கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

Page 1

மனிதன் வெளியிட்டகம்

Page 2

‘முன்றாவது மனிதன்” வெளியீடு
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

Page 3
Title
Author
Copy Rights
Publication Address
Date of Publication
Printers
Price
Muslim Thesamum €athirkazhamum
Victor
Publisher (M. Fouzer)
"MUnraujathu Manithan" Publication No. 27, R.V.V. Road, Rkkaraipattu - 02,
Sri Lanka.
O1 February 1997
Techno Print 83, Hospital Road, Kalubouila
Rs, 20.00

பதிப்புரை
இலங்கையில் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தொடர்ந்துவரும் சிங்கள ஆட்சியாளர்களினால் அடக்கப்பட்டும் நசுக்கப்பட்டும் சமத்துவ அந்தஸ்து மறுக்கப்பட்டவர்களாகவும் நீண்ட காலமாய் நடாத்தப்பட்டு வருகின்றனர். சுதந்திரத்தின் பின்னான அரை தசாப்த காலங்களில் - தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இந்த நாட்டில் நீதி வழங்கப்படவில்லை. அனைத்து வழிகளிலும் புறக்கணிக்கப்பட்ட அடக்கிவைக்கப்பட்ட தமிழ் முஸ்லிம் மக்கள் இலங்கை தேசத்துடன் இணைந்து கொள்ள எடுத்த அனைத்து எத்தனங்களையும் தென்னிலங்கை பெளத்த சிங்கள இனவாத சக்திகள் முறியடித்த நிலையில், சிங்கள ஆட்சியாளர்களினால் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு ஒருபோதும் நியாயமான நீதி வழங்கப்படப் போவதில்லை என்பதை அனைத்து தமிழ் முஸ்லிம் மக்களும் இன்று உணர்ந்துநிற்கின்றனர். அந்த உண்மையின் விளைவாக கடந்த இரண்டு தசாய்த காலமாக தமிழ் மக்கள் ஆயுத வழிப்போராட்டத்தில் தங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ள நடாத்தும் போராட்டத்தில் தமிழ் மக்களுக்கு அடுத்த சிறுபான்மையான முஸ்லிம்கள் இன்னும் தங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சலுகைகளுக்கு அப்பாற்பட்ட சக்தியொன்றை கட்டியெழுப்ப முன்வராது துரதிருஷ்டமே. முஸ்லிம்கள் தங்களுக்கென்ற அரசியல் பலத்தை தனித்துவத்தோடு அடையாளப்படுத்தக் கூடிய வடக்குகிழக்கு முஸ்லிம்களை பொறுத்த வரையில், கடந்த கால அனுபவங்களின் ஊடே அவர்கள் சந்தித்த சவால்கள், விளைவுகள், அனுபவங்கள் காரணமாய் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக ஒரு தனித்துவ தேசத்தை கோர வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டு விட்டார்கள். இக்கோரிக்கையானது இன்று வரலாற்றின் ஊடே ஒரு தவிர்க்க முடியாத தேவையாகியும் விட்டது. பேரினவாத பெளத்த சிங்கள ஆட்சியாளர்களின் மேலாதிக்க மனோபாவம், தென்னிலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கீழான சலுகைகளுக்கான அரசியல், தமிழ் மிதவாத கட்சிகளின் போலித்தனம்,

Page 4
ஆயுத அமைப்புகளின் அடக்குமுறைகள், இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு காரணிகளால் வெடித்தெழும்பியுள்ள முஸ்லிம்களுக்கான தனித்தேசக் கோரிக்கையின் வழித்தடத்திற்கான கடந்த கால சவால்களை, நிகழ்வுகளை, அனுபவங்களை பரிசீலனைக் குட்படுத்துவதன்மூலம் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒரு நியாயமான முடிவுக்கு வருவதற்கு இவ் ஆய்வு முயற்சி துணைநிற்கும். சிறுபான்மை மக்கள் தொடர்பாக நியாயமாக நடந்து கொள்ள மறுத்த சிங்கள ஆட்சியாளர்களுக்கெதிராக தமிழ், முஸ்லிம் மக்களும் தங்கள் தங்கள் தனித்துவத்துவ அடையாளங்களைப் பேணும் அதே நேரம் ஐக்கியப்பட்டு போராடுவதைத்தவிர வேறு ஒரு வழியும் இருப்பதாகத் தெரியாத யதார்த்தம் உணரப்பட்ட இச்சூழலில்; இவ் ஆய்வு முயற்சி நூலுருவாக்கம் பெறுவது தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஒரு தெளிவான இணக்கப்பாட்டுடனான முற்போக்கு அணியை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை. லண்டனிலிருந்து வெளிவரும் "உயிர்ப்பு" சஞ்சிகையின் ஆசிரியர் குழுவின் பெரும் முயற்சியினால் எழுதப்பட்ட இவ் ஆய்வுக்கட்டுரையானது உடனடியாக நூலுருவாக்கம் பெறப்படல் வேண்டுமென தமிழ், முஸ்லிம் முற்போக்கு சக்திகள் அதிக ஆர்வம் காட்டின. சுயவிமர்சனத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை கொண்ட மக்களும் தலைமைத்துவங்களும் இவ் ஆய்வுக்கட்டுரையில் சொல்லப் பட்டுள்ள கருத்துக்களை பக்க சார்பில்லாத நடுநிலையான கண்ணோட் டத்துடன் அணுகி, விமர்சனத்திற்கு உட்படுத்துவதன் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களிடையே நிலவி வரும் இடைவெளியை தகர்த்தெறிய முடியும். இதனை நூலுருவில் வெளியிட அனுமதியளித்த லண்டன் "உயிர்ப்பு" குழுவினருக்கும் சிரமமெடுத்து அச்சிட்டுத் தந்த நண்பர் தியாராசா அவர்களுக்கும் "சரிநிகர்" ஆசிரியர் பீடத்தைச் சேர்ந்த நண்பர் சிவகுமார் அவர்களுக்கும் அட்டைப்பட வடிவமைப்பைச் செய்த நண்பர் ஏ. எம்.றவுமி அவர்களுக்கும் பல்வேறு வழிகளிலும் துணை நின்ற அனைவருக்கும் எனது மனப்பூர்வான நன்றிகள்.
எம். பெளசர்.
பதிப்பாளர்.

முன்னுரை
நிலங்கா இனவாத அரசு தமிழ் தேசத்தின் இருப்பை சிதைத்து அழித்துவிட பல்வேறு வழிகளிலும் முயற்சிக்கின்றது. தமிழ் தேசத்தை நிராயுதபாணியாக்கி தனது ஆயுதபலம் கொண்டு நசுக்கி விட கடுமை யாக பிரயத்தனப்படுகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்றைய சந்திரிகா அரசும் தீர்வுத் திட்டப் போர்வையில் யுத்தத்தை தீவிரப் படுத்தி தமிழ் தேசத்தின் மீது தனது மேலாண்மையை நிறுவும் முயற்சி யில் இறங்கியுள்ளது. எனவே சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் தேசம் தன்னை விடுவித்து அது தனக்கென சொந்த அரசை அமைத்துக் கொள்வதே வரலாற்று தேவை என்பது மேலும் துல்லிய மாக்கப்பட்டுள்ளது.
எனினும் தமிழ் தேசம் தனது விடுதலையை எளிதாகவும், விரைவாக வும் பெற்றுவிட முடியும் என கற்பனை செய்ய முடியாது. தமிழீழம் இதோ கிடைத்துவிடும் என்று மிதவாத/தீவிரவாத தமிழ் தலைமைகள் கடந்த காலங்களில் பல தடவை நம்பிக்கை தெரிவித்திருந்தும் கூட, 15 வருடங்களுக்கும் மேலாக ஆயுத போராட்டம் தொடர்வதே யதார்த்த மாயுள்ளது. விடுதலைப் போராட்டம் மேலும் கணிசமான காலம் நீடிக்கும் என்பதை, தமிழ் தேசம் இன்று எதிர் கொள்கின்ற பல்வேறு பிரச்சினைகளின் தீவிர பரிமாணங்கள் உணர்த்துகின்றன.
ஒரு போராட்டம் இறுதி வெற்றியடைய முன்பு, தனது பாதையில் பல்வேறு பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் எதிர் கொள்கின் றது; போராட்டத்தில் பங்கு கொண்ட சக்திகள், புதிதாக இணைகின்ற சக்திகள்; போராட்டத்திலிருந்து ஒதுங்கிச் செல்லும் பிரிவினர்; இவர்களிற்கிடையிலான உறவுகள்; இவற்றின் விளைவாக மேலேழு கின்ற புதிய பிரச்சனைகள், மாறும் புறநிலைமை, அதற்கு ஏற்ப போராட்ட வழிமுறைகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள், என வேறுபட்ட பல அக,புற நெருக்கடிகளை ஒரு போராட்டம் சந்திக்கிறது. இவற்றை கண்டு கொள்ளமால் ஒதுங்குவதோ, அல்லது இவற்றிற்கான தீர்வுகளை எதிர்காலத்திற்கு என ஒத்திப்போடுவதோ போராட்டத்தின்

Page 5
வெற்றியை உறுதிப்படுத்தி விடாது. மாறாக பலவீனப்படுத்தவே செய்யும். இத்தகைய நெருக்கடிகளை புறநிலையாக எதிர்கொள்வதும் இவற்றிற்கான தீர்வுகளைக் கண்டு கொள்வதுமே போராட்டம் புதிய வலிமையுடனும், புதிய பரிமாணத்திலும் பாய்ச்சல் அடைவதைச் சாத்தியமாக்கும். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் இதுவரை பல நெருக்கடிகளை எதிர் கொண்டு வந்துள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வுகள், பிரதேச வேறுபாடுகள், வெகுசனப்படுத்தலின்மை, அராஜகம், பெண்களின் நிலை. என்பவற்றுடன் இப்போது முஸ்லிம் மக்களின் விடயமும் தீர்க்கமான விடயமாக முன்தள்ளப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்கள் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களுடன் அருகருகே அவர்களுடன் சமூக, பொருளாதார, கலாசார ரீதியில் நெருக்கமாக உறவுகொண்டு வாழ்ந்து வந்திருந்தும், அவர்கள் தமிழ் மக்களின் அரசியலுடன் இணைவதைத் தவிர்த்து வந்திருப்பதை, ஒரு வெறுப்பிற்குரிய புதிராகவே தமிழ்த் தலைவர்களும், பெரும் பாலான தமிழ் மக்களும் கருதி வந்துள்ளனர். ஒரு நூற்றாண்டிற்கு முன்பே, முஸ்லிம்கள் தனியான இனமல்ல (Ethnic Group) என்றும், அவர்களும் தமிழர்களே என்றும் தமிழ் தலைவர்கள் வாதித்திருந்த போதிலும். பிற்காலங்களில் பல்வேறு தமிழ்தலைமைகளும் முஸ்லிம் மக்களை 'இஸ்லாமிய தமிழர்கள்', 'தமிழ் பேசும் மக்கள்', 'ஈழவர் கள்' என்றெல்லாம் அடையாளப்படுத்திய போதிலும் முஸ்லிம் மக்களின் அரசியல் போக்கு தமிழ் மக்களின் அரசியல் பாதையிலிரு ந்தும் வேறுபட்டுச் சென்று விட்டதே யதார்த்தமாகும்.
இந்த எதார்த்தத்தை தமிழ் தலைமைகள் சரியாக புரிந்து கொள்ளாதது மட்டுமல்ல, இதனை அவர்கள் அணுகிய முறையானது, ஒரு வரலாற்று அவமானத்தைச் சுமக்க வேண்டிய நிலைக்கு தமிழ் தேசத்தை இட்டுச் சென்றுள்ளது. தமிழ் மக்களின் அரசியலில் இருந்து வட- கிழக்கு முஸ்லிம்கள் வேறுபட்டு நிற்பதற்கான அடிப்படைக் காரணங்களை புரிந்து கொள்ள முயற்சிக்காமல், தமிழ் தலைமைகள் - குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தலைமைகள் வட-கிழக்கு முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வந்திருக்கின்ற வன்முறை நடவடி க்கைகள், தமிழ் தேசத்தின் போராட்டத்தின் நியாயப்பாட்டின் மீதே

கேள்வியை எழுப்பியிருக்கின்றன. முஸ்லிம்களை முற்றாகவே வடக்கிலிருந்து வெளியேற்றியிருக்கும் கொடூரமும், கிழக்கு முஸ்லிம் களின் சமூக இருப்பை அச்சுறுத்தி இருப்பதும் வரலாற்றில் இடம் பெற்றுள்ள பிற இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு (Ethnic Cleansing) எந்தவிதத்திலும் குறைந்ததல்ல என்பதையே காட்டுகிறது.
தமிழ் தேசமானது ஒரே தாயகத்துள் வாழும் இன்னோர் தனித்துவமான சமூகமாகிய முஸ்லிம் மக்களை உதாசீனப்படுத்தி விட்டு, தனது விடுதலையை அடைந்துவிட முடியாது. ஏனெனில் முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினை என்பது தமிழ் தேசம் தனது விடுதலைக்கான பாதையில் முகங்கொடுத்து தீர்வு கண்டாக வேண்டிய ஓர் அரசியல் பிரச்சினையாகும். ஆதலால் இதனை எதிர்காலத்திற்குரிய பிரச்சினை யாக ஒத்தி வைப்பதும் சாத்தியப்படமாட்டாது. இது தமிழ் தேசத்தின் ஜனநாயக பண்புடன் நெருக்கமாக தொடர்புற்றிருக்கின்றது. ஒரே தாயகத்துள் வாழும் இன்னொரு சமூகத்துடன் தமிழ் தேசம் எவ்வா றான உறவைப் பேண விரும்புகின்றது என்பதை உலகிற்கு வெளிப் படுத்துகின்ற விடயமாகும். கடந்த கால தவறுகளை 'மன்னிப்போம் மறப்போம்' என பிரச்சினையை அப்படியே ஒட்டுமொத்தமாக கிடப்பில் போடுவதோ அல்லது அவ்வப்போது நடைமுறையில் எழும் பிரச்சனைகளுக்கு உள்ளூர்மட்டத்தில் அணுகி தீர்வு கண்டு செல்வதோ இதற்கான தீர்வாக மாட்டாது. பதிலாக வட-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு, அவற்றை முறையாக மதிப்பிட்டு, அதனடிப்படையில் அவர்களுடன் தமிழ்தேசம் ஏற்படுத்தக்கூடிய உறவுகள் மீள்வரையறை செய்யப்பட வேண்டும்.
முதலில், வட கிழக்கும் முஸ்லிம்கள் தொடர்பாக எழுந்திருக்கின்ற பிரச்சினைகள் அரசியல் பரிமாணம் கொண்டவை என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இதுவரை காலமும் தமிழ் தலைமைகள், வட-கிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான விடயங்களை அரசியல் ரீதியாக அணுகுவதற்கு தயாராக இருக்கவில்லை. இப்போக்கின் நேரடி விளைவாகவே விடுதலைப் புலிகள் வடக்கு முஸ்லிம்களை ஆயுத முனையில் வெளியேற்றிய நிகழ்வும் அமைந்திருக்கிறது. இதற்கு மேல் தமிழ் தேசத்திற்கும் வட கிழக்கு முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவுகள் அரசியல்ரீதியாக தெளிவாக வரையறுக்கப்படுவதே

Page 6
இப்பிரச்சனைகளுக்கான தீர்வாக அமையும்.
இதனை நோக்கமாக கொண்ட முயற்சியின் விளைவு தான் இக் கட்டுரை. இந்த ஆய்வு இயன்றவரை முழுமையாக அமையவேண்டும் என்பதற்காக, முழு இலங்கை முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் தொடங்கி அவர்களின் பூர்வீகம், குடிசனப்பரப்பல் பொருளாதாரம். என ஊடறுத்து வட கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவத்தை வெளிப்ப டுத்தி, அவர்களின் அரசியல் போக்குகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வட கிழக்கு முஸ்லிம்களின் சமூகத் தன்மை களில் ஏற்பட்டு வந்திருக்கின்ற மாற்றங்களையும் அவற்றுடன் இணைந்ததாக அவர்களின் அரசியல் போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்களையும், இறுதியில், அவர்கள் தமக்கென தனியான அரசியல் இயக்கத்தையும், அரசியல் கட்சியையும் உருவாக்கியிருப்பதோடு, தமக்கென தனியான அரசியல் அதிகார அலகைக் கோருகின்ற நிலையை அடைந்திருப்பதையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. இவற்றின் ஊடாக வட-கிழக்கு முஸ்லிம்கள் ஒரு தனியான தேசமாக உருவாக்கியிருக்கின்றார்கள் என்ற உண்மையும் கட்டுரையில் வெளிப் படுத்தப்படுகின்றது. இத்தகைய பின்னணியில், இக்கட்டுரை வடகிழக்கு முஸ்லிம்களின் தேச உருவாக்கத்தை வெளிப்படுத்துவதாயும், இதனடிப்படையில் வட-கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே இனிமேல், ஏற்படவிருக்கும் உறவுகள் சமத்துவமுள்ள இரு தேசங் களுக்கு இடையிலான உறவுகளாகவே அமைய வேண்டும் என்ற முடிவை முன் வைப்பதாக்வும் அமைகிறது.

பூர்வீகமும் தனித்துவமும்
அறிவியல் துறையில் பூர்வீகமானது ஒரு சமூகத்தின் வரலாற்று இருப்புடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட சூழலில், ஒரு சமூகம் எத்தனை கால இருப்பைக் கொண்டுள்ளது. அச்சூழலுடன் குறிப்பிட்ட சமுகம் எத்தகைய இடையீட்டுத் தொடர்புகளை பேணிவருகின்றது போன்றவற்றை மதிப்பிடுகின்ற வரலாற்று அளவு கோலாக பூர்வீகம் விளங்குகிறது. பொதுவான நிலைமையில் ஒரு சமூகம் தனது பூர்வீகம் குறித்து பெருமிதம் கொண்டிருக்கும் சில சந்தர்ப்பங்களில் தனது பூர்வீகத்தை மறந்த நிலையிலும் கூட ஒரு சமூகம் வாழக்கூடும்.
என்றாலும், இந்த வரலாற்று அம்சத்தோடு எழுச்சியுடன் கூடிய அரசியல் அம்சத்தையும் பூர்வீகம் தன்னளவில் கொண்டிருக்கிறது. பூர்வீகத்தை ஆதாரமாகக் கொண்டு கிளர்ந்தெழுந்த பல்வேறு அரசியல் இயக்கங்களை வரலாறு வெளிப்படுத்தியுள்ளது.
தனது வாழ்வுச்சூழலில் தனக்குரிய வளங்களையும் வாய்ப்புகளையும் அனுபவிப்பதற்கான உரிமை, தனது சுயத்தை பேணுவற்கான உரிமை, ஒரு சமூகத்திற்கு மறுக்கப்படுகின்ற போது, அச்சமூகம் அங்கு தனக்குள்ள உரிமைகளையும், பாத்தியதைகளையும் நிலைநாட்டு வதற்காக தனது பூர்வீகத்தை ஆதாரமாகக் கொள்கின்றது. தான் ஒரு தனியான சமூகம் என்றும், ஏனைய சமூகங்களைப் போன்று தமக்கும் சமத்துவமான உரிமைகள் உண்டு என்றும் நிலை நாட்டுவதற்காக வரலாற்றில் இருந்து தனக்குரிய அடையாளங்களை அச்சமூகம் கண்டெடுக்கிறது. இத்தகைய பூர்வீக அடையாளங்கள் விஞ்ஞான கண்ணோட்டத்தில் பகுத்தறிவுக்கு பொருந்தாதவையாகக் கூட இருக்கலாம். எனினும் குறித்த சமூகம் தனது தனித்துவத்தையும் உரிமைகளையும் நிலைநாட்டுகின்ற போராட்டத்தில் தன்னை
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 1.

Page 7
இறுக்கமாக ஒன்றிணைக்கவும், அதற்கான ஆன்மீக வலிமையை பெற்றுக் கொள்ளவும் உதவுகின்ற ஒரு சாதனமாக பூர்வீகத்தை உயர்த்திப் பிடிக்கின்றது. இதன் பின்னர் பூர்வீகமானது அச்சமூகத்தின் கடந்த கால இருப்பை குறிக்கின்ற வரலாற்று அளவுகோல் என்பதிலிருந்து அதன் எதிர்கால இருப்புடன் பிணைந்து விடுகின்ற ஓர் அரசியல் காரணி என்ற நிலைக்கு மாறுகின்றது.
இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் தமது பூர்வீகம் பற்றிய உணர்வு பூர்வமான தேடலை ஒரு நூற்றாண்டிற்கு முன்பே தொடங்கிவிட்டனர். முஸ்லிம்கள் மீது சிங்கள மற்றும் தமிழ் தலைமைகள் கொண்டிருந்த விரோதமும் மேலாதிக்க மனோபாவமும் இத்தகைய தேடலுக்கு காரணமாகின. 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இவ்விரு சமூகத் தலைமைகளும் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தையும், உரிமை களையும் மறுக்கின்ற போக்கை எடுத்தனர். ஒரு புறம், தென்னிலங்கை முஸ்லிம்களின் ஒரு பிரிவினர் வர்த்தகத்தில் பெற்றிருந்த செல்வாக்கின் காரணமாக, அவர்கள் மீது சிங்கள வர்த்தகர்களும், சிங்கள இனவாதிகளும் இவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் விரோதம் கொண்டிருந்தனர். இவர்கள் தென்னிலங்கை முஸ்லிம் பிரிவினரின் வர்த்தக மேலாண்மையை அகற்றி அங்கு தமது மேலாண் மையை ஏற்படுத்த முயன்றனர். இதன் நிமித்தம் இலங்கை முஸ்லிம் களின் பூர்வீகத்தை கொச்சைப் படுத்தினர். முஸ்லிம்களுக்கு இந் நாட்டில் உரிமையில்லை என நிரூபிப்பதற்காக அவர்களை 'கள்ளத் தோணிகள்' என்றும் "மரக்கல மினிசுகள்' (மரக்கலத்தில் வந்தோர்) என்றும் கேவலப்படுத்தி வந்தனர். மறுபுறம், 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் சார்பில் சட்டசபை பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டு, அரசியல் அதிகாரங்களை அனுபவித்த தமிழ்த் தலைமை இந்த அதிகாரங்கள் தொடர்ந்தும் தமது பிடிக்குள் வைத்திருக்கும் நோக்குடன் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுத்து அவர்களும் தமிழர்களே என வகைப்படுத்த முயன்றனர். சிங்கள, தமிழ் தலைமைகளின் இத்தகைய முயற்சி களுக்கு எதிராக அன்றைய முஸ்லிம் தலைவர்கள் உறுதியாக செயற் பட்டனர்.
இவர்கள் தமது சந்ததியை மதிப்பிடுவதில் ஆண்வழித் தொடர்பிற்கு முதன்மையளித்து தாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இலங்கையில்
2 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

குடியேறிய செல்வமும், வீரமும் மிக்க அரேபியர்களின் ஆண்வழித் தோற்றல்கள் எனவும், தாம் இந்நாட்டிற்கு ஆக்கிரமிப்பாளர்களாக வரவில்லை எனவும், மாறாக இந் நாட்டின் வளர்ச்சிக்கு பொருளா தாரம், மருத்துவம், கலாசாரம். என பல்வேறு துறைகளிலும் பங்களிப்புச் செய்தவர்களெனவும், இந்நாட்டின் சிறப்புகளை பிற நாடுகளுக்கும் பரப்பியவர்கள் எனவும், பலவாறாக தமது முக்கியத் துவத்தை வெளிப்படுத்தினர். தென்னிந்திய மற்றும் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கட்கு எதிராக தாம் தனித்தும், சிங்கள மன்னர் களுடன் தோள் கொடுத்தும் போராடியவர்கள் என்ற தமது வீரவர லாற்றை எடுத்துக் கூறினார்கள்.
இவ்வாறு, தமது பூர்வீகத்தை ஆதாரபிடியாகக் கொண்டு, உரிமை களை மறுக்க முனைந்த சிங்கள, தமிழ் தலைமைகளுக்கு எதிராகத் தமது தனித்துவமான பூர்வீகத்தையும், மாண்பையும் அன்றைய முஸ்லிம் தலைமை உயர்த்திப்பிடித்தது. இதன் மூலமாக இந்நாட்டில் சிங்கள தமிழ் சமூகங்களைப் போலவே தமக்கும் சகல உரிமைகளும் உண்டு என முஸ்லிம் தலைமை விடாப்பிடியாக வாதிட்டது. இத் தகைய விவாதங்களினூடாக தமது தனித்துவத்தை உறுதியாக நிலை நாட்டிய இலங்கை முஸ்லிம்கள் பின்னர் தம்மை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் தனியான சமூகமென அடையாளப்படுத்துவதில் வெற்றி கண்டனர்.
வரலாற்று ஆதாரங்களின்படி, கி.பி. 8 ம் நூற்றாண்டு அளவில் இலங்கையில் முஸ்லிம்களின் குடியேற்றம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இதற்கு மிக நீண்ட காலங்களுக்கு முன்னரே, அதாவது அரேபியாவில் இஸ்லாம் மதம் தோன்றுவதற்கு முன்பே அரேபியர் இலங்கையுடன் நெருக்கமான வர்த்தகத் தொடர்புகளை கொண்டிருந்த போதிலும், அவர்களில் எவரும் இலங்கையில் குடியேறி வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் இல்லை. கி.பி. 8 ம் நூற்றாண்டில் இருந்து படிப் படியே இலங்கையில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளனர். தொடக்கத்தில் முழு இலங்கையையும் தழுவியதாக கிட்டத்தட்ட எட்டு (8) பிரதான இடங்களில் முஸ்லிம்கள் குடியேறியதாக அறியப்பட்டுள்ளது. அரே பியாவில் அதிகாரப் போட்டியின் காரணமாக வெவ்வேறு குலப் பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல்களின் விளைவாக ஹாசீம் பிரிவைச் சேர்ந்த சில நூறு அராபிய முஸ்லிம்கள் இலங்கையில்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 3

Page 8
குடியேறியதாக சில வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதே வேளை தென்னிந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கையில் குடியேறியமை வரலாற்று ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கை யிலுள்ள மிகப் பெரும்பாலான முஸ்லிம்கள் (முற்றிலும் சிங்கள மக்கள் மத்தியில் சிறியளவில் வாழும் முஸ்லிம்களும் கூட ) தமிழ் மொழியை தாய்மொழியாகக் கொண்டு இருப்பதையும் இலங்கை மூஸ்லிம்களின் பல கலாசார அம்சங்கள் தென்னிந்திய முஸ்லிம் களினதும், இலங்கை தமிழர்களினதும் கலாசார கூறுகளுடன் ஒத்த தன்மையை கொண்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளும் போது இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தில் தென்னிந்திய வருகை முக்கிய பாத்திரம் வகித்திருப்பதை அறிய முடிகிறது. இந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகத்தை அராபியப் பாரம்பரியத்துடன் முக்கியமாக தென்னிந்திய முஸ்லிம்களின் இடம் பெயர்வையும் இணைத்தே விளங்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறா யினும் முஸ்லிம்களின் பூர்வீகம் குறித்து எதிர்காலத்தில் எழக்கூடிய எந்த சர்ச்சைகளும் முஸ்லிம்களின் தனித்துவத்தை நிராகரிப்பதாக ஆகிவிடாது. ஏனெனில் அவர்களின் தனித்துவம் என்பது அடையப் பட்டுவிட்ட தொன்றாகும். அரசியல் ரீதியில் நிலைநாட்டப்பட்டு விட்டதொன்றாகும்.
4. முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

குடிசனப் பரம்பலும் சமூகத் தன்மையும்
1 98 1 ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின்படி இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகைச் செறிவு என்பன மாவட்ட அடிப்படை யில் எவ்வாறு அமைந்திருந்தது என்பதை முதலாவது அட்டவணை காட்டுகின்றது.
அட்டவணை 1
மாவட்டம் முஸ்லிம்களின் இலங்கையின் மொத்த
எண்ணிக்கை சனத்தொகையில்
முஸ்லிம்களின் வீதம்
1. அம்பாறை 161481 41.53 督 2. மட்டக்களப்பு 79317 23.97 督 3. திருகோணமலை 74403 28.97 鲁 4. யாழ்ப்பாணம் 13757 1.66 5. வன்னி -மன்னார் 28464 26.62
-வவுனியா 6640 6.92 骨
-முல்லைத்தீவு 3777 4.87 6. கொழும்பு 140461 8.27 7. கம்பஹா 386O7 2.78 8. களுத்துறை 61706 7.46 9. கண்டி 112O52 9.95 10. மாத்தளை 25836 7.23 11. நுவரெலியா 14688 2.81. 12. புத்தளம் 47959 9.72 13. குருநாகல் 61342 5.05 14. காலி 25896 3.18 15. மாத்தறை 16457 2.55 16. அம்பாந்தோட்டை 47.32 1,12 17. அனுராதபுரம் 41833 7.12 18. பொலனறுவை 17095 6.50 19. இரத்தினபுரி 13531 1.70 20. கேகாலை 34.852 5.10 21. பதுளை 26808 4.17 22. மொனராகலை 5322 1.90
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 5

Page 9
இலங்கையின் நிர்வாக அலகுகளாக தற்போது மாகாணங்கள் அமைவ தால் மாகாண மட்டத்தில் இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை எண்ணிக்கையும் செறிவையும் கூடவே பொருளாதார அடிப்படை களையும் தெரிந்து கொள்வது இங்கு பொருத்தமாகும். * (1981 ம் ஆண்டுத் கணக்கெடுப்பின்படி, இலங்கையிலுள்ள மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 1056972 ஆகவும் மொத்த சனத் தொகையில் இது 7.12 வீதமாகவும் அமைகிறது.)
அட்டவணை I
மாகாணம் மொத்த முஸ்லிம் மொத்தசனத் பொருளாதார
சனத்தொகை களின் தொகையில் அடித்தளம்
எண்ணிக்கை முஸ்லிம்-வீதம்
1. கிழக்கு 976475 | 316164 33.00 - விவசாயம், மீன்பிடி, H கால்நடை வளர்ப்பு, 2. வடக்கு 11094.04 50831 4O6 வியாபாரம், நெசவு,
குடிசைக் கைத் தொழில் காட்டுத் தொழில்
3. மேற்கு 39198O7 238728 6.O மொத்த வியாபாரம் 4. தென் 1882661 46699 2.50 நகர்புற கூலித் தொழில் 5. மத்திய 2OO9348 1469,37 7.30 சிறு தோட்டப்பயிர், 6. GuLGuddo 1704334 109791 6.40 | இரத்தினக்கல் அகழ்வு 7. வடமத்திய 831408 53.729 6.50 சிறு கைத்தொழில் 8. ஊவா 914522 31912 3.50 9. சப்ரகமுவ | 1482031 4318O 3.30 一
அட்டவணை இலிருந்து இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகையை மாவட்ட அடிப்படையில் அறிந்து கொள்ளலாம். கிழக்கு மாகாணத் திலுள்ள மூன்று மாவட்டங்களிலும் வன்னியிலுள்ள மன்னார் மாவட் டத்திலும் முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளக்கூடிய அளவு கணிசமான செறிவுடன் வாழ்கின்றனர். வட -கிழக்கிற்கு வெளியே கொழும்பு (8.27), களுத்துறை (7.46), கண்டி (9.95), மாத்தளை (7.23), புத்தளம் (9.72), அனுராதபுரம் (7.12) வீதம் ஆகிய மாவட்டங்களில்
6 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

தமது தேசிய அளவின் *துழுது:12வீதம்ண்ைதிச்சரவை விட கூடிய செறிவில் காணப்படுகின்றனர். மாகாண அளவில் பரம்பலைக் காட்டும் அட்டவணை I இலிருந்து இலங்கை முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டுமே குறிப்பிடத் தக்க செறிவில் வாழ்கின்றனர் என்பதை அறிய முடியும்.
இலங்கை முஸ்லிம்கள் மாவட்ட, மாகாண ரீதியில் மேற்படி செறிவினை கொண்டிருந்தபோதிலும் கூட அவர்களது எதார்த்தமான குடிப் பரம்பல் ஆனது குறிப்பான தன்மைகளைக் கொண்டதாக அமைகிறது. குறிப்பாக வட-கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் குடிப்பரம்பலில் இத்தகைய தன்மையை தெளிவாகக் காணலாம்.
வட-கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்கள் (இவர்கள் இக் கட்டுரையில் பொதுவாக 'தெற்கு முஸ்லிம்கள்' என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர்) ஆங்காங்கே சிறு சிறு எண்ணிக்கையில் சிதறிய நிலையில் வாழ்கின்றார்கள். இதனால் இவர்களிடையே இறுக்கமான சமூகத் தொடர்புகள் ஏற்பட முடிவதில்லை. இவர்களது நலன்களை உண்மையாகவே பிரதிபலிக்கின்ற சமூக இயக்கங்களும் அமைப்புகளும் உருவாக முடிவதில்லை. தெற்கில் குறைந்த எண்ணிக்கையில் வாழுகின்ற மாகாணங்களில் மட்டுமன்றி இரண்டு இலட்சத்திற்கும் கூடுதலாக வாழ்கின்ற மேல் மாகாணத்திலும், ஒன்றரை இலட்சம் அளவில் வாழ்கின்ற மத்திய மாகாணத்திலும் கூட இவர்களின் மிக ஐதான குடிசனப் பரம்பல் காரணமாக பல இடங்களில் முஸ்லிம்களுக்கென தனியான கிராம சேவையாளர் பிரிவுகள் கூட அமைக்கப்பட முடியவில்லை. இதனால் ஒரு சமூகத்திற்கு அவசிய மான அடிப்படைநிர்வாகத் தேவைகளில் கூட இவர்கள் ஒதுக்கப்பட்டு வருவது நிகழ்ந்து வருகின்றது. வாசிகசாலைகள், பாடசாலைகள், கலாசார செயற்பாட்டு வசதிகள், வீதி அபிவிருத்திகள், சுகாதார வசதிகள் போன்ற உள்ளகக் கட்டமைப்புகள் சார்ந்த அபிவிருத்தி 3sGifdio ge(U55g (Infrastructural Development) gaLib (upGiugSLb Loġissgit ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள். இவற்றின் விளைவாக, பொதுவில் தெற்கு முஸ்லிம்கள் மாகாண, மாவட்ட மட்டத்தில் மாத்திரமன்றி தொகுதி அல்லது உதவி அரசாங்க அதிபர் பிரிவு மட்டத்தில் கூட நெருக்கமாக பிணைக்கப்படாத சமூகமாகவே வாழ்கின்றனர்.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 7

Page 10
தெற்கு முஸ்லிம்களின் பொருளாதாரம் பெரும்பாலும் வர்த்தகம் சார்ந்தவையாக இருப்பதால் அது போட்டியை அடிப்படையாகக் கொண்டது. இப் பொருளாதாரம் பெரிதும் நிலம் சாராததாகவும், நேரடி உற்பத்தியுடன் தொடர்புபடாததாயும் இருக்கிறது. பெரிதும் வாங்கி - விற்றல் என்ற இடையீட்டுச் செயற்பாட்டுக்குரியதாகவும், ஒருவரின் வீழ்ச்சியே மற்றவருக்கான உயர்ச்சி என்ற நிலைமையும் இங்கு காணப்படுகிறது. மேலும் இப்பொருளாதார நடவடிக்கைகளில் பரபரப்பும் அவசரமும் தொடர்ச்சியான பங்குபற்றலும் அவசியப் படுகின்றன. இவற்றின் காரணமாக சக நபர்களுடன் சமூக உணர்வுடன் கூடிய நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதும் சாத்தியமற்றதாகி றது. மறுபுறம், இப்பொருளாதார தளங்கள் முற்றிலும் சந்தையை இலக்காகக் கொண்டிருப்பதால், தெற்கு முஸ்லிம்கள் தமது அவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏனைய சமூகங்களில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. இவ்வாறு தெற்கு முஸ்லிம்களின் பொருளாதார மானது அவர்களிடையே ஒத்த நலன்கள் சார்ந்த நெருக்கமான உறவுகள் ஏற்பட முடியாமலும், சுயசார்பு மிக்க சமூகமாக நிலைக்க முடியாமலும் அவர்களைத் தடுக்கின்றது.
தெற்கு முஸ்லிம்கள் இவ்வாறு சமூக, பொருளாதார ரீதியில் பொது வான நலன்களும், சுயசார்பும் கொண்ட சமூகமாக தம்மை உருவாக்க முடியாமலிருப்பதால், அவர்களது அரசியற் செயற்பாடுகள் முற்றிலும் பலவீனமாக இருந்து வந்துள்ளன. ஒரு சமூகத்தின் அரசியல் பல மானது அச்சமூகத்தின் ஆள் எண்ணிக்கையினாலோ சில தனிநபர்கள் கொண்டிருக்கின்ற பொருளாதார பலத்தினாலோ தீர்மானிக்கப் படுவதில்லை. பதிலாக, அந்த சமூகம் எத்துணை செறிவாக வாழ்கின் றது என்பதிலும், எவ்வளவு இறுக்கமாக தம்மிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதிலும், பொதுவான நலன்கள் சார்ந்து எவ்வாறு தமக்கிடையே ஐக்கியத்தையும் அமைப்பு வடிவங்களையும் ஏற்படுத்துகிறார்கள் என்பதிலுமே பெரிதும் தங்கியு ள்ளது. ஆனால் இத்தகைய அம்சங்களில் பலவீனப்பட்டிருக்கின்ற தெற்கு முஸ்லிம்கள் தமக்கென தனியான அரசியல் இயக்கங்களை முன்னெடுக்க முடியாதவர்களாகவுள்ளனர். அத்துடன் தமது செறி வற்ற, சிதறிய பரம்பலின் காரணமாக தாம் வாழ்கின்ற பிரதேசங்களின் பொதுவான அரசியல் செயற்பாடுகளில் கூட வலுவான தாக்கம் ஏற்படுத்த முடியாதவர்களாயும், இதனால் அரசியல் முக்கியத்துவ
8 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

மற்றவர்களாயுமே இருக்கின்றனர். தெற்கு முஸ்லிம்கள் தலைமையின் வழிகாட்டலில் பிரதான சிங்கள கட்சிகளுக்கு ஆதரவளிப்பதாக மட்டுமே இவர்களது அரசியல் செயற்பாடுகள் எல்லைப்பட்டி ருக்கின்றன.
1981 சனத்தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கை முழுவதிலும் முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை 1055972 ஆகும். இதில் தெற்கு முஸ்லிம்களின் சனத்தொகை வீதம் 60 ஆகும். வட-கிழக்கு முஸ்லிம் களின் சனத்தொகை வீதம் 40 ஆகும். இருந்த போதிலும், தெற்கு முஸ்லிம்கள் தெற்கு மொத்த மக்கள் தொகையில் 5.4 வீதம் மட்டுமே. அதே சமயம் வடகிழக்கு முஸ்லிம்கள் வடகிழக்கு மொத்த மக்கள் தொகையில் 17.59 வீதமாகும். கிழக்கை மட்டும் எடுத்துக் கொண்டால் முஸ்லிம்கள், கிழக்கு சனத்தொகையில் 32 வீதமாகும். இவ்வாறு எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்ற தெற்கு முஸ்லிம்கள் சிதறு ண்டவர்களாயும், தமது சமூக, பொருளாதார, அரசியல் தன்மைகளின் அடிப்படையில் ஒரு "தேசிய சிறுபான்மை' என்ற எல்லைக்குள் தமது நலன்களையும் உரிமைகளையும் பேணிப்பாதுகாக்கும் அவசியத் திலும் உள்ளனர். (வட) கிழக்கு முஸ்லிம்களின் எதார்த்த நிலையை எடுத்துக்கொண் டால், அது தெற்கு முஸ்லிம்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றது. கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும், வடக்கின் மன்னார் மாவட்டத்திலும் கணிசமான செறிவுடன் வாழ்கின்ற இவர் கள் அங்கு தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் அரசியல், நிர்வாக அமைப்புகளை தாமே சுயமாக உருவாக்கக்கூடியவர்களாக இருக்கின் றார்கள். தமக்கென கிராம, உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் என்பவற்றையும் அவற்றில் தமது அதிகாரத்தையும் கொண்டிருக் கின்றனர். இதன் காரணமாக இத்தகைய நிர்வாக மற்றும் அதிகார அலகுகளில் பரிச்சயம் உள்ளவர்களாயும், இவற்றின் அவசியம் குறித்து உணர்வுபூர்வமான புரிதல் கொண்டவர்களாகவும் உள்ளனர். தமக்குரிய உள்ளக கட்டமைப்புகளின் அபிவிருத்தியில் கரிசனை கொண்டவர்களாயும், அவை குறித்து கேள்வியெழுப்பக் கூடியவர் களாயும் உள்ளனர். குறிப்பாக பிரதேச மட்டத்தில் தமக்கென பல்வேறுபட்ட சுயமான சமூக நிறுவனங்களையும், அமைப்புகளை யும் ஏற்படுத்தி, அவற்றின் மூலமாக காத்திரமான சமூகப் பாதிப்பு களை நிகழ்த்தக் கூடியவர்களாக உள்ளனர்.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 9.

Page 11
(வட) கிழக்கு முஸ்லிம்களின் பொருளாதாரம் அவர்களிடையே நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களது சுய சார்பை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. இவர்கள் ஒரு தனியான இருப்பாக (Seperate Entity) திகழ்வதை சாத்தியமாக்கும் வகையில் ஒரு சுயசார்புப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளனர். மேலும் இப் பொருளாதாரத் தளங்கள் பரஸ்பர ஒத்துழைப்பை அவசியப்படுத்துவதோடு இதனூடாக கூட்டு அக்கறையையும் , கூட்டான நலன்களையும் உருவாக்குகின்றன. இவ்வாறு (வட) -கிழக்கு முஸ்லிம்களின் பொருளாதாரம், இயல்பாகவே அவர்களி டையே பொதுவான நலன்களையும் தோற்றுவிக்கின்றது.
(வட) கிழக்கு முஸ்லிம்களின் நெருக்கமான, செறிவான குடிப் பரம்பலும், சமூக நிறுவனங்கள், நிர்வாக இயந்திரங்கள் என்பவை தொடர்பாக அவர்கள் கொண்டிருக்கின்ற அவசியமும், பரிச்சயமும் பொருளாதாரம் ஏற்படுத்திய நெருக்கமான உறவுகளும், பொதுவான நலன்களும் அவர்களின் அரசியல் வாழ்வை பலமிக்கதாக மாற்று கின்றன. தமக்கிடையே தனியான அரசியல் இயக்கங்களை ஏற்படுத்து வதும், தனியான அரசியல் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் முன் வைப்பதும் இவற்றினூடாக பொதுவான நலன்களின் அடிப் படையில் ஒன்று திரள்வதும் இவர்களுக்கு சாத்தியமாகிறது. இறுதியில் தாம் பொதுவான அரசியல் தலைவிதியினால் பிணைக்கப்பட்டிருக் கின்ற சமூகம் என்ற அடையாளத்தைப் பெறுவதும், இவர்களுக்கு சாத்தியமாகிறது. இவ்வாறாக வட-கிழக்கு முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்களில் எண்ணிக்கை வகையில் தெற்கு முஸ்லிம்களிலும் பார்க்க தொகையில் குறைந்தவர்களாக இருந்தபோதிலும், ஒரு தனியான தேசமாக தம்மை உருவாக்குகின்ற வாய்ப்பைப் பெற்றுள்ள னர். தமது அரசியல் வாழ்வை தாமே தீர்மானிக்கின்ற சுய நிர்ணய உரிமையை இவர்கள் கொண்டிருக்கின்றனர்.
இந்த வகையில் தெற்கு முஸ்லிம்களிடையிலும், வட-கிழக்கு முஸ்லிம் களிடையிலும் சமூக, பொருளாதார, அரசியல் நிலமைகளில் காணப் படுகின்ற இத்தகைய வேறுபட்ட தன்மைகள் புறநிலையாகவும், தெளிவாகவும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இவ்விரு முஸ்லிம் தரப்புகளிடையேயும் மதம், மொழி, கலாசாரம் மற்றும் பூர்வீகம் போன்றவற்றில் ஒத்த தன்மைகள் காணப்படுகின்ற போதிலும், அவர்களது சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வானது இருவேறு
1 O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

திசைகளில் அமைந்திருக்கின்ற எதார்த்தம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இத்தகைய வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதும் அவற்றின் அடிப்படையில் தத்தமக்குரிய இருப்பை தீர்மானிப்பதும் இலங்கை முஸ்லிம்களுக்கு எவ்விதத்திலும் பாதகமாக அமையப் போவ தில்லை. மாறாக, இவற்றின் மூலமே அவர்கள் தமது நலன்களையும், உரிமைகளையும், பூரணமாக பெற்றுக்கொள்வது சாத்தியமாகும். இதுவரை காலமும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளினால் இலங்கையிலுள்ள இரு முஸ்லிம் பிரிவுகளதும் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்வில் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகள் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
குறிப்பிட்ட பல அம்சங்களிலும் ஒத்த சமூகங்களிடையே இத்தகைய பிரிவினை ஏற்படுவது வரலாற்றில் பல சந்தர்ப்பங்களில் இடம் பெற்றுள்ளன. உதாரணமாக இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்த போது அரைப்பங்குக்கும் அதிகமான முஸ்லிம்கள் இந்தியாவிலேயே இருந்துள்ளனர். பின்னர், பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் முஸ்லிம்கள் தம்மை பிரித்துக்கொண்டார்கள். இன்று முஸ்லிம் சனத்தொகை அதிகமுள்ள நாடுகளில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியாவிலிருந்து (மொத்த இந்திய முஸ்லிம் சனத்தொகையில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கினராக மட்டுமேயுள்ள) காஷ்மீர் முஸ்லிம்கள் தமது பிரிவினைக்காக போராடுகின்றார்கள். இத்தகைய அரசியல் வகை பிரிவினைகள் முஸ்லிம்களுக்கிடையிலான பிரி வினைகள் அல்ல என்பதும், அவை ஒடுக்கும் ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து தம்மை விடுவிப்பதை இலக்காகக் கொண்டவை என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இலங்கையிலும் கூட, சிங்கள - தமிழ் இனவாத ஒடுக்கு முறைகளுக் குள்ளாக்கப்படுகின்ற முஸ்லிம்கள் தமக்கிடையில் எதார்த்தமாக நிலவும் தெற்கு, வட-கிழக்கு என்ற வேறுபாடுகளை அங்கீகரித்து, இதனடிப்படையில் தமக்கென தனியான அரசியல் இயங்கங்களை முன்னெடுப்பதன் மூலமே இத்கைய அடக்குமுறையிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளமுடியும்.
இத்தகைய பின்புலத்தில் இக்கட்டுரை தெற்கு முஸ்லிம்களையும், வடகிழக்கு முஸ்லிம்களையும் தனித்தனியாக ஆய்வு செய்கின்றது.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 1 1

Page 12
தெற்கு முஸ்லிம்கள்
இங்கு 'தெற்கு முஸ்லிம்கள்' என்று குறிப்பிடப்படுபவர்கள் வட - கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த, இலங்கையின் ஏனைய மாகாணங் களில் வாழ்கின்ற முஸ்லிம்களாகும். இலங்கை முஸ்லிம்களில் கிட்டத் தட்ட அறுபது வீதத்தினராக (60) இருக்கின்ற இவர்கள் தென்னிலங்கை எங்கும், அதாவது புத்தளத்திலிருந்து அம்பாந்தோட்டை வரையும், பொலநறுவையிலிருந்து கொழும்பு வரையும் பரந்து சிறு சிறு எண்ணிக் கையில் வாழ்கிறார்கள். இவ்வாறான செறிவற்ற சிதறிய குடிப்பரம்பல் காரணமாக தெற்கு முஸ்லிம்களிடையே வலிமையான பிணைப்புடன் கூடிய சமூக உறவுகள் ஏற்பட முடியாதிருக்கின்றது. மேலும் இவர் களின் பொருளாதாரம் நிலத்திலிருந்து விடுபட்டதாகவும் சந்தையுடன் பிணைக்கப்பட்டதாகவும் இருப்பதால் பொருளாதார ரீதியான பொது நலன்களின் அடிப்படையிலும் இவர்களிடையே நெருங்கிய உறவுகள் ஏற்பட முடியாதிருக்கின்றது. இவற்றின் விளைவாக, தமக்கென சுயமான அரசியல் நிறுவனங்களை உருவாக்கக் கூடிய சாத்தியங்களை தெற்கு முஸ்லிம்கள் இழந்துள்ளார்கள். மேலும், பெளத்த சிங்கள இனவாதம் தம்மீது தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்ற ஒடுக்கு முறைகளுக்கு எதிராக, ஒன்று திரண்ட உணர்வெழுச்சியை வெளிப் படுத்த முடியாதவர்களாகவும், போராட முடியாதவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறு இலங்கை முஸ்லிம்களில், எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருக்கின்ற தெற்கு முஸ்லிம்கள் தமது அரசியல் தலைவிதியை தமக்குரிய வழியில் தீர்மானிக்க முடியாத வர்களாகவும் பெளத்த - சிங்கள இனவாதத்திற்கு கட்டுப்பட வேண்டி யவர்களாகவும் இருக்கின்றனர்.
எனினும் ஒரு நூற்றாண்டிற்கு மேலாக, முழு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் தலைமையாக, தெற்கு முஸ்லிம் தலைமை (குறிப்பாக கொழும்புசார் முஸ்லிம் தலைமை) செயற்பட முடிந்தமை கவனத்திற் குரியது. இதைச் சாதிப்பதில், தெற்கு முஸ்லிம் தலைமையின் பொரு ளாதார பலம், அவர்கள் கல்வியில் பெற்றிருந்த உயர் நிலை, பிரித்
12 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

தானிய ஆட்சியாளர்களால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவ அரச வடிவம் என்பவற்றோடு, கடந்த காலங்களில் கிழக்கு முஸ்லிம்கள் அரசியல் விழிப்புணர்வற்ற நிலை காணப்பட டதும் காரணமாகியிருந்தன.
தெற்கு முஸ்லிம் தலைமையும் அதன் அரசியல் பண்புகளும்
பிரித்தானியர் இலங்கையை ஆதிக்கத்திற்கு உட்படுத்திய பின்னர், அவர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவ அரசு முறைக்குள், தெற்கு முஸ்லிம் தலைமை தன்னை படிப்படியாகவே நிலைப்படுத்திக் கொண்டது. இதன் பின்னர், முழு இலங்கை முஸ்லிம் களினதும் அரசியல் தலைமையாக தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட தெற்கு முஸ்லிம் தலைமையின் அரசியல் பண்புகளைப் புரிந்து கொள்வதற்கு, போர்த்துக்கீசர் இலங்கையை கைப்பற்றிய காலம்வரை பின்செல்வது அவசியமாகின்றது.
16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் போர்த்துக்கீசர் இலங்கையை கைப்பற்றி தமது வர்த்தக ஆதிக்கத்தை நிலைநாட்ட முனைந்த போது, இங்கு ஏற்கனவே வர்த்தகத்தில் பலம் பெற்றவர்களாக முஸ்லிம்கள் இருந்தனர். முஸ்லிம்களுக்கும் கத்தோலிக்கருக்குமிடையே நிகழ்ந்த சிலுவைப் போரின் ஆழமான வடுக்கள் இன்னமும் மறையாதிருந் தாலும், வர்த்தக மேலாண்மைக்காக இவர்கள் தரையிலும், கடலிலும் மோதலில் ஈடுபட்டு வந்தாலும், போர்த்துக்கீசரும் முஸ்லிம்களும் பரம்பரை எதிரிகளாக அப்போது விளங்கினார்கள். 17 கப்பல்களைக் கொண்ட ஒரு கப்பல்படையுடனும், ஒரு இராணுவப்பிரிவுடனும், ஏராளமான பீரங்கிகளுடனும் இலங்கையை ஆக்கிரமித்த போர்த்துக் கீசரை முதன் முதலாக எதிர்த்தவர்கள் தெற்கு முஸ்லிம்கள் தான். அப்போது கோட்டை இராட்சியத்தின் அரசனாக இருந்த 9 ம் தர்ம பராக்கிரபாகு போர்த்துக்கீசருக்கு பணிந்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய முன்வந்த நிலையில், அங்கிருந்த முஸ்லிம்கள்தான் போர்த்துக் கீசரை யுத்தகளத்தில் எதிர்த்தார்கள். எனினும் போர்த்துக்கீசர் தமது படைபலத்தினாலும், நவீன ஆயுதங்களின் துணையுடனும் முஸ்லிம் மக்களை தோற்கடித்து அவர்கள் வாழ்ந்த நகரையும் எரித்தனர். இதன்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 13

Page 13
பின்னர் தெற்கு முஸ்லிம்கள் சீதாவாக்க இராச்சியத்தின் அரசனான மாயாதுன்னவுடன் இணைந்து போர்த்துக்கீசருக்கு எதிராக போரிட் டனர். எனினும் இப்போரிலும் போர்த்துக்கீசரே வெற்றி பெற்றனர். இவ்வாறு இலங்கையின் தென்கரையோரப் பிரதேசம் போர்த்துக் கீசரின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் தெற்கு முஸ்லிம்களின் சமூக, பொருளாதா, கலாசார இருப்பு போர்த்துக்கீசரினால் சீர்குலைக் கப்பட்டது. தெற்கு முஸ்லிம்களின் வர்த்தகத் தளங்களை போர்த்துக் கீசர் தமதுடமையாக்கியதோடு, முஸ்லிம்களின் சமூக, கலாசார நடவடிக்கைகளையும், வர்த்தகத்தையும் சிதைப்பதற்காக பல்வேறு சட்டங்களையும், கூடுதல் வரியையும் விதித்தனர். பின்னர் 1926 ல் போர்த்துக்கீசர் தமது ஆட்சிப் பகுதியிலிருந்து முஸ்லிம்களை வெளி யேறும் படி உத்தரவிட்டனர். கிட்டத்தட்ட 4,000 (நாலாயிரம்) முஸ்லிம்கள் தென்கரையோரப் பகுதிகளில் இருந்து கண்டியை நோக்கி இடம்பெயர்ந்தார்கள்.
(தெற்கு முஸ்லிம்களைப் போன்று, வடக்கு மற்றும் கிழக்கு முஸ்லிம் களும் போர்த்துக்கீசருக்கு எதிராக போரிட்டனர். வடக்கில் காதர் லாலா என்பவரின் தலைமையிலும், கிழக்கில் குஞ்சிலி மரைக்கார் என்பவரின் தலைமையிலும் இவர்கள் போரில் ஈடுபட்டனர். எனினும் தெற்கு முஸ்லிம்களைப் போன்றே இங்கும் அவர்கள் போர்த்துக் கீசரினால் தோற்கடிக்கப்பட்டனர்.)
போர்த்துக்கீசருக்குப் பின்னர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஒல்லாந்தர் கைப்பற்றினர். இவர்கள் பொருளாதாரச் சுரண்டலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டதால், இவர்களின் ஆட்சியின் போதும், தெற்கு முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இவற்றின் விளைவாக கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளாக தெற்கு முஸ்லிம்கள் சமூக பொருளாதார ரீதியில் பின்தள்ளப்பட்டார்கள், கிறிஸ்தவ மதத்தினரான இந்த ஐரோப்பியர்களினால் சமூக, பொருளா தார ரீதியில் ஒடுக்கப்பட்ட தெற்கு முஸ்லிம்களிடையே, இவற்றின் எதிர்வினையாக மதநம்பிக்கையும், மதம் சார்ந்த கலாசார அம்சங் களும் மேலும் ஆழமாக ஊடுருவின.
போர்த்துக்கீசர் வர்த்தக மேலாண்மையை அடையும் நோக்கில் பிறநாடுகளைக் கைப்பற்றினர். கைப்பற்றிய நாடுகளில் தமது சுரண் டலைத் தொடர்வதற்கு வசதியாக தமது 'அந்நிய' தன்மையை களைய
1 A முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

அங்கு தமது கத்தோலிக்க மதத்தை பரப்புவதிலும் தீவிரம் காட்டினர். இலங்கையின் கரையோரப்பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கு தமது பொருளாதார சுரண்டலுக்குரிய நிலை மைகளை ஏற்படுத்திய பின்னர், தமது மதத்தை பரப்பும் நடவடிக் கைகளில் போர்த்துக்கீசர் தீவிரமாக ஈடுபட்டனர். சலுகைகள் வழங்கு தல், நிர்ப்பந்தித்தல் என்பவற்றோடு கல்வியையும் மதமாற்றத்திற்குரிய ஒரு முக்கிய கருவியாக போர்த்துக்கீசர் மேற்கொண்டனர். பாடசாலை களில் எழுதுதல், வாசித்தல் என்பவற்றோடு, கத்தோலிக்கமும் கற்பிக்கப்பட்டது. கத்தோலிக்கராக மதம் மாறியவர்களே ஆசிரியர் களாக நியமிக்கப்பட்டார்கள். பாடசாலைகளில் கத்தோலிக்கம் சார்ந்த மத நடவடிக்கைகளும் கலாசார அம்சங்களும் மட்டுமே பின்பற்றப் பட்டன. சில பாடசாலைகளிலும், பயற்சி நிறுவனங்களிலும் கத்தோ லிக்கர் மட்டுமே கற்பதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு போர்த்துக்கீசர் கல்வியை அடிப்படையில் மத மாற்றத்திற்கான ஒரு கருவியாகவே இங்கு அறிமுகப்படுத்தினர். போர்த்துக்கீசருக்குப் பின்னர் வந்த ஒல்லாந் தரும் கூட கல்வியை இதே நோக்கத்திற்கே பயன்படுத்தினர். இத்தகைய கல்வியை கற்பதில், தெற்கு முஸ்லிம்கள் நாட்டம் செலுத்தா மல் இருந்ததை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்று ரீதியாக முஸ்லிம்கள் கிறிஸ்தவத்தின் எதிரிகளாக விளங்கியதாலும், தெற்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் போர்த்துக்கீசரினால் சமூக, பொருளாதார, கலாசார ரீதியில் கடுமையாக அடக்கப்பட்டிருந்த தாலும், இயல்பாகவே முஸ்லிம்கள் தமது மதத்துடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்தவத்திற்கு மதம் மாற அவர்களில் யாரும் தயாராக இருக்கவில்லை. இதனால் கத்தோலிக்க, கிறிஸ்தவ மிஷனறிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்பட்ட கல்வியைக் கற்பதிலிருந்து, இரண்டரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தெற்கு முஸ்லிம்கள் ஒதுங்கியிருந்தார்கள். இதன் விளைவாக போர்த்துக் கீசருக்கும், ஒல்லாந்தருக்கும், பின்னர் இலங்கையை கைப்பற்றிய பிரித்தானியர் இங்கு அறிமுகப்படுத்திய முதலாளித்துவ முறையிலான நிர்வாக மற்றும் அரசு நிறுவனங்களில், தெற்கு முஸ்லிம்களினால் கணிசமான காலத்திற்கு பங்குகொள்ள முடியவில்லை.
முதன் முதலாக முழு இலங்கையையும் கைப்பற்றிய அந்நியரான பிரித்தானியர், இலங்கையின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 15

