கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காலம் தந்த கைவிளக்கு

Page 1

ளக் கற்க ஒரு திறவுகோல்)

Page 2

காலம் தந்த கை விளக்கு
(திருமுறைகளைக் கற்க ஒரு திறவுகோல்)
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், M.A, Ph.D.,
முன்னாள் வருகை ஆய்வாளர் கக்சுயின் பல்கலைக்கழகம் தோக்கியோ, ஜப்பான்
2005

Page 3
தலைப்பு
ஆசிரியர்
உரிமை
பதிப்பு
வெளியீடு
அச்சுப்பதிப்பு
Title
Author
Edition
Publication :
Printing
Price
ISBN
காலம் தந்த கைவிளக்கு (திருமுறைகளைக் கற்க ஒரு திறவுகோல்)
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
பேராசிரியர் அ.சண்முகதாஸ்
முதற்பதிப்பு:தை 2005
சிவத்தமிழ்ச்செல்விதங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 80ஆவது பிறந்தநாள் சிறப்பு வெளியீடு, துர்க்காபுரம்,தெல்லிப்பளை.
கரிகணன் பிறிண்டேர்ஸ்,
424, காங்கேசன்துறை சாலை, யாழ்ப்பாணம்,
Kalam Tanta Kaivilakku (Tirumurai Kaļaik karka oru Tiravukõl)
Dr.Manonmani Shanmugadas
First Edition: January 2005
A special Publication on the 80"Birthday of SivattamilchchelvyTangammah Appakkuddy, Turkkapuram, Tellippalai.
Harikanan Printers, 424, K.K.S Road, Jaffna.
50/-
955.98925-0-9
ii

வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிய பொன்மனச் செல்வி. எங்கள் அம்மாவின் எண்பதாவது அகவை கண்டு மகிழ்ந்து வழங்கும் பரிசு. பல்லாண்டு வாழ்ந்து எமக்கு நிழல்தர வேண்டுமென அம்பிகையை வேண்டிப் பணிவன்புடன் வழங்குகிறேன்.
சமனோன்மணி
O7.01.2OO5
iii

Page 4
உள்ளடக்கம்
1 அறிமுகம்
2. நூல்முகம்
உலகு உய்ய வந்த ஒரு மகவு
ஞானத்தின் திரு உருவு
மறுஒழித்த இளம்பிறை
நீலகண்டனை நித்தல் நினைமினே
மாசிலா மரபில் வந்த வள்ளல்
அடியார்க்கு அடியன்
தென்னவன் பிரமராயன்
நம்பணி கொண்டவன்
3. திருமுகம்

வைய நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தாந்தழைத்து ஓங்குக தெய்வ வெண்திருநீறு சிறக்கவே.
சித்திரைச் சதயம் அப்பர் சிறந்த வைகாசி மூலம் அத்தரைப் பணிசம்பந்தர் ஆனி மாமகத்தில் அந்த முத்தமிழ் வாதவூரர் முதிய நல் ஆடி தன்னில் சுத்தமாம் சோதிநாளில் சுந்தரர் கயிலை சேர்ந்தார்.
அப்பருக்கு எண்பத்தொன்று அருள் வாதவூரருக்கு செப்பிய நால் எட்டினில் தெய்வீகம் - இப்புவியில் சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்கு அந்தம் பதினாறு அறி.
விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய் கனி போல் அன்றோ பராபரமே.

Page 5
அணிமுகம்
இவ்வுலக வாழ்வில் இடரின்றி வாழ்வதையே ஒவ்வொரு மனிதனும் விரும்புகின்றான். இனிய வாழ்வினை நாம் அனுபவிப்பதற்கு இறைவழிபாடு அவசியமாகும். இரைதேடுவது போல் இறையையும் தேடும். என்றார் ஒரு தவஞானி. சைவ சமயத்தவர்களின் பெருஞ்சொத்து என கருதப்படுபவை திருமுறைகளாகும். அநுபூதிச் செல்வர்கள் தாம்பெற்ற இறை அனுபவத்தை அழகு தமிழில் எடுத்துரைத்தனர். இசையால் இறைவனை வாழ்த்துவதோடு ஆத்மாவின் ஆதங்கங்களை அர்ப்பணமாக இறைவனிடம் ஒப்படைப்பதற்கு எம் முன்னோர்கள் இசையைப் பயன்படுத்தினர். திருமுறைகள் கருத்தாழம் மிக்கவை. இன்பத்திலும் துன்பத்திலும் இறைவன் ஆறுதல் செய்யும் அற்புதத்தை அனுபவரீதியாக எடுத்துரைப்பவை. திருமுறைகளின் பொருள் அறியாது ஒதுகின்றபோது அகமலர்ச்சி ஏற்பட வாய்ப்பில்லை. ஆறாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற தேவாரங்களின் பொருளினை இருபத்தோராம் நூற்றாண்டில் வாழும் இன்றைய மனிதன் பாடியவுடன் விளங்கிக் கொள்வான் என்பது இயலாத காரியம். திருமுறைகளில் காணப்படும் சொற்சுவையை, பொருட்சுவையை, பாடப்பெற்ற சந்தர்ப்பச் சுவையை, பாடலினால் கிடைத்த பயனை இன்றைய சமூகத்திற்கு எளிமையாக விளக்க வேண்டியது தெளிந்து கற்றவர்களின் கடனாகும்.
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமூலர் போன்ற பெருமக்கள் சைவ உலகிற்கு தந்த அமிர்தத்தை பருகும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கின்றது. திருமுறைகளின் சுவையை, அதன் திருவருட்சிறப்பை உணரும் வாய்ப்புப் பெற்றவர்கள் முன் செய் தவப்பயன் உடையார் எனலாம். திருமுறைகளைப் பாடிய அநுபூதிச் செல்வர்கள் தத்தமது நலம் நோக்கி இறைவனைப் பாடியவர்கள் அல்லர். ஆன்மார்த்த வழிபாட்டிற்கு அப்பால் நின்று இவ்வுலகத்திற்காகப் பாரார்த்த வழிபாடு செய்தவர்கள் இவர்கள். பிறரது துன்பத்தைக் கண்டு பிறருக்காக
இறைவனை மன்றாடுகின்ற மாண்பினை திருமுறைகளில் காணலாம்.
vi

ஞானக்குழந்தையாகிய ஞானசம்பந்தர் "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என எல்லோருக்கும் செய்தி சொல்கிறார். அப்பர் சுவாமிகள் கூற்றாயினவாறு விலக்ககலீர் கொடுமை பல செய்தன நானறியேன்” எனக் குறிப்பிடுகிறார். தான் செய்த வினையால் தானே அவதியுறுவதை உலகிற்கு எடுத்துணர்த்துவது உலகத்தை உய்விப்பதற்கே, தம்மை உதாரணம் காட்டி தரணியில் உள்ளவரை தக்கவாழ்விற்கு ஆற்றுப்படுத்திய வர்கள் இவர்கள். ஆண்டவனை நேசித்து அகத்தாலும் புறத்தாலும் ஒன்றுபட்டு நின்ற உத்தமர்கள். திருவடியைப் போற்றி வாழ்த்தியவர் சுந்தரர். நாயிற் கடையாய்க் கிடந்த அடியேன்” என தன்னை எளிமைப்படுத்தி இவ்வுலகிற்கு அரிய தத்துவம் சொன்னவர் மணிவாசகர். திருத்தொண்டர் களின் ஒப்பற்ற உயர் சக்தியை உவமையில்லா நயங்களோடு
உணர்வுபூர்வமாக எடுத்தியம்பியவர்கள் சேக்கிழார் சுவாமிகள்.
'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினால் ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினில் கும்பிடவே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என அடியவரது பெருமையினை சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தில் அற்புதமாக எடுத்துரைத்துள்ளார்.
திருமுறைகளின் திருவருளை எட்டுத் தலைப்புக்களில் ஆழமாகச் சிந்தித்து அருமருந்தாகச் செய்திகளை இந்நூல் ஆசிரியர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அம்மையார் வடித்துள்ளார். தமிழ்மொழியை ஆழ அகலக் கற்று புலமை சார் அறிஞராக விளங்குபவர் இவர். இறைபக்தி, இயல்பாகவே இவரை ஆட்கொண்டுள்ளது. தான் உணர்ந்த, சுவைத்த, நலந்தந்த திருமுறைகளின் சிறப்பினை மற்றவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற உந்துதல் இந்நூல் படைப்பதற்கு காரணமாக இருந்துள்ள மையை உணரமுடிகிறது. மிகப் பரந்த சிந்தனைத் தேடல்களை உயிரோட்டமாக இந்நூலில் எடுத்தியம்பி உள்ளார்.
vii

Page 6
ஈழத்திருநாட்டில் ஈடிணையற்ற ஆத்மீகத் தலைவராக விளங்கும் எங்கள் அன்னை சிவத்தமிழ்ச் செல்வி அவர்களின் அகவை எண்பது பூர்த்தி நாள் குறித்து இம்மலர் வெளிவருவது சாலப்பொருத்தமானது. தமிழோடிசை பாடல் மறந்தறியேன்” என்று அனுதினம் சிவப்பொலிவோடு வாழும் அன்னைக்கு தம் நன்றிக்கடனாக கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அம்மையார் இந்நூல் வெளியிடுவது வரலாற்றுக் கைங்கரியமாகும். மங்கையருக்குத் தலைவியாக மதிக்கப்படுகின்ற அன்னையை மங்கை நல்லாள் மனோன்மணி அம்மை பூமாலை, பாமாலை வாழ்த்துக்களுக்கு அப்பால் புனிதர்கள் வாழ்வு கூறும் நூலைப் படைத்து வாடாமலர் கொண்டு வாழ்த்துவதாய் இம்மலர் அமைந்துள்ளது.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபாராட்டு முலகு
செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன்
viii

அறிமுகம்
உலகிலே தோன்றிய உயிர்கள் யாவும் துன்பம் நீங்கி இன்பம் பெற விரும்புதல் இயற்கை. மானுடராகப் பிறந்தவர்க்கு இன்பமாக வாழ்வு நடத்த முடியும். மனித ஆற்றலுக்குள் அடங்காத இயற்கையின் ஆற்றலை எல்லோரும் அறிவர். ஆனால் அப்பேராற்றலைத் தமக்கு உற்ற துணையெனக் கருதுபவர் மிகச் சிலரே உள்ளனர். இந்த மண்ணிலே நல்ல வண்ணம் வாழ்வதற்கு மானுடருக்கு வழிபாடுதான் துணை நிற்கும். உள்ளத்தை அலையவிடாது ஒருநிலைப்படுத்தி வழிபாடு செய்கையில் வாழ்வின் துன்பங்களும் அவலங்களும் தொலைந்து விடும். எனவே எமக்கு இன்பத்தை நல்கும் வழிபாட்டுப் பயிற்சியைப் பெறுவதற்கு நாமே முயற்சி செய்ய வேண்டும். எமக்கு முன்னே மண்ணில் நல்லவண்ணம் வாழ்வு நடத்திய முன்னோரின் வாழ்வியல் தடத்தைத் தேடிச் செல்ல வேண்டும். அவர்களது வரலாற்றை அறியும் முயற்சிதான் எம்மை வழிபாட்டிலும் ஈடுபடுத்தும். இதுவரை வழிபாட்டில் நம்பிக்கையற்றவரும் அந்த வாழ்வாங்கு வாழ்ந்தோர் வரலாற்றைப் படித்தால் புதிய உணர்வைப் பெறக்கூடும். வழிபாட்டு மரபான வாழ்வியல், ஒரு தொடர்ந்து வரும் நடைமுறையாகும். ஆவணப்படுத்தப்பட்ட வழிபாட்டு மரபை இலக்கியங்கள் எடுத்து இயம்பியுள்ளன. சிறப்பாகத் தமிழில் எழுந்த இலக்கியங்கள் காலந்தோறும் வந்து கலந்த பிற பண்பாட்டுச் செல்வாக்கையும் இணைத்துள்ளன. மாறி வந்த வாழ்வியலைத் தெளிவாக விளக்கியுள்ளன. எனவே நாம் அந்த இலக்கியங்களைத் தேடிச் செல்ல வேண்டியுள்ளது.
வழிபாட்டினால் வாழ்வின் துன்பங்களை எல்லாம் வென்ற நமது முன்னோர்கள் பலர் உளர். அவர்களுள் சிறப்பாக நால்வர் எமக்கு நல்ல வழிகாட்டிகளாய் விளங்குகின்றனர். தமிழ் இலக்கியத்தில் திருத்தொண்டர் வரலாறு கூறும் திருத்தொண்டர் புராணம், அடியார்கள் வரலாற்றை எடுத்து உரைக்கின்றது. இந்நூல் பெரிய புராணம் எனவும் வழங்கப்பட்டது. பன்னிரண்டாம் திருமுறை எனவும் அழைக்கப்பட்டது. இதனை இயற்றியவர்

Page 7
சேக்கிழார். தொண்டைமண்டலம் என்பது இவரது நாடு. இவர் இயற்பெயர் அருண்மொழித்தேவர். சேக்கிழார் குடியில் பிறந்தமையால் குடிப்பெயரே அவர் பெயராகிற்று. சோழ நாட்டு மன்னன் குலோத்துங்கனால் 'உத்தம சோழப் பல்லவன்'என்ற உயர்பட்டம் பெற்றவர். மன்னனுக்கு முதன் மந்திரியாகப் பணிசெய்தவர். அந்நாளில் 'சீவகசிந்தாமணி’ எனும் நூல் புகழ் பெற்றிருந்தது. சமண சமய வாழ்வைச் சிறப்பித்துக் கூறும் அந்த நூலை மன்னனும் பாராட்டினான். சைவசமய வாழ்வியலை விளக்கச் சேக்கிழார் திருத்தொண்டர் வரலாற்றைப்பாடினார். நீண்ட வரலாறு கூறும் பெரியபுராணம் ஒரு ஆண்டு அரங்கேற்றுரை செய்யப்பட்ட நூலாகும். அரசனும் தொண்டர் வாழ்வியல் கேட்டு சேக்கிழாருக்கு ஞானமுடிசூட்டித் 'தொண்டர் சீர் பரவுவார்’ என்ற பெயரும் தந்து பாராட்டினான். பன்னிரண்டாவது திருமுறையாக முன்னர் எழுந்த திருமுறைகளுள் அந்தப் பெரியபுராணமும் கோவை செய்யப்பட்டது.
பெரியபுராணத்திற்கு முதல்நூல் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத்தொகையாகும். பதினொரு பாடல்களில் சுந்தரர் சுட்டிய திருத்தொண்டர்களை நம்பியாண்டார் நம்பி என்பார் தொகையை விரித்து 'திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார். இதுவே பெரியபுராணத்திற்கு ஒரு வழிநூலாய் அமைந்தது. நூல் இரண்டு இலக்கணம் உடையதெனத் தொல்காப்பியம் கூறுகிறது. தொல்:சூத்.வருமாறு.
“மரபுநிலை திரியா மாட்சிய வாகி
யுரைபடு நூறா மிருவகையியல
முதலும் வழியுமென நுதலிய நெறியின்”
முன்னோனால் செய்யப்பட்டது முதல் நூல். அதன் வழி வந்த நூல் வழிநூல். சுந்தரர் பாடிய அடியார் வரலாறு பதினொரு பாடல்களில் அமைந்தது. நம்பியாண்டார் நம்பி 86 பாடல்களில் அடியார்கள் வரலாற்றைப் பாடினார். சேக்கிழார் புராணம் விரிநூலும் சார்புநூலுமாக அமைந்துள்ளது. முன்னைய திருமுறைகளில் உள்ள தகவல்களையும் இணைத்துப் பெரியபுராணமாக இரண்டு காண்டங்களாகவும் பதின் மூன்று
சருக்கங்களாகவும் நாலாயிரத்து இருநூற்றைம்பத்து மூன்று விருத்தச்

செய்யுட்களாகவும் விரிந்தமைந்தது. இதன் அமைப்பை உமாபதி சிவாசாரிய சுவாமிகள் வருமாறு கூறுகிறார்.
"மூவர் ஒது திருநெறித்தமிழும் அம்மையாரது அருள் நூல்களும் சேரமான் பெருமான் நாயனாரது அந்தாதி, உலா, கோவை என்றவையும் ஐயடிகளாரது திருவெண்பாவும் திருமூலர் திருமந்திர மாலையும் என்னும் இவை இதற்கு உறுப்பாகவும் பொருள்கோள் உயிராகவும் விருத்தப்பா உடலாகவும் கொண்டு இது நாலடியால் உலகெலாம் நடந்தது" சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணம் உலகத்தவரை எல்லாம் வழிபாட்டால் இணைய வைத்தது. நாடெங்கும் சிதறிக் கிடந்த தொண்டர் வாழ்வியலைத் தேடித் தொகுத்துத் தந்தது. புராணத்தின் முதல், இடை, கடை என்னும் மூன்று நிலைகளிலும் வழிபாட்டின் உலகளாவிய தன்மை பேசப்படுகிறது. நூற்பாயிரத்தின் முதற்பாடல்,
"உலகெலாம் உணர்ந்து ஒதுதற்கு அரியவன் நிலவுலாவிய நீர்மலிவேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்" (பாயிரம்1)
என அமைந்துள்ளது. இடைநிலையாக அமைந்த பாடல் வருமாறு,
“சோதி முத்தின் சிவிகைசூழ்வந்துபார் மீது தாழ்ந்துவெண்ணிற்றொளிபோற்றிநின்று ஆதியார் அருளாதலின் அஞ்செழுத்து ஒதி ஏறினார் உய்ய உலகெலாம்” (திருஞானசம்216)
புராணத்தின் கடைநிலையாய் அமைந்த பாடல் வருமாறு, “என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளம் ஓங்கிட மன்றுளார் அடியார் அவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம்” (வெள்ளானைச்சரு53)
சேக்கிழார் வரலாறு சேக்கிழார் புராணம்' என்ற பெயரால் கொற்றவன்குடி
உமாபதி சிவாச்சாரியரால் பாடப்பட்டுள்ளது. சேக்கிழார் அடிபோற்றி,
நூற்பெயரை விளக்கி 103 பாடல்களில் அமைந்துள்ளது. எனவே தொண்டர்

Page 8
வரலாறு பற்றி அறியும் அவா காலம்காலமாகத் தொடர்ந்துள்ளதை நாம் உணர இந்நூல்கள் பெரிதும் உதவுகின்றன. எனினும் இத்தகைய நூல்களைப் படிப்பதற்கு இன்று ஒர் இடர்ப்பாடு உண்டு. செய்யுளமைப்பில் நூல் தரும் தகவல்களை உடன் அறிய மொழியறிவு போதாதுள்ளது. காலத்திற்கு ஏற்ற வகையிலும் உள்ளத்துள் உடனிருத்தும் பணியிலும் உரைநடை வடிவில் அச்செய்திகளைப் புத்தாக்கம் செய்யவேண்டியுளது. எமது வழிபாட்டு வாழ்வியல் மரபை காலச்சூழலுக்கு ஏற்ற வகையில் நமது பின்னவரிடம் கையளிப்புச் செய்ய வேண்டியுள்ளது. இத்தகையதோர்
இலக்குடனே இச்சிறுநூல் ஆக்கம்பெற்றுள்ளது.
H 04 m.

நூல் முகம்:
உலகு உய்ய வந்த ஒரு மகவு
திருத்தொண்டர் வரலாற்றில் உலகு உய்ய வந்த ஒரு மகவு ஆளுடைய பிள்ளையார். இந்த ஞானக்குழந்தையின் வரலாறு உலகத்துக் குழந்தைகளின் வாழ்வுக்கு வழிகாட்டியாய் உள்ளது. சோழநாட்டில் பன்னிரு பெயர்களுடன் திகழ்கின்ற சீர்காழியில் அந்தணர் மரபில் தோன்றிய அற்புதக்குழந்தை. சிவபாதவிருதயரும் பகவதியாரும் ஒருங்கிணைந்து ஒழுங்குபட வாழ்ந்தமையால் இத்தெய்வமகவைப் பெற்றனர். ஆதிரை நன்னாளில் பிறந்த மகவுக்கு அனைவரும் அன்பு காட்டினர். குழந்தை வளரும் சூழல் சைவச்சூழலாக இருந்தது. வேதவிதிகளும் நீதிமுறைச் சடங்கு நெறிகளும் பேணும் வாழ்வியல் நடைபெற்றது. எனவே குழந்தைப் பருவத்தில் அவற்றைக் காணும் நிலையும் அவற்றோடு சேர்ந்து இயங்கும் பயிற்சியும் பெற்றதால் குழந்தையும் சைவ வழிபாட்டு மரபில் இணைந்திருந்தது. பெற்றோரின் வளர்ப்புநிலையில் வழிபாட்டு மரபினைக் குழந்தை பயில்வதற்கு ஏற்ற சூழ்நிலையும் அமைந்திருந்தது. வழிபாட்டு நிலையில் திருக்கோவிலில் சென்று வழிபடும் முறைமையையும் குழந்தை தன்னளவில் உணர்ந்திருந்தது.
இக்குழந்தையின் வரலாற்றையும் வாழ்வியலையும் பெரியபுராணம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளது. 1255 பாடல்களில் 16 ஆண்டுகாலம் இவ்வுலகில் வாழ்ந்தமை பேசப்படுகின்றது. ஏறக்குறைய சேக்கிழார் தமது நூலின் காற்பங்கை குழந்தையைப் பற்றிப் பாட எடுத்துள்ளார். மூன்று வயதில் குழந்தை வழிபாட்டின் பயனை உணர்ந்து கொண்டமையே இதற்கு அடிப்படை எனலாம். ஒருநாள் தந்தை நீராடச் செல்லும் போது குழந்தையும் உடன் செல்ல விரும்பியது. தந்தை தடுத்தார். சினந்தார். குழந்தையோ உடன்செல்வதில் உறுதியாய் நின்றது. தந்தையொடு தொடர்ந்து சென்றது. தந்தை தனது ஒரு மகவின் உறுதிக்கு முன்னே உளம் இரங்கினார்.

Page 9
உடனழைத்துச் சென்றார். இந்த அனுபவம் மகவின் மனதில் ஆழப்பதிந்தது. உறுதியுடன் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நினைப்புடனே குழந்தை தந்தையுடன் திருக்குளத்திற்குச் சென்றது. மகவினைக் கரையில் விட்டுத் தந்தை திருத்தோணி வள்ளலாரை வணங்கி நீருள் இறங்கி நீராடுகிறார். குழந்தை அவர் நீருள் மூழ்குவதைக் கண்டது. தந்தை நீராடும் நியமப்படி நீருள் முற்றாக உடலை மூழ்கச் செய்தார். குழந்தை அறியாத நீராடல் நியமம் அது. தந்தையை நீரின் மேற்பரப்பில் காணாத குழந்தை திகைக்கிறது. தந்தை நீருள் அமிழ்ந்து விட்டார் என்ற முன்னுணர்வு உள்ளத்திலே மூளவே அழத்தொடங்குகிறது. கண்மலர்கள் கண்ணிரில் நனைய கைமலர்களைப் பிசைந்து வண்ண மலர்ச் செங்கனிவாய் இதழ் துடிப்ப விம்முகிறது. தந்தையை தேடிச் செல்லமுடியாத நிலையில் எல்லாத் திக்கையும் நோக்கித் தேடுகிறது. துயரம் தாங்காமல் பொருமுகிறது. வழிபாட்டுப் பயிற்சி நினைவில் உந்த திருத்தோணிபுரக் கோவிலின் சிகரம் பார்த்து அம்மே! அப்பா ! என்று குரல் கொடுத்துக் கூவி அழைக்கிறது. குழந்தையின் குரல் தோணிபுரத்து உறையும் இறைவன் திருச்செவி சேரவே அழுகின்ற குழவிக்குப் பால் ஊட்டும்படி உலகத்து அன்னையை அனுப்புகிறான். எல்லா உலகும் தொழும் அன்னை திருமுலைப் பாலை வள்ளத்திலே கறந்து குழந்தைக்குப் பரிவுடன் ஊட்டினாள். நீர் வழியும் கண்மலர் ஒற்றினாள். குழந்தை அன்பினால் அகத்தில் ஞானம் பெற்றான். ஆட்கொண்டமையால் ஆளுடைய பிள்ளையார் ஆயினான். சிவஞான சம்பந்தன் ஆயினான். குழந்தையின் அப்போதைய நிலையைச் சேக்கிழார் பெரியபுராணத்தில், “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்” (70) எனத் தெளிவாகப் பாடியுள்ளார். குழந்தைக்கு அந்த அனுபவம் வழிபாடு எதையும் தரவல்லது என்ற உறுதியை ஏற்படுத்தியது. அல்லல் களையும் துன்பத்தை நீக்கும், துயரம் போக்கும். இடர் போக்கும். இறை வழிபாடு என்பது வாழ்வின் தேவை என்பதை குழந்தை நிலையிலே உணர்ந்த
= 06 -ത്ത

சம்பந்தரைப் பாட வைத்தது. நீராடிக் கரையேறிய தந்தைக்கு கடைவாயில் பால் வடிய நின்ற மகவின் கோலம் அதிர்ச்சியைக் கொடுத்தது. குழந்தையிடம் கேள்விக் கணைகளைத் தொடுக்க வைத்தது. யார் அளித்த பாலடிசில் உண்டது நீ" என வெகுண்டு ‘எச்சில் மயங்கிட உனக்கு ஈது இட்டாரைக் காட்டுஎனக் கையிலே ஒரு சிறு கோல் எடுத்து அதட்டுகிறார். பிறர் தரும் அடிசில் உண்ணாத மரபான வாழ்வியலை எண்ணித் தந்தை சினம் கொண்டார். அன்பினால் ஊட்டிய அமுது என்பதை அவரால் உணரமுடியவில்லை. மூன்று வயதுக் குழந்தை பிறர்தரப் பாலுண்டதை அந்தணமரபில் வந்த அவரால் பொறுக்க முடியவில்லை. ஆனால் குழந்தைக்கு அவருக்கு விடை கூறும் ஞானம் இருந்தது. நடந்ததைச் சுருங்க விளங்க வைக்கிறது. கண்களிப்ப தன்னுடைய விரற்சுட்டினாலே விடைமேல் தோன்றும் இறைவனையும் இறைவியையும் காட்டுகிறது. நெடுந்தமிழால் பாடுகிறது. குழந்தையின் கண்ணில் நிறைந்த தோற்றம் காட்சியாக சொல்லிலே வடிகிறது. தொடக்கமாக வாய் மலர்ந்த பாடலாக,
"தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக் காடுடைய சுடலைப்பொடி பூசிஎன் உள்ளங்கவர்கள்வன் ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே" என அமைந்தது. 10 பாடல்களில் குழந்தை தன் தெய்வீக அனுபவத்தைப் பழகு தமிழில் விளக்குகிறது. மண்ணுலகில் வாழ்பவர்கள பிழைசெய்தாலும் மனம் ஒன்றிய வழிபாட்டால் நன்மையடையலாம். தொழுபவர் என்றும் அருள் பெறுவது உறுதி. கற்றல் கேட்டல் உடை பெரியார் கழல் கையால் தொழும் வழிபாட்டையும் கருமை பெற்ற கடல்கொள்ள மிதந்தோர் காலம் இதுவென இறை அருளையும் இயற்கையின் அழகையும் துயரிலங்கும் உலகில் பல ஊழிகள் தோன்றும் போதெல்லாம் இறைவன் காப்பான் என்பதையும் திருக்கோவிலை வலம் வந்து குழந்தை பாடியது. தந்தை தன் பிழை உணர்ந்தார். இறைவனோடு ஒன்றாத சடங்குநெறியின் பயனின்மை கண்டார். குழந்தையைக் கும்பிட்டு வலம் வந்தார். பாடல் கேட்டு அனைவரும் மனப்பக்குவம் கண்டனர். இன்னிசையோடு செழுந்தமிழில் சொல்முறையாகப் பாடித் தொழும்பு செய்வதையே தொடக்கமாக்கி பல

Page 10
மறையோதும் வேதியர் வியந்து நிற்க பால் நாறும் புனித வாயர் புறப்பட்டார். மூன்றாம் வயதிலே முதிர்ச்சிபெற்ற ஞானசம்பந்தரைச் சேக்கிழார்.
"வேதநெறிதழைத்து ஓங்க மிகு சைவத்துறை விளங்கப் பூதபரம்பாை பொலியப் புனிதவாய் மலர்ந்து அழுத சீத வளவயல் புகலித் திருஞானசம்பந்தர் பாதமலர்தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம் எனப் போற்றுகிறார்" குழந்தை தெய்வீகமாகப் பாடுவது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கிற்று. ஆளுடையார் பெற்ற தெய்வ அனுபவம் அனைவருக்கும் ஒரு புதிய வழிபாட்டு மரபினை அறிய வைத்தது. திருக்கோயில்களைத் தேடிப்போய் வழிபடுவது நன்று. சம்பந்தர் வரலாறு இதனையே உணர்த்துகிறது. தனியாக வழிபடுவதை விட எல்லோரும் கூடி வழிபடும் கூட்டுவழிபாடு தொடரவே அவர் தொண்டுசெய்தார். தனது முதல் திருக்கோவில் பயணமாக திருக்கோலக்காவுக்குச் செல்கிறார். காவிரி நீர் அலைக்க மலர்கள் நிறைந்த, மணி நீர் வாவியருகே அமைந்த கோவிலின் அழகுக் கோலம் பாடத்தொடங்குகிறார்.
“மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட உருவம் என்கொலோ’ திருத்தோணிபுரத்திலே இறைவன் அவர் உள்ளம் கவர் கள்வனாயி ருந்தான். நித்தம் தொழுதமையால் மனத்தில் நெருங்கியிருந்தான். ஆனால் கோலக்காவில் கோவில் கொண்டவன் குழந்தையின் இசையில் வசமாகி அஞ்செழுத்து எழுதிய நற்செம் பொற்றாளம் நல்கினான். பாடும் பணிக்குப் பரமன் அருள் செய்தமை மூன்று வயது நிரம்பிய குழந்தையைச் சிறுவனாக்கி உயர்த்திற்று. உலகம் உய்ய நஞ்சுண்ட மறை வல்லானை இனிய தாளத்துடன் சிறுவன் பாடி வலம் வந்தான். வழிபாட்டு முறைமைகளை வரிசைப்படுத்தும் ஞானம் வழிபடுவோரை ஈர்த்தது.
- 08 -

