எழுதியிருக்கும் உதயன் அவ்விரண்டு நாவல்களையுமே சாகித்திய மற்றும் இலக்கிய விருதுக்குரிய அத் தளத்தில் படைத்தளித்தார் எனில் உதயனின் நாவல் படைக்கும் திறனை விதந்துரைக்கத் தான் வேண்டியுள்ளது.
தொன்னூற்றாறு பக்கங்களைக் கொண்ட இந் நாவல் மூன்றாவது நபர் ஒருவரால் கூறப்படுவது போல எழுதப்பட்டுள்ளது. கடலோரக் கிராமமாகிய மன்னார், பேசாலைக் கிராமத்தின் மொழி வழக்கிலேயே கதை கூறப்பட்டுள்ளது. அம் மொழி நடை இலங்கையடங்கிலுமுள்ள தமிழ் மக்களால் புரிந்து கொள்வது கடினமாயினும் கூட, மன்னார், மற்றும் வட புல முஸ்லிம் தமிழ் மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பது எனது கருத்து.
இந் நாவலில் கையாளப்பட்டுள்ள மொழி நடையைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தமிழ் நாவல்களின் மொழி நடை தஞ்சாவூர், மெட்ராஸ், திருச்சி, மதுரை, கோவை, சாயல்பட்னெம், திருநெல்வேலி, தோப்பில் போன்ற பிரதேச மொழி நடையைப் புரிந்து கொள்ள முடிந்த நமக்கு மன்னார்ப் பிரதேச மொழி வழக்கை ஏன் புரிந்து கொள்ள முடியாது என்பது எனது வினா.
இந் நாவலின் மகுடமே சிலருக்குத் தலையைச் சுற்ற வைக்கலாம். 'வாசாப்பு' வித்தியாசமான தலைப்புக்களைச் சூட்டுவதில் வல்லவராக உதயன் திகழ்கிறார். லோமியா, தெம்மாடிகள் இவையெல்லாம் அவரது நாவல்களின் தலைப்புக்கள். 'வாசாப்பு” எனப்படுவது மன்னார்ப் பிரதேசங்களில் ஆணி டாண்டு காலமாகப் படிக்கப்பட்டு வரும் நாட்டுக் கூத்துக்களின் ஒரு
தாயகம் 80
 

நால் விமர்சனம்
* நாவல்
பற்ற எஸ்.ஏ. உதயனின் “வாசாப்பு” நாவல் கலில் நிகழ்த்திய நூல் விமர்சனம்
வகையாகும். ஒரே நாளில் நடிக்கப்படுவது வாசாப்பு ஆகும். இரண்டு மூன்று தினங்கள் படிக்கப்படும் நாட்டுக் கூத்துக்களும் மன்னாரில் உண்டு. நாவலாசிரியரே கூறுவது போல் 'வாசாப்பு’ நடிக்கப்படுவதல்ல, படிக்கப்படுவது! ஏனெனில் பாடலினி இடையிடையரிட்ட வசனங்கள் கொண்டவை தான் இக் கூத்துக்கள். எனவே படிக்கப்படுவது என்பது பொருத்தமான பதம் தான். கூத்துக் கலை எனப்படுவது பாரம்பரிய கலை வடிவங்களில் ஒன்றாகும். இதில் இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் அடங்கும். மன்னார் மாவட்டம் நாட்டுக் கூத்துக் கலையில் உன்னத நிலையடைந்திருந்தது எனில் அது மிகையல்ல. மன்னார் மாதலம் கிறீஸ்தவ செல் வாக்கு மிக்கது. மீன் பிடித் தலைப் பெரும்பான்மைத் தொழிலாகக் கொண்டிருந்த கிறிஸ்தவ மக்கள் வருடா வருடமும் இடைக்கிடையேயும் இந்த நாடக விழாக்களை மகிழ்ச்சிப் பிரவாகத்துடன் நடத்துவார்கள். கூத்துக் கலை கொடி கட்டிப் பறக்கும் பேசாலை, வங்காலை, தாழ்வுப்பாடு, இசைமாலைத்தாழ்வு, முருங்கன் போன்ற இடங்களில் தொடர்ச்சியாக இவை மேடையேற்றப்படும். இக் கூத்துக் கலையை நெறிப்படுத்தி வழங்குபவரை ‘அண்ணாவியார்’ என்று அழைப்பர்.
நல்ல ஆரோக்கியமாக உடல்வாகும் உற்சாகமும் சுறுசுறுப்பும் ஆடற் கலையும் பாடற்திறனும் இனிய குரல் வளமும் அறிந்தவர்கள் மட்டும் தான் வாசாப்பு படிக்க முடியும்.
ஒரு கட்டுரை நூலுக்கு ஏற்ற விதமாக '' வாசாப் பு’ என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும் வாசாப் பை அடித் தளமாக வைத்து ஒரு ய தா ர த' த மா ன கதையைக் கூறுகிறார் நா வலா சரி ரபி ய ர , வாசாப் பு மற்றும் நாட்டுக் கூத்துக்களைப்
23 3360T6յՐ - ԱOՈմ Ժ ՋOI

Page 26
நால் விமர்சனம்
பற்றியும் அவை எவ்வாறு ஆடப்படுகின்றன என்பவற்றைப் பற்றியும் நாவலில் அடிக்கடி பிரஸ்தாபிக்கும் உதயன் அலுப்புத் தட்டிவிடாதபடி கதையை நகர்த்துவதிலும் அருமையான உரை நடை மூலமும் நாவலை கீழே வைத்து விடாமல் வாசிக்கத் தூண்டுவதில் வெற்றி பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும். இந்த நாவலின் கதைக்கரு இதுதான்:
பேசாலையைச் சேர்ந்த கட்டுமஸ்தான தோற்றமும் கம்பீரமும் நல்ல குரல் வளமும் கொண்ட அமலதாசு, அடிக்கடி மேடையேற்றப்படும் வாசாப்பு ஆட்டத்தில் மன்னன் ஏரோதுவாகத் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். ஒரு தடவை, நடிகர்களுக்குப் பாத்திரம் வழங்கப்படும் வேளையில், அமலதாசின் அக்கா மகன் பநுறாத்து அந்தப் பாத்திரத்தைத் தனக்குத் தரும்படி அடம்பிடிக்கிறான். அமலதாஸ் குடும்பத்துடன் சிறிது பகை பாராட்டி வரும் பறுநாத்துவக்கே அப் பாத்திரம் வழங்கப்படுகிறது. ஆனால பறுநாந்துவினால் அமலதாசைப் போல, ஆடவோ, பாடவோ, நடிக்கவோ இயலவில்லை. தனது பாத்திரம் பறிக்கப்பட்டதால் ஆழ்ந்த கவலையில் மூழ்கியிருந்த அமலதாசு ஊண் உறக்கமின்றி ஒடிந்து போகிறான். ஆனால் பறுநாந்து உரிய பாத்திரத்தை நடிக்க முடியாமல் தோற்றுப் போகிறான். மரமுடியை மாமன் அமலதாசிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கேட்கிறான். அமலதாசு ஏரோதுவாக நடிக்கிறார். நாடக மேடையில் வைத்துத் திடீரென்று நாடக ஆசிரியர் குரூஸ"ப் புலவர் இறந்து போகிறார் . நாடகம் நிறுத்தப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஊர் துன்பமும் வறுமையும் அடைகிறது. குரூசுப் புலவரின் மரணம் அபசகுணமாகக் கருதப்படுகிறது. அதேவேளை ஊர் ப் பெரிய மனிதரான கட்டளைக்காரரின் மகன் சீமான், அவரது இல்லத்தில் வேலைக்காரியாகப் பணிபுரியும் “தாழ்சாதிப்” பெட்டையான காமாச்சியைக் கெடுத்து விடுகிறான். உண்மை கட்டளைக்காரருக்குத் தெரிந்து விடுகிறது. மகனின் மானத்தையும் குடும்ப கெளரவத்தையும் காக்க எண்ணிய கட்டளைக்காரர், காமாச்சியின் தகப்பனை அழைத்து, “காமாச்சி திருடி விட்டாள்” என்று பொய்யொன்றைக் கூறி, தந்தையுடனேயே அனுப்பி விட்டார். அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய், குடிசை திரும்பும் காமாச்சி அங்கு நடந்த உண்மையைத் தாயாரிடம் கூறுகிறாள். என்ன செய்வது ஏழையாய்ப் பிறந்தால் அதுவும் கீழ்சாதியில் பிறந்தால் இது தான் எங்கள்
Q.

விதி. தெய்வம் விட்ட வழி என்று விளாவிக்கின்றாள் தாய்.
தனது குற்றத்தை உணர்ந்த பட்டணத்தில் படித்த சீமான், காமாச்சியைக் கூட்டிக் கொண்டு எங்காவது ஓடி விடுவது என்று மனதில் உறுதி பூணுகிறான்.
இதுதான் கதை. இரட்டைக் கதை என்றும் சொல்லாம். ஒன்று அமலதாசு - பறுநாந்து கதை, மற்றயது கட்டளைக்காரர் - காமாச்சி - சீமான் கதை. இவ்விரண்டு கதைகளையும் ஒரு தோணி மீது ஏற்றியிருக்கிறார் உதயன். தோணி நன்றாகவே நகர்கிறது.
வாசாப் பு’ நாவலில் வருகின்ற பாத்திரங்கள் இரண்டொன்றுதான். ஆனால் அப் பாத்திரங்கள் அனைத்தும் நம் நெஞ்சில் நிலைத்து நிற் கினி றன. அமலதா சு, பறுநாத்து, கட்டளைக்காரர், கமாச்சி, சீமான், சலமோன் மாஸ்டர், மலரு, பவுனு, குரூசுப் புலவர், தாழையன், அண்ணாவியர். இவர்கள் தான் மாறி மாறி நடமாடுகிறார்கள். ஆனால் நம் நெஞ்சில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள். இந்தப் பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு புராதன கடலோரக் கிராமத்தின் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நாகரீகம், நளினம், நபுஞ்சகம், மொழிப் பிரயோகம், நற்குணம், துர்க்குணம், போட்டி, பொறாமை போன்ற இன்னோரன்ன கறி மசாலாக் களை வைத்துக் கொணி டு ஒரு சுவையான உணவைத் தயாரித்திருக்கிறார், கைதேர்ந்த சமையல்காரரான உதயன்.
கதையை நகர்த்திச் செல்லும் உத்தி சிறப்பானது. அத்தோடு பாத்திரங்களின் உரையாடல் களும் யதார்த்தமாயுள்ளன. அதேவேளை சுவையாகவும் உள்ளன. இறுக்கமான கட்டுக் கோப்பான சிறிய சிறிய வசனங்கள். சிறிய சிறிய சொற்கள். சில தூஷண வார்த்தைகளையும் எழுதியிருக்கிறார். ஆனால் முதல் எழுத்துடன் நிறுத்திக் கொணி டுள்ளார். சொற்களை அறிந்தவர்கள் (மன்னார் மக்கள்) பூரணமாக வாசித்துக் கொள்ளலாம் (மனதிற்குள்).
எழுத்தாளர் கையாண்டுள்ள சொற்கள் அனைத்துமே பேசாலைக் கிராமத்தில், வழக்கில் உள்ள சொற்கள் தான். ஆனால் மன்னார் முஸ்லிம்களும் இச் சொல்லை அறிவர் அல்லது பயன்படுத்துவர். அத்தகைய சில சொற்கள் வருமாறு;
மோரை (மோரை என்றால் முகரை - முகரைக் கட்டை+முகம்) வேச மகன், விரசாத்தட்டி,

Page 27
தெம்மாடிகள் (அறிவு குறைந்த அப்பாவிகள்) பேய்க் கழுத, தேவாங்கு, பறக்கழுத, முச்சூடும் (முழுவதும்) அவசங்கம், அம்பாரம் (அதிகமதிகம்) கும்பாரம், பேதில போவான், பாதகத்தி (பாதகி) சுருக்கா, கினக்கா, மசிராண்டி இத்தகைய சொற்கள் நாவல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
நாடகத்தில் நடிக்கும் நடிகர்களின் பாத்திரத்தைக் குறிக்க “வரவு” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார் (இதற்கு மட்டுமாவது அடிக்குறிப்பு எழுதியிருக்கலாம்) உதாரணமாக ' வரவு குடுக்க ஆரம்பிச்சாச்சு. மொத்தம் நாப்பத்தேழு வரவு. அணி ணாவியருக்கு வாசாப்பில வரவைச் சொல்லி அதப்படிக்கிறவின் பேரையும் சொன்னா அவன் முன்னுக்கு வந்து அணி னா வியருக் குத் தட்சணை வைச் சு வரவெடுக்கணும்.” இவ்வாறு வரவு என்ற சொல்
கதாபாத்திரத் தைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது.
கதாபாத்திரங்களைப் பற்றிய
வர்ணனைகளை அளவாகவும் அலங்காரமாகவும் இறுக்கமாகவும் கையாண்டிருகுகிறார் உதயன்.
ஏரோது வரவு இம் முறை படிக்கக் கிடைக்காததால் பேசாலை கடற்கரை குருத்த மணலின் மீது நீண்ட நேரம் மனக் கவலையுடன் கிடக்கும் அமலதாசுவை வர்ணிக்கப் புகுந்த நாவலாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்.
“சீக்குப் பிடிச்ச சிங்கம் படுத்துக் கிடக்கிற மாதிரி தெரியுது. ஆறடி உசரம், நெஞ்சிலே புசுபுசுவெண்டு கறுப்பும் வெள்ளையுமா மசிரு. மனுசன் கையைக் காலை விரிச்சு நிண்டா நடு மேடையிலே ராசாதான், பிரம்ம உருவம்.”
சாதியில் தாழ்ந்தவளான கட்டளைக்காரர் வீட்டு வேலைக்காரப்பெண் காமாச்சியின் அழகை இரண்டு வரிகளில் இவ்வாறு கூறிவைக்கிறார் நாவலாசிரியர்.
“காமாச்சி நல்ல நிறம். துறுதுறுவெண்டு பெரிய கண்ணும் தனமும், வாலைக்குமரி. பாக்கிறதுகள் நல்லாத்தான் இருக்கா எண்டு திரும்பிப் பாத்துட்டுத் தான் போகுதுகள்.”
‘மலருக்குப் பூங்கொத்தால தடவின மாதிரிப் பழைய ஞாபகம். அப்ப அவளுக்குப் பத்தொன்பது வயது. மஞ்சளையும் மாவையும் சேர்த்துப் பிசைஞ்செடுத்த மாதிரி நிறம். திடுக்குற திடுக்கெண்டு அங்கயும் இங்கயும் மருண்டு பாக்கிற கண்ணுக்குள்ள கனவு நிறைஞ்சு கிடக்கிற இளமை. வார்த்தாப் போல தேகமும் மெய்யார நடையும் மிதப்பான முன்னழகும் அதுக்கேத்த பின்னழகும்.”
g

நால் விமர்சனம்
இவ்வாறு புதிய சொற்களைக் கையாண்டு, மலரை வர்ணிக்கிறார் நாவலாசிரியர்.
அமலதாசுக்குச் சந்தர்ப்பம் வழங்கப் படாமையைப் பற்றி “பேசாலை” என்ன பேசிக் கொள்கிறது.
‘ஆசிரிய விருத்தப் பாவை ஏழரைக் கட்டைக்கு உசத்திப் படிச் சாலும் சரி. உலாப்போட்டு இன்னிசை படிச்சாலும் சரி. அவரிட உருவத்துக்கும் குரலுக்கும் தோதுப்பட்ட மாதிரிப் பொருந்தும்”
‘இந்த முறை நாடகத்துக்கு இந்த மனுசனை வேணாமெண்டுட்டாங்களே. ஊரே கலகலப்பாக இருக்கும் போது இவரு மட்டும் பேய் புடிச்ச மாதிரி ஏமத்திலயும் சாமத்திலயும் புலம்பிக்கிட்டுக் கிடக்கிறாரு...” ሳ சாதியில் குறைந்த பையன் வரைந்த நாடக சீனைப் பற்றிய காட்சிகள் இவ்வாறு விரிகின்றன.
‘சூ. அதுல ஒரு அற்புதம் நடந்தது. கினக்கா தடாகம். தடாகத்தில நீந்துற அன்னச் சோடி. விசிறியடிக்கிற தண்ணி. பச்சை, சிவப்பு, மஞ்சள் எண்டு பல வண்ணத்திலயும் பூக்கள். நந்தவனத்தில நாமளே உலாவுற மாதிரி உணர்வு வருது போங்க...”
‘பறப்பய. பயப்பயலெண்டு சொல்றீக. படைக்கிறான். பாத்திகளா?” ஆளாளுக்கு அவனைப் புகழுறாங்க.
‘பவுணு கொழும்பாக் குட்டிக் கிழவிட்ட ஒடிப் போறா, இந்த ஊரில நாட்டு மருந்து கை மருந்து தெரிஞ்ச மருத்துவச்சி இந்தக் கிழவிதான். தொப்புள் கொடி அறுத்துப் பிரசவம் பாக்கிறதில இருந்து சாவக் கிடக்கிறவனுக்குத் தொண்டக் குழிக்குள்ள பாலூத்திற வரைக்கும் கொழும்பாங் குட்டிக் கிழவிதான் எல்லாம்.”
நாவல் நிறைய (96 பக்கங்களிலும்) விரவிக் கிடக்கும் இத்தகைய, கொச்சையான பிரதேசப் பேச்சு வழக்குச் சொற்களை நூலில் பதிக்கும் போது நியமத் தமிழ் வராமல் பார்த்துக் கொள்வதில் கணி னும் கருத்துமாய் இருந்துள்ளார் நாவலாசிரியர்.
மூன்று ஒசைச் சுவர்களுக்குள் 40, 50 பேர் நின்று நடிக்கின்ற - அல்ல - அல்ல படிக்கின்ற இத்தகைய நாடகங்கள் ரசிகர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவை. சினிமா அல்லது தொலைக்காட்சி நாடகங்கள் போல தயாரித்து வெட்டி, ஒட்டி, சகாசு வேலை செய்து காட்டிடப்படும் கலை வடிவமல்ல இது. நடிகர்கள் பொது மக்களை
( மிகுதி 30 ஆம் பக்கத்தில்)
5)

