கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நற்சிந்தனைகள் நாற்பது

Page 1


Page 2


Page 3

நற்சிந்தனைகள் நாற்பது
பண்டிதர் சி. அப்புத்துரை
தெல்லிப்பளைக் கலை இலக்கியக்கள வெளியீடு 2OOO. 11. O2

Page 4
ANATA) മി - தற்கிந்தனைகள் நாற்பது
-gλήόλήμή - பண்டிதர் சி அப்புத்துரை
9 Мйтуу) ~ ஆசிரியருக்கு
முதற்பதிப்பு -2.
கணனி வடிவமைப்பு ~ கீதா பப்ளிகேஷண்ம்
அட்டைப்படம் - திரு. குணபாலசிங்கப்
பதிப்பகம் - நிஷானி பிரிண்டேர்னர்
வெளியீடு - தெவிப்பளைக்
கலை இலக்கியக் களம்
விங்வை - Ισο ν=
፲፲፫ሃe - Natsinthanaikal Natpathu
Author - Pandit S. Apputhurai
CopyRight - Author
First Edition - 2000. II.()2
Tjpe Setting &
Designing - Keethαα Ριμβιτσατιονη
Cover Design - Mr. Καινιαpαίαςiηgαιη
Printers - Nisarı Printers,
PublicaІion - Lусеит of Literary ć
Aesthetic Studies, Tellippalai.
Price - IOO/=
- தி நத்திந்தனைகளிர்நாற்பது

F.
கய்பையாகணேசலிங்கம்
செய்யவுச் சுப்பைW செந்திரு திப்ைைழத்து கைமுகத்திறை வணங்கிக் கருவுயிர்த்த கணேசலிங்கம் மெய்யான தம்பி ந்ெதன் மேன்மை துெமனைக்கு ஐண் நினைவாகச் சொக்க வனவிலுறை கமுகன் தாள்களிலே உய்திரே இம்மலரை உவப்போடு சூட்டுகின்றோர்.
- ஆசிரியர் -
ந்ேதனைகர்நாற்பது

Page 5

OI,
O2,
O3,
O4.
OS,
O6.
Ο 7.
O8,
O9.
IO,
II.
12.
13,
14.
19.
I6.
-Z
18.
29,
2O.
2I.
2
சிவமயம்
பொருளடக்கம்
நல்லை ஆதீனம் நீலநீ சுவாமிகள் ஆசிச்செய்தி சிவநீ பா. சண்முகேஸ்வரக் குருக்கள் ஆசிக்செய்தி பதிப்புரை
அணிந்தரை
முகவுரை
விநாயகர் வணக்கம் வித்தக விநாயகர் விரைகழல் சரணி கற்பக விநாயக் கடவுளே போற்றி வந்தே அருள்புரிதவாம். குறைவிலா நிறைவு தாயிற் சிறந்த தயாவான தத்துவன் பாவியேனர் உணர் அடைக்கலம் நின்னை வந்திப்பதோர் நெறியறியேன் நின் திருவடிக்காம் பவமே அருளுகண்டாய் ஆசை அறுமின்
ஈர அண்பினர் மாலறியா நாண்முகத்ணுங் காணா மலை சங்கரா ஆர்கொலோ சதரர் திருவெம்பாவை
திருவெம்பாவை - 1
திருவெம்பாவை - 2
நற்கிந்தனைகள் நாற்பது
Of
Ո4
06
11
f3
15
17
19
21
23
25
27
29
31
34
36
38
40
42
44

Page 6
22 திருவெம்பாவை - 3 46
23. திருவெம்பாவை - 4 48 24. திருவெம்பாவை - 5 50 25. திருவெம்பாவை - 6 52 26. திருவெம்பாவை - 7 54 27. திருவெம்பாவை - 8 28 திருவெம்பாவை - 9 58 29. திருவெம்பாவை ~ 10 60 30 நவராத்திரி 62 31. நவராத்திரி - வீரர் 64 32, நவராத்திரி - செல்வம் 66 33, நவராத்திரி - கல்வி 68 34. தருமம் எண்றொரு பொருள் 70 35. நாமார்க்குங் குடியலிலேம் 72 36. மூர்த்தி தலம் தீர்த்தம் 74 37. குரு வழிபாடு 76 38. சர்த்தின் பயனர் 78 39 உணர்வொன்றிய வழிபாடு 40. மனிதப் பிறவி B2 41. மனித்தப் பிறவியும் வேண்டுவதே 84 42. பிறவிப்பயனர் 43. சிவகதி பெறுவோம். 44. பாதி மாதொடுங் கூடிய பரணி 90 45. குட முழக்கு என்னுங் கும்பாபிஷேகம் 92
VI நற்சிந்தனைகள் நாற்பது

罗_ &՞a/Louth
குருபாதம். நல்லை திருஞானசம்பந்தர் ஆதனம் நறிலறிசேIDகந்தர ஞானசம்பந்த LரIDாசார்ய சுவாமிகள் இரண்டாவது குருமகாசந்நிதானம் agpirasir அருளாசிச் செய்தி இலங்கை வானொலியினர் சைவ நற்சிந்தனை என்னுந் தலைப்பிலமைந்ததொரு நிகழ்ச்சியினை நாளாந்தம் அதிகாலை வேளையிற் பல்லாண்டு காலமாக ஒலிபரப்பி வருகின்றனர். ஐந்து நிமிடங்கள் மட்டும் நடைபெறும் அந்த நிகழ்வு, அனைவரையும் குறிப்பிட்ட நாளின் தொடர்ந்த முயற்சிகளுக்கு இட்டுச் செல்வதாக உற்சாகமூட்டுவதாக அமைந்துள்ளமையை நாம் பார்க்கிண்றோம்.
இந்தத் தொடர் நிகழ்விற் கலந்து கொண்டவர்களுள் ஒருவராய பண்டிதர் சி அப்புத்தரை அவர்கள் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன நிகழ்வுகளுடனும் நெருங்கியதொடர்புடையவர். கல்வி பயிற்றும் போதனாசிரியராகிய அவர் மாணவருடனர் பெற்ற அனுபவங்கள், நல்லை ஆதீனச் சமய நிகழ்வுகளுடனாகிப் பெற்ற விளக்கங்கள் எண்பவற்றினர் வெளிப்பாடே அவர் நற்சிந்தனைப் பேச்சுக்களாயின. அவற்றுள் நாற்பதைத் தொகுத்து 'நற்கிந்தனைகள் நாற்பது” எனினும் பெயருடையதான நாலாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. வானொலியில் கேட்டவர்களும் இவற்றை வாசித்துப் பயனர்பெற முடியும். எதிர்காலத்திய உறுப்பினர்களும் பயனர்கோட வாயர்ப்பாகும். ஆகவே நாலாக்க முயற்சி பாராட்டிற்குரியது. இதே போன்று தொடர்ந்தும் நூல்கள் வெளிவரப் பண்டிதரினர் முயற்சி உதவுவதாக எண்று திருவருளைச் சிந்தித்து எமது நல்லாசிகளை வழங்குகின்றோம்.
* எண்றும் வேண்டும் இனிய அண்பு " பூரிலழரசுவாமிகள் み○○○. ○ス. ○5
நற்சிந்தனைகள் நாற்பது 1

Page 7
罗_ Ժa/Louth கொழும்பு கொட்டாஞ்சேனை
நறிமுத்துDTரியம்பாள் தேவஸ்தான ஆலோசகரும் விசேஷ குருவுமான பிரம்மறிLா. சண்முகேஸ்வரக் குருக்கள் வழங்கிய
ஆசிச் செய்தி
சிவ நெறிச் செம்மல், பண்டிதர் சி அப்புத்துரை அவர்கள் அவ்வப்போது இலங்கை வானொலியில் ஆற்றிய சைவ நீதிச் சிந்தனைகள் நாற்பதைத் தொகுத்து வெளியிடும் "நற்சிந்தனைகள் நாற்பது” எனினும் நாலுக்கு ஆசி வழங்குவதில் யானிர் பெருமையடைகின்றேனர்.
கசடறக் கற்று அதற்குத் தக நிற்கும் கொள்கை மயினைக் கடைப்பிடித்து வாழ்வாங்கு வாழும் பெருந்தகை யாம் பண்டிதர் அவர்கள் நற்கிந்தனைகளை வழங்குவதற்கு மிக மிகப் பொருத்தமுடையவரே! இவர் வழங்கிய சைவ நற்சிந்தனைகள் ஓரளவாவது நல்ல வழி காட்டக் கடடியனவாக அமைந்தவை எனபது திணர்ணம். பாடசாலைகளிற் கல்விபயிலும் மாணவர்களுக்குச் சிறப்பாக வேண்டப்படுவன இவை. மாணவர் எண்ணங்களைத் தாய்மைப்படுத்த வல்லன இவை என்று தணிந்து கூறலாம்
இவ்வாறு உணர்ந்து வாழும் உத்தமர், தாம் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறவேண்டுமென்ற அவர வுடனாகிச், சந்தர்பங்கிடைக்கும் போதெல்லாம் சைவ நற்கிந்தனைகளை வானொலி மூலம் வழங்கி வந்தார்கள். அப்போதம் அவர் மனம் திருப்தியடையவில்லை. காரணம்
நற்சிந்தனைகள் நாற்பது

இலங்கை வானொலியில் அந்த அதிகாலை வேளை நடைபெறும் நற்சிந்தனை நிகழ்வை எல்லோரும் கேட்க வாய்ப்பிருப்பதில்லை என்பது ஒன்று. மற்றறொன்று எதிர்காலத்தினருக்குத் தெரியாத போய்விடுமே என்பது. இந்தக் காரணங்களால் தாம் வானொலி மூலம் வழங்கிய நற்கிந்தனைகளுள் நற்பதைத் தொகுத்த நற்கிந்தனைகள் நாற்பத' எனினும் பெயருடன நாலாக வெளியிடுகின்றார்கள். இ.தொரு காலத்தின் தேவை எண்று தணிந்த கூறலாம்.
இச் சிந்தனைகள் சைவ உலகத்திற்குப் பெரும் பெருஞ் வேவையாக அமைவது மாத்திரமன்றி ஒரு முன்னுதாரணமாகவும் அமையும் இந்த ஆசிரியரது சேவை தொடர வேண்டும். இறைவன் இவருக்கு நல்ல உடலி நலத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தித்து ஆசி கூறுகின்றேன்.
சுபம்!
T. 6Op67j67eš z5é67.
2OOO . IO . O5
நற்சிந்தனைகள் நாற்பது
3

Page 8
பதிப்புரை
கலை இலக்கியக் களத்தினர் முக்கிய உறுப்பினரும் ஆத்மீகவாதியும் ஆகிய பண்டிதர் அவர்கள் இலங்கை வானொலியிற் பேசிய சைவரீதிச் சிந்தனைகள் நாற்பதை உள்ளடக்கிய இந்நூலை வெளியிடுவதிற் பேருவகை கொள்கிறோம் ஆழமான சமயக் கருத்தக்கள் குன்றிவரும் இக்காலத்தில் மரணவ மலர்களும் இளம் சிறார்களும் இலகுவாக அறியும் வகையில் மேற்படி கட்டுரைகளை ஆசிரியர் அவர்கள் வரைந்துள்ளார்.
சிறிய சிறிய, கனதியான வசனங்களிற் கவர்ச்சியான முறையில் கட்டுரைகள் அமைந்துள்ளன. கந்தவொரு விடயத் தையும் எவரும் பேசிவிடலாம், எழுதிவிடலாம். ஆனாலி சமயம் சம்பந்தமான உண்மைகளை , வழிபாட்டு முறைகளை, விரத விளக்கங்களை , அநட்டான முறைகளைத் தக்க மேற்கோள்கள் காட்டி முறைப்படி ஆக்குவது இலகுவான விடயமன்று. பண்டிதர் அவர்கள் கீரிமலைச் சிவன் ஆலயச் சூழலில், மயிலங்கடடலி எனும் இரரில் சைவ மக்கள் வதியும் பிண்ணணியிற் பிறந்த சிறந்த அறிஞர்களிடத்துச் சைவசித்தாந்தம் கற்று உணர்ந்து சைவத்தமிழன் என உணரும் வகை உதாரண புருஷனாக வாழ்பவர். கோவிற் றொண்டு, விரத அநட்டானம் இவரது நாளாந்த வாழ்வில் மேலெழந்து நிற்பவை.
இவரது ஆக்கங்களை ஆர்வத்துடன் படித்தபோது, இவர் போன்ற சான்றோர் சமயவிடயங்களைக் கையாண்டு எழுதும்போததான் உண்மைத்துவம் பிறக்கிறது என உணர்ந்தேனர். சும்மா பேச்சுக்காக ஆக்கம் செய்யப்படுவதைவிட, ஒரு அநுபூதிமான், சதா தெய்வ சிந்தனையும் வாழ்வும் உள்ளவர், இப்படியான கட்டுரைகளைத் தீட்டும்போது நூல் மந்திர சக்தி பெற்று மனிதன் மனிதனாம் வாழத் தணைபுரிகிறது எனலாம். இன்று சமயத்தறையிற் கூடப் போலிகள்தான் அதிகம். அநாட்டாணம் இல்லை. ஆனால் பிரசங்கத்தக்குப் பெருவிருப்பு. இந்நூலாசிரியர் கருத்துக்கள் கடவுள் வழிநடந்த நண்மணத்தில் ஜழகிய திவ்ய சிந்தனைகளாய்த் தெரிகின்றன. விநாயக வணக்கம், வித்தக விநாயகர் விரைகுழல்கள், நவராத்திரி-வீரம், நவராத்திரி-செல்வம், நவராத்திரி ~ கல்வி மூர்த்தி தலம் தீர்த்தம், குரு வழிபாடு, தருமம் எண்றொரு பொருள், ஆசை அறயின், சர்த்தின் பயனர்,"உணர்வொன்றிய
4 நற்கிந்தனைகள் நாற்பது

வழிபாடு, மனித்தப்பிறவி மனித்தப்பிறவியும் வேண்டுவதே குறைவிலா நிறைவு, பாவியேன். உன் அடைக்கலம், நாமார்க்கும் குடியலிலேம், நிண்னை வந்திப்பதோர் நெறியறியேன், நின்திருவடிக்காம் பவமே அருளு கண்டாம் எண்னுந் தலைப்பில் அமைந்த கட்டுரைகள் முதலாக திருவெம்பாவைத் தொடர் கட்டுரைகள், வந்தே அருள் புரிவாய் ஈறாக அத்தனையும் வாசகருக்கு ஆத்மீகத்தறையின் அவசியத்தை உணர வைப்பனவாம், மாணவர்க்குப் போதனையாயும் சாதனையாயும் அமைவதை உணர முடிகின்றது.
மனிதனை மனிதானாக வாழவைக்க - உருவாக்க இசை நடனம்நாடகம் போன்ற கலையாக்கங்கள் உதவவேண்டும் இயற்றமிழ் ஆக்கங்களும் இரசனையுடன் மட்டும் நின்றுவிடாது வாழ்வியலில் வளமார்ந்து திகழ உதவ வேண்டும் எண்பதில் அதீத அக்கறையுடைய தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம் பண்டிதர் சி அப்புத்துரையினி நற்சிந்தனைகள் நாற்பது எண்னும் நரவினை அச்சுவாகணறுேற்றி அரிய நற்பணிபுரிந்த திருப்தியுடனர், தொடர்ந்தம் பணிபுரிய விழைகிறது.
கலாபூஷணம் கலைப் பேரரசு ஏரி பொன்னுத்தரை இணைச்செயலர், கலை இலக்கியக்களம், தெல்லிப்பழை,
2OOO.o.25
நற்சிந்தனைகள் நாற்பது 5

Page 9
அணிந்துரை
சிந்தனைகள் எனப்படுபவை சித்தத்தைக் குறித்த நெறியிற் செயற்படுத்தி நிற்கும் முயற்சிகள். இவ்வாறு நெறிப்படுத்தும் முயற்சிகளில் சமயம் அல்லது ஒழக்கம், அறம் எண்பனசார் எண்ணக் கருக்கள் தொழிற்படும் நிலையில் அவை "நற்சிந்தனைகள் ஆகிண்றன. ’ நாள் தொறும் உதயகாலத்தில் இத்தகைய நற்சிந்தனைகளை வழங்கும் முறைமையைப் பல்லாண்டுகளாக இலங்கை வானொலியரினர் பேணிவந்தாளர்ளனர். இவர்வாறு வழங்கப்பட்ட நற்சிந்தனை களில் ஒருபகுதி இங்கு நூலுருவிற் பதிவு பெறுகின்றது.
சிந்தனைகளின் ஆசிரியர் தமிழறிஞர் பண்டிதர் சி அப்புத்துரை அவர்கள். ஆசிரியர், அதிபர் ஆகிய பதவி நிலைகளில் கல்விப் பணி ஆற்றி ஓய்வு பெற்றுள்ள பண்டிதர் சி அ. அவர்கள், தரண் சார்ந்துள்ள சமூகத்தின் "கலை -பண்பாடு” சார்ந்த செயற்பாடுகளில் தண்னை நெருக்கமாகப் பிணைத்துக் கொண்டவர். தெல்லிப்பழையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் "கலை இலக்கியக் களம்' எனிற அமைப்பின் மூலத்தாணிகளில் ஒருவர். நீலநீ ஆறுமுக நாவலரைத் தலைமைக் குரவராகக் கொண்டு தழைத்து வந்துள்ள ஈழத்தச் சைவ பாரம்பரியத்தில் இன்றும் நம்மத்தியில் வாழும் பண்பாட்டுச் சிந்தனையாளர்களுள் ஒருவராகவும் அவர் திகழ்கிறார். அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய சிந்தனைத் தேறலிகள் இந்நூலாகத் தொகுநிலை எயிதியுள்ளன.
நற்சிந்தனைகள் நாற்பது

இத்தொகுப்பிலுள்ள நற்கிந்தனைகள் பொதுவாக இருவகை எண்ணக்கருக்களினடியாக உருவானவை. சைவம் சார்ந்த விழமியங்கள் ஆகியவற்றினடியாக உருவான சிந்தனைத் தெறிப்புக்களாக உருவானவை ஒருவகை, சைவ வாழ்வியலோடு தொடர்புடைய சிறப்புத்தினங்கள் -விர்தநாள்கள்-சார்ந்த நம்பிக்கைகளையும் கதைகளையும் மையப்படுத்தியவை இண்னொரு வகை. முதல் வகையைப் பொதநிலை எனவும் பிண்ணையதைச் சிறப்பு நிலை எனவும் கொள்ள்லாம்.
விநாயகர் வணக்கம், வித்தக விநாகன் விரைகழல் சரணர், முதலியனவாக அமைவன முதல் வகையான, பொது நிலையின. நவராத்திரி திருவெம்பாவை முதலியனவாக அமைந்தவை இரண்டாவதான சிறப்பு நிலையின. இவ்விருநிலை சார்பான விடயங்களையும் அவற்றுக்குரிய தொல்லிலக்கியச் சான்றுகளை மையப்படுத்தி, பொருத்தமான மேற்கோள்களையும் இணைத்து நம் கவனத்தை ஈர்க்கிறார் ஆசிரியர். சராசரி வாசகர்களினி மனதில் இலகுவாகப் படியத்தக்க வகையில் நேர் நின்று உரைப்பவர் போன்ற உத்தியில் இச்சிந்தனைகள் அமைகின்றன.
இந் நற்கிந்தனைகளினி தலைப்புக்கள் சைவமரபு சார்ந்தவர்களுக்குப் புதியனவல்ல. பலராலும் பலமுறை பேசப்பட்டவை, எழுதப்பட்டவையுங்கூட. எனவே இவற்றின் சிறப்பு என நாம் கவனிக்கவேண்டியவை இவற்றை எடுத்துரைக்கும் முறையில் உள்ள சிறப்பேயாம். குறிப்பாக வாழ்வியலோடு இணைத்துக் காட்ட முயலும் பாங்கும் ஒவ்வொரு நற்கிந்தனையிலும் குறித்த ஒரு எண்ணக் கருவுக்கு
நற்கிந்தனைகள் நாற்பது

Page 10
அல்லது சொற்றொடருக்கு அழத்தம் கொடுத்து மனதிற் பதியவைக்கும் முறைமையை இத்தொகுப்பில் அவதானிக்க முடிகிறது.
விநாயகர் வணக்கம் எண்ற தலைப்பில் அமைந்த முதலாவது சிந்தனையிலே பொதுவாக விநாயகப் பெருமானினர் முதனிமை பற்றிய எண்ணங்களைத் தொகுத்தத் தருவதோடு "விரும்பியவற்றை வேண்டுதலி செய்யும்” காமியபூசை ஏற்பட்ட காரணமும் சிந்திக்கப் பட்டுள்ளது. “சக்தி வழிபாட்டைச் சார்ந்த நவராத்திரி" தொடர்பாக அமைந்த நவராத்திரி-வீரம், நவராத்திரி - செல்வம் நவராத்திரி கல்வி எண்ற சிந்தனைகளிலே வள்ளுவமும் பெரிய புராணமும் நமது கவனத்திற்கு முனர்வைக்கப் படுகின்றன. வளர்ரூவம் சுட்டும் பேராணிமையும் நாயண்மாரது வரமும் விளக்கம் பெறுகின்றன. "தருமம் எண்றொரு பொருள்” என்ற சிந்தனையிலே "நினைவு நல்லதாக இருந்தால் மனம் புனிதமடையும். அவிவழி செயலும் நல்லதாகவே அமையும்” என்ற கருத்து அழுத்தம் பெறுகிறது. வள்ளுவத்தின் "மனத்துக் கண் மாசிலன் ஆதல்” என்ற தொடர் இங்கு விளக்கம் பெறுகின்றது. 'ஆசை அறுமின்' என்ற சிந்தனையிலே "பற்றற்றாண் பற்றினைப் பற்றுக’ என்ற வள்ளுவ நெறியுடனர் மணிவாசகரினர் மனப்பக்குவமும் (ஆசைப்பத்து) பொருத்தமுற இணைகிறது. " குறைவிலோ நிறைவு” என்ற சிந்தனையிலே இறைவனின் முழுமை-பரிபூரண நிலையை மணிவாசகர் பேசும் திறன் நயக்கப் படுகிறது. கோயிற்றிருப்பதிகத்தில் Ꮺ ᏑᎲ பிலாநிறைவே கோதில7 அமுதே' எனத் தொடங்கும் திருவாசகம் சுட்டப்பட்டு அதில்
நற்சிந்தனைகள் நாற்பது

குறைவிலர, கோதிலோ, ஈறிலா என அறைந்த தொடர்கள் எதிர்மறை நிலையில் முழுமைக்கு அழத்தம் தருவது எடுத்தரைக்கப்படுகிறது. "நாமார்க்குங் குடியல்லேம்’ என்ற தலைப்பில் அமைந்த சிந்தனையிலே அப்பர் பெருமானின் “அஞ்சாமை” க்கு அடிப்படை யாது? எண்ற வினாவுக்கு விடைகாண முற்படுவது தெரிகினிறது. இறைவனினர் அருட்கடலில் திளைக்கும் அவரைப்புறுதியைான - உடலை நோக்கிய~ தண்டனைகள் எதவும் செய்ய வல்லன அல்ல எணர்ற கருத்த அழத்தம் பெறுகிறது.
விரதங்களைப் பற்றி அமைந்த சிந்தனைகளில் பொதுவாக விரதங்கள் தோண்றிய சூழ்நிலைகள் அவற்றினர் பேணுகை என்பன தொடர்பான புராணச் செய்திகள், திருமுறைப் பாடற் சானர்றுகள் எனர்பன எடுத்தும் பேசப்படுகின்றன, அவிவவி விரதங்களின் பயண்பாடுகள் பற்றிய மரபுசார் செய்திகளும் எடுத்தாளப்படுகின்றன. இவற்றுள் "திருவெம்பாவை’ தொடர்பாக அமையும் சிந்தனைகளிலே மேற்படி பாவைப் பாடல்களுக்கு உரைவிளக்கம் தரும் முறைமை பயில்கின்றது. இவ்வாறு உரைவிரிப்பதோடு அமையாமல் ஒவ்வொரு பாடலிலும் பயிலும் ஒரு தொடரை மையப்படுத்தி அழுத்தம் தரும் பண்பும் அமைந்துள்ளது. “அரும்பெரும்சோதி”, “ஆங்கவர்க்கே பாங்காவோம்”, “ பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை', 'கண்ணைத் தயின்றவமே காலத்தைப் போக்காதே’, "கேழில் விழப்பொருள்கள்”, “உய்வார்கள் உய்யும்வகை", முதலிய தொடர்களை இவ்வகையிற் சுட்டலாம் வித்தப் பேசப்பட வேண்டிய இவை பாடல்களின் பொருள் தொடர்புக்கு ஏற்கச் சுட்டியுணர்த்தப்பட்டுள்ளன.
இத்தொகுப்பிலி அமைந்த நறிசிந்தனைகள்
நற்கிந்தனைகள் நாற்பது

Page 11
10
அனைத்தினதம் தொனிப்பொருள் 'அறம்சார் வாழ்வியல்’ ஆகும் "இந்த அறவாழ்வியல்’ சைவம் எண்ற சமய நம்பிக்கைத் தளத்தில் நினர்று சிந்திக்கப்பட்டுள்ளது. அவர் வகையில் "நற்சிந்தனைகள் நாற்பது' என்று இத் தொகுப்பு பெயர் பெறுவது சாலப் பொருத்தமே. அவ்வழிசைவசமய நற்பரப்பும் வள்ளுவம், நாலடியார் முதலான அறநூற்பரப்பும் 'அபேதமாகப் பிண்னிப் பிணைந்தமைந்த பொருட்சுவையையும் சொற்சுவையையும் இதில் பெற்றுக் கொள்ளமுடிகின்றது. ஆசிரியர் அறிஞர் பண்டிதர் சி. அப்புத்துரை அவர்கள் தாம் பேணிநிற்கும் மரபினர் விழமியங்களைப் பற்றிய தமது கணிப்புக்களை நூல் வடிவிற் பதிy செய்ய முயன்றமை மூலம் அடுத்து வரும் தலைமுறையை நெறிப்படுத்த முயன்றுள்ளமை தெரிகின்றது. வாழ்வியலோடு ஒட்டி விளக்கம் தர முயனர்றமை அவரது சமூகச் சார்பையும் புலப்படுத்துவதாகும். இச்சமூக நோக்கு தொடர்வது அவசியம் காலத்தினர் கட்டாயமும் கூட
அவரை வாழ்த்த எனக்கு வயதில்லை, வணங்கி நிறைவு செய்கிறேனர்.
பேராசிரியர் கலாநிதி நா. சுப்பிரமணியணி தமிழ்த்தறை யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்
இலங்கை
நற்சிந்தனைகள் நாற்பது

இ. சிவமயம்
dP2562/62T
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினர் தினமும் அதிகாலை வேளையில் நடைமுறைப்படுத்தம் நற் சிந்னை நிகழ்ச்சி இந்த நூலமைவிற்கு மூலமாகின்றது.
இந்த அநற்சிந்தனை நிகழ்வில் நாமும் பங்குகொள்ள வேண்டும் நல்ல கருத்துக்களை, சிந்தனைகளை வானொலியிலே சொல்ல வேண்டும் அவற்றைத் தேவைக் கேற்ப உருவாக்கம் பெற வைக்க வேண்டுமென்று அடிக்கடி இரக்குவித்த எம்மை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினர் முனர் கொண்டு சென்று நிறுத்தியவர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைத்துறை அலுவலர் சேதுபதி கோணேஸ்வரன் அவர்கள். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் ஆக்கம் பெறுவதற்குத் தோன்றாத் தனையாக விருந்த அவர்களுக்கு எண் நன்றி
சைவ நற்கிந்னைகள் என்னுந் தேவைக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் நாற்பது தொகுக்கப்பெற்ற நற்சிந்தனைகள் நாற்பத' எண்னும் பெயரில் நாலாக வேண்டுமென்றம், சிறப்பாக, மாணவர் நலிலவகையிற் பயன்படுத்தி தம் அறிவை விருத்தி செய்ய அது உதவும் என்றும், அடிக்கடி ஊக்குவித்து, எமக்கு எந்தவகைத் தொல்லையுமில்லா வகை இவ்வகை, நூலுருவிற் காண வைத்தவர் இளவாலை சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்கள எல்லா நலங்களும் பெற்று அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும்.
இந்தச் சிறிய நாலை முழுமையாக வாசித்து , எம்மீது கொண்ட அண்பு காரணமாக புகழ்ந்த ஆசி வழங்கியுள்ள
நற்சிந்தனைகள் நாற்பது 11

Page 12
12
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் , நீலநீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசர்ய சுவாமிகள், கொட்டாஞ்சேனை முத்தமாரி அம்பாள் தேவஸ்தான விசேஷ ஆலோசகர் சிவநீ பா. சண்முகேஸ்வரக் குருக்கள், நாலின் முழுமையை வெளிகொணரக் கூடிய வகை அணிந்துரை வழங்கியுள்ள யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் நா.சுப்பிரமணியனர் எண்போர்க்கு எனர் பணிவண்புடன் கூடிய வணக்கம்
இதனைப் பதிப்பித்து வெளியிடுவது மூலம் எம்மைக் கெளரவப்படுத்தியுள்ள தெல்லிப்பளையை மையமாகக் கொண்டியங்கும் கலை இலக்கியக் களத்தினரைச் சிரந் தாழ்த்தி வணங்குகின்றேனர்.
ஆக்மார்த்தமாக அழகுற இதனை அச்சிட்டுதவிய கொட்டாஞ்சேனை கீதா அச்சுப்பதிவாளர்களுக்கு, நன்றி கூறி அமையாது.
எல்லோரதஞ் சிறப்பான வாழ்விற்குப் பொருந்தம் வகை திருவருள் பாலிக்க வேண்டுமென எல்லாம் வல்ல வரதராஜ விநாயகனை வேண்டுகின்றேன்.
சி அப்புத்துரை 18/1, 9th Lane, மயிலங்கூடல் Wasala Road, இளவாலை, Colombo - 13.
நற்கிந்தனைகள் நாற்பது

g சிவமயம்
விநாயகர் வணக்கம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்; விநாயகனே வேட்கை தணிவிப்பான்; விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம், என்பதெல்லாம் "திருவாக்கும், செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும், பீடும் பெருக்கும் உருவாக்கும்” என்னுஞ் சிந்தனைகளுடனாகும் போது விநாயகர் வழிபாட்டின் முதன்மை தெளிவாகின்றது. வழிபாடு இயல்பாக நிகழ வேண்டியது. எந்த விதமான பின்னணியுந் தொக்கு நிற்பது பொருத்தமில்லை. தேவைகளின் நிறைவு காரணமாகக் கோரிக்கைகளை முன் வைத்து வழிபாடு அமையக்கூடாது. இவ்வகை வழிபாடு வர்த்தகப் போக்கில் அமைந்துவிடும்.
சாதாரண உலகியல் வாழ்வில் எதை நாம் செய்யத்தொடங்கும் போதும் அங்கு அதைச் செய்வதால் என்ன பயன் கிடைக்கும் என்ன ஊதியம் பெறலாம் என்பதைத்தான் முதலில் எண்ணுகின்றோம். பண்டமாற்று அடிப்படைக் கொள்கையில் நம் வளர்ச்சி சென்று கொண்டிருக்கிறது. மாணவப் பருவத்திற் பிள்ளைகள் கல்வி வளர்ச்சி பரீட்சையிற் சித்தி என்பவற்றை வேண்டி வழிபடுகின்றனர். தொடரும் வயதினில் உத்தியோகம், நல்ல வருவாய், சிறந்த வாழ்க்கைத்துணை, உயர்வான மக்கட்டேறு, முதலியவற்றை எதிர்பார்க்கும் வழிபாடு அமையும் தனந்தரும், கல்விதரும், ஒரு நாளுந் தளர்வறியா மனந்தரும், நல்லன எல்லாந்தரும் என்றுதான் அபிராமிப்பட்டரும் பாடியிருக்கிறார். தும்பிக்கையான் பாதத்து நம்பிக்கை வைத்தவர்களுக்கு “வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலர7ள் நோக்குண்டாம்” என்று ஒளவையாரும், "நற்குஞ்சரக்கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ்சரக்கன்று’ என்று உமாபதி சிவாச்சாரியாரும் எம்மை வழிப் படுத்துகின்றனர். இங்கே ஒரு நல்ல கருத்தைப் பெறுகின் றோம். புதிதாக ஒரு கட்டிடத்தை அமைக்கத் தொடங்கும் போது கட்டிடத்தை உயர்த்து வதற்காய்ப்
நற்கிந்தனைகள் நாற்பது 3

