கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்

Page 1


Page 2

ல் காணலாம்
தி
té0) L55
2
O த்தின் ஒரு பகு
ய மருதடி விநாயகர் ஆலய
மானிப்பா

Page 3

9. சிவமயம்
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
<>
மூன்றாம் பதிப்பு சுவாமிநாதன் தர்மசீலனர் IDTGofůLITů
<>
All Rights Reserved பதிப்புரிமை பதிப்பாளருக்குரியது
பவ ரீ

Page 4

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
பொருளடக்கம்
முகவுரை 1970
சிறப்புரை 1970
இதய வாசல் 1995
சிறப்புரைகள் 1995
மகான் அடக்கம்
போர்த்துக்கேயர் காலம் ஆலய உற்பத்தி
திருப்பணி வேலைகள் கோவிற் பூசகரும் தருமகர்த்தாக்களும் விநாயகர் சீர்பரவல்
வாழ்த்துக் கவி
விநாயகர் கும்மி வினைகளை வேரோடறுக்கும் விநாயகப் பெருமான் 1970 நூற்பயன்

Page 5
劑
シ
 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
முகவுரை
சிற்றறிவும் சிறு தொழிலும் உடையோமாகிய யாம் சர்வ வல்லமையும் சகல ஞானமும் படைத்த ஆதியும், அந்தமும் இல்லா
விநாயகப் பெருமானின் திருப்புகழை எடுத்து உரைப்பதற்கு தகுதி
பெற்றவர்கள் அல்லர்.
இலங்காதீபத்திற்குச் சிரமென விளங்கும் எமது யாழ்ப்பாண நன்னகரில் பல வளங்களாலுஞ்செறிந்தமானிப்பாயிலே தமதடியார்கள் இட்ட சித்திகளைப் பெற்றிடேறுமாறு திருக்கோயில் கொண் டெழுந்தருளியிருக்கும் கருணைக் கற்பகவள்ளலும், மெய்யன்பர் களுடைய அகக்கண்களுக்கு அருச்சுனம் அல்லது பூதவமென்று அழைக்கப்படும், மருத விருட்சத்தின் கீழ் வீற்றிருந்து தயிரின் கண் நெய் போல் வியாபகமாய் தோற்றுகின்ற சச்சிதானந்தரூபியும் எங்களால் “மருதடி விநாயகர்” என அழைக்கப்படுபவருமாகிய கற்பக விநாயகக் கருணாநிதிப் பெருமானுடைய சரித்திரத்தைப்பற்றிப் பேசுவோர் அனேகர், ஆனால் அவர்களில் பலருக்கு கோயில் எக் காலத்தில் எக்காரணம் பற்றி உருவாகியதென்பதும், எவர் முதன் முதலில் ஆலயத்தை நிறுவினார் என்பதும் தெரியாது.
நமது ஈழவள நாட்டின் வரலாற்றில் மானிப்பாய் பட்டினத் திற்கு என்றுமே தனிச் சிறப்பு உண்டு. இலங்கையின் விடுதலைக்கு வித்திட்ட வீரபுருடர்களான சேர், பொன். இராமனாதன், சேர். பொன். அருணாசலம் போன்ற விடுதலை வீரர்களையும் சொற்கலைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் போன்ற தமிழ் பேரறிஞர் களையும் இந் நாட்டிற்கு நல்கிய பெருமை மானிப்பாய் பட்டினத் திற்குண்டு. இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க பட்டினத்தில் பிறந்த எனது பாட்டனார் பண்டிதர். தா. சுவாமிநாதன் அவர்கள் ஊரார் மத்தியில் நிலவிய கதைகளைக் கொண்டும் பெரியவர்கள் ஆதார மாகச் சொல்லிய மொழிகளைக் கொண்டும் இவ்விநாயகமூர்த்தியைப் பிரார்த்தித்து மக்கள் மனித சீவியத்தின் பரமப்பிரயோசனத்தை அடைகிறதற்கு இம்மூர்த்தியின் அற்புதம் வாய்ந்த அருமைத் திவ்விய சரித்திரத்தைப் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த இந்நூலின் பிரதிகள் இப்போது இல்லை. சில மெய்யன்பர்களிடம் மட்டுமே பேணிப் பாதுகாக்கப்பட்டு வரும் சில பிரதிகள் உண்டு. இன்றைய சந்ததியினருக்கும் இந்நூல் கிட்ட வேண்டும் என்ற பேராவலால் நான் அதனை மறுபதிப்புச்
செய்ய எண்ணினேன். அந்த எண்ணத்தின் விளைவாக இந்நூல்
உருப்பெற்றது. இப்பதிப்பில் ஆலயப் படங்கள் சிலவற்றுடன் மேலும்

Page 6
2 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
பல விபரங்களையும் சுருக்கமாகச் சேர்த்துள்ளேன். விக்கினேஸ்வர னில் கொண்டதனியா அன்பு காரணமாக அவருடைய மகிமைகளை வியந்து கூறும் நூலை அழிய விடாது எனது சிற்றறிவுக்கு எட்டியவாறு புதுப்பித்திருக்கிறேன். இப்பணியில் எனது சிற்றறிவுக்குப் புலப்படாத சிறுபிழைகள் இருப்பின் அன்பு கூர்ந்து மன்னித்து அவற்றை எனக்குத் தெரிவிப்பின் மறுபதிப்பில் திருத்திக் கொள்ளுவேன்.
எனது வேண்டுகோழுக்கிணங்க இந்நூலுக்கு சிறப்புரை தந்த திரு. சி. இராசேந்திரன் அவர்களுக்கும் திரு. ஐ. குமாரசுவாமி அவர்களுக்கும் நான் மிகவும் நன்றிசெலுத்தக் கடமைப்பாடுடையேன். எனக்கு இப்புத்தகத்தை புதுப்பிக்க அதிகாரம் வழங்கிய பாட்டன் மார் தா. தில்லைநாதன் அவர்களையும் ஒத்துழைப்புத்தந்த ஆலய அதிபர் திரு. சு. இராமேஸ்வரம் அவர்களையும் எவ்வளவு பாராட்டி னாலும் தகும். இந்நூலைப் புதுப்பிக்க உற்சாகமூட்டிய ஆசிரியர் கே. கணேசிற்கு எனது நன்றி. புகைப்படம் சிறந்த முறையில் எடுத்த மானிப்பாய் ராஜா ஸ்ரூடியோ ஸ்தாபனத்தாருக்கும் இந்த நூலை அழகுற அச்சிட்டுத்தந்த வீரகேசரி அச்சகத்தாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
ஈற்றில் மானிப்பாய் மருதடித் திருப்பதியில் எழுந்தருளி சகல அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழித்து, மறைத்து அருள் சொரியும் ஐங்கரத்தண்ணலின் கோவில் பரம்பரையிலும், ஆக்கியோன் வழியிலும் வந்த சிறியேனை இச்சிறுமான்மியத்தை அழிந்து ஒழிந்து சிதைந்து போகாது மறுபதிப்புச் செய்து யாரும் அறியும் பொருட்டு வெளியிடுவதற்குத் திருவருள் புரிந்து ஒரு தினத்தினையாவது பணிசெய்வதற்கு வழிவகுத்துக் கொடுத்ததற்கு, மருதடி விநாயகரை மெய்மறந்து, மனங்கசிந்துருகி கண்ணிர் மல்கி இறைஞ்சி நெஞ்சார வாழ்த்தி வணங்குகின்றேன்.
சுவாமிநாதன் தர்மசீலன்
 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 3
முதற் பதிப்பின் முன்னுரையிலிருந்து
1925ம் ஆண்டு திரு. தா. சுவாமிநாதன் அவர்களால் எழுதப்பட்டு, அச்சிடப்பட்ட மானிப்பாய் மருதடி விநாயகர் மான்மியம் என்ற நூலுக்கு எழுதப்பட்ட மதிப்புரைகளில் இருந்து சில பகுதிகள்.
மானிப்பாய் இந்துக் கல்லூரி முன்னாள் தலைமை ஆசிரி யரும், பழைய வட்டுக்கோட்டை எம். பி. யுமான காலஞ் சென்ற திரு. வீ. வீரசிங்கம் பி. ஏ. அவர்கள் எழுதியதிலிருந்து :
தரிசிப்பார் மனங்களைக் கவர்ந்து, பக்தியை வளர்த்து வேண்டுவார் வேண்டுவதை ஈயும் மருதடி விநாயகர் மான்மியத்தைத் தெள்ளிய தமிழில் யாவரும் வாசித்து இன்புறுமாறு எழுதப்பெற்ற இச் சிறு புத்தகம் எனக்கு அதிகம் சந்தோஷத்தைத் தந்தது. எங்கள் யாழ்ப்பாண நாட்டில் உள்ள வாலிபர் தங்கள், தங்கள் கிராமங்களின் சரித்திரங்களை ஆராய்ந்து எழுதுவராயின் தேசத் தொண்டு செய்பவராவர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லுTரி ஆசிரியர் திரு. பொ. சபாபதிப்பிள்ளை பி. ஏ. எல். டீ. அவர்கள் கூறியதிலிருந்து :
பிறவியின் நோக்கம் மருதடி விநாயகர் மேல் அன்பு வளர்த்தலே அதை வளர்ப்பதற்கு அப்பெருமான் மான்மியத்தையும் அவர் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தின் சரித்திர வரலாற்றையும் அறிதல் இன்றியமையாதது. இப் பெருந்தேவையை நிறைவேற்றி யருளியுள்ள திரு. தா. சுவாமிநாதன் அவர்கட்கு அபிமானிகளும் பக்தர்களும் என்றும் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

Page 7
4 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
சிறப்புரை
ஆலயத்தின் தற்போதைய தருமகர்த்தாக்களுள் ஒருவ ரான திரு. நவரெத்தினசிங்கம் சுவாமிநாதனின் புதல்வர்
திரு. சு. இராமேஸ்வரம் அவர்கள் அளித்த சிறப்புரை.
மருதடி விநாயகர் ஆலயத்தின் வரலாற்றைப் பக்தியுடன் வாசிக்கும் பொழுது எங்கள் மனதில் மட்டற்ற மகிழ்ச்சியும், அள வற்ற பக்தி உணர்ச்சியும் பிரவகிக்கின்றது. எங்கள் குலதெய்வ மாகிய மருதடி விநாயகரிடத்தில் இந்நூலைப் படிப்பவர்கள் மனதில் மேலும், மேலும் அபிமானத்தையும், பக்தியையும் வளர்க்கும் என்பது நிச்சயமாகிறது. விநாயகருடைய மான்மியமும், பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயத்தின் வரலாறும், எமது முன்னோர் பெருமானுக்குச் செய்த தொண்டுகளும் இனிய தமிழில் இந்நூலில் காணப்படுகின்றன. இத்தகைய நூல் இதுவரை இருந்ததாக எமக்குத் தெரியாத நிலையில், மான்மியத்தை மறைய விடாது காத்த பெருமை எனது பேரன் சு. தர்மசீலனைச் சாருகின்றது. மருதடி விநாயகர் ஆலயப் பெருமைகளை உலகறியச் செய்யும் இந்நூலை அழகிய ஆலயப்படங்களுடன் வெளியிட்ட சு. தர்மசீலனை எங்களால் பாராட் டாமல் இருக்க முடியாது. இந்நூலைக் கவனமாக வாசித்துப் பெரும் பயனடையுமாறு மருதடி விநாயகரின் திருவடியார்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.
சு. இராமேஸ்வரம்
 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 5
சிறப்புரை
சமாதான நீதவானும், மானிப்பாய் வேலக்கைப் பிள்ளையார் கோவில் அதிபரும், மானிப்பாய் கோவிற்பற்று முன்னேற்றச் சங்கத் தலைவரும், நியாய துரந்தரும் முன்னை நாள் மானிப்பாய்ப் பட்டின சபைத் தலைவரும், சிறந்த சமூக சேவைத் தொண்டனுமாகிய திரு. சி. இராசேந்திரன் அவர்களின் சிறப்புரை.
மருதடி ஆலய அதிபர் வழித்தோன்றலும், ஆக்கியோன் வழித் தோன்றலுமான இளைஞர் அருட்செல்வன் சுவாமிநாதன் தர்மசீலன் அவர்களுக்கு சைவ உலகமும்மானியம்பதிமருதடியான் கருணையை முன்னிட்டு வாழும் அடியார்களும் என்றென்றும் கடமைப் பட்டுள்ளார்கள். பல அன்பர்களுக்கு இப்படியோர் சிறந்த மருதடி ஆலய சரிதை எழுதப்பட்டு இருக்கின்றதென்பது தெரியாது. இந்த மான்மியத்தை அச்சிடச்செய்து வேறு சில விபரங்களையும் சேர்த்து அழகான முறையில் ஆலயத்தின் பிரதான காட்சிகளையும் இடம் பெறச் செய்து பலரின் ஆத்ம ஈடேற்றத்திற்கு உறுதுணையாக நிற்கும்படி இக் கைங்கரியத்தில் ஈடுபட்டதையிட்டு நான் மிக மன மகிழ்ச்சியடைகிறேன். மிகப்பெருமைப்படுகிறேன். மிக வாழ்த்து கின்றேன். இப்படிப்பட்ட தெய்வத்தொண்டில் உணர்ச்சியைச் செலுத்தினோர் தங்கள் வாழ்க்கையைப் புனிதப்படுத்துவது மட்டு மல்ல வாராத செல்வம் வருவிப்பான் ஆகிய விநாயகரின் இட்ட சித்திகளைப் பெற்று உய்வது மட்டுமல்ல, மானிட வர்க்கத்திற்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் மிளிர்வார்கள்.
ஆக்கியோன் திரு. தா. சுவாமிநாதன் அவர்களை நான் நன்கு அறிவேன். அவரின் தமிழ் அறிவும், சமய உணர்ச்சியும், பண்பாடும் போற்றத்தக்கன. அதே போல் மறைந்து கிடந்த விநாயகர் ஆலய மான்மியத்தை அச்சிட்டு மறுமலர்ச்சி கொடுத்த திரு. சு. தர்மசீலன் அவர்களின் பெரு முயற்சியும் வியக்கத்தக்கன. இச் சிவநேயச் செல்வருக்கு பெருமானின் பேரருள் பொலிக இச் சரிதையை வாசிப்போர், கேட்போர், இல்லங்களில் வைத்திருப்போர் அனைவரும் வாழ்க.
சி. இராசேந்திரன்

