கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மானுடம் 2000-2001

Page 1

S. ----- .CD 3 قد - بي C_2 يتم تجاريخ S. فتشينجنتينية OC O OC as
இ — es. 艮*国 s
R-A :جیے
LSLSLSS رر : يموت منتصميم هان-كين 18 م. تضخيمة.
隨

Page 2


Page 3

(Dagyuth – Maanadaw
சமூகவியல் ஏடு - 4
ஆலோசக ஆசிரியர் கலாநிதி என். சண்முகலிங்கனி
தொடர்பாளர்
ரீ. விஜயகலா
துணைத் தொடர்பாளர்
ஆர். ஜெயந்தினி
Sociological Society University of Jaffna. 2000/2001

Page 4
எல்லோர்க்கும் வாழ்வு எனும் எல்லைதான் சமாதானம் இந்த எண்ணம் செயலாக்கும்
எழுச்சியில்தான் மானுடம்
കpകയ്'ഠങ്ങ് ഗകb
 
 

தணைவேந்தர் வாழ்த்தம் தணைவேந்தருக்கு வாழ்த்தம்
சமூகவியல்துறை இன்று எங்கள் பல்கலைக்கழகத்தில் நிலையான தடம்பதித்துள்ளது. நிலவும் சமூகவிஞ்ஞானத் துறைகளில் அதன் முனைப்பான வளர்ச்சி மகிழ்ச்சி தருகின்றது. வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டுப்படாமல் தம் அறிவின் பயன்களை சமூகத்துக் காக்கும் அவர்களது சமூகபணி நடவடிக்கைகளின் விரிவாக்கமும் மனதிற்கு நிறைவு தருகின்றது.
நீண்ட கால கனவாகவிருந்த மானுடவியல் கல்வியும் இப்பொழுது சமூகவியலுடன் எங்கள் கலைத்திட்டத்திற் கைகோர்த்துள்ளது. கூடவே உளவியல் கல்வி, திட்டமிடற்கல்வி, பணிபாட்டியலில் முதுமாணி என எங்கள் சமூகபணியாட்டியல் கல்விப்பரப்பு இன்று மெனிமேலும் விரிவாக்கம் பெறுகின்றது. இத்தகு விரிந்த கல்விப்பெருக்கிற்கான வள கருவூலமாக மானுடம் - சமூகவியல் ஏடு வெளிவருவது மாணவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
திட்டமிட்ட, அர்ப்பணிப்புடனான சமூகவியல் சமூக செயற்பாடுகளுக்கு எனி அன்பான வாழ்த்துக்கள்
uymaduMsund. LumaoaigdöglyubishanGT துணைவேந்தர், யாழ் பல்கலைக்கழகம்.

Page 5
மானுடத்தின்வழி சமூக உறவும் உணர்வும்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் சமூகத்தினரின் அரிய முயற்சியின் பெறுபேறாக மானுடம் என்ற சமூகவியல் ஏட்டின் நான்காவது இதழ் வெளிவருவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேனர். இவ்வேட்டினி வெளியீட்டிற்கென அர்ப்பணிப்புச்சிந்தையுடனி செயற்படும் துறைத்தலைவர், விரிவுரையாளர்கள், சமூகவியல் சமூகத்தினர் ஆகியோர் பாராட்டிற்குரியவர்கள். மாணவர்கள் சமூகத்தில் ஆற்ற வேண்டிய நற்பணிகளை எடுத்துக் கூறும் வளமான ஆக்கங்களைக் கொண்டு “மானுடம்” விளங்க வேணடுமென வாழ்த்துகின்றேனர். மாணவர்களது ஆற்றல் வளரவும், சமூக உறவு உறுதி பெறவும், சமூக உணர்வு மலர்ச்சிபெறவும், சமூகவியல் சார்ந்த அறிவியற் சிந்தனைகள் திக்கெட்டும் பரவவும், “மானுடம்” நற்பணியாற்றுவதாகுக! “மானுடம்” தொடர்ந்து சிறக்க எனது நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக!
LITTófuatang Lu. STILITERBad Buft,
கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்லைக்கழகம்.
உங்களின் அன்பு
நினைவுகளை
காத்திருப்போம்
நேற்றைய பொழுதில் எங்களுக்காய் மங்கல
விளக்கேற்றும் முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் செ. பாலச்சந்திரன்
அவர்கள் O
 

