கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம்

Page 1

༽།
ངོ་། །ཡོད་ 三美秀 @丁交父> NSS ●
J予。さびs 轟
556.j56j56
ఈ గ్రా56mu
வபுராணம்
சங்கநூற் செல்வர்
ந மணி சு, அருளம்பலவ ை

Page 2

KÄRRYKE بهمن ۶۹
0 m Yurama Wv Ww Yy Airw rwv y'vov", "" A
' .. ' , , V Yn

Page 3

திருவாசகம் நூற்சிறப்பு வெண்பா
அருள்வாத வூரர்சொல் அம்பலவர் தாமெழுதும் திருவா சகத்தைத் தெளிந்தால்-கருவாம் பவகதியும் நீங்கிப் பர்மரருளாலே சிவகதியும் உண்டாம் சிவம் கற்பாந்த காலங் கடவாக் கடல்கடக்கத் தெப்பமாய் வந்தெனக்குச் சேர்ந்ததே-அப்பன் உருவாசகங்கொண்டுரைத்த தமிழ்மால்ைத் திருவா சகம்என்னும் தேன்,
தொல்லை இரும்பிறவிச் சூழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே-ள்ல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கே திருவா சகம்என்னும் தேன்.
போதலர்ந்து தேன்சொரியும் பொன்னம்
பலத்திலுறை வாதவூர் எங்கோமான் வாசகத்தை-ஒதிப் பிறவிப் பிணிநீக்கிப் பேரின்ப வெள்ள செறிவுக்குள் செல்வர் சிறந்து.

Page 4

10
15
20
6. gallouth திருச்சிற்றம்பலம்
திருவாசகச் சிறப்பு
தொல்லை இரும்பிறவிச் 5ழும் தளைநீக்கி அலலலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன் $COsort சகம்என்னும் தேன்.
சிவபுராணம் சிவனது அநாதி முறைமையான பழமை. திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டது. கலிவெண்பா
திருச்சிற்றம்பலம் ாமச்சிவாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க இமைப்பொழுது மென்னெஞ்சி னிங்காதான் றாள்வாழ்க கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பாள் றாள்வாழ்க ஏக னனேக ளிறைவ னடிவாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றள் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவா ருண்மகிழுங் கோள்கழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க ஈசனடி போற்றி யெந்தை யடிபோற்றி தேசனடி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கு மள்ள னடிபோற்றி சீரார் பெருந்துறைாகக் தேவ னடிபோற்றி ஆராத வின்ப மருளுமலை போற்றி சிவனவனெள் சிந்தையு ளின்ற வதனால் அவாரு ளாலே பவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினைமுழுது மோய வுரைப்பளியான்

Page 5
25
30
35
40
45
55
சிவபுராணம்
கண்ணுதலான் றன்கருணைக் கண்காட்ட வருதெய்தி எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறங் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று விடுற்றேன் உய்யவென் னுள்ளத்து ளோங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வெனவோங்கி யாழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்யாய் தனியா பியமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதே னின்பப் பெருமானே அஞ்ஞானங் தன்னை யகல்விக்கு நல்லறிவே ஆக்க மளவிறுதி யில்லா யனைத்துலகும் ஆக்குவாய் காப்பா .யழிப்பா யருடருவாய் போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றெழும்பின் நாற்றத்தி னேரியாய்ச் சேயாய் கணியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுட் டேனூறி நின்று பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த மறைந்திருந்தா யெம்பெருமான் வல்வினையேன் றன்னை மறைந்திட மூடிய மாய விருளை அறம்பாவ மென்னு மருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலணைந்தும் வஞ்சனையைச் செய்ய விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி

60
65
70
75
80
85
90
95
திருவாசக ஆராய்ச்சியுரை 3
ாாயிற் கடையாய்க் கிடந்த வடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே ாேச வருள்புரிந்து கெஞ்சில் வஞ்சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே ஆரா வழுதே பளவிலாப் பெம்மானே ஓராதா ருள்ளத் தொளிக்கு மொளியாளே நீரா புருக்கியென் னாருயிராய் நின்றாளே இன்பமுங் துன்பமு மில்லானே யுள்ளானே அன்பருக் கன்பனே யாவையுமா யல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே யந்த நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட வெங்தை பெருமாளே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே பத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாங் தேற்றனே தேற்றத் தெளிவேயெள் சிந்தனையுள் வாற்றாள வுண்ணா ரமுதே யுடையானே வேற்று விகார விடக்குடிம்பி னுட்கிடப்ப ஆற்றேனெம் மையா வரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளி னட்டம் பயின்றாடு நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டாே அல்லற் பிறவி யறுப்பானே யோவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து,
திருச்சிற்றம்பலம்
* «a asas * *swassassassassassa a

Page 6
4. சிவபுராணம்
பதவுரை: 1-5 நமச் சிவாய வாழ்க . நமச் சிவாயவென் னுந் திருவைந்தெழுத்து வாழ்வதாக நாதன் தாள் வாழ்க - எப் பொருட்கும் தலைவனாகிய இறைவனது திருவடி வாழ்வதாக; இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க - கண் இமைக்கும் நுண்ணிய கால அளவிற்றானும் என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்வதாக கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க . திருவாவடுதுறை என்னும் தலத்தினை அரசாட்சி செய்த இறைவனாகிய பரமாசாரியனது திருவடி வாழ் வதாக ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க - வீட்டு நெறி கூறும் ஆகமப் பொருளாகி நின்று உயிர்களைத் தன் பால் அணுகச் செய்து அருள் புரிபவனாகிய இறைவனது திருவடி வாழ்வதாக; ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க~ ஒருருவான வனும் ஒன்றல்லாத பலவுருவானவனுமாகிய எப்பொருளிலுந் தங்குகின்றவனது திருவடி வாழ்வதாக,
ஆ-ரை. நமச்சிவாய என்பது இறைவனது ஐந்தெழுத்து மகாமந்திரமாகும். இது தூலபஞ்சாட்சரம் எனப்படும். நம: சிவாய என்பது வடமொழி விதிப்படி நமச்சிவாய எனப புணர்ந்து, வணக்கம் சிவனுக்கு என்பது பொருள், சைவசித் தாந்த நூலார் இந்த ஐந்தெழுத்து மகாமந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு பொருளை உணர்த்துவனவாகக் கொள்வர். இது 'பதமஞ்சும்" (நாவு 230 : 7) என அப்பரடிகளும் 'அந்தியு நண்பகலு மஞ்சு பதஞ் சொல்லி" (தேவாரம் 83 : 1) என ஆளுடைய நம்பிகளும் அருளியமையால் விளங்கும். நமச்சிவாய என்பதில் நகரம் திரோதான சக்தியையும், மகரம் மலத்தினையும், சிகரம் இறைவனையும் வகரம் திருவருட் சக்தியையும், யகரம் உயிரையும் குறிக்கும். இது பந்த நிலையிலுள்ள உயிர்களைப் பிறவிக்கணுய்த்து இருவினைப்படுத்தி மல நீங்கும் நிலைவருவித்து அருள் வாயிலாக வீடடைதலை உணர்த்துவது; இதுவும் இறைவ னது கைம்மாறு கருதாத பேரருளையே குறித்தலால் திருவடி வாழ்த்தாகவே அமையும்.
நாதன் - எப்பொருட்குந் தலைவன் நாத தத்துவத்தால் வெளிப்படுவோன் எனினுமாம். தாள் என்றது திருவருளை, இமைத்தல் - கண்ணிமைகள் சேர்தல்; இமைப்பொழுதும் நீங்கா தான் எனவே ஒருபொழுதும் நீங்காதவன் என்பது பொருள். "திருப்பெருந்துறை யுறைவான், நிச்சம்என நெஞ்சில் மன்னியா னாகி நின்றானே' (திருவா: உயிருண்ணி 9) என அடிகள் அருளியமையுங் காண்க,

திருவாசக ஆராய்ச்சியுரை 5
கோகழி - திருவாவடுதுறை. திருப்பெருந்துறையாகாதோ வெனின் ஆகாது; என்னை? பண்டாயாான்மறை என்னும் திருப்
பதிகத்தில்,
StT MLTT TaTLL TTTt LLLTT LLTtT 0TtLLL ELL
erabroofl erp6&msyé stros“ (6)
என அடிகள் அருளிச் செய்தலாற் கோகழியும் பெருந்துறையும் வேறு தலங்கள் என்பது போதருதலின் 'கோகழியாண்ட' என அருளியது "கோ கழிக்கரசை' என்பதனோடு இயைபுடைத்தாதல் காண்க. குருமணி - ஆசாரியருள் மேம்பட்டவன்.
ஆகமம்-இறைவனிடத்தினின்றும் வந்தது. இப்பொருளில் வேதமும் ஆகமம் எனப்படும். அன்றியும் பதினெண்வித்தைகளுக் கும் நேரே கர்த்தா குலபாணியாகிய இறைவன்" எனக் கூறப்படுத லால் அவைகளும் இறைவனிடத்திலிருந்து வந்தமையால் ஆகமம் எனப்படும். ஆயினும் ஈண்டு ஆகமம் என்றது வீட்டு நெறியைக் கூறும் சிவாகமங்களேயாகும். "பொறிவாயிலைந்தவித்தான் பொய் தீ ரொழுக்க நெறி (குறள்) என்றதும் ஆகம நூலையே யாம். அண்ணித்தல் - அண்ணுவித்தல்; என்றது u5rif issir தன்னை அடையும்படி செய்தல்.
ரகன் - ஒருருவானவன்; அநேகன் - ஒன்றல்லாத பலவுரு வானவன். ஒருருவான இறைவன் உயிர்களுக்கு அருள்செய்ய வேண்டிச் சிவம் சத்தி என ஈருருவாயும், பின்னர் அச்சிவமும் சத்தியும் சேர்ந்து ஐவகைச் சாதீாக்கிய வடிவங்களாயும், அச் சாதாக்கியத்திலிருந்து ஈசுவரவடிவங்கள் இருபத்தைந்தாயும், காரனேசுர வடிவங்கள் ஐந்தாயும் பிறவாயும் ஆனமை பற்றி
அநேகன்" என்றார்.
8-10 வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க - ஆணவமலத்தின் வெம்மையைக் கெடுத்து அடியேனை ஆண்டரு ளிய இறைவனது திருவடிகள் வெற்றி பெறுக; பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க . பிறவியாகிய மரத்தை வேரோடறக்கும் சடைமுடியாகிய தலைக்கோலத்தையுடைய இறைவனது இடப்பட்ட வீரக்கழல்களையுடைய திருவடிகள் வெற்றி பெறுக: புறத்தார்க்கு சேயோன்தன் பூங்கழல்கள் TTTTS S TTLLLLLL T LLTLLL HEL TTTLTLLtLTYS TELLEETLST LLLTLE EtCL LL T இறைவனது பூப்போன்ற திருவடிகள் வெற்றி பெறுக; கரம் குவி வார் உள் மகிழும் கோன் சுழல்கள் வெல்சு - கைகள் குவிய வணங் கும் அன்பர்களது மனமகிழ்தற்கேதுவாகிய இறைவனது திருவடி

Page 7
6 சிவபுராணம்
கள் வெற்றி பெறுக சிரம் குவிவார் ஒங்குவிக்கும் சீரோன் கழல் வெல்சு - தலைகள் தன் தாளில் ஒடுங்கப் பெறுவாரை உயர் வடையச் செய்யும் சிறப்பையுடைய இறைவனது திருவடிகள் வெற்றிபெறுக.
ஆ-ரை. வேகம் - வெம்மை. ஈண்டு ஆணவ மலத்தின் வெம் மையை வேகம் என்பதற்குப் பிறவிவெப்பம்" என்றும், மன வேகம்" என்றும் உரைப்பாருமுளர். வேந்தன் - இறைவன். "மாண்டார் சுடலைப் பொடி பூசி மயானத் தீண்டா நடமாடிய வேந்தன்" எனத் தேவாரத்தும் (சம்பந், 30:9) வருதல் காண்க. வெல்க என்பது வெற்றி பெறுக என ஒருவகை வாழ்த்துப் பொரு ளில் வந்தது. இது ஜெய என்பதன் தமிழாக்கம். இறைவன் பிற வியை அறுத்தலின் "பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்' என்றார். 'பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்" (சிவபுரா 48) 'பிள்ளைப் பிறப்பறுக்கும் பேராளன்" (வெண்பா 4) என வருவன காண்க. அறுக்கும் என்ற வினையினால் பிறவியாகிய மரத்தை வேரோ டறுக்கும் என உரைக்கப்பட்டது.
' பிறவியை வேரோடுங் களைந் தாண்டு கொள்" நீத் 19. ' என் பிறவிக் கருவேரதுத்தபின் யாவரையுங்
கண்டதில்லை" தெள் 2. " பிறவிவே ரறுத் தென் குடி முழு தாண்ட பிஞ்ஞகா"
பிடித் 8.
' என் பிறவியை வேரறத்துப் பெரும்பிச்சுத்
தரும்பெருமான்" அடைக் 3
என அடிகள் அருளியமை காண்க. அறுத்தல் திருவருளால் என்க. 'நின் திருவருளால் என் பிறவியை வேரறப்பவனே" (அடைக் 2) ன்ன வருதல் காண்க. பிஞ்ஞகம்-சடைமுடியாகிய தலைக் கோலம். பெய்கழல் - இட்ட வீரக்கழல். பெய்தல் - செறித்தல் எனினுமாம். 'அளித்தலும் பெய்தலும் செறித்தலாகும்" எனப் பிங்கலங்தையில் வருதலும் காண்க, கழல், திருவடிக்கு ஆகு Guuusf.
இறைவன் பிரமன் தலையையும், அந்தகாசுரனையும் முப் புரங்களையும், தக்கனையும், சலந்தரனையும், கஜன் என்னும் யானையையும், காமனையும் யமனையும் அழித்து வெற்றி கொண்ட பெருவீரனாதலின் வீரக்கழலணிந்த திருவடியை யுடையனாயினான். இவ்வெட்டு வீரங்களையும் அட்ட வீரம் என்பர். கழல் - மலவாற்றல் தவிர்க்கும் வெற்றிப்பாடு குறித்தது எனினுமமையும்.

