கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2011.05

Page 1


Page 2


Page 3
நதியினு
கவிதைகள்
: சத்தியமலரவன்
புலோலியூர் வேல்.நந்தகுமார் மன்னூரான் ஷிஹார் தாட்சாயணி த.ஜெயசீலன் வே.ஐ.வரதராஜன் அல்வாயூர் சி.சிவநேசன்
 
 
 


Page 4
2011 வைகாசி இதழ் - 32
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துவஜ்யந்தன்
பதிப்பாசிரியர்
கலாநிதி கு.கலாமரிை
தொடர்புகளுக்கு :
ආරැන60 ඌlébló சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அலிவாய் வடமேற்கு அலிவாய்
GIീb,
ஆலோசகள் குழு:
திரு.தெனியான் திரு.கி.நடராஜா
விதாலைபேசி 0775991949 0212262225
E-mail: jeevanathy(a)yahoo.com
வங்கித் தொடர்புகள் K. Bharaneetharan
Commercial Bank Nelliady A/C - 8108021808
CCEYLKLY
இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படும் படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர்
ஜீவநதி
இன்ன
சாதனங்களால் எட்டாக்கனியா
க்கு எளிதாகக் தலைமுறைப் படைப்புக்க6ை உண்மை தான் றன என்ற ஐய இளம்தலை மு ஒட்டு மொத்தம இன்ன தொடர்பாடற் ச றோம் என்பது இளைய தலை என்பதை நாம் எளிதாகியுள்ள இளைய தலை சந்திக்கவும் க( கொள்ளவும் ந அநுபவ தரிச6 வைக்கப் போக
பாளிகளை நி
ஆளுமைகளை யெல்லாம் இெ
கேள்விகள்.
இக்ே செல்செறி தங் களினதும் இன தாங்கி "ஜீவந படைப்பாளிகளு யாக ஜீவநதி சொன்னோரு கள் என்ற புரித எமது எதிர்கா எப்போதும் ஜீ
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
தலைமுறை இடைவெளி
Dறய இலக்கியச் சூழல் நவீன தொழில்நுட்ப, இலத்திரனியற் ) ஆளப்படுவது. எமது மூத்த தலைமுறையினருக்கு க இருந்த பிரசுர வசதிகள் இன்றைய தலைமுறையினரு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இளைய படைப்பாளிகள் தாம் நினைத்த மாத்திரத்திலேயே தமது ா நூலுருவில் வெளிக்கொண்டுவருகின்றனர் என்பது அந்நூல்களில் எத்தனை சிரஞ்சீவியாய் வாழப்போகின் ப்பாடு பலரிடம் எழுவதும் நியாயமானது தான். ஆனால், றைப் படைப்பாளிகளின் படைப்புக்கள் அனைத்தையுமே ாக உதாசீனம் செய்வதும் ஆரோக்கியமானதன்று. றைய இலக்கியச் சூழலைத் தீர்மானிக்கின்ற நவீன தகவற் ாதனங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின் தான் இன்று மூத்த தலைமுறைப் படைப்பாளிகளிடமும் முறைப் படைப்பாளிகளிடமும் உள்ள இலக்கியப் பொறுப்பு மறந்து விடலாகாது. போக்குவரத்தும் தொடர்பாடலும் நிலையில், மூத்த தலைமுறைப் படைப்பாளிகளும் முறைப் படைப்பாளிகளும் பரஸ்பரம் ஒருவரையொருவர் ருத்துப் பரிமாறல் செய்யவும் ஒருவரையொருவர் புரிந்து ாம் என்ன செய்யப்போகிறோம். மூத்த படைப்பாளிகளின் னத்தை இளைய படைப்பாளிகளிடம் எவ்வாறு தொற்ற கின்றோம்? வேகம் கொண்ட இளைய தலைமுறைப் படைப் ன்று நிதானிக்கச் செய்து அவர்களது ஆற்றல்களையும் Tயும் எவ்வாறு குறைவற வளர்க்கப் போகிறோம்? இவை 0க்கியப் பொறுப்புள்ள படைப்பாளிகளின் முன்னாலுள்ள
கள்விகளுக்கு விடை காண்பதில் தான் எமது இலக்கியச் கியுள்ளது. இந்தப் புரிதலோடு தான் மூத்த படைப்பாளி )ளய தலைமுறைப் படைப்பாளிகளினதும் ஆக்கங்களைத் தி வெளிவந்து கொண்டிருக்கின்றது. இளந்தலைமுறைப் ளுக்கு மாத்திரம் களம் அமைத்துக் கொடுக்கும் சஞ்சிகை, யை வெளிக்கொணரவேண்டும் என்ற கருத்துக்களைச் ம் உண்டு. ஆனால், மூத்த படைப்பாளிகள் எமது சொத்துக் ல் ஜீவநதிக்குண்டு. தலைமுறை இடைவெளியைக் குறைத்து, ல இலக்கியச் சூழலை வளமாக்க முனையும் முயற்சிகளில் வநதியும் பங்கெடுக்கும்.
- ஆசிரியர்
2 இதழ் 32

Page 5
பலதரப்பட்ட குணாதிசய இயல்புகளை
யுடைய பாத்திரங்களைப் படைக்கும் படைப்பாளியும் தனது தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு குண இயல்பு களுடன்தான் காட்சி அளிக்கின்றார். தான் வாழும் சூழல் பெற்றுக் கொண்ட அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், படித்த நுால்கள், வாழ்வில் சந்தித்த மனிதர்கள் தான் ஒரு படைப் பாளியின் குண இயல்புகளையும் படைப்புகளையும் தீர்மானிக்கிறது என்ற முடிவுக்கு சுலபமாக வர முடியும்.
இந்த சிந்தனையினை அடியொற்றியே நாம் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலை இலங்கை யில் நடத்தினோம். இந்த ஒன்றுகூடல் வெறுமனே கூடிக் களைந்து, உண்டு களித்துவிடும் சம்பிரதாயமான சடங் காகிவிடாமல் பயனுள்ள பணிகளையும் முன்னெடுத்தது.
எழுத்தாளர்களுக்குள் அரசியல் சித்தாந்த முரண்பாடுகள் காலம் காலமாக நீடித்துக் கொண்டி ருக்கும் அதேவேளை இலங்கை உட்பட பலநாடுகளில் இனமுரண்பாடுகளினால் பகைமையும் வெறுப்பும் மலிந்து, எந்த ஒரு சாதாரண நிகழ்வுக்கும் அரசியல் பார்வையை பதிவுசெய்துவிடும் கணினி யுகத்தில் நாம் வாழ்கின்றோம்.
2001ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலி யாவில் தொடர்ச்சியாக நாம் நடத்திவரும் தமிழ்
எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவை அவதானித்து வந்த ஈழத்து படைப்பாளிகள் சிலரது கோரிக்கை தான் இலங்கையில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகிய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்று ஏற்கனவே பல
கூடலை நடத்தும் போது எத்தனை எழுத்தாளர்களினால் வருகைதந்து கலந்துகொள்ள முடியும் என்ற வினா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லெ.முருகபூபதி அவுஸ்திரேலியா
விளிகளைஇருவாகிகுறி இணையங்கள்
இனச்சங்காரத்தினாலும் சொத்தழிவுகளினாலும் ‘போர்க்கால இலக்கியம்' என்ற பேசுபொருை இலக்கிய அரங்கில் அறிமுகப்படுத்தியவர்கள் ஏதிலிகளாக உலக அரங்கில் முகவரி தேடும் மனிதர் களாக தமது இருப்பை வெளிப்படுத்த புலம்பெயர்ந் தோர் இலக்கியம் , புகலிட இலக்கியம் ஆகிய சொற்பிர யோகங்களையும் வளர்த்து விட்டவர்கள், பரஸ்பரம் தமது அனுபவப்பகிர்வை நடத்துவதற்கு உகந்த நாடு தற்போதைக்கு இலங்கைதான் என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள்.
அனைத்துலக ஈழத்தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற தொனிப்பொருளுடன் நடத்துங்கள் - என்ற 1 கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் அதனை நிராகரித்து, எழுத்தூழியக்காரர்கள் நாடு பிரதேசம் கடந்து ஒன்று கூடவேண்டும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்ந்து அறியாததை அறிந்துகொள்ள முயல வேண்டும் என்ற பரந்த சிந்தனையுடன்தான் நாம் அனைவரையும் அரவணைத்துச் செல்ல விரும் பினோம். அந்த எண்ணத்திலிருந்து நாம் இம்மியளவும் விலகவில்லை. விலகவும் மாட்டோம். செய்திகளை எழுதியவர்களே செய்தியாகிப் போன நாடுகளில் இலங்கையும் அடங்கு கிறது. அவர்களையும் நினைவுகூர்ந்து கொண்டே நாம் ஒன்று கூடுகின்றோம்.
ஒரு காலத்தில் சித்தாந்த பண்டிதர்களினால் முரண்பட்டிருந்த படைப்பாளிகள், அணிகளாக பிரிந்து நின்று சமரிட்டனர். உலகமயமாதலுக்கு மத்தியில் கணினி யுகத்தில் இணையங்களில் எழுதுவதன் மூலம் அந்தச்சமர் இன்று வேறு ஒரு கோணத்தில் திரும்பி யிருக்கிறது.
நான் சிறுவனாக இருந்தகாலத்தில் அயலில் வாழ்ந்த சில சுட்டிப்பயல்களுடன் சேர்ந்து விளையாடும் போது அவர்களது சுட்டித்தனங்களையும் என்னுடன் எடுத்துவந்து வீட்டில் தொடரும் போது எனதருமைப் பாட்டி சொல்வார். துஷ்டனைக்கண்டால் துார விலகு"

Page 6
சுமார் 55 ஆண்டுகளுக்குமுன்னர் அப்படிச்சொன்ன எங்கள் பாட்டி, தற்போது அறுபது வயதை நெருங்கிக் கொண் டிருக்கும் எனக்கு அடிக்கடிநினைவுக்கு வருகிறார்.
நான் தற்போது சந்திக்கும் அனுபவங்களை எனது பாட்டி உயிரோடு இருந்து நேரடியாகக் கண் டிருப்பாரேயானால், "எழுத்தாளனைக்கண்டால் எட்ட நில் என்றும்சொல்லியிருப்பாரோஎன்றும்சிந்திக்கின்றேன்.
நல்லகாலம் இந்த கணினி யுகத்தில் பாட்டி ജൂൺങ്ങാണു.
சுவரோவியக்காரர்களைப்பற்றி அறிந்திருப்பீர் கள். நான் இங்கே குறிப்பிடுவது பொதுக் கழிப்பறை களில் வீதியோரச்சுவர்களில் கிறுக்கும் எழுதும் பிரம் மாக்கள் பற்றியது.
தமக்குப்பிடிக்காதவர்களைப்பற்றி கண்டபடி எழுதுவது, கேலிச்சித்திரங்கள் வரைவது வாய்திறந்து சொல்ல முடியாத தூஷண வார்த்தைகளை பதிவு செய்வது இன்றளவும் நடந்துவருகிறது. அதற்கு எந்த வொரு நாடும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டில் தமிழில் எழுதினால் அவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்தில் அல்லது பல் தேசிய மொழிகளில் எழுதுவார்கள் இந்த மாண்புமிகு சுவர் ஓவியர்கள்.
பல தமிழ் இணையத்தளங்களைப் பார்க்கும் போது சுவர் கிடைக்காதவர்களுக்கு கணினி கிடைத் துள்ளது. அவ்வளவுதான். அவதூறுகளை பதிவு செய் வதில் சுயஇன்பம் அனுபவிக்கின்ற இணைய எழுத் தாளர்கள் பல்கிப்பெருகி விட்டார்கள்.
நவீன தொழில்நுட்பம், கணினியில் - இருப்பவர்களை இல்லாமலாக்கும், இல்லாமல் போன வர்களை இருப்பவர்களாகக்காட்டும். ஒரு எந்திரனை ஆயிரம், பல்லாயிரம் எந்திரன்களாகவும் காட்டும். எதிர்வினைகள் கூட காலப்போக்கில் நீர்த்துப்போய் சகஜநிலைக்குத் திரும்பியிருப்பதை இலக்கிய அரசியல் அரங்குகளிலும் அவதானித்து வருகின்றோம்.
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெய காந்தன் ஆனந்தவிகடனில் முத்திரைக்கதைகள் எழுத ஆரம்பித்ததும் இடதுசாரிகளும் முற்போக்குவாதிகளும் வரிந்துகட்டிக்கொண்டு அவர்மீது வசை பொழிந்தார்கள். அச்சமயம் நான் ஈழத்து இலக்கிய உலகினுள் பிரவேசித்த காலம் என்னை அறிமுகப்படுத்திய மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, மல்லிகையில் ஜெயகாந்தனை கடுமை யாக விமர்சித்து நீண்ட கட்டுரைத்தொடரே அக்காலப் பகுதியில் எழுதினார்.
ஜெயகாந்தனும் இவர்களை உசுப்பேத்தும் விதமாக தமது குசும்புத்தனங்களை எழுதியும் பேசியும் வந்தார்.
= DCM ஜீவநதி H

அவரது மில்லியன் டொலர் பெறுமதியான ஒரு வாசகம் இப்படி அமைந்திருந்தது: "நான் எந்தக் கட்சிக்கும் தாலிகட்டிக்கொண்டவன் அல்ல."
தாலி கட்டுவதே ஆணாதிக்கத்தின் ஒரு அடை யாளம் என்ற சிந்தனைகள் மெதுமெதுவாக துளிர்க்கத் தொடங்கிய காலத்திலேயே அவர் அவ்வாறு சொல்லி தனது நிலைப்பாட்டுக்கு நியாயமும் கற்பித்தார்.
அதனால் முரண்பாடுகளின் மொத்த உருவம் என்ற விமர்சனத்துக்கும் ஆளானார்.
ஆண்டுகள் ஒடிக்கொண்டிருந்தன. அவருக்கு சாகித்திய அக்கடமி விருது, ராஜராஜ சோழன் விருது, பாரதீய ஞானபீட விருது, பத்மருநீ விருது. இப்படியாக அவர் விருதுகளை வரவாக்கிக்கொண்டார். மெளனமே மொழியாக வாழ்ந்து காட்டும் அவர் மீது இப்போது எந்த எதிர்வினையும் இல்லை.
பக்கம் பக்கமாக கடும் விமர்சனம் எழுதிய மல்லிகை ஆசிரியர் ஜீவா, ஜெயகாந்த னுக்கு ஞானபீட விருது கிடைத்ததும், அவரைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக ஜெயகாந்தனின் படத்தை மல்லிகை முகப்பில் பிரசுரித்து சிறப்பிதழ் வெளியிட்டார்.
தமிழக இடதுசாரி பிரமுகர்கள் ஜெயகாந்தன் வீடு நோக்கிச்சென்று நேரில் வாழ்த்தியதுடன் இதழ் களில் விதந்தும் எழுதினார்கள். அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நேரில் சென்று பார்த்து சுகநலன் விசாரித்தார்கள். அவரைப்பார்க்க நான் விரும்பிய போது, என்னை அழைத்துச்சென்றவர்தாமரை மகேந்திரன்.
நண்பர் ஜெயமோகன் எனக்கு ஒரு தகவல் சொல்லியிருக்கிறார். இலங்கையைச்சேர்ந்தவரான தருமு சிவராம், தமிழகத்திலிருந்துகொண்டு பல தமிழக படைப்பாளிகளை கடுமையாக தமது எழுத்திலே விமர்சித்துக் கொண்டிருந்தார். பலபெயர் மன்னன் (பலகுரல் மன்னர்கள் போன்று) தருமு சிவராம் தமிழ் நாட்டில் தற்காலிக வதிவிடப்பிரஜையாகத் தான் காலத்தை ஒட்டினார். அத்தருணம் அவரால் கடுமையாக திட்டப்பட்ட இலக்கிய விமர்சகர் ஒருவர் அரச உயர் பதவியில் இருந்தார். அவர் நினைத்திருந்தால் தன்னை தொடர்ந்து காயப்படுத்திவரும் தருமுசிவராமை நாடு கடத்துவதற்கும் வழிகோலியிருக்க முடியும். ஆனால் கருத்தை கருத்தால் எதிர்கொண்டார்.
இன்று கணினியுகம் பலருக்கு சாதகமாக விருப்பதனால் அவதூறுகளையும் எழுதி தமது இருப்புக்கு இடம்தேடுகின்றனர். இலக்கியம் இருப்பை மட்டுமல்ல புரிந்துணர்வையும் தேடலையும் உருவாக்கும் ஊடகம்,
) Olom
-இதழ் 32

Page 7
ଦୁଷ୍ଟ பரலோக இராட்சியத்தின் நுழைவாயில்.
பெருந்திரளான மனித உயிர்கள் கூடி * நிற்கின்றன.
கூற்றுவன் திகைத்துப்போய் நிற்கின்றான்.
ஏனெனில் வழமையாகப் பூலோகத்திலிருந்து மனித sis கூற்றுவன் தான் அழைத்து வருவான்
உயிர்களும் வந்து நிற்கின்றன.
அத்தனை உயிர்களும் குண்டுகளுக்குப் பலியாகியிருக்க, வேண்டும். ஏனெனில் அத்தனை உயிர்களிலும் கெந்தக நெடில் வீசுகின்றது.
கெந்தக நெடில் வீசுகின்ற இந்த உயிர்கள் அத்தனையும் லிபியா நாட்டைச் சேர்ந்தவை என்பதை அங்கு நின்ற சில உயிர்களின் உரையாடலிலிருந்து ஊகிக்க முடிகின்றது. 청 இப்படித்தான்.
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு, மே ெேமாதத்தின் இறுதிப்பகுதியில். கெந்தக நெடிலோடு பல்லாயிரக் கணக்கான மனித உயிர்கள் இதே இடத்தில் நிறைந்துநின்றன.
இலங்கையின் வடபுலத்தில் உள்ள முள்ளி
&
ாய்க்காலில் அகால மரணமடைந்தவர்கள். அந்தப் பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களில் ஒன்றாக நானும் நின்றேன்.
 
 
 
 

உணவு விடுதியில் உள்ள சமையல் பகுதியில் மிகப்பெரிய தாச்சிக்குள் கொதிக்கும் எண்ணையில் இறால்கள் பொரிந்து குறண்டுவது போல், எரிகுண்டில் சிக்கிப் பொரிந்து குறண்டிப் போனவர்களில் நானும் ஒருவன்!
நாங்கள் எங்களின் சுகந்திரத்தை யாசித் தோம். அரசு எங்களைப் பார்த்து "நீங்கள் பயங்கர வாதிகள்" என்று கர்ச்சித்து. fG| போட்டது.1 क्षे
சர்வதேச நாடுகளின் நாக்குகளில் ஒன்றாவதுΑ 8 எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை.
ஒரு விநாடி. எனது மனம் பின்நோக்கி நகர்ந்து. உணர்வலையால் கிறுகிறுத்து. ஓய்கின்றது. மீண்டும் எனது கவனம் கெந்தக நெடில் வீசும் அந்த லிபிய நாட்டு உயிர்கள் மீது திரும்புகின்றது.
உயிர்ப் பூச்சிகள் வந்து கொண்டேயிருக் கின்றன.
பரலோக இராட்சியம்பூலோகத்தில் மரண்க்கின்ற மனித உயிர் களின் இறுதித் தரிப்பிடம். இங்கு சுவர்க்கலோகம், நரக லோகம் என இரு பிரிவுகள் உண்டு. பூலோக வாழ்க்கை யின் மனித நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மனித உயிர்களும் பரமபிதாவின்ஜி தீர்ப்புக்குள்ளாகுகின்றன.

Page 8
இங்கு யாரும் பிறப்பதுமில்லை. யாரும் இறப்பதுமில்லை. 酸 இங்கு யாருக்கும் பசிப்பதுமில்லை. யாரும்
புசிப்பதுமில்லை.
இங்கு ஆள்பவரும் இல்லை. அடிமைகள் இல்லை.
இங்கு வர்க்கங்கள் இல்லை. அதனால் இனங்கள், மதங்கள், சாதிகள் இல்லை.
இங்கு அரசியல் இல்லை. அதனால் கட்சிகள், 毅 பாதாளக்குழுக்கள், இனந்தெரியாத நபர்கள், வெள்ளை 羲 வான்கள், இலஞ்சங்கள். என்று எதுவுமே இல்லை.
'பரம பிதா 夔 இவர்தான் இந்த பரலோக இராட்சியத்தின்
பிதாமகர்.
சில நிமிடங்கள் சென்றிருக்கும். கூற்றுவன் வருகின்றான். கூற்றுவனைத் தொடர்ந்து பரம பிதா வருகின்றார்.
கடல் போல் நிற்கின்ற மனித உயிர்களைப் பார்த்து பரமபிதாதிகைத்துப் போய் விட்டார்.
".பிதாவே. நான் இவர்களை அழைத்து வரவில்லை" பயபத்தியுடன் கூற்றவன் பரமபிதாவிடம் கூறுகின்றான்.
பரமபிதாவின் முகத்தில் ஆச்சரியக் குறிகள். பூவிதழ்கள் அசைவதுபோல் பரம பிதாவின் இமைகள் அசைந்து மூடிக்கொள்கின்றன. அவரது கண்களின் இமைத்தோற் புரையைப் புடைத்து நிற்கும் கண் முளிகள் இலேசாக அசைவது தெரிகின்றது. முகத்திலே சாந்தம். அந்தச் சாந்தத்தோடு கலந்திருக் கும் தெய்வீக உணர்வு. ! லிபியா நாட்டு உயிர்கள் மெளனமாக
நிற்கின்றன. 醬 பூவிதழ்கள் விரிவது போல் பரமபிதாவின் கண் இமைகள் விரிகின்றன. அந்த உயிர்கள் மீது அவரின் பார்வை நத்தையாய் ஊர்ந்து வருகின்றது. D அவரது முகத்திலே வேதனைச் சாயல்.
அவர் பேசுகிறார். ". இவர்கள் அனைவரும் லிபியா நாட்டைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒரு பகுதியினரை லிபியா இராணுவம் கொன்றுள்ளது. பெரும் பகுதியினரை மூப்பனார் சபையைச் சேர்ந்த நாடுகளின் இராணு வங்கள் கொன்றுள்ளன. இவர்கள் அப்பாவிப் பொது
மக்கள். இவர்கள் அனைவரையும் மோட்ச இராட்சி
 

யத்திற்கு அனுமதிக்கிறேன்" பரமபிதாதீர்ப்பிடுகின்றார்.
"பிதாவே. அங்கு குழுமி நின்ற உயிர்க் கூட்டத்தில் இருந்து ஒரு உயிர் அழைக்கின்றது. அந்த அழைப்பில் பணிவும், வேதனையும் இயலாத்தன்மை
யும் கலந்திருக்கின்றது. . Σ
"உனக்கு என்ன வேண்டும்?" பரமபித
கேட்கிறார்.
".நாங்கள் எங்கள் சுதந்திரத்தை எங்கள் நாட்டுத்தலைவனிடம் கேட்டது பிழையா?. எங்களைப் காப்பாற்றவென்று வந்த மூப்பனார் சபையைச் சேர்ந்த நாடுகளும் எங்கள் மீது குண்டுகளைத்தானே போடு கின்றன." அந்த உயிர் வேதனையோடு கேட்கின்றது.
பரமபிதா கண்களை மூடி. அமைதியாச் சிரிக்கின்றார். முக்காலத்தையும் உணர்ந்த பரமபிதா வின் ஞானச் சிரிப்பு. - சில விநாடிகளில் கண்களைத் திறந்த பரமபிதா பேச ஆரம்பிக்கின்றார்.
“...சர்வதேச நாடுகளில் மிக ഖണ്മഥ பொருந்திய நாடு. உலகப் பெரும் மூப்பனார். சகல அழிவுகளுக்கும் அவர்தான்காரணம். மூப்பனார் சபை. ஏகாதிபத்திய வெறி கொண்டவர்களின் அரசியல் இருப்பையும் அவர்களின் எதிர்காலத்தையும் காப்பாற்றுவதற்காகவே இச்சபை உருவாக்கப்பட்டது.
இச்சபை உலகப் பெரும் மூப்பனார்தான் இயக்குகின்றார். பாம்பு பயத்தில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களைக் கடிப்பது போல். உலகப் பெரும் மூப்பனாரும் தனது ஏகாதிபத்தியப் போக்கிற்கு ᏕᏯᏕ8 எதிராக யாரும் வந்துவிடலாம் என்ற பயத்தில் உயிர் களைக் கடிக்கின்றார்.
.உலகத்தில் எந்த நாட்டிலும் புரட்சிகர அமைப்புகள் தோன்றுவதையோ, உலகத்தில் எந்த

Page 9
நாடும் பொருளாதாரத்தில் வளர்வதையோ. அவர்
அனுமதிக்கமாட்டார்.
இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மே மாதத்தின் இறுதிப்பகுதியில் இலங்கையின் வடபுலத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் நடந்த மனிதப் பேரழிவு தான் இப்போது லிபியாவில் நடக்கின்றது.
இலங்கையில் இயற்கையான மூலவளங்கள் எதுவுமில்லை, ஆனால், இலங்கையில் வலிமையான தோர் வாலிபர் அமைப்பு இருந்தது. இலங்கை அரசுக்குப் பின்னால் நின்று அந்த வாலிபர் அமைப்பை அழித்தனர். அதன்பின். இலங்கை அரசிடம் இலேசாக அமைந்துள்ள அரசியல் திமிர்க் குணத்தை அவதானித்த உலகப் பெரும் மூ ப் பனார் . இலங் கை அரசை அச்சுறுத்துவதற்காக, முள்ளிவாய்க் காலில் படுகொலை செய்யப்பட்ட பொது மக்களின், உயிர்களை "மூப்பனார் சபை மூலம் பட்டியல் படுத்துகின்றார். இதுவும் ஒரு அரசியல் சாணக்கியம்.
லிபியாவின் புரட்சிகரமான வாலிபர் அமைப்
போடு இயற்கையான எண்ணை வளங்களும் உண்டு, அத்தோடு லிபியாத் தலைவரிடம் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வும் உண்டு.
உலகப் பெரும் மூப்பனாருக்குப் பிடிக்காத மூன்று முக்கிய விடயங்களும் லிபிய நாட்டில் அமைந் திருந்தது.
இந்த நாட்டை அழித்துவிட நீண்டகாலம் எதிர்பார்த்திருந்த உலகப் பெரும் மூப்பனாருக்கு பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் காலம் வந்தது. கைக்குள் "மூப்பனார் சபை தயாராக இருந்தது.
பொதுமக்களைக் காப்பாற்றப் போகிறோம்" என்ற தர்மத்துப்பட்டாவுடன் மூப்பனார் சபையைத் தூண்டி விட்டார். லிபியாவில் மூப்பனார் சபை பொது மக்களின் இரத்தங்களைக் குடித்துக் கொண்டிருக் கின்றது.
. இலங்கையிலும் சுரண்டக் கூடிய ஏதாவது இயற்கை மூலவளங்கள் இருந்திருந்தால் இலங்கையும் அழிக்கப்பட்டிருக்கும். பரமபிதா நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டு மெளனமாக நிற்கின்றார்.
அங்கு குழுமி நின்ற உயிர்கள் மத்தியில் பேரமைதி.
".பிதாவே. சுவர்க்க இராட்சியத்தின்
வாசலோடு நின்ற நான் தாழ்மையுடன் அழைக்கின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றேன். பரமபிதா திரும்பி என்னைப் பார்க்கின்றார்.
". நீ. இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டுமே மாதத்தின் இறுதிப்பகுதியில் இலங்கையின் வடபுலத்தில் உள்ள முள்ளிவாய்க்காலிலிருந்து வந்தவன் தானே என்னை இனங்கண்டு கொண்ட பரமபிதா இப்படிக் கேட்கிறார்.
"ஆமாம் பிதாவே. நான் அவரது கேள்வியை 雛 ஆமோதிக்கின்றேன்.
"உனக்கு என்ன வேண்டும்." பரமபிதா
கேட்கின்றார்.
"பரலோக இராட்சியம் பூலோகத்திலும் மலர வேண்டும். அது தான் என் ஆசை. அருள்வீர்களா.." எனது கண்களில் கண்ணிர் பனித்து. வார்த்தைகள் குழைகின்றன.
முள்ளிவாய்க்காலில். குண்டுக்குள் சிக்கி. குற்றுயிராய்க்கிடந்த எனது இரண்டு வயது மகனின் 8 குரல்வளையை ஈரமாக்க ஒரு சொட்டுத்தண்ணிரின்றி.
தண்ணீர் பிச்சை எடுத்த அந்த நினைவுகள் சிரட்டைத்
தணலாய் எனது மனத்தை அவிக்கின்றது.
.நான்குரல் வைத்து அழுகிறேன்.
"பரலோக இராட்சியம் பூலோகத்திலும் மலர வேண்டும்" நான் மீண்டும் யாகிக்கின்றேன்.
விரிந்த, பனையோலைக் குருத்துப்போல் தனது வலது கை விரல்களை விரித்து. இலேசாக அசைத்து. தனது எண்ணத்தை வெளிப்படுத்திய
பரமபிதா அங்கிருந்து செல்கிறார்!

