கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்

Page 1

தமிழ்
Agios

Page 2


Page 3

ஈழத்தத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்
கலாநிதி, மயில்வாகனம் - இரகுநாதன் B.A(Hons), M. A., Ph. D.,
வெளியீடு தென்றல் பய்னிக்கேஷன் St/
135, கனல்பாங் வீதி, கொழும்பு - 06
Te: 011-2360239.

Page 4
நூல் விபரம்
ஈழத்துத்தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள். Social Problems as Reflected in the Sri Lankan
ශ්‍රේෂ්rfuff
Tamil Novelas.
: கலாநிதி, மயில்வாகனம் இரகுநாதன்,
சிரேஷ்ட விரிவுரையாளர், பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்,
முதல் பதிப்பு
வெளியீட்டு
OffsD
தாள்
பக்கம்
எழுத்து
பதிப்பகம்
பதிப்பாசிரியர்
கணனி அச்சமைப்பு
8u
இலங்கை விலை
01 வைகாசி 2004
: தென்றல் பப்ளிக்கேஷன்,
135, கனல் பாங் வீதி, கொழும்பு -06. Te : 011-2360239.
; 70 கிராம்
: 335 - 22
11 புள்ளி - கழகம்
: தென்றல் பப்ளிக்கேஷன்,
135, கனல் பாங் வீதி, கொழும்பு -06. Te : 011-2360239.
: இ. க. சிவஞானசுந்தரம், M.A
: SDS கம்பியூட்டர் சேர்விஸ்
43, 55வது ஒழுங்கை கம்டன் லேன் முடிவில், கொழும்பு -06. Te : O11-2553265, 5-518812
: மாணவர் மறுதோன்றி அச்சகம்,
சென்னை - 600 001. T.P. 253.82513.
: 300/-

Social Problems as Reflected in the
Sri Lankan Tamil Novels.
Dr. Mailvaganam — Ragunathan B. A (Hons), M. A., Ph.D.,
Published
Thendral Publication,
135, Canal Bank Road, Colomob - 06.
Te: 011-2360239

Page 5

காணிக்கை
“எனது வாழ்வையே தனது வாழ்வாகக் கொண்ட அன்னைக்கும் தந்தைக்கும்.

Page 6
நூல் வெளியீட்டுரை .
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மயில்வாகனம் இரகுநாதன் அவர்களால் தனது கலாநிதி ஆய்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட “ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்” என்ற ஆய்வுக் கட்டுரை யின் முக்கியத்துவம் கருதி அதனை நூலாக வெளியிட விரும்பினேன். அவ் ஆய்வுக்கட்டுரையில் எத்தகைய மாற்றமும் செய்யாது உள்ளவாறே அதனை நூலாக வெளியிட முன்வந்தேன். ஈழத்துத் தமிழ் நாவல்கள் தொடர்பாக இதுவரை ஆழமான ஆய்வுகள் அதிகம் வெளிவரவில்லை. தில்லையூர் செல்வராசனின் "ஈழத்துத் தமிழ் நாவல் வளர்ச்சி” மேலோட்டமான ஆய்வாகவே உள்ளது.
மேலும் நா. சுப்பிரமணியம் அவர்களது “ஈழத்துத் தமிழ் நாவல்கள்” என்னும் நூல் குறிப்பிடத்தக்க ஆய்வு நூலாக அமைந்த போதும் சுருக்கமாகவே காணப்படுகிறது. அவ்வகையில் இவ் ஆய்வு நூலானது ஈழத்துத் தமிழ் நாவல்கள் பற்றிய காத்திரமான ஓர் ஆய்வாகவே விளங்குகின்றது.
எனவே “ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்” என்ற இந்நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வெளிவாரிப் பட்டப் படிப்பு மாணவர்களுக்கும். பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற காத்திரமான ஆய்வு நூல்கள் மேன்மேலும் வெளிவந்து இலக்கிய வளத்தை மெருகூட்டவேண்டுமென விரும்புகிறேன்.
அவ்வகையில் இவ் ஆய்வு நூலைப் பிரசுரம் செய்து வெளியிடு வதற்கும் எனது ஆய்வு நூல்களையும், வேறுபல நூல்களையும் திறம்படப் பிறர்வியக்குமளவுக்கு வெளியீடு செய்யும் தென்றல் பப்ளிக்கேஷன் நிறுவனத்தின் (கொழும்பு -06) பிரதம வளவாளரும் எனது மாணவனு மாகிய இ.க.சிவஞானசுந்தரம், M.A அவர்கள் இப்பொறுப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். அவ்வகையில் அந்நிறுவன உறுப்பினர்கள் அனைவருக் கும் எமது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியர் க. அருணாசலம்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
27-7-2003 பேராதனை.

முன்னுரை
ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள் என்னும் தலைப்பிலான இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் கலாநிதிப் பட்டத்திற்காக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேட்டின் புதுக்கிய வடிவமாகும்.
ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக மாணவர்களுக்கும் இலக்கிய ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஏற்பட்டுள்ள ஆர்வத்தினைப் புரிந்து கொண்டு இந்த ஆய்வேட்டினை நூலாக வெளியிடவேண்டும் என்று என்னை உற்சாகப்படுத்தியவர் பேராசிரியர் க. அருணாசலம் அவர்களாவார். இறுதியில் அவரே இந்த வெளியீட்டிற்கான வாய்ப்பினையும் தேடிக்கொடுத்தார். நல்ல நூல்களைத் தேடி வெளிக்கொணரும் ஆர்வத்துடன் செயற்படும் கொழும்பு - 06, தென்றல் பப்ளிகேஷன் நிறுவனம் இதனை வெளியிட முன்வந்ததால் இந்நூல் இப்போது உங்கள் கைகளில் தவழ்கின்றது.
ஈழத்துத்தமிழ் நாவல்கள் தொடர்பாக இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து இந்த ஆய்வு சற்று வேறுபடு கின்றது. நாவல்களில் இடம்பெறுகின்ற சமுதாயச் சிக்கல்கள் விரிவான சமூக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஆய்வின் ஒருபகுதி சமுதாயச் சிக்கல்களின் ஆய்வாகவ்ே அமைந்துள்ளது. இதன் மூலம் ஈழத்துத் தமிழ் மக்களின் சமூக வரலாற்றின் ஒருபகுதி இங்கே எடுத்துக் காட்டப்படுகின்றது.
இலக்கியத்தையும் சமூகவியலையும் இணைத்து நோக்கி ஆய்வு செய்வதற்கு எனக்கு வழிகாட்டியவர்களை இந்த வேளையில் நினைத்துப் பார்க்கின்றேன். அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மாணவனாக நுழைந்தபோது நவீன இலக்கியத்துறையில் அடியெடுத்துக் கொடுத்தவர் பேராசிரியர் க.கைலாசபதி, தமிழைச் சிறப்பாகப் பயின்ற வேளையில் நாவல் இலக்கியத்தின் ஊற்றுக்களையும் ஓட்டங்களையம் உணர்த்தியவர்கள் பேராசிரியர் கா.சிவத்தம்பியும்

Page 7
பேராசிரியர் எம்.ஏ.நு.மானும். இவர்கள் எனக்களித்த ஆர்வத்தைப் புரிந்துகொண்டு என்னை ஈழத்துத்தமிழ் நாவல்கள் தொடர்பான ஆய்வில் ஈடுபடுத்தி நண்பனாய் நல்லாசிரியனாய் உடனிருந்து வழிகாட்டியவர் பேராசிரியர். நா.சுப்பிரமணியன். அருகில் இருந்து உதவ முடியவில்லையே என்ற ஆதங்கத்தோடு அடிக்கடி எனது ஆய்வு முயற்சிகள் பற்றி ஆர்வத்தோடு விசாரித்து ஆலோசனை கூறியவர் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. தமித்துறையில் உடனிருந்து உற்சாகந் தந்தவர்கள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்; கலாநிதி. எஸ்.சிவலிங்கராஜா. ஆய்வுப் பொருள் பற்றி அடிக்கடி என்னோடு விவாதிப்பவர் நண்பர் கலாநிதி. செ.திருநாவுக்கரசு.
இறுதியாக இந்நூல் அழகுற அமைய வேண்டும் என்பதில் ஆர்வத்தோடு செயற்பட்டவர் கொழும்பு -6, தென்றல் பப்ளிகேசன் நிறுவனத்தின் பிரதம வளவாளரும், எனது நண்பருமான இ.க.சிவஞானசுந்தரம், M.A அவர்களாவர் இவரின் விடாமுயற்சியால் தமிழுலகம் அரிய பல நூல்களைப் பெற்று வருகின்றது என்பது யாவரும் அறிந்தமையே. மேலும் இந்நூலைக் கணனிப் பொறியில் அழகுறப் பொறித்து உதவிய கொழும்பு -06,SDS கம்பியூட்டர் சேர்விஸ் நிறுவனத்தாரின் பணி மகத்தானது. இந்நூல் முழுமை பெற்று இன்று எனது கைகளில் தவழுகின்றது இவ்வேளையில் இந்நூல் உருவாக் கத்தில் உதவிய அனைவரையும் நினைத்துப் பார்க்கின்றேன். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
இந்நூல் இலக்கிய ஆய்வாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும், உயர்தர, பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு மாணவர்களுக்கும் நிச்சயம் பலவழிகளில் உதவும் என்பது வெள்ளிடைமலை. வாசகர்கள் இந்நூல் தொடர்பாக எழும் சந்தேகங்களை எனக்குத் தெரியப்படுத்தினால் அவை அடுத்த பதிப்பில் தெளிவுபடுத்தப்படும்.
ஆய்வாளர் கலாநிதி மயில்வாகனம் இரகுநாதன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

பொருளடக்கம்
பக்கம்
வெளியீட்டுரை II
முன்னுரை V-VI
பொருளடக்கம் VII-X ஆய்வு முன்னுரை XI-XIV இயல் ஒன்று 1 - 17
1. இலக்கியமும் சமுதாயச் சிக்கலும் 1
1.1 சமுதாயச் சிக்கல்
1.2 இலக்கியத்தில் சமுதாயச் சிக்கல் 5 1.3 நவீன தமிழ் இலக்கியங்களில்
சமுதாயச் சிக்கல்கள். 6
அடிக்குறிப்புக்கள் 16
இயல் இரண்டு 18 - 69
2. ஈழத்துத் தமிழரிடையே காணப்படுகின்ற பிரதானமான
சமுதாயச் சிக்கல்கள்.
2.0 அறிமுகம் 18
2.1 ஈழத்துத் தமிழர்களும் சாதியமும் 19
2.1.1 தீண்டாமைக்கு எதிரான
சமூக இயக்க நிலை 25 2.1.2 இடது சாரி இயக்கச் சிந்தனையின்
வருகையும் சமூகக் குறைபாடுகள்
ஒழிப்புச் சட்டமும், 28 2.1.3 எழுச்சிகளும் போராட்டங்களும். 30 2.1.4 ஆக்க இலக்கியங்களில் . 34
ix

Page 8
2.2 தொழிலாளர் பிரச்சினைகள்
2.2.1 தொழிலாளர் வகையும்
பொதுவான பிரச்சினைகளும் 35 2.2.2தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றம். 35 2.2.3தொழிலாளர் வெகுஜன இயக்கம் 38 2.2.4இலங்கையில் தொழிலாளர் போராட்டங்கள். 40 2.2.5நிறுவனமயப்பட்ட போராட்டங்கள் 41 2.2.6தோட்டத் தொழிலாளர்கள் 43 2.2.7ஆக்க இலக்கியங்களில். 46
2.3 பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள். 48
2.3.1 பெண்தொடர்பான பாரம்பரியமான
கருத்து நிலை 48 2.3.2 பெண்விடுதலை தொடர்பான
சிந்தனைகள் 52 2.3.3 பெண்பற்றிய ஈழத்துத் தமிழரின்
கருத்து நிலை 57 2.3.4 ஈழத்துத் தமிழரிடையே பெண்
விடுதலை தொடர்பான சிந்தனைகள் 59
2.3.5 ஆக்க இலக்கியங்களில் . 62
அடிக்குறிப்புக்கள் 65
இயல் முன்று
70- 129
3. சாதியம் தொடர்பான சிக்கல்கள்
3.0 அறிமுகம் 70 3.1 சாதியை மீறிய காதல் 70 3.2 குடிமை முறை 88 3.3 ஆலய வழிபாட்டில் சமஉரிமை மறுப்பு 93 3.4 தேநீர்க் கடைகளில் சமஉரிமை மறுப்பு 99

3.5 பாலியல் ஒடுக்கு முறை 101
3.6 தீண்டாமையும் மதமாற்றமும் 104 3.7 பல்வேறுவிதமான அடக்கு முறைகள் 109
3.7.1 நல்ல ஆடை, நகை, செருப்பு
முதலியவற்றை அணியத் தடை 109 3.7.3 விருப்பமான பெயர்களை வைக்கத்தடை 110 3.7.4 பிரேத ஊர்வலத்தில் மேளம்
அடிக்கத் தடை 110 3.7.5 சம ஆசனம் வழங்க மறுப்பு 11 3.7.6 வீதிகளில் நடமாடத் தடை 112 3.7.7 தட்டுவத்தில் சோறும், சிரட்டையில்
தண்ணிரும் 113 3.8 பிராமணர்கள் மீதான அடக்குமுறை 114 3.9 முடிவுரை 117
அடிக்குறிப்புக்கள் 124
இயல் நான்கு 130-237
4. தொழிலாளர் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள் 4.0. அறிமுகம் 130
4.1 தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள் 131 4.1.1 உழைப்புக்கேற்ற ஊதியமின்மை 131 4.1.2 ஒடுக்கு முறை 139 4.1.3 கல்விகற்கும் வசதியின்மை 145 4.1.4 குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் 153 4.1.5 பாலியல் சுரண்டல் 166 4.2 விவசாயிகளின் பிரச்சினைகள் 80 4.2.1 சுரண்டலும் வறுமையும் 180 4.2.2 நிலம், நீர், பற்றாக்குறை 191

Page 9
4.3 மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைகள் 199 4.3.1 6...g60)LD 200
4.3.2 சுரண்டல் 206 4.4 நகரப்புறத் தொழிலாளர் பிரச்சினைகள் 211 4.4.1 வறுமை 212
4.4.2 சுரண்டல் 216 4.5 கிராமப்புறத் தொழிலாளர் பிரச்சினைகள் 220 4.6 முடிவுரை 225
அடிக்குறிப்புக்கள் 228
இயல் ஐந்து 238 - 302
5. பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள். 238 5.0 அனைத்துலக நிலையில் பெண்கள் 238 5.1 ஈழத்துத் தமிழர் சமூகத்தில் பெண் 238 5.1.1 திருமணம் தடைப்படுதல் 240 5.1.2 பொருந்தா மணம் 252 5.1.3 ஒழுக்கப் பிறழ்வுகள் 262 5.1.4 பாலியல் சுரண்டல் 278 5.1.5 கற்புப் பற்றிய கருத்து நிலை 284 5.1.6 குடும்பப் பிரிவும் தனிமைத் துன்பமும் 293 5.2 முடிவுரை 296
அடிக்குறிப்புக்கள் 302 இயல் ஆறு 309 - 335 6. நிறைவுரை 309 நூல்விபரப்பட்டியல் 316-335

ஆய்வு முன்னுரை
ஆய்வின் தலைப்பும் கால எல்லையும்.
“ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்” என்னும் தலைப்பிலான இந்த ஆய்வில் ஈழத்தில் 1960 ஆம் ஆண்டு முதல் 1980 களின் முடிவு வரையான முப்பது ஆண்டுகாலப் பகுதியினுள் வெளிவந்த நாவல்களே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின், பிற்பகுதியிலேயே ஈழத்தவர்கள் தமிழில் நாவல் எழுத ஆரம்பித்து விட்டார்கள் எனினும் இக்காலப் பகுதியில் எழுதப்பட்டனவாக எமக்குக் கிடைத்த சித்திலெப்பையின் அசன்பேயுடைய கதை, திருகோணமலை த. சரவணமுத்துப்பிள்ளையின் மோகனாங்கி ஆகிய நாவல்களில் ஈழத்து மண்ணோ ஈழத்து மக்களின் பிரச்சினைகளோ இடம் பெறவில்லை. இவற்றை எழுதியவர்கள் ஈழத்த வர்கள் என்ற வகையிலேயே இவை ஈழத்துத் தமிழ் நாவல்கள் என்ற தகுதியைப் பெறுகின்றன.
ஈழத்து மண்ணையும் மக்களையும் பொருளாகக் கொண்ட தமிழ் நாவல்களை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அவதானிக்க முடிகின்றது. இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்தின் வரலாறு 1905 இல் வெளியிடப்பட்ட சி. வை. சின்னப்பபிள்ளையின் வீரசிங்கன் கதை அல்லதுசன்மார்க்க ஜெயம் என்றநாவலுடனேயே ஆரம்பிக்கின்றது. சின்னப்பபிள்ளை, வாசகர்களின் உள்ளங்களிலே சன்மார்க்கத்தின் மகத்துவத்தையும் அதனாலடையக் கூடிய நன்மைகளையும் பதிய வைப்பதும் இந்திய வாசகர்களுக்கு ஈழத்து மக்களின் சாதாரண கிராம வாழ்க்கையையும் பழக்க வழக்கங்களையும் தெளிவாக விளக்குவதுமே இப்படைப்பின் நோக்கமாகும் எனக் கூறியிருந்தாலும் இந்நாவலில் கதை நிகழும் இடம் ஈழம் என்பதைத் தவிர கதைப்பொருளில் ஈழத்துச் சமூகக் களம் முக்கியத்துவம் பெறவில்லை என்கின்றார் நா. சுப்பிரமணியம்.
சின்னப்பபிள்ளையின் நாவலைத் தொடர்ந்து 1914 இல் திருமதி மங்களநாயகம். தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் என்னும் நாவல் வெளிவந்துள்ளது. மங்கள நாயகம் தம்பையா தனது நாவலுக்கு எழுதிய நூன்முகத்தில்,

Page 10
“சன்மார்க்க சீவியத்தின் மாட்சியை உபதேசத்தால் விளக்கு வதிலும் உதாரணங்களால் உணர்த்துவது மிகவும் நன்மை பயத்தற்கு
992
ஏதுவாகும் என்றெண்ணி இக்கதையை எழுதத் துணிந்தேன்
எனக் கூறுகின்றார். இந் நோக்கத்திற்கு ஏற்றவாறே கதையும் அமைகின்றது. இங்கு கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு இருதயம் நொறுங்குண்ட கண்மணி என்னும் பாத்திரம் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரின் போதனைகளால் மன அமைதியடைவதும் கிறிஸ்தவ வாழ்வு அவளின் துயரங்களுக்கு ஆறுதலளிப்பதும் காட்டப்படுகின்றது. பொதுவாக வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு கிறிஸ்தவமே விடுதலை தரக் கூடியது என்ற கருத்தே இந் நாவலினுடாக முன்வைக்கப்படுகின்றது.
எனவே சின்னப்பபிள்ளைக்கும், மங்களநாயம் தம்பையாவுக்கும் சன்மார்க்கத்தின் மகத்துவத்தை விளக்கிக் கூறுவதே பிரதான நோக்கமாக இருந்திருக்கின்றது. முதல் தமிழ் நாவலை எழுதியவர் எனப்படும் வேதநாயகம் பிள்ளையிலிருந்து 1925 இல் நீலகண்டன் அல்லது ஓர் சாதி வேளாளன் என்ற நாவலை எழுதிய இடைக்காடர் வரை ஆரம்பகாலத் தமிழ் நாவலாசிரியர்கள் பலரும் அறிவியல் போதனையையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தனர் என்பதை க. கைலாசபதி எடுத்துக் காட்டியுள்ளார். மேலும் இத்தகைய போக்கு தமிழ்கூறு நல்லுலகத்திற்கு மட்டுமன்றி அனைத்திந்தியாவுக்கும் பொதுவானது என்றும் எமது நாவல் முதன் முயற்சியாளரால் வகுக்கப்பட்ட இத்தகைய கோட்பாடுகளால் நாவலாசிரியர்கள் வெகு வாகப் பாதிக்கப்பட்டு நாவலின் பூரண வளர்ச்சியும் தாமதம்ாகிவிட்டது என்றும் கைலாசபதி கருதுகின்றார். எனவே இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த ஈழத்துத் தமிழ் நாவல்களில் அற்புதக் கதைத் தன்மையும் சமய அறவியல் நோக்கமுமே பிரதான இடம் வகிப்பதால் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்கத் தக்க வகையில் அமைந்த நாவல்களை அவற்றுள் தேடுவது வீண் முயற்சியே.
1930 களின் பிற்பகுதியிலிருந்து 1950 களின் நடுப்பகுதிவரை ஈழத்தில் வெளிவந்த தமிழ் நாவல்களில் பெரும்பாலானவை காதல், தியாகம் பாசம் முதலிய தனிமனித உறவுகளைமுதன்மைப்படுத்தி எழுதப்பட்ட சமகால தமிழ் நாட்டு குடும்ப நாவல்களாலும் மர்மப் பண்பு கொண்ட துப்பறியும் நாவல்களாலும் கவரப்பட்டு “ஆசை பற்றி அறையலுற்ற” ஆரம்ப முயற்சிகளாகவே அமைந்துள்ளன. என்கின்றார்.
xiv

நா. சுப்பிரமணியம். எனவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் ஆரம்பித்த ஈழத்துத் தமிழ் நாவல்கள் 1950 களின் பிற்பகுதிவரை நாவலுக்குரிய சமூக யதார்த்தத்தைச் செம்மையாகப் பிரதிபலிக்க வில்லை எனத் தெரிகின்றது.
1950 களின் பிற்பகுதியில் ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் புரட்சிகரமான மாறுதல் ஒன்று ஏற்பட ஆரம்பித்தது. இத்தகைய மாறுதலுக்குக் காரணமாக அமைந்தது இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கமும் அதன் பணிகளுமே. 1950 களின் நடுப்பகுதியிலிருந்து ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்குத் தலைமை தாங்கிய இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் ஈழத்திலே தோன்றும் தமிழ் இலக்கியம் ஈழத்து மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை அடிப்படை யாக வைத்து எழுதப்பட வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர். மேலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் பலர் எழுத்தாளர்களாகவும் இருந்ததால் அவர்கள் தமது கருத்துக்களுக்கு ஏற்றவகையில் ஆக்க இலக்கியங்களையும் படைத்தனர். இதனால் ஈழத்துத் தமிழ் நாவல்கள் சமூக நடப்பியல்போடு கூடிய படைப்புக் களாக வெளிவர ஆரம்பித்தன.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியத்துறையில் இத்தகைய போக்கை ஆரம்பித்து வைத்தவர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த எழுத்தாளரான இளங்கிரனே. இளங்கீரனின் தென்றலும் புயலும் (1955) என்னும் நாவலில் யாழ்ப்பாணத்துச் சமூகத்திலுள்ள பிரதான சமுதாயச் சிக்கலான சாதியம் எடுத்துக் காட்டப்படுகின்றது. பொது வுடைமைக் கோட்பாட்டில் நம்பிக்கை கொண்ட இளங்கீரன் சாதிய வேறுபாட்டை வர்க்க வேறுபாடாகவே கருதி அதனைப் போக்குவதற்கு கலப்புத் திருமணத்தையே தீர்வாகக் காட்டுகின்றார். பழைய தலை முறை அழிந்து புதிய சமுதாயம் உருவாகும்போது இத்தகைய வேறுபாடுகள் இருக்காது என்று இவர் கருதுவதாகத் தெரிகிறது.
தென்றலும் புயலும் காட்டிய வர்க்க வேறுபாட்டை விரித்து வளர்த்துக் காட்டும் வகையில் இவரது நீதியே நீ கேள் (1959) என்னும் நாவல் அமைகின்றது. இந்நாவலில் முதலாளி - தொழிலாளி

Page 11
என்ற வகையில் அமையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அதனால் ஏற்படும் சமுதாயச் சிக்கல்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன. பொதுவாக சமூக ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் பொதுவுடைமைத் தத்துவத்தின் அடிப்படையில் அணுகித் தீர்வு காண்பவராகவே இளங்கீரன் காணப்படுகின்றார்.
இளங்கீரன் தொடக்கி வைத்த இப்பணி அடுத்து வரும் சில ஆண்டுகளில் மேலும் கூர்மையடைகின்றது. இதனால் 1960 களின் ஆரம்பத்தில் இருந்து ஈழத்துத் தமிழ் நாவல்களில் காணப்படும் சமுதாயச் சிக்கல்களை ஆய்வு செய்வதே பொருத்தமாக அமையும் எனக் கருதுகின்றேன்.
மேலும் இந்த ஆய்வினை 1980 களுடன் நிறுத்த வேண்டியதும் அவசியமாகும் எனக் கருதுகின்றேன். ஏனெனில் 1980 களின் நடுப்பகுதியிலிருந்து ஈழத்தில் வெளிவந்த நாவல்கள் பலவற்றிலும் பிரதான பொருளாக அமைவது இன முரண்பாடுகளும் அதனோடு தொடர்பான பிரசசினைகளுமே. 1980 களில் ஆரம்பித்த இப் பண்பு 1990 களில் மேலும் வளர்த்துச் செல்லப்படுகின்றது. ஈழத்துத் தமிழ் நாவல்களில் எடுத்துக் காட்டப்படும் இன முரண்பாடுகள் தொடர்பான சிக்கல்கள் தனியே ஆய்வு செய்யப்பட வேண்டியவை என்பதாலும் ஈழத்தில் நிலவுகின்ற தற்போதைய சூழல் இது தொடர்பான ஆய்வுக்கு வசதியானதாக இருக்காது என்பதாலும் இச் சிக்கலை இந்த ஆய்வில் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அதனாலேயே இந்த ஆய்வினை 1980 களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஆய்வு மூலங்கள்
1960 ஆம் ஆண்டு முதல் 1980 கள் வரையான முப்பது ஆண்டுக் காலப்பகுதியிலும் ஈழத்தில் பெருமளவு தமிழ் நாவல்கள் வெளிவந்துள்ளன. இந் நாவல்கள் அனைத்தையும் பட்டியலிட்டுக் காட்டுவதோ அவற்றைக் கால நிர்ணயம் செய்வதோ இந்த ஆய்வின் நோக்கமன்று. வெளிவந்த நாவல்களில் உள்ள சமுதாயச் சிக்கல் களையும் அவற்றிற்கான பின்னணிகளையும் எடுத்துக் காட்டுவதே எமது நோக்கமாகும். எனவே சமுதாயச் சிக்கல்களைப் பொருளாகக் கொள்ளாத நாவல்கள் இந்த ஆய்வில் கருத்திற் கொள்ளப்படவில்லை.
இந்த வகையில் சாதியம் தொடர்பான இயலில் சொக்கனின் சீதா, செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், போர்க்கோலம், சடங்கு, செவ்வானம், டானியலின் பஞ்சமர், அடிமைகள், தண்ணிர், கானல், பஞ்ச கோணங்கள், தெணியானின் விடிவைநோக்கி, பொற்சிறையில் வாடும் புனிதர்கள், அகஸ்தியரின் எரிநெருப்பில் இடை பாதை இல்லை, செங்கை ஆழியானின் பிரளயம் செ. யோகநாதனின் காவியத்தின் மறுபக்கம் ஆகிய நாவல்கள் ஆய்வு மூலங்களாக அமைகின்றன:
தொழிலாளர் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள் என்ற இயலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதற்கு நந்தியின் மலைக் கொழுந்து, பென்டிக்ற் பாலனின் சொந்தக் காரன் கோகிலம், சுப்பையாவின் தூரத்துப் பச்சை, தி. ஞானசேகரனின் குருதிமலை, புலோலியூர் சதாசிவத்தின் மூட்டத்தி ணுள்ளே, தெளிவத்தை ஜோசெப்பின் காலங்கள் சாவதில்லை, சி. வி. வேலுப்பிள்ளையின் வீடற்றவன், இனிப்படமாட்டேன், சிக்கன் ராஜின் தாயகம், கே. ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்று விட்டது, அகஸ்தியரின் மண்ணில் தெரியுதொரு தோற்றம், எரி நெருப்பில் இடைபாதை இல்லை, அருளரின் லங்காராணி ஆகிய நாவல்கள் ஆய்வு மூலங்களாக அமைகின்றன.
விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு செ.கணேசலிங் கனின் மண்ணும் மக்களும், செங்கை ஆழியானின் காட்டாறு, மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, அ. பால மனோகரனின் நிலக்கிளி, காவலூர் ஜெகநாதனின் கலட்டுத் தரை, நாளை ஆகிய நாவல்கள் ஆய்வு மூலங்களாக அமைகின்றன.
xvi

Page 12
மீன்பிடித் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு கைலாசநாதனின் கடற்காற்று, செங்கை ஆழியானின் வாடைக்காற்று, செ.யோகநாதனின் கட்டுமரங்கள், தோழமை என்றொரு சொல், அப்பச்சி மகாலிங்கத்தின் கமலினி, வை. அஹற்மத்தின் புதிய தலை முறைகள் ஆகிய நாவல்கள் ஆய்வு மூலங்களாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.
நகரப்புற, கிராமப்புற தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு செ. கணேசலிங்கனின் செவ்வாணம், அருள். சுப்பிரமணியத்தின் அக்கரைகள் பச்சையில்லை, சுதந்திரராஜாவின் மழைக்குறி, ஞானர தனின் புதியயூமி, மாத்தளை சோமுவின் அந்த உலகத்தில் இந்த மனிதர்கள், செங்கை ஆழியானின் இரவின் முடிவு ஆகிய நாவல்கள் ஆய்வு மூலங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஈழத்தில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை மட்டுமே எடுத்துக் கூறுகின்ற தமிழ் நாவல் எதுவும் வெளிவந்ததாகத் தெரிய வில்லை. ஆனால் வெளிவந்த நாவல்கள் அனைத்திலும் ஏதோ ஒரு வகையில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளும் இடம் பெற்றி ருப்பதை அவதானிக்க முடிகின்றது. பெண்கள் எதிர்நோக்கும் பிரச் சினைகள் பலவாக இருந்தாலும் அவை அனைத்துமே சமுதாயச் சிக்கல்களாகக் கருதப்படுவதில்லை. எனவே சமுதாயச் சிக்கல்களாகக் கருதப்படுகின்ற பிரச்சினைகளை எடுத்துக் கூறுகின்ற நாவல்களே இவ்வியலில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையில் செ. கண்ேச லிங்கனின் நீண்டபயணம், செவ்வானம், போர்க்கோலம், தரையும் தாரகையும், சடங்கு, சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை, டானியலின் கானல், பொ.பத்மநாதனின் யுகசந்தி, கவிதாவின் கனவுகள் வாழ்கின்றன, நஜிமா ஏ. பஷிரின் வாழ்க்கைப் பயணம் ஜோன்ராஜனின் போடியார் மாப்பிளை, செங்கை ஆழியானின் கங்கைக் கரை ஓரம். காட்டாறு, கிடுகுவேலி, காற்றில் கலக்கும் பெரு மூச்சுகள், இரவின் முடிவு, பிரளயம், ஒ அந்த அழகிய பழைய உலகம், மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, ஒருமைய வட்டங்கள், கனவுகள் கற்பனைகள் ஆசைகள், சந்திரா தியாகராஜாவின் நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள், தி. ஞானசேகரனின் புதிய சுவடுகள், அ. பாலமனோ கரனின் கனவுகள் கலைந்தபோது, நிலக்கிளி, தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள், சோமகாந்தனின் விடிவெள்ளி பூத்தது, செம்பியன் செல்வனின் நெருப்பு மல்லிகை, அருள் சுப்பிரமணியத்தின் நான்கெட மாட்டேன், அக்கரைகள் பச்சை இல்லை, இந்து மகேஷின் ஒரு விலை மகளைக் காதலித்தேன், இங்கேயும் மனிதர்கள், கோகிலா மகேந்திரனின் தூவானம் கவனம், ஜூனைதா ஜெரீப்பின் சாணைக் கூறை முதலிய நாவல்கள் இந்த இயலுக்கு ஆய்வு மூலங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆய்வின் அமைப்பியல்
இந்த ஆய்வு முன்னுரை நீங்கலாக ஆறு இயல்களையும் இறுதியில் துணை நூற்பட்டியலையும் கொண்டதாக அமைகின்றது. இலக்கியமும் சமுதாயச் சிக்கலும் என்ற முதலாவது இயலில் சமுதாயச் சிக்கல் என்பதற்கு சமூகவியலாளர்கள் கூறிய வரையறைகளும் இலக்கியத்தில் சமுதாயச் சிக்கல் இடம் பெற வேண்டுமா என்பது பற்றிய இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்துக்களும் எடுத்துக் காட்டப்பட்டு இலக்கியத்தில் சமுதாயச் சிக்கல்கள் இடம் பெறும் என்ற கருத்தின் அடிப்படையில் நவீன இலக்கியங்களில் சமுதாயச் சிக்கல்கள் இடம் பெறுவது எடுத்துக் காட்டப்படுகின்றது. நவீன தமிழ் இலக்கியங்களில் இடம் பெறும் சமுதாயச் சிக்கல்களை ஆய்வு செய்வது எமது நோக்கமாகாது என்பதால் தமிழ் நாவல்களில் இடம் பெறுவனவாகக் காட்டப்படும் சமுதாயச் சிக்கல்கள் மட்டும் வகைமாதிரியாக இவ்வியலில் எடுத்துக் காட்டப்படுகின்றன.
ஈழத்துத் தமிழ் நாவல்களில் இடம் பெறுகின்ற பிரதான சமுதாயச் சிக்கல்களின் வரலாறாக அமையும் இரண்டாவது இயலில் சாதியம், தொழிலாளர் தொடர்பான சிக்கல்கள், பெண்கள் தொடர்பான சிக்கல்கள் ஆகியவற்றிற்கான சமூக வரலாற்றுப் பின்னணிகள் எடுத்துக் காட்டப்படுகின்றன்.
இந்த வகையில் இந்திய தேசிய விடுதலைப் போராட்டச் சூழலில் சாதியம் ஒரு சமுதாயச் சிக்கலாக உருவாகியதும் தமிழ் நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பினால் அச்சிந்தனை மாற்றம் யாழ்ப்பாண இளைஞர்களிடையே பரவியவரலாறும் எடுத்துக் காட்டப்படு கின்றது. யாழ்ப்பாணத்தில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான சிந்தனை தோற்றம் பெற்றபோது மக்கள் எவ்வாறெல்லாம் அடக்கியொடுக்கப் பட்டிருந்தார்கள், அவர்களுக்கு எத்தகைய உரிமைகள் மறுக்கப்பட்டி ருந்தன என்பது விளக்கமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும் ஒடுக்கு முறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் எடுத்துக் கூறப்பட்டு சாதியம் ஒரு சமுதாயச் சிக்கலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறு விளக்கமாகக் காட்டப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தொடர்பான சிக்கல்களின் வரலாற்றில் தொழிலாளர்கள் ஒரு வர்க்கமாக உருவாகிய சமூக பொருளாதாரச்

Page 13
சூழல் எடுத்துக் காட்டப்பட்டு இந்தியாவில் அந்நிய ஆட்சி நிலவிய சூழலில் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தொழிலாளர் இயக்கமாக உருவாகிய வரலாறு விளக்கமாகக் கூறப்படுகின்றது. இந்தியாவில் உருவாகிய தொழிலாளர் இயக்கங்கள் இலங்கையில் பரவிய வரலாறும் இடது சாரி இயக்கங்களால் இவை தமிழர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றமையும் இதனால் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
மேலும் இலங்கையிலுள்ள தொழிலாளர்களில் மிகவும் முக்கிய மானவர்களாக விளங்கும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் வரலாறும் அவர்களிடையே தொழிற்சங்கங்கள் உருவாகிய சூழலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
பெண்கள் தொடர்பான சிக்கல்களின் வரலாற்றைக் கூறும் பகுதியில் பெண் தொடர்பான பாரம்பரியமான கருத்து நிலை தமிழர் சமூகத்தில் பெண்கள் தொடர்பாக நிலவும் கருத்து நிலை ஆகியவை எடுத்துக் காட்டப்பட்டு இந்தியாவில் பெண் விடுதலை தொடர்பான சிந்தனைகள் உருவாகிய சூழல் எடுத்துக் காட்டப்படுகின்றது. பெண் விடுதலை தொடர்பாக இந்தியாவில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் உடனடியாக இலங்கையைப் பாதிக்காத நிலையும் இலங்கையில் குறிப்பாக தமிழர் சமூகத்தில் 1970 களின் பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்தே பெண் பற்றிய நிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது என்பதும் இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.
மூன்றாவது இயலில் ஈழத்துத் தமிழ் நாவல்களில் இடம் பெறுகின்ற சாதியம் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இந்த வகையில் அடக்குமுறை, குடிமை முறை ஆலய வழிபாட்டில் சம உரிமை மறுப்பு, தேநீர்க் கடைகளில் சம உரிமை மறுப்பு, பாலியல் சுரண்டல் முதலிய பல்வேறு விதமான சிக்கல்களும் நாவலாசிரியர்களால் எவ்வாறு எடுத்துக் காட்டப்பட் டுள்ளன என்பது தனித்தனியான தலைப்புக்களில் விளக்கப்பட்டுள்ளது. இறுதியில் சாதியம் தொடர்பான சமுதாயச் சிக்கல்களுக்கு நாவலாசிரி யர்கள் ள்த்தகைய தீர்வினைக் கூறியிருக்கின்றார்கள் என்பதும் எடுத்துக் கூறப்படுகின்றது.
நான்காவது இயல் தொழிலாளர்கள் தொடர்பான சிக்கல்கள் பற்றியதாகும். இவ்வியலில் ஈழத்துத் தமிழ் நாவல்களில் இடம்பெறுகின்ற

தொழிலாளர்களை தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், நகரப்புறத் தொழிலாளர்கள், கிராமப் புறத் தொழிலாளர்கள் என ஐந்து வகையினராக வகைப்படுத்தி இவ்வைந்து வகைத் தொழிலாளர்களும் எதிர்நோக்குகின்ற உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, ஒடுக்குமுறை, பாலியல் சுரண்டல், தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் முதலிய பல்வேறு விதமான சிக்கல்களையும் தனித்தனியான தலைப்புக்களில் எடுத்துக் கூறி இறுதியில் இத்தகைய சிக்கல்களுக்கு நாவலா சிரியர்கள் கூறிய தீர்வுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன.
ஐந்தாவது இயல் பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள் பற்றியதாகும். இவ்வியலில் தமிழ்ப் பெண்கள் எதிர் நோக்குகின்ற சீதனக் கொடுமையும் அதனால் ஏற்படும் பொருந்தாமணம், ஒழுக்கப் பிறழ்வுகள், திருமணம் தடைப்படுதல், முதலிய சிக்கல்களும் பாலியல் சுரண்டல் தொடர்பான சிக்கல்களும் நாவலாசிரியர்களால் காட்டப்பட்டி ருப்பதை எடுத்துக் காட்டி இத்தகைய சிக்கல்களுக்கு அவர்கள் கூறும் தீர்வுகளும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
ஆறாவது இயல் நிறைவுரையாக அமைகின்றது. நிறைவுரையில் ஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்களை எடுத்துக்காட்டி யவர்களை முற்போக்கு அணியினர், முற்போக்கு அணியைச் சாராதவர்கள் எனப் பிரித்துக் காட்டி இவ்விருவரும் கூறிய தீர்வுகளும் எடுத்துக் காட்டப்படுகின்றது. மேலும் இவ்விருவரது தீர்வுகளின் அடிப்படையிலும் புலப்படுகின்ற கருத்துக்கள் எடுத்துக்காட்டப்பட்டு சமுதாயச் சிக்கல்களை எத்தகைய சூழலில் ஒழிப்பது சாத்தியமாகும் என்பது எடுத்துக் கூறப்படுகின்றது.
ஆய்வின் இறுதியில் இந்த ஆய்வுக்கு உதவிய நூல்கள் தொடர்பான விபரப்பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

Page 14
ஆய்வு முன்னுரை
அபழக்குறிப்புகள்
1. சுப்பிரமணியம், நா.,
2. மங்களநாயகம் தம்பையா,
3. கைலாசபதி, க.,
4. சுப்பிரமணியம், நா.,
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் 1978, யாழ்ப்பாணம், ப.17.
நொறுங்குண்ட இருதயம், 1914, தெல்லிப்பழை, நூன்முகம்.
தமிழ் நாவல் இலக்கியம், 1999, சென்னை, ப.39.
ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், ப. 72.

இயல் ஒன்று
1. இலக்கியமும் சமுதாயச் சிக்கலும்
1. சமுதாயச் சிக்கல்
மனித இனம் தனது வாழ்வியல் தேவைகளை ஈட்டிக் கொள்வதற்காக ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டும் இணைந்தும் வாழ முற்பட்டபோதுதான் சமுதாயம் என்ற அமைப்பு உருவாகியது என்பது பண்பாட்டு மானிடவியலாளர்களின் பொதுவான கருத்தாகும். சமுதாயம் என்பதற்கு மதுரைத் தமிழ்ப் பேரகராதி கூட்டம், சங்கம், பின்னணி, ஊர்ப்பொது, போர், மக்களின் திரள், பொருளின் திரள் பொதுவானது, பொதுவாகவேனும் அவ்வவர்க்குப் பங்குப்படி பிரித்தேனும் அனுபவிக்கப்படும் ஊர்ப் பொதுச் சொத்து, சபை, அவைக்களம் என்ற பொருள்களைத் தருகின்றது. இவற்றில் கூட்டம், மக்களின் திரள், சங்கம், சபை, அவைக்களம், ஆகியவை வெறுமனே மக்கட் கூட்டத்தை மட்டும் குறிக்காமல் குறித்த சில நோக்கங் களுக்காகக் கூடிய மக்கட் கூட்டத்தையே குறிப்பதை உணர முடிகின்றது. எனவே இங்கு எண்ணிக்கை மாத்திரமன்றி கூடியுள்ளவர் களின் தேவைகள், பரஸ்பர தொடர்புகள் ஆகியவையும் முக்கியத் துவம் உடையனவாக அமைவது புலனாகின்றது.
மனித வாழ்வின் தொடக்க நிலையிலேயே கூட்டு வாழ்வின் தேவை உணரப்பட்டது. மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்ற வகையில் அவனது அடிப்படைச் செயல்களான மூச்சுவிடுதல், உணவு உண்ணுதல், நீர் பருகுதல், உறங்குதல், இனப்பெருக்கம் செய்தல், கழிவுப்பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றுதல் முதலிய செயற்பாடுகளில் முதற் செயலையும் இறுதிச் செயலையும் மட்டுமே அவர்களால் தனிமனிதர்களாக நின்று செய்ய முடிந்தது. ஏனைய செயல்ளைச் செய்வதற்கு ஒருவர் மற்றொருவருடன் சேர்ந்து கூட்டாகச் செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. இவ்வாறு ஒருவரோபொருவர் சேர்ந்து வாழ்தல் மனித இனத்தின் கட்டாயம் என்று உணரப்பட்ட நிலையில் எவருடன் இணைவது எவ்வாறு இணைவது எந்தெந்தச் செயல்களில் இணைவது போன்ற பிரச்சினைகள் எழுந்தன. அன்று
ஈழத்துத்தமிழ்நாவல்கள் CD Dா.ம.இரகுநாதன்

Page 15
தொடங்கி இன்றுவரை உலகம் முழுவதும் பரவி வாழ முற்பட்ட மக்களிடையே திருமணம், குடும்பம், உறவுமுறை, சமூக ஒழுங்கு, சமயம் ஆகிய முறைகளில் ஒத்த தன்மை ஏற்படவில்லை. எனவே ஒவ்வொரு மனிதனும் ஏனைய மனிதர்களுடன் கொண்டிருக்கும் சிக்கலான சமூக உறவு முறைத் தொடர்புகளே சமூகம் என்பது தெரிகின்றது. இது உருவுள்ளதாகக் கருதும் போது மக்கள் குழுவை யும் உருவற்றதாகக் கருதும் போது மக்கள் வாழ்வையும் குறிக்கும்.
சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். குடும்பம் என்னும் அமைப்பானது ஓர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமுதாய மரபுப்படி மணவாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். அவ்வாறு இணைந்தாலேயே அச் சமுதாயத்தில் அவர்கள் ஒரு குடும்பமாக ஏற்றுக் கொள்ளப்படுவர்.
“குடும்பம் என்பது இயக்கமுள்ள சித்தாந்தத்தையே குறிக்கிறது. அது என்றைக்கும் இயங்காதிருப்பதில்லை; சமுதாயம் கீழ் நிலையில் இருந்து மேல் நிலைக்கு முன்னேற முன்னேற அதுவும் கீழான வடிவத்திலிருந்து மேலான வடிவத்திற்கு முன்னேறிச் செல்கிறது. என்பது குடும்பம் பற்றிய எங்கெல்சின் கருத்தாகும். குடும்பம் பற்றி தமிழ் கலைக்களஞ்சியம் பின்வருமாறு கூறும்.
“குடும்பம் எல்லாச் சமூகங்களிலும் உள்ள அடிப்படையான அமைப்பு குடும்பத்தினின்று உறவு ஏற்படுகிறது. சமூகத்தின் பல்வேறு பிரிவுகளுக்கும் குடும்பம் அடிப்படையானது. இக்குடும்பம் சமூக வழக்காலும் சமயத்தாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.”
எனவே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இணைந்த குடும்பம் என்பதே சமூகத்தின் அடிப்படை அலகாகும். இக்குடும்பத்தின் உருவாக் கத்தில் சமூக மரபுகளும் நம்பிக்கைகளும் பிரதான பங்கை வகிக்கின்றன. இயங்கிக் கொண்டிருக்கும் குடும்ப நிறுவனங்களால் உருவான சமூக அமைப்பு குறிப்பிட்ட சில விதிமுறைகளையும் வழக்கங் களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். இத்தகைய விதி முறைகளின் உருவாக்கத்தில் பொருளாதார, அரசியல் காரணிகள் பங்கு கொண்டிருக்கலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Ga) Dr.ம.இரகுநாதன்

குடும்பம் இயங்கிக் கொண்டிருப்பதால் அதன் இயக்கத்தில் புதிய கருதுக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டாகின்றது. இக்கருத்துக்கள் ஏற்கெனவேயுள்ள சமூக மரபுகளோடு மாறுபடுகின்ற போது சமூகத்தில் பிரச்சினைகள் உருவாக வழியேற்படுகின்றது. புதிய கருத்துக்களைச் சமூகம் எதிர் கொள்ளும்போது அக்கருத்துக் களால் ஏற்கெனவே இருந்த சமூக நடைமுறைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டாகின்றது. சமூகத்தில் நடைமுறையில் இருந்த கருத்துக்கள் அதிகார வர்க்கத்திற்குச் சாதகமானவையாகவே இருக்கும் என்பதால் புதிய கருத்துக்களை அதிகார வர்க்கம் தனது நலனைப் பாதிக்காத வகையிலேயே அனுமதிக்க விரும்பும். இக்கருத்துக்கள் அதிகார வர்க்கத்தின் நலனைப் பாதிக்கும் எனின் அதிகார வர்க்கம் இக் கருத்துக்களை இல்லாதொழிப்பதற்கே முயற்சி செய்யும். இதனால் இரு சாராருக்குமிடையே கருத்து மோதல்கள் ஏற்படும் நிலை உருவாகும். இது சமூகத்தில் சிக்கல்களை ஏற்படுத் தும். சமுதாயச் சிக்கல் என்பது பற்றி புல்லா (Richard to Fula), சர்மா, சுகார் பிற்றி (Frank R. Scarpitti) ஆகிய சமூகவியலாளர்கள் கூறிய கருத்துக்களை சி. இ. மறைமலை தனது இலக்கியமும் சமூகவியலும் என்னும் நூலில் எடுத்துக் காட்டியுள்ளார்.5 பொருத்தம் நோக்கி அக்கருத்துக்கள் இங்கே எடுத்தாளப்படுகின்றன.
“ஒரு சமுதாயத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களால் விரும்பத் தகாதவையாகவும் வெறுத்தொதுக்கப்பட வேண்டியவையாகவும் கருதப்படும் நடத்தை முறைமைகள் அல்லது சூழல்கள் சமூகச் சிக்கல்களாகக் கருதப்படும்”6
என்பது புல்லா, மேயர்சு ஆகிய சமூகவியலாளர்களின் கருத்தாகும்.
சமூகவியலாளர் சர்மா,
“சமுதாயத்தைப் பாதிக்கின்ற அனைத்துச் சிக்கல்களும் சமுதாயச் சிக்கல்களாகும் சமுதாயம் என்பது சமுதாய உறவுமுறை களாற் பின்னப்பட்ட ஒரு வலை போன்றது இவ்வுறவு முறைகள் குடும்பம், திருமணம் ஆகிய சமுதாய நிறுவனங்களால் ஏற்படுகின்றன. எனவே சமுதாயச் சிக்கல்கள் சமுதாய நிறுவனங்களைப் பாதிக்கின்ற சிக்கல் களாகும். இவை தனிப்பட்டவையோ தனிப்பட்டவரைச் சார்ந்து இருப்ப வையோ அல்ல. ஒருவருக்கொருவர் இடையிலேயான உறவைப் பாதிப்பன;
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G3) Dr.ம.இரகுநாதன்

Page 16
இவை சமூகக் கட்டமைப்பின் பகுதியாகப் பிணைந்தவை. மனிதனது சிக்கல்கள் சமூகக் கட்டமைப்பைப் பாதிக்கும் போதுதான் அவை சமூகச் சிக்கல்களாகக் கருதப்படும் இந்தவகையில் தடை, கொந்தளிப்பு, முட்டுக்கட்டை, ஒருங்கிணைவு கெடுதற்குரிய காரணம், சீர்கேட்டை உண்டாக்கும். மூல ஊற்று ஆகிய வகைகளில் அமையும் அனைத்துமே சமூகச் சிக்கல்களாகக் கருதப்படவேண்டியவை.”
என்கிறார்.
சுகார் பிற்றி.
“ஒரு பொதுவான சிக்கலொன்றைச் சமுதாயச் சிக்கலாகக் கருதுவதாயின் அதற்கு இரண்டு அடிப்படைகள் தேவை. முதலாவது சமுதாயத்திலுள்ள பெரும்பான்மையினர் சமுதாயச் சிக்கல் நிலவுவ தாகக் கருதவேண்டும். இரண்டாவது சமுதாய நடைமுறைகளால் அச் சமுதாயச் சிக்கலுக்குத் தீர்வுகாண முடியும் என்ற நம்பிக்கை அச் சமுதாயத்தின் பெரும்பான்மையினருக்கு இருக்க வேண்டும்.”*
என்கிறார்,
மேற்படிகருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது சமூகத்தில் அதிகார முதன்மையுடையோரை அல்லது குறித்த வொரு சிக்கலால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையோரைப் பாதித்து அதன் விளைவாகச் சமுதாயக் கட்டமைப்பைப் பாதிக்கக் கூடிய சிக்கல்கள் அனைத்துமே சமுதாயச் சிக்கல்களாகக் கருதப்பட லாம் எனத் தெரிகிறது. இவ்வாறான சிக்கல்கள் நிலவும்போது இவற்றைத் தீர்க்க வேண்டும் என்ற துடிப்பு சமூகத்தில் உருவாகும். இதனைச் சமூகப் பொறுப்புடைய நிறுவனங்கள், பத்திரிகைகள் முதலியன பிரதிபலிக்கும். இதனால் அரச நிறுவனமும் இச் சிக்கலைத் தீர்த்து சமூக அமைப்பைக் குலைய விடாமல் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும்.
ஒரு குறிப்பிட்ட சிக்கலை சமுதாயத்தில் ஒரு சாரார் சமூகச் சிக்கலாகக் கருதும் வேளையில் பிறிதொருசாரார் அதனைச் சிக்கலே இல்லையெனப் புறக்கணிக்கவும் செய்யலாம். இங்ங்ணம் ஒன்றினைச் சமூகச்சிக்கல் என்று கொள்ளுவதும் சிக்கலன்று எனத் தள்ளுவதும் அவரவர் ஏற்றிப்போற்றும் வாழ்க்கை நெறிமுறைகளுக்கும் வாழ்வியல்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (4) Dr.ம.இரகுநாதன்

விழுமியங்களுக்கும் ஏற்ப மாறுபடலாம் எனக்கூறும் சி. இ. மறைமலை இதற்குச் சான்றாக 1960 களில் தமிழ் நாட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது, மதுப் பழக்கம் ஆகியவை ஒரு சமுதாயச் சிக்கலாகக் கருதப்பட்டு மது விலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதையும் பின்னர் கள் வேண்டுவோர் கழகம் இதற்கு எதிராகப் போராடியதையும் தி. மு. க. ஆட்சிக்கு வந்ததும் மது விலக்குத் தளர்த்தப்பட்டதையும் சான்றாகக் காட்டியுள்ளார்.”
1.2 இலக்கியத்தில் சமுதாயச் சிக்கல்
இலக்கியத்தில் சமுதாயச் சிக்கல்கள் எடுத்துரைக்கப்பட வேண்டுமா என்பதில் இலக்கிய ஆய்வாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு சாரார் இலக்கியத்திற்குச் சமுதாயப் பணி உண்டென்றும் எழுத்தாளன் சமுதாயத்திற்காகவே என்றும் சமுதாயப் பிரக்ஞை சிறக்கவும் சமுதாய ஒழுங்கு செம்மையுறவும் இலக்கியம் உதவ வேண்டும் என்பர். மறு சாரார் இலக்கியத்தின் சமுதாயப் பணியை மறுத்து கலை கலைக்காகவே என்றும் இன்னொன்றுக்குப் பயன்படுவதால் அதன் மதிப்பு நலிந்துவிடும் என்பர்.19
எழுத்தாளன் தனித்து இருந்து வாழும் ஒருவன் அல்லன். அவன் ஒரு சமூகப் பிராணி சமுதாயத்தில் எல்லாக் காலங்களிலும் முரண்பாடுகளும் போராட்டங்களும் இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வர்க்கவேறுபாட்டினால் இவை எழுகின்றன. இவற்றின் மத்தியிலேயே எழுத்தாளனும் வாழ்கின்றான். எனக் கூறும் க. கைலாசபதி எழுத்தாளர்களின் நிலைப்பாடுகளை மூன்றாக வகுத்துக் காட்டுகின்றார். முதலாவது பிரிவினர் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் துன்ப துயரங்களையும் எதிர் நோக்காதவராய் அவற்றுடன் சம்பந்தப்படாமல் இன்பமூட்டுவதையே எழுத்தின் தலையாய நோக்கமாகக் கொண்டு அதற்கியையக் கற்பனைச் சம்பவங்களையும் இலக்கியமாக்குபவர்கள். இவர்கள் சமூகப் பிரச்சினைகளைப் பிரதிபலிக்காமல் மானசீக உலகில் இருந்து கொண்டு எழுதுவோர்.
இரண்டாவது பிரிவினர் சமூகப் பிரச்சினைகள் இலக்கியத்தில் இடம் பெறுவதை ஏற்றுக் கொள்கின்றனர்; எனினும் தமது கடமை அல்லது பொறுப்பு அவற்றைத் தத்ரூபமாகச் சித்திரித்துவிடுவதே
SE er o ன் SE
D chsherif 6.

Page 17
கருதுகின்றனர்.
மூன்றாவது பிரிவினர் சமுதாயத்தை நுணுக்கமாகப் பிரதிபலிப்பது மட்டுமன்றி அதனை மாற்றியமைக்கும் பணியில் பங்குபற்றுவதுடன் அப்பணி வெற்றி பெறுவதற்குரிய மாற்றங்களை இலக்கியப் பொருளாகத்துணிந்து ஏற்றுக் கொண்டவர்கள். இம் மூன்றாவது பிரிவினரின் கருத்துக்கு அனுபவமும் அனைத்துலகப் போக்கும் அரண் செய்வதாகக் கூறும் கைலாசபதி அண்மைக்காலத் தமிழ் நாவல்களிற் சிலவும் புதுக்கவிதைப் படைப்புக்கள் சிலவும் இப்போக்கு நமது மத்தியிலும் வலுப் பெற்று வருவதைக் காட்டுகின்றன என்கின்றார்.
எனவே சமூகமுன்னேற்றத்தில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட படைப்பாளிகளின் இலக்கியங்களில் சமுதாயச் சிக்கல்கள் எடுத்துக் காட்டப்பட்டு அவற்றிற்கான தீர்வும் கூறப்படுகின்றது என்பது தெளிவா கின்றது. இத்தகைய படைப்புக்களே வாசகர் மத்தியில் நின்று நிலைக்கக் கூடியனவுமாகும்.
13 நவீன தமிழ் இலக்கியங்களில் சமுதாயச்
சிக்கல்கள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் வெளிவந்த நாவல், சிறுகதை ஆகிய வசன இலக்கியங்களும் மரபிலிருந்து மாறுபட்ட புதிய கவிதைகளுமே இங்கு நவீன இலக்கியங்கள் எனப்படுகின்றன. இவை “நவீன இலக்கியங்கள்’ எனச் சிறப்பித்துக் கூறப்படுவதற்கு இவற்றில் காணப்படுகின்ற புதுமையான அம்சங்களே காரணமாகும். இலக்கியம் சமுதாயத்தின் விளைபொருள் என்பதால் நவீன இலக்கியங்களிற் காணப்படுகின்ற புதுமையான அம்சங்களின் ஊற்றுக்களைத் தேடுவதற்கு அவ்விலக்கியங்கள் உருவாகிய காலத்துச் சமுதாய வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகும்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆங்கிலேயர் தமது ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்டனர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் முதலா ளித்துவ பொருளாதார அமைப்பு இந்தியாவிலும் இலங்கை யிலும் புகுத்தப்பட்டது. இதனால் இந்திய பாரம்பரிய நிலவுடைமை அமைப்புச் சிதைவுற்றது. நிலவுடைமை அமைப்பில் சாதி, மதம் ஆகியவற்றால்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Ο6) Dr.மஇரகுநாதன்

உருவாக்கப்பட்ட சமூக அந்தஸ்து புதிய சூழலில் ஆங்கிலக் கல்வி, அரச பதவி ஆகியவற்றால் கிடைத்தது. இந்நிலையில் சுதேசிகள் பலரும் ஆங்கிலங் கற்று அரச பதவிகளைப்பெற முயன்றனர். இதனால் தமிழ் மக்களிடையே படித்த மத்தியதர வர்க்கம் ஒன்று உருவாகியது. ஆங்கில ஆட்சிக் காலத்தில் உயர் கல்வி கற்றவர் களுக்குப் பாடநூல்களாக ஆங்கில மொழியில் நன்கு வளர்ச்சியடைந் திருந்த நவீன இலக்கியங்களே வழங்கப்பட்டிருந்தன. வசன இலக்கி யங்களை அறிந்திருக்காத இந்தியத் தமிழ்மக்கள் ஆங்கில வசன இலக்கியங்களால் கவரப்பட்டனர். இதனால் தமிழிலும் அதுபோன்ற இலக்கியங்களைப் படைக்க வேண்டும் என விரும்பினர். தமிழில் முதல் நாவலை எழுதியவர் எனப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆங்கிலம் படித்து அரசாங்கத்தில் உயர் பதவியை வகித்தவர். இவர் தமிழில் ஆங்கிலத்தில் இருப்பது போன்ற புதியதொரு இலக்கிய வடிவத்தைப் படைக்க வேண்டும் என்ற ஆவலினாலேயே பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதியதாகக் கூறியுள்ளார். 'நாவல் இலக்கி யத்தின் அடிப்படைகள் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சூழலில் எழுதப்பட்ட இப் படைப்பு கற்பனை நிறைந்த அற்புதக்கதை போலவே அமைந்தது.
நாவல் இலக்கியம் பற்றிக் கூறுகின்ற பலரும் அது உலகானு பவத்தையொட்டிச் செல்வது என்றும் நாவலில் இடம்பெறுகின்ற சம்பவங்கள் அனைத்தும் நிகழத் தக்கவையாக இருத்தல் வேண்டும் என்றும் கூறுவர். இதுவே நாவலுக்குயதார்த்தம் என்ற பண்பைக் கொடுப்பதாகவும் அமைந்தது. அற்புதக்கதை மரபில் ஆரம்பித்த தமிழ் நாவலுக்கு சமூக நடப்பியல்பைப் புகுத்தியவர் ராஜம் அய்யரே. இவரின் கமலாம்பாள் சரித்திரத்தில் நிலப்பிரபுத்துவ குடும்ப மொன்றின் சிதைவு காட்டப்படுகின்றது. புதிய சக்திகளும் பழைய சக்திகளும் முரண்பட்டு மோதும்போது சமூக உறவுகளில் ஏற்படும் மாற்றங் களையும் பாத்திரங்கள் பலவும் தம்முள் வேறுபட்டு நிற்பதையும் எடுத்துக் காட்டி அக்காலத் தமிழகம் பற்றிய யதார்த்தப் படிமத்தை இவர் உருவாக்கியுள்ளார். எனினும் சமூக உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை இவர் சமூக ரீதியில் விளக்கவில்லை சிந்தனை ரீதியில் இவர் அத்வைதியாக இருந்ததே இதற்குக் காரணமாக இருக்கல்ாம்.
ராஜம் அய்யர் தொடக்கி வைத்த யதார்த்தவாதம் மாதவை யாவிடம் இன்னும் பிரகாசமடைந்து. இவர் சமூக உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்கின்றார். மாதவையாவின் காலத்தில் தமிழக
ஈழத்துத்தமிழ்நாவல்கள் O7) Dr.ம.இரகுநாதன்

Page 18
இந்துக்கள் பலர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிக் கொண்டிருந்தனர். பாரம்பரிய இந்து சமூக அமைப்பில் அதிருப்தியடைந்தவர்களுக்கு கிறிஸ்தவம் ஆறுதலளிக்கும் என்ற கருத்து ஓரளவுக்கு வலுப்பெற்றி ருந்தது. இதனால் தமிழக இந்துக்கள் பலரும் மதம் மாறுவதில் ஆர்வம் காட்டினர். இத்தகைய மத மாற்றத்தைத் தடுப்பதற்காக இந்து சமூகத்தைச் சீர்திருத்த வேண்டும் என்ற நோக்கில் பிரம்ம சமாஜம் போன்ற அமைப்புக்கள் மும்முரமாகச் செயற்பட்டன. இவற்றின் மூலமாக இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சமூகக் கேடு களான குழந்தைமணம், கட்டாய விதவைநிலை, பெண்ணடிமை, தீண்டாமை பாராட்டுதல் முதலிய வழக்கங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
1885 இல் இந்திய தேசிய காங்கிரஸ் தேசிய விடுதலைக்கு சமூக விடுதலை அவசியம் என்ற கருத்தை வலியுறுத்தியது. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னளவில் சாதி, மூடப்பழக்க வழக்கங் கள், நம்பிக்கைகள், மதிப்பீடுகள் முதலியவற்றிலிருந்து விடுதலை பெறும் அக விடுதலையைப் பாரதி போன்ற பலரும் வலியுறுத்தினர். அக விடுதலையை விரும்பிய மாதவையாவும் தனது படைப்புக்களில் அதனை ஆதரித்து எழுதினார். பார்ப்பனர்கள் குற்றம் புரிந்தாலும் தண்டிக்கப்படக் கூடாதவர்கள் என்ற கருத்தை எதிர்த்து பத்மாவதி சரித்திரத்தில் சீதாபதி ஐயரை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெறச் செய்கின்றார்.?
தந்தையும் மகனும் என்ற சிறுகதையில் தன் தந்தை வசதி படைத்திருந்தும் சாணான் என்ற ஒரே காரணத்துக்காக எந்த அக்கிர காரத் தெருவில் நடப்பதற்குப் பார்ப்பனர்கள் தடை செய்தார்களோ அதே தெருவில் படித்து கிறிஸ்தவனாகி தாசில்தார் பதவி ஏற்ற மகன் குதிரைமீது பவனி வருவதை சித்திரிப்பதன் மூலம் மாதவையா சட்டத்தின் முன்பாக மட்டுமன்றி கிறிஸ்தவ மதத்தின் முன்பும் பார்ப்பனப் பெருமை செல்லுபடியாகாமற் போவதை உணர்த்திவிடு கின்றார் என்கின்றார் ராஜ் கெளதமன். *
மாதவையாவின் காலத்திலேயே மகாகவி பாரதி,
“பார்ப்பானை ஐயரென்ற
காலமும் போச்சே - வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற
காலமும் போச்சே .
994
LLLLLL LLL LLLS LLSL LLL LLL LLLL LSL LLSL LLLLL LL LLL LLL LLLL LSL LLLLL LLL LLLL LL LSLL LL LLL LLL LLL LLLS LL LSL LLLLL LL LLL LL
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Ꮹ8Ꭷ Dr.ம.இரகுநாதன்

“பறையருக்கும் இங்கு தியர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை
ஏழை யென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லையே.*
என்று சாதியத்தை எதிர்த்து ஆவேசமாகப் பாடினான். பாரதி யைத் தொடர்ந்து பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் சாதியத்தை எதிர்த்துப் பாடியிருக்கின்றார்கள்."
இந்து சமூகத்தில் நிலவிய மற்றொரு சமூக வழக்கம் கட்டாய விதவை நிலையாகும். இளமையிலேயே கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய முடியாதவாறு மதம் இவர்களைத் தடுத்தது. இவ் வாறு மறுமணம் செய்யும் உரிமை மறுக்கப்பட்ட இளம் விதவைகளை இளைஞர்களும் மணமாகாத ஆண்களும் தமது காம இச்சைக்கு இரையாக்கும் கொடுமை சமூகத்தில் நிகழ்ந்து வந்தது.
மாதவையாவின் முத்து மீனாட்சி என்ற நாவலில் வரும் இளம் விதவையான முத்து மீனாட்சி தன்னை சுந்தரியின் புருஷன் தவறான முறையில் அணுகுவதாகக் கூறுகின்றாள். இவ்வாறு விதவைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலையைக் காட்டுவதன் மூலம் மாதவையா அவர்களின் மறுமணத்தை ஆதரிக்கின்றார். முத்து மீனாட்சியிலும் கிளாரின்ராவிலும் வரும் பார்ப்பன இளம் விதவைகள் கிறிஸ்தவத்திற்கு மாறி மறுமணம் செய்வதாக இவர் சித்திரிப்பது இக்கருத்தையே உணர்த்துகின்றது.
மாதவையா “அது நேர்ந்த விதம்” என்ற சிறுகதையில் வரதட்சணை கொடுக்கமுடியாத நிலையில் கிணற்றில் வீழ்ந்து தற் கொலை செய்து கொள்ளும் பெண்ணையும், கமலத்தின் கலியாணம் என்ற சிறுகதையில் முப்பதாயிரம் ரூபா வரதட்சணைக்காக அழகற்ற ஒரு பெண்ணை மணம் செய்யும் வாலிபனையும் காட்டியிருப்பதோடு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G9) Dr.ம.இரகுநாதன்

Page 19
“அது நேர்ந்த விதம்” என்ற சிறுகதையில் வரதட்சணைக் கொடுமையி லிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவத்திற்கு மதம் மாறுவதையும் காட்டியி ருக்கின்றார். இவ்வாறு காட்டுவதன் மூலமாக மாதவையா இத்தகைய கொடுமைகளுக்குத் தீர்வாக மதமாற்றத்தையே எடுத்துக் கூறுகின்றார் போலத் தெரிகிறது. ஆனால் இதனை மறுக்கும் ராஜ் கெளதமன், தனது கருத்துக்கு ஆதாரமாக பத்மாவதி சரித்திரத்தில் (மூன்றாம் பாகம்) இந்திய கிறிஸ்தவ மதத்தில் கோயில் வழிபாடு, பந்திபோசனம், மண உறவுகள் போன்ற அனைத்திலும் சாதி வேறுபாடுகள் கடைப் பிடிக்கப்படுவதை மாதவையா சித்திரிப்பதைக் காட்டி சீர்திருத்தத்திற்குத் தயங்கும் இந்து மதத்திற்கு ஓர் எச்சரிக்கையாகவே கிறிஸ்தவ மத மாற்றத்தை மாதவையா முன்வைத்துள்ளார் என்கின்றார்.'
மகாகவி பாரதி கற்பு என்ற பெயரில் பெண்கள் அடக்கியொடுக் கப்படுவதை எதிர்த்தார்.
“கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்”*
எனப் பாரதி கற்பு பெண்ணுக்கு மட்டும் உரியதல்ல அது ஆணுக்கும் இருக்க வேண்டும் என்றார். பாரதியின் கருத்தை அடியொற்றிப் பின்னர் வந்த பல கவிஞர்கள் பாடியிருக்கின்றனர். கற்பு என்ற பெயரில் இளம் விதவைகளை மறுமணம் செய்ய விடாது தடுப்பதைக் கண்டு பொறுக்காத பாரதிதாசன்,
“அணையாத காதலினை அணைக்கச் சொன்னீர்
அணை கடந்தால் உங்கள் தடை எந்த முலை.?
என இளம் விதவைப்பெண்ணின் இயற்கை உணர்வினைப் புலப்படுத்திப் பாடுகின்றார். இவ்வாறே சுத்தானந்த பாரதியாரும்,
*கதிமுடிந்த கணவனுக்காக நம்
காய்க்கும் இளமையை மாய்த்திடவோ”
என்று பழைமைக்கு எதிராகவும் பெண்ணின் உரிமைக் குரலாகவும் பாடுகின்றார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Οι0) ம.ம.இரகுநாதன்

பாரதியார் கவிதைகளினூடாக மாத்திரமன்றி தனது கதைகளி னுாடாகவும் விதவைகளின் மறுமணத்தை வலியுறுத்தினார். இவரது சந்திரிகையின் கதை விதவை மறுமணத்தையே பொருளாகக் கொண்ட தாகும். இக் கதை வெளிவந்த காலத்தில் வ.ரா.வும் “சுந்தரி அல்லது பிழைப்பு” என்ற நாவலினூடாக விதவை மணத்தை ஆதரித்து எழுதியுள்ளார்.?
இந்திய தேசிய விடுதலை இயக்கம் தேச விடுதலைக்கு முன் நிபந்தனையாக சமூக விடுதலையை முன்வைத்ததால் சமூகத் தில் சாதியின் பெயராலும் சமயத்தின் பெயராலும் அடக்கியொடுக்கப் பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்ற கருத்து நாடெங்கும் பரவியது. இதன் தாக்கம் இலக்கியங்களையும் பாதித்தது. இதனால் வரலாற்று நாவல்களை எழுதுவதிலேயே அதிக அக்கறை காட்டிய கல்கி தனது தியாக பூமி என்ற நாவலில் வரதட்சணைக் கொடுமை, தீண்டாமை ஒழிப்பு, ஆகிய சமுதாயச் சிக்கல்களை எடுத்துக் காட்டியிருந்தார்.
“. ஒரு சமூகத்தாரை ஒடுக்கிச் சுயமரியாதை அற்று வைத்தி ருக்கும் சமூகத்தார் சுயராச்சியம் அடைவது மற்ற சமூகங்களுக்கு நன்மையைத் தருமா? அல்லது ஒடுக்கப்பட்டவருக்கும் சேர்த்துத்தான் சுயராச்சியம் தேடுவது என்று சொல்வோமானால் அவர்கள் தங்கள் தெய்வங்களைக் காணவும் தரிசிக்கவும் முடியாதபடியும், தெருவில் நடக்கவும், கண்ணில் தென்படவும் முடியாத படியும் வைத்திருப்பதற்குக் காரணம் சுயராஜ்யம் இல்லாமைதானா?”
எனக்கேட்டு 1926- ஜனவரி 24 குடியரசு இதழில் எழுதியதை அவருடைய கொள்கைப் பிரகடனமாகக் கருதலாம் என்கிறார் ராமகிருஷ்ணன்.* பெரியாரின் வழியில் வந்த அறிஞர் அண்ணா சொற்பொழிவுகளாலும், நாடகம், சிறுகதை, நாவல் முதலியவற்றாலும் சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்பினார். அண்ணாவின் சொற் பொழிவுகளும் வசன இலக்கியங்களும் இளைஞர்களை வேகமாகக் கவர்ந்தன.
அண்ணா தனது நாவல்களிலும் சிறு கதைகளிலும் சாதி ஒழிப்பு, பொருந்தாமணத்தின் கொடுமை, கலப்பு மணத்திற்கான ஆதர்வு ஆகிய பொருள்களையே எடுத்தாண்டுள்ளார். கபோதிபுரக் காதலில் பெற்றோரின் வறுமையினால் இளம் பெண்களைக்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G1) Dr. D-prepargar

Page 20
கிழவர்களுக்கு மூன்றாந் தாரமாக்கும் பொருந்தா மணக் கொடுமை எடுத்துக் காட்டப்படுகின்றது. குமரிக்கோட்டத்தில் கீழ் சாதிக் காரியை மணப்பதற்காக வீட்டைவிட்டே வெளியேறும் வைதிக இளைஞனைக் காட்டுகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதிய வை. மு. கோதைநாயகி அம்மாள் தனது நாவல்களில் பெண்கள் அனுபவிக்கம் துன்பங்களை விளக்கிக் கூறி குழந்தையற்ற விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதைப் பரிந்துரை செய்கின்றார்?
எஸ். வேலாயுதம்பிள்ளையின் “இராஜசுந்தரம்” (1930) என்னும் நாவல் பொருந்தா மணத்தின் கொடுமையை எடுத்துக் கூறுவதுடன் விதவைகளின் மறுமணத்தை ஆதரிப்பதாகவும் அமைகின்றது. இந்நாவலில் தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் துன்பங்களும் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.*
சீர் திருத்த இயக்கங்கள் கலப்பு மணம் பற்றிக் கொள்கை யளவில் விரிவாகப் பேசுகின்றன. ஆனால் நிஜவாழ்வில் கலப்புமணம் செய்து கொண்டவர்கள் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றனர், அவற்றை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பவற்றை ஆர். வி. யின் அணையா விளக்கு (1956) என்ற நாவல் எடுத்துக் காட்டுகின்றது.*
பார்ப்பன இளைஞனான சந்தானம் முதலியின் மகள் பாப்பாவை ஊராரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் கலப்பு மணம் செய் கின்றான். பாப்பாதானும் குழந்தையும் சந்தானத்தின் தாய் காவேரியின் வைதீக நடைமுறைகளுக்குத் தடையாக இருப்பதை உணர்ந்து துன்பப்படுகின்றாள். இதனால் கலப்பு மணத்திற்கு வெளியாரின் எதிர்ப்பு மாத்திரமன்றி உட்போராட்டமும் இருந்ததை இவர் எடுத்துக் காட்டுகின்றார். எனினும் காவேரியம்மாவின் விரிந்த மன்த்தால் கலப்பு மணம் காப்பாற்றப் படுவதாக நாவலை முடிக்கின்றார்.
விந்தனின் பாலும் பாவையும் (1951) என்ற நாவலில் பெண் ஒருத்தி ஒரு முறை குற்றம் செய்தாலும் கெட்டுப்போனவள் கெட்டுப்போனவளே எனத் தள்ளிவைக்கப்படுவதை எதிர்த்து ஆணுக்கு வழங்கப்படுவது போன்ற சமூக நீதி பெண்ணுக்கும் இருக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G 2) Dr.ம.இரகுநாதன்

புதுமைப்பித்தனின் பொன்னகரத்தில் ஏழ்மையின் முன்னே கற்பு அர்த்தமற்றதாகிவிடுவது காட்டப்படுகின்றது. ஜெயகாந்தனின் அக்கினிப் பிரவேசம் என்ற சிறுகதையில் அறியாமல் செய்த தவறுக்காக அச்சிறுமி கற்பிழந்தவளாகிவிடமாட்டாள் என்ற கருத்தே முன்வைக்கப்படுகின்றது.
நவீன தமிழ் இலக்கியங்களில் சாதியம், பெண்களின் அடக்கு முறைக்கொடுமைகள் ஆகியன விடுதலைப் போராட்டச் சூழலிலிருந்து இடம்பெற்று வந்துள்ளன. இந்திய தேசிய விடுதலை இயக்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியன தனிமனிதனின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள சமூக நடைமுறைகளை எதிர்த்து வந்ததையும் இத்தகைய எதிர்ப்புணர்வு சமூகத்தில் உருவானதும் அதனை ஆக்க இலக்கியங்கள் பிரதிபலித்ததையும் நவீன தமிழ் இலக்கிய வரலாறு எடுத்துக்காட்டுகின்றது.
இந்திய தேசிய விடுதலை இயக்கம் போல தொழிலாளர் - உழவர் சமூக விடுதலை இயக்கமும் இந்தியா எங்கும் பரவியிருந்தது. இவ்வியக்கத்தின் தாக்கம் நவீன இலக்கியங்களையும் பாதித்தது. இதனால் தமிழ் நாவல்களில் உழைக்கும் மக்கள் எடுத்துக் காட்டப் பட்டனர். வேங்கடரமணியின் முருகன் ஓர் உழவன், தேசபக்தன் கந்தன், சங்கரராமின் மண்ணாசை, சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் முதலிய பல நாவல்களில் உழைக்கும் மக்கள் இடம் பெற்றனர். ஆனால் இந் நாவல்களில் வருகின்ற உழைப்பாளிகள் நிலவுடைமை யாளர்களுக்கு உண்மையுள்ள ஊழியர்களாகவும் அல்லது முதலாளிக்கு விசுவாசமுள்ளவர்களாகவுமே சித்திரிக்கப்பட்டனர். உரிமைக்காகப் போராடும் உழைப்பாளிகளாக இவர்கள் சித்திரிக்கப்பட வில்லை.*
பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பணிபுரிகின்ற இந்தியப் பெண்களின் துன்பத்தைப் பாடிய பாரதியும் அத்துன்பத்திலிருந்து அவர்கள் எவ்வாறு விடுதலை பெறுவது எனக் கூறவில்லை.
1920 களின் பின்னர் இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்கள் பரவின. இந்திய தேசியத் தலைவர்கள் பலரும் ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சியில் கவனம் செலுத்தினர். பாரதி அப்புரட்சியை வாழ்த்திப் பாடினான். இத்தகைய சூழலில் எழுந்த நாவல்களிலும் சோசலிசம் பேசும் கதாபாத்திரங்கள் இடம் பெற்றன. அகிலனின் எங்கே போகிறோம் (1973) என்ற நாவலில் வருகின்ற கணேசன் ஒரு தொழிற் சங்க வாதியாகச் சித்திரிக்கப்படுகின்றான். ராஜம்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G1) Dr.ம.இரகுநாதன்

Page 21
கிருஷ்ணனின் வேருக்கு நீர், (1973) ரோஜா இதழ்கள் (1974) ஆகிய நாவல்களிலும் கம்யூனிச கதாபாத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. வேருக்கு நீரில் வருகின்ற சுதீர் காந்தியத்தை எதிர்ப்பவன்; பலாத்காரத்தின் மூலம் கம்யூனிசத்தை நிறுவ விரும்புவன்.
ராஜம் கிரஷ்ணனின் அலைவாய்க் கரையில் (1978) என்ற நாவலில் மீன்பிடித்தொழிலாளர்களின் போராட்டம் காட்டப்படுகின்றது. சுரண்டலுக்கு எதிராக மீன்பிடித்தொழிலாளர்கள் ஒன்றுபட்டுப் போராடுவது காட்டப்படுகின்றது.
மார்க்சியக் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட ரகுநாதனின் பஞ்சும் பசியும் (1955) என்னும் நாவலில் நெசவுத் தொழிலாளர்கள் பற்றியும், செல்வராஜின் தேனீர் (1966) என்னும் நாவலில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பற்றியும், பொன்னீலனின் கரிசல் (1967) என்னும் நாவலில் விவசாயிகள் பற்றியும் சின்னப்ப பாரதியின் தாகம் (1975) என்னும் நாவலில் உழைக்கும் மக்கள் பற்றியும் எடுத்துக் காட்டப்பட் டுள்ளது. மேற்படி நாவல்களில் உழைக்கும் மக்கள் வர்க்க அடிப்படை யில் ஒன்று சேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது காட்டப்படு கின்றது. ஆனால் 1950 களின் முன்னர் வெளிவந்த நாவல்களில் இவ்வாறான வர்க்கப்போராட்டம் முக்கியத்துவம் பெறவில்லை.
முதலாளிகளாலும் அரசினாலும் சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் தமக்குள் ஒன்று சேர்ந்து சுரண்டுபவர்களை எதிர்க்க முற்படுவதைப் பாரதிதாசன் தனது கவிதையில் அழகாகச் சித்திரித்துள்ளார்.
“செப்புதல் கேட்பீர்! இந்தச்
செகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின் கப்பல்களாக இனித்
தொழும்பர்களாக மதித்திட வேண்டாம் இப்பொழுதே நீர் பொது
இன்பம் விளைத்திட உங்களின் சொத்தை ஒப்படைப்பிரே - எங்கள்
உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே ஒப்படைப் பிரே.”
தொகுத்து நோக்கும் போது இந்தியாவில் ஏற்பட்ட சமூக மாறுதல்களால் பாரம்பரிய இலக்கிய வடிவங்கள் புறந்தள்ளப்பட்டு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G1) Dr.ம.இரகுநாதன்

நாவல், சிறுகதை, புதிய கவிதை ஆகிய நவீன இலக்கியங்கள் அறிமுகமாயின. சமுதாய மாற்றம் இலக்கியத்தின் பொருளையும் புதிதாக மாற்றியது. ஆங்கில ஆட்சிக்கு எதிரான தேச விடுதலை இயக்கம், சுயமரியாதை இயக்கம் ஆகியவற்றின் கொள்கைகளால் கவரப்பட்ட மக்களிடையே பாரம்பரியமான கருத்துக்கள் மதிப்பிழந்தன. இவை புதிய சமூகத்திற்கு சிக்கல்களாகவே தெரிந்தன. இதனால் இச் சிக்கல்களை நீக்க வேண்டும் என்ற கருத்து சமூகத்தில் வலுப்பெற்றது. இதனை அக்காலத்தில் வாழ்ந்த ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் தமது படைப்புக்களில் எடுத்துக் காட்டினர். இதனால் சாதியம், பெண்களின் ஒடுக்குமுறை, விதவைகளின் மறுமணம், வரதட்சணைக் கொடுமை முதலிய சமுதாயச் சிக்கல்கள் நவீன இலக்கியங்களில் இடம்பெற்றன.
தேசிய விடுதலை இயக்கம் போலவே தொழிலாளர் - உழவர் போராட்டமும் இந்தியா எங்கும் பரவியதால் உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் சமூக முக்கியத்துவம் பெற்றன. கம்யூனிசக் கருத்துக்கள் நாட்டில் பரவியபோது உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் வர்க்க ரீதியான சிந்தனையுடன் அணுகப்பட்டன. இதனால் வெறும் துயரங்களின் சித்திரிப்பாக இல்லாமல் கொடுமைக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராடும் வர்க்கப் போரை முதன்மைப்படுத்தும் படைப்புக்கள் வெளியாகின.
எனவே நவீன இலக்கியங்கள் சமூக நடப்பியல்பைப் பிரதிபலிக்க முற்பட்டபோது சமுதாயத்திலுள்ள பிரச்சினைகள் விரிவாக ஆராயப்பட்டன. இதனால் சமுதாயத்தில் சிக்கல்களாக இருந்தவை இலக்கியங்களில் இடம்பெற்றன. சில படைப்பாளிகள் சிக்கல்களை மட்டுமே காட்டினர்; சிலர் சிக்கல்களைக் காட்டுவதோடு நின்று விடாமல் அவற்றிற்கான தீர்வினையும் கூறினர். எவ்வாறெனினும் நவீன இலக்கியங்களில் சமுதாயச் சிக்கல்கள் இடம் பெற்று அவை சமூகச் சித்திரிப்புக்களாக மாறின. இனி ஈழத்துத் தமிழ் நாவல் களினூடாக எடுத்துக்காட்டப்படும் சமுதாயச் சிக்கல்கள் பற்றி விரிவாக நோக்கலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G15) Dr.ம.இரகுநாதன்

Page 22
இயல் ஒன்று
அடிக்குறிப்புக்கள்.
1. மதுரைத் தமிழ்ப்பேரகராதி,
2. பக்தவத்சல பாரதி, சீ,
3. எங்கல்ஸ், பீ.,
4. கலைக்களஞ்சியம்,
5. மறைமலை, சி.இ.,
6. மேலது,
7. மேலது,
8. மேலது,
9. மேலது,
10. தில்லைநாதன், சி.,
11. கைலாசபதி, க.,
12.மாதவையா, அ.,
முதல் பாகம், இரண்டாவது பதிப்பு, 1956, மதுரை, ப. 837
பண்பாட்டு மானிடவியல், 1990 சென்னை, ப. 335.
குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், மூன்றாம் பதிப்பு, மாஸ்கோ, Lu. 48.
தொகுதி 4, தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை, ப. 8.
இலக்கியமும் சமூகவியலும், 1991, சென்னை
J. 73.
Lu. 73.
u. 74.
u. 74.
இலக்கியமும் சமுதாயமும், 1987, சென்னை, ப. 17.
சமூகவியலும் இலக்கியமும், 1988, சென்னை, ப. 26
பத்மாவதி சரித்திரம், 1994 சென்னை, ப. 12.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
G10
ா.ம.இரகுநாதன்

13.
14.
15.
16.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
ராஜ் கெளதமன்,
மகாகவி பாரதியார் கவிதைகள்,
மேலது,
பாரதிதாசன் பாடல்கள்,
ராஜ் கெளதமன்,
மகாகவி பாரதியார் கவிதைகள்,
பாரதி தாசன் பாடல்கள்,
சுத்தானந்த பாரதியார்,
சுந்தரராஜன், பெ. கோ., சிவபாதசுந்தரம், சோ.,
ராமகிருஷ்ணன், என்.
வீராசாமி, தா. வே.
மேலது,
மேலது,
தோதாத்ரி, எஸ்.,
பாரதிதாசன் பாடல்கள்,
அ. மாதவையா 1872-1925 வாழ்வும் படைப்பும், 1995, சென்னை, ப. 53.
சுதந்திரப் பள்ளு, பாடல் 1, சக்தி வெளியீடு, 1957, சென்னை, ப.52.
விடுதலை, பாடல் 1, 2, ப.5.
சுயமரியாதை எக்காளம், 1993, Q36,60601, U.550.
மேலது, ப.68.
மேலது, ப.262.
மேலது, ப.102.
முன்னேற்றப் பாடல்கள், 1942, திருச்சி., ப.87.
தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும், 1977, சென்னை, ப.112.
ஈ. வெ. ரா. பெரியார் வாழ்வும் பணியும், 1997, சென்னை, ப. 77.
தமிழில் சமூக நாவல்கள், 1987, சென்னை, ப.66.
ப.71.
U. 116.
தமிழ் நாவல் சில அடிப்படைகள், 1980, சென்னை, ப.68.
மேலது ப.115.
த்துத்தமிழ்நாவல்கள்
G1)
Dr.ம.இரகுநாதன்

Page 23
இயல் இரண்டு
2. ஈழத்துத் தமிழரிடையே காணப்படுகின்ற பிரதானமான சமுதாயச் சிக்கல்கள்
2.0 அறிமுகம்.
ஈழத்துத்தமிழர்களுடைய சமூக அமைப்பில் சாதி, சமயம் ஆகியன பிரதான இடத்தை வகிக்கின்றன. நிலவுடைமைப் பொருளா தார அமைப்பின் தன்மைக்கேற்ப உற்பத்திச் சாதனங்கள் ஒரு சில சாதியினரின் தனிப்பட்ட சொத்தாகவே இருப்பதால் அவர்கள் பொருளா தார அடிப்படையில் பின்தங்கிய சில சாதிக்குழுக்களைத் 莎LD@h அடிமை- குடிமைகளாக்கித் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தினர். இச் சமூகத்தவர்களும் காலங்காலமாக அடிமை குடிமைகளாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் உலகெங்கும் ஏற்பட்ட சமூக விழிப் புணர்ச்சி இம் மக்களையும் நெருங்கியபோது அவர்கள் தாம் அடக்கப் படுவதையும் தமது உரிமைகள் மறுக்கப்படுவதையும் உணர்ந்து அதற்கெதிராகப் போராடமுற்பட்டனர். இந்நிலையில் சாதியம் சார்ந்த ஒடுக்குமுறைகள் ஒரு சமுதாயச் சிக்கலாக உருவாகியது. சாதியடிப் படையில் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் சமுதாயச் சிக்கலாக உருவெடுத்தது போலவே பொருளாதார அடிப்படையில் முதலாளிகளாலும், நிலவுடைமை யாளர்களாலும் அடக்கியொடுக்கப் பட்ட தொழிலாளர்களின் பிரச்சினைகளும் சமூக முக்கியத்துவம் பெற்றன. காலங்காலமாகத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வந்த முதலாளிவர்க்கம் இடது சாரிச் சிந்தனைகளின் வரவோடு பலத்த எதிர்ப்பைச் சந்தித்தது. இச் சிந்தனைகள் உலகெங்கும் பரவிய போது தொழிலாளர்கள் இயக்க மாக மாறித் தமது உரிமைக் காகப் போராடினர். இந்நிலையில் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைகளும் சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G 8) Dr.ம.இரகுநாதன்

அடுத்து சாதியடிப்படையில் அமைந்த சமூக அமைப்பில் சமூக அந்தஸ்து சாதியாலும், சொத்துக்களாலுமே கணிக்கப்பட்டது. இந்நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. சாதி அந்தஸ்து காரணமாக வயது வந்த பெண்களின் திருமணங்கள் தடைப்பட்டன. சாதி அந்தஸ்துடன் மாப்பிள்ளை கிடைத்தால் அவர் எதிர்பார்க்கும் சீதனத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டு திருமணம் தடைப்பட்டது. பருவ வயதில் திருமணம் செய்ய முடியாத பெண்களின் தொகை சமூகத்தில் அதிகரித்தபோது அது மேலும் பல சிக்கல்களை உருவாக்கி விடலாம் எனப் பலரும் அஞ்சினர். இதனால் பெண்கள் தொடர்பான சமூக அமைப்புக்கள் பலவும் சீதனக் கொடுமைக்கு எதிராகப் போராடின. இந்நிலையில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் ஒரு சமுதாயச் சிக்கலாக உணரப்பட்டன.
இத்தகைய சிக்கல்களை எமது சமூகம் எதிர்கொண்டபோது சமூகத்திலிருந்தே உருவான இலக்கியப் படைப்பாளிகளும் தத்தமக்கேற்ற விதத்தில் அவற்றைத் தமது படைப்புக்களில் எடுத்துக்காட்டினர்.
2.1 ஈழத்துத் தமிழர்களும் சாதியமும்
தமிழர் சமூக அமைப்பிலே காணப்படுகின்ற பிரதானமான சமூகச் சிக்கல்களில் ஒன்று தீண்டாமை ஆகும். இதற்கு அடிப்படை யாக அமைவது சாதியமைப்பு ஆகும். இதனையே இங்கு சாதியம் என்று சுட்டப்படுகின்றது. ஈழத்துத்தமிழர்களிடையேயுள்ள சாதியமைப் பின் தன்மைகளை அறிந்து கொள்வதற்கு அவர்களின் சமூக அமைப்பினை அறிந்து கொள்வது அவசியமாகும்.
ஈழத்திலுள்ள தமிழ் பேசும் மக்கள் மூன்று வகையினர்.
1. ஈழத்துத்தமிழர்கள். 2. மலையகத் தமிழர்கள்.
3. தமிழ் பேசும் முஸ்லீம்கள்.
இம் மூவருள்ளும் தீண்டாமை ஒரு பிரதான சமூகச் சிக்கலாக நிலவுவது ஈழத்துத் தமிழர்கள் மத்தியிலேயே.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ΟιΟ Dr.ம.இரகுநாதன்

Page 24
மலையகத் தமிழர்கள் எனப்படுவோர் மேற்கு நாட்டவரின் ஆட்சிக் காலத்தில் பெருந் தோட்டங்களில் கூலிவேலை செய்வதற்காக இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட கூலித்தொழிலாளர்களின் பரம்பரையினர் ஆவர். சாதி ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த இந்திய சமுதாயத்திலிருந்து குறிப்பாகத் தமிழகத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் இவர்கள் மத்தியிலும் சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் போய்விட முடியாது. எனினும் ஒரே லயங்களில் வாழ வேண்டிய நிலை; மீள முடியாத பஞ்ச நிலை; எல்லோருமே கள்ளித்தோணிகள் என ஒதுக்கப்பட்ட பரிதாப நிலை ஆகியவற்றினால் தமக்குள்ளே சாதி உணர்வுகளைப் பேண முடியாத நிலைக்கு இவர்கள் தள்ளப் பட்டிருந்தார்கள். இதனால் தீண்டாமை என்பது இவர்களிடையே ஒரு சமுதாயச் சிக்கலாக உருவெடுக்கவில்லை.
அடுத்து தமிழ் பேசும் முஸ்லீம்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மதம் சாதி வேறுபாடுகளுக்கு இடங்கொடுக்கவில்லை. இதனால் முஸ்லீம்களின் சமூக வாழ்வில் சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லை. எனினும் சாதி வேற்றுமைகள் ஆழமாக வேரூன்றியுள்ள இந்து சமூகத்தவரின் மத்தியில் வாழ்வதால் இந்துக்களின் சாதிபற்றிய கொள்கைகளின் தாக்கம் முஸ்லீம்களிடமும் பிரதிபலிக்கின்றது. இதனால் தமிழர்களால் தீண்டத்தகாதவர்களென ஒதுக்கப்பட்டவர்களை முஸ்லீம்களும் தீண்டாதாராகவே கருதுகின்றனர். எனவே முஸ்லீம்கள் தமக்கிடையேயும் உயர்சாதியினர் எனக் கூறப்படும் தமிழர்கள் மத்தியிலும் சமத்துவமாக நடந்து கொண்டாலும் தமிழ் மக்களிடையேயுள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் எனக் கூறப்படுவோரிடம் தீண்டாமையைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். எனவே தீண்டத் தகாதவர்க ளென ஒதுக்கப்பட்டவர்கள் தமிழர்களில் ஒரு பகுதியினரே.
ஈழத்துத் தமிழர்களிடையேயுள்ள சாதி ஏற்றத் தாழ்வுகளை நோக்கும்போது இவர்கள் இருவகையான சமூகக் குழுக்களாகப் பிரிந்து நிற்பது தெரிய வருகின்றது.
இவர்களை
1. மட்டக்களப்புச் சமூகம். 2. யாழ்ப்பாணச் சமூகம்
என இரு முக்கியமான சமூகக் குழுக்களாக இனங்காணலாம்?
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G0) Dr.ம.இரகுநாதன்

மட்டக்களப்புச் சமூகம் என இனங்காணப்படுகின்ற கிழக்கு மாகாணத் தமிழர்களிடம் சாதியமைப்பு நிலவிய போதும் அதன் இறுக்கம் அதிகளவில் இல்லை. கிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண இராச்சியம் போன்று தனியரசு இல்லாததும் பிராமணிய ஆதிக்கத் திற்கு உட்பட்ட ஆலய வழிபாட்டு மரபுகளை விட பல்வேறு சாதியினரும் பூசகர்களாக இருக்கின்ற சிறு தெய்வ வழிபாட்டு மரபுகளே பெரு வழக்காக இருப்பதாலும் அடிநிலை மக்கள் விவசாயம் செய்து வாழக்கூடிய அளவுக்கு விவசாய நிலங்களைப் பெற்றிருப்பதாலும் சாதியமைப்பின் தாக்கம் அங்கு யாழ்ப்பாணச் சமூகத்தைப் போல இறுக்கமாக இல்லை.
மேலும் மட்டக்களப்புச் சமூக அமைப்பில் நில ஆதிக்கம் பெற்றவர்களாகவும் சமூக மேலாண்மையுடையவர்களாகவும் முக்குவர் எனப்படும் சமூகப்பிரிவினரே விளங்குகின்றனர். இவர்களின் சமூக மேலாண்மை ஐரோப்பியரின் ஆட்சிக் காலத்தில் அங்கீகரிக்கப்ட்டு முக்குவச் சட்டத்தின் வாயிலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக் களப்பில் முக்குவருக்குரிய உயர் அந்தஸ்து காரணமாக அவர்கள் தம்மை யாழ்ப்பாண முக்குவரிலிருந்து வேறுபடுத்தியே பார்க்கின்றனர்."
யாழ்ப்பாணத்துச் சமூகத்தவரிடையே சாதியமைப்பின் இறுக்கம் மிகக்கடுமையான அளவில் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. சமூக அதிகார நிலையினை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாணத்துச் சமூகத்திலுள்ள சாதிக் குழுக்களை மூன்று வகையாக வகுப்பர்.
1. உயர் சாதியினர். 2. உயர் சாதியல்லாதோர். 3. குடிமக்கள்
உயர் சாதியினர் என்ற பிரிவினுள் பிராமணர், வெள்ளாளர் ஆகியோர் அடங்குவர். எனினும் யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் பிராமணர்கள் அதிகார மேன்மையுடையவர்களாக இல்லை. தமிழ் நாட்டின் சமூக அமைப்புக்கும் யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்புக்கு முள்ள முக்கிய வேறுபாடு இதுவாகும். தமிழ் நாட்டைப் போன்று யாழ்ப்பாணத்தில் பிராமணர்கள் நிலச் சொந்தக்காரர்களாக விளங்க வில்லை. இவர்கள் இங்கு பெரும்பாலும் புரோகிதத் தொழிலையே புரிந்து வருகின்றனர். எனவே யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் அதிகார மேன்மையுடையவர்களாக விளங்குபவர்கள் வெள்ளாளரே.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Ga) Dr.ம.இரகுநாதன்

Page 25
குடிமக்கள் என்ற பிரிவினுள் கோவியர், நளவர், பள்ளர், சாண்டார், சிவியார், பறையர், அம்பட்டர், துரும்பர் முதலியோர் அடங்குவர். இக் குடிமக்கள் வெள்ளாளரின் விவசாய வாழ்க்கையிலும் சமூக வாழ்க்கையிலும் அவர்களுக்கு ஊழியம் செய்யும் அடிநிலை மக்களாகவே நடத்தப்பட்டு வந்தனர். இக் குடிமக்களில் ஒரு பிரிவினரான கோவியரின் சமூக நிலை சற்று வித்தியாசமானதாகும். இவர்கள் உயர்சாதியினரின் வீட்டினுள் சென்று அவர்களைத் தொட்டுச் சேவகம் புரியும் சிறைக் குடிகளாவர். இவர்களை விட எஞ்சியோருள் நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், துரும்பர் என்னும் ஐந்து சாதியினரும் பஞ்சமர் என்னும் பெயரில் வீட்டுக்குப் புறம்பாக வைக்கப்படுகின்றனர். பங்சமர்களுக்கு சமூகத்தில் ஏனையவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளில் பல மறுக்கப்பட்டிருந்தன அவற்றுள். முக்கியமான சிலவற்றை இப்படியல் காட்டுகின்றது.
ஆண்கள் மேலங்கி அணியக் கூடாது. கணுக்கால் வரைக்கும் வேட்டி கட்டக் கூடாது. தோளில் சால்வை போடக் கூடாது. பெண்கள் மேற்சட்டை போடக்கூடாது. தாவணி போடக் கூடாது. சாலைகளிலும் பொது இடங்களிலும் கண்டபடி நடமாடக் கூடாது. அனுமதிக்கப்பட்ட பாதைகளில் நடமாடும் போது தமது வருகையை உணர்த்தும் வகையில் காவோலையை இழுத்துச் செல்லுதல் வேண்டும். 7. நகை அணியக் கூடாது. 8. திருமணத்தில் தாலி கட்டக் கூடாது. 9. உயர் சடங்குகளின் போது வெள்ளை கட்டக் கூடாது. 10. விசேட சடங்குகளின் போது வெள்ளை கட்டக் கூடாது. 11. பிரேதங்களைத் தகனம் செய்யாது புதைக்க வேண்டும். 12. உயர் சாதியினரின் சுடலையினைப் பயன்படுத்தக் கூடாது. 13. நன்மை தீமைகளின் போது வாத்தியங்கள் பயன்படுத்தக்
கூடாது. 14. உயர் சாதியினரின் குளங்களைப் பயன்படுத்தக் கூடாது. 15. குடை பிடிக்கக் கூடாது. 16. பாதணிகள் அணியக் கூடாது. 17. கல்வி கற்க முடியாது. 18. உயர் சாதியினரின் தெய்வங்களைத் தமது கோயில்களில்
பிரதிஷ்டை செய்யக் கூடாது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (22) Dr. D-6 rebryar

19. உயர் சாதியினரின் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 20. தேனீர்ச் சாலைகளுக்குள் போகக் கூடாது. 21. பொதுக் கிணறுகளில் தண்ணிர் அள்ளக் கூடாது. 22. சயிக்கிள், கார் போன்ற வாகனங்களில் பிரயாணம் செய்யக்
கூடாது. அவற்றைச் செலுத்தவும் கூடாது. 23. பஸ் வண்டிகளில் ஆசனங்களில் உட்காரக் கூடாது. 24. பிற்காலத்தில் பாடசாலை அனுமதி கிடைத்த போதும்
ஆசனங்களில் உட்காரக் கூடாது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வெளியே வன்னிப் பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழர்களிடையே சாதி ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் யாழ்ப்பாணச் சமூகத்தில் உள்ளது போன்ற தீண்டாமைக் கொடுமை கள் பெருமளவுக்கு இல்லையென்றே கூறலாம். சாதிக்குள் சாதி வேறுபாடுகளால் வெள்ளாளர்கள் ஒருமித்து நிற்க முடியாத நிலையும் வெள்ளாளர்களைவிடப் பொருளாதார அடிப்படையில் பலம் மிக்கவர் களாகக் கரையார் விளங்கி வருவதும் இப் பிரதேசத்தில் வெள்ளாள மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்ளத் தடைகளாக அமைந்தன. இவ்விரு சமூகக் குழுக்களினதும் போட்டிநிலை இவர்கள் ஏனைய சிறு குழுக்களை அடக்கியாள்வதற்குத் தடையாக அமைந்தது. எனினும் கிராமங்களினுள் ஆங்காங்கே சாதி தொடர்பான தீண்டாமை பல்வேறு மட்டங்களில் நிலவிவந்திருக்கின்றது. இன்றும் நிலவி வருகின்றது. என்பதையும் கட்டிக் காட்டுவது அவசியமாகும். ஆனால் அவை சமுதாயச் சிக்கல் என்ற வகையில் போராட்ட ரீதியான எழுச்சிகளுக்கு வழிவகுத்ததாக வரலாறு இல்லை. தாழ்த்தப்பட்ட வர்கள் சிறுசிறு குழுக்களாகவே கிராமங்களில் காணப்படுவதும் அவர்களுக்கிடையில் திட்டப்பாங்கான ஒருங்கிணைப்பு இல்லாததும் இத்தகைய எழுச்சி உருவாகத் தவறியமைக்குக் காரணங்களாகலாம்.
எனவே தீண்டாமை என்பது ஒரு சமூதாயச் சிக்கல் என்ற வடிவத்தில் உணர்வெழுச்சிகளுக்கும் அவற்றினடிப்படையிலான போராட்டங்களுக்கும் வழிவகுத்து நின்ற சூழலை யாழ்ப்பாணக் குடநாட்டுச் சமூக அமைப்பிலேயே எம்மால் தரிசிக்க முடிகின்றது.
சாதியடிப்படையில் மக்கட் சமூகத்தின் ஒரு பகுதியினரை தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைத்திருந்த போதும் ஒதுக்கப்பட்ட வர்களிடமிருந்து அதற்கான எதிர்ப்புணர்வு இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதிவரை உரியவாறு உருப்பெறவில்லை. பொருளாதார
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (23) Dr. LD-a USSrpsår

Page 26
அடிப்படையில் அவர்கள் பலமில்லாதவர்கள் என்பதாலும் சமய அடிப்படையில் காலங்காலமாகக் கட்டியெழுப்பப்பட்ட மரபுரீதியான சிந்தனைகளால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள் என்பதாலும் போதிய கல்வியறிவைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் என்பதாலும் அவர்கள் தீண்டாமையை எதிர்க்க முற்படவில்லை எனலாம். அதனால் தீண்டாமை ஒரு சமுதாயச் சிக்கலாக உருவெடுக்க அக்காலப் பகுதியில் வாய்ப்பிருக்கவில்லை.
இந்தியாவில் 1920 களின் தொடக்கத்தில் உருவான காந்திய அலை இந்தியத் துணைக்கண்டமெங்கும் வேகமாகப் பரவியது. இந்திய சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடாத்திய காந்தி அன்றைய இந்திய சனத்தொகையில் ஏறத்தாழ நான்கு கோடியின ராக இருந்த தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைத்துவிட்டு சுதந்திரப் போரில் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்தார். இதனால் தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தைத் தீவிரமாக நடாத்தினார். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்களும் தேசிய இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டனர். தீண்டாமைக்கு எதிரான காந்தியின் போராட்டம் தமிழகத்திலும் வேகமாகப் பரவியது. பெரியார் ஈ.வெ. ராமசாமியால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் தனிமனித முன்னேற்றத் திற்குத் தடையாகவுள்ள சமூகக் கொடுமைகள் அனைத்தையும் போக்குவதையே தனது கடமையாகக் கொண்டு செயற்பட்டது. பெரியாரின் கருத்துக்களும் அறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளும் தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின.
இவ்வாறாக இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் ஏற்பட்ட தீண்டாமைக்கு எதிரான சமூக உணர்வு தமிழகத்தோடு மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த ஈழத்தையும் பாதித்தது. ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் 1915 - 18 ஆம் ஆண்டுக் கிடைப்பட்ட காலப்பகுதியில் சுன்னாகத்தைச் சேர்ந்த வி. எம். கந்தையா என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான ஆதிதிராவிடன் என்ற மாத இதழுடன் இச் சாதி எதிர்ப்பு இயக்கம் மெதுமெதுவாக ஆரம்பிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து 1920 - 25 ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் சூ. எ. சின்னப்பு என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான மேல் நோக்கம், ஈழகேசரி பொன்னையாவால் நெறிப்படுத்தப்பட்ட முன்னேற்றம், ஜோவேல் போல் அவர்களால் வெளியிடப்பட்ட ஜனதர்மபோதினி முதலிய பத்திரிகைகள் சாதிக் கொடுமைகளின் தன்மையை வெளிப்படுத்தின."
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G 4) Dr.ம.இரகுநாதன்

2.1.1 தீண்டாமைக்கு எதிரான சமூக இயக்க
நிலை
தீண்டாமைக்கு எதிரான சமூக உணர்வினைத் தோற்றுவித்ததில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் பணியும் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணக் கல்லூரியில் யாழ்ப்பாண மாணவர் காங்கிரஸ் என்ற பெயருடன் 1920 களின் ஆரம்பத்தில் கருக்கொண்ட இச்சிந்தனை வளர்ச்சிபெற்று 1924 டிசெம்பர் மாதத்தில் ஒரு அமைப்பாக முழுவடிவம் பெற்று தனது முதலாவது ஆண்டு மாநாட்டை யாழ்ப்பாணத்தில் ரிட்ஜ்வே மண்டபத்தில் நடாத்தியது. இதன் பின்னர் அவ்வமைப்பு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என அழைக்கப்பட்டது. இவ்வமைப் பினை முன்னின்று செயற்படுத்தியவர் திரு. என். ஹன்டி பேரின்பநாயகம் ஆவார்.
யாழ்ப்பாணத்தவர்கள் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தனர். இன, மத, மொழி ஒருமைப்பாடு, இந்தியா குறிப்பாகத் தமிழகம் தமது தாய்நாடு என்ற உணர்வு ஆகியவற்றால் இவர்களுக்கும் இந்தியாவுக்குமிடையேயான உறவு மிகவும் நெருக்கமானதாக அமைந்திருந்தது. 1920 களின் பின்னர் இந்தியாவில் ஏற்பட்ட காந்திய எழுச்சியினையும் அதன் செயற்பாடு களையும் இவர்கள் நன்கு அறிந்து கொண்டனர். இந்திய தேசிய விடுதலை இயக்கத்தின் பால் அவர்கள் பெரிதும் கவரப்பட்டனர். இதற்குச் சான்றாக இன்றும் யாழ்ப்பாணத் தமிழர்கள் பலரின் வீடுகளில் காந்தி, நேரு, இந்திராகாந்தி, சுபாஸ் சந்திரபோஸ் முதலிய இந்திய தேசியத் தலைவர்களின் உருவப்படங்கள் காணப்படுவதை எடுத்துக் காட்டலாம். காந்திய இயக்கம் அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் இயக்கமாக மட்டும் செயற்படவில்லை. சமூகத்தில் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கப்பட்ட மக்களின் சமத்துவ உரிமை களுக்காகப் போராடும் இயக்கமாகவும் செயற்பட்டது.
தீண்டாமைக்கு எதிரான காந்திய இயக்கத்தின் செயற்பாடு களால் யாழ்ப்பாண இளைஞர்களும் கவரப்பட்டனர். 1924 டிசெம்பர் 29, 30, 31 ஆம் திகதிகளில் நடைபெற்ற யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் முதலாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பத்துத் தீர்மானங்களில் மூன்றாவது தீர்மானமாக அமைந்தது தமிழர்கள் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் தீண்டாமைக்கு எதிரான
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gs) Dr.ம.இரகுநாதன்

Page 27
கண்டனக் குரலாகும். தீண்டாமையை ஒழிப்பதற்கு காங்கிரஸ் ஆக்க பூர்வமான நடவடிக்கைகளைச் செயற்படுத்த வேண்டும் என அத்தீர் மானம் வலியுறுத்தியது.”
வருடா வருடம் நடாத்தப்பட்ட மாநாடுகளிலும் தீண்டாமைக்கு எதிரான கருத்துக்களும் தீர்மானங்களும் பிரதான இடத்தைக் கொண்டிருந்தன. மேலும் இம்மாநாடுகளில் இந்தியத் தேசியத் தலைவர்களை உரையாற்ற அழைத்து அதன் மூலமாக ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த வகையில் 1927 இல் மகாத்மாகாந்தி யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டார். இவரைத் தொடர்ந்து நேரு, நேதாஜி, சத்தியமூர்த்தி, திரு.வி.கல்யாணசுந்தரனார் முதலியோரும் யாழ்ப்பாணத் திற்கு அழைத்துவரப்பட்டனர். இளைஞர் காங்கிரசின் இத்தகைய நடவடிக்கைகளால் தீண்டாமைக்கு எதிரான சமூக உணர்வு உத்வேகம் பெற்றது.
இவ்வாறாக தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்தும் உயர்ந்த சாதியினர் எனப்படுகின்ற மக்கள் மத்தியிலிருந்தும் தீண்டாமைக்கு எதிரான கருத்துக்கள் உருவான சூழலில் ஒடுக்கப்படும் தமிழ் ஊழியர் சங்கம் என்ற அமைப்பு உருவாகியது. 16.07.1927 இல் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்நோக்கிய தீண்டாமைப் பாகுபாட்டை எதிர்ப்பதிலும் அவர்களின் சமூக முன்னேற்றத்திற்காக உழைப்பதிலும் அக்கறை காட்டியது. இவ்வமைப் பின் தலைவராக உயர் சமூகத்தைச் சேர்ந்த திரு.நெவின்ஸ் செல்லத்துரை என்பவரும் இணைச் செயலாளர்களாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த திரு.யோவேல் போல் திரு.டி.ஜேம்ஸ் ஆகியோரும் இருந்தனர்."
ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கத்தின் செயற்பாடுகளின் முதற்படியாக 1928இல் சம ஆசனம், சமபோசனம் இயக்கம் உடுவில் பெண்கள் பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் செயற்பாடு களுக்கு யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் அணியினரும் ஆதரவு வழங்கினர்."
தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கைகள் ஒரு புறத்தில் தீவிரமாக்கப்பட்டபோது மறுபுறத்தில் உயர் சாதியினரிடமிருந்து அதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. 1928 இல் சேர். பொன். இராமநாதன்
ஈழந்துத்தமிழ்நாவல்கள் G0) Dr. D.6Legistry air

எழுபத்தொன்பது கிராமச் சங்கப் பிரதிநிதிகளுடன் சென்று அன்றைய வெள்ளைக்காரத் தேசாதிபதியைப் பேட்டி கண்டு சாதியமைப்பு முறையிலான பாடசாலை நடைமுறைகளை வலியுறுத்தியதோடு. தேச வழமைப்படி தமிழர்களின் பாரம்பரியம் காப்பாற்றப்படுவது அவசியம் எனவும் வாதிட்டார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதையும் இவர் எதிர்த்தார்.'
இவ்வாறே 4.11.1929 இல் 131 சைவப் பெரியார்கள் யாழ்ப்பாணம் றோயல் தியேட்டரில் இந்து மகா சபையின் தலைமையில் ஒன்று கூடி கோப்பாய் அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையை உயர் சாதியினரின் தனி ஸ்தாபனமாக்குமாறு தேசாதிபதிக்கு மனுச் செய்தனர்.
உயர் சாதியினரின் எதிர்ப்புக்கும் மத்தியில் 1930 இல் டொனமூர் ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சம ஆசனம், சமபோசனம் என்பன சட்டமாக்கப்பட்டன. 1931 இல் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமையும் வழங்கப்பட்டது.
இத்தகைய சூழ்நிலைகளால் 1930 களின் ஆரம்பத்திலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் அடக்கு முறைக்கு எதிரான செயற்பாடுகளை அவர்கள் ஆரம்பித்தனர். இந்த வகையில் 31.8.1931 இல் சங்கானையிலுள்ள உயர்சாதியினரின் மயானத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் ஒருவரின் பிணத்தை எரிக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. இம்முயற்சியின் போது இரு பகுதியினருக்கு மிடையே ஏற்பட்ட கலவரத்தைப் பொலிசார் தலையிட்டு நிறுத்திய துடன் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனியான இடமும் ஒதுக்கப்பட்டது. எனினும் இத்தகைய போராட்டங்கள் நிறுவன மயமாக்கப்பட்ட போராட்டமாக இல்லாமல் உணர்ச்சி வசப்பட்ட குழுக்களின் மன எழுச்சிச் செயற்பாடுகளாகவே அமைந்தன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G) Dr.ம.இரகுநாதன்