Page 13
பல தடிகளை உயர்ந்து நிற்கக் கூடியதாகவும் ஏறிநின்று சுவர்களை வளர்க்கக்கூடிய வகை குறுக்காகவுங் கட்டி முயற்சியை நிறைவாக்குகின்றோம். கட்டிடம் பூர்த்தியானபின் தடிகள் அப்புறப்படுத்தப்படும் உரிய தேவை அடைவிற்குரியதாகும் போது சார்பாக இருந்தவை தேவையற்றுப் போகும். வழிபாட்டு வளர்ச்சியின் ஆரம்பநிலையில் நாம் விரும்பியவற்றை வேண்டுதல் செய்துவழிபடும் முறைமை வேண்டியதுதான் என்பது இப்பே7 தெளிவாகின்றது. காமிய பூசை என்று ஒருவகை ஏற்பட்டமைக்கு இதுவே காரணம் என்று தெரிகின்றது.
எங்கள் முழுமுதல் சிவன் அவர் மூத்த புதல்வர் விநாயகர். அதனால் முத்த விநாயகர், முத்த பிள்ளையார் என்றும் அவர் குறிப்பிடப்படுவர். விநாயகரைப் பிள்ளை என்று குறிப்பிடும் முறைமை ஒன்றும் இருக்கிறது. அப்பெயர் "ஆர்" என்னும் கெளரவத்திற்கான பன்மை விததி பெற்று பிள்ளையாரென அமைந்துள்ளது. "தந்தையார் போயினார் தாயாரும் போயினார்” என்னுமிடத்துத் தந்தை தாய் என்னும் பெயர்கள் “ஆர்' என்னுங் கெளரவப் பன்மை விகுதி சேர்ந்து தந்தையார் தாயார் எனநின்றமை போலெனக் கொள்ளலாம்
விநாயகனை வழிபடுவது மிக இலகுவானது. பசுவின் சாணம், அல்லது மஞ்சள் மா, அல்லது சந்தனம் என்பவற்றுள் ஒன்றைக் குழைத்துத்திரட்டி அறுகம்புல்லையும் சொருகிவிட்டால் வழிபாட்டிற்கான பிள்ளையாரைக் காண முடியும். ஆற்றங்கரை, குளக்கரை, மரநிழல்கள் ஆய எந்த இடத்திலும் விநாயக வழிபாடு i560 பெறலாம். முக்கனிகள், மோதகம், இளநீர், வெற்றிலை பாக்கு முதலியன நிவேதிக்கப் படலாம். விநாயக வழிபாட்டின் போது அர்ச்சிக்கப் பயன் படுத்தப்படும் மலர்களுடன் அறுகம் புல்லும் சிறப்பிடம் பெறவேண்டும் சீர்காழிக்கு நீர்வளம் வேண்டியதொரு சந்தர்ப்பத்திற் காக உருவில் வந்த விநாயகர் கங்கையின் புனித நீருடன் இருந்த அகத்தியரின் கமண்டலத்தைச் சரித்து ஓடச்செய்தாரென்றும் அதுவே காவேரி என்னும் புனித நதி என்றுஞ் சொல்வர். விநாயகன் அருட்பிரவாகத்தில் நாமும் திளைப்போமாக
14 நற்கிந்தனைகள் நாற்பது

வித்தக விநாயகர் விரைகழஸ் சரணி
சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளை யானையிலும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் குதிரையிலுமாகக் கைலாயம் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவரும் கைலாயம் நோக்கிச் செல்கின்றனர் என்னுஞ் செய்தி விநாயகருக்குப் பூசை செய்து கொண்டிருந்த ஒளவையார் காதிற் பட்டது. பூசை வேகமாகியது. தவத்திலும் யோகத்திலும் முதிர்ந்தவர் ஒளவை. இந்த உலகியலில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டவர் ஒளவை. பூசையை விரைவாக நிறைவு செய்து கொண்டு அவர்களுடன7கித் தாமும் கைலைக்குச் சென்றுவிட வேண்டுமென்டது ஒளவையின் விருப்பம் பூசை மேலும் வேகமாகியது. அந்த வேளை ஒரு குரல் கேட்டது. “ஏன் அவசரம் அமைதியாக உன் பூசையைச் செய்; உன் எண்ணம் நிறைவேறும்.” என்பன ஒளவையாரின் காதிற்பட்ட வார்த்தை கள். சுற்று முற்றும் பார்த்தார் யாரையுங் காணவில்லை. விநாயகப் பெருமானது அருள் வாக்குத்தான் இது எனத் துணிந்து கொண்டார். பூசையிற் கருத்தைச் செலுத்தினார். ஈடுபாடு கூடிய பூசை தொடர்ந்தது. தன்னை மறந்தார். விநாயகன் பிரபாவத்திலேயே முழ்கின7ர். உணர்வு வயப்பட்டார். விநாயகன் கருணைப் பொழிவுள் அமிழ்ந்து பேரானந்தப் பெருவாழ்வு பெற்ற7ர். உள்ளம் பொங்கியது. உள்ளம் முழுவதும் விநாயகன் திருவருட்டிறம் நிறைந்தது. அவன் அற்புதக் கோலம், அணிகள், அங்கங்கள் அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. அவரை அறியாமலேயே அவர் வாயிலிருந்து வார்த்தைகள் வெளியாயின. அவை ஒரு பாடலாகி - அருமந்த பாடலாகி- அற்புதமான கருத்தைத் தருவனவாகி- தத்துவங்களின் திரண்டதொரு உருவைக் காட்டுவனவாகி வெளிவந்து கொண்டிருந்தன. விநாயக வடிவின் கோலங்கள் அங்கு நர்த்தனஞ் செய்கின்றன. ஒளிர்ந்து கொண்டிருக்கும் பாதச் சிலம்பு கண்ணிலே படுகின்றது. இறை வழிபாட்டுடனாகும் போது திருவடி வழிபாடு தானே முதன்மையானது அந்த நிலையிற் காலணியாகிய சிலம்பு கண்ணிற் படுவது பொருந்துவதுதானே! பொன்வண்ணம் காட்டும்
நற்கிந்தனைகள் நாற்பது 5

Page 14
அரைஞாண் பின்னால் காட்சி தர அழகியதும் பொலிவுடன் கூடியதும7கிய உடை சுடருகின்றது. அவயங்களுள் முதற் கண்ணிற் படுவது பேழைவயிறு பின்னர் எழுத்தானியாகிய கொம்பும், பிரணவத்தைச் சொல்லிக் கொண்டிருக்கும் வேழமுகமும், துதலிடையான சிந்துரமும் , அஞ்சு கரம், அங்குசபாசம், நீலமேனி தொங்கும் வாயொடு நாலிரு புயங்களும், மூன்று கண்களும், இரண்டு செவியும், முப்புரிநூல் திகழ் ஒளிம7ர்பும் ஒளிர மூஷிக வாகனன7கி நிற்கின்றான். இந்த வடிவினையுடைய கற்பகக்களிறு தாயாகி வந்து என் உள்ளத்தை இடமாகக் கொண்டு மயக்கத்தை நீக்கி ஐந்தெழுத்துண்மையைத் தெளிய வைத்து வினைகளைப் போக்கி என்னை யாரென்று எனக்குத் தெரியச் செய்து ஆனந்தத்துடனாகச் செய்து மெய்த்தொண்டர் குழாத்துடன் கூட்டி ஆண்ட வித்தக விநாயகன் திருவடிமலர்கள் சரண் ஆவன ஆகுக என்று நிறைவு காண்கின்றார். அப்போது விநாயகர் தும்பிக்கையால் துக்கி எங்கள் தமிழ்க் கிழவியை, பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் கலந்து சுவைக்கச் சுவைக்க அருத்திய பாட்டியை, “சிதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட” என்றெடுத்து “வித்தக விநாயக விரைகழல் சரனே” என்று பெருமிதத்தோடிருந்த ஒளவையை விநாயகன் துதிக்கையினாலே எடுத்துக் கைலாயத்துச் சேர்த்தார். சுற்றுமுற்றும் பார்த்தாள் ஒளவை. அங்கு யாரையுங் கண்டுகொள்ள முடியவில்லை. சிறிது பொழுது செல்ல அவ்விடம் வந்த சேரமான்பெருமாள் நாயன7ர் ஒளவ்ையாரைக் கண்டு எப்படி வந்தீர்கள் என வினவுகின்றார்.
இனிய மொழியைப் பேசுபவளாகிய உமை மைந்தன் விநாயகனைச் சிக்கெனப்பிடிக்க வல்லார்க்கு இது அரிய காரியமாகுமா? அவனை உள்ளன்போடு வழிபடுபவர்க்கு அதிர வருகின்ற யானையும் தேரும் குதிரையும் பின்னேதான் மன்னவா! உமை புதல்வனைப் பூசித்தவளாகிய எனக்கு இது கூப்பிடு தொலைதான், என்று நிலைமையைத் தெளிய வைக்கிறாள் கிழவி அந்த வித்தக விநாயகன் கழலினை இறுகப் பற்றி நாமும் மேலான வாழ்வு பெற முயற்சிப்போமாக.
16 நற்சிந்தனைகள் நாற்பது

கற்பக விநாயகக் கடவுளே போற்றி
விநாயகன் அருள் பெற்ற ஒளவை, நம்பியாண்ட7ர்நம்பி அகத்தியர் வரிசையிற் பாரதியாரும் இடம் பெறுகின்றார். சக்தி வழிபாட்டில் ஈடுபாடுடையவராகி நின்ற பாரதியார் அவ்வழி விநாயகன் அருளையும் பெற்ற7ர். வித்தைக்கிறைவன் கணபதி வித்தக மருப்புடையவன் கணபதி அவனை உப7சித்து, தன் பாட்டுத் திறத்தாலே விநாயகன் அருளைப் பெற்றவர் அவர். வாழ்நாள் பூராவும் தன்னைக் கணபதியிடம் அடைக்கலப் பொருளாக வைத்து தம்மை தம் குடும்பத்தை அவன் காப்பான் என்ற வைராக்கியத்துடன் பணிந்து நின்றார். சக்திக் கனல் பறக்கும் அவர் பாடல்களில் விநாயகர் நான்மணிமாலையும் ஒன்று வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற வரிசையிற் பாடல்கள் அமைந்தபோதும் , வழமையான பாடற் பாணியை விடுத்துப் புதுமையான கருத்துச் செறிவுக் கோலத்தைக் கையாண்டிருக்கிறார். விநாயகனிடம் வரம் கேட்கின்றார்கள். விநாயகனை வாழ்த்துகின்றார்கள். “வித்தைக்கிறைவா கனநாத7 மேன்மைத் தொழிலிற் பணி” என்று வேண்டி நிற்கின்ற7ர்கள். நாமகள் கல்வித் தெய்வமென்றும் பூமகள் நிதித் தெய்வமென்றும் எப்பொழுதும் போற்றப்படும் முறைமை ஒன்றுண்டு. விநாயகக் கடவுளோ திருவுங் கல்வியும் சீருந் தழைக்க நிற்பவர். அதனாலேதான் வித்தைக்கிறைவாவென்று பாரதியார் அழைக்கின்றார். அழைத்துத் தன்னுடைய வேண்டுகோளைச் சமர்ப்பிக்கின்றார். பதறாத காரியம் சிதறாது என்ற கொள்கை உடையவர்கள் ஞானிகள். தெய்வகாரியத்தைப் பதறிப் போட்டழக்க ம7ட்டார்கள். பண்படுத்திய நிலத்தில் வித்தைக் காலமறிந்து நாட்டி நீர் விட்டு அது முளைத்துப் பயன்தரும்வரை அமைதியுடனும் அவதானத்துடனும் பொறுமையுடனும் ஆர அமர இருந்து பராமரிப்பது போன்று தெய்வ காரியங்களிலும் காலமறிதல், வேண்டுவன செய்தல், அமைதியாக வேண்டி நிற்றல் முதலியன கைக்கொள்ளப்பட வேண்டும். மந்திரத்தால் ம7ங்காயை உண்டாக்குவது போன்று இறை யருளைப் பெற்றுவிட முடியாது. வித்தினை முளைக்கச் செய்து பயன் காண்பது போலவே இறையருளைக் காணவும் முன
நற்சிந்தனைகளி நாற்பது 17

Page 15
முயற்சிகள் வேண்டப்படும் வித்து முளைக்கவில்லையே என்று அதனைப் பிடுங்கி ஆய்வு செய்யக் கூடாது. நீர் ஊற்றுதலைத் தவிர்த்தலாகாது . துணைச்செயல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். இந்த வகையிலேதான் இறையருளை வேண்டியவர்களது முயற்சியும் இருக்க வேண்டும். விநாயகன் தொடர்புவழிநிற்பவர்களும் இந்த முறைமைகளைக் கையாண்டால் துன்பமேது; துயரமேது. இதே கேள்வியைப் பாரதிதான் கேட்கின்றான் விநாயகனை அண்டினர்க்குக் குறைவில்லை. காரணம் அவன் குறைவிலா நிறைவு. குறைவிலா நிறைவை அணைந்துவிட்டால் குறையேது.
கற்பக விநாயகக் கடவுளே போற்றி சிற்பர மோனத் தேவன் வாழ்க
மணக்குள விநாயக வான்மறைத் தலைவா தனைத்தான் ஆளும் தன்மை நான் பெற்றிடில் எல்லாப் பயன்களும் தாமே எய்தும்.
இன்புற்றிருக்க வேண்டி நின்னிருதாள் பணிவதே தொழிலெனக் கொண்டு கணபதி தேவா வாழ்வேன் களித்தே. ஒரு கையில் எழுதுகோல்; மறு கையில் உருத்திராக்கம் , இத்தோற்ற அமைதிக்குரியவரே வித்தைக்கிறைவர் என்பது தெரிகிறது. உமைக்கினிய மைந்தனே மனதிற் சலனமில்லாமல் மதியில் இருட்டிறம் இல்லாமல் இருக்க வேண்டுமென அவன் அருளை வேண்டி
"ஒமெனும் பொருளை உளத்திலே நிறைத்து
சத்தியைக் காக்குந் தந்திரம் பயின்று யார்க்கு எளியானாய் யார்க்கும் வலியனாய் யார்க்கும் அன்பனாய் யார்க்கும் இனியனாய் வாழ்ந்திட விரும்பினேன் . . . . . . . . . . . . என்னை ஏற்றுக்கொள்வாயாக இன்பச் சூழலை எளிதடையச் செய்வாயாக போற்றி போற்றி சுமுகா போற்றி
多萝
18 நற்சிந்தனைகள் நாற்பது

வந்தேயருள் புரிகுவாப்
பால், தெளிதேன்பாகு, பருப்பு என்பவற்றைக் கலந்து நிவேதனமாக்கி வழிபாடு செய்கின்றார் ஒளவையார். நான்குமே தனித்தனி சுவை மிகுந்தவை. அத்தகு சுவை மிகு பொருள்களைக் கலந்து விட்டால், , ..! சொல்ல வேண்டுமா? அந்தச் சுவை மிகு கலவையை நிவேதித்துச் சங்கத் தமிழ் முன்றையுந் தரும்படியாக வேண்டுகின்ற7ர். நான்கைக் கொடுத்து மூன்றைப் பெற விரும்பும் ஒளவைப்பாட்டியின் சிந்தனையில் ஏதோ தொக்கிருக்க வேண்டும்மென எமது நெஞ்சு குடைகின்றது. சுட்டபழம் வேண்டும7? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டு, முருகன் கூர்த்தமதியுடைய பாட்டியை ஆட்டங்கான வைத்ததும் யாமறிவோம். "கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி இருங்கதலி வாழைக்கு நானும்” என்று, சிறுவனிடம் தோல்வி கண்ட ஒளவை, பின்னர் தன் பின்னடைவை ஏற்றுக்கொள்கின்றார். ஒளவையாரே ஏற்றுக் கொண்டபின் நாமேன் குழம்பவேண்டும்!
இந்தக் கருத்தினை நன்றாக உள்வாங்கிக்கொண்ட வரதராஜ விநாயகர் இரட்டை மணிமாலை ஆசிரியர்,
பணிந்தே பருப்பமுது பால்தெளித்தேன் பாகு துணிந்தகரும்புகனி தூபம் - திணிந்தவிருள் சிந்துமொளித் தீபம் சிறக்கவமைத் தேன்திருமுன் வந்தேய ருள்புரித வாய்.
என்று பாடிப் பணிந்து நிற்கின்றார். குடமுழுக்குச் சிறப்புகளிற் தோய்ந்து நிற்கும் மக்கள் வெள்ளத்துடனாகியுள்ள வரதராஜ விநாயகர் முன் பருப்பு, அமுது, பால், தெளிதேன், பாகு, கரும்பு, கனி என்னுஞ் சுவைமிகு பொருள்களை நிவேதித்துத் தூப தீப அஞ்சலி நிகழுகின்றது. இந்த நிவேதனத்துடனான கருத்தொன்று L6tfjøffékings.
ஆலயங்களிற் பொங்கலி போன்ற நிகழ்வுகள்
நடைபெறும்போது இறுதியிற் பொங்கலைப் படைத்துச் சுற்றிவர நல்ல பலகார வகைகள் கனிவகைகள் எல்லாவற்றையும்
நற்கிந்தனைகள் நாற்பது 9

Page 16
திவேதிப்பர். நிவேதனமாகுபவை ஏதோ ஒரு வகையில் உயர்வாக இருக்கும். பெரியவையாகவோ , அழகு மிகுந்தவையாகவோ, சுவையானவையாகவோ, இருக்கலாம். இது நிவேதனமாக்கும் மக்கள் உள்ளத்துயர்வைக் காட்டும். இவ்வழி சுவை மிகுதியுடைய பொருள்களை நிவேதித்து நிற்கும் மகனொருவனை இப்பாடலிற் காண்கின்றோம்.
ஒவையார் நிவேதனம் போன்றதரகாததொரு தலைமையையும் இங்கு பார்க்கின்றோம். இத்தனை பொருள்களையும் நிவேதனமாக்கியுள்ளேன்; வரதராஜ விநாயகரே, இவற்றை அங்கீகரித்துக் கொண்டுபிரதி உபகாரமாக எனக்கு அருளவேண்டும் என்ற கருத்து இங்கு வைக்கப்படவில்லை. வேறொரு உயர்ந்த உள்ளத்தை இங்கு காண்கின்றோம்.
வெளியே சென்றிருந்த தந்தை விடு திரும்பும்போது வாங்கிக் கொண்டுவந்த இனிப்புப் பொதியைத் தன் குழந்தையிடம் கொடுக்கின்ற7ர் பெருமகிழ்வுடன் பெற்றுக் கொண்ட குழந்தை பொதியைப் பிரித்து முதலில் எடுப்பதைத் தந்தையின் வாயில் வைத்து அவர் அதை ஏற்று உண்பதை ஆசையோடு பார்க்கின்றது. அப்ப7 அதனை ஏற்றுக் கொள்வது குழந்தைக்கு எல்லையில்லாத மகிழ்வைத் தருகின்றது. இங்கே இந்தப் பாவலன் உள்ளமும் வரதராஜ விநாயகன் ஏற்றுக் கொள்வதையே6எதிர்பார்க்கின்றது. கண்ணபிரானிடம் சென்ற குசேலர், கொண்டு சென்ற பழந்துணியிற் கட்டப்பட்டிருந்த அவலைக் கண்டுகொண்ட கண்ணன் அதனை ஆர்வத்தோடு பெற்று இரண்டு முறைமட்டும் வாயிற் போட்டுச் சுவைத்தவுடன் குசேலர் வீட்டுச் சூழல் எப்படி எப்படியெல்லாம் ஆயிற்று என்பதையும் இலக்கியஞ் சொல்ல அறிந்துள்ளோம். கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகன் திருவடி மலர்களை எமதுள்ளத்து நிறைத்து நிறைந்தவாழ்வு காணவோண்டும். அதற்காக அவனிடம் அது த7 இது தா என்பது முறையல்ல. எமக்கு வேண்டியது எது என்பதை அவனறிவான். வரதராஜ ஐங்கரன் என்னும் என் எண்ணத்தினிக்கும் இறை, வேண்டிய போது வேணடியது தந்து எம்மை ஏற்றுக்கொள்வான்.
20 நற்சிந்தனைகள் நாற்பது

குறைவின்Uாநிறைவு
நீதி நிர்வாக நடைமுறையில் மரண தண்டனையும் ஒன்று. பண்டை நாள்களில் அதனைத் துரக்குத் தண்டனை என்று குறிப்பிடுவர். கயிற்றிற் தொங்கச் செய்வது மூலம் அந்தத் தண்டனை அன்று நிறைவு செய்யப்பட்டமையினாலேயே அந்தப் பெயர்வழக்கு உண்டாயது துக்குத் தண்டனையை நிறைவு செய்யும் ஏவலன் ஒருவன் ஒருமுறை குற்றத்திற்குரியவனைத் துக்கிலிட்டு அவிழ்த்துவிட்டான் தண்டனைக்குரியவன் பிழைத்துக் கொண்டான் ஏவலன் குற்றக் கூண்டிற்குச் செல்ல வேண்டிய நிலை வந்தது. அவனுக்காக வாதாடிய நியாயவாதி தூக்குத் தண்டனைதானே விதிக்கப்பட்டது. ஏவலன் அதைச் செய்யத் தவறவில்லையே! எனவே அவனிடத்து குறை காண முடியாதே! என்று வாதிட்டான். தர்ப்பிலே உள்ள பொள்ளல் அப்போதுதான் நீதிபதிக்கு விளக்கமாகியது. மரணிக்கும் வரை து7க்கு என்று எழுதப்பட்டிருந்தால் அந்தக் குற்றவாழி தப்பியிருக்க முடியாது. அதாவது எடுத்துக் கொள்ளப்படும் கருத்து எந்த வகையாலும் புரட்டப்பட முடியாது என்ற எண்ணத்துடன் சொற்களின் உபயோகம் அமையவேண்டும். இந்த விடயத்தில் மணிவாசக சுவாமிகள் மிக ஆழமானதும் நூனுக்கமானதுமான சிந்தனையுடனேயே சொற்களையும் சொற்றொடர்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று உணர்ந்து சுவைக்கமுடிகிறது.
இறைவன் நிறைவானவன் பரிபூரணன் நீக்கமற எங்கும் நிறைந்தவன்; எல்லாம் வல்லவன் ; எல்லாம் அறிபவன் என்னும் இந்த இயல்புகள் பற்றி எந்தவொரு ஐயம் உண்டாவதற்கும் இடமில்லை. இந்தக் கருத்துக்களை உடன்பாட்டிலோ அல்லது எதிர்மறையிலோ மட்டும் சொல்லிவிட்டாற் போதுமானதாகாது என்று அவர்கள் கருதியிருக்க வேண்டும் இறைவன் நிறைவானவன் என்று சொல்லி அமைந்திருக்கலாம். அங்கே அவர்களுக்கு நிறைவு பிறக்கவில்லை. எதிர்மறைப் பொருளாகிய குறைவிலா என்னுந் தொடரையும் சேர்த்துக் குறைவிலா நிறைவே என்று சொல்லிப் பூரணத்தை அனுபவித் திருக்கின்றார்கள்.
நர்சிந்தனைகள் நாற்பது 2

Page 17
தித்திக்கும் சிவபெருமானைக் கண்டவர் மணிவாசகர். தித்திக்கும் சிவபதத்தை உணர்ந்தவர் அவர். அவர் காரணமாக அடிபட்டவர் சிவபெருமான். அவரும் அடிபட்டார். எவ்வளவு பொருளாதார வசதி படைத்தவராக இருந்தாலென்ன? எவ்வளவு வினைத்திறம் படைத் தவராக இருந்தாலென்ன? நினைத்ததை நிறைவு செய்யக்கூடிய பெளதீக வசதிகள், வளங்கள் நிறைந்தவராக இருந்தாலென்ன? மனிதன் மனிதன்தான். அவனுக்குரிய வல்லமைகள் எல்லைக்குட்பட்டவையே என்பது கருத்திலிருக்க வேண்டும். ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்தவன் இறைவன் ஒருவன்தான்.
திர்வு காணப்பட வேண்டிய எண் பிரச்சனை ஒன்று அந்தத் துறையில் வல்லமை பெற்ற ஒருவர் அதற்கான திர்வைக் கான முடியும். அதனிலும் கூடிய சிக்கல் நிறைந்த மற்றொரு பிரச்சனையை அந்தத் துறையில் வல்லமை பெற்ற மற்றொருவர் திர்வு காணலாம். இப்படி பிரச்சனைகள் மேலே மேலே செல்ல அவற்றை விடுவிப்பவர்களும் வெவ்வேறான வர்களாக மாற வேண்டிய நிலைமை உண்டு இறுதியிற் தீர்வு காணப்படாத நிலையும் உண்டாகலாம். எந்தவித சந்தேக விபரீதமுமில்லாத தெளிந்த அறிவுடைய ஒருவராற்றான் பிரச்சனைக்கு ஒழுங்கான திர்வு காண முடியும். அப்படிப்பட்டவர் சிவபெருமான் ஒருவர்தான் எனக் காட்கிறார் மணிவாசகர். குறைவிலா நிறைவே கோதிலா அமுதே ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தெண் மனத்திடை மன்னிய மண்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும் திருப்பெருந் தறையுறை சிவனே இறைவனே நீயென் உடலிடங் கொண்டாய் இனியுன்னை யென்னிரக் கேனே. என்று பணிந்து நிற்கின்றார்கள். குறிப்பாகச் சொன்னால் இறை சிந்தனையில் எல்லாம் அதியுயர் சிறப்பினவாகப் பார்க்கப்படல் வேண்டும், அதனாலேதான், “ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே', என்றும், “ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே" என்றும், "குனங்கள் தாமில்லா இன்பமே” என்றும், "உணர்விற்குந் தெரிவரும் பொருளே’ என்றும் பேசும் நிலை வந்தது. அந்த வழி சிந்தித்து மணிவாசகனார் திருவடிகளுடனாகி இறையின்பங்கான முயலுவோம்
22 நற்கிந்தனைகள் நாற்பது

தாயிற் சிற்ந்த தயாவான தத்துவர்ை
“அன்னையும் பிதாவும் முன்னறி" தெய்வம் , என்னும் புனிதமான கருத்தை முன்மொழிந்த தமிழ்க்கிழவி ஒளவை "தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை" என்று அதே கொன்றை வேந்தன் என்னும் நூலிற் பின்னோரிடத்துக் குறிப்பிடுகின்றார். அன்னையையும் பிதாவையும் தெய்வமெனக் கொண்டு காட்டிய பாட்டி பின்னர் அன்னையை மட்டுங் கோயிலாகக் கொண்டு காட்டுகின்றார். நாமெல்லாம் குடியிருந்து வந்த உயர் மதிப்பிற்குரிய கோயில், சிறப்புக்குரிய தோற்றங்களுக்கெல்லாம் இடமாக - ஆறுமுக நாவலா, ஞானப் பிரகாச முனிவர், காசிவாசி செந்திநாதைர், மகாவித் துவான் கணேசையர், பண்டிதமணி சி கணபதிப் பிள்ளை இலக்கணவித்தகர் நமசிவாய தேசிகர் போன்ற மாகான்களின் தோற்றத்திற்கு இடமாயமைந்த உதரம் கோயில் என்று போற்றப்படத்தானே வேண்டும். இந்த வகையில் எண்ணற்ற புனிதர்கள் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் எமது சிந்தனைக் குள்ளாகியுளர். பூசும் வெண்ணிறு போன்று உள்ளமும் வெண்மையாய் அமைந்த புனிதர்கள். காந்தியடிகள், வினோபாஜி போன்ற வெவ்வேறு வழியில் நின்றவர்கள் எல்லோருமே எம் எண்ணத்தில் உயர்ந்து நிற்பவர்கள் . அந்த வகையில் அந்த மகான்களது தோற்றம் நிகழ்வதற்கு காரன மாயமைந்த உதரம், அதற்கு உரிமையாளராகிய அன்னை கோயில் என்னும் புனிதம் பெறுவதற்கு உரித்துடையவர்தான்.
இதிப்படியிருக்க "தாயிற்சிறந்த தயாவான தத்துவனே’ என்று திருவாசகம் சிவபுராணம் என்னும் பகுதியில் மணிவாசக சுவாமி பேசுகின்றார். "தாயில்” என்னும் போது தாயைப் போன்று என்று பொருள் கிடைக்கிறது. தாயைப் போன்று சிறந்த அன்பைப் பொருந்தியவர். என்று இறைவனை நாங்கள் உணர முடிகிறது. தாயன்பை நாமெல்லாம் உணர்ந்துள்ளோம் அறிந்ததைக் கொண்டு தானே அறியாததை விளங்க வைக்க வேண்டும் என்ற நியதி காரணமாக சுவாமி எம்மால் அறியமுடியாத இறையன்பை விளக்கத் தாயன்பை உவமைப் பொருளாக்கியுள்ளார். இதேயிடத்து மற்றொரு சிந்தனை எந்தவித எதிர்பார்ப்புமின்றித் தாய் பிள்ளைக்கு வேண்டியது எதையும் கொடுப்பாள் என்பது. குழந்தையை
நற்கிந்தனைகள் நாற்பது 23