விரியும் ஞான எல்லைகளைத் தொட்டபடி.
எங்கள் சமூகவியல் சமூக இலச்சினை சுட்டுகின்றவாறு, ஒன்றுபட்ட சிந்தையால் எங்கள் செயல்கள் அழகாய் அமைகின்றன. அறிவைச் செயற்படும் அறிவாக்கும் எங்கள் பணிகள் தெளித்த நல் மனதோடு தொடர்கின்றன.
அணிமைய நாட்களில் அறிமுகமாகும் புதிய கலைத்திட்டச் சீர்திருத்தம், எங்கள் அறிவுப்புல விரிவாக்கலில் பெருந்துணையாகி நிற்றலை உணருகினிறோம். விரியும் இந்த ஞான எல்லைகளைத் தொட்டபடி, வழமை போல தமிழை அறிவியல் மொழியாக்கும் எங்கள் முயற்சியின் கனியாய் மானுடம் நான்காவது சமூகவியல் ஏடு இன்று எங்கள் வசமாகின்றது.
ஒவ்வொரு இதழின் மலர்ச்சியிலும் “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” எனும் பாரதியின் மன எழுச்சியில் எங்கள் மனங்கள்.
அநீதியான மேலாண்மைகளைக் கேள்விக்குள்ளாக்கும். வாழ்வின் அழகான பகுதிகளை நிலைபேறாக்கும் எங்களின் இந்தப் பயணம், நாளையை எங்களதாகும்.
இந்தப் பெரும் பணியில் இசைந்துள்ள எண் அன்பு மாணவச் செல்வங்களோடு என்றும் என் அன்பும் வாழ்த்துக்களும் உடனிருக்கும்.
apd.rigaiši
பொருந்தலைவர்,சமூகவியல் சமூகம், யாழ்ப்பானப்பல்கலக்கழகம்.
šr
3ý *
எண்ணியமூடிதல் வேண்டும்
நல்லவேஎண்ணல் வேண்டும் திண்ணியநெஞ்சம்வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
- UsJdšl -

Page 6
பல்தறை புலமைசார் ஆக்கங்கள்
சமூகவியல் சமூகத்தினரின் அயரா உழைப்பினர் பயனாய் இன்று மானுடம் - 4 இதழ் வாய்க்கப்பெறுவதையிட்டு மகிழ்ச்சி கொள்கின்றேனர். பெரும் தலைவரினி வழிகாட்டலினி வழி விரிவுரையாளர்கள், மாணவச் செல்வங்கள் அனைவரின் பணியும் இங்கு குறிப்பிடத்தக்கது. எண்ணக்கருக்கள், கோட்பாடுகள் மற்றும் பல்துறை புலமைசார் ஆக்கங்களுடன் மானுடம் - 4 இதழ் வெளியாகிறது. இந்நாளில் சமூகவியல் சமூகம் பெருமகிழ்ச்சி கொள்கின்றது.
a.i.d. பெரும் பொருளளர்,
சமூகவியல் சமூகம்.
Safarpsiloamb சிறந்திட வாழ்த்துகிறோம்
எங்களில் ஒருவராய் எங்கள் பெரும்பொருளாளராய் நெடுநாள் பணிபுரிந்து
னறு தன்கிழக்கு பல்கலைக்கழகம் சென்றுள்ள எங்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. ஜீ.எம். செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் வாழ்வும் பணியும் சிறந்திட வாழ்த்துகின்றோம்.
 