Page 28
2.1.2. இடதுசாரி இயக்கச் சிந்தனையின் வருகையும் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டமும்
1930களின் நடுப்பகுதியில் வடபகுதிக்கு இடதுசாரி இயக்கச் சிந்தனைகள் படிப்படியாக வர ஆரம்பித்தன. இச்சிந்தனைகளால் கவரப்பட்ட தொழிலாளர்கள் மத்தியிலும் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியிலும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்று திரண்டு போராட வேண்டும். என்ற உணர்வு தோற்றம் பெற்றது. வடபகுதிக்கு அறிமுக மான முதலாவது இடதுசாரிக் கட்சியாக லங்கா சமசமாஜக் கட்சியி னையே குறிப்பிடலாம். 1937இல் திரு.சி.தர்மகுலசிங்கம் லங்கா சமசமாஜக் கட்சியின் வடபகுதித் தலைவராக இருந்து செயற்பட்டு வந்தார். இக் காலகட்டத்தில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசின் கூட்டங்களில் இடதுசாரித் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இடதுசாரிச் சிந்தனைகளால் தொழிலாளர் இயக்க ஆரம்ப நடவடிக் கைகள் தோற்றம் பெற்றன. இக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் மத்தியில் சன்மார்க்க ஐக்கிய வாலிபர் சங்கம் (1941), நல்லுரிமை ஊழியர் சங்கம், சமூக ஒற்றுமை வாலிபர் சங்கம், ஹரிசன வாலிபர் சங்கம், தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், வடமராட்சி சமூக சேவா சங்கம், ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம் அளவெட்டி சமூகசீர்திருத்த மகாசபை, தெல்லிப்பழை வாலிபர் ஐக்கிய சங்கம் முதலிய பல சங்கங்கள் இருந்ததை அறிய முடிகின்றது.*
1940களின் தொடக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே இருந்த பல்வேறு அமைப்புக்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. இம் முயற்சிகளின் விளைவாக வட இலங்கை சிறுபான் மைத் தமிழர் மகாசபை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இவ் வமைப்பின் முதலாவது மாநாடு 24.4.1943 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன் முதலாவது தலைவராக திரு.யோவேல் போல் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இவ்வமைப்பு பின்னர் அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபை எனப் பெயர் மாற்றப்பட்டது.
1945 இல் வடபகுதிக்கு கம்யூனிஸ்ட் கட்சியும் அறிமுகப்படுத்தப் பட்டது. சமசமாஜக்கட்சியின் வருகையுடன் இடது சாரிக் கருத்துக்கள் பரவியிருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் வருகையுடனேயே மார்க்சியக்
குற்றுத்தமிழ்நாவல்கள் (28) Dr.ம.இரகுநாதன்

கருத்துக்கள் அடக்கியொடுக்கப்பட்டி மக்களின் வாழ்வில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தின. இடது சாரிக் கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவோடு உள்ளூராட்சித் தேர்தல்களிலும் போட்டியிட்டன.
தேர்தலில் சங்கானையைச் சேர்ந்த பொன்னர் என்பவரும் பளையைச் சேர்ந்த செல்லையா என்பவரும் கிராமச்சங்க உறுப்பினர் களாகத் தெரிவு செய்யப்பட்டனர். உயர் சாதியினரால் இவர்களின் வெற்றியைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் முதன் முதலாகக் கிராமச் சங்கக் கூட்டத்திற்குச் சென்ற பொன்னரை கைத்தறிநெசவுக் கிடங்குபோலக் கிடங்கமைத்து அதிலே கால்களை செருகிக் கொண்டு உட்காரும்படியும், செல்லையாவை தென்னை மரக் குற்றியிலே உட்காரும்படியும் உயர்சாதி உறுப்பினர்கள் கூறினர். எனவே சர்வசன வாக்குரிமை பெற்று சட்டப்படி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதியாக வந்தாலும் உயர்சாதியினர் பங்குபற்றும் நிகழ்ச்சிகளில் இவர்களுக்குச் சம ஆசனம் வழங்கப் படவில்லை.
இலங்கையில் 1956 இல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் முதன் முறையாக ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் அரங்கில் தோற்கடிக்கப்பட்டது. திரு.எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி பதவிக்கு வந்தது. தமிழர் வாழும் பகுதிகளில் தந்தை எஸ்ஜே.வி.செல்வநாயகத்தின் தலைமையிலான தமிழரசுக்கட்சி திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியை விட அதிக எண்ணிக்கையான தொகுதிகளில் வெற்றி பெற்றது.
பண்டார நாயக்காவின் ஆட்சி இடது சாரி இயக்கச் சிந்தனை களுக்குச் சார்பானதாக அமைந்திருந்தது. இது வட பகுதியில் மேலும் முன்னெடுப்பதற்கு வாய்ப்பானதொரு அரசியல் சூழலை வழங்கியது. இச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சார்பான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த தமிழரசுக்கட்சியினால் 13.4.1957 இல் கொண்டுவரப்பட்ட சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் பூரண ஆதரவோடு நிறைவேறியது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமாகும்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G9) Dr.ம.இரகுநாதன்

Page 29
2.1.3. எழுச்சிகளும் போராட்டங்களும்
பாராளுமன்றத்தில் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து வடபகுதியில் தீண்டாமைக்கு எதிரான நடவடிக்கைகள் முனைப்புப் பெற்றன. இந்தவகையில் தேனீர்க் கடைப் பிரவேசம், ஆலயப்பிரவேசம் முதலிய நடவடிக்கைகள் குறிப் பிடத்தக்கன. 20.10.1958 இல் சிறுபான்மைத் தமிழர் மகாசபையினர் தேனீர்க்கடைகளைச் சமத்துவமாகத் திறந்துவிடும்படி வேண்டுகோள் விடுத்தனர். இவர்களின் நடவடிக்கைகளை தமிழரசுக்க்ட்சி, இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி ஆகியனவும் ஆதரித்தன. இவற்றின் விளைவாகப் பல தேனீர்க்கடைகள் திறந்து விடப்பட்டன. முதன் முதலாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியிலுள்ள மலையாள வம்சத்தவரான கோவிந்தபிள்ளை என்பவரே தனது தேனிர்க்கடையைச் சமத்துவமாகத் திறந்துவிட முன்வந்தார். இவரைத் தொடர்ந்து யாழ்ப்பாண நகரப் பகுதியிலுள்ள பலரும் தமது கடைகளைத் திறந்துவிட முன்வந்தனர்.
1960 களின் ஆரம்பத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைப் பெளத்த மதத்திற்கு மதமாற்றம் செய்வதன் மூலமாக அவர்களின் அடிமை நிலை வாழ்வுக்கு முடிவு காணலாம் என்ற கருத்தும் நிலவியது. 1962இன் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் கரவெட்டிப் பகுதியில் பெளத்த சங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. திரு.வைரமுத்து என்பவரின் தலைமையில் இயங்கிய இச் சங்கத்தின் முயற்சியால் பல பெளத்த மதப்பாடசாலைகளும் நிறுவப்பட்டன. இந்த வகையில் கரவெட்டி றி நாரதபாடசாலை, புத்தூர் பன்யாசீக வித்தியாலம், அல்வாய் சேமகே வித்தியாலயம், அச்சுவேலி ரீ விபசி வித்தியாலயம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. பெளத்த மதத்திற்கு மதம் மாறிய தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களில் நூறு பேர் உயர்கல்வி கற்பதற்காகத் தென்னி லங்கைக்கு அனுப்பப்பட்டனர். தென்னிலங்கையிலுள்ள சூழ்நிலைகள் இவர்கள் எதிர்பார்த்த அளவிற்குச் சாதகமாக அமைய வில்லை. இதனால் தமது கல்வியைத் தொடராமல் விரைவிலேயே இவர்கள் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பினர். இதனால் பெளத்த மதத்திற்கு மதம் மாறுவதால் சமத்துவம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப்போனது.
இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய டாக்டர். அம்பேத்காரும் பெளத்த மதத்திற்கு மதம் மாறினால் சமூக விடுதலையைப் பெற்றுக் கொள்ளலாம் என
 

இலங்கையில் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறியவர்களும் ஏமாற்றத்தையே அடைய வேண்டியிருந்தது. யாழ்ப்பாணச் சமூகத்தில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஐரோப்பியரின் ஆட்சிச் சூழலில் கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கியபோது குறிப்பாக அமெரிக்க மிஷனரியினரின் செயற்பாடுகளின்போது யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள தாழ்த்தப்பட்டோரில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவமதத்தில் சேர்ந்து கொள்வதன் மூலம் பாரம்பரியமாக இந்து சமய ரீதியாக தங்கள் மீது சுமத்தப்பட்டிருந்த தீண்டாமை சார்ந்த கொடுமைகளிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முற்பட்டனர். எனினும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இம் மக்களுக்குத் தேவாலயங்களில் சம உரிமை வழங்கப்படவில்லை. அங்கும் இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனவே மதமாற்றம் என்பது தீண்டாமை என்னும் சமுதாயச் சிக்கலுக்குரிய தீர்வாக அமையமுடியாது என்பது புலனாகிறது. சாதி ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை முதலியவை சமூக அமைப்போடு தொடர்பானவை. இவற்றை சாதியடிப்படையிலான தனி அமைப்புக்களா லோ, தனி நபர்களாலோ தீர்த்து வைக்க முடியாது. இவை சமுதாய மாற்றமொன்றின் மூலமாகவே தீர்த்து வைக்கப்பட வேண்டியவை. இக்கருத்தை 1960 களின் பிற்பட்ட கால வரலாறு உணர்த்தியது.
1960 களில் உலக நாடுகள் பலவற்றிலும் இனவெறி, நிறவெறி ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டங்கள், தொழிலாளர் போராட்டங்கள் என்பன வேகம் பெற்றன. வட இலங்கையிலும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையினரான தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களை வேகமாக்கினர்.
தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை முன் னெடுக்கும் பணியில் வட இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் சீனச்சார்பு அணியினர் முனைப்புடன் செயற்பட்டனர். இவர்களின் ஏற்பாட்டில் 1966 ஒக்ரோபர் 21 இல் சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான எழுச்சி ஊர்வலமொன்று நடாத்தப்பட்டது. ஊர்வலத்தில் “சாதியமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற சுலோகம் ஒலிக்கப்பட்டது." இவ்வூர்வலத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மட்டு மன்றி பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான போரில் சாதி வேறுபாடின்றிப்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் GD Dr.ம.இரகுநாதன்

Page 30
பல்வேறு சமூகத்தவர்களும் கலந்து கொண்டது சாதிப்பிரச்சினை அடிப்படையில் வர்க்கப்பிரச்சினையாகும் என்று அவர்கள் கருதிய மையை உணர்த்தியது எனலாம். இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் இரு பிரிவினரும் தமது கருத்து வேறுபாடுகளை நீக்கிச் சரியான வெகுஜனப் போராட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றனர். சாதிப்பிரச்சினையை ஒரு வர்க்கப் பிரச்சினையாக ஏற்றுக் கொண்ட திரு.கே.ஏ.சுப்பிரமணியம் கூறிய கருத்தினை கம்யூனிஸ்ட் கட்சியினர் பலரும் ஏற்றுக்கொண்டனர்.
அவரின் கருத்து,
“இலங்கையின் சமூக அமைப்பில் சாதி அடக்குமுறை பிரதான முரண்பாடு என்ற இடத்தை வகிக்கவில்லை. தமிழர் சமுதாய அமைப் பைப் பொறுத்த வரையில் நிலப்பிரபுத்துவ உறவுமுறைகளுடன் இணைந்த ஒன்றாகவே சாதியமைப்பு நிலவுகின்றது. இதில் சாதிமான் களும் அதை உறுதிப்படுத்தி முன்னெடுக்க முயலும் சாதி வெறியர்களுமே தாழ்த்தப்பட்ட மக்களின் விரோதிகளாக இருக்க முடியுமே தவிர சகல உயர் சாதியினரும் விரோதிகள் அல்லர். உயர் சாதியினர் எல்லோரும் எதிர்க்கப்பட்டால் அல்லது தீவிர பலாத்காரத் திற்கு உட்படுத்தப்பட்டால் தாழ்த்தப்பட்ட மக்களின் நியாயமான போராட்டம் தனிமைப்பட்டு குறுகி இறுதியில் படுதோல்வியடைவதுடன் அம்மக்கள் அதிக சேதங்களையுமே தேடிக் கொள்ளமுடியும். எனவே சாதித் திமிர் கொண்ட சொத்துடையவர்களையும் அவர்களின் கையாட்களாகச் செயற்பட்டு வரும் சாதி வெறியர்களையும் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தமது எதிரிகளாகக் கொள்ளவேண்டும். அதேவேளை தாழ்த்தப்பட்ட மக்கள் தமது போராட்டங்களுடன் முற்போக்கு நல்லெண்ணங்கொண்ட வர்க்கரீதியில் ஐக்கியப்படக் கூடிய சகல உயர் சமூக மக்களோடும் தமது ஐக்கியத்தை வலுப் படுத்திக் கொள்ள வேண்டும்"
என்பதாகும்.
1960 ஒக்ரோபர் 21 இல் ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து வடபகுதியில் கிராமங்களிலும் நகரங்களிலும் பல்வேறு கூட்டங்களும், கருத்தரங்குகளும், ஊர்வலங்களும் நடாத்தப்பட்டன. 1967 ஆம் ஆண்டு நடுப்பகுதி முதல் தேனீர்க்கடைகளிலும், ஆலயங்களிலும் சமத்துவ உரிமை கோரிய போராட்டங்கள் தீவிரமாக நடாத்தப்பட்டன. இப் போராட்டங்களுக்கு ஒரு சில உயர் சமூகத்தவர்கள் ஆதரவு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (32) Dr. D-agrebirger

வழங்கினர்; பலர் தீவிரமாக எதிர்த்தனர்; இதனால் போராட்டக்களங் களில் பலத்த சேதங்களும் அழிவுகளும் ஏற்பட்டன.
5-8-1967 இல் சங்கானையில் நடாத்தப்பட்ட தேனீர்க்கடைப் பிரவேசப் போராட்டம் பெரும் கலவரத்தை உருவாக்கியது பிரவேச இயக்கத்திற்கு ஆதரவளித்த உயர் சமூகத்தவரான முன்னாள் சங்கானை பட்டினசபைத் தலைவர் திரு.நா.முத்தையாவின் வீடு உயர் சாதியினரால் தாக்கப்பட்டது. சங்கானையிலுள்ள நிச்சாமம் என்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமம் தாக்கப்பட்டது; பல வீடுகள் எரிக்கப்பட்டன; பலர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர்; சின்னர் - கார்த்திகேசு என்பவர் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார்.
1967 இல் ஆரம்பித்த சங்கானைப் போராட்டம் 1968 இலும் தொடர்ந்தது. இம் முறை வன்னியன் - குமரேசு என்பவர் பலியானார். இதே சூழலில் 1967 இல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகள் வடபகுதியெங்கும் விஸ்தரிக்கப்பட்டன. சங்கானை, அச்சுவேலி, கொடிகாமம் முதலிய இடங்களில் முக்கியமான தேனிர்க்கடைப் பிரவேசப் போராட்டங்கள் நடைபெற்றன.
வெகுஜன இயக்கத்தின் ஏற்பாட்டில் ஆலயப் பிரவேச நடவடிக் கைகளும் மேற்கொள்ளப்பட்டன. 1968 பங்குனியில் மட்டுவில் பன்றித் தலைச்சியம்மனின் பொங்கல் விழாவோடு அவ்வாலயத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து இதேயாண்டு ஆனி மாதம் மாவிட்டபுரம் கந்தசுவரிமி கோயிலிலும் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடாத்தப்பட்டது. இப்போராட்டங்களின் போது தாழ்த்தப்பட்ட சமூகத் தவர் பலர் கொலை செய்யப்பட்டனர்; பலரின் வீடுகள் எரிக்கப்பட்டன; இதனால் யாழ்ப்பாணப் பிரதேசம் ஒரு விதமான போர்க்கோலத்திற் காணப்பட்டது.
ஐந்துத்தமிழ்நாவல்கள் G3) Dr. LD-6pegsugar

Page 31
2.1.4. ஆக்க இலக்கியங்களில் .
தீண்டாமைக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்டங்கள் தாழ்த்தப் பட்ட மக்களின் போராட்டமாக மட்டுமன்றி ஒரு வர்க்க அடிப்படையி லான மக்கள் போராட்டமாக மாறியபோது இது பாரியதொரு சமுதாயச் சிக்கலாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகையதொரு நிலையினை உருவாக்குவதில் ஆக்க இலக்கிய காரர்களின் பணியும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த வகையில் 1950 களின் பின்னர் அகஸ்தியர், செ.கணேசலிங்கன், டானியல், டொமினிக் ஜீவா முதலியோர் தமது புனைகதைகளில் தீண்டாமைக் கொடுமைகளை வெளிப்படுத்தினர்.
1960 களின் பின்னர் மகாகவி, சுபத்திரன், முருகையன், பசுபதி முதலிய பலர் தமது கவிதைகளினூடாக தீண்டாமைக் கொடுமையினை எடுத்துக்காட்டினர். மகாகவியின் தேரும் திங்களும், சுபத்திரனின் சங்கானைக்கென் வணக்கம் முதலிய கவிதைகள் பிரபல்யமான கவிதைகளாகும்.
தீண்டாமை என்பது பாரியதொரு சமுதாயச் சிக்கலாக உருவெடுத்தபோது அதனை மையமாக வைத்து எழுதப்படுகின்ற இலக்கியங்களும் அதிகரித்தன. ஒவ்வொரு படைப்பாளிகளும் தத்தமது கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இச் சமுதாயச் சிக்கலை இலக்கியப் பொருளாக்கிக் கொண்டனர். இந்த வகையில் ஆக்க இலக்கிய வரிசையில் ஈழத்துத் தமிழ் நாவல்களில் தீண்டாமை என்னும் சமுதாயச் சிக்கல் எவ்வாறு பிரதிபலித்தது என்பதை தனியே ஒரு இயலில் விரிவாக நோக்கலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G) Dr.ம.இரகுநாதன்

22. தொழிலாளர் பிரச்சினைகள்
2.2.1. தொழிலாளர் வகையும் பொதுவான பிரச்சினைகளும்
தொழிலாளர் என்னும் பதம் இங்கு உடலுழைப்பில் ஈடுபடு கின்றவர்களையே குறித்து நிற்கும். இந்த வகையில் எமது சமூகத்தில் நகரப்புறத் தொழிலாளர், துறைமுகத் தொழிலாளர், கிராமப்புற விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர், சுருட்டுத் தொழிலாளர், தச்சு, மேசன் தொழிலாளர், சிகையலங்கரிக்கும் தொழிலாள்ர், சலவைத் தொழிலாளர், சீவல் தொழிலாளர், பறையடிக்கும் தொழி லாளர், மீன்பிடித்தொழிலாளர், தோட்டத் தொழிலாளர் எனப் பல்வேறு வகையான தொழிலாளர்களை இனங்காணக் கூடியதாக உள்ளது.
இத் தொழிலாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தமது உழைப்பை அரசாங்கத்திற்கோ முதலாளிகளுக்கோ விற்பவர் கள். நாள் முழுவதும் வியர்வை சிந்தி உழைக்கின்ற இத் தொழிலா ளர்களின் வாழ்வு வறுமையும் துன்பமும் மிக்கதாகவே இருந்து வருகின்றது. உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமல் முதலாளி களாலும் அரசாங்கத்தாலும் தாம் சுரண்டப்படுவதையும் தமது நியாய மான உரிமைகள் மறுக்கப்படுவதையும் உணரக் கூடிய அளவுக்கு இத் தொழிலாளர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்களாக இல்லை. அத்துடன் அவர்களை ஒன்று திரட்டிப் போராடத்தக்க வகையிலான அமைப்பு எதுவும் அந்நாளில் உருவாகவுமில்லை. இதனால் அவர்களின் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
22.2. தொழிலாளர் வர்க்கத்தின் தோற்றம்
மனித சமுதாயத்தின் வரலாறு மிகவும் நீண்டதாகும். மனித இனம் தோன்றிய காலத்தில் அவர்களிடையே சாதி வேறுபாடுகளோ வர்க்க வேறுபாடுகளோ இருந்திருக்க வில்லை. சிறிய சிறிய குலக் குழுக்களாக வாழ்ந்து வந்த இம் மக்கள் அனைவரும் அவரவர் பகுதிகளின் வள ஆதாரங்களைச் சமமாகப் பகிர்ந்து கொண்டனர் என்பதையும் சமுதாயத்தில் அனைவரும் சமமான தகுதியினையே பெற்றிருந்தனர். என்பதையும் பண்பாட்டு மானிடவியல் ஆய்வாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.” இச் சமுதாய அமைப்பு ஆதிகால பொதுவு டைமைச் சமுதாய அமைப்பு எனப்படுகின்றது. ஈழத்துத்தமிழ்நாவல்கள் G5) Dr.ம.இரகுநாதன்

Page 32
குலமரபுக் குழுக்களாக வாழ்ந்தவர்கள் தமது வாழ்வியல் தேவைகளுக்காகத் தமக்குள் மோதிக் கொண்டனர். மோதலில் வெற்றி பெற்ற குழுவினர் தோற்றவர்களைத் தமது அடிமைகளாக்கிக் கொண்டனர். அதனால் சமுதாயம் தலைமக்கள் - அடிமைகள், சுரண்டுகிறவர்கள் - சுரண்டப்படுபவர்கள் என இருவர்க்கங்களாகப் பிரிந்தது.*
அடிமைச் சமுதாய அமைப்பில் ஏற்பட்ட அக முரண்பாடுகளினா லும் பெர்ருளாதார வளர்ச்சியினாலும் நிலவுடைமைப் பொருளாதார அமைப்பு உருவாகியது. நிலவுடைமைப் பொருளாதார அமைப்பில் அடிமைகள் நிலவுடைமையாளர்களின் பண்ணையடிமைகளாக இருந்தனர்.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியினால் புதிய புதிய உற்பத்திக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட பொருளுற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டது. கைத்தொழில்கள் வளர்ச்சியடைந்தன. கைத்தொழில்களின் வளர்ச்சியினால் பொருளாதார அமைப்பில் நிலம் பிரதான உற்பத்திச் சாதனமாக இருந்த நிலை மாறி பெரும் கைத்தொழில்கள் முக்கியத்து வம் பெறத்தொடங்கின. உற்பத்திச் சாதனம் மாறிய போது உற்பத்தி உறவுகளும் மாற்ற மடைந்தன. புதிய உற்பத்தி உறவுகளுக்கு நிலவுடைமை அமைப்பும் அதன் அரசும் தடையாக இருந்ததால் அவ்வமைப்புத் தகர்க்கப்பட்டு முதலாளித்துவ பொருளாதார அமைப்பு உருவாக்கப்பட்டது.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் தொழிற்சாலைகள் சில தனிப்பட்ட முதலாளிகளின் சொத்தாகவே இருந்தன. இத்தொழிற் சாலைகளில் தொழிலாளர்கள் உற்பத்தியில் ஈடுபட்டனர். முதலாளிகள் தமது உச்ச லாப நோக்கத்தையே கருத்திற் கொண்டு செயற்பட்ட தால் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியமின்றித் துன்புற்றனர். தொழிலாளர்களின் நீண்ட நேர உழைப்பைப் பயன்படுத்தும் முதலாளி கள் அவர்களுக்குக் குறைந்தளவு கூலியினையே கொடுத்து வந்தனர். இதனால் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் எப்போதும் தாழ்ந்ததா கவே இருந்தது.
ஆனால் அவர்களின் உழைப்பைப் பயன்படுத்தும் முதலாளிகள் பெரும் செல்வந்தர்களாக மாறி வந்தனர். இத்தகைய வேறுபாட்டி னைத் தொழிலாளர்கள் உணரத் தலைப்பட்ட போது அவர்கள்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G6) Dr.ம.இரகுநாதன்

தனியுடைமையின் மீது வெறுப்புக் கொண்டனர். இத்தகைய சூழ்நிலை யிலேயே தனியுடைமை மாறி பொதுவுடைமை உருவாக வேண்டும் என்ற சிந்தனை தோற்றம் பெற்றது. இச் சிந்தனையின் விளைவாக உருவானதே சோஷலிச பொதுவுடைமைத் தத்துவம் ஆகும். சோஷலிச அமைப்பின் மூலமே முதலாளித்துவ அமைப்பைத் தகர்த்து வர்க்கங்களற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதையும் இப்புரட்சியை இறுதி வரை கொண்டு செல்லவல்லது தொழிலாளர் வர்க்கமே என்பதையும் சோஷலிச பொதுவுடைமைத் தத்துவம் எடுத்துக் கூறியது.
இவ்வாறாக மனித இனம் ஆதிகால பொதுவுடைமைச் சமுதாய அமைப்பு, அடிமைச் சமுதாய அமைப்பு, நிலவுடைமைச் சமுதாய அமைப்பு, முதலாளித்துவ சமுதாய அமைப்பு ஆகிய சமுதாய அமைப்பு முறைகளைத் தாண்டி சோஷலிச சமுதாய அமைப்பு முறைக்கு வளர்ந்திருக்கின்றது என்பது மார்க்சிய மூலவர்களின் கருத்தாகும். இத்தகைய சமுதாய வளர்ச்சிப் பார்வை தமிழ் மக்களின் வாழ்க்கைக்கும் பொருந்தும். இந்த வகையில் குறிஞ்சி நில வாழ்க்கையில் ஆதிகால பொதுவுடைமைச் சமுதாய அமைப்பு முறையின் சின்னங்களையும், முல்லை நில வாழ்க்கையில் அடிமைச் சமுதாய அமைப்பு முறையின் சின்னங்களையும் மருத நில வாழ்க்கையில் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பு முறையின் சின்னங்களையும் காணக்கூடியதாக உள்ளது. எனவே மனித சமுதாயத்தின் பொதுவான வளர்ச்சிப் படிநிலைகளைத் தமிழர் சமுதாயத்திலும் கண்டு கொள்ளலாம்.
இந்தியாவிலும் இலங்கையிலும் பல நூறு வருடங்களாக நிலவுடைமை அமைப்பு கட்டிக் காக்கப்பட்டு வந்தது. இவ்வமைப்பின் காவலர்களாக மன்னர்கள் விளங்கினார்கள். நிலவுடைமை அமைப்பின் காவலர்களாக மன்னர்களின் ஆட்சி பலவீனமாக இருந்த காலத்தில் வியாபார நோக்கமாக வந்த மேற்கு நாட்டவர் இந்தியாவிலும் இலங்கையிலும் தமது அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். இதற்கு முன்னர் இந்தியாவில் பல்வேறு படையெடுப்புக் கள் நிகழ்ந்த போதும் இந்திய நாட்டின் சமுதாய அமைப்பை அவை பாதிக்கவில்லை. பிரிட்டிஸ் படையெடுப்பு ஒன்றுதான் நிலைத்து நின்ற நிலவுடைமை மன்னராதிக்கங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் வேட்டு வைக்கும் சமுதாய மாறுதல்களை இந்திய சமுதாயத்தில் முதன் முதலாகப் புகுத்தியது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G) Dr.ம.இரகுநாதன்

Page 33
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவிலும் இலங்கையிலும் தமது ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர் தமது தேவைக்கும் இலட்சியத்திற்குமியைய நாட்டை ஆளத்தொடங்கினர். நூற்றாண்டுகளாக நிலவிவந்த பொருளாதார அமைப்பு வெடிக்கத் தொடங்கிது. விவசாயத்தையும் கிராமக் கைத்தொழில்களையும் ஆதாரமாகக் கொண்டியங்கி வந்த புரதான வாழ்க்கை முறை தகர்ந்து மேனாட்டாரின் கைத்தொழிற் புரட்சியின் வழிநின்ற நவீன நாகரிகமும் பொருளாதார அமைப்பும் இடம் பெறலாயின."
தமது ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்காக ஆங்கிலேயர் புகையிரதப் போக்குவரத்து, தபால், தந்தி அமைப்புக்கள், நெடுஞ்சாலைகளும் போக்குவரத்தும், அவற்றிற்குத் தேவையான தொழிற்சாலைகள் முதலியவற்றை உருவாக்கினர். இந்தியாவிலும் மிகவும் மலிவான விலையில் கிடைத்த தொழிலாளர்களின் உழைப்பு ஆங்கிலேயரின் தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. புதிய புதிய தொழில்கள் உருவாக்கப்பட்ட போது சமூக உறவுகளும் மாற்றமுற்றன. சமூகத்தில் புதிய வர்க்கங்கள் தோன்றின. இக்கால கட்டத்திலேயே தொழிலாளி வர்க்கம் என்ற புதியதொரு வர்க்கமும் தோன்றியது.'
2.2.3. தொழிலாளர் வெகுஜன இயக்கம்
மேற்கு நாட்டவரின் ஆட்சிக் காலத்தில் மேற்கு நாட்டுப் பண்டங்கள் பலவும் இந்தியாவிலும் இலங்கையிலும் குவிக்கப்பட்டன. இதனால் சந்தையில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை பெரிதும் பாதிக்கபப்பட்டது. கைத்தொழில் வளர்ச்சி பெற்ற மேற்கு நாடுகளின் பண்டங்களின் தரம், விலை ஆகியவற்றுடன் போட்டி போட முடியாத உள்ளுர் உற்பத்தியாளர்களின் கைத்தொழில்கள் பலவும் அழிந்தன. சிறிய சிறிய வாணிபங்கள் பலவும் பயனற்றுப் போயின. ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் தனது தந்தையின் தொழில் பாதிக்கப்பட்டு அவர் வறுமையடைந்தது பற்றிப் பாரதி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்."
தொழிலை இழந்த சுதேசிகளின் உழைப்பை மலிவாகப் பெற்றுக் கொள்வதற்காக ஏகாதிபத்திய நாடுகள் தமது தொழிற்சாலைகளைத்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G8) Dr. ம.இரகுநாதன்

தமது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளிலேயே நிறுவ முற்பட்டனர். இதனால் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆங்கிலேயரின் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. மேலும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட் பட்ட நாடுகளுக்கெல்லாம் கூலித் தொழிலாளர்களாகத் தமிழர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இந்த வகையிலேயே இலங்கைக்கும் பெருமளவு இந்தியத் தமிழர்கள் தோட்டக் கூலிகளாகக் கொண்டு வரப்பட்டனர்.
ஆங்கில ஆட்சியாளர்களின் பொருளாதார நடவடிக்கைகளால் வேளாண்மைத் தொழிலில் சிறு அளவிலும் கைத்தொழிலிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களெல்லாம் அநாதைகளாக்கபட்டனர். உழவர்களும் சிறு கைத்தொழிலாளர்களும் தமக்கு எதிராக ஆட்சியாளர்கள் செய்யும் கொடுமைகளை உணர்ந்து அவர்களின் மீது வெறுப்புக் கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக் கைகளில் ஈடுபடுவதற்கு ஓர் அமைப்பாக அணிதிரளும் வாய்ப்பு இருக்கவில்லை. இதனால் அவர்களின் செயற்பாடுகள் ஒழுங்கும் திட்டமிடலும் இன்றித் தனிப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளாகவே அமைந்தன. இந்த வகையில் பலர் ஊரை விட்டு வெளியேறினர். சிலர் ஆயுதக் கலகங்களில் ஈடுபட்டனர்.*
தனிப்பட்ட முறையில் ஆங்காங்கே கலகங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு 1857க்குப் பின்னர் படித்த மத்திய தர வர்க்கத்தினரின் தலைமை கிடைத்தது. இதனால் அவர்கள் தமக்கென ஒரு சங்கத்தையும் அமைத்துக் கொண்டு போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். இவ்வேளையில் இவர்களுடன் வேறு பல தொழிலா ளர்களும் இணைந்து கொண்டனர். இதனால் தனிப்பட்ட கலகமாக ஆரம்பித்த உழவர்களின் போராட்டம் தொழிலாளர் போராட்டமாக விரிவுபட ஆரம்பித்தது."
ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராகத் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட முற்பட்ட சூழலில் இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தியிருந்தது. தேசிய விடுதலை இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட்' எழுச்சியில் தொழிலாளர்கள் முன்னணியில் நின்றனர். மேலும் இந்தி யாவில் உருவான அந்நியருக்கெதிரான விடுதலை எழுச்சி தனியே அந்நியரை மட்டுமன்றி அவர்களைச் சார்ந்து நின்ற மன்னர்கள் பெரும் நிலவுடைமையாளர்கள் முதலியோரையும் எதிர்த்து எழுச்சி யாகவே வளர்ந்தது.'
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G9) Dr.I.இரகுநாதன்

Page 34
இந்திய சமுதாயத்தின் பெரும் பகுதியினர் அந்நிய ஏகாதிபத்தி யத்தால் மட்டுமன்றி நிலவுடைமை அமைப்பாலும் அடக்கியொடுக்கப் பட்டனர். இதனாலேயே இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் உருவான தேசிய எழுச்சியின் போது நிலவுடைமை அமைப்பும் எதிர்க்கப்பட்டது. இதுவே நிலவுடைமை அமைப்பின் பிரதான அம்சமான சாதியத்திற்கெதிரான போராட்டமாக வெளிப்பட்டது. இப்போராட்டத்தில் நிலவுடைமை அமைப்பால் அடக்கியொடுக்கப்பட்ட பல்வேறு சாதியி னைச் சேர்ந்த தொழிலாளர்களும் இணைந்து நின்றனர்.
2.2.4. இலங்கையில் தொழிலாளர் போராட்டங்கள்
இலங்கையில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் மொழியாலும் மதத்தாலும் தமக்குள் வேறுபட்டவர்களாக இருந்தாலும் இவர்களி டையே தொழிலாளர்கள் என்ற வகையில் தாம் அனைவரும் ஒன்றுபட்ட வர்கள் என்ற வர்க்க உணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெருந் தோட்டத்துறை முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. இத் தோட்டங்களில் சிங்களவர், இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர், மலையாளிகள், முஸ்லீம்கள், மலாயர், பறங்கியர் போன்ற பல்வேறு இனத்தினரும் பணியாற்றினர். இவர்கள் அனைவரும் உழைப்புக் கேற்ற ஊதியமின்றியும் மோசமான வேலை நிலைமை களாலும் பாதிக்கப்பட்டனர். இதனால் அந்நிய ஏகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு எதிராகத் தாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற உணர்வு இவர்களிடையே உருவாகியது.*
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிலாளர்களி டையே ஏற்பட்ட விழிப்புணர்வினால் நகரப்புற அச்சுத் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 1893 செப்ரெம்பர் 12 ஆம் திகதி கொழும்பில் H.W கேவ் கம்பனியைச் சேர்ந்த அறுபது அச்சுத் தொழிலாளர்கள் தமது சம்பளம் தாமதமான தற்காக ஐந்து நாள்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தின் போது கொழும்பில் பெரும்பான்மையைான செய்திப் பத்திரிகைகளையும் வேறு அச்சகங்களையும் சேர்ந்த சுமார் 500 தொழிலாளர்களைக் கொண்ட பொதுக் கூட்டமும் நடைபெற்றது. இக் கூட்டத்தில் இலங்கை அச்சுத் தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டது.?
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G O) Dr.ம.இரகுநாதன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் மேலும் பல வேலை நிறுத்தங்கள் நடைபெற்றதை அறிய முடிகின்றது. அவற்றுள் சலவைத் தொழிலாளர் வேலைநிறுத்தம் (1896), யாழ்ப்பாண சுருட்டுத் தொழிலாளர் வேலைநிறுத்தம் (1886), டைம்ஸ் ஒவ் சிலோன் அச்சுத்தொழிலாளர் வேலைநிறுத்தம். (1898) துறைமுகத்தொழிலாளர் வேலைநிறுத்தம் (1901) ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.
1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் மாட்டுவண்டிக்காரர்கள் செய்த வேலைநிறுத்தம் மிகத் தீவிரமானதாகும். கொழும்பு மாநகர சபையின் புதிய சட்டங் களை எதிர்த்து அவர்கள் செய்த வேலை நிறுத்தத்தினால் கொழும் பின் பிரதான வர்த்தகப் பகுதியான புறக்கோட்டை நிலை குலைந்தது. இவ் வேலைநிறுத்தங்கள் தொழிலாளரிடையே ஒற்றுமையை உருவாக் கியிருந்தாலும் நிறுவனமயப்பட்ட ஒரு தொழிற்சங்கமாக இவர்கள் வளர்ச்சியடையவில்லை."
2.2.5. நிறுவனமயப்பட்ட போராட்டங்கள்
நிறுவனமயப்பட்ட போராட்டங்களை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அவதானிக்க முடிகின்றது. இந்த வகையில் 1912 இல் ரயில்வேத் தொழிலாளர்கள் தமது சம்பள உயர்வுக்காக நடாத்திய வேலைநிறுத்தம் சகல ரயில்வேத் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்ததுடன் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை தொழி லாளர் வர்க்கத்தால் செயலிழக்கச் செய்யலாம் என்பதையும் எடுத்துக் காட்டியது.
1919இல் இலங்கைத் தொழிலாளர் நலச் சங்கம் (Ceylon Workers Welfare league) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக சேர். பொன். அருணாசலம் இருந்தார். 1920 இல் இவ் வமைப்பு இலங்கைத் தொழிலாளர் கூட்டுக் கழகமாக மாறியது." இவ்வமைப்பினுடாக அருணாசலம் தொழிலாளர்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வந்தார். இவ்வமைப்பின் செயற்பாடுகளால் ஏ.ஈ.குணசிங்கா ஜோர்ச்.இ.டி. சில்வா போன்ற தீவிர தொழிற் சங்க வாதிகள் கவரப்பட்டனர்.
1922 இல் ஏ.ஈ குணசிங்காவின் தலைமையில் இலங்கைத் e s இவ்வமைப்பு பல்வே

Page 35
தொழிலாளர்களையும் இணைத்து 1923 பெப்ரவரியில் நடாத்திய பொது வேலை நிறுத்தம் தொழிலாளர்களின் வலிமையை எடுத்துக் காட்டியது. இவ்வேலை நிறுத்தத்தில் சுமார் இருபதினாயிரம் தொழிலாளர்கள் வரையில் பங்குபற்றினர். இப் போராட்டம் தொழிலாளர்களின் எழுச்சியாகவே கருதப்பட்டது.*
குணசிங்காவின் இலங்கைத் தொழிற்சங்கம் என்ற அமைப்பில் பல்வேறு இனத்தவர்களும் இணைந்திருந்தனர். இலங்கைத் தமிழரான ஏ.ஈ.தம்பிஐயா இச் சங்கத்தின் கிளை ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைத்து ஊர்காவற்றுறை துறைமுகத் தொழிலாளரை அமைப்பு ரீதியாக ஒழுங்கமைத்தார். இந்தியத் தமிழரான கே.நடேசையர் இச் சங்கத்தின் உபதலைவராக இருந்தார். தோட்டத் தொழிலாளர்களின் மத்தியில் தொழிற்சங்கத்தை உருவாக்குவதில் நடேசையர் ஆற்றிய பணி விதந்து குறிப்பிடத்தக்கதாகும். மேலும் எம்.எல்.எம்.நியாஸ், எம்.என்.என்.கனியா, காசிம் இஸ்மாயில் முதலிய இஸ்லாமியர்களும் இச் சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். 1928இல் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் நிறுவப்பட்ட போது அதில் சகல இன மக்களும் அங்கம் வகித்தனர்.
1930 களில் இருந்து இடதுசாரிக் கட்சிகள் தொழிற்சங்க இயக்கத் தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. இக்கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்தை வர்க்கப் பிரக்ஞை உள்ளதாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டன. சோஷலிசக் குறிக்கோளை இறுதியாக அடைவதற்கான வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கருவியாக தொழிலாளர் இயக்கங்களில் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடின்றி அனைவரும் பங்காற்றக் கூடிய வாய்ப்பு இருந்தது. இந்நிலையே தமிழர்கள் மத்தியில் இடதுசாரி இயக்கத்தின் மீது நம்பிக்கை கொண்ட முற்போக்கு அணியொன்றையும் உருவாக்கியது. இவ்வணியினர் இலக்கிய காரர்களாகவும் இருந்ததால் இவர்களின் படைப்புகளில் சாதி, இனம் ஆகியவற்றைக் கடந்த வர்க்க உணர்வுகள் முனைப்புப் பெறுவதுடன் தொழிலாளர்களின் உரிமைக்கான ஒன்றுபட்ட வர்க்கப் போரையே தீர்வாகக் காட்டுகின்ற தன்மையும் காணப்பட்டது. இந்நிலை 1950 களின் நடுப்பகுதியிலிருந்து ஆரம்பித்தது. இளங்கீரனின் நீதியே நீ கேள் என்னும் நாவலை இதன் தொடக்க மாகக் கொள்ளலாம்.
ஈழத்துத்தமிழ் நாவல்கள் G 2) Dr. ம.இரகுநாதன்

2.2.6. தோட்டத் தொழிலாளர்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையும் இந்தியாவும் பிரித்தானியரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் இலங்கை யில் மேற்கொள்ளப்பட்ட பெருந்தோட்டத் துறையின் அபிவிருத்திக் காக இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட கூலித் தொழிலாளர்களே தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். தமிழக வரலாற்றில் முன்னைய காலங்களில் காணப்படாத அளவுக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பெருமளவு தமிழ்த் தொழிலாளர்கள் இவ்வாறு குடிபெயர்ந்தனர். இவர்கள் இலங்கையில் மாத்திரமின்றி பிரித்தானியாவின் ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித்தீவுகள் முதலிய பல நாடுகளிலும் குடியேற்றப்பட்டனர்.
தமது சொந்த நாட்டில் தாம் அனுபவித்த வறுமையிலிருந்து விடுபட்டு புதிய நாட்டில் தொழில் வாய்ப்புப் பெற்று வளமாக வாழலாம் என்ற எதிர்பார்ப்புடன் குடி பெயர்ந்த இம் மக்கள் சென்ற இடமெல்லாம் ஏமாற்றத்தையே அடைந்தனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட தமிழ்த் தொழிலாளிகள் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில் குடியேற்றப் பட்டனர். போதிய இட வசதியற்ற சிறிய லயங்களில் (குடிசை) குடியிருப்பதாலும், சுகாதார வசதிகளோ, போசாக்கான உணவோ இல்லாததாலும் இவர்கள் துன்பப்பட்டனர். மேலும் இலங்கையின் சுதேசிகளான சிங்களவர்களாலும், தமிழர்களாலும், முஸ்லீம்களாலும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டு வெறுத்தொதுக்கப்பட்டனர்; கள்ளத் தோணிகள், தோட்டக்காட்டார், இந்தியாக்காரர் என்றெல்லாம் இவர்கள் பழித்துரைக்கப்பட்டனர். மேலும் தோட்டங்களில் உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாமலும், வேலைவாய்ப்பு வழங்கப்படாமலும் இவர் கள் துன்புறுத்தப்பட்டனர். அதிகாரிகள் இவர்களது உழைப்பை இலகு வாகச் சுரண்டிக் கொண்டனர். தொழிலாளர்களான பெண்கள் அதிகாரி களின் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவது சாதாரணமான சம்பவமாகவே இருந்தது.
தோட்டத் தொழிலாளர்கள் 1820 களில் மலையகத் தோட்டங் களில் குடியேற ஆரம்பித்த போதும் அக் காலத்தில் மலையகத்தில் நிரந்தரமாகக் குடியேறும் எண்ணம் இவர்களுக்கு இருக்கவில்லை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G3) Dr. ம.இரகுநாதன்

Page 36
அடிக்கடி இந்தியாவிற்குச் சென்று வந்தனர். மலையகத்தில் உஒழத்து செல்வத்தைத் திரட்டிக் கொண்டு தாயகத்திற்குத் திரும்பி விடுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. இலங்கையில் மட்டுமன்றி பர்மா, மலாயா முதலிய நாடுகளில் வாழ்ந்த தொழிலாளர்களும் இதே எண்ணத்தையே கொண்டிருந்தனர். எனினும் பெரும்பாலான தொழி லாளர்களுக்கு இது கனவாகவே போய்விட அவர்கள் இங்கு நிரந்தரக் குடிகளாகவே மாறினர்.?
தோட்டத் தொழிலாளர்களின் விடிவுக்காக சேர்.பொன். அருணாசலம், கே.நடைசையர் போன்ற சிலர் குரல் கொடுத்திருக்கின் றார்கள். 1920 களிலிருந்து 1940 களின் பிற்பகுதிவரை நடேசையர் ஆற்றிய பணி விதந்து கூறத்தக்கது. சிறிது காலம் சட்ட சபையில் அங்கத்தவராக இருந்த நடேசையர் தனது பதவிக் காலத்தை தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காகப் பெரிதும் பயன்படுத்தினார். 1931இல் “அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம்” என்னும் சங்கத்தை அமைத்த நடேசையர் அதன் மூலம் தனது செயற்பாடுகளை நிறுவனப்படுத்திக் கொண்டார். நடேசையரின் நடவடிக்கைகளால் மலையக மக்களிடையே ஒருவித விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்தது. இம் மக்களிடையே மேலும் பல தொழிற்சங்கங் கள் உருவாகின. இத் தொழிற் சங்கங்களின் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்காக வேலைநிறுத்தங்களிலும் வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழிலாளர்கள் விழித்துக்கொண்ட காலத்திலேயே அரசியல் ரீதியாக அவர்களுக்கிருந்த ஒரு சில சலுகைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. 1931 இல் நிறைவேற்றப்பட்ட டொனமூர்ச் சட்டம், 1935 இல் கொண்டுவரப்பட்ட காணி அபிவிருத்திச் சட்டம், 1948 இல் நிறைவேற்றப்பட்ட பிரஸாவுரிமைச் சட்டம், 1949 இல் கொண்டுவரப்பட்ட தேர்தல் திருத்தச்சட்டம் முதலியவற்றால் தோட்டத் தொழிலாளர்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர். அரசியல் அநாதைகளாக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களை இந்தியாவுக்குத் திரும்பி அனுப்பும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. 1970 களின் முற்பகுதிவரை இலங்கை - இந்திய அரசுகளுக்கிடையே மேற்கொள்ளப் பட்ட பல ஒப்பந்தங்களினால் பல இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (44) Dr. LD&Despirgbair

1970 களின் முற்பகுதியில் நிறைவேற்றப்பட்ட நிலச் சீர்திருத்தச் சட்டங்களினால், பெருந்தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் வேலையின்றித் தெருத்தெருவாக அலைந்தனர். பட்டினிச் சாவுகள் அதிகரித்தன. அத்துடன் அடிக்கடி நடைபெற்ற இனக்கலவரங்களினால் மலையகத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் குடியேறினர். பலர் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்தனர்.
இத்தகைய நிலையிலும் 1950 களின் பிற்பகுதியில் இருந்து தோட்டத் தொழிலாளரின் உரிமைப் போராட்டங்கள் அதிகரித்தன. 1940 களில் தமிழகத்தில் உக்கிரமடைந்த பிராமணிய எதிர்ப்பு, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் செயற்பாடு முதலியன பிராமணிய ஆதிக்கத்தை வீழ்ச்சியுறச் செய்ததுடன் காலங்காலமாக சமூக பொரு ளாதார நிலையில் பின் தள்ளப்பட்டிருந்த மக்களை எழுச்சியுறவும் செய்தன. இந்நிலை இலங்கையையும் பாதித்தது. தமிழர்கள் மத்தியில் பிற்படுத்தப்பட்டவர்களிடையே பெரியார், அண்ணாதுரை போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் செல்வாக்கு வலுப்பெற்றது.
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி, தாய் மொழி மூலமான கல்விப் போதனை ஆகியவற்றால் சமூகத்தில் பிற்படுத்தப்பட்டிருந்த மக்கள் கல்வி அபிவிருத்தி பெற்றனர். இதனால் இத்தகைய மக்களிடையே இருந்த தொழிலாளர்கள் விழிப்புற்ற்னர். கல்வி மறுக்கப்பட்டவர்களும், பொருளாதார சமூக ரீதியில் பின்தங்கி யிருந்தவர்களும் பெரும்பாலும் தொழிலாளர்களே என்பதால் அவர்களி டையே ஏற்பட்ட விழிப்பு தொழிலாளர்களின் விழிப்பாகவும் அமைந்தது.
இத்தகைய நிலைமைகளால் தோட்டத் தொழிலாளர்களும் விழித்துக் கொண்டனர். இவ்விழிப்புக்கு புறச் சூழ்நிலைகள் மட்டுமன்றி பெருந்தோட்டங்களில் வளர்ச்சியடைந்து வந்த தொழிற்சங்கங்கள், தோட்டத்தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புக்கள், கலை இலக்கிய மன்றங்கள், சஞ்சிகைகள் போன்ற பலவும் துணைபுரிந்தன. இவ்வாறாக எழுச்சி பெற்ற தோட்டத் தொழிலாளர்கள் தமது பிரச்சினைகளுக்காகப் போராட முன்வந்தனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் GS) Dr.ம.இரகுநாதன்

Page 37
2.2.7. ஆக்க இலக்கியங்கள்.
ஆக்க இலக்கியங்ளைப் பொறுத்தவரையில் ஈழத்தில் வெளிவந்த தமிழ் நாவல்களிலேயே தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள் தனிக்கவனம் பெற்றிருக்கின்றன.
1950 களில் முழு இலங்கையிலும் தொழிற்பட்ட இடதுசாரி இயக்கங்களாலும் பல்வேறு தொழிற்சங்கங்களாலும் சாதி, இனம் ஆகியவற்றைக் கடந்த வர்க்க உணர்வு தட்டியெழுப்பப்பட்டது. இத்தகைய வர்க்க உணர்வு நிலையைப் புலப்படுத்தும் வகையில் 1950 களின் நடுப்பகுதியில் இளங்கீரனின் நாவல்கள் வெளிவந்தன.
1950 களில் சிறந்த சிறுகதை ஆசிரியர்களாக இருந்த பலர் 1960 களில் நாவல்களையும் எழுத முற்பட்டனர். இவ்வெழுத்தாளர்கள் சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலுமுள்ள பலரையும் தமது நாவல் களில் எடுத்துக் காட்டினர். இதனால் நாவல்களில் பல்வேறு வகை யான தொழிலாளர்களது பிரச்சினைகள் இடம்பெற்றன. இக்கால நாவலாசிரியர்களை வெகுவாகக் கவர்ந்த பிரச்சினை தோட்டத்தொழி லாளர்களின் பிரச்சினையே. இவர்களின் பிரச்சினைகளை யாழ்ப்பாணத் துத் தமிழர்கள் மாத்திரமன்றி மலையகத்தவர்களும் தமது படைப்புக் களில் எடுத்துக் காட்டினர். இந்த வகையில் யாழ்ப்பாணத்தவர்களான நந்தி, பெனடிக்ற் பாலன், கே.ஆர். டேவிட், தி.ஞானசேகரன் முதலியோரும் மலையகத்தவர்களான கோகிலம் - சுப்பையா, சி.வி.வேலுப்பிள்ளை, கே.கணேஷ், மாத்தளை சோமு முதலியோரும் குறிப்பிடக்கூடியவர்கள்.
ஈழத்துத் தமிழ் நாவல்களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் எடுத்துக் கூறப்பட்டது போல வேறு எந்தவொரு தொழிலாளர்களின் பிரச்சினைகளும் தனியே எடுத்துக் கூறப்பட வில்லை. இதற்கான காரணம் தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக் கும் துன்பங்கள் ஏனையவர்களை விட மிகவும் அதிகமானவை என்பதேயாகும்.
1960 களில் ஈழத்துத் தமிழ் நாவல்களில் தொழிலாளர்கள் பற்றிய உணர்வு முனைப்புப் பெறுவதற்கு சில சமூக வரலாற்றுக் காரணங்களும் பின்னணியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஈழத்துத்தமிழ்நாவல்கள் G6) Dr.ம.இரகுநாதன்

வகையில் 1950 களிலிருந்து உலகின் பல பாகங்களிலும் தேசிய எழுச்சிகள் உருவாகின. அடக்கி ஒடுக்கப்பட்ட இனங்கள் பலவும் தமது விடுதலைக்காகப் போராடின. கிழக்கு நாடுகள் பலவற்றிலும் பொதுவுடைமைச் சிந்தனை வேகமாகப் பரவியது. இதனால் தொழிலா ளர்களும் விழிப்புற்றனர். சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இயற்கை நியதி; அவை மாற்றப்பட முடியாதவை என்ற கருத்து தகர்க்கப்பட்டு நவீன சிந்தனைகளும் முற்போக்குக் கருத்துக்களும் பரவ ஆரம்பித்தன.
1956 இல் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா இலங்கையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினார். இவரது ஆட்சியில் பொதுவுடைமைக் கொள்கையில் நாட்டங்கொண்ட பல கட்சிகள் அங்கம் வகித்தன. இதனால் பொதுவுடைமைக் கருத்துக்கள் பரவு வதற்கு வாய்ப்பான சூழல் நிலவியது. இலங்கை, சீனா, சோவியத் யூனியன் ஆகியவற்றுடன் நெருக்கமான உறவைப் பூண்டிருந்ததால் அந்நாடுகளிலுள்ள பொதுவுடைமைத் தத்துவங்கூறும் நூல்கள் பலவும், இலக்கியங்களும் இங்கு இறக்குமதி செய்யப்படட்ன. தமிழகத்திலும் ஈழத்திலும் இவை மொழி பெயர்க்கப்பட்டன. மேலும் இடதுசாரிக் கட்சிகள் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட தொழிலாளர் களிடையே தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டன. இதனால் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. முன்னெப்பொழு தும் இல்லாதவாறு தமிழர் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தமது உரிமைக்காகப் போராட முற்பட்டனர். சாதி எதிர்ப்புப் போராட் டங்கள் என்ற வகையில் இப் போராட்டங்கள் பற்றி முன்னர் விரிவாக நோக்கினோம்.
1960 களில் பல்கலைக்கழகங்களில் தாய்மொழி மூலமான கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமன்றி சாதாரண கிராமப்புற மாணவர்களும் உயர் கல்விகற்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர். உயர்கல்வியினூடாக இவர்கள் உலக அரங்கில் ஏற்பட்டு வரும் மாறுதல்களையும் தமது சமூகத்திலுள்ளவர்களின் பின்தங்கிய நிலையினையும் அதற்கான காரணங்களையும் தெரிந்து கொண்டனர். இவ்வாறு உயர்கல்வி கற்றவர்கள் இலக்கியம் படைத்தபோது அவ்விலக்கியங்களில் அவர்களின் பிரச்சினைகளே முக்கியத்துவம் பெற்றன. இதனால் தமிழ் நாவல்களில் சாதாரண தொழிலாளர்களின் பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G.) Dr.ம.இரகுநாதன்

Page 38
தொழிலாளர் மத்தியிலிருந்து தோன்றிய புனைகதைகளை நெறிப்படுத்தும் பணியை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மேற் கொண்டது. 1946 இல் ஆரம்பிக்கப்பட்ட இச் சங்கம் 1950 களின் நடுப்பகுதியிலிருந்து ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துமளவிற்கு நிறுவனரீதியாக வளர்ச்சியடைந்திருந்தது. ஈழத்துத் தமிழ் இலக்கியங்களில் சமூக உணர்வு ஆழம் பெறுவதற்கும், முற்போக்குச் சிந்தனைகள் வலுப்பெறுவதற்கும் இச் சங்கம் ஆற்றிய பணி விதந்து கூறத்தக்கதாகும்.
மேலும் ஈழத்து இலக்கிய உலகில் 1960 களில் ஏற்பட்ட இலக்கியச் சர்ச்சைகளும் ஈழத்து இலக்கியங்களில் சமூக உணர் வினை உண்டாக்குவதில் உந்து சக்தியாக அமைந்திருக்கின்றன.
1970 களில் வெளிவந்த பிரதேச நாவல்களில் ஈழத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ்த் தொழிலாளர்களின் பிரச்சினை கள் எடுத்துக் காட்டப்பட்டன.
2.3 பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள்.
2.3.1. பெண் தொடர்பான பாரம்பரியமான கருத்துநிலை
ஈழத்திலுள்ள தமிழ்பேசும் மக்கள் அனைவருக்கும் பொதுவான மற்றொரு பிரதானமான் சமுதாயச் சிக்கலாக விளங்குவது பெண்கள் தொடர்பான பிரச்சினைகளாகும். ஆண்களின் நலனையே பிரதான மாகக் கொண்ட கருத்து நிலைகளால் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பில் பெண்கள் இரண்டாந் தரப் பிரசைகளாகவே நடாத்தப்படு கின்றனர். ஆண்களின் தேவைகளை நிறைவேற்றுவதே தமது கடமை எனப் பெண்களும் நம்பவைக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சூழலில் தம்மீது இழைக்கப்படுகின்ற கொடுமைகள் அநீதியானவை என்பதை உணர்கின்ற வாய்ப்பு அவர்களுக்கு இருக்கவில்லை.
காலந்தோறும் ஏற்பட்ட சமூகமாறுதல்களால் பெண்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற கொடுமைகள் உள்வீட்டுப் பிரச்சினைகள் என்ற நிலையைக் கடந்து வீதிக்குக் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் பெண்களின் பிரச்சினைகள் பெண்களை மாத்திரமன்றி முழுச்சமுதாயத்தையுமே பாதிக்ககூடியவை என்பதைப் பலரும் ஏற்றுக்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G8) மா.ம.இரகுநாதன்

கொள்ளும் நிலை உருவாகியது. இத்தகைய நிலையைத் தோற்றுவிப் பதில் சமூக விடுதலை இயக்கங்களும் பெண்களின் நலனில் அக்கறை கொண்ட சமூக அமைப்புக்களும் ஆற்றிய பணி குறிப்பிடத்தக் கதாகும். இவ்வாறானதொரு சூழலில் பெண்களின் பிரச்சினைகள் ஒரு சமுதாயச் சிக்கலாக உணரப்பட்டது. இந்நிலையை விரிவாக நோக்கலாம்.
தமிழ் மக்கள் தாம் வாழும் உலகையும், பேசும் மொழியையும் பூமித்தாய், நிலமகள், தாய்மொழி எனப் பெண்ணின் வடிவாகவே கண்டு போற்றி வருகின்றனர். தமது வாழ்வுக்கு அடிப்படையான கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றையும் பெண்ணின் வடிவிலேயே கண்டு வணங்கி வருகின்றனர். இவ்வாறாக ஒரு புறத்தில் பெண் தெய்வமாக்கப்பட்டாலும் மறுபுறத்தில் வீட்டுக்குரியவளாகவும் ஆண் களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டியவளாகவும் குழந்தை களைப் பெற்று வளர்க்க வேண்டியவளாகவுமே கருதப்பட்டு வந்திருக் கின்றாள். ஏன் பெண்ணின் பிறப்பே விரும்பப்படாத ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கின்றது. பிற்கால ஒளவையார் அரியது பற்றிக் கூறும்போது,
“அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது - அதனிலும் அரிது கூன், குருடு, செவிடு, பேடு நீங்கிப் பிறத்தல்”*
என்கின்றார். பேடு அதாவது பெண்ணாகப் பிறத்தல் என்பது பாவஞ்செய்த பிறவி என்றே கருதுகின்றார் போலும், ஒளவையாரின் இக்கருத்து அவர் வாழ்ந்த காலத்துப் பெண்பற்றிய கருத்து நிலையின் வெளிப்பாடாகும். ஒளவையாரின் இக் கருத்தினை அவர் தனது அழகிய தோற்றத்தை மாற்றிக் கிழ உருவம் வேண்டிப்பெற்றார் என்ற ஐதீகத்துடன் இணைத்து நோக்கும்பொழுது பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் சமூகத்தில் அனுபவித்த துன்பங்களை உணர முடிகின்றது.
வரலாற்றடிப்படையில் நோக்கும்போது சமுதாயத்தில் வர்க்க வேறுபாடுகள் தோன்றிய காலத்திலிருந்தே பெண்கள் தமது சம உரிமையையும் அந்தஸ்தையும் இழந்தார்கள் என்பது தெரிய வருகின்றது. இதனை விஞ்ஞான பூர்வமாகவும் சமூகவியல் அடிப்படையிலும் ஆராய்ந்து நிறுவியுள்ளார் எங்கெல்ஸ். பெண்களின் சமூக அந்தஸ்து மாறியமை பற்றி இவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G9) Dr.ம.இரகுநாதன்

Page 39
*தாயுரிமை தூக்கியெறியப்பட்டது பெண்ணினம் உலக
வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். வீட்டிலேயும் ஆட்சிச்
சுதந்திரத்தை ஆண் கைப்பற்றினான்; பெண் இழிநிலைக்குத்
தள்ளப்பட்டாள்; ஆணின் காம இச்சைக்கு அடிமையானாள்; கேவலம்
99.35
குழந்தைகளைப் பெறும் சாதனமாக ஆகிவிட்டாள்.
எங்கெல்சின் கருத்தின்படி தாய்மொழிச் சமூக அமைப்பு தூக்கியெறியப்பட்டு தந்தைவழிச் சமூக அமைப்புத்தோற்றம் பெற்றதோடு ஆண் சொத்துக்குரியவனாக மாறியதும் ஆணின் சொத்தாகவே பெண்ணும் கருதப்பட்டாள். இத்தகைய ஆணாதிக்க சமுதாய அமைப்பில் ஆணின் சொத்துக்குரிய வாரிசைப் பெற்றுத் தருபவளாக பெண் பயன்படுத்தப்பட்டாள். இதனாலேயே பெண்ணுக்கு கற்புநெறியும் வலியுறுத்தப்பட்டது. என்பது சமூக வரலாற்று உண்மை.
நாகரிகமடைந்த பல்வேறு சமுதாயங்களிலும் பெண்கள் உரிமைகளற்ற அடிமைகளாகவே வாழ்கின்றனர் என்பதைப் பின்வரும் லெனினின் கூற்றும் உறுதிப்படுத்துகின்றது.
*மாதர்கள் வீட்டு அடிமைகள் என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை; நாகரிகம் அடைந்த எல்லா நாடுகளிலும் மிகவும் முன்னேற்றமடைந்த நாடுகளிலும்கூட மாதர்களின் நிலை இவ்வாறு தான் உள்ளது.”*
நாகரிகமடைந்த பல்வேறு சமுதாயங்களிலுங் காணப்படுகின்ற இச் சமுதாய வரலாற்று உண்மை தமிழர் சமுதாயத்திற்கும் பொருத்த மானதே. தமிழர் சமுதாய வரலாற்றில் சங்க காலப் பகுதியில் குடும்பம் என்ற அமைப்பு நிலைபெற்றுவிட்டது. குடும்ப அமைப்பின் நிலைபேற்றிற்கு ஒருதார மணமுறையும் பெண்களுக்கு மட்டுமே வலியுறுத்தப்படும் கற்பு நெறியும் அவசியமானவையாகும். சங்க இலக்கியங்களும் அற நெறிக்கால நீதி நூல்களும் கற்புடை மகளிரின் சிறப்புப்பற்றி விரிவாகவே கூறியிருக்கின்றன. சிலப்பதிகாரம் இயற் கையை அடிபணிய வைக்கும் பத்தினித் தெய்வமாகவே கண்ண கியைக் காட்டுகின்றது. ஆணாதிக்கத்தைக் காட்டி குடும்ப அமைப்பை நிலை நிறுத்த கற்புநெறி அவசியமானதாகக் கருதப்பட்டதால் கணவனைப் பிரிந்துவாழும் கண்ணகியின் துயரம் பெரிதுபடுத்தப்பட வில்லை. கோவலனைப் பிரிந்த காலத்திலும் கோவலன் மாதவியைத் தவிக்க விட்டுவிட்டு மீண்டு வந்த காலத்திலும் கண்ணகி கணவனின்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Go) Dr. ம.இரகுநாதன்

தேவைகளை உணர்ந்து செயற்படுபவளாகவே சித்திரிக்கப்பட்டுள்ளாள். அவளின் பெண்மைக்குரிய உட்ணர்ச்சிகள் பெரிது படுத்தப்படாமல் அவள் கோவலனின் படிதாண்டாப் பத்தினியாகவே காட்டப்படுகின்றாள். சமய நூல்களும், அறநீதி நூல்களும் இன்றுவரை பெண்பற்றிக் கூறும் கருத்துக்களில் பெருமளவு மாற்றம் இருப்பதாகத் தெரிய வில்லை.
நவீன காலத்தில் வாழ்ந்து மேற்கு நாட்டு இலக்கியங்களைக் கற்று தமிழில் முதல் நாவலை எழுதியவர் என்ற சிறப்பினைப் பெற்றவரான வேதநாயகம்பிள்ளை பெண்கள் தொடர்பாகக்கூறும் கருத்துக்கள் மரபு ரீதியான சிந்தனையின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன.
“திருமணமான பெண், கணவனை மனமாரக்காதலிப்பதோடு கூட அவனுக்குக் கீழ்ப்படிந்து அவனுடைய சொற்படி நடக்கவும் மனைவி சிறப்பாக உரிமைப் பட்டிருக்கிறாள்.”
“மாதர்கள் எவ்வளவு படித்தாலும் ஆடவர்களுக்குத் தாழ்ந்த வர்களே தவிர மேற்பட்டவர்களல்லர்.”*
தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியான வ.வே.சு.ஐயரும் பெண் கள் தமது பாரம்பரிய நிலையிலிருந்து விலகக் கூடாது என்ற கருத் துடையவராகவே இருந்தார் எனக் கூறும் மெள. சித்திரலேகா அதற்கு ஆதாரமாக ஐயரின் பின்வரும் கருத்தை எடுத்துக் காட்டியுள்ளார்."
“நமது மாதரின் வாழ்க்கை நோக்கந்தான் என்ன? அவர்கள் குமாஸ்தாக்களாக இருந்து கொண்டு சம்பாதிப்பதா? அல்லது மாஸிஸ் ரேட், தாசீல் முதலிய உத்தியோகங்கள் பார்த்து ராஸ்ய நிர்வாகத்தை நடத்துவதா? அல்லது கடைகளில் உட்கார்ந்து கொண்டு வியாபாரம் செய்வதா? அல்லது யந்திர சாலைகளிலும் ஆலைகளிலும் புகுந்து தச்சர் செய்யும் வேலைகள் செய்து அவைகளை நடத்துவதா? இவை ஒன்றும் அல்ல என்று அநேகமாய் எல்லோரும் ஒப்புக்கொள் வார்கள். மற்றும் என்னதான் அவர்கள் வாழ்க்கையின் லட்சியம் எனக்குத் தோன்றிய மட்டில் இவ்விலட்சியத்தை இரண்டாகக் கூறலாம். ஒன்று பொது லட்சியம், மற்றது ஆத்ம லட்சியம். அதாவது தாங்கள் பிறந்த குடும்பத்துக்கும் புகுந்த குடும்பத்துக்கும் தாயகமாகவும் ஆதாரமாகவும் இருத்தல் வேண்டும்.”
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (51) Dா.ம.இரகுநாதன்

Page 40
எனவே நவீன உரைநடை இலக்கியங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்த முன்னோடிகளான வேதநாயகம் பிள்ளை, வ.வே.சு.ஐயர் ஆகிய இருவரிடத்தும் பெண் ஆடவர்களுக்குக் கீழ்ப்பட் டவள்; வீட்டுக்குரியவள் என்ற கருத்தே காணப்படுகின்றது.
2.3.2. பெண்விடுதலை தொடர்பான சிந்தனைகள்
இருபதாம் நூற்றாண்டின் விடியலில் பெண் விடுதலை தொடர் பான கருத்துக்கள் உலகமெங்கும் துளிர்க்க ஆரம்பித்திருந்தன. குறிப் பாக ஆசியாவில் பெண்ணுரிமை கோரும் இயக்கங்கள் ஆங்காங்கே தோன்றியிருந்தன. மேற்கே துருக்கியிலிருந்து கிழக்கே சீனாவரை இவ்விடுதலையுணர்வு கரைபுரண்டோடியது. பெண்கள் மட்டுமன்றி ஆண்கள் பலரும் பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தனர். இது வெறும் தற்செயல் நிகழ்வல்ல ஆசிய நாடுகள் பலவற்றிலும் நிகழ்ந்த தேசிய விடுதலைப் போராட்டமே இத்தகைய சமூகமாற்றத்தை உருவாக்கியிருந்தது. தேசிய விடுதலைப் போராட்டத் திற்கு சமூக உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் பங்கு மிக முக்கிய மானதாகக் கருதப்பட்டது. இது பெண் விடுதலைக்கு அத்தியா வசியமானதொன்றாகவும் கருதப்பட்டது. இவ்வாறாக ஆசிய நாடு களில் தேசிய வாதிகளால் முன்னெடுக்கப்பட்ட பெண்ணுரிமைவாதக் கருத்துக்கள் இந்தியத் தேசிய வாதிகளையும் பாதித்தது. சீனத் தேசிய வாதியும் பெண்ணுரிமை வாதியுமான சியுசீன் (1875 - 1907) என்பவரின் கவிதையொன்றினையும் சொற்பொழிவொன்றினையும் பாரதி மொழிபெயர்த்தமை அவரது கருத்துக்கள் மீது பாரதிக்கு இருந்த அக்கறையினையே எடுத்துக்காட்டுகின்றது. மேலும் இந்தியத் தேசிய வாதிகளான மகாத்மாகாந்தி முதல் அன்னி பெசன்ட் வரை, பலரும் பெண்களின் முன்னேற்றம் தொடர்பாகப் பேசியும் எழுதியும் வந்தனர்.
கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்த பாதிரிமார்கள் சமுதாயத்தில் பிற்பட்ட நிலையிலிருந்த மக்களை முன்னேற்றுவதற்கு உழைத்தது போலவே பெண்களின் முன்னேற்றத் திற்காகவும் பாடுபட்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்திய சீர்திருத்த வாதிகளின் முன்னோடியாக விளங்கியவரும் பிரம்மசமாஜம் என்ற அமைப்பினைத் தோற்றுவித்தவருமான ராஜாராம் மோகன்ராயப் பெண்களின்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G52) Dr. D.6 persair

முன்னேற்றத்திற்காக அரும்பணியாற்றினார். இவரது முயற்சியாலேயே பெண்கள் உடன் கட்டை ஏறும் வழக்கம் (ஸ்தி) ஒழிக்கப்பட்டது. 1846 ஆம் ஆண்டில் ஈஸ்வர சந்திர வித்தியா சாகரரின் பணியால் மாதர் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது."
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து பெண்கள் கல்வியில் முன்னேற்றமடையத் தொடங்கினர். 1917 இல் அன்னி பெசன்ட் அம்மையாரால் தொடக்கி வைக்கப்பட்ட இந்திய மாதர் சங்கம் அகில இந்திய அடிப்படையில் பெண்களை ஒன்றுபடுத்தி அவர்களின் கல்வியறிவை வளர்க்க முற்பட்டது. 1921 ஆம் ஆண்டில் இம் மாதர் சங்கம் நாடெங்குமாக 48 கிளைகளையும் 27000 அங்கத்தவர்களையும் கொண்டு விளங்கியது. இதே காலத்தில் பல்கலைக்கழகப் பெண்கள் சங்கம் (1920), பெண்களின் தேசிய சபை (1925) முதலிய பெண்கள் அமைப்புக்களும் செயற்பட ஆரம்பித் திருந்ததை அறியமுடிகின்றது.* இத்தகைய அமைப்புக்களின் தோற்றம் இந்தியப் பெண்ணினம் விழித்தெழத் தொடங்கியதையே எடுத்துக் காட்டுகின்றது.
அன்னி பெசன்ட்டின் அரசியல் ஈடுபாடு பெண்ணுலகை மேலும் விழிப்புறச் செய்தது. 1917 ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் அம்மையார் @sögðu Ggbäuld, æTsÉ1&yń6ö (Indian National Congress) uDITsbsrú løsbGg, தலைமை தாங்கினார். அம்மையாரின் அரசியல் பிரவேசம் சரோஜினி நாயுடு, பீ.அம்மான் போன்ற தலைவிகளையும் உருவாக்க உதவியது.
இந்திய தேசிய விடுதலை இயக்கத்திற்குக் காந்தியடிகள் தலைமை தாங்கிய பின்னர் ஆயிரக் கணக்கான பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கு பற்றினர். இதனால் சமுதாயத்தில் தமது விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த பெண்கள் தேசத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற புதியதொரு சமுதாய மாற்றத்தை உருவாக்கியது.
தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகள் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க சங்கம் ஆண்களைப் போலவே பெண்களும் எல்லாத் துறைகளிலும் சமமாக முன்னேற வேண்டும் என்ற கொள்கையுடையதாக இருந்தது. இதன் செயற்பாடுகளும் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவின.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gs) 0ா.ம.இரகுநாதன்

Page 41
இருபதாம் நூற்றாண்டின் விடியலில் பாரதியின் வருகை, தமிழகத்தில் புதியதொரு எழுச்சியினையே ஏற்படுத்தியது. 1905 இல் சென்னையிலிருந்து வெளிவந்த சக்கரவர்த்தினி என்ற இதழில் பாரதியார் பெண்களின் முன்னேற்றம் குறித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மேற்படி கட்டுரைகளும் பெண்விடுதலை தொடர்பாக அவர் பாடிய பாடல்களும் தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின.
1927 இல் இந்திய தேசிய இயக்கத்தைச் சேர்ந்த திரு.வி. கல்யாண சுந்தரனார் “பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணைநலம்” என்ற நூலை வெளியிட்டார். திரு.வி.க.வின் இம் முயற்சி பெண்விடுதலை, பெண்களின் முன்னேற்றம் என்பன தொடர் பாகத் தமிழகத்திலுள்ள தேசிய வாதிகளுக்கிருந்த அக்கறையினை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
மேலும் தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக பெரியாரின் சுயமரியாதை இயக்கம் ஆற்றிய பணியும் குறிப்பிடத்தக்க தாகும். இவ்வியக்கத்தின் சார்பாக இராமாமிர்தம் அம்மையார், டாக்டர்.தர்மாம்பாள் ஆகியோர் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரும்பணி புரிந்தனர்.
இவ்வாறாகப் பாதிரிமார்கள், சமுதாயச் சீர்திருத்தவாதிகள், தேசிய விடுதலை இயக்கத் தலைவர்கள், பெண்ணினத் தலைவிகள் முதலிய பலரும் ஆற்றிய பணிகளால் இந்தியப் பெண்ணினம் விழிப் புற்றதோடு மரபுசார்ந்த வாழ்க்கை முறைகளோடு முரண்படவும் ஆரம் பித்தது. இத்தகைய முரண்பாடும் மோதலும் பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கலைக் கூர்மைப்படுத்தியதுடன் இச் சிக்கலுக்குத் தீர்வு காணவேண்டிய தவிர்க்க முடியாத நிலையினையும் தோற்றுவித்தது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s Dr.ம.இரகுநாதன்

2.3.3. பெண்பற்றிய ஈழத்துத்தமிழரின் கருத்துநிலை
ஈழம் புவியியல் அடிப்படையில் இந்தியாவிற்கு அயல் நாடு. ஆனால் ஈழத்துத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இந்தியாவைத் தமது அயல் நாடாக மட்டுமன்றித் தாய் நாடாகவும் கருதி வருகின்றனர். இந்தியாவில் தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களும் ஈழத்துத் தமிழர்களும் பண்பாட்டு ஒருமைப் பாடுடையவர்கள், தாய்நாடு, சேய்நாடு என்ற உணர்வினாலும் பண்பாட்டு ஒருமைப்பாட்டினாலும் தமிழ் நாட்டு மக்களைப் பாதிக்கின்ற கருத்துக்கள் ஈழத்துத் தமிழர் களையும் பாதிப்பதுண்டு. இந்த வகையில் இந்தியாவில் தோற்றம் பெற்ற பெண்விடுதலை உணர்வு தமிழகத்தையும் விழிப்புறச் செய்த போது அதன் சேய் நாடான ஈழத்தில் வாழ்ந்த தமிழ் மக்களிடையே எத்தகைய பாதிப்பினை ஏற்படுத்தியது என்பதை நோக்குவது அவசியமாகும்.
மேற்கு நாட்டவரின் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக பிரித்தானி யரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை மக்களின் தேசிய உணர்வானது சமய, சமூக மறுமலர்ச்சி சீர்திருத்த இயக்கங்களின் மூலமாகவே வெளிப்பட்டது. இவை மேற்கு நாட்டுக் கலாசாரத்திற்கும் கிறிஸ்தவ மதப் பரம்பலுக்கும் எதிராகச் செயற்பட்டன. மேற்கு நாட்டுக் கலாசார மும் கிறிஸ்தவ மதமும் ஈழத்தவரின் கலாசாரத்தைச் சீர்குலைத்து விடும் எனக் கருதினர். இதனால் ஈழத்தில் தோற்றம் பெற்ற தேசிய உணர்வு ஈழத்துப் பண்பாட்டுப் பாரம்பரியங்களை எதிர்ப்பதாகவுமே அமைந்தது. இதனால் இத்தேசிய உணர்வு முழு அளவிலான தேசிய வாதமாகவோ விடுதலை இயக்கமாகவோ வளரமுடியவில்லை. இது பற்றி குமாரி. ஜெயவர்த்தனா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்த எதிர்ப்புணர்வு முழு அளவிலான தேசிய வாதமாகவோ விடுதலை இயக்கமாகவோ வளரவில்லை. அது. சமூகத்தின் மத, பண்பாட்டு எதிர்ப்பின் எல்லைக்குள்ளேயே நின்று விட்டது மாத்திரமன்றிப் பின்னர் இனவாதமாகவும் சீரழிந்தது.”*
இவ்வாறு மத, பண்பாட்டு எல்லைக்குள் தன்னைக் குறுக்கிக் கொண்டு பாரம்பரியங்களைப் பேணும் முயற்சியில் ஈடுபட்ட தேசிய வாதம் பெண்கள் பற்றிய கருத்துக்களிலும் பாரம்பரியத்தையே பின் பற்றியது. பெண்கள் பாரம்பரியத்தோடு ஒத்து ஒழுக வேண்டியவர்களா கவும் அதிலிருந்து விலகியோர் வெறுக்கத் தக்கவர்களாகவும் கருதப்பட்டனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gss) Dr. ID-6pergeir

Page 42
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்ற சைவ மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தையான ஆறுமுகநாவலர் பெண்கள் பற்றிக்கூறும் கருத்துக்கள் சைவ அற, நீதி நூல்களில் கூறப்பட்ட கருத்துக்களின் சாரமாகவே அமைந் துள்ளன. சைவத்தையும் அதன் சாத்திர, பிரமான நூல்களையும் பாதுகாக்க முற்பட்ட நாவலர் பெண்கள் பற்றிய பாரம்பரியமான கருத்துக்களையே எதிரொலிப்பது புதுமையானதாக இல்லை. இவரது பாலபாட நூல்களில் பெண்கள் தொடர்பாகப் பின்வரும் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
“பெண்களுக்குக் கற்பாவது விவாகஞ் செய்யுமுன் பிதா மாதாக் களாலும், விவாகஞ் செய்த பின் கணவனாலும் கற்பிக்கப்பட்டபடியே நீதி வழுவாமல் ஒழுகுதலாகும். பெண்கள் இளமைப் பருவத்திலே பிதாவினாலும், யெளவனத்தில் கணவனாலும், மூப்பிலே புத்திரனாலும் காக்கத் தக்கவர்; ஆகையால் ஒருபோதும் பெண்கள் சுவாதீனரல்லர். தகப்பன் கணவன் பிள்ளைகள் இவர்கள் இல்லாமல் தனித்திருக்க விரும்பும் பெண் பிறந்த குலம், புகுந்த குலம் இரண்டுக்கும் வசையை உண்டாக்கி விடுவள்”*
“பெண்களுக்கு விவாகமே உபநயனமாகும். கணவனுக்குப் பணிவிடை செய்தலே குரு வழிபாடாகும். சமையல் முதலிய வீட்டு
வேலையே அக்கினி காரியமாகும்.”*
“மனைவியானவள் தனக்கு ஈசுர சங்கற்பத்தினால் வாய்த்த கணவன் அழகில்லாதவனாயினும் நற்குணம் இல்லாதவனாயினும், வியாதியானவனாயினும் அவனைச் சிறிதும் அவமதியாது நன்கு மதித்து வழிபடல் வேண்டும்.”*
மேற்படி வாசகங்களினுடாக நாவலர் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டியவர்கள் என்றும் ஆண்களுக்குப் பணிவிடை செய்வதே அவர்களது கடமை என்றும் கணவன் எத்தகைய குறைபாடுடையவனாக இருப்பினும் பெண் அதனைப் பொருட்படுத்தக் கூடாது என்றும் அறுதியிட்டுக் கூறியுள்ளார். மேலும் நாவலர்,
“விவாகஞ் செய்யப்படுங் கன்னிகை. தனக்கு இளையவளா கவும், முன்னொருவராலும் விவாகஞ் செய்யப்படாதவளாயும். அவலஷணம் இல்லாதவளாயும் இருத்தல் வேண்டும்.” என்றும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G50) Dr.ம.இரகுநாதன்

கூறுவதால் விதவைகள் மறுமணம் ச்ெய்வதையும் அழகிற்குறைந்த பெண்களை விவாகஞ் செய்வதையும் இவர் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகின்றது.
ஆணை முதன்மைப்படுத்தும் பாரம்பரிய சமுதாய அமைப்பினைப் பாதிக்காத வகையில் தனது கருத்துக்களைக் கூற முற்பட்ட நாவலர் பெண்கள் பற்றிய மரபுரீதியான கருத்துக்களையே திரும்பவும் கூறியிருக்கின்றார்.
நாவலரின் காலத்திற்குப்பின்னர் தமிழ் மக்களிடையே தேசியக் கருத்துக்களையும் சமூகசீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்ப முயன்ற சிலரும் பெண்கள் தொடர்பான விடயத்தில் பிற்போக்குத் தனமான கருத்துக்களையே கூறியுள்ளனர். இவர்களில் பாவலர் துரையப்பா பிள்ளை முக்கியமானவர். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த *உதயதாரகை” “Morning Star” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றியவர். தெல்லிப்பழையில் மஹாஜனக் கல்லூரி என்ற பெயரில் இந்துக் கல்லூரி ஒன்றை நிறுவியவர்; சிறந்த கல்வியாளர்; சமூக சீர்திருத்தவாதி எனப் புகழ் பெற்றவர்; சாதி ஒழிப்பு, மதுவிலக்கு, கல்வி, கைத்தொழில் முன்னேற்றம் போன்றவை பற்றி ஆணித்தரமான கருத்துக்களைத் தெரிவித்தவர். எனினும் மேனாட்டு நாகரிகத்தால் தமிழ்ப் பெண்கள் கவரப்படுவதை அவரால் பொறுக்க முடியவில்லை. தமிழ்ப் பெண்கள் தமது பாரம்பரிய ஆடை அலங்காரங்களைக் கைவிட்டு அந்நிய முறைகளைப் பின்பற்றுவதை இவர் பின்வருமாறு கேலி செய்தார்.
“கொண்டைக்குப் பூச்சூடும் குணம் போச்சு - நாடாக்
கொண்டு மயிர் முடிக்குங் காலமாச்சு தண்டையா தசரங்கள் தவிப்பாச்சு - பெண்கள்
சப்பாத்துள் நொண்டுமவ காலமாச்சு.”*
இவ்வாறே ஆண்களைப் போலவே பெண்களும் உயர் கல்வி கற்க வேண்டும் என்ற கருத்தையும் இவர் எதிர்க்கின்றார். பெண் களுக்கு வீட்டு நிர்வாகத்தை நடாத்தக் கூடிய சுகிர்த கலை கற்பித்தலே போதுமானது; பீ.ஏ, எம்.ஏ, பட்டங்கள் பயன்தரப் போவதில்லை என்பதே இவரது கருத்தாகும். இதனைப் பின்வருமாறு பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் @ Dr. ம.இரகுநாதன்

Page 43
“ஆண்களைப் போலவே பெண்களுக் குஞ்சரி
யாக உயர் கல்வி வேண்டுமெனும் வீண்கதை யாற்சில பெண்கள் படும்பாடு விள்ளற் கரிதடி சங்கமின்னே”
“வீட்டினிற் சீவிய மின்பம் நிறைந்து விளங்குதற் கேற்ற சுகிர்த கலை ஊட்டுதல் போதும் பீ.ஏ, எம்.ஏ பட்டம் உதவாது பெண்கட்குச் சங்கமின்னே.”*
எனவே பாரம்பரிய இனத்துவ அடையாளங்களையம் தனித் தன்மைகளையும் பிரதிபலிக்க வேண்டிய பெண்கள் அவற்றைக் கைவிடும் போது சமுதாயத்தின் கண்டனத்திற்கு உள்ளாகின்றனர்; கேலி செய்யப்படுகின்றனர். இக் கேலித் தொனியையும் கன்டனத்தை யும் துரையப்பா பிள்ளையிடமும் காணமுடிகின்றது. இத்தகைய பெண் களைச் சமூகத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்கும் தன்மையும் காணப்பட்டது. இவ்வாறு வேறுபடுத்திப் பார்க்கப்பட்ட பெண்களை ஆரம்ப கால ஈழத்துத் தமிழ் நாவல்களிலும் காணலாம். சான்றாக ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளையின் கோபால நேசரத்தினம் என்னும் நாவலில் வருகின்ற கிறிஸ்தவ மதப் பெண்ணான நேசரத் தினத்தைக் குறிப்பிடலாம். நேசரத்தினத்தை மருமகளாக ஏற்கத் தயங்கிய கோபாலனின் தாய் அவள் பற்றிக் கூறும் கருத்துக்கள் பாரம்பரியத்தை மீறியதற்கான எதிர்ப்புணர்வின் வெளிப்பாடாகவே அமைகின்றன.
“போதகருடைய மகளை வைத்துத் தாபரிக்க உன்னால் முடியுமா உன்னை விற்றாலும் அவளுடைய உடுப்புக்குக் காணாதே; சட்டையென்ன, பாவாடையென்ன, பவுடர் மாவென்ன, சவர்க்கார மென்ன, கட்டப் பூட்ட நகையென்ன, மூக்குக் கண்ணாடியென்ன, கைமேசு கால்மேசு சப்பாத்தென்ன, இவைகளுக்கு நீ என்ன செய்வது ow an an ww.a. அடுக்களைப் பக்கம் அவர்கள் போவதே கிடையாது; சமையலுக்கு வேலைக்காரி வேணும்; சமைத்து வைத்ததை உண்ணும் படி கொண்டு வந்து கொடுப்பதற்கு ஒரு பையன் வேணும்; இன்னும் மற்றை வீட்டுக் கருமங்கள் பார்ப்பதற்கும் வேலைக்காரர் வேணும்"
மேற்படி கூற்று மேற்கு நாட்டு ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி கல்வி கற்ற ஒரு தமிழ்ப் பெண்ணை எடுத்துக்

காட்டுவதோடு இவளின் நடையுடை பாவனைகளை யாழ்ப்பாணத்துச் சைவ நடுத்தர வர்க்கத்தினர் விரும்பாததையும் எடுத்துக் காட்டுகிறது.
இருபதாம் நூற்றாண்டில் தென்னாசிய நாடுகளில் உருவான சமூக சீர்திருத்த இயக்கங்களின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று பெண் கல்வியாகும். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ப தில் பலரும் ஆர்வங் காட்டினர். எனினும் பெண்களுக்கு எத்தகைய கல்வி புகட்டப்பட வேண்டும் என்பதிலேயே கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. இலங்கைத் தேசிய வாதிகள் பெண்களைச் சிறந்த மனைவியராகவும், தாய்மாராகவும் ஆக்கி வீட்டு வேலைகளைக் கவனிக்கக் கூடிய அளவுக்கு கல்வி கற்பிப்பதே போதுமானது எனக் கருதினர். பாவலர் துரையப்பாபிள்ளை இக்கருத்தினையே பிரதிபலித் தார். யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியாக இலங்கைச் சட்ட சபையில் அங்கத்துவம் வகித்த சேர். பொன்னம்பலம் - இராமநாதனும் பெண்களின் கல்வியில் அக்கறை கொண்டிருந்தார். இதற்காகவே 1931 இல் மருதனாமடத்தில் ஒரு பெண்கள் கல்லூரியையும் நிறுவினார். எனினும் பெண்களுக்கான கல்வி சமய அடிப்படையில் அமைந்து அவர்களை இந்து தர்மத்தின் படி ஒழுகக் கூடிய சிறந்த மனைவியராகவும் தாயாராகவும் ஆக்குவதற்கு உதவ வேண்டும் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. எனவே இவரும் பெண்ணை வீட்டுக்குரியவளாகவே கருதினார். இதனாலேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படுவதையும் இவர் எதிர்த்தார்.
23.4.ஈழத்துத் தமிழரின்டயே பெண்விடுதலை
தொடர்பான சிந்தனைகள்
ஈழத்தில் சமய மறுமலர்ச்சியாளர்களும் தேசிய வாதிகளும் சமய பண்பாட்டுப் பாதுகாப்பு என்ற அளவிலேயே சிந்தித்துச் செயற்பட்டதால் பெண்கள் பாரம்பரியத்தைப் பேண வேண்டியவர்கள் என்ற கருத்தினையே முன்வைத்தனர். ஆனால் அயல் நாடான இந்தியாவிலே இதே கால கட்டத்தில் பெண்களின் சமூக விடுதலை, கல்வி தொடர்பாகப் பல முற்போக்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டி ருந்தன. இந்தியத் தேசிய வாதிகள் பலர் பெண்விடுதலை என்ற கருத்தாக்கத்தையே கையாண்டனர். ஆனால் இலங்கையில் தேசிய வாதிகள் எவரிடமும் இத்தகைய கருத்தாக்கம் இருக்கவில்லை. இந்திய தேசிய வாதத்திற்கும் இலங்கைத் தேசிய வாதத்திற்கும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (59) Dr.ம.இரகுநாதன்

Page 44
இடையில் காணப்படும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுள் இதுவும் ஒன்றாகும். எனவே ஈழத்துத் தமிழ் மக்களிடையே பெண்கள் தொடர்பாக நிலவிய கருத்தாக்கம் பாரம்பரியமானதாகும். சுதந்திர இலங்கையிலும் நீண்ட காலமாக இக் கருத்தே ஆட்சி செலுத்தியது.
1970களின் பின்னர் ஏற்பட்ட அரசியல், சமூக நிலைமைகளின் மாற்றத்தைத் தொடர்ந்தே பெண்கள் தொடர்பான கருத்து நிலையிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. 1970 களிலிருந்து தமிழ் மக்களது அரசியலில் தனிநாட்டுக் கோரிக்கை வலுவடைந்தது. 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழ் நாட்டுக் கோரிகையை முன்வைத்துப் போட்டியிட் டனர். தமிழர் வாழும் வடக்கிலும், கிழக்கிலும் இவர்களுக்குக் கிடைத்த அமோக வெற்றியால் திரு. அ. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். இதே கால கட்டத்தில் நாட்டில் மீண்டும் ஒரு இனக் கலவரம் உருவானது. பாரளுமன்ற அரசியலில் இளைஞர்கள் வெறுப்புக் கொள்வதற்கும் நம்பிக்கையை இழப்பதற்கும் இக் கலவரங்களும் வழிசமைத்தன. பாராளுமன்ற அரசியலில் நம்பிக் கையை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்ட வழிமுறையினைத் தேர்ந்தெடுத்தனர். இந்த இயக்கங்களின் செயற்பாடுகளில் ஆண்களுடன் பெண்களும் இணைந்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்கள் நிதி சேகரிப்பு. பிரசாரம், செய்திப்பரிமாற்றம் போன்ற பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டனர். எனினும் காலப்போக்கில் இவர் களின் பணி விரிவுபடுத்தப்பட்டது.
1980 களின் பின் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தீவிர மடைந்த போது இலங்கை யுத்த பூமியாகவே மாறியது. வசதியான குடும்பங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் புலம் பெயர்ந்து வெளிநாடு களில் தஞ்சம் புகுந்தனர். குறிப்பாக யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்க இளைஞர்களே இவ்வாறு புலம் பெயர்ந்தனர். யுத்த நிலைமைகளாலும் பொருளாதாரத் தடைகளாலும் தொழில் வாய்ப்பு, கல்விவாய்ப்பு போன்ற அனைத்தையும் இழந்த இன்னும் ஒரு பகுதி இளைஞர்கள் போராளிகளாக மாறினர். இவ்விரு வகையாகவும் பெரும்பாலான இளைஞர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்த போது குடும்பத்தில், சமூகத்தில் இளைஞர்களின் தொகை குறைவடைந்தது. இதனால் திருமண வயதை அடைந்த பெண்கள் பலரும் தமக்கேற்ற மணமகனைத் தேடுவதில் பெரும் சிரமத்தினை எதிர் நோக்கினர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (6) Dr. ம.இரகுநாதன்

தமிழர் சமுதாயத்தில் திருமணம் சாதி, சமூக உறவுகளை அனுசரித்தே நடைபெறுவதால் இது மேலும் சிக்கலைக் கொடுத்தது.
பெண்களை விட ஒப்பீட்டளவில் குறைவாக இருந்த படித்த இளைஞர்கள் திருமணச் சந்தையில் விலை பேசப்பட்டனர். இவர்கள் சீதனம் (Dawri) அன்பளிப்பு (Donation) என்ற பெயர்களில் பெண் வீட்டாரிடமிருந்து பெருமளவு பணத்தை எதிர்பார்த்தனர். ஏற்கெனவே புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்களால் யாழ்ப்பாணத் திற்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணம் திருமண விடயத்தில் மேலும் போட்டியினை உருவாக்கியது. இப் போட்டியில் தோற்றுப் போனவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டுப் பணம் இல்லாத யாழ்ப் பாணப் பெண்களே. இத் தோல்வியால் இப் பெண்களுக்குத் திருமண வாழ்வு கனவாகவே அமைந்தது. இத்தகைய நிலை சமூகத்தில் பரவிய போது திருமணமாகாமல் இருக்கின்ற பெண்களின் தொகை அதிகரித்தது. இதனால் சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளும் உருவாகின. இந்நிலையில் திருமணத்திற்குத் தடையாகவுள்ள சீதனக் கொடுமை என்பது தனியே பெண்களின் பிரச்சினையாக மட்டுமன்றி ஒரு சமுதாயச் சிக்கலாகவே கருதப்பட்டது. சீதனக் கொடுமையை ஒரு சமூதாயச் சிக்கலாகவே மக்கள் கருதிய நிலையின் வெளிப்பாடா கவே இளைஞர் இயக்கங்களால் கொண்டு வரப்பட்ட சீதன ஒழிப்புச் சட்டத்தைக் கருதலாம்.
நாட்டில் ஏற்பட்ட பல்வேறு இனக்கலவரங்களினாலும் போர்ச் சூழலினாலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இளம் பெண்களில் ஒரு சாரார் கணவனை இழந்து விதவைகளாயினர். இன்னொரு சாரார் கணவனை அந்நிய நாடுகளில் தஞ்சம் புக வைத்துவிட்டுத் தனிமையில் வாடினர். திருமணமாகாத இளம் பெண்கள் ஆயுத பாணிகளாலும் காடையர்களாலும் வரக்கூடிய ஆபத்தினை எதிர் நோக்கிய வண்ணம் அச்சத்தோடு வாழ்ந்து வந்தனர். பலர் பாலியல் வல்லுறவுகளுக்கு உட்படுத்தப்பட்டுப் பெண்மையை இழந்தும் நின்றனர். இத்தகைய நிலைமைகளால் பெண்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் தனியே பெண்களின் பிரச்சினைகளாக மட்டுமன்றிச் சமூகத்தைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளாக உணரப்பட்ட போது பெண் பற்றிய பாரம்பரியமான கருத்து நிலை மாற்றமுற வேண்டும் எனப் பலரும் சிந்தித்தனர். இந்நிலையில் பெண்களைப் பாதிக்கின்ற கற்பு, விதவைகளின் மறுமணம் ஆகிய விடயங்கள் பற்றிய புதிய சிந்தனை கள் உருவாகின. சமூகத்தில் உருவான அச்சிந்தனைகள் ஆக்க இலக்கியங்களையும் பாதித்தன. ஈழத்துத்தமிழ்நாவல்கள் GD Dr.ம.இரகுநாதன்

Page 45
1980களில் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்த சூழலில் போராட்டத்தில் பெண்களும் பெருமளவில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். போர்க்களத்தில் பெண்கள் படையணிகளும் ஆண்களோடு சமமாக நின்று போரிட்டன. இதனால் வீட்டுக்குரிய வளாகக் கருதப்பட்ட பெண்ணின் சமூக நிலை மாற்றமுற்றது. வீட்டுக்குரியவளான பெண்ணை வீதிக்குக் கொண்டு வருவதற்கும் ஆயுத பாணியாகக் களத்தில் நிறுத்துவதற்கும் தடையாக இருந்தது பெண்பற்றிய பாரம்பரியமான கருத்து நிலையே. அதனால் பெண்களின் சுயமான செயற்பாடுகளுக்குத் தடையாகவுள்ள சமூகத் தளைகளிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற சிந்தனை வலுப்பெற்றது. இச்சிந்தனை வலுப் பெற்ற போது குடும்ப அமைப்பினை உடைத்து வெளியேறும் பெண்களின் தொகை சமூகத்தில் இன்னும் அதிகரித்தது.
குடும்பத்தை விட்டு வெளியேறிய பெண் போராளியாகவும், வெளிநாட்டிற்கு வேலை தேடிச் செல்பவளாகவும் ஏன் தனது தேவைகளுக்காக வீதியில் சைக்கிளில் ஒடிச் செல்பவளாகவும் கூட மாறினாள். அத்தகைய சமூக நிலையில் பெண்கள் பற்றிய கருத்துநிலை பெரிதும் மாற்றமுற்றது. கற்பு, குடும்பம் என்ற வேலி களையெல்லாம் உடைத்தெறிந்து புதுமைப் பெண்ணாகப் புறப்படுகின்ற பெண்கள் சமூகத்தில் உருவாகினர். தம்மீது மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளையும் சமூகத்தளைகளையும் உடைத்தெறியப் பெண்களே புறப்பட்ட போது ஆண்களும் அதனை உணர்ந்து கொண்டனர். இதனால் பெண்களின் விடுதலை பற்றி ஆண்களும் சிந்தித்தனர். இத்தகைய சமூக நிலைமைகளால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் அனைவரையும் பாதிக்கும் சமுதாயச் சிக்கல்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
23.5. ஆக்க இலக்கியங்கள் .
பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் சமுதாயத்திலுள்ள அனைவரையுமே பாதிக்கத்தக்க நிலையை அடைந்த போது மகளிர் விடுதலை அமைப்புக்கள் மாத்திரமன்றி சமூக நலனில் அக்கறை யுள்ள பலரும் இது பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் இப்பிரச்சினைகள் ஒரு சமுதாயச் சிக்கலாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இத்தகையதொரு நிலையை உருவாக்குவதில் ஆக்க இலக்கியங் களும் குறிப்பிடத்தக்க பணியை ஆற்றியிருக்கின்றன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G62) Dr.ம.இரகுநாதன்

ஈழத்துத் தமிழ்ப் புனைகதைகளைப் பொறுத்த வரையில் ஆரம்ப காலப் படைப்புக்களிலேயே பெண்களின் பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. மங்கள நாயகம் - தம்பையாவின் நொறுங் குண்ட இருதயம்” என்னும் நாவலில் ஆணாதிக்கத்தால் துன்பப்படும் கண்மணி, பொன்மணி ஆகிய இரு பெண்களினதும் அவல வாழ்வு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வெளிவந்த கோபால நேசரத்தினம், துரைரத்தினம் - நேசமணி, முதலிய நாவல் களிலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெற்றுள்ளன.
சிறுகதைகளைப் பொறுத்த வரையில் தொடக்க காலப் படைப்புக்களில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் தனிக் கவனம் பெறவில்லை என்றே கூறலாம்.
சிறுகதைகளைப் போன்றே தொடக்க காலக் கவிதைகளிலும் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் தனிக்கவனம் பெறவில்லை.
1960 களின் பின்னர் வெளிவந்த புனைகதைகளிலும் கவிதை களிலும் ஆரம்பத்தில் சாதியம் சார்ந்த விடயங்களே பிரதான இடத்தைப் பெற்றுக் கொண்டன. எனினும் இக்காலப் புனைகதைகளில் பெண் களின் பிரச்சினைகளும் ஆங்காங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. 1970 களின் பின்னர் வெளிவந்த பெருமளவு குடும்ப நாவல்களிலும் சமூக நாவல்களிலும் பெண்களின் பிரச்சினைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. காதல் நிறைவேறாமை, சீதனத்தால் திருமணம் தடைப்படுதல், கற்புத் தொடர்பான சிக்கல்கள் முதலிய அம்சங்கள் இக் கால நாவல்களில் இடம் பெற்றுள்ளன. இவை விரிவாக ஆய்வு செய்யப்படும்.
1970 களிலும்அதன் பின்னரும் குறமகள், பவானி, ந.பாலேஸ்வரி, மண்டூர் அசோகா, யாழ் நங்கை, தாமரைச் செல்வி முதலிய பல பெண் எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் பெண்களின் பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
1980 களில் வெளிவந்த கோகிலா மகேந்திரன், செ. கணேசலிங்கன், சந்திரா - தியாகராஜா முதலியோரின் புனைகதை களில் பெண்களின் பிரச்சினைகள் தனிக் கவனம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G3) 0ா.ம.இரகுநாதன்

Page 46
கவிதைகளைப் பொறுத்த வரையில் 1970 களில் கவியரங்கக் கவிதைகளில் பெண்களின் பிரச்சினைகள் எடுத்துக் கூறப்பட்டன. காரை. செ. சுந்தரம்பிள்ளை கவிஞர் கந்தவனம் முதலியோரின் இத்தகைய கவிதைகள் பின்னர் நூலுருப் பெற்றிருக்கின்றன.
1980 களின் பின்னரைப் பகுதியில் பெண்போராளிகளின் கவிதைகள் வெளிவந்த போது அவை பெண்களின் பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறின. இக்காலச் சூழலில் வெளிவந்த கவிதைகளில் பெண்களின் பிரச்சினைகள் புதியதொரு பரிமாணத்தைப் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. சொல்லாத சேதிகள், விடியலின்கீதம் முதலிய கவிதைத் தொகுப்புக்கள் இப் புதிய பரிமாணத்தை எடுத்துக் காட்டுகின்றன.
கவிதைகளில் பெண்களின் பிரச்சினைகள் பெற்றுக் கொண்ட தனிக்கவனத்தை நாவல்களிலும் சிறுகதைகளிலும் காணக்கூடியதாக இல்லை. 1980 களின் பிற்பகுதியில் வெளிவந்த ஒருசில நாவல்கள் தவிர ஏனையவற்றுள் பல்வேறு பிரச்சினைகளையும் கூறும் போது பெண்களின் பிரச்சினைகளையும் கூறுவதையே அவதானிக்க முடிகின்றது. இதனால் பெண்களின் பிரச்சினைகளை மட்டுமே கூறும் நாவல்களை அதிகம் காணமுடியாத நிலையே உள்ளது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G4) Dr.ம.இரகுநாதன்

இயல் இரண்டு
அடிக்குறிப்புக்கள்.
1. இளங்கீரன்,
2. சிவத்தம்பி,கா.,
3. வெகுஜனன், இராவணா.,
4. மேலது,
5. சிவத்தம்பி, கா.,
முஸ்லீம்களும் சாதிகளும், LDST860)u LD6)ft, 1959, யாழ்ப்பாணம், ப. 27.
யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், 1993, கொழும்பு, ப.7.
சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், 1989, u JTIġILIT6OOTLb, L. 18.
L. 19 - 20.
ஈழத்தில் தமிழ் இலக்கியம், 1978, சென்னை, ப. 168.
. இப்பட்டியல் வெகுஜனன், இராவணா ஆகியோரின் மேற்படி
நூலிலிருந்தும் கே.டானியலின் “தீண்டாமை ஒழிப்பு இயக்கம்” என்னும் கட்டுரையிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும். இக் கட்டுரை 1979 இல் வெளியான வெகுஜன இயக்க மலரில் இடம் பெறாமல் தணிக்கை செய்யப்பட்டது என்ற குறிப்புடன் கல்லச்சுப் பிரதியாக வெளியிடப்பட்டுள்ளது. வெளியீட்டு விபரம் எதுவும் தரப்பட
வில்லை.
7. டானியல், கே,
தீண்டாமை ஒழிப்பு இயக்கம், மேற்படி கட்டுரை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
* (5) 0ா.ம.இரகுநாதன்

Page 47
8. சத்தியசீலன், ச,
9. வெகுஜனன், இராவணா.,
10.மேலது,
11. சத்தியசீலன், ச,
12. வெகுஜனன், இராவணா,
13.மேலது,
14. மேலது,
15. டானியல், கே,
16. வெகுஜனன், இராவணா,
17.மேலது,
18. மேலது,
19. பக்த வத்சல பாரதி, சீ,
20. கைலாசபதி, க,
21. பாலசுப்பிரமணியம், கு. மா.,
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசும் ஹன்டி பேரின்ப நாயகமும் - ஒரு மீள் மதிப்பீடு, 1999, கொக்குவில்.
மேலது ப. 51.
L. 54.
மேலது, ப. 55.
மேலது ப. 55
Lu. 56
J. 60
மேற்படி கட்டுரை
மேலது ப. 87
. 93
L. 96
பண்பாட்டு மானிடவியல், 1990, சென்னை, ப 293,
பண்டைத் தமிழர் வாழ்வும்.
வழிபாடும், 1991, சென்னை, ப. 31.
பண்டைத் தமிழர் சமுதாய வளர்ச்சி, 1987, குடியாத்தம், ப.3.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Go)
Dr.ம.இரகுநாதன்

22.கைலாசபதி, க.,
23. மேலது,
24. மகாகவி பாரதியார்
கவிதைகள்,
25. கேசவன், கோ.,
26. மேலது,
27. முத்தையா, கே.,
28. குமாரி ஜெயவர்த்தனா,
29. மேலது,
30. மேலது,
31. மேலது,
32. மேலது,
33. அருணாசலம், க.,
தமிழ் நாவல் இலக்கியம், 1987, சென்னை ப. 20 - 21.
I. 76
சுயசரிதை, பாடல் 39, சக்தி வெளியீடு, 1957, சென்னை
இந்திய தேசியத்தின் தோற்றம், 1985, சென்னை, ப. 159,
L. 160
தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம், 1989, சென்னை, ப. 76.
இலங்கையில் இன வர்க்க முரண்பாடுகள், 1987, சென்னை, u. 24.
u. 25.
U. 26
L. 29
u. 31.
இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம், 1994, இலங்கை, u. 54.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
G) 0ா.ம.இரகுநாதன்

Page 48
34. தனிப்பாடற் றிரட்டு
முதற்பாகம்,
35. எங்கல்ஸ், பீ.,
36. லெனின், வி. இ,
37. வேதநாயகம் பிள்ளை,
குளத்தூர், முனிசீப்,
38. மேலது,
39. மேலது,
40. சித்திரலேகா, மெள,
41. Natarajan, S.,
42. யோகீசுவரன், பீ.,
43. சித்திரலேகா, மெள,
கா. சுப்பிரமணியபிள்ளை உரையுடன், 1948, சென்னை இரத்தின நாயகர் ஸன்ஸ் பதிப்பித்தது. ப. 27.
குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவ்ற்றின் தோற்றம், மூன்றாம் பதிப்பு, மாஸ்கோ ப. 91
மாதர் விடுதலை பற்றி, 1972, சென்னை, ப. 103.
பெண்கல்வி, 1950, சென்னை, L. 80
Lu. 19.
Lu. 21.
பாரதியும் பெண் விடுதலையும், தாயகம், மலர் 1, இதழ் 4,
மார்கழி 1983, யாழ்ப்பாணம், U. 17.
A Century of social Reform in India, 1962, Bombay-, p. 10.
தமிழ்க் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள், 1985, சென்னை,
. 177.
இலங்கையில் இனத்துவமும் சமூக
(பதிப்பாசிரியர்) மாற்றமும், தமிழ்ப் பதிப்பு 1985,
இலங்கை, ப. 153, 19 ஆம்
நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G8) Dr.மஇரகுநாதன்

44. ஆறுமுக நாவலர், ரீலறி.
45. மேலது,
46. மேலது,
47. மேலது,
ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இலங்கையில் நிலவிய வர்க்க, இன உணர்வின் சில அம்சங்கள், குமாரி ஜெயவர்த்தனா.
பாலபாடம், நான்காம் புத்தகம், 1993, சிதம்பரம், ப. 111.
u. 78
U. 113
U. 83
48. துரையப்பாபிள்ளை, தெ. அ., சிந்தனைச் சோலை, 1960,
49. மேலது,
50. திருஞான சம்பந்தப்பிள்ளை,
LD. (86)J.,
51. Vythilingam, M.,
52. மங்கள நாயகம் தம்பையா,
யாழ்ப்பாணம், பாடல் 21, u. 74.
u. 117, 126
கோபால நேசரத்தினம், 1948, யாழ்ப்பாணம், ப. 30
Ramanathan of Ceylon the life of Sri Ponnampalam Ramanathan, Vol 1, 1971, Chunnagam, p. 555.
நொறுங்குண்ட இருதயம், 1914, தெல்லிப்பழை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr.ம.இரகுநாதன்

Page 49
இயல் மூன்று
1. சாதியம் தொடர்பான சிக்கல்கள்
1.0 அறிமுகம்
1950 ஆம் ஆண்டுகளில் ஆக்க இலக்கியம் படைத்த முற்போக்குச் சிந்தனையுடைய ஈழத்துப் படைப்பாளிகள் பலருக்கும் இலக்கியப் பொருளாக அமைந்தது ஈழத்து மண்ணில் புரையோடிப் போன சாதியக் கொடுமைகளே. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் ஆகிய பல்வகைப் படைப்புகளிலும் சாதியத்தின் கொடுமைகள் எடுத்துக் காட்டப்பட்டாலும் நாவல் இலக்கியத்திலேயே இவை பற்றிய விரிவான பதிவுகள் இடம் பெற்றன. இந்த வகையில் இளங்கீரன், செ. கணேசலிங்கன், அகஸ்தியர், டானியல், சொக்கன், செங்கை ஆழியான், தெணியான், செ. யோகநாதன், தி.ஞானசேகரன், நா.சோமகாந்தன் முதலிய பலரின் படைப்புக்கள் குறிப்பிடக் கூடியனவாக அமைந்துள்ளன. இவர்களின் படைப்புகளில் எடுத்துக் காட்டப்படுகின்ற சாதியம் தொடர்பான சமுதாயச் சிக்கல்களும் அச்சிக்கல்களுக்கு அவர்கள் கூறுகின்ற தீர்வுகளும் இங்கு ஆய்வு செய்யப்படுகின்றன.
1.1. சாதியை மீறிய காதல்
உயர் சாதியினர் எனக் கூறிக்கொள்பவர்கள் தாழ்த்தப்பட்டோர் எனத் தாம் கருதும் மக்கள் மீது புரியும் அடக்கு முறைக் கொடுமைகளை ஈழத்துத் தமிழ் நாவல்களில் எடுத்துக் கூறிய முதல்வர் என்ற சிறப்பு இளங்கீரனுக்கே உரியது. அவரின் தென்றலும் புயலும் (1955) என்னும் நாவல் சாதியக் கொடுமைகளை எடுத்துக் காட்டிய ஈழத்துத் தமிழ் நாவல்களில் காலத்தால் முற்பட்டதாகும்.
இந்நாவலில் யாழ்ப்பாணத்தில் உயர் சாதியினர் எனக் கூறப்படும் சமூகத்திலுள்ள சபாபதியின் மகள் தங்கத்திற்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பூபதிக்கும் இடையே ஏற்பட்ட காதல் பற்றியும் அக் காதலுக்கு இருந்த எதிர்ப்புப் பற்றியும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G70) Dr. ID-6.Ugbirger