Page 10
அறிமுகம்
நாடகமும் அர
ஆகும். யாழ்ப்பாணத்தி & U603 UT, (86).T355T567, கவிஞர் கந்தவனம் VM.குகராசா, சோ.தேவ குழந்தை ம.சண்முகலிங் நெறியாளரான தாசீசி கலையரசு சொர்ணலிா - ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் நாடக அர மகுட வாசகத்தை அடிப் நோக்கங்கள் 1) நாடகத்தைக் கல்விமு 2) நாடகத்திற்கு முறை
தயாரித்தல், 3) மேலைத்தேச, கீன நாடகங்களைத் தயா நாடக அரங் செயலாளராக குழந்தை ஜெனமும் ஆரம்பகால லோகநாதன், தாசீசிய தேவராசா, ATபொன் அன்ரன் பொன்ராஜ், மெ6
தோற்றப் பின்னணி
நாடக அரங்க மாயின் 1976ஆம் ஆன அரங்கியல் டிப்பிளோமா கலந்து கொண்டபோது அ நாடகத் தயாரிப்புக்கள் இனங்கண்டு நாடகப் பயி நா. சுந்தரலிங்கம், கான சிவானந்தன், குறமகள் அ சண்முகலிங்கத்தின் முழு பாட்டை முன்னெடுத்தது
 

அரங்கக் கல்லூரியின் கச் செயற்பாடுகள்
ங்கியலும் என்னும் துறையினைக் கற்கை நெறியாக
ம், காத்திரமான நாடக உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ானும் நோக்கில் நிறுவப்பட்டதே நாடக அரங்கக்கல்லூரி ன் பழைய தலைமுறை நடிகர்களான செல்வரட்ணம், பிரான்சிஸ் ஜெனம், ATபொன்னுத் துரை, பேர்மினஸ் போன்றவர்களையும் புதிய தலைமுறையினரான ராசா, உருத்திரேஸ்வரன் போன்றோரையும் இணைத்து கம் அவர்களின் முழு முயற்சியின் காரணமாக நவீன பஸின் துணையுடன் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் ங்கம் அவர்களால் 23-01-1978இல் வைபவரீதியாக
து.
ங்கக் கல்லூரி "எமக்காக ஒரு நாடகம் செய்வோம்" ன்ன்ற 8 படையாகக் கொண்டு இயங்குகின்றது. இக்கல்லூரியின்
றையாக்கல்.
பான பயிற்சிகளை வழங்கி சுய ஆக்க நாடகங்களைத்
ழத்தேச நாடக வரலாற்றை நன்கறிந்து தரமான ரித்தல், என்பனவாகும். கக் கல்லூரியின் தலைவராக க.செல்வரட்ணமும், ம.சண்முகலிங்கம் நிதிப் பொறுப்பாளராக, பிரான்சிஸ் உறுப்பினர்களாக சிசுநாகேந்திரா, S.T.அரசு, T.S. ஸ், உருத்திரேஸ்வரன், கோவிந்தசாமி, பேர்மினஸ், னுத்துரை, செ. சுந்தரலிங்கம், L.M.றேமன், தயாளன் ானகுரு ஆகியோரும் செயற்பட்டனர்.
க் கல்லூரியின் தோற்றம், பின்னணியை நோக்குவோ ர்டு ஆசிரியர்களுக்கு என ஒழுங்குபடுத்தப்பட்ட நாடக கற்கைநெறியில் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள்
Hங்கு நடத்தப் பட்டகளப்பயிற்சிகள், பயிற்சிப் பட்டறைகள், மூலம் நாடகத்தை சாதனைக்குரியதாக்கலாம் என்பத்ை ற்சிநெறியினைப் பூர்த்தி செய்தவர்களான அ. தாசீசியஸ்
0ரசுந்தரம்பிள்ளை, கவிஞர் கந்தவனம், திருட்செல்வம்,
ஆகியவர்களை வளவாளர்களாகக் கொண்டு குழந்தை ம ழமுயற்சியால் நாடக அரங்கக் கல்லூரி தனது செய
ஆரம்பத்தில் அங்கத்தவர்களாக 150 பேர் வரையில்

Page 11
இணைந்து கொண்டனர். சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மேற்படி வளவாளர்களால் களப்பயிற்சிகளும், அதனூடாக நாடகங்களும் தயாரிக்கப்பட்டன. நாடகங்களைப் பார்ப் பதற்காக நிரந்தரமாக ரசிகர் அவை உருவாக்கப் பட்டு பருவச்சீட்டு அடிப்படையில் வருடத்தில் 2 சீசன்கள் நாடகங்கள் அளிக்கை செய்யப்பட்டன.
அரங்கச் செயற்பாடுகள்
நல்ல நாடகத்தை தயாரித்தல் என்ற
அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக 1978, 1979, 1980, 1981 காலப்பகுதியில் சனி, ஞாயிறு தினங்களில் காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கம், கோண்டாவில் இராமகிருஸ்ண வித்தியாலயம், பெரிய புலம் மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் தாசீசியஸ் தொடர்ச்சியாக 4 வருடங்கள் வாரத்தில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து வருகைதந்து பயிற்சிகளை ஏனைய வளவாளர்களுடன் இணைந்து வழங்கினார். ஆடல், பாடல், ஒலி, ஒளியைப் பயன்படுத் தல், ஒப்பனை, நாடக நிர்வாகம், உலக நாடக வரலாறு, நாடகத்தயாரிப்பு, நெறியாள்கை முறைமை, நாடகப் பயிற்சிக்கான உடற்பயிற்சி, குரல் பயிற்சி, மூச்சுப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, உளப் பயிற்சி, கற்பனைத்திறன், ஆக்கத்திறன், கருத்தூண்டலுக்கான பயிற்சி என அரங்கு சார் முழுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டு அப்பயிற்சிப் பட்டறை ஊடாகப் பல தரமான நாடகங்கள் வீரசிங்கம் மண்டபத்தில் ரசிகர் அவைகூடாகத் தயாரிக்கப்பட்டன.
திகதி நாடக ஆசிரியரும், நாடகமும் 20-03-1979 மஹாகவியின் கோடை
25-03-1979 அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை
05-05-1979 ஏ.ஆகுகராஜாவின் விளக்கும் விரல்களும்
26-08-1979 அதாசீசியஸின் பொறுத்தது போதும்
21-09-1979 குழந்தையின் கூடி விளையாடு பாப்பா
23-12-1979 ஆனந்தராஜாவின் இருட்டினிற் குருட்டு ஆட்ட 25-05-1980 குழந்தையின் உறவுகள் 02-08-1980 VMகுகராஜாவின் அவள் ஏன் கலங்குகிறாள
15-11-1980 சி.மெளனகுருவின் சங்காரம் 21-03-1981 மஹாகவியின் புதியதொரு வீடு 25-07-1981 சுந்தரலிங்கத்தின் அபசுரம் 26-03-1982 | ஞானியின் குருசேஷ்த்திரோபதேசம்
மேற்படி நாடக ஆற்றுகைகள், ரசிகர் அவைக்கு மட்டுமன்றி வேறு இடங்களிலும் ஆற்றுகை செய்யப்
ஜீவநதி -
 
 

பட்டன. இந்த வகையில் கொழும்பு புதிய கதிரேசன்
மண்டபம், காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி, குரும்பசிட்டி மார்க்க சபை, யாழ்.மத்திய கல்லூரி, யாழ்.இந்துக் கல்லூரி, பொஸ்கோ, யாழ்.சென் ஜோன்ஸ், கொழும்பு சரஸ்வதி மண்டபம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கேட்போர் கூடம், கொழும்பு ஜோன் டீ சில்வா அரங்கு, இளவாலை, அளவெட்டி, நயினாதீவு, பருத்தித்துறை, நெல்லியுடி, முள்ளியவளை, அரியாலை, முல்லைத்தீவு, மட்டுவில், கிளிநொச்சி, பம்பலப்பிட்டி, தெல்லிப்பளை, நல்லூர், குரும்பசிட்டி, பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ரன் கல்லூரி, யாழ்திறந்த வெளி அரங்கு, யூனியன் கல்லூரி, யாழ்றிம்மர் மண்டபம், யாழ்.பல்கலைக்கழகம், கொழும்புரவர் மண்டபம், யாழ். மாநகரசபை மண்டபம், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி போன்ற இடங்களில் மேடை ஏற்றப்பட்டன.
நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பு நாட கங்கள் பலதரப்பட்டவையாக காணப்பட்டன. மஹாகவி
யின் கோடை குழந்தை ம.சண்முக நெறியாளர் லிங்கத்தின் உறவுகள், VMகுக V.M.g55JT82T ராஜாவின் விளக்கும் விரல்களும், அதாசீசியஸ் அவள் ஏன்கலங்குகின்றாள் என்பன V.M.g55JITS2T நேர் நாடகங்களாகக் காணப்பட் அதாசீசியஸ் டன. இங்கு இயற்பண்பு நெறிக் அதாசீசியஸ் காட்சி அமைப்புக்களும் நடிப்பு L.M.(8 DITLD&T உரையாடல்களும் கையாளப்பட்
V.M.G585 UITSEBIT டன. புதியதொரு வீடு, காட்சி
ம.சண்முகலிங்கம் யமைப்பு, நடிப்பு முறைகளில்
சிமெளனகுரு மோடிமையை உள்ளடக்கியிருந் L.M.(BDITLD6t தது. அம்பலத்தாடிகளின் கந்தன் சிமெளனகுரு கருணையும், மெளனகுருவின் சிமெளனகுரு
சங்காரமும் கூத்து முறையில்
அமைந்த நவீன அரங்கியல் நெறிமுறைகளுக்கமைய மேடை நுணுக்கங்களுடன் தயாரிக்கப்பட்ட நவீன நாடகங்களாகும். குழந்தை
9 இதழ் 32

Page 12
ம.சண்முகலிங்கத்தின் கூடி விளையாடு பாப்பா நாடகம் சிறுவர் நாடக காட்சி நெறிமுறைக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டது. நா.சுந்தரலிங்கத்தின் அபசுரத்தில் அபத்த நாடகக் காட்சி, நடிப்புக்கள் கையாளப்பட்டன. தாசீசியஸின் பொறுத்தது போதும் மேலைத்தேய நாடக முறை, பிரெக்ற்றின் காவிய நாடக முறை அகியவற்றுக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட நாடகமாகும். இவ்வாறு பல தரப்பட்ட நாடக வடிவங்களை உள்ளடக்கிய சுய ஆக்கத் தயாரிப்புக்களை நாடக அரங்கக் கல்லூரி ரசிகர்கட்கு வழங்கியது.
மேலும் நாடக அரங்கக்கல்லூரிக்கு வெளியிலே நாடகத்தில் ஈடுபடும் ஆய்வு மனப்பாங்குகொண்டோரை அழைத்துக் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகளை நடாத்தியது. ரசிகர் அவை உருவாக்கப்பட்டு நாடகங்கள் தயாரிக்கப்பட்டமையினால் தாசீசியஸ், மெளனகுரு, சண்முகலிங்கம், S.T.அரசு, பிரான்சிஸ் ஜெனம் போன்ற நெறியாளர்களும் புதிய நெறியாளர்களாக VMகுகராஜா, றோமன், சிதம்பரநாதன் போன்றோர் நாடகத்தை வளர்க்க இனங்காணப்பட்டனர். பேர்மிஸஸ், பிரான்சிஸ் ஜெனம், லோக நாதன், உருத்திரேஸ்வரன் போன்றோர் சிறந்த நடிகர்களாக இனங்காணப்பட்டனர்.
நாடக அரங்கக் கல்லூரியினர்களுக்கு நாடகப் பயிற்சிப் பட்டறைகள், தயாரிப்புக்கு அப்பால் 19811982 காலப்பகுதியில் அரங்கம் என்னும் பெயரில் நாடகச்சஞ்சிகையை மஹாகவியின் "வேண்டியவாறு வேண்டிய விளைக்கும் வேட்கையில் வீறுடன் முயல் வோம்” எனும் கூற்றினை தாரக மந்திரமாகக் கொண்டு குழந்தை ம.சண்முகலிங்கத்தின் வழிகாட்டலில் V.M. குகராஜாவை ஆசிரியராகக் கொண்டு நாடக அரங்கக் கல்லூரியின் அரங்கச் செயற்பாடுகள், நாடகத் தயாரிப்புக்கள், அக்காலத்தில் மேடையிட்ட நாடகத்தின் விமர்சனங்கள், அரங்கியல் செய்திகள், நாடகம்சார் கட்டுரைகள், கருத்தாடல்கள், நாடகக் கலைஞர்களின் போட்டிகள், நாடகக் கலைஞர்களை அறிமுகப்படுத்தல் போன்ற அரங்கியல் சார் அம்சங்களை உள்ளடக்கிய ஈழத்து தமிழர் மத்தியில் வெளிவந்த முதலாவது அரங்கியலுக்கான சஞ்சிகை என்ற பெருமையுடன் 5 பிரதிகள் வெளிவந்தன. பின் நிதிநிலைமை காரணமாக இச்செயற்பாடு முடங்கிவிட்டது. இது அரங்கக் கலைக் ஏற்பட்ட துரதிஸ்டம் எனலாம். நாடக அரங்கக் கல்லூரி யின் தயாரிப்பாக அ.தாசீசியஸ் எழுதி நெறிப்படுத்திய பொறுத்தது போதும் என்ற நாடகம் யாழ்ப்பாணத்துக் கூத்துமுறைகளை கையாண்டு தமிழ் மக்களுக்கான ஒரு தேசிய நாடக வடிவத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டன. இந்நாடகம் கொடுமைப்படுத்தும் சம்மாட்டிக்கு எதிராகத்
ஜீவநதி -

திரண்டெழும் மீனவத் தொழிலாளர் பற்றியது. இந்த நாடகம் 1980ல் நடைபெற்ற இலங்கை கலைக்கழக நாடகப் போட்டியில் சிறந்த நெறியாள்கை, சிறந்த நடிப்பு, சிறந்த பிரதி இவற்றுக்கான பரிசிலைப் பெற்று 1வது இடத் தையும் தனதாக்கிக் கொண்டது. மெளனகுரு சங்காரத் தைக் கூத்தினடியாக நவீன மேடை நெறிகளுக்கு இயைய நாடக அரங்கக் கல்லூரிக்காக தயாரித்தார். ஈழத்தமிழ் நாடக உலகில் முதல் சிறுவர் நாடகமான குழந்தை ம.சண்முகலிங்கத்தால் எழுதப்பட்ட கூடி விளையாடு பாப்பா நாடகம்தாசீசியஸால் நெறிப்படுத்தப்பட்டது.
நாடக அரங்கக் கல்லூரியின் தாக்கத்தினால் பயின்றவர்கள் வெளியே நாடகங்களை நெறியாள்கை செய்தனர். இந்த வகையில் VM குகராஜா, சிதம்பர நாதன், உருத்திரேஸ்வரன், பிரான்சிஸ் ஜெனம், பேர்மினஸ், குழந்தை ம.சண்முகலிங்கம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். நாடக அரங்கக் கல்லூரியின் செயற்பாடுகளில் பிரச்சினை காரணமாக இடைவெளி காணப்பட்டது. அக்காலப்பகுதியில் குழந்தை ம.சண்முக லிங்கம், சி.மெளனகுரு போன்றோர் பாடசாலை நாடகங் களில் கவனம் செலுத்தினர். பிற்பட்ட காலங்களில் நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பான உயிர்த்த மனிதன் கூத்து நாடகம் வெளிந்தது. இந்நாடகம் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றைப் புடமிட்டுக்காட்டி அடக்கப்பட்ட தமிழ் மக்களின் உணர்வை விழிப்படையச் செய்கின்றது. ஐதீகக் கதை ஒன்றின் மூலம் பண்பாட்டு அம்சங்களை விஸ்தாரமாக அலசுகின்றது. பிற்பட்ட தயாரிப்பான எந்தையும் தாயும் நாடகம் முதியோர் பிரச்சினை பற்றியதாக அமைந்தது. வெளிநாட்டிற்குப் பிள்ளைகளை அனுப்பிவிட்டு தனிமையில் வாழும் முதியவர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் யதார்த்த நாடகமாகும். இவ்நாடகம் பரீட்சார்த்த முயற்சியாக நாச்சார் வீட்டில் போடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. பின் நீ செய்த நாடகமே, ஒரு பாவையின் வீடு, மனத்தவம் மேடையேற்றப்பட்டது. குழந்தையின் எழுத்துரு அரசையாவின் நெறியாள் கையில் 1997ல் பாஞ்சாலிசபதம் எனும் நாடகம் மேடையிடப்பட்டது. நாடக அரங்கக் கல்லூரி பிற்பட்ட காலத்தில் தனது பணியை கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என்ற ரீதியில் குறைத்துக் கொண்டது. இதற்கு அங்கத் தவர்களின் இணைவு இல்லாத் தன்ம்ை காரணமெனலாம். புதிய தலைமுறையினரான றெஜி னோல்ட், ஞான பாஸ்கரன் போன்றோர் மீண்டும் அரங்கக் கல்லூரியை புத்துயிர் பெறச் செய்வதற்காக சண்முகலிங்கத்தின் வழி காட்டலில் நாடக அரங்கக் கல்லூரிக்கான புதிய யாப்பு அமைத்தல், இலச்சினை
O இதழ் 32

Page 13
அமைத்தல், செயற்பாடுகளை விஸ்தரித்தல், நாடக அரங்கக் கல்லூரியின் 25ஆவது ஆண்டு நிறைவு தினத்தைக் கொண்டாடும் முகமாக இக்கல்லூரியின் பரீட்சார்த்த முயற்சியாக ஆர்கொலோ சதுரர் என்ற நாடகம் சாந்தினி சிவநேசன், தவநாதன் றொபேட் இ.முருகையன், குழந்தை ம.சண்முகலிங்கம் ஆகி யோரின் எழுத்துருவாக்கத்தில் சாந்தினி சிவநேச னின் நடனவாக்கம். நெறியாள்கையில் 2003ஆம் ஆண்டு மேடையிட்டுப் பலரது பாராட்டையும் பெற்று 9 ஆற்றுகைகளைக் கண்டது. இவ் ஆற்றுகையை ஆவணப் படுத்தும் நோக்கில் புத்தகமாக, ஒலி, ஒளி பதிவுகளாக நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பில் வெளியிடப் பட்டது. தற்போதும் தனது செயற்பாட்டினை பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் நடாத்துதல் என்ற ரீதியில் நடைமுறைப்படுத்துகின்றது.
நாடக அரங்கக் கல்லூரியின் ஸ்தாபகர், அங்கத்தவர்களின் பங்களிப்புக்களால் நாடகமும் அரங் கக்கல்லூரியும் இன்று கற்கை நெறியாக வளர்ந்துள்ளது. இந்த வகையில் நாடகம் கற்கை நெறியாக வளர, பயிற்
(STIG) (GSD
வேறெப்படியும் நடக்கலாம் முகம் முறிந்த உடைந்த சித்திரங்களாய் ஆவது எப்படி? இரவும் பகலும்
காலையும் மாலையும் அவள் வார்த்தைகளாய் சாலம் செய்கிறாள் நேருக்கு நேர் ஒரு முகம் போகவிட்டு ஒரு முகம் நண்பர் நண்பிகளுடன் இன்னொரு முகம் பெற்றோர் பிள்ளைகளுடன் மறுமுகம் இப்படித்தான் இருக்குமா இழவு வாழ்ககை நான் கனவில் கூட நினைக்கவில்லை மனிதனை உயிரோடு எரிக்க முடியுமென சில காலந்தானே முடிந்திருக்கிறது இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது முதலில் புன்னகைத்து பின்பு சிரித்து உணவு பரிமாறி சிற்றுாண்டியுடன் தேனிர் பருகி அடிக்கடி தனிமையில் பேசி மகிழ்ந்து தனிமையே சகிப்பு இல்லாத வெறுமைதான். இப்போதெல்லாம்
அப்படியல்ல
அடிவான இருளுக்குள்
ஜீவநதி
 

சிப்பட்டறைகள் ஊடாக தயாரிப்புக்களை உருவாக்க, யாழ்பல்கலைக் கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடநெறி நடைபெற, வட அலங்கைச் சங்கீத சபை, யாழ்.தேசியக்கல்வியியற் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் கற்பிக்க, மட்டக்களப்புப் பல்கலைக்கழகம், விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் நாடகம் கற்பிக்க, பல நெறியாளர், பல நாடக ஆசிரியர், நடிகர்கள், நாடகத்தயாரிப்புக்கள் உருவாக நாடக அரங்கக்கல்லூரி யின் ஸ்தாபகர் குழந்தை ம.சண்முகலிங்கம், பேராசிரி யர் சி.மெளனகுரு, தாசீசியஸ் ஏனைய நாடக அரங்கக் கல்லூரியின் அங்கத்தவர்களின் பங்களிப்பே காரண மெனலாம்.
ഗ്രഖങ്ങ]
இன்றைய தேவை யாதெனில் குற்றுயிராகக் கிடக்கும் நாடக அரங்கக் கல்லூரியினை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர உழைத்தலே நாடக அரங்கக் கல்லூரி ஸ்தாபகர் குழந்தை ம.சண்முகலிங்கத் திற்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
பிடும் வாழ்திகை
இரவின் இரகசியங்கள் கசியத்தொடங்க நீண்ட இடைவெளி அவளுக்குத் தனியாகவே எல்லாம் அவளின் முகம் தெரியவில்லை புன்னகையின் புலம்பல் * :-కొత్తాప్తి. இரவின் நடுக்கம்
N" سے بنے۔ کھتر سمہ ’’ கடலலையை கெளவிக் கொண்டு போனது வானம்
பூமியின் அச்சுக்கோடு மன்ங்களால் இடறுப்பட அவள் தெரியாத பெயர் அவள் உணரப்படாத பொய்வார்த்தை அந்தியில் முடிகிறது எனது கனாக்கடல் கண்ணிர் நிரம்பிய படகென.
- சத்தியமலரவன்
இதழ் 32

Page 14
மோகன் ஐயருக்கு மனம் அமைதியாக இல்லை. முற்றாக குழம்பித் தவிக்கிறது. மனதைக் கட்டுப்படுத்தி உறுதியான ஒரு முடிவுக்கு வருவதற்கு இயலவில்லை. எங்கு திரும்பினாலும் தேனீக்களாக இந்தச் சமூகம் அவன் மனதைக் கொட்டுகிறது. அதே சமயம் தேன்வதையில் இருந்து கொட்டிக் கொண்டிருக் கும் தித்திக்கும் தேனாக கடந்தகால நினைவுகளில்.
மனம் இன்பக் கிளர்ச்சியில் குதித்தோடியது. நீண்ட நாட்களாக அவன் எடுத்த முயற்சிக்குப் பலன் கிடைத்துவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக அவனுக்கு ஒரே நாயலைச்சல், சாந்தி எங்கு ரியூசன் போகிறாளோ அங்கெல்லாம் மோகனும் வந்து சேர்வான். சாந்தியின் நடமாட்டத்தை மணந்து பிடிச்சு அவளுக்குப் பின்னால் திரிவதில் அவனுக்கொரு அலாதி பிரியம். சில சமயங்களில் அவன் ஒரு பித்தனைப் போல் இனம்புரியாத வெறிபிடித்து அவளுக்குப் பின்னால் சுற்றித்திரிந்த நாட்களும் உண்டு.
இன்று மோகனின் கரங்களில் சாந்தியின் சம்மதக் கடிதம். அவன் திரும்பத் திரும்ப அதைப்படித்துப் பார்த்தான்.
"நீங்கள் என்னை விரும்புவதுபோல் நானும் உங்களை விரும்புகிறேன்" என்ற காதல் வரி அவனது கண்களில் ஓவியமாய் விரிந்தது. தான் ஒலிம்பிக் சாதனை நிலைநாட்டிவிட்டதாக எண்ணிக்குதூகலித்தான். மோகனுக்கு இனி என்ன வேலை அடுத்த கட்ட நகர்வைப்பற்றி அவன் உற்சாகமாகச் சிந்திக்கத் தொடங்கினான்.
சாந்தியை எங்கு தனிமையில் சந்திப்பது? என்ன என்ன பேசுவது? ஞாபகப் பரிசாக என்ன கொடுப்பது? அவளுக்காக வேறு என்ன தியாகங்களைச்
ஜீவநதி
 

வட அல்வை க.சின்னராஜன் தொலையும்
சத்தியங்கள்
செய்வது? மோகன் கற்பனைத் தேரினில் பறந்து கொண்டான்.
மோகன் பூர்வாங்க ஏற்பாடுகளை கனகச்சித மாக செய்து முடித்து சக மாணவி மூலம் செய்தி அனுப்பினான். எதிர்வரும் பெளர்ணமிக்கு மறுநாள் நடைபெறவுள்ள பூங்காவனத் திருவிழாவில் இருவரும் சந்திப்பதாக ஏற்பாடு,
உரிய நாள் வந்தது. இரவு முருகப் பெருமானுக்கு மணவாளக்கோலப் பெருவிழா, கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்க மக்கள் வெள்ளம் அலை மோதத் தொடங்கி விட்டது. இந்நிகழ்வானது இருவரின் சந்திப்புக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. தாழக்கிளை பரப்பி நின்ற ஓர் ஆலமரத்தின் கீழ் இருவரும் நெருங்கி வந்தனர். அவர்களின் இதயத்தில் ஒரு வகையான அதிர்வு. "சாந்தி" மோகன் அவளது கரத்தினை எட்டிப்பிடித்தான்.
"விடுங்கோ பயமாக் கிடக்கு" அவள் கையை உதறிவிட்டு சிறிது விலகி நின்றாள்.
"சாந்தி ஏன் பயப்படுகிறீர்? நான் இருக்கும் போது நீர் எதற்கும் பயப்படத் தேவையில்லை.
"இல்லை. இதை உங்கட ஆக்கள் கண்டால்" அவள் தயக்கத்துடன் சொன்னாள்.
"சும்மா விடும்! எங்கட ஆக்கள் பிராமணர் எண்டால் அதற்கென்ன! உமது அழகைப் பார்த்தால் நீர் தான் அசல் பிராமணப் பெண்மாதிரி.”
"சொல்லுறதுக்கு நல்லாத்தான் இருக்கு, உலகம் அதை ஏற்க வேண்டாமா?"
"சாந்தி எல்லாம் எனக்குத் தெரியும். நீர் ஒரு கட்டாடியின் மகள் எண்டு. வாழ்ந்தால் உம்மோடைதான் வாழ்வன். என் உயிர் இருக்கும் வரை உம்மைக் கைவிட மாட்டன்" மோகன் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினான்.
"சரி முருகன் சாட்சியாக நான் உங்களை நம்புறன். ஆனால் ஒண்டு. எந்தக்காலத்திலையும் எவர் சொல்லையும் கேட்டும் என்னைக் கைவிடக் கூடாது." அவளது கண்களில் நீர் பனித்தது. t
"சாந்தி உன்னை என்றைக்கும் கைவிட மாட்டன். கண்கலங்கவும் விடமாட்டன். இது சத்தியம்! என்னை நம்பு!”
சாந்தி மெளனமாக தலை அசைத்தாள். மோகன், கொண்டு வந்த அழகிய 'றோஸ் கலர் மணி மாலையை அவளிடம் கொடுத்தான். இருவரும் புன்முறு வல்களைப் பரிமாறிக் கொண்டனர். அதற்குமேல் இதழ் 32

Page 15
அவர்கள் எதுவும் பேசவில்லை.
"நான் வாறன் சாந்தி தன் இதயத்தை அந்த இடத்திலே தொலைத்துவிட்டு விரைந்து சென்று விட்டாள்.
நாட்கள் நகர்ந்தன, மடல்கள் பரிமாறின. கைத்தொலைபேசிகள் காதலை வளர்த்தன. ஒரு நாள் இருவரும் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். அவர்கள் உல்லாசப் பறவைகளாய் தேன் நிலவில்களித்தனர்.
சாந்தி மோகன் ஐயருடன் ஓடிவிட்டாள் என்ற செய்தி காட்டுத் தீபோல் ஊரெங்கும் பரவியது. சாந்தி அம்மா மனம் வெந்து புலம்பினாள். தந்தை மாணிக்கன் மனக் குழப்பத்தில் கலங்கிப்போனான். அவன் வீட்டிற்கு வெளியே போவதையும் சலவை செய்யச் செல்வதையும் நிறுத்திக் கொண்டான். தன் மகளின் எதிர்காலம் சூனிய மாய் மாறப் போகிறதேயென எண்ணி எண்ணி ஏக்கப் பெருமூச்சு விட்டான்.
“எதற்கெடுத்தாலும் ஆசாரமும் சாதியும் பார்க் கின்ற பிராமணனை எப்படி நம்பமுடியும்.? இளம் குமர்ப்பிள்ளையின் அழகில் மயங்கி கலியாணம் செய்கிறவன் எவ்வளவு காலத்துக்கு குடும்பமாய் இருக்கப் போறான்.? அதுக்கிடேல வாயில வயித்திலை வந்தால் என்ன நடக்குமோ..!"
மாணிக்கன் ஏக்கப் பெருமூச்சு விட்டான். சிந்தித்தான். அடுத்தநாள் காவல்த்துறைக்கு சென்று முறையிட்டு அழுதான். காவல்துறை அவர்கள் இருவரை யும் தேடி வலைவிரித்தது. ஒருநாள் இருவரும் தாங்களா கவே காவல்த்துறைக்குச் சென்று வெளிப்பட்டனர். விசாரணை சூடாக நடைபெற்றது. மோகனை மிரட்டிப் பார்த்தார்கள், அதட்டிப் பார்த்தார்கள், றிமான்ட் பண்ணப் போவதாக அச்சுறுத்தினர். ஆனால் எதற்கும் அவன் அசையவில்லை.
சாந்தியைக் கூப்பிட்டு தனியே விசாரணை செய்தனர். புத்திமதிகள் கூறி அவள் மனதை மாற்ற முயன்றனர். எதுவும் முடியவில்லை.
சிறிது நேரம் அமைதிக்குப்பின் பொலீஸ் அதிகாரி கேட்டார்,
"நீர் இனி என்ன சொல்லப் போரீர்" "நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் விரும்பித்தான் கல்யாணம் செய்து கொண்டோம், தயவு செய்து எங்களைப் பிரிக்காதையுங்கோ! எங்களை வாழ விடுங்கோ!" என்று இருவரும் கெஞ்சினார்கள். சாந்தியின் நெஞ்சு பொருமி கண்களில் நீர் பனித்துக் கொட்டியது.
"உமக்கு இப்ப எத்தனை வயது?" காவல்துறை பொறுப்பாளர் கேட்டார். "பத்தொன்பது" சாந்தியின் பெற்றோரும் வயது சரியென தயக் கத்துடன் தலையசைத்தனர். அதன்பிறகு காவல்த்துறை தன் விசாரணையைத் தொடர்வதில் ஆர்வம் காட்ட வில்லை. அவள் வயது வந்த பெண். இருவரிடமும்
ஜீவநதி -

வாக்கு மூலங்கள் பெறப்பட்டன.
"மோகன், இனி நீங்கள் போகலாம். ஆனால் ஒன்று ஒருபோதும் அவளைக் கைவிடக்கூடாது. சரியா புரிஞ்சுதா!" பொறுப்பாளர் கொஞ்சம் அதட்டலும் ஆலோ சனையுமாக கூறிமுடித்தார்.
"கடவுள் சாட்சியாக சாந்தியை நான் எண்டைக்கும் கைவிடமாட்டன்” என்று மோகன் சத்தியம் செய்தான். அதன் பின் இருவரும் கையெழுத்துப் போட்டு விட்டு சிட்டாகப் பறந்து சென்றனர்.
சாந்தியின் அம்மாவின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் சாரை சாரையாகக் கொட்டிக் கொண்டிருந் தது. மாணிக்கன் மனம் எரிந்து கருகிக் கொண்டிருந் தான்.
சாந்தி போனவள் தான். திரும்பி ஒரு நாளாவது தனது அம்மா, அப்பா நிலைமை எப்படி என்று பார்க்க வரவில்லை. மோகன் ஐயர் அதைத் திட்டமிட்டுத்தடுத்து விட்டார். அவளை ஐயர் வீட்டுக்குள் சேர்த்து விடமுடியாது என்பதும் தெரியும்.
மோகன் ஐயர் கோயிலுக்குப் பூசை பண்ண யார் அனுமதிப்பார்? இந்தச் சமூகத்தில் அவன் கீழ் மட்டத்துக்கு விழுந்துவிட்டான். சாந்தி மேலே உயர்ந்து போக முடியாது என்பதும் புரிந்து விட்டது. செய்வதற்குத் தொழில் இல்லை. வயிற்றுப்பாட்டுக்கே திண்டாட்டம், இறுதியில் சேலைக்கடை ஒன்றில் வேலை கிடைத்தது. அதுவும் நீண்டகாலம் நிலைக்கவில்லை.
"ஐயர் வடிவான குமரிகளைக் கண்டால் விழுங்கிப் போடுவார் போலக் கிடக்கு" என்று முதலாளி சொன்னாராம். அவர் ஐயரைத் தொடர்ந்து கடையில் வைத்திருப்பாரா?
"ஐயர் வெளுப்புக்குப் போகவில்லையே” ஒருவன் கேட்டான். அவன் காதில் விழுந்ததாக காட்டிக் கொள்ளவில்லை.
அவன் மனம் அவனைக்கேட்டது, "நான் செய்தது சரியா?. நான் செய்தது சரியா?."
முத்துப்போன்ற இரண்டு குழந்தைகளைப் பெற்று விட்டாள் சாந்தி குழந்தைகள் கட்டழகைக் குறைத்து விட்டார்கள். அவளது அழகும் வனப்பும் குறைந்துவிட்டது. அவள் இப்பொழுது அவனுக்கு ஆகசம், அவனுக்கு மோகம் தணிந்து விட்டது.
"இனிமேல்தான் நான் அசல் பிராமணனாக வாழப் போறன். இதுவரை அவளோடு குடும்பம் நடத்திய பாவத்துக்குப் பிராயச்சித்தம் செய்யப் போறன். அந்தத் தூமைச் சாதியோடு இனிமேலும் வாழ முடியாது." அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டான். அவன் மனக்குழப்பம் தீர்ந்து போய் விட்டது. அவளுக்குச் சொல்லாமல் கொள் ளாமல் கொழும்புக்குப் புறப்படுகின்றான். கடல் கடந்து பறந்து போகப்போகின்றான், எங்கிருந்தாலும் சாதி வளர்க்கும் நண்பர்கள் அவனை அழைக்கின்றார்கள்.
அங்கை கிடைக்கப் போகும் வெள்ளைத் தோலில் சாதியா இருக்கப் போகிறது?.
இதழ் 32
B