திருவாசக ஆராய்ச்சியுரை 7
தன்னிடத்து அன்பு கொண்டு சார்தலின்றி உலகப் பொருள் களைச் சார்ந்து நிற்பார்க்கு உணரப்படானாகலின் புறத்தார்க் குச் சேயோன்" என்றார். "யாவராயினு மன்பரன்றி யறி Guramermr Louital CBF mrsazumreir'' (Qerdir Arafu 7) Tar fuq assir அருளியமை ஈண்டறியற்பாலது. பூங்கழல் என்ப்த ற்குப் பொலிவு பெற்ற கழல் எனினுமாம். கழல் திருவடிக்கு ஆகுபெயர்.
இறைவனிடத்து அன்புடையார் கைகுவித்து வணங்குதலும், கண்ணிர் வார்தலும், மெய்ம்மயிர் சிலிர்த்தலும் உடையராத லின், சிறப்புப் பற்றிக் கரங்குவிதலை எடுத்துக் கூறினார். இறை வனை நினைக்குந்தோறும் அடியார்க்கு மனத்தின்கண் பெரு மகிழ்ச்சி தோன்றுதலின் "உண்மகிழும்" என்றார். மகிழும்கோள். மகிழ் தற்கேதுவாகிய கோன்.
சிரம்குவிதல் - இறைவன் திருவடிகளிற் சிரசு ஒடுங்குதல். தாள் + தலை என்பது தாடலை என இயைந்து நிற்பது போல அத்துவித பாவனையினால் இறைவன் திருவருளிற் கலந்து நிற்றல். குவிதல் - ஒடுங்குதல். 'குவிதலுடன் விரிதலற்று" (தாயுமா. சின்மயா 8) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சிரம் குவியும் அன்பரை இறைவன் உயர்வடையச் செய்தலின் "ஓங்குவிக்கும்" என்றார். சீர் என்னுஞ் சொல், புகழ், அழகு, செல் வம் முதலிய பொருள்கள் தருதலின் சீரோன் அவையெல்லாம் நிறைந்தவன் எனினுமாம்.
11-16, ஈசன் அடி போற்றி - ஐசுவரியத்தையுடையவனது திருவடிக்கு வணக்கம்; எந்தை அடி போற்றி.எமது தந்தையினது திருவடிக்கு வணக்கம்; தேசன் அடி போற்றி - ஞான ஒளிவடிவை யுடைய பரமாசாரியனது திருவடிக்கு வணக்கம்; சிவன் சே அடி போற்றி - சிவபெருமானது சிவந்த திருவடிக்கு வணக்கம்: நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி - அன்பரது அன்பின்கண் அன்புருவாய் நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம், மாயம் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி - மாயையினாலுண் டாகும் பிறவியை வேரோடறக்கும் அரசனது திருவடிக்கு வணக் கம்; சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி - சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின்கண் பரமசாரியராய் எழுத் தருளிய நமது கடவுளது திருவடிக்கு வணக்கம்: ஆராத இன்பம் அருளும் மலை போற்றி - தெவிட்டாத இன்ப அருவியை சந்தரு ளும் மலையை ஒப்பவனுக்கு வணக்கம்.
ஈசன் - ஐசுவரியத்தையுடையவன். ஈண்டு ஐசுவரியம் என்றது வீடுபேறாகிய உயர்திருவினை. இத்திருவினை "உத்கிருட்ட

Page 8
8 சிவபுராணம்
லக்ஷமி" என உபநிடதம் கூறும். தேசு . ஒளி. தேசன் - ஒளிவடி வினன். தேசன் என்பது ஈண்டு பரமாசாரியத் திருவுருவை யுணர்த்தியது.
சிவன் - செம்பொருளாதலின் அவன் திருவடி சேவடியா யிற்று. சேவடி - சிவந்த திருவடி, மாயம் - மாயை. மாயை யினாலேயே தனு கரண புவன போகமாகிய பிரிவுகளையுடைய பிறப்பு உண்டாகின்றது. அதனால் மாயப் பிறப்பு என்றார். அறுக்கும் என்ற வினையினால் பிறவியை மரமாகக் கொள்க. "சீரார்" என்னும் அடை தேவனுக்காய்ப் பின்னர் அவன் எழுந் தருளியிருக்கும் பெருந்துறையாயிற்று. றைவன் திருப்பெருந் துறையில் குருந்தமர நீழலிற் பரமாசாரியனாக அமர்ந்து தம்மை ஆட்கொண்டமையின் "நம் தேவன்" என்றார்.
உலகியல் இன்டங்கள் அனுபவித்த அளவில் தெவிட்டுந் தன்மையன. இறைவன் அருளாற்பெறும் இன்பமோ என்றும் தெவிட்டாவியல்பிற்றாதலின் அதனை "ஆராத இன்பம்" என் றார். இறைவனை மலையென ஏகதேசவுருவகஞ் செய்தமை யால், என்றும் வற்றாத இறைவனருளால் உண்டாகும் இன்பம் அருவி நீராகக் கொள்ளப்பட்டது.
17-22. கண் நுதலான் - அழற்கண் அமைந்த நெற்றியை யுடைய இறைவன், எண்ணுதற்கு எட்டாத எழில் ஆர் கழல் இறைஞ்சி-நினைத் தற்கும் எட்டா அழகுபொருந்திய வீரக்சுழல் அமைந்த திருவடிகள் அருமையில் எளியவாய்ப் பூமியில் தாழ்ந்து, வந்து எய்தி. திருப்பெருந்துறையின் கண் பரமாசாரியனாய் வலிய எழுந்தருளிவந்து, தன் கருணை கண் காட்ட - தனது அருட் பார்வையாகிய நயனதிக்கையினைச் செய்து ஞானோபதேசஞ் செய்தலால், அவன் சிவன் என் சிந்தையுள் நின்ற அதனால் - அக் கண்ணுதலானாகிய சிவபெருமான் என் மனத்தில் நீங்காது நிலை பெற்ற அத் தன்மையினால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.அவனது திருவருளினாலே அவனது திருவடிகளை வணங்கி, முந்தை வினை முழுதும் ஒய-முற்பிறப்பிற்செய்தவினை முழுவதும் வலிகுன்றிப் போகவும், சிந்தை மகிழ - மனம் மகிழ்ச்சி யடையவும், சிவபுராணம் தன்னையான் உரைப்பன் - சிவனது பழமையான முறைமையினை அடியேன் கூறுவேனாயினிேன்.
கண் நுதலான் -கண்ணமைந்த நெற்றியையுடைய இறைவன் "கண் சுமந்த நெற்றிக் கடவுள்" (திருவா. அம்மானை 8) 1"கண்ணுதலான் ஒரு காதலின் நிற்கவும்" (திருமங், 11) எனப் பிறாண்டும் வருவன காண்க. கண்ணுதலான் என்பதற்கு ந்ெbறிக் கண்ணையுடைய இறைவன் எனினுமாம்.

திருவாசக ஆராய்ச்சியுரை 9
எண்ணுதற்கும் என உம்மை விரிக்க. எண்ணுதற்கு என்றமை யால் சொல்லுதற்கும் காண்டற்கும் எட்டாமையும் கொள்ளப் படும். எழில் என்பதற்கு எழுச்சியெனினுமமையும், கழல் ஆகு பெயராய்த் திருவடியை உணர்த்தியது. இன்றஞ்சி - தாழ்ந்து. "எல்லை செல்ல வேழுர் பிறைஞ்சி"(குறிஞ்சி 215) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க. சுழல் இறைஞ்சி என்பதற்குத் திரு வடிகளை வணங்கி எனப் பொருளுரைக்கின், "அவனருளர்லே யவன்றாள் வணங்கி" (18) எனக் கூறப்படுதலிற் கூறியது கூற லாம்; ஆதலால் திருவடிகள் த்ருமையில் எளியனவாய்ப் பூமியிற் றாழ்ந்து எனப் பொருள் உரைக்கப்பட்டது. இறைஞ்சி என்னும் சினைவினை வந்தெய்தி என்னும் முதல் வினையொடு முடித்தது. இனி, கழலிறைஞ்ச வந்தெய்தி எனச் செயவெனச்சமாக்கி முடிப் பினுமமையும். "கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந் தெய்தி, எண்ணுதற் கெட்டா வெழிலார் கழலிறைஞ்சி. வின் ணிறைந்து மண்ணிறைந்த மிக்காய் விளங்கொளியாய், எண் ணிறந்தெல்லை யிலாதானே" எனக் கிடந்தவ்ாறே கூட்டிப் பொருளுரைக்கின் கண்ணுதலான்” என்னும் படர்க்கையும் "மிக் காய்" "விளங்கொளியாய்" "எண்ணிறந்தெல்ல்ல பிலாதானே? என்னும் முன்னிலைகளும் தம்முளியையாமையின், கண்ணுத orrcir (21) aralyTgysebGsil-m ertfleurit sypáv ganapsys (22) வந்தெய்தி தன் கருணைக்கண் காட்ட (21) என மாறிக் கூட்டிப் பொருளுரைக்கப்பட்டது.
கருணைக் கண் காட்டல் - நயனதிக்கை செய்து உபதேசஞ் செய்தல், காட்ட என்னும் சிெயவெனெச்ச்ம் ஏதுப் பொருளில் வந்தது. காட்ட (2) நின்றவதனால் (17) என இயையும்.
அவன் சிவன் என மாறிக்கூட்டி அவன் என்றது கண்ணுத லானைச் சுட்டியதாகக் கொள்க. தன் கருணைக் கண்க்ாட்டலின் பேறாக இறைவன் சிந்தையுள் நின்றமையின் "சிவனவனென் TTTTT t TTT TYT LTTS TT TTLLLLS LLLLLLLLtLLTTTTLLTTT LLLLGL LL றாள் வணங்கி என்றது சிவனது திருவருளினாலே அவனது திரு வடிகளை வணங்கி என்றவாறு. "நித்தனருள் பெற்று அவர் பாதம் நினைக்கும் நியமத் தலைநின்றார்" எனப் பெரியபுரா ணத்தும் (பெருமிழலைக் குறும்பனார் செய். 4) வருதல் கர்ண்,
உயிர்க்குயிராய் இறைவன் உண்ணின்று இயக்குகின்றமை யால் தம் செயலெல்லாம் அவன் அருள்வழிச் செய்யும் ச்ெயல்கி ளாதலின் "அருளால் வணங்கி மகிழ ஒய யான் புராணந்தன்னை உரைப்பன்" என்றார். சிவபுராணத்தை உரைப்பதன் பயன் முந்தை வினைமுழுதும் ஒய்தலும் சிந்தை மகிழ்தலுமாகும்.