சபாபதி தன்னை உயர்ந்த சாதிக்காரன் எனக் கூறிக்கொள்பவர். அச் சமூகத்திற்குரிய வரட்டுக் கெளரவங்களை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருப்பவர். இதனால் தாழ்ந்த சாதிக்காரன் எனப்படும் பூபதியைத் தனது மருமகனாக ஏற்றுக் கொள்ள இவரால் முடியவில்லை.
“பரம்பரை பரம்பரையாக உள்ள வழக்கத்திற்கு மாறாக நாம் நடந்து கொண்டால் என் சந்ததிக்கே தீராப்பழி உண்டாகும். சாதி ஆசாரத்தை யெல்லாம் கடைப்பிடித்து வந்த நமது முன்னோர்க ளெல்லாம் முட்டாள்களா?. நமது வாழையடி வாழையாக வந்த வழக்கத்துக்கு மாறாக நான் எதையும் செய்ய மாட்டேன். ஏழையோ, கூனோ, குருடோ, முடமோ நம்ம சாதிக்காரன் ஒருவனைக் கொண்டு வந்து தாலியைக் கட்டச் சொல்லுங்கள். நான் தடை செய்யவில்லை. ஆனால் பூபதியை மருமகனாக்க நான் சம்மதிக்க மாட்டேன்.”
என்பது சபாபதியின் உறுதியான நிலைப்பாடு. இது அவர் வாழ்ந்த காலச் சமூக யதார்த்தம். ஆனால் உலகெங்கும் ஏற்பட்டு வருகின்ற மாறுதல்களுக்கேற்ப நாமும் மாற வேண்டும்; புதியதொரு சமுதாயத்தைப் படைக்க வேண்டும் என்பது ஆசிரியரின் கருத்தாகும். இதனையே நடராசன் என்னும் பாத்திரத்தின் கூற்று உணர்த்துகிறது.
“ஒரு தாழ்ந்த சாதிக்காரனுக்கு நம்முடைய பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுப்பது ஊரிலில்லாதவழக்கம் தான், ஆனால் இந்த ஊரிலில்லாத வழக்கம் என்பதற்காக நீதியையும் நியாயத்தையும் நாம் புறக்கணிக்கக் கூடாது. உலகத்தில் எந்த நாட்டிலும் எந்தச் சமூகத்திலும் நம்மவர்களிடையே இருக்கும் சாதி வித்தியாசங்கள் கிடையாது. உலகத்திலுள்ள நாமெல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று சொல்லிக் கொள்கிறோம். காந்தியடிகள் கூட இதைத்தான் சொல்கிறார். சாதிகள் இருக்கக் கூடாது என்று போராடினார். கீழ் சாதிக்காரர் என்று யாரும் இல்லை. எல்லாம் நாம் வைத்துக் கொண்டது தான் நாமெல்லோரும் பத்துமாதம் தாய் வயிற்றில் இருந்து பிறந்தவர்கள் தான். நம்முடைய இரத்தத்தில் வேற்றுமை யில்லை. இப்படியிருக்கும் போது கீழ்சாதியென்றும் மேல் சாதியென்றும் பிரிக்கலாமோ?-- சாதி ஒழிந்தால் தான் நம் சமூகம் முன்னேறும் என்று அறிவாளிகள் முழக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி யெல்லாம் இருக்கும் போது. பழைய வழக்கத்தை நீதிக்கும் நியாயத் திற்கும் புறம்பான வழக்கத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது தான் மதியீனம். இன்று உலகம்மாறிக் கொண்டிருக்கிறது. கால
|ஈழத்துத்தமிழ்நாவல்கள் GD Dr. LD&Erg prair

Page 50
மாற்றத்திற்கு ஒத்தபடி நாமும் மாற வேண்டும். நம்மைப் போன்றவர்கள் தான் இப்படிக் கலப்பு மணம் செய்து வைப்பதன் மூலமாக மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இன்று ஊரும் சமூகமும் ஏசினாலும் பழித்தாலும் நாளை நம்மைப் பாராட்டும்.”
நடராசனின் மேற்படி கூற்று சாதிய வேறுபாடுகளை நீக்குவதற்கு காதல் திருமணங்களை அதாவது சாதிமாறிய கலப்புத் திருமணங் களை ஊக்குவிக்க வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்தை எடுத்துக் காட்டுகின்றது.
இதனாலேயே ஆசிரியர் பூபதியையும், தங்கத்தையும் இணைத்து வைக்கின்றார். இவர்களின் கலப்புத் திருமணம் ஆசிரியர் காண விரும்பிய புதியதொரு சமூக மாறுதலின் அடையாளமே. இத்தகைய தொரு சமுதாயம் மலர வேண்டுமாயின் பழைய தலைமுறை அழிய வேண்டியது அவசியமாகும். சபாபதியின் மரணம் இதனையே உணர்த்துகின்றது.
தீண்டாமைக் கொடுமைகள் அதன் உச்சக் கட்டத்திற்கே சென்று விட்ட யாழ்ப்பாண மண்ணில் இத்தகைய கலப்புத் திருமணங்கள் சாத்தியமாகுமா? உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக நடாத்தப்படு கின்ற மக்களுடன் திருமண உறவை வைத்துக் கொள்ள உயர்சாதி யினர் முற்படுவார்களா? இவ்வாறு நோக்கும் போது இளங்கீரனின் முடிவு வெறுங் கனவாகவே அமைந்து விடும் என்பதில் ஐயமில்லை.
யாழ்ப்பாண மண்ணில் சாதியத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை நேரடியாகக் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பு டானியல், தெணியான் முதலிய படைப்பாளிகளுக்குக் கிடைத்தது போல இஸ்லாமியரான இளங்கீரனுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. எனினும் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் பெரியாரின் பகுத்தறிவு இயக்கச் சிந்தனைகளால் கவரப்பட்டதாலும் பொதுவுடைமைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதாலும் இவரால் இத்தகையதொரு நாவலைப் படைக்க முடிந்தது. இவரின் பின்வந்தவர்கள் யாழ்ப்பாண மண்ணில் நடைபெற்ற சாதிக்கொடுமைகளை நேரடியாகக் கண்டு அனுபவித்தவர்கள். அக் கொடுமைகளால் தாமும் பாதிக்கப்பட்ட வர்கள். அதனால் அவர்களின் நோக்கு நிலை வேறுபடுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G2) Dr. ம.இரகுநாதன்

சொக்கன்.
இளங்கிரனை அடுத்து சாதியம் தொடர்பான சிக்கலைப் பொருளாகக் கொண்டு நாவல் எழுதியவர் சொக்கன் எனப்படும் திரு.க. சொக்கலிங்கம் ஆவார். இவரது சீதா' என்னும் நாவல் 1963 இல் விவேகி இதழில் தொடராக வெளிவந்து பின்னர் 1974 இல் நூல் வடிவம் பெற்றது. இந்நாவலில் சாதியை மீறிய காதலினால் ஏற்படும் சிக்கல்கள் ஆராயப்படுகின்றன.
உயர்சாதியைச் சேர்ந்த செல்வரத்தினம் இளமையில் முற்போக்குச் சிந்தனைகளால் கவரப்பட்டவர். இதனால் கலப்பு மணம் செய்து சமூக சீர்திருத்தத்தை உண்டாக்க வேண்டும் என விரும்பி னார். இதன் விளைவாக தமது வீட்டில் தொட்டாட்டு வேலைகள் செய்து வந்த கோவியப் பெண்ணான சிவபாக்கியத்தை விரும்பி மணம் செய்து கொள்கின்றார். எனினும் ஊரவரின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத நிலையில் சிவபாக்கியத்துடன் சிங்கப்பூருக்குப் பயணமாகி விடுகின்றார். சிங்கப்பூரில் கிடைத்த வாழ்க்கை வசதிகள் அவரின் முற்போக்குச் சிந்தனைகளை மறக்கச் செய்து விடுகின்றன. இதனால் சிவபாக்கியம் கொடுமைப்படுத்தப்படுகின்றாள். சிவபாக்கியத்தை வெறுத்த செல்வரத்தினம் மலேயாப் பெண் ஒருத்தியையும் மணந்து கொள்கின்றார். மலேயாப் பெண்ணுக்கும் சிவபாக்கியத்துக்கும் ஒரே காலத்தில் பிரசவம் நடைபெறுகின்றது. பிரசவத்தின் போது சிவபாக்கி யத்தின் குழந்தை இறந்து விடுகின்றது. இவ்வாறே ஒரு பெண் குழந்தையைப் பிரசவித்து விட்டு மலேயாப் பெண்ணும் இறந்து விடுகின்றாள். இதனால் அவளின் குழந்தையைச் சிவபாக்கியம் வளர்க்கிறாள்.
செல்வரத்தினம் சிங்கப்பூரைவிட்டு யாழ்ப்பாணத்திற்குத் திரும்புகிறார். யாழ்ப்பாணத்தில் இவர் உற்றார் உறவினர்களுடன் சேராமல் ஒதுங்கியே வாழ்கின்றார். எனினும் இவர்களுக்கு அயலில் இருந்த பிராமணக் குடும்பம் ஒன்று இவர்களோடு நெருக்கமாகப் பழகி வருகின்றது.
பிராமணக் குடும்பச் சிறுவன் ஆத்மநாதனும் செல்வரத்தினத்தின் மகள் சீதாவும் நெருக்கமாகப்பழகுகின்றனர். படித்து கொழும்பில் உத்தியோகம் பார்த்த ஆத்மநாதன் முற்போக்குச் சிந்தனைகளால் கவரப்படுகின்றான். இதனால் சீதாவைத் திருமணம் செய்ய
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G3) Dr.ம.இரகுநாதன்

Page 51
விரும்புகிறான். ஆனால் ஆத்மநாதனின் காதலை செல்வரத்தினம் விரும்பவில்லை சீதாவை அவன் திருமணம் செய்தால் மீண்டும் ஒரு சிவபாக்கியத்தின் கதை போலவே சீதாவின் வாழ்வு பாதிக்கப்படும் என அவர் கருதினார். சீதாவும் இலட்சியப் பிடிப்பில்லாமல் ஊருக்கு உபதேசம் செய்யும் ஆத்மநாதனைத் திருமணம் செய்வதால் சாதிப் பிரச்சினை தீராது எனக் கருதி அவனின் காதலை நிராகரிக்கின்றாள்.
“சமூகம் என்பது முழுமையான ஒரு பொருள் தனிமனிதனாகிய அதன் சிறு உறுப்பு நிகழ்த்தும் புரட்சி, சமூகம் நடத்தும் புரட்சியாகி விடாது அப்படி நினைப்பது வெறும் மாயம். சாதி விட்டுச் சாதியிலே விவாகஞ் செய்தல், சமபந்தி போசனம் என்பவற்றால் சமூகத்தை விழிப்படையச் செய்யலாம் என்ற கருத்தே முட்டாள் தனமானது. சாதிக்கொடுமை போன்ற அழிவுகளைச் சமுதாயம் முழுவதும் உணர்ந்து திருந்த பொறுமையுடனும் துணிச்சலுடனும் இடைவிடாது கூட்டாகப் போராட வேண்டும்.”*
*ஆத்மநாதனை விவாகம் செய்வதன் மூலம் சமூகச் சீர்திருத்தம் செய்ய நான் முயல்வதாக நீங்கள் நினைக்கிறீர்களா ஐயா? நீங்களும் அம்மாவும் நடாத்திய நரக வாழ்க்கையை அறிந்த பின்னரும் அப்படி நான் செய்வேன் என்று எப்படி உங்களால் நினைக்க முடிந்தது.?”
எனக் கூறுகின்றாள்.
இந்நாவலினூடாக செல்வரத்தினம் சிவபாக்கியம் கலப்பு மணம் துன்பமாக முடிந்ததை எடுத்துக் காட்டி சீதாவையும் ஆத்மநாதனையும் கலப்பு மணம் செய்யவிடாது தடுக்கும் ஆசிரியர் கொள்கைக்காக கலப்பு மணம் செய்வதால் சாதியை ஒழித்துவிட முடியாது என்ற செய்தியைப் புலப்படுத்துகின்றார். எனவே சாதி மாறிய காதல் துன்பத்தையே தரும் அதனால் பயன் இல்லை என்பதே ஆசிரியரின் கருத்தாகத் தெரிகின்றது.
சொக்கனின் நாவலில் எடுத்தாளப் படுகின்ற பாத்திரங்கள் சற்று வித்தியாசமானவை. செல்வரத்தினம் உயர்சாதி வேளாளன், முதலாவது மனைவியாக வருபவள் சிவபாக்கியம் கோவியப் பெண், இரண்டாவது மனைவி மலேயாக்காரப் பெண். சாதி மாறித் திருமணம் செய்து சமூக சீர்திருத்தத்தைச் செய்ய விரும்பிய செல்வரத்தினம் தனது வீட்டில் பணிபுரிந்த கோவியப் பெண்ணையே தெரிவு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G.) − Dr.ம.இரகுநாதன்

செய்கின்றார். கோவியரின் சமூக நிலை சற்று வித்தியாசமானது. அவர்கள் பஞ்சமர்கள் அல்லர், தீண்டத் தகாதவர்களும் அல்லர், உயர்சாதியினரின் உள்வீட்டில் பணிபுரிபவர்கள். எனினும் செல்வரத் தினம் இத் திருமணத்திற்காக ஊரவர்களால் புறக்கணிக்கப்படுகின்றார்.
மலேயாப் பெண்ணின் மகளான சீதாவை விரும்புபவன் பிராமணக் குடும்பத்தவன் பிராமணர் யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் உயர் நிலையில் இல்லாதவர்கள். வேளாளர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். இந்நிலையில் பிராமணக் குடும்பத்து ஆத்மநாதன் உயர் சாதி வேளாளக் குடும்பத்து சீதாவைத் திருமணம் செய்வதால் ஏற்படும் சமூக சீர்திருத்தம் எத்தகையதாக இருக்கும் என்பது தெரியவில்லை.
இங்கு சாதிப்பிரச்சினை வேளாளர்களுக்கும் பங்சமர்களுக்கும் இடையிலானதே தவிர கோவியர், பிராமணர் போன்றவர்களுடனானதல்ல. எனவே இங்கு பிரச்சினையின் மையம் தொடப்படாமல் இருக் கின்றது. சொக்கன் தூர நின்று நழுவி விடுகின்றார். இதனால் பிரச்சினைக்கான சரியான தீர்வையும் அவர் கூறவில்லை.
யாழ்ப்பாணத்தில் சாதிப்பிரச்சினை எரியும் பிரச்சினையாக இருந்த காலகட்டத்தில் இப்பிரச்சினையை வைத்து முதன் முதலில் நாவல் எழுதியவர் சொக்கனே. 1963 இல் இவரது நாவல் விவேகி இதழில் தொடராக வெளிவந்தது. இதுவரையும் பேசாப் பொருளாக இருந்த விடயத்தைத் துணிந்து பேச முற்பட்டவர் என்ற வகையில் சொக்கன் பாராட்டப்பட வேண்டியவர். மிக விரைவிலேயே செ. கணேசலிங்கன், டானியல் முதலிய முற்போக்கு அணியைச் சேர்ந்த படைப்பாளிகள் இப் பிரச்சினையை எழுத முற்பட்ட போது அவர்கள் சாதிப் பிரச்சினை யின் மையத்தையே தொட்டுச் சென்று அதன் கொடுமைகளை அப்பட்டமாக வெளிக்காட்டி அதற்கான தீர்வையும் கூறிநின்றனர்.
செ. கணேசலிங்கன்
செ. கணேசலிங்கன் முற்போக்கு அணியைச் சேர்ந்த ஒரு முன்னணிப் படைப்பாளி இவர் சாதியம் தொடர்பாக நீண்டபயணம், போர்க்கோலம், சடங்கு முதலிய பல நாவல்களை எழுதியுள்ளார்.
இவரது சடங்கு (1966) என்ற நாவலில் யாழ்ப்பாண வேளாளர் களிடையே உள்ள சாதிக்குள் சாதி பார்க்கும் வழக்கம் எடுத்துக்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gs) Dr.ம.இரகுநாதன்

Page 52
காட்டப்படுகிறது. இவ் வழக்கத்தால் சாதியை மீறிய காதலுக்கு ஏற்படும் சமூக எதிர்ப்பு இங்கு ஆராயப்படுகிறது.
இந் நாவலில் வருகின்ற பத்மாவின் சாதியை மீறிய காதல் நிறைவேற முடியாமல் போனதற்கும் அவளின் வாழ்வு சீரழிந்து போவதற்கும் அவர்களிடையே உள்ள சாதிக்குள் சாதி பார்க்கும் வழக்கமே காரணமாகக் காட்டப்படுகின்றது.
பொன்னம்பலம் யாழ்ப்பாணத்தில் உள்ள உயர் சாதி எனப்படும் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். வேளாளர்களுக்குள் நிலவும் சாதிக்குள் சாதி பார்க்கும் வழக்கத்தினால் அவரின் மகள் பத்மா தான் காதலித்த இராசரத்தினத்தைத் திருமணம் செய்ய முடியாமல் போய் விடுகின்றது. இதனால் பத்மாவுக்கு 30 வயதாகியும் பொருத்த மான மணமகன் வந்து சேரவில்லை. பத்மாவின் காதல் நிறைவேறா ததற்கும் வேறு திருமணம் கைகூடாததற்கும் காரணம் தகப்பனின் சாதிக்குள் சாதி பார்க்கும் வழக்கமே என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
“பொன்னம்பலத்தார். அந்த வம்சங்களில் போய் நாங்கள் செம்பும் தண்ணியும் எடுக்க முடியாது என்று சில இடங்களைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்லி விடுவார். அவரையே சாதிகுறைந்தவர் என்று ஒதுக்கப்பட்ட இடங்களும் உண்டு. பத்மாவிற்கு முப்பது வயதானதும் பேச்சு வார்த்தைகள் எடுக்கக்கூடிய மாப்பிளைகளே குறைவாக இருந்தனர்.”
இதனால் பத்மாவின் தம்பியான பரமநாதனை முன்வைத்து மாற்றுச் சம்பந்த முயற்சி நடைபெறுகின்றது. பத்மாவைச் சிவஞானமும் பரமநாதனை ஈஸ்வரியும் மணம் புரிகின்றனர். இத் திருமணங்கள் பொருத்தமில்லாதவையாக இருந்தாலும் சாதி அபிமானத்தைக் கட்டிக் காத்து விட்டன என்பதால் பொன்னம்பலம் திருப்திப் பட வேண்டும் என புறோக்கர் கந்தையா கூறுகின்றார்.
"........... ஊருக்கை ஆலடிப் பக்கத்திலை நாங்கள் சம்பந்தமே செய்யிறேல்லை. இராசரத்தினத்திற்குச் செய்யிறதெண்டால் நான் செம்பு தண்ணியே அந்த வீட்டிலை எடுக்க மாட்டேன். அதோடை
பாக்கேக்கை இது எவ்வளவு நல்ல சம்பந்தம்”
ஆர்வத்தமிழ் நாவல்கள் G )ெ Dr. ம.இரகுநாதன்

இங்கு பத்மா - இராசரத்தினம் காதல் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்பதும் பொருத்தமில்லா விடினும் சாதி அந்தஸ்தை பேணி மேற்கொள்ளப்பட்ட திருமணமே உயர்வானது என்ற கருத்தும் வெளிப்படுத்தப்படுகின்றது. இது பிரபுத்துவ சமூகத்தின் கருத்தாகும்.
ஆனால் மனமொத்த காதலைப் புறக்கணித்துவிட்டு வெறும் வரட்டுக்கெளரவத்திற்காக நடாத்தப்பட்ட இத் திருமணத்தை பத்மாவின் தம்பி கந்தசாமி எதிர்க்கின்றான். அவன்,
“இதென்ன ஆச்சி கலியாணமா? ஏதோ பொயிலை வியாபாரம் போலையெல்லோ நடக்குது. அக்காவும் அண்ணனும் துணிச்சல் இல்லாத கோழைகள். இல்லாட்டி அக்காவுக்குப் பிடிச்ச இராசரத்தி னத்தை விட்டிருப்பினமா? ஒண்டு மட்டும் சொல்லிறனாச்சி இனிமேல் இந்த வீட்டிலை அப்புவின்ரை ஆட்டமொண்டும் நடக்காது நான் பார்த்துக்கொள்ளுறன்."
இவ்வாறு பிரபுத்துவ மதிப்பீடுகளை எதிர்க்கும் கந்தசாமி இடது சாரி இயக்கச் சிந்தனைகளால் கவரப்பட்டனவனாகவும் காங்கேசன் துறை சீமேந்து தொழிற்சாலையில் பல்வேறு தொழிலாளர்களுடனும் இணைந்து பணிபுரிபவனாகவும் சித்திரிக்கப்படுகின்றான்.
பத்மாவின் காதலை அறிந்த சிவஞானம் அவளைக் கொடுமைப் படுத்துகின்றான். அவள் கொடுமை தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்ளுகின்றாள்.
பத்மாவின் தங்கை தவமலரின் காதலை கந்தசாமி நிறைவேற்றி வைக்கின்றான்.
சாதியை மீறிய காதலுக்கு சமூகம் தடையாக இருப்பதையும் காதலைப் புறக்கணித்து சாதி அபிமானத்திற்காக வேறொரு திருமணத்தைச் செய்தால் அவ்வாழ்வு துன்பமாகவே முடியும் என்பதை யும் பத்மாவின் வாழ்வின் மூலமாக ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். பிரபுத்துவ சமூக மதிப்பீடுகள் மாறும் போது சாதி அபிமானமும் செயலிழந்து விடும். என்பதையும் அத்தகைய சூழலிலேயே சாதியை மீறிய காதல் நிறைவேற முடியும் என்பதையும் கந்தசாமியின் புதிய சிந்தனைப் போக்கும் தவமலர் நெசவு மாஸ்ரர் தம்பதிகளின் சாதியை மீறிய காதல் திருமணமும் உணர்த்துகின்றன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் O7) Dr. ம.இரகுநாதன்

Page 53
எனவே சாதியை மீறிய காதல் நிறைவேறுவதற்கும் அவர்களின் வாழ்வு மகிழ்ச்சியாக அமைவதற்கும் பிரபுத்துவ சமூகத்தின் மதிப்பீடுகள் செயலிழந்த புதியதொரு சமூகச் சூழல் அமைய வேண்டி யது அவசியம் என்பது இந் நாவலினூடாகப் புலப்படுத்தப்படுகின்றது.
தெணியான்
முற்போக்கு அணியின் மற்றொரு படைப்பாளியான தெணியான் சாதியம் தொடர்பான தனது கருத்துக்களைப் புலப்படுத்தும் வகையில் விடிவை நோக்கி (1973), பொற் சிறையில் வாடும் புனிதர்கள் (1989) ஆகிய இரு நாவல்களை எழுதியுள்ளார்.
விடிவை நோக்கி என்னும் நாவலில் வருகின்ற கோவிந்தன் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இவன்கல்வி கற்று முன்னேறி ஆசிரியராகப் பணிபுரிகின்றான். தமது சமூகத்தவர்களுக்கு எதிராக உயர் சாதியினரால் மேற் கொள்ளப்படும் அடக்கு முறைக் கொடுமை களைக் கண்டு மனம் கொதிப்பவன் கோவிந்தன். இத்தகைய நிலை யிலுள்ள கோவிந்தனை அவன் பணிபுரியும் பாடசாலையிலுள்ள உயர் சாதிக்கார ஆசிரியையான மல்லிகள் காதலிக்கின்றாள். ஆனால் மல்லிகா வின் காதலை ஏற்றுக் கொள்ளக் கோவிந்தன் தயாராக இல்லை.
96)6OT,
“உங்களை நான் ஏற்றுக் கொள்வதால் என்னுடைய சமூகத்துப் பெண்ணொருத்திக்கு நான் கொடுக்கக் கூடிய வாழ்வு தவிர்க்கப்பட்டு விடுமல்லவா? இது எங்கள் சமூகத்தைப் பொறுத்த வரையில் ஒரு நஷ்டம் தானே.”*
எனக் கூறுகின்றான்.
இங்கு உயர்சாதியைச் சேர்ந்த மல்லிகாவின் சாதியை மீறிய காதல் நிறைவேற முடியாததாகக் காட்டப்படுகின்றது. உயர் சாதிப் பெண் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணை மணந்து கொள்வது சீர்திருத்தத் திருமணமாகவும் அமையப் போவதில்லை. அத்துடன் கோவிந்தன் கல்வியால் முன்னேறிய ஒருவன் என்பதால் அவன் போன்றவர்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் பெறக் கூடிய நன்மைகள் அதிகம். அவன் மல்லிகாவை மணந்து கொண்டால்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (8) Dr. D.6, prestrybar

சாதிக்கொடுமைகளை எதிர்க்கும் வலுவான ஒரு போராளியை அச் சமூகம் இழப்பதாகவே அமையும். அத்துடன் அவனால் வாழவைக்கக் கூடிய ஒரு தாழ்த்தப்பட்ட சாதிப்பெண்ணின் வாழ்வும் இழக்கப்படும். எனவே தாழ்த்தப்பட்ட சமூகத்து ஆண்கள் குறிப்பாக படித்து முன்னேறியவர்கள் இது போன்ற சாதியை மீறிய திருமணங்களைச் செய்யக் கூடாது என்பதும் அவ்வாறு செய்வது அவர்களது சமூகத்திற்கே இழப்பாகும் என்பதும் இங்கு புலப்படுத்தப்படுகின்றது.
செங்கை ஆழியான்.
செங்கை ஆழியான் என்ற புனைபெயரில் ஆக்க இலக்கியங் களைப் படைத்து வரும் க. குணராஜா முற்போக்கு அணியைச் சாராத ஒரு படைப்பாளி.
இவரது பிரளயம் (1975)' என்னும் நாவல் சாதியம் தொடர்பான தாகும். இதில் யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணார்பண்ணைக் கிராமத்தில் வாழும் சலவைத் தொழிலாளர்களின் வாழ்வு எடுத்துக் காட்டப்படு கின்றது. சலவைத் தொழிலாளியான வேலுப்பிள்ளையின் குடும்பம் கல்விகற்று முன்னேறி வருகின்றது. இந் நிலையில் உயர்சாதியைச் சேர்ந்த வாமதேவன் வேலுப்பிள்ளையின் மகள் சுபத்திராவைக் காதலிக்கின்றான். சாதியை மீறிய இக்காதலை ஏற்றுக் கொள்ள வாமதேவனின் பெற்றோர் தயாராக இல்லை. சுபத்திரா வயிற்றில் கருவுற்ற நிலையில் கலங்கி நிற்க வாமதேவனுக்கு உயர்சாதிக்குள் திருமணம் நடைபெறுகின்றது. சுபத்திராவின் நிலையை அறிந்தும் வாமதேவனோ அவனது பெற்றோர்களோ அவளுக்கு வாழ்வு கொடுக் கத் தயாராக இல்லை. இந்நிலையில் அண்ணன் செய்த தவறை ஏற்றுக்கொண்டு அவளுக்கு வாழ்வு கொடுக்க முன்வருகின்றான் வாமதேவனின் தம்பி மகாலிங்கம்.
இங்கு சாதியை மீறிய காதலுக்கு பழைய சமூகம் ஆதரவு தரப்போவதில்லை என்பதும் இளைய தலைமுறையினரிடையே மாற்றம் ஏற்பட்டு வருகின்றது என்பதும் உணர்த்தப்படுகின்றது. சமூக மாற்றம் ஏற்படாதவரை சாதியை மீறிய காதல் துன்பத்தையே தரும் என்பது சுபத்திராவின் வாழ்வால் உணர்த்தப்படுகின்றது.
செங்கை ஆழியானின் மற்றொரு நாவலான அக்கினி (1991) யிலும் சாதியம் தொடர்பான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. ஈழத்துத்தமிழ்நாவல்கள் G.) Dr.ம.இரகுநாதன்

Page 54
சாதியை மீறிய காதல் தொடர்பான ஆசிரியரின் கருத்தை இந்நாவல் மேலும் தெளிவாகவே எடுத்துக்காட்டுவதால் எமது ஆய்வுப் பரப்பைக் கடந்து இந்நாவலைப் பயன்படுத்த விரும்புகின்றேன்.
யாழ்ப்பாணத்துக் கலட்டிக் கிராமத்தில் வாழ்ந்த கனகு தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்தவன், பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தவன். யாழ்ப்பாணத்துச் சூழலில் இளைஞர்கள் பலரும் புலம்பெயர்ந்தபோது கனகுவும் புலம்பெயர்ந்து வெளிநாட்டிற்குச் சென்று உழைத்தான். அவனின் வெளிநாட்டுப் பணம் அவர்களின் குடும்ப நிலையை உயர்த்தியது. மண் வீடு கல்வீடாகியது; வசதிகளும் அதிகரித்தன; சகோதரிகள் படித்து முன்னேறினார்கள். இந்நிலையில் கனகு ஊருக்குத் திரும்பி வருகின்றான். இப்போது அவனின் பணம் அவனுக்குப் புதியதொரு சமூக மதிப்பைக் கொடுக்கின்றது. கனகு கனகசபையாக மாறு கின்றான்.
கனகசபையின் தம்பி சிவபாலன் உயர் சாதிப்பெண்ணைக் காதலிக்கின்றான். இதனைப் பொறுத்துக் கொள்ளாத சிலர் அவனை வழிமறித்துத் தாக்கிவிடுகின்றனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த கனகசபையின் நண்பன் கந்தசாமி,
“இந்தச் சமூகம் மாறாது - நிச்சயமாக மாறாது. சாதித்தடிப்பு பிறப்புடன் ஒட்டிவிட்டது. சமூகப் புரட்சி என்ற சத்திர சிகிச்சை மூலம் தான் இதற்குச் சாவுமனி அடிக்கமுடியும் தனிமனித விவகாரத்தில் இத்தனை தடங்கலா? அவனும் அவளும் விரும்பிக் கொண்டால் பிறகென்ன தடை?”
எனக் கூறுகின்றான். கந்தசாமியின் இக்கருத்தை மறுத்த 86601858F60),
“இது தனிமனித விவகாரமல்ல. சமூக விவகாரம் ஒரு கலியாணத்தின் பின்னணியில் எத்தனை சமூக உறவுகள் இருக்கின்றன தெரியுமா? பிரிக்க முடியாதவாறு யாழ்ப்பாணத்துச் சமூகத்தோடு ஒட்டிவிட்ட சாதிப் பாகுபாடு என்னதான் மாற்றம் நேரிட்டாலும் அழியும் என என்னால் நம்பமுடியவில்லை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (80) Dr.ம.இரகுநாதன்

மாற்றங்கள் சமூகத்தில் திடீரென ஏற்படுவதில்லை. படிப்படி யாகத்தான் ஏற்படுகின்றன. முன்னைய காலத்திலும் பார்க்க இந்தக் கிராமத்தில் எவ்வளவோ மாற்றங்கள் இன்று ஏற்பட்டு விட்டன. அடிமை குடிமை முறை இருக்கின்றதா? கட்டுப்பாடிருக்கின்றதா? கோயிலுக்குள் வரக்கூடாது எனத் தடுக்கின்றார்களா இவ்வளவும் படிப்படியான சமூக மாற்றம்தான். கல்வியால் என் தம்பி உயர்வதால் அப் பெண் அவனிடம் காதல் கொள்ள நேர்ந்தது என நினைக் கின்றேன். இருவரும் மணந்து கொள்வதற்கு இந்தச் சமூகத்தால் தடை விதிக்கமுடியுமென நான் நினைக்கவில்லை.”
“முதலில் எங்கட அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதுக்குப் பிறகுதான் பணத்தாலும், கல்வியாலும் அந்தஸ்தில் உயர்ந்திருக்கிற அவன்களுடன் சரிநிகர் சமானமாக நின்று பேச முடியும். உரிமைகளை வென்றெடுக்கிற மாதிரி உறவுகளை அவ்வளவு லேசாக வென்றெடுக்க முடியாது.”*
எனக் கூறுகின்றான்.
எனவே கல்விவசதி, செல்வ வசதி ஆகியவற்றால் தாழ்த்தப்பட்ட மக்களது சமூக அந்தஸ்து தானாகவே உயர்வடையும் என்பதையே செங்கை ஆழியான் தனது இரு நாவல்களிலும் எடுத்துக் கூறியுள்ளார். சமூக அந்தஸ்து மாற்றமடைவதற்கும் ஏற்றத்தாழ்வுகள் ஒடுக்கு முறைகள் அகல்வதற்கும் புரட்சியின் மூலமாகக் கிடைக்கும் புதிய சமுதாயமே வழி என போராளிக்குழுவில் இணைந்துள்ள கந்தசாமி நம்புகின்றான் அவன்,
“நாளைய விடியலில் இந்த ஏற்றத்தாழ்வு இருள்கள் அகன்று 6ክGub”l°
எனக் கூறுகின்றான். இதற்கு கனகசபை “நம்புவோம்” எனக்கூறிச் சிரிப்பதாக ஆசிரியர் சித்திரித்துள்ளார். இது இன்னும் விடைதெரியாத வினா என்பதை மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை என்பதையும் உணர்த்தி விடுகின்றது.
கழுத்துத்தமிழ் நாவல்கள் Gs) Dr. D.6, ரகுநாதன்

Page 55
செ. யோகநாதன்
முற்போக்கு அணியைச் சார்ந்த மற்றொரு படைப்பாளியான செ.யோகநாதன் தனது காவியத்தின் மறுபக்கம் (1977)? என்ற குறுநாவலில் சாதியம் தொடர்பான சிக்கல்களை எடுத்துக்காட்டி யுள்ளார்.
இந்நாவலில் உயர்சாதியைச் சேர்ந்த கமலத்திற்கும் தாழ்த்தப் பட்ட சாதியைச் சேர்ந்த பாலசிங்கத்திற்கும் இடையேயான சாதியை மீறிய காதல் எடுத்துக் காட்டப்படுகின்றது.
கமலம் தனது சாதியை மீறிய காதலைப் பெற்றோர்கள் விரும் பாத நிலையில் பாலசிங்கத்தோடு ஓடி விடுகின்றாள். பாலசிங்கம் சாதியடிப்படையில் தாழ்த்தப்பட்டவன்; பொருளாதார அடிப்படையில் அடிப்படை வசதிகள் கூட இல்லாதவன். ஆடம்பரமான வாழ்க்கை வசதிகளுடன் சொகுசாக வாழ்ந்த கமலத்துக்கு பாலசிங்கத்தின் வீட்டு நிலைமைகள் வெறுப்பைக் கொடுக்கின்றன. காதல் கசக் கின்றது. இந்நிலையில் பொலிசாரின் உதவியுடன் கமலத்தைத் தேடிவருகின்றார் அவளின் தந்தை கணபதிப்பிள்ளை. பொலிசாரின் முன்னிலையிலேயே அவள் பாலசிங்கத்தைப் பிரிந்து தாய் தகப்பனுடன் செல்ல விரும்புவதாகக் கூறிவிடுகின்றாள். கமலத்தின் தாய்,
“பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒரு போதுமே ஒட்டிறகில்லை. மகளே. எங்களின்ரை பரம்பரையை யோசித்துப்பார், எங்களின்ரை சாதியையும் ஒழுக்கத்தையும் நீதியையும் யோசித்துப் பார். p உனக்கு யார் விருப்பமென்று போனியோ அவனுடைய ஊரைப் பார்த்தியா? எங்களின்ரை முன்னோர் சொன்னதை நீ நினைக்கிறதில் லையா, எல்லாத்துக்கும் ஒரு தகுதியிருக்க வேணும்.”
தகப்பன் கணபதிப்பிள்ளை,
“சாதி என்றது இன்றைக்கு நேற்றைக்கு வந்ததில்லை மகளே. நந்தனாரின் சரித்திரத்தையே பார். நந்தன் கோயிலுக்கு வெளியிலை நின்றுதான் நடராசதரிசனம் கேட்டான். கடவுளும் நந்தியை விலகச் செய்தாரே தவிர நந்தனைக் கோயிலுக்குள்ளை வந்து கும்பிடு என்று சொல்லவில்லை.”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gs) Dr. ID-6 registripair

தாய், தகப்பனின் வார்த்தைகள்ைக்கேட்ட கமலம் பாலசிங்கத் தைப் பிரிய உடன்படுகின்றாள். கமலத்தின் சாதியை மீறிய காதல் சாத்தியமாகாத நிலையில் அவள் அமெரிக்காவிலிருந்து வந்த மைத்துனனுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகின்றாள்.
இங்கு பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய பாலசிங்கத் துடன் சாதியால் மட்டுமன்றி சொத்து சுகங்களாலும் உயர்ந்த கமலம் இணைந்து வாழமுடியாது என்பது காட்டப்படுகின்றது. எனவே பொருளா தார நிலையில் சமத்துவம் ஏற்படாதவரையில் சாதியை மீறிய காதல் சாத்தியமில்லை என்பதும் ஏழைகளாகவும் அடக்கி ஒடுக்கப்படுபவர் களாகவும் ஒரு பகுதி மக்கள் இருக்கும் வரை சம அந்தஸ்து பற்றிப் பேசுவது அர்த்தமற்றது என்பதும் உணர்த்தப்படுகின்றது.
தி. ஞானசேகரன்
1960 களின் முற்பகுதியில் சிறுகதை ஆசிரியராக அறிமுகமான தி.ஞானசேகரன் பின்னர் குருதிமலை’, புதிய சுவடுகள்* முதலிய பல நாவல்களையும் எழுதியுள்ளார். இவரது புதிய சுவடுகள் (1977) என்ற நாவலில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள சாதியம் தொடர்பான சிக்கல்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இந்நாவலில் வருகின்ற வேளாளர் குலப்பெண்ணான பார்வதி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணிக்கனைக் காதலிக்கின்றாள். சாதியை மீறிய இக் காதலுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்காது என்பதால் இவள் மாணிக்கனோடு ஊரைவிட்டே ஓடி விடுகின்றாள். பார்வதியின் செயலால் ஆத்திரமுற்ற ஊரவர்கள் சிலர் அவளை மாணிக்கனிடமிருந்து பலவந்தமாகப் பிரித்துவிடுகின்றனர். இந் நடவடிக் கையின் போது மாணிக்கன் பலமாகத் தாக்கப்படுகின்றான்.
தாக்குதலின் போது மாணிக் கண் இறந்துவிட்டான் என ஊரவர்களும் பெற்றோரும் கூறிய பொய்யை நம்பிய பார்வதி அவர்கள் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு உடன்படுகின்றாள். மன வளர்ச்சி குறைந்த நடேசு வயிற்றிலே கருவோடிருந்த பார்வதியை மணந்து கொள்கின்றான். பிரசவகாலத்தில் மாணிக்கன் இறக்கவில்லை என்பதை அறிந்த பார்வதி மனம் குமுறுகிறாள். அந்த மனத் துயரோடு குழந்தையைப் பிரசவித்த உடனேயே அவள் இறந்து விடுகின்றாள்.
ஈழத்துத்தமிழ் நாவல்கள் G83) Dr. D.Gregorgber

Page 56
மாணிக்கனும் பார்வதியும் இணைந்து வாழ்வதை ஏற்றுக் கொள்ளத் தவறிய சமூகம் இறந்த பின்பு தமது தவறை நினைத்து வருந்துகின்றது. மாணிக்கனுக்குப் பிறந்த குழந்தையை ஏற்றுக்கொள் கின்றது.
சாதி வேறுபாடுகளைத் தீவிரமாகக் கட்டிக் காக்கின்ற ஒரு சமுதாயத்தில் சாதியை மீறிய காதல் நிறைவேறுவது சாத்தியமற்றது என்பதையே இந்நாவல் உணர்த்துகின்றது. தீண்டாமை தொடர்பான ஆழமான பார்வையினையோ கோட்பாட்டு ரீதியாக அதனை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துக்களையோ இந்நாவலில் காணமுடியவில்லை.
அகஸ்தியர்
ஈழத்து மண்ணில் புரையோடிப்போன சாதியக் கொடுமைகளை வேரறுக்க முனைந்த முற்போக்குச் சிந்தனையாளர்கள் 1950 களிலே ஆர்ப்பரித்துக் கிளம்பி ஆற்றல் இலக்கிய காரர்களாகப் பரிணமித்தார் கள். சத்திய வேட்கையுடன் சாதனை புரியப் புறப்பட்ட அந்த முன்னோடி கள் வரிசையில் முன்னிலைப்படுத்தப்படுபவர் எஸ் அகஸ்தியர்.
அகஸ்தியரின் “எரிநெருப்பில் இடைபாதை இல்லை” என்ற நாவல் 1992 இல் வெளிவந்துள்ளது.* இந்நாவலின் முன்னுரையில்
“சுரண்டும் வர்க்கத்தின் எச்ச சொச்சமான யாழ்ப்பாணச் சமூக அமைப்பின் “தாழ்த்தப்பட்ட”, “உயர்த்தப்பட்ட” பிறழ்வுகளை மையப்படுத்தி ஐம்பது ஆண்டு யாழ்ப்பாணத்துப் பரப்பை இலங்கையில் முதல் பிரசவித்த தமிழ் நாவல் இதுவே”
என்றும் இந்நாவல் 1959 இல் எரிமலை என்ற தலைப்பில் எழுதப்பட்டு பல்வேறு காரணங்களால் பிரசுரிக்கப்படாமல் 1992 இல் புதிய தலைப்போடு பிரசுரிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் அகஸ்தியர். எனவே இந்நாவலை. எமது ஆய்வுப் பரப்பினுள் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கருதுகின்றேன்.
இந் நாவலில் யாழ்ப்பாணத்து உயர் சாதியைச் சேர்ந்த செல்ல மணிக்கும் முருகன் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞ னுக்குமிடையே ஏற்பட்ட சாதியை மீறிய காதல் எடுத்துக்காட்டப்படு கின்றது. ஈழத்துத்தமிழ்நாவல்கள் (8) Dr.ம.இரகுநாதன்

நடேசபிள்ளை உயர்சாதி வேளாளன். எனினும் சமூகத்தில் நடைபெற்ற சீர்திருத்தம் தொடர்பான விடயங்களுக்கு ஆதரவு வழங்கியவர். ஆலயப் பிரவேசம் தேநீர்க்கடைப் பிரவேசம் ஆகியன நடைபெற்றபோது அவர் இவ்வியக்கங்களுக்கு மறைமுகமான ஆதரவை வழங்கியிருந்தார். நடேசபிள்ளையின் மகள் செல்லமணி முருகனைக் காதலித்து அவனோடு ஊரைவிட்டே ஓடிவிடுகின்றாள். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நடேசபிள்ளை சாதிக் கலவரங்களைத் தூண்டிவிடுகின்றார்.
செல்லமணி சாதியை மீறி முருகனோடு ஓடியபோது அதை எதிர்த்த ஊரவர்களின் வார்த்தைகள் இவ்வெதிர்ப்பை வெளிக் காட்டின. சான்றாக,
*அமசடக்கமாயிருந்து போட்டுக் கடைசியில வெக்கமில்லாமல் கீழ் சாதியானோட ஓடியிட்டாள்” என்றது ஒரு பத்தினிக் குரல்.
*ஏடி ஆத்தே; அவர் குடுத்த செல்லமெங்கே! அவவுக்கு நோகக்கூடக் கதைக்க ஏலாதடி நாச்சியார்; கடைசியில பாத்தியளே; அவவின்ர பொட்டுக்கேடு வெளிச்சுப் போச்சு இப்படிக் கேலியும் கிண்டலும் குரோதமும் கொண்டு தனது ஒழுக்கத்தைக் காட்டியது இன்னொரு கண்ணகிக் குரல்.”
*அவேக்கு, இனி வெளிக்கிட்டுத் தாங்களும் ஒரு ஆக்கள்தான் எண்டு சொல்லிச் சனங்களின்ர முகத்தில முழிக்க வெக்கமில்லையோ?
ரோஷம் கொண்ட தன்மானக்குஞ்சொன்று இப்படி ஒரு நாக்கால மூக்குத் தொட்டு அழுது தொலைத்தது.
“சீ. தூ. கிலிசகெட்ட நாயே!” ஆக மனிதத்தன்மையுள்ள மானமுடைய ஒரு சிங்காரம் முகத்தைச் சுழித்துக் காறித்துப்பித் தன்னுள்ளே திருப்தி கண்டது.
"அமர் பிடிச்சு அலைஞ்சு, கேவலம் கொண்டதுகளுக்கு
இப்பிடிச் சொன்னாலும் ரோஷம் நாணம் எப்பனுக்கும் வராது.
இருக்கு மட்டும் இருந்து போட்டுக்கடைசியில நல்ல ஆட்டம்
ஆடிக் காட்டிப்போட்டா” ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி ஓய்ந்துபோன ராட்டினம் ஒன்றும் கடைசியாக இப்பிடிச் சுழன்று விட்டு ஓய்ந்தது. \
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G85) Dr.ம.இரகுநாதன்

Page 57
*பேரென்ன தெரியுமே? செல்லமணியெல்லே, அப்பசெண்டம் இருக்கும் தானே? ஒ செல்லத்தில மணியடிக்கிறதுக்கு தீண்டாச்சாதி யானாய்ப் பார்த்துப் பிடிச்சு ஓடியிட்டா வெட்கமில்லாத கழுதை சீ; மூதேவி” இப்படியெல்லாம் மான ரோஷமுள்ள ஓர் இரண்டு கால் பிராணி கடைசியாக உமிழ்ந்து காறித்துப்பியது.*
ஊரவர்களின் எதிர்ப்பால் நடேசபிள்ளை செல்லமணியை முருகனிடமிருந்து எப்படியாவது பிரித்துவிட முயற்சி செய்கிறார். தான் மனம் மாறிவிட்டதாக நடித்து மனைவியின் மூலம் செல்லமணியை வீட்டுக்கு வருமாறு கடிதம் அனுப்புகின்றார். தாயின் கடிதத்தைக் கண்ட செல்லமணி முருகனையும் கூட்டிக்கொண்டு தாயிடம் செல்ல விரும்புகிறாள் ஆனால் இக் கடிதத்தை நம்பாத முருகன்,
“புலிபோல இருந்தவர்கள் திடீரென்று பூனையாக மாறுவார்களா இப்ப ஜாதிப் பெருமையே எங்கள் யாழ்ப்பாணத்தானுக்கு வாழ்க்கையின் உயிராயிருக்கும் போது, கொய்யா மனம் மாறுவதென்றால் அவர் என்ன பெரிய பொதுவுடைமை வாதியா?
“கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் புரியும் நானோ உங்க வீட்டு அந்தஸ்துக்குக் கொஞ்சம் கூட அருகதையற்றவன்; அவயால முழுமையாகவே தீண்டப்படாதவன் இந்தக் கேர்லத்தில அம்மா வீட்டுக்கு வாவெண்டு அழைக்கிறா அது உண்மையா? அந்த ஊரவங்கள் சும்மா விட்டு வைப்பாங்களா?”*
என்று செல்ல மணியிடம் கேட்கின்றான். எனினும் செல்லமணி தாயிடம் வருகின்றாள். தாழ்த்தப்பட்ட சாதிக்காரனோடு ஓடிப்போனவள் மீண்டும் பிறந்த வீட்டிற்கு வந்தபோது அயலவர்கள் அதனை விரும்பவில்லை.
“நடேசபிள்ளை குடும்பத்தால யாழ்ப்பாணத்தில வாழுற முழு வெள்ளாஞ்சாதிக்கே இழுக்கு. இனிமேல் என்ன கண்டறியாத புதின்ம் நடக்க வேணும்? இப்ப நளவங்களோட சம்பந்தமும் கலந்தாச்சு. இப்படி நல்ல சாதியானுக்கு இங்கிஷை பண்ணுகிறவேயைத்தான் முதலில் ஊரைவிட்டுத் துரத்த வேணும். இல்லாட்டி இந்த கிலிச சேட்டை ஒருக்காலும் சீர்ப்படுத்த முடியாது.” என ஊரவர்கள் பேசிக் கொள்கின்றனர். ஊரவர்களின் வாயை அடக்கித் தனது சாதியபிமானத் தை நிலை நிறுத்த நடேசபிள்ளை தான் பெற்ற மகளையே இரவோடிரவாகக் கொலை செய்து விடுகின்றார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (80) Dr.ம.இரகுநாதன்

செல்லமணியைக் கொலை செய்த பின்னர் நடேசபிள்ளையின் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களிடமிருந்து எதிர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. இதனால் யாழ்ப்பாணக் குடாநாடெங்கும் சாதிச் சண்டைகளையே காணக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் முருகன் சோஷலிச இயக்கச் சிந்தனைகளால் கவரப்படுகின்றான். தொழிலாளர் இயக்கத்தில் இணைந்து புதியதொரு சமுதாயத்தை உருவாக்கப்பாடுபடுகின்றான். சோஷலி சப் புரட்சியில் மக்கள் பலரும் நம்பிக்கை கொண்டு அணி சேருகின்றனர். இதே வேளை நடேசபிள்ளையும், தம்பரும் கொலை செய்யப்படுகின்றனர். இவர்களின் அழிவு பழையவை அழிவதாலேயே புதியவை நிலைக்கும் என்பதன் குறியீடாகவே அமைந்து விடுகின்றது.
எனவே சமுதாய மாற்றம் நடைபெற்று சமத்துவமான சமுதாயம் உருவாகும் வரை சாதியை மீறிய காதல் சாத்தியமில்லை என்பதையே இவர் உணர்த்துகின்றார். இதே நாவலில் உயர்சாதியைச் சேர்ந்த செல்வராசன் என்ற இளைஞன் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த நாகாத்தையைக் காதலித்து அவளைக் கூட்டிக்கொண்டு சென்றுவிட்ட சம்பவமும் எடுத்துக் காட்டப்படுகின்றது. இங்கு நாகாத்தை அழகியாகவும் செல்வராசன் “மொக்குப் பொடியன்” எனத் தனது சமூகத்தவர்களாலேயே ஒதுக்கப்பட்டவனாகவும் காட்டப் படுவது அழகிய படித்த உயர்சாதிக்கார ஆண்கள் தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை விரும்ப மாட்டார்கள் என்ற ஆசிரிய ரின் மனநிலை யின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். செல்வராசனின் காதலை உயர்சாதியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது நடேசபிள்ளையின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது. அவர்,
“எழிய ராஸ்க்கல் பொம்புளை இல்லாமல் எங்கினையோ கிடந்த நளத்தியைக் கூட்டிக்கொண்டு போய் எங்கட வெள்ளாஞ்சாதி யின்ரை சீலையை உரிஞ்சிட்டானே; சீ நாய்ப்பயல்; அவள் நளத்திக் கென்ன வெள்ளாளனெண்டவுடன் இளிச்சுப் பிடிச்சுக்கொண்டு தன்ர முன்தானையை அவனுக்கு விரிச்சிட்டாள் தோறை.”*
என்று தனது ஆத்திரத்தை வெளியிடுகின்றார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (87) Dr.ம.இரகுநாதன்

Page 58
1950 களில் சாதியம் தொடர்பாக எழுதிய இளங்கீரன் தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் அதற்காக சாதியை மீறிய காதல் வரவேற்கப்பட்டு கலப்பு மணங்கள் நடைபெற வேண்டும் என்று எழுதினார். கலப்பு மணத்தையே சாதியப் பிரச்சினைக்குத் தீர்வாக இவர் கருதியிருந்தார். கலப்பு மணத்தால் ஏற்படும் பாதகமான விளைவுகளை இவர் சிந்தித்ததாகத் தெரியவில்லை.
1950 களின் பின்னர் சாதியப் பிரச்சினை தீவிரமடைந்த சூழலில் பொதுவுடைமைச் சிந்தனைகளும் பரவியபோது அகஸ்தியர் செ.கணேச லிங்கன், ஆகியோர் சாதியை மீறிய காதலால் நிகழக் கூடிய சமூக அனர்த்தங்களை உணர்ந்து அதற்கேற்ற சூழல் உருவாகும் வரை அதாவது சோஷலிசப் புரட்சியின் மூலமான சமத்துவ சமுதாயம் உருவாகும் வரை இத்தகைய காதல் திருமணங் கள் சாத்தியமில்லை என உணர்த்தினர். இவர்களைத் தொடர்ந்து முற்போக்கு அணியில் வந்த தெணியான், செ. யோகநாதன் ஆகியோரும் இதே கருத்தையே உணர்த்தினர்.
முற்போக்கு அணியைச் சாராத சொக்கன் 1960 களின் ஆரம்பத்தில் கலப்பு மணத்தால் சாதியை ஒழிக்க முடியாது என்ற கருத்தைக் கூறி சாதியை மீறிய காதலை வரவேற்காமல் விடுத்தார். ஞானசேகரனும் சமூக வேறுபாடுகள் உள்ள நிலைமையில் சாதியை மீறிய காதல் சாத்தியமில்லை எனக் காட்டினாலும் சமூக வேறுபாடு களை நீக்குவதற்கான வழிகளை எடுத்துக் கூறவில்லை.
செங்கை ஆழியான் சாதியை மீறிய காதலை ஊக்குவிக்கா விடினும் கல்விச் சூழலால் சமூகம் மாறிக்கொண்டு வருகின்றது எனக்காட்டி அவ்வர்று மாறிய சமுதாயத்தில் இத்தகைய திருமணங்கள் சாத்தியமாகலாம் என்று காட்டுகின்றார். எனினும் சமூக மாற்றம் நிகழாதபோது சாதியை மீறிய காதல் ஆபத்தானது என்பதையே இவர் நாசூக்காக உணர்த்திவிடுகின்றார்.
3.2 குடிமைமுறை
உயர்சாதியினர் தமக்கு ஊழியம் செய்வதற்காக குறிப்பிட்ட சில சாதியினரை குடிமைகள் என்ற பெயரில் அடக்கியாண்டு வந்திருக்கின்றனர். உயர்சாதியினரின் வீடுகளில் நடைபெறுகின்ற
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gછે Dா.ம.இரகுநாதன்

சடங்குகளின்போது குடிமைகளுக்குரிய கடமைகள்வகுக்கப்பட்டி ருந்தன. இக் கடமைகளை மீறமுடியாதவாறு இவர்கள் அடக்கியாளப் பட்டனர். எனினும் சாதியத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்ற போது குடிமை முறையினையும் புதிய தலை முறையினர் எதிர்த்து நின்றனர். இதனை ஈழத்துத் தமிழ் நாவல்கள் சில ஆவணப்படுத் தியுள்ளன.
செ. கணேசலிங்கன்
கணேசலிங்கன் வண்ணார் எனப்படும் சலவைத் தொழிலாளர் கள் குடிமை முறையை எதிர்த்து நிற்பதை தனது சடங்கு என்ற நாவலில் எடுத்துக் காட்டியுள்ளார். திருமணத்திற்காக வெள்ளைகட்ட வந்த குடிமைக்காரர்களை புறோக்கர் கந்தையா “கட்டாடி” என அழைத்தபோது அவர்கள் அதை எதிர்க்கின்றார்கள்.
*அப்புவுக்காக வந்தனாங்கள் சோடனை செய்யிறதுக்காக. உங்கடை அடிமைக் குடிமக்களாக வரேல்லை. ஊத்தை வெளுக் கிறதை தொழிலாக வேணுமெண்டால் செய்வம். நாங்கள் வீட்டை வரேல்லையெண்டால் லோண்டரிகளுக்கு உங்கடை ஊத்தைகளைத் தூக்கிக் கொண்டு வராமலா இருக்கப்போறியள்.”*
என இளைஞன் வடிவேலு கூறுகின்றான். வடிவேலுவின் தந்தை சரவணமுத்து,
“...இந்த நாளைய பெடியங்களைப் பற்றித் தெரியாமல் ஏன் வீணாய் வாய் குடுத்து மானங்கெடுறியள். என்ரை பிள்ளை என்ரை சொல்லுக் கேட்கப் போறானா இல்லாட்டி என்ரை தொழிலைத்தான் செய்யப்போறானா. நான் செத்த பிறகு இவங்கள் உங்கடை வீடு களுக்கு ஊத்தச் சீலை எடுக்க வருவாங்களெண்டு நினைக்கிறி u6mm...?'32
எனக் கூறுவது புதிய தலைமுறையினரின் வருகையுடன் அடிமை குடிமை முறை ஒழிந்துவிடும் என்ற ஆசிரியரின் எதிர்பார்ப்பையே எடுத்துக் காட்டுகிறது.
மேலும், சுடலையில் தமது அடிமை, குடிமைப் பணிகளைச் செய்வதற்காக வந்த பள்ளன் சுப்பன், பொன்னன் ஆகியோர் தமக்குள்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G89) Dr.ம.இரகுநாதன்

Page 59
உரையாடும் போது அடிமை குடிமை முறையை எதிர்ப்பதாகவே தெரிகின்றது. சுப்பன்,
“ஒருகாலத்திலை காணியளை வைச்சு எங்களையும் அடிமை யாய் வைச்சு வேலை வாங்கிச் சீமானாய் இருந்தினம். இப்ப காணியளும் பிரிஞ்சு துண்டு துண்டாய்ப் போட்டுது.”*
எனக்கூற பொன்னன்,
“எண்டாலும் தங்கடை வீம்பையும் சடங்கு சாதி மிடுக்கையும் விடுறேல்லை எண்டு காணி வித்தோ கடன்பட்டோ ஆடினம்; இன்னும் எத்தினை காலத்துக்குத்தான் ஆடப்போயினமோ பார்ப்பம்.”*
எனக் கூறுகின்றான். பிரபுத்துவ மதிப்பீடுகள் மதிப்பிழந்து வருவதையும் ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை அடிமைப்படுத்துபவர்களை எதிர்க்கத்துணிந்து விட்டார்கள் என்பதையும் இவ்வுரையாடல் மூலமாக ஆசிரியர் உணர்த்துகின்றார்.
டானியல்
ஈழத்து இலக்கிய வானில் அறுபதுகளின் முற்பகுதியில் சிறுகதை ஆசிரியராக அடி எடுத்து வைத்த டானியல் உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் இலக்கியக் குரலாகத் தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். இவரது முதல் நாவலான பஞ்சமர் 1972 இல் வெளிவந்தது? இந் நாவலில் பஞ்சமர்கள் தமது குடிமைக்குரிய பணியைச் செய்ய மறுப்பது காட்டப்படுகின்றது. கரவெட்டியில் சண்முகம் சட்டம்பியாரின் மாமி இறந்தபோது குடிமக்கள் தமது கடமைகளைச் செய்ய மறுத்து விடுகின்றார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து குடிமக்களை வரவழைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வேலுப்பிள்ளைக் கமக்காரன் தனது குடிமைக்காரனான கிட்டின்னை,
“கிட்டினன், நீ ஒரு நாலஞ்சு பேரோடை இவையோடை கரவெட்டிக்குப் போட்டுவா! சம்பந்தி பகுதியிலை செத்த வீடொன்று நடக்குது; தொண்டு துரவு செய்ய வேணுமாம் போட்டுவா”*
எனக் கூற கிட்டினன்,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (0) Dr.ம.இரகுநாதன்

“நீர் கோவிச்சாலும் கோவியும், நான் அவங்களிட்டை சொல் லன்; ஊர்விட்டு ஊர்போய்ச் சவங்காவ மாட்டாங்கள். என்னைத்தான்
பேசுவாங்கள். நான் அவங்களிட்டைச் சொல்ல மாட்டன்.”
என மறுக்கின்றான். தனது குடிமகன் பிற ஊரவர்களின் முன்னால் தன்னை எதிர்த்துப் பேசியதைப் பொறுக்காத வேலுப் பிள்ளைக் கமக்காரன்,
“என்னடா கோவியப்பயலே சொன்னணி! நீ மாட்டியோ? அவங்கள் தூக்கமாட்டாங்களோ என்ரை சொல்லைத் தட்டிப்போட்டு நீங்கள் இருந்திடு வியளோ?*
என்று எச்சரிக்கின்றார். கிட்டினன்,
*கமக்காரன் சும்மா வெருட்டாதையும் இனி உந்த வெருட்டெல் லாத்தையும் விட்டிடவேணும்! வெருட்டுகளிலை வேலை இல்லை; சும்மா போம்! இனிமேல் தொண்டு துரவு வேலையை விடத்தான் போறம்;?
என முடிவாகக் கூறி விடுகின்றான்.
சிறாப்பரின் மகள் இறந்தபோதும் குடிமைகள் எவருமே தமது தொண்டு துரவு வேலைகளைச் செய்ய உடன்படவில்லை. இதனால்
“பந்தலில்லை, கட்டாடியின் வெள்ளையில்லை மூன்று கால் பந்தல் போடவும், வாய்க்கரிசி பொரிப்பெட்டி, நெருப்புச்சட்டி தூக்கவும் பரியாரி இல்லை. கட்டை குத்தி தறிக்கப் பள்ளணில்லை. பறை கொட்டச் சாம்பானில்லை. இதற்கு மேல் இல்லாமலிருக்க எதுவுமே இல்லை.”*
என்ற நிலையிலேயே மரணச் சடங்கு நடைபெற்றதாக எடுத்துக் காட்டுகின்றார். மேலும்,
“பாடையின்றி மேளமின்றி நில பாவாடையின்றி, மேலாப்பு இன்றி பொரிப்பெட்டி இன்றி, கொள்ளிக்குடமுடைத்தலின்றி, குடமூத லின்றி, அடிமை முறைகளுக்கான எந்தச் சின்னமுமின்றி ஒப்பேறி விட்ட முதலாவது பிரேத ஊர்வலம் நினைவுக்கு எட்டிய காலத்துள் இது ஒன்றே ஒன்றுதான்.” ஈழத்துத்தமிழ்நாவல்கள் GD Dr.ம.இரகுநாதன்

Page 60
என டானியல் குறிப்பிடுகின்றார்.
அடிமை குடிமைகளின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாத உயர் சாதியினர், தமது காணிகளில் குடியிருக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் அக்காணிகளை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகின்றனர். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்கள் இவ்வுத்தரவுக்குப் பணிந்துவிடாமல் இரவல் காணிகளில் குடியிருக்கும் அனைவரையும் இணைத்து நிலமில்லாதவர்களுக்கான சங்கம் ஒன்றை உருவாக்குகின் றார்கள். இச் சங்கத்தின் உருவாக்கத்தில் உயர் சாதியைச் சேர்ந்த ஐயாண்ணன் என்பவரே முக்கிய பங்கு வகிக்கின்றார். இவரே இதன் தலைவராகவும் தெரிவு செய்யப்படுகின்றார். இதனால் இப் பிரச்சினை வெறும் சாதிப் பிரச்சினையாக இல்லாமல் சொத்துள்ளவர் களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான வர்க்கப் பிரச்சினை யாக ஆசிரியரால் இனங்காணப்படுவது தெரிகின்றது.
செங்கை ஆழியான்
செங்கை ஆழியான் பிரளயம் என்ற நாவலில் சலவைத் தொழிலாளியின் குடும்பம் ஒன்று கல்வி கற்று முன்னேறுவதால் அடிமை, குடிமை நிலையிலிருந்து விடுப்ட்டு வருவதை எடுத்துக் காட்டுகின்றார்.
வண்ணார் பண்ணையிலுள்ள சலவைத் தொழிலாளியான வேலுப்பிள்ளையின் மூத்த மகள் ராணி பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெறுகின்றாள். இளையவன் கனகசிங்கம் க. பொ. த. சாதாரண தரத்தில் சித்திபெற்று உயர் தரம் படிக்கத் தகுதி பெறுகின்றான். கல்வி கற்றுப் படிப்படியாக முன்னேறியபோது அவர்கள் தமது அடிமை குடிமை நிலையிலிருந்து விடுபட முயற்சிக்கின்றார்கள். இதனால் கனகசிங்கம்,
“உவையின்ரை வீடுகளுக்குப் போய்த் துணி எடுக்கிறதை இனி விட்டிட வேணும். சலவை செய்ய விரும்பினால் கொண்டு
9942
வந்து தர வேணும்.
எனக்கூறி வண்ணார் பண்ணையில் இதுவரையும் இல்லாத லோன்றி வைக்கும் வழக்கத்தைக் கொண்டுவர விரும்புகின்றான்.
G2) ம.ம.இரகுநாதன்
 

“என்னால் இனிமேல் உங்கட அழுக்குத் துணிகளைத் தோய்க்க முடியாது. எவ்வளவு கேவலமாக நினைச்சிட்டாங்கள். நான் வேறு தொழில் செய்து தான் பிழைக்கப் போறன்”*
எனக்கூறி அடிமை, குடிமை நிலையிலிருந்து விடுபடத் தயாராகின்றான்.
கல்விகற்று முன்னேறுவதும் அடிமை, குடிமை முறையை விடுத்து வேறு தொழில் செய்ய முற்படுவதும் வேலுப்பிள்ளையின் குடும்பத்தில் மட்டும் நடைபெறவில்லை. வேறு குடும்பங்களிலும் இது போன்ற மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.
*கணபதியின் மகன் ஒருவன் இன்று ரெயில் வேயில் உத்தியோகம் பார்க்கின்றான். வல்லிபுரத்தின் மகன் பாற்பண்ணை நடத்துகின்றான். சோமரின் இளைய மகன் சைக்கிள் கடை ஒன்று தொடங்கிவிட்டான்.”*
*வல்லிபுரத்தின் தமையன் ஒருவர் இன்று தச்சுவேலை செய்து வருகின்றார். முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்துபோன சம்பவம் அது. வல்லிபுரத்தின் தமையன் மரவேலை செய்கின்ற குடும்பத்துப் பெண்ணொருத்தியை விரும்பி மணந்து கொண்டார். அதன் பின் தன் தொழிலையே மறந்து விட்டார்.”*
இவ்வாறாக தனிமனித மாற்றங்கள் குடும்ப மாற்றமாகி சமூக மாற்றமாக மாறிவருகின்றன என ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.
3.3 ஆலய வழிபாட்டில் சம உரிமை மறுப்பு
சாதியம் தொடர்பான சிக்கல்களுள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சிக்கலாக விளங்குவது ஆலய வழிபாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை வழங்கப்படாத விடயமாகும். அகஸ்தியர், செ.கணேசலிங்கன், டானியல் ஆகியோர் இப் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட போராட்டங்களையும் அவைபற்றிய தமது கருத்துக்களையும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் )3و( Dr. D.6, prepirgbair

Page 61
அகஸ்தியர்
அகஸ்தியரின் “எரி நெருப்பில் இடைபாதை இல்லை” என்னும் நாவலில் சங்கானையிலுள்ள வேளாளர்களின் கோயிலினுள் தாழ்த்தப்பட்ட மக்கள் அத்துமீறிப் பிரவேசிக்க முயன்றது பற்றியும் இவ் வேளையில் இரு பகுதியினருக்கும் இடையே கலவரம் மூண்டது பற்றியும் எடுத்துக் கூறியுள்ளார். இக் கலவரத்தை அடக்குவதற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர். பொலிசார் தாழ்த்தப்பட்ட மக்கள் சிலரைக் கைது செய்து நீதிமன்றத்தில் விடுத்தனர். நீதிபதி சிலரைப் பிணையில் விடுவித்தார். சிலரை விளக்க மறியலில் வைக்க உத்தர விட்டார். இவ்விடயத்தை பத்திரிகைச் செய்தியாகக் காட்டிய ஆசிரியர் இச் செய்தியைப் படித்ததும் உயர் சாதியைச் சேர்ந்த நடேசபிள்ளை.
“உவங்களுக்கு நல்லாவேணும், கொஞ்சம் இடம் கொடுத்தா இந்த எளிய நாயஸ் ஆக மிஞ்சி விடுறாங்கள். இப்பிடியும் அடக்கா விட்டால் ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு, நாளைக்கு ஆளையும் கடிக்கத்துவங்கியிடு வாங்கள்...”*
எனக் கூறுகின்றார். எனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆலய வழிபாட்டில் சம உரிமை வழங்குவதற்கு உயர்சாதியினர் தயாராக இல்லை என்ற நிலை புரிகின்றது.
தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைக்காகப் போராடுகின்றனர். ஆசிரியரின் கருத்தின்படி சாதியம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்துக்கும் சோஷலிசப் புரட்சியின் மூலமான சமூக மாற்றமே தீர்வாகும். இதனையே செங்கொடி தாங்கிய ஊர்வலம் உணர்த்து கின்றது.
செ. கணேசலிங்கன்
செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965)" என்னும் நாவலில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலுள்ள குரும்பையூர் என்னும் கற்பனைக் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழிபாட்டில் சம உரிமை மறுக்கப்பட்டது பற்றி எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
குரும்பையூர் அம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் பஞ்சமருக்கென கயிறு கட்டிப் பிரித்தொதுக்கப்பட்ட பகுதிக்குள் ஈழத்துத்தமிழ்நாவல்கள் )4و( Dr.ம.இரகுநாதன்

இருந்த நல்லான் என்ற பள்ளர் குலச் சிறுவன் நித்திரையில் தடுமாறி கயிற்றுக்கு அப்பால் புரண்டு விடுகின்றான். இதனைக் கண்ட உயர் சாதி இளைஞர்கள் அச்சிறுவனை மோசமாக அடித்துத் துன்புறுத்து கின்றனர். இதனைத் தடுக்க முயன்ற பள்ளர்குல வாலிபனான செல்லத்துரை கயிற்றை அறுக்கப்போவதாகச் சபதம் கூறுகின்றான். இச் சம்பவத்தால் செல்லத்துரை வேளாள இளைஞர்களின் பிரதான எதிரியாகக் கருதப்படுகின்றான்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நல்லானை உரிய நேரத்தில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முடியதவாறு உயர் சாதியினர் தடுக்கின்றனர். இதனால் அவன் இறக்க நேரிடுகின்றது. நல்லானின் மரணம் பஞ்சமர்களிடையே ஒரு வித எழுச்சியை ஏற்படுத்திவிடுகின்றது. இதனால் உயர் சாதியினரின் அடக்கு முறையை எதிர்க்கும் பணியில் பள்ளரும் பறையரும் இணைந்து கொள்கின்றனர். இவர்களின் ஒன்றிணைந்த போராட்டம் உள்ளூர் அரசியலிலும் வெற்றியைத் தேடிக் கொடுக்கின்றது.
அம்மன் கோயில் திருவிழாவின்போது வெளிவீதி உலாவந்த சுவாமிக்கு வழக்கத்திற்கு மாறாக நிறைகுடம் வைத்து நிறைகுடத் தண்ணிரை ஊற்றிய பள்ளர் குலத்தவனான செல்லப்பன் வேளாள இளைஞர்களால் தாக்கப்படுகின்றான். இச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளர்களின் குடிசைகள் பலவும் எரிக்கப்படுவதாக ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
நீண்ட பயணம் நாவலின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக அமைவது போர்க் கோலம் (1969)* என்னும் நாவல். இந்நாவல் யாழ்ப்பாணத்திலுள்ள கரம்பன் என்னும் கிராமத்தைக் களமாகக் கொண்டது.
இந் நாவலில் வேளாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் எனக் கூறப்படும் பள்ளர், பறையர் முதலியோரைப் பல வழிகளாலும் அடக்கி ஒடுக்குவதும், இத்தகைய ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அவர்கள் போராடுவதும் காட்டப்படுகின்றது. இந் நாவலில் சாதியக் கொடுமைகளை எதிர்த்து பொதுமக்கள் இயக்கமொன்று உருவாகி வருவது காட்டப்படுகின்றது. உயர் சாதி இளைஞர்களின் தலைவனாக உள்ள ஆனந்தனின் வீட்டிலேயே அவனின் தம்பி வடிவேலு இடது சாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டு சாதியக் கொடுமைகளுக்கு எதிரான
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gs) Dr.ம.இரகுநாதன்

Page 62
இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கின்றான். இதனால் இப்போராட்டம் தனியே தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டமாக இல்லா மல் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் போராட்டமாகவே உருவாகி விடுகின்றது.
பள்ளர் குல வாலிபனான இலட்சுமணன் உயர்சாதி இளைஞ னான ஆனந்தனுக்கு,
"...... நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கிறம் என்று நினைக்க வேண்டாம். எமது உரிமைகளை யெல்லாம் நாங்கள் உங்களிடமிருந்து தயவோடு எதிர்பார்க்கவில்லை. கோவில், தேத்தண்ணிக் கடைகள் போன்றவையெல்லாம் பொது இடங்கள். மனித இனமான எங்களுக் கும் அங்கே நுழைய உரிமை இருக்கு. நாமாகவே நுழைவோம். இப்போது எமக்குப் பயந்து பூட்டி வைக்கிறீர்கள். உந்தப் பூட்டையெல் லாம் உடைத்து நாங்கள் நுழையிற காலம் தூரத்திலில்லை.”
எனக் கூறுகின்றான். மேலும் இலட்சுமணன் அன்னத்திற்கு
“இதெல்லாம் வெறும் சாதிச் சண்டையாக மட்டும் நினைக் காதை இது அடக்குபவர்களுக்கும் ஒடுக்கப்படுபவர்களுக்கும் இடையே ஏற்பட்ட யுத்தம். இது அத்தனை விரைவாக முடிவடையப் பேர்வ தில்லை. நிலத்தோடு எமது உழைப்பையும் சுரண்டிக்கொண்டு சாதி என்ற பெயரில் எம்மை அடக்கிக் கொண்டவர்களுக் கெதிராகத்தான் இப்போது துப்பாக்கி எடுத்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றோம். இந்தச் சாதி வேளாளரையும் நிலவுடைமைக் காரரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பொலிஸ் அவர்களை ஆட்டிப்படைக்கும் ஆளும் வர்க்கம் - அவர்களைக் காப்பாற்றும் பட்டாளம் இப்படியாக இதோர் சங்கிலித்தொடர். இவற்றையெல்லாம் உடைத்தெறியும் பெரிய போராட் டத்துக்குத்தான் உன்னைப் போன்றவர்களும் தேவைப்படுவர்.”*
எனக் கூறுகின்றான். இக் கூற்றுக்கள் இது வெறுமனே ஒரு சாதிச் சண்டை அல்ல; இது அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் தம்மை அடக்குபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் ஒரு வர்க்கப் போராட் டமே என்ற கருத்தையே ஆசிரியர் கொண்டிருக்கின்றார் என்பதையே உணர்த்துகிறது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் )6و( Dr.ம.இரகுநாதன்

இத்தகையதொரு போராட்டத்தில் ஆளும்வர்க்கத்தினர் பலாத் காரத்தையும் ஆயுதங்களையும் பயன்படுத்தினால் அதற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தையே மேற்கொள்ள வேண்டுமென்ற கருத்தையே ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். இதனாலேயே ஆலய நுழைவைத் தடுப்பதற்காக வேளாள இளைஞர்கள் ஆயுதங்களுடன் ஆலயத்தினுள் காத்திருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களும் ஆயுதபாணிகளாகவே ஆலயத்தினுள் நுழைய முற்படுவதாக இவர் காட்டுகின்றார். இதனால் புரட்சி வர்க்கத்தின் பலாத்காரமும் எதிர்ப்புரட்சி வர்க்கத்தின் பலாத்காரமும் ஒன்றோடொன்று மோதுகின்றன. ஆலய நுழைவின் போது ஏற்பட்ட சண்டையில் கூடியிருந்த மக்கள்,
“ஒரு பள்க்குமரிகூட கைக்குண்டு எறியிறதைப் பார்த்தன். என்ன துணிச்சல்?”
“வேளாளருக்கு மட்டும் வெடிகுண்டு சொந்தமோ அவங்களும் எறியாமலிருந்தால் உள்ளேயிருந்த எறிகுண்டெல்லாம் அவங்கள் தலையில் தானே வெடித்திருக்கும்.”*
“பலாத்காரத்தைப் பலாத்காரத்தால்தான் அடக்க முடியும். முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்”*
*அரக்கர்கள் ஆயுதம் எடுக்க அவர்களை ஒடுக்க முருகன் ஆயுதம் எடுக்கவில்லையா?*
என்றெல்லாம் பேசிக் கொள்கின்றார்கள். இது அடக்கு முறைக்கு எதிராக ஆயுதம் எடுத்துப்போராடும் அவசியத்தையும் இப்போராட்டத்திற்கு ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் தயார்ப்படுத்தப் படவேண்டும் என்பதையும் வெளிக்காட்டுவதாக அமைகின்றது. பொதுவாக சாதி, ஆண், பெண் என்ற வேறுபாடுகளைக் கடந்த ஒரு வர்க்கப் போராட்டத்தையே ஆசிரியர் சாதியக் கொடுமைகளுக் கான தீர்வாகக் கருதுகின்றார்.
டானியல்
சாதியம் தொடர்பான பிரச்சினைகளை வெறுமனே சாதிப்பிரச்சி னையாக நோக்காமல் சொத்துள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான வர்க்கப் பிரச்சினையாகவே கருதிய டானியல் உரிமைகள்
ஈழத்துத்தமிழ் நாவல்கள் (97) Dr.ம.இரகுநாதன்

Page 63
மறுக்கப்பட்ட மக்கள் வர்க்க அடிப்படையில் ஒன்றுபட்டுத் தமது உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்றும் அப்போராடத்தில் பலாத்கார வழியினைப் பின்பற்றலாம் என்றும் கருதுகின்றார்.
இவரது பஞ்சமர் நாவலில் நந்தாவில் கந்தசுவாமி கோயிலினுள் நுழையமுற்பட்ட பஞ்சமர்கள் வன்முறை வழியினையே பின்பற்று கின்றனர். உயர் சாதியினர் துப்பாக்கியால் சுட்டபோது பஞ்சமர்களும் வன்முறையினை நாடித் தேரை எரித்தும் கதவுகளை உடைத்தும் உள்ளே நுழைவதாக ஆசிரியர் சித்திரிக்கின்றார்.
இவ்வாறே “அடிமைகள்” என்ற நாவலிலும் மட்டுவில் பன்றித் தலைச்சி அம்மன் கோயிலில் சம உரிமை வேண்டிப் போராடிய பஞ்சமர்களின் போராட்டம் வன்முறையுடன் கூடியதாகவே நடை பெற்றதை டானியல் எடுத்துக் காட்டியுள்ளார்.
திருவிழாவின்போது பஞ்சமர்கள் ஒதுக்குப்புறமாக நிற்பதற்காகக் கயிறு கட்டப்பட்டிருப்பதையும் அக்கயிற்றைப் பஞ்சமர்கள் அறுக்க முற்பட்டதையும் அவ்வேளையில் இருபகுதியினரும் மோதிக் கொண்டதையும் மோதலின் விளைவாக பஞ்சமர் தரப்பில் மூவர் கொலையுண்டதையும் ஆசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார்.* எனவே ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்டம் வன்முறையுடன் கூடியதாக அமைவதை ஆசிரியர் எதிர்க்கவில்லை எனத் தெரிகிறது.
பொதுவாக ஆலய வழிபாட்டில் சம உரிமை மறுக்கப்பட்டமை பற்றி அகஸ்தியர், கணேசலிங்கன், டானியல் ஆகிய மூவரும் தமது நாவல்களில் எடுத்துக் காட்டியுள்ளனர். இவர்கள் மூவருமே இதனை ஒரு சாதிப் பிரச்சினையாக மட்டும் கருதவில்லை. உரிமைகள் மறுக்கப்பட்ட மக்கள் அனைவரும் வர்க்க அடிப்படையில் இணைந்து மேற்கொள்ளும் சோஷலிசப் புரட்சியே இப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையும் என்பதே இவர்களது பொதுவான கருத்தாக உள்ளது. இப் புரட்சியின்போது ஆளும் வர்க்கம் ஆயுதங்களை உபயோகித்து புரட்சியாளர்களை ஒடுக்க முற்படும்போது புரட்சியாளர் களும் ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்பதை கணேசலிங்கனும், டானியலும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G 8) Dr.ம.இரகுநாதன்

3.4 தேநீர்க் கடைகளில் சம உரிமை மறுப்பு
சாதியம் தொடர்பான சமுதாயச் சிக்கல்களுள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தேநீர்க்கடைகள், உணவுச் சாலைகள் ஆகியவற்றினுள் நுழைவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதும் ஒன்றாகும். தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகள் முனைப்புப் பெற்றபோது சமபந்தி போசனம், தேநீர்க்கடைப் பிரவேசம் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போராட்டங்கள் பற்றிய இலக்கியப் பதிவுகளை அகஸ்தியர், டானியல் ஆகியோரின் நாவல்களில் காணமுடிகின்றது.
அகஸ்தியர்
அகஸ்தியரின் “எரி நெருப்பில் இடைபாதை இல்லை” என்ற நாவலில் நெல்லியடிச் சந்தியில் தாழ்த்தப்பட்ட மக்களால் நடாத்தப்பட்ட தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த செல்லையா தேநீர்க்கடைக்குள் திடீரெனப் புகுந்து தேநீர் கேட்கின்றான். செல்லையாவின் தோற்றம், அவன் நின்ற நிலை முதலாளியையும் டீ மேக்கரையும் பயமுறுத்துவ தாக அமைகின்றது. டீ மேக்கர் போத்தலில் தேநீரைக் கொடுக்கின் றான். செல்லையா இதை ஏற்க மறுத்து பேணியில் தருமாறு கேட்கின்றான். முதலாளி,
*என்னடா? உங்களுக்கு மறுக்காலம் நீரேத்தம் வந்து கண்ணை மறைச்சுப் போட்டுது போல கிடக்கு?
எனக் கூறி மறுத்தபோது செல்லையா தன்னிடமிருந்த பாளைக்கத்தியை எடுத்து பட்டடையில் போடுகின்றான். கத்தியைக் கண்டு பயந்த முதலாளி,
“இதென்ன தம்பி, ஒரு நல்ல பிள்ளையெண்டு இம்மட்டுக் காலமும் நினைச்சிருந்தன். உதாருது உந்தப் பழக்கத்தைச் சொல்லித் தந்தது? இஞ்ச இப்பிடி உள்ளுக்க வா. வந்து தாராளமாய் இருந்து வேண்டிய மட்டும் குடிச்சிட்டுப்போவன் அதை விட்டிட்டு இதென்ன கெட்ட குணம்?
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gوو( Dr.ம.இரகுநாதன்

Page 64
என்று கூறித் தடுமாறுகின்றார். மேலும்,
*தம்பி இதில எங்களுக்கு என்ன இருக்கு? ஒரு அறுப்புமில்லை. ஆனா, இந்த நடேசபிள்ளையும் சின்னத்தம்பியும் அவயோட கூடிக் கொண்டு திரியிற எங்கட நட்டா முட்டியளும் ஒண்டாத் திரளுவாங்கள்; நீங்கள் அங்கால அடியெடுத்து வைக்க, அவங்கள் பேந்து இஞ்சால வந்து எங்களைச் சும்மாவிட்டு வையாங்கள். இஞ்ச இருக்கிற தேத்தண்ணிக் கடைக் காறங்களுக்கோ பிறகு மத்தளம் மாதிரி அங்காலும் அடி இஞ்சாலும் அடி.”*
என்று தனது மன நிலையை வெளிக்காட்டினார் முதலாளி.
எனவே உயர் சாதியினர் சிலரின் தூண்டுதலாலும் பயமுறுத் தலாலுமே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேநீர்க்கடைகளில் சம உரிமை மறுக்கப்படுகின்றது என்பதையும் கடைக்காரர்கள் உரிமையினை வழங்க மறுக்கவில்லை என்பதையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆயுதபாணியாகச் சென்று உரிமையைக் கோரும்போது அவர்களின் போராட்டம் வெற்றிபெறும் என்பதைச் செல்லையாவின் தேநீர்க்கடைப் பிரவேசத்தின் மூலம் உணர்த்து கின்றார்.
டானியல்
டானியலின் பஞ்சமர் என்னும் நாவலில் சித்திரிக்கப்படுகின்ற தேநீர்க்கடைப் பிரவேசம் பலாத்கார வழியிலேயே மேற்கொள்ளப்படு கின்றது. தேநீர்க்கடையினுள் புகுந்து கொண்ட வாலிபர்கள்,
“தண்ணி சுடாட்டா கெதியாச் சுடவைத்துத் தேத்தண்ணியைப் போடும்”59
எனக் கடைக்கார வேலுப்பிள்ளையை மிரட்டுவதாகவும் கடையில் இருந்த சோடாவைத் தாங்களாகவே எடுத்துக் குடித்துத் திருப்தி காண்பதாகவும் அவ்வாலிபர்களின் தேநீர்க்கடைப் பிரவேசம் சித்திரிக்கப்படுகின்றது.
தேநீர்க்கடைப் பிரவேசம், ஆலய நுழைவு முதலிய போராட்டங்க ளெல்லாம் சாதியக் கொடுமைகளால் நீண்ட காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் மனதில் ஒரு நம்பிக்கையை ஊட்டுவதற்கும் ஈழத்துத்தமிழ்நாவல்கள் God) Dr.ம.இரகுநாதன்

போராட்டத்திற்கு அவர்களைத் தயார்ப்படுத்துவதற்குமாக மேற்கொள் ளப்படுகின்ற நடவடிக்கைகளே என்பதையும் போராட்டம் சமூக மாற்றத்தை நோக்கியதேயன்றி வெறும் சாதிப் பிரச்சினைக்கான போராட்டமல்ல என்பதையுமே ஆசிரியர் தனது கருத்தாகக் கொண்டிருக்கின்றார் என்பது குமாரவேலன் என்ற பாத்திரத்தினூடாக வெளிப்படுத்தப்படு கின்றது. குமாரவேலன்,
“பல தலைமுறைகளாக நசுக்கப்பட்டு வெகுவாகப் பின்தங்கி நிற்கும் மக்களைத் தட்டி எழுப்புவதும் போராட்டங்கள் மூலமாகவே பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுவதும், சமூக மாற்றத்திற்கான போராட்டத்திற்கு இவைகள் மூலம் பயிற்சி கொடுப்பதும், இவர்களோடு ஒத்த வாழ்வு நடத்தும் ஏனைய பஞ்சப்பட்ட மக்களையும் சேர்த்துப் பிடித்து ஐக்கியப்படுத்து வதும் எதிரே வரப்போகும் முழு நாட்டு மாற்றத்திற்குமான பரந்துபட்ட இயக்கத்தோடு பிரதேச மக்களை ஒன்றிணைப்பதும் அவசியமான 60) 6..... அந்த அவசியங்களை இந்தவித இயக்க ரூபமான செயற்பாடுகள் பூர்த்தியாக்கும்.”*
எனக் கூறுகின்றான். இது ஆசிரியர் வர்க்கப் போராட்டத்தின் மூலம் ஏற்படுகின்ற சமுதாய மாற்றத்தையே விரும்புகின்றார் என்பதை யும் அதுவே சாதியம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வாகும் என நம்புகின்றார் என்பதையும் உணர்த்துகின்றது.
3.5 பாலியல் ஒடுக்கு முறை
தாழ்த்தப்பட்ட மக்கள் அடிமை, குடிமைகளாகவும் தீண்டத்தகா தவர்களாகவும் கருதப்பட்டு ஒதுக்கப்பட்டாலும் அச் சமூகத்துப் பெண்கள் உயர் சாதி ஆண்களின் பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டனர். இதனை டானியலின் நாவல்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
டானியலின் அடிமைகள் என்ற நாவலில் கயிலாயரின் பாலியல் ஒடுக்கு முறை பற்றிக் கூறப்படுகின்றது.
*கயிலாயர் . யாராவது ஒருத்தியில் கண்வைத்து விட்டால் அவள் உறவினன் அல்லது உறவினள்; ஏன் சில வேளையில் வளின் கணவனிடமே லை உமலில் ifોઈીઈ

Page 65
தவிட்டை நிறைத்து கொடுத்துவிட்டால் குறிப்பிட்டவள் அதை உடம்பு முழுவதும் தேய்த்துக் குளித்து புனிதமாக்கிக் கொண்டு கயிலாயரின் தனி வளவான பலாமரக் கிடுகுக் களஞ்சியக் கொட்டகைக்கு அவள் வரவேண்டும். உமலில் தவிடு நிறைத்து அனுப்புவாரானால் அதனோ டேயே இடம், நேரம் ஆகிய அறிவிப்புக்கள் எல்லாமே அந்தத் தவிட்டு உமலுக்குள் அடங்கிவிடும்.”
எனவே தான் விரும்பிய பெண்ணை அடைவதற்காக அவளின் கணவனிடமே தவிட்டு உமலைக் கொடுத்து அனுப்புகின்ற அளவுக்கு பாலியல் ஒடுக்கு முறை இருந்ததை இது எடுத்துக் காட்டுகின்றது.
இத்தகைய பாலியல் ஒடுக்கு முறைகளை எதிர்க்கக்கூடிய நிலை ஆரம்பத்தில் இருக்கவில்லை; எனினும் தாழ்த்தப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெற்றபோது இதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கயிலாயர் கறுத்தானின் மூன்றாவது மனைவியின் மீது ஆசை கொண்டதால் கறுத்தானால் கொலை செய்யப்படுகின்றார்.
கயிலாயரின் மறைவுக்குப் பின்னர் அவரின் வழிமுறைகளைப் பின்பற்றி தனது விரக தாபத்தைத் தீர்க்க விரும்பிய சரக்கர் சுப்பனால் கொலை செய்யப்படுகின்றார். சுப்பனின் மனைவியின் மீது ஆசை வைத்த சரக்கர் சுப்பன் இல்லாத நேரத்தில் அவளிடம் சென்று சந்தனக் கட்டி சவர்க்காரத்தைக் கொடுத்து விட்டு
*கண்ணி நான் போறன் . யாழ்ப்பாணப் பட்டணம் போற றயில் எட்டு மணிக்கு இஞ்சாலை வரும் . அப்ப நான் பின் பக்கத் துரவடிக்கு வாறன் சந்தனக் கட்டியைப் போட்டுக் குளிச்சுப் போட்டு துரவடியில் நில் வாறன்.”*
எனக் கூறிவிட்டுச் செல்வதாக டானியல் குறிப்பிடுகின்றார். கண்ணி இதற்குப் பதில் கூறாது விட்டாலும்.
“ஊருக்குள் நடந்து வரும் பல சம்பவங்கள் அவளுக்குத்
தெரியும். பல தலை முறைகளையும் அவள் கேள்விப்பட்டிருக்கின்றாள்.
பல நயினார் மார்களுக்கும் வடுகருக்கும் இப்படி ஒவ்வொன்றை
அல்லது அதற்கு மேற்பட்டவைகளையும் வைத்துக் கொள்வதில்
பெருமை. இது ரகசியமாக மட்டுமல்ல பகிரங்கமாகவும் நடந்து
9963
கொண்டிருக்கின்றது.” ஈழத்துத்தமிழ்நாவ்ல்கள் Go) Dr.ம.இரகுநாதன்

என்பதை ஆசிரியர் எடுத்துக் கூறுகின்றார். கண்ணி சரக்கரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை எனக் காட்டிய ஆசிரியர் சரக்கரின் செயலால் ஆத்திரமுற்ற சுப்பன் சரக்கரைக் கொலை செய்வதாகக் காட்டுகின்றார்.
டானியலின் கானல் நாவலில் நயினாத்தி வீட்டில் தொண்டு துரவு செய்வதற்காக நின்ற சின்னியை நயினாத்தியின் இளைய மகன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முனைவதும் சின்னி இதை எதிர்த்து வீட்டை விட்டு வெளியேறுவதும் காட்டப்படுகின்றது. சின்னியின் வெளியேற்றத்தால் தனது மருமகனுக்கு அவப் பெயர் உண்டாகிவிடுமே என நினைத்த தம்பாபிள்ளைக் கமக்காரன் நன்னியனை அழைத்து சின்னியை நயினாத்தியின் வீட்டில் திரும்பவும் கூட்டிக்கொண்டுபோய் விடும்படி கட்டளையிடுகின்றார். அவர்,
“இப்ப என்னடா நடந்து போச்சு? கிழட்டு வயசிலை நீ பெத்த கடைக் குட்டியை அவன் கடிச்சுத் திண்டேபோட்டான். அவள் சின்னிக்கு ஒரு மாப்பிள்ளை பார்; சோறு குடுத்து விடலாம்; நானும் பார்க்கிறன்; எங்கையெண்டாலும் தாரம் இழந்தவனையாகிலும் பாப்பம்; அது வரைக்கும் மூச்சுக் காட்டாமல் இரு" எனக் கூறுகின்றார். தம்பாபிள்ளையின் இந்த உத்தரவு தனது மருமகன் அனுபவிக்குமட்டும் அவளை அனுபவிக்கட்டும் பின்பு தாரம் இழந்தவனையாவது பார்த்து அவளுக்குக் கட்டி வைக்கலாம் என்பதையே உணர்த்துகிறது. ஆனால் நன்னியன் இதற்கு உடன்படவில்லை என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
டானியலின் தண்ணிர்? என்னும் நாவலில் சொடுகனின் மகள் தெய்வியை மூத்த தம்பி நயினார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத் துவது காட்டப்படுகின்றது. தெய்வியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் நயினார் அவளுக்கும் தனது வீட்டில் அடிமையாக வுள்ள கறுத்தானுக்கும் சோறு குடுப்பித்து விடுகின்றார். கறுத்தானும் தெய்வியும் நயினாரின் காணியிலேயே குடியிருத்தப்படுவது தொடர்ந்தும் அவளை அனுபவிப்பதற்காக அவர் ஏற்படுத்திக் கொண்ட முயற்சியே எனத் தெரிகின்றது.
இவ்வாறாக தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை உயர்சாதியினர் தமது பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதை டானியல் சாதாரண வழக்கமாகவே எடுத்துக் காட்டுகின்றார். ஆனால் தாழ்த்தப்பட்ட
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ܫ டு Dr.ம.இரகுநாதன்

Page 66
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னர் இத்தகைய பாலியல் ஒடுக்கு முறைகள் தீவிரமாக எதிர்க்கப்பட்டதையும் இவர் எடுத்துக் காட்டியுள்ளார். எனினும் இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகள் தனிப்பட்ட ஒரு சிலரின் நடவடிக்கைகளாக அமைந்ததையே ஆசிரியர் சித்திரித் துள்ளார். இவ்வொடுக்குமுறைக்கு எதிராக சமூகத்தின் ஒன்றுபட்ட குரலை இவர் எடுத்துக் காட்டவில்லை. மறுபக்கத்தில் இவர் உயர் சாதிப் பெண்கள் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களிடம் சோரம் போவது பற்றி விளக்கமாகவே கூறியிருக்கின்றார். இவரது நாவல்கள் பலவற்றிலும் இத்தகைய சம்பவங்கள் மிகவும் விரிவாகவே எடுத்துப் பேசப்படுவதைக் காணமுடிகின்றது. பஞ்சமரில் வரும் கமலாம்பிகை, கோவிந்தனில் வரும் அழகம்மை நாச்சியார், அடிமைகளில் வரும் சந்திரரின் மனைவி ஆகியோர் தாழ்த்தப்பட்ட சாதி ஆண்களிடம் சோரம் போனவர்களாகவே சித்திரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சித்திரிப்பு உயர் சாதி ஆடவர்கள் கீழ்சாதிப் பெண்களைப் போகப் பொருளாக நினைக்கும் யதார்த்தப் போக்கிற்கு இலக்கியப் பழிவாங் கலாக உருமாறி ஒரு விதமான போலி மன நிறைவைத் தரமுயல் கின்றது என்றும் இத்தகைய போலி மன நிறைவுகள் புரட்சிகர கலை இலக்கியத்திற்குப் பலம் சேர்க்காது என்றும் அடிமைகள் நாவலுக்கு எழுதிய முன்னுரையில் கோ. கேசவன் குறிப்பிட்டுள்ளார்."
3.6 தீண்டாமையும் மதமாற்றமும்
காலங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைக் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச் செல்ல விரும்பியதையும் அவ்வாறு மதம் மாறியவர்கள் அங்கும் தீண்டப்படாதவர்களாகவே கருதப்பட்டது பற்றியும், அகஸ்தியர், கணேசலிங்கன் டானியல் முதலிய படைப்பாளிகள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
அகஸ்தியர்
சாதிக் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காக கிறிஸ்தவத்திற்கு மாறிய பஞ்சமர்கள் தேவாலயங்களிலும் தீண்டப்படாதவர்களாகவே ஒதுக்கப்பட்டனர் என்பதை லூர்த்தாள் என்னும் பாத்திரத்திற்கு நடைபெற்ற சம்பவத்தினூடாக ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். தேவாலயத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G10) Dr.ம.இரகுநாதன்

இருந்து தலையில் துப்பட்டியுடன் பிரார்த்தனை செய்த லூர்த்தாளைக் கண்டு உயர் சாதியினர் ஆத்திரப்படுகின்றனர்,
“அதாரடி ஒரு பறைச்சி, துணிஞ்சு துப்பட்டி போட்டுக்கொண்டு கோயிலுக்குள்ள வந்திருக்கிறாள்?” என்று பாம்புபோல் சீறி எழுந்தார் அந்தக் கோயில் சங்கிலித்தாம்"
“என்ன பார்த்துக்கொண்டு நிக்கிறியள். அவளின்ர துப்பட்டியைப் பறிச்சுப்போட்டுப் பிடிச்சு வெளியே தள்ளுங்கோ” என்று உடனே உத்தரவு போட்டார் கோயில் மூப்பர்.”*
“எளிய பள்ளி பறைச்சியள் எல்லாம் சொகுசாகத் துப்பட்டியோட வந்து எங்கட வெள்ளாளப் பிள்ளையளோட சரிக்குச் சரி இருக்கிறாளு கள். இன்னும் ஏனடி பார்த்துக் கொண்டு நிக்கிறியள்?” என்று கேட்டு உயர்த்தப்பட்ட ஜாதிப் பெருமையைக் காட்டிச் சன்னதம் செய்தார் அடுத்தாரில் நின்ற மொடுதாம்.?
“கொஞ்சம் பொறுங்கோ, கோயிலுக்குள்ள வைச்சு ஒண்டும் செய்யப்படாது. எதுக்கும் ஒருக்காக் குருவானவரிட்டப் போய்ச் சொல்லுங்கோ, அவர் என்ன சொல்லுறாரெண்டு பாத்துப் பிறகு வெளியேத்துவம்” என்று பிலாத்தூஸ் கைகழுவியது போல் கூறினார் உபதேசியார்."
இவ்வாறு கோயிலுக்குப் பொறுப்பானவர்கள் பலரதும் மனநிலை களைக் காட்டிய ஆசிரியர் இறுதியில் குருவானவருக்கு முன்னா லேயே துப்பட்டி கிழிக்கப்பட்டு தாக்கப்பட்டு கோயிலுக்கு வெளியே நாய்போல லூர்த்தாள் விரட்டப்படுவதாக எடுத்துக் காட்டு கின்றார்.
லூர்த்தாளுக்கு நடந்த கொடுமையை எதிர்த்த அவளின் தமையன் அந்தோனி பொய்க்குற்றஞ் சாட்டப்பட்டு சிறைக்கு அனுப்பப் படுகின்றான். சிறை மீண்டு வந்தவன் மனித உரிமையை மறுத்த இந்த வேதக் கோயிலை இனி எட்டியும் பார்க்கப்போவதில்லை என்ற முடிவோடு புரட்டஸ்தாந்து வேதத்தில் இணைகின்றான். அந்தோனியின் முடிவுபற்றிக் கூறும் ஆசிரியர்,
“இப்படி அவன் சபதம் செய்துகொண்டு புரட்டஸ்டன் வேதத்தில் சேர்ந்து செய்த புரட்சி அவனின் ஆவேசத்தைத் தீர்த்தது. ஆனால் தீண்டாமை..? அது தீரவில்லை”
ஈழத்துத்தமிழ்நாவல்கள் GOS Dr.ம.இரகுநாதன்

Page 67
  

Page 68
*அன்பான கிறிஸ்தவர்களே! வேஸ்பருக்கு கோவிலின் நடுவே மாதா சொரூபம் கோவில் வாயில் வரை வந்து திரும்புவதற்கு வசதியாகவும் எல்லோரும் சேர்ந்து வேதம் பரப்புதல் ஒரே நோக்கத்தை நிறைவேற்றவும், நடுவே வழிவிட்டு இந்த ஊரைச் சேர்ந்த கிறீஸ்தவர் கள் இடது புறமாகவும், வெளியூரைச் சேர்ந்த கிறிஸ்தவர்களும் அவர்களின் உருத்துக் காரர்களான இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து வலது. பக்கமாகவும் அமர்ந்து கொள்ளும்படி எல்லாம் வல்ல கர்த்தரின் பெயரால் கேட்டுக் கொண்டு உங்கள் எல்லோரையும் ஆசீர் வதிக்கிறேன்.”*
“இதென்ன . கதை கதைக்கிறார் குருவானவர்? எல்லா . வடுகப் . மக்களும் சேந்து மற்றவையை பேப்பட்டமெல்லே கட்டப்பாக்கிறாங்கள். ஆமான . பிறவாத நளவன், பள்ளன், பறையன், வண்ணான், அம்பட்டன் ஆரெண்டாலும் இருந்தா அவங்களும் என்னைப்போலை வெளிக்கிட்டு வரட்டுக்கு”
எனக் கூறிக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறுகின்றான்.
வயிற்றிலே நெருப்போடு (படகினி) வாழும் பஞ்சப்பட்ட மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் உயர் சாதியினர் உடைமை வர்க்கமாக இருக்கும் வரை சாதிப் பிரச்சினை தீரப்போவ தில்லை. இதனாலேயே இளையவன் தனக்கு கரைவலை இழுக்கும் தொழில் வழங்கப்பட்டபோது ஆத்திரத்தை அடக்கிப் பணிந்து போகின்றான். எனவே இது பஞ்சப்பட்ட மக்களின் பிரச்சினை இதற்கு கிறிஸ்தவ மத மாற்றம் தீர்வாகிவிடாது. இது வர்க்கப் போரினுடான சமூகமாற்றத்தின் மூலமே தீர்க்கப்பட வேண்டியதாகும் என்ற கருத்தையே டானியல் புலப்படுத்துகின்றார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Go) Dr.ம.இரகுநாதன்

3.7 பல்வேறு விதமான அடக்கு முறைகள்
3.7.1 நல்ல ஆடை, நகை, செருப்பு முதலியவற்றை
அணியத்தடை
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்ல ஆடையினையோ, நகையினை யோ, செருப்பினையோ அணிவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருந்தது என்பதை அகஸ்தியர் எரி நெருப்பில் இடை பாதை இல்லை என்னும் நாவலில் செல்லன் எனப்படும் செல்லையா என்ற தாழ்த்தப்பட்ட சாதி இளைஞனுக்கு ஏற்பட்ட கொடுரமான சம்பவத்தின் மூலமாக எடுத்துக் காட்டுகின்றார்."
நெல்லியடிச் சந்தியில் வெள்ளை வேட்டி பட்டுச் சால்லை, கலாவரை மோதிரம், காலில் செருப்பு, நெற்றியில் சந்தனப் பொட்டு, இடதுகை மணிக் கட்டில் கடிகாரம் சகிதம் நின்ற செல்லையா உயர் சாதி இளைஞர்களால் தாக்கப்படுகின்றான். செல்லையாவைத் தாக்கியவர்கள் சுண்ணாம்புத் தண்ணியால் அவனின் நடு முதுகில் நளச் செல்லன் என்று எழுதிவிடுகின்றனர். இச் சம்பவத்தால் ஆத்திர முற்ற செல்லையா பழிக்குப்பழி வாங்கத் துடிக்கின்றான். எனினும் “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேர்வீர்” என செங்கொடியோடு நின்று முழங்கிய தலைவனின் பேச்சு அவனின் சிந்தனையை மாற்றிவிடுகின்றது. அவன் இவ்வாறு பழிவாங்குவதால் மட்டும் தீண்டாமையை ஒழிக்கமுடியாது என்பதை உணர்கின்றான் என ஆசிரியர் சித்திரிக்கின்றார்.
டானியலின் அடிமைகள் என்னும் நாவலில் சேவல் அடிப்பந்தயத் திற்காக வந்த பண்டாரியன் கிறில் வெட்டுத் தலை, காதில் கல்லுப்பதித்த காதுக்குச்சி, அரைக்கை பெணியன், முழங்காலுக்குக் கீழாக பதித்து உடுத்த வேட்டி, ஒட்டு மீசை ஆகியவற்றுடன் கூடிய தோற்றத்துடன் காட்டப்படுகின்றான். இத் தோற்றத்தைக் கண்ட உயர் சாதியினர் முணுமுணுக்கின்றனர். எனினும் அவன் பட்டணத்து கொட்டடி நளவன் என்பதால் நேரடியாக அவனோடு மோத விரும்பாமல் ஒதுங்கிக் கொள்கின்றனர் என ஆசிரியர் குறிப்பிடுகின்றார்."
ஈழத்துத்தமிழ்நாவல்கள் டு) Dr.ம.இரகுநாதன்

Page 69
3.7.2. விருப்பமான பெயர்களை வைக்கத் தடை
தாழ்த்தப்பட்ட மக்கள் தமது பிள்ளைகளுக்குப் பெயரிட வேண்டு மாயின் ஊருக்கு அதிகாரிகளாக இருக்கும் கிராம விதானைமாரிடமே செல்ல வேண்டியிருந்தது. இவ்வதிகாரிகள் பெயர்களைப் பதியும்போது திரித்தோ, விகாரப்படுத்தியோ தமது விருப்பத்திற்கேற்றவாறு பதிந்து விடுகின்றனர். இதனை அகஸ்தியர் தனது மேற்படி நாவலில் எடுத்துக் கூறியுள்ளார்.
“கோயில் மேளகாறர் மாதிரி ஊருக்கு அதிகாரிகளாய் நியமிக் கப்பட்ட கிராம விதானைமார்கள் கையில் இந்தத் தீண்டாச் சாதிகள் சிக்கியபோது முருகேசு முருகன் ஆனான், கந்தசாமி கந்தன் ஆனான், சுந்தரம்பிள்ளை சுந்தரன் ஆனான், செல்லையா செல்லன் ஆனான், வேலுப்பிள்ளை வேலன் ஆனான் சின்னத்தம்பி சின்னவன் ஆனான் செல்லம்மா செல்லி ஆனாள். பொன்னம்மா பொன்னி ஆனாள். இப்படி ஆண்களுக்குள்ளும், பெண்களுக்குள்ளும் சேர்த்துப் புரட்சி செய்து மறுபக்கம் அவர்கள் பெயர்களை விதானைமார் தீண்டிக் கொண்டார்கள்.”
என அகஸ்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயத்தை செ. கணேசலிங்கனும் தனது நீண்ட பயணம் என்னும் நாவலில் எடுத்துக்கூறியுள்ளார்."
3.7.3. பிரேத ஒஊர்வலத்தில் மேளம் அடிக்கத்தடை
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரேத ஊர்வலத்தில் மேளம் அடிக்கின்ற உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை மீறி கொட்டடி நளச் செல்லனின் மூத்த மகனின் இறுதி ஊர்வலத்தில் மேளம் அடிக்கப்படுவதையும் இதனை உயர் சாதியினர் எதிர்ப்பதையும் அகஸ்தியரின் மேற்படி நாவல் எடுத்துக் காட்டுகின்றது. உயர் சாதியினர் இதனை எதிர்த்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது சுடலையில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்படுகின் றார் என்பதையும் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (L10) Dr.ம.இரகுநாதன்

3.7.4. சம ஆசனம் வழங்கமறுப்பு
சாதியம் தொடர்பான அடக்குமுறைகள் தீவிரமடைந்தபோது பாடசாலைகளிலும், பஸ் வண்டிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம ஆசனம் வழங்கப்படவில்லை. பாடசாலைகளில் இவர்கள் வெறுந்தரையிலேயே இருந்து படிக்க வேண்டியிருந்தது. இதனையும் அகஸ்தியரின் மேற்படி நாவல் எடுத்துக் காட்டுகின்றது.
“முருகன் பகுதிச் சிறுவர்கள் பாடசாலைகளில் வெறுந்தரை களில் இருந்து படிக்கப் பணிக்கப்பட்டார்கள். பள்ளிக்கூட வளவுப் பொதுக் கிணறுகளில் அவர்கள் தாகத்துக் குத் தணிணிர் அள்ளிக்குடிக்க மறுக்கப்பட்டார்கள். தேகத்தில் சட்டைபோட்டுக் கொண்டு துப்பரவாக வருவதற்கே அந்தத் தீண்டாமை இயக்கம் புதிய வேகத்தோடு தடைபோட்டது. தொடர்ந்து இந்தத் தீண்டாச் சாதிகள் பஸ் வண்டிகளில் பிரயாணம் செய்யும்போது நின்று கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை கூட ஒரு சட்டம் போல் பஸ் கம்பனி முதலாளிகளால் நடைமுறைப்படுத்தப்பட்டது.”*
செ. கணேசலிங்கன் தனது போர்க்கோலம் என்னும் நாவலில் மிஷன் பாடசாலையில் பள்ளர், பறையர் ஆகிய தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு வகுப்பிலும், பிரார்த்தனை மண்டபத்திலும் தனியான இடம் ஒதுக்கப்பட்டதையும் ஆசிரியர்களாலேயே இம் மாணவர்கள் வெறுக்கப்படுவதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.?
இந்நாவலில் வருகின்ற நவமணி வாத்தியார்,
“பள்ளிக்கு என்னடி படிப்பு? போய் செம்பாட்டிலை ஆடு மாட்டை மேயன்" என்று அன்னத்தையும் வேறு பள்ளர் சாதி மாணவர் களையும் தினமும் ஏசுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
டானியலின் அடிமைகள் என்னும் நாவலில் கோச்வண்டியில் பிரயாணம் செய்த எல்லுப்போலை, இத்தினி ஆகிய இருவரும் உயர்சாதியினரால் தாக்கப்பட்டது பற்றிக் கூறப்பட்டுள்ளது. இங்கு இவ்விருவரும் வேலுப்பிள்ளைக் கமக்காரனும் சீதேவி அம்மாளும் திருமணமாகிக் கொழும்புக்குச் சென்றபோது அவர்களின் அடிமைகளா கவே கோச் வண்டியில் ஏற்றப்பட்டனர். எனினும் வண்டியில் இவர்கள் ஏறியதை விரும்பாத உயர் சாதியினர் சிலர் வண்டியை வழிமறித்து ஈழத்துத்தமிழ்நாவல்கள் GD) Dr.ம.இரகுநாதன்

Page 70
இவ்விருவரையும் வெளியே இழுத்து எறிந்து விடுகின்றனர். தாக்குதலின்போது எல்லுப்போலை இறந்துவிடுவதாகவும் ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.*
தெணியானின் விடிவை நோக்கி என்னும் நாவலில் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு பாடசாலைக் கிணற்றில் தண்ணிர் அள்ள அனுமதி மறுக்கப்பட்டது பற்றியும் இதற்காக கோவிந்தன் என்னும் தாழ்த்தப்பட்ட சாதி ஆசிரியன் போராடுவதும் எடுத்துக் காட்டப்படு கின்றது.
கோவிந்தன் ஆசிரியனாக இருந்தும் அவனுக்கு அதிபர் சம ஆசனம் வழங்க முன்வராமல் இருந்ததையும் கல்வி அதிகாரியின் முன்னிலையிலேயே அவனுக்கு ஆசனம் வழங்கப்பட்டதையும் தெணியான் எடுத்துக் காட்டியுள்ளார். எனினும் கோவிந்தன் அமைதியான முறையில் தமது உரிமைகளுக்காகப் போராடி வெற்றி பெறுவதாக ஆசிரியர் கூறுகின்றார். அடக்கு முறையை வன்முறையால் எதிர்க்கும் வழியை ஆசிரியர் விரும்பவில்லை என்பது கோவிந்தனின் மூலமாக உணர்த்தப்படுகின்றது.
3.7.5. வீதிகளில் நடமாடத் தடை
தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத் தகாதவர்களாகக் கருதிய உயர்சாதியினர் அவர்களைக் காண்பதால் தமக்குத் தீட்டு உண்டாகிவிடும் எனக் கருதினர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீதிகளில் சுதந்திரமாக நடமாடுகின்ற உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இவர்கள் வீதிக்கு வரும்போது வருகையை அறிவிக்கும் பொருட்டு காவோலையை இழுத்து வரவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டனர். காவோலையின் ஓசையைக் கேட்டதும் உயர் சாதியினர் மறைந்து நின்று தீட்டுப்படாமல் தப்பிக்கொள்ள முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.
டானியலின் அடிமைகள் என்னும் நாவலில் இக் காவோலை இழுக்கும் வழக்கம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இங்கு மழுவராயரின் மனைவிக்கு மாந்திரிகம் செய்வதற்காக அழைக்கப்பட்ட கயித்தான் என்ற துரும்பன் காவோலையை இழுத்துவர மறுப்பதாகவும் மழுவராயர் அதற்குப் பணிந்து போவதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது.87
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (12) 0ா.ம.இரகுநாதன்

முல் க்ராஜ் ஆனந்தின் தீண்டாதான் (1947)° என்னும் நாவலிலும் இது போன்ற பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இங்கு தனது வருகையை அறிவிக்காமல் வீதியால் வந்த பாக்கா என்ற தோட்டியை உயர்சாதிக்காரன் ஒருவன்,
“கீழ்ச்சாதிப் புழுவே! பாதையின் ஓரத்தில் நடந்து போடா! நீ வருவதற்கு முன் அதை அறிவிப்பதற்கு என்ன கேடா? என்னைத் தொட்டுத் தீண்டலாக்கி விட்டாயே! பறைப்பயலே, உன் அவலஷண மூஞ்சியைப் பார்! இன்றைக்குக் காலையில் தான் புது வேஷடியும் சட்டையும் எடுத்து உடுத்தினேன். இனிமேல் போய்க் குளித்துத் தொலைக்க வேணுமே”
எனக்கூறி பாக்காவை அடிக்கின்றான். பாக்கா அடிவாங்கிய பின்னர்,
*தோட்டி வருகிறேன் ஒத்திப் போங்கள்”
என்று உரக்கக் கூவிக்கொண்டு செல்வதாக ஆசிரியர் சித்திரிக்கின்றார்.
3.7.6. தட்டுவத்தில் சோறும், சிரட்டையில் தண்ணிரும்.
உயர் சாதியினரின் வயல்களில் வேலை செய்யும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தட்டுவத்தில் சோறும், சிரட்டையில் தண்ணிரும் கொடுப்பதே வழக்கம். இந்நடைமுறையினை தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்த்து நின்று வெற்றி பெற்றதை டானியல் எடுத்துக் காட்டியுள்ளார். இவரின் பஞ்சமர் என்னும் நாவலில் இந்நடைமுறையினை எதிர்த்து வயலில் வேலை செய்ய மறுத்த பெண்களுக்கு கடகத்தில் சோறும், அலுமினியச் சட்டியில் கறியும், தண்ணிர் குடிக்க பிளாஸ்ரிக் பாத்திரங்களும் வழங்கப்படுவது காட்டப்பட்டுள்ளது.”
பஞ்சகோணங்கள்? என்னும் நாவலில் இளையதம்பிக் கமக்காரனின் தோட்டத்தில் வேலை செய்யும் பெண்கள் இந் நடைமுறையினை எதிர்த்து நின்று வெற்றிபெறுவது காட்டப்படுகின்றது. அப் பெண்களுள் மூன்றாம் வகுப்பு வரைப்படித்தவளான செல்லி,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G 13 Dr.ம.இரகுநாதன்