Page 16
1974இல் அவரை நான் முதன் முதலாக ந்தித்தேன். அப்போது எனக்குப் பதினெட்டு வயது. காலரதம் ன்றொரு சிற்றிதழை நடத்திக் கொண்டிருந்தேன். நான் முதன் முதலாக எழுதிய "அந்தப் பார்வை அப்படித்தான் இருக்கும்" என்ற சிறுகதை அதில் வெளியாகியிருந்தது. அந்தக் காலத்தில் கல்முனையில் எந்த எழுத்தாளர்களு டனும் நான் பெரிய தொடர்பு கொண்டதில்லை. அவர்கள் டத்தும் இலக்கியக் கூட்டங்களில், பின் வரிசைப் ார்வையாளர்களில் நானும் ஒருவன். அவ்வளவுதான்.
மேலே குறிப்பிட்ட இந்தக் கதை வெளிவந்த ஒரிரு வாரங்களில் நீண்ட உறையுடன் ஒரு கடிதம் எனக்கு வந்திருந்தது. கதையைப் பற்றிய பாராட்டுக் குறிப்புகளுடன் அந்தக் கடிதத்தை சசி அவர்கள் எனக்கு அனுப்பி வைத் திருந்தார். சசியை ஊரிலுள்ள எல்லோரும் அழைப்பது பால "ஸ்டீபன் சேர்" என்ற பெயராலேயே நான் அப்போது அறிந்து வைத்திருந்தேன்.
அந்தக் கடிதம் தந்த உற்சாகத்தில் அவருடைய வீட்டுக்கு ஒரு நாள் போனேன். அன்போடு என்னை வரவேற்று பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவருக்கும் எனக்கும் இடையே மிகவும் நெருக்கம் ஏற்பட்ட காலமாக 1975ஐத்தான் சொல்ல
வண்டும்.
சண்முகம் சிவலிங்கம் அவர்கள் தன்னுடைய ல்விமாணிப் பட்டப் படிப்புக்காகவும், பாடநூல் ஆக்க பையின் உறுப்பினர் கடமைக்காகவும் கொழும்பில் ங்கியிருந்தார். நானோ ஒழுங்கான வேலை வெட்டி ல்லாமல், வீட்டிலிருந்து மாதாந்தம் வருகின்ற பணத்தை நம்பிக் கொண்டு கொழும்பில் என் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தேன். இந்த சூழல் எங்கள் இருவரையும் ஒரு புள்ளியில் இணைத்து வைத்து, ஒரே இடத்தில் குடியிருக்கும் சந்தர்ப்பத்தையும் ஆக்கித்தந்தது.
நாங்கள் இருந்த வீடு 602/3, ஹெவ்லொக் ரோடு, கொழும்பு ஆறில் இருந்தது. அந்த வீட்டின் மேல் மாடியில் அமைந்த எங்கள் அறையிலிருந்து வெளியே பார்க்கையில் நேரெதிரே அந்த மாநகரத்தின் அழகு 犯 முகத்துக்கு ஒரு கோணல் வாய் போல புல்லும், புத்தரும் நிறைந்த வளவொன்று தென்படும். அந்த வளவில் சிதிலமடைந்த ஒரு கட்டிடம், அருகிலிருந்த வீதி மிகவும் ஒடுக்கமானது. எதிரும், புதிருமாக வரும் வாகனங்கள் முன்னேற முடியாமல் பல தடவைகள் திணறிக் கொண்டு, ஹோர்ன் அடித்தபடிநிற்பதைப் பார்த்தபடி இருப்பேன்.
கொழும்பு, ஹெவ்லொக் ரோட் 602/3 இலக்க ல்லத்தையும், சசியையும் நினைக்கும்போது இன்னொரு ஞாபகமும் இப்போது வருகின்றது.
எங்கள் வீட்டின் சொந்தக்காரி அதே வளவில் புறம்பானதொரு ஆடம்பரமான வீட்டில் குடியிருந்தா, இடையிடையே நரையோடிய அவவின் நீண்ட கூந்தல் முழங்காலைத் தொட்டுக் கொண்டிருக்கும். எலுமிச்சம்பழ நிறமும், கனிவான தோற்றமும் கொண்ட பெண்மணி அவர். மாதாந்தம் நாங்கள் கொடுக்கும் 600/=
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S0 TOT QITJ35 JT82GUI --حی
ல வனத்தின் குரல்
லிங்கம் எண்றொரு கவிஞன்
வாடகைப் பணத்தைப் பெறும் போது அந்தக் கனிவு, கொல்லன் பட்டறை துருத்தி தூண்டிய தீபோல மேலும் சுடர் விட்டுப் பிரகாசிப்பது தனி அழகு. நானும், சசியும் அவவுக்கு சூட்டிய செல்லப் பெயர்"சீமாட்டி".
எனக்கும், சீமாட்டிக்கும் இடையே தீர்க்க முடியாத ஒரு பிரச்சினை இருந்தது. சீமாட்டி புதைத்து வைத்திருந்த மிதிவெடியில் பாதம் பதியாமல் ஒவ்வொரு நாளும் தப்புவது என்னைப் பொறுத்த வரையில் அவ்வளவு லேசான காரியமாக இருக்கவில்லை. மிதிவெடியின் பெயர் நுனிநாக்கு ஆங்கிலம்,
அறையிலிருக்கும் எங்களுக்கு வரும் கடிதங்கள் எல்லாவற்றையும் காலையில் தபால்காரன் சீமாட்டியிடம் கொடுத்து விட்டுப் போய் விடுவான். அவற்றை விசாரித்துப் பெற வேண்டிய வேலையை சசி என்னிடம் ஒப்படைத்திருந் தார். சீமாட்டியிடம் போவதென்றால் எனக்கு உள்ளூ ரக் கொஞ்சம் காய்ச்சல் அடித்துக் கொண்டிருக்கும். கார ணம் தன்னுடைய ஆங்கிலத்தைப் பரிசோதித்துப் பார்க்கும் ஆய்வுகூட எலி போல சீமாட்டியின் பார்வையில் நான் ஆகி இருந்தேன்.
கடிதம் வந்திருக்கிறதா என்பதை ஆங்கிலத்தில் எப்படி விசாரிப்பது என சசி எனக்கு சொல்லித் தருவார். 36.5 G8IIgb65555 "Is there any letterforme?" GT6TD வாசகத்தை மனனம் செய்தபடி, அறுபடப் போகும் ஆடு போல 25 படிகள் கீழே இறங்கி சீமாட்டியிடம் செல்வேன். சில வேளைகளில் 13வது படியால் இறங்கும் போது அந்த ஆங்கில வாக்கியத்தை மறந்து போய்த் திரும்பவும் அவரி டம் கேட்டு ஊர்ஜிதம் செய்வதற்காக திரும்பவும் மூச்சி ரைக்க படிகளில் ஏறுவேன். அப்போதெல்லாம் சசி என்னை ஒரு நமுட்டுச் சிரிப்போடு பார்த்துக் கொண்டிருப்பார். பதிலுக்கு இரவு வேளைகளில் கண்ணதாசன் திரைப்படப் பாடல்களை என் சொந்தக் குரலில் பாடி அவரை நானும் பழி தீர்த்ததுண்டு
ஆனால் இந்தத் தலைநகர வாழ்க்கை தான் எனக்குப் பல சாளரங்களையும், வாசல்களையும் திறந்து விட்டது. நான்கு உயரமான மதில்களுக்குள் லேடீஸ் ஹொஸ்டல் போன்ற வீடொன்றில், வெளியார் தொடர் பின்றி ஊரில் வாழ்ந்து பழகிய எனக்கு வெளியுலகத்தின் காற்றுமுகத்தில் வந்து மோதிய காலம் அது. சசி அவர்களின் தூண்டுதலால் தான் நவீன நாடகங்களுடனும், சிறந்த திரைப்படங்களுடனும் அந்தக் கால கட்டத்தில் எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது. லும்பினி, லயனல்வென்ட் அரங்கு களுக்கு என்னை அவர் அழைத்துச் சென்றிருக்கிறார். சுந்தரலிங்கம், தாசீசியஸ், பாலேந்திரா போன்றோர் தீவிர மாக தமிழ் நாடகத் துறையில் இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. பணப் பற்றாக்குறையுடன் தள்ளாடிக் கொண்டிருந்தாலும், சத்தியஜித் ரேயின் மீது இருந்த தீராக் காதலால் ரூபா 500/= கொடுத்து அவருடைய பதேர் பஞ்சலியைப் பார்க்க சவோய் தியேட்டருக்கு அவரும், நானும் சென்றிருக்கின்றோம். இப்படி சசி அவர்கள் என் ரசனையில் ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்.

Page 17
எங்களது அறை அந்த நாட்களில் இலக்கிய நண்பர்களால் நிரம்பி வழியும், திருவாளர்கள் நுஹற்மான், மெளனகுரு, சித்திரலேகா மெளனகுரு, சாந்தன், இமைய வன், ஈழவாணன், தாசீசியஸ், சுந்தரலிங்கம், ஷண்முக ரெத்தினம். இப்படிப் பலர் சசியுடன் வந்து பேசிக் கொண்டி ருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் தேநீர் தயாரிக்கும் பணி என்னுடையது. என் கை விசேஷத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் எனக்கு "தேநீர்த் தென்றல்" என்றொரு பட்டத்தை மெளனகுரு அவர்கள் அப்போது வழங்கி இருந்தார்கள். யோசித்துப் பார்த்தால் பணம் கொடுத்து இன்று வாங்கிக் கொள்ளும் "டாக்டர், பேராசிரியர், சாமருநீ பட்டங்களை விட இந்தத் "தேநீர்த் தென்றல்" பட்டத்துக்கு இருக்கும் பெறுமதிக்கு நிகரேது?
அண்மைக் காலமாக கவிதைத் தொகுதிகளுக்கு அருகில் போவதென்றால் “மருந்து குடிக்கும் பிள்ளை போல்" நான் ஆகி விடுவேன். பெரிய பத்திரிகைகளில், வர்ண ஒவியங்களுடன் வாலி, வைரமுத்து, பா.விஜய், தாமரை, அறிவுமதி, நா.முத்துக்குமார் போன்றவர்கள் கவி தைகள் எழுதுகின்றனர். வார்த்தை அலங்காரம், சிலேடை துணுக்குகள், செய்தி விமர்சனங்கள், தனி மனிதப் புகழ்ச்சி, இகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இவர்களுடைய கவிதைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் தமிழ்ப் புலவர்கள், கவிராயர்கள், ஆஸ்தானக் கவிஞர்களின் வழித்தோன்றல்களாக தென்படுகின்றார்கள், வசீகரமான சொற்கள், வரிகள் மாத்திரம் ஒரு கவிதையை உருவாக்கி விட முடியும் என்பதில் இவர்கள் சாகும் வரை உறுதியாக இருப்பார்கள் என்றே தோன்றுகின்றது. இது ஒரு புறம்.
இன்னொரு புறம் சிற்றிதழ்களில் வெளியாகும் பல கவிதைகள் கொண்டிருக்கும் மிதமிஞ்சிய தன்னம் பிக்கைக்கு அளவே இல்லை என்பது மனதுடன் சம்பந்தப் பட்ட ஒரு விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தான் இன்றைக்கு அங்கே கவிதைகள் எழுதிக் கொண்டிருக் கிறார்கள். வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளைப் பிய்த்துக் கொண்டிருப்பது போல் கவிதைகளை இவ்வளவு கொடுர மாக சித்திரவதை செய்யும் காரணம் பற்றி மனோதத்துவ வைத்தியர்களால் தான் அறிந்து சொல்ல முடியும்.
ஒரு கவிதை எவ்விதம் கவிதை ஆகின்றது? வெறும் வரிகளுக்கும், கவிதைகளுக்கும் நடுவே உள்ள வேற்றுமைகள் என்ன? என்ற கேள்விகளை, கழிப்பறையில் கிடைக்கும் தனிமையான தருணங்களில் கூட பல கவிஞர் கள் தங்களை நோக்கிக் கேட்டதாகத் தெரியவில்லை.
அனுபவத்தின் சாரமற்ற எந்தக் கவிதையுமே உயிரற்ற ஓர் முண்டம் என்ற "பால பாடத்தைப்" பல கவிஞர்களும் அறிந்து வைத்திருப்பதாகத் தெரியவில்லை. தன் அனுபவத்தை "பிறருடைய அனுபவமாகவும் இருக்கலாம்" கலை நுட்பங்களுடன், மிகையற்ற, துருத்தாத மொழிப் பரிவர்த்தனையுடன் வாசக மனமொன்றில் பரவ விடும் போது, அது "மனக் குளத்தில் எறியப் பட்ட கல்லாகி நீர் வளையங்களை உருவாக்கி செல்லும் போது அந்தப் படைப்பின் நோக்கத்துக்கு ஓர் அர்த்தம் கிடைக்கின்றது". செங்கற்களைக் கொண்டு வீட்டைக் கட்டி எழுப்புவதைப் போல உயிரற்ற வெற்றுச் சொற்களால் ஒரு போதும் கவி தையைக் கட்டி எழுப்ப முடிவதில்லை. மனதைப் பிழிந்து வரும் சாறின் துளிகள் அவை. ஒரு கவிஞன் தன் வார்த் தைக்காக மீனவன் போல் தூண்டிலுடன் காத்திருக்கின்றான். வார்த்தைகளின் வரத்துக்காகத் தவமியற்றும் முனிவன். இந்தப் பயணத்தில் புத்தாண்டு, பொங்கல், தீபாவளிக் கவி ராயர்கள் வந்து சேரமாட்டார்கள். கலை நுட்பம் கைவரப் பெற்றவர்களைத் தான் நம் இலக்கிய வரலாறு கவிஞர்கள் எனக் கொண்டாடி இருக்கின்றது.
ஜீவநதி 15

அந்த வகையில்தான் சசி அவர்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றார். அதற்குரிய காரணம் அவருடைய பன்முக வாசிப்பு. ஏட்டு வடிவத்தில் அவர் பழந் தமிழ் இலக்கியம் பயின்றவர். அதே வேளை நவீன தமிழ் இலக்கிய வாசிப்பும் அவரிடம் இருக்கின்றது. எழுபது களிலேயே ஓர் அசோக மித்திரனின் கரைந்த நிழல்கள் பற்றி, நீல பத்மநாபனின் தலைமுறைகள் பற்றி, சிவராம காந்தின் "மண்ணும் மனிதர்களும்" பற்றி, க.நா.சு.வின் "பொய்த் தேவு” பற்றி இங்கே முதலில் அடையாளம் கண்டு, சிலாகித்துக் கூறக் கூடிய ஒருவராக அவர் இருந்தார். இவ்வளவு ஆண்டுகள் கழிந்தும் நான் இப்போது சொன்ன எழுத்தாளர்களை, அவர்களுடைய படைப் புகளை இன்றைய கல்விக் கூடங்களின் தமிழாசிரியர்களும், பல் கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் அறிந்து வைத்திருப்பார்களா என்றால் அது சந்தேகந்தான்.
அதே போல ஆங்கில இலக்கியத்தில் சசி அவர் கள் நல்ல பரிச்சயமுள்ளவர். மார்க்சிம் கோர்க்கி, அன்டன் செக்கோவ், டோல்ஸ்டோய், டோஸ்தவோஸ்கி , ஜேம்ஸ் ஜோய்ஸ் போன்ற எழுத்தாளர்களை மொழி பெயர்ப்பின் வாயிலாக அல்லாமல் ஆங்கிலத்திலேயே அவர் வாசித் திருக்கின்றார். அவருடைய கவிதையின் தனித்துவப் பாணிக்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட சிறப்பம்சங்களால் தான் அவருடைய கவிதைகள் தனித்துவம் மிக்கவையாக அமைகின்றன. சந்தம், சொல் விளையாட்டு போன்ற செய்யுள்களின் பாங்கு களைப், பண்புகளை உத்றித் தள்ளிய சசியின் பெரும் பாலான கவிதைகள் வேறொரு தளம் நோக்கி நகர்ந்தவை. உதிர்ந்து போன அந்தப் பண்புகளை அவருடைய கவிதைகளிலுள்ள மனக் காட்சிகள் ஈடுகட்டத் தொடங்கின.
அந்நாட்களில் அவருக்கு மிகவும் புகழ் சேர்த்த நீர் வளையங்கள் என்ற கவிதை இது. இன்று மிகத் துயர் உற்றேன் என் இனிய அன்பே, இவ் இரவின் நிலவொளியில் என்னுடன் நீஇருந்தால் வெண் பனியின் துளி சொட்டும் பூங்கொத்தைப் போன்று விம்முகின்ற என் நெஞ்சில் ஆறுதல்கள் தருவாய்,
"இன்று, இந்த மிகச் சிறிய சம்பவத்திற்காக இவ்விதமோதுயர் உறுதல்" என்று நினைப்பாயோ?" இன்றளவும் வாழ்ந்துள்ளேன். எனினும் எனதன்பே, எனது மனம் பூஞ் சிட்டின் மென்சிறகுத்தூவல். என் பாதம்
இடர்கல்லில் அழுந்தாத ரோஜா. என் நண்பர் மிக இனியர் சுடு சொல்லை அறியார் கண்ணீரின் துளி போல காலம் எனும் நதியில் கலப்பதற்கே உயிர் செய்த காதல் உரு ஆனார்.
போகட்டும் இன்று முதல் கசப்புகளை வாங்கிப் புசிக்கின்றேன். அதற்கென்ன!
என் மனதை என்றும் நோகாது வைத்திருக்க வேண்டுமென எண்ணினேன். நொந்தவர்தான் வாழ்க்கையிலே சாதனைகள் செய்தார். ஆதலினால்
என் மனத்தைக் கல்லாக்கிக் கொள்வேன்.
இதழ் 32

Page 18
அம்பு வரும்
அது முறியும் நான் நடந்து செல்வேன்.
ஏகமும் தாம் என்று எண்ணுபவர் மாள்வார் இப் பெரிய உலகினிலே எத்தனை பேர் உள்ளார் ஆகாய வீதியிலே என் நெஞ்சைக்கிள்ளி அத்தனையும் இட்டது போல் மின்னுகிற
வெள்ளிப் பூ ஆனந்தம்-அதைப் போல தினம் மேதை பூப்பார்
பூச்சிவந்த சேவல்
ஒருநாள் இரவு கூவும்.
என் இதயம் இப் பரந்த வான் முழுதும் ஆகி இருப்பதனை ஆர் அறிவார் என் இதய ஊற்றே?. என் எதிரில் தெரிகின்ற வான் முழுதும், இந்த இரவெல்லாம் ஒளிர்கின்ற கற்கண்டுத்தூளும் பொன்னிதயம் என்னுள்ளே நெடுஞ்ச சுரங்கமாகிப் பூக்கின்ற அழகைத்தான் ஆர்கண்டார் அன்பே?
விண்வெளியில் உதிர்ந்துள்ள இவ்வெள்ளிப் பூக்கள் மீது யான் அடிவைத்து நடக்கின்றபோதில் "என்ன இவன் அழகு" என்று இவர் வியந்து கொள்ளும் இனிய பொற்காலம் ஒன்று வந்திடுமோ. அல்லால்
இன்றிரவு
இதோ வெளியில் எம் கிணற்று வாழை இலைகளிலே நிலவினிலே
பனித்துளிகள் பட்டு
"இச்"
என்ற முத்தத்தின் ஒலியுடனே அவைகள் இழிந்து நிலம் சொட்டுவதைப் போல் மறைத்து போமோ.
அச் செயலும் எனக்கு மிக உவப்புளதே - ஆஹா அலை கடலும்
புவி முழுதும்
அருமை உயிர்ச்சிட்டும் சப்திக்கும் ஒருங்கமைந்த ஒசையில் என் குரலும் சங்கமிக்க என் இயல்பை நான் பாடுகின்றேன் இச்சை மிகு சுருதியினை இதனின்று வேறாய் எழுப்புகிற நரம்புகளை நாம் முறித்து வைப்போம் எச்சிறிய புல்லும் அதன் இயல்பினிலே முழுமை இடுகாட்டில் முளைக்கின்ற கழனியும் ஓர் அருமை !
அப்படியே நாம் ஆனோம்
அதோ இந்த நிலவில் அகன்ற இல்லை வாழையிலே பணி சொட்டும் கீதம் "இச்"
என்ற ஒலியுடனே எழுகிறது மீண்டும்: இனி என்ன போய்துயில்வேன், என் உயிரின் கண்ணே.
ஜீவநதி

இது சசியால் 1968 இல் எழுதப்பட்ட ஒரு கவிதை. தமிழில் வெளிவந்த தலை சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று.
இத்தகைய மன நெகிழ்ச்சியும், விம்மலும், அகக் காட்சிகளும் ததும்பும் கவிதை எல்லோருக்கும் கை வரும் ஒன்றல்ல. அதற்கு ஒரு கவிஞன் தன்னை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது.
சசியின் முந்திய கவிதைத் தொகுதியான "நீர் வளையங்கள் 1988இல் வெளியானது. அப்போதிருந்த உக்கிரமான அரசியல் சூழ்நிலையால் பலருடைய கைகளுக்கும் அது போய்ச் சேரவில்லை. சுமார் 23 வருடங்கள் கழிந்த நிலையில் அவருடைய அடுத்த தொகுதியான "சிதைந்து போன தேசமும், தூர்ந்து போன மனக் குகையும்" இப்போது வெளிவந்திருக்கின்றது.இரண்டு கவிதைத் தொகுதிகளையும் ஒப்பீடு செய்த என் நண்பர் ஒருவர் பிந்திய இந்தத் தொகுதி கட்டிறுக்கம் சற்றுக் குறைந்து காணப்படுவதாகவும், மிகவும் வெளிப்படையான தன்மையைக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.
ஆனால் அவருடைய கவிதைகளுடன் தொடர்ச்சி யான பயணம் மேற்கொள்ளும் ஒருவனுக்கு இக்கூற்றில் உடன்பாடு இருக்காது.அவருடைய கவிதைகளின் வெளிப் பாட்டு முறைகளில் வெவ்வேறு தன்மைகள் உண்டு. நேரடித் தன்மை, இருண்மை, அரூபம், சூசகம், விரித்து விபரித்தல் என்ற எந்த சிமிழுக்குள்ளும் அடக்க முடியாத கவிதைகள் இவை. எளிமையான தொனியில் சொல்லப்படும் கவிதை கள் எல்லாமே எளிய தரத்துக் கவிதைகள் என்றாகிவிட்ா.
உருது எழுத்தாளர் சதாத் ஹசன் மந்தோவின் சுருக்கமான எளிய சொற் சித்திரங்களைப் படித்திருப்ப வர்களுக்கு அதன் கலைத் தாக்கம் எத்தகைய ஆழம் மிக்கது என்பது புரிந்திருக்கும். ஹிந்து-முஸ்லீம் கலவரத்தின் போது நடந்த அபத்தங்களைக் கொடூரங்களை அவரளவுக்குப் பதிவு செய்த எழுத்தாளர்களை அந்த கால கட்டத்தில் காண முடியாதுள்ளது. கிட்டத் தட்ட அதைப் போன்ற இன்னொரு வகை அரசியல் கொடுரத்தினுள், அதிகார மையங்களுக்கிடையிலான போராட்ட காலத்துள் வாழ நேர்ந்த சசியின் கவிதைகள் மேலோட்டமான பார்வையில் அனுபவக் குறிப்புகளைப் போலவே தென் படும். ஆனால் உரத்த சத்தமற்ற, அலைகளற்ற கடலைப் போல எளிமையான தோற்றப்பாடு காட்டும் இவை தரும் துயரத்தின் ஆழத்துக்கு அளவேது?
நாம் கடந்து வந்த வரலாற்றின் பக்கங்களை இந்தத் தொகுதியின் பல கவிதைகளில் காணலாம். நம் மீது திணிக்கப்பட்ட ஒரு யுத்தம் காரணமாக நமது சிறுவர்கள் எல்லாம் வீடுகளைத் துறந்தோடிக் காடுகளை நாடிய ஒரு காலத்தை நாம் அங்கே காண்கின்றோம். அந்தக் கால மொன்றின் தந்தையின் துயரத்தைத் தரிசிக்கின்றோம். இந்தக் கவிதையைப் பாருங்கள். தலைப்பு:துப்பாக்கிக் குழந்தை
உன் தங்க மீன்கள் இன்னமும் கண்ணாடித் தொட்டியில் தக தகக்கின்றன.
உந்துதல் ஓடுதல்
ஒளித்தல் எனும்
எந்த நகர்வுமின்றி நீரின் மேலெழுந்து எங்கே நீஎனத் தேடுகின்றன எவர் அவர்க்கு உன் போல் தீனி இடுவர்?
இதழ் 32

Page 19
வெண் பஞ்சுத்துளிகள்-உன் முயல்கள் வெளியில் வந்து துள்ளித்துள்ளி முன் பாதங்கள் தூக்கி செங்கண் முகத்தைத் திருப்பித்திருப்பி எங்கே நீஎனத் தான் இன்னமும் தேடுவான் எவர் உன் போல் அடம்பன்தளிரை ஊட்டுவார் அவர்க்கு?
பப்பிதிரிகிறது நாலுகால் பாய்ச்சலில் எறிந்த பந்தை எடுத்து வந்து என்னிடம் தராதாம் உன்னையே தேடி ஓட்டமாய்த்திரிகிறது.
இத்தனையும் விட்டு எப்படி நீ துப்பாக்கியோடு வாழ்வைத் தொடர்கின்றாய்
இது ஒரு தந்தையின் பார்வையில் மிகவும் எளிமையான வடிவில் எழுதப் பட்ட ஒரு கவிதை, ஆனால் அது ஒருதனிமனிதனிடமிருந்துமட்டும்வருகின்ற பெருமூச்சா?
போர்க்களம் என்று இன்னொரு கவிதை. இதுவும் தந்தை நோக்கில் சொல்லப்படும் ஒரு கவிதை. (8UTC860T60T நான் உன் போர்க்களம் காண
விடிந்தும் விடியாததுமாக காதில் விழுந்தும், விழாததுமாக
எனக்கெதிரில் பல முகங்கள் மிகத்துயரில் விம்மலுடன்
முகங்கள் ஊடு
முகங்கள் ஊடு
பிடரிகள் ஊடு
பிடரிகள் ஊடு
அர்ச்சுனர் வீதியில் அரைத் தூரம். இதுதான் என்றார்கள் இடைவிடாது துப்பாக்கிக் காயங்கள் துளைத்த மதில் சுவருக்கும் கிளிசரியா மரங்களுக்கும் இடையில்,
நேருக்கு நேர்
நீஒருவன் தனியாக சுழன்று, சுழன்று தொடுத்த பானங்களின் அற்புதம் பற்றி அளந்தார்கள் அமைதிப் படை
சர்ப்பமாய் ஒளித்து சக்கரமாய் மாறிய அற்பத்தனம் பற்றியும் அளந்தார்கள்.
மதிலோரத்தின் மங்கிய மண்ணில் குவிந்து கிடந்தது உன் குருதி மெதுவாக அள்ளிமுத்தமிட்டு விரலிடை நெரித்தேன்
ஜீவநதி - 1
 

மீண்டும் முகங்கள் முகங்கள் முகங்கள் ஊடு சிவந்த சூரியனின் சிதறிய முகத்துண்டுகள் ஆயிரம் என் கண்ணில் : அடஎன் மகனே!
எளிமையின் அழகியல் என்று இந்த வெளிப பாட்டு முறையை நாம் கூறலாம். தேவையற்ற சோடனை களும், மிகையுணர்ச்சிகளும் இந்தக் கவிதையைப் பீடித் திருந்தால் கவிதை கொண்டிருக்கும் உட்பொருளின் உக்கிரம் இரண்டாம் பட்சமாகி இருக்கும். ஆனால் இந்தத் தொகுதியில் உள்ள சசியின் எல்லாக் கவிதைகளும் இந்த வெளிப்படையான, எளிமையான தன்மையைக் கொண்டி ருப்பதாகக் கூற முடியாது. உதாரணமாக அதே அதிகாரத் தில் காணப்படும்"வனத்தின் வரைபடம்” கவிதை,
சசி அவர்கள் என் மதிப்பில் உயர்ந்த இன்னொரு முக்கியமான தருணத்தை இங்கே குறிப்பிடுவது அவசியம் என்று நினைக்கின்றேன். 1975இல் முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாடு ஒன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் பின்னணியில் இடதுசாரி அரசியல் சார்புடைய எழுத்தா ளர்கள் இயங்கினார்கள். அங்கே அதிதிகளாக வருகை தந்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா, அமைச் சர்கள் குமாரசூரியர், டி.பி.இலங்கரத்தின ஆகியோருக்குத் தங்கள் திருமுகங்களைக் காட்டுவதில் ஏகப்பட்ட போட்டி, அந்த மாநாட்டின் இறுதிநாளன்று தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் ஒரு கவியரங்கு இடம் பெற்றது.
சசி அவர்களும் அங்கே கவிதை வாசித்தார். அவர் துணிச்சலுடன் அப்போது அங்கே கவிதை ரூபத்தில் முன்வைத்த கேள்வி இதுதான்.
"தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்து விட்டு பின்னர் தேசிய ஒருமைப்பாடு பற்றி பேசுங்கள். பிரச்சினை களைக் காண மறுத்து தீக்கோழிகளைப் போல மண்ணுக் குள் தலையை மறைக்காதீர்கள்"
இளந் தலைமுறையை சேர்ந்த பலரும் அப்போது அங்கே கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். என்னுடைய மனதில் ஒரு பெருமித உணர்வு அப்போது ஏற்பட்டது. ஒரு துணிச்சலான, மனசாட்சியுள்ள, விலை போகாத கவிஞர் ஒருவரின் சகபாடியாக அவருடன் நானும் இருக்கின்றேன் என்பதால் வந்த பெருமிதம் அது. சுமார் 35 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் இது.
ஓர் எழுத்தாளன் என்பவன் கூழைக் கும்பிடு போடாமல் கம்பீரத்துடனும், செருக்குடனும் எவ்வாறு இருக்க வேண்டும் என 35 வருடங்களுக்கு முன்பே கற்றுத் தந்தவர் அவர் எழுத்தும், வாழ்க்கையும் வெவ்வேறல்ல என்பதை சொல்லித் தந்தவர் அவர்.
அவருடைய கவிதையொன்றை இயக்குனர் மணிரத்தினம் தன்னுடைய "கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப் படத்தில் முறையான அனுமதி எதுவும் பெறாமல் பயன்படுத்தியிருந்தார். அவரும் நானும் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது "பாருங்கள் இந்த அயோக்கியத்தனத்தை" என்று என் இயல்புக்கேற்ப குமுறிக் கொண்டிருந்தேன். அவர் எதுவும் பேசாமல் சிரித்துக் கொண்டிருந்தார். 等
அண்மையில் பால பண்டிதர் ஒருவர் "சசி 80 களிலேயே தங்கி விட்டார். நவீன இலக்கியம் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது " என்று எழுதியிருப்பதை அவருக்குக் காட்டினேன். இந்தத் தடவை நான் குமுற வில்லை.
அவரும், நானும் சேர்ந்தே சிரித்தோம்.
7 இதழ் 32

Page 20

பிறந்திருந் திறந்து போனார் 1றிநின்றலைவதேனோபாய்ச்சலூர்க்கிராமத்தாரே
லங்குலம் என்பதெல்லாம் குடுமியும் பூணு நூலும்
கங்கொண்டதேகந்தன்னில் மற்றொரு சுத்தம்காணீர் கங்கண்டுபுறமும் கண்டும் அவனுக்கேதாரமானேன்
ரிலே மூழ்கிவந்து நெருப்பினில் நெய்யைவிட்டுக்
ர்வயல் தவளை போலக் கதறியே