Page 28


Page 29
மதியம் சொரியும்
ன் ஓர் தமிழன் ஏனோ ஐயம்
 


Page 30
சிறுகதை
GԼՈ6010 (
புவனம்
கனேஸ் என்று அறியப் படுகிற
சிவகணேசமூர்த்திக்குப் பெண்களைப் பற்றி எப்போதுமே ஒரு பயம் இருந்து வந்தது. கணேஸ் ஒன்றும் படிப்பறிவில்லாதவரோ பழமைவாதக் கிராமச் சூழலில் வளர்ந்தவரோ இல்லை. என்றாலும், கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும், ஆணிகளை மேவி விடுவார்கள் என்பது அவருடைய ஆணித் தரமான நம்பிக்கை. அவருடைய உளவியலை ஆராய்வதற்கு எனக்கப் போதிய நிபுணத்துவம் இல்லை. ஆனால் அவருடனான நீண்டகாலப் பழக்கத்தை வைத்து அவருடைய உலக நோக் கை என்னால் நிச்சயத்துடன் கூற முடியும்.
அவரிடம் முற்போக்கான கருத்துக்கள் இல்லை என்று சொல்ல மாட்டேன். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு அளவு கணக்கு இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த கவனம் இருந்தது. சொல்லப் போனால், எதிலும் தீவிரவாதம் என்பதை அவர் ஏற்க மாட்டார். அவர் ஒரு சமூகவியல் ஆய்வாளர் என்பதால் பலவேறு உலக அலுவல்களையும் அறிவார். அவருடைய நிதானப் போக்கும் நடுநிலையும் என்னை மட்டுமல்ல, பலரையும் வியக்க வைக்கும்.
ஒரு உதாரணத்துக்குச் சொல்லுகிறேன். அவரை ஒரு முறை சந்தித்த வேளை என்னுடைய கையில் ஒரு ஆங்கிலப் புத்தகம் இருந்தது. அதன் முன் பக்கத்தில் ஒரு பையன் கல்லெறிகிற படமொன்று இருந்தது. புத்தகம் பலஸ்தீனத்தைப் பற்றியது. "பலஸ்தீனத்திலை இஸ்ரேலியர் செய்கிறது பெரிய அநியாயம். அதை எதிர்க்கிறது தேவையான விஷயம். எண்டாலும் இப்பிடிக் கல்லெறிகிறதால் இஸ்ரேலியர்கள் இன்னும் மோசமாக நடந்து கொள்ளுவினமே ஒழிய இறங்கி வர மாட்டினம்’ என்று அதைப் பார்த்தவுடனேயே என்னிடம் சொன்னார்.
‘அப்பிடியெண்டால் குண்டு எறிகிறது தான் சரி என்கிறீர்களோ? என்று கொஞ்சம் குறும்பாகக் கேட்டேன்.
‘* நீரென்ன பயங்கரவாதியோ? குண்டெறிகிற கதையெல்லாம் கதைக்கிறீர். நீர் இந்த மாதிரித் தீவிரவாதி எண்டு தெரிஞ்சிருந்தால்

மெனவுஜன
நான் உம்மோடை கதை வைச்சுக் கொண்டிருக்க மாட்டன்” என்று என்னை வன்மையாகக் கடிந்து கொண்டார். அவருக்குப் பகிடிகள் பொதுவாகவே விளங்காது என்பதும் விளங்கினாலும் பெரும்பாலும் பிடியாது என்பதும் அப்போது தான் நினைவுக்கு வந்தது. எனவே கதையை மேலும் அந்தத் திசையில் வளர்க்காமல் நான் என்றுமே பயங்கரவாதியல்ல என்பதையும் என்றுமே பயங்கரவாதத்திற்கு ஆதரவாக எதையுமே சொன்னதில்லை என்பதையும் இதுவரை மேசைக் கத்தி தவிர்ந்த கூரிய ஆயுதம் எதையுமோ சீனவெடி தவிர்ந்த எந்த வெடிப் பொருளையுமோ தொட்டதில்லை என்பதையும் தலையில் அடித்துச் சத்தியம் பண்ணாத குறையாக அவரிடம் சொன்ன பின்பு தான் அவருக்கு என் மீது நம்பிக்கை மீண்டது. பெணி னுரிமை பற்றி அவருடைய நிலைப்பாடு அவருக்கு மிகத் தெளிவாக இருந்தது என்றே நான் நினைக் கிறேன். பெண்கள் எதையெதைச் செய்யலாம் என்பதில் அவருக்கு மிகத் தெளிவான கருத்துக்கள் இருந்த மாதிரி எதையெதையெல்லாம் செய்யலாகாது என்பதிலும் அவருக்கு மிகத் தெளிவான கருத்துக்கள் இருந்தன. எனவே ஒரு குடும்பத்தில் ஆண்களுக்கும் செய்யத் தக்கன செய்யத் தகாதன என்றும் எல்லா விடயங்களையும் வகைப்படுத்தி வைத்திருந்தார்.
சொல்லப் போனால் அவர் ஒரு வகையான இலட்சியவாதி. எல்லா இலட்சிய வாதிகளுக்கும் இலட்சிய மனைவிகள் அமைவதில் லை. அவருக்கும் அவரது இலட்சியங்களுக்குப் பூரணமான உடனி பாடான மனைவி அமையவில்லை. ஆனாலும் மனைவி தனது இலட்சிய வாழ்வுக்கு இடையூறாக அமையாத விதமாக அவர் திருமணமான நாளிலிருந்தே கவனித்துக் கொண்டார்.
கணேஸ் திருமணம் செய்த பெண் அவரைப் போல ஒரு பட்டதாரி. அது அவரைக் கொஞ்சம் உறுத்திய விடயம். ஏனென்றால் மனைவிமார் எப்படித் தெருவில் கணவனுடன் போகும் போது ஓரிரண்டு அடியாவது பின்னால் நடக்க வேண்டுமோ அப்படியே படிப்பிலும் பின்னால் இருக்க வேண்டும் என்பது அவருடைய கொள்கை. பாடுபட்டு ஒரு
8)

Page 31
முதுமாணிப் பட்டம் (எம்.ஏ.) வாங்கியதன் மூலம் அப் பிரச்சனையைத் தீர்த்து விட்டார்.
பெண்கள் உத்தியோகம் பார்க்கலாம் என்று சொல்லுமளவுக்கு அவர் முற் போக் குச் சிந்தனையாளர். ஆனாலும் ஆசிரியைத் தொழிலுக்கு மேல் எதையும் அவர் பரிந்துரைக்க மாட்டார். பெண்களுக்கு மருத்துவம் பார்க்கப் பெண் மருத்துவிச்சியர் தேவை என்பதையும் வைத்தியர்கள் தேவை என்பதையும் ஏற்றாலும் ஆண்கள் எந்தப் பெண் வைத்தியரிடமும் போவதை அவர் ஏற்பதில்லை. மிகுதியை நான் சொல்லாமலே நீங்களாக ஊகித்துக் கொள்ளுங்கள். நான் சொல் ல வேணி டியதெல்லாம் அவருடைய மனைவிக்கு இருந்த பொருளியல் பட்டத் தகுதியின் அடிப்படையில் அவர் பெற்றிருக்கக் கூடிய உத்தியோகத்தைப் பெறாமல் அவர் தனியார் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பொறுப்பேற்றார் என்பது தான்.
அதன் மூலம் மங்கை என அறியப்படும் மங்கையற்கரசியால் குடும்பச் செலவுகட்குப் போதியதாக மேலதிக வருமானத்தைப் பெற்றதுடன் அந்த வருமானம் கணவருடையதை விடக் கூடுதலாக அமையாமலும் உறுதிப் படுத்த முடிந்தது. அதைவிடவும், இடமாற்றம் போலப் பிரச்சனைகளும் ஏற்படவில்லை. பாடசாலை நேரங்கள், அவருக்கு வீட்டுப் பணிகளைச் செய்யப் போதிய பொழுதையும் வழங்கின.
கணேசின் இலட்சிய வாழ்க்கை நோக்கை நிறைவு செய்கிறமாதிரி மங்கை இரண்டு ஆண்
Q
 

சிறுகதை
குழந்தைகளைப் பெற்றார். குழந்தைகள் வளரும் வரை மங்கையின் தாயார் கூட வந்து இருந்து விட்டுப் பிறகு தன்னுடைய மற்றப் பிள்ளைகளின் தேவைகளைக் கவனிக்க வேண்டியதாலும் கணவருடைய உடல் நலக் குறைவாலும் விலகிச் சென்று விட்டார். எனவே கணேசின் வீட்டில் காலைச் சமையல் வேலைகளில் உதவ ஒரு பெண் வந்து போவார். முழு நேர ஊழியரை அமர்த்த அவர்களது வருமானம் போதாது.
மங்கைக்குத் தலைவலி காய்ச்சல் என்று வருவது அருமை. வந்தாலும் இரண்டு நாட்களில் மாறிவிடும். நோயையும் பொருட்படுத்தாமல் ஏதாவது மாத்திரையை விழுங்கி விட்டுத் தனது இலட்சியக் குடும்பத்தின் இலட்சிய மனைவியாக வாழ்ந்து வருகிற காலத்தில் ஒரு நாள் கணேசைப் பார்க்க அவருடைய வீட்டுக்குப் போக நேர்ந்தது. அவருடைய வீட்டுக்கு நான் அருமையாகவே போவேன். மங்கை ஒரு இலட்சியக் குடும்பத்தரசியாக என்னை நன்கு உபசரிப்பார். ஆனால் வாங்கோ, இருங்கோ, அவர் இப்ப வந்து விடுவார் என்பவற்றுக்கு மேலாக அவர் எந்தச் சொற்களையும் பயன்படுத்தி நான் கேட்டதில்லை. அன்றைக்கு மங்கை கதவடிக்கு வரவில்லை. கணேஸ் தான் வரவேற்றார், மங்கைக்குக் கடுமையான காய்ச்சல் . கணேசுக்கு அது டெங்குவா மலேரியாவா சிக்கன்குனியாவா என்று ஒன்றுமே தெரியாது. அது அவர் அறிய வேண்டிய விடயமல்ல. அவருடைய மனைவியிடம் அவர் அதைப் பற்றி விசாரிக்கவுமில்லை. அது
Ꭷ

Page 32
சிறுகதை
வைத்தியருக்கு மட்டுமே தெரியப் போதுமான விடயம். கணேசுக்குத் தெரிய வேண்டியதெல்லாம் மனைவிக்குக் கொஞ்சம் கடுமையான காய்ச்சல் என்பது தான். பிள்ளைகளுக்கும் கிட்டத் தட்ட அதே நிலை தான். மங்கைக்கு முடியுமானால் கோப்பியோ கொத்தமல்லியோ ஊற்றிக் குடிக்கு மளவுக்கு உடம்பில் திராணியிருந்தது என்று நினைக்கிறேன்.
கணேஸ் வழமைபோல உற்சாகத்துடன் “கோப்பியா? தேத்தண்ணியா?” என்று கேட்ட பிறகு தான் அவருக்கு மனைவியின் சுகயினம் நினைவுக்கு வந்தது. முன் வைத்த காலைப் பின் வைக்க இயலாதே. எனவே, நான் மறுப்பதற்கும் வாய்ப்பளிக்காமல் வீட்டுக்குள் போனார்.
கணவன் மனைவி உரையாடலில் கணேஸ் பேசிய பகுதி மட்டும் தெளிவாகக் காதில் விழுந்தது. மங்கையின் சொற்கள் ஒரு சில மட்டுமே கேட்டன.
மங்கையால் கோப்பி ஊற்றித்தர முடியுமா என்று கணேஸ் கேட்டதும் மங்கைக்குக் கட்டிலால் எழும்பி நிற்கவே இயலாது என்ற நிலையில் எப்படிக் கோப்பி ஊற்றுவது என்று கேட்டறிந்ததும் நன்றாக விளங்கியது. தண்ணிரைச் சுட வைத்து விட்டு என்னுடன் சிறிது உரையாடிவிட்டு மறுபடி உள்ளே போன போது மங்கை அவரிடம் தனக்கும் சிறிது கோப்பி பால் விடாமல் ஊற்றித் தருமாறு கேட்டது என் காதில் விழுந்தது.
கணேஸ் தனக்கும் எனக் குமான கோப்பியை வரவேற்பறையில் கொண்டு வந்து வைத்து விட்டு, உள்ளே போய் மனைவியிடம் கோப்பியைக் கொடுக்க அவர் “தாங்க்ஸ்" என்றதும் மறுமொழியான கணேஸ் "டோன்ட் மென்ஷன். ஆனால் இதை வழக்கமாக்கிக் கொள்ளாதையும்’ என்று அதிகாரத் தொனியில் சொன்னதும் கேட்டது.
安 宏 安
சில மாதங்கள் கழித்து நாள் கணேஸ் வீட்டுக்குப் போன போது மங்கை வீட்டில் இல்லை. கணேஸ் கோப்பி ஊற்றிக் கொண்டு வந்து தந்தார். புறப்படு முன் அவரிடம் ‘உங்கள் மனைவி.” என்று இழுத்தேன். முகத்தை விறைப்பாக்கிக் கொண்டு “அவ இப்ப இங்க இல்லை எண்டு தெரியாதோ?’ என்றார்.
நான் மேற் கொணி டு எதையும் கேட்கவில்லை. மங்கை எப்போது திரும்பி வருவாரோ தெரியாது. ஆனால் அவர் திரும்பி வரும் போது இலட்சியக் குடும்பம் பற்றிய இருவரது பார்வைகளும் மிகவும் மாறிப் போயிருக்கும் என்று தோன்றியது.
* 첫
(6

25 ஆம் பக்கத் தொடர்ச்சி. நேருக்கு நேர் சந்திப்பதால் நாடகம் நன்றாக இருப்பின் கைதட்டல் கிடைப்பதும் மோசமாயிருந்தால் கல்லெறி கிடைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதும் நடிகர்களைப் பொறுத்ததாகும். ஆனால் இன்று எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்பதற்கு இன்றைய திரைப்படங்களும் தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்களும் தக்க சான்றாகும். தமிழ் நாட்டிலிருந்து இறக்குமதியாகும் இவைகளெல்லாம் நச்சு விதைகளாகும். நாம் இப்போது அபின் விழுங்கிகளாக மாறிவிட்டோம். தமிழகத்துத் தொலைக்காட்சி நாடகங்கள் போதிக்கும் சமூகச் சீர்கேடுகளுக்கும் பஞ்சமா
பாதகங்களுக்கும் வாலாயமாகி விட்டோம். அந்த நிலையில் நாட்டுக் கூத்துக் கலையின் மகத்துவத்தை மீள் எழுச்சிக்கு அழைத்துச் செல்லத் துடிக்கும் உதயன் போன்றவர்களைக் கை தூக்கி விட வேண்டியது நமது
கடன். இந் நாவல் சாகித்திய மண்டலத் தெரிவில்
இடம்பெற வேண்டிய நாவலாகும். தெரிவுக் குழுவில்
நான் இருப்பின் இதனை சிபாரிசு செய்வேன். ஆனால் இன்று சாகித்திய மண்டலத்தில் என்ன நடக்கிறது. அங்கு நேர்மையில்லை, முறைகேடுகள் இடம்பெறுகின்றன. நண்பரின் நூலை ஏனைய நண்பர்கள் இருவர் அல்லது மூவர் பார்வையிட்டுப் பரிசை வழங்கி விடுகிறார்கள். இதனை என்னால் நிரூபிக்க முடியும். இவ்வாறு தான் இலங்கையில் சகல விருதுகளும் வழங்கப்படுகின்றன. இம் முறைகேடுகள் ஒழிக்கப்படல் வேண்டும்.
நாவலாசிரியரிடம் முற்போக்குச் சிந்தனை இருக்கிறது. முதலாளித்துவம் - பிரபுத்துவத்துக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன. கட்டளைக்
காரனின் மகன் சீமான் காமாச்சி மீது முதலில் காம
வயப்படுகிறான். பின்னர் காதல் வயப்படுகிறான்.
“கீழ்சாதிப் பெட்டை’யான அவளை ஏற்றுக் கொள்ளவும்
முற்படுகிறான். நாவலின் இறுதிப் பந்திகள் இவ்வாறு
முடிவுறுகின்றன.
“சாதியும் தொழிலும் தோலிலயா ஒட்டிக் கொண்டிருக்கு, இந்த ஊர்க்காரன் கண்ணுல படாம எங்கயாவது தூரத்துச் சீமைக்கு காமாச்சியைக் கூட்டிக்கிண்டு போய் ராசாத்தி மாதிரி வாழ வச்சா
என்ன?” அவனுக்கு அந்த நினைப்பே புத்தருவியில
குளிக்கிற சுகத்தைக் குடுக்கிற மாதிரி இருக்கு.
அவனின் மனசு படக்குப் படக்கெண்டு அடிச்சு அலைக்கழிக்க விறுக்கு விறுக்கெண்டு எழும்பி நடக்கிறான் சீமான்.
சிறப்பாக நாவலை நிறைவு செய்திருக்கிறார் உதயன். தொண்ணுாற்றாறு பக்கங்களைக் கொண்ட இந்த நாவலில் எங்காவது ஓரிடத்தில் நாவலாசிரியர் அநாவசியமாக மூக்கை நுழைத்துக் கொள்கிறாரா என்று பார்த்தால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆசிரியர் ஒதுங்கியே நிற்கிறார். நாவல் அதுபாட்டுக்கு நகர்கிறது. உண்மையில் நாவல் இலக்கியத்தின் மற்றொரு பரிமாணம் ‘வாசாப்பு” ஆகும்.
O

Page 33
காதல் செய்ே
தாமரையாள்
நீயென்றால் நான் நான் என்றால் கனவு கனவென்றால் வாழ்வு வாழ்வென்றால் நீ
நீ எங்கே தேடுகிறேன் நீ எங்கே தேடுகிறேன்
நீயென்றால் ( நீயும் நானும் ஒன்றானால் இமயம் எங்கள் வசமாகும் பாயும் சிந்துவும் கங்கையும் இதமே எங்கள் இதயத்தில்
நீ எங்கே ஓடுகிறாய் நீ எங்கே ஓடுகிறாய் (
நீயென்றால் வாழ்வென்றால் உழைப்பு உழைப்பிருந்தால் உயிர்பிழைப்பு உழைப்பாளர் பெருந்தவிப்பு உடைத்தெழுவோம் பெரு நெருப்பாய்
தோழா நீ எழுவாய் தொடர்ந்தொன்றாய் திரள்வாய்
நீயென்றால்
என்னை அடி என் தோட்டங்கள் தெரு இரைச்சலில் தொங்குகிற பயிலோனியன் நான்.
என்னை அடி.
தயங்காதே. மேல் அறையில் நீ என்னை இரு முறை ( உன் சட்டைப் பையில் இரண்டு வெள்ளி
என்னை அடி. நான் கல்லின் மேற் குந்த மாட்டேன். என் கழுத்து வேரற்றது, என் உடல் கைவிடப்பட்ட ஒரு ஊன்று கே
தாயகம் 80 G