Page 71
“ஊரிலை தமிழரெல்லாம் ஒண்டாச் சேரவேணுமெண்டு எல்லாருங் கதைக்கினம்! அதுதான் இனிமேல் எங்களுக்குச் சிரட்டையிலை தண்ணியும், தட்டுவத்திலை சோறும் தராமல் பக்குவமா வேறை ஏதனங்களிலை தரச் சொல்லிக் கேக்கிறம். அது தான் உதைக் கேக்கிறதுக்கெண்டு வயது செண்டவையை விட்டுட்டு நாங்கள் வந்தனாங்கள்?
எனக் கேட்பது இளந் தலைமுறையினர் இத்தகைய அடக்கு முறைகளை ஆதரிக்கப் போவதில்லை என்ற ஆசிரியரின் கருத்தையே வெளிக்காட்டுகின்றது எனலாம்.
3.8. பிராமணர்கள் மீதான அடக்குமுறை
வருணாச்சிரம தர்ம அடிப்படையில் முதற் படிநிலையில் வைக்கப் பட்டுள்ள பிராமணர்கள் யாழ்ப்பாணச் சமூக அமைப்பில் அதிகார மேன்மையுடையவர்களால் அடக்கியாளப்படுபவர்களாகவே இருந்து வருகின்றனர். சைவ சமூகத்தின் மிக உயர்ந்த நிலையிலுள்ள பிராமணர்கள் தாழ்த்தப்படுவதற்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி பின்வரு மாறு காரணம் கூறுகின்றார்.
“பிராமணர்கள் யாழ்ப்பாணச் சாதியமைப்பில் அதிகார மேன்மை யுடையவர்களாக இருக்கவில்லை. தமிழ்நாட்டின் சமூக அமைப்புக்கும் யாழ்ப்பாணத்துச் சாதியமைப்புக்குமுள்ள முக்கிய வேறுபாடு இது வாகும். தமிழ் நாட்டைப் போன்று யாழ்ப்பாணத்திற் பிராமணர் நிலச் சொந்தக் காரர்களாக விளங்கவில்லை. யாழ்ப்பாணத்துப் பிராமணர் பெரும்பாலும் புரோகித வாழ்க்கையை மேற்கொண்டிருந்தமையே இதற்குக் காரணமாகும்.”*
எனவே வருணாச்சிரம தரும அடிப்படையில் முதற்படியில் இருந்தாலும், பிராமணர்கள் யாழ்ப்பாணத்தில் நிலவுடைமையாளர் களாக விளங்கும் வேளாளருடைய மேலாண்மைக்குக் கட்டுப்பட்டே வாழ வேண்டியுள்ளது. இச் சமுதாய வரலாற்றை தெணியான் சோமகாந்தன் ஆகிய இரு படைப்பாளிகளும் தமது நாவல்களில் எடுத்துக் காட்டியுள்ளனர்.
தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்னும் ாவலில் புரோகிதத் தொழிலையே நம்பி வாழ்கின்ற பிராமணக் ஈழத்துத்தமிழ்நாவல்கள் 114 Dr.ம.இரகுநாதன்

குடும்பம் ஒன்று ஆலய உரிமையாளர்களால் அடிமைகள் போல நடத்தப்படுவதும் அவமதிப்புக் குள்ளாக்கப்படுவதும் எடுத்துக் காட்டப் பட்டு புதிய தலைமுறையினர் புரோகிதத் தொழிலை வெறுத்து கல்விகற்று அரச உத்தியோகங்களை விரும்பிச் செல்வது காட்டப்படு கின்றது.
கோயிற் பூசகராக இருக்கும் தன் மகனுக்கு மனைவியாக்கி மோதகமும், வடையும் தயாரித்துக் கொண்டு சிறைவாசம் செய்யும் அடிமை வாழ்வுக்குள் தன்னை இழந்துவிட எண்ணும் அத்தையை ஜமுனா வெறுக்கின்றாள். புரோகிதத் தொழிலையே நம்பி வாழ்கின்ற தனது சகோதரனான கோபிக்கு பாலன்,
“நாங்கள் கிரியைகள் செய்கிறபோதும், கோயிலுக்குள்ளேயும் பெரியவர்களாகவும் புனிதமானவர்களாகவும் காட்டப்பட்டு ஏமாற்றப் படுகிறோம், சுரண்டப்படுகிறம், கோயில் எங்களுக்கொரு பொற்சிறை, யாழ்ப்பாணத்திலை சடங்காசாரங்களினாலைதான் பிராமணன் பெரியவன், சமூகத்திலை பிராமணன் பெரியவனில்லை. சொத்துடைமை யுள்ளவன்தான் பெரியவன். சமூகத்திலை ஒடுக்கு முறைகளைப் பாதுகாக்கும் காவல் அரண்களாக இண்டைக்கும் கோயில்களை வைச்சிருக்கினம்..”*
எனக் கூறுகின்றான். தமக்கென எந்தவிதமான சொத்துக்களும் இல்லாமல் கோயில் நிர்வாகத்தினர் தருகின்ற சம்பளத்தையே நம்பிவாழ்ந்து அடிமைகள்போல நடாத்தப்பட்டதை உணர்ந்த இளைய தலைமுறை பூசகர் தொழிலையே வெறுத்துபுலம் பெயர்ந்து வேறு தொழில்தேடிச் செல்வதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
சோமகாந்தனின் விடிவெள்ளி பூத்தது என்ற நாவலிலும் பிராமணர்களின் அடிமைநிலை எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. பூசகரின் மகன் சரவணன் ஜே. எஸ். சி. வகுப்பில் முதல் பிள்ளையாகவந்து சித்தி பெற்று விட்டான் என்பதை அறிந்த ஊர்ப் பிரமுகர்கள் தமது அபிப்பிராயங்களை சரவணனின் தந்தைக்குக் கூறுகின்றனர்,
*புத்தகத்தை வாசிக்கின்ற அளவுக்குப் படிச்சிட்டார். மூத்த மகனைப்போல இவரையும் கோயிற் பூசைப் படிப்புக்கு அனுப்பி வையுங்கோ குருக்கள்”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G15) Dr.ம.இரகுநாதன்

Page 72
இது விதானையார் கதிரிப்பிள்ளையின் அபிப்பிராயம்,
*குருக்களின்ரை பிள்ளைக்கு இங்கிலீசு என்னத்துக்கு? மந்திர மெல்லாம் சமஸ்கிருதத்திலைதானை இருக்கு. குடுமியை வளத்துப்
போட்டு சமஸ்கிருதம் படிக்க வைக்க ஆக்கும் குருக்கள்.”
இது கொந்தறாத்து முருகேசரின் அபிப்பிராயம்.
“ஊரைத் தாண்டி பெரிய பள்ளிக் கூடத்துக்குப் போனால் கூடாத கூட்டத்தில் சேர்ந்து ஒழுக்கம் கெட்டுப்போகும். பிறகு ஊருக்கு அவமானமாகப் போயிடும் குருக்கள். ஊர்ப் புரோகிதத் தொழிலை உங்களுக்கு உதவியாகப் பழகினால் போதும் தானை”
இது சண்டியன் மார்க்கண்டுவின் கருத்து.
“ஊருக்கு வெளியே இருக்கிறது வேதப் பள்ளிக்கூடம். எளிய சாதியளோடு ஒண்டடி மண்டடியாக இருந்துதான் படிக்க வேணும். குருக்களின்ரை மேன் அந்த வேதப் பள்ளிக்குப் போனால் கோயில் மடத்தின்ரை ஆசாரம் கெட்டுவிடும் எண்டு ஆரும் யோசிச்சியளோ?”
இது கோயில் எசமான் கணபதிப்பிள்ளையின் மைத்துனனான் தாமோதரம்பிள்ளையின் எச்சரிக்கை.
இவர்களின் கருத்தை மறுத்து ஒரு சிலர் அவன் படிக்க வேண்டும் எனக் கூறினாலும் அவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க முடியவில்லை. எனினும் குருக்கள் மகனைப் படிக்க அனுப்புகின்றார். அவன் படித்து உத்தியோகம் பெற்று புதிய வாழ்வு வாழ்கின்றான் என ஆசிரியர் சித்திரிக்கின்றார்.
பொருளாதார நிலையில் உயர் சாதியினரிடம் தங்கியிருக்காமல் தமது சொந்தக் காலில் நிற்க முனையும் போதே பிராமணர்களால் தமது அடிமை நிலையிலிருந்து மீளமுடியும். அதுவரை அவர்கள் அடிமைகள் போலவே வாழவேண்டியிருக்கும் என்பதை தெணியானும், சோமகாந்தனும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளனர். எனவே அடிமைப் படுத்தப்படுவது தீண்டாதாராக்கப்படுவது ஆகிய அனைத்தும் பொருளாதார அடிப்படையில் சொத்துடைமையோடு தொடர்பான வையே ஆகும். இத்தகைய நிலைமையை மாற்றுவதற்கு சமூக
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (10) Dா. ம.இரகுநாதன்

அமைப்பு மாறவேண்டும் என்பதை இவர்கள் நேரடியாகக் கூறாவிட் டாலும் இவர்களின் படைப்புக்கள் இதனையே உணர்த்துகின்றன.
இவ்விரு படைப்பாளிகளுக்கும் முன்னர் சாதியம் தொடர்பாக சீதா என்ற நாவலை எழுதிய சொக்கன் அந்நாவலில் முற்போக்குச் சிந்தனையுடைய பிராமண வாலிபனான ஆத்மநாதன்,
“யாழ்ப்பாணத்துச் சமூக அமைப்பில் நிலத்துக்குச் சொந்தக் காரனாயிருக்கும் வேளாளனே உயர்ந்தவன். அவன் தனது வர்க்கப் பாதுகாப்பிற்கும் சுய நலன்களுக்குமாகவே பிராமணர் தொடக்கம் தாழ்ந்த சாதியர் எனக் கூறப்படும் இனம் வரை பல சாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறான். குரு என்றும் ஐயர் என்றும் பிராமண சமூகத்தை உயர்த்துவதெல்லாம் தனது சொந்த நன்மைக்காகவே யன்றி வேறல்ல. இல்லாவிட்டால் அன்றும் இன்றும் எனது தந்தை கோயில் எஜமானர் முன்பு கூனிக் குறுகி அவர் தயவுக்காகக் காத்திருப்பதெல்லாம் ஏன்? என்றும் வறுமையையே இவர் கவசமாகப் பூண்டிருப்பதும் ஏன்?"
எனச் சிந்தித்து பூசகர் தொழிலை விடுத்து கல்விகற்று அரச உத்தியோகத்தை நாடிச் செல்வதாக எடுத்துக்காட்டியுள்ளார். எனவே பிராமணர்கள் பொருளாதார அடிப்படையில் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதாலேயே அடிமை நிலையிலிருந்து விடுபட முடியுமென்பது தெரிகின்றது.
3.9 முடிவுரை
ஈழத்துத் தமிழ் நாவல்களில் சாதியம் தொடர்பான விடயங்கள் இருபதாம் நூற்றாண்டின் முதற் கால் நூற்றாண்டுப் பகுதியிலேயே இடம்பெறத் தொடங்கிவிட்டன. எனினும் சாதியம் தொடர்பான பிரச்சினைகள் பாரியதொரு சமுதாயச் சிக்கலாக உணரப்படாத சூழலில் இந்நாவல்கள் எழுதப்பட்டதால் இவற்றில் சாதியத்தின் புறத்தோற்றத்தின் சில கூறுகள் மட்டுமே மேலெழுந்தவாரியாக எடுத்துக் காட்டப்பட்டன. இந்தவகையில் இடைக்காடரின் நீலகண்டன் ஓர் சாதிவேளாளன், எஸ்.தம்பிமுத்துப்பிள்ளையின் அழகவல்லி ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தக்கனவாகும்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் GD) Dr.ம.இரகுநாதன்

Page 73
சாதியப் பிரச்சினைகளின் பல்வகைத் தாக்கங்களையும் சமுதாய வரலாற்று நோக்கில் ஆழமாக நோக்கி நாவல் படைக்கும் முயற்சிகள் 1950 களின் பிற்பகுதியிலிருந்தே ஆரம்பித்தன. இளங்கீரனின் தென்றலும் புயலும், செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் ஆகிய நாவல்கள் இத்தகைய முயற்சிகளுக்குக் கால் கோளிட்டன. இவற்றினைத் தொடர்ந்து சாதியம் தொடர்பான சமுதாயச் சிக்கலைப் பொருளாகக் கொண்டு பல நாவல்கள் எழுதப்பட்டன.
சாதியம் தொடர்பான சிக்கல்களைப் பொருளாகக் கொண்டு நாவல் படைத்தவர்களை இரு வகையாகப் பகுத்து நோக்கலாம்.
1. முற்போக்கு அணியினர். இவர்கள் சாதியம் தொடர்பான பிரச்சினைகளை வெறுமனே சாதிப்பிரச்சினையாக மட்டும் கருதாமல் வர்க்கப் பிரச்சினையாகக் கருதி பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தீர்வு காண முயல்கின்றனர். இவ்வணியில் இளங்கீரன், செ. கணேசலிங்கன், டானியல், அகஸ்தியர், தெணியான், செ. யோகநாதன் ஆகியோர் அடங்குவர்.
2. முற்போக்கு அணியைச் சாராதவர்கள். இவர்கள் சாதியம் தொடர்பான சிக்கல்கள் கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றில் ஏற்படும் இயல்பான மாற்றங்களால் தானாகவே அகன்று விடும் என்ற கருத்துடையவர்கள். இவ்வணியில் சொக்கன், செங்கை ஆழியான் ஆகியோர் அடங்குகின்றனர். தி.ஞானசேகரன் முற்போக்கு அணியைச் சேராதவரே எனினும் சாதியம் தொடர்பாக கோட்பாட்டு ரீதியான ஒரு சிந்தனையை வெளிப்படுத் துபவராகத் தெரியவில்லை.
முற்போக்கு அணியினர் பொதுவுடைமைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள் என்ற வகையில் ஒற்றுமையுடையவர்களாக இருந்தாலும் சாதியம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் விடயத்தில் அவர்களிடையே சில வேறுபாடுகளையும் காணக்கூடிய தாக உள்ளது. இந்த வகையில் சாதியம் தொடர்பாக 1950 களில் எழுதிய இளங்கீரன் கலப்புத் திருமணங்களின் மூலமாக சாதியத்தை ஒழித்துவிடலாம் என்ற கருத்தை வெளியிட்டார். தீண்டாமைக் கொடுமைகள் அதன் உச்சக் கட்டத்திற்கே சென்று விட்ட யாழ்ப்பாண மண்ணில் இத்தகைய கலப்புத் திருமணங்கள் சாத்தியமாகுமா?
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (18) Dr.ம.இரகுநாதன்

உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைகளாக நடாத்தப்படுகின்ற மக்களு டன் திருமண உறவை வைத்துக்கொள்ள உயர்சாதியினர் முற்படுவார் களா? இவ்வாறான தீர்வு நடைமுறைக்குச் சாத்தியமானதா என்று சிந்திக்கும்போது இளங்கீரனின் முடிவுவெறும் கனவாகவே அமைந்து விடும் எனத் துணிந்து கூறலாம்.
யாழ்ப்பாண மண்ணில் சாதியத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகளை நேரடியாகக் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பு டானியல், தெணியான் முதலிய படைப்பாளிகளுக்குக் கிடைத்ததுபோல இஸ்லாமியரான இளங்கீரனுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. எனினும் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் பெரியாரின் பகுத்தறிவு இயக்கச் சிந்தனைகளால் கவரப்பட்டதாலும் பொதுவுடைமைக் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதாலும் இவரால் இத்தகையதொரு நாவலைப் படைக்க முடிந்தது. இவரின் பின் வந்தவர்கள் யாழ்ப்பாண மண்ணில் நடைபெற்ற சாதிக் கொடுமைகளை நேரடியாகக் கண்டு அனுபவித்தவர்கள், அக் கொடுமைகளால் தாமும் பாதிக்கப்பட்ட வர்கள், அதனால் அவர்களின் நோக்கு நிலை வேறுபடுகின்றது.
இளங்கீரனையடுத்து சாதியம் தொடர்பான நாவல்களை எழுதி யவர் செ.கணேசலிங்கன். முற்போக்கு இயக்கத்தைச் சார்ந்து நின்ற கணேசலிங்கன் இவ்வியக்கத்தின் கோட்பாடுகளுக்கு ஏற்ப ஈழத்தின் சம கால வரலாறு எனத் தக்க வகையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தீண்டாமைக் கொடுமைகளை மையமாக வைத்து நீண்ட பயணம், சடங்கு, போர்க்கோலம் ஆகிய நாவல்களை எழுதினார். இந் நாவல்களினூடாக இவர் சாதியம் சார்ந்த பிரச்சினைகள் வெறுமனே ஒரு சாதிச் சண்டை அல்ல; இது அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் தம்மை அடக்குபவர்களுக்கு எதிராக மேற்கொள்ளும் ஒரு வர்க்கப் போராட்டமே என்ற கருத்தை முன்வைத்தார்.
இத்தகையதொரு போராட்டத்தில் ஆளும் வர்க்கத்தினர் பலாத் காரத்தையும் ஆயுதங்களையும் பயன்படுத்தினால் அதற்கு எதிராக ஆயுதப்போராட்டத்தையே மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இவர் புலப்படுத்தியுள்ளார். இதனை உணர்த்தவே ஆலய நுழைவைத் தடுப்பதற்காக வேளாள இளைஞர்கள் துப்பாக்கி, கைக்குண்டு முதலியவற்றின் உதவியுடன் ஆலயத்தினுள் காத்திருந்தபோது ஒடுக்கப்பட்ட மக்களும் ஆயுத பாணிகளாகவே ஆலயத்தினுள் நுழைவதாக இவர் சித்திரிக்கின்றார். இதனால் புரட்சி வர்க்கத்தின்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் டு) Dr. D.6(35pb.rgiair

Page 74
பலாத்காரமும் எதிர்ப்புரட்சி வர்க்கத்தின் பலாத்காரமும் ஒன்றோ டொன்று மோதுவதை இவர் எடுத்துக் காட்டுகின்றார்.
நிலப் பிரபுத்துவ எச்சங்களைக் காப்பதற்காக பலாத்காரமாகத் தாக்குபவர்களையும் அவர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் பொலிசாரை யும் பலாத்காரத்தால் எதிர்த்துத் தாக்காமல் அழிக்க முடியாது என்ற உணர்வுடையவர்களாகவே கதை மாந்தர்கள் படைக்கப்பட் டுள்ளனர்.
எனவே வர்க்கப் போராட்டமொன்றை நிகழ்த்தி சமத்துவமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு பலாத்கார வழியினைப் பின்பற்றிப் போராடுவதை ஆதரிப்பவராகவே கணேசலிங்கனை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
1972 இல் பஞ்சமர் என்ற நாவலோடு நாவல் இலக்கிய உலகில் புகுந்த டானியல் சாதியம் தொடர்பான சிக்கல்களைப் பொருளாகக் கொண்டு பஞ்சமர், கோவிந்தன், அடிமைகள், தண்ணிர், கானல், பஞ்ச கோணங்கள் ஆகிய ஆறு நாவல்களைப் படைத்துள்ளார். இந் நாவல்களின் பிரதான பொருளாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் அவல வாழ்வும் அவர்களது உரிமைப் போராட்டங்களுமே அமைந்துள்ளன.
டானியல் சாதியம் தொடர்பான பிரச்சினைகள் தற்போதுள்ள சமூக அமைப்பு மாறாத பட்சத்தில் மேலும் தொடரவே செய்யும் என்றும் சமூக அமைப்பை மாற்றியமைப்பது பொருள் இல்லாத மக்கள் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைந்து நடாத்துகின்ற போராட் டத்தின் மூலமாகவே சாத்தியமாகும் என்றும் கருதுகின்றார். எனினும் நீண்ட காலமாகப் புரையோடிப் போன சாதியக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்கவும் போராட்டத்தில் அவர்களை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் ஈடுபடுத்தவும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களின் மூலமாக மக்களை ஒன்றிணைத்து இறுதியில் ஒரு சமூக மாற்றத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அச் சமூக மாற்றம் நடைபெறும் பட்சத்திலேயே தீண்டாமை தமிழர் சமூகத்தை விட்டு அகல வாய்ப்பிருக்கும் என்பதே டானியலின் கருத்தாகும்.
இத்தகைய போராட்டங்கள் வன்முறையுடன் கூடியதாக அமை வதை டானியலும் ஏற்றுக்கொள்கின்றார். சாத்வீக வழிகள் பயனற்றுப் போனதால் இளைஞர்கள் வன்முறையைப் பின் பற்றியதாக இவர் குறிப்பிடுகின்றார். ஈழத்துத்தமிழ்நாவல்கள் G 2) Dr. D.6 respirpair

சாதியம் தொடர்பான சிக்கல்களை வர்க்கப்போராட்டத்தின் மூலமே தீர்க்க முடியும் என்ற கருத்தில் கணேசலிங்கன், டானியல் ஆகியோருடன் ஒன்றுபடும் அகஸ்தியர் வன்முறையினை ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றார். சாதிக் கொடுமைகளுக்குக் காரணமான தனிப்பட்டவர்களைப் பழிவாங்குவதால் சாதியம் தொடர்பான சிக்கல்கள் ஒழிந்து விடாது என்பது இவரது கருத்தாகும். இதனா லேயே கொடுமை களுக்குக் காரணமான உயர்சாதி நடேசபிள்ளை யையும் தம்பரையும் கொலைசெய்யும் நோக்கத்தோடு புறப்பட்ட கணபதி, முருகனின் தலைமையில் வந்த ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட கோஷங்களைக் கேட்டு மனம்மாறி முருகனின் இயக்கத்தில் இணைவதாக ஆசிரியர் சித்திரிக்கின்றார். எனவே வன்முறை கலவாத வர்க்கப்போராட்டத்தையே இவர் விரும்புகின்றார் எனத் தெரிகிறது.
முற்போக்கு அணியின் மூன்றாவது தலைமுறையினைச் சார்ந்த வரான தெணியானும் வன்முறை கலவாத வர்க்கப் போராட்டத்தையே விரும்புகின்றார். இவரது விடிவை நோக்கி என்னும் நாவலில் வருகின்ற கோவிந்தன்,
“எங்களுடைய நோக்கந்தான் என்ன? சமத்துவ சமுதாயத்தைக் காண வேண்டுமென்பதுதானே? அப்படியானால் யாரோடு சமத்துவமாக வாழ விரும்புகிறோம் உயர்ந்த சமூகத்து மக்களோடுதான்! அவர் களை அழித்தோ அல்லது எங்களை அழித்துக் கொண்டோவிட்டால் வாழ்வுதான் ஏது? அவர்களை முற்று முழுதாகப் பகைத்து நாங்கள் பிரிந்து கொண்டால் அவர்களும் நாங்களும் இணைய வேண்டிய பொது இடங்களில் கலந்து கொள்ளுவோமா? பொது இடங்களில் சமத்துவமாக இணைய முடியாது போனால் சமத்துவமென்பதை எப்படித் தான் அடைய முடியும். நாங்கள் சமாதான வழியில் செல் வோம். நான் குறிப்பிடுகின்ற சமாதானம் வெறும் கோழைத் தனமான தல்ல. சாத்வீக வழியென்றால் செயலற்று இருப்பதென்ற கருத்தல்ல. தட்டினால் தான் திறக்கப்படுமென்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
ஆனால் இரத்தக்களரியை ஏற்படுத்துகின்ற போராட்டத்தை நான் வெறுக்கின்றேன்.”9
எனக் கூறுகின்றான். எனவே தெணியான் சாத்வீக வர்க்கப் போராட்டத்தை நடாத்த விரும்புகின்றார். சமத்துவமான சமுதாயம் மலரும் வரை சாதிமாறிய கலப்பு மணங்கள் கூட நன்மையைத் தரப்போவதில்லை என்பதும் இவரது நாவலில் எடுத்துக் காட்டப்படு கின்றது. ஈழத்துத்தமிழ்நாவல்கள் (12) Dr.ம.இரகுநாதன்

Page 75
சாதியம் தொடர்பான சிக்கல்களை வெறுமனே சாதிப் பிரச்சி னையாக மட்டும் நோக்காமல் பொருள் உள்ளவர்களுக்கும் இல்லா தவர்களுக்கும் இடையிலான வர்க்கப் பிரச்சினையாக நோக்குவதா லேயே இவர் வருணாச்சிரம தரும அடிப்படையில் உயர் நிலையில் வைக்கப்பட்ட பிராமணர்களும் வேளாளர்களின் அடக்கு முறைக்கு உட்படுத்தப்படுவதை எடுத்துக் காட்டினார். இதனால் இது வெறும் சாதிப்பிரச்சினை மட்டுமல்ல என்பது மேலும் தெளிவு படுத்தப்படுகின்றது.
செ.யோகநாதன் பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த விரும்பு கின்றார். அத்தகைய சமத்துவமான சமுதாயம் மலரும் வரை கலப்பு மணங்களால் பயனில்லை என்பதை இவரது நாவல் எடுத்துக் காட்டுகின்றது.
சாதியம் தொடர்பான நாவல்களை எழுதிய இரண்டாவது அணியினருள் சொக்கன், செங்கை ஆழியான், தி.ஞானசேகரன் ஆகியோர் அடங்குகின்றனர். பொதுவாக இம் மூவரும் சாதி ஏற்றத் தாழ்வினை ஒரு சமுதாயக் குறைபாடு எனக் கருதி மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் தீர்வுகாணவே விரும்புகின்றனர். இதனால் பிரச்சினைகளின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டுமே இவர்களது நாவல்களில் காணமுடிகின்றது.
சொக்கனின் நாவலான சீதா சாதியம் தொடர்பான பிரச்சினை களை கலப்பு மணம், சமபந்திபோசனம் போன்ற தனிமனிதப் புரட்சி களால் நீக்கிவிடமுடியாது என்றும் முழுச் சமுதாயமும் உணர்ந்து திருந்துவதன் மூலமே தீர்க்க முடியும் என்றும் போதிக்கின்றது. இதனாலேயே செல்வரத்தினத்தின் கலப்பு மணம் துன்பத்தில் முடிகின்றது; ஆத்மநாதனின் சாதியை மீறிய காதல் நிறைவேறாது போகின்றது.
சாதியம் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக்கூறுவதற்கு சொக்கன் தெரிவு செய்த பாத்திரங்கள் வேளாளர், கோவியர், பிராமணர், மலாய்க்காரர் ஆகிய இனத்தவர்களே. உயர் சாதி வேளாளனான செல்வரத்தினம் கோவியப் பெண்ணை மணந்து கொள்வதால் உயர் சாதியினரால் ஒதுக்கப்படுகின்றார். செல்வரத்தினத் திற்கும் மலாய்க்காரிக்கும் பிறந்த சீதாவை பிராமண வாலிபன் ஆத்மநாதன் காதலிக்கின்றான். செல்வரத்தினம் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்; பிராமணர்கள் வேளாளர்களால் அடக்கியாளப்படு பவர்கள். இந்நிலையில் ஆத்மநாதன் சீதா திருமணத்தால் பெரிதாக எதைச் சாதித்துவிட முடியும் சாதியம் தொடர்பான சிக்கல்கள் எரியும் பிரச்சினையாக விளங்கியது பஞ்சமர்கள் பக்கமே, சொக்கன்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G2) Dr.ம.இரகுநாதன்

அவர்களின் பக்கம் திரும்பாமல் தூரவிலகி நின்று பிரச்சினையில் இருந்து நழுவி விடுகின்றார்.
செங்கை ஆழியானின் பிரளயம் என்ற நாவல் சலவைத் தொழிலாளி குடும்பம் கல்வி கற்று முன்னேறி அடிமை, குடிமை நிலையிலிருந்து விடுபடுவதை எடுத்துக் காட்டுகின்றார். இவரது நாவலில் தீண்டாமை தொடர்பான ஆழமான பார்வை எதுவும் இருப்பதாகக் தெரியவில்லை.
எனவே ஈழத்துத் தமிழ் நாவல்களில் சாதியம் தொடர்பான சிக்கல்களை எடுத்துக் கூறிய முற்போக்கு அணியினர் சாதிப்பிரச்சி னையை வர்க்கப் பிரச்சினையாக இனங் கண்டு பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் மூலம் அதற்குத் தீர்வு காணலாம் என்ற கருத்தை முன்வைத்தனர். இவர்களுள் முன்னவர்கள் வன்முறையுடன் கூடிய போராட்டத்தை ஆதரிக்க பின்னவர்கள் சாத்வீக வழியை ஆதரித்தனர்.
முற்போக்கு அணியைச் சாராத ஏனையோர் சாதியம் தொடர் பான சிக்கல்களை ஒரு சமூகக் குறைபாடாகவே கருதி கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றால் ஏற்படும் சமூகமாற்றம் இக் குறைபாட்டி னைப் போக்கிவிடும் எனக் கூறினர்.
சாதியத்திற்கெதிரான போராட்டங்கள் அரை நூற்றாண்டைக் கடந்து விட்ட நிலையில், இதன் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்பதைச் சிந்திக்கும்போது கல்வி, பொருளாதார நிலை, இனப் பிரச்சினையின் தாக்கம், புலப்பெயர்வு போன்ற பல்வேறு காரணங் களால் காலந்தோறும் சாதியக் கொடுமைகள் குறைந்து வந்திருப்பதை கடந்த அரை நூற்றாண்டுக் கால வரலாறு உணர்த்துகிறது. சாதிய ஒடுக்கு முறைகள் சட்ட ரீதியாகவே தடை செய்யப்பட்டுள்ளன. எல்லோருக்கும் சமமான கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு முதலிய அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலைமைகளால் ஒடுக்கு முறைகள் குறைவடைந் திருப்பினும் சாதியை ஒழித்துக் கட்டி விட்டதாகக் கூறமுடியாது. சாதியம் தமிழர் சமூக அமைப்பில் ஆழமாக வேரூன்றி விட்ட பெரு விருட்சம் போன்றது. சட்டம் இயற்றப் படலாம்; நீதிமன்றத்தில் சென்று உரிமைகளை வென்றெடுக்கலாம்; ஆனால் மனங்களை வென்றெடுப்பதென்பது அத்தனை இலகுவான காரியமாக இருந்து விடுமா? எவ்வாறெனினும் எதிர்காலத்திற்காக நம்பிக்கையோடு காத்திருப்போமாக.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G2 Dr.ம.இரகுநாதன்

Page 76
இயல் மூன்று
அடிக்குறிப்புக்கள்.
1. இளங்கீரன், தென்றலும் புயலும், 1956
சென்னை
2. மேலது, L. 178.
3. மேலது, L. 177 - 178.
4. சொக்கன், சீதா, 1974, கொழும்பு
5. மேலது, Lu. 88.
6. மேலது, L. 88 - 89.
7. கணேசலிங்கன், செ., சடங்கு, 1966, சென்னை
8. மேலது, Lu. 21 - 22.
9. மேலது, Lu. 63.
10. மேலது, Lu. 54.
11. தெணியான், விடிவை நோக்கி, 1973, கொழும்பு
12. மேலது, பொற்சிறையில் வாடும் புனிதர்கள்,
1989, யாழ்ப்பாணம்.
13. மேலது, விடிவை நோக்கி ப. 111.
14. செங்கை ஆழியான் பிரளயம், 1989, யாழ்ப்பாணம்.
இந்நாவலின் முதலாவது பதிப்பு 1975 ல் கொழும்பு வீரகேசரி வெளியீடாக வெளியிடப்பட்டது.
15. (BLD6)g, அக்கினி, 1991, யாழ்ப்பாணம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G12 Dr.ம.இரகுநாதன்

16. மேலது, L. 107.
17. மேலது, L. 107.
18. மேலது, 1. 108.
19. மேலது, Ll. 93.
20. யோகநாதன், செ., காவியத்தின் மறுபக்கம், 1977,
யாழ்ப்பாணம்
21. மேலது, L. 59.
22. மேலது, . 59.
23. ஞானசேகரன், தி., குருதிமலை, 1979, கொழும்பு.
24. மேலது, புதிய சுவடுகள், 1977, கொழும்பு.
25.அகஸ்தியர், எரிநெருப்பில் இடை பாதை
இல்லை, 1992, சென்னை.
26. மேலது, U. 112 - 113.
27. மேலது, u. 140.
28. மேலது, Lu. 142.
29. மேலது, ш. 145.
30. மேலது, u. 44.
31. கணேசலிங்கன். செ., சடங்கு, ப. 66.
32. மேலது, Լյ. 78.
(25) Dr.ம.இரகுநாதன்

Page 77
34.
மேலது,
լյ. 256.
35. டானியல், கே, பஞ்சமர், 1972, யாழ்ப்பாணம்.
36. மேலது, J. 55.
37. மேலது, U. 56.
38. மேலது, u. 56.
39. மேலது, ш. 56.
40. மேலது, Lu. 62.
41. மேலது, Lu. 62.
42. செங்கை ஆழியான், பிரளயம், 1989, ப. 56.
43. மேலது, Lu. 64.
44. மேலது, i. 65.
45. மேலது, ш. 65.
46. அகஸ்தியர், எரிநெருப்பில் இடைபாதை
இல்லை, ப. 49.
47. கணேசலிங்கன், செ., நீண்ட பயணம், 1994, சென்னை.
48. மேலது, போர்க்கோலம், 1969, சென்னை
49. மேலது, L. 205.
50. மேலது, Lu. 243 - 244.
51.மேலது, Lu. 83.
ஈழத்துத்தமிழ்ழ்நாவல்கள் (2Θ Dr. ID-6.prepairger

52. மேலது,
53. மேலது,
54. மேலது,
55. டானியல், கே.,
56. அகஸ்தியர்,
57. மேலது,
58. மேலது,
59. டானியல், கே,
Lu. - 83.
L. 84.
u. 84.
அடிமைகள், அலைகள் வெளியீட்டகம், 1995, சென்னை.
6If நெருப்பில் இடைபாதை இல்லை, ப. 198.
Lu. 200.
Lu. 201.
பஞ்சமர், அலைகள்
வெளியீட்டகம், 1994, சென்னை, L. 97.
60. மேலது, lu. 234.
61. மேலது, அடிமைகள், 1995, சென்னை,
Lu. 232
62. மேலது, Lu. 235.
63. மேலது, Lu. 235.
64. மேலது, கானல், 1986, சென்னை,
U. 11 - 12.
65. மேலது, தண்ணிர், 1987, யாழ்ப்பாணம்.
66. மேலது, அடிமைகள், தோழமை வெளியீடு,
1984, குடந்தை, முன்னுரை
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ( 1 2) Dா.ம.இரகுநாதன்

Page 78
67. அகஸ்தியர், எரி நெருப்பில் இடைபாதை
இல்லை, ப. 85.
68. மேலது, Lu. 85.
69. மேலது, Lu. 85.
70. மேலது, Lu. 85.
71. மேலது, L. 89.
72. மேலது, Lu. 90.
73. டானியல், கே., கானல், ப. 325 - 326
74. மேலது, Lu. 304.
75. மேலது, Lu. 347 - 348
76. மேலது, I. 347 - 348.
77. அகஸ்தியர், எரி நெருப்பில் இடைபாதை
இல்லை, ப. 179.
78. டானியல், கே, அடிமைகள், 1995, ப. 188.
79. அகஸ்தியர், எரிநெருப்பில் இடைபாதை
இல்லை, ப. 81 - 82.
80. கணேசலிங்கன், செ., ß60ÖTLUuu 1600Tb, Lu. 66.
81. அகஸ்தியர், எரிநெருப்பில் இடைபாதை
இல்லை, ப. 225
82. மேலது, u. 81.
83. கணேசலிங்கன், கே. போர்க்கோலம், ப. 132.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (28) Dr.ம.இரகுநாதன்

84
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96
97
98
99
. மேலது,
டானியல், கே,
தெணியான்,
டானியல், கே,
முல்க் ராஜ் ஆனந்த்
மேலது,
மேலது,
டானியல், கே,
மேலது,
மேலது,
சிவத்தம்பி, கா.,
தெணியான்,
.சோமகாந்தன்,
. மேலது,
. மேலது,
. மேலது,
100. சொக்கன்,
10
1. தெணியான்,
U. 132.
அடிமைகள் 1995, ப. 39.
விடிவை நோக்கி, ப. 86.
அடிமைகள் 1995, ப. 117.
தீண்டாதான், 1947, காரைக்குடி
u. 53.
Lu. 59.
பஞ்சமர் (1994), ப. 215.
பஞ்சகோணங்கள், 1993, சென்னை.
u. 34.
ஈழத்தில் தமிழ் இலக்கியம், 1978, சென்னை, ப. 207.
பொற்சிறையில் வாடும் புனிதர்கள், Lu... l 13.
விடிவெள்ளி பூத்தது, 1989. யாழ்ப்பாணம், ப. 40,
lu. 41.
u. 41.
U. 42.
சீதா, ப. 60.
விடிவை நோக்கி, ப. 73.
த்துத்தமிழ்நாவல்கள்
(29) Dr.ம.இரகுநாதன்

Page 79
இயல் நான்கு
4. தொழிலாளர் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள்
4.0 அறிமுகம்
மனித சமுதாயத்தின் வரலாறு மிகவும் நீண்டதாகும். இந் நீண்ட வரலாற்றில் உடல் உழைப்பாளிகளாக இருக்கின்ற தொழிலா ளர்களின் வரலாறும் அடங்கியிருக்கின்றது. ஒய்வே இல்லாமல் தினமும் மெய்வருத்தம் பாராது வியர்வை சிந்தி உழைக்கின்ற தொழிலாளர்கள் நிரந்தரமான வறுமையினையே அனுபவிக்கின் றார்கள். தொழிலாளர் களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளி களின் வாழ்வு சுகபோகம் நிறைந்ததாக அமைந்திருக்கின்றது. இத்தகைய வேறுபாட்டிற்கான காரணத்தை உணரக்கூடியவர்களாகத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வூட்டி வைத்தது மேற்குலகில் நடைபெற்ற கைத்தொழிற் புரட்சியும் அதனால் ஏற்பட்ட சமூக மாறுதல்களுமே.
புதிய சமூகச் சூழல் தொழிலாளர்களை வர்க்க ரீதியில் ஒன்றுபடுத்தி உரிமைக்காகப் போராட வைத்தது. இதனால் சாதி, இன, மத வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டனர். இத்தகைய சமூக நிலைமைகள் இந்தியாவிலும் இலங்கையிலும் உருவாகியபோது இது ஒரு சமூகச் சிக்கலாக உணரப்பட்டது. ஆக்க இலக்கியங்களிலும் தொழிலாளர் தொடர்பான பிரச்சினைகள் முக்கியத்துவம் பெற்றன.
ஈழத்தில் 1960 களில் முன்னணிப் படைப்பாளிகளாக இருந்தவர் கள் முற்போக்கு அணியினரே. இவர்கள் பொதுவுடைமைக் கொள்கையை ஏற்றுக் கொண்டு சமுதாயப் பிரச்சினைகள் அனைத்திற்கும் சோஷலிசப் புரட்சியே தீர்வாக அமையும் எனக் கருதினர். இதனால் மக்களை வர்க்க அடிப்படையில் ஒன்றுபடுத்தி சோஷலிசப் புரட்சியை நோக்கி நகர்த்தும் பணியில் இவர்கள் ஈடுபட்டனர். இந் நடவடிக்கையின் இலக்கியச் செயற்பாடாகவே இவர்களின் நாவல்களில் தொழிலாளர் வர்க்கமும் அவர்களது பிரச்சினைகளும் இடம் பெற்றன. வர்களைத் தொடர்ந்து நாவல் ஈழத்துத்தமிழ்நாவல்கள் G 3 Dr. D.6Lebirgeir

எழுதிய பலரும் பல்வேறு வகையான தொழிலாளர் களின் துன்பங் களையும் எடுத்துக்காட்ட முற்பட்டனர். இலங்கையிலுள்ள தொழி லாளர்களில் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமானவர்களும் ஏனையவர்களைவிட அதிக துன்பத்தை அனுபவிப்பவர்களும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே. இதனாலேயே இவர்களின் வாழ்வையே பிரதான பொருளாகக் கொண்ட நாவல்கள் பல வெளிவந்துள்ளன.
4.1 தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் பெருந்தோட்டங்களில் பணிபுரிவதற் காக இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட கூலித் தொழிலாளர்களும் அவர்களது சந்ததியினருமே தோட்டத் தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் ஆங்கில ஆட்சிக் காலத்திலிருந்து பெருந்தோட்டங்களில் அனுபவித்து வரும் துன்பங்கள் மிகவும் அதிகம். தமது சொந்த மண்ணில் அனுபவித்த கொடுமைகளிலிருந்தும் வறுமைத் துன்பத்தி லிருந்தும் விடுதலை பெறலாம் என்ற கனவோடு இலங்கைக்கு வந்தவர்கள்; இங்கு அனுபவித்தது அடக்கு முறை, சுரண்டல், வறுமை முதலிய துன்பங்களையே. இவற்றை ஈழத்து நாவலாசிரியர்கள் பலர் எடுத்துக் காட்டியுள்ளனர். இனி நாவல்களினுடாகப் புலப்படும் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை நோக்கலாம்.
4.1.1. உழைப்புக்கேற்ற ஒளதியமின்மை
இந்தியாவில் அனுபவித்த வறுமை, வேலையின்மை, அடக்கு முறை ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான வாழ்வு வாழலாம் என்ற நம்பிக்கையோடு இலங்கைக்கு வந்த தொழிலாளர் கள் பெருந் தோட்டங்களில் மிகவும் குறைவான கூலிக்கே வேலை செய்யவேண்டியிருந்தது. நாள் முழுவதும் உழைக்க வேண்டும்; ஆனால் கூலியோ ஒரு வேளைக்கு உணவு உண்பதற்கே போது மானதாக இருப்பதில்லை. இதனால் தோட்டத்தொழிலாளர்கள் வறுமை யில் வாடிவதங்கினார்கள். தொழிற்சங்கங்கள் உருவாகாத சூழலில் இவர்களின் பிரச்சினைகள் வெளியே தெரியாதவாறு மறைக்கப் பட்டிருந்தன. தொழிலாளர்களும் தமது உழைப்புச் சுரண்டப்படுவதை எதிர்க்கும் சக்தியை ஆரம்பத்தில் பெற்றிருக்கவில்லை. இதற்கு அவர்களின் அறியாமை, புதிய சூழல், ஒன்றுபடக்கூடிய வாய்ப்பின்மை
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G3) Dா.ம.இரகுநாதன்

Page 80
ஆகியனவே காரணங்களாகும். தொழிற்சங்கங்கள் உருவாகி தொழி லாளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டபோது இவர்கள் தமது உழைப் புக்கேற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள். பல சந்தர்ப்பங்களில் போராட்டம் வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது. இச்சூழலில் தோட்டத் தொழிலா ளர்களின் ஊதியம் தொடர்பான பிரச்சினை ஒரு சமுதாயச் சிக்கலாக அவர்கள் மத்தியில் உருவெடுத்திருந்தது. இதனைத் தோட்டத் தொழி லாளர்களின் பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி எழுதிய ஈழத்துத் தமிழ் நாவல்கள் பலவும் எடுத்துக் காட்டின.
தொழிலாளர்களின் சம்பளக் கணக்கில் பொய்க் கணக்குக்காட்டி அவர்களுக்குரிய சம்பளத்தில் ஒரு பகுதியை கணக்கப்பிள்ளை, கங்காணி, தோட்டத் துரைமார் முதலியோர் சுரண்டிக் கொள்வது வழக்கம், இதனால் தொழிலாளர்கள் நிரந்தர கடன் காரர்களாகவே இருக்க வேண்டியேற்படுகின்றது. தொழிலாளர்கள் கணக்குக் கேட்டால் தண்டிக்கப்படுகின்றார்கள். அல்லது தோட்டத்தில் குழப்பத்தை உண்டாக்கியவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக் கப்படுகின்றனர். தூரத்துப்பச்சை என்னும் நாவலில் கணக்குக்கேட்ட மூக்கனை காவற்காரர்கள் மரத்தில் கட்டிவைக்க துரை சாட்டையால் அடிப்பதும் பின் குழப்ப காரன் என்று கூறிப் பொலிசாரிடம் ஒப்படைத்து சிறைத் தண்டனை பெற்றுக் கொடுத்ததும் காட்டப்படுகின்றது.
“என்னா கணக்கு? கடன்னு எங்களை ஏமாத்துறிங்களா?”
“நாங்க மட்டும் மனுசனில்லையா? நாங்க என்னா மிருகமா? நீங்க எல்லாம் சும்மா இருந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்கீங்க. நாங்க வேலை செஞ்சு கூட சாப்பாடு சரியா இல்லேன்னா எப்படித்தானிருக் கிறது”
என ஆத்திரத்தோடு கேட்ட மூக்கன் சாட்டையால் அடிக்கப்பட்டு பொலிசாரிடம் கொடுக்கப்பட்டபோது.
‘சாமி! இனிமே நான் அப்படியெல்லாம் பேசவே மாட்டேன் சாமி! என்னே விட்டுவிடுங்க” என்று மன்றாடினான். ஆனால் அது எவரது காதிலும் விழவில்லை. இந்நிலைலமை தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டதையும் சுரண்டலை எதிர்த்தவர்கள் கடுமை யாகத் தண்டிக்கப்பட்டதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (32) Dr. ID-6pgbirgsar

தோட்டத் தொழிலாளர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக துரைமாரிடம் உரிமைக்குரல் எழுப்புவதையும் தொழிற்சங்க முயற்சிகளின் மூலம் போராட்டம் நடத்துவதையும் பெனடிக்ற் பாலனின் சொந்தக் காரன் என்னும் நாவல் விபரிக்கின்றது.
“நாம் நேர்மையாகத்தான் உழைக்கிறோம். நமக்குத் தான் இலங்கையில் ஆகக் குறைந்த கூலி படுத்துத் தூங்க நல்ல வீடு இல்லை. மனிதனுக்கு இருக்கக்கூடிய அடிப்படை உரிமைகளே இல்ல.”*
எனக் கூறும் இராகவன் செங்கொடிச் சங்கத்தில் இணைந்து முதலாளித்துவத்திற்கு எதிராகத் தொழிலாளர்களை ஒன்றிணைத்துப் போராட்டத்தை நடாத்துகிறான். இப் போராட்டத்தின் மூலமே தொழிலா ளர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்பதே இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.
தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை என்னும் நாவலில் மலையகமக்களின் வாழ்க்கைத் துன்பங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. நாள் முழுவதும் உழைப்பவர்களின் சம்பளத்தை அதிகாரிகள் எவ்வாறு சுரண்டுகின்றார்கள் என்பது விளக்கமாகக் காட்டப்படுகின்றது. சம்பள நாளில் துரையின் அலுவலகத்தில் கூடியுள்ள தொழிலாளர்கள் துரையிடம் பணத்தை வாங்கிச் செல்வதே அங்கு நடைமுறையாக இருந்தது. சம்பளப் பட்டியலில் கையெழுத்திடுவதோ சம்பளக் கணக்கு விபரத்தைப் பார்வையிடுவதோ வழக்கமாக இருக்க வில்லை. இதனால் கிளாக்கர் பட்டியலில் உள்ள தொகையைக் குறைத்தே வாசிப்பது வழக்கம். இவ்வாறு ஒவ்வொருவரிடமும் வெட்டப்படும் பணத்தை துரை அறியாதவாறு திருடுவதற்காக கிளாக்கர் தனது ஆட்களை வைத்து இரண்டாவது தடவையாகவும் சம்பளம் கொடுக்க வைப்பார். இச் சூழ்ச்சிகளை அறிந்த கண்ணுச்சாமி சம்பளம் வாங்கும்போது தனக்கு விபரம் தர வேண்டும் எனக் கேட்கின்றான். விபரம் கேட்ட கண்ணுச்சாமியை ஏசி விரட்ட முயல்கின்றார் கங்காணி. கண்ணுச்சாமி,
“என்ன பெரியாணி அக்கிரமம் இது? செஞ்ச வேலைக்குச் சம்பளம் வாங்கையில வெவரம் கேட்டா தகராறு பண்ணாதேங்கிறீங்க. நாங்க என்ன குத்தவாளிகளா? அல்லது கைதிங்களா? வாயைத் தொறக்காமல் இருப்பதுக்கு?
မျိုးဇီးဇားဇီးzufü நாவல்கள் (33) Dr.ம.இரகுநாதன்

Page 81
*.கம்பளிக்கு அஞ்சி ரூபா, கறுப்புக் கம்பளிக்கு அஞ்சி ரூபான்ன காலம் செத்துப் போச்சி.”
*. வெவரம் சொல்லிக் குடுத்தா வாங்கிக்கிறேன். இல்லாட்டி இப்புடியே நிப்பேன். என்னைத் தள்ளிவிட்டு அடுத்த ஆளு சம்பளம் வாங்க வந்தாலோ, நீங்க அடுத்தாளுக்கு சம்பளம் போட முயன்றாலோ கொலை விழும்”*
என்று கூறிநிற்க அவனுக்கு ஆதரவாக ஆறுமுகம்,
“அம்பது ரூபா எம்பது சதம், நாப்பது ரூபா இருபது சதம்னு அவுக பாட்டுக்குப் பாட்டுப் பாடிக்கிட்டு இருப்பாக, நீங்க பாட்டுக்கு தலையாட்டிட்டு வாங்கிக்கிணு போயிடணும். எப்படி ஏன் ஏதுக்காகன்னு கேட்டுறக் கூடாது. அப்பத்தானே செக் றோல்ல ஒன்னு இருக்க இவுக வாயில் ஒன்னு வரும்.”*
என்று கிளாக்களின் கொடுமையைச் சுட்டிக் காட்டுகின்றான்.
கிளாக்கரின் திருட்டு வேலையை அம்பலத்திற்குக் கொண்டுவரு வதற்காக ஆறுமுகமும், கண்ணுச்சாமியும் திட்டமிட்டுச் செயற்படுகின் றனர். இதன் முதற்படியாகவே கண்ணுச்சாமி சம்பள விபரத்தைக் கேட்டு பிரச்சினையை ஆரம்பித்து வைத்தான். இரண்டாவது கட்டத்தில் இவர்களின் திட்டப்படி முதல் முறை சம்பளம் வாங்கிய கண்ணம் மாவை இரண்டாவது முறையும் சம்பளத்திற்கு அனுப்புகின்றார்கள். கண்ணம்மா முதல் முறை வாங்கியதை உறுதிப்படுத்த முடியாத நிலையில் கிளாக்கர் அவளை மிரட்டுகின்றார்.
“இதோ பார் கண்ணம்மா, இது வெளையாட்டு இல்லே, நீ செய்யுற குத்தம் எத்தனை பெரிசுன்னு ஒனக்குத் தெரியாது. வாங்குன சம்பளத்தை இல்லேன்னு சொல்லி மறுவ கேட்டா பத்துச் சீட்டில் வந்து நிக்கும். பேசாம போயிறு.”
என்ற கிளாக்கரின் மிரட்டலுக்கு ஆறுமுகம்,
“என்ன பத்துச் சீட்டு, பதினொரு சீட்டுன்னுகிட்டு இருக்கீங்க. சம்பளம் கேட்டாக்க பத்துச்சீட்டு குடுத்துடுறதா. அப்ப பத்தாந்தேதி அல்லாத்துக்கும் பத்துச்சீட்டையே குடுத்துடுறது தானே?”
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (32) Dr.ம.இரகுநாதன்

என்று அவள் சார்பாகப் பதிலளிக்கின்றான்.
*சம்பளங் கேட்டா ஒருத்தரும் பத்துச் சீட்டுக் குடுக்கிறத சொல்ல மாட்டாங்க. நேத்தே சம்பளம் வாங்கிட்டு இன்னைக்கு வந்து வாங்கலைன்னா. அது லேசு பட்ட குத்தமா?”*
என்ற கிளாக்கருக்கு கண்ணுச்சாமி,
“இந்தப்புள்ளை நேத்தே சம்பளத்தை வாங்கிட்டு இன்னைக்கு மறுபடியும் வந்து கேட்டா அது குத்தம் தான். பெரிய துரைக்கு ரிப்போட் பண்ணி தோட்டத்தைவிட்டே அனுப்புற மாதிரி பெரிய குத்தம் தான் . ஆனா ஆண்டியப்பனும், அவம் பெஞ்சாதி அலமேலும் நேத்தும் வாங்கிட்டு இன்னைக்கும் வாங்குனா அது குத்தமில்லை . சுத்தம்.”
என்று பதில் கூறுகின்றான். இதனால் கிளாக்கர் தடுமாறுகிறார். இறுதியில் துரை பணம் எஞ்சியிருந்தால் கண்ணம்மாவுக்கு சம்பளம் தரலாம் என்று கூறுகின்றார்.
இப் போராட்டத்தால் கிளாக்கரின் திருட்டுத்தனம் வெளிப்படுத்தப் படுகின்றது. இறுதியில் சம்பள விபரம் வெளியே பார்வைக்கு வைக்கப் படுகின்றது. இதனால் தொழிலாளர்கள் தமது சம்பள விபரத்தை அறிந்து கொள்ள வாயப்பு ஏற்படுகின்றது. இதன் மூலம் கிளாக்கரின் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது.
தி.ஞானசேகரனின் குருதிமலை என்னும் நாவலில் மலையக மக்களின் வாழ்வுப் பிரச்சினைகள் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. கடுமையான மழையிலும் மலைகளில் நின்று கொழுந்தெடுக்கும் தொழிலாளர்கள் ஆபத்தான விளைவுகளைக்கூட எதிர் நோக்குவ துண்டு. மலைச் சரிவுகளில் சறுக்கி விழும் பெண்கள் இறந்துவிடுவது வழக்கம். ஆனால் எந்த நிலையிலும் இத்தொழிலாளர்களுக்கு கருணை காட்டப்படுவதில்லை. இதனை இந் நாவலில் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
கடும் மழை காரணமாக மலையிலே நின்று கொழுந்து பறிக்க முடியாததால் அரைமணி நேரம் முன்பாகவே சென்ற பெண்களை கண்டக்டர் கண்டிக்கின்றார். அரைமணி நேரம் முந்தி வந்ததற்காக
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G13s Dr.ம.இரகுநாதன்

Page 82
அரைநாள் வேலையை கழித்து விடுவதாகக் கூறுகின்றார். இனிமேலும் இவ்வாறு நடந்து கொண்டால் வேலையிலிருந்து நிற்பாட்டப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்படுகிறது."
சம்பளக் கணக்கில் முறைகேடுகள் நடைபெறுவதையும் இந் நாவல் எடுத்துக் காட்டுகின்றது. மாதம் முழுவதும் வேலைக்குப்போன குப்பன் தனக்கு சம்பளம் எதுவுமே இல்லை என்று ஆத்திரப்படு கின்றான்" அதேவேளை வவுனியாவுக்குச் சென்று இரண்டு மாதமாக வேலைக்கே வராத கறுப்பையாவுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது. இது தொழிலாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகின்றது. கண்டக் டரும், தலைவரும் சேர்ந்து சம்பளத்தில் முறைகேடுகளைச் செய்கின் றார்கள் என்று அங்குள்ளவர்கள் பேசிக் கொள்கின்றார்கள்.
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்த ராமுவுக்கு பதினொரு நாள் மட்டுமே பெயர் பதியப்பட்டிருந்தது. இதனால் தொழிலாளர்கள் ஆத்திரமடைகின்றார்கள்.
*வவுனியாவுக்குப் போன ஆளுக்கு செக்றோல்ல பேரு விழுகுது; அந்தச் சல்லிய நீங்க வாங்கி கண்டக்கையா கையில் கொடுப்பீங்க. இங்க தோட்டத்தில கஷ்டப்பட்டு ஒழைக்கிறவங்க பேரை வெட்டிப்புடுறிங்க.”
என்று வீரையா ஆவேசமாகக் கத்துகின்றான். இன்னொருவன்,
“நாங்க எல்லாம் தோட்டத்தில தூங்கிக்கிட்டு இருக்கோமுனு நெனைச்சீங்களா? இனிமே சும்மா விடமாட்டோம்; புதிசு புதிசா வேலைக்கு வந்து எல்லாரும் தோட்டத்தை சொறண்டுறானுக ஏழைங்க வவுத்தில இல்லியா அடிக்கிறாங்க.”* என்று கூறுகின்றான். தலைவருக்கு எதிராகப் பலரும் கிளர்ந்தெழுந்து அவரை மாற்ற முயற்சிக்கின்றனர்.
தொழிலாளர்கள் செய்த வேலைக்குரிய சம்பளத்தைக் குறைப் பதும், நாளைக் குறைத்துப் பதிவதும், ஊரிலில்லாதவர்களுக்குப் பெயர் பதிந்து சம்பளம் போட்டு அவற்றைத் தாம் கையாடுவதும் அதிகாரிகளின் வழக்கமாகும். இக் கொடுமைகளை எதிர்த்த தொழிலா ளர்கள் பொலிசாரின் உதவியுடன் அடக்கப்படுகின்றார்கள். தொழிலா ளர்களின் போராட்டத்தில் முன்னின்ற வீரையா பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகின்றான்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் டுே Dr.ம.இரகுநாதன்

புலோலியூர் சதாசிவத்தின் மூட்டத்தினுள்ளே என்னும் நாவலில் கிளாக்கர் கங்காணியைத் தனது வலைக்குள் சிக்கவைத்து தொழிலா ளர்களின் கூலியைச் சுரண்டுவது காட்டப்படுகின்றது. மலையில் பதினைந்தேக்கர் நிலம் துப்பரவு செய்வதற்காக துரை முந்நூற்றைம்பது ரூபா மதிக்கின்றார். இதனைக் கங்காணியிடம் பொறுப்புக் கொடுத்த கிளாக்கர் இரு நூற்றைம்பது ரூபாவுக்கு வேலையை முடிக்கும் படியும் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்து விடும்படியும் கூறுகின்றார்.13
மேலும் மற்றொரு மலையில் முருங்க வெட்டும் வேலைக்கும் இதே தொழிலாளர்களைப் பயன்படுத்தி அதையும் முதல் வேலைக் கணக்காகவே காட்டித் தொழிலாளர்களை ஏமாற்ற இவர்கள் திட்டம் போடுகின்றார்கள். இதனால் சுரண்டப்படும் கூலிப்பணம் கங்காணிக்கும் கிளாக்கருக்கும் சென்றடைகின்றது.
மலையக மக்கள் தோட்டத்தில் மட்டுமன்றி வெளியேயும் சுரண்டப்படுகின்றார்கள். மலையாண்டி ஓரளவு படித்தவன். அந்தப் படிப்பை வைத்து ஏதாவது தொழில் தேடி அலைந்து இறுதியில் படிப்பித்த ஆசிரியர் ஒருவரின் சிபார்சின் பேரில் கொழும்பிலுள்ள *யாழ்ப்பாண ஸ்ரோர்ஸ்" க்கு வேலைக்குச் செல்கின்றான். கடையில் முதலாளிக்கு நேர்மையாகவும் கீழ்ப்படிவாகவும் உழைக்கின்றான். அவர் கொடுத்த குறைந்த சம்பளத்தைப் பெற்று அரை வயிறு உணவுண்டு, சாமான் பெட்டிகளுக்கு நடுவில் படுத்தெழும்பி உழைத்த அவனுக்கு இறுதியில் கிடைத்தது. தோட்டக் காட்டானை நம்பேலாது என்ற வசை மொழிதான். கடையில் ஐம்பது ரூபா காணாமல் போனபோது முதலாளியின் மகன் மலையாண்டியின் மீதே சந்தேகப்பட்டு தோட்டக் காட்டானை நம்பேலாது என்று கூறிவிடுகின்றான்."
இது யாழ்ப்பாணத்தவர் பலரிடமும் ஆரம்பத்தில் இருந்த மலையக மக்கள் மீதான வெறுப்புணர்வையும் நம்பிக்கையின்மை யையும் எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய நிலைமைகளில் பல தொழிலாளர்கள் கூலியும் கொடுக்கப்படாமல் வேலையை விட்டு விரட்டப்படுவதுண்டு.
“எப்படி எனக்கு இம்புட்டு கொறவா சம்பளம் வந்திச்சி. போன மாசம் ரெண்டு நாத்தானே வேலயில்ல, ஒரு நா நேரம் போயிருக் கின் னு சின்னத்தொர வெரட்டிப்புட்டாரு. அப்பொறம் ஒரு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G3). Dr.ம.இரகுநாதன்

Page 83
நாகைப்புள்ளைக்கி வவுத்துவலி வந்து ஆசுப்பத்திரிக்கு எடுத்துக்கிட்டு போனதில அன்னிக்கி வேலைக்கி போவ கெடக்கல. போன மாசம் ஒண்ணாந்தேதி கூட எனக்கு மேலுக்கு ரொம்ப சங்கடமாயிருந்தும் ஒண்ணாந்தேதி சீக்குருக்கப் படாதுன்னு மலைக்குப் போயி ஒடம்பு வெவெடுக்க கொழுந்தெடுத்து எப்படியோ அன்னிக்குப் பேரும் போட்டுட்டேன். இது கணக்கன், கங்காணி வீரபுத்திரன் இவங்க வுட்டு திருக்குசாத்தான் இருக்கும். நாளைக்கி பெருமாளுகிட்ட சொல்லி பெரியாபிசில சம்பளக் கணக்கைப் பாத்துக்கணும்”*
என்று கூறும் போது அவள் எத்தனை துன்பங்களின் மத்தியில் உழைத்த உழைப்பு சுரண்டப்பட்டிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது.
சி. வி. வேலுப்பிள்ளையின் இனிப்படமாட்டேன் என்ற நாவலிலும் தோட்டத் தொழிலாளர்களின் துன்பமான வாழ்வு எடுத்துக் காட்டப்பட் டுள்ளது. இந் நாவலில் இலங்கைப் பிரசாவுரிமை கிடைத்த மலையக மக்கள் அவ்வுரிமையினால் எந்தச் சுகத்தையும் அனுபவிக்க முடியா மல் இருப்பது விரிவாக எடுத்துக் காட்டப்படுகிறது. தோட்டத்தில் குறைவான நாள்களே வேலை வழங்கப்படுவதும் கொடுக்கின்ற சம்பளம் சாப்பாட்டுக்கே போதாது என்பதும் தொட்டுக் காட்டப்படு கின்றது. ராமையா பிரஜா உரிமையை ரத்துச் செய்துவிட்டு இந்தியாவுக்கே செல்ல விரும்புகின்றான். அவன்
“இப்ப தோட்டக் காட்டுல பதினாறு, பதினெட்டு நாள் வேலே குடுக்குறாங்க. வாங்கிற சம்பளம் சாப்பாட்டுக்கே பத்தல. மூக்குமுட்ட கடனுங்க...”*
என்று கூறுவது அவர்களின் கடனிலிருந்து மீள முடியாத வறுமையையும் குறைந்த கூலிவழங்கப்படும் கொடுமையையும் எடுத்துக் காட்டுகின்றது.
செ. கணேசலிங்கனின் சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை என்ற நாவலில் முற்போக்குச் சிந்தனையுள்ளவனாகக் காட்டப்படும் பாலன், யோகநாதனுடன் பேசும்போது மலையகத் தொழிலாளர்களின் நிலை பற்றியும் பேசுகின்றான்.
“ஜனநாயகம் எப்பொழுதுதான் தோன்றப் போகிறது” ஈழத்துத்தமிழ்நாவல்கள் (38) Dr.ம.இரகுநாதன்

“பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தான் பெரிய பாட்டாளிகள் என்று நீங்க எங்கோ எழுதியிருந்தீர்கள். அவர்களுக்கு இப்போது நல்ல கூலி கிடைப்பதாகச் சொல்லுகிறார்கள்”
“பொய், அவர்களும் வறுமையிலேயே வாடுகிறார்கள். பணவீக்கம் வேறு அவர்களது கூலியைப் பாதி ஆக்கிவருகின்றது. உழைப்பிற்கேற்ற உரிமைகளில்லை; தக்க உணவில்லை, இருப்பிடமில்லை, பிள்ளைகளுக்கு தக்க கல்வி தர வாய்ப்பில்லை. இவையெல்லாம் வறுமையின் சின்னங்கள். அவர்களுக்குக் கிடைக்கும் கூலிப்பணத்தை வைத்துக் கொண்டு வறுமையை அளக்க முடியாது. அவர்கள் அரசியல் போராட்டத்தில் முற்று முழுதாக நுழையவில்லை. வேறு வர்க்கங்கள் அரசியலாதிக்கத்திற்காக ஆயுதமேந்திப் போராடுகிறார்கள். உழைப்பவர்களுக்கு எங்கே நீதி கிடைக்கிறது? எமது உணவையெல்லாம் உற்பத்தி செய்யும் கூலி விவசாயிகள் தான் நாட்டிலே பாதி நாட்கள் பட்டினியாகக் கிடக்கிறார்கள். உழைக்காதவர்கள் மூன்று வேளை உண்ணுகின்றனர்.”
என்று பாலன் யோகநாதனுக்குக் கூறுகின்றான். இவ்வுரையாடல் மலையக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அவர்கள் வர்க்க அடிப்படையில் ஏனைய தொழிலாளர்களுடன் இணைந்து போராட வேண்டும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
4.1.2. ஒடுக்கு முறை
பெருந்தோட்ட நிர்வாகிகள் மலையக மக்களின் உழைப்பைச் சுரண்டிய தோடல்லாமல் அம் மக்களைப் பல்வேறு விதமான ஒடுக்கு முறைகளுக்கும் உட்படுத்தின. இவர்களுக்கு குடியிருப்பதற்கு வசதி யூான வீடு வழங்கப்படவில்லை; மிகவும் சிறிய லயங்களில் பலர் நெருக்கமாகக் குடியிருத்தப் பட்டனர். குடியிருப்புக்களில் சுகாதார வசதிகள் கவனிக்கப்படவில்லை; நோயுற்றவர்களுக்கு ஏற்ற மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை; பிள்ளைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் வாழ்கின்ற மக்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுவது சாதாரணமானதாகும். குறிப்பாக இளந் தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்படுவர். சிறிய வயதிலேயே தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி இவர்களின் வாழ்வு
ஈழத்துத்தமிழ்ழ்நாவல்கள் )3و( Dr. D6 rebirgeir

Page 84
கெட்டுப் போய்விடுகின்றது. இவர்களின் மனோநிலை இள வயதிலேயே பாதிக்கப்படுவதால் இவர்கள் தம்மீது பிரயோகிக்கப்படும் ஒடுக்கு முறைகளை உணர முடியாதவர்களாகவே இருப்பர்.
இதனால் அம்மக்கள் மீது பிரயோகிக்கப்படும் ஒடுக்கு முறைகள் வெளியுலகத்திற்குத் தெரியவராமல் மூடிமறைக்கப்பட்டுவிடும். இதன் மூலம் இவர்கள் பிரச்சினையுள்ள ஒரு சமூகம் என்று ஏனையவர் களுக்குத் தெரியவர வாய்ப்பில்லாது போய்விடும். இது இவர்களின் உரிமைகளை நசுக்குவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். ஏகாதிபத்தி யத்திற்கோ தோட்ட நிர்வாகிகளுக்கோ இவர்களின் உழைப்பு மிகவும் மலிவான விலையில் கிடைப்பதற்கு எந்தத் தடையும் இருக்காது.
இத்தகைய நோக்கங்களின் அடிப்படையிலேயே இம் மக்கள் மீது கடுமையான ஒடுக்கு முறை பிரயோகிக்கப்பட்டது எனலாம். ஆனால் காலம் மாறியபோது அம்மக்களும் சிந்திக்கத் தலைப்பட்டனர்; இதனால் தமது உரிமைகளுக்காகப் போராட முற்பட்டனர். இந்த வரலாறு நாவல்களினுடாகப் புலப்படுத்தப்படுகின்றது.
தோட்டங்களில் லயங்கள் என அழைக்கப்படும் சிறிய குடிசை களில் பலர் நெருக்கமாகக் குடியமர்த்தப்பட்டனர். இருவர் வாழ முடியாத இடத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட் டனர். இவர்களுக்கான ஏனைய வசதிகளும் வாய்ப்பற்றதாகவே இருந்தன. புதிதாகத் திருமணம் முடித்த வள்ளியும் செங்கமலையும் ஒருவரோடொருவர் தனியாகப் பேசக் கூட வாய்ப்பில்லாத நிலையில் இருக்கின்றனர் என்பதை தூரத்துப்பச்சை என்ற நாவல் எடுத்துக் காட்டுகின்றது.
“பொன்னம்மாளும் குப்பனும் தங்களின் ஒன்பது குழந்தை களுடன் வாழ்க்கை நடத்தி வந்த அதே லயத்தில் அதே காம்பராவில் (அறை) பத்தடி அகலமும், பன்னிரெண்டு அடி நீளமும் கொண்ட அந்த ஒற்றை அறையில்தான் வள்ளியும், செங்கமலையும் வாழ்ந்து வந்தார்கள். வள்ளிக்கு இது நரக வேதனையாக இருந்தது.”*
*. திருமணமாகி ஒருமாதமாகியும் செங்கமலை அவளிடம் நாலு வார்த்தை ஒழுங்காகப் பேசியது கிடையாது. அதுவும் தனியாகப் பேசியதே கிடையாது. அந்த நிலையில் அன்று அவன் அவளை அழைத்ததும் அவளுக்கு வெட்கம் எங்கிருந்தோ ஓடிவந்து புகுந்து கொண்டது. மெதுவாகத் தலை கவிழ்ந்து நின்றாள்.”
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (40) Dr.ம.இரகுநாதன்

“வள்ளி ஏன் என் கூட பேசமாட்டேங்கிறே? எங்கிட்ட வரமாட் டேங்கிற செங்கமலை மெதுவாகக் கேட்டான். அவள் மெளனமாக நடந்தாள்.
“சரிவா. ஆத்துக்குப் போயிட்டுப் போவோம். ஆமாம் எனக்குத் தெரியும் நீ அழுவுறது எல்லாம். நான் ராத்திரிலே முழிச்சிக்கிட்டுதான் இருக்கேன்” என்றான்.
அதற்கும் அவள் மெளனமாகவே நடந்தாள்.
“என்னா வள்ளி பேசமாட்டேங்கிறே? அப்பு இல்லாட்டா நான் ஓங்கிட்டே வந்திருப்பேன். நீ ஏன் அழுவுறே? நாங்க எல்லாம் இருக்கோமே” என்று மெதுவாக அவள் கரத்தைப் பற்றினான். அவள் வெட்கத்தால் சாம்பிக் குவிந்து கொண்டாள். மெதுவாகத்தன் கையை விடுவிக்க எத்தனித்தாள்.
“நான் விடமாட்டேன் தெரியுமா நீ இன்னெக்கி எங்கிட்டே வந்தாதான் விடுவேன். வாரியா? வள்ளியின் கன்னம் கன்றிச் சிவந்தது.
“வருவியா சொல்லு வள்ளி. நான் காம்பரா தொங்கல்ல படுத்திருப்பேன் எல்லாம் படுத்தபிறவு வாரியா? என்று கெஞ்சும் குரலில் கேட்டான் செங்கமலை. “சரி” என்ற அவள் மெதுவாக மெல்லிய குரலில் பதிலளித்தாள்.”
மேற்படி உரையாடல் வள்ளியும் செங்கமலையும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டபோதும் தமது தாம்பத்திய வாழ்வை அனுபவிக்க முடியாமல் அனுபவித்த துன்பத்தை எடுத்துக் காட்டு கின்றது. இத்தகைய நிலையில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டும் தீயபழக்கங்களுக்கு உட்பட்டும் வாழ்வை அழித்துக் கொள்பவர்களும் ഉ_ങ്ങ് (B.
பெனடிக்ற்பாலனின் சொந்தக்காரன் என்ற நாவலிலும் இது போன்றதொரு சம்பவம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சப்பாணி திருமணமாகி ஒருமாதமாகியும் தனது மனைவியுடன் உறவு வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றான். இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போன சப்பாணி மது போதையில் ஒரு நாள் இரவு மனைவி என நினைத்து தங்கையின் மீது விழுந்து அவளை
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G4) Dr.ம.இரகுநாதன்

Page 85
அணைக்கின்றான். அவள் சத்தமிட்டுக் கத்தியபோது திடுக்கிட்டு எழுந்த தகப்பன் யாரோ என நினைத்து சப்பாணியை நன்றாகத் தாக்கிவிடுகின்றார். இச் சம்பவத்தால் மனம் பாதிக்கப்பட்ட சப்பாணி தற்கொலை செய்து விடுகின்றான்."
எட்டாம் வகுப்புவரை படித்த வீரமுத்து திருமணம் முடித்துத் தனியாக வாழ்வதற்குத் தனிக் காம்பரா தருமாறு துரையிடம் கேட்கின்றான்.
துரை,
*ஓ! ஒனக்குக் கல்யாணமா ஒனக்குக் கல்யாணம் இப்ப eighiduuLDIr'
“காம்பரா எங்கேயிருக்குது? இந்தா உள்ளதைக் கொண்டு நல்லா இருக்கப் பார்க்கணும். அதுதான் கூலிக்காரங்க படிச்சுக்கணும் தெரியுதா?
என்று கூறும்போது அவனது மனித உணர்ச்சிகளையே ஏளனம் செய்யும் துரையின் அதிகார வெறி வெளிப்படுகின்றது.
இறுதியில் துரை வீரமுத்துவுக்கு காம்பரா தருவதாயின் அவன் இணைந்துள்ள செங்கொடிச் சங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று பேரம் பேசுகின்றான்.
“நீ நல்லவன். ஒன் அப்பனும் நல்லவன். இந்த சங்கம்தான் சரியில்லை. மிச்சம் சரியில்லை. ஒப்பன் நல்லவன். ஒப்பனுக்கு நான் கங்காணி வேலை கொடுக்கிறது. ஒனக்குக் காம்பரா தர்றது. ஆனா ஒன்னு, நீங்க ரெண்டு பேரும் இந்த சங்கத்தை ஒடச்சி வெளியே வரணும் தெரியுதா? . நாங்கள்தான் ஒங்களுக்கு வேலை கொடுக்கிறது. சாப்பாடு கொடுக்கிறது. நம்மை நீங்க கடவுளா மதிக்கணும்.”*
துரையின் வேண்டுகோளுக்கு இணங்காத வீரமுத்து அலுவல கத்தை விட்டு வெளியேறுகின்றான்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (142) Dா.ம.இரகுநாதன்

லயங்களில் மிருகங்களைப்போல அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான சுகாதார வசதிகள் எதுவும் வழங்கப்படுவ தில்லை. இதனை சொந்தக்காரன் நாவல் எடுத்துக் காட்டுகின்றது.
“அந்த லயத்தில் வாழும் எல்லோருக்குமாக லயத்தின் சிறிது தூரத்தில் கட்டப்பட்ட ஒரே கக்கூஸ் மலசலத்தின் அறிவியல் நாற்றம் வீசிக் கொண்டிருந்தது. அந்த லயத்திற்கு மட்டுமன்றி இல்லை. எல்லா லயத்துக்கும் அப்படித்தான்.
லயக்கானில் ததும்பி வழியும் லய நீரும் ஒவ்வொரு லயக் காம்பரா வாசல்களிலும் ஊற்றிய அழுக்கு நீரும் எறிந்த கழிவுப் பொருட்களும், வெற்றிலைக் கழிச்சலும் சேர்ந்து ஒரு ஹோட்டலின் ஒதுக்குப்புறம் போல் லயத்தின் முன்புறம் காட்சியளித்தது.
வெற்றிலை துப்பிக்கொண்டு வழிவழியே துப்பிக் கொண்டு வந்த சின்னத்தங்கம், தன் காம்பராவுக்குள் நுழைந்ததும், வழமைபோல் கணவனுடன் உரத்த குரலில் ஊத்தைப் பேச்சில் சண்டை தொடங் கியது. அவனும் குடித்துவிட்டுத்தான் வந்திருந்தான். அவன் அவளின் சத்தத்தை அமுக்கும் குரலில் கத்தினான்.
“இரண்டு நாளைக்குத்தானே" என்ற சமாதானத்துடன் வசதியீ னங்களைச் சகித்துக் கொண்டு தங்கி வாழ்க்கையின் சகல பகுதி களையும் நடத்தும் யாத்ரீகர்கள் போல அவர்கள் நெடுங்காலமாக வாழ்கிறார்கள்.”*
லயங்களில் வெளிப்புறச் சூழலில் நிகழும் அருவருக்கத்தக்க செயல்களை ஆசிரியர் மேலும் எடுத்துக் காட்டியுள்ளார்.
*குளிர் காற்று மலை முகடுகளிலிருந்து வந்து அலை வீசிக் கொண்டிருந்தது. லயத்துக் குழந்தைகள் லயத்தின் வாசலிலுள்ள லயக் கானின் இரு பக்கங்களிலுமிருந்து மலம் கழித்துக் கொண்டிருந் தனர். நாய்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று அதை நக்கிக் கொண்டு நின்றன.*
லயங்களின் வெளிப்புறமும் சுற்றுச் சூழலும் இவ்வாறு அருவருக் கத்தக்கதாக இருப்பதால் இவர்களிடையே தொற்று நோய்கள் வேக மாகப் பரவுகின்றன. லயங்களின் உட்புறமும் வசதியற்றதாகவே அமைந்துள்ளது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G143 Dா.ம.இரகுநாதன்

Page 86
“காம்பரா இருளை நிரந்தரமாக அமுக்கி வைத்திருக்கின்றது. அந்த அடிமை இருளின் பரப்பில் சிறை பிடிக்கப்பட்ட பட்டாளக் காரரைப் போல குமைந்து நெருங்கி இருள் துண்டுகளாக அவர்கள் எல்லோரும் படுத்திருக்கின்றார்கள். அவர்களோடு சாமான் வைக்கும் விறாக்கியும், அரிசிச் சாக்கும், மற்றும் தட்டு முட்டுச் சாமான்களும் மூலைக்கு மூலை இடம் பிடித்துக் கிடக்கின்றன.”
எனவே போதிய சுகாதார வசதிகளற்ற சூழலில் காற்றும் வெளிச்சமும் உட்புகமுடியாத சிறிய லயங்களில் நெருக்கமாகப் பலர் குடியிருத்தப்பட்டார்கள். இத்தகைய சூழல் அவர்களின் மன நிலையைப் பாதித்ததால் அவர்கள் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டார்கள். வாழ்வின் மீதே அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. சின்னக் கலப்பனுக்கு ஏற்பட்ட விரக்தியை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.
“இன்னொரு உயிர் புகுவதற்குக் காம்பராவில் இடம் இல்லை. நிதானவுணர்வுடன் காம்பராவையும் அதற்குள் மந்தைகளைப் போல் அடைக்கப்பட்டு குவிந்து கிடக்கும் உழைக்கும் உயிர்களையும் பார்க்கும் போது தம்மேல் அனுதாபமும் “இதுவும் ஒரு வாழ்வா?” என்றளண்ணமும் வெறுப்பும் அவன் மனதில் சூடான ஜுவாலை வீசிற்று. இருதயம் சுட்டுக் கொண்டது” இந்த உணர்வு சின்ன்க் கலப்பனுக்கு அடிக்கடி எழுந்து மடியும், அவன் திருமணம் செய்யப் போகும் மகனை நினைத்துப் பார்த்தான்.
தானே தன் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள முனையும் நாட்களில் தனக்கேற்படும் கஸ்டத்தையும், மற்ற லயங்களில் உள்ளவர்களின் அனுபவங்களையும் அவை ஏற்படுத்தும் மன நிஸ்டுரங்களையும் அவன் அறிவான். அந்தக் காம்பராவில் வீரமுத்துவும் கலியாணம் முடித்துவந்தால்? .பருவ மடைந்த பொட்டு, நட்சத்திரம், வயது வந்த பயலுகள். ஏற்படும் அவஸ்தைகளையும் சங்கடங்களையும் அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. மனம் அருக்குளித்தது. வாய்க்குள் ஏதோ புறுபுறுத்துக் கொண்டான்.”*
சின்னக் கலப்பன் தனது குடும்பத்தின் நிலைபற்றிச் சிந்தித்தாலும் அதை மாற்ற அவனால் முடியாது. இதே நிலையிலேதான் மலையக மக்கள் அனைவரும் வாழ்ந்து வந்தனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (4) 0. ம.இரகுநாதன்

4.1.3. கல்விகற்கும் வசதியின்மை
மலையக மக்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு வசதியாக பாடசாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் அவர்கள் படிக்காதவர் களாக இருந்து தோட்டக் கூலிகளாகவே தமது வாழ்வைக் கழிக்கவேண்டியிருந்தது. இந் நிலையிலும் ஒரு சிலர் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை அனுப்பி ஓரளவுக் காவது படிக்க வைத்தனர்.
தூரத்துப்பச்சை நாவலில் வருகின்ற வள்ளி கணவனிடம் தனது ஆசையை வெளியிடுகின்றாள்.
*.அதுசரி நம்ம தோட்டத்திலே தான் இப்ப ரொம்ப சனம் நாட்டுப் பக்கம் போறாங்களே. தொரகிட்ட சொல்லி ராமனையும் லெட்சுமணனையும் பள்ளிக்கூடத்திலே சேத்துவிடேன்.”
“என்னா, பள்ளிக் கூடமா? ஒனக்குப் பைத்தியமா என்னா”
“இல்லே! நாலு வார்த்தே எழுதப் படிக்கத் தெரிஞ்சா நம்ப தொரேகிட்ட சொல்லி ஆபிஸிலேயே வேலை வாங்கித் தரலாம் இல்லே?.”
“நாட்டிலே பள்ளிக்கூடமில்லையே. நம்ப டீ மேக்கரையா புள்ளேங்க எல்லாம் டவுனுக்கு படிக்கப் போறாங்க. நம்பளுக்கு அன்றாடம் கஞ்சி குடிக்கவே பத்தாமே இருக்கு. அப்படியிருக்க, பள்ளிக்கூட செலவு செய்ய காசா இருக்கு? அந்தப் பாவிங்கதான் கொடுப்பாங்களா என்று அங்கலாய்த்துக் கொண்டான்.”
வள்ளி தனது காதோலையை விற்று ராமனையும் இலட்சுமண னையும் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகின்றாள். வள்ளியின் இச்செயலை ஏனையவர்கள் பார்த்துக் கேலி செய்கின்றார்கள். இதனால் மலையக மக்களின் மனதில் தாம் வெறும் தோட்டக் கூலிகள்தான் தமக்குப் படிப்பு, உத்தியோகம் என்ற வார்த்தைகளுக்கே இடமில்லை என்ற மனநிலை ஏற்பட்டிருப்பது தெரிகின்றது. அத்தகையவர்களைப் பொறுத்தவரை ஏகாதிபத்தியத்திற்கு வெற்றியாக இருந்தாலும் வள்ளி போன்றவர்கள் இதற்கெல்லாம் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து முன்னேறியதால் அவர்களுக்கு விடிவு காத்திருந்தது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (149 Dr.ம.இரகுநாதன்

Page 87
நந்தியின் மலைக்கொழுந்து என்ற நாவலில் வருகின்ற ரங்கசாமி தோட்டத்துப் பிள்ளைகள் படிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றான். இதனால் மலையப்பனைப் படிப்பிப்பதில் அக்கறை காட்டுகின்றான்.
“மலையப்பனை ரங்கசாமி படிப்பித்தான். வீராயியை பிள்ளைமடு வத்திற்கு எடுத்துச் செல்வதும், பின்பு லயத்திற்கு அழைத்து வருவதும் தான் மலையப்பன் செய்யும் வேலைகள். வேறு வேலை ஒன்றையும் தந்து அவன் படிப்பை குழப்பியடிக்க விரும்பவில்லை ரங்கசாமி எழுத்துக்களை ஒவ்வொன்றாகக் கூட்டி, சொற்களுக்குப் பின் சிறிது தாமதித்து, வசனங்களின் முடிவில் நன்றாக இளைப்பாறிவிட்டு முன்னேறிப் படிக்குமவக்குத்தான் ரங்கசாமியின் கல்வியறிவு இருந்தது. என்றாலும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் அவன் ஒரு படிப்பாளி, *தோட்டத்து மக்களுக்கு கல்வி அறிவு மிக அவசியம், நம்ம கவலைகளுக்கெல்லாம் அறியாமைதான் முக்கிய காரணம்” என்பான் J Easg|TLS).’
தோட்டத்துப் பிள்ளைகள் படிக்க வேண்டியதன் அவசியத்தை ரங்கசாமி உணர்ந்திருந்தான். ஆனால் தோட்டத்தில் ஐந்தாம் வகுப்புவரை உள்ள சிறிய பாடசாலை ஒன்றே அமைந்திருந்தது. ஐந்தாம் வகுப்பு வரையாவது எல்லாப்பிள்ளைகளும் படிக்கவேண்டும் என்று ரங்கசாமி நினைத்து ஆசைப்பட்டான். ஆனால் தோட்ட நிர்வாகம் இதற்குச் சாதகமாக இருக்கவில்லை.
*தோட்டத்தின் நிர்வாக மூளை வேறு இரண்டு விஷயங்களை யல்லவா சிந்தித்து விட்டது. அதில் ஒன்று, பேருக்கு இருக்கும் அந்தப் பாடசாலையையும் மூடிவிடுவது. இரண்டாவது, அந்தக் கொட்டிலின் ஒட்டை ஒடிசல்களைத் திருத்திவிட்டு அதைத் தோட்டத்து டிஸ்பென்சருக்கும் கண்டக்டருக்கும் மாட்டுத்தொழுவமாக உபயோ கிக்கக் கொடுப்பது.”
எனவே தோட்ட நிர்வாகம் மலையகப் பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டவில்லை என்பது தெரிகின்றது. கல்வியறிவின் அவசியத்தை உணர்ந்த ஒரு சிலர் மிகுந்த சிரமத்துடன் படித்ததா லேயே முன்னேறக் கூடியதாக இருந்தது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் அமைப்பு ரீதியில் ஒன்றுபட்டு தொழிற் சங்கங்களை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட
ஈழத்துத்தமிழ்நாவல்கள் )4و( Dr.ம.இரகுநாதன்

போது இம் முயற்சிகளை முறியடிக்கும் பணியில் தோட்ட நிர்வாகம் மும் முரமாகச் செயற்பட்டது. மலையக மக்கள் கல்வியறிவின்மையால் தாம் ஒடுக்கப்படுவதை ஆரம்பத்தில் உணர முடியாமல் இருந்தனர். உணரத் தலைப்பட்டபோதும் அக்கொடுமைகளை எதிர்த்துப் போராட முடியாதவர்களாக இருந்தனர். எனினும் காலப் போக்கில் ஓரளவு கல்வியறிவைப் பெற்றுக் கொண்ட சிலர் தாம் ஒடுக்கப்படுவதை மற்றவர்களுக்கு உணர்த்த முற்பட்டனர். இந்நிலையில் இவர்களின் முயற்சிகள் முறியடிக்கவும் பட்டன.
தூரத்துப்பச்சை என்னும் நாவலில் வருகின்ற லட்சுமணன் சங்கத்திற்கு ஆள் சேர்ப்பதை அறிந்த கங்காணி அவனை வேலையி லிருந்து நீக்க முயற்சி செய்கின்றான். லட்சுமணனை சக மலையகத் தொழிலாளர்களே காட்டிக் கொடுக்கின்றார்கள். லட்சுமணன் துரையின் அலுவலகத்தில் விசாரிக்கப்படுகின்றான்.
*நீ என்னமோ சங்கம் என்று ஆள் சேக்கிறியாமே நெசமா? என்று கங்காணி நிதானத்தோடு கேட்டார்.”
“இல்லிங்க” என்று மறுத்தான் லட்சுமணன்.
“அதுக்கு நிறைய அத்தாட்சியிருக்கு” என்றான் கணக்கப் பிள்ளை. அதற்குள் ஆபிஸினுள்ளிருந்து மருதை என்கிற தொழிலாளி வெளியே வந்தான். லட்சுமணனுடன் வேலை செய்யும் தொழிலாளி அவன். அவன் அங்கு வருவதன் காரணம்.?
“ஏ மருதே, லட்சுமணன் என்னமோ சங்கம் கிங்கம்னு சேத்தானா இல்லியா.?
*ஆமாங்க! நம்ம பிச்சமுத்து, சிவசாமி எல்லாத்தையும் கூட்டி வச்சி ரகசியமா பேசிக்கிட்டாங்க. என்னே கூடச் சேரச் சொன்னாங்க. நான் முடியாதுன்னுகிட்டேன். என்னா இருந்தாலும் சாப்பாடு குடுக்கிற ஓங்களுக்குத் துரோகம்னு சொன்னேன்” என்றான் மருதை, தன் இரு கைகளையும் கட்டி வணங்கிப் பணிவுடன் கூறினான். அவன் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை தெரிந்தது.”
இலட்சுமணன் பத்துச்சீட்டுக் கொடுக்கப்பட்டு தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றான்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (14) Dா.ம.இரகுநாதன்

Page 88
“நாளைக்குப் பொழுது விடிந்ததும் தோட்டத்தைவிட்டே போயிட ணும். இந்தப் பக்கத்திலே ஒன்தலை தெரியக் கூடாது தெரியுமா என்றான் கங்காணி.”
இலட்சுமணன் மலையக மக்கள் அடக்கி ஒடுக்கப்படுவதை உணர்ந்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராட முற்பட்டவன் அதற்காக தொழிற்சங்கத்தில் மலையகமக்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றான். ஆனால் அவன் மலையக மக்களாலேயே காட்டிக் கொடுக்கப்படுகின்றான். மலையக மக்களின் கல்வியறிவின் மையைப் பயன்படுத்திய தோட்ட நிர்வாகம் அவர்களுக்குச் சில சலுகைகளைக் கொடுத்தும் ஆசை வார்த்தைகளைக் கூறியும் ஏமாற்றுவது வழக்கம். இவ்வாறு ஏமாற்றப்பட்ட தொழிலாளர்களே இலட்சுமணனைக் காட்டிக் கொடுக்கின்றார்கள். இதனால் இலட்சுமணன் தோட்டத்தை விட்டு வெளியேற்றப்படுகின்றான்.
சில சந்தர்ப்பங்களில் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குலைப்பதற்காக தோட்டங்களை மூடிவிடும் முயற்சிகளும் எடுக்கப் பட்டன. குருதிமலை என்னும் நாவலில் தோட்டத்தைக் கொலனியாக்கு வதற்காக ஒரு மாத முன்னறிவித்தலில் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவது காட்டப்படுகின்றது.
“இப்ப நாங் ஒங்களுக்கு ஒரு முக்கியமான விஷயங் சொல்லத் தாங் வந்தது. தோட்டத்தை இந்த மாசத்தோட மூடச் சொல்லி அரசாங்கத்திலிருந்து இன்னிக்கு எனக்குஒரு லெட்டர் வந்திருக்கு. வாற மாசத்திலயிருந்து ஓங்களுக்கு இந்தத் தோட்டத்தில வேலை யில்லை, வேலை நிப்பாட்டிரது.”*
துரையின் இந்த அறிவிப்பை மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.
“இது நாங்க பொறந்த பூமிங்க. இதை வுட்டிட்டு எங்களால போக முடியாதுங்க. இங்கதான் நாங்க பொறந்தோம், வளந்தோம், கஷ்டப்பட்டோம், அந்தக் கஷ்டங்களுக்குள்ளேயே வாழ்ந்தோம். இந்த எடத்தவுட்டிட்டு நாங்க போக மாட்டோமுங்க தொரை.*
என்று அம்மக்களின் தலைவனாக நின்ற வீரையா முடிவாகக் கூறிவிடுகின்றன்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (48) Dr.ம.இரகுநாதன்

மக்கள் வெளியேற மறுத்தபோது அவர்களை வெளியேற்றுவதற் காக பொலிசார் வரவழைக்கப்படுகின்றனர். ஆயிரமாயிரமாகத் திரண்டு நின்ற தொழிலாளர்கள் மத்தியில் பொலிசாரின் அடக்குமுறை பலிக்க வில்லை ஆனால் அவர்களின் துப்பாக்கி பலரின் உயிரைப் பறித்து விடுகின்றது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் வீரையாவும் ஒருவன்.
சி.வி.வேலுப்பிள்ளையின் வீடற்றவன் என்னும் நாவலில் தொழிற்சங்கத்திற்கு ஆள் சேர்த்த ராமலிங்கமும் அவனது குடும்பத்தி னரும் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு வீடற்றவர்களாகத் திரியும் பரிதாப நிலை காட்டப்படுகின்றது.
ராமலிங்கம் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டதால் அவன் பிறந்து வளர்ந்த கண்ணியப்பு தோட்டத்திலிருந்து பத்துச் சீட்டுக் கொடுக்கப்பட்டு குடும்பத்தோடு வெளியேற்றப்படுகின்றான். அவனுக்கு ராங்கிக்காரன் என்ற பட்டஞ்சூட்டிய கண்ணியப்பு துரை தனது சக துரைமார்களுக்கும் அவனைப்பற்றி எச்சரிக்கை செய்திருந் தான். இதனால் அவனின் பெயர் கறுப்புப் பட்டியலில் போடப்பட்டி ருந்தது. கறுப்புப் பட்டியலில் பெயர் இருந்ததால் அட்டன் பகுதியில் எந்தத் தோட்டத்திலும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை.
ஒன்றரை வருடங்களின் பின் தனது மாமனார் கங்காணியாக வுள்ள நீலகிரித் தோட்டத்தில் வேலை கேட்டுப் போனபோது மாமனார் சங்கத்திற்கு ஆள் சேர்க்க மாட்டேன் என்று கர்ப்பூரத்தை அணைத்து சத்தியம் செய்யுமாறு கேட்கின்றார். அவன் சத்தியம் செய்து வேலையைப் பெற்றுக் கொள்கின்றான்.
வறுமையின் காரணமாக சத்தியம் செய்து வேலையைப் பெற்றுக் கொண்டாலும் அவனால் தொழிற் சங்கத்திலிருந்து ஒதுங்க முடியவில்லை. தோட்டத்தில் தொழிற் சங்க நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுகின்றான்.
ராமலிங்கத்தின் தம்பி பழனியப்பன் வேலையிலிருந்து நீக்கப்பட்ட வன். அவன் நோயுற்றிருந்த தனது தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் தோட்டத்திற்கு வருகின்றான். இதைச் சாட்டாக வைத்து ராமலிங்கம் பத்துச் சீட்டுக் கொடுக்கப்பட்டு வேலையிலிருந்து நீக்கப்படுகின்றான். இதை எதிர்த்து தொழிற்சங்கப் பிரதிநிதிகள் நீதிமன்றம் வரை செல்கின்றனர். ஆனால் நீதிமன்றத்தில் விசாரணை
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (149 Dா.ம.இரகுநாதன்

Page 89
நடைபெற்ற போது நீதிபதி இரண்டு மாதத் தவணையில் தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகின்றார்.*
ராமலிங்கத்திற்கு ஆதரவாக இருந்த மாமன் கங்காணியும் மகனும் வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். வேலையை இழந்து வாழ வழியின்றி எங்காவது நீதி கிடைக்குமா எனத்தேடிச் சென்ற கங்காணி பெரியசாமியை கொழும்பில் வீதியில் வைத்து காடையன் ஒருவன் ஏய் கள்ளத் தோணி”* என்று கூறி மிரட்டுகின்றான். இது பெரியசாமியின் மனதை வெகுவாகப் பாதிக்கின்றது.
ராமலிங்கம்,
“கடவுளே எனக்குப் போக வழிதெரிய வில்லையே,
எனக்கு ஒரு இடமில்லையே என்று வாய்விட்டுப் புலம்பினான்*
இது ராமலிங்கத்தின் புலம்பலாக இருந்தாலும் மலையக மக்கள் பலரின் குரல் இவ்வாறு தான் இந்த நாட்டில் ஒலிக்கின்றது. என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
வேலுப்பிள்ளையின் “இனிப்பட மாட்டேன்” என்னும் நாவலில் கிராம விஸ்தரிப்பு என்ற பெயரில் தோட்டங்களை மூடி அங்குள்ள தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்யும் அரசாங்கத்தின் தந்திரமான நடைமுறை எடுத்துக் காட்டப்படுகிறது.
தொழிற்சங்கப் பிரதிநிதியான ராஜனும் சந்திரனும் உரையாடும் போது அரசாங்கத்தின் இத்திட்டம் பற்றி விமர்சிக்கின்றார்கள்.
*சந்திரன் தெரியுமா விஷயம் டி.எஸ் சேனநாயக்கா களனி வெளிப் பகுதி உருளை வள்ளித் தோட்டத்தை கிராம விஸ்தரிப்புக்காக எடுத்து விட்டார். 350 தொழிலாளர்களுக்கு ஒருமாத நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரச்சினையைத் தீர்க்க குறுக்கு வழி கண்டுபிடித்த மாதிரித் தெரிகிறது”
“இந்த 350 தொழிலாளர்களும் எங்கே போவார்கள்.” *றோட்டுக்கு இதில் அவர்கள் வெற்றி கண்டால் பல
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gus) ம.ம.இரகுநாதன்

தோட்டங்களை எடுத்து நம் தொழிலாளர்களை வெளியே போடுவார்கள்.?
*அவர்கள் போக மறுத்தால்? *அத்து மீறி இருப்பதாய் கோர்ட்டில் வழக்கு போட்டு மறியலுக்கு அனுப்புவார். பின்னால் அவர்கள் றோட்டுக்குத் தான் போக வேண்டும்.*37
இவ்வாறு தோட்டங்களை மூடிவிட்டுத் தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்குவதன் நோக்கம் அவர்களை இந்த மண்ணை விட்டு வெளியேற்றுவதற்காகவே என்பதும் அதற்காகவே இனக் கலவரங்கள் பல துண்டி விடப்பட்டதும் இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றது. இனக் கலவரங்கள் ஏற்பட்ட போது மலையக மக்கள் காரணமின்றியே தாக்கப்பட்டார்கள்.
“ஈழப் பிரச்சினைக்கும் மலை நாட்டுத் தமிழ் பேசும் மக்களுக் கும் எந்த விதமான தொடர்புமில்லையென்பதை உங்களுக்கு சொல்லத் தேவையில்லை! நமது பிரச்சினை வேறு எனினும் அவர்களை ஒதுக்கி வைத்துப் பேசுவது இழுக்கு”
அவர்கள் இந்நாட்டின் பழங்குடி மக்கள். ஆனால் நாம் நிற்க நிழலின்றித் தவிக்கிறோம். நாடற்ற கூட்டம். நமக்குச் சொந்தமான விடில்லை, வாசல் இல்லை, நமக்கு நிரந்தரமான தொழில் இல்லை. 150 வருடங்களுக்கு முன் நமது மூதாதையர் கூலிகளாக இந் நாட்டிற்கு நம்பர் போட்ட தகரத் துண்டை மாட்டிக் கொண்டு வரப்பட் டார்கள். இன்னும் நம்மவர்கள் கூலிகளாகவே வயிற்றைக் கழுவிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையிலுள்ள நம்மை ஏன் சிங்கள வர் தாக்க வேண்டும். இந்த கேள்விக்குப் பதில் சொல்லும் முகமாக எனக்குத் தெரிந்த ஒரு சில தகவல்களை இங்கு குறிப்பிடுகின்றேன்.
1939ம் ஆண்டு டொனமூர் அரசியல் அமைப்பில் நம்மவர் களுக்கு சர்வஜன வாக்குரிமையில் பங்கு கிடைத்தது. அந்த நாள் முதல் இனவாத சிங்கள அரசியல் வாதிகளும், சிங்கள, ஆங்கில பத்திரிகைகளும் துவேசப் பிரசாரம் செய்து வருவதும் உங்களுக்கு தெரியும். கட்டுரை, காவியம், சரித்திரம், நாடகம் இவைகள் எல்லாம் இந்தியத் தமிழரை வசைபாடுகின்றன. இந்த விஷ வித்து சாதாரண சிங்கள மக்களிடத்தில் விருட்சமாக வளர்ந்து விட்டது. நம்மவர்களை நாடுகடத்த வேண்டுமென்ற எண்ணம் பல வருடங்களாய் நடை முறைக்கு வந்து கொண்டிருக்கிறது. *ழத்துத்தமிழ்நாவல்கள் " . . .... Gs) Dr.ம.இரகுநாதன்

Page 90
1972 - 76 ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி காணி சீர்திருத்த சட்டத்துக்குக் கீழ் தோட்டங்களை சுவீகரித்து கிராமங்களுக்குப் பக்கத்திலுள்ள தோட்டங்களை அரசு கிராம விஸ்தீரணத்திற்காக எடுத்த போது, தொழிலாளர்களுடைய வாழ்வு சிதைக்கப்பட்டது. அவர்களின் உரிமைக்காக தொழிற்சங்கங்கள் பேரம் பேசின. நேரடி நடவடிக்கைகளும் எடுத்தன. இதனால் கிராம விஸ்தீரணத்தில் சுணக்கம் ஏற்பட்டது. சிங்கள அரசியல்வாதிகள் இதை பலாத்காரத்தி னால் தீர்ப்பதற்கு கிராம வாசிகளைத் தூண்டி விட்டார்கள். 1977 இல் கம்பளைப் பகுதியில் டெல்டா பச்சைக்காடு, சங்குவாரி தோட்டங் கள் தாக்கப்பட்டன. இதிலிருந்து வயல்களுக்குத் தீ வைப்பது, கொள்ளை யடிப்பது, பெண்களை மான பங்கம் செய்வது சகஜமாகிவிட்டது.”*
மேற்படி பகுதியினால் மலையக மக்கள் இந்த மண்ணில் அனுபவிக்கும் துன்பங்களும் அரசியல் காரணங்களினால் அவர்கள் அடக்கி ஒடுக்கப்படுவதும் புலப்படுகின்றது. உழைப்பைச் சுரண்டும் நோக்கில் கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்கள் இங்கு தமிழ் சிங்கள இன முரண்பாடுகளின் பின்னணியில் சிங்கள மக்களால் வெறுக்கப்பட்டனர். அரசாங்கமும் இம் மலையக மக்களை எவ்வா றெனினும் இலங்கையை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றே விரும்பியது. இதனால் இவர்கள் பல்வேறு விதமான கொடுமை களையும் அனுபவித்தனர்.
புலோலியூர் சதாசிவத்தின் மூட்டத்தினுள்ளே என்ற நாவலிலும் தோட்டக் காணிகளைச் சுவீகரிக்கும் முயற்சி பற்றி எடுத்துக் காட்டப்படுகின்றது. நுவரெலியா, மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் பசுமலைத் தோட்டத்தை சுவீகரித்து தொழிலாளர்களைப் பிரித்து வேறு தோட்டங்களுக்கு அனுப்பிய போது அவர்கள் அதற்கு எதிராகப் போராடுகின்றார்கள்.
வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமான தோட்டங்களை அரசுடை மையாக்கும் திட்டம் வந்த போது தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந் தார்கள். தமக்கும் அதன் மூலம் விமோசனம் கிடைக்கும் என நினைத்தார்கள். ஆனால் அது ஏமாற்றமாகவே இருந்தது.
*தோட்டங்களைக் கண்களால் கூடப் பார்க்காத சொந்தக்காரர் களான வெள்ளையர்கள், காலாட்டிக் கொண்டு வருமானத்தைப் பெறுகின்றார்கள். நமது தேசியச் செல்வம் சுரண்டப்படுகிறது. நாம் மாடாக உழைத்துக் கொடுக்கிறோம். எமது நாட்டிற்கே எமது
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gs) Dr.ம.இரகுநாதன்

உழைப்பின் பிரயோசனம் வர வேண்டும், தோட்டத் தொழில் பொதுவு டைமையாக்கப்பட்டால் நாமெல்லாம் தோட்டச் சொந்தக் காரர்கள் போலாகிவிடுவோம். நமது வசதிகள் பெருகும். என்றெல்லாம் அன்று மகிழ்ந்த பெருமாளுக்கு இன்று இவையெல்லாம் சொல்லளவில் இருப்பதாகவே படுகிறது.
4.1.4. குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பெருமளவு இந்தியத் தமிழர்கள் தோட்டக் கூலிகளாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். ஆரம்பத்தில் இவர்களின் வருகை இலங்கையின் பெரும்பான்மைச் சிங்கள மக்களுக்கு எந்தவிதமான பிரச்சினையையும் கொடுக்கவில்லை. தோட்டத்துறை முதலாளித்துவத்தின் வருகைக்குப் பின்னரும் சிங்கள விவசாயிகள் சிறு நிலமாவது உடையவர்களாக இருந்ததால் இவர்கள் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்ய மறுத்தனர். இதனால் இவர்கள் தோட்டக் கூலிகளாக இருந்த இந்தியத் தமிழர்களுடன் தொழில் ரீதியில் போட்டியிடவில்லை. இதனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சிங்கள மக்களிடையே இந்தியத் தமிழர்கள் மீதான எதிர்ப்புணர்வு ஏற்படவில்லை.
ஆனால் 1920 களின் பிற்பகுதியில் சர்வசன வாக்குரிமை பற்றியும் அரசியல் யாப்புச் சீர் திருத்தங்கள் பற்றியும் விவாதங்கள் நடந்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான உணர்வலை கள் சிங்கள மக்களிடையே எழுந்தன. 1927 இல் இலங்கைக்கு வந்த டொனமூர் ஆணைக்குழு 21 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனச் சிபார்சு செய்தது. டொனமூர் சீர்திருத்தங்களுக்கு முன்னர் வாக்குரிமை வழங்குவது ஒருவரின் சொத்து, கல்வித் தகைமை ஆகியவற்றின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இத்திட்டத்தால் இந்தியத் தோட்டத் தொழிலாளர் கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருக்க வில்லை. டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சுகள் அழுலாக்கப்பட்ட போது இலங்கை யைத் தாயகமாகக் கொண்டோர் அல்லது ஐந்து வருடங்கள் தொடர்ச்சி யாக வசித்து மேலும் நிலையாக வசிக்கும் நோக்கமுடையோருக்கு வழங்கப்பட்ட குடியிருப்புச் சான்றிதழ் கொண்டோர் என்போருக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. இச்சட்டத்தால் முதன் முறையாக தோட்டத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் வாக்களிக்கும் உரிமை யினைப் பெற்றனர்."
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gs) Dr.ம.இரகுநாதன்

Page 91
1936 இல் இந்தியத் தமிழர்களில் 145,000 பேரும் 1941 இல் 225,000 பேரும் வாக்களிக்கும் உரிமையினைப் பெற்றிருந்தனர். இது சிங்கள மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதனால் 1948 இல் இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் சிங்கள மக்கள் இலங்கையிலிருந்து இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராகப் போரிட ஆரம்பித்தனர். 1949 இல் கொண்டு வரப்பட்ட இலங்கை குடியுரிமைச் சட்டம், பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றால் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை பறிக்கப்பட் டது. இதனால் பல இலட்சக் கணக்கான மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். இதன் பின்னர் 1964 இல் கைச்சாத்திடப் பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பலர் இந்தியா வுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். இத்தகைய அரசியல் நடவடிக்கை களையும் இத்தகைய சூழ் நிலையில் மலையக மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளையும் மலையக நாவல்கள் சில எடுத்துக் காட்டியுள்ளன. அத்துடன் மலையக மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தாத வேறு சில நாவல்களிலும் இப்பிரச்சினை தொட்டுக் காட்டப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
செ. கணேசலிங்கனின் செவ்வானம் என்னும் நாவலில் வருகின்ற தொழிற்சங்க வாதியான பொன்னையாவும் மாலினியும் உரையாடும் போது மலையக மக்களை நாடு கடத்தும் அரசாங்கத் தின் திட்டம் பற்றியும் உரையாடுகின்றனர். மாலினி,
*அவர்களில் பெரும் பகுதியினரைத்தானே நாடு கடத்துவதற்கு அம்மா இந்தியப் பிரதமர் சாஸ்திரியோடு ஒப்பந்தம் எழுதிவிட்டு வந்திருக்கிறா?*
எனக் கூறியபோது பொன்னையா,
“அது வெறும் அரசியல் வேடிக்கைக் கூத்து வேலையில்லாது தவிக்கும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு தேசிய முதலாளிகள் கையாளும் தந்திரம் உலகத் தொழிலாளிகளே ஒன்று படுங்கள் என்று எமது போலிக் கூட்டரசாங்க இடது சாரிகளே கோஷமிட்டுவிட்டு இந் நாட்டின் முது கெலும்பான தொழிலாளர்களை நாடு கடத்தவும் அனுமதிக்கிறார்கள். இதை விட வேடிக்கையான ஏமாற்றுக் கிடையாது”*
ஈழத்துத்தமிழ் நாவல்கள் (5) Dr.ம.இரகுநாதன்

எனக் கூறுகின்றான். பொன்னையாவின் வார்த்தைகள் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடு கடத்தப்படுவது பற்றிய ஆசிரியரின் கருத்தையே எடுத்துக் காட்டுகின்றன எனலாம். இங்கு சிங்கள மக்களுக்கு வேலையில்லாப் பிரச்சினை வந்த போது அவர்களுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புக்களை மலையக மக்கள் பெற்று விடுகின்றார்கள். எனவே மலையக மக்களை நாடு கடத்திவிட்டு அவர்களின் வேலையினை சிங்கள மக்களுக்குக் கொடுக்கலாம் என்ற கருத்தின் அடிப்படையிலேயே இந் நாடுகடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஆசிரியர் உணர்த்துகின்றார். அதாவது தொழில் ரீதியாக மலையக மக்களுக்கும் சிங்கள மக்களுக்கு மிடையே ஏற்பட்ட போட்டியைத் தவிர்த்து சிங்கள மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது என்ற போர்வையில் சிங்கள மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாகவே இச் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது எனக் கூறுகின்றார். உண்மையில் மலையக மக்கள் தோட்டக் கூலிகளாகவே இருந்ததால் இவர்கள் சிங்கள மக்களுடன் தொழில் ரீதியில் போட்டியிடவில்லை அரசியல் அடிப்படையில் மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதே அரசியல் வாதிகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. இதுவே அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதற்கான மூல காரணமாகும். ஆனால் அதை நேரடியாகக் கூறாத அரசியல் வாதிகள் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் அவர்களுக்கு வேலை வழங்குவதற்காகவே இத்தகைய செயல் மேற்கொள்ளப்பட்டது என்று பிரசாரம் செய்தனர். இதனையே பொன்னையாவின் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.
பெனடிக்ற் பாலனின் சொந்தக் காரன் என்னும் நாவலில் மலையக மக்களின் குடியுரிமைப் பிரச்சினை எடுத்துக் காட்டப்படு கின்றது. வாசிகசாலையில் ஒன்று கூடித் தமது பிரச்சினைகளை ஆராய்ந்த மலையகத் தொழிலாளர்கள் தம்மை நாடுகடத்த எடுக்கப் படும் முயற்சிகள் பற்றிப் பேசிக் கொள்கின்றனர்.
*நாடு கடத்தும் பிரச்சனை தோட்டத்தில் அநேக தொழிலாளர் களின் உஷாரைக் கெடுத்ததோடு மனக் கொதிப்பையும் உண்டாக்கி இருந்தது. இதையிட்டு எங்கும் பரபரப்பாக இருந்தது. அந்தமான் தீவுக்கு கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்ற செய்தி பத்திரிக்கைகளில் வந்து அவர்களின் உள்ளங்களை நோண்டிச் சிதைத்துக் கொண்டிருந்தது. அநேகருக்கு அதன் சாராம்சம் என்னவென்றே புரியவில்லை நாளைக்கு என்ன நடக்குமோ என்று
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gss Dா.ம.இரகுநாதன்

Page 92
புரியாமல், இருட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கிரிமினல் கைதிகளின் மனநிலையில் எல்லாரும் இருந்தனர்”*
என இம் மக்களின் மனநிலையை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இலங்யிைலேயே பிறந்து வளர்ந்த மக்களுக்கு தம்மை ஏன் நாடுகடத்த வேண்டும் என்பது புரியவில்லை. சின்னக்கலப்பன்,
இதென்னய்யா? இதென்ன கொடுமை? “நம்மளை நாடு கடத்தப் போறாங்களாமே? “நம் மளை இந்தியாவுக்கு துரத்தப் போறாங்களாமே உண்மையா?” “சிறிமா, சாஸ்திரி ஒப்பந்தமென்னங்க? நமக்கு ஒண்ணும் புரியலையே? “நாம இந்த நாட்டுக்கு என்ன குத்தமய்யா செய்தோம்? அந்தமானுக்கு கடத்தப் போறாங்களாமே?” “இந்த நாட்டில பொறந்தவங்களையும் அனுப்புவாங்களா?*
என்று விபரம் புரியாமல் மனம் கொதிக்கின்றான். அண்ணா மலை, பெருமாள், நொண்டிச்சிலம்பன், இராகவன் முதலிய பல தொழிலாளர்கள் அங்கு செய்வதறியாது மெளனமாகக் கூடியிருந்தனர். மெளனத்தை அண்ணாமலை குலைக்கின்றான்.
*நீங்கள்ளாம் யாரு? “நீங்கள்ளாம் எங்க பொறந்ததுங்க? *இலங்கையிலே” “உங்கள் தகப்பன், தாய் எங்க பொறந்தாங்க” “இலங்கையில” *அப்புறமென்ன நீங்க ஏன் பயப்புடனும்? “நீங்கள் இலங்கையர் தானே. நீங்க இங்கே தானே வாழனும் உங்களுக்கு இந்தியாவிலே நிலமிருக்கா? ஏதாவது சொத்திருக்கா? *. “எப்படி இருக்கும்? ஒண்ணு மில்லையே?” *நீங்க கள்ளத் தோணிகளா?* *ஆரய்யா சொன்னா..? இங்க கடலைக் காணாதவங்க தான் கூட இருக்கானுகா!. 99 *அப்புறம் என்ன இதெல பயப்பர்ரதுக்கு என்ன காரணமிருக்கு?
என்ன நியாயத்தை கொண்டு நம்மல அனுப்ப முடியும்”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (50 Dr.ம.இரகுநாதன்