Page 14
அரசியல் அமைப்புகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தினார்கள். தமக்கு முந்திய ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை போன்று, இவர்கள் வர்த்தகத் துறையில் மட்டும் ஆதிக்கத்தைச் செலுத்தவில்லை. மாறாக இந்நாட்டின் முழு பொருளாதாரத்திலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத் தினர். இலங்கையின் பொருளாதாரத்தை முதலாளித்துவ முறைக்கு மாற்றியமைத்தனர். தமது பொருளாதாரச் சுரண் டலை எவ்வித தடையுமின்றி, முழு அளவில் மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் முதலாளித்துவ முறையிலான நிர்வாக மற்றும் அரசு அமைப்புக்களை இங்கு புகுத்தினர். சுதேச மக்களின் எதிர்ப்புகளை படிப்படியே அகற்றுவதற்கும், அவர்கள் உணராமலேயே அவர்களைத் தமது அதிகாரத்தின் கீழ் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் இத்தகைய நிர்வாக அரசு அமைப்புகளில் கல்வி கற்ற சுதேசிகளையும் பங்கு கொள்ளச் செய்வது அவசியமாக இருந்தது. சிங்கள தமிழ் மக்களிடையே காணப்பட்ட படித்த உயர்பிரிவுகளைச் சேர்ந்த நபர்கள் பிரித்தானியர் அறிமுகப்படுத்திய நிர்வாக அரசு நிறுவனங்களுக்குள் இணைந்து கொண்டனர். ஆரம்ப காலங்களில், சிவில் சேவையிலும், நிபுணத் துவத்துறையிலும், அரசு நிறுவனங்களிலும் இணைந்து கொள்வதற்கு தேவையான கல்வி அறிவை இலங்கை முஸ்லிம்களில் எவருமே பெற்றிராததால், அவர்களில் யாரும் இவற்றில் இணைக்கப்பட வில்லை. குறிப்பாக 1830 களில் முதன் முதலாக இங்கு அறிமுகப் படுத்தப்பட்ட சட்ட சபைக்கு (Legislative Council) இலங்கை முஸ்லிம்களின் சார்பில் யாருமே நியமிக்கப்படவில்லை.
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் போலன்றி பிரித்தானியர் இலங்கை முஸ்லிம்களுடன் சுமூகமான உறவுகளை ஏற்படுத்தினர். வர்த்தகத்தில் முஸ்லிம்களுக்கிருந்த ஆற்றலையும், அதன் காரணமாக இலங்கையை தமக்குரிய சந்தையாக மாற்றுவதில் முஸ்லிம்கள் வகிக்கக் கூடிய பாத்திரத்தையும் உணர்ந்து கொண்ட பிரித்தானியர் இலங்கை முஸ்லிம் களுடன் சுமூகமான உறவுகளை வளர்க்கத் தொடங்கினர். பிரித்தானி யர் மத ரீதியில் அதிக தாராளவாதப் போக்குகள் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் கல்வித்துறையில், கிறிஸ்தவ மிஷனரிகள் ஆதிக்கம் செலுத்துவதை படிப்படியே தளர்த்தி வந்தனர். சுதேச மக்கள் தமது மத, கலாசார அம்சங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கல்வி கற்பதற்கும், கல்விக் கூடங்களை அமைப்பதற்கும் பிரித்தானியர் அனுமதி வழங்கினர்.
16 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

இலங்கை முஸ்லிம்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையே ஏற்பட்ட நல்லுறவின் விளைவாகவும், கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங் களினாலும், ஆங்கிலக் கல்வியைக் கற்பதில் நாட்டம் கொண்ட ஒரு பிரிவினர் தெற்கு முஸ்லிம்களிடையில் உருவாகத் தொடங்கினார்கள். எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்ட ஒராபிபாஷாவும், தெற்கைச் சேர்ந்த சித்திலெப்பை, வப்புச்சி மரைக்கார் 1.L.M. அஸிஸ் போன்றோ ரும் ஆங்கிலக் கல்வி கற்கும்படி முஸ்லிம்கள் மத்தியில் தீவிர பிரச் சாரத்தை மேற்கொண்டனர். இவற்றின் விளைவாக, 'ஸாஹிராக் கல்லூரி' என்ற பெயரில், முஸ்லிம்களுக்கென தனியான பாடசாலை ஒன்று கொழும்பில் அமைக்கப்பட்டது. இவ்வாறு தெற்கு முஸ்லிம்கள் படிப்படியே ஆங்கிலக் கல்வி கற்பதில் ஆர்வம் கொள்ளத் தொடங்கி னார்கள். 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தெற்கு முஸ்லிம்களி டையே கல்வி கற்ற முஸ்லிம்கள் ஒரு சிறு எண்ணிக்கையில் உருவாகி யிருந்தார்கள். இவர்கள் தான் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத் தையும், அதுவரைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு வழங்கப் படாதிருந்த சட்டசபை பிரதிநிதித்துவத்தையும் விடாப்பிடியாக
கோரினார்கள்.
1889 ம் ஆண்டுவரை சட்ட சபை பிரதிநிதித்துவமானது இலங்கைத் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் என தனித்தனியாக வழங்கப்பட வில்லை. மாறாக அவ்விரு சமூகங்களுக்குமென ஒன்றிணைந்த பிரதிநிதித்துவமே வழங்கப்பட்டு வந்தது. இந்த ஒன்றிணைந்த பிரதிநிதித்துவத்திற்கு 1889 வரை தமிழ்த் தலைவர்களே நியமிக்கப் பட்டு வந்தார்கள். எனினும் 1880 களில், தெற்கு முஸ்லிம்களிடையே புதிதாக உருவாகிய படித்த பிரிவினர் 'இலங்கை முஸ்லிம்கள்' (அதாவது "இலங்கை சோனகர்") தனித்துவமான சமூகம் என்றும், எனவே தமக்கென தனியான சட்டசபை பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பினார்கள். இதற்கு எதிராக, 'இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களே' என்றும் எனவே அவர்க ளுக்குத் தனியான சட்டசபை பிரதிநிதித்துவம் வழங்கப்படத் தேவை யில்லை என்றும் பொன்.இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்கள் வாதிட்டார்கள். எனினும் இவர்களின் வாதங்களை தொடர்ச்சி யாகவும், உறுதியாகவும் எதிர்த்ததினூடாக, தெற்கு முஸ்லிம் தலைமை இலங்கை முஸ்லிம்களுக்கு என தனியான சட்டசபைப் பிரதிநிதித் துவத்தை 1889ல் பெற்றுக் கொண்டது. இவ்வாறு முதன் முதலாக
idth 0šajih aliапарih 17

Page 15
இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் அரசியல் ரீதியான பிளவு தோன்றியது.
இலங்கை முஸ்லிம்கள், 'இலங்கைச் சோனகர்' என்னும் தனித்துவ மானசமூகம் என்று நிரூபிப்பதற்கான போராட்டத்தில், முஸ்லிம்களின் உருவ அமைப்பையும், ஒரு முக்கிய வாதப் பொருளாக தெற்கு முஸ்லிம் தலைமை முன் வைத்தது. இலங்கைத் தமிழர்களின் பொது வான திராவிட தோற்ற அமைப்பிலிருந்து, தெற்கில் வாழ்ந்த சில முஸ்லிம்களின் உருவ அமைப்பானது வேறுபட்டு அராபியச் சாய லைக் கொண்டு இருப்பதாக ஆதாரமாகக் காட்டி "இலங்கைச் சோன கர்' அராபிய ஆண்வழித் தோன்றல்கள் (Racial Origin) என்று இவர்கள் வாதிட்டனர், தெற்கில் ஆங்காங்கே காணக்கூடியதாக இருந்த இத்தகைய உருவ அமைப்புச் சான்றானது வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை பொருந்தக் கூடியதாக இருக்க வில்லை. வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உருவமைப்பு பெரிதும் திராவிடத் தன்மையை கொண்டிருந்தது. மொழி, பிரதேசம், கணிச மான கலாசாரக் கூறுகள் என்பவற்றோடு உருவ அமைப்பிலும் கூட வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் மக்களை நெருங்கிக் காணப் பட்டார்கள். இந்நிலையில், அராபிய பாரம்பரியத்தை அடிப்படை யாகக் கொண்ட 'இலங்கைச் சோனகர்' என்ற தனித்துவமான வரையறைக்குள், திராவிட உருவமைப்பை வெளிப்படுத்திய வடக்கு, கிழக்கு முஸ்லிம்களையும் உள்ளடக்கினால் தெற்கு முஸ்லிம் தலைமை யின் வாதங்கள் வலுவிழந்து விடக் கூடிய சாத்தியம் இருந்தது. இந்நிலையைத் தவிர்ப்பதற்காக, 'வடக்கு கிழக்கு முஸ்லிம்களை தமிழ் இனமாகக் கருதலாம்' என தெற்கு முஸ்லிம் தலைமை அப் போது கூறியது. இதன் மூலம், ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்பத்தில், தெற்கு முஸ்லிம் தலைமை, வடக்கு கிழக்கு முஸ்லிம் களை முற்றாக ஒதுக்கிவிட்டது. இதற்கு பின்வந்த காலங்களில், வட-கிழக்கு முஸ்லிம்களின் விடயத்தில், தெற்கு முஸ்லிம் தலைமை கள் தொடர்ச்சியாக மேற்கொண்டதுரோகத் தனங்களின் ஒரு தொடக்க மாக இந்த நிகழ்வு அமைந்தது.
எனினும், இலங்கை முஸ்லிம்கள் ஒரு தனியான சமூகம் என்பதை நிலைநாட்டியதிலும், இந்த தனித்துவத்தை அன்று அரசியல் ரீதியாக உறுதிப்படுத்தியதிலும் ஆரம்ப கால தெற்கு முஸ்லிம் தலைமை ஆற்றிய பங்கு வரலாற்று முக்கியத்துவமுடையது. அரசியல் ரீதியில்,
18 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

தமிழ் மக்களுக்குள் தனியான அரசியல் அந்தஸ்து கிடைப்பதிலும், அதனூடாக இலங்கை முஸ்லிம்களுக்கு என ஒரு புதிய அரசியல் பாதை திறக்கப்படுவதற்கும் காரணாக அமைந்தவர்கள் என்ற ரீதியில் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கிறார்கள்.
தெற்கில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதல்கள்
தெற்கு முஸ்லிம் தலைமை, இலங்கை முஸ்லிம்களுக்குரிய தனியான சட்டசபை பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்ட காலப்பகுதியில், தெற்கு முஸ்லிம்கள் வர்த்தகத்துறையில் மீண்டும் முன்னேற்றமடையத் தொடங்கினார்கள். அவர்களின் வர்த்தக நடவடிக்கைகள் தெற்கி லுள்ள நகரங்களிலும், கிராமங்களிலும் பரவியிருந்தன. உள்நாட்டு வர்த்தகத்தில் மட்டுமன்றி, வெளிநாட்டு வர்த்தகத்திலும் தெற்கு முஸ்லிம்கள் மீண்டும் செல்வாக்கு பெறத் தொடங்கினார்கள். இதே நேரத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த முதலாளித்துவ பொருளாதார முறைமையின் விளைவாக சிங்கள சமூகத்தில் புதிதாக வர்த்தக முதலாளித்துவப் பிரிவினர் உருவாகிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் அன்றைய அமைப்பில் வர்த்தக ரீதியாக மேலாண்மை பெறுவதற்கு, வர்த்தகத்தில் நீண்ட பாரம்பரியத்தையும், செல்வாக்கை யும் கொண்டிருந்த தெற்கு முஸ்லிம் வர்த்தகப் பிரிவினருடன் போட்டி யிட வேண்டியிருந்தது. தெற்கு முஸ்லிம் வர்த்தகர்களுடன் ஒப்பிடு கையில், சிங்கள வர்த்தகர்கள் குறைந்த வர்த்தக அனுபவமும், குறைவான வெளிநாட்டுத் தொடர்புகளுமே கொண்டிருந்ததால், இந்த வர்த்தகப் போட்டியில் சிங்கள வர்த்தகர்களினால் வெற்றிபெற முடியவில்லை. இத்தகைய வர்த்தக போட்டியின் விளைவாக சிங்கள வர்த்தகர்கள் தெற்கு முஸ்லிம்கள் மீது பகைமை கொள்ளத் தொடங் கினார்கள். எனினும் நாட்டை ஆட்சி செய்கின்ற பிரித்தானியரின் வர்த்தகக் கூட்டாளியாக இருந்த முஸ்லிம் வர்த்தகர்களுடன் சமூக ரீதியில் மோதுவது, அன்றைய சிங்கள வர்த்தகர்களுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. எனவே இவர்களில் படித்த பிரிவினர், சித்தாந்த தளத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். இந்தக் காலப்பகுதியில்தான் புறக்கோட்டை சிங்கள வர்த்தகரின் மகனான அநாகரிக தர்மபால, நாவலாசிரியர் பியதாச சிறிசேனா போன்ற 'சிங்கள தேசிய வீரர்கள்' தமது
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 19

Page 16
'அந்நியர்' எதிர்ப்புக் கருத்துக்களை 'மண்ணின் மைந்தர்கள்' மத்தியில் இனவாதச் சூடேற பரப்பிக் கொண்டிருந்தார்கள். இவர் களின் எழுத்துக்களில் தெற்கு முஸ்லிம் வியாபாரிகள்தான் பிரதான 'அந்நியர்களாக' வெளிப்படுத்தப்பட்டனர். 'மண்ணின் மைந்தர் களான" சிங்கள மக்களின் அவலங்கள் அனைத்திற்கும் 'அந்நியர் களான" தெற்கு முஸ்லிம் வியாபாரிகளை பிரதான காரணம் என இவர்கள் எழுதினார்கள். இவர்களின் எழுத்துக்கள் பெளத்த சிங்கள மக்கள் மத்தியில், முஸ்லிம் விரோத உணர்வுகளை தீவிரமாக ஏற்படுத் தத் தொடங்கின.
இத்தகைய கொதிப்பான நேரத்தில்தான், முதலாம் உலக யுத்தம் தொடங்கியது. இதனோடு இணைந்ததாக, அத்தியாவசியப் பொருட் களுக்கான தட்டுப்பாடும், விலையேற்றமும் எங்கும் பரவின. ஒரு புறம் பெரும்பாலான மக்களிடையே வறுமையும், பற்றாக்குறையும் நிலவின. மறுபுறம் வர்த்தகர்கள், யுத்தகால நெருக்கடிகளைப் பயன்படுத்தி பெருமளவில் சம்பாதித்துக் கொண்டிருந்தார்கள். இத்தகைய யுத்தகால சீரழிவினால் இலங்கை மக்கள் (குறிப்பாக சிங்கள மக்கள்) அமைதியிழக்கத் தொடங்கினார்கள். இத்தகைய அமைதியற்ற, கொந்தளிப்பான சூழ்நிலையை, சிங்கள வர்த்தகர்களும் அவர்களின் படித்த பிரிவினரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள். 'தந்திரமிக்க முஸ்லிம் வியாபாரிகள், சிங்கள மக்களை ஏமாற்றிச் சுரண்டுவதனால் தான் அவர்களின் வாழ்க்கை மோசமடைந்திருக்கின்றது' என இவர்கள் மீண்டும் மீண்டும் பிரச்சாரம் செய்தார்கள். இறுதியில் 1915 ல் முஸ்லிம் வர்த்தகப் பிரிவினர் மீது, சிங்களவர்த்தகப் பிரிவினர் கொண்டிருந்த முரண்பாடு களும், பகைமைகளும், சிங்கள இனவாதப் பிரச்சாரங்களுடன் இணைந்து மதப் போர்வையின் கீழ், தெற்கு முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்களாக மாற்றப்பட்டன. கம்பளையில் தொடங் கியதாக்குதல்கள், உடனடியாக தெற்கு எங்கும் பரவின. அந்தளவிற்கு முஸ்லிம்கள் குறித்து சிங்கள மக்களிடையே பகைமையுணர்வுகள் வளர்க்கப்பட்டிருந்தன. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் முஸ்லிம் களின் வியாபாரத் தளங்களையும், வீடுகளையும் இலக்காகக் கொண்டி ருந்தன, இத் தாக்குதல்களின் போது பல முஸ்லிம்கள் கொல்லப் பட்டார்கள்.
1915ல் தெற்கில் பரவலாக இடம் பெற்ற இவ் வன்முறைத் தாக்குதல்
2O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

களிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாள ர்கள், சிங்கள வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை களை மேற் கொண்டனர். இதன் காரணமாக, இவர்களில் சிலர் கொல்லப்பட்டார்கள். பல சிங்களத் தலைவர்கள் சிறையிலிடப் பட்டனர். இவர்களில் அநாகரிக தர்மபாலாவின் சகோதரர் எட்மன்ட் ஹேவா விதாரண, பெர்னாண்டோ விஜயசேகர, N.S.பெர்னாண்டோ போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். சிலர் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவ்வாறு தெற்கு முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் அடக்கப்பட்டபோது, பொன்.இராமநாதன், சிறையிலிடப்பட்ட சிங்களத் தலைவர்களின் சார்பாக, இங்கிலாந்து சென்று மகாராணியிடம் வாதாடினார். கலவரத்திற்கான பொறுப்பை அவர் முஸ்லிம்கள் மீது சுமத்தினார். பொன்.இராமநாதனின் இந்தச் செயல்கள், பின்வரும் கேள்விகளை எழுப்பக் காரணமாகின்றன. அது வரையிலும் முஸ்லிம்களுக்குரிய அரசியல் பிரதிநிதித்துவத்தை அனுபவித்தும், 'முஸ்லிம்களும் தமிழர்களே' என்று வாதிட்டு வந்த பொன்.இராமநாதன் ஏன் முஸ்லிம் களுக்கெதிராகச் செயற்பட்டார்? முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப் பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் பெளத்த-சிங்கள இனவாத உணர்வின் வெளிப்பாடுகள் என்பதை அடையாளம் கண்டு எதிர் காலத்தில் அத்தகைய தாக்குதல்கள் தமிழ் மக்கள் மீதும் மேற்கொள்ளப் படலாம் என்பதைப் புரிந்து கொண்டு, அவற்றிலிருந்து தமிழ் மக்க ளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமல், சிங்களத் தலைவர்களின் சார்பாக அவர் செயற்பட்டதற்குரிய காரணம் என்ன? இக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்வதற்கு, அன்றைய தமிழ்த் தலைமையின் சித்தாந்த மற்றும் அரசியல் பண்பு களை சுருக்கமாக புரிந்து கொள்வது அவசியமாகின்றது.
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆறுமுகநாவலரினால் யாழ்ப் பாணத் தமிழ் மக்களிடையே சித்தாந்த இயக்கம் ஒன்று முன்னெடுக் கப்பட்டது. கிறிஸ்தவ மதத்திற்கும், ஆங்கில மொழிக்கும் எதிரான தாகக் காட்டப்பட்ட இயக்கம், அடிப்படையில் தமிழ் மக்களிடையே நிலவி வந்த சைவ - வேளாளா சிந்தாந்தத்தை பலப்படுத்துவதாக இருந்தது. இந்த சிந்தாந்தத்தை உயர்த்திப் பிடித்தோர் இதன் வரைய றைக்குட்பட்டவர்களையே (Subject) மேலோர்களாகவும், தூய்மை யானவர்களாகவும் கருதினார்கள். இந்த வரையறைக்குட்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 21

Page 17
படாதவர்களை அவர்கள் 'பிறராகவும்' (Others) தாழ்ந்தவர் களாகவும் தூய்மையற்றவர்களாகவும் ஒதுக்கினார்கள். மேலும் இவர்கள், இந்த "பிறர்' தம்மால் அடக்கிவைக்கப்படக் கூடியவர்கள் என்றும் கருதினார்கள். (இந்த சிந்தாந்தமும்), இதனால் உருவாகின்ற மதிப்பீடுகளும் இன்னமும் தமிழ் மக்களிடையே -குறிப்பாக யாழ் தமிழர்களிடையே -வலிமையுடன் நிலவுகின்றன என்பதை மனதில் கொள்வோம்)
அன்றைய தமிழர் அரசியல் தலைமையும் இந்த சித்தாந்தத்தால் கட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது. இவர்கள் யாழ். சைவ, வேளாள, ஆண்களின் நலன்களை மையப்படுத்திச் செயற்பட்டார் களே தவிர, முழுத்தமிழ் மக்களின் தலைமையாகச் செயற்படவில்லை. இத் தமிழ் தலைவர்கள் தாம் அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்திய பிரிவினரின் நலன்களையும், சமூக, பொருளாதார ஆதிக்கத்தையும் பேணுவதற்காக, தம்மை ஒத்த சிங்கள உயர்சாதியான 'கொவி' பிரிவைச் சேர்ந்த சிங்கள அரசியல் தலைமையுடன் நெருக்கமான உறவுகளை பேணி வந்தார்கள். எனவே அன்றைய தமிழ்த் தலைவர்கள் இந்த சிங்கள உயர் பிரிவினரை, சிங்கள சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளாக அடையாளம் காணவில்லை, பதிலாக தம்மையொத்த அதிகாரப் பிரிவினராகவே அவர்களைக் கருதினர். இதன் காரணமாகத்தான், முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல் களை, பெளத்த- சிங்கள இனவாத அடிப்படையிலான தாக்குதல் களாக அடையாளம் காணாததோடு, அத்தாக்குதல்களில் பங்கு கொண்ட பெளத்த சிங்கள தலைவர்களுக்கு ஆதரவாகவும் தமிழ் தலைமை வாதாடியது.
யாழ். சைவ, வேளாள, ஆண் ஆதிக்க சித்தாந்தத்தை சமூக ரீதியிலும், அரசியலிலும் முன்னெடுத்துச் செல்கின்றவர்கள் ஏதாவது ஒரு நிலையில் தாம் "பிறராக' கருதுகின்றவர்களைத் தம்முடன் இணைத்து அடையாளப்படுத்த முயன்றால், அங்கு அந்த 'பிறரை' ஆதிக்கம் செய்யும் நோக்கமே அடிப்படையாக இருக்கும். இவ்வகையில் 'இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களே' என இராமநாதன் போன்ற தலைவர்கள் வாதிட்டதானது, அந்த முஸ்லிம்களின் நலன்களைப் பேண வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. மாறாக முஸ்லிம்களை தமது அதிகாரத்தின் கீழ் வைப்பதன் மூலமாக தமக்கு தாம் பிரதிநிதித்
22 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

துவப்படுத்திய பிரிவினருக்கும் கிடைக்கக்கூடிய நலன்களை அடிப் படையாகக் கொண்டே அவர்கள் அவ்வாறு வாதிட்டார்கள். முஸ்லிம் களின் அரசியல் தலைமையாக செயற்படக்கூடிய சந்தர்ப்பம் இந்தத் தமிழ்த் தலைமையிடமிருந்து பறிக்கப்பட்டவுடன், அவர்கள் முஸ்லிம் களைப் "பிறராகவும்', விரோதிகளாகவும் கருதிச் செயற்பட்டதை, அவர்களின் இத்தகைய சிந்தாந்த வழிபாட்டிலும், நலன்களிலும் தான் கண்டு கொள்ள முடியும். இவ்வகையில் தமிழ்த்தலைமை முஸ்லிம் களைத் தம்மில் ஒருவராகக் கருதாததாலும் சிங்கள கொவி பிரிவின ருடன் இத்தலைமை கொண்டிருந்த கூட்டினாலும் ஏற்பட்ட விளைவு என்றே 1915 ல் இராமநாதன் போன்றோர் செயற்பட்டதைக் கருத வேண்டும். மனிங் அரசியல் சீர்திருத்தத்தின் கீழ் நிலவிய படித்தவர் களுக்கு மட்டுமே வாக்குரிமை என்ற அடிப்படையிலான அரசியல் பிரதிநிதித்துவத்தின் கீழ் தமிழ் தலைமை சற்று வாய்ப்பான நிலையி லேயே இருந்தது. இந்த ஏற்பாட்டின்படி படித்த தமிழர்களின் எண்ணி க்கை வீதமானது அவர்களது மொத்த சனத்தொகை வீதத்திலும் பார்க்க உயர்வாகவே அமைந்தது. அதாவது படித்த தமிழர்களின் வீதம் 40 ஆக இருந்தது. இதனால் படித்த சிங்களவர்களுடன் சேர்ந்து படித்த தமிழர்களின் தலைமையும் தம்மை பெரும்பான்மையினராக கருதிக் கொண்டு ஏனைய சிறுபான்மையினரான மலையக, முஸ்லிம் மக்கள் மீதான ஒடுக்கு முறைகளின் போது சிங்கள அரசியல் தலைமைக்கு
சாதகமாகவே செயற்பட்டது.
காலப்போக்கில் அடுத்தடுத்து வரவிருந்த அரசியலமைப்புச் சீர்திருத் தங்களின் அடிப்படையிலான கோரிக்கைகளாக பிரதேச ரீதியான பிரதிநிதித்துவம், சர்வசன வாக்குரிமை போன்றவை எழுந்து, அதிலும் தமிழருக்கென கொழும்பு மேற்கில் ஒரு தொகுதியை ஒதுக்கிக் கொடு க்க சிங்கள அரசியல் தலைமை மறுத்த போதுதான் தமிழ் தலைமைக்கு முதன் முதலில் தாமும் ஒரு 'சிறுபான்மையினரே' என்ற உணர்வு ஏற்பட்டது. எனினும் பின் வந்த கணிசமான காலம் வரைக்கும் தமிழ் தலைமைகளிடம் இந்த விழிப்பு போதியளவு வளரவில்லை. மலையக மக்களது வாக்குரிமை பறிப்பில் தமிழ் தலைமையின் ஒரு பகுதி சிங்களத் தலைமையுடன் ஒத்துழைத்தமை இந்த அடிப்படையிலேயே நடைபெற்றது. இந்தளவிற்கு சிங்கள கொவி -தமிழ் வேளாள கூட்டு பலமானதாகவே இருந்துள்ளது. இந்த தவறான பிரக்ஞையானது தமிழ் தலைமையின் தூரதிருஸ்டியை முற்றாகவே மறைத்தது.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 23

Page 18
தெற்கு முஸ்லிம் அரசியல் தலைமைக்கும் சிங்கள அரசியல் தலைமைக்கும் இடையிலான இணைப்பு.
முதலாம் உலக யுத்தத்தின் பின்னர், இன்னும் கூடுதலான முதலாளி த்துவ ஜனநாயகத்தை நோக்கி இலங்கை படிப்படியாக முன்னேறியது. இலங்கையில், முதலாளித்துவ அரசு வடிவம் நோக்கிய முன்னேற்றங்க ளுக்கும் இலங்கை மக்கள் தமக்கிடையே இனத்துவ ரீதியில் (Ethnicity) மேலும் மேலும் பிளவுபடுவதற்கும் இடையே நேரடித் தொடர்பு காணப்பட்டது. தம்மிடம் அரசியல் அதிகாரம் அற்ற நிலையில், தமது மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு உத்தரவாதமில்லை என்பதை சிங்கள அரசியல் தலைமை அனுபவரீதியாகவே அறிந்திருந்தது. எனவே சிங்களத் தலைவர்கள், அதுவரையில் நடைமுறையில் இருந்த எல்லை ப்படுத்தப்பட்ட இனவாரிப் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக (Communal Representation), தாம் பெரும்பான்மையாக அமையக்கூடிய வகையில் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவ முறையை (Terriotoriol Representation) நடைமுறைப்படுத்தும் படி கோரிக்கை எழுப்பி னார்கள். இவ்வாறு சிங்களத் தலைமை, தமது எண்ணிக்கை அளவி லான பெரும்பான்மையினூடாக, முழு நாட்டின் மீதும் அதிகாரத்தைப் பேணுவதற்கு மேற்கொண்ட முயற்சிகளினால், தமிழ் தலைமைக்கும், சிங்களத் தலைமைக்கும் இடையிலான உறவுகளில் பிளவுகள் ஏற்படத் தொடங்கின. உயர்சாதிகள் என்ற அடிப்டையில், சிங்களத் தலைமை யுடன் நெருக்கமான அரசியல் உறவுகளை ஏற்படுத்துவது இனியும் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்ட தமிழ்த் தலைமை, அனைத்து தமிழ் மக்களின் தலைமையாக தன்னை உருமாற்றவும், அதனூடாக தனது ஆதிக்கத்தை தொடர்ந்து பேணிக் கொள்ளவும் ஆரம்பித்தது.
இவ்வாறு இலங்கையின் அரசியல் தளத்தில் துல்லியமாக வெளிப் பட்டுக் கொண்டிருந்த இனத்துவரீதியான இயக்கங்களுக்கு நடுவே தெற்கு முஸ்லிம் தலைமை செயலற்று நின்றது. தெற்கு முஸ்லிம்களை இனத்துவரீதியில் ஒன்றுபடுத்தி, பிரதேச அடிப்படையிலான பிரதிநிதி த்துவத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் தெற்கு முஸ்லிம் களின் குடிப்பரம்பல் அமைந்திருக்கவில்லை. இதனால் நடைமுறை யிலிருந்த இனவாரிப் பிரதிநிதித்துவத்தைத் தொடர்ந்தும் பேணுவதே அவர்களுக்கு சாதகமானதாக இருந்தது. எனவே தெற்கின் முஸ்லிம்
24 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

தலைவர்கள் பிரதேசவாரிப் விதித்துவத்திற்கு எதிராக தமது கண்டனத்தை வெளிப்படுத்தினார்கள். எனினும் இவர்களின் கண்டங்களினால் எதுவுவித மாற்றமும் ஏற்பட வில்லை. மாறாக தெற்கு முஸ்லிம் தலைமைக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் டொனமூர் அரசியல் யாப்பு 1931 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அரசியல் யாப்பின்படி, இனரீதியான பிரதிநிதித்துவம் முற்றாக கைவிடப்பட்டு, தொகுதிவாரிப் பிரதிநிதித் துவம் (Electorial Representation) நடைமுறைக்கு வந்தது. இதனுடன் கூடவே, சர்வஜன வாக்குரிமையும் அமுலாக்கப்பட்டது. இவற்றின் விளைவாக, தெற்கு முஸ்லிம் தலைமையின் அரசியல் பலம் முற்றா கவே இழக்கப்படக்கூடிய அபாயம் ஏற்பட்டது. அதாவது தெற்கு முஸ்லிம்கள் தமக்கென ஒரு பிரதிநிதியைக் கூட தெரிவு செய்ய முடியாத அளவுக்கு செறிவற்றும், சிதறிய எண்ணிக்கையிலும் இருந் தார்கள். இதற்கு மாறாக, தெற்கு முஸ்லிம் தலைமைகளினால் இது வரை காலமும் புறக்கணிக்கப்பட்டிருந்த கிழக்கு முஸ்லிம்கள் தான் தமக்கென பிரதிநிதிகளைத் தெரிவு செய்யக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு, தமது அரசியல் பலத்தை முற்றாகவே இழந்துவிடக் கூடிய நிலையில் இருந்த தெற்கு முஸ்லிம் தலைமைT.B.ஜயாவின் தலைமை யில் 1932ல் இங்கிலாந்துக்குச் சென்று, முஸ்லிம்களுக்கான பிரதிநிதித் துவத்தை அதிகரிப்பதற்கு வழிகாணுமாறு கோரியது. எனினும் முஸ்லிம்களுக்கு என புதிய தொகுதிகள் எதுவும் வழங்கப்படாமல், பெரும்பாலும் சிங்கள அங்கத்தவர்களைக் கொண்ட மந்திரிசபையின் சிபாரிசின் மூலமாகத் தெரிவு செய்யப்பட கூடிய இரு நியமன உறுப் பினர்கள் மட்டும் மேலதிகமாக முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது. பின்னைய காலங்களில், தெற்கு முஸ்லிம் தலைமை, சிங்களத் தலைமையின் முன்னால் பணிந்து நிற்கவேண்டியிருந்த நிலைமை க்கான ஆரம்ப அடித்தளமாக இந்த நியமன அங்கத்துவமுறை அமைந்தது. தனது சொந்த மக்களால், அதாவது தெற்கு முஸ்லிம்களினால் தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்பை இழந்துவிட்ட தெற்கு முஸ்லிம் தலைவர்கள், தம்மால் இதுவரை காலமும் உதாசீனப்படுத்தப்பட்டி ருந்த கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகளை நாடி கிழக்கில்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 25

Page 19
போட்டியிட்டனர். மாக்கான் மார்க்கார், ராசீக் பரீட் போன்றவர்கள் கிழக்கில் போட்டியிட்ட தெற்கு முஸ்லிம் தலைவர்களில் முக்கிய மானவர்கள். எனினும் கிழக்கு மாகாணப் பிரதிநிதித்துவம், தெற்கு முஸ்லிம் தலைமையை திருப்தி செய்யக்கூடியதாக இருக்கவில்லை. ஏனெனில் அவர்களுக்கு அப்பிரதிநிதித்துவம் போதாததாக இருந்தது. அல்லது அப்பிரதிநிதித்துவத்திற்கான தேர்தலில் அவர்கள் தோல்வி யடையும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு ஒரு இக்கட்டான நிலையில் இருந்த தெற்கு முஸ்லிம் தலைமை, அரசியல் ரீதியில் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு இறுதியில் வந்து சேர்ந்தது.
ஆட்சி அதிகாரம் பெற்றிருப்பவர்களுடன் ஏற்படுகின்ற நெருங்கிய உறவு அவர்களின் ஆதரவும், பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு இன்றியமையாதவை என்ற உண்மையை நீண்ட வரலாறு அனுபவத் தின் மூலமாக தெற்கு முஸ்லிம் தலைமை அறிந்திருந்தது. சிங்கள மன்னர்கள், பிரித்தானியர் ஆகியோருடனான நல்லுறவு தங்கள் முன்னேற்றத்திற்கு எவ்விதம் உதவியிருந்தது என்ற நேர்மறை அனுபவத்தை மட்டுமின்றி, போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோரு டனான பகமை எவ்விதம் தங்களது நலன்களைச் சிதைத்திருந்தது என்ற எதிர்மறை அனுபவத்தையும் அவர்கள் பெற்றிருந்தார்கள். இதுவரை காலமும் பிரித்தானியருடனான நல்லுறவின் கீழ் தம்மைப் பேண முடிந்த வாய்ப்பான சூழல், தற்போது மாற்றத்திற்குட்பட்டு வருவதை அன்றைய தெற்கு முஸ்லிம் தலைமை புரிந்து கொண்டது; இப்போது அதிகாரத்தின் எஜமானர்களாகவும், பொருளாதாரத்தை ஒழுங்கமைத்து நிர்வகிப்பவர்களாகவும் சிங்கள ஆளும் வர்க்கம் மாறிக் கொண்டு வருவதை தெற்கு முஸ்லிம் தலைமை உணர்ந்து கொண்டது. இந்நிலையில், சிங்கள ஆளும் வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்வதை, தனது, அரசியல் வழியாக தெற்கு முஸ்லிம் தலைமை தெரிவு செய்து கொண்டது. இவ்வாறு, சிங்கள அரசியல் தலைமையுடன் நிபந்தனையற்ற இணைவை ஏற்படுத்துவதற்காக தெற்கு முஸ்லிம் தலைமை முன்வந்தது.
மறுபுறத்தில், தெற்கு முஸ்லிம் தலைமையுடன் இணைவை ஏற்படுத்து வது, சிங்கள தலைமைக்கும் சாதகத்தை அளிப்பதாக அமைந்தது. ஏனெனில், சிங்களத் தலைமைக்கும், தமிழ்த் தலைமைக்கும் இடை யில் ஏற்பட்ட பிளவானது, தொடர்ச்சியாக விரிவடைந்து கொண்டிரு ந்தது. இந்நிலையில் இலங்கை முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன்
26 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

இணைந்து கொள்வார்களாயின், தாம் பூரண அதிகார மிக்கவர்களாக மாறுவது தடைப்பட்டு அரசியல் அதிகாரம் சமூகங்களுக்கிடையே பகிரப்படக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படலாம் என்பதை சிங்களத் தலைமை உணர்ந்திருந்தது. இந்நிலையில் தெற்கு முஸ்லிம் தலைமை யுடன் இணைவை ஏற்படுத்துவதால், தமிழ் முஸ்லிம் இணைவை சாத்தியமற்றதாக்குவதோடு, தெற்கு முஸ்லிம் தலைமையின் ஆதர வோடு, தாம் பூரண அதிகாரத்தைப் பெறுவது சாத்தியமாகும் என்ப தையும் சிங்களத் தலைமை உணர்ந்து கொண்டது. இவ்வாறு இறுதியில் சிங்களத் தலைமைக்கும் தெற்கு முஸ்லிம் தலைமைக்கும் இடையே அரசியல் இணைவு ஏற்பட்டது. இதன் பின்னர், தெற்கு முஸ்லிம் தலைமை, சிங்கள அரசியல் தலைமை மீதான தனது விசுவாசத்தை வெளிப்படுத்துவதற்காக, மலையக தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், மற்றும் இலங்கை முஸ்லிம்கள் ஆகியோரின் தலைவிதியை நிர்ண யிக்கக் கூடிய முக்கியமான விவகாரங்கள் அனைத்திலும், அந்த சமூகங்களின் நலன்களுக்கு விரோதமாகச் செயற்படத் தொடங்கியது.
தெற்கு முஸ்லிம் தலைமை, சிங்கள தலைமையுடன் தன்னை இணைத் துக் கொண்ட பின்னர், தமிழ் அரசியல் தலைமையுடனான அதன் முரண்பாடுகளும், பிளவும் மேலும் கூர்மையடைந்தன. தமிழ் அரசி யல் அமைப்புக்கள் முன்வைத்த சகல கோரிக்கைகளையும் தெற்கு முஸ்லிம் தலைவர்கள் எதிர்த்தார்கள். 1940 களில் முன்வைக்கப்பட்ட 'ஐம்பதுக்கு ஐம்பது' கோரிக்கையும் (அதாவது அரசியல் பிரதிநிதித் துவமானது 50% சிங்கள சமூகத்திற்கும், 50% தமிழ், முஸ்லிம் , மலையகத் தமிழ் மற்றும் பறங்கிய சமூகங்களுக்கிடையே சம அளவில் பகிரப்பட வேண்டும் என்று இக்கோரிக்கை வலியுறுத்தியது.
இதன்மூலம் எந்தவொரு சமூகமும், பிற சமூகங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத வகையில் சமநிலை பேணப்பட முடியும்.) 1950 களில் முன்வைத்த சமஷ்டி ஆட்சிக்கான கோரிக்கையையும் தெற்கு முஸ்லிம் தலைமை எதிர்த்தது. அத்துடன் 1948 ல் சிங்கள அரசினால் மலையக தமிழ் மக்களின் பிரஜாவுரிமையும், பின்னர் வாக்குரிமையும் பறிக்கப்பட்ட போதும், 1956 ல் முன்வைக்கப்பட்ட தனிச் சிங்கள சட்டத்திற்கும் தமது பூரண ஆதரவை அவர்கள் வழங்கினார்கள். மேலும் முஸ்லிம்கள், தமது கல்வி மொழியாக சிங்களத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் , தமிழ் மொழி முஸ்லிம்களின் தாய் மொழி அல்ல என்றும் தெற்கு முஸ்லிம் தலைமை பிரச்சாரம் செய்தது.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 27

Page 20
இவற்றுடன் முஸ்லிம் மாணவர்கள் பெரும்பான்மையாக கல்வி கற்கின்ற பாடசாலைகளில் தமிழ் அதிபர்கள் நியமிக்கப்படுவதையும் தெற்கு முஸ்லிம் தலைவர்கள் பலமாக எதிர்த்தார்கள்.
இவ்வாறு, சிங்கள தலைமைக்கு தனது விசுவாசத்தை வெளிப்படுத் தியது முஸ்லிம் தலைமை. இதன் விளைவாக, ஒரு தனியான சமூக மாகவும் தெற்கு மற்றும் வட-கிழக்கு என்று பிரிந்து வாழ்கின்ற இலங்கை முஸ்லிம்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. இதற்கு, மாறாக சிங்கள அரசினால், இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்திருக் கின்ற இனச் சிதைப்பு நடவடிக்கைகளை தெற்கு முஸ்லிம் தலைமை மெளனமாக அங்கீகரித்து வந்திருக்கிறது. இவ்வாறு சிங்களத் தலை மையின் நம்பிக்கையைப் பெற்றுக் கொள்வதற்காகவும், அதன் மூலம் தமது சொந்த நலன்களை உயர்த்திக் கொள்வதற்காகவும், தமது சமூகத்தின் நலன்களையும், உரிமைகளையும் பலி கொடுக்கின்ற அரசியல் பண்பை தெற்கு முஸ்லிம் தலைமை பெற்றுக் கொண்டது. இதன் பின்னர் தொடர்ச்சியாக உருவாகி வந்த தெற்கு முஸ்லிம் தலைமைகளின் அரசியல் வாழ்வு முழுவதிலும் இந்த சுயநல அரசியல் பண்பே ஆட்சி செலுத்தி வந்திருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்கள் மீது பெளத்த -சிங்கள இனவாதம் மேற் கொண்டு வந்திருக்கின்ற ஒடுக்குமுறைகள், தமிழ் மக்கள் மீது, பெளத்த சிங்கள இனவாதம் மேற்கொண்டு வந்திருக்கின்ற ஒடுக்கு முறைகளுடன் ஒப்பிடக்கூடிய அளவிற்கு கடுமையாகவும், தீவிர மாகவும் இருக்கின்றன.
முஸ்லிம்களின் பாரம்பரிய நிலங்களில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், முஸ்லிம்களின் சனச் செறிவை குறைத்தல், அரசியல் ரீதியில் அவர்களைப் பலவீனப்படுத்தல் அவர்களின் பொருளாதார முயற்சிகளுக்குத் தடைகளை ஏற்படுத்துதல், கல்வி மற்றும் கலாசார அம்சங்களின் வளர்ச்சிகளைத் தடுத்தல், முஸ்லிம் பிரதேசங்களை அகக் கட்டமைப்பு (Infra Structural) அபிவிருத்தியிலிருந்து ஒதுக்கு தல். என பல்வேறு வழிகளிலும் பெளத்த -சிங்கள இனவாதம், இலங்கை முஸ்லிம்களை ஒடுக்கி வந்திருக்கிறது.
சுதந்திரத்தின் பின்னர் வரண்ட வலயக் குடியேற்றத் திட்டத்தின் கீழும், 'பசுமைப் புரட்சி' திட்டத்தின் கீழும் முஸ்லிம்களின் பாரம்பரிய
28 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

எல்லைக்குள் அடங்குகின்ற பல ஆயிரக்கணக்கான ஏக்கர் வளமான நிலங்களில் சிங்களக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அந்நிலங் களும், காட்டு வளங்களும் சிங்களவர்களுக்குச் சொந்தமாக மாற்றப் பட்டுள்ளன. குறிப்பாக திருகோணமலை, அம்பாறை மாவட்டங் களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமாக உள்ள நிலங்களுடன் ஒப்பிடுகை யில், பல மடங்கு பரப்பு அதிகமான நிலங்கள் குறைந்த எண்ணிக்கை யில் உள்ள குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டு ள்ளன. மேலும் சிங்கள மக்கள் செறிந்து வாழ்கின்ற, பிற மாவட்டங் களைச் சேர்ந்த பகுதிகள் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளு டன் இணைக்கப்படுவதன் காரணமாக, முஸ்லிம்களின் செறிவு திட்டமிட்ட ரீதியில் குறைக்கப்பட்டு வந்திருக்கிறது. குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற ஒரே யொரு மாவட்டமான அம்பாறை மாவட்டத்துடன், மொனராகலை மாவட்ட சிங்களப் பிரதேசங்கள் இணைக்கப்பட்டதன் காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பெரும்பான்மையானது, கணிசமாகக் குறைக்கப்பட்டிருக்கின்றது. இதே போன்று திருமலை மாவட்டத்தில், முஸ்லிம் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்திய இரட்டை அங்கத்தவர் தொகுதியான மூதூர் தனி அங்கத்தவர் தொகுதியாக மாற்றப்பட்டு, அங்கு சிங்கள மக்களுக்கென சேருவில என்னும் புதிய தொகுதியை உருவாக்கி, தமிழ் முஸ்லிம்களுக்குரிய நிலங்களுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்குக்கும் அதிகமான நிலம் சிங்களவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது. பின்வரும் ஒரு உதார ணத்தின் மூலம், திருகோணமலை மாவட்டத்திலும், பொதுவாக கிழக்கு மாகாணத்திலும் சிங்கள, முஸ்லிம் குடிசன வீதம் எவ்வாறு மாற்றப்பட்டு வந்திருக்கின்றது என்பதை புரிந்து கொள்ளலாம். திருகோணமலை மாவட்டத்தில், 1921 ம் ஆண்டு வரை நான்கு வீதமாக (4%) இருந்து வந்த சிங்களவரின் சனச்செறிவு, 1952 ல் பதினெட்டு வீதமாகவும் (18%), 1981 ல் முப்பத்து நான்கு வீதமாகவும் (34%) உயர்த்தப்பட்டது. அதேநேரத்தில் 1921 ல் முப்பத்தேழு வீதமாக (37%) இருந்த முஸ்லிம்களின் செறிவு 1952 ல் முப்பத்து நான்கு வீதமாகவும் (34%) 1981 ல் இருபத்தெட்டு வீதமாகவும் (28%) குறைக்கப்பட்டு வந்திருக்கின்றது. ஒட்டு மொத்தமாக கிழக்கு மாகாண விகிதாசாரத்தை கவனித்தால், 1921 வரை 4.69 வீதமாக இருந்த சிங்களவர்களின் செறிவு, 1981 ல் 25.8 வீதமாக உயர்த்தப்பட்டது.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 29

Page 21
ஆனால் முஸ்லிம்களின் செறிவோ, 1921 ல் 40.55 வீதமாக இருந்து, 1981 ல் 32.2 வீதமாக குறைக்கப்பட்டது.
இதே போன்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களின் காரணமாக, ஆங்காங்கே சிறு எண்ணிக்கையில் வாழ்ந்த தெற்கு முஸ்லிம்களின் செறிவானது, மேலும் ஐதாக்கப்பட்டது. தென் இலங்கையில் முஸ் லிம்கள் கணிசமான செறிவில் வாழ்ந்த புத்தளம் மாவட்டத்தில் சனத்தொகை வீதம், கிட்டத்தட்ட முப்பது வருட காலத்தில் முற்றாக மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றது. 1946 ல் அங்கு 31 வீதமாக இருந்த முஸ்லிம்களின் செறிவு, 1981ல் 9.72 வீதமாகக் குறைக்கப்பட்டி ருக்கிறது. இவ்வாறு திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களினால், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வளமான காணிகளும், காட்டுவளங்களும் பறிக்கப்பட்டிருப்பதோடு அவர்களு டைய பொருளாதார முயற்சிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கின்றது. இவற்றோடு இத்தகைய சிங்களக் குடியேற்றங்களினால் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பலவீனப்படுத்தப் பட்டிருக் கிறார்கள். இலங்கை அரசியல் பாராளுமன்றப் பெரும்பான்மைக்கும், அரசியல் அதிகாரத்தில் மேலாண்மை செலுத்துவதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. அதே நேரத்தில் ஒரு சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவமானது அதன் குடிசன செறிவிலும், பரம்பலிலும் தங்கியிருக்கின்றது. இந்நிலையில் ஒரு சமூகத்தை அரசியல் ரீதியில் பலவீனப்படுத்துவதற்கு, அதன் குடிசனச் செறிவை குறைப்பதே போதுமானது. சிங்கள அரசாங்கங்களின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களின் பிரதான இலக்கு இது தான். இத்தகைய குடியேற்றங்களின் மூலம் பிற சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதோடு, மறு புறத்தில் சிங்கள சமூகத் தின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் முடிந்தது. இத்தகைய குடியே ற்றங்கள் ஏற்கனவே தெற்கு (வட) கிழக்கு என பிரிந்திருந்த முஸ்லிம் களை, அரசியல்ரீதியில் மேலும் பலவீனப்படுத்தியது.
1956ம் ஆண்டுக்குப் பின்னர், சிங்கள மொழி அரசகருமமொழி யாகவும், நிர்வாக மொழியாகவும் மாற்றப்பட்டதன் காரணமாக, வட - கிழக்கு முஸ்லிம்களும் அதேபோன்று தெற்கு முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். சிங்களம் தெரியாத காரணத்தினால் வட-கிழக்கு முஸ்லிம்களும், சிங்கள நிர்வாகிகளின் இனவாத நடவடி க்கைகளினால் தெற்கு முஸ்லிம்களும் தொடர்ச்சியாக பாதிக்கப்
3O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

பட்டிருக்கின்றனர். முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களின் போக்குவரத்து, சுகாதாரம், நீர்விநியோகம். போன்ற அகக் கட்டமை ப்புக்கள் அரசின் அபிவிருத்தி முயற்சிகளிலிருந்து திட்டமிட்ட ரீதியில் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
முஸ்லிம்களது வர்த்தக முயற்சிகளையும் சிங்கள அரசு திட்டமிட்டே சிதைத்து வந்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் பல இறக்குமதிகளை அரசு ஏகபோகமாக்குவதும் பின்பு தாராளமயமாக்குதல் என்னும் பெயரில் அவற்றிற்கான அனுமதிகளை சிங்களவர்களுக்கு வழங்கி யது. இதன் மூலம் இந்த முயற்சிகள் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப் பட்டு சிங்களவர்களிடம் ஒப்படைப்பதே நடந்தேறுகிறது. அத்தோடு அரசு இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்தை நிறுவுவதன் மூலம் இரத்தினக் கல் தொழிலில் முஸ்லிம்கள் வகித்துவந்த ஆதிக்க நிலை முறியடிக்கப் பட்டது. இப்படி பலவற்றை நாம் குறிப்பிடலாம்.
கல்வியைப் பொறுத்தவரையில் தெற்கு முஸ்லிம்கள், சுதந்திரத்தின் பின்னர் மோசமாகப் பின்தள்ளப்பட்டு வந்திருக்கிறார்கள். தமிழ் மொழி மூலமான கற்பித்தலைக் கொண்டிருந்த தெற்கு முஸ்லிம் பாடசாலைகள், அரசின் கவனிப்பிலிருந்து திட்டமிட்ட ரீதியில் ஒதுக்கப்பட்டு வந்திருக்கின்றன. போதிய ஆசிரியர்களும், ஏனைய வசதிகளும் வழங்கப்படாமல் பெரும்பாலான தெற்கு முஸ்லிம் பாடசாலைகள் சீரழிக்கப்பட்டு வந்திருக்கின்றன. சுதந்திரத்திற்கு முன்னரான காலகட்டத்தில், இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், கல்வியில் உயர்நிலை வகித்திருந்த தெற்கு முஸ்லிம்களின் கல்வி நிலை, சுதந்திரத்தின் பின்னர் படிப்படியே வீழ்ச்சியடைந்து வந்திருக்கின்றது. சுதந்திரத்திற்கு முன்னர் தெற்கு முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் காத்திரமான பங்கு வகித்து வந்த 'ஸாஹிராக் கல்லூரிகள்' சுதந்திரத்தின் பின்னர் அரச பாடசாலைகளாக்கப்பட்டு, திட்டமிட்டரீதியில் அவற்றின் வளர்ச்சி தடுக்கப்பட்டு வந்திருக் கின்றது. சில ஸாஹிராக் கல்லூரிகளில் சிங்கள அதிபர்கள் நியமிக்கப் படுகின்ற அளவுக்கு, அரசின் இனவாத நடவடிக்கைகள் தீவிரமடைந் திருக்கின்றன. இவற்றை விட, தெற்கு முஸ்லிம்களின் இயல்பான சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப, புதிய முஸ்லிம் பாடசாலைகள் அமைக்கப்படுவதை பெளத்த -சிங்கள இனவாதிகள் கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றார்கள். இவற்றின் விளைவாக தெற்கு முஸ்லிம் மாணவர்களின் கல்வி படிப்படியே வீழ்ச்சியடைந்து வந்திருக்கின்றது.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 31

Page 22
இவற்றோடு முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்ப தும், அவர்களின் சமூக ரீதியான கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருந்து வருகின்றது. பொதுவாக ஒருவர் தனது தாய்மொழியில் கற்கும் போதுதான் அவரது கல்வி அறிவு சீரான வளர்ச்சியைப் பெறுகின்றது என்பது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. கிட்டத்தட்ட முழு இலங்கை முஸ்லிம்களும் தமது தாய்மொழியாகத் தமிழைக் கொண்டிருக்கிறார்கள். எனினும் தெற்கு முஸ்லிம் தலைமையின் தவறான வழிகாட்டலினாலும், தெற்கிலுள்ள தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் அரசினால் உதாசினப்படுத்தப்பட்டிருப்ப தாலும், தெற்கு முஸ்லிம் மாணவர்கள் ஆரம்பத்திலிருந்தோ அல்லது இடைநிலைக் கல்வியிலிருந்தோ சிங்கள மொழியில் கற்கும் படி நிர்ப்பந்திக்கப்படுகின்றார்கள். அந்நிய மொழியின் சுமையினாலும், பாடசாலைச் சூழலின் கலாசார வேறுபாடுகளினாலும் சிங்கள ஆசிரியர்களின் பாகுபாடுகளினாலும் பெரும்பாலான முஸ்லிம் மாணவர்கள் விரைவிலேயே பாடசாலையை விட்டு வெளியேறும் நிலைக்கு ஆளாகிறார்கள். 1970 களின் இறுதிப்பகுதியில் கிழக்கு முஸ்லிம்களிடையிலும், சிங்கள மொழியில் கல்வி கற்கின்ற போக்கு உருவாக்கப்பட்டது. ஒரு குறைந்த அளவிலான மாணவர்கள் சிங்கள மொழியில் கற்றபோதிலும், அவர்களினால், இடைநிலைக் கல்வியைக் கூடக் கடக்க முடியவில்லை.
இலங்கை முஸ்லிம்களின் (குறிப்பாக தெற்கு முஸ்லிம்களின்) கலாசார ரீதியான செயற்பாடுகளை, பெளத்த - சிங்கள இனவாதிகள் தொடர் ச்சியாக எதிர்த்து வருகிறார்கள். தெற்கில் புதிய பள்ளிவாசல்கள் அமைக்கப்படுவதையும் (அல்லது அவை திருத்தியமைப்படுவதை யும் தொழுகைக்காக ஒலி பெருக்கியில் அழைப்பதையும் (அதாவது 'பாங்கு' ஒலிப்பதையும்) தடைசெய்யும்படி பெளத்த - சிங்கள இனவாதிகள் அரசைக் கோரிவருகிறார்கள். பல சந்தர்ப்பங்களில், அரசு இவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்திருக் கின்றது. இவற்றை விட, உணவிற்காக முஸ்லிம்கள் விலங்குகளைக் கொல்வதை, ஒரு கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான செயலாக பெளத்த - சிங்கள இனவாதிகள் பிரச்சாரப்படுத்தி வந்திருக்கிறார்கள். இவ்வாறு இலங்கை முஸ்லிம்களுக்கு, சாதாரண அடிப்படை உரிமை களைக் கூட மறுப்பதிலேயே பெளத்த - சிங்கள இனவாதம் தன்னை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது.
32 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

இவற்றை விட, பெளத்த - சிங்கள இனவாதம் தெற்கு முஸ்லிம்கள் மீது வன்முறைத் தாக்குதல்களை அடிக்கடி மேற்கொண்டு வந்திருக் கின்றது. சுதந்திரத்திற்கு முன்னர் ஒரு தடவை மட்டும் இடம் பெற்று ஓய்ந்திருந்த முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள், சுதந்திர த்தின் பின்னர், பெளத்த - சிங்கள அரசு உருவாக்கப்பட்ட பின்னர், அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. கருத்தியில் ரீதியாக, பெளத்த - சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் விரோத உணர்வு தொடர்ச்சி யாகவும் ஆழமாகவும் பரப்பப்பட்டு வந்திருப்பதால், தெற்கு முஸ்லிம் கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் எளிதாகவும் தீவிரமாகவும் இடம் பெறுகின்றன. இத்தகைய தாக்குதல்களில் அரச படையினரும் பங்குபற்றி வந்திருக்கிறார்கள் என்பதையும், பல சந்தர்ப்பங்களில் அரச படையினரே தாக்குதல்களை ஆரம்பித்து வைக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளும் போது, பெளத்த - சிங்கள அரசு முஸ்லிம்கள் மீது எத்தகைய விரோதத்தைக் கொண்டிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு சுதந்திரத்தின் பின்னர், இலங்கை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் உரிமைகளோடு, உயிர் வாழும் உரிமையும் கூட, பெளத்த - சிங்கள இனவாதத்தினால் மறுக்கப்பட்டு வந்திருந்தும், இவற்றை வெகுசனரீதியில் எதிர்க்கவோ அல்லது சர்வதேச சமூகங்கள் மத்தியில் இவற்றை பகிரங்கப்படுத்தவோ தெற்கு முஸ்லிம் தலைமை ஒரு போதும் முயன்றதில்லை. பதிலாக, பல சந்தர்ப்பங்களில் மெளனமாக இருப்பதும், பெளத்த- சிங்கள இன வாத அரசுடன் முஸ்லிம்கள் முரண்படாத வகையில் சமரசம் செய்து கொள்வதுமே தெற்கு முஸ்லிம் தலைமையின் வழிமுறையாக இருந்து வந்திருக்கின்றது.
1931 டொனமூர் அரசியல் யாப்பைத் தொடர்ந்து இலங்கையின் அரசியல் தளத்தில் இனத்துவ ரீதியான பிளவுகள் மேலும் ஆழமாக வெளிப்பட்டன. சிங்கள, தமிழ் மக்கள் தமக்கென தனித்தனியான அரசியல் அமைப்புக்களை ஏற்படுத்தி, அவற்றில் ஒன்றிணைந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், அவர்கள் ஒரு பொதுவான தனித்துவமான அரசியல் அமைப்பின் கீழ் ஒன்றிணைய சாத்தியமற்றதாக இருந்தது தெற்கு, மற்றும் வட-கிழக்கு என பிரிந்து வாழ்ந்ததோடு, சமூக பொருளாதாரத் தன்மைகளில் வேறுபட்டவர்களாகவும், மேலும் தெற்கில் குறைந்த
Gyblish Cryph Sifas Toph 33