'மறைவல்லானையே பேணப்பறையும் பிணிகளானவே 'கோலக்கா இழுக்காவண்ணம் ஏத்தி வாழ்மினே 'கோலக்காவையே பயிலா நிற்கப்பறையும்பாவமே' 'கோலக்காவுளெம் அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே பாதங்கைகளால் தொழலார் பக்கல் துயரம் இல்லையே 'கோலக்காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே. எனச் சிறுவன் செந்தமிழில் எடுத்துரைத்தது ஒரு வழிபடுவோர் கூட்டமைப்பு உருவாக வழிவகுத்தது. எல்லோரும் இறைவனைப் பாடித் திருக்கோயிலை வலம் வரும் வழிபாட்டு முறைமையும் தொடங்கிற்று. தந்தையாரும் இத்தகைய வழிபாட்டில் மைந்தனைத் தோளில் சுமந்து செல்லும் பணி செய்தார். சிறுவன் அறியாத கோயில்களின் வரலாற்றைச் சொல்லித் தருகிறார். சிறுவனும் நற்றமிழ்ச் சொல்லால் தொடை மாலை நவிலும் தொண்டு செய்தான். திருக்கோயில்களைச் சென்று வழிபடுநிலையிலே திருநீலகண்டத்துப் பெரும்பாணர் தொடர்பு ஏற்படுகிறது. அதன் மூலம் இறைவன் மேல் பாடும் பாடல்களுக்கு கருவிமூலமான இசையும் இணைந்தது. சொல் நிலையில் தொடுத்த பாமாலைகள் கருவி இசைசேரப் புது மெருகு பெற்றன. சிறுவன் பாடல்கள் பலரும் விரும்பும் பக்திப் பாடல்களாயின. பண்ணமை யாழ் இசை கூடவே பதிகம் கேட்போர் மனம் கணியவைத்தது. தெள்ளமுதம் அருந்தும் சிந்தைக் களிப்பை நல்கிற்று. தில்லையம்பதி சென்று பல பதிகம் பாடிய சிறுவன் தில்லையின் வழிபாட்டு மரபுகளைப் பாட்டிலே பதிவு செய்து வைத்த பெருமை பெற்றான். தில்லைக் கூத்தனின் திருநடம் காணச் சென்ற சிறுவனுக்கு தில்லைக் கோயிலின் அமைப்பு வியப்பூட்டியது. மறையவர் நிறைவான வாழ்வியலும் அடியவர் வழிபாடும், வீதிகளின் அமைப்பும், கோபுரத்தின் உயர்வும், செம்பொன் மாளிகையும் புதிதாய்த் தோன்றின. அம்பலத்தே ஆடும் கூத்தனைக் காண கண்கள் பனித்தன. சென்னியில் சிறிய செங்கை உயர்ந்தது. இன்னிசை வாய்பாடியது.'கற்றாங்கெரியோம்பி என்ற பதிகம் அமைந்தது.
சம்பந்தர் வாழ்வில் சொற்பெரும் வேந்தரான நாவுக்கரசரின் சந்திப்பு முக்கிய திருப்பமாய் அமைந்தது. வாக்கின் பெருவிறல் மன்னர் வயதால்

Page 11
முதிந்தவர். அவரை எதிர்கொள்ள ஆளுடைய பிள்ளையும் அவாவுற்றார். இருவரும் சந்தித்த காட்சியைச் சேக்கிழார் சொல்லோவியமாய் பெரியபுராணத்தில் அமைத்துள்ளார்.
சிந்தை இடையறா அன்பும் திருமேனிதன்னில் அசைவும் கந்தம் மிகயாங் கருத்தும் கைஉழவாரப்படையும் வந்திழி கண்ணிர் மழையும் வடிவில் பொலிதிருநீறும் அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர் வந்தணைய இளமையும் முதுமையும் எதிர்கொள்ளும் காட்சி இது. கவுணியக்கன்று தனக்கு முன்னே வரும் தொண்டர் திருவேடம் காண்கிறது. அழைத்துச் சென்று அமுதுசெய்விக்கின்றது. அளவளாவி மகிழ்கின்றது. இறைவனை வழிபடுவதில் இன்பம் காணும் உணர்வினால் வயது வேறுபாடின்றி இருவரும் இணைய முடிந்தது. நாவுக்கரசர் சொல்மாலையால் மட்டுமன்றி உழவாரப் பணியாலும் வழிபாட்டு மரபில் புதுமை புகுத்தியவர். திருக்கோவில் சூழலின் தூய்மை பேணத் தொண்டு செய்தவர். ஆரூர் வணங்கிப் போந்த அரசனுடன் புகலிவந்த பூசுரர் சிங்கம் உரையாடல் செய்தமை இளமையும் முதுமையும் இணைந்து பணிசெய்ய முடியும் என்பதை உணர்த்திற்று. அப்பருடைய தோற்றமும் பணிவுநிலையும் ஆளுடைய பிள்ளையை மனித வாழ்வியலை ஒருமுறை திரும்ப நோக்க வைத்தன. வாழ்க்கையில் வரும் துன்பங்கள் மனிதனை நெறிப்படுத்தும் என்பதையும் உணரச்செய்தது. தன்னுடைய தொண்டுப் பணிக்கும் இடைஞ்சலாக இருக்கும் உள்ளுணர்வுகளை ஒழிக்கவும் இறைவனிடம் வேண்டுதல் செய்ய விழைந்தார். திருவலிவலம் என்னும் கோயில் வலியான் என்னும் கரிக்கருவி வணங்கிப் பேறு பெற்றமையால் இப்பெயர் பெற்றது. இது மாடக்கோயில். இங்கு சம்பந்தர் பாடிய பாடல்களில் சில அவர் உள்ளம் வழிபாட்டில் ஒன்றாத நிலையைக் காட்டுகின்றன.
'ஒல்லையாறி உள்ளம் ஒன்றிக் கள்ளம் ஒழிந்துவெய்ய சொல்லையாறித் தூய்மை செய்து காமவினை யகற்றி நல்லவாறே யுன்றன் நாமம் நாவில் நவின்றேத்த வல்லவாறே வந்து நல்காய்வலிவலம் மேயவனே"
இளமை நிலைக்கேற்ப புலனடக்கம் கைகூடாமல் இறைவனை
manu- 10 m

வேண்டுகின்றார். பெண்டிர், மக்கள், சுற்றம் என்பவற்றின் தொடர்பால் வேதனை நோய் நலியும் வாழ்விலிருந்து விடுபட வழிதேடுகிறார். இறைவன் பெயர்கூறி வாழும் வாழ்வு தொடர வினை தடையாயுள்ளதை எடுத்துக் காட்டுகிறார். பாடும் பணிக்கு உள்ளத்தூய்மை இன்றியமையாதது. தனது அச்சவுணர்வை இக்கோவிலிலே வெளிப்படுத்திப்பாடுகிறார்.
“தாயுநீயே தந்தைநீயே சங்கரனே யடியேன் ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக்கின்றதுள்ளம் ஆயமாய காயந் தன்னுள் ஐவர் நின்றொன்றவொட்டார் மாயமேயென்றஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே" உலகியல் வாழ்க்கையில் ஐம்புலன்களை நெறிப்படுத்தமுடியாத நிலையில், வழிபாட்டையும் தொடரமுடியாது. இளமை உணர்வும் செயற்பாடும் தொண்டு செய்யத் தடையாகலாம். எனவே அவற்றை நெறிப்படுத்தும் மனப்பக்குவம் இன்றியமையாதது. சிறுவனாய் இருந்தபோது ஐம்புலன்களின் எதிர்ப்பைச் சம்பந்தர் உணரவில்லை. எனினும் கோயில் சென்று வலம் வந்து இறைஞ்சி வீழ்ந்து மொய் கழல் சேவடி கைதொழ மனப்பக்குவம் பெறலாம் என்பதை தன் அனுபவத்தால் உணர்ந்தார். பணிந்து போற்றுதல், தாழ்ந்து இறைஞ்சுதல், புனைவுறு பாடலிற் போற்றுதல், தாள் பணிதல், பக்தர் பரிசனங்களுடன் பரவுதல், சிந்தை இன்புறப்பாடுதல் முதலிய செயற்பாடுகள் வழிபாட்டு நிலைகளாகச் சம்பந்தர் கைக் கொண்டவை. மீண்டும் உள்ளத்தை ஒருப்படுத்தி சொல்மாலை தொடுக்கும் பணியைத் தொடர்ந்தார்.
இந்நிலையில் தந்தையார் வேள்வி செயப்பொருள் கேட்டு சம்பந்தரிடம் வந்தார். அந்தமில்லாத பொருள் ஆவடுத்துறையுள் அமர்ந்த எந்தையார் அடித்தலமே என உறுதியாய் நினைந்திருந்தார். நீள்நிதி வேண்டிய தந்தைக்கு ஈவது ஒன்றில்லேன். உன்னடியல்லது ஒன்று அறியேன் எனத் தொழுது பதிகம் பாடினார். இப்பதிகம் அவர் வழிபாட்டில் மீண்டும் ஒன்றியமைக்குச் சான்றாயுள்ளது. அவை வருமாறு,
"இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்”

Page 12
"வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன்”
"நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்”
"தும்மலோடுஅருந்துயர் தோன்றிடினும் அம்மலர் அடியலால் அரற்றாது என் நா”
“கையது வீழினுங் கழிவுறினும் செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்”
“வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என்நா”
“வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பா உன் அடியலால் அாற்றாது என்நா"
"பேரிடர் பெருகியோர் பிணிவரினும் சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்”
"உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண்மலர் அடியலால் உரையாது என் நா”
"பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா” இத்தகைய உறுதிநிலை ஏற்பட்டதால் சம்பந்தர் பல அற்புதச் செயற்பாடு களைச் செய்ய முடிந்தது. தந்தையின் வேள்விக்கான பசும் பொன் ஆயிரக்கிழி கிடைத்தது. இதனால் சம்பந்தருடைய இப்பதிகத்தை

மனமொன்றிப் பாடி வழிபாடு செய்தால் பொருள்வளம் பெறலாம் என்ற
நம்பிக்கை மக்களிடையே பரவலாயிற்று.
நாவுக்கரசருடன் சம்பந்தர் கொண்ட தொடர்பு அவரை தொண்டு செய்யத் தூண்டிற்று. திருக்கோயில்களை வலம் வந்து பாமாலை சாற்றும் பணியுடன் மக்கள் நலம் பேணும் பணியிலும் ஈடுபட வைத்தது. திருவீழிமிழலையில் நாவுக்கரசரோடு இணைந்து தொண்டர்களைச் சேர்த்து வழிபாடு செய்து வந்தபோது நீண்ட காலம் மழை பெய்யாமையால் ஆறுகள் வற்றின. பயிர்வளம் குன்றியது. மக்கள் பசியால் வாடினர். இந்நிலை கண்ட சம்பந்தரும் நாவுக்கரசரும் இறைவனை வழிபாடு செய்ய இருவருக்கும் கிழக்குப் பீடத்திலும் மேற்குப் பீடத்திலும் நித்தம் ஒரு காசு நல்க இறையருள் துணை செய்தது. படிக்காசைப் பெற்று மக்களுக்கு அன்னம் பாலிக்கும் அரும் தொண்டு செய்தனர். ஆனால் சம்பந்தர் மடத்தில் அமுது ஊட்டும் தொண்டு காலந்தாழ்த்தியே நடந்தது. அப்பர் மடத்திலோ காலம் தவறாமல் நடைபெற்றது. இதற்குக் காரணம் தமது பீடத்துக் காசின் மதிப்புக்குறைவே என்பதைச் சம்பந்தர் அறிந்தார். தமது தொண்டு சிறப்பாக நடக்க இறைவனைப்பாடி நற்காசு பெற நினைத்தார். பெருவாய்மை பெற்ற திருநாவுக்கரசர் போல வருநாளில் தொண்டு செய்ய உறுதிபூண்டு இறைவன் முன்னிலையில் பதிகம் பாடினார்.
"வாசிதீரவே காசு நல்குவீர்
மாசின் மிழலையீர் ஏசலில்லையே”
“இறைவர்ஆயினிர்மறைகொள் மிழலையீர்
கறைகொள்காசினை முறைமை நல்குமே” நற்காசு பெற்று அமுது செய்விக்கும் தொண்டுப்பணியைத் தொடர்ந்தார். மக்கள் பசிதீர்க்க மனமாரப் பணிசெய்யவே மழையும் பொழிந்தது. பஞ்சம் நீங்கிற்று. வழிபாட்டின் பெருமை யாவராலும் உணரப்பட்டது. உடலால் தொண்டு செய்வது வழிபாட்டில் உயர்ந்தது என்பதைச் சம்பந்தர் இளமைப்பருவத்தில் நன்கு உணர்ந்து கொண்டார்.

Page 13
வழிபாட்டில் இறைவன் தோற்றப்பாட்டில் ஆழ்ந்து வழிபடும் மரபு இருந்தது. சிறுவயதிலே தோடுடைய செவியனை மனதில் நிறுத்தி வழிபட்ட சம்பந்தர் தாம் செல்லும் கோவில்களிலே எழுந்தருளியிருக்கும் இறைவன் தோற்றத்தைப் பாடலானார். இறைவன் சடை, கண்டம், தோள், கை, அரை, கழல் என உற்று நோக்கி வழிபட வைத்தார். அவருடைய பாடல்களில் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோவிலின் சூழலும் அமைப்பும் விளக்கப்பட்டன. கோயிலுக்கு நேரில் சென்று வழிபட முடியாதவர்கள் பாடலிலே கண்டு மனமுருகி வழிபடவும் வாய்ப்புண்டாயிற்று. மனமொன்றி வழிபாடு செய்வதால் எல்லா நினைப்பும் நன்மையாக நடக்கும். சம்பந்தர் வாழ்வில் திருமறைக் காட்டில் நடந்த நிகழ்ச்சி இதற்கு நல்ல சான்றாகும். அப்பரோடு திருமறைக்காடு சென்றார். அருமறைகள் அங்கே திருக்காப்புச் செய்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அங்குள்ள கதவைத் திறந்திடப் பெருகிய அன்புடையார் பலர் முயன்றும் அது கைகூடவில்லை. கோவிலை நேரே சென்று வழிபடாமல் ஒரு புடை வாயில் அமைத்து வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் சம்பந்தர் அப்பரின் மனமொன்றிய வழிபாட்டின் திறன் நன்குணர்ந்தவர் பின்வருமாறு அப்பரை வேண்டுகிறார்.
"அப்பரே வேத வனத்து ஐயர்தம்மை அபிமுகத்துத் திருவாயில்
திறந்து புக்கே எப்பரிசும் நாம் இறைஞ்ச வேண்டும். நீரே இவ்வாயில்
திருக்காப்பு நீங்குமாறுமெய்ப்பொருள் வண்டமிழ்பாடி அருளும்" சம்பந்தர் வேண்டுகோள் ஏற்று நாவுக்கரசர் பதிகம் பாடுகிறார். கண்ணினால் இறைவனைக் கண்டு வணங்க அவர் மனம் உருகிப்பாடிய பாடல்கள் பத்தும் நிறைவுற கோயிலின் கதவும் திறந்தது. அடியார் நேர்வழி சென்று வழிபட்டனர். என்பு நெக்குருக இறைஞ்சி வழிபாடு செய்த நாவுக்கரசன் அன்பின் திறம் இளையவர் சம்பந்தரை இறைவன் அருளின் தன்மை காண வைக்கிறது. அப்பர் சம்பந்தரிடம் கோயிலின் “மணிக்கபாடம் நீக்கமும் அடைப்பும் நிற்க திறந்தவாறு அடைக்கப்பாடி அருளும் நீர்” எனறு கூறுகிறார். சம்பந்தர்பாடுகிறார்.
சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட்டுறை மைந்தா

இதுநன்கு இறை வைத்து அருள் செய்க எனக்குன்
கதவம் திறக்காப்புக் கொள்ளும் கருத்தாலே” அவருடைய முதற் பாடல் முடிய கதவு காப்பு நிரம்பிட அடைத்தது. நாவுக்கரசரும் கூடி நின்ற தொண்டரும் இளையவர் சம்பந்தர் மனமொன்றிய வழிபாட்டின் திறம் கண்டு வியந்தனர். புகலிவேந்தர் சம்பந்தர் 10 பாடல்களால் தொடையமைத்து பதிகமாக்கினார். சம்பந்தர் தன்னை உணர்ந்தார். தன் தொண்டுப் பணி உணர்ந்தார். இந்நிலையில் அப்பர் திருவாய்மூர் செல்கிறார்.
பாண்டி நாட்டிலே வழிபாட்டு நன்னெறி மாறி மன்னனும் பிற சமய நெறி சார்ந்தான். கோவில்களெல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளியும் ஆயின. மயிற்பீலியொடு உலவும் அமணர் நடமாடும் இடங்களாகின. இந்த நெறி மாற்றத்தை மன்னன் மந்திரி குலச்சிறையும் மனைவி மங்கையற் கரசியும் ஏற்கவில்லை. வழிபாட்டு நிலையில் கோயிற் சூழல் மாறியது. பறிமயிர் தலையும் பாயும் பீலியும் தடுக்கும் கையில் முக்குடை யுமாய்த் திரியும் அமணர் கோலம் நாட்டுச் சூழலையும் மாற்றியது. பெரியபுராணம் இம்மாற்றத்தை வருமாறு காட்டியுள்ளது.
'பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில் சீர்ப்பதிகள் எல்லாம் பாழியும் அருகர்மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலியோடு மூழிநீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப" நாட்டின் பண்பாட்டுத் தோற்றத்தில் புதிய வழிபாட்டு நெறி தோன்றியமை யால் சம்பந்தர் தொண்டு அங்கே பெரிதும் வேண்டப்பட்டது.

Page 14
ஞானத்தின் திரு உருவு
பிறசமயம் பேணும் மன்னன் வழியில் மக்கள் மனம் சென்றது. மீண்டும் பழைய வழிபாட்டு நெறியை நிலைநாட்ட வழி தேடினர். சம்பந்தர் பாமாலைத் தொண்டு பற்றி அறிந்த குலச்சிறையும் மங்கையற்கரசியும் அவரிடம் தொடர்பு கொண்டனர். கணவன் அறியாமல் வழிபாட்டு மரபு பேண மனைவி முயன்றார். மன்னவன் நிலைமாற்ற மந்திரி செயல்பட்டார். சம்பந்தர் தனது வழிபாட்டுத் தொண்டு, நாடு கடந்து பரப்ப வேண்டியதை நினைந்தார். ஆனால் அச்சமயம் உடனிருந்த முதுபெரும் தொண்டர் தனது வாழ்வியல் அனுபவம் கொண்டு “பிள்ளாய் அந்த அமணர் வஞ்சனையால் அவதியுற நேரும் கோள்களும் தீத்திறம் சார்ந்துள்ளன. எனவே அங்கு செல்ல உடன்படுவது ஒண்ணாது” என்று தடுக்கிறார். ஆனால் சம்பந்தரோ மனக்கலக்கமின்றி பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது. எனத் திடமாக உரைக்கிறார்.
"வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து
என் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும்உடனே ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே” என்று தொடங்கும் கோளறு பதிகம் பாடி நாவுக்கரசரை ஒருப்படச் செய்தார். குழந்தைப் பருவத்திலே சம்பந்தர் உளம் கவர் கள்வனாக இறைவன் இருந்தான். அவனை வழிபடுவது அவருக்கு விருப்புடைய செயலாக இருந்தது. ஆனால் இப்போது அவர் உள்ளத்திலே புகுந்திருக்கின்றான். எப்போதும் எங்கு சென்றாலும் உடனிருக்கிறான். எனவே துணிவுடன் பாண்டிநாடு செல்கிறார். முன்னோர் வழிபாட்டு மரபு காக்கப் பணிசெய்யச்
செல்கிறார். சம்பந்தரது உளவளர்ச்சியும் உறுதியும் துணையாக
n-ma 16 -m-

நிற்கின்றன. அப்பரும் அவர் மனஉறுதிகண்டு மறுக்காமல் வாழ்த்தி அனுப்புகின்றார். முதியவரான அன்பரின் வாழ்வியலில் ஏற்பட்ட துன்பியல் நிலைகள் சம்பந்தருக்கு இதுவரையும் ஏற்படவில்லை. ஆனால் மனப்பக்குவம் ஏற்பட்டிருந்தது. பாண்டிநாடு வந்த சம்பந்தர் திருவாலவாய் திருக்கோயிலை வழிபட விரும்பிச் செல்கிறார். அவரோடு திருநீறு தரித்த தொண்டர்களும் வருகிறார்கள். இசைக்கருவிகள் இசைத்து வருகின்றன. புண்ணியத்தின் படையெழுச்சி என இக்காட்சியைச் சேக்கிழார் பாடியுள்ளார். வானுலகும் மண்ணுலகும் செய்த புண்ணியத்தால் சம்பந்தர் வருகை தந்துள்ளார். அவர் தோற்றம், வெண்மை, தூய்மை என்பன அந்நாட்டில் மறைந்து விட்டவை. பாண்டிநாடு வழிபாடு மறந்து பழிசூழ்ந்து கிடந்தது. அங்கு ஞான மணிவிளக்காக சம்பந்தர் வந்தமை பரசமய கோளரி வந்தார் என எண்ண வைத்தது. குலச்சிறையார் தலைமேல் கைகுவித்து நிற்கிறார். சம்பந்தர் தாளில் நீள நிலத்திடை வீழ்ந்து பணிந்தார். அவரைப் பார்த்து ஏனையோரும் பணிகின்றனர். சம்பந்தர் குலச்சிறையாரை கரம் பற்றி எழுப்புகிறார். சம்பந்தர் அவரிடம் வருமாறு கூறுகிறார்.
“செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் நம்பெருமான் தன் திருவருள் பெருகும் நன்மைதான் வாலிதே' குலச்சிறையார் செவிகளில் சம்பந்தர் கூற்று தெய்வத்தின் கூற்றாக வந்து விழுகிறது. தமது இடர்களையும் துன்பங்களையும் நீக்க வந்த இளவலை குலச்சிறையார் வணங்கிவருமாறு உரைக்கின்றார். “சென்ற காலத்தின் பழுதிலாத் திறமும் இனி
எதிர்காலத்தின் சிறப்பும் இன்று எழுந்து அருளப்பெற்ற பேறு இதனால்
எற்றைக்கும் திருவருள் உடையோம் நன்றியில் நெறியில் அழுந்திய நாடும்
நற்றமிழ்வேந்தனும் உய்ந்து வென்றிகொள் திருநீற்று ஒளியினில்
விளங்கும் மேன்மை படைத்தனம்" குலச்சிறையாருக்கு திருநீறு துலங்கும் சம்பந்தரின் வாக்கு மனநிறைவைத்

Page 15
தந்தது. மன்னன் போக்கினால் மனக்கவலை கொண்ட மந்திரிக்கு உள்ளத்திலே அமைதி பிறந்தது. காலம் கடந்து நிற்கும் வழிபாடு பேணும் சம்பந்தரின் ஞானம் பாண்டி நாட்டை நல்வழிப்படுத்தும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. கோவில் வழிபாட்டை மக்கள் மீண்டும் தொடர ஒரு நல்ல தலைமையாக அவருக்குச் சம்பந்தர் காட்சியளித்தார். இளமைக்கோலமும் நெஞ்சில் உறுதியும் கொண்ட சம்பந்தர் நாட்டையும் நற்றமிழையும் காப்பார் என மனம் மகிழ்ந்தார். சம்பந்தருக்கும் மன்னனும் மக்கள் பலரும் பிறநெறி பேண குலச்சிறையும் மங்கையர்க்கரசியும் மனம் தளராதிருப்பது மனதைத் தொட்டது. மதுரைக் கோவிலை வழிபடச் சென்றவர் மனதில் மங்கையர்க்கரசியின் வழிபாடு பேணும் உறுதி படிந்திருந்தது. அதனால் அவர் பாடிய சொல் மாலையில் மங்கையர்க்கரசியின் குணஇயல்புகளையும் தொடுத்துள்ளார். பாண்டி நாட்டிலே வழிபாட்டு மரபுபேணி கணவன் பேணும் பிறவழிபாட்டு மரபை ஏற்காது உறுதியோடு இருந்த அவள் பெருந்தொண்டு இளவல் சம்பந்தரை வியப்படைய வைத்தது. அந்த வியப்பு பதிகப்பாமாலையில் வெளிப்படையாய் தெரிகிறது.
“மங்கையர்க்கரசி வளவர்கோன்பாவை வரிவளைக் கைம்மடமானி பங்கையச் செல்வி பாண்டிமாதேவிபணிசெய்து நாள்தொறும் பரவ”
"செந்துவர் வாயாள் சேலன கண்ணாள் சிவன் திருநீற்றினை வளர்க்கும்
பந்தனை விரலாள் பாண்டிமாதேவிபணிசெயபாரிடை நிலவும்”
“செய்யதாமரைமேல் அன்னமே யனைய சேயிழைதிருநுதற் செல்வி பையரவல்குற் பாண்டிமாதேவி நாள்தொறும் பணிந்து இனிது ஏத்த”
“முத்தின் தாழ்வடமும் சந்தனக் குழம்பும் நீறும் தன் மார்பினில் முயங்க பத்தியார்கின்ற பாண்டிமாதேவிபாங்கோடு பணிசெயநின்ற”
“மண்ணெலாம் நிகழமன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன்தன் மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவி பாங்கினாற்பணிசெய்து பரவ”

பாண்டி நாட்டில் உள்ள திருவாலவாய்த் திருக்கோயிலிலே பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியின் வழிபாட்டு நிலை சம்பந்தர் மனத்தை உருக்கியது. நாள்தோறும் திருக்கோவிலுக்கு பரவி பணிந்து நின்ற கோலம், சந்தனமும் திருநீறும் அணிந்து நின்ற திருக்கோலம், இறைவனை இனிமையாய் ஏத்திப் பாடிய எழிற் கோலம், இவற்றைக் கண்ட போது சம்பந்தர் ஒர் உண்மை நிலையை நன்கு தெளிந்து கொண்டார். பாண்டிமாதேவியின் தொடர்ந்த வழிபாட்டுத் தொண்டுதான் திருவாலவாய்த் திருக்கோவில் சமண பள்ளியாக மாறிவிடாமல் தடுத்து நின்றது. அவள் தன் கணவன் பிறநெறி சார்ந்த போதும் தான் மாறாமல் கோவிலிலே பணிசெய்தாள். மந்திரி குலச்சிறையும் உடன் நின்று உதவினார். இவர்களின் காலத்திற்கேற்ற பணி கோவில் வழிபாட்டு மரபு அழிந்து விடாமல் காத்தது. மணிமுடிச் சோழன் மக்ள் வழிபாட்டு மரபில் வளர்ந்தவள். அவளைக் கண்டபோது சம்பந்தருக்கு தன் வளர்ச்சி நிலைதான் நினைவிற்கு வந்தது. எல்லாத் திசையினரும் வழிபடும் பெருமை பெற்ற ஆலவாய். அத்திருக்கோவிலை வணங்கி தமிழ் இசைமாலை சூட்டி வாயில் வரும்போது மங்கையர்க் கரசியார் முன் வந்தார். இவ்விடத்தில் மங்கையர்க்கரசியைச் சேக்கிழார் 'தெள்ளு நீர் விழித் தெரிவையார்’ எனக் குறிப்பிட்டுள்ளார். தெரிவை என்றால் 25-31 க்கும் இடைப்பட்ட வயதினர் என அகரமுதலி விளக்கம் தருகிறது. மங்கையர்க்கரசியார் சம்பந்தரை வீழ்ந்து வணங்குகிறார். சம்பந்தர் அவரைத் திருக்கையால் எடுத்தார். பாண்டிமாதேவி கண்களில் நீர் மல்க பவளவாய் குழறி யானும் என்பதியும் செய்த தவம் என் கொல் என்று விளம்புகிறார். பரசமய நெறியிடையே தொண்டு வாழ்க்கையிலீடு
பட்ட மங்கையர்க்கரசியாரை சம்பந்தர் போற்றினார்.
அமண் சமயநெறியாளர் சம்பந்தரை அழித்துவிட முயற்சி செய்கின்றனர். மன்னன் துணை நிற்கின்றான். சம்பந்தர் இருப்பிடத்திற்குத் தீயிட முடிவு செய்தனர். இதனையறிந்த பாண்டிமாதேவி சோர்ந்து போனாள். அமணர் தீயிட்டனர். முத்தமிழ் விரகன் சம்பந்தர்
ஆலவாயன் மீது பாமாலை பாடத்தொடங்கினார்.