கவிதை
முத்தமிட்டாய். நாணயங்கள் இருந்தன.
ால்.
- யூஸ"..ப் அல்-க்ஹல்
Ꭰ g6ØTe6Jgf - uomijés 920

Page 34
நடைச்சித்திரம்
uDeoðr6Olb uDn
குணதாச L
புவன ஈசுவரன்
எப்போதும் வெள்ளச் சாரமும் இடுப்புப் பட்டியும் வெள்ளைக் கட்டைக்கைச் சட்டையுமாகக் காட்சி தரும் குணதாச பாஸ"ன்னெ இடதுசாரிப் பாரம்பரியத்தில் வந்த ஒருவர். வேலையின் போது சட்டையைக் கழற்றி மேலங்கி அணிவார். அவருடைய தகப்பனாரும் ஒரு தச்சுத் தொழிலாளி. தகப்பனாரிடம் பார்த்துப் படித்துப் பழகியதன் காரணமாக குணதாசவுக்கு இளமையிலேயே தொழிலில் ஈடுபாடு வந்துவிட்டது. தகப்பனாரின் தூண்டுதலில் பள்ளிப் படிப்பை முடித்துத் தொழிற் பயிற்சிக் கல்லூரி ஒன்றில் முறையாக இயந்திரத் தச்சு வேலை பழகினாலும் அதற்கான சான்றிதழ் கிடைக்க முன்னரே படிப்பை நிறுத்தி வேலையிற் சேரும்படியாகி விட்டது. சிறு சிறு நிறுவனங்களில் உதவியாளாகப் பத்து வருடங்களாகப் பணியாற்றி வந்தார். அரசாங்கம் 1960களில் பல புதிய தொழில்களைத் தொடங்கியதால் குணதாசவுக்கும் ஒரு அரசாங்கக் கூட்டுத்தாபனத்தில் வேலை கிடைத்தது. தச்சு வேலைப் பிரிவு குணதாச வேலை பார்த்த இடத்தின் ஒரு சிறிய பகுதி தானி . என்றாலும் மற்றப் பிரிவுகளில் உள்ளவர்களுடன் பழகப் போதிய வாய்ப்புக்கள் இருந்தன.
தனியார் துறையிற் போல தொழிலாளர்கள் தங்களுடைய ஒவ்வொரு உரிமைக்காகவும் போராடியே ஆக வேண்டிய நிலைமை இல்லா விட்டாலும், நிர்வாகத்துடன் சில சில முரண் பாடுகள் வருவதும் தொழிற்சங்கத் தலைவர்கள் போய்ப் பேசித் தீர்ப்பதும் வழமையாக இருந்தது. தொழிற்சங்கம் சார்ந்த கட்சி முதலில் அரசாங் கத்துடன் நல்ல உறவைக் கொண்டிருந்தது. ஆனால் 1965இல் அரசாங்கம் மாறிய பின்னர் நிருவாகத்தின் போக்குக் கொஞ்சம் அப்படி இப்படியாகத் தான் இருந்தது. இந்த மாதிரியான ஒரு காலத்தில் தான் குணதாச தொழிற்சங்கத்தில் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றார். அவருடைய தொழில் திறமை காரணமாக, அரசாங்கத்தால்
ଔ;

ந்தரும் - 04
ITGm°6G6OI
நடத்தப் படும் தொழில் வல்லமைப் பரீட்சைகளில் தேறியதுடன் முதல் தரத் தச்சராகவும் நியமிக்கப்பட்டார். என்றாலும் தச்சுப் பிரிவில் பிரதான தச்சர் பதவி நிரப்பப்படாமலே இருந்தது. அதற்கு ஆள் பற்றாக் குறையை விட அரசியல் காரணங்கள் முக்கியமாக இருந்திருக்கலாம்.
குணதாச பாஸ"ணி னெக் குப் lf D தொழிலாளர்கள் நடுவே நல்ல மரியாதை இருந்தது. அவருடைய வெளிப்படையாகப் பேசுகிற தன்மையும் விடாப்பிடியாகப் போராடும் குணமும் காரணமாக மாற்று அரசியற் கட்சிக்காரர்களும் அவரை மதித்தார்கள். தொழிற்சங்க வேலைகளை விடச் சக தொழிலாளர்களின் நன்மைக்கான காரியங்களிலும் அக்கறை காட்டி நோய், சாவு போன்றவற்றால் பணம் தேவைப்படும் போது கடனாகவோ நண் கொடையாகவோ நிதி வழங்குகிற சமூக நலச் சங்கத்தைத் தொடக் கியதிலும் பாஸன்னெயின் பங்கு முக்கியமானது. 1969 அளவில் அரசாங்கத்திற்கெதிரான கசப்புணர்வு மிகவும் வலுப்படத் தொடங்கி விட்டது. எப்படியாவது இந்த அரசாங்கத்தை விரட்டி அதனிடத்தில் புதியதொரு அரசாங்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வலுப்பெற்று வந்தது. 1970ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே இரண்டு பெரிய இடதுசாரிக் கட்சிகளும் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கூட்டணி அமைப்பதாக முடிவெடுத்து விட்டன. குணதாச பாஸன்னெவும் தேர்தல் பிரசார வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். இன்னொரு சூழ்நிலையில் பாஸன்னெ வேலையால் நிறுத்தப்பட்டிருப்பார். ஆனால் அரசாங்கம் மாறும் என்ற சாத்தியப் பாட்டை நிருவாகத்தில் இருந்தவர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் வீண் தொல் லையை விலைக்கு வாங்க விரும்பவில்லை. அத்துடன் அரசியல் காரணத்துக் காக பாஸன்னெயைத் தண்டித்தால் அது கட்சி வேறுபாடற்ற ஒரு எதிர்ப்புப் போராட்டத்துக்கும் வழிவகுக்கும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.
3360TaյցՐ - ԱOՈtj Ժ ՋOII

Page 35
தேர்தல் முடிந்து எல்லாரும் எதிர்பார்த்த விதமாகவே ஆட்சி மாற்றம் வந்த போது, குறிப்பிட்ட ஒரு இடதுசாரிக் கட்சி முன்வைத்து, மக்கள் முன்னணி ஏற்றுக் கொண்ட விதமாகப், பலவேறு தொழில் நிறுவனங்களிலும் “ஜனதா கமிட்டுவ” என்ற மக்கள் குழுக்களை அமைப்பதில் அக் கட்சி ஆதரவாளர்கள் தீவிரமானார்கள்.
இந்த மக்கள் குழுக்களுக்கு என்ன விதமான அதிகாரங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்படாத போதும் அவற்றைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருப்பதன் மூலம் தங்கள் கட்சியின் அதிகாரத்தை வலுப்படுத்தலாம் என்று அக் கட்சியினர் எதிர்பார்த்தார்கள். எனவே அந்தக் கட்சிக்குக் கொஞ்சமாவது செல்வாக்கு இருந்த நிறுவனங்களில் மக்கள் குழுக்கள் அமைக்கும் நடவடிக்கை துரிதமடைந்தது.
பாஸ"ன்னேக்கு மக்கள் குழு பற்றிய நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தாலும் அதன் நோக்கமும் அமைப்பு முறையும் செயற்பாடும் பற்றிய விடயங்களைத் தொழிலாளரிடம் விளங்கப்படுத்திய பிறகே குழுவை அமைப்பது நல்லது என்ற கருத்து இருந்தது. அதைத் தனது தொழிற்சாலையில் மக்கள் குழுவை அமைக்க முன் வந்தவர்களிடம் சொன்னார். அவர்கள் திட்ட வட்டமாக எதையும் கூறாவிட்டாலும் குழுவை அமைத்த பிறகு அதிகாரங்களை அரசாங்கத்திடம் வற்புறுத்திப் பெறலாம் என்று சொன்னதை அவர்
(3.
 

நடைச்சித்திரம்
ஏற்றார். அடுத்தபடியாக யார் யாரைக் குழுவிற்கு நியமிப்பது என்று பேசப்பட்டது. ஆளுங் கூட்டணிக்கு உடன்பாடானவர்களின் பேர்கள் ஏற்கனவே தெரிவாகி விட்டன. பாஸ"ன்னேக்கு இது பிடிக்கவில்லை. இந்த விதமான தெரிவு, குழுவை தொழிலாளரிடம் இருந்து தனிமைப்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். முடிவில் குழுவினரின் பேர் பட்டியலை ஊழியர்கள் அனைவரும் பங்கு பற்றக்கூடிய ஒரு கூட்டத்தில் சமர்ப்பித்து ஏற்பது என்று (p 1961 T 601 g). Lu T 6mo ' 6oi (860T 60o u J E கலந்தாலோசியாமல் பட்டியல் தயாரானது.
மக்கள் குழுவை நியமிக்கும் பொதுச கூட்டத்திற்குத் தொழிற்சாலையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிருவாகி ஒருவர் தலைமை தாங்கினார். அவரது நீண்ட உரையின் போது எப்படி இந்த மக்கள் குழுக்கள் மூலம் நாட்டில் மக்கள் அதிகாரத்தைக் கொண்டு வரலாம் என்று சொல்லப்பட்டது. அதை எதிர்த்து வாதிக்கக் கூடியவர்கள் யாரும் அங்கு வந்திராததால் குழுவின் தெரிவு என்ற நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுச் சபையினரது அங்கீகாரத்திற்காகக் குழுவினரின் போர்ப் பட்டியலை வாசிக்க ஒரு ஏற்பாட்டாளர் ஆயத்தமான போது, குணதாச எழுந்து நின்று ஒவ்வொரு பேராக வாசித்துச் சபையினரால் ஏற்கப்பட வேண்டும் என்று கருத்துரைத்தார் தலைவர் அதை மறுத்துப் பேசிய போது இருவருக்குமிடையிலான விவாதம் வலுத்தது
D 3616յմՐ - ԱOՈid ՋOI

Page 36
நடைச்சித்திரம்
சபையினர் நடுவே உடன்பாடில்லாத நிலையில், தெரிவு முறை எப்படி அமைய வேண்டும் என்பதைப் பொது வாக்கெடுப்புக்கு விடலாம் என்று பாஸ“ன்னெ பிரேரித்தார். அதற்கு ஆதரவு வலுத்ததைக் கண்ட தலைவர் கூட்டத்தை ஒத்தி வைத்தார்.
அதன் பிறகு மக்கள் குழு அமைப்பது பற்றிய பேச்சே எழவில்லை. பாஸன்னெ சில மாதங்களுக்குள்ளாகவே தொழிற் சங்கப் பொறுப்புக்களிலிருந்து ஒதுங்க நேர்ந்தது. என்றாலும் தொழிலாளர்கள் சார்பாகக் குரல் கொடுப்பதிலிருந்து அவர் ஒதுங்கவில்லை.
1977இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது பாஸன்னே புதிய அரசாங்கத்தின் பக்கம் போவார் என்று சிலர் பேசிக் கொண்டார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடக் கவில் லை. H) (b தொழிற்சங்கவாதியாகச் செயலிழந்த போதும் பாஸ"ன்னே எப்போதுமே தனது வர்க்கத்துக்கு விசுவாசமாகவே வாழ்ந்தார். 赛 赛 赛
-།༽
நூல் : எதுவுமல்ல எதுவும் ஆசிரியர் : கருணாகரன் வெளியீடு : மகிழ் விலை : ரூபா 200.00
நூல் : அவல அடைகாப்பு (கவிதைத் தொகுதி) ஆசிரியர் : கமல சுதர்சன்
வெளியீடு : அம்பிகை பப்ளிசர்ஸ் لد 150.00 விலை : ரூபா ܢܠ
ଔ:
 
 
 
 
 
 

\
நூல் : "நீங்களும் எழுதலாம் ஆண்டு 3இன்
ஆசிரியர் : எஸ். ஆர். தனபாலசிங்கம் வெளியீடு : நீங்களும் எழுதலாம் விலை : ரூபா 150.00
хwwww.3%ANokixx3x
நிறைவாக தகவும் தகவலும் 01 -
கவிதையும் கவிஞனும்
நூல் : செம்மாதுளம்பூ ஆசிரியர் : ஷெல்லிதாஸன் வெளியீடு : நீங்களும் எழுதலாம் விலை : ரூபா 200.00
D
స్రావాణు : еђLJT 150.00 گر
நூல் : ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
ஆசிரியர் : கலையரசன்
வெளியீடு : கீழைக்காற்று வெளியீட்டகம்
360T6յՈՐ - ԱOՈtjժ ջOII

Page 37
ஆங்கிலேயனின் பரிசு 17
கடல்
ஜெகதலப்பிரதாபன்
numret
ނަށަis سسترس سے کسی سہ O Q O سیمبر کس -- ... سسسسسسس
முனிவரலாற்றுச் சுருக்கம்:
கண்ணன் எனப்படும் கிறித்தி எத்துவாத்து சிமித்து பேர் பெற்று ஆங்கில விடுதலைப் போராளிச் சிங் போராட்டத்திற்குப் பங்களிக்க ஆயத்தமாகிறான். அ கொண்ட குறுந்தட்டு அவனுடைய தங்கை மேக அக் குறுந்தட்டைக் கண்ணனிடம் கொடுக்க மு விட்டான். மேகலை அக் குறுந்தட்டைக் கணணி கழ்ந்ததா இல்லையா என்று அறிய மேற்கொ6
கண்ணன் அஞ்சியது போலவே மேகலை வீட்டுக் கணினியில் அல்ல. உள்ளுவராமிட்டன் இணைய உணவகம் எனும் விதமான ஒரு இ மின்தொடர்பாடல் இடம்பெறும் இடமாயினும் பிற கண்ணன் துயில்கலையும் முன்னம் குறுந்தட்டை அங்கு சென்றாள். ஆனால் அவள் நினைத்தது விட்டது. குறுந்தட்டு செயற்படாமலே கணினியில் நேரமாகியதால் இல்லப் பொறுப்பாளரிடம் அதை கூறி விட்டு வீடு திரும்பினாள். இன்னமும் கண்ண வேலைகள் காத்திருந்தன.
”مبر
(3.
 
 
 
 
 
 
 
 

பின்வரலாற்றியல் தொடர்கதை
ހހހހ ޔ ނަހގ کمره سے محسوسر ރއި -rكمر کسی ح ށަހަށިހ
—ज्रेक्'=— 纥 بیسیسیسم نیستی مستحت
இப்போது ஆங்கிலேயனின் பரிசு என்ற இயக்கப் பகங்கள் என்ற அமைப்பில் இணைந்து விடுதலைப் வனுடைய இயக்கப் பணிகளின் விவரக் கொத்தைக் லையின் கைக்குக் கிடைத்து விட்டது. மேகலை ன் கண்ணன் பயணக் களைப்பாற் கண்ணயர்ந்து ரியில் இட்டுப் படிக்கப் போய் ஏதாவது விபரீதம்| ண்டு வாசியுங்கள்.
அக் குறுந்தட்டைக் கணனியில் இட்டுப் பார்த்தாள். நகரில் உள்ள இணைய இல்லம் (இப்போது சிலர் இடம்). அது மிகுந்த கண்காணிப்புக்கட்குட்பட்டு
பாவனைக்கான கணினிகளும் உண்டு. மேகலை ப் பார்த்து விடலாம் என்ற நோக்கத்துடன் தான்
ஒன்றாகவும் நடந்தது இன்னொன்றாகவும் போய் சிக்கி விட்டது. அதை வெளியே எடுப்பதற்கு மிக ாடுத்து வைக்குமாறும் பின்னர் வந்து எடுப்பதாகவும் ன் துயிலெழவில்லை. மறுநாள் அவனுக்குப் பெரிய
Ꭷ 886076յցՐ - ԱՕՈԹ Ժ ՋOI

Page 38
பின்வரலாற்றியல் தொடர்கதை
மேகலை கண்ணன் குறுந்தட்டைக் கேட்டால் என்ன செய்வது என்று ஒரு திட்டம் வகுத்திருந்தாள். அவனுடைய குறுந்தட்டு போலத் தோற்றமுடைய தன்னுடைய குறுந்தட்டொன்றைக் கொடுத்து விட்டுக் கண்ணன் அதைப் பார்ப்பதற்குள் இணைய இல்லத்துக்குப் போய்ச் சிக்குண்ட குறுந்தட்டை மீட்டெடுப்பது தான் அவளுடைய திட்டம். கணக்குக்கள் கொஞ்சம் பிழையாகி விட்டன. எதிர் பாராத மழையாலி நகரத்துக் கான போக்குவரத்துத் தடைப்பட்டு விட்டது. ஐரோப்பிய நாடுகளில் இப்படி நிகழுவது வழக்கம். கொஞ்சம் கடுமையான காற்று, மழை, பனி என்று ஏதாவது சிறிய காரணம் போதும். பேரூந்துகள் இயங்காமல் நின்று விடும். தமிழர் போல கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று தங்களை நெறிப்படுத்தாததால் அல்லவா ஐரோப்பியர் அனைவரும் தமிழரிடம் ,பணிய நேர் நீதது. அதைவிட فيا إك அலுவலகங்களுக்கு வேளாவேளைக்குப் போயும் என்ன நடக்கப் போகிறது? எனவே அரை நாழிகை (12 நிமிடம்) சுணங்கினால் என்ன அரை நாள் (30 நாழிகை) சுணங்கினா லெனி ன, ஒரு வேறுபாடுமில்லை என்பது தான் பொதுவான அணுகுமுறையாக இருந்தது.
கண்ணன் விழித்தெழுந்ததும் முதல் வேலையாகக் குறுந்தட்டைக் கேட்டான் என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆனாலும் அவன் அவள் கொடுத்ததைக் கணினியில் இட மாட்டான் என்பதும் அதைத் தீயிலிடுவான் என்பதும் மேகலை அறியாதது. அக் குறுந் தட்டில் மேகலைக்கு முக்கியமான தகவல்கள் இருந்தனவா என்பது உங்கள் கவலையாக இருக்கலாம். அது அழிக் கப்பட்ட பிறகு அது மேகலையின் கவலையாகவும் மாறலாம் . ஆனால் அவற்றையெல்லாம் விடக் கவலைக்குரிய வேறொரு அலுவலல்லவா நடந்து விட்டது.
மேகலை வீடு திரும்பி ஒரு நாழிகை கடக்க முன்னரே இல்லப் பொறுப்பாளர் அக் குறுந்தட்டை மீட்டு விட்டார். மீட்டதுடன் நில்லாது தனது கணினி நிலையத்தின் தலைமைக் கணினியில் அதை இட்டு வாசிக்க முயன்றார். நானோ நீங்களோ கண்ணனோ நினைத்திருக்கக் கூடிய விதமாக அக் கணினி செயலிழக்கவில்லை. மாறாக நச்சு நிரல்கள் சில இருப்பதாகவும் அவை நீக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்ததுடன் கணினியில் இருந்த கோப்புக்களை எல்லாம் பிரதியெடுத்துக் கொணர் டது. மேகலையுடைய (உண்மையில் கண்ணனுடைய) நல்ல காலம் போலும். இல்லப் பொறுப்பாளருக்கு வேறு வேலை ஏதோ வந்து விட்டது. எனவே நச்சு
தாயகம் 80
 