Page 21

繆
《雨《命

Page 22


Page 23
இழப்பதும் ஒன்றாகக் கருதுகின்றவள். பாலியல் வல்லுறவு மிக வெறுக்கத்தக்க, குரூரமான மிருகச் செயல். பெண்களின் அநாதரவான நிலையும், சந்தர்ப்ப சூழ்நிலையும், ஆயுதபலமும் போர்க்காலத்தில் பாலியல் வல்லுறவுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றன. கொல்லுதல் போலிந்தக் கொடுமையை உலக நாடுகள் முழுவதிலுமுள்ள இராணுவம் தயக்கமின்றிப் புரிந்து கொண்டுதான் வருகின்றது.
இந்திய இராணுவம் இந்த மண்ணில் நிலை கொண்டிருந்த காலத்தில் பாலியல் வெறிபிடித்து அலைந்தது. தனது கறை படிந்த மிருகப் பற்களல் பெண்களை எங்கெல்லாம் சந்திக்கும் போது கடித்துப் பாலியற் கொலை புரிய முடியுமோ அங்கெல்லாம் குதறிப்போட்டது. வயது, இளமை, பருவம், உடல் நிலை என்பவை பற்றிய பாகுபாடு எதுவும் பார்க்காது பெண்ணாக இருந்தால் மாத்திரம் போதுமென எண்ணித் தனது பசிதீர்க்கப் பேயாக அலைந்தது, தமிழ் மக்களைப் பாதுகாக்க வந்த இராணுவம், யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் இந்த இராணுவம் செய்த குரூர மான ஒரு நிகழ்வு. உடல் பருத்து கொழு கொழு வென்றிருந்த, வயது முதிர்ந்த ஒரு பிராமணப்பாட்டி ஆதரவற்றவள், தனிமையில் வாழ்ந்து வந்தாள். இந்திய இராணுவத்தின் கண்ணில் அந்த முதியவள் வாய்ப்பாகச் சிக்கிக் கொண்டாள். பாலியல் வெறியுடன் அலைந்து கொண்டிருந்த இராணுவப் பிசாசுகள் அந்தக் கிழவியின் தசையைத் தின்று தங்கள் பசியைத் தீர்த்துக் கொண்டன. ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டிய எல்லாம் அந்த மூதாட்டியிடமும் இருப்பதாக, வெட்கமின்றி அந்த நாய்கள் பின்னர் சொல்லிக் கொண்டனவாம்.
கர்த்திகாயினியின், "அறுவடையாகாத விதைப்புகள்” சிறுகதையைப் படித்தவேளை அந்தப் பாட்டிக்கு நடந்த கொடுமை நினைவுக்கு வருகின்றது. இந்தத் தொகுதியிலுள்ள நான்கு சிறுகதைகள் இராணு வம் புரிந்த பாலியல் வல்லுறவுகளைப் பதிவு செய்திருக் கின்றன. பிராமணப் பாட்டிக்கு நடந்த கொடூரமான சம்பவம். வேறு பல சம்பவங்கள் என்பன இந்த மண்ணில் வாழ்ந்த பாட்டிகள் அனைவரையும் விழப்புடன் முன் னெச்சரிக்கையாக நடந்து கொள்ளத் தூண்டி இருக் கின்றது. அதனை கார்த்திகாயினி இவ்வாறு காட்சிப் படுத்துகின்றார்.
"விடியக் காத்தாலை மனுசி, உங்க எங்கே போட்டு வருகுது என்று எண்ணியவளாய் ஆச்சியைப்
பார்த்தபடி நின்றாள். ஆச்சி சாறி பிளவுஸ் போட்டு ஜீவநதி 墨

சீலையை பாவாடைக்கு மேல் சுற்றிக் கட்டுவா. அதை முந்தானையாகப் போட மாட்டா. ஆனால் எப்ப ஆமி இஞ்ச வந்து சேர்ந்துதோ, அன்றிலிருந்து படலையைத் தாண்டி னாவென்டால் சுத்தியிருக்கின்ற சீலையின் ஒரு பக்கத்தை அவிட்டு முந்தானை போட்டுடுவா. இப்பவும் அப்படித்தான் இருந்தா. பாட்டியின் இந்த மாற்றத்தை அறிந்தாலும் அது பற்றி அவள் ஆச்சியிடம் எதுவும் கேட்டதில்லை."
இந்தக்காட்சிக் கூடாகக் கதாசிரியர் சொல்லாத பல செய்திகளைச் சொல்லுகின்றார். ஒரு படைப்பினைப் படித்து முடித்த பின்னர், அந்தப் படைப்பு வெளிப்படை யாகச் சொல்லாத பல செய்திகளை வாசகர் உள்ளத்தில் எடுத்துச் சொல்ல வேண்டுமென விமர்சகர்கள் கூறுவார் கள். வாசகர் உள்ளத்தில் அப்படி எடுத்துச் செல்லும் இயல்பு கார்த்திகாயினி சித்திரித்துள்ள இக்காட்சிக்கு உண்டு. பெண் உடல் மீது கணவன் உட்பட ஆண்கள் செலுத்தும் காமம் செறிந்த பார்வை பற்றிக் கதைகளாக, கவிதைகளாக, கட்டுரைகளாகப் பெண்கள் பலர் முன்னரே எழுதியிருக்கின்றார்கள். அந்த எழுத்துக்களில் மிகுந்த வன்மமும் ஒரு வகை வெறியும் வெளிப்படுவதை அவதானிக்கலாம். ஆண்களின் பாலியல் வக்கிரங்களை எடுத்துச் சொல்ல வந்த பெண்களின் எழுத்துக்கள் சில, ஆண்களின் அந்த வக்கிரங்களிலும் பார்க்க, மிக ஆபாச மானவையாகவும் வக்கிரமானவையாகவும் இருப்ப தற்கு நிறைந்த உதாரணங்கள் பல உண்டு. அவைகள் தான் சிறந்த பெண்ணியப் படைப்பாளிகள் எனச் சிலாகித்துப் பேசும் விமர்சகர்களும் இருக்கவே செய் கின்றனர். ஆனால் கார்த்திகாயினி மிக நேர்த்தியாக, நிதானமாக பாலியல் பற்றி இங்கு சொல்லி இருக்கின்றார்.
தமிழர் சமுதாயத்தில் முற்றாக அழிந்து போய்விடாது இன்றும் இருந்துவரும் பெரும் நோய் சாதியம். அந்தரங்கத்தில் அதனைப் பாதுகாக்க விரும்ப கின்றவர்கள்தான், அந்த நோய் முற்றாகத் தீர்ந்து விட்ட தெனப் பேசியும் எழுதியும் வருகின்றார்கள். போர் முடிந்து விட்ட சூழ்நிலையில் அடக்கி வைத்துக் கொண்டிருந்த அழுக்குத் தனமான எண்ணங்களுக்கு இலக்கிய வடிவங் கொடுக்க சிலர் முற்பட்டிருக்கின் றார்கள். இத்தகைய சூழ்நிலையில் சாதியம் பற்றிய இரண்டு சிறுகதைகள் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தகுந்ததுதான்.
இயற்கையின் சீற்றமும், சுனாமியின் கோரத் தாண்டவத்தினால் அழிந்து சிதைந்து போன குடும்பங் களின் கண்ணிர்க்கதையினை, ஒரு குடும்பத்தின் கதை இதழ் 32

Page 24
மூலம் கதாசிரியர் உண்மை நெகிழப் பதிவு செய்திருக் கின்றார்.
பெண்களுக்கு எதிராக ஆண்களின் அடக்கு முறை, மூர்க்கத்தனம் என்பன இரண்டு சிறுகதைகளில் சித்திரிக்கப்படுகின்றன. இந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள மிக நல்ல சிறுகதையாக, இந்த இரண்டு கதைகளுள் ஒன்று எனக்குத் தோன்றுகின்றது. ஒரு சிறுகதையைப் படித்து முடிக்கையில், வாசகன் உள்ளத்தில் எதிர்பாராத அதிர்வினை அந்தச் சிறுகதை கொடுக்குமேயானால், அது ஒரு நல்ல சிறுகதை. காலங்காலமாக கட்டிக்காத்து வந்த பொய்மையான, போலித்தனமான மரபுகள் உடைக்கப்படும் பொழுது, அந்த உடைப்பு வாசகன் உள்ளத்தில் அதிர்வினை உண்டாக்குகின்றது. கேவல மான இந்தச்சமுதாயத்தின் மீது ஓங்கி அடி விழுகின்றது. புதுமைப்பித்தனின் 'பொன்னகரம், ஜெயகாந்தனின் அக்கினிப்பிரவேசம் போன்ற சிறுகதைகள் சமுதாயம் பேசும் நியமத்தின் மீது ஓங்கி அறைந்த படைப்புக்கள் தான். கார்த்திகாயினியின், கருமுகில் தாண்டும் நிலவு அத்தகைய ஒரு படைப்பாகவே உயர்ந்து நிற்கின்றது.
எப்பொழுதும் அடித்துத் துன்புறுத்திக் கொண் டிருக்கும் குடிகாரக் கணவனின் கொடுமைகளைச் சகித்துச் சகித்துத் தாங்கிக் கொண்டு வந்தவள் அவன் மனைவி சீதா, அவனைக் காதலித்துத் திருமணஞ் செய்து கொண்டு, தனது உறவுகளை உதறி விட்டு அவனோடு சேர்ந்து வாழ்வதற்கு வந்தவள். இனி அவனுடன் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கு இயலாதென்ற அவலமான வாழ்வு நிலைக்கு வருகின்றாள். தான்பெற்ற குழந்தை களைத் தன்னோடு கொண்டு செல்வதற்கு உள்ளத்தில் உறுதியாகத் தீர்மானித்த சந்தர்ப்பத்தில் கணவனின் நிர்ப்பந்தத்தினால் சத்திய கழ்நிலை உருவாகின்றது. அவள் சத்தியம் செய்கின்றாள்! “சத்தியமாய் என்ரை பிள்ளைக்கு நீ அப்பனில்லை. உன்னாலை நல்ல அப்பனாய் இருக்கவும் முடியாது”. இந்தக் கூற்றே, இந்தத் சிறுகதையைப் படிக்கும் வாசகன் உள்ளத்தில் அதிர்வை உண்டாக்குகின்றது. "நல்ல அப்பனாய்" என்று கூறுமிடத் தில் நல்ல என்னும் அடையைத் தவிர்த்திருந்தால், அடி மேலும் பலமாக விழுந்திருக்கும். அதன் அர்த்தமும் வேறுவகையாக, மேலும் பலமாக இருந்திருக்கும்.
தமிழ்மக்கள் மத்தியிலுள்ள மரபுசார்ந்த நடைமுறை ஒன்றினைக் கதாசிரியர் இச்சிறுகதையில் பயன்படுத்தியுள்ளார். கற்பூரம் கொளுத்தி அணைப்பதும், தான் பெற்ற பிள்ளையை நிலத்தில் கிடத்தி, கடந்து
ஜீவநதி H

போவதும் ஒன்றை உண்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இங்கு உண்மைப்படுத்த வேண்டியவள் ஒரு பெண். தாயானவள் எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் பெற்ற பிள்ளையைக் கடந்து போகமாட்டாள். அதனால் அந்தக் குடிகாரக் கணவனும், அயோக்கியனான அவன் நண்பனும் கற்பூரம் தயாராகக் கொண்டு வந்து சீதாவிடம் சத்தியம் கேட்பதாக எழுதியிருப்பது மரபை விளங்கி வைத்திருக்கும் தெளிவினைக்காட்டுகின்றது.
இந்தச் சிறுகதை தரும் அதிர்வு, இந்தச் சமு தாயத்தில் பெண் விழித்தெழுந்து விட்டாள் என்பதனை எடுத்து இயம்புகின்றது. பெண்ணானவள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகின்றது. இன்னும் பல செய்திகள் பேசாமல் பேசுகின்றது.
இந்தக் கதையினை சீதாவின் வீட்டுக்கு அருகில் வாழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஒருத்தி சொல்லுவதாக கதாசிரியர் கதையை நகர்த்திச் செல்லுகின்றார். வேறு சில கதைகளும் பாத்திரங்களுக் கூடாகச் சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட இச்சிறுகதை களைப் படிக்கும்போது, பாத்திரங்கள் வாயிலாகலாவக மாக கதை வளர்த்துச் செல்வது, கார்த்திகாயினிக்குக் கைவந்த இலக்கியப் பண்பாகத் தோன்றுகின்றது. பேச்சு மொழி மேலும் நுட்பமாக, செறிவாகப் பயன்படுத்தப் பெற்றால் மேலும் சிறப்பாக இருக்கும். மொழிவளம் முட்டின்றி இருப்பினும், பத்திரிகை எழுத்தாளர் என்னும் இயல்புதவிர்க்க இயலாதுதலைகாட்டுகின்றது.
இத்தொகுப்பிலுள்ள படைப்புக்களில் பெரும் பாலான பாத்திரங்கள் முறையாக வளர்க்கப்பட்டிருக் கின்றன.
போரும், போர்க் கால அவலங்களும் இலக்கி யங்களாகப் படைக்கப்படும் காலகட்டத்திலேயே கதாசிரி யர் கார்த்திகாயினி வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவை பற்றியே பேசும் பெரும்பாலான எழுத்தாளர் களின் எழுத்துகள் போல கார்த்திகாயினியின் எழுத்து களும் பேசுகின்றன. ஆனால் இந்தச் சூழ்நிலையில் ஒரு பெண்ணிடம் இருந்து வெளிப்படும் பெண்ணின் குரலாக இந்த நூலினைப் பார்க்கலாம். பெண்கள் பற்றிய பிரச்சி னைகள் மேலோங்கி ஒலிப்பது இந்தத் தொகுப்பின் சிறப்பு, பிரச்சினை யாருக்கு இருக்கிறதோ, அதனால் துன்பத்தை அனுபவிக்கின்றவர் யாரோ, அவைேர அந்தக் கொடுமைகளை எடுத்துக் கூறும் பொழுது, அது உணர்வுபூர்வமாக, ஆழமாக வெளிப்படும். அது தான்
22H இதழ் 32

Page 25
உண்மையும் சிறப்புமாக இருக்கும். ஆனால் பிரச்சினையை அனுபவிப்பவர் தான் அதனை எடுத்துச் சொல்ல வேண்டுமென்னும் கட்டாயம் எதுவுமில்லை. அப்படி ஒரு கட்டாய நியதியுடன் கடந்த காலத்தில் இலக்கியங்கள் படைக்கப்படவுமில்லை. நெருக்கடிகளை அனுபவிக்கின் றவர்கள் தங்கள் நெருக்கடிகளை, பிரச்சினைகளைத் தாங்களே எடுத்துப் பேசுவதற்கு முற்பட்டது காலத்தால் பிந்தியே. இதனைத் தெளிவாக விளங்கிக் கொள்ளாமல் அல்லது விதண்டாவாதமான கருத்துகள் தெரிவிக்கப்படு கின்றன. நொந்தவன் மாத்திரம் தனது நோவைப் பற்றிச் சொல்லவேண்டுமெனக் கருத்து கூறப்படுவதாகப் பிரசாரப்படுத்தப்படுகின்றது. அவ்வாறு பிரசாரப்படுத்து வதற்குத் தமது கடந்த கால இலக்கியப் பணி பற்றித் தந்திரமாக சிலாகித்து எடுத்து சொல்லப்படுகின்றது. இதன் அந்தரங்கம் ஒன்றுண்டு. தங்கள் எழுத்துக்களைத் தாங்களே முனைப்புடன் சொல்லிப் பாராட்டுவது தான். இந்தக் கேலிக் கூத்து ஆரம்பத்தில் ஒருவரே முன்வந்து ஆடுவதற்கு ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து இந்த அரும்பணியைச் செய்வதற்கு இன்று இன்னும் சிலர் முன்வந்துவிட்டார்கள். தாய் மடி தேடி அல்ல. தன் மடி தேடி வாய் வைத்துச் சுவைத்து அனுபவிக்கின்றார்கள். தன் முதுகில் தானே தட்டிக் கொள்வது ஆரோக்கியமான பாதையில் இலக்கியத்தை வளர்த்து இட்டுச் செல்லப் போவதில்லை.
இந்தத் தொகுதியின் பலம் அல்லது கார்த்தி யாகினி சுபேஸின் பலம் பெண்ணியத்தின் குரலாக ஓங்கி ஒலிப்பது தான். பலவீனமும் அது தான் எனச்
சுட்டிக் காட்டும் வண்ணம் எழுதுவதைத் தவிர்த்துக்
 

கொள்ள வேண்டும். பெண்ணிய ஆவே சத்துடன் மனதிலெழும் கருத்துக்கள் யாவற்றையும் படைப்பு இலக்கியத்துக்குள் திணித்துவிடுதல் தகாது என்பதனைக் காலப்போக்கில் கார்த்திகாயினி கண்டு கொள்வார். அழகான ஒரு கரத்தில் கவர்ச்சியான ஐந்து விரல்களுடன் மேலதிகமாக இன்னொரு ஆறாவது விரல் ஒட்டிக் கொண்டு தொங்குவது போல பெண்ணியக் கொதிப்பு நீண்டு தொங்குவது அழகினையா கொடுக்கும்? அதே சமயம் பெண்ணியக் கருத்துக்களை எழுதுவதற்கு அவாவி நிற்கும் பெண் படைப்பாளிகளும் ஏனைய படைப் பாளிகளும் கார்த்திகாயினியின் இந்த தொகுப்பினை நிச்சயம் படித்துப் பார்க்க வேண்டும்.
"தாய் மடி தேடி." என்னும் இந்தத் தொகுப்பி லுள்ள சிறுகதைகள் ஒவ்வொன்று பற்றியும் தனித்தனி யாக எனது கருத்தினை எடுத்துக் கூற நான் முற்பட வில்லை. தொகுதி பற்றிய பொதுவான கருத்தினையே இங்கு நான் முன்வைத்துள்ளேன். எனது கருத்துக்கள் கார்த்திகாயினி சுபேஸின் இந்த நூலை வாசகர்கள் தேடிப் படிப்பதற்கான தூண்டுகோலாக அமையுமென நம்புகின்றேன். துள்ளித் திரியும் கன்றுக் குட்டி கூடத் "தாய் மடி தேடி. ஓடும், பால் பருகிப் பசி ஆற குழந்தை கள், வளர்ந்த மனிதர்கள் என்ற வேறுபாடில்லாது "தாய் மடி தேடி. ஓடுவதென்பது, இந்த உலகில் அப்படி ஒரு அதிசயமுமல்ல. தாய் மடி தரும் சுகம் வேறு எங்குமே கிடைக்கப் பெறாத பேரின்பம். கார்த்திகாயினியின் இந்த
நூலை நீங்கள் இதற்காகவும் படிக்கலாமல்லவா?
நிச்சயம் படியுங்கள்! எனது கருத்துக்களுடன் பொருத்திப் பாருங்கள்!

Page 26
முள்ளாய் நீ தொட்டபோது பட்ட ரணம். மலராய் நீ வருடும் போதும் வலிக்கிறது./
பிறகெப்படி நான் உணர்னிலே
"ஈர்ப்புற்றுள்ளதாய்'
எனக்கு நானே சமரசம் ஏற்படுத்த முடியும்./
எனர் கண்ணிர் இரசத்துளியாய் உன் தங்க மனதைப் பாழ்படுத்தி விட்டதாய் đổ புலம்பிக் கொண்டிருக்கையில் திரும்பத் திரும்ப வெட்கமேதுமில்லாமல் ప్రస్తే உணர்னையே நான்
நினைப்பதெங்ாவனம்.?
அருவிச் 6600/ft) ஆழ்ந்த நினைவுகளெல்லாம் அலையடித்து அழிந்த பிறகு இந்த வெறும் மனதில் ஏன
 
 
 
 
 

வெறுப்பை ஏற்றுகிறாய்.?
கொஞ்சம் விலகியிரு./
முரண்களுக்கிடையிலேயே ம்ோதிக் கொண்ட பிறகு இதற்குள் அந்த 'அன்பு துளியேதும் இருக்கப்போவதில்லை.
எனவே, போய்க் கொண்டிரு உன் பாதையில்.
என்னை மட்டும் அப்படியே விட்டுவிடு./

Page 27
餐業
భఖ ,}ޠު
எழுதாத ஒரு கவிதை
ஒரு கவிதை என்றாலும் எழுதத் துடிக்கின்றேன். ஒரு கவிதை எழுதுவது ஒரு பெரிய விசயமல்ல.
எனினும். ஒரு கவிதை, உண்மையான கவிதை, மனச்சாட்சியிற்குத் துரோகம் இழைக்காமல் உள்ளதை உள்ளபடி எழுதும் உயிர்க்கவிதை, அள்ளி இடர் அகற்றும் அருட்கவிதை,
தொடர்ந்தும் ஆயிரமாய் வெற்றுக் கவி எழுதக் களமெனக்கு வாய்த்தாலும்
எழுத இடந்தராத துர்(ப்)பாக்கியத்துக்குள்ளே துவண்டு உளறுகிறேன்!
嵩 நேற்று எழுத நினைத்தேன்;
இன்றைக்கு ஏற்படாத சந்தர்ப்பம் எனைமிரட்ட ஊமையானேனர்/ நாளை ஒரு கவிதை நாணயமாய் நானெழுதக் கூடுமோ என் சூழலிலே குற்றுயிராய்க் கேட்கின்றேன்!
- த.ஜெயசீலன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இளமை நினைவுகள் ஊற்றாய் சுரக்க உணர்வுகள் சிலிர்க்கும் விஷமாய் இருந்தவை அமிர்தமாய் மாறும் அமிர்தமாய் உள்ளவை விஷமாய் தோன்றும் மழலைகள் பேச்சில் மகிழ்ந்தவை யாவும் பழையன வாகிப்
பொறுமையைக் குலைக்கும்
எதிரியாய் இருந்தவன் உற்றவ னாவான் உற்றவை எளிதில் அற்றன வாகும் சரியெது பிழையெது தெரியாத வகையில் தன்னிலை மறக்கும்; சொல்லிதம் இழக்கும் சுற்றமும் விலகும் மருந்துகள் நெடியோ மரணத்தை யாசிக்கும் தன்னுயிர் வெறுத்து வெறுமையில் உழல வேதனை வாழ்வு விடுபட நினைக்கும்.
- 6.8.Gīggge:Grī

Page 28
*
நான் எழுதி) போ
எழுத்தாளன் என்பவன் சமூகத்தில் தான் காண்கின்ற, தன்னைப் பாதிக்கின்ற, தன் உணர்வுகளைக் கிளர்த்துகின்ற விடயங்களை இலக்கியம் ஆக்கு கின்றான். அந்த வகையில் கடந்த மூன்று தசாப்த காலத்தில் எமது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள் பெரும்பாலானவற்றில் போர்க்கால நிகழ்வுகளே பேசு பொருளாக இருந்து வருகிறது.
போர்க்கால இலக்கியங்களைப் படைக்கும் எழுத்தாளன் தான் விரும்பியவாறெல்லாம் அவற்றைப் படைத்துவிட முடியாது. அவன் சுயதணிக்கை மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. பலவற்றைப் பூடகமாகச் சொல்லவேண்டியிருக்கிறது. சிலவற்றைக் குறியீடாகச் சொல்லவேண்டியிருக்கிறது. அவனைப் பாதித்த விடயங்களை அவனால் சொல்லாமல் இருக்க முடிவ தில்லை. எப்படியோ அவன் சொல்லித்தான் ஆக வேண்டி
அரசாங்கத்தின் போர்க்கால நடவடிக்கை களுக்கு அல்லது இயக்கப் போராளிகளின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு எதிராக எழுதிய பலர் காணாமல் போயிருக்கிறார்கள். பலர் வெள்ளைவான் கடத்தல் கேளுக்காளாகியிருக்கிறார்கள் பலர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் விசாரணை களுக்குள்ளாக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார் கள். பலர் இன்றும் சிறையில் வாடுகிறார்கள்.
இதன் காரணமாக போர்க்கால இலக்கியங்கள் பலவும் போர்க்கால அனர்த்தங்களைப் பேசும் இலக்கி யங்கள் என்ற நிலையிலிருந்து மேலே வராத நிலையில் அமைந்து விடுகின்றன. அவற்றிற்கு ஆவணப் பெறுமானம் மட்டுமே இருப்பதைக் காண்கிறோம். சமூகத்தை வழி நடத்தும் இலக்கியங்களாக அவை பெரும்பாலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

16
தி.ஞானசேகரன்
■ @ ● ● ta525R-8085 85,69569
இந்த நாட்டைவிட்டு வெளியேறி புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவும் இருப்பதில்லை. அதனால் அவர்கள் விரும்பிய வாறெல்லாம் எழுத முடிகிறது. அந்த இலக்கியங்கள் போராளி இயக்கங்களையோ அரசாங்கத்தையோ துணி வுடன் விமர்சிக்கின்றன.
நான் எழுதிய போர்க்கால இலக்கியங்க பற்றி இந்த அத்தியாயத்தில் கூற விழைகிறேன்.
2000ஆம் ஆண்டு என நினைக்கிறேன். இலண்டனில் வசிக்கும் பத்மநாப ஐயர், தான் வெளியிட விருக்கும் சமகால எழுத்தாக்கங்களின் தொகுதி ஒன்றி ற்கு என்னை ஒரு சிறுகதை எழுதித் தரும்படி வேண்டியி ருந்தார். ஏற்கனவே அவர் இத்தகைய நான்கு தொகுதி களை வெளியிட்டிருந்தார். அந்தத் தொகுதிகளுக் அவர் ஆக்கங்கள் அனுப்பும்படி ஊடகங்கள் மூலமும்
எழுத்தாள நண்பர்கள் மூலமும் கோரிக்கை விடுத் திருந்த போதும் நான் எனது ஆக்கங்கள் எதனையு அனுப்பாது அசட்டையாக இருந்துவிட்டேன். வெளிவ விருக்கும் ஐந்தாவது தொகுதியில் எனது படைப்பு ஒன் கட்டாயம் இடம்பெற வேண்டும் என தொலைபேசியில் வலியுறுத்தியிருந்தார்.
சில வருடங்களுக்கு முன்னர் கிருஷாந்தி என்ற பள்ளி மாணவி தடைமுகாம் ஒன்றில் பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விடயம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அவளைத் தேடிச் சென் அவளது தாயாரும் கொலை செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கை எடுத்து நடத்திய பிரபல சட்டத்தரணி குமார் பொன்னம்பலமும் கொலை செய்யப்பட்டார்.
இந்த விடயம் என்னைப் பெரிதும் பாதித்தி ருந்தது. கிருஷாந்திக்கு ஏற்பட்ட அவலம் வேறு பெண் களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். அவை வெளியே வராமல் மூடி மறைக்கப்பட்டிருக்கலாம். இந்தச் சம்பவத்தை ஒ

Page 29
சிறுகதையாக்கிவிட எண்ணினேன். இதனை வெளிப் படையாக எழுதிவிடமுடியாது. கத்தியிலே நடக்கும் நிதானத்துடன் - சம்பந்தப்பட்டவர்களை நேரிடையாகக் குற்றம் சுமத்தாமல் பூடகமாக எழுதுவதன்மூலம் சமூகத்துக்கு ஒரு செய்தியைக் கூற விரும்பினேன்.
எனவே குறியீடாகச் சொல்லும் உத்தியைக் கையாண்டு இந்தச் சம்பவத்தைக் கூற முடிவு செய்தேன். பள்ளி மாணவிகளைப் பச்சைக் கிளிகளாக உருவகித்து, கதைக்கு காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும் எனப் பெயரிட்டேன். ரியூசன் வகுப்புக்குச் சென்ற பள்ளி மாணவி ஒருத்தி தடைமுகாம் ஒன்றில் பாலியல் வல் லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு அதனை வேறொருவருக்கும் சொல்லமுடியாமல் அதிர்ச்சியுற்ற நிலையில் புத்திசுவா தீனத்தை இழந்துவிடுகிறாள். அவளின் கூற்றாகக் கதையை வளர்த்தேன்.கதையின்ஆரம்பம்பின்வருமாறு அமைகிறது: “அறையின் நான்கு பக்கச் சுவர்களும் என்னை நோக்கி நகர்கின்றன. மெதுமெதுவாக நகர்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தச் சுவர்களுக்குள் நான் நசிபட்டுச் சாகப்போகிறேன்.
தலை சுற்றுகிறது. நெஞ்சு விம்மித் தணிகிறது. தேகம் குப்பென்று வியர்க்கிறது. கைகளால் கண்களைப் பொத்திக் கொண்டு நான் வீரிட்டு அலறுகிறேன்.
சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மணிக்கூட்டில் நேரம் காலை எட்டு மணி அதன் "டிக் டிக் சத்தம் பெரிது பெரிதாகிக்கொண்டே வருகிறது. என்னை நெருங்கி நெருங்கி வருகிறது. ஏ.கே.47இன் சத்தம்போல் காதைப்பிளக்கிறது"
மேலே உள்ள கதையின் ஆரம்பத்தை வாசிக் கும்போது வாசகர்களுக்குக் குழப்பமாக இருக்கும். கதையைப் புரிந்துகொள்வது சிரமமாக இருக்கும். இரண்டு மூன்று தடவைகளாவது திரும்பத் திரும்ப முழு மையாக வாசித்தால் மட்டுமே கதை சொல்பவள் அதிர்ச் சிக்குள்ளாகி மனம் பேதலித்திருக்கிறாள் என்பது தெரிய வரும்.
கதையில் பாதிக்கப்பட்ட பெண் பச்சைக் கிளிக்கு உருவகப்படுத்தப்படுகிறாள். எனவே பச்சைக் கிளியை கதையில் பின்வருமாறு கொண்டுவந்தேன்.
"சின்னராசு கார் ஒட்டிவரும் சத்தம் கேட்கிறது. யன்னல் பக்கம் சென்று வெளியே பார்க்கிறேன். யன்ன லின் ஒரு பக்கக் கதவு உடைஞ்சு தொங்குது. இழுத்துப் பூட்ட ஏலாது.
அடே சின்னராசு! இங்கை வாடா, அச்சாப் பிள்ளையெல்லே. இந்த அறைக்கதவைத் திறந்து விடடா.
அவனுக்கு நான் சொல்லிறது கேட்கேல்லை. விர்ரென்று வேகமாய் கார் ஒட்டும்போது வாயிலிருந்து
ஜீவநதி 琵