Page 18
வளர்த்தெடுக்கும் நிலையில் தாய் எந்தவொரு பிரதியுபகாரத்தையும் எதிர்பார்ப்பவளாக இருப்பதில்லை இ.தொரு தெய்வீக இயல்பு தாய்மையின் உயர்நிலை அது அதனாலேதான்தாயன்பைத் தெய்வ அன்பிற்கு உவமையாக் கினார். ஆனால், எல்லாச் சந்தர்ப்பத்திலும் உதவக் கூடிய நிலை பொருத்தமான வகை குழந்தைக்கு உதவக்கூடிய நிலை - ஒரு தாய்க்கு அமையுமென்று எதிர் பார்க்க முடியாது. அதனாலேதான் தாயிற் சிறந்த என்பதற்குத் தாயினும் மேலான கருணை கொண்டவர் என்று தெய்வ நிலையை உயர்வாக்கிச் சிந்திட்டது முறை என்று கண்டனர் அறிஞர். தாயாகி வந்து பன்றிக் குட்டிகளுக்குப் பாலுட்டிய இறை இயல்பினை எல்லோரும் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதே உண்மையைப் போற்றித்திருகவிலில், "த7யேயாகி வளர்த்தனை போற்றி” என்றும் திருக்கோத்தும்பியில், "தாயுற்று வந்தெனை ஆண்டு கொண்டதன் கருணை' என்றும், “செய்பணிகள் கொண்டருளும் தாயான ஈசற்கே” என்றும், திருப்பூவல்லியில், "தாயிற் பெரிதும் தயாவுடைய பெருமான்’ என்றும், பிடித்த பத்தில் , “பால் நினைந்துட்டும் தாயினும் சாலப் பரிந்து” என்றும், ஒப்புமை காட்டிய மணிவாசக சுவாமிகள் அந்த நெறியில் நிறைவு காணவில்லை. இறைவனைத் தாயாகவே கண்டு ஆனந்திக்கின்ற நிலையில் "தாயாய் முலைப்பால் தருவானே’ என்றும், "தாயே என்றுன் தாளடைந்தேன்” , என்றும் ஆனந்தமாலை என்னும் பதிகத்துப் பேசி இறும்பூதெய்துகின்றார்கள். கையாற் திண்டப்படவோ கண்ணாற் பார்க்கப் படவோ முடியாததொன்று அன்பு “ஆர்வலர் புன்கணி பூசல் தரும்’ என்னும் வள்ளுவர் குறியீடு கொண்டு உள்ளத்தாலி அனுபவிக்கப்பட வேண்டியது அது என்பது தெளிவாகின்றது. அது உள்ளத்தினுடைய ஒரு அகவுறுப்பு. உயிர்நிலை அன்பின் வழியது என்பது வள்ளுவர் தரும் உறுதியான கருத்து.
தமிழ் மூதாட்டி ஒளவை பாடிய விநாயகரகவலில் “தாயா யெனக்குத் தானெழுந்தருளி”, என்று விநாயகனைக் குறிப்பிடு கிறார்கள். திருநெறிய தமிழ் தந்த திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் , “தாயினும் நல்ல தலைவர்” என்று தாயினுஞ் சிறந்த தலைவராகக் காட்டுகின்றார்கள். எந்த வகையிலும் தாய்மையின் தெய்வீகமான இயல்பு பரிமளிப்பது தெரிகின்றது. அந்தத் தெய்வீகத் துடனாகி தாமும் இன்புறுவோம்.
24 நற்சிந்தனைகள் நாற்பது

பாவியேனர் உர்ை அடைக்கலம்
புனிதமானவர்கள் என்று காட்டும் வகையில், கழுவித் துடைத்து, வாசனைப் பெ7ருள்கள் பூசிப் பொருத்தமற்ற மனங்களை மறைத்து, எம்மை நாமே ஏமாற்றிப் பார்ப்பவர்களையும் ஏமாறச் செய்து வாழும் வாழ்க்கை முறைதான் இப்பொழுது எம்முடையதாக இருக்கின்றது. எப்பழத்தான் நாம் தூய்மை காண முயன்றாலும் எமது உடம்பு தூய்மையடைவதில்லை. 'சீவார்ந் திமொய்த் தழுக்கொடு திரியுஞ் சிறுகுடி விது” என்றும் “மிடைத்தெலும் பூத்தை மிக்கழுக் கூறல் வீறிலி நடைக்கூடம்” என்றும் மணிவாசக சுவாமிகளே சொல்லுவார்கள். தூய்மையற்ற நிலையொன்று திமிஷத்திற்கு நிமிஷ2ம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அது காரணமாக "எல்லாப்படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை” என்று பேசப்பட வேண்டிய நிலைமைக்குள்ளாகிறது.
உடம்பு அந்தவகை அமைந்து விட்டது. பிறப்பிலேயே அந்தவகை இயற்கையை அது பெற்றுவிட்டது. அதே வேளை மனமும் அழுக்குடையதாக இருக்கின்றது. இருப்பினும் பக்குவஞ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகின்றது. அதற்காகிய ஒரே வழி உயர்ந்த வழி கடவுள் வழிபாடுதான். தெய்வ நம்பிக்கையை எமதாக்கிக் கொள்ளவேண்டும் வேறு எத்தனையோ தேவைகளுக்குக் கூட அந்த நம்பிக்கை மூலமாயமைந்துவிடும். கடவுளை நம்பினோர் களவு செய்ய முடியாது கடவுளை நம்பினோர் பொய் பேச முடியாது. கடவுளை தம்பினே7ர் உயிர்க் கொலை செய்ய முடியாது. உயிர்க்கொலை தவிர்க்கப்பட்டால் புலாலுண்ணல் தவிர்க்கப்படும் அவற்றின் புண் என்று உணரப்படும் தசையை எப்படி உண்பது? தொடர்ந்து வஞ்சனை, பொறாமை, ஏமாற்றுதல், கொள்ளையடித்தல் என்றித் தொடக்கத்தன அனைத்தும் தவிர்க்கப்படும். இவ்வண்ணமாகும் போது எண்ணம் முழுவதும் இறைபற்றியதாயிருக்கச், சிந்தனை சைவந்தியிற் தோய்ந்துவிடும். மனத்துக்கண் மாசிலனாந் நிலை கைகூட உடம்புத் தூயது என்ற சிந்தனைக்குள்ளாகும். அழுக்கு அகத்தூய்மையுடன் மிகுதியுந் தொடர்புடையது.
நற்சிந்தனைகள் நாற்பது 25

Page 19
“கல்வி ஞானமிலாப் பொல்லா அழுக்கு மனத் தடியேன்” என்று மணிவாசக சுவாமிகள் துன்புறுதலைப் பார்க்கின்றோம். மனந் தூய்மை பெற - புனிதமடைய - கல்வி ஞானமும் வேண்டும் என்று தெரிகிறது. கல்வியறிவிருந் தாற்றான் மனம் பக்குவமடைய முடியும். உன்னைவிட்டு நீங்குதலை அறியாத அடியவர்கள், அருளைப் பொழிகின்ற நின் தாளினைக் கீழ் வந்து மீட்டும் பிறவிக்குத் திரும்புதலை அறியாத செல்வத்தைப் பெற்றுள்ளார்கள். யான் அமுக்கு மனத்தடி யேன், இழிவானவன்; இரக்கப்படக்கூடியவன் என்று துன்பமடை கின்றார் மாணிக்கவாசக சுவாமிகள். தன்னுடம்பு புழுக்கனுடைப் புண்குரம்பை என்றும் வருந்துகின்றார்கள். ஆன காரணத்தாற் பாவத்தையு டையவனானேன்; கொஞ்சங்கூடக் கல்வியறிவுமில்ைைல; எனக்கு அவர்கள் பெற்றது போன்ற நிலை கிடைக்கப்போவதுமில்லை என்றெல்லாம் வருந்துகின்றார்கள்.
பக்குவ நிலை அடைந்தவர்கள் பழுத்த மனத்தடியர்,
தூய்மையானுயர்ந்தவர்கள்; யானோ உடல் உணர்வுகளுடன் வளர்ந்தவன்; பல வழிகளிலும் வெறுப்பை உண்டாக்கக் கூடிய இழிவான செயல்களைச் செபவன். உன் பெருந்தன்மையால் அவற்றைப் பொறுத்துக்கொண்டு என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் நீ என்னையும் உடையவனாகவே இருக்கின்றாய். ஆகவே நீ என்னை விட்டுவிட முடியாது விட்டுவிடவும் வேண்டாம். அதாவது என் சுதந்திரம் எல்லாம் இழந்து சுயமுனைப்பின்றி நிற்கின்றேன் என்டது.
செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கனுடப் புண்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமில7
அழுக்குமணத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே. உடலைத் தான் என்று கருதும் மயக்கத்தை விட்டுவிடும் போது பரத் துடனாகும் நிலை சாத்தியமாகும் என்பது. அதற்கு எல்லாவற்றையும் இழந்த சரணாகதி நிலை அவசியம் நாமும் மனந் துயராகிச் சரணாகதி நிலையடைய முயற்சிப்போம்.
26 நற்சிந்தனைகள் நாற்பது

நின்னை வந்திப்பதோர் நெறியறியேனர்
உயிரினங்களை ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறி வுயிர், ஐந்தறிவுயிர் என ஐந்து பிரிவுள்' அடங்கக்கூடிய வகை பிரித்துப் பார்த்த மனிதன் தன்னை மட்டும் ஆறாவது பிரிவுளடக்கி வைத்துக் கொண்டான். அப்படிப் பகுப்பதற்கு அவன் பகுத்தறிவென்னும் சுயசிந்தனைத் தெளிவே வழி செய்தது என்பது உண்மைதான் கிடைக்கின்ற கருத்துக்களைத் தொகுத்து ஆய்வு செய்து முடிவுகளைக் கண்டுகொள்ளக் கூடிய பக்குவ நிலையொன்று அவனுக்கு இருந்ததென்னவோ உண்மைதான். ஆனால் அந்த ஆய்வு நெறிக்கும் ஒரு எல்லையுண்டு. ஒரு நிலைக்கு அப்பால் அந்த ஆய்வு நெறிகள் செல்லுபடியாகா. உலகியலைச் சார்ந்த ஆய்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக் கலாம். அதே வேளை இறையுணர்வு பற்றிய சிந்தனைகள் வளர்வதற்கிடமில்லை. சிந்தையும் மொழியும் சொல்லா நிலைமையதான அப்பகுதி வாழ்வியலின் ஏனைய பகுதிகள் கொண்டு ஓரளவு சிந்திக்கப்படலாம்.
எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு பெ7ல்லாப் புழு மலி நோய்ப் புன்குரம்பை தல்லார் அறிந்திருப்பர். அதனால் இந்த உடம்புடனாய தொடர்பினின்றும் பிரிந்திருப்பார்கள். வேறெதுவுஞ் செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை. பெருமழை பொழிகின்ற போது வெள்ளத்திலே தோன்றுங் குமிழிகள் நாம் பார்த்திருக்கவே ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுவதையும் மறைவதையும் பார்க்கின்றோம். அந்த நீர்க்குமிழிகளின் தோற்றமும் மறைவும் போன்றதுதான் எமது வாழ்வு அதனாலேதான்,
“யாக்கையை யாப்புடைத்தாய்ப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க . . . . . . . . . . . . και ο
என்று வற்புறுத்தினர் நாலடியார் என்னும் நூலுடையோர். யாக்கை உறுதியுடையதாக இருக்கும் போதே அதனாற் பெற்றுக் கொள்ளக்கூடிய பயனைப் பெற்றுவிட வேண்டும். ஏனெனில், மனப்பறையாய் ஒலித்த ஒலி பிணப்பறையாய் ஒலிக்கும் நிலை விரைவில் வரும் கற்றத்தார் கூட்டத்தினராக அழும் நிலை ஒன்று
நற்கிந்தனைகள் நாற்பது 27

Page 20
வந்து சேர்ந்து விடுமென்பதால் பயன் கொள்ள முடியாததொரு நிலை உருவாகும். அதன் முன் அதைத் தக்கவாறு பயன்படுத்த வேண்டுமென்பது தெளிவாகின்றது.
இது இவ்வாறாக, உளத்தின் நிலை சிந்திக்கப்பட வேண்டியது. சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டு, மின்கணினார் நுடங்குமிடையார் வெகுளி வலையிற்பட்டு, மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத்திடவுடைந்து இளைந்துவிட்ட நிலை. வாழத் தெரியாத, வாழக் கருதாத நெஞ்சமே நீ கேடுனக்குச் சூழ்கின்றாய்; உன் பாழ7ய்ப்போன வாழ்வு இல்ல7 தொழிக்கப்பட வேண்டுமெனில் மதுகர முரலும் தாரோயை வாழ்த்து , வணங்கு. ஒரே வழி சிவாயநம என்று சிந்தித்தல், என்பது ஒளவையார் அறிவுறுத்தல்.
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அப7ய மொருநாளு மில்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம்
விதியே மதியாய் விடும்.
புத்திசாதுரியமான செயல் இ.தொன்றுதான் என்பது அவர் முடிபு. அது சரிதான் என்பதை உறுதி செய்வதாக சிந்தனை நின்தனக்காக்கி நாயினேன்றன் கண்ணிணை நின்திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கிவாக்குன் மணிவார்த்தைக்காக்கி ஜம்புலன்கள் ஆர வந்தனை, என்று மணிவாசகர் சிவமயமாதலைக் காணுகின்றே7ம் தந்தது உன்தன்னை , "கொண்டது என்தன்னை சங்கரா யார்கொலோ நிறமை மிக்கவர் என்கின்றார்கள். காலமல்லாத காலத்திற் பழுத்த வம்புப் பழம் போன்று பொருத்தமற்று, அதாவது பக்குவமடையு முன்பாக உன்னிடமாகிவிட்டேன். செம் பொருட்டுணிவே, சிவபெருமானே, எம பொருட்டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் செம்மை யேயாய சிவபதமளித்த செல்வமே, செப்புதற்கரிய செழுஞ்சுடர் மூர்த்தி உன்னை வந்திப்பதோர் நெறியறியேன். உன்னை வழிபடும் முறை தெரியவில்லை, உன்னையே அறியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலான புதுமை உன்னை அறியக்கூடிய அறிவு என்னிடம் இல்லையே என்பதுதான்! என்று துன்புறுகின்ற7ர்கள். அவர்கள் திருவடிமலர்களைச் சார்ந்து இறையின்பம் பெறுவோம்.
28 நற்சிந்தனைகள் நாற்பது

நின் திருவடிக்காம் பவமே அருதுநகண்டாப்
அறநெறி வழிச் செலுத்தப்படவேண்டியது மனித வாழ்வு அதனாலேதான் தருமம் தலைகாக்குமென்றனர் நம் முன்னோர். அறஞ்செய வரும்பு என்றார் ஒளவைப்பிராட்டியார். அறம் இருவகையினது ஒன்று மனையாளொடு கூடி விட்டிலிருந்து செய்யப்படுவது மற்றையது எல்லாவற்றையும் துறந்து ஐம்புல இன்டங்களை ஒதுக்கிய நிலையிற் செய்யப்படுவது பொருத்தமான இல்லத் தலைவி பிள்ளைகள், வேண்டியவராயமைந்த சுற்றத்தவர், வீடு வாயில், பொருள் பண்டம் என்பவற்றுடன் கூடியது தான் இல்லற வாழ்வு விட்டு வாழ்விற்குரிய ஒழுங்கான நெறியில் எமது வாழ்வை அமைத்தால் அது இல்லாற வாழ்வு எனப்படலாம். இந்த உலகியலில் நம் கண்ணிற் படுவன எல்லாம் பொய், பூமி பெ7ய், எனவே பூமியிற் காணப்படும் தோற்றங்களும் பொய், என்று கண்டு தாமரை இலை நீர் போற் பட்டும் படாமல் வாழ்வதுதான் துறவறம். இவற்றுக்குமேல் இன்னொரு நிலையும் உண்டு. ஞானியர7ய் வாழ்வது அது மேலானதுய உணர்வுடையவர்களாகி அகக் கண்ணால் இறைவனைக் கண்டு தரிசிக்கும் நிலை அது எனலாம். எல்லோர்க்கும் பொதுவான குறிக்கோள் ஒன்று அமைய வேண்டியது அவசியம். அதுதான் வையத்து வாழ்வாங்கு வாழுதலாம். அதாவது இல்லற நெறியில் நிற்போர், துறவறநெறியில் திற்பே7ர், மேலான ஞானநெறிப்பட்டோர் என்றிவர்களெல்லாம் தத்தமக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை முறையில் மாறுபடாதவராகச் சென்று கொண்டிருக்க வேண்டும். எந்த நிலையில் நின்றாலென்ன சிவ சிந்தையுடன் எல்லாம் நடைபெற வேண்டும் எனச் சித்தத்தைச் சிவன்பால் வைத்து வாழ்ந்தால் அவர் இல்லறத்தாராயினும், இறுதியில் எல்லாவற்றையும் ஒன்றாகவே கானும் நிலையொன்று உருவாகும். எல்லாம் இறைவன் உடைமை என்ற எண்ணம் பதிவாகும் நிலையில் ஒடு வேறு செம்பொன் வேறு என்று தெரிவதற்கில்லை. இறைவன் அருட்செயல் வழிதான் எல்லாம் என்று உணரும் நிலை கைவரும்போது தாழ்வு உயர்வு என்று மாறுபடுத்திப் பார்க்கும் இயல்பு மறைந்துவிடும். கயிற்றின் வழிப் பம்பரங்கள் சுழல்வது போன்று நாமும் அவன் வழிக் கயிற்றிற
நற்கிந்தனைகள் நாற்பது 29

Page 21
சுழல்கின்றோம். வல்லவன் பம்பரம் மணலிலும் சுழலுமல்லவா! அந்த வல்லவன் சுழற்றலில்-திருப்பெருந்துறையில் ஒன்று சுற்றத்தொடங்கியது. வேகம் தளரா வகை அது சுழன்று கொண்டே இருந்தது. இருக்கின்றது.
புலையனேனையும் பொருளென நினைந்துன் அருள் புரிந்தனை பொருத்தமற்றவனாகிய என்னை ஒரு மனிதனென்று மதித்து அருள் புரிந்துவிட்டாய். அந்தக் கிடைத்தற்கரிய நிலை கிடைத்ததும், அதை அறிந்து கொள்ள முடியாத யான் இது எனக்குக் கிடைக்கக் கூடியதா இல்லையா என்று தரப்படுத்திப் பார்க்கக்கூடிய அறிவு வளம் இல்லாத யான்- உணர்வின்றித் தலையால் நடக்கத் தொடங்கிவிட்டேன். அற்பருக்குப் பவுசு வந்தால் அர்த்த இராத்திரியிற் குடைபிடிப்பர் என்னுங் கருத்தமைதி போன்று யானுந் தலைகால் தெரியாது நடந்துவிட்டேன்.
தவமே புரிந்திலன் தண்மல ரிட்டுமுட் டாதிறைஞ்சேன் அவமே பிறந்த அருவினை யேனுனக் கன்பளுள்ளாஞ் சிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின் திருவடிக்காம் பவமே யருளுகன் டாய்அடி யேற்கெம் பரம்பரனே
என்று வருந்துகின்றார் மணிவாசகர். தவஞ் செய்யவில்லை. பூ வைத்து வணங்கவுமில்லை. மிகுந்த வினையுடையவனாகி யான் வனாகப் பிறந்துவிட்டேன். இல்லை தெரியாத்தனமாகப் பிறந்துவிட்டேன். மங்கள கரமான த்யர்ந்த செல்வத்தையும் பெற்றதில்லை. நான் நாயிற் கடைப்பட்டவன்தானே!
நாயிற் கடையாம் நரயேனை நயந்து நீயே ஆட்கொண்டாய்
மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டிருக்கும் அதவன்றி
ஆயக் கடவேண் நானோதரண் எண்ன தேரவிங் கதிகாரம்
காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய் கண்ணுதலே
குறைந்தது உன் திருவடிகளை வழிபடக் கூடிய பிறவிகளையாவது அருளுவாயாக என்று மிகுதியாகத் துன்புற்ற நிலையில் வேண்டுகின்றார்கள். யாமும் அவர்களுடனாகி இறை திருவடி மலர்களைப் பணியும் பெரும்பேறு பெறுவோம்.
30 நற்கிந்தனைகள் நாற்பது

ஆசை அலுமின்
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லாலெந்தன் மூச்சை நிறுத்திவிடு. தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லாலதிற் சிந்தனை மாய்த்துவிடு. என்பது மகாகவிபாரதியார் முழக்கம் மோகம் - ஆசைப் பெருக்கம் அதனை இல்லாமலாக்கிவிட வேண்டும் முடியவில்லையென்றால் மூச்சையே நிறுத்திவிட வேண்டும், என்பது அவர் வேண்டுகோள். “வெள்ளக் கருணையிலே இந்நாய் சிறு வேட்கை தனியாதோ' என்றும் வினயமாகக் கேட்கின்றார்கள். பிறவித் தொடருக்குக் காரணம் ஆசைதான் என்று கண்டுகொண்ட அறிஞர்கள் அதனை நீக்கவேண்டும்- இல்லையென்றாகும்படி செய்ய வேண்டும்- என்று விரும்பினர். அந்த வகையில் எழுந்ததுதான் திருமந்திரம் தரும் Gettilap)
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனே7 டாயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே. என்பது திருமுலர் சொல்லும் அனுபவ மந்திரம் தேவைகள் பெருகப் பெருகத் துன்பங்களும் பெருகிக்கொண்டே போகும் நூறு வைத்திருப்பவன் இருநூறுக்கு ஆசைப்படுகின்றான். இருநூறு வைத்திருப்பவன் நாநூறையும், நாநூறு வைத்திருப்பவன் என்னுறையும் எதிர்பார்க்கின்றனர். உள்ளதை வைத்துக் கொண்டு திருப்தி அடைபவர் யாரையுங் காண முடிவதில்லை. எவ்வளவு பெற்றாலும் மனம் நிறைவடைவதாக இல்லை. இந்த உலகம் முழுமையாகக் கிடைத்தாலும் அடுத்த உலகமும் எமதாக வேண்டும் என்னும் பேய்மனம் படைத்தவர்கள் நாங்கள். போகப் போக ஆவலும் உயர்ந்து கொண்டே போகிறது. அவற்றுடன7கித் துன்பங்களும் உயிரைக் குழக்குமளவிற்குப் பெருகுகின்றன.
"ஈட்டலுந் துன்பமற் ஈட்டிய ஒன்பொருளைக்
காத்தலு மாங்கே கடுந்துன்பம் - காத்தல் குறைபழற் துன்பம் கெடிற்றுன்பம் . . . . . . . 鼎鼎
நற்சிந்தனைகள் நாற்பது 3.

Page 22
நிலையுடனாகி இருத்தல். புனிதமான உள்ளத்தொடு புனிதன்தாள் போற்றி புண்ணியம் காண்போம். என்று ஒரே துன்பத் தொடர்ச்சியைத்தான் பார்க்க முடிகிறது. ஆசைப் பெருக்கங் காரணமாக, யாம் அளவைமிறி எல்லாவற்றையும் அனுபவிக்க விரும்புகிறோம். அவை எத்தனை வகையினவான தொல்லைகளை வளர்த்து விடுகின்றன. மன அமைதியையுங் கெடுத்து விடுகின்றன. எந்த நேரமும் செத்துக் கொண்டே இருக்கவேண்டிய நிலை உருவாகிவிடும்.
அவ்வளவிற்குப் பொல்லாத ஆசை ஈசனொடு கூட இருக்கக் கூடாது என்று ஒரு புலமையாளன் சொல்ல , "மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்’ என்று வேண்டுதல் செய்கின்றார் காரைக்காலம்மையார். ஆசையினின்றும் தவறிக்கொள்ள வேண்டும் என்று தன் இளமையான அழகிய உருவிலேயே மாற்றம் நடைபெறச் செய்த உயர்ந்த சிந்தனையாளர் அவர், இறைவனிடத்து ஆரா அன்பு பெருக்கெடுத்தோடிய மாணிக்கவாச சுவாமிகள் ஆசைப்பத்து என்னும் பெயரில் ஒரு பதிகமே பாடி எம்மைத் திணறடிக்க வைத்துவிட்டார். எல்லையற்ற அமுதக் கடலாய மாணிக்க வாசக சுவாமிகளின் உள்ளத்திலே பாய்ந்து கொண்டிருந்த தித்திக்கும் சிவ பெருமானை எல்லோரும் அனுபவிக்க வேண்டுமென்று விரும்பினாரோ என்னவோ,
LSL S SSSSLS SSLSSL SLLSL SLS S SLLL S S LSL SY S S LS S S S S S0SL S SL S SLSLS S S SLL S S SLSLSLSL S SLL S SL வாவென் றங்கே கூவும் அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன் . . . . . . .." ". . . . . . . . . . . . . . . . . . . . . . . என்னா ரமுதேயோ
py
அப்பா காண ஆசைப்பட்டேன் . . . . . . . . . . . . . ". . . . . . . . . . . . . . . . . . . சிவனே சிறிதென் முகநோக்கி
y»y
ஆவா வென்ன ஆசைப்பட்டேன் . . . . . . . . . . . . ". . . . . . . . . . . . . . . . . . . . . உன்திரு மலர்ப்பாதம்
gy
அடைந்து நின்றிடுவான் ஆசைப் பட்டேன் . . . . . . . . “எளிவந் தென்னை ஆண்டு கொண்ட என்னா ரமுதேயோ
sy
அளியன் என்ன ஆசைப் பட்டேன் . . . . . . . . . . . . .
32 நற்கிந்தனைகள் நாற்பது

"முத்தா உன்தன் முகவொளி நோக்கி முறுவல் நகைகான
அத்தா சால ஆசைப்பட்டேன். . . . . . . . . . . . . . . . "பேரா யிரமும் பரவித் திரிந்தெம் பெருமான் என ஏத்த ஆரா அமுதே ஆசைப்பட்டேன் . . . . . . . . . . . . . . και η
"ஐயா என்றன் வாயா லரற்றி அழல்சேர் மெழுகொப்பு
ஐயாற் றரசே ஆசைப்பட்டேன் . . . . . . . . . . . . . . . "படிதா னில்லாப் பரம்பரனேயுன் பழவடி யார்கூட்டம்
y
அடியேன் காண ஆசைப்பட்டேன் . . . . . . . . . . . . .
"பஞ்சே ரடியாள் பாகத் தொருவா பவளத் திருவாயால் அஞ்சேல் என்ன ஆசைப்பட்டேன் . . . . . . . . . . . . y»
என்று பத்து வகையினவான ஆசைகளைக் குறிப்பிட்டுள்ளார். சிவத்துடனாகிய ஆசைகள்; சிவத்திற்கே சமர்ப்பணமாகின்றன. தான் சிவனைக் காணவும், சிவன்தன்னைக் காணவும், அவன் அருளைப் பெற்றுக் கொள்ளவும், பரவி ஏத்தவும், ஏத்தி உருகவும் விளைந்த ஆசையை இந்தப் பதிகத்திலே மாணிக்கவாசக சுவாமிகள் சொல்லியுள்ளார்கள். அதே சுவாமிகள் "வேண்டத்தக்க தறிவோய் நீ” என்றும், "வேண்டும் பொருளொன்றுண்டென்னில் அதுவும் உந்தன் விருப்பன்றே" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. என்பது வள்ளுவர் பொதுமறை தருங் கருத்து வயிற்றினுட் சென்ற நஞ்சாம் அமுக்கை அவசர அவசரமாக வெளிக் கொணருவதற்கு மற்றொரு அழுக்கு நீராகிய சவர்க்காரக் கரைசலை மிகுதியாக வயிற்றினுள்ளே செலுத்துவர். இந்தச் சவர்க்காரக் கரைசல், முன்பாகவே அங்கு நின்ற அழுக்கையும் கொண்டு வெளியேறிவிடும். பற்றற்றான் பற்றினைப் பற்றுவதன் மூலம் முன்னைய பற்று நீக்கம் பெறும் என்பது அற்றது பற்றெனில் உற்றது விடு என்பதைத் தெளிந்து வாழ்வோமாக
நற்சிந்தனைகள் நாற்பது 33

Page 23
Ær Søfrotif
ஆசைகளினுடனாகி அவற்றின் பின்னே மனிதன் நெடுந்துரம் சென்றுவிட்டான். இந்த உடம்பு ஏன் கிடைத்தது என்பதை, அதன் நோக்கத்தை அவன் அறிய முயற்சிக்கவில்லை. "இந்த உடம்பு எமக்குக் கிடைத்தது நாம் இறைவனை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்' என்று எங்கள் நாவலர் பெருமான் சொன்ன கருத்தையும் அறிந்து கொள்ளவில்லை. தன் சொந்த அபிப்பிராயங்கள் கொண்டு உலகியல் ஆசாபாசங்களுக்கு அடிமையாகிவிட்டான். கடவுட் பற்றில் ஊன்றிநிற்க வேண்டியவன், அதை விடுத்து உலகியலுடனாகிய தனது சிந்தனைகளைக் கடவுளின் சிந்தனைகளென்றும் சொல்லத் தொடங்கியுள்ளான் எந்த வகையிலுந் தனக்குத் தொடர்பில்லா தவற்றை யெல்லாந் தன்னுடையவையாக்கிப் பார்க்க விரும்புகின்றான். இறைவழிபாட்டுச் சிந்தனையினின்றும் அவன் விலகிக் கொண்டிருக்கின்றான். இறை வழிபாடு செய்வதையும் தன் வருவாய்க்கு ஆதரவு தரக்கூடியதென்று கண்டால் அந்த வழியிற் பயன் படுத்தத் தவறவும் மாட்டான். அந்த அளவிற்கு மனித மனம் வளர்ந்துள்ளமை எமது சிந்தனைக்குரியதாக வேண்டும்.
ஆசை வளர வளரத் துன்பங்கள் மலிந்து கொண்டே இருக்கும் பற்றுக்களை அடக்க வேண்டும். அதற்குரிய ஒரேயொரு வழி ஆசைகளைத் துறக்க வேண்டும். இல்லை அவை அவையாகவே அடங்க வேண்டும். அதற்குரிய ஒரேயொரு வழி " சிவாயநம ' வென்று சிந்தித்துப் பற்றுக்களைச் சிவ நெறியிலே, தர்ம வழியிலே செலுத்துவது மாணிக்கவாசகம் சொல்லுகின்றது.
குதுகுதுப் பின்றிநின் றென்குறிப் பேசெய்து நின்குறிப்பில் விதுவிதுப் பேனை விடுதிகண் டாய்விரை யார்ந்தினிய மதுமதுப் போன்றென்னை வாழைப் பழத்தின் மனங்கணிவித் தெதிர்வதெப் போது பயில்விக் கயிலைப் பரம்பரனே ஆள்வாரிலி மாடு என நின்ற என் மனம், கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு உலகியலையே தஞ்சமெனக் கொண்டு உழன்ற என்
34 நற்கிந்தனைகள் நாற்பது

சிந்தை, இப்போது வயமாகியுள்ளது. என்னை விட்டுவிடாதே என்கின்றார் மணிவாசகர். கயிலையில் எழுந்தருளியுள்ள எல்லோர்க்கும் மேலாண்gவனே, உன்னைச் சார்ந்திருப்பதிற் கொஞ்சங்கூட விருப்பமில்லாதிருந்த யான் என் மனதிற் தோன்றியதை யெல்லாம் செய்தேன். அனைத்தும் ஈசன் செயல் , எனவே அதுவும் உன் திருவுளக் குறிப்பு என்று உணருகின்றேன். இப்படி முரணான சிந்தனபுடைய என்னை நீவிட்டுவிட வேண்டாம் வாழைப்பழம் போன்று என் மனதை நன்கு கனியச் செய்து வாசனை பொருந்திய தெளிந்த இனிய தேனை அப்பழத்துடன் கலப்பதால் உண்டாகும் அரிய சுவையைப் போன்றதொரு நிலையில் நீ எதிர்ப்படுவது எப்போது என்பதாக அத்திருவருட்பாடல் தரும் செய்தியைக் காணுகின்றோம்.
தரும வழி அது நீண்ட தொலை தூரமான வழி அதன் முடிவிடம் சுவர்க்கமாகத்தான் இருக்க முடியும் பொய்ச்சார்புகள் விடுபட மெய்ச் சார்புணர்ந்து ஒழுகுவதற்குரிய இடத்தான் அது. இந்த முடிவிடந்தான் அறத்திற்குரியது. மனத்துக்கன் மாசில7ைந் தன்மையதான இடம் என்று சொல்வதும் பொருந்தும் புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்குதல் தருமநெறி மேலாகிய நன்னெறிக்கன் செல்வது அறம் அறவழி செல்பவர்களுக்குப் பொய் எது மெய் எது என்ற வேறுபாடு தெரியும் அவர்கள் துய்மையையே காண்பர். பொய்யில் காட்சி அவர்கள் காண்டது. உண்மைப் பொருளையே அவர்கள் கண்டு கொண்டிருப்பர். அப்பொருளை, இமைப்பொழுதும் பிரிந்திருக்க மாட்டாதவர்கள்; ஆரங் கண்டிகை ஆடையுங் கந்தையே பாரம் ஈசன் பணியல தொன்றிலர் ஈர அன்பினர் யாதுங் குறைவிலர் வீரம் என்னால் விளம்பும் தகையதோ இறைவனைச் சிக்கெனப் பிடித்தவர்கள், சிந்தை முழுவதும் அவனையே காண்பவர்கள். ஈர அன்பினர்; மறப்பு நினைவு இன்றி அவனாகவே இருப்பவர்கள். அந்த நிலையிற் படிந்து மேலான வாழ்வு காண முயற்சிப்போம்.
நற்சிந்தனைகள் நாற்பது 35