நிரல்கள் பற்றிய எச்சரிக்கையை மட்டும் கவனித்து விட்டு மேகலை வந்தால் “பெண்பிள்ளைகள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்காமல் கலவி, கணினி என்று வெளிக் கிட்டால் இப்படித்தான்’ என்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு குறுந்தட்டை ஒரமாக வைத்தார்.
மறுநாள் மேகலை வந்து (பொறுப்பாளரிடம் ஒரு நாழிகை நேர அரிச்சனை கேட்ட பிறகு) அதைப் பெற்றுச் செல்வதற்குள் கணிணன் தனக்கு ஆங்கில ஆராய்ச்சிப் பணிகளுக்காக மீண்டும் தேஞ்சுப்பூம்பட்டினத்திற்குச் செல்ல வேண்டியிருப்பதாகத் தாயாரிடம் கூறிவிட்டு வெளியேறி விட்டான். கண்ணன் போன பிறகு அந்தக் குறுந் தட்டில் என்ன தகவல்கள் இருந்தனவோ அவற்றில் இயக்கத்திற்கு முக்கியமானவை எவையேன் இருந்தால் அவற்றைப் பற்றி எதுவும் செய்ய இயலுமோ என்றவாறான எண்ணங்களுடன் மேகலை அக் குறுந்தட்டைக் கண்ணனுடய அறையில் இருந்த சிறிய கணினியில் இட்டு வாசிக்கலானாள். கோப்பிலிருந்த எச்சரிக்கை வாசகம் ஒரு நச்சு நிரலாதலால் அது நீக்கப்பட்டு விட்டது. மிகுதியை வாசித்த அவளுக்குக் கண்ணனுக்கு இவ்வளவு பெரிய இயக்கப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமென்று நம்ப இயலவில்லை. இப்பொழுது அவளுடைய நிலைமை மிகவும் சங்கடமானதாகி விட்டது. குறுந்தட்டைக் கண்ணனிடம் கொண்டு சேர்க்க அவன் சென்ற இடத்திற்குப் போக வேண்டும். போனால் அவள் அதை எப்படி அறிந்தாள் என்ற கேள்விக்கு முகங் கொடுக்க வேண்டும். போகா விட்டால் கண்ணனுடைய இயக்கப் பணி முடக்கப்பட்டுவிடும். தொடர்பு கொள்ள வழி வேறு இல்லை.
எனவே கணிணனுடைய ஆங்கில மொழியியல் நூல்கள் ஒன்றிரண்டைக் கையில் எடுத்துக் கொண்டு கண்ணன் அவற்றை மறந்து போய் வீட்டில் விட்டு விட்டுப் போய் விட்டான் என்று தாயாரிடம் திருவள்ளுவர் அங்கீகரிக்கக் கூடிய ஒரு பொய்யைச் சொல்லி விட்டுக் கண்ணன் போயிருக்கக்கூடிய இடந் தேடிப் புறப்பட்டாள். தேஞ்சுப்பூம்பட்டினத்துக்கான மின்தொடரூந்து, அவள் தொடரூந்து நிலையத்தைச் சென்றடையச் சற்று முன்னரே புறப்பட்டு விட்டதால் அவளாற் கண்ணனிடம் குறுந்தட்டைக் கொடுக்க இயலாது போயிற்று. இனி என்ன செய்யலாம் என்ற யோசனையுடன் அவள் தடுமாறி நின்ற போது அவள் எதிர்பாராத விதமாகச் சூசை அங்கு வந்தான். “நீ கண்ணனுடைய தங்கை அல்லவா?”
*360T6յմՐ - ԱՕՈԹ Ժ ՋOI

Page 39
என்று அவன் கேட்க, அவள் ஒமென்று மறுமொழி சொல்லக் “கண்ணன் போய் விட்டானா?” என்று சூசை அவளிடம் இன்னொரு கேள்வி கேட்டான். மேகலை ஒன்றுஞ் சொல்லவில்லை. “கண்ணனைத் தேஞ்சுப்பூம்பட்டினத்தில் தான் போய்க் காண வேணி டியிருக்கும்’ என்று சூசை முணுமுணுத்ததைக் கேட்ட மேகலை, முன்பின் யோசியாமல் குறுந்தட்டைச் சூசையிடம் நீட்டிக், 'கண்ணன் இதை மறந்து போய் விட்டான்” என்று சொல்லியபடி அவனுடைய கையில் வைத்து விட்டு அவனுடைய மறுமொழிக்கும் காத்திராமல் திரும்பி விட்டாள். அவள் ஏன் அப்படிச் செய்தாள் என்று அவளுக்கே விளங்கவில்லை. அதன் அபாயம் பற்றியும் அவள் அந்த நேரம் யோசிக்கவில்லை. لا لا لا
யாரும் அஞ்ச வேண்டாதளவுக்குச் சூசை நம்பகமான ஒரு இளஞ் சிங்கம். ஆனால் அவன் தற்செயலாகக் காவற் படையினரிடம் அகப்பட்டால் கண்ணனுக்கும் வேறு சிலருக்கும் பெரும் கெடுதல் விளையலாம் என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள். ஆனாலும் சூசை குறுந்தட்டைக் கொண்டு போய்க் கண்ணனிடம் பத்திரமாகச் சேர்த்து விட்டான். கண்ணனும் அவனிடம் மேற்கொண்டு எதையும் விசாரிக்கவில்லை. ஆனால் கண்ணன் தனது முதலாவது சந்திப்பை முடித்துவிட்டு அடுத்த சந்திப்புக்காகக் கோபுரக் குன்றத்தின் பாழடைந்த பழஞ் சுரங்கச் சிறைக் கூடத்திற்குப் போய்ச் சேர முன்னரே ஒரு வெள்ளை மின் மகிழுந்து அவனருகாக வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய முரட்டுத்தனமான தோற்றமுடைய ஒருவன் கண்ணனின் முகத்தின் மேலாக ஒரு ஈரத் துணியை வைத்து அதன் மேலாகத் தன் கையால் கண்ணனின் வாயை அழுத்தினான்.
கண்ணன் கண் விழித்த போது அவன் சிறியதொரு அறையில் மரத்தாலான ஒரு கட்டிலிற் கிடந்தான். அறையில் ஒரு பக்கத்தில் வட்டமான ஒரு சிறிய கண்ணாடிச் சாளரம் இருந்தது. கட்டிலிலிருந்து எழுந்து நோக்கிய போது நெடுந் தொலைக்கும் நீல நிறமாகக் கடற்பரப்புத் தெரிந்தது. கண்ணனுக்குத் தான் எப்படி அங்கு வந்து சேர்ந்தான் என்று விளங்கவில்லை. உங்களுக்கு அவன் இப்போது ஒரு கப்பலில் இருப்பது விளங்கியிருக்கும் ஆனால் கப்பலின் மேல் தளத்திற்குக் கண்ணன் கொண்டு செல் லப் படும் வரை அவனுக்கு அது விளங்கவில்லை. ஏனெனில் அதற்கு முதல் கண்ணன் கடலையே ஒழுங்காகப் பார்த்ததில்லை.
தாயகம் 80
 

பின்வரலாற்றியல் தொடர்கதை
இது தான் அவனது முதலாவது கப்பற் பயணம் என்று ஊகிப்பதில் உங்களுக்குச் சிரமம் இராது. ஆனால் கப்பலோட்டிய ஆங்கிலேயர் பரம்பரையில் வந்த கண்ணன் எப்படிக் கப்பலேற்றப்பட்டான் என்பது அவனுக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது.
있,
உள்ளுவராமிட்டனில் கணனி இல்லத்தில் மேகலை கணனிக்குட் தவறவிட்ட குறுந்தட்டுப் பற்றியும் அதிலிருந்த தகவல்கள் தலைமைக் கணினியிற் சேர்க் கப்பட்டமை பற்றியும் சொல்லியிருந்தேனல்லவா. அந்தக் கணினி இங்கிலாந்தின் தலைநகரான குளியலூரில் (ப.பெ. பாத்) உள்ள உலகத் தகவல் நடுவம் எனனும் பன்னாட்டுத் தகவல் ஆய்வுப் பணிமனையில் உள்ள கணினியுடன் தொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் தகவல் நடுவம், சிறிய ஐயங்கட்கான ஏற்பாடு சி.ஐ.ஏ என்கிற உண்மை அறியும் (தமிழர் உளவு என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை) உலகத் தமிழர் நிறுவனத்தால் நடத்தப்படுவதாகும். கண்ணனுடைய கோப்புக்கள் அகப்பட்டவுடனேயே ஐரோப்பியப் பாதுகாப்புச் செயலகம் துரிதமாகச் செயலில் இறங்கியது. கணிணனை யார் கடத்தினார்கள் என்பதோ எப்படி அவன் கப்பலேற்றப்பட்டான் என்பதோ பற்றிய விவரங் களால் உங்களுக்கோ எனக்கோ கண்ணனுக்கோ இனி ஒரு பயனும் இல்லை என்பதால் அவற்றை ஒரு புறம் வைத்து விட்டுக் கப்பலின் மேல் தளத்திற்குப் போய்க் கண்ணனுக்கு என்ன நடக்கிறது என்று கவனிப்போம்.
安安安
கப்பல் மிகப் பெரியது என்று கூற இயலாது. எனினும் தமிழர் ஆளும் உலகில் எரிபொருள் விரயத்தைத் தடுக்கும் நோக்குடன் கப்பல்களின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்திருந்ததை நீங்கள் பெரும்பாலும் அறிவீர்கள். எனவே பின்வரலாற்றுக் கப்பல்களுடன் ஒப்பிடும் போது இக் கப்பலைக் கடற்பெருங் கலம் எனும் வகைக்குட் சேர்க்கலாம். மேற்தளம் ஏழு கிளித்தட்டுத் திடல்களின் நீளமும் அதில் அரைவாசி அகலமும் கொண்டதாக இருந்தது. (கிளித்தட்டுக்கும் கிளிகளுக்கும் ஒரு உறவுமில்லை என்பதையும் அது பழந்தமிழ் மெய்வல்லமை விளையாட்டுக்களில் ஒன்று என்பதற்கும் மேலாக என்னால் இவ்விடத்து எதையும் கூற இயலாது. மேலும் விவரங்களை வேண்டுவோர் ‘தமிழர் விளையாட்டுக்கள்’ என்ற நூலைப் பார்க்கலாம். நூலின் தொகுப்பாளர் ஆடவல்லார் தடகளச் சூரனார். வெளியீடு:
836øTenjifo _ tomjé# 92Ol

Page 40
பின் வரலாற்றியல் தொடர்கதை
உலகத் தமிழர் தகவல் நடுவம். தி.வ. ஆண்டு 2043. கணினிப் பதிப்பு, ப. 7311).
தளத்தின் முன் பகுதியில் விசாரணைக் கான மன்றம் அமைக்கப்பட்டிருந்தது. ஆறு நீண்ட சமாந்தரமான வாங்குகளின் வரிசையை நோக்கியவாறு கடலுக்கு முதுகைக் காட்டியபடி விசாரணைக் குழுவினர் அமர்ந்திருந்தனர். பன்னாடைச் சிங்கத்தாரை விட்டால் அவர்களில் எவரையும் கண்ணனோ நாமோ அறிந்திருக்க நியாயமில்லை. வாங்குகளில் இருந்தோரிடையே பேராசிரியர் பெருமுடிக்கோ, கோதைநாச்சி அம்மையார், அங்கி எனப்படும் அங்கயங்கண்ணி ஆகியோரையும் ஒ சி மின் எனும் வியற்நாமியன், யமாகுச்சி என்ற யப்பானியன், நாராணயன் என்ற கனடா நாட்டு வைணவன் போன்று தானறிந்த பலரையும் கண்ணன் அடையாளங் கண்டான். இன்னுஞ் சில முகங்கள் எப்போதோ எங்கோ கண்ட மாதிரி இருந்தன. முன்னாள் குருதியப் போராளி உசுமானை உடனடியாக அவனால் மட்டுக்கட்ட இயலவில்லை. அவர்களெல்லாரும் ஏன் எப்படி அங்கு வந்தார்கள் என்று கண்ணனுக்கு இனி னும் விளங்கவில் லை. சிலவேளை, உங்களுக்குத் தமிழ் ச் சினி னத் திரை தொடர்நாடகங்களின் இறுதிக் கட்டங்களைப் பார்த்துப் பழகியிருந்தாலொழிய, இவை விளங்கக் கடினமாயிருக்கும். எனினும் அப்படியொன்றும் வியப்படைய வேண்டிய விடயமல்ல இது. தமிழர் தகவல் அமைப்பின் ஆற்றல் அத்தகையது.
-- 잇
கண்ணன் பிடிக்கப்பட்ட கையோடு கண்ணனைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் சி.ஐ.ஏயால் சேகரிக் கப்பட்டு அவனுடன் தொடர்பு கொண்டிருக்கக் கூடிய அனைவரையும் கண்ணன் தங்கி நின்ற இடங்களிலுள்ள உலகத் தமிழர் காவல் நிறுவனத்தின் மூலம் இந்து மாகடலில் உள்ள காய்ச்சித் தீவுக் (ப.பெ. தியேகோ கார்சியா) கப்பற் துறைக்குக் கொண்டு வந்து விட்டனர். கண்ணன் மட்டுமன்றிப் பற்றை, நரி, யோச்சுப் பெரியவர் போன்று பலவேறு ஆங்கிலத் தேசியவாதிகளும் ஐரோப்பிய அதிரடிப் படை ஒன்றினாற் பிடிக்கப்பட்டிருந்தனர். அவர்களிற் சிலரும் கண்ணன் இருந்த கப்பலில் இருந்ததைக் கண்ணன் அறியான்.
* \
இப் போதைக் கு உங்களுக்கு
இவையெல்லாம் எவ்வாறு ஒரு குறுகிய காலத்திற்குள் நடந்திருக்கலாம் என்ற ஐயம்
G

எழுந் திருக்கும். கண்ணனுடைய முகத்தில் வளர்ந்திருந்த பதினேழு நாட் தாடியைப் பார்த்திருந்தால் கண்ணன் பதினாறு நாட்களாக மயக்க நிலையில் வைக் கப்பட்டிருந்தது உங்களுக்கு விளங்கியிருக்கும்.
இந்தப் பதினாறு நாட்களாக நடந்த எதையுமே நான் ஏன் சொல்லவில்லை என்று உங்களுக்கு எரிச்சலாக இருந்தால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். கிழக்கு அத்திலாந்திக்கு மாகடலிலிருந்து ஆபிரிக்கக் கண்டத்தைச் சுற்றி நடு இந்து மாகடலுக்கு அமைதியான கடற் பரப்பில் நடந்த ஒரு கடற் பயணத்தை நான் இங்கே விவரிக்க முற்பட்டிருந் தால் உங்களுக்கு அதைவிட எரிச்சலாக இருந்திருக்கும். அத்துடன், நமது நாயகன் கண்ணன் மயக்க நிலையில் இருந்த இந்த நாட்களில் உங்களிடம் சொல்ல என்னிடம் என்ன இருந்தது என்று நினைத்துப் பாருங்கள்.
ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை கூறக் கடமைப்பட்டுள்ளேன். கப்பல் ஏன் சூயசுக் கால்வாய் வழியாகப் பயணப்படவில்லை என்று நீங்கள் கேட்க முதலே சொல்லி விடுகிறேன். உலகப் பெரும் போரின் பிறகு சூயசுக் கால்வாய் பேரழிவுக்குட் பட்டிருந்தது. அதன் பின்னர் அது தமிழரால் மீளத் தோண்டப்பட்டு ஆழப்படுத்தப்பட்ட போதும் அப் பகுதியில் பெரும் பலத்தீன ஆட்சியாளர்கட் கெதிரான யூதப் பயங்கரவாதிகளின் நடமாட்டம் மிகுதியாக இருந்தது. பலத்தீனத்தின் எல்லைகள் சூயசுக் கால் வாயைக் கடந்து எகிப்திற்குள் விரிவதற்குப் பலத்தீன விடுதலை இயக்கத் தினருக்குத் தமிழர் பேரரசு அளித்த ஊக்குவிப்புப் பெரும் பங்களித்தது என்பதை மேற்கொண்டு விவரிக்கத் தேவையில்லை என நினைக்கிறேன். எனினும், மீயுயர் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களில், தமிழர் பேரரசு அக் கால்வாயைத் தவிர்த்தே வந்தது. இப்போது கண்ணனுடைய விசாரணை தொடங்கி விட்டது. சூயசுக் கால்வாயை இருந்த இடத்தில் இருக்க விட்டு நாம் கப்பலுக்கு மீளுவோம்.
‘* ஆங்கிலேயனின் பரிசு’’ எனவும் அறியப்படும் ஆங்கில விடுதலைப் போராளிச் சிங்க உறுப்பினரான எத்துவாத்து கிறித்தி சிமித்துவை முன்னால் வருமாறு விசாரணைக் குழுத் தலைவர் மனுநீதிச் சோழனார் அறிவித்தார். அதைப் பணி னா ைடச் சிங்கம் ஆங்கிலத்தில மொழிபெயர்த்துப் பேசிய போது கண்ணனுக்கு உலகமே திசைமாறிச் சுழலுவது போல இருந்தது.