Page 8
6 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
சிறப்புரை
சைவப் பெரியாரும் ஜேம்ஸ் பின்லே கொம்பனியில் முன்னாள் காசாளராகவும் முதலாவது கணக்காளருமாகக் கடமை ஆற்றிய திரு. தா. தில்லைநாதன் அவர்கள் எழுதியது.
தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் பக்திநெறியிலும் பெருமளவு ஈடுபாடு கொண்டவரும், மானிப்பாய் இந்துக் கால்லூரியில் பல ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றியவருமான மறைந்த எம் சகோதரன் பண்டிதர் சுவாமிநாதன் அவர்கள், பிரண வடிவினரும் பிரணவப் பொருளாய் ஞான சொரூபியுமாயுள்ள மருதடி விநாயகப் பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமகிமையைப்பற்றி 1925ம் ஆண்டு “மருதடி விநாயகர் ஆலய மான்மியம்’ என்ற திருப்பெயருடன் ஒர் புத்தகம் எழுதி அச்சிடுவித்து வெளியிட்டுள்ளார்.
இற்றைக்குப் பல ஆண்டுகள் சென்றமையால் அப்புத் தகத்தின் உட்கருத்தும் மகிமையும் குன்றிப் போய்விடுமென் றெண்ணி எமது நற்பெளத்திரன் திரு. சு. தர்மசீலன் அதை அழகுறப் புதுப்பித்து அச்சிட்டு வெளிப்படுத்த முன்வந்துள்ளார். இப்புத்த கத்தில் தவச்சரிதம் விநாயகப் பெருமானின் திருவருளால் சுருக்க மாய்க் கூறப்பட்டிருக்கின்றது. எமது சமய நெறியிலுள்ள தமிழ் மக்கள் மெய்யன்புடனே இச்சரிதையை வாசித்து விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுய்யுறுமாறு யாம் வேண்டுகின்றோம்.
தா. தில்லைநாதன்
 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 7
சிறப்புரை
சைவத் தொண்டு புரிபவரும், பிரபல ஆலைச் சொந்தக் காரரும் வர்த்தகருமான சண்டிலிப்பாய் திரு. ஐ. குமாரசுவாமி அவர்கள் எழுதியது.
அருந்தவம் புரிந்து அண்ட சராசரங்களையும் ஆட்டிப் படைத்த இராவணனையே, ‘மறையோன் என்று உனை நினைத்த மடைமையினால் ஈது இழைத்தேன், பிறையோங்கு மணி மகுடப் பெருங்களிறே பிழைசெய்தேன், இறையோனே பொறுப்பது உனக்கு இயல்பு என்று ஏத்துதலும் பொறையுடனே உமை புதல்வன் புவியில் அரக்கனை விடுத்தான்.”
இவ்வாறாகச் செய்த ஆனைமுகனின் அடிகளை வணங்கி அவர் வீற்றிருந்து அருள் புரியும் புண்ணிய தலங்களின் சரிதை களுள் ஒன்றான “மருதடி விநாயகர் ஆலய மான்மியம்” என்னும் நூலை பெரியார் தா. சுவாமிநாதன் அவர்கள் 1925ம் ஆண்டு எழுதி வெளியிட்டமை போற்றுதற்குரியது.
இப்படியான ஆலய வரலாறுகள் பக்தியை வளர்ப்பதோடு சைவ சமயத்திற்கும் புத்துயிர் அளிப்பனவாக விளங்குகின்றன. இந்த மான்மியத்தை எழுதி வெளியிட்ட காலம் முதல் இன்றைய காலம் வரை உள்ள விபரங்களையும் சேர்த்துத் திரட்டித் தொகுத்து புதுப் பதிப்பாக மீண்டும் இம் மருதடி விநாயகராலய மான்மியத்தை வெளி யிட முன்வந்துள்ள கோவில் அதிபர் பரம்பரையில் வந்துதித்த திரு. சுவாமிநாதன் தர்மசீலனுக்கு சைவ உலகம் கடப்பாடுடையது.
ஈதன்றியும் மேலும் பலப் பல திருப்பணி வேலைகள் புரிய மருதடி விநாயகரின் பக்தர்களுக்குப் போதியஅளவு வாய்ப்புகள் உண்டு. செய்ய வேண்டிய பணிகளில் ஒன்றை யாம் கூறுவோம், இக்கோவிலுக்குச் சேர்ந்த குளத்தைத் திருத்தி அமைத்து நடுவில் தீர்த்த மண்டபங்கட்ட யாராவது முன் வருவாராயின் அப்படிப்பட்ட தொண்டு ஏழேழு பிறவிக்கும் நன்மை பயக்கும். அதனைச் செய்ய அன்பர்கள் முன்வரவேண்டும்.
ஐ. குமாரசுவாமி

Page 9
8 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
இதயவாசல்
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் மூன்றாவது பதிப்பினை வெளியிட வேண்டும் எனப் பல பெரியார்கள் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் எண்ணம் நிறைவேற வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆலயம் இப்பொழுது மக்களால் தெரிவு செய்யப்பட்ட தருமகர்த்தா சபையினரால் நிருவகிக்கப்படுகிறது.
1979ம் ஆண்டு ஒரு நாள் மாலை திருவாளர்கள் சி.சுப்பிரமணியம் (ஒறேற்றர்) எம். இராமேஸ்வரம்,பொ.அமிர்தலிங்கம், அ. நாகராசா ஆகியோர் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் சம்பந்தமாக கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். ஒற்றேற்றர் சி. சுப்பிரமணியம் அவர்கள் ஆண் தலைமுறையில் மூத்த ஆண் பிள்ளை தருமகத்தாவாக வர உரிமையுண்டு. அதன்படி திருவாளர் கள் சுவாமிநாத முதலியார், நவரத்தினசிங்கம், சுவாமிநாதன், இராஜகாரியர், சுவாமிநாதன்,தர்மசீலன், ஆதித்தன் என்றுதொடரும். தற்செயலாக அப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டால் உங்கள் நிலைப் பாடு என்ன என்று கேட்டார். அதற்கு நான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு தருமகத்தா சபையை நிறுவி ஆலய நிருவாகத்தை திறம்பட நடத்த வேண்டும் என்று உடன் பதிலளித்தேன். அதற்கு அவர்கள் தமது மட்டற்ற மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்த அந்த இனிய நினைவுகள் என் நெஞ்சில் இன்றும் நிழ லாடிக் கொண்டிருக்கிறது.
மருதடி விநாயகர் அலயத்திற்கு “யாப்பு” எழுத வேண்டும் என்பதற்காக மானிப்பாய் கோவில் பற்று பல. நோக்கு கூட்டுறவு சமாஜத்திற்கு ஒறேற்றர் சுப்பிரமணியம் அவர்கள் அடிக்கடி வந்து போவார்கள். நான் அச்சமாஜத்தின் தலைவராகக் கடமையாற்றிய காலம் அது. எமது சமாஜத்தின் உபவிதிகளை அடிப்படையாக வைத்து என் ஆலோசனைகளையும் பெற்று அவர் குறிப்புகளை எடுத்துச் சென்றதை இன்றும் மகிழ்வுடன் நினைவு கூருகிறேன்.
முதலாவது தருமகத்தா சபையில் என்னையும் ஒரு தருமகத்தாவாக சேர்த்துக் கொள்ளப்போவதாக கூறினார்கள். கல்வளைப் பிள்ளையார் கோவில் தருமகத்தா சபையில் பொரு ளாளராக இருந்த நான் இப்பொழுது செயலாளராக பணியாற்றி வருவதால் என்னை அச்சபையில் சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்குமாறு நான் கேட்டுக் கொண்டேன். எனது வேண்டுதலை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

மாணிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 9
10. 06, 94 இல் பெங்களூர் வைற்பீல்ட் சென்றிருந்தேன். “மருதடி விநாயகர் ஆலய” மான்மியம் என்ற எனது நூலின் மூன்றா வது பதிப்பை வெளியிடுவதற்குப் பகவான் ழரீ சத்ய சாயிபாபாவின் ஆசியையும் பெறுவதற்காகவே நான் அங்கு சென்றேன். அன்றே வைற்பீல்ட் விநாயகர் சிலைக்கு முன் இரண்டாவது பதிப்பை வைத்து வணங்கினேன்.
11. 06, 94 அன்று காலை பகவான் தரிசனம் கொடுக்கும் நேரம் எனது நூலின் இரண்டாவது பதிப்புடன் மண்டபம் நிரம்பி விட்டதால் வெளியில் அமர்ந்திருந்தேன். சுவாமி நேராக நான் இருக் கும் இடத்தில் வந்து மிக அருகில் என்முன் நின்று அருள் பொழிந் தார்கள். அந்த நூலைக் கையில் வைத்துக் கொண்டே அவரை வணங்கி அவரின் ஆசியையும் பெற்றுக்கொண்டேன். பாபாவின் படப் பிடிப்பாளார் இந்த அற்புதக் காட்சியைப்படம் பிடித்துவிட்டார்கள். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத திருநாளாகும். பொன்னாளாகும்.
இந்த நூலினை அச்சிடவென லசஷ்மி அச்சகத்தின் உரிமை யாளர் திரு. வே. திருநீலகண்டன் அவர்களைச் சந்தித்தேன். என்னை அவர் இன்முகத்துடன் வரவேற்று நூலினை அழகுற அச்சிட்டுத் தருவதாகக் கூறினார். அவர்களுக்கு எனது நன்றிகள். மூத்த எழுத்தாளர் திரு. ந. சிவபாதம் அவர்கள் கொழும்பு பகவான்பூரீ சத்ய சாயி மத்திய நிலையதலைவர் திரு. எஸ். டி. சிவநாயகம், தற்போதைய தருமகத்தா சபைத்தலைவர் திரு. க. தருமராசா அவர்கள் ஆகி யோருக்கும் எனது நன்றிகள் உரித்தாகுக.
அமரர்கள் திரு. கா. சுந்தரம்பிள்ளை. திரு. மு. வைரமுத்து. திரு. மு. இராமேஸ்வரம் திரு. சி. சுப்பிரமணியம் (ஒறேற்றர்), திரு. பொ. அமிர்தலிங்கம் ஆகியோரின் சுயநலமற்ற தியாகத்தை நினைவு கூருகிறேன். அதேநேரம் இன்றும் நற்பணிசெய்யும் திரு. அ.நாகராசா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வாசிப்பவர்கள் நல்வழிப்படும் நோக்கத்துடன் இந்த அரிய நூல் அழியாது ஒவ்வொருவரின் இல்லங்களிலும் பேணிப் பாதுகாக்கப் படவேண்டும் என்பது எமது அவா. ஆகவே அறிவிற் சிறந்த சைவ அபிமானிகள் இதில் ஏதாவது சேர்க்கப்பட வேண்டும் என விரும்பி னால் அதை எமக்குத் தெரியப்படுத்தினால் நான்காவது பதிப்பில் சேர்த்துக் கொள்வோம். எதிர் காலத்தில் கோவில் பெரிய அளவில் புனரமைக்கப்பட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறோம். இந்நூலை கலியுக அவதார புருஷர் பகவான் பூரீ சத்ய சாயிபாபாவிற்கு அர்ப்பணம் செய்கின்றோம்.
சுவாமிநாதன் தர்மசீலன்

Page 10
O மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
ஆண்டறிக்கை
முன்னாள் ஸ்கந்தவரோதையாக் கல்லூரி அதிபரும் பிரபல சமூக சேவையாளரும். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வழிபடுவோர் சங்க செயலாளருமாகிய அமரர் திருவாளர் ஒறேற்றர் சுப்பிரமணியம் கோவில் ஆண்டறிக்கையில் தெரிவித்தது.
ஆலயத்தின் முதல் மேற்பார்வையாளர் சுவாமிநாத முதலியார் குமாரசிங்கம் அவர்களின் நேர்வழித் தோன்றலாகிய சுவாமிநாதன் தர்மசீலன் அவர்கள் தனது பாட்டனார் பண்டிதர் தா. சுவாமிநாதன் அவர்களால் 1925 ம் ஆண்டில் பதிப்பித்த மருதடி விநாயகர் மான்மியம் என்ற அரிய நூலினைத் தந்துதவினார். ஒரேயொரு பிரதி அவரிடம் இருந்தது. பின்னர் 1970 ம் ஆண்டில் அந்நூலைத் தழுவி தான் பதிப்பித்த இரண்டாம் பதிப்பில் பல பிரதிகளை இலவசமாக தந்தார். இவ்விரு நூல்களிலும் நாம் முன் அறியாத எவ்வளவோ விபரங்கள் இருந்தன. சுவாமிநாத முதலியாருடைய உதவியைக் கொண்டு தியாகராசக் குருக்கள் ஆலயத்தைத் தாபித்த காலம் தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரையுமுள்ள சரித்திரம் இந்நூல்களில் விரிவாய் சொல்லப்பட்டிருந்தன. இந்நூல்களுக்குப் பழைய மேற்பார்வையாளர் கள் இருவர் கொடுத்த சிறப்புரைகளில் இந்நூல்களில் சொல்லப்பட்ட விடயங்கள் யாவும், விசேடமாக திருப்பணி விபரங்கள் யாவும் உண்மை என்று கூறியிருந்தார்கள். இந்நூல்கள் கிடைக்காவிட்டால் நாங்கள் திக்குத் தெரியாமல் செயல் கெட்டிருந்திருப்போம்.திரு. சு. தர்மசீலன் அவர்கள் செய்த உதவி போற்ார்க்கது. அவருக்கு எங்கள் நன்றி உரித்தாகுக.
சி. சுப்பிரமணியம்
 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 1
da
ஆசியுரை
மூத்த எழுத்தாளரும் - ஆனைக்கோட்டை அ. மி த. க. பாடசாலை முன்னாள் அதிபரும், சிறந்த சமூக சேவையாளருமான திரு. ந. சிவபாதம் புத்தொளி அவர்களின் ஆசியுரை.
நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற மன உறுதியும், மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற இலட்சியமும் கொண்டு வாழ்பவர் இந்நூலின் ஆசிரியர் திரு. சு.தர்மசீலன் அவர்கள்
இவர் மானிப்பாய் கோயில் பற்று ப.நோ. கூட்டுறவுச் சமாஜத் தலைவராக ஆனைக்கோட்டை கூளாவடியிலும், மானிப்பாயிலும் கடமையாற்றியும் மானிப்பாய் கோயில்பற்று முன்னேற்றச் சங்க உப தலைவராகவும், உடுவில் கமநலசேவை நிலைய உபதலைவர், கடற் றொழிலாளர் சங்க இயக்குனராகவும் அணிசெய்து சமூக சேவையில் சிறப்புற்றார். மானிப்பாய் ப. நோ. கூ. சமாஜத்தில் திரு. சு. தர்மசீலன் தலைவராக இருந்த போது கல்வி உத்தியோகஸ்தராகத் திகழ்ந்து பல பாடசாலைகளுக்கு சமாஜம் சார்பில் அன்பளிப்புகள், பண உதவிகள் செய்து சிறப்பித்தார்.
கல்வளை விநாயகர் ஆலயத்தில் பலவருட காலமாகத் தர்மகர்த்தா சபையில் அங்கம் வகித்தபோது ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இவர் செய லாளராக இருந்த காலத்தில் புதிய சித்திரத்தேர் உருவாக்கப்பட்டு அடியார்களை அகமகிழ வைத்தது.
இவரது சமூக சேவை, ஆலயத்திருத்தொண்டு மக்களுடன் பழகும் மகத்தான பண்பு என்பன என்னை அவரது நண்பராக்கியது.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியத்தை திரு. சு. தர்மசீலனின் பாட்டனார் 1925 ம் ஆண்டு வெளியிட்டார்கள். அதன் பின்னர் திரு. சு. தர்மசீலன் 1970 ம் ஆண்டு இரண்டாவது பதிப்பையும் வெளியிட்டு 1995 ம் ஆண்டு மூன்றாவது பதிப்பையும் வெளியிட்டு வைக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய சரியைத் தொண்டாகும்.
விநாயகர் ஆலயம் சம்பந்தமான படங்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன.