Page 23
சனச் செறிவுடன், சிதறுண்டு வாழ்வதாலும் முழு இலங்கை முஸ்லிம் களும் ஒரு பொது அமைப்பில் இணைவது சாத்தியம் அற்றதாகவே இருந்தது. ஏற்கனவே, முழு முஸ்லிம்களையும் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட 'அகில இலங்கை முஸ்லிம் லீக்' அம்முயற்சி யில் தோல்வி கண்டிருந்தது.
சிங்கள மக்களும், தமிழ் மக்களும் தமக்கென தனியான, சுயமான அரசியல் அமைப்புக்களை ஏற்படுத்தி அவற்றில், அணிதிரண்டு கொண்டிருந்த நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கென சுயமான தனித்துவமான அரசியல் அமைப்புகளை ஏற்படுத்துவதற்காக, தெற்கு முஸ்லிம் தலைமை சமூக நேர்மையுடன் செயற்பட்டிருக்க வேண்டும். இலங்கை முஸ்லிம்களிடையே எதார்த்தமாகக் காணப்படுகின்ற, தெற்கு மற்றும் வடகிழக்கு என்ற வேறுபாடுகளை கவனத்தில் கொண்டு பலமிக்க பிராந்திய மற்றும் பிரதேச ரீதியிலான அரசியல் அமைப்புக்களை ஏற்படுத்தி, அவற்றில் முஸ்லிம்களை இணைப்ப தற்காக உழைத்திருக்க வேண்டும். இதன்மூலம், அரசியல் ரீதியிலும் கூட, தாம் தனித்துவமான சமூகம் என்று இலங்கை முஸ்லிம்கள் தம்மை அடையாளம் காண்பதற்குரிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி யிருக்க வேண்டும். ஆனால் தெற்கு முஸ்லிம் தலைவர்களிடையே காணப்பட்ட சுயநல அரசியல் பண்பு காரணமாக, அவர்கள் தமது சமூகத்திற்கு அவசியமான இத்தகைய சுயமான அரசியல் குறித்து ஒருபோதும் சிந்திக்கவில்லை. மாறாக தமது சொந்த நலன்களை எவ்வாறு பேணிக்கொள்வது என்பதையே அவர்கள் ஒரே இலக்காகக் கொண்டிருந்தார்கள். இந்த இலக்கை அடைவதற்காக, தாம் தேசியக் கட்சி என அழைத்த சிங்களக் கட்சி என்ற பலமிக்க அமைப்பில் தெற்கு முஸ்லிம்களையும் வட-கிழக்கு முஸ்லிம்களையும் ஒன்றிணைப்பதை சிறந்த வழியாக தெற்கு முஸ்லிம் தலைமை கருதியது. சிங்களக் கட்சியில் முழு இலங்கை முஸ்லிம்களையும் ஒன்றிணைப்பதன் மூலமாக, தெற்கு முஸ்லிம் தலைமை இருவழிகளில் நன்மையடைக் கூடியதாக இருந்தது. முதலாவதாக முஸ்லிம்களுக்கு என ஒதுக்கப் பட்ட நியமன அங்கத்துவத்தை தெற்கு முஸ்லிம் தலைமையால் பெற்றுக் கொள்ள முடிந்தது. இரண்டாவதாக, தெற்கில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற கொழும்பு, அக்குறணை போன்ற இடங்களில் முஸ்லிம்களின் வாக்குகளோடு, ஒரளவுக்கு சிங்கள வாக்குகளையும் பெறுவதன் மூலம் இவர்களில் சிலர் தேர்தல்களில் வெற்றி பெறவும்
34 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

முடிந்தது.
இவ்வாறு தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறையின் காரணமாக தமக்கு ஏற்படவிருந்த அரசியல் ரீதியான இழப்புகளை, சிங்களக் கட்சியில் இணைந்ததன் மூலமாகத் தெற்கு முஸ்லிம் தலைமை நிவர்த்தி செய்து கொண்டது. சிங்களக் கட்சி மூலம் தமக்குக் கிடைத்த இத்தகைய வாய்ப்புகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகளாக, தெரிவு செய்யப்பட்டவர்கள் சிங்களக் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு தெற்கு முஸ்லிம் தலைமை நிர்ப்பந்தித்தது. இப்போதுதான் முதன் முதலாக பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்த அன்றைய கிழக்கின் முஸ்லிம் அரசியல் வாதிகளை, செல்வாக்கும், அந்தஸ்தும், அரசியல் பாரம்பரியமும், கல்வித் தேர்ச்சியுமிக்க தெற்கு முஸ்லிம் தலைவர்கள் கட்டுப்படுத்தி, சிங்களக் கட்சியில் இணையும் படி செய்வது கடினமானதாக இருக்கவில்லை. இவ்வாறு சிங்கள, தமிழ் மக்களிடையே, இனத்துவ ரீதியான அரசியல் இயக்கங்கள் வலிமையாக உருவாகிக் கொண்டிருந்த வேளையில், தெற்கு மற்றும் வட-கிழக்கு முஸ்லிம்கள் தமது அரசியல் சுயேட்சை பற்றி உணர்வூட்டப்படாதவர்களாக, தெற்கு முஸ்லிம் தலைமையின் வழிகாட்டலின் கீழ் சிங்களக் கட்சிகளில் ஒட்ட வைக்கப்பட்டார்கள். இதன் மூலமாகத்தான், தெற்கு முஸ்லிம் தலைமை, முழு இலங்கை முஸ்லிம்களின் தலைமையாக தோற்றம் பெற்று செயற்பட முடிந்தது.
தெற்கு முஸ்லிம் தலைமை, சிங்கள அரசியல் தலைமையுடன் நிபந்தனையற்ற முறையில் இணைவை ஏற்படுத்திய பின்னர், அதன் அரசியல் வாழ்வு முரண்பாடுகள் நிறைந்ததாக மாறிவிட்டது. இந்த முரண்பாடுகள் தெற்கு முஸ்லிம் தலைமையின் சொந்த நலன்களுக்குமிடையே நிலவுகின்ற வேறுபாடுகளின் விளைவாகும். முதலில் தெற்கு முஸ்லிம்களின் நலன்களைக் கவனத்தில் கொள்வோமாயின், இந்த நலன்கள் தெற்கிலுள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருக்கவில்லை. பதிலாக பிரதேச ரீதியில் வேறுபடுகின்ற, தனித்துவமான பிரச்சனைகளுக்கு இவர்கள் முகம் கொடுக்க வேண்டியிருப்பதால், அவர்களது நலன்களும் பிரதேச ரீதியில் வேறுபடுவதாகவும் தனித்துவமானதாகவும் இருக்கின்றன. இவ்வாறு தெற்கு முஸ்லிம்கள்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 35

Page 24
எதிர் கொள்கின்ற பிரச்சினைகள் பிரதேச ரீதியில் வேறுபட்டும், தனித்துவமானதாகவும் இருக்கின்ற போதிலும், அவை அனைத்தும், அடிப்படையில் பெளத்த - சிங்கள இனவாத ஒடுக்குமுறையின் விளைவுகளாகவே இருக்கின்றன. எனவே இவர்கள் தமது நீலன் களைப் பெற்றுக் கொள்வதும் கூட அடிப்படையில் பெளத்த - சிங்கள இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலமே சாத்தியப் படக்கூடியதாக இருக்கிறது. பெளத்த - சிங்கள இனவாதத்தினால் ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவற்றிற்குப் பொருத்தமான தீர்வுகளைக் காணவேண்டுமாயின், முதலில் தெற்கு முஸ்லிம் தலைமையானது, ஒரு கூட்டுத் தலைமையாகவும், தெற்கின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த நபர்களை உள்ளடக்கியதாகவும், அதிக எண்ணிக்கையான நபர்களைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இவர்கள் தெற்கின் முஸ்லிம் பிரதேசங்களுக்குள் பலமான அடித்தளங்களைக் கொண்டவர்களாகவும், அங்குள்ள முஸ்லிம்களின் நலன்களுடன், தமது நலன்களையும் இணைத்து கொண்டவர் களாகவும், பெளத்த - சிங்கள இனவாதத்திற்கு எதிராக உறுதியாக, தொடர்ச்சியாகவும் போராடக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் எதார்த்தத்தில் தெற்கு முஸ்லிம் தலைமையோ இவற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. இத்தலைமை பெரிதும் கொழும்பை மையப்படுத்தியதாகவும், குறிப்பிட்ட ஒரு சில நபர்களின், குடும்பங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டதாகவும், கொழும்பு சார்ந்த வர்த்தகம், தொழிற்துறை மற்றும் கலாசாரம் என்பவற்றில் தமது நலன்களைக் கொண்டதாகவும் இருக்கின்றது. மேலும் தமது சமூக அரசியல் நலன்கள் தொடர்ந்து பேணப்படுவதற்கும், வளர்ச்சிடைய வதற்கும் பெளத்த, சிங்கள அரசின் தயவிலேயே இவர்கள் பெரிதும் தங்கியிருக்கிறார்கள். இவ்வாறு தெற்கு முஸ்லிம்களின் சமூக ரீதியான நலன்களும், தெற்கு முஸ்லிம் தலைமையின் தனிப்பட்ட நலன்களும் முற்றிலும் வேறுபட்டவைகளாக இருக்கின்றன.
மறுபுறத்தில் வட-கிழக்கு முஸ்லிம்களின் நலன்களைக் கவனத்தில் கொள்வோமாயின், அவை, தெற்கு முஸ்லிம் தலைமையின் தனிப் பட்ட நலன்களுடன் எவ்விதத்திலும் பொதுத்தன்மையை கொண்டி ருக்கவில்லை. வாழ்கின்ற இடத்தால் மாத்திரமன்றி, தாம் முகம் கொடுக்கின்ற நெருக்கடிகள் தொடர்பாகவும், பொருளாதார ரீதியிலும் தெற்கு முஸ்லிம் தலைமையிடமிருந்து வட- கிழக்கு முஸ்லிம்கள்
36 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

முற்றாக வேறுபட்டிருப்பதால், அவர்களின் நலன்களும் தெற்கு முஸ்லிம் தலைமையின் நலன்களும் முற்றிலும் வேறுபட்டே இருக்கி ன்றன.
இவ்வாறு இலங்கை முஸ்லிம்களின் எந்த ஒரு பிரிவினரின் சமூக நலன்களுடனும், தமது நலன்களை இணைத்துக் கொண்டிராத தெற்கு முஸ்லிம் தலைமை, இந்த முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதை இலக்காகக் கொண்டு ஒருபோதும் செயற்பட் முடியா திருக்கின்றது. இலங்கையிலுள்ள பிற சமூகங்களின் உரிமைகளை பறித்தெடுப்பதன் மூலமாகவே தனது இருப்பைத் தொடர்ச்சியாக பேணிவருகின்ற பெளத்த சிங்கள இனவாத அரசுடன் இணைப்பை ஏற்படுத்தியதன் மூலம், தெற்கு முஸ்லிம் தலைமையானது, அடிப் படையிலே தனது சொந்த சமூகத்தின் நலன்களுக்கு முரணான தாகவும், எதிரானதாகவும் மாறிவிட்டது. பெளத்த - சிங்கள இனவாத அரசின் தயவில், தனது நலன்களைப் பேண வேண்டிய அவசியத்தில் இருப்பதால், தமது சமூகத்தின் நலன்களும் உரிமைகளும் பெளத்தசிங்கள அரசினாலும், இனவாதிகளினாலும் மறுக்கப்படும் போதும், பறிக்கப்படும் போதும், அவற்றிற்கு எதிராக தெற்கு முஸ்லிம் தலை மையால் எதுவும் செய்ய முடிவதில்லை. இத்தகைய இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக, தெற்கு முஸ்லிம் தலைமை மேற்கொள்ளக் கூடிய எந்தவொரு நடவடிக்கையும், அதன் சொந்த நலன்களுக்கு பெரும் அபாயமாக மாறிவிடக் கூடியது. இதனால் தான் சுதந்திரத்தின் பின்னர், இலங்கை முஸ்லிம்கள் மீது, பெளத்த - சிங்கள இனவாத அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அத்தனை ஒடுக்குமுறை களுக்கும், அநீதிகளுக்கும் எதிராக தெற்கு முஸ்லிம் தலைமை எத்தகைய வெகுசன நடவடிக்கைகளையும் எடுக்காமலும், அவற்றை தேசிய மற்றும் சர்வதேசிய ரீதியில் பகிரங்கப்படுத்தாமலும் இருந்து வந்திருக்கின்றது.
எனினும், தான் இலங்கை முஸ்லிம்களின் தலைமை என்பதை வெளிப்படுத்திக் கொண்டிக்க வேண்டிய அவசியம் தெற்கு முஸ்லிம் தலைமைக்கு இருக்கின்றது. பெளத்த - சிங்கள அரசு திட்டமிட்ட ரீதியில் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொண்டு வருகின்ற இன ஒடுக்குமுறைகள் விடயத்தில் மெளனமாக இருக்கின்ற, அல்லது எச்சரிக்கையுடன் வார்த்தைகளை உபயோகிக்கின்ற இவர்கள், ஏனைய நாடுகளிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 37

Page 25
அநீதிகள் விடயத்தில் மட்டும் உடனடியான எதிர்ப்புகளை ஆக்ரோஷ மாகத் தெரிவிப் பார்கள். சில சந்தர்ப்பங்களில் வெகுசன ஆர்ப் பாட்டங்களையும் நடத்துவார்கள். இதே போன்று, வட-கிழக்கு முஸ்லிம்கள் மீது, விடுதலை அமைப்புகளினால் மேற்கொள்ளப் படுகின்ற அராஜகங்களுக்கு எதிராகவும், இந்திய இராணுவம் வடகிழக்கில் நிலை கொண்டிருந்தபோது, முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல்களுக்கு எதிராகவும் இவர்கள் உடனடியாக கண்டனங்களை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். தனது சமூகத்தின் இருப்பை படிப்படியே அகற்றி வருகின்ற பெளத்த - சிங்கள அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறைகளின் விடயத்தில் மெளனமாக இருக் கின்ற தெற்கு முஸ்லிம் தலைமை, பெளத்த - சிங்கள அரசு அல்லாத ஏனைய பிரிவினரால் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்படுகின்ற அநீதி களை எதிர்ப்பது என்பது, முஸ்லிம்கள் மீது அவர்களுக்கு இருக்கின்ற உண்மையான அக்கறையின் காரணமாக அல்ல, மாறாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற பெளத்த - சிங்கள அரசுக்குச் சார்பாக இருக்கின்ற, தமது அப்பட்டமான சுயநலத் தோற்றத்தை மறைப்பதற்கான முயற்சிகளாகத்தான் இவை அமை கின்றன.
சுதந்திரத்திற்குப் பின்னர், பிற சமூகங்களை நசுக்கி சிதைக்க முயற் சிக்கின்ற பெளத்த - சிங்கள அரசின் இனவாதச் செயற்பாடுகளின் காரணமாக, அந்த சமூகங்களைச் சேர்ந்த சகல பிரிவினரும் பாதிப் புக்குள்ளாகியிருக்கின்றனர். இவ்வகையில், தெற்கிலுள்ள உயர் வர்த்தகப் பிரிவு முஸ்லிம்களினதும், அவர்களைத் தளமாகக் கொண்ட தெற்கு முஸ்லிம் அரசியல் தலைமையினதும், சமூக பொருளாதார நலன்களும் கூட பாதிப்புக்குள்ளாகியே வந்திருக்கின்றன. எனினும் இவற்றை உறுதியாக எதிர்க்கவோ, தமது உரிமைகளுக்காக போரா டவோ முடியாதவர்களாகவே இவர்கள் இருக்கின்றனர். அந்தளவிற்கு அவர்களின் நலன்கள் தமக்குள் பொதுத்தன்மை கொண்டிராதவை யாகவும், தமது சமூகத்தின் நலன்களிலிருந்து வேறுபட்டவையாகவும் இருக்கின்றன. ஒரு அரசியல் தலைமை, மக்களை போராட்டத்திற்கு அணிதிரட்ட வேண்டுமாயின், அப் போராட்டத்தில் பங்குகொள்ளக் கூடிய வெகுசனங்களிலும், தலைமையினதும் நலன்கள் பெரும்பாலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறின்றி வெகுஜனங்களினதும், தலைமையினதும் நலன்கள் வேறுபடுமாயின்,
38 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

அப்போது உறுதியான மக்கள் போராட்டம் சாத்தியமற்றதாகின்றது. இந்த இரண்டாவது வகையை சார்ந்ததாகத்தான், இலங்கை முஸ்லிம் களினதும் அவர்களின் தலைமை எனக் கூறிக் கொள்கின்ற தெற்கு முஸ்லிம் தலைமையினதும், உறவு நிலை அமைந்திருக்கின்றது. இதனால் தெற்கின் முஸ்லிம் தலைமையும் தம்மைச் சிதைத்து, தமது வாய்ப்புக்களைப் பறித்து வருகின்ற அரசுடன் ஏதோ வகையில் சமரசம் செய்து கொள்ளவும் கிடைக்கின்ற வாய்ப்புக்களுக்காக முந்திக் கொள்ளவும் முயற்சிக்கின்றனர். ஒரு தனித்துவமான சமூகம் என்ற வகையில், இலங்கை முஸ்லிம் களுக்குரிய சுயமான அரசியல் இயக்கம், கிழக்கு முஸ்லிம்களிடையே தான் வேர் கொண்டிருக்கின்றது. எனினும் இத்தகைய அரசியல் இயக்கத்தை தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் தெற்கு முஸ்லிம் தலைமைக்கு அவசியமாக இருக்கின்றது. கிழக்கு முஸ்லிம்களின் சுயமான, எழுச்சிமிக்க அரசியல் இயக்கம், தெற்கு முஸ்லிம் தலைமை யின் அரசியல் இருப்பை உறுதியற்றதாக்குகின்றது. அதன் நலன் களுக்குப் பாதகமாக அமைகின்றது. கிழக்கு முஸ்லிம்களின் சுயமான அரசியல் இயக்கம், தன்னை நசுக்கிக் கொண்டிருக்கின்ற பெளத்த - சிங்கள அரசுடனான மோதலை தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ள நேரும். இத்தகைய மோதலினாலும், அதில் கிழக்கு முஸ்லிம்கள் பெறக்கூடிய வெற்றியினதும் எதிர்விளைவாக, தெற்கு முஸ்லிம் தலைமையின் இன்றைய அரசியல் மற்றும் பொருளாதார நலன்கள் பாதிப்புக்குள்ளாகும். எனவேதான், கிழக்கு முஸ்லிம்களின் சுயமான அரசியல் இயக்கத்தை எதிர்ப்பதில், தெற்கு முஸ்லிம் தலைமை உணர்வுபூர்வமாகச் செயற்பட்டு வருகின்றது. இத்தகைய தனது எதிர்ப்பை நியாயப்படுத்துவதற்காக, கிழக்கிற்கு வெளியே அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற முஸ்லிம்களின் நலன்கள், கிழக்கில் உள்ள குறைந்த எண்ணிக்கையான முஸ்லிம்களின் செயற்பாடு களினால் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்ற வாதத்தை தெற்கு முஸ்லிம் தலைமை முன் வைத்து வந்திருக்கிறது. இலங்கை அரசியலானது மேலும் மேலும் இனத்துவரீதியாகப் பிரிகி ன்ற போக்கைப் பெற்றிருக்கின்ற நிலையில், தனது சமூகம் சார்ந்து சுயமான அரசியல் இயக்கத்தை முன்னெடுக்காதிருக்கின்ற தெற்கு முஸ்லிம் தலைமை, பெளத்த - சிங்கள இனவாத அரசுடன் இணங்கிப் போவதையும் அதற்கு ஆதரவு வழங்குவதையும் தொடர்ந்தும்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 39

Page 26
மேற்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, தமது உரிமைகளை வென்று கொள்வதற்காக பெளத்த - சிங்கள இனவாதத்துடன் போராடி வருகின்ற தமிழர் அரசியல் இயக்கத்திலிருந்து, தெற்கு முஸ்லிம் தலைமை தன்னை முற்றாகவே பிளவுபடுத்திக் கொண்டு விட்டது. இந்தப் பிளவை அது இலங்கை முஸ்லிம்கள் மத்தியிலும் திணித்து வந்திருக்கின்றது. தமிழர் அரசியல் இயக்கம் வட-கிழக்கு முஸ்லிம் களின் பாரம்பரிய பிரதேசத்தையும் ஊடுருவிச் செல்வதால், தெற்கு முஸ்லிம் தலைமை இந்தப் பிளவை ஆழப்படுத்துவதில் மிகவும் உணர்வுபூர்வமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக 1970 களின் பிற்பகுதியில் தமிழீழ விடுதலைக் கோரிக்கை முன்வைக்கப் பட்டதிலிருந்து, தெற்கு முஸ்லிம் தலைமை இக்கோரிக்கைக்கு எதிராக முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. 'இலங்கை முஸ்லிம்கள் பிரிவினைக்கு எதிரானவர்கள்', 'அவர்கள் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள்' என்பது போன்ற பிரச்சாரங்களுக் கூடாக, தமிழர் அரசியல் இயக்கத்திலிருந்து இலங்கை முஸ்லிம்களையும் இவர்கள் விலக்கி வருகின்றார்கள். மேலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளின் தீர்வுக்கு குறைந்தபட்ச அடிப்படையாக அமையக் கூடிய வட-கிழக்கு இணைப்பையும் தெற்கு முஸ்லிம் தலைமை தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறது. இதன் மூலம், வட - கிழக்கு இணைப்பை, அங்குள்ள முஸ்லிம்கள் விரும்பவில்லை என்று காரணம் காட்டி வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு பெளத்த - சிங்கள இனவாதிகள் செய்து வருகின்ற முயற்சிகளுக்கு, தெற்கு முஸ்லிம் தலைமை நேரடியான உடந்தையாளராக இருந்து வருகின்றது. இதற்கு ஒரு உதாரணமாக முன்னாள் சபாநாயகர் M.H. முகம்மது, ஏனைய இனவாத சக்தி களுடன் இணைந்து உருவாக்கி, செயழிழந்து விட்ட 'கிழக்கு மாகாண பாதுகாப்பு முன்னணி' என்ற அமைப்பை இங்கு குறிப்பிடலாம்.
தெற்கு முஸ்லிம் தலைமை சாராம்சத்தில், ஒட்டுமொத்த ஜனநாயக அரசியல் சூழலுக்கு எதிரானது. ஜனநாயக அரசியல் நோக்கிய ஒவ்வொரு உண்மையான முன்னேற்றமும், இங்குள்ள பிற சமூகங் களின் உரிமைகளை மீட்டுத்தரக்கூடியது. இதனால் ஒரு உண்மையான அரசியல் சூழலானது. ஒவ்வொரு சமூகமும் தனது நலன்களை உண்மையாக பிரதிபலிக்கக் கூடிய அரசியல் தன்மையை சுயமாக தேர்ந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்கும். இலங்கையின் ஜனநாயக அரசியல் சூழல் இலங்கை முஸ்லிம்களின் குறிப்பாக
4O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

கிழக்கு முஸ்லிம்களின் சுயமான அரசியல் வாழ்வை உறுதிப்படுத்தக் கூடியது. இதனால் தவிர்க்க முடியாமல் தெற்கு முஸ்லிம் தலைமையின் அரசியல் இருப்பு ஆபத்துக்குள்ளாகும். எனவே தெற்கு முஸ்லிம் தலைமை விரிவான ஜனநாயக அமைப்புகளுக்குப் பதிலாக அதிகார ங்கள் மையத்தில் குவிந்திருக்கக் கூடிய, இறுக்கமான அமைப்பு களுக்கே ஆதரவு வழங்கக் கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு, ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட அரசியல் வாழ்வினூடாக, தெற்கு முஸ்லிம் தலைமையானது, ஒரு சமூக விரோத, ஜனநாயக விரோத, மற்றும் சுயநலத்தன்மை மிக்க அரசியல் பண்புகள் கொண்ட தலைமையாக உருவாகி வந்திருக்கின்றது. இதன் பின்னர், இந்தத் தலைமையிடமிருந்து தெற்கு முஸ்லிம்களோ அல்லது வட கிழக்கு முஸ்லிம்களோ தமது நலன்கள் மற்றும் உரிமைகள் சார்ந்த அரசியல் நலன்கள் மற்றும் உரிமைகள் சார்ந்த அரசியல் முன்னெடுப்புகளை எதிர்பார்ப்பதில் எவ்வித அர்த்தமுமில்லை. இந்நிலையில் இந்த அரசியல் தலைமை, முழு இலங்கை முஸ்லிம்களினாலும் நிரகாரிக் கப்பட வேண்டிய காலம் வந்து விட்டது. தனது சமூகத்தை தவறான, தற்கொலைப் பாதையில் இட்டுச் சென்றிருக்கின்ற இந்தத் தலைமை யின் அரசியல் வழிகாட்டலில் இருந்து விலகி, இலங்கை முஸ்லிம்கள் புதிய அரசியல் பாதைகளை தெரிவு செய்வதற்கான நேரம் வந்து விட்டது.
தெற்கு முஸ்லிம்களிடையே, இந்தத் தலைமை நிராகரிக்கின்ற சில பிரிவினர் இருந்து வருகின்றனர். பிற்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த, படித்த தெற்கு முஸ்லிம்களில் சிலர், தமது தலைமையின் இத்தகைய போக்குகளுக்கு எதிராக செயற்படுகின்றவர்களாக இருக்கின்றார்கள். எனினும் இவர்கள் திட்டவட்டமான முறையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு பதிலாக, பெரும் பாலும் மத அமைப்புகள் சார்ந்தே இயங்குகின்றனர். தெற்கு முஸ்லிம் களை அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து, பொதுவானதும், வலிமை யானதுமான அரசியல் இயக்கத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாக இருப்பதால், அவர்களை மதரீதியில் ஒன்று திரட்டுவதற்கு இந்தப் பிரிவினர் முயற்சிக்கின்றனர். பெளத்த - சிங்கள இனவாதத்தினால் பல்வேறு முனைகளிலும் நேரடியாகப் பாதிக்கப்படுகின்ற இந்தப் பிரிவினர், இவற்றுக்கு எதிரான தமது கண்டனங்களை தீவிர மதக் கருதுக்களினூடாக வெளிப்படுத்துகின்றனர். எதார்த்தத்தில் நிலவு
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 41

Page 27
கின்ற சமூக, அரசியல் அமைப்புகளிலிருந்து கிட்டத்தட்ட முற்றாகவே விலகியிருக்கின்ற இவர்கள், மதரீதியாக ஏற்படக் கூடிய வெற்றியின் மூலமாக தமது சமூகத்தின் அவலங்களைத் தீர்க்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் முஸ்லிம் நாடுகளிடையே உருவாகி வருகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களினால் கிளர்ச்சியூட்டப்பட்டிருக்கின்றனர். இவர்களில் சிலர், இலங்கையும் ஒரு இஸ்லாமியாக நாடாக மாறி விடமுடியும் என்று நம்புகின்ற அளவிற்கு, சமூக, பொருளாதார, அரசியல் குறித்து அறியாமையில் இருக்கிறாரர்கள். பல முஸ்லிம் சமூகங்களில் இன்று எழுந்து வருகின்ற இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பது, வெறும் மத ரீதியான இயக்கம் அல்ல என்பதையும், அது ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகின்ற சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார முரண்பாடுகளினால் தோற்றுவிக்கப்படுகின்ற ஒரு அரசியல் இயக்கம் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கின்றனர். மதத்தை அடிப்படையாகக் கொண்ட இவர்களின் முயற்சிகள், தனிநபர் வாழ்வில், கலாசார ரீதியான சில பாதிப்புகளை ஏற்படுத்த முடிகின் றனவே தவிர, சமூக அளவில், அரசியல் ரீதியான பாதிப்புகள் எதையும் ஏற்படுத்த முடியாதிருக்கின்றது. அரசியல், பொருளாதார, கலாசார ரீதியாக தமது சமூகம் முகங் கொடுக்கின்ற பிரச்சினைகளை வெற்றி கொள்வதற்குரிய உணர்ச்சிகரமான ஆயுதமாக மதத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு பதிலாக, இவர்கள் தமது சொந்த பலவீனங் களுக்குரிய வடிகாலாகவே மதத்தைப் பயன்படுத்துகின்றனர். இறுதி யில் இவர்கள் கற்பனைகளிலும், அற்புதங்களிலும் நம்பிக்கை வைப்ப வர்களாகவும் நடைமுறைச் செயற்பாடுகளில் சோர்வு அடைந்த வர்களாகவும் மாறுகின்றனர்.
தெற்கில் ஒரு தேசிய சிறுபான்மையினர் என்ற நிலையில், தமது இருப்பைப் பேணவேண்டிய அவசியத்தில் இருக்கின்ற தெற்கு முஸ்லிம்களின் நலன்களையும், அபிலாஷைகளையும் பிரதிபலிக் கின்ற தலைமையாக அமையவிருப்பவர்கள் முதலில் அங்கு நிலவு கின்ற எதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்வது அவசியம். தெற்கு முஸ்லிம்கள், பிரதேசரீதியான தொடர்ச்சியின்றி, சிறிய எண்ணிக்கை யில் சிதறிய நிலையில் வாழ்வதால், பொதுவான அரசியல் அமைப் பில் அவர்களை இணைப்பதற்குப் பதிலாக, வலிமைமிக்க, பிரதேச ரீதியான அரசியல் அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து இவர்கள்
42 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

சிந்திக்க வேண்டும். எனினும் இன்று நடைமுறையில் உள்ள அரசியல் முறைமையானது, இத்தகைய பிரதேச ரீதியான அரசியல் அமைப்பு களை முக்கியத்துவமற்றதாக்குகின்றது. (இருந்தும், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டும், ஓரளவுக்கு செல்வாக்கைப் பெற்றிருக்கின்ற 'மலையக மக்கள் முன்னணி' என்ற அமைப்புக்குக் கிடைத்திருக் கின்ற அரசியல் வெற்றியை தெற்கு முஸ்லிம்கள் ஒரு முன்னுதார ணமாகக் கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும்) இந்நிலையில், நடைமுறையிலுள்ள ஜனாதிபதி அல்லது பாராளுமன்ற முறைமை க்குள், அதிகாரங்கள் குவிக்கப்படுவதற்கு பதிலாக, சகல சமூகங்களும் தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு ஏற்ற விதத்தில் புதிய அரசு மற்றும் நிர்வாக ஒழுங்கமைப்பை ஏற்படுத்துவதற்காக இவர்கள் செயற்பட வேண்டும். இதைச் சாத்தியமாக்குவதற்கு, சிங்கள மற்றும் பிற சமூகங்களைச் சேர்ந்த ஜனநாயகப் பிரிவினருடன் இணைந்து செயற்படுவதற்கான வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டும் , இவற்றோடு பெளத்த - சிங்கள இனவாதம் குறித்து எச்சரிக்கை யாகவும், அதற்கு எதிராக உறுதியாகச் செயற்படக் கூடியவர்களா கவும் இருப்பது அவசியம். அடக்கப்பட்டிருக்கின்ற ஒரு சமூகம் தனது சொந்தப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே தன் விடுதலையைப் பெற்றுக் கொள்ள முடியும். உலகெங்கும் நிரூபிக்கப்பட்டிருக்கின்ற இந்த உண்மை, தெற்கு முஸ்லிம்களுக்கும் பொருந்தக் கூடியதே. தெற்கு முஸ்லிம்கள் இன்னமும் ஒரு சுயமான அரசியல் இயக்கத்திற்கு காலடி வைத்திராத நிலையில் இருக்க மறுபுறத்தில், கிழக்கு முஸ்லிம் கள் தமக்கென சுயமான அரசியல் இயக்கத்தை உருவாக்கி விட்டார் கள். படிப்படியே வளர்ந்து, பலமுற்று வருகின்ற கிழக்கு முஸ்லிம் களின் சுயமான அரசியல் இயக்கமானது, தெற்கு முஸ்லிம் தலை மையை நிராகரிக்கின்ற போக்கை ஏற்கனவே எடுத்து விட்டது. தமது நலன்களுடன் எவ்விதத்திலும் தொடர்பு கொண்டிராத தெற்கு முஸ் லிம் தலைமையின் அரசியல் வழி காட்டலை, கிழக்கு முஸ்லிம்கள் இனிமேல் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 43

Page 28
(வட) கிழக்கு முஸ்லிம்கள்
சமூகத்தன்மை
முதலில், இங்கு (வட) கிழக்கு முஸ்லிம்கள் என்ற தலைப்பின் கீழ் வருகின்ற விடயங்கள் பெரிதும் கிழக்கு முஸ்லிம்களைப் பற்றியே விபரிக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டியுள்ளது. ஏனெனில் இலங்கை அரசியல், குறிப்பாக வட -கிழக்கு அரசியலில் அவர்கள் முக்கியத்துவம் பெறுவதால் அவர்களது அரசியல் முன்னெடுப்புக்கள் அதிகக் கவனத்தைப் பெறுவதாக இருக்கின்றன. எனினும், வட -கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்கள் அனைவரும் பெரும்பாலும் ஒரேவிதமான சமூக - பொருளாதார அரசியல் நிலைமைகளையே முகம் கொடுப்பதால், இங்கு வாழ்கின்ற முஸ்லிம்கள் ஒரே விதமான பிரச்சினைகளையே சந்திக்க வேண்டியுள்ளது. இவ்வகையில், கிழக்கு முஸ்லிம்கள் பற்றிய விடயங்கள் பெரும்பாலும் வடக்கு முஸ்லிம்களுக்கும் பொருந்தக் கூடியதே.
கிழக்கு முஸ்லிம்களின் செறிவான சனத்தொகையும், அடர்த்தியான பரம்பலும், சுயசார்புக்குரிய பொருளாதார முறையும் இணைந்து அவர்களிடையே சுயமான அரசியல் இயக்கத்தையும், தனியான அரசியல் அமைப்புகளையும் தோற்றுவிக்கக் கூடியனவாக இருந்து வந்திருக்கின்றன. எனினும் 1980 களின் நடுப்பகுதி வரை கிழக்கு முஸ்லிம்களினால் இவற்றை உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. பதிலாக, அவர்களது அரசியல் செயற்பாடுகள் தெற்கு முஸ்லிம் தலைமையினாலும் அந்த தலைமை ஆதரவளித்த சிங்களக் கட்சிகளினாலும் தீர்மானிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய நிலைமை ஏற்பட்டதைப் புரிந்து கொள்வதற்கு, கிழக்கு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, கலாசார அம்சங்கள் குறித்து விரிவான பரிசீலனை மேற்கொள்வது அவசியமாகின்றது.
கிழக்கு முஸ்லிம்களிடையே நீண்ட காலமாக நிலவுடமை சார்ந்த உற்பத்தி முறை நிலவியது. 1815 இல் பிரித்தானிய ஆக்கிரமிப்
44 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

பாளர்கள் முழு இலங்கையையும் கைப் பற்றிய பின்னர் இங்கு முதலாளித்துவ உற்பத்தி உறவுகளைப் புகுத்தி வந்த போதிலும் 1950 களின் பிற்பகுதி வரை, கிழக்கு முஸ்லிம்களிடையே நிலவிய நிலவுடமை சார்ந்த, பின் தங்கிய உற்பத்தி உறவுகளில் குறிப்பிடக் கூடிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அதேபோன்று, பெரிதும் கொழும்பு சார்ந்த நகர்ப்புறங்கள் தழுவியதாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகால, சீர்திருத்தவாத அரசியல் இயக்கங்களும் கூட கிழக்கு முஸ்லிம்களை பாதிக்கவில்லை. 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து, தெற்கு முஸ்லிம்களிலும் அவர்களின் அரசியல் தலைமைகளிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி வந்த சமூக அரசியல் நிகழ்வுகள் எதுவும் கிழக்கு முஸ்லிம்களை பாதிக்கவில்லை. 1880 களில் நடைபெற்ற, தனியான முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கான போராட்டம், 1915ல் தெற்கு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள், 1940களில் தமிழ் தலைமை முன்வைத்த ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை, சமஷ்டி ஆட்சிக்கான கோரிக்கை பின்னர் 1950 களில் தீவிரமாக இடம்பெற்ற மொழிப் பிரச்சனை. போன்ற எதுவும் கிழக்கு முஸ்லிம்களில் குறிப்பிடக்கூடிய தாக்கங் களை ஏற்படுத்தவில்லை. அந்தளவிற்கு அவர்களிடையே நிலவுடமை சார்ந்த உறவுகள் வலிமை பெற்றிருந்தது.
கட்சி அரசியலின் அறிமுகம்:-
எனினும் 1931ல் சர்வஜன வாக்குரிமை அமூலுக்கு வந்ததன்பின்னர், கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் முதலாளித்துவ அரசியல் உறவுகள் புகுத்தப்பட்டன. இந்த அரசியல் உறவுகள், கிழக்கு முஸ்லிம்களின் வாழ்க்கை முறையின் இயல்பான வெளிப்பாடாக அமையாததால், அவர்கள் முதலாளித்துவ அரசியல் நோக்கி, உணர்வுபூர்வமாக ஈர்க்கப்படவில்லை. ஆரம்ப காலங்களில் அவர்களுக்குரிய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கூட தமிழ் பிரதிநிதிகள் அல்லது தெற்கு முஸ் லிம்கள் அரசியல்வாதிகளே பெற்று வந்தார்கள். இவ்வகையில் மாக் கான் மாக்கார், நல்லையா போன்றவர்களை இங்கு குறிப்பிடலாம்.
சுதந்திரத்தின் பின்னர் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையும், தெரிவுசெய்யப்படக்கூடிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் அதிகரித் ததால், பிரதேச மட்டத்தில் செல்வாக்கு மிக்க நபர்கள் பாராளுமன்ற
Gabilih gegh Filarogh 45

Page 29
அரசியலுக்குள் பிரவேசிப்பது இடம்பெறத் தொடங்கியது. இத்தகைய போக்கு கிழக்கு முஸ்லிம்களிடையிலும் ஏற்பட்டது. சமூக பொருளா தார ரீதியில் ஆதிக்க நிலையில் இருந்த முஸ்லிம் நிலவுடமையாளர் களே அரசியலிலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார்கள். இவர்களது அரசியல் பிரவேசம் கிழக்கு முஸ்லிம்களை அரசியல் ரீதியில் ஒன்று திரட்ட வேண்டும் என்பதையோ அல்லது கிழக்கு முஸ்லிம்களின் நலன்களைப் பேண வேண்டும் என்பதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு முஸ்லிம் தொகுதிக்கும் உரிய பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற அவசியத் தினாலும், இத்தகைய பிரதிநிதித்துவத்தின் மூலம் தமது சொந்த நலன்களும், அந்தஸ்தும் மேலும் விரிவடையும் என்பதாலுமே இவர்கள் அரசியலில் ஈடுபட்டார்கள். ஆரம்ப காலங்களில் பிரதான சிங்களக் கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் ஊடுருவியிராததாலும், தெற்கு முஸ்லிம் தலைமையால் கிழக்கு முஸ்லிம்கள் மீது செல்வாக்கு செலுத்த முடியாமல் இருந்ததாலும் இவர்கள் பெரும்பாலும் சுயேட்சை யாகவே போட்டியிட்டார்கள்.
இவ்வாறு பாராளுமன்ற அரசியலில் பங்குகொண்ட கிழக்கு முஸ்லிம் நிலவுடமையாளர்கள் உடனடியாகவோ அல்லது குறுகிய காலத்திலோ, தெற்கு முஸ்லிம் தலைமையின் வழிகாட்டலில், இரு பிரதான சிங்களக் கட்சிகளில் (முதலில் U.N.P. பின்னர் S.L.F.P. அல்லது U.N.P) இணைந்து கொண்டார்கள். தமது சொந்த நலன்களை யும் அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்வதற்காக அரசியலில் பிர வேசித்த கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள், விரைவிலேயே கட்சி அரசியலினால் தமக்குக் கிடைக்கக் கூடிய நன்மைகளை அறிந்து கொண்டார்கள். பிரதான சிங்களக் கட்சிகள் தேர்தல் காலங்களில் வழங்குகின்ற பொருளாதார மற்றும் பிரச்சார உதவிகளினால் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் அதிகரித்தன. மேலும் இக்கட்சிகள் ஆட்சியமைக்கக் கூடிய சந்தர்ப் பங்களைக் கொண்டிருந்ததால், இவற்றில் இணைந்து கொள்வதன் மூலமாக கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது நலன்களை அதிகரித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டன. இதனால் இவர்கள் இந்த சிங்களக் கட்சிகளில் ஆர்வத்துடன் இணை ந்து கொண்டார்கள். இவ்வாறு கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள், சிங்களக் கட்சிகளில் இணைந்ததன் மூலமாகத்தான், தெற்கு முஸ்லிம்
46 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

தலைமை தன்னை கிழக்கு முஸ்லிம்களின் தலைமையாகவும் மாற்றிக் கொள்ள முடிந்தது. ஒவ்வொரு தேர்தலும் முன்னைய தேர்தலை விட போட்டி மிக்கதாகவும், வெற்றிக்கான நிச்சயமற்றதாகவும், அதிக செலவுமிக்கதாகவும் மாறிக் கொண்டிருந்ததால் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது தேர்தல் வெற்றிக்காக சிங்களக் கட்சிகளில் தங்கியிருக்க வேண்டிய நிலை படிப்படியே அதிகரித்தது. இதனால் தாம் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனத்தை பெறவும், தமது வெற்றியை உறுதிப்படுத்தவும் சிங்களக் கட்சிகளில் ஏற்கனவே, செல்வாக்குடன் இருந்த தெற்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் தயவை இவர்கள் நாடினார்கள். இதன் விளைவாக கிழக்கு முஸ்லிம் அரசியல் வாதிகள் தெற்கு முஸ்லிம் தலைமையினால் கட்டுப்படுத்தப்படுகின்ற நிலை உருவாகியது. இவ்வாறு தெற்கு முஸ்லிம் தலைமை கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் கட்டுப்படுத்தியதனூடாக, முழு கிழக்கு முஸ்லிம்களையும் கட்டுப்படுத்துவதும், அவர்களின் தலை மையாக மாறுவதும் சாத்தியமாகியது.
கிழக்கு மாகாண முஸ்லிம்களிடையே முதலாளித்துவ வகைப்பட்ட பாராளுமன்ற தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் கூட, அவர்கள் இன்னமும் பின்தங்கிய நிலவுடமைச் சமூக உறவுகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இதனால் இவர்கள், தேர்தல்களில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களின் குடும்ப செல்வாக்கையோ அல்லது பிரதேசத்தையோ அடிப்படையாகக் கொண்டே பொதுவாக தமது வாக்குகளை வழங்கி வந்தார்கள். எனினும் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் கட்சி சார்ந்த அரசியலுக்குள் நுழைந்த போது, இவர்கள் இதுவரை காலமும் தாம் ஆதரவு வழங்கிய, தமது அபிமானத்துக்குரிய அரசியல்வாதியைப் பின் பற்றி, அவர் எந்தக் கட்சியில் இணைந்து கொண்டாரோ, அந்தக் கட்சியின் ஆதரவாளர்களாக மாறினார்கள். இவ்வாறு கிழக்கு முஸ் லிம்களிடையே புகுத்தப்பட்ட கட்சி அரசியல், பின்னர் மாற்ற முடியாத அளவுக்கு இறுகி, பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப் பட்டு வந்தது.
கிழக்கு முஸ்லிம்களிடையே கட்சி அரசியல் புகுத்தப்பட்ட காலத்தில் அவர்களுக்கு முன்னே இரு பிரதான சிங்களக் கட்சிகளுடன், தமிழ் கட்சிகளும் காணப்பட்டன. தனித்துவமானவையாகவும் ஒன்றுக் கொன்று முரணானவையாகவும், அரசியலில் அனுபவமிக்கவை
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 47

Page 30
யாகவும் விளங்கிய இவ்விருவகைக் கட்சிகளும் அன்றைய கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அந்நியமானவையாகவே இருந்தன. இதில் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கு சமஷ்டி முறைகோரி போரா டிக் கொண்டிருந்தது. சிங்களக் கட்சிகள் அந்தக் கோரிக்கைக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்தன. இவற்றிற்கிடையே கிழக்கு முஸ்லிம் கள் அரசியல் ரீதியில் விழிப்புணர்வூட்டப்படாதவர்களாக இருந்த தால் சுயாட்சி முறை குறித்தும், அதனால் தமக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் கிழக்கு முஸ்லிம்கள், சிங்கள, தமிழ் கட்சிகளில் எந்த ஒன்றை நோக்கியும் உணர்வுபூர்வமாக ஈர்க்கப்படவில்லை. தமது அபிமான த்துக்குரிய அரசியல்வாதி இவற்றில் எந்தக் கட்சியில் இணைந்து கொண்டாலும், அதற்கு ஆதரவு வழங்கக் கூடியவர்களாகவே இருந் தார்கள். இத்தகைய நிலையில், கிழக்கு முஸ்லிம்களின் கட்சி ஆதர வைத் தீர்மானித்ததில் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் சொந்த நலன்களே அடிப்படையாக அமைந்தன.
கிழக்கு முஸ்லிம்களிடையே கட்சி அரசியல் புகுத்தப்பட்ட காலப்பகுதியில் தமிழ் மக்கள் தம்மீதான சிங்கள அரசின் இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக (குறிப்பாக மொழி பிரச்சினைக்கூடாக) அரசியல் ரீதியில் ஒன்றிணைந்து கொண்டிருந்தார்கள். பெளத்த சிங்கள அரசை எதிர்த்து, தமது உரிமைகளுக்காகப் போராடுவதுதான் தமிழர் அரசியல் இயக்கத்தின் பொதுவான போக்காக இருந்தது. இத்தகைய சூழலில், தமிழ் கட்சிகளில் இணைவதால் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது சொந்த நலன்களை உயர்த்திக் கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கவில்லை. மறுபுறத்தில் தமிழ் மக்களின் அரசியல் இயக்கத்திற்கு எதிராக தெற்கு முஸ்லிம் தலைமை தீவிர மாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தது. தமிழ் மக்களின் அரசியல் இயக்கத்தில் முஸ்லிம்களை இணையவிடமால் தடுக்கும் நோக்கத்தில், பாராளுமன்றத்திலும், வெளியிலும் பல்வேறு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டார்கள். முஸ்லிம்கள் மத்தியில் தமிழ் மொழியை புறக்கணித்து சிங்கள மொழியையும் அரபு மொழியையும் உயர்த்திப் பிடிக்கின்ற பிரச்சாரத்தில் அவர்கள் தீவிரமாக இறங்கினார்கள். இதேவேளை பெளத்த - சிங்கள அரசும், இனவாத சக்திகளும் தமிழ் மக்களின் மீது வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்ளத் தொடங் கின. அரசியல் உரிமைகளைக் கோரி சாத்வீகப் போராட்டத்தை
48 (ph Oss(ph Rita Troch

முன்னெடுத்த தமிழ் அரசியல்வாதிகள் மீது மட்டுமன்றி, சாதாரண தமிழ் பொதுமக்களின் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான நிலையில், தமிழ் கட்சிகளில் இணைவதால் தமது தொடர்ந்த அரசியல் வாழ்வுக்கும், நலன்களுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்று கிழக்கு முஸ்லிம் அரசியல் வாதிகள் உணர்ந்தார்கள். கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை, மொழிப் பிரச்சினை சம்பந்தமாக அவர்களிடையே குறிப்பிடக்கூடிய தாக்கங்கள் எதுவும் அப்போது ஏற்படவில்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு, அவர்க ளிடையே அன்று நிலவிய பொருளாதார மற்றும் ஆன்மீக வாழ்க்கை 1Tைகள் குறித்து பரிசீலிப்பது அவசியம்.
கிழக்கு முஸ்லிம்கள் தொடர்ச்சியாக நிலவுடமை உற்பத்தி உறவு களுக்குள் கட்டுப்பட்டிருந்ததால், அவர்களது பொருளாதார அடித் தளங்களாக நிலமும் ஏனைய இயற்கை மூலங்களுமே அமைந் திருந்தன. தமது பொருளாதார வாழ்வுக்கு அரச வேலை வாய்ப்பு களை நாடுகின்ற போக்கு அவர்களிடையே சமூக அளவில் ஏற்பட வில்லை. அரச வேலை வாய்ப்புகளில் தங்கியிருப்பவர்களும் அதற்காக தமது தாய்மொழி மூலக் கல்வியை வேண்டி நிற்பவர்களும் தமது மொழிக்கு ஏற்படுகின்ற பாதிப்பை தீவிரமாக உணர்கின்றனர். இவர்கள் தமது மொழிக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை சமூகமயப் படுத்துவதில் உணர்வுபூர்வமாக ஈடுபடுகின்றனர். இத்தகைய பிரிவின ரைக் கொண்டிருக்கின்ற சமூகம், தனது மொழியை தன்னுடலின் பிரிக்க முடியாத அங்கமாக உணர்கின்றது. தனது மொழிக்கு ஏற்படு கின்ற அவமானத்தை, தனது சொந்த அவமானமாகக் கருதுகின்றது. ஆனால் அன்றைய கிழக்கு முஸ்லிம்களிடையே இத்தகைய பிரிவினர் உருவாகியிராததால் (அல்லது மிகக் குறைவான நபர்களே இருந் தனர்) தமது தாய் மொழிக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை கிழக்கு முஸ்லிம்களினால் சமூக அளவில் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அத்துடன் அன்றைய கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் 'கல்வி' ஆன்மீகத் தேவையுடன் இணைத்தே புரிந்து கொள்ளப்பட்டது. 'சீனா சென்றாயினும் சீர் கல்வி கற்றுக்கொள்' என்ற நபிகள் நாயகத்தின் அறிவுரையில், ஆன்மீகக் கல்வியின் முக்கியத்துவம் உணர்த்தப்பட் டிருக்கின்றது. அவர்களது ஆன்மீக நடவடிக்கைகள் பெரிதும்
(podch seph Jistoph 49

Page 31
மதத்துடன் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்ததால், மதத்துடன் இணைந்ததாகவே அவர்களது கல்வியும் அமைந்தது. முஸ்லிம்களின் மத நூலான குர்ஆன் அரபு மொழியில் எழுதப்பட்டிருப்பதாலும், இறைவன் அரபு மொழியிலேயே அதை அருளினான் என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாலும் தமது வணக்கத்தின் போது அரபு மொழியை ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டியிருப்பதாலும் அவர்கள் அரபு மொழியை புனிதமான மொழியாகக் கருதுகின் றார்கள். அவர்கள் அரபு மொழியைக் கற்பது அவசியமாக்கப் பட்டிருக்கிறது. இதனால், ஆண், பெண் வேறுபாடுகளின்றி, மிக இளவயதிலிருந்தே அவர்கள் அரபு மொழியை வாசிக்கக் கற்கிறார்கள். மேலும் அன்றைய கிழக்கு முஸ்லிம்கள் ஐரோப்பியரின் கல்வி குறித்து எதிர்மறையான மனோபாவத்தைக் கொண்டிருந்தார்கள். இக்கல்வி, மதரீதியில் தமது பரம்பரை எதிரியாகவிருந்த கிறிஸ்தவர்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததோடு அது மத கலாசார மாற்றங்கள் ஏற்படுவதையும் இலக்காகக் கொண்டிருந்ததால் கிழக்கு முஸ்லிம்கள் அக் கல்வியைக் கற்பதில் ஆர்வம் காட்டியிருக்கவில்லை. சுதந்திரத் திற்குப் பின்னர், இக் கல்வியும் சுதேசத் தன்மைகள் அறிமுகப் படுத்தப்பட்ட போதிலும் கூட, கல்வி குறித்து கிழக்கு முஸ்லிம் களிடையே நிலவிய எதிர்மறையான மனோபாவம் உடனடியாக மாற்றமடையவில்லை. இதனால் தமிழ் மொழியை வாசித்தறியக் கூடியவர்கள், அதாவது அதை தொட்டுணரக் கூடியவர்கள் அன்றைய கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் குறைவாகவே இருந்தார்கள்.
இவ்வாறு தமிழ் மொழியானது அன்றைய கிழக்கு முஸ்லிம்களின் பொருளாதார நலன்களுடன் இணைந்திராததாலும், அவர்களின் ஆன்மீக நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்காததாலும், இம் மொழி அவர்களுக்கு வரிவடிவில் பரிச்சயமற்றிருந்ததாலும் அவர்கள் தமிழ் மொழி மீது தீவிர ஈடுபாடு காட்டவில்லை. எனவே அன்று தமிழ் மொழிக்கு பாதிப்புகள் ஏற்பட்ட போது, கிழக்கு முஸ்லிம்கள் அப் பாதிப்புகள் குறித்து உணர்வுபூர்வமாக தூண்டப்படவில்லை.
இவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் இயக்கம் தொடர்பாக ஒரு புறத்தில் தெற்கு முஸ்லிம் தலைமையும், பெளத்த - சிங்கள இன வாதமும் வெளிப்படுத்திய உணர்வுபூர்வமான எதிர்ப்புகளும்,
SO முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

மறுபுறத்தில் கிழக்கு முஸ்லிம்களிடையே நிலவிய விழிப்புணர் வில்லாத நிலைமையும் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிப்பதில் கணிசமான தாக்கங் களைச் செலுத்தின. உண்மையில் கிழக்கு முஸ்லிம்கள் அரசியல்வாதி கள் தமது சொந்த மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பார்களாயின், தெற்கு முஸ்லிம் தலைமையினதும், பெளத்த -சிங்கள இனவாதத் தினதும் எதிர்ப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல், கிழக்கு முஸ்லிம் களை அரசியல் மயப்படுத்துவதற்காக உழைத்திருப்பார்கள். ஆனால் கிழக்கு முஸ்லிம்கள் அரசியல்வாதிகளோ, தமது சொந்த நலன்களை உயர்த்திக் கொள்வதற்காகவே அரசியலுக்குள் நுழைந்திருந்தார்கள். இதனால் இத்தகைய எதிர்ப்புகளை சமாளித்து அன்றைய கிழக்கு முஸ்லிம்களை அரசியல் மயப்படுத்தி, ஒன்று திரட்ட வேண்டிய கடினமான அரசியல் பணியை மேற்கொள்வது பற்றி இவர்கள் சிந்திக்கவில்லை. மாறாக சாதாரண பாராளுமன்ற அரசியல்வாதி களாகவே இவர்கள் நடந்து கொண்டார்கள். இதன் பின்னர் தெற்கு முஸ்லிம்கள் தலைமையைப் போன்று இந்த கிழக்கு முஸ்லிம் அரசியல் வாதிகளும், பெளத்த - சிங்கள அரசின் திட்டமிட்ட இனச் சிதைப்பு நடவடிக்கைகளினால் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அனைத்துப் பாதிப்புகளையும் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருப்பவர்களாக மாறினார்கள்.
இதற்கிடையே, ஆங்காங்கே சில கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் கட்சிகளின் சார்பில் தேர்தல்களில் போட்டியிட்டார்கள். அவர்களில் பெரும்பாலானோர் வெற்றி பெற்றும் இருந்தார்கள். இவ்வகையில் காரியப்பர், எம்.எம். முஸ்தபா, எம்.சி. அஹமட், எம்.ஈ.எச்.முகம்மதலி. போன்றோரைக் குறிப்பிடலாம். எனினும் இந்த கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மக்களின் அரசியல் இயக்கத்தையும், போரட்டங்களையும் ஏற்றுக்கொண்டதன் விளை வாக தமிழ் கட்சிகளில் போட்டியிடவில்லை. மாறாக தமிழ் மக்கள் கணிசமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்குரிய தேர்தல் தொகுதிகளில் தாங்கள் தமிழ் கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதன் மூலம், முஸ்லிம் கள் மத்தியில் தமக்கிருக்கின்ற தனிப்பட்ட செல்வாக்குடன், தமிழ் மக்களின் வாக்குகளையும் பெற்று இலகுவாக வெற்றி பெற முடியும் என்பதை இவர்கள் கண்டார்கள். இந்த ஒரே காரணத்திற்காகவே இவர்கள் தமிழ் கட்சிகளில் போட்டியிட்டார்கள்.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 51

Page 32
மறுபுறத்தில் தமிழ் தலைமையோ, செல்வாக்குமிக்க ஒரு முஸ்லிம் வேட்பாளரை தமது கட்சியில் போட்டியிட வைப்பதன் மூலமாக தமது கட்சிக்கு ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதில் அக்கறை காட்டினார்களே தவிர, தமது அரசியல் நிலைபாடுகளை, இந்த முஸ்லிம் அரசியல்வாதி எவ்வளவு தூரம் ஏற்றுக் கொண்டிருக் கிறார் என்பதில் அக்கறை காட்டவில்லை. மேலும் இத்தகைய சந்தர்ப் பங்களை பயன்படுத்தி பிற சமூகங்களை ஒடுக்குகின்ற பெளத்த - சிங்கள அரசுக்கு எதிராகப் போராடக் கூடியவகையில் முஸ்லிம் களுக்கு விழிப்புணர்வூட்ட தமிழ் தலைமை நேர்மையாக முற்பட வில்லை. இவ்வகையில் தமிழ்க் கட்சிகளுக்கும், கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட இத்தகைய தேர்தல் இணைவு என்பது முற்றிலும் பாராளுமன்ற சந்தர்ப்பவாதக் கூட்டாகவே அமைந்திருந்தது. இதனையும் விட வாய்ப்பான இன்னொரு நிலைமை தோன்றும் போது இந்த சந்தர்ப்பவாதக் கூட்டு, வேறொரு சந்தர்ப்பவாதக் கூட்டினால் பிரதியீடு செய்யப்படுகின்றது. எனவே வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே, இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் வெற்றி பெற்ற தமிழ்க் கட்சியிலிருந்து விலகி, பொதுவாக அப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய சிங்களக் கட்சியில் இணைந்து கொண்டார்கள். (இத்தகைய சந்தர்ப்பங்களில், 'முஸ்லிம்கள் தொப்பி புரட்டிகள்' என்ற கருத்தை வெளிப்படுத்தி, தமிழ் தலைமை தமது சந்தர்ப்பவாதத் தன்மைகளை மறைத்துக் கொண்டது. முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து தமிழ் தலைமை வெளிப்படுத்திய இத்தகைய கருத்துக்கள், அத்தலைமையின் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருந்த முஸ்லிம் விரோத உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக அமைந்தன. தமிழ் தலைமை முஸ்லிம்களைத் தம்மில் ஒருபகுதியாக உண்மையிலேயே கருதியிருப்பார்களானால், இந்த ஒருசில முஸ்லிம் அரசியல்வாதி களைக் காரணமாகக் காட்டி, முழு முஸ்லிம் சமூகத்தையும் இழிவாக மதிப்பிட்டிருக்க முடியாது. கட்சி மாறிய முஸ்லிம் அரசியல்வாதி களைப் போன்ற தமிழ் அரசியல்வாதிகளில் சிலரும் கூட அவ்வப் போது கட்சி மாறியிருக்கிறார்கள். இத்தகைய சந்தர்ப்பங்களில் தமிழ்த் தலைவர்கள் அந்த அரசியல்வாதிகளை இனத்துரோகிகளாக அடை யாளம் காட்டினார்களே தவிர, அவர்களைக் காரணமாகக் கொண்டு முழுத்தமிழ்மக்களையும் இழிவுபடுத்த ஒருபோதும் முற்படவில்லை.)
52 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