Page 41
பன்னாடைச் சிங்கம் போன்ற ஒரு ஆங்கிலத்
துரோகி விடுதலை இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்க இயலுமானால், இயக்கத்தில் யாரை நம்ப முடியும் என்ற வெறுப்பு அவன் மனதில் எழுந்தது. தன்னைக் காட்டிக் கொடுத்தவர் பன்னாடைச் சிங்கம் என்றே கண்ணன் நினைத்தான். ஆனால் அவனுடைய குறுந்தட்டை அவனிடம் மனுநீதிச் சோழனார் காட்டி அது அவனுடையதா எனக் கேட்ட போது தன்னைத் தானே காட்டிக் கொடுத்து விட்டதை அவன் உணர்ந்தான். மேகலையைக் குற்றஞ் சொல்லிப் பயனில்லை.
சாட்சி சொல்வதற்காக வந்தவர்களிடம் கண்ணனைப் பற்றி எவ்விதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை. கண்ணனைப் பற்றி அவர்கள் அறிந்ததாக எழுத்தில் தெரிவித்த விடயங்கள் வாசிக் கப் பட்டு அவர்கள் தங்களுடைய வாக்குமூலங்களை உறுதிப்படுத்துமாறு கேட்கப்பட்டனர். தேவையானால் மேலதிகமாகக் கேள்விகள் கேட்கப்படும் என்று அவர்கட்குச் சொல்லப்பட்டது.
கண்ணனுடைய ஆங்கிலப் பற்றுக் கொஞ்சம் தீவிரமானது என்பதைத் தவிர அவர்கள் யாரும் அவனுக்கெதிராக எதையுமே சொல்லவில்லை. அவனுடைய அறையில் செகப்பிரியரின் படம் ஒன்று இருந்ததை அங்கி குறிப்பிட்ட போதும் அதன் அடியில் இருந்த ஆ.வி.போ.சி. என்ற இயக்கப் பேரை அவள் கவனமாகவே தவிர்த்திருந்தாள். பன்னாடைச் சிங்கம் மனுநீதிச் சோழனாரின் காதில் எதையோ குசுகுசுத்ததும், அங்கி அழைக்கப்பட்டாள். அந்தப் படத்தின் அடியில் என்ன எழுதப்பட்டிருந்தது என்று மனுநீதிச் சோழர் கேட்டார். அங்கி தனக்கு எதையும் வாசித்த நினைவு இல்லை என்றாள். பன்னாடைச் சிங்கம் மனுநீதிச் சோழனாரின் அனுமதியுடன் அவளிடம் தனக்குத் தெரிந்த உடைசல் தமிழில் அவளுக்கும் கண்ணனுக்குமிடையே வலுவான நட்பு இருந்ததாகவும் அதனாலே தான் அவள் பலதையும் மூடி மறைப்பதாகவும் குற்றஞ்சாட்டிப் பேசிய போது, தைரியமாகப் பன்னாடையாரின் வாதங்கள் விஞ்ஞானப் பண்பில்லாத ஆங்கில அளவையியல் (ஆங்கிலத்தில் லொஜிக்) பண்புடையன என்று கடுமையாகத் திருப்பித் தாக்கினாள்.
அது விசாரணைக்கு வந்திருந்தோரிடையே சலசலப்பை ஏற்படுத்தி எல்லாரும் பன்னாடையாரை ஏளனமாகப் பார்ப்பது போலத் தோன்றவே பன்னாடையார் எழுந்து உரத்த சத்தத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூச்சலிடக் கோதை நாச்சியார் மகளுக்கு ஆதரவாக எதையோ சொல்ல வேண்டிக் கையை உயர்த்த அவரை நோக்கியும் பன்னாடையார் கூச்சலிட எல்லாமே பெரிய கலவரமாகி விட்டது.
அந்த அமளிதுமளிக்கிடையே கப்பலின் கீழ்த்
தளங்களில் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்டன.
தாயகம் 80
 

பின்வரலாற்றியல் தொடர்கதை
ஆங்கிலத்திலும் தமிழிலுமாக ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட சத்தமும் கேட்டது.
있었
நீங்கள் ஊகித்திருக்கக் கூடிய விதமாக ஆங்கில விடுதலைப் போராழிச் சிங்கங்களின் கடற்படை அணியான பேராழிச் சிங்கங்கள் தங்கள் விசைப்படகுகளால் கப்பலை முற்றுகையிட்டுக் கப்பற் குழுவினரைக் கட்டிப் போட்டு விட்டனர். அதெல்லாம் எப்படி நடந்தது என்பது நமக்கு முக்கியமில்லை. ஏனெனில் பேராளிச் சிங்கங்கள் மேல் தளத்துக்கு வந்து விட்டனர். நிறுத்தப்பட்ட விசாரணை மீளவும் தொடங்கியது - ஆனால் ஒரு சில சிறு வேறுபாடுகளுடன்.
جو چی چ
கீழ் அறைகளில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் எல்லாரும் மேலே கொண்டு வரப்பட்டனர். யோச்சுப் பெரியவருடைய தலைமையில் விசாரணை தொடர்ந்தது.
இந்த விசாரணையின் போது கண்ணன் உண்மையான விடுதலைப் போராளிக் குருளையா அல்லது தமிழரின் கைக்கூலியா என்ற கேள்வி முன்னெழுந்தது. ஆங்கில விடுதலைச் சிங்கங்கள் இத்தனை பேர் தமிழரிடம் அகப்படக் கண்ணன் தான் காரணமா என்பதற்கான சாட்சியாகப் பன்னாடைச் சிங்கம் தன்னை அறிவித்துக் கொண்டு கண்ணனால் காட்டிக் கொடுக்கப்பட்டே தானும் சிறைப் பிடிக்கப்பட்டதாகக் கூறினார். அத்துடன், கண்ணனுக்கும் அங்கிக்கும் உள்ள தொடர்பு பற்றித் தான் முன்னர் பேசிய போது யாருமே தன்னை நம்பவில்லை என்றும் முறைப்படடார்.
அதிர்ச்சியடைந்த கண்ணன் தனது மறுப்பைத் தெரிவித்துக் கூச்சலிடத் தொடங்கினான். ஆவேசம் அவனை ஆட்கொண்டது. அவனை அதட்டி அடக்கிய போராளிச் சிங்கங்கள் இருவர் அவனை இழுத்துக் கொண்டு கப்பலின் அடித் தளத்தில் இருந்த ஒரு அறைக்குக் கொண்டு சென்றனர். கப்பல் திசைமாறி அசைவதை அவனால் உணர முடிந்தது.
(கண்ணன் குற்றவாளியாகக் காணப்பட்டுக் கடலில் எறியப் பட்டானா, அல்லது விடுதலைச் சிங்கங்களால் மேற் கொண்டும் அவனை விசாரிக்க ஆங்கிலேயர் தாயகத்துக்குக் கொணர்டு சென்றனரா, அல்லது பன்னாடையாரின் பொய்கள் அம்பலப்படுத்தப்பட்டு அவன் தனது பேருக்கேற்ற ஒரு ஆங்கில வரனாக மரீள முடிந்ததா என றெலலாம் உங்களுக்கு அறிய ஆவலாயிருந்தால், அடுத்த படலத்தில் உங்கள் ஐயங்கள் அனைத்தும் தெளிவுபடுத்தப்படும்).
ஜனவரி - மார்ச் 2OI

Page 42
விந்தை மனிதர்
சின்ன வயதில் எனக்குச் சந்தைக்குப் போகிறதெண்டால் வலும் விருப்பம். சந்தையிலை போய் நான் எதுவும் வாங்குகிறதெண்டில்லை. எண்டாலும் அம்மாவுக்கு அலுப்புக் குடுத்து ஒரே ஒரு பல்லி முட்டை வாங்கினாலும் வலும் திறுத்தி. பல்லி முட்டை எண்டு சொல்லகிற சாமான் பல்லி இடுகிற முட்டை மாதிரித் தான் தொடக்கத்தில் செய்தவை எண்டதாலை அதுக்கு அப்பிடிப் பேர் வைச்சவை எண்டு தான் இன்னமும் நினைக்கிறன். ஒரு நாள் பள்ளிக்கூடத்திலை 'பல்லி முட்டை” எண்டு எழுதுகிறது பிழை 'பல்லு மிட்டாய்” எண்டு எழுத வேறும் எண்டு தமிழ் வாத்தியார் திருத்தின பிறகும் என்னுடைய முடிவுதான் சரி எண்டதிலை எனக்கு அசையாத நம்பிக்கை. ஆனாலும் பல்லி முட்டை எண்டு எழுதினால் வாத்தியார் கோழி முட்டை போட்டு விடுவார் எணர் டதாலை கொப்பியிலை அப்பிடி எழுத மாட்டன். ஆனால் இன்னமும் அப்பிடித்தான் சொல்லுவன். என்ன பந்தயமுங் கட்டுவண் , வாத்தியாரின் டை பிள்ளையஞம் இப்ப அவரின் டை பேரப் பிள்ளையஞம் பல்லி முட்டை தான் கேப்பினம் எண்டு. வழக்கம் போலை, எங்கையோ துவங்கி எங்கையோ போகிறன். இல்லா விட்டால் எப்பிடி ஆராய்ச்சிமணி எண்டு பேரெடுக்கிறது?
என்ன சொல்லிக் கொண்டிருந்தனான்? சந்தை எண்டு தானே கதைக்கத் துவங்கினன். சந்தைக்குள்ளை மரக்கறிச் சந்தை, மீன் சந்தையும் இருக்கும். அதைவிட மாட்டுச் சந்தை எண்டுங் கேள்விப்பட்டிருக்கிறன் . சந்தை எண் டால் சாமான்கள் வாங்கி விக்கிற இடம் எண்டும் கடைகடையா றோட்டு றோட் டாப் போய் அலையாமை எல்லாச் சாமானையும் ஒரே இடத்திலை போய் வாங்கக் கொள்ள வசதியான இடம் தான் சந்தை எண்டும் விளங்குது. இப்ப, சந்தையள் இருந்த இடமெல்லாம் மட்டுமில்லைச் சின்ன சின்னக் கடைகளை எல்லாம் விழுங்கிக் கொண்டு சுப்பர் மார்க் கெற்றுக்கள் எல்லோ முளைச்சு எழும்புகுதுகள்.
தாயகம் 80
 
 

சந்தையள் எண்டால் புறோக்கர் மார் எண்டு சொல்லிற தரகர்மாரும் இருப்பினம் எண்டு கேள்விப்பட்டிருக்கிறன். அதெல்லாம் தொகை தொகையாச் சாமான் வாங்கி விக்கிறவைக்குத் தான் சரி. எங்கள் தரவழிக்கு யாவாரிமார் சொன்ன விலையைக் கால்வாசியாக் குறைச்சுக் கேட்டுப் பேரம் பேசிச் சாமான் வாங்கினாத்தான் திறுத்தி. இப்ப கடை வழிய கொஞ்சம் டிஸ்கவுண்ட் எண்டு கேட்டுப் பேரம் பண்ணினாலும், சுப்பர்மார்க்கெற் வழிய அப்பிடி ஒண்டும் ஏலாது. மார்க்கெற் எண்டாச் சந்தை, சந்தையிலை உள்ள பேரம் பேசுகிறது, யாவாரிமார் சாமான்களை எடுத்து நிறுத்து எண்ணி அளந்து தருகிறது, தரகர் மார் எண் ட ஒணி டுமில லாத இடம் எப் பிடி 69 (5 சந்தையாகேலும்? சந்தையிலை செய்கிறதைச் செய்யேலாத இடத்துக்கு எப்பிடிச் சுப்பர்மார்க்கெற் எண்டு பேர் வைக்கேலும்? இந்தா, இன்னொருக்கால் வேறெங்கையோ போகிறேன். இந்த ஆராய்ச்சி மணிப் பட்டம் சூட்டின பிறகு ஒரு அலுவலிலை கவனங் காட்டிக் கதைக்க ஏலாமல் போயிட்டுது. இப்பிடியே போனால் கதைக்க நினைச்சதை விட்டு விட்டுப் பங்குச் சந்தை, உலகச் சந்தை எண்டு எங்கையோ போய்விடுவன்.
எனக்கு இந்தக் கலியாணச் சந்தை எண்டால் என்னவெண்டு முதலிலை விளங்கேல்லை. ஏனெண்டால் எதை வாங்கி எதை விக்கினம் எண்டு அப்ப தெரியாது. தரகர்மார் இருக்கிறதை வைச்சுத் தான் சந்தை எண்டு சொல்லுகினம் எண்டு விளங்கிக் கொண்டன். பிறகு தான் கலியாணம் எண்டால் ஆக்களை வாங்கி விக்கிற அலுவல் எண்டு தெரிஞ்சுது. ஏனெண்டால் ஒரு நாள் எங்களை ஊர்ப் புறோக்கர் கலியாணம் பேச வெளிக்கிட்ட ஒரு ஆள் வெளியூரிலை கலியாணம் முடிச்சுப் போட்டார் எண்டு கேள்விப்பட்டுக் கொதியிலை ‘நல்ல மாடெண்டா ஊரிலை விலை போயிருக்கும்’ எண்டு நக்கலாகச் சொல்லிப் போட்டார். கதை எப்பிடியோ அந்த ஆளிட்டைப் போயிட்டுது. அவர் வந்து ஆக்களுக்கு நடுவிலை
3360TaյցՐ - ԱoՈtjd ջOII

Page 43
புறோக்கரைப் பிடிச்சு “ஓய், ஆடு மாடெண்டு கல தான் சரிவருங் காணும். சொல்லும், உம்மலை எண்டெல்லாம் தாறுமாறாப் பேசிப் போட்டுது. தரகர் யாவாரஞ் செய்ய ஏலாது எண்டது தான் அவரின்
கலியாணச் சந்தையிலை ஒவ்வொண்டுக்கு காலத்திலை எஞ்சினியர்மாரை விட ஓவர்சீயர்மா பிறக்கிராசி எண்டு தொழில் ஒவ்வொண்டுக்கும் ஒரு பாக்கிற மாதிரி முத்தல், பிஞ்சு, நிறம், வடிவு கொஞ்சங் கூடிக் குறைஞ்சாலும் விலை அதுக்கு ஏற்றுமதி செய்யக் கூடிய சாமான் எண்டால் அது
எண்டாலும் பாருங்கோ, உலகம் மாறுகுது கொஞ்சங் கொஞ்சம் மாறுகுது. இப்ப இப்ப கடை அதுவும் போய் இப்ப கொம்பியூட்டரிலை படம் ப சந்தையும் கொம்பியூட்டர் இன்றர்நெற் எண்டு பி சனம் சாதியும் சாத்திரமும் சீதனமும் எண்டு அை புறோக்கர்மாரும் ஆடு மாட்டுக்கு விலை பேசுகிற தான் இருப்பினம்.
நீத்தார் நினைவு: ଘଣ୍ଟୀ
தனது 64ஆவது வ என்றழைக்கப்படும் ெ
பேரவையுடன் நெருக் கூத்துக் கலைஞரால் தானாகவும், அம்பலத்த புகழ்பெற்றவர். இவர் செயற்பாட்டாளராகவுப் கூட்டுறவுச் சங்க உ கிராமத்தில் பயிற்சிப்ப தனது வீட்டிலே நடத் சேவை செய்தார்.
தாயகம் 80
 
 
 

விந்தை மனிதர்
தைச்சீராமே. உமக்கு ஆடு மாடு விக்கிற தொழில் ா உம்மடை ஆக்கள் எவ்வளவுக்கு வித்தவை?” ஒண்டும் பேசேல்லை. ரோசம் பாக்க வெளிக்கிட்டால் டை ஞாயம். கு ஒவ்வொரு மாதிரி விலை வைச்சிருக்கினம். ஒரு ருக்குக் கூட விலை குடுத்தவையாம். டாக்குத்தர், விலைக் கணக்கு இருக்குது. காய்கறி வாங்கேக்கை எண்டும் கணக்கு வித்தியாசம் இருக்குது. சாதி குத் தக்கினையா ஏறி இறங்கும். அதைவிட இப்ப க்கும் ஒரு பெறுமதி இருக்குது. 1. அதுக்கு ஏத்தாப் போலை எல்லா நடைமுறையும் யள் போய் சுப்பர் மார்க்கெற்றுக்கள் வாற மாதிரி, ாத்து உடுபுடவை வாங்குகிற மாதிரிக், கலியாணச் ய்ச்சுக் கொண்டு போகுது. எண்டாலும் எங்கடை லயிற மட்டும், சந்தை சந்தையாத் தான் இருக்கும், மாதிரி ஆம்பிளையஞக்கு விலை பேசிக் கொண்டு
கா.துரைராஜா (பாவக்கிளி) |யதில் எம்மை விட்டுப்பிரிந்த ‘பாவைக்கிளி’ கா. துரைராஜா அவர்கள் தேசிய கலை இலக்கியப் கமான உறவைப் பேணிவந்த முக்கியமான நாடக, பார். இவர் காத்தவராயன் கூத்தில் கிளிக்காத் ாடிகளின் கந்தன் கருணையில் நாரதராகவும் நடித்துப் சாந்தை விநாயகர் நாடக மன்றத்தின் முக்கிய ), பண்டத்தரிப்பு பனை தென்னை வள அபிவிரித்திக் றுப்பினராகவும் இருந்தார். 80 களில் சாந்தைக் ட்டறைகள், இலக்கியச் சந்திப்புக்கள், வகுப்புக்களை தினார். மார்க்சிய வாதியாக வாழ்ந்து மக்களுக்குச்
360T6)gf – orgjd 20

Page 44
சிறுகதை
Մ
திக்குவல்லை கமால்
எதிரெதிரே முகம் பார்த்தபடி ஒவ்வொன்று தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட தலா ஐந்து கூறுகளை கொண்ட இரண்டு கட்டிடங்கள்.
அதற்கிடையே பொது முற்றம். நடமாட்ட திற்கான பாதையும் அதுதான். மழை காலங்களி கூரை நீர் பாய்ந்தோடும் வாய்க்காலும் கூட.
தோட்டப் பக்க லயன்கள் போல் அமைந்திரு தாலும் அதைவிடச் சற்றே வசதியானது. அதற்கு பத்துக் குடும்பங்கள் அடக்கம். மிகமிகப் பழைய கூை சுவர்கள்.
முடுக்கூடு’ என்று யாராவது சொன்னா அது இந்த இடத்தைத் தான் குறிக்கும். இங்கு பிறந் வாழ்ந்த பலர், இன்று பேர் சொல்லும்படியாகப் ப இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இப்போதுள்ள குடும்பங்களைப் பார்க்கையி காதர்ஸா குடும்பத்தினரே நீண்ட காலத்துக்குரி வர்கள். அவரது வாப்பா வழியால் கிடைத் வீட்டிலேயே இன்னும் மனைவி மக்களோடு வாழ்ந் வருகிறார். அவருக்கு அறுபது வயது நெருங்கிய எந்த முன்னேற்றத்தையும் இதுவரை காணவில்ை யென்பதே உண்மை.
காதர்ஸாவுக்கென்றொரு தொழிலில் ை மனைவி மகா கெட்டிக்காரி. இன்றுவரை நின்று பிடித்
G
 