Page 16
“செய்யனே திருஆலவாய் மேவிய ஐயனே அஞ்சல் என்று அருள் செய் எனைப் பொய்யராம் அமணர்கொளுவுஞ் சுடர் பையவே சென்று பாண்டியற்காகவே” எனத் தொடங்கிப் பத்துப்பாடல்களிலும் இறுதியில் பாண்டியற்காகவே எனப் பாடிமுடித்தார். பாண்டிமாதேவியின் மங்கலநாண் பாதுகாக்கவும் குலச்சிறையார் தண்டனை பெறுவதைத் தடுக்கவும் வேண்டியே 'பையவேசென்று எனப்பாடினார். தீயின் வெம்மை போய் வேந்தனைச் சார்ந்தது. அமண மருந்தினால் மன்னன் வெப்புநோய் அதிகரித்தது. நோய் தீர்க்க சம்பந்தரை அழைக்க எண்ணினர். மன்னனோ யானுற்ற பிணியைத் தீர்த்து வென்றவர் பக்கம் சேர்வேன்' என்றான். பாண்டிமாதேவி யும் குலச்சிறையாரும் சம்பந்தரை அழைத்து வரச்சென்றனர். சம்பந்தரை மீண்டும் கண்ணாரக் கண்டனர். தீயில் அழிந்திடுவாரே எனக் கலங்கிய அவர்கள் கண்கள்களிப்புடன் கண்டன.
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மிசையன்றிமண்ணில் வளர்மதிக்கொழுந்தை தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்கும் கானத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள் எரியிடை புகுந்தார் மீள்வது அரிது. சம்பந்தர் ஞானம் பெற்றவர். வழிபாட்டைத் தொடர்ந்து செய்யும் உறுதி பூண்டு வாழ்ந்தவர். அவரைக் கண்டபோது அமணர் செய்த கொடுந்தொழில் நினைந்து கண்ணிர் பெருக்கினர். சம்பந்தரது அடிகளில் வீழ்ந்து பணிந்தனர். அவர்கள் அச்சம் தீர்த்த ஆளுடைய பிள்ளையார் அமணரை வாதில் வெல்வேன். வென்று பாண்டியனை மீண்டும் வெண்ணிறு அணிவிப்பேன் என உறுதிமொழி கூறுகிறார். ஆவதும் அழிவதும் எல்லாம் இறைவன் செயல். வெண்ணிறு அணிந்த தொண்டர் தொடரச் சம்பந்தர் ஆலவாய் சென்று பாமாலை பாடி வழிபடுகிறார். ஞாலம் முழுதும் ஆலவாயான் புகழ் பேச வேண்டும் என்பதே அவரது அவா. அதனால் பாண்டிய மன்னன் நோய் தீர்க்கச் செல்கிறார். பாண்டியன் அவரைக் கண்டபோது நிறைமதியே எனக் கண்டான்.
பாண்டிமாதேவி சமணருடன் சம்பந்தர் வாதில் வெல்ல முடியுமோ என
m 20

அஞ்சுகிறாள். ஆனால் ஆளுடைய பிள்ளையோ அவள் அவலம் தீர்க்க பதிகம்பாடுகிறார்.
மானின் நேர்விழிமாதராய்வழுதிக்கு மாபெரும் தேவிகேள் பால்நல் வாயொருபாலன் ஈங்கிவன் என்றுநீபரிவு எய்திடேல் ஆனைமாமலை ஆதியாய இடங்களில் பல அல்லல் சேர் ஈனர்கட்கு எளியேன் அலேன் திருஆலவாய் அரன் நிற்கவே பாண்டியனுக்குத் திருநீறே மந்திரமும் மருந்துமாய் வெப்புநோய் தீர்ந்தது. ஞானசம்பந்தர் பாதம் நண்ணி நான் உய்ந்தேன் என அவர் பெருமை பேசினான். அமணருடன் பல நிலையில் வாதிட்டு வென்ற ஞானக்கன்று சம்பந்தர் மீனவனுக்கு உயிர் நல்கி மெய்ந்நெறி காட்டியவர். அவர் வழிபாடு புறநெறிச் செல்வோரை விலக்கிற்று. அப்பரும் பாண்டியநாடு வந்து ஆளுடைய பிள்ளையின் அருள்திறம் போற்றினார். சிவபாதவிருதையரும் சென்று மகவைக்கண்டார். அவரைக் கண்டவுடன் சம்பந்தருக்குத் தோன்றாத் துணையாய் நின்ற தோணியப்பர் கழல்கள நினைவுக்கு வந்தன. தன் குழந்தைப் பருவத்திலே ஆட்கொண்ட பெருந்தகையை எண்ணினார். தன் வாழ்வியலில் வழிபாட்டின் சிறப்புணர்த்திய கழுமலத்தைக் கண்ணால் கண்டார். புதியபாமாலை ஒன்று தொடுக்கலானார்.
“போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாதென தாதையார் முனிவுறத்தான் எனை ஆண்டவன் காதையார் குழையினன் கழுமல வளநகர்ப் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே" தான் மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு பெண்ணில் நல்லாளொடு அந்தப் பெருந்தகை இருந்ததே காரணம் என்பதைச் சம்பந்தர் வாழ்வியலால் நன்கு அறிந்துகொண்டார். இதனையே உலகத்திற்கு எடுத்து இயம்பினார். தோணியப்பரை மறவாத தமிழ் ஞானசம்பந்தர் வயதில் இளையவராயினும் முதுமை அனுபவம் பெற்றவர். 16 ஆண்டுகளே வாழ்ந்தபோதும் வழிபாட்டால் வாழ்வில் நிறைவுபெற்றவர்.
சம்பந்தர் வழிபாட்டுத் திறத்தால் நினைப்பது எல்லாம் செயற்பட அருள்பெற்றவர். குடத்துள் ஏன்பாகக் கிடந்த பூம்பாவையை உயிர் பெறச்

Page 17
செய்தபோது அவர் நினைப்பைச் சேக்கிழார் சிறப்பாகப் பாடியுள்ளார்.
"மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலார் அடியார் தம்மை அமுதுசெய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவுகண்டு ஆர்தல் உண்மையாம் எனில் உலகர்முன் வருக என உரைப்பார்” வழிபாடு செய்யும் அடியாரை அமுது செய்வித்தல், பெருந்தொண்டு. பசிப்பிணி தீர்த்தல் வழிபாடே. பெண்களின் பெருந்தொண்டு அது. தோணிபுரத்திலே பாலூட்டிய பேரன்னையைச் சம்பந்தர் என்றும் மறக்கவில்லை. தனது கண்ணிர் துடைத்த அன்புக்கரங்களை அவர் எங்கும் கண்டார். வரிவளைக் கைமட மானியும் வளைக்கை மடநல்லாரும் நாள்தோறும் செய்த அப்பணிக்கு ஈடில்லை. கோவில் வழிபாட்டுமரபிலே மடை பரவி வழிபடும் மங்கையர் உலக மக்கள் உயிர்வாழத் தொண்டு செய்பவர். அவர் பணியைச் சம்பந்தர் தனது சொல் மாலைகளிலே பலவாறு சிறப்பித்துள்ளார். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதற்கு வழிபாடு துணை செய்ததைச் சம்பந்தர் வரலாறு நன்கு உணர்த்துகின்றது. அவர் திருமணம் முடித்த அன்றே இல்லாளுடன் சோதியில் கலந்தவர். திருமண வீட்டிற்கு வந்த அனைவரும் உடன்புகுந்தனர். இளமையிலே உலகவாழ்வை நீத்த சம்பந்தர் தொண்டு; பின்வந்தோரால் பேணப்பட வேண்டியது. இறையடியார் வாழ்வில் துன்பத்திற்கு இடமில்லை. தொண்டு செய்து வாழ்க்கை நடத்துவோர்க்குத் துன்பம் நேராது எனச் சம்பந்தர் பாமாலை யிலே பாடினார்.
"அன்புறு சிந்தையர் ஆகி அடியவர் நன்புறு நல்லூர்ப் பெருமணம் மேவிநின் இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவார் அல்லார் தொண்டு செய்வாரே” என்ற சம்பந்தர் கூற்று அவரது வழிபாட்டு வாழ்வியல் அனுபவமாகவுள்ளது. அவர் சோழநாடு, நடுநாடு, தொண்டைநாடு எனப் பல நாட்டுத்தலங்களை வலம் வந்து பாடியவர். ஈழநாட்டுத் தலங்களில் கோணேஸ்வரத்தையும், கேதீஸ்வரத்தையும் பாடியவர். உலகெங்கும் வழிபாடு பரப்புவது என்ற நிலையில் அவர் பாமாலைகள் பாடினார். 283 பதிகங்கள் பாடினார். அவை
w- 22 m

22 பண்களில் பாடப்பட்டுள்ளன. திருமுறை வகுப்பில் முதல் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. அவர் பாடிய பாடல்களின் தொகை ஆதியில் 16,000 என்று கருதப்படுகிறது. இப்போதுள்ளவை 377 தலங்களைப் பாடிய பாடல்களும் 7 பொதுப் பதிகங்களும் ஆகும். பதிகங்களின் இறுதியில் அமைந்த முத்திரைக்கவிகளில் தன்னை அறிமுகம் செய்துள்ளார். பதிகத்தை தமிழ்மாலை, செந்தமிழ், ஒண்தமிழ், நற்றமிழ், அருந்தமிழ், திருநெறியதமிழ், குலமார் தமிழ், உரைக்கும் தமிழ், சொல்மாலை, பன்னுரை செந்தமிழ், தண்தமிழ், சீர்மிகுந்ததமிழ், முத்தமிழ் எனப் பலபெயர்களால் குறிப்பிட்டுள்ளார். இதனால் தமிழ்மொழி பற்றிய அவரது அறிவுத்திறம் பெறப்படுகின்றது. தமிழை வழிபாட்டிற்குரிய சிறந்த மொழியாக சம்பந்தர் கருதினார். கோவிலின் சூழலையும் அங்கு உறையும் இறைவனையும் தமிழ்ச் சொல்லோவியமாக அமைத்த சம்பந்தர் உலகிலே வழிபாட்டை நிலைபெற வைத்த பெருமைக்குரியவர். பிள்ளை நிலையிலே நின்று கோவில்களை அவர் நோக்கிய போது இயற்கையழகையும் கண்டார். இளவல் என்பதால் அவர்மனம் அழகுச் சூழலை வலம் வரவிரும்பியது. அதையே பாமாலையாக்கியது. துள்ளும் மனத்தையும் தொண்டுப் பணியிலே செல்ல வழிகாட்டியவர் சம்பந்தர்.
23 u

Page 18
மறு ஒழித்த இளம்பிறை
வழிபாட்டுமரபு பேணிய திருத்தொண்டர்களில் அறநெறிகாட்டியவர் அப்பர். பெரிய புராணம் இவர் வரலாற்றினை 428 பாடல்களில் அடக்கியுள்ளது. 81 ஆண்டுகள் உலகில் வாழ்ந்து 4090 பதிகம் பாடிய பெருமகன் என்பர். வாழ்வின் நீட்டத்தில் 49000 பாடல் பாடிய பெருமை பெற்றவர். ஆனால் இன்று கிடைப்பவை 321 பதிகங்களே. அடங்கன் முறையுள் அவை நான்கு, ஐந்து, ஆறாம் திருமுறைகளாக வகுக்கப்பட்டுள்ளன. சம்பந்தர்பாடல் திருக்கடைக்காப்பு என்றும் சுந்தரர் பாடல் திருப்பாட்டு எனவும் திருநாவுக்கரசர் பாடல் தேவாரம் எனவும் வழங்கியது. எனவே வழிபாட்டில் தேவன் ஆடும் கூத்தினுக்கு வாரப்பாடலாக அப்பர் பாடல் கருதப்பட்டது. அவர் வரலாறும் வாழ்வியலும் மனிதர் அறியப்படவேண்டியவை.
திருமுனைப்பாடி நாடு இவர் பிறந்தநாடு. பெண்ணை மாநதி பாயும் வளம் படைத்தது. தெய்வநெறி பெருகிய திருவாமூர் அறம் வளர்க்கும் திரு ஊர். இவ்வூரிலே குறுக்கையர் குடியில் அறம்புரிந்து விருந்தளிக்கும் பெரும் சிறப்புடைய புகழனார் மாதினியாரை மணம் புரிந்து வாழ்ந்து வந்தார். அவர்கள் முதற்குழந்தை திலகவதி. பின்னர் வந்து பிறந்தவர் மருணிக்கியார். இவர் பிறப்பைச் சேக்கிழார் வருமாறுபாடியுள்ளார். 'திலகவதியார் பிறந்து சிலமுறை ஆண்டு அகன்றதன் பின் அலகில் கலைத்துறை தழைப்ப அருந்தவத்தோர் நெறிவாழ உலகில் வரும் இருள்நீக்கி ஒளிவிளங்கு கதிர் போல் பின் மலரும் மருணிக்கியார் வந்து அவதாரம் செய்தார்" குழந்தைகளைப் பெற்றோர் பள்ளி சேர்த்துக் கல்வி பயில்விக்கின்றனர். தாயும் தந்தையும் பேணி வளர்க்க குழந்தைகள் அன்பு நிலையில் வளர்கிறார்கள். திலகவதிக்கு பன்னிரண்டு வயதாகிற்று. அக்கால மரபுக்கு ஏற்ப திருமணம் பேசி கலிப்பகை என்னும் மணமகனை உறுதி செய்கின்றனர். வழிபாட்டுமரபு பேணும் வாழ்வியல் என்பதால் உரிய
ത്ത 24 -

வயதில் உற்றார் சூழ மணம் செய்ய எண்ணியிருந்தனர். இந்த குடும்பநெறியில் கலிப்பகையார் போர்த்தொழில் முடிய மணம் என இருந்த போது புகழனார் திடீரென நோயுற்று விண்ணுலகு எய்தினார். மாதினியாரும் சிலநாளில் உலகவாழ்வை நீத்தார். பெற்றோரின் இழப்பு உடன்பிறப்புகளைப் பெரும் கவலைக்கு ஆளாக்கிற்று. சுற்றத்தவர் தேற்ற திலகவதி தம்பியை வளர்க்கும் பணியில் முனைகிறார். இந்த வேளையில் போர்முனையில் கலிப்பகையார் மாண்ட செய்தி வந்தது. உடன் உயிர் துறக்கத் துணிந்த திலகவதியின் இணையடியில் மருணிக்கியார் வீழ்ந்து புலம்பினார். 'உம்மையும் இழப்பின் உமக்கு முன்னே உயிர் துறப்பேன்’ என வருந்துகிறார். தம்பியாரை வாழ்விக்க கைம்மை பூண்டு திலகவதி வாழ்வு நடத்துகிறார். அவரைத் தாய் போலப் பேணுகிறார். உயிர் வாழ்க்கை என்பது தனக்காக அன்றிப்பிறர்க்காக வாழுதலே என்ற அறநெறிநிற்கிறார். அவர் வளர்ப்பில் மருணிக்கியாரும் அருந்தொண்டுகள் செய்கிறார்.
மனத்திலே துயர் ஒழியப் பிறர்க்கு அருளும் பேராளர் ஆகிறார். வெயில் வெம்மை தீர்க்கச் சோலைகள் அமைக்கிறார். நிலையாமை கண்டமையால் அறம் செய்ய அவாக்கொண்டார். நீர்நிறை குளங்கள் தோண்டுகிறார். தண்ணிர்ப் பந்தர் அமைக்கிறார். வறுமையுற்றவருக்குப் பொருள் வழங்குகிறார். இரவலர்க்கு இல்லையென்னாது ஈந்து இன்பம் காண்கிறார். நாவலர்க்கு பெரும் பொருள் நல்குகிறார். அருளாளராய் அன்பு வாழ்க்கை நடத்துகிறார். வாழ்வில் இழப்புகளை அனுபவித்தமையால் இல்லாதாரை மகிழ்விக்க எண்ணிப்பணி செய்கிறார். தந்தை செய்த விருந்து மைந்தன் மனதிலும் ஊன்றியிருந்தது.
இக்காலத்தில் பிறநெறி பேணுவோர் பலர் தமிழகத்திற்கு வந்தனர். பாடலிபுத்திரம் என்னும் ஊரில் சமண் பள்ளிகளும் பாழிகளும் அமைத்து வாழ்ந்தனர். கல்விநிலையிலே புதியநூல்களை அறிமுகம் செய்தனர். இளையவரான மருணிக்கியாருக்கு இப்புதிய கற்கை நெறிமுறை கவர்ச்சியாக இருந்தது. பிறநெறியின் நல்லாறை அறியும் அவாவில் தனது வழிபாட்டுச் சூழலை விட்டுப்பாடலிபுத்திரம் சென்று சமண்பள்ளி சேர்ந்தார். புதிய கல்வியே வீடுபற்றி அறியும் நெறியெனத் துணிந்தார். அமண் சமய தருக்க நூல்களையெல்லாம் கற்றார். சமணர் அறவுரையில் உள்ளம்

Page 19
பறிகொடுத்தார். மருள்நீக்கியார் மனம் மாறி சமணம் தழுவினார். அரிய நூல்கள் கற்று வித்தகரானார். தருமசேனர் என்று சமணர் சிறப்புப் பெயர் வழங்க மருணிக்கியார் என்ற பெயர் மறையப் பெற்றார். நின்று உணும் பழக்கமுடைய சமணநெறியால் முன்னைய விருந்தோம்பல் வாழ்விலிருந்து முற்றாக விலகிநின்றார். சமணர் குண்டர், அமணர் என பிரிவினராய் இருந்ததைத் தேவாரங்கள்மூலம் அறியமுடிகிறது. மருள்நீக்கியார் குண்டர் பிரிவிலே சார்ந்திருந்ததை அவரே தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
"அறம் தெரியா ஊத்தை வாய் அறிவில் சிந்தை ஆரம்பக் குண்டரோடு அயர்த்து நாளும் மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன்" (6:91:8) வாதத்திறமையினால் தேரரையும் வென்று புகழோடு வாழ்கிறார். தம்பியை நல்வழிபாட்டு நெறியிலே வளர்த்த திலகவதியாருக்கு புறச்சூழலால் கவரப்பட்ட இளவலை மீண்டும் சிவநெறி சாரச் செய்ய வேண்டுமென்பதே முழுப்பணிஆயிற்று. கோவில் வழிபாட்டு மரபை மீண்டும் பரப்ப திருவீரட்டானம் வந்து பணிசெய்கிறார். நீறணிந்து நாள் தோறும் புலர்வதற்கு முன்னே கோவில் செல்கிறார். அலகிடுதல், மெழுகுதல், மலர்கொய்தல், மாலைதொடுத்தல் முதலிய முன்னோர் வழிபாட்டு மரபு பேணுகிறார். தம்பியைப் புறநெறியிலிருந்து மீட்டு எடுக்க எந்நாளும் கோவில் வந்து வழிபடுகிறார். அவர் பணியைச் சேக்கிழார், "சென்று வீரட்டானத்து இருந்த செம்பவள குன்றை அடிபணிந்து கோதில் சிவசின்னம் அன்றுமுதல் தாங்கி ஆர்வம் உறத் தங்கையால் துன்று திருப்பணிகள் செய்யத் தொடங்கினார்." எனச் சொல்லோவியமாகக் காட்டுகிறார். திலகவதியார் வேண்டுதல் நிறைவேற தரும சேனரைச் சூலைநோய் பெரிதும் வருத்துகிறது. சமண சமய மருத்துவமுறையால் நோயை ஆற்றமுடியவில்லை. குண்டிகைநீரும். மயிற்பீலியும் நோயை மேலும் வளரச் செய்தன. சமணர் நோயுற்ற தருமசேனரைக் கைவிட்டுச் சென்றனர். இந்நிலையில் தருமசேனருக்கு உறவு நினைவுக்கு வருகிறது. தம்மைப் பேணிவளர்த்த தமக்கையாரை

எண்ணுகிறார். அவருக்குத்தாம் நோயுற்ற செய்தியை அனுப்புகிறார். ‘சமணர் வாழிடம் நான் வருவதற்கில்லை யென்ற மறுமொழி கேட்ட தருமசேனர் தனது சமணக்கோலத்தை விடுத்து வெள்ளாடை பூண்டு நள்ளிரவில் தமக்கையாரிடம் வந்து அடைக்கலமானார். தருமசேனர் மருணிக்கியாராக மீண்டுவந்தமை தன்வழிபாட்டின் பயனே என எண்ணித் திலகவதியார் அவரை ஏற்றுக்கொள்கிறார். திருநீற்றை அஞ்செழுத்து ஒதிக் கொடுத்தார். மருணிக்கியார் தமக்கையாரின் வழிபாட்டு மரபைப் பேண பொழுது புலர்கையில் திருவலகும் திருமெழுக்கும் தோண்டியும் கைக்கொண்டு திருவீரட்டானம் சென்றார். தொழுது பணி செய்து தூய தமிழ்ப்பாமாலை உள்ளத்திலே பேரன்பு சுரக்கப்பாடுகிறார்.
"கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே." நெஞ்சத்தை இறைவனுக்கு இடமாக்கி எப்போதும் அவனை நினைத்து வாழும் வாழ்வியலை மேற் கொள்கிறார். அவர் முதற்பாமாலை. தன்னுடைய பழைய வழிபாட்டுமரபுகளையெல்லாம் மறக்காமல் வாழ உறுதிபூண்கிறார். சலம், பூ, தூபம், தமிழிசை என்ற வழிபாட்டுக்குரிய வற்றை எல்லோருக்கும் உணர்த்துகிறார். துன்பம்; பிணி, கவலையணுகாமல் காப்பது வழிபாடே என வாழ்வியல் அனுபவத்தால் உணர்ந்தார். வாழ்க்கையில் சலிப்படையாதிருக்க, பயத்தை அகற்ற, அறியாமை அகல வழிபாடே துணை என்கிறார். அவரின் அனுபவமும் தெளிந்த அறிவும் சொல்மாலைகளாகப் புனைவு பெற்றன.அதனால் நாவுக்கரசன்’ என்ற பெயர் பெற்றார். மக்களுக்கு அவர்வரவு மகிழ்ச்சி தருகிறது. புறநெறியின் புன்மை உணர்த்திற்று. உழவாரப்படையாளியாக அவர் நின்ற கோலம்
பரசமயம் பயனற்றது என்பதைக் காட்டியது.
== 27 =

Page 20
நாவுக்கரசர் வழிபாட்டு நிலை கேட்டுச்சமணர் ஒன்று கூடினர். மன்னனும் நம்மைப்புறக்கணிப்பானே என வருந்தினர். வஞ்சனைகள் செய்ய முனைந்து நாவுக்கரசர், 'சூலைநோய் வந்தது எனப்பொய் கூறினார் என மன்னனிடம் மாறி உரைத்தனர். மன்னன் அவரை அழைத்து வரும்படி ஏவினான். நாவுக்கரசர் மன்னன் அழைப்பை மறுத்து வழிபாட்டுநிலையைத் தொடர்ந்து பதிகம் பாடினார். இப்பதிகம் மறுமாற்றத்திருத்தாண்டகம்' என வழங்கப்படுகிறது. வழிபாடு தந்த துணிவு பாமாலை ஆகிற்று. செந்தமிழிலே செழுந்திருத்தாண்டகம் பாடினார்.
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் ஏமாப்போம்பிணியறியோம்பணிவோம் அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை தாமார்க்கும் குடியல்லாத்தன்மையான
சங்கரன் நற்சங்க வெண் குழையோர் காதில் கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே." நாட்டு மன்னனே அழைத்தாலும் நாம் வருவதற்கில்லை என்ற நாவுக்கரசர் கூற்று வந்தவர்களை திகைக்கவைத்தது. எனினும் மன்னனைக் காண்பதே நல்லதென விளக்கி அவரை மன்னனிடம் அழைத்துச் சென்றனர். அவர் வருகை மன்னன் கோபத்தைக் கிளறிற்று. நாவுக்கரசரை நீற்றறையிலே இடுவதே தக்கது எனச் சமணர் பரிந்துரைக்கின்றனர். மன்னன் ஆணையால் நீற்றறையிலே இட்டுப் பூட்டுகின்றனர். நாவுக்கரசர் சூலைநோய் தீர்த்தானை வழிபட்டுப்பாமாலை சாற்றுகிறார். நீற்றறை அவருக்கு ஈசன் இணையடி நீழலாய் இருந்தது. ஏழுநாள் இருந்தும் ஊனம் இன்றி வெளியே வருகிறார். அவரை நஞ்சூட்டிக்கொல்ல நினைந்து நஞ்சுகலந்த பாலடிசிலை உண்ணச் செய்கின்றனர். அவருக்கு நஞ்சும் அமுதாகிற்று. யானையால் இடறச் செய்தனர். அவரை அது ஒன்றும் செய்யவில்லை. வழிபாடு துணையென இருப்பார்க்கு இடையூறு இல்லை. கல்லிலே கட்டிக்கடலிலே விட்டபோதும் கல்லிலே மிதந்து கடலூரில் கரையேறிய நாவுக்கரசரைத் தொண்டர்
- 28 -

மகிழ்ந்து எதிர்கொள்கின்றனர். அஞ்செழுத்தைச் சிந்தையால் ஓதி வழிபட்ட நாவுக்கரசர் புதிய வழிபாட்டுமரபு ஒன்றையும் தொடக்கியவராகிறார். கோயில்தொண்டு செய்யும் முறைமையை மக்களிடையே பரவச்செய்தார். திலகவதியார் காட்டிய நல்வழியை உலகத்தவர்க்கெல்லாம் அறிவித்தார். ஒவ்வொரு கோவிலுக்கும் சென்று சூழலைத் தூய்மையாக்கினார். பிறசமயப் பரம்பலால் மக்கள் கவனியாது விட்ட வழிபாட்டுத்தலங்களை மீண்டும் பொலிவுபெறச்செய்வதில் முன்னின்று உழைத்தார். திருப்பாதிரிப் புலியூர்த் திருக்கோயில் அமைந்திருந்த இடம் பாடலிபுரம் என்ற பெயரில் தமிழ் நாட்டுச் சமணரின் குருபீட இடமாக நிலவியது. சமணப் பெரும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், மடங்கள் என்பன நிரம்பியிருந்தன. நாவுக்கரசர் அங்குள்ள கோவிலை மீண்டும் வழிபாட்டுச் சிறப்புத் தலமாக்கினார். அங்கு தன் விருப்பை வெளிப்படுத்துகிறார்.
"புழுவாய்ப்பிறக்கினும் புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாது இருக்க வரந்தர
வேண்டும் இவ்வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்தருள் செய்
பாதிரிப்புலியூர்ச் செழுநீர்புனல் கங்கை செஞ்சடைமேல்
வைத்த தீவண்ணனே" அவருடைய உள்ளத்திலே வழிபாட்டுமரபு துறந்து சமணர் நெறிநின்றமை பெரிதும் உறுத்துகின்றது. எனவே எப்பிறவியிலும் வழிபாட்டை மறவாதிருக்க வேண்டுகிறார். மறந்தமையால் பெற்ற நோயும் மீண்டும் நினைந்தமையால் பெற்ற பேறுகளும் அவர் நினைவை விட்டு அகலவில்லை. தாய் தந்தையாக நின்று தன்னைக் காத்தவரை பெற்றோரை இழந்த அவர் நன்குணர்ந்திருந்தார். கருவாய்க் கிடந்துன் கழலே நினையும் கருத்துடையேன் என உறுதி கூறுகிறார். சமணர் தீ நெறிப்பட்டு திகைத்ததை நினைந்து வழிபடுகிறார். உள்ளத்திலே ஒன்றி வழிபாடு செய்வதால் யமபயம் இல்லையென்கிறார். அவர் பலமுறை அதை நினைக்கிறார். தோன்றாத்துணையாக இருந்த இறைவழிபாட்டை

Page 21
எல்லோரும் உணரச் செய்யவே பாமாலை பாடுகிறார். அவர்பாடல்களில்
அவருடைய வாழ்வியல் அனுபவமே சொற்களில் புனையப்பட்டுள்ளது.
சேக்கிழார் இவரை இன்தமிழ்ஈசர் என்று புகழ்கிறார்.
"வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைகளெல்லாம் எஞ்ச வென்று ஏறிய இன்தமிழ்ஈசர் எழுந்தருள் மஞ்சு இவர் மாடத்து திருவதிகைப் பதிவாணர் எல்லாம்
தம் செயல் பொங்கத்தழங்கு ஒலிமங்கலஞ் சாற்றலுற்றார்"
எனத் தொண்டர்கள் வரவேற்றதைக் காட்டுகிறார். சமணர்கள் செய்தகொடுமைகளையெல்லாம் வழிபாட்டால் வென்ற நாவுக்கரசரை பிறநெறிதழுவியவர் என்று எவரும் புறம் தள்ளிவிடவில்லை. அதற்கு மாறாகச் ‘சிவனருள் பெற்றவர்’ எனப்போற்றினர். அவருடைய தூயவெண்ணிறு அணிந்த கோலமும் பொன்னிற மேனியும் தாழ்வடமும் நீர் பொழிகண்ணும் வாய்ச் சொல் மாலையும் அனைவரையும் அவர்பால் ஈர்த்தன. அப்பரைச் சமணர் சொல் கேட்டு துன்புறுத்திய மன்னனும் மனம் மாறினான். தான் இழைத்த துன்பங்கள் யாவற்றையும் வழிபாட்டால் வென்ற நாவுக்கரசனின் மனவுரம் மன்னனையும் நல்ல தொண்டு செய்யத் தூண்டுகிறது. பாடலிபுத்திரத்து பள்ளிகளையும் பாழிகளையும் இடித்து குணதரவீச்சரம்' எனத் திருவதிகையிலே திருக்கோயில் கட்டுவிக்கிறான்.
திருவதிகை மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் சிறப்புடைய வழிபாட்டுத்தலமாகும். திலகவதியார் இத் தலத்திலே திருத்தொண்டு செய்து வாழ்ந்தார். பொழுது புலர்வதன்முன்வைகறையிலே கோயிலின் முன்திருவலகிடும் பணி செய்தார். ஈன்று பத்துநாள் கழிந்ததும் மலடு, சினை முதலிய குறையற்ற பசுவின் சாணத்தால் இடைவெளியோ புள்ளியோ தென்படாமல் மெழுகிடுதல், மலர்களைக் கொய்து மாலை யாக்கல், திருவிளக்கிடுதல், திருநாமம் ஏத்தல் போன்ற இவர் தொண்டு கோயிலை அனைவரும் வழிபட வகை செய்தது. சமணசமயம் திருவதிகையில் கல்வியால் பரவி; மக்களையும் மனம் மாற்றியிருந்தது. ஆனால் நாவுக்கரசர் மீண்டும் கோவில் வழிபாட்டிலே இணையப்
س= 30 س

பெருந்துணையாய் நின்ற திலகவதியின் தொண்டு சிறப்பானது. இத்தலத்தை நாவுக்கரசர் 16 செந்தமிழ்ப்பதிகங்களால் பாடியுள்ளார்.
வழிபாட்டினாலே வந்ததுன்பங்கள் யாவும் தொலைந்தமையால் நாவுக்கரசர் சோழநாட்டுத் திருத்தலங்களையும் சென்று வழிபட அவாவுறுகிறார். 190 தலங்களையும் மூன்று சுற்றுகளில் அவர் வழிபட்டார். தூங்கானை மாடம் என்னும் தலத்தில் சூலமும் இடபமும் இலச்சினையாக வேண்டுமென விண்ணப்பித்தார்.
"பொன்னார் திருவடிக்கு ஒன்று உண்டு
விண்ணப்பம் போற்றி செய்யும் என் ஆவிகாப்பதற்கு இச்சை
உண்டேல் இரும் கூற்று அகல மின்னாரும் மூவிலைச் சூலம் என்
மேல் பொறி மேவுகொண்டல் துன்னார் இடந்தையுள் தூங்கானை
மாடச் சுடர்க் கொழுந்தே." அவர் நினைப்பு நிறைவேறியது. அடுத்து, தில்லைக் கோயிலுக்குச் செல்கிறார். பொன் மாளிகையை வலம் வந்து வழிபட்டுப்பாமாலை புனைந்து ஏத்தி வழிபடுகிறார். காலனைக் காலால் கடிந்து தில்லையிலே நடம்புரியும் கூத்தனைச் சென்று தொழுமின் என மக்களை வழிபாட்டில் இணையப்பணி செய்கிறார். தில்லை முன்றில்களிலும் திருவீதிகளிலும் உழவாரப்பணியைத் தொடர்ந்து செய்கிறார். மக்களுக்கு அன்னம் இடும் வழிபாட்டு நடை முறையைச் சிறப்பித்து குறுந்தொகை வடிவிலே பாடல்கள் பாடினார்.
"அன்னம்பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் பொன்னம்பாலிக்கும் மேலும் இப்பூமிசை என்னம்பாலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம்பாலிக்குமோ இப்பிறவியே" தன் வாழ்வியலில் வழிபாடு செய்த நன்மைகளை நாவுக்கரசர் எல்லோருக்கும் எடுத்துக் கூறுகிறார். கோயில் தோறும் அவர் வழிபட்டுப் பாடிய சொல்மாலைகளிலே தன் அனுபவத்தையே சான்றாக எடுத்து உரைத்தார்.