சமூகவியல் தந்த மேன்மை
சமூகவியல் கல்வியை கற்கும் வாய்ப்பினைப் பெற்றதையிட்டு நாம் மிகுந்த பெருமையும், மகிழ்ச்சியும், அடைகின்றோம்.
சமூகம்பற்றிய அறிவியல்வெளிச்சத்தை எமக்குள் ஏற்றிவைத்ததுடன், எங்களுக்குள் இருந்த மானுடப் பணியையும் அது மேன்மைப்படுத்தியுள்ளது.
பட்டம் பெறும் இலக்கு என்ற மட்டுப்பாடு கடந்து “வாழும் சமூகத்தினி வாழ்வே எம் வாழ்வு” எனும் தெளிவோடு கல்வியைச் சமூகப் பயனாக்கும் உளம் படைத்தோம்.
எங்கள் அணியின் துணைவேந்தர், கலைப்பீடாதிபதி, பெருந்தலைவர், ஆசானிகளினி வழிகாட்டலில் நாங்கள் காணும் அர்த்தங்கள் பல. இனிறு எங்கள் நான்காவது அறுவடையாக மானுடம் - சமூகவியல் ஏட்டினை உங்கள் கரங்களில் சமர்ப்பிப்பத்தில் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
f. Llamargarh தலைவர்,சமூகவியல் சமூகம்
எங்கள் ஆத்ம தரிசனம்
மானுடம் நான்கின் உதயத்தால் எல்லை இல்லா இனிபத்தில் எம் உள்ளம். சமூகவியல் சார்ந்த தரிசனம் - பரப்பு என்பன நாளுக்கு நாள் பெருகி வருவதனால், அறிவியலின் அகன்ற ஆராய்ச்சிக்கு மேலாக சமூகத்தையும் அதன் படிநிலைக் கூறுகளையும் புரிதல், புரியவைத்தல் என்ற பணி சமூகவியல்சார்ந்த ஆசானிகள், மாணவர்கள் ஆகியோருக்கு உரியதாகி விட்டது. இம்முயற்சியின் ஆத்மதரிசனமாய் வருடந்தோறும் முகிழ்த்திடும் மானுடம் ஏட்டின் நான்காவது இதழ் இன்று உங்கள் கரங்களில்,
ஆலோசக ஆசிரியராக இதழின் அழகினைத் திட்டமிட்டு வழிப்படுத்திய எங்கள் பெருந்தலைவர், அதன் உருவாக்கத்திற்காய் அயராது உழைத்த எங்கள்தலைவர் மற்றும் சமூகஅங்கத்தினர், பதிப்பினி அழகுவண்ணம் காத்த ஹரிஹணன் பிறிண்டேர்ஸ், எங்களுக்கு பொருள் வழி கைகொடுத்த அன்புள்ளங்கள் அனைவருக்கும் மானுடத்தின் சார்பில் எனி அன்பு நன்றிகள்.
Göll. Sull, தொடர்பாளர் சமூகவியல்சமூகம்.

Page 7
MAJ 24, * , w * * ***
輯 vቶ woቐ ... ዊፕw
Sociological Society 2000/2001 University of Jaffna
OFFICE BEARERS
PEATRO Dr. N. Shanmugalingan, M.A.Ph.D
SEOR TREESIKRER Mr. A.E Richard, BA (Hons)
PRESIDENT W, PRESIDETT R. Panchacharasarma S. Gayathiri
JOLT SECRETERIES УНПIOR TREESIRER K.Sasikala, M.Mathanamohan KSenthillnesan
GZOTI LIGZETOR ESST. E.ONIMIGETOR
TVijayakala R. Jeyanthini -
(ZOITILITTEE ETEITBERS
SAnton Felix A.Sivakumar
J.M.T Rodrigo S.Karunanithy
SSubatha S.Kalaivani
S. Pathmanesan
SSaganya K. Saratha
K. Yasotha S.Murugathas
F
Seated (L-R) |ང་། སྡེ་ཚོ་ K. Senthitnesan (Junior Treasurer), J.M.T.Rodrigo, A.E Richard
(Senior Treasurer), Prof. S.Balachandran (Dean/Arts), R.Panchacharasarma (President), Prof. P. Batasundarampillai (Vice - Chancellor), Dr. N.Shanmugatingan (Patron), Prof. A.Sanmugadas (Dean/Graduate Studies) K.Sasikala (Joint Secretary), S.Gayathiri (Vice-President)
Standing (L-R)
S.Suganya, S.Kalaivani, K.Saratha, S. Karunanithy, A.Sivakumar, S. Pathmanesan, S.Murugathas, M.Mathanamohan (Joint Secretary), S. Anton Felix, KYasotha, R.Jeyanthini, (Asst. Communicator), T.Vijayakala (Communicator).
ב[פד \

ப878 இா சூr இலக் 'ஆ இ
Lorra nu, ser a.