இவ்விதமாக, 1960களின் ஆரம்பத்தில், முழு கிழக்கு முஸ்லிம்களும் இரு சிங்களக் கட்சிகளின் பரம்பரை ஆதரவாளர்களாக மாற்றப்பட்டு விட்டனர்.
கிழக்கு முஸ்லிம்களிடையே முதலாளித்துவ உறவுகளின் உருவாக்கமும் புதிய சமூகப் பிரிவினரின் தோற்றமும்.
கிழக்கு முஸ்லிம்களிடையே 1950 கள் வரையிலும், நிலவுடமை உறவுகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையே நிலவி வந்தது. இதனால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும், ஏனைய சமூகங்களிலும் ஏற்பட்டுக் கொண்டிருந்த புதிய வாழ்க்கை முறை சார்ந்த விழிப்புணர்வுகள் கிழக்கு முஸ்லிம்களிடையே சமூக அளவில் ஏற்பட முடியவில்லை. ஆயினும் 1950களின் பிற்பகுதியில், கிழக்கில் இடம்பெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகள் அவர்களிடையே முதலாளித்துவ வகையிலான உறவுகள் உருவாவதற்கும், புதிய சமூகப்பிரிவினர் தோன்றுவதற்கும் காரணமாக அமைந்தன.
: ل6(68}29
() நிலச்சீர்திருத்தம் (i)விவசாயத்தில் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டமை. (i) தாய்மொழிக் கல்வியின் துரித அமுலாக்கம் என்பவையாகும்.
1950 களில் பரவலாக இடம்பெற்ற நிலச்சீர்திருத்தமானது (குறிப்பாக நிலப்பகிர்வும் புதிய குடியேற்றங்களும்), கிழக்கு முஸ்லிம்களின் வர்க்க ஒழுங்கமைப்பில் குறிப்பிடக் கூடிய மாற்றங்களை ஏற்படுத்தின. இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக, கிழக்கு முஸ்லிம்களின் மத்தியில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளும், விவசாயக் கூலியாட் களும் அதிக எண்ணிக்கையில் உருவானார்கள். முன்னர் குத்தகை விவசாயிகளோ அல்லது நிலவுடமையாளர்களின் கீழ் கூலியாட் களாகவோ கட்டுப்பட்டிருந்தவர்கள் இப்போது சொந்தமாகக் காணி பெற்ற சுயேட்சையான விவசாயிகளாகவும், சுயேட்சையான கூலியாட் களாகவும் மாறினார்கள். இதன் விளைவாக கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் நிலவிய இறுகிய நிலவுடமை உறவுகளில் உடைவுகள் ஏற்பட்டு சுதந்திரமான முதலாளித்துவ உறவுகள் படிப்படியே உருவாகத் தொடங்கின.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 53

Page 33
கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில், கிழக்கு முஸ்லிம்களின் விவசாயத் தொழிலில் இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உழவு இயந் திரம், நெல் அரைக்கும் இயந்திரம், தெளி கருவிகள். என பல்வேறு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, கிழக்கு முஸ்லிம்களின் சமூகத்தன்மையில் மேலும் தீவிர மாற்றங்கள் இடம் பெற்றன. இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் விவசாயத் தில் மனிதவலு பயன்படுத்தப்படுவது வெகுவாக குறைந்து விட்டது. இதனால் நிலவுடைமையாளர்களிடம் இன்னமும் கட்டுப்பட்டிருந்த ஏராளமான நபர்கள் வேலையற்றவர்களாகவும், அவசியமற்றவர் களாகவும் மாற்றப்பட்டார்கள். எனவே அவர்களை விடுவிப்பது தவிர்க்க முடியாததாகியது. இவ்வாறு இயந்திரங்கள் ஏராளமானோரை விடுவித்து விட்டன. இதுவரை காலமும் கிழக்கு முஸ்லிம்களிடையே விவசாயத்துடன் தொடர்பான கூலி, குத்தகை. என்பனவும், ஏனைய கொடுப்பனவுகளும் தானியங்களின் வடிவத்திலேயே வழங்கப்பட்டு வந்தன. இப்போது இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கொடுப்பனவுகள் அனைத்தும் பண வடிவத்திற்கு மாற்றப்பட்டன. இதுவரை காலமும் தமது பிரதேசத்திக்குள்ளேயே எல்லைப்பட்டிருந்த பலர், இப்போது விவசாய கூலியாட்களாக, எங்கோ தொலைதூரத்தில் இருந்த, முன்பின் அறிந்திராத பிரதேசங்களை நோக்கி, பருவகால உழைப்புக்காகச் செல்லத் தொடங்கினார்கள். இவற்றுடன் கூடவே, இந்த இயந்திரங்களின் பாவனையால் கிழக்கு முஸ்லிம்களிடையே இன்னுமொரு முக்கியமான விளைவும் ஏற்பட் டது. அதாவது முன்புபோன்று, விவசாயத் தொழிலில் குடும்பத்தைச் சேர்ந்த முழு அங்கத்தினர்களும் ஈடுபட வேண்டிய அவசியம் இப் போது இல்லை. இயந்திரங்களையும், தேவையான அளவுக்கு கூலியாட்களையும் பெறக்கூடியதாக இருந்ததால், விவசாயத் தொழி லில் சிறுவர் சிறுமியரின் உழைப்பைத் தவிர்ப்பது சாத்தியமாகியது. இதன் நேரடி விளைவாக, கிழக்கு முஸ்லிம் விவசாயிகளிடையே, குறிப்பாக, நடுத்தர விவசாயிகளிடையே கல்வி கற்கக் கூடிய சந்ததி ஒன்று உருவாகத் தொடங்கியது.
இவ்வாறு கிழக்கு முஸ்லிம்களிடையே தோன்றிய புதிய, இளஞ் சந்ததியினரின் கல்வி ஆர்வத்தைத் தூண்டிய சிறப்பான காரணியாக தாய்மொழி கல்வியின் துரித அமுலாக்கம் அமைந்தது. கிழக்கில் கணிசமான எண்ணிக்கையில் தமிழ் மொழி மூலம் பாடசாலைகள்
54 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

புதிதாக 蠶譽豐蠶 பாடசாலைகள் உருவாக் கிழக்கன் முஸ்லிம் இளம் சந்ததியினர் மிகுந்த ஆர்வத்துடன் கல்வி கற்க ஆரம்பித்தார்கள். குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் கல்வி கற்கும் ஆர்வம் தீவிரமாக இருந்தது. நவீன உலகில் கல்வி என்பது ஒருவரின் அறிவைக் குறிக்கின்ற காரணியாக மட்டும் தொழிற்படவில்லை. கூடவே முக்கியமாக அவரின் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்தைத் தீர்மானிக்கின்ற காரணிகளில் ஒன்றாகவும் மாற்றமடைந்திருக்கின்றது. கல்வியானது நவீன சமூகத்தில் புதிய அதிகார படிநிலை அமைப்பு உருவாவதற்கும், செல்வாக்குமிக்க நபர்கள் மற்றும் குடும்பங்கள் தோன்றுவதற்கும் காரணமாக அமைகின்றது. இந்நிலையில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களாகவும் எப்படியும் தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பவர்களாகவும் இருக்கின்ற நடுத்தர வர்க்கத்தினர் கல்வியை தமது மூலதனமாகக் கொள்கின்றனர். தமது தேவைகளை ஒறுத்துக் கொண்டு அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை கல்விக்காக வழங்குகின்றனர். 1970 களில் இருந்து கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலும் இத்தகைய போக்கு ஏற்பட்டது.
1970 பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணியின் ஆட்சிக்காலத்தில் வங்கிகள், கச்சேரி போன்ற நிர்வாகத் துறையிலும், ஆசிரியத் தொழி லும், போக்குவரத்து, கூட்டுறவு அமைப்புகள் போன்றவற்றிலும் தொகுதி அடிப்படையில் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்பு கள் வழங்கப்பட்டன. இதன் விளைவாக முன் எப்பொழுதையும் விட, அதிக எண்ணிக்கையில் கிழக்கின் படித்த முஸ்லிம் இளைஞர்கள் அரசாங்க உத்தியோகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டனர். அப்போ தைய கல்வி அமைச்சரான பதியுத்தீன் மஃமூத் இஸ்லாம் பாடம் கற்பிக்கக் கூடிய மெளலவி ஆசிரிய நியமனங்களோடு, வேறு பாடங் களைக் கற்பிப்பதற்கும் ஏராளமான முஸ்லிம் ஆசிரியர்களை நியமித் ததும், இவர்களில் அதிகமானோர் கிழக்கு முஸ்லிம்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவற்றைவிட அப்போதைய அரசாங்கத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகளாகவிருந்த கிழக்கின் மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளால் (இவர்களில் இருவர் பிரதி அமைச்சர் களாக இருந்தனர்.) வழங்கப்பட்ட அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 55

Page 34
மேலும் 1950 களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்த 'முஸ்லிம் பாடசாலைகள்' என்ற தனிப்பிரிவானது, ஒரு முஸ்லிம் நபர் கல்வி அமைச்சராக இருந்த காரணத்தால் கூடிய கவனத்தைப் பெற்றது. முஸ்லிம் பாடசாலைகள் தரமுயர்த்தப்படு வதும், முஸ்லிம் பெண்களுக்கு என தனியான பாடசாலைகள் உரு வாக்கப்படுவதும், புதிதாக முஸ்லிம் பாடசாலைகள், முஸ்லிம்களுக் கான பயிற்சி நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் என்பன அமைக்கப் படுவதும் பரவலாக இடம் பெற்றன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இத்தகைய நிகழ்வுகள் பரந்த அளவில் இடம்பெற்றன. மேலும் 1970 களின் நடுப்பகுதியில் மாவட்ட அடிப்படையிலான பல்கலைக்கழக அனுமதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டதால் கிழக்கு மாகாண முஸ்லிம் மாணவர்களும் (குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம் மாணவர்கள்) அதிக அளவில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டன.
1970 களில் இடம்பெற்ற மேற்கூறிய நிகழ்வுகளினால் கிழக்கு முஸ்லிம்களின் கல்வி ஆர்வம் மேலும் தீவிரமடைந்தது. பணக்கார, நடுத்தர விவசாயிகளின் பிள்ளைகள், வர்த்தகர்களின் பிள்ளைகள் என்பவர்களோடு வறிய விவசாயிகள் மற்றும் மீனவக் குடும்பங் களைச் சேர்ந்த பிள்ளைகளும் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டினார்கள். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாக 1970 களின் இறுதிப்பகுதியில், பல்வகை ஆர்வங்கள் கொண்ட, படித்த, அரசாங்க உத்தியோகங்களில் தம்மை இணைத்துக் கொண்ட, இணைத்துக் கொள்ள முயன்ற ஒரு புதிய பிரிவினர் கிழக்கு முஸ்லிம்களிடையே உருவாகியிருந்தனர். இப் பிரிவினர்தான் குறுகிய காலத்திற்குள் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தலைமையை வென்று கொள்ளவிருப்பவர்கள். இவர்கள் தான் (வட) கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தைக் கோரவிருப்ப வர்கள்.
56 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

புதிய சமூகப் பிரிவினரால்
ஏற்பட்ட பாதிப்புகள்
சமூக கலாசார தளங்களில் ஏற்பட்ட பாதிப்புகள்:-
கிழக்கு முஸ்லிம்களிடையே உருவாகி வந்த படித்த பிரிவினருக்கு அங்கு ஏற்கனவே நிலவி வந்த விவசாயிக்குரிய மந்தமான வாழ்க்கை முறை பொருத்தமானதாக அமையவில்லை. நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்தின் கீழேயே இன்னமும் இருந்த, சமூக, அரசியல், நிறுவனங்களில் இவர்கள் திருப்தி பெறவில்லை. எனவே இவர்கள் தமக்கென புதிய வாழ்க்கை முறைகளை உருவாக்க முயன்றார்கள். இளைஞர் சங்கங்கள், சமூக சேவை நிறுவனங்கள், கல்வி மற்றும் இலக்கிய வட்டங்கள். என பல்வேறு புதிய சமூக, கலாசார நிறுவனங்களை இவர்கள் உருவாக்கினார்கள். பெரிதும் நடுத்தர வர்க்கம் என்ற எல்லைக்குள் இதுவரைக்கும் நலிவுற்றிருந்த இப்படித்த பிரிவினர், தமக்குச் சாதகமான முறையில் சமூகத்தை ஒழுங்குபடுத்த முயன்றனர். ஏற்கனவே இருக்கின்ற சமூக நிறுவனங்களைக் கட்டுப் படுத்துவதன் மூலமும் அரசியல் ஆதிக்கம் செலுத்துவதன் மூலமும் இவற்றைச் சாதிக்க முடியும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். இதனால் முஸ்லிம்களின் சமூக நிறுவனங்களில் மிகவும் பலமிக்கதான பள்ளி வாசல் நிர்வாகத்திலும் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்றனர்.
எனினும் இந்த படித்த பிரிவினரால் தாம் எதிர்பார்த்தபடி செயற்பட முடியவில்லை. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஏற்கனவே சக்தி பெற்ற வர்களாகவும், சமூக, அரசியல் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களாகவும் இருந்த நிலவுடமையாளர்களின் கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்க வேண்டியேற்பட்டது. 'உயர்' பரம்பரை க்கு என உரித்தாக்கப்பட்டிருந்த பள்ளிவாசல் நிர்வாகத்திலும், அரசியல் அதிகாரத்திலும் இருந்து தமது ஆதிக்கத்தை இழப்பதற்கு இந்த நிலவுடமையாளர்கள் தயாராக இருக்கவில்லை. வலிமைமிக்க
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 57

Page 35
இந்த நிலவுடமையாளர்களை எதிர்த்து வெல்லக் கூடிய நிலையில் அன்றைய படித்த பிரிவினரின் சமூக, பொருளாதார நிலைமைகள் இருக்கவில்லை. இவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசங்களில் வெகுசன ரீதியான ஆதரவையும், அபிமானத்தையும் இன்னமும் பெற்றுக் கொள்ளவில்லை. மேலும் இவர்கள் தமது உத்தியோக வாய்ப்பு களுக்கும், அவை சார்ந்த நலன்களுக்கும், நிலவுடமையாளர்களின் நேரடி வாரிசுகளாகவோ அல்லது அவர்களின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாகவோ இருந்த பாராளுமன்ற பிரதிநிதிகளிலேயே முற்றிலும் தங்கியிருந்தனர். இவ்வாறான நிலையில், படித்த முஸ்லிம் பிரிவினரால் நிலவுடமையாளர்களை எதிர்த்து போராட முடியவில்லை. இவர்களின் சமூக, கலாசார நிறுவனங்களில் பெரும் பாலானவை விரைவிலேயே கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டிய நிலைக்கும் ஆளாகின. நிலவுடமையாளர்கள் படித்த இளைஞர்களில் கணிசமானோரை தங்களின் பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். படித்த இளைஞர்கள் தமது சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்வதற்கான வழிகள் அடைக்கப்பட்ட நிலையில், நிலவுடமைக் குடும்பங்களுடன் திருமண உறவை ஏற்படுத்துவதன் மூலம் தம்மை உயர்த்திக் கொள்ள லாம் என்ற எதிர்பார்ப்பில் இத்தகைய திருமண உறவுகளை ஆர்வத்து டன் ஏற்றுக் கொண்டார்கள்.
நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்தின் காரணமாக, சமூக, அரசியல் நிறுவனங்களில் படித்த முஸ்லிம் பிரிவினர் ஆளுமையைச் செலுத்த முடியாமல் தடுக்கப்பட்ட போதிலும், அவர்களில் ஒருசாரார் இலக்கி யத் துறையில் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். இவர்கள் தமது படைப்புகளில் நிலவுடமையாளர்களுக்கும் (அதாவது போடி யார், ஹாஜியார் என்ற வடிவில்), முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் எதிரான கருத்துக்களை ஆவேஷமாக வெளிப்படுத்தினார்கள். மருதூர் கொத்தன், மருதூர்க்கனி, எம்.எச்.எம்.அஷ்ரப், வை. அஹமட், எஸ்.எல்.எம். ஹனிபா, எம்.எம். மஃறுப் கரீம். போன்றோரை இந்தவகையில் குறிப்பிடலாம். (பின்னாட்களில் இவர்களில் கணிச மானோர் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார்கள் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.)
58 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

அரசியல் தளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள்:-
அன்றைய படித்த முஸ்லிம் பிரிவினரின் அரசியல் செயற்பாடுகள் மிகவும் பலவீனப்பட்டும், எல்லைப்படுத்தப்பட்டும் இருந்தன. முஸ்லிம் அரசியல்வாதிகளும், அவர்களுக்கு பக்கபலமாக விளங்கிய நிலவுடமையாளர்களும் இரு சிங்களக் கட்சிகளில் செல்வாக்குப் பெற்றவர்களாக விளங்கினார்கள். இவர்களின் செல்வாக்கை மீறி, படித்த முஸ்லிம் பிரிவினரால் சிங்கள கட்சிகள் சார்ந்த அரசியலுக்குள் ஊடுருவ முடியவில்லை. இவர்களின் அரசியல் பங்களிப்பு என்பது, ஏற்கனவே செல்வாக்குடன் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாகவே அமைந்திருந்தது.
எனினும் சிங்கள கட்சிகளில் இணைந்திருந்த முஸ்லிம் அரசியல் வாதிகளினால் தமது அரசியல் வாழ்வு கட்டுப்படுத்தப்படுவதை மாற்றியமைத்து, தமது அரசியல் சுயேட்சையை நிலைநாட்ட விரும்பிய சிலர், 1970 களில் நடுப்பகுதியில் 'முஸ்லிம் ஐக்கிய முன்னணி' என்ற தனியான அரசியல் அமைப்பை உருவாக்கி னார்கள். எம்.எச்.எம்.அஷ்ரப், ஏ.எம்.சம்சுதீன், ஊதுமான் லெப்பை போன்றோர் இப்புதிய கட்சியை அமைப்பதில் முன்னணிப் பாத்திரம் வகித்தார்கள். எனினும் கிழக்கு முஸ்லிம்கள் இரு பிரதான சிங்களக் கட்சிகளின் 'பரம்பரை' ஆதரவாளர்களாக விளங்கியதோடு, தமக்கென ஒரு சுயமான அரசியல் இயக்கம் தேவை என்ற உணர்வை இன்னமும் பெற்றுக்கொள்ளாதவர்களாகவும் இருந்ததால், இந்த புதிய அரசியல் கட்சியினால் அவர்கள் கவரப்படவில்லை. இந்நிலையில் பாராளுமன்ற அரசியலுக்குள் காலூன்றிவிடுவதற்கு முயற்சித்த புதிய முஸ்லிம் அமைப்பின் முக்கியஸ்தர்களுடன், தேர்தல் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வந்தது. அன்றைய கட்டத்தில் தமிழ்த் தலைமை முன்மொழிந்திருந்த தமிழீழக் கோரிக்கைக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டியிருந்ததால், 1977 ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. தமிழீழக் கோரிக்கைக்கு தமிழ் மக்களின் ஆதரவோடு , வடக்கு - கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் கணிசமான ஆதரவையும் பெற்றுக் கொண்டால் அக்கோரிக்கைக்கு வலிமை பெறும் என்று தமிழ் தலைமை கருதியது. கிழக்கின் மரபுவழி முஸ்லிம் அரசியவாதிகள், தமிழீழக்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 59

Page 36
கோரிக்கையை முற்றாக எதிர்த்து நின்ற சிங்கள கட்சிகளில் இணைந் திருந்ததால், அவர்களுடன் தேர்தல் உடன்பாட்டை ஏற்படுத்துவது கூட்டணியினருக்கு சாத்தியமற்றதாக இருந்தது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்பட்டிருக்கின்ற 'முஸ்லிம் ஐக்கிய முன்னணி யோடு' தேர்தல் கூட்டை ஏற்படுத்துவதன் மூலமாக, ஓரளவிற்கு வடகிழக்கு முஸ்லிம்களின் ஆதரவைப் பெறலாம் என கூட்டணியினர் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த எதிர்பார்ப்புகளுக்கு மாறாக 77ம் ஆண்டுத் தேர்தலில் வட - கிழக்கு முஸ்லிம்கள் புதிய முஸ்லிம் அரசியல் அமைப்பை முற்றாகவே நிரகாரித்து விட்டார்கள். இந்தத் தோல் விக்குப் பின்னர் . 'முஸ்லிம் ஐக்கிய முன்னணியின்' முக்கியஸ்தர்கள் அதாவது எம்.எச்.எம்.அஷ்ரப், சம்சுதீன், உதுமான் லெப்பை போன்றோர் தமிழர் விடுதலைக் கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டனர். அத்துடன் அக்கட்சியும் செயலிழந்து விட்டது. இவ்வாறாக கிழக்கின் படித்த முஸ்லிம்களில் ஒரு சாரார், தனியான அரசியல் கட்சிக்கூடாக பாராளுமன்ற அரசியலில் நுழைவதற்குச் செய்த முயற்சிகளும் கூட இறுதியில் பலத்த தோல்வியிலேயே முடிந்தன.
தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்ட பாதிப்புகள்:-
கிழக்கு முஸ்லிம்களிடையே புதிதாக உருவான படித்த பிரிவினரால் சமூக, கலாசார மற்றும் அரசியல் தளங்களில் ஏற்பட்ட மேற்படி பாதிப்புகளோடு, இன்னும் ஒரு முக்கியமான விளைவும் அங்கு ஏற்பட்டது. இதுவரை காலமும், கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே நெருக்கமான உறவுகள் நிலவி வந்தன. கிழக்கில் பின்பற்றப்பட்டு வந்த விவசாய முறையானது, வடிகால் அமைப்பு, நீர்விநியோகம், உழவு, பயிர்ப்பாதுகாப்பு மற்றும் அறுவடை போன்ற பலவிடயங்களில் விவசாயிகளிடையே பரஸ்பர ஒத்துழைப்பையும் பங்கு பற்றுதலையும் அவசியமாக்கியிருந்தன. மேலும், கிழக்கில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் விவசாய நிலங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்தும், அவர்களது குடியிருப்புகளிலிருந்து தொலைவிலும் இருக்கின்றன. இவ்வாறான புற நிலைமைகளினால் கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம்களிடையே காலம் காலமாக மிக நெருக்கமான
6O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

உறவுகள் நிலவி வந்திருக்கின்றன. இதேபோன்று, கால்நடைப் பண்ணைகளும், மேய்ச்சல் நிலங்களும் கூட அவர்களது குடியிருப்புகளிலிருந்து மிகத் தொலைவிலேயே அமைந்திருப்பதால், கால்நடை வளர்ப்பிலும் தமிழ், முஸ்லிம்களிடையே திருமண உறவு நீங்கலாக ஏனைய பல்வேறு விடயங்களில் காலம் காலம் நெருக்கமான உறவுகளே நிலவி வந்திருக்கின்றன. கிழக்கு முஸ்லிம்களிடையே படித்த பிரிவினர் உருவாகத் தொடங்கிய போது, அங்கு காணப்பட்ட இத்தகைய சுமூகமான நிலைமை குழம்பத் தொடங்கியது.
1970 களில் கிழக்கு முஸ்லிம்களில் பல சமூகப் பிரிவுகளையும் சேர்ந்தவர்கள் கல்வி கற்கவும், அரசாங்க உத்தியோகங்களைப் பெறவும், முயற்சி செய்தார்கள். என்றாலும் இவர்களின் இத்தகைய ஆர்வத்தையும், தேவைகளையும் முழுமையாகத் திருப்தி செய்யக்கூடிய விதத்தில் அன்றைய நிலைமைகள் இருக்கவில்லை. மேலும் படித்த தமிழ், முஸ்லிம் பிரிவினருக்கிடையே கல்வியை அடிப்படையாகக் கொண்ட தேவைகளில் போட்டிகள் உருவாகத் தொடங்கின. கல்விக்கூட வசதிகள், உயர் கல்வி வாய்ப்புகள், உத்தியோக வாய்ப்புகள், நிர்வாகச் செயற்பாடுகள். என படித்த பிரிவினருக்கு அவசியமான சகல கூறுகளிலும் படித்த கிழக்கு முஸ்லிம் கள், படித்த தமிழ்ப் பிரிவினருடன் போட்டியிட வேண்டியிருந்தது. இதன் காரணமாக, படித்த தமிழ் - முஸ்லிம் பிரிவினரிடையே முரண்பாடுகள் தோன்றின. இந்த முரண்பாடுகள் குறித்து ஆழமாகப் பரிசீலிப்போம்.
(1) கல்விகற்க விரும்பிய அன்றைய கிழக்கு முஸ்லிம் மாணவர்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய விதத்தில், கிழக்கிலும் முஸ்லிம் பாடசாலைகள் அமைந்திருக்கவில்லை. 'முஸ் லிம் பாடசாலைகள்' என்ற பிரிவிற்குள் கொண்டுவரப்பட்டிருந்த இப்பாடசாலைகளை முன்னேற்றுவதில் அரசு நேர்மையான முறையில் அக்கறை செலுத்தவில்லை. தேவையான ஆசிரியர்களை நியமிப் பதிலும், கட்டிடங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவதிலும் முஸ்லிம் பாடசாலைகள் விடயத்தில் அரசு பாராபட்சம் காட்டியது. (பதியுத்தின் மஃமூத் கிழக்கு முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்புகளைச் செய்திருந்த போதிலும், அவை ஆரம்ப கட்டத்திற்குரியதாகவே அமைந்திருந்தன. தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கிழக்கு முஸ்லிம்களின் கல்வித் தேவைகளை அவை
posíh 55ph Gišroph 61

Page 37
பூர்த்தி செய்யவில்லை.) U.N.Pயிலும் S.L.FPயிலும் இருந்த கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், இப்பாடசாலைகளின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அவற்றில் தமக்கு, ஆதரவான அதிபர்களையும், ஆசிரியர்களையும் நியமிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். பாராளுமன்ற அரசியலில் ஏற்படுகின்ற எந்தவொரு மாற்றமும் முதலில் பிரதிபலிக்கின்ற இடமாக, கிழக்கின் முஸ்லிம் பாடசாலைகள் இருந்தன. போதிய தகுதிகளின்றி, அரசியல்வாதிகளின் ஆதரவினால் மட்டும் அதிபர்களாக உயர்வு பெற்றவர்களே பெரும்பாலான முஸ்லிம் பாடசாலைகளை நிர்வகித்தார்கள். இவர்களுக்கு நிர்வாக அறிவோ, தமது பாடசாலைகளின் கல்வி நிலைமை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்த புரிதலோ போதுமான அளவில் இருக்கவில்லை. இதனால் இவர்கள் தமது பாடசாலைகளின் முன்னேற்றத்திற்காக அரச மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள முடியாதவர்களாக இருந்தார்கள். மேலும் இவர்களால் தமக்குக் கீழே பணிபுரிகின்ற ஆசிரியர்களை ஒழுங்கமைத்து, கடமையாற்றச் செய்ய முடியவில்லை. மறுபுறத்தில் ஆசிரியர்களின் நிலைமை குழப்பமிக்கதாக இருந்தது. இவர்களில் ஒரு சாரார் ஆளும் கட்சியின் ஆதரவாளர்களாகவும், மறுசாரார் எதிர்க்கட்சி ஆதரவாளர்களாகவும் இருந்தனர். ஆளும் கட்சி ஆதரவாளர்களாக இருந்த ஆசிரியர்கள் தன்னிச்சையோடு எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் உட்படாதவர்களாகவும், மேலாதிக்க உணர்வுடனும் நடந்துகொண்டார்கள். அதேவேளை எதிர்க்கட்சி ஆதரவாளர்களாக இருந்த ஆசிரியர்கள், அதிபருடனும், ஆளும் கட்சி சார்ந்த ஆசிரியர்களுடனும் முரண்பட்டவர்களாகவும், அதனால் நிர்வாகத்திற்கு கட்டுப்பட மறுப்பவர்களாகவும், இருந்தார்கள் இவற்றோடு, புதிய கிழக்கு முஸ்லிம் ஆசிரியர்களிடம் , தமது கற்பித்தல் தொழிலில் நேர்மையான அர்ப்பணிப்பு காணப்படவில்லை. தமது சமூகத்தை கல்வியில் உயர்த்த வேண்டும் என்ற சமூக அக்கறை பொதுவாக அவர்களிடம் குறைவாகவே காணப்பட்டது. கிழக்கில் முஸ்லிம் பாடசாலைகளில் கற்பித்த தமிழ் ஆசிரியர்களுடன் ஒப்பிடும் போது, கிழக்கு முஸ்லிம் ஆசிரியர்களிடம் நிலவிய அர்ப்பணிப் பின்மையும், சமூக அக்கறையின்மையும் தெளிவாக புலப்பட்டது. இவற்றின் விளைவாக கிழக்கு முஸ்லிம் பாடசாலைகளில் நிர்வாக ஒழுங்கின்மை நிலவியது. கற்பித்தலில் பின்னடைவுகள் ஏற்பட்டன. ஆசிரிய இடமாற்றங்கள் தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டிருந்
62 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

தன. இவற்றோடு கிழக்கின் கல்வி சார்ந்த நிர்வாக உயர்மட்டங்களில் பெரும்பான்மையாக இருந்த தமிழ் அதிகாரிகளும், நிர்வாக உத்தியோகத்தர்களும் முஸ்லிம் பாடசாலைகளைத் திட்டமிட்டரீதியில் ஒதுக்கியும், பாரபட்சமான முறையிலும் செயற்பட்டார்கள்.
இவை அனைத்தினதும் ஒட்டுமொத்த விளைவாக, முஸ்லிம் பாட சாலைகளின் நிர்வாகம் சீர்குலைந்தது. அவற்றின் கற்பித்தலின் பின்னடைவும், தேக்கமும் ஏற்பட்டன. தேவைகளும் பற்றாக் குறைகளும் தொடர்ந்தன. அதனால் முஸ்லிம் மாணவர்களிடையிலும் பெற்றோரிடையிலும் அதிருப்திகளும், எதிர்ப்புகளும் உருவாக ஆரம்பித்தன. பாடசாலைப் பகிஷ்கரிப்புகள் பரவலாக இடம்பெற்றன. இந்நிலையில் இப்பாடசாலைகளின் அதிபர்கள், தமது பலவீனங்களை மறைக்கவும், அதிருப்தியுற்றிருக்கின்ற மாணவர்கள், பெற்றோரி டையே தம்மை நியாயப்படுத்திக் கொள்வதற்காகவும், 'தமிழ் அதிகாரிகள் துவேஷ உணர்வுடன் முஸ்லிம் பாடசாலைகளைப் புறக்கணிக்கின்றார்கள்' என்று காரணம் கூறினார்கள். (இந்தக் கூற்றில் உண்மையுண்டு. எனினும் முஸ்லிம் பாடசாலைகளில் ஏற்பட்ட சீரழிவுக்கு இதுமட்டுமே காரணமல்ல. மறுபுறத்தில் இந்த முஸ்லிம் அதிபர்கள், தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தமது பாடசாலைகளின் வருமானம் மற்றும் ஒதுக்கீடுகளில் கணிச மானவற்றை தாம் அபகரித்துக் கொள்வதற்காகவும் இதே தமிழ் அதிகாரிகளுக்கு கையூட்டல்கள், சந்தோஷ உபசாரங்கள் என்பன வற்றை வழங்கி, நெருங்கிய உறவுகளைப் பேணி வந்தார்கள்.)
(2) கிழக்கு முஸ்லிம் பாடசாலைகளில் நிலவிய இத்தகைய சீரழிவு களின் காரணமாக, பல முஸ்லிம் மாணவர்கள், குறிப்பாக உயர் வகுப்பு மாணவர்கள், அவற்றிலிருந்து வெளியேறி கடினமான முயற்சி யின் பின்னர் தமிழ் பாடசாலைகளில் அனுமதி பெற்றுக் கல்வியைத் தொடர்ந்தார்கள். இவ்வாறு தமிழ்ப்பாடசாலைகளில் கல்வி கற்கச் சென்ற மாணவர்களும், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிலையங்கள், தொழில் நுட்பக் கல்லூரிகள். போன்றவற்றில் கல்வி கற்கச் சென்ற முஸ்லிம் மாணவர்களும், அவற்றில் கல்வி கற்ற தமிழ் மாணவர் களுடன் முரண்படக் கூடிய நிலைமைகள் ஏற்பட்டன. சைவவேளாள சித்தாந்தத்தினால் வழிகாட்டப்பட்ட தமிழ் மாணவர்களிடையே முஸ்லிம்கள் பற்றி நிலவிய தப்பெண்ணங்களால் இந்த முஸ்லிம் மாணவர்கள் ஆத்திரம் அடைந்தார்கள். 'முஸ்லிம் தொப்பி
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 63

Page 38
புரட்டுபவர்கள்' என்று தமிழ் மாணவர்கள் இழிவாகப் பேசுவதும், அவர்கள் தமது ஆண்குறிகளை வெட்டிக் கொள்பவர்கள் ('சுன்னத்' செய்தல்) என்று கொச்சைப்படுத்துவதும் முஸ்லிம் மாணவர்களின் உணர்வுகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தின. மறுபுறத்தில் தமிழ் மக்களின் மத்தியில் நிலவிய சாதிப் பிரிவினைகளும், அதனால் ஏற்படுகின்ற விளைவுகளும் முஸ்லிம் மாணவர்களின் விவாதப் பொருள்களாக அமைந்தன. உயர்சாதி விரிவுரையாளர்கள் தாழ்ந்த சாதி மாணவர்களினதும், வடக்குத் தமிழ் விரிவுரையாளர்கள், கிழக்கு தமிழ் மாணவர்களினதும் முன்னேற்றத்தை விரும்புவதில்லை என்று இவர்கள் சாடினார்கள். இவ்வகையில், முஸ்லிம்களாகிய தமது முன்னேற்றத்தையும் தமிழ் விரிவுரையாளர்கள் விரும்பாததால், தமக்கு குறைந்த புள்ளிகள் இட்டு, தாம் உயர் நிலை அடையக்கூடிய வாய்ப்புகளைத் தடுப்பதாகவும் கூறினார்கள்.
(இந்த இடத்தில் சில விடயங்களைக் குறிப்பிட வேண்டியுள்ளது. பெரும்பாலான தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளைத் தடுத்த தரப்படுத்தல் முறை, 1970 களில் தமிழ் மக்களிடையே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தரப்படுத்தல் முறை பெளத்த - சிங்கள இனவாதத்தின் திட்டமிட்ட செயற்பாடாக இருந்த போதிலும், அதை அமுல்படுத்திய அமைச்சராக முஸ்லிம் நபரான பதியுத்தீன் மஃமூத் இருந்தார். தான் ஒரு தனியான சமூகத்தைச் சேர்ந்தவர் என்றவகையில் அவர் இன்னுமொரு சமூகத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு திட்டத்தை அமுல்படுத்துவதற்கு முன்னிற்றிருக்கக் கூடாது. 'அது பீலிக்ஸின் திட்டம். நான் அதற்குப் பொறுப்பல்ல' என்று கூறி பதியுத்தீன் மஃமூத்தன்னை நியாயப்படுத்த முடியாது. பெளத்த - சிங்கள இனவாதத்தின் கருவியாக தான் செயல் படுவதை உணர்ந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர் ஒரு அப்பாவி யும் அல்ல. இந்தவகையில், பெரும்பாலான தமிழ் மாணவர்களின் எதிர்காலம் சூனியமாக்கப்பட்டதற்கான தார்மீகப் பொறுப்பு, பதியுத் தீன் மஃமூத்துக்கும் இருக்கிறது. இந்தநிலையில் தமிழ் மாணவர்கள் தம்மை விட, குறைந்த புள்ளிகளைப் பெற்று, உயர்கல்வி கற்பதற்காக வருகின்ற முஸ்லிம் மாணவர்களுடன், சினேகபூர்வமான உறவு களைப் பேணுவது என்பது அவ்வளவு எளிதான விடயமல்ல. மேலும், இவ்வாறு உயர்கல்வி கற்க வருகின்ற தமிழ் மாணவர்களுக்கும், முஸ்லிம் மாணவர்களுக்கும் இடையே கற்றல் செயற்பாட்டில்
64 Qyprilio sikh dgar (Upto Golfak TROQyph

பொதுவாக ஏற்றத் தாழ்வுகளும் காணப்பட்டன. சமூக அளவில், கல்விக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவமும், கல்வியில் காட்டுகின்ற அக்கறை ஒழுங்கு என்பவையும் தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பொறுத்தவரை வேறுபட்டவையாக இருந்தன. தமிழ் சமூகம் மரபு வழியாகப் பெற்றிருக்கின்ற கல்விசார் அறநெறியின் காரணமாக தமிழ் மாணவர்கள் ஆரம்ப வகுப்பு முதலே ஒழுங்காகவும், கடுமையாக முயன்றும், விரிந்த அளவிலும் கற்க முடிகிறது. இதனால் அவர்களது அறிவும், தொடர்ந்து கற்பதில் உள்ள ஆர்வமும் பொதுவாக, முஸ்லிம் மாணவர்களைவிட உயர்வாகவே இருந்தன. பொதுவாகவே தமிழ ரிடையே குறிப்பாக யாழ்ப்பாண தமிழரிடையே காணப்பட்ட புரெட் டஸ்தாந்து அறநெறியை ஒத்த ஒருவித அறநெறியானது உழைப்பை உயர்வாக போற்றுவது. கற்பதிலும் கற்பிப்பதிலும் காட்டும் அக்கறை, அர்ப்பணிப்பு, ஒறுத்தல் போன்றவை - முஸ்லிம் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் காணப்படவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். இவ்வாறு கல்வியில் தமிழ் மாணவர்களுடன் போட்டியிட முடியாதிருந்த தமது பலவீனத்தை மறைப்பதற்காக, தமிழ் விரிவுரையாளர்கள் தம்மீது பாரபட்சம் காட்டுகின்றார்கள் என்ற குற்றச் சாட்டை முஸ்லிம் மாணவர்கள் முன்வைத்திருக்கக் கூடிய சாத்தியம் கவனத்தில் கொள்ளங்பட வேண்டும். இம்முஸ்லிம் மாணவர்களில் பெரும்பாலானோர் தமது கல்வி வளர்ச்சியின் ஏதாவது ஒரு கட்டத்தில் தமிழ் ஆசிரியர்களின் நேர்மையான பங்களிப்பைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். நிர்வாகச் சீர்கேடுகளினாலும், அரசில் முரண் பாடுகளினாலும், சமூக அக்கறையின்மையினாலும் முஸ்லிம் ஆசிரி யர்களில் பலர் கற்பித்தலில் அக்கறை காட்டாதிருந்த நிலையில், தமிழ் ஆசிரியர்கள் தான் குறிப்பாக வடக்கைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர்கள் தமது கடமையை பொறுப்புடன் செய்து வந்தார்கள். இவ்வகையில் அன்றைய படித்த கிழக்கு முஸ்லிம்கள், தமக்குக் கற்பித்தலில் சிரத்தை யுடனும், மிதமிஞ்சிய உழைப்புடனும் செயற்பட்ட தமிழ் ஆசிரியர் களை ஒரு போதும் மறக்க முடியாது.)
(3) படித்த கிழக்கு முஸ்லிம்களின் நலன்கள் மிகப் பெரும்பாலும் அரசாங்க உத்தியோகங்களிலேயே தங்கியிருந்தன. இந்த உத்தியோக ங்களைப் பெறுவதற்காக, இவர்கள் அன்று, பாராளுமன்ற உறுப் பினர்களிலேயே முற்றிலும் தங்கியிருந்தார்கள். கிழக்கில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்த போதிலும் படித்த
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 65

Page 39
முஸ்லிம்கள் தமது வேலைவாய்ப்புகளுக்காக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிலேயே தங்கியிருந்தார்கள். விதிவிலக்குகள் என்று கொள்ளக்கூடிய அளவுக்கு ஒன்றிரண்டு முஸ்லிம்களே தமிழ் பாராளு மன்ற உறுப்பினர்களின் மூலம் உத்தியோகங்களைப் பெற்றார்கள். இதற்கு மாறாக, கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் கணிசமானவற்றை தமிழர் களுக்கு (குறிப்பாக யாழ்ப்பாண தமிழர்களுக்கு) விற்பனை செய்தார் கள். இதன் விளைவாக படித்த கிழக்கு முஸ்லிம்கள் தமக்குரிய வேலைவாய்ப்புகளில் கணிசமானவற்றை இழக்க வேண்டியேற் பட்டது. இதனால், இவர்கள் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது மாத்திரமன்றி, தமக்குரிய உத்தியோகங்களை விலைக்கு வாங்கிய தமிழ் பிரிவினர் மீதும் கோபமும், விரோதமும் கொண்டார்கள்.
(4) கல்வி வாழ்வில் ஆரம்பக்கட்டத்தில் இருந்த படித்த கிழக்கிற்கு முஸ்லிம்களினால், நிர்வாகத்துறையில் ஆளுமை செலுத்த முடிய வில்லை. கிழக்கிற்குரிய நிர்வாகத் துறையின் ஒவ்வொரு பிரிவிலும் நீண்ட அனுபவமும், ஆதிக்கமும் பெற்றவர்களாக தமிழ் அதிகாரி களே இருந்தார்கள். தமிழ் மக்கள் பெளத்த - சிங்கள இனவாதத்திற்கு எதிராக சகல முனைகளிலும் கடுமையாகப் போராடிக் கொண்டிருந்த நிலையில், சிங்கள அரசின் இனவாதப் பிடிக்குள் இருந்து வடகிழக்கிற்குரிய ஒதுக்கீடுகள், அபிவிருத்தி முயற்சிகள், பதவியுயர் வுகள் போன்றவை குறைந்த அளவிலும், தாமதமாகவுமே வழங்கப் பட்டன. இவ்வாறு கிடைத்தவற்றில் பெரும் பகுதியை தமது சமூகத்திற்கு கிடைக்கச் செய்வதில் தமிழ் அதிகாரிகள் முனைப்புடன் செயற்பட்டார்கள். கிழக்கு முஸ்லிம்கள் உயர் நிர்வாக மட்டங்களில் மாத்திரமன்றி, நிர்வாகத் துறையின் சகல மட்டங்களிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்ததால், தமிழ் நிர்வாகப் பிரிவினர் தமது இத்தகைய முயற்சிகளை எளிதாக நிறைவேற்றி னார்கள். விதிவிலக்காக, உயர்கல்வி தகைமை பெற்ற ஒன்றிரண்டு முஸ்லிம்கள், உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தாலும் கூட அவர்கள் தமிழ் ஊழியர்களினால் நிறைந்திருந்த தமது அலுவல கங்களில் சுயமாகவும், சுதந்திரமாகவும் கடமையாற்ற முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் அவர்கள் தமது பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, தமக்கு மேலும் கீழும் இருக்கின்ற தமிழ் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கட்டுப்பட்டு, அவர்களின்
66 posíh 550ph řárodph

பாரபட்சமான நடவடிக்கைகளை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். இவ்வாறு கிழக்கு முஸ்லிம்களுக்கு, உரிய விகிதா சாரத்தில் கிடைக்க வேண்டியவற்றில் கணிசமான பகுதியை, தமிழ் நிர்வாகிகள் தமிழ் சமூகத்திற்குப் பெற்றுக் கொடுத்தார்கள். உண்மை யில் பெளத்த - சிங்கள அரசினால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு என ஒதுக்கப்பட்டவை குறைவாக இருந்த போதிலும், அவ்விதம் ஒதுக்கப் பட்டவற்றில் தமக்குரிய பங்கு தமிழ் அதிகாரிகளினால் மறுக்கப் படுவதுதான், கிழக்கு முஸ்லிம்களின் படித்த பிரிவினரை உடனடி யாகவும் கடுமையாகவும் பாதித்தது. இவ்வாறு படித்த தமிழ், முஸ்லிம் பிரிவினரிடையே கல்வி, உத்தியோகம், நிர்வாகம் என பல்வேறு மட்டங்களில் ஏற்பட்ட முரண்பாடுகள் படிப்படியே, தமிழ் மக்களுடனான சமூக முரண் பாடுகளாக கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் அர்த்தம் பெற வைக்கப்பட்டன. இதுவரை தமக்கிடையே இயல்பான முறையில் நல்லுறவுகளைப் பேணிவந்த கிழக்கின் தமிழ், முஸ்லிம் மக்களி டையே இதன்பின்னர் பகைமை வித்துக்கள் தோன்றத் தொடங்கின.
தொகுத்து கூறினால், அன்றைய படித்த கிழக்கு முஸ்லிம் பிரிவினர் சமூக, அரசியல் வாழ்க்கையின் சகல முனைகளிலும் கட்டுப்படுத்தப் பட்டவர்களாகவும், பலவீனப்படுத்தப்பட்டவர்களாகவும் இருந்தார் கள். ஒருபுறம் அவர்கள் தமது சமூகத்தைச் சேர்ந்த நிலவுடமை யாளர்களினாலும், அவர்களின் ஆதரவு பெற்ற முஸ்லிம் அரசியல் வாதிகளினாலும் கட்டுப்படுத்தப்பட்டார்கள். மறுபுறத்தில் படித்த தமிழ் பிரிவினரின் நிர்வாக ஆதிக்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்டார் கள். இவற்றை வென்று தமது ஆதிக்கத்தையும், ஆளுமையையும் சமூக அளவில் நிலைநாட்டுவதற்குரிய வழிகள் எதுவும் அப்போது அவர்களுக்கு இருக்கவில்லை. இந்நிலையில் தான், படித்த கிழக்கு முஸ்லிம் பிரிவினர் தமது சமூகத்தின் அரசியல் தலைமையாக மாறுவதைச் சாத்தியமாக்கிய இரு நிகழ்வுகள் நாட்டில் இடம்பெற்றன. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்ட வடிவத்தைப் பெற்றதும், மத்திய கிழக்குக்கான வேலை வாய்ப்புகள் உருவானதும் இவ்விரு நிகழ்வுகளாகும்.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 67

Page 40
கிழக்கு முஸ்லிம்களிடையே தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய
தாக்கங்கள்.
முஸ்லிம்கள் குறித்த விடுதலை அமைப்புகளின்
நிலைப்பாடுகள்:-
பெளத்தி - சிங்கள அரசின், இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நீண்டகாலமாகப் போராடி வந்த தமிழ் தேசம், 1970 களில் தனது போராட்டத்தை சாத்வீக வடிவத்திலிருந்து வன்முறை வடிவத்திற்கு மாற்றியது. தமிழீழப் போராட்டத்தில் ஏற்பட்ட இத்தகைய வடிவ மாற்றத்திற்கு ஏற்ப, அப்போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொள் கின்ற பிரிவினரிலும் போராட்டத்தை வழிநடத்திச் செல்கின்ற தலைமையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. இப்போது போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுகின்ற பிரிவினராக இளைஞர்களும், மாணவர்களும் விளங்கியதோடு, போராட்டத் தலைமையும் இவர்களிலிருந்தே உருவாகியது. தமிழ் தேசத்தின் போராட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த இந்த நிகழ்வுடன், தமிழர் தலைமையின் ஐக்கியமும் சிதறுண்டது. நீண்டகால முயற்சியின் பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ் மக்களின் ஒன்றிணைந்த அரசியல் தலைமையானது, இதன் பின்னர் திடீர் திடீரென தோன்றிய ஆயுதக் குழுக்களினால் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கப்பட்டது.
தமிழ் மக்களின் போராட்டத்தில், 1980 களின் முற்பகுதி, கிளர்ச்சியும் கொந்தளிப்பும் மிக்க ஒரு காலப்பகுதியாக விளங்கியது. வட - கிழக்குத் தழுவியதாக முழுத் தமிழ் மக்களும் போராட்டத்தின் பால் அக்கறையும், அனுதாபத்தையும் வெளிப்படுத்தினார்கள். போராட் டம் சார்ந்த செயற்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்டார்கள். எனினும் இவர்களை ஒன்று திரட்டி, அமைப்பாக்கி, பல்வேறுபட்ட வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற
68 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

ஆற்றலைக் கொண்டதாக, எந்த ஒரு விடுதலை அமைப்பும், தன்னை வெளிப்படுத்தவில்லை. இவை தமிழீழ விடுதலையை நோக்கி உறுதி யாக முன்னேறுவதிலும் பார்க்க, தம்மை தமிழ் மக்களின் தலைமை யாக நிலைநாட்டுவதையே பிரதான இலக்காகக் கொண்டிருந்தன. எனினும் இதைச் சாதிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தமிழ் மக்களின் தலைமையைப் பெற்றுக் கொள்வதற்காக, முன்னைய தமிழர் விடுதலை கூட்டணி தலைமையோடு, இப்போது புதிதாக உருவாகி வந்த ஆயுதக் குழுக்களும் போட்டியிட்டன. தமிழ் மக்க ளைப் பொறுத்தவரை, அவர்கள் பொதுவாக இந்த எல்லா ஆயுதக் குழுக்களையும் அனுதாபத்தோடும் , பெருமையோடும் மதித்து, அவற்றுக்கு தமது ஆதரவை வழங்கினார்கள்.
தமிழ் மக்களின் தலைமை என தம்மைக் கூறிக் கொண்ட அமைப்புகள், பெளத்த - சிங்கள அரசுக்கு எதிரான போராட்டத்தை உறுதியாக முன்னெடுப்பதன் மூலமாக தமது தலைமையை நிலைநாட்ட முயற் சிக்கவில்லை. போராட்டத்தின் நோக்கம், அதில் பங்கு கொள்கின்ற சக்திகள், தமிழ் தேசத்தில் நிலவுகின்ற சமூக பிரிவுகள், போராட்ட வழிமுறைகள், ஏனைய சமூகங்களினுடனான உறவுகள், சர்வதேச சமூகங்களுடனான உறவுகள் என ஒரு போராட்டம் எதிர்கொள்கின்ற அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதான ஒரு தெளிவான திட்டத்தை எந்த அமைப்பும் கொண்டிருக்கவில்லை. போராட்டத்தின் வெற்றிக்கு பல அமைப்புகளையும் உள்ளடக்கியதான பலமான ஐக்கிய முன்னணி அவசியம் என்பதை உணர்ந்து அதை நோக்கியதாக தமது வேலை திட்டங்களை வகுக்கக் கூடிய அரசியல் முதிர்ச்சியை எந்த அமைப்பும் வெளிப்படுத்தவில்லை. இவற்றுக்கு பதிலாக ஆயுத பலத்தின் மூலம், தமிழ் மக்களைக் கட்டுப்படுத்தி தமது தலைமையை ஏற்படுத்த அவை முயற்சித்தன. தமிழ் மக்களின் விமர்சனச் சுதந்திரங்களையும், தொடர்பு சாதனங்களையும், சுயமான, சமூக, கலாசார நிறுவனங்களையும் இவை கட்டுப்படுத்தின. விரிவான ஜனநாயக சூழலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, ஒவ்வொரு அமைப்பிலும் ஆதிக்க உணர்வுகளே வெளிப்பட்டன. இத்தகைய அராஜக அரசியல் விரைவிலேயே அழித்தொழிப்பாக மாறியது. தம்முள் முரண்பட்டு, பிரிந்து சென்ற அங்கத்தினர்கள், வேறு அமைப்புகளில் இணைவதைத் தடுப்பதற்காகவும், தம்மைப்பற்றி அவர்கள் வெளியிடக் கூடிய கருத்துக்களின் காரணமாக தாம் தமிழ்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 69

Page 41
மக்களினால் நிராகரிக்கப்படலாம் என்பதாலும், அவர்களை உடனடியாக அழித்தனர். மேலும் தமக்குப் போட்டியாக இருக்கின்ற ஏனைய அமைப்புகளை வீழ்த்துகின்ற செயற்பாடுகளில் விதி விலக்கின்றி ஒவ்வொரு அமைப்பும் ஈடுபட்டது. இவ்வாறு தமிழ் மக்களில் எந்த பிரிவினரும் தமக்கு எதிரான நிலையை எடுக்கவிடாது தடுப்பதில் ஒவ்வொரு அமைப்பும் தீவிரமாகச் செயற்பட்டது.
தமிழ் மக்கள், தம்மீது விடுதலை அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட அராஜக நடவடிக்கைகளை, தேச விடுதலைப் போராட்டம் என்ற உயரிய லட்சியத்தின் பெயரால், வெகுஜன ரீதியான எதிர்ப்புகள் எதுவுமின்றி ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட்டார்கள். தேசவிடுத லைப் போராட்டத்தின் போது இத்தகைய அராஜகங்கள் குறிப்பிட்ட காலத்திற்குத் தவிர்க்க முடியாதவை என்று அமைப்புகளால் நியாயப் படுத்தப்பட்டன. இவ்வாறு தமது அராஜக நடவடிக்கைகளுக்கு, தமிழ் மக்களிடமிருந்து வெகுஜன ரீதியான எதிர்ப்புகளை முகம் கொடுக்காத விடுதலை அமைப்புகள், வட - கிழக்கு முஸ்லிம்கள் மீதும் அதே போன்ற அராஜகங்களை படிப்படியே பிரயோகிக்கத் தொடங்கின.
'தமிழ் பேசும் மக்கள்', 'இஸ்லாமியத் தமிழர்கள்', 'ஈழவர்கள்' போன்ற வரையறைகளுக்குள் வட - கிழக்கு முஸ்லிம்களையும் உள்ளடக்கி, அவர்களையும் தமிழீழப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெறச் செய்ய விடுதலை அமைப்புகள் முயன்றன. இத்தகைய முயற்சியின் தீவிரம் காரணமாக, (வட) கிழக்கு முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே காணப்படுகின்ற வேறுபாடுகளை விடுதலை இயக்கங்கள் உதாசீனப்படுத்தின. பொதுவான கூறுகளை மட்டுமே முதன்மைப்படுத்தின. பொதுமொழி, பொதுப்பிரதேசம், பொதுப் பொருளாதாரம், கலாசார ரீதியாக வெளிப்படுகின்ற சில ஒத்த தன்மைகள். போன்றவை காரணமாக வட -கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் மக்களின் ஒரு பிரிவுதான் என்றும், எனவே தமிழீழப் போராட் டத்தில் கிழக்கு முஸ்லிம்கள் உணர்வு பூர்வமாக, முழுமையாகப் பங்குபற்ற வேண்டும் என்றும் விடுதலை அமைப்புகள் எதிர்பார்த்தன. இவற்றோடு, கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசங்களை அரசு பறிப்பது, அவற்றில் திட்டமிட்ட ரீதியில் சிங்களக் குடியேற்றங்களை உண்டாக்குவது, இதன் மூலமாக கிழக்கு முஸ்லிம்களின் சனச்செறி வைக் குறைப்பது, கிழக்கு முஸ்லிம்களின் விவசாயத்திற்கும் மீன்பிடித் தொழிலுக்கும் சிங்கள இனவாதிகள் தடைகளை ஏற்படுத்துவது.
7 O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

போன்றவை காரணமாக, கிழக்கு முஸ்லிம்கள் தவிர்க்க முடியாமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றுவார்கள் என்று விடுதலை அமைப்புகள் கருதின. இதன் காரணமாக, விடுதலை அமைப்புகள் வட - கிழக்கு முஸ்லிம்கள் மீது முழு அதிகாரத்துடன் நடந்து கொள்ள ஆரம்பித்தன. மக்கள் திரள் தம்மை ஒரே தேசமாகக் கருதி, பொதுவான அரசியல் வரையறைகளுக்குள் தம்மை இணைத்துக் கொள்வதென்பது, பல்வேறு காரணிகளின் இணைவினால் தீர்மானிக்கப்படுகின்ற ஒரு சிக்கலான நிகழ்வுப் போக்காகும். புறநிலையாக மக்களிடையே எவ்வளவுதான் ஒத்த தன்மைகள் காணப்படுகின்ற போதிலும், அகநிலையில் தமது நலன்களும், அவற்றை அடைந்து கொள்வதற் கான மார்க்கங்களும் பொதுவானது என்றும் , தமது எதிர்காலம் ஒரேவிதமான அரசியல் விதிக்குட்பட்டிருக்கின்றது என்றும் உணர்ந்து கொள்ளும் போதுதான் மக்கள் தம்மை ஒரே தேச வரையறைக்குள் இனம் காணத் தொடங்குகிறார்கள்.
ஒரே பிரதேசம், ஒரே மொழி, ஒரே வகையான பொருளாதார அடித்தளம், மற்றும் கலாசார ரீதியாக வெளிப்படுகின்ற கணிசமான ஒத்ததன்மைகள் என வட - கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையே ஒத்த அம்சங்கள் காணப்பட்ட போதிலும், மேலும் அவர்களிடையே காலம் காலமாக நல்லுறவுகள் நிலவி வந்திருந்தும் கூட வட - கிழக்கு முஸ்லிம்கள் தம்மை தமிழ் தேசத்திற்குள் அடையாளம் காண ஒருபோதும் முற்படவில்லை. அவர்கள், இத்தகைய அம்சங்களில் புறநிலையாக தமிழ் மக்களுடன் ஒத்திருந்த போதிலும், அகநிலையில் தம்மை தமிழ் மக்களிடமிருந்து வேறுபட்ட சமூகமாகவே கருதி வந்திருக்கிறார்கள். இவ்வாறு தமிழ் மக்களும், (வட) கிழக்கு முஸ்லிம்களும் ஒரே தேச வரையறைக்குள் தம்மை இணைத்துக் கொள்வதற்குத் தடையாக அமைந்த காரணிகள் குறித்துப் பரிசீலிப்போம்.
முஸ்லிம்கள் குறித்து சைவ - வேளாள சித்தாந்தம் பரப்பியுள்ள தப்பெண்ணங்கள்
ஒரு சமூகத்தினர் மத்தியில், பிறசமூகங்கள் குறித்த தப்பெண்ணங்களை ஏற்படுத்துவதில் அச்சமூகத்தின் மத்தியில்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 7 1