Page 11
2 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
மூன்றாம் பதிப்பாக வெளிவரும் இந்நூலுக்கு ஆசியுரை வழங்கக் கிடைத்த சந்தர்ப்பத்தை பெரும்பேறாகக் கருதுகிறேன்.
மருதடி விநாயகர் சகல செல்வங்களையும் திரு. சு. தர்மசீலனுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கி ஆசீர்வதிப்பாராக.
துன்பமுற வரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை - குறள் -
ந. சிவபாதம்
ஆசியுரை
மாணிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தருமகர்த்தா சபைத் தலைவர் திரு. கந்தப்பு தருமராசா அவர்களினது ஆசியுரை.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மிய மூன்றாவது பதிப்பு வெளியிட உத்தேசித்திருக்கும் இவ்வேளையில் உங்கள் ஆசை நிறைவேற வேண்டுமென எம்பெருமான் மருதடி விநாயகரை பிரார்த்திக்கிறேன். ஓர் தேவஸ்தானத்தின் வரலாற்றை மக்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதும், வரும் சந்ததியார் சரித்திரத்தை புத்தக ரூபத்தில் படிக்க வேண்டும் என்பதும் உங்களது ஆவல். இதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. எனது ஆசியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். மருதடி விநாயகர் அடி யார்கட்கு என்றுமே அருள் பொழிந்த வண்ணம் இருக்கிறார். உங்களுக்கும் அவரின் அருள் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை. இங்கு விநாயகரின் அருளின் மகிமை பற்றி ஒர் நிகழ்வைக் குறிப்பிட விரும்புகிறேன். மகா கும்பாபிஷேகத்திற்கு உரிய கிரியைகளில் நூல் பூசை நடந்து கொண்டு இருக்கும் பொழுது அவரின் அருளை மழையாகப் பொழிந்தார். ஆலயத்தில் கிரியைகள் புரிந்த அந்தணர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். மானிப்பாய் மக்கள் அதிசயம் கொண் டார்கள். ஆனந்தக் கண்ணிர் வடித்தார்கள்.
விநாயகரின் கடாட்சம் உங்களுக்கு கிடைக்க வேண்டு மெனப் பிரார்த்திக்கிறேன்.
க. தருமராசா

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 13
பாராட்டு
பகவான்பூரீ சத்ய சாயிபாபா கொழும்பு மத்தியநிலையத்தின் தலைவரும் முன்னாள் சிந்தாமணி தினபதி பிரதம ஆசிரியருமாகிய திரு. எஸ். டி. சிவநாயகம் அவர்களின் பாராட்டு
மானிப்பாய் அருள்மிகு பூரீ மருதடி விநாயகர் ஆலயம் இலங்கையிலும் மட்டுமன்றி அண்டை நாடான இந்தியாவிலும் புகழ் பரவிய ஒர் ஆலயமாகும். இந்தியச் சித்தர் ஒருவரினாலேயே இவ் வாலயம் ஆதியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. என்பது கர்ண பரம்பரையாக வழங்கிவரும் ஒரு நற்செய்தி.
இவ்வாலயம் மிகப் பழமைவாய்ந்த அதாவது யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் அரசர்கள் காலத்துக்கு முன்பே முளைத்தெழுந்த ஒரு கீர்த்தி மிகு ஆலயம் இதுவென்பது பெருமை. அத்தோடு மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற முச்சிறப்பும் பெற்றோர் ஆலயமாக இது விளங்கு கின்றது. விநாயகர். தலம் முக்கோணத்திடர், தீர்த்தம் பிள்ளையார் குளம் என்பனவே அவையாகும்.
யாழ்ப்பாணத்தில் மட்டும் அல்லாது வடபகுதி முழுவதிலு முள்ள இந்துசமய ஆலயங்களின் வருஷாந்த துவஜாரோகண உற்சவங்களுக்கு கால் கோள் அமைத்துக் கொடுக்கும் பெருமை பூரீ மருதடி விநாயகர் ஆலயத்தைச் சார்ந்ததாக இருப்பது குறிப்பிடத்தக் கதாகும். வருஷப் பிறப்பன்று தான் ழரீ மருதடி விநாயகரின் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. வருஷம் பிறந்ததும் முடிவடையும். முதல் திருவிழாத் தொடர் இதுவே. இதைத் தொடர்ந்து தான் யாழ்ப் பாணத்தில் உள்ள சகல ஆலயங்களிலும் ஒன்றன்பின் ஒன்றாக திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கழியும் வருஷத்தையும் பிறக்கும் வருஷத்தையும் இணைத்து விழா எடுப்பது பூரீ மருதடி விநாயகர் தான் என்பது பெருமையாகும்.
இப்படிப் பெருமைகள் பல பொதிந்த ஒர் அருள் மிகு ஆலயத் தின் வரலாற்றை எழுதுவதும் அதன் மான்மியத்தை எடுத்தியம்பு வதும் எழுதப்பட்ட பனுவலை அச்சுவாகனம் ஏற்றி, கோயில் கொண்ட விநாயகரின் வெற்றிகளையும், அடியார்களின் உள்ளங்களில் வியா பிக்கச் செய்வதும், சிறந்ததொரு தெய்வத் திருப்பணியாகும்.

Page 12
|-|| மாணிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
இந்தப் பணியை ஆதியில் செய்த பெருமகனார் பண்டிதர் தா. சுவாமிநாதன் அவர்கள் என்று தெரியவருகிறது. அவர் இந்நூலைத் திறம்பட எழுதி 1925ம் ஆண்டில் வெளியிட்டுள்ளார். அந்த ஆன்றோர் செய்த அரும்பணி மங்கி மறைந்து விடாமல் குன்றின் மேல் இட்ட குமிழ் விளக்காக ஒளிபரப்பும் வண்ணம் நூலினை அவர் பேரர் திருவாளர் சுவாமிநாதன் தாமசீலன் அவர்கள் 1970ம் ஆண்டில் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளார்.
இப்போது திருவாளர் சு. தர்மசிவன் அவர்கள் மூன்றாம் பதிப்பினையும் வெளியிட முயல்வது பாராட்டுக்குரியதாகும். இந்த மூன்றாம் பதிப்பிற்கு ஒரு பாராட்டுரை எழுதுவதில் நான் பெரு மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைகிறேன்
இந்த முயற்சி வெற்றியும் பலனும் அளிக்கவேண்டும் என்று அந்த சர்வவல்லபரான பூர் மருதடி விநாயகப் பெருமானின் கருனா கடாட்சத்தை மனமார இறைஞ்சுகின்றேன்.
எஸ். டி. சிவநாயகம்
వే
 

மாணப்பாட்டரு விநாயகள் ஆலயமான்மிய நூலாசிரியர் இரண்டாவது பதிப்பை கையில் வைத்துக் கொண்டு மூன்றாவது பதிப்பை வெளியிடுவதற்கு பகவான் ரீ சத்யூசாயிபாபாவிடம் அருள் ஆசிபெறுவதைப் படத்தில் காணலாம்

Page 13

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
9. சிவமயம்
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய LDmsrufuld
விநாயகர் துதி
மின்னும் மருதடிவாழ் வேழமுகன் றாள்பணிந்து பன்னுமவன் காதை பகர்ந்திடவே - மன்னுபகழ் நீட்டு மலை மேல் நிகழ்பாரதம்வரைந்த கோட்டுமுகன் பாதங் குறி.
நாமகள் துதி
விக்கினங்கள் நீக்க மருதடியில் வேழமுகன் புக்ககதை யாவும் புகலவே - மிக்கபுகழ் வன்னமே வுங்கமல மாமலர் மேல் வீற்றிருக்கும் அன்னமே முன்னின் றருள்.

Page 14
16 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
1. மகான் அடக்கம்
பூரீ அகண்டாகார சச்சிதானந்த தயமுக சொரூபமாய் விளங்காநின்ற விநாயக மூர்த்தியின் திருவடிப் பேறெயதிய சித்த வான்களே! ஒர் அந்தகனாகிய யாழ்ப்பாடிக்குப் பரிசளிக்கப்பட்ட எமது யாழ்ப்பாண நாடு பூகோளப் படத்தில் கடுகுப்பிரமாணமாய் தோன்றி னும் அதன்பூர்வீக சரித்திரத்தை நோக்கும் போது பெரிய தேசங்களின் சரித்திரங்களோடு வைத்து நோக்கத்தக்க பெருமையுடையதாய் இருக்கின்றது. இத்துணைச் சிறந்த யாழ்ப்பாணவரசு தொடங்கிய காலம் தொட்டு ஆயிரத்தைஞ்ஞாறு வருஷம் வரையிற் சுதேசவரசு நடந்தது. இவ்வூரை ஆண்ட பேர் பெற்ற தமிழரசரெல்லாம் சைவசம யத்தைச் சிரமேற்கொண்டு சிவாலய மடாலய வித்தியாலயங்களைத் தாபித்து தேசத்திலே சைவசமயத்தின் மகத்துவங்களை நாட்டுவா ராயினர். மேற்படியரசர் காலத்திலே திருகோணமலை, திருக்கேதீச் சரம், நகுலேசர் மலை என்னும் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிக்கும் பொருட்டு வடநாட்டிலிருந்து அநேகந் துறவிகள் தபசிரேட்டர்கள் ஞானிகள் சித்தர்கள் முதலானோர் வந்து யாழ்ப்பாண, நாட்டில் தங்குவாராயினர். எம்மூர் வாசிகளிலுமனேகர் ஆத்ம வளர்ச்சியின் பொருட்டு யோகசித்தி ஞானசித்திகள் பெற்றவராய் தாழ்ந்த சிந்தண்ைகளுக்கு மனதில் இடங்கொடுக்காதவராய் கடவுளையே தமது ஆன்ம நாயகராகக் கொண்டு முத்திப்பேற்றினைப் பெற்றவர்க ளாயினர். இப்படியே ஓர் தபசிரேஷ்டரானவர் மானியம்பதி மருதடி விக்னேஸ்வரன் தற்போது திருக்கோயில் கொண்டெழுந்தருளி யிருக்கும். கர்ப்பக்கிருக மண்டபத்தை ஸ்தானமாய்க் கொண்டு விநாய்கரைச் சற்குருவாய்ச் சிந்தித்து ஞான சாதனங்களை
# s
அப்பியசித்து மனம், புத்தி, சித்தம், அகங்காரங்களை ஒருவழிப்படுத்தி ஏகாக்கிரக சித்தமாய்,
“ஐந்துபேரறிவுங் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்க ணான்குஞ் சிந்தையேயாகக் குணமொரு மூன்றுந் திருந்துசாத் துவிகமே யாக இந்து வாழ் சடையானாடுமா னந்த
எல்லையி றணிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துட்டிளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்’
என்ற சேக்கிழார் சுவாமிகள் திருவாக்காகிய பெரியபுராணத் தில் கூறியவாறு நிஷ்டையில் இருந்தாரென்று அறிகிறோம்.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 17
இதுவேயன்றி இக்கோயிலைத் தரிசிக்கும் பிறவூர் கற்றறிந்த புல வர்களும் யோகாப்பியாசத்திலே தேர்ச்சியுற்ற மகாத்துமாக்களும் தங்கள் அனுபவ முறையைக் கொண்டு இவ்விடத்திலோர் மகான் அடக்கமிருக்க வேண்டுமென்று கூறுகின்றனர். ஆகையினாற் பின்னாற் சொல்லப்படும் சரித்திர ஆதாரத்தைக்கொண்டு முற்கூறிய வண்ணம் ஒர் மகான் தமிழரசர் பிற்காலத்திலும் பறங்கியர் யாழ்ப் பாணத்தைத்தம் வயப்படுத்திய சொற்ப காலங்களுக்கு முன்னருமாய் இவ்விடத்தில் இருந்துள்ளார் என்று திடப்படுத்திக் கொண்டோம். இன்னும் தமிழரசர் காலத்தில் இவ்விடத்தில் விநாயகர் ஆலயம் இருந்திருக்கிறதென்றும் இருந்த காலத்திலேயே மகான் இங்கே நிஷ்டையில் இருந்தாரென்றும் பின் பறங்கியர் காலத்தில் ஆலய மிடிபட்டதென்றும் இதற்கு ஆதாரமாக ஆலயத்தின் தெற்கு வீதி யிலுள்ள திருக்குளத்தை (இவ்வாலயம் கட்டப்படுமுன்னும்) “பிள்ளையார் குளம்” என்று சனங்கள் அழைத்து வந்தார்களென்றும் கூறுவாருமுளர். இது நிற்க மனதை ஒரு வழிப்படுத்தியோகசாதனை செய்வதற்கு வாய்ந்த இடம் எப்பொழுதும் ஏகாந்தமான இடமேயாகும். தங்களைச் சுற்றியிருக்கும் இயற்கைப் பொருட்களின் மூலமாய்ப் புதிய அழகுகள் வெளிப்பட அவைகள் மூலமாகப் பிரகாசித்து விளங்கு கின்ற சித்தாகசரான இறைவனை ஏகாந்தமாய்க்கண்டு களிப்பதற்கு யோகிகள் ஆறுகள் மலைகளினோரங்களிலும் அடர்ந்த செடிகளின் கீழும் இருந்தார்களென்பதைப் புராண இதிகாசங்கள் மூலமாயறி கின்றோம். மருதடியிலமர்ந்த மகானும் யோகாப்பியாசத்திற்கு இயற்கையில் இலட்சணங்களமைந்துள்ள இடத்தையே நாடினர். இவ்விடத்தில் “மருதஞ் சோலை” என்று அழைக்கத் தக்கதாய்ப் பூதவ மரங்கள் அடர்ந்தோங்கி வளர்ந்திருந்தன. இம்மரம் இயற் கையிலே ஒர் அழகுவாய்ந்ததென்றும் “இயற்கைப் பொருளானது இறைவனைத் தெரிவிக்கின்றது” என்றபடி இம்மரங்களில் இறை வன் பிரதி விம்பமாயிருக்கிறாரென்றும் விநாயகரின் அன்பு பூண்ட வர்கள் சொல்வர். மேற்படி மகானுபாவர் மருத மரங்களின் கீழேயிருந்து,
“ஆசினான் மறைப்படியுமெண்ணில் கோடியாகமத்தின் படியு மெழுத்தைந்துங் கூறிப், பூசினான் வடிவமெலாம் விபூதியாலப் பூதியினைப் புரிந்த சடைப்புரத்தே சேர்த்தான், றேசினால் அப்பொருப்பின் சிகரமேவஞ் சிவனிவனே போலுமெனத் தேவ ரெல்லாம். பேசினார் வரிசிலைக்கைவிசயம் பூண்ட பெருந்தவத் தினிலை சிலர்க்குப் பேசலாமோ.”
என்ற பாரத கவிக்கேற்ப, விக்கினேசுரன் தியானத்திலே யிருந்து ‘தன்னையுந் தனக்காதாரத் தலைவனையுங் கண்டானேற்