Page 8

பொருளடக்கம்
pasikobLING கிராமிய மேம்பாடு D சமுகப்பணி
O
|sgibugyibalpa Gympagnib| () குடும்பம்
தேச வழமையில் குடும்பமும், ஆதன உரிமையும்.
0 உறவு முறை மெட்டக்களப்பில் குடிமரபு )ெ இஸ்ரேலிய கிபுட்ஸ்
0 சமய அனுபவங்கள் udsåenstskæld
2GGuid
( பரம்பரையும் சூழலும் 0 மன அழுத்தம்
சமுகம்சார் உளவியல் - ஒர் அறிமுகம்
upangpulusó
0 உளவியல் ஆய்வு முறைகள் D சமுக ஆய்வில் கணணி
antLINGGG
0 தமிழகத்தில் சாதியமும் கருத்தியலும் 0 புலனறிவாதமும், தோற்றப்பாட்டியலும்
வி. அனுஷா 01 வாவரதகெளரி 08
என்சுகன்யா 12 த.விஜயகலா 15 சபத்மநேசன் 20 ஞாதில்லைநாதன் 27 ஜோன் பெட்போட் 32
இஇராஜேஸ்கண்ணன் 35 p, arras 41
6ri. DarDrsair 50 எம். ராசலிங்கம் 56 அ. டொறின் எ2
இ. விக்னேஸ்வரி 68 ஏ. அமுதினி 73
மதுவுயந்தன் 78 அஎறிச்சேட் 83
ரா. சுஜீவா 95
á sæsirum 99 கலாநிதி என். சண்முகலிங்கன் 105

Page 9
CONTENTIS
Social Development
O Rural Development W. Anusha 01 O Social work V.Varathagowri 08
Family and Kinship
O Family N.Suganya 12 O Family & Property Rights in Thesawalamai T.Vijayakala 15 J Kinship S.Pathmanesan 20 Kudi system in Batticaloa G.Thillainathan 27 O The Israeli Kibbutz John Bedford 32
Sociology of Religion
O Religious Experiences R.Rajeskannan 35 0 Secularization R.Vasuki 41
y
50 Hereditary and Environment M.Mathanamohan ם O Mental stress M.Rajalingam 56 O Societal Psychology - An Introduction A.Doreen 62
Methodology
O Psychological Research methods E.Vigneswary 68 Computer in Social research - An Introdution A. Amuthini 73
Castism and Ideology in Tamilnadu M.Thushyanthan 78 O Positivism and Phenomenology A.E.Richard 83
Anthropology
O Australian Aborigines R.Sujeeva 95 Ethno-music S.Suganya 99
Architecture as a site for social Anthropology Dr.N.Shanmugalingan 105

கிராமிய மேம்பாடு Rural Development
அனுஷா ஜெராலின் வின்ஸ்லோஸ் B.A (Hons.)
வாழ்வு என்பது அர்த்தத்துடன் கூடிய மனித இருப்பை ஊடறுத்தச் செல்லும் தேடலாகும். மனிதன் தனது வாழ்வின் ஒவ்வொரு தேடலையும் தனது வாழ்வின் உயர்வுக்காக அர்த்தத்துடன் நகர்த்தும் போதே வாழ்வின் உண்மைத் தன்மை உயிர்ப்படைகின்றது. இன்று சமூகவியலின் கிராமியச் சமூகவியலானது (Rural Sociology) இவ்வாறான உயர்ந்த எல்லையை நோக்கி பயணம் செய்ய ஒவ்வொரு பின்தங்கிய கிராமங்களையும் கிராமிய மக்களையும் அழை(ணை)த்து நிற்கின்ற ஆர்வமுடைய நவீன இயலாக சமூகவியலின் அடிவேரிலிருந்து முகிழ்ந் துள்ளது.
சமூகவியலின் விரிந்து செல்லும் ஆய்வுப் புலத்தில் கிராமியச் சமூகவியலின் அவசியம், தேவை, அதன் சிறப்புத்துவம் இன்று பல சமூகவியல் அறிவாளர்களால் முனைந்துரைக்கப்படுகின்றது. கிராமியச் சமூகவியல் தனித்துவமான சமூக விஞ்ஞானப் புலமாக வெளித்தெரியினும் அதன் உள்ளடக்கம் சமூகவியலின் கருத்தாழத்திற்குள் தேடப்பட வேண்டிய தொன்றாகும். கிராமியச் சமுதாயத்தின் மேம்பாடு, கிராமிய மக்களுடனான இசைவாக்கம், மாறுபட்ட மனிதர்களிடையே களப்பயிற் சியில் அதன் காத்திரம், கிராமிய மேம்பாட்டில் மதமும் கருத்தியலும், நெகிழ்ச்சியான நகரத்துவத்துடன் நோக்கின் நெருக்கீடான கிராமத்துவப் பண்பு போன்ற இதன் அடிவேர்கள் சமூகவியலின் ஆணிவேரில் மையங் கொண்டுள்ளது என்பதே தகும்.
கிராமம் அல்லது கிராமியம் என்பதற்கான ஒரு சமூகவியல் தரிசனத்தை நோக்கும் போது "பாரம்பரிய தொழில் முறைகளான விவசாயம், மீன்பிடி போன்ற தொழில் முறைகளை கொண்டு நகர மக்களுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது குறைவான வாழ்க்கை