Page 42
ஆதிக்கம் பெற்றுள்ள சித்தாந்தங்களுக்கு முக்கிய பாத்திரம் உண்டு. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு நபர், அதனை அடிப்படையாகக் கொண்டு பரப்பப்படும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்களையும் கூட கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொள்ப வராகின்றார். தரப்பட்ட உண்மையாக அவற்றை எடுத்துக் கொள்கி றார். இப்படிப்பட்ட ஒருவர், தான் கண்டோ அறிந்தோ பழகியோ இராத பிறசமூகத்தவர் பற்றி பல்வேறு தப்பான மதிப்பீடுகளையும் தம்மளவில் ஆழமாகக் கொண்டிருப்பதற்கு அவரிடமுள்ள சித்தாந்தப் பீடிப்பே காரணமாகிறது.
இப்படிப்பட்ட சித்தாந்த ஆதிக்கம் ஒவ்வொரு சமூகத்திலும், வெவ் வேறு வடிவில் காணப்படவே செய்கிறது. தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை முஸ்லிம்கள் குறித்து பரப்பப்பட்டுள்ள பல்வேறு தப்பெண் ணங்களுக்கு சைவ -வேளாள சித்தாந்தம் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இதுவரை காலமும் முஸ்லிம்களை பார்த்தே இராத, பழகியே இராத தமிழர்களும் கூட முஸ்லிம்கள் என்றாலே இழிவான வர்கள், சுத்தம் பேணாதவர்கள், எனவே வெறுக்கத்தக்கவர்கள் என ஆழமான நம்பிக்கை கொண்டிருப்பதற்கு எது காரணம்?
ஏற்கனவே சைவ -வேளாள சித்தாந்தம் முஸ்லிம்கள் பற்றி பல்வேறு தப்பெண்ணங்களை பலமாக பரப்பியுள்ளதால், பிற்காலத்தில் முஸ் லிம்கள் பற்றி தமிழ் அரசியல் தலைமைகள் பரப்புகின்ற கருத்துக் களும், மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் கேள்விக்கிடமின்றி ஏற்றுக் கொள்கின்ற நிலைக்கு சாதாரண தமிழ் மக்கள் ஆளாக்கப்பட்டு ள்ளனர். இந்த வகையில் தமிழ் தலைமைகளும், விடுதலை அமைப்பு களும் தாம் இழைக்கின்ற அரசியல் தவறுகளையும், முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் மறைத்து நியாயப்படுத்த முஸ்லிம்களின் மீது பழி போடுகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்கு முஸ்லிம்களே தடை எனவும், அவர்கள் சிங்கள அரசுடன் இணைந்து தமிழருக்கு எதிராக செயற்படுகின்றனர் என்றும், எனவே அவர்களை தாக்கு வதும், பாடம் படிப்பிப்பதும், அவர்களை வெளியேற்றுவதும் கூட நியாயமானதே என்றும் பல ஜனநாயக விரோத கருத்துக்களைக் கூட தமிழ் மக்கள் மத்தியில் இவர்களால் இலகுவில் பரப்ப முடிகிறது.
(அ) தமிழ்த் தலைமையும் சைவ வேளாள சித்தாந்தமும்:-
இலங்கை மக்கள் மத்தியில் முதலாளித்துவ அரசியல் உறவுகள்
72 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்க காலத்திலிருந்தே, தமிழ்த் தலைமை கள் சைவ - வேளாள சித்தாந்தத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டவர் களாகவே இருந்து வந்துள்ளார்கள். மக்களை ஒழுங்கமைப்பதிலும், அவர்களது மதிப்பீடுகளைத் தீர்மானிப்பதிலும் சித்தாந்தம் பிரதான பாத்திரம் வகிக்கின்றது. ஒரு சித்தாந்தத்தினால் கட்டமைக்கப் படுகின்ற நபர், அந்த சிந்தாத்தின் அடிப்படையிலான கருத்துக்களை எளிதாகவும் உறுதியாகவும் பின்பற்றக் கூடியவராக இருக்கிறார். 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆறுமுகநாவலரினால் சமூக அளவில் மறுநிர்மாணம் செய்யப்பட்ட இந்த சைவ - வேளாள சித்தாந்தம் பின்னர் தமிழ் அரசியல் தலைமையின் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தியது. இதன் பின்னர் சமூகரீதியில் மாத்திரமன்றி, அரசியலி லும் முஸ்லிம்களை அந்நியர்களாகவும், தூய்மை அற்றவர்களாகவும் அடக்கி வைக்கப்பட வேண்டியவர்களாகவும் கருதுகின்ற தப்பெண் ணங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்ட்டன. அன்றைய 19 ம் நூற்றாண்டு தலைமை தொடங்கி இன்றைய ஆயுதப் போராட்ட தலைமை வரை இந்தப் போக்கு பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது. இதனால் வட -கிழக்கு முஸ்லிம்களை தம்மவராக கருதுகின்ற மன உணர்வை தமிழ் மக்கள் பெறமுடியாத நிலை ஏற்பட்டு வந்திருக்கின்றது. பதிலாக, 'தொப்பி புரட்டிகள்', 'காட்டிக் கொடுப்ப வர்கள்' என்று அவர்களை தனியான சமூக அடையாளத்துடன் கேவலப்படுத்துவதும், அவர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதும் தமிழ்த் தலைமைகளுக்கு எப்போதும் எளிதான காரிய மாக இருந்து வந்திருக்கின்றது.
சகல அம்சங்களிலும் ஒத்த தன்மைகளைக் கொண்டிருக்கின்ற மக்கள் திரள்தான் தம்மை ஒரு தேசமாக உருவாக்க முடியும் என்பதல்ல. பதிலாக, சில அம்சங்களில் (சாதாரணமாக மதம், கலாசாரம். போன்றவற்றில்) வேறுபட்டிருக்கின்ற பிரிவினரும்கூட, குறித்த தேசமாக தம்மையும் இனம் காண்பது சாத்தியமாகியிருக்கின்றது. இது நிகழ்வதற்குரிய ஒரு நிபந்தனையாக, எண்ணிக்கையில் அதிகமுள்ள பிரிவினர், பிற பிரிவினர் மீது சமத்துவமானதும், ஜனநாயக பூர்வ மானதுமான உறவுகளை ஏற்படுத்துவது அவசியமாகின்றது. இங்கு தமிழ்த் தேசத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்ற சைவ மதப் பிரிவினர் (குறிப்பாக அவர்களது தலைமையாக தம்மை உருவாக்கி யுள்ள யாழ். சைவ, வேளாள பிரிவினர்) வட - கிழக்கு முஸ்லிம்களை
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 73

Page 43
ஒரு சமத்துவமான பிரிவினராகக் கருதாததோடு, வட - கிழக்கில் அவர்களுக்கு என தனியான உரிமைகள் இல்லை என்றும் கூறிவந்திருக்கின்றனர். தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக வெளிப்படையாகச் செயற்படுகின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி, தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வித அரசியல் செயற்பாடுகளிலும் பங்குகொள்ளாமலும், இன்னமும் சிங்கள கொவி பிரிவினருடன் நெருக்கமான உறவுகள் கொண்டு தமக்குரிய நலன்களைப் பேணி வருகின்ற சைவ - வேளாள பிரிவினரும் கூட வட - கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றனர். வட - கிழக்கு முஸ்லிம்களுக்கு என தனியான தீர்வு யோசனைகள் குறித்து பேச்சு எழுகின்ற போதெல்லாம் அதற்கு எதிராக கருத்துக் கூறி வருகின்ற யோகேந்திரா துரைசாமி போன்றோரை இங்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய போக்குகள் தமிழ் மக்கள் மத்தியில், தனிநபர்கள் அளவில் மட்டுமன்றி, வெகுஜன அளவிலும் ஊடுருவி, வட-கிழக்கு முஸ்லிம்களை ஒரு சமத்துவமற்ற பிரிவினராகவும், தமக்கென தனியான உரிமைகள் அற்ற சமூகமாகவும் கருதும்படி செய்திருக்கின்றது. பெளத்த - சிங்கள இனவாதத்திற்கு எதிராக தமிழ் மக்கள் நடாத்தி வந்திருக்கின்ற போராட்டங்களில் தனிநபர்கள் என்ற அளவிலாவது பல முஸ்லிம்கள் பங்கு பற்றியிருக்கிறார்கள். உதாரணமாக மசூர் மெளலானா, உதுமான் லெப்பை போன்றவர்களைக் குறிப்பிடலாம். தமிழ்த் தலைமைகள், இத்தகைய நபர்களின் பங்களிப்புகளை தமிழ் மக்கள் மத்தியில் விளக்கி, தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முஸ்லிம்களிடமிருந்தும் ஆதரவுகள் கிடைத்திருக்கின்றது என்ற உண்மையைச் சுட்டியிருக்க வேண்டும். இதன் மூலமாக, வட - கிழக்கு முஸ்லிம்கள் குறித்து தமிழ் மக்களிடையே நிலவுகின்ற தப்பெண்ணங்களை அகற்ற முயற்சித்திருக்க வேண்டும். ஆனால் வட - கிழக்கு முஸ்லிம்களை சமத்துவமாகக் கருத தயாராக இல்லாத தமிழ்த் தலைமை, அவர்களின் இத்தகைய பங்களிப்புகளை மறைத்து, அவர்களில் சிலர் கட்சி மாறியதை மட்டுமே மேடைதோறும் பிரச்சாரப்படுத்தி வந்தது.
(ஆ) தெற்கு முஸ்லிம் தலைமைகளின் செயற்பாடுகள்:-
தெற்கு முஸ்லிம் தலைமைகள் தமிழ் மக்களின் அரசியல் தொடர்பாக
74 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

மேற்கொண்டு வந்திருக்கின்ற நிலைப்பாடுகளை இரு கட்டங்களாக மதிப்பிட வேண்டும். முதலாவது கட்டமாக 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ் தலைமை அரசியல் அதிகாரத்தில் ஏகபோக உரிமை பெறும் நோக்கத்தில் இலங்கை முஸ்லிம்களை தமிழர்களாக வகைப்படுத்த முயன்றபோது, அதற்கு எதிராக வாதிட்டு, இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத்தை அரசியல் ரீதியாகவும் உறுதிப்படுத்தி யதில் அன்றைய தெற்கு முஸ்லிம் தலைமை வகித்த பாத்திரம் வரலாற்று முக்கியத்துவமிக்கது. இரண்டாவது கட்டத்தில், பெளத்த - சிங்கள இனவாத சக்திகளுடன் இணைந்து இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களும் அடங்கலாக ஒடுக்கப்படுகின்ற சமூகங்கள் அனைத்திற்கும் எதிராக செயற்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற வகையில் தெற்கு முஸ்லிம் தலைமையின் அரசியல் பாத்திரம் இழிநிலைக்குரியதாக விளங்குகின்றது. தம்மிடமிருந்து சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களில் பெரிதும் வேறுபட்டிருக்கின்ற வட - கிழக்கு முஸ்லிம்களின் அரசிய லில் தலையிடாமல் அவர்கள் அரசியலில் சுயமாக இயங்குவதற்கு தெற்கு முஸ்லிம் தலைமை வழிவிட்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்திருப்பின், பாராளுமன்ற அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட காலத்திற்குள் வட - கிழக்கு முஸ்லிம்கள் தமக்கான அரசியல் பாதையைத் தெரிவு செய்திருப்பார்கள். ஆனால் தெற்கு முஸ்லிம் தலைமை இதற்கு முற்றிலும் மாறாக, (வட) கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவத்தைச் சிதைத்து வந்திருக்கின்ற பெளத்த - சிங்கள சக்திகளுடன் அரசியற் கூட்டை ஏற்படுத்தியதோடு (வட) கிழக்கு முஸ்லிம்களை தமிழ் தேசத்திற்கெதிரான திசையிலும் இட்டுச் சென்றிருக்கிறது. தமிழ் தலைமைகளின் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை, சமஷ்டிக் கோரிக்கை போன்றவற்றையும் , தமிழ்த் தேசவிடுதலைப் போராட்டத்தையும் தெற்கு முஸ்லிம் தலைமை தீவிரமாக எதிர்த்து வந்திருக்கிறது. மேலும் மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமை, வாக்குரிமை பறித்தல், தனிச்சிங்கள சட்டம் போன்ற அப்பட்டமான ஒடுக்குமுறை முயற்சிகளில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டதன் மூலமாக தமிழ் மக்களுக்கும், வட - கிழக்கு முஸ்லிம் களுக்கும் இடையே பகைமையுணர்வுகள் மேலும் தீவிரமடைவ தற்கும் தெற்கு முஸ்லிம் தலைமை காரணமாகியிருந்தது.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 75

Page 44
(இ)சிங்களத் தலைமையின் பாத்திரம் :-
தமிழ் மக்களையும், வட - கிழக்கு முஸ்லிம்களையும் இணைய விடாமல் தடுத்ததில் சிங்களத் தலைமை வகித்து வந்திருக்கின்ற பாத்திரம் முக்கியமானது. இந் நூற்றாண்டின் முதல் கால்பகுதி வரை சிங்கள மக்களிடையே நிலவி வந்த கண்டி, கரையோரம் என்ற வேறுபாடுகளையும், பெளத்த கிறிஸ்தவ வேறுபாடுகளையும் அகற்றி, அவர்களை ஒரே தேச வரையறைக்குள் கொண்டு வருவதில் சிங்களத் தலைமை உறுதியாகச் செயற்பட்டிருந்தது. ஆனால் தனது அரசு அதிகார எல்லைக்குள் வாழ்ந்து வந்திருக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களிடையே அவ்வாறான ஒரு ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் இந்த சிங்களத் தலைமை ஒருபோதும் அக்கறை காட்டியதில்லை. மாறாக அவர்களிடையே பிரிவினைகளையும், பகைமையையும் ஏற்படுத்து வதற்காக அது திட்டமிட்டு செயற்பட்டு வந்திருக்கிறது.
(ஈ) ஏனைய காரணிகள்
தமிழ் மக்களை ஒரு தேசமாக ஒன்றிணைத்ததில், மொழி, வேலை வாய்ப்பு, தரப்படுத்தல் என்பவை தொடர்பான நெருக்கடிகள் முக்கிய பாத்திரம் வகித்திருக்கின்றன. ஆனால், வட - கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள், தமிழ் மக்கள் போன்று இவற்றினால் பாதிக்கப்படவில்லை. மொழிப் பிரச்சினை தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில், தமிழ் மொழிக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி களினால், தமது பொருளாதார வாழ்வுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு களை உணரக்கூடிய பிரிவினர் வட -கிழக்கு முஸ்லிம்களிடையே பரந்த அளவில் இருக்கவில்லை. அதேவேளை (வட) கிழக்கு முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்புக்கள் தனியாக வழங்கப்பட்ட தாலும், தரப்படுத்தலின் காரணமாக கிழக்கு முஸ்லிம்கள் நன்மை அடைந்ததாலும் இவையும் கூட அவர்களுக்குப் பாதகமாக அமையவில்லை. எனவே இவற்றின் அடிப்படையில், தம்மைத் தமிழ்த் தேசத்திற்குள் இணைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் (வட) கிழக்கு முஸ்லிம்களுக்கு ஏற்படவில்லை.
1980 களின் முற்பகுதியில், தமிழ் மக்களின் தனியான அரசியலானது அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டதாகவும் பெளத்த - சிங்கள இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தைக் கொண்டதாகவும் இருந்தது. இவர்களுடன் ஒப்பிடுகையில், சிங்கள
76 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்த (வட) கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வு முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. தேர்தல்களின் போது தாம் சார்ந்திருந்த சிங்களக் கட்சி களுக்கும் , தமது அபிமானத்திற்குரிய அரசியல்வாதிகளுக்கும் ஆதரவளிப்பது என்ற எல்லைக்குள்ளே அவர்களின் அரசியல் செயற்பாடுகள் அமைந்திருந்தன. இதனால், பெளத்த - சிங்கள அரசின் திட்டமிட்ட செயற்பாடுகளின் காரணமாக, தமது பாரம்பரிய நிலங்களுக்கும், பொருளாதாரத்திற்கும், குடிசனச் செறிவுக்கும், அரசியல் பலத்திற்கும், இவற்றின் மொத்த விளைவாக தமது எதிர்கால சமூக இருப்புக்கும் ஏற்பட்டுக் கொண்டிருந்த அபாயங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய அரசியல் விழிப்புணர்வை இன்னமும் பெற்றிரா தவர்களாகவே (வட) கிழக்கு முஸ்லிம்கள் இருந்தார்கள். இதனால் பெளத்த - சிங்கள இனவாதத்தை எதிர்த்த போராட்டத்தினூடாக தம்மை ஒரு தேசமாக உருவாக்கிக் கொண்டிருந்த தமிழ் மக்களுடன் இணைந்து, அந்தத் தேசத்தின் ஒரு கூறாக தங்களை உணருகின்ற நிலையில் (வட) கிழக்கு முஸ்லிம்கள் இருக்கவில்லை. இவ்வாறு (வட) கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் மக்களுடன் ஒரே தேசமாக ஒன்றிணைந்து, தமிழீழத்தின் விடுதலைக்காகப் போராடக்கூடிய நிலைமைகள் அன்று காணப்படவில்லை. இந்த உண்மையை எந்த வொரு விடுதலை அமைப்பும் புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. மாறாக, எவ்விதத்திலாவது (வட) கிழக்கு முஸ்லிம்களை தமிழீழப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குபெறச் செய்ய வேண்டும் என்பது தான் அவற்றின் நோக்கமாக இருந்தது. எனினும் ஆங்காங்கே, போராட்டத்தில் பங்கெடுக்க முன்வந்த சில முஸ்லிம் இளைஞர்களைத் தவிர, அனைத்து முஸ்லிம்களும் அப்போராட்டத்திலிருந்து ஒதுங் கியே இருந்தார்கள். எவ்வறாயினும் வட - கிழக்கு முஸ்லிம்களில் பெரும்பாலானோர் தமிழ் மக்களின் போராட்டத்தின் மீது அனுதாபம் கொண்டிருந்தார் கள். இதுவரை காலமும் தமிழ் மக்களுடன் சமூக, பொருளாதார ரீதியில் நெருக்கமான நல்லுறவுகளை பேணிவந்திருந்த கிழக்கு முஸ்லிம் விவசாயிகளும் முற்போக்கு முஸ்லிம் பிரிவினரும், தமிழ் மக்களுடைய போராட்டத்தின் மீது உண்மையான அனுதாபம் கொண் டிருந்தார்கள். இவர்கள் பெளத்த - சிங்கள இனவாதத்தினால், தமது நிலங்களுக்கும், விவசாயத்திற்கும் ஏனைய சமூக, பொருளாதார
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 77

Page 45
நடவடிக்கைகளுக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற பாதிப்புகளை அனுபவித்தவர்கள். இத்தகைய பாதிப்புகளை அரசியல் மயப்படுத்தி புரிந்து கொள்ளாதவர்களாக இருந்த போதிலும் கூட அவற்றின் தாக்கத்தை உணர்ந்தவர்கள். எனவே இவர்கள் அரச படையினரால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு வேதனை அடைந்தார்கள். இவர்கள் தம்மால் முடிந்த அளவு, தார்மீகரீதியான உதவிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார்கள். அரச படையின ரின் தாக்குதல்களுக்குள்ளாகி, வெளியேறிய தமிழ் மக்களை தமது வீடுகளில் தங்க வைத்தார்கள். இக்கட்டான, அபாயத்திற்குரிய நிலைமைகளில் கூட தமிழ் மக்களையும் அவர்களின் உடமைகளை யும், போராளிகளையும் காப்பாற்றியிருக்கிறார்கள். இவ்வாறு கிழக்கு முஸ்லிம் விவசாயிகளும், முற்போக்கு சக்திகளும் வழங்கிய ஆதர வின் பெறுமதியையும், முக்கியத்துவத்தையும் விடுதலை அமைப்பு கள் உணர்ந்து கொள்ளவில்லை. வட - கிழக்கு முஸ்லிம்களை ஒரு தனியான, சமமான உரிமைகள் கொண்ட சமூகமாகக் கருதி, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அவர்கள் வழங்கிய ஆதரவை முறை யாகக் கையாண்டிருந்தால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நிலைமை இன்று வேறுவிதமான மாறியிருக்கலாம்.
(i) விடுதலை அமைப்புகளின் அராஜக நடவடிக்கைகள் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்திய உணர்வலைகள்.
வட- கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவத்தை மறுப்பதன் மூலமாகவே, அவர்களை தமிழ்த் தேசத்திற்குள் இணைத்துவிடலாம் எனக் கருதிச் செயற்பட்ட விடுதலை அமைப்புகளின் நடவடிக்கைகள் முற்றிலும் வேறுவிதமாக இருந்தன. பொதுவாக விடுதலை இயக்கங்களுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவுகள் அதிகார உறவாக இருந்தனவே அன்றி, தமிழ் மக்களை அரசியல் மயப்படுத்தி, அணி திரட்டி போராட வழிகாட்டுகின்ற தன்மையுடையதாக இருக்க வில்லை. முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையிலும் கூட, விடுலை இயக்கங்கள் இதேவிதமான அதிகார உறவுகளையே கொண்டிருந்தன. அவை வட - கிழக்கு முஸ்லிம்கள் வழங்கிய ஆதரவின் முக்கியத் துவத்தை உணராமல், அவர்கள் மீது தமது அராஜகச் செயற்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கின. முஸ்லிம் நிலவுடமையாளர்களிடமும்,
78 (posh Gššph StBEROdph

வர்த்தகர்களிடமும் பின்னர் முஸ்லிம் அரசாங்க உத்தியோகத்தர் களிடமும் விடுதலை அமைப்புகள் பணம் பறிக்கவும், வரி அறவிடவும் ஆரம்பித்தன. தமிழ் பகுதிகளுக்குள் வியாபாரத்திற்குச் சென்ற சிறு வியாபாரிகளும், விறகு எடுக்கச் சென்ற ஏழை உழைப் பாளிகளும், தமது வயல் நிலங்களுக்குச் சென்ற விவசாயிகளும் 'உளவாளிகள்', 'சமூகவிரோதிகள்' என்ற முத்திரைகளின் கீழ் விடுதலை அமைப்புகளினால் கொல்லப்பட்டார்கள். இவர்கள் மீதான கொலைத் தண்டனைகள், எந்தவிதமான இராணுவக் காரணங்களு மின்றி, முஸ்லிம்கள் குறித்து வழமையாகக் கொண்டிருந்த தப்பெண் ணங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டன. முஸ்லிம் களின் வைப்புகள் செறிந்திருந்த வங்கிகளிலும் (உதாரணமாக காத்தான்குடி, கிண்ணியா) முஸ்லிம்களுக்கான கல்வி நிலையங்கள், பயிற்சி நிலையங்கள் (உதாரணமாக சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரி, அக்கறைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி என்பவற்றிலும் விடுதலை அமைப்புகள் அபகரிப்புகளில் ஈடுபட்டன. இத்தகைய செயற்பாடுகளை தமிழ் மக்கள் மீதும், முற்றிலும் தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களிலும் விடுதலை இயக்கங்கள் மேற்கொண்ட போதிலும், தம்மை வேறொரு சமூகமாக இனம் காணும் முஸ்லிம்கள் மீது அதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அவர்கள் அதை வேறுவிதமாக அர்த்தப்படுத்தினார்கள். விடுதலை அமைப்புகள் தம்மை அடிமைப்படுத்தவும், தமது பொருளாதாரம், கல்வி என்பவ ற்றை அழிக்கவும் முயற்சிக்கின்றன என்று கிழக்கு முஸ்லிம்கள் கருத ஆரம்பித்தார்கள். இவ்வாறாக, கிழக்கு முஸ்லிம்கள், விடுதலை அமைப்புகளின் அடக்குமுறைகள் தம்மைச் சூழ்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டார்கள். இதுவரை, தாம் போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்கிய உதவிகள், ஆதரவுகள், பாதுகாப்புகள் போன்ற அனைத்தும் விடுதலை அமைப்புகளினால் மறக்கப்பட் டிருந்த சூழலில், கிழக்கு முஸ்லிம்கள், தமிழ் சமூகத்தை நன்றிகெட்ட சமூகமாகத் தூற்றினார்கள்; விடுதலை அமைப்புகளுக்கு எதிரான ஆவேச உணர்வுகள் கிழக்கு முஸ்லிம்களிடையே பரவின.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 79

Page 46
கிழக்கில் தமிழ் - முஸ்லிம் வன்முறை மோதல்கள்
இதன் பின்னர் தம்மீது விடுதலை அமைப்புகள் மேற்கொள்கின்ற அராஜகங்களை எதிர்த்து கிழக்கு முஸ்லிம்கள் வெளிப்படையாகச் செயற்பட ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களிடம் பணம் பறிக்கவும், தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் அபகரிப்பில் ஈடுபடவும் வந்த விடுதலை அமைப்புகளின் உறுப்பினர்களை முஸ்லிம்கள் சூழ்ந்து கொண்டார்கள்; அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் அந்த உறுப்பினர்களை தடுத்தார்கள். சில இடங்களில் அவர்களைப் பிடித்து அரச படைகளிடம் ஒப்படைத்தார்கள். ஹர்த்தால், மற்றும் கடை யடைப்புகள் செய்யும்படி விடுதலை அமைப்புகள் விடுத்த அறிவித் தல்களை உதாசீனம் செய்தார்கள்; 'சமூக விரோதிகள்' என்ற பெயரிலும் , வேறு காரணங்களுக்காகவும் முஸ்லிம் நபர்கள் மீது விடுதலை அமைப்புகள் வன்முறைகளைப் பிரயோகித்த போது அதற்கு எதிராக முஸ்லிம் இளைஞர்கள் தமிழ்ப் பொதுமக்கள் மீது வன்முறைகளைப் பிரயோகிக்க ஆரம்பித்தார்கள். விடுதலை அமைப்புகள் பல்வேறு காரணங்களுக்காக முஸ்லிம் நபர்களை கடத்தியபோது, அதற்குப் பதிலடியாக முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் நபர்களைக் கடத்தினார்கள். இவற்றின் மொத்த திரட்சியாக, 1985இல் கிட்டத்தட்ட கிழக்கு எங்கும் தமிழ் - முஸ்லிம் வன்முறை மோதல்கள் வெடித்துப் பரவின. தமக்கு எதிராகச் செயற்படுகின்ற முஸ்லிம்களைப் பழிவாங்க வேண்டும் என்ற உணர்ச்சியுடன் இந்த விடுதலை அமைப் புகள், இத்தகைய வன்முறை மோதல்களை தமது பழிதீர்ப்புக்குரிய களங்களாகப் பாவித்தன. எல்லா விடுதலை அமைப்புகளும் முஸ்லிம் களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டன. சில இடங்களில் தனித்தனியாகவும், சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் கூட்டாக இணைந்தும் முஸ்லிம் பிரதேசங்களைத் தாக்கின. இவற்றின் விளைவாக பல அப்பாவி உயிர்கள் பலியாக் கப்பட்டன. உடமைகள் அழிக்கப்பட்டன. கிழக்கில் தமிழ் மக்களும்,
8O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

முஸ்லிம் மக்களும் வெளிப்படையாகவே எதிரெதிர் முனைகளுக்கு பிரிக்கப்பட்டார்கள். 1985 இல் ஆரம்பித்த இத்தகைய வன்முறை மோதல்கள், பின்னர் அடிக்கடி இடம்பெறத் தொடங்கின. ஒரு மோதல்கள் ஏற்படக் கூடியளவுக்கு முரண்பாடுகள் வெளிப்படாத சந்தர்ப்பங்களிலும் கூட இத்தகைய மோதல்கள் வெடித்தன. இவ்வாறான மோதல்களின் போது, முஸ்லிம்களின் வியாபாரத் தளங்கள், தொழில் நிலையங்கள், வீடுகள். என்பவை பிரதான இலக்குகளாகக் கொள்ளப்பட்டன. இவற்றில் இருந்த பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்ட பின்னர் அக்கட்டிடங்கள் அழிக்கப்பட்டன. இத்தகைய தாக்குதல் களின் போது ஆங்காங்கே முஸ்லிம்களில் சிலர் கொல்லப்பட்டார்கள். மறுபுறத்தில் மோதல்களில் ஈடுபட்ட முஸ்லிம் பிரிவினரைப் பொறுத்த வரை அவர்களினால் தமிழ்க் கிராமங்களுக்குள் ஊடுருவி தாக்குதல் களை நடாத்துவது எளிதானதாக இருக்கவில்லை. இதனால் பெரும் பாலும் தமக்கிடையேயும், மிக அருகிலேயும் வாழ்ந்த தமிழ் மக்களின் வீடுகளையும், உடமைகளையும் அழிப்பதிலும், ஆட்களைக் கொல்வ திலும் இவர்கள் தீவிரம் காட்டினார்கள்.
இத்தகைய மோதல்களில் விடுதலை அமைப்புகள் பங்கு கொண்ட தற்கு, கிழக்கு முஸ்லிம்கள் கருதியது போன்று, முஸ்லிம்களின் பொருளாதாரத்தைச் சிதைக்க வேண்டும் என்றும் தமக்கு எதிரான நிலையை எடுக்க விடாமல் அவர்களை அடக்க வைக்க வேண்டும் என்றும் விடுதலை அமைப்புகளிடையே நிலவியிருக்கக் கூடிய மனோபாவம் குறித்து கவனம் கொள்வது அவசியம். தமிழ் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் குறித்து சமூக, அரசியல் தளங்களில் ஏற்கனவே நிலவிய தப்பெண்ணங்களும், விடுதலை அமைப்புகளைச் சேர்ந்த முன்னணி அங்கத்தினர்களில் பலர் ஏற்கனவே முஸ்லிம்களுடன் (குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களுடன்) உத்தியோக ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் முரண்பட்டவர்களாகவும், போட்டியை சந்தித்தவர்களாக வும் இருந்தமையும் இந்த மோதல்களில் வகித்திருக்கக் கூடிய பங்கு கவனிக்கப்படவேண்டும். விடுதலை அமைப்புகளில் இருந்த இவ்வா றான நபர்கள் இத்தகைய மோதல்களில் உணர்வுபூர்வமாக (அல்லது உணர்வு பூர்வமற்ற நிலையில்) பங்கு பற்றியிருக்கக் கூடிய சாத்தியம் கவனிக்கப்பட வேண்டும். இவ்வகையில், கிழக்கில் இடம்பெற்ற தமிழ்
(yksilth CSeph GAiäFogh 81

Page 47
-முஸ்லிம் வன்முறை மோதல்களை வெறுமனே இரு சமூகங்களி டையே தன்னியல்பாக வெடித்துக் கிழம்பிய மோதல்களாகக் கருத முடியாது. இத்தகைய மோதல்களில் விடுதலை அமைப்புகள் தீவிரமாகப் பங்குபற்றியிருந்தன என்பதையும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இவ்வமைப்புகள், முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல்களை நடாத்தியிருந்தன என்பதையும் கவனத்தில் கொள்ளும் போது, இவற்றை முஸ்லிம் இனச்சுத்திகரிப்பின் (Ethnic Cleansing) ஒரு வடிவமாகக் கொள்வதே பொருத்தமாக அமையும்,
இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஒரு முக்கியமான உண்மையைத் தெளிவாக வெளிப்படுத்தின. அதாவது விடுதலை அமைப்புகள் வட - கிழக்கு முஸ்லிம்களை, 'தமிழ் பேசும் மக்கள்', 'இஸ்லாமியத் தமிழர்கள்' அல்லது "ஈழவர்கள்' என்று வரையறுக்க முனைந்த போதிலும், அவர்களை உணர்வுபூர்வமாக தங்களில் ஒருவராகக் கருத முடியாதிருந்த அந்நிய மனோபாவத்தையும், இந்த விடுதலை அமைப் புகளில் முஸ்லிம்கள் குறித்த தப்பெண்ணங்கள் எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருந்தது என்பதனையும் இவை வெளிப்படுத்தின. முஸ்லிம் கள் மீதான தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்காக, காட்டிக் கொடுக்கின்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள் என்றும், அரசாங்கப் படைகளுடன் இணைந்து அப்பாவித் தமிழ் மக்களுக்கும் தமக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் விடுதலை அமைப்புகள் கூறின. எனினும் இத்தகைய நியாயப்படுத்தல்களில் தர்க்கப் பொருத்தம் இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பக்கட்டத்திலிருந்தே பல தமிழர் கள் காட்டிக் கொடுக்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக் கிறார்கள். பொலிஸ் அதிகாரிகளாகவும், உளவுப்பிரிவைச் சேர்ந்தவர் களாகவும் இருந்த பல தமிழர்கள் விடுதலை அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டும் வந்திருக்கிறார்கள். போராட்டத்தின் பிற்பகுதிகளில், விடுதலை அமைப்புகளின் அராஜ கங்களுக்கு எதிராக தமிழ் மக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர்; மேலும் விடுதலைப் புலிகள் ஏனைய இயக்கங் களைத் தடை செய்த போது அவற்றில் அனேகமானவை இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தினருடன் இணைந்து, விடுதலைப் புலி களுக்கு எதிராகவும், பல சந்தர்ப்பங்களில் அப்பாவித் தமிழ் மக்க ளுக்கு எதிராகவும் செயற்பட்டு வந்திருக்கின்றன. அப்போது விடு
82 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

தலைப்புலிகள் சிங்கள அரசுடன் இணைந்து ஏனைய அமைப்புகளை வேட்டையாடியது. எனினும் விடுதலை அமைப்புகள் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்களை தாக்கி அழிக்கவில்லை. பதிலாக தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய நடவடிக்கைகளை,தனிநபர் துரோகமாகக் கருதி, சம்பந்தப் பட்ட நபர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கின.
ஆனால் முஸ்லிம்களில் சிலர் காட்டிக் கொடுக்கின்ற நடவடிக்கை களில் ஈடுபட்ட போதும், அரசாங்கப் படைகளுடன் சேர்ந்து செயற் பட்ட போதும் விடுதலை அமைப்புகளின் அராஜகங்களுக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகளைக் காட்டியபோதும், விடுதலை அமைப்பினர் அவற்றை தனிநபர் துரோகமாகக் கருதாமல் அவற்றை ஒரு அந்நிய சமூகத்தின் சமூகத் துரோகமாகக் கருதி முழுச் சமூகத்தையுமே கூட்டாகத் தண்டித்தனர். அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களைத் தாக்கி அழித்தனர்; பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள் (அதாவது மதப் பாட சாலைகள்) என்பவற்றை சேதப்படுத்தினார்கள்; அக் கட்டிடங்களில் 'ஓம்' 'சூலம்' போன்ற இந்துமத அடையாளங்களை இட்டனர். அவற்றில் இருந்த முஸ்லிம்களின் மதநூலான குர்ஆனை கிழித்து எரித்தனர். இவை அனைத்தும் தமிழீழ விடுதலை அமைப்புகளில் முஸ்லிம் விரோத உணர்வு எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருந்தது என்பதற்கான அடையாளங்களாக விளங்கின. (பிற்காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் 44 முஸ்லிம் பொலிசாரையும், காத்தான் குடியில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம்களையும் படுகொலை செய்ததும், வடபகுதி முஸ்லிம்களை 48 மணிநேர அவகாசத்தில் அங்கிருந்து வெளியேற்றியதும், விடுதலை அமைப்பு களில் காணப்பட்ட ஆழமான முஸ்லிம் விரோத உணர்வுகளின் உச்ச வெளிப்பாடாக அமைந்திருந்திருக்கின்றன.)
(v) தமிழ் - முஸ்லிம் மோதல்களில் அரசபடைகளின் பங்கு
1985 இலும், அதற்குப் பின்னரும் கிழக்கில் இடம்பெற்ற தமிழ் - முஸ்லிம் மோதல்களில், அரச படையினர் வகித்த பங்கு முக்கிய மானது. இவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும், இம்மோதல் களைத் தூண்டுவதிலும், இவற்றில் முஸ்லிம்களை ஈடுபடுத்துவதிலும்
(pri slih dgogih gliarodpih 83

Page 48
தீவிரமாகச் செயற்பட்டனர். சில சந்தர்ப்பங்களில் தமிழ் பகுதிகளு க்குச் சென்ற முஸ்லிம்களை அரச படையினர் கொன்றுவிட்டு, அவற்றை விடுதலை அமைப்புகளின் செயலாகக் காட்டுவதன் மூல மாக முஸ்லிம்களைத் தூண்டினார்கள். கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே ஏற்படக்கூடிய அரசியல் ஐக்கியத்தைச் சிதைப்பதன் மூலமாக, தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் பலவீனப்படுத்துகின்ற நோக்கத்தில், அன்றைய தேசிய பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத் முதலியின் தலைமையில் அரசு திட்டமிட்டு செயற்பட்டு வந்தது. இதற்காக கிழக்கில் தமிழ் -முஸ்லிம் நல்லுறவைச் சீர்குலைப்பதும், அவர்களிடையே பகைமையை ஏற்படுத்துவதும் அவசியமாக இருந் தது. இதை நிறைவேற்றுவதற்காக அரசு, முக்கியமாக தனது உளவுப் பிரிவைப் பயன்படுத்தியது. இந்த உளவுப் பிரிவு சில தனி நபர்களி னுடாக முஸ்லிம்கள் சிலரைப் பயன்படுத்தி, கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவுகளைச் சீர்குலைப்பதில் தீவிரமாகச் செயற்பட்டது. இந்த உளவுப் பிரிவின் திட்டத்துடனும், உதவியுடனும் தான் இக் கொலைப்படையினர் கிழக்கில் முக்கிய முஸ்லிம் பிரமுகர்களைக் கொலை செய்தார்கள். பின்னர் இவற்றை தமிழ் இயக்கங்களின் செயல் எனக்கூறி, தமிழ் - முஸ்லிம் மக்களிடையே மோதல்களைத் தூண்டி னர். இவ்வாறு அரசாங்கமும், உளவுப் பிரிவும், ஆயுதப் படையினரும் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவுகளைச் சீர்குலைப்பதற்கு மேற் கொண்ட முயற்சிகளுக்குரிய சாதகமான சூழலை, கிழக்கு முஸ்லிம்கள் மீதான விடுதலை அமைப்புகளின் அராஜகச் செயற்பாடுகள் உருவாக் கிக் கொடுத்தன.
84 Cypsib iaith dissCypth GriffSirNOCypth

மத்திய கிழக்கு வேலை வாய்ப்புகளினால் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட தாக்கங்கள்
1977 இன் பின்னர், இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட திறந்த பொருளாதாரக் கொள்கையின் காரணமாக இலங்கையர்கள் வெளி நாடுகளுக்கு குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை பெற்றுச் செல்ல ஆரம்பித்தார்கள். இந்த மத்திய கிழக்கு வேலை வாய்ப்பு, கிழக்கு முஸ்லிம்களின் சமூக பொருளாதார அமைப்பில் குறிப்பான மாற்றங்களை ஏற்படுத்தியது. மத்திய கிழக்கு வேலை வாய்ப்பு, ஆரம்பத்தில் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியிலேயே ஆர்வத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம் பெண்கள் தொழிலுக்காக வெளிநாட்டுக்கு செல்வது மதத்திற்கு முரணானது எனக் கூறி முஸ்லிம் பெண்கள் வெளிநாடு செல்வதை மத நிறுவனங்கள் தடுக்க முயன்றன. எனினும் அதிகரித்துச் சென்ற வறுமையும், வாழ்க்கைச் செலவும், வேலை வாய்ப்பின்மையும், புதிய நுகர்வுப் பொருட்கள் கட்டுப்பாடற்ற முறையில் இறக்குமதி செய்யப்பட்டதால் உருவாக்கப்பட்ட நுகர் பண்ட வெறியும் மத நிறுவனங்கள் போட்ட இத்தகைய கட்டுப் பாடுகளை உடைத்து நொறுக்கின. முதலில் தென்னிலங்கை முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்குக்குச் செல்லத் தொடங்கினார்கள்.
சமூகக் கட்டுப்பாடுகளும், இறுக்கமான உறவுகளும் நிறைந்திருந்த கிழக்கில், முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வது பரவலாக இடம் பெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில முஸ்லிம் பெண்களே மத்திய கிழக்குக்குப் பயணமானார்கள். 1980களின் நடுப்பகுதிவரை இத்தகைய நிலைமையே காணப்பட்டது. ஆனால் 1985 வன்முறை நிகழ்வுகளுக்குப் பின்னர், கிழக்கின் சூழ்நிலையானது தொடர்ச்சியாகக் குழப்பத்துக்குள்ளான போது, கிழக்கு முஸ்லிம் பெண்களின் மத்திய கிழக்குப் பயணம் துரிதமாக அதிகரித்தது. பரஸ்பர ஆட்கடத்தல், தாக்குதல்கள், கொலைகள் என கிழக்கின் சூழல் பாதுகாப்பற்றதாக மாறியதால், அங்கு விவசாய முயற்சிகள் காட்டுத்தொழில், குடிசைக் கைத்தொழில், மீன்பிடி மற்றும் கூலித் தொழில் என்பன பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனால்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 85

Page 49
முற்றிலும் இவற்றில் தங்கியிருந்த சிறுவிவசாயிகள், கூலியாட்கள், மற்றும் மீனவர்கள் ஆகியோர் வறுமையின் பிடிக்குள் இறுக்கப் பட்டார்கள். இதன் தவிர்க்க முடியாத (மற்றும் தடுக்க முடியாத) நிகழ்வாக, கிழக்கு முஸ்லிம் பெண்கள் அதிக எண்ணிக்கையில் மத்திய கிழக்குக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். முஸ்லீமாக இருந்த தாலும் ஆண்களைவிட மிகவும் குறைந்த கட்டணத்தில், அல்லது கட்டணமின்றியும் உடனடியாகச் செல்லக்கூடியதாக இருந்ததாலும், ஆயிரக் கணக்கான வறிய முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்கிற்குச் செல்ல தொடங்கினார்கள்.
இவ்வாறு அதிக எண்ணிக்கையிலும், தொடர்ச்சியாகவும் கிழக்கு முஸ்லிம் பெண்கள் மத்திய கிழக்குக்குச் செல்லத் தொடங்கியதன் விளைவாக, கிழக்கு எங்கும், உழைப்பதற்கு அவசியமில்லாத, உழைப்பதில் ஆர்வம் குறைந்த ஆண்கள் கூட்டம் ஒன்று உருவாகத் தொடங்கியது. வெளிநாடு சென்ற பெண்களின் கணவன்மார், அவர்களின் வயதுவந்த மகன் மார், அல்லது தகப்பன் மற்றும் சகோதரர்கள் போன்றோர் இதன்பின்னர் வேலை செய்ய வேண்டிய அவசியமின்றி, வீதிச் சந்திகளிலும், கடைத் தெருக்களிலும் குழுமத்
தொடங்கினார்கள்.
அத்துடன், மத்திய கிழக்கு வேலை வாய்ப்பின் காரணமாக கிழக்கு முஸ்லிம்களின் பொருளாதாரத் தன்மையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. வெளிநாடு சென்ற பெண்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பணம் வரத் தொடங்கியது. இதன் காரணமாக ஒருபுறத்தில் வறிய மற்றும் கூலி விவசாயிகளின் விவசாய முயற்சிகள் பலவீனப்பட்டன. உற்பத்தியிலும், உழைப் பிலும் ஈடுபடாமலேயே தமது பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய நிலை இப்போது இருந்ததால், தமது தொழிலுக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலை குறித்து இவர்கள் அதிகம் கவலைப்பட வில்லை. விவசாயம் செய்வதற்கு ஏற்றதாக இல்லாத போதிலும், அத்தகைய சூழலை மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்ற எண்ணம் கூட ஏற்படாமல் இந்த மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு அவர்களைத் தடுத்தது. மறுபுறத்தில் மத்திய கிழக்கு வேலைவாய்ப் பானது, கிழக்கு எங்கும் வியாபாரத்தில் ஈடுபடக் கூடிய முஸ்லிம் களின் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தி விட்டது. அதிகரித்த பணப்புழக்கத்தினாலும், விவசாயத்திற்கு ஏற்பட்ட மோசமான
86 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

பாதிப்புகளினாலும் வியாபாரம் வளர்ந்து பெருகியது. மூலை முடுக்கு எங்கும் சிறுசிறு கடைகள் தோன்றின. அத்தியாவசியப் பொருட்களுக் குரிய கடைகள் மாத்திரமன்றி, ஆடம்பரப் பொருட்களுக்குரிய கடைகளும் உருவாகத் தொடங்கின.
மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு கிழக்கு முஸ்லிம்களின் விழுமியங் களிலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. அவர்களின் மத்தியில் நிலவிய விவசாய சமூகத்திற்குரிய இறுக்கமான ஒழுக்க நெறிகளும், கலாசார மதிப்பீடுகளும் இப்போது மாற்றமடையத் தொடங்கின. மத்திய கிழக்குக்குச் சென்ற ஆண்கள், பெண்கள் மத்தியில் மாத்திரமன்றி, ஊரில் உழைப்பில் ஈடுபடாமல் இருந்த அவர்களின் குடும்ப உறுப்பி னர்கள் மத்தியிலும் இத்தகைய விழுமிய மாற்றங்கள் உருவாகின. குடும்பத் தலைவனுக்கு கட்டுப்பட்டும், தங்கியும் இருக்க வேண்டிய இறுக்கமான விவசாயக் குடும்ப உறவுகள் சிதைவடைந்து, தமது சுதந்திரமான தேர்வுகளைச் சாத்தியமாக்குகின்ற தளர்ந்த உறவுகள் உருவாகின.
இவ்வாறு கிழக்கு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார உறவுகளிலும் விழுமியங்களிலும் ஏற்பட்ட மாற்றங்களுடன், நிலத்தை அடிப்படை யாகக் கொண்டிருந்த உறவுகள் படிப்படியே சிதைவுறத் தொடங்கின. தமது அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதற்கு, தமிழ் மக்களுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வந்த முஸ்லிம் விவசாயிகளின் இடத்தில், அத்தகைய உறவுகளுக்கான தேவையைக் கொண்டிராத சிறு வர்த்தகர்களும், புதிய நலன்களும் பண்புகளும் கொண்ட உழைப்பில் ஈடுபடாதவர்களும் உருவாகிக் கொண்டிருந்தார்கள். இவர்களுடன், ஏற்கனவே தமிழ்த் தரப்பினருடன் நிர்வாக ரீதியாக முரண்பட்டுக் கொண்டிருந்த படித்த முஸ்லிம் பிரிவினர்; விடுதலை அமைப்புகளின் வரி, கொள்ளை, தாக்குதல்கள் என்பவற்றால் பாதிக்கப்பட்ட, மற்றும் நிலவுடமையாளர்கள்; வன்முறைகளின் போதும், விடுதலை அமைப் பினரின் தாக்குதல்களினாலும் தமது உறவினர்களையும், உடமை களையும் இழந்து குமுறிக் கொண்டிருந்தோர். என தமிழ் மக்களு டன் முரண்பாட்டைக் கொண்டிருந்த முஸ்லிம் பிரிவினரின் சமூக ஆதிக்கம் மேலோங்கியது. இதன் பின்னர் கிழக்கு முஸ்லிம்களின் பெரும்பான்மையினராக இருக்கின்ற நடுத்தர விவசாயிகளின் தேவைகளும், நலன்களும் சமூக அளவில் முக்கியத்துவம் இழக்கத் தொடங்கின.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 87

Page 50
ஊர்காவல் அமைப்பின் தோற்றம்
1985 மோதல்களுக்குப் பின்னர், கிழக்கு முஸ்லிம்களில் ஒரு சிறு தொகையினர் தமது ஊரைப் பாதுகாக்கும் நோக்கத்தில் ஆயுதப் படையினரின் ஆதரவுடனும், ஊர்காவல் அமைப்புகளில் பங்கேற்றும் செயற்பட ஆரம்பித்தார்கள். இவர்களில் ஒரு சாரார் ‘உதிரிகள்' பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர்கள் நிரந்தரத் தொழில் இல்லாதவர்களாகவும், சமூக ஒழுக்கமற்றவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் விடுதலை அமைப்புகளினால் மேற்கொள்ளப் பட்ட 'சமூக விரோதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளி னால்' பாதிக்கப்பட்டிருந்தார்கள். சிலர் விடுதலை அமைப்புகளினால் தண்டனை வழங்கப்பட்டவர்கள். (இவர்களில் சிலர், விடுதலை அமைப்புகளின் தீவிர ஆதரவாளர்களாகவும் தம் மைக் காட்டிக் கொண்டவர்கள்) இன்னொரு பிரிவினர், மத்திய கிழக்குக்குச் சென்ற பெண்களின் குடும்ப உறுப்பினர்களாக இருந்தார்கள், உழைக்க வேண்டிய அவசியமில்லாமலும் குடும்ப பொறுப்புக்களை கைவிட்டவர்களாகவும் இருந்த இவர்களில் கணிசமானோர் ஊர் காவல் அமைப்புகளில் இணைந்து கொண்டார்கள். தமிழ் - முஸ்லிம் வன்முறை மோதல்களின் போதும், விடுதலை அமைப்புகளின் தாக்குதல்கள் மற்றும் கடத்தல் என்பவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங் களைச் சேர்ந்த ஒரு பிரிவினரும் இவற்றில் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் முற்றிலும் அரச படைகளில் தங்கியிருந்ததால் அப்படை யினரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படுகின்றவர்களாக இருந்தார் கள். சிலரை, தமிழ் - முஸ்லிம் உறவைச் சீர்குலைப்பதற்கான தமது முயற்சிகளுக்குப் பயன்படுத்த முடிந்தது. இவர்கள் விடுதலை அமை ப்புகளுக்கு எதிராக மட்டுமன்றி அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான செயல்களிலும் ஈடுபட்டார்கள். 'முஸ்லிம்களின் பாதுகாவலர்கள்' என்ற உரிமையுடன் ஆயுதம் ஏந்திச் செயற்படத் தொடங்கிய இவர்கள் தமிழ் - முஸ்லிம் முரண்பாடுகளை மேலும் ஆழப்படுத்த முனைந்த அரச படையினரின் திட்டமிட்ட செயற்பாடுகளுக்குப் பொருத்தமான உடந்தையாளர்களாக மாறினார்கள்.
88 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

'ஜிஹாத்' அமைப்புகள்
இதேவேளையில் படித்த மற்றும் வர்த்தகக் குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களில் ஒரு பிரிவினர், விடுதலை அமைப்புகளின் தாக்குதல்களிலிருந்து தமது பிரதேசங்களைப் பாதுகாப்பதற்காக ஆயுத அமைப்புகளை உருவாக்க முயன்றனர். இவர்கள் ஆயுதப் படையினரால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படாதவர்களாக ஓரளவு க்குத் தமது சுயேட்சையைப் பேணிய நிலையில், ஆயுதங்களைப் பெறுவதிலும், பயிற்சி யெடுப்பதிலும் ஈடுபட்டனர். கல்முனை, அக்கரைப்பற்று, காத்தான்குடி போன்ற செல்வமிக்க நகர்ப் பகுதிகளில் இப்போக்கு முதலில் தொடங்கியது. 'ஜிஹாத்' இயக்கம் என்ற பெயரில், (ஜிஹாத் என்ற அரபுச் சொல், இறைவனுக்காக அர்ப்பணித் தல் என்ற கருத்தைக் குறிக்கிறது, மேலும் இஸ்லாத்தையும், முஸ்லிம் களையும் பாதுகாப்பதற்காக புனிதப் போர் புரிதல் என்ற தீவிர அர்த்தத்தையும் இது பெறுகிறது) செயற்பட்ட இவர்கள், ஆரம்பத்தில் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் செல்வந்தர் களிடம் பணம் பெற்று, அதன் மூலம் ஆயுதப்படையைச் சேர்ந்த சில உயரதிகாரிகளுக்கூடாக ஆயுதங்களை வாங்கினார்கள். அத்துடன் விடுதலை அமைப்புகளில் அராஜகம் உச்ச நிலையை அடைந்து, அதன் காரணமாக போராட்டத்தில் நம்பிக்கை இழந்து பலர் தாபனங் களை விட்டு வெளியேறுகின்ற போக்கு ஆரம்பித்த போது, அவர் களிடமிருந்தும் கணிசமான ஆயுதங்களை ஜிஹாத் இயக்கத்தினர் விலைக்கு வாங்கினார்கள்.
ஜிஹாத் இயக்கம் என்பது, கிழக்கிலுள்ள முழு முஸ்லிம் பிரதேசங் களையும் உள்ளடக்கிய ஒரு பொது அமைப்பு அல்ல, மாறாக பிரதேச அளவில் தனித் தனியாக, தன்னியல்பான முறையில் அவை தோன் றின. 'ஜிஹாத்' என்றால் 'புனித யுத்தம்' என்று அர்த்தம் பெறுவ தால், பொதுவாக உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் தமது சமூகத்தைப் பாதுகாக்கின்ற நோக்கத்தில் அமைப்புக்களை உருவாக்கும் போது, அங்கு 'ஜிஹாத் என்ற பதம் பிரபல்யம் பெறும் , இங்கு கிழக்கு முஸ்லிம்களிடையே பிரதேச ரீதியில் தன்னியல்பாக உருவான பல அமைப்புக்களும் தம்மைத் தனித் தனியே 'ஜிஹாத்' அமைப்பு என்றே அழைத்துக் கொண்டன. இவ்வாறு வெவ்வேறு பிரதேசங் களில் உருவான ஜிஹாத் அமைப்புகளுக்கிடையே நெருங்கிய
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 89

Page 51
தொடர்புகள் காணப்படவில்லை. விடுதலை அமைப்புக்களின் தாக்குதல்களில் இருந்து தமது பிரதேச முஸ்லிம்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கின்ற நோக்கத்துடன் செயற்பட்ட இவர் களுக்கு, தமது பிரதேச எல்லைகளுக்கு அப்பால் தமது அமைப்பை விரிவுபடுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை. மேலும் கிழக்கிலு ள்ள பெரும்பாலான முஸ்லிம் பிரதேசங்களிடையே நெருங்கிய நிலத்தொடர்ச்சி காணப்படாததாலும், விடுதலை அமைப்புகள் கிழக்கு முழுவதிலும் செயற்பட்டதாலும், ஜிஹாத் அமைப்பினரால் தமது பிரதேச எல்லைகளைக் கடந்து செயற்பட முடியவில்லை. இவற்றின் காரணமாக, ஜிஹாத் இயக்கங்களிடையே நெருக்கமான உறவுகள் தோன்றவோ, அவ்வியக்கத்தினர் ஒரே தலைமைக் கூடாக, ஒரே இலக்கு சார்ந்து செயற்படவோ முடியவில்லை. பிற்காலங்களில் இவர்களிடையே ஆயுதம் வாங்குவதற்கு உதவுதல், ஆயுதப் பயிற்சிகள். போன்ற சில அம்சங்களில் சிறியளவில் ஒத்துழைப்பு க்கள் ஏற்பட்டபோதிலும், ஒருபோதும் ஒன்றுபட்ட, ஒரே அமைப்பாக இவர்களினால் இயங்க முடியவில்லை.
ஆரம்பத்தில், ஜிஹாத் அமைப்புகளில் படித்தவர்களும், ஓரளவு வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்திருந்த போதி லும், படிப்படியே முஸ்லிம் சமூகத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அவற்றில் இணைந்து கொண்டார்கள். குறிப்பாக மத்திய கிழக்குக்குச் சென்ற பெண்களின் குடும்ப உறுப்பினர்கள், தமது தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டவர்கள், விடுதலை அமைப்பு களினால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோர், ஜிஹாத் இயக்கங்களில் தீவிரமாகச் செயற்பட்டனர்.
ஆரம்பத்தில் ஜிஹாத் இயக்கத்தினர், அரச படையினரின் பிடிக்குள் முற்றிலும் அகப்பட்டு விடாமல், தமது சுயேட்சையை ஓரளவிற் கேனும் பேணிக் கொள்ள விரும்பிய போதிலும், விடுதலை அமைப்பு களின் அடக்கு முறைகளும் அவற்றின் ஆயுத பலமும் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் காரணமாக, படிப்படியே அரச படைகளைச் சார்ந்து செயற்பட வேண்டிய நிலைக்கு மாறினார்கள்.
சில இடங்களில், ஜிஹாத் அமைப்புக்கள் முற்றிலும் இராணுவத் தினரின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இயங்கின. இவை படிப்படியே தமது நோக்கத்திலிருந்து விலகி, இராணுவ உயர் அதிகாரிகளின்
90 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

மறைமுகமான ஆயுத விற்பனைக்குரிய சந்தையாக மாறின.
ஜிஹாத் அமைப்பினர் தாம் வாழ்ந்த பிரதேசத்தை, தமது ஆளுகைக் குட்பட்ட, சுதந்திரமான ஆட்சிப் பிரதேசமாகக் கருதிச் செயற்பட் டார்கள். முஸ்லிம் வியாபாரிகள், நிலவுடமையாளர்கள், உத்தியோகத் தர்கள் என்பவர்களிடமும், நிவாரண உதவி பெறுகின்ற சாதாரண பொது மக்களிடமும் இவர்கள் நிதி அறவிட்டார்கள். தமது பகுதிகளில் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித் தார்கள். அதாவது சூது, களவு, குடி, விபச்சாரம், திரைப்படங்கள், வீடியோ. போன்றவை தடை செய்யப்பட்டு, இவற்றில் சம்பந்தப் படுபவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன. எனினும் ஜிஹாத் அமைப்பினர் தாம் அமுல்படுத்திய இந்த சட்டங்களுக்கு ஒருபோதும் விசுவாசமாக இருக்கவில்லை. தமது சமூகத்தினரிடையே, மதத்தின் பெயரால் இவர்கள் எவற்றையெல்லாம் தடை செய்து, தண்டனைக் குரியவைகளாக ஆக்கினார்களோ, அவை அனைத்தையும் அவர் களே செய்து வந்தார்கள். 'சமூகத்திற்காக உயிரைத் துறக்கப் போகி றோம்' என்ற நியாயப்படுத்தலுடன், எவ்வித குற்றவுணர்வுமின்றி தடைசெய்யப்பட்ட அனைத்தையும் இவர்கள் செய்து வந்தார்கள். வரி வசூல் என்பவற்றின் மூலமாக, இவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் திரண்டது. இதை அனுபவிப்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் போட்டி யும் முரண்பாடு களும் ஏற்பட்டன. இதனால் தலைமைப் பொறுப்பு களிலிருந்தவர்கள் அடிக்கடி மாற்றப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப் பட்டார்கள். சில இடங்களில் உட்கொலைகளும் இடம் பெற்றன. இவ்வாறான செயல்களுக்கு எதிராக தமது பிரதேச முஸ்லிம்களி டமிருந்து எவ்வித உணர்வலைகளும் தோன்றிவிடாமல் தடுப்பதற் காகவே ஜிஹாத் அமைப்பினர் இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தி னார்கள். இவ்வாறு விடுதலை அமைப்புக்களின் அராஜகத்தை எதிர்த்துப் போராட முன்வந்த ஜிஹாத் அமைப்பினர், விரைவிலேயே அந்த அராஜகத்தை ஒன்று விடாமல் தமது சொந்த மக்களின் மீது தாமே பிரயோகிப்பவர்களாக மாறினார்கள். இத்தகைய அராஜகத்தின் மூலம் தமது பகுதி முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும், வரிவசூல் என்பவற்றைத் தடையின்றி பெறவும், தாம் விரும்பியவாறு செயற்படவும் அவர்களால் முடிந்தது.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 91