Page 9
10 சிவபுராணம்
முந்தை - முன். முந்தை வினையென்றது முற்பிறப்பிற் செய்த சஞ்சிதகன்மங்களை, வினைமுழுதும் ஒய என்றது சஞ்சித கள் மங்கள் முழுவதும் நுகர்வுக்கு வாராமல் வலிகுன்றிப்போக என்ற வாறு. ஒய - நுணுக என்றது வலிகுன்ற என்றபடி, ஒய்தல் என்பது நுணுக்கமாகிய குறிப்புணர்த்தும் என்பது. "ஒய்த லாய்த னிழத்தல் சாஅய், யாவயினான்கு முள்ளதனுணுக்கம்" (தொல், உரி 34) என்பனாலுமறிக.
இதுவரையுங் கூறிய இருபத்திரண்டு அடிகளில் முதற்பத்து அடிகளால் வாழ்த்தும், பின்னர் ஆறு அடிகளால் வணக்கமும் அதன் பின்னர் ஆறு அடிகளால் வருபொருளுரைத்தலுமாகிய தற்சிறப்புப்பாயிரம் கூறியருளினார். ஆறுமுதல் பத்து அடிவரை “வெல்க' என மற்றொரு பொருள் கூறியது என்னையெனின் "வெற்றி பெறுக' என்பதும் வாழ்த்தாகவே அமைதலினென்க.
23-5, விண் நிறைந்து மண்நிறைந்து மிக்காய் - விண்ணுல கம் முழுவதும் நிறைந்தும் மண்ணுலகம் முழுவதும் நிறைந்தும் அவற்றிற்கு அப்பாலுமாய் நிறைந்தவனே, விளங்கு ஒளியாய் - விளங்குகின்ற ஒளிவடிவினனே, எண் இறந்து எல்லை இலா தானே . சுட்டிபுணரப்படும் தன்மையினைக் கடந்து வரம்பின்றி விரிந்தவனே, நின் பெரும் சீர் - நின்னுடைய பெரிய புகழினை, பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் - தீய வினையையுடையேனாகிய யான் நின்னருளாலன்றிப் புகழ்ந் துரைக்கும் நெறி ஒன்றனையும் அறிகிலேன்.
இறைவன் விண்ணுலகம் மண்ணுலகம் முதலாகிய எல்லா வுலகங்களும் தன்னுள் அடங்கத் தான் அவற்றிற்கு அப்பாலு மாய் நிறைந்து ஒளிவடிவினனாய் உள்ளான் என்பது "விண்ணி றைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்" என்பத னாற் கூறப்பட்டது. 'உலகெலாஞ் சோதியாய் நிறைந்தான்" எனத் தேவாரத்தும் (ஞான 14 2:7) வருதல் காண்க. இறைவன் விண்ணும் மண்ணும் நிறைந்த ஒளிவடிவினன் என்பது,
' அண்டமா ரிருளுடு கடந்தும்பர்
உண்டுபோலு மோரொண்சுடர் " தே. நாவு, 21 1:2. என அப்பரடிகள் அருளியவாற்றானுமறியப்படும்.
மனத்தினால் எண்ணி உணர்ந்து கட்டியறியப்படும் தன் மைக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பது எண்ணிறத்து" என்பதனாற் கூறப்பட்டது.
"இள்ளவுரு வின்ன நிற மென்றறிவதே லரிது" (தே.330:4) ானத் திருஞான சம்பந்தசுவாமிகளும்,

திருவாசக ஆராய்ச்சியுரை 11
" அப்படியுமந்நிறமு மவ்வண்ணமு மவனருளே
ssassarrasák smrsofistráýeomré இப்படிய னிந்நிறத்தணிவ்வண்ணத் தரிைவனிறைவ
னென்றெழுதிக் காட்டொணாதே" 311:10,
எனத் திருாாவுக்கரசுசுவாமிகளும் அருளிய திருவாக்குகளும் இதனை உணர்த்தும். இனி "எண்ணிறந்து" என்பதற்கு மன வுணர்வுக்கும் எட்டாது எனப் பொருள் உரைத்து வாக்குக்கும் ாட்டாது எனவும் உரைக்கலாம்.
பெருஞ்சீர் - அளவில்லாத உண்மைப் புகழ், 'இறைவன் பொருள் சேர்புகழ்" (குறள் 6) என்றார் திருவள்ளுவரும். பொல்லா என்பது வினைக்கு விசேடணம். வினையேன் என்றது தன்னைத் தாழ்த்திக் கூறியலாறு.
அவனருளாலே அவன்தாள் வணங்கிச் (18) சிவபுராணத் தன்னை (19) உரைப்பனியான் (20) என்று சொல்லத் தொட்ங் கிய அடிகள் இம்மூன்று (23-5) அடிகளாலும் அவையடக்கம் கூறுகின்றாரதலின், "நின்சீர் புகழுமாறொன்றறியேன்" என்றார். இறைவனை முன்னிலைப் படுத்தி இவ்வவையடக்கத்தினைக் கூறி பது அவ்விறைவனருள் முன்னின்று உதவுமாயினும் தற்போதங் கெட வேண்டியாகும். ஒன்று என்பதற்குச் சிறிது எனினுமமை யும். " இடனின்றி யிரந்தோர்க்கொன் றீயாமை யிழிவென " (கலி 2 19) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
26-31. புல் ஆகி - புல்லாகியும், பூடுஆய் - பல்வகைப் பூண்டுகளாகியும், புழு ஆய் - புழுவாகியும், மர்ம் ஆகி-மரமாகி யும், பல்விருகம் ஆகி - பலவகைப்பட்ட மிருகங்களாகியும், பறவை ஆய் - பலவகைப் பறவைகளாகியும், பாம்பு ஆகி .பாம்பு களாகியும், கல் ஆய் - கல்லாகியும், மனிதர் ஆய் - மனிதராகியும் பேய் ஆய் - பேய்களாகியும், கணங்கள் ஆய் - கணங்களாகியும், வல் அசுரர் ஆகி - வலிய அசுரராகியும், முனிவர் ஆய் - முனிவ ராகியும், தேவர் ஆய் - தேவராகியும், செல்லா நின்ற இ தாவர சங்கமத்துள் - நிகழா நின்ற இந்த நிலையியற்பொருள் இயங்கி யற் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே.எம்பெரு மான் எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன். கூ எம்பெருமானே யான் எல்லாப் பிறவிகளிலும் பிறந்து இளைப்படைந்தேன்.
இங்கு கூறப்பட்ட உயிர்களின் தோற்றமுறைமை, செய்யுனா தலின் பிறழவைத்துரைத்தாராயினும் அவை தோன்று முறைமை யில் வைத்து உரைகொள்ளற்பாற்று. எல்லா உயிர்ப்பொருள் களும், நிலையியற்பொருளாகிய தாவரமும் இயங்கியற் பொரு

Page 10
12 சிவபுராணம்
ளாகிய சங்கமமும் எள இருகூற்றுள் அடங்கும். தாவர வகையுள் கல் புல் பூண்டு மரம் என்னும் நான்கும், சங்கம வகையுள் புழு பாம்பு பறவை பல்விருகம் மனிதர் அசுரர் முனிவர் பேய் கணங் கள் தேவர் என்னும் பத்தும் கூறப்பட்டனவாகும்.
தாவரவகையுள் முதற்கண் கொள்ளத்தக்க கல் அல்லது மலை ஒருவகை அறிவு விளக்கமுமின்றிக் கிடந்த உயிர்களின் நிலையேயாகும். அந்நிலையினின்று ஏற்ற தகுதி வந்தபோது ஓரறிவுயிர்களாகிய புல் பூடு மரம் ஆகிய தோற்றத்தையடையும்: அவற்றினின்றும் அறிவு சிறிது சிறிதாக மேற்படும்போது சங்கம வகையுள் அவற்றிற்றேற்ற உடம்பினைப் பெற்று ஈரறிவுயிர் களாகிய புழுக்களாகியும், மூவறிவுயிர்களாகிய கறையான் எறும்பு களாகியும், நாலறிவுயிர்களாகிய நண்டு தும்பிகளாகியும், ஐந் தறிவுயிர்களாகிய பாம்பு பறவை பல்விருகமாகியும், ஆறறிவுயிர் களாகிய மனிதர் அசுரராகியும், ஆறறிவின் மேற்பட்ட முனிவர் பேய் கணங்கள் தேவர்களாகியும் பிறவி எடுக்கும் என உரை கூறிக்கொள்க.
பூமியினுட் கிடக்கும் கல் வளர்ச்சியடையக் காண்கின்றோ மாதலின் அதுவும் ஒருவகை உயிர்த்தோற்றத்தின்பாற்பட்ட தாகும். ஆயினும் அது உணர்ச்சியுடைத்தன்று; கெளதமர் சாபத் தாற் கல்ல்ாய்க்கிடந்த அகலிகை இராமரது பாதந் தீண்டுதலால் தொல்லுருப் பெற்றனள் என வரலாறு கூறுதலின் உயிருக்குக் கல்லும் ஒருவகைப் பிறப்பாதல் உணரப்படும். இனிச் சர்வசங் காரகாலத்து உயிர் ஒருவகை உணர்ச்சியுமின்றி ஆணவமலத்துள் பாஷாணம் (கல்)போல் அசைவற்றுக் கிடத்தலின் "கல்லாய்" எனக் கூறினார் எனக் கொள்ளுதலும் ஒன்று.
விருகம் - மிருகம்; பல் என்ற அடையைப் பூடு முதலியவற் றோடும் கூட்டுக. பேய் - நிழல்போல் நுண்ணுடம்பினையுடைய ஒருவகை உயிர். "நிழல்போ னுடங்கிப் பேயாட' (சீவக 309) எனப் பிறரும் கூறுதல் காண்க. இது கண்டார்க்கு அச்சத்தைச் செய்தலின் "பேய்" எனப்பட்டது. பேந்தரும் பேய்" (சீவக 1181) என வருதலும் காண் நீ. பேம் - அச்சம். "பேநா முரு மென வரூஉங் கிளவி, யாமுறை மூன்று மச்சப் பொருள்" (உரி 69) s7skrpmtrf Gastrábaszrú u9u svrrg5úb.
ஈண்டு கணங்கள் என்றது பதினெண்கணங்களுள் இங்கே விதந்து கூறப்பட்ட அசுரர் பேய் தேவர் ஒழிந்த ஏனையோரை. பதினெண் களங்களாவார்; தேவரும் அசுரரும் தைத்தியரும் கருடரும் கின்னரரும் கிம்புருடரும் இயக்கரும் விஞ்ஞையரும் இராக்கதரும் கந்தருவரும் சித்தரும் சாரணரும் பூதரும் பைசா

திருவாசக ஆராய்ச்சியுரை 13
கணமும் தாரகா கணமும் நாகரும் ஆகாயவாசிகளும் போகபூமி யோருமென விவர். இதற்கு பிறவாறு முரைப்பர்.
அசுரர் . சுரர்க்கு மாறானவர். தாவரம் - நிற்பன. ஸ்தா வரம் என்னும் வடசொற்றிரிபு. சங்கமம்-அசைவன. ஜங்கமம் என்னும் வடசொற்றிரிபு.
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் - நிலையியற்பொருள் இயங்கியற் பொருள் என்னும் இருவகைப் பொருள்களுள்ளே யான் எல்லாப் பிறவிகளிலும் பிறந்து இளைப்படைந்தேன்.
" ஆன்ையாய் கீடமாய் மானுடராய்த் தேவராய் ஏனைப்பிறவாய்ப் பிறந்திறந் தெய்த்தேனை "
-sey tbuo mravnavr 1 4 என அடிகள் பிறாண்டும் கூறியிருத்தலுங் காண்க.
32-5. மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன். உண்மையாகவே உன் அழகிய திருவடிகளைக் கண்டு இப்பொழுது அப்பிறவித் துன்பங்களினின்றும் விடுபட்டேன்; உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா - அடியேன் உய்யும் பொருட்டு என் மனத்துள் "ஓம்" என்னும் பிரணவவுரு வாய் நின்ற மெய்யனே, விமலா - மாசற்றவனே விடைப்பாகா . தரும வடிவாகிய ஏறு வார்ந்தவனே, வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே - வேதங்கள் ஐயனே என்று அழைக்கவும் அவற்றிற்கெல்லாம் எட்டாது மேல் உயர்ந்தும் கீழ் சூழ்ந்தும் புடைபரந்தும் அமைந்த நுட்பமான பொருளாய் உள்ளவனே.
மெய்யே கண்டு எனக்கூட்டிக் காட்சியளவையானே தேரில் கண்டு எனவுரைக்க. 'திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடியை, உருநா மறியவோ ரந்தணனாய் ஆண்டுகொண் டான்" (தெள்ளேணம் 1) "கண்ணார் நுதலோய் கழலிணைகள் கண்டேன் கண்கள் களிகூர' (குழைத் 9) 'நீவாவென்னக், கண் னார உய்ந்தவா றன்றெயுன் கழல்கண்டே" (திருவேசறவு 2) என அடிகள் அருளியவாறுங் காண்க.
பொன்னடி - அழகிய அடி. பொன் - அழகு பு. வெ. மா. 128 உரை. பொன்னடி என்பதற்கு பொன்போலும் அருமையும் TLLTLtaaa TTLaLTTLLLLS LLH STTTGSTTTLTTaLLS SLLLTLELEL பிறப்பும் பிறந்திளைத்தேன்" என்றமையால் வீடுற்றேன் என்றது
1. புறநானூறு 1:10 உரை. பிங்கலந்தை 92.