Page 10
நிலையையும் தனிமைப்படுத்தப்பட்ட தன்மையையும் கொண்டு குறிப்பிட்ட புவியியல் எல்லைப் பரப்பினுள் நிரந்தரமாக வாழும் மக்கள் குழுவே கிராமியச் சமுதாயம்" என்று வரையறுக்க முடியும். இவ்வாறான மேம்பாட்டிற்கு முரணான காரணிகளை தன்னுள்ளே அடக்கியுள்ள கிராமியத்துறையின் மேம்பாட்டில் கிராமியச் சமூகவியலின் ஆர்வம் குவிக்கப்பட்டுள்ளது. இதையே பிரபல சமூகவியலறிஞரான ARDesai என்பவர் அழுத்திக் கூறுகின்றார். அதாவது "விஞ்ஞான ரீதியாகவும் முழுமையாகவும் ஒரு கிராம சமூகத்தின் அமைப்பு தொழிற்பாடு என்பவற் றினூடான அபிவிருத்தி நோக்குகளை ஆராய்ந்து அறிவதன் மூலம் கிராமியச் சமூகவியலின் ஆக்கச் சட்டங்களையும் விதிகளையும் விளங்கிக் கொள்ள முடியும் என்றார். இவர் கிராமியச் சமூகவியலில் கிராமிய வளர்ச்சி பற்றிய கோட்பாட்டை விளங்கிக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்தினார். எனவே கிராமிய சமூகவியலில் கிராமிய மேம் பாட்டின் இடம் காத்திரமான ஒன்றாகும்.
கிராமிய மேம்பாடு என்பது கிராமியத்துறையினையும் அது சார்ந்த அனைத்து சிறப்பம்சங்களையும் உள்ளடக்குகின்றது. கிராமிய மேம்பாடு என்பது எல்லாக் கிராமங்களுக்கும் அவசியமானதா? எப்படியான வாழ்க் கைப் போக்குடைய கிராமங்களில் இக் கிராமிய மேம்பாட்டின் அவசியத் தன்மை உணரப்பட வேண்டும்? என்ற வினாக்களின் பின்னனியில் நோக்கும் போது கிராமங்களை மூன்று பிரிவுக்குள் அடக்கி அதற்கு விடைகாண (ՄIԳպլb.
1. வளர்ந்த கிராமம் - இது நகரப் போக்குடையது
2. வளர்ந்து வரும் கிராமம்
3. வளர்க்கப்பட வேண்டிய கிராமம்
எனவே கிராமிய மேம்பாட்டின் தேவை இவ் இறுதிவகைப் போக்குடைய கிராமத்தின் மீதே மையங்கொண்டுவிடுகின்றது.
கிராமிய மேம்பாடானது பொருளாதார ரீதியில் வாழ்வதற்கான ஒரு ஸ்திரத் தன்மையை வழங்கிவிட்டால் போதுமானதாகிவிடுமா? எனும் சந்தேகமும் எம் மனங்களில் எழுந்து விடுகின்றது. இங்கு மேம்பாடு என்பதற்கு சமூகவியலாளரது கருத்து தனித்துவம்மிக்க தொன்று. அதாவது