Page 22
"பத்தனாய்ப்பணிந்து அடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப்பயில்வித்தானை." "மண்ணாயமாயக் குரம்பைநீங்க
வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே" "பெரும் பற்றப்புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே" "நலந்தீங்கினும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்" இக்கால கட்டத்தில் ஞானசம்பந்தரைச் சந்திக்க எண்ணிய அப்பர் சீகாழி செல்கிறார். மூன்று வயதிலே வழிபாட்டினால் பாமாலை புனையும் அற்புதம் பற்றித் தொண்டர் கூறக்கேட்டிருந்த அப்பருக்கு அவரை நேரிலே காண அவா ஏற்பட்டது. கடல் நஞ்சுண்ட கண்டனை அம்மையின் பாலமுது உண்டு பாடிய பாலறாவாயன் புகழ் அப்போது எங்கும் பரந்திருந்தது. ஆளுடைய பிள்ளையும் அப்பர் பற்றி அறிந்து நேரில் காணும் விருப்புடன் இருந்தார். அருட்கடலும் அன்புக்கடலும் என இருவரும் விளங்கியமையால் இவர்கள் சந்திப்பை நாட்டு மக்களும் ஆவலுடன் காத்திருந்தனர். அப்பர் வருகிறார் என்ற செய்தி ஆளுடைய பிள்ளையாருக்கு எட்டியது. அறிவில் சிறந்த முதுபெரும் தொண்டராகிய நாவுக்கரசரை தொண்டர் குழாத்துடன் எதிர் கொண்டழைக்கச் சம்பந்தர் செல்கிறார். அப்பர் சம்பந்தரைக்கண்டு அளவிலா ஆர்வத்துடன் அவர் திருவடியில் வீழ்ந்து வணங்குகிறார். சம்பந்தர் அவரைக் கைப்பற்றி இறைஞ்சி 'அப்பரே என அன்பினால் அழைக்கிறார். அப்பரும் அடியேன்” என்கிறார். வழிபாட்டுமரபு பேணும் இருபெரும் தொண்டர்களின் சந்திப்பைச் சேக்கிழார் அற்புதமாக 3 பாடல்களிலே காட்டியுள்ளார்.
"அம்பிகை செம்பொன் கிண்ணத்து அமுத
ஞானம் கொடுப்ப அழுகை தீர்ந்த செம்பவள வாய்ப் பிள்ளை திருநாவுக்கு அரசரெனச் சிறந்த சீர்த்தி எம்பெருமக்களும் இயைந்த கூட்டத்தில் அரன் அடியார் இன்பம் எய்தி
umana 32 mms

உம்பர்களும் போற்றி இசைப்பச் சிவம் பெருகும்
ஒலி நிறைந்தார் உலகம் எல்லாம்."
"பிள்ளையார் கழல் வணங்கப்பெற்றேன் என்று
அரசு உவப்பப் பெருகு ஞான வள்ளலார் வாகீகர்தமை வணங்கப் பெற்றதற்கு மகிழ்ச்சி பொங்க. உள்ளநிறை காதலினால் ஒருவரொரு
வரில் கலந்த உண்மையோடும் வெள்ளநீர்த்திருத்தோணிவீற்றிருந்தார்
கழல் வணங்கும் விருப்பம் மிக்கார்."
"அருள் பெருகு தனிக்கடலும் உலகுக்கு எல்லாம் அன்புசெறிகடலுமாம் எனவும் ஓங்கும் பொருள் சமயமுதல்சைவநெறி தான் பெற்ற
புண்ணியக் கண் இரண்டு எனவும் உய்ய இருள் கடுஉண்டவர் அருளும் உலகம் எல்லாம் ஈன்றாள்தன் திருவருளும் எனவும் கூடித் தெருள்கலை ஞானக் கன்றும் அரசும் சென்று
செஞ்சடை வானவர் கோயில் சேர்ந்தார் அன்றே." இருபெரும் தொண்டர்களும் மக்களை வழிநடத்தத் தோன்றி யவர்கள் புன்னெறிவழிச் செல்லாமல் நன்னெறியில் சென்றவர்கள். இருவருமாகப் பல தலங்களை வழிபட்டவர்கள்.
பிறநெறி சென்ற அப்பர் மீண்டும் நன்னெறி வந்து மிக ஆர்வமாய் வழிபாட்டு மரபு பேணுகிறார். சம்பந்தருடைய திருக்கோவில் வலம் வரும் தொண்டு அப்பருக்கு வழிகாட்டிற்று. நாடெங்கிலும் சென்று மனம் திரிந்த மக்களை மீண்டும் வழிபாட்டில் புலன்செலுத்தப்பணிசெய்ய உறுதிபூண்டார். தன்னுடைய பழி நீக்க உடல் வருத்திப் பணி செய்தார். சம்பந்தரைப் பிரிந்து தனியாகத் தலங்களுக்குச் சென்றார். தனது சொல் மாலையிலே திருத்தாண்டகம், திருக்குறுந்தொகை, திருவிருத்தம் எனப்பல செய்யுள்
m 33 m

Page 23
வடிவங்களைப் பாடினார். பாவலர் செந்தமிழால் பல பாமாலைகளை ஆக்கினார். நறுமலர் கொண்டு பூமாலை செய்த கரங்களுக்கு இணையாக நற்சொற்கள் கொண்டு பாமாலை செய்த நாவும் துணைநின்றது. வழிபாட்டு மரபிலே உடலால் செய்யும் தொண்டின் பெருமையை உலகு அறிய வைத்தவர் அப்பர். முதுமைநிலையிலும் கோவில்தொண்டு செய்தவர். இளவயதிலே சமணர் செல்வாக்கால் வழிமாறிச் சென்றதை வாழ்வின் இறுதிவரை அவர் மறக்கவே இல்லை. கல்வியறிவை மக்களுக்கு நல்வழிகாட்டும் கருவி யாக்கினார். தமிழால் பாவுறு செந்தமிழ்மாலை பாடி வணங்கும் முறைமை பேணினார். ஏறக்குறைய 50 ஆண்டுகள் இப் பணி செய்து வாழ்ந்தவர். மக்களுக்கும் வழிகாட்டப் பாடல் புனைந்தவர். அவர் பாடிய திருக்குறுந் தொகைப்பதிகங்கள் அதற்குச் சான்றாயுள்ளன.
"நன்று நாள் தொறும் நம் வினை போயறும் என்னும் இன்பம் தழைக்க இருக்கலாம் சென்று நீர்திருவேட்களத்து உள்உறை துன்று பொன் சடையானைத் தொழுமினே"
ത്ത് 34 അ

நீலகண்டனை நித்தல் நினைமினே
மனித வாழ்வியலின் துன்பங்களை வழிபாட்டால் வெல்லலாம் என்பதை நன்குணர்ந்தவர் அப்பர். தான் உணர்ந்ததைப் பிறர்க்கும் நன்கு உணர்த்த வேண்டுமென எண்ணினார். அவருடைய உள்ளத்திலே முன்னர் சமணர் நெறிச் சென்றிருந்தமை உறுத்தியபடியே இருந்தது. மக்கள் தமது பண்டைய வழிபாட்டு நடைமுறைகளை விட்டுச் சமண நடைமுறைகளை விரும்பியதற்குதானும் ஒருவகையில் காரணம் என நினைந்தார். தமது தவறான போக்கைப் பிறரும் கைக்கொள்ளாவண்ணம் தடை செய்ய எண்ணினார். அவர் பாடிய செந்தமிழ்த் திருத்தாண்டக மாலைகளில் இதற்குச் சான்று உண்டு. புள்ளிருக்கும் வேளூர் என்னும் தலத்திலே சென்று வழிபடும்போது இதனைப் பாடலிலே குறிப்பிட்டுள்ளார்.
"பேர் ஆயிரம் பரவி வானோர் எத்தும்
பெம்மானை பிரிவிலா அடியார்க்கு என்றும் வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி தீராத நோய்தீர்த்து அருள வல்லான் தன்னை
திரிபுரங்கள் தீஎழதிண் சிலை கைக்கொண்ட போரானை புள்ளிருக்கும் வேளூரானைப்
போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே." எனவே மனிதன் வாழும் காலத்திலே வழிபாட்டு மரபுபேண வழி சொல்கிறார். கோவில் வரலாற்றைப் பாடலிலே ஆவணப்படுத்த முயல்கிறார். காலம்காலமாக வழிபட்டவர் பேணிய இறையருளை மீண்டும் நினைவுபடுத்துகின்றார். கண்ணப்பர் வழிபாட்டு நடை முறையைப் பதிகங்களிலே குறிப்பிட்டுள்ளார். திருக்குறுக்கை வீரட்டானம் என்னும் பதிகத்தில் பல அடியார் வரலாறு பாடப்பட்டுள்ளது. சண்டேஸ்வரநாயனார், கண்ணப்பர் போன்றோர் வழிபாடு எத்தகையது என்பதை அப்பர் விளக்குகிறார். தந்தையைக் கொன்ற மைந்தன் சண்டியும் தன்

Page 24
கண்ணையே இடந்து அப்பிய வேடர்குல திண்ணனும் வழிபாட்டில் உறுதியாய் நின்றதைக் காட்டுகிறார். ஒருவனை உன்னி எப்போதும் நெஞ்சுள் ஏத்திவழிபடும் முறைமை சிறந்தது என்கிறார். திருத்துருத்தி என்னும் தலத்திற்கு சென்று வழிபட்டுப் பதிகம் பாடியபோது தன் அனுபவத்தையே சொல்ல விழைந்துள்ளார். இதற்குச் சான்றாகப் பத்துப் பாடல்களின் இறுதி அடிகள் அமைந்துள்ளன.
1. "இருத்தி எப்பொழுதும் நெஞ்சுள் இறைவனை எத்துமின்கள்.
துருத்தியஞ் சுடரினானைத் தொண்டனேன் கண்டவாறே."
2. "இவையொரு பொருளுமல்ல இறைவனை ஏத்துமின்னோ.
சுவையினைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே."
3. "உன்னியெப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்துமின்னோ.
துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே."
4. வான் தலைத் தேவர்கூடி வானவர்க்கு இறைவா என்னும்
தோன்றலை துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே."
5. "இடர்தனைக் கழியவேண்டில் இறைவனை ஏத்துமின்னோ.
சுடர் தனைத்துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே."
6. அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினைமினிர்கள்.
துள்ளலைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே.
7. "சோதியைத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே."
8. "தூம நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்குமின்னோ.
தூமனத் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே."
سست 36 -ـــــــــ

9. "குண்டரே சமணர் புத்தர் குறியறியாதுநின்று
கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமினிர்கள் விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த
தொண்டர்கள் துணையினானை துருத்திநான் கண்டவாறே."
10. "பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்றுமின்கள்.
துண்டத்துத் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே." மேற்காட்டிய எடுத்துக்காட்டுகள் அப்பருடைய தொண்டுப்பணி மக்களை நெறிப்படுத்தும் நோக்குடையதாயிருந்ததை விளக்குகின்றன. மணஞ்சேரி என்னும் திருத்தலத்துப் பதிகத்திலே 'வாழ்க்கையென்பது வள்ளலார் கழல் வாழ்த்தலே' எனப்பாடியுள்ளார். திருக்கடம்பூர் என்னும் தலத்திலே சென்று வழிபட்ட அப்பர் தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோளை வெளிப்படுத்தியுள்ளார். இறைவன் கடமையையும் தனது கடமையையும் தெளிவாக எடுத்து இயம்பியுள்ளார். அக்கோவிலின் வழிபாட்டு நடைமுறைகள் அப்பருக்கு மனநிறைவு தந்தன போலும், நாள் தொறும் நடைபெறும் வழிபாடுநாவுக்கரசரையும் உறுதிபூணச் செய்தது.
"நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென் கடம்பைத் திருக்கரக் கோயிலான் தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே." இளமையும், இல்லமும் அப்பரின் வாழ்வில் அல்லல் தந்தவை. தமக்கையாரின் இளமை பயனற்றுப் போனது. இல்லத்தில் வாழும் வாழ்க்கை அவருக்கு நன்கு அமையவில்லை. அந்த துன்பம் அப்பரை வாட்டியது. எனவே தானும் இளமையைத்துறந்து இல்லத்தை நீங்கி கோயில் வழிபாட்டில் அமைதியை நாடினார். அந்த உழவாரத் தொண்டு கோயில் சூழலுடன் மனம் ஊன்றிப் பணியாற்ற வைத்தது. மனிதப்பிறவியின் நோக்கத்தையும் நன்கு புலப்படுத்திற்று. முன்னர் செய்த பாவத்தை உணரவும் பின்னர் தெளிவுற்று வழிபாட்டைத் தொடரவும் அவர் அனுபவம் அவருக்குத் துணை நின்றது. உலகிற்கு உறுதியானதை அவர் உணர்ந்தார். பெற்றோரை இழந்த போது தமக்குத் தாயாக நின்ற இறை நினைப்பை அவர்
ma 37 m

Page 25
மற்றவர்க்கும் துணையாக்க எண்ணுகிறார். பழைமையான வழிபாட்டிலே பிழையெலாம் நீங்கியவரானார். சொல் துணையான மாலை கொண்டு தொழுதவர் எல்லாம் இடர் தீரப்பெற்றனர். சம்பந்தர் மிக இளவயதிலேயே புத்தர், சமணர் போன்றவர்கள் கொடுமைகளை வென்ற நிலை அப்பரை மிக ஆழமாக வழிபாட்டில் மனம் ஊன்ற வைக்கிறது. கோவில் வழிபாட்டிலே மனம் விடுதலறியா விருப்புக்கொள்ள எல்லாத் தலங்களையும் நேரிலே, கண்டு வழிபாடு செய்ய விரைகிறார். வழிபாட்டு நடைமுறை பேணாத மக்களையும் நினைத்துப்பார்க்கிறார்.
"வையம் வந்து வணங்கி வலம்கொளும் ஐயனை அறியாதார் சிலர் ஆதர்கள் பைகொள் ஆடு அரவு ஆர்த்த பழனன் பால் பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே" இவ்வாறு தலவழிபாடு செய்யும் நாவுக்கரசர் திங்களூருக்குச் செல்கிறார். அங்கே தண்ணிர்ப்பந்தல் ஒன்று திருநாவுக்கரசர் தண்ணீர்ப்பந்தல்' என்ற பெயருடன் இருந்தது. மேலும் பல இடங்களில் திருநாவுக்காரசர் என்ற பெயரும் பொறிக்கப்பட்டிருந்தது. தான் செய்யும் பணி அவ்வூரிலே பரவி நின்றமை அப்பருக்கு வியப்பூட்டுகிறது. அப்பணி செய்த அப்பூதியடிகளை நேரில் காண்கிறார். பெயரிட்ட காரணம் பற்றி வினவுகிறார். புறநெறிச் செல்வோரைக் காத்த பெருந்தொண்டன்பெயர் இடுவதே சாலச்சிறந்தது என்ற அப்பூதியடிகளின் விளக்கம் அப்பர் மனதைத் தொட்டது. தன்னை யாரென அறிமுகம் செய்கிறார். அப்பூதியடிகள் அவர் திருவடி வணங்கி அமுதுசெய்து போக வேண்டுகிறார். திருவமுது படைக்க வாழைக்குருத்து அரியச் சென்ற மூத்தமகன் அரவு தீண்ட இறந்தான். அவன் உடல் மறைத்து உணவுபடைக்க எண்ணினர் பெற்றோர். மகன் இழப்பை விடத் தொண்டர் அமுது செய்விக்க வேண்டி நின்றனர். அப்பர் மூத்தவனை அழைக்க நடந்ததை அப்பூதியடிகள் கூற நாவுக்கரசர் வழிபாட்டின் உறுதிகண்டு வியக்கிறார். வழிபடும் அடியவர்துயர்தீர வேண்டிப் பாமாலை பாடுகிறார். மூத்தவன் உயிர் பெற்றான். அப்பர் அருள் செய்தானைப் பணிந்து தலயாத்திரை தொடர்கிறார். மூன்றாவது சுற்று வழிபாட்டுத்தலப்பயணம் தொடங்குகிறார்.
س= 38 س

அவர் மனநிலை தோற்றப்பாடு என்பவற்றைச் சேக்கிழார் வருமாறு
Tusi rri.
"மார்பாரப் பொழிகண்ணிர் மழைவாரும் திருவடிவும் மதுரவாக்கில் சேர்வாகும் திருவாயில் தீம்தமிழின் மாலைகளும் செம்பொன்தானே சார்வான திருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமும் ஆகிப் பார்வாழத் திருவீதிப் பணிசெய்து பணிந்து ஏத்திப் பரவிச் செல்வார்."
எல்லாத் தலங்களையும் நடந்தே சென்று வழிபடுகிறார். உடலை வருத்தி திருக்கோயில் சூழலைத் திருத்தும் உழவாரத்தொண்டு அவர் மனத்துஇருள் நீக்கும் பணியாக இருந்தது.
திருநாவுக்கரசர் ஆளுடைய பிள்ளையாருடன் சேர்ந்து தல வழிபாடு செய்தவர். வயதில் மூத்தவரானாலும் தொண்டு செய்யும் நிலையால் உயர்ந்தவர். மனிதவாழ்வியலில் வழிபாடு இணையவேண்டியதன் இன்றியமையாமையை அப்பர் வரலாறு காட்டுகிறது. ஊன் உருத்தி ஒன்பது வாயில் வைத்து வெள் எலும்பு தூணாக உரோமம் மேய்ந்த கூரை என மானுட உடலின் தன்மையைப் பாடியுள்ளார். எனினும் இறைவனை நினைப்பதற்கு இப்பிறவிதான் வேண்டும். ஐம்பொறிகளாலும் ஐம்புலன்களாலும் வழிபாடு செய்யலாமென. அப்பர் விளக்கியுள்ளார். திருவங்கமாலை என்னும்பதிகத்தில் இதனைக் காணலாம்.
தலையே நீவணங்காய்
கண்காள் காண்மின்களோ
செவிகாள் கேண்மின்களோ
மூக்கே நீழுரலாய்
வாயே வாழ்த்து கண்டாய்
'நெஞ்சே நீ நினையாய்
கைகாள் கூப்பித் தொழிர்
கோயிலை வலம் வந்து வழிபடாத யாக்கையால் பயனில்லை. கால்களால் நடந்து செல்லாவிட்டால் பயனில்லை. வாழ்வியல் பற்றிய
அப்பருடைய கருத்து நிலையாமையை உறுதிசெய்வது. மனித உடல்
= 39 -

Page 26
இருக்கும் போது அதை வழிபாட்டில் நிலைநிறுத்த வேண்டும். திருவுருவ வழிபாடு செய்ய மானிடப் பிறவி வேண்டும் என்கிறார் அப்பர். தில்லையிலே செய்த உருவவழிபாடு அவர் மனதை நிறைவித்தது. பொன் ஒத்தமேனி, வெண்ணிற்றுக்கவின், புரிசடை, முடிகொண்ட மத்தம், முக்கண்ணின் நோக்கு, முறுவலிப்பு, துடி கொண்டகை, கரிகுழலாள்பாகம், பொன் மலையிலே வெள்ளிக்குன்று போல பொலிந்த தோற்றம், கூத்து எல்லாற்றையும் தனித்தனியே கண்டு வியந்தார். அவற்றையெல்லாம் ஒரு சேரக்காண ஒரு பாடல் செய்தார்.
"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே." மனிதப் பிறவி தொண்டு செய்ய ஏற்றது. பிறர் துயர்கண்டு உதவும் கரங்களாக உழைப்பது நல்லது. அப்பர் அடியார்க்கு அமுதூட்டும் அன்னதானப்பணி செய்தவர். படிக்காசு பெற்று பரமனடியார்க்குச் சோறு படைத்தவர். இத் தேசப்பணியில் சம்பந்தரையும் இணைய வைத்தவர். சம்பந்தர் தொண்டுப்பணி அப்பரைத் தன்பணியை மேலும் விரைவாக்கச் செய்தது. பலதலங்களுக்கு உடன் செல்ல வைத்தது. பாண்டி நாட்டிலே வழிபாட்டின் பெருமையைச் சம்பந்தர் சென்று நிறுவிய போது அப்பரும் மகிழ்ந்தார். திருமறைக்காட்டிலே ஏற்பட்ட அனுபவம் அப்பரை இறைவனுடன் பிணங்க வைக்கின்றது. சம்பந்தர் முன்னிலையில் திருக்கதவு திறக்கப்பாடுகிறார் அப்பர். அவரது வேண்டுதல் வருமாறு அமைகிறது.
'திண்ணமாகத் திறந்து அருள் செய்ம்மினே. நீண்டமாக்கதவின் வலிநீக்குமே. "சட்டவிக் கதவம் திறப்பிம்மினே." "பெரிய வான்கதவம் பிரிவிக்கவே." "தொலைவிலாக் கதவம் துணை நீக்குமே." "நோக்கிக் காணக் கதவைத் திறவுமே." "இந்த மாக்கதவம் பிணிநீக்குமே."
"மாறிலாக் கதவம் வலிநீக்குமே."

9. "திண்ணமாகக் கதவம் திறப்பிம்மினே." 10. "திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே." 11. "சரக்க இக்கதவம் திறப்பிம்மினே."
இறுதிப் பாடலில் இரக்கம் ஒன்றிலீர் எம் பெருமானிரே என அப்பர் பாடியமை அவர் மனிதக் குணத்தை வெளிப்படுத்தியுள்ளது. இப்பண்பினை வேறுபதிகங்களும் காணமுடிகிறது. ஐம்புலன்களையும் அடக்க முடியாமல் அவதியுற்றதையும் அப்பர் பாடியுள்ளார்.
"மனமெனும் தோணிபற்றி மதியெனும் கோலை ஊன்றி சினமெனும் சரக்கை ஏற்றிச் செறிகடல் ஒடும்போது மதனெனும் பாறை தாக்கிமறியும் போது அறிய வொண்ணாது உனைஉன்னும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே." தன்னை நன்குணர்ந்தபோது அப்பர் வழிபாட்டைத் தொடர்ந்தார். நாள்தோறும் கோவில் வழிபாடு செய்வதன் பயனாய் புலனடக்கம் ஏற்படுவதையும் உணர்ந்தார். நிலைகொள்ளாமல் தவிக்கும் நெஞ்சத்தை வழிபாட்டால் வழிப்படுத்துகிறார். திருக்கயிலையைச் சென்று வழிபட விரும்பிய அப்பர் வடதிசைப்பயணத்தைத் தொடங்குகிறார். இருபுறமும் அடியவர் தொடர்ந்து வருகின்றனர். தெலுங்கு, கன்னட நாட்டுத் தலங்களையெல்லாம் பாடி வழிபட்டுச் செல்கிறார். காடு, நதி, குன்று கடந்து நடக்கிறார். இரவு பகலாக அவர் நடக்கிறார். சொற்றுணை வேதியனை எண்ணியபடி செல்கிறார். கால்கள் கல் உரசித் தேய கைகளே ஆதரவாக தவழ்ந்து செல்கிறார். வெப்பத்தின் கொடுமையை சகித்து மார்பினால் உந்திப்போகிறார். உடல் உறுதி தளர்ந்தும் அவர் மன உறுதி தளரவில்லை. இடையில் ஒரு முனிவர் தடுக்கிறார். அப்பரோ உறுதியாக நிற்கிறார். அங்குள்ள தடாகம் ஒன்றிலே மூழ்கி வழிபாடு செய்கிறார். திருவையாற்றிலே கரையேறுகிறார். அங்கே அவருக்குக் கயிலையம்பதி தெரிகிறது. நினைப்பெல்லாம் கயிலை என்பதால் நிற்பது யாவுமே சக்தியும் சிவமுமாய்த் தெரிகிறது. அவர் ஐம்புலன்களையும் வழிபாட்டில் செலுத்தி நின்றார். அங்குபாடிய பதிகம் அதனை நன்கு உணர்த்துகின்றது.
"மாதர்ப்பிறைக் கண்ணியானைமலையான் மகளொடும்பாடிப்
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
- 41 mu

Page 27
யாதும் சுவடுபடாமல் ஐயாறு அடைகின்றபோது
காதன் மடப்பிடியோடும் களிறுவருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்."
இப்பதிகத்தில் அவர் கண்ட காட்சிகளை எடுத்து உரைக்கும் போது
தன் அனுபவத்தை, இயற்கையிலே இறைவன் இணைந்துள்ளமையைத்
தெளிவாக விளக்கியுள்ளார். அதனை வருமாறு ஒழுங்கு நிரைப்படுத்திக்
காட்டலாம்.
இறைவன் தோற்றம் 1. போழிளங்கண்ணியினானைப்
பூந்துகிலாளொடும் பாடி.
2. எரிபிறைக் கண்ணியினானை
ஏந்திழையொடும்பாடி
3.பிறை இளங்கண்ணியினானைப்
பெய்வளையொடும் பாடி.
4.ஏடுமதிக் கண்ணியானை
ஏந்திழையாளொடும் பாடி.
5. தண்மதிக் கண்ணியினானைத்
தையல் நல்லாளொடும் பாடி.
6.கடிமதிக் கண்ணியினானைக்
காரிகையாளொடும் பாடி.
7. விரும்புமதிக் கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி.
இயற்கையின் தோற்றம் கோழிபெடையொடு குளிர்ந்து
வருவன கண்டேன்
வரிக்குயில் பேடையொடு ஆடி வைகிவருவனகண்டேன்.
சிறை இளம் பேடையொடு ஆடி ச்ேவல் வருவன கண்டேன்
பேடை மயிலொடும் கூடி
பிணைந்து வருவன கண்டேன்.
வண்ணப்பகன்றிலொடு ஆடி
வைகிவருவன கண்டேன்.
இடிகுரல் அன்னதோர் ஏனம் இசைந்து வருவன கண்டேன்.
கருங்கலை பேடையொடு ஆடிக் கலந்து வருவன கண்டேன்.
- 42 =

8.முற்பிறைக்கண்ணியினானை நற்றுணைபேடையொடு ஆடி மொய்குழலாளொடும் பாடி. நாரைவருவன கண்டேன்.
9. திங்கள் மதிக்கண்ணியானைத் பைங்கிளிபெடையொடு ஆடிப் தேமொழியாளோடும்பாடி. பறந்து வருவன கண்டேன்.
10. வளர்மதிக் கண்ணியினானை இளமணநாகுதழுவி
வார் குழலாளொடும் பாடி. ஏறுவருவன கண்டேன்.
வழிபாட்டு நிலையில் அப்பருடைய இந்த அனுபவம் அவர் பாடல்களில் முன்னர் வெள்ளிப்படவில்லை. கயிலைக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற இலக்குடன் அவர் ஐம்பொறிகளையும் ஐம்புலன்களையும் ஒருநிலைப்படுத்தினார். அதனால் எங்கும் எதிலும் இறை என்னும் பேராற்றலின் வடிவத்தை அவரால் காணமுடிகிறது. இறைவனின் இறைவியோடு இணைந்த தோற்றத்தைக் கண்டு பரவசமாகிப்பாடியுள்ளார். தன்னை மறந்து மனம் ஒன்றி வழிபாடு செய்யும் நிலை இது. எல்லா உயிர்களும் ஆணும் பெண்ணுமாய் துணையொடு வாழ்வதை அப்பர் அப்போது உணர்கிறார். இல்லறவாழ்வுபற்றி இதுவரை அவர் எண்ணிப்பார்க்கவில்லை வழிபாட்டை மறந்து சமணர்பால் சென்று மீண்டபோது வழிபாட்டிலே மனத்தை ஒன்ற வைப்பதே அவர் முழுமுயற்சியாக இருந்தது. எனவே கயிலையை வழிபடுவது இன்றியமையாதது எனக்கருதினர். ஆனால் திருவையாற்றில் மனம் ஒன்றிய நிலையில் மனித வாழ்வியலை உணர்ந்து கொண்டார். வழிபாட்டில் உள்ளடங்கி நின்ற அனைத்தையும் கண்டார். இறைவன் திருவுருக்காண மனித்தப்பிறவி வேண்டும் என்று கருதிய அப்பருக்கு எல்லா உயிர்களும் இறைவனை அறியும்; என்ற உண்மை புலனாயிற்று. அப்போது பாடிய திருத்தாண்டகப்பதிகம் இதற்குச் சான்று. முதற்பாடலிலேயே
"ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
m 43 m

Page 28
வாசமலரெலாம் ஆனாய் நீயே
மலையான்மருகனாய் நின்றாய் நீயே பேசப்பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே தேசவிளக்கெலாம் ஆனாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொற் சோதி." என, இதனை அப்பர் தெளிவுபடுத்தியுள்ளார். நோக்கரிய திருமேனியுடைய இறைவனைப் பற்றிப்பாடும் போது அவர் அவனை நன்கு உணர்ந்து கொண்டதை அறிய முடிகிறது. மனத்திருந்த கருத்தை முடிப்பவன். நோவாமே நோக்கு அருள வல்லவன். தீர்ப்பரிய வல்வினை நோய் தீர்ப்பவன். உணர்வாய் நிற்பவன். சுற்றமாய் சூழநிற்பவன். தொண்டரை ஆள்பவன். வழிபாட்டினால் நாம் இறைவனை முற்றாய் உணரமுடியும். நீரிலும் நெருப்பிலும், நெடுவரையிலும் நீள்விசும்பிலும் பாரிலும் பெளவத்திலும் நிறைந்த பேராற்றல், எமக்குப் புலனாகும் போது எமது மனிதப் பிறவியின் மாண்பினை உணரமுடியும். மனிதவாழ்வில் உடல்மூப்பையும் மரண பயத்தையும் அப்பர் வெல்வதற்குக் காட்டும்வழி வழிபாடே. அதனால் வழிபாட்டுநிலையில் பல தொண்டர்களின் பாங்கினைப் பாடியுள்ளார். பாடுபவர், ஆடுபவர், பரவுபவர், பணிபவர், பேசுவோர், ஏத்துவோர், போற்றுவோர், தொழுவோர், உள்குவார், வணங்குவோர், பன்னியுரைப்போர், இயம்புவோர், சாற்றுவோர், வழுத்துவோர் எனப் பலரைக் குறிப்பிட்டுள்ளோர். கீழ்வருந்தொடர்கள் இவரை நன்கு அறிய உதவும்
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி 'காடொடு நாடு மலையும் கைதொழுது ஆடாவருவேன்' பரவி நாளும் பணிந்தவர் பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர் பித்தரைப் போலப்பிதற்றுவார்’ எத்துவார் இடர்கள் தீர்ப்பாய் "வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே"
"போற்றிசைத்து உன்னடி பரவ நின்றாய்போற்றி"