Page 11
14 சிவபுராணம்
எல்லாப் பிறப்புகளின் துன்பங்களினின்றும் விடுதலையடைதலைக் குறித்தது
உய்ய நின்ற என இயையும், ஓங்காரம் - பிரணவம், •ይሃፊö! அகர உகர மகரமாகிய பகுப்பினையும் விந்து நாதமாகிய (pas லினையுமுடையது. அகர உகர மகர விந்து நாதமாகிய ஐந்தும் இறைவனது ஐந்தொழிலைக் குறிக்கும். அதனால் ஓம் என்பது இறைவனுக்குரிய சிறந்ததொரு மறைமொழியாகும் அம்மறை மொழி வடிவாய் உயிர்க்குயிராய் நின்று இறைவன் உயிர்களை இயக்குதலின் என்னுள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற என்றார், அங்ங்ணம் இறைவன் உள்ளத்துல ஓங்காரமாய் நிற்பினும் உண்மை இயல்பில் திரிவடையானாதலின் "மெய்யா" என்றார், விமலன் - மாசற்றவன், மலம் - மாசு: அழுக்கு. வி. இன்மைப் பொருளுணர்த்தும் உபசர்க்கம்.
வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே என்பதனால் நான்மறைகளால் இறைவன் இயல்பு (P(push அறியப்படாமையின் பொதுவகையால் இறைவனை அழைக்கவும் அவற்றிற்கு எட்டாது மேலுயர்ந்தும் கீழ் சூழ்ந்தும் புடைபட விரிந்தும் நுண்ணியனாய் உள்ளான் என்பதும், அவன் அருள் செய்யும் சிவஞான மொன்றானேயே அறியப்படுபவனாவான் என்பதும் கொள்ளப்படும்.
"வேதக்காட்சிக்கும் உபநிடத் துச்சியில் விரிந்த
போதக் காட்சிக்கும் காணலன்" சூரன் அமைச் 27, எனக் கந்தபுராணத்தும்,
'அல்லையீ தல்லயிதென மறைகளு மன்மைச்
சொல்லினாற் றுதித்திளைக்குமிச் சுந்தரன்" கடவுள் 29, எனப் பரஞ்சோதி திருவிளையாடற்புராணத்தும் வருவன காண்க.
இறைவனருளிய வேதங்கள் இறைவன் இயல்பினை முழு வதும் உரைக்க மாட்டாமையின் அவற்றாற்பெறும் பயன் என்னையெனின்? இறைவனுக்குரிய பொதுவியல்பு சிறப்பியல்பு என்னும் ஈரியல்புகளுள் பொதுவியல்பு வேதமுதலிய நூல்களாற் கூறப்படும். சிறப்பியல்பும் நூல்களாற் கூறப்படினும் அனுபவ வுணர்வு உண்டாதற்கு அவனருளாற் பெறும் சிவஞானம் வேண்டும். ஆதலின் இறைவனருளிய வேதம் முதலிய நூல்களும் பயன்றருவனவாமென்க.
36-40. வெய்யாய் தணியாய்-ஞாயிற்றின் வெம்மையை யும் திங்களின் தண்மையையும் உடையவனே, இயமானன் ஆம்

திருவாசக ஆராய்ச்சியுரை 15
விமலா - உயிரை உருவாகக்கொண்டு உண்ணின்று இயக்குதலின் உயிராக விளங்கும் துடியோனே, பொய் ஆயின எல்லாம் போப் அகல வந்தருளி பொய்யான நினைவு சொல் செயல்களெல்லாம் விட்டு நீங்கும்படி குருவடிவில் வந்து அருள் செய்து, மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய் சுடரே . மெய் அறிவாகி விளங்கு கின்ற உண்மை ஒளியே, எஞ்ஞானம் இல்லாதேன் இன்ப பெரு மானே - எவ்வகையான அறிவும் இல்லாதேனுக்கு இன்பத்தைத் தருகின்ற பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே - அறியாமையாகிய இருளை நீங்கச் செய்யும் நல்ல அறி வுருவானவனே.
இறைவன் அட்டமூர்த்தங்களுள் ஞாயிற்றின் உருவாக நின்று வெம்மையைத் தந்து உலகினை உய்வித்தலின் "வெப்பாய்" என்றும், திங்களின் உருவாய் நின்று தண்மையினைத் தந்து உல கினை உய்வித்தலின் தணியாய்" என்றும் கூறினார். "தண்ணி யான் வெய்யோன்" (தே. ஞான 61-26) "வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி" (தே. திருநாவு 27 1:3) என வருவன காண்க. இங்கு வெம்மையும் தண்மையும் இறைவனையும் அவன் அருட்சத்தியையும் குறிப்பனவாகும். விந்து வெப்பமுடையது; நாதம் தட்பமுடையது விந்து நாதங்கள் சிவனையும் சத்தியை யும் குறிக்கும். ஆண்மையும் பெண்மையுமாகிய சரியல்புகளை யுடைய இறைவன் எல்லாவுயிர்களிடத்தும் உயிர்க்குயிராய் நின்று அவற்றினை ஆண் பெண்ணாகப் படைத்து இயக்குதலின் 'இயமானனாம் விமலா" என்றார். இயமானன் - உயிர். இறை வனது அட்டமூர்த்தங்களுள் உயிரும் ஒன்றாதலின் அவ்வுயிரை உடலாகக் கொண்டு இறைவன் உயிர்கள் எல்லாவற்றையும் இயக்குபவன் என்பதும் இதன்ாற் போதரும். உயிர்க்குபிராப் உண்ணின்று இயக்கினும் தன்தூய தன்மையில் திரியாதவன் என் unrt 'suoanr' GToirApmst.
பொய் - பயனில்லாத நினைவும் சொல்லும் செயலும். வந் தருளி என்றது பரமாசாரியத் திருவுருவாய் வந்து அருளுபதேசம் செய்தமையைக் குறித்தது.
ஞானம் - பாசஞானம், பசுஞானம், பதிஞானம் என மூவகைப்படும். பாசஞானம் வேதம் முதலிய நூல்களாலும் சூட்சுமை பைசந்தி மத்தியமை வைகரி என்னும் நான்கு வாக்கு களாலும் அறியப்படும் நாதமுடிவான ஞானமாகும். பசுஞானம்; நான் பிரமம் என உணரும் உணர்வாகும். பதிஞானம் : உயிர் உடலின்கட்டோன்றி ஓதி ஒவ்வொன்றாக உணர்ந்திடுதலாற் பக வாகிய தன்னினும் மேம்பட்ட பதியினையுணர்தல். இது மெய்ஞ் ஞானம் எனப்பட்டது.

Page 12
16 சிவபுராணம்
"வேதசாத் திர மிருதி புராண கலை ஞானம்
விரும்பசபை வைகரியா தித்திறங்கள் மேலாம்
நாதமுடி வானவெல்லாம் பாசஞானம்
நணுகி ஆன் மாஇவை கீழ் நாடலாலே
காதலினான் நான் பிரமம் என்னும் ஞானங்
கருதுபசு ஞானம்இவ னுடலிற் கட்டுண்
டோதியுணர்ந் தொன்றொன்றா யுணர்ந்திடலாற் பசுவாம்
ஒன்றாகச் சிவனியல்பின் உணர்ந்திடுவன் கானே"
(குத் 9 அதி 1) எனச் சிவஞானசித்தியாரில் வருதல் காண்க.
மிளிர்தல் - விளங்குதல், மெய்ச்சுடர் உண்மை ஒளி "பொய்யிருள் கடிந்த மெய்ச்சுடரே" (கோயிற் 3) என அடிகள் பிறாண்டும் கூறியது காண்க. சுடர் - ஒளி. இப்பொருட்டாதல் "தெறுசுட ரொண்கதிர் ஞாயிறு" (புற 627-8) என் புழிக்
inters.
எ + ஞானம்- எஞ்ஞானம், எஞ்ஞானமும் என்னும் உம்மை தொக்கது. இன்பப்பெருமான் - இன்பத்தைத் தந்தருளிய, பெரு uonoir.
"யாவர்க்கும் கீழாம் அடியோனை-யாவரும் பெற்றறியா இன் பத்துள் வைத்தாய்க்கு"
திருவெண்பா 8. * இன்பம் பெருக்கி' திருவெண்பா 11,
"இகபர மாய தோர் இன்ப மெய்த" திருவார்த்தை 10. எனத் திருவாசகத்து வருவன காண்க.
அஞ்ஞானம்-அறியாமை, அஞ்ஞானம் என்பதில் அமறுதலைப் பொருளில் வந்தது. அறியாமை பொருள்களின் இயல்பினை அறியாமை, அதுவோ இதுவோ என ஐயுற்றுணர்தல், ஒன்றை மற்றொன்றாக உணர்தல் என மூன்று வகைப்படும். அவ்வறி யாமை ஆணவ மலத்தால் உயிர்க்குளதாவதாகும். அதனை நீக்கும்பொருட்டு இறைவன் தனு கரண புவன போகங்களை உயிர்களுக்குக் கொடுத்தலால் ஆணவ வலியாகிய அறியாமை மெல்ல மெல்ல நீங்கும். அந்த நன்மையினை இறைவனது அறிவின் மேலேற்றி "அஞ்ஞானந் தன்னை யகல்விக்கு நல்லறிவே என அருளிச் செய்தார்.
41-8. ஆக்கம் அளவு இறுதி இல்லாய் - தோற்றமும் நிலை பேற்றின் அளவும் முடிவும் இல்லாதவனே, அனைத்து உலகும்

சிவபுராணம் 17
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்-எல்லா உலகங் YTLTTLLaa LLLLLL LLLLLLLTLTLTTLLL LCTTTTLTTTLTS TTTTTTLL TTTTT வாய் முடிவில் உயிர்கட்கு அருளையும் தருகுவாய்; என்னை போக்குவாய் - என்னை அப்பல்வகைப் பிறவிகளிற் செலுத்திப் போகங்களில் முழுகச் செய்வாப் நின் தொழும்பில் புகுவிப்பாய்பின்னர் அப்போகங்களில் உவர்ப்புண்டாயவிடத்து என்னை நினது திருவடித்தொண்டில் புகும்படி அருள்செய்வாய்; நாற்றத் தின் நேரியாய் - பூவில் மணம்போல அன்பருள்ளத்தில் இசைந் திருப்பவனே சேயாய் - அன்பரல்லாதவர் உணராமையின் தூரத் திலிருப்பவனே நனியானே - அன்பராயினார் உணருதலின் அணுகி இருப்பவனே மாற்றம் மனம் சுழிய நின்ற மறையோனே. சொல்லும் நினைவும் அளவிட முடியாது நீங்க அப்பாற்பட்டுள்ள மறைபொருளாயுள்ளவனே கறந்தபால் கன்னலொடு நெய் கலந் தாற்போல - பசுவிற் கறந்த புதிய பால் சர்க்கரையும் தேனும் கலந்துழிமிக்க இனிமை தந்தாற்போல, அடியார் சிந்தனையுள் சிறந்து தேன் உாறி நின்று - அடியவர்களது உள்ளத்திலே மிகுந்து தேன்போல இனிமை ஊற்றெடுக்குமாறு நிலைபெற்றுத் தங்கி, பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் - அவ்வடியவரது எடுத்த பிறவியை நீக்கும் எங்கள் பெருமானே.
ஆக்கம் அளவு இறுதி இல்லாதவனே அனைத்துலகங்களை யும் ஆக்குதல், காத்தல் அழித்தல் செய்ய வல்லவனாவான் என்பது போதர "ஆக்கமள விறுதி யில்லாய்" என்றார்.
JedkgGuntů smrů umrdů Jonůurrtů Qurrákesantů poskrQasrtgpub பில் புகுவிப்பாய் அருள்தருவாய் என இயைத்து எல்லாத் தனு கரணபுவன போகங்களையும் நீயே படைத்து அவற்றில் LTTTLTTTL CLLLaLLLLLLL E LTTTLTTTLLLLLLL LTTLLLLLLL LLTLELtttLTtLLttt LrLLCCTT S TLaLTT LLTTTTLLLLLLL S CCTLTTTTT CLL LLLLLLaTTTLL LLLLLL விடத்து நினது திருத்தொண்டில் புகும்படி செய்து பக்குவமுண் டாயபோது மலக்கட்டினைக் கெடுத்து நித்திய இன்ப நிலையை அருளுவாய் எனக் கொள்க.
அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தரு வாய் எனப் படைத்தல் காத்தல் அழித்தல் அருளல் என்னும் நான்கு தொழில்கள் கூறப்படினும் இவற்றிடையே நிகழும் மறைத்தற்றொழில் காத்தற்றொழிற் கண் அடங்கும். ஆகவே படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்றும் ஐந் தொழில்களையும் செய்பவன் இறைவன் என்க. ஐந்தொழிலும் இறைவன் அருட்செயல்களேயாதல்,