Page 15
18 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
பின்னையத் தலைவன்றானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத் தீர்வன்’ என்பதற்கிணங்க அவ்விடத்திலே சமாதியாய் விட்டாரென்று அறிகிறோம்.
* காடுங் கரையு மனக்குரங்கு
கால்விட்டோட வதன் பிறகே ஒடுந் தொழிலாற் பயனுளதோ
வொன்றாய்ப் பலவாயுயிர்க்குயிராய் ஆடுங் கருணைப் பரஞ்சோதி
யருளைப் பெறுதற்கன்புநிலை தேடும்பருவமிது கண்டீர் சேர
வாருஞ் செகத்தீரே”
2. போர்த்துக்கேயர் காலம்
விக்னேசுரப் பெருமானது திருவடித்தாமரை மலர்களை வணங்கும் புண்ணியோத்தமர்களே! மேற்படி மகான் சமாதியடைந்த காலத்தில் உன்னத விசித்திர கோபுரங்களோடும் மதில்களோடும் விளங்கிய யாழ்ப்பான நாட்டின்கண் சுமார் ஆயிரத்தைதுாறு வருஷம் தமிழரசர்கள் பெருநிதி கொண்டு பாதுகாத்து வந்த சைவால யங்களையெல்லாங் கைசிறிதுங்கூசாது தகர்த்துவிட்ட பறங்கியரசர் காலந் தொடங்கியது. இவர்கள் கிராமங்கள் தோறுமிருந்த கோயில் களையெல்லாம் இடித்து அங்கிருந்த விலையுயர்ந்த விக்கிரகங் களையும்,திருவாபரணங்களையும் கொள்ளை கொண்டார்கள். இவ் வகையாய் இடிபட்ட கோயில்களில், தமிழரசர் காலத்திலும், மகான் சமாதியடைந்த காலத்திலும் மருதடியிலிருந்த‘விநாயகர் ஆலயமும்” ஒன்று என்று கூறுவர். பறங்கியர் இக்கோயிலை இடித்து இவ் விடத்தைச் சவக்காலையாக்கி விட்டனர். இதற்கோர் ஆதாரம் இப்பொழுது இருக்கும் ஆலயக் கட்டிடம் ஆரம்பஞ்செய்த நாட்களில் இவ்விடத்தில் மனுஷருடைய எலும்புகள் காணப்பட்டனவென்று தக்க பெரியோர்கள் வாயிலாக அறிகின்றோம். சவக்காலையும் மயானமும் இப்போது கோயிலிலிருந்து ஏறக்குறைய நூற்றிருபத்தைந்து யாருக்கப்பால் ஆலயத்தின் மேற்கு வாசலின் நேர் திசையிலிருப்ப தாலும், இது உண்மையெனத் தெரிகிறது. இது நிற்க, பறங்கியர் சைவசமய மணம் கொஞ்சமுமில்லாது, பிராமணரையும் தம்முடைய மதத்தைத் தழுவும்படி செய்து வந்த நாட்களில் அவர்கள் தண்டனைக்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 19
கஞ்சி அகத்தே சைவராகவும் புறத்தே கிறிஸ்தவர்களாகவும் நடித்த பலசனங்கள். மகான் சமாதியடைந்த இடமும். இப்பொழுது மூலஸ் தானத்திற்குக் கிழக்கிலிருப்பதுமாகிய மருதமரத்தின் கீழ் இராக் காலங்களிலும் பறங்கியர் கண்களுக்குப் புலப்படாத நேரங்களிலும் பொங்கலிட்டுக் கற்பூரமெரித்து விநாயகரை வழிபட்டு வந்தார்கள். காலஞ் செல்லச் செல்ல இவ்வேலை இவ்விடத்து நின்ற பல மருத மரங்களில் ஒன்றின் கீழ் நடந்து வந்தது. இதற்கு ஓர் ஆதாரம் இப் பொழுதும் மூலஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள மருதமரத்திலும், வெளி வீதியில் நிற்கின்ற மருதமரங்களின் கீழும். சனங்கள் உற்சவ காலங்களிலே கற்பூரமெரித்து மருதந்தளிரைப் பறித்துக் கண்ணி லொற்றிக் காதில் அல்லது தலையில் அணிந்துகொள்வதைக் காண லாம். பொங்கல் நாள் வீதம் நடத்தப்பட்டு வருகின்றது. தீவுப்பற்றிலுள்ள சனங்களும் யாழ்ப்பாணத்தில் எந்தப் பாகங்களில் உள்ளவர்களும் வேளாண்மையறுப்புக் காலங்களில் முதலெடுக்கும் நெற்றானியத்தை “மருதடிப் பிள்ளையாருக்கு பொங்கலுக்கு” என்று சொல்லி எடுத்து வைப்பது வழக்கம். இப்படிப் பறங்கியர் காலத்தில் பொங்கல் வணக்கம் முதலியன மறை பொருளாய் நடந்து வர எல்லாம் வல்ல விக்கினேஸ் வரப் பெருமான் பொறுத்திருப்பாரோ! பறங்கியரின் கொடுங்
கோன்மையை 40 வருஷத்தில் நின்றுவிடச் செய்து யாழ்ப்பாணவரசை ஒல்லாந்தர் கையில் செல்லவிட்டார். மெய்யன்பர் உள்ளமுருகப் பார்த்திருக்கச் சகியாமல் திருப்பள்ளி கொண்டெழுந்தருளத் தீர்மானித்தனர் போலும்!
“பெற்றவட்கே தெரியுமந்த வருத்தம் பிள்ளை பெறாப் பேதை யறிவாளோ பேரானந்தம்
உற்றவர்க்கே கண்ணிர்கம் பலையுண்டாகும் உறாதவரே கன்னெஞ்ச முடையா ராவார்.”

Page 16
20 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
3. ஆலய உற்பத்தி
மருதடியான் திருவடி நீழலிற்றங்கும் அடியவர் சிரேட்டர் களே! ஒல்லாந்தவரசு தொடங்கிச் சில காலம் வரையில் பொங்கல் வணக்கங்கள் மேற்படி மருதடியில் விசேடமாயும் வெளிபொருளாயும் நடந்து வந்தன. ஒல்லாந்தர் மார்க்க விஷயத்தில் அதிகம் ஊக்கம் செலுத்தாமல் பெரும் பொருளீட்டும் நோக்கமாய் வியாபாரத்தில் கவனம் செலுத்தினார்கள். இதைவிட இவர்கள் பறங்கியரைப் போல் அதிகம் மதப்பித்தும் பிடித்தவர்களல்லர். இவர்கள் காலத்திலே தொண்டை மண்டலத்தில் நடந்த ஒர் இராச கலகத்திற்கஞ்சி அநேக வேளாண் குடும்பத்தவர் புறப்பட்டு வந்து வட்டுக்கோட்டை, காரைநகர் முதலிய இடங்களிற் குடியேறினர். இவர்களில் ஒர் பிரமசரிய ஒழுக்கம் பூண்ட தியாகராசக்குருக்கள் என்பவர் தனிமையாய் வந்தமையால் நவாலி வயல்களிலிருக்கும் தூக்கிணி வைரவர் கோவிலடியில் வந்து தங்க நேரிட்டது. இவர் சைவ முதலி வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த வராகையால்,
‘புலைகளுடன் கொலைகளவு கட்காமத்தைப்
புந்திதனிற் கருதாம நிற்பீராயின் மலைமளோர் ப்ாகனுங்கள் வசமாய் நிற்பர்
மாதவமும் பலிக்குமிந்த வழிநில்லார்க்கு அலைகடலிற் றுரும்பதுபோன் மனந்தள்ளாடு மறிவுதனக் கானிவரு மதுவல் லாமல் நிலையான வெகு பிறப்பு நீங்காதென்றே
நீணிலத்தி வருமறைக ணகழ்ந்து மாறே”
என்ற கவிக்கேற்பச் சைவசித்தாந்தம் முற்றும் கற்றுணர்ந்த வராய்ச் சமயாபிமானமுள்ளவராயினார். மானம், கல்வி, தயை, இன் சொல், சிவபக்தி முதலிய குணங்கள் வாய்ந்தவரென்பது இவர் சந்ததி யாரில் இப்போது நன்கு விளங்குகின்றது. இத்தூக்கிணி வைரவர் கோவிலிலிருந்து ஒரு வருஷம் வரையிற் சிவபூசை வணக்கஞ் செய்து வரும் நாட்களில் வருடந்தோறும் நடந்து வரும் வைரவ மடையும், வேள்வியும் கிட்டி வந்தன. பெரியவர் இக்கோவிலிற் பெருந்தொகை ஆடுகள் வெட்டப்படுமென்று கேள்விப்பட்டார். "ஐயோ என்ன பரிதாப மான காட்சி! கடவுள் கொடுத்த தனுகரணாதிகளை அழித்துக்

ஆலய மஞசம

Page 17

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 21
கடவுளைத் திருப்தி செய்வதா? கொலைத் தொழில் புரிபவர் ஆட்டை வெட்டும் பொழுது அவ்வுடம்பை உடைய ஆன்மாவின் கதி யென்னோ கொன்றனயனைத்து மனைத்து நினைக்கொன்றன’ என ஆன்றோர் வாக்குப்படி கொலைஞனும் மரணாந்தத்தில் அம் மிருகப் பிறவியை பெற்று அது அனுபவித்த துன்பத்தை அனுபவிப்பா னல்லவா ? இக்கோவிலதிகாரியும் பூசகரும் வழிபடுவோர்களும் கொலைபுரிபவரும் எச்சமயத்தவர்களோ ? எக்கதியையடைய விரும்பு கின்றார்களோ ? அறிகிலோம். என்று தமக்குள்ளே பிரலாபித்துப் பெரியவர் அவ்விடம் விட்டு நீங்கிக் கீழ்த்திசை நோக்கிச் சென்று மானி நகரிலுள்ள மருதஞ்சோலையை அடைந்தார். இச்சோலைக்கு அணித்தாயுள்ள காணிகள் மானியம்பதி சுவாமிநாத முதலியாருக் குரியது. 'மருதமரங்கள் நின்ற நிலமும் பக்கத்திலுள்ள குளமும்,
முக்கோணத்திடரும் பிள்ளையார் குளமும்’ எனப்பெயர் வழங்க லாயிற்று. இவ்விடம் சமய சம்பந்தமான வழிபாட்டுக்குரிய புண்ணிய தோற்றத்தையுடையதாயிருந்தது பற்றிப் பெரியவர் இங்கே தங்கி யிருப்பதற்கு ஆவல் கொண்டு அதற்குரிய வசதியேற்பாடுகள் செய்யும் படி மேற்படி முதலியாரிடம் வேண்டினார். அவர் அவ்வேளையில் இராச உத்தியோகம் வகித்திருந்தவராகையால் அரசாட்சியாருக் குரிய“முக்கோணத்திடர்” என்னும் நிலத்தை அவர்களிடம் பெற்றுத் தியாகராசக் குருக்களை அதில் அமர்த்தினார். இந்நிலத்திலே இரண்டு பனைகளும் ஒர் வேப்ப மரமும் நிற்க அவைகளை வெட்டி ஒரு சிறு வீடு கட்டிச் சீவித்திருந்தார். இருந்து வரும் நாட்களில் இவ் விடத்தில் அநேக சனங்கள் பொங்கல் வணக்கஞ் செய்து வந்தார்கள். அங்ங்னம் அவர்கள் செய்து வரும் உற்சாகத்தைக்கண்டு அன்பர்கள் உய்யுமாறு ஒர் விநாயகர் சிலையை வைத்துப் பூசாக்கிரமங்கள் செய்து வந்தார். செய்து வரும் நாட்களில் ஒல்லாந்தர் பறங்கியரைப் போல் மத ஸ்தாபனஞ் செய்யாது குடிகளாயுள்ளவர்கள் வலிந்து போய்ச் சேர்ந்து கிறீஸ்தவர்கள் ஆகும்படி (அற்ப குற்றம் செய்த வர்களையும் ) கொலைத்தண்டங் கற்பித்தல், கிறீஸ்தவ பாடசாலைகள் வைத்தல், கிறீஸ்தவர்களுக்கு பட்டமளித்தல், உயர்ந்த உத்தியோகம் கொடுத்தல் ஆகிய கிரிகைகளினால் அனேகரைத்தம்மதப்படுத்தினர். எம். சுவாமிநாத முதலியாரும் மார்க்க விஷயத்தில் ஒல்லாந்தரோடு இணங்கி நடந்தனர் போலும். ஏனெனில், மானிநகரில் கிறீஸ்தவமத ஊழியம் நடாத்திய ஒல்லாந்த பாதிரிமாருக்கு உவப்பாயிருக்கும் என்று எண்ணி விநாயகர் சிலையை இவ்விடம் விட்டு நீக்கி விட்டார். தமக்கும் பிறர்க்கும் ஆன்மாக்கள் ஈடேறும் படி பிரயோசனமாயிருந்த விநாயகரது உருவத் திருமேனி எடுபட்டதேயென்று மனத்துயரத்தி

Page 18
22 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
லாழ்ந்து “ஒ விக்கினேசுரனே! அங்கு சபாசமேந்தி!அம்பிகைதனயா! முன்னோனே! மூத்தோனே!ஐங்கரனே!ஒற்றைமரப்பினனே! ஏரம்பா கங்கை பெற்றோனே! முக்கண்ணர்! கணபதியே! ஈசன்மைந்தா கயமுகனே! ஆகுவாசனனே! என் செய்வேன்! உம்மைத் தஞ்சமென்றிருக்கும் மெய்யன்பர்கள் தேவரீரில்லாமல் உய்வதெப்படி? மருத மரத்தோனே! எமக்கு உமது திருவருளைப் புரிந்திடும்' என்று பலவாறாய் பிரலாபித்து வரும் நாட்களில் ஒர் இரவில் விநாயகர் குரு வுக்குத் தரிசனம் கொடுத்து “அன்பனே! வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வீதியில் வசிக்கும் வைத்தியலிங்கச் செட்டியிடம் சென்று எனது உருவத்திரு மேனியமைந்த சிலையைக் கேட்பாயேலுனது மனத்துயரம் நீங்கும்.” என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். அதேநேரத்தில் வைத்தியலிங்கச் செட்டியாருக்கும் பெருமான் காட்சி கொடுத்து, “எனதன்பன் தியாகராசன் உன்னிடம் வேண்டும் காரி யத்தை மறுக்காமல் கொடுத்து விடு' என்று சொல்லி மறைந்தனர். மறுநாள் உதயமானதும் குருமணியானவர் குறிக்கப்பட்ட செட்டி யாரிடம் சென்றார். அவ்வேளையில் மருதடி விநாயகர் பெருமையை இருவரும் நெடுநேரம் கலந்து பேசிக்கொண்டு ஈற்றில் செட்டியார் பசும்பொன்னை ஒத்த திருமேனியைய்டைய ஒர் திருவுருவத்தை குருவிடம் வழங்கினார். அப்பால் மருதடியில் விநாயகமூர்த்தியின் நித்திய நைமித்தியங்கள் ஒழுங்காய் நடந்து வந்தன. சுவாமிநாத முதலியார் விநாயகரருளால் தான் செய்தது பிழையென உணர்ந்து திரும்பவும் விநாயகர் சிலையைக் குருவிடம் கொடுத்து விட்டார். இந்தத் திருவுருவம் இப்பொழுது ஆலயத்திலிருக்கும் சிவன் கோவிலுக்கும் மேற்கே வைக்கப்பட்டு பூசை செய்யப்படுகிறது. இச் சிலையைத் தியாகராசர் முக்கோணத்திடரென்னும் நிலத்திற் கணித்தாயுள்ள ஓர் கிணற்றிலிருந்து எடுத்தாரென்றும் அதைப் பறங்கியர் காலத்திற் பிராமணர்கள் கிணற்றில் புதைத்து விட்டார்க ளென்றும் ஆகையால் மருதடியிலாலயம் தமிழரசர் காலத்தில் இருந்திருக்கிறதென்றும் பெரியோர் சொல்வர். செட்டியார் வழங்கிய திருவுருவம் மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுக் காவடிப்பாலபிஷேகம் பண்ணப்பட்டு வருகின்றது. இது நிற்கத்தியாகராசர் மருத மரத்தின் கீழ்த் திசையில் விநாயகர் சிலையை வைத்துப் பூசை செய்து வரும் நாட்களில் திருக்கோயில் கட்டி மகோற்சவம் நடாத்த உத்தேசித்தார். உத்தேசித்து விநாயகர் அருளை முன்னிட்டுச் சுவாமிநாத முதலியார் உதவியைக்கொண்டு மருதமரத்தின் மேற்குத் திசையை நோக்கிக் கெர்ப்பக் கிருகமும், அர்த்த மண்டபமும் கட்டி முடித்து எஞ்சிய கோவிற்பாகங்களை மரந்தடிகளால் உருவாக்கிப்பங்குனி மாசத்தில்