Page 24
மாஸ்றியா நாண்முகனூர் கானா மலை
பணம் பதவி போன்றவை மனித மனத்தை மாசுபடுத்திக் குற்றத்திற்குள்ளாக்கக் கூடிய வல்லமை வாய்ந்தவை. எவ்வளவு உயர்ந்த ஆற்றல், தற்றுணிபு உடையவர்களும் பதவி காரணமாகவோ பணம் காரணமாகவோ சலனமடைவதுண்டு. "செல்வம் வந்துற்ற காலைத் தெய்வமுஞ் சிறிது போனார், சொல்வன அறிந்து சொல்லார், சுற்றமுந்துணையும் நோக்கார்’ என்பதொரு பாடற்பகுதி செல்வத்திற்கு முதன்மை கொடுப்பவர்கள் நிலை பற்றிக் கூறுகின்றது. "புல்லுக் கட்டும் விறகும் சுமந்த பேர் பூர்வ காலத்துப் புண்ணிய” வசத்தினாற் சொல்லுக்கட்டும் பணக்கட்டும் வந்தபின் மற்றையேர்க்குப் பழிச்சொல் வரக்கூடிய வகை எதையுஞ் செய்யத் தயங்கமாட்டார்கள் என்று மற்றறொரு தனிப்பாடல் பேசுகின்றது. பொருளுக்கு முதன்மையளித்தால், அல்லது பதவிக்கு முதன்மையளித்தால் அவற்றின் வழிதான் நாம் செல்லவேண்டியிருக்கும். அதனால் நாம் நம் நிலைமையை மறந்து நடக்கத் தொடங்குவோம். அவற்றுக்கு முதன்மை கொடுக்காது அவற்றைப் பின்னாக்கி தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவோராக நாம் மாற வேண்டும். சங்க இலக்கியமெனும் புறநானூற்றில் உள்ளதொரு பழந்தமிழ்ப் பாடல் "சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்து வழிபடூஉம் தோற்றம் போல’ என்று பேசுகின்றது. இதனைப் பாடிய கோவூர்கிழார், பயன்படுத்திய தேவை வேறு எனினும், காட்டிய உண்மை பொதுவான்து , உயர்வானது. எமது சிந்தனைக்கு அமுதாவது உறுதிப் பொருள்கள் பற்றிய வரிசையில் நூலமைத்த வள்ளுவர் அறத்தைப் பொருளின்பங்களுக்கு முன்னதாகத்தானே வைத்தார். அறத்தை உள்ளிடாகக் கொண்டு பொருளின்பங்கள் இயங்க வேண்டுமென்பதைத் தமது செயல் கொண்டு உணர்த்தியுள்ளார்கள். தரும சிந்தனையுடன் பதவியையோ பணத்தையோ அணுகும்போது அங்கு தவறேதும் நிகழ இடமில்லாது போய்விடுகிறது. நிதி நேர்மை பணியிற் பற்று என்பவற்றை உடையவன் தன் நிலமையைத் துவுர்பிரயோகம் செய்யமாட்டான். தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகும். நீதி ! நிதி தெய்வந்தானே ! “பங்கயத்தயனு மாலறியா நீதியே” என்று மணிவாசக சுவாமி விளிக்கின்றார்களே. கடவுளைத்தானே
36 நற்சிந்தனைகள் நாற்பது

விளிக்கின்றார்கள். “அறத்தாறிதுவென வேண்டா, சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடைக் காணவேண்டு மென்கின்றார் வள்ளுவர். சிவிகை சுமப்பவன் தொழிலாளிகை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்பது பாரதியார் அறிவுறுத்தல்.
பிரமா விஷ்ணு இருவருக்கும் படைத்தல் காத்தல் எனும் செயல்களுடனாகிய பதவிகள் கிடைக்கின்றன. பதவி அவர்களை ஆட்கொண்டு விட்டது. தனித்தனி தாந்தாம் முழுமுதல் என்று எண்ணத் தலைப்பட்டனர். பித்தேறிய நிலையிலே தலையால் நடக்கத் தொடங்கினர். அவர்கள் உள்ளத்தில் வெளிப்பு வரவேண்டுமே என்ற எண்ணத்தால் இறைவன் சோதிவழவினனாகி அடிமுழ காணும்படி பணிப்பு வழங்கினார். அங்கேகூட தன்முனைப்பு மிகுதியால் நான் முந்தி நீ முந்தி என்று செயலில் இறங்கி ஆற்றாமையுடன7கி இறைவனைப் பணிகின்றனர். படைத்தற் கடவுள் காத்தற் கடவுள் எனற உயர்நிலை பெற்றவர்களாயிருந்தும் பதவிக்கு அடிமையாகிய காரணத்தால் இறைவன'அடியையோ முழயையோ கான அவர்களால் முடியாது போய்விட்டது.
அவனருளாலேதான் அவன்தாள் வணங்க வேண்டும். அந்தச் சிந்தனை பிரம7விற்கோ விஷத்ணுவிற்கே7 இல்லை. அவர்கள் செருக்கு அப்படி என்ன அவர்களை விடவில்லை. இந்த நிலையை உலகம் உனர்ந்துகொள்ள வேண்டுமென்ற உயரிய சிந்தனைக்குள்ளாகிய சம்பந்தப் பெருமான் தமது தேவாரத் திருப்பதிகங்களின் ஒன்பதாவது பாடல்கள் தோறும் பிரம விஷ்ணுக்களின் செயலைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏனையோரும் அங்காங்கு சுட்டிக் காட்டியுள்ளார்கள். குஞ்சரமிதும் பஞசனை மிதும் குலவிய காலமே7 காலம் என்று அவற்றின் கழிவில் பழைய நிலைமைக்குள்ளாகி விடுவோம்.
அ.தொரு பெரும்மலை. கண்தெரியாதவன் கண்ணிற் கூட பட்டுவிடக் கூடியது. அந்த மாபெரும் மலை நான்முக துக்குந் திருமாலுக்குக் தெரியாது போனமை புதுமைதான். மணிவாசக சுவாமிகள் "மாலறியா நான்முகனுங் காண மலை’ என்று காட்டிய இறையை வாழ்த்தி வணங்குவோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 37

Page 25
சங்கரா ஆர்கொலோ சதுரர்
தமிழ் மூதாட்டி ஒளவை நான்கைக் கொடுத்து மூன்றைக் கேட்டவர். அதுவுஞ் சுவைமிகுந்த நான்கைக் கொடுத்து மூன்றைத் தரும்படி வேண்டியவர். கூர்த்த மதியுடைய கிழவி முருகக் கடவுளிடம் சுட்டபழம் பெற்றுத் தோல்வி கண்டதென்னவோ உண்மைதான் இங்கே விநாயகனிடம் நான்கு தருகிறேன் மூன்றுதா, என்னும் போது ஏதோ சிந்தனை செய்யத்தான் வேண்டும்.
அதே கிழவி அவசர அவசரமாகப் பூசை செய்த போது, பொறுமையாகப் பூசனையை நிறைவு செய்யுமாறு பணிக்கப்பட்டாரே! அதன் பயன் கைலை நோக்கிய பயணத்தில் பாட்டி எந்தவித பிரச்சினையையும் அநுபவிக்க வில்லை. மாறாக, மிக இலகுவான வகை, விரைவாகத் தமக்கு முன்னே பயணிக்கத் தொடங்கியவர்களையும் முந்திக் கொண்டு கைலையை அடைய முழந்தது.
சீர்காழியில் தோனியப்பர் கோயிற் குளக்கரை யிலிருந்து அழுத குழந்தைக்கு ஞானப்பாலுட்டி ஞானக் குழந்தையாகக் கண்டமையால் துன்பந் தாளாநிலையிற் பொற்றளம் கொடுக்க நேர்ந்தது. தொடர்ந்து முத்துப் பல்லக்கு, முத்துக் குடை, முத்துச் சின்னம் முதலானவையுங் கொடுக்க வேண்டி வந்ததே.
திலகவதியாரின் ஓயாத வேண்டுதலால், தருமசேனர் என்னும் பெயருடன் சமண மதத்தைச் சார்ந்துள்ள மருணிக்கியார் குலை நோயினாற் பாதிக்கப்படுகின்றார். சிவன் திருவிளையாடலாக வந்த நோயெனவே, அக்கா திலகவதியார் திருநீறிட நோய் குணமாகியது. எனவே சூலை நோயினால் ஆட்கொள்ளப்பட்டவர் என்பது தெரிகின்றது. அதனால் அப்பரைச் சார்ந்து நீற்றறையில் வெந்து போகும் நிலையும் கல்லுடனாகிக் கடலில் அமிழும் அனுபவமும் பெறவேண்டியதாயிற்று.
வயது முதிர்ந்த கிழப் பிராமணராகிப் புத்தூர் சடங்கவி சிவாசாரியார் விட்டின் திருமணப் பந்தருள் மணமகனாகி வந்திருந்த நம்பியாரூரரைத் தம் அடிமையென அழைத்துச் சென்று
38 நற்கிந்தனைகள் நாற்பது

திருவெண்ணெய் நல்லுர் கோயிலுளான்தான் தாமென உணர்த்துகின்றார்கள். உலக புந்தத்துள் ஈடுபட விடாது தடுத்தாட் கொண்டமையால் பின்னர் திருவாரூரில் நட்டநடு நிசியில் பரவையாரிடம் நடந்து திரிய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. துதுவராகித் துணிந்து நிற்க வேண்டியதாயிற்று.
திருப்பெருந்துறையிற் குருமந்தமர நிழலிற்குருவாகித் தன் சிஷ்யர்களுக்கு உபதேசம் செய்கின்றான் இறைவன். பாண்டியன் முதன் மந்திரியாகிச் சேவுகஞ் செய்த மணிவாசகர்திருப்பெருந்துறை வருகின்றார். குருந்தமர நிழல் உபதேசத்திலே தன்னையிழந்தார். அந்த உபதேசத்தினால் தம் கூட்டத்துள் அகப்படுத்தியுள்ளார். இந்த நிலைமை நரிகளைப் பரிகளாக்கி அவமானப்பட வைத்தது; செம்மணச் செல்வியாரின் உதிர்ந்த பிட்டிற்காகப் போய் வைகைக்கரையில் அடி வாங்கவும் நேர்ந்தது என்பது நாமெல்லாம் அறிந்ததுதான்.
அவை ஒரு புறமாக , மணிவாசக சுவாமிகளே கேட்டு விடுகிறார்கள், “அன்றே என்தன் ஆவியும் உயிரும் உடமையெல்லாம் குன்றே அனையாய் என்ை ஆட்கொண்டபோதே கொண்டிலையோ! இன்றோர் இடையூறெனக் குண்டோ” என்றவர் “தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை, சங்கரா ஆர்கொலோ சதுரர்” என்று பெருமிதத்தோடு கேட்கின்றார்கள். உன்னை யான் பெற்றதால், “அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன்; யாது நீ பெற்ற தொன்றென்பால்” என்று தன் பேரானந்தப் பெரும் பேற்றினைச் சொல்லி மகிழுகின்றர்கள். இறைவனால் ஆட்கொள்ளப்படும் ஒவ்வொருவரும் இவ்வண்ணம் பெரும் பேரின்பப் பேற்றில் திளைக்கின்றனர் என்று தெரிகின்றது.
“கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்கக்
காலிற் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க வில்லால் அடிக்க அந்தவேளை
யாரை நினைத்திரோ ஐயா" என்பதொரு பாடற் பகுதியும் நம் காதிற் ஒலித்த வண்ணமே இருக்கிறது.
நற்சிந்தனைகள் நாற்பது 39

Page 26
திருவெம்பாவை
மார்கழி மாதத்தில் நோற்கப்படும் சிறப்பானதொரு விரதம் திருவெம்பாவை. மார்கழித் திருவாதிரையை இறுதி நாளாகக் கொண்ட பத்து நாள்கள் இதற்குரிய காலமாகும். கன்னியர்களின் நீராடலையே மாணிக்கவாசக சுவாமிகள் திருவெம்பாவை என்னும் பெயரிற் பாடிவைத்தார் என்ற கருத்தும் உண்டு. மார்கழி நீராடல் மார்கழி முழுமையாக நிகழ்வது என்பதொரு கருத்தும் உண்டு.
அதிகாலையில் மார்கழி நீராடச் சென்ற கன்னியர்கள் பார்வதிதேவியை ஈரமணலில் உருவாக்கம் செய்து வழிபட்டனர். பார்வதிப் பாவையை வழிபட்டு அனுட்டிக்கப்பட்ட நோன்பு பாவை நோன்பு என்றாயிற்று பாவை என்றது பார்வதிப் பாவையை உயர்ந்த குணநலம் பொருந்திய கணவர் கிடைக்க வேண்டும் என்றுவேண்டுதல் செய்து கன்னியர்கள் இந்த நோன்பை அனுட்டிப்பர்.
திருவெம்பாவை பற்றிய திருவாசகத் திருவுள்ளக்கிடை, அப்பகுதியின் உள்ளடக்கமான உயிர்ப்பொருள் எனச் “சக்தியை வியந்தது” என்று குறிப்பிடுகின்றது. சக்தி என்றது பர்வதிதேவியாரை. பார்வதிதேவியாரைப் பாவையாக முன்னர் கண்டோம். எனவே பார்வதிதேவியை வியந்த பாடல் பாவைப்பாட்டு என்று வழங்கியது.
அம்மையப்பனாகிய இறையை அடைவதற்கு அன்பு வழிச் செல்ல வேண்டும். அன்பு நெறி கைகூட வேண்டுமெனில் அன்னையின் திருவருள் நோக்கைப் பெற வேண்டும். அன்னை உபகாரியாக அப்பனை அணுகுவதுதான் எளிதான முறைமை, இறைவன் திருவருட்பார்வையைப் பெறுவதற்கும் தேவியாரின் அனுசரணை வேண்டும். எனவே சக்தியை வழிபட்டுச் சிவானந்தப் பேற்றினை அடையவேண்டுமென்பது புலான7கின்றது. "அம்மையே அப்பா” என்று அம்மைக்கு முதலிடங் கொடுத்துப் பிரார்த்தனைப்பத்தில் திருப்பாடல் செய்தது மூலம், மணிவாசக சுவாமிகளே அதனை அநுவதித்துமுள்ளார்கள்.
40 நற்கிந்தனைகள் நாற்பது

திருவெம்பாவை என்னும் இப்பகுதியிலுள்ள ஒவ்வொரு பாடல் இறுதியிலும் எம்பாவாய் என்றிருக்கும் முழவிடத்தைப் பார்க்கின்றோம். அப்பகுதி தெய்வீகத்தை உணர்த்தும் திரு என்னும் அடையைப் பெற்றுத் திருவெம்பாவை என்று நிற்கின்றது. திருவாசக உண்மை என்னுந் தலைப்பிலமைந்த பாடல்களுள் திருவெம்பாவை பற்றிக் குறிப்பிடுவ தொரு செய்யுள்,
மலவிருளுற்றுறங்காமல் மன்னுபரி ப7கரருள் செலமுமுக வருகவெனச் செப்பல்திரு வெம்ப7வை என்று குறிப்பிடுவது கொண்டு எமது சிந்தையிற் படவேண்டிய கருத்துக்கள் சில உண்டெனத் தெளியலாம். பக்குவமடைந்த ஆன்மாக்களே கன்னியர்களெனக் கருதப்பட்டனரென்றும் இறைவன் தலைவன் எனக் கொள்ளப்பட்டானென்றும், மலப்பிணிப்புடன7கிக் கிடக்கும் ஆன்மாவின் நிலை துயிலுதல் என்றும், அந்தப் பிணிப்பிலிருந்து விடுபடுதல் துயிலெழுப்புதல் என்றும், பக்குவமடைந்த ஆன்மாக்கள் பக்குவமடையாத ஆன்மாக்களை நன்நெறிப்படுத்தல் நீராட அழைத்தல் என்றும் உணர வேண்டும். பண்டைத்தமிழர் கலாச்சாரப்படி ஐந்து முதல் பன்னிரண்டு வயது வரையிலான பெண்கள் எட்டுப் பிரிவுள் அடக்கப்பட்டனர். திருவெம்பாவை முதல் எட்டுத் திருப்பாடல் களும் முன்னே காட்டிய பகுப்புள் முத்தவரானோர் ஏனையோரை வரிசைக் கிரமமாக எழுப்புவதாக அமைந்துள்ளன. முத்தவர்கள் முதலில் துயிலுணர் ந்துவிடுவர். அவர்கள் தம்மோடொத்தவரையே முதலில் எழுப்புவர். அதன் பின்னர் இருவருமாகவும், தொடர்ந்து பின்னர் எழுப்பப் பட்டவர்களுடனுஞ் சேர்ந்து எழுப்புவர். ஒன்பதாவது திருப்பாடலில் எல்லோருமாக இறைவனைப் பாடிப் பரவி வேண்டுதல் செய்தல் பேசப்படுகின்றது. இருபதாவது திருப்பாடல் நீராடல் நிறைவாகியதும் தம்மைக் காத்தருளுமாறு இறைவனை வேண்டுவதாக அமைகிறது. இறைவனைப் புகழ்ந்து வழிபட வாய்ப்பாயமைந்த மார்கழி நீராடலையும் வேண்டுவதாக இதிற் கருத்துண்டு. ஆதியந்த மில்லாதவனே யாம் அடைக்கல மாவதற்கும் பொருத்தமானவன் என்பது அறிவுறுத்தப்படுகிறது.
நற்கிந்தனைகள் நாற்பது 41

Page 27
திருவெம்பாவை -M
ஆதிபு மந்தமு மில்லா அரும்பெருஞ் சோதியை யாம்பாடாக் கேட்டேயும் வாட்டடங்கன் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து போதா ரமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன் ஏதேனு மாகாள் கிடந்தாளென் னேயென்னே யீதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.
தொடக்கம் முடிவு என்பன இல்லாத அரிய பெரிய சோதி வடிவானவர் சிவபெருமான் அவர் இயல்புகள் நாம் பாராட்டுதற்கு எளிதானவையல்ல, எப்படியோ எமக்குத் தெரிந்த அளவில், எமது வல்லமைக்குள் அகப்படுத்தி யாம் அவரைப் பாடுகின்றோம். எம்மால் முடிந்த அளவில் நாம் செய்யும் வாழ்த்துதலைக் கேட்டும் நீ தூங்குகின்றாயே! உன் செவிகள் செவிடானவையாக இருக்கலாமோ! சிவபெருமானைப் புகழ்ந்து நாங்கள் தெருவில் நின்று வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேட்டு, மலர் போன்ற படுக்கையிலிருந்த இவள் பக்தி மேலிட்டமை காரணமாக விம்மி விம்மித் தன்னிலை இழந்து அழுதாள். வேறேதுவுஞ் செய்ய அவளால் முழயவில்லை. அவள் நிலை இப்படியாக எம் தோழியாகிய உன் நிலை இப்படி ஆயிற்றே! அட! இன்னமும் துங்குகிறாயே! என்னே வியப்பு!! என்று சிந்திக்க வைக்கின்றார் மாணிக்க வாசக சுவாமிகள்.
திருவெம்பாவை விரதம் அனுட்டிக்கும் கன்னிப் பெண்கள் வைகறையில் நித்திரைவிட்டெழுந்து கடமைகளை நிறைவு செய்து நீராடும் பொருட்டு நீர்நிலைக்குச் சேர்ந்து செல்வோம் என்பதாக ஒரு திட்டம் போட்டிருந்தனர். குறிப்பிட்டபடி குறிப்பிட்ட மத்திய இடத்துக்கு வாராத சிலரை, முன்னேதுயிலுணர்ந்தவர்கள் சென்று எழுப்புவதாக இத் திருப்பாடற் பொருளை நாம் பார்க்கின்றோம். பிரம விஷனுக்கள் தேடியுங் கண்டுகொள்ள முடியாததாகிச் சோதிப்பிழம்பாக நின்ற அந்த நிலையைச் சிந்திக்க வைக்கின்றது
42 நற்சிந்தனைகள் நாற்பது

"ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ் சோதி” என்னுந் தொடர். எம்போன்றவர்களது அறிவால் உணர்ந்து கொள்ளப்படவும் முடியாதவன் என்பது தோன்ற நிற்கின்றது. "அரும்பெருஞ் சோதி” என்னும் பகுதி
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையிர் சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி யேசு மிடமீதோ வின்னோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசன7ர்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
என்னும் இரண்டாவது திருப்பாடலில், பெண்ணே, இரவுபகலாக நாம் பேசியபோதெல்லாம், என் அன்பு பரஞ்சோதிக்கு என்றாயே! இப்போது மலர் போன்றதாகிய படுக்கையை விடமுடியாத நிலையில் இருக்கின்றாயே! எனவே படுக்கையில் அன்பு வைத்துவிட்டாயோ? என்று துயிலெழுப்ப வந்தவர்கள் வினவ, சிசி இப்படிப்பட்ட சிறுமை வார்த்தைகள் பேசும் முறைமையும் உங்களிடம் இருக்கிறன்றதோ! விளையாட்டாகத் தானும் இப்படிப்பட்ட வார்த்தைகள் பேசுவதற்கு இதுதான7 இடம்!! என்று நித்திரைவிட்டெழுந்து கொண்டிருந்தவள் சொல்லத் தேவர்களே புகழுவதற்கு வெட்கப்படும் மலர் போன்ற திருவடிகளை எளியதாக எங்களுக்குத் தந்தருளும் பொருட்டு இந்த உலகிற்கு வந்தருளிய ஞானாசிரியர், சிவலோகநாயகன், தில்லைச்சிற்றம்பலத்துள்ள ஈசன் ஆகிய சிவபெருமான்மிது செய்யப்படும் அன்பு எத்தகையதாக வேண்டும். அதற்கான நம் தகுதி என்ன? என்கின்றார்கள் வந்தவர்கள்.
இறைவன் புகழ் பேசப்படும்போது விளையாட்டாகக் கூட வீண்வார்த்தைகள் பேசக்கூடாது. இறைவன் திருவடி மகிமையைப் பேச விண்ணவர்களும் கூசுவார். அத்தகையவன் எளியான7கி "மலர்ப்பாதம் தந்தருள வந்தருளுவான்’ அவன் திருவடி மலர்களிற்றோய்ந்து இன்புறுவோம்.
நற்சிந்தனைகள் நாற்பது 43

Page 28
திருவெம்பாவை 2
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென் அத்தன் ஆனந்தன்.அமுதனென் றள்ளுறித் தித்திக்கப்பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர் ஈசன் பழவழயிர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைத்திர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்.
முத்துப் போன்ற வெண்மையான பற்களை உடையவளாகி இனிய புன்முறுவலைச் செய்பவளே, முன்பு எங்களுக்கு முன்னரே துயில் நித்து எழுந்து வந்து என் தந்தை, இன்பமே வடிவானவன், அமுதமானவன் என்று வாயூறி இனிக்க இனிக்கப் பாராட்டிப் பேசுவாய். இப்போது எழுந்து வந்து உன் படுக்கையறையின் வாயிலையாதல் திறக்கின்றாயில்லை. இ.குதென்ன காரணமே7! என்று துயிலெழுப்ப வந்த கன்னியர்கள் கூற, துயிலெழும் பெண், "நீவிர் ஆண்டவனிடம் மிகுந்த அன்புடையவர்கள் , இறைவனுக்கு அடிமைத் திறம் பூண்ட பழமையானவர்கள் , எனக்கும் நண்புடையவர்கள்; எனவே தொண்டிற்குப் புதியவர்களாகிய எமது குற்றத்தை விடுத்து அடிமை கொள்ளுதல் பொல்லாததாகிப் பொருத்தமற்றதாகுமா!" என்று கூற, துயிலெழுப்ப வந்த கன்னியர் உனது “அன்புடைமை இந்த வகையானதோ? யாம் அதனை அறியமாட்டோமா? புனிதமான மனமுடையவர்கள் எங்கள் சிவபெருமானைப் புகழ்ந்து பாடாமல் இருப்பார்களா? உன்னைத் துயிலெழுப்ப வந்த எமக்கு இதுவும் வேண்டியதுதான்” என்று பதில் உரைப்பதான சிந்தனை மணிவாசக சுவாமிகள் தருவது.
இறைவன் இன்ப வடிவானவன். "ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே,” என்றும், “அனைத்தெலும் புண்னெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையான்" என்றும், வருமிடங்கள் இந்தக் கருத்தினை வலிவுபெறச் செய்வன நெஞ்சிற்கு அழகு மனந்துயரானே7ர் பக்தி
44 நற்கிந்தனைகள் நாற்பது

நெறியில் தலைப்படுதல். அவர்களால் இறையுணர்வு களைப்
பாடாமல் இருக்க முடியாது.
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியனைப் பாடிக் கசிந்துள்ளம் உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந் தெண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்,
“ஒளி பொருந்திய வெள்ளிய முத்துப் போன்ற பற்களை உடையவளாகி அப்புன்முறுவலைச் செய்பவளே, இன்னமும் பொழுது புலரும் நிலை தோன்றவில்லையா? என்று துயிலெழுப்ப வந்த கன்னியர் சொல்ல, அழகிய கிளியின் மொழி போன்ற மொழியைப் பேசும் பெண்கள் எல்லோரும் வந்துவிட்டார்களா? என்று துயில் நித்தெழும்புபவள் வினவுகின்றாள்.” “வந்தவர்களை எண்ணிக் கணக்கிட்டுச் சரியான எண்ணிக்கையைத் தெரிவிப்போம். நாம் எண்ணிச் சரிகண்டு எண்ணிக்கையைச் சொல்வது வரை நித்திரையாகி இறைவனைப் புகழ்ந்து பாடவேண்டிய நேரத்தை அநியாயமாக்கிவிடாதே! அமிர்தமாய் மருந்தாய், வேதப் பொருளாய், இனிய காட்சிப் பொருளானவனை, சிவபெருமானைப் புகழ்ந்து ப7ழ மனம் நிலையாக நிற்கக் கசிந்து உருகுவாய்” என்று துயில்ெமுப்பிய கன்னியர்கள் கூறவும் படுக்கையில் இருந்தவள் தொடர்ந்தும் துயிலுதற்காகிய நிலையில் இருத்தலைப் ப7ர்த்து "வந்தவர்களைக் கணக்கிட்டு நாம் சொல்லமாட்டோம் நீயே வந்து கணக்கிட்டுக் குறைவு கண்டால் மீண்டும் துயில்வாயாக" என்றமைகின்றது மணிவாசக சுவாமிகள் சிந்தனை
இறைவனைப் பூவுலகினர் நூலறிவாலும் அநுபவ அறிவாலும் உணரமுடியும் வேத விழுப்பொருள், கண்ணுக்கினியான் என்னும் பகுதிகள் இக்கருத்தினைத் தந்து நிற்பதாகத் தெரிகின்றது. கண்துயின்று உள்ள பொழுதை விரயஞ் செய்யாது பயனுள்ளதாக்கி நாமும் பயன் பெறுவோம்.
நற்சிந்தனைகள் நாற்பது 45

Page 29
திருவெம்பாவை 3
மாலறியா நான்முகனுங் கானா மலையினைநாம் போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலுறு தேன்வாய்ப் பழறி கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான் கோலமும் நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும் சிலமும் பாடிச் சிவனே சிவனேயென் றோல மிடினும் உணரா யுனராய்கான் ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.
விஷ்ணு பிரமனால் அறியப்படாத அடியையும் முடியையும் உடையமலை போன்றவனாகிய இறைவனை நாம் அறிவோம் என்று பால் தேன் என்பவைபோல் இனிமை தோன்றப் பொய்பேசும் வாயினையுடைய வஞ்சகி ! கடை வாயிலைத் திறப்பாயாக இந்த உலகினர், வானுலகினர், ஏனை உலகினர் யாராலும் அறிதற்கரிய அப்பெருமானது வடிவினையும் இழிதகைமைக்குரியராகிய எம்மை ஒரு பொருட்டாக மதித்து ஆட்கொண்டருளிச் சிறப்புச் செய்து அருளும் உயர்குணத்தையும் புகழ்ந்து பாடி, சிவனே சிவனே என்று அபயம் வேண்டிக் கூவியும் அறியமுடியாதவளாகி இருக்கின்றாய். இப்போதாவது துயில் நீத்தாயோவென்றால் அதுவுமில்லை. உன் கூந்தலுக்குச் சாந்து முதலிய வாசனைப் பொருள்களைப் பூசி அலங்கரித்துள்ளமையை என்னென்பது என்கின்றார் மணிவாசக சுவாமிகள்,
எம்மை ஆட்கொண்டு அருளவேண்டும் என்னும் கருத்தால் தானாகவே எளிவந்துள்ள எம்பெருமானை அழகு செய்து கண் குளிரமணங் குளிரப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதுமின்றித் தன்னை அலங்கரித்து அழகு கண்டு இன்புறும் நிலை இரங்குதற்குரியது என்பதைப் புலப்படுத்தவே 'ஏலக்குழலி பரிசு” என்னுந் தொடரைப் பயன்படுத்தியுள்ளார். ஒளிமலையாகி நின்ற எம்பெருமானைப் பிரம விஷ்ணுகளாலுங் கண்டுகொள்ள முடியவில்லை. நான் என்ற மயக்க உணர்வுடன7கும்
46 நற்கிந்தனைகள் நாற்பது

சிந்தனை இலையென்றாகும் படி செய்ய வேண்டும். “சிந்தனை நின்தனக்காக்கி’ என்னும் தொடர் இந்த இடத்து உபயோகமுள்ளதாகின்றது. “ஞாலமே விண்ணே பிறவே அறிவரிபான்’ எனவே எம்ம7ல் முடியும் என்பார்க்கு முடியாது. அவனருளே கண்ணாகக் காண வேண்டும். “நீ முந்திப்பாராதே" என்பது உமாபதிசிவாசாரியார் கருத்து
மானேB நென்னலை நாளைவத் துங்களை தானே யெழுப்புவன் என்றலும் நானாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே யறிவரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே யுருகாய் உனக்கே யுறுமெமக்கும் ஏனே7ர்குத் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.
மான் போன்றவளே. நீங்கள் நித்திரைவிட்டெழுவதற்கு முன்பாக நாளை வந்து உங்ளை நானே எழுப்புவேன் என்று நீ நேற்றுச் சொன்ன அளவிற் போய்விட்டாய், அவ்வண்ணம் நீசென்ற திசையை நானமின்றிச் சொல்ல வேண்டும் இருள் இன்னும் நீங்கவில்லையா? வானோர், மண்ணுலகினர், ஏனையோர் ஆய எவராலும் அறிதற்கரியவனாகிய சிவபெருமான் தானே வந்தான். எம்மைக் காத்து ஆட்கொண்டரு ஞதற்குரிய அழகிய வீரக் கழலணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடினோம். எம் பொருட்டு வாயைத் திறக்கின்றாயில்லையே! உடல் உருகப் பெறுகின்றாயுமில்லையே! இது உனக்கு மட்டுந்தான் பொருந்தும் இனியாவது எழுந்து இறைவனை எம்முடன் சேர்ந்து பாடுவாயாக, என்பது மணிவாசகர் தருஞ் சிந்தனை.
அரிய தவம் புரிந்தும் இறைவனை அறிய முடியவில்லை. தவ வலிமை இல்லாத எம்மிடத்துத் தானே வலிய வந்து ஆண்டு கொண்டான். ஆன்மாக்களின் ஈடேற்றங் கருதிய இறைவனின் எளிவந்த நிலை இங்கே புலப்படுத்தப்படுகின்றது. நாமும் இறைவனைப்பாடி இன்புறுவோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 47