Page 13
18 திருவாசக ஆராய்ச்சியுரை
"அழிப்பிளைப்பு *ற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம GuDá svirti
கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம ஒப்பில் தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பருள் செய்தி
தானும் பழிப்பொழி பந்தம்வீடு பார்த்திடின் அருளே யெல்ல. S. 1 : 37. என்னும் சிவஞானசித்தியார் திருவிருத்தத்தானுமறிக.
க்ேகுதல் காத்தல் அழித்தல் மிமத்தல் அருளல் என்பதை ஐந்தொழில் முறைமையாயினும் போக்குவாய் என உலக
வாய் எனவும், என்னைப் புகுவிப்பாய் எனவும் இயையும் போக்குதல் - பக்குவமுண்டாகும் பொருட்டுப் பலவகைப் பிறவி களிலும் போகச் செய்தல்,
தொழும்பில் புகுவித்தல் . அப்பிறவிகளினாற் பக்குவமுண் டாயவிடத்து என்னைத் தினது திருவடித்தொண்டில் t-I, (9) lonrtin அணுகச் செய்தல், தொழும்பு . தொண்டு.
நாற்றம் தான்பற்றிய பொருள்களில் எங்கும் நிறைந்து அதற்கப்பாலும் நுட்பமாய் இருப்பதுபோல, இறைவன் உலகு உயிர் எங்கும் நிறைந்து அதற்கப்பாலுமாய் Bluuonruy sit om mrsör என்பது நாற்றத்தின் நேரியா, என்பதனாற் போந்தபொருள். அங்ங்ணமாயின் நாற்றம் புலப்படுவதுபோல இறைவன் புலப்பட வேண்டுமேயெனின் அவன் usirunrSuu பொறியில்லாதவர்க்குச் சேயனாய்ப் புலப்படாமலும், சிதனையுடையார்க்கு அணி னாய்ப் புலப்படுதலுமுடையனாகலின் oautů 156nfurtovo என்றார்.
"மெய்யடிவர்கட் கண்மையனே யென்றுஞ் சேயாய்
பிறர்க்கு" கீத் 22. 'ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானைச்
சேயானை" அம் 7.
'அப்பார் சடையப்பன் ஆனந்த வார்கழலே
ஒப்பாக வொப்புவித்த உள்ளத்தார் உள்ளிருக்கும் அப்பாலைக் கப்பாலை" 9th 11 என அடிகள் அருளியமை காண்க,

சிவபுராணம் 19
வாக்கும் மனமும் அளவிட முடியாது நீங்கிப்போக அப்பாற் பட்டு நிற்றலின் "மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே" என்றார். "வாக்கு மனாதீதன்' என்பதும் இப்பொருள் பற்றி யாகும். "சொற்பதங் கடந்த தொல்லோன்" (அண்ட.111) "சொற்பதங் கடந்த அப்பன்" (அச்சப் 6) என வருவனவும் ஈண் டறியற்பாலன.இறைநூல்கள் இறைவன் இயல்பினைக் குஃபாதி குஃயம்" எனக் கூறுதலின் "மறையோனே" என்றார்.
கறந்தபால்-பசுவிற் சறந்த புதியபால். கன்னல் சருக்கரை, "கட்டியும் விசயமும் குளமும் கன்னலும், ஒட்டிய பாகும் அக் காரமும் சருக்கரை" என்பது திவாகரம், நெய் - தேனெய். 'தேனெய்யொடு கிழங்கு மாறியோர்" (பொருங் 214) என்புழி யும் இப்பொருட்டாதல் காண்க. தானே இனிமை தருவதாய பால், கன்னலும் தேனும் கலந்தவழி மிக்க இனிமை தருதலிற் "கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போல’ என்றார். சிறந்து - மிகுந்து, சிறந்து நின்று என இயையும். தேன் - இனிமை, நின்று எனக் கூறினும் இறைவன் புலப்படுதலும் புலப் படாதிருத்தலுமாகிய நிலைமையினின்றும் நீங்கி என்றும் புலப் பட்டு நின்று என்பது பொருளாகக் காண்க. பிறந்த பிறப்பு அறுத்தல் - அவ்வடியவர் எடுத்த பிறப்பை நீக்குதல்.
49 61. நிறங்கள் ஒர் ஐந்து உடையாய் - ஒப்பற்ற ஐந்து நிறங்களையுடையவனே, விண்ணோர்கள் ஏத்த மறைந்து இருந் தாய் : தேவர்கள் உன்னைத் துதிக்கவும் அவர்களுக்கு வெளிப் படாமல் மறைந்திருந்தவனே எம்பெருமான் - எம்பெருமானே, வல் வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை - வலிய வினையையுடைய என்னை அறிவு மறையும்படி மூடிய வஞ்சனையையுடைய ஆணவ மலமாகிய இருளை, அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி - நல்வினை தீவினை என்னும் அரிய கயிறுகளாற் கட்டி, புறம் தோல் போர்த்து - வெளியே தோலைப் போர்வையாக இட்டு, எங்கும் புழு அழுக்கு மூடி - அதனால் உடம்பில் எங்குமுள்ள புழுக்களையும் அழுக்குகளையும் மறைத்துச் செய்த, மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை - அழுக்குகள் கழிகின்ற ஒன்பது வழிகளையுடைய உடம்பாகிய குடிசையை, மலங்க புலன் ஐந்தும் வஞ்சனையை செய்ய - யான் கலங்கும்படி ஐம்புலன்களும் மாயத்தைச் செம்ய, விமலா-மாசற்ற வனே, விலங்கு மனத்தால் - இடையே நின்று தடுக்கும் மனத்தை யுடைமையால், உனக்கு கலந்த அன்பு ஆகி கசிந்து உள் உருகும் நலம்தான் இலாத சிறியேற்கு நல்கி - உன்னிடத்துக் கலந்த அன் புடையேனாகி நெகிழ்ந்து உள்ளே உருகும் நன்மை இல்லாத சிறி

Page 14
20 திருவாசக ஆராய்ச்சியுரை
யேனுக்கு அக்குடிசையினைத் தந்து அதனால் ஆற்றலைக் கெடுத்து இருவினையொப்பு மலபரிமாகிய பக்குவ நிலையை வரச்செய்து, நிலம்தன்மேல் வந்தருளி நீள் சுழல்கள் காட்டி - இந்நிலவுலகத்தே குருவடிவில் எழுந்தருளிவந்து எல்லை காண்டற்கரிய நீண்ட திருவடிகளை எனக்குக் காட்டியருளி, நாயின் கடையாய் கிடந்த அடியேற்கு - நாயினும் கீழ்ப்பட்ட வனாய்க் கிடந்த அடியேனுக்கு தாயின் சிறந்த தயாலான தத்து வனே - தாயினும் சிறந்த கருணை வடிவான உண்மைப்பொருளா யுள்ளவனே.
இறைவனது அட்டமூர்த்தங்களுள் நிலம் நீர் தீ வளி வான் என்னும் பூதங்கள் ஐந்தும் அடங்குதலினாலும், அவை முறையே பொன்மை வெண்மை செம்மை கருமை புகைமை என்னும் ஐந்து நிறங்களும் உண்மையானும் "நிறங்களோ ரைந்துடையாய்" 6Tsirprrst.
'மண்புனல் அனல்கால் வான்.
வண்பொன்மை வெண்மை செம்மை கறுப்பொடு
தூமவண்ணம்' (சூத் 2. செய் 67) எனச் சிவஞானசித்தியாரிலும்,
'பொன்பார் புனல் வெண்மை பொங்குமனல் சிவப்பு
வன்கால் கருமைவளர் வான் தூமம்-என்பர்." என உண்மைவிளக்கத்தும் வருவனவும் காண்க.
தேவர்கள் தமக்குரிய சில ஆற்றல்களினாற் றம்மை முதல்வ ராகக் கருதிச் செருக்குறுவராதலின் அவர் செறுக்கினை அறுத்தற் பொருட்டு இறைவன் மறைந்திருப்பானாதலின் "விண்ணோர் களேத்த மறைந்திருந்தாய்" என்றார். இறைவன் தேவர்களின் உதவியின்றித் திரிபுரங்களைச் சிரித்து எரிசெய்யவும் அதனை உணராத தேவர், தாமும் அவ்வென்றிற்குரியராகக் கருதி இறு மாந்தமையும் அஃதுணர்ந்த இறைவன் இயக்கவடிவங்கொண்டு எதிரில் நின்றகாலை அவர்கள் அவனை அறியாதிருந்தமையும் கேநோபநிடதத்துட் காண்க.
இயல்பாகவே ஆணவ மலத்தாற் பிணிக்கப்பட்டிருத்தலின் தம்மை "வல்வினையேன்" என்றார், "வல்வினையேன், ஆழியப்பா வுடையாய்" (அடைக்கலப் 6) என அடிகள் பிறிதோ ரிடத்தும் கூறுதல்காண்க மறைந்திட மூடியமாய இருளை என்றது அறிவு சிறிதும் விளங்காது தம்மை மூடிக்கொண்டு உடனிருக்

சிவபுராணம் 21
கின்ற வஞ்சகத்தையுடைய ஆணவ இருளை என்றவாறு, மாயம். வஞ்சனை. "மடங்கல்போற் சினைடு மாயஞ்செ யவுண்ரை" (கலி 2 3) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க.
உயிர்களை அநாதிசம்பந்தமாகப் பற்றியிருக்கின்ற ஆணவ இருளை வலிகெடச் செய்தற்பொருட்டு நல்வினை தீவினையென் னும் தொழில்களைச் செய்யும்படி பிரவாக அநாதிசம்பந்தமாகிய கன்மமலத்தோடு சேர்ப்பன். அறம் பாவம் என்னும் கன்மம் நிகழ்தற்கு "உடம்பு இன்றியமையாதது இருத்தவின் பிரவாக அநாதிசம்பந்தமான மாயையோடு சேர்ப்பன்: இம்முறைமையே "என்னை மூடிய மாய இருளை அறம் பாவம் என்னிம் அருங்கயிற் றாற் கட்டி ஒன்பது வாயிற்குடிலைச் சிறியேற்கு நல்கி என JoyQ56flé QartitulJul"Lo).
புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடியென்றது புறத்தே தோலைப் போர்வையாக இட்டு அதனால் உடம்பில் எங்குமுள்ள புழுக்களையும் அழுக்குகளையும் மறைத்து என்ற Gump.
"மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல்போர்த்த குப்பாயம்" ஆசை2. "அளிபுண் ணகத்துப் புறந்தோல்மூடி யடியேனுடைய
unréttins”” ஆசை 5. என வருவன காண்க. மூடி என்பதற்கு மூடிச்செய்த என ஒரு சொல் வருவித்துரைக்க. இதனால் ஒன்பது வாயிற்குடிலின் அமைப்புக் கூறியவாறு. மலஞ்சோரு மொன்பது வாயிற்குடில் - மலம் சலம் தாது பீழை குறும்பி சளி என்றும் அழுக்குகள் சோரு கின்ற ஒன்பது வாயில்களையுடைய உடம்பாகிய குடிசை.
"கால்கொடுத் திருகையேற்றிக் கழிநிறைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல் ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே'
நாவு 33 4.
"புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி
ஒழுக்கறா வொன்பதுவா யொற்றுமை யொன்று மில்லை"
prry 52 : 2. aTaMT & C5 en rygh anvenvar øsmrarferas.
மலங்கு, ல் - கலங்குதல். இப்பொருட்டாதல் "கதுவே கலுழ குதல் மலங்குதல்" என்னும் பிங்கலங்தையானும்