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 23
மகோற்சவ ஆரம்பஞ் செய்வித்து, இருபத்து நான்கு நாட்களாய் விசேஷ திருவிழாக்கொண்டாடி, சித்திரை மாசம் முதலாந் தேதியில் புதுவருஷம் ஆரம்பமாகும் வேளையில் இரதோற்சவமும், அடுத்த நாள் தீர்த்தோற்சவமும் நடாத்திவந்தார். கோவில் மேற்குத்திசையாக மாற்றவேண்டியிருந்தது, கீழ்த்திசையில் இருந்தால் உற்சவம் நடாத்தப் போதிய இடம் இல்லாதிருந்ததும் வீரகத்தி விநாயகரை அமர்த்திக் கும்பாபிஷேகஞ் செய்யவேண்டியிருந்ததுமே போதிய நியாயங் களாகும். ஆலயம் உற்பத்தியான காலங்களில் ஒல்லாந்தவரசு முடிந்து ஆங்கிலேயர்காலம் உதயமாகிவிட்டது.
மெய்வைத்த சமயங்கள் பலவற்றின் மிகவுயர்ந்த வேத நூலின் கைவைத்த சைவமதங்காட்டு முதற் பிரணவமே கருதியன் பிற். றெய்வத் தன்மைகள் வாய்ந்த திருமேனி மருதடியிற் சிறந்து தோன்றி, யுய்வைத்தந்தருளுதற்கங்குயருறுபூங் கோயிலொன்றை யுஞற்றினாரால்,
விநாயகர்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.

Page 19
24 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
4. திருப்பணி வேலைகள்
அஷ்டசித்திகளையும் அருளும் ஆகுவாகனன் அடிய வர்களே! ஆங்கிலேயர் காலம் உதயமானதும் அதிகாலையிற் கதிரவன் உதயமாகும் பொழுது புஷ்பங்கள் மலருமாறு போல் ( மதப் பைத்தியங் கொண்ட பறங்கிக்காரராலும் ஒல்லாந்தராலுங் கொடிய தண்டனைகளை அனுப்வித்த ) எமது யாழ்ப்பாண மாது ஈன்ற புத்திர இரத்தினங்கள் சமய சுயாதீனம் பெற்று முக மலர்ந்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில் மருதடியாலயம் அதி உன்னத மகத்துவ மேம்பாடுள்ள நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. கோவிற்றிருப் பணி வேலைகள் தர்மசீலராயும், விநாயகரடியவராயும் விளங்கின பெரியவர்களுடைய பரோபகாரங்களினால் நடைபெற்றன. விநாய கரின் கெர்ப்பக்கிருக தூபியும், அர்த்த மண்டபமும். மகாமண்டப மும் திரு. பொன்னம்பலச் சிறாப்பரவர்களாலும், சபாமண்டபம் திரு. மண்டலத்தாரவர்களாலும், ஸ்தம்பமண்டபம் திரு. இரகுநாத முதலியார் சின்னத்தம்பி அவர்களாலும், சிவன் கோவில், நடராசர் கோவில் அம்மன் கோவில்கள் திரு. தன்மாவரதர் முத்துத்தம்பி அவர்களாலும், முற்கோபுரம் திரு. தம்பையா முதலியவர்களாலும், மடைப் பள்ளி, வாகன மண்டபம் தெற்கு மானியம்பதி திரு. மருதப்பு அவர்களாலும் வசந்த மண்டபம் வைரவி ஆசாரியாலும் வசந்த மண்டபக் கொட்டகை வட்டுநகரிலுள்ள சில புண்ணியவான்களாலும், தேர் முட்டியும், இரதமும் திரு. இரகுநாதமுதலியார் சின்னத்தம்பி அவர்களாலும் செய் விக்கப்பட்டன. பின்பு கீழைக்கோபுரம் திரு. செல்லப்பா வயிரமுத்து அவர்களாலும் பொங்கல் மண்டபக் கொட்டகை திரு. வன்னியசிங்கம் தம்பிப்பிள்ளையவர்களாலும், திரு. நந்தவனம் திரு. ம. சிவப்பிரகாசமவர்களாலும், திருமஞ்சனக் கிணறு திரு. முருகேச முதலியார் பொன்னுச்சாமியவர்களாலும், தீர்த்தக்கிணறு திரு. முருகேசர் வினாசித்தம்பியவர்களாலும் உண் டாக்கப்பட்டன. தீர்த்தக் கிணற்றுக்குத் தெற்குத் திசையிலே சாமி தீர்த்தமாடுவதற்கு ஒர் தீர்த்த மண்டபம் திரு. வல்லிபுரம் கனகசபை யவர்களாற் கட்டப்பட்டிருக்கின்றது. இவைகளை விட அனேகம் பெரியோர்கள் அனேகம் வேலைகளைச் செய்வித்து ஆலயத்தை மேன்மைப்படுத்தினர்.
ஆலயத்தின் தெற்கு வீதி மண்டபமும் தெற்கு வீதி பெரிய மணியும் திரு. பொன்னம்பலம் அரியகுட்டி அவர்களால் வழங்கப் பட்டது. வடக்கு வீதி மணிக்கோபுரம் முகாந்திரம் மகேசன் அவர் களாலும் நவக்கிரகங்கள், மின்சார விளக்குகள் திரு. செல்லமுத்து

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 25
சிவநாதன் அவர்களாலும், கந்தசுவாமி விக்கிரகம் திரு. செல்லையா காராளபிள்ளையவர்களாலும், சுவர் மணிக்கூடு திரு. தம்பையா சிவநாதன் அவர்களாலும், மடம் திரு. வி. கே. இராசலிங்கம் அவர் களாலும், எழுந்தருளும் அம்மன் சிவன் அம்பாள் விக்கிரகங்கள் திரு. எஸ். இரட்டினகாரம் அவர்களாலும் மனமுவந்து ஆலயத்திற்கு அளிக்கப்பட்டவைகளாகும். இவைதவிர ஆலயத்தின் பொலிவுக்கும், மகத்துவத்தை உணர்த்தவும் பல்வேறு உதவிகளை பலர் செய் துள்ளனர். இன்றும் அவர்களின் திருப்பணிதொடர்ந்துநடைபெற்றே வருகிறது.
இப்பொழுதும் புண்ணியோத்தமர்கள் சில வேலை களைச் செய்வித்து வருகிறார்கள். விநாயகருக்குத் திருமஞ்சம் திரு. வினாசித்தம்பி கணபதிப்பிள்ளையின் புத்திரர்களாற் செய்யப் பட்டது. இத்திருப்பணி வேலைகளைப் பெரியவர்கள் ஒவ்வோர் காரணம் பற்றிச் செய்வித்தார்கள். அதாவது, விநாயகருடைய விசேஷ வரப்பிரசாதங்கள் பெற்றுய்வதற்கே இவைகள் நடந்தன. உதா ரணமாக திரு. இரகுநாதமுதலியார் சின்னத்தம்பியாரவர்கள் ஒரு முறை கொடிய விஷந் தீண்டப்பெற்று அவ்விஷம் சிகிக்சைக்கு மேற் கொண்டதால்; அவர் அரியமாதவிநாயகருக்கு இரதஞ் செய்து வைப்பதாகப் பிரார்த்தனை செய்ததாகவும், அங்ங்ணம் பிரார்த்தனை செய்ததன் மேல் அக்கொடிய விஷம் நீங்கி அவர் சுகம் பெற்றதாகவும் அறிகிறோம். பெரும்பாலும் திருப்பணிகள் இவ்வகையாய் நடந்தன. அவைகளை விரித்துரைக்கில் எமது நூல் கொள்ளாது.
தர்மகர்த்தா சபை பொறுப்பேற்றதின் பின் செய்த திருப் பணிகள் பின்வருமாறு :
தீர்த்தக்கேணி வெளிவீதி புனரமைத்தமை, லைட் என்ஜின் வீதிக்கு மின்வசதிகள், கொங்கிரீட் தூண்கள், பொருட்கள் வைப் பதற்குப் பெரிய அலுமாரி இணைக்கப்பட்டுள்ளது. தேருக்கு பித்தளை பதித்தமை, தேர்முட்டி திருத்தவேலை, தேருக்கு தகர கதவுகள் அமைத்தமை, அறுபது பரப்பு வயல் கொள்வனவு செய்தமை, நாலு பரப்பு காணியும் வீடும் குருக்களுக்கு என்று கொள்வனவுசெய்தமை, ஆலய உள்வீதிக்குரிய கூரைகள் மாற்றியது, ஆலய அலுவலகத்தை திருத்தி அமைத்தது, 30.6.94ஆனிமாத உத்திரட்டாதிநட்சத்திரத்தில் மகா கும்பாபிஷேகம் செய்தது. தேருக்கு சுவாமி எழுந்தருளும் சிம்மாசனம் செய்யப்பட்டது. இதுதவிர பத்து வாகனங்களும் அடியார் களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

Page 20
26 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
ஆங்கிலேயர் ஆட்சி முடிவடைந்த பின்னர் இலங்கை 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம் திகதி விடுதலை பெற்றுச் சுதந்திர நாடாயிற்று. அரசியல் சுதந்திரத்துடன் வழிபாட்டுச் சுதந்திரமும் மக்க ளுக்குக் கிடைத்தது. இந்த சுதந்திரத்திற்கமைய மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயமும், தன்னை நாடி வரும் மெய்யடியார்களுக்கு நித்திய அனுக்கிரகம் செய்யும் வகையில் சகல மக்களுக்கும் திறந்து விடப்பட்டது. தீண்டாமை நிலவி வரும் இவ்வேளையில், சகல சாதி மக்களும் ஒன்றாக வழிபாடு செய்ய யாழ்ப்பாணத்தில் திறந்து விடப் பட்டுள்ள சில ஆலயங்களில் மருதடி விநாயகர் ஆலயம் முக்கியமானது. தனிப்பட்ட நிர்வாகத்திலிருக்கும் இந்த ஆலயம் இப்படி சகலருக்கும் தனது கதவுகளைத் திறந்து விட்டிருக்கிறது.
சங்கரனார் பெற்றபிள்ளை சங்கரிக்கு மூத்தபிள்ளை மங்குல்வண்ண னுக்குகந்த மாப்பிள்ளை பொங்கியெழும் அப்பமவல் மோதகந்தேன் ஆசைப் படும்பிள்ளை இப்பிள்ளை யார்சொல் எமக்கு.
அன்றுவடமொழிக் கடலில்வியாசமாமுனி
யுரைத் தவமலகாதை நன்றுநிலவுக தனிலெந்நானுந்
நிலைபெற்று நலத்தாலோங்கச் சென்றுபெரும் பொன்
மலையில் மருப்பொடித்து வரைந்தருளும் பெரியதேவன்
இன்றுவளர் மருதடியிற்றமிழறிவோரக
 

`
3:
%
5: 繳 繳
繳
激
繳
ஆலயத்திற்குரிய தாமரைக் குளமும் அதை அடுத்து பெரியதொரு மருதமரமும் இப்படத்தில் காணப்படுகின்றன.

Page 21

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 27
5. கோயிற்பூசகரும் தருமகள்த்தாக்களும்
விநாயகரடியராய் விளங்கும் மகாசைவ தவ விரதிகளாகிய அன்பர்களே! மேற்படி தியாகராசக்குருக்கள் இல்லறம் நடாத்த வெண்ணி ஆவரங்காலிற் சைவச் செட்டிவேளாண் குடும்பத்திலே ஓர் பெண்ணை விவாகஞ் செய்து குமரகுருபரர், வெற்றிவேலர் என்னும் இருவரைப் பெற்றனர். வெற்றிவேலருடைய மகன் திரு. ஐயாத்துரையவர்கள் மானிநகரில் வசித்து வந்தார். மேற்கூறப் பட்ட வெற்றிவேலருடைய பெளத்திரனே சிவபூசா ஒழுக்கங்களிற் றவறாத திரு. செல்லையரவர்கள். ஆங்கிலேயர் காலமுதயமானதும் சந்தான விருத்தியுடையராய் விளங்கிவரும், விக்கினேசுரப் பெரு மானின் தொண்டு பூண்டு குருத்துவம் புரிந்த புண்ணியோத்தமரு மாகிய தியாகராசர். இம்மண்ணுலக வாழ்க்கையை விட்டு விண் ணுலகில் விநாயகமூர்த்தியின் திருத்தாளெய்தினர். ஆலய பூசா கருமங்கள் அவரது சிரேஷ்ட புத்திரன் வெற்றிவேலையாரால் நடைபெற்று வந்தன. கோயிற் காரியதரிசி சுவாமிநாத முதலியாரும் சிவபதமடைய, அவருடைய மகன் வலிகாமம் மேற்கு மணியகார னாய் விளங்கிய குமாரசிங்கமணியமென்பவர் கோயில் மணிய காரனாயும் விளங்கினார். இவருக்குப்பின் இவரது புத்திரர்கள் டாக்டர் சுவாமிநாதபிள்ளையவர்களும் இராசகாரிய உத்தியோகம் நடாத்திய திரு. இராசகாரியரவர்களும் கோயிற்காரியங்கள் பார்த்து வந்தனர். பின் இவர்களின் பிள்ளைகள் சுகாதார பரிசோதகர் திரு. நவரத்தின சிங்கமவர்களும் திரு.இரத்தினசிங்கமவர்களும் தர்மகர்த்தாக்களாய் விளங்கினர்.
திரு. நவரத்தினசிங்கமவர்கள் ஆலயத்திற்கு அனேக நன்மை களைச் செய்திருக்கின்றார். அவைகளிலொன்று, தெற்கு வீதி யிலிருந்த அரசாட்சியாருக்குரிய குளம் ஆலயத்திற்கு அதிகம் கிட்டி யிருந்தமையால் இரதோற்சவத்திலன்று தேர் ஒடுவதற்கு வீதி அகலம் போதாதிருந்தது பற்றி, அப்போது வடமாகாண ஏசண்டராயிருந்த சேர் வில்லியம் துவையினம் என்பவர் உதவியைக் கொண்டு குளத்தி லொரு பாகத்தை மூடி ஒடுக்கமாயிருந்த வீதியைவிசாலமாக்கி விட் டார். இக்காலத்திற்கோயிற் பூசை செய்து வந்தவர் வெற்றி வேலருடைய மகன் திரு. ஐயாத்துரையவர்கள். இவ்விதமே ஏறக் குறைய நூற்றைம்பது வருஷகாலம் பூசை செய்து வந்த சைவக் குருமார் கோயிலை விட்டு நீங்கிப் பிராமணருக்கு இடங்கொடுத் தனர். பிராமணருள்ளே முதற் பூசகராயேற்பட்டவர் பிரமழரீ சீதாபதி ஐயரவர்கள். இவர் ஏறக்குறைய ஐம்பது வருஷகாலமாய் விநாயகரது நித்தியநைமித்திகங்களை நடாத்தி வந்து சிவலோகஞ் சேர்ந்தனர். இவருடைய குமாரர்களே பின்னர் பூசகராய் இருந்தனர்.