"தொழுது தூமலர்தூவித் துதித்து"
"பன்னியமறையர்"
அப்பர் காட்டிய வழிபாட்டு நடைமுறையில் மலரிட்டு வழிபடல் தனித்துவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவதிகை வீரட்டானத்திலே பாடிய திருக்குறுந்தொகைப் பதிகத்தில் 'எட்டுமலர்' கொண்டு வழிபாடு செய்வது குறிப்பிடப்பட்டுள்ளது.
"எட்டுநாண்மலர் கொண்டு அவன் சேவடி
மட்டு அவர் இடுவார் வினை மாயுமால்"
"நீளமா நினைந்து எண் மலர் இட்டவர்
கோள வல்வினையும் குறைவிப்பரால்"
"கள்ளிநாண்மலர் ஒரிரு நான்கு கொண்டு
உள்குவார் அவர் வல்வினை ஒட்டுவார்"
'பூங்கொத்து ஆயின மூன்றோடு ஒர் ஐந்து. இட்டு வாங்கி நின்றவர் வல்வினை ஒட்டுவார்"
"தேனப்போது கண் மூன்றோடு ஒர் ஐந்து உடன் தானப்போது இடுவார் வினை தீர்ப்பவர்"
"ஏழித்தொன் மலர் கொண்டு பணிந்தவர் ஊழித் தொல்வினை ஒட அகற்றுவார்"
"உரைசெய்நூல் வழி ஒண் மலர் எட்டு இட திரைகள் போலவருவல்வினை தீர்ப்பரால்"
"ஒலிவண்டு அறை ஒண்மலர் எட்டினால்
காலை எத்த வினையைக் கழிப்பரால்"
"தாரித்து உள்ளிதடமலர் எட்டினால்
பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார்"

Page 29
உடம்பினனால் தொண்டுசெய்வதை வழிபாடாக்கி வாழ்ந்தவர் அப்பர். அவர் திருக்கோயில் தொண்டில் ஈடுபட்டவர். அடியாருள் ஒருவனாக நின்று தொண்டுப்பணிசெய்து ஏனைய அடியார்களையும் அதில் ஈடுபடுத்தியவர். உழவாரத் தொண்டினால் உலகம் உய்யவழி காட்டியவர். மனிதவாழ்வைச் செம்மைப்படுத்த அவர் கூறும் வழிவருமாறு.
"மெய்மையாம் உழவைச் செய்து
விருப்பு எனும் வித்தை வித்தி பொய்மையாம் களையை வாங்கிப்
பொறை எனும் நீரைப்பாய்ச்சித் தம்மையும் நோக்கிக் கண்டு
தகவு எனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகில்
சிவகதிவிளையும் அன்றே" கோயிற் சூழலிலே உழவாரத்தொண்டு செய்த அவர் உள்ளம் நன்கு பக்குவப்பட்டிருந்தது. தனது தனித்துவமான தொண்டின் உட்கிடையை அவர் இப்பாடலிலே தெளிவுபடுத்தியுள்ளார் பக்தி' எனும் உழவாரம்; வெறும், சின்னமாக அன்றி வழிபாட்டில் இணைக்கும் சிறந்த கருவியாகவும் பயன்பட்டது. "உழவாரப்படையாளி என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் அப்பர். இறைவன் திருவடி காண மனித மனம் பண்பட வேண்டும்.
மனத்தைப் பண்படுத்த நல்ல பயிற்சி வேண்டும். அந்தப் பயிற்சியை வழிபாடு நல்கும். மனித வாழ்வியலில் வழிபாட்டுப்பயிற்சி இடையீடு இன்றி நடைபெற வேண்டும். அதற்காக வழிபாட்டிடங்கள் பொலிவு பெற மனிதன் செயற்பட வேண்டும். தூய்மை, அழகு, அன்பு என்ற நிலைகளில் மனித வாழ்வு மேம்பாடு அடையும். இந்நிலை உடலுக்கும் உள்ளத்திற்கும் அப்படியே பொருந்தும். அப்பர் இதனை,
"என்னில் ஆரும் எனக்கு இனியார் இலை என்னிலும் இனியான் ஒருவன் உளன் என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே"
aum- 46 -

என அழகுற எடுத்து இயம்பியுள்ளார். அவர் வாழ்வில் செய்த தொண்டு தூய்மையைக் கொடுத்தது. அழகைத் தந்தது. அன்பை ஈந்தது. எல்லோரும் வாழ வழிகாட்ட வேண்டுமென்ற அருள் உணர்வை ஏற்படுத்தியது. கற்ற கல்விப் பயிற்சியை வழிபாட்டுப் பணியில் இணைத்தது. இளமையும் முதுமையும் வாழ்வியலில் இணைய வைத்தது. சம்பந்தர் தொடர்பு நாவுக்கரசர் தொண்டைப் பரவலாக்கிற்று. பிறநெறிபால் சென்று வாழ்ந்த காலத்து தீவினையை நல் வினையாக்கத் துணை நின்றது. வழிபாட்டின் உறுதிப்பாட்டை நன்கு உணர வைத்தது. சம்பந்தர் பாடல்களின் பின்னே அப்பர் பாடல்கள் 4,5,6 என்ற நிலையில் தொகுக்கப்பட்டமைக்கு இப்பண்பு நிலையும் ஒரு ஏதுவாக அமையலாம். அப்பருடைய இறுதிக்கால வாழ்வியலைச் சேக்கிழார்,
மண்முதலாம் உலகுஒத்த மன்னுதிருத்தாண்டகத்தைப் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப்புகன்று நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்.
சித்திரைச் சதய நாளில் உடல் நீத்து உயிர்ப்பு புறம் போந்து இறையுடன் கலந்தது. ஆனால் அதுவரை சாற்றிய சொல்மாலை பின்வந்தோர்க்கு நல்ல வழிகாட்டும் பாமாலையாயிற்று. இறைவனுக்கு சாற்றிய மாலைகள் அனைவரும் இசைத்துப் பரவும் இசைமாலைகளாக இவ்வுலகில் என்றும் நிலைத்து நிற்கும் பக்தி மாலைகள் ஆயின. வாழ்வியலில் முதுமை வரை வழிபாடே வழித்துணையாய் வாழ வழிகாட்டிய அப்பர் எல்லோருக்கும் என்றும் அப்பரானார்.

Page 30
மாசிலா மரபில் வந்த வள்ளல்
வழி வழியாய் வந்த வழிபாட்டு மரபில் பெரிய புராணம் தொண்டர் பெயர்களைப் பாட்டிலே பதிவு செய்த சுந்தரரைப் போற்றுகிறது. சேக்கிழாருக்கு முதல்நூல் தந்த வள்ளல் சுந்தரர். அதனால் பெரிய புராணத்தில் சுந்தரர் வரலாறு முதலிற் பாடப்பட்டுள்ளது. 'தடுத்தாட்கொண்ட புராணம்" எனப் பெயர் கொண்டு புராணத்துள் புராணமாய் அமைந்துள்ளது. சுந்தரர் வாழ்வின் இறுதிநிலை "வெள்ளானைச் சருக்கம்" என இறுதியில் அமைக்கப்பட்டுள்ளது. திருத்தொண்டர் பெயர்களை தொகைநிலையில் தந்தவரைச் சேக்கிழார் தாம் பாடிய திருத்தொண்டர் புராணத்தில் தலைமைத் தொண்டராய் போற்றியுள்ளார். தமிழ் நாட்டில் வாழ்ந்த தொண்டர்களை இனம் காட்டிய சுந்தரர் வரலாறு தனித்துவமாய் பாடப்பட்டுள்ளது. சுந்தரர் பாடிய திருப்பதிகங்கள் 100. அவற்றுள் 96 தலங்களைப் பாடியவை. 4பொதுப்பதிகங்கள். திருமுறைகள் வரிசையில் ஏழாம் திருமுறையில் அடக்கப்பட்டுள்ளன. இவை "திருப்பாட்டு" என அழைக்கப்பட்டன. சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகை பெரியபுராணம் முழுவதும் ஊடுருவி நிற்கிறது. எனவே சேக்கிழார் சுந்தரர் வரலாற்றையும் சிறப்பாகப் பாடியுள்ளார். சுந்தரர் தொண்டர் அறுபதின்மரைத் தனது பதிகத்தில் காட்டினார். திருத்தொண்டர்திருவந்தாதி பாடிய நம்பியாண்டார்நம்பி இன்னும் 9 அடியார்களைச் சேர்த்துள்ளனர். அத்துடன் திருவாரூரரையும் அவர் தாய் தந்தையரையும் சேர்த்து 72 அடியார் வரலாற்றைப் பாடினார். அடியார் வரலாறு பேணல் என்ற சுந்தரரது நோக்கைச் சேக்கிழார் முழுமை செய்தார். எனவே சுந்தரர் வரலாற்றை சிறப்பாக முதலில் வைத்தார்.
பெரியபுராணம் சுந்தரருடைய முற்பிறப்பு வரலாற்றையும் கூறுகின்றது. திருமலைச் சிறப்பு, என்ற பகுதியில் இவ்வரலாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுலகில் சுந்தரரின் வாழ்வியல் 664 பாடல்களில்
m 48 m

இயம்பப்பட்டுள்ளது. சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டிலே திருநாவலூரில் பிறந்தவர். தந்தை வேதியர் குலத்துத் தோன்றிய சடையனார். தாயும் அதே குலத்தவரான இசைஞானியார். சுந்தரரைப் பயந்தமையால் இவ்விருவரும் பெரியபுராணத்தில் தனித்தனியாகவும் பாடப்பட்டுள்ளனர். சுந்தரருக்குப் பெற்றோர் இட்ட பெயர் நம்பியாரூரர். செல்வமாகச் சீரோடு வளரும் குழந்தை தெருவிலே தேர் உருட்டி விளையாடும் போது அந்நாட்டுஅரசர் நரசிங்கமுனையர் கண்ணிற் படுகிறது. அரசர் குழந்தையை தன் மகனாக வளர்ப்புமகனாக்குகிறார். இதனைச் சேக்கிழார்வருமாறு கூறுகிறார்.
'நரசிங்க முனையர் என்னும் நாடுவாழ் அரசர் கண்டு பரவருங் காதல் கூரப் பயந்தவர் தம்பால் சென்று விரவிய நண்பினாலே வேண்டினர் பெற்றுத்தங்கள் அரசிளம் குமரற்கு ஏற்ப அன்பினால் மகன்மை கொண்டார்." அந்தணர் மரபான வாழ்வியலில் வளர்ந்த ஆரூரன் அரசரின் காதற்பிள்ளையாய் வளர்கிறான். எனினும் மரபான அந்தணக் கோலத்துடன் பலகலைகளையும் கற்றுச் சீருடன் பொலிகிறான். மணப்பருவம் எய்திய அவனுக்கு அந்தணர் குலத்திலே மணம் பேசி முற்றாகிற்று. புத்தூர்ச் சடங்கவியின் மகள் மணமகளாக உறுதிசெய்யப்பட்டாள். அவள் பெயரைப் பெரியபுராணமும் குறிப்பிடவில்லை. பெரியோர் குலமுறையும் கோத்திரமுறையும் தேர்ந்துமண உறுதி செய்தமையால் அரசனும் ஏற்றான். நாள் குறிக்கப்பட்டது. பூமாலைப் பந்தர் அமைக் கப்பட்டது. மண நடைமுறைகள் எல்லாம் செயற்படுத்தப்பட்டன. சேக்கிழார் அக்காலத் திருமண நடைமுறைகளைத் தெளிவாகக் காட்டியுள்ளார். வழிபாட்டு மரபில் திருமணநடைமுறைகள் இணைந்திருந்தன. மன்னனுக்கு ஏற்ற திருவும் வைதீகத்திருவும் பொலிய ஆரூரன் மணமகனாய் புரவியில் வந்தான். அவனோடு மங்கலகீதம், நாதம், மறையவர் குழாம், மைந்தர், பெண்கள் எனப் பலவும் வந்தன. அவர்களைச் சடங்கவியின் பக்கத்தார் எதிர்கொண்டு வரவேற்ற காட்சி சிறப்பாக சேக்கிழார் காட்டுவது,
"நிறைகுடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகைகள் ஏந்தி நறைமலர் அறுகு சுண்ணம் நறும்பொலி பலவும்வீசி
ത്ത 49 അ

Page 31
உறைமலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்துவீதி
மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார்.
இது மரபான மணநடைமுறையை இன்று விளங்கிக் கொள்வதற்கு உதவுகிறது. இந்த மணவினை காண்பதற்கு வந்தவர்களில் முதியவர் ஒருவர் எல்லோருடைய பார்வையிலும் நிறைந்திருந்தார். அவருடைய தோற்றம் அனைவரையும் அவர்பால்ஈர்த்தது. வெண்ணரை முடி; பண்டிசரிகோவண உடை, வெண்துகில் போர்வை, காதில் அணி கண்டிகை, மார்பின் அசை நூல், தண்டு ஒரு கையில் கொண்ட தள்ளுடை, மூப்பு எனும் வடிவமாக அவர் தோன்றினர். மனவினை தொடங்கும் வேளை அந்த முதியவர் எழுந்து முன்னே வந்தார். "நான் சொல்வதை எல்லோரும் கேளுங்கள்" என்றார். அவர்குரல் எல்லோருடைய செவியிலும் விழுந்தது. மணவினை செய்வோரும் முதியவரை அவர் உரைக்க எண்ணுவதைக் கூறும்படி வேண்டினார். முதியவர் மணமகன் நம்பியாரூரனை நோக்கி "எனக்கும் உனக்குமிடையே வழக்கு ஒன்று உண்டு. அதனை முடித்த பின் நீ திருமணம் செய்யலாம்" என்றார். மணமகனும் "வழக்குஉண்டேல் அதை முடியாமல் வதுவை செய்யேன்" என மொழிந்தான். முதியவன் மறையோரை நோக்கி "என் அடியான் இந்நாவல் நகர் ஊரன்" என்றார். மறையவர் முதியவர் எண்ணம் அறியாமல் திகைத்திருந்தனர். சிலர் வெகுண்டனர். சிலர் சிரித்தனர். மணமகன் நாவலூரனும் "பெரியோய் உம்மொழி நன்று" எனக் கூறி நகைத்தான். பெரியார் நகைத்தவன் அருகே சென்றார். "அக்காலத்தில் உன் தந்தையின் தந்தையாகிய உன் பாட்டன் வரைந்து தந்த அடிமை ஒலை என்னிடம் உளது" என்றார். மணமகன் அவரை நோக்கி "குற்றமற்ற அந்தணர் மரபிலே வந்தவர் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் வழக்கில்லை. நீர் பித்தனைப் போலப் பிதற்றுகிறீர்" என்று கூறினார். முதியவர் சினக்கவில்லை. மணமகனை அடியவன் எனக் காட்டுவதிலேயே உறுதியாய் நிற்கின்றார். அவர் கோலத்தைச் சேக்கிழார் வருமாறு காட்டுகிறார்
"பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்

அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம் பணிசெய்ய வேண்டும் என்றார்."
நம்பியாரூரர் முதியவரிடம் அடிமை ஒலையைக் காட்டும்படி கேட்கிறார். முதியவர் "சபையோர்க்கே கட்டுவேன்" என்கிறார். மணமகன் முதியவர் கையிலிருந்த ஒலையைப் பறிக்க ஓடுகிறார். முதியவரும் சபையில் அங்கும் இங்கும் ஒடுகிறார். மணமகன் ஒலையைப் பறித்து எடுத்து அந்தணர்க்கு அந்தணர் அடிமையாதல் என்னமுறை" எனச் சொல்லிக் கிழித்து எறிகிறார். முதியவர் அவர் அடாத செயல் கண்டு அரற்றுகிறார். பெரியவர்கள் அவர் ஊரை வினவ "திருவெண்ணெய் நல்லூர்" என விடை தருகிறார். ஒலையைக் கிழித்ததன் மூலம் நம்பியாரூரன் தான் அடிமை என்பதை எல்லோருக்கும் நிரூபித்து விட்டான் என முதியவர் மொழிகிறார். அது கேட்டு மணமகன் "இந்த முறையற்ற வழக்கை உம்முடைய ஊராகிய திருவெண்ணெய் நல்லூரிலேயே தீர்ப்போம்" என்கிறார். முதியவரும் "உன் பாட்டன் வரைந்த மூல ஓலை அங்கே உளது. அதைக் காட்டி என் வழக்கை வெல்வேன்" எனப் பகர்ந்து கோலை ஊன்றி முன்னேநடக்கிறார். மணமகனும் உறவினரும்பின் தொடர்கின்றனர்.
"திருவெண்ணெய்நல்லூரில் அவைப் பெருமக்கள் முன் வழக்கை முதியவர் எடுத்துச் சொல்கிறார். பெருமக்களும் உலக வழக்கில் அத்தகை நிலை இல்லையென விளக்குகின்றனர். முதியவர் மணமகன் ஒலை கிழித்ததை எடுத்துக் கூறி மீண்டும் தன் வழக்கை நிறுவுகிறார். அவையோர் முதியவரிடம் வழக்கை நிறுவ ஆட்சி, ஆவணம், சாட்சி என்ற மூன்றில் ஏதாவது ஒன்றைக் காட்ட வேண்டும் எனக் கட்டளையிடுகின்றனர். முதியவர் தன்னிடம் உள்ள மூல ஓலையை எடுத்து நீட்டுகிறார். அதைக் கரணத்தான் தொழுது வாங்கி சுருள்பெறு மடியை விரித்து எழுதி இருப்பதை எல்லோரும் அறியச் செப்புகிறான்.
"அருமறை நாவல் ஆதி
சைவன் ஆரூரன் செய்கை பெருமுனி வெண்ணெய்நல்லூர்ப்
பித்தனுக்கு யானும் என்பால்

Page 32
வருமுறை மரபுளோரும்
வழித்தொண்டு செய்தற்கு ஒலை இருமையால் எழுதி நேர்ந்தேன்
இதற்கு இவை என் எழுத்து"
ஒலைக்குச் சான்றாளராகக் கையெழுத்து இட்டவர்களுடைய எழுத்துகளையும் ஒப்ப நோக்கிப் பார்க்கின்றனர். நம்பியாரூரரின் பாட்டனின் சேமிக்கப்பட்ட கைச்சாத்து ஒன்றையும் கொணரச் செய்து ஒப்பு நோக்கினர். உண்மை கண்டு முதியவரே வென்றார் என அறிவிக்கின்றனர். மணமகன் தோல்வியை ஏற்கிறார். அவையோர் முதியோரை இருப்பிடம் காட்டும்படி கேட்கின்றனர். எல்லோரும் பின்தொடர முதியவர் திருவருட்டுறைக் கோயிலுட் புகுந்து மறைகிறார். நம்பியாரூரர் அவர் செயல் கண்டு வியப்புறுகிறார். தனியே சென்று கூவி அழைக்கிறார். தாம் தடுத்தாட்கொள்ளப்பட்டதை உணர்கிறார். வன்மொழி பேசியவரை "வன் தொண்டர்" என்று அழைத்து இறைவன் பண்பாடும்படி பணிக்கிறான். எவ்வாறு பாடுவேன் என இரங்கியவரைப் "பித்தன் என் பெயராகப் பாடு" என விளித்தவர் அடி எடுத்துக் கொடுக்கிறார். மண வாழ்வில் புக இருந்த நம்பியாரூரர் வழிபாடு செய்யும் வாழ்வில் நுழைகிறார். செந்தமிழால் பதிகம் பாடுகிறார். "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக்கு ஆளாயினி அல்லேன் எனலாமே"
சுந்தரர் இவ்வாறு தான் தடுத்தாளப்பட்டதைத் தனது பாடல்களிலே குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்ச்சி அவரது வரலாற்றில் அவரை வழிபாட்டுப் பணியில் செலுத்திய முக்கிய நிகழ்ச்சியாகும். எனவே அதைக் குறிப்பிடுகிறார்.
"ஏவலனாய் வெண்ணெய் நல்லூரில் வைத்தெனையாளும்
கொண்ட நாவலனார்." (∂ñ፡ 7:17:1)
| 52 سب

"தன்மையினால் அடியேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிடவன்தொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார்."
(சுந்:7:17:2) 'ஆகம் கொண்டார்வெண்ணெய்நல்லூரில் வைத்து எனையாளும் கொண்டார்" (Jiሿ7:17:3) "வேயாடியார்வெண்ணெய்நல்லூரில் வைத்து எனையாளும் கொண்டார்" (சுந்:7:17:8) "அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல்வெண்ணையூர் ஆளும் கொண்டார்." (õቌ :7:17:10)
"பித்தரை ஒத்தொரு பெற்றியர் நற்றவை என்னைப் பெற்ற முற்றவைதம்மனை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்"
(ii:7:18:7) "எற்று நம்பி என்னை ஆளுடைநம்பி" (சுந்:7:63:5) "தூயசோதியை வெண்ணெய்நல்லூரில் அற்புதப்பழஆவணம் காட்டி அடியனா என்னை ஆளது கொண்ட" (சுந்:7; 68:6)
நம்பியாரூரரை மணஞ்செய்ய இருந்த புத்தூர்ச் சடங்கவியின் மகளும் வேறு திருமணம் செய்யவில்லை. திலகவதியைப் போல நாயகனாக வர இருந்த நம்பியாரூரரையே கணவனாக உள்ளத்திருத்தி வாழ்ந்தார். சில காலம் செல்ல இவ்வுலக வாழ்வை நீத்தார். நம்பியாரூரர் இறைவன்
புகழ்பாடும் வழிபாட்டில் வாழ்வைத் தொடரலானார்.
அந்தணர் குலத்தில் பிறந்த நம்பியாரூரர் வழிபாட்டுச் சூழலில் வாழ்ந்தவர் எனினும் அரசன் வளர்ப்பு மகனாக அரண்மனைச் சூழல் வாழ்வும் பெற்றமையால் குணநலம் வேறுபட்டவரானார். எனவே மீண்டும் வழிபாட்டுச் சூழல் நினைவூட்டப்பட்ட போது கோவில்கள் தோறும் சென்று வழிபட விரும்பினார். தன் வாழ்வு தவநெறியில் செல்ல வேண்டுமென விழைகிறார். திருத்துறையூர் என்னும் தலத்திலே பதிகம் பாடியபோது தவநெறி தரும்படி வேண்டிப்பாடுகிறார்.
H 53

Page 33
"தலைவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" "அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவநெறியே" "எந்தாய் உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" "விரும்பா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" "வேடா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" "சிட்டா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" "நாதா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" "ஐயா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" "அண்ணா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" "தேவா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே" எனப்பத்துப் பாடல்களிலும் வேண்டுதல் செய்கிறார். தவநெறியில்
செல்வதற்குப் புலனடக்கம் தேவை. அதனை வழிபாட்டின் மூலம் பெறலாம். எனவே அடியார் வாழ்வை ஏற்றுத்தலங்கள் தோறும் சென்று வழிபடுகிறார்.
தில்லையைச் சென்று வழிபட விரும்புகிறார். வழியிலே
திருவதிகையின் எல்லையை அடைந்த போதுநாவுக்கரசர் சூலை நோய்தீரப் பெற்றதை நினைத்தார். உழவாரத் தொண்டு புரிந்த திருவதிகையைத் தமது கால்களால் மிதித்து உட்புக விரும்பாமல் ஊரின் புறத்தேயுள்ள சித்தவட மடத்திலே தங்குகிறார். முதியவர் ஒருவர். அவர் அருகில் வந்து கால்களை ஆரூரர் தலைமேற்படும்படி படுத்து உறங்குகிறார். அவர் செயல் ஆரூரரை உரையாட வைக்கிறது. தனது முன் அனுபவத்தால் முதியவர் யாரென உணர்ந்து திருவதிகை வீரட்டானத்தைப் பாடி வழிபடுகிறார்.
"தம்மானை அறியாத சாதியாருளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன் கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல்
உடையாணை விடையானைகறைகொண்ட கண்டத்து எம்மான் தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன் எம்மானை எறிகெடில வடவிரட்டானத்து
உறைவானை இறை போதும் இகழ்வன் போல்யானே"
- 54

இந்த இரண்டாவது அனுபவம் திருவடி தீட்சை நிலையில் ஆரூரரைக் கோயில் வழிபாட்டில் ஒன்றச் செய்கிறது.
மூன்றாவது அனுபவமாக கூடலையாற்றுாரிலுள்ள கோவிலை வழிபடச் சென்ற போது ஒரு முதியவரால் ஆற்றுப்படுத்தப்படுகிறார் முதியவர், வன்தொண்டருக்கு வழிகாட்டியாக உடன் செல்கிறார். அந்த வியப்பான நிகழ்ச்சியைப் பதிகப்பாடல் பத்திலும் குறிப்பிட்டுள்ளார்.
"அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே" "ஐயன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே" "ஆர்வன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே" "அந்தணன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே" "ஆதி இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே" "அத்தன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே" "அழகன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே" "அறவன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே" "ஆலன் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே"
இவ்வாறு மீண்டும் மீண்டும் வன்தொண்டர்குறிப்பிட்டுப் பாடுவது அவர் மனத்திலே முதியவரை முன்னர் அவமதித்தமையால் போலும். தலங்களுக்குச் செல்லும் போது தம்முடன் வரும் முதியவரை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்திலே உறையலாயிற்று.
பல தலங்களை வழிபட்டுத் தில்லை வந்த ஆரூரர் அங்குள்ள அடியார்களை எல்லாம் வணங்குகிறார். தில்லையில் நடைபெறும் வழிபாடு, ஆங்குள்ள வீதிகள், தொண்டரின் போற்றிசைப்பு, மறைகளின் ஒலி, மணி ஒலி, வாச மாலைகளின் வண்டொலி யாவும் பரவசப்படுத்துகின்றன. சிற்றம்பலத்தின் வாயில் வந்த அவர் நின்ற தோற்றத்தைச் சேக்கிழார் அழகாகக் காட்டுகிறார். "ஐந்து பேர் அறிவும் கண்களே கொள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவீகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங்கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்துமாறிலா மகிழ்சசியின் மலர்ந்தார்"
- 55 am

Page 34
அந்த நடனத் தோற்றம் காண்பதற்காக மண்ணில் பிறப்பது இன்பம் என வன்தொண்டர் பாடினார், பரவினார், பணிந்தார்.
அதன் பின்னர் ஞானசம்பந்தர் திருமுலைப்பால் அமுதுண்ட கழுமலம் திருப்பதியை வழிபடுகிறார். திருத்தோணிபுரத்தாரைப் பணிந்து பல பதிகம் பாடினார். வழிபாட்டின் பெருமையை உலகிற்கு உணர்த்திய ஆளுடைய பிள்ளையை வன்தொண்டர் வழிகாட்டியாகக் கொண்டு பல கோயில்களை வழிபட்டுப் பதிகம் பாடுகிறார். வழிபாடு அவருக்குத் தேவையானவற்றை நல்கியது. அப்பரும் ஆளுடைய பிள்ளையும் செய்த பெருந் தொண்டை நம்பியாரூரரும் தொடர்ந்தார். புற்றிடங் கொண்டான் கோயிலை வழிபடும்போது தோழமை பெற்ற தொண்டரானார். திருமணக் கோலத்தில் என்றும் தன்னை நிதமும் ஆக்கித் 'தம்பிரான் தோழர்" என்ற சிறப்புப் பெயர் பெற்றார். அணி நாவலூரன் எனக் குறிப்பிடப்பட்டார். சுந்தர வேடம் தரித்து உலாவியதால் சுந்தரமூர்த்தி எனவும் அழைக்கப்பட்டார். உலகியல் வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய இன்பங்களையெல்லாம் அனுபவித்தவர் நம்பியாரூரர். முதல் உறுதி செய்யப்பட்ட திருமணம் நடைபெறாவிட்டாலும் பின்னர் வழிபாட்டு நிலையிலே திருமணம் கைகூடப்பெற்றவர். அந்த தொடர்பு சுந்தரமூர்த்தி என்ற பெயரை அவர் பெற ஏதுவாயிற்று.

ԳlւգայIIlid;Ա5 Գlւգայ65r
நம்பியாரூரர் திருக்கோயில் வழிபாடு செய்யப்போந்த போது கணிகையர் மரபில் தோன்றிய பரவையார் என்னும் பெண்ணைக் காண்கிறார். அவள் பயில் பெரும் சுற்றம் பேண வளர்ந்தவள். பருவம் தோறும் விழாவாக அவள் வளர்ச்சி கொண்டாடப்பட்டது. சேக்கிழார் பரவையை வருமாறு அறிமுகம் செய்கிறார்.
"மாணிளம்பிணையோ? தெய்வவளரிள முகையோ? வாசத் தேனிளம்பதமோ? வேலைத்திரை இளம் பவள வல்லிக் காணிளம் கொடியோ? திங்கள் கதிர் இளம் கொழுந்தோ? காமன் தான் இளம்பருவம் கற்கும் தனி இளந்தணுவோ என்ன" பரவை வாழ்ந்த சூழல் வேறுபட்டது. இறைவன் எழுந்தருளி யிருக்கும் வழிபாட்டுத் தலங்களில் ஆடல் நிவேதனம் செய்யும் மரபான வாழ்வு அங்கே நடைமுறையாய் இருந்தது. பரவை கோவில் வழிபாட்டிலும் ஈடுபட்டவள். பாங்கியர் புடைசூழ ஒருநாள் இறைவன் பூங்கழல் வழிபட வருகிறாள். அணி சிலம்பு ஒலிப்பநடந்து வருகிறாள். பட்டு அரையில் துவள, குழல் சரிய அவள் கோவிலுள் வருவதை வருவதை நம்பியாரூரர் கண்டார். அவர் எண்ணத்தைச் சேக்கிழார் சொல்லித் தருகிறார்.
"கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக்கொடியோ அற்புதமோ சிவனருளோ அறியேன் என்று அதிசயித்தார்" அவளைக் கண்டவுடன் அப்படியே நின்றுவிட்டார். அவருடைய இளவயதும் வாழ்வியல் உணர்வும் வெளிப்படையாக அவர் தொண்டு நிலைக்கு சற்றுத் தடையாக இருந்ததை இந்நிலை உணர்த்துகிறது. என்றும் அவர் காணாத பேரழகு அது. அவரைத் தொண்டிலிருந்து திசை திருப்புகிறது. கோவிலை வழிபட வந்த அடியாளுக்கு அடியானாகிநிற்கிறார். புலன் வேறு எதிலும் செல்லாமல் முன்நின்ற பரவையாரையே நோக்குகிறார்.