வருகிறாள். அந்தப் பகுதியில் எல்லோருக்குமே மைமூனா தேவை. சடங்கு, சாமத்தியம், கல்யாணமென்று எதுவந்தாலும் அங்கே அவளிருப்பாள். அவளுடைய ஆலோசனையும் வழிகாட்டலும் இருக்கும்.
காதர்ஸா ஒருவித பராகல் பேர்வழி. எல்லோருக்கும் நண்பன். நாளாந்தம் செலவைத் தேடிக் கொள்வார். மாலை ஐந்து மணி நகரும் போது, பாவாஜா லேகியம் ஒரு உருண்டை போடா விட்டால் கையும் ஓடாது காலும் ஓடாது. வீட்டில் ஏதாவதிருந்தால் சாப்பிட்டுவிட்டுப் படுக்கையில் புரண்டு விடுவார். கோபம் வந்தால் கொஞ்ச நேரம் கத்துவார். அது மைமூனாவைத் தவிர வேறு எவருக்கும் விளங்கவும் மாட்டாது. இதற் கிடையில் சொல் வார்த்தை கேட்காமல் வளர்ந்து விட்ட அவர்களது மகனுக்கு இருபத்தொரு வயது. ஓதல் - படிப்பு என்று ஒன்றும் உருப்படியில்லை. எங்காவது கடையில் சேர்த்து விட்டால் இரண்டொரு நாளில் ஓடி வந்து விடுவான்.
இப்பொழுது கொஞ்ச நாட்களாக அவனுக்கு ஏதோவொரு வகையில் புத்தி
ஜனவரி - மார்ச் 201

Page 45
வந்திருப்பதாகவே மைமுனாவுக்குத் தோன்றியது. ஏதோ வேலை என்றபடி காலையில் போய் விடுவான். மாலையில் இருநூறு முன்னுாறு ரூபா வோடு வருவானி . அவனுக் கென்று பிரத்தியேகமான தேவையென்று ஒன்றுமில்லை. பஸ் செலவுக்கு வைத்துக் கொண்டு மற்றதை உம்மாவின் கையில் கொடுத்து விடுவான்.
‘' மை மூனா இப் பொங் கட மகன் ஜாதியெனா?” ஒரு நாள் அடுத்த வீட்டு அஸ்மியா ஆரம்பித்தாள்.
‘பேசாமிரீ கண்ணுார் படாம. இப்பதான் அவனுக்கு சாட புத்த வந்தீக்கி” அதற்குமேல் பேசவிடாமல் இடை நிறுத்தி விட்டாள் மைமூனா. மகனின் ஒழுங்கான நடவடிக்கையை உறுதிப்படுத்திக் கொண்டு, இப்பொழுது நாளாந்தம் நூறு ரூபா சீட்டுக் கூடப் பிடித்து வருகிறாள்.
இப்படியிருக்கும் போது தான் இடி விழுந்தது போல் அந்தச் செய்தி வந்தது அன்று. ‘காதர்ஸாட மகன பொலிஸால புடிச்சி” வாய்க்குவாய் வந்த செய்தி. மைமூனா துடிதுடித்துப் போனாள். எவரிடம் எங்கு விசாரிப்பதென்றே அவளுக்குத் தெரியவில்லை.
“மாத்தறே பஸ்டாண்டில வைச்சி புடிச்சீக்கி’
ஏதோ வேலையென்று ஒவ்வொரு நாளும் மாத்தறைக்குப் போய்வரும் விஷயம் மட்டுமே அவளுக்குத் தெரியும். மேல் விபரங்களை அவள் கேட்பதுண்டு. அவன் சொன்னால்தானே.
“பாருங்கொளே வந்த வருத்த. கொஞ்ச நாளா ஒரு கரச்சலில்லாமீந்த, மணிசரு கண்ணால திண்டு போட்ட. ம். இந்த மனிசனும் எங்க தொலஞ்சோ தெரிய”
சூழநின்று எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர, எப்படி உதவுவதென்று அவர்களுக்குத் தெரியவில்லை.
'இது கஞ்சா பார்சலோடயாம் புடிச்சீக்கிய” யாரோ இருவர் சைக்கிளில் வந்து போவதோடு இந்த மோசமான செய்தியும் பரவியது.
“ஒன்ட ஒம்பதாக்கிப் பேசுவாங்க. அவனுக்கு கஞ்சாவேம் தெரிய, வெளப்பமில்லாதவன்”
மைமூனா சொல்வது உணி மைதான். அவனுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் தெரியாது. பெரும் பணம் தேடும் நோக்கமும் கிடையாது.
‘'இப்ப எப்பிடிச்சர் பொடியன பேராபிக் கோணும். எதுக்கும் ச.ப்ராஸ் தொரேக்கிட்ட செல்லிப் பாக்கியது நல்லம். அவரு பொலிஸோட நல்ல தெறமாம். பாத்துப் பாத்து நிண்டு சரிவாரல்ல. வா போம். பொலிஸ் காரணியள் போட்டு அடிக்கியாயிக்கும். பாவமேன்”
G

சிறுகதை
சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்
தாது இருவரும் நடந்தனர்.
சட்ப்ராஸ் தொர ஊர்ல பிரபலமானவர். இரண்டு தடைவ இலக்ஷனில் நின்று பிரதேச சபைக்குத் தெரிவானவரும் கூட. லாப நட்டம் பார்க்காமல் ஊருக்குச் சேவை செய்தவர்.
ஏதோ அவசரமான காரியமென்பதைப் புரிந்து கொண்டு கேற்றைத் திறந்து விட்டனர்.
'தொர ஏண்ட மகன மாத்தறேல பொலிஸால புடிச் சீக்காம் ஒங்களுக்க நன்ம கெடக்கும். அவன் படிப்பில்லாதவன். எப்படிச்
சரி எடுத்துத் தாங்கொ தொர ... எங்களுக்கு
செலவழிக்க சல்லீமில்ல ஆள்களுமில்ல’
இடைநிறுத் தாது மை மூனா சொல் லிக்
கொண்டிருந்தாள்.
‘ஆ. நானும் கேள்விப்பட்ட.ம். இதில
நானெப்பிடியன் தல போடிய. இது கஞ்சா கேஸ். இந்தக் காலத்தில இதியளுக்கு ஸமா இல்ல. நல்ல விஷயங்களுக்குத் தான் நான் முன்னுக்காகிய’
* அப் பிடிச் செல்ல வாண தொர .
எங்களுக்கு தாரனிக்கிய?” மீண்டும் மைமூனா அழ ஆரம்பித்தாாள்.”
'இது மிச்சம் தூரம் பொகாது. உடுவாங்க
போலிக்கி. கொஞ்ச நேரம் பொறுத்துக்கோங்கொ. * அந்திபடட்டே பாக்கோம்”
அவருக்கு விளங்காதா என்ன? இப்படி
எத்தனை பிடிபட்டு விடுபட்டிருக்கிறார்கள். ஏதோவொரு ஊகத்தில் நம்பிக்கையூட்டினார்.
அவருடைய பேச் சிலிருந்து இதை
அவ்வளவு பாரதூரமாக எடுக்கத் தேவையில்லை
யென அஸ்மியாவுக்குத் தோன்றியது.
‘செல்லியது வெளங்கல்லயா. மகன்
வாரொண்டும். வாங்க போம்.”
மை மூனாவைக் கூட்டிக் கொண்டு
அங்கிருந்து வெளிப்பட்டாள் அஸ்மியா.
ஆங்காங்கே இரண்டு மூன்று பேர் கூடிக்
கூடிக் கதைப்பது தெரிந்தது. எல்லோரும் இதைக்
கதைப்பதாகவே மைமூனா எண்ணினாள்.
அவர்கள் வரும் போது முடுக் கூட்டு
முற்றத்தில் மோட்டார் பைக்கொண்டு நின்றது. அதனைச் சூழ்ந்து கொண்டு எல்லோரும் கதை கேட்டனர்.
வாட்டசாட்டமான அந்த இரண்டு பொடியன் களும் யாரென்று தெரியவில்லை. அவர்களது நடை உடை பாவனைகள் உயர்ந்த தன்மையை வெளிப்படுத்தின.
ஜனவரி - மார்ச் 20

Page 46
சிறகதை
“ஆ. இதுதான் அவன்ட உம்மா. - யாரோ அறிமுகப்படுத்தினார்கள்.
அவன் சிரித்து விட்டுச் சொன்னான். 'நீங்க ஒண்டும் யோசிக்க வாண. மகன் அந்தியாகச் செல்லே வார”
அவளது கல்பு இப்பொழுது தான் நேராகியது. சட்ப்ராஸ் தொரயும் அப்படித்தானே சொன்னார்.
பைக்கை வெட்டித் திருப்பி சிரித்துக் கொண்டே அவர்கள் பறந்தனர்.
“தாரன் புள்ள அது..?’ மைமூனாதான் கேட்டாள்.
“ஒங்கட மகனோட இவங்க பேசிக்கோ நிக்கியத்த நான் எத்தினயே பைணம் கண்டீக்கி. பயப்புடத் தேவில்ல மைமூன் தாத்தா. 'மகனின் வயது பொடியன் ஒருவன் தான் அவன்.
“மைமூன் தாத்தா வாங்கொ. சோறு ரெண்டு மணிய வாயில போடோம்” பாத்து முத்துவின் அழைப்பு.
மைமூனாவை எவருமே கைவிடவில்லை. அவரது துயரத்தில் பங்கு போட்டுக் கொண்டனர். துன்பம் நேர்கிற போது தான் உண்மையாக அன்பும் ஆதரவும் வெளிப்படுமென்பதை முடுக்கூடும் உறுதிப்படுத்தத் தவறவில்லை.
ஏதோ அவள் சாப்பிட்டாள். அடிக்கடி மூக்குத் துாள் போட்டுக் கொண்டாள். கொடுத்த கோப்பியைக் குடித்தாள். என்னதான் செய்தாலும் மகனைக் காணும் வரை அவளுக்கு நிம்மதியில்லை.
ஆறு மணி பிந்தி வரும் காதர்ஸா அன்று நேர காலத்தோடு வந்திருந்தார். ஆனால் வழமை போல் லேகியம் விழுங்கத் தவறவில்லையென்பதை சிவப்பு சுருண்ட கண்கள் கூறின.
“எனத்தியன் மகன்ட செய்தி.?’ வந்ததும் வராததுமாக யாரோ வாயைக் கிளறினர்.
‘‘கஞ சா யா வாரியள் ட வேல. படிப்பில்லாத இவனைப் போல பொடியனியள ஸெட் பண்ணி. குடுக்கியத்த செல்லிய எடத்துக்கு கொணுபோற. வெளங்கினா. சும்ம வல்ல. இருநூறு முன்னுாறு கை குடுக்கிய. எங்களுக்கு தெரியாத ஜாதியா. புடிபட்ட பகா குடுத்து பேராபிக்கில. ஒடனே பெய்த்தானியலாம் கூட்டிக் கொணுவர.”
காதர்ஸாவுக்குக் கொஞ்சம் “மஸ்து ஏறியிருந்தாலும் தெளிவாகவே சொல்லி விட்டார். பலரதும் கண்கள் அப்போது தான் திறந்து கொண்டன.
தாயகம் 80
 

“பெரியவங்க.. ஆனா பொல்லாதவங்க. பொல்லாதவங்க ஆனா பெரியவங்க. நாங்க. ஹி..ஹி. சோத்து மாடுக. ’ ஆணியடித்தாற் போல இன்னும் ஒருபடி மேலாகச் சொன்னார்.
“ஆ. வாங்கொ உள்ளுக்கு.”
அதற்கு மேல் குழம்ப விடாமல் மைமூனா உள்ளே அழைத்துச் சென்றாள்.
அந்தப் பெரியவங்க யாரென்று ஒரு
சிலராவது இனித் தேடத் தான் போகிறார்கள்.
T6) : Edibgs (35.T.L. - Bitter Berry (மொழிபெயர்ப்பு நாவல்) ஆசிரியர் : இரா சடகோபன் வெளியீடு : சூரியா வெளியீடு 2010 தொடர்புகளுக்கு :
109, 6,600T. GT6). LDa5b5 LDITogs608b, 6hastgiblq 10. TP 2693607
நூல் : ஆரோக்கியத்தில் உணவின் பங்கு (குடும்பத்தினருக்கான ஆரோக்கிய வழிகாட்டி) ஆசிரியர் : கா. வைத்தீஸ்வரன் தொடர்புகளுக்கு :
ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேட் பிளேஸ், தெகிவளை.
محمدبرسے 17401 27 TP ܢܠ
ஜனவரி - மார்ச் 20

Page 47
ஆங்கிலேயனின் பரிசு 18
துன்
முனர்வரலாற்றுச் சுருக்கம் (கண்ணனும் விடுதலைப் போராளிச் சிங்கங்கள் சிலரும் உலகத் தமிழ்க் காவற் படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டு இங்கிலாந்திலிருந்து இந்து மாகடலில் உள்ள தியேகோ கார்சியா என முன்னம் அறியப்பட்ட காய்ச்சித் தீவின் அருகே நங்கூரமிடப்பட்ட பெரிய ஒரு கடற்கலத்தின் மேல் தளத் தில் விசாரணைக் குட் பட்டுக் கொண்டிருக்கையில் விடுதலைச் சிங்கங்களின் பெருங்கடல் அதிரடிப்படையினர் அக் கடற்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றி விடுகின்றனர். தமிழ்க் காவல் நிறுவனத்தால் ஆங்கிலப் பயங்கரவாதி என விசாரணைக்குட்பட்ட கண்ணனை இப்போது ஆங்கில விடுதலைச் சிங்கங்களின் விசாரணைக் குழு ஆங்கிலத் துரோகி என ஐயுற்று அவனைச் சிறையிலிடுகிறது. அதே வேளை, கடற்கலம் திசை மாறிப் பயணப்படுகிறது. கண்ணனுக்கு என்ன நடந்தது என அறிய மேற்கொண்டு வாசியுங்கள்.)
கண்ணனைக் கீழே கொண்டு சென்ற இருவரும் அவனை முன்னரே அறிந்தவர்களான ஆவியும் அலுப்பிரட்டும் என்பதால் அவர்கள் அவனைக் கொஞ சம் மரியாதையுடன் நடத்தினார்கள். அவர்கள் அவனை ஒரு அறைக்குட் கொண்டு சென்ற பின் கண்ணனுக்கு நிதானம் மீண்டது. என்ன நடந்திருக்கக் கூடும் என்று நினைத்ததை அவர்களிடம் சொன்னான். ஆனால் அவனுடைய ஊகங்கள் யாவும் தவறாகவே இருந்தன. அவன் நினைத்தது போல நீணி ட காலமாக யாரும் அவனைப் பின்தொடரவில்லை. மேகலை தன்னிடம் தவறான குறுந்தட்டைத் தந்ததைப் பற்றியும் பின்னர் சூசை அதைத் தன்னிடம் ஒப்படைத்ததையும் கூறினான். அக் குறுந்தட்டை வாசித்த கையோடு அழிக்கத் தவறியதை அவன் ஒப்புக் கொண்டதுடன், சூசையைக் கண்காணித்த யாராவது கண்ணன் மயக்கமூட்டப்பட்ட பின் அதை வாசித்திருக்கலாம் என்றும் சொன்னான்.
கண்ணன் சொன்னது தவறானாலும் மனமறிந்த பொய்யல்ல என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டனர். பன்னாடையார் பற்றி அவர்களுக்கும் ஐயம் இருந்தாலும் பன்னாடையார்

பின்வரலாற்றியல் தொடர்கதை
IIổ |ổhi() LIL6)Iổ
ஒரு மூத்த சிங்கம் என்பதால் அவருடன் வாதிட்டுக் கண்ணனை மீட்க முடியாது என்று அவர்கள் அறிவார்கள். எனவே தங்கள் மீது பழி விழாத விதமாகக் கண்ணனை எப்படிக் கப்பலிலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டபடி மேல் தளத்திற்கு மீண்டார்கள். கீழ்த் தளத்திற்குக் காவலாகக் கணி னனை வெறுக் கும் லிங் கனி நிறுத்தப்பட்டிருந்தான். எனவே கண்ணன் ஒடித் தப்ப வாய்ப்பில்லை.
கப்பலில் இருந்த தமிழர் அனைவரும் கீழ்த் தளங்கட்குக் கொண்டு செல்லப்பட்டுத் தனி அறைகளில் இருக்குமாறு பணிக்கப்பட்டனர். மேல் தளத்தில் விசாரணைகள் தொடர்ந்தன. பன்னாடைச் சிங்கம் உற்சாகத்துடன் தனது விளக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
அவரது ஆய்ந்தறிந்த முடிவின் படி, கண்ணன் தமிழரின் ஒற்றன் மட்டுமன்றி ஐரோப்பியக் கைக்கூலியுமாவான். பேராசிரியர் பெருமுடிக்கோ அவனுக்கு ஐரோப்பியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் அங்கி எனப்படும் அங்கயற்கண்ணி என்ற இரகசிய உளவாளியை அவனுக்கு நெருக்கமாக்கி வைத்தார். அங்கியினுடைய தாயாரான மருத்துவர் கோதைநாச்சியார் கணி ணனைப் போதைப் பொருட் பழக்கத்திற்குட்படுத்தி முற்று முழுதாகத் தமிழரின் கட்டுப்பாட்டுக்குட் கொண்டு வந்து விட்ட்ார் என்று விசாரணையாளர் எவரதும் ஐயத்துக்கிடமின்றி விளக்கினார்.
துரோகிகளையும் எதிரிகளையும் நடுக் கடலில் எறிவோம் என்று யாரோ உரத்துக் கூச்சலிட்டார்கள். ஆனால் யோச்சுப் பெரியவர் மறுத்துத் தமிழரைக் கடலில் எறிவதன் கொடிய விளைவுகள் பற்றி விளக்கினார். எனினும் ஏற்கெனவே கப்பலின் முற்றுகையால் ஏற்பட்ட சிக்கலே தமிழருக்குச் சினமூட்டப் போதுமானது என்பதால் , சிறைப் பட்ட சிங் கங்களுடன் மீளுவதாகவம் ஆங்கிலத் துரோகியான கண்ணனை மட்டும் கை கால்களைக் கட்டிக் கப்பலில் இருக்கும் சங்கடப் படகொன்றில் வைத்து நடுக் கடலில் இறக்கி விடுவதென்றும் முடிவெடுத்தனர்.
கணிணனி தவிர்ந்த ஆங்கிலேயர் அனைவரும் பேராளிச் சிங்கங்கள் ஏறி வந்த
36076յՈՐ - ԱoՈtjժ ջOII

Page 48
பின்வரலாற்றியல் தொடர்கதை
விசைப் படகுகளில் ஏறிப் போய் விட்டனர். தமிழ் மீகாமன்மார் தம் இடத்திற்கு மீளுவதற்கு முன்பாக ஆவியும் நரியும் கண்ணனின் கைகால்களைக் கொஞ்சம் நெகிழ்வாகக் கட்டிச் சங்கடப் படகில் வைத்துக் கடலில் இறக்கி விட்டனர் என்று இங்கு சொல்ல வேண்டும்.
\ \ \
தமிழரின் கடற்பெருங் கலம் குறிப்பான திசையின்றிக் கடலில் ஒடிக் கொண்டிருந்தது. கண்ணன் இருந்த படகு அலைகளிடையே தள்ளாடிக் கொண்டிருந்தது. கண்ணன் தன் கட்டுக்களை நெகிழ்த்த முயன்ற போது, யாரோ அவனுடைய பின்புறமாக வந்து அவனுடைய கைக் கட்டுகளை அவிழ்ப்பதை உணர்ந்தான். அவனாற் திரும்பிப் பார்க்க இயலாதபடி கால்கள் இன்னமும் கட்டப்பட்டு அவன் இருந்த இரையிலேயே இருந்தான். அவனுடைய கைகளை அவிழ்த்து விட்டவர் கால்களையும் அவிழ்க்க வந்த போது கண்ணனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
을
அங்கி
அவள் எப்படி அங்கே வந்தாள் என்று யோசிக்காதீர்கள். அவள் ஆங்கிலச் சிங்கங்களிடமிருந்து தப்புவதற்காக ஒளிந்திருந்த சங்கடப் படகிற்குட் தான் ஆவியும் நரியும் கண்ணனைக் கட்டிப் போட்டார்கள்.
 

இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியவாறு பேசாமலே நின்றனர். கண்ணனின் மனதில் இந்ந நல்ல தமிழ்ப் பெண்ணை எவ்வளவு தவறாக நினைத்து விட்டேன் என்ற குற்ற உணர்வு ஆதிக்கஞ் செலுத்தியது. அவளிடம் மன்னிப்புக் கேட்பதா தன்னைக் காட்டிக் கொடுக்காததற்காக நன்றி சொல்லவதா என்று தீர்மானிக்க அவனுக்கு இயலவில்லை.
அங்கி அவளைப் பார்த்த பார்வையில் இருந்தது பரிவா அல்லது காதலா என்று சொல்ல இயலவில்லை. ஆங்கிலேயர்கள் போலன்றித் தமிழர்கள் தங்கள் உணர்வுகளை எளிதில் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள் என்று அறிவீர்கள்.
நீண்ட நொடிப் பொழுதுகள் பல நகர்ந்தன. அங்கியின் கரங்கள் கண்ணனை நோக்கி நீண்டன. கண்ணன் தன் கைகளை உயர்த்திய போது படகு சற்றே எம்பிச் சரிந்தது. கால் தடுமாறிக் கண்ணன் விழுந்தான். நல்ல வேளை கடலில் அல்ல. ஆனால் தலையில் நல்ல அடி பட்டிருக்க வேண்டும்.
‘ஐயோ” என்று அலறிய கண்ணன் கண் விழித்து முனகிக் கொண்டிருந்தான். ‘என்ரை ராசா, கண்ணா என்ன நடந்தது?” என்ற இதமான குரல் அவனுடைய காதில் விழுந்தது.
கண்ணன் கட்டிலிலிருந்து விழுந்து கிடந்தான். அவனுடைய தாயார் அவனை நிமிர்த்தி அவனுடைய தலையைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டார்.
36oreogf? - som sjói 220

Page 49
‘என்னடா ஆங்கிலேயனின் பரிசு, ஆங்கிலே! என்று தாயார் அவனைக் கேட்டார்.
தான் கண்ட கனவைத் தாயாரிடம் முன்னாள் த
'கனவிலையும் நீ கஸ்ற்றப்படுகிற கட்சி தா தாயார் அவனை இறுக அணைத்துக் கொண்டார்.
(முற்றும்)
(இதற்கு மேலும் இக் காவியம் பற்றிய ஐயங்களோ பேராசிரியர் நெடுநாட் துஞ்சிய திருப்பசுங்குன்றத்துச் சி
நீத்தார் நினைவு :
தேசிய கலை இலக்க
தோழர்குே
தேசிய கலை இலக் தோழர் குணேந்தி என தனது அறுபத்தி நான் மாரடைப்பால் இயற்கை
ஆசிரியையான மை 6 குடும்பமாக வாழ்ந்து ܀ பிறந்து வளர்ந்து கற்றுத் தேறிக் கல்வித் திணைக்கள் மண்ணில் நிலைப்படுத்தியவராவார். சிந்தையிலும் செ ஒரு பொதுவுடைமைவாதியாக வாழ்ந்து, இறுதிவரை, த கொண்டுசென்ற அவரது அழிக்க முடியாத அடையாள
தோழர் குணேந்தி ஒரு நேர்மையான பொதுவுடமை கவனம் தவறியதில்லை. அதனால் அவரிடம் அன்பும் ட அவாவும் குறைவின்றி இருந்து வந்தன. மக்களை மு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகச் தீவிரமாகச் செய
مصر
போது தோழர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட அயற்
தனது சொந்தக் கிராமத்தில் சனசமூக நிலையம், பணியைத் தீவிரமாக முன்னெடுத்த தோழர் குணேந் விளங்கினார். 1973 டிசம்பரில் தேசிய கலை இலக்கிய நாளில் “தாயகம்” அதன் சஞ்சிகையாகத் நெல்லியடி கைலாசபதியால் வெளியிடப்பட்டது. தோழர்கள் தணிக பேரவையின் இணைச் செயலாளர்களாகப் பொறுப்பேற் என்பனவற்றன் ஊடாகச் சமூக மாற்றத்திற்கான கலை தோழர் குணேந்தியின் அன்றைய பங்களிப்புக் கனதிய
தோழர் குணேந்தி, இறுதி வரை, மலையகத்தில் வெளியீடுகளுடனும் குறிப்பாகத் தாயகம் சஞ்சிகையுடனு நிகழ்வுகளில் தவறாது கலந்து கொண்டு இளந் தலை தோழர் குணேந்தியின் இழப்பினால் வாடும் அவ பேரவையும் தாயகமும் தமது ஆழ்ந்த அனுதாபத்தைத் அவரது இழப்பின் துக்கத்தைப் பலமாக மாற்றி அ பெறுவோம் என்ற உறுதிமொழியை அவருக்கு நமது
G
 

பின்வரலாற்றியல் தொடர்கதை
யனின் பரிசு எண்டு ராராவா உளம்பிக் கொண்டிருந்தாய்
தமிழ்ப் போராளியான கண்ணன் வெட்கத்துடன் சொன்னான்.
னோடா?” என்று பகிடியாகச் சொன்னபடி அவனுடைய
கவலைகளோ இருந்தால் அவற்றைப் பின்வரலாற்றியற் சிவனெழிலாரிடம் விசாரித்து உண்மை அறியலாம்.)
நியப் பேரவையினர் முனர்னோடி
ணேந்தி
கியப் பேரவையின் நிறுவக உறுப்பினர்களில் ஒருவரான அறியப்படும் சின்னத்தம்பி குணேந்திரராஜா அவர்கள் காவது வயதில் சென்ற ஆண்டு செப்ரம்பர் மாதத்தில்
எய்தினார். னவியையும் இரண்டு பிள்ளைகளையும் கொண்ட பண்பான
வந்த தோழர் குணேந்தி வடபுலத்தில் பொலிகண்டியில் ாத்தில் பணியாற்றித் தனது குடும்ப வாழ்வை மலையக
Fால்லிலும் செயலிலும் இளமை தொட்டே பற்றுறுதிமிக்க ன் குடும்பத்தையும் தனது சமூக நோக்குடன் இணைத்துக் ாம் அவரது அரசியல் வாழ்வேயாகும். வாதிக்குரிய வாழ்வியல் நடைமுறைகளைப் பின்பற்றுவதிற் பண்பும் அடக்கமும் மனிதநேயமும் சமூக மாற்றத்திற்கான தன்மைப் படுத்திச் செயற்பட்டவரான தோழர் குணேந்தி பற்பட்டதுடன் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் ) கிராம மக்களுக்குத் துணைநின்றவருமாவார். நூல் நிலையம் போன்றவற்றினுாடு புத்தகப் பண்பாட்டுப் தி தரமான நாடக அரங்கேற்றலுக்கும் வழிகாட்டியாக ப் பேரவை தோற்றுவிக்கப்பட்டு, 1974 தமிழ்ப் புத்தாண்டு அம்பலத்தாடிகள் நடாத்திய கலை விழாவில் பேராசிரியர் காசலமும், குணேந்திரராசாவும் தேசிய கலை இலக்கியப் ]றனர். புதிய ஜனநாயகம், புதிய வாழ்வு, புதிய பண்பாடு ) இலக்கியக் கோட்பாட்டை முன்னெடுக்கும் பயணத்திற்
ானது. تی தேசிய கலை இலக்கியப் பேரவையுடனும் அதன் நூல் ம் மிக நெருக்கமாக இருந்து வந்ததுடன் கலை இலக்கிய முறையினருக்கு உற்சாகமளித்தும் வந்தவராவார். நடைய குடும்பத்தினருக்குத் தேசிய கலை இலக்கியப்
தெரிவித்துக் கொள்கின்றன. அவரது போற்றத்தக்க பண்புகளிலிருந்து கற்று ஊக்கம் அஞ்சலியாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

Page 50
சிறுகதை
முத்து
நாட்டில் இனக் கலவரம் மேலோங்கி அமைதியின்மை துோன்றுவதை அவதானித்த ஜங்கரன் தம்பதியினர் தம் பின் சந்ததியைப் பேண 18 ஆண்டுகளுக்கு முன் க.பொ.த. உயர்தரத்தைப் படித்துக் கொண்டிருந்த சோதிருபனின் கல்வியைப் பொருள் செய்யாது வெளிநாட்டுக்கு ஆனுப்பி வைக்கின்றனர்.
மகனின் பிரிவுத் துயரை மூன்று ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாத அன்னை காலமாகி விடுகிறார்.
தனித்து விடப்பட்ட ஐங்கரனுக்கு அடிமேல் அடிபோலி நேர்ந்த மனைவியின் இழப்பு இதயத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்து சிறகொடிந்த பறவையாகிறார்.
மனைவியின் “அஸ்தி” கரைக்க இந்தியா சென்ற போது மகனும் அங்கு வந்து கலந்து கொள்கிறான்.
ஏற்கனவேயுள்ள மனத் தளர்ச்சியுடன் உடல் தளர்ச்சிக்கும் ஆளாகிய ஐங்கரன் மூன்று ஆண்டுகளின் பின், மகன் விரும்பிய பெண்ணை, செய்வதறியாது ஒத்துறவாடி இந்தியாவில் விவாகத்தை ஒப்பேற்றித் திரும்புகிறார்.
காலம் கரையக் கரையத் தந்தையுடனான தொடர்பு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிறது. இதனால் பொருள் செய்ய வாய்ப்பில்லாதவாறு ‘97ல் இருப்பிடம், இராணுவ வதிவிடமாகிறது. கொண்டு செல்லக் கூடிய தட்டு முட்டுப் பொருட் களுடன் ஐங்கரன் உறவினர் வீட்டில் தஞ்சமடைய நேருகிறது. 2000ம் ஆண்டு மேயில் உயிர் தப்பினால் போதுமென்று உடுத்த உடையுடன் வலிகாமம் இடம்பெயருகிறார். 2004இல் இராணுவம் வீட்டிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பல லட்சம் செலவு செய்து வீடு, வேலிகளைத் திருத்தி இருப்பிடம் திரும்பி வசித்து வருகிறார்.
2005ஆம் ஆண்டில் பார்வை குன்றியவரின் முன் திடீரெனச் சோதிரூபன் தோன்றவே முக்கி முனகி எழுந்து வரவேற்கிறார். மகனின் வரவால் இளைஞரானவர் தேநீரைக் கொடுத்தபடி “இப்ப இருக்கிறதைச் சாப்பிடு இரவைக்கு உருளைக் கிழங்கு காச்சித் தல்லாம்” எனக் கூறிச் சாப்பிட வைக்கிறார்.
தாயகம் 80
 

5ருமம்
"நானென்ன தடுக்குப் பிள்ளையே எழுதாமலிப்பாயோ என்று தெரிய போட்டமோ இல்லையோ மற்றவை போல நாமும் நாலு காசு சம்பாதிக்க வேண்டாமோயில்லையோ!”
சோதிருபன் சென்ற வீடுகளை விசாரித்து செல்ல வேண்டிய வீடுகளைச் சுட்டிக் காட்டியதன் மேல் ‘சிதறிப் போய் திரும்ப முடியாத நிலையில், ஒன்பது வருஷத்துக்குப் பிறகு நேருக்கு நேர் பார்க்க வைத்த பிள்ளையாரிட்டை, நாளை வெள்ளியோ இல்லையோ, போய்க் கேக்கிறதைக் கேட்டுக் கும்பிட்டு அரிச்சனையையும் செய்து கொண்டு வா! எல்லாற்றை நட்சத்திரத்தையும் பேர்களையும் சொல்ல மறந்திடாதை எல்லாம் நன்றாகவே நடக்கும் என நம்பிக்கையோடு இருப்பம்”
-
தந்தை யுத்த காலத்தில் எதிர் நோக்கிய இடையூறுகள், இழப்புகள், இன்னல்கள், அவரின் உடல் நிலைச் சரிவு ஆகிய இன்னோரன்னவை களை விசாரித்து ஆறுதல் கூறாதது போல், தந்தையும் ஏற்பட்ட துன்ப துயரங்களைக் கூறி மகனின் மனத்தை நோகச் செய்து விடுவேனோ என எச்சரிக்கையாகவே நடந்து கொள்கிறார்.
உறவினர்களும் சூழவுள்ளவர்களும் செத்த நாயிலுள்ள உண்ணி போன்று கழன்று வருவதைக் கூடக் கூறவில்லை.
நினைப் பற நினைக் கும் தட் டாங்
குளத்தானையே, மற்றவர்கள் போன்று, நோகாத வராச்சே!
---- --
பத்து நாட்களின் பின், “நாளை திரும்ப
வேண்டுமே” என்றவனை ஊடறுத்து
‘இராசா மனிசற்றை சீவியம், அதுகும் என்னைப் போன்றவர், சொல்லிக் கொண்டல்ல, எதுக்கும் காணி உறுதிகளைக் கையோடு கொண்டு போய் கவனமாக வைத்திரு மறந்தாலும் கேட்டு
வாங்கு...!’
‘என்கென்னவோ அப்பா! உங்களைக் கூட்டிக் கொண்டு போவம் எண்டு தான் படுகுது!” ‘அரசனை நம்பிப் புரியனைக் கைவிடு என்றது போலவல்ல கிடக்குது உன்ரை கதை!”
8)

Page 51
“கொஞ்ச நாளைக்கெண்டாலும்.”
‘என்ரை நிலையைக் கண்ட பிறகும் கேக்கிறயே! இன்ப துன்பம் கொண்டது தானே வாழ்க்கை! இதைப் போய் பெரிசுபடுத்திக் கொண்டு. நீங்கள் எல்லாரும் திரும்பி வந்திட்டால் அதுவே போதும்! எனக்கு இங்கு ஒரு குறையும் வரத் தட்டாங்குளத்தான் விட மாட்டார். கவலைப் படாமல் போய் விரைவாகத் திரும்பு!
பிரிய மனமின்றி, செய்வதறியாது சோதிருபன் திரும்புகிறான்.
- - *
வன்னிப் பிரதேசத்தில் உக்கிர மோதல் நடந்து கொண்டிருக்கும் காலம். அவ்வப்போது வந்து சுகம் விசாரித்து, வேண்டிய உதவிகளையும் கேட்டறிந்து உதவும் உள்ளங் கொண்ட தம்பதிகள் வந்த போது ஐங்கரன் ‘போட்டிக்கோவின் கீழ் உடை தோய்ந்த சத்தியில் நினைவழிந்த நிலையைக் கண்டு உடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
* புற்றுநோய்’ எனக் கண்டு இதயத்து வெளிப்பாடோ, மறுநாள் 22.02.2007இல் (எண்பது வயது நிரம்பும் நாள்) வயிற்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
அங்கு தங்கிய இருபது நாட்களும் கண் இமை போல் பிரியாது காத்து வந்த அந்த தம்பதிகள் முன் இடம் பெயர்ந்து, ஐங்கரன் தங்கிய இடத்தில் தங்க வைத்து “இவருக்கு ஞாபக சக்தி வரப் பல நாட்கள் செல்லும், கேள்விகள் கேட்டுத் தொல்லைப்படுத்தாமல் அமைதியாகப் படுக்க வைத்து நேரம் தவறாது மருந்துகளைக் கொடுத்து அடுத்த மாதம் 'கிளினிக்குக் கூட்டி வாருங்கள்’ என டாக்டர் கூறினார்கள் எனக் கூறி அகன்றனர். ஒரு வாரத்தின் பின் ‘போன்’ உங்களுக்குத் தான் எனக் கூறிக் கொண்டு வரவே "கிடந்தால் கிடக்கட்டும்’ என்றவர் “போனை' கண்டதும் அதனை வாங்க “கதை கதையாம் காரணமாம்! கண்டபாட்டுக்குக் கொண்டை முடிப்பாம்” என்று கூறிக் கொண்டு தொலைபேசியைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்.
“நீங்கள் இருக்கும் போதே வீடு தவிர்ந்த மற்றக் காணிகளை விற்கா விட்டால் பின்னொரு நேரம் ஏமாற்றப்பட்டு விடுவேன்’ எனக் கூறித் தந்தையை வழிப்படுத்த முனைந்த சோதிருபன் அவரின் அலட்டலைக் கேட்டுச் செய்வதறியாது குழம்பிப் போகிறான்.
ஐங்கரன் இருப்பிடம் திரும்பிய சில நாட்களின் பின், மருமகளிடமிருந்து கடிதம் ஒன்று வருகிறது. பிரித்துப் பார்த்துவிட்டு, கிடக்கட்டும்
G