Page 22
28 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
இவர்களைத் தொடர்ந்து இன்று வரை பல்வேறு நபர்கள் இவ்வாலயத்தின் பூசகர்களாக, திருப்பணி செய்து வந்துள்ளனர்.
அக்காலத்தில் திரு. நவரத்தினசிங்கம்.திரு.இரத்தினசிங்கம் ஆகியோரது பிள்ளைகள் ஆலய பரிபாலனத்தை மேற்கொண் டிருந்தனர். இவர்களுக்குப் பின்னர் திரு. நவரத்தினசிங்கத்தின் புதல்வர் திரு. சுவாமிநாதனும், திரு. இரத்தினசிங்கத்தின் புதல்வர் திரு. சின்னத்தம்பியும் ஆலய நிர்வாகத்தைப் பொறுப்பேற்றனர். இவர்களின் மறைவுக்குப் பின்னர் திரு. சுவாமிநாதனின் புதல்வர் திரு.இராமேஸ்வரமும்,திரு. சின்னத்தம்பியின் புதல்வர் திரு. கணேச ரத்தினசிங்கமும் ஒரு வருஷத்துக்கு ஒருவராக ஆலயத்தை நிர்வகித்து வருகின்றனர்.
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய வழிபடுவோர் சங்கம் 1978 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் திகதி மானிப்பாயில் ஆரம் பிக்கப்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி குறித்த ஆலய வழிபடுவோர் சங்கம் அங்குரார்ப்பணம் செய்யப் பட்டது. அதன் விதிகள் அங்கீகரிக்கப்பட்டு அதன் உத்தியோகத்தர் களும் நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது. இதே நிருவாக சபையில் மாற்றங்கள் செய்வதில்லை எனச் சங்கம் தீர்மானித்தது. இத் தீர்மானத்தின்படி நான்கு ஆண்டுகளும் ஒரே நிருவாக சபை தான் கடமை ஆற்றி வந்தது. அதன் தீவிர முயற்சியினாலேதான் சங்கத்தின் முக்கிய குறிக்கோள் வெற்றிகரமாக அடையப்படக் கூடியதாகவிருந்தது. பின்வருவோர் நிருவாக சபையில் தொண் டாற்றினார்கள்.
திருவாளர்கள்
(1) கா. சுந்தரம்பிள்ளை (தலைவர்) (2) மு. வைரமுத்து J. P.
(உபதலைவர்) (3) மு. இராமேசுவரம் (உபதலைவர்) (4) சி. சுப்பிரமணியம்
ஒறேற்ரர் (செயலாளர்) (5) க. நடேசர் (உபசெயலாளர்) (6) சி. க. உதயசூரியர்
(உபசெயலாளர்) (7) அ. நாகராஜா (பொருளாளர்) (8) சி. சோமசுந்தரம்
(உபபொருளாளர்)
(9) வ. மகேந்திரராசா (உபபொருளாளர்) (10) ச. இராசகாரியர்
9

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 29
(11) பொ. அமிர்தலிங்கம் (12) மு. ஆ. தம்பையா (13) அ. கார்த்திகேசர் (14) வ. கந்தையா (15) கி. நாகநாதர் (16) கே. சாந்தாகிருஷ்ணன் (17) என். கணேஸ் (18) சி. மார்க்கண்டு (19) வி. தியாகராசா , P. (20) பொ. சண்முகபாரதி (21) க. இராசநாயகம் (22) க. கந்தையா (23) த. தளையசிங்கம் (24) சு. இராசசுந்தரம் (25) சு. தர்மசீலன் (26) க. துரைசுவாமி (27) செ. அப்புத்துரை . P. (28) க. விசுவரத்தினம் (29) சோ. செல்வரத்தினம் (30) மு. வல்லிபுரம் (31) b. bLJfTG-T (32) ஜே. ஏ. இராசகாரியர்
வழிபடுவோர் சங்கத் தலைவராக திரு. அ. நாகராசாவும். செயலாளராக திரு. எஸ். கே. உதயசூரியரும். பொருளாளராக திரு. அ. அழகேந்திரனும் செயல்படுகிறார்கள்.
18. 3. 82 ல் திரு.த. சிவசம்பு, திரு. பொ. அமிர்தலிங்கம், திரு. க. தர்மராசா ஆகிய மூவரும் ஆலயத்தின் பொறுதுநராக நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டார்கள். அதன் பின்னர் 18, 7 1983 அன்று தெரிவு செய்யப்பட்ட தருமகர்த்தாக்களின் விபரம் :-
திரு. கா. சுந்தரம்பிள்ளை (தலைவர்), திரு. சி. சுப்பிரமணியம் (செயலாளர்), திரு.ச.சிவசம்பு (பொருளாளர்), திரு.மு.இராமேஸ்வரம் (முகாமைத்துவ தருமகர்த்தா), திரு. பொ. அமிர்தலிங்கம் (உதவிப்பொருளாளர்), திரு.மு. வைரமுத்து, திரு. சு. சத்தியமூர்த்தி.
17.8.88 அன்று தெரிவுசெய்யப்பட்ட தருமகர்த்தா சபையினர் விபரம் :-
திரு. ச. சிவகுருநாதர் (தலைவர்), திரு. ந. சிவசுப்பிரமணியம் (செயலாளர்), திரு. த. சிதம்பரநடராசா (பொருளாளர்), திரு. பொ. காங்கேசு (உதவிப்பொருளாளர்), திரு. க. தர்மராசா, திரு. சு. சிவக்குமார், திரு. க. சுந்தரலிங்கம்.
பின்னர் 3, 10, 93 அன்று தெரிவு செய்யப்பட்ட தருமகர்த்தா சபையினர் விபரம் :-

Page 23
30 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
திரு. க. தர்மராசா (தலைவர்), திரு. ச. குகபாஸ்கரன் (செயலாளர்), திரு. சு. சிவகுமார் (பொருளாளர்), திரு. க. கந்தையா, திரு.செ. கேசவராஜன், திரு. ந. சிவசுப்பிரமணியம், திரு. செ. ஜெய தாசன், திரு. செ. ஜெயதாசன் விலகிச் சென்றபடியால் திரு. த. சிதம்பரநடராசா அவர்களை அவரின் இடத்திற்குச் சபை தெரிவு செய்து முகாமைத்துவ தருமகர்த்தாவாக நியமித்தது. தர்மகர்த்தா சபை இயங்கத் தொட்ங்கிய காலம் முதல் அங்கத்தவர்கள் பலர் பிரத்தியேக காரணங்களுக்காக விலகிச் சென்றபடியால் அவர்களின் இடத்திற்கு திரு. மு. வைரமுத்து (தலைவர்), திரு. தி. இராசதுரை (தலைவர்), திரு. மா. கிரிதரன் (பொருளாளர்), Dr. P. S. M. மூர்த்தி (செயலாளர்), திரு. சி. பாலரத்தினம் (உதவிப் பொருளாளர்), திரு. கா. விசுவலிங்கம், திரு. சி. பத்மநாதன், திரு. த. சிதம்பரநடராசா, திரு. க. தர்மராசா என்போர் கடமையாற்றினர். மக்களால் தெரிவு செய்யப்படும் தர்மகர்த்தா சபையினர் ஆலய நிர்வாகத்தை நன்கு செயலாற்றி வருகின்றனர்.
ஐங்கரனே ஈசன் அருமைத் திருமகனே தங்கு மருதடிவாழ் தற்பரனே - திங்களனி செஞ்சடிலத் தானே திருமான் மருமகனே நெஞ்சதனில் வாழ்ந்திருப்பாய் நீ.
 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 31
6. விநாயகர் சீர்பரவல்.
சைவ சிரோன்மணிகளாகிய அன்பர்களே! மருதடியான் திரு வடிகளைத் துதிக்கும் ஆசை பூண்ட சிற்றறிவுடைய யாமும் புலவர்களுடைய செவிகளில், புல்லறியாவேடன், “மரா. மரா” என்று கத்திய சத்தங் கேட்டவாறதுபோல் இச்சரிதையைப் புகன்றிட்டோம். பெருமானுடைய மகத்துவங்களை எடுத்துப் பூரணமாயுரைக்கத் தக்க தபோபலனை யாம் பெற்றிலோம். ஆயினும் கல்வியில்லாத யாம் கருணாநிதியாகிய விநாயகப்பெருமானுடைய திருவருளைப் பணிந்து வேண்டும் பொழுது பெருமான் எமது சிற்றறிவிற்குத் தோன்றிய விதத்தை இயன்றவரையிற் கூறுவோம்.
பிரார்த்தனை
விண்ணின்ற சோதி விரிகதிர் மண்டிலத்தின் உண்ணின்ற தெய்வ உருவமே! - கண்ணின் ஒளியே! ஒளிக்கொளியே ஒள்மருதம் மேவும் வெளியே! வெளிக்குமுன்னர் மெய்யர் - களிகூரும் அண்ணலிறையே! நின்சீர் ஆர்எழிலின் தோற்றத்தை எண்ணி உரைக்க இயைந்துநின்ற - மண்ணிலத்தோர் எல்லையற்ற ஒர்பொருளுக்கெல்லையிடம் யாங்ங்னென்று அல்லலுற்றார் என்னும் அறிஞருரை - மெல்லச் செவியகத்துச் சேர்தலும்யான் சிந்தைநைந்தேன் எந்தாய் கவியகதர்துத் தேர்ந்த கலைஞர் - புவியகத்துப் பைந்திரச்சேர் மேனிநல்லார் பாணி உரைக் குங்காலம் என்குருநீர் ஆரென் றியம்புவார் - அந்தரமாம் தாக்கிறையே! நின்திருவைச் சாற்றுவதென் றாலடியேன் ஆக்கும் அருளுடைய ஐங்கரனே! - நோக்கில் தனக்குவமை தானென்பேன் தாதாய்! சிறியேன் மணக்கமல பீடம் வதிந்து - நினைக்கரிய பேரெழிலைக் காட்டுவையேற் பேணுமறிவிற் கெட்டும் சீர்சொலலென் நாவின் செயல்: வானகத்தும் மண்ணகத்தும் வயங்குசுடர் நீயாயின் காணகத்தி லவதரித்தாய்! கருதுமெழில் நீயாயின் நானகத்துக் கொண்டனநின் நளினமலர்ப் பதம யின் தேனகத்து மருதடியோ திருப்பீட மாவதுவே! கோபாலன் திருமருகன் குட்டுவப்பா னியாயின்

Page 24
32 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
மாபார தம்வரையு மாமுனிவர்க் கிறையாயின் நாவார வழுத்துவநின் நளினமலர்ப் பதமாயின் பூவாரு மருதடியோ புதுப்பீட மாவதுவே! பொன்னீர்நெல் அணிமணிசீர் புகழளிப்பா னியாயின் மின்னூரு மாமகுட மிலங்குதலை யுடையாயின் நன்னீர உளத்தனநின் நளினமலர்ப் பதமாயின் செந்நீர்மைப் பூதவமோ திருப்பீட மாவதுவே! என ஆங்கு மன்றலந்தா ரணிமார்பன் மதகரியின் முகத்தானை ஆலமுண்ட இறைமகிழுமைங்கரனைப் பணிந்துநின்றேன் நின்ற எல்லையுள் நீடருள் சுரந்தெம் மனக்கண் காண வலக்கண் துடிப்ப உளமெனும் பீடத் துவந்த கோற்றினன் வளர்பெரு வயிற்றோன் வயங்கொளிக் கரிமுகன் அங்கு
“நீடியவானோர் நெறியுடன்வாழ அந்தணர்சிறக்க வானினம்பெருகச் செந்தழல்வேள்விவே தாகமஞ்சிறக்க அறம்பலபெருக மறம்பலசுருங்கத் திறம்பலவரசர் செகதலம்விளங்க வெங்கரிமுகமும் வியன்புழைக்கையோ டைங்கரதலமு மலர்ப்பதமிரண்டும் பவளத்தொளிசேர் பைந்துவர்வாயுந் தவளக்கிம்புரித் தடமருப்பிரண்டுங் கோடிசூரியர்போற் குலவிடுமேனியும் பேழைபோலகன்ற பெருங்குடவயிறும் நெற்றியினயனமு முப்புரிநூலுங் கற்றைச்சடையுங் கனகநீண்முடியுந் தங்கியமுறம்போற் றழைமடிச்செவியுமாய் ஐங்கரத்தண்ணல் வந்தவதரித்தார்’
என சிந்தித்துத் துதிப்போம்

繳
然
線
繳 怒 必
క్లి 繳
簽 繳 繳
ஆலய சித்திரத் தேர்

Page 25

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 33
மூலஸ்தானம்
மேற்கூறிய இலட்சணங்களமைந்தவராய் மருதமரத்தின் கீழ் எழுந்தருளியிருக்கும் விநாயகரது ஆலயம் உற்பத்தியாகா விட்டால் இப்பொழுது அவரை வணங்குமனேகர் புறமதத்தைத் தழுவு வாராய்விடுவர். யாழ்ப்பாணத்திற் சைவசமயத்தை நிலைநிற்கச் செய்த ஆலயங்களிலொன்று இம்மருதடியாலயமே. மூலஸ்தானத்தில் எழுந் தருளியிருக்கும் பிள்ளையார் திருவுருவம் வடக்கில் நாட்டுக்கோட்டை யென்னு மூரிலிருந்து அவ்வூர்ச் செட்டியார்களின் மூலமாய் வர வழைக்கப்பட்டு இற்றைக்கு ஏறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன் அமர்த்திக்கும்பாபிஷேகஞ்செய்யப்பட்டது. பூசையாகும் வேளை களிலே சனங்கள் கூடிக்கண்ணிர் சொரிந்து "அரகர” வென ஒல மிட்டுத் தலைகளிற் குட்டிச் சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்காரஞ் செய்கின்றனர்.
“கணபதியே ரம்பன்மோ கன்றரணி தரனே
கலாதரனே கசியபந் தன்விநா யகன்மா கணபதிகிப் பிரப்பிரசா தனனாசா பூர
கன்வரதன் செயனமுத மந்திரனே யிலக்க கணபதியே வாச்சிகதன் பீஜவிநா யகன்மங்
கலவிநாயகனுடுண்டி விநாயகனே பிரிய கணபதியே சித்திவிநாயகன்சிந்தா மணியே
காமர்மகோற் கடனென்ன’
மனத்தில் தியானஞ்செய்தும் வாயாலுரைத்தும் தொழுவர்.