அண்ணாமலையைத் தொடர்ந்து கூட்டத்தில் நின்ற ஒருவன்,
“இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளரைத்தான் அனுப்புற துக்கு திட்டம் போர்றாங்க. இது இண்ணக்கிப் போட்ட திட்டமில்ல. அரசியல் நோக்கத்துக்காக முதலாளி வர்க்கம் ஒண்ணுமே தெரியாத தொழிலாளரைப் பழிவாங்கிற திட்டமிது. ஆனா சிறிமா, சாஸ்திரி ஒப்பந் தந்தான் இதுக்கு ஒரு முடிவு கண்டிருக்கு நாங்க கூறுகிறோம் இந்தியாவில் நிலம், சொத்துக்கள் இருக்கிறவங்களை இந்தியாவுக்குப் போக விரும்புறவர்களை அனுப்புறதில குத்தமில்ல ஆனா இந்த நாட்டில பொறந்து இந்த நாட்டுக்காக ஒழைச்சு இந்த நாட்டையே நம்பி இருக்கிறவர்களை பலவந்தமாக அனுப்புவதை நாங்கள் கடுமை யாக எதிர்க்கிறோம். அது பெரிய கொடுமை”*
எனக் கூற அங்கு நின்ற பலரும் அதை ஆதரித்துத் தாமும் ஆமா கொடுமைதான் என்று உரக்கக் கத்துகின்றனர்.
கூட்டத்தில் நின்ற இராகவன்,
“நாங்க இந்த விசயத்தை வைச்சு ஆத்திரமடையுறோம். எல்லோரையும் அனுப்பப் போறாங்க என்று வைச்சிருக்கிருவோம். எங்களுக்கு ஆத்திரம் தான் வரும். ஆனால் யார் மேலே நமக்கு ஆத்தரம் வரனும்? யார் யாரை அனுப்புறாங்க? தொழிலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தக்கு துரோகம் செய்யுமா? அது சரித்திரத்தில நடக்காது, அப்புறம் இந்த நாட்டை கொள்ளை அடிக்கிற வெள்ளை முதலாளிகளை இங்க ஒரு முடிவில்லாம இருக்க விட்டுவிட்டு, இந்த நாட்டை வளமாக்கிறவர்களை அனுப்பத் துணிபவர்கள் யாராக இருக்க முடியும். நிச்சயம் இது முதலாளி வர்க்கத்தின் கோழைத்தன மான வேலை. தொழிலாளி வர்க்கம் ஆட்சியில இருந்தா இது நடக்குமா . வெள்ளைக்காரன் கொடுக்கிற எலும்புத் துண்டில உயிர் வாழ்கிற முதலாளிகள் வேல இல்லாம கஷ்டப்படுற சிங்கள மக்களை ஏமாத்துறதுக்கு செய்யிற முட்டாள் தனமான வேலை இ g?'47
பிரச்சினையை வர்க்க அடிப்படையில் ஆசிரியர் அணுகுவதால் தொழிலாளர்களின் ஆட்சி வருவதன் மூலமே இப்பிரச்சினைக்கு முடிவு தாணலாம் என்ற கருத்தை இராகவனின் மூலம் உணர்த்துகின்றார். இன ரீதியாக நோக்காமல் வர்க்க ரீதியில் நோக்குவதாலேயே
wur த்தமிழ்நாவல்கள் Gs) Dr. LD-6 respirgar

Page 93
இவர் இந்நாடுகடத்தல் முயற்சி சிங்களத் தொழிலாளிகளின் முடிவல்ல என்பதையும் அவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்பதையும் புஞ்சிபண்டா என்ற சிங்களத் தொழிலாளியின் கூற்றாக எடுத்துக் கூறுகின்றார் புஞ்சிபண்டா,
... இந்த நாட்டுத் தொழிலாளி வர்க்கமோ விவசாயிகளோ இந்த முடிவை எடுக்கலே, இங்க ஏற்பட்டிருக்கிற வேலை இல்லாத் திண்டாட்டத்தை அதுவும் முதலாளிகள் தான் உண்டாக்கினது. அதை வெச்சு மக்களை ஏமாத்துறதுக்கு வகுப்புவாத ரீதியில் நடவடிக்கை எடுத்திருக்கிறாங்க. இதனால் ஒண்ணும் தீரப் போறதில்ல. இந்த நாட்டு மக்கள், நாம தான் நடவடிக்கை எடுக்கிறதுன்னா முதல்ல வெள்ளைக் காரனைத் தூரத்துவாங்க*
என்று கூறுகின்றான். வீரமுத்து,
*படுத்துத் தூங்குறத்துக்குத் தான் இடமில்லண்ணாங்க கடைசியில நாடே இல்லேன்றாங்க*
என்று தனது மனக்குறையை வெளிப்படுத்துகிறான். பழனி,
"...... ஒரு குற்றமும் செய்யாமலேயே நாம நாடற்றவராகி 6(3LTlib'
என்கிறான். இராகவன்,
“இதுலே ஆச்சரியம் ஒன்றுமில்ல. நமக்கு நாடேல்லத்தான் ஆமா, படுத்துத் தூங்க இடமில்லத்தான். முதலாளி வர்க்கம் ஆட்சியில் இருக்கிற வரைக்கும் எந்த நாட்டிலும், அந்நாடு தொழிலாளி வர்க்கத் திற்கு சொந்தமில்லத்தான். ஆனா உண்மையான சொந்தக்காரங்க அவங்கதான். முதலாளி வர்க்கத்தைப் பூண்டோடு அழிக்கிற வரைக்கும் அவங்களுக்கு இல்லத்தான். முதலாளிகள் நம்மள கடலில்தள்ள நெனச்சுட்டாங்க, தள்ளத்தான் செய்யும்.”*
இராகவனின் கூற்று இப்பிரச்சினை முதலாளி வர்க்கத்தின் எண்ணத்தில் உதித்துச் செயல் வடிவம் பெற்றது என்பதையும் இதனைத் தீர்ப்பதற்கு தொழிலாளி வர்க்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதனாலேயே
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ઉsછે Dr.ம.இரகுநாதன்

மலையகத் தொழிலாளர்கள் வர்க்க அடிப்படையில் ஏனைய தொழி லாளர்களுடன் இணைந்து முதலாளித்துவத்தை எதிர்ப்பது காட்டப்படு கிறது. இதுவே ஆசிரியர் கூறும் தீர்வாகும்.
சிக்கன் ராஜ் எழுதிய தாயகம் என்னும் குறுநாவலில் குடியுரிமை பறிக்கப்பட்டு இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்ட போது தாம் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டுப் பிரிய மனமின்றித் தவிக்கும் மலையக மக்களின் மனநிலை எடுத்துக் காட்டப்படுகின்றது.
“இந்த நாட்டை நான் நேசிக்கிறேன் இந்த மண் என்னைத் தவழவும், நடக்கவும், வாழ்ந்து வருவதற்கும் மட்டுமா விட்டது தன்மீது பெருகி ஓடும் நீரை வார்த்து வளர்க்கிறது. அந்த நீரின் மண்ணின் வளத்தில் வளர்ந்த உணவைக் கொடுத்து வளர்த்து வருகிறது. உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தோரே என்று மணிமேகலா காவியம் பகர்கிறதே. அந்த உணவைக் கொடுத்தல் லவா எனக்கு உயிர் கெர்டுத்திருக்கிறது உயிர் கொடுத்திருக்கிற இந்த மண்ணை என்னால் மறக்க முடியாது.”*
இலங்கை மண்ணை விட்டுப் பிரிய மனமற்று ஏங்கும் நிலை இங்கே தெளிவாகப் புலப்படுகின்றது. ஆனால் இரத்தம் சொரிந்து காடுகளைக் களனிகளாக்கிய மக்களை நாடற்றவர்களாக்கி இந்த மண்ணை விட்டே வெளியேற்ற முயற்சித்த போது,
*ஆனால். ஆனால். எனக்குத்தான் இந் நாட்டிலே வாழ்கிற உரிமையில்லையே, இந்த நாட்டிலே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தும் உரிமைகள் பறிக்கப்பட்டு நடைப்பிணமாக வாழ்கின்றேனே. 99.53
என்று ராகு என்ற பாத்திரம் ஏங்குவது மலையக மக்கள் பலரினதும் ஏக்கமேயாகும்.
மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட போது சிங்கள மக்கள் அதனை எதிர்த்தனர். இதனால் மலையக மக்களுக்கு எதிரான கலவரங்கள் தூண்டிவிடப்பட்டன. நாமும் நமது வறுமையும் என்றும் மீள முடியாத கடன் சுமையுடனும் பசித்த வயிற்றோடும் வாழ்ந்த மக்களுக்கு - குடியிருக்க சொந்தமாக நிலமில்லா விட்டாலும் வசதியான வீடே இல்லாத மக்களுக்கு அரசியல் அடிப்படையில்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G15) Dா. ம.இரகுநாதன்

Page 94
கிடைத்த குடியுரிமையோ வாக்குரிமையோ எந்தவிதமான நன்மையை யும் கொடுத்துவிடப் போவதில்லை. இது தொடர்பான அரசியல் செயற்பாடுகள் பற்றி மலையக மக்களில் எத்தனை பேருக்குத் தெரிந்திருந்தது என்பதே விடைதெரியாத விடயந்தான். எனவே மலையக மக்களுக்குக் குடியுரிமைப் பிரச்சினை முக்கியத்துவம் உடையதாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் யாரோ உரிமையைக் கொடுத்தார்கள் அதனால் இதுவரையும் குரோத உணர்வின்றி இருந்த சிங்கள மக்கள் மலையக மக்களைத் தாக்கவும் தூவழிக்கவும் தொடங் கினார்கள். இத்தகைய நிலைமையால் இம் மக்கள் இந்த நாட்டிலேயே வெறுப்புக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதனை இந் நாவலில் வருகின்ற ஒரு சாதாரண மலையகப் பெண்ணின் வார்த் தைகள் உணர்த்துகின்றன.
*ச்சீ இந்த ஊரிலே மனிசன் இருப்பானா? டவுணுக்குப் போனாலும் சரி ஸ்கூலுக்குப் போனாலும் சரி, வீட்டை விட்டு வெளி யேறி விட்டால் சரி, பஸ்ஸிலும் போக முடியாது. நடந்தும் போக முடியாது. ஒரே துவேஷந் தான், கேட்கவே சகிக்கவில்லை,”*
மண்ணில் உரிமை கேட்டன்றி வயிற்றுப் பிழைப்புக்கு வழிதேடி வந்த மக்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவர்களை இவ்வாறு தான் சிந்திக்க வைத்தது.
அருளரின் லங்கா ராணி என்னும் நாவல் 1977 இல் நடைபெற்ற இனக்கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட தென்னிலங்கைத் தமிழர்களை யாழ்ப்பாணத்திற்குக் கப்பலேற்றி அனுப்பிய வரலாற்றை எடுத்துக் கூறுகின்றது. இக் கலவரத்தில் மலையகத் தமிழ் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களும் இக்கப்பலில் பயணம் செய்தனர். கப்பலில் நடைபெறும் உரையாடல்களின் மூலமாக மலையக மக்களின் குடியுரிமை தொடர்பான விடயங்கள் எடுத்துக் கூறப்படுகின்றன. இந் நாவலில் வரலாற்றை ஆவணப்படுத்தும் நோக்கமே மேலோங்கி யிருப்பதால் வரலாறும் விரிவாகக் கூறப்படுகின்றது.
“இலங்கையிலுள்ள தமிழர்களில் இரு பகுதியினர் உள்ளனர். ஒன்று பாரம்பரியக் குடியினர். இவர்கள் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்றார்கள். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இலங்கையிலேயே இருக்கின்றார்கள். மற்றவர்கள் குடியேற்றப்பட்ட தமிழர்கள். ஆங்கிலேய ஆட்சியில் தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்க தமிழ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (6) 0ா.ம.இரகுநாதன்

இலங்கையின் குடித்தொகையில் மூன்றிலொரு பகுதியினர் தமிழர்கள். மலையகத் தமிழர்களின் ஒரு பகுதியினரை 1964 இல் செய்யப்பட்ட சிறிமா, சாஸ்திரி ஒப்பந்தப்படி இந்தியாவிற்கே மீண்டும் அனுப்புகி றார்கள். 1958 ஆம் ஆண்டின் கலவரம் மலையகத்தை அதிகம் பாதிக்கவில்லை. இம் முறை மலையகம் பலத்த சேதத்தக்கு உள்ளாக் கப்பட்டிருந்தது. ஏராளமானோர் உயிரிழந்தனர். சிறிமாவோ பண்டார நாயக்காவின் அரசாங்கம் தோட்டங்களைத் தேசிய மயமாக்குதல் என்ற போர்வையில் பல தமிழ்த் தொழிலாளர்களைத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றியது. இவர்களில் பலர் கொழும்பைச் சுற்றி குடியேறி சில்லறைத் தொழில்களில் ஈடுபட்டிருந்தனர். இக் கலவரத்தி னால் அவர்கள் அனைவரும் அகதிகள் முகாமில் குடிபுகுந்து கொண் டனர். இவர்கள் அடுத்து எங்கு போவது என்பது பெரிய கேள்வியாக இருந்தது.”*
மேற்படி வரலாற்றினூடாக இதுவரை ஒற்றுமையாக வாழ்ந்த மலையகத் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே இன முரண் பாடுகளை உருவாக்கி அவர்களிடையே இனக்கலவரங்களைத் தூண்டிவிட்டது அரசியல் வாதிகளின் குடியுரிமை பறிப்பு, நாடுகடத்தல், தோட்டங்களை விட்டு வெளியேறுதல் ஆகிய நடவடிக்கைகளே என்ற கருத்து உணர்த்தப்படுகின்றது.
மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட ஏதுவாக இருந்த அரசியல் காரணங்களையும் அரசின் இந்நடவடிக்கையை இடது சாரிகளும் சில தமிழர்களும் கூட எதிர்க்கவில்லை என்பதையும் ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார்.
“இலங்கை சுதந்திரம் அடைந்தபின் ஏற்பட்ட தேர்தலில் மலையகத் தமிழர்கள் பல இடதுசாரிகளை வெற்றி பெறச் செய்து அனுப்பி இருந்தார்கள். அப்போது இந்த யூ.என்.பி அரசாங்கம் இதனைப் பொறுக்க முடியாமல் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை யைப் பறித்துவிட்டது. இவர்கள் தமிழர்களாகவும் இருந்ததனால், இந்தியாவில் இருந்து வந்தவர்களை இந்தியாவுக்கே அனுப்ப வேண்டும் என்ற கோஷமும் எழுப்பப்பட்டது. சிங்கள மக்களின் ஆதரவு அற்றுப் போய் விடுமென்று இடது சாரிகளும் வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டனர். இதே அரசாங்கத்தில் மந்திரியாக இருந்த ஜீ. ஜீ. பொன்னம்பலம் இந்த மசோதாவை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானார். இவையெல்லாம்
ਪੰਨੂੰ, நாவல்கள் G )ெ Dr. ID-6-pressurger

Page 95
இலங்கை அரசியலில் தேசிய ரீதியிலான அமைப்பை மாற்றி இன அடிப்படையில் ஒரு போக்கை உருவாக்கியிருந்தன.*
இவ்வாறு இலங்கை அரசியலில் இன ரீதியிலான வேறுபாடுகள் வளர்ந்து தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்ததையும் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப் பட்டதையும் மலையகத் தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதையும் ஆசிரியர் தொடர்ந்து விபரித்துச் செல்கின்றார். தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கொழும்பு நகரப் பகுதிகளில் சிறிய சிறிய தொழில்களைச் செய்து வந்தனர். 1977 இனக் கலவரத்தின் போது இவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு அகதி முகாமில் தஞ்சம் புகுந்ததையும் பின்னர் யாழ்ப்பாணத்திற்குக் கப்பலேற்றப்பட்டதையும் இந் நாவல் எடுத்துக் கூறுகின்றது.
சி.வி.வேலுப்பிள்ளையின் இனிப்படமாட்டேன் என்னும் நாவலில் இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மலையக மக்கள் இனியும் இத்தகைய துன்பங்களை அனுபவிக்க விரும்பாமல் இந்தியாவுக்குச் சென்று வாழ விரும்புவது காட்டப்படுகின்றது.
“சிங்கள ஆளுக்கும் யாழ்ப்பாணத்து ஆளுக்கும் சண்டை வாறப்ப எங்களேதான் முதல்லே கொத்துவாங்க இந்தியாவுக்கு போய் பிச்சை எடுக்கிறது நல்லதுங்க சார்”
இது கலவரத்தால் பாதிக்கப்பட்டு அகதிமுகாமில் தஞ்சம் புகுந்திருக்கும் மலையகத் தொழிலாளி ஒருவரின் விருப்பம், மற்றொரு தொழிலாளி,
*. சும்மாக் கிடக்கிறவங்களே நடுசாமத்திலே வந்து அடிச்சு விரட்டி, நெருப்பு வைச்சாங்க, பொம்புளே பிள்ளைகளே அவமானம் செஞ்சாங்க காட்டு சாதி பயக. இந்த ஊர்லே மனுசன் இருக்க முடியுங்களா.”*
என்று இலங்கையில் இருக்க விரும்பாத நிலையை எடுத்துக் கூறுகின்றார்.
இலங்கைப் பிரஜா உரிமை கிடைத்தவர்களும் இலங்கையில் இருக்க விரும்பவில்லை என்பதை மற்றொரு பாத்திரத்தின் கூற்று எடுத்துக் காட்டுகின்றது. ஈழத்துத்தமிழ்நாவல்கள் (62) 0ா.ம.இரகுநாதன்

*. நான் இலங்கை பிரஜே மாஸ்டர். வெள்ளைக்காரி கக்கூசுக்கு போயிட்டு பேப்பர்லே தொடப்பாளாம். அதுக்குக் கூட இந்த பத்தரம் ஒதவாது என்ன பேசாம இருக்கிறீங்க. நம்ம தலைவர் மாரு மந்திரிமாரு என்ன கிழிச்சிட்டாங்க. நம்ம எல்லோருக்கும் தண்ணி கசந்திருச்சு ஏதோ நாம செய்த பாவம்.”*
பிரஜா உரிமை என்பது வெறும் கண்துடைப்பு என்பதையும் இனக் கலவரங்கள் ஏற்படும் போது தாமும் தமிழர்கள் என்ற வகையில் தாக்கப்படுவதையும் உணர்ந்து கொண்ட இம் மக்கள் இந்த மண்ணில் வாழ விரும்பவில்லை என்பதையே இக் கூற்று எடுத்துக் காட்டுகிறது. இதனாலேயே பலர் பிரஜாவுரிமையை ஏற்க மறுத்து இந்தியா செல்ல விரும்பினர். பழனிமுத்து.
“சொந்தக் காரங்க அடுத்த மாதம் இந்தியாவுக்கு போறாங்க. அவங்களோட போகணுங்க பிரஜா உரிமயே வாபஸ் செய்யனூங்க giff'60
JT60LDuut,
“இங்கே இருந்து என்ன பிரயோசனங்க சார். வருசா வருசம் இந்த வன்செயல் தானுங்க அங்கிட்டு போயிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் . பிரசா உரிமையை வாபஸ் செஞ்சிருக்கு சார்”
பழனிமுத்து,
“இலங்கை பிரசா உரிமை இருந்து என்னங்க அது கூலிவேலே வாங்கத் தானுங்க ஒதவுது நம்ம பொடியங்களுக்கு எந்த வேலை குடுக்கிறாங்க நம்ம படிச்ச புள்ளேகளுக்கு ஆயாம்மா வேலே, சுப்பவைசர் வேலேகுடுப்பாங்களா சும்மா பிரசா உரிமை ஒட்டு
வாங்க மாத்தரம் தான்”
மலையக மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்புக்கான காரணத்தையும் இவர்களைச் சிங்களவர்கள் தாக்குவதற்கான காரணத்தையும் காவத்தை மாதா கோயில் அண்ணாவியார் சந்யாகு என்ற பாத்திரம் சந்திரன் என்ற தொழிற்சங்க வாதிக்கு எழுதிய கடிதம் விபரிக்கின்றது.*
இக் கடிதத்தில் மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டதும், பின்னர் அது பறிக்கப்பட்டதும், தோட்டங்கள் சுவீகரிக்கப்ட்டு ஈழத்துத்தமிழ்நாவல்கள் ( Dா.ம.இரகுநாதன்

Page 96
இவர்கள் வேலையற்றவர்களாக வெளியேற்றப்பட்டதுமான வரலாறு விபரிக்கப்படுகின்றது.
அகஸ்தியரின் மண்ணில் தெரியுதொரு தோற்றம் என்னும் நாவலில் பேராதனைப் பல்கலைக்கழக மாணவியான ஜானகி அங்குள்ள பூந்தோட்டத்தையும் இயற்கைக் காட்சிகளையும் கண்டு வியந்த போது அவளின் நண்பனான பொன்ராசா அச் சோலைகளை உருவாக்கிய மலையக மக்களைப் பற்றி அவளுக்குக் கூறுகின்றான்.
*ஜானகி, இந்த நந்தவனம் அழகும் ரம்மியமுமாக விருக்கலாம். இவற்றைச் சில மனிதர் ரசித்தும் கொள்ளலாம். ஆனால் இந்த அழகைச் சிருஷ்டித்த பிரம்மாக்களை நேரிற் கண்டால் எந்த ரசிக சிகாமணிகளும் நாக்குப் பிடுங்கிச் சாவார்கள்.
‘ஏன்?
*அந்தப் பிரமாக்கள் தான் இந்த மலையகத்திலே குடியுரிமை யிழந்து வாக்குரிமையற்று, நிலப்பரப்பின்றி ஓட்டை ஒடிசல் குடிசைகளில் லயங்களில் அடைபட்டு அன்றாடம் செத்து மூச்சுத் திணறி நித்திய நரகம்” என்ற குழியில் சீவித்துக் கொண்டிருப்பவர்கள்.”
‘மாட மாளிகை கோட்டை கோபுரங்கள் புடை சூழ்ந்த ரீ ராஜ விக்கிரம சிங்கனாம் தமிழன் அரசோச்சிய இந்தக் கண்டி மாநகரத்திலே . தமிழன் ஆட்சி புரிந்த கண்டியிலே தமிழர்களே நரகக் குழியில் லயங்களில் வாழ்கின்றார்களென்றால்..?
மலையக மக்கள் குடியுரிமை இழந்து நாடற்றவர்களாக்கப்பட்ட நிலையினை எடுத்துக் காட்டிய ஆசிரியர் இவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகக் கூறுவது வர்க்க அடிப்படையில் தொழிலாளர்கள் இணைந்து போராட்டத்தை நடாத்தி ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சியினையேயாகும். நாவலின் இறுதியில் இத்தகைய போராட்டமே காட்டப்படுகின்றது.
அகஸ்தியரின் மற்றொரு நாவலான எரி நெருப்பில் இடை பாதை இல்லை என்பதில் சாதிப் பிரச்சினையே பிரதான பொருளாக இடம் பெற்றுள்ளது. எனினும் கதைப் போக்கின் இடையில் மலையக மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டது பற்றியும் கூறப்படுகின்றது. சாதியம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வர்க்க ரீதியிலான தீர்வையே முன் வைக்கும் அகஸ்தியர் மலையக மக்களையும் தொழிலாளிகள் என்ற
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (63) Dr.ம.இரகுநாதன்

வகையில் ஒரே வர்க்கமாகவே அணுகியிருக்கின்றார். இதனாலேயே சாதியம் தொடர்பான நாவலிலும் இவர்களின் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது எனலாம். இந் நாவலில்,
“தென்னிந்திய மண்ணிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் பிரிட்டிஷ் தரகர்களால் பேராசை காட்டி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு, வெறும் கூலிகளாக்கி, காடாய் இருந்த மலைநாட்டைப் பொன் கொழிக்கும் சோலையாகக் குவித்தனர். அவர்களின் இரத்தச் சுவடுகள் இவர்களுக்குக் கோட்டும் சூட்டும் அணிவித்தன. இதற் கெல்லாம் அவர்களுக்குப் பரிசாகக் கிடைத்திருப்பது, பிறந்த மண்ணும் இழந்து வாழ்ந்த மண்ணும் தெரியாது இலங்கையனோ இந்தியனோ அல்லாத நாடற்ற பிரசை களாகவும் 'கள்ளத் தோணி” களாகவும் சூட்டப்பட்ட பட்டங்களாகும்.”*
என இவர்களின் துன்பத்தை எடுத்துக் காட்டுகின்றார்.
தொகுத்து நோக்கும் போது இடதுசாரிச் சிந்தனையுடைய செ.கணேசலிங்கன், பெனடிக்ற் பாலன், அகஸ்தியர் ஆகியோர் மலையக மக்களின் பிரச்சினையை வர்க்க அடிப்படையில் நோக்கி பாட்டாளிவர்க்கத்தின் புரட்சியின் மூலமே தீர்வு காணலாம் எனக் கூறுகின்றனர். செ.கணேசலிங்கன் மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட செயலை வேலையற்ற சிங்கள மக்களை ஏமாற்ற தேசிய முதலாளிகள் செய்த தந்திரம் என்றே கூறுகின்றார். பெனடிக்ற் பாலன் கடலையே காணாத இம் மக்களைக் கள்ளத் தோணிகளாக்கி நாடு கடத்துவது பிழை என்ற கருத்தை முன்வைக்கின்றார். அகஸ்தியர் இம் மக்களையும் ஏனைய தொழிலாளர்களுடன் இணைத்து நோக்கிப் பாட்டாளி வர்க்கப் புரட்சியையே தீர்வாகக் காட்டுகின்றார். இவர்கள் அனைவரும் மலையக மக்களைப் பிரித்து நோக்காமல் யாழ்ப்பாணச் சூழலில் உருவாகிய அரசியல் சிந்தனைப் போக்கிற்கேற்ப அவர் களைத் தம்மோடு இணைத்துக் கொள்கின்றனர்.
சிக்கன்ராஜ், வேலுப்பிள்ளை ஆகியோர் மலையகச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனக் கலவரங்களில் பாதிக்கப் பட்டவர்கள். யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக சிங்களவர்களிடம் அடிவாங்கிய மலையக மக்களின் அவலங்களை இவர்கள் நேரில் கண்டு உணர்ந்தவர்கள். இதனாலேயே இவர்களின் நாவல்களில் குடியுரிமை பறிக்கப்பட்ட போது இலங்கையை விட்டு வெளியேறும் மன நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் மன உணர்வுகள்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (6) Dா.ம.இரகுநாதன்

Page 97
வெளிப்படுத்தப்படுகின்றன. பிரஜா உரிமை பெற்றுக் கொண்டவர்கள் கூட அதனை ஏற்காது இந்தியாவுக்குச் செல்லத் துடிப்பதை வேலுப்பிள்ளையின் நாவல் எடுத்தக் காட்டுகின்றது. இவர் மலையக மக்களின் பிரச்சினையை ஈழத்துத் தமிழர்களின் அதாவது யாழ்ப்பாணத்துத் தமிழர்களின் பிரச்சினையோடு இணைத்து நோக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைக்கின்றார். ஆனால் சிங்கள மக்கள் இதை உணராததாலேயே மலையக மக்களும் தாக்கப்பட்டு இலங்கையில் வாழ விரும்பாமல் இந்தியாவுக்குச் செல்லத் துடித்ததை இவரின் நாவல் எடுத்துக் காட்டுகின்றது. எனவே நேரடியாகப் பாதிக்கப்பட்ட வர்கள் பிச்சை எடுத்தாவது நிம்மதியாக வாழ விரும்பி இந்த நாட்டை விட்டே புறப்பட்டார்கள் எனத் தெரிகிறது. இவர்களுக்கு அரசியல், பாட்டாளி வர்க்கப் புரட்சி, வாக்குரிமை என்பவையெல்லாம் அறியப் படாத விடயங்களேயாகும்.
4.1.5. பாலியல் சுரண்டல்
மலையக மக்களைத் தமது அதிகாரத்தால் அடக்கியாண்ட தோட்ட நிர்வாகிகள் அவர்களது உழைப்பைச் சுரண்டியதோடல்லாமல் பாலியல் ரீதியான சுரண்டல்களிலும் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் அறியர் மையினாலும் பயத்தினாலும் இத்தகைய சுரண்டல்களை எதிர்க்க முடியாமல் இருந்த மலையகப் பெண்கள் காலப்போக்கில் ஓரளவு கல்வியறிவையும் வெளித் தொடர்புகளையும் பெற்றுக் கொண்டபோது இச் சுரண்டல்களை எதிர்த்தனர். எனினும் மலையக மக்களை நிரந்தரமாகவே ஆட்கொண்ட வறுமை அதிகாரிகளின் இத்தகைய சுரண்டல்களுக்கு எப்போதுமே சாதகமான சூழலையே அளித்து வருகின்றது. இத்தகைய நிலைமைகளையெல்லாம் மலையக நாவல்களில் கண்டு கொள்ள முடிகின்றது.
கோகிலம் சுப்பையாவின் தூரத்துப்பச்சை என்னும் நாவலில் வருகின்ற முத்தம்மாவின் மீது ஆசை வைத்த கணக்குப்பிள்ளை அவளைத் தனியான இடத்திற்கு வேலைக்கனுப்பி அங்கு அவளோடு தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சிக்கின்றான். இதற்கு உடன்பட மறுத்த முத்தம்மாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் )6و( Dா.ம.இரகுநாதன்

“சீ வெட்கமில்லை. எங்களைப் போல ஏழைங்களுக்கு இருக்கிற மானம் மரியாதை கூட உனக்கெல்லாம் எங்கே இருக்கு மரியாதை யாய்ப் போயிடு*
என்று கூறி அவனை விரட்டுகின்றாள். ஆனால் முத்தம்மாளின் எதிர்ப்பு நிலைத்து நிற்க முடியாமல் விரைவிலேயே பணிந்து போய்விடுகின்றது. பிரட்டுக்களத்தில் பலரின் முன்னிலையில் வைத்து, “என்ன முத்தம்மா! வரவர நீ வேலை என்னா, ஒன்னும் சரியா செய்ய மாட்டேங்கிறியே, சொன்ன வேலேயே சரியா செய்யலேன்னா எப்படி?
எனக் கணக்கப்பிள்ளை கேட்டபோது
*இனிமே சொல்றமாதிரி செய்ரேனுங்க”
என்று தாழ்ந்த மெல்லிய குரலில் பதிலளித்தாள் முத்தம்மாள், முத்தம்மாள் பணிந்து போக வேண்டிய நிலையில் இருந்ததை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார்.
*அவனைப்பகைத்துக் கொள்வதில் ஏதும் நன்மை வராது. தான் தாழ்ந்து தணிந்து போய்த்தானாக வேண்டும் என்பதையும் நன்கறிவாள். தன்னுடைய ஒரு சாண் வயிற்றை மட்டுமா கழுவ வேண்டியிருந்தது? அவளாள் அவள் குடும்பமே துன்புறாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினாள். எத்தனை தான் மனத்தை சமாதானப் படுத்தியும் கூட, அந்த குரூர வாழ்க்கையை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளின் உள்ளமும், உடலும் மறுத்தது. அதனை நெஞ்சார வெறுத்தாள். ஆனால் அந்த வாழ்க்கைப் பாதையை மாற்ற என்னதான் செய்யவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல், இருட்டிலேயிருந்து வெளியே வரத்துழாவிக் கொண்டிருந் தாள். அவள் மட்டுமென்ன? அங்கு வேலை செய்யும் எல்லாத் தொழிலாளிகளும் அவளைப் போன்ற நிலையிலிருந்தார்கள்.”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ன்ெ) Dr.ம.இரகுநாதன்

Page 98
இங்கு முத்தம்மாளின் வறுமை, அதிகாரிகளுக்கு அடிபணிய வேண்டிய தவிர்க்கமுடியாத நிலை ஆகியவற்றால் அவள் மனம் விரும்பாமலே கணக்கப்பிள்ளையின் ஆசைகளுக்கு இடங்கொடுப்பது தெரிகின்றது.
இந் நாவலில் வருகின்ற மற்றொரு பெண்ணான சிவகாமி வெள்ளைக்காரத் துரையின் பாலியல் சுரண்டலுக்கு உட்பட்டவள். அவளுக்கு குழந்தை பிறந்த போது அது வெள்ளைக்காரர்களைப் போன்றே தோற்றமளித்தது.
"......... அந்தக் குழந்தை ஒரு விசித்திரமான குழந்தையாகத் தோற்றமளித்தது. சாதாரணமாக அங்கு பிறக்கும் குழந்தையைப் போல் இல்லை அந்தக் குழந்தை பனிமூட்டத்தைப் போல், வெள்ளை வெளேரென்று, வளவளவென்று இருந்தது. மெல்லிய பஞ்சு போன்ற செம்பட்டை நிறமுடைய தலைமயிரும், மேகத்தைப் போல் சாம்பல் நிறக்கண்களும் அந்தக் குழந்தைக்கிருந்தன. எல்லோரும் வியந்து போய் மெளனமாகச் சிறிது நேரம் கண்கொட்டாமல் அந்த அதிசயப் பிறவியைப் பார்த்தார்கள். அதன் பின் கசமுசவென்று ஏதேதோ பேசிக் கொண்டு அந்த இடத்தை விட்டுக் கலைந்து சென்று தோட்டத்திலுள்ள ஆடவர்களிடம் இந்தச் செய்தியைப் பரப்பினார்கள். சிறிது நேரத்தில் விஷயம் தோட்டம் முழுவதும் பரவிற்று. ராமசாமி தன் குழந்தையை வந்து பார்த்ததும் நிலைமையை ஊகித்துக்
கொண்டான்.??
இந்தக் குழந்தையைப் பார்த்த அயலவர்கள் மட்டுமன்றி சிவகாமியின் கணவன் ராமசாமி கூட நிலைமையைப் புரிந்து கொள் கின்றான் எனக் கூறுவதால் இது அவர்களின் சாதாரண வாழ்க்கையாகி விட்டது தெரிகின்றது.
சிவகாமியின் கணவன் ராமசாமி ஒரு நொண்டி. பிழைக்க முடியாதவன். இதனால் அவன் சிவகாமியின் தவறான நடத்தைகளைக் கண்டிக்க விரும்பாமல் அவளை மேலும் உற்சாகப் படுத்துகின்றான்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (68) Dr.ம.இரகுநாதன்

எப்படியாகிலும் பணம் கிடைத்தால் போதும் என்பதே அவனின் நிலைமை. இதை சிவகாமியே எடுத்துக் கூறுகின்றார்.
"...... கங்காணி என்னெ வரச்சொல்லி ஒரேயடியா கசிட்டப் படுத்துறான். எம் புருசனா எப்படியாச்சும் காசு பணம் கெடச்சாப்
979و
போதும்னு தொல்லைப் படுத்துறான்
சிவகாமியைத் திருமணம் செய்து கொள்ள மூக்கன் விரும்பு கின்றான். இதனால் சிவகாமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற கங்காணியை ஏசித் துரத்திவிடுகின்றான். மூக்கனால் அவமானப்படுத் தப்பட்ட கங்காணி அவனைப் பழிவாங்கும் நோக்கில் சம்பளத்தைக் குறைத்து விடுகின்றான். சம்பளக் கணக்குக் கேட்டபோது துரை மூக்கனைக் குழப்பகாரன் எனக் கூறி பொலிசில் பிடித்துக் கொடுக் கின்றான். மூக்கனுக்கு ஆறுமாத கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படுகின்றது."
சிறை மீண்டு வந்த மூக்கனிடம் கங்காணி சிவகாமியின் தொடர்பை விட்டுவிடுமாறு கண்டிப்புடன் கூறுகின்றான். இதற்கு மூக்கன் உடன்பட மறுத்தபோது கங்காணி மூக்கனைத் தாக்குகின்றான். பலமாகக் காயம்பட்ட மூக்கன் இறந்து விடுகின்றான்.
*சிவகாமி அழுது துடித்தாள். “ஒன்னே கொன்னுபட்டானே. என்னாலே நீ செத்துப் போயிட்டியே, இந்தப் பாவியாலே தானே ஒனக்கு இந்தக் கதி வந்துச்சி.’ என்று கதறிக் கதறி அழுதாள். மார்பில் அடித்துக் கொண்டாள். நாசமா போவ மாட்டானா அவனே கொள்ளையும் பெருவாரியும் கொண்டு போவாதா? என்று புலம்பினாள். தோட்டத் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து மூக்கனின் பூதவுடலை கோப்பித் தூரில் அடக்கம் செய்தார்கள். இது ஏன் நடந்தது? எப்படி நடந்தது என்று துணிந்து கேட்க யாரும் முன்வரவில்லை.”
இது அதிகாரிகளின் பாலியல் சுரண்டல்களை எதிர்ப்பவர்கள் எவ்வாறு அடக்கப்பட்டார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (169 Dr.ம.இரகுநாதன்

Page 99
மாலைநேரத்தில் தனியாக தண்ணிர் எடுக்கச் சென்ற வள்ளியை கங்காணி பலாத்காரம் செய்ய முற்படுகின்றான்.
*. பேசாம நான் சொல்லுறமாதிரி கேட்டினா, ராசாத்தி மாதிரி இருக்கலாம். தெரியுமா? என்று வள்ளியின் வலது கையை எட்டிப் பிடித்தான் அவனின் கையை உதறித் தள்ளிவிட்டு மேலே நடக்க முயன்றாள் வள்ளி. என்னா வள்ளி! என்கிட்டியே இப்படி வாலாட்டிறியே என்று மீண்டும் அவளின் கையைப் பிடித்தான். இந்த முறை கெட்டியாகப் பிடித்து அவள் அருகில் நெருங்கினான்.”
கங்காணி அவளைப் பலாத்காரம் செய்ய முற்பட்டபோது தற்செயலாக அவ்விடத்திற்கு வந்த துரை கங்காணியை எச்சரித்து வள்ளியை வீட்டிற்கு அனுப்புகின்றான்.
அதிகாரிகளால் பாலியல் ரீதியில் சுரண்டப்பட்ட பெண்கள் பின்னர் அதையே தமது தொழிலாக்கிக் கொண்டு பிழைத்து வந்தார்கள். வறுமை காரணமாக பெண்களின் இச் செயல்களை ஆண்களும் ஆதரித்தனர், வள்ளிக்கு,
“நீங்களும் தான் பொம்பளெங்கண்ணு இருக்கிங்க, இந்தத் தோட்டத்திலேயும் தான் இருக்காங்க. எப்படிப் பொழைக்கிறாங்கன்னு பாருங்க. மண்ணு திங்கிறதை மனுசன் திண்டால் ஆகாதா என்ன? என்னமோ காலத்தே ஒட்டி நடப்பீங்களா, பெரிய பத்தினிபோல இருக்கீங்க. இப்படியெல்லாம் வேலை செஞ்சா சம்பளம் போட்டுறு வானா என்ன” என்று சொல்லி மீண்டும் கிளுகிளுத்துச் சிரித்தான் மருதை."
வள்ளிக்கு மருதையின் வார்த்தைகள் ஆச்சரியமாகவே இருக் கின்றன. அவள் இன்னும் அந்த வாழ்க்கையை அனுபவிக்காதவள். ஆனால் தனது சிநேகிதிகள் பலரின் வாழ்க்கை அப்படித்தான் என்பதை அவள் அறியாமலில்லை. அவள் காவேரியுடன் பேசும்போது சிட்டு பெரிய கணக்கப்பிள்ளையுடன் தொடர்பு வைத்திருப்பதையும் டீ மேக்கர் வெள்ளச்சியுடன் தொடர்பு வைத்திருப்பதையும் வேடிக்கை யாகப் பேசிக் கொள்கின்றாள்." ஈழத்துத்தமிழ்நாவல்கள் (70) Dr.ம.இரகுநாதன்

கங்காணி மலையகப் பெண்களைச் சுரண்டுவது போல கங்காணியின் மனைவியை துரை சுரண்டுவதும் உண்டு. கங்காணியின் மனைவி பூஞ்சோலையின் நடத்தை பற்றி சிட்டு வள்ளிக்குக் கூறுகின்றாள்.
“.அதுதான் குட்டு வெளுத்துப் போச்சு அவளுக்கு நேத்து பொறந்த புள்ளே பரங்கிப் பழம்போல இருக்காம்.”*
என்று ஆச்சரியத்துடன் சிட்டு கூறுகின்றாள். இது கங்காணியின் மனைவி பூஞ்சோலையின் பிள்ளைக்கு வெள்ளைத் துரையே தகப்பன் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
கணவனை இழந்து விதவையாகி நின்ற அஞ்சலை சின்னத் துரையின் பாலியல் சுரண்டலுக்கு உட்பட்டு கருத்தரிக்கின்றாள். இதை அறிந்த வள்ளி
*தன் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுந்தானா இந்த நிலையை எய்தியிருந்தாள்? அல்லது இந்த ராட்சதப் பேய்களின் பிடிகளினின்று தப்ப முடியாமல் இத்தகைய நிலையை அடைந்து விட்டாளா உலகம் எதைச் சொன்னால் ஏற்கும்? கணவன் இல்லாத விதவை கர்ப்பிணி என்றால் அதை எப்படி விளக்கிக் கூறுவது?"
என்று நினைத்து வருந்துகின்றாள். இது வறுமையால் மட்டுமன்றி அதிகாரிகளின் பலாத்காரத்தினாலும் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
பெனடிக்ற் பாலனின் சொந்தக் காரன் என்ற நாவலிலும் பாலியல் சுரண்டல் எடுத்துக் காட்டப்படுகின்றது. ஜானகி பருவமடைந்து விட்டாள். அவளை விரைவில் யாருக்காவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தாய் கண்ணம்மா நினைக்கின்றாள். அவளின் அவசரத்திற்குக் காரணம் அவளுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலைதான்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G17) Dr.ம.இரகுநாதன்

Page 100
“ஜானகியும் மலையில் கொழுந்தெடுக்கிறாள். கண்ணம்மாவுக்கு அவளையிட்டுப் பெரும் மனப்பீதி, மகளின் அழகோடு பிணைந்திருக்கும் ஆபத்தையும் அவள் யோசித்தாள். கணக்கப்பிள்ளையோ, கங்காணியோ வேறு யாருமோ ஜானகிக்குக் கெட்ட பெயர் உண்டாக்கி விட்டார்களா னால்? காமத்தால் களை விரித்துக் கொண்டு எத்தனை காட்டு மிராண்டித் தனமான கழுகுகள் பசியோடிருக்கின்றன. நிர்ப்பந்தத்தினால் அக் கழுகுகளுக்கு இரையாகிச் சீரழியும் உயிர்கள் எத்தனை.”*
அதிகாரிகளின் காமப் பசிக்கு இரையாகிச் சீரழியும் பெண்களின் நிலையை இது உணர்த்துகின்றது. இந்த நிலையிலேதான் கண்ணம்மாவின் பக்கத்துக் காம்பராவிலுள்ள ஒரு பெண் திருமணமாக முன்னரே தகப்பன் யாரென்று தெரியாமல் குழந்தையைப் பெறுகின் றாள். இதைக் கண்ட கண்ணம்மா ஜானகிக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவசரப்படுகின்றாள்.”
இந்நாவலில் வருகின்ற மற்றொரு பாத்திரமான ஆத்தாள் தனது வறுமையினால் தன்னையே விற்று வாழ்ந்து வருகின்றாள். அவளின் நடத்தைபற்றி சின்னக் கலப்பன் கணவனான கறுப்பனுக்கு முறையிடுகின்றான்.
“அவளுக்கு நீ மட்டுமாடா புருசன் பூசாரி, வாச்சர், மலையன் எத்தனை பேர வச்சிருக்க?
என்ற சின்னக் கலப்பனுக்கு கறுப்பன்,
*அதிலென்ன இருக்கு, என்னையும் சேர்த்துக்க!”
என்று சாதாரணமாகக் கூறிவிடுகின்றான்."
*ஆத்தாளை மட்டுமல்ல, அவளைப் போன்ற பலபேரை அவன் தன் வாழ்க்கையில் சந்தித்து சலித்துப் போயிருக்கின்றான். சேற்றில் திருப்தியுடன் புரளும் பன்றிகளைப் போல அவர்கள் அந்தச் சின்னத் தனமான வாழ்க்கையில் தர்ம பயமின்றி வாழ்ந்து கொண்டிருப்பதற்கு அந்த உயிர்கள் எவ்விதத்திலும் காரணமாக மாட்டார்கள். அதே போது அவர்கள் மனிதவுயிர்களின் ஆத்ம சுத்தத்திற்குப் பொருந்தாத
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (72) Dr.ம.இரகுநாதன்

சுகாதாரமற்ற சூழ்நிலையில் அவர்களின் மனச் சாட்சிக்கு மாறாக பலவந்தமாக அந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவனுடைய அடிமனத்தின் ஆழத்தில் உணர்ந்திருக்கும் அனுபவத்தின் மூலம் கண்டு கொண்ட உண்மை இப்பொழுது சிறிது தலை நீட்டி மறைந்து விடுகின்றது.”*
சின்னக் கலப்பனின் மனதில் தோன்றுவதாக ஆசிரியர் காட்டும் மேற்படி பகுதியினால் தர்ம பயமின்றி தவறுகளைத் தவறுகளாகவே நினைக்காமல் வாழ்கின்ற இம்மக்களின் வாழ்வுக்குக் காரணம் அவர்கள் வாழ்கின்ற சூழலே என்ற கருத்து புலப்படுத்தப்படுகின்றது.
அழகான பெண்கள் மீது மோகம் கொள்கின்ற அதிகாரிகள் அப் பெண்களைத் தாம் அனுபவிப்பதற்கு யாரும் தடையாக இருந்தால் அவர்களைக் கொடுரமான முறையில் அடக்கி ஒடுக்குகின்றனர். குறுாஸ் துரையின் பங்களாவில் சமையல்காரனாக இருக்கும் பொன்னுச்சாமி தோட்டத்தில் கொழுந்தெடுக்கும் தங்கம்மாளைக் காதலிக்கின்றான். தங்கம்மாளின் மீது மோகம் கொண்ட குறுாஸ் துரை பொன்னுச்சாமியை மோசமாக அடித்துக் காயப்படுத்திவிடுகின் றான்.? எனவே அழகான பெண்களைக் காதலிக்கும் உரிமை கூட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அப் பெண்களை அனுபவிக்கும் உரிமையும் அதிகாரிகளுக்கே இருந்தது.
தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள் சாவதில்லை என்ற நாவலில் வருகின்ற கிளாக்கர் அலமேலு என்ற சிறிய பெண்ணைத் தனது வீட்டு வேலைகள் செய்வதற்காக வீட்டிலேயே மறித்து வைத்திருந்தது பற்றியும் பின்னர் அவளைப் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியது பற்றியும் எடுத்துக் காட்டப்படுகின்றது.
*சட்டி பானைகளைக் கழுவிக் கொடுக்க, வீடு கூட்ட, ஐயா வீட்டு பைப்மக்கார் செய்யும் நாட்களில் காட்டுப்பீலியில் இருந்து தண்ணிர் கொண்டுவர என்று ஆரம்பித்து அங்கேயே சாப்பிட்டு; அங்கேயே படுத்துக்கொள்ள என்னும் அளவுக்கு வந்துவிட்டது.
அவளுடைய பெற்றோர்களுக்கும் இது வசதியாகப் போய் விட்டது. அவசரமென்றால் கூப்பிட்டுக் கொள்ளலாம். அய்யாவிடம்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (73) Dr. ம.இரகுநாதன்

Page 101
சலுகைகள் பெறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு ஆள் செலவு குடும்பத்தில் குறைகிறது. படுக்க இடம் என்பதிலிருந்து, உடுக்க உடை, சாப்பாடு என்பது வரை”*
*அலமேலுவின் குடும்பத்தின் வறுமை அவளைக் கிளாக்கர் வீட்டில் தங்கவைத்து விடுகிறது. அவள் கிளாக்கர் வீட்டில் உள்வீட்டு வேலைக்காரி ஆகிவிட்டாள். இந்த நிலையில்தான் கிளாக்கர் அவளைத் தனது பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றார். அலமேலு கருவுற்றபோது தோட்டம் முழுவதும் கதை பரவி விடுகின்றது. கிளாக்கர் அவளை அத்தை மகன் ஆண்டியப்பனுக்கு மணம் முடித்து வைக்கின்றார். ஆண்டியப்பன் கிளாக்கரின் அன்புக்குப் பாத்திரமானவனாகிவிட்டான்.”*
என்று ஆசிரியர் கூறும் போது கிளாக்கர் அலமேலுவைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்கு ஆண்டியப்பன் எந்த வகையிலும் எதிரியாக இருக்க மாட்டான் என்பது தெரிகின்றது.
தோட்ட அதிகாரிகள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மலை யகப் பெண்கள்மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டது போல தோட்டத் துக்கு வருகின்ற சில சிங்கள இளைஞர்க்ளும் தோட்டப் பெண்கள் மீது பலாத்காரம் புரிய முற்படுகின்றார்கள். கண்ணம்மா குளித்துக் கொண்டு நின்றபோது அங்கு வந்த இரு சிங்கள இளைஞர்கள் அவளைப் பலாத்காரம் செய்ய முற்படுகிறார்கள். அவள் சத்தமிட்ட போது கண்ணுச்சாமி ஓடி வருகிறான். கண்ணுச்சாமியைத் தொடர்ந்து மேலும் பல தோட்டத் தொழிலாளர்கள் அங்கு கூடிவிடுகின்றனர். கண்ணுச்சாமி சிங்கள இளைஞனை நன்றாகத் தாக்கி விடுகின்றான். இவ் வேளை யில் அங்கு பொலிசார் வருகின்றனர். பொலிசார் சம்பவத்தைப் பார்த்ததும் ஆத்திரப்படுகின்றனர்.
“இன்றைக்கோ நாளைக்கோ உதைத்து ஊரைவிட்டுத் துரத்தப் போகின்றோம். இந்தப் பயல்களுக்கு இத்தனை திமிரா? இரண்டு சிங்களவர்களை அடித்துப் போட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்களே!*
என்று யோசிக்கிறார்கள். பின்னர் சிங்களவர்களுக்குச் சார்பாக நின்று தோட்ட மக்களுடன் பொலிஸ்காரர்கள் மோதுகின்றனர். இம் மோதலில் கண்ணுச்சாமி சுட்டுக் கொல்லப்படுகின்றான்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (17) Dr.ம.இரகுநாதன்

கண்ணுச்சாமியின் கொலைக்கு எந்தவிதமான நீதி விசாரணை யும் நடத்தப்படவில்லை. தோட்டத்துரை கண்ணுச்சாமியின் மீதே குற்றத்தைச் சுமத்துகின்றான். இச் சம்பவம் மலையகத் தோட்டப் பெண்கள் மீது பலாத்காரம் புரியும் சிங்களவர்களுக்கு அரச நிர்வாகம் ஆதரவாக இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது.
கே. ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது என்னும் நாவலின் மையக் கருத்து தோட்டத் துரையின் பாலியல் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
துரையின் பங்களாவில் நடைபெறவுள்ள விருந்தொன்றிற்குச் சமையல் செய்வதற்காக என்ற போர்வையில் முனியம்மா பங்களாவுக்கு அழைக்கப்படுகின்றாள். பங்களாவில் முனியம்மாவைப் பாலியல் தேவைக்குப் பயன்படுத்த விரும்பிய துரை அவளுக்குச் சில சலுகைகள் வழங்குவதாக ஆசை காட்டுகின்றான்.
“நான் சொல்வதை நீ கேட்டா உனக்கு இந்த வருஷமே கலியாணத்தையும் முடிச்சு. காளிமுத்துவுக்கு இந்தத் தோட்டத்தி லேயே வேலைக்கு ஒழுங்கு பண்ணுவன். . தங்கிறதுக்கு புறம்பான 6)utb .... ..... சகல வசதியும் . . என்ன முனியம்மா சொல்றாய்?*
இந்த ஆசை வார்த்தைகளின் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத முனியம்மா "ஆகட்டுமுங்க” என்று பதில் கூறிவிட்டு சமையல் வேலை பற்றி விசாரிக்கின்றாள். ஆனால் அதுபற்றிப் பொருட்படுத்தாத துரை அவளைத் தனது படுக்கை அறையினுள் போகுமாறு கூறித் தானும் உள்ளே சென்று கதவைப் பூட்டி விடுகிறான். பின்பு முனியம்மா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றாள்.
இச் சம்பவத்தை முனியம்மா இதுவரையும் எவருக்குமே சொல்லாமல் மறைத்துவிட்டாள். இப்போது முனியம்மாவால் அதை மறைக்க முடியாத நிலை வந்து விட்டது.
*முனியம்மா ஐந்து மாதக் கர்ப்பிணி யாரிடம் சொல்லுவாள் எப்படிச் சொல்லுவாள். இயற்கை உடல் மாற்றங்களை இதுவரை எப்படியோ மறைத்துவிட்டாள். இனி மறைக்க முடியாது என்றாகிவிட்டது. *கன்னிப் பிள்ளை பெற்றவள்’ ‘வேசைப் பிள்ளை . . துரை எவ்வளவு பணக்காரன். அவன் இவளைத் தேடி வந்திருப்பானா
ஈழத்துத்தமிழ்நாவல்கள் GS Dா. ம.இரகுநாதன்

Page 102
. இவள்தான் பெரிய இடத்து ஆசையிலை போயிருப்பாள் . . அற்ப ஆசை . அற்பனுகளுக்குத்தான் வரும். இப்படித்தானே உலகம் சொல்லும்.
துரைதான் பலாத்காரமாகக் கெடுத்தான். இதை உலகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொண்டாலும் கூட முனியம்மாவின் குழந்தைப்பிள்ளைத் தனத்தை ஏற்றுக்கொள்ள வைக்குமா? முனியம்மா முச்சை அறுத்த பட்டமாகத் தத்தளித்தாள். சரி . முனியம்மாவின் குழந்தைக்கு துரைதான் ‘அப்பன்’ என்பதை நிரூபித்து விட்டதாக வைத்துக்கொண்டாலும் முனியம்மாவுக்கு துரை கணவனாகிவிட முடியுமா .? துரை முனியம்மாவை ஏற்றுக் கொள்வானா? முனியம்மாவின் இதயத்துள் பெரும் பிரளயம் நடந்து கொண்டிருந்தது."
துரையால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட முனியம் மாவின் நிலையும் அவள் பற்றி சமூகம் எவ்வாறு பேசிக்கொள்ளும் என்பதையும் ஆசிரியரின் மேற்படி பகுதி நன்கு எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய நிலையில் முனியம்மா தற்கொலை செய்து கொள்கிறாள்.
“முனியம்மாவின் இறப்பு “தற்கொலையல்ல" இது படுகொலை
இந்தக் கொடுமையை நம்மவர்கள் பார்க்க வேண்டும் அதற்காக . முனியம்மாவின் உடல் தோட்டத்துச் சகல வீதிகளிலும் ஊர்வலமாக கொண்டுவரவேண்டும். இனிமேலாவது நம்மவர் களுக்கு உணர்வு வரட்டும்.”*
என்ற சுப்பிரமணியம் ஆசிரியரின் ஆலோசனை இளைஞர்களை விழிப்படைய வைக்கின்றது. அவர்கள் நீண்ட ஊர்வலத்துக்கு ஆயத்தம் செய்கிறார்கள். ஆனால் துரையின் தலையீட்டால் ஊர்வலம் பாதியிலேயே தடுக்கப்படுகின்றது. எனினும் தோட்ட மக்களிடையே இச் சம்பவங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி விடுகின்றன.
*விருந்துக்குச் சமைக்க வெண்ணு கூப்பிட்டு அவளின்ரை உயிரைச் சமைச்சுப் புட்டானே . பாவி . மாமா . அம்மா .” இவ்வாறு அழுது புலம்பி குருவம்மா இதயத்தில் ஒட்டிய சம்பவ வடுக்களைத் தோலுரிக்கின்றாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (170 Dr.ம.இரகுநாதன்

“இந்தக் கொடுமையளைக் கேக்க ஆர் இருக்கா ...”
அங்குகுந்தியிருந்த ஒரு கிழவி கூறுகின்றாள் “எங்களுக்கு ஏற்படுகிற கொடுமையளை நாமதான் கேக்கணும்.” அந்த வாலிபக் கூட்டத்தில் நின்ற சேகுவன் கூறுகின்றான். *. . ஏனுங்க சேர் . எங்கடை ஆளுக்களுக்கு விமோசனம் இல்லையா. “சேகுவன் கேக்கின்றான்.” ஏன் இல்லாமல் போகுது . நாமெல்லாம் ஒன்றுபட்டு சரியா இருந்தால் விமோசனம் இல்லாமல் போகாது” சுப்பிரமணியம் மாஸ்ரர் கூறுகின்றார். “நம்ம முனியம்மாவைப் போலை எத்தனை பெண்ணுங்க சீரழிக்கப்பட்டிருக்கிறாங்க. எதுக்குங்க எங்களுக்கு நியாயம்
9989
கிடைச்சிருக்கு. காளிமுத்து கூறுகின்றான்.
சுப்பிரமணியம் மாஸ்ரரின் தலைமையில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து துரைக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். தோட் டத்துச் சுவர்களில் துரைக்கு எதிரான சுலோகங்கள் எழுதப்படுகின்றன. துரையின் பங்களாவுக்கும் கங்காணியின் வீட்டுக்கும் இரவில் கல்லெறி விழுகின்றது. இதனைத் தொடர்ந்து துரைக்கு எதிராக வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்படுகின்றன. எனினும் இம் முயற்சி துரையால் முறியடிக்கப்பட்டு விடுகின்றது.
இளைஞர்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டாலும் முனியம் மாவின் மரணத்தால் மனமுடைந்த அவளின் தங்கை குருவம்மா துரையைப் பழிவாங்குவதையே தனது ஒரே நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றாள். தாயையும் இழந்து தனிமரமான குருவம்மா துரையின் பங்களாவில் வேலைக்குச் சென்று அங்கு தந்திரமான முறையில் அவனைக் கொலை செய்கின்றாள். இக் கொலையின் மூலம் குருவம்மா தோட்ட மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுக் கொள்கின்றாள்.
எனவே இந்தியத் தமிழர்கள் தோட்டக் கூலிகளாக மலைய கத்தில் குடியிருத்தப்பட்ட காலத்தில் அவர்களின் அறியாமை, வறுமை, பயம் ஆகியவற்றைப் பயன்படுத்திய தோட்ட அதிகாரிகள் அவர்கள் மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டனர். புதிய சூழலில் வயிற்றுப் பசியைப் போக்க இந்த ஒரு வழியாவது இருந்தபோது மலையகப் பெண்கள் அதிகாரிகளின் பலாத்காரத்துக்குப் பணிந்து போயினர். இதனை கோகிலம் சுப்பையாவின் தூரத்துப் பச்சை என்ற நாவல் மிகத் தெளிவாகவே எடுத்துக் காட்டுகின்றது. கோகிலம் சுப்பையா
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (17) Dr.ம.இரகுநாதன்

Page 103
மலையக மக்களின் துன்பமான வாழ்க்கையினை விபரித்தாலும் இத்தகைய துன்பங்களிலிருந்து அவர்கள் எவ்வாறு விடுதலை பெறுவது என்பதை எடுத்துக் கூறவில்லை.
தெளிவத்தை ஜோசப்பின் கால்கள் சாவதில்லை என்ற நாவலில் அதிகாரிகளின் பாலியல் சுரண்டல்கள் மட்டுமன்றி தோட்டத்திற்கு வருகின்ற சிங்களக் காடையர்கள் மலையகப் பெண்களைப் பலாத் காரம் புரிய முற்படுவதும் காட்டப்படுகின்றது. இன முரண்பாடுகள் முற்றிய சூழலில் மலையக மக்களுக்கு எதிராகவே பொலிசாரும் செயற்படுகின்றனர் என்பதை இந் நாவல் எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய சூழலில் தோட்ட மக்கள் தமக்குள் ஒன்றுபட்டுக் கொடு மைகளுக்கு எதிராகப் போராட முற்படுவதும் இந் நாவலில் காட்டப்படுகிறது.
கே. ஆர். டேவிட்டின் வரலாறு அவளைத் தோற்றுவிட்டது. என்னும் நாவலில் தோட்ட அதிகாரிகளின் பாலியல் சுரண்டல்கள் விரிவாகவே காட்டப்படுகின்றன. தோட்டத் துரையால் கெடுக்கப்பட்ட முனியம்மா அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றாள். சகோதரியின் மரணத்தால் மனமுடைந்த தங்கை குருவம்மா அவளைக் கெடுத்த தோட்டத் துரையைப் பழிவாங்குகின் றாள். முனியம்மாவின் மரணத்தால் தோட்ட இளைஞர்களிடையே ஒரு விதமான விழிப்புணர்வு ஏற்பட்டாலும் அதிகாரிகள் பொலிசாரின் ஆதரவுடன் இதனை அடக்கி விடுகின்றனர். குருவம்மா தனிப்பட்டவளாக நின்று பழிவாங்கும் முயற்சியில் வெற்றிபெறுகின்றாள். எனவே தோட்ட அதிகாரிகளின் பாலியல் சுரண் டலையோ கொடுமைகளையோ ஒழிப்பதென்பது அவர்கள் வாழும் சூழலில் சாத்தியமற்றதாகவே தெரிகின்றது. குருவம்மா இயக்க அடிப்படையி லன்றித் தனிப்பட்டவளாகச் செயற்பட்டே தனது இலக்கை அடைகின் றாள். அவ்விலக்கை அடைய அவள் தனது பெண்மையினையும் துரையிடம் பறிகொடுக்கின்றாள்.
பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் என்னும் நாவலில் மலையகப் பெண்களை அதிகாரிகள் பாலியல் ரீதியில் சுரண்டுவதும் அப்பெண்கள் அத்தகைய வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டு விடுவதும் எடுத்துக் காட்டப்படுகின்றது. இவர் இம் மக்களின் இத்தகைய வாழ்வுக் குக் காரணம் அவர்களின் வறுமையும் வாழும் மோசமான சூழலுமே என்பதை எடுத்துக் கூறி இத் துன்பங்களிலிருந்து இவர்கள் விடுதலை
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (78) Dr.ம.இரகுநாதன்

பெறுவதற்கு அவர்கள் தொழிலாளர்கள் என்ற வகையில் அனைத்துத் தொழிலாளர்களுடனும் வர்க்க அடிப்படையில் இணைந்து போராட வேண்டும் என்று கூறுகின்றார். நாவலின் இறுதியில் தொழிலாளர்கள் செங்கொடியின் கீழ் ஒன்றுபட்டு நிற்பது காட்டப்படுகின்றது. எனவே மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் இவர் கூறும் தீர்வு வர்க்கப் போராட்டத்தின் மூலம் புதியதொரு சமூகத்தை உருவாக்குவதென்பதேயாகும்.
பொதுவாக நோக்கும் போது ஈழத்தில் வெளிவந்த மலையக நாவல்களினூடாகவும் வேறுசில சமூக நாவல்களினூடாகவும் மலையக மக்களின் வாழ்வியல் துன்பங்களையும் அத்துன்பங்களுக்கு அடிப்படையாக இருக்கின்ற காரணங்களையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இந்தியாவிலிருந்து தோட்டக் கூலிகளாக வந்த இம்மக்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் இலங்கையில் சொத்துக்கள் எதுவுமே இல்லை. சொந்தமாக வீடில்லாவிட்டாலும் வாழ வசதியாக இரவல் வீடு கூட இவர்களுக்கு இல்லை. வயிறார உணவு கூடக் கிடைக்காத இம்மக்களுக்கு எஞ்சியது கடன் சுமை மட்டுமே. இந்நிலையில் அவர்கள் தமது உடலை விற்றுக் கூட வயிற்றுப் பசியைப் போக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. பசித்த வயிற்றோடும் உடுத்த உடையோடும் கடன் சுமையோடும் வாழ்ந்த மக்களை அரசியல் வாதிகளின் குடியுரிமை வழங்குவதும் பறிப்பதுமான சட்டங்கள் மேலும் துன்பத்திலாழ்த்தின. எதுவுமறியாத மக்கள் சிங்கள மக்களின் விரோதிகளாக்கப்பட்டு தாக்கப்பட்டார்கள். அரசாங்கத்தின் காணிச் சீர்திருத்தச் சட்டங்களால் தொழிலை இழந்து வீதியில் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்நிலை யிலேயே பலர் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லவும் முற்பட்டனர்.
இத்தகைய துன்பங்களையெல்லாம் எடுத்துக் காட்டிய நாவலா சிரியர்களில் பலர் இம்மக்கள் இத் துன்பங்களிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவது என்பது பற்றி எதுவுமே கூறவில்லை. அகஸ்தியர், பெனடிக்ற் பாலன், செ.கணேசலிங்கன் ஆகிய சிலர் மலையக மக்களை வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகி இவர்கள் தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து பாட்டாளி வர்க்கப் புரட்சியை மேற்கொள் வதன் மூலமே விடுதலை பெற முடியும் என்ற கருத்தை எடுத்துக் கூறியுள்ளனர். பொதுவாகத் தொழிலாளர்கள் தொடர்பான சமுதாயச்சிக் கல்கள் அனைத்திற்கும் அவர்கள் கூறும் தீர்வு பாட்டாளி வர்க்கப் புரட்சியே.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (179) Dr.ம.இரகுநாதன்

Page 104
4.2 விவசாயிகளின் பிரச்சினைகள்.
இலங்கை ஒரு விவசாய நடாகும். இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் விவசாயிகளே அதிக எண்ணிக்கையினராக விளங்குகின்றனர். விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களின் பிரச்சினைகளும் வாழ்க்கைத் தரமும் ஒரே மாதிரியாக அமைவதில்லை. சிலர் விவசாயிகள் என்ற பெயரில் குட்டி நிலச் சுவாந்தர்களாக விளங்குகின்றனர். சிலர் சிறிய சிறிய துண்டு நிலங் களையே சொந்தமாக வைத்திருக்கின்றனர். வேறு சிலர் சொந்த நிலம் எதுவுமே இல்லாமல் உடைமையாளர்களிடம் குத்தகைக்குப் பெறும் நிலத்திலேயே விவசாயம் செய்கின்றனர், இவர்கள் அனைவருமே விவசாயிகள் என்றே நோக்கப்படுகின்றனர். மேலும் இந்த ஆய்வில் விவசாயிகள் என்ற பதம் தனியே நெற் செய்கையில் ஈடுபடுவோரை மட்டுமன்றி உப உணவுப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவோரையும் உள்ளடக்கி நிற்கின்றது.
ஈழத்தில் விவசாயிகளின் வாழ்க்கையினை எடுத்துக் கூறும் நாவல்கள் 1970 களிலிருந்தே வெளி வந்திருக்கின்றன. எனினும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முதன்மை கொடுத்து வெளிவந்த நாவல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். சில நாவல்களில் பல்வேறு பிரச்சினைகளுடன் விவசாயிகளின் பிரச்சினைகளும் தொட்டுக் காட்டப்படுகின்றன. இனி இந் நாவல்களினூடாகப் புலப்படும் விவசாயிகள் தொடர்பான பிரச்சினைகளைக் கவனிக்கலாம்.
4.2.1. சுரண்டலும் வறுமையும்
செ.கணேசலிங்கனின் மண்ணும் மக்களும் என்ற நாவல் விவசாய பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசங்குடி, பழங்குடியிருப்பு ஆகிய கற்பனைக் கிராமங்களைக் களமாகக் கொண்ட தாகும். இக் கிராமங்களில் வாழும் விவசாயிகள் நிலவுடைமையாளர் களின் சமூகக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவது இந் நாவலில் எடுத்துக் காட்டப்படுகின்றது.
நடராசபிள்ளை என்ற நிலவுடைமையாளன் மக்களின் சொத்துக் களைச் சுரண்டுபவனாகவும், பெண்ணாசை கொண்ட காமுகனாகவும்,
கொலைகாரனாகவும் காட்டப்பட்டு அவனுக்கு எதிராக விவசாயிகள்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s) 0ா.ம.இரகுநாதன்

வர்க்க உணர்வுடன் ஒன்றுபட்டுப் போராடுவது காட்டப்படுகின்றது. இப்போராட்டத்தில் விவசாயிகள் மட்டுமன்றி பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் முதலியோரும் இணைந்து கொள்கின்றனர். பொலிசார் சட்டத்தை நிலைநாட்டாமல் உடைமை யாளர்களின் சாராயத்தின் முன் சரணடைவதாகக் கூறி இடதுசாரி அரசும் நிலவுடைமையாளர்களுக்குச் சாதகமாகவே இருப்பதை எடுத்துக் காட்டுகின்றது. இந் நாவல்.
நடராசபிள்ளை விவசாயிகளின் கூலியைக் குறைப்பதற்காக உழவு இயந்திரத்தை வாங்கிய போது விவசாயிகள் அதை எதிர்த் தனர். இப் போராட்டத்தில் ஈடுபட்ட நமசிவாயம் கொலை செய்யப்படு கின்றார். நமசிவாயத்தின் மகனான சந்திரனுக்கு இடதுசாரிச் சிந்தனை களால் கவரப்பட்ட மாதவன் நடராசபிள்ளையின் சுரண்டல் பற்றி எடுத்துக் கூறுகின்றான்.
“நீங்கள் உழைக்க அதெப்படி அவன் மட்டும் மூட்டையெல்லாம் ஏத்திக் கொண்டுபோகிறான். உங்களுக்குச் சாப்பிடவே அரிசிக்குத் தட்டுப்பாடு. அவன் பிள்ளை நாளுக்கொரு சட்டை போடுகிறான் நீ ஒரே அழுக்கு வேட்டியோடை பள்ளிக்குப் போறாய். படிப்பிலை கூட அவள் தான் கெட்டிக்காரியாயிருப்பாள் ஏனென்றால் வீட்டிலே வேலை செய்ய வேண்டியதில்லை. கிடைக்கும் நேரத்தில் படிப்பாள் வீட்டிலை பாடம் சொல்லித்தர வாத்தியார் இருப்பார். நீ இங்கே பிள்ளை பார்க்கிறாய், வயலுக்கு சாப்பாடு கொண்டு போக வேணும்.”
மாதவனின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவனான சந்திரன்
*நீங்க சொல்லுறது எல்லாம் சரி வாத்தியாரே எங்களைப் பார்த்து ‘மக்குகளே, உங்களுக்கு என்ன படிப்பு? போய் உடையாருக்கு மாடு மேயுங்கடா என்று சொல்லித் தான் அடிப்பார்.”
எனக் கூறி மறுமுறை வாத்தியார் அவ்வாறு கூறும் போது வாத்தியாரை எதிர்க்க முடிவு செய்கின்றான்.
மேலும் மாதவன், விவசாயிகள் நாள் முழுவதும் உழைத்தும் வறுமையில் வாடுவதற்குக் காரணம் உடையான் உரியவாறு கூலியைக் கொடுக்காமல் விடுவதே என்பதையும் சந்திரனுக்குப் புரிய வைக்கின்றான்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் Gs) Dr. D-pepsirger

Page 105
"கூலியாட்கள் உடலை வருத்துகிற அளவிற்காவது உடையான் கூலி கொடுக்கிறானா? அப்படி கொடுத்திருந்தால் இப்படியான வறுமை உங்களுக்கு வருமா? அப்ப இரண்டு உண்மை தெரியுது ஒன்று உடலை வருத்திற அளவுக்கு கூலி கிடைப்பதில்லை. மற்றது கடவுளால் முடியாவிட்டாலும் உடலை வருத்தாமலே சிலர் செல்வம் சேர்க்கிறார்கள். சரியா?"
மாதவனின் போதனைகளால் சந்திரன், நடராசபிள்ளை உடையார், பழைய விதானையெல்லாம் உடம்பை வருத்தாமலே பணக்காரரானார்கள்; டிராக்டர், லொறி, ஜீப் எல்லாம் வைத்திருக் கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டான் என்றும் நிலமுடையவர் பக்கமே வள்ளுவரும் இப்போதைய அரசாங்கமும் நிற்பதை அவன் அறிந்து கொண்டான் என்றும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்."
மேலும் அறுவடைக்காலத்தில் நெல்லை கூட்டுறவுச் சங்கத்தில் விற்பதற்காகக் கொண்டு செல்லும் விவசாயிகள் அங்கு ஏமாற்றப்படு கின்றனர். அங்கும் முதலாளிகளுக்கே முன்னுரிமையும் சலுகையும் வழங்கப்படுகின்றது. இந்நிலைமையால் ஆத்திரமுற்ற விவசாயிகளுக்கு மாதவன,
"இது உங்கள் அரசாங்கமல்ல, அவனது அரசாங்கம், அவன் தனது வசதியைப் பொறுத்தே கூட்டுறவுச் சங்கம் தொடக்கம் எல்லா ஸப்தாபனங்களையும் அமைத்துக் கொள்வான். உத்தரவாதக் கொள்வனவு விலையைக் கூட அவன் தனது இலாப வசதிக்காகத் தான் வைத்துக் கொள்கிறான். . பொதுப் பணத்தில் மலிவாகக் கொடுக்கப்படும் உரம், கடன் வசதிகள், வருமான வரிச்சலுகை எல்லாவற்றையுமே பயன்படுத்திக் கொள்பவன் அவனே தான், உங்களைத் தேயச் செய்து அவன் வளர்ந்து கொண்டிருக்கிறான். உங்களுக்கு எதிர்கால வாழ்வு வேண்டுமென்றால் இவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும். இவர்களுக்குப் பின்னணியாக பாதுகாப்பளிக்க முன்வரும் அரசையும் ஒழித்துக் கட்ட வேண்டும்.”
எனக் கூறுகின்றான். மாதவனின் சிந்தனைகளால் கவரப்பட்ட விவசாயிகள் உடைமையாளர்களுக்கு எதிராகப் போரிட முற்படு கின்றனர். நாவலின் முடிவில் விவசாயிகளின் படையின் புறப்பாடு சித்திரிக்கப்படுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (8) Dr.ம.இரகுநாதன்

"கொதித் தெழுந்த விவசாயிகள் கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து வந்தனர். அரிவாள், கத்தி, பொல்லு, கிறிஸ், கோடரி, மண்வெட்டி, அலவாங்கு, குத்தூசி, முள்முருக்கத் தடி, கல்லு, மிளகாய்ப் பொடி . கையில் கிடைத்தவற்றை உயர்த்திப் பிடித்தனர். . வேள்விக்குப் புறப்பட்டவர்கள் போன்று விவசாயிகளின் கூட்டம் வயல்களின் வரம்பு வழியே அணிவகுத்துப் புறப்பட்டது."
என்றவாறு விவசாயிகளின் போராட்டத்தை சித்திரித்த ஆசிரியர் இப் படையணியைக் கண்டு மகிழ்ச்சியுற்ற தியாகன் மாதவனுக்கு,
"சரியான கருத்துகள் ஒருகால் பொதுமக்களால் கிரகித்துக் கொள்ளப்பட்டதும், இக்கருத்துகள் சமுதாயத்தை மாற்றுகின்ற, உலகை மாற்றுகின்ற ஒரு பொருளாதார சக்தியாக வடிவெடுக்கின்றன என்பது எத்தனை உண்மையாகத் தெரிகிறது.” என்று கூறுவதை எடுத்துக் காட்டுகின்றார். இதன் மூலம் விவசாயிகளின் மீதான சுரண்டலை ஒழித்து அவர்களுக்கு நல்ல வாழ்வைப் பெற்றுத்தர வல்லது வர்க்கப் போராட்டத்தின் வெற்றியே என்பது புலப்படுத்தப் படுகின்றது.
அ.பாலமனோகரனின் நிலக்கிளி என்னும் நாவல் வன்னிப் பிரதேசத்திலுள்ள தண்ணிமுறிப்பு என்னும் வயற் கிராமத்தைக் களமாகக் கொண்டதாகும். இந்நாவலில் பிரதேச மனங்கமழ விவசாயிகளின் வாழ்க்கை முறையை எடுத்துக் காட்டிய அளவிற்கு அவர்களின் பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்படவில்லை. எனினும் ஏழை விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டங்களும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சிலவும் கதைப் போக்கோடு ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன.
விவசாயிகளின் என்றுமே நீங்காத வறுமைத் துன்பம், தீராத கடன் சுமை, இயற்கையில் ஏற்படும் மாற்றங்களால் பயிர்கள் பாதிப்படையும் போது அவர்கள் அடையும் கஷ்டங்கள், பணம் படைத்தவர்கள் ஏழைகளைச் சுரண்டும் விதம் ஆகியவற்றை இந் நாவலினூடாகக் கண்டு கொள்ள முடிகின்றது. பருவ மழை ஒரு வருடத்திற்கு மேலாகியும் பெய்யாததால் நாட்டில் ஏற்பட்ட வரட்சியையும் அதனால் விவசாயிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் இந் நாவலில் வருகின்ற கோணாமலையரின் வாழ்க்கையினூடாக ஆசிரியர் உணர்த்தி விடுகின்றார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (183) Dா. ம.இரகுநாதன்

Page 106
*காய்ந்து போன தன் வளவுக்குள், மனதிலும் வரட்சி நிறையப் பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்தார் மலையர். வேளாண்மையில் ஒரு சதமேனும் மிஞ்சவில்லை. எருதுகளையும், வண்டிலையும், எஞ்சியிருந்த மாடு கன்றையும் விற்றுப் பணமாக்கிய போதும் மலையாக வளர்ந்திருந்த கடனில் ஒரு பகுதியைத் தானும் அவரால் தீர்க்க முடியவில்லை.”
மலையர் போன்ற ஏழை விவசாயிகளுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்தும் ஈட்டிற்குப் பணம் கொடுத்தும் அவர்களைச் சுரண்டும் பணக்காரர்களும் இக் கிராமத்திலேயே இருந்திருக்கின்றார்கள். மலையர் தனது கடன் தொல்லையைக் குறைப்பதற்காகத் தனது வயல் நிலத்தை சின்னத்தம்பியிடம் ஈடுவைத்துப் பணம் பெற்றுக் கொள்கின்றார். குறிப்பிட்ட தவணையில் மலையரால் பணத்தையும் வட்டியையும் கொடுத்து ஈட்டை மீள முடியவில்லை. இதனால் சின்னத்தம்பி மலையருக்குத் தெரியாமலே வயலை முல்லைத்தீவுச் சம்மாட்டிக்கு விற்று விடுகின்றார். இதனை அறிந்த மலையர் மனமிடிந்து படுக்கையாகிப் பின்னர் உயிரை விடுகின்றார்.*
ஏழை விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டுவது போலவே சிலர் பெண்களின் கற்பையும் சுரண்டுகின்றார்கள். இக் கிராமத்திற்கு மலேரியாத் தடுப்பிற்கு நுளம்பெண்ணை விசிற வரும் ஆட்களை மேற்பார்வை செய்ய வந்த உத்தியோகத்தன் ஒருவனால் முத்தம்மா கெடுக்கப்படுகின்றாள். முத்தம்மா கருத்தரித்ததும் உத்தியோகத்தன் தலை மறைவாகி விடுகின்றான். அவள் திருமணமாகாமல் இருந்து பதஞ்சலியைப் பெற்றெடுக்கின்றாள்.
பதஞ்சலி தண்ணி முறிப்புக்கு ஆசிரியராக வந்த சுந்தரலிங்கத் தால் கெடுக்கப்படுகின்றாள். அவளின் அறியாமையையும் சந்தர்ப்பத் தையும் பயன்படுத்திய சுந்தரலிங்கம் அவள் இன்னொருவனின் மனைவி என்பதையும் பொருட்படுத்தாமல் அவளோடு உடலுறவு கொள்கின் றான். இதன் மூலம் கற்பு என்பது பற்றியே அறியாதிருந்த பதஞ்சலி அதை அறிந்து கொண்டு துன்பப்படுகின்றாள்.”
எனவே படித்தவர்களும் பணக்காரர்களும் ஏழை விவசாயிகளின் உழைப்பையும் பெண்களின் கற்பையும் சுரண்டி அவர்களின் வாழ்வைக் கெடுத்து விடுகின்றார்கள் என்பது தெரிகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (8) Dr.ம.இரகுநாதன்

செங்கை ஆழியானின் கட்டாறு என்னும் நாவல் வன்னிப் பிரதேசத்தைக் களமாகக் கொண்டதாகும். இந் நாவலில் தோற்றம் பற்றி அதன் ஆசிரியர் பின்வருமாறு கூறுகின்றார்.
“விவசாய தொழிலாள மக்கள் கூட்டம் காடுகளை வெட்டிக் கொளுத்திக் கழனிகளாக்கி இயற்கைக்கும் மிருகங்களுக்குமிடையில் நிரந்தரப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற வேளையில், இடையில் இன்னொரு வர்க்கம் சுரண்டிப் பிழைப்பதைக் கண்டேன். நிலந்தேடிய பின் இறுதியில் அதையும் இழந்து சீரழிவதைக் காணமுடிந்தது. அழகிய விவசாயக் கிராமங்களை பெரிய மனிதர் என்ற போர்வையில் உலாவும் முதலாளித்துவக் கூட்டமும், உத்தியோக வர்க்கமும் எவ்வாறு சீரழித்துச் சுரண்டுகின்றன. என்பதை நான் என் கண்களால் காண நேர்ந்தது. மண்ணையும் பொன்னையும் மட்டுமா அவர்கள் சுரண்டினார்கள்? பெண்களை விட்டார்களா? சுரண்டலின் வகைகள் என்னைப் பதற வைத்தன. பல முனைகளிலும் தாங்கள் சுரண்டப்படு வதை அறியாது, அறிய வகையற்ற தேங்கிய குட்டையாக கிராம மக்கள் வாழ்ந்து வருவதையும், அதிகாரத்திற்கும் சண்டித்தனங் களுக்கும் பயந்து ஒதுங்கியிருப்பதையும், ஆங்காங்கு சிறு தீப்பொறி யாக இளைஞர் சிலர் விழிப்புக் குரல் எழுப்புவதையும் நான் கண்டேன். என் மனதில் இவை யாவும் ஆழப்பதிந்து வெளிவரத் துடியாய்த் துடித்தன. இச் சின்னத்தனங்களை. தேசியத் துரோகிகளை மக்கள் விரோதிகளை மக்கள் முன் காட்டிக் கொடுக்க வேண்டும் என்ற சத்திய ஆவேசத்தின் விளைவாக உருவானது தான் காட்டாறு"
ஆசிரியரின் நோக்கத்திற் கேற்ப நாவலில் விவசாயிகள் பல்வேறு விதமாகவும் சுரண்டப்படுவது காட்டப்படுகின்றது. கிராம சபையால் வீதிகளைத் திருத்துவதற்காக ஒதுக்கப்படும் பணத்தை கிராம சபை யின் தலைவரும், வேறு சிலருமாகச் சேர்ந்து எவ்வாறு கையாடுகின் றார்கள் என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார். ஒப்பந்தகாரனான கந்தசாமியிடமிருந்து சேமன் தனக்குரிய பணத்தைக் கேட்டு நிற்கும் போது ஒப்பந்தத்தில் எவ்வாறு கையாடல் நடைபெறுகிறது என்பது தெரிய வருகின்றது.
“..... இரண்டாயிரத்திலை செய்து முடித்து விடக் கூடிய வேலையை நான் பத்தாயிரத்துக்கு எஸ்ரிமேற் போடச் செய்து உமக்குக் கொன்றாக் தந்தன். ஏன் தந்தன்? எல்லோரும் பிழைக்க வேண்டும் என்றதுக்காகத்தான். நீர் நினைக்கிறீர் ஏதோ நான்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (ss) Dr.ம.இரகுநாதன்

Page 107
தனிய இரண்டாயிரத்தையும் கொண்டு போகப் போறன் எண்டு எத்தனை பேருக்குக் கொடுக்க வேண்டும்?10
இங்கு இரண்டாயிரம் ரூபாவுடன் முடிக்கக் கூடிய வேலைக்கு பத்தாயிரம் போட்டதால் எண்ணாயிரம் ரூபாவை இந்த அதிகாரிகள் சுரண்டிவிடுகின்றார்கள்.
மேலும் விதானையார், அப்போதிக்கரி, காணி ஒவசியர், கிளாக்கர்மார், ரீ.ஓ மார், ஒவசியர்மார் முதலிய அதிகாரிகளெல்லாம் கிராம மக்களைச் சுரண்டுவதைக் கண்டு இளைஞர்கள் சிலர் விழித்துக் கொள்கின்றனர். அவர்களில் ஒருவனான சந்தனம் எதுவுமே அறியாத தாமரைக் கண்டு என்ற ஏழை விவசாயிக்கு இச் சுரண்டல் பற்றி எடுத்துக் கூறுகின்றான்.
“கடலாஞ்சி விதானையாரிடம் ஒரு முறைப்பாடு கொடுக்கிறது என்றால் மூன்று ரூபா லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு ஏக்கர் அரசாங்கக் காணிக்கு விதானையாரின் சிபார்சு பெறுவதற்குக் குறைஞ்சது ஒரு புசல் நெல், ஐந்து கொத்து உழுந்து ஏதாவது தேவைப்படுகுது. ஒரு கூப்பன் பெறுவதற்கு விதானையாரின் றிப்போட் பெற ஒருத்தன் எத்தனை தடவை அலைய வேண்டியிருக்கு பத்து பன்னிரெண்டு முறை அலைஞ்ச பிற்பாடும் இரண்டு ரூபா வாங்கிக் கொண்டுதான் றிப்போட் கொடுக்கிறார்.”?
“எங்கடை கிராமத்து வைத்தியசாலை எப்படி இயங்குது? அந்த அப்போதிக்கரி ஐம்பது சதத்திலிருந்து ஐந்து ரூபா வரை வாங்காமல் ஆருக்காவது வைத்தியம் பார்த்திருக்கிறாரா? நல்ல மருந்து கொடுக்கிறதெண்டால் அவருக்கு மேசையில வைக்க வேண்டும். காசில்லாவிடில் கத்தரிக்காய்ப் பிஞ்சு அல்லது முட்டைகள் கொடுக்க வேண்டும். நல்ல மருந்துகளை ஒடலி எடுத்து வித்திடு வான் எண்டு மேசை லாச்சிக்குள்ளை பூட்டி வைச்சு காசுக்கு இலவச வைத்தியம் செய்கிறவர். தமிழ்ப் பகுதியெண்டு நல்ல திறமான மருந்துகள் தட்டுப்பாடில்லாமல் வாறதில்லை என்று முதலைக் கண்ணிர் வடிக்கிற அந்த அப்போதிக்கரி வாற மருந்துகளையெல்லாம் சேகரித்து வைச்சிருக்கிறார் ஏன் தெரியுமா? பென்சன் எடுத்ததும் தனிப்பட்ட டிஸ் பென்சரி போட. அரசாங்கம் மக்களுக்காகத் தருகிற இலவச மருந்துகளை வைத்துக் கொண்டு காசு சம்பாதித்து வீடு, காணி, பூமி என்று தேடியது போதாமல் இப்ப மருந்துச் சேமிப்பும் நடக்குது. இது சுரண்டலில்லையா?? ஈழத்துத்தமிழ்நாவல்கள் (80) Dr.ம.இரகுநாதன்

சந்தனம் இவ்வாறு கூறக் கேட்ட சந்திரன்,
“உணவு உற்பத்திக் கிணறுகளுக்கு அரசாங்கம் தாற இரண்டாயிரத்து எண்ணுறு ரூபாயில் கடலாஞ்சி காணி ஒவசியர்மார் அடிக்கிறது எவ்வளவு தெரியுமா?. வார முடிவில் கடலாஞ்சியில இருந்து ஊருக்குப் போற காணி ஒவசியர்மார் கொண்டு போற ஆட்டுக்கிடாய், கோழியள், முட்டைகள், லக்ஸ்பிறேக்கள் எல்லாம் ஆர் கொடுத்தது? கிராம மக்களிடம் வாங்கின லஞ்சங்கள் தான். இவர்கள் எல்லாரும் கடலாஞ்சியில இருந்து துரத்தப்பட வேணும்.”*
எனத் தனது கருத்தைக் கூறினான். இவ்வாறாக இருவரும் அங்குள்ள அதிகாரிகள் பலரும் புரிகின்ற ஊழல்களை எடுத்துக் கூறினர். இதைக்கேட்ட கணபதி தினசகாயம் வாத்தியை மட்டும் இதுக்குள்ளை இழுக்காதையுங்கோ’ என்று கூறியபோது சந்தனம்.
“இந்தக் கிராமத்திலேயே மிக ஆபத்தானவன் இந்த வாத்தி தான். அறிவுச் சுரண்டலைச் செய்யிறவன். இவனைப் போன்றவர்கள் தான் எங்கட கிராமத்துப் பிள்ளையஸ் படிப்பறிவைப் பெற்று விடக் கூடாது. அப்படிப் பெற்று விட்டால் இவங்களின்ர விளையாட்டுகளுக்கு இடமிருக்காது என்பதை நல்லாத் தெரிஞ்சு வைச்சுக் கொண்டு திட்டமிட்டு நமது சக்தியைப் பாழடித்து வாறான்கள். பத்து மணிக்கு பள்ளிக்கூடந் திறந்து பதினொன்றிற்குப் பூட்டிவிட்டு. பள்ளிக்குப் போற பிள்ளையளைக் கொண்டு வீட்டு வேலை செய்யிற யாழ்ப் பாணத்து வாத்தி வாரத்தில செவ்வாக்கிழமை பள்ளிக்கு வந்து வியாழக்கிழமை மத்தியானம் காய் கறியோடும் மல்லி சாமானோடும் லக்ஸ்பிறேயளோடும் திரும்பிச் செல்வதை நீங்கள் ஒருதரும் காணுறதில்லையா? இவற்றை விடவா நமது கிராமத்துக்கு கேடு (3660 (6tb”0
எனக் கேட்டு தினசகாயம் வாத்தியால் மேற்கொள்ளப்படும் கல்விச் சுரண்டலை எடுத்துக் காட்டினான்.
மேலும் முதலாளிகள் எவ்வாறு ஏழை விவசாயிகளின் உழைப் பைச் சுரண்டுகின்றார்கள். என்பதற்குச் சான்றாக கந்தசாமி சந்தனத் திற்கு கூலி கொடுக்க மறுத்ததையும் அவன் நியாயம் கேட்டதையும் எடுத்துக் காட்டலாம். சந்தனத்தை வேலையால் நீக்கிய போது அவன் தனது மூன்றாண்டுக் காலச் சம்பளத்தைக் கேட்கின்றான். கந்தசாமி,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (187) Dr. ம.இரகுநாதன்

Page 108
*அதெல்லாம் தந்தாச்சே . மூன்று நேரச் சாப்பாடு போட்டிருக்கிறன், துணிமணி வாங்கித் தந்திருக்கிறன்,”
என்று கூறுகின்றார். இதைக் கேட்ட சந்தனம்,
“அவற்றையெல்லாம் கணக்கில் கழித்து நீங்கள் எனக்கு எண்ணுாறு தர வேணும். தராட்டில் உங்களுக்கு வீண் கரைச்சல். ஐயா சொல்றன் எண்டு கோவியாதையுங்கோ. நான் செய்ததுக்குத் தான் கூலி கேக்கிறன். இந்தியாக் காரரை வேலைக்கு அமர்த்திச் செய்து போட்டு கூலி கொடுக்காமல் அடிச்சுத் துரத்திறது போல அல்லது கள்ளத் தோணியள் எண்டு பொலிசில பிடிச்சுக் கொடுக்கிறது போல என்னை ஏமாற்ற முடியாது”.*
என்று கூறுகின்றான். இது மலையகத் தொழிலாளிகளின் உழைப்பை மலிவான விலைக்கு வாங்குவதுமல்லாமல் அவர்களுக் குக் கூலி கொடுக்காமல் அடித்து விரட்டும் கொடுமையையும் எடுத்துக் காட்டுகின்றது.
இவ்வாறாக ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்தும் உழைப்பைச் சுரண்டியும் வந்தவர்கள் காலப் போக்கில் பாலியல் சுரண்டலிலும் ஈடுபட்டார்கள். தினசகாயம் வாத்தியின் பாலியல் சுரண்டலை விழிப்புற்ற இளைஞர்கள் எதிர்க்கின்றார்கள்.
*படிப்பிக்கப் போற வாத்திக்கு ஏன் இந்த வேலை? காலமை சந்திரன்ர தங்கச்சிப் பொடிச்சு பள்ளிக்குப் போயிருக்குது. வாத்தி, கோபால் வாத்தியின்ர குவாட்டசில பெட்டையை சமைக்க அனுப்பி விட்டு பின்னால போய் சேட்டை விட்டிருக்கிறான். உவங்களை நம்பிப் பிள்ளையளை அனுப்பன்?. பெட்டை பயந்து போய் வீட்டுக்கு ஓடி வந்திட்டாள். விசயத்தை அழுதபடி தாய்க்குச் சொல்லேக்க தமையன் காரன் கேட்டிருக்கிறான். அவ்வளவுதான். திட்டமிட்டு நடந்திட்டான். இங்வளவு காலமும் இவங்கள் காணி பூமியில கை வைச்சாங்கள். பொறுத்திருந்தது சனம். இப்ப பெண் பிள்ளையளிலும் கைவைக்கத் தொடங்கி விட்டார்கள். விடுவாங்களோ?.”
“கணபதி வியப்புடன் கேட்டான். தினசகாயம் மாஸ்ரருக்கு ஒருவன் கை நீட்டி அடிப்பதா? வரலாற்றிலேயே நிகழாத ஒன்று. நடந்து விட்டது."
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (189 Dr.ம.இரகுநாதன்

இச் செயல் இளைஞர்கள் விழித்துக்கொண்டுவிட்டார்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
காவலூர் எஸ்.ஜெகநாதனின் கலட்டுத்தரை என்னும் குறுநாவல் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த மெலிஞ்சிமுனைக் குடியேற்றப் பகுதி யைக் களமாகக் கொண்டதாகும். இக் கிராமத்திலுள்ள நிலவுடைமை யாளர்களுக்கும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கும் இடையிலான உறவுகள் கால ஓட்டத்தோடு ஒட்டி மாற்றமடைவதையும் அதனால் ஏற்படும் முரண்பாடுகளையும் மோதலையும் இந்நாவல் சித்திரிக்கின்றது.
நிலவுடைமையாளரான செல்லத்துரையின் நிலத்தில் விவசாய உற்பத்தியில் ஈடுபடும் ஏழைகளின் உழைப்பு செல்லத்துரையால் பல வழிகளிலும் சுரண்டப்படுகின்றது. விவசாயத் தொழில் செய்பவர்கள் செல்லத்துரையின் வீட்டு வேலைகளையும் இலவசமாகவே செய்து கொடுக்க வேண்டும். அறியாமையும் அடிமைச் சுபாவமும் கொண்ட முதிய தலை முறையினர் செல்லத்துரையின் கட்டளைக்குப் பணிந்து தமது உழைப்பை இலவசமாக வழங்கி வந்தார்கள். ஆனால் இளைய தலைமுறையினர் இதற்கு உடன்பட மறுக்கின்றனர். இதனால் செல்லத்துரையின் நிலத்தை விட்டு வெளியேறி கட்டாந் தரையாக இருந்த நிலத்தைத் தமது கடுமையான உழைப்பினால் பண்படுத்திக் கூட்டுறவுக் கமச் செய்கையில் ஈடுபடுகின்றனர். காலங்காலமாகத் தனது அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தவர்கள் தனது அதிகாரத்தை மீறி முன்னேறுவதைக் கண்ட செல்லத்துரை ஆத்திரமடைகின்றார். அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க முயல்கின்றார். ஆனால் இளைஞர்களின் விழிப்பும் பலமும் செல்லத்துரைக்குத் தோல்வியையே கொடுக்கின்றது. காலம் முழுவதும் அவருக்காகவே அடிமை போல உழைத்து,
“சாகும் வரைக்கும் செல்லத்துரைக்குத்தான் ராமன் வெட்டி பிடிப்பான். அவற்றை உப்பைத்திண்டு வளர்ந்தனான். அவருக்குத் துரோகம் செய்தால் ஆண்டவன் மன்னிக்க மாட்டாரடா..”*
எனக் கூறிய சேமாலைக் கிழவனே செல்லத்துரையரை மண் வெட்டியால் அடித்து வீழ்த்துகிறான். செல்லத்துரையின் வீழ்ச்சி நிலவுடைமையாளர்களின் சுரண்டல் கொடுமைகள் எழுச்சி பெற்ற சமுதாயத்தில் அழிந்துவிடும் என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (89) Dr.ம.இரகுநாதன்

Page 109
காவலூர் ஜெகநாதனின் நாளை என்ற நாவலிலும் பல்வேறு விடயங்களுடன் விவசாயிகளின் பிரச்சினையும் தொட்டுக் காட்டப்படு கின்றது. முதலாளித்துவத்திற்குச் சார்பாக அரசாங்கம் செயற்படுவது பற்றி பாத்திர உரையாடலின் மூலமாக எடுத்துக் கூறப்படுகிறது. இதில் குமரேசன் என்னும் பாத்திரம்,
“கல்வி மட்டுமா சீரழிஞ்சு போச்சு, விவசாயம். அந்தக் காலம் ஒரு துண்டு நிலம் கூட மிச்ச மில்லாமல் பாடுபட்டாங்க. இப்ப விவசாயம் செய்கிறதே கேலியான விசயமாகப் போச்சு. இதுக்கும் நிலவுகிற அரசியல் தான் காரணம். அறுவடை காலங் களில் அதே பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. உற்பத்திச் செலவு அதிகமாகிறது. இப்படி இதையும் இன உணர்வோடேயே அரசாங்கம் அணுகுகிறது.”
என்ற கருத்தைக் கூறுகின்றது. இங்கு விவசாயிகள் கூடிய முதலைச் செலவிட்டு உற்பத்தி செய்யும் போது அரசாங்கம் அறுவடைக் காலத்தில் அதே பொருளை இறக்குமதி செய்வதால் உள்ளூர் விவசாயிகள் தமது பொருட்களைச் சந்தைப்படுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றார்கள். இங்கு உள்ளூர் உற்பத்தி ஊக்குவிக்கப்படாமல் அவர்களின் உழைப்புக்கு ஊறு விளைவிக்கப்படுகின்றது. அரசாங்கத் தின் இச் செயலை இன ரீதியான கண்ணோட்டத்தில் அணுக முற்படும் ஆசிரியர் இக் கொடுமைகளுக்குத் தீர்வாக முதலாளித்துவத்தை அழிப்பது என்ற போர்வையில் தனிப்பட்ட முதலாளிகளை ஒழிக்க இளைஞர்கள் முன்வருவதையும் அவர்கள் பழிக்குப் பழிவாங்க ஆயுதமேந்திப் போராட முற்படுவதையும் உணர்த்துகின்றார். இது இன முரண்பாடுகளின் காரணமாகத் தோற்றம் பெற்ற ஆயுதப் போராட்டத்தை நினைவுபடுத்தினாலும் அது பற்றி வெளிப்படையாக எடுத்துக் கூறப்படவில்லை.
பொதுவாக விவசாயிகள் பல்வேறு வழிகளிலும் சுரண்டப்படு வதை எடுத்துக் காட்டிய பலரும் இச் சுரண்டலுக்கு எதிராக இளைஞர்கள் விழித்தெழுவதையே காட்டுகின்றனர். கணேசலிங்கன் வர்க்கப் போராட்டமாக இவ் விழிப்புணர்வைக் காட்ட மார்க்சிய அணி சாராத செங்கை ஆழியான் போன்றோர் சமூக மாற்றமாக எடுத்துக் காட்டுகின்றனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் )و( Dr.ம.இரகுநாதன்

4.2.2. நிலம், நீர் பற்றாக்குறை
இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்ற வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் வரண்ட பிரதேசங்களாகும். இப்பிரதேச விவசாயிகளை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுள் முதன்மையானது நீர்ப் பற்றாக் குறையாகும். யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நெற்செய்கையிலும் பார்க்க உப உணவுப் பயிர்ச்செய்கையே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. உபஉணவுப் பயிர்ச் செய்கைக்கு வேண்டிய நீரை கோடை காலங்களில் கிணறுகளிலிருந்தே பெறுகின்றனர். மாரி காலத்தில் மழையை நம்பி நெற் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.
வன்னிப்பிரதேசத்தில் உப உணவுப்பயிர்ச் செய்கையை விட நெற் செய்கையே அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இங்கு நெற் செய்கைக்குத் தேவையான நீரைப் பெறுவதற்கு ஓரளவுசிறிய குளங்கள் பல காணப்படுகின்றன. எனினும் இக் குளங்களில் உள்ள நீர் விவசாயிகளின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. இதனால் இந் நீரைப் பங்கிடுவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன.
நிலத்தைப் பொறுத்த வரையில் யாழ்ப்பாணப் பிரதேசத்திலேயே நிலப் பற்றாக்குறை காணப்படுகின்றது. வன்னிப் பிரதேசத்தில் வளமான நிலங்கள் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையே பெரிதும் காணப்படுகின்றது.
வன்னிப் பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துக் கூறிய செ.கணேசலிங்கன் அங்குள்ள வறிய விவசாயிகளுக்கு நிலம் வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள் . பற்றித் தனது மண்ணும் மக்களும் என்ற நாவலில் விமர்சிக்கின்றார். மாதவன் என்னும் பாத்திரத்தின் மூலமாக பின்வரும் கருத்துக் கூறப்படுகின்றது.
“பிரதான முரண்பாட்டை மூடி மறைக்கும் மிகப் பெரும் ஏமாற்று வித்தை இதுதான். எல்லாம் வெறும் கண்துடைப்பு. தமது வளமான நிலம் பறிபோகாமல் இருப்பதற்காக வறிய விவசாயிகளை ஊரை விட்டு விரட்டும் அழகான திட்டம்"
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (9) Dr.ம.இரகுநாதன்

Page 110
இவ்வாறு புதிய நிலங்களுக்கு அனுப்பப்படும் விவசாயிகள் அந் நிலத்தைத் திருத்துவதற்குத் தமது உழைப்பைச் செலவழிப்ப துடன் பணக்காரர்களிடம் கடன் பெற வேண்டியும் வருகின்றது. இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்கள் கடனை வட்டியுடன் உரிய தவணையில் திருப்பிக் கொடுக்க முடியாதபோது நிலத்தையே எழுதிக் கொடுத்து விடுகின்றனர். இதனால் ஏழை விவசாயிகளின் உழைப்பில் வளமாக்கப்பட்ட நிலம் பணக்காரர்களுக்கே செல்கின்றது. ஏழைகள் மீண்டும் நிலமற்றவர்களாகவே வாழ வேண்டியிருக்கின்றது. இது முதலாளி வர்க்கத்தின் திட்டமிட்ட சுரண்டல் என்பதை தியாகு மாதவன் ஆகிய இருவரது உரையாடலின் மூலமாக ஆசிரியர் உணர்த்துகின்றார். இவர்களின் உரையாடலின் போது இம் முரண்பாட்டிற்கான தீர்வும் கூறப்படுகின்றது.
“இந்த நாட்டில் வறிய நிலமற்ற விவசாயிகள் நூற்றுக்கு எண்பத்தைந்து சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள். அவர்கள் இப் பிரதான முரண்பாட்டை உடைத்தெறிந்து அரசியல் ஆதிக்கத்தைக் கைப்பற்ற ஒன்று சேர வேண்டும்."
எனவே தீர்வு வர்க்கப் போராட்டமே என்பது தெரிகின்றது.
செங்கை ஆழியானின் காட்டாறு என்னும் நாவலில் வன்னிப் பிரதேச விவசாயிகள் மழையை நம்பி ஏமாற்றமடைவதும் குளத்தும் நீரைப் பெற முடியாமல் தவிப்பதும் காட்டப்படுகின்றது.
*கணபதி வயலையும் வானத்தையும் மாறி மாறி பார்த்தான். பயிர்கள் நீரின்றிச் சோரத் தொடங்கியிருந்தன. கதிர்கள் குலையளாகத் தள்ளிச் சிலிர்த்திருந்தன. இரண்டு தண்ணிர் போதும் பால் பிடித்து முற்றிப் பழுக்க. பன்றிக்கும் யானைக்கும் காவலிருந்து காத்த அவன் வேளாண்மை வீணாகப் போய்விடுமா? எத்தனை இரவுகள் நித்திரையின்றி பன்றி கலைத்திருக்கிறான். நெருப்பு மூட்டி யானை கலைத்திருக்கிறான். பகல் வேளையில் அவனது குடும்பத்தினர் ஒருவர் மாறி ஒருவர் குரங்குகளிடமும் பட்சிகளிடமும் இருந்து பயிரைக் காத்து வந்திருக்கிறார்கள். அந்த உழைப்பு வீணாகிவிடுமா? அவன் சொத்து அந்த வயலின் விளைவு தான். வறுமை,பசி, குழந்தைகள். சோரத்தொடங்கி யிருக்கும் பயிர்களை விழிகளில் நீர் வடியப் பார்த்தான் கணபதி ஒரு தண்ணிர் குளத்திலிருந்து தரும்படி காண வேண்டிய எல்லாரையும் கண்டு கேட்டாகி விட்டது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G19) Dr.ம.இரகுநாதன்

பயிர்ச் செய்கைத் தலைவர் சொன்னார் “நீ ஆரைக் கேட்டு விதைச்சனி? அவயிட்ட போய் தண்ணீர் கேள்.”*
கணபதி பயிர்ச்செய்கைக்குழுத் தலைவர் குள மேற்பார்வை ஒவசியர் என்று எல்லோரிடமும் சென்று தண்ணிருக்காக மன்றாடி இறுதியில் காரியதரிசியிடம் செல்கின்றான். அவர்,
“அடாத்தா விதைச்சிருக்கிறாய். நீ பலகை அடிக்கேக்கை விதானையார் வந்து தடுத்திருக்கிறார். அப்ப குளத்துத் தண்ணி கேக்கமாட்டன் எண்டு விதானையாரிட்டை, எழுதிக் கொடுத்திருக் கிறாய். டயறியில இருக்கு - சட்டம் சட்டம் தான். அடாத்தா விதைச்சால் இப்படி அழிய வேண்டியது தான்' என்று கூறிக் கையை விரிக்கின்றார். எனவே கணபதிக்கு குளத்து நீரில் உரிமை இல்லை, தண்ணிர் கிடைக்கக் கூடிய நிலத்தில் அவனுக்கு உரிமையில்லை, இதனால் அவனின் வயல் அழிந்து அவனது குடும்பம் அழிய வேண்டும் என்பது தான் அதிகாரிகளின் முடிவாக இருக்கின்றது.
இரண்டு ஏக்கர் நிலத்துக்கு -அதுவும் குடலைப் பருவப் பயிர் களை அழியவிடாமல் பாதுகாப்பதற்கு கணபதிக்கு தண்ணி வழங்க அதிகாரிகள் எல்லோருமே மறுத்து விடுகின்றனர். ஆனால் முதலாளி கந்தசாமிக்கு தண்ணி வழங்கப்படுகின்றது. அதைக் கண்ட கணபதி மனம் கொதிப்படைந்து ஒவசியரிடம் நீதி கேட்கிறான். அவர்,
“போடா தண்ணி தரேலாது. உங்களுக்கு இப்ப எல்லாம் வாய் கொழுத்திட்டுது. உத்தியோகத்தனென்று மரியாதையில் லாமல்.”* என்று கூறி கணபதியை வெளியேற்றுகின்றார். கணபதியின் வயல்கள் அழிந்து விடுகின்றன.
கணபதி அடுத்த போகத்தில் வயலை விதைப்பதற்காக பலகையடிப்பதற்குத் தண்ணி கேட்டு கம விதானையிடம் செல்கின் றான். அவர், “நீ நினைச்சோன்னை தண்ணி தர முடியுமோ? இப்ப தான் கந்தசாமியரின்ர கமத்துக்குப் பாயுது. ரெண்டு நாள் பாய்ந்தால் தான் பலகை அடிக்கலாம். அதுக்குப் பிறகு சியாமன்ர கமம். பிறகு வாத்தியாரின்ர கமம் பேந்து கனகராசன்ர கமம். அதுக்குப் பிறகுதான் உனக்கு எட்டுப் பத்து நாளாவது செல்லும் . 9915
ஈழத்துத்தமிழ்நாவல்கள் )3و( Dr.ம.இரகுநாதன்

Page 111
என்று கூறி கணபதிக்குத் தண்ணிர் வழங்க மறுத்து விடுகின்றார் ஒரு நாளில் பாய்ந்து விடக்கூடிய இரண்டு ஏக்கர் நிலத்திற்கு மறுக்கப்பட்ட தண்ணிர் முதலாளிகளின் பல ஏக்கர் நிலங்களுக்கு முன்னுரிமையுடன் வழங்கப்படுகின்றது. ஆனால் கணபதி உரிய காலத்தில் நெல்லை விதைக்க முடியாமல் துன்பப்படுகின்றான்.
அடிாத்துக் காணிக்குத் தண்ணிர் வழங்க மறுத்ததால் சென்ற முறை கணபதியின் பயிர்கள் பன்றிகளுக்கு இரையாகின. ஆனால் இம்முறை அவன் விதைத்தது ஏக்கர் வரி கட்டிய உரிமையுள்ள காணி. பணக்காரரின் பட்டியலுக்கே தண்ணிர் வழங்கப்படுகின்றது. இரண்டு ஏக்கர் நிலத்திற்குத் தண்ணி வழங்கப்படாமல் வாத்தி யாருக்கு இரண்டாவது முறையும் தண்ணிர் வழங்கப்படுவதைக் கணபதி சுட்டிகாட்டிய போது சியாமன்,
*அது பார் கணபதி. அவை பத்தாயிரம், பதினையாயிரம் எண்டு நாட்டின் விவசாய அபிவிருத்திக்காக முதலிட்டுக் கமம் செய்யிறவை” நீங்கள் ஒரு ஏக்கர் ரெண்டேக்கர்காரர்” பெரிய
நட்டம் வராமல் காப்பது ஒரு தேசிய சேவை. நாட்டின் தேவையும்
9916
என்றுக் கூறிக் கணபதிக்கு தண்ணிர் வழங்க மறுக்கின்றார். கணபதி,
“அவையின்ர பெரிய நட்டம் தான் எங்கட நட்டமும் சியாமன். அவையளால நட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும். எங்களால தலை நிமிரவும் முடியாது . 9917
என்று கூறுவது ஏழை விவசாயிகள் வறுமையிலிருந்து மீள முடியாத நிலையை எடுத்துக் காட்டுகின்றது.
அதிகாரிகளும் பணக்காரர்களும் சேர்ந்து ஏழைவிவசாயிகளை வஞ்சித்த போது அவர்கள் விழித்துக் கொள்கின்றார்கள். அதனையே இம்முறையும் தனது பயிர்களை அழிய விடத் தயாராக இல்லாத கணபதி சுலுசை உடைப்பதும் அதை எதிர்க்க வந்தவர்களைத்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (9) Dr.ம.இரகுநாதன்

தாக்க முற்படுவதும் எடுத்துக் காட்டுகின்றது. கணபதி விழித்துக் கொண்ட போது சுரண்டுபவர்கள் பின்வாங்கிவிடுவது சமூக மாற்றம் நடைபெறுவதையே எடுத்துக் காட்டுகின்றது.
நிலமற்ற ஏழை விவசாயிகள் காட்டை அழித்து நிலத்தைத் தேட முற்படும் போது அதனைத் தடுத்து நிறுத்தும் அதிகாரிகள் அந்நிலங்களையும் பணக்காரர்களுக்கே சொந்தமாக்க முயற்சிப்பதை இந் நாவல் எடுத்துக் காட்டுகின்றது.
ஒரு சிறு துண்டு நிலங்கூட இல்லாத சந்தனம் காடு வெட்டியபோது விதானையார்,
“எங்கட அனுமதியில்லாமல் காடழிக்கக் கூடாது என்று உனக்குத் தெரியாதா?
றிசேவேன் காட்டை வெட்டிப் போட்டியே?-உன்னை இப்ப பிடிச்சுக் கொண்டுபோய் றிமாண்ட்பண்ணப் போறன். அடாத்தாக் காடு வெட்டின தெண்டு.”* என்று அவனை எச்சரிக்கின்றார், சந்தனம்,
“என்னைத் தாராளமாகப் பிடியுங்கோ. அதே நேரத்தில் இப்ப கடலாஞ்சியில் அடாத்தக் காடு வெட்டுற மற்றாக்களையும் காட்டித்தாறன் அவயளையும் பிடியுங்கோ. இப்ப கந்தசாமியார் வாணன் குளத்துஅலைகரையில் உத்தரவில்லாமல் வெட்டிறார். சியாமன் பன்றி நின்ற குளத்தில் அடாத்தா வெட்டிறார் தினசகாயம் வாத்தியார் கிட்டறாக் குளத்தில் வெட்டிறார் அவயள் மட்டும்வெட்டுறது சரியே விதானையார்? ஏன் நீங்கள் பல்லாற்றில வெட்டுவிக்கிறியளே அதுமட்டும். 999
என்று விதானையாரின் தவறினைச் சுட்டிக்காட்டுகின்றான். விதானையார் இறுதியாக, “நீ இப்ப வெட்டியிருக்கிற காணி ஒருவருக்குச் சொந்தமான பிரைவேட் காணி சியாமன்ர காணி. இதுக்கு அவரிட்ட உறுதி இருக்குது. நான் பாத்தனான். அவர் தன்ர காணியை நீ அடாத்தா வெட்டுறதா முறைப்பாடு செய்துள்ளார். என்ர விசாரணையின் படி இந்த நிலம் அவருக்குச் சொந்தமானது
5T6'.....'
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (195) Dr.ம.இரகுநாதன்