எச்சில் பறக்கிறது. தூவானமாய்த் தெறிக்கிறது. கால் இடறி விழப்போகும் நேரத்தில் சமாளித்துக்கொண்டு 'கியரை மாற்றுகிறான். ரிவேர்ஸ் கியர். பின்புறமாய் ஒட்டிவந்து விறாந்தையின் முன்நிற்பாட்டுகிறான்.
அவன் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் விறாந்தையில் தொங்கும் கிளிக்கூண்டின் பக்கம் போவான். ரிவிரஸ் இராணுவ நடவடிக்கையின்போது நாங்கள் ஊரைவிட்டு ஓடி வன்னிக்குப் போயிருந்த காலத் திலை ஒரு கிளி பிடிச்சனாங்கள். திரும்பி வரேக்கை அதையும் கொண்டுவந்திட்டம், அது என்ரைசெல்லக்கிளி.
அடுத்து, தடை முகாம்களைத் தாண்டிச் செல் லும் பெண்கள் எல்லோருமே அவலங்களுக்கு ஆளாவ தில்லை. அப்படியானால் எவர் எத்தகைய சூழலில் வன் புணர்ச்சிக்கு உள்ளாகிறார்கள்?
அதனைப் பின்வருமாறு விளக்கியிருக்கிறேன். "அந்தச் சென்றியைக் கடந்து போறதெண்டா எல்லாருக்கும் சங்கடம்தான். வண்டில்களில், சைக்கிள் களில், தலைச் சுமைகளில் கஷ்டப்பட்டுக் கட்டியேத்திக் கொண்டுபோற சாமான்களை "செக் பண்ணிறதெண்டு கொட்டிச் சிந்துவாங்கள். சைக்கிள் செயின் கவர்களைக் கழட்டி செக் பண்ணிப்போட்டு நிலத்தில போடுவாங்கள். நாங்கள்தான் அதைப் பூட்டவேணும். கொழுப்பு.
அண்டைக்கு எங்களைச் செக் பண்ணுற நேரத்திலை வேறையொருவரையும் செக்பண்ணாமல் போக விட்டாங்கள். எல்லாரும் எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போச்சினம். சந்தேகக் கண்கள். எங்களுக்குக் கூச்சமாயிருந்தது.
கொஞ்சநாளில் ரியூசன் வகுப்பிலை எங்களைப் பற்றிய கிசுகிசுப்பு, நாங்கள் தான் வலிய வலியப்போய் சென்றியிலை நிண்டு சிரிச்சுச் சிரிச்சுக்கதைக்கிறமாம்.
பின் வாங்கிலை இருக்கிற சிவராசன் சொன் னான், “எங்கடை ஊர்ப்பெட்டையள், தெரிஞ்சதுகள் எண்டு ஆசையாய் நாங்கள் ஏதும் பகிடி கதைச்சால் எங்களை முறைச்சுப் பாக்கிறாளவை. அவங்களோடை இளிச்சு இளிச்சு நளினம் பேசுறாளவை.
"அது மட்டுமில்லையடா, எங்களைப் பற்றி அவங்களிட்டை றிப்போர்ட் பண்ணுறாளவை" என்றான் பக்கத்திலிருந்த வேல்முருகு,
அப்போது வசந்தி என்னுடைய காதுக்குள் சொன்னாள். "உவையளுக்கு எங்கடை நிலைமை ଗTIfiରେ085 தெரியப்போகுது? அவங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் இருக்க முடியுமே? அவங்களோடை சிரிச்சுக் கதைச்சா செக்கிங் குறையும். பிரச்சினை இருக்காது. நாங்கள் மனசுக்குள்ளை எரிஞ்சு கொண்டு தான் வெளியிலை சிரிக்கிறம் எண்டது உவையளுக்குத் தெரியாது”
இதழ் 32

Page 30
கொஞ்ச நாளில் எல்லாம் பழகிப்போய் விட்டது. சென்றியில் எங்களுக்குப் பெரிதாய் செக்கிங் இருப்பதில்லை. தனியாய்ப் போகும்போது பயமிருக் காது. அதனால் ரியூற்றரிக்குப் போகும்போது சேர்ந்து போகவேண்டும் என்ற நிலைமையும் இல்லை. இப்போது அங்கு ஐ.சி.யை எங்களிடம் கேட்க மாட்டார்கள். ஆனா லும் அந்த இடத்தில் சைக்கிளை ஒட்டிச் செல்வதற்கு எவருக்கும் அனுமதியில்லை, இறங்கி உருட்டிக் கொண்டுதான் போகவேணும்"
மேலே கூறப்பட்ட பகுதி இடம்பெறப்போகும் அவலத்துக்குரிய சூழல் எவ்வாறு உருவாகிறது என்பதை விளக்குகிறது.
கதையின் முடிவு பின்வருமாறு அமைகிறது: "அண்டைக்கு நான் தனியாகத் தான் போன னான். சென்றியிலை சறத்தும் சுமனபாலாவும் தான் நிண்டவங்கள். என்ரை சைக்கிளைப் பறிச்சு உள்ளுக்குக் கொண்டுபோய் வச்சிட்டாங்கள். சைக்கிளைத் தரச் சொல்லி நான் கெஞ்சிமன்றாடினன். உள்ளுக்குப்போய் எடுக்கச் சொன்னாங்கள்.
நான் தயங்கித் தயங்கி பயந்து பயந்து. ஐயோ எனக்கு மயக்கம் வருகுது. தேகம் நடுங்கி நெஞ்சு LILLIL5(53).
ஒ. அதுக்குப் பிறகு உச்சந் தலைக்குள் ஏதோ கிழிந்து சிதறி எழும்பமுடியாமல் எழும்பி நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி சைக்கிளை உருட்டிக் கொண்டுதான் வீட்டுக்கு வந்தனான்.
விறாந்தையில் சைக்கிளைச் சாத்தினபோது அம்மா கவலையோடு சொன்னா, "உவன் சின்னராசு வந்து கிளிக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தவன். கூட்டுக் கதவை பூட்ட மறந்திட்டான். பூனையொண்டு திரிஞ்சது. கிளியைக் கடிச்சுக் குதறிப்போட்டுது பிள்ளை."
எனக்கு நெஞ்சு விறைச்சுப் போச்சு. அம்மா என்ன சொல்லிறா? ஒருவேளை. ஒருவேளை.
என்னுடைய தேகம் நடுங்கியது. கிளி இரத்தவெள்ளத்தில் குற்றுயிராய்க்கிடக்கிறது. அதன் அடி வயிற்றின்கீழ்காட்டுப்பூனை பதித்த கோரச் சுவடுகள்.
மயங்கி நிலத்திலே சாய்கிறேன். என்னைச் சுற்றியிருக்கும் சுவர்கள் சுழல் கின்றன. என்னை நெரிப்பதற்கு மெதுமெதுவாய் நெருங்கி வருகின்றன.
"a3G8uut... egG3u T.." இவ்வாறு கதை நிறைவு பெறுகிறது. இந்தக் கதையில் நான் எந்த இடத்திலும் பெண்ணொருத்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள் என்பதை வெளிப்படையாக எழுதவில்லை. யாரால் பாலியல்
ஜீவநதி 壓

வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டாள் என்பதையும் கூற வில்லை. ஆனால் கதையை வாசிக்கும் வாசகன் இவற் றைத் தெளிவாக ஊகித்து அறிந்துகொள்ளும் வண்ணம் கதையை நகர்த்தியிருக்கிறேன்.
இந்தக் கதையின் சமூகப்பயன் யாது? தடை முகாம்களில் பாலியல் வல்லுறவுக்குரிய சூழல் எவ்வாறு உருவாகிறது என்பதனைக் கூறுவதன் மூலம் அதனைப் பெண்கள் எவ்வாறு தவிர்த்துக் கொள்ள லாம் என்பதனை இக்கதையில் தெளிவாகக் காட்டியிருக் கிறேன்.
பத்மநாப ஐயர் தொகுத்த "கண்ணில் தெரியது வானம்" என்ற சமகாலப் புதிய எழுத்தாக்கங்களின் தொகுப்பின் முதலாவது கதையாக இக்கதை இடம் பெற்றிருப்பது இக்கதையின் தரத்திற்குச் சான்று. பின்னர் இக்கதை ஞானம் சஞ்சிகையில் மறுபிரசுரம் செய்யப் பட்டது. தமிழக மித்ரா பதிப்பக வெளியீடான "போர்க் காலக் கதைகள்” தொகுப்பிலும் இக்கதை இடம் பெற்றுள்ளது.
இக்கதைபற்றி கலாநிதி செ. யோகராசா பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"ஈழத்தின் சமகாலச் செல்நெறிகளை அவ தானிக்கும்போது எழுத்தாளரது படைப்புகளில் பேரின வாத ஒடுக்குமுறைக் கொடுமைகள், போர்க்கால அவலங்கள் என்பன வெறும் பதிவுகளாகவே அமைந்தி ருப்பது கண்கூடு. இதற்கு விதிவிலக்காகவுள்ள மிகச்சில படைப்புகளுள் தி.ஞானசேகரனின் காட்டுப்பூனைகளும் பச்சைக்கிளிகளும் விதந்துரைக்கப்பட வேண்டிய தொன்று. மாணவியொருத்திக்கு நிகழ்ந்துவிட்ட கொடு ரம் தரும் அதிர்ச்சி, கதை சொல்லப்படும் முறையிலுள்ள பல்வேறு சிறப்புகளால் வாசகர்களது மனதில் என்றென் றும் உறைந்திருக்கும். இக்கதை தமிழ்ச் சிறுகதை வர லாற்றிலே இடம்பெறவேண்டிய சிறுகதை."
பேராசிரியர் நந்தி பின்வருமாறு குறிப்பிட் டுள்ளார்:
"கண்ணில் தெரியது வானம்" தொகுப்பில் உங்களது காட்டுப் பூனைகளும் பச்சைக்கிளிகளும்" என்ற சிறுகதையைப் படித்தேன். தடைமுகாம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருத்தி இராணுவத்தினரின் பாலி யல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதையும் அதன்காரண மாக அவள் புத்திபேதலித்த நிலைமையை அடைவதை யும் கலாரூபமாகக் கதையில் வடித்துள்ளீர்கள். நமது நாட்டில் மட்டுமல்ல, இனவிடுதலைப் போராட்டம் நடக் கும் பல்வேறு நாடுகளிலும் இப்படியான நிகழ்வுகள் நடந் திருக்கின்றன. இக்கதையின் கரு உலகப் பொதுவானது. பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டிய கதை இது."
இதழ் 32

Page 31
"கருவறை எழுதிய தீர்ப்பு" என்பது நான் எழுதிய இன்னுமொரு போர்க்காலச் சிறுகதை, இக் கதையில் ஒரு புதுமை செய்திருக்கிறேன். செயற்கை முறைக் கருக்கட்டல் பற்றிய விபரங்களை இக்கதையில் இணைத்திருக்கிறேன்.
கதை இதுதான் முப்பது வருடங்களுக்கு முன்னர் பெரேரா என்ற சிங்கள இராணுவ அதிகாரியும் தமிழ் மருத்துவப் பேராசிரியர் ஒருவரும் கொழும்பில் அயலவர்களாக வசித்துவருகின்றனர். இனக்கலவரம் வெடிக்கிறது. சிங்கள வெறியர்கள் தமிழ் மருத்துவப் பேராசிரியரை யும் அவரது மனைவியையும் தெருவுக்கு இழுத்து வந்து அவர்களுடைய உடல்களில் பெற்றோல் ஊற்றித் தீ வைக்க முனைகின்றனர்.
சிங்கள இராணுவ அதிகாரி அந்தக் காடை யர்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து மருத்துவப் பேராசிரியரையும் மனைவியையும் காப்பாற்றுகிறார். இந்தச் சம்பவத்தின் பின்னர் கொழும்பில் வாழப்பிடிக் காத மருத்துவப் பேராசிரியர் லண்டன் சென்று அங்கு ஒரு தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இராணுவ அதிகாரிக்கு திருமணம் முடிந்து நீண்ட காலம் பிள்ளைப்பேறு கிடைக்காததால் தனது நண் பரான மருத்துவப் பேராசிரியரிடம் மனைவியை லண்ட னுக்கு அழைத்துச் சென்று வைத்திய ஆலோசனை பெறுகிறார்.
அவரையும் அவரது மனைவி ருநீமணியை யும் பரிசோதித்த மருத்துவப் பேராசிரியர், அவரால் ஒரு குழந்தைக்குத் தந்தையாக முடியாது. அவரது ஸ்கலிதத் தில் உயிருள்ள விந்துகள் இல்லை. ஆனாலும் அவரது மனைவி ருரீமணியின் உடலமைப்பில் எவ்வித குறை பாடும் இல்லை. அவளால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும் என்பதை விளக்குகிறார்.
இந்நிலையில், பெரேரா குழந்தை யொன்றைத் தத்தெடுத்து வளர்க்கலாமா என வினவுகிறார்.
நவீன மருத்துவமுறைகளை மருத்துவப் பேராசிரியர் விளக்குகிறார்.
"வேறொரு ஆணின் விந்தினைப் பெற்று குழாய் மூலம் ருரீமணியின் கருப்பையினுள் செலுத்தி செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்யலாம். இந்த முறையில் கருத்தரிக்கும்போது தாயினது "ஜீன்ஸ் குழந் தைக்கு வருவதால் பெற்றோரது ஐம்பதுவீதப் பரம்பரை அலகுகள் குழந்தைக்கு வந்துவிடுகின்றன. தத்தெடுக்கப் படும் குழந்தையை வேறொருவரது குழந்தையாகவே சமூகம் கணிக்கிறது. ஆனால் செயற்கை முறையில் கருத்தரித்துப் பிறக்கும் குழந்தை பெற்றோரது குழந்தை யாகவே சமூகத்தின்கணிப்பைப் பெறுகிறது.
ஜீவநதி

மறுவாரத்தில் ஒருநாள் ஒரு புதிய பிரச்சினை யுடன் பெரேராவும் மனைவியும் மருத்துவப் பேராசிரிய ரைச் சந்தித்தனர். முரீமணி மனோரீதியில் பாதிக்கப்பட்டி ருந்தாள். வெள்ளைத் தோலும் பூனைக்கண்ணும் செம் பட்டைத் தலைமயிருமாக தனக்கொரு குழந்தை பிறக்கக் கனவு கண்டதாகக் கூறினாள். இரண்டு நாட்களுக்கு முன்னரும் நீக்குரோ குழந்தையொன்று தனக்குப் பிறந்ததாகக் கனவு கண்டிருந்தாள்.
பிரச்சினை இது தான், மருத்துவப் பேராசிரி யரின் கிளினிக்கில் பல பிரதேசத்து மருத்துவ மாணவர் கள் பயிற்சி பெறுவதை ருநீமணி பார்த்திருக்கிறாள். அவர்கள் யாரிடமாவது விந்தினைப் பெற்று தனது கருக் கட்டலுக்குப் பேராசிரியர் பாவித்து விடுவாரோ என அவளது உள்மனம் பயப்படுகிறது.
பேராசிரியருக்கு நிலைமை புரிந்துவிடுகிறது. "பயப்படாதீர்கள். இங்குவிந்து வங்கியொன்று இருக்கிறது. அதில் விந்து வழங்கத் தகுதியான பலரது விந்துகள் சேகரிக்கப்பட்டு உறை நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களைப் பற்றிய விபரங்களும் எம்மிடம் உள்ளன. பெரேராவின் உயரம், தோற்றம், நிறம் முதலியன பொருந்தக்கூடிய ஒருவரது விந்தினை உங்களது கருக்கட்டலுக்குப் பாவிப்பேன். பிறக்கும் குழந்தை ஒரு ருநீலங்கனின் தோற்றத்துடனேயே பிறக்கும்" என அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
முரீமணி, "ஆர்ட்டிபிஷல் இன்ஸெமினேஸன்” என்னும் செயற்கை முறைக் கருக்கட்டலின் பின்னர் கணவனுடன் இலங்கை வந்துவிடுகிறாள்.
பத்து மாதங்களின் பின் ருரீமணிக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. சுனில் எனப் பெயரிடுகின்றனர். குழந்தையின் ஒவ்வொரு பருவ வளர்ச்சிக்கட்டத்திலும் பெரேரா மருத்துவப் பேராசிரியருக்கு டெலிபோன் செய்து உரையாடி மகிழ்வார். அவனது வளர்ச்சிக்கான அபிப் பிராயங்களைக் கேட்பார். மருத்துவப் பேராசிரியர் ஆலோசனை வழங்குவார்.
சுனில் வளர்ந்து இளைஞனாகி இராணுவ விமானம் ஒட்டும் பைலட்டாகப் பயிற்சிக்குத் தெரிவான போது அந்தத் தொழில் ஆபத்தானது வேண்டாமென மருத்துவப் பேராசிரியர் புத்திமதி கூறினார். ஆனால், தான் பைலட்டாக வேண்டுமென்பதில் சுனில் பிடிவாத மாக இருந்தான்.
சுனிலின் வீரதீரச் செயல்களை பெரேரா தொலைபேசியில் பேராசிரியரிடம் கூறுவார். போராளி களின் மேல் குண்டுமழை பொழிந்து அவர்களைத் துவம்சம் பண்ணினான் என விபரிப்பார். அப்போதெல் லாம் இனம்புரியாத வேதனையால் மருத்துவப் பேராசிரி யர்துடிப்பார்.
9. இதழ் 32

Page 32
ரிவிரஸ்' இராணுவ நடவடிக்கையின்போது குண்டுமழை பொழிந்து யாழ்ப்பாண மக்களை அநாதை களாக்கி விரட்டியடிக்க உதவியவன் சுனில் தானா? உயி ரைக்கையில் பிடித்துக்கொண்டு நவாலித் தேவாலயத் தில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு உயிருடன் சமாதி கட்டிய வன் அவன்தானா?
இரவில் படுக்கையில் சாயும்போது இத்தகைய எண்ணங்களால் பேராசிரியரின் மனம் தத்தளிக்கும். விடுதலைப் போராளிகளினால் விமானங்கள் சுட்டு விழுத்தப்படும்போது அவரது மனம் துணுக்குறும். சுட்டு விழுத்தப்பட்ட விமானம் சுனில் ஒட்டிச் சென்றதாக இருக் கக்கூடாதென மனசு பிரார்த்திக்கும். இருதலைக் கொள்ளி எறும்பாய்த் துடிக்கும்.
அவர் பயந்தது போல் சுனில் ஒட்டிச் சென்ற விமானம் போரளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டு சுனில் மரணம் அடைகிறான்.
கதையின் இறுதிப்பகுதி மருத்துவப் பேராசிரி யரின் கூற்றாகப் பின்வருமாறு அமைகிறது:
"மறுநாள் நான் சுனிலின் மரணச் சடங்குகளில் பங்குபற்றுவதற்காக Uநீலங்காவிற்குப் புறப்பட்டேன். அப்போது என் மனைவி என்னை ஆச்சரியத்துடன் நோக் கினாள். ஆனாலும் தடையேதும் கூறவில்லை. பெரேரா இனக்கலவரத்தின்போது எங்களைக் காப்பாற்றியது அவள் நினைவில் வந்திருக்கலாம்.
பெரேரா என்னைக் கண்டதும் விரைந்து வந்து என்னைக்கட்டிக்கொண்டு கதறி அழுதார். ருரீமணி என்காலடியில் விழுந்து மயக்கம் அடைந்தாள்.
சுனிலின் கருகிய உடலைப் பார்த்ததும் என்னுள் அடக்கி வைத்திருந்த சோகம் அத்தனையும் திரண்டு பிரவாகித்தது. எனது உடல் குலுங்க விம்மி விம்மி அழுதேன்.
சுனில் எனது விந்து எனது மகன் என்ற உண்மையை நான் யாரிடந்தான் சொல்ல முடியும்?.
இந்தக்கதையில் போர்க்கால நிகழ்வுகள், செயற்கை முறையில் கருக்கட்டல் ஆகியன உருவ உள்ளடக்கங்களாக அமைவதோடு மூன்றாவது பரி மாணமாக கதையின் தலைப்பு ஒரு தத்துவ விசாரத்தை வெளிப்படுத்துவதைத் தரமான வாசகர்கள் புரிந்து கொள்வர்.
இக்கதை பற்றி பிரபல விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"கருவறை எழுதிய தீர்ப்பு" என்ற தலைப்பில் கதாசிரியர் தி.ஞானசேகரன் முற்றிலும் புதுமையான தொரு கதையை அண்மையில் எழுதியிருந்தார். கருத்தரித்தல் பற்றிய சில தகவல்கள் கதையோட்டத் துடன் தரப்படுகின்றன. சிறுகதைக்கேயுரிய பண்புகளைக்
ஜீவநதி

கொண்டதாகவும் செட்டாகவும் கதாசிரியர் வடிவமைத் திருக்கிறார். கதை முடிவும் எதிர்பாராத தொன்று. அதே வேளையில் இனவேறுபாடுகளிடையே கூட முரண்படு நிலை இருப்பதையும் காட்டியுள்ளார். இது ஒரு அருமை யான கதை என்பது எனது மதிப்பீடு"(47)
வைத்திய கலாநிதியும் இலக்கியவாதியு மாகிய எம்.கே.முருகானந்தன் பின்வருமாறு குறிப்பிடு கிறார், "சிறுகதை, நாவல், விமர்சனம் எனப் பல துறை களில் தடம் பதித்த இலக்கியவாதியான தி.ஞானசேகர னுள் உறைந்து நிற்கும் மருத்துவனை வெளிப்படுத்தும் ஒரு சிறுகதைதான் கருவறை எழுதிய தீர்ப்பு செயற்கை முறைக் கருத்தரித்தல் பற்றிய பல அரிய மருத்துவத் தக வல்களை இலாவகமாகவும் கதையோட்டத்திற்கு ஊறு செய்யாமலும் வாசகனை ஆர்வத்தோடு வாசிக்கும் வண்ணம் இக்கதையில் ஞானசேகரன் புகுத்தியுள்ளமை வியந்து பாராட்டத்தக்கது"
எனது இலக்கியத்தடத்தில் போர்க்காலக் கதைகள் எவ்வாறு பதிவாகியுள்ளன என்பதை எடுத்துக் காட்ட வகைமாதிரிக்கு மேலேயுள்ள இரண்டு கதைகளை விரிவாக விளக்கியுள்ளேன்.
என் சிறுகதைத் தொகுதிகளில் இடம்பெற்ற மேலும் சில கதைகளின் விபரங்களை விரிவஞ்சி சுருக்க மாகக் கீழே தருகிறேன்.
"அல்சேஷனும் பூனைகுட்டியும் என்ற சிறுகதை யும் போர்க்காலப் பின்புலத்தைக் கொண்டது தான். இனக்கலவரங்களின்போது தமிழ்மக்கள், சிங்களமக்க ளால் தாக்கப்படும்போதெல்லாம் அவர்கள் வடபகுதியை நோக்கி ஓடி வந்தார்கள். வடபகுதியிலே இராணுவத்தின ரால் அவர்கள் தாக்கப்படும்போது அவர்களுக்கு ஓடுவ தற்கு இடமில்லாமல்போயிற்று. உயிரைக் காப்பாற்றத் திருப்பித்தாக்கினார்கள் என்பதை இக்கதை விளக்கு கிறது.
இக்கதை தோன்றிய பின்புலத்தை இத்தொட ரின் முன் அத்தியாயமொன்றில் மிகவிரிவாக விளக்கி யுள்ளேன். இக்கதைபற்றி பிரபல எழுத்தாளர் தெணியான் பின்வருமாறு எழுதியுள்ளார்:
"ஆரம்ப முதல் வாசகனை ஈர்த்து இறுதிவரை கவனம் கலையாது ஒன்றித்திருக்க வைக்கும் கலைத்துவ மான சிறந்த படைப்பு அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டி யும். இயல்பான பாத்திரவார்ப்புடன் ஊடாட்டம் உரை யாடல் என்பன இயல்பாக நகர்ந்து நிகழ்வுடன் கலந்து நல்ல அனுபவமாக விரிகிறது. பாத்திரங்கள் இன முரண் பாடு பற்றிய தங்கள் பக்க மன ஆதங்கங்களை மெல்லப் பேச ஒடுக்குமுறைக்கு எதிரான நியாயமான போராட்டம் பற்றி குறியீடு உரக்கப்பேசுகிறது. மாறுபட்ட கலாசாரங் களை வெகு நுட்பமாக பதிவுசெய்து இரு வேறுபட்ட
O இதழ் 32

Page 33
இனங்கள் என்பதனைச் சுட்டும் அதேசமயம், மேல்வர்க் கம் இனப்பாகுபாடு கடந்து தம்முள்ளே உறவு பூண்டு நிற்கும் உண்மையானது பேசாப் பொருளாகத் துல்லிய மாக உணர்த்தப் படுகிறது. இவை யாவற்றிற்கும் அடி ஆதாரமாக விளங்குகிறது ஆசிரியரின் சரளமான தெளிந்த மொழிநடை என்பதனை மறந்துவிடமுடியாது."
"சுதந்திரத்தின் விலை" என்பது நான் எழுதிய மற்றொரு போர்க்காலக் கதை போர்க்காலச் சூழலில் இலங்கையை விட்டு வெளியேறிச் செல்லவும், பல்வேறு தேவைகளுக்காகவும் கொழும்பு லொட்ஜ்களில் வந்து தங்குபவர்களை ஏஜன்ட்டுகள், லொட்ஜ் உரிமையாளர் கள், பொலிஸார், சட்டத்தரணிகள் போன்ற பலரும் கூட்டுச் சேர்ந்து "எரியும் வீட்டில் பிடுங்கியது லாபம்" என இயங்குவதைத் தோலுரித்துக்காட்டும் சிறுகதை,
இக்கதை 1997ல்தினக்குரலில் வெளியாகியது. சோதனை என்பது மற்றுமொரு போர்க்காலக் கதை. இந்தக்கதை தோன்றிய சூழல் முக்கியமானது. தொண்ணுாறுகளின் நடுப்பகுதியில் எனது மூத்த மகன் இராஜேஸ்வரன் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயின்று கொண்டிருந்தான். அக் கால கட்டத்தில் தமிழ்மாணவர்கள் பலரும் இராணுவத் தினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத் தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது மகனும் மூன்று முறை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டான். அப்பாவி மாணவர்களே இத்தகைய துன்புறுத்தல்களுக்கு ஆளாகி னர். ஆனால் உண்மையான இயக்கத் தொடர்புள்ளவர் கள் எப்படியோ தப்பிவிடுகிறார்கள் என்ற மகன் சொன்ன விபரங்களை வைத்துக்கொண்டு இக்கதையை எழுதினேன். இக்கதைபற்றி கலாநிதி துரை. மனோகரன் வீரகேசரி வாரமஞ்சரியொன்றில் வந்த கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். "இலங்கையின் பிற பாகங்களிற் பொதுவாகவும் கொழும்பிற் குறிப்பாக வும் இடம்பெறும் தமிழ்மக்களுக்கெதிரான சோதனைக் கெடுபிடிகளை சோதனை என்ற கதை புலப்படுத்து கிறது. இச்சிறுகதையிற் குமரேசன் என்ற பாத்திரத்தைக் கையாளும் திறன் குறிப்பிடத்தக்கது. வெளிப்படை யாகவன்றிக் குறிப்பாக அப்பாத்திரத்தைச் சுட்டி வாசகரே அதன் இயல்பைப் புரிந்துகொள்ளுமாறு செய்தமை அக்கதைக்குக் கலைச் செழுமையைச் சேர்க்கிறது."
சிறுகதைகள் மட்டுமன்றி எரிமலை என்ற மகுடத்தில் நான் ஒரு போர்க்கால நாவலையும் எழுதி னேன். அதன் கதைச் சுருக்கம் பின்வருமாறு அமைகிறது: 58 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட டொக்டர் மகேசன் அவரது மனைவி டொக்டர் மாலா ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று நடத்துகிறார்கள். ஒருநாள் இரவு அவர்கள் வீட்டு
ஜீவநதி -8

மதிலேறிக்குதித்து இரு இளைஞர்கள் வீட்டின் உள்ளே வருகிறார்கள். ஒருவனுக்கு காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம். அதற்கு வைத்தியம் செய்யும்படி டொக்டர் மகேசனை துப்பாக்கி முனையில் நிர்ப்பந்திக்கிறார்கள். வேறுவழியின்றி அவர் தனது வீட்டின் பின்புறத்தேயுள்ள சாரதியின் அறையில் அவர்களைத் தங்கவைத்து வைத்தியம் செய்கிறார்.அவர்கள்அன்று நடைபெற்ற வங்கிக்கொள்ளை யொன்றில் சம்பந்தப்பட்டவர்கள் என்பது மறுநாள் பத்திரிகையை வாசிக்கும்போது டொக்டருக்குத் தெரிய வருகிறது. இந்நிலையில் மறுநாள் காலை யாழ்தேவி யில் டொக்டரின் தம்பி சந்திரன் கொழும்பிலிருந்து வருகிறான். அவனுடன் கொழும்பில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பத்தினர் விமல்சிறி, அவரது மனைவி, அவரது சகோதரி அனுலா ஆகியோரும் வருகின்றனர். அவர்கள் வீட்டில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்தைச் சுற்றிப்பார்க்க விழைகின்றனர். இவர்கள் யாழ்ப்பாணத் திற்கு வந்த மறுநாள் தமிழரசுக் கட்சியின் தீவிர ஆதர வாளரான செல்லையா மாஸ்டர் டொக்டரைக்கான வீட்டுக்கு வருகிறார். அங்கு விமலசிறியுடனும் அவரது மனைவியுடனும் தமிழ்ர் சார்பான அரசியலை எடுத்துக் கூறி வாதாடவும் செய்கிறார். இதற்கிடையில் சந்திரனுக் கும் விமலசிறியின் தங்கைக்குமிடையே காதல் மலர்வது தெரியவருகிறது. சந்தேகத்தின் பெயரில் டொக்டர் இராணுவத்தினரால் விசாரிக்கப்படுகிறார். காயமடைந்த இளைஞனைத் தனது வீட்டில் பின்புறத்தில் வைத்திருக்க முடியாத நிலையில் டொக்டர் சாரதியின் உதவியுடன் காயம்பட்டவனைத் தனது மருத்துவமனைக்கு மாற்றுகி றார். அங்குள்ள நோயாளர் சிலருக்கு அவன் இயக்கத்தைச் சேர்ந்த இளைஞன் என்பது தெரிய வருகிறது. இந்தக் கதைப்பின்னலில் தமிழர் அரசியல் - அவர்களது போராட்டம் எவ்வாறு தொடங்கி வளர்ச்சியுற்று ஆயுதப் போராட்டமாக மாறியது. போராட்டத்தின் வெற்றிகள், தோல்விகள், போரட்டத்தின் தாற்பரியங்கள் போன்ற பலவிடயங்கள் ஆராயப்படுகின்றன.
இந்த நாவலை எழுதி முடித்ததும் அதனைப் புலோலியூர் க. சதாசிவம் உட்படப் பலநண்பர்களுக்கு வாசிக்கக் கொடுத்தேன். அந்தக்காலச் சூழ்நிலையில் அந்த நாவலை வெளியிடுவது ஆபத்தானது என்பது பலரது அபிப்பிராயமாக இருந்தது. எனவே அந்நாவ லைக் கிடக்கையில் போட்டுவைத்தேன்.
அந்த நாவலின் பிரதி இப்போது என்கைவசம் இருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிந்த நிலையில் அதனை மீண்டும் புதுக்கி எழுதி சேர்க்கவேண்டிய தகவல் களையும் சேர்த்து விரைவில் நூலாக்க எண்ணியுள்ளேன்.
(இனி அடுத்த இதழில்)
உசாத்துணை: (47) தினக்குரல் 25-05-1999
31 இதழ் 32

Page 34
ଅgsiରିକ୍ସ୍]]
6L6 famib
மலையுச்சி
மலையுச்சி மாளிகை
சிங்கள நவீன இலக்கியத்துறையில் குறிப்பிட்டு jဓ"r®ပေး கூடிய ஒரு படைப்பாளியான டெனிஸன் "பெரேராவின் இளைஞர் நாவல், டெனிஸன் பெரே ராவை பொறுத்தவரை கடந்த 50 வருடங்களாக இலக்கி யத்துறையில் ஈடுபட்டு நாவல், சிறுகதை என பல நூல் களை வெளியிட்டு உள்ளார். பல விருதுகளை பெற்றுள் ளார். சிங்கள நவீன இலக்கியத்துறையில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. ஆகாஸ்ஸே மாளிகாவ' என்ற பெயரில் சிங்களத்தில் வெளிவந்த இந்த நாவல் திக்கு வல்லை கமாலின் மொழிபெயர்ப்பில் மலையுச்சி மாளிகை என்ற பெயரில் தமிழில் கொடகே வெளியீ டாக வந்துள்ளது. இந்த நாவல் 2001 ஆம் ஆண்டு "The Castle in the Sky" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளி
வந்துள்ளது.
டெனிஸன் பெரேராவின் இந்த நாவல் ஒரு வகையில் பின் காலனிய நாவல் என்று சொன்னால் பொருந்தும். பின்காலனிய இலக்கியம் என்பது, காலனியம் மற்றும் பின்காலனிய சூழலான இன்றைய நவீன காலனியம் ஆகியவற்றுக்கு எதிரான இலக்கியம் என்று சொல்லலாம். கடந்த ஒரு சில நூற்றாண்டுகளாக உலக நாடுகளில் நிலவிய காலனியத்திற்கும் பின் அந்த காலனியம் நவீன வடிவங்கள் எடுத்து, நிலவிய-நிலவும் காலனியம் ஏற்படுத்துகின்றன விளைவுகளை பற்றி பேசு கின்ற இலக்கியங்களாக அத்தகைய இலக்கியங்கள்
அமைகின்றன.
அதேவேளை இந்த காலகட்டங்களில் ஜனநாய கம் என்பது பல்வேறு வடிவங்களை பெற்று வந்துள்ளது. நிலப்பிரபுத்துவத்தை கடந்து உலக சமூகங்கள் முத லாளித்துவத்திற்குள் உள் நுழைந்த பொழுது, ஜனநாய ܡ܀ கம் மிக கவர்ச்சிகரமான ஒன்றாக இருந்த பொழுதும், காலனியத்துவம் கொடுத்து சென்ற சுதந்திரம் என்பதும் கூட, அது சர்வதிகார-இன்னும் ஆழமாக சொன்னால்
 