Page 15
22 திருவாசக ஆராய்ச்சியுரை
(7:182) அறிக. புலனைந்தும் வஞ்சனையைச் செய்தல் - ஐம் புலன்களும் தம்மைக் கவருமாறு ஐம்பொறிகளையும் மயக்கித் தம்பால் இழுத்தல். அங்ங்ணம் பொறிகள் புலன்களாலே மயக்கப் படுதலால் மாறுப்ட்டு விடுகின்றது. அதனால் அம்மனம் அன் பாகிக் கசிந்துள்ளுருகும் நலம் அற்றதாகின்றது. விலங்கும் என்ப தற்கு எதிரில் நின்று தடுக்கும் எனினுமாம். உனக்கு - உன் னிடத்து, வேற்றுமை மயக்கம். 'எம்பிரான் தில்லைச் சூழ் பொழிற்கே" (திருக்கோவை 167) என்புழிப்போல. கசிந்துள் ளுருகுதல் - மனம் கசிந்து உள்ளே யுருகுதல்.
மாயஇருளை (51) அருங்கயிற்றாற் கட்டி (52) புழுவழுக்கு முடிச்செய்த (53) குடிலை (54) நல்கி (58) என முடிக்க,
நிலந்தன்மேல் வந்தருளியென்றது இறைவன் இந்நிலவுல கத்தே குரு வடிவில் எழுந்தருளிவந்து என்றவாறு.
"செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய பொங்குமலர்ப் பாதம் பூதலத்தே போந்தருளி'
அம்மானை 1.
"பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து
தோன்றி" வார்த் 7. என வருவன காண்க, நீள்கழல்கள் காட்டியென்றது எல்லை காண்டற்கரிய நீண்ட திருவடியைக் காணுமாறு செய்து என்றலை மேற் குட்டி அருள் செய்து என்றவாறு.
'கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட
அண்ணாமலையானை" அம் 10, எனவும்,
"இணையர் திருவடி யென்றலைமேல் வைத்தலுமே" பூவல் 1. எனவும் அடிகள் அருளியமை காண்க.
"சென்னி யின்மிசை மேவிய பாதந்
திருந்து கண்ணிணை சேர்த்திரு கரத்தா லுன்னல் செய்திடு மிதயமே லணைவித்
துவகை கூர்ந்துமெய் யுணர்ச்சியி னெழுந்தார்"
(திருப்பெருந் 58) எனத் திருவாதவூரடிகள் புராணத்து வருதலும் காண்க.
கடை - இழிவு. மக்களுக்குத் தயைசெய்தலில் தாய் சிறந்த வளாதலின் தாயிற் சிறந்த தயாவான' என்றார்.
'தாயி லாகிய இன்னருள் புரிந்த என்தலைவனை"
சதகம் 39.

சிவபுராணம் 23
'as rumour resbos' Garris 12. "தாயிற் பெரிதுந் தயாவுடைய தம்பெருமான்" பூவல் 3.
"பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து" பிடித்த 9. என வருவனவுங் காண்க.
"பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே" (நாவு 252 : 6) எனத் தேவாரத்தும் வருதல் காண்க.
தத்துவம் - வடமொழி. அதன் தன்மை என்பது பொருள். அதன் தன்மையென்றது எப்பொருள் எத்தன்மையுடைத்தோ அப்பொருளை அத்தன்மையுடையதாக உண்மையுணர்தல்.
62-9 மாசு அற்ற சோதி மலர்ந்த மலர் சுடரே - களங்கம் இல்லாத ஒளிவிரிந்த மலரின் ஒளிபோன்றவனே, தேசனே. குரு முதல்வனே தேன் ஆர் அமுதே - இனிமை நிறைந்த அமுதம் போன்றவனே, சிவபுரனே சிவபுரத்தையுடையவனே, பாசம் ஆம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களின் பிடிப்பினைக்கெடுத்து மெய்யறி வினை வளர்க்கும் மேலோனே, நேச அருள் புரிந்து - நின்பால் அன்பு செய்தற்கேதுவாகிய திருவருளைச் செய்து நெஞ்சில் வஞ்சம் கெட - என் மனத்தின்கணுள்ள பொய்ம்மையாகிய குற்றம்கெட, பேராது நின்ற பெரும் கருணை பேர் ஆறே - என் மனத்தின்கண் நீங்காமல் நிலைபெற்ற பெருங்கருணையாகிய பெரிய யாறாகவுள்ளவனே, ஆரா அமுதே - தெவிட்டாத அமுதம் போன்றவனே, அளவு இலா பெம்மானே - எல்லையில் லாத இயல்பினையுடைய பெருமானே, ஒராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே - நின்னை ஆராயதவர் உள்ளத்தின்கண் வெளிப்படாது மறையும் ஒளிப்பொருளாயுள்ளவனே, நீராய் உருக்கி என் ஆர் உயிராய் நின்றானே - என் மனத்தை நீர் போல உருகச் செய்து என் அரிய உயிர்க்கு உயிராய் நின்றவனே.
உலகத்து நீ்ளிகள் போலாது களங்கமின்றி என்றும் ஒருபடித் தாக இருக்கும் ஒளிவிரிந்த மலரொன்று உளதாயின் அம்மலரின் ஒளிபோலும் ஒளியையுடையான் இறைவனாதலின் மாசற்ற Gemß uoso†ßas Losv†4er-Gur“ steiromt. “autapmug) uo-ru ரன்றி யறியொனா மலர்ச்சோதியான்" (அருட் 1) என அடிகள் பிறிதோரிடத்து அருளியமையுங் காண்க.
தேசு - ஒளியாயினும், சோதிமலர்ந்த மலர்ச்சுடரே" (32) என இறைவன் ஒளிவடிவு கூறப்பட்டமையின் தேசன் என்பதற்கு ஈண்டு ஞான ஒளியையுடைய குரு என்பது பொருளாயிற்று.

Page 16
24 திருவாசக ஆராய்ச்சியுரை
சிவபுரம் - சிவலோகம். மேலேழுலகங்களின் மேலேயுள்ள சத்தியலோகம் பிரமாவுடையதாக, அதற்குமேலே வைகுண்ட லோகம் விஷ்ணுவுடையதாக, அதற்குமேலே சிவலோகம் சிவ னுடையதாக நூல்கள் கூறும், அச்சிவலோகமே ஈண்டுச் "சிவ புரம்" எனப்பட்டது.
பாசம் - ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்கள். 'பசுக்களைக் கட்டிய பாச மூன்றுண்டு" என்றார் திருமந்திரத் தும் (2367). இறைவன் பாசமாம் பற்றறுத்தமையை,
"பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசமறுத்தெனை
யாண்ட" குயில் 9. "பாசமானவை பற்றறுத் துயர்ந்ததன் பரம்பெருங்
கருணையால் ஆசைதீர்த் தடியாரிடைக் கூட்டிய வற்புத மறியேனே" அற்புத 8. என அடிகள் அருளியவாற்றானுமறிக. பாரிக்கும் -
வளர்க்கும். பகலென்னும் பண்பின்மை பாரிக்கு நோய்" (குறள் 851) என்புழி, பாரிக்கும் என்பதற்கு வளர்க்கும் எனப் பரிமேழை கர் ப்ொருளுரைத்தமையுங் காண்க. மும்மலங்களின் பற்றைக் கெடுத்து உயிர்கட்கு மெய்யறிவினை வளரச் செய்தலாம் "பாச மாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியன்" என்று அருளிச் செய்தார். ஆரியன் - மேலோன்; வடசொல்.
நேசம் - அன்பு. நேச அருள் - உயிர்கள் தன்பால் நேசம் செய்வதற்கேதுவாகிய திருவருள். "அவனருளாலே யவன்றாள் வணங்கி" (சிவபுரா 18) என வருதலுங் காண்க. வஞ்சம்-பொய். "நின்வாய்மைக்கட் பெரியதோர் வஞ்சமாய்க் கிடவாதோ' (கலி 135 10-11) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க,
பெயராது என்பது பேராது எனத் திரிந்தது. "பேரா விடும்பை தரும்" (குறள் 892) என்புழியும் இஜ்வாறு வருதல் காண்க. ஆராவமுதே - தெவிட்டாத அமுது போன்றவனே.
"ஆராவமுதமுமானார்தாமே (தே. நாவு 250:6) எனவும்,
"அப்பனை நந்தியை ஆரா வமுதினை" (திருமங் 36) எனவும் வருவன காண்க .
இறைவன் இயல்புகள் அளவுபடாதனவாதலின் அளவிலாப் Guiborreiro têrprt. Quborrer Tairus Guilborrer rss நின்றது.

சிவபுராணம் 25
ஒர்தல் - ஆராய்ந்தறிதல், ஒராதார் - தம்மியல்பின்னயும் தம்மையுடைய தலைவன் இயல்பினையும் ஆராய்ந்து அறியா தவர். ஒராதார் உள்ளம் அறியாமையாற் பற்றப்பட்டு இருண்டு கிடத்தலின், எங்குமுள்ள இறைவன் அவருள்ளத்து இருப்பினும் விறகிற்றிப்போல் மறைந்திருப்பானாகலின், "ஒராதாருள்ளத் தொளிக்கு மொளியானே" என்றார். "ஒராதார் உள்ளத்தில்லார் தாமே, உள்ளுறு மன்பர்தம் மனத்தார் தாமே" (திருநாவு 250:8) எனத் தேவாரத்தும் வருதல் காண்க.
ஆருயிராய் நின்றானே என்றது எனது உயிர்க்குயிராய் நின்று இயக்குபவனே என்றவாறு. "உயிர்க்குயிரா யங்கங்கே ffair prair” “’ará avir வுயிர்கட்கும் உயிரா யுளன்" (ஞான 132 4: 377:3) எனத் தேவாரத்து வருவன்வுங் காண்க.
70-4, இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - இன்பமும் துன்பமுமாகிய இரண்டும் இல்லாதவனே, அவை பிரண்டும் உள்ளவனே அன்பருக்கு அன்பனே - அன்பு செய் வார்க்கு அவர்கருதும் அன்புருவாய் அருள் செய்பவனே, யாவை யும் ஆய் அல்லையும் ஆம் சோதியனே - எல்லாப் பொருள்களு மாகி அவையல்லாத வேறுமாகியும் உள்ள ஒளியையுடையவனே, துன் இருளே - நெருங்கிய இருளையுடையவனே தோன்றாப் பெருமையனே - புலனாகாத பெருமையையுடையவனே, ஆதி யனே - எல்லாவற்றிற்கும் முதலாயிருப்பவனே, அந்தம் நடு ஆகி அல்லானே - முடிவும் நடுவும் ஆகி, ஆதியும் அந்தமும் நடுவும் அல்லாதவனுமாய் இருப்பவனே, ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே - என்னை வலியவந்து இழுத்து அடிமை கொண்டருளிய எமது தந்தையாகிய பெருமானே.
உலகத்து இன்ப துன்பங்கள் மாறிமாறி வந்து அழியுந்தன்மை யுடையன. இறைவன் நித்திய நிரதிசய ஆனந்தமுடையனாத லின் இன்பமும் துன்பமும் இல்லானே" என்று அருளிச் செய்தார், இனி, தம்மைத் தலைக்கூடிய அடியார்க்கு உலகத்தாலும் உல கத்துப் பொருள்களாலும் உயிர்களாலும் வரும் இன்பதுன்பங்கள் அவ்வடியாரைத் தாக்காமல் முதல்வனே ரன்று கொள்வானாத லின் இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே" என்றார் எனினுமாம். "துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு" (திருப் பொற் 20) என அடிகள் அருளியமையுங்காண்க.
இவன் உலகில் இதம்அகிதஞ் செய்த எல்லாம்
இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும் அவன் இவனாய் நின்றமுறை யேக னாகி
அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றங்