Page 52
இவ்வாறிருந்தும், ஜிஹாத் அமைப்பினர் தமது பிரதேச முஸ்லிம்களின் பலத்த ஆதரவைப் பெற்றார்கள். விடுதலை அமைப்புக்களின் அராஜ கங்களினால் அச்சத்திற்கு உள்ளானவர்களாயும், ஆவேஷம் கொண்ட வர்களாகவும் இருந்த கிழக்கு முஸ்லிம்கள், தம்மை ஜிஹாத் அமைப்பி னர் பாதுகாப்பார்கள் என்று நம்பினார்கள். மேலும் ஜிஹாத் உறுப் பினர்கள், அந்தந்தப் பகுதி முஸ்லிம்களின் உறவினர்களாகவும், இம் முஸ்லிம்களை ஏதோ வழியில் பாதிப்புக்குள்ளாக்கிய விடுதலை அமைப்புகளுக்கு எதிராக போராட முன் வந்தவர்களாகவும் இருந் தனர். இதனால் ஜிஹாத் அமைப்பினர் முஸ்லிம்களின் அனுதாபத் தையும், மதிப்பையும் பெற்றவர்களாகவும், இளஞ்சந்ததியினரான மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில், அபிமானத்திற்கும், வியப்புக்கும் உரிய "கதாநாயகர்களாகவும்' விளங்கினார்கள். கிழக்கு முஸ்லிம்களிடையே ஜிஹாத் இயக்கங்களும், ஊர்காவல் அமைப்புகளும் உருவாகிய பின்னர், அங்கு தமிழ் - முஸ்லிம் உறவுகள் மேலும் சீர்குலைக்கப்பட்டன. தாங்கள் விடுதலை அமைப்பு களுக்கு எதிராகச் செயற்பட தொடங்கி விட்டதால், என்றோ ஒருநாள் அந்த அமைப்புகளினால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று இந்த முஸ்லிம் ஆயுதப் பிரிவினர் அச்சம் கொண்டிருந்தனர். எனவே தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொள்வதற்கு, கிழக்கின் சூழ் நிலை குழப்பப்படுவதும், அங்கு தமிழ் - முஸ்லிம் உறவுகள் மேலும் சீர்கெடுவதும் இவர்களுக்கு அவசியமானவையாக இருந்தன. கிழக் கில் மீண்டும் தமிழ் - முஸ்லிம் நல்லுறவு ஏற்படுமாயின் அதனால் இந்த முஸ்லிம் ஆயுதப் பிரிவினரின் உயிருக்கு ஆபத்து உண்டாகக் கூடிய சாத்தியம் இருந்தது. அதாவது இத்தகைய நல்லுறவு ஏற்படு மாயின், சாதாரண தமிழ் மக்களுடன் சேர்ந்து, விடுதலை அமைப் பினரும் முஸ்லிம் பிரதேசங்களுக்குள் நடமாடக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மேலும் இத்தகைய ஒன்றுதலின் மூலம் அமைதியான சூழ்நிலை உருவாகுமாயின், அதன் பின் ஆயுதப் படையினரின் கண்காணிப்பிலிருந்து, அத்தகைய பிரதேசங்கள் விடுபடக் கூடிய நிலை உருவாகும். இவற்றின் விளைவாக, முஸ்லிம் ஆயுதப்பிரிவி னர், விடுதலை அமைப்புகளின் தாக்குதல்களுக்கு எளிதில் உள்ளாக நேரிடும்.
இவ்வாறான நிலைமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, முஸ்லிம் ஆயுதப் பிரிவினர் கிழக்கில், தமிழ் - முஸ்லிம் உறவுகளைத்
92 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

திட்டமிட்டு சீர்குலைத்தார்கள். தமது பிரதேசங்களுக்குள் பொருட் களை வாங்கவோ விற்கவோ வருகின்ற சாதாரண தமிழர்களையும், கூலி உழைப்பிற்காக வந்த தமிழர்களையும் திட்டமிட்டுக் கொலை செய்ததன் மூலம் அவர்கள், இந்த உறவை சீர்குலைத்தார்கள். முன்னாள் மூதூர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல். அப்துல் மஜீது போன்ற முக்கிய நபர்களினதும், பிரபல்யம் பெறாத இன்னும் பல சாதாரண முஸ்லிம்களினதும் கொலைகளுக்கு இந்த முஸ்லிம் ஆயுதப் பிரிவினர் காரணமாக அமைந்தனர். இந்த முக்கிய நபர்களின் கொலை களில் அரச படையினரும் உளவு நிறுவனத்தினரும் பின்னணியில் நின்று செயற்பட்டனர். ஆயுதப் படையிலும் உளவு நிறுவனத்திலும் இருந்த சில உயரதிகாரிகளுக்கு கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவு குழப்பப்படுவது பல வகைகளில் அவசியமானதாக இருந்தது. முதலாவதாக தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்படக் கூடிய பகைமை, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும். இரண்டாவதாக இத்தகைய பகைமையின் மூலமாக இராணுவத்துடன் இணைந்து செயற்படக்கூடிய முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மூன்றாவதாக இத்தகைய குழப்பநிலை தொடரும்போது ஜிஹாத் அமைப்பினருக்கு தாம் ஆயுத விற்பனை செய்வதும் அதிகரிக்கும். மேலும் இத்தகைய குழப்பநிலை காரணமாக அரசாங்கம் வழங்கக்கூடிய நிவாரணத்தில் கணிசமானவற்றை தாங்கள் அபகரித்துக் கொள்வதும் சாத்தியப்படும் எனவே இவர்கள், தமிழ் - முஸ்லிம் பிரமுகர்களையும் கொலை செய்வதில், முஸ்லிம் ஆயுதப் பிரிவினருக்கு பக்க பலமாக நின்றார்கள். திட்டங்கள் வகுத்தும், ஆயுத மற்றும் போக்குவரத்து வசதிகள் வழங்கியும் இத்தகைய கொலைகள் இடம் பெறுவதற்குக் காரணமாக அமைந்தார்கள்.
காத்தான்குடி அஹமட் லெப்பை, மூதூர் மஜீது. போன்ற முற்போக்கு, ஜனநாயக சக்திகள் கொலை செய்யப்பட்டதானது, கிழக்கு முஸ்லிம்களிடையே உருவாகக் கூடிய ஜனநாயக இயக்கத்திற்கு பலத்த பின்னடைவைக் கொடுத்திருக்கிறது. உண்மையில் இவர்கள், கிழக்கு முஸ்லிம்களிடையே இருந்த முற்போக்கு, ஜனநாயகப் பிரிவினருக்கு தலைமை தாங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இவர்கள் கிழக்கு முஸ்லிம்களின் சுயமான அரசியற் குரலாக வெளிப்பட்டார்கள். தாம் வாழ்ந்த பிரதேச முஸ்லிம்களின் மத்தியில் இவர்களின் வார்த்தைகளுக்கு அதிக மதிப்பு இருந்தது. இவர்களின் மீது அந்த
gpidih dasagath adiarnogi 93

Page 53
மக்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இவர்கள் பகைமை யாக்கப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் - முஸ்லிம் உறவுகளை சீர்ப்படுத்த தீவிரமாக உழைத்தார்கள். பெளத்த - சிங்கள இனவாத ஒடுக்கு முறைகள் குறித்தும், அவற்றுக்கு எதிராகப் போராடுகின்ற தமிழ் மக்களுடன் சுமூகமான உறவுகளைப் பேணுவதன் அவசியம் குறித்தும் இவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். இவ்வகையில் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களை ஒன்றிற்கு ஒன்று எதிராக நிறுத்துவதற்கு திட்டமிட்டு வந்த பெளத்த - சிங்கள இனவாதத்தின் முயற்சிகளுக்கு இவர்கள் பெரும் இடைஞ்சலாக இருந்தார்கள். எனவே இவர்கள் கொலை செய்யப்படுவது சிங்கள அரசிற்கு அவசியமாகவும் சாதக மாகவும் இருந்தது. இவர்களின் கொலைகளினால் கிழக்கின் முஸ்லிம் முற்போக்கு ஜனநாயக இயக்கத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இடைவெளி இன்னமும் நிரப்பப்படாமலேயே இருக்கின்றது. இத்தகைய ஒரு ஜனநாயக இயக்கம் கருக்கொள்ளக்கூட முடியாத நிலையே இன்று வரை கிழக்கில் இருந்து வருகிறது. இவ்வாறு கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவுகள் சீர்குலைக்கப்பட்டு, முஸ்லிம் பிரதேசங்களின் சூழ்நிலை அச்சத்துக்குரியதாக மாற்றப்பட் டதன் காரணமாக மேலும் சில புதிய பிரிவினர்கள் பொருளாதார ரீதியில் பெரும் நன்மைகளை அடைந்தார்கள். அரசாங்கத்தினாலும், அரச சார்பற்ற முஸ்லிம் நிறுவனங்களினாலும் வழங்கப்பட்ட நிவா ரண உதவிகளில் கணிசமான பகுதியை, முஸ்லிம் ஆயுதப் பிரிவினர், இராணுவ உயரதிகாரிகள் என்பவர்களோடு, உள்ளூர்க் கிராம சேவையாளர்கள், நிவாரப் பணியாளர்கள், மொத்த வியாபாரிகள் என பல பிரிவினரும் பகிர்ந்து கொண்டார்கள். கிழக்கு முஸ்லிம் பிரதேசங் களில் குழப்பமான, அச்ச மூட்டக் கூடிய சூழலைத் தொடர்ந்தும் பேணுவதன் மூலமாக, பொருளாதார ரீதியில் வசதிகளைப் பெருக்கிக் கொண்டிருந்த இத்தகைய புதிய பிரிவினர், தமிழ் - முஸ்லிம் உறவுகளை மேலும் சீர்குலைப்பதில் ஈடுபட்ட முஸ்லிம் ஆயுதப் பிரிவினருக்கு தமது ஆதரவுகளை வழங்கினார்கள்.
இவ்வாறு 1985 வன்முறை மோதல்களுக்குப் பின்னர், கிழக்கு முஸ்லிம்களில் ஒரு சாரார் கடுமையான தமிழ் விரோத உணர்வுடனும், சுயநல நோக்கத்துடனும் செயற்பட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கத்தில், தமிழ் - முஸ்லிம் நல்லுறவுகளின் தேவையைக் கொண்டிருந்த முஸ்லிம் விவசாயிகளும், முஸ்லிம் முற்போக்கு
94 (pcio sh (5a puh GadiasTRO (páh

ஜனநாயகப் பிரிவினரும் தமது பங்கிற்கு செயற்படவே செய்தார்கள். 85 வன்முறை மோதல்களில் பாரதூரமான விளைவுகள் இவர்களைக் கலக்கமடையச் செய்தன. தமிழ் - முஸ்லிம் உறவுகளைச் சிதைப்பதில் ஆயுதப்படையினர் கொண்டிருந்த ஆர்வம் அவர்களை அச்சத்திற்குள் ளாக்கியது. ஆயுதப்படையினர், கிழக்கு முஸ்லிம்களையும், தமிழ் மக்களையும் நிரந்தரப் பகையாளிகளாக்கத் திட்டமிடுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். தமிழ் மக்களுடன் ஏற்படக்கூடிய நிரந்தரப் பகைமையின் விளைவாக, தமது பொருளாதாரத்திற்கும், வாழ்க்கை முறைகளுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை அவர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். எனவே மீண்டும் இத்தகைய மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்று இவர்கள் கருதினார்கள். கிழக்கு முஸ்லிம்கள் தமக்குள் ஒன்றிணைந்து, ஒரே குரலில் தமது கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடிய நிலை உருவாகும் போதுதான், அவர்கள் ஆயுதப்படையினரின் பிடிக்குள் அகப்படுவதிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடியும் என்று முஸ்லிம் முற்போக்கு, ஜனநாயகப் பிரிவினர் முடிவு செய்தார்கள். இதன் தொடர்ச்சியாக, கிழக்கின் அனைத்து முஸ்லிம் பிரதேசங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்புகளை உருவாக்குகின்ற முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. இத்தகைய முயற்சிகளில் காத்தான்குடியைச் சேர்ந்த அஹமட் லெப்பை மிகவும் மும்மரமாக ஈடுபட்டார். இவை தொடர்பான கூட்டங்களில், தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையின் அவசியம் பற்றி வலியுறுத்தப் பட்டதோடு, கிழக்கு முஸ்லிம்களின் விடயங்களில் விடுதலை அமைப்புக்களோ, ஆயுதப் படையினரோ தலையிட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் இந்த அமைப்புக்கள் தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே செயலிழந்து விட்டன. இவற்றின் பிரதிநிதிகள் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு சிங்களக் கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்ததாலும், தமது சொந்த ஊர்களில் இராணுவம் மற்றும் முஸ்லிம் ஆயுதப் பிரிவினரை முகம் கொடுக்க வேண்டியிருந்ததாலும், விடுதலை அமைப்புக்களினால் தாக்கப் படலாம் என அஞ்சியதாலும் தங்களது சொந்தப் பிரதேசங்களுக்குத் திரும்பியவுடன் இவர்கள் இந்த அமைப்புக்களில் இருந்து விலகிக் கொண்டார்கள்.
இதன் பின்பும் கூட, SLFP யைச் சேர்ந்த சில முன்னாள் பாராளுமன்ற
(ypdiosdSch dg55(ypth Grífa5 TG0Qypih 95

Page 54
உறுப்பினர்களும் அமைப்பாளர்களும் மற்றும் சில முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையின் அவசியம் பற்றியும், இதைச் சீர்குலைப் பதில் அரச படைகள் திட்டமிட்டுச் செயற்படுகின்றன என்றும் வெளிப்படையாகவே பேசி வந்தார்கள். மேலும், இவர்கள் தமிழ் பிரமுகர்களுடன் இணைந்து, சமாதானக் குழுக்களை அமைத்து தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காகச் செயற்பட்டார்கள். இவ்வாறு செயற்பட்டவர்களில் முக்கியமான வர்களான மூதூர் மஜீது போன்றவர்கள் அரச படையினரின் உதவியுடன், முஸ்லிம் ஆயுதக் குழுக்களினால் கொலை செய்யப்பட் டார்கள். தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தைப் பேண விரும்பிய சில பிரமுகர்களும் கூட, இதே போன்று ஆயுதப் படையினராலும், விடுதலை அமைப்புக்களினாலும் கொல்லப்பட்டார்கள். இவ்வாறு தமிழ் - முஸ்லிம் ஐக்கியத்தைப் பேண விரும்பியவர்கள் கொடூரமாக அடக்கப்பட்ட பின்னர், அத்தகைய சமாதான இலக்கு நோக்கிய செயற்பாடுகள் கிழக்கில் படிப்படியே குறைந்து, இறுதியில் மறைந்து போயின.
இவ்வாறு கிழக்கு முஸ்லிம்களின் சமூக பொருளாதார தன்மைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த சூழலில், கிழக்கு முஸ்லிம் நிலவுடமையாளர்களினாலும், அவர்களின் ஆதரவு பெற்ற மரபு வழி கிழக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் சமூக, அரசியல் ஆதிக்கம் தளர்வுறத் தொடங்கியது. முற்றாகக் குழம்பி, பாதுகாப்பற்றதாக மாறிவிட்ட கிழக்கின் சூழலில், புதிய சமூகப் பிரிவுகளும், நவீன ஆயுதங்களின் பாவனைகளும் அதிகரித்துவிட்ட நிலையில், பழமையான இந்த நிலவுடமையாளர்களினால் தமது சமூக ஆதிக்கத்தை தொடர்ந்தும் பேணிக் கொள்ள முடியவில்லை. இதே நேரத்தில் கிழக்கின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் சங்கடமான நிலையில் இருந்தார்கள். முஸ்லிம்கள் மீது விடுதலை அமைப்புக்கள் மேற்கொண்டிருந்த அராஜக செயற்பாடுகளை இவர்களால் கண்டிக்க முடியவில்லை. இவ்வாறு கண்டிப்பதால் அவர்களினதும், அவர்களது குடும்ப உறுப்பினர்களதும், உயிர், உடமைகளுக்கு விடுதலை அமைப்புக்களினால் பாதிப்புகள் ஏற்படலாம். மேலும் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் இனவாதி களாகக் கருதப்படக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். தமது தேர்தல் வெற்றிகளுக்கு ஓரளவு தமிழ் வாக்குகளையும் எதிர்பார்த்திருக்கின்ற
96 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

இவர்களின் வெற்றி வாய்ப்பு இதனால் பாதிக்கப்படலாம். மறுபுறத்தில், தமிழ் மக்கள் மீது கொடூரமான அடக்குமுறைகள் மேற்கொண்டிருக்கின்ற இனவாத அரசைக் கண்டிக்கவோ அல்லது கிழக்கில் தமிழ் - முஸ்லிம் உறவுகளைத் திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்ற ஆயுதப்படைகள் மற்றும் முஸ்லிம் ஆயுதப்பிரிவினரின் செயற்பாடுகளைக் கண்டிக்கவோ இவர்களால் முடியவில்லை. இவ்வாறு கண்டிப்பதால் அவர்களின் உயிர் வாழ்வும், அரசியல் வாழ்வும் கடுமையாகப் பாதிக்கப்படலாம். இத்தகைய இக்கட்டான நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் எப்படியாவது தீர்க்கப் படுவதும், தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் மீண்டும் உருவாக்கப்படுவதுமே அவர்களுக்குச் சாதகமாக அமையக் கூடியவையாக இருந்தன. எனினும் இவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், விருப்பத்திற்கும் மாறாக, பிரச்சினைகள் கடுமையாகிக் கொண்டே சென்றன. கிழக்கு முஸ்லிம்களிடையே தீவிரமடைந்து கொண்டிருந்த உணர்ச்சிக் குமுறலைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலை இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இழந்து கொண்டிருந்தார்கள். அத்தோடு கிழக்கு முஸ்லிம்களிடையே சமூக ஆதிக்கத்தைப் பெற்றுக் கொண்டிருந்த புதிய பிரிவினரின் ஆவேசத்துக்குரியவர்களாகவும் இவர்கள் மாறியிருந்தார்கள். குடும்ப, சமூக உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களினால், இவர்களின் ‘பரம்பரை' ஆதரவாளர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கை நன்கு குறைந்து விட்டது. இவற்றின் மொத்த விளைவாக, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசியல் செயற்பாடுகள், கிழக்கில் படிப்படியே குறைந்து கொண்டு வந்தன. அவர்கள் மிகப் பெரும்பாலும் கொழும்பிலேயே தமது
வாழ்க்கையை கழிப்பவர்களாக மாறினார்கள்.
இவ்வாறு 1985 ம் ஆண்டிலிருந்து கிழக்கு முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல் நிலைமைகளிலும் விழுமியங்கள் தொடர்பாகவும் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாற்றங்களின் விளைவாக, அவர்களின் கருத்துக்களிலும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. தமது தனித்துவம், உரிமைகள், முன்னேற்றம் என்பவை பற்றிய சிந்தனைகள் கிழக்கு முஸ்லிம்களிடையே தோன்றின. இவற்றை அழிக்கவும், தம்மைக் கீழ்ப்படுத்தவும், முயற்சிக்கின்ற விடுதலை அமைப்புக களிடமிருந்து தமது தனித்துவத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஆவேசக் கருத்துக்கள் எங்கும் வலுப்பெற்றன.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 97

Page 55
பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வந்த சிங்களக் கட்சிகள் சார்ந்த அரசியலிலிருந்து அவர்கள் விடுபடத் தொடங்கினார்கள். இப்போது தான் முதன் முதலாக, சகல கிழக்கு முஸ்லிம்களையும் உள்ளடக்கிய சுயமான அரசியல் இயக்கத்தை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பான சூழல் உருவாகியது. குடும்ப, பிரதேச, கட்சி எல்லைகளுக்கு அப்பால் கிழக்கின் சகல பகுதிகளிலுமுள்ள முஸ்லிம்களை ஒன்றிணைக்கக் கூடிய பொருத்தமான சூழல் இப்போது தான் தோன்றியது. இதுநாள் வரை நிலவுடமையாளர்களினதும், அவர்களின் செல்வாக்குட்பட்ட அரசியல்வாதிகளினதும் கட்டுப்பாட்டின் கீழ், நிமிர முடியாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்த படித்த முஸ்லிம் பிரிவினர் இப்போதுதான் தமது சமூகத்தின் அரசியல் தலைமையை வென்று கொள்ளக்கூடிய சாத்தியம் உருவாகியது. பொதுவாக வெவ்வேறு சமூகங்களிடையே முரண்பாடுகள் கூர்மையடைகின்ற போது, ஒடுக்கப்படுகின்ற சமூகத்தைச் சேர்ந்த படித்த, நடுத்தர, வர்க்கப் பிரிவினரே தமது சமூகத்தின் 'தத்துவ ஊற்றாகவும்' அதன் அரசியல் உணர்ச்சியை ஒரு முகப்படுத்துகின்ற 'வடிகாலாகவும்' அமைகின்றனர். கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் கூட, இந்தப் படித்த பிரிவினர் தான் இத்தகைய வரலாற்றுப் பாத்திரத்தை வகித்தார்கள். இவ்விதமாக "பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்' ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாக பரிணாமம் அடைந்தது.
98 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

கிழக்கு முஸ்லிம்களின் தேசிய எழுச்சியும் பூரீலங்கா முஸ்லிம் கொங்கிரசும்
கிழக்கு முஸ்லிம் தேசிய எழுச்சியின் ஆரம்பம்:-
மக்கள் திரள் ஒரு தேசமாக ஒன்றிணைவது சூழ்நிலைகளில் நிகழ்கிறது. இவற்றில் ஒன்றாக ஒரு சமூகம் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுவது அமைகிறது. ஒரு சமூகத்தின் மீது, பிற சமூகம் / சமூகங்களினால் திட்டமிட்டரீதியில், தொடர்ச்சியாக ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப் படும் போது ஒடுக்கப்படும் சமூகம் அவற்றிற்கான தனது எதிர்வினைகளை படிப்படியே வெளிப்படுத்துகின்றது. இவ் ஒடுக்குமுறைகளை வெற்றி கொள்வதற்காக, அது படிப்படியே தன்னை ஒன்றிணைக்கிறது. தமக்கிடையில் நிலவும் பொது அடையா ளத்தைக் கொண்டே தம் மீது ஒடுக்குமுறைகள் மேற் கொள்ளப் படுகின்றது என்பதை, ஒடுக்கப்படும் சமூகத்தினர் உணரும் போது அப்பொது அடையாளத்தின் கீழ் தம்மை ஒன்றிணைக்கின்றார்கள். மொழி, மதம், கலாசாரம், பொருளாதாரம், நிறம் (Race) பிரதேசம், பாரம்பரியம், இனம் (Ethnicity) பொதுவான வரலாற்று அனுபவம். என பல்வேறுபட்ட காரணிகளில் ஒன்று அல்லது பல, ஒரு மக்கள் திரளை ஒன்றிணைக்கின்ற அடையாளங்களாக அமைகின்றன.
ஒடுக்கப்படும் சமூகத்தினர் இவ்வாறு, தமக்கிடையே நிலவுகின்ற இதர வேறுபாடுகளைக் கடந்து, பொது அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்து தமக்கென தனியான அரசியலை முன்னெடுக்கின்ற போது அவர்கள் ஒரு தேசமாக அமைகின்றார்கள். அவர்களது தனியான அரசியல் இயக்கமானது இங்கு தேசிய இயக்கமாக மாற்றமடைகின்றது.
1985 வன்முறை மோதல்களுக்குப் பின்னர், கிழக்கு முஸ்லிம்கள் தம்மை ஒரு தனியான தேசமாக ஒன்றிணைத்து, தேசிய இயக்கத்தை முன்னெடுக்கக் கூடிய கிளர்ச்சி நிலையில் காணப்பட்டார்கள். 1985 மோதல்களுக்குப் பின்னர் தாம் முஸ்லிம்களாக இருப்பதே. தம் மீது விடுதலை அமைப்புக்கள் தாக்குதல்கள் மேற்கொள்ளக் காரணம் என்று
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 99

Page 56
கிழக்கு முஸ்லிம்கள் உணர்கின்ற வகையில் வரிசையாக சம்பவங்கள் நிகழ்ந்தன. விறகு எடுக்கவும், தம் கால்நடைகளை கவனிக்கவும், வியாபாரத்திற்காகவும், மீன்பிடிக்கவும், தமது வயல் நிலங்களுக்கும் சென்ற சாதாரண முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கும், பயணம் சென்று கொண்டிருந்த முஸ்லிம்கள் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தற்கும், தமது பிரதேசங்கள், வியாபார தளங்கள், மத, கலாசார தளங்கள் போன்றவை விடுதலை அமைப்புகளினால் தாக்கி அழிக்கப் பட்டதற்கும் வேறு காரணங்கள் எதையும் கிழக்கு முஸ்லிம்களினால் கண்டு கொள்ள முடியவில்லை. கிழக்கின் எப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்களாயினும், தாம் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர் எந்நேரமும் விடுதலை அமைப்புகளின் வன்முறைக்கு உள்ளாகலாம் என்ற அச்சத்தைக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், கிழக்கு முஸ்லிம்கள் தமது குடும்ப, பிரதேச, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து தாம் 'முஸ்லிம்கள்' என்ற பொதுவான உணர்வைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். 'முஸ்லிம்கள்' என்ற பொது அடையாளத்தின் கீழ் கிழக்கு முஸ்லிம்களை ஒரு தேசமாக ஒன்றிணைத்து, அவர்களிடையே தேசிய இயக்கத்தை முன்னெடுக்க வாய்ப்பான சூழ்நிலை இப்போது உருவாகியிருந்தது. கிழக்கு முஸ்லிம்களிடையே நிலவிய இத்தகைய கொந்தளிப்பு நிலைமையை "பூரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ்' பற்றி பிடித்தது. முஸ்லிம்களின் தனித்துவம், சுதந்திரம், உரிமைகள், பாதுகாப்பு, மதம். என்பவற்றை உணர்ச்சி மிகு கோசங்களாக்கி அது கிழக்கு முஸ்லிம்களை அரசியல்ரீதியாக ஒன்றிணைத்தது.
கிழக்கு முஸ்லிம்களின் தேசிய எழுச்சி 85 ல் இடம்பெற்ற தமிழ் - முஸ்லிம் வன்முறை மோதல்களுடன் தோன்றியது. இத்தேசிய எழுச்சி ஒரு படிமுறை சார்ந்த வளர்ச்சியின் விளைவாக அல்லாமல் ஒரு திடீர் எழுச்சியாக அமைந்தது. 1985 க்கு முன்னர் கிழக்கு முஸ்லிம்கள் வெகுசன அளவில், தமது அரசியல் தனித்துவம் பற்றியோ, தமது உரிமைகளை உத்தரவாதம் செய்யும் தனியான அரசியல் அதிகார அலகு குறித்தோ சிந்தித்திருக்கவில்லை. தமது உரிமைகளை பெறுவதற்கான அரசியல் போராட்டங்கள் எதனையும் அவர்கள் முன்னெடுத்திருக்கவில்லை. தாம் ஒரு தனியான சமூகம், தமக்கென மறுக்கமுடியாத உரிமைகள் இருக்கின்றன போன்ற பிரக்ஞை அவர்களிடம் நிலவியிருக்கவில்லை. இவ்வகையில், 1985 வரையில்
1 OO முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

கிழக்கு முஸ்லிம்கள் ஒரு தேசிய இயக்கம் சார்ந்த அனுபவங்கள் எதனையும் பெற்றிருக்கவில்லை.
கிழக்கு முஸ்லிம்கள் பெளத்த - சிங்கள இனவாத ஒடுக்கு முறைகளினால் கடுமையாகப் பாதிப் புற்றிருந்தார்கள் என்பது உண்மை. காணிப் பறிப்பு, விவசாயத்துறைக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தின் விளைவால் ஏற்பட்ட அரசியல், பொருளாதார பாதிப்புகள் இதன் விளைவாக கிழக்கு முஸ்லிம் இளைஞர்களிடையே (குறிப்பாக அம்பாறை மாவட்ட இளைஞரிடையே) சிங்கள இனவாதத்திற்கும், அரசுக்கும் எதிரான உணர்வலைகள் என்பன கணிசமாக உருவாகியிருந்தன. ஆங்காங்கே சில முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை அமைப்புகளில் இணைந்தமைக்கும், 1984 இல் கிழக்கில் (குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில்) பரவலாக இடம் பெற்ற இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் பின்னணியாக சிங்கள இனவாதத்திற்கு எதிரான உணர்வலைகளும் காரணமாயிருந்தன. எனினும் கிழக்கு முஸ்லிம்கள் சிங்கள இனவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒன்றி ணைந்த போராட்டத்தை முன்னெடுத்திருக்கவில்லை. இதற்கு சில குறிப்பான காரணங்கள் இருந்தன. முதலாவது. கிழக்கில் பெளத்த சிங்கள இனவாதம், இனவாத அரசும் மேற்கொண்டு வந்திருக்கின்ற ஒடுக்கு முறைகள், அங்குள்ள முஸ்லிம்களைப் பாதித்த அதே வேளையில் அங்குள்ள தமிழ் மக்களையும் பாதித்திருக்கின்றன. இதனால் இனவாத ஒடுக்கு முறைகள் 'முஸ்லிம்கள்' என்ற வகையில் தம்மை இலக்காகக் கொண்டவை என அவர்களால் உணர முடியவில்லை.
இரண்டாவதாக. தெற்கு மற்றும் கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வெகுசன நடவடிக்கைகள் எதனையும் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் முன்னெடுக்கவில்லை. ஒடுக்குமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இதனால் கிழக்கு முஸ்லிம்கள் தாம் வாழ்ந்த பிரதேச அளவில் பெளத்த - சிங்கள இனவாத ஒடுக்குமுறைகளை உணர்ந்தார்களே தவிர அவை பிரதேச எல்லைகளை கடந்து, முழு கிழக்கு முஸ்லிம்களுக்கும் பொதுவானது என்ற பிரக்ஞையை பெறவில்லை.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 1 Ο 1

Page 57
மூன்றாவதாக. கிழக்கு முஸ்லிம்கள் அதுவரைக்கும் சிங்கள கட்சிகளின் பரம்பரை ஆதரவாளர்களாக இருந்து வந்திருப்பதால், தம் மீதான சிங்கள இனவாத அரசின் ஒடுக்குமுறைகளை, கட்சி அரசியலுடன் இணைத்துப் புரிந்து கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். இக்கட்சிகளில் போட்டியிட்டவர்கள் முஸ்லிம்களாகவும், தமது பிரதேசத்தை சேர்ந்தவராக அல்லது தமது அபிமானத்திற்குரிய வர்களாகவும் இருந்தமையால், சிங்கள கட்சிகளுக்கும் தம் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளுக்கும் இடையிலான உறவை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு, கிழக்கு முஸ்லிம்கள் 1985 ம் ஆண்டு வரைக்கும் தாம் ஒரே அரசியல் விதியினால் பிணைக்கப்பட்டுள்ள ஒரு சமூகம் என்றோ தமக்கென தனியான அரசியல் இயக்கம் அவசியம் என்றோ உணராதவர்களாக இருந்துள்ளனர்.
விடுதலை அமைப்புகளினால் கிழக்கு முஸ்லிம்களின் மீது மேற்கொள் ளப்பட்ட அராஜகம் சிங்கள இனவாத ஒடுக்குமுறைகளில் இருந்து வேறுபட்டதாக இருந்தது. இந்த அராஜகம், கிழக்கு முஸ்லிம்களின் உயிர்வாழ்வு, பொருளாதாரம், கலாசாரம், மதம் என்பவற்றை நேரடி இலக்காகக் கொண்டதாயும், தொண்டுணரக்கூடியதாகவும் அமைந்திருந்தது. இவ்வராஜகம் அவர்களது தனிமனித மற்றும் சமூக இருப்பை நேரடியாக அச்சுறுத்துவதாகவும், அதனால் இதிலிருந்து விடுபட வேண்டியதன் உடனடி அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்திருந்தது. விடுதலை அமைப்புகளின் அராஜக செயற்பாடுகள் அதிகரித்துச் செல்ல, கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தம்மையும் தமது நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர் வும் அதிகரித்து ஆழமாகிச் சென்றது. 1985 வன்முறை மோதல் களுக்குப் பின்னர் இந்த உணர்வலைகளின் திரட்சி தேசிய எழுச்சியாக வெளிக்கிளம்பியது.
முஸ்லிம் தேசிய எழுச்சியில் வன்முறை இயக்கம்
கிழக்கு முஸ்லிம்களின் தேசிய எழுச்சி எடுத்த எடுப்பிலேயே வன் முறை சார்ந்த வடிவம் பெற்றது. கிழக்கு முஸ்லிம்களை பொறுத்த வரை, விடுதலை அமைப்புகளின் வன்முறையில் இருந்து தமது உயிர்,
1 O2 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

உடமைகளை பாதுகாப்பது என்பது உடனடிப் பிரச்சினையாக இருந்த மையால் அவர்கள் உடனடியாகவே ஆயுதங்களுடன் தொடர்பு கொண்டனர். இதனால் தேசிய இயக்கத்தின் தொடக்கத்திலேயே 'ஜிஹாத்' குழுக்கள், ஊர்காவல் அமைப்புகள் போன்ற ஆயுதப் பிரிவுகளும், அரச படையினருடன் சேர்ந்து செயற்படுவதும் இடம் பெறத் தொடங்கின.
இவ்வாறு, கிழக்கு முஸ்லிம் தேசிய எழுச்சியின் ஆரம்பத்திலேயே தோன்றிவிட்ட வன்முறை இயக்கமானது அம் முஸ்லிம்களின் தேசிய உணர்வைத் தொடர்ந்து வளர்த்தெடுக்கவும், அவ்வுணர்வை முழுமை யாகப் பிரதிபலிக்க கூடிய வகையில் தேசிய இயக்கத்தை முன்னெடுத் துச் செல்லவும் தவறிவிட்டது. இவ் வன்முறை இயக்கத்தினால் அனைத்து கிழக்கு முஸ்லிம்களையும் ஒன்றிணைக்க முடியமால் போனதோடு தான் செயற்பட்ட பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் தேசிய உணர்வையும் கூட வளர்த்தெடுக்க முடியவில்லை. அவர் களின் பிரதேச எல்லைகளைக் கடந்ததாகவும், பொதுவான இலக்கு நோக்கியதாயும் தேசிய உணர்வை வளர்த்தெடுக்க முடியவில்லை. இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் ஒரு பிரிவினரிடம் ஆழமான சமூக உணர்வுகள் காணப்பட்டன. எனினும் இவர்களுக்கு அரசியலிலும், ஆயுதப் போராட்ட முறையிலும் படிமுறை சார்ந்த வளர்ச்சி ஏற்படாமையால் தமது இயக்கத்தை தொடர்ச்சியாக முன் னெடுத்துச் செல்ல இவர்களால் முடியவில்லை. இன்னொரு பிரிவி னரோ, சமூக நலன்களில் எந்த அக்கறையுமே அற்ற உதிரிப் பிரிவினராக இருந்தனர். இவர்கள் தமது செயற்பாடுகளுக்குரிய சமூகப் பெறுமதியைக் கூட உணரவில்லை. பெரிதும் தமது சுயநலன் கருதியே செயற்பட்ட இவர்கள், முஸ்லிம்களின் தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அரசபடையினரின் கைக்கூலி களாகவே மாறினர் வன்முறை இயக்கத்தை முன்னெடுத்தவர்களின் யதார்த்த நிலைல்ைகள் இவ்வாறு அமைந்திருப்பதால், கிழக்கு முஸ்லிம்கள் அவர்களது தேசிய இயக்கத்தில் உறுதியாக அணிதிரட்டப்படவும் அவர்களிடையே ஒரு தேசம் சார்ந்த உணர்வு தெளிவாக வளர்த்தெடுக்கப்படவும் முடியாது போயிற்று.
கிழக்கு முஸ்லிம்களிடையே குறுகிய காலத்தில் கணிசமான வளர்ச் சியைப் பெற்ற 'ஜிஹாத்' அமைப்புக்களை வழிநடாத்தியவர்கள் அவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்காக முன்னெடுத்துச் செல்லக்கூடிய
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 1 O3

Page 58
ஆற்றலை விரைவிலேயே இழந்து விட்டனர். இவற்றின் தலைமைப் பொறுப்புகள் பல்வேறு நபர்களிடையே கைமாறிய போதிலும், எவராலுமே அவற்றைக் கட்டுப்படுத்தி ஒழுங்கமைக்க முடியவில்லை. ஒரு அமைப்பு தனது இலக்கு நோக்கி படிப்படியாக முன்னேற முடியா மல் தேக்கமுறும் போது அவ் அமைப்பு சீர்குலைவிற்குள்ளாவது இயல்பு. அதன் உறுப்பினர்கள் மத்தியில் காணப்பட்ட போர்க் குணாம்சமும், சமூக நோக்கும் அகன்று சுயநலப் போக்குகள் முதன்மை பெறுகின்றன. கிழக்கு முஸ்லிம்களிடையே தோன்றிய ஜிஹாத் அமைப்புக்கள் இத்தகைய தேக்க நிலைமையையும் சீர்குலைவையும் விரைவிலேயே சந்தித்தன. அவற்றை வழிநடாத்திச் சென்றவர்களிற்கு பொருளாதார மற்றும் அதிகார நலன்களோ பிரதான இலக்காகியது. பணமோசடியும், அதிகார துஷ்பிரயோகங்களும் தாராளமாக இடம்பெற்றன. சில இடங்களில் உட்கொலைகள் நடந்தன. முக்கிய உறுப்பினர்கள் ஏராளமான பணத்தை கையாடி தெற்கிற்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்று விட்டனர். இவ்வாறாக கிழக்கு முஸ்லிம்களிடையே கிட்டத்தட்ட ஐந்து வருடகாலம் நிலவிய இந்த வன்முறை இயக்கம் ஆங்காங்கே பல வடுக்களைப் பதித்து விட்டு, இப்போது ஓய்ந்திருக்கிறது.
()ருலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் (SLMC)
கிழக்கு முஸ்லிம்களிடையே வன்முறை சார்ந்த வடிவமானது முனைப் புற்ற வேளையில், அதற்கு அருகாக வன்முறை சாராத வடிவில் தேசிய இயக்கத்தை முன்னெடுக்கும் அமைப்பாக சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் (SLMC) வளர்ச்சியுற்றது. 'ஜிஹாத்' போன்ற வன்முறை இயக்கங்களால் ஒன்றுபடுத்தப்படாதிருந்த கிழக்கு முஸ்லிம்களின் தேசிய உணர்விற்கு பொருத்தமான வடிகாலாக முஸ்லிம் கொங்கிரஸ் அமைந்தது, வன்முறை இயக்கத்தினுள் நேரடியாக இணைந்து கொள்ளத் தயங்கிய கிழக்கு முஸ்லிம்களின் பல்வேறு பிரிவினரும், தமது தேசிய உணர்வின் குவியமையமாக முஸ்லிம் கொங்கிரஸ்சை கருதினர். இதனால், 1986 நவம்பரில் முஸ்லிம் கொங்கிரஸின் 6 வது வருடாந்த மாநாடு முடிவடைந்த மிக குறுகிய காலத்திலேயே, இக்கட்சி பெரும்பாலான கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் தன்னை வலுவாக
1 O4 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

ஊன்றிக் கொண்டது. குறிப்பாக தமிழ் - முஸ்லிம் மோதல்கள் கடுமையாகவும் அடிக்கடியும் இடம் பெற்ற அக்கரைப்பற்று, சம்மாந் துறை, கல்முனை, காத்தான்கடி, ஏறாவூர், வாழைச்சேனை, ஒட்ட மாவடி, மூதூர் போன்ற இடங்களில் முஸ்லிம் கொங்கிரஸ்சுக்கு பெரும் ஆதரவு கிடைத்தது. முஸ்லிம் கொங்கிரஸ் வன்முறைசார்ந்த முஸ்லிம் இயக்கங்களைக் கண்டிக்காமலும், அவற்றின் உறுப்பினர்களுடன் நல்லுறவையும் பேணியதால் கிழக்கு முஸ்லிம்களிடையே சக்திமிக்க ஓர் அரசியல் அமைப்பாக முஸ்லிம் காங்கிரஸ் உருவாக முடிந்தது.
இவ்வாறாக, கிழக்கு முஸ்லிம்களின் தேசிய உணர்வின் குவிமையமாக முஸ்லிம் கொங்கிரஸ் அமைந்ததன் மூலமாகவே அது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. முஸ்லிம்களிடையே எழுச்சி பெற்ற தேசிய உணர்வானது ஜிஹாத் முஸ்லிம் வன்முறை அமைப்புகளினால் இணைக்கப்படாமல் இருந்த நிலையில், அத்தேசியவுணர்வை ஒருமுகப்படுத்தி அரங்கிற்கு கொண்டு வந்த வரலாற்றுப் பொறுப்பை முஸ்லிம் கொங்கிரஸ் நிறைவேற்றியிருக்கிறது. கிழக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் கொங்கிரஸ்சிற்கு உறுதியான ஆதரவை வழங்கினர். மிகுந்த அர்ப்பணிப்புகளுடன் அதனை வளர்த்தெடுத் தனர். விடுதலை அமைப்புகளின் அச்சுறுத்தல்களுக்கும் சிங்கள கட்சிகளின் எம்.பிக்களுடைய பழிவாங்கல்களுக்கும் மத்தியில் தமது நலன்கள் பலவற்றை விலையாகக் கொடுத்து கிழக்கு முஸ்லிம்கள் இதனை செய்தனர். அவர்களைப் பொறுத்தவரையில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் உருவாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்கான தனிக் கட்சியை வளர்த்துப் பலப்படுத்த வேண்டும் என்பது ஒரு கடமையாக உணரப்பட்டது. கிழக்கு முஸ்லிம்களிடையே நிலவிய தேசிய உணர்வு, 1987ம் ஆண்டு முதல் கிழக்கில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் தெளிவாக வெளிப்பட்டது. கிழக்கு முஸ்லிம்கள் முஸ்லிம் கொங்கிரஸ்சிற்கு தொடர்ச்சியாக தமது ஆதரவை வழங்கி வந்துள்ளனர். ஓரளவு ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட போதிலும் இவ் ஆதரவு பலமானதாகவே இருந்து வருகின்றது. மறுபுறம், அவர்கள் சிங்க்ளக் கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை நிராகரிக்கும் போக்கும் படிப்படியாக அதிகரித்து வந்திருக்கின்றது. 1977 பொதுத் தேர்தலில் யு.என்.பி சார்பில் ஐந்து முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாயினர். ஆனால் 1989
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 1 O5

Page 59
பொதுத்தேர்தலில் யு.என்.பி. சார்பில் மூன்று உறுப்பினர்களே தெரிவாயினர். (இவர்களில் இருவர் நியமன உறுப்பினர்கள்) 1994 பொதுத் தேர்தலில் யு.என்.பி. இலிருந்து இரு முஸ்லிம் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர். 1987 மாகாண சபைத் தேர்தலில் சிங்களக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தவிர (யு.என்.பி) கிட்டத்தட்ட சகல முஸ்லிம் வேட்பாளர்களும் தோற்கடிக்கப்பட்டனர். அதே சமயம், SLMCசார்பில் 1989 பொதுத் தேர்தலில் இரு உறுப்பினர்களும் 1994 இல் நான்கு உறுப்பினர்களும் கிழக்கில் தெரிவு செய்யப் பட்டனர். (நஜீப் ஏ. மஜீத் SLFPயை சேர்ந்தவராக இருப்பினும் SLMC பட்டியலிலேயே தெரிவானார்.) இவற்றுடன் வட கிழக்கு மாகாணசபை தேர்தல்களிலும் உள்ளூராட்சித் தேர்தல்களிலும் SLMC மீதான ஆதரவை கிழக்கு முஸ்லிம்கள் வெளிப்படுத்தியிருந்தனர். இவற்றின் மூலம் அவர்கள் தெற்கு முஸ்லிம் தலைமையை அரசியல் ரீதியில் முற்றாக நிராகரித்து விட்டமையையும் அத்தலைமை மீதான மாயை இப்போது தமக்கு இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டினர்.
முஸ்லிம் தேசியமும் பெண்களும்;
வட கிழக்கு முஸ்லிம் தேசியத்தில் முஸ்லிம் பெண்களின் பாத்திரம் காத்திரமானது. ஆரம்பத்திலிருந்தே இத்தேசிய இயக்கத்தில் முஸ்லிம் பெண்களும் ஈர்க்கப்பட்டு இத் தேசிய இயக்க வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை ஆற்றியுள்ளனர். 1985 இற்கு முன்னர் (வட) கிழக்கு முஸ்லிம் பெண்களின் அரசியல் பங்களிப்பு என்பது, தமது குடும்ப ஆண்கள் சார்ந்துள்ள கட்சிக்கு தாமும் வாக்களிப்பது என்ற எல்லைக்குள் குறுக்கப்பட்டிருந்தது. கிழக்கு முஸ்லிம்களிடையே திருமண உறவும் கூட, பெரும்பாலும் ஒரே கட்சியைச் சார்ந்த குடும்பங்களிடையே ஏற்படுத்தப்படுவதால் ஒரு முஸ்லிம் பெண் தன் வாழ்நாள் பூராவும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும் நிலையே காணப்பட்டது. ஆங்காங்கே, கணவன், வேறொரு கட்சியை சார்ந்தவராக இருந்து விட்டால் மட்டுமே ஒரு முஸ்லிம் பெண் கணவன் சார்ந்த கட்சிக்கு வாக்களிக்க முடிந்தது.
எனினும் 1980 களில் இருந்து கிழக்கு முஸ்லிம் பெண்களின் இப்போக்கில் படிப்படியே மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970
1 O6 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

களில் இருந்து, கிழக்கு முஸ்லிம் பெண்கள் மத்தியில் கல்வியின்பால் ஏற்பட்ட தீவிர ஆர்வம் அவர்களின் கருத்துக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதுவரை காலமும் இல்லாதவாறு கிழக்கு முஸ்லிம் பெண்களிடையே பரஸ்பர தொடர்புகள் அதிகமாக ஏற்பட்டன. குறிப்பிட்ட பிரதேசத்திலுள்ள பல பகுதிகளையும் சேர்ந்த பெண்களிடையே மாத்திரமன்றி, வெவ்வேறு பிரதேச பெண்களிடை யிலும் தொடர்புகள் ஏற்பட்டன. கிழக்கு எங்கும் முஸ்லிம் பெண்கள் உயர் கல்வி கற்பதும் விரிவாக இடம் பெற்றது. இவர்கள், 1980 களில் வாக்களிக்கத்தகுதியுடைய பெண்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவில் அமைந்தனர். இவர்களில் கணிசமானோர் மரபு வழியில் தமது வாக்குகளை அளிக்கவில்லை. இதற்கு ஒரு காரணம், இவர்கள் தமக்கு கிடைத்த கல்வியினாலும், புதிய தொடர்புகளினாலும் கருத்து ரீதியில் குடும்பத்தாரிடமிருந்து மாறுபட்டவர்கள். இரண்டாவது, இவர்கள் அரச உத்தியோகங்களில் நாட்டம் கொண்டிருந்தனர். அரச உத்தியோகங்கள் பெறுவது அரசியல் மாற்றங்களுடன் தொடர்புடைய தால் தமக்கு சாதகமாக அமையும் கட்சிக்கு ஆதரவளிக்கும் போக்கை இவர்கள் எடுத்தனர்.
1980 களில் காணப்பட்ட போட்டிப் பரீட்சை அடிப்படையிலான நியமன முறை கட்சி, பால்வேறுபாடுகளைத் தாண்டி பலருக்கு உத்தி யோகங்களை வழங்கியது. இதனால் கிழக்கில் ஆண்களுக்குச் சமமாக முஸ்லிம் பெண்களும் அரச உத்தியோகங்கள் பெற்றனர். சுய உழைப் பும், புதிய தொடர்புகளும் காரணமாக, மரபான குடும்பம் சார்ந்த கட்சி ஆதரவு என்ற போக்கு இவர்களிடையே வலுவிழக்கத் தொடங்கியது. கிழக்கு முஸ்லிம் பெண்களிடையே கட்சி சார்ந்த உணர்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய மற்றொரு காரணியாக மத்திய கிழக்கு வேலைவாய்ப்பு அமைந்தது. 1980 களின் நடுப்பகுதியில், கிழக்கு முஸ்லிம் பெண்கள் ஆயிரக்கணக்கில் மத்திய கிழக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றதும், கிழக்கில் ஆண்களின் பாரம்பரியத் தொழில் முயற்சிகளில் (விவசாயம், மீன்பிடி, மந்தை வளர்ப்பு, காட்டுத் தொழில் கூலித் தொழில் ...) பாதிப்புகள் ஏற்பட்டதும், முஸ்லிம் குடும்பங்களின் பண்பில் மாற்றங்களை ஏற்படுத்தின. இதுவரை காலமும் அனைத்துத் தேவைகளுக்குமே ஆண்களில் தங்கியிருந்த முஸ்லிம் பெண்கள் தற்போது ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறும் உழைப்பாளிகளாக மாறினர். தமது
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 1 O7

Page 60
திருமணத்திற்கும், தமது குடும்பத்திற்குமான தேவைகளையும் கூட, தமது உழைப்பின் மூலம் நிறைவேற்றினர். முற்றிலும் புதிய சூழலில். புதிய வாழ்க்கை முறைகளை சந்தித்த இவர்களின் கருத்துக்களிலும் சொந்த வாழ்க்கை முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சுதந்திர உணர்வும் தனித்து நிற்கும் துணிவும் பெற்றனர். இக் கட்டத்தில் கிழக்கின் நிலை மோசமடைந்து, ஆண்களின் பாரம்பரிய தொழில்கள் பாதிப்புற்றிருந்தமையால், குடும்பத் தேவைகளுக்கு உழைப்பவர்கள் (Bread Winners) எனும் நிலையில் இருந்து பல ஆண்கள் அகற்றப்பட்டு, இப்போது இவர்கள் (அதாவது மத்திய கிழக்கு சென்ற முஸ்லிம் பெண்களின் கணவன், தந்தை, சகோதரர்கள், மகன்மார்.) பெண்களின் உழைப்பில் தங்கியிருக்க வேண்டியவராயினர். இதன் பின்னர் ஆண்களின் ஆதிக்கத்தையும், கட்டுப்பாடுகளையும் முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் பெண்கள் இல்லை. இந்நிலை பெண்களின் அரசியல் தேர்விலும் வெளிப்பட்டது.
சம காலத்தில் கிழக்கு முஸ்லிம்கள் மீது விடுதலை அமைப்புகளின் அராஜகம் தீவிரமடைந்ததும், முஸ்லிம் பெண்கள் மத்தியில் தேசிய உணர்வும் தோற்றம் பெற்றது. விடுதலை அமைப்புகளின் அராஜகம் முஸ்லிம் பெண்களின் உடல், உளநிலைகளை கடுமையாக பாதித்தது. விடுதலை அமைப்புக்களின் வன்முறைகள் காரணமாக வறுமையும், அகதிவாழ்வும், பற்றாக் குறைகளும் முஸ்லிம் பெண்களின் குடும்பச் சுமைகளைக் கடுமையாக்கின. குடும்பத்திலுள்ள குழந்தைகள், வயோ திபர், நோயாளிகள் போன்றோரின் தேவைகள் உட்பட அனைத்து குடும்ப சுமையும் இவர்களை அழுத்தின. மறுபுறம் அடுத்தடுத்த வன்முறைகளில் தமது உடமைகளையும், உறவினர்களையும் இழந்தும், விடுதலை அமைப்புக்களினால் எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சமும் இப்பெண்களை உளரீதியில் பாதித்தன.
இப்படிப்பட்ட சூழலில், தமது துயரங்களை முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு புதிய அரசியல் இயக்கத்திற்கு ஆதரவளிக்கக் கூடியவர்களாக கிழக்கு முஸ்லிம் பெண்கள் காணப்பட்டனர். தொடக் கத்தில் கிழக்கு முஸ்லிம்களிடையே உருவான தேசிய இயக்கத்தின் வன்முறை சார்ந்த வடிவத்தில் இப் பெண்கள் நேரடியாக ஈடுபட முடியாதிருந்தபோதிலும் கூட, அவர்கள் அதனை ஆதரித்தனர். தமது பிரதேசத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்காக தமது
1 O8 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

பிள்ளைகளும், உறவிருேகின்சாஸ்துக்ஸ்தும் 'ஜிஹாத்' இயக்கங்களிலும் g கேதுகழுஸ்லிம்
பெண்கள் அதனை வரவேற்றண்
பின்னர், முஸ்லிம் தேசிய இயக்கத்தின் வன்முறை சாராத வடிவமாக முஸ்லிம் காங்கிரஸ் உருவான போது முஸ்லிம் பெண்கள் அதனை உணர்வுபூர்வமாக ஆதரித்தனர். படித்த நகர்ப்புற பெண்களில் இருந்து கிராமப்புற பெண்கள் வரை இவ் ஆதரவு பரந்தளவில் அமைந்தது. முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல்களில் வெற்றி பெறவேண்டும் என அவர்கள் நோன் பிருந்தனர். (விரதம் இருத்தல்) பிராத்தனை செய்தனர். வாக்களிப்புகளில் ஆர்வமாயும், தீவிரமாயும் பங்குபற்றினர். உண்மையில் முஸ்லிம் காங்கிரசின் ஒவ்வொரு தேர்தல் வெற்றிக்கும் பின்னே கிழக்கு முஸ்லிம் பெண்களின் ஆதரவு உறுதியான தளமாக அமைந்திருந்தது எனலாம். ஆண்களில் பலர் இன்னமும் UNP , SLFP கட்சிகளுக்கு ஆதரவு வழங்கிய போதிலும் அவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் SLMC க்கு ஆதரவை வழங்கினர். இவ்வாறாக முஸ்லிம் தேசிய இயக்கத்தில் முஸ்லிம் பெண்களின் பாத்திரம் மிகக் காத்திரமானதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
SLMC தலைமை குறித்து.
கிழக்கு முஸ்லிம்கள் அற்ப சலுகைகளையோ, சில அபிவிருத்தித் திட்டங்களையோ எதிர்பார்த்து SLMC க்கு தமது ஆதரவை வழங்க வில்லை. சிங்கள கட்சிகளில் இருந்து முஸ்லிம் அரசியல்வாதிகளிட மிருந்து கிடைக்கக்கூடிய சில சலுகைகளையும், அபிவிருத்திகளையும் உதறிவிட்டே அவர்கள் SLMC ஐ ஆதரித்தனர். தமது பாரம்பரிய பிரதேசங்களில் கெளரவமும், உரிமைகளும் கொண்ட சுதந்திர பிரஜைகளாக பாதுகாப்புடன் வாழ விரும்புகிறார்கள் என்பதையே SLMCக்கு ஆதரவளிப்பதன் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனினும் SLMC தனது வரலாற்றுப் பாத்திரத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை. கிழக்கு முஸ்லிம்களின் தேசிய உணர்வை அடித்தளமாகக் கொண்டு உறுதியான தேசிய இயக்கத்தை முன்னெடுப்பதில் இன்றுவரை SLMC நேர்மையான அக்கறையுடன்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 109

Page 61
செயற்படவில்லை. இவ்வாறு SLMC தனது சொந்த மக்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றாமல் தவறியமைக்கு, குறிப்பாக அதன் தலைவரின் அரசியல் பண்புகளும், இலக்குகளுமே பிரதான காரணியாக அமைகிறது. இவற்றைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு SLMC தலைவரான அஷ்ரப்பின் இன்று வரையிலான அரசியல் செயற்பாடுகள் குறித்து பரிசீலிப்பது அவசியமாகிறது.
SLMC, 1980 ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எனினும் இலங்கை முஸ்லிம்களுக்கென ஒரு தனியான அரசியல் கட்சியை உருவாக்கக் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய முயற்சிகளுக்கு நடந்தது போலவே, SLMC இன் ஆரம்பமும் அமைந்திருந்தது. அதாவது SLMC இலங்கை முஸ்லிம்களை, குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களையும் கூட, ஒன்றிணைக்கக் கூடிய ஆற்றலை அப்போது கொண்டிருக்கவில்லை. இக் கட்சியின் ஸ்தாபகரான காத்தான்குடியை சேர்ந்த அஹமட் லெப்பை, ஒரு நேர்மையான சமூக சேவையாளராக செயற்பட்டார். காத்தான்குடி மெத்தைப் பள்ளியின் நிர்வாக சபைத் தலைவராக இருந்த இவர், மதரீதியாக மட்டுமன்றி, காத்தான் குடியின் சமூக, கலாசார, அரசியல் விடயங்களிலும் காத்திரமாகச் செயலாற்றி னார். இவர் தமிழ் மக்களின் போராட்டம் குறித்து அக்கறையும், ஆர்வமும் கொண்டிருந்தார். வடக்கு, கிழக்கு இணைக்கப்பட வேண்டும் எனவும் அதில் முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் கருதினார். எனினும் இவர், SLMCயுடன் ஏற்க னவே தான் கொண்டிருந்த தொடர்புகளை அறுத்துக் கொள்ளாததோடு, SLMCஐ முஸ்லிம்களின் தனிக் கட்சியாக உருவா க்குவதிலும், தீவிரமாகச் செயற்படவில்லை. 1983 இற்கு பின்னர், தமிழ் மக்களின் போராட்டத் தலைமை தமிழ் இளைஞர்களிடம் கைமாறிய போது, SLMC இன் தலைமையும் முஸ்லிம் இளைய தலைமுறையிடம் ஒப்படைக்கப்படுவது அவசியம் என கருதினார். இதனால், SLMC இன் தற்போதைய தலைவரான M.H.M.அஷ்ரப்பை 1984 இல் கட்சித் தலைவராக பிரேரித்தார். இருந்தும் 1986 பிற்பகுதி வரைக்கும் இக்கட்சியினால் குறிப்பிக்கூடிய செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்க முடியவில்லை.
இக்கட்டத்தில் தான் SLMC இன் 6 வது வருடாந்த மாநாடு, 1986 நவம்பரில் மிகுந்த பரபரப்புடன் கொழும்பில் நடத்தப்பட்டது. இம்
1 1 O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

மாநாடு குறித்து, தலைவர் அஷ்ரப், கட்சியின் ஸ்தாபகருக்கோ, அதன் முக்கிய ஆரம்ப கால உறுப்பினர்கள் பலருக்கோ முறையான அறிவித்தல் எதனையும் வழங்கியிருக்கவில்லை. மாநாடு நடைபெற ஒரு வாரத்திற்கு முன்பு, பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்ட விளம்பர அறிவித்தல்கள் மட்டுமே, இம் மாநாடு நடக்கவிருப்பது பற்றி கட்சியின் பல உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தியது. தான் இவ்வாறு செயற்பட வேண்டியிருந்தமைக்கு 'முறையான அறிவித்தல் வழங்க கால அவகாசம் போதவில்லை' என்று அஷ்ரப் விளக்கம் அளித்தார். எனினும், முஸ்லிம்களின் அரசியல் தலைவிதியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியளவிற்கு முக்கியத்துவம் பெற்றிருந்த அம் மாநாடு ஏன் அவ்வளவு அவசரமாக அஷ்ரப் பின் சொந்த மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் இருந்து பெருந்தொகையானோரை இலவச போக்குவரத்து, உணவு மற்றும் இருப்பிட வசதிகளுடன் மாநாட்டில் பங்கு கொள்ளச் செய்வதற்கு மட்டும் எப்படி அவகாசம் கிடைத்தது என்பது பற்றியோ அஷ்ரப் தெளிவான விளக்கம் எதனையும் கூறவில்லை. எனவே அவர் எதிர்பார்த்தது போலவே, இந்த அவமதிப்பு காரணமாக SLMC இன் ஸ்தாபகர் உட்பட, முக்கிய ஆரம்பகால உறுப்பினர்கள் பலர் அம் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதற்கு மாறாக பல பகுதிகளில் இருந்து, குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட புதியவர்களில் இருந்து மத்திய குழுவிற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களில் அம்பாறை மாவட்டத்தவரே அதிகமாக இருந்தனர். அஷ்ரப் "தேசியத் தலைவர்' என்ற புதிய அந்தஸ்திற்கு தன்னைத் தானே உயர்த்திக் கொண்டார். கட்சியின் முக்கிய பொறுப்புகள் அஷ்ரப் பின் ஆலோசனைப் படி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் முன்னாள் கட்சித் தவிசாளர் சேகு இஸ்ஸதீன், தற்போது மூத்த துணைத் தலைவர் என அழைக்கப்படும் மருதூர்க்கனி போன்றோர் முக்கியமானவர்களா கும். இவ்வாறு குறுகிய நோக்குடன் திட்டமிட்டு நடத்தப்பட்ட 6 வது வருடாந்த மாநாடு, இதுவரைக்கும் இலங்கை முஸ்லிம்களின் தலைமை என கூறிவந்த தெற்கு, முஸ்லிம் தலைமையை மாத்திரமன்றி, செயற் திறன் குறைவான SLMC இன் ஸ்தாபகர் மற்றும் ஆரம்ப கால உறுப்பினர்களையும் நிராகரித்த போக்கினை வெளிப்படுத்தியது.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 1 11