Page 35
வழிபாடு செய்ய வந்த பரவையும் முன்நின்ற சுந்தரரைக் கண்டாள். நெடுங்கண் வியப்ப நோக்கினாள். கிளர் ஒளிப் பூண்கள் பூண்ட ஆண்மகனை அயல் அறியா மனம் விரும்ப பரவையாரும் கடை விழி கூட்டிப் பார்க்கிறாள். அவள் நினைப்பைச் சேக்கிழார் வருமாறு கூறுவார்.
"முன்னே வந்து எதிர் தோன்றும் முருகனோ பெருகுஒளியால்
தன்னேர் இல் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்னேர் செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ
என்னே என்மனம் திரித்த இவன் யாரோ என நினைந்தார்.
பரவையின் பார்வையில் ஆரூரர் அண்ணல் மெய்யருள் பெற்றவரென்பது வெகு துல்லியமாகத் தெரிந்தது. தான் முன்னே கலையறிவால் கண்டுணர்ந்த முருகன் வடிவையும் மாரன் வடிவையும் நினைத்துப் பார்க்கின்றாள். அந்த அழகு அவள் மனத்தைத் திரிபு படுத்தவில்லை. ஆனால் நம்பியாரூரர் தோற்றம் அவள் புலனடக்கத்தைச் சிதைத்துவிட்டது. அவர்மேல் அளவிறந்த காதல் ஏற்பட்டது. எனினும் பரவை வழிபாட்டுமரபை மறவாமல் கோயிலுட் சென்று வணங்கத் தலைப்பட்டாள். நம்பியாரூரர் அவள் போனபின் அயலவரிடம் அவள் பற்றியறிகிறார். அவள் மீது காதல் கொண்டு இறைவனிடம் தன் விருப்பைக் கூற கோயிலின் உட்சென்றார். பரவை வழிபாட்டை முடித்துச் சென்றுவிட்டாள். ஆனால் சுந்தரரோ அவள் நினைவால் மனம் வாடுகிறார். பரவையும் தன் மாளிகை சென்ற பின் மையல் மனம் சேரச் சேடியரிடம் ஆரூரர் பற்றி அறிகிறாள். தம்பிரான் தோழர் எனக்கேட்டுக் காதல் பெருகிட இறைவனை வேண்டுதல் செய்தாள். இருவர் வேண்டுதலையும் இறைவன் ஏற்று சிவனடியார் மூலம் திருமணமும் கைகூடச் செய்தார். வழிபாட்டுத் தலத்தில் ஒரு வாழ்வியல் தொடரலாயிற்று. சுந்தரர் பாடிய திருவாரூர்ப்பதிகத்தில் இவ்வரலாறு வருமாறுபாடப்பட்டுள்ளது.
"ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு உடனாகி
மாழைஒண்கண் பரவையைத் தந்து

ஆண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன்
என் ஆரூர் இறைவனையே" பரவையுடன் சுந்தரர் அன்பு வாழ்வு நடத்துகிறார். இன்பப் பெருக்கினால் செந்தமிழ்ப் பாமாலை பல பாடுகிறார். அடியார்களைக் காணும் போதெல்லாம் இவர்களுக்கு அடியானாவது எந்நாளோ என்று நினைத்து வழிபாடு செய்கிறார். விறன்மிண்டர் என்னும் அடியார் நம்பியாரூரர் அடியாரைப் பணியாது நேரே திருக்கோயில் வழிபாடு செய்கிறார் எனக் கருதினார். அடியவர்க்கு அடியனாவேன் என்ற நினைப்புடன் வழிபாடு செய்த சுந்தரர் அடியார் வரலாற்றைப் பாட அருள்பெறுகிறார். மெய்யடியார் வரிசையில் தில்லைவாழ் அந்தணரை முன்னிறுத்திப் பாடுகிறார். அடியார் திருக்கூட்டத்தின் நடுவே சென்று திருத்தாண்டத்தொகை பாடுகிறார்.
"என்னவனாம் அரன் அடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானிகாதால் திருநாவலூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே" எனப் புதியதொரு வழிபாட்டு முறைமையைத் தொடக்கி வைத்தார். உலகம் அடியாரையும் வழிபட வன்தொண்டர் பாடிப் பணி செய்தார்.
நம்பியாரூரர் இல்லறம் நடக்க குண்டையூர்க் கிழவர் என்னும் வேளாளர் நெல் முதலிய தானியங்களை அனுபிவைத்தார். ஒருமுறை பஞ்சம் ஏற்பட்டதால் நெல் அனுப்ப முடியவில்லை. கிழவர் இறைவனை வேண்டி நெல் பெற்றார். ஆனால் வன்தொண்டரிடம் அனுப்ப வழியில்லை. வழிகான திருவாரூரை நோக்கி நடக்கிறார். பரவைக்குப் பன்னெடுநாள்படி சமைத்தவர் வழிதெரியாது செல்கிறார். நம்பியாரூரர் குண்டையூர் கிழாரை நோக்கி வருகிறார். நெல் கொண்டு செல்ல ஆளிலை என்பது அறிந்து திருக்கோளிலித் திருக்கோயில் சென்றுவழிபட்டுப்பாமாலை சாற்றுகிறார்.
"நீள நினைந்து அடியேன் உமை
நித்தலும் கைதொழுவேன்
- 59 m.

Page 36
வாளன கண்மடவாள் அவள்
வாடி வருந்தாமே கோளிலிஎம் பெருமான்
குண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன் ஆளிலை எம்பெருமான்
அவை அட்டித்தரப்பணியே" என்பது முதற் பாடல். இரண்டு பாடல்களில் தனது இல்லாளின் துன்பத்தைக் குறிப்பிட்டுப்பாடியுள்ளார்.
"குரவமருங்குழலாளுமை நங்கையொர் பங்குடையாய் பரவை பசி வருத்தமது நீயும் அறிதி அன்றே" "பரக்கும் அரவல்குலாள் பரவையவள் வாடுகின்றாள் குரங்கினங்கள் குதிகொள் கொண்டையூர்ச்சில நெல்லுப்பெற்றேன் இரக்கமதாயடியேற்கு அவை அட்டித்தரப்பணியே"
ஒன்பது பாடல்களில் "அட்டித்தரப்பணியே" என வேண்டுதல் செய்தார். உலகியல் வாழ்வில் சுந்தரர் வழிபாடு இறைவனோடு அடியார் நெருங்கி இருக்கும் நிலையைப் புலப்படுத்துகிறது.
திருக்கோயில்களுக்கு அமுதுபடிக்குத் தேவையான நெல்லை வழங்கும் கோட்புலி நாயனாரையும் சுந்தரர் பாமாலையில் போற்றிப் பாடியுள்ளார். அவர் மக்களாகிய சிங்கடி, வனப்பகை என்னும் பெண்களை அருமை மக்களாக ஏற்றுள்ளார். இதனைப் புலப்படுத்த பல பதிகங்களில் "வனப்பகையப்பன்" எனத் தன்னைக் குறிப்பிடுகிறார்.
"இளங்கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன் உளம் குளிர் தமிழ்மாலை பக்தர்கட்கு உரையாமே" (சுந்:7:29:10) "உளங்குளிர் தமிழுரன் வன்தொண்டன் சடையன் காதலன் வனப்பகையப்பன்" (சுந்:7:57:12) தனக்கு முன்னே வழிபாட்டுத் தொண்டு செய்த அருளாளர் களைச் சுந்தரர் ஏத்துகிறார். வலிவலம் என்னும் திருக்கோயில் பதிகத்தில் சம்பந்தரையும் அப்பரையும் குறிப்பிடுகிறார்.
"நல் இசைஞானசம்பந்தனும் நாவினுக்கு
அரசரும்பாடிய நற்றமிழ் மாலை
mu 60 -

சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை
தொண்டனேன் அறியாமை அறிந்து கல்லியல் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டிஎன் களைகளை அறுக்கும் வல்லியல் வானவர் வணங்க நின்றானை வலிவலந் தனில் வந்து கண்டேன்" பல தலங்களையும் வழிபட்டு பரவையாருடன் சுந்தரர் இல்லறம் நடத்துகிறார். பங்குனி உத்தரநாளில் பரவையார் கொடை நேர்ந்திருந்தார். ஆனால் பொருள் இல்லை. திருப்புகலூர் கோவில் சென்று சுந்தரர் வழிபாடு செய்கிறார். அங்குள்ள மடத்திலே செங்கல்லைத் தலையணையாக வைத்து உறங்குகிறார். காலையில் துயிலெழுந்த போது செங்கட்டி பொன்கட்டியாக மாறி இருந்தது. அக்கோயிலை வழிபட்டுப் பதிகம் பாடுகிறார். உலகத்திலே பொருள் பெறும் பொருட்டு மனிதரைப் பாடும் வகைகளை இப்பதிகத்திலே குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியின் "சொற்பொருள் பயன்பாட்டை வெகு துல்லியமாக விளக்கி உள்ளனர். அவற்றை இங்கே தருவது பயனுடைத்து. 1. பாடுதல்:"பொய்மையாளரைப்பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்" 2.கூறுதல்: "மிடுக்கிலாதானை வீமனே விறல்
விசயனே வில்லுக்கு இவன் என்று கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்" 3. பேசுதல்: "காணியே பெரிதுடையனே கற்று
நல்லனே சுற்ற நற்கிளை பேணியே விருந்தோம்புமே என்று பேசினும் கொடுப்பாரில்லை" 4. வாழ்த்துதல்:"நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கிநிற்கும் இக் கிழவனை வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பாரிலை"

Page 37
5.சாற்றுதல் "நோயனைத்தடந்தோளனே என்று
நொய்யமாந்தரை விழுமிய தாயன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பாரில்லை" 6.மொழிதல்: "கற்றிலாதானைக் கற்று நல்லனே
காமதேவனை ஒக்குமே முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பாரில்லை" 7. கழறுதல்: "தையலாருக்கு ஒர் காமனே என்றும்
சால நல்வழக்குடையானே கையுலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பாரிலை" சுந்தரர் செந்தமிழ்த் திறனையும் இதனால் உணரமுடிகிறது. அப்பர், சம்பந்தர் போலப் பிறநெறியாளருக்கு தமிழ்மொழியின் ஆற்றலை உணர்த்த வேண்டிய நிலைமை சுந்தரருக்கு இருக்கவில்லை. ஆனால் வழிபாட்டு நிலையிலே மக்கள் நாவிலே செந்தமிழ்ப் பயிற்சி இன்றியமையாதது என்பதை உணர்த்த முனைந்தார். இதனை அவருடைய பாமாலைகளில் பெரிதும் காணமுடிகிறது.
வழிபாட்டு நிலையில் வாழ்க்கைத் துணை பெற்றாலும் பரவையாரை இல்லிருத்தி சுந்தரர் தனியாகவே சோழ நாட்டுத் திருத்தலங்களை வழிபடச் செல்கிறார். தம்பிரான் தோழர் சோழநாட்டுத் தலங்கள் 47 சென்று வழிபட்டதை அவரது பதிகங்களே சான்று பகர்கின்றன. சுந்தரர் திருக்கலய நல்லூர் தலத்தை வழிபட்டுப் பாமாலை பாடியபோது பல புராணக் கதைகளைக் குறிப்பிட்டுள்ளார். சேக்கிழார் இப்பண்பினை,
"மெய்மைப்புராணம் பலவும் மிகச் சிறப்பித்து
இசையின் விளம்பினார்" எனக் குறிப்பிடுகிறார். தலத்திற்கு வழிகாட்டும் வகையில் புராணக் கதைகளையும் சூழலையும் பாடியுள்ளார். இயற்கை அழகு வாய்ந்த கோவிலின் அமைவிடத்தை அவர் சுட்டிக் காட்டுவது சிறப்பாயுள்ளது.
m 62 H

அவரது செந்தமிழ் ஆற்றல் அதற்குத் துணை செய்தது. பத்துப் பாடல்களில் அவர் காட்டும் கோயிற் சூழலின் காட்சி கண்கொள்ளாதது. நில வளத்தையும் நீர்வளத்தையும் பயிர் வளத்தையும் இயற்கைத் தோற்றப் பாடாக அவர் பாடல்களில் புனைந்திருப்பது எல்லோரும் அறியவேண்டியது. 1. "அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண்பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ் அயலில் கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்
கமலம் கண்முக மலரும் கலய நல்லூர்"
2. "பெருமேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும்
பிள்ளை இனம்துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக கருமேதிபுனல் மண்ட கயல் மண்ட கமலம்
களிவண்டின் கணம் இரியும் கலயநல்லூர்"
3. "மண்டபமும் கோபுரமும்மாளிகை சூளிகையும்
மறையொலியும் விழவுஒலியும் மறுகு நிறைவுஎய்தி கண்டவர் கண் மனம் கவரும் புண்டரிகப் பொய்கை
காரிகையாள் குடைந்தாடும் கலய நல்லூர்"
4. 'அலை அடைந்த புனல்பெருகியானை மருப்பு இடறி
அகிலோடு சந்து உந்திவரும் அரிசிலின் தென்கரை மேல் கலை அடைந்து கலிகடி அந்தணர் ஒமப்புகையால்
கணமுகில் போன்று கிளரும் கலய நல்லூர்"
5. "சொற்பால பொருட்பால சுருதி ஒரு நான்கும்
தோத்திரமும் பல சொல்லி துதித்து இறை தன் திறத்தே கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர்
கலைபயில் அந்தணர் வாழும் கலயநல்லூர்"
- 63 m

Page 38
6. "தெற்று கொடிமுல்லை மல்லிகை செண்பகமும்
திரை பொருது வருபுனல் சேர் அரிசிலின் தென்கரைமேல் கற்றினம் நன்கரும்பின் முளை கறி கற்க கறவை
கமழ் கழுநீர் கவர் கழனிக் கலய நல்லூர்"
7. "பலம்கள் பலதிரை உந்திபருமணிபொன் கொழித்து
பாதிரிசந்து அகிலினொடு கேதகையும் பருகி கலங்குபுனல் அலம்பிவரும் அரிசிலின் தென்கரைமேல்
கயல் உகளும் வயல் புடைசூழ் கலயநல்லூர்"
8. "சோலை மலிகுயில் கூவ கோலமயில் ஆல
சுரும்பொடு வண்டிசை முரலபசுங்கிளிசொல்துதிக்க காலையிலும் மாலையிலும் கடவுள் அடிபணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர்"
9. "இரும்புனல் வெண்திரை பெருகிஏலம் இலவங்கம்
இருகரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென்கரைமேல் கரும்புனை வெண்முத்து அரும்பி பொன் மலர்ந்துபவளக்
கவின் காட்டும் கடிபொழில் சூழ் கலயநல்லூர்"
10. "வெண்கவரிகரும்பீலி வேங்கையொடுகோங்கின்
விரை மலரும் விரவுபுனல் அரிசிலின் தென்கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ் தென்றல் புகுந்து உலவும் கலயநல்லூர்" சம்பந்தரும் தமது பதிகங்களிலே கோவிலின் சூழலையும் அமைவிடத்தையும் பாடியுள்ளார். சுந்தரர் பதிக அமைப்பிலே ஒரு ஒழுங்கு காணப்படுகிறது. கோவில் அமையும் ஊரின் வளம், மக்கள் பண்பு, குடியிருப்பு நிலை என்பவற்றைச் சுந்தரர் பாடியுள்ளார். இன்னும் தனக்கு முன்னே வாழ்ந்த அடியார்கள் வழிபட்ட தலங்களையெல்லாம் வழிபட வேண்டும் என
எண்ணினார்.
- 64 unumu

தொண்டைநாட்டுத் திருத்தலங்கள் 32. அவற்றுள் சுந்தரர் சென்று வழிபட்ட தலங்கள் 14,திருக்கச்சூர் கோயிலை வழிபட்டவர் வெம்மை தாளாமல் ஓரிடத்தில் அமர்கிறார். அமுதும் கிடைக்கவில்லை. அவர் நிலைகண்ட வேதியர் ஒருவர் அண்மையிலுள்ள வீடுகளில் திருவமுதும் கறியும் இரந்து பெற்று வந்து நாவலரின் பசி தீர்க்கிறார். மறையவரின் பேரன்பை எண்ணி முதுவாய் ஓரி" என்னும் பதிகம் பாடுகிறார். காலை எழுந்து தொழுவார்கள் கவலை களையும் இறைவனைப் போற்றுகிறார். அடியாரை அமுது செய்வித்தல் சிறந்த வழிபாடாகும் என உணர்ந்து கொள்கிறார். சுந்தரர் பல ஊர்களும் சென்று வழிபாடு செய்யும் நிலையில் பொருள் தேட்டம் செய்ய முடியவில்லை. திருவோணகாந்தளியை அடைந்த போது வழிபாடு செய்பவர் பொருள் பெறவில்லையே என்ற எண்ணம் அவருக்கு உண்டாயிற்று. நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தலும் பூசை செய்பவர் கையிலே காணமில்லை. இங்கு ஒற்றி வைத்து உண்ணவும் வழியில்லை. ஊரிடும் பிச்சையுண்டு வாழ்வதற்கில்லை. எனவே உம்மை வணங்கி அடியானாக்கி இங்கே நான் வாழமாட்டேன் எனப்பாடுகிறார்.
"திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும் கங்கையாளேல் வாய்திறவாள்
கணபதியேல் வயிறு உதாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவியார் கொற்று அட்டி ஆளார் உங்களுக்கு ஆட்செய்யமாட்டோம்
ஒணகாந்தன் தளிஉளிரே" இறைவனது குடும்பநிலையை உலகியல் குடும்ப நிலையில் வைத்து எண்ணுகிறார். தன்னுடைய நெருக்கமான தோழமையுணர்வை வெளிப்படுத்துகிறார். உண்மை நிலை கூறிப் பொருள் வேண்டும் சுந்தரரது வழிபாட்டு நடைமுறை வேறுபட்டது. இங்கு பொன் பெற்று வழிபாடு செய்ய தலங்களை நோக்கிப் புறப்பட்ட சுந்தரர் தம்பிரான் தோழர் என்ற உணர்விலேயே செயற்படுகிறார்.
mm 65 m

Page 39
திருவொற்றியூர் சென்று வழிபட்டு வரும் போது சுந்தரர் வாழ்வில் இன்னொரு அடியாள் தொடர்பு ஏற்படுகிறது. கோவில் வழிபாட்டை மூன்று காலமும் ஆர்வமுடன் செய்த சுந்தார் ஒருநாள் சங்கிலியாரைக் காண்கிறார். சங்கிலியார் வேளாளர் குலத்தில் பிறந்தவர். சிவனடியானையே கணவனாகப் பெறவேண்டும் என்ற இலக்குடன் வழிபாடு செய்து வந்தார். பெற்றோர் பேசும் மணமறிந்து உடலும் மனமும் நலிந்தார். எனவே அவரை கோவிலிலே தொண்டு செய்ய விடுத்தனர். அங்குள்ள கன்னி மாடத்தில் வாழ்ந்தார். கோவிலிலே மாலை தொடுத்து வழங்கும் சங்கிலியாரைச் சுந்தரர் கண்ட காட்சியை சேக்கிழார்
"அன்புநாரா அஞ்செழுத்து நெஞ்சு தொடுக்க அலர் தொடுத்தே என்பு உள் உருக்கும் அடியாரைத் தொழுது நீங்கி வேறிடத்து முன்பு போலத்திரை நீக்கி முதல்வர் சாத்தும் பணிகொடுத்து மின்போல் மறையும் சங்கிலியார் தம்மை விதியாற்கண்ணுற்றார்" எனக் கூறுகிறார். ஏற்கனவே பரவையாரை வழிபாட்டின்போது கண்டு மணம் செய்து கொண்டவர் சுந்தரர். இப்போது சங்கிலிபால் மணம் திரிந்தார். சங்கிலியின் வழிபாட்டு நடைமுறை மனத்தை ஈர்த்தது. இறைவன் கோலநிலையை எண்ணுகிறார். மங்கை ஒருத்தி பாகத்திருக்க கங்கையாளைச் சடையிலே கரந்த காதலை நினைக்கிறார். ஒற்றியூர் இறைவன் திருவடிகளை இறைஞ்சுகிறார்.
சங்கிலியாரும் இறையருளால் ஆரூரரை மணக்க தொண்டர் நாதனே தூதாய் நின்றான். சங்கிலியரைப் பிரியேன் என மகிழ மரத்தை மும்முறை வலம் வந்து சூளுரை செய்து திருமணம் செய்கிறார். இத்திருமணம் பற்றி நம்பியாரூரர் தேவாரத்திலே சான்று உண்டு.
"பொன்னவிரும் கொன்றையினாய் போய் மகிழ்க் கீழ் இரு என்று சொன்னவனைக் காணோமே
சூளுறவு மகிழ்க் கீழே என்ன வல்ல பெருமானே." (சுந்:7:89:9) "மான் திகழும் சங்கிலியைத்
தந்து வருபயன்கள் எல்லாம்

தோன்ற அருள் செய்து அளித்தாய்." (சுந்:7:89:10) ".நொய்யேன் பொருட்படுத்துச் சங்கிலியோடு எணைப்புணர்த்த தத்துவனை." (சுந்:7:51:1)
"பண்மயத்த மொழிப்பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெருமாளே." (சுந்:7:46:1) சங்கிலியாரோடு சிலகாலம் இன்பமாய் வாழ்ந்த சுந்தரருக்கு பரவையாரின் பண்ணமைந்த பாடலும் ஆடலும் நினைவுக்கு வருகிறது. அவளை மறந்ததை எண்ணிப்பார்க்கிறார். புற்றிடம் கொண்டிருந்தாரை மறந்தமையால் அவளையும் மறக்க நேர்ந்ததை உணர்கிறார். திருவாரூர் இறைவனை நினைந்து பாடுகிறார்.
"பத்திமையும் அடிமையும் கைவிடுவான் பாவியேன் பொத்தின நோயது இதனைப் பொருள் அறிந்தேன் போய்த்தொழுவேன் முத்தினை மாமணி தன்னை வயிரத்தை மூர்க்கனேன் எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே" உடனே புறப்படுகிறார். ஒற்றியூர் அகல அவர் கண் ஒளியும் மறைந்தது. சங்கிலியாருக்கு கூறிய சூளுரையை மீறியது நினைவுக்கு வந்தது. காதல் சங்கிலி காரணமாக துன்பம் ஏற்பட்டது. கண்பார்வை தருமாறு ஒற்றி யூரனை இரந்து பாடுகிறார். பெண் வசப்பட்ட பிழையை மன்னிக்க வேண்டுகிறார். முகத்தில் கண்ணிழந்து வாழும் துன்ப வாழ்விலிருந்து தன்னை மீட்கவேண்டுமெனக் கேட்கிறார். காஞ்சியிலே வந்து அறம் புரக்கும் அன்னையின் திருக்கோவிலை வழிபடுகிறார். கச்சி ஏகம்பனை பனிமலர் கொண்டு பரவுகிறார். செங்கயற்கண்ணி சேவடி போற்றுகிறார். அவருடைய இடைவிடாத வழிபாட்டால் இடக்கண் ஒளி பெற்றார். ஆலந்தான் உகந்து அமுது செய்தானை" என்னும் பாமாலையைப் பாடுகிறார். மீண்டும் பல தலங்கள் வழிபாடு செய்கிறார். தனக்கு ஒரு கண்ணில் ஒளி இல்லையே எனக் கவலையுடன் வழிபாட்டைத் தொடர்கிறார். திருவாரூர் சென்று உன்கோலம் காண "மற்றைக் கண்தாரும்" என
வேண்டிப்பாடுகிறார்.
سے 67 ــــــــــــــــــــــ

Page 40
"விற்றுக் கொள்வீர் ஒற்றியல்லேன் விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினிர் எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண் தராது ஒழிந்தால் வாழ்ந்து போதிரே" சுந்தரர் இறைவன் மீது கொண்ட நெருக்கமான தோழமை வழிபாட்டால் நேர் நின்று கேட்கும் ஆற்றல் பெற்றார். இப்பதிகம் பாடி முடிய வலக்கண் ஒளியையும் பெற்றார். அடியானாக வந்து தடுத்தாண்டவர் என்பதால் அவரே பொறுப்பு எனக் கருதி வாழ்ந்தவர் சுந்தரர், கோயில்களைச் சென்று வழிபடும் நிலையில் உலக இன்பங்களை அவர் முற்றாகக் கைவிடவில்லை.
கண்பெற்ற சுந்தரர் பரவையாரிடம் போகிறார். பரவையார் இத்துணை காலமும் பிரிந்தமையையும் சங்கிலியாரை மணந்தமையையும் எண்ணிப் புலந்திருந்தார். சுந்தரரை அவர் காணவிரும்பவில்லை. சந்தரர் உலகநடைமுறைப்படி பெரியோர் சிலரைப் பரவையாரிடம் அனுப்புகிறார். பரவையாரோ அவரோடு சேரேன். இன்னுயிர் துறப்பேன்’ என வருந்திக் கூறுகிறார். சுந்தரர் இறைவனிடம் வேண்டுதல் செய்ய இறைவன் இருவருக்குமிடையே தூது போகிறான். மறையவர் வடிவில் பரவையாரிடம் சென்று சுந்தரனை மன்னித்து ஏற்கும் படி அறிவுறுத்துகிறார். பரவையார்அடியானாகக் கண்ட சுந்தரன்ர ஏற்றுக்கொள்கிறார். உலகியலில் மண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை சுந்தரர் வரலாறு தெளிவாய்க் காட்டுகிறது. அடியாரைப் போற்றி வாழும் வாழ்வியலில் வரும் இடர்களை அறிய வைத்துள்ளது.
இன்னும் ஏயர்கோன் கலிக்காமர் நட்பும் சுந்தரர் வாழ்வில் வழிபாடு எத்துணை இன்றியமையாதது என்பதை உணர்த்துகிறது. வழிபாட்டில் வாழ்பவர் உலக இன்பங்களுக்காக இறைவழிபாடு செய்வது தகாது என்பது கலிக்காமர் கருத்து. ஆனால் வன்தொண்டர்வழிபாட்டால் எதையும் பெறலாம் என்பதை உணர்ந்தவர், இறைவனைத் தோழமை நிலையிலே வழிபட்டவர். இப்பண்பினை கலிக்காமர் உணர்ந்து சுந்தரரின் நண்பராகிறார்.
சுந்தரர் வழிபாட்டால் பெற்ற ஆற்றலால் முதலை வாய்ப்
பிள்ளையை மீட்டார். வழிபாட்டின் போது பாடிய பதிகங்கள் சம்பந்தர் பதிகம்

போல உகந்து பாடும் உவகைத்திறம் கொண்டவை. அப்பர் பதிகம் போல பிழையுணர்ந்து இரங்கும் இயல்புடையவை. இதனால் சுந்தார் பாடல்கள் முன்வந்தோர் பாடல்களின் கருத்துரையாகவும் விளக்கவுரையாகவும் அமைந்தன. வன்கண்மையுடன் பாடப்பட்டவை. தொண்டர்களிலே தன்னைச் சுந்தரர் வன்றொண்டர் எனக் குறிப்பிட்டுள்ளார். அடியவர்களில் இவர் குணப்பண்பு பெரிதும் வேறுபட்டது. அடியானாய் வாழ்வதற்கு அவர் அஞ்சிய நிலையும் உண்டு. இறையின் பேராற்றலை இயற்கையிலே கண்டு தெளிந்த போது அச்சம் ஏற்பட்டது. திருப்பரங்குன்றத்திலே வழிபாடு செய்த போது அவர் பாடிய பாடல்கள் இதனைத் தெளிவாய்க் காட்டுகின்றன.
"பாரொடு விண்ணும் பகலும் ஆகி
பணிமால் வரையாகிபரவையாகி நீரொடு தீயும் நெடுங்காற்றும் ஆகி
நெடுவெள் இடையாகி நிலனும் ஆகி. தேரோடு அவரை எடுத்த அரக்கன்
சிரம்பத்து அறுத்தீர் உமசெய்கை எல்லாம் ஆரோடும் கூடா அடிகேள் இது என்
அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே" இவ்வுலக வாழ்க்கையில் 18ஆண்டு சுந்தரர் வாழ்ந்தார். வழிபாட்டு நிலையிலே தன்னை ஒரு அனுபவமற்ற சிறுவனாகவும் மனம் பண்படாத வன்தொண்டனாகவும் கருதியுள்ளார்.
"தொண்டர் தொண்டன் சடையனவன் சிறுவன்" "வனப்பகைஅப்பன் வன்தொண்டன்" "சடையன் இசைஞானி சிறுவன்" "வன்தொண்டன் ஆரூரன்" "ஆரூரன் அடியான் அடித்தொண்டன்" "வன்தொண்டன் ஊரன்" "நாவலூரன் வனப்பகையப்பன் வன்தொண்டன்" "வனப்பகைஅப்பன் சடையன்தன் சிறுவன் வன்தொண்டன்" "நாவலூரன் வன்தொண்டன்"
"நாவலர்கோன் செஞ்சொல்லான் அவன் வன்தொண்டன்"

Page 41
"வனப்பகைஅப்பன் வன்தொண்டன்"
"வன்தொண்டன் ஊரன்"
"சடையன் சிறுவன் அடியன்"
"ஆரூரன் அடித்தொண்டன் அடியன்"
"சிறுவன் வன்தொண்டன் ஊரன்"
"ஊரன் வன்தொண்டன்"
"நாவலூரன் வன்தொண்டன்"
"நாவலாரூரன் வன்தொண்டன்"
"ஊரன் வன்தொண்டன்"
"அணுக்க வன்தொண்டன்"
"தமிழுரன் வன்தொண்டன்"
"வாழவல்ல வன்தொண்டன்"
"நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன்தொண்டன்"
"நாவலூரன் வன்தொண்டன்"
'வன்தொண்டன்’ என்ற நிலையில் சுந்தரர் தம்மைக் கருதுவதற்கு அவர் வாழ்வியல் காரணமாக இருந்தது. நினைப்பதைச் செயற்படுத்தும் நிலையில் அவர் இரு திருமணம் செய்கிறார். நினைப்பது கைகூடாத நிலையில் இனிய உயிரையும் துறக்க எண்ணுகிறார். வாழ்வை உகந்த நெஞ்சையும் மடவார் பால் சென்றதையும் வன்மையான செயல்களாக எண்ணுகிறார். தான் வழிபாடு அறியாதவன் என உறுதியாக நம்பியவர்.
"பரவும் பரிசு ஒன்றறியேன் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்"
என தனது உண்மை நிலையைக் கூறுகிறார். பிழைத்தமையாலும் தன்னை வன்தொண்டர் என முடிவுசெய்தார். அடியார்க்குத் தொண்டு செய்வதே வழிபாடு' என்று கண்டார்.
பத்தராய்ப்பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
ത്ത് 70 -

முழுநீறுபூசியமுனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே" என்ற பாடல் சுந்தரர் தன்னை எவ்வாறு மதிப்பீடு செய்துள்ளார் என்பதை விளக்குகிறது. தொண்டு செய்து வாழும் வாழ்க்கையைத் தொடர வேண்டும். எல்லோரையும் பணிந்து வாழும் முறைமையை சுந்தரர் நல்ல தொண்டர் வாழ்வு எனக் கருதினார். வழிபாட்டு நிலையிலே கோவில் வழிபாடு தொண்டு செய்யும் பக்குவம் தருவது. அதுவே உலகத்து உயிர்களை எல்லாம் இணைக்க வல்லது. அப்பரும் சம்பந்தரும் செய்த தொண்டும் வழிபாடென சுந்தரர் நன்குணர்ந்த போது தன்னை ஒரு
வன்தொண்டனாகக் கண்டார்.