Page 30
திருவெம்பாவை ~4
அன்னே இவையும் சிலவோ பலவமரர் உன்ற்ை கரியான் ஒருவன் இருஞ்சிரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய் தென்ன7என்ன7முன்னம் திசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ் சொன்னே7ங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுகியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.
அன்னையே, நின் செயல்களுள் இந்த வகையினவுஞ் சில உளவோ? தேவர்கள் பலராலுந் நினைத்தற்கரியவனும், ஒப்புயர்வு இல்லாதவனும், மிகுந்த பெருமையுடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளி வருவதற்கு அடையாளமாக எக்காளம், சங்கு முதலியவற்றின் ஒலியைக் கேட்டவுடனும் சிவ சிவ என்று சொல்லிநிவாயைத் திறப்பாயே! தென்ன7 என்று அவன் பெயரைச் சொல்லும் அளவிலேயே பிறர் சொல்வதற்கு முன்னாக தியிலிடப்பட்ட மெழுகுபோல் நீ மனம் கசிந்துருகுவாயே! அப்படிப்பட்ட வளாகிய உன் முன்னிலையில், எனக்கு இனியன் என்றும் என் அரசன் என்றும் இனிய அமுதம் போன்றவன் என்றும் நாங்கள் எல்லோரும் தனித்தனியே சொன்னே7ம். அவற்றையெல்லாம் கேட்டும் இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கின்றயே? குழைவில்லாத கல்நெஞ்சுடையவர் போல நீ உணர்ச்சியற்றுக் கிடக்கிறாயே! உறக்கத்தின் தன்மை இத்தகையதோ? என்பது மணிவாசக சுவாமிகள் சிந்தனை
இழிந்த நிலையிலுள்ள எம்மை ஆட்கொள்ள வேண்டி எளியவனாகி எழுந்தருளிவந்து அருளுபவன் சிவபெருமான். இருஞ்சிரான் - அளவிட முடியாத பெருமைக்குரியவன் என்பது எக்காளம், சங்கு முதலிய சின்னங்கள் மங்கல ஒலியை இசைப்பன அவை ஒலிக்கின்றன என்றால் இறைவன் திருவுலா நினைவிற்கு 62/g5եւ0.
48 நற்சிந்தனைகள் நாற்பது

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்புவெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங் கருணை கேழில் விழுப் பொருள்கள் பாடினே7ம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆம7றும் இவ்வாறே7 ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.
சேவல் கூவப் பறவைகள் எங்கும் ஒலி செய்யும். நாதஸ்வர ஒலி இசைப்பதற்கு வழி செய்வதாகச் சங்குகள் முழங்குகின்றன. உவமையில்லாத பரம்பொருளாகிய ஒளி உருவானவனது உவமையில்லாத மேலான கருணை முதலிய ஒப்பற்ற சிறந்த பொருள்கள் அமைந்த புகழ்ப் பாடல்களை நாம் பாடினே7ம். நீ கேட்கவில்லையா? நீ வாழ்வாயாக. இதுவும் ஒரு உறக்கமோ? இதைக் கொஞ்சம் எடுத்துச் சொல் வாய், கேட்போம். அருட்கடலாகிய சிவபெருமானிடத்து அன்பு செய்யும் முறையும் இம்முறைதானே7! ஊழிக் காலத்து இறுதியில் அனைத்தும் ஒடுங்க எஞ்சுபவன் அவன் மட்டுந்தான். உமையம்மையைப் பாகத்தில் அமர்த்திக் கொண்டவன். அத்தகையவனைப் பாடுவாயாக என்பது மணிவாசக சுவாமிகள் தருவது.
கோயிலில் இசைக்கப்படும் மங்கல ஒலிகள் சங்கொலியின் பின்ன7க வேண்டும். முதலிற் சங்கொலியும் தொடர்ந்து ஏனைய ஒலிகளும் இசைக்கப்படும். ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கெங்கும் என்னுத் தொடர் இக்கருத்தைத் தந்து நிற்கின்றது. இறைவன் புகழ்சேர் பொருள்களைத் தன்னகத்துக் கொண்ட பாடல்களையே பாடவேண்டும் கேழில் விழுப்பொருள்கள் பாடினே7ம் கேட்டிலையோ என்பது இப்பாடல் தரும் செய்தி கேழில் - ஒப்பில்லாத என்பது.
பரஞ்சோதி ஆகிய பரம்பொருள் ஏழை பங்காளனாகி அதாவது உமையைப் பாகத்துடையவனாகி எழுந்தருளி ஏழையோமாகிய நம்மை பாதுகாக்குமியல்பினன் என்பது யாமும் அவன் அருள்வழி உய்திபெறுவோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 49

Page 31
திருவெம்பாவை ~ 5
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே ஊன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் உன்னழயார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே யெங்கணவ ராவார் அவருகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே யெமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.
பழமை வாய்ந்த பொருள்கள் எல்லாவற்றுள்ளும் பழமை வாய்ந்தவனே, அதாவது எல்லாவற்றுக்கும் முதன்மை யானவனே! பிற்பட்டவையும் புதியனவுமான பொருள்கள் எல்லாவற்றுக்கும் புதுமையானவனே! அதாவது எல்லா வற்றுக்கும் பிற்பட்டவனே! உன்னை ஆண்டவனாகப் பெற்றமையால், உன் சிறப்புக்களுக் குள்ளாகிய அடியார்களாகிய நாங்கள் நின் அடியார் வணங்குக் திருவடிகளை வணங்குவோம். அவ்வழி அந்த அடியார்களுக்கே நாம் உரிமையுடைய வராவோம். அவர்களுக்கு அடிமைகளாகி ஏவல்கள் செய்வோம் எங்கள் பிரான7கிய நீ எங்களுக்கு இந்தவகை அருள் புரிவையேலி எந்த வகையான குறைபாடுகளும் இல்லாதவராவோம் என்பதுதான் இப்பாடலிலிருந்து நாம் அறிவது.
இறைவனை வழிபடும் போது உள்ளத்தாலும் வழிபட வேண்டும் “சிந்தனை நின்தனக்காக்கி” என்னும் பாடலை இங்கு நினைக்க முடிகின்றது. முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும். c:25/Élő6lö6ő LATIiáb766) IIIb. LETië5 2 fkolo.
பாதாளம் ஏழினுங்கிழ் சொற்கழிவு பாதமலர் போதரர் புனைமுடியும் எல்லாப் பொருள்முழவே பேதை யொருபாற் றிருமேனி யொன்றல்லன் வேதமுதல் விண்னோரும் மண்ணுந் துதித்தாலும் ஓத வுலவா ஒருதோழம் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
50 நற்கிந்தனைகள் நாற்பது

ஏதவனூர் ஏதவன்பேர், ஆருற்றார் ஆரயலார் ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பTவாய்.
கீழேழுலகங்களுக்கும் கீழானவை இறைவன் திருவடி மலர்கள். அதேவேளை சொற்களால் அளவிட்டுச் சொல்லவும் முடியாதவை. மலர்கள் நிறைந்து அழகொளிருந் திருமுடியும் பொருள்கள் அனைத்திற்கும் முடிவாகவுள்ளது. அதாவது முடிவிடங் காணப்படாதது. ஒரு கூறுபெண்வடிவாகவுள்ளவன். ஒரே வகையான திருமேனியை உடையவனு மல்லன். வேதங்களை முதலாகக் கொண்டு தேவர் உலகத்தினரும், மண்ணுலகத்தினரும் புகழ்ந்து பாராட்டினாலும் சொல்லுதற் கரியவனும், தொண்டர் நடுவண் இருப்பவனும் ஆகிய சிவன் திருக்கோயிலிலுள்ள குற்றமற்ற, நலம் நிறைந்த உதவுநர்களாகிய பெண்பிள்ளைகளே, அவன் ஊர் எது ? அவன் பெயர் என்ன ? என்று பேசுகின்றது இப்பாடல்.
அதிகாலையில் ஒன்று சேர்ந்து கன்னியர்கள், இறைவன் திருக்கோயிலிற் பணிபுரிந்து கொண்டிருக்கும் பெண்களைத் தங்களிலும் பார்க்க அவர்களுக்கு இறைவனிடம் நெருக்கங் கூடுதலாக இருக்கலாம் என்பது கருதிக் கேட்கப்பட்டது போன்ற ஒரு நிலைமையினை இங்கு உணருகின்றோம். திருமால் பிரமன் என்பே7ர் கர்வங்கொண்டு தனித்தனி தாந்தாம் முழுமுதல் என்று போரிட்டு அடிமுழ காண முயன்ற செய்தி இப்பாடற் பகுதியில் இழையோடி நிற்பது புலனாகின்றது. "பாதாளம் ஏழினுங்கிழ்” என்னும் போது சொற்கழிவு என்றனர், சொற்களாற் சொல்லி முடியாதென்பதை உணர்த்த. அ.தே போன்று முடி பற்றிய செய்தியைப் “போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே” என்கின்றனர். எல்லாப் பொருள்களுக்கும் முடியாக அவற்றது அந்தத்திலே இருக்கும் பொருள் என்பதை உணர்த்த, அடியை நோக்கும்போது சொல் அந்தமாகியது. முழபற்றிச் சிந்திக்குபோது பொருள் அந்தத்தின் முன்னாகி அந்தத்தைத் தாங்கி நிற்கின்றது. ஆதியந்தமில்லா அரன் சிந்தனையை மனத்து நிறைத்து வாழ்வோம்.
நற்சிந்தனைகள் நாற்பது 51

Page 32
திருவெம்பாவை ~ 6
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழிபடியோம் வாழ்ந்தோங்கான் ஆரழல்போல் செய்யாவென் னிறாடிச் செல்வா சிறுமருங்குல் 6ODALI Tii BSL silab6ai lo fb6o25 LOGO76 I76mHT ஐயாநி ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம். எய்யாமற் காப்பாய் எமையேலோ ரெம்பாவரீய். சுடர்கின்ற தியைப்போன்ற செம்மைநிறம் பொருந்திய மேனியை உடையவனே, வெண்மை நிறம் பொருந்திய நிற்றை நிறைவாகப் பூசியவனே, சிற்றிடையையும், அஞ்சனம் எழுதப்பெற்ற விசாலமான கண்ணையுமுடைய உமையம்மையின் கணவனே எமது தலைவனே, வண்டுகள் நிறைந்த விசாலமான குளத்திலே புகுந்து முகேள் எனும் ஒலியுண்டாகும்படி நீரைக் குடைந்து வாரி இறைத்து முழுகி நின் திருவடிகளைப் புகழ்ந்து பாடிப் பரம்பரை பரம்பரையாக உன் அடியவர்களாகிய நாம் நல்வாழ்வு எய்தினோம். தலைவனே, ஆண்டவனாகிய நீ உயிர்களை ஆட்கொண்டருளும் உன் திருவிளையா டவினால் தாங்கள் எல்லோரும் உறுதியாகவே உய்வடைந் திருக்கின்றோம். இனி யாம் தளர்வுறாதிருக்கும்வகை காத்தருள்வாய். பெண்ணே இக்கருத்துக்களைநி சிந்தித்துப்பார் என்பது மணிவாசகர் சிந்தனை
வழிபாட்டுடன7கியுள்ள காலத்து எந்தத் தொழிலைச் செய்தாலும் அங்கெல்லாம் இறைவனைப் பற்றியே சிந்திக்கவேண்டும். இறைவன் புகழே பாட வேண்டும். இறைவன் புகழே பேச வேண்டும் மார்கழிநீராடலும் வழிபாட்டுத் தொடர்புடன் கூடிய போதும் ஐயா வழிபடியோம் வாழ்ந்தோங்கான் என்று அவன் கழலைப் பாட வேண்டும் என்று காட்டுகின்றார் மணிவாசகர் இறைவன் முன்னிலையில் எல்லாம் எளிதானவை என்னுஞ் சிந்தனையை "ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள் என்பது உணர்த்துகின்றது.
52 நற்சிந்தனைகள் நாற்பது

ஆர்த்த பிறவித் துயர்கெடந7ம் ஆர்த்தாடும் தீர்த்தன்தற் றில்லைச்சிற் றம்பலத்தே தியாடும் கூத்தின்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங் காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகளும் பொய்கை குடைந்துடையான் பெ7ற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீராடேலே7 ரெம்பாவாய். எம்மைப் பிணித்துள்ள பிறவித்துன்பம் இல்லாதுபோக நாம் மகிழ்வாய் ஆரவாரித்து முழுகிப் பரிசுத்தராவதற்குரிய புனித நீரையுடையவனும், தில்லைச் சிற்றம்பலத்திலே உள்ள ஞானவெளியில் தியேந்தி ஆடுகின்றவனும், இந்த உலகத்தையும் விண்ணையும் எம்மையும் படைத்துக் காத்து மறைத்து விளையாடுகின்றவனும் ஆகிய சிவபெருமான் பற்றிய புகழைப் பாடிக் கைவளையல்கள் ஒலிக்கவும் மேகலையுடனான ஒட்டியானங்கள் பெருமித ஒலி செய்யவும் , அழகிய கூந்தலில் வண்டுகள் ஆரவாரிக்கவும், மலர்கள் நிறைந்துள்ள குளத்தில் முழுகி எல்லாவற்றையுமுடைய இறைவன் பொன்னடிகளைப் பாராட்டிப் பெரிய சுனைநீரில் ஆடுவோம். பெண்னே இவற்றை ஓர்வாய் உணர்வாய் என்பது மணிவாசகம்
தீர்த்தன் - சிவன், பரிசுத்தன் என்னும் பொருள்களைத் தருவதொரு சொல். தீர்த்தன் அருளாகிய நீரையுடையவன் என்றும் பொருளுரை செய்யலாம். இறை வழிபாட்டுடன7கிய எந்தவொரு செயல் நிகழும்போதும் அங்கு தெய்வ சிந்தனை உடனாக வேண்டும் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீராடுதல் வேண்டும் என்பது குறிப்பு வினைமாசு நீக்கும் அருள் நீராகவும் அமைய வாய்ப்புண்டாகும் என்பது மறைபொருள்.
பஞ்ச கிருத்தியம் இறைவனுக்கு விளையாட்டு என்பது எளிய முயற்சி விளையாட்டாய் அவை ஆவன என்பது , ”----------- யாவையுந் தரமுளவாக்கலும் நீக்கலும் நீங்கலா அலகிலாவிளையாட்டுடை யாரவர்” என்பது இங்கு கருதத்தக்கது. யாமும் அவன் விளையாட்டுடன7கி இன்புறுவோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 53

Page 33
திருவெம்பாவை 7
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அக்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கண் மலங்கழுவு வார்ந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநஞ் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
பசுமையான குவளை மலர்களும், செந்தாமரை மலர்களும் நிறைந்துள்ளமையாலும் அங்கு நீர் வாழ் பறவைகள் ஓலமிடு கின்றமையாலும் ஒன்றுடனொன்று மாறுபட்டுப் பின்னி அலைககள் வந்து எழுந்து விழுகின்றமையாலும் தங்களது அமுக்குகளைப் போக்க வேண்டியவர்கள் பலராக வந்து போகின்றமையாலும் குளம் சிவசக்தியாக உணர்விற்பட நிற்கின்றது. குருகு கைவளை எனினுமாம். இந்தப் பொய்கையில் நாம் பாய்ந்து நீராடுவோம். எமது சங்கு வளையல்கள் சய்திக்க காற்சிலம்புகள் உடனாகி ஒலிக்க மார்பகங்கள் குலுங்க, நீராடுதற்குரிய நீர் மேலெழ, தாமரை மலர்களால் பொலிந்து விளங்கும் குளத்தில் குளிப்போம் என்பது பாடலிற் பெறப்பட்டது.
கருங்குவளை மலர் நீலமேனியளாகிய அம்மையையும் செந்தாமரை அப்பனையும் குறிப்பதாகி அர்த்தநாரீஸ்வர வடிவை தினைய வைக்கின்றன. பின்னும் அரவம் - எம்பெரு மானிடமாகியுள்ள பின்னிக் கிடக்கும் பாம்பென்றும் தெளிகின்றோம். தம் உடம்பிலுள்ள அழுக்கைப் போக்க வந்தோர் ஆணவம், கன்மம், மாயை எனும் மனவழுக்கைப் போக்க இறைவனை அனைந்தவர்களாகக் காட்சிதருகின்றனர்.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
54 நற்சிந்தனைகள் நாற்பது

வேதப் பொருள்பாடி யப்பொருளாமாபாழச் சோதித் திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி யந்தமா மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்.
காதிலனிந்த தோடுகள் ஆடவும் ஏனைய பகுதிகளில் அணியப்பட்ட பசும் பொன்னாலான ஆபரணங்கள் ஆடவும், பூமாலை அணியப்பெற்ற கூந்தல் ஆடவும் அணிந்துள்ள மலர் மாலைகளைச் சுற்றி வண்டுக் கூட்டங்கள் ஆடவும், நாம் குளிர்ந்த நீரிலே நீராடுவோம். பின் ஞானசபையை, வேதப் பொருளமைதியாம் இறைவனைப் பாடி, இறைவன் அவ்வண்ணம் ஆமாறு இருத்தலைப் பாடிச் சோதி சொரூபனாகவுள்ள அப்பெருமான் பெருமையைப் பாடிச் சுற்றிவளைந்ததாக அணியப்பெற்ற கொன்றை மலர் மாலையைப் பாடி, எப் பொருட்கும் முதலாய் - முன்னவன7ய் உள்ள முறைமையைப் பாடி, எல்லாப் பொருள்களுக்கும் பொருட்டன் மைகளுக்கும் இறுதியாயுள்ள நிலையையும் பாடிப், பிரபஞ்சத்தினின்று எம்மை வேறுபடுத்தி ஆட்கொண்ட வளையலை அணிந்த கைகளையுடைய உமை யம்மையின் திருவடிகளது பெருமையைப் பாராட்டிப் பாடுவோமாக என்பது பாடல் தருங் கருத்து
இறைவன் திருமேனிகளுள் முதன்மையானது ஒளி வடிவு "சோதிபாய்த் தோன்றும் உருவமே' என்றும், “சோதிப் பிழம்பதோர் மேனியாகி” என்றும் வருமிடங்கள் இதனை வலியுறுத்துவன. "பேதித்து நம்மை வளர்த்தெடுத்தல்’ கன்ம நுகர்ச்சியில் ஈடுபடுமாறு வேறுபடுத்தல், அன்னை தன் பிள்ளையிடத்துத் திருத்துவதற்கு வேண்டிய கண்டிப்பைக் கைக் கொண்டு திருந்திய குணநிலை காணும்போது அன்பு காட்டி ஏற்றுக்கொள்ளல் அது கன்ம நுகர்ச்சியில் ஈடுபடுத்தலைப் பஞ்சகிருத்தியத்துள் மறைத்தல் என்றும் சொல்வர். பெய்வளை தன் பாதத் திறம்பாடுதல் அப்பன் திருவுளக்கிளர்ச்சிக்கு ஏதுவாகுமென்பது. நாமும் அன்னை திருவடிகளைப் புகழ்ந்து பாடி அப்பன் திருவுளப் பிரிதியிற் திளைப்போம்.
நற்சிந்தனைகள் நாற்பது 55

Page 34
திருவெம்பாவை - 8
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர திரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிடப் பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள் பேரரையற் கிங்கனே பித்தொருவர் ஆமாறும் ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள் வாருருவப் பூண்மலையிர் வாயார தாம்பாடி ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்,
கச்சணிந்த அழகிய ஆபரணங்களுடனான மார்பகங்களை உடையவர்களே! ஓரொருவேளை எம் பெருமான் என்று சொல்லிவந்து இப்பொழுது வாய் ஓயாது நம் பெருமான் ஆகிய சிவபெருமானின் பெரும்ைகளைப் பேசுவாள். மனதில் மகிழ்ச்சி பொங்க விழிகளினின்றும் இடையீடுபடாது தாரை தாரையாகக் கண்ணிருகுப்பாள். நிலத்தில் வழ்ந்து ஒரே வகையான வணக்கத்தைச் செய்வாள். வேறு தேவர்களை வணங்கமாட்டாள். சிவபெருமானிடத்து ஒருவர் பித்துக் கொள்வதும் இவ்வாறாகலாமோ ! இப்படி இவளை ஆட்கொள்ள வல்ல திறமையுடையவர் யாரோ? அவர் திருவடிகளை வாயாரப் பாடிக்கொண்டு அழகிய பூ நிறைந்த பொய்கையிலே குளித்து நீராடுவோம் பெண்ணே, இவற்றை நீயும் ஏற்க்கொள்வாயாக என்பது மணிவாசகம்
உலகியலை மறந்து, ஒரளவாவது அற்றினின்றும் விலகி
மனம், மொழி மெய் என்னும் முப்பகுதியானும் இறைவனுடன் ஈடுபட வேண்டும். வணக்கம் சிவபெரு மானுக்குரியது. அவ்வழி சிவமூர்த்தங்களும் வழிபாட்டிற்குரி யவை. ஏனை எவரையும் வழிபாட்டிற்குரியவராக தெய்வீக நிலையிற் காணவேண்டி யதில்லை.
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் சிற்றிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவழமேற்
56 நற்கிந்தனைகள் நாற்பது

பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய், மேகமே நீகடலை அடைந்து அதன் நீரைக் குடித்து மேலெழுந்து எம்மை உடையவளாகிய உமையம்மையின் நிறமாகிய நிலத்தைப் பொருந்தி எம்மை ஆண்டு கொண்டு அருளியவளது சிறிய இடையைப் போல மின்னி அதாவது இடையிடை விளக்கமாகி தேவியின் திருவடியிலுள்ள சிலம்புகள் ஒலிப்பது போல இடிமுழக்கமாய் ஒலிப்பாயாக அம்மையின் புருவம் போன்று வானவிற் காட்சி எம்மை அடிமைகொண்டவளாகிய உமையை விட்டு நீங்குதலில்லாத சிவபெருமானுடைய அன்பர்க்கும் சிறியவர்களாகிய எமக்கும் அம்மை முன்னதாகவே திருவருட் திறத்தால் மழைபொழிவது போல அருளைப் பொழிவாயாக; பெண்ணே நீயும் எண்ணிப் பார்ப்பாயாக என்பது மணிவாசகம்
மேகம் கடல் நீரை ஏற்றல், நீலநிறமாதல், மின்னுதல், முழங்குதல், மழைபொழிதல் எல்லாம் இயற்கை நிகழ்வுகள். இந்த வகைச் செயல்களிடத்துத் தெய்வ நிலையைக் காண்டதுதான் மேலான இயல்பு. தெய்வீக நெறிநின்று -அவ்வகையான கண்கொண்டு பார்த்தோமானால் எங்கும் உயர்ந்தவற்றையே காண்போம். கயிற்றைப் பாம்பென்று கண்டோம். இது பார்வைப் பிழை, அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாம் பேய் என்பர். இது சிந்தனைப் பிழை. மழைவளம் வேண்டிக் கன்னியர் கூறியதான அக்கருத்தினை இத் திருப்பாடல் கொண்டுளதென்று திருவெம்பாவை நோன்பைச் சிந்திப்போர் கூறுவர். மழைநலம் வேண்டியதுதான். உலகு நலம்பெற மழை நலம் வேண்டும். அப்போதுதான் உயிர்நலம் சிறப்பாக அமையும். உலக நலத்திற்கு வேண்டிய மழை உயிர்நலத்திற்கு வேண்டிய அருளுக்கு ஒப்பானமைக்கு அதுவே காரணம். அந்தத் திருவருள் நலத்துடனாக நாமும் முயலுவோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 57

Page 35
திருவெம்பாவை ~ 9
செங்க ணவன்பால் திசை முகன்ப7ல் தேவர்கள்பால் எங்கு மிலாததோ ரின்பம்தம் பாலதாக் கொங்குன் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குதம் மில்லங்க டோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை அங்க ணரசை யழயோங்கட் காரமுதை கங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் பங்கயப் பூம்புனல்பர்ய்ந் தாடேலோ ரெம்பாவாய்.
இயல்பாக வாசனையுடைய கரிய கூத்தலையுடைய பெண்னே, திரும7ல், பிரமன், தேவர்கள் என்போரிடத்து இல்லாததாகிய ஓரின்பம் எம்மிடத்ததாக எம்மிடமுள்ள குற்றங் களைந்து இங்கு இப்பூமி யிலுள்ள எமது இல்லங்களுக்கு எளியவனாகி எழுந்தருளிச் செந்தாமரை போன்ற திருவழகளைத் தந்த விறலோனை அழகிய தண்ணளி உடையவனை அடியவர்களாகிய எமக்குக் கிடைக்கமுடியாத அமுதம் போன்றவனை, எங்கள் தலைவனைப் பாராட்டிப் பாடி நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நன்மை கிடைக்கத் தாமரை மலர்ந்து பொலிந்து நிறைந்து விளங்கும் இந்தப் பொய்கையிற் பாய்ந்து ஆடுவோம் என்பது பாடல் குறிப்பிடுவது.
"வாட்டடங்கண் மாதே’ என்றும், "நேரிழையாய்” என்றும், “முத்தன்னவெண்ணகையாய்” என்றும், "ஒண்ணித்தில நகையாய்” என்றும், “ பாலுறு தேன்வாய்ப் பழறி ' என்றும், “வாருருவப் பூண்முலையீர்” என்றும் கன்னியரின் முன்புறமாய நோக்கிற்குரிய பகுதிகளைக் கொண்டு விளித்த மணிவாசகர் இந்தப் பாடலில் “கொங்குன் கருங்குழலி” என்று பின்புறத்தை நோக்க வைக்கின்றார். விளையாட்டாக இறையுடன் ஊடினர் என்பது புலப்படவோ!“செங்கமலப் பொற்பாதம் தந்தருள வந்தருளுஞ் சேவகன்” என்பதால் திருவடி இன்ப உயர்வு உணர்த்தப்படுகின்றது.
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்னோர் முடியின் மணித்தொகைவிறற்றாற் போற்
58 நற்கிந்தனைகள் நாற்பது

கண்ணா ரிரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி யானா யலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி யித்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்த் தாடேலோ ரெம்பாவாய். கரிய இருள் நீங்கும் படியாக எங்கும் பரவிய குரிய ஒளியால் விண்மீன்ககள் தமது ஒளிப் பொலிவிழந்து மழுங்கி மறைவது போல, திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள இறைவன் பாத கமலங்களை அணைந்து வணங்குகின்ற தேவர்கள் முடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளியை இழந்துவிடுவனவாகும். பெண்ணாகி ஆனாகி அலியாகி ஒளிப் பிரபையை உடையதாகிய விண்ணகமாகியும், மண்ணகமாகியும், அவற்றின் வேறாகியும், ஞான அனுபவமுடைய அமுதமாகியும் நின்றவனாகிய இறைவனது திருவடிகளைப் புகழ்ந்து பாடிப் பொலிவுபெற்ற இந்த நீர்நிலையிற் பாய்ந்து ஆடுவோம் என்பது பாடல் குறிப்பிடுவது.
உலகெலாமாகி வேறாய் உடனுமாய் நிற்பவன் இறைவன்
அதனாலேதான் உலகத்தோற்றங்களுள் இயங்தற்குரியவையாகிய பெண்ணாகி ஆனாகி அலியாகி என்றும் இயக்கமற்றவையான மண்ணாகி விண்ணாகி என்றும் அவற்றின் வேறானவன் என்றும் பேசப்பட்டது. ஒரு கால கட்டத்தில் திருவண்ணாமலை பேரொளிப் பிழம்பாக விளங்கியது என்பது ஒரு கருத்து. இறைவன் சோதிப்பிழம்பாகிநின்ற இடம் திருவண்ணாமலைதான் என்பதொரு கருத்தும் உண்டு. எனவே அண்ணாமலையான் என்னும்போது சோதிவடிவினன் என்ற தோற்றமே கண்முன் நிற்கின்றது. அச்சோதியுள் ஏனைய ஒளிகள் எல்லாம் அடங்கிவிடுமாம். பல காலம் தொடர்ந்து கடவுள் பக்தி உடையவர்களாய் இருந்தவர்கள் சிவஞானம் கைவரப்பெற்றதும் பாசம் நீங்கப் பெற்று உலகியலில் இருந்து விடுபட்டுத் தெய்வீகத்துட் கலந்து இன்புறுவர் என்பது. அந்தப் பேரொளியுள் அடக்கமாகி நாமும் இன்பம் அனுபவிப்போமாக.
நற்சிந்தனைகள் நாற்பது 59

Page 36
திருவெம்பாவை - 70
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன்றுரைப்போங்கேள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க கங்குல் பகலெங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.
உன்னிடம் சேர்க்கப்பட்ட இந்தப் பிள்ளை உன்னிடமே அடைக்கலமாக இருக்கும் என்று அந்தக் காலமுதல் வழங்கிவரும் வழி வழி மொழியை புதுப்பிக்க அஞ்சுகின்றோம். அது காரணமாக உனக்கு ஒன்று சொல்லுவோம் ; கேட்பாயாக நாம் தழுவக் கூடியவகை நின் மெய்யன்டர்களையே மணந்துகொள்வோம். எமது கைகள் உனக்கன்றி வேறு யாருக்கும் பணிவிடை செய்வனவாகா. எமது கண்கள் இரவுபகல் உன்னையல்லாது மற்றெதையும் பாராது ஒழியவேண்டும். இறைவனே, இந்த வாய்ப்பை எமக்கு எங்கள் தலைவனாகிய நீ தந்தருளுவையேல், அதன் பின்னர் சூரியன் திசைமாறிப் போனாலும் எமக்குக் கவலையில்லை. பெண்ணே இதனை ஓர்ந்து பார் என்பது மணிவாசகர் தருவது.
பாவை நோன்பு நோற்றலின் சிறப்புக்களுள் ஒன்று கன்னியர் நல்ல கணவரை வேண்டுதல் என்பது யாமறிந்தது. இந்த வகையிற் கிடைக்குங் கணவர் சிவனிடத்து அன்புடையவராக இருந்துவிட்டால் அவரோடு சேர்ந்து இல்லறம் நடத்தும்போது சிவத்தொண்டில் ஈடுபட்டு இன்புறலாம் என்பது கருத்து எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க என்னுந் தொடர் கன்னியரின் நிலையினைத் தெளிவாக விளக்கிநிற்கின்றது.
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகதின் அந்தமாஞ் செந்தளிர்கள்
60 நற்கிந்தனைகள் நாற்பது