Page 62
SLMCஇன் பரபரப்பான 6 வது மாநாடும் அதன் பின்னராக SLMC இன் வேகமான செயற்பாடுகளும் அன்றைய அரசியல் அரங்கில் சில கேள்விகளை எழுப்பின. இது வரைகாலமும் ஒரு கட்சியாக அடையாளம் காணப்படாமலும், பெருமளவில் அங்கத்தவர்களைக் கொண்டிராமலும் இருந்த SLMCஇவ்வளவு பிரமாண்டமாக செயற்படுவதற்குரிய பொருளாதார வசதிகளை எவ்வாறு பெற்றுக் கொண்டது? சிங்கள இனவாதத்திற்கு எதிராக செயற்பட்ட தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் சுதந்திரமான செயற்பாடுகளை எப்போதுமே அரசு கட்டுப்படுத்தி வந்துள்ள நிலையில் பெளத்த - சிங்கள இனவாதத்தையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வந்த SLMC இனால் மட்டும் தங்கு தடையின்றி எப்படி செயற்பட முடிந்தது? இவ்வினாக்களுக்கான பதிலை SLMC தலைவரே கூறினார். நல்லெண்ணம் மிக்க சில முஸ்லிம் செல்வந்தர்கள் கட்சிக்குரிய முழுச் செலவையும், பொறுப்பெடுத்திருப்பதாயும், அதேசமயம், SLMC உறுப்பினர்களுக்கு அரச படையினரால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வதாக தேசிய பாதுகாப்பு அமைச்சர் (லலித் அத்துலத் முதலி) உறுதி அளித்திருப்பதாகவும் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களிடம் அஷ்ரப் தெரிவித்தார். தேசிய இயக்க அரசியற் செயற்பாடுகளில் முதன் முதலாக பங்குகொண்டSLMC இன் மத்திய குழு உறுப்பினர்களுக்கும், கிழக்கு முஸ்லிம்களுக்கும் அஷ்ரப்பின் இக் கூற்றுக்கள் பிரமிப்பையும் ஊக்கத்தையும் அளித்தன. ஆனால் தனது சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்காக போராட முன்வந்த ஒரு கட்சி, அச்சமூகத்தின் வெகுசன பங்களிப்புகளில் பெரிதும் தங்கியிருக்காமல் யாரோ முகம் தெரியாத ஒரு சில நபர்களின் ஆதரவில் தங்கியிருப்பதும், தமது மக்களின் உரிமைகளை மறுத்து, சமூக இருப்பை சிதைத்து வருகின்ற சிங்கள அரசிடமே, தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை ஒப்படைப்பதும், அக்கட்சிக்கு மாத்திரமன்றி, அந்த சமூகத்திற்கும் அரசியல் ரீதியில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இதன் விளைவாக, சமூகத்தின் உரிமைகளுக்காக போராட முன்வரும் கட்சி இறுதியில் ஒரு சில நபர்களினால் கட்டுப்படுத்தப்பட்டு சீரழிவுக்குட்படுகின்ற நிலை படிப்படியே உருவாகின்றது.
கடந்த ஒன்பது வருடங்களுக்கும் மேலான SLMC இன் அனுபவங்கள்
1 12 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

இந்த உண்மையை தெளிவுபடுத்துகின்றன. ஒருபுறம் SLMC இன் ஏக போக அதிகாரம் படைத்த தலைவராக அஷ்ரப் உருவாகி யிருக்கின்றார். கட்சிக்குள் விவாதங்கள் நடாத்தி கருத்துக்களை ஒன்று திரட்டி அவற்றின் அடிப்படையில் பொது முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக, அஷ்ரப் தம்மிஷ்டப்படி முடிவுகளை எடுத்துச் செயற்படும் நிலை உருவாகியுள்ளது. கட்சியின் ஏனைய உறுப்பினர்களும், வட கிழக்கு முஸ்லிம்களும் தமது கட்சி விடயங்கள் தொடர்பாக அறியா மையில் இருத்தப்படவும், அஷ்ரப் முன்வைக்கும் எத் தீர்மானங் களையும் அப்படியே ஏற்க வேண்டிய நிலையும் தோன்றியுள்ளது. மறுபுறம், SLMC உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடக்கத்திலிருந்து அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இன்றுவரை SLMC யினால் அரசின் கட்டுப்பாட்டை மீறி சுயமாகச் செயற்பட முடியவில்லை. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதற்கு ஆதரவாக செயற்பட வேண்டிய நிலைக்கு SLMC தள்ளப்பட்டுள்ளது. SLMC எதிர்க்கட்சி வரிசையில் இருந்த சந்தர்ப்பங்களிலும் கூட, வட - கிழக்கு முஸ்லிம் கள் மீது அரசினாலும், படைகளினாலும் மேற்கொள்ளப்பட்ட ஒடுக்கு முறைகளையும், வன்முறைகளையும், கண்டிக்கவோ அவற்றிற்கு எதிராக வெகுசன எதிர்ப்புகளை திரட்டி முன்செல்லவோ SLMC யினால் முடியவில்லை.
வட-கிழக்கு முஸ்லிம் தேசிய எழுச்சியின் விளைவாக புத்துயிர்ப் படைத்த SLMC, அத் தேசிய இயக்கத்தை தொடர்ந்தும் உறுதியாக முன்னெடுக்க வேண்டிய தனது வரலாற்றுப் பொறுப்பை இப்போது தவறவிட்டிருக்கிறது. பதிலாக அது ஒரு தேர்தல் கால அரசியல் கட்சியாக குறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலை ஏற்படுவதற்கு, SLMC தலைவர் அஷ்ரப் முக்கிய காரணமாகின்றார். வட-கிழக்கு முஸ்லிம்கள் தமது சமூக, அரசியல் இருப்புக்களை உறுதிப்படுத்தி, சகல உரிமைகளையும் வென்று தருவதற்கான ஆணையை SLMCக்கு வழங்கியிருக்கின்றனர். இவ் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள அஷ்ரப், அதற்காக வெகுசன பங்குபற்றுதலுடன் கூடிய பல்வேறு அரசியல் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கடப்பாட்டை கொண்டுள்ளார். இருந்தும், அஷ்ரப் உரிமைகளைப் பெறுவதற்கான அரசியல் களமாக தேர்தல்களை மட்டுமே கருதச் செயற்பட்டு வருகின்றார்.
yibh Asih risTROGlyph 113

Page 63
பொதுவில் தேர்தல்கள், ஒரு சமூகத்தின் அரசியல் உணர்வை ஓரளவு அளவிடக் கூடிய 'அரசியல் மானியாக' பயன்படுகின்றன என்பது உண்மையே. எனினும் தேர்தல் வெற்றிகளால் மட்டும் ஒரு சமூகம் தனது உரிமைகளை வென்று கொள்ள முடியாது. ஒரு சமூகம் தனது அரசியல் ஒற்றுமையையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்துகின்ற பிரச்சார களமாக மட்டுமே தேர்தல்களை பயன்படுத்த முடியும். இதற்கு மேல், ஒரு ஒடுக்கப்பட்ட சமூகம் தேர்தல்களின் மூலமாக மட்டும் தனது உரிமைகளை வென்று கொண்ட உதாரணம் ஒன்றைக்கூட எடுத்துக் காட்ட முடியாது. தனது சமூகத்தின் உணர்வுகளை அரசியல் தளத்தில் உறுதியாக பிரதிபலிக்கக் கூடிய ஒரு தலைமையானது தேர்தல் மூலம் மக்கள் வெளிப்படுத்திய அரசியல் ஒருமைப்பாட்டை ஆதாரமாக் கொண்டு அவர்களின் உரிமைகளை வென்றெடுக்க தேர்தலுக்கு புறம்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். இவற்றினால் மட்டுமே இறுதியில் ஒரு சமூகம் தனது உரிமைகளை வென்றுகொள்ள முடிகிறது
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் போராட்டத்தில், தேர்தல்களின் மட்டுப்படுத்தப்பட்ட பாத்திரத்தை ஓர் அரசியல் இயக்கத்தை வெறும் தேர்தல் இயக்கமாக மட்டும் குறுக்கும் போது, குறிப்பிட்ட சமூகமானது தனது போராட்ட ஆயுதமான கட்சியின் பின்னே அணிதிரளாமல் வெறுமனே வாக்களிப்பதுடன் நின்று விடுகிறது. ஒரு சமூகத்தின் அரசியல் வெற்றிக்கு, அச் சமூகத்தின் அரசியல் இயக்கத்தின் குவிமையமாக அமைகின்ற கட்சியே பிரதான ஆயுதமாகும். ஒரு கட்சி எந்தளவிற்கு மக்களாதரவில் தங்கியிருக்கின்றதோ, எந்தளவிற்கு மக்களை அரசியல் ரீதியில் அணிதிரட்டி பல்வேறு வெகுசனப் போராட்டங்களில் ஈடுபடச் செய்கின்றதோ, அந்தளவிற்கு அச்சமூகம் அரசியல் வெற்றி பெறுவது உறுதியாகிறது. மாறாக அக் கட்சியானது வெறும் தேர்தல் கால அமைப்பாகி விடும்போது, அங்கு தனிநபர் ஆதிக்கமும், பதவி மோகமும், ஊழலும் செழித்து அக்கட்சியை சீரழித்து விடுகிறது. தேர்தல்கள் ஒருபுறம், சமூகத்தின் அரசியல் உணர்வை பிரதிபலிக்கும் அதேசமயம், மறுபுறம் தனி நபர்கள் தமது நலன்களை உயர்த்திக் கொள்வதற்கான பல்வேறு வழிகளையும் திறந்து விடுகின்றன. எனவே ஒரு கட்சி முற்றிலும் தேர்தல் அமைப்பாகி விட்டால் அது மக்களை அரசியல் விழிப்பூட்டுவதை கைவிடுகிறது. சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை மேற்கொள்கிறது. சந்தர்ப்பவாத
1 14 Cynsio saith G55Cyph GiffaS FRO Gyath

கூட்டுக்களை அமைக்கிறது. அங்கு தனிநபர் போட்டிகளும் கழுத்தறுப் புகளும் மேலோங்குகின்றன. இவற்றின் விளைவாக கட்சி உறுப்பினர் களிடையே சமூக உணர்வு மறைந்து சுயநலப் போக்குகள் ஊட்டம் பெறுகின்றன. கட்சியின் அதிகாரம் ஒரு சில நபர்களின் கைகளில் குவிகின்றன.
இவை அனைத்துமே SLMC இனுள் நடந்தேறியுள்ளன. கட்சியின் 'தனிப் பெரும்' தலைவராக தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள அஷ்ரப் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். கட்சியின் ஸ்தாபகரும், அதன் ஆரம்பகால உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேறும் நிலையை ஏற்படுத்தினார். கட்சி நடவடிக்கைகளில் தன் சமகால உறுப்பினர்களாக இருந்து செயற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் படிப்படியே கட்சியிலிருந்து வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் நிலையை ஏற்படுத்தினார்; இறுதி முடிவை எடுக்கும் பூரண அதிகாரம் தலைவருக்கே என்ற சரத்தை கட்சியாப்பில் சேர்த்து, தனது முடிவையே கட்சியின் முடிந்த முடிவாக அஷ்ரப் மாற்றியிருக்கின்றார். அனுபவமிக்க உறுப்பினர்களை கட்சியிலிருந்து வெளியேற்றி அனுபவமற்ற புதியவர்களை கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அவ்வப்போது நியமிப்பதன் மூலமாக, அவர்கள் மீது அஷ்ரப் தனது மேலாண்மையை இலகுவில் ஏற்படுத்தி வருகின்றார். தவிர, ஆட்சியிலுள்ள கட்சியின் உயர் அதிகாரத்திலுள்ள வர்களுடன் நெருங்கிய உறவைப் பேணுவதனூடாக SLMCஉறுப்பினர் கள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் சக்திமிக்க ஒருவராக தன்னை உருவகப்படுத்துகின்றார். தன்னைப் பற்றிய ஒருவகை பயபக்தி மிகுந்த பிரமிப்பை கட்சி உறுப்பினர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.
இவ்வாறு அஷ்ரப் மேலாதிக்க நிலையில் தன்னை இருத்திக் கொண்ட அதேவேளை, கட்சியும் அதன் உறுப்புகளும் அனுபவமற்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கதம்பமாக உயிர்ப்பற்ற ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. வட - கிழக்கு முஸ்லிம்களின் தேசிய உரிமைகள் குறித்தும் அவற்றை வென்றெடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் தெளிவான பார்வை அற்றவர்களை முக்கிய உறுப்பினர்களாக கொண்டதாய் கட்சி மாற்றப்பட்டுள்ளது. இதனால் அது அரசியல் ரீதியில் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்த முடியாததாக உள்ளது. வெறுமனே தேர்தல் வெற்றி, பதவிமோகம் என்பவற்றை குறியாகக்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 1 15

Page 64
கொண்ட நபர்களை உள்வாங்குகின்ற ஒரு சந்தர்ப்பவாத கட்சியாக SLMCமாற்றப்பட்டுள்ளது.
முற்றிலும் தேர்தலையே இலக்காகக் கொண்டதாக SL-MC வைக்கப்பட்டுள்ளதால், அதற்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளும் கூட தேர்தல் உறவாகவே குறுக்கப்பட்டுள்ளது. வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய உணர்வை ஒன்றிணைப்பது என்பது தேர்தல்களின் போதுSLMCக்கு வாக்களிப்பதாகவே அர்த்தம் கொள்ளப்பட்டுள்ளது. கட்சித் தலைமைக்கு தேர்தல் வெற்றியொன்றே இறுதி இலக்கு என்பதால் மக்களின் உணர்வுகளும் கூட அந்த மட்டத்திற்குள் வைக்கப்பட்டிருப்பதையே அது விரும்புகிறது. இது இத்தலைமைக்கு அவசியமானதும் கூட மக்களின் அரசியல் உணர்வு தேர்தல் எல்லையை தாண்டும்போது அவர்கள் அத் தலைமையைக் கேள்விக்குள்ளாக்கித் தூக்கி எறிந்து விட்டு புதிய தலைமையையும், புதிய வழிமுறைகளையும் நாடுகின்றனர். எனவே அஷ்ரப்பை பொறுத்த வரையில், கட்சியில் தனது மேலாதிக்கத்தை பேண வட - கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உணர்வை தேர்தல் ஆதரவு என்பதுடன் மட்டுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு மேல் கட்சியும் மக்களும் அரசியல் வளர்ச்சியை எட்டுவது அஷ்ரப்பின் இருப்பிற்கு ஆபத்தானதாகிறது. இதனைத் தவிர்க்கவே அவர் பல வகையிலும் திட்டமிட்டு செயற்படுகின்றார்.
முதலாவதாக SLMCக்கு வாக்களிப்பதால் மட்டும் உரிமைகளைப் பெற்றுவிடலாம் என்ற கருத்தையே முஸ்லிம்கள் மத்தியில் அஷ்ரப் பரப்பியுள்ளார். ஏறக்குறைய தொண்டமானையும், மலையக மக்களையும் ஒத்த மாதிரியை முஸ்லிம்களிடையே உருவாக்க அவர் முனைகின்றார். ஆனால் ஒரு முக்கிய விடயத்தை அவர் இங்கு மறைத்து விடுகின்றார். அதாவது மலையகத் தமிழர்கள் தொண்டமானையும் CWCஐயும் தேர்தலில் ஆதரித்ததால் மட்டுமே சில உரிமைகளை வென்றெடுக்கவில்லை என்பதையும், கூடவே வேலை நிறுத்தம், சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், பிரார்த்தனைப் போராட்டம். போன்ற பல்வேறு வெகுசனப் போராட்டங்கள் மூலமாகத்தான் அவற்றை வென்றெடுத்துள்ளார்கள் என்பதையும் அஷ்ரப் மறைத்து விடுகின்றார்.
இரண்டாவதாக. முஸ்லிம்களிடையே அரசியல் விழிப்புணர்வை
116 Cybih sugih ritäTIOph

ஏற்படுத்துவதிலும் தமது உரிமைகளை தெளிவாகவும் பிரக்ஞை பூர்வமாக கண்டு கொள்ளச் செய்வதிலும் அஷ்ரப் காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக கட்சி உறுப்பினர்களினதும் மக்களினதும் அரசியல் உணர்வை உயர்த்தி, முனைப்புறச் செய்யும் கட்சி மாநாடு, கட்சிப் பத்திரிகை போன்ற தீர்க்கமான விடயங்களில் பயனுள்ள நடைமுறைகள் எதனையும் அஷ்ரப் கொண்டிருக்கவில்லை.
கட்சி மாநாடுகளில், வட - கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கைகளை திரட்டி, கறாராக வரையறுத்து திட்டவட்டமாக முன்வைத்ததில்லை. முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுப்பதாக மாநாடுகள் அமைவதில்லை. பதிலாக இம்மாநாடுகளை அவர் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களைப் போலவே நடாத்துகின்றார். ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்களிடம் தனது பலத்தைக் காட்டுகின்ற தனக்குள்ள விசுவாசத்தை வெளிப்படுத்துகின்ற, அவர்களை முகஸ்துதி செய்கின்ற, களமாககட்சி மாநாட்டைமாற்றியிருக்கின்றார். பொதுவாக ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சி நடாத்தக் கூடிய மாநாட்டிற்கு முற்றும் முரணான வகையில் பிரமாண்டமாகவும், ஆடம்பரத்துடனும், ஒடுக்கும் சமூகத்தின் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்தும், மாநாடு நடத்தும் முதல் அரசியல் தலைவராக அஷ்ரப் விளங்குகின்றார்.
கட்சி மாநாடுகளை இவ்வாறு திட்டமிட்டு பிரமாண்டமாக நடாத்துவதில் குறியாக இருக்கும் அஷ்ரப் கட்சிப் பத்திரிகை விடயத்தில் மெளனம் சாதிக்கிறார். முஸ்லிம்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் வெளிப்படுத்தி அவர்களின் தேசிய உணர்வை மேலும் பலப்படுத்தி முன்னெடுப்பதில் காத்திரமான பாத்திரம் ஆற்றக் கூடிய கட்சிப் பத்திரிகையை வெளியிடுவதில் அறவே அக்கறைப்படாதவராக இருக்கின்றார். எந்தவொரு தேசிய இயக்கத்திலும் பத்திரிகை மிகுந்த முக்கியத்துவம் உடையதாகும். தேசிய இயக்கத்தை நேர்மையுடனும், உறுதியுடனும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு தலைமை கட்சியின் நிலைப்பாட்டில் நின்று இத்தகைய பத்திரிகையை கட்சி மூலமாகவோ அல்லது கட்சி சார்ந்த சிலர் மூலமோ வெளிக்கொண்டு வருவதில் தீவிர அக்கறை காட்டும். ஏனெனில் கட்சியின் கொள்கைகள் மக்களை சென்றடையும் ஒரு
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 117

Page 65
பிரதான மார்க்கமாக பத்திரிகை பங்கு பற்றுதலுடன் விவாதங்களை நடாத்தும் களமாக பத்திரிகை அமைகிறது. அதன் மூலம் அவர்களின் அரசியல் தரத்தை உயர்த்தவும் அவர்களின் வளர்ச்சியை கண்டு கொள்ளவும் பத்திரிகை உதவுகிறது. தற்போது தமது சந்தர்ப்பவாத நிலைப்பாடுகளை விளக்க தெற்கு முஸ்லிம் தலைமையின் கருத்துகளுக்கு மறுப்புவிட SLMC இரவல் பத்திரிகைகளை நாடி ஓடவேண்டியுள்ளது. இவ்வாறு, தமது மக்களின் அரசியல் உணர்வை உயர்த்திப் பலப்படுத்தக் கூடிய ஒரு பத்திரிகை குறித்து அஷ்ரப் அக்கறை கொள்ளாதிருப்பது அறியாமையின் விளைவாகத் தோன்றவில்லை.
SLMC ஆனது முஸ்லிம்களது நேரடி பங்குபற்றுதலுடன் கூடிய ஒரு வெகுசனக் கட்சியாகவும், மக்களால் கண்காணிக்கப்படவும், விமர்சிக் கப்படவும் கூடிய ஒரு ஜனநாயகக் கட்சியாகவும், அமையக் கூடிய சாத்தியத்தை அஷ்ரப் தவிர்த்து வருகின்றார். ஒரு கட்சிக்கும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்திற்கும் இடையே நெருங்கிய உறவு நெருங்குவதில், அக்கட்சி பொதுமக்களின் பங்களிப்பில் தங்கியிருப்பது பிரதான காரணியாகிறது. மக்களின் உணர்வு மற்றும், உடல்ரீதியான பங்களிப்பு மட்டுமன்றி, முக்கியமாக பொருளாதார பங்களிப்பும் இப் பிணைப்பிற்கு அவசியம். அஷ்ரப்பைப் பொறுத்தவரையில் SLMC இன் பொருளாதாரத் தேவைகளுக்காக அவர் சொந்த மக்களில் தங்கியிராமல் SLMC அரசியலுடன் சம்பந்தமற்ற ஒரு சில தனிநபர்களிடம் செல்கின்றார். இவ்வாறு நிதி வழங்குபவர்கள் குறித்தும் பெற்ற தொகை குறித்தும் கட்சிக்குள்ளேயே தெளிவான விபரங்கள் எதனையும் தெரிவிப்பதில்லை. கட்சியின் நிதி விவகாரங்களை முற்றிலும் தன்னிடம் வைத்திருப்பதன் மூலமாக அஷ்ரப் SLMCஇல் தனது ஆதிக்கத்தை மேலும் வலுவாக நிலை நாட்ட முடிகிறது. தேவைக்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்ப, கட்சிக்கு உதவுகின்ற வர்கள் என்ற பெயரில் சில நபர்களை பிரச்சாரப்படுத்தவும், அவர் களுக்கு கட்சியிலும், பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும் இடமளிக் கவும், அவரால் முடிகின்றது. இதற்கு உதாரணமாக புகாரிதீன், அஸித பெரேரா, ரவூப் ஹக்கீம், சுஹைர் போன்றவர்களைக் குறிப்பிடலாம். வட - கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இயக்கத்துடன் எவ்வித தொடர் பும் இல்லாத இவர்கள் தமது பொருளாதார பலத்தினால் மட்டும், முஸ்லிம்களின் அர்ப்பணிப்பின் விளைவான கட்சியினுள்ளும், அதன்
118 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினுள்ளும் மிக இலகுவாக இடம் பிடிக்க முடிந்தது. இவ்வாறு தனிநபர்கள் சிலரின் நலன்களை உயர்த்தும் ஆதாரப் படையாக மாற்றப்பட்டு விட்ட கட்சியும் , அதன் தலைமையும் முஸ்லிம்களின் தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை கைவிட்டு, பதிலாக ஒரு வீதி திருத்தவும் அதிகாரமற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல் வெற்றியை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்று கொள்வதற்கான வழிகளில் ஒன்றாக பிரச்சாரப்படுத்தி தமது அரசியல் வங்குரோத்தை வெளிப்படுத்துகின்றனர்.
SLMC தலைவர் அஷ்ரப்பின் அரசியல் தலைமை இவ்வாறாக இருக்க, அவர் சகல திறமைகளும் மிக்க 'அரசியல் வித்தகர்' தான் என்ற தோற்றத்தை (Image) முஸ்லிம்களிடம் ஏற்படுத்த முயற்சிக்கின்றார். தனது தனித் திறமையின் மூலமாகவே முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்று விட முடியுமென்ற கருத்தை ஏற்படுத்த அவர் முனைகின்றார். இதற்காக அவ்வப்போது பரப்பான அறிக்கைகளை வெளியிடுவதும், சில தனிநபர்களுடன் திரை மறைவில் ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதும், இத்தகைய இரகசிய ஒப்பந்தங்கள் குறித்து ஆரவார மாகப் பிரச்சாரப்படுத்துவதும் அஷ்ரப்பின் அரசியல் வழிமுறைகளாக உள்ளன.
இவர் தன் செயல் முனைப்பற்ற தன்மையை மறைக்க வட - கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளையும் வட - கிழக்கு இணைப்பு என்ற கருத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்துகின்றார். அதாவது வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக இணைக்கப்படும் போது மட்டுமே முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படும். எனவே அப்போது முஸ்லிம்களுக்கு தனியான அலகு தேவை என்றும் அவ்வாறன்றி இருமாகாணங்களும் தனித்தனியாக பிரிக்கப்படுமாயின் முஸ்லிம்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. எனவே தனியான அதிகார அலகு தேவையில்லை எனவும் அஷ்ரப் பேசத் தொடங்கியுள்ளார். இவ்வாறு வட-கிழக்கு இணைப்பு - பிரிப்பு என்பதுடன் அங்குள்ள முஸ்லிம்களின் உரிமைகளை தொடர்புபடுத்துவதன் மூலமாக, அந்த உரிமைகளை பெற தான் முன்னின்று போராட வேண்டிய கடமையிலிருந்து தப் பியோட அஷ்ரப் முயற்சிக்கின்றார்.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 119

Page 66
உண்மையில், வடக்கு கிழக்கு இணைப்பிற்கும் அங்குள்ள முஸ்லிம்களின் தேசிய இயக்கத்திற்கும் இடையே நேரடித் தொடர்பு எதுவும் இருந்ததில்லை. 1985 இல் வட கிழக்கு முஸ்லிம்களிடையே தேசிய எழுச்சி ஏற்பட்ட போது, வடக்கு கிழக்கு இணைப்பு குறித்த கருத்து அங்கு நிலவியிருக்கவில்லை. இதனால் வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய எழுச்சியில் இந்த இணைப்பு என்ற சிந்தனை எவ்வித பங்கும் வகித்திருக்கவில்லை. பதிலாக வட - கிழக்கில் தாம் ஒரு தனியான சமூகம் என்ற வகையில் தமது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே அம்முஸ்லிம்கள் தமது தேசிய இயக்கத்தை முன்னெடுத்தார்கள். இவ்வுண்மையை, வடக்கும் - கிழக்கும் இணைக்கப்படும் போது மட்டுமே முஸ்லிம்களுக்கு தனியான அதிகார அலகு தேவை என்பதாகத்திரித்து விடுவதன் மூலம் இம் முஸ்லிம்கள் ஒரே அரசியல் தலைவிதியினால் பிணைக்கப்பட்டிருக்கின்ற சமூகம் என்பதையும், எனவே இவர்களுக்கென தனியான அரசியல் அதிகார அலகு வரலாற்றுத் தேவையாக முன்னிறுத்தப்பட்டுள்ளது என்பதையும் அஷ்ரப் வேண்டுமென்றே மறைக்கின்றார்.
வடக்கும் - கிழக்கும் நிரந்தரமாக பிரிக்கப்படும்போது, அங்கு முஸ்லிம்களுக்கு என தனியான அரசியல் அதிகார அலகு தேவையில்லை என அஷ்ரப் கூறுவதன் மூலமாக உண்மையில் வட - கிழக்கு முஸ்லிம்களுக்கு அவர் அரசியல் துரோகம் இழைப்பவராகின்றார். ஏனெனில் வடக்கும் - கிழக்கும் தனித்தனியாக பிரிக்கப்படுமாயின் அவ்விரு பகுதிகளிலுமுள்ள முஸ்லிம்களின் அரசியல் பலம் கூறிடப்படவும், உரிமைகள் சிதைக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், இதுவரை வடக்கும், கிழக்கும் தனித்தனி அலகுகளாக பிரிந்திருந்த நிலையில்தான் கிழக்கு முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசமும், காணிகளும் சிங்கள அரசினால் பறிக்கப்படுவதும் சொந்த பிரதேசங்களிலேயே அவர்களின் செறிவு குறைக்கப்படுவதும் அவர்களின் பல்வேறு பொருளாதார முயற்சிகள் பாதிக்கப்படுவதும் இடம் பெற்றன. இந்த உண்மைகளை மறைப்பதன் மூலம் சொந்த மக்களுக்கு துரோகம் இழைப்பவராக மட்டுமல்ல, சிங்கள இனவாதத்திற்கு துணைபோகின்றவராகவும் அஷ்ரப் மாறுகின்றார். முஸ்லிம்களது உரிமை தொடர்பான பிரச்சினையை வடக்கு - கிழக்கு இணைப்பு என்பதற்கு எதிராக மட்டுமே
12O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

திருப்பிவிடுவதன் மூலம் இவர் தமிழர் தாயகத்தை கூறுபோட முனையும் சிங்கள பேரினவாதத்தின் கருவியாகவே உண்மையில் செயற்படுகின்றார்.
தவிர, வடக்கு, கிழக்கு இணைப்பையும் முஸ்லிம்களுக்கென தனியான அரசியல் அதிகார அலகையும் வலிந்து இணைத்து, இதன் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளை முற்றிலும் தமிழ் இனவாதத்துடன் மட்டுமே தொடர்புபடுத்துபவராக அவர் மாறுகின்றார். எனவே வடக்கு, கிழக்கு முழுவதையுமே தன் ஆதிக்கத்தின் கீழ் அடக்கி வைக்க முனைகின்ற சிங்கள இனவாதம் குறித்த தெளிவான புரிதல் முஸ்லிம்களிடம் ஏற்படுவதை அவர் தடுத்துவிட முயல்கின்றார். இவ்வாறாக அவர் தனது அரசியல் கடமைகளை துறந்தோடுவதுடன், இப்பிரச்சினையை தனது அரசியல் சதுரங்க விளையாட்டுக்கு ஒரு முக்கிய காயாகவும் பயன்படுத்தி வருகின்றார்.
ஒரு தேசிய இயக்கம் சமூகத்தின் பல பிரிவுகளையும் ஐக்கியப் படுத்தியே முன்னேறிச் செல்கின்றது. தேசிய இயக்கத்தில் பங்கு கொள்கின்ற இச்சமூகப் பிரிவுகள் தமக்கென தனித்தவமானதும், சில சமயங்களில் வேறுபட்டதுமான சில நன்மைகளைக் கொண்டிருப்பது தவிர்க்க முடியாதது. எனவே இவற்றை ஒன்றிணைத்து, பொதுவான தேசிய நலன்களை வெளிப்படுத்தும் வகையில் கோரிக்கைகளை வகுக்க வேண்டிய பொறுப்பு அத்தேசிய இயக்கத்தின் தலைமைக்கு உரியதாகும். தனது சமூகத்தின் மத்தியில் இத்தகைய ஐக்கியத்தை உறுதியாக ஏற்படுத்துவதற்கு தலைமையானது பல்வேறு சமூகப் பிரிவினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்த ஒரு கூட்டுத் தலைமையாக இருப்பது அவசியமாகும்.
வட-கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்கள் இதுவரை காலமும் பிரதேச தொடர்ச்சியின்மையும், முரண்பாடுகள், பிரதேச வாதங்கள் என்பவற்றையும் கொண்டிருப்பதோடு, பிரதேச மட்டங் களின் அடிப்படையில் வேறுபடுகின்ற குறிப்பான தேவைகளையும் கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் மத்தியில் கடந்த காலங்களில் நிலவிய மரபான கட்சி அரசியல் காரணமாக அவர்களிடையே U.N.P, SLFP என்ற பிளவுகளும், பகைமைகளும், பழிவாங்கல்களும் நிலவி வந்துள்ளன. எனவே இப்படிப்பட்ட பிளவுகளையும், முரண்பாடுகளையும் கடந்து, வட - கிழக்கு முஸ்லிம்களை ஒரே
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 121

Page 67
தேசிய இயக்கத்தின் கீழ் அணிதிரட்டுவதற்கு கூட்டுத் தலைமையும், பொதுக் கோரிக்கைகளும் மிகவும், அவசியமாகின்றன. எனினும் SLMC இல் இத்தகைய நிலைமை இன்றுவரை ஏற்படவேயில்லை. அஷ்ரப்பின் தனி ஆதிக்கம் SLMC இல் நிலவுவது ஒரு புறம் இருக்க, கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு அவரின் சொந்த மாவட்டமான அம்பாறையைச் சேர்ந்தவர்களே பெரிதும் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். முழு வட - கிழக்கு முஸ்லிம்கள் தேசிய கட்சியாக உருப்பெற்ற SLMC, இன்று பண்புரீதியில், அம்பாறை மாவட்டத்தை முதன்மைப்படுத்துகின்ற ஒரு பிரதேசக் கட்சியாக குறுக்கப்பட்டிரு க்கிறது. முழு வட- கிழக்கு முஸ்லிம்களின் நலன்களையும் பிரதிபலிக் கின்ற பொதுவான அரசியல் கோரிக்கைகளை திட்டவட்டமாக வரையறுத்து முன்வைப்பதற்குப் பதிலாக, அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்திய கோரிக்கைகளே முதன்மையாக்கப்பட்டு வந்திருக் கின்றது. இதன் ஒரு வடிவமாகவே 'தென்கிழக்கு மாகாணம்' என்ற கோரிக்கையும் வெளிப்பட்டிருக்கின்றது. ('தென் கிழக்கு மாகாணம்' என்ற பெயரிடலே, கிழக்கு மாகாணத்தின் மத்திய, வடக்கு பிரதேசங்களான, மூதூர், கிண்ணியா, போன்ற முஸ்லிம் பிரதேசங்கள் கூட கைவிடப்பட்டதாக அமைந்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக வடகிழக்கின் ஏனைய பிரதேச முஸ்லிம்கள் SLMC இல் நம்பிக்கை இழக்கின்ற நிலை தோன்றி வருகின்றது.
வட - கிழக்கு முஸ்லிம்களின் நலன்களையும், உரிமைகளையும் முதன்மைப்படுத்திச் செயற்படுவதற்குப் பதிலாக, அஷ்ரப் முழு நாட்டினதும், அனைத்து சமூகங்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கும் ஒருவராக அடிக்கடி தன்னை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதில் அவரது அரசியல் சாணக்கியத்திற்கு பதிலாக அரசியல் முதிர்ச்சியின்மையே வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பில் SLMCயும் அதன் தலைவரும் உள்ளனர். இப் பொறுப்பைக் கைவிட்டு முழு நாட்டுப் பிரச்சினைக்குமான தீர்வு குறித்து அஷ்ரப் பேசுவதில் அர்த்தம் இல்லை. ஒரு சமூகம் தன் சொந்த உரிமைகளை வென்று தருவதற்காகவே SLMC இற்கு ஆணையை வழங்கியுள்ளது என்று உண்மையை அவர் தட்டிக் கழித்து விடப் பார்க்கின்றார். சிங்கள அரசும் தமிழ் போராட்ட அமைப்புகளும் நவீன ஆயுதங்களை ஏந்தியபடி வட - கிழக்கு முஸ்லிம்களுக்கு விரோதமான முறையில் செயற்படுகின்றன என்ற உண்மையை அஷ்ரப்பும் SLMCஇன் ஏனைய
122 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

உறுப்பினர்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகம் தனது அரசியல் உரிமைகளை கண்ணாமூச்சி விளையாடி வென்றுகொள்ள முடியாது. சிங்கள, தமிழ் சமூகங்களின் முன்பாக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கோரிக்கைகளையும் அறிக்கைகளையும் மாற்றி மாற்றி வெளியிட்டு வருவதால் தமது மக்களின் உரிமைகளை வென்று விடலாம் என அஷ்ரப் கருதினால் அது அவரது அறியாமையின் விளைவாகும். முஸ்லிம்கள் சமகாலத்தில் இருபக்க ஒடுக்குமுறை களால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். தமிழ் தேசத்தின் மீதான சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளையும் அதற்கு எதிரான போராட்ட மும் தொடர்ந்து உக்கிரமடைந்து கொண்டே செல்லும் என்பதை, அஷ்ரப் SLMC தலைமையும் புரிந்து கொள்பவார்களாயின், இம் மோதல்களின் விளைவாக வட-கிழக்கில் எஞ்சியிருக்கின்ற முஸ்லிம் களின் சமூக இருப்பும் கூட அச்சுறுத்தலுக்குள்ளாகும் என்பதை தெளிவாக காண்பார்கள், இந்த நிலை ஏற்படுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டுமாயின், அரசியல் தூரதிருஷ்டியும் வெகுசனங்களை அணிதிரட்டும் போராட்ட வடிவங்களும், இம் முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவதும் அவசியமாகும். இப்படியான நடவடிக்கைகளை முற்கூட்டியே எடுக்காமல் விடப்படும் போதுதான் முஸ்லிம் சமூகத்தின் இருப்பு இருந்த இடம் தெரியாமல் சிதறடிக்கப்படும் வாய்ப்பு ஏற்படும். அதன் பிறகு விழிபிதுங்கிப் பயனில்லை. முதலாவதாக, வட கிழக்கு முஸ்லிம்கள் ஏற்கனவே சிங்கள, தமிழ் இனவாதங்களின் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றார்கள். இரண்டாவதாக, இத்தகைய ஒடுக்குமுறைகளை மறைப்பதால் அல்ல, பகிரங்கத்துக்கு கொண்டுவந்து, தேவையான முன்னெடுப்புகளை மேற்கொள்வதால் மட்டுமே ஒரு சமூகம் தன்னை ஒடுக்குதல்களில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியும். உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தேசிய இயக்கங்களின் அனுபவங்கள் வெளிப்படுத்துகின்ற ஒரே உண்மை இதுதான்.
இன்று தலைவிரித்தாடும் கொடூர இன ஒடுக்குமுறைகளுக்கும், யுத்தப் பேரழிவுகளுக்கும் சிங்கள இனவாதமும், சிங்கள அரசுமே முதற் காரணம். எனவே இந்த அவலங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பும் தொடக்கி வைத்தவர்களுக்கே உரியதாகும். ஆனால் இந்தப் பொறுப்பை தாம் நிறைவேற்றுவதற்குப் பதிலாக, சிங்கள அரசும், தலைமைகளும் மற்றைய சமூகங்கள் மீதான
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 123

Page 68
ஒடுக்குமுறைகளை மேலும் தீவிரப்படுத்தி வருவதோடு, ஒடுக்கப் படும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை தமக்கிடையில் மோத விடுகின்ற நிலையை தொடர்ந்தும் ஏற்படுத்தி வருகின்றன. ஒரு புறம் தமிழ், முஸ்லிம்களிடையே வன்முறைகளைத் தூண்டிவிடுவதோடு, மறுபுறம் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காண்கின்ற பொறுப்பை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் தள்ளிவிட்டு, இவ் விரு சமூகங்களிடையிலும் முரண்பாட்டை மேலும் ஆழப்படுத்தி விடு கின்றன.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாகவும், வடக்கு-கிழக்கு இணைப்பு மற்றும் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பாகவும் SLMC இத் தமிழ் அமைப்புகளுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளது. இவ்வாறாக தமிழ் தரப்புகளுடன் இணக்கம் காண மேற்கொள்ளப் பட்ட இம்முயற்சிகளில் ஏற்படும் தோல்வியின் மூலம் வட-கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் சிங்கள இனவாதிகளினால் உதாசீனப் படுத்தப்பட்டு கேலிக்குள்ளாக்கப்பட்டன என்ற உண்மையை அஷ்ரப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு தமிழ் -முஸ்லிம் இணக்கமின் மையை காட்டி சிங்கள அரசும், இனவாதிகளும் தப்பிக்க முயல்வதை யும் அஷ்ரப் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறாக சிங்கள அரசின் 'சதிப் பொறியில்' சிக்கி, முஸ்லிம்களின் அரசியல் உரிமை கள் தொடர்ந்து பறிக்கப்படுவதற்கு அஷ்ரப் துணைபோவது ஒருவகை சமூக துரோகமே.
சிங்கள அரசினதும், பெளத்த - சிங்கள இனவாதத்தினதும் சதிகள் குறித்து ஒடுக்கப்படும் சமூகம் என்ற வகையில் வட-கிழக்கு முஸ்லிம் கள் தெளிவான புரிதலைப் பெறவேண்டும் அரை நூற்றாண்டு காலமாக போராடி வருகின்ற தமிழ் மக்களுக்கு மிகச் சாதாரண உரிமைகளைக் கூட வழங்கத் தயாராக இல்லாத இந்த சிங்கள இனவாதமும் அரசும் , தம்மால் ஒடுக்கப்படுகின்ற இன்னொரு சமூகமான வட - கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் விடயத்தில் தாராளமாக நடந்து கொள்ளும் என முஸ்லிம்கள் தப்புக்கணக்கு போட்டால், அது தமது சமூகத் தற்கொலைக்கு இட்டுச் செல்வதாகவே அமையும் இருந்தும், இன்று வரையிலான தனது அரசியல் முன்னெடுப்புக்கள் மூலம் அஷ்ரப், சாராம்சத்தில் சிங்கள அரசிற்கும், சிங்கள இனவாதத்திற்கும் அடிபணிந்து விட்டவராகவே தன்னை
124 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

வெளிப்படுத்தி வருகின்றார். அதிகாரத்திலுள்ள சிங்களத் தலைவர்களை முகஸ்துதி செய்வதும், இலங்கை சிங்கள பெளத்த நாடு என ஏற்றுக்கொள்வதும், சிங்கள சமூகத்தின் தயவில் வட-கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கூறுவதும். இதனை நிரூபிப்பதாக அமைகிறது.
தமது தேர்தல் வெற்றியைக் கொண்டு, அரசாங்கத்துடன் பேரம் பேசி வட-கிழக்கு முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுவிட முடியும் என்ற அஷ்ரப் பின் பிரச்சாரங்கள் தவறானவை என்பது, இன்றைய அரசாங்கத்தின் "பங்காளிகளாக" அவரும் SLMC உறுப்பினர்களும் ஆன பின்னர் தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகின்றது. அரசாங்கத்தின் இருப்பை தீர்மானிக்கும் 'சக்தி' பெற்றவராயும், புனர் வாழ்வு அமைச்சராயும் அஷ்ரப் இருக்கின்ற போதிலும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் முஸ்லிம்களின் புனர் வாழ்வு விடயத்தில் காத்திரமாக எதுவும் செய்ய முடியவில்லை. அகதிகள் என்ற பெயரே இல்லாத வகையில் அவர்களுக்கு அடிப்படை தேவைகள் அனைத்தையும் வழங்கி மறுவாழ்வு அளிப்பேன் என்ற வார்த்தைகள் இன்று மறந்துவிட்ட ஒன்றாகி விட்டது. மூதூரின் மையப்பகுதியில் சிங்களவர்களுக்கு காணி வழங்கி குடியேற்றப்பட்டதையும், ஏறாவூர், புல்மோட்டை போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் அரச படைகளால் தாக்கப்பட்டதையும், கொல்லப்பட்டதையும் அஷ்ரப்பினாலும் அவரது பாராளுமன்ற சகாக்களினாலும், தடுக்க முடியவில்லை. இவை அனைத்தும் வெளிப்படுத்தும் உண்மை இதுதான். இனவாதத்தால் இறுகிப் போயிருக்கும் சிங்கள அரசின் ஓர் அங்கமான அரசாங்கத்தில் ஒடுக்கப்படும் சமூகங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் பதவிகளை வகிப்பதன் மூலமாக அச்சமூகங்கள் உரிமைகளை பெற்றுவிட முடியாது. மாறாக, தனது சமூகத்தின் உரிமைகளை தாரை வார்த்துவிட்டே இவர்கள் அமைச்சர்களாக நீடிப்பது சாத்தியப்படும். ஒடுக்கப்படும் சமூகங்கள் மற்றொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, சிங்கள இனவாத அரசில் அங்கம் வகிக்கின்ற தமது அமைச்சர்களை விட, அந்த அரசு நிறுவனங்களில பணிபுரிகின்ற ஒரு சிங்கள எழுதுவினைஞர் (Clerk) கூடிய அதிகாரமுடையவனாக இருக்கின்றான் என்பதே அந்த உண்மையாகும்.
(pindah dasarapih ridiarnapih 125

Page 69
ஒருபுறம் சிங்கள இனவாதமும் மறுபுறம் தமிழ் இனவாதமும் வடகிழக்கு முஸ்லிம்களின் சமூக இருப்பை வேரறுத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் தமது தேசிய இயக்கத்தை வலிமையுடன் முன்னெடுத்தாக வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட தேசிய இயக்கத் திற்கு தலைமை தாங்கக் கூடிய, ஒரு தேசிய தலைவராக அஷ்ரப் இருக்கின்றாரா? தமது உரிமைகளை வென்று தரக்கூடிய ஒரு அரசியல் போராட்ட தலைவராக அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கின் றாரா? என்பதை தீர்மானிக்க வேண்டிய நிலையில் வட-கிழக்கு முஸ்லிம்கள் உள்ளனர். தனது ஒன்பது வருடகால SLMC சார்ந்த அரசியல் வாழ்வின் மூலமாக, அஷ்ரப் தன்னை ஒரு பாராளுமன்ற பிழைப்புவாத அரசியல்வாதியாகவே வெளிப்படுத்தி வந்துள்ளார். தனது அதிகாரத்தையும், நலன்களையும் , செல்வாக்கையும் பாதுகாப்பதில் குறியாக இருக்கும் ஒரு சந்தர்ப்பவாத அரசியல் தலைவராகவே தன்னை அடையாளம் காட்டியுள்ளார். அரசியல் பண்பில் அவர் தெற்கு முஸ்லிம் தலைமையிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. இனவாதத்துடன் பணிந்து போகின்றார். அதனுடன் சமரசம் செய்கின்றார். அவரும் அவரின் சகாக்களும் தமது வாழிடங்களையும், பொருளாதார முயற்சிகளையும் கொழும்பை மையப்படுத்தியதாக மாற்றியிருக்கின்றனர். இதனால் இவற்றை பாதுகாக்க சிங்கள அரசின் தயவை நாடவ்ேண்டியுள்ளனர். இறுதியாக SLMC தலைவர் அஷ்ரப் பற்றி ஒன்றை தெளிவாக குறிப்பிட முடியும். வட-கிழக்கு முஸ்லிம்கள் ஒரு தனியான தேசமாக உருவாகி விட்டார்கள் என்பதும் அவர்களின் தேசிய இயக்கத்தில் தான் அவர் தனது அரசியலை நடாத்திக் கொண்டிருக்கிறார் என்பதும் அஷ்ர ப்பிற்கே தெரியவில்லை. முஸ்லிம் தேசத்தின் அரசியல் கோரிக்கைகள் என்ன? என்பதைக் கூட இதுவரைSLMC திட்டவட்டமாக வெளிப்படு த்தவில்லை. தனியான மாகாணசபை நிபந்தனையுடன் கூடிய வடக்கு - கிழக்கு இணைப்பு தனியான இராணுவம் . என பலப் பல கோரிக்கைகளை அவ்வப்போது அஷ்ரப் முன் வைத்துள்ளார். இப்போது வடக்கு கிழக்கு பிரிப்புதான் முஸ்லிம்களின் கோரிக்கை என்பதுபோல பேச முற்படுகின்றார். மறுபுறம், தென்கிழக்கு மாகாண சபை எனவும் இரகசியமாக ஆலோசனை நடத்துகின்றார். இப்படியாக அடிக்கடி சந்தர்ப்பத்திற்கு ஏற்ப கோரிக்கைகளை முன்வைப்பதும் பின்பு கைவிடுவதுமாக, செயற்பட்டு வந்துள்ளார். உண்மையில்,
126 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

மக்களுடைய பங்குபற்றுதலுடன் கூடிய விரிவான விவாதத்தை நடாத்தி முஸ்லிம் மக்களது அரசியல் கோரிக்கைகள் இவைதான் என்பதை தெளிவாக முன்வைக்க முடியாத ஒரு அமைப்பாகவே SLMC இதுவரை இருந்து வருகின்றது. இதன் காரணமாக,SLMC உம், வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இயக்கமும் தேக்கத்திற்கும் , ஓரளவு பின்னடைவிற்கும் உட்பட்டுள்ளது. இருந்த போதிலும், இம் முஸ்லிம்களின் தேசிய உணர்வு இன்னமும் உள்ளார்ந்து உயிர் துடிப்பு மிக்கதாகவே உள்ளது. வட கிழக்கில் தமக்கென தனியான அரசியல் அதிகார அலகு உருவாக்கப்படுவதன் மூலமாக மட்டுமே, தமது சமூக இருப்பும், உரிமைகளும் பாதுகாப்பும், உறுதிப்படுத்தப்படும் என்பதில் அவர்கள் இன்னமும் திடமாகவே உள்ளனர். இவற்றை அடைவதற்கு தமக்கென தனியான அரசியல் கட்சி அவசியமே என்பதில் அவர்கள் உறுதியாகவே இருக்கின்றனர். அஷ்ரப் பின் அதிகாரத்துவ போக்குகளும், சந்தர்ப்பவாத அரசியலும் தமது உரிமைகளை பெற்றுத்தராது என்பதை வட-கிழக்கு முஸ்லிம்கள் படிப்படியே உணர்ந்து வருகின்றார்கள். எனினும் ஒரு பொருத்தமான தேசிய தலைமை தம்மிடையே இன்னமும் உருவாகாததால், அஷ்ரப்பின் தலைமையை தொடர்ந்தும் ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் வட-கிழக்கு முஸ்லிம்கள் இருக்கின்றனர். வடக்கு கிழக்கு முஸ்லிம்களும், கிழக்கின் சில பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம்களும் SLMC இல் இருந்து கணிசமாக விலகி நிற்பதற்கான காரணம், அவர்களின் தேசிய உணர்வு மழுங்கி விட்டது என்பதால் அல்ல. மாறாக அஷ்ரப் பின் மீதான அவநம்பிக்கை காரணமாகவே அவர்கள் SLMC இலிருந்து விலகி நிற்கின்றார்கள். இவ்வாறு விலகி நிற்பவர்களிடம் மீண்டும் சிங்கள கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் போக்கு மேலோங்கியிருக்கவில்லை. தமக்கேயுரிய அரசியல் குறித்தும், தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுவது குறித்துமே இன்னமும் சிந்திக்கின்றனர். இவ்வாறு இவர்கள் SLMC இலிருந்து விலகி நிற்பது, வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இயக் கம் பலவீனப்பட்டு விட்டது என்பதையோ, மறைந்து கொண்டி ருக்கிறது என்பதையோ குறிக்காது. மாறாக பிற்போக்கு சந்தர்ப்பவாத தலைமையிடமிருந்து விடுபடும் போக்கு ஆரம்பித்து விட்டது
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 127

Page 70
என்பதையும், ஒரு தனியான தேசம் என்ற வகையில், அவர்களி டையே உறுதியான ஐக்கியம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதை யுமே காட்டுகிறது. முஸ்லிம் தேசிய இயக்கம் இன்று ஒரு மாற்றுத் தலைமையை வேண்டி நிற்கிறது. வட-கிழக்கு முஸ்லிம் தேசத்தை மேலும் பலப்படுத்தி, தமது அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற சயநிர்ணய உரிமை தமக்கு இருக்கிறது என்ற தெளிவுடன், அவ் உரிமையை நிலை நாட்டுவதற் கான அரசியல் நடவடிக்கைகளில் அவர்களை பங்கு கொள்ளச் செய்கின்ற ஒரு புதிய தலைமை அவசியமாகின்றது. தம்மை இருபுற மும் ஒடுக்குகின்ற சிங்கள இனவாதத்தையும், தமிழ் இனவாதத்தையும் எதிர்கொண்டு அவ் வழிமுறைகளை இனங்கண்டு, முஸ்லிம்களை அரசியல் போராட்ட நடவடிக்கைகளில் பங்கு கொள்ளச் செய்கின்ற ஒரு போராட்டத்தலைமை அவசியமாகின்றது. முஸ்லிம் தேசத்துள் அடங்குகின்ற சகல பிரிவினரின் நலன்களையும், அபிலாசைகளையும் நிறைவு செய்யக் கூடிய வகையில் கோரிக்கைகளை தெளிவாக வரையறுத்து முன்வைக்கக் கூடிய ஒரு கூட்டுத்தலைமை அவசிய மாகின்றது. வட-கிழக்கு முஸ்லிம்களில் தங்கியிருப்பதாயும் அவர்க ளின் பிரச்சினைகளையும் போராட்டத்தின் நியாயத் தன்மையையும் சர்வதேச மயப்படுத்துபவர்களாயும் அமைகின்ற ஒரு தீர்க்கமான தலைமை அவசியமாகின்றது.
SLMC இலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களில் சிலர் மாற்றுத் தலைமையாக அமைவதற்கும், புதிய கட்சியை அமைக்க வும் அவ்வப்போது முயன்று வந்துள்ளனர். ஆனால் இவர்கள் முஸ்லிம்களின் தேசிய இயக்கத்தை தலைமை தாங்கி உறுதியாக முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, எப்படியும் அஷ்ரப்பை வீழ்த்த வேண்டும் என்பதே இலக்காக இருந்தது. இவர்கள், அஷ்ரப் தவறவிட்ட அரசியற் பாத்திரத்தை நிரப்பி, பண்பில் அஷ்ரப்பிலிருந்து வேறுபட்ட ஒரு தலைமையாகத் தம்மை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, நபர் என்ற அளவில் மட்டும் அஷ்ரப்பிற்கு மாற்றாகத் தாம் வர விரும்பினர். இதனால் இவர்களில் முயற்சிகள் தோல்வியடைந்ததோடு, இறுதியில் இவர்களின் சுயநலத் தோற்றங்களும் அம்பலமாயின. இவ்வகையில் SLMCஇன் முன்னால் தவிசாளர் சேகு இஸ்ஸதீன் இதற்கு உதாரணமாகின்றார். முன்பு
128 Cyphosih gayuh ra TROVyph

கட்சியின் தீர்மானம் எதுவும் இன்றி ஜனாதிபதி தேர்தலில் பிரேமதாஸாவை ஆதரிப்பது என்று தன்னிச்சையாக அஷ்ரப் கருத்து வெளியிட்டதை காரணம் காட்டி SLMC இலிருந்து வெளியேறி, "முஸ்லிம் கட்சி' என்ற தனிக்கட்சியும் ஆரம்பித்த சேகு இஸ்ஸதீன் பின்னர், UNPஇல் இணைந்து கொண்டதன் மூலம் தனது உண்மைத் தோற்றத்தை அப்பட்டமாக்கிக் கொண்டார். உண்மையில், வடகிழக்கு முஸ்லிம்களின் தேசிய அரசியலில் ஊன்றி நின்று அதனை தெளி வாகவும், உறுதியாகவும் முன்னெடுப்பதால் மட்டுமே முஸ்லிம்களின் பலமான ஆதரவை ஒரு மாற்றுத் தலைமை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை முஸ்லிம்கள் மத்தியிலுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.
கிழக்கு எங்கும் அரச படைகளும், விடுதலைப்புலிகளும் ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையில், முஸ்லிம் மத்தியில் உருவாகக் கூடிய முற்போக்கு, ஜனநாயக சக்திகளை அழித்தொழித்த அரச படைகள் தீவிரமாக இருக்கின்ற நிலையில், வடக்கிலிருந்து முற்றாகவே முஸ் லிம்கள் வெளியேற்றப்பட்டுள்ள சூழலில், இன்றைய SLMC தலை மைச் சக்திமிக்கவர்களாக மாறியிருக்கின்ற நிலையில், வட-கிழக்கு முஸ்லிம்கள் மத்தியிலிருந்து ஒரு புதிய போராட்டத் தலைமை உருவாவது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. எனினும் இத்தேவை நிறைவேற்றப்பட்டாக வேண்டும். இது இன்றைய வரலாற்றுத் தேவை யாகும். வட-கிழக்கு முஸ்லிம்களிடையே ஒரு புதிய மாற்றுத் தலைமை உருவாகும் போதுதான் அவர்களின் தேசிய இயக்கம் மீண்டும் முன்நோக்கிப் பாய்ந்து சரியான திசைவழி செல்வதும் சாத்தியமாகும். ஒரு உண்மையான மக்கள் இயக்கம் தனது இலக்கை அடைவதில் என்றுமே தோல்வி கண்டதில்லை. இத்தகைய இயக்கம் தனது வளர்ச்சிப் போக்கில், ஒவ்வொரு கட்டத்திற்கும் பொருத்தமான புதிய, ஆற்றல் மிக்க போராட்ட தலைமைகளை தன்னிலிருந்து உருவாக் கியே தீரும். இந்த உண்மையை வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இயக்கத்திற்கும் முற்றிலும் பொருந்தும். எனவே ஒடுக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் இந்த தேசிய இயக்கம் தன்னுடைய இன்றைய கட்ட வரலாற்றுத் தேவையை உணர்ந்து பொருத்தமான ஒரு தலைமையை நிச்சயம் படைத்தளிக்கும்!
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 129

Page 71
(plg. 660d J
இலங்கை முஸ்லிம்கள் தெற்கு வட-கிழக்கு என வேறுபட்ட அரசியல் தலைவிதிகளைக் கொண்ட இரு பிரிவுகளாக வாழ்கிறார்கள் என்பதையும், வட-கிழக்கு முஸ்லிம்கள் ஒரு சுயமான அரசியல் இயக்கத்தை முன்னெடுத்திருப்பதோடு, தமக்கென தனியான அரசியல் அதிகார அலகை கோருகின்ற ஒரு தனித்தேசமாக உருவாகி யிருக்கிறார்கள் என்பதையும் இதுவரை வெளிப்படுத்தினோம். வட-கிழக்கு முஸ்லிம்கள் ஒரு தனியான தேசம் என்ற முடிவு தமிழ் தேசத்தின் பல்வேறு தரப்புகளிடையே வேறுபட்ட கேள்விகளையும், சர்ச்சைகளையும் உருவாக்கக்கூடும். ஏற்கனவே தனிப்பட்ட விவாதங் களிலும், சஞ்சிகைகளினூடாகவும் வட-கிழக்கு முஸ்லிம்கள் குறித்த மதிப்பீடுகளும் கேள்விகளும் எழுப்பப்பட்டிருக்கின்றன. இவற்றை உள்ளடக்கும் வகையில் விரிவாக விவாதிப்பதன் மூலமாக வட-கிழ க்கு முஸ்லிம்களின் தேச இருப்பை புரிந்து கொள்ள முயல்வோம்.
முதலில், வட-கிழக்கு முஸ்லிம்களை, தமிழ் தேசத்திற்குள் அடை யாளப்படுத்துகின்ற முயற்சிகளைத் தமிழ் தலைமைகள் இப்போது முற்றாகக் கைவிட்டுள்ளன என்ற உண்மையை மனதில் கொள்வோம். வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய விடுதலைப் புலிகளும் கூட வட-கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பது முரண்நகையான உண்மை. தமிழ் தேசத்தின் சிந்தனைப் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் இவ்வா றான நிகழ்விற்கு காரணமென்பதை விட, வடகிழக்கு முஸ்லிம்கள் தமது தனித்துவம் மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த உணர்வலை களைத் தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் வெளிப்படுத்தி வந்திரு ப்பதே இதற்கு முக்கிய காரணமாகும். இன்னும் தெளிவாகக் கூறினால், வட-கிழக்கு முஸ்லிம்கள் தமது தனித்துவத்தையும் உரிமைகளையும் திட்டவட்டமாக வெளிப்படுத்திய பின்னர்தான் அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி தமிழ் தலைமைகள் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. எனவே தமிழ் தலைமைகளும் தமிழ் தேசமும் ஏற்றுக் கொண்டாலும்,
13 O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