Page 26
34 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
பொங்கல் வணக்கம்
1. நிலம்புகழுந்தமிழ்நாட்டிலறிஞ
ரெலாங்கொண்டடிநியமமாகத்
தலம்புகழுமறையோதிப்பொரு
ளாய்ந்து களிகூறுஞ்சைவராகப்
புலம்பரவுதிருமானிப் பதியடியார் செம்மையுறும்புவியிற்பத்தி
நலம்பரவு பொங்கல் பலமோதகந்
தேன்வழுநீங்கநயப்பார்நேர்ந்து
2. மாசத்தார்கொழுதேத்தவரமளிக்கு
மருதடிவாழ் வள்ளல்மானித்
தேசத்தார்நன்னகரிற்சிறந்த
வளப்பிள்ளையான்திடரிலீசன்
நேசத்தாருமைப்புதல்வனேரம்ப
னிருமலனைங்கரத்தன்பூமி
வாசத்தார்மகிழ்ந்துபாற்பொங்கல்
புரிந்தேத்தமிறைநாதன்மன்னோ.
மருதடி விக்கினேசுரனாலயத்தில் ஒவ்வோர் நாளும் ஒர் விசேஷ தினமாயிருக்கின்றது. சனங்களாற் பொங்கல் செய்யப்படாத நாள் கிடையாது. இங்கே நடக்கும் நித்திய பொங்கல் கருமங்களைப் போல் இலங்கையில் வேறெந்தக் கோயிலிலுமில்லையெனலாம். இப் பொங்கல் வணக்கங்களைப் பற்றி அநேகம் வித்துவான்கள் புகழ்ந்து கவிகள் பாடியிருக்கின்றனர். அங்ங்ணம் பாடிய கவிகள் எனது கைக்கு எட்டவில்லை. விநாயகரிலன்பு பூண்டு எவராவது அவைகள் எமக்குக் கிடைக்கச் செய்யின் அடுத்த பதிப்பிற் சேர்த்து வெளியிடுவோம்.
義で。

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 35
மகோற்சவம்
வருஷத்திலே பங்குனி மாசத்தில் மகோற்சவம் ஆரம்பமாகிப் பதினெட்டு நாட்களாய் விசேஷ திருவிழாக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. அலங்காரமான திருவிழாக்கள் நடக்கினும் ஆலய மகிமைகளைக் குறைக்கும் தாசியர் நடனம் முதலியன கோயிலில் நடப்பதில்லை. ஆலய வரலாற்றில் முதல் தடவையக இவ்வாண்டு (1970) மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
பஞ்சமுக விநாயகர் கும்பாபிஷேகதினம், இலட்சார்ச்சனை, கணபதி ஹோமம், தீபழசை, ஐப்பசிவெள்ளி, உற்சவம், கேதாரகெளரி விரத விழா இருபத்தொரு நாட்கள், ஸ்கந்தஷஷ்டி உற்சவம், விநாயகர் விரதம், கஜமுகாசுரன் போர், பெருங்கதை முடிவு ஆகிய உற்சவங் கள் தர்மகத்தா சபையினர் பொறுப்பேற்றதின் பின் நடைபெறுகிறது.
இரதோற்சவம்
ஏர்கொண்டமானிநகர்க் கிறைவனா
மேரம்பனெழிலார்சீதச் சீர்கொண்டமருதடியிற்செங்கழுநீர்ப்
போதகமாம்புனிதனேறிக் கார்கொண்டபிள்ளையான் தடாகமார்
காவலர்சூழ்செம்மைவீதிப் போர்கொண்டதிருவுலாத்தேரூரும்
பெருமைசேர்கோலமன்னா.
மருதடிப் பிள்ளையார் கோவில் இரதோற்சவம் எமது யாழ்ப் பாண நாட்டார் எல்லார் மேலும் ஒர் கிளர்ச்சியை உண்டுபண்ணுந் தினமாயிருக்கின்றது. புதுவருடமாரம்பமாகும் நேரத்தில் விநாயகப் பெருமான் அதி உன்னத விசித்திர அலங்காரமமைக்கப் பெற்ற இரதத்தில் ஏறி வீதிவலம் வருகின்ற அற்புதக்காட்சியை எல்லோரும் கண்டு இன்புறுகின்றனர். மருதடியிரதத்தை வியந்து பேசாதவர் இல்லை, இவ்வமைப்புக் கொண்ட இரதம் திருவாலங்காட்டில் சிவா னந்தத்தைப் பெற்று வாழும்பிரம்மழநீசச்சிதானந்தராஜயோகீஸ்வரர் சங்கரசுப்பைய சுவாமிகளவர்களால் நன்குமதிக்கப்பெற்று அவரை இலங்கைக்குத் தரிசனம் கொடுக்கச் செய்தது யாவரும் அறிவர்.

Page 27
36 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
சுவாமி தூக்கிய திருவடியின் கீழே சிவானந்தத்தை அனுபவித்துக் கொண்டு எக்காலமும் இருக்கின்ற “காரைக்காலம்மையார்’
பேரானந்தத்தோடு,
கொங்கைதிரங்கிநரம்பெழுந்துகுண்டுகண்வெண்பற் குழிவயிற்றுப் பங்கிசிவந்திருபற்கணிண்டுபாடுயர்நீள்கணைக் காலோர் பெண்பேய் தங்கியலறியுலறுகாட்டிற்றாள்சடை யெட்டுத்திசையும் வீசி யங்கங்குளிர்ந்தனலாடுமெங்களப்பனிடந்தில வாலாங் காடே
என்று பாடித்துதித்து அருள் செய்த இறைவனுடைய மனதை யும் இந்த இரதம் கவரச் செய்தது போலும்! வருஷம் பிறந்த இரண்டாம் நாள் தீர்த்தோற்சவம் வெகுவிமரிசையாய் நடைபெறுகின்றது. இத் தினத்தில் அனேகர் காவடியெடுத்து வருங்காட்சி வியக்கத்தக்கது.
சதுர்த்தி
ஒவ்வொரு மாதமும் ஆலயத்தில் சதுர்த்தித் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இச்சதுர்த்தி,
“தேவர்கள் முனிவர்சித்தர் கந்தருவர் யாவரும்வந்திவ னேவல்செய்திடுநாள் அதிகமாயுரைக்கு மாவணித்திங்களின் மதிவளர்பக்கம் வந்திடுசதுர்த்தியில் விநாயகற்குரிய விரதமென்றெண்ணி மனாதிகள்களித்து மரபொடுநோற்றார் இப்படிநோற்றிட் டெண்ணியபெறுநாள் ஒப்பரும்விரதத் துறுமொருசதுர்த்தியில் நோற்றுநற்பூசை நுடங்காதாற்றிப் போற்றிசெய்திட்டார் புலவரைங்கரனை மருமலர்தூவும் வானவர்முன்னே நிருமலன்குமர னிருத்தம்புரிந்தான்.”
என்று பாடப்படும் மேன்மையுள்ளது. இச்சதுர்த்தியின் மேன்மைகளையெடுத்துரைக்க எமது நாவும் நூலுங் கொள்ளாது.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 37
“ தேருநீராவணித் திங்களின்மதிவளர் பூர்வீகபக்கம் புணர்ந்திடுசதுர்த்தியின் முந்தும்புலரியின் முறைநீர்படிந்து சந்திவந்தனந் தவறாதியற்றி அத்தினமதனி லைங்கரக்கடவுளைப் பக்தியோடர்ச்சைன பண்ணுதல் செய்வார்.”
என்பதற்கிணங்க இத்தினத்தில் அன்பர்கள் பத்திசெய்யு முறையெவருமறிந்த விஷயமே. இத்தினத்திலே திருவிழாக் கொண் டாட்டம் வெகு விமரிசையாய் நடைபெறுகின்றது. கோயிலில் அன்ன தானம், சொர்னதானம் முதலிய தர்மங்கள் நடைபெறுகின்றது.
விநாயகர் பிரபாவம்
கார்த்திகை மாசத்தில் விநாயகர் விரதாரம்பமாகி இருபத் தொரு நாட்களாய்ப் பிள்ளையார்கதை வாசிக்கப்பட்டுக் கடைசி நாளிலே சனங்கள் சட்டிவிரதம் பூண்டு மருதடி விநாயகரைத் தெரிசித்து வேண்டிய வரங்களைப் பெற்றேகுகின்றனர். இந்த விரதமானது.
“கார்த்திகைக்கார்த்திகைக் கழித்தபின்னாளில் ஆர்த்தகலிங்கத் தணியிழைவாங்கி இருபத்தோரிழை இன்புறக்கட்டி ஒருபோதுண்டி யுண்டொருமணமாய் வேதத்தாதியும் பூமியிலெழுத்தும் மூன்றெழுத்ததனான் மொழிந்தமந்திரமுந் தேன்றருங்குழலியர் சிந்தையுட்செபித்தே உரைதருபதினாறுபசாரத்த்ால் வரைமகண்மதலையை வழிபாடாற்றி இருபதுநாளு மிப்படிநோற்று மற்றைநாளைங்கர மாமுகன்பிறந்த தற்றைநாட்சதயமு மாறாம்பக்கமுஞ் சேருமத்தினத்திற் றெளிபுனலாடி வாரணமுகத்தோன் வதிபெருங்கோயில் சீர்பெறமெழுகித் திருவிளக்கேற்றிக்

Page 28
38 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
குலவுபொற்கலைகள் கொடுவிதானித்து மலர்பலதொடுத்திடு மாலைகனாற்றிக் கொலைபுரிவடிவேற் குகற்குமுன்வருகை மலைமுகக்கடவுளை மஞ்சனமாட்டிப் பொற்கலைநன்னூற் பூந்துகில்சார்த்திச் சொற்பெறுசந்தனச் சுகந்தம்பூசிச் செருந்திசண்பகஞ் செங்கழுநீரொடு குருந்துமல்லிகை கோங்கொடுபிச்சி கருமுகைபுன்னை கடிகமழ்பாதிரி மருவிரிஞாழன் மகிழிருவாட்சி தாமரைமுல்லை தழையவிழ்கொன்றை பூமலர்நொச்சிபூத்தமைக்குவளை காந்தளரத்தி கடம்புசெவ்வந்தி வாய்ந்தநல்லெருக்கு மலர்க்கரவீரம் பச்சிலைநொச்சி படர்கொடியறுகு முத்தளைக்கூவிள முதலியூசார்த்தித் தூபதிபங்கள் சுகம்பெறக்கொடுத்தே அப்பமோதக மவலெள்ளுண்டை முப்பழந்தேங்காய் முதிர்மொழிக்கரும்பு சீனிதேன்சர்க்கரை செவ்விளநீருடன் பானறுநெய்தயிர் பருப்புடன்போனகங் கற்பகக்கடவுள் களித்திடத்திருமுன் பொற்புறப்படைத்துப் பூசனைபண்ணி'
அனுட்டிக்க வேண்டியதாயிருக்கின்றது. இவ்விரதத்தின் மகிமைகளை விரித்துரைக்க இயலாதிருந்தும் அனுபவமுறையைக் கொண்டு சனங்கள் சொல்லியவற்றை மாத்திரங்கூறுவோம். அதாவது, இந்தவிரத நாட்களில் விடியற்காலையிலெழுந்து ஆசார நியதி நியமத்தோடு மருதடியிற் சென்று எவராவது பெருமானது உதயகாலப் பூசையைக் காண்பாரேல் அவர் இம்மை மறுமைப் பயன் களை உள்ளங்கை நெல்லிக்கனி போலடைவர் நீடித்த ஆயுள், தேகாரோக்கியம், ஐசுவரியம், செளரியம், கீர்த்தி, தாட்சணியம், தயை, பொறுமை, நீதி, சபாபாண்டித்தியம், ஞானம் முதலானவைகள் பெறுவர். பகை, கலகம், துர்க்கருமம், கொலையாதி பாதகம், இடர், வறுமை, சகலரோகங்கள் யாவுந்தீர்ந்து போகும்.

வருடப் பிறப்பன்று இரதம் அழகாகப் பவனி வரும் காட்சி

Page 29

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 39
கருதடியார் பாவங் கடிந்தருளு மானி மருதடிவாழ் ஐங்கரத்து வள்ளால் - பெரிதடியேன் ஒதும் உனது சரிதத் துறுபிழையுந் தீதுங் கடிந்தருளைச் செய்.
வாழ்த்து கவி
பூவாழி மன்னர்மநுநீதி வாழி
புகலரிய மடமகளிர் நிறையும் வாழி ஆவாழி அந்தணர்தங் கூட்டம் வாழி
அருமறைவே தாகமங்கள் புராணம் வாழி ஒவாத தவங்கருணை விரதம் வாழி
உலகிலுள்ள சராசரங்க ளனைத்தும் வாழி மாவாழும் பிள்ளையார் திடரில் வாழும்
மருதடியிற் கணபதிதாள் வாழி வாழி.
திருச்சிற்றம்பலம்
சிவ சிவ சிவ