போற்றிஎல் லாவுயிர்க்குத் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இன்னையடிகள் போற்றிம7ல் நான்முகனுங் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யவாட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் ம7ர்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.
எல்லாப் பொருள்களுக்கும் முதலாகவுள்ள நின்திருவடிமலர்களை எம்மைப் பாதுகாத்தற் பொருட்டுத் தந்தருள்வாயாக. எல்லாப் பொருள்களுக்கும் முழபாக அந்தத்திலே உள்ளதின் செவ்விய திருவடிகளை எம் பாதுகாப்பிற்காகத் தந்தருள்வாயாக உயிர்கள் அனைத்திற்கும் பிறப்பிடமாகவுள்ள உன் திருவடிகள் எம்மைக் காத்தருளுவனவாக. எல்லா உயிர்களும் அனுபவித்தற்குரிய இன்பமுட்டும் திருவடிகள் எம்மைக் காப்பனவாக. எல்லா உயிர்களதும் ஒடுக்கத்திற்கு இடமாகிய உன் திருவடிகள் எம்மைக் காப்பனவாக. திருமாலும் பிரமனும் கண்டுகொள்ள முடியாதனவாயிருந்த திருவடி முடிகளையுடைய நின் திருவுருவின் திருவடி மலர்கள் எம்மைக் காப்பனவாக. எம்மை ஆட்கொண்டு இன்பம் அருளும் பொன்போன்ற நின் திருவடிகள் எம்மைக் காத்தருளட்டும். நாம் ஆடுகின்ற மார்கழிநீர் எம்மைக் காப்பதாக; பெண்ணே இவற்றை நீ ஏற்றுக்கொள்வாயாக என்பது மணிவாசகம்
வணக்கம், தாழ்ந்த நிலையினை உடையது. "தாழ்த்தச் சென்னியும்’ என்பது இவ்விடத்திய சிந்தனைக்கு உரியதாகலாம். இந்தத் திருப்பாடலில் திருவழகள் காப்பனவாகவென்று ஏழு இடங்களில் வருவதைக் காணுகின்றோம். போற்றி மால் நான்முகனுங் காணாத புண்டரிகம் என்னுமிடத்து, எப்பொருட்கும் முதலும் ஈறும் இறை திருவடிகள்தான் என்பதால் நான்முகன் காணாததும் புண்டரிகந்தான் எனப்பட்டது. இறைவன் திருவருளைப் பெற மார்கழிநீராடல் காரணமாய் அமைந்தது. அதனால் மார்கழி நீராடலின்போது பயன் கொண்ட நீரிடமும் கன்னியர் காப்பு வேண்டினர். மார்கழி நீராடற் செய்திகளுடனாகி நாமும் அருள் பெறுவோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 61

Page 37
நவராத்திரி
அன்னையை வழிபடும் சிறப்பு விழாவாகி ஒன்பது நாள்கள் நடைபெறுவதொரு விழா நவராத்திரி இது ஒன்பது நாள்கள் கொண்டாடப்படுவதற்கு அமைந்த காரணங்களாகப் பல கூறப்படலாம். அவை எந்த அளவிற்குச் சரியானவை என்று கண்டுகொள்ள நாம் முயற்சிப்பது பயனற்ற காலக்கழி வேயாகும். கதைச் சம்பவங்கள் எமக்கு எந்தளவிற்குப் பயன்படும் என்று சிந்திப்பதுதான் சாலப் பொருத்தமாக அமையலாம். ஒரு கதையை இங்கு காண்டது எமது எண்ணத்தை வலுவுடையதாக்கும்.
தர்மங் குன்றி அதர்மம் மேலோங்கியதொரு காலத்திலே தேவர்கள் அசுரர்களின் கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது. தேவர்கள் மிகக் கொடூரமாக நடத்தப்பட்டார்கள். அவ்வளவுடன் நின்று விடவில்லை. மிகக் கொடூரமான செயல்கள் செய்யவுந் தூண்டப்பட்டார்கள். வற்புறுத்தப் பட்டார்கள். பலாத்காரமாக வழிப்படுத்தப்பட்டார்கள். துன்பம் பொறுக்க முடியாதளவிற்குப் போய்விட்டது. மதுகைடபர், மஹிடாசுரன், சும்ப நிசும்பர் என்னும் அசுரத் தலைவர்கள் கோரச் செயல்களின் கோலங்களாக அவற்றின் சொருபங்களாகக் காட்சியளித்தனர். துன்பம் பொறுக்க முடியாத - அட்டூழியங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தேவர்கள் திரிமூர்த்திகளிடஞ் சென்று முறையிட்டனர். அன்னை பராசக்தியினாற்றான் அசுரர்களை அழிக்க முடியும் அதனால் அன்னையிடமே விண்ணப்பிக்கும்படி வேண்டப்பட்டனர். தேவர்களது துன்பத்தை நீக்கும் பணியை ஏற்றுக் கொண்ட அன்னை பராசக்தி துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி என்று மூன்று கூறுகளாகி அசுரர்களையெல்லாம் அழித்தனர். முறையே மும்மூன்று தினங்கள் ஒவ்வொருவரும் போரிட்டனரென்றும் இறுதித் தினத்தை வெற்றித்தினமாகக் தேவர்கள் கொண்டாடினர் என்றும் கூறுவர்.
இக்கதையின் வரலாற்று நிகழ்வுகள் எப்படியாயினும் ஆகட்டும். அவை பற்றி ஆய்வுகள் எமக்குத் தேவையில்லை. எமக்குக் கொடுமை விளைக்கும் பகைவர் பலர் எம்முடனேயே
62 நற்சிந்தனைகள் நாற்பது

இருக்கின்றனர். கோபம், வஞ்சினம், பகைமை முதலிய மதுகைடவர்களும், உலோபம், பேராசை, கயமை முதலிய மகிடாசூரர்களும், அகந்தை, மமதை, அஞ்ஞானம் முதலிய சும்ப நிசம்பர்களும் எம்முடன7கி எமது அனுசரணையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கோபம் முதலிய தீய குணங்கள் நீங்க வேண்டடுமென்று கருதி மகா நோன்புக் காலத்தின் முதல் மூன்று தினங்களும் வழிபட வேண்டும். பேராசை கயமை முதலான பொருத்தமில்லா நிலமை எம்மை விட்டு நீங்க வேண்டுமென்று மகாலட்சுமியை நினைத்து அடுத்துள்ள மூன்று தினங்களும் வேண்ட வேண்டும். அறியாமை, அஞ்ஞானம் முதலிய இழிநிலைகள் நீங்க வேண்டுமெனச் சரஸ்வதி தேவியைப் பிரார்த்தித்து இறுதி மூன்று தினங்களும் வாணியை நினைத்து வழிபட வேண்டும். ஆகவே எமக்குள்ளேயே உள்ள அசுரர்களையும், அரக்கர்களையும் அழிக்க இந்த மகா நோன்புக் காலத்திலே முயல வேண்டும்.
இந்நோன்புக் காலத்தின் ஒன்பாதாவது நாள் இரவு ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழிற்றுறையினரும் தத்தமது ஆயுதங்களை, கல்விசார் உறுப்பினர்கள் தங்கள் புத்தகங்களைப் பூசையில் வைக்க வேண்டும். பத்த7வது நாள் விஜயதசமிப் பூசை நிறைவேறியதும் அவற்றைப் பெற்றுக் கருமமாற்றத் தொடங்கலாம். விஜயதசமி வாழ்வளிக்குந் தினம் வெற்றித் தினம் வாழ்க்ககையின் வெற்றியே வாழ்வின் கருதுகோள். இறைவனுடனாகி இன்புற்றிருத்தல் எமது இறுதிநிலையாக வேண்டும்.
“மனதிலுறுதி வேண்டும்; வாக்கினிலே இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்; ”
என்ற பாரதியின் சிந்தனை எமதாக வேண்டும். பானையுள் இருப்பதுதானே அகப்பையில் வரும் எமது உள்ளம் தூய்மையுடன் இருந்தாற்றான் செயல்கள் தூய்மையு டையனவாக இருக்கும். எனவே இந்தப் பொன்னான நவராத்திரி நாளிலே எமது உள்ளம் புனிதமடைய வேண்டுமென ஆழ்ந்து சிந்திப்போம். அபிராமியை வேண்டுதல் செய்வோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 63

Page 38
நவராத்திரி~ வீரம்
தேவி வழிபாட்டுடனாகிய ஒன்பது இரவுகள் நவராத்திரி எனப்படும் சிவமென்றும் அவன் வல்லமையென்றும் பிரிக்க முடியாத சம்பந்தமுடைய குணம் குறியினைக் கூறுபோட்டுக் குணத்தினைத் தேவியெனக் கண்டு வழிபடுகின்றோம். இறை குணத்தைவல்லமையைச் -சக்தியைப்- பெண்மையாகக் காணுகின்றோம். அதனைக்கூட இன்னும் நுண்ணிய அளவிலான பகுதியாக்கிப் பார்க்கின்றோம். செம்மையான வாழ்வு முக்கூறுகளைப் பெரும்பான்மையாக உடையது. வீரம் செல்வம் கல்வி என்னுங் கூறுகள் ஒழுங்காக அமைவதுதான் பொருத்தமான வாழ்வு என்று சொல்ல முடியும். அந்த மூன்று கூறுகளையும் வேண்டுதல் செய்தற்கிடமாகச் சக்தியையும் மூவராக்கிக் கண்டனர். வீரத்தினை வேண்டித் துர்க்கையையும், செல்வத்தினை வேண்டி மகாலட்சுமியையும், கல்வியை வேண்டிச் சரஸ்வதியையும் வழிடத் தொடங்கினர். இந்த மூன்று கூறுகளும் சக்தி என்னும் ஓரிடத்தடக்கம் என்பதை யாம் என்றும் நினைவிற் கொள்ள வேண்டும்.
வீரம், உடலுடன7ய வீரம் என்றும் உள்ளத்துடன7ய விரமென்றும் பார்க்கப்படும். உடலுறுதி சார்பான வீரம் ஒரு சிறு பகுதி யென்றுதான் கொள்ளவேண்டும் உளஞ் சார்பான விரமே பெரிய அளவிலானது வள்ளுவர் செர்ல்லுவார்;
உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. என்பார். அறிவு என்னுந் தோட்டியால் மெய், வாய், கண், முக்கு, செவி என்னும் ஐம்பொறிகளாகிய யானைகள் ஐந்தினையும் அவ்வவற்றின் வழிச் செல்லவிடாது காப்பவன்தான் வீட்டு நிலத்திற்கு வித்தாவான் என்பது அவர் விளக்கம் மெய், வாய், கண், முக்கு, செவி என்னும் பொறிகள் ஒவ்வோர் பகுதியிற் சுவையை மிகுதியாக அனுபவிக்க விரும்புபவை. அவற்றின் தனித்தனி உணர்வு எமது தெய்வ சிந்தனைக்கு ஊறு விளைவிக்குமென்பது எமக்குத
64 நற்கிந்தனைகள் நாற்பது

தெரிய வேண்டும். "ஐந்து பேரறிவுங் கண்களே கொள்ள” என்ற இடம் சிந்தனைக் குரியதாக வேண்டும். அப்போதுதான் மனத்துக்கண் மாசிலன7ம் தன்மை கைவரப்பெற்று உறுதிபெறும் மனம் பொறி வழிப் போகாது தடை செய்யப்படும் பொழுது, புனிதநிலை ஏற்படுவது உறுதிதானே. இந்த உறுதி நிலை பற்றி வள்ளுவர் மற்றோரிடத்துங் குறிப்பிடுவார்.
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கறனொன்றோ வான்ற வொழுக்கு.”
பேராண்மை என்று இங்கே குறிப்பிடுகின்றார். ஆண்மை-வீரம். “புறப் பகையை அடக்கும் ஆண்மை உடையார்க்கும் உட்பகையாகிய காமம் அடக்குதற் கருமையின் அதனை அடக்கிய ஆண்மையைப் பேராண்மை என்றார்", என்று பரிமேலழகர் விளக்கமுங் கூறுவார்.
சேக்கிழார் சுவாமிகள் இன்னும் மேலே ஒருபடி சென்று கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி விடும் வேண்டா விறலின் விளங்கியோர் வீரம் என்னால் விளம்புந் தகையதோ என்று கேட்கிறார். கூடும் அன்பினிற் கும்பிடுதல் அல்லாமல் விட்டுப் பேற்றிணைக்கூடக் கருத்திற் கொள்ளாத திறம் பொருந்தியவர்கள் பூசும் வெண்ணிறு போன்று உள்ளமும் புனிதமானவர்கள். ஓட்டையும் செம்பொன்னையும் ஒன்றாகவே காண்பவர்கள் இவர்கள்.
ஈசன் பணியல்லாத வேறெதுவு மில்லாதவராகிய ஈர அன்பை உடையவர்கள் வீரம் எத்தகையது என்பதை என்னாற் பேசவும் முடியாது என்று வாயிற் கை வைக்கின்றார்கள்.
ஏனாதி நாயனார் முன் “வெண்ணிறு நெற்றி விரவப் புறம் பூசி உண்ணெஞ்சில் வஞ்சக் கறுப்பும் உடன் கொண்டு" அதிசூரன் போர் செய்ய வந்து நிற்கின்றான். அண்டர்பிரான் சீரடியரை எதிர்க்கக்கூடாது. நிராயுபாணியை அவன் கொல்லக்கூடாது. எனவே எதிர்ப்பவன் போல வாளை ஏந்திப் போரிடுவான் போன்று நிற்க அதிதிரன் தன் எண்ணத்தை நிறைவாக்குகின்றான். ஏனாதியாரின் வீரமே வீரம். இவ்வண்ணம் வீரத்தின்தலை தின்றோர்வழி எம் வழிபாடு தலைப்படுவதாக
நற்கிந்தனைகள் நாற்பது 65

Page 39
நவரத்திரி~ செல்வம்
புரட்டாதி மாதத்தில் வரும் சுக்கில பட்சப் (புரட்டாதி அமாவாசையின் பின்வரும்) பிரதமை முதல் ஒன்பது இரவுகளுடன் கூடிவரும் தினங்கள் நவராத்திரி விரதகாலமாகக் கொள்ளப்படும் வாழ்வின் பகுதிகளாகி நாளாந்த நிகழ்வுகளில் தாக்கத்தை விளை விப்பவனாய் உள்ளவை வீரம், செல்வம், கல்வி என்பன இறைவன் வல்லமையைச் சத்தியெனக் கண்டு, அச்சக்திக்கோர் தனிவழிாட்டு முறைமையினை அமைத்துக் கொண்டவர்கள் இந்த நவராத்திரி விரதகாலம் பற்றியும் சிந்தித்துள்ளார்கள். வாழ்வின் பிரதான கூறுகளாயமைந்த வீரம், செல்வம், கல்வி என்பவற்றையும் அதனுடன் தொடர்புபடுத்திப் பார்த்துள்ளனர். அதனால் ஒன்பது நாள்களையும் மூன்று மூன்று நாள்களாக்கி முதல் மூன்று நாள்களையும் வீரம் பற்றி சிந்திப்பதாய், அதனை வேண்டி மகாசக்தியின் வீரத்துக்குரிய கூறாகிய துர்க்கையை வழிபடுவதாய் அமைத்துள்ளனர். அடுத்து வரும் மூன்று தினங்களும் செல்வத்தை விரும்பி இறை வழிபாடு செய்வதாய், அக்கூறுக்குரிய சக்தியின் தோற்றமாகிய திருமகள் வழிபாடு இடம்பெறும் இறுதி மூன்று தினங்களும் கல்வியை வேண்டி வழிபாடு செய்வதாய்க் கலைமகளைப் பணிதல் நடைபெறும்
இந்தச் சிந்தனையிலே செல்வம் பற்றிய கருத்துக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. செல்வம் என்று குறிப்பிடும்போது அது பரந்துபட்டதொரு பரப்பை உள்ளடக்குவது தெரிகிறது. ஆனாலும் செல்வமென்றவுடன் பொருளை மட்டும்சிந்திக்கும் இயல்பு எமது பழக்கத்திற்குள்ளாகி விட்டது. பொருள் செல்வத்தின் சிறியதொரு பகுதி அது இழிந்தவரிடத்தும் இருக்கக்கூடியது என்று வள்ளுவர் சொல்லுவார். கொலை, கொள்ளை, களவு ஏமாற்று முதலிய இழிவ்ான செயல்களாலும் அதனை அடைந்துவிட முடியும். அத்தகு பொருளைச் செல்வமென்று மதிப்பதே பொருளற்ற செயலாகும் தேவைகளை நிறைவு செய்யப் பொருள் வேண்டுமென்ப தென்னவோ உண்மைதான் “வாணிபஞ் செய்வார்க்கு வணிபம் பேணிப் பிறவும் தமபோல்” சிந்திக்கின்ற சங்ககால மக்களது எண்ணப்படி
66 நற்சிந்தனைகளி நாற்பது

வந்த பொருள், உடலுழைப்பை உண்மை வழிப் பயன்படுத்திப் பெறும் ஊதியம், நேர்மையான முறையிற் கல்வியை ஊட்டுவதன் மூலம் பெறப்படும் சம்பளம், அரச ஊழியத்தைச் செய்யவேண்டிய முறைப்படி செய்து பெறும் சன்மானம் முதலியவை பொருள்தான். அவை செல்வ மெனப்படக்கூடியவையே! இருப்பினும் இந்தவகை நேர்மையான உழைப்பின் வழி வரும் பொருளுக்கும் கொள்ளை முதலியவற்றின் மூலம் வரும் பொருளுக்கும் வேறுபாடு கண்டுகொள்ள முடிவதில்லை. அதனர்லேதான் செல்வம் என்ற தொகுப்பில் அதனை அடக்க வள்ளுவர் விரும்பவில்லை.
அந்தக் காரணத்தாலேதான், “அருட் செல்வம் செல்வத்துட் செல்வம்” என்று திருக்குறள் அருளுடமை என்னும் அதிகாரத்துக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு உரையெழுதிய பரிமேலழகர், "செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்தெடுக்கப்பட்ட செல்வம் அருளான் வருஞ் செல்வம்” என்று குறிப்பிடுவர். “அ. தொழிந்த பொருளான் வருஞ் செல்வங்கள் இழிந்தார் கண்னும் உளவாம் ஆகலான்’ என்று காரணமுந் தொடரும் “அருளான் வருஞ் செல்வம7வது உயிர்களை ஓம்பி அவ்வறத்தான் மேம்படுத்தல். உயர்ந்தார் கன்னே யல்லதில்லாத அருட் செல்வமே சிறப்புடைய செல்வம்" என்று விளக்கமும் தருவார். திருக்குறள் கேள்வி என்னும் அதிகாரத்திலே, “செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்” என்று குறிப்பிடுவதைப் பார்க்கிறோம். கேள்வியறிவால் எல்லாவற்றையும் அறியக்கூடிய வாய்ப்பு உண்டாகின்ற காரணத்தால் மற்றைய செல்வங்களை விட இது மேலானதுதான் என்று உணர முடிகின்றது.
சைவத் திருமுறைகள் இவற்றைவிட மேலான ஒரு செல்வம் பற்றிக் குறிப்பிடுகின்றன. அவை " செல்வன் கழலேத்துச் செல்வம் செல்வமே' என்று செல்வன் கழலேத்து தல்தான் மேலான செல்வம் என்கின்றன. அந்தப் பக்குவ நிலை மேலானதுதான். எனவே செல்வம் வேண்டி வழிபட வேண்டிய இந்தத் தினங்களிலே அதிலே மனமொன்றி ஈடுபாடுடையவர்களாகி வழிபடுவதற்கான பக்குவநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும்
நற்கிந்தனைகள் நாற்பது 67

Page 40
நவராத்திரி - கண்வி
புரட்டாதி மத வளர்பிறைக் காலப் பிரதமை முதல் ஒன்பது தினங்கள் நவராத்ததிரி விரதகாலமெனக் கொள்ளப்பட்டுச் சக்தி வழிபாடு நடைபெறும் சக்தி பின்னமிலான் இறைவன் சக்தி - வல்லமை. வல்லமை என்னும் பகுதிக்கான நினைவுகளில் வழிபாட்டினைச் செலுத்துங்காலம் அது அந்த வல்லமையைக் கூட முப்பெரும் கூறுகளாக்கி வழிபட்டனர். அப்பகுப்பினுள் இறுதி மூன்று தினங்களும் கல்வியை நினைந்து கல்வித் தெய்வத்தை வேண்டுவதாக அமைந்தது.
கல்வி அறிவு வித்தை, தேர்ச்சி தெளிவு உணர்வு எனப் பொருள் விரிவு காணும். ஒரு உயிர் பிறவி பெற்ற அந்த விநாடியிலிருந்து கற்கத் தொடங்குகின்றது. அது இறுதி மூச்சுவரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். இந்த உலகில் முதன் முறையாகவந்ததொரு ஜீவன் காற்றின் ஸ்பரிசத்தினை, ஒளிதரும் உருவங்களின் பிரகாசத்தினை அன்னை முதலியோரின் பரிச உணர்வினை எதிர்கொள்கின்றது. அவற்றை ஏற்று அனுசரித்து வாழவும் முடிகின்றது. அந்தச் சின்னஞ் சிறியதன் கல்வி இங்கேதான் ஆரம்பிக்கின்றது. வளரும் நிலையிற் பெறுவனவெல்லாம் கல்வி வளர்ச்சிக்கான கருவூலங்கள்தான்.
இவ்வண்ணம் வளரும் குழந்தை கல்வி நிலையங்கள் மூலம் மேலும் கல்வி பெறுகின்றது. ஒலிகளுக்கு உருவங்கொடுத்து, எழுத்துக்களாக்கி சொற்கள் வசனங்கள் என்று வளர்த்துப் பேசுதல், எழுதுதல், வாசித்தல், கேட்டல், என்பவை வழி யாம் உயர்ந்து நிற்கின்றோம். விஞ்ஞானம், பொறியியல், தொழில்நுட்பம், இயைபாக்கம், நயப்பு என்று நமதாற்றல் மிக உயர்ந்து செல்கின்றது. சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் என்று அன்று பாரதி கண்ட கனவு இன்று ஏவுகணை மூலம் சந்திரனிலும் செவ்வாயிலும் இறங்கச் செய்துவிட்டது. குடியேற்ற நாடாகுவதும் விரைவிற் சாத்தியமாகலாம்.
இந்த அடைவுகளெல்லாம் மற் றோர் உயரிய
கருதுகோளைச் சிந்திக்க வைக்கின்றன. காரணம் ஒரு தேக்கநிலை;
68 நற்சிந்தனைகள் நாற்பது

சிந்தனை தொடரமுடியாத நிலை பதினோராவது வயதிலேயே ஒரு பையன்பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளான் என்பதறிந்து முக்கில் விரலை வைக்கின்றார்கள் எம்மவர்கள். மூன்ற7வது வயதிலேயே சிறப்புட்பட்டதாரிகளான எமது பிள்ளைகளை அந்தவேளை எம்மால் நினைய முடிவதில்லை. அதற்குக் காரணமும் உண்டு சிறப்புப் பட்டம் ஆத்மீகத்துடன7கி வந்தது. தெய்வீகத்துடன் தொடர்புடையது. அந்தச் சிறப்படைவினை இந்த உலகியலுடன் சம்பந்தப்பட்ட அடைவுடன் நினைந்து பார்ட்தும் பொருத்தமில்லை.
மணி வெளுக்கச் சாணையுண்டு - எங்கள் முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரி மனம் வெளுக்க வழியிலையே. . . . . . . . . . . .
என்று வேதனையடைகின்றார் மகாகவி பாரதியார். மனத்துக்கண் மாசிலானந் தன்மை கைவர வேண்டுமென்பது பாரதியாரின் எதிர்பார்ப்பு என்று புரிந்து கொள்ள முடிகின்றது. அப்போதுதான் அந்தத் தெய்வீக நிலையை உணரமுடியும் கல்வி அந்த நிலைக்கு உயர்த்துவதாக வேண்டும்.
கற்றதனா லாய பயன்கொல் வாலறிவன் நற்றாள் தொழஅ ரெனின்
என்பது வள்ளுவம் கல்விப்பயன் ஐன்ஸ்ரின் ஆர்க்கிமிடிஸ் போன்ற உயர் சிந்தனையாளர்களாய் வருவதன்று. சிவாஜி சார்ளிசப்ளின் போன்ற நுண்ணறிவுமிகு நடிப்புக் கலைஞர்களாவதுமன்று தெய்வப் புலமைத் திருவள்ளுவர் போன்றோ மகாத்மா காந்தியடிகள் போன்றோ செய்யும் தொழில்கள் மூலம் தெய்வத்தை உணர்பவர்களாய், தெய்வீகத்தைக் காண்பவர்களாய் மாற வேண்டும் உலகு புகழ் வைத்திய கலாநிதியாக, அண்டம் விட்டு அண்டம் பாயும் ஏவாயுதங்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானியாகலாம். அவர்கள் முயற்சியின் முடிபு தெய்வ உணர்வுகளுக்கு இட்டுச் செல்வதாக வேண்டும். அந்த வகைக் கல்வியையே வேண்டுதல் செய்ய வேண்டும் தெய்வமென்பதோர் சித்தத்தை உண்டாக்கக் கூடிய கல்வியை பக்தி வழிபாட்டிற்குரிய இறுதிமூன்று நாள்களிலும் வேண்டுதல் செய்வோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 69

Page 41
தருமம் எண்றொரு பொருள்
"தருமம் என்றொரு பொருள் உளது", என்று சூரபதுமன் முதலியோர்க்கு அவர்கள் தந்தை காசிர் உபதேசம் தொடருகிறது. அவர்களைப் பெற்ற அன்னை மாயை, கணவன் காசிபரையும் பிள்ளைகளையும் பார்த்து நகைத்து, உன் பிள்ளைகளுக்கு இது கடினமான பாடம் என்கின்ற7ள். இந்தச் செய்தியைப் பார்த்ததும் எமக்கொரு ஐயம்; நாமும் ஒருகால், சூரபதுமன் வழிவந்தவர் களாகலாம7! என்பதுதான் அது தருமம் என்பது என்ன என்ற தெளிவு இல்லாமையாற்றான் இன்று இத்தனை அனர்த்தங்களும் என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
தருமமென்றால் என்ன ? இதை உணர்ந்து கொண்டால் தருமத்தின் வழிச் செல்வது பற்றியும் சிந்திக்கலாம். திருத் தொண்டர்களது செயற்கருஞ் செயல்களைச் சிந்திக்க வைக்கும் பெரியபுராணம் மனுநீதிகண்டபுராணத்தில் ஓரிடம் மனுநீதி கண்டசோழன் மைந்தன் விதிவிடங்கன் தேரில் உலா வருகிறான். ஈன்று அண்மைக்காலத்ததாகிய இளைய பசுங்கன்று ஒன்று தேர்க்காலில் அகப்பட்டு இறக்கிறது. தாய்ப்பசு மனுநீதிகண்ட சோழ மன்னன் கோயில் வாயிலிற் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சிமணியை அடிக்கிறது. மன்னன் அமைச்சர்களுடன் ஆலோசிக்கிறான். பிராயச்சித்தக் கிரியைகள் பற்றி அமைச்கர்கள் கூறுகின்றன. ஆனால் மன்னன், விதிவிடங்கனை தன் குலத்திற்குரிய ஒரேயொரு மைந்தன் என்றுஞ் சிந்திக்கவில்லை; தருமம் தன் வழிச் செல்கைதான் தக்கது என்று தன் மைந்தன் நெஞ்சின் மேலாகத் தேரைச் செலுத்து கின்றான். கன்றை இழந்து கதறும் பசுவைப் போன்று மைந்தனை இழந்து யானும் வருந்த வேண்டும்; அதுதான் தருமம், என்று சிந்தித்தவன் செயலாக்கி நின்றான். மன்னன் குணாதிசயங்களை - பக்குவ நிலையை - உலகத்திற்குக் காட்ட வேண்டித் தருமமே அப்படி ஒரு வடிவுடன் வந்து தேர்ச் சில்லில் அகப்பட்டு இறந்திருக்கலாம7 என்பதொரு ஐயத்தைப் பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் உண்டாக்கியுள்ளார். சிந்தனைக்குரியதாகட்டும்.
தருமம் இம்மை மறுமை இன்பங்களைத் தரவல்லது. அதைப் போற்றுதல் செய்ய அன்பு சாரும் அதனால் அருள்
70 நற்சிந்தனைகள் நற்பது

கிடைக்கும். இந்த இரண்டும் தவம் என்னும் மேலான நிலைக்கு இட்டுச் செல்வன. அது தெளிந்த சிந்தையை உண்டாக்கி சிவசம்பந்தத்திற்குள்ளாக்கும். இக் கருத்துக்கள் கந்தபுராணத்திலிருந்து பெறப்பட்டவை.
நிதி நூல்கள் விதிப்பன தருமங்கள். கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, வெ. காமை, வெகுளாமை, அழுக்காறாமை, இன்ன செய்யாமை, பிறர் மனை நயவாமை, பயனில சொல்லாமை, புறங்கூறாமை, பெரியாரை இகழ7மை, சிற்றினஞ் சேராமை, ஒழுக்கமுடைமை முதலாயினவெல்லாம் தருமங்கள் தான்
"மாநிலங் காவல னாவான் மன்னுயிர் காக்குங் காலை தானதனுக் கிடையூறு தன்னால் தன்பரி சனத்தால் ஊனமிகு படைத்திறத்தாற் கள்வரால் உயிர்தம்மால்”
வரக்கூடிய துன்பங்கள் தொல்லைகள் வாராவகை காப்பதுதான் அரச தர்மமாகும். இவ்வண்ணம் வெவ்வேறு நெறிக்கன் நிற்பவர் ஒவ்வொருவரும் தத்தமிடத்து நின்று அவரவர்க்கு உரிய கடமைகளை உரியமுறை நிறைவு செய்வதும் தருமம் என்றாகும். அவ்வண்ணம் நிறைவு செய்யும் போது அது அறம் என்ற உயர் நிலையிற் சிந்திக்கப்படும் அறம் - மனத்துக்கண் மாசிலனாதல் என்று குறிப்பிடுவர் வள்ளுவர். நினைவு நல்லதாக இருந்தால் மனம் புனிதமடையும். அவ்வழி செயலும் நல்லதாகவே அமையும் அதனாலேதான் வள்ளுவர் அவ்வாறு கூறினர் எனலாம். அறத்தான் வருவதே இன்பம், அது இல்லறம், அதாவது மனையாளொடு கூடி வாழ்வது என்றும், துறவறம், அ.தாவது பிறப்பினை அஞ்சி வீடுபேற்றின் பொருட்டு உலகியலைத் துறந்து வாழ்வது என்றும் ஆகும். இந்த தெறி வாழ்வை விரும்பி அதனை ஏற்று உயர்வடைய அறவாழி அந்தணன் திருவடி மலர்கனை வணங்க வேண்டும். அறம், மனு முதலிய நூல்கள் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமாம் என்பர் பரிமேலழகர். அது மனத்திற் குற்றமற்ற நிலையுடனாகி இருத்தல், புனிதமான உள்ளத்தோடு புனிதன்தாள் போற்றி புண்ணியம் காண்போம்.
நற்சிந்தனைகள் நாற்பது 7