இல்லாவிட்டாலும், வட-கிழக்கு முஸ்லிம்கள் தம்மை அரசியல் ரீதியில் தனியான சமூகமாக உருவாகிவிட்டனர் என்பதே உண்மை. இந்த உண்மையை தமிழ் முற்போக்கு, ஜனநாயகப் பிரிவினர் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு சமூகத்தின் அரசியல் தனித்துவம் என்பது முற்றிலும் அச்சமூகத்தின் சொந்த விருப்பினாலேயே தீர்மா னிக்கப்படுகிறது என்ற உண்மை இங்கும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
இனி, தமிழ் தேசத்தின் அனைத்துப் பிரிவினரும் வட-கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தை ஒரே அர்த்தத்தில் புரிந்து கொள்ளவில்லை என்ற உண்மையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ் பிரிவினர், வட-கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் தனித்து வத்தை முக்கியமாக மூன்று வகையில் அர்த்தப்படுத்துகின்றனர் எனக் கொள்ளலாம்.
(1) வட-கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் ஈழத்தில் அடங்குகின்ற
ஒரு தேசிய சிறுபான்மையினர்.
(2) வட-கிழக்கு முஸ்லிம்கள் வளர்ந்து வருகின்ற ஒரு
தேசம்,
(3) வட-கிழக்கு முஸ்லிம்கள் ஒரு தனியான தேசம். இவற்றில் முதல் இரண்டு அர்த்தப்படுத்தல்களும் பெரிதும் தேசம் குறித்த ஸ்டாலினின் வரையறைகளை அளவுகோலாகக் கொள்வதன் வெளிப்பாடுகளாகும். குறிப்பாக வட-கிழக்கு முஸ்லிம்களிடையே நிலத் தொடர்ச்சியின்மையும், பலவீனமான பொருளாதாரக் கட்டமைப்புகளும் காணப்படுகின்றன எனக்கொண்டு இத்தகைய முடிவுகள் பெறப்படுகின்றன. இவ்வாறு அர்த்தப்படுத்துவதிலுள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதற்குப் பதிலாக, 'வட-கிழக்கு முஸ்லிம் கள் தனியான தேசம்' என்று இக்கட்டுரை முன்வைத்திருக்கின்ற முடிவு குறித்து விவாதிப்பதன் ஊடாக பொதுவான புரிதலை எட்டு வது பொருத்தமாக அமையும்.
முதலில், சமூக நிகழ்வுகள் தொடர்பான வரையறைகள் குறித்து சில விளக்கங்களை முன்வைக்க வேண்டியுள்ளது. வரையறைகள் என் பவை, சமூக இயக்கங்களில் இருந்து பெறப்படுகின்ற தர்க்க ரீதியான முடிவுகளே தவிர, சமூக இயக்கங்களைக் கட்டுப் படுத்துகின்ற, அவற்றை நிராகரிக்கின்ற தடைகள் அல்ல, எந்த சமூகமும்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 131

Page 72
வரையறைகளைச் சரி பார்த்தபடி இயங்குவதில்லை. பல பரிமாணங்களைக் கொண்டதாகவும், சிக்கலானதாகவும் மாறும் புறநிலை எதார்த்தங்களை எதிர் கொண்டு, அங்குள்ள தடைகளின் பிடியிலிருந்து, தம்மை விடுவித்து முன்னேறுவதற்கான அக வலி மையை வேண்டி நிற்கின்ற ஒரு சமூகத்தின் இயக்கத்தை, முற்றிலும் வேறான சமூக இயக்கத்தில் இருந்து பெறப்பட்ட வரையறைகளுடன் பொருத்தி மதிப்பிடுவது இயங்கியல் முறைமையாகாது. இது வரையறைகளை அளவுகோலாக்கிக், குறித்த சமூகத்தின் உள்ளார்ந்த இயக்கத்தை மறுப்பதாகவே அமையும், வரையறைகளின் பற்றாக் குறைகளையும், அவை மீறப்படுவதையும் அவற்றுடன் புதிய கூறுகள் இணைக்கப்படுவதையும் வெளிப்படுத்துவதாகவே இன்று வரையி லான வரலூாற்று அனுபவங்கள் அமைந்திருக்கின்றன.
தேசம் குறித்து ஸ்டாலின் முன் மொழிந்த வரையறைகள் நவீன சமூகங்களின் வரலாற்றில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தி யிருக்கின்றன. பல சமூகங்களின் தேசிய உரிமைகள் பறிக்கப்படவும், தேச இருப்புகள் சிதைக்கப்படவும், தமது வாழிடங்களில் இருந்து வெளியேற்றப்படவும், ஸ்டாலினின் வரையறைகள் காரணமாயின. மக்களின் உணர்வலைகளை, வரையறைகள் மிதித்து அடக்கிய சோக வரலாற்று நிகழ்வுகளை நவீன உலகம் அனுபவித்தது. எனினும், ஸ்டாலினின் வரையறைகளிலிருந்து விடுபட்டு, அவற்றையும் மீறிப் பல சமூகங்கள் தம்மை தேசங்களாக அடையாளப்படுத்தியிரு க்கின்றன. ஒரு தேசத்திற்கென ஸ்டாலின் வரையறுத்த பிரதேசம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவற்றைப் பூரணப்படுத்தாத சமூகங்கள் மட்டுமன்றி, மதம், நிறம், பூர்வீகம், இனம் (Race) பொதுவான வரலாற்று அனுபவம். போன்ற புதிய கூறுகளின் அடிப்படையில் தம்மை ஒன்றிணைத்த சமூகங்களும் தேசங்களாக உருவாகியுள்ளன. இவற்றிற்கு மாறாக, ஸ்டாலின் வரையறைகளைப் பூர்த்தி செய்த மக்கள் கூட்டம் வெவ்வேறுபட்ட தேசங்களாக பிரிந்திருப்பதையும் நவீன வரலாறு கொண்டிருக்கிறது.
இத்தகைய புறநிலை யதார்த்தங்களின் அடிப்படையில் தான் தேசம் குறித்த பிரச்சினையை நாம் அணுக வேண்டும். மக்கள் தேசமாக உருவாவதில் வேறுபட்ட காரணிகள் தொழிற்படுவதால், தேச உருவாக்கத்தை குறிப்பிட்ட சில புறக்காரணிகளின் அடிப்படையில்
132 (gopio sith dgardyph Gies TROQyph

பொதுவான வரையறைக்குட்படுத்துவது முடியாது. ஒவ்வொரு தேசிய இயக்கமும் தனித் தனியாக மதிப்பிடப்பட வேண்டும் என்ப தோடு, மக்களிடையே நிலவும் பொதுவான புறநிலைக் காரணிகளில் அதிக கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அகநிலையில் அவர்கள் தமக்கிடையில் காண்கின்ற அரசியல் ஒருமையும், அதன் அடிப்படை யில் அமையும் பொதுவான உணர்வும், முதன்மைப்படுத்தப்பட வேண்டும். மக்கள் திரளொன்று தமக்கிடையே நிலவுகின்ற ஏதேனும் பொது அடையாளத்தின் கீழ் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து தமக்கெனத் தனியான அரசியல் அதிகார அலகைக்கோரும் போது அவர்கள் தேசமாக அமைகின்றார்கள் என்பதே நவீன புரிதலாகும். இங்கு மக்கள் தமக்கிடையிலான பொது அடையாளத்தை தேர்வு செய்வது கூட அவர்களின் வெறும் சுயவிருப்பின் பேரிலல்ல. மாறாக தமக் கிடையே நிலவும் எந்த பொது அடையாளம் அல்லது அடையாளங் களைக் கொண்டு தாம் பிற சமூகங்களால் ஒடுக்கு முறைக்குள்ளாக் கப்படுகின்றார்களோ, அதனை அல்லது அவற்றை ஆதாரமாகக் கொண்டு தான் அவர்கள் தேசமாக ஒன்றிணைக்கின்றார்கள். இந்த வகையில் தேசிய எழுச்சி என்பது வரையறைகளை அனுசரித்துச் செல்லும் ஒரு முறைப்படியான நிகழ்வு என்பதை விட, ஒரு வரலாற் றுத் தற்செயல் நிகழ்வாகவே இருக்கின்றது. இந்த பின்னணியில் வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய எழுச்சியை யும் அவர்கள் ஒரு தேசமாக உருவாகியுள்ளதையும் புரிந்து கொள்ள முடியும். ஸ்டாலின் ஒரு தேசத்திற்கென வரையறுத்த மொழி, வாழி டம், பொருளாதாரம், ஓரளவு கலாசாரத்திலும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒத்திருந்தும் கூட தமிழ் தேசத்துடன் தம்மை இணைத்துக் கொள்ள வட-கிழக்கு முஸ்லிம்கள் ஒருபோதும் முற்பட வில்லை. இவ்வாறு நிழ்ந்தமைக்கு வட-கிழக்கு முஸ்லிம்களின் தனித்துவமான சமூக இயக்கமும், மதரீதியில் அவர்கள் தம்மை தனியாக அடையாளப்படுத்தியதும் பிரதான காரணிகளாக அமை கின்றன. இந்நிலையில், வட-கிழக்கு முஸ்லிம்கள் தமிழ் தேசத்துடன் தாம் கொண்டிருந்த அத்தனை ஒற்றுமைக் கூறுகளையும் கடந்து, நிலத் தொடர்ச்சியின்மை என்பதையும் தாண்டி மத அடையாளத்தின் கீழ் 1980 நடுப்பகுதியில் தம்மை அரசியல் ரீதியில் ஐக்கியப்படுத்திக்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 133

Page 73
கொண்டமைக்கு, விடுதலை அமைப்புக்கள் முஸ்லிம்களை மதரீதியில் வேறுபடுத்தி அவர்கள் மீது மேற்கொண்ட வன்முறை அராஜகங்கள் பிரதான காரணியாகத் தொழிற்பட்டிருக்கின்றது. இதன் பின்னர், வட-கிழக்கு முஸ்லிம்கள் படிப்படியே, தமக்கென தனியான அரசியல் அபிலாசைகளுடன் ஒருதேசமாக உருவாகினர். வரலாற்றுத் தற்செயல் நிழ்வாயமைந்த வட-கிழக்கு முஸ்லிம் தேச உருவாக்கத்தில் அவர்கள் தமிழ் தேசத்திலிருந்து தம்மை வேறுபடுத்தியதும், அரசியல் ரீதியில் தமக்குள் ஒன்றுபட்டதும் பிரதானமாக அமைகின்றது. இந்த வகையில் வட-கிழக்கை தமது தாயகமாகக் கொண்ட, தமிழ், முஸ்லிம் என்ற இரண்டு தேசங்கள் இங்கு நிலவுகின்றன என்பதே இன்றைய யதார்த்தமாகும். இதற்கு மேல் வட - கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே ஏற்படுகின்ற உறவுகள், தனித்தனியானதும், சமத்துவமானதுமான இரு தேசங்களுக்கிடையிலான உறவுகளாகவே இருக்க முடியும். இந்த உண்மையை இதுவரைக்கும் தமிழ் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ளததால், வட-கிழக்கு முஸ்லிம்களுடனான உறவுகள் குறித்து தமிழ் மக்களிடையே இன்னமும் தவறானதும், ஆதிக்கதன்மை கொண்டதுமான கருத்துக்களே நிலவுகின்றன. தமிழ் முற்போக்கு, ஜனநாயக பிரிவினரும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. எனவே வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய அரசியல் குறித்து தமிழ் முற்போக்கு, ஜனநாயகப் பிரிவினரர் மத்தியில் நிலவுகின்ற சில கருத்துக்களைப் பரிசீலிப்பது இங்கு அவசியமாகும்.
வட-கிழக்கு முஸ்லிம்களும் அவர்களின் அரசியல் தலைமையும் மதத்தை உயர்த்திப் பிடிப்பதனால் பிற்போக்கானவர்கள். இந்நிலை யில் அவர்களின் தனித்துவத்தையும், அரசியல் இயக்கத்தையும் ஏற்றுக்கொள்வதால், பிற்போக்கை அங்கீரிப்பதாயும், ஆதரிப்பதாயும் ஆகிவிடும் என்ற ஆட்சேபங்கள் எழுப்பப்படுகின்றன. அதே சமயம் வேறொரு பிரிவினர் இத்தகைய பிற்போக்கிலிருந்து வட-கிழக்கு முஸ்லிம்களை மீட்டெடுத்து சரியான திசையில் வழிகாட்டுவதற்கு தமிழ் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் முன் வர வேண்டும் என அழைப்பு விடுகின்றனர். சிலர் இத்தகைய முயற்சிகளில் ஏற்கனவே இறங்கியுள்ளனர். இவ்விரு கண்ணோட்டங்களும் வெளித்தோற் றத்தில் வேறுபட்டவை போல் தெரிகின்ற போதிலும், சாராம்சத்தில் தமிழ் முற்போக்கு, ஜனநாயக பிரிவினரிடம் காணப்படுகின்ற
134 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

ஒருவகை மேலாதிக்க உணர்வின் வெளிபாடாக அமைகின்றன. முதற் பிரிவினரின் ஆட்சேபணைகள் குறித்து முதலில் பரிசீலிப்போம்.
மதத்தை உயர்த்திப் பிடிப்போர் பிற்போக்காளர் என்ற கருத்து நடைமுறையில் இப்போது தவறென நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு தேசிய இயக்கங்களில் மதமும், மதத்தை உயர்த்திப் பிடிப்ப வர்களும் வகிக்கின்ற பாத்திரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நூற்றாண்டுகளாக நீடித்து வருகின்ற அயர்லாந்து தேசிய விடுதலைப் போராட்டத்திலும், வியட்நாம், நிக்கரகுவா, ஈரான் போன்ற நாடு களின் புரட்சிகளிலும், அரபு நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டங்களிலும், பாலஸ்தீனம், காஷ்மீர், காலிஸ்தான், தீபெத், பொஸ்னியா போன்ற தேசிய விடுதலைப் போராட்டங்களிலும் மதங்களினதும் மத நம்பிக்கையாளர்களினதும் பாத்திரம் முக்கிய மானது. பல இடங்களில் ஏகாதிபத்தியத்தினதும், உள்ளூர் ஒடுக்கு முறையாளர்களினதும் பிடியிலிருந்தும் தமது மக்களை விடுவிப்பதில் இந்த மத நம்பிக்கையாளர்களே தீவிர பங்கு வகித்திருக்கின்றார்கள். எனவே மதம் மற்றும் மத நம்பிக்கையாளர்களின் பாத்திரத்தை புறநிலையாகவும், சார்பு ரீதியாகவுமே மதிப்பிட வேண்டும்.
இங்கு வட-கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், அவர்கள் தம்மை ஒரு தேசமாக அடையாளப்படுத்தவே மதத்தை முதன்மைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் கோரிக்கைகள் மதத்துடன் தொடர்புபடவில்லை. அவை 'மறுஉலகில்' எவ்வாறு மீட்சி பெறுவது என்பது தொடர்பான கோரிக்கைகள் அல்ல. மாறாக, நடப்பு சமூக முரண்பாடுகளில் அந்தச் சமூகம் தன்னை வழிநடாத்திச் செல்வதற் கான அரசியல் வழி முறைகளாகும். அவை அரசியல் ரீதியான வையும், வட-கிழக்கு முஸ்லிம்களின் பொருளாதார இருப்புடன் பிணைந்தவையுமாகும்.
இங்கு இன்னொரு விடயம் சுட்டிக் காட்டப்பட வேண்டும். வட-கிழக்கு முஸ்லிம்கள் மதத்தை முதன்மைப்படுத்துவதை பிற் போக்கு என அடையாளப்படுத்தும் தமிழ் முற்போக்கு, ஜனநாயகப் பிரிவினர் தமிழ் தேசிய இயக்கத்தின் இன்று வரையிலான எதார்த்த நிலைமைகள் குறித்து புரிதலைப் பெற வேண்டும். சைவ -வேளாள சித்தாந்த ஆதிக்கத்திற்குட்பட்டதாயும், கொடுமையான சாதிய வேறுபாடுகளைக் கொண்டதாயும் இருக்கின்ற தமிழ் தேசத்தையும்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 135

Page 74
அதன் தேசிய இயக்கத்தையும் நாம் எவ்வாறு மதிப்பிட போகின்றோம்? தனது சொந்த தேசத்தின் மீதும், வட-கிழக்கு முஸ்லிம் தேசத்தின் மீதும் அராஜகத்தையும் வன்முறைகளையும் மேற் கொண்டு வந்திருக்கின்ற விடுதலை அமைப்புக்களைக் காரணமாகக் காட்டி, தமிழ் தேசிய இயக்கம் பிற்போக்கானது என மதிப்பிட போகின்றோமா? தமிழ் தேசம் சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறை களுக்கு போராட்டத்தை அதன் குறிப்பிட்ட கட்டத்திலான தலைமை யைக் கொண்டு மதிப்பிடக் கூடாது என்ற இந்த அடிப்படையில் தானே நாம் தமிழ் தேசிய இயக்கம் குறித்து மதிப்பிடுகிறோம். மாறாக அது தனக்குள் கொள்டிருக்கின்ற சில பிற்போக்கு அம்சங்களை அளவு கோலாகக் கொண்டல்லவே! இந்த உண்மை வட-கிழக்கு முஸ்லிம் களின் தேசிய இயக்கம் குறித்தும் பொருந்தக் கூடியதே.
முஸ்லிம் காங்கிரஸின் ஊசலாட்டங்கள், மற்றும் ஜிஹாத், ஊர்காவற் படைகள், மத அடிப்படையிலான இனங்காணல் போன்ற அம்சங்கள் அனைத்தையுமே சேர்த்துப் பார்த்து முஸ்லிம் தேசிய இயக்கமே அடிப்படையில் பிற்போக்கானது என்பது இவர்களின் வாதம் , இதனால் அதனை அங்கீகரிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றனர். ஒரு தேசத்தின் அரசியல் முன்னெடுப்பை, சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு, ஆதரிப்பதற்கு நிபந்தனை போடும் உரிமை இன்னோர் தேசத்திற்கு கிடையாது. எல்லா தேசங்களையும் போலவே முஸ்லிம் தேசமும் தனக்குள், பிற்போக்கு சக்திகளுடன் கூடவே முற்போக்கு, ஜனநாயக கூறுகளையும் கொண்டுள்ளது. ஆனால் இன்றுள்ள குறிப்பான சூழலில் பிற்போக்கு சக்திகள் தலைமையில் இருந்தாலும், மாறிவிட்ட சூழ்நிலைமையில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் பலம் பெறும் வாய்ப்பும் உள்ளது. தமிழ் இனவாதம் முஸ்லிம்களை அழித்தொழிக்கும் அபாயம் தொடர்ந்து நீடிக்கும் வரையில் முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள பிற்போக்கு சக்திகளே ஊட்டம் பெற்று விளங்கும். முஸ்லிம் தேசம் தனது பாதுகாப்பிற்கு சிங்கள படையை நம்பியிருக்கும் வரையில் இந்த பிற்போக்காளர்களே முஸ்லிம்களின் அரசியலை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். தமிழ் இனவாதம் இவ்வாறு கோர வடிவத்தை எடுப்பதானது முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள் முற்போக்கு, ஜனநாயக சக்திகளுக்கு பலத்த தார்மீக, அரசியல் நெருக்கடிகளை உருவாக்குகின்றன.
136 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

முஸ்லிம் தேசம் தனது சுயமான அரசியலை முன்னெடுக்க வேண்டி யது அவசியமாகும். தமிழ் தேசத்துடன் சுமூகமான உறவுகளைப் பேண வேண்டியது அவசியமாகும். சிங்கள பேரினவாதத்தின் உண்மையான சொரூபத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற எந்தக் கருத்துக்களுமே, புலிகளால் முஸ்லிம்கள் எந்நேரமும் படுகொலை செய்யப்படலாம், ஊர்களை விட்டுத் துரத்தப்படலாம் என்ற புறநிலை யதார்த்தத்தின் முன்பு எடுபட மாட்டாது. மேலும் முஸ்லிம்கள் தமது பாதுகாப்பிற்காக சிங்கள படைகளை நம்பியிருக்க வேண்டிய நிலையில், இங்குள்ள கைக்கூலிகள் முஸ்லிம்கள் மத்தியிலுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளை வேட்டையாடியும் வருகின்றனர். எனவே முஸ்லிம்கள் மத்தியிலுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் பலம் பெறுவது என்பது முஸ்லிம் தேசம் இன்றைய நெருக்குதலில் இருந்து விடுபடுவதில் பெரிதும் தங்கியுள்ளது. இதனை நோக்கி தமிழ் முற்போக்கு, ஜனநாயக சக்திகள்.
(1) வட-கிழக்கு முஸ்லிம் தனியான தேசமாக உருப்பெற்று விட்ட யதார்த்த்தினை ஏற்றுக்கொண்டு அவர்களது சுயநிர்ணய உரிமைக்காக விரிவான பிரச்சாரத்தை தமிழ் தேசத்தினுள் மேற்கொள்ள வேண்டும்.
(2) தமிழ் தேசத்தினுள் மேலாண்மை செலுத்தும் சைவவேளாள சித்தாந்தத்தையும் அதன் நேரடி விளைவான முஸ்லிம்கள் பற்றிய தப்பெண்ணங்களையும் முறியடிக்க வேண்டும்.
(3) இவற்றினூடாக தமிழ் தேசத்தின் தலைமையை முற்போக்கு,
ஜனநாயக சக்திகள் கையேற்க வேண்டும்.
இதுவே முஸ்லிம் தேசத்திலுள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் பலம் பெற்று தலைமை சக்தியாக திகழவும், நீண்டகால நோக்கில் தமிழ் முஸ்லிம் உறவின் ஆரோக்கியமான முன்னெடுப்புகளுக்கும் வழி வகுக்கும்.
அவ்வாறில்லாமல், முஸ்லிம்களைத் தொடர்ந்தும் சமத்துவமாக நடாத்தத் தயங்குவது, அவர்களது தேசிய இயக்கத்தை அங்கீகரிக்க நிபந்தனை போடுவது போன்ற செயற்பாடுகள் ஒட்டு மொத்தத்தில் முஸ்லிம் பிற்போக்கு சக்திகளைப் பலப்படுத்தவும், தமிழ் -முஸ்லிம்
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 137

Page 75
உறவுகளை மேலும் சிதைக்கவுமே வழிவகுக்கும். இது இறுதியில் தமிழ் 'பாசிச' சக்திகளை பலப்படுத்துவதிலேயே போய் முடியும். உண்மையில், தமிழ் தேசிய இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் சைவ -வேளாள சித்தாந்தத்திற்கும், அராஜகத்திற்கும் எதிராக போராட முடியாதவர்கள் முஸ்லிம் தேசிய இயக்கத்தில் குறைகாண முற்படு வதன் மூலம் தம்மிடமுள்ள சைவ-வேளாள சித்தாந்தப் பீடிப்பையும் ஆதிக்க மனோபாவத்தையுமே வெளிப்படுத்துவதாகவே கொள்ள வேண்டும். மிதிப்பது என்றே அர்த்தப்படும். இதற்கு மாறாக, ஒரு சமூகத்தின் விழுமியங்களை இன்னொரு சமூகம் தனது சொந்த விழுமியங்களின் அடிப்படையில் மதிப்பிடுவதும், முற்போக்கு, பிற்போக்கு, என அவற்றை வகைப்படுத்தி குறை காண முற்படுவதும் சாராம்சத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் தனித்துவத்தை மறுப்பதாகவே ஆகின்றது. ஒவ்வொரு சமூகமும் வரலாற்றுரீதியாக தனக்குரிய சொந்த வழியில் தன்னை உருவாக்கி வந்திருக்கிறது. எனவே ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், பழக்கவழங்கங்கள், ஒழுக்க நெறிகள், கலாசாரம், மதிப்பீடுகள், செயற்பாடுகள், உணவு முறைகள் . என வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அச்சமூகத்தின் சொந்த முத்திரையும், பிற சமூகங்களில் இருந்து வேறுபட்ட தன்மைகளும் காணப்படுவது இயல்பானது. நிலைமை இவ்வாறு இருக்க, எந்த சமூகத்தின் விழுமியங்களை மாதிரியாகக் கொண்டு இன்னொன்றின் விழுமியங்களை தரப்படுத்தல் செய்யப் போகின்றோம்? ஒருவர் இவ்வாறு தரப்படுத்த முற்படுவதன் மூலம் அவரது ஆற்றலும் மேன்நிலையும் வெளிப்படுவதில்லை. மாறாக அவரிடமுள்ள ஆதிக்க மனோபாவமே இங்கு வெளிப்படுகிறது GT60TGorth.
'இன்னொரு தேசத்தை ஒடுக்கும் தேசமானது தனது அடிமைத் தளையை தானே போட்டுக் கொள்கிறது' என்ற மார்க்சின் புகழ்பெற்ற வாசகமானது சிங்கள தேசத்திற்கு மாத்திரமன்றி தமிழ் தேசத்திற்கும் பொருந்தி வரக்கூடியதே!
இனி, வட-கிழக்கு முஸ்லிம்களைப் பிற்போக்கின் பிடியிலிருந்து விடுவிப்பதற்கு தமிழ் முற்போக்கு, ஜனநாயகப் பிரிவினர் வழிகாட்ட வேண்டும் எனக் கூறப்படுவதை எடுத்துக் கொள்வோம். ஒரு சமூகத் தைத் தனித்துவமானதாக கருதுவது என்பது அதன் இருப்பை
138 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

அப்படியே ஏற்றுக்கொள்வது என்றே பொருள்படும். அச்சமூகம் கொண்டிருக்கின்ற பல்வேறு விழுமியங்களையும். ஒருவர், தன்னி லிருந்து வேறுபட்ட விழுமியங்கள் கொண்ட இன்னொரு நபர்/ சமூகத்தை தாழ்வாக மதிப்பிடும் போதே, கூடவே அவ்வாறு தாழ்வாக மதிப்பிட்ட நபர்/ சமூகத்தின் மீதுதான் அதிகாரம் செலுத்தக் கூடிய மனோபாவத்தையும் பெற்று விடுகின்றார். இதன் பின்னர், தாழ்வாக கருதப்பட்ட நபர்/ சமூகத்தின் மீது -தானோ, தனது சமூகமோ மேற் கொள்கின்ற பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் இயல்பானதா கவும் அவசியமானதாகவும் கூட அவர் ஏற்றுக் கொள்கின்றார். இதன் மூலமாக இறுதியில் சமூக ஒழுங்குகளின் முழுக்கட்டமைப்பிலும் ஏற்றத் தாழ்வுமிக்க அதிகாரத்தன்மை கொண்ட, ஒடுக்குமுறை சார்ந்த படிநிலை அமைப்புகள் ஏற்படவும், அவை இயல்பானவை என ஏற்றுக்கொள்ளப்படவும் கூடிய நிலை அவருக்குள் உருவாகின்றது.
இந்த வகையில், சமூகங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பொருளா தார, ஆன்மீக நலன்களின் அடிப்படையில் மட்டும் உருவாவதில்லை என்பதையும் பிறிதொரு சமூகத்தைச் சமத்துவமாக மதிக்கத் தவறு வதும் கூட, சமூக முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் முற்போக்கு ஜனநாயகப் பிரிவினர் தமது நல்லெண்ணத்தின் விளைவாகவே வட-கிழக்கு முஸ்லிம்களுக்கு 'வழிகாட்ட' விரும்பினாலும் கூட, உண்மையில் அது அவர்களிடம் உள்ளார்ந்து கிடக்கும் மேலாதிக்க உணர்வின் வெளிப்பாடாகவே அமைகின்றது. இப்போக்கு இறுதியில் தமிழ் தேசத்திற்கும் முஸ்லிம் தேசத்திற்கும் இடையே அதிகாரப்படி நிலை சார்ந்த உறவுகள் தோன்றுவதற்கு இட்டுச் செல்லக்கூடியது. தமிழ் முற்போக்கு, ஜனநாயக பிரிவினர் முஸ்லிம் தேசத்திற்கு உண்மையிலேயே நன்மை செய்ய விரும்புவார்களாயின் அவர்கள் முதலில், தமிழ் தேசத்தில் ஆழ வேரூன்றியுள்ள சைவ-வேளாள சித்தாந்தத்தையும், ஜனநாயக விரோதக் கூறுகளையும் களைவதற்கு நேர்மையாக முயற்சிக்க வேண்டும். அத்துடன் முஸ்லிம் தேசத்தின் தனித்துவத்தை மதித்து அதனுடன் சமத்துவமான உறவுகளைப் பேணும் வகையில் தமிழ் தேசத்தை மாற்றியமைக்க வேண்டும். அப்போது, முஸ்லிம் தேசம் தனது தலைவிதியை சொந்தக் கரங்களில் எடுத்துக் கொண்டு, தன்னிடமுள்ள பிற்போக்கு கூறுகள் என தான் கருதுபவற்றை களைந்து கொள்ளும் என்பதையும், இதற்கான தகுதி
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 139

Page 76
ஒவ்வொரு தேசத்திற்கும் உண்டு எனவும், ஏற்றுக்கொள்ளும் போது தான் சமத்துவம் என்பதே அர்த்த முள்ளதாகின்றது. வட-கிழக்கு முஸ்லிம்கள் உரிமைகள் கோருவது தொடர்பாக தமிழ் தரப்பிலிருந்து இவ்வாறு குற்றச்சாட்டு எழுப்பப்படுகின்றது. அதாவது வட-கிழக்கு முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பெற போராடாமல் இருக்கின்றார்கள் எனவும், தமிழ் மக்கள் நீண்ட காலம் போராடிக் கடுமையான இழப்புக்களின் பின் பெற விளையும் உரிமைகளை, முஸ்லிம்கள் மிக இலகுவான முறையில் பகிர்ந்து கொள்ள முயற்சிக் கின்றார்கள் என்றும் குற்றஞ் சாட்டப்படுகிறது. இக் குற்றச்சாட்டு போராட்டம் தொடர்பான புரிதலில் எம்மிடமுள்ள பற்றாக்குறையின் வெளிப்பாடாகும்.
போராடுவது என்று நாம் எதனைக் கருதுகின்றோம்? இன்றைய நிலையில் எமது போராட்டம் என்பதை ஒடுக்கு முறை அரசுக்கும் அதன் படைகளுக்கும் எதிரான யுத்தம் என்றே நாம் கருதுகின்றோம். தமிழ் தேசத்தைப் பொறுத்த வரையில் இது முற்றிலும் சரியானதே. சிங்கள அரசின் ஒடுக்குமுறைகளில் இருந்து விடுபட்டு தனக்கென சொந்த அரசை உருவாக்குவதிலேயே தனது இருப்பை உத்தரவாதப்படுத்த வேண்டியுள்ள தமிழ் தேசம் தனது எதிரிக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடாத்துவது ஒன்றே சரியான வழியாக இருக்கின்றது. ஆனால் இதே போராட்ட வடிவம் வட-கிழக்கு முஸ்லிம் தேசத்திற்கும் உடனடியாக அவசியப்படுக்கின்றதா என்பதை தமிழ் தேசத்தின் போராட்ட விதியை அப்படியே அளவுகோலாகக் கொண்டு மதிப்பிட முடியாது. வட-கிழக்கு முஸ்லிம்கள் தமக்குரிய போராட்ட வடிவத்தை தாமே தேர்ந்து கொள்வார்கள். இத்தகைய தேர்வு வேறு எவரினதும் விருப்பு, வெறுப்பின் பாற்பட்டதாக இல்லா மல், தாம் எதிர்கொள்கின்ற அக,புற நிலைமைகள் வெளிப்படுத்து கின்ற அவசியத்தின் விளைவாகவே இருக்கும்.
ஒரு தேசம் தனது உரிமைகளைப் பெற முன்னெடுக்கும் போராட் டங்கள் பல பரிமாணங்கள் கொண்டவை. தேர்தலில் வாக்களிப்பதிலிருந்து, போர்க்களத்தில் உயிர்களை இழப்பது வரை பல்வேறு வடிவங்களை ஒரு தேசியப் போராட்டம் கொண்டிருக்கும். இங்கு ஒவ்வொரு போராட்ட வடிவத்தையும் அதற்கேயுரிய முக்கியத்துவத்துடன் மதிப்பிட வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு
14O முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

போராட்ட வடிவமும் குறித்த கட்டத்தின் வெளிப்பாடாக இருப்பத னால், அது அக்கட்டத்திற்குரிய அவசியமானதும், பொருத்தமானது மான வடிவமாக இருக்கும். ஒருவர் தனது அகவிருப்பின் பேரில் ஒரு குறிப்பிட்ட போராட்ட வடிவத்தை மாற்றவோ, மற்றொரு வடிவத்தை பிரதியீடு செய்யவோ முடியாது. அதே போன்று குறித்த கட்டத்திற்குப் பொருத்தமில்லாத போராட்ட வடிவத்தை வைத்துக் கொண்டு, எந்தவொரு தலைமையும் தேசிய இயக்கத்தில் நீண்ட காலத்திற்குத் தனது அரசியலை கொண்டு நடாத்த முடியாது. வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய இயக்கம் முதலில் தன்மீதான விடுதலை அமைப்புகளின் வன்முறை அராஜகத்திற்கு எதிராக கிளர்ந் ததால், தொடக்கத்திலேயே அது வன்முறை போராட்ட வடிவத்தை எடுத்தது. எனினும், அப் போராட்ட வடிவத்தால் வட-கிழக்கு முஸ்லிம்களின் தேசிய உணர்வை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. எனவே அதன் இடத்தை வன்முறை சாராத போராட்ட வடிவம் எடுத்துக் கொண்டது. வெகுசன அரசியலை முன்னெடுத்த SLMC நிரப்பியது. தமது தேசிய உணர்வை பிரதிபலித்த SLMC ஐ சூழ்ந்து வட-கிழக்கு முஸ்லிம்கள் ஒன்றிணைந்தார்கள். அதனூடாக தமது தேசிய அபிலாஷைகளை வெளிப்படுத்தினார்கள். தமக்கென தனியான அரசியல் அதிகார அலகு வேண்டும் என்பதை தொடர்ச்சி யாக வலியுறுத்தி வருகின்றார்கள். இம் முஸ்லிம்கள் தமது போராட் டப் பாதையில் பலநூறு உயிர்களை இழந்துள்ளனர். கோடிக் கணக்கில் மதிப்புள்ள தமது உடமைகளை இழந்துள்ளனர். வடக்கிலிருந்து முற்றாகவே வெளியேற்றப்பட்டுள்ளனர்.
எனினும், வட-கிழக்கு முஸ்லிம் தேசத்தின் வெகுசனப் போராட்ட வடிவம், சந்தர்ப்பவாத, சுயநல. தலைமையின் தவறான வழிகாட் டலின் காரணமாக தேர்தல் கால இயக்கமாக மட்டும் தேக்கமடையச் செய்யப்பட்டுள்ளது. தமது தேசிய இயக்கம் தேக்கமடையச் செய்யப் பட்டுள்ளது என்பதையும், இதே வடிவில் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் அவர்கள் உணர ஆரம்பித்துள்ளனர். எனவே தமக்குப் பொருத்தமான அடுத்த போராட்ட வடிவத்தை அவர்களே’தேர்ந்து கொள்வார்கள். எனவே, முஸ்லிம்கள் போராடாமல் உரிமை பெறமுயல்கின்றார்கள் என்று குற்றம் சாட்டுவதில் அறியாமை மட்டுமல்ல, முஸ்லிம்களின்
(po dů š50ph ř50yh 141

Page 77
போராட்டத்தை நிபந்தனைக்குட்படுத்தி அவர்களின் உரிமைகளை மறுக்கின்ற ஆதிக்க மனோபாவமும் இங்கு வெளிப்படுகின்றது என்பதை நாம் அடையாளம் காணவேண்டும்.
வட-கிழக்கு முஸ்லிம்கள் மீது, தமிழ்த் தலைமைகள், குறிப்பாக விடுதலை அமைப்புக்களின் தலைமைகள், கொண்டுள்ள மேலாதிக்க உணர்வானது, முஸ்லிம் ஊர்காவல் அமைப்புக்கள் சம்பந்தமாகவும், முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் இவ்வமைப்புகள் வெளிப் படுத்துகின்ற கருத்துக்களின் மூலமாக துல்லியமாக வெளிப்படுகிறது.
முஸ்லிம் ஊர்காவற்படையினர் அப்பாவித் தமிழர் மீது வன்முறை களை மேற்கொள்வதால் முஸ்லிம் ஊர்காவல் அமைப்புக்களைக் கலைக்கும்படி தமிழ் தலைமைகள் இனவாத அரசிற்கு வேண்டுகோள் விடுகின்றனர். சில தமிழ் அமைப்புகள் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்கப் போவதாகவும் மிகவும் 'கரிசனையுடன்' கூறுகின்றனர். இங்கு இரண்டு விடயங் களைக் கவனிக்க வேண்டும். ஒன்று. (வட) கிழக்கு முஸ்லிம்கள் தம்மை தாமே பாதுகாப்பதற்கு கொண்டிருக்கின்ற உரிமை. இரண்டா வது, முஸ்லிம் ஊர்காவற்படைகளின் வன்முறைகளில் இருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பது.
ஒரு தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முழு உரிமையும் கொண்டிருக்கின்றது. வட-கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை, அவர்கள் விடுதலை அமைப்புகளின் வன்முறைத்தாக்குதல்களை இன்றுவரை எதிர் கொண்டு வருகின்றனர். வடக்கிலிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டுள்ளதோடு, கிழக்கிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய ஆபத்தையும் எதிர் கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தமது உயிர்களோடு தமது சமூக இருப்பையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றார்கள். இந்த வகையில் அவர்களுக்கு முன்னே இன்றுள்ள ஒரே ஒரு தெரிவு ஊர்காவற் அமைப்புகள் தான். இவ்வமைப்புகள் அரச படைகளின் பூரண கட்டுப்பாட்டில் இருப்பதோடு, மிக நவீனமானவை அல்லாத சாதாரண ஆயுதங்களே இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் கூட, இவற்றில் சேரவேண்டிய நிர்ப்பந்தத்தில் முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். நவீன ஆயுதம் தரித்த விடுதலைப் புலிகளுக்கு எதிரே தாம் ஈடு கொடுப்பது அசாத்தியம் என்பது தெரிந்தும் கூட, மாற்று வழியற்றவர்களாக
142 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

முஸ்லிம்கள் ஊர்காவல் படைகளில் இணைந்துள்ளனர். இந்நிலை யில், தமிழ் தலைமைகள் இவ் அமைப்புக்களை கலைக்கும்படியும், நிராயுதபாணியாக்கும்படி கோருவதும் உண்மையில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு முஸ்லிம்களைத் திறந்து விடும்படி கோருவதாகவே அர்த்தம் பெறுகின்றது. மறுபுறம், முஸ்லிம் ஊர்காவற் படையினர் தமிழ் மக்கள் மீது மேற்கொள்கின்ற வன்முறைகளுக்கு எதிராக செயற்படுவதற்குத் தமிழ் தேசத்திற்கு பூரண உரிமை உண்டு. இது விடயத்தில் தமிழ் தலைமை கள் பொருத்தமான மாற்றுவழிகளைக் காண வேண்டும். முஸ்லிம் ஊர் காவல் படையினர் தமது சமூகத்தை பாதுகாப்பதை தடுக்க முடியாது. அதே சமயம், அவர்களின் தாக்குதல்களில் இருந்து தமிழ் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். இது சிக்கலான விடயமாக இருந்த போதிலும், தனித்தனியான இரு தேசங்களின் பாதுகாப்பும் உரிமை களும் பேணப்பட வேண்டும் என்ற வகையில், இத்தகைய மாற்று வழியைக் காண்பது அவசியமாகிறது.
இங்கு இன்னுமொரு விடயமும் சுட்டிக் காட்டப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் ஊர்காவற் படையினரும், முஸ்லிம் சமூகமும் ஆயுதமயமாக்கப்படுவதாக கண்டனம் தெரிவிக்கின்ற இந்த 'முன்னாள்' விடுதலை அமைப்புகள் தாம் இப்போதும் ஆயுதபாணிகளாக இருப்பதை எவ்வாறு நியாயப்படுத்த போகின்றனர்? ஆயுதம் ஏந்துவதை தாம் மட்டுமே குத்தகையாக எடுத்துக் கொண்டார்களா? தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை துறந்தோடி அரச படைகளுடன் இணைந்து செயற்படுவதோடு அப்பாவி தமிழ் மக்கள் மீது வன்முறைகளை மேற்கொண்டும், வரி வசூல், போன்றவற்றை அறவிட்டும் வருகின்ற இவர்களுக்குச் சொந்த சமூகத்தை பாதுகாப்பதற்கு ஊர்காவற் படைகளில் செயற்படும் முஸ்லிம்களை கண்டிப்பதற்கு எந்தத் தார்மீக உரிமையும் கிடையாது. இந்த சாதாரண உண்மையை கூட புரிந்து கொள்ளாத இவர்கள், புலிகளின் தாக்குதல்களில் இருந்து (வட) கிழக்கு முஸ்லிம்களை தாம் பாதுகாப்பதாகக் கூறுவது வேடிக்கையானதே. இவ்வாறு கூறுவதில் நல்லெண்ணம் ஏதும் தொணிக்கவில்லை. மாறாக முஸ்லிம்கள் மீது தமக்குள்ள மேலாதிக்க உணர்வையே இவர்கள் மீண்டும் வெளிப்படுத்துகின்றனர்.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 143

Page 78
இவற்றுடன், முஸ்லிம் தேசத்தின் சுயநிர்ணய உரிமை தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகள் குறித்தும் பரிசீலிப்போம். தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒரே தாயகத்தில் ஒன்று கலந்து வாழ்கின்ற நிலையில் முஸ்லிம் மக்களைத் தனித் தேசமாக கருதும் போது, அவர்கள் தனியே பிரிந்து செல்வார்களாயின் அது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு குந்தகமாகாதா? அல்லது பிரிந்து செல்கின்ற முஸ்லிம் தேசம், சிங்கள அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் போராட்டத்திற்கு எதிராகச் செயற்பட்டால் அப்போது விடுதலைப் போராட்டம் நெருக்கடிக்குள்ளாகாதா?
முதலில் ஒரு தேசத்திற்குள்ள உரிமைகளைப் புரிந்து கொள்வோம். தேசம் என்பது ஓர் அரசியல் வகையினம். அது பிரிந்து செல்லும் உரிமை உட்பட, தனது அரசியல் வாழ்வை தானே தீர்மானிப்பதற்கான சுயநிர்ணய உரிமையைத் தனது பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது. இந்த வகையில் ஒரு தேசம் பிற தேசங்களுடன் தான் எத்தகைய உறவைப் பேண விரும்புகின்றது என்பதைத் தீர்மானிக்கும் பூரண உரிமையைக் கொண்டிருக்கின்றது. இவ்வுரிமையை எத்தகைய காரணங்களைக் காட்டியும் பிற தேசங்கள் மறுக்க முடியாது. ஒரு தேசம் தனது உரிமைகளை அனுபவிப்பதை புறநிலைமைகள் எதுவுமே தடுக்க முடியாது.
இவ்வகையில் முஸ்லிம் தேசமானது பிரிந்து செல்வதற்கும், தனக்கெனச் சொந்த அரசை அமைப்பதற்கும் அது பூரண உரிமையைக் கொண்டுள்ளது. தமிழ் தேசத்திடம் இருந்து பிரிந்து சென்று தனியாகத் தனது அரசியல் இருப்பை பேணுவது என முஸ்லிம் தேசம் முடிவு செய்தால், அம் முடிவை ஏற்றுக் கொள்வதும், ஜனநாயக வழியில் அத்தகைய பிரிவினையை சாத்தியமாக்குவதற்குமான சூழ்நிலையை உருவாக்குவதுமே தமிழ் தேசத்தின் கடமை. இதற்கு மாறாக, தாம் முஸ்லிம் தேசத்துடன் பிரதேச ரீதியில் கலந்து வாழ்வதையோ, அல்லது அவர்களின் பிரிவினை மூலம் தமது விடுதலைப் போராட்டத்திற்குப் பாதிப்பு ஏற்படலாம் என்பதையோ காரணமாகக் காட்டி முஸ்லிம் தேசம் பிரிந்து செல்வதை மறுப்பதற்கு தமிழ் தேசத்திற்கு உரிமை இல்லை. தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை அதன் தேசிய உரிமைகள் அதற்கு முக்கியத்துவமுடையவை தான். ஆயினும் தனது உரிமைகளை பேணுவதற்கு மற்றொரு தேசத்தின் உரிமைகளை
144 Gypskih gripih SASTRO(lih

மறுக்க முடியாது. முஸ்லிம் தேசம் பிரிந்து செல்வதையே தனது தேர்வாக முன்வைக்குமாயின், அந்நிலையில் தமிழ்தேசம் தனது தேச இருப்பும், உரிமைகளும் பாதிக்கப்படா வண்ணம் பரஸ்பர பரிமாற்றங் களுக் கூடாக இப்பிரிவினையை எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டுமே தவிர, பிரிவினையை மறுப்பதற்கான காரணங்களைத் தேடக் கூடாது.
முஸ்லிம் தேசம் சிலவேளை சிங்கள அரசின் கீழ், சிங்கள தேசத்துடன் வாழ முடிவு செய்யுமாயின் அந்நிலையிலும் கூட, இதே அடிப்படையிலேயே தமிழ் தேசம் நடந்து கொள்ள வேண்டும். இங்கும் இரண்டு தனித்தனி தேசங்களிற்கு இடையிலான சமத்துவ உறவு என்பதே அடிநாதமாக இருக்க வேண்டும். தனது எண்ணிக்கை பெரும்பான்மை, கூடியளவு வாழிடப் பரப்பு, நீண்ட வரலாறு. போன்ற எந்தக் காரணத்தைக் கொண்டும் வட-கிழக்கு பிரதேசத்தை ஏகபோக உரிமை கொண்டாடுவதற்கும், அங்குள்ள முஸ்லிம் தேசம் முனையக் கூடாது. ஏனெனில் இவை எல்லாவற்றிக்கும் அப்பால் இந்த இரு தேசங்களும் அரசியல் மொழியில் முற்றிலும் சமத்துவமானவை. எனவே எந்த நிலையிலாவது முஸ்லிம் தேசம் பிரிந்து செல்லும் முடிவை மேற்கொண்டால் அதனை முற்று முழுதாக நடைமுறைப்படுத்துவது தான் தமிழ் தேசத்திற்குள்ள ஜனநாயகப் பொறுப்பாகும். முஸ்லிம் தேசம் பிரிந்து செல்வதற்கும் தனியான அரசை அமைக்கவும் கொண்டுள்ள உரிமையையும், அது பிரிந்து சென்று சிங்களத் தேசத்துடன் இணைந்து தமிழ் தேசத்தின் உரிமைகளுக்காக எதிராக நிற்பதையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பக் கூடாது. முன்னைய சந்தர்ப்பத்தில் தமிழ் தேசம் முஸ்லிம் தேசத்தின் உரிமையை மதிக்க வேண்டும். பின்னைய சந்தர்ப்பத்தில் தமிழ் தேசம் தனது சொந்த தேசிய உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
தொகுத்துக் கூறினால், வட-கிழக்கில் தமிழ், முஸ்லிம் என இரண்டு தேசங்கள் நிலவுகின்றன என்பதையும், அவையிரண்டும் அரசியல் ரீதியில் சமத்துவமானவை என்பதையும் ஒரு தேசத்தின் உரிமைகளில் தலையிடுவதற்கு இன்னொரு தேசத்திற்கு எதுவித உரிமையும் கிடை யாது என்பதையும் தமிழ் முற்போக்கு ஜனநாயகப் பிரிவினர் உணர்ந்து கொள்ள வேண்டும். இங்கு ஒரே தாயகத்தினுள் வாழ்கின்ற வெவ்வேறு தேசங்களுக்கிடையே ஏற்படக்கூடிய உறவுகள் குறித்து
gyblidh sisih asogih 145

Page 79
சில விடயங்களைப் பரிசீலிப்பது அவசியமாகும். ஒவ்வொரு தேசமும் இன்னொன்றிற்கு சமத்துவமானதாகவும், பிரிந்து செல்வதுடன் கூடிய அனைத்து உரிமைகளை கொண்டதாகவும் இருந்து போதிலும், அது எல்லா சந்தர்ப்பத்திலும் பிரிந்து செல்ல விரும்புவதில்லை. உண்மையில், பிரிவினைக்கான எண்ணப் போக்கு பெரிதும் அக விருப்பமாக இல்லாமற் புறநிலை சார்ந்த அவசியமாகவே இருக்கின்றது. பொதுவாக, ஒரு ஜனநாயக சூழலில் அதிகாரங்கள் சமத்துவமாகப் பகிரப்படுகின்ற நிலைமையில், தொடர்ச்சியான பெரிய பிரதேசம் என்பது விரிந்த சந்தை வாய்ப்பைக் கொடுப்பதாலும், வளங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்புக்களை அளிப்பதாலும், கலாசார பரிமாற்றத்திற்கும், கலாசார வளர்ச்சிக்கும் வாய்ப்பாக அமைவதாலும் ஒன்றாக வாழ்வது சாதகமானது என்பதை ஒவ்வொரு தேசமும் தனது சொந்த அனுபவத்தின் மூலம் புரிந்து கொள்கிறது. இவ்வகையில், ஒரு ஜனநாயக சூழலில் பிரிந்து போவது பற்றி ஒரு தேசம் மிக அரிதாவே சிந்திக்கிறது. சேர்ந்து வாழ்வது என்பது எப்போது இனிமேலும் சகிக்க முடியாது என்ற அளவிற்கு ஒரு தேசத்தின் மீது ஒடுக்கு முறைகள் தீவிரப்படுகின்றதோ அப்போதுதான் அது பிரிந்து செல்வது பற்றிச் சிந்திக்க ஆரம்பிக்கின்றது. இந்த வகையில், வட-கிழக்கு முஸ்லிம்களைத் தனியான தேசமாகத் தமிழ் தேசம் மதிக்குமானால், வடகிழக்கு பிரதேசம் கூறுண்டு போகக் கூடிய நிலைமை தோன்றிவிடாது. மாறாக அங்குள்ள முஸ்லிம்களின் தேசிய உரிமைகளை மறுப்பதன் காரணமாகவே இத்தகைய பிரிவினை தோன்றும். ஒரு பொதுவான தாயகத்தில், தன்னுடன் வாழ்கின்ற இன்னொரு தேசத்துடன் சமத்துவமான உறவுகளை பேண முடியாத ஒரு தேசம் அந்த பொதுத் தாயகத்தை தொடர்ந்தும் முழுமையாக பேணக் கூடிய தகுதியை இழந்து விடுகின்றது. அத் தாயகத்தை கூறு போடுகின்ற வேலையை அத்தேசம் தானே தொடக்கி வைக்கின்றது என்ற உண்மையைத் தமிழ் முற்போக்கு, ஜனநாயக பிரிவினர் மனதில் கொள்ள வேண்டும்.
ஒரே தாயகத்தினுள் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் தேசங்கள் இணைந்து வாழவேண்டும் என தமிழ் தேசம் விரும்பினால், (இங்கு தமிழ் தேசம் குறித்தே நாம் பேசுகின்றோம்) அவ்வாறு வாழ்வது தனது நலன்களுக்கும் உகந்தது எனக் கருதினால், அதற்காகத் தமிழ் தேசம்
146 (pih dasarapih diarnapih

தன்னுடைய ஜனநாயக தன்மையையும், முஸ்லிம் தேசத்தை தான் சமத்துவமாக கருதுவதையும் அரசியல் ரீதியில் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். முஸ்லிம் தேசம் வட-கிழக்கில் தனக்குரிய அரசியல் வாழ்வைத் தீர்மானிப்பதற்கான உரிமையைக் கொண்டிருப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கடுமையாக பகையுற்றிருக்கும் தமிழ்-முஸ்லிம் உறவில் நம்பிக்கை பிணைப்பு ஏற்படுத்துவதற்கு தமிழ் தேசம் தனது பங்கை நேர்மையாக ஆற்ற வேண்டும். விடுதலை அமைப்புகளினால் முஸ்லிம் தேசத்திற்கு ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற சேதத்திற்கும், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை க்கும் பகிரங்க மன்னிப்பு கோருவதும், உரிய நஷ்ட ஈடுகளை வழங்கி அவர்கள் மீளக் குடியேறுவதற்கான நிலைமைகளைத் தோற்றுவிப்ப தும் தமிழ் தேசம் வெளிப்படுத்தக் கூடிய ஆரம்ப நல்லெண்ண சமிக்ஞைகளாக இருக்க முடியும்.
இவ்வுண்மைகள் அனைத்தும் தமிழ் தேசத்தின் முன்பாக ஓர் அவசரப் பிரச்சினையை முன்வைக்கின்றன. தன்னுடன் ஒரே தாயகத்தில் வாழ்கின்ற முஸ்லிம் தேசத்துடன் சமத்துவமான, ஜனநாயக பூர்வமான உறவுகளை ஏற்படுத்த வேண்டுமாயின், முதலில் தமிழ் தேசம் தன்னுள் மேலாண்மை செலுத்தும் சைவ-வேளளா சித்தாந் தத்தை எதிர்த்து முறியடிப்பதும், ஜனநாயக பூர்வமான, சமத்துவமான உறவுகளைத் தமக்குள் தோற்றுவிப்பதும் அவசிய நிபந்தனையாகின் றன. இன்றுவரை தமிழ் தேசமானது தனது சமூக அக உறவுகளில் குறிப்பிடக் கூடிய தகர்வுகள் எதனையும் ஏற்படுத்தவில்லை என்பதையும், தொடர்ச்சியாக நிலவி வருகின்ற அதிகார படிநிலை வகைப்பட்ட சமூக உறவுகள், தனது விடுதலைப் போராட்டத்தில் பாசிச சக்திகள் தலைமையை கையகப்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்ற என்பதையும், தமிழ் தேசமும் அதன் முற்போக்கு ஜனநாயகப் பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் நிலவுகின்ற சமூக உறவுகளை விமர்சனத்திற்குட்படுத்துவதும், மாற்றி யமைப்பதும், அதனூடாக முஸ்லிம் தேசத்துடன் சமத்துவமான உறவை ஏற்படுத்துவதை நோக்கி முன்னேறிச் செல்வதும் தமிழ் தேசத் தின் அவசரக் கடமையாகின்றது. இவ்வாறு உள்ளும் புறமும் ஏற்படக் கூடிய உறவு மாற்றங்கள், தமிழ் தேசத்தின் விடுதலையை சரியான இல க்கிலும், விரைவிலும் சாத்தியமாக்குகின்ற ஊக்கிகளாக தொழிற்படும்.
முஸ்லிம் தேசமும் எதிர்காலமும் 147

Page 80
இறுதியாக, ஒரே தாயகத்தில் இரு தேசங்களாக நிலவுகின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் தேசிய இயக்கங்கள் தனித்தனியாக மட்டுமல்லாமல், துரதிஸ்டவசமாக, முரண்பட்டு நிற்பவையாகவும், பகைமை நிறைந்தவையாயும் அமைந்திருக்கின்றன. எனினும் இவ்விரு தேசங்களும் பொதுத்தாயகம், பொதுமொழி, நெருக்கமான பொருளாதார பிணைப்புகள். போன்ற பல பொதுவான அம்சங் களோடு, பெளத்த - சிங்கள இனவாதத்தினால் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்டு வருபவையாகவும் இருக்கின்றன. இந்த வகையில் இவ்விரு தேசங்களின் அரசியல் இயக்கங்களும் பல சந்திப்புப் புள்ளிகளைத் தம்மிடையே கொண்டுள்ளன. இவை வருங்காலத்தில் எவ்வாறு ஒன்றையொன்று பலப்படுத்தும் அல்லது பலவீனப்படுத்தும் என்பது தமிழ் தேசத்திலுள்ள முற்போக்கு பிரிவினர் தமது வரலாற்றுப் பாத்திரத்தை எவ்வாறு ஆற்றுகின்றார்கள் என்பதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
148 முஸ்லிம் தேசமும் எதிர்காலமும்

O.
11.
உசாத்துணை நூல்களும் கட்டுரைகளும்
ldentity Crisis of Sri Lankan Muslims
- R. Vasundhara Mohan
Sri Lankan Ethnic Crisis and Muslim - Tamil Relationship - A Sociopolitical Review
- K. Sivathamby
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறும் பண்பாடும்
- எம். எஸ். றஹீம்
தேசிய இனப் பிரச்சினையும் இலங்கை முஸ்லீம்களும்
- வ. ஐ. ச. ஜெயபாலன்
தினகரனில் வெளிவந்த முகம்மது சமீம் இன் தொடர் கட்டுரை
சரிநிகரில் வெளிவந்த முஸ்லீம்கள் தொடர்பான பல்வேறு கட்டுரைகள் மற்றும் விவாதங்கள்.
The Social Foundation of Education and Economic Activity in Jafna
- R.S. Perinpanayagam
Political Nationalism - The Evolution of the idea
- Eugene Kamenka
Marxists and The National Question
- Michel Lowy
Great Historical Failure - Marxist Theories of Nationalism
- Ephraim Nimni
The lceology of Siva - Tamil integrity, its Social and Historical Significance in the study of YalppanamTamil Society.
- K. Sivathamby

Page 81
THANKS
Mr. M. R. A. Zakeer
Mr. A.L. Ali-ahamed
Mr. M.T.M. Ibralebbe
Mr. M.H. Segu Issudeen
Mr. M.M.M. Tahiyar
Mr. R. Ramamoorty
Mr. H. Talib


Page 82


Page 83
திறந்திருக்கும் ஜன்னல்வழியா எனது கனவுகளின் உலகத் யாருமே நுழையமுடியாத என்சரை
உன்னால் படையெடுக்க
திடீரென எனதுடைப்புகளை அவற்றை இரவில் சிதறடித்து பயமு
என்மீது திணிக்கே என்னை வழிநடத்தவோ உன்
@ கொள்ளைக்காரை என்ஆன்மாவைத் திருடிச்
உன்னால் முடியாது
நான் எதிர்ப்பேன்
ரீட்டா-பெளமி-பப்
 
 
 
 
 
 

5.GJIT TÉIGLIATG)
6.
涧