Page 17
26 திருவாசக ஆராய்ச்சியுரை
சிவன்இவன் செய்தியெல்லாம் என்செய்தி யென்றுஞ்
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்
பவம் அகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற்
பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே "
(சூத் 10) எனச் சிவஞானசித்தியாரில் வருதலும் ஈண்டு அறியற்பாலது.
அன்பருக்கு அன்பனே என்பதற்கு அன்பராயினார்க்குத் தானும் அன்பனாயுள்ளான் எனின் அன்பரும் இறைவனும் ஒத்த இயல்பினராவர். அதனால் அன்பனே என்பதற்கு அன்பர்க்கு அன்புருவாய் அருள் செய்பவனே என உரைக்கப்பட்டது. "அன் பாணினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடி வோடு விரைந்து சேறல் இறையியல்பு" எனப் பரிமேலழகர் கூறு தலும், (குறள் 3 உரை) "யாதொரு தெய்வங் கொண்டிர் அத்தெய்வமாகி யாங்கே, மாதொரு பாகனார்தாம் வருவர்" எனச் சிவஞானசித்தியாரில் வருதலும் (குத் 2. செய் 25) காண்க.
இறைவன் வியாபகத்துள் உலகம் முழுவதும் அடங்குதலின் 'யாவையுமாய்" என்றும், அவனது வியாபகம் உலகப் பொருள் களுக்கு அப்பாலுமாய் இருத்தலாலும், தன்னுள் வியாப்பிய மான உலகப்பொருள்களால் இறைவன் தாக்குண்ணாது வேறாய் நிற்றலினாலும் "அல்லையுமாய்" என்றும் அருளிச் செய்தார். இறைவன் ஒளியுடையவனாதலின்"சோதியனே" என்றார்.
எல்லாவுயிர்களையும் மறைக்கும் ஆணவ வல்லிருளால் தான் மறைக்கப்படாது தான் அதனுள்ளும் மறைந்து நிறைந்திருத்த லின் "துன்னிருளே’ என்றார். துன்னுதல் - நெருங்குதல். "துன்னி நங் காதலர் துறந்தேகு மாரிடை" (கலி:6) என்புழிப்போல, செறிதலுமாம். இறைவன் சோதியனாயும் துன்னிருளாயும் உள்ளான் என்பது "சோதியுமாயிருளாயினார்க்கு" (திருப்பொற் 20) என்பதனாலுமறியப்படும்.
இறைவன் பெருமை எத்துணைக் காலமிருந்தும் அறியப் புகினும் வரையறைவின்றி விரிதலின் அது புலனாகாது என்பர் தோன்றாப் பெருமையனே" என்றார்
" ஞானந் தானுரு வாகிய நாயக ளியல்பை
யானும் நீயுமாம் இசைத்துமென் றாலஃ தெளிதோ மோனத் தீர்கலாமுனிவருந் தேற்றிலர் முழுதுந் தானுங் காண்கிலன் இன்னமுந் தன்பெருந் தலைமை" (குரமைச் 128)
எனக் கந்தபுராணத்து வருதலுங் காண்க.

சிவபுராணம் 27
இறைவன் ஆதியும் அந்தமும் நடுவுமாகியும் அவையின்றியும் உள்ளாதலின் 'ஆதியனே யந்த நடுவாகி பல்லானே" என்றார்.
"ஆதியே நடுவே யந்தமே" கோயில் 9. எனவும்,
முன் ஈறும் ஆதியும் இல்லான்" திருப்பொற் 3. எனவும் அடிகள் அருளியமையுங் காண்க. இறைவன் ஆதியும் அந்தமும் நடுவும் உடையனாம் எனின் அவனது இறைமைக் குணத்திற்கு குற்றமாகாதோவெனின் ஆகாது; என்னை? இறைவன் அன்பராயினார்க்கருள் செய்யும் பொருட்டு அருளுருக் கொண்டு தோற்றி நின்று மறைதல்பற்றி அவையுடையனாகத் தோன்றினும், உண்மையில் இலனாமாகலின். இது பற்றியே.
ஆட்பாவலர்க் கருளு வண்ணமுமாதி மாண்பும் Osunrir severtosauann) 6Traias Cavalrlin'
(தே. 312:4) என ஆளுடையபிள்ளையாரும் அருளிச் செய்வாராயினர்.
ார்த்தென்னை யாட்கொண்ட என்றது என்னை வலியவந்து இழுத்து அடிமைகொண்ட என்றவாறு.
" நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க" திருவண்ட 99
கேள்ளேன் ஒழியுங் கண்டுகொண் டாண்டதெக் காரணமே" 部菇2。 எனவும் அடிகள் பிறாண்டும் கூறுவன காண்க. எந்தை பெருமான் - எமது தந்தையாகிய பெருமான். "எந்தாய் எந்தை பெருமானே" ஈசனே பென்னெம்மானே எந்தைபெருமான்" (சத 24 51) என வருவன காண்க.
78-85. கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம் கருத்தில் நோக்கு அரிய நோக்கே - கூரிய மெய்யறிவினால் உளங்கொண்டு உணர்வாருடைய கருத்தினாலும் அறிதற்கு அரிய கருத்துப் பொருளே, நுணுக்கு அரிய நுண் உணர்வே - நுணுகி உணர்தற்கும் அரிய நுண்ணிய உணர்வுப் பொருளே, போக்கும் வரவும் புணர்வும் இலா புண்ணியனே - போதலும் வருதலும் பொருந்தியிருத்தலும் இல்லாத தூய்மையுடையோனே, காக்கும் எம் காவலனே - எல்லாவற்றையும் காக்கும் 'எம் அரசனே, LCLLT LTT LCLTLLL TTTLT S TTTTGMTLLLLLTLT TTLLLLL LLLLLLLTEELtLt வடிவினனே, ஆற்று இன்ப வெள்ளமே - ஆற்றின் வெள்ளம் பொன்ற இன்ப வெள்ளத்தையுடையவனே, அத்தா - அப்பனே, மிக்காய் நின்ற தோற்ற சுடர் ஒளியாய் - எல்லாவற்றினும் மேலாய் நிலைபெற்ற தோற்றத்தினையுடைய விளங்குகின்ற ஒளி

Page 18
28 திருவாசக ஆராய்ச்சியுரை
யாகியும் சொல்லாத நுண் உணர்வாய் - சொல்லுதற்கியலாத நுண்ணிய உணர்வாகியும், மாற்றமாம் ஆம் வையகத்தின் வெவ் வேறே வந்து அறிவு ஆம் தேற்றனே - மாறுபாட்டினையுடைய இந்நிலவுலகத்தின்கண் உயிர்களுக்கு வெவ்வேறு நிலைமையில் வந்து அருள் செய்தலால் அறியப்படும் தெளிபொருளாகியுமுள் ளவனே, தேற்ற தெளிவே . தெளிவினிற் றெளிவே, என் சிந்த னையுள் ஊற்று ஆன உண் ஆர் அமுதே - என் மனத்தினுள்ளே ஊற்றாய்ச் சுரக்கின்ற உண்டற்கினிய அரிய அமுதமே, உடை யானே - எப்பொருளையும் எவ்வுயிரையும் உடையவனே.
கூர்த்த - கூரிய சிறந்த, "கூர்ப்புங் கழிவு முள்ளது சிறக் கும்" என்பது தொல்காப்பியம். கூர்த்த மெய்ஞ்ஞானமுடையார் இறைவனொடு இயைந்து நிற்கப் பெறுதலானும் அவர் செய லெல்லாம் அவன் செயல்வழியே நடைபெறுதலானும் அவர்தம் உயிர்க்குயிராய் விளங்க அறியப்படுவானல்லது சுட்டுணர்விற்குப் புலனாகான் என்பது தெரித்தற்குக் "கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின், நோக்கரிய நோக்கே" என்று அருளுவாராயினர்.
நுணுக்கு - நுண்மை. நுண்ணுணர்வு - நுண்ணிய உணர்வுப் பொருள். உணர்வாய் நின்ற திருவனே" "உணர்வவன் காண்" உணர்வெலா மானானை" (தே. 126 : 5, 285 : 5; 299 : 1) என அப்பரடிகள் அருளியயமையும் காண்க.
இறைவன் சர்வவியாபகனாதலின் "போக்கும் வரவும் இலன் எனவும், உலகமும் உயிரும் தன் வியாபகத்துள் அடங்கினும் அவற்றொடு தான் இயைபின்றியிருத்தலிற் "புணர்வுமிலன்" என வும் கூறினார்.
" போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதலாடுத லல்லால் " (திருப்பள்ளி 5)
என வருதல் காண்க. இனி, "போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியன்" என்பதற்கு இறத்தலும் பிறத்தலும் பொருந்தி யிருத்தலும் இல்லாத தூய்மையுடையோனே எனினுமாம். 'இறப்பொடு பிறப்பிலானை" எனத் தேவாரத்து (நாவு 74:3) வருதலுங் காண்க. புண்ணியன் - சிவபெருமான், " அடியார் வினைபோக்க வல்ல புரிசடைப் புண்ணியன்" (தே.நாவு 180:7) என வருதலுங் காண்க. காவலன் - அரசன். 'அயன்றிருமால னானை யனலோன் போற்றுங் காவலனை" (தே. 304 1) என அப்பரடிகள் அருளியமை காண்க.

சிவபுராணம் 29
காண்பரிய பேரொளியே என்பதற்கு மிக்க பேரொளியுடை மையாற் கண்களாற் காண்டற்கரிய பேரொளி வடிவினனே எனினுமாம். "காண்பரிதாகி நின்ற சுடர்தனை" காண்பரிய செழுஞ்சுடரை" (அப் 42 : 5; 247 : 1) எனத் தேவாரத்து வரு வனவுங் காண்க.
இறைவன் சுடரொளியாயும் நுண்ணுணர்வாயும் இருப்பினும் நிலவுலகத்திலுள்ள மக்களுயிரின் அறிவுநிலைக்கேற்ப வேறு வேறாக வந்து அருளுதலால் அறியப்படுதலின் "வெவ்வேறே வந்தறிவாந் தேற்றனே" என்றார். என்றது உலகின்கண் பல்வேறு வகைப்பட்ட மக்கள் தத்த்ம் அறிவுக்கெட்டியவாறு பல்வேறு தன்மைகளையுடைய தெய்வங்களை வழிபட்டுப் பின்னர் அறிவு வளருந்தோறும் முன்னைய தெய்வம் வழிபாட்டிற்குரியதன் றென விடுத்து அதனின் மிக்கதனை வழிபாடாற்றிப் பின்னர் அதனிற் சிறந்ததொன்றனை வழிபட்டு இறுதியாக எல்லாவற் றையும் விடுத்து அறிவுருவாய் எஞ்சிநின்ற முழுமுதலிறைவனைத் தெளிந்து வழிபாடாற்றி வீடு பேறடைவராதலின் மாற்றமாம் வையகத்தின் வந்தறிவாந் தேற்றனே" என்றார்.
* யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி யாங்கே
மாதொரு பாக ணார்தாம் வருவர்மற் றத்தெய்வங்கள் வேதனைப் படுமிறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும் ஆதலான் இவையிலாதான் அறிந்தருள் செய்வன் அன்றே
(சூத். செய் 25) என்னும் சிவஞானசித்தியார் திருவிருத்தம் இங்கே சிந்திக்கத் தக்கது.
தேற்றத்தெளிவு - தெளிந்தார்க்கும் உயிர்க்குயிராய் நின்று நுகரப் படும் தெளிவு. ஊற்றான அமுது - என் மனத்தினுள் ஊற்றாகச் சுரக்கின்ற அமுது. "ஊற்றிருந் துள்ளங் கழிப் போன்" (அண்ட 121) என அடிகள் அருளியமையுங் காண்க. ஆர் அமுது - அரிய அமுது, "நின்னாளானார்க் குண்ணார்ந்த ஆரமுதே" (ஏசறவு 2) என வருதல் காண்க. உடையானே - என்னை ஆளாக உடையானே எனினுமாம்:
84-88. வேற்று விகார விடக்கு உடம்பின் உள் கிடப்ப bQapdir - Qaudio Qaugo LDraqoyunTC995 Aparı7 azyarplu 27 abir alıb.9 TTTT TT L TLTT TTTT TTTLLTTTT LLL LLTLLLLLLLLSLLLLLLSS LE ஐயா - எமது தலைவனே, அரனேயோ என்று என்று. பாசங் களை நீக்குவோனேயோ என்று பலகால் ஓலமிட்டு அழைத்து, போற்றி புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் - வணங்கிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்து பொய்யாகிய நினைவு சொற்