ஒரு கிராமத்தின் மேம்பாடு என்பது பொருளாதார உருமாற்றம் (Economic
Transformation) sepas D-OLDITiptib (Social Transformation) u60örLIT' (6 உருமாற்றம் (Culture Transformation) எனும் மூன்று காரணிகளினதும் நிறைவில் மலரக்கூடியதொன்று என்று கூறுகின்றனர். இவ்வாறான முழுமையான உருமாற்றத்தை பெறமுடியாத கிராமங்களில் மேம்பாட்டின் குறைநிலை மேலோங்கியிருக்கும். இவ்வாறான கிராமங்களில் 6.6LD, தேக்கநிலை போன்ற சமூக நோய்க்கிருமிகள் மேம்பாட்டிற்கான எதிர்பார்ப்பை அரித்து அழித்து விடுகின்றன என்பது இவ் அறிஞரது கருத்தாகவுள்ளது.
திட்டமிடலாளர்கள் பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள் கிராமிய மேம்பாடு குறைநிலையிலுள்ள கிராமியப் பகுதிகளில் விழிப்புணர்வு கொண்டுள்ளது எனும் ஒருமித்த கருத்தினை முன்வைத்துள்ளனர். கிராமிய மேம்பாட்டில் வறுமை, தேக்கநிலை
என்பவற்றின் தீவிரத்தன்மையை குனர் மைர்டால் (Gunner Myrda)
நேக்ஸ் (Nurkse) போன்ற அறிஞர்கள் விளக்கியுள்ளனர்.
குனர் மைர்டால் எனும் அறிஞர் தமது Asian Drama எனும் நூலில் தென்னாசிய சமூகங்களில் மேம்பாட்டிற்குத் தடையான காரணிகளை முன்வைக்கும் போது வறுமை என்பதனை முக்கியமான ஒரு மூலமாக முன்வைத்தார். நேக்ஸ் எனும் அறிஞர், இவ் வறுமையை குறைவிருத்திப் போக்குடைய பகுதிகளில் எவ்வாறான பாதகத் தன்மையை கொண்டுள்ளன, என்பதை தமதாய்வுப் புலத்தினின்று விளக்க முற்படுகின்றார். ஒருவன் வறியவனாய் இருப்பதற்கு காரணம் அவன் வறியவனாய் இருப்பதே என்ற இவரது கருத்து இங்கு சுட்டிக்காட்டப்படக் கூடிய ஒன்று.
எந்தவொரு பின்தங்கிய கிராமங்களின் வளர்ச்சியற்ற தேக்கநிலைக்கு அடிக்கட்டுமானமாக இருப்பது வறுமையே. வறுமை என்பதை மக்கள் "கஷடம்" எனும் சொல்லினுடாக வெளிப்படுத் துகின்றனர். அமெரிக்க சமூகவியலாளரான் மில்ஸ் (Mills) சமூகத்தின் மேம்பாட்டிற்குத் தடையாகும் பிரச்சினைகளை சமூகப்பிரச்சனை,

Page 11
தனிமனித பிரச்சனை என இருபிரிவுகளுடாக காண்கின்றார். வறுமை என்பது பல கிராமங்களில் தனியார் பிரச்சினையாக இருந்த போதும் அது பல சமூகப் பிரச்சினைகளுக்கு தூண்டுதலாக அமையும் பட்சத்தில் அது ஒரு சமூக சிக்கலாக மாறி கிராமிய மேம்பாட்டிற்கு தடையாக அமைந்துவிடுகின்றது.
இன்று உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வறுமை சார்ந்த அக்கறை போதியளவு முன்னெடுக்கப்படவில்லை என்பதே உண்மை. சீரிய வாழ்வை மேற்கொள்ள முடியாத இந்நிலையானது பல வறிய கிராமங்களில் போதிய நிறையுணவின்மை, சுகாதார நலம் பெறும் வசதியின்மை, பொருத்தமான வீட்டு வசதியின்மை, குறைந்த கல்வித்தரம், குறைந்த வாழ்க்கைத்தரம், மூட நம்பிக்கைகளின் ஆதிக்கம் போன்ற விளைவுகளின் பாதிப்பு அதிகமாக காணப்படும். உலக வங்கியின் அறிக்கையின் படி (World Bank Staft, 1983:249) வறியோரில் 80% மானோர் கிராமப் புறங்களில் வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கிராமிய மேம்பாட்டிற்குத் தடையாகும் வறுமையை தணிப்பதன் மூலமே கிராமிய மேம்பாடு என்பது சாத்தியமாகும். எனவே கிராமிய மேம்பாட்டில் ஆர்வம் கொண்டுள்ள குழுக்களை இனங்கண்டு அவற்றை முன்னெடுப்பதில் கிராமிய சமூகவியலின் பங்கு குறித்துரைக்கப்பட வேண்டியதொன்றாகும்.
வறுமை என்பது உள்ளவரை மேம்பாடு என்பது அடைந்து கொள்ள
முடியாத ஒன்று என்பது "Dadly Seers" எனும் அறிஞரது கருத்து. ஒவ்வொரு பின்தங்கிய கிராமங்களிலும் வறுமைக்கான காரணங்களை ஆராய்ந்து சென்ற பல சமூகவியலாளர்கள் பின்வரும் காரணிகள் வறுமையை தூண்டி கிராமிய மேம்பாட்டை அழித்துவிடுகின்றன என்று கண்டறிந்துள்ளனர்.
0பாரம்பரிய தொழில் முறைகளில் தங்கியுள்ளதால் ஏற்படும் குறைந்த
உற்பத்தித் திறன்
0 போதிய வருமானமின்மையும் சமனற்ற வருமானப் பரம்பலும்
0 கல்வியறிவின்மையும் பயிற்சித் திறன்மிக்க மனித வளக் குறைவும்