Page 112
என்று தீர்ப்புக் கூற விதானையாருக்குத் துணையாக வந்த வீரசிங்கம், “இன்னும் பத்து நாளில நீ இந்தக் காணியை விட்டு போய் விட வேணும். என்று சியாமன் சொல்லுகிறார்.”*
என்று சியாமனின் உத்தரவைத் தெரிவிக்கின்றான்.
எனவே பணக்காரர்கள் தாம் மேலும் மேலும் நிலத்தைத் தேடுவதில் மாத்திரமன்றி ஏழைகள் நிலத்தைத் தேடாமல் இருக்க வேண்டும் என்பதிலும் அக்கறையாக இருக்கின்றனர், ஏழைகள் நிலமற்றவர்களாக இருக்கும் போதே அவர்களின் உழைப்பை இலகுவாகச் சுரண்ட முடியும் என்பது வெளிப்படை, பணக்காரர்களின் சுரண்டலுக்கு அதிகாரிகளும் ஆதரவாகவே இருக்கின்றனர். எனினும் சமூகம் விழிப்புற்றால் இத்தகைய சுரண்டல்களை ஒழிக்க முடியும் என்பது சந்தனத்தின் மூலம் எடுத்துக் காட்டப்படுகின்றது.
பருவ மழை உரிய காலத்தில் பெய்யும் போதே விவசாயிகள் பயனடைகின்றார்கள். பருவம் தப்பிப் பெய்கின்ற மழை விவசாயி களுக்கு அழிவையே கொடுக்கின்றது. இந்நிலைமையை செங்கை ஆழியானின் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து என்ற நாவலில் காண முடிகின்றது.நெற்பயிர்கள் முற்றும் பருவத்தில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகின்றார்கள், தம்பிராசா என்ற விவசாயி,
“இப்பபெய்யிற மழை செய்த பயிர்களுக்குக் கணக்கான மழை. கண்டாவளை, முரசுமோட்டை வயல்கள் இந்த மழையோட முற்றி விடும். அறுவடைக்குத் தயாராகிவிடும். வட்டக்கச்சி, இராமநாதபுரம் வயல்களில் நெல் கதிர் தள்ளி இருக்குது. இடது கரைக் கால்வாய் வயல்களில் பயிர்கள் குடலைப்பருவம். இந்த முறை பெரும் போகம் உச்சமாகத்தான் இருக்கப் போகுது. ஒரு சிறு துண்டு நிலம் கூட ஒதுக்கப்படாமல் விதைக்கப்பட்டிருக்குது.”*
எனத் தனது அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் கூறுகின்றான். ஆனால் மழை ஓயாமல் தனது வயலெல்லாம் வெள்ளமாகி குளத்தில் கலிங்கு பாய ஆரம்பித்த போது அனுபவசாலியான முத்தையா என்ற விவசாயி,
“இந்த மழை நல்லதுக்கில்லைப் போலத்தான் இருக்குது. இந்த முறை வெள்ளாண்மை சரிவரும் என்ற நம்பிக்கை எனக்கில்லை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (90) Dr.ம.இரகுநாதன்

வழமையிலும் பார்க்க இம்முறை நல்லா இருந்தது. கதிர் நல்லாத் தள்ளி மதர்த்து இருந்தது. சா விளைச்சல் மாதிரி. எல்லாரும் தலையில் கை வைக்க வேண்டியது தான்.”*
என்று தனது ஏக்கத்தை வெளியிடுகின்றான். மற்றொரு விவசாயியான சின்னையா, *. இப்படியும் ஒரு மழையா? “இந்த முறை பயிரெல்லாம் சரி. குடலையும் கதிருமா வெள்ளத் துக்க அமிழப்போகுது. b....... சா விளைவு மாதிரி விளைஞ்சுது. நானும் சந்தோசப்பட்டன். இந்த முறையாவது சங்கக் கடனைக் கட்ட வேண்டு மென்றிருந்தன். வீணாப் போச்சுது. இந்த முறை கட்டாயம் கட்டத் தான் எண்ணியிருந்தன் வழக்கு வைக்கப் போறாங்களாம். வெள்ளத் தில் என்னதான் மிஞ்சப் போகுது.
வேளாண்மை இந்த முறை சரி கண்டாவளையில பயிரெல்லாம் அறுவட செய்யிற பருவம். சிலர் அறுவடை செய்து வரம்பில் போட்டபடியாம். உப்பட்டியைச் சூடு வைக்கக் கூட இந்த மழை விடவில்லை. இப்ப வெள்ளத்தில் மிதக்கும் என்று நினைக்கிறன். வேளாண்மை ஒரு சூதாட்டமாய்ப் போய்ச்சுது. மழையில்லாட்டியும் வறட்சியில அழியுது மழை கூடினாலும் வெள்ளத்தில் அழியுது. எவ்வளவு கடன் பட்டு, நகை நட்டுக்களை வித்து விதைச்சிருப்பினம், நிமிர முடியாமல் செய்துபோட்டுது.”*
எனக் கூறுவது பருவம் தப்பிய பெருமழையால் விவசாயிகள் அடைந்த துன்பத்தை எடுத்துக் காட்டுகின்றது. நகைகளை விற்றும். வங்கியில் கடன் வாங்கியும் செய்த வேளாண்மை வெள்ளத்தில் அழிந்த போது அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. மாறாக வாங்கிய கடனைக் கட்டும்படி வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது என்ற அறிவிப்புத்தான் வருகின்றது.
பெய்த பெரு மழையால் இரணைமடுக் குளம் நிரம்பி உடைப் பெடுக்கும் நிலையை எதிர் நோக்கியது. மக்கள் கிளிநொச்சியை விட்டு இடம் பெயர ஆரம்பித்தனர். தண்ணிர் இல்லாமல் பயிர்கள் அழிந்ததையும் இப்போது குளம் நிரம்பி அதுவே பிரச்சினையாகி விட்டதையும் முத்தையா நினைத்து இயற்கையின் மீது ஆத்திரப் படுகின்றார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (19) Dr.ம.இரகுநாதன்

Page 113
“கடைசித் தண்ணி இல்லாமல் எத்தனை தடவை வேளாண்மை அழிந்திருக்குது. எவ்வளவு தண்ணி இங்கு அவமாக ஓடுது. இயற்கைக்குக் கொஞ்சம் கூட இரக்கமில்லை. பயிருக்குத் தேவையான தண்ணிரே பயிர்களை அள்ளிக் கொண்டு போகுது.”125
தண்ணிர் பயிர்களை மட்டுமல்ல, அறுவடை செய்து வரம்பில்வைத்த கதிர்களை, சூடுகளை. எல்லாவற்றையுமே அள்ளிக் கொண்டு போனது. இந்த நிலையில் குளத்தின் நீர் மட்டத்தைக் குறைத்து உடைப்பெடுக்காமல் பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கையும் பொருட்படுத்தாமல் குளத்தின் கதவுகள் திறக்கின்றன. இதைக் கண்ட சிவக்கொழுந்து,
“ஐயோ திறக்காதையுங்கோ. திறக்காதையுங்கோ. எல்லாம் போச்சு. என்ர சூடு. காணி, பணம் எல்லாம். என்ர பிள்ளையின்ர வாழ்வு எல்லாம் போச்சு. 9926
என்ர தலையில் அடித்துப் புலம்புகின்றார். இங்கே தண்ணிர் வெள்ளப் பெருக்காகி வாழ்வையே அழித்து விடுகின்றது.
பொதுவாக நோக்கும் போது நிலத்தைத் தமது உடைமையாக வைத்திருக்கின்றபணக்காரர்கள் ஏழை விவசாயிகளின் உழைப்ப்ைப் பெறுவதற்காக அவர்களை நித்திய கடன்காரர்களாகவும் நிலமற்றவர் களாகவும் ஆக்குவதில் பணக்காரர்கள் அக்கறையாக இருக்கின் றார்கள். இதனாலேயே அவர்கள் நிலத்தைத் தேடும்போதும், சிறிய துண்டு நிலத்தில் பயிர் செய்ய முற்படும் போதும் பணக்காரர்கள் தடையாக இருக்கின்றார்கள். விதைத்த பயிருக்குத் தண்ணிர் மறுக்கப் படுகின்றது. இதனால் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச்செலுத்த முடியாத விவசாயி காணியையே கொடுத்து விட்டு வெறுங்கையோடு நிற்கின்றான். இயற்கை கூட ஏழைகளின் விடயத்தில் கருணை காட்ட மறுத்து விடுகின்றது.
பணக்கார வர்க்கம் விவசாயிகளைச் சுரண்டுவது நிலைக்க வேண்டுமானால் விவசாயிகள் கல்வியறிவு பெறக் கூடாது. இதனாலேயே ஏழை விவசாயிகளின் கிராமங்களில் ஆசிரியராகப் பணிபுரிபவர்கள் அம் மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதில் அக்கறை காட்டுவதில்லை. ஏக்கர்க் கணக்கான வயல்களை மலிவாக வாங்கி விவசாயம் செய்வதிலேயே இவர்கள் அக்கறை காட்டுகின்றார்கள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (98) Dr.ம.இரகுநாதன்

மேலும் பாடசாலைகளிலும், கிராமங்களிலும் உள்ள ஏழை விவசாயிகளின் பெண்கள் மீது இவர்கள் பாலியல் சுரண்டலிலும் ஈடுபடுகின்றார்கள். அறியாமை, பயம் காரணமாக இப்பெண்கள் இத்தகைய கொடுமைகளை எதிர்க்க முடியாமல் தவிக்கின்றார்கள்.
நீண்ட காலமாக இத்தகைய கொடுமைகளை அனுபவித்து வருகின்ற சமூகத்தில் கால ஓட்டத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன இளைஞர்கள் விழிப்படைந்ததனால் ஏற்பட்ட சமூக மாற்றம் மேன்மேலும் முன்னேற்றமடையும் என்பதை செங்கை ஆழியான் போன்ற சிலர் எடுத்துக் கூறுகின்றனர். ஆனால்,
செ. கணேசலிங்கன் போன்றவர்கள் விவசாயிகள் தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து வர்க்கப் போராட்டத்தை மேற்கொண்டு முதலாளித்துவ அரசை அழிப்பதன் மூலமே இக்கொடுமைகளை ஒழிக்கமுடியும் என்ற கருத்தைப் புலப்படுத்தி நிற்கின்றனர். எவ்வா றெனினும் சமூகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை எவரும் மறுக்க முடியாது.
4.3 மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைகள்.
நாற்புறமும் கடலாற் சூழப்பட்ட இலங்கைத் தீவிலே தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசம் நீண்ட கடற்பரப்பைக் கொண்டதாகவும் மீன்பிடித் தொழிலுக்கு உகந்ததாகவும் அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் கடற்கரையினை அண்டிய பகுதிகளில் மீனவர்கள் செறிவாக வாழ்ந்து வருகின்றார்கள். மீன்பிடித் தொழில் பெரும்பாலும் சாதியடிப்படையி லேயே மேற்கொள்ளப்படுவதாகும். எனினும் சில இடங்களில் மீனவர் கள் அல்லாத வேறு சிலரும் சிறிய சிறிய அளவில் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிழக்கிலும் வடக்கின் சில பகுதிகளிலும் வாழும் முஸ்லீம்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வரு வதைக் காணக் கூடியதாகவுள்ளது.
ஈழத்தில் மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் நாவல்கள் மிகவும் குறைவாகவே வெளிவந்துள்ளன. வெளிவந்த நாவல்களிலும் தொழிலாளார் என்ற வகையில் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவன ஒரு சிலவே. அவை கூறும் பிரச்சினைகளை இனி நோக்கலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் டு Dr. ம.இரகுநாதன்

Page 114
4.3.1 6p16OLD.
மீன்பிடித்தொழிலாளர்களின் சமூகம் எதிர் நோக்குகின்ற சிக்கல்களுள் வறுமைத் துன்பம் முக்கியமானது. ஈழத்தில் மீனவர் சமுதாயத்தின் வாழ்வைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட முதல் நாவல் எனக் கருதப்படும் கயிலாசநாதனின் கடற்காற்று இச் சமுதாயத்தின் வறுமையை எடுத்துக் காட்டுகின்றது.
மண்டைதீவுக் கிராமத்தில் வாழும் மீனவர்களின் வாழ்வே இந் நாவலின் பொருளாகும். நாவலின் ஆரம்பத்திலேயே மாலைப் பொழுதை வருணிக்க முற்படும் ஆசிரியர்,
“பகல் முழுவதும் உழைத்துக் களைத்துவிட்ட பாட்டாளியின் பெரு மூச்சுப்போல, உதயத்தை மதியத்தை மாலையை மறந்து பூமியிடமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டிருந்தன செங்கதிர்கள்.”*
என ஒய்வின்றி உழைக்கும் பாட்டாளிகளையும் அவ்வாறு உழைத்தும் வறுமையையே அனுபவிக்கும் துன்ப நிலையினையும் உவமையாகக் காட்டுகின்றார். இத்தகைய மாலை வேளையில் கடலுக்குச் செல்லத் தயாராகும் தோமஸ் என்ற தொழிலாளியைக் காட்டும்போது அவனது வறுமை தெளிவாக உணர்த்தப்படுகின்றது.
“உருவம் அப்படியேயிருக்க உள் வாரியாகக் குடைந்து உக்கிப்போன பாலைமரம் ஒன்றை நடுவே வைத்து ஏனைய இரண்டு மரங்களை இரு புறமும் இணைத்தன அவனது கைகள். அவை தாம் அவனுடைய தோற்றத்தைக் காட்டும் எலும்புக் கூடுகள்.
கூனியிருந்து ஒரு காலை மரத்தின் மீது இட்டு மற்றதை மண்ணிற் பதித்திருந்த அவனுடைய உடலில் விலா எலும்புகள் அப்படியே புறப்பட்டு, ஏழ்மையைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன. உண்ணவோ உடுக்கவோ முடியாத சங்கடமான நிலையிலே தோமஸ் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதைத் தலையிலே கட்டியிருந்த பழைய மேற்சட்டை ஒன்றும், வெட்கத்தை மறைக்கும் நான்கு முழ வேட்டியும் நிரூபணஞ் செய்து காட்டின. அடுத்த வேளைச் சோற்றுக் காக ஏங்கிக் கொண்டிருக்கும் அவனுடைய சுருக்கம் விழுந்த வயிற்றின் ஊடாக, வியர்வைத் துளிகள் பாதை கட்டிப் பாய்ந்து அந்தக் கந்தையுடன் கலந்து கொண்டன.”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (00) Dா.ம.இரகுநாதன்

உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி எலும்புக் கூடாகக் காட்சிதரும் தோமஸ்,
“எனக்கெண்டால் நம்பிக்கையில்லை. ஏதோ போயிட்டு வாறன் .கிடைச்சால் கிடைக்குது. விட்டால் விடுகுது. இதோடை இந்தக் கிழமைவந்து மூண்டு நாளாச்சு கடல் தாயை நம்பி, நம்பி என்ன பலனைக் கண்டேன். ஆண்டவருக்கும் பொருளாயில்லை
99.29
எனக் கூறுவது மீன் பிடித்தொழிலின் நிச்சயமில்லாத தன்மையை எடுத்துக் காட்டுகிறது. வாடகைக்குத் தோணியை வாங்கித் தொழில் செய்யும் தோமஸ் போன்ற தொழிலாளர்கள் வெறுங்கையோடு திரும்பி வரும்போது அவர்கள் எப்படித்தான் வறுமையை எதிர்த்துப் போராட முடியும்
நாவல் முழுவதும் தோமஸ் குடும்பத்தின் வறுமையே காட்டப்படுகின்றது. தோமஸ் வறுமையால் வாடியபோது அவனுக்கு உதவுவதற்கு எவருமே முன்வரவில்லை. ஆனால் அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி தோமஸ்சின் மனைவியான அன்னாவை அனுபவித்துவிட சில பணமுதலைகள் ஆசைப்படுகின்றார்கள். முத்துமாணிக்கன்,
*உன்ரை சாதிக்காறியளை சிவத்தத் தாளோடையும் பச்சைத் தாளோடையும் சமாளித்த நான் உனக்கு வேணுமெண்டா இந்தா நீலம். 9930
எனக்கூறி அன்னாவை நெருங்க முயல்கின்றான். தனது பலாத்கார முயற்சி பலிக்காது போக
*அன்னா! நீ என்னை அடிப்பியோ, கொல்லுவியோ! இந்த ஜென்மத்திலை உன்னை அனுபவிக்காமல் நான் சாக மாட்டன். நீ எந்தளவுக்கு என்னை வெறுக்கிறியோ நான் அந்தளவுக்கு உன்னை விரும்புறன். உனக்கு சம்மத மெண்டால் சொல்லு பொல்கா வலைக்ககுப் போய் அங்கேயே குடியிருப்பம். அல்லாட்டி எனக்கு ஒரே ஒரு நாளைக்காவது உன்னைத்தா.”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (0) 0ா.ம.இரகுநாதன்

Page 115
என்று இரந்து கேட்பது போலக் கேட்கிறான். இது வறிய குடும்பத்துப் பெண்களை ஆசைகாட்டி அனுபவிப்பதற்கு முயலும் பணக்காரர்களின் கொடுமையினையே எடுத்துக் காட்டுகின்றது. கணவனை இழந்து கதியற்றவளான போதும் அன்னா தனது கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்கிறாள். எனினும் இவள் போன்ற பெண்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்பது இதன் மூலம் புலப்படுத்தப்படுகின்றது.
நாவலில் மீன்பிடித் தொழிலாளர்களின் வறுமையும் அதனால் ஏற்படும் பல்வேறு துன்பங்களும் எடுத்துக் காட்டப்பட்டாலும் இத் தொழிலாளர்கள் வறுமையில் இருந்து விடுபடுவதற்கான வழி எதுவும் கூறப்படவில்லை. கணவனையும் இழந்த அன்னா கதியற்றவளாகவே நாவலின் முடிவில் காணப்படுகின்றாள்.
செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்னும் நாவல் நெடுந் தீவுக் கடற்கரையில் வாழும் மீனவர்களின் வாழ்வைப் பொரு ளாகக் கொண்டதாகும். வாடைக் காற்று வீசும் பருவகாலத்தில் நெடுந்தீவுக் கடற்கரைக்கு வந்து வாடியமைத்து மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற மன்னார் முதலிய பிரதேசத்து மீனவர்களும் இவர்களிடம் வேலைக்குச் செல்கின்ற நெடுந்தீவுக் கிராம மீனவர்களும் இந் நாவலில் பாத்திரங் களாக வருகின்றனர்.
சாதாரண மீனவர்களின் வாழ்வு என்றுமே வறுமைமிக்கதாகவே இருப்பதை இவரின் நாவலிலும் காணமுடிகின்றது. ஆனால் அவர் இத் தொழிலாளர்களின் பிரச்சினைகளில் தனிக்கவனம் செலுத்தாத தால் அவை விரிவாகக் கூறப்படவில்லை.
பொன்னுக் கிழவர் கூப்பனுக்குக் கொடுக்கின்ற இலவச அரிசியை நம்பியே வாழ்வது பேர்த்தி நாகம்மா கிழிந்த சட்டையை மாற்றுவதற்கே வழியில்லாமல் வீட்டினுள் நிர்வாணமாக நின்று சட்டையின் கிழிசல் களைத் தைப்பதும் இவர்களின் வறுமையின் அடையாளங்கள்.*
திரேசம்மாவின் குடும்பமும் வறுமையில் இருந்து மீள முடியாத நிலையிலேயே இருக்கின்றது. தகப்பனும் மகனும் உழைப்பதைக் குடித்துவிட்டு வெறுங்கையோடு சாப்பிட வீட்டுக்கு வருகின்றார்கள். திரேசம்மா தனது வறுமைத் துன்பத்தால் விரக்தியுற்று மகள் பிலோமினாவோடு சண்டையிடுகின்றாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (02) Dr.ம.இரகுநாதன்

“வறுமையும் ஆற்றாமையும் அவளை ஓயாமல் கத்தவைக் கின்றது. பனாட்டு, ஒடியல் செய்து விற்று, ஏதாவது கூலி வேலைக்குப் போய் உழைத்தும் இரண்டு ஆண் பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட அவளால் எத்தனை நாட்களுக்குத் தான் முடியும்?”
வாடை வீசத் தொடங்கினால். கடற் கரையில் வாடிகள் அமைந்தபின் ஐந்து மாதங்களுக்காயினும் சாப்பாட்டுக் கஷ்டம் குறைவு. சோளகம் வீசத் தொடங்கியதும், பழையபடி வீட்டிலே அடுப்பில் பூனை படுத்துறங்கத் தொடங்கிவிடும்.”*
இது மீனவர்களின் நிலையான வருமானமில்லாத நிலையையும் அதனால் ஏற்பட்ட வறுமையினையும் எடுத்துக்காட்டுகின்றது. இவ் வறுமையைப் போக்க வழி எது என்பது நாவலில் காட்டப்படவில்லை.
வை. அஹமத்தின் புதிய தலைமுறைகள் என்னும் நாவல் கிழக்கிலங்கைக் கரையோரத்தில் வாழும் இஸ்லாமிய மீன் பிடித்தொழிலாளர்களின் வாழ்க்கையை எடுத்துக் காட்டுகின்றது. சமுதாயப் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பழைமைக்கும் புதுமைக்கும் இடையே நடைபெறும் போராட்டமாகவே நாவல் அமைகின்றது. எனினும் இந் நாவலில் வருகின்ற மீன்பிடித் தொழிலாளர்கள் வறியவர்கள் என்பது தெரிகின்றது. சான்றாக சுலைமான் லெவ்வையின் வலை கடலில் களவு போய்விட்டபோது அவர் தனது வாழ்வே முடிந்து விட்டது போலத் துன்பப்படுகின்றார்.
"........ இந்த வள்ளமும் வலையும்தானே எனக்கு இருந்த ஒரேயொரு சொத்து. எண்ட குமரை இதை வித்துப் போட்டாச்சும் கரைசேர்த்துப் போடலாமென்றுதானே எண்ணியிருந்தன். இந்த வயசு போன காலத்தில கடன் வாங்கி எப்படி இறுக்கப் போகிறன் நான். அந்த வள்ளம், வலையை வைக்கிறதுக்கும் எண்ட குமர்ர பேரில இருந்த ஒரு ஆதனத்தை வித்துப்போட்டுத்தானே காசு எடுத்தன். %罗134
தனது ஒரே மகளை வாழ்விக்கவே முடியாத வறுமை, வயிற்றுப் பிழைப்பிற்காக மகளின் சொத்தையே விற்று வலை வாங்கிய நிலைமை ஆகியன மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களின் நிச்சய மில்லாத வருமானத்தையும் அதனால் அவர்கள் வறுமையி லிருந்து மீளமுடியாதிருப்பதையும் உணர்த்துகிறது. ஆனால் நாவலில் இப்பிரச்சி னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (303) Dr. D.6, rebirgbair

Page 116
அப்பச்சி மகாலிங்கத்தின் கமலினி என்னும் நாவல் யாழ்ப் பாணத்தில் நவாலிப் பகுதியிலுள்ள மீன்பிடித் தொழிலாளார்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். இத் தொழிலா ளர்கள் வறுமையில் வாடுவதால் தனதுபிள்ளைகளைக் கல்வி கற்பிப் பதில் அக்கறை காட்டுவதில்லை. கடலுக்குச் செல்லக் கூடிய பருவம் வந்ததும் படிப்பை நிறுத்திவிட்டு அவர்களைத் தொழிலுக்கே அனுப்புகின்றனர். இந்த நாவலில் வருகின்ற தம்பித்துரையின் குடும்ப நிலைமை இதையே எடுத்துக் காட்டுகிறது. தம்பித்துரை தனது மகன் குணராசாவின் படிப்பை நிறுத்தி அவனைக் கடலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்த போது குணராசாவின் ஆசிரியர் இதனைத் தடுக்க முற்படுகின்றார். ஆசிரியருக்குத் தம்பித்துரை தனது பக்க நியாயங்களைக் கூறுகின்றார்.
“எனக்கு உதவிக்கு ஆளில்லை . என்ரை தனி உழைப்பு குடும்ப சீவியத்துக்குப் போதாமல் இருக்கு. அதுதான் அவனைக் கூட்டிக்கொண்டு போனால் ஒரு சம்பள ஆள் பிடிக்கிற காசு மிஞ்சும்.”
"...... ஒரு ஏழைக் கடல் தொழிலாளி தன்ர பிள்ளையைப் படிப்பிக்கிறதெண்டால் அவனுக்குப் பல வழியிலை நட்டம் . உடுப்பு, புத்தகம், அதுஇது வெண்டு மாதத்தில் கன காசு வேணும். பள்ளிக்கு விடாமல் அவனைக் கடலுக்குக் கூட்டிக்கொண்டு போனால் இந்த வருமானம் இல்லை,.”
"...... என்னையொத்த தொழிலாளியாள் எல்லாம் கல் வீடு கட்டிப் போட்டாங்கள். நான் மட்டும் இன்னும் அப்பு கட்டின பழைய வீட்டில்தான் இருக்கிறன். அவன் என்னோட வந்தானெண்டால் என்ரை தோளின் கனம் கொஞ்சம் குறையும்.’
"........ வீட்டிலை ஒரு குமர் இருக்கு அதுக்கு. ஒரு இடம் பார்க்க வேணும். இப்ப அதின்ரை உழைப்பையும் நாங்க சாப்பிடுகிறம். என்னை என்ன செய்யச் சொல்லுகிறியள் படிச்சவையின் ரை பிள்ளையஸ்தான் படிக்கும் எங்கடை பிள்ளையஸ் எங்கை படிக்கப் போகுது.?”*
குடும்ப வறுமை நிலையில் ஒரு பிள்ளையைப் படிப்பிக்கச் செலவு செய்வதை விட அவனைக் கடலுக்கு அனுப்பி உழைக்கவே இத் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள். தனது தோளின் சுமையை
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (20) Dr.ம.இரகுநாதன்

இள வயதிலேயே பிள்ளைகளின் தோளில் சுமத்தி விடுகின்றார்கள் இதனால் இப் பிள்ளைகள் ஆர்வமிருந்தும் படிக்க முடியாமல் பின் தங்கியவர்களாகவே வாழ்கின்றார்கள். இதனால் சமூகத்தில் இவர்கள் கடற்றொழில் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற அபிப்பிராயம் உருவாகி விடுகின்றது மேலும் இத்தொழில் சாதியடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாலும். இப்பிள்ளைகள் படிக்காத போது அவர் களின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. இதனைக் குணராசாவின் ஆசிரியர் தம்பித்துரைக்கு எடுத்துக் கூறுகின்றார்.
“கடல் தொழில் குறைவானதெண்டு நான் நினைக்கிறதா நீ நினைக்கிறாய். அப்படியில்லை தம்பித்துரை என்னுடைய தகப்பன் படிக்காமல் இருந்தால், என்னைப் படிப்பிக்காமல் இருந்தால் நானும் தோளிலை மரக்கோலைத் தூக்கிக்கொண்டு உன்னோடை காக்கை தீவுக் கடலுக்கு வந்திருக்க வேண்டியவன்தான். பொய் சொல்லாமல், பிரளி பண்ணாமல், நேர்மையாக உழைக்கின்ற எல்லாத் தொழிலும் நல்ல தொழில்தான். நான் சொல்ல நினைக்கிறது வேறு விஷயம். எங்கடை ஆட்கள் கடல் தொழில் செய்யத்தான் பிறந்தவர்கள் என்ற தவறான எண்ணம் இருக்கு. அந்த எண்ணம் பிழை, படிக்கக் கூடியவன்ரை படிப்பைக் குழப்பிறது பிழை. 99
"...... வசதி வறுமையெல்லாம் ஒரு சாட்டில்லைத் தம்பித்துரை, வறுமையின்ரை முதுகை ஏறி மிதிச்சு எத்தனை பேர் படிச்சு நல்லா வந்திருக்கினை . உன்ரை கஷ்டங்களுக்கு அவனைச் சுமை தாங்கி ஆக்கி விடாதை.” *
வாத்தியாரின் அறிவுரையைக் கேட்ட தம்பித்துரை மகனைப் பாடசாலைக்கு அனுப்புகிறார். அவன் படித்து க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் நல்ல பெறுபேற்றினையும் பெற்றுக் கொள்கின்றான். அவனின் வாழ்வு புதிய பாதையில் செல்கின்றது.
நாவலில் மீன் பிடித் தொழிலாளர்களின் வறுமையும் வறுமையினால் அவர்களின் பிள்ளைகள் படிக்காமல் மீண்டும் மீண்டும் கடல் தொழிலிலேயே ஈடுபடுவதையும் காட்டிய ஆசிரியர் இத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக குணராசாவை படிக்க வைத்து அவன் முன்னேறுவதைக் காட்டியுள்ளார். ஆனால் இவர்களின் மீளாத வறுமைக்குக் காரணமும் அதை எவ்வாறு போக்குவது
ஈழத்துத்தமிழ்நாவல்கள் டு Dr. LD-Sprepirbair

Page 117
என்பதும் தெளிவு படுத்தப்படவில்லை. கல்வி கற்று முன்னேறு வதென்றால் அது கூட அவர்களின் சூழலில்அத்துணைப் பொருத்த மானதாகத் தெரியவில்லை.
எனவே மீன்பிடித் தொழிலாளர்களின்வாழ்வு வறுமையிலிருந்து மீள முடியாத அவலம் நிறைந்த வாழ்வாகவே அமைந்துள்ளது. இவ் வறுமைத் துன்பத்தைப் பலரும் எடுத்துக் காட்டியிருந்தாலும் அத் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழியை எவரும் காட்ட வில்லை.
4.3.2 சுரண்டல்
வறுமையில் வாடும் மீன்பிடித் தொழிலாளர்களின் உழைப்பு பல்வேறு வழிகளில் முதலாளிகளாலும் தமது தோணிகளை ஏழை மீனவர்களுக்கு வாடகை, குத்தகை என்ற பெயரில்கொடுத்து மாதா மாதம் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். கடலுக்குச் சென்று வெறுங்கையோடு திரும்பி வந்தாலும் குத்தகைப் பணம் கட்டுவ திலிருந்து இவர்கள் தவற முடியாது. இதனால் அவர்களின் உழைப்பு குத்தகைப் பணத்துடனேயே முடிந்து விடுகின்றது. அதனைக் கடற்காற்று என்ற நாவலில் வருகின்ற இன்னாவின் விரக்தியான வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.
"...... தோணிக்கு மாசாமாசம் குத்தகைக் காசு கட்டிறத்திலையே உழைக்கிறதெல்லாம் போகப் பாக்குது.”*
தோணிக்கு குத்தகைப் பணம் கட்டவே முடியாத நிலையில் இருக்கின்ற தொழிலாளர்களை கோயில் நிர்வாகமும் வரி என்ற பெயரில் சுரண்டி வருகின்றது. தோமஸ் காலையில் எழுந்து பாதித் தூக்கத்தோடு நின்றபோது அங்கு வந்த அந்தோனி என்ற கோயில் வரி வசூலிப்பாளன்,
தோமஸ் இஞ்சை பாரப்பா உன்ரை கஷ்ட நஷ்டங்களைப்பற்றிக் கவலைப்பட நாங்கள் ஆக்களில்லை. நீ கட்ட வேண்டிய காசை இண்டைக்கே தந்திடு. இல்லாட்டி கோயிலுக்கு வந்து சுவாமியட்டைச் சொல்லு.”
ஈழத்துத்தமிழ்நாவல்கள் 0ெல் Dா.ம.இரகுநாதன்

“எனக்கென்ன, இன்னும் ரண்டு நாளைக்கை காசு கட்டியிட்டாய் எண்டால் சரி. அங்காலை நீயே பார்த்துக்கொள்.”*
எனக் கூறித் தனது அதிகாரத்தை வெளிப்படுத்தி வரிகேட்டுப் பயமுறுத்துகின்றான். தோமஸ்,
“கோயிலுக்கும் சுவாமிக்கும் காசு கொடுக்க மனிசனட்டை இருந்தாத்தானே. படைச்ச கடவுள் படைச்சார். பணத்தையுமாவது எங்களுக்குத் தரக்கூடாதோ? அல்லது செய்யிற வேலைதான் சரியா வருகுதோ? கால் வயித்துக் கஞ்சிக்குக் காணாத பிழைப்பு. சே! நரக வாழ்க்கை.”*
என்று தனது வறுமையை நினைத்துத் துன்புற்றாலும்
“கர்த்தரே! என்னைமன்னிச்சிடுங்கள். நான் தப்பாச் சொல்லிப் போட்டன் போலை கிடக்குது எப்படியாவது அந்தக் காசைக் கட்டிப்போடுறன்.”*
என்று கூறும்போது எவ்வளவு வறுமை என்றாலும் கோயில் வரிப்பணத்தைக் கட்டாமல் விட முடியாது என்ற நிலை தெரிகின்றது. இவ்வாறு மக்களை வருத்தி வரி வசூலித்த கோயில் நிர்வாகம் அவர்கள் பசித்த வயிற்றோடு பட்டினி கிடந்த போது ஏறெடுத்தும் பார்ப்பதில்லை என்பதை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.
“பட்டினி கிடக்கும் நேர அளவு இப்போது நீண்டு, நாள் அளவு வரை வந்தது கோயில் தர்மம் ஒன்றுமே கிடைக்கவில்லை. வாங்கத் தெரிந்தவர்களுக்குக் கொடுக்கத் தெரிவதில்லையே. ஒ கடவுளும் வாங்கத்தான் இருக்கிறாரா?”*
கோயிலின் பெயரால் நடக்கும் இக் கொடுமையைக் காட்டியவர் இதனை இல்லா தொழிப்பதற்கு வழி எதையும் கூறவில்லை. இக் கொடுமை கோயிலின் பெயரால் சில முதலாளிகளாலேயே மேற்கொள்ளப்படுகின்றது என்பதற்கு வரி வசூலிக்கும் அந்தோனியே சான்றாகும். அவன் அக்கிராமத்திலேயே செல்வம் மிக்க பணக்காரன் என்பதையும் அதனாலேயே இப்பதவி அவனுக்கு வழங்கப்பட்டது என்பதையும் ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார்.* எனவே கோயிலின் பெயரால் முதலாளிகளே மக்களைச் சுரண்டிவருவது தெரிகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (0) Dr.ம.இரகுநாதன்

Page 118
செ. யோகநாதனின் கட்டுமரங்கள் என்ற குறுநாவலில் சம்மாட்டிமார் சாதாரண மீன்பிடித் தொழிலாளர்களை எவ்வாறு சுரண்டுகின்றனர் என்பது காட்டப்படுகின்றது.
"...... மீன் முதலாளிகளான சம்மாட்டிகள் எத்தனையோ மைல்களுக்கு அப்பால் சென்று குடும்பங் குடும்பமாக மீனவர்களைக் கொண்டு வருவார்கள். அப்படிக் குடும்பங்களைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காக சம்மாட்டிகள் தங்களுக்கெனக் கங்காணிகளை வைத்திருப்பார்கள். கங்காணிகள் மீனவக் குடும்பங்களோடு பேரம் பேசி ஆறுமாதம் மீன் பிடித் தொழில் செய்வதற்கான கூலியினை முற்பணமாகக் கொடுத்து விட்டுஅந்தக் குடும்பங்களைத் தங்கள் இடத்திற்குக் கூட்டிக்கொண்டு வருவார்கள் மீன் முதலாளிகளே கடற் கரையோரமாக அவர்களுக்கு சிறிய குடிசைகளைக் கட்டிக் கொடுப்பார்கள், மீன் முதலாளிகள் தான் அங்குள்ள பெரிய கடைகளின் சொந்தக் காரர்கள். அவர்களிடமே இந்த மீன் பிடிகாரர்கள் பொருட்கள் வாங்க வேண்டும். குடிசைக்கு வாடகை, பொருட்களுக்கு விலை என்று சம்மாட்டி கணக்குப் பார்த்தால் மீனவனே கடைசியில் கடன்காரனாகிவிடுவான். அந்தக் கடனை அடைப்பதற்காக மீண்டும் அவன் தன்னுடைய முதலாளிக்காக உழைத்துக் கொடுக்க வேண்டும். இதே கதை தொடரும்.”*
கங்காணியின் ஆசை வார்த்தைகளை நம்பியும் முற்பணமாகக் கொடுத்த பணத்தின் ஆசையிலும் ஏமாந்த மீன்பிடித் தொழிலாளர் களின் உழைப்பு முதலாளிமாரால் எவ்வாறு சுரண்டப்படுகின்றது என்பதை இப்பகுதி தெளிவாகவே காட்டிவிடுகின்றது. இதனாலேயே,
“நாங்கள் உயிரை வெறுத்து வேலை செய்தும் கண்ட தென்ன?. பஞ்சமும் கஷ்டமும் தான் எங்களுக்கு மிஞ்சி இருக்கிற சொத்து”*
என ஒரு தொழிலாளி கூறிப் பெருமுச்சு விடுகின்றான். உயிரை வெறுத்து உழைத்த தொழிலாளிகள் கடலில் வீசிய புயலில் சிக்குண்ட போது அவர்களைக் காப்பாற்றத் தனது எஞ்சின் போர்ட்டைக் கொடுக்க மறுத்து விடுகின்றார் கனகசபை முதலாளி. இவ்வேளையில் மீன்பிடித் தொழிலாளிகள் இன மத வேறுபாடுகளை மறந்து ஒன்றாகத் திரண்டு நின்று முதலாளியை எதிர்க்கின்றனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (08) Dr. D.6Jepprisair

"...... இதென்ன துணிவு சிங்களவன், தமிழன், கத்தோலிக்கன், சைவன் என்பதையெல்லாம் மறந்து தங்களையெல்லாம் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக நினைத்து ஒருவருக்கொருவர் உயிர்விடத் துணியும் இத் துணிவை இவர்களுக்குக் கொடுத்த உணர்வு என்ன பெருமை மிக்கது.”*
என ரூபசிங்காவின் மனம் நினைத்து வியந்ததாக ஆசிரியர் எழுதுகின்றார். இங்கு சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் வர்க்க அடிப்படையில் இணைந்து முதலாளியை எதிர்ப்பது தெரிகின்றது. எனவே ஆசிரியர் மீன்பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைக்குக் கூறும் தீர்வும் வர்க்கப் போராட்டம் என்பது தெரிகின்றது. ஆனால் நாவலில் இது விரிவாகக் காட்டப்படவில்லை.
செ. யோகநாதன் தனது தோழமை யென்றொரு சொல் என்னும் குறுநாவலில் பலம் கொண்ட முதலாளிகள் கடலில் தமது தனியுரிமையினை நிலைநாட்டுவதையும் பின்னர் அப்பகுதியினைக் குத்தகைக்குக் கொடுத்து உழைப்பதையும் எடுத்துக் காட்டுகின்றார்.
“கடலினைக் கூடப் பணபலம் பிடித்தவர்கள் காணிகளாகப் பிரித்து விட்டார்கள். வரம்புகள் கட்டாத குறை ஒன்றுதான். பழைய நாட்களில் மீன்பிடிப்பதற்குக் கடலினுள் சென்ற வசதி படைத்தவர்கள் தம்முள் உடன்பட்டு, கடலிற் குறித்த இடங்களிலே மீன் பிடிப்பதற்கென ஒப்புக் கொண்டார்கள் பிறகு பரம்பரை பரம்பரையாக அந்த இடங்களில் மீன் பிடித்து வந்து, எல்லோருக்கும் பொதுவான கடலை நிரந்தரமான மீன்பிடியிடங்களாக்கி, காலப் போக்கில் அந்த எல்லைகளுக்குட்பட்ட கடற் பரப்பு தமக்கே உரிய தென்றும் அதில் தாமே மீன் பிடிக்க உரித்துடையவர்களென்றும் கூறி தாங்கள் கடலிற்குப் போகாது அரசாங்க உத்தியோகங்களைச் செய்து கொண்டு அந்தக் காணியின் சொந்தக் காரருக்கு வாடிக்கையாக தினசரி தான் பிடிக்கும் மீனில் ஒரு பங்கும் குத்தகைக் காசும் கொடுக்க வேண்டும்.”*
இவ்வாறு முதலாளிகள் கடலைத் தமது தனியுடைமையாக்கி விடுவதால் சாதாரண மீன்பிடித் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. இதனால் அவர்கள் கடன்காரர்களாகவே வாழ வேண்டியுள்ளது. இதனை நாகலிங்கம் என்ற தொழிலாளியின் கூற்று எடுத்துக் காட்டுகிறது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (09) Dr. ID-Suebirgbair

Page 119
*அந்தக் கடற் காணியிலை நாங்கள் உசிரையும் வெறுத்து முறிஞ்சிருக்கிறம். அப்படியிருந்தும் எங்கடை கையிலை சல்லிக் காசு கூட மிஞ்சிறேல்ல. மீன் பறியோடை கரையிலை இறங்கி றாத்தலிலை அதைக் கொண்டு போய் வித்திட்டு, ஒரு ரூபாவுக்கு பத்துச் சதம் தீர்வையைக் குத்தகைக் காரன் கையிலை குடுத்திட்டு வீட்டுக்கு வருந்தனைக்கும் காசு புளங்குது. பிறகு பார்த்தால்
35l-60....... 35L6'7
இவ்வாறு முதலாளிகளால் சுரண்டப்பட்டு வறியவர்களாகிக் கடலில் தத்தளிக்கும் தொழிலாளர்கள் தமக்குள் ஒன்றுப்பட்டு முதலாளியை எதிர்க்க முற்படுகின்றனர். கந்தையா என்ற முதலாளிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கும் தொழிலாளர்களை இங்கு காண முடிகின்றது. கடலில் ஆதிக்கம் செலுத்தும் கந்தையா தொழிலாளர் களைக் கடலில் இறங்க விடாது தடுக்கின்றார் அதனைத் தொழிலா ளர்கள் எதிர்க்கின்றனர். அவர்களில் ஒருவனான ஐயாத்துரை,
“எங்களைப் போலை இவங்கள் வள்ளத்திலை ஒரு நாளைக் கொண்டான்ன வந்திருக்கிறாங்களாடா? நாங்க முறிமுறி யெண்டு முறிய அவையள் காலாட்டிக் கொண்டு வீட்டிலை இருந்துவிட்டு இப்ப சண்டித்தனம் பேசிறேண்டா முடியுமோ? முறியிறவங்களை இனிமே முந்தியைப் போல வெருட்டேலாதடா. வெருட்டேலாது”*
எனக் கூற அதனை ஆதரித்து தம்பிராசா,
*. நாங்கள்ளாம் ஒண்டு இனி எங்கடை தலையிலை மிளகாய் அரைக்கேலாது”*
எனக் கூறி முஷடியை உயர்த்திக் காட்டுகின்றான். அவ் வேளையில் கரையில் நின்ற வேலாயுதர், முருகர், முத்தர் எல்லோரும் கொடுக்கை வரிந்து கட்டிக் கொண்டு அவனை நோக்கித் தோழமை உணர்வுடன் வருவதையும் அவர்களைக் கண்ட முதலாளி இங்கிருந்து தலையைக் குனிந்தபடி பின் வாங்கிச் செல்வதையும் ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார்.
இங்கே முதலாளிக்கு எதிரான அல்லது சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டம் நடைபெறுகின்றது. எனவே மீன் பிடித் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு ஆசிரியர் கூறும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (3.10) Dr. ID-6pressbirger

தீர்வும் வர்க்கப் போராட்டத்தின் மூலம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவதே எனலாம்.
பொதுவாக நோக்கும் போது மீன்பிடித் தொழிலாளர்கள் வேலைக் கேற்ற கூலி வழங்கப்படாததாலும் முதலாளிகளின் பல்வேறு வகையான சுரண்டல்களாலும் வறுமையிலிருந்து மீள முடியாதவர் களாகவே வாழ்வது தெரிகின்றது. ஆனால் இத் தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்பாக நாவல் எழுத முற்பட்ட கைலாசநாதன், டானியல், செங்கை ஆழியான் முதலியோர் இவர்களின் துன்பங்களைக் கூறுவதோடு நாவலை முடித்து விடுகின்றனர். செ. யோகநாதன் இம் மக்களின் துன்பங்களை வர்க்க அடிப்படையில் அணுகி இவர்கள் தொழிலாளர்கள் என்ற வகையில் இணைந்து முதலாளிகளுக்கு எதிராகப் போராடுவதன் மூலமே இத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற முடியும் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். எனவே யோகநாதன் கூறும் தீர்வு வர்க்கப் போராட்டமேயாகும்.
4.4நகரப் புறத் தொழிலாளர் பிரச்சினைகள்
நகரப் புறங்களில் வாழும் தொழிலாளர்கள் பல்வேறு வகையான தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக தொழிற் சாலைகள், சிறு கைத்தொழில் நிலையங்கள், கம்பனிகள், வியாபார நிலையங்கள், துறைமுகங்கள் முதலியவற்றில் பணிபுரிகின்றவர்கள் தொடக்கம் மூட்டை சுமப்போர், செருப்புத் தைப்போர், நகரசுத்தி செய்வோர் வரையிலான அனைத்துத் தொழிலாளர்களையும் நகரப் புறத்தில் காணலாம்.
இத்தகைய நகரப் புறத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் நாவல்கள் 1960 களின் பிற்பகுதியிலிருந்தே வெளிவர ஆரம்பித்தன. இந்த வகையில் செ. கணேசலிங்கன், சி. சுதந்திரராஜா செ.யோகநாதன், எஸ். அகஸ்தியர், அருள்.சுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடக் கூடிய நாவல்களை எழுதியிருக்கின்றனர். இவர்களின் நாவல்களிலெல்லாம் காணப்படும் பொதுவான பிரச்சினை தொழிலாளர் களின் வறுமையும் அவர்களது உழைப்புச் சுரண்டப்படுவதுமேயாகும். அனைத்துத் தொழிலாளர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இவ்விரண்டுமே என்பதை அந் நாவல்கள் உணர்த்துகின்றன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (D) Dா. ம.இரகுநாதன்

Page 120
4.4.1 oup6OLD
செ. கணேசலிங்கனின் செவ்வானம் என்னும் நாவலில் வருகின்ற பொன்னையா என்னும் தொழிற்சங்க வாதி கம்பனி ஒன்றில் பணிபுரியும் மாலினிக்கு தொழிலாளர்களின் வாழ்க்கையின் தன்மையை எடுத்துக் காட்டுகின்றான். அவன்,
“அதோ வண்டியால் இறங்கிப் போகும் தொழிலாளர்களைப் பார். அவர்களோடு பழகினாலல்லவாஉனக்கு நிஜ வாழ்க்கையைப் பற்றித் தெரிய வரும் வாழ்க்கை என்பது நீ நினைப்பது போலச் செவ்வானமல்ல"
எனக் கூறுகின்றான். அவன் காட்டிய திசையில் வந்த தொழிலாளிகளினிடையே மாலினி அகப்பட்ட போது அவளுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆசிரியர் பின்வருமாறு காட்டுகின்றார்.
*ரைம் என்னம்மா”
யாரோ ஒரு தொழிலாளியின் குரல். அவள் கையை உயர்த்த அவனே நேரத்தை கூர்ந்து பார்த்தான்: வியர்வை நெடி வீசியது:
உடையெல்லாம் அழுக்கு
“எட்டரை. காலையிலை ஏழரைக்கு வெளிக்கிடேக்கை சின்ன வனுக்குக் காச்சல். என்ன நடந்துதோ”
“பக்கத்தில் நின்றவனுக்கோ அவளுக்கோ தெரியவில்லை, தானாகவே சொல்லிக் கொண்டே அவசர அவசரமாகக் கூட்டத்தை
நெரித்துக் கொண்டு முன்னேறினாான்.”
“இன்டைக்குதான் ஓவர்டைம் கிடைச்சது. இந்தக் கிழமை இன்னும் கூப்பனரிசியே வாங்கேல்லை”
*யு.என் பி பிறகும் வந்திடும்”
“வரவிடப்படாது”
“வீட்டை போனதும் அவள் பொக்கெற்றைத்தான் பார்ப்பாள்” ஈழத்துத்தமிழ்நாவல்கள் (2 1) Dr. LD-6pepsirgar

“மழை தூறுது. வீட்டிலை கிடந்த ஒரு குடை, அதுவும் முறிஞ்சு போச்சு”
“இருபத்தைஞ்சு சதமிருந்தால் கடன்குடு. ராத்திரிக்கு ஒரு றாத்தல் பாணாதல் வாங்கிக் கொண்டு போக வேணும்”
“காலையிலை என்னோட வந்தானே வீரக்கோன் மெஷினுக்கை கையைக் குடுத்திட்டான் பெண்சாதி குமரும் குஞ்சுமாய் ஆறு பிள்ளைகள், எப்படி வாழப் போகுதுகளோ”*
தொழிலாளர்களின் அழுக்கான உடை வியர்வை நாற்றம் ஒரு இறாத்தல் பானுக்கே வழியில்லாத வறுமை இவற்றை முதலாளி வர்க்கத்தோடு அண்டி வாழும் மாலினி இப்போதுதான் காண்கின்றாள். இவற்றைக் கண்டபோது பொன்னையா கூறிய காதல், திருமணம், குடும்பம், வர்க்கபாசம் ஆகியவை பற்றிய கருத்துக்களை அவளின் சிந்தனை அசைபோடுகின்றது என்று குறிப்பிட்டு நாவலை முடிக் கின்றார் கணேசலிங்கன்.
செ. யோகநாதன் இருபது வருஷங்களும் மூன்று ஆசை களும் என்னும் குறுநாவலில் சாதாரண பலசரக்குக் கடைக்காரனின் மகன் சிவகுமார், கல்லுடைக்கும் தொழிலாளியான விதவைத் தாயின் மகன் சுமணதாசா, விவசாயியின் மகன் தர்மபால ஆகிய மூவரினதும் வாழ்க்கை எடுத்துக் காட்டப்படுகிறது.
இம்மூவரும் பேராதனை பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்படுகின்றனர். வாழ்வில் எந்த நம்பிக்கையுமற்று படிப்பொன் றையே ஆதாரமாகக் கொண்டு அதுவே தமது குடும்பத்தை வாழ வைக்கும் என்ற நம்பிக்கையோடு காணியை ஈடு வைத்தும் காதுத் தோட்டை விற்றும் பிள்ளைகளைப் படிக்க அனுப்பியவர்கள் இவர்களின்
பெற்றோர்கள். பெற்றோரின் ஆசை பிள்ளை படித்து உத்தியோகம் பார்த்து நல்ல உணவு, நல்ல உடை, நல்ல வீடு இவற்றை அனுபவிக்க வேண்டும் என்பது தான். ஆனால் நாட்டுச் சூழல் நாட்டின் அரசியல் பொருளாதார நிலை இந்த ஆசைகளை நிராசையாக்கி விடுகின்றது. இருபது வருஷமாகக் காத்திருந்த ஆசைகள் நிறைவேற வழியற்ற சூழலிலேயே பட்டதாரிகளின் வாழ்வு முடிகின்றது என்பதை இந் நாவல் எடுத்துக் காட்டுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (3) Dr.ம.இரகுநாதன்

Page 121
சாதாரண பலசரக்குக் கடைக்காரனின் மகனான சிவகுமார் பாடசாலை யில் படிக்கும் போது தான் அனுபவித்த வறுமைத் துன்பத்தை நினைத்துப் பார்க்கின்றான்.
".......... கடையிலே பொருட்களை வாங்கிப் போட்டு விற்பனை செய்வதற்காக என் தகப்பனார் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணம்,பல தடவை என் அழுகை கலந்த பிடிவாதங்களால் தவணைப் பணங்களாயும், பள்ளிக் கூட நிதியென்ற பெயரிலும் பள்ளிக் கூடத்திற்குப் போயிருக்கின்றது.”
இப்படியான மனதினை நெகிழ வைக்கின்ற நிலைமைகளில் எல்லாம் எனது துளிரான இதயம் வெதும்பிச் சாம்பி அழுங்கி மெளனமாக அழுததுண்டு.*
எனவே இலவசக் கல்வி என்பது பெயரளவில் மட்டுமே இருப்பதையும் ஏழை மாணவர்கள் பாடசாலைகளில் வசூலிக்கப்படும் பணத்தைக் கட்டுவதற்கு எவ்வளவு துன்பப்படுகின்றனர் என்பதையும் இது உணர்த்துகின்றது.
சிவகுமார் காலுக்கு செருப்புக் கூட அணிய வசதியற்றவன் அதை அவனே கூறுகின்றான்.
“நான் பல்கலைக்கழகத்துக்கு வரும் போது தான் என் கால்களின் அளவு கூட எனக்குத் தெரிந்தது. புழுதியிலும் பொங்கும் வெய்யிற் தகிப்பினிடையேயும் தான் பதினெட்டாவது வயது வரை என் வெறும் பாதங்கள் நடந்திருக்கின்றன. எனது பதினெட்டாவது
வயதிலே தான் நான் சப்பாத்து வாங்கி அணிந்து கொண்டேன்.”*
கல்லுடைக்கும் தொழிலாளியான ஒரு விதவைத்தாயின் மகன் சுமணதாசா தனது வறுமையினையும் அதனால் தாயப்படும் துன்பத்தையும் சிவகுமாருக்குக் கூறுகின்றான்.
“சிவா, இலங்க்ைகு சுதந்திரம் கிடைத்த அன்று தான் நானும் பிறந்தேன் முன்பெல்லாம் எனது அம்மா இதைச் சொல்லிப் பெருமைப் படுவதுண்டு. நான் சுதந்திரமானவனாய்ப் பிறந்தேனாம். ஒவ்வொரு சுதந்திர தினத்தின் ஆடம்பரமான கொண்டாட்டங்களின் போதும் என்னைப் பெற்றவள் மனமும் கண்களும் பொருமிக் கண்ணிர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (1) Dr. D-Suebirgeir

சொரிந்திருக்கிறாள். தன்னுடைய ஒரேயொரு ஆசை மகனுக்கு நல்ல உணவு கொடுக்க முடியாமல், கிழிசலற்ற ஆடைகள் அணிவிக்க முடியாமலிருக்கின்றதே. அவனை ஒரு சொந்தமான வசதியுள்ள வீட்டில் வைத்து வளர்க்க முடியாமல் இருக்கின்றதே என்று தான்
Ké 99.54
என்தாய் அழுகின்றாள் “ .
இத்தகைய வறுமை நிலையிலே தான் சுமணதாசா தனது இரத்தத்தை விற்று பணம் பெறுகின்றான்.
“என்னுடைய படிப்புக்காகவும் வயோதிபத் தாயின் ஆசைக்கா கவும் நான் என்னுடைய சதையை விற்கக் கூடத் தயாராயிருக் கின்றேன். 99.55
இது சுமணதாசா கூறும் வார்த்தைகளாக இருந்தாலும் பல ஏழைத் தொழிலாளர்களின் வாழ்க்கையும் இது போலத்தான் என்பதை உணர முடிகின்றது. ஏழைகளின் வாழ்வில் எந்த மலர்ச்சியையும் உருவாக்காத சுதந்திரம் அர்த்தமற்றது என்ற கருத்தை இக் குறுநாவல் உணர்த்துகின்றது.
அருள் சுப்பிரமணியத்தின் அக்கரைகள் பச்சையில்லை என்னும் நாவல் திருகோணமலைத் துறைமுகத்தைக் களமாகக் கொண்ட தாகும். வேலையில்லாத் திண்டாட்டத்தால் வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் ஒரு பகுதியினர் அந்நிய நாட்டு கப்பல்களில் வேலைக்குச் சேர்கின்றனர். அவ்வாறு சேர்ந்தவர்களின் வாழ்க்கை துன்பங்களையும் கப்பல்களில் அவர்கள் அனுபவிக்கும் அவலங்க ளையும் இந் நாவல் எடுத்துக் காட்டுகின்றது.
கப்பலில் பணிபுரியும் இளைஞர்களை மீட்க முயற்சித்த தொழி லாளர்களில் ஒருவனான சரவணை இவ்விளைஞர்கள் வெளிநாடடிற்குச் சென்றதற்கான காரணத்தைக் கூறுகின்றான்.
“ஏன் எங்களுடைய பிள்ளைகள் வெளிநாடு போகிறார்கள்? a is இங்கே வேலையில்லை,வயிற்றுக்கு வழியில்லை, பத்துமாதம் சுமந்து பெற்று வளர்த்த தாயை, தந்தையைக் காப்பாற்ற வழி தெரியவில்லை, இருட்டில் தடுமாறியவர்களுக்கு வெளிநாட்டுக் கப்பல் என்ற ஒளி தெரிந்தது, போய்விட்டார்கள். போன பின்தான் தெரிந்தது அக்கரைகள் பச்சையில்லை என்ற உண்மை”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (15) Dா. ம.இரகுநாதன்

Page 122
எனவே இளைஞர்களின் வறுமைத்துன்பமே அவர்களை வெளி நாட்டிற்கு அனுப்பியது. வெளிநாடுகளில் வேலை பெற்று ஒளிமயமான எதிர்காலத்தைப் பெறலாம் என்று நம்பினார்கள். ஆனால் கப்பல்களில் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. எதிர்காலம் இருட்டாக இருப்பதை அவர்கள் உணந்து கொண்டார்கள். இந்த இருளிலிருந்து அவர்களைக் காப்பாற்ற துறைமுகத் தொழிலாளர்கள் இணைந்து மேற்கொண்ட முயற்சி இந் நாவலில் எடுத்துக்காட்டப்படுகிறது.
4.4.2 சுரண்டல்
சி. சுதந்திரராஜாவின் மழைக்குறி என்னும் நாவலில் வருகின்ற கடைச் சிப்பந்தியான சின்னத்தம்பி இடது சாரிச் சிந்தனைகளால் கவரப்பட்டவன். தொழிலாளர்களை முதலாளிகள் சுரண்டுவது பற்றியும் அச் சுரண்டலை இல்லாதொழிக்க தொழிலாளர்கள் வர்க்க அடிப்படை யில் இணைந்து போராட வேண்டும் என்பது பற்றியும் இவன் தனது சக தொழிலாளர்களுக்கு எடுத்துக் கூறுகின்றான். “நீ ஏன் கொம்யூனிஸ்டாய் இருக்கிறாய்?” எனக் கேட்ட கந்தசாமிக்கு சின்னத்தம்பி,
“ஏழையள் எண்டா அவையள் கஷ்டப்பட்டு உழைக்கிறவை யாயும் பணக்காரர் எண்டா அந்த உழைப்பை நடத்திக்கிறவையாயும் அந்த உற்பத்திச் சாதனங்கள் எல்லாம் உடைமையாய் வைச்சிருக்கிற வையாயும் இருக்கினம்.
இந்த ஆளும் பணக்கார வர்க்கம் பாராளும் பாட்டாளியளின்ரை உழைப்பை நேரடியாகவும் மறைமுகமாயும் சுரண்டுது தொழிலாளியள் தங்கடை உரிமையளைக் கேட்டவுடனை பொலிஸ், மில்றிரி, நேவி ஆயுத பலங்கொண்டு அடக்குது. அந்தப் பணக்காரக் கும்பல் தன்ரை அரசு இயந்திரம் ஒண்டைக் கட்டிவைச்சுச் சுரண்டல், பலவந்தத்தைத் தன்ரை எதிர் வர்க்கமான தொழிலாளியள்ளை திணிக்குது. கொடுமையைத் தாங்கேலாதவை குமறிக் கொத்தளிச்சு அரசு இயந்திரத்தோடை முட்டினால் அவையளின்ரை உயிரையும் பொலிஸைக் கொண்டு எடுப்பிக்குது. பொலிசிட்டை துவக்கில்லாட்டி சுரண்டல் ஒரு செக்கனுக்கும் நடக்காது.
அதுமட்டுமில்லை தொழிலாளியளின்ரை பக்கம் தான் நூற்றுக்கு நூறு நீதியும் நேர்மையும் சத்தியமும் இருக்குது. எங்களை அடக்கி ஈழத்துத்தமிழ்நாவல்கள் (10) Dr.ம.இரகுநாதன்

ஒடுக்கிற அரசு இயந்திரத்தைப் பலாத்காரத்தாலை சுக்குநூறாக்கி அது இருந்த இடத்திலை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை வைச்சால் தான் ஏழைச் சனத்துக்கு நீதியும் நல்ல சீவியமும் கிடைக்கும். புரட்சியாலை முதலாளிமாற்றை சர்வாதிகாரத்தை தொழிலாளியின்ரை சர்வாதிகாரம் ஆக்கினால் தான் விடிவு.”*
இவ்வாறாக உற்பத்திச் சாதனங்களைத் தமது தனியுடைமை யாக்கி வைத்திருக்கும் முதலாளிகள் ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதையும் தொழிலாளர்கள் உரிமை கேட்டுப் போராட முற்பட்டால் அவர்களை ஆயுத பலத்தால் அடக்குவதையும் எடுத்துக் கூறிய சின்னத்தம்பி இத்தகைய சுரண்டலை இல்லாதொழிப்ப தற்கு பாட்டாளிகள் புரட்சி செய்து பலாத்காரத்தால் பாட்டாளி வர்க்க அரசை உருவாக்க வேண்டும் என்று கூறுகின்றான். சின்னத்தம்பியின் கருத்து இடதுசாரி இயக்கச் சிந்தனையின் வழியாக உருவான கருத்தேயாகும்.
நாவலின் இறுதியில் தொழிலாளர்களின் ஊர்வலம் கொழும்பு நகர வீதியில் நடாத்தப்படுவது காட்டப்படுகின்றது. இவ்வூர்வலம் பாதிவழியில் பொலிசாரால் தடுக்கப்படுகின்றது. அவ்வேளையில் ஊர்வலத்திற்க்குத் தலைமை தாங்கிச் சென்ற சின்னத்தம்பி பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி அவ்விடத்திலேயே பலியாகி விடுகின்றான். அது தொழிலாளர்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தருவதாக ஆசிரியர் சித்திரிக்கின்றார்.
செ. யோகநாதன் தனது “இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும் என்னும் குறுநாவலில் தொழிலாளர்களின் வாழ்வுக்காகப் போராடும் இளைஞர்களைக் காட்டுகின்றார். விவசாயிகளோடும், மலையகத் தொழிலாளர்களோடும் தொடர்பு வைத்துள்ள தர்மபாலாவின் சிந்தனைகளால் சிவகுமார் கவரப்படுகின்றான். தான் வாழ்கின்ற சமூக அமைப்பில் வசதியுள்ளவனுக்கே வாழ்வு என்றும் ஏனையவர்கள் நல் வாழ்வு வாழ முடியாமல் அழிந்து போய் விடுவார்கள் என்றும் இந்நிலை மாறுவதற்கு எல்லோரும் எல்லாமும் பெற்று வாழத்தக்கதாக சமூக அமைப்பு மாற வேண்டும் என்றும் அவன் கருதுகின்றான்.
இச் சமூக அமைப்பு மாற வேண்டும் என்று கருதிய சிவகுமாருக்கு தர்மபாலா,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (1) Dr.ம.இரகுநாதன்

Page 123
".......... கொடுமை நிறைந்த பேதமுள்ள உலகமானது தானாகவே மாறிவிடக் கூடியதல்ல. அதனைத் தகர்த்து நொருக்க வேண்டும். 99158
என்று கூறுகின்றான். எனவே முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை ஒழிக்க தொழிலாளர்களின் புரட்சி நடைபெற வேண்டும் என்ற கருத்து இங்கு உணர்த்தப்படுகின்றது.
செ. யோகநாதனின் மற்றொரு குறுநாவலான “சிறுபொறி பெருந்தீ’ என்பதிலும் முதலாளி வர்க்கத்தை எதிர்க்கும் தொழிலாளி களின் ஒருங்கிணைவு காட்டப்படுகின்றது. இங்கு நகரப் புறத்தில் கடைச் சிப்பந்திகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்வும் அவர்களிடையே இடதுசாரிச் சிந்தனைகள் பரவி அவர்கள் சுரண்டலை எதிர்த்துப் போராட முற்படுவதும் எடுத்துக் காட்டப்படுகின்றது.
வாசிகசாலையில் ஒன்று கூடிய சிப்பந்திகள் தமது சம்பளப் பிரச்சினை, கடைகளில் வழங்கப் பெறும் மிகக் குறைபாடுகள் நிரம்பிய உரிமைகள், எட்டுமணித்தியாலத்திற்கு மேலாகத் தொழிலாளர் களைக் கசக்கிப் பிழிதல் ஆகிய விடயங்கள் பற்றிக் கலந்துரையாடு கின்றனர். இக் கூட்டத்தில் ஒருவனாக நின்ற மாணிக்கம் என்னும் சிப்பந்தி காலங்காலமாக உழைக்கும் சிப்பந்தி கடைசி நாட்களில் எது விதமான உதவியுமில்லாமல் வெறுஞ் சக்கையாக வெளியே விரட்டப்படுவதையும், அவனது எதிர்காலப் பாதுகாப்பின்மையையும் பற்றி மிகவும் ஆணித்தரமாக எடுத்துக் கூறினான். மேலும் அவன்,
“இந்தக் கொடுமைகளை ஒழித்து, உழைப்புக் கேற்ற ஊதியத் தையும் நம்பிக்கையான எதிர்கால வசதிகளையும் பெற வேண்டு மாயின் தொழிலாளர்கள் யாவரும் ஒரே அணியில் சேர வேண்டும்.”*
என்ற கருத்தையும் தொழிலாளர்கள் மத்தியில் எடுத்துக் கூறுகின்றான். அது சுரண்டலுக்கு எதிராக தொழிலாளர்கள் ஒன்று பட்டுப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அமைகின்றது. மாணிக்கம் பிறிதோரிடத்தில்,
*சுரண்டல் ஒழியும் வரை எல்லாரும் எல்லாம் பெற்று வாழுங்
காலம் வரும் வரை இந்த அவல நிலைமைகள் தான் இருக்கும்"
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (18) Dr.ம.இரகுநாதன்

என்றும் கூறியிருக்கின்றான். மாணிக்கத்தின் கருத்துக்கள் ஆசிரியரின் கருத்துக்களாகவே கருதப்பட்ட வேண்டியவை. எனவே ஆசிரியர் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகப் புதிய சமூதாயம் உருவாகுவதன் மூலமே தொழிலாளர்களின் துன்பங்கள் தீர்க்கப்படும் என்ற கருத்துடையவராகவே இருக்கின்றார் எனலாம்.
நகரப்புறத் தொழிலாளர்கள் தமது நிலையை உணர்ந்து விழிப்புற்று முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராகப் போராடத் துணிந்துள்ளமையைக் காட்டுவதாக அமைந்துள்ளது எஸ் அகஸ்தி யரின் மண்ணில் தெரியுதொரு தோற்றம் என்னும் நாவல். இந்நாவலில் நகரப்புறத் தொழிலாளர்கள் மட்டுமன்றி கிராமப் புறத் தொழிலாளர்கள், விவசாயிகள், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் முதலிய பலரும் தொழிலாளர் என்ற வகையில் ஒன்று திரண்டு உடைமை வர்க்கத்திற்கு எதிராகவும் முதலாளித்துவ அரசாங்கத்தின் அடக்கு முறைகள், அநீதிகள் முதலிய கொடுமைகளுக்கு எதிராகவும் போராடுவது காட்டப்படுகின்றது.
தொழிலாளர்களின் போராட்டங்களுக்குத் தலைமை தாங்குபவ னாக பொன்ராசாவை ஆசிரியர் படைத்துள்ளார். வசதியான குடும்பத்திற் பிறந்து பல்கலைக்கழகப் பட்டம் பெற்று பொலிஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியாக வாழ்ந்த ஜானகி பொன்ராசாவின் கருத்துக்களாலும் தொழிலாளர்களுக்காக அவன் புரிந்த தியாகங் களாலும் கவரப்படுகின்றாள். தொழிலாளர்களை அடக்கியாளும் முதலாளிக்கும் அரசாங்கத்திற்கும் பக்க பலமாக உள்ள பொலீஸ் படையின் அதிகாரியான தன் கணவனோடு வாழ முடியாத நிலையை உணர்கின்றாள். அதனால் வீட்டை விட்டு வெளியேறி பொன்ராசாவின் இயக்கத்தில் இணைந்து கொள்கின்றாள். வீட்டை விட்டு வெளியேற முன் அவள் தந்தைக்கு எழுதிய கடிதத்தில்,
“இந்த பூமியில் எத்தனையோ உரிமைப் போராட் டங்கள் நிகழ்ந்தமையால் புதிய சமுதாயத்தின் தோற்றங்கள் இதே மண்ணில் தெரிகின்றன. சமூகவாழ்க்கை தனிமனித இச்சைக்குள் அடங்கு வதன்று. அது உலகளாவிய மனித வர்க்கத்துக்குட்பட்டது. எனவே அந்த உலகலாவிய மாபெரும் வர்க்க இயக்கத்துடன் நான் இணைந்து கொள்ளப் போகிறேன்."
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (1 9) Dr. ID-Sugsburg air

Page 124
நாவலின் இறுதியில் தொழிலாளர்களின் அணி ஊர்வலமாக வருவதும் அதில் ஜானகியும் ஒருத்தியாக நிற்பதும் காட்டப்படுகின்றது
தொகுத்து நோக்கும் போது நகரப்புறங்களில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினைகளை எடுத்துக் காட்டியவர்களில் பலரும் முற்போக்கு அணியினராகவே காணப்படுகின்றனர். அவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் இணைந்து முதலாளிக்கு எதிராக நடாத்தும் வர்க்கப் போராட்டத்தையே பிரச்சினைக்குரிய தீர்வாகக் காட்டுகின்றனர்.
அருள் சுப்பிரமணியம் துறைமுகத் தொழிலாளர்களின் பிரச்சினை களை எடுத்துக்காட்டும் போது கப்பலில் சிக்குண்ட இளைஞர்களை விடுவிக்கும் முயற்சியில் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு நிற்பதைக் காட்டிலும் இந் நாவலில் வர்க்க சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுக் கப்படவில்லை. எனவே இவர் கூறும் தீர்வு தெளிவாக்கப்படவில்லை.
4.5 கிராமப்புற தொழிலாளர் பிரச்சனைகள்
கிராமப்புறத் தொழிலாளர்கள் பெரும்பாலும் சாதியடிப்படையி லேயே தமது தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் சாதியம் தொடர்பான அடக்கு முறைக் கொடுமைகளுக்கு உட்பட்டவர்கள். இத்தகைய தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சாதியம் தொடர்பான இயலியல் விரிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
செ. கணேகலிங்கன், டானியல், செ. யோகநாதன் முதலியோர் சாதியம் தொடர்பான பிரச்சினைகளை வெறுமனே சாதிப்பிரச்சினை களாகவே கருதாமல் அவற்றை கிராமப்புறத் தொழிலாளர்களின் பிரச்சினைகளாகவே கருதி வர்க்கக் கண்ணோட்டத்துடன் அணுகி யிருக்கின்றனர். இவர்கள் கூறும் தீர்வும் வர்க்கப் போராட்டமே செங்கை ஆழியான் போன்றவர்கள் சாதியடிப்படையிலான தொழில் களை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் கால மாற்றத்தால் கல்வி யறிவு பெற்று பரம்பரைத் தொழில்களை விடுவித்துப் புதிய தொழில் களை மேற்கொண்டு வருவதால் அவர்களின் பிரச்சினைகள் பல தீர்க்கப்பட்டு இயல்பாகவே ஒரு சமூக மாற்றம் நடைபெற்று வருகின்றது என்ற கருத்தையே கூறியிருக்கின்றனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (20) Dா.ம.இரகுநாதன்

கிராமப்புறங்களில் சாதியடிப்படையிலான தொழிலாளர்களைவிட வேறு சிலரும் காணப்படுகின்றனர். எனினும் இவ்வாறான தொழிலாளர்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறும் நாவல்கள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை செங்கை ஆழியானின் இரவின் முடிவு என்னும் நாவலில் கிராமப்புறத்தில் உள்ள சுருட்டுத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன.
புகையிலை முதலாளியான துரையப்பாவின் சுருட்டுக் கொட்டிலில் சுருட்டுத் தொழில் புரியும் அறுபது தொழிலாளர்களுள் ஒருவரான ஐயாத்துரையின் வறுமைத் துன்பம் இந் நாவலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சம்பள நாளன்று கடன் கொடுத்தவனும் வந்து நிற்க ஐயாத்துரையின் மனம் அல்லற்படுகின்றது.
*அவனிடம் அவர் எட்டு மாதங்களுக்கு முன் நூறு ரூபா வீடு மேய்வதற்காகக் கடனாகப் பெற்றிருந்தார். மாதம் பத்து ரூபா வட்டி. இந்த வட்டி ஒரு வகையான வட்டி. ஒவ்வொரு கணக்குத்தீரும் போதும் வட்டி கொடுத்துவிட வேண்டும். சில வேளைகளில் இருபது நாட்களிலும் கணக்குத் தீர்வதுண்டு. நூற்றிப் பத்து ரூபாவை எடுத்து என்னதான் செய்வது?
கடைக்காரச் சின்னத்தம்பிக்கு இம்மாதம் ஐம்பது ரூபா வரை வந்திருக்கும். சிறிது குறைத்துக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளக் கூடியவனுமல்லன். கொப்பியைத் தூக்கி எறிந்து விடுவான்.
*உடுப்பெல்லாம் கிழிஞ்சு போச்சுது, ஐயா. ஒன்றாவது நல்லாயில்லை. என்று அவருடைய மூத்த மகள் மகேஸ்வரி எப்போதோ கூறியவை அவரின் நினைவுக்கு வருகிறது.
சின்னவன் சண்முகநாதன் “கிளரிக்கல்’ சோதனைக்கு விண்ணப்பிக்க இருபது ரூபாய்க்குக் காத்திருக்கிறான். d6JTFIT ஏதோ புத்தகம் வேண்டும் என்றவன்.
மலரும் தன்னுடைய காதுக்குச்சிகளை அடைவு எடுத்துத்
தரும்படி கேட்டவள். அதுவும் அடைவு வைச்சு எவ்வளவு காலம். வேப்பங்குச்சியை காதுத் துளைக்குள் செருகிக் கொண்டு திரிகிறாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (2) Dr.ம.இரகுநாதன்

Page 125
“எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரிய கடன் அவர் தலையை உடைக்கிறது. அவருடைய காணி ஐயாயிரம் ரூபாய் களுக்கு ஈடு வைக்கப்பட்டுள்ளது. அந்த ஈட்டுக்குரிய வட்டி ஒவ்வொரு மாதமும் கட்டப்பட வேண்டும்.”*
நூற்றிப் பத்து ரூபா சம்பளம் பெறுகின்ற ஒரு சுருட்டுத் தொழிலாளியின் வறுமையை மேற்குறிப்பிட்ட பகுதி தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. பணக்காரர்கள் வட்டி வாங்கி உழைப்பதிலும் ஒரு விதமான சுரண்டல் இங்கு காட்டப்படுகின்றது. கணக்கு முடிக்கும் நாளில் வட்டி வாங்குவது. கணக்கு இருபதாவது நாளிலும் முடிக்கப்படும். இதனால் இருபது நாளிலேயே ஒரு மாத வட்டி அறவிடப்பட்டு விடுகின்றது. எனினும் இதனை எதிர்த்து ஏழைத் தொழிலாளிகள் எதைத்தான் செய்ய முடியும். இந் நிலை சுரண்டலுக்கு வாய்ப்பாகி விடுகின்றது.
எனவே பொருள் உள்ளவர்கள் வறியவர்களைச் சுரண்டும் நிலை எங்குமே காணப்படும் பொதுவான கொடுமைதான். இச் சுரண் டலால் தொழிலாளிகள் நித்திய கடனாளிகளாகவும் வறுமையிலிருந்து மீள முடியாதவர்களாகவும் இருக்கும் நிலை நிலைத்து விடுகின்றது.
ஞானரதனின் புதிய பூமி என்னும் நாவல் நில அளவைத் தொழில் புரியும் தொழிலாளர்களின் வாழ்க்கையினையும் மாத்தளை சோமுவின் அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் என்னும் நாவல் இரத்தினக்கல் தோண்டும் தொழிலாளர்களின் வாழ்க்கையினையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன.
புதிய பூமி என்னும் நாவலில் காட்டில் கூடாரங்கள் அமைத்து நில அளவைத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் தமிழ், சிங்கள தொழிலாளர்களிடையேயிருந்த இன முரண்பாடுகள் வர்க்க உணர்வின் முன் அற்றுப் போவதும் எடுத்துக் காட்டப்படுகின்றது. காட்டில் யானையிடமிருந்து காப்பாற்றப்பட்ட முதியான்சே தன்னைக் காப்பாற்றிய ரவீந்திரனுக்கு,
“ஒரு தொழிலாளி என்ற உறவுக்காக மட்டும் நீ இப்படி உயிரைப் பணயம் வைத்து என்னைக் காப்பற்றியிருக்கிறாய். ஆனால் நானோ இன்று வரை உனக்கு என்ன செய்திருக்கிறேன். நீ தமிழன்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (2) Dr.ம.இரகுநாதன்

என்பதற்காக உன்னை என்னுடைய எதிரியாக வெறுத்து வந்திருக் கிறேன். என்னுடைய மனசாட்சியே என்னைக் கொன்றுவிடும் போலிருக் கிறது. நீயோ எல்லாவற்றையும் மறந்து விட்டு மனிதனாய் உயர்ந்துவிட்டாய்.”*
எனக் கூறும் போது இன உணர்வுக்கப்பால் வர்க்க உணர்வு இவர்களை இணைத்து வைப்பது தெரிகிறது.
ரவீந்திரன் யாழ்ப்பாணத்தில் உயர்குடியில் பிறந்த இளைஞன். படித்தும் உத்தியோகம் கிடைக்காததால் எப்படியாவது பிழைக்க வேண்டும் என்ற நிலையிலேயே இத் தொழிலில் இணைகின்றான். இதனை அவனின் வீட்டார் விரும்பாததால் அவன் வீட்டை விட்டே வெளியேறுகின்றான். ரவீந்திரனின் வறுமை குடும்ப கெளரவத்தையே மறந்து எப்படியாவது பிழைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்து கின்றது.
பொதுவாக அந் நாவலினுடாகத் தெரிவது தொழிலாளர்களின் வறுமை, இன முரண்பாடுகளை மறந்து தொழிலாளர்கள் வர்க்க ரீதியில் இணைதல் ஆகிய இரண்டு அம்சங்களே.
மாத்தளை சோமுவின் அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் என்னும் நாவலில் வருகின்ற மணியம் கலுகங்கை ஒரு சொர்க்க பூமி என நினைத்து அங்கே இரத்தினக்கல் தோண்டித் தனது வறுமையைப் போக்க நினைக்கின்றான். ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் அந்த ஊர் நினைத்ததற்கு மாறாக இருப்பதை அவன் உணர்கின்றான்.
“அந்த உலகத்தில் மாணிக்கக் கல் தோண்டியெடுக்க காட்டின் மத்தியில் வாடி போட்டு, முடி வெட்ட முடியாமல், சேவ் எடுக்க நேரமில்லாமல்,தாடி மீசையோடு, பழைய உடுப்புகளோடு வெய்யிலில் கறுத்து, நச்சுப் பாம்புகளையும் காட்டு மிருகங்களையும் எதிர்த்து ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டு இருக்கின்ற மனிதர்களைப் பார்க்கலாம்.
அந்த மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வதற்காகப் போராடுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை லேசானதல்ல “ரெண்டில் ஒண்ணு ஆனாலும் பரவாயில்ல. என்ற முடிவிற்கு வந்த பின்னர்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (23) Dr.ம.இரகுநாதன்

Page 126
தான் இங்கே வேலை செய்ய வந்து விட்ட வாழ்க்கையிலே சலிப்படைந்து எப்படியோ வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் தான். 99164
நகரத்தில் வேலை கிடைக்காமல் இருந்து கலுகங்கையைச் சொர்க்க பூமியாக நினைத்து வந்து ஏமாற்றமடைந்தவர்கள் அங்கு மாதக் கணக்கில் இரத்தினக்கல் தோண்டும் பணியில் ஈடுபட்டு ஏமாற்றமடைகின்றார்கள்.
"........... ஆறுமாசமா கல்லு தோண்டிக் கிட்டிருக்கிறோம். இன்னும் கல்லுத்தான் கெடைக்கல்ல. கெடைக்குங்கிற நம்பிக்கை மட்டும் மனசில இருக்கு. 99.165
என்று ஒரு தொழிலாளி மணியத்திற்குக் கூறுகின்றான். இருவரும் அருகருகே உள்ள இடங்களில் கல்தோண்டுபவர்கள் ஆனால் ஒரு வரை ஒருவர் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
".......... இரண்டு பேரும் ஒரே இடத்தில் தான் இருந்திருக்கோம். ஆனா ஒருத்தரை ஒருத்தர் தெரிஞ்சுக்க முடியல்ல. قا.......... இங்க தெரிஞ்சுக்க முடியாது. தப்பித் தவறி தனியாக ஒருத்தன் காட்டுப்பக்கத்தில செத்தா கூட அவன் செத்ததை கண்டு புடிக்கவே ஒரு கிழமையாகும்"
இக் கூற்றுக்கள் இரத்தினக்கல் தோண்டும் தொழிலாளர்களின் நம்பிக்கையை, நம்பிக்கை வரட்சியை, இயலாமையை வெளிப்படுத்து கின்றன, மொத்தத்தில் இந்நாவலினுடாகத் தெரிவது இத் தொழி லாளர்களின் வறுமைத் துன்பமே.
எனவே கிராமப்புறத் தொழில்கள் பலவும் சாதியடிப்படையி லானவை என்பதால் அத்தகைய தொழிலாளர்கள் தொடர்பான சிக்கல்கள் சாதியம் சார்ந்த இயலில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சாதியடிப்படையில் இல்லாத சுருட்டுத் தொழில், நில அளவைத் தொழில், இரத்தினக்கல் தோண்டும் தொழில் ஆகியவை தொடர் பாகவே இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அத்தகைய தொழிலாளர் களின் வாழ்வைக் காட்டிய படைப்பாளிகளும் அவர்களின் துன்பங் களை மட்டுமே காட்டுகின்றனர். அவற்றிற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து தீர்வு கூறுவனவாக இப் படைப்புக்கள் அமையவில்லை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (2) Dr.ம.இரகுநாதன்

4.6 முடிவுரை
தொகுத்து நோக்கும் போது ஈழத்துத் தழிழ் நாவல்களில் தொழிலாளர்களின் வாழ்க்கையினைப் பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. இவ்வாறு வெளிவந்த நாவல்களிலும் தொழிலாளர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் இவற்றிற்கான காரணங்களையும் அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் செம்மையான முறையில் எடுத்துக் கூறியிருப்பவை மிகவும் சிலவே. பல நாவல்களில் தொழிலாளர்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அவர்களது துயரம் நிறைந்த வாழ்க்கையே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கான காரணங்களை அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளைக் கூற முற்படும் படைப்பாளிகள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகி அவர்கள் இன, மத வேறுபாடுகளைக் கடந்து வர்க்க அடிப்படையில் இணைந்து தம்மை அடக்கி ஒடுக்குகின்ற முதலாளி வர்க்கத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் இத்தகையதொரு பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் அரசை உருவாக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். இவ்வாறாக புரட்சியின் மூலம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவதே தொழிலாளர்களின் பிரச்சினை களுக்கும் ஏனைய சமூகப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என்பது இவர்களின் கருத்தாகும். செ. கணேசலிங்கன், டானியல், அகஸ்தியர், பெனடிக்ற்பாலன், செ.யோகநாதன், சுதந்திரராஜா, காவலூர் ஜெகநாதன் முதலியோரின் படைப்புக்கள் இத்தகைய கருத்தினையே எடுத்துக் கூறுகின்றன. அவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகியுள்ள அதே சமயம் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாகவுள்ள நிலப்பிரபுத்துவம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், அவற்றின் எடுபிடிகள் ஆகியவற்றின் சுரண்டற் கொடுமைகளையும் சர்வாதிகாரப் போக்கையும் அடக்கு முறைகளையும் அம்பலப்படுத்துவதிலும் அக்கறை காட்டியுள்ளனர்,
தொழிலாளர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கையினைக் காட்டி அவர்கள் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த நாவல்களிலும் தொழிலாளர்களின் வறுமை, அவர்களின் உழைப்புச் சுரண்டப்படுவது முதலிய அம்சங்கள் இடம் பெறுவதை அவதானிக்க
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (25) Dr. ம.இரகுநாதன்

Page 127
முடிகின்றது. ஆனால் இத்தகைய நாவல்களில் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணம் ஆராயப்படவில்லை. அத்துடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளும் எடுத்துக் கூறப்படவில்லை. இயல்பான சமூக மாற்றத்தின் மூலம் தொழிலாளர் களின் வாழ்விலும் மாறுதல்கள் ஏற்படுவதையே இந்நாவல்கள் எடுத்துக் காட்டுகின்றன, இத்தகைய நாவல்களை எழுதியவர்களுள் கோகிலம் சுப்பையா, மாத்தளை சோமு, நந்தி, கே.ஆர்.டேவிட் ,செங்கை ஆழியான் முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
பொதுவாகத் தொழிலாளர் பிரச்சினைகளை எடுத்தாளும் நாவல்கள் பலவற்றிலும் வருகின்ற தொழிலாளி வர்க்கத்து இளந்தலை முறைப் பாத்திரங்கள் அடக்குமுறைக்கும், கொடுமைகளுக்கும் அடி பணிய மறுப்பவர்களாகவும் சிறுமை கண்டு “பொங்குபவர்களாகவும்,
அநீதியை எதிர்த்து மூர்க்கத்தனமாகப் போராடுபவர்களாகவும் மூட நம்பிக்கை, போலி ஆசாரங்கள் முதலியவற்றிற்குப் பலியாகாதவர் களாகவும் காணப்படுகின்றனர். இவர்கள் இற்றுப் போன பழைய சமூகத்தை மாற்றிப் புதியதோர் சமூகத்தை உருவாக்கும் மன உறுதி படைத்தவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எழுச்சி பெற்றுக் கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்தைக் காட்டுவதுடன் அவ்வர்க்கத்தின் எதிர்கால சுபீட்சத்திற்கான நம்பிக்கை நட்சத்திரங் களாகவும் காணப்படுகின்றனர். சான்றாக செ. கணேசலிங்கனின் செவ்வானத்தில் வருகின்ற பொன்னையா, மண்ணும் மக்களில் வரும் மாதவன், அகஸ்தியரின் மண்ணில் தெரியுதொரு தோற்றத்தில் வருகின்ற ஜானகி, பொன்ராசா. செங்கை ஆழியானின் காட்டாற்றில் வருகின்ற குருவம்மா, வேலுப்பிள்ளையின் வீடற்றவனில் வருகின்ற இராமலிங்கம், ஞானசேகரனின் குருதி மலையில் வருகின்ற வீரையா முதலியோரைக் குறிப்பிடலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (20) Dr.ம.இரகுநாதன்

சாதி, இன, மத வேறுபாடுகளை மறந்து தொழிலாளர் என்ற வர்க்க உணர்வுடன் அனைவரும் ஒன்று பட்டு நிற்பதையும் சில நாவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. சான்றாக ஞானரதனின் புதிய பூமி, மாத்தளை சோமுவின் அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் ஆகியவற்றைக் காட்டலாம். இவற்றில் தமிழ், சிங்களத் தொழிலாளர் கள் இன முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடுவது காட்டப்படுகின்றது.
இன்று உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கம் எழுச்சி பெற்று வருகின்றது. எனவே எமது சமூகத்திலும் இத்தகைய எழுச்சி தவிர்க்க முடியாததே. இந் நிலையில் எழுச்சி பெற்று வருகின்ற ஒரு வர்க்கத்தின் பிரச்சினைகளைத் தவிர்த்து இலக்கியம் படைக்க முடியாத நிலை படைப்பாளிகளுக்கும் ஏற்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆழமாக அணுகும் படைப்புக்கள் வெளிவரக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்று துணிந்து கூறலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (2) Dr. ம.இரகுநாதன்

Page 128
10.
11.
12.
13.
14.
இயல் நான்கு
அடிக்குறிப்புக்கள்.
கோகிலம் சுப்பையா,
மேலது,
பெனடிக்ற் பாலன்,
ஜோசப், தெளிவத்தை,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
ஞானசேகரன், தி.,
மேலது,
மேலது,
சதாசிவம், புலோலியூர்,
மேலது,
தூரத்துப் பச்சை, 1973, கொழும்பு, ப. 100
L. 101.
சொந்தக்காரன், 1968, சென்னை, ப. 31.
காலங்கள் சாவதில்லை, 1976, கொழும்பு, ப.13,
Lu. 14.
u. 80.
U. 80.
u. 80.
Lu. 81.
குருதிமலை, 1979, கொழும்பு, L. 46.
Lu. 139.
L. 139.
மூட்டத்தினுள்ளே, 1983, கொழும்பு,
u. 31.
Lu. 57.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr. ID-6pegburger

15. மேலது, Lu. 83-84
16. வேலுப்பிள்ளை, சி.வி., இனிப்படமாட்டேன்,1989,
சென்னை, ப. 64.
17. கணேசலிங்கன், செ., சூரியன் கிழக்கில்
உதிப்பதில்லை, 1997, சென்னை, ப. 83-84.
18. (3asтаŠlsolb attisошт, தூரத்துப் பச்சை, ப. 125.
19. மேலது, u. 122-123.
20. பெனடிக்ற் பாலன், சொந்தக்காரன், ப. 107.
21. மேலது, J. 39.
22. மேலது, Lu. 42.
23. மேலது, 1. 47-48.
24. மேலது, U. 21.-22.
25. மேலது, Lu. 17.-18.
26. மேலது, Lu. 18.
27. கோகிலம் சுப்பையா, தூரத்துப் பச்சை, ப. 170-171.
28. நந்தி, மலைக்கொழுந்து, 1964,
யாழ்ப்பாணம், ப. 22.
29. மேலது, J. 23.
30. கோகிலம் சுப்பையா, தூரத்துப் பச்சை, ப. 252-253.
31. மேலது, . 253.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (29) Dr.ம.இரகுநாதன்

Page 129
32. ஞானசேகரன், தி., குருதிமலை, ப. 186.
33. மேலது, L. 186.
34. வேலுப்பிள்ளை, சி.வி., வீடற்றவன்,1981, யாழ்ப்பாணம்,
L. 105.
35. மேலது, Lu. 87.
36. மேலது, L. 109.
37. மேலது, இனிப்படமாட்டேன், ப. 24.
38. மேலது, L. 79-80.
39. சதாசிவம், புலோலியூர், மூட்டத்தினுள்ளே, ப. 205.
40. குமாரி ஜெயவர்த்தனா, இலங்கையின் இன வர்க்க
முரண்பாடுகள், 1987, சென்னை, Lu. 69.
41. கணேசலிங்கன், செ., செவ்வானம், 1967, சென்னை,
L. 295.
42. மேலது, 1. 295.
43. பெனடிக்ற் பாலன், சொந்தக்காரன், ப. 178.
44. மேலது, L. 79.
45. மேலது, L. 180.
46. மேலது, L. 180-181.
47. மேலது, L. 181-182.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (3) Dr. LD-Surgistriar

48.
49.
SO.
51.
52.
53.
54.
55.
56.
57.
58。
S9.
60.
61.
62.
63.
64.
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
சிங்கன் ராஜ், தொ.,
மேலது,
மேலது,
அருளர்,
மேலது,
வேலுப்பிள்ளை, சி.வி.,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
அகஸ்தியர்,
L. 182-183.
Lu. 183.
Lu. 183.
U. 183.
தாயகம், 1969, நூரளை U. 43-44.
Lu. 8.
U. 28.
லங்காராணி, 1988, யாழ்ப்பாணம், Lu. 23-24.
Lu. 27.
இனிப்படமாட்டேன், ப. 36.
u. 36.
ш. 44.
L. 62.
Lu. 64.
Lu. 64.
L. 79.
மண்ணில் தெரியுதொரு
தோற்றம், 1978, கொழும்பு, L. 32 - 33.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr.ம.இரகுநாதன்

Page 130
65. மேலது, எரி நெருப்பில் இடைபாதை
இல்லை, 1992, சென்னை,
L. 92-93.
66. கோகிலம் சுப்பையா, தூரத்துப் பச்சைஈ ப. 62.
67. மேலது, J. 62-63.
68. மேலது, Lu. 63.
69. மேலது, Lu. 83-84.
70. மேலது, Lu. 90.
71. மேலது, L. 101.
72. மேலது, L. 110
73. மேலது, L. 140.
74. மேலது, . 150.
75. மேலது, LJ. 156.
76. மேலது, Lu. 163.
77. மேலது, LJ. 259.
78. பெனடிக்ற் பாலன், சொந்தக் காரன், ப. 5.
79. மேலது, ш. 6.
80. மேலது, u. 49.
81. மேலது, Lu. 49-50
82. மேலது, U. 36.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (3) Dா.ம.இரகுநாதன்

83. ஜோசப், தெளிவத்தை காலங்கள் சாவதில்லை, ப.42.
84. மேலது Lu. 43
85. மேலது, Lu. 116.
86. டேவிட், கே. ஆர்., வரலாறு அவளைத் தோற்று
விட்டது, 1976, கொழும்பு,ப26.
87. மேலது, u. 30.
88. மேலது, Lu. 40.
89. மேலது, L. 47-48.
90. கணேசலிங்கன், செ., மண்ணும் மக்களும், 1996,
சென்னை, ப. 73.
91. மேலது, LJ. 73.
92. மேலது, lu. 77-78.
93. மேலது, u. 82.
94. மேலது, U. 152.
95. மேலது, L. 176.
96. மேலது, u. 176.
97. பாலமனோகரன், அ., நிலக்கிளி, 1973, கொழும்பு,
ս. 137.
98. மேலது, Lu. 139.
99. மேலது, L 130.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (33 0ா.ம.இரகுநாதன்

Page 131
100. செங்கை ஆழியான், காட்டாறு, 1977, கொழும்பு,
ஆசிரியர் முன்னுரை.
101. மேலது, U. 14.
102. மேலது, U. 104.
103. மேலது, L. 104-105.
104. மேலது, L. 105-106.
105. மேலது, L. 109
106. மேலது, U. 124.
107. மேலது, Lu. 236.
108. ஜெகநாதன், காவலூர். எஸ்., கலட்டுத்தரை, 1977 கொழும்பு.
109. மேலது, ப. நாளை, 1982, சென்னை,
u. 126.
110. கணேசலிங்கன், செ., மண்ணும் மக்களும், ப. 106.
111. மேலது, Lu. 106.
112. செங்கை ஆழியான், காட்டாறு, ப. 88.
113. மேலது, L. 88-89.
114. மேலது, L. 90.
115. மேலது, Lu. 200.
116. மேலது, Lu. 208.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (3) Dr.ம.இரகுநாதன்

117.
118.
119.
120.
121.
123.
124.
125.
126.
127.
128.
129.
130.
131.
132.
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
கயிலாசநாதன்,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
செங்கை ஆழியான்,
U. 208.
Lu. 156.
L. 157.
Lu. 158.
L. 158.
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து 1989, யாழ்ப்பாணம். LJ. 16.
LI. 37.
u. 40-41.
L. 94
Lu. 94.
கடற்காற்று, 1973, கொழும்பு, lu. 1.
U. 2.
Lu. 7.
u. 12.
u. 48.
வாடைக்காற்று, 1973,
கொழும்பு, L. 16, 25.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr.ம.இரகுநாதன்

Page 132
133. மேலது, u. 27.
134. அஹமத், வை, புதிய தலைமுறைகள், 1976,
கொழும்பு, ப. 82.
135. அப்பச்சி மகாலிங்கம், கமலினி, 1977, கொழும்பு
Lu. 17-18
136. மேலது, U. 20.
137. கயிலாசநாதன், கடற்காற்று, ப. 6.
138. மேலது, u. 20.
139. மேலது, Lu. 18.
140. மேலது, Lu. 18.
141. மேலது, Lu. 69.
142. மேலது, u. 17.
143. யோகநாதன், செ, காவியத்தின் மறுபக்கம், 1976,
கொழும்பு, ப. 117, கட்டுமரங்கள்.
144. மேலது, Lu. Il 17.
145. மேலது, Lu. 124.
146. மேலது, ஒளி நமக்கு வேண்டும். 1973, மட்டக்களப்பு, ப. 47, தோழமை யென்றொரு சொல்
147. மேலது, Lu. 48
148. மேலது, Lu. 58.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (30) Dr. LD-6prebirger

149.
மேலது,
Lu. 58.
150. கணேசலிங்கன், செ., செவ்வானம், ப. 305.
151. மேலது, L. 305-306
152. யோகநாதன், செ., ஒளி நமக்கு வேண்டும்,
u. 3. இருபது வருஷங்களும் மூன்று ஆசைகளும்.
153. மேலது, Lu. 4.
154. மேலது, Lu. 9.
155. (3LD6hog, L. 22.
156. செங்கை ஆழியான், இரவின் முடிவு, 1976,
கொழும்பு, ld. 4-5.
157. ஞானரதன், புதிய பூமி, 1977, கொழும்பு,
L. 77.
158. சோமு, மாத்தளை, அந்த உலகத்தில் இந்த
மனிதர்கள், 1984, சென்னை
159. மேலது, Lu. 13.
160. மேலது, Lu. 14.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (2з) Dr. D.6 peoplgar

Page 133
5. பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள்
5.0 அனைத்துலக நிலையில் பெண்
உலக சனத்தொகையில் செம்பாகமானவர்கள் பெண்கள். புள்ளி விபர அடிப்படையில் அவர்கள் செம்பாகமாக இருந்தாலும் சமூக நிலையில் ஆண் வர்க்கம் எனப்படுகின்ற மறு பாதிக்குள் அடங்கியவர் களாகவும் பல விடயங்களில் ஆண் வர்க்கத்தைச் சார்ந்தே வாழ வேண்டியவர்களாகவும் பெண்கள் இருந்து வருகின்றார்கள். இந்த அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்டாலே பெண்களின் பிரச்சினை என்றால் என்ன என்ற தெளிவை நாம் பெறமுடியும். பெண் என்பவள் பிறக்கும் பொழுது ஆணுக்குச் சமமானவளாகவே பிறக்கின்றாள், அவளது வளர்ப்பும் சூழலுமே அவளை ஆணில் தங்கி நிற்பவளாகவும் ஆணுக்காகவே வாழ்பவளா கவும் ஆக்கி விடுகின்றன. இத்தகைய நிலை காரணமாக அவர்கள் பலவகை அடக்கு முறைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கின்றார்கள். பல தளங்களில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாகின்றார்கள். அனைத்துலகுக்கும் பொதுவான அந் நிலையை இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் பெண்களிடமும் நாம் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
5.1. ஈழத்துத் தமிழர் சமூகத்தில் பெண்கள்
ஈழத்துத் தமிழரின் சமூகம் குடும்பம் என்ற கட்டமைப்பைக் கொண்டதாகும். திருமணத்தின் மூலம் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குடும்பத்தவளாகி அதாவது இல்லாளாகி வாழும் வாழ்வே பெண்ணுக்குச் சிறப்பானது எனத் தமிழ் மக்கள் கருதுகின்றனர். ஆனால் குடும்ப அமைப்பு ஆணாதிக்கத்தை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டதால் குடும்ப உருவாக்கத்தில் ஆண்களின் நலனே பெரிதும் கவனிக்கப்படுகின்றது. ஆண்கள் தமதும் தமது குடும்பத்த வரதும் நலனைக் கருத்திற் கொண்டே தமக்குரிய பெண்ணைத் தெரிவு செய்கின்றனர். இத்தகைய பெண்தெரிவின் போது சீதனம், சாதி ஆகிய இரண்டு அம்சங்களுமே ஈழத்துத் தமிழர் சமூகத்தில் பிரதான இடத்தினை வகிக்கின்றன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (38) Dா.ம.இரகுநாதன்

இவற்றுள் சீதனம் என்பது ஈழத்துத் தமிழர் சமூகத்தில் இரண்டு வகையாகப் பெற்றுக் கொள்ளப்படுகின்றது. பெண் வீட்டார் தமது பெண்ணுக்காகக் கொடுக்கும் வீடு, காணி முதலிய அசையாச் சொத்துக்களும் ஆபரணங்களும், பணமும் சீதனம் என்ற பெயரில் குறிக்கப்படுகின்றன. இவற்றினை விட அன்பளிப்பு என்ற பெயரில் மாப்பிள்ளையின் வீட்டாருக்கும் ஒரு தொகைப் பணம் வழங்கப்படுகின்றது, இப் பணம் மாப்பிள்ளையின் சசோதரிகளுக்கோ பெற்றோருக்கோ சென்றடைகின்றது.
மாப்பிள்ளை பெற்றுக் கொள்கின்ற அன்பளிப்புப் பணம் அவனின் சகோதரிகளின் வாழ்வுக்கு அவசியமானது என்பதால் ஆணின் தரப்பிலிருந்து அது நியாயப்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்த நியாயப்படுத்தலால் பெண் தெரிவின் போது அன்பளிப்புப் பணம் முக்கிய இடத்தினை வகிக்கின்றது. தனது சகோதரிகளின் வாழ்வுக்காகப் பெண் வீட்டாரின் அன்பளிப்புப் பணத்தை எதிர்பார்த்தே பெண் னைத் தெரிவு செய்ய வேண்டிய நிலைக்கு வரும் போது தான்விரும்பிய பெண்ணைத் தெரிவு செய்ய முடியாத நிலைக்கு ஆணும் வருகின்றான். இதனால் ஆணும் ஒரு வகையில் பாதிக்கப்படுகின்றான். எனினும் வாழ்வையே இழந்து நிற்பவள் பெண்ணே.
சீதனப் பணம் இல்லாத போது பெண்ணுக்கு திருமண வாய்ப்பு இல்லாமல் போய்விடுகின்றது. பல வறிய குடும்பத்துப் பெண்கள் தாரமிழந்த முதியவர்களுக்கு வாழ்க்கைப்பட்டுத் துன்புறுகின்றனர், மேலும் திருமணமாகாத பெண்கள்ஆண்களின் பாலியல் சுரண்டல் களுக்கு உட்படுத்தப்படுவதும். அதனால் பல ஒழுக்கப்பிறழ்வுகள் ஏற்படுவதும் சமூகத்தில் சாதாரணமாகி விட்டபோது தமிழர் பண்பாடு அச்சுறுத்தலுக்குள்ளாகியது. இதனால் சீதனக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரல் சமூகத்தில் ஓங்கி ஒலித்தது. சீதனக் கொடுமையால் பெண்கள் அனுபவித்த துன்பங்கள் பலவற்றை ஈழத்து ஆக்க இலக்கிய காரர்கள் பலரும் எடுத்துக் காட்டினர். இந்த வகையில் ஈழத்துத் தமிழ் நாவல்களில் சீதனக் கொடுமையின் பிரதிபலிப்பு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை நோக்கலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (3) 0ா.ம.இரகுநாதன்

Page 134
5.1.1 திருமணம் தடைப்படுதல்
சீதனக் கொடுமை என்னும் சமுதாயச் சிக்கலினால் தமிழ்ப் பெண்கள் பலரின் திருமணம் தடைப்படுகின்றது. சிலர் திருமண வாய்ப்பையே இழந்து கன்னியாகவே வாழ்வைக் கழிக்கின்றனர். இந்நிலை ஈழத்துத் தமிழ்ப் பெண்களுக்கும் பொதுவானதே. சீதனப் பணம் இல்லாததால் காதல் நிறைவேறாது போய் விடுகின்றது. நிச்சயித்த திருமணம் குழம்பிவிடுகின்றது. சிலருக்கு திருமணப்பேச்சே நடைபெறுவதில்லை. இதனால் பருவ வயதைக் கடந்தும் பல பெண் கள் திருமணமாகாமல் இருக்கின்றனர். இவ்வாறான பெண்களையும் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் ஈழத்துத் தமிழ் நாவல் களிலும் காணலாம்.
செ. கணேசலிங்கன் தனது போர்க்கோலம்' என்னும் நாவலில் சீதனக் கொடுமையால் பருவ வயதைக் கடந்தும் திருமணமாகாமல் இருக்கின்ற பெண்கள் உயர் சாதியினரிடையிலேயே அதிகம் என்பதையும் பஞ்சமர்களிடையே இவ்வாறான பெண்களைக் காண முடியாது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். இக் கருத்தை உயர் சாதி ஆனந்தனுக்கும் பஞ்சமர் சாதி அன்னத்திற்கும் இடையே யான உரையாடல் உணர்த்துகின்றது.
*தீட்டு நிக்கிற வயதிலை அந்தக் கிழட்டுக் குமரை என்னைக் கட்டச் சொல்லிக் கேக்கிறியாடீ. 99
“உங்களுடைய சாதித் திமிரிலை உப்படி ஊரெல்லாம் குமருகள் இருக்க. எங்கடை சாதீக்கை உப்படி ஒன்றைப் பார்க்க LDITL'iquois'
“உங்கடை சாதியைப் போலை சொத்தில்லாமல் சும்மா சோறு கொடுத்துக் கூட்டி விடுற சாதியாடி நாங்க”
*அதிலையும் ஒரு வீரந்தான். உந்தச் சொத்தாலை தானே வீட்டுக்கு நாலு குமருகள் கிழடாகுது, அதுவும் உங்கடை சாதிக்குப் பெருமை தானே”
நாவல் சாதியம் தொடர்பானது என்பதால் மேற்படி உரையாட லிலும் சாதியமே முதன்மைப் படுத்தப்படுகிறது. எனினும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (40) Dr. ID-6pestriar

பஞ்சமர்களிடையே சீதனம் அதாவது சொத்து பற்றிய பிரச்சினை இல்லாததால் பருவ வயதில் பெண்கள் திருமணமாகி விடுகின்றார்கள் என்பதும் உயர் சாதியினரிடம் சொத்து இருப்பதால் அவர்கள் அதற்கு ஏற்றவர்களைத் தேடும் போது பருவம் கடந்து விடுகின்றது என்பதும் தெரியவருகின்றது. எனவே உயர்சாதியினரின் சாதிபார்க்கும் வழக்கம் மட்டுமன்றி சீதன வழக்கமும் அவர்களின் திருமணத்திற்குத் தடையாக அமைந்து விடுகின்றது.
பொ. பத்மநாதனின் பென்னம்மாளின் பிள்ளைகள் (1970) 3 என்ற நாவலில் தாயையும் தந்தையையும் இழந்து உடன்பிறந்த இரு ஆண் சகோதரர்களாலும் கைவிடப்பட்டு அநாதரவாகி நிற்கும் ஆறு பெண்களின் அவல வாழ்வு எடுத்துக்காட்டப்படுகின்றது. குடும்பத் தின் வறுமை காரணமாக கணவன் இருக்கும் போதே இன்னொரு வனிடம் சோரம் போனவள் பொன்னம்மா. பொன்னம்மாளின் மரணம் மூத்த மகள் பாக்கியத்தைக் குடும்பத் தலைவியாக்கி பாரத்தைச் சுமக்க வைக்கின்றது. தாயால் குடும்பத்திற்கு ஏற்படுத்தப்பட்ட கறை தன்னாலோ சகோதரிகளாலோ ஏற்படுத்தப்படக் கூடாது என்ற மன வைராக்கியத்துடன் பாக்கியம் குடும்பத்தை வழி நடத்தி வந்தாள். உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளையே பாக்கியத்தால் நிறைவு செய்யமுடிந்தது. பருவ வயதில் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளுக்குப் பதில் கூற பாக்கியத்தால் முடியவில்லை. திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உணர்ந்த போது தங்கைகளின் பாதைகள் மாறுகின்றன. இரண்டாமவள் சுந்தரி அயல் வீட்டு கந்தசாமி என்ற காவாலிப்பையனிடம் சோரம் போகின்றாள். மூன்றாமவள் மீனாட்சி தமக்கை விரும்பாத இடத்தில் ஒருவனைக் காதலிக்கின்றாள். சகோதரிகளின் நடவடிக்கைகளால் மனமுடைந்த பாக்கியம் வீட்டோடு அனைவரையும் எரித்துக் கொலை செய்து தானும் அந்நெருப்பில் எரிந்து தற்கொலை செய்து கொள்கின்றாள்.
சுந்தரியின் ஒழுக்கப் பிறழ்வுக்கும் ,மீனாட்சியின் பொருத்த மில்லாத் காதலுக்கும் காரணம் பருவவயதில் திருமணம் செய்ய முடியாத நிலையேயாகும். குடும்ப வறுமையால் உணவுக்கே கஷ்டப்படும்போது சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வதென்பது தமது வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒன்றல்ல என்பதை இப் பெண்கள் உணர்ந்தபோது தமது பருவ வயதின் உணர்ச்சிகளிடம் தோற்றுப் போய்விடுகின்றார்கள். திருமண வாய்ப்பு இல்லாமல் போனதற்குக் காரணம் வறுமை என்றே வெளிப்படையாகக் காட்டப்பட்டாலும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (241) Dr.ம.இரகுநாதன்

Page 135
வறுமையால் சீதனம் கொடுத்து மணமகனைத் தேடமுடியாமல் போனதே காரணமாகும்.
1972 இல் வெளிவந்த மணிவாணனின் யுகசந்தி' என்னும் நாவலிலும் பொருளாதார பலமற்று திருமண வாய்ப்பை இழந்த வறிய குடும்பத்துப் பெண்களின் வாழ்வு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
கூலித் தொழிலாளியான தந்தை மதுவுக்கு அடிமையாகிப் பாதியிலேயே வாழ்வை முடித்துக் கொள்கின்றார். மூத்த மகள் கனகம் வறுமையுடன் போராடிப் படித்து ஆசிரியையாக நியமனம் பெறுகின்றாள். ஆசிரியத் தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் அவளின் குடும்ப வறுமையைப் போக்கிவிடும்; ஆனால் அவளின் பருவ உணர்ச்சிகளுக்குத் தீனி போட இப்பணமும் பதவியும் போதுமானவையாக அமைய வேண்டாமா என்ற வினா எழுந்தபோது
96)6T,
*சில வேளைகளில் நினைத்தால் கல்யாணம் செய்து கொள்ளாமலே காலத்தைக் கடத்தலாமென்று தோன்றுகின்றது. அது கஷ்டமானதுதான் என்பதை நானும் உணருகிறேன் அக்கா, ஆனாலும் என்ன செய்வது? கூலியின் மகள் கூலியின் மகள் தானே. உத்தியோகம் பார்க்கிறேன் என்றாற்போல் அந்தத் தரத்தை மாற்றிவிட முடியுமா? அதுதான் இல்லையென்றாலும் சீதனம் என்று கொடுப்பதற்கு நம்மிடம் என்ன இருக்கிறது? ஏதோ எப்படியோ படித்துவிட்டேன் அவ்வளவுதான். வேண்டுமென்றால் ஒன்று செய்யலாம் படிப்பு வாசனையே அற்ற சாதாரண கூலிக்காரன் ஒருவனாகப் பார்த்து கல்யாணம் செய்து வாழ்க்கை நடத்தலாம்.”*
எனக்கூறுவது சீதனக் கொடுமையால் அவள் திருமண வாய்ப்பை இழந்து நிற்பதையும் பொருத்தமில்லாத திருமணத்திற்கு தள்ளப்படக் கூடிய ஆபத்து நிலையை எதிர்நோக்குவதையும் எடுத்துக்காட்டு கின்றது. கனகம் பொருத்தமில்லாத திருமணத்திற்குத் தன்னைப் பலியிட்டுத் தனது வாழ்வைப் பாழாக்கத் தயாராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் பல பெண்களின் வாழ்வு இவ்வாறுதான் பாழடிக் கப்படுகின்றது.
கவிதாவின் கனவுகள் வாழ்கின்றன(1976)6 என்னும் நாவலில் வருகின்ற ஜானகி சீதனம் இல்லாததால் திருமண வாய்ப்பை
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (4) Dr. ID-6.pregistriar

இழந்துவிடுகின்றாள். ஜானகியும் அவளின் அத்தான் குமரேசனும் இளமை முதல் ஒருவரை ஒருவர் விரும்பிக் காதலித்தனர்.
ஆனால் சீதனம் இல்லாத வறியவளான ஜானகியைத் தனது மருமகளாக்கிக் கொள்ள குமரேசனின் தாய் விரும்பவில்லை. இதனால் குமரேசனுக்கு சீதனத்துடன் வேறொரு பெண்ணை மணம் பேசுகின்றனர்.
தமிழர் சமூகத்தில் குறிப்பாக யாழ்ப்பாணச் சூழலில் திருமண விடயங்களில் ஆண்-பெண் இருவரது விருப்பங்கள் கேட்கப்படாமல் பெற்றோரின் விருப்பமே முக்கியத்துவம் பெறுவது வழக்கம். இதனா லேயே குமரேசனின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் பெற்றோர் தமது விருப்பப்படி அவனுக்குத் திருமணம் பேசி நிச்சயித்தனர். புதிய தலைமுறையினர் இத்தகைய வழக்கங்களை எதிர்க்கின்றனர் என்பதற்குச் சான்றாக குமரேசனின் நண்பனான ஞானமணியின் தங்கை மார்க்கிரட்,
“இந்த இருபதாம் நூற்றாண்டில் மணமகனுக்குத் தெரியாம லேயே அவனுக்குப் பெண் பார்க்கும் விஷேஷம் உங்கள் வீட்டிலை தான் நடக்குது.”
என்று குமரேசனுக்குக் கூறுவதை எடுத்துக் காட்டலாம்.
குமரேசன் புதிய சிந்தனைகளால் கவரப்பட்ட இளைஞன் என்பதால் சீதனத்திற்காகப் பேசப்பட்ட திருமணத்திற்கு உடன்பட மறுக்கின்றான். எனினும் அவன் வாழ்ந்த பாரம்பரியத்தை மீறுவது அத்தனை இலகுவானதல்ல என்பதால் உடனடியாக ஜானகியை மணந்து கொள்ள அவனால் முடியவில்லை. பெற்றோரின் விருப்பத் திற்கு மாறாக நடந்துகொள்ள முடியாததாலும் புதிய சிந்தனைகளின் தாக்கத்தாலும் அவன் வீட்டை விட்டு வெளியேறுகின்றான். வீட்டை விட்டு வெளியேறியவன் கொழும்பில் தங்கியிருந்தபோது தனது நண்பனின் தங்கை விமலாவைத் திருமணம் செய்து விடுகின்றான். இதனால் ஜானகியின் வாழ்வு கனவாகிவிடுகின்றது. நாவலாசிரியர் சீதனக் கொடுமையின் தாக்கத்தை நேரடியாகப் புலப்படுத்தாவிடினும் ஜானகியின் வாழ்வு கனவாகிப் போனதற்கு அவளால் சீதனம் கொடுத்துக் குமரேசனை மணம் முடிக்க முடியாமற்போனதே அடிப்படைக் காரணமாகும்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (43) Dr. ID-6peprisair