 
 
 
 
 
 
 
 

ஹ ராஜாவின் கன் நீர் வரோவின்
மாளிகையில்,
முடியாட்சி பண்புகளை தமக்கே கொண்டுதான் உலக சமூக மக்களை ஆண்டு வந்துள்ளது. இத்தகைய சர்வதி கார-முடியாட்சி பண்புகளை கொண்டு ஆளும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராக படைக்கப்படும் கலை இலக்கியங்களே பின் காலனிய கலை இலக்கியங்கள் என அடையாளப்படுத்தப்படுகிறது. இவ்வாறான கலை இலக்கியங்களில் அதிக அளவில் பல்வேறு உத்திகளை கொண்டு படைக்கப்படுவதை காணலாம். குறிப்பாக உரு வகம், குறியீடு போன்ற உத்திகளை சொல்லாம். இக்கால கட்டங்களில் யதார்த்த கோட்பாடு கையாளப்பட்டு படைக்கப்பட்ட கலை இலக்கியங்கள் மிக செல்வாக்கு செலுத்திக் கொண்டிருந்த பொழுதும், லத்தீன் அமெரி க்கா நாடுகளில் Magical Realism போன்ற உத்திகள் கையாளப்பட்டு பின்காலனிய கலை இலக்கியங்கள் படைக்கப்பட்டன. ஆனால் யதார்த்த கோட்பாட்டாளர்கள் Magical Realism போன்ற உத்திகளை ஏற்றுக் கொள்ளா தற்கு காரணம், அத்தகைய உத்தி கையாண்டு படைக்கப் பட்ட கலை இலக்கியங்களில் கையாளப்பட்ட படிமங்கள், உருவகங்கள், தொன்மங்கள் போன்றவைகளால் வெளிப்பட்ட இருண்மையும் அந்நியத்தன்மையும் ஆகும். அக் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில் அவ்வாறான உத்திக்காக பயன்படுத்தப்படும் படிமங்களு டன், உருவகங்களுடன், தொன்மங்களுடன் அக்கலை இலக்கியங்கள் படைக்கப்பட்ட சமூகங்களுக்கு நெருக் கம்/ பரிச்சயம் இருந்த அளவுக்கு, அக்கலை இலக்கியங் கள் படிக்கப்பட்ட சமூங்களுக்கு இல்லாத நிலையில், அக்கலை இலக்கியங்கள் பயிலப்படும் பொழுது எதிர் கொள்ளப்படும் இருண்மை அல்லது ஓர் அந்நியத் தன்மை காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், பரிச்சய மான குறியீடுகள், உருவகங்கள் பயன்படுத்தி படைக்கப் பட்ட அத்தகைய கலை இலக்கியங்கள் வாசகமனங்களு க்கு சொல்ல நினைக்கின்ற செய்திகளை கொண்டு
செல்வதில் வெற்றி பெறுகின்றன. அத்தகைய ஒரு
– o

Page 35
நாவலாக டெனிஸன் பெரேராவின் "மலையுச்சி மாளிகை" எனும் இந்த நாவல் விளங்குகிறது.
டெனிஸன் பெரேரா இந்த இளைஞர் நாவலில்
முடியாட்சிகால அரசன் ஒருவனை மையமாக கொண்டு,
அவனது ஆட்சியில் அவனது சுயநலத்திற்காய் மக்களை
பலி கொடுப்பதையும், அவனது அத்தகைய அராஜ ஆட்சிக்கு எதிராக அந்த நாட்டு இளைஞர்கள் கிளர்ச்சி
ஈடுபடுவதையும் எடுத்துக் காட்டுகிறார். முடியாட்சி கால அரசனை ஏன் ஜனநாயக யுகத்தில் நிலவும் ஆட்சி முறைமைகளில் மக்களை பலி கொடுத்தலையும், அத்த கைய ஆட்சிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும்
கிளர்ச்சிகளையும் காட்டுவதற்காக பயன்படுத்தி
இருக்கிறார் என்ற கேள்வி எழலாம். இன்றைய நவ காலனிய ஜனநாயகம் என்பது ஒரு வகையில் முடியாட்சி தன்மைகளை கொண்டிருப்பதன் கராணமாகவே அத்தகைய ஓர் உத்தி கையாண்டுள்ளார் என்பதே அக்கேள்விக்கான பதிலாக இருக்கிறது.
இத்தகைய ஜனநாயக யுகத்தில் இவ்வாறான உத்திகளை (அதாவது யதார்த்தத்தில் இல்லாத அமைப்புகளை, நடக்காத முடியாத சம்பவங்களை) கையாளுவது என்பது, ஒரு வகையில் போர் சூழலில் கையாளப்படும் தந்திரோபாயத்திற்கு ஒத்தது எனலாம். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் கலை இலக்கியம் என்பது வெறுமனே பொழுதுபோக்கவோ (இன்றைய யுகத்தில் பொழுதுபோக்குவதற்கு கலை இலக்கியத்தை அணுகுதல் என்பதில் ஏற்பப்பட்ட மாற்றம், அதற்கான சமூக, பொருளாதார, அறிவியல் தொழில் நுட்ப காரணி கள் பற்றி தனியாக பேச வேண்டும்) தனித்து அழகியல் சித்திரிப்புகளாக அமையாமல், இன்றைய யுகத்தில் கலை இலக்கியம் படைக்கும் படைப்பாளியின் சூழலில் நிலவும் சகல அரசியல் களில் வெளிப்படும் அதிகாரம், சமூக இருப்பின் மீதான வன்முறை(வன்முறை என்பது ஆயுத கலாசாரத்தால் நிகழ்த்தப்படும் வன்முறை என்பது மட்டுமே வன்முறை இல்லை, அதற்கு அப்பால் வேறு வழிகளில் வன்முறை வெளிப்படும் யுகம் இது). ஆகிய வற்றுக்கு எதிராக நிகழ்ந்தபபடும் போராட்டங்களுக் கான ஆயுதங்களாக மாறி இருக்கும் யுகம் இது. அதன் காரணமாக அத்தகைய கலை இலக்கியங்களில் தந்தி
ரோபாயம் கையாளப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இத்தகைய தந்திரேபாயத்தை நாம் உலக கலை இலக்கியச் சூழலில் மார்க்ஸியக் கோட்பாட்டின் அடிப்
படையில் படைக்கப்பட்ட கலை இலக்கியங்களிலும், பின்
 
 
 
 
 
 

காலனிய கலை இலக்கியங்களிலும் காணலாம். இத்த கைய சிந்தனைகளின் பின்னணியில்தான் நாம் டெனிஸன் பெரேராவின் மலையுச்சி மாளிகை எனும் இந்த நாவலை எதிர் கொள்கிறோம்.
தனது ஏழு பரம்பரையினர் வாழ்ந்த, தான் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் மாளிகை பழசாகி விட்டதனால், புதிய மாளிகை ஒன்று கட்ட
வேண்டும், அதுவும் தன் நாட்டிலுள்ள மலை ஒன்றின்
உச்சியில் அந்த மாளிகையை கட்ட வேண்டும் என்று
முடிவெடுக்கும் ஒரு நாட்டு அரசன், அந்த மாளிகையை கட்டுவதற்கு அவன் தனது நாட்டு மக்களை பயன் படுத்துவதும், அந்த மாளிகையை கட்டுகின்ற பாரியப் பணியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிர் இழப்பதையும், அதேவேளை அரசனின் அச் செயலுக்கு அந்த நாட்டு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இறுதியில் அம்மாளிகை கட்டி முடிக்க பட்ட தருணத்தில் அவ்விளைஞர்கள் அரசனுக்கு எதிராக பொங்கி எழுந்து கிளர்ச்சியில் ஈடுபட்டு அந்த மலையுச்சி மாளிகையை இடித்து தரைமட்டமாக்குவதுடன் நாவல் நிறைவு பெறுகிறது. ܡ
இவ்வாறாக நகர்கின்றன இந்த நாவலில் அந்த மாளிகையை கட்டுவதற்கு மக்களை பயன்படுத்துவதற்கு அரசன் பல ராஜ தந்திர உத்திகளை கையாளுகிறான், அதில் ஒன்றுதான் நாட்டிலுள்ள எல்லா மக்களை பயன் படுத்துவது சரிவராது என கருதி, மக்களின் பெரும் பகுதியினர் அப்பணிக்கு வருவதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு, அரசன் தன்நாட்டிலுள்ள இளைஞர்களை கைது செய்து வதைமுகாம்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறான். அவர்களை பேச்ச வார்த்தைகள் மூலம் விடுவிக்க வரும் அவ்விளைஞர்களின் மூத்தஉறுப்பினர் களிடம் ஒரு நிபந்தனையை முன் வைக்கிறான். அவர் களின் இளைஞர்களை விடுவிக்க வேண்டுமானால் நீங்கள் எல்லோரும் அந்த மலையுச்சி மாளிகை கட்டும் கட்டுமான பணியில் இணைந்துக் கொள்ள வேண்டும் என்கிறான். அவர்கள் அதற்கு உடன்பட, இளைஞர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். விடுக்கப்பட்ட இளைஞர்கள் அரசனின் ஆட்சி முறைமையில் அதிருப்தி கொண்டு காட்டில் ஒளித்துக் கொள்கிறார்கள். இளைஞர்களை வைத்து மாளிகை கட்ட முடியாது என அறிந்து தான், அரசன் அவர்களை பகடக்காயாக்கி, மாளிகை கட்ட அவனுக்கு தேவையான மனித வளத்தை, அவர்கள்
முதுமையானவர்களானாலும் திரட்டிக் கொள்கிறான்

Page 36
இது மாளிகை கட்டுவதற்கான அரசன் கையாண்ட ராஜதந்திர உத்திகளில் ஒன்றானாலும் இறுதியில் அவனது கணக்குப் பிழைத்து விடுகிறது என்பதை இந்த நாவலின் முடிவு எடுத்துக்காட்டுகிறது.
அதே போல அரசன் கையாளும் ராஜ தந்திரங் களில் ஒன்றுதான், இத்துணை நாட்டுச் சொத்தை செல வழித்து, விலை மதிக்க முடியாத நூற்றுக்கணக்கான மக்களை பலி கொடுத்து இவன் மலையுச்சியில் மாளிகை கட்டு வதை மக்கள் ரொம் பும் விரும் புகிறார்கள் என்ற ஒரு மாயையை உருவாக்கிறான். அதற்கு அவன் அறிவு ஜீவிகளை ன்ெ அத்தோடு இதுவரை காலம்
3.
8
தற்பொழுது தான் வசிக்கும் மாளிகையை மக்கள் பார்வையிட அனுமதிக்காத அரசன் புதிதாய் மாளிகை கட்டுவது என்ற யோசனைக்கு பின் மக்களை பழைய மாளிகையை பார்வையிட அனுமதிக்கிறான். இதுவும் அவன் கையாளும் ராஜதந்திர உத்திகளில் ஒன்று. இந்த உத்திகள் எல்லாம் முடியாட்சி தன்மை கொண்ட ஜனநாயக யுக இன்றைய அரசியலின் போக்கினை செயற்பாடுகளை பிரதிபலிப்பவைகளாக இருக்கின்றன. இத்தகைய அம்சங்களை உள்ளடக்கி இருப்பதானால் இந்த நாவல் இன்றைய யதார்த்ததிற்கான குறியிட்டு நாவல் ஆகுகிறது.
இவ்வகையான நாவல்கள் குறிப்பாக ஈழத்து தமிழ் இலக்கியச் சூழலில் இளைஞர் நாவல் என்ற வகை
என்பது இல்லை என்றே சொல்ல வேண்டும். அதே
வேளை பின்காலனிய கலை இலக்கிய உத்திகளை கையாண்டு எழுதப்படும் எழுத்து முயற்சி என்பது பரவலாக இல்லாத சூழலில் மலையுச்சி மாளிகை என்ற இந்த நாவல் நமக்கு தமிழில் கிடைத்திருக்கிறது. இவ் விடத்தில் எனக்கு உமா வரதராஜனின் 'அரசனின் வருகை' எனும் சிறுகதை எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்த நாவலில் அரசன் மலையுச்சியில்
மாளிகை கட்டுவதற்கான சிந்தனையை பற்றி விரிவாக சொல்லப்பட்ட அளவுக்கு, அதற்காக பலியாகும் மக்களின் நிலையை எடுத்துச் சொல்லும் அளவுக்கு அந்த அரசனுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் இளைஞர்களின் நடவடிக்கைகள் விரிவாக சொல்லப் படாவிடினும், ஏற்படும் கிளர்ச்சிக்கு சற்று முன்னதான தருணத்தில் அரசனால் அவ்விளைஞர்களுடன் நடத்துப் படுகின்ற பேச்சு வார்த்தையில் அவ்விளைஞர்கள் தாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிளர்ச்சி செய்வதற்கான காரணத்தை பகிரங்கமாக முன் - வைக்கிறார்கள். அத்தோடு அரசனின் ஏழு பரம் படை யினர் வாழ்ந்த , இன்றைய அரசன் வாழ்ந்துக் கொண் டிருக்கும் அந்த பழைய மாளிகையும் அந்த நாட்டுக்கு தேவையில்லை என்ற கருத்து கொண்டவர்களாகவும் -- அந்த இளைஞர்கள் இருந்த பொழுதும் அவர்கள் அது வரை காலம் கிளர்ச்சியில் ஈடுபடவில்லை. ஆனால், என்று அவர்களது பெற்றோர்கள் அடிமைப்படுத்தப் பட்டும், கொடுமைப்படுத்தபட்டும் அவர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டும், அந்த நாட்டின் செல்வமும், வளமும் சுரண்டப்பட்டும் அரசனால் புதிய மாளிகை கட்டப் படுகிறேதோ அன்றுதான் அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபடுகிறார்கள். இவ்விடத்தில் தான் நமக்கு தெரிந்த நாம் கண்கூடாக கண்ட உண்மையான பாதிக்கப்பட்ட சமூகம்தான் கிளர்ச்சியில் இறங்கும் என்ற உண்மை அங்கு வெளிப் படுத்தப்படுகிறது.
காலத்து தேவையான கலை இலக்கியம் படைக்கப்படவேண்டும் என சொல்லப்படுவதுண்டு. அத்தோடு அது காலத்தாலும் வாழும் கலை இலக்கிய மாக மாறவேண்டும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. டெனிஸன் பெரேராவின் "மலையுச்சி மாளிகை" என்ற இந்த நாவல் அவரது ஆரம்ப கால நாவல் என்று அறிகிறோம். இந்த நாவல் இளைஞர் நாவல் என்ற வகையானது எனச் சொல்லப்படுகிறது. இருக்கலாம். நம்மை பொறுத்தவரை - இந்த நாவல் அன்று எழுதப் பட்டிருந்தாலும் பின்காலனிய ராஜா ஒருவனின் கதையை தீர்க்க தரிசனத்துடன் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கும் ஒருநாவல் எனலாம்.
இன்றைய நமது உலக அரசியல் சூழலில், ஜனநாயக யுக முடியாட்சி அரசர்கள் எல்லோரும் தங்கள் நாட்டிலே தங்கள் மக்களால் தங்களுக்கு எதிராக ஏற் படுத்தப்படும் கிளர்ச்சிகளை அடக்க எத்தனித்துக் கொண்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அக் கிளர்ச்சிக்கு (அக்கிளர்ச்சிகளின் தொடக்க கர்த்தாக்கள் இளைஞர்களாக இருப்பதும், அக்கிளர்ச்சியின் பங்காளர் களாக தொகையில் அதிகமாக இருப்பது இளைஞர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) பயந்து தங்கள் நாட்டு விட்டு ஓடி கொண்டிருக்கும், ஓட வேண்டிய சூழல் ஏற்பட் டிருக்கும் ஒரு காலகட்டத்தில் இன்று தமிழில் இந்த நாவல் ஒரு தீர்க்க தரிசனமிக்க நாவல் என்றே சொல்ல
வேண்டும்.

Page 37
GUATGólgnas Glee TIUT (Graflað)
முனித நேய
மு5.த46 இர42 பரீக
எழுத்தாளர்கள் வரிசையில் மானிடப் பண்பு
களை மதித்து, பண்பட்ட எழுத்து வடிவமூலம் மக்களை
யும், அப்போதைய இலங்கை ஜனாதிபதியையும் பெரிதும் கவர்ந்தவர் அமரர் இராஜருநீகாந்தன் ஆவார்.
வடமராட்சி, வதிரி, அல்வாய்தெற்கு என்ற கிராமத்தில் 30-04-1948 இல் ஜனனித்து, தனது ஆரம்பக் கல்வியை யா/தேவரையாளி இந்துக் கல்லூரி யிலும், மேல் வகுப்பை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக்
கல்லூரியிலும் தொடர்ந்து மிகச் சிறந்த கல்விமானா கவும், பண்பு நிறைந்தவராகவும் விளங்கியதோடு, சிறந்த சிறுகதை எழுத்தாளனாக, திறமைமிக்க மொழிபெயர்ப் பாளராக தன்னை இனம் காட்டிக் கொண்டார்.
1970இல் இவரது முதலாவது கவிதை'விவேகி' என்ற சஞ்சிகையில் பிரசுரமானது. மேலும் இவரால் வரையப்பட்ட சிறுகதைகள் தேசிய, விதேசிய பத்திரிகை களிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தன. இவற்றுள் சில ரஷிய, உக்கிரேன் மொழிகளிலும், ஆங்கில, சிங்கள மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.
அன்னாரின் மொழிபெயர்புத் திறனுக்கும், ஆக்க இலக்கியத் திறமைக்கும் சான்றாக இவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட "நீதிபதியின் மகன்" என்ற நூலுக்கும், சிறுகதைத் தொகுதியான "காலச்சாளரம்" என்ற நூலுக்கும் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது.
சோவியச் சார்பு கம்மியூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து தனது இறுதி மூச்சுள்ள வரை உண்மையான கம்மியூனிஸ்டாகவே மறைந்து போனார். பொன்.கந்தையா, தர்மகுலசிங்கம் ஜெயம் பாரம்
பரியத்திலிருந்து கொழும்பு முற்போக்கு சங்கத்தில்
ஜீவநதி 一圈
 
 
 

ஈற்றிய பணிகள் விரிவானது. இச்சங்கத்தின் உறுப் புரிமையுடன் நில்லாது முன்னோடி தலைவர்களான வி.பி.பொன்னம்பலம், எம்.சி.சுப்பிரமணியம் மற்றும் தெணியான், நவத்துடன் நெருக்கமாக இருந்தார்.
1987 இல் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை சம்பந்தமான பாடநெறியை கற்று தேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் சிறந்த சஞ்சிகையான "மல்லிகை"யின் வளர்ச்சிக்கு உதவினார். மேலும் சோவியத் ரஷ்ய தகவல் சஞ்சிகையிலும் பணிமேற்கொண்டு இலங்கை இலக்கிய வாதிகளுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தார்.
சோவியத் யூனியன் நொவெஸ்தி செய்தி சேவையில் இணைந்து பணி மேற்கொண்ட அமரர் இராஜ ருநீகாந்தன் சோஷலிசம், தத்ததுவமும் நடை முறையும், புதிய உலகம், சக்தி போன்ற வெளியீடுகளின் ஆசிரியர் குழுவில் காத்திரமான பணியினைச் சிறப்புற மேற்கொண்டார்.
பேராசிரியர் கைலாசபதி பிரதம ஆசிரிய ராக வீற்றிருந்த 'தினகரன் ஆசிரியர் பொறுப்பை ஏற்று தனித்துவ பாணியில் 1997 இவ் அப்பத்திரிகையை மேன் மையுறச் செய்தார். தனக்குக் கீழ் பணிபுரிந்த கடைநிலை ஊழியர்வரை பணிவன்புடன் நடந்து கொண்ட மனித நேயத்தை அன்னார் இறந்து 7ஆம் ஆண்டு சென்றும், இன்றுவரை தினகரன் ஊழியர்கள் நினைவுகூருவதை அறிய முடிகின்றது. மலையக எழுத்தாளர்களின் எழுத் தாற்றலுக்கு முன்னுரிமை வழங்கி தினகரனில் அவர் களது இலக்கியங்களை வெளியிட்டு அவர்களை ஊக்கப் படுத்தினார். காலம் சென்ற துரை-விஸ்வநாதன்
(துரைவி), தெளிவத்தை ஜோசப் போன்றவர்களின்
5 இதழ் 32

Page 38
படைப்புக்களை தினகரனில் அடிக்கடி காணலாம். வன் முறை அரசியலுக்கு துதிபாடாது, பத்திரிகை தர்மத்தை பேணிகாப்பதில் தனது பேனா மையை தெளிவுடன்
சிந்தவிட்டவர் முரீகாந்தன்.
20-04-2004இல் அன்னார் மறைந்து விட்டார் என்ற செய்தியைக்கேட்ட அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க இரங்கல் செய்தி வெளியிட்டது நினைவுகூரல் சாலச் சிறந்தது. "மறைந்த இராஜ ருநீகாந்தன் இலங்கை அரசியல் தொடர்பாக ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். தமிழ் இலக்கியத்துறைக்கு அளப்பெரிய சேவைகள் செய்தவர். இவரது இழப்பு தமிழ் வாசகர்களுக்கு பாரிய இழப்பு. இவர் மறைந்தாலும் அன்னாரின் எழுத்துக்கள் என்றும் உயிர்த்தன்மை கொண்டவை” என சந்திரிக்கா அனு தாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதி பதியால் பாராட்டுப்பத்திரம் பெறுமளவுக்கு இராஜருநீ காந்தன் உயர காரணகர்த்தாக்கள் இலங்கையின் முற்போக்கு இடதுகாரிகளே.
சோவியத்து இலக்கிய கர்த்தாக்களான கலீல், ஜிப்ரான் ஆகியோரது ஆக்கங்களை இவர் மொழி பெயர்த்து வெளியிட்டது தமிழ் கூறும் உலகுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்.
தான் ஆரம்பக்கல்வியை தொடங்கிய தேவரை யாளி இந்துக்கல்லூரியின் வணக்கத்துக்குரிய ஸ்தாபகர் திரு.கா.கரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை "சூரன் சுயசரிதை” எனும் நாமத்தில் வெளியிட்டு வைக்கும் முயற்சியில் இறங்கியவேளை காலன் திடீரென 20-042004 இல் இவர் உயிரை கவர்ந்து சென்று விட்டான். இவரின் மறைவின் பின்னர் இவரது உறவினர்கள் "சூரன் சுயசரிதை” என்ற மேற்படி நூலை சுவிஸில் வசிக்கும் வையாபுரியின் உதவியோடு வெளியிட்டு வைத்தனர்.
2005 தை மாதம் அவுஸ்திரேலிய தமிழ்ச் சங்கம் இராஜருநீகாந்தன் பற்றியும் சூரன் சுயசரிதை என்ற நூலைப்பற்றியும் நினைவு கூரலோடு புத்தக விமர்சனக் கூட்டமும் நடைபெற்றது. இந் நிகழ்வு நாடு தாண்டியும் இவர் நினைவில் நிறுத்தப் படுகின்றார் என்ற செய்தியை தெரிவிக்கின்றது.
சாகா சரித்திரம் படைத்த நேயமிக்க இலக்கிய
வாதியை ஏழாம் ஆண்டில் நாமும் நினைவுகூர்வோம்.
 
 

உனக்குள் ஆயிரம் வேதனைகள் அதையடக்கி வாழ்வதுன் சாதனைகள் மனைவாழ நீயாளும் நுதனங்கள் மனைவியெனும் ஸ்தானத்து மாட்சிமைகள்
விடிவுக்கு முன்விடியும் விடியலாகி வீட்டுக்கு விடிவேற்றும் குலவிளக்கே அடுக்களையில் அவியும் மாமிசமாய் அளந்தான் உண்விதியை ஆண்டவனும்
பத்துமாதம் வயிற்றினிலோ பிள்ளைப்பாரம் பிறப்புலகில் வாழுமட்டும் குடும்பபாரம் நித்திலத்தில் ஆணாதிக்கக் கொடுங்கோரம் உனையடிமை கொண்டிடும் விதிப்பாரம்
கடும்வேலைக் களைப்பினில் கிடந்தாலும் கட்டியவன் கொடுங்காமம் தீண்டியுனை இடுப்பொடித்து உடல்வலிக்க வதைத்திடினும் கடுப்புமுகம் காட்டாது துடிக்கின்றாயே
சேலையின் நூலிடைக் கண்ணறையால் தசைமதப்பு சுவைக்கின்ற கண்களிடையே நாளும் நிர்வாணப் படுகின்ற
நிலையாகுமுன் வீதிவழி நகர்வுகள்
தனித்தொரு பயணம் செய்திடவும்
தவித்துத் திகைக்கிறாய் தெருக்களிலே சனசந்தடி நெரிசல் நெருக்கடியில்
தினமெத்தனை பங்கம் படுகின்றாய்
ஆடையால் மூடிய உன்னுடலை கண்மேடையில் ரசிக்குது காமுகங்களும் கேடுசைச் சினிமாப் பாடல்களும் உன்னழகினை அரைக்குது ஆலைகளாகி
பிறப்புகள் முகைக்கும் கொடியானாய் மறைப்புள் கசங்கும் மலரானாய் இருக்கும் வரைக்கும் உடலெரிந்து உருகும் மெழுகென உருவானாயே
பாரதி பாட்டுடைப் பெண்ணாக பவனிக்க எத்தனை சோதனைகள் வீரப் பெண்ணென வீறுபெறு வல்லடிமைத் தனத்தை வென்றெழவே
- அல்வாயூர் சி.சிவநேசன்
ဗျွိဋ္ဌိ - இதழ் 32

Page 39
faOTLOT
அலெய்ன் ரெனே (ALAINRESNAIS) படங்கள் இரண்டு
- கே.எஸ்.சிவகுமாரன்
குறிப்பிட்டதொரு நெறியாளரின் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை அனைத்துலகத் திரைப்பட விழாக் களில் பார்த்தறியும், மகிழும் வாய்ப்பு நமக்குக் கிடைப்ப துண்டு. அத்தகைய சந்தர்ப்பம் 2008 இல் எனக்குக் கிடைத்தது. கேரள அனைத்துலகத் திரைப்பட விழா அம்மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இடம்பெற்றது. Retrospective எனப்படும் நினைவூட்ட லாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு முக்கிய நெறி யாளரின் பல படங்கள் அங்கு காட்டப்பட்டன. அவரு டைய பெயரின் உச்சரிப்பு அலெய்ன் ரெனே எனப்படும். பிரெஞ்சு/ஆங்கில மொழிகளில் அவர் பெயர் இவ்வாறு எழுத்துக்கூட்டப்படும்: ALAINRESNAS.
இந்த நெறியாளர் பிரான்ஸ் நாட்டின் உடன் நிகழ்காலச் சிறந்த நெறியாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். அண்மைக்கால திரைப்பட நெறியாளர் கள்/இயக்குநர்களுள் இவரும் பேசப் பட்டு வருகின்றார். இவர் நெறிப்படுத்திய படங்களுள் பின்வருபவை திரைப் பட விழாவிலே காட்டப்பட்டன.
LASTYEAR AT MARIENDAD, HIROSHIMA MON AMOUR, GUERNICA, EVEN STATUES DIE, NIGHT AND FOG, MURIEL, STRAVINSKY, SAME OLDSONG, COEURS.
இவற்றுள்ளே இரண்டு படங்கள் பற்றிய சில திறனாய்வுக் குறிப்புகளைச் சிறிது பார்ப்போம். நினைவில் நின்றவற்றைத் தொகுத்துப் பார்க்கையில், கதைப்பின்னல் பற்றி மாத்திரம் இங்கு குறிப்பிடுவோம்.
அரை நூற்றாண்டுக்கு முன்னர் வெளிவந்த ரெனேயின் படம் "மாரியன்பாடில் கடர் ண்டு" என்ப தாகும். பிரெஞ்சு மொழியில் பரிசோதனை எழுத்தாள ராகக் கருதப்பட்ட அலெய்ன் ரொபே-க்றிலே (ALAN ROBBE-GRILLET) எழுதிய நாவலொன்றைக் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை
ஜீவநதி -

-Cast Teare/at c/Marienbad
NEW 3.SSCOPEPRNT
எழுதியிருப்பவரும் இந்த நாவலாசிரியர் தான். இந்தப் படத்தை சுமார் 40 வருடங்களுக்கு முன் கொழும்பிலே
இப்படத்தைப் பார்த்த பொழுது அந்நேரம் இப்படம் எனக் குப் புதிராக இருந்தது. பரிசோதனை எழுத்துக்களிலோ, திரையாக்கங்களிலோ பரிச்சயம் குறைவாகவிருந்த காலம் அது.
குறிப்பிட்ட இந்தக் கதையின் போக்கு எப்படி யிருந்தது என்றால்.
முன்னைய வருடத்தில் மாரியன் பாட் என்ற இடத்தில் ஓர் ஆணும் பெண்ணும் சந்தித்தது உறவு கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருந்தான். அவன் தன்னிடம் இருந்து அவள் பிரிந்து செல்வதை விரும்பவில்லை அவ்வளவு தான். பின்னர் நெறியாளர் கையாண்ட உத்திமுறை களினால் கதை வேறு உத்திமுறைகளைக் காட்டுகிறது.
அடுத்த ஆண்டிலே அந்த ஆண் மீண்டும் அவ ளைச் சந்தித்து உறவை நீடிக்க விரும்பினான். ஆனால் அவளுக்கோ முன்னைய உறவு நினைவுக்கு வருவதா யில்லை. அவள் நினைவெல்லாம் பிறிதோர் காலத்திலும் இடத்திலும் தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றது. இது அவனுக்கு குழுப்பத்தை ஏற்படுத்துகிறது. நமக்கும் தான்.
37 இதழ் 32