சிறுகதை
எனப் பக்கத்திலுள்ள திருவாசகப் புத்தகத்தின் மேல் வைத்தவர, மருந்து குடிக்கப் பிந்திவிட்டதே என எண்ணியபடி மருந்தைக் குடித்து அப்படியே குசினிக்குள் சென்று ‘சஸ்டசினை'யும் கரைத்துக் குடித்தவர், சமையல் தொழிலில் இறங்கி விடடார். பகல் 2.30 போல் சாப்பிடும் போது வறுமையின் எல்லைக் கோட்டில் நின்று தன்னை வளர்த்த கைம்பெண்ணான தாயின் உருவம் உள்ளத்தில் நிழலாடவே, காலை கிடைத்த கடிதம் நினைவுக்கு வருகிறது.
07.04.2007இல் எழுதிய கடிதம். இங்கு வர, சண்டையால், இரண்டு மாதம் எடுத்திருக்கு
என்னென்னபாடோ! நகை நட்டுகளும் எத்தனை நாளுக்கு! அவை வயித்தைக் கட்டலாம். பிள்ளைகள் பசிக்குதம்மா என வரும் போது?
நிலைகொள்ள முடியாது ஐங்கரன் அடுத்த வீட்டுப் பையனின் உதவியுடன் மூன்று பிள்ளைகள் வெளிநாட்டிலுள்ள உறவினரிடம் சென்று “தம்பி பண நெருக்கடியில் இருப்பதாகத் தெரியுது உங்கள் பிள்ளைகள் அனுப்பும் பணத்தில் இருபது இலட்சத்தை அங்கு அவனுக்குக் கொடுக்க உதவுவீர்களானால் பெரும் உதவியாக இருக்கும் என வேண்டி ஒப்புக் கொள்ளச் செய்து இருப்பிடம் திரும்புகிறார்.
ஆறு மாதங்களின் பின் கிடைத்த கடிதம் அப்படியே கீழே தரப்படுகிறது.
அனுப்பிய இருபதும் பத்து நாட்களுக்கு முன் கிடைத் திருந்தால் வங்கி வீட்டை எடுத்திருக்காது.
நெருங்கிய கடன்காரருக்குக் கிள்ளித் தெளிக்கவே காணாமல் போய் விட்டது.
கட்டிப் பிடிச்சுக் கொண்டிருக்கிற காணிகளும் சேமிப்பும் வல்லார் தான் தின்பார்கள்.
நீங்கள் நினைப்பது போல நான் குழந்தையல்ல! 42 வயது மனிதன். நானோ குடும்பமோ உங்கு வரப் போவதில்லை.
நீங்கள் விரும்பியவர்களுக்கு அல்லது கோயிலுக்குக் கொடுங்கள்.
விலாசமோ, திகதியோ, யாருக்கு என்றோ, எழுதியவர் யாரென்றோ குறிப்பிடாதது தான் இங்கு கவனிக்க வேண்டியது.
‘' இவனுக்கு என்ன வந்தது என்று எண்ணியவராய், மருமகளின் கடிதத்தைத் தேடி எடுத்துப் பல முறை வாசித்தவர் ‘ஐந்து வருடம் வேலையில்லை! 50 இலட்சம் கடன். தஞ்சமடைந்த நாட்டில் விரும்பிய தொழிலை எதிர்பார்க்க அகதிப் பணம் உதவியிருக்கிறது! இரணி டு பிள்ளைகளுக்குத் தகப் பனாகியும் புத்தி

Page 52
சிறுகதை
கெட்டவனாக இருக்கிறானே! மருமகள் ‘இரண்டு பெட்டையஞக்கும, தனக்குப் போல சீதனம் இல்லாது, மாப்பிளை கிடைக்குமோ?’ என்று சிறிதாவது சிந்திக்க வேண்டாமா? சாடிக்கேற்ற முடியாயல்லோ இருந்திருக்கிறா!
ஆமாம், 2005இல் வந்தவன் தானே! 2007இல் எழுதிய கடிதத்தில் ஐந்து வருடம் வேலையில்லையென்றால்?
‘இருந்த கக்கூஸைப்பார்! தனிதானே பாவிக்கிறேன். எனக்கோ உங்களுக்கோ தோதுப்படாது. நீங்கள் வர முன் அதைக் கட்டி முடிக்க வேண்டும்” என்றதற்கு “பிள்ளைக்குச் சங்கிலி வேண்ட வேணும் அங்கு போயப் அனுப்பகிறேன் என்று ஐம்பதினாயிரம் 'அரிஓம்’ என அனுப்பியவனாச்சே!.
இதன் பிறகு குடும்பமாக இந்தியா சென்று திரும்பியதும் கடன்பட்ட பணத்திலா? இது ஒரு புறம். 'பாரிய சத்திரசிகிச்சையால் மீண்டு மற்றவர் வீட்டில் மூளை குழம்பித் தஞ்சமாக இருந்தவனிடம் * சுகதுக்கம் விசாரிப்பதற்குப் பதிலாகக் காணி பூமிகளை விற்க எண்ணியது, பாதுகாப்பாக வைத் திருக்கக் கொடுத்த உறுதிகளைப் பிரதியெடுத்துக் கொண்டு திருப்பியனுப்பியது, எல்லாம் திட்டமிட்ட செயலென்று எண்ணத் தோன்றுகிறதே? மேலும் இருந்து சிந்திக்க முடியாமல் போய் படுக்கக் கொள்கிmார்.
தாயகம் 80
 
 

‘நான் இன்றைக்கோ, நாளைக்கோ! எனது கடப்பாட்டை நிறைவேற்றாமல் அழிந்து போகக் கூடாது! எனது சுய தருமத் தை எப்படி நிறைவேற்றுவது?
மறுநாள் வேண்டுகோளுக்கு இணங்கி வருகை தந்த மூவரையும் வரவேற்று:
“எனது கையறு நிலை தெரிந்த உங்களின் காலத்தின் பெறுமதியைக் கருத்தில் கொண்டு சுருக்கமாகக் கூறுவது:
அர்த்தம் புரிந்த பின் தர்மம் வேறாகிறது என்பது போல் நொத்தாரிசைச் சந்தித்து எனது கருத்தைக் கூறிய போது அதனைப் பாராட்டி, நகலொன்று நான்கு நாளில் தருகிறேன் என்றார். எழுதவிருக்கும் மரணசாதனத்தின் உள்ளிடு, மகனும் குடும்பமும் இங்கு நிரந்தரமாக வசிக்க நேராவிடத்து சொத்துக் கள் யாவையும் நிருவகிக் கும் தொணி டு நிறுவனமாகத் தொழிற்படுவீர்கள்! வெற்றிடம் நேரில் அதனை மற்றிருவர் நிரப்பும் உரிமையுடையவர்களாவர்.
நிரந்தரமாக வசிக்க வந்தவர்களாகப் பாசாங்கு காட்டுகிறார்கள் என ஐயம் ஏற்படின் வருவாயை நுகரும் உரிமையே அவர்களுக்குண்டு! காணிகளையோ, வீட் டையோ ஈடு ஒற்றி வைக்கவோ அல்லது விற்கவோ எவருக்கும் எக்காலத்திலும் உரிமையில்லை! நகலை நீங்களும் பார்த்த பின்பே ஒப்பமிடுவேன்!
Ꭷ 36076յմՐ - ԱOՈՄ Ժ ջOH

Page 53
“இச் சாதனம் எம் போன்றோருக்கு ஒரு கைவிளக்கு உபகரிப்போன் கருத்தறிந்து ஒழுக வேண்டும் என வலியுறுத்துகிறது. இதனைச் செயற்படுத்தத் தயங்கோம்”.
மூவரும் ஒரே குரலில் கூறினர்.
2009 டிசம்பர் 1 ** தெரியலையோ குஞ்சியப்பு!” கூறிக்கொண்டு உள் வந்த சண்முகத் தின் குரலில் இனங் கண்டவர், “அடடஅ அப்புவே” என்றபடி எழுந்து அணைத்துக் கொள்கிறார்.
‘என்னுடைய நண்பர்கள் வந்து பார்க்கும் நேரமெல்லாம், பக்கத்தில் நின்று உதவ முடியாமல் போய் விட்டதே. அதுகும் சத்திர சிகிச்சையின் போது என்று தவிப்பதைக் கூறினார்கள்! எனக் கென்று ஒன்று இருக் கென்று மனம் நிறைந்தேன்.
இப்ப என்னெடா என்றால் ஞாபகமில்லாமல் போய் விட்டது, அத்தோடு தடக்குப்பாடும்! இரண்டு மூன்று மாசமாய் நினைச்சுப் பார்க்க முடிகிறது. அதுவே போதும்!
சண்முகம் ஜங்கரனின் மனைவியின் மூத்த சகோதரியின் ஏகபுத்திரன். இரு தசாப்தமாக மாவிட் டபுரத்திலிருந்து இடம் பெயர் நீ து குடும்பத்தோடு இந்தியாவில் வசிப்பவர். தேநீரைக் கொடுத்தபடி "அங் இனிச் சொல்லன்? - தூண்டுகிறார்.
உங்களையும் பார்த்திட்டு நிலைகளையும் ஆராய்ந்து கொண்டு திரும்புவம் என்று வந்தனான். இரண்டு மூன்று மாதத்துள் எங்கள் பகுதியிலும் மீள்குடியமர்வு நடக்குமாம்! பிறகென்ன சனி தொலைந்து ஞாயிறு வந்ததென்று இருக்கலாம்!
வீடு தானே! தொல்லையில்லாத ஆளுக்குக் கொடுத்து விட்டு நீங்களும் எங்களோடு.”
இடைபுகுந்த ஐங்கரன் “எனக்கென்னவோ பார்க்க வேண்டியவன் கைவிரித்த நிலையில் மற்றவர்களுக்குப் பாரமா...”
“என்னயுைம் மற்றவர் என்கிறியளா? உப்பு மூட்டையாக்கி முதுகில் சுமந்தபடி உப்பு உப்பு! என்று கத்தி அங்குமிங்குமாய்த் திரிந்தது இப்பவும் கண்ணுக்குள் நிக்குது திருவிழாக் காலத்தில் அது இது என்று வேண்டித் தந்தது நேற்றுப் போல் கிடக்கு கதையைப் பாத்தால் புறம்பு காட்டுவது போலெல்லோ கிடக்கு! எனக்குத் தெரிந்த எத்தனையோ பேர் வெளிநாட்டுக்குப் போனது போனதுதான், கஷடப்படும் தாய் தகப்பனுக்குச் சகோதரங்களுக்கு ஒரு சதம் அல்லது ஒருவரி கடிதம் ? கணி டதே காட்சி கொணி டதே கோலமென்று இருக்கிறார்கள்!
தாயகம் 80
 

சிறுகதை
‘* அதை விடுவம் ! உங்களிடம் ஒன்றுமில்லையென்றால் தானே மற்றவர்களுக்குப் பாரம் ! உங்கள் ‘பென்சனே நாலுபேருக்கு மாலோகமாகக் காணுமே உள்ள குறையெல்லாம் 'தன்னாள் பக்கத்திலை இல்லாதது தானே! நான் தான் வந்து விடுவேன் என்கிறேனே! நானும் உங்கள் பிள்ளை தானே!’
“கன கதையேன் நாங்கள் திரும்பமுன், பிறகும் எப்பெப்பவோ, முக்கிய கோயில்களுக் கெல்லாம் போக இருக்கிறோம். உங்களையும் கையோடு கூட்டிக் கொண்டு போனனெண்டால் பிறகு எங்களோடு திரும்பி வரலாம் தானே! யோசிக்கிறதற்கு ஒன்றுமில்லை! உங்கள் பழைய ‘பாஸ் போட்டைத் தாருங்கள், பிரச்சனை எதுவுமின்றிப் புதுப்பிக்கலாம்"
“கதையிக்கை கதை மரண சாதனம் பதிந்து வந்திட்டுதல்லோ! - ஐங்கரன்.
அதுக் கென்ன விரைவில் வரப் போறந்தானே! வயோதிபர் இல்லத்துக்கு (செலவு கொடுத்து தங்குமிடம்) போறது தான் நிறைவேறாது! முற்று வைத்தார் சண்முகம்.
安安 宏
திருச்சி விமான நிலையத்திலிருந்து இருவரும் வெளியேறி வந்த போது, பயணிகளை எதிர்பார்த்து நின்ற கூட்டத்தில் சண்முகத்தின் மனைவி நிற்பதைக் கண்டவர் ‘நாங்கள் வருவந்தானே!” என்றபடி முன்னேறியவரை இரு சிறுமிகள் ‘அப்பப்பா! அப்பப்பா!” என்றபடி அவரின் கால்களை அணைத்துப் பிடிக்கவே திகைத்தவராய் சண்முகத்தின் மனைவியை ஏறிட்டுப் பார்க்கிறார். ‘‘அடடஅ! சொல்ல மறந்திட்டனே, தம்பியின் பிள்ளைகள் எங்களோடு தான் இருக்கிறார்கள்!” என இடைபுகுந்தார் சண்முகம்.
அப்படியா என்றவர் இருவரையும் அணைத்தபடி கூட்டிச் சென்று வாகனத்தில் ஏற்றி, வைகையை மடியிலும் வைசாலியை அருகிலும் அமரச் செய்கிறார்.
வாகனம் வீட்டு வாசலில் நின்றது நிற்க முன், ஆதாரத் தாமரையில் முகிழ்ந்த தன்னை அப்பா! அப்பா!' எனும் வார்த்தைகளைப் பெருங் குரலாக்கி, ஓடி வந்து கதவைத் திறந்து தந்தையை அலாக்காகத் தூக்கிச் சென்று கதிரையில் இருக்க வைத்து, தான் முழங்காலில், ரோமம் சிலிர்த்தபடி நின்று அவரின் பாதங்களை நெஞ்சுடன் அழுத்துகிறான். கண்களில் திரண்ட நீர்த் துளிகள் தந்தையின் பாதத்தில் சொரிகின்றன! அதே நேரம் சோதிருபனின் தலையைக் கோதும் ஐங்கரனின்
s
836oTejf? _ uomjé# 92OITI

Page 54
சிறகதை
கண்ணிர்த் துளிகள் சோதிருபனின் தலையைக் குளிரச் செய்து நெஞ்சை நிறையச் செய்கின்றன. நிலவி நிற்கும் உடனாதல் - அத்வைதம் நிலையை உருக்குலைப்பது போன்று "யுத்தம் என்று ஒன்று வந்திட்டால் வெற்றி தோல்வி தவிர, நீதி நியாயத்தை எவர் தான் பொருட்படுத்து கிறார்கள்?”
“இந்நிலையில் எம் போன்றோர்க்கு விவேகம் தேவையோ இல்லையோ குஞ்சியப்பு!” இவனுடன் வேலை செய்த 'அப்பாவி' நண்பனொருவன், எழுந்தமானமாக, தாயப் தேப்பனைப் பார்க்க, ஒருவரியத்துக்கு முன் போனவன், போனவன்தான்! அவனின் பெற்றோர் கள் தடுப்பு முகாமில்; மனைவி பிள்ளைகள் அநாதரவாக இங்கு கண்ணிர் வடிக்கிறார்கள் என்கிறான். தம்பி பயந்தவன் கண்களுக்கு இருண்ட தெல்லாம் பேய் இருசாராருக்கும் பொருந்தும் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்லுற.
ஆய்ந்தோய்ந்து பாராமல் - பெத்தாரே பிள்ளையொன்றையென நையாண்டி செய்பவர் களும் இருக்கத் தான் செய்யும் எங்கள் வாயை மூடிக் கொள்வது தவிர ஊர் வாயை மூட முடியுமா? திக்குமுக்காடிச் சிதறிக் கிடக்க வேண்டும் என்று பலன் போலும் என அவன் சொல்லாத நேரமில்லை!
‘‘ எனக் குத் தவறாகத் தெரிவது, சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் அவனைப் போல வந்தான் வரத்தான்கள்! என்ன துணிச்சலோடு சீட்டுப் பிடிக்க வெளிக்கிட்டாய், உனக்குத் தேவை தானோ, சீட்டு எடுத்தவர்கள் எந்த நாட்டிலென்று இப்ப தேட முடியும்? புலிக்குப் பிறந்தது பூனையாய் நிக்கிறியே” என்றதற்கு ஊமையாய் நிற்கிறான் குஞ்சியப்பு!
இவனும், உங்களைப் போல அடுத்த வருசம் வரவிருந்த பதவியுயர்வைப் பொருள் செய்யாது உள்ளது போதும் என்று ஐம்பது வயதில் ஓய்வு பெற்றது போல், திரும்பலாம் என்பது தான் எனது கருத்து; அதை அவனே தீர்மானிக்க வேண்டியதல்லவோ! எனக் கூறிக் கூட்டி வைக்கும் கடகன் ஆனார் சண்முகம்.
குறிப்பு நாம் சீவிக்கும் காலத்துக்குட்பட்ட புனைவற்ற கதையாதலின் ஒன்றி உய்த்துணர வேண்டிய தேவை ஏற்படுமாயின், தோன்றாத் துணையாய், துTண் டாமல் துணி டி வரும் கல் வயலுTர் கவிமணிக்கே பாராட்டுரியது!
தாயகம் 80
 

/ー ༄༽
புத்தகப் பண்பாட்டுப் ILI6)Ib
புத்தகப் பண்பாட்டு ஆர்வலர்கள் தத்தம் பிரதேசங்களிலுள்ள நூலகங்கள், சனசமுக நிலையம், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் மன்றங்கள், நலன்புரி நிலையங்கள் ஆகியவற்றில் மாதந்தோறும் பெளர் னமரி தினத்தில் ஒன்று கூடுகின்றனர். காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை புத்தகக் கண்காட்சியும் மாலை 4.00 மணிமுதல் 6.00 மணி வரை புத்தக அறிமுகமும் உட்பட இலக்கியச் சந்திப்பும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரை புத்தகங்களில் வெளிவந்த கதை, கவிதை, பாடல், நாடகம் உட்பட்ட விடயங்களை ஒட்டிய கலை நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன.
தேசிய கலை இலக்கியப் பேரவை இந் நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பா ளராகச் செயற்பட்டு வருகின்றது.
நீங்களும் புத்தகப் பண்பாட்டுப் பயணத்தில் இணைய வேண்டாமா?
தொடர்புகளுக்கு பொதுச் செயலாளர் தேசிய கலை இலக்கியப் பேரவை 571/15, காலி வீதி, கொழும்பு - 06 జాణలో : 011 2381603, 077 8851989
للمرے
ஜனவரி - மார்ச் 2OI

Page 55
குழந்தை(ச்) சிறுவர் 66
குழந்தையும் தெய்வமும் ஒன்றென்பர் குழந்தை சொல் மெய்யென்பர் - நல் மழலை மொழி இன்பமென்பர் மழலை பெருஞ் செல்வமென்பர் குழந்தை தனிச் சுகமென்பர் - கருக் குழந்தை சுமை கொடையென்பர் பிஞ்சுக் குழந்தை என்பர் பஞ்சுக் குழந்தை என்பர் பெரும் முதலாளிச் செல்வந்தர்.
குழந்தைச் செல்வம் என்பர் குழந்தை (சிறுவர்) விற்பனை என்பர் குழந்தைச் (சிறுவர்) சுரண்டல் என்ப குழந்தை (சிறுவர்) பாலியல் என்பர் குழந்தை (சிறுவர்) துஷ்பிரயோகம் குழந்தை (சிறுவர்) பலாத்காரம் என் குழந்தை (சிறுவர்) கடத்தல் என்பர் பேய் என்பர் பிசாசு என்பர் செல்வந்தனால் சுரண்டப்படும் ஏழைத் தொழிலாளர்கள்.

6US-Q UD
- இராகலை மோகன் -
என்பர் பர்

Page 56