Page 42
தென்னவன் பிரமராயன்
வழிபாட்டினால் மக்களை வழிப்படுத்திய முன்னோர்களில் மணிவாசகர் தனிச் சிறப்புடையவர். இவருடைய வரலாற்றைப் பெரியபுராணம் பாடவில்லை. சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலும் இவருடைய பெயர் இடம்பெறவில்லை. எனவே திருத்தொண்டர் வரலாறு பாடும் போது ஏன் இவருடைய வரலாறு சேர்க்கப்படவில்லை என்பது ஆய்வுக்கு உரியதாகும். ஆனால் மணிவாசகரது பாடல்களும் வாதவூரர் புராணமும் இவருடைய வரலாறு அறிய உதவும் சான்றுகளாகும். வாதவூரர் புராணம் திருவிளையாடற்புராணம் என்னும் மதுரைத் தலபுராணத்தின் 4851 பாடல்களின் விரிவாக்கம் என்றும் கருதப்படுகிறது.
மணிவாசகர் மதுரைக்கு அருகே வைகை நதிக்கரையில் இருந்த திருவாதவூரில் பிறந்தவர். இதனால் திருவாதவூரர் எனப் பெயர்பெற்றார். அமாத்தியகுல அந்தணர் மணிவாசகர் தந்தை பெயர் பூரீசம்புபாதாசிருதர் என்றும் தாய் பெயர் சிவஞானவதியார் என்றும் உ.வே.சாமிநாதையர் தாம் பதிப்பித்த திருவிளையாடற் புராணத்தின் முகவுரையில் கூறியுள்ளார்.இளம் வயதிலேயே திருவாதவூரர் அறிவு மிக்கவராய் விளங்கினார். பதினாறு வயதிலே வேதபுராணங்களையும் சைவ ஆகமங்களையும் நன்கு கற்றுத் தேர்ந்திருந்தார். மதுரை மன்னன் இவருடைய கல்விச் சிறப்பையும், அறிவின் திறத்தையும் கேள்வியுற்று இவரை அழைத்து தன்முதன் மந்திரியாக நியமித்தான். தென்னவன் பிரமராயன்' என்ற சிறந்த பட்டத்தையும் நல்கினான். இப்பட்டம் அந்தணர் தலைவன்’ என்று பொருள் படும். முதன் மந்திரி என்ற நிலையில் திருவாதவூரர் வாழ்க்கை செல்வவளம் மிக்கதாயிருந்தது. பட்டாடையும், வைர அணிகளும் பூண்டு இன்பமான வாழ்வு நடத்தி வந்தார். மன்னனும் இவருடைய நிர்வாகத்திறமை கண்டு அரசநிர்வாகப் பொறுப்புக்கள் அனைத்தையும் ஒப்படைக்கிறான். ஆனால் வாதவூரரோ அரண்மனை வாழ்வையும் செல்வ வளங்களையும் அத்துணை
பெரிதாக மதிக்கவில்லை. மனித வாழ்வு பயனற்றது. இவ்வாழ்வியலில்
്വ 72 ത

மக்கள் எல்லோரும் நடிகர்களே. பிறவிக்கொடுமையிலிருந்து விடுபட ஒரு நல்ல வழிபாட்டு நடைமுறையை வாதவூரர் தேடினார். தன்னுடைய மந்திரி நிலையான கடமைகளைச் செவ்வனே நிறைவேற்றிய போதும் அவருடைய உள்மனம் ஒரு வழிகாட்டியைத் தேடி ஏங்கிக் கொண்டிருந்தது. தான் முன்னர் கற்ற வழிபாட்டு மரபான கல்வியினை மேலும் குருநாதர் ஒருவரிடம் கேட்டுத் தெளிவு பெற விரும்பினார். இக்காலத்திலே ஜைனமதக் கோட்பாடுகளும் நாட்டில் பரவியிருந்தன.
இவ்வாறு இருக்கையில் ஒருநாள் அரசவைக்குச் சிலதூதுவர் வந்தனர்.சோழநாட்டுத் துறைமுகத்திலே அரபு நாட்டிலிருந்து பல அரிய குதிரைகள் மரக்கலங்களில் வந்திருப்பதாய் செய்தி கூறினர். மன்னன் குதிரைகளை வாங்க விரும்பினான். தன் நம்பிக்கைக்குரிய தென்னவன் பிரமராயனை அழைத்து திருப்பெருந்துறைக்குச் சென்று குதிரைகளை வாங்கிவரும்படி பணித்தான். பொற்கிழிகளையும், வைர வைடூரியங் களையும் அவரிடம் கொடுத்தான். முதன் மந்திரியும் படைகள் புடைசூழ அரச மரியாதைகளுடன் குதிரை வாங்குவதற்காக திருப்பெருந்துறைக்குப் புறப்பட்டார். துறைமுகம் நோக்கி பல நகரங்கள், மலைகள், காடுகள் கடந்து பரிவாரத்துடன் சென்றார். இந்த மந்திரி வாழ்க்கை வாதவூரரைக் கடமைநிலையிலே இறுகப்பிணித்திருந்தது.
திருப்பெருந்துறையிலே குருந்தமர நீழலிலே ஒரு குரு சீடர் களுடன் அமர்ந்திருக்கும் காட்சியை வாதவூரர் கண்ணால் காண்கிறார். சைவ ஆகம ஒலியைக் கேட்டார். முதன் மந்திரி குதிரையைவிட்டு இறங்கி குருந்தமரத்தடிக்குச்சென்றார். அங்கே அமர்ந்து இருக்கும் குருவின் தோற்றம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. நெற்றியையும் கழுத்தையும் சுற்றி உருத்திராக்கமாலை. வெண்ணிறு பொலிந்த திருமேனி, நெற்றியில் ஒளிரும் மூன்றாம் கண், கையில் நூல், வாதவூரர் அந்தக் குருவின் பார்வைபட்ட உடனேயே தன்னை மறந்தார். தலை தாழ்த்திக் குருவின் தாள்களிலே வீழ்ந்து பணிந்தார். தன் ஆசைகள் அனைத்தையும் துறந்தார். 'நாயினும் கடையேனை ஆட்கொண்டு அருளவேண்டும் எனத் துதித்து நின்றார். திருவாதவூரருக்குத் திருவடிதீட்சை செய்து குரு வழிபாட்டு நெறி அறிவைப் புகட்டுகிறார். அவருடைய அறிவு நெறி வழிகாட்டல் வாதவூரரை
- 73 m

Page 43
ஞானத்தொண்டின் பாற் செலுத்துகிறது. அவருடைய வாழ்வில் அந்த அனுபவம் வாய்ச்சொற்களாக வெளிப்பட்ட போது வழிபாடு செய்யும் மந்திரச் சொற்களானது,
திருப்பெருந்துறையில் திருவாதவூரர் பாடிய முதல் நெடும்பாட்டு சிவபுராணம் ஆகும். 95 அடிகளால் ஆனது. நமச்சிவாய என்ற மந்திரச் சொல்லை உச்சரித்து வழிபாடு செய்ய வழிகாட்டுவது. இறைவன் திருவடிகளை வழிபடும் மரபு கூறுவது. இச் சிவபுராணத்தில் தாள். அடி, கழல் என்ற மூன்று வகைப்பாடு குறிக்கப்பட்டுள்ளது.
'நமச்சிவாய வாழ்கநாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க"
"அவன் அருளாலே அவன் தாள்வணங்கி"
"ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க வேகம் கெடுத்து ஆண்டவேந்தன் அடிவெல்க" "பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க கரம்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஒங்குவிக்கும் சீரோன்கழல்வெல்க"
"ஈசனடி போற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடிபோற்றி நேயத்தே நின்றநிமலன் ஆடிபோற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடிபோற்றி சீரார் பெருந்துறை நந்தேவன் அடிபோற்றி" "மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"
"நிலந்தன்மேல் வந்தருளி நீழ்கழல்கள் காட்டி"
ത്ത 74 -ത്ത

"சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்"
"செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்" வழிபாட்டு நிலையில் வாழ்க, வெல்க, போற்றி என மூன்று நிலையில் உச்சரிப்பு நடைபெற வழிகாட்டியுள்ளார். குருந்தமர நீழலிலே அவர் கண்ட தாளும், கழலும், அடியும் எல்லோர் உள்ளத்திலும் பதிய வேண்டி சிவபுராணத்தைப் பாடினார்.
முதற் குறிப்பிடப்பட்டுள்ள அறுவகை வாழ்த்துக்களும் அறுபகைகளாகிய செருக்கு, சினம், சிறுமை, இவறல், மாண்பிறந்த மானம், மாணா உவகை என்னும் அறுவகைக் குற்றங்களையும் அறுக்கும் எனக் கருதப்பட்டது. நமச்சிவாய என்பது நமசிவாய எனப் பொருள் ந–நடப்பு, மமறைப்பு, சி-சிறப்பு, வ-வணப்பு. யா-யாப்பு என தனியெழுத்து நிலை விளக்கமும் உண்டு. 'யா' என்பது 'ய' எனக்குறுகி நின்றது.'வளன்பது'வா என நீண்டு நின்றது. சிறப்பு, வனப்பு என்ற சொற்களின் முதனிலைகள் இணைந்து சிவ என நிற்கிறது.
வேந்தன்' பண்டு தொண்டு வழிபடப்பட்ட மருத நிலத்தெய்வம். “வெல்கன்னக் குறிப்பிட்ட ஐந்தும் மனிதனின் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களையும் நன்னெறிப்படுத்த உச்சரித்து வழிபாடு செய்வதாகும். 'போற்றி என்னும் சொல் நாண்மலர் கொண்டு வழிபாடு செய்யும் போது உச்சரிப்பதாகும். வாதவூரர் அடுத்ததுப் பாடிய கீர்த்தித் திருவகல் 145அடிகளால் ஆனது. குதிரை வாங்குவதற்கெனக் கொண்டு சென்ற பொருளையெல்லாம் திருப்பெருந்துறையிலே வழிபாட்டிலே வாதவூரர் செலவிட்டார். குருவிடம் கொடுத்து அடியார்க்கும் ஏழைகட்கும் பயன்படுத்துமாறு வேண்டுகிறார். அவருடன் வந்த அரசன் பணியாளர் திகைக்கின்றனர். வாதவூரரிடம் விளக்கம் கேட்டனர். அவர் சிவநெறி நிற்பதாகக் கூறினார். மன்னனிடம் சென்று நடந்ததைக்கூறினர். மன்னன் வாதவூரரை உடனே மதுரை வரும்படி பணித்து ஒலை அனுப்பினார். ஒலை பெற்ற மணிவாசகர் குருவிடம் அதனைக் காட்டினார்.குரு புன்முறுவல்

Page 44
பூத்தார். "பயமின்றித் திரும்பிப் போ" ஆவணித் திங்கள் 19ஆம் நாள் அரபுக்குதிரைகள் மதுரைக்கு வரும் என மன்னனிடம் இயம்பு" என்றார். வாதவூரர் குருவின் கட்டளையை ஏற்று மீண்டும் முதன் மந்திரியாக பட்டு அணிந்து சென்றார். அவரிடம் குரு ஒரு மாணிக்கக் கல்லையும் மன்னனுக்குப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். வாதவூரர் மதுரை திரும்பினார். மன்னனிடம் குதிரைகள் வாங்கியாயிற்று ஆவணித் திங்கள் 19ஆம் நாள் இங்கு வரும்என இயம்பினார். ஆனால் திருப்பெருந்துறையில் நடந்ததை ஒரு மந்திரி மன்னனிடம் சொல்லிக் குதிரைகள் வரமாட்டா என்பதை உணர்த்திவிட்டார். அதனால் கடும் சினமுற்ற அரசன் தென்னவன் பிரமராயனைச் சிறையிலடைக்கப் பணித்தான். சிறை சென்ற
வாதவூரர் குருவை நினைத்து வழிபடலானார்.
குரு காட்டிலுள்ள நரிகளையெல்லாம் நல்ல பரிகள் ஆக்கி குறித்த நாளில் மதுரைக்கு கொணர்கிறார். தானே குதிரை வணிகர் வேடம் பூண்டு வருகிறார். மன்னனுக்குச் செய்திபோகிறது. மன்னன் மந்திரியைச் சிறைவிடுத்து குதிரைகளைப் பார்வையிட தன்னுடன் அழைத்துப் போகிறான். வாதவூரர் குருவைக் கண்டு கொள்கிறார். குதிரைகளை வாங்கி இருப்பிடம் சேர்த்தனர். வந்த வணிகர் விடைபெற்றுச் சென்றார். அன்றிரவு கழியவிடிகாலத்தில் பரிகளெல்லாம் நரியாக உருமாறி ஊளையிட்டுக் காட்டுக்குள் ஒடின. மன்னன் செய்தி கேட்டு வெகுண்டான். வாதவூரரை அழைத்து வரச் செய்து வறண்டிருந்த வைகை நதிக்கரையில் முதுகில் ஒரு பாறையைத் தாங்கி மண்டியிட்டு இருக்கப் பணிந்தான். வாதவூரர் மனம் கலங்கவில்லை. குருவை நினைந்துதண்டனையை ஏற்றார். திடீரென மதுரை நகர் காணாத வெள்ளம் வைகையில் கரைபுரண்டு ஒடிற்று. நகரமே வெள்ளத்துள் மூள்கும் நிலை. மன்னன் செய்வது அறியாது முதல் மந்திரியை அழைத்து வெள்ளத்திலிருந்து மதுரை நகரைக் காப்பாற்ற ஆவன செய்யும் பொறுப்பை அவரிடமே ஒப்படைக்கிறான். முதலமைச்சர் மதுரை வாழ் மக்கள் அனைவரும் ஒத்துழைத்து வெள்ளத்திற்குஅணை போட வேண்டும் எனத் திட்டம் வகுக்கிறார். எல்லோரும் அதை ஏற்றுச் செயற்படுகின்றனர்.

மதுரையில் ஒரு ஏழைக்கிழவி பெயர் செம்மணச்செல்வி. பிட்டு விற்றுப் பிழைப்பவள். அவள் பங்கை அடைப்பதற்கு ஆளில்லை. கொடுக்கக் கூலியும் இல்லை. ஆலயத்தில் சென்று மனம் உருகி வழிபடுகிறாள். வெளியே வர வாசலில் ஒரு கூலியாள் தலைமேல் மண்சுமக்கும் கூடையும் தோள் மீதுமண்வெட்டியும் கொண்டு எதிரே வந்தான். கிழவியிடம் வேலை தரும்படி வேண்டினான். கிழவி தன் வழிபாட்டுக்கு உடனே பலன் கிடைத்ததே என எண்ணி அவனை உற்றுப் பார்த்தாள். பதினாறு ஆண்டுப் பருவம், புழுதி படிந்த திருமேனி, பொலிவான தோற்றம். வலிய நடை, கூலியாளிடம் கிழவி கூலி பேசியதை திருவிளையாடற் புராணம் வருமாறு காட்டுகிறது.
"அந்தித்து இருக்கும் பொருளில்லை ஐயரே
கந்தித்து வெந்தாய் நறுவிதாய்க் கண்ணுக்குச்
சிந்தை குவந்திருக்கும் செவ்விகூர் பிட்டு உண்டு
முந்தத் தருகவல் யான் என்றாள் முதுநிரையாள்"
(திருவிளை. புரா:144)
இளைஞன் கூலியை ஏற்று வேலையை மேற்கொண்டான். பாட்டுப்பாடி ஆடி மண்வெட்டிக் கொட்டினான். பிட்டைத் தின்றுவிட்டுக் கூடையைத் தலைக்கு அணையாக்கித் தூங்கினான். ஆற்றுப் பெருக்கிற்கு அணையிடும் செயற்பாட்டை நேரில் காண வந்த மன்னன் தூங்கும் தொழிலாளியைக் கண்டான். அவனை எழுப்பி பிரம்படி கொடுக்கும்படி கட்டளையிட்டான்.அடி கொடுக்கப்பட்டது. அந்த அடி உலகத்தவர் அனைவர் முதுகிலும் விழுந்தது. எல்லோரும் திகைத்து நிற்க கூலியாள் மறைந்தான். இந்த நிகழ்வினால் வாதவூரர் மந்திரிப் பதவியைத் துறந்து திருப்பெருந்துறை சென்று வழிபாட்டில் தன்னை ஈடுபடுத்திப் பாடல்கள் பாடுகிறார். துறவியாகி குருவைத் தேடுகிறார். மந்திரியாக இருந்தபோது நடந்த நிகழ்வுகளை எல்லாம் தில்லையிலே பாடிய கீர்த்தித் திருவகவலில் குறிப்பிட்டுள்ளார்.
"குதிரையைக் கொண்டு குடநாடு அதன் மிசை
சதுர்பட சாத்தாய் தான் எழுந்து அருளியும்"

Page 45
"மொக்கணி அருளிய முழுத் தழல்மேனி சொக்கதாக் காட்டிய தொன்மையும் அரியொடு பிரமனுக்கு அளவறி ஒண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டுகொண்டு அருள் அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று ஈண்டு கனகம் இசையப்பெறாது
ஆண்டான் எங்கோன்"
"மதுரைப் பெருநன் மாநகர் இருந்து குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும் ஆங்கது தன்னில் அடியவளுக்காகப் பாங்காய் மண்சுமந்து அருளிய பரிசும்" வாதவூரர் தன் பிறவி பற்றிய விளக்கத்தைத் தேடுகிறார். கல்வியறிவு இருந்த போதும் வழிபாட்டு நிலையில் அவர் தனக்கு வழிகாட்டிய குருவை மீண்டும் காணவேண்டும் என விரும்பினார். மனிதப் பிறவிக்கு முன்னைய படிமுறை வளர்ச்சிபற்றிய அவருடைய கருத்து அவருடைய தேடலை வெளிப்படுத்தி நிற்கிறது.
"பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்றறியேன் புல்லாகிப்பூடாகிப்புழுவாய்மரமாகிப் பல்விருகமாகி பறவையாய்பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல் அசுரராகிமுனிவராய் தேவராய் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்" ஆனால் அவருடைய மனம் புதிய வழிபாட்டு நடைமுறை ஒன்றை அறிந்து செயற்பட்டது. அதனால்,
"சிந்தை மகிழ சிவபுராணம்தன்மை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன் யான்" என்று பாடுகிறார். ஞான நிலையிலே வழிபாடு தொடர அவர் முயல்கிறார்.
ത്ത 78 മത്ത

நெடும் பாட்டாக 225 அடிகளில் போற்றித் திருவகவல் பாடுகிறார். மனிதன் கருவாகித் தாயின் வயிற்றினுள்ளே வளர்ந்து குழந்தையாய் பிறக்கும் வரை ஏற்படக்கூடிய துன்பங்களையெல்லாம் எடுத்துக் கூறியுள்ளார்.
"தாயின் கருப்பையின் உள்ளே குன்றுதல் இல்லாத புழுக்கள் இடும் போரின் நடுவே பட்டுமடியாது தப்பியும் முதல் திங்களில்தான்றிக் காயின் வடிவினை ஒப்பதாகி இருவகைப்பட்ட தன்மைகளின்று தப்பியும் இரண்டாம் திங்களில் கருத்தோற்றத்தின் ஒன்றுபட்ட தன்மையினின்றுதப்பியும் மூன்றாம் திங்களில் தோன்றும் அந்த மதநீருக்குத்தப்பியும் நான்காம் திங்களில் பெரிய இருளுக்குத் தப்பியும் ஐந்தாம் திங்களில்சாதலுக்குத்தப்பியும் ஆறாம்திங்களில் கருப்பையின் நெருக்குதலான் நேரும் துன்பத்திற்குத்தப்பியும் ஏழாம் திங்களில் கீழுள்ளநிலத்தின் வந்து பிறத்தலுக்குத்தப்பியும் எட்டாம் திங்களில் உண்டாகும் துன்பத்திற்குத்தப்பியும் ஒன்பதாம்திங்களில் வரும் துன்பங்களுக்குத்தப்பியும் தாயின் கருப்பையை விட்டு அகலுதற்கு இசைந்த பத்தாம் திங்களில் தாயும் தானுமாய்ப்படும் துன்பக்கடலில் உளதாகியதுயரத்தினின்றும் தப்பியும்" என நிரல்படுத்திக் காட்டியுள்ளார். இன்று விஞ்ஞானத்தின் மூலம் கண்டறியும் கருவின் வளர்ச்சி நிலைகளையும் அது அழிதற்குரிய காரணிகளையும் ஒரு மகப்பேற்றுமருத்துவர்போல விளக்கியுள்ளார்.
வழிபாட்டு நிலையில் 'போற்றி என்னும் சொல்லைச் சாற்றி வழிபடும் முறைமையை வாதவூரர் காட்டுகிறார். ஐம்பொறிகளாலும் ஐம்புலனாலும் வழிபாடு செய்யலாம். 130 முறை இச்சொல்லைப் பயன்படுத்தி உள்ளார். என்புருகிநின்று வழிபடல், நாதா என அரற்றி வழிபடல், உரைதடுமாறிவழிபடல், உரோமம் சிலிர்ப்ப வழிபடல், கரம்குவித்து வழிபடல், கண்களிகூர வழிபடல், கண்துளி அரும்ப வழிபடல், என நாள்தோறும் வழிபடும் முறைமையையும் பாடியுள்ளார். திருவாதவூரர் வாழ்வியல் அனுபவமும் கல்வியறிவும் வழிபாடு பற்றிய தெளிவு நிலையை அவர் பெறக்காரணமாயின. கற்றபடி ஒழுகல் என்ற ஞானம் அவருக்குக் கைகூட குருந்தமர நீழலில் பெற்ற குருவின் உபதேசம் துணைநின்றது.அரச வாழ்வு துறந்து வழிபாடே வாழ்வாக வாதவூரர் தில்லைக்கு வருகிறார். அங்கே
- 79 m

Page 46
பதிகம் பாடாது நெடும்பாட்டுகளே பாடுகிறார். திருப்பெருந் துறையில் பெற்ற அற்புத அனுபவத்தின் நினைவாகவே வாழ்கிறார். குருநாதர் பணிப்பின் பேரில் திருத்தல வழிபாடு செய்யப் புறப்படுகிறார். திருப்பெருந்துறை அவர் வாழ்வில் மறக்க முடியாத இடமாகிற்று. அங்கு திருச்சதகம் என்னும் 100 பாடல்களைப் பாடி வழிபாடு செய்தார். அங்கு பக்தி வைராக்கிய நிலையை இப்பாடல்கள்காட்டுகின்றன. பக்தி என்பது உள்ளம், உரை, உடல் என்னும்மூன்றினாலும் வழிபடுவது. அவ்வாறு வழிபடும் போது உலகியல் தொடர்பான பொருள்களில் வெறுப்பு ஏற்படும். இதுவே பக்தி வைராக்கிய நிலையாகும்.
H 80 m

நம்பணி கொண்டவன்
வழிபாட்டிலே தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட வாதவூரர் பாடிய திருச்சதகப்பாடல் படிப்போர் மனத்தையும் கரைய வைக்கும் தன்மையன. திருவாசகம் எனப் போற்றப்பட்டன. மணிவாசகங்கள் என மதிக்கப்பட்டன. இப்பாடல்களின் சிறப்பால் திருவாதவூரர் பெயரும் மணிவாசகர் என மாறி வழங்கலாயிற்று. சதகம்' என்னும் வடசொல் நூறு எனப் பொருள் தருவது. பதிற்றுப்பத்து நிலையில் பாடப்பட்டவை. பலவகை யாப்பு முறையில் பாடப்பட்டவை. திருவாசகத்தைப் பலர் தேனுக்கு ஒப்பிட்டுப் பாடியுள்ளனர்.
"தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்" மணிவாசகர் பாடல்களை வேதத்துடன் ஒப்பிட்டுச் சிவப்பிரகாச அடிகள் வருமாறுபாடியுள்ளார்.
"விளங்கு இழைபகிர்ந்த மெய்யுடை முக்கண் காரணன் உரையெனும் ஆரண மொழியோ ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல் மலர்வாய்ப்பிறந்த வாசகத்தேனோ யாதோ சிறந்தது என்குவர் ஆயின் வேதம் ஒதின் விழிநீர் பெருக்கி நெஞ்சு நெக்குஉருகிநிற்பவர் காண்கிலேம் திருவாசகம் இங்கு ஒருகால் ஒதின் கருங்கல் மனமும் கரைந்து உக கண்கள் தொடுமணல் கேணியில் சுரந்துபாய மெய்ம்மயிர் பொடிப்பவிதிர் விதிர்ப்பு எய்தி அன்பர் ஆகுநர் அன்றி

Page 47
மன்பதை உலகின் மற்றையர் இலரே" வேத ஒலி கேட்டு விழிநீர் பெருக்கியவர் இல்லை. ஆனால் திருவாசகத்திற்கு உருகாதவர் வேறு ஒரு வாசகத்துக்கும் உருகமாட்டார் என்பது தெளிவு. வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் பாடிய "ஆளுடைய அடிகள் அருள் மாலை" என்னும் பதிகத்திலேதிருவாசகத்தின் பெருமையையும் சிறப்பையும் நன்கு விளக்கியுள்ளார். அவற்றில் ஒன்று,
"வான்கலந்த மாணிக்கவாசகநின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றிலே தேன்கலந்து, பால்கலந்துசெழும் கணித்தீஞ்சுவை கலந்து என் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே" மணிவாசகர் பாடல்களிலே சொற்களின் பொருளும் உணர்வும் ஒன்றோடு ஒன்று இறுகப் பிணிந்துள்ளன. திருச்சதகப் பாடல்களில் அவர் மனவுணர்வு நிலை தெளிவாக வெளிப்பட்டுள்ளது. ஒவ்வொரு பத்துப்பாடல்களிலும் அவன் தன் நிலை சுட்டுவது அவருடைய வழிபாட்டு நிலையைக் காட்டுகிறது. மந்திரியாய் மதிப்புடன் வாழ்ந்தவர் தன்னைப் பக்குவப் படுத்திய தன்மையை அறிவிக்கிறது. மெய் உணர்தல் என்னும் முதல் பத்துப் பாடல்களில் தன் உடல் உள நிலை காட்டுகிறார். அன்பு மேலிட்டால் உடல் மயிர்சிலிர்த்தல். நடுங்குதல், கைகளைத் தலையிற் குவித்தல், கண்ணிர் பெருகல், உள்ளம் உருகல், திருவடி போற்றி நாவால் ஏத்துதல் போன்ற மாற்றங்களைக் குறிப்பிடுகின்றார். வளமான வாழ்வியலை வெறுக்கிறார். பிற தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாது மரபான வழிபாட்டையே கைக்கொள்கிறார். தன் வழிபாட்டு நிலை கண்டு பிறர் தத்தம் மனம் போனபடி பேசுவதால் உலக வாழ்விலிருந்துவிடுபட்டு எப்போது சாவது என்ற நினைப்புடன் இருக்கிறார். தன் குறையை வருமாறு கூறுகிறார்.
தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் பலர் மலர்கள் இட்டு வழிபடும் மரபைத் தான் மறந்ததை நினைவு கூருகிறார். அன்பருள் புகத்தகுதியற்ற தன்னை குருவாய் வந்து ஆட்கொண்ட அருளை எண்ணி வியக்கின்றார். நாடகத்தால் தானும் அடியார் போல நடித்து வழிபாடு செய்ததை ஒப்புக் கொள்கிறார். நாத்தழும்பேறப் போற்றுதல் செய்யாது இருந்தமை அவர் உள்ளத்தில் உறுத்துகிறது.

ஆமாறு உன்திருவடிக்கே அகம் குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்தாடேன் சாமாறே விரைகின்றேன் சதுராலே சார்வேனே மணிவாசகர் மனதிலே கோயில் வழிபாடு செய்யாமல் மந்திரியாக வாழ்ந்த வாழ்வு பயனற்றதாகத் தெரிகிறது.
“விரையார்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன்” "அலறிடேன் உலறிடேன் ஆவிசோரேன்” தன் நெஞ்சத்தையே குறை கூறுகிறார். குருவாகி வந்து கழல் காட்டி ஆட்கொண்டபோதும் தான் வழிபாட்டைத் தொடரவில்லையே என வருந்துகிறார். தேடி வழிபாடு செய்யும் மனம் தேவை என்கிறார் மணிவாசகர் தன்னை நாய் என இழித்துரைக்கின்றார். "நாயிலாகிய குலத்தினும் கடைப்படும் என்னை நன்நெறிகாட்டி.” "ஆண்டு கொண்டுநாயினேனை ஆவ என்றருளுநீ” தான் பொய்யன் என்று கூறும் மணிவாசகர் உத்தரகோசமங்கை சென்று இறைவனுக்கு விண்ணப்பம் செய்கிறார். இப்பதிகம் நீத்தல் விண்ணப்பப்பதிகம் எனப்படும். 50 பாடல்கள் அமைந்துள்ளன. இவ்வுலக வாழ்வை நீத்தல் விரும்பி வழிபாடு செய்தல். தன் முயற்சியால் முடியாததை வழிபட்டுப் பெறலாமென்பதை மணிவாசகர் இப்பதிகத்தில் உணர்த்தி யுள்ளார். கோவில் கோலமும் அங்கு இறைவன் தோற்றமும் கண்டு பாடிய பாடல்கள் இவை. இப்பதிகத்தில் தனது ஆசையின் தன்மையை வெளிப்படையாக எடுத்துக்கூறுகிறார்.
“காருறுகண்ணியர் ஆற்றங்கரை மரமாய் வேருறுவேனை விடுதிகண்டாய்.” "செழிகின்ற தீப்புகு விட்டிலின் சில்மொழியாரில் பல்நாள்
விழுகின்ற என்னை விடுதிகண்டாய்.
"கொழுமணி ஏர்நகையார்கொங்கைக் குன்றிடைச் சென்று குன்றி
விழும் அடியேனை விடுதிகண்டாய்.”
سے 83 ســــــــــــــ

Page 48
"வலைத்தலை மானன்ன நோக்கியர் நோக்கின் வலையிற்பட்டு
மிலைத்து அலைந்தேனை விடுதிகண்டாய்.”
"முதலைச் செவ்வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்பமூழ்கி
y
விதலைச் செய்வேனை விடுதி கண்டாய்.
"முழுது அயில் வேல் கண்ணியர் என்னும் மூரித்தழல் முழுகும் விழுதனையேனை விடுதி கண்டாய்.”
"உழைதரு நோக்கியர் கொங்கை பலாப்பழத்து ஈயின் ஒப்பாய்
yy
விழை தருவேனை விடுதி கண்டாய்.
மந்திரியாக வாழ்ந்த காலத்தில் மணிவாசகர் பெண்கள் பால் கொண்டிருந்த விருப்பை இருநிலையிலே வெளிப்படுத்துகிறார். ஒரு நிலையில் பெண்கள் தன்னை மயக்குவதாகவும் மறுநிலையில் பெண்களின் அழகு கண்டுதானே மயங்குவதாகவும் குறிப்பிடுகிறார். இளமையும் மந்திரி பதவியும் வாழ்வியற் சூழலும் இன்ப வாழ்வில் மணிவாசகர் ஈடுபட வாய்ப்பாய் இருந்தன. வழிபாட்டு நிலையால் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவத்தால் உணர்ந்த பின்புதான் அவருக்குச் சிற்றின்பநிலை தெளிவாகிறது. மனித வாழ்வியலில் இல்லறத்திலும் ஈடுபடாது பெண்பித்தனாய் வாழ்ந்த நிலை புரிந்தது. உள்ளம் வழிபாடு செய்யும் பயிற்சியற்றிருந்தது. வழிபாடென்பது உலகத்து இன்பங்களை அடைவதற்கான விண்ணப்பம் என்றே வாதவூரர் எண்ணிவாழ்ந்தார். ஆனால் வழிபாடு முதுமை வரை எப்போதும் இன்பமாக வாழ விண்ணப்பம் செய்வது என்பதைப் பின்னே உணர்ந்தார். இதனால் இறுதிப்பாடல் அத்தகைய விண்ணப்பமாய் அமைகிறது. "எசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து வேசறுவேனை விடுதி கண்டாய்
செம்பவள வெற்பின்
m 84 m.