Page 40
அவள் நினைவில் என்ன கோளாறு ஊற்பட்டது என்பதற்கு விளக்கமில்லை. அது அவ்வாறு இருக்க படத்தின் ஒளிப்பதிவு பிரமாதமாக அமைந்ததைக் குறிப்பிட வேண்டும்.
அடுத்த படம் "ஹீரோஷிமாவில் காதல்" என்ற மற்றொரு ஆண்-பெண் உறவுப்படம். இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரமாகிய ஹீரோஷி மாவில் அணுக்குண்டு போடப்பட்டதனால் ஏற்ப் பட்ட விளைவுகளைக் காட்டும் கதைசாரா விவ ரணப்படம்(documentary) காட்டப்படுகிறது. இந்தப்படத்தில் ஓர் இளம் பிரெஞ்சு நடிகை, யுத்த GT5iTILLI LJLLb 3,6760p (anti-war film) 6T(B55) வருவது காட்டப்படுகிறது. அது ஒரு புறமிருக்க இடது சாரிப் போக்குடைய நெறியாளரான அலெய்ன் ரெனே தமது கோட்பாடான வன்செயல் கண்டிப்பு, துயர்தரும் நிகழ்வுகளைச் சித்திரிப்ப தில் நாட்டமுடையவர் என்பதை நாம் கண்டு
கொள்கின்றோம். ரேனே குடியேற்ற வாதத்தை, யுத்த வெறுப்பை ஆண் - பெண் உறவின் நுட்ப மான பகுதிகளைச் சித்திரிப்பதில் முதன்மை யாளராக இருந்து வந்திருக்கின்றார் என்பதையும்
நாம் கண்டு கொள்கின்றோம்.
அந்தப்படத்திலே, உத்திச்சிறப்புக்களின்
நேர்த்தியையும், நேரிய நடிப்புத்திறனையும் நாம்
அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
இந்தப் படமும் யுத்தப் பின்னணியாகக்
கொண்ட ஒரு காதல் கதைதான்.
ஒரு பிரெஞ்சுப் பெண் இரண்டாவது யுத்தத் தின் போது ஜேர்மனியப் போர் வீரன் ஒருவருடன் உறவு கொண்டிருந்தாள். பின்னர் ஜப்பானில் அவள் படமெடுக் கச் செனி ற போழுது, ஜப்பானிய கட்டடக் கலைஞன் ஒருவன் இந்தப் பெண் நெறியாளர் மீது மையல் கொள்கிறான்.
அவளும் இணக்கமாய் நடந்த கொள்கிறாள். இருவரும் தத்தமது பமைய காதல் நிகழ்ச்சிகளையும், யுத்த விளைவுகளையும் நினைவூட்டி சஞ்சரிக்கின்றனர். ஓரிரவு இருவருமே ஒன்றாகக் கூடி மகிழ்கின்றனர். அவ்வளவுதான். அடுத்தநாள் காலை அவள் பாரிஸலிக்குத் திரும்புகின்றாள்.
ஜீவநதி 哥
 
 

Un filmde AAN RESNAS scéngritore cic
&cblluj6b6|Tg5Lb (existentialism) (66) g56)|T35 கலை, இலக்கியங்களில் இடம்பெற்ற கால கட்டத்தில் ரெனே, அத்தத்துவ நோக்கிலே அநித்திய சம்பவங்களை வலியுறுத்தும் படங்களை எடுத்தார் என்று எண்ணத் தோன்றுகின்றது.
சமூகவியலாளர்களும் பகுப்பாய்வாளர்களும் உவகை கொள்ளும் விதத்தில் ரெனே தமது படங்களை ஆக்கித்தந்துள்ளார் எனக்கூறலாம்.
இங்கு முழுமையான திரைப்படத் திற னாய்வை நான் மேற்கொள்ளவில்லை. கோடிக்காட்டு வதற்காகச் சில செய்திகளைக் கூறிச் சென்றேன். அலெய்ன் ரெனே இரு தடவை மணம் முடித்தவர். இவரு டைய முதல் மனைவி ஒண்ட்றே மோல்ரூ (ANDARE MALRUX) என்ற பிரபல பிரெஞ்சு எழுத்தாளரின் மகளாவார். பின்னர் சபீன் அஸிமா என்ற பெண்ணை மணம் புரிந்தார்.
நல்ல திரைப்படங்கள் என்று கூறப்படுபவற்றை பார்க்க விரும்புபவர்கள் ரெனேயின் படங்களையும் பார்த்து மகிழலாம். அவர் பற்றிய மேலும் தகவல்களை அறிய இணையங்களில் தேடுதலை மேற்கொள்ளலாம்.
8 இதழ் 32

Page 41
அன்று ஞாயிற்றுக் கிழமை பூசைப் பலி முடிந்து, தேவாலயத்திற்கு வெளியே வந்து, அவசரமாக போய்க் கொண்டிருந்தாள். மெரீனா. சுகயினமான கணவனை விட்டு வந்தோமே என்ற சிந்தனையோடு போய்க் கொண்டிருந்தவளை பின்னால் யாரோ அழைப்பது கேட்டு, திரும்பிப் பார்த்து நடையைத் தளர்த்தினாள். "நில்லடி மெரீனா உன்னோடு எவ்வளவோ பேசவேண்டும். எத்தனை வருடங்களின் பின் உன்னைக் காண்கிறேன். நீ என்னடா என்றால் தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடுகிறாய்" என்று சொல்லிக் கொண்டு, அவள் உறவுக்காரியும் நண்பியுமான ஸ்ரேலா அவளருகே வந்தாள். "சரி. இன்றைக்கு வீட்டுக்குப் போன மாதிரித்தான், யாருக்கோ அள்ளி வைப்ப்தற்காக அழைக்கிறாள்" என்று மனதுக்குள் சலித்துக் கொண்டு, "என்னடி அது. இவரும் கோடாரி வெட்டி காலில் கட்டுப் போட்டுக் கொண்டு, கட்டி லில் படுத்திருக்கிறார். நான் போய்த் தான் அவருக்குரிய அலுவல்களைப் பார்க்க வேண்டும். நேரமாகிறது" என்று திரும்பியவள் கையைப் பிடித்து நிறுத்தினாள் ஸ்ரேலா. "அது தானே பார்த்தன். பூசைக்கு இருவருமாக வரு கிறனிங்க இன்று நீ மட்டும் தனியே வந்திருக்கிறாய்? இரு வருக்கும் இடையில் பிரச்சினைகளோ தெரியாதென்று தான் விசாரிக்க அழைத்தேன்" என்று மெதுவாக விஷ யத்திற்குள் நுழைந்தாள் விஷமக்காரி "அது சரி. ஏனடி? உன் கணவர் பழைய தொடர்புகளை இன்னும் விடமாட்டா ராடி? பல வருடங்கள் சென்ற பின்னும் உறவுகளை புதுப்பிக் கிறாரோ?" என்று சொல்லி மெரீனாவின் முகத்தைப் பார்த் தாள். விளங்கிற்று மெரீனாவுக்கு. பல வருடங்களுக்கு முன் குடும்பத்தில் பல பிரச்சினைகளைக் கொண்டு வந்து, பல விளைவுகளைச் செய்து வந்தவள்தான் இவள்.
 
 
 
 
 
 
 
 
 

ஊருக்கு வந்து ஆறு மாதங்கள் கூட ஆக வில்லை. ஏதோ ஒரு அணுகுண் டொன்றை தலையில் போடப் போகி றாள் என்று நன்றாக விளங்கிற்று, மெரீனா வுக்கு இவளிடமிருந்து தப்பவும் முடியாது. என்ன விஷயமென்று அறியாமல் அவளால் போகவும் முடி யாது. "என்ன அப்படி தலை போகிற விஷயம். அவருக்கும் வயது போய்விட்டது. உடல் தளர்ந்து, மனம் மாறி தானுண்டு தன் பாடுண்டு என்று நிம்மதியாக கதையும் கவிதையும், புத்தகம் வெளியிடுவதுமாக தன் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறார். நீ என்னடா என்றால் உன் குணாதி சயங்களை மாற்றிக் கொள்ளாமல் இன்னும் இருக்கிறீயே? நீண்ட வருடங்களின் பின் என்னைக் கண்டனி, சுக பலன் களை விசாரித்துக் கொள்ளாமல், பழையது என்கிறாய்? புதுமை என்கிறாய்? அவரை அள்ளி வைப்பதே உனக்கு வேலையாயிற்று" என்று சினந்து கொண்டாலும், விஷ யத்தை அறிந்து கொள்வதிலும் மிகவும் ஆர்வமாய் இருந் தாள் மெரீனா,
போவதற்கு திரும்பிய ஸ்ரெலாவைப் போலிச் சிரிப்புடன் தடுத்து நிறுத்தியவள் விஷயத்தை வினாவினாள்.
அதை அறிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்து விடுமே? அதுவும் அவள் கணவரைப் பற்றி விடுவாள அவள். இருவரும் நடந்து வந்து கொண்டிருந்தவர்கள் ஜெசியின் மகள் வீட்டுக்கு முன்னால் வந்ததும் "நுதலும் தன் வாயால் கெடும்" என்பதைப் போல் “ஸ்ரெலா ஜெசி இப்பே எங்கேயடி? அவள் மகள் வீடுதானே இது? நல்ல வசதியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது?" என்ற மெரீனாவின் கேள்விக்கு, வலையில் மாட்டிக் கொண்ட மீனைப் போல் மெரீனாவைக் கண்ட ஸ்ரேலா தேன் கலந்த பாலைப் பருகியவள் போல் மனதில் மகிழ்ச்சியடைந்தாள். "அது தாண்டியப்பா உன்னோடு கதைக்க வந்தனான். நீயும் #గ్రా SS மணம் செய்து உன் ஊரோடு போய்விட்டாய், இங்கு ஜெசி 8 யும் பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்துவிட்டு, புருஷன் இறந்த பின் அவருடைய ஓய்வூதியத்தை எடுத்துத் தனிமை" ܀ ܀ யில் வாழுகிறாள். அவளும் பத்திரிகைகளுக்கு கதைகள்
எழுதுவதும், வானொலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வது ر
மாக காலத்தை ஒடவிட்டுக் கொண்டு இருக்கிறாள். உன் கணவர் கூட இரண்டு நாளைக்கு முதல் புத்தகங்களும் கையுமாக அங்கு போய் வந்ததாக அறிந்தேன்" என்று விஷயத்தைப் பட்டும் படாமலும், வாழைப் பழத்தில் ஊசியை ஏற்றுவதைப் போல் சொல்லி, மெரீனாவின்

Page 42
முகத்தில் ஏற்படும் மாற்றத்தை உற்றுக் கவனித்தாள், GroGUGOT.
தன் தலையில் இடி விழுந்ததைப் போல் அந்தச் செய்தி மெரீனாவுக்கு இருந்தாலும், காட்டிக் கொள்ளாமல் "அடி விசரி அந்த ஆள் ஏக பத்தினி விரதனாக, கம்பனும் கண்ணதாசனையும் போல் எழுதுவதிலேயே ஒன்றித்துப் போய் இருக்கிறார். எனக்கு சமையலுக்கு சாமான்கள் வாங்கித் தரவே அவருக்கு நேரமில்லை. விடிந்து காலைக் கடன்களை முடித்துக் கொண்டு தன் அறைக்குள் புகுந்து விட்டால், சாப்பாட்டுக்குக் கூட நான் கத்தினால் தான் வெளி யில் வருவார். புத்தகப் பூச்சியாக, எழுதுவினைஞராகவே மாறிவிட்டாரடி அவர். தொலைக்காட்சி பார்ப்பது கூட அன்றைய செய்திகள் மட்டுந் தான் பார்ப்பாரடி நல்ல நிகழ்ச்சிகள் போடுகிறார்களப்பா, வெளியில் வந்து இருந்து பாருங்கோவன் என்றால், அவன் விசரன்கள்ர நாடகங் களை நீ தான் இருந்து பார்த்துக்கோ என்று சொல்லிப் போய்விடுவார். அவர் அப்படி இருக்க, நீ என்னடா என்றால், அவரைத் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்று சொல்லி முடித்தாள்.
ஸ்ரெலா விட்ட பாடில்லை. "எப்படியடி உன் கணவர் இப்போ இருக்கிறார்? அந்த நாளில் சுழல்டல் மன்னராச்சே உன் மன்னவன்?" என்று மெரீனாவைச் சீண்டி னாள். மெரீனாவும் "அவருக்கென்னடி குறை. மனுஷன் வயது போனாலும் நோய் நொடி ஏதுமில்லாமல் உஷாராகத் தான் இருக்கிறார். இடைக்கிடை இருமலோ காய்ச்சலோ வந்துவிட்டால் தூதுவளையையும், மல்லியும் இஞ்சியும் அவித்துக் குடித்துவிடுவார். அவையும் இரண்டு நாளில் அவரை விட்டு பஞ்சாய்ப் பறந்துவிடும். எனக்குத் தான் அடிக்கடி வருத்தம் வரும், மருந்து எடுப்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் போய்க் கொண்டிருக்கிறது. கிழமைக்கு ஒரு தரம் வைத்தியரிடம் போவது பழக்க மாகிவிட்டது. பாவம் அவர் என்னைக் கடும் வேலைகளைச் செய்யவிட மாட்டார். வருத்தங்கள் வந்தாலும் நன்றாய் கவனித்துக் கொள்வாரவர்டி" என்று சொல்லி முடிக்க, மீண்டும் ஸ்ரெலா அப்படியென்றால், உன் கணவர் முற்றும் துறந்த முனிவர் என்று சொல்லு, உன் விஷயத்தில் சரி. அப்படியென்றால் ஏன் ஜெசியைத் தேடி உனக்குத் தெரியா மல் போகவேண்டும். அவளுக்கு பத்திரிகை களையும் புத்தகங்களையும் கொடுத்து சில்லாட்டு வேலைகளை ஏன் செய்யவேண்டும்? கவனம். பழைய குருடி கதவைத் திறடி என்று மாறிடுவார் பார்த்துக்கோ. நான் வாறன்" என்று விடை பெற்றாள். நண்பி மீது அவளுக்கு கோபம் வந்தா லும், "பல வருடங்களுக்குப் பின் சொந்த பந்தங்களை பார்ப்பதில்லையா? அதையெல்லாம் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதா? குணத்தை அறிந்து தான் குதிரைக்குக் கடவுள் கொம்பு கொடுக்கவில்லை என்பதைப் போல் உன் கண
ஜீவநதி H

வரை கடவுள் விரைவாக எடுத்துக் கொண்டார். இல்லாவிட் டால் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்” என்று சொல்லிக் கொண்டு வீடு நோக்கி விரைந்தாள்.
அவள் நடந்து போகும் வேகத்தைவிட கணவன் மேல் கொண்ட கோபந் தான் மேலோங்கி நின்றது. மனதில் நச்சரித்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தவள் வீடு பூட்டி யிருப்பதைக் கண்டு திகைத்தாள். காலை ஒன்பது மணிக்கு மேலாகியும் முன் கதவு திறக்கவுமில்லை. யன்னல் கதவு களும் திறக்காமல் இருப்பதைக் கண்டு, யன்னல் கதவைத் தட்டப் போனவள் சடாரெனக் கையை எடுத்துக் கொண்ட வளின் மனதில் பல சந்தேகங்கள் உருவாகின. இது வரை அந்த சூரவல்லியின் வீட்டுக்குப் போனதைப் பற்றியோ, அவள் தனிமையில் வாழுவதைப் பற்றியோ என்னிடம் சொல்லவில்லையே அறுவான். எவ்வளவு அமசடக்குக் காரன். அம்மாஞ்சி மாதிரி மூஞ்சை வைச்சுக் கொண்டு ஆரவல்லியைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் போலிருக்கு பூசை முடிந்து மச்சாள் வீட்டுக்குப் போய் கதைத்திருந்து தாமதித்து வருவது தான் வழக்கம். அதை நினைத்துக் கொண்டு, அவளை வீட்டுக்கு அழைத்து இருப் பாரோ? என்ற சந்தேகம் மெரீனா மனதில் தோன்றியது.
"சந்தேகம் தீராத வியாதி. அது வந்தாலே தடு மாறும் அறிவென்னும் ஜோதி தன்னைத் தானே நம்பாதது சந்தேகம். அதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை தாய் தந்தை யாகும். மனிதனை மடையனாக்கும் இப்படியான கீழ்த்தர மான சந்தேகங்கள் மனதைக் குடைய மெதுவாக காலடிச் சத்தம் கூடக் கேட்காமல் பின் கதவை எட்டிப் பார்த்தாள். அரைவாசி திறந்திருந்த அந்தக் கதவை மனம் படபடக்க, கைகள் துடிதுடிக்க, சந்தேகம் தலை தூக்கத் திறந்தவள் கண்ட காட்சி அவள் மனதை உருக்கிவிட்டது. கடவுளே! இப்படியான கணவரையா நான் கேவலமாக சந்தேகப் பட்டது? என்று அவரைக் கட்டிக் கொண்டு அழவேண்டும் போலிருந்தது. காரணம் அவள் கணவர் கட்டுப் போட்டி காலை நீட்டி கதிரையில் வைத்துக் கொண்டு, சமையல் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். கதவை மெதுவாகத் திறந்து எட்டிப் பார்த்த மெரீனாவைக் கண்ட கணவர் "என்னப்பா பூனை போல பதுங்கி எட்டிப் பார்க்கி றாய்? நீ வர முன் இவைகளைச் செய்து வைத்தால் உனக்கு வேலைப் பளு கொஞ்சம் குறையுந் தானே? நீர் முன் கதவைத் தட்டியிருந்தால் நான் திறந்திருப்பன் தானே யப்பா?" என்று கேள்வி எழுப்பினார் கணவர்.
தடுமாறிய மெரீனா "இல்லை. இல்லை. நீங்கள் நித்திரையாய் இருப்பீர்கள் என்று தான் கதவைத் தட்ட வில்லை" என்று அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லிக் கொண்டு அறையினுள் நுழைந்துவிட்டாள். ஆத்திரத்தோடு வந்தவள் கொஞ்சம் அமைதியானாள். உடையை மாற்றிக்
கொண்டு சமையலறை வந்தவள் எழும்புங்க. நான்
40 இதழ் 32

Page 43
மற்றவைகளைச் செய்கிறேன் என்று சொல்லவும், நீர் பசியோடு வருவீரென்று அப்பமும் வாங்கி, சுடுதண்ணி போத்தலில் கோப்பியும் ஊற்றி வைத்துள்ளேன். முதலில் அதைச் சாப்பிட்டு வா என்று ஆதங்கத்துடன் கூறிய அவள் கணவன் செயல் அவளை ஆச்சரியப்பட வைத்தது.
கெட்டதிலும் நல்லதைப் பார்ப்பது தான் நல்ல மனிதன் செய்யும் செயல். ஆனால் நல்லதிலும் கெட்டதைப் பார்க்கும் ஈனச் செயல் தான் அவள் மனதிலும் தோன்றிய தாகும். தான் ஏதோ விட்ட பிழைக்காகத் தான் என்னைக் காக்கா பிடிக்கிறாரோ? என்ற சந்தேகம் வலுக்கத் தொடங் கியது. "என்னப்பா, எல்லாம் புதினமாய் இருக்கு எதற்கு இந்த சுற்று வளைப்பு" என்று வலிய சொருகினாள் மெரீனா, "கடவுளே! கடவுளே. மனிதன் நல்லதைச் செய்தாலும் உனக்கு தப்பாகத் தான் தெரியும். என்றைக்குத் தான் இந்த பாழ்பட்டுப் போன குறுக்குப் புத்தி உன்னை விட்டுப் போகுமோ? ஏதோ என்ரையவர் நல்லதைச் செய்கிறாரே என்று பாராட்டாமல் விட்டாலும், பழித்துரைக்காமலாவது இருக்கலாம் அல்லவா? நன்றி கெட்ட ஜென்மம்" என்று எரிந்து தள்ளிவிட்டு, தன் அறைக்குள் நுழைந்து, கட்டிலில் சாயப் போனவரின் கையைப் பிடித்து இழுத்தாள், நீறு பூத்த நெருப்புப் போல் மனதில் சந்தேகத்தீயை மூடி வைத்திருந்த சண்டாளி,
என்ன கள்ளன் மாதிரி மாறுகிறீர்கள்? நான் கேட்கும் கேள்விக்கு என்னைப் பார்த்து பதில் சொல்லுங் கள். அவள் தேவடியாள் ஜெசி வீட்டுக்கு ஏன் போனீங்க? போனது தான் போனீங்க. அதை என்னிடம் ஏன் மறைத் தனீங்க? கள்ளப் பூனை மாதிரி திருதிருவென்று முழிக்கிற தைப் பார். அவள் கண்ணை மூக்கை எங்கேயோ காட்டியி ருப்பாள். இவர் குதிக்கால் பிடரியில் அடிபட ஓடியிருப்பார். அவள் தானே இருக்கிறாளே நாசமாய் போனவள். புருசனையும் சாக்காட்டிவிட்டு, யார் யாரையோ மடக்கி, பிள்ளைகளையும் கட்டிக் கொடுத்து விட்டு, எந்தப் பெரிய வன்களை வலையில் வீழ்த்தி, ஆண் பிள்ளைகளுக்கு உத்தி யோகங்களும் எடுத்துக் கொடுத்துவிட்டு, அம்போ என்று தனியே வாழ்கிறாள். சீரழிந்தவள் வயது போயும் ரதியும், ரம்பையும் பொன்ற நினைப்பு. அதுதானே நான் வந்து ஆறு மாதமாகியும் அவள் மூச்சையே பார்க்கல்ல. இவருக்கு மட்டுந்தான் அவளைப் பார்க்க வேண்டுமென்ற தவிப்பு என் பிள்ளைகள் கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தில் என்னத்தை அள்ளிக் கொண்டு கொடுத்தாரோ. வாயடச்சுக் கொண்டு முட்டை போட்ட கோழி மாதிரி அம்மமுண்டியாட்டம் குந்திக் கொண்டு இருக்கிறார். செவிடன் காதில் ஊதிய சங்கு தான் என் பேச்செல்லாம் அவருக்கு என்று பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தாள் மெரீனா,
பெண் டாட்டிக்குப் பயந்தவனாய் நடித்து, வாயடக்கி வாழ்பவரும், மனைவியின் கடுகடுப்பையும்,
ஜீவநதி 艇

புறுபுறுப்பையும், குழந்தைகளின் குறும்பாக எடுத்து வாழ்பவருந் தான் அவள் கணவர். சொன்னாலும் ஏற்க மாட்டாள். சொல்லாவிட்டாவும் விடமாட்டாள். எவ்வளவோ எழுதக் கிடக்கு வெளி வேலைகள் இருக்கு. இவளோடு நின்று வாய்ச் சவால் போட்டுக் கொண்டிருப்பதைவிட தன் வேலைகளைப் பார்ப்பதற் காகக் குளியலறைக்குள் நுழைந்துவிட்டார். தன் அலுவல்களை முடித்துக் கொண்டு புறப்பட்டவரின் அருகில் வந்தாள் மெரீனா என்ன மாப்பிளை, வெள்ளையும் சொள்ளையுமாகக் கிளம்பீட்டீங்க. சாப்பிட் டுப் போங்க என்றதற்கு வெளி அலுவல்களை முடித்துக் கொண்டு வருகிறேன். பிறகு சாப்பிடலாம். உன் முணு முணுப்போடு சாப்பிட்ட மாதிரித் தான் என்று கிளம்பி விட்டார் கணவர் சாந்தனய்யா.
அவர் துவிச்சக்கர வண்டியின் வேகத்தை விட மன உளைச்சலின் வேகம் விரைவாக அவர் சேர வேண்டிய இடத்தை வந்தடைந்தது. தன் வேலைகளை முடித்துக் கொண்டு, களைப்புடனும் சலிப்புடனும் வந்து, இளமைக் காலத்தில் இனிமையாகத் தன் நண்பன் அரவிந்தனோடு சந்தோஷமாகப் பேசிப் பழகி இருந்த அவர் வேலை செய் யும் நூலகத்திற்கு முன்னால் உள்ள பெரிய ஆல மரத்தின் கீழ் உட்கார்ந்து நீண்ட பெருமூச்சு விட்டுக் கொண்டார். அந்த வேளை தன் இளமைக் காலம் மீண்டும் திரும்பி விட்டதாக ஓர் உணர்வு பூரிப்பு. இருபத்தி ஐந்து வருடங்களு க்கு முன் தன் வாழ்க்கையை திசை திருப்பிய அந்த இடம், பேச்சுக்கள், விவாதங்கள், உள்ளக் கிடக்கைகளை ஒன்று விடாமல் பகிர்ந்து கொள்ளும் என் உயிர் நண்பன் அரவிந். எல்லாவற்றையுமே மீட்டுப் பார்க்கிறார். நண்பன் அரவிந் நூலகப் பொறுப்பாளர். சிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சா ளர். அவர் பேச்சுத் திறமையால் எந்த நேரமும் அவரைச் சுற்றி இளவட்டங்கள் தான் சூழ்ந்திருப்பார்கள். அவர்களு க்கு ஏற்றபடி காதல் புத்தகங்கள், கவிதைகளைக் கொடுத்துக் கொள்வார். மனம் விட்டுக் கதைப் பவர்களோடு எல்லாவற் றையும் பகிர்ந்து கொள்வார்.
எனக்கும் நண்பனுக்கும் வயசு வித்தியாசங்கள் இருந்தாலும், பேச்சுத் திறமையிலும், எழுத்திலும் இரு வரும் சளைத்தவர்கள் அல்ல. பெண்களைப் பற்றி, அவர்கள் காதல் லீலைகளைப் பற்றி, ஒழுக்கம், கற்பு விடாமுயற்சி, சாதி, சமூகம் இவைகளைப் பற்றியெல்லாம் மணித்தி யாலக் கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உறவை வீட்டார் விரும்புவில்லை என்றாலும், குருவிடம் சிஷ்யன் பாடம் கேட்பதைப் போல் பணிவுடன் கேட்டுக் கொள்பவர் தான் சாந்தன். அடிக்கடி அவரிடம் அரவிந் ஏனடா சாந்தன். அழகும் கம்பீரமுமான நீ யாரையும் காதலிக்கவில்லையா? உன்னைவிட இளம் வயதுப் பெடியன்கள் என்னிடம் வந்து காதல் கடிதங்களை எழுதிக்
கொண்டு போகிறார்கள். அதற்கெல்லாம் ஒரு யுக்தி
இதழ் 32

Page 44
வேணுமடா! எந்தப் பெண்ணை எப்படிக் கவர்வது என்ற டெக்னிக்கல் உன்னிடம் இல்லையே? நீ பெண்களைக் கண்டாலே ஒதுங்கிவிடுவாய், வாசிகசாலையிலே பெட்டை களைக் கண்டவுடனே தலையைப் புத்தகத்திற்குள் வைத்து விடுவாய்' என்று நக்கலாகக் கேட்டதற்கு அவர் மெளனந் தான் பதிலாக இருந்தது.
இருந்தாலும் சாந்தன் மனதிலுள்ள காதலிக்க வேண்டுமென்ற ஏக்கம், தவிப்பு, இள மங்கை ஒருத்தியைக் கண்டால் தன் காதலியாகவே கற்பனை செய்து கொள்ளும். சின்ன சின்ன சில்மிசங்களைச் செய்யவேண்டுமென்ற ஆவல் அவர் மனதில் இல்லாமல் இல்லை. இருந்தும் ஒரு சங்கோவித்தனம், தன்னைத் தானே அடக்கப் பழகிக் கொள்ளாதவன் நல்ல மனிதனல்ல என்ற கொள்கை கொண்டவர். ஆனாலும் சில நாட்களாக இளநங்கை ஒருத்தி அவர் மனதில் புகுந்து கொண்டதையும், உறவுக் காரியான அவளையே தாய் தந்தை சம்மதத்தோடு திரு மணம் செய்து கொள்ள வேண்டுமென்ற விருப்பத்தையும், அவளுக்குத் தெரியாமலே அவர் விரும்பிக் கொண்டிருக் கும் நிலையையும் அரவிந்திடம் சொல்ல முடிவெடுத்தான் சாந்தன்.
அன்று ஞாயிறு பூசைப் பலிக்குப் போனபோது தான் என் மைத்துனர் அவளைக் கண்டார், நம் உறவுக் காரி தானடா, நம் இருவருக்கும் முறையும் கூடடா, ஆனால் எவரையுமே அவள் திரும்பிக் கூட பார்க்கமாட்டாள். அவள் பெயர் ஜெசி. மூத்த சகோதரி திருமணம் செய்துவிட்டாள். தம்பிமார் படிக்கிறார்கள். நம் இனத்திலே அழகிகளில் அவளும் ஒருத்தி தானடா. அவளை கை பிடிக்கப் போகிறவன் கொடுத்து வைத்தவனடா, தந்தையாரோ பெரும் பொக்கிஷமாக அவளை கண்காணித்து வருகிறார். எந்த ஆம்பிளைகளையுமே வீட்டுக்கு எடுப்பதில்லை. படிப்பு விஷயமான புத்தகங்களைக் கொடுப்பதற்கும், பாடங்கள் சொல்லிக் கொடுப்பதற்கும் உன் நண்பன் அரவிந்தானே அங்கு போய்க் கொள்வார். அவரும் ஜெசியின் தந்தையின் நண்பனான படியால் அவரை மட்டுந் தான் வீட்டுக்கு அனு மதித்தவர். ஏன்? உனக்கு அவர் சொல்லவில்லையா?” என்று கேட்டான் மைத்துனன். எல்லாவற்றையுமே பகிர்ந்து கொள்ளும் என் உயிர் நண்பன் இதை மட்டும் மறைத்த மர்மம் அவருக்கு விளங்கவில்லை.
சாந்தன் ஜெசியின் விஷயத்தை அரவிந்திடம் தெரிவித்ததும் ஏளனமாய் சிரித்தார் அரவிந், "டேய் நண்பா. அவள் என் மாணவி. அவளை யாருமே நெருங்க, நினைக்கவே முடியாது. அந்த தேவதை என்னோடு மட்டுந் தான் கதைப்பாள். சிரிப்பாள். தனவந்தர்களின் மகன்மா ரைக் கூடக் கேட்டு வந்ததிற்கு அவள் மறுப்பே சொல்லி விட்டாள். அவள் தந்தையும் அவளுக்கு பிடித்தவர் வரும் வரை அவள் திருமணப் பேச்சே எடுப்பதில்லை. உன்
ஜீவநதி

விருப்பத்தை நான் சொன்னால், எனக்கும் அந்த வீட்டில் இடம் கிடைக்காது" என்று ஏதோ மழுப்பி மறைத்தது சாந்தனுக்கு விளங்கி விட்டது. இருந்தும் அவர் முதல் காதலை மறக்க முடியாமல் பெற்றோரிடம் விபரத்தைச் சொல்லி, திருமணம் எனக்கு நடப்பதென்றால் அது ஜெசி யோடு மட்டுந் தான் என்று உறுதியாகச் சொல்லிவிட்டுத் தொழிலுக்காக வேறுார் போய்விட்டார் சாந்தன். ஒரு வருடமாகி வீடு திரும்பிய சாந்தனிடம் அவன் பெற்றோர் கள் சொன்ன சேதி அவரை அதிரவைத்தது. பாம்பை மிதித்தவன் போல பதறினான். உடனடியாக தன் நண்பனை பார்ப்பதற்கு விரைந்தான். பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் அவர் வேலை புரியும் நூலகம் சென் றார். அவர் அங்கு இல்லாததால் அவரின் விபரங்களை அறிந்து கொண்டு இல்லம் தேடிப் போனார்.
சாந்தனை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி, அரவிந்தன் தன் மாணவியாக இருந்த ஜெசியை மனைவி யாக்கிக் கொண்டு, எல்லோராலும் புறக்கணிக் கப்பட்டு, கிராமப் பகுதியொன்றில் வளவை எடுத்து குடிசையொன்று போட்டு வாழ்வதாக அறிந்தது தான். அதிர்வில் இருந்து மாறாத உணர்வுடன் அரவிந்தனின் வீட்டு வாசலில் போய் நின்று "அரவிந்த. அரவிந்." என்று அழைத்த குரல் கேட்டு, ஒரு பெண் வெளியில் வந்தாள். அழுக்குப் படிந்த இடுப்பில் ஒரு துணியும், மேல் சட்டையும் உச்சியில் ஒரு கொண்டை யும், கையில் அகப்பையுடனும் வந்தவள் "அவருக்கு சுக மில்லை. உள்ளுக்கு வாருங்கோ” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் நுழைந்துவிட்டாள். தான் காண்பது கனவா? நனவா? என்று தெரியாமல் தடுமாறி நின்றவனை "வாடா சாந்தன். உன்னைக் காணத் தான் நான் துடித்துக் கொண் டிருந்தேன். என்னை மன்னித்துவிடடா நண்பா என்று கட்டி அணைத்துக் கண்ணிர் சொரிந்தார் நடிகர் திலகம் அரவிந்தன்.
அன்று கோபுரக் கலசத்தில் ஏற்றி வைத்ததீபமாய் இருந்த ஜெசி, ஒளி குன்றி? உடைந்த குப்பைமேட்டுக் குண்டு மணியாகக் கிடக்கும் நிலையைக் கண்டு மனம் வெதும்பியவன், தன் உணர்வுகளைக் காட்டிக் கொள்ளாமல் நண்பா. உன் திருமணத்தைக் கூட என்னிடம் சொல்லாமல் மறைப்பதற்கு நான் உனக்கு என்ன தவறு செய்தேன்? உடல்கள் பிரிந்தாலும் உள்ளம் உணர்வு குறையுமா? நாம் இருவரும் வைத்திருந்த நட்பு?" என்று கேட்ட சாந்தனின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு "நீ எனக்குத் தவறு செய்யவில்லையடா. நான் தான் உனக்கு மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டேன். நீ விரும்பிய உனக்குப் பொருத்தமானவளை, உனக்கென்றே பிறந்தவளை நான் என் சுயநலத்திற்காக பிரித்துவிட்டதால் கடவுள் எனக்கு சரியான தண்டனையைத் தந்துவிட்டாரடா. உன் காதலை
அவளுக்கு மறைத்து அவள் மனதை மாற்றி எனக்குரியவள்
2 இதழ் 32

Page 45
ஆக்கிவிட்ட பாவி துரோகி தானடா நான் என் மனச் சாட்சியே என்னை மெல்ல மெல்ல கொன்று கொண்டி ருக்கிறது. நான் நோயாளியாகிவிட்டேன். ஒரு நோயாளி யோடு எத்தனை காலம் அவள் என்னுடன் சந்தோஷமாய் வாழுவது? நான் என்னையே அழித்துக் கொள்ளப் போகி றேன். நீ தான் இனி அவளை காப்பாற்றவேண்டும். உன் காலில் விழுகிறேனடா, என் சுயநலத்திற்கு அவள் பலியாகி விட்டாள். எதுவுமே விளங்காத அப்பாவியவளை நீ பார மெடுத்து அவளை வாழ வையடா’ என்று காலைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார் அரவிந்
விழியால் மொழி பேசி இதயத்தில் இடம்பிடித்து இது வரை என் இதய ராணியாக இருக்குமு எழிலோவியத் தின் எழிலுருவத்தின் மாற்றத்தைக் கண்டு மனதிற்குள் வெம்பிக் கொண்டிருந்த சாந்தனும் ஒரு நிமிடம் தடுமாறி "அரவிந், உன் வீர ஆவேசமான வார்த்தைகளைக் கேட்டுத் தான் நான் வியந்திருக்கிறேன். இப்படியான கீழ்த் தரமான பேச்சுக்களை கேட்க, எனக்கு மிகக் கவலையாகவும் கேவல முமாக இருக்கிறது. நீ மட்டும் ஜெசியை அழைத்து வரவில் லையே? அவளும் விரும்பித் தானே உன்னோடு வந்தவள். நீ மட்டும் ஏன் அடித்துக் கொள்கிறாய். இருவரும் விரும்பித் தானே வாழ வந்தனிங்க இன்பமோ துன்பமோ கடைசி மட்டும் உறுதியாக நின்று ஒன்றாக வாழவேண்டும் நீங்க. தன்னம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் கொண்டு தளம்பிவிடாமல், ஒதுக்கி வைத்த இந்த சமூகத்திற்கு வாழ்ந்து காட்டுங்கள். என்னை மன்னித்துவிடு நண்பாத என்று ஜெசி உன் மனைவியாளோ அன்றிலிருந்து, நீயும் அவளும் என் உண்மை அன்புக்கு பாத்திரமானவர்கள். உங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன். உன் மனதைத் திடப்படுத்திக் கொள் நண்பா" என்று சொல்லிவிடைபெற்றார் சாந்தன்.
AVCNo. 810802,
ஜீவநதி 4.
 