Page 19
30 திருவாசக ஆராய்ச்சியுரை
செயல்களெல்லாம் கெட்டு மெய்யாகிய நினைவு சொற் செயல் களை உடையராயினார், மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே - திரும்பவும் இந்நிலவுலகத்தில் வந்து இருவினைக்டோ னதும் இருவினைக்கு விளைவானதுமாகிய பிறப்பினை அடை யாமே, கள்ளம் புலம் குரம்பை கட்டு அழிக்க வல்லானே-வஞ்சகத் தையுடைய புலன்களின் வழிச்செல்லும் ஐம்பொறிகளின் குடிசை யாகிய எடுத்த உடம்பின் பந்தத்தினை அழிக்க வல்லவனே.
வேறு விகாரம் - வேறாகிய விகாரம். இருபெயரொட்டுப் பண்புத் தொகை. வேறாகிய விகாரங்கள் : பாலியம் யவ்வனம் கெளமாரம் வயோதிகம் நரை திரை நோய் மூப்பு சாக்காடு என் பன. விடக்கு - ஊன்.
*"புலி தனக்கிடு விடக்கை நின்றதொரு பூனைதின்னுமது
போல்" (பாரதம்) என்புழியும் இப்பொருட்டாதல் காண்க
இறைவன் திருவடியைத் தலைக்கூடும் நிலையை எய்தி னார்க்கு இவ்வூனுடம்பு ஒரு பொறையாயும் சிறையாயுமிருத்த லின் ஊனுடம்பினுட்கிடப்ப ஆற்றேன்" என்றார். "ஆக்கை யைப் பொறுத்தல் புகலேன்" (அண்ட 123) 'தினைத் துணை யேனும் பொறேன் துயராக்கையின் திண்வலையே" (நீத் 39) என அடிகள் அருளியமையுங் காண்க.
அரன் - வடமொழி. உயிர்களின் மாசுகளை அழிப்பவன் என்பது இதன் பொருள். புகழ்ந்திருத்தல் - புகழ்ந்து பாடிக் கொண்டிருதிதல். 'பொய்என்றது உயிரியல்பான நினைவு சொற் செயல்களை - அவை உள்ளிடின்மையின் பொய்யெனப்பட்டன. மெய் . இறையருள் வழி நிற்றலினால் உளவாகும் நினைவு சொற்செயல்கள். அவை உயிரின் ஈடேற்றமாகிய உள்ளிடுமையின் மெய்யெனப்பட்டன. இங்கு என்னும் சுட்டு நிலவுலகைக் குறித் ዶÙŠሀ•
வினைப்பிறவி-வினைப்பயனால் உண்டாகும் பிறவி எனவும், வினையைத் தேடுதற்குரிய பிறவி எனவும் கொள்ளப்படும். "வினையின் வந்தது வினைக்கு விளைவாயது" (மணிமேகலை) எனப் பிறரும் கூறுதல் காண்க. பிறவி துன்பத்திற்கேதுவாதலின் "பிறவிசாராமே" என்றார்;
"வினைப்பிறவி யென்கின்ற வேதனையி லகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை" 66TL 2.

சிவபுராணம் 81
என அடிகள் அருளியமையுங் காண்க. சாராமே, மே சற்று வினையெச்சம். "வாராமே" (திருப்படையெழுச்சி 2) என்பது போல. கள்ளம் - வஞ்சகம், "உள்ளுவன் மன்யா னுரைப் பதவர்திறமாற்”, கள்ளம் பிறவோ பசப்பு" (குறள் 1184) என்புழிப்போல. புலம் என்றது ஈண்டு ஐம்புல அவாக்களுக்கிட மான பொறிகளை. அவைகளுக்கு இருப்பிடமாகலின் "புலக் குரம்பை" என்றார். சிறுமனைபோதலின் உடம்பு குரம்பை
76ertull-gi.
எடுத்த உடம்பின் தொடர்பு உளதாங்காறும், நீக்கப்பட்ட புலன்களின் அவா பண்டைப் பயிற்சி வயத்தால் ஒரோவழி உள வாகலின் இவ்வுடம்பின் தொடர்பு நீக்கப்பட வேண்டியதென் பதும் அதனைச் செய்யவல்லான் முழுமுதலிறைவன் ஒருவனே என்பதும் உணர்த்துவார் 'கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே" என்றார்.
89-96 நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே - செறிந்த இருளிலே திருக்கூத்தினைப் பலகாலும் ஆடுகின்ற தலை வனே, தில்லையுள் கூத்தனே. தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் கண்ணே கூத்து இயற்றுவோனே. தென் பாண்டி நாட்டானே - தெற்கேயுள்ள பாண்டி நாட்டையுடையவன்ே. அல்லல் பிறவி அறுப்பானேயோ என்று - துன்பத்திற்கிடமான பிறப்பினை நீக்கு வோனேயோ என்று அழைத்து முறையிட்டு, சொல்லற்கு அரியானை சொல்லி - சொல்லிப் பாராட்டுதற்கு முடியாத அருமைப்பாடுடையவனை இயன்றமட்டும் பாராட்டி, திருஅடி கீழ் சொல்லிய - அவன் திருவடியாகிய திருவருளின் கீழ்பட்டு நின்று பாடிய, பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் - பாடல்களின் பொருள்களை அறிந்து ஒதவல்லவர்கள், சிவபுரா ணத்தின் உள்ளார் பல்லோரும் பணிந்து ஏத்த சிவபுரத்திலுள்ள சிவகணத்தவர் பலரும் வணங்கித் துதிக்க, சிவன் அடி கீழ்ச் செல் வர் - சிவன் திருவடிக்கீழ்ச் சென்று இன்புற்றிருப்பர்.
நள்ளிருள் செறிந்த இருள், நளி என்பது செறிவுப் பொரு ளுணர்த்துதல் "நளியென் கிளவி செறிவு மாகும்" (தொல்,உள5) என்பதனாலுமறிக. நட்டம் - கூத்து. பயின்றாடுதல் - எல்லை யின்றிப் பலகாலுமாடுதல். பயின்று என்பதற்குப் பழகி எனப் பொருள் உளதாயினும் இங்கு இறைவன் எண்ணிறந்த காலமாக ஆடுதலின் அதற்குப் பலகால் என்பதே பொருளாகக் கொள்ளப் படும். எல்லாவுயிர்களும் உணர்வு செயலற்று அறியாமையாகிய வல்லிருளில் மூழ்கிக் கிடக்கும் பேரூழிக்காலத்தும்இறைவன் தான்

Page 20
32 திருவாசக ஆராய்ச்சியுரை
வாழா இருத்தலின்றி அவற்றின்பொருட்டு ஆடுதலின் "நள்ளிரு
ளில் நட்டம் பயின்றாடு நாதனே' என்றார்.
"நள்ளிரு ணட்டம தாடுவார்" ஞான 360 7. "நட்டமாடுவர் நள்ளிருளேமமும்" நாவு 1443, "நள்ளிருள் நட்டமதாடல் நவின்றோர்" சுங் 11 3.
எனத் தேவாரத்தும் வருமன காண்க.
இறைவன் நள்ளிருளில் ஆடும் திருக்கூத்தினைப் புறத்தே குறிப்பது தில்லைத் திருச்சிற்றம்பலக் கூத்தாகலின் "தில்லையுட் கூத்தனே' - என்றார். இறைவன் தமிழின் பொருட்டும் தமி ழுணர்ந்த அன்பர் பொருட்டும் பலவகைத் திருவிளையாடல் களும் செய்தற்கு இடமானமைப் பற்றித் "தென்பாண்டி நாட் டானே" என்றார். "பாண்டி நாடே பழம்பதி auntasaqub (SerfäSŞ 118) என வருதலும் காண்க.
அல்லம் - துன்பம், பிறவி அறுப்பான் - பிறவி "மாயப் பிறப்பறுக்கும் மன்னன்' "பிறந்த பிறப்பறுக்கு மெங்கள் பெருமான்" (சிவபுரா 14, 48) பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன்" (திருவண்ட 2) என அடிகள் பிறாண்டும் அருளியமை காண்க. அறுப்பானேயோ நீக்குவானேயோ, "மணியேயோ" "கோவேயோ" "அமுதேயோ" (ஆசைப் 1, 2, 5) 'பிஞ்ளு கனேயோ" (செத் 7) எனப் பிறவிடங்களிலும் முறையீட்டுப் பொருளில் இங்ங்ணம் அருளிச் செய்யுமாறு காண்க,
சொல்லற்கரியானை - சொல்லிப் பாராட்டுதற்கு முடியாத அருமைப்பாடுடையவனை, "சொற்பத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற சொலற்கரிய சூழலாய்" (அப் 309 : 4) எனத் தேவாரத்தும் வருதல் காண்க,
திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டென்றது இறைவன் திருவடி யாகிய திருவருளின் கீழ்ப்பட்டு நின்று பாடிய பாட்டு என்றவாறு, பாட்டென்றது"ஈண்டுத் திருவாசகத்தை பாட்டின் பொரு ளுணர்ந்து சொல்லவேண்டுமென்பது "சொற்பாவும் பொரு டெரிந்து தூய்மை நோக்கித் தூங்காதார் மனத்திருளை வாங்கா " (திருநாவு 281 : 2) எனத் தேவாரத்து வருதலாறு Of
சொல்லுவார் (93) சிவபுரத்திலுள்ளார் (94) பல்லோரும் பணிந்து ஏத்த (95) சிவனடிக்கீழ்ச் செல்வர் (94) Grar இயைத்துப் பொருள் கொள்க.
இறைவனைப் படர்க்கைக்கண் வைத்து வாழ்க (1.5) வெல்க (6-10) என வாழ்த்தும், Gunsbso ( 1-6) Tar

சிவபுராணம் 33
வணக்கமும் அதன் பயனாகக் கண்ணுதலான் (21) கழல் இறைஞ்சி (22) வந்தெய்திக் கண்காட்ட (1) அவன் என் சிந்தை புள் நின்ற அதனால் (17) தாள் லணங்கி (18) மகிழ (19) ஒயச் (20) சிவபுராணந்தன்னை (19) உரைப்பணியான் (20) என வருபொருளுமுரைத்து நுதலிப் புகுந்தவர், மிக்காய் விளங்கொளி பாய் (23) எல்லையிலாதானே (24) என இறைவனை முன்னிலைப்படுத்தி நின்பெருஞ்சீர் (24) புகழுமாறொன்றறி யேன் (35) என அவையடக்கம் கூறி மேலே திருப்பாடலைத் தொடங்குகின்றார். மேல் ஆகி ஆய்’(28-29) எனப் பலகாலும் வந்த எச்சங்கள் பிறந்து (31) என்றும் வினையொடு முடிய அது இளைத்தேன் (31) என்னும் முற்றுவினை கொண்டது.
இளைத்தேனாஇய யான் எம்பெருமான் (31) மெய்யா விமலா விடைப்பாகா (34) நுண்ணியனே (35) வெய்யாய் தணி until studeur (36) Quotidalour (38) gairu Guo Lorror (39) நல்லறிவே (40) இல்லாப் (41) ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் (42) போக்குவாய் புகுவிப்பாய் (43) நேரியாய் சேயாய் நணியானே (44) மறையோனே (45) எங்கள் பெருமான் (48) ஐந்துடையாய் (49) மறைந்திருந்தாய் எம்பெருமான் (50) விமலா (56) தத்துவனே (61) மலர்ச்சுடரே (82) தேசன்ே அமுதே சிவபுரனே (68) ஆரியனே (64) பேராறே (86) அமுதே பெம்மானே (67) ஒளியானே (68) ஆருயிராய் நின்றானே (89) இல்லானே உள்ளானே (70) அன்பனே (71) சோதியனே துன் னிருளே பெருமையனே (72) ஆதியனே அல்லானே (73) எந்தை பெருமானே (74) நோக்கே நுண்ணுணர்வே (78) புண்ணியனே (77) காவலனே பேரொளியே (78) வெள்ளமே அத்தா (79) தேற்றனே தெளிவே (82) அமுதே உடையானே (83) வல்லானே (88) நட்டம் பயின்றாடும் நாதனே (89) தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90) பிறவி அறுப்பானே என்று (91) திருவடிக்கீழ்ச் (92) சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்தி சொல்லுவார் (93) சிவபுரத்தினுள்ளார் (94) பல்லோரும் பணிந்து ஏத்தச் (95) சிவனடிக்கீழ்ச் செல்வர் என வினை முடிபு செய்க
இது கடவுட் பராய முன்னிலைக்கண் வந்த பாடாண்பாட்டு.
æðsmætti

Page 21


Page 22
OOOOOOOOOOOOOOOOOOOOOOC
"URA IASI RI "SANGANOOL C
"PANDITHA SAIVA THIR U.S., ARUL
CCCCCO-CI C

CDCDCDCXCOCOK DEKDICIOCCOYOYO
YAR"
HEL VAR" YAANI" -
AMPALA Y ANAR
DIOFO ,