தேசு உடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கி காய்சின ஆலம் உண்டாய் அமுது
உண்ணக் கடையவனே” மற்றவர்களைக் காப்பதற்காக நஞ்சுண்ட இறைவனை நாமும் வழிபட்டால் நன்மையடையலாம் என்பதே மணிவாசகர் நீத்தல் விண்ணப்பத்தால் கூறும் செய்தியாகும். தான் வழிபாட்டுப் பயிற்சி இன்றி வாழ்ந்ததையும் தனித்து நிற்பதையும் நினைத்து விண்ணப்பம் செய்கிறார்.
"சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னைத்
தாங்கிக் கொள்ளே” "வாருறு பூண் முலையாள் பங்க என்னை வளர்ப்பவனே" “வழிநின்று நின் அருள் ஆரமுது ஊட்டமறுத்தனனே" “ஒறுத்து எனை ஆண்டுகொள். s “சிறியேன் பாவம் தீர்ப்பவனே.” “எந்தை பிரான் என்னை ஆளுடை என் அப்பனே" "அன்னை ஒப்பாய் எனக்கு அத்தன் ஒப்பாய் என்
அரும்பொருளே’ “என் பிறவியை வேரோடும் களைந்து ஆண்டு கொள்” “தொடர்வரியாய் தமியேன் தனிநீக்கும் தனித்துணையே’ "வினையேனுடை மனத்துணையே என்றன் வாழ்முதலே எனக்கு எய்ப்பில் வைப்பே' “தேடிற்றிலேன் சிவன் எவ்விடத்தான் எவர்கண்டனர் என்று ஒடிற்றிலேன் கிடந்து உள்ளுருகேன் நின்று உழைத்தானே” வழிபாட்டு நடைமுறைகளால் பெறும் பலத்தையும் மகிழ்ச்சியையும் மணிவாசகர் வெகு விரைவாகப் பெற விரும்புகிறார். தனக்கு அன்னையாகவும் அத்தனாகவும் ஒருவர் இருக்க விழைந்து வேண்டுதல் செய்கிறார். எனவே ஏனைய தலங்களுக்குச் சென்று வழிபட விரும்புகிறார். உறவு நிலையில் வாதவூரருக்கு யாருமில்லை. இல்வாழ்க்கை நிலையும் இல்லை. இறைவனையே தனக்குத் தாயாகவும் தந்தையாகவும் எண்ணி வாழ்கிறார். தன்னுடைய வாழ்வியலை ஒழுங்குபடத் திட்டமிட்டு நடத்த

Page 49
எண்ணுகிறார். திருச்சதகத்து இறுதிப்பாடல் இதற்குச் சான்று. “பாடவேண்டும் நான் போற்றி நின்னையே
பாட நைந்து நைந்து உருகி நெக்கு நெக்கு ஆட வேண்டும் நான் போற்றி அம்பலத்து
ஆடு நின் கழற்போது நாயினேன் கூட வேண்டும் நான் போற்றி இப் புழுக்
கூடுநீக்கு எனைப் போற்றி பொய்யெலாம் வீட வேண்டும் நான் போற்றி வீடு தந்து
அருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே" திருத்தலங்களை வழிபட்ட மணிவாசகர் திருவண்ணாமலையிலே பாடிய பதிகம் திருவெம்பாவை என்று அழைக்கப்படுகிறது. சக்தியை வியந்து பாடிய பாடல்கள் எனக் கருதப்படுகிறது. வழிபாட்டு மரபு ஒன்றை அடிப்படையாக வைத்து மணிவாசகர் இப்பதிகத்தைப் பாடியுள்ளார். அவர் காலத்திலே நடைமுறையாக இருந்த மார்கழிநீராடலை மனதுள் கொண்டு தனது வழிபாட்டு அனுபவத்தைப் பாடியுள்ளார். இருபது பாடல்களாக அமைந்துள்ளார். பாவை நோன்பு என்னும் வழிபாட்டு மரபைப் பெண்கள் பேணி வந்தனர். மழையை வேண்டி நோன்பிருந்தனர். விடிகாலையில் எழுந்து நீராடி பாவை வடிவிருந்த சக்தியைத் துதித்தனர். நல்ல மழை பெய்து நாடு செழிக்கவும் வீடு விளங்கவும் கூட்டாக வழிபாடு செய்தனர். இந்த நடைமுறையை மணிவாசகருக்கு முன்னே வாழ்ந்த ஆண்டாள் 30 பாடல்களில் 'திருப்பாவை’ எனப் பாடியுள்ளாள். மணிவாசகரும் ஆண்டாளின் அடி ஒற்றியே 'திருவெம்பாவை' பாடியுள்ளார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் 'எம் பாவாய்' என்ற சொற்றொடரை அமைத்துள்ளார். முதல் பத்துப் பாடல்களும் தூக்கத்திலிருந்து எழுப்பும் பாடல்களாக உள்ளன. முதல் எட்டுப் பாடல்களிலும் குறிப்பிடப்படும் பருவப் பெண்களின் அகவை முறையே 12, 11, 10, 9, 8, 7, 6, 5 எனக்கருதப்படுகிறது. முதற் பாட்டில் குறிக்கப்படும் பெண் மங்கைப்பருவத்தினள். மாதே வளருதியோ என்ற பாடல் தொடர் இதனை உணர்த்தும். 2, 3, 4, 5 பாட்டில் குறிக்கப்படும் பெண்கள் பெதும்பைப் பருவத்தினர். நேரிழையாய், முத்தன்ன
வெண்நகையாய், ஒள்நித்திலநகையாய், பாலூறு தேன்வாய்ப்படிறீ, என்னும்
س= 86 --

தொடர்கள் இதனை உணர்த்தும். ஆறு, ஏழாம் பாட்டில் குறிக்கப்படுவோர் பேதைப்பருவத்தினர். மானே, அன்னே என்ற சொற்கள் இதனை நன்கு உணர்த்தும். எனவே வயது நிலையில் வேறுபாடின்றி சிறுமியரும் கன்னியரும் கூட்டாக வழிபாடு செய்யும் மரபு பேணப்பட்டதை மணிவாசகர் பாடல் காட்டுகிறது. இந்நீராடலே 'அம்பா ஆடல், "தைநீராடல்' என்றும் கூறப்பட்டுள்ளதை அறியலாம். பெண் தாயோடு சென்று நீராடி வழிபாடு செய்யும் மரபு இருந்துள்ளதை பரிபாடலும் குறிப்பிட்டுள்ளது. நீராடி வழிபாடு செய்யும் நோக்கத்தை மணிவாசகர் பாடலில் கூறுகிறார். வழிவழியாக வந்த வழிபாட்டு மரபை அடியாரைப் பேணும் முறைமையை பாடல் மூலம் நன்கு அறியமுடிகிறது.
“முன்னைப்பழம்பொருட்கு முன்னைப்பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே உன்னைப்பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம் அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணிசெய்வோம் இன்னவகையே எமக்கு எங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம் எல்ஓர் எம்பாவாய்” அடியவர்களைப் பணிந்து வாழும் மரபும் வழிபாடு செய்வோரையே வாழ்க்கைத் துணையாகக் கொள்ளும் மரபும் அக்காலத்திலே பேணப்பட்டன. 1-20 ஆவது வரையுள்ள பாடல்களில் பெண்களின் நீராட்டு நிலை கூறப்பட்டுள்ளது.
அக்காலத்தில் திருக்குளத்தில் பெண்கள் நீராடினர். கைகளால் நீரைக் குடைந்து ஆர்ப்பு அரவம் செய்தும் பூத்திகழும் பொய்கைகளில் நீராடினர். பொங்கு மடுவிலே புகப் பாய்ந்து நீராடினர். பூம் புனலில் நீராடினர். எனவே வழிபாட்டுத் தலங்களை அடுத்துள்ள நீர் நிலைகளான பொய்கை, மடு, புனல் என்பவற்றில் பெண்கள் கூட்டாகச் சென்று நீராடி வழிபட்டதை அறியமுடிகிறது. 16ஆம் பாடல் பெண்கள் மழையை வேண்டிப்பாடுவதாக அமைந்துள்ளது. 19ஆம் பாடல் வழிபாட்டு மரபுபேணும் ஆடவரே கணவனாக வேண்டுமெனக் கூறுகிறது.
ത്ത 87 -ത്ത

Page 50
“உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கு அப்பழம் சொல் புதுக்கும் எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கு ஒன்று உரைப்போம் கேள் எம்கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க எம்கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க கங்குல் பகல் எம் கண் மற்று ஒன்றும் காணற்க இங்கு இப்பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல் எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏல்ஓர் எம்பாவாய்” மணிவாசகர் வாழ்ந்த காலத்தில் வழிபாட்டு மரபைப் பெண்கள் பேணுவது மட்டுமன்றி ஏனைய பெண்களுக்கு எடுத்துரைக்கும் பணியையும் செய்து வந்தனர். இதற்குத் திருவெம்பாவைப் பாடல்களே சான்றாகும். இன்னும் பெண்களின் விளையாட்டுகள், பாடல் மரபுகளைப் பற்றியும் மணிவாசகர் பதிகம் அமைத்துப் பாடியுள்ளமை இதனை உறுதி செய்கிறது. திருவண்ணாமலைத் தலத்திலே பாடிய திரு அம்மானைப் பதிகத்தில் பெண்கள் விளையாட்டு மரபான ஒரு பாட்டை வழிபாடு செய்யும் பாடலாக்கியுள்ளார். தன் வாழ்வியல் அனுபவத்தையும் இணைத்துப் பாடியுள்ளார்.
"பண்சுமந்த பாடல் பரிசு படைத்து அருளும் பெண் சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன் கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண் சுமந்து கூலி கொண்டு அக்கோலால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனிபாடுதுங்காண் அம்மானாய்” பாண்டிநாட்டிலே நடந்த இந்த அற்புத அனுபவத்தை மணிவாசகரால் மறக்க முடியவில்லை. திருவிளையாடற்புராணம் மண்சுமந்த படலம் பாடல் 53 இதனை வருமாறு காட்டுகிறது.
"பாண்டியன் முதுகிற்பட்டதுசெழியன்
பன்னியர் உடம்பினில் பட்டது ஆண்டகை அமைச்சர் மேனிமேற்பட்டது
அரசிளம் குமரர் மேல் பட்டது

தீண்டிய கழற்கால் வீரர்மேல் பட்டது தீவுளிமேல் பட்டது பருமம் பூண்டவெம் கரிமேல்பட்டது எவ்வுயிர்க்கும்
போதல் மேல்பட்ட அத்தழும்பு' காலம்காலமாக இந்த நிகழ்ச்சி நினைவுகூரப்பட வேண்டியதென வாதவூரர் எண்ணினார். இதேபோன்று வள்ளைப்பாட்டு, உரல்பாட்டு, உலக்கைப் பாட்டு, அவலிடி, அம்மனை, வள்ளை முதலிய பெயர்களால் வழங்கப்பட்ட பெண்கள் தொழிற்பாடல் மரபினையும் வழிபாட்டிலே இணைய வைத்தார். காதலனுடைய திருமுழுக்கிற்கு வேண்டிய மணப்பொடியினை காதலியும் தோழிமாரும் இடித்துப் பெறும் மரபு இருந்தது. காதலன் பெயர், ஊர், பெருமை, குணம்பாடிக் குற்றும் பெண்களைப் போல மணிவாசகரும் திருமுழுக்குப் பொடியைச் சிவபெருமானுக்கு அமையப் பாடியுள்ளார். இங்கே செய்தொழில் நிலையிலே வழிபாடு பேணவகை செய்தார். அவர் குறிப்பிடும் செய்திகள் இதனை வலியுறுத்துகின்றன.
"அத்தன் ஐயாறன் அம்மானைப்பாடி’ “கூவுமின் தொண்டர் புறம் நிலாமே
குனிமின் தொழுமின் எங்கோன் எங்கூத்தன் தேவியும் நானுமாய் வந்து எமையாள.” “தேசமெலாம் புகழ்ந்து ஆடும் கச்சி
திருஎகம்பன் செம்பொன் கோயில் பாடி’ "நாண்மலர்ப்பாதங்கள் சூடத்தந்த
மலைக்குமருகனைப்பாடிப்பாடி’ "நாயின் கடைப்பட்ட நம்மை இம்மை
ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி’ “மேதகு தென்னன் பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப்பாடி” "பாடுமின் நம்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடி’ “என்னுடை ஆரமுதன் எங்கள் அப்பன்
எம்பெருமான் இமவான் மகட்கு
= 89 -

Page 51
தன்னுடைக் கேள்வள் மகன் தகப்பன்
தமையன் எம் ஐயன் தாள் பாடி’ "கோனை பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட கூத்தனை நா தழும்பேற வாழ்த்தி” "சிவபெருமான் புரம் செற்ற கொற்றச்
சேவகன் நாமங்கள் பாடிப்பாடி’ "ஊனக மாமழுச் சூலம் பாடி’ "ஏழை அடியேமை ஆண்டுகொண்ட
நயந்தனைப் பாடி” சிவன் தன்னைக் குருவாய் வந்து வலிய ஆட்கொண்ட அனுபவத்தைப் பிறர்க்கு எடுத்துரைக்க மணிவாசகர் வள்ளைப்பாட்டைப் பயன்படுத்தி உள்ளார். தொழிற்பாடலே வழிபாட்டு மரபு பேணத்துணை நிற்கும் என்பதையும் உணர்த்தியுள்ளார். பெண்கள் மத்தியில் வழிபாடு பரவினால் அது எல்லோருக்கும் பரவும் என மணிவாசகர் எண்ணினார். ஆனால் இந்த பதிகம் தற்காலத்தில் இறப்பு நடைமுறைகளுடன் கலந்து விட்டது. ஈமச்சடங்கிலே பாடப்படுகிறது. சுண்ணமும் இடிக்கப்படுகிறது. இக்கலப்பு ஏற்பட்டதற்குரிய காரணம் ஆராயப்படவேண்டியது.
மணிவாசகர் பாடலோடு இசையும் சேர்ந்த வழிபாட்டைச் செயற்படுத்தினார். கூட்டு வழிபாட்டு நிலையிலே எல்லோரும் சேர்ந்து படகம் என்னும் இசைக்கருவியை ஒலித்துப்பாடும் மரபு இருந்துள்ளது.
"குலம்பாடி கொக்கு இறகும் பாடி கோல் வளையாள் நலம்பாடி நஞ்சுண்டவா பாடி நாள்தோறும் அலம்பார் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” வழிபாட்டிற்கு உரிய பூவைக் கொய்கின்ற மகளிரைக்கண்ட மணிவாசகர் இறைவன் புகழ்பாடி பூக்கொய்ய 'திருப்பூவல்லி’ எனும் பதிகம் பாடியுள்ளார். திருப்பென்னூ சல் என்னும் பதிகம் பெண்கள் விளையாட்டில் இறைவழிபாட்டை இணைத்துப் பாடியதாகும்.
மணிவாசகர் இலங்கைக்குச் சென்றதாக திருவாசத்தை ஆங்கிலத்திலே மொழிபெயர்த்த மேலைத்தேச சிறிஸ்தவ பாதிரியான போப்
=س= 90 ==

குறிப்பிட்டுள்ளார். பொன்னம்பலர் பற்றி மணிவாசகர் பாடித்திரிவது புத்த சமய நெறி நின்றாரை அவரோடு வாதிட வைக்கின்றது. தில்லைக் கோவிலுக்கு இலங்கை மன்னனும் சென்றான். வாதிட வந்த புத்தர்கள் ஊமைகளாகினர். மன்னனின் பிறவி ஊமையான மகளைப் பேச வைக்க மணிவாசகர்திருச்சாழல்பாடுகிறார். இப்பதிகம் சிவவழிபாடு தொடர்பான ஐயங்களை நீக்கும் விளக்கப் பதிகமாகப் பாடப்பட்டுள்ளது. ஊமைப் பெண் விடை பகர்வது போலப் பாடல்கள் அமைந்துள்ளன. பாடல்களின் வினா விடை அமைப்பு வருமாறு அமையும். 1. வெண்ணிறுபூதுவதும் அரவம்பூண்பதும் மறைபேசுவதும் ஏன்?
ஈசன் எல்லாவுயிரிடத்தும் இயல்பானவன் என்பதை காட்டவே. 2. துன்னும் கோவணம் அணிந்தது ஏன்?
நான்கு வகை ஒசைகளின் சரடாக அதைக் காட்டுவதற்கே. 3. தாயும் தந்தையும் இல்லாமல் தனியனாக இருப்பது ஏன்?
அவன் தனியன் ஆயினும் தீமைகளை அழிக்க வல்லவன் காண் 4. பிரமனையும், மன்மதனையும், கூற்றுவனையும், சந்திரனையும் கிள்ளியும், எரித்தும், உதைத்தும், தேய்த்தும் கொடுமை செய்த பழிச் சொல்லை ஏன் பெற்றான்?
தேவர்களை குற்றம்கெடுத்து குணம் கொடுத்து வாழ்விக்கவே. 5. தக்கன் எச்சன் தலை அறுத்து தேவர் கணம் தொலைத்தது ஏன்?
நெறியல்லா நெறி சென்று வெறியாட்டு எடுப்பவரை நல்வழிப்படுத்துவதற்கே. 6. பெருநெருப்பாய் பிரமனும் மாலும் அறியாமே நின்றதேன்?
அவர் செருக்கினால் ஏற்பட்ட கலகத்தைத் தீர்ப்பதற்கே 7. மலைமகள் ஒரு பாகம் இருக்க சடைமேல் மற்றொருத்தி ஏன்? கங்கையால் உலகம் அழியாமல் காப்பதற்காக 8. ஆலம் உண்டது எதற்காக?
தன்னை அடைந்தவரின் துன்பம் தீர்ப்பதற்காக 9. பெண்பால் உகந்த பித்தனாய் இருப்பதேன்?
உலகவாழ்க்கையில் ஆருயிர்கள் தோன்றுவதற்காக.

Page 52
10.நாயேனை ஆனந்த வெள்ளத்தில் அழுத்துவித்தது ஏன்? தேவர்கள் வான்பொருள் காண்பதற்காக 11. எலும்புக் கூட்டைச் சுமப்பது ஏன்?
காலமுடிவைச் செய்பவன் என்பதைக் காட்டவே. 12. வெறுக்கத்தக்க தோற்றமுடையானுக்கு யார் அடியவராவார்?
அயனும் திருமாலும் இந்திரனும் வழிவழி அடியவராவார் 13.மலையரசன் மகளை உலகு அறிய மணம் செய்தது ஏன்?
மனையறம் புரிந்து உலகத்தைக் காப்பதற்காகவே, 14.தில்லையில் தான் நின்று ஆடும்நிலையோடு என் திருவாலங்காட்டில்
கால்மாறி ஆடியதேன்? காளியிடமிருந்து உலகத்தைக் காப்பதற்காகவே, 15.இடபத்தை வாகனமாகக் கொண்டது ஏன்?
தன்னை திருமால் ஆனேற்றுவடிவாய் தாங்கியமையால் 16. ஆலின் கீழிருந்து அறம் உரைத்தது ஏன்?
உட்கலனைச் செம்மைப்படுத்தி தீமையை அழிப்பதற்காகவே 17.கூத்தாடுபவனையும்பிச்சை ஏற்பவனையும் முதல்வன் எனலாமோ?
அடியார்க்கு எளியராய்த் திகழ்ந்து ஆட்கொள்ளுவதாலே. 18. நாரணனுக்கு சலந்தரன் உடல் பிளக்கச் சக்கரம் அருளியது ஏன்?
நாரணனின் மலர் வழிபாட்டுப்பயனால் அருளினான். 19.நஞ்சினை உண்டது ஏன்? புலித்தோல் உடுத்தது ஏன்?
எதனை உண்டு எதனை உடுத்தாலும் சிறுமை
அடையார் என்பதை விளக்குதற்காகவே, 20. நால்வர்க்கு ஆலின் கீழ் அறம் உரைத்தது ஏன்?
உலகம் அறியவேண்டிய உலக இயற்கையை
அறிவிப்பதற்காகவே, இத்தகைய வினாக்கள் இன்றும் எழுகின்றன. அவற்றைத் தெளிவுபடுத்த மணிவாசகர் பாடல்கள் உதவுகின்றன. வழிபாடு மனிதரிடையே நல்ல ஒழுக்கமான வாழ்வியலைத் தோற்றுவிக்கவும் உதவும். திருக்கோவில் வழிபாட்டில் திருப்பள்ளியெழுச்சி என்ற நடைமுறையை மணிவாசகர் பாடியுள்ளார். விடிகாலையில் வழிபாடு செய்வதே சிறந்தது. நாளில்
=س= 92 -س-

தொடக்கத்தில் முதற் செயற்பாடாக வழிபாடு அமைய வேண்டும். இருள் நீக்கத்தையும், கதிரவன் வருகையையும் கண்ணால் காணவேண்டும். பறவைகளின் ஒலிப்பைக் காதால் கேட்கவேண்டும். அந்த நாளின் அதிகாலைப் பொழுது வழிபாட்டை நினைவுபடுத்துவது வழிபாட்டில் வயப்பட்டு நின்றாரை மணிவாசகர் காட்டுகிறார். "இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால்
இருக்கொடுதோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்து அருளாயே’ வழிபாட்டில் ஆடல், பாடல், இசை, மலர் என்னும் நான்கும் இன்றியமை யாதவை. மணிவாசகர் தில்லையிலே பாடிய பதிகங்கள் இந்நான்கும் வழிபாட்டில் நன்கு இணைந்திருந்தவாற்றைக் காட்டுகின்றன. வழிவழியாக வந்த அடியார் மரபில் தானும் இணைந்ததை மணிவாசகர் அடிக்கடி நினைக்கிறார். இறைவன்' என்ற கோட்பாடு வழிபாடு என்ற செயற்பாட்டின் மூலம் காலம் தோறும் பயிற்றப்பட்டு வந்துள்ளது. பழவடியார் கூட்டம் ஒன்று புதிய அடியார்களை வழிபாட்டில் ஆற்றுப்படுத்துகிறது. இறைவன் பெயரைச் செப்பி, அவன் திறம்பேசி, திருக்கோயில் வலம் வந்து, உண்பதன் முன் மலர் பறித்து வழிபடுபவர் நோய்களால் நலியப்பெறார். மலரிலே உள்ள தேனை வண்டு உண்பதற்கு முன் அதனைக் கொய்தல் வேண்டும். காலையில் எழுந்து நீராடி அரும்பு மலர்கள் கொண்டு ஆர்வத்துடன் விரும்பி விளக்கு ஏற்றி தூபம் இடுவார் வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு இருக்கும். வழிபாடு செய்யும் நினைப்பு வந்து விட்டால் தூய்மை முதலில் தோன்றும். உடல் அழுக்கையும் உள்ளத்து அழுக்கையும் நீக்கும் செயற்பாடு நடைபெறும். வாழ்வில் நிறைவு ஏற்படும்.
வழிபாட்டினால் பெரும் அதி உன்னதமான பயனை வாதவூரர்
அடைந்தார். குருவாய் வந்து ஆண்டு கொண்ட வரை முழுமையாக
كس= 93 =س-

Page 53
உணர்ந்தபோது அவர் ஞானம் பெற்றவரானார்.
"தந்தது உன் தன்னைக் கொண்டது என்தன்னை
சங்கரா ஆர் கொலோ சதுரர் அந்தம் ஒன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீபெற்றது என்பால் சிந்தையே கோவில் கொண்ட எம்பெருமான்
திருப்பெருந்துறையுறை சிவனே எந்தையே ஈசா உடல் இடம் கொண்டாய்
யான் இதற்கு இலன் ஓர் கைம்மாறே" 32 ஆண்டுகள் வாழ்ந்த மணிவாசகர் காட்டிய வழிபாடு மனித உள்ளத்தைப் பண்படுத்த வழிகாட்டியது. பாடல் அமைப்பிலே 20 பாடல்களின் தொகுப்பு அவர் தனிச்சிறப்பு. சதகம் என்னும் அமைப்பும் அவ்வாறே. இறைவன் நம் பணி பூண்டவன் என்பதை மாணிக்கவாசகர் தெளிவாகப்பாடினார். பக்திநெறி நிற்பாரைக் காப்பவன் தாயினும் சாலப் பரிந்து உயிர்களை உய்விப்பவன்; அவன் தாளை அவன் அருளால் வணங்கப் பெற்றவர் மணிவாசகர். பல்லுயிர்களில் பயின்று நிற்கும் பேராற்றலை உள்ளத்தால் உணரும் உத்தியைக் கற்பித்த வாதவூரர் மனித வாழ்வியல் மாண்புபெற வழிகாட்டியவர். அவரது பாடல்கள் மணிவாசகங்களாக மனத்துள்
பொறிக்கப்பட வேண்டியவை.
ك= 94 س

திருமுகம்
வாழ்வியலில் வழிபாடு இன்றியமையாதது என்பதை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்து செயற்பட்டதைப் பழைய புராணக்கதைகளால் இன்று அறிய வாய்ப்பு உண்டு. வாய்மொழியாகப் பரவி மரபாகப் பேணப்பட்ட அந்த கதைகளை அவற்றுள் காணும் மானுட அனுபவத்தை எப்படி இன்றைய மனிதர்களுக்கு எடுத்துக் கூறுவது. இயற்கையின் காலம் அறிந்த கொடைகளை உணராமல் செயற்கையான விஞ்ஞானச் செயற்பாடுகளை வியந்துபேசும் காலம் இது. குழவி முதல் கிழவி வரை அன்றாட வாழ்வில் விஞ்ஞானத்தையே மெய்ஞ்ஞானம் என எண்ணுகின்றனர். மனித வலுவுக்கு மேலான வலுவை அதுவே தரும் என நம்புகின்றனர். ஆனால் இயற்கையின் ஆற்றல் அதை விடப் பெரியது என்பதை இன்று எல்லோரும் மறந்தே வாழ்கின்றனர். இத்தகை மனிதர்களை நல்வழிப்படுத்த நன்னெறியிலே ஆற்றுப்படுத்த விரைவான செயற்பாடு தேவை. முன்னோர் வாழ்வியல் அனுபவங்களையும் வாய்மொழிச் சொற்களையும் எளிய முறையிலே உரைநூல்களாக்கி அவற்றைக் கற்கும் பயிற்சி ஒன்றைத் தொடக்க வேண்டும். அதற்காகக் கோவில் ஒன்றை மையமாக வைத்து அப்பணியை அங்கே காலூன்றச் செய்ய வேண்டும். முற்காலங்களைப் போல மனித வாழ்வியல் நடைமுறைகள் அத்தனையையும் கோவிலுடன் இணையச் செய்ய வேண்டும். அன்று போல மொழியும், இசையும் வழிபாடு ஒன்று சேர கோவிற்பணி தொடவேண்டும். உள்ளத்தாலும் உடம்பாலும் வாக்கினாலும் தொண்டு செய்யும் பயிற்சிக் கூடமாக கோவில் விளங்கவேண்டும். இசைக்கருவிப் பயிற்சியும் பண்சுமந்த பாடற்பயிற்சியும் மனத்து வக்கிர உணர்வைக் குடிபெயர்த்தும். அன்பும், ஆர்வமும், நண்பும் தோன்ற தொண்டு செய மனம் தூண்டும். கால்களால் நடந்து வாயாரப்பாடி கண்ணாரக்கண்டு மகிழ்ந்த நிலையை முன்னோர் அனுபவித்தனர். அவர் காட்டிய வழிச்செல புலன் அடக்கம் முதலில் தேவை. மெய்யறிவு நிலையில் எண்ணிப் பார்த்து முன்னோர் வழியை நினைந்து செயற்பட்டால் நாம்

Page 54
நடக்கும் வாழ்க்கைப்பாதை தெளிவாய் தெரியும் யுகங்கள் கிருதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு என்பர். இது காலத்தின் கணக்கை வகுத்தமுறை. இப்போது நடப்பது கலியுகம் என்பர். இந்த யுகத்தில் பக்தியினால் முத்தியடையலாம். மனிதர் மண்ணில் நல்ல வண்ணம் வாழவேண்டுமானால் பக்தி செய்து பிழைக்க வேண்டும். பயனில்லாது உழைக்க வேண்டும்.


Page 55


Page 56

இயற்கையின் காலம் அறிந்த கொடைகளை உணராமல் செயற் கையான விஞ்ஞானச் செயற்பாடு களை வியந்துபேசும் காலம் இ குழவி முதல் கிழவி வரை அன்றாட வாழ்வில் விஞ்ஞானத்தையே மெய் ஞ்ஞானம் என எண்ணுகின்றனர். fig வலுவுக்கு ពេលណា வலுவை அதுவே தரும் என நம்புகின்றனர். ஆனால் இயற்கையின் ஆற்றல் அதை விடப் பெரியது என்பதை இன்று எல்லோரும் மறந்தே வாழ் கின்றனர். இத்தகை மனிதர்களை நல்வழிப்படுத்த நன்னெறியிலே ஆற்றுப்படுத்த விரைவான செயற்
ឃុំញ៉ា