Page 136
நயிமா.ஏ.பவரின் வாழ்க்கைப் பயணம் என்னும் நாவல் 1974 இல் வெளிவந்தது.8 ஹிதாயா என்ற வறிய இஸ்லாமியக் குடும்பப் பெண்ணின் வாழ்வு
சீதனத்தால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பதை இந்நாவல் எடுத்துக் காட்டுகின்றது. ஹிதாயா ஏழ்மை மிக்க குடும்பத்தில் பிறந்தவள்: படித்தவள்: ஆசிரியையாகப் பணிபுரிபவள். அவளின் அழகில் மயங்கிய பணக்கார வாலிபனான ஜமீல் அவளைக் காதலிக்கின்றான். ஜமீலின் காதலை ஏற்றுக் கொண்ட அவனின் தந்தை ஹிதாயாவைப் பெண்பார்க்கச் செல்கின்றார். சம்பிரதாய பூர்வமான நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் ஜமீலீன் தந்தை,
“பெண்ணை எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் எவ்வளவு கொடுப்பீர்கள்.?
எனக் கேட்கின்றார், இதற்குப் பதில் கூறமுடியாத ஹிதாயாவின் தாய் ரஹற்மத்தும்மாவின் மெளனத்தைக் கண்ட பெரியவர் ஒருவர்,
“இப்ப பாருங்க உம்மா. இந்தக் காலத்தில பணமில்லாமல் ஒன்னையுமே செய்யமுடியாது. நம்மட ஜமீலுக்கு ஐம்பதாயிரம் அறுபதாயிரம் என்று பேசி வாராங்க. பண்டாரவளை ஹசைன்ஸ் டோர்ஸ் காரங்க கூட எழுபத்தையாயிரம் தர்ரேன்னு சொல்றாங்க...”
என்று கூறுகின்றார். ஹிதாயா சீதனம் கொடுக்க முடியாத ஏழை என்பதை அறிந்துதான் ஜமீல் அவளைக் காதலித்தான் என்பதை உம்மா நினைவூட்டுகின்றாள்.
*தம்பி ஜமீல் தெரிந்துதானே இங்கு வந்து பழகிறாரு. 991
என்று அவள் கூறியதும் ஆத்திரமுற்ற ஆண் குரலொன்று பெரிதாய்,
"D-LibLDIT............ நீங்க சொல்றது நல்லாவேயில்லை. ஆம்புளப் பிள்ளைக்கு என்ன. சேத்தைக் கண்டா மிதிப்பான் 8 m w x O ஆத்தைக் கண்டால் கழுவுவான். இதையெல்லாம் நீங்க தான் தெரிஞ்சு நடந்திருக்கணும்.”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (4) Dr. D-6 prepairgar

எனக் கூறுகின்றது. ஜமீலின் தந்தை “கடைசியாகச் சொல் கிறோம். இருபத்தைந்து பணமாக பத்து நகையாக”
என்று கண்டிப்பான தொனியில் கூறிவிட்டு சிற்றுண்டிகளைச் சாப்பிடாமலே போய் விடுகின்றார்.
ஏழைப் பெண் என்று தெரிந்தே காதலித்த ஜமீல் பெற்றோரின் முன் பேசாமடந்தையாகி நிற்க சீதனம் இல்லையே என்பதற்காக காதல் நிராகரிக்கப்படுகின்றது . மறுவாரமே அவன் வேறு திருமணம் செய்துவிடுகின்றான். ஹிதாயா ஏமாற்றப்பட்டு வாழ்வை இழந்து விடுகிறாள். இங்கு சீதனத்தால் காதல் நிறைவேறாது போக திருமணவாய்ப்பையே அவள் இழக்கின்றாள். இறுதியில் அவளை இன்னொருவன் சீதனம் இல்லாமல் திருமணம் செய்ய முற்படுகின்றான். ஆனால் அவள் அதற்கு முன்பே விபத்தில் இறந்து விடுகின்றாள்.
மஹற்றுப் போன்ற இளைஞர்கள் சீதனம் வாங்காமல் மணம் முடிக்க முற்பட்டாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வுள்ள இடங்களில் வாழ்வு மலராது என்பதையே அவளின் மரணம் எடுத்துக் காட்டுகின்றது. புதிய சிந்தனைகள் உருவாகி வருவதை மஹற்றுாப்பின் வடிவில் காணமுடிந்தாலும் சமூக பொருளாதார அமைப்பு மாறாதபோது புதிய சிந்தனைகள் செயலற்றுப்போய்விடும் என்பதை ஹிதாயாவின் மரணம் தெரியப்படுத்திவிடுகின்றது. எனவே சீதனம் இல்லை என்றால் காதலும் கை கூடாது: திருமண வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என்பதை இந்நாவலின் மூலம் உணரமுடிகின்றது.
ஜோன். ராஜனின் போடியார் மாப்பிள்ளை (1976)" என்னும் நாவல் மட்டக்களப்பில் கன்னங்குடாவில் வாழும் போடியார் சமூகத் தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டதாகும். இந்நாவலிலும் போடியார் சமூகத்தில் உள்ள சீதனக் கொடுமையின் தன்மை எடுத்துக் காட்டப்படுகின்றது
போடியார் கதிர்காமத்தம்பியின் மகன் செல்லத்துரை ஏழைக் குடும்பத்துப் பெண்ணான கற்பகத்தைக் காதலிக்கின்றான். காதலித் தவனுக்குத் தனது காதலை எடுத்துக்கூறி அவளை மணந்து கொள்கிற துணிவில்லை. பெண்வீட்டாரே முறைப்படி மாப்பிள்ளை கேட்டு வரவேண்டும் என்று கற்பகத்திடம் கூறுகின்றான். அதை ஏற்றுக் கொண்ட கற்பகம் அவ்வாறு செல்லும் போது சீதனம்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (49 Dr. LD-6peprger

Page 137
கேட்கப்பட்டுத் திருமணம் தடைப்படுத்தப்படும் என்பதை அவனுக்கு எடுத்துக் கூறுகின்றாள்.
“சரி அப்படித்தான் வாறமெண்டு வச்சுக் கொள்ளுங்கோ! உங்கட அப்பா, அம்மா, கொள்ளையாய்ச் சீதனம் கேட்டா-? உடுத்த சீலையும், காதில கழுத்தில் கிடக்கிற இந்தக் கிலுட்டு நகைகளையும் விட வேறென்ன என்னிட்ட இரிக்கி..??
இது கற்பகத்தின் நிலை. இத்தகைய நிலையிலுள்ள கற்பகத்தை மருமகளாக ஏற்றுக் கொள்வதற்க்கு செல்லத்துரையின் பெற்றோர் விரும்பவில்லை. அவர்கள் நிறைந்த சீதனத்தோடு பாலப்போடியாரின் மகளை மருமகளாக்கிக் கொள்ளவே விரும்புகின்றனர்.
"............ பள்ளிக்குப் போய் வரக்குள்ளயே ரவுணில’ உள்ளவளுகளப் போல பெருந்தொடை தெரியிற சட்டையும், பல்லிளிப்பும் அவளுக்க! போன கண்ணயம்மன் திருவிழாவுக்க பாக்க வேணுமே, அவள் ஆடித் திரிஞ்ச ஆட்டத்தையும் அவளுக்குப் பின்னால ஒடித்திரிஞ்ச இளந்தாரிகள் கூட்டத்தையும்! அவள் ஆருக்க வலைவீசித் திரியிறாளோ எண்டு சமுசயப்பட்டுக் கொண்டிருந்தன்! இப்பதான் தெரியுது அவள் வலை வீசினது உனக்குதானெண்டு”
இது செல்லத்துரையின் தாய் கற்பகத்தின் மீது கூறிய வசை.
*கட்டத்துணியில்லாதவள் எண்டான்ன மரியாதையான குமராயி ருந்தா நமக்கென்னெண்டு விட்டிடுவம்? இவன் வாக்குக் குடுத்த அந்தக் குமரப்பத்தி ஊருக்க நல்ல கதையில்ல! மற்றது.துரையப்பா வாத்திக்கு படிப்பிக்கிறதால வாற சம்பளத்தைத் தவிர வேற படுற பாடு அய்யோ வாயால சொல்லேலே! இவ்வளவுக்கும் மாப்பிள்ளை தேடேலாதெண்டுதான் எல்லாத்தையும் தந்திரமா ஊர்வழிய உலாத்த விட்டிருக்கிறான்.”*
இது செல்லத்துரையின் தந்தை கற்பகத்தின் மீதும் அவளின் சகோதரிகளின் மீதும் கூறிய வசை, சீதனம் இல்லாத வறுமைநிலை இப் பெண்களை அநியாயமான வசை மொழிக்கு ஆளாக்குகின்றது. கற்பகத்தின் மீது வீணான வசைமொழிகளைக் கூறிச் செல்லத் துரையின் மனதை மாற்றிவிடலாமென்று அவர்கள் நினைக்கின்றார்கள். நாவலின் முடிவில் செல்லத்துரையும் கற்பகமும் இணைந்தாலும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ઉ4) Dr.ம.இரகுநாதன்

சீதனம் இல்லாத நிலையில் காதல் கூட நிறைவேறத் தடையாவது தெரிகின்றது.
செங்கை ஆழியானின் கங்கைக்கரை ஓரம் (1978)? என்னும் நாவலில் வருகின்ற சிவராசா - கங்கா காதல் நிறைவேறாது போனதற்கும் கங்காவின் கனவுகள் கனவுகளாகவே அமைந்து அவள் திருமண வாய்ப்பை இழந்ததற்கும் சீதனக் கொடுமையே காரணமாகும். வறிய குடும்பத்தில் பிறந்து பல்கலைக்கழகம் சென்றவன் சிவராசா. அவனின் காதலி கங்காவும் ஏழ்மையான குடும் பத்தில் பிறந்தவள் தான். சிவராசாவின் கல் விக்காக ஈடுவைக்கப்பட்ட காணி, அவனின் உழைப்பை எதிர்பார்த்திருக்கும் சகோதரிகள் இவ்வளவையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சிவராசாவின் மாமன் ஈடு மீண்டு சகோதரிகளுக்கும் வாழ்க்கை தேடித்தந்து. சிவராசனையும் தனது மகள் சரோசாவுக்கு மணம் செய்து வைக்க விரும்புகின்றார். சிவராசாவின் பெற்றோரும் இதற்கு உடன்படுகின்றனர். சிவராசாவின் குடும்ப நிலையை அறிந்த கங்கா தனது காதலைத் தியாகம் செய்கின்றாள் சிவராசன் தனக்காக வாழ முடியாதவன் அவனை எதிர்பார்த்துப் பல சகோதரிகள், ஈடு வைத்த காணி இவையெல்லாம் இருக்கும்போது இவையனைத் தையும் தன்னால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் காதலும் பணக்காரர்களுக்கே உரியது என நினைத்து அவள் தனது காதலைத் தியாகம் செய்கின்றாள். சீதனம் இல்லாத ஏழைகள் காதலிக்க முடியாத சமூகத்தில் பணக்கார சரோஜாவிடம் கங்காவின் காதல் தோற்றுப்போய்விடுகின்றது. இதனால் கங்கா திருமண வாய்ப்பையே இழந்து கன்னியாகவே வாழ்கின்றாள்.
கங்காவிடம் சீதனம் இல்லை. அவளைச் சீதனமின்றி மணந்து கொண்டால் சிவராசனின் சகோதரிகளின் வாழ்வு பாதிக்கப்படும். இத்தகைய முரண்பாடான நிலையில் சிவராசனின் தரப்பிலிருந்து சீதனம் வாங்க வேண்டிய தேவை எடுத்துக் காட்டப்படுகின்றது. சிவராசன் சீதனம் வாங்கியே சகோதரிகளின் வாழ்வை மலரவைக்க முடியும் என்ற நிலையில் அவனும் தனக்காக வாழ முடியாதவனா கின்றான். எனவே காதலும் பணக்காரர்களுக்கே உரியது என்பதை ஆசிரியர் உணர்த்தி விடுகின்றார். எனவே தற்போதுள்ள சமூக அமைப்பு மாறாதவரை சீதனக் கொடுமையும் ஒழியப்போவதில்லை. சீதனக் கொடுமை நிலைத்திருக்கும்வரை பெண்களின் வாழ்வு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (4) Dr. ம.இரகுநாதன்

Page 138
துன்பமாகவே இருக்கும்; இதற்கு எடுத்துக் காட்டு கங்காவின் வாழ்வு அவளின் காதல் நிறைவேறமுடியாமல் அவள் திருமண வாய்ப்பையே இழந்ததற்குச் சீதனக் கொடுமையே காரணமாகும். மறுபக்கத்தில் ஆண்கள் கூட தமக்காக வாழமுடியாமல் துன்பப்படுவதற்கும் இச் சீதனக் கொடுமை காரணமாகிவிடுகின்றது என்பதையே சிவராசனின் வாழ்வு எடுத்துக் காட்டுகின்றது. எனவே சீதனக்கொடுமை தனியே பெண்களை மட்டும் பாதிக்கவில்லை ஆண்களையும் பாதிக்கின்றது என்பது உணர்த்தப்படுகின்றது.
செங்கை ஆழியானின் காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள் (1983)20 என்னும் நாவலில் யாழ்ப்பாணத்துச் சமூகத்திலுள்ள திருமணமாகாத இளம் பெண்கள் பலரின் பெரு மூச்சுக்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
இந்நாவலின் பிரதான பாத்திரமாக வருகின்ற மனோரஞ்சிதம் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் ரவீந்திரனைக் காதலிக் கின்றாள். படிப்பு முடிந்து அவள் ஆரம்பித்தபோது அவளை ரவீந்திரனுக்குத் திருமணம் செய்துவைக்க அவளின் பெற்றோர் விரும்பவில்லை. அவளின் உழைப்பு அவர்களுக்குத் தேவைப்படு வதால் அவளின் வாழ்வு தடுக்கப்படுகின்றது. அவளுக் காகக் காத்திருந்த ரவீந்திரன் வேறு திருமணம் செய்துவிடுகின்றான். இதன் பின்னர் மனோரஞ்சிதத்திற்குப் பேசப்படும் திருமணங்கள் எல்லாமே தடைப்படுகின்றன. மாப்பிள்ளை வீட்டார் கேட்கும் வீடு, டொனேசன் அனைத்தையும் கொடுக்கமுடியாததால் அவள் திருமண வாய்ப்பை இழக்கின்றாள்.
இந்நாவலில் வருகின்ற மற்றொரு பெண்ணான சித்திரா என்ற ஆசிரியையும் சீதனக் கொடுமையால் திருமண வாய்ப்பை இழக்கின்றாள். அவள் தனது வாழ்வு பழாகிப்போனது பற்றிக் கூறும்போது இந்தச் சமூகத்தையே வெறுக்கின்றாள். அவள், “பெண்ணாகப் பிறக்கக் கூடாது. பெண்ணாகப் பிறந்தாலும் யாழ்ப்பாணச் சமூகத்தில் ஒருக்காலும் பெண்ணாகப் பிறக்கக்கூடாது. பாவம் செய்த சமூகம் .பேராசை பிடித்த சமூகம்:. 992
என்று தனது மன வெறுப்பை வெளிப்படுகின்றாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (48) Dr. LD-6.Uebirgeir

இவள் தனது தகுதிக்கு ஏற்ற வாழ்வையேதேடினாள். அதனைக் கூடப்பெறுவதற்குச் சீதனக்கொடுமை தடையாகிவிடுகின்றது. அவளே தனது நிலைமையைப் பின்வருமாறு கூறுகின்றாள்.
“எனக்கொன்றும் பெரியதொரு உத்தியோகத்தன் மாப்பிள்ளை யாக வரவேண்டும் என்று நான் ஒருக்காலும் எண்ணியதில்லை. எங்களிடம் இருக்கின்ற சீதனத்திற்கு அளவாக ஒரு மாப்பிள்ளையைத் தான் என் தப்பனார் தேடினார். எத்தனையோ பேர் வந்தார்கள். அவர் களுக்காக அலங்கரித்து அலங்கரித்தே நான் தேய்ந்து போனேன். ஒருவருக்குப் பொம்பிளை பிடிக்கவில்லை: இன்னொரு வருக்கு சீதனம் போதவில்லை: இன்னொருவருக்கு தங்கைக்கு டொனேசன் வேண்டுமாம். இப்படி. இப்படி .என் வயது ஏறியதுதான் மிச்சம்.”
இவ்வாறான சீதனக் கொடுமையினால் திருமண வாய்ப்பை இழந்தபோது அவள்,
“கலியாணம் இப்ப யாழ்ப்பாணத்தில் ஒரு வர்த்தகம்போல லாப நோக்கம் பார்க்கும் வர்த்தகம் போல. பணம் படைத்தவர்கள் சற்றுப் படித்த நல்ல உத்தியோகத்திற்கு வந்த இளைஞர்களைத் தேடிப்பிடித்து அவர்களின் சீதனத்தைப் போட்டி போட்டு அதிகரிக்க வைக்கிறார்கள் அந்த வர்த்தகப் போட்டியில் எங்களைப் போன்ற சாதாரண பெண்கள் மூலையில் ஒதுங்கிக் கொள்ள வேண்டியது g5 T6.’
என்ற முடிவுக்கு வருகின்றாள். இம் முடிவு சமூக யதார்த்தத்தி னுாடாக ஆசிரியர் கூறும் முடிவாகவே கருதத்தக்கதாகும்.
சந்திரா தியாகராஜாவின் நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள் (1988)" என்னும் குறு நாவலிலும் சீதனக் கொடுமையால் திருமண வாய்ப்பை இழக்கும் பெண்களின் துயரம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந் நாவலில் வருகின்ற சிவராசா என்பவர் ஒரு சாதாரண அரசாங்க ஊழியர். மாதா மாதம் கிடைக்கின்ற சம்பளத்தோடு அவரின் குடும்பத்தைச் சமாளிக்க அவருக்கு உறுதுணையாக இருப்பது எட்டுப் பரப்புத் தென்னந்தோட்டம். இவ்வருமானங்களால் வறுமையின்றி வாழ்க்கையை நடத்தலாம். ஆனால் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் சீதனம் கொடுப்பதற்கு அவரால் எதையும் செய்து விட முடியாது. அவரே தனது குடும்ப நிலையைக் கூறுகின்றார்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (49) Dr. D-6 respirger

Page 139
... ரெண்டு குமருகளை வைச்சிருக்கிறதெண்டால் இந்த நாளையில.. ரெண்டு பாதாளக் கிடங்குகளை வெட்டி வைச்சிருக்கிற மாதிரி. நாங்கள் அதுக்குள்ளை குதிச்சால் தான் அதுகளை வாழவைக் கலாம். அதுகள் வாழுறது யாழ்ப்பாணத்திலை. கலியாணப் பேச்சுக்கள் சூடுபிடிக்கேக்கைதான். பெண்ணைப் பெத்தவை எவ்வளவு உழைக்க வேணுமெண்டு உனக்குத் தெரியும்.”
இது இரண்டு பெண்பிள்ளைகள் உள்ள ஒரு சாதாரண அரசாங்க ஊழியரின் நிலை. இத்தகைய ஒருவரின் பிள்ளைகளுக்கே திருமணத்தை முடித்து வைப்பதில் பெற்றோர்கள் "துன்பப்படவேண்டி யிருக்கின்றது என்றால் பல பெண்கள் உள்ள வறிய குடும்பத்துப் பெண்களின் நிலைபற்றிப் பேச வேண்டியதில்லை. மேலும் சிவராசா யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு திருமணம் பற்றித் தனது வெளிநாட்டு மருமகனுக்குப் பின்வருமாறு கூறுகின்றார்.
e...... பெடியன் ரெக்னிக்கல் ஒவீசர். பெட்டை ஏ.எல் வரையும் படிச்சவள்: அவளுக்குக் கீழை இன்னும் மூன்று குமருகள் இருக்குது கள்! சீதனம். எவ்வளவு தெரியுமே? எழுபத்தையாயிரம் காசு, பெட்டைக்கு வேண்டிய நகைகள், மாப்பிள்ளை வீட்டாருக்குப் பிடிச்ச மாதிரி வீடு! இப்ப. அந்தப் பெட்டையின்ரை தகப்பன் அரைவாசி யாய்ப் போனான். அவன் ஒரு கிராஜ்வேட் ரீச்சர். இருந்தும் என்ன் சுகத்தைக் கண்டான்? கஷ்டப்பட்டுச் சேர்த்து ஒருத்தியைத்தான் கரை சேர்த்தான். இனி. மற்றதுகளின்ரை பாடு என்ன? இதுகளை எல்லாம் யோசித்துப் பார்க்கிறபோது உண்மை யாகவே எனக்கு வயிறு பத்தி எரியுது.”*
இங்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் தனது மூத்த மகளுக்கு ஒரு “ரெக்னிக்கல் ஒவீசரை மணமகனாக எடுப்பதற்குத் தனது சொத்துக் கள் முழுவதையும் சீதனமாகக் கொடுத்துவிட்டு ஏனைய மூன்று பெண்களுக்கும் எதைச் செய்வது எனத் தெரியாமல் வயிறு பற்றி எரிவதாகக் கூறுகின்றார். இது யாழ்ப்பாணத்துப் பெற்றோர்கள் பலரதும் நிலையினையே எடுத்துக் காட்டுகின்றது. இங்கு உழைப்பு முழுவதும் ஒருத்தியோடு போய்விட ஏனையோரின் திருமணம் நிச்சயமற்றதாக அமைகின்றது. இந்த நிலை மாறுவதற்குச் சீதனக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டியது அவசியமாகும் என்பதை ஆசிரியர் உணர்த்தி விடுகின்றார். ஆசிரியரின் சீதனக் கொடுமைக்கு எதிரான கருத்தையே ராமின் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன. அவன்,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (5) Dr.ம.இரகுநாதன்

“என்னைப் பொறுத்த வரையில் ... புதிசாய் கலியாணஞ் செய்யிறவையஞக்கு புறம்பாய் வாழுறதுக்கு ஒரு வீடு அவசியம்தான். அதுக்காக சீதனமாய்க் காசு, இனாம் எண்டெல்லாம் வாங்கிறது சுத்த அடாவடித்தனம் எண்டு நினைக்கிறவன் நான். வீடு கூட பெண் வீட்டாரை வற்புறுத்திக் கேட்கக் கூடாது. அவைகளுக்குத் தரக்கூடிய வசதியிருந்தால் வாங்கலாம். இல்லாவிட்டால் இரு பக்கத்தாரும் ஒண்டாச் சேர்ந்து ஒரு வீட்டு வசதியைக் கொடுக்கலாம். அதுதான் முறையெண்டு நானே எனக்குள்ளை யோசிக்கிற மாதிரி எல்லாரும் யோசித்தால் . நீங்கள் சொன்ன மாதிரியான அவலங்கள் வரவே வராது.”
எனக் கூறுகின்றான். சீதனக் கொடுமையைப் போக்குவதற்கு ஆசிரியர் ராமின் மூலமாகக் கூறும் கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்கலாம். ஆனால் இக் கருத்துக்களைக் கூறுவதற்கு ஆசிரியர் தெரிவு செய்த பாத்திரம் குடும்பத்தில் ஒரே ஒரு பிள்ளை, வெளிநாட்டில் உழைத்த பணத்தோடு ஊருக்குத் திரும்பியிருப்பவன் இந்த நிலையிலுள்ள ராமுக்கு சீதனம் வாங்குவதில் உள்ள மறு பக்க நியாயங்கள்தெரியவர வாய்ப்பு இல்லை. தனது சகோதரிகளின் வாழ்வுக்காகவும் பல இளைஞர்கள் சீதனம் வாங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு கிறார்கள். செங்கை ஆழியனின் கங்கைக் கரை ஓரம் என்ற நாவலில் வருகின்ற சிவராசாவின் காதல் நிறை வேறாது போனதும் அவன் தனக்காக வாழ முடியாதவன் என்ற யதார்த்தம் உணர்த்தப்பட்டதும் முன்னர் எடுத்துக் காட்டியிருந்தோம். எனவே சீதனக் கொடுமை தனி மனிதர்களின் தியாகங்களாலும் விருப்பு வெறுப்புக்களாலும் ஒழிக்கப்படக் கூடியதல்ல. சமுதாய மாற்றமே இதனை ஒழிக்கக் கூடியதாகும்.
1989 இல் வெளிவந்த செ. கணேசலிங்கனின் சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை" என்ற நாவலில் திருமண பந்தத்தையே வெறுத்து நிற்கும் பெண்கள் பற்றிக் காட்டப்பட்டுள்ளது.
*ஒருவனுக்குச் சமைத்துப் போட்டுப் பிள்ளை பெற்றுக் கொடுத்து
அடிமைப் பணிகளும் செய்ய நான் தயாரில்லை.”
எனக் கூறும் சித்திரா திருமண பந்தத்தை வெறுத்து வெளி நாட்டில் பணிப் பெண்ணாகப் பணிபுரியச் செல்கின்றாள். பெண்கள் சீதனம் போன்ற நடைமுறைகளாலும் வேறு காரணங்களாலும் வாழ
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s) Dr.ம.இரகுநாதன்

Page 140
முடியாதவர்களாக்கப்பட்ட நிலையினை இனி மாற்ற முடியாது எனக் கருதியே சித்திரா போன்றவர்கள் குடும்ப அமைப்பை உடைத்து வெளியேறுகின்றனர். எனவே இவர்களைக் குடும்ப அமைப்பினுள் நிலை நிறுத்த சீதனம் ஒழிக்கப்பட்டு திருமண வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இதன் மூலம் தமிழர் பண்பாடு சிதைந்து போவதைத் தடுக்க முடியும்.
5.1.2 பொருந்தா மணம்
சீதனம் இல்லாத காரணத்தினால் திருமண வாய்ப்பை இழந்து நிற்கும் இளம் பெண்களைத் தாரமிழந்த வயது முதிர்ந்த ஆண்கள் இரண்டாந் தாரமாக மணக்க முற்படுகின்றார்கள். இத்தகைய பொருந்தா மணத்தினால் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை ஆரம்ப கால நாவலாசிரியரான அ. நாகலிங்கம் என்பவரும் தனது சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ்சியம் (1927)" என்னும் நாவலில் எடுத்துக் காட்டியுள்ளார்.
இவரது நாவலில் வருகின்ற கனகசூரியர் தாரமிழந்தவர் தாரமிழந்த கனகசூரியர் கிழ வயதிலும் மறு விவாகம் செய்ய விரும்புகின்றார். இதற்கு ஏழைக் குடும்பத்தில் பிறந்து சீதனமின் மையால் திருமணம் செய்ய முடியாமல் இருந்த விசாலாட்சி பலியாகின்றாள். பதினைந்து வயதான விசாலாட்சியை மறுமணம் செய்யவுள்ள கனகசூரியரின் தோற்றத்தை ஆசிரியர் பின்வருமாறு சித்திரிக்கின்றார்.
“தலைமயிர் முழுவதும் நரைத்துப் போய்விட்டது. சிறிது கூனிக் கூனியே நடப்பார். மீசையும் நரைத்துவிட்டது. மேல் வாயிலும் சில பற்கள் விழுந்து போயின. என்றாலும் தான் விவாகம் செய்யப் போகின்றமையால் தான் ஓர் வாலிபனாக நடிக்க வேண்டுமென்று எண்ணங் கொண்டவராய் விழுந்த பற்களுக்குப் பதிலாக தங்கப் பற்களைக் கட்டுவித்தார்.மீசையை வைத்திருந்தால் நரை மயிர் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமென்று கருதி அதையெடுத்து விட்டார். முகச் செளரம் சிறிது காலத்துக்கு நாள் வீதம் செய்விக்கலாமென்று எண்ணியிருந்தார். தலையிலிருக்கும் மயிரும் நரை மயிராய்த் தோன்றுமென்று கருதியதைச் சிறிது நாளைக்குத் தெரியவிடாதபடி ஆங்கிலேயருடைய தொப்பியைப் பகல் முழுவதும் கழற்றாமல் மாட்டிக்கொள்ள எண்ணியிருந்தார். கையில் பத்தரை மாற்றுத் தங்கப்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s) Dr.ம.இரகுநாதன்

பூண் போட்ட பிரம்பொன்று பிடித்துக்கொண்டார். கை விரலிலே விலையுயர்ந்த நீலக்கற் பதித்த மோதிரமொன்று அணிந்திருந்தார்.”*
இவ்வாறான தோற்றங் கொண்ட கனகசூரியருக்கு விசாலாட்சியை மணஞ் செய்து வைப்பதன் கொடுமையை இவர் சமூகத்தின் குரலாகவே எடுத்துக் காட்டுகின்றார்.
“இந்தத் தள்ளாதவயதில் இவருக்கென்ன விவாகம் என்றவர் சிலர். ஏழெட்டுக் குழந்தைகளிருப்பதால் வீட்டில் ஓர் பெண் தேவைதானே என்றவர் சிலர். குழந்தைகளுடன் இருக்கும் கிழப் பிணத்துக்குக் கலியாணமென்ன கலியாணம் என்றவர் சிலர்.
w s a பதினைந்து வயதுப் பெண் பிள்ளை இக் கிழவனுடன் என்ன சுகத்தையனுபவிக்கப் போகிறாள் என்றவர் சிலர். இப்படியான விவாகத்தை ஒழுங்கு பண்ணிய தாய் தந்தையரின் மூளை களிமண்ணாயிருக்கலாம் என்றவர் சிலர்.”*
பொருத்தமில்லாத இத் திருமணத்தை சமூகத்தில் பெரும் பாலானவர்கள் எதிர்க்கின்றனர். எனினும் ஆணாதிக்கத்திற்குக் கட்டுப் பட்டு தந்தையின் வார்த்தைக்கு மறுப்புக் கூறமுடியவில்லை, அவள்,
“தாங்கள் எனது வருங்கால நன்மையைக் கருதியிருந்தால் தெருவில் போகின்ற ஓர் கூலியாளுக்குத் தன்னும் என்னை விவாகம் செய்துவைத்தால் மிக ஒற்றுமையாகவும் இன்பமாகவும் வாழக் கூடியதாயிருந்திருக்கும். வறுமை காரணத்தால் சீதனம் இல்லையென்று அடாத வேலையைச் செய்து பாணர் கிணற்றிற்குள் தள்ளி விட்டீர்களே.
இனிமேல் எனது சகோதரிமாருக்கும் இவ்வித விவாகங்களை ஒழுங்கு பண்ணாமல் வறிய குடும்பத்திலுதித்தவர்களானாலும் அவர்களுக்குத் தோதான மாப்பிள்ளைகளைத் தேடி மணம் முடித்து வைக்கும் வண்ணம் வேண்டிக் கொள்ளு கின்றேன்”33
எனக் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டுத் தீமூட்டித் தற் கொலை செய்து கொள்கின்றாள். விசாலாட்சியின் தற்கொலை ஆசிரியர் இத் திருமணத்தை விரும்பவில்லை என்பதையே உணர்த்து கின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s3) Dr.ம.இரகுநாதன்

Page 141
மேலும் தாய் தந்தையரின் பேச்சைக்கேட்டு சீதனத்தை மாத்திரம் கருத்திற் கொண்டு பொருத்தமில்லாத திருமணங்களைச் செய்யும் இளைஞர்களுக்கு அறிவுரையாகப் பின்வருமாறு கூறுகின்றார்.
"........... தற்காலத்து வாலிபர்களும் மூடக் கொள்கையுடைய சில தாய் தந்தையருடைய சொல்லைக் கவனியாது சீதனத்தைக் கருதாமல் தத்தமக்கேற்ற பெண்களைத் தெரிந்து கொள்வதே நலமென உணர வேண்டும். மன அன்புடன் பெண்ணின் தாய் தந்தையர் பெண்ணுக்காகக் கொடுக்கும் பொருளை மனத் திருப்தி யோடு ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை வருத்தி வேண்டுவதில் ஒருவித பிரயோசனமில்லையென்பது அறிவாளிகளுக்கே தெரியும்.*
எனவே வியாபார நோக்கில் கொடுமைப்படுத்திச் சீதனம் வாங்குவதையும் சீதனத்திற்காக பொருத்தமில்லாதவர்களை மணந்து கொள்வதையும் இவர் கண்டிக்கின்றார்.
1960 களில் நாவல்களில் சாதியம் சார்ந்த பொருளே பிரதான இடத்தை வகித்தாலும் சீதனக் கொடுமையால் பெண்கள் அனுபவித்த துன்பங்களும் ஆங்காங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் என்னும் நாவலில் வருகின்ற ஆறுமுகம்-தங்கம்மா தம்பதியரின் திருமணம் பொருத்தமில்லாத ஒன்றாகவும் இவ்வாறு நடைபெற்றதற்குத் தங்கம்மாவின் சீதனமில்லாத வறுமை நிலையே காரணம் என்பதும் காட்டப்படுகின்றது. மேலும் இந் நாவலின் பிரதான பொருள் சாதியம் என்பதால் சாதியம் தொடர்பான சிக்கல்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன.
யாழ்ப்பாணத்து வேளாளர்களிடையேயுள்ள சாதிக்குள் சாதிபார்க்கும் வழக்கம் திருமண விடயங்களில் மிகவும் கண்டிப்புடன் பேணப்பட்டு வருவதாகும். எனினும் சீதனக் கொடுமை தலை தூக்கியபோது இவ்வழக்கங்கள் கூட நெகிழவிடப்படுகின்றன. இதனால் தம்மை வேளாளர்களுக்குள்ளேயே உயர்ந்த பிரிவினராகக் கூறிக்கொள்ளும் குடும்பங்கள் தமது வறுமை காரணமாக தம்மிலும் சாதியந்தஸ்தில் குறைந்த குடும்பங்களில் திருமண உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. போர்க்கோலம் நாவலில் வருகின்ற தங்கம்மா தனது வறுமையால் சீதனம் கொடுத்துத் தனது அந்தஸ் திற்கு ஏற்ற ஒருவரை மணந்து கொள்ள முடியாததால் சாதியந்தஸ்தில்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s) Dா.ம.இரகுநாதன்

குறைந்த ஆறுமுகத்தாருக்கு வாழ்க்கைப்படுகின்றாள். எனினும் இத் திருமணத்தால் தங்கம்மாவோ அவளின் குடும்பத்தினரோ எவ்வித திருப்தியையும் பெற்றுக்கொள்ளவில்லை. தங்கம்மா வாழ்நாள் முழுவதும் துன்பத்தையே அனுபவிக்கின்றாள், சீதனக் கொடுமையால் ஆறுமுகத்தாருக்கு வாழ்க்கைப்பட்டாலும் சாதியபிமானம் அவர்களைப் பிரித்தே வைத்திருக்கின்றது என்பதை,
"........ சாதியிலையும் நாங்கள் இவையிலும் பார்க்க கூட, முது சத்துக்கு ஆசைப்பட்டுத்தான் அப்பு சம்மதித்தவர். சாகும் வரை கூட இந்தப் பக்கம் வந்தால் மற்றவை பார்க்க செம்பு தண்ணி எடுக்க மாட்டார். 993.5
எனத் தங்கம்மா கூறுவது உணர்த்துகின்றது. தங்கம்மாவின் குடும்பத்தினர் மாத்திரமன்றித் தங்கம்மாவும் இத் திருமணத்தால் துன்பத்தையே அனுபவித்தாள் என்பதையே அவள் அன்னத்திற்குக் கூறும் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
* .உன்ரை கண்ணுக்கே தெரியேல்லையா. அவர் எனக்கு ஒரு மாப்பிளையே, கூட்டிக்கொண்டு பெருமையாய் தெருவிலை போக. அவர் கேட்டாலும் நான் மாட்டனென்று போடுவன் இப்பெல்லாம் கேட்கிறதேயில்லை. திருவிழாவுக்குப் போறதெண்டாலும் அவர் தானே போவார், நான் என்பாட்டுக்குப் போவன். எப்பவேன் கார் பிடிச்சால்தான் ஒருமிக்கப்போவம்.”*
ஊரறிய மாலையிட்ட கணவனோடு ஊராருக்கு முன்னால் ஒன்றாகப் போக முடியாதவாறு தங்கம்மாவின் மனம் பாதிக்கப்பட் டுள்ளது. நாவல் சாதியத்தைப் பொருளாகக் கொண்டது என்பதால் தங்கம்மாவின் நிலைக்கு சாதிக்குள் சாதி பார்க்கும் நிலையே முதன்மையான காரணமாகக் காட்டப்பட்டாலும் தங்கம்மாவின் சாதிக்குள் அவளுக்கு மாப்பிள்ளை எடுக்க முடியாமல் போனதற்கு அவளிடம் சீதனம் இல்லாத வறுமை நிலையே காரணமாகும். இவ் வறுமையே தங்கம்மாவை பொருத்தமில்லாத திருமண உறவில் தள்ளி வாழ்வைத் துன்பமாக்கியது.
செ.கணேசலிங்கனின் சடங்கு (1966)" என்னும் நாவலில் வருகின்ற பத்மா தன்னிலும் சாதி குறைந்த இராசரத்தினத்தைக் காதலிக்கின்றாள். சாதியபிமானத்தால் பத்மாவின் தந்தை இக்காதலை
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s.9) 10. ம.இரகுநாதன்

Page 142
நிறைவேறவிடாது தடுக்கின்றார். இதனால் பத்மா உரிய வயதில் திருமணம் செய்யமுடியாமல் இருக்கின்றாள். பத்மாவின் காதலுக்குத் தடையாக இருந்த அவளின் தந்தையால் அவளுக்கு வேறு திருமணம் செய்துவைக்க முடியாமல் போனதற்கு சாதகம், சாதி, ஆகியவற்றுடன் சீதனமும் ஒரு காரணமாக இருந்ததை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
“சாதகம் பொருந்தாமல் போகும். சீதனப் பேச்சில் பெரும்பாலா னவை சிதைந்து போகும். பொன்னம்பலத்தார் சாதி பார்ப்பதில் மிகவும் கவனமாக இருப்பார். பத்மாவிற்கு முப்பது வயதானதும் பேச்சு வார்த்தைகள் எடுக்கக் கூடிய மாப்பிள்ளைகளே குறைவாக இருந்தன. கல்யாணம் கட்டாத தங்கைகள் அவர்களுக்கும் இருந்தனர். தங்கைமார்களுக்கு சீதனத்திற்கு வேறாகப் பணம் கேட்டனர் சிலர். மாற்றுக்கு மாப்பிள்ளை கேட்டனர் பலர்."38
இத்தகைய நிலைமைகளால் உரிய வயதில் திருமணம் செய்ய முடியாது போனதும் பத்மாவுக்கு தம்பி பரமநாதனுடன் இணைத்து மாற்றுச் சம்பந்தமொன்று நிறைவேற்றப்படுகின்றது. இத்திருமணத்தை விரும்பாத பத்மா,
“சீதனத்துக்கும் சாதிக்கும் குடும்பப் பெருமைக்கும் தானா கலியாணம், என்னை விரும்பிக் கலியாணம் செய்ய இந்த உலகில் ஒருவரும் இல்லையா?”
எனக் கேட்டுத் தனது துயரை வெளிக்காட்டுகின்றாள் பொருத்தமில்லாத திருமணத்தால் துயருற்ற பத்மா இறுதியில் தற்கொலை செய்கின்றாள். பத்மாவின் முடிவு சாதி, சீதனம் ஆகியவற்றிற்காக பொருத்தமில்லாத திருமணங்களைச் செய்பவர் களுக்கு எதிரானதாகவே அமைகின்றது.
பொ. பத்மநாதனின் பொன்னம்மாளின் பிள்ளைகள் (1970) என்ற நாவலிலும் சீதனமின்மையால் திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் துயரங்கள் எடுத்துக் காட்டப்படுகின்றன. இந் நாவல் தாயையும் தந்தையையும் இழந்து உடன் பிறந்த இரு ஆண் சகோதரர்களாலும் கைவிடப்பட்டு அநாதரவாகி நிற்கும் ஆறு பெண்களின் அவல வாழ்வைப் பொருளாகக் கொண்டது. ஆறு பெண்களிலும் மூத்தவள் பாக்கியம். பாக்கியத்தை இரண்டாம் தாரமாக மணந்து கொள்ள ஆசைப்படுகின்றார் அயல் வீட்டு வேலாயுதம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (5) Dr.ம.இரகுநாதன்

ஐம்பது வயதில் இவர் பாக்கியத்தை இரண்டாம் தாரமாக்க விரும்பு வது கொடுமையானது என்பதை உணர்ந்து கொண்ட அவரின் மகன் பொன்னுத்துரை,
“அவர் கல்யாணங் கட்ட ஆசைப்பட்டா எந்த நாயையாவது கட்டிக் கொள்ளட்டும். நான் ஏனென்று கேக்கேல்லை. ஆனா பாக்கியக்காவின்ரை கதை மட்டும் இன்னொருக்க இந்த வீட்டிலே G5ITLIEidsoTT எனக்குக் கொள்ளிவைக்க வேண்டிய நிலைதான் வரும்.”*
எனக் கூறி அதைத் தடுகின்றான். பொன்னுத்துரையின். எதிர்ப்பு இளைய தலைமுறை இத்தகைய பொருந்தா மணங்களை எதிர்க்கின்றது என்பதை உணர்த்துவதாக உள்ளது.
செங்கை ஆழியானின் இரவின் முடிவு (1976)" என்னும் நாவலில் சுருட்டுத் தொழிலாளியான முத்தரின் ஒரே மகளான பாக்கிய லட்சுமியின் பொருந்தா மணமும் அதன் விளைவுகளும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. பாக்கியலட்சுமி பணம் நிறைந்த வாழ்வு. பெரிய மாளிகை. கார். ஆடை அணிகள் என்று கனவு கண்டவள். ஆனால் அவளுக்கு ஒரு சாதாரண அரசாங்க உத்தியோகத்தனையாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற முத்தரின் ஆசை நிறைவேறுவதற்கு சீதனம் தடையாகி விடுகின்றது. கிளரிக்கல் உத்தியோகத்தரது சாதகம் பொருந்தி வந்தபோதும் சீதனத்தால் அதுவும் குழம்பிவிடுகின்றது. பாக்கிய லட்சுமியின் வயது ஏறிக் கொண்டேயிருந்ததால் அவளைத் தன்னிடம் சுருட்டுச் சுற்றும் தொழிலாளியாக இருந்த ஐயாத்துரைக்கு மணம் முடித்துவைக்க முத்தர் முடிவு செங்கின்றார். இந்த முடிவு பாக்கிய லட்சுமிக்குப் பேரிடி விழுந்தது போலாகின்றது.
*வண்டில் கார கனகுவின் மகள் ஒவசியரைக் கட்ட முடியுமானால் முத்தர் அம்மானின் மகள் ஏன் கட்ட முடியாது.?*
என்று அவள் துன்பப்பட்டு அழுது கொண்டேயிருந்தாள். திருமணம் செய்த முதல் இரவிலேயே அவள்,
“என் வாழ்க்கையைப் பழாக்கிப் போட்டாய்”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s) Dr.ம.இரகுநாதன்

Page 143
என்று கூறி அழுகின்றாள். எதிர்பாராத அதிர்ச்சியால் மன முடைந்த ஐயாத்துரை அன்றிரவே வீட்டைவிட்டு வெளியேறு கின்றார். முத்தரின் முயற்சியால் ஐயாத்துரை திரும்பி வந்தாலும் பாக்கியத் திற்கும் ஐயாத்துரைக்கும் இடையே ஒடடுறவில்லாத ஒரு வாழ்வே தொடர்ந்தது. பாக்கியம் தான் விரும்பிய கணபதிப்பிள்ளை மாஸ்ர ரையே மனதில் நினைத்து ஏங்கிக்கொண்டிருந்தாள். இதனால் அவள் அவரிடம் சோரம் போவதாகவும் ஆசிரியர் சித்திரிக்கின்றார். பாக்கியம் கணபதிப்பிள்ளை மாஸ்ரரிடம் சோரம் போனதை அறிந்த ஐயாத்துரை அதிர்ச்சியால் இறந்து விடுகின்றார். பாக்கியத்தின் ஒழுக்கப்பிறழ்வுக்கும், ஐயாத்துரையின் மரணத்திற்கும், இவ்விருவரது வாழ்வின் துயரங் களுக்கும் காரணமாக அமைவது சீதனமின்மையால் நடைபெற்ற பொருந்தா மணமே ஆகும்.
தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள் (1977)* என்னும் நாவலில் வருகின்ற பார்வதி ஒரு வறிய குடும்பத்துப் பெண் இதனால் இருபத்தேழு வயதைக் கடந்தும் திருமணமாகின்ற வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கவில்லை. தனது தோழிகள் அனைவரும் திருமணமாகிக் குழந்தைகளுடன் இருப்பதை நினைத்துப் பார்வதி துன்பப் படுகின்றாள். பார்வதியின் துன்பத்திற்கு அவளைப்பெற்ற தகப்பனே காரணம் என்று பழி சுமத்துகின்றாள் தாய்.
*அந்த மனிசனுக்கு குடும்பத்திலை அக்கறையில்லை. வீட்டை ஒரு குமர் இருக்கொண்டு சிந்தனை இல்லை. ஊர் ஊராய்ச் சுத்தித் திரியிறார். உழைக்கிற காசுகளை குடிச்சு வெறிச்சுக் கொண்டு திரியிறார். வருங்காலத்தைப்பற்றி அவருக்கு யோசினை இல்லை. உனக்கு ஒரு கலியாணங் காட்சிவந்தால் கையிலை மடியிலை நாலு காசு இருந்தால் தானே இந்தக் காலத்திலை எதையும்
9945
செய்ய முடியும்.
என பார்வதியின் தாய் கூறுகின்றாள். சீதனம் இல்லாததால் திருமணம் செய்ய முடியாமல் போனதால் பார்வதி சாதியை மீறி வீட்டில் தொட்டாட்டு வேலை செய்யும் மாணிக்கனைக் காதலிக் கின்றாள். மாணிக்கனும் பார்வதியும் ஊரைவிட்டே ஓடிவிடுகின்றனர். பின்னர் மாணிக்கனிடமிருந்து பிரிக்கப்பட்ட பார்வதி சித்த சுவாதீனமற்ற நடேசுவுக்கு மனைவியாக்கப்படுகின்றாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s Dr. ம.இரகுநாதன்

பார்வதியின் வாழ்வு தாழ்த்தப்பட்ட சாதிக் காரனான மாணிக்கனோடும், சித்த சுவாதீனமற்ற நடேசுவோடும் போராடுவதற்குக் காரணம் சீதனம் கொடுத்து உரிய காலத்தில் திருமணம் செய்ய முடியாததேயாகும். அதனாலேயே அவள் பொருத்தமில்லாத திருமண பந்தங்களில் கட்டுண்டு துயருறுகின்றாள்.
அ. பாலமனோகரனின் கனவுகள் கலைந்தபோது (1977)" என்ற நாவலில் வருகின்ற ராமச்சந்திரன், வசந்தி தம்பதிகளின் திருமணம் பொருந்தா மணமாகவே அமைந்துள்ளது. தமிழர் திருமண நடைமுறைகளில் ஆண்-பெண் இருவரதும் சாதகப் பொருத்தம் மிகவும் அவதானமாகப் பார்க்கப்படுவது வழக்கம். இச் சாதகப் பொருத்தத்தில் பிரதான மானதாகக் கருதப்படுகின்ற பத்துவகைப் பொருத்தங்களில் ஒன்று யோனிப் பொருத்தமாகும். சாத்திர விதிகளின்படி சூத்திரர் களுக்கு இப் பொருத்தமே பிரதானமாகக் கூறப்படுகின்றது. சாத்திர விதிகளின்படி இவர்களது திருமணம் ஏற்றுக் கொள்ளக் கூடிய தொன்றாக அமைந்தாலும் வசந்தியின் பாலியல் தேவைகளை நிறைவேற்றக் கூடிய ஒருவனாக ராமச்சந்திரன் அமையவில்லை. அவன் ஆண்மையில்லாதவன். ராமச்சந்திரன் தனது சகோதரிகளுக்கு சீதனம் கொடுக்க வேண்டுமென்பதற்காகத் தனது குறைபாட்டை மறைத்து வசந்தியைத் திருமணம் செய்கின்றான். வசந்தியின் பெற்றோர் கொடுத்த சீதனப் பணம், நன்கொடை, நகைகள் முதலிய அனைத்தும் அவனின் சகோதரிகளின் வாழ்வுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் வசந்தியின் வாழ்வு சூனியமாகவே அமைந்து விடுகிறது. பெயரளவில் ராமச்சந்திரனின் மனைவி என்ற ஒன்றுதான் அவளுக்குக் கிடைக்கின்றது. தனது கணவனோடு ஒரு முறைகூட உடலுறவு கொள்ள முடியாமல் அவள் ஏமாற்றமடைகின்றாள்.
ராமச்சந்திரன் தனது குறைபாட்டைக் கருத்திற் கொண்டு திருமணம் செய்யாமல் இருந்திருக்கலாம். அவன் திருமணம் செய்யவில்லை என்றால் அவனது சகோதரிகளின் வாழ்வு பாதிக்கப்படும். இங்கு சீதனம் ஒரு வகையில் நியாயப்படுத்தப்படுவது போல இருந்தாலும் வசந்தியின் அவல வாழ்வு சீதனக் கொடுமை இருக்கக் கூடாது என்பதையே உணர்த்துகின்றது. ராமச்சந்திரன் பொருத்தமில்லாத ஒரு திருமண உறவில் ஈடுபடுவதற்கும் அதன் மூலம் ஒரு பெண்ணின் வாழ்வு அவலமாக முடிவதற்கும் அடிப்படைக் காரணம் சீதனக் கொடுமையே.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (59) Dr.ம.இரகுநாதன்

Page 144
பிராமணர் சமூகத்தில் வறிய குடும்பத்துப் பெண்கள் தாரமிழந்த முதியவர்களுக்கு வாழ்க் கைப்படுவது பற்றி தெணியானின் பொற்சிறையில் வாடும் புனிதர்கள் (1989)', சோமகாந்தனின் விடிவெள்ளி பூத்தது (1989)* ஆகிய நாவல்களில் எடுத்துக் காட்டப்பட் டுள்ளன. தெணியானின் மேற்படி நாவலில் வருகின்ற பஞ்சாட்சர ஐயரின் மகள் காயத்திரி சீதனம் இல்லை என்பதால் தாரமிழந்த முதிய பிராமணன் ஒருவனுக்கு நிச்சயிக்கப்படுகின்றாள். முதல் தாரத்திற்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்து அவர்கள் திருமண மாகிக் குழந்தை குட்டிகளோடு இருக்க தகப்பன் காயத்திரியை இரண்டாந்தாரமாக மணக்க விரும்புகின்றார். இதற்கு அவர்கள் கூறும் காரணம்,
*பிராமணனுக்கு இது புதிசுமில்லை; அநியாயமுமில்லை. தாரமில்லாதவன் கோயிலிலே கொடியேற்ற ஏலாது. அவன் பிரதிஷ்டா பூஷணம், எத்தனை கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடத்த வேணும்: கொடியேற்றி வைக்க வேணும், இதெல்லாம் செய்கிறத்துக்கு விதி முறையின்படி அவனுக்கொரு தாரம் வேணும்.”
என்பது தான். சமய சம்பிரதாயங்களைக் காட்டி இளம் பெண் களை முதியவர்கள் திருமணம் செய்வதைச் சிலர் எதிர்க்கின்றனர்.
“சீ.. 1இப்படியும் ஒரு கலியாணம்? பாவம் இந்தக் குமர்ப்பிள்ளை கிழவனுக்கு வாழ்க்கைப் பட்டு. 6650
என்பது இன்னொரு பிராமணனின் மனக் குறை.
முற்போக்குச் சிந்தனைகளால் விழித்துக்கொண்ட காயத்திரி இத் திருமணத்தை எதிர்க்கின்றாள். பெற்றதாயே தன்னை இப்படியான வாழ்வுக்குள் புகுத்த விரும்புவதை நினைத்துத் துன்புறுகின்றாள். ஆனால் தாய்,
*ஐயோ நான் கேக்கையில்லையெடி காயத்ரி, எங்கடை வறுமைதான் இப்பிடிக் கேக்குது”
எனத் தமது வறுமையாலேயே இவ்வாறான பொருந்தா மணத்திற்கு உடன்பட்டதைக் கூறுகின்றாள். காயத்திரி,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ன்ெ) Dr.ம.இரகுநாதன்

“வறுமையோடை வாழ்ந்திட்டுப் போறன் ஆனால் ஒரு கிழவரோடை என்னாலை வாழேலாது.”*
எனக் கூறி மறுத்துவிடுகின்றாள். காயத்திரியின் மறுப்பும் தந்தை வற்புறுத்தியபோது அவள் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டதும் ஆசிரியருக்கு இவ்வாறான திருமணங்களில் உடன் பாடில்லை என்பதையே காட்டுகின்றது. இதனாலேயே தற்கொலை முயற்சியிலிருந்து அவள் தப்புவதாகவும் பாலன் என்ற இளைஞன் அவளை மணக்க விரும்புவதாகவும் காட்டி நாவலை முடிக்கின்றார்.
சோமகாந்தனின் விடி வெள்ளி பூத்தது (1989) என்னும் நாவலில் வருகின்ற வைத்தீஸ்வரக் குருக்கள் நாற்பத்தேழு வயது முடிய முன்னரே மனைவியை இழந்துவிடுகின்றார். அவருக்கு மறுமணம் செய்துவைக்க தாய் காவேரியம்மா விரும்புகின்றாள். ஆனால் அவர்,
“இந்த வயதில் எனக்கு இன்னொரு கலியாணமோ?. அவளிருந்த இடத்தில வேறொருத்தியை உட்கார்த்தி வைத்துப்பார்க்க எப்படி அம்மா உங்களுக்கு மனசு வந்தது?. அவளுக்குப்
பிறகு எனக்கு எவளுமே வேண்டாம்.”*
எனக் கூறி நிராகரித்து விடுகின்றார், வைத்தீஸ்வரக் குருக்கள் மறுமணம் செய்ய மறுப்பது மறுமணத்திற்கு எதிரான கருத்தாக இல்லாமல் பொருந்தா மணங்களுக்கு எதிரானதாகவே உணரமுடி கின்றது. இதனை உணர்த்தவே கிழப் பருவத்துப் பிராமணர்கள் இளம் பெண்களை மறுதாரமாக்குவது பற்றிக் காவேரியம்மா தெரிந்து வைத்திருப்பதாக ஆசிரியர் கூறுகின்றார். அவர்,
*உள் வளைந்த உடம்பு, ஊதிப்பருத்த வயிறு, வழுக்கை விழுந்த உச்சந் தலையில் எஞ்சி நரைத்த முடிகளை இழுத்துச் செருகிய கூர்ச்சக் குடுமி, பார்வை மங்கிவிட்ட கண்களைக் கூர்மைப் படுத்த ஒடிந்துவிட்ட மெல்லிய கம்பி பிரேமுக்குப் பதிலாக நூலால் இழுத்துக் கட்டிய மூக்குக் கண்ணாடி, மேல் வரிசை நடுப்பற்களும் கொடுப்புப் பற்களும் கழன்று விட்ட வாய், இருந்து எழும்பவே மூச்சிரைக்கிற வயசில். இரண்டாந் தாரமாக மட்டுமல்ல, மூன்று நாலாந்தாரமாகக் கூட, தாரமிழந்த கையோடு தொடர்ந்தும் சிவாசாரியாராக உற்சவங்களை நடத்த வேண்டுமென்று கூறிக் கொண்டு இந்தியாவுக்குப் போய் பெற்றோருக்கு இரு நூறும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (6) Dr. LD-6.Uespirpair

Page 145
முன்னுறும் கொடுத்து, தமது புதல்வருக்கு முடித்து வைப்பதற்கெனப் பொய் சொல்லி 17, 18 வயசுப் பிராமணப் பெட்டைகளைக் கூட்டிக் கொண்டு வந்து மறுதாரம் முடித்துக் கொண்டு அசிங்க வாழ்க்கை நடத்துகிற தனது ஜாதியைச் சேர்ந்த பலரைப் பற்றிகாவேரியம்மா கேள்விப்பட்டிருக்கிறாள்.”*
எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறான கொடுமைக்குக் காரணம் வறுமையால் சீதனம் கொடுத்து பொருத்தமான திருமணத்தைச் செய்ய முடியாத நிலையேயாகும். இத்தகைய வறுமை நிலையினைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் தாரமிழந்த கிழ்ப் பிராமணர்கள் சமய விதிகளைக் கூறி இளம் பெண்களின் வாழ்வைப் பழாக்கி விடுகின்றனர். இத்தகைய கொடுமை தமது ஜாதிக்குள் நடப்ப தாலேயே வைத்தீஸ்வரக் குருக்கள் தனக்கு வயதிருந்தும் மறுமணம் செய்ய மறுக்கின்றார் என ஆசிரியர் சித்திரிக்கின்றார் எனலாம்.
5.1.3 ஒழுக்கப் பிறழ்வுகள்
சீதனக் கொடுமையினால் திருமணமாகாமல் இருக்கும் பெண்களில் பலர் தமது பருவவயதின் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி ஒழுக்கப் பிறழ்வான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஈழத்துத் தமிழர் சமூகத்தில் காணப்படுகின்ற இத்தகைய பெண்களை ஈழத்துத் தமிழ் நாவல்களிலும் காணக் கூடியதாகவுள்ளது.
செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965)* என்னும் நாவலில் வருகின்ற உயர்சாதியைச் சேர்ந்த சீனிவாசகத்தின் மூத்த மகள் சரஸ்வதி ஒழுக்கப் பிறழ்வான செயலில் ஈடுபட்டதால் வாழ்வை அழித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. பருவ வயது கடந்தும் திருமணமாகாமல் இருந்த சரஸ்வதி தனது பருவ உணர்வுகளுக்கு அடிமையாகி வீட்டிற்கு வந்து கள்ளிறக்கும் செல்லத்துரையுடன் இளமையை அனுபவிக்கின்றாள். செல்லத்துரை வள்ளி, கற்பகம் ஆகிய பெண்களுடனும் தொடர்புகளை வைத்திருப்பவன். சரஸ்வதியின் வயிற்றில் கரு உண்டானதை உணர்ந்த செல்லத்துரை அங்கு செல்வதை நிறுத்தி விடுகின்றான். வயிற்றிலே சிசுவுடன் செய்வதறியாது நின்ற சரஸ்வதி தற்கொலை செய்து தனது வாழ்வை அழித்துக் கொள்கின்றாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (6) Dr.ம.இரகுநாதன்

பருவ வயது கடந்தும் திருமணமாகாத நிலையே சரஸ்வதியின் ஒழுக்கப் பிறழ்வுக்குக் காரணமாகும். அவளுக்குத் திருமண வாய்ப்பைக் கொடுக்கத் தவறியதற்கு சாதி, சீதனம் ஆகிய சமூக நடைமுறைகளே காரணமாகும்.
செ.கணேசலிங்கனின் செவ்வானம் (1976)* என்னும் நாவல் கொழும்பு நகரப் பகுதிகளில் கம்பனிகளில் பணிபுரியும் தொழி லாளர்கள், முதலாளிகள் முதலியோரின் வாழ்வை மையமாகக் கொண்டதாகும். இந் நாவலில் பெண்கள் தொடர்பான சில பிரச்சினை களும் ஆங்காங்கே இடம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகிறது.
கம்பனியொன்றில் தட்டெழுத்தாளராகப் பணிபுரியும் மாலினி திருமணமாகாத கன்னிப்பெண். அவளின் வாழ்வு நாகரத்தினம் என்ற முதலாளியுடனும் பொன்னையா என்ற தொழிற்சங்க வாதியான இளைஞனுடனும் பிணைந்து சீரழிவது காட்டப்படுகின்றது. நாகரத்தினம் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்: பெரிய கம்பனியொன்றின் முதலாளியாக இருப்பவர். அவரின் பணம், ஆடம்பர வாழ்வு ஆகியவை பாலியல் பலவீனங்களை வளர்த்துவிடுகின்றன. இதனால் மனைவியும் வயது வந்த பிள்ளைகளும் இருக்கும் போதே பிற பெண்களுடன் பாலியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றார். அவரின் பணம், சமூக அந்தஸ்து ஆகியவை பக்க பலமாக அமைய அவர் கெளரவமான மனிதராகவே வேஷமிட்டுக் கொள்கின்றார். இவரின் வலையில் வீழ்ந்த பலரில் ஒருத்தியாகவே மாலினி இடம் பெறுகின் றாள். மாலினியும் தனது சுய இலாபங்களைக் கருத்திற் கொண்டு அவருக்கு ஏற்றவிதத்தில் வாழ்ந்து வருகின்றாள். அதே மாலினி பொன்னையாவைக் காதலிப்பதாகவும் கூறுகின்றாள். அவனிடமே,
“என் இதய பூர்வமான அழகுணர்ச்சிகளை அடக்குவது தான் ஒழுக்க மென்றால் அந்த ஒழுக்கமே அழிந்து போகட்டும். நான் உங்களை என் உயிருக்கும் மேலாகக் காதலிக்கின்றேன் என்னை முத்தமிடுங்கள்.”
"........... நீ நம்பும் காதல் திருமணத்தில் பூரணத்துவமடைய வேண்டுமாயின் உன்னைக் காதலிக்கும் நாகரத்தினத்திடம் போ. அவரும் உன்னைக் காதலிக்கிறார்தானே. நாகரத்தினம் நீ நம்பும் அதே காதலை முற்றாக நம்புகிறார். பணத்தைக் கொடுத்ததும் பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்கு நிர்வாணப் படங்கள் எடுப்பதற்கு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ன்ெ) Dr.ம.இரகுநாதன்

Page 146
போஸ் கொடுப்பதற்கு தயாராகும் கவர்ச்சியான பெண்கள் கிடைக்கும் இந்த நகரத்திலேயா, பணம் கொடுத்து அறைகளிலே இன்பத்தை வாங்க அவரால் முடியாது. அப்போதும் அவர் ஏன் உன் பின்னே சுற்றுகிறார்? அவர் காதலை நம்புகிறார். நீயும் அதை நம்பிப்போனால் அவர் சில வருடங்களில் மற்றொரு பெண்ணைக் காதலித்துவிட்டு உன்னிடத்தில் அப் புதுக் காதலியை வைக்கப் பார்ப்பார். அதனால் தான் காதல் என்ற இந்தப் பொய்த் தோற்றத்தை நம்ப வேண்டாம் என்று சொல்லுகின்றேன்.”*
எனக் கூறுகின்றான். பொன்னையா காட்டும் நகரப் பகுதிப் பெண்கள் ஒழுக்கப் பிறழ்வுகளில் ஈடுபடுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும் உரிய காலத்தில் திருமணமாகாததும் முக்கியமான ஒரு காரணமே. மாலினி கூட உரிய காலத்தில் திருமணமாகியிருந் தால் நாகரத்தினம் போன்றவர்களின் பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுவதிலிருந்து தப்பியிருக்கலாம். எனவே மாலினி போன்றவர் களின் ஒழுக்கப் பிறழ்வுகளுக்குக் காரணம் திருமணமாகாததும் இதற்குத் தடையாக இருந்த சீதனக் கொடுமையுமே என்று துணிந்து கூறலாம்.
மணிவாணனின் யுகசந்தி (1972) என்னும் நாவலில் வருகின்ற பரமேஸ், தனது அக்கா கனகத்தின் வாழ்வு திருமணமாகாமலே கழிந்து வருவதைக் கண்டு தனக்கும் அதுதான் விதி என்பதை உணர்ந்து கொள்கின்றாள், மனதில் ஏற்பட்ட விரக்திநிலையால் பணக்கார வாலிபனொருவனிடம் தனது பெண்மையைப் பறிகொடுத்து விடுகின்றாள். வயிற்றிலே கருவோடு வாழ வழியின்றி நிற்கும் அவளுக்கு அந் நிலை ஏன் ஏற்பட்டது என்பதற்கு ஆசிரியர் கனகத்தின் மூலமாகக் கூறும் பதில்,
“பாவம் அவள்தான் என்ன செய்வாள்? ஏழையாய்ப் பிறந்தது குற்றம். அதிலும் பார்க்கப் பெண்ணாகப் பிறந்தது இன்னும் குற்றம். கூலிக் காரி, அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வெறும் சடப் பொம்மை. அவளுக்கு உணர்ச்சியோ உள்ளமோ இருக்கக்கூடாது. காலா காலத்தில் முறைப்படி கல்யாணம் நடந்தால் ஏன் இந்த நிலை ஏற்படுகிறது? கல்யாணம் நடக்காதது யார் குற்றம்? நான் தான் மரக் கட்டையாக என் உணர்ச்சிகளை- தாபங்களைக் கொலை செய்து கொண்டிருக் கின்றேன் என்றால் அவளும் - மன அடக்கம்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (69 Dr.ம.இரகுநாதன்

9
கொலை நிகழ்ச்சிக்கு ஒப்பான ஒன்றுதான் இயற்கைக்கு விரோதமான செயல். இயற்கையோடு ஒட்டிய வயசும், அதற்குரிய பருவமும், அந்தப் பருவங்களுக்கு ஏற்ப எழுச்சிகளும் ஏற்படுத்தப்பட்டி ருக்கின்றன. அவற்றை மீறுவது? அறநெறி -ஒழுக்கம்-வாழ்க்கைஎல்லாம் பிரச்சினை தான். மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி, நேரான வழியில் அமைப்பதற்குத்தான் இந்தக் கட்டுப்பாடுகள் எல்லாம். அதற்காக ஒரு மனித உள்ளத்தையோ, உணர்ச்சியையோ கொலை செய்ய வேண்டுமென்பதில்லையே! இந்தக் கட்டுபாடுகளையும் அற நெறிகளையும் போற்றிக் காப்பாற்றுகின்ற சமூகம் இந்த ஒழுக்கக் கேட்டுக்குக் காரணமாயிருப்பவர்களுக்கு என்னதான் தண்டனையை ஏற்படுத்தியுள்ளது? வாழ் நாள் முழுவதும், சீவிய பரியந்தம் வரை ஒரு பெண்ணுக்கு மட்டும் இயற்கை வழியான தண்டனையை அவளது வாழ்க்கையைச் சிதைத்துச் சித்திரவதை செய்கின்றது. அவளோடு சம்பந்தப்பட்ட அந்த ஆண்? பரந்த கண்ணோட்டத்தில் அவனுக்கு எந்தத் தாக்கமுமில்லாத ஒரு முழு நிறைவு அறுசுவை உண்டியை உண்டு ஏப்பம் விடுகின்ற அந்த நிறைவு. உணர்விலும் பார்க்க கூடுதலான நிறைவு. தவறு செய்தவர்கள் இருவரும். காலம் காலமாக நிலைத்துவிட்ட நியதி யாருக்குமே புரியாதது.*
கனகத்தின் சிந்தனையாகக் காட்டப்படும் மேற்படி பகுதி உரிய காலத்தில் பெண்ணுக்குத் திருமணம் செய்திருந்தால் அவள் தவறிழைக்க வழி இருந்திருக்காது என்றும் திருமணம் செய்து வைக்காதது சமூகத்தின் குற்றமே என்றும் எடுத்துக் கூறுகின்றது. சமூகத்தின் குற்றம் எனக் கூறப்படுவது திருமணத்திற்குத் தடையாக இருக்கின்ற சமூக வழக்கங்களான சாதி, சீதனம் ஆகியனவே. இங்கு சீதனக் கொடுமையால் அவள் திருமண வாய்ப்பை இழக்கின்றாள். திருமண வாய்ப்பை இழந்த பரமேஸ் தனது பருவ வயதின் உணர்ச்சிகளிடம் தோற்றுப் போகின்றாள். அவளை ஏமாற்றிக் கெடுத்த பணக்கார வாலிபன் எந்தவிதமான தண்டனையுமின்றி இலகுவாகத் தப்பி விடுகின்றான். பெண்ணுக்கு மட்டும் உள்ள இந்த விதியை ஆசிரியர் கண்டிக்கின்றார்.
நாவலின் முடிவில் பரமேசை சிவபாதம் திருமணம் செய்வதாகக் காட்டுவது சமூகத்தின் தவறினால் தவறிழைத்த இவள் போன்ற பெண்களை மன்னித்து அவர்களுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்ற ஆசிரியரின் கருத்தையே எடுத்துக் காட்டுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (65) Dr. LD-6pressurpair

Page 147
பொ.பத்மநாதனின் புயலுக்குப் பின் (1973)" என்னும் நாவலில் வருகின்ற கோகிலா மருத்துவக் கல்லூரியில் படித்த காலத்தில் லோகநாதன் என்ற இளைஞனைக் காதலித்து அவனோடு உடலுறவு கொண்டு கருத்தரிக்கின்றாள். லோகநாதன் அவளை ஏமாற்றிவிட்டு வெளி நாட்டிற்குச் சென்று விடுகின்றான். நாவலில் குடும்ப உறவு காதல் ஆகியனவே முதன்மைப்படுத்தப்படுவதால் கோகிலா திருமணத் திற்கு முன்னர் காதலித்தவனுடன் எனினும் உடலுறவு கொண்டது ஒழுக்கப் பிறழ்வு என்பது பெரிது படுத்தப்படவில்லை. திருமணமாக முன் உடலுறவில் ஈடுப்பட்டது கோகிலாவின் ஒழுக்கப் பிறழ்வே. இதற்குக் காரணம் உரிய வயதில் திருமணமாகாத நிலையே.
இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணச் சூழலில் மருத்துவக் கல்வி க்ற்கும் மாணவர்கள் குறித்த காலத்தில் தமது கற்கை நெறியினைப் பூர்த்தி செய்வதில் பல கஷ்டங்களை எதிர் நோக்கு கின்றனர். இதனால் பருவ வயதில் திருமணமாக முடியாத நிலை ஏற்படுகின்றது. சிலர் படிக்கும்போதே திருமணமாகி விடுவதும் உண்டு. இத்தகைய சூழ்நிலைகளால் பருவ வயதுப் பெண்கள் கல்வி கற்கும் இடங்களில் ஒழுக்கப் பிறழ்வான செயல்களில் ஈடுபடுகின்ற நிலை ஏற்பட்டு விடுவதுண்டு. இதற்கு கோகிலா ஒரு சான்று,
இந் நாவலில் வருகின்ற மற்றொரு பெண்ணான சுமதி ஆடம்பர நாட்டமுள்ளவள். அவள் அமைதியான சுபாவமுள்ள சுரேஷ் என்ற இளைஞனைத் திருமணம் செய்கின்றாள். பொருந்தா மணம் விரை விலேயே இருவரையும் பிரித்து விடுகின்றது. கணவனைப் பிரிந்த சுமதி பணக்கார வாலிபனொருவனைக் காதலித்து ஏமாற்றமடை கின்றாள். பின்னர் தனது வயிற்றுப் பிழைப்பிற்கே வழியில்லாமல் நகர வீதிகளில் திரிந்து ஒழுக்கப்பிறழ்வான செயல்களில் ஈடுபடுகின்றாள். சுமதியின் ஒழுக்கப் பிறழ்வுக்குக் காரணம் அவள் மீது திணிக்கப்பட்ட பொருந்தா மணமும் அதனை உதறிவிட்டு வெளியேறியபோது அவளுக்கு உடனடியாக ஒரு மாற்று வழி கிடைக்காத நிலையுமேயாகும். கணவனைப் பிரிந்த போது அவள் நம்பிய காதலன் கைகொடுத்திருந்தால் அவளின் வாழ்வு பரிதாபத்திற்குரியதாக மாறியிருக்க முடியாது.
இந்து மகேஷின் ஒரு விலை மகளைக் காதலித்தேன்(1974)61 என்னும் நாவலில் வருகின்ற பிரீதா ஒழுக்கப் பிறழ்வான செயல்களில் ஈடுபடுபவளாகவே காட்டப்படுகின்றாள். பிரீதா இளமையில் தாய்,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் ன்ெ) Dr.ம.இரகுநாதன்

தந்தையரை இழந்து அநாதரவாகி நின்ற நிலையில் சித்தப்பா முறையான சிவராம் என்பவரால் ஆதரிக்கப்படுகின்றாள். சிவராமின் நோயாளியான மனைவியையும் பிள்ளைகளையும் பராமரிக்கும் பணியைப் பிரீதா ஏற்றுக் கொள்கின்றாள்.
பருவப் பெண்ணான பிரீதாவின் மீது பணக்காரன் ஒருவன் மோகம் கொள்கின்றான். அவனின் பணம் சிவராமனின் மனதையும் மாற்றிவிடுகின்றது. இதனால் அப் பணக்காரனின் மகனுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறிப் பிரீதாவை அழைத்துச் சென்ற பணக்காரன் அவளோடு உடலுறவு கொள்கின்றான். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரீதா விரக்தியுற்று நிற்கின்றாள். இந் நிலையில் அவளுக்கு கனகாவின் நட்புக் கிடைக்கின்றது. அவளோடு சேர்ந்த பிரீதா விலைமகளாகி விடுகின்றாள்.
பிரீதாவின் ஒழுக்கப் பிறழ்வுக்குக் காரணம் அவள் ஏமாற்றப்பட்டது மட்டுமல்ல: அவள் திருமணமாகிக் குடும்பமாக வாழ முடியாத வறுமை நிலையுமேயாகும். வறுமை நிலையில் சீதனம் கொடுத்து மாப்பிள்ளை தேடிக் குடும்ப வாழ்வு வாழ முடியாத நிலையே அவளின் ஒழுக்கப் பிறழ்வுக்குக் காரணமாகும்.
செங்கை ஆழியானின் பிரளயம் (1972)? என்னும் நாவலில் வருகின்ற சுபத்திரா திருமணமாக முன்னரே வாமதேவன் என்ற உயர் சாதி இளைஞனோடு உடலுறவு கொண்டு கருத்தரிக்கின்றாள். வாமதேவன் இவளை ஏமாற்றிவிட்டுத் தனது சாதியினுள் ஒருத்தியைத் திருமணம் செய்துவிடுகின்றான்.
சாதியம் தொடர்பான சிக்கல்களும் சமூக மாறுதல்களுமே நாவலின் பிரதான பொருளாக இடம் பெறுவதால் முற்போக்கு எண்ணங்கொண்ட வாமதேவனின் தம்பி மகாலிங்கம் தமையன் செய்த தவறினை ஏற்றுக் கொண்டு சுபாத்திராவைத் திருமணம் செய்ய முன்வருவதாக நாவல் அமைகின்றது. இங்கு சாதியம் தொடர்பான சமூக மாற்றமே பிரதான இடம் பெறுவதால் சுபத்திரா காதலித்தவனுடன் எனினும் திருமணமாக முன்னர் உடலுறவு கொண்டது தவறு என்பது பெரிது படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும் சுபத்திராவின் செயல் ஒழுக்கப் பிறழ்வானதேயாகும். இவ்வொழுக்கப் பிறழ்வுக்குக் காரணம் உரிய காலத்தில் திருமணமாகாத நிலையேயாகும்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் 267 Dr.ம.இரகுநாதன்

Page 148
பொ. பத்மநாதனின் யாத்திரை (1976)? என்னும் நாவலில் நடைபாதையில் வாழ்க்கை நடாத்துகின்ற குடும்பங்களிடையே உள்ள ஒழுக்கப் பிறழ்வுகள் காட்டப்படுகின்றன. வீதிச் சண்டையொன்றில் ஒரு பெண் இன்னொரு பெண்ணைப்பார்த்து.
“இந்தச் சிறுக்கி என் புருஷனை வசியம் பண்ணி வைச்சிருக் கிறாள். இவளை என்ன செய்யக் கூடாது நான்.”*
எனக் கூறி அவளோடு சண்டையிடுகின்றாள். இங்கு காட்டப்படும் பெண்ணின் ஒழுக்கப் பிறழ்வுக்கு சீதனம் நேரடியாக ஒரு காரணமாக அமையாது. இவர்களது வாழ்க்கை வறுமை மிக்கதாக அமைந்து சமூகக் கட்டுப்பாடுகள், ஒழுக்க நெறிமுறைகள் போன்ற அனைத்தும் இவர்களது வாழ்வில் செயலிழந்த நிலையும் ஒரு காரணமாகும். ஆனால் அக் கிழவனை வசியம் பண்ணிய இருபது வயதுப் பெண்ணுக்கும் திருமணமாகியிருந்தால் இந் நிலை ஏற்படாமல் இருந்திருக்கலாம். எனவே அவளுக்குத் திருமணமாகாதது யார் குற்றம்? இதற்குச் சமுதாயமே பதில் கூறவேண்டும்.
அருள் சுப்பிரமணியத்தின் நான் கெடமாட்டேன் (1976)° என்னும் நாவலில் வருகின்ற இந்திரா தனது உடன்பிறவாத சகோதரனான பொன்னம்பலத்துடன் உடலுறவு கொண்டு கர்ப்பமுறுகின்றாள். அவளின் வயிற்றில் உண்டான கருவை அழிக்க மறுத்த டாக்டர் குமாரசாமி,
“வறுமையினால் வேசித் தனத்தைக் கைக்கொள்பவர்கள் எமது பரிதாபத்திற்குரியவர்கள். ஆனால், இங்கே என்ன நடந்திருக்கிறது! பெட்டைக்கு வறுமைச் சூழலில்லை, வாலிப வயதின் கற்பனைகளி னாலோ சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலோ இதுவரை காணாததைக் கண்டு அனுபவித்து விட வேண்டுமென்ற ஆசையினாலோ அல்லது வேறெந்தக் காரணங்களினாலோ பெண்கள் எதை இழக்கக் கூடாதோ அதை இவள் இழந்திருக்கிறாள். இவள் பரிதாபத்திற்குரியவளாக மாட்டாள். தன் ஒழுக்கத்தை இழந்து போனதின் மூலம் சமூகத்தின் நன்மை தீமைகளைக் கருத்தில் எடுக்காமல் விட்ட இவளுக்கு அதே சமூகம் திருப்பித்தரப் போகின்ற விளைவுகளைத் தாங்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதை அவள் இலகுவில் தடடிக் கழிக்க முடியாது.”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (268) Dr.ம.இரகுநாதன்

என்று அவள் மீது பழியைச் சுமத்துகின்றார். மேலும் கருவை அழித்து விடுவதால் இவள் பயந்தெளிந்து மேலும் கெட்டுப் போகத் துணிந்து விடுவாள் என்பதும் இவரின் கருத்தாகக் கூறப்படுகிறது.
“இவள் பெட்டைக்கு குளிகையைப் போட்டு வயிற்றில் இருக்கும் சிசுவினை அழித்துப் போடலாமென்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் என்ன நடக்கும்? அவளுக்குப் பயம் போய்விடும். தன் துர் நடத்தைக்குப் பாதுகாப்பு இருக்கிறதேயென்ற துணிவில் மேலும் மேலும் கெட்டுப் போகத் துணிவாள் அவள். அது இயல்பு. அதற்காகத் தான் சொல்கிறேன். அவளை அப்படியே விடுங்கள். வயிறு பெரிதா கட்டும். சமூகம் பார்க்கட்டும். நான்கு பேர் காறி உமிழட்டும். அந்த அவதிகளுக்கு மத்தியில் தன் துர் நடத்தையின் சின்னமான குழந்தை யைப் பெறட்டும். திருமணமாகாமலே பாலுறவில் ஈடுபடுவதால் ஏற்படும் கஷடங்களை அவள் உணரட்டும். அது மற்றப் பெண்களுக்குப் பாடமாக அமையட்டும். சமூகம் திருந்தட்டும்.”
என ஆவேசமாகக் கூறுகின்றார். ஒரு பெண்ணின் ஒழுக்கப் பிறழ்வினால் ஆத்திரமுற்று அவளின் கருவை அழிக்க மறுத்துஅவள் குழந்தையைப் பெற்றெடுப்பதன் மூலம் சமூகம் இத்தகைய ஒழுக்கப் பிறழ்வினை உணர்ந்து திருந்தட்டும் என்பது டாக்டரின் விருப்பம். ஆனால் இவளின் இவள் போன்ற பல இளம் பெண்களின் ஒழுக்கப்பிறழ்வுக்குக் காரணமான திருமணமாகாத நிலையை டாக்டர் நினைக்கவில்லை. பருவவயதில் திருமண மாகியிருந்தால் அவளுக்கு இந் நிலை ஏன் ஏற்படவேண்டும் என்பதை அவர் சிந்திக்கவில்லை.
*கருத்தடைச் சாதனங்கள். இன்று பரத்தைகளின் பம்மாத்துத் தனங்களை மறைத்து நிற்கும் போர்வைகளாகவல்லவா மாறிவிட்டன . வயது வந்த பிள்ளைகளுக்கெல்லாம், கொண்டம், கொன்றா செப்ரிவ் என்பதெல்லாம் மனப்பாடமாகி விட்டது. அந்த அளவுக்கு ஒழுக்கம் ஒழிந்து போய்விட்டது.”*
என்பது டாக்டரின் கருத்தாகக் கூறப்படுகின்றது. இதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் பருவ வயதில் திருமண மாகியிருந்தால் இவ்வாறான ஒழுக்கப் பிறழ்வுகளிலிருந்து தப்பிவிட முடியுமல்லவா. எனவே பருவ வயதில் திருமணமாகாமல் இருப்பதுதான் ஒழுக்கப் பிறழ்வுக்கு வாய்ப்பாகி விடுகின்றது எனலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் டுன்) Dr.ம.இரகுநாதன்

Page 149
அ.பாலமனோகரனின் கனவுகள் கலைந்தபோது (1977) என்னும் நாவலில் வருகின்ற காஞ்சனா ஒரு இளம் டாக்டரைக் காதலித்து அவரால் வஞ்சிக்கப்பட்டவள். வாழ்வில் ஏற்பட்ட துன்பங்களை ஆற்றிக் கொண்டு மறுபடியும் தனது வாழ்வை ஆரம்பிக்க முயன்றபோது அவளுடைய முதற் காதலை அறிந்த சிலர் அவளைத் தற்காலிக இன்பப் பொருளாக அனுபவித்து விட்டு வேறு யாராவது ஒரு கற்புள்ள பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளோடு பழகினர். இதனால் ஆண்கள் என்றால் அத்தனை பேருமே கயவர்கள் தான் என அவள் கருதினாள். அதனால் பணம் மட்டுமே நல்ல வாழ்க்கையைத் தரும் என்ற முடிவுக்கு வந்து தனது மனம் போல வாழமுற்பட்டாள்.
“முப்பது வயது வரை தனக்கும் ஒரு திருமணம் நடக்கும் என நம்பியிருந்தவள் மனஞ்சோர்ந்து போனாள். இடையே எத்தனையோ தொடர்புகள் அவளுடைய அழகை ரசிக்கவும் அதை அனுபவிக்கவும் விழைந்தவர்கள் சீதனம் இல்லாததால் அவளுக்கு ஒரு மனைவியின் ஸ்தானத்தைக் கொடுக்க முன்வராதபோது அவள் காத்திருப்பதில் களைத்துப் போனாள். நினைத்தவுடன் இளமைப் பருவம் விட்டு நீங்கவும், முதுமை ஓடிவந்து அணைத்து உள்ளே ஊற்றெடுக்கும் சில அபூர்வமான உணர்வுகளை அழித்து விடு வதற்கும் காஞ்சனா என்ன ஒளவையாரா?
எனக் கேட்கும் ஆசிரியர் இளமை இருக்கும் வரை அதனை எங்காவது அனுபவிக்கத் துணிந்து விட்ட காஞ்சனாவின் நிலையை எமக்கு உணர்த்திவிடுகின்றார். சமுதாயச் சூழ் நிலைகள் மாறி வரும்போது காஞ்சனா போன்ற பெண்களால் ஏற்படக் கூடிய ஆபத்தான நிலையைக் கருத்திற் கொண்டு சமூகம் அவர்களுக்கு வாழ்வு கொடுக்க முன்வரவேண்டும். அதாவது சீதனம் போன்ற காரணிகளால் வாழமுடியாமல் இருப்பவர்களுக்கு சீதனக் கொடுமையை ஒழித்து வாழ்வு வழங்க முன்வரவேண்டும். இதன் மூலமே இத்தகைய ஒழுக்கப் பிறழ்வுகளை இல்லாமல் செய்ய (ԼԶlգալb.
செங்கை ஆழியானின் காட்டாறு (1977)" என்னும் நாவலில் வருகின்ற மகேஸ்வரி பருவ வயதிலும் திருமணமாகாதவள். அவள் மாயழகு என்ற வாலிபனோடு காட்டில் சந்தித்து ஒழுக்கப் பிறழ்வான செயல்களில் ஈடுபடுகின்றாள். மகேஸ்வரியின் குடும்ப வறுமையும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (7) Dr.ம.இரகுநாதன்

சீதனம் கொடுத்து உரிய காலத்தில் மாப்பிள்ளை தேட முடியாத நிலையுமே அவளை இத்தகைய செயலில் ஈடுபட வைத்தது.
அருள்-சுப்பிரமணியத்தின் அக்கரைகள் பச்சை இல்லை (1977)" என்னும் நாவலில் வருகின்ற லூசியா வறுமையால் தனது உடலை விற்றுப் பிழைக்கின்றாள் திருகோணமலையில் வறுமையால் கற்பைக் காசாக்கும் பல பெண்கள் பற்றி இவர் சுட்டி காட்டுகின்றார். குடும்ப வறுமையால் வயிற்றுப் பசியைப் போக்க இப்பெண்கள் தமது உடலை விற்றுப் பிழைக்கின்றார்கள். இவர்களின் வயிற்றுப் பசிக்கே வழி தெரியாதபோது சீதனம், திருமணம் என்ற குடும்ப வாழ்வும் ஒழுக்க நடைமுறைகளும் இவர்களுக்கு எத்துணைப் பொருத்தமானவை எனத் தெரியவில்லை.
இந்து மகேஷின் இங்கேயும் மனிதர்கள் (1977)” என்னும் நாவலில் செம்பங்கி தாய் தந்தையை இழந்து அநாதரவாகி நின்ற நிலையில் டேவிட் என்பவனால் ஏமாற்றப்படுகின்றாள். டேவிட்டின் தொடர்பால் வயிற்றிலே கருவோடு நின்ற செம்பங்கி வாழ வழி தெரியாமல் தனது உடலை விற்றுப் பிழைக்கின்றாள். அவள் விபச்சாரியாகவே மாறிவிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு வறுமையே பிரதான காரணமாகும். வறுமையால் வயிற்றுப் பசியைப் போக்க வழி தெரியாமல் இருந்தவளைத் திருமணம் செய்ய எவர்தான் முன்வருவார்கள் என்ற நிலையில் வந்தவர்கள் எல்லோருமே அவளை அனுபவித்து விட்டுச் செல்கின்றனர். எனவே திருமண வாழ்வு இல்லாத வறுமை நிலை ஒழுக்கப்பிறழ்வான செயல்களில் ஈடுபடவைத்து விடுகின்றது.
பொ.பத்மநாதனின் பொன்னம்மாளின் பிள்ளைகள்(1979) என்னும் நாவலில் வருகின்ற சுந்தரி திருமண வாய்ப்பே தனக்குக் கிடைக்காது என்ற நிலையில் அயல் வீட்டு வாலிபனோடு திருட்டுத் தனமாக உடலுறவில் ஈடுபடுகின்றாள். ஆபாசப் படங்களையும், புத்தகங் களையும் காட்டி சுந்தரியின் பாலுணர்வினைத் தூண்டி விட்ட அவ்விளைஞன் தனது ஆசையை நிறைவேற்ற அவளைப் பயன் படுத்திக் கொள்கின்றான். வர்த்தக நிலையங்களில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்ற பாலியல் தொடர்பான படங்களும் புத்தகங் களும் சிறிய வயதிலேயே இளைஞர்களின் பாலுணர்வினைத் தூண்டி விடுகின்றன. இத்தகைய இளைஞர்களின் உணர்ச்சிகளுக்குத் திருமண வாய்ப்பை இழந்து தமது உடல் உணர்ச்சிகளோடு போராடுகின்ற
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (27) Dா.ம.இரகுநாதன்

Page 150
இளம் பருவத்துப் பெண்கள் இலகுவாகப் பலியாகி விடுகின்றனர். இதற்குச் சுந்தரி ஒர் எடுத்துக் காட்டு.
செம்பியன் செல்வனின் நெருப்பு மல்லிகை (1981)” என்னும் நாவலில் வருகின்ற ராணியின் வாழ்வு துன்பமாக முடிவதற்குக் காரணம் அவளின் ஒழுக்கப் பிறழ்வேயாகும். வேணுகோபாலன் என்ற உயர் சாதி இளைஞன் ராணியைக் காதலிப்பதுபோல நடித்து அவளோடு நெருக்கமாகப் பழகி உடலுறவு கொள்கின்றான். அந்த உறவால் அவள் கருத்தரிக்கின்றாள். இதனையறிந்த ராணியின் பெற்றோர் வேணுகோபாலனை அணுகியபோது அவன் தனக்கும் அவளுக்கும் இடையே அவ்வாறான தொடர்பு இருக்கவில்லை என்று கூறிவிடுகின்றான்.
நாவலில் வேணுகோபாலன் உயர் சாதியைச் சேர்ந்தவனாகவும் ராணி அவனை விடச் சாதியந்தஸ்தில் குறைந்தவளாகவும் காட்டப்பட்டு சாதி வேறுபாடே இவர்களின் திருமணத்திற்குத் தடையாக இருப்பதாகக் காட்டப்பட்டாலும் திருமணத்திற்கு முன் உடலுறவில் ஈடுபட்டது ராணியின் தவறே. இவ்வாறான செயல்களால் ஆண்கள் பாதிக்கப் படுவதில்லை என்பதும் பெண்களே பாதிக்கப்படுகின்றார்கள் என்பதும் தெரியப்படுத்தப்படுகிறது. ராணியின் செயல் ஒழுக்கப் பிறழ்வானதே.
செங்கை ஆழியானின் கனவுகள் கற்பனைகள் ஆசைகள் (1981)" என்னும் நாவலில் வருகின்ற தவமணியின் துயரமான வாழ்வுக்கு அவளின் ஒழுக்கப் பிறழ்வே காரணமாகும். பருவ வயதிலும் திருமணமாகாமல் இருந்த தவமணியை இராசலிங்கம் காதலிக்கின் றான். இருவரதும் காதல் மறைவிடங்களில் சந்தித்து உடலுறவில் ஈடுபடுவதாகவும் அமைகின்றது. இராசலிங்கம் தவமணியைக் காதலித்தாலும் அவனுக்கு மாமிக்காரி ரஞ்சிதம், மரைக் கிழவனின் மகள் பாக்கியம் ஆகியோருடன் இவ்வாறான தொடர்பு இருந்து வந்திருக்கின்றது. ரஞ்சிதமும்- இராசலிங்கமும் காட்டில் மறைவிட மொன்றில் சந்தித்துஉடலுறவு கொள்வதைத் தவமணி நேரடியாகவே கண்டு அவன்மீது வெறுப்படைகின்றாள். நிச்சயித்த திருமணத்தையே வேண்டாம் என்று மறுத்துவிடுகின்றாள்.
இராசலிங்கம் பல பெண்களோடு தொடர்புள்ளவன் என்பது தவமணி அறியாததாக இருக்கலாம். ஆனால் அவனைத் திருமணம் செய்வதற்கு முன்னர் உடலுறவுவரை நெருக்கமாகப் பழகியது
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (72) Dr.ம.இரகுநாதன்

தவமணியின் தவறுதான். தவமணி தான் பெண் என்பதை உணர்ந்து ஒழுக்கப் பிறழ்வான செயலில் ஈடுப்படுவதைத் தவிர்த்திருந்தால் இராசலிங்கத்தால் அடைந்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்க முடியாது. எனவே திருமணமாகு முன் காதலித்தவனோடு கூட உடலுறவில் ஈடுபடும் ஒழுக்கப் பிறழ்வுகளைப் பெண்கள் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.
தனது மனம் விரும்பிய காதலனை இன்னொருத்தியோடு கண்டு ஆத்திரங்கொண்ட தவமணி,
“நீங்கள் சரியான மிருகம். ஒருத்தியோட திருப்திப் படுகிற சாதியல்ல. கண்ட கண்ட இடமெல்லாம் மேயிற சாதி. நான் எவ்வளவு இன்பக் கனவுகள் கண்டன் எத்தனை மனக் கோட்டைகளைக் கட்டினன். என்னையும் உங்களையும் சுற்றி ஒரு உலகத்தையே கற்பனை பண்ணியிருந்தன். எல்லாம் உங்களால் ஒரு கணத்தில் தரைமட்டமாகிப் பொடிப்பொடியாகி. ஐயோ. போயிடுங்க.......... போயிடுங்க... தயவு செய்து போயிடுங்க. 99.75
என்று கூறி அழுது புலம்புவதும், இராசலிங்கம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் படுத்திருந்தபோது அவனருகில் நின்று,
“என்னை மன்னியுங்க. 9976
என்று கூறி அழுவதும் இருவரும் இணைவதும் ஆண்கள் செய்யும் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்பதைக் காட்டுகின்றனவா? இராசலிங்கத்தின் தந்தை பொன்னப்பர்,
“கலியாணத்திற்கு முதல் ஆண்கள் இப்படி நடக்கிறது சகசம் தான், பிள்ளை. அதை மன்னித்து நீ இந்தக் கலியாணத்திற்கு ஒப்புக் கொள்ளக் கூடாதா? அவன் திருந்தி விடுவான். 9977 என்று தவமணியிடம் கேட்டதும் தவமணி முதலில்
“என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை ஐயா. என்னை விரும்பிய பிறகு, என்னைக் காதலித்த பிறகு, என்னோடு பழகிய
பிறகு, பேசிய பிறகு. இது நடந்திருக்குது. என்னால் முடியல்ல. முடியல்ல. தாங்கிக்கவே முடியவில்லை. 6678
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (73) Dr.ம.இரகுநாதன்

Page 151
என்று கூறி மறுத்து விடுகின்றாள். நாவலின் முடிவில் அவள் அவனிடம் மன்னிப்புக் கோரிநின்று அவனோடு இணைகின்றாள். இச் செயல் ஆண்களின் தவறுகள் மன்னிக்கப் படலாம் என்பதையே உணர்த்தி நிற்கின்றன. ஆனால் சமூக யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளும்போது அவள் அவனை மன்னிக்க முடியாது என்பதும் அவளின் தவிர்க்க முடியாத நிலைதான் அவளை அவனோடு மீண்டும் இணைத்து விடுகின்றது என்பதும் தெரிய வருகின்றது. சீதனக் கொடுமை போன்ற காரணங்களால் திருமண வாய்பையே இழக்கும் சூழலில் தவமணி இராசலிங்கத்தின் தவறைப் பெரிதுபடுத்தி இவனைப் புறக்கணிப்பதால் தனது வாழ்வையே இழக்க நேரிடும். இராசலிங்கம் இன்னொரு பெண்ணை இலகுவாகக் திருமணம் செய்துவிடலாம். இந் நிலைதான் அவளை மீண்டும் அவனோடு இணைத்தது. இது பெண்களுக்குச் சமூகம் இழைக்கின்ற கொடுமையேயன்றி வேறில்லை.
செங்கை ஆழியானின் ஒருமையவட்டங்கள் (1982)” என்னும் நாவலில் வருகின்ற மாலினி சிறிசேனா என்ற வாலிபனோடு தொடர்பு கொண்டு கருத்தரிக்கின்றாள். வயிற்றிலே இரண்டு மாதச் சிசுவோடு நின்ற மாலினியைத் திருமணம் செய்ய சிறிசேனா மறுத்து விடுகின்றான்
“மாலினி . உலகத்தில் இல்லாததா நடந்து விட்டது? நான் யார்? என் அந்தஸ்து என்ன? உன்னைக் கலியாணம் செய்து கொள்வதை ஊர் ஒப்புக் கொள்ளுமா? என் தாத்தாதான் ஒப்புக் கொள்வாரா... 99.80
எனக் கேட்ட சிறிசேனா கருவை அழித்து விடுமாறும் அழித்துவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்துகின்றான். இதனை ஏற்றுக் கொள்ளாத மாலினி தற்கொலை செய்கின்றாள்.
மாலினியின் பரிதாபகரமான முடிவுக்கு சிறிசேனாவின் மீது பழி கூறலாம். ஆனால் திருமணமாக முன் திருட்டுத்தனமாக உடலுறவில் ஈடுபட்டது ஒழுக்கப் பிறழ்வே. இதற்கு இருவரது பங்கும் இருந்தாலும் இதனால் பாதிக்கப்படப்போவது பெண்ணே என்பதை மாலினி உணர்ந்திருக்க வேண்டும். எனவே மாலியின் ஒழுக்கப் பிறழ்வான செயல் துன்பத்தையே தேடித் தந்ததால் இது ஏனையவர் களுக்கு ஒரு பாடமாகும்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (7) Dr.ம.இரகுநாதன்

செங்கை ஆழியானின் காற்றில் கலக்கும் பெரு மூச்சுக்கள் (1983) என்னும் நாவலில் வருகின்ற ராஜி சீதனக் கொடுமையால் திருமண வாய்ப்பினை இழந்தவள். திருமண வாய்ப்பை இழந்தாலும் தனது இளமையைப் பாழாக்க விரும்பாத ராஜி தனது காதலனோடு ஒழுக்கப் பிறழ்வான நடவடிக்கைகளில் ஈடுபட்டு இன்பம் காண்கின்றாள்.
தனது சகோதரிகளினதும் தனதும் வாழ்வைப் பாழாக்கிய சமூகத்தை அவள் வெறுக்கின்றாள்.
“கொழுத்த சீதனத்துக்காக ஆண்களை வளர்க்கின்ற சீதனப் பேய்கள் நிறைஞ்ச உலகம். பெத்து வளர்த்து சாப்பாடு போட்டு படிப்பித்து உத்தியோகமாக்கி விட்டு ஒவ்வொன்றுக்கும் பிறந்ததி லிருந்து கலியாணம் வரை கணக்குப் பார்த்து பெண்களிடம் வாங்கிவிடப் பார்க்கின்ற பிசாசுகள் நிறைந்த ஊர். என் அக்காமார் மாதிரி எத்தனை பேர்? அவர்களுக்கு இந்த ஊரும் உலகமும் என்னடி செய்து விட்டது? ஒரு அக்காவிற்கு முப்பது வயது, மற்றக்காவிற்கு இருபத்தெட்டு? . அவர்களுக்கு நல்லதொரு வாழ்வை அளிக்க முடியாத இந்த உலகத்தால் . ஆடு கத்தினால் கூட பருவத்திற்கு அழைத்துச் செல்கின்ற இந்தச் சமூகம் 8 so சீச்சீ . கிழடாகிற குமருகளைப்பற்றி..? அவர்களின் இயல்பான உணர்வுகளைப்பற்றிக் கொஞ்சமாவது சிந்திக்கிறதா?”
எனக் கேட்கும் ராஜி தனக்கும் தனது சகோதரிகளுக்கும் வாழ்வளிக்காத சமூகம் விதித்த கட்டுப்பாடுகளை உடைத்து அதனைப் பழிவாங்கத் துணிகின்றாள்.
*நான் இச் சமூகத்தைப் பழிவாங்கப் போகிறேன். இந்தச் சமூகம் சொல்லுகிற சம்பிரதாயங்களை உடைக்கப் போகிறேன் 8 & 4 O சந்தர்ப்பம் கிடைக்கும் போது நான் வாழப்போகிறேன். சம்பிரதாயச் சிறைக்குள் அடக்கப்பட்டு முடங்கிக் கிடக்கின்ற என் அக்காமாருக்கு வாழ்வளிக்க முயற்சிக்கின்ற அதே வேளை என் இளமையை அவமாக்க நான் தயாராக வில்லை . 99.82
எனக் கூறி ராஜி தனது காதலனோடு கூடி இளமையை அனுபவிக்கின்றாள்,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (75) Dr.ம.இரகுநாதன்

Page 152
சீதனக் கொடுமையால் பெண்களோடு கூடிப்பிறந்த ஆண்களும் தமது இளமையை அவமாக்க வேண்டியிருக்கின்றது என்பதையும் ராஜி எடுத்துக் கூறுகின்றாள்.
*அவரும் என்னைப் போலத்தான். அவரை நம்பி வீட்டில் இரண்டு அக்காமாரும் ஒரு தங்கையும் கார்த்திருக்கிறார்கள். சீதனப் பேயும் காத்திருக்கிறது. வி ஆர் ஜஸ்ற் பிரன்ட்ஸ். அங்க இருக்கும் வரை வாழ்வோம். வெளியில் போனதும் அவர் யாரோ, நான் யாரோ, எங்கள் முன் கிடக்கும் கடமைகள் முடிய நானும் கிழவியாகி விடுவேன். அவரும் கிழவனாகி விடுவார் 4* ) 8A di 4 p y y ) » 8 99.83
ராஜியின் வார்த்தைகள் தமது சகோதரிகளின் வாழ்வுக்காகத் தம்மைத் தியாகம் செய்யும் ஆண்களின் பரிதாபநிலையை எடுத்துக் காட்டுகின்றன இவ்வாறானவர்களைப் பொறுத்தவரை சீதனம் வாங்குவது நியாப்படுத்தப்படலாம். எனினும் இது தனிப்பட்ட முறையில் ஒரு சிலரது பிரச்சினையல்ல, இது சமூகப் பிரச்சினையே ஆகும். எனவே தனிப்பட்ட முறையில் ஆண்கள் மீது குற்றம் சுமத்தவும் முடியாது அவர்களும் தமக்காக வாழ முடியாதவர்களாகி விடுகின் றார்கள்.
இத்தகைய நிலையில் தான் ராஜியும் அவனும் தமது இளமையை அனுபவிக்கத் துணிகின்றனர். இங்கு ராஜி என்ற பாத்திரத்தின் மூலமாக ஆசிரியர் எமது சமூகத்தை எச்சரிக்கின்றார். சீதனக் கொடுமையின் விளைவு சமூகத்தை இவ்வாறுதான் பாதிக்கும். எனவே சமூகம் திருந்த வேண்டும் என்பதே ஆசிரியரின் நோக்கமாக இருக்கலாம்.
செங்கை ஆழியானின் மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து (1989)" என்னும் நாவலில் வருகின்ற சிவபாக்கியத்தின் வாழ்வு சோகமாக முடிவதற்குக் காரணம் திருமணத்திற்கு முன்னர் ஏற்பட்ட உடலுறவேயாகும். கிளிநொச்சியில் தந்தையுடன் குடியிருந்த சிவபாக்கியம் அங்கு வந்து தம்மோடு பழகிய முத்தையாவைக் காதலிக்கின்றாள். முத்தையாவும் சிவபாக்கியமும் திருமணமாக முன்னரே உடலுறவில் ஈடுபடுகின்றனர். இதனால் சிவபாக்கியம் கருத்தரிக்கின்றாள். அவளின் வயிற்றில் உண்டான கருவைப்பற்றி அறிய முன்னரே முத்தையா யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிடுகின்றார். யாழ்ப்பாணத்தில் அவருக்கும் முறைப் பெண்ணான அன்னத்திற்கும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (272) Dr.ம.இரகுநாதன்

திருமணம் நடைபெறுகின்றது. சிவபாக்கியம் ஏமாற்றப் படுகின்றாள். ஒரு பெண் குழந்தையைப் பெற்று விட்டு சிவபாக்கியம் குளத்தில் வீழ்ந்து தற்கொலை செய்து கொள்கின்றாள். குழந்தை பார்வதி தகப்பன் யார் எனத் தெரியாதவளாகவே வளர்கின்றாள்.
சிவபாக்கியம் திருமணமாகமுன் உடலுறவில் ஈடுபட்டதாலேயே அவளின் முடிவு சோகமாகவும் குழந்தை பார்வதியின் வாழ்வு துன்பமாகவும் அமைந்தது. பருவ வயதில் திருமணமாகாமல் இருந்ததே சிவபாக்கியத்தின் தவறுக்குக் காரணமாக அமைந்து விட்டது.
சோமகாந்தனின் விடிவெள்ளி பூத்தது (1989) என்னும் நாவலில் வருகின்ற பண்டாரத்தின் மகள் ஒழுக்கப் பிறழ்வாக நடந்து கொள்வதற்குக் காரணம் திருமண வாய்ப்பு இல்லாததே எனலாம்.
நாராயண அய்யர் மனைவியை இழந்தபின்னர் பண்டாரத்தின் மகளைத் தனது வைப்பாட்டியாக வைத்துக் கொள்கின்றார். அய்யர் அவளை மறுதாரமாக மணந்திருந்தால் சாதிப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை இருந்திருக்கும். இதனால் அவளைத் தனது வைப்பாட்டியாக்கிக் கொள்கிறார். திருமணமாகாத பருவப் பெண் வயதான நாராயண அய்யருடன் தொடர்பு கொண்டு தனது இளமையை அனுபவிக்கின்றாள். இவளின் இச் செயல் சமூக அங்கீகாரம் பெறாத ஒழுக்கப் பிறழ்வே. இதற்குக் காரணம் பருவ வயதில் திருமணமாக முடியாத பண்டாரத்தின் குடும்ப வறுமை நிலையேயாகும்.
செ. கணேசலிங்கனின் சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை (1989) என்னும் நாவல் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. இந்நாவலில் வருகின்ற சித்திரா, பல்வேறு காரணங்களால் ஒழுக்கப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபடத் துணிந்தவளாகவே காட்டப்படுகின்றாள்.
பருவ வயதில் திருமணம் செய்கின்ற வாய்ப்பை இழந்த சித்திரா சமுதாயக் கட்டுப்பாடுகளை உடைத்து வெளியேறுகின்றாள்.
“ஒருவனுக்கு சமைத்துப்போட்டு பிள்ளை பெற்றுக் கொடுத்து அடிமைப் பணிகளும் செய்ய நான் தயாரில்லை,”*
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (27) Dr.ம.இரகுநாதன்

Page 153
எனக் கூறும் சித்திரா குடும்ப அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறி மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாகப் பணிபுரியச் செல்கின்றாள், வெளிநாடுகளில் பணிபுரியும் பெண்கள் எஜமானர்களின் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளாவதைப் பற்றி அறிந்து கவலைப்பட்ட தம்பிக்கு சித்திரா,
“பெண்களும் எல்லா உணர்வும் கொண்ட மனிதர்கள்தான். சுகத்திற்காக அல்லது பணத்திற்காக உடன்படலாம். இதில் என்ன தவறு? இன்பத்திற்கும் குழந்தைக்கும் இன்று ஒரு தொடர்புமில்லை , கருத்தடைச் சாதனங்கள் பலவுண்டு. பணத்தோடும் நுகர்பண்டத் தோடும் திரும்பும் பணிப்பெண்களைக் கட்ட சிங்கள வாலிபர்கள் போட்டி போடுகிறார்கள். ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்தை யார் எங்கே தேடிக் காணப்போகின்றார்கள? கற்பு என்பதெல்லாம் வெறும் கற்பனை. நாமெல்லாம் வெறும் பொய்மையிலே எம்மை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.”*
“கலியாணத்திற்கும் பிள்ளை பெறுவதற்கும் என்ன தொடர்பு? எனக்குப் பிள்ளை வேணுமென்றால் தெருவில் போகிற எந்த வாலிபனோ, கிழவனோ கூடத் தயாராக இருப்பாங்க. நான் விரும்பினவனைக் கூப்பிட்டே என்னைச் சினைப்படுத்த முடியும். அது என் பிள்ளையாகவும் இருக்கும்.”*
எனக் கூறும் பதில் அவள் தனக்கு வாழ்வளிக்காத சமூகம் தன்னைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதை வெறுத்து அத்தடைகளை அறுத்து வெளியேறித்தனது விருப்பப்படி வாழத்துடிப்பதை எடுத்துக் காட்டுகிறது. சித்திராவின் கருத்துக்களை ஏற்கின்ற சமூகம் இன்னும் உருவாகாத நிலையில் இவள் நடத்தை கெட்டவள் என்றும் ஒழுக்கப் பிறழ்வானவள் என்றும் வெறுத்தொதுக்கப்படவே வாய்ப்பு உள்ளது.
5.1.4. பாலியல் சுரண்டல்
பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் முக்கியமான மற்றொரு பிரச்சினை பாலியல் சுரண்டலாகும். இது திருமணமாகாத இளம் பெண்கள் மீதும் கணவனைப் பிரிந்து வாழ்கின்ற பெண்கள் மீதும் வயது வேறுபாடின்றி எல்லாப் பருவத்து ஆண்களாலும் மேற்கொள்ளப் படுகின்றது. இதனால் பெண்கள் தனித்து வாழமுடியாத நிலையொன்று உருவாகி வருகின்றது. பெண்களுக்குத் தனிமை பாதுகாப்பில்லை.
ஈழத்துத்தமிழ் நாவல்கள் (78) Dr. D.6 peogrger

அவர்கள் ஆணின் துணையின்றி வாழக்கூடிய சமுதாய நிலை இன்னும் உருவாக வில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.
செ.கணேசலிங்கனின் போர்க்கோலம் என்னும் நாவலில் வருகின்ற அன்னம், காதலன் கொலைசெய்யப்பட்ட பின் வேறொரு வனைத் திருமணம் செய்ய விரும்பாமல் தனிமையாக வாழ்பவள். ஆண் துணையின்றி வாழும் அன்னத்தைத் தனது பாலியல் தேவைக்குப் பயன்படுத்த ஆனந்தன் என்ற இளைஞன் முயற்சி செய்கின்றான். ஆனந்தனின் வீட்டில் கூலி வேலை செய்து பிழைக் கின்ற அன்னம் தனது வறுமை காரணமாக அவனை எதிர்க்க முடியாமல் தத்தளிக்கின்றாள். மேலும் தனது காதலனின் கொலைக் காக ஆனந்தனைப் பழிவாங்கவேண்டும் என்ற நோக்கத்தி னால் அன்னம் அவனின் பாலியல் சுரண்டல்களை முளையிலேயே கிள்ளிவிடாமல் வளர்த்து விடுகிறாள் இறுதியில் கிடைத்த தனிமையைப் பயன்படுத்தி அவளோடு உடலுறவு கொள்ள முயற்சித்த ஆனந்தன் கொலை செய்யப்படுகின்றான்.
நாவல் சாதியம் தொடர்பானது என்பதால் உயர் சாதி ஆனந்தன் தாழ்ந்த சாதி அன்னத்தின் மீது மேற்கொள்ளும் பாலியல் சுரண்டல்கள் சாதாரண மானவையாகவே காட்டப்படுகின்றன
செங்கை ஆழியானின் இரவின் முடிவு என்னும் நாவலில் வருகின்ற மகேஸ்வரி பருவ வயது கடந்தும் திருமணமாகாமல் இருந்தாள். திருமணமாகமல் இருந்த மகேஸ்வரியின் பருவ உணர்ச்சிகளைத் தனது காமப் பசிக்கு இரையாக்கி விடுவது சுபமாக இருக்கும் எனக் கருதிய அயல் வீட்டு மணியம் அவளை அடை வதற்கு முயற்சிக்கின்றான் மூன்றாவது பிள்ளைக்கும் தகப்பனாகப் போகும் மணியத்தின் செயற்பாடுகள் மகேஸ்வரிக்கு அருவருப்பை உண்டாக்கி விடுகின்றன. அவள் அவனின் விருப்பத்திற்கு இணங்க வில்லை எனினும் அவனின் செயற்பாடுகளைக் கண்ட சிலரால் இருவருக்கும் தொடர்பு இருப்ப தாகக் கதை கட்டி விடப்படுகின்றது. இதனால் மகேஸ்வரிக்குப் பேசிய திருமணமும் குழம்பி விடுகின்றது
966T,
*உலகம் நம்ப வேண்டுமே?. ஊரெல்லாம் இதே கதைதான். என்னை இனி யார் நம்பப் போகினம்?. பெண்களுக்கு ஏற்படுகின்ற கெட்ட பெயரைப் போல ஒரு கொடுமை
ஈழத்துத்தமிழ் நாவல்கள் G Dr.ம.இரகுநாதன்

Page 154
உலகத்தில் இல்லை. உண்மையோ பொய்யோ அதன் விளைவு மிகப் பயங்கரம் . 9928
எனக் கூறி அழுது புலம்புகின்றாள். மகேஸ்வரியின் வாழ்வு பாதிக்கப்பட்டதற்கு மணியத்தின் பாலியல் சுரண்டலே காரணமாகும்.
தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள் என்னும் நாவலில் வருகின்ற பார்வதி வயது வந்தும் திருமணமாகாமல் இருந்தவள். இந்நிலையில் அவள் தமது வீட்டுக்கு வந்து தொட்டாட்டு வேலைகள் செய்கின்ற மாணிக்கன் என்ற இளைஞனோடு பழகி அவனையே விரும்பிக் காதலிக்கின்றாள். தமது காதலை வீட்டாரும் ஊராரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற நிலையில் அவள் அவனோடு ஊரை விட்டே ஓடி விடுகின்றாள். எனினும் பார்வதியின் தந்தை மாணிக்கனிடமிருந்து தந்திரமாக அவளைப் பிரித்து விடுகின்றார்.
தாழ்த்தப்பட்ட சாதிக்காரனான மாணிக்கத்துடன் ஓடியவளை மீண்டும் கூட்டி வந்ததை ஊரவர்கள் விரும்பவில்லை. ஒடிப்போனவள், கெட்டுப்போனவள் என்ற கருத்தில் சமூகம் அவளைப் பார்க்கின்றது. இதனாலேயே அம்பலவாணர் அவளைப் பலாத்காரம் செய்கின்றார். அம்பலவாணருக்கு அவளைத் திருமணம் செய்ய விருப்பமில்லை. ஆனால் அவளைத் தனது ஆசைக்குப் பலியாக்கிக் கொள்ள விரும்புகின்றார். அம்பலவாணரின் பலாத்கார முயற்சி ஆணின் துணையின்றி வாழும் பெண்ணுக்கும் திருமணமாகிக் கணவனைப் பிரிந்திருப்பவர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதையும் பார்வதி போன்ற பெண்களைச் சமூகம் கெட்டுப் போனவர்கள், இன்னும் பலரது ஆசையை நிறைவேற்றக் கூடியவர்கள் எனக் கருதுவதையுமே எடுத்துக் காட்டுகின்றது.
அ.பாலமனோகரனின் கனவுகள் கலைந்த போது என்னும் நாவலில் வருகின்ற வசந்தி வைத்தியசாலையில் தாதியாகப் பணி புரிபவள். அங்குள்ள டாக்டர் சிவப்பிரகாசம் அவளை, “நீ மிஸ்ஸா மிஸிஸ்சா?” எனக் கேட்டுத் தனது பார்வையை அவளின் உடலில் பரவ விடுகின்றான், இதனால் வசந்தி அருவருப்படைகின்றாள்.
“பார்வையாலேயே ஒரு பெண்ணைத் துகில் உரிந்து ரசிக்கும் துச்சாதனன் பரம்பரை இதுபோலும்”?
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (80) Dr. ம.இரகுநாதன்