Page 30
40 மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
வினைகளை வேரோடாறுக்கும் விநாயகப் பெருமான்
பிரணவத்தைத் தனது வடிவமாகக் கொண்ட விநாயகப் பெருமானை சிவபெருமானின் மூத்த திருக்குமாரர் என்று நமது பழம் பெரும் புராணங்கள் பகருகின்றன. த்ம்மை நினையாத வர்களுக்கு விக்கினங்களை ஏற்படுத்துவதாலும், தம்மை அன்புடன் வழிபடுபவர்களுக்கு விக்கினங்களை நீக்கி அருள் பாலிப்பதனாலும் இவருக்கு விக்கினேஸ்வரர், விக்கினராசர் என்ற காரணப் பெயர் களும் உண்டு. சிவனும், விநாயகரும் ஒருவரே என நம்பும் சைவப் பெருமக்கள் எக்கருமத்தைத் தொடங்கு முன்பும் விநாயகரை வணங்கி, எம் பெருமானின் அருள் பெற்றுய்வதை வழக்கத்தில் கொள்ளுகின்றார்கள்.
சைவ சித்தாந்த சாத்திரங்களில் விநாயகப் பெருமானின் பெருமைகள் நன்கு புலப்படுத்தப்பட்டிருக்கின்றன. சைவ சித்தாந்த சாத்திரங்களில் விநாயகப் பெருமானை எக்கருமம் தொடங்கு முன்னரும் அக்கருமம் இடையறாது தடையின்றி வெற்றிபெற வணங்கல் வேண்டும் என்பது மிகவும் ஆணித்தரமாக விளங்கப் படுத்தப்பட்டுள்ளது. இதை சைவ சித்தாந்த சாத்திரங்கள் படித்த வர்கள் நன்கு அறிவார்கள். ஆன்மாக்கள் அருள் பெற்றுய்யும் பொருட்டு பரமபதியாகிய சிவன் எடுத்த மூர்த்தங்களில் ஒரு மூர்த்தமான மூஷிக வாகனனை வணங்குவது சிவனைப்பணிவதற்கு ஒப்பானது. தன்னை மெய்யன்போடு வணங்குபவர்களின் துன்பங் களை நீக்கும் விநாயகப் பெருமான், ஆன்மாக்களின் அஞ்ஞானத்தை நீக்கி ஆன்மாக்களின் அறிவிற்கு அறிவாக விளங்குகின்றார்.
பருத்தவயிறும், தேவசரீரமும், யானைமுகமும், ஒற்றைக் கொம்பும், மூன்று திருக்கண்களும்,இரு செவிகளும், துதிக்கையுடன் ஐந்து திருக்கரங்களும், இரண்டு திருவடிகளும் விநாயகப் பெரு மானின் அங்கலட்சணங்களாகும். இவ்வகையான லட்சணங் களுடன் மெய்யடியார்களுக்கு அருள் செய்யும் உயர்தெய்வம் கணங் களுக்கே நாதனாய் விளங்கிக் கணநாதன் என்று பெயர்பெற்ற விநாயகக் கடவுளாவர். சூரியன், சந்திரன், அக்கினி என்ற முப் பெரும் சக்திகளைத் தன்னகத்தே கொண்டவர் என்பது அவர்பால் உள்ள மூன்று திருக்கண்களும் விளக்குகின்றன.
விநாயகர் வணக்கத்தில் தேங்காய் அடித்தல் மிகமுக்கிய மானதொரு நிகழ்ச்சியாகும். இளந்தேங்காயும், முதிர்ந்த தேங்காயும், விநாயகர் முன்னிலையில் உடைக்க ஏற்றவையல்ல. கணபதிக்கு உடைக்கும் தேங்காய் முடியுடன் இருத்தல் அவசியம்.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 41
கயமுகாசுரனைத் தேவர்கள் பொருட்டு விநாயகப் பெரு மான் சங்கரித்ததனால் தேவர்கள் பெருமகிழ்ச்சியில் இருகரங் களினாலும் தங்கள் தலையில் முட்டியாகப் பிடித்து கரங்களினால் குட்டி பின்னர் இருகைகளினாலும் எதிர் எதிராகக் காதுகளைப் பற்றிக் கொண்டு, கணைக்காலும் தொடைகளும் ஒன்றை ஒன்று தழுவும்படி மூன்று முறை தாழ்ந்து எழுந்து வணங்கினார்கள். அதன் பிற்பாடு அகத்திய முனிவர், சிவபக்தன் இராவணன் இவ்வணக்க முறையைக் கைக்கொண்டு விநாயகப் பெருமானின் அநுக்கிரகம் பெற்றுய்ந்தார்கள் என்பது எமக்குப்புராணங்களில் இருந்து கிடைக்கப் பெறும் தகவல்களாகும். இவ்வணக்க முறைகள் சைவமக்களால் அன்று தொடக்கம் தொடரப்பட்டு வந்தும் தற்பொழுது எம்மால் அனுஷ்டிக்கப்படாமல் இருந்து வருகின்றது.
போலி வாழ்க்கையும், ஆடம்பரமான ஆலய தரிசனமுமே தற் காலச் சமயப் பழக்கவழக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றன. இந்நிலை மாறி விநாயகப் பெருமானை மனதில் பிரார்த்தித்து அவர் கோவிலுக்குச் சென்று யான், எனது, என்னும் மமதைகள், அகந்தைகள் யாவும் அறவே நீங்கும்படியாக மும்முறை தாழ்ந்து முறைப்படி வணக்கஞ் செலுத்தி சிறுமைகள் மிக்க யாம் பெருமைகள் பெறவேண்டிச் செய்யும் கருமங்கள் எவ்வித விக்கினங் களும் இன்றி இனிது முடிவுற வேண்டும். விநாயகப் பெருமானை வாழ்த்தி வணங்குதலால் சகல சித்திகளையம் நாம் பெற இயலும் என்பது முக்காலமும் உண்மையானதன்றோ.
வி. என். மதியழகன் “கல்வளை’ சண்டிலிப்பாய்

Page 31
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
குருதுே:ள்
மருதடி விநாயகள் கும்மி
ஏர்பூத்த மானி மருதடி மேவிய ஏரம்பன் பாதம் மனத்திருத்திச் சீர் பூத்த செந்தமிழ்க் கும்மி யுரைத்திடச் செப்பு மவன்பதங் காப்போமே.
ஆதியு மந்தமு மில்லாத நான்மறை ஆதிப் பிரணவ நல்வடிவாய் ஒதிய தொண்டர்கள் விக்கினம் நீக்கிட ஒருரு வானாண்டி ஞானப் பெண்ணே
உச்சியில் மாமகு டந்துவங்க வெள்ளை ஒற்றை மருப்பு மணிவிளங்க மெய்ச்செவிச் சாமரம் வீசப் பிரனவ வேழமுகங் கொண்டு வந்தாண்டி
ஐந்து கரத்தனை யானை முகத்தனை ஆகுமோர் மூவடி வானவனை தொந்தி வயிற்றனை மானி மருதடித் தோன்றலைப் பாடுவம் ஞானப்பெண்ணே
எந்தக் கருமங்கள் செய்யினும் முன்னாக எம்பெருமா னென்று போற்றாக்கால் அந்தக் கருமஞ் சிவனுக்கு மாகாதா மச்சு முறிந்தது காணுங்கடி
சர்க்கரை மோதகந் தேங்கா பவல்கனி சாற்றிய பாற்பொங்கற் புத்தமுதம் இக்குடனெள்ளுண்டையிட்டுத் துதிக்க இருவினை தீர்க்குவன் ஞானப்பெண்ணே
தொட்டு வணங்க வருள் தரு மற்புதச் சோதி மருத மரம்பாடிக் குட்டை யுவந்தரு ளைங்கரன் பாதங்கள் கும்பிட்டுக் கும்மி யடியுங்கடி

மருதடி விநாயகள் ஆலய பஞ்சமுக பிள்ளையார்

Page 32

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 43
சைவ சமயிகளன்றியு மேனைச் சமயிகளும்மணத் தில்நினைந்தால் ஐயமொன் றின்றி யருள்செயு மெம்பிரான் ஆகும் மருதடி யைங்கரனே. 8
வாழி மருதடி யைங்கரன் பாதங்கள் வல்லபை வாழி யருள்வாழி வாழி யடியவரந்தண ரென்றென்றும் மக்கள் வர்க்கமும் வாழியரோ 9
நூற்பயன்
வெண்பா
சித்தா குலந்தீருஞ் சித்திபுத்தி முத்தியெய்தும் சந்தான மென்றுந் தழைத்தோங்கும் - கொந்தார் மருதடியான் பாத மலரைத் தொழுது தரிசித்துப் போற்றிநினைந்தால்
தீராத நோய்தீருஞ் செல்வமிகும் பத்திவரும் வாராத கல்வியெல்லாம் வந்தெய்தும் - பேரார் மருதடியா னைங்கரத்தான் மாமுகத்தான் பாதம் கருதிக் கசிந்தேத்துங் கால்.

Page 33
44
காயமே கோயிலாகக்
கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக
மனமணி லிங்கமாக நேயமே நெய்யும் பாலா
நிறைய நீர் அமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப்
போற்றவிக் காட்டினோமே
திருச்சிற்றம்பலம்
 
 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம் 45
2. மருதடி விநாயகர் துணை
IDTGofůLITü மருதடி விநாயகர் திருவுஞ்சல்
(காய்பு)
பூமருவு பூந்தமிழும் சைவம் ஓங்கும்
புனிதநகர் யாழ்ப்பாணப் பதியில் என்றும் நாமருவு பாவலர்கள் போற்றிப் பாடும்
நகர்மானிப் பாய்திகழும் மருதடியின் கோமகனாம் கொம்பொடித்துக் கவிவரைந்த
கொழுக்கட்டை அவலுண்ணும் பிள்ளை யார்க்குப் பாமருவும் பைந்தமிழில் ஊஞ்சல் பாடப்
பரிந்தருள்செய் மருதடியான் காப்ப தாமே!
(நூல்)
திருவோங்கும் நான்மறைகள் கால்க ளாகத் திகழுசிவா கமம்வயிர விட்ட மாக அருளோங்கும் கலைஞானம் வடங்க ளாக
ஆனந்த ஓங்காரம் பலகை யாகப் பொருளோங்கும் தமிழுஞ்கல் தனிலே வைகி
பொலிமானிப் பாய்நகரில் கோயில் கொண்ட பெருமானே மருதடியாம் தலத்தில் மேவும்
பூரணரே விநாயகரே ஆடீர் ஊஞ்கல்.
சிந்தையிலே திகழ்பக்திக் கால்நிறுத்திச்
சீலமிகு பஞ்சபுலன் விட்டம் பூட்டி முந்துமெழில் நாற்கரணக் கயிறு மாட்டி
முகிழ்த்ததிரு வருளென்ற பலகை தேக்கி பந்தமொரு ஜீவனவன் முத்தி என்னும்
பக்குவமாம் பேரின்ப ஊஞ்சல் ஆட சிந்தும்அருள் மருதடியாம் தலத்தில் மேவும்
சிற்பரரே விநாயகரே ஆடீர் ஊஞ்சல். 2

Page 34
46
மாணிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
உச்சிதனிற் பொன்மகுட முடியும் ஆட
உயர்நுதலிற் சிந்துரத்தின் திலக மாட கச்சிதம்சேர்ச் செவிக்குழைகள் சேர்ந்தே ஆட கார்வண்ணக் கரியுருவ மேனி ஆட அச்சிறுகொம் பொடித்திடுநல் மருப்பும் ஆட
அபயமொடு வரதத்தின் கரங்க ளாட பிச்சிகமழ் மருதடியாம் தலத்தில் மேவும்
பேரருளே விநாயகரே ஆடீர் ஊஞ்சல்,
விழியாட அருளாட விசும்பும் ஆட
விளங்குதிருப் பட்டணியும் பொலிந்தே ஆட எழிலான மாதங்கக் கரமும் ஆட
எடுத்திடுநற் பூரணமோ தகமும் ஆட அழகான ஆத்தியொளிர் ஆரம் ஆட
அறுகாடத் தும்பைபுரி நூலும் ஆட நிழலியும் மருதடியாம் தலத்தில் மேவும்
நிர்மலரே விநாயகரே ஆடீர் ஊஞ்சல்.
செந்தமிழின் கவியருந்தும் செவிகள் ஆடச்
செவ்வருளை மலர்முறுவ லிதழு பூப்ப தந்திமுகத் தொந்தியெழில் குலுங்கி ஆடத்
தவழ்பாச அங்குசமாம் படைக ளாட முந்தியருள் அவ்வைக்கே முகிழ்த்த ஞான
முதல்வனே அகவலுக்கே அருளும் செல்வா கொந்தவிழ்பூ மருதடியாம் தலத்தில் மேவும்
குஞ்சரனே விநாயகரே ஆடீர் ஊஞ்சல்,
திங்கள் முகத்தினிலே செவ்வாய் பூத்தே
திகழ்வில்லில் அம்புதன்னைத் தொடுத்தே அன்று பொங்கவுணர் குலமழித்தே வியாளன் பூண்டு
பொன்வெள்ளித் தண்டைதனைக் காலில் மாட்டி பங்குலவு மூஷிகத்தில் ஆசனித்தே
பரிதியெனும் ஞாயிறுபல் கோடி ரூபன் தங்குமெழில் மருதடியாம் தலத்தில் மேவும் தந்திமுக விநாயகரே ஆடீர் ஊஞ்சல்.

மாணிப்பாங் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
47
அம்பிகையும் அம்பலனோர் வடந்தொட் டாட்ட
அரவிந்தன் இலக்குமியோர் வடந்தொட் டாட்ட நம்பியயன் வாணியுமோர் வடந்தொட் டாட்ட
நயந்துருகி பக்தருமோர் வடந்தொட் டாட்ட தும்பிமுகத் தண்ணல்கண பதியே தேவா!
துயர்நீக்கி நல்லருளைப் பொழியும் நாதா அம்பதும மருதடியாம் தலத்தில் மேவும்
ஆனைமுக விநாயகரே ஆடீர் ஊஞ்சல்,
அகத்தியருக் கருள்தந்த அரசே முன்னம்
ஆனந்த முருகனுக்கும் உதவும் செல்வா! மதத்தினொரு கொம்பொடித்து மேரு மீதில்
மாபார தக்கதையை எழுதும் தீரா! இகத்தினிலே அவ்வையிவள் தமிழைக் கேட்டு
எடுத்தவளைப் பரமுத்தி நல்கும் வீரா! செகத்தினிலே மருதடியாம் தலத்தில் மேவும்
சிற்பரரே விநாயகரே ஆடீர் ஊஞ்சல்,
பானுவொடு மதியால வட்டம் ஏந்தப்
பாவையராம் நாரியரும் பரதம் ஆட வானுலக இந்திரனும் கவரி வீச
வாணியவள் வீணையதை மீட்டிங் பாட தேனுலரா மாலவனும் குழலும் ஊதத்
தேவநந்தி முழவிசைத்துக் கீதம் பாட மாணிநகர் மருதடியாம் தலத்தில் மேவும்
மதக்கரியே விநாயரே ஆள் ஊஞ்சல்,
கழனியொடு கமலங்கள் சூழும் வரவிக்
கவின்மானி நகர்பக்தர் போற்றிப் பாட அழகொழுக அருள்நல்கி அயம் ஈனும்
ஆனைமுகப் பெருமானே ஆடீர் ஊஞ்சல் குழகனொடு குஞ்சரியும் வள்ளி யோடு
கூடிமகிழ் வேணலக்கைய் பிள்ளை சேரும் எழிலருள் செய் மருதடியாம் தலத்தில் மேவும் ஏரம்ப விநாயகரே ஆடீர் ஊஞ்சல்.
O

Page 35
48
மாணிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
பூரணனே வாரணனே ஆடீர் ஊஞ்சல்
பூங்கொன்றைத் தார்புனைவோய் ஆடீர் ஊஞ்சல் காரணனே கணபதியே ஆடீர் ஊஞ்சல்
கவின் ஞானம் அருள்பவனே ஆடீர் ஊஞ்சல் நாரணனின் மருகோனே ஆடீர் ஊஞ்சல்
நயந்தருளைப் பொழிபவனே ஆடீர் ஊஞ்சல் தாரணியில் மருதடியாம் தலத்தில் மேவும்
தண்ணருள்செய் விநாயகரே ஆடீர் ஊஞ்சல். 1
(6мпуф)
செந்தண்மை சேர்ந்திடுமந்தணர்கள் வாழி!
செழும்விண்ண கத்தாரும் வாழி! வாழி! பைந்தமிழின் இனிமையெனப் பாலை நல்கும்
பசுவினமும் மாரிமழை வாழி! வாழி!! சிந்தையிலே செங்கோலின் அரசு வாழி!
செந்தமிழும் சைவநெறி ஞானம் ഖTി! எந்தையருள் மருதடியாம் தலமும் வாழி!
ஏரம்ப விநாயகரும் வாழி! வாழி!!
 

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மான்மியம்
நன்றியுரை
1925ம் ஆண்டு எனது பாட்டனார் பண்டிதர் தா. சுவாமிநாதனால் எழுதப்பட்ட மருதடி மான்மியத்தின் வெளியீட்டு வைபவம் நடைபெறவில்லை. பின்னர் 1970ம் ஆண்டில் என்னால் எழுதப்பட்ட இரண்டாம் பதிப்பிற்கும் வெளியீட்டு வைபவம் நடாத்த முடியவில்லை. அப்போதைய சூழ்நிலை காரணமாகவே இதனைச் செய்ய முடியவில்லை. இன்று இந்த வெளியீட்டு வைபவத்தை நடாத்துவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்த கொழும்பு இந்து இளைஞர் மன்றத்திற்கு முதலில் நன்றி கூறக் கடப்பாடுடையேன். இன்றைய இந்த விழாவிற்கு தலைமை வகித்த வருக்கும், சிறப்புரை ஆற்ற வந்தவர்களுக்கும் எமது அழைப்பை ஏற்றுவந்து விழாவினைச் சிறப்பித்தவர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றிகள் உரித்தாகுக.
சுவாமிநாதன் - தர்மசீலன்
●

Page 36


Page 37

--
臧
慧