இருவர் பேச்சையும் கேட்டிருந்த ஜெசி கணவர் அருகில் வந்து ஏனுங்க. ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? உங்களையே நம்பி வந்த என்னில் உங்களுக்கு நம்பிக்கை யில்லையா? மாற்றான் ஒருவனிடம் தாய்மையுடன் இருக்கும் எனக்காக மண்டியிடுறீங்களே என்று கண்ணிர் சிந்தினாள். வாரி அணைத்துக் கொண்டார் அரவிந், அவள மேல் இத்தனை அன்பு வைத்திருப்பதைப் புரிந்து கொள் ளாத மடையனாயிற்றனே என்பதைப் புரிந்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடர, புத்தியர் பெற்றதைப் போல் எழுத் தார் அரவிந்த இப்படியாக நண்பன் வாழ்க்கை தொடர்ந்து இருபத்தி ஐந்து வருடங்களாகி, நண்பனும் இறந்து பிள்ளைகளும் வாழ்க்கையில் ஒதுங்கிவிட்டார்கள். அவர் ஓய்வுபூதியத்துடன் அவரின் எழுத்துக்களை அவளும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாள்.
திருமணமான புதிதில் ஜெசியைப் பற்றி தன் மனைவியிடம் சொன்ன பெரும் தவறு தான் இன்று வரை அவரை அவள் இம்சைப்படுத்துவதற்கு காரணம். இயல்பான அவள் குணத்தை இனி மாற்றவே முடியாது. ஆகவே நானே என் செயல்களை மாற்றியாக வேண்டுமென்ற தீர்மானத்து டன் பழைய நினைவுகளை மீட்டுப் பார்த்ததில் நிம்ம்தி அடைந்து வீடு நோக்கி கிளம்பினார் சாந்தனய்யா. வாழ்க்கை முழுவதும் ஜெசி பட்ட துன்பங்களுக்கு என்னால் அவளை பார்க்கப் போவதை நிறுத்திக் கொள்வது தான் அவளுக்கு நான் செய்து கொடுக்கும் மாபெரும் உதவி வயது போயும் இருவரும் மனைவிக்கும் மற்றவர்கள் ஏளனத்துக்கும் இழிவுக்கும் தள்ளப்படவேண்டும் என்றும், என் மறைந்த நண்பனுக்கும் நான் செய்யுமு கைமாறாக நினைத்துக் கொண்டும் நிறைவான முடிவெடுத்து, நிம்மதியோடு வீடு
போய்ச் சேர்ந்தார் சாந்தனய்யா,
Branch
808 CCESLKE
f
༢
இதழ் 32

Page 46
1) பி.அமல்றாஜின்
கிறுக்கல்கள் சித்திரமாகின்றன (கவிதைத் தொகுதி)
மன்னார்ப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் படைப் பாளியாகிய பி.அமல்றாஜின் கன்னிக் கவிதைத் தொகுப் பாக "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" கவிதைத் தொகுதி 92 பக்கங்களில் 18 நீண்ட கவிதைகளை உள்ளடக்கி சீரிய வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. இந்நூலிற்குரிய அணிந்துரையை கவிமாமணி அகளங்கன் எழுதியுள்ளார். இவரது 18 கவிதைகளும் நீண்ட கவிதைகளாக சொல்ல வந்த கருவை சிதறல் இல்லாமல் கவிதைக்குரிய கட்டமைப்போடு பாடி நிற்கின்றன. கவிதைகளின் கருப் பொருளாக காதல், பாசம், தாய்மை, பெண்ணியம், போரின் வடு, அரசியல் சார்ந்த விடயங்கள் காணப்படு கின்றன. பெரும்பாலான கவிதைகள் காதல் கவிதையாக காணப்படுவதுடன் ஒரு பெண்ணின் காதலிற்கு ஏங்கும் ஆணின் ஏக்கமாகவும் காணப்படுகின்றன.
நூல் - கிறுக்கல்கள்
சித்திரமாகின்றன
விலை - 150/=
முதிர்கன்னி, கல்லறைக் கனவு, முள்ளி வாய்க்கால் முடிவு வரை, தமிழ் சுதந்திரம்', 'கொன்று விடுங்கள் போன்ற தலைப்பில் அமைந்த கவிதைகள் படைப்பாளியின் கவியாற்றலின் உச்சப் படைப்புகளாக கருதுகின்றேன். உதாரணத்திற்கு முள்ளிவாய்க்கால் முடிவு வரை கவிதையில் இருந்து சில வரிகள்.
பதுங்குகுழிக்குள்ளே
பதுங்கியபடி
இறந்ததாய்
உறுதிசெய்யப்பட்ட
அம்மாவின் மரணம்
எங்கு
மாண்டார் என்றே
தெரியாமல் போன
ஜீவநதி 艇
 
 
 

அப்பா சாவு, ஒரே குழிக்குள் எறிந்துவிட்டு வந்த
கணவன் மகள்
இருவரின் சடலம்
& GUIT
இவர்களுக்காய்
அழுவதற்கு மட்டும் - இவள்
உயிரோடு
கவிதைகள் அனைத்துமே தொடர்ந்து வாசகனை பற்றி இழுத்து வாசிக்கச் செய்வதாக அமைகின்றன. எனினும் கவிதைகளின் நீட்சித் தன்மை சில கவிதைகளில் சலிப்பை உண்டாக்கு கின்றது. இளங்கவிஞரான பி.அமல்றாஜ் இன்னும் பல கவிதை களை வடித்து இலக்கிய உலகில் தடம் பதிப்பார் என நம்புவதற்குசான்றாக இந்நூல் அமைந்துள்ளது.
- அர்ச்சுனன்
2) எஸ்.குமரலிங்கத்தின்
சீனாவும் இலங்கையும்
எழுத்தாளரும், முன்னாள் வங்கி முகாமை
யாளருமாகிய எஸ்.குமரலிங்கம் அவர்களின் சீனாவும்,
இலங்கையும் என்னும் கட்டுரைத் தொகுப்பு வெளி
வந்துள்ளது. நேற்றைய சீனா, இன்றைய சீனா, புராதன
சீனா பற்றிய தெளிவான விளக்கங்களை தன் பன்முகப்
பட்ட அறிவின் காரணமாக விளக்கம் தந்துள்ளார்.
{;hịăa & Sri Lanka சீஐலும் இலங்கையுல்
நூல் - சீனாவும் இலங்கையும்
ഖിങ്ങാൺ - 150/=
சீன பெருமதிற் சுவர், சீனாவின் மத சுதந்திரம், அரசியல், பொருளாதார கட்டமைப்பு என்பவை பற்றி நன்கு அலசி ஆராயப்பட்டுள்ளது. கார்ல் மாக்ஸ், மாசேதூங், மாவோ அன்லாவ், கோசிமின், ஃபிடல்
图一 இதழ் 32

Page 47
காஸ்ட்ரோ, எர்னஸ்டோ சேகுவரா, சூ-என்-லாய் பெனின், லெனின், ஸ்டாலின், லூரன் போன்ற அறிஞர்கள், மாக்சிய வாதிகள் பற்றி தகவல்களையும் அவர்களுக்கு நீனாவுடன் இருந்த நெருங்கிய தொடர்பு, சீனாவின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு பற்றியும் ஆராய்ந்துள்ளார். சீனா, இலங்கையிடையில் நட்புறவு பற்றியும், சீனாவின் வறுமை, சீனாவின் தேசிய கீதம், லூரனின் கவிதைகள் பற்றியும் விரிவான தகவல்களை தந்துள்ளார்.
ஈழத்தின் சீனா பற்றி தகவல்களையும் சீன மார்க்சிஸ் பற்றி வெளிவந்த சிறந்ததொரு நூலாகவும், அனைவரும் படிக்கவேண்டிய நூலாகவும் இது அமைந் துள்ளது. இவ்வளவு தகவல்களையும் சேர்நத்து நல்ல தொரு நூலை சமர்ப்பித்த ஆசிரியர் பாராட்டிற்குரியவர்.
- அர்ச்சுனன் 3) உடப்பூர் வீரசொக்கனின்
நம்ம ஊரவங்க.
வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் மாவட்டத்தில் அழகிய ஒரு கிராமம் உடப்பு. இக் கிராமத்தில் வாழ்ந்த பலர் சிறந்த கலைஞர்களாகவும் படைப்பாளிகளாகவும் பாடகர்களாகவும் கவிஞர்களா கவும் தேர்ந்த ரசனையுள்ள வாசகர்களாகவும் ஊடக வியலாளர்களாகவும் ஆய்வாளர்களாகவும் விளை யாட்டு வீரர்களாகவும் விளங்கி இக்கிராமத்துக்குப் புகழ் சேர்த்திருக்கிறார்கள்.
நூல் - நம்ம ஊரவங்க வெளியீடு - இளம்தாரகை வட்டம் ) ഖിങ്ങാൺ - 150/=
இவ்வாறான,துறைசார் விற்பன்னர்கள் பற்றிய விபரங்கள் அடங்கிய ஆவணத் தொகுப்பாக அமையும் நூலே நம்ம. ஊரவங்க. ஆகும். இந்நூலை எழுதி யிருப்பவர் உடப்பூர் வீரசொக்கன். அண்மைக் காலமாக பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் உடப்பூர் வீர சொக்கன் என்ற படைப்பாளியின் ஆக்கங்களைக் காணும்போது, உடப்பு என்ற கிராமத்தின் மீது வீர சொக்கன் என்ற படைப்பாளி கொண்டுள்ள விசுவாசமே தெரியவரும்.
இத்தொகுப்பு நூலில் பல்வேறு கலைஞர்க ளைப் பற்றியும் விளையாட்டு வீரர்களைப் பற்றியும் ஊடகவியலாளர்களைப் பற்றியும் தாம் எழுதிய
ஜீவநதி
 
 
 

கட்டுரைகளைத் தந்திருப்பதனூடாக, உடப்பு கிராமத் தைப் பற்றிய ஒரு வெட்டுமுகத்தைத் தரிசிக்கச் செய்திருக்கிறார் வீரசொக்கன். உடப்பு மண்ணின் மைந்தர்களைப் பற்றிய குறிப்புகளைப் படிக்கும்போது, இவர்களின் வாழ்வுக் கோலங்களினூடாக உடப்பு மண்ணின் மேன்மையைத் தரிசிக்க முடிகிறது.
-தகலாமணி
4) த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)
முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்
இலங்கையிலும் இந்தியாவிலும் முற்போக்குச் சிந்தனைகளை விதைத்து இலக்கியம் படைத்த பன்னிரு வரைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. இந் நூலினூடாக ஒரு குறிப்பிட்ட காலகட்டத்து முற்போக்குச் சிந்தனை வடிவங்களின் குறுக்குவெட்டுமுகத்தைத் தரிசிக்க முடிகிறது.
நூல் - முற்போக்கு இலக்கியச்
செம்மல்கள் வெளியீடு - நியூ செஞ்சரி
புக் ஹவுஸ்
விலை - 50/= (இந்திய)
இந்நூலில் வங்கம் தந்த நாவல் இலக்கியப் படைப்பாளி சரத்சந்திரர், கேரளத்தைச் சார்ந்த தகழி சிவசங்கரன் பிள்ளை, வட புலத்தைச் சார்ந்த கிஷன்சந்தர், ஆந்திரத்தைச் சார்ந்த கவிஞர் மக்தூம், தமிழகத்தைச் சார்ந்த வல்லிக்கண்ணன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகிய அறுவரைப் பற்றிய கட்டுரைகள் பாகம் ஒன்றில் தொகுக்கப் பெற்றுள்ளன. இரண்டாம் பாகத்தில் இலங்கையர்களான பேராசிரியர் க.கைலாசபதி, கவிஞர் பசுபதி, செ.கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், முகமது சமீம், கவிஞர் சுபத்திரன் ஆகியோர் பற்றிய குறிப்புகளைக் கொண்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன
இக்கட்டுரைகளை எழுதிய தம்பு சிவா பொதுவுடைமை இயக்க முன்னணி இலக்கியவாதிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவர். முற்போக்கு இலக்கியச் சிந்தனைகளைப் பின்புலமாகக் கொண்டு கொள்கைப் பிடிப்புடன் நீண்ட காலம்ாக கட்டுரை இலக்கியம் படைக்கும் தம்பு சிவா ஒரு சிறுகதை எழுத்தாளரும் ஆவார். இவர், தனது நீண்ட கால அனுபவத்துடன், முற்போக்குச் சிந்தனைகளின் தரிசனங்களை இக்கட்டு ரைத் தொகுப்பு நூலினூடாக வாசகர்களுக்குத் தந்திருக்கிறார். இந்தியத் தளத்திலும் இலங்கைத்
5- இதழ் 32

Page 48
தளத்திலும் முற்போக்குச் சிந்தனைகளின் இருப்பிட மாகத் திகழ்ந்த தெரிந்தெடுத்த முற்போக்காளர்கள் பற்றிய கட்டுரைகளினூடாக முற்போக்குச் சிந்தனை களின் பல்பரிமாணங்களை வாசகர்களுக்குத் தொற்ற வைப்பதில் தம்பு சிவா வெற்றி கண்டிருக்கிறார் என்றே கூறவேண்டும்.
பன்முகப்பட்ட வாசகர்களையும் கருத்திற் கொண்டு எளிய நடையில், ஆற்றொழுக்காகச் சொல் லப்பட்ட கருத்துகள் இந்நூலைப் படிக்கத்தூண்டுகின்றன. இலக்கிய நாட்டம் கொண்டோர் அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
- தகலாமணி 5) பெரிய ஐங்கரனின்
கறுப்பு மழை
இன்றைய இளந்தலைமுறைக் கவிஞர்களுள் "பெரிய ஐங்கரன்" கவனிப்புக்குரியவராக விளங்குகிறார். அண்மைக்காலமாக இவரின் கவிதைகளை பத்திரிகை களிலும் சஞ்சிகைகளிலும் படிக்கக் கூடியதாக இருக்கின் றது. தான் காணும் காட்சிகளையும் சூழலையும் உணர்வு பூர்வமாகத் தரிசித்ததோடு மட்டுமல்லாமல், அந்த உணர்வுகளைத் தனது கவிதைகளினூடாகப் பிறரிடம் தொற்றவைப்பதிலும் பெரிய ஐங்கரன் வெற்றிகண்டு வருகிறார்.
நூல் - கறுப்பு மழை வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 160/=
தனது தந்தையின் மறைவின்பின் 31ஆம் நாள் நினைவாக பெரிய ஐங்கரனின் "கறுப்புமழை" என்ற கவிதை நூல் மீராபதிப்பக 95ஆவது வெளியீடாக மலர்ந் துள்ளது. போர்க்காலச் சூழலிலும் இயற்கை அனர்த்தங் களினாலும் ஏற்பட்ட துயரங்களைப் பதிவு செய்வன வாய் 50 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. "சொல்லாடல்" என்ற சித்து விளையாட்டின்றி, எளிய பதங்களாலும் வரிகளினாலும் சிக்கனமாக இக்கவிதைகள் யாவும் படைக்கப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் படிப் போருக்கு மழைக்காலக் கவிதைகளாக இவை தெரி யினும், ஆழமாக, கருத்தூன்றிப் படிப்போருக்கு இக் கவிதைகள் சொல்லும் செய்திகள் பல.
இந்நூலின் பின் அட்டையில், "அப்பா பற்றி ஒரு வரிகூட இந்நூலில் நான் எழுதவில்லை. இருந்தபோதும்
ஜீவநதி
 

இச்சிறுநூலை அவருக்குக் காணிக்கை ஆக்குவதில் எனக்கு அளவுகடந்த மனநிறைவு" என்று இந்நூலின் வரவு பற்றி பெரிய ஐங்கரன் குறிப்பிட்டிருக்கிறார். துயரின் சுவடுகளையும் கூடஇலக்கியப் பதிவுகளாக மேற்கொள்ளும் மரபை, "ஈழத்துக் கவிமலர்கள்” என்ற கவிதைத் தொகுப்பு நூலைத் தனது மகளின் நினைவாக வழங்கியதன் மூலம் இரசிகமணி கனகசெந்திநாதன் அன்று தொடக்கிவைத்தார். இம்மரபின் தொடர்ச்சியில், வ.அ.இராசரத்தினம், என்.சண்முகலிங்கன், முரீகணேசன், வளநாடன் என நீளும் பெயர் வரிசையில் இன்று பெரிய ஐங்கரனும் இடம்பிடித்துக் கொள்கிறார். "கறுப்பு மழை" நூலில் உள்ள கவிதைகள் எமது நெஞ்சங்களில் காட்சிகளாய் விரிகின்றன. அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது.
- அர்சுனன்
6) அகில இலங்கை இளங்கோ கழகத்தின்
76 கவிதைகளின் தொகுதி
திருகோணமலையிலுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் 76 கவிதைகளைத் தொகுத்து, அகில இலங்கை இளங்கோ கழகத்தின் திருமலைக் கிளையினர்"76 கவிதைகள்” என்ற பெயரில் நூலாகத் தந்திருக்கிறார்கள். மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும் அவர்களின் ஆக்கத்திறனை மலரச் செய்யவும் நல்ல முயற்சி இது. இவ்வாறான முயற்சிகள் வரவேற்கத்தக்கன.
நூல் - 76 கவிதைகளின் தொகுதி வெளியீடு - அகில இலங்கை
இளங்கோ கழகம்
| ഖിഞ്ഞു - 100=
மனித செயற்பாடுகள் எவையும் ஊக்குவிக்கப் படும் போதே, அவை செழுமையடையும் மாணவர்களின் கவியாற்றலை வளர்ப்பதற்கும் இந்நூலாக்க முயற்சி உந்து சக்தியாக அமையும். பள்ளி மாணவர்களின் கவிதைகள் என்ற வகையில் கவிதைகளில் தர வேறுபாடுகள் உண் டெனினும், எதிர்காலக் கவிஞர்களைத் தோற்றுவிக்கப் போகின்றஊற்றுக்கண்கள் இக்கவிதைகளிற் தெரிகின்றன. கவிதைகளைப் படைத்த மாணவர்கள் பாராட்டுக்குரிய வர்கள்.
- அர்சுனன்
இதழ் 32

Page 49
1)
2)
நிகழ்த்தினார்.
கலை இலக்கி
தெணியானின் "தவறிப் போனவன் கதை" நாவல் வெளி தகலாமணி தலைமையில் நடைபெற்றது. வரவேற்பு நிகழ்த்தினார். அருட் தந்தை இராசேந்திரம் ஸ்ரலி முகாமையாளர் திரு.க.சின்னராஜன் பெற்றுக் கொண்ட அவர்களும், விரிவுரையாளர்களான திரு.பா.தனபால ஏற்புரையை நூலாசிரியர் தெணியான் நிகழ்த்தினார். ந
மன்னார் அமுதனின் "அக்குரோணிகள்” கவிதைத்தெ கலாநிதி எம்.கே.முருகானந்தன் தலைமையில் தமி வரவேற்புரையை திரு.அம்புறோஸ் பீற்றர் நிகழ்த்தின திரு.ஆ.இராஜ்மோகன் நிகழ்த்தினார். நூல் பற்றிய ந கருத்துரைகளை என்.சடபோபன், என்.அசோக் பரன்
கோப்பாய் கலை , பண்பாட்டு மன்றம் நடத்திய க6ை பிரதீபன் அவர்களின் "கிராமந்தோறும் கலை, பண்பா வடக்கு, மத்தி, தெற்கு ஆகிய கிராமசேவையாளர் பிரி 27 அன்று கலை, பண்பாட்டு விழா ஒன்றை நடத்தினர்.
இவ்விழா மன்றத்தலைவர் வைத்தியகலாநிதி வை.
கல்லூரியில் சேனாதிராய முதலியார் அரங்கில் நடை பிரதம விருந்தினராக யாழ். அரசஅதிபர் திருமதி. இ6 கோப்பாய்ப் பிரதேச பாடசாலைமாணவர்களினது மாணவர்கள்,யாழ் தேசிய கல்வியியற்கல்லூரி மா
ஜீவநதி
 

ய நிகழ்வுகள்
யீட்டரங்கு 2011-04-03 அன்று கலைஅகத்தில் கலாநிதி ரையினை நிர்வாக அலுவலர் திரு.வே.சிவராஜலிங்கம் ன் வெளியிட்டு வைக்க, முதற் பிரதியை முன்னாள் டார். நயப்புரைகளை ஆசிரியை திருமதி எஸ்.தனேஸ்வரி ன், திரு.இ.இராஜேஸ்கண்ணன் ஆகியோர் ஆற்றினார்கள். ன்றியுரையை திரு.ந.ஆதவன் நல்கினார்.
ாகுதி வெளியீட்டுவிழா 2011-04-03 அன்று மருத்துவ ழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது. ார். நூல் அறிமுகவுரையை சக்தி பண்பலை தயாரிப்பாளர் யவுரையை கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் நிகழ்த்தினார். T ஆகியோர் கூறினர். ஏற்புரையை மன்னார் அமுதன்
ல, பண்பாட்டு விழா,கோப்பாய் பிரதேச செயலர் திரு ம. ாட்டு எழுச்சி" என்னும் சிந்தனைக்கு அமைய கோப்பாய் வுகள் இணைந்து மன்றம் ஒன்றை அமைத்து, - 2011-03
தியாகராஜா தலைமையில் யா/கோப்பாய் கிறிஸ்தவக் பெற்றது.பி.ப. 2மணியளவில் ஆரம்பமான இவ்விழாவில் மல்டா சுகுமாரும் திருசுகுமாரும் கலந்து சிறப்பித்தனர். ம் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக்கலாசாலை ஆசிரிய ணவர்கள் ஆகியோரதும் கலைநிகழ்வுகள் விழாவைக்
இதழ் 32

Page 50
காணவந்திருந்த கலையார்வலர்களுக்குப் பெருவிரு கிராமிய நடனங்களாக அமைந்திருந்தன.
பிரதமவிருந்தினரதும் சிறப்பு விருந்தினர்களான பேர ஆகியோரதும் உரைகளுடன் ருநீ ஜெயவர்தனபுர பல் நினைவுப்பேருரையும் இடம் பெற்றன. யாழ்.தேசிய வடமோடிக்கூத்து நிகழ்வைக் களைகட்டச்செய்தது. ம வெளியீட்டுரையினை சைவப்புலவர் திரு.மு.முரளிதர நாகரிகத்துறை சிரேகூழ்ட விரிவுரையாளர் திருமதிசு வாழ் கலைஞர்கள் கெளரவிக்கப்பட்டனர். விழான மாணவர்களுக்கும் கோப்பாயிலிருந்து 2009ல் மாணவர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
2011-03-27 அன்று பி.ப.3.30 அளவில் பேராசிரி திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் சம்பந்தர் விருது வ முதலாம் ஆண்டு நினைவாக சுதந்திரனில் வெளியா நிகழ்வும் நடைபெற்றன.
"ஈழத்தின் தமிழ் நாவல்கள் நாட்டார் பண்பாட்டுக் கூறு அதனை எழுதிய பேராசிரியர்கிவிசாகரூபன் அவர்களு
வரவேற்புரையை செங்கை ஆழியான் நிகழ்த்த சிறப்பு பேராசிரியர் விசாகரூபன் பதிலுரை நிகழ்த்தினார்.மன திரு இ. சங்கர் வெளியிட்டு வைத்து அனைவ திருமதி.மனோன்மணி சண்முகதாஸ் நூலின் அறிமு மேடையில் மூன்று தலைமுறை பேராசிரியர்கள் அமர்ந் அவர்களின் மாணவன் பேராசிரியர் சிவலிங்கராஜா. அ மேடையில் இரு நிகழ்வுகளும் இனிதே நிறைவுற்றன.
2)
3)
பேசும் අමා
ஜீவநதியின் ஏப்பிரல் மாத இதழ் வாசித்தேன். த.ஜெயசீல6 ஒரு கவிஞன் வெளிப்படையாக எதையுமே பாட முடிய தடைபோட முடியாது என்பதையும் தன் கவித்துச் சிறப் சிறுகதை யதார்த்த வாழ்வை பிரதிபலிப்பதாக இருந் (36).j600rGL b.
தெளிவத்தை ஜோசப் பற்றிய சந்திரபோஸ் அவர்களின் க பற்றிய குறிப்புக்களும் மலையக இலக்கியத்தில் தெ6 வெளிக்கொணர்ந்தது. "உரையாடலில் மாற்றப்பட வேை வேண்டும். தான் உரையாடும் போது கவனிக்க வேண்டி
ஜீவநதி நூல் வெளியீட்டிலும் சாதனை படைத்துள்ளது கலை இலக்கிய நிகழ்வுகள், கலந்து கொண்ட எ இடம்பெறுவது சிறப்பு வடிவமைப்பு நன்று. ஆக்கங்களுட
ஜீவநதி 图

தாக அமைந்திருந்தன. பெரும்பாலான நடனநிகழ்வுகள்
ாசிரியர் எஸ். சிவலிங்கராஜா,கோப்பாய் பிரதேசசெயலர் கலைக்கழக விரிவுரையாளர் ருநீபிரசாந்தன் அவர்களின் 5 கல்வியியற் கல்லூரி மாணவர்களின் இராவணேசன் ன்றம், முக்கூடல் என்னும் மலரினையும் வெளியிட்டது. ன் அவர்களும் ஆய்வுரையை யாழ்.பல்கலைக்கழக இந்து கந்தினி முரளிதரன் அவர்களும் நிகழ்த்தினர்.கோப்பாய் வயொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட
பர் அ. சண்முகதாஸ் அவர்கள் தலைமையில் நல்லை pங்கும்நிகழ்வும் அமரர் திருமதிபூரண பாக்கியம் சங்கர் ான பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு
புகள் பயில் நிலையும் பயன்பாடும்” என்னும் நூலிற்காக நக்கு சம்பந்தர் விருது வழங்கப்பட்டது.
1ரையைப் பேராசிரியர் க. சிவலிங்கராஜா நிகழ்த்தினார். Dனவியின் நினைவு வெளியீடான சிறுகதைத்தொகுதியை ருக்கும் இலவசமாக நூலை வழங்கினார். கலாநிதி கவுரையை நிகழ்த்தினார். அவ்வேளையில் அவர் விழா திருந்ததைச் சுட்டிக்காட்டினார். பேராசிரியர் சண்முகதாஸ் அவரது மாணவன் பேராசிரியர் விசாகரூபன். இந்த அபூர்வ
தகவல் - யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
தயங்கள்
0ரின் கவிதை மனதைக் கொள்ளைகொண்டது.
ாத இடர்நிறைந்த காலச்சூழலையும். கவிஞனுக்கு எவரும் பால் கவிதையாக ஆக்கியுள்ளமை சிறப்பு, தெணியானின் தது. கீதாகனேஸ் இன் கட்டுரை விரிவாகப் பார்க்கப்பட
- சி.சிவஞானம் (புட்டளை)
ட்டுரையும் தி.ஞானசேகரன் தொடரில் தெளிவத்தை ஜோசப் ரிவத்தை பெறும் முக்கியத்துவத்தை சரியான வகையில் 1ண்டியவை பற்றிய கட்டுரை ஒவ்வொரு மனிதனும் வாசிக்க யவற்றை கருத்தில் கொண்டு செயற்பட வழி அமைக்கும்.
- இ.ராஜசேகரம் (கொழும்பு)
இதுவரை 8நூல்களை வெளியிட்டுள்ளது. பாராட்டுக்கள்.
ழுத்தாளர்கள் அனைவரதும் தனித்தனிப் புகைப்படமும்
ம் நன்று.த.கலாமணியின் நூல்விமர்சனம் சிறப்பு.
- அன்புமணி (Dட்டக்களப்பு)
8- இதழ் 32

Page 51


Page 52
இஞ்சி ைஅஸ்ரர் விைையிர் பிளிட்டு உரிமையாளர் இ.