2O
எனத் தனக்குள் பொருமிக் கொள்கின்றாள். பருவ வயதிலும் திருமணமாகாமல் இருக்கும் பெண்கள் அலுவலகங்களில் மேலதிகாரி களால் இத்தகைய பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படு வதற்கு இது ஒரு சான்றாகும்.
இந் நாவலில் வருகின்ற மற்றொரு பெண்ணான காஞ்சி இளம் டாக்டர் ஒருவரைக் காதலித்து அவரால் ஏமாற்றப் படுகின்றாள், காதலில் தோல்வியுற்ற காஞ்சியைக் கெட்டுப்போனவள் என நினைத்துத் தாமும் அனுபவித்துவிடத் துடிக்கின்றனர் பல இளைஞர்கள். காதலில் தோல்வியுற்றதால் அவள் கற்பில்லாதவள் என்றும் இன்னும் பலரதும் ஆசைகளை நிறைவேற்றத்தக்கவளாக இருப்பாள் என்றும் சமூகம் கருதி விடுகின்றது. இதனால் பலரும் அவள் மீது பாலியல் ரீதியான் சுரண்டலில் ஈடுபடுகின்றனர்.
செம்பியன் செல்வனின் நெருப்பு மல்லிகை என்னும் நாவலில் வருகின்ற கமலம் கணவனை இழந்து தனிமரமாகி தம்பிஐயாவினால் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றாள்.
கமலத்தின் அழகில் மயங்கிய தம்பிஐயா அவளை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை மனதிற் கொண்டே அவளைத் தனது பராமரிப்பில் இருந்த வீடடில் குடியிருக்க அனுமதிக்கின்றாார். கமலத்தின் கணவன் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்த போதெல்லாம் தம்பிஐயா மிகுந்த கவனத்தோடு அவளுக்கு உதவி செய்து வருகின்றார். தம்பிஐயாவின் உள்நோக்கத்தை அறியாத கமலமி அவரின் உதவிகள் மனிதாபிமானவை எனக் கருதிவருகின்றாள். கணவன் இறந்த பின்னர் தம்பிஐயாவின் நடவடிக்கைகள் மாறுபடுகின்றன. அவர் வெளிப்படையாகவே தனது எண்ணத்தை அவளிடம் தெரியப்படுத்தி அவளை அனுபவிக்க முயற்சிக்கின்றார். கணவனை இழந்து வேலியில்லாத பயிராகி நிற்பவளிடம் அவர் பலத்காரமாக என்றாலும் தனது ஆசையை அனுபவித்துவிடத் துடிக்கின்றார். அவள் மறுத்த போது அவர் அவள் மீது வசை கூறுகின்றார். பொலிஸ்காரர்களால் அனுபவிக்கப்பட்டவள் என்றும் நடத்தை கெட்டவள் என்றும் வசைமாரி பொழியப்படுகின்றது. அவள் தனது கற்பைக் காப்பாற்றுவதற்காகத் தன்னையே தீயில் பலியிடுகின்றாள். கமலத்தின் முடிவு எமது சமூகத்தில் பெண்கள் தனித்து வாழமுடியாது என்பதையே காட்டுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (s) 0ா.ம.இரகுநாதன்

Page 155
செங்கை ஆழியானின் கனவுகள் கற்பனைகள் ஆசைகள் என்னும் நாவலில் வருகின்ற சித்திரா சிறியவளாக இருக்கும் போதே இளைஞர்களின் பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுகின்றாள். சித்திரா பருவமடைவதற்கு முன்னரே அக்கிராமத்தின் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க மனேஜர் அவளின் கையைப் பிடித்து இழுத்து “சித்திரா .நீ சரியான வடிவு . ” என்று கூறுகின்றான். அவள் வீதியால் செல்லும் போது அவளின் உடலை அங்கம் அங்கமாக வாலிபர்களின் கண்கள் மேய்கின்றன. சிலர் அவளை நெருங்கித் தமது விருப்பத்தைத் தெரிவிக்கின்றனர். கனகு அவளைப் பார்த்து கே.ஆர். விஜயா போல இருக்கிறியள்” எனக் கூறித் தனது ஆசையை வெளிக்காட்டுகின்றான்.
கிளிநொச்சி பஸ் நிலையத்தில் இவள் இறங்கிய போது அவளைக் கண்ட சில வாலிபர்கள் பின்தொடர்கின்றார்கள். தியேட்டரில் இவளுக்குப் பின்புறமாக இருந்து இருட்டில் அவளின் இடையை வருட முயல்கின்றான் ஒருவன். இச் சம்பவங்கள் அழகும் இளமையும் உள்ள ஒரு பெண் தனியாக வாழ முடியாத நிலையினையே எடுத்துக்காட்டுகின்றன.
செங்கை ஆழியானின் காற்றில் கலக்கும் பெருமூச்சுக்கள் எனனும் நாவலில் வருகின்ற ராஜி பருவ வயதில் திருமணமாக முடியாத நிலையில் தானும் காதலனும் தமது இளமையை அனுபவிப்பதை நியாயப்படுத்து வதற்காகத் தமது பாடசாலையில் நாற்பத்தொன்பது வயது நிரம்பிய அதிபர் திருமணமாகி ஐந்தாறு; பிள்ளைகள் இருக்கின்ற நிலையிலும் ஒரு திருமணமான ஆசிரியை யோடு தொடர்பு வைத்திருப்பது பற்றிக் குறிப்பிடுகின்றாள்.
திருமணமான நிலையிலும் பெண்கள் மேலதிகாரிகளின் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவதை இது எடுத்துக்காட்டு கின்றது. திருமணமான பெண்கள் கூட இத்தகைய சுரண்டல்களை அனுபவிக்க வேண்டிய நிலையில் திருமணமாகாத இளம் பெண்களின் நிலை சற்று அதிகமாகவே இருக்கும் என்பதை உணர முடிகின்றது.
செங்கை ஆழியானின் ஓ அந்த அழகிய பழைய உலகம் என்னும் நாவலில் வருகின்ற மயிலம்மை கணவனை இழந்து விதவையாகிய நின்றபோது கிராமத்திலுள்ள பெரிய மனிதர்கள் பலரும் அவளை அனுபவிக்க முற்படுகின்றனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (82) Dr. LDSuebirger

“இந்த உலகத்தில் பயங்கரமான பிராணிகள் இந்த ஆண்கள் தான்! ஆற்றிற்குக் குளிக்கச்செல்ல முடியவில்லை. புதிய விதானையார் வம்புக்கு அழைக்கின்றார். தன்மனைவியையே மேய விட்டுவிட்டு கந்தசாமி என்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரிக்கின் றான்! பெரிய கமக்காரர் தனியவா இருக்கிறாய் என்று கேட்கிறார். இந்த உலகத்தில் ஒரு பெண் தனியாக வாழவே முடியாதா?”
எனக் கேட்கும் மயிலம்மை நாவலின் இறுதியில் புதிய விதானை செல்வச்சந்திரனின் ஆசைக்குப் பலியாகி விடுகின்றாள். வயிற்றுப் பிழைப்புக்கு வழி தெரியாத நிலையில் அவள் எடுத்த முடிவாகவே இதனை ஆசிரியர் காட்டினாலும் தனிமை பெண்ணுக்குப் பாதுகாப்பில்லை என்பதையும் இது உணர்த்தி விடுகின்றது.
டானியலின் கானல் என்னும் நாவலில் வருகின்ற சின்னி? பாலியல் ரீதியான பலாகாரத்திற்கு உட்படுத்தப்படுகின்றாள். உயர் சாதியினர் தமது அடிமை குடிமைகளைப் போகப் பொருளாக அனுபவிப்பது சாதாரணமான வழக்கம் என்பதால் நயினார் மகனின் இச் செயற்பாடு பற்றிப் பெரிது படுத்தவில்லை. ஆனால் சின்னியின் தகப்பன் இதை எதிர்க்கின்றான். இந் நிலையிலும் நயினார் தனது மகனின் கெளரவம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலேயே கவனமாக இருக்கின்றார். சின்னியின் பெண்மை பற்றி அவர் பொருட்படுத்தவே இல்லை.
எனவே இளமையும் அழகும் உள்ள பெண்களுக்கு இந்தச் சமூகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலை தெரிகின்றது. அவள் வீதியிலும், அலுவலகங்களிலும், பொது இடங்களிலும், சந்தர்ப்பம் கிடைத்தால் வீடுகளிலும் ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுவது சாதாரணமாகிவிட்டது. பருவ வயதில் திருமண மாகாமல் இருப்பதும் இளமையில் விதவையாகி இருப்பதும், கணவனைப் பிரிந்து தனியே வாழ்வதும், அலுவலகங்களில் பணிபுரிவதும் பெண்களுக்குப் பாதுகாப்பானவையாக இல்லை. இங்கெல்லாம் இவர்கள் ஆண்களின் பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். இத்தகைய நிலை மாறும்போதே பெண்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை உருவாகும்.
ஈழத்துத்தமிழ் நாவல்கள் (83 Dr. ம.இரகுநாதன்

Page 156
5.1.5 கற்புப் பற்றிய கருத்து நிலை.
தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்குகின்ற மற்றொரு பிரதானமான சமுதாயச் சிக்கலாக விளங்குவது கற்புப் பற்றிய பாரம்பரியமான கருத்து நிலையாகும். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் ஒரு பெண் கணவன் அல்லாத இன்னொரு ஆடவனுடன் உடலுறவு கொள்ளக் கூடாது என்றும் அவள் மனதாலும் இன்னொரு ஆடவனை விரும்பக் கூடாது என்றும் பிறர் தன்னை விரும்புமாறு வாழக் கூடாது என்றும் பிறர் தன்னை விரும்புமாறு வாழக் கூடாது என்றும் கூறி இவற்றையே கற்பின் அடிப்படைகளாகக் காட்டுகின்றன! எனினும் உடல் சார்ந்ததாகக் கூறப்படுகின்ற கற்புப் பற்றிய கருத்து நிலையே பெரிதும் பிரச்சினைக்குரியதாக இருந்து வருகின்றது. இதன்படி ஒரு பெண்ணோடு உடலுறவு கொள்பவன் அவளின் கணவனாகவே இருக்க வேண்டும். இக் கருத்து நிலைக்கு மாறாக திருமணத்திற்கு முன்னரோ பின்னரோ ஒரு பெண் கணவன் அல்லாத இன்னொரு வருடன் உடலுறவு கொண்டால் அவள் கற்பில்லாதவள் என்றே கருதப்படுகின்றாள்.
கற்புப்பற்றிய இத்தகைய நிலையினால் இளமையில் கணவனை இழந்து விதவையாகிவிட்ட ஒரு பெண் மறுமணம் செய்ய முடிவதில்லை. அத்துடன் இனக் கலவரங்களின்போதும் போர் நடவடிக்கைகளின் போதும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களும் கற்பை இழந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழ்கின்ற சூழலில் உருவாகின்ற காதல் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நிறைவேறிவிடுவதில்லை. சாதி, சீதனம், போர்க்காலச் சூழல் போன்ற பல்வேறு விதமான காரணங் களால் காதலில் தோல்வியுற்ற பெண்கள் கற்பை இழந்தவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்கு வாழ்வு மறுக்கப்படுகின்றது.
எமது சமூகத்தில் நிலவுகின்ற போர்க்காலச் சூழல், இளமையி லேயே கணவனை இழந்த விதவைகளையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட இளம் பெண்களையும் அதிகமாகவே சந்தித்திருக் கின்றது. சாதி, சீதனம் போன்ற காரணங்களாலும் போர்க்காலச் சூழலினாலும் காதல் கை கூடாதுபோன பெண்களும் சமூகத்தில் சற்று அதிகமாகவே காணப்படுகின்றனர். இத்தகைய பெண்களுக் கெல்லாம் வாழ்வு கொடுப்பதற்குத் தடையாக அமைவது எமது கற்புப்பற்றிய கருத்து நிலையே. எனவே இப் பெண்களுக்கு மறுவாழ்வு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (8) Dr.ம.இரகுநாதன்

கொடுப்பதற்காகக் கற்புப்பற்றிய கருத்து நிலையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமாக இருந்தது. இதனால் இக் கருத்து நிலை பிரச்சினைக்குரிய தொன்றாக மாறியது. இதனை ஈழத்துத் தமிழ் நாவலாசிரியர்கள் சிலர் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
செ. கணேசலிங்கன் சமூக உறவுகளை மார்க்சியக் கண்ணோட் டத்தில் அணுகுபவர். இதனால் இவரது கற்புப் பற்றிய கருத்து நிலையும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்து நிலையிலிருந்து வேறுபட்டதாகும். இதனை இவரது நாவல்களி னுாடாகக் கண்டு கொள்ளலாம்.
கணேசலிங்கனின் தரையும் தாரகையும்? என்னும் நாவலில் வருகின்ற திலகா கந்தசாமியைக் காதலிக்கின்றாள். ஏழையான கந்தசாமிக்குத் தனது மகளைத் திருமணம் செய்துவைக்க திலகாவின் தந்தை விரும்பவில்லை. இதனால் திலகா பணக்கார வாலிபன் ஒருவனுக்கு மனைவியாகின்றாள். இங்கு திலகாவின் முன்னைய காதல் பற்றிய பிரச்சினை எதுவுமே இருக்கவில்லை. ஆண்-பெண் இருவரதும் சொத்துக்களும் பற்றியும் சமூக அந்தஸ்து பற்றியுமே கவனம் செலுத்தப்படுகின்றது. இதனையே முற்போக்குச் சிந்தனை யுள்ள பாலனின் கூற்றாகவும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
“தனிச் சொத்துரிமையின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்தச் சமுதாயத்தில் குடும்ப உறவுயாவும் பொருளுறவை ஒட்டியே அமையும். அன்பு, பாசம், கற்பு, ஒழுக்கம் என்பவையெல்லாம் வெறும் புறத்தோற்றங்கள்.”*
இக்கருத்தின் அடிப்படையிலேயே திலகா கந்தசாமியை விடுத்துப் பணக்கார வாலிபனை மணந்து கொள்கின்றாள்.
கொழும்பில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது தமிழர்கள் பலரும் யாழப்பாணத்திற்கு அனுப்பப்படுவதற்காக றோயல் கல்லூரியில் தங்க வைக்கப்படுகின்றனர். அங்கு வசதியான வாழ்வை இழந்து அகதியாகி நிற்கின்ற திலகாவைக் கந்தசாமி சந்திக்கின்றான். அவர்களின் பழைய காதல் மீண்டும் தொடர்கின்றது. யாழ்ப்பாணம் சென்ற இருவரும் மிகவும் நெருக்கமாகவே பழகி உடலுறவிலும் ஈடுபடுகின்றனர். மூன்று வாரங்களின் பின்னர் கொழும்பு திரும்பும்போது திலகா வயிற்றில் உண்டான சிசுவின் தகப்பன் தானாகவே இருக்க
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (ss) Dr. D.6Jepirgar

Page 157
வேண்டும் எனக் கந்தசாமி நினைக்கிறான். ஆனால் அவள் இதுபற்றிப் பெரிது படுத்தவேயில்லை. கந்தசாமியின் வற்புறுத்தலினால் இறுதியில் யார் தகப்பன் என்று தனக்குத் தெரியாது என்றே கூறிவிடுகின்றாள். திலகாவுக்கோ - கணவனுக்கோ இது பிரச்சினையாகவே இருக்க வில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வைக் களிக்கின்றனர். எனவே கற்பு என்பது இங்கு பொருட்படுத்தப்படவில்லை.
*தனிக்குடும்பச் சொத்துரிமையை நிலை நாட்டுவதற்காக அந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டை எங்க வர்க்கத்தார் மட்டுமே தூக்கி போற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம். எங்களுக்காகப் படைக்கப்படும் சினிமா, நாடகம், இலக்கியம் கலைகளில் நடைமுறைக்குச் சாத்தியமற்ற முறையில் கற்பை இன்னும் வற்புறுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.”*
என்ற பாலனின் கருத்து கற்புப்பற்றிய கருத்து நிலையை மறுப்பதாகவே அமைந்துள்ளது. திலகாவின் வாழ்வும் இதனையே எடுத்துக் காட்டுகின்றது.
மணிவாணனின் யுகசந்தி என்னும் நாவலில் வருகின்ற பரமேஸ் காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்; இலட்சுமி இனக் கலவரத்தில் கணவனை இழந்தவள். பரமேஸ் பருவ வயதிலும் திருமணமாகாமல் இருந்தவள். வறுமை அவளுக்கு வாழ்வுகொடுக்க மறுத்துவிடுகின்றது. இந்நிலையிலேயே அவள் பணக்கார வாலிபன் ஒருவனிடம் ஏமாந்து போகின்றாள். ஊரில் எங்கும் பரவிவிட்டது; வெளியே தலைகாட்ட முடியவில்லை என்று தாய் கவலைப்படுகின்றாள். பாரம்பரியமான சமூகக் கட்டுப்பாடுகளையும் ஒழுக்க விதிகளையும் நம்பிக் கொண் டிருக்கும் தலைமுறையின் பிரதிநிதியான அந்தத் தாயைப் பொறுத்த வரையில் பரமேஸ் கற்பிழந்தவள்: இனி வாழத் தகுதியற்றவள்.
இக் கருத்து நிலையை எதிர்ப்பதாக இலட்சுமியின் வாழ்வு காட்டப்படுகின்றது. இலட்சுமி இனக்கலவரத்தின் போது கணவனை இழந்து விதவையாகி விடுகின்றாள், இளவயதிலேயே விதவையான வளுக்கு மறுமணம் செய்து வைக்கப்போவதாக இலட்சுமியின் தமக்கை பார்வதி கூறுகின்றாள். பார்வதியின் கருத்துக்கள் பரமேஸ்வரியின் தமக்கை கனகத்தையும் பாதிக்கின்றது. பார்வதி,
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (89 Dr.ம.இரகுநாதன்

“நம்முடைய காலம் வேறம்மா. நம்முடைய வாழ்க்கை முறை களும் வேறு. நமது காலத்துக் கட்டுப்பாடுகளையும் சம்பிரதாயங் களையும் எப்போதுமே நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பதில் அர்த்தமில்லை. கால ஓட்டத்தோடு கூடிச் சாதாரண வாழ்க்கையிலும் பலமாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் விரும்பினால் என்ன, விரும்பா விட்டால் என்ன அந்த மாற்றங்களுக்கு நாமும் கட்டுப்பட்டு ஒத்துப் போக வேண்டியது தவிர்க்க முடியாதது”
“அவள் குழந்தை வாழ்ந்து அலுத்துப் போகவில்லை. கொடுரமான முறையில் அவளது வாழ்க்கை தட்டிப் பறிக்கப்பட்டது. அதற்கு நாம் எங்கள் சம்பிரதாயங்களைக் காட்டி அவளைக் குற்றப்படுத்துவது நியாயமாகாது. ஒரு விதவை தன் மனம் ஒப்பி எந்த வித வாழ்க்கையை நாடுகின்றாளோ அந்தவித வாழ்க்கையை அவளுக்குக் கொடுப்பதற்கு நாம் தடையாக இருக்கக் கூடாது. அப்படித் தடைவிதிப்பது அவளைத் தவறான வேறு வழிகளில் ஈடுபடுத்துவதாகவும் அமைந்துவிடும்.”
எனக் கூறி இலட்சுமிக்கு மறுவாழ்வு கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றாள். நாவலின், இறுதியில் பரமேஸிற்கு வாழ்வு கொடுக்க சிவபாதம் முன்வருகின்றான் என்பது காட்டப்படுகின்றது.
எனவே காதலனால் வஞ்சிக்கப்பட்ட பரமேஸ், விதவை இலட்சுமி ஆகியோரின் மறுவாழ்வுக்குத் தடையாக இருந்த கற்புப்பற்றிய கருத்து நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதும் இவர்களுக்கு வாழ்வு வழங்கப்பட வேண்டும் என்பதும் இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.
கோகிலா-மகேந்திரனின் தூவானம் கவனம்" என்னும் நாவலில் விதவைகள் மறுமணம் செய்வதற்குத் தடையாகவுள்ள சமூகப் பார்வை எடுத்துக் காட்டப்படுகின்றது. தான் மறுமணம் செய்து கொள்வதில் பிழை இல்லை என்பதை ஒரு விதவை உணர்ந்து கொண்டபோது சமுதாயம் அதனை வரவேற்கவில்லை என்று கூறி அதனைக் கடிந்து கொள்ளும் ஆசிரியர் சமுதாயம்,
அவளா? அவளா? இப்படி மனம் மாறினாள்,
அவளா திருமணம் செய்ய விரும்புகிறாள்?
ஈழத்துத்தமிழ் நாவல்கள் 8ெ) Dr. ம.இரகுநாதன்

Page 158
அவள் தன் முந்திய கணவனை மறந்தே போய் விட்டாளா?
என்று பல கேள்விகளைக் கேட்டு அவளின் மனதை மாற்றிவிடுகின்றது. இதனால் சமுதாயத்தில் தனது இமேஜ் உடைந்து விடும் எனக் கருதிய அந்த விதவை மீண்டும் தனது ஒட்டிற்குள் புகுந்துவிடுகின்றாள். எனக் கூறுவதனுாடாக ஆசிரியர் விதவைகளின் மறுமணத்தை ஆதரிக்கின்றார். ஆனால் நாவலில் இவ்விடயம் பிரதான பொருளாக இடம்பெறவில்லை.
செ. கணேசலிங்கனின் சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை என்னும் நாவலில் வருகின்ற சித்திரா, உமா, மீனாட்சி ஆகிய மூன்று பெண்களும் கற்புப் பற்றிய பாரம்பரியமான கருத்து நிலையை மறுத்துரைக்கின்றனர்.
சித்திரா, காலங்காலமாகத் தானும் தனது முன்னோர்களும் உயர்வானவை என மதித்து வந்த சமூகக் கட்டுப்பாடுகள் தனக்கு வாழ்வளிக்கத் தவறியதால் அவற்றை உடைத்து வெளியேறுகின்றாள். திருமண வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று ஏங்கிய நிலை மாறி இப்போது திருமணம் பெண்ணுக்குச் சிறை போன்றது என்று உணர்கின்ற நிலைக்கு அவள் மாறிவிடுகின்றாள். இதனாலேயே
*ஒருவனுக்குச் சமைத்துப் போட்டுப் பிள்ளை பெற்றுக் கொடுத்து அடிமைப் பணிகளும் செய்ய நான் தயாரில்லை.9900
“பாலுறவு இன்பத்தை எப்படிப் பெறுவது அனுபவிப்பது என்பதையும் நான் அறிவேன். 9910.
“இன்பத்திற்கும் குழந்தைக்கும் இன்று ஒரு தொடர்பும் இல்லை. கருத்தடைச் சாதனங்கள் பலவுண்டு. பணத்தோடும் நுகர் பண்டத் தோடும் திரும்பும் பணிப் பெண்களைக் கட்ட சிங்கள வாலிபர்கள் போட்டி போடுகிறார்கள். ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்தை எங்கே தேடிக்காணப் போகிறார்கள். கற்பு என்பதெல்லாம் வெறும் கற்பனை. இலக்கியத்திலும் இல்லை. அங்கே விதவை இல்லை. விவாகரத்து, இரண்டாம் மூன்றாம் திருமணம் நடைபெறுகிறது. நாமெல்லாம் வெறும் பொய்மையிலேயே எம்மை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருக் கின்றோம்.?? எனக்கூறுகின்றாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (288) 0ா.ம.இரகுநாதன்

இங்கு சித்திராவின் மூலமாக உடலின்பத்தை விரும்பியபோது விரும்பியவனுடன் அனுபவிக்கலாம; திருமணத்திற்கு முந்திய உடலுறவில் திருமணம் பாதிக்கப்படாது: பணம் இருந்தால் திருமணம் இலகுவில் சாத்தியமாகிவிடும் என்ற கருத்துக்கள் வெளிப்படுகின்றன. சித்திரா சமூகக் கட்டுப்பாடுகளைஉடைத்து வெளியேறி மத்திய கிழக்கு நாடொன்றில் பணிப்பெண்ணாகப் பணிபுரிபவள். அவளின் வாழ்க்கை அனுபவத்தில் கற்பு என்பது அர்த்தமற்றதாகவே அமைகின்றது.
மற்றொரு பாத்திரமான உமா, கற்பு என்ற பெயரில் பதினான்கு ஆண்டுகளாக இன்ப உணர்வுகளைத் துறந்து தனது பெண்மையைக் காப்பாற்றியதைத் தனது கணவனுக்குக் கூறியபோது இவன் “யார் காப்பாற்றச் சொன்னது?’ என்று கேட்டுவிடுகின்றான். இதனால் சித்திரா சமூகத்தில் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றாள். கணவன் இறந்தபோது அவள் தனக்கு விடுதலை கிடைத்ததாக உணர்கின் றாள.
மலையகப் பெண்ணான மீனாட்சி இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டவள். கலவரத்தின் போது இராணுவத்தினர் பெண்களையெல்லாம் கெடுத்தார்கள், கற்பழித்தார்கள் என்றெல்லாம் வந்த செய்திகள் பற்றிக் கேட்ட சித்திராவுக்கு மீனாட்சி,
"........... கெடுக்கிறது அழிக்கிறதென்றெல்லாம் ஏனம்மா
சொல்லுறிங் க. உயிர் தான் பெரிசம்மா அதைக்
99.103
காப்பாற்றினால்தான் மற்றது எதையும் சாதிக்க முடியும்
எனக் கூறுகின்றாள்.
இம் மூன்று பெண்களினூடாகவும் ஒரு பெண்ணின் கன்னித் தன்மை காப்பற்றப் படவேண்டியது: அது கணவனுக்கு மட்டுமே உரித்தானது: என்ற கருத்துக்கள் மறுக்கப்படுகின்றன. இதனால் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளவும் திருமணத்திற்கு முன்னர் இன்னொருவனுடன் உடலுறவு கொண்டவள் அச்சமின்றித் திருமணம் செய்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுகின்றது. கற்புப்பற்றிய பாரம்பரிய மான கருத்து நிலையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வாழ்வளிக்க இக்கருத்துக்கள் பயனுள்ளவையாக அமைகின்றன.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (8) 0ா.ம.இரகுநாதன்

Page 159
கற்புப்பற்றிய பாரம்பரியமான கருத்து நிலையினை மறுத்து செ. கணேசலிங்கன், கோகிலா. மகேந்திரன், மணிவாணன் முதலியோர் தமது பாத்திரங்களை உருவாக்கியிருக்கின்றனர். இதே காலத்திலேயே பாரம்பரியமான கருத்து நிலையை ஆதரிப்பது போன்ற பாத்திரங்களைக் கொண்ட நாவல்களும் வெளிவந்துள்ளன.
பொ. பத்மநாதனின் புயலுக்குப்பின் என்னும் நாவலில் வருகின்ற கோகிலா மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் லோகநாதன் என்ற இளைஞனைக் காதலித்து அவனோடு உடலுறவு கொண்டு கருத்தரிக்கின்றாள். கோகிலாவின் தந்தை இக் குழந்தையை இன்னொருவரிடம் கொடுத்துவிட்டு அது இறந்துவிட்டதாக அவளுக்குப் பொய் கூறுகின்றார். குழந்தை இறந்து விட்டதாக நம்பினாலும் கோகிலா இன்னொருவனைத் திருமண செய்யாமல் வாழ்வு முழுவதும் விதவைபோலவே வாழ்ந்து விடுகின்றாள்.
மற்றொரு பாத்திரமான சுமதி கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு களால் வீட்டைவிட்டு வெளியேறி இன்னொருவனைக் காதலித்து அவனாலும் கைவிடப்பட்டு வயிற்றிலே கருவோடு வீதியிலே திரிகின்றாள். வீதியிலே திரிந்த சுமதியை மன்னித்து மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்ள அவளின் கணவன் தயாராகின்றான்: ஆனால் அதற்கிடையில் விபத்தொன்றில் அவள் பலியாக குழந்தை மட்டும் தப்பிவிடுகின்றது. அவன் குழந்தையை ஏற்றுக் கொள்கின்றான்.
படித்த காலத்தில் ஏற்பட்ட தவறினால் வாழ்வு பூராவும் கோகிலா விதவையாக இருப்பதும் கணவனைப் பிரிந்து இன்னொரு ஆடவனுடன் தொடர்பு கொண்டு வயிற்றிலே கருவையும் சுமந்து கொண்டு விபச்சாரி போல வீதியிலே திரிந்த சுமதி மன்னிக்கப்படலாம் எனக் கூறுவதும் முரண்பாட்டை ஏற்படுத்துவதாகவுள்ளன. கோகிலா கற்புப்பற்றிய பாரம்பரியமான கருத்து நிலையின் பிரதி நிதியாகவும் சுமதி அக்கருத்து நிலையினை மறுதலிப்பவளாகவும் இருக்கின்றனர். சுமதியை மன்னிக்க வேண்டும் என விரும்பின்ாலும் அவள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவள் என்பதாலேயே விபத்து அவளைப் பலி கொண்டு விடுவதாகக் காட்டி ஆசிரியர் தப்பிக் கொள்கின்றார். எனவே சுமதியின் விடயத்தில் அவர் காட்டியது மனிதாபிமான உணர்வாகவே கருதப்படவேண்டும். எனவே ஆசிரியர் கற்புப் பற்றிய பாரம்பரியமான கருத்தையே பிரதிபலிக்கின்றார் எனலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (9) Dr. ID-6pebirgeir

அ. பாலமனோகரனின் நிலக்கிளி" என்னும் நாவலில் வருகின்ற பதஞ்சலி மிகவும் பின் தங்கிய காட்டுக் கிராமமொன்றில் வாழ்பவள். கணவனல்லாத இன்னொருவனுடன் நெருங்கிப் பழகு வதையும் தொட்டுப் பழகுவதையும் தவறாகவே கருதாதவள். கற்பு என்றால் என்ன? எல்லாப் பெண்களுக்கும் கற்பென்ற ஒன்று இருக்கத்தான் வேண்டுமா? என்றெல்லாம் கேட்ட பதஞ்சலிக்கு புயற்காற்று வீசிய அந்தக் கொடுரமான இரவில் சுந்தரலிங்கம் தன்னோடு உடலுறவு கொண்டபோது கற்பு என்றால் என்ன என்பது புரிந்து விட்டதாக ஆசிரியர் எழுதுகின்றார்.
கணவனை விட இன்னொருவனைத் தவறான எண்ணத்துடன் நினைத்தே பார்க்காத ஒரு அப்பாவிப் பெண்ணை அவள் எதிர்பாராத வேளையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளைச் சாதகமாகப் பயன்படுத்திச் சுந்தரலிங்கம் அவளோடு உடலுறவு கொள்கிறான். இதனால் அவள் அனுபவிக்கும் துன்பத்தை எடுத்துக்காட்டும் ஆசிரியர் கற்புப்பற்றிய பாரம்பரியமான கருத்து நிலையின் பக்கமே சாய்ந்து விடுகின்றார். பதஞ்சலி வயிற்றிலே கருவோடு அனுபவித்த துன்பமும் குழந்தை பிறந்தபோது அனுபவித்த மனத்துயரமும் கற்புக்கு அடிப்படை மனம் அல்ல; உடல்தான் என்ற கருத்தையே புலப்படுத்துகின்றன.
பத்மாவின் யாத்திரை என்னும் நாவலில் வருகின்ற சாந்தி தனது சங்கீத ஆசிரியரான மகேஸ்வரனைக் காதலிக்கின்றாள். எதிர் பாராத விதமாக செல்வராஜன் சாந்தியைப் பலாத்காரம் செய்கின்றான். இதனால் தனது கற்புப் பறிபோய்விட்டது எனக் கருதிய சாந்தி தனது காதலனைத் திருமணம் செய்ய விரும்பாமல் தனது கற்பைப் பறித்த செல்வராஜனையே கணவனாக்கிக் கொள்கின்றாள்.
மகேஸ்வரனின் காதலியாகவும் செல்வராஜனின் மனைவியா கவும் வாழ்ந்து இன்னொரு ஆடவனுடன் உடலுறவு கொள்ளாத கற்பு நிலையைக் காப்பாற்றிக் கொள்கின்றாள் சாந்தி. கற்புப்பற்றிய கருத்து நிலையினால் சாந்தி அர்த்தமில்லாதவாழ்வை வாழ்ந்து துன்புறுகின்றாள். சாந்தி அனுபவிக்கும் துன்பம் இக் கருத்து நிலையின் குறைபாட்டினையும் உணர்த்தி விடுகின்றது.
அருள். சுப்பிரமணியத்தின் நான் கெடமாட்டேன் என்னும் நாவலில் வருகின்ற இந்திரா திருமணத்தின் முன்னர் தனது அண்ணன் முறையான ஒருவனுடன் உடலுறவு கொள்கின்றாள்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (9) 0ா. ம.இரகுநாதன்

Page 160
அவளின் வயிற்றில் உண்டான கருவை அழிக்க மறுத்த டாக்டர் இவள்,
“பெண்கள் எதை இழக்கக் கூடாதோ அதை இவள் இழந்திருக்கின்றாள். y9 105
என்று கூறி அவளைக் கற்பை இழந்தவளாகக் காட்டுகின்றார்.
ஆனால் இந்திராவைத் திருமணம் செய்த நடராஜன் அவள் முன்னர் இன்னொருவனுடன் உடலுறவு கொண்டதை உணராமல் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வில் ஈடுபடுகின்றனான். எனினும் இந்திராவின் மனம் தனது தவறினை நினைத்துத் தினமும் வருந்திக் கொண்டே இருக்கின்றது. தான் தவறு செய்தவள்; கெட்டுப்போனவள் என்பதை அவள் அவனுக்குக் கூறியபோது வாழ்வின் இனிமை குழம்பிவிடுகின்றது.
எனவே திருமணத்திற்கு முன்னர் இன்னொருவனுடன் உடலுறவு கொண்டதை வெளிப்படுத்தக் கூடிய மாறுதல்கள் பெண்ணின் உடலில் இருக்கின்றனவோ இல்லையோ அல்லது அவ்வாறு இருந்தும் அதைக் கண்ணால் கண்டு கொள்ள முடியாவிட்டாலும் பெண் கற்பை இழந்தவள்தான் என்பதே ஆசிரியரின் கருத்தாகும்.
ஜீனைதா ஷெரீப்பின் சாணைக் கூறை" என்னும் நாவலில் வருகின்ற நஜிமா நவாஸ் மச்சானுக்குச் சாணைக் கூறை போட்டு நிச்சயிக்கப்படுகின்றாள். எனினும் குடும்பத்தின் வறுமை காரணமாக அவள் முஸ்தபா போடியாரின் மகன் சலீமையே திருமணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
சலீம் எதிர்பாராத விதமாக இறந்தபோது நஜிமா விதவையா கின்றாள். விதவையாகி நிற்கும் அவளை மறுமணம் செய்துகொள்ள நவாஸ் விரும்புகின்றான். இன்னொரு வனுக்கு மனைவியாகிய பின்னர் மறுமணம் செய்துகொள்ள நஜீமா மறுக்கின்றாள். விதவைகள் மறுமணம் செய்வதால் கற்புநிலை பாதிக்கப்படும் என்ற கருத்தே அவளின் மறுப்புக்குக் காரணமாகும்.
எனவே கற்புப் பற்றிய பாரம்பரியமான கருத்து நிலையினால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இளமையிலேயே வாழ்வை இழந்து நிற்கும் பெண்களின் துயரம் துடைக்கப்படுவதற்குக் கற்புப்பற்றிய கருத்து நிலை மாற்றப்படுவது அவசியமாகும். ஈழத்துத்தமிழ்நாவல்கள் (9) Dr.ம.இரகுநாதன்

5.1.6 குடும்பப் பிரிவும் தனிமைத் துன்பமும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமைகளினாலும் பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளினாலும் ஆணிகள் புலம் பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக யாழ்பாணத்துச் சமூகத்தில் இந்நிலை அதிகரித்தே வருகின்றது. திருமணமான ஆண்கள் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாடு செல்லும் போது மனைவி தனிமைப்படுத்தப்படுகின்றாள். அவளின் தனிமைத் துன்பம் யாழ்ப்பாணத்துச் சமுதாயத்தின் துன்பமாகவே தெரிய முற்பட்டபோது இது ஒரு சமுதாயச் சிக்கலாகவே கருதப்பட்டது. இந்நிலையை யாழ்ப்பாணத்துச் சூழலிலிருந்து வெளிவருகின்ற சில நாவல்களும் எடுத்துக் காட்டியிருக்கின்றன.
செங்கை ஆழியானின் கிடுகுவேலி" என்னும் நாவலில் வருகின்ற சண்முகம் குடும்பத்தில் மூத்தவன்: இரண்டு பெண்களுக்கு அண்ணன்: தந்தைக்கு வயதாகி விட்டதால் குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவன் இந்நிலையில் அவன் நிர்மலாவைத் திருமணம் செய்கிறான் மூன்று மாதங்கள் மகிழ்ச்சியாகக் கழிந்து விடுகின்றன இந்த இடைவெளியில் நிர்மலாவின் வயிற்றில் நிர்மலன் கருக் கொண்டுவிடுகின்றான். அவளின் பிரசவத்திற்காகக் கூடக்காத்திருக் காமல் சண்முகம் வெளிநாடு செல்லத் தயாராகின்றான் இரண்டு சகோதரிகளுக்கும் சீதனம் கொடுக்க வேண்டும் என்ற குடும்பப் பொறுப்பு அவனை அத்தகையதொரு முடிவுக்குத் தள்ளி விடுகின்றது. தனது குடும்பம், மனைவி , மனைவியின் வயிற்றில் உருவாகிக் கொண்டிருக்கும் குழந்தை அனைத்தையும் பொருட்படுத்தாமல் அவன் புறப்படத் தயாராகின்றான். அவனின் பிரிவால் தனிமைப்படுத்தப்பட்ட நிர்மலா,
*எல்லோரும் கலியாணம் செய்யிறது வாழ்கிறதுக்கு
உழைக்கிறதுக்கில்லை. நாங்க சந்தோஷமாக வாழ வேண்டிய
வயதில உழைக்க வேண்டும் என்கிறியள். கலியாணம் கட்டி மூன்று
108
மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் பிரிகிறன் என்கிறியள்.
“தங்கச்சியளுக்குத்தான் என்னை கலியாணம் செய்யேக்க ஒரு லட்சம் டொனேசன் வாங்கினியள். அப்பா உங்களுக்கு ஒரு
லட்சம் தந்தது நாங்க வாழுகிறத்துக்கு. நீங்கள் அப்படியே அந்தக்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (93) Dr. D.6 peogrgar

Page 161
காசைக் கொண்டு மூத்த தக்கச்சியின்ர கலியாணத்தை முடிச்சியள். நான் ஏதாவது கேட்டேனா? இப்ப மற்றத் தங்கச்சி மாருக்காக உழைக்கப் போறன் என்கிறியள். என்னைப் பற்றிக் கொஞ்சமாவது நீங்கள் யோசித்துப் பார்த்தியளா? நானும் நீங்களும் என்ன வாழ்ந்து முடிச்சவங்களா? என்னை வாழா வெட்டியாக விட்டிட்டு நீங்க போகப் போறியள். 99.09
என்று அழுது புலம்புகின்றாள். சீதனக் கொடுமையோடு போராடும் சகோதரிகளின் வாழ்வுக்காகத் தனது ஆசா பாசங்களைத் துறந்து வெளிநாடு ச்ெல்லத் தயாரான சண்முகத்தின் நிலை யாழ்ப்பாணச் சமூகத்தின் தவிர்க்க முடியாத நிலை. இத்தகைய சமூக நிலையின் முன் தனியொரு நிர்மலாவின் கண்ணிரால் எதைத்தான் செய்து விட முடியும்.
சண்முகம் ஐந்து ஆண்டுகள் வெளிநாட்டில் தங்கியிருக் கின்றான். போர்க்காலச் சூழலில் நிர்மலாவும் மகன் நிர்மலனும் அனுபவித்த துன்பங்கள் அதிகம். ஐந்தாண்டுகள் கழிந்து சண்முகம் ஊருக்குத் திரும்பி வருகின்றான். வெளிநாட்டில் உழைத்த சகோதரிகளின் வாழ்வுக்கு வழி கிடைத்தபோது அவன் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இறந்து விடுகின்றான். நிர்மலா விதவையாகி விடுகின்றாள், மூன்று மாத வாழ்வுட்ன் அவள் விதவையாகி நிற்கின்றாள்.
யாழ்ப்பாணத்துச் சமுதாயத்திலுள்ள பல பெண்களின் பிரதிநிதியாகவே நிர்மலா விளங்குகின்றாள். சீதனக் கொடுமை சண்முகத்தைத் தனக்காக வாழ விடவில்லை. நிர்மலா சீதனம் கொடுத்து மாப்பிள்ளை தேடியும் அவனோடு வாழ முடியவில்லை. எனவே சீதனக் கொடுமையால் ஆண்களும் துன்பப்படுகின்றனர்: சீதனம் கொடுக்கக் கூடிய பெண்களும் துன்பப்படுகின்றனர். மொத்தத்தில் இது அனைவரையுமே பாதிக்கின்றது. எனவே இக் கொடுமை இருக்கும் வரை மகிழ்ச்சியன குடும்பவாழ்வு அமையப் போவதில்லை என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது.
கோகிலா- மகேந்திரனின் தூவானம் கவனம் என்னும் நாவல் கணவன் வெளிநாடு சென்றுவிடத் தனது இரண்டு பிள்ளைகளுடனும் தனித்து வாழ்கின்ற வீணா என்னும் ஒரு ஆசிரியையின் வாழ்வை மையமாகக் கொண்டதாகும்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (9) Dr.ம.இரகுநாதன்

வீணா சிறை உடைக்கும்குயில்கள்’ என்ற மகளிர் அமைப்பின் மாவட்டச் செயலாளராக இருந்தவள். அந்தக் குழுவினர் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்வதில்லை என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டவர்கள். ஜீவன் நாடகப் பயிற்சிப் பட்டறையொன்றில் வீணாவைக் கண்டு காதலித்து சீதனம் வாங்காமல் திருமணம் செய்து கொள்கின்றான்.
ஜீவனின் நண்பன் சங்கர் பெருமளவு சீதனத்தோடு திருமணம் செய்தவன். சங்கரின் வீட்டில் நடந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஜீவனும் வீணாவும் சென்று வருகின்றனர். அங்கு நடைபெற்ற கொண்டாட்டத்தின் சிறப்பு சங்கரின் வாழ்க்கை வசதிகள் எல்லாம் ஜீவனின் மனதைக் குழப்பி விடுகின்றன. தான் சீதனம் வாங்காதது தவறு என அவன் உணர்ந்து கொள்கின்றான். இது அவர்களின் குடும்பத்தில் சிக்கலை உருவாக்கி விடுகின்றது. அவன் தனது வறுமையைப் போக்க வெளிநாட்டிற்குப் புறப்படுகின்றான். இதனால் வீணா தனிமைப் படுத்தப்படுகின்றாள்.
கணவனைப்பிரிந்த தனிமைத் துன்பமும் போர்க்காலச் சூழலின் துன்பமும் வீணாவை வாட்டி வதைக்கின்றன. இத் துன்பங்களுக்கு முடிவு வருவது போல ஜீவன் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருகின்றான். ஆனால் வந்தவன் எயிட்ஸ் நோயோடு வந்து அதை அவளுக்கும் கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறான். வீணா விதவையாக் கப்படுகின்றாள். அதை விடவும் மேலாக எயிட்ஸ் நோயாளி என்ற அவமானமும் அவளுக்குக் கிடைக்கின்றது.
வீணாவின் வாழ்வின் மூலமாக ஆசிரியர் சமூகத்துக்கு எச்சரிக்கை விடுக்கின்றார். ஆனால் இத்தகைய பிரிவுகளை எயிட்ஸ் என்ற உயிர் கொல்லியை மட்டும் காட்டித் தடுத்துவிட முடியுமா? எமது சமூகத்தின் தவிர்க்க முடியாத தேவையே வெளிநாட்டுப் பயணங்களை ஊக்குவிக்கின்றது. எனவே சமூகம் மாறவேண்டும் சமூக மதிப்பீடுகள் மாறவேண்டும் அப்போதுதான் எமக்கு மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (99 Dr.ம.இரகுநாதன்

Page 162
5.2 Фрц26Gропт
ஈழத்திலே வெளிவந்த தமிழ் நாவல்கள் சமுதாயச் சித்திரிப்பாக அமைய முற்பட்ட காலத்தில் இருந்தே அவற்றில் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளும் இடம் பெற ஆரம்பித்து விட்டன. இந்த வகையில் ஈழத்துத் தமிழ் மக்களது சமுதாயச் சிக்கல்களைப் பொருளாகக் கொண்டு சமூகப் பிரதிபலிப்பாக எழுதப்பட்ட முதல் நாவலாக மங்கள நாயகம்- தம்பையாவின் நொறுங்குண்ட இருதயம் (1914)" என்ற நாவலையே குறிப்பிடலாம். அந்நாவலில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் குடும்ப அமைப்பில் நிலவுகின்ற ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கு, அந்தஸ்துணர்வு என்பன பெண்களின் வாழ்க்கையை எந்தளவிற்குப் பாதிக்கின்றன என்பதை வகைமாதிரியான பாத்திரங்களினுடாக எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. குறிப்பாக தனக்குரிய கணவனைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையற்ற பெண்களின் நிலை, தமது பிள்ளைகளின் விருப்பத்தைப் பொருட்படுத்தாமல் தாம் விரும்பிய வகையில் திருமணம் செய்துவைக்க முயலும் பெற்றோரின் அந்தஸ்து சார்ந்த மனப்பான்மை, தாமே விரும்பி மணம்முடித்த மனைவியைக் கூட அடக்கியொடுக்கித் துன்புறுத்த முயலும் ஆண்களின் மனநிலை போன்ற பன்முகப்பட்ட குணாம்சங்கள் கொண்ட மாந்தர்கள் பற்றிய ஒரு சமுதாய விமர்சனமாகவே இந் நாவல் அமைகின்றது.
மங்கள நாயகம்- தம்பையாவைத் தொடர்ந்து நாவல் எழுதிய ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை, அ.நாகலிங்கம்? போன்றோர் சீதனத்தால் வரும் பிணக்கு, கற்புநெறியின் மேன்மை ஆகியவற்றை விளக்குவதாகவே தமது நாவல்களை அமைத்தனர். கற்பு நெறியை வலியுறுத்தியதால் இவர்கள் விதவாத விவாகத்தை எதிர்த்தனர். எனினும் ஆங்கில ஆட்சியாலும் கிறிஸ்தவச் சூழலாலும் பழைய மதிப்பீடுகள் செயலிழந்து கொண்டிருந்தன. இதனாலேயே ம.வே.திருஞானசம்பந்தப்பிள்ளை தனது கோபால நேசரத்தினம் என்னும் நாவலில் வருகின்ற கிறிஸ்தவ மதத்து விதவைப் பெண்ணான நேசரத்தினத்தை சைவத்திற்கு மாற்றி கோபாலனை மணம் முடிப்பதாகக் காட்டுகின்றார். இங்கு மதமாற்றமே பிரதான பொருளாக அமைந்ததால் விதவாத விவாகம் பெரிதுபடுத்தப்படவில்லை. எனினும் இது சமுதாய மாற்றத்தில் பழைய மதிப்பீடுகள் செயலிழப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. ஈழத்துத்தமிழ்நாவல்கள் 9ெடு Dா. ம.இரகுநாதன்

1960 களில் ஈழத்துத் தமிழ் நாவலுலகில் முன்னணி வகித்தவர்கள் முற்போக்கு அணியைச் சேர்ந்த படைப்பாளிகளே. அவர்கள் வர்க்க வேறுபாடுகளை முதன்மைப் படுத்தியே தமது படைப்புக்களை அமைத்தனர். யாழ்ப்பாண மண்ணில் எரியும் பிரச்சினையாக இருந்த சாதிப் பிரச்சினையே இவர்களது நாவல்களின் பிரதான பொருளாக அமைந்தது. இதனால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் பிரதான இடத்தை வகிக்கவில்லை. எனினும் ஆங்காங்கே சீதனக் கொடுமையால் பருவ வயதைக் கடந்தும் திருமணமாகாத பெண்களின் பெருமூச்சுக்களையும் சீதன மின்மையால் பொருந்தா மணத்திற்கு உட்பட்டு வாழ்நாள் பூராவும் துயருறும் பெண்களின் அவலக் குரலையும் கேட்க முடிகின்றது.
1970 களில் வெளிவந்த பெருமளவு குடும்ப நாவல்களிலும் சமூக நாவல்களிலும் பெண்கள் எதிர்நோக்குகின்ற பல் வேறு விதமான பிரச்சினைகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
1980 களில் நாட்டில் ஏற்பட்ட யுத்தச் சூழ்நிலையினாலும் பல்வேறு காரணங்களாலும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் பெண்கள் தொடர்பான பிரச்சினைகள் புதிய பரிமாணத்தைப் பெற்றுக் கொண்டன.
பொதுவாக ஈழத்துத் தமிழ் நாவல்களில் எடுத்துக் காட்டப்படு கின்ற பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கல்களுள் முதன்மை யானது சீதனக் கொடுமையாகும். சீதனக் கொடுமையால் பெண்கள் அனுபவிக்கும் பல்வேறு வகையான துன்பங்களை இந் நாவல்கள் எடுத்துக்காட்டியுள்ளன. அந்த வகையில்,
1. திருமணம் தடைப்படுதல் அல்லது திருமண வாய்ப்பையே
இழத்தல்.
2. கல்வித்தரம், அழகு, சாதி அந்தஸ்து முதலியவற்றால்
பொருத்தமில்லாத மணமகனுக்கு வாழ்க்கைப்படுதல்.
3. வயது முதிர்ந்த தாரமிழந்தவர்களுக்கு இரண்டாம், மூன்றாம்
தாரமாக வாழ்க்கைப் படுதல்.
4. சீதனமின்மையால் காதல் நிறைவேறாது போதல்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (9) Dr.ம.இரகுநாதன்

Page 163
5. பருவ வயதில் திருமணமாகாததால் பாலியல் தொடர்பான
ஒழுக்கப் பிறழ்வுகளுக்கு ஆளாதல்.
6. அலுவலகங்களிலும், பொது இடங்களிலும். வீடுகளிலும்
ஆண்களின் பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுதல்.
போன்ற பல்வேறு விதமான சிக்கல்களை ஈழத்து தமிழ் நாவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ஈழத்துத் தமிழ் நாவலாசிரியர்கள் பலரும் சீதனக் கொடுமையால் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை எடுத்துக் காட்டியிருந்தாலும் இக் கொடுமையைப் போக்குவதற்குரிய சரியான தீர்வினைக் கூறிவிடவில்லை. 1960 களில் முற்போக்கு அணியைச் சேர்ந்த படைப்பாளிகள் சமூக மாற்றத்தின் மூலமே அனைத்துப் பிரச்சினை களுக்கும் தீர்வு காணப்பட்ட வேண்டும் என்ற கொள்கையை முன் வைத்தனர். இவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையைக் கருத்திற் கொண்டு சோஷலிசப் புரட்சியை சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வாகக் கருதினாலும் பெண்களின் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை என்பதை உணர்ந்தனர். இதனையே செ.கணேசலிங்கனின் பின் வரும் கூற்று உணர்த்துகின்றது.
“பாட்டாளி வர்க்கத்தின் விடுதலையோடு ஒப்பிடும் போது பெண்ணினத்தின் விடுதலை மிகவும் சிக்கலானதாகவும் பாட்டாளியின் விடுதலை எளிதாகவும் தோன்றுகின்றது.
பாட்டாளி வர்க்க விடுதலையோடு பெண்ணும் விடுதலை பெற்று விடுவாள் என்றும் அறிஞர்கள் எண்ணியிருக்கலாம் ஆனால் சோஷலிசப் புரட்சி நடந்து கொண்டிருப்பதாகக் கூறும் நாடுகளிலும் பெண் பூரண விடுதலை பெற்று விட்டதாகக் கூறுவதற்கில்லை. ஆணினத்தின் ஆதிக்கம் அங்கு இன்னும் நிலவுவதையே காணுகின் (8ptub.”
எனவே சோஷலிசப் புரட்சி சீதனப் பிரச்சினைக்கோ பெண்களின் பிரச்சினைக்கோ தீர்வாக அமையப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொண்டனர் எனத் தெரிகின்றது. முற்போக்கு அணியினர் எதிர்பார்த்த சோஷலிசப் புரட்சி, சமூகமாற்றம் ஆகியவை சாத்தியமாகாத நிலையில் கல்வி, வேலைவாய்ப்பு, வெளிநாட்டு
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (98) Dr. ID-6puebirgiair

வேலை வாய்ப்பு. விடுதலை இயக்கங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் குடும்ப அமைப்பை உடைத்து வெளியேறும் பெண்களின் தொகை அதிகரித்தது. இதே காலச் சூழலில் பெண் விடுதலை தொடர்பான புதிய சிந்தனைகளும் வேகமாகப் பரவின. இதனால் திருமணம், கற்பு, குடும்பம் ஆகியவை தொடர்பான பாரம்பரியக் கருத்து நிலை கேள்விக்குரியதாக்கப்பட்டது.
இவ்வாறான சூழலில் வெளிவந்த நாவல்கள் சிலவற்றில் திருமண பந்தத்தை வெறுத்து குடும்ப அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியேறும் பெண்கள் காட்டப்படுகின்றனர். எனவே சீதனக் கொடுமை தீர்க்கப்பட முடியாத சிக்கலான பிரச்சினையாக மாறிவிட்ட போது பெண்கள் தமது முழு விடுதலையையும் கருத்திற் கொண்டு குடும்ப அமைப்பினையே, விட்டு வெளியேறுகின்றனர். இவ்வாறு வெளியேறுகின்ற பெண்களுக்கு சீதனம், திருமணம், கற்பு, குடும்பம் முதலிய பிரச்சினைகள் எதுவுமே இருக்கப்போவதில்லை. இவ்வாறான புதிய போக்குடைய பெண்ணாகவே செ. கணேசலிங்கனின் சூரியன் கிழக்கில் உதிப்ப தில்லை என்னும் நாவலில் வருகின்ற உமா சித்திரிக்கப்படுகின்றாள்.
முற்போக்கு அணிசாராத படைப்பாளிகள் சீதனக் கொடுமையால் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை எடுத்துக் காட்டினாலும் அதற்குரிய தீர்வு எதனையும் முன் வைக்கவில்லை. இப் படைப்பாளிகளுள் சிலர் சீதனம் வாங்குவதற்கான ஆண்கள் பக்க நியாயங்களையும் எடுத்துக் காட்டுகின்றனர். இந்த வகையில் அ.பாலமனோகரனின் கனவுகள் கலைந்த போது என்னும் நாவலில் வருகின்ற ராமச்சந்திரன் தனது ஆண்மைக் குறைபாட்டை மறைத்து வசந்தியைத் திருமணம் செய்கின்றான். இதற்குக் காரணம் அவன் வாங்கவுள்ள சீதனப் பணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சகோதரிகளின் வாழ்வாகும். தனது சகோதரிகளின் வாழ்வுக்காக அவன் சீதனம் வாங்குவதுடன் இன்னொரு பெண்ணின் வாழ்வையும் பாழடிக்கின்றான்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (399) Dr. ம.இரகுநாதன்

Page 164
செங்கை ஆழியானின் கங்கைக் கரை ஓரத்தில் வருகின்ற சிவராசாவின் சீதனப்பணத்தையும் உழைப்பையும் அவனது சகோதரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். சிவராசாவின் படிப்பிற்காக ஈடு வைத்த காணியும் அவனை நம்பியே இருக்கின்றது. இந்நிலையில் அவன் தனக்காக வாழமுடியாதவனாகி விடுகின்றான். இதனால் காதலை மறந்து சீதனத்திற்காக மாமனின் மகளுக்குக் கணவனாகின்றான்.
செங்கை ஆழியானின் காற்றில் கலக்கும் பெரு மூச்சுக்கள் என்ற நாவலில் வருகின்ற மனோவின்' தந்தை இரணி டு பெண்களுக்கும் சீதனம் கொடுப்பதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைத் தீர்ப்பதற்காக மகனுக்குச் சீதனம் வாங்குவதாகக் கூறுகின்றார்.
இவர்கள் சகோதரிகளின் வாழ்வுக்காகப் பெண்களோடு கூடிப்பிறந்த ஆண்கள் சீதனம் வாங்கும் தவிர்க்க முடியாத நிலையை எடுத்துக் காட்டினாலும் சீதனக் கொடுமை திருமணத்தை வியாபாரமாக்கி விட்டது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே இக் கொடுமையை மாற்றுவதற்குரிய வழியை எங்குமே காண முடியவில்லை. இது தமிழர் சமூகத்தில் காச நோய் போலவே தொற்றிக் கொண்டு விட்டது என்றே கருத முடிகின்றது.
போர்க்காலச் சூழலினாலும் தமிழ்ப் பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பலர் இளமையிலேயே கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்டனர், இன்னும் பலர் காதலில் ஏற்பட்ட தோல்வியால் கற்பை இழந்தவர்களாகக் கருதப்பட்டு நின்றனர். சிலர் பாலியல் வல்லுறவுகளால் பாதிக்கப்பட்டு நின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களால் கற்பை இழந்தவர்களாகக் கருதப்பட்ட பெண்களுக்கும், கணவனை இழந்த இளம் பெண்களுக்கும் மறு வாழ்வு கொடுக்க வேண்டிய தேவை உணரப்பட்டது. இதனால் கற்புப் பற்றிய கருத்து நிலை புறந் தள்ளப்பட்டு விதவைகளுக்கும், ஏனையோருக்கும் மறு வாழ்வு கொடுப்பது காட்டப்படுகின்றது. பெரும்பாலும் முற்போக்கு அணிசார்ந்த படைப்பாளிகளே இத்தகைய கருத்தினைப் பிரதிபலித்தனர்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (30) Dr.ம.இரகுநாதன்

முற்போக்கு அணிசாராத படைப்பாளிகள் கற்புப் பற்றிய பாரம்பரியமான கருத்து நிலையினைப் பிரதிப்பலிப்பவர்களாகவே அமைகின்றனர். அருள். சுப்பிரமணியம், பொ.பத்மநாதன், அ.பாலமனோகரன் போன்றவர்களின் படைப்புக்கள் இதற்கு நல்ல உதாரணங்களாகும்.
1980 களின் பிற்பகுதியில் ஈழத்தில் இருந்து குறிப்பாக யாழ்ப்பாண இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வது அதிகரித்தது. இதனால் சீதனம் வாங்கித் திருமணம் செய்தவர்கள் கூட சீதனப் பணத்தை உபயோகித்து வெளிநாட்டிற்குச் செல்ல ஆரம்பித்தனர். இந் நிலையில் பணத்தையும் கொடுத்து வாழ்வையும் இழந்து நிற்கும் நிலைமையைப் பெண்கள் எதிர் நோக்கினர். இத்தகைய பிரச்சினைகளை எடுத்துக் காட்டுவதாக செங்கை ஆழியானின் கிடுகுவேலி, கோகிலா. மகேந்திரனின் தூவானம் கவனம் ஆகிய நாவல்கள் அமைந்தன.
எனவே சீதனக் கொடுமையினாலும், போர்க் காலச் சூழலாலும் பெரிதும் துன்பப் படுபவர்கள் பெண்களே. பணம் இல்லாததால் வாழ்வை இழப்பவர்களும் பணம் இருந்தும் இணைந்து வாழமுடியாமல் தனிமையில் துன்பப்படுபவர்களும் பெண்களே. இத்தகைய துன்பங்களுக் கெல்லாம் முடிவே கிடைக்காதா என்ற வினா எழுந்து பதில் கிடைக்காமலே சோர்ந்து போய் விடுகின்றது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் இ0) Dr. ம.இரகுநாதன்

Page 165
இயல் ஐந்து
அடிக்குறிப்புக்கள்.
1. கணேசலிங்கன், செ, (3LT fris(35|T6ub, 1969,
சென்னை.
2. மேலது L. 203.
3. பத்மநாதன், பொ., பொன்னம்மாளின் பிள்ளைகள்
1979, கொழும்பு.
4. மணிவாணன், யுகசந்தி, 1972, கொழும்பு.
5. மேலது, Lu. 74.
6. கவிதா, கனவுகள் வாழ்கின்றன, 1976,
கொழும்பு.
7. மேலது, U. 16.
8. நயீமா.ஏ.பஷீர், வாழ்க்கைப் பயணம், 1974,
கொழும்பு.
9. மேலது, Lu. 28.
10. மேலது, Lu. 28.
11. மேலது, u. 29.
12. மேலது, L. 29.
13. மேலது, Lu. 29.
14. ஜோன் ராஜன், போடியார் மாப்பிள்ளை, 1976,
கொழும்பு.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் 602) Dr.ம.இரகுநாதன்

15. மேலது, Lu. 38.
16. மேலது, Lu. 42.
17. மேலது, U. 45.
18. மேலது, Lu. 47.
19. செங்கை ஆழியான், கங்கைக் கரை ஓரம், 1978,
கொழும்பு.
20. மேலது, காற்றில் கலக்கும் பெருமூச்சுக்
கள், யாழ்ப்பாணம்.
21. மேலது, u. 49.
22. மேலது, U. 49.
23. மேலது, Lu. 50.
24. சந்திரா தியாகராஜா., நிழல்கள், 1998, பருத்தித்துறை, நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்.
25. மேலது, L. 109.
26. மேலது, L. 109 - 110.
27. மேலது, Lu. 110.
28. கணேசலிங்கன், செ, சூரியன் கிழக்கில் உதிப்ப
தில்லை. 1997, சென்னை.
29. மேலது, u. 52.
30. நாகலிங்கம், அ., சாம்பசிவம் ஞானாமிர்தம்
அல்லது நன்னெறிக் களஞ் சியம், 1927, கொக்குவில்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (303) Dr. D.6 pegbirger

Page 166
31. மேலது, ... 139.
32. மேலது, Lu. 140.
33. மேலது, Lu. 150.
34. மேலது, Lu. 157.
35. கணேசலிங்கன், செ., போர்க்கோலம், ப. 47.
36. மேலது, u. 47.
37. மேலது, சடங்கு, 1966, சென்னை
38. மேலது, Lu. 2 l.
39. மேலது, Lu. 70.
40. பத்மநாதன், பொ., பொன்னம்மாளின் பிள்ளைகள்,
L. 129.
41. செங்கை ஆழியான், இரவின் முடிவு, 1976,
கொழும்பு.
42. மேலது, Lu. 18.
43. மேலது, Lu. 35.
44. ஞான சேகரன், தி., புதிய சுவடுகள், 1977,
கொழும்பு.
45. மேலது, Lu. 5, 6.
46. பாலமனோகரன், அ., கனவுகள் கலைந்த போது,
1977, கொழும்பு
47. தெணியான், பொற்சிறையில் வாடும் புனிதர்
கள், 1989, யாழ்ப்பாணம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (303) Dr.ம.இரகுநாதன்

48. சோமகாந்தன், விடிவெள்ளி பூத்தது, 1989,
யாழ்ப்பாணம்.
49. தெணியான், பொற்சிறையில் வாடும்
புனிதர்கள். ப. 61.
50. மேலது, u. 61.
51. மேலது, U. 81.
52. மேலது, Lu. 8 l.
53. சோமகாந்தன் விடிவெள்ளி பூத்தது, ப. 72.
54. மேலது, Lu. 72.
55. கணேசலிங்கன், செ., நீண்ட பயணம், 1994,
சென்னை,
56. மேலது, செவ்வானம், 1967, சென்னை.
57. மேலது, u. 300.
58. மேலது, Lu. 301 - 302.
59. மணிவாணன், யுகசந்தி, ப. 126 - 127.
60. பத்மநாதன், பொ., புயலுக்குப் பின், 1973,
கொழும்பு.
61. இந்து மகேஷ், ஒரு விலைமகளைக் காதலித்
தேன், 1974, கொழும்பு.
62. செங்கை ஆழியான், பிரளயம், 1989, யாழ்ப்பாணம்.
63. பத்மநாதன், பொ., யாத்திரை, 1976, கொழும்பு.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (305) Dr.ம.இரகுநாதன்

Page 167
64. மேலது, Lu. 34.
65. அருள் சுப்பிரமணியம், நான் கெடமாட்டேன், 1976,
கொழும்பு.
66. மேலது, Lu. 42 - 43.
67. மேலது, u. 44.
68. மேலது, Lu. 43.
69. பாலமனோகரன், அ., கனவுகள் கலைந்தபோது,
Lu. 37.
70. செங்கை ஆழியான், காட்டாறு, 1977, கொழும்பு.
71. அருள் சுப்பிரமணியம், அக்கரைகள் பச்சையில்லை,
1977, கொழும்பு.
72. இந்து மகேஷ், இங்கேயும் மனிதர்கள், 1977,
கொழும்பு.
73. செம்பியன் செல்வன், நெருப்பு மல்லிகை, 1981,
கொழும்பு.
74. செங்கை ஆழியான், கனவுகள் கற்பனைகள்
ஆசைகள், 1981, கொழும்பு.
75. மேலது, Lu. 190.
76. மேலது, LJ. 233.
77. மேலது, LJ. 181.
78. மேலது, U. 181.
79. மேலது, ஒருமைய வட்டங்கள், 1991,
யாழ்ப்பாணம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் டுே Dr.ம.இரகுநாதன்

80. மேலது, U. 41.
81. மேலது, காற்றில் கலக்கும் பெருமூச்சு
கள், ப. 20 - 21.
82. மேலது, Lu. 20.
83. மேலது, U. 20.
84. மேலது, மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து, 1989, யாழ்ப்பாணம்.
85. கணேசலிங்கள், செ. சூரியன் கிழக்கில் உதிப்ப
தில்லை, ப. 52
86. மேலது, Lu. 60.
87. மேலது, լյ. 60.
88. செங்கை ஆழியான், இரவின் முடிவு, ப. 153.
89. UsT6)LD660TT35J6, 9., கனவுகள் கலைந்த போது,
Lu. 6 l.
90. செங்கை ஆழியான் ஓ அந்த அழகிய பழைய
உலகம், யாழ்ப்பாணம்.
91. மேலது, Lu. 51 - 52.
92. டானியல், கே, கானல், 1986, கும்பகோணம்.
93. கணேசலிங்கன், செ., தரையும் தாரகையும், 1968,
சென்னை.
94. மேலது, Lu. 183.
95. மேலது, u. 49.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (30) Dr.ம.இரகுநாதன்

Page 168
96. மணிவாணன், யுகசந்தி, ப. 155.
97. மேலது, U. 156.
98. கோகிலா மகேந்திரன், தூவானம் கவனம், 1988,
தெல்லிப்பழை.
99. மேலது, Lu. 37.
100. கணேசலிங்கன், செ, சூரியன் கிழக்கில் உதிப்ப
தில்லை.
101. மேலது, u. 52.
102. மேலது, u. 52.
103. மேலது, Lu. 60.
104. பாலமனோகரன், அ., நிலக்கிளி, 1973, கொழும்பு.
105. அருள் சுப்பிரமணியம், நான் கெடமாட்டேன், ப. 42.
106. ஜூனைதா ஷெரீப், சாணைக்கூறை, 1985, கண்டி
107. செங்கை ஆழியான், கிடுகு வேலி, 1989,
யாழ்ப்பாணம்.
108. மேலது, Lu. 3.
109. மேலது, Lu. 3.
110. மங்கள நாயகம் தம்பையா, நொறுங்குண்ட இருதயம், 1914,
தெல்லிப்பழை.
111. திருஞானசம்பந்தப்பிள்ளை, துரைரத்தினம் நேசமணி, 1931,
ம.வே., யாழ்ப்பாணம்,
112. நாகலிங்கம், அ., சாம்பசிவம் ஞானாமிர்தம்.
113. கணேசலிங்கன், செ., பெண்ணடிமை தீர, 1977,
சென்னை, ப. 5.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் இ08) Dr.ம.இரகுநாதன்

இயல் ஆறு
நிறைவுரை
இந்த ஆய்விலே ஈழத்துத் தமிழ் நாவல்களில் இடம் பெறுகின்ற
1. சாதியம் தொடர்பான சிக்கல்கள் 2. தொழிலாளர் தொடர்பான சிக்கல்கள். 3. பெண்கள் தொடர்பான சிக்கல்கள்.
ஆகிய மூன்று பிரதான சமுதாயச் சிக்கல்களும் அவற்றிற்கான சமுதாய வரலாற்றுப் பின்னணிகளும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
இந்த வகையில் சாதியம் தமிழர் சமுதாயத்தில் நீண்டகால மாகவே இருந்து வந்தாலும் ஆரம்பத்தில் அது ஒரு சமுதாயச் சிக்கலாகக் கருதப்படவில்லை. 1920 களின் தொடக்கத்தில் இந்திய தேசிய விடுதலை இயக்கத்திற்குக் காந்தி தலைமை தாங்கிய போது நாட்டின் விடுதலைக்கு முற்படு தேவையாக சமூக விடுதலை வலியுறுத் தப்பட்டது. இதனால் காந்திய இயக்கம் சமூக ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடியது. இத்தகைய சூழலில் சாதியம் ஒரு சமுதாயச் சிக்கலாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதுகால வரையும் தீண்டாதாராகக் கருதப்பட்ட மக்கள் காந்தியின் முயற்சியால் தேசிய விடுதலை இயக் கத்தில் இணைந்து கொண்டனர். காந்திய அலையின் தாக்கம் தமிழகத்தினுாடாக இலங்கையில், யாழ்ப்பாணத்திலும் பரவியது. யாழ்ப்பாண இளைஞர்கள் பலர் சமூக ஒடுக்கு முறைக்கு எதிராகச் சிந்திக்க ஆரம்பித்தனர்.
1930 களில் டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சின் படி அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. இது உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதே காலத்தில் யாழ்ப்பாணத்திற்கு இடது சாரி அரசியல் கட்சிகளும் வர ஆரம்பித்தன. தமிழ் மக்களிடையே ஆதரவைத் தேட விரும்பிய இக் கட்சிகளுக்கு இதுவரை காலமும் தமிழர் சமூகத்தில் தீண்ட்த்த காதவர்களாக இருந்த மக்கள் சாதகமாக இருந்தனர். இம் மக்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய இடது சாரிக் கட்சிகள் உள்ளூர் அரசியலிலும் தேசிய அரசியலிலும் படிப்படியாக இம் மக்களைப் பங்கு பெறச் செய்தனர். இச் செயலை யாழ்ப்பாணத்திலுள்ள படித்த உயர் சாதியினர் சிலர் விரும்பாவிட்டாலும் அவர்களால் இதனைத் தடுக்க முடியவில்லை. ஈழத்துத்தமிழ்நாவல்கள் (3.09 Dr. LD-Spreprisair

Page 169
இடதுசாரிச் சிந்தனைகளால் கவரப்பட்ட தமிழ் இளைஞர்களில் சிலர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அணியினை உருவாக்கியிருந்தனர். இவ்வணியினரில் ஒரு பகுதியினர் இலக்கிய காரர்களாகவும் இருந்தனர். ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஈழத்து மக்களின் பிரச்சினைகளையே பிரதிபலிக்க வேண்டும் என வலியுறுத் திய இவ்வணியினர் மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் அனைத் தையும் பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகித் தீர்வு காண்பவர்களாகவும் விளங்கினர். இதனால் 1950 களின் நடுப் பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தில் எரியும் பிரச்சினையாக இருந்த சாதியம் இவர்களின் பிரதான பொருளாகியது. இவர்கள் தமது நாவல்களில் சாதியக் கொடுமைகளை எடுத்துக் காட்டியதோடு சாதியக் கொடுமைகளுக்கு பாட்டாளி வர்க்கப் புரட்சியே தீர்வாகும் என்பதையும் எடுத்துக் கூறினர்.
முற்போக்கு அணியைச் சாராத வேறு சில படைப்பாளிகளும் சாதியம் தொடர்பான நாவல்களை எழுதியிருந்தனர். இவர்கள் பொதுவுடைமைக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளாதவர்கள். இவர்கள் அனைவரையும் ஒரு அணியாகக் கொள்ள முடியாவிட்டாலும் இவர்கள் அனைவ்ரும் சாதியம் தொடர்பான சிக்கல்களுக்குக் கூறும் தீர்வு ஏறத்தாள ஒத்ததாகவே இருக்கின்றது. இவர்கள் கல்வி, பொருளாதார நிலைமைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களினால் சமூகம் தானாகவே மாறிக் கொண்டிருக்கின்றது. என்றும் சமூகம் மாறும் போது சாதியம் தொடர்பான சிக்கல்களும் தானாகவே இல்லாது போய்விடும் என்றும் கூறுகின்றனர்.
பொதுவாக சாதியம் தொடர்பான ஒடுக்கு முறைகளுக்கு அடிப் படையாக இருப்பது ஒடுக்கப்படுகின்ற மக்கள் பொருளாதார நிலையில் பலமில்லாதவர்களாக இருக்கும் நிலையே எனத் தெரிகின்றது. பொருளாதார பலமில்லாத மக்கள் பொருளாதார பல முள்ளவர்களில் தங்கி வாழ்வதாலேயே ஒடுக்கு முறை சாதியமாகின்றது. எனவே பொருளாதார ஏற்றத் தாழ்வு இருக்கும் வரை ஒடுக்குமுறையை ஒழிப்பது சாத்தியமாகாது. ஆகவே பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மூலமாகவேனும், படிப்படியான சமூக மாற்றத்தின் மூலமாகவேனும் ஒடுக்கப்படுபவர்களில் தங்கி வாழும் நிலை அகற்றப்படும் வரை சாதிய ஒடுக்கு முறைகளை ஒழிப்பது கடினமானதாகும்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G10) Dr.ம.இரகுநாதன்

நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் சாதியத்தின் பெயரால் ஒரு பகுதி மக்கள் துன்புறுத்தப்பட்டது போல முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் முதலாளிகளால் தொழிலாளர்கள் துன்புறுத் தப்பட்டார்கள். மேற்கு நாட்டவரின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலும் இலங்கையிலும் புகுத்தப்பட்ட முதலாளித்துவ பொருளாதார அமைப் பால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இயக்க அடிப்படையில் இணைந்து நின்று அந்நிய ஆதிக்கத்தை எதிர்க்க முடியாத நிலையில் இத் தொழிலாளர்கள் ஆங் காங்கே சிறிய சிறிய கலகங்களில் ஈடுபட்டனர். காந்தியின் அந்நிய ஆதிக் கத்தை எதிர்க்க முற்பட்ட தொழிலாளர்களும் இத் தேசிய விடுதலை இயக்கத்தோடு இணைந்து கொண்டனர். இதனால் சிறிய சிறிய கலகங்கள் தொழிலாளர்களின் போராட்டமாகி அத் தொழிலாளர் அணிகள் தேசிய விடுதலைப் போராட்ட அணிக்குப் பலம் சேர்த்தன.
இவ்வாறாக இந்தியாவில் ஏற்பட்ட தொழிலாளர்களின் விழிப் புணர்வு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையிலும் பரவியது. கொழும்பு நகரப் புறங்களில் அச்சுத் தொழிலாளர்களின் போராட்டமாக ஆரம்பித்த இத்தகைய போராட்டங்கள் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நிறுவனமயப்பட்ட போராட்டங்களாக மாறின. 1922 இல் ஏ.ஈ. குணசிங்காவினால் இலங்கைத் தொழிற்சங்கம் என்ற அமைப்பு உருவாக்கபபட்ட போது அவ்வமைப்பில் இன, மத வேறுபாடின்றிப் பலரும் இணைந்து கொண்டனர். இவ்வமைப்பின் கிளைகள் தென்னிலங்கையில் மட்டுமன்றி வடக்கில் யாழ்ப்பாணத் திலும் மத்தியில் மலையத்திலும் கூட நிறுவப்பட்டன.
1930 களில் தொழிற்சங்க இயக்கத்தில் இடது சாரிக் கட்சிகள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தன. இதனால் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இயக்கமாகத் தொழிலா ளர்கள் இயக்கம் வளர்த்தெடுக்கப்பட்டது. இத்தகைய சூழலிலேயே இடது சாரி இயக்கச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்ட இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பும் உருவாகியிருந்தது. இவ்வணியினர் இலக்கியங்களைப் படைத்தபோது அவற்றில் தொழிலா ளர்களின் பிரச்சினைகள் வர்க்கக் கண்ணோட்டத்தில் அணுகப்பட்டன. 1955 இல் நீதியே நீ கேள் என்ற நாவலின் மூலமாக இளங்கீரன் இப் பணியைத் தொடக்கி வைத்தார் எனலாம். இவ்வணியினர் சாதி, இன, மத வேறுபாடுகளைக் கடந்து தொழிலாளர்கள் அனைவரும் வர்க்க அடிப்படையில் இணைந்து முதலாளிகளுக்கும்
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (31) Dா.ம.இரகுநாதன்

Page 170
முதலாளித்துவ அரசுக்கும் எதிராகப் போராடும் பாட்டாளி வர்க்கப் புரட்சியினையே தமது படைப்புக்களில் வலியுறுத்தினர்.
இத்தகையதொரு புரட்சியின் மூலமாகப் புதியதொரு சமுதாயத் யுைம் பாட்டாளி வர்க்கத்தின் அரசையும் அமைப்பதன் மூலமாகவே சகல சிக்கல்களுக்கும் தீர்வு காணலாம் என்பதே இவர்களின் நாவல்களினூடாக உணர்த்தப்படுகின்றது.
தொழிலாளர்கள் தொடர்பான சிக்கல்கள் சமூகத்தில் முக்கியத் துவம் பெற்ற சூழலில் முற்போக்கு அணியினர் மாத்திரமன்றி வேறு பலரும் தமது நாவல்களில் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் துன்பங் களை எடுத்துக் காட்டினர். ஆனால் இவர்களின் நாவல்களில் தொழி லாளர்களின் பிரச்சினைகளுக்கான காரணங்கள் ஆராயப்படவுமில்லை அவற்றைத் தீர்த்து வைப்பதற்கான வழிமுறைகள் எதுவும் கூறப்படவு மில்லை.
இலங்கையில் குறிப்பாக தமிழர் சமூகத்தில் மிகவும் அவலமானதொரு வாழ்க்கையினை அனுபவிப்பவர்கள் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே, வீடற்றவர்களாகவும், நாடற்றவர்களாகவும் ஆக்கப்பட்டு அரசியல் வாதிகளால் பந்தாடப்படுகின்ற இம் மக்கள் வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய விடுதலைப் போராட்டச் சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இனக்கலவரங்களின் போது கொடுரமான முறையில் தாக்கப்பட்டார்கள். வட பகுதி அரசியல் நடவடிக்கைகளுடன் நேரடியாகத் தொடர்பில்லாத போதும் இவர்கள் தமிழர்கள் என்பதற்காகத் தாக்கப்பட்டார்கள். இவ்வாறு பல வழி களாலும் இம் மக்கள் துன்புற்ற போது ஆக்க இலக்கியகாரர்கள் அவர்களின் அவல வாழ்வைப் பொருளாக்கிக் கொண்டார்கள். அவர் களின் அவல வாழ்வை எடுத்துக் கூற முற்பட்ட பலர் அந்த வாழ் விலிருந்து அவர்கள் எவ்வாறு விடுதலை பெறுவது என்பதை எடுத்துக் கூறவில்லை. முற்போக்கு அணியைச் சார்ந்த அகஸ்தியர், செ.கணேச லிங்கன், பெனடிக்ற் பாலன் போன்ற சிலரே பொதுவுடைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கப் புரட்சியைத் தீர்வாகக் கூறினர்.
அடுத்து பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கல்களைப் பொறுத்த வரையில் இது ஏனைய இரண்டு சிக்கல்களைப் போல ஈழத்துத் தமிழ் நாவல்களில் தனிக்கவனம் பெறவில்லை. உலக
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G1) Dr. D-6.Uebirgair

நாடுகள் பலவற்றிலும் பெண் விடுதலை தொடர்பான சிந்தனைகள் பரவியபோது இந்தியாவிலம் ராஜாராம் மோகன்ராய், அன்னிபெசன்ட், காந்தி, பாரதி முதலிய பலர் பெண்களின் முன்னேற்றம், விடுதலை என்பன தொடர்பான கருத்துக்களைப் பரப்பி வந்தனர். காந்தியின் தலைமையிலான தேசிய விடுதலை இயக்கத்தில் பெண்களும் பங்கேற்றனர். இத்தகைய சூழலினால் இந்தியப் பெண்மை விழித்துக் கொண்டது. இந்தியாவில் ஏற்பட்ட இத்தகைய மாறுதல்கள் உடனடியாக இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பாரிய தாக்கமெதையும் ஏற்படுத்தவில்லை. மேற்கு நாட்டவரின் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் தோற்றம் பெற்ற தேசிய உணர்வு ஈழத்துப் பண்பாட்டுப் பாரம்பரியங்களை உயர்வானது எனக் கூறி அவற்றைப் பேணும் முயற்சியாகவே அமைந்தது. இதனால் மத, பண்பாட்டு எல்லைக்குள் நின்று பாரம்பரியங்களைப் பேண முற்பட்ட போது பெண்கள் தொடர்பான கருத்துக்களிலும் பாரம்பரியமே உயர்வான தாகக் கருதப்பட்டது.
1970 களின் பின்னர் ஏற்பட்ட சமூக அரசியல் நிலைமைகளின் மாற்றத்தைத் தொடர்ந்தே பெண்கள் தொடர்பான கருத்து நிலையிலும் மாற்றம் ஏற்பட்டது. தமிழர் மத்தியில் தோற்றம் பெற்ற ஆயுதப் போராட்ட இயக்கங்களின் நடவடிக்கைகளில் பெண்களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இதனால் பெண் குடும்ப அமைப்பை விட்டு வெளியேறும் நிலை உருவாகியது.
1980 களில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்த போது இலங்கை யுத்த பூமியாக மாறியது. வசதியான குடும்பங் களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தனர். மற்றொரு பகுதியினர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து போராளிகளாயினர். இவ்விரு வகையாகவும் குடும்பத்தை விட்டுப் பிரியும் ஆண்களின் தொகை அதிகரித்த போது திருமண வயதை அடைந்த பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மணமகனுக்கான போட்டி அதிகரித்த போது சீதனம், அன்பளிப்பு என்ற பெயரில் பெண் வீட்டார் பெருமளவு பணத்தைக் கொடுத்தே மண மகனைத் தேட வேண்டியிருந்தது. இதனால் பணவசதியில்லாத பெண்கள் திருமண வாய்ப்பை இழந்தனர். இது ஒரு சிலரை மட்டும் பாதிக்கும் பிரச்சினையாக இல்லாமல் சமூகத்தில் பலரையும் பாதிக்கும் பிரச்சினையாக விரைவிலேயே மாறியது. இதனால் சீதனக் கொடுமை ஒரு சமுதாயச் சிக்கலாக்கியது.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (33) Dr. D-6 presburgiair

Page 171
மேலும் நாட்டிலுள்ள போர்ச் சூழல் இளம் பெண்கள் பலரை விதவைகளாக்கியது, பலர் கணவனை அந்நிய நாட்டிற்கு அனுப்பி விட்டுத் தனிமையில் வாடினர், இன்னும் பலர் பாலியல் வல்லுறவு களால் பெண்மையை இழந்து நின்றனர். இத்தகைய சூழ்நிலைகளால் கற்பு, மறுமணம் போன்ற கருத்துகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற சிந்தனை ஈழத்துத் தமிழரிடையேயும் உருவாகியது. இவ்வாறான சிந்தனைப் போக்கினை 1980 களில் வெளிவந்த சில நாவல்கள் எடுத்துக் காட்டுகின்றன. 1980 களின் பிற்பகுதியில் பெண்ணியக் கருத்துக்களால் கவரப்பட்ட சிலர் குடும்ப அமைப்பை உடைத்து வெளியேறும் பெண்களையும் தமது நாவல்களில் எடுத்துக் காட்டுகின்றனர். இவ்வாறு பெண் குடும்ப அமைப்பை விட்டு வெளியேறும் போது அவள் எதிர் நோக்குகின்ற சிக்கல்கள் அகன்று விடும் என்பதே இவர்களின் கருத்தாகும்.
பொதுவாக பெண்கள் தொடர்பான சமுதாயச் சிக்கல்கள் ஈழத்துத் தமிழ் நாவல்களில் சாதியம், தொழிலாளர் பிரச்சினைகள் ஆகியவை பெற்ற அளவு முக்கியத்துவத்தைப் பெறவில்லை. முற்போக்கு அணியினரைப் பொறுத்த வரையில் அவர்கள் தனியே பெண்களின் பிரச்சினை என்று நோக்காமல் சமுதாயப் பிரச்சினைகள் அனைத்தையும் ஒன்றாகவே நோக்கி அதற்கான தீர்வினையும் கூறிவிடுகின்றனர். ஏனையவர்கள் சீதனக் கொடுமை முதலியவற்றால் பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை மட்டுமே காட்டுவதோடு நின்று விடுகின்றனர்.
தொகுத்து நோக்கும் போது ஈழத்துத் தமிழ் நாவல்களில் சாதியம் தொடர்பான சிக்கல்கள், தொழிலாளர் தொடர்பான சிக்கல் கள், பெண்கள் தொடர்பான சிக்கல்கள் ஆகிய மூன்றுவகையான சிக்கல்களே பெரிதும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இத்தகைய சிக்கல்களை எடுத்துக் கூறியவர்களை இரண்டு வகையினராகப் பிரித்து நோக்கலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் 61) Dr. ம.இரகுநாதன்

1. முற்போக்கு அணியினர். 2. முற்போக்கு அணியைச் சாராதவர்கள்.
முற்போக்கு அணியினர் சகல விதமான சமுதாயச் சிக்கல் களுக்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சியினையே தீர்வாகக் கூறுகின்றனர். ஏனையோர் கல்வி வாய்ப்பு, பொருளாதார நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றால் சமூகம் படிப்படியாக மாறிக் கொண்டு வருகின்றது என்ற கருத்துடையவர்கள். இவ்விருவரது கருத்துக் களையும் உற்று நோக்கும் போது பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதும் சமதாயச் சிக்கல்களுக்கு அடிப்படையாக இருப்பது பொருளாதார ஏற்றத் தாழ்வே என்பதும் தெரிய வருகின்றது.
எனவே பொருளாதார நிலையில் ஒருவர் மற்றொருவரில் தங்கி வாழும் நிலை இருக்கும் வரை சமுதாயச் சிக்கல்களும் தொடரவே செய்யும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அகலும் போதே சமுதாயச் சிக்கல்களும் ஒழித்து புதியதொரு சமுதாயம் மலரும் என எதிர்பார்க்கலாம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (3 1S Dr. ம.இரகுநாதன்

Page 172
el)
நூல் விபரப் பட்டியல்.
முலதூல்கள்.
அகஸ்தியர், எஸ்.,
மேலது
அப்பச்சி மகாலிங்கம்,
அருளர்,
அருள் சுப்பிரமணியம்,
மேலது,
மேலது,
அஹற்மத், வை.
இடைக்காடர்,
1978, மண்ணில் தெரியுதொரு தோற்றம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1992, எரிநெருப்பில் இடை பாதை இல்லை, ஜெகனி பதிப்பகம், மதுரை -02.
1977, கமலினி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1988, (இரண்டாம் பதிப்பு), லங்காராணி, ஈழம் றிசேச் ஒகனைசேசன், லண்டன்.
1973, அவர்களுக்கு வயது வந்து விட்டது, மலர் வெளியீடு, மட்டக்களப்பு.
1976, நான் கெடமாட்டேன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1977, அக்கரைகள் பச்சை யில்லை, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1976, புதிய தலை முறைகள், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1925, நீலகண்டன் ஓர் சாதி வேளாளன், நாவலர் அச்சுக் கூடம், யாழ்ப்பாணம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr. LD-6prepirgbar

இந்து மகேஷ்,
மேலது,
இளங்கீரன்,
கயிலாசநாதன், வை.அ.,
(335|Tasool b &iouurt,
கோகிலா மகேந்திரன்,
கணேசலிங்கன், செ.,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
1974, ஒரு விலைமகளைக் காதலித்தேன், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1977, இங்கேயும் மனிதர்கள், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1956, தென்றலும் புயலும், நவபாரத் பிரசுராலயம், சென்னை.
1972, கடற்காற்று, உதயம் புத்தக நிலையம், கொழும்பு.
1973, (மறு பிரசுரம்), தூரத்துப் பச்சை, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1988, தூவானம் கவனம், கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை.
1966, FLI(g) unts googloub, சென்னை.
1967, செவ்வாணம், பாரி நிலையம், சென்னை.
1968, தரையும் தாரகையும், பாரி நிலையம், சென்னை.
1969, போர்க்கோலம், பாரி நிலையம், சென்னை.
1994, நீண்ட பயணம், பாரி நிலையம், சென்னை.
0ா.ம.இரகுநாதன்

Page 173
மேலது,
மேலது,
சதாசிவம், புலோலியூர்,
சந்திரா தியாகராஜா
சித்திலெவ்வை, முகம்மது காசிம்,
சின்னப்பபிள்ளை, சி.வை.
சுதந்திராஜா, சி.,
செங்கை ஆழியான்,
மேலது,
மேலது,
மேலது,
1996, (இரண்டாம் பதிப்பு).
மண்ணும் மக்களும், பாரி நிலையம், சென்னை.
1997, (மறுபதிப்பு), சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை, பாரி நிலையம், சென்னை.
1983, மூட்டித்தினுள்ளே, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1988, தாயகம், குறிஞ்சிப் பண்ணை வெளியீடு, நூரளை.
1974 (புதிய பதிப்பு) அசன்பே கதை, இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம், திருச்சிராப் பள்ளி.
1905, வீரசிங்கன் கதை அல்லது சன்மார்க்க ஜெயம், மினர்வா அச்சகம், சென்னை.
1975, மழைக்குறி ஆர், எஸ், அச்சகம், யாழ்ப்பாணம்.
1973, வாடைக்காற்று, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1976, இரவின் முடிவு, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1977, காட்டாறு, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1978, கங்கைக்கரை ஓரம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr. ID-6Leprair

மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
செம்பியன் செல்வன்,
சொக்கன்,
மேலது,
1981, கனவுகள் கற்பனைகள் ஆசைகள், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1989, மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து. வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.
1989 (இரண்டாம் பதிப்பு), பிரளயம், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
1989, கிடுகுவேலி, கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
1991 (இரண்டாம் பதிப்பு), ஒரு மைய வட்டங்கள், கமலம் பதிப்பகம், யாழ்ப்பாணம்.
ஓ அந்த அழகிய பழைய உலகம், ரஜனி வெளியீடு, யாழ்ப்பாணம், ஆண்டு விபரம் இல்லை.
காற்றில் கலக்கும் பெரு மூச்சுக்கள், சுஜாதா பப்ளிக் கேசன், யாழ்ப்பாணம், ஆண்டு விபரம் இல்லை.
1981, நெருப்பு மல்லிகை, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1974, சீதா, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1973, செல்லும் வழி இருட்டு, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr. LD-6pepsirpair

Page 174
சோமகாந்தன்,
சோமு, மாத்தளை,
ஞானசேகரன், தி.,
மேலது,
ஞானரதன்,
டானியல், கே,
1989, விடிவெள்ளி பூத்தது. வரதர் வெளியீடு, யாழ்ப்பாணம்.
1984, அந்த உலகத்தில் இந்த மனிதர்கள், நர்மதா வெளியீடு, சென்னை.
1977, புதிய சுவடுகள், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1979, குருதிமலை. வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1977, புதிய பூமி, வீரகேசரி வெளியீடு, யாழ்ப்பாணம்.
1972, பஞ்சமர், தாரகை வெளியீடு, யாழ்ப்பாணம்.
மேலது, 1975; போராளிகள் காத்திருக் கின்றனர். வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
மேலது, 1984, அடிமைகள், தோழமை
வெளியீடு, குடந்தை.
மேலது, 1986, கானல், தோழமை
வெளியீடு, கும்பகோணம்.
மேலது, 1987, தண்ணிர், வராவொல்லை
வெளியீடு, பருத்தித்துறை, இலங்கை.
மேலது, 1993, பஞ்சகோணங்கள்,
விடியல் பதிப்பகம், கோவை.
மேலது, 1994, பஞ்சமர், அலைகள் வெளியீட்டகம், சென்னை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் G2) Dr. LD-6Despirgiair

டேவிட், கே. ஆர்.,
திருஞான சம்பந்தப்பிள்ளை, LD.(86).,
மேலது,
தெணியான்,
மேலது,
நந்தி,
நயிமா, ஏ, பஷீர்,
நாகலிங்கம், அ.,
பத்மநாதன், பொ.,
மேலது,
1976, வரலாறு அவளைத் தோற்றுவிட்டது, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1927, (இரண்டாம் பதிப்பு), கோபால நேசரத்தினம், சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம்.
1931, துரைரத்தினம் நேசமணி, சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம்.
1973, விடிவை நோக்கி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1989, பொற்சிறையில் வாடும் புனிதர்கள், முரசொலி வெளியீடு, யாழ்ப்பாணம்.
1964, மலைக்கொழுந்து, ஆசீர்வாதம் அச்சகம், யாழ்ப்பாணம்.
1974, வாழ்க்கைப் பயணம், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1927, சாம்பசிவம் ஞானாமிர்தம் அல்லது நன்னெறிக் களஞ் சியம், எம்.லாசர் அன்ட் சன்ஸ், கோலாலம்பூர்.
1973, புயலுக்குப்பின், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1976, யாத்திரை, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (32)
Dr.ம.இரகுநாதன்

Page 175
மேலது,
பாலமனோகரன், அ.,
மேலது,
பெனடிக்ற் பாலன்
மங்கள நாயகம் தம்பையா,
மணிவாணன்,
முல்க்ராஜ் ஆனந்த்,
யோகநாதன், செ,
மேலது,
வேலுப்பிள்ளை, சி.வி.,
1979, பொன்னம்மாளின் பிள்ளைகள், வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1973, நிலக்கிளி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1977, கனவுகள் கலைந்த போது, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1968, சொந்தக்காரன், பாரி நிலையம், சென்னை.
1914, நொறுங்குண்ட இருதயம், தெல்லிப்பழை.
1972, யுகசந்தி, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1947, தீண்டாதான், மொழி பெயர்ப்பு கே. கணேஷ், புதுமைப் பதிப்பகம், காரைக்குடி.
1973, ஒளி நமக்கு வேண்டும், மலர் வெளியீடு, மட்டக்களப்பு.
1977, காவியத்தின் மறுபக்கம், கூட்டுறவுப் பதிப்பகம், இலங்கை.
1981, வீடற்றவன், வைகறை வெளியீடு, நல்லூர்,
யாழ்ப்பாணம்.
மேலது, 1984, இனிப்பட மாட்டேன்,
மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. ஈழத்துத்தமிழ்நாவல்கள் G2) Dr. D-6 respirgar

ஆ)
ஜெகநாதன், காவலூர் எஸ்., 1977, கலட்டுத்தரை,
மேலது,
ஜீனைதா ஜெரீப்
ஜோசப், தெளிவத்தை,
ஜோன் ராஜன், எஸ்.ரீ.,
துணை நூல்கள்.
அண்ணாதுரை, சி.என்.
அப்பாத்துரை, க.,
அர்ஜின் டாங்ளே,
அருணாசலம், க,
அருளொளி அச்சகம், கொழும்பு.
1982, நாளை, நர்மதா பதிப்பகம், சென்னை.
1985, சாணைக் கூறை, தமிழ் மன்றம், கண்டி.
1974, காலங்கள் சாவதில்லை, வீரகேசரி வெளியீடு, யாழ்ப்பாணம்.
1976, போடியார் மாப்பிள்ளை, வீரகேசரி வெளியீடு, கொழும்பு.
1948 (இரண்டாம் பதிப்பு), விடுதலைப்போர், திராவிடப் பண்ணை, திருச்சி.
1960 (இரண்டாம் பதிப்பு), இந்திய மக்கள் விடுதலை இயக்க வரலாறு, சென்னை.
1992, தலித் இலக்கியம் போக்கும் வரலாறும், தமிழில் தி.சு. சதாசிவம், தாமரைச் செல்வி பதிப்பகம், சென்னை.
1994, இலங்கையின் மலையகத் தமிழ் இலக்கியம், தமிழ்மன்றம், ராஜகிரிய, ரீலங்கா.
Dr.ம.இரகுநாதன்

Page 176
ஆறுமுகநாவலர், ரீலறி., 1993, பாலபாடம் நான்காம்
புத்தகம், ரீ ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, சிதம்பரம்.
இராமலிங்கம், மா., 1973, இருபதாம் நூற்றாண்டு
தமிழிலக்கியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
இளங்கீரன், 1993, தேசிய இலக்கியமும்
மரபுப் போராட்டமும், தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத்ஏசியன் புக்ஸ் சென்னை.
மேலது, 1994, ஈழத்து முற்போக்கு
இலக்கியமும் இயக்கமும், எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், கொழும்பு.
எங்கெல்ஸ், பி., மூன்றாம் பதிப்பு (ஆண்டு
இல்லை), குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.
கணேசலிங்கன், செ, 1997, (நான்காம் பதிப்பு),
பெண்ணடிமை தீர, பாரி நிலையம், சென்னை.
கலியாண சுந்தரனார், 1953, (எட்டாம் பதிப்பு),
திரு.வி., பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை நலம், சாது அச்சுக் கூடம், இராயப்பேட்டை, சென்னை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (32) Dr. Darebirger

குமாரி ஜெயவர்த்தனா,
கேசவன், கோ.,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
கைலாசபதி, க.,
மேலது,
மேலது,
1987, இலங்கையின் இன வர்க்க முரண்பாடுகள், குமரன் பதிப்பகம், சென்னை 5.
1982, இயக்கமும் இலக்கியப் போக்குகளும், சென்னை புக்ஹவுஸ், சென்னை.
1985, இந்திய தேசியத்தின் தோற்றம், சிந்தனையகம் வெளியீடு, சென்னை.
1988, பொதுவுடைமை இயக் கமும் சிங்கார வேலரும்,
சரவணபாலு பதிப்பகம், விழுப்புரம்,
1991, திராவிட இயக்கமும் மொழிக் கொள்கையும், செல்மா வெளியீடு, சிவகங்கை,
1998, தலித் இலக்கியம், சில கட்டுரைகள், புதுமைப்பதிப்பகம், மதுரை-01.
1980, நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், மக்கள் வெளியீடு சென்னை-02.
1981, (மூன்றாம் பதிப்பு), இலக்கியமும் திறனாய்வும், சென்னை புக் ஹவுஸ், சென்னை.
1987, (நான்காம் பதிப்பு), தமிழ் நாவல் இலக்கியம், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.
0ா. ம.இரகுநாதன்

Page 177
மேலது,
கைலாசபிள்ளை, த,
கோதண்டராமன், பி.,
சண்முகதாஸ், அ.,
சண்முகதாஸ், அ.,
சந்திரகாந்தன், ஏ.ஜே.வி.,
சாந்தி சச்சிதானந்தம்,
சிங்கார வேல், மா.,
1988, (இரண்டாம் பதிப்பு), சமூகவியலும் இலக்கியமும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
1955, (நான்காம் பதிப்பு), யூரீலரீ ஆறுமுகநாவலர் சரித்திரம், வித்தியாதுபாலன யந்திரசாலை, சென்னை.
1978, இந்திய புரட்சி இயக்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
1977, ஆக்க இலக்கியமும் அறிவியலும் (பதிப்பாசிரியர்) யாழ்ப்பான வளாக தமிழ்த் துறை வெளியீடு, யாழ்ப்பாணம்.
1986, கிறிஸ்தவத் தமிழ் இலக்கிய வளர்ச்சி, கிறிஸ்தவ நாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
1993, தமிழ்ப் பண்பாட்டில் கிறிஸ்தவம், (தொகுப்பாசிரியர்) கிறிஸ்தவ மன்றம், யாழ்ப் பாணம் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
1989, பெண்களின் சுவடுகளில் தமிழியல் வெளியீடு, சென்னை.
1957, சுயராஜ்யம் யாருக்கு சிங்கார வேலர் பதிப்பகம், மைலாப்பூர், சென்னை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் 2ேடு
Dr.ம.இரகுநாதன்

சித்திரலேகா மெளனகுரு
(பதிப்பாசிரியர்)
சித்திரலேகா மெளனகுரு,
சிவகுமாரன், கே.எஸ்.,
சிவத்தம்பி, கா.,
மேலது,
மேலது,
மேலது,
மேலது,
1985, (தமிழ்ப்பதிப்பு), இலங்கையில் இனத்துவமும் சமூகமாற்றமும், சமூகவிஞ்ஞானி கள் சங்கம், கொழும்பு.
1993, பெண் நிலைச் சிந்தனைகள், பெண்கள் கல்வி ஆய்வு நிலையம், கொழும்பு.
1989, கலை இலக்கியத்
திறனாய்வு, தமிழ் மன்றம், கண்டி, ரீலங்கா.
1972, தனித்தமிழ் இயக்கத்தின் அரசியல் பின்னணி, சென்னை புக்ஹவுஸ், சென்னை.
1978, ஈழத்தில் தமிழ் இலக்கியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
1978, இலக்கியத்தில் முற்போக்கு வாதம், பாட்டாளிகள் வெளியீடு, சென்னை.
1980, (மூன்றாம் பதிப்பு), தமிழில் சிறுகதையின் தோற்ற மும் வளர்ச்சியும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
1988, (இரண்டாம் பதிப்பு), நாவலும் வாழ்க்கையும், நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.
1993, யாழ்ப்பாணச் சமூகத் தை விளங்கிக்கொள்ளல், தர்ஷனா பிரசுரம், கொழும்பு 5
Dr. ம.இரகுநாதன்

Page 178
சுந்தர ராஜன், பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ.,
மேலது,
சுந்தரமூர்த்தி, டாக்டர்.இ.
சுந்தர வடிவேலு, நெது.
சுப்பிரமணிய அய்யர், ஏ.வி.,
சுப்பிரமணியம், க.நா.,
சுப்பிரமணியம், நா.,
செல்வராஜன், சில்லையூர்,
1977, தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் சென்னை.
1989, தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும், க்ரியா, சென்னை.
1994, (மூன்றாம் பதிப்பு), இலக்கியமும் பண்பாடும், இன்ஸ்டி டியூட் ஆஃப் சவுத் இன்டியன் ஸ்டபிஸ், சென்னை.
1979, புரட்சியாளர் பெரியார், எஸ். சந்த் அன்டு கம்பனி லிமிடெட், 152 அண்ணா சாலை, சென்னை 2.
1995, (மூன்றாம் பதிப்பு), தற்காலத் தமிழ் இலக்கியம், மக்கள் வெளியீடு, சென்னை.
1985, நாவல் கலை, கலைஞன் பதிப்பகம், சென்னை.
1978, ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம், முத்தமிழ் வெளி யீட்டுக் கழகம், யாழ்ப்பாணம்.
1967, ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி, அருள் நிலையம், சென்னை.
சோமலே, 1975, தமிழ் நாட்டு மக்களின்
மரபும் பண்பாடும், நேஷனல்
புக்பிரஸ்ட், இந்தியா. ஈழத்துத்தமிழ்நாவல்கள் (323) Dா.ம.இரகுநாதன்

செளரிராஜ், செ,
தண்டாயுதம், டாக்டர், இரா.,
மேலது,
மேலது,
தளையசிங்கம், மு.
தில்லைநாதன், சி.,
துரையப்பாபிள்ளை, தெ.அ.,
தோதாத்ரி, எஸ்,
பக்தவத்சலபாரதி, சீ,
1997, தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள், நிகழ் வெளியீடு, கோவை.
1977, (இரண்டாம் பதிப்பு), நாவல் வளம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
1983, (மூன்றாம் பதிப்பு), தற்காலத் தமிழ் இலக்கியம், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
1985, ஓர் இலக்கிய ஆய்வு, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
1984, முற்போக்கு இலக்கியம், க்ரியா, சென்னை.
1987, இலக்கியமும்
சமுதாயமும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
1960, சிந்தனைச் சோலை மகாஜனாக் கல்லூரி பொன்விழாச் சிறப்பு மலர்.
1980, தமிழ் நாவல் சில அடிப்படைகள், அகரம், சிவகங்கை.
1990, பண்பாட்டு மானிடவியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
Dr.ம.இரகுநாதன்

Page 179
பரமேஸ்வரன், பி.ஆர்.,
பாக்கியமுத்து, தி.,
(பதிப்பாசிரியர்)
பாரதிதாசன் பாடல்கள்,
பிரேமா அருணாசலம்,
மகாகவி பாரதியார் கவிதைகள்,
மறைமலை, சி.இ.,
DTg5606 unt, 9.,
மார்க்ஸ், அ.,
ரவிக்குமார். இ.,
வேலுச்சாமி, பெ, (தொகுப்பாசிரியர்கள்)
முத்துச் சண்முகன்,
1991, இந்திய சமுதாயத்தில் சாதி மதம் வர்க்கம், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை 02.
1980, தமிழ் நாவல்களில் மனித உரிமைகளும் மக்கள் போராட்டமும், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.
1993, தொகுப்பு: டாக்டர் தொ. பரமசிவன், நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை.
1993, பத்தினித் தெய்வங்களும்
பரத்தையர் வீதிகளும், சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.
14.4.1957, சக்தி வெளியீடு, சென்னை.
1991, இலக்கியமும் சமூகவி யலும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
1994, (நியூ செஞ்சுரியின் முதற்பதிப்பு), பத்மாவதி சரித்திரம், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
1994,அரசு, குடும்பம், பெண்ணியம் விடியல் பதிப்பகம், கோவை.
1976, (இரண்டாம் பதிப்பு), தமிழ் இலக்கியக் கோட்பாடு கள், முத்து பதிப்பகம், சென்னை.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
3ே)
Dr.ம.இரகுநாதன்

முத்தையா, கே.,
மேலது,
முருகரத்தினம், பேர். தி.,
(பதிப்பாசிரியர்)
மோகன், டாக்டர், இரா.,
மேலது, (பதிப்பாசிரியர்)
மெளனகுரு, சி., சித்திரலேகா மெளனகுரு, நுஃமான், எம், ஏ.,
1957, (இரண்டாம் பதிப்பு), வீரபரம்பரை - இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் வரலாறு, தமிழ்நாடு கமிட்டி, சென்னை 1.
1989, (மூன்றாம் பதிப்பு), வர்க்க சமுதாயம், தாகம் வெளியீடு, சென்னை.
தமிழியல், பெண்ணியம், ஞாலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை. (ஆண்டு விபரம் இல்லை).
1988, டாக்டர் மு.வ.வின் நாவல்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
1989, நாவல் வளர்ச்சி, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
1979, இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம், வாசகர் சங்க வெளியீடு, கல்முனை, இலங்கை.
1985, தமிழ்க் கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள், நீலா பதிப்பகம், சென்னை.
1986, (இரண்டாம் பதிப்பு), பாரதி காலமும் கருத்தும், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை.
யோகீசுவரன், பீ.,
ரகுநாதன்,
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr.ம.இரகுநாதன்

Page 180
ராமகிருஷ்ணன், என்.
ராதாகிருஷ்ணன், எஸ்.,
ராஜ் கெளதமன்,
ராஜம் கிருஷ்ணன்,
மேலது,
லெனின், வி.அ.,
வரதராசன், மு.,
வீராசாமி, தா.வே.
வெகுஜனன், இராவணா.,
1997, ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும், சவுத்ஏசியன் புக்ஸ், சென்னை.
1977, மதமும் பண்பாடும், வள்ளுவர் பண்ணை, சென்னை.
1995, ge. uDsig5606)]uT 1822 - 1925 வாழ்வும் படைப்பும், காவ்யா, வெங்களுர்,
1990, காலந்தோறும் பெண்மை, தாகம் வெளியீடு, சென்னை.
1991, (இரண்டாம் பதிப்பு), காலந்தோறும் பெண், தாகம், சென்னை.
1972, மாதர் விடுதலை பற்றி, ராதாகிருஷ்ணன் (மொழி பெயர்ப்பு ஆசிரியர்), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
1966, (மூன்றாம் பதிப்பு), பெண்மை வாழ்க, பாரி நிலையம், சென்னை.
1987, (இரண்டாம் பதிப்பு), தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
1989, சாதியமும் அதற்கெதி ரான போராட்டங்களும், புதிய பூமி வெளியீடு, யாழ்ப்பாணம்.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dா.ம.இரகுநாதன்

வேங்கடசாமி, மயிலை, சீனி, 1962, பத்தொன்பதாம் நூற்றா ண்டில் தமிழ் இலக்கியம், சாந்தி நூலக வெளியீடு, சென்னை.
வேதநாயகம் பிள்ளை,
குளத்தூர், முன்சீப். 1950, (இரண்டாம் பதிப்பு), தமிழில் சமூக நாவல்கள், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
வையாபுரிப்பிள்ளை, எஸ். 1959, (நான்காம் பதிப்பு),
தமிழர் பண்பாடு, தமிழ்ப் புத்த காலயம், திருவல்லிக்கேணி, சென்னை.
ஜெயப்பிரகாஷ் நாராயணன், 1959, காந்திய தர்மம், தொகுத் தவர் வி.ஆர். ராதாகிருஷ்ணன், ஜோதிநிலையம், சென்னை 5.
ஜீவானந்தம், ப. 1974, (மூன்றாம் பதிப்பு),
மதமும் மனித வாழ்வும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை.
ஜெபநேசன், எஸ்., 1983, அமெரிக்கன் மிஷனும்
இலங்கையில் தமிழ்வளர்ச்சியும், யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை.
இ.கட்டுரைகள்
சத்தியசீலன், ச, யாழ்ப்பாண இளைஞர் காங்கி ரசும் ஹன்டி பேரின்ப நாயகமும்
பேரின்பநாயகம் நூற்றாண்டு விழாச்சபை, கொக்குவில் இந்துக் கல்லூரி, கொக்குவில், 1999.
ஈழத்துத்தமிழ்நாவல்கள் (333) Dr.ம.இரகுநாதன்

Page 181
டானியல், கே,
ஈ) மலர்.
மகாசபை மலர்,
உ) அகராதி, கலைக்களஞ்சியம்,
மதுரைத்தமிழ்ப் பேரகராதி,
(முதல் பாகம்)
கலைக்களஞ்சியம் (தொகுதி 4)
ஊ) ஆங்கில நூல்கள் Cazamian, Lauis.,
Haines, E.Heley.,
Henry Hudson, William.,
தீண்டாமை ஒழிப்பு இயக்கம், கல்லச்சுப்பிரதி, இக் கட்டுரை 1979 இல் வெளியான வெகு ஜன இயக்க மலரில் இடம்பெ றாமல் தணிக்கைச் சபையினால் தடுக்கப்பட்டதாகும் என்ற குறிப் புடன் வெளியிடப்பட்டுள்ளது. வெளியீட்டு விபரம் எதுவும் இடம்பெறவில்லை.
அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் 16ஆவது ஆண்டு விழா வெளியீடு, 30
ஆகஸ்ட், 1959, பொறுப்பாசிரியர் கே.பசுபதி.
1956, (இரண்டாவது பதிப்பு), இ.மா.கோபாலகிருஷ்ணக்கோன் வெளியிட்டது, மதுரை; திருநெல்வேலி, சென்னை.
1956, தமிழ் வளர்ச்சிக் கழகம், சென்னை.
1973, The social Novelin England (1830 - 1850), London, Roubledge & Keganpaul.
1946, What's in a Novel, New York, Columbia University
press.
1961, An Introduction to the study of Literature, George G.Harrap & Co.Ltd, London.
த்துத்தமிழ்நாவல்கள்
Dr.ம.இரகுநாதன்

Kapadia, K.M.,
Nanda, B.R., (Editor)
Narain, V.A.,
Natarajan, S.,
Pillay, K.K.,
Scarpitti, Frank, R.,
Srinivasa, M.N.,
Thomas, P.,
Vythilingam, M.,
1966, (3rd Edition), Marriage and Family in India, Oxford Univer sity Press, Madras.
1958, Indian Women From Purdah to Modernity, Vikas Pub lishing House, Pvt Ltd, allahabad.
1972, Social History of Modern India 19th Century, Meenakshi Prakahshan Bengum Bridge, Meerut 4, Ansari Road, Daryagans, Delhi.
1962, (2nd Edition), A century of Social Reform in India, Asia Publishing House, Bombay-1.
1969, Asocial History of the Tamils (Part 1), University of Madras.
1977, (2nd Edition), Social Prob lems, The Dryden Press, Hinsdale Illinois.
1978, The Changing Position of Indian Women, Oxford Univer sity, Delhi.
1964, Indian Women through the Ages, Asia Publishing Home, Bombay.
1977, Ramanathan of Ceylon, The life of Sir Ponnampalam Ramanathan, Vol II, Printed at the Thirumagal Press, Chunnakam.
ஈழத்துத்தமிழ்நாவல்கள்
Dr.ம.இரகுநாதன்

Page 182


Page 183
SEN: 955-3621-65-X