Page 42
நாDார்க்குகள் குடியல்லேம்
மக்களாட்சிக்குட்பட்டிருந்தாலென்ன முடியாட்சிக் குட்பட்டிருந் தாலென்ன மேனிலை அதிகாரிகளுக்கு, அவர்கள் ஆணைக்கு, அடங்கி நடக்க வேண்டியதுதான் முறைமை, அவர்கள் சொல்லைப் போற்ற வேண்டும் மதிக்க வேண்டும். அது நியதி மதிப்பதுதான் மனிதப் பண்பு எதையும் நாமே சிந்திக்க வேண்டும். சரியெது, பிழையெது என்று கண்டுகொள்ள வேண்டும். பிழையானவற்றை நாமாகவே நீக்கிக் கொள்ள வேண்டும், சரியானவற்றின் வழிச் செல்ல வேண்டும் சுருக்கமாகச் சொன்னால் தீர்மானிக்கும் உரிமை எம்முடையதாக வேண்டும். சுயமாகவே அடங்கிப் போக வேண்டும்.
இதற்கும் ஒரு எல்லையுண்டு. மேலே கூறிய உண்மை பொருத்தமான இடங்களுக்குத்தான் பொருத்தமானது. தலைமை சுயசிந்தனை அற்ற நிலையில், எடுபிடிகளின் கையிற் சிக்கி வேண்டாத பணிப்புக்களுக்கு ஆளாகும் போது மாறான நடைமுறை ஏற்பட்டுவிடும் திருநாவுக்கரசு நாயனHர் இந்த வகை பொருத்தமற்ற - துன்பங்களுடன7கிய நிலைமைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். சமண மதத்தைச் சார்ந்தவர், அங்கே தலைமை பெற்று விளங்கியவர். அவ்விடத்திய விடயங்களையெல்லாம் தெளிவாக உணர்ந்தவர். பொருத்தமற்ற முறைமைகளிலிருந்து விலகிவிட வேணடுமென்னும் நோக்கில் மீண்டும் சைவ அனுட்டானவழி நின்றவர். இந்த மாற்றத்தை பொறுத்துக் கொள்ளமுடியாத சமணர்கள் மன்னன் அனுசரணையுடன் எத்தனையோ துன்பங்களுக்குள்ளாக்கினர். கல்லுடன் கட்டிக் கடலிற் போட்டனர். களிற்றினை ஏவிக் காலால் மிதிக்கச் செய்தனர். நீற்றறையிற் போட்டுப் பூட்டிப் பார்த்தனர். எந்தச் செயலும் அவரைப் பாதிப்பனவாக இருக்கவில்லை. சமணர்கள் நாவுக்கரசு சுவாமிகளின் தூல உடம்பைமட்டுந்தான் சிந்தித்தார்கள். அவர் அக உணர்வு எத்தகையது என்று கண்டுகொள்ளவில்லை. அவர் எண்ணம் முழுமையாக இறை சிந்தனை நிறைந்திருந்தது.
அறிவியலுடன் சம்பந்தமான சிந்தனை ஒன்று. ஒரு பொருள் எந்தத் திரவத்தில் அமிழ்ந்திருக்கிறதோ அப்பொருளின் அமிழ்ந்தும்
72 நற்கிந்தனைகள் நாற்பது

பாகத்திற்குச் சரியான கனவளவுள்ள திரவத்தின் எடையைச் சம்பந்தப்பட்ட அமிழ்ந்தும் பொருள் இழக்கும் என்பதுதான் அது. கப்பல்கள் கடலில் மிதப்பதற்கான விதி இந்த உண்மையுடனானது திருநாவுக்கரசு நாயனார் கல்லுடன் கட்டிப் போடப்பட்ட விடயத்திலும் இந்த விதி நிறைவாகத் தொடர்புடையதாய் இருந்திருக்கிறது. சமணக் கொள்கையுடையோர்க்கு இது தவறு போன்றிருக்கலாம். சமணர்கள் கல்லுடன் கட்டிப் போட்டது சாதாரண கடலிற்றான் . ஆனால் அப்பர் சுவாமிகள் இறை சிந்தனை நிறையப்பெற்று மிதந்தது அருட் கடலிலாகும். அருட்கடற் திரவத்தின் நிறைதான் மிதப்பிற்குக் காரணமாகியது. இதைப் புரிந்து கொள்வதற்கு ஞான உணர்வு வெண்டும். எம் போன்ற, உலகியலுடன் இறுக்கமான தொடர் புடையவர்கள் இதனைக் கண்டுகொள்ள முடியாது. இந்த நிலையிற்றான் அப்பர் சுவாமிகளைத் தம்மிடம் வரும்படி பல்லவ மன்னன் பணிக்கிறான் அப்பர் சுவாமிகள் பல்லவ மன்னனின் மன்னனுக்கே அதாவது இறைவனுக்கு அடைக்கலமானவர். அவர் வேறு யாருடைய பணிப்பையும் ஏற்க வேண்டியதில்லை. நேரடியாகவே சொல்கிறார்.
நாம7ர்க்குங் குடியல்லேம் நமனை யஞ்சேம்
நரகத்தி லிடர்ப்படேம் நடலை யில்லேம் ஏமாப்போம் பிளியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்பமில்லை தாம7ர்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா வாளாய்க்
கொய்மலர்ச்சே வடியினையே குறுகி னோமே. என்று தம் நிலையைப் புலப்படுத்துகின்றார். தாம் யாருக்கும் குடிமையான வனல்லாத சங்கரன், தனக்கு மேலொருவன் இல்லாதவனாகிய அவனுக்கு யான் ஆட்பட்டுவிட்டேன். ஆகவே வேறு யாருக்கும் யான் பணிந்து நிற்க வேண்டிய தேவை இல்லை என்கின்றார்கள். மணிவாசகர் கூட “யாமார்க்கும் குடியல்லோம் யாதுமஞ்சோம்” என்கின்றார்கள். இவ்வண்ணம் தர்ந்த ஆற்றலுடையோருடனாகிய யாமும் அச்சமற்ற மேலான வாழ்வு வாழ முயலுவோம்.
நற்கிந்தனைகள் தாற்பது 73

Page 43
மூர்த்திதலம் தீர்த்தம்
மனிதகுலத்தின் ஒழுங்கான உயரிய வாழ்விற்கு உரியனவாக அமைந்தவை இறைவன் திருவிளையாடல்கள். இறைவன் சந்நிதி என்று பார்க்கும் பார்வைக்கு அவை திருவிளையாடல்கள்தான். ஆனால்ஆழமான நுணுக்கமான உட்பொருளை உ ையவை அவை, எல்லோரையும் சிந்திக்க வைப்பனவாக - சிறப்புற வாழ வைப்பனவாக - வாழ்வின் மூலங்களை விளங்க வைப்பனவாக அவை அமைந்துள்ளன. தெய்வ சிந்தனைக்கு வழி செய்வன என்பதால் திருவிளையாடல்கள் என்று குறிப்பிடப்பட்டன.
மூர்த்தி தலம் தீர்த்தம் என்று மூன்று பகுதியானுஞ் சிறப்புறப் பெற்ற இடத்தில் தீர்த்தமாடுதல், இறைவனை வணங்குதல் பெரும் பேறெனப் பெரியவர்கள் சொல்வர்.அவ்வாறான மகத்துவத்திற்குரிய தலம் எது என்றறிய விரும்பிய சம்புபாதர் முதலிய முனிவர்கள் குதமுனிவரிடம் கேட்கின்றார்கள். சூதமுனிவரின் அறிவுறுத்தலின்படி நாரத முனிவரிடம் வினவி, பரமசிவன் விரும்பியுறையும் திருவாலவாய்தான் அந்த உயர் சிறப்புக்களைப் பொருந்திய தலம் என்று அறிந்து கொண்டனர். அந்தத் தலம் பரமசிவன் விரும்பி உறைவது பொற்றாமரை வாவி என்னும் சிறப்புப் பொருந்தியதொரு தீர்த்தமும் அங்குண்டு. அந்தத் தீர்த்தத்திற்கு அண்மையாகச் சென்றுவிட்டாலே பாவங்கள், மலங்கள் எல்லாம் அகன்றுவிடுமாம் அவ்வளவு புனிதமும் தெய்வீகமும் வாய்ந்தது அந்தத் திர்த்தம் அந்தத் தலத்திலேதான் அறுபத்து நான்கு திருவிளை யாடல்களும் இடம்பெற்றன.
இந்த மேன்மைபெறு செய்தியுடன் மற்றொரு கருத்தினையும் அறிகின்றோம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று சிறப்புக்களையும் ஒருங்கு பெற்ற தலங்கள் பலவிருப்பினும் திருவாலவாய் முதலில் வைத்து எண்ணப்படக்கூடியதாய் அதியுயர் சிறப்பபையும் பெற்றுள்ளது. மூர்த்தி தலம், தீர்த்த விசேடங்களைப் பொருந்திய தலங்களுள்ளே மிக உயர்வான தலங்களாகக் காசி
74. நற்சிந்தனைகள் நாற்பது

சிதம்பரம், திருக்காளத்தி திருவாலவாய் என்பன குறிப்பிடப்படும். இறுதிக் கிரியைகள் காசியில் நடைபெறக்கூடிய வாய்ப்பு ஒருவனுக்கு வந்து சேருமானால் அதுதான் அவன் வாழ்விற் பெற வேண்டிய அதிஉயர் பேறாகும். அதாவது காசியில் ஒருவன் இயற்கையாக இறுதிநிலையைத் தழுவுவான7யின் அவனுக்கு முத்தி நிச்சயம் என்பர். அந்தச் செய்தியை அறிந்த பலர் தம் இறுதிக் கிரியைகள் அங்கேயே நடைபெற வேண்டுமென்ற பேராவலினால் அங்கேயே சென்று தங்கியுள்ளனர். எது எப்படியானாலும் இறைவன் பணிப்பு என்று ஒன்றுண்டல்லவா? அதன்படிதானே எல்லாம் நடைபெறும். அடுத்தது சிதம்பரம், அத்திருத் தலத்தைத் தரிசித்தாலே முத்தி கிடைக்கும் என்பர் அறிஞர். மற்றொன்று திருக்காளத்தி திருக்காளத்தியை அடைந்து வழிபட்டாலே முத்தி யெனும் மேனிலை கிடைக்கும் என்பர். அடுத்துத் திருவாலவாய், நினைத்தல் மாத்திரையானே முத்திநிலை என்னும் வாய்ப்பைத் தருவது திருவாலவாய். திரிகரணகத்தியுடன் திருவாலவாய் இறைவனை நினைந்து வழிபட்டால் முத்திப்பேறு கிடைக்கும் என்பர். நினைத்தல் மாத்திரையால் முத்தி நிலையை அடைய வாய்ப்பளிக்குந் தலம் மற்றைய தலங்களைவிடச் சிறப்பானது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுதான். இந்தச் செய்திகள் பரஞ்சோதி முனவர் செய்த திருவிளையாடற் புராணம் என்னும் நூலிலிருந்து பெறப்பட்டவை.
திருவாரூரிற் பிறந்தோர் அனைவரும் முத்திபெறுவர் என்னுங் கருத்து மற்றோரிடத்து உண்டுஇறைவன் திருப்பாதங்கள் பதிந்த நிலம் திருவாரூரில் உண்டு. சுந்தரருக்காக துது போன நகர். மனுநீதி கண்ட சோழனின் மாட்சி நிறை ஆட்சி நடைபெற்ற நகர்.
"மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கு வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே."
என்பது தாயுமானவர் தரவு ; வழிப்படுத்துவதாகி அமைவதாக
நற்சிந்தனைகள் நாற்பது 75

Page 44
குரு வழிபாடு
சுவர்க்கலோகத்தில் தேவ மங்கையரின் நடனத்தையுங் கிதத்தையும் தேவேந்திரன் சுவைத்துக்கொண்டிருக்கின்றான். அந்தவேளை தேவ குருவாகிய வியாழபகவான் அங்கு எழுந் தருளுகின்றார். கலைச்சுவையை அனுபவித்துக் கொண்டிருந்தமை காரணமாக இந்திரன் குருவை உபசரிப்பதினின்றுந் தவறினான். அச்செயல் வியாழ பாகவான் மனதில் வேதனையை உண்டாக்க அது கோபமாக மாறியது. எந்தவித உரையாடலுமின்றி அவர் அவ்விடத்தை விட்டகன்றார். அதனைத் தொடர்ந்து இந்திரன் செல்வங் குறையத் தொடங்கியமை, தவறு நிகழ்ந்தமையை உணர்ந்த இந்திரன் வியாழபகவானைக் கண்டுகொள்ள முயன்றமை, செய்த பிழையின் பேறாக அசுரகுலத்து விசுவருபனைக் குருவாகக் கொள்ள நேர்ந்தமை, அவன் வஞ்சனையை அறிந்தபின் அவனைக் கொன்றமை, பிரமகத்தியினின்றும் நீங்கத் தேவர்கள் உதவியமை, விசுவரூபனின் தந்தை இந்திரனைப் பழிவாங்க எண்ணி யாகம் செய்தமை, இந்திரனைக் கொலைசெய்யும்படி யாகத்திலே தோன்றிய விருத்தாசுரனை ஏவியமை, அஞ்சிய இந்திரன் பிரம்மதேவருடன் வைகுந்தஞ் சென்று விஷ்ணுவிடம் விண்ணப்பித்தமை, ததிசி முனிவரின் முதுகந் தண்டான குலிசத்தைப் பெற வழிசெய்தமை, மீண்டும் விருத்தாசுரனை எதிர்த்தமை, அவனைக் கொலை செய்தமை, தொடர்ந்த பிரமகத்தி கடம்ப்வனத்தைச் சமித்தபோது நீங்கியமை, பொற்றாமரை வாவியில் நீராடியமை, சோமசுந்தரரை வணங்கிச் செய்த பிழையைப் பொறுக்குமாறு வேண்டிக் குருவைப் பூசித்து அரச பரிபாலனத்தைத் தொடர்ந்தமை என்பனவாய செய்திகள் திருவிளையாடற் புராணம் என்றும் நூலிற் காணப்படுவன.
பரஞ்சோதி முனிவர் தந்துள்ள இந்த நூலில் குரு வழிபாட்டின் உயர்வு சிந்தனைக்குரியதாக்கப்பட்டுள்ளது. கலையார்வம் இந்திரனின் உண்மை அறிவை மழுங்கடித்தது. அங்கு வந்த தேவகுரு பிருகஸ்பதியை அவன் உதாசீனஞ் செய்தான்.
76 நற்கிந்தனைகள் நாற்பது

அந்தவொரு நிகழ்வு எத்தனையோ தொல்லைகளுக்குக் கால7யது. சைவ ஒழுக்கங்களுள் குரு வணக்கம் மிகமிக இன்றியமையாதது.
அரசன் உபாத்தியாயன் தாய்தந்தை தம்முன் நிகரில் குரவர் இவரிவரைத் தேவரைப் போலத் தொழுதெழுக என்பதே யாவருங் கண்ட நெறி
என்பது ஆசாரக்கோவை எனும் அருமந்த நூல் தருங் கருத்து. மன்னன், ஆசிரியன், தாய், தமக்கு முன்பிறந்தோர் ஆகிய இந்த ஐவரும் ஐங்குரவர் ஆவர். ஆசிரியர் என்னும்போது கல்விதந்த ஆசிரியர், ஞானம் தந்த ஆசிரியர் என இரு வகையினரையுஞ் சிந்திக்க வேண்டும். இவர்களைத் தெய்வமாக வணங்க வேண்டும். பொருத்தமான முறைப்படி பொருத்தமான இடங்களில் வணங்க வேண்டும் ஒரு மாணவனைப் பற்றிய நல்லதோர் பதிவு குருவின் மனதில் இடம்பெற வேண்டும் இவன் என் மாணவன் என்ற மதிப்பீடு ஆசிரியர் வாயிலிருந்து வரவேண்டும். அவன்தான் அந்த ஆசிரியரின் உண்மையான மாணவன் என்று கொள்ளப்படத்தக்கவன் அவ்வகை இடம்பெறும் குருவின் மானசீகமான வாழ்த்துதல்களே மாணவனை வாழவைக்கும். புனிதமான நினைவுடன் ஆற்றத் தொடங்கும் செய்திகளை நிறைவு செய்ய முடியாது மனத்தில் ஏதாவது இடர்கள் தோன்றும7யின் உடனுந் தம் அன்பிற்கும் மதிப்பிற்கு முரியகுருவை நினைய வேண்டும் வழி காட்டும்படி வேண்டுதல் செய்ய வேண்டும். இடர் தான7கவே அகன்றுவிடும்.
வாழ்வில் நல்ல கருமங்கள் நடைபெறும் வேளைகளில் எல்லோரும் வாழ்த்தும் முறைமை உண்டு. இங்கு வாழ்த்துபவர்கள் எல்லாம் குரவர்கள் என்றே கொள்ளப்படுவர். இவர்களுள் ஆசானாய் அமைந்தவர் சிறப்பிடம் பெறுகின்றார். "குருவாய் வருவாய் குகனே!” என்னும் மந்திரம் எம்மை வழிபடுத்துவதாக அமையும்.
நற்கிந்தனைகள் நாற்பது 77

Page 45
dffgögőčoř Unuiøi
"இந்தச் சரிரம் தமக்குக் கிடைத்தது நாம் இறைவனை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்.” என்பது நாவலர் எழுதிய இரண்டாம் பாலபாடத்துள்ளதொரு உண்மை. உயிர்த்தோற்றங்களை ஓரறிவு உயிரென்றும், ஈரறிவு உயிரென்றும், மூவறிவுயிரென்றும், நான்கறிவு உயிரென்றும், ஐந்தறிவு உயிரென்றும், ஆறறிவு உயிரென்றும் பாகுபாடு செய்துள்ளனர். இந்த உயிர்ப் பகுப்புக்களுக்கிடையே வேறுபாடு கண்ட புலமையாளர், இறுதி இடத்து வைத்துள்ள ஆறாவது அறிவுடன் கூடிய மனிதன் பகுத்தறி வுடையவன் எதையும் ஆராய்ந்து சிந்திக்கக் கூடிய தனியாற்றல் உடையவன். அவனாலேதான் இந்தச் சரிரம் ஏன் கிடைத்தது என்பதைச் சிந்திக்க முடியும். சிந்தித்தான் பொருத்தமான முழபையும் பெற்றுக்கொண்டான்.
முந்திய முந்திய பிறவிகளில் நாம் செய்த நல்ல திய காரியங்களுக்கேற்ப, யாம் பெற்ற பொருத்தமற்ற பிறப்புக்களில், அனுபவித்த துன்பங்களுக்கேற்ப, இந்த மானிடப் பிறவி இறைவனாலே எமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. “அரிது அரிது மானிடராதல்’ என்ற உண்மையை ஒளவைவாய்க் கேட்ட நாம் “என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே” என்று நெஞ்சைப் பெரிய அங்கலாய்ப்புடன் வினவுவதையும் பார்க்கின்றோம். சிந்தித்துச் செயற்படக்கூடிய நல்ல பிறவி கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பொருத்தமான வழியிற் பயன் கொள்ள வேண்டும். எமக்குப் பெ7ருத்தமான சிந்தனை எது? எமக்கு வேண்டாத போக்கு எது ? என்று திர ஆராய வேண்டும். பொருந்தும் வழி எம்மை நெறிப்படுத்தி எமது நல்ல வாழ்விற்கு வேண்டுவனவற்றை ஒழுங்கான வழியிற் பெற்று எல்லோரும் போற்ற வாழ வேண்டும். நீதி வழிநின்று பொருளைச் சம்பாதிக்க வேண்டும் “கொள்வதுஉம் மிகை கொளாது கொடுப்புதூஎங் குறை கொடாது" என்பதொரு பாடற்பகுதியை பண்டை இலக்கியத்திலே காணுகின்றோம். பொருள்களைப் பெறும்போது உரிய அளவினும் கூடுதலாகப் பெறுவதோ கொடுக்கும் போது அளக்கப்பட வேண்டிய
78 நற்கிந்தனைகள் நாற்பது

அளவையினுங் குறைத்துக் கொடுப்பதோ இன்றிச் சரியான அளவையே பயன்படுத்த வேண்டும் அதுதான் தர்மம் நீதி வழுவா நெறிமுறையிற் பொருள்சம்பாதிக்கப்பட வேண்டும். அளவிற்கு மேற்பட்ட பொருளை வைத்துக் கொள்வதும் நிதியாகாது. நிதிவழி அறக் கோட்பாடுகளுக்கு மாறுபடாது பெறப்பட்ட செல்வங் கொண்டு மனைவி மக்களுடன் இன்பமாக வாழமுடியும் உண்மையான வாழ்க்கைச் சுவையை அப்போதுதான் அனுபவிக்க முடியும். பெறப்படும் வருவாய் கொண்டு வறியவர்களுக்கு, ஊனமுற்றோருக்கு மனநிறைவோடு உதவவும் முடியும் புண்ணியச் செயல்கள், தான தர்மங்கள் என்பனவும் நல்லபடி நிகழலாம். புண்ணியமே செய்யத்தக்கது. பாடம் நீக்கப்பட வேண்டியது என்று உணரும் நிலை உயிருடன் கூடிய இந்தச் சரிரத்துக்குத்தான் உண்டு. அ.தாவது ஆராய்ந்து அறியும் நிலை இந்தச் சாரத்துடன் கூடிய உயிருக்குத்தான் உண்டு. அல்லாத, விலங்கினத்திற்கோ பறவை இனத்திற்கோ ஊர்வனவற்றிற்கோ அது முடியாததொன்று. இந்த நிலைமையைத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டு கிடைத்த சந்தர்ப்பத்தை எமதாக்கிக் கொள்ள முயல வேண்டும்.
"யாக்கையை யாப்புடைத்தாய்ப் பெற்றவர் தாம்பெற்ற
tLIIIdiá05utally LIL16iGé576ias' என்று நாலடியார் அருமையாகச் சொல்லும் இது நிலையில்லாதது இப்பவோ, பின்னையோ, மத்தியானத்திலோ, வீட்டிலோ, தெருவிலோ, திண்ணைதனிலோ உயிர் சரிரத்தை விட்டுப் பிரிந்து விடலாம். அதன் பின்,
“- கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோற் போகு முடம்பு.”
என்பதை அறிந்து, உணர்விற்கொண்டு, வாய்ந்தது நத்தமக் கிதோர் பிறவி என்பதைத் திர்க்கமாக எண்ணிதல்லனவற்றைச் செய்துவிட வேண்டும். இப்பிறவிதப்பின7ல் எப்பிறவி வாய்க்குமோ அறியோம். கிடைத்த இந்தச் சர்த்தை, அதிகூடிய பயன் பெறக்கூடிய வகை உபயோக முள்ளதாக்குவோமாக.
நற்சிந்தனைகள் நாற்பது 79

Page 46
உணர்வொன்றிய வழிபாடு
உளப்பக்குவ நிலைக்கேற்ப மக்கள் வழிபாட்டு முறைகளும் மாறுபட்டுக் கொண்டேயிருக்கும். நாளொன்றுக்கு ஒரு முறை வணங்குவது என்றும் காலை மாலை வணங்குவது என்றும் காலை நண்பகல் மாலை வணங்குவது என்றும், குளித்தபின் வணங்குவது என்றும், கை கால் முகம் கழுவிய நேரத்திலெல்லாம் வணங்குவது என்றும், வணங்குதல் விரிவடையும் இன்னும், விசேட காலங்களில் வழிபடுவது, விசேட தேவைகளின்போது வழிபடுவது, மகோற்சவ காலங்களில் வழிபடுவது என்றும் விரிவடையும் எந்த வேலையைத் தொடங்கும் போதும் இறைவழிபாடு செய்வது ஒன்று ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்து முயற்சிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் என்று உள்ளவர்கள் எல்லாம் பிள்ளையார் சுழியிட்டு முதலில் விநாயகனை வேண்டிக் கொண்டு பின்னர் எல்லாம் வல்ல பரம் பொருளை நினைத்து சிவமயம் என்று எழுதிப் பேனாவின் நுனி முதல் இதயத்தின் அடித்தளம் வரை சிவமயமாகக் கண்டு முயற்சியைத் தொடருவர். வாகனங்களை ஓட்ட ஆரம்பிப்பவர்களும் இந்த வகையிலான இறை சிந்தனையை மானசீகமாகச் செய்து கொண்டேதமது வேலைகளைத் தொடருவர். எந்தவொரு தொழிலைச் செய்பவரும் ஏதோ ஒரு வகையில் தெய்வ சிந்தனைக்கு உள்ளாகின்றனர்.
ஆலயங்களுக்குச் செல்பவர்கள் செல்லும் முறையிலும் ஆலயங்களில் இடம் பெறும் வழிபாட்டு முயற்சிகளிலும் வேறுபாடுகளைப் பார்க்கின்றோம். ஆலயங்களுக்குச் செல்லும் போதும், வழிபாட்டு நிறைவுடன் திரும்பும் போதும் இறை சிந்தனையுடனேயே போக்கு வரவு நிகழ வேண்டும். ஆலயத்தைச் சமிபித்தவுடன் துல இலிங்கமாகிய கோபுரத்தையோ, ஆலய முன்றிலையோ வணங்கிக் கொண்டு நீரினாற் புனிதப்படுத்தி உள்ளே சென்று பரம் பொருளை வணங்கி மனதிலே திருமுறைகளை ஓதி வழிபடலாம் செய்ய வேண்டுவனவாயுள்ள சரியைத் தொண்டுகளில் ஈடுபடுவது மற்றொருவகை வழிபாடுதான் கோயிலுக்கு வேண்டிய பூசைத் திரவியங்களைக் கொடுத்தல் பூந்தோட்டம் அமைத்தல்,
80 நற்சிந்தனைகள் நாற்பது

குடை கொடி ஆலவட்டம் பிடித்தல், கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், பாத்திரங்கள் தீபங்கள் முதலியவற்றை துயதாக்கல், விளக்கேற்றுதல், பூ எடுத்துக் கொடுத்தல், மாலை கட்டிக் கொடுத்தல் முதலியன சரியை வழிபாட்டு முயற்சிகளாம். இந்த நிகழ்வுகளெல்லாம் உள்ளத்துணர்வுடன் ஒன்றியன ஆகவேண்டும் வழிபடும் நேரம் சிறியதாயினும் அது மனப்பதிவுள் சேர்ந்ததாக வேண்டும் மனம் மொழி மெய் என்பன ஒருவழிப்பட்டு இயங்க வேண்டும். ஐந்து பேரறிவுங் கண்களேயாக, அந்தக் கரணங்கள் சிந்தையாகத் தொழிற்பட வேண்டும் கேட்டுப்பார்த்தல், சுவைத்துப் பார்த்தல், முகர்ந்து பார்த்தல், பரிசித்துப் பார்த்தல், கண்டு பார்த்தல் என ஐம்பொறிகளுமே பார்க்கவேண்டும். இந்த நிலை கைவரப் பெற்றால் புறநிகழ்வுகள் எதுவுமே புலப்பட முழயாது. அபிராமி அம்மையிடம் தம்மைப் பறிகொடுத்த அபிராமிப்பட்டர் சரபோவி மன்னன் உரையாடிய போது அமாவாசையைப் பெளர்ணமி என்று குறிப்பிட்டதும், அன்னை அவரைக் காப்பாற்றியதும் நாம் அறிந்தவையே!
இந்த வழியில் நாம் இறைவனை யாசிக்கவேண்டும் அது பழக்கத்திற்குள்ளாகி இறையனுபவத்தில் ஒரு உயர்ந்த இடத்தை அடைய வைக்கும். இந்த அனுபவத்திற்கு உதவும் வகையில் ஆலயப் பணிகள் அமைகின்றன. ஒழுங்கு, அமைதி நறுமணம், புனிதம், சுகந்த தூபம், இனிய பக்தி இசை என்று எல்லாமே எமக்குச் சாதகமாகின்றன. இவ்வழி, நாம் இறையனு பவத்துடன7கி, மனச்சஞ்சலங்களினின்றுந் துர விலகி வாழ முயலுவோம் எல்லாம் வல்ல பரம்பொருளே! அடியேன் உன்னை நினைந்து வழிபடும் ஒரு கணப் பொழுதாவது உணர்வொன்றி உன்னுடனாகி இருக்க அருள்வாயாக
" சிந்தனைநின் தனதாக்கிநாயி னேன்தன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கி ஐம்புன்கள் ஆர வந்தெனையாட் கொள் . . . . . . . . . . . . . என்று வேண்டுதல் செய்து பயன் காண்போம்.
நற்கிந்தனைகள் நாற்பது 81

Page 47
மனிதப்பிறவி
பூவுலகத் தோற்றங்களுள் மனிதப்பிறவி மேலானது. உயிரினங்கள் எல்லாவற்றினும் மேலானவனாக மனிதன் எண்ணப்படுகின்றான். அவ்வண்ணம் எண்ணுபவனும் மனிதன்தான் என்பது யாம் அறிந்ததுதான். அவனிடந்தான் பகுத்தறிவு உண்டு. எனவே சிந்தித்துத் தெளியக் கூடிய நிலைமையும் அவனுடையதாகவே இருக்கும்.
அறிவும் உணர்வும் உடையவன் மனிதன் மெய்ப்பாடுகளும் நிறைந்தவன். சிந்தனைவளம் நிறைவாக உண்டு. அதன7ற் தன்னைப் பற்றிச் சிந்தித்தான் மேலே ஒரு சக்தி உண்டு என்பதைத் தெளிந்தான். மேலான வல்லமை, வழிபாட்டிற்குரியதாயிற்று சமய ஒழுகலாறுகள் உண்டாயின. இதுதான் ஆரம்ப காலம் என்று சொல்ல முடியாத காலத்திலிருந்தே சிவ வழிபாடு நடைமுறையில் இருந்திருக்கிறது. மொஹஞ்சதாரோ, ஹரப்ப7 முதலிய இடங்களின் பண்டை நாகரிகம் சிவ வழிபாட்டைப் பிரதிபலிப்பதாக இருந்தனவென்று ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த அமைதியில் உடலும் உயிரும் இணைந்த நிலைதான் வாழ்க்கைக்கு உரியதாகின்றது. இந்த வாழ்வமைதி உயிருக்கும் இறைவனுக்கிடையேயும் உண்டு. சீவன், உயிர், சிவன் உயிருக்குயிராய் நிற்பவன்.
“சிவனைப் பரமனுட் சீவனுட் காட்டும்’ (திருமந்திரம்2397) என்னுமிடத்தும் அந்த உண்மை தெளிவாகின்றது.
சீவ னெனச்சிவ னென்னவே றில்லை சீவ ன7ர்சிவ னாரை யறிகிலர் சிவ னார்சிவ னாரை யறிந்தபின் சீவ Hைர்சிவ 7ையிட் டிருப்பரே என்னும் மற்றோர் திருமந்திரத் திருப்பாடல் சீவன் சிவன் என்பவற்றின் ஒருமைப்பாட்டினை விளக்குகின்றது. சிவன் சிவனாய் விழன் எல்லாம் சிவமயமாகும். சிவமயமாய் வாழ்ந்தோர் அநுபூதிச் செல்வர்கள், அவர்கள் பிறப்பை வெறுத்தவர்கள். "முன்னம் பிறந்த
82 நற்கிந்தனைகள் நாற்பது

பிறப்போ முடிவில்லை, இன்னம் பிறப்பிக்க எண்ணாதே’ என்கின்றார் ஒருவர். "பிணிப்பட வாய்ந்துடலம் இறக்குமாறுளதே’ என்றும் "இன்ன மோரன்னை கருப்பையூர் வாராமற் கார்" என்றும் பலர் பிறவியை இழித்துக் கூறிய அதே வேளையில், மனித்தப் பிறவி மூலமே எமக்கு இறையன்பு கிட்டு மென்று பேசியவர்களும் உளர். “இப்பிறவிதப்பினால் எப்பிறவி வாய்க்குமோ” என்பர் தாயுமானவர். அரிது அரிதும7னிடராதலரிது’ என்ற7ர் ஒளவையார். “வாய்ந்தது நந்தமக் கிதோர் பிறவி மதித்திடுமின், .மதித்திடுமின் ஆடல் காண்டான் அடியனேன் வந்தவாறே”, என்பது அப்பர் சுவாமிகள் மறைமொழி “மணித்தப் பிறவியும் வேண்டுவதே" என்று அவர்கள் பின்னும் வற்புறத்துகிறார்கள்.
குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.
கூத்தபிரானின் ஆடல் காணக் கிடைக்குமேயான7ல், குனித்த புருவம், சிவந்தவாயிற் குமின் சிரிப்பு பார்க்க முடிந்தவையெனில் மனித்தப் பிறவியுடனேயே இருந்துவிடலாம் என்பது அப்பர் சுவாமிகளின் அங்கலாய்ப்பு உற்றாரை யான் வேண்டேன், ஊர் வேண்டேன், பேர் வேண்டேன் என்ற மாணிக்கவாசகர்கூட “கூத்தா உன் குரைகழற்கே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே”, என்று கேட்பதோடு நில்லாது பாடவேண்டும், ஆடவேண்டும், அம்பலத்தாடும் நின்கழற் போது கூடவேண்டும், என்று வேண்டுதல் செய்கின்றார். இந்தப் பூமிதான் சிவனுய்யக் கொள்கின்ற ஆறு என்று தெரிந்து கொண்டபின் அதனை உதற முடியுமா! பெறுதற்கரிய மானிடப்பிறவியைச் சைவம7ஞ் சமயஞ் சார்ந்து பெற்றுள்ளோம். சிவனுய்யக் கொள்கின்ற இடமாகிய பூமியில் சிந்திக்கக்கூடிய மனிதனாகப் பிறவி பெற்றுள்ளோம். அதுவுஞ் வைசவ சமயத்துடனாகி வந்துள்ளோம் இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன் கொண்டு பேரின்பப் பெருவாழ்வு பெற முயலுவோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 83

Page 48
மனித்தப் பிறவியும் வேண்டுவதே
யாம் செய்த புண்ணிய பாவங்களுக் கேற்ப எமது பிறப்பு அமைகின்றது. ஏதோ நல்லது செய்துவிட்டோம் அதன7ல் இந்தப் பிறவி அமைந்தது. இந்தப் பேற்றினைப் பார்த்து தேவர்கள் ஆசைப்படுகின்றார்கள். இது மேலான பிறவி என்பது அவர்கள் கருத்து அவர்கள் நிலை மேலானது என்று நாங்கள் ஏங்குகின்றோம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்னும் நிலையோ என்னவோ.
எமது இந்தப் பிறவி நிலையில்லாதது எந்த நேரத்தில் அழிவுபடுமோ எமக்குத் தெரியாது. நேற்று எம்முடனாகியிருந்து எல்லாவிதமான களியாட்டங்களிலும் பங்கு கொண்டவர். இன்று அவரில்லை; நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும்; நம்பித்தான் ஆகவேண்டும். மனிதப்பிறவியின்நிலை அத்தகையது எப்படியோ நாம் பிறந்துவிட்டோம் இங்கு நாம் இருக்கக்கூடிய கால எல்லை எமக்குத் தெரியாது. ஆனால் சிந்திக்கவல்லது இந்தப்பிறவி பகுத்தறிவு என்பதொரு சிறப்பாற்றல் இதற்குமுண்டு. சரி எது பிழை எது என்று சிந்திக்கவல்ல திறன் இதற்குண்டு. எனவே புல், பூண்டு, மரஞ், செடி, ஊர்வன, பறப்பன, நடப்பனவாய உயிர்த் தோற்றங் களைவிட இது மேலானதுதான். இது மேலானது, இது மேலானது என்று எத்தனை தாட்களுக்கு எம்மால் சொல்லிக் கொண்டிருக்கமுடியும். இன்றோ, நாளையோ , நாளை மறுதினமே7 இதற்கு ஒரு முடிவு வந்துவிடும். அதற்கு முன்பாகச் செய்ய வேண்டுவனவற்றை நிறைவாக்கிவிட வேண்டும் நாளை செய்வோம், நாளை செய்வோம் என்று காலத்தைப் போக்குவது பொருத்தமில்லை.
இன்று கொல் அன்று கொல் என்று கொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம் என்பது நாலடியார் என்னும் நூல் கூறும் புத்திமதி அது - இந்த உடம்பிற்கும் உயிருக்குமாகிய தொடர்பு அற்புதமானது. சாதாரணமாகப் போகிறபோக்கிற் தங்குவதற்குக் கிடைத்த இடம
84 நற்சிந்தனைகள் நாற்பது

போன்றது இந்த உடம்பு, தேவை நிறைவெய்த உடம்பும் தவிர்க்கப்படும்.
"குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.’ என்பது திருக்குறள் தரும் செய்தி முட்டையுள்ளிருந்து வெளிப்பட்ட குஞ்சு மீண்டு எந்தச் சந்தர்ப்பத்திலும் தான் புறப்பட்ட இடத்தைப் பார்ப்பதில்லை. உயிரினுடைய நிலையும் அத்தகையதே!
சின்னஞ் சிறுவர்களுக்கான புதியதொரு கல்வி முறை செய்து கற்றல் அது. அதற்காகப் பொருட் செலவு செய்யக்கூடாது. கிடைக்குங் கழிவுப் பொருட்களையே பயன்கொள்ள வேண்டும். ஒதுக்கப்பட்ட வெட்டுத்துணிகள், இனிப்புவகை சுற்றப்பட்ட கடதாசிகள், பழைய நெருப்புப் பெட்டிகள், சோடாப் போத்தல் மூழகள் என்று கிடைக்கும் கழிவுப் பொருட்கள் எல்லாமே பயன்படுத்தப்படலாம். கற்பித்தல் முடிந்து நோக்கம் நிறைவேறியதும் அப்பொருள்கள் நீக்கப்படலாம். வான்வெளியிற் காணப்படும் சந்திரத் தரையில் இறங்க ஒரு வாகனம் பயன்படும். திரும்பிப் பூமியை வந்தடையவும் உதவும். அதன்மேல் அதன் பயன் முந்தியது போன்றதாகாது.
கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயரான் டுழவார் வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவதிலர்.
ஆலையொன்றில் கரும்பினை ஆட்டிச் சருக்கரைக் கட்டியைச் செய்து கொண்டவர் அக்கரும்பின் சக்கை நெருப்பில் வேகும் போது துன்பப்படமாட்டார். உடம்பினதும் உண்மையான பயனைக் கொண்டவர்கள் இறப்பு நிகழும்போது துன்பப்படமாட்டடார்கள் கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்னுதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு உடம்பு சக்கை வேண்டிய அளவு பயன்பெற்ற பின் அதனை உதறிவிட வேண்டியதுதான் தேவையின் அளவிற்கு எதையும் வைத்துக்கொண்டு பயன் பெறுவோமாக.
நற்கிந்தனைகள் நாற்பது 85

Page 49
பிறவிப்பயனர்
மூன்று வயது நிரம்பிய குழந்தை ஞானசம்பந்தர். அப்பா குளிக்கச் சென்றபோது தானும் உடன் செல்கின்றது. தந்தையின் உருவம் தண்ணிலே மறைய “அம்மே அப்பா" என்றழைத்து அழுகிறது. அருகே இருந்த தோனியப்பர் கோயிலின் கோபுரத்தைப் பார்த்து அது அழுதது. இறைவன் இறைவி காட்சி கிடைக்கின்றது. உமையம்மையார் பொற்கிண்ணத்திலே தமது திருமுலைப்பாலை எடுத்து ஊட்டுவித்து மறைகின்றார். பால் குடித்த அடையாளத்தின் அறிகுறியாக வாயின் பக்கலிலிருந்து பால் ஒழுகிக் கொண்டிருந்தது. நீராடி முடித்த தந்தை குழந்தையிடம் வருகின்றார். குழந்தையின் வாயிற் பாலி வடிந்திருப்பதைக் கண்டார். ஒரு கணம் பதட்டமடைந்தார். "யார் உனக்குப் பால் தந்தவர்” என்று அச்சுறுத்துவது போன்று வினாவுகின்றார். ஞானப் பாலுண்ட ஞானக் குழந்தை, அச்சமடைந்ததாகத் தெரியவில்லை. இறைவனொடு வந்த இறைவி பால் தந்ததாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் குழந்தை அப்படியுஞ் சொல்லவில்லை. "தோடுடைய’ செவியன் என்று ஏதோ சிறுபிள்ளைத்தனத்தாற் சொன்னது போற் சொல்கின்றது. தோடு பெண் பாலுக்குரியது. செவியன் ஆண்பாலுக்கு உரியது. பென்னும் ஆணும் கலந்த வடிவமோ? அதுதான் காரணம் குழந்தை உயர்ந்த தத்தும் பேசுகின்றது எவ்வித களங்கமும் இல்லாத குழந்தை உள்ளம், கண்டதைக் கண்டபடியே சொல்கிறது. தந்தையைக் காணவில்லை என்று அழுத குழந்தை தோனியப்பர் கோயிற் கோபுரத்தையல்லவா பார்த்து அழுதது. உண்மையாகவே குழந்தை அப்பாவைக் காணவில்லை யென்றுதான் அழுதிருக்குமா? சிந்தனைக்குரியது.
குழந்தைச் செல்வம் இல்ைைலயே என்ற ஏக்கத்துடனிருந்த அச்சுதாளப்பாதர், அவர் குருவாகிய அருணந்தி சிவாச்சாரியாரிடம் பெற்ற அறிவுறுத்தலுக்கமையத்திருமுறை ஒதும் விரதத்தைத் தொடருகின்றார். ஞானசம்பந்தப் பெருமான் அருளிய திருவெண்காட்டுப் பதிகம்- பேயடையா பிரிவெய்தும், என்னுந் தொடக்கத்தை யுடைய தேவாரத்தைக் கொண்ட பதிகம் - கணவன
86 நற்கிந்தனைகள் நாற்பது

மனைவி இருவராலும் பாராயணஞ் செய்யப்பட்டது. திரு வெண்காட்டுத் தலத்திலுள்ள முக்குளநீரில் நாளும் நீராடித் துயராகி அத்தேவாரத் திருப்பதிகத்தைப் பாராயணஞ் செய்து பிள்ளைச் செல்வம் வேண்டினர். தெய்வீகக் குழந்தை கிடைக்கின்றது. மூன்று வயதிலே ஞானப்பாலுண்டு ஞானம் கைவரப் பெற்ற குழந்தையாலே அருளப்பட்ட தேவாரத் திருமுறைப் பாராயணம் தந்த செல்வம் மூன்று வயதிலேயே போதனை செய்யும் ஆசானாகியது. மூன்றாவது வயதிற் கிடைத்த தேவாரத் திருமுறையைப் பாராயணஞ் செய்தமையால் வந்த பிள்ளையும் மூன்றாவது வயதிலேயே மிக உயர்ந்த சித்தாந்த சாஸ்திரமாகிய சிவஞான போதம் என்னும் நூலைத் தந்தது.
ஐந்தாவது வயதுவரை வாய் பேசாது இருந்தவர்கள் குமரகுருபரசுவாமிகள் பெற்றோர்க்குப் பெருங்கவலை. இறைவனை வேண்டின7ர்கள். தம்பிள்ளைக்கு ஏற்பட்ட பேசா நிலையாகிய ஊனத்தை மாற்ற வேண்டுமென நாளும் வேண்டினர். முருக உபாசனை பேசா நிலை மாறியது. அருமையான சித்தாந்தக் கருத்துக்கள் நிறைந்த கந்தர் கலிவெண்பா என்னும் பாடற்றொகுதி வெளிவந்தது என்று நூல்கள் கூறுகின்றன.
இந்தச் சம்பவங்களின் உண்மை என்னவாக இருக்கலாம் என்பது எல்லோர் உள்ளத்தையும் குடைவ தொன்று உன்னதமான பக்குவ நிலையை அடைந்த ஆன்மாக் களின் இறுதி நிலைத் தோற்றங்கள்தான் அவை என்று சிந்திக்கலாம் போலும். ஆலாலசுந்தரர் கயிலையிலிருந்து மீள் பிறவி எடுத்தார். அப்படியாக அவர்கள் தோற்றம் பெறும் போது பூமியிலுள்ளோர் பெரும் பயனடைகின்றனர். சம்பந்தர் தோற்றம் மிகக் குறுகிய காலத்தில் மூன்று திருமுறைகளைத் தந்தது. திருமுறைப் பயன்பெரும்பபயன் மெய்கண்டதேவர் . அவர் தந்த அற்புதமான சாஸ்திரம் சிவஞானபோதம். குமரகுருபரர் கந்தர் கலிவெண்பா, சுந்தராகி வந்த ஆல7ல சுந்தரர் தந்தது ஏழாந் திரு முறை - திருத்தொண்டத் தொகை, பெரிய புராணத்திற்கு மூலமாய் அமைந்தது. இந்த உயர்நிலைகள் எம் உள்ளத்தை வளஞ் செய்து வளர வழிசெய்வனவாகும்.
நற்கிந்தனைகள் நாற்பது 87

Page 50
சிவகுதி பெறுவோம்
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாமும் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே.
சைவத் திருமுறைகளுள் பத்தாவதாகவுள்ள திருமந்திரந் தருஞ் செய்தி இது. அருமையானதொரு செய்தி எம் வாழ்வின் இலட்சியத்தை அடைய வழிப்படுத்துஞ் செய்தி இந்த உலகம் - எமக்குக் கிடைத்துள்ள பிறவி - எல்லாம் சிவானுபவம் பெறுவதற்கு உபகாரமாகும் வகை தரப்பட்டவை. ஏனைய தோற்றங்கள் கூட அந்தவகையிலான தேவைக்கு உதவும் வகையிலேயே தோற்றுவிக்கப்பட்டுள்ளன. இந்த வழியில் எமக்கு மிகமிக வேண்டப்படுவதாகிய பிறவியையே நாம் பெற்றுள்ளோம். அதனால் இதுவும் நிலையானதன்று படுமழை மொக்குளிற் பல்காலுந் தோன்றிக் கெடுமிதோர் யாக்கை மழை பெய்யும் போது ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றி மறையும் குமிழி போன்றவை நாம் பெறும் உடம்புகள் ஆன காரணத்தால், யானை எருத்தம் பொலியக் குடைநிழற்கிழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் ஏனை வினையுலப்ப வேறாகி வீழ்வர் என்ப துணர்ந்து குஞ்சரம் மீதும் பஞ்சணை மிதுங்குலவியர்கள் ஒருநாள் சாதாரண நிலைக்கு வரவுங் கூடுமென்பதிலிருந்து - தாம் பெற்ற யாக்கையாலாய பயனை, நின்றன நின்றன எல்லாம் நில்லாவென உணர்ந்து செய்ய வேண்டியவற்றை வாழ்நாள் அற்றுப் போகுமுன் நிறைவு செய்யவேண்டும்.
இந்த வேளையிற் தமிழ்க்கிழவி ஒளவை எமக்குக் கை கொடுத்துதவுகின்றார். வேண்டிய புத்திமதிகளையுஞ் சொல்லிப் புண்ணியங்களே செய்யப்படக்கூடியன என்றும் பாவங்கள் ஒழிக்கப்பட வேண்டியனவென்றுங் குறிப்பிடுவர்.
"புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத்தோர் சொல்லுந் திதொழிய நன்மை செயல்
88 நற்சிந்தனைகள் நாற்பது

என்பது ஒளவையாரின் அறிவுறுத்தல். அல்லாத மற்றைய முயற்சிகளெல்லாம் பழியாகி விதியென்ற ஒன்றின் தலையிற் கட்டுப்படும் என்பதும் ஒளவையார் தரவிற் தொக்கு நிற்கும் கருத்தாகும்
இறைவன் என் சிந்தையில், எண்ணங்களில் நின்ற காரணத்தால் அவன் அருளிய கருணையுடன7கிநின்று அவனை வணங்கினேன். அவன் கருணை வழியில் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்வகை மிருகங்களாகிப், பறவைகளாகிப், பாம்புகளாகிக், கல்லாகி மனிதர்களாகி எத்தனையோ கோடானுகோடி பிறவிகளைப் பெற்றுக் களைத்துவிட்டேன் என்பது மணிவாசகனார் அனுபவ உணர்மை வெளிப்பாடு. இந்த இளைப்பிற்கிடையேயும் ஏதோ நல்லது செய்துவிட்டேன் போலிருக்கிறது, என்று சிந்தனை தொடருகிறது. அங்கே ஒரு அறிவுறுத்தல் நெஞ்சிற்குக் கிடைக்கிறது. முன்பு நீ செய்த இரண்டொரு நல்ல காரியங்கள் இருந்திருக்கின்றன. முழுமணித் தரளங்கள் மன்று காவிரிசூழ் திருவலஞ்சுழி வாணனை வாயார ஏத்தியிருக்கிறாய். பன்னி ஏத்தியும் பாடியும் வழிபட்டிருக்கிறாய். அது உனது உயர்விற்குக் காரணமாகிவிட்டது என்பது சம்பந்தர் அருள் மொழி சிந்தை மகிழச் சிவபுராணங்களை ஓதவேண்டும். முந்தை வினைகள் அடங்கும் வரை ஓத வேண்டும். வாய் நிறைய மனமார ஓத வேண்டும் , என்பது மணிவாசகனார் தெளிந்த சிந்தையிலிருந்து பெறப்படுவது.
நாமெல்லாம் பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவை உடையவர்களாகி இந்தப் பூமியில் வந்து பிறந்துள்ளோம். இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு விடயங்கள் சிந்தனைக் குரியனவாக வேண்டும் ஒன்று, சிந்தனை ஆற்றலைப் பொருந்தியதாகிய மனிதப் பிறவியைப் பெற்றிருக்கின்றோம் என்பது மற்றொன்று சிவனை அடைவதற்குரிய இடமாயமைந்த பூமியிலே தோன்றியிருக்கிறோம் என்பது . உண்மை பொய், நிலையானது நிலையற்றது என்னுங் கருத்துக்களை நாம் பொருத்தமான வழி பெற்றுக்கொள்ள வாய்ப்பாயமைந்தது இந்தப்பிறவி அந்த வருகையை முழுமையாகப் பயன்படுத்தி இறை சிந்தனையுடனாகி வாழப் பயில்வோம்.
நற்கிந்தனைகள் நாற்பது 89

Page 51
JJag5o IDIr62:5InGri dôl IgJJ Urábř
குளிப்பதற்காகக் குளத்தை நோக்கிச் சென்ற அப்பாவைக் தொடர்ந்து மூன்று வயதுக் குழந்தை சம்பந்தர் செல்கிறார். குழந்தையைக் கரையிலே இருக்கச் செய்து அப்பா குளத்திலே நீராடுகின்றார். அப்பாவின் உருவம் நீரினுள்ளே மறைந்தபோது, அப்பாவைக் காணாத பிள்ளை “அம்மே அப்பா” என்று அழுகின்றது. முன்வினைத் தொடர்பினாலோ என்னவோ, குழந்தை அருகேயிருந்த தோனியப்பர் கோயிலைப் பார்த்து அழுகிறது. இறைவன் உமையுடனாகி வந்து ஞானப்பாலை ஊட்டுகின்றான். நீராடி வந்த தந்தையின் கண்ணில், குழந்தையின் வாயிலிருந்து பால் வடிவது தெரிகிறது. ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டது என்று நினைத்தவர், கோபங்கொண்டவராய், உனக்குப் பால் தந்தவர் யார்? என்று குழந்தையை அதட்டுகிறார். பால் தந்தவரை உடனுங் குழந்தை காட்டுகின்றது.
தோடுடைய செவியன் விடையேறி போர்தாவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடியூசியெனினுள்ளங் கவர்கள்வனி ஏடுடைய மலராணி முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே, என்று தம் உள்ளங் கவர்ந்த கள்வனின் அடையாளங்களைக் குறிப்பிடுகின்றது. அந்தக் குறிப்புகளிலே முதலாவதாக உள்ளது தோடுடைய செவியன் என்பது தோடு, பெண்கள் அணிவதொரு ஆபரணம் செவியன் என்னும் ஆண்பாலை உணர்த்தும் சொல்லுடன் தொடர்கின்றது அது. எனவே ஆனும் பெண்ணும் ஆகிய அர்த்தநாரீஸ்வரர் வடிவில் இறைவன் அங்கு தோன்றியுள்ளார் என்பது உணர்விற்படுகின்றது. பாலுட்டப்படுதல் அன்பே வடிவான பெண்மைக்குரிய செயல். கருணை, இரக்கம், போன்ற குணவியல்புகளின் இருப்பிடம் பெண்மை இறைவனிடத் தேயமைந்த இந்த இயல்புகள் பெண்மைக்குரியன என்ற வகையில் அவ்வியல்புகளின் தொகுதியாகிய அர்த்தநாரீஸ்வரர் வடிவங் கற்பிக்கப்பட்டிருக்கலாம். அவ்வழி தோடுடைய செவியனாகி
90 நற்கிந்தனைகள் நாற்பது

இறைவன் குழந்தையின் கண்ணிற் பட்டிருக்கின்றான்.
மற்றோர் சந்தர்ப்பதில் வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடி மேலணிந்து என் உளமே புகுந்த அதன7ல் கிரகங்கள் நல்ல நல்ல என்கின்றார்கள். அன்னையுடன7கி நின்றமை கருனைப் பொழிவிற்கு இடமாயிருந்திருக்கின்றது. அந்த நிலை பாற்கடலில் வந்த ஆலகால விடத்தை ஏற்கச் செய்து தேவர்களை அநுக்கிரகித்தது. திங்கள் கங்கை வாழ்வும் கடைக்கணிக்கப்பட்டது. அவற்றை இறைவன் சடாப7ரத்திற் காண்கின்றே7ம் உமையுடன7கி இறைவன் எமதுள்ளத் துறைவதொரு நிலை கைவரப் பெற்றால் கிரகங்களை வழிபடவேண்டியதில்லை. கிரகங்களும் எமக்கு நல்லனவற் றையே செய்து கொண்டிருப்பனவாக, மாற்றத்திற்குரியனவான செயலினவாகும்.
“மாவடு வகிரன்ன கண்ணி பங்கா’ “பண்ணினேர் மொழியாள் பங்கநி யல்லால்” "பஞ்சின் மெல்லடியாள் பங்கநி யல்லால்” "பந்தனை விரலாள் பங்கரீயல்லால்” “சுரிகுழற் பனைமுலை மடந்தை பாதியே பரனே’ “தையலோர் பங்கினர் தாபதவேடத்தர்” என்பன மணிவாசகம் அம்மையப்பர் பற்றிப் பேசும் சில இடங்கள். இந்தவகை அமைப்பு, இறைவனது அன்பை அரவணைப்பை மிகுதியும் வேண்டிய இடத்திலேயே காண முடியும், உமையம்மையைப் பங்கினளாக உடையவனே! என்னை நின்னிடமாக அழைத்துக்கொள்வாயாக நீஎது செய்வாய் என்பதை யானறியேன். நரகத்திற் தள்ளினாலும் தள்ளுக என்று அலட்சியமாகக் குறிப்பிடுகின்றார்கள். அதற்கான காரணமொன்றுண்டு. அன்னை உடனாகிய அப்பனுக்குத்தானே சொல்கின்றோம். தவறு நிகழ அன்னை விடமாட்டாள் என்பது தான் மனோபலத்திற்குக் காரணமாகின்றது. பாதிமாதொடுங் கூடிய பரணை வழிபட்டு நாமும் பெரும்பயனடைவோம்.
நற்சிந்தனைகள் நாற்பது 91

Page 52
குட முழுக்கு எண்ணும் கும்பாயிஷேகம்
குடமுழுக்கு, கும்பாபிஷேகம், பெருஞ்சாந்தி என்பன ஒரு பொருளையே குறிப்பன. குடம் - கும்பம், குடமுழுக்கு - கும்பாபிஷேகம். ஆலயங்களில் நடைபெறும் கிரியைகளிற் கும்பாபிஷே2கந்தான் மிக மிக உயர்வானது. இந்த கும்பாபி ஷேகத்தைத் தரிசிக்கக்கூடிய வாய்ப்பு எல்லோருக்குங் கிடைத்துவிடுவதில்லை. கும்பாபிஷேகத்தைச் செய்வதற்கோ அல்லது செய்விப்பதற்கோ அல்லது தரிசிப்பதற்கோ வாய்ப்புப் பெற்றவர்கள் பூர்வ புண்ணியலம் பெற்றவர்கள் என்று அறிந்து கொள்ளவேண்டும் பூர்வத்திற் பெருந்தவம் செய்தவர்கள் என்றுஞ் சொல்லலாம். இதனைத் தெளிவாக உணர்ந்துள்ள மக்கள்வெள்ளம் கும்பாபிஷேகம் தடைபெறும் ஆலயத்தில் முட்டி மோதி நிற்பர். திருஞானசம்பந்த மூர்த்திசுவாமிகள், பூம்பாவையை மீண்டும் உயிர் பெற்றெழச் செய்வதற்காகப் பாடியதொரு திருப்பாடலிற் “கபாலிச்சரமமர்ந்தான் பெருஞ் சாந்தி காணாது போதியோ பூம்பாவாய்” என்கின்றார்கள். பெருங்சாந்தியென்னுங் குடமுழுக்குக் காணாது போதியோ என்று குறிப்பிடுவது கொண்டு அதன் முக்கியத்துவம் உணர வைக்கப்பட்டுள்ளது. அதுவுஞ் சம்பந்தர் வாயிலிருந்து வரும்போது அதன் உயர்வு சிந்தனைக்குரிதாகின்றது.
கும்பாபிஷேகத்திற்கென வைக்கப்படும் கும்பம் புண்ணிய தீர்த்தங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித நீரால் நிறைவு செய்யப்படும் அபிஷேகத் திரவியங்களுடன், சுவர்ணம் வெள்ளி நவரத்தினக் கற்கள் முதலியனவும் இடப்படும். சம்பந்தப்பட்ட மூர்த்தியை ஆவாகனஞ் செய்து மந்திரங்களால் உருவேற்றுவர். வேதபாராயணம் , திருமுறைகள் சமர்ப்பணம் என்பவற்றை முறையாக ஓதுவது மூலம் அந்தக் கும்பமூர்த்தியின் சக்தி மேலும் வலுப்படுத்தப்படும்.
கும்பாபிஷேகம் நடைபெறுவதற்குரிய புனிதமான நாள் சுயவேளை என்பன அத்துறையிற் புலமை வாய்ந்த சிவாசாரியர் களால் முன்பாகவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அந்தத் தீர்மானங்க
92 நற்சிந்தனைகள் நாற்பது

ளுக்கு அமைவாக மூர்த்தி உரிய இடத்தில் மந்திரத் தாபனத்துடன் மருந்து சாத்தப்பட்டு இருத்தப்பட்டிருப்பார். யாக சாலையில் ஒமகுண்டங்க ளுடனTக வைக்கப்பட்டு வல்லமை வளர்ச்சியடையும்படியாக மந்திர உரு வேற்றப்பட்ட கும்பம்விதி வலமாக சங்கு, சேமக்கலம், மணி மேளம் முதலாம் மங்கல வாத்தியங்கள் ஒலிக்கச் சிவாசாரியார்களின் வேத ஒலியும், ஓதுவார்களின் திருமுறைப் பண் ஒலியும் உடனாக, ஒரு சிவாசரியார் தலையின்மீது வைத்துக் கொண்டுவருவார். மூர்த்தி விதியுலா வருவதாகவே கொள்ளப்பட்டு குடை கொடி ஆலவட்டம் எல்லாம் பிடிக்கப்படும். அர்ச்சகர்களுள் ஒருவரை நந்தி கனத் தலைவராகப் பூசை செய்து அவருக்கு வேண்டிய அலங்காரங்கள் உபசாரங்கள் எல்லாம் செய்து பிரதான கும்பம் அவர் சிரசின்மீது வைக்கப்படும். சர்வ சாதகர், பிரதம குரு, சிவாசாரியர் குழுவின் ஏனையோர் சுற்றிநின்று தருப்பையாற் தொட்டுவரப் பக்தர்கள் புஸ்பாஞ்சலி செய்வர். ஊர்வலம் மிக மிக ஆறுதலாக நடைபெறும் அவ்வண்ணம் கொண்டுவரப்பட்ட கும்பங்கள் மூலமூர்த்திக்கு முன்பாக நியமனம் பெற்றதோரிடத்தில் வைக்கப்படும் கும்ப மூர்த்திக்கும் தொடர்புண்டாக்கி உரிய சுப வேளையின் போது பக்தர்கூட்டம் அரகர ஒலி எழுப்பச் சிவாசாாரியர்கள் தேவகிதம் இசைக்க, ஒதுவார்கள் திருமுறைகளைப் பண்ணுடன் இசைக்க, மங்கல வாத்தியங்கள் முழங்க, பிரதம சிவாசாரியார் முதன்மைக்கும்ப நீரை மூர்த்தியின் மிது அபிஷே2கிப்பார். மந்திர வலுவுடன் கூடிய நீரினால் அபிஷே2 கிக்கப்பட்டமையால் தெய்வ சாந்நித்தியம் அங்கு நிறைவாக இருக்கும். இந்த அருள்பொலி தரிசனத்தைப் பெற நாமெல்லாம் பூர்வ புண்ணிய பலமுடையவர்களாய் தரிசனத்திற்கான முயற்சிவழி நிற்கவேண்டியது நங்கடன். அபிஷேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறும் பின் மூர்த்தி அலங்கரிப்பு நிவேதனம் என்பவற்றுடன7கிக்கும்பாபிஷேக பூசனை நடைபெறும் கும்பாபிஷேகத்திரவியங்களுள் குறைந்தது, சில பூக்களுடன7வது சென்று பங்கு கொண்டு பயன்பெற வேண்டும்
நற்சிந்தனைகள் நாற்பது 93

Page 53


Page 54
கடவுள் இ
இலக்கண வித்தகர்
வான த
இ ைவ அறிந்தவர்க எமது சிந்தனை ம என்பதை அறிகிறோம். இலண்டன் நாம் நேரேயறியோம். அறிந்தே அவர்கள் எழுதியதை வாசித்தலாே என்பதை நம்புகின்றோம். ஒருடலி அவ்வுடலின் அசைவு, மூச்சு வரு கொண்டு சிந்தித்து அறிகிறோம். அறியோம். எனினும் அவ்வுயிர் இ இங்குக் கூறியதிலிருந்து நாம் இல்லையென்று சொல்லுதல் விளங்குகின்றோம். கடவுள் எ காணவில்லை; எமக்குக் காட்டு வ என்றொரு பொருள் இல்லை என்ற ஆகாது. கடவுள் எல்லாவற்றை அளவுபட்ட எம் கருவிகளால் அவன்
 
 

இ.நமசிவாயதேசிகர்
ர் ஒரு பொருள் இருக்கிறது தைத் தொட்டுப் பார்த்தல், ால் உருசித்துப் பார்த்தல், னாற் காணுதல், மணந்து த் த ல் , கா தாற் கேட்டல் வற்றுள் ஒன்றாலோ பல ாலோ அறிகிறோம். இது கள் எல்லாவற்றுக்கும் பொது மனிதர்களாகிய நாம் க ள ர ல் மா த் திர ம ன் றி ள் சொல்லக் கேட்டலாலும் பினாலும் பொருள் இருக்கிறது என்றொரு நகரம் இருப்பதை ார் சொல்லக் கேட்டலாலோ லா அறிகின்றோம்; இருக்கிறது ல் உயிர் இருக்கிறது என்பதை தல், இரத்தம் ஒடல் என்பன ஆனால் அவ்வுயிரை நேரே ல்லை என்று நம்ப மாட்டோம். நேரேயறியாத பொருளை பொருந்தாது என்பதை ன்றொரு பொருளை நாம் ாருமில்லை. ஆதலால் கடவுள் ர முடிவு செய்தல் அறிவுடமை யும் கடந்த பொருளாதலால் ரைக் காணல் கூடாது
நன்றி "பாரதி” 1982