0வர்ணக் கோட்பாட்டின் தீண்டத்தகாதோர் தீண்டத்தகாதோரே என்பது போல் வறியவர்கள் வறியவர்களே எனும் நிலையை இறுக்கமாக
வளர்க்க முயலும் சமூக அடுக்கமைவுகள்.
0 தனிநபர் மேம்பாட்டின்மையும் குடும்பத்தலைவரது பொறுப்பற்ற போக்கும் 0 யுத்தமும் போர் விளைவுகளும் 0போலி நம்பிக்கைகளும் நெகிழ்ச்சியற்ற சமூக நியமங்களும்.
வறுமை எனும் இத் தனிமனித சிக்கலானது பல சமூக விளைவுகளை கிராமிய வாழ்புலங்களில் ஏற்படுத்தி விடுகின்றது. 0 விரைந்து கீழ்நிலைக்குத் தள்ளப்படும் வாழ்க்கைத் தரம், 0 குன்றிய ஆரோக்கியமும் சுகாதார சீர்கேடுகளும் 0 பாடசாலை இடைவிலகலும் சிறுவர் ஊழியமும் 0 பிச்சை எடுத்தலும் விபச்சாரமும்
0 திருட்டும் குற்ற நடத்தைகளும்
இன்று பல கிராம மேம்பாட்டுச் சிந்தனைகள் கிராமங்களில் வறுமை நிலையை ஒழித்தல் என்பதற்கு மேலாக கிராமங்களில் நகரமயமாக்கத்தையும் Urbanization) நவீனமய மாக்கத்தையும் (Modernization) கொண்டுவருவதுதான் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் எனும் கருத்து பரவலாக நிலவி வருகின்றது. அத்துடன் உலகம் ஒரு failu SysFLDib (World is a small village) 6Tgib உலகமயமாக்கல் சிந்தனையின் அடிப்படையில் கிராமிய மேம்பாட்டுச் சிந்தனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவை எவ்வளவு தூரம் கிராமிய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பது கேள்விக் குறியாகும். எனவே அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத மக்களிடம் நவீனத்துவத்தைப் பற்றிப் பேசுவது சாத்தியமாகுமா? எனும் சந்தேகமும் எழுகின்றது. "முதலில் வயிற்றுப் பசியை தீருங்கள் பின்னர் அறிவுப் பசியைப் பற்றிப் பேசுவோம்" என்ற கருத்திற்கு ஒப்ப முதலில் அடிப்படைத்

Page 12
தேவையை நிறைவேற்ற வறுமையை ஒழிக்கும் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு அவை மக்கள் மத்தியில் பூரண பயன்பாட்டைத் தந்த பின்னரே நவீனமயமாக்கம் பற்றியோ நகரமயமாக்கம் பற்றியோ பேச முடியும் என்பது கிராமியச் சமூகவியலாளரது கருத்தாகவுள்ளது.
வறுமையில் இருந்து விடுதலை.
இனங்காணலம் சுயவிழிப்புணர்வு சமூக அணிதிரட்டலும்
(Identity) -> He
Self- Awareness மக்கட் பங்களிப்பும்
(5(9 உள்/வெளி அமைத் நாட்டு தல் உதவி Rural
Development
குற்ற தனிமனித நடத்தை upbuTG 56忙
living Conditions சக்தியுற்றவர்களாக்கல் சமூக பொருளாதார உருமாற்றம் (Poverty) -mi) (Empowerment) “วั>| social Economic transformation
அரசும் அரசசார்பற்ற நிறுவனங்களும் கிராமிய மேம்பாட்டில் அக்கறை கொண்டுழைப்பதுடன் கிராமய மக்கள் மத்தியில் மேம் பாட்டிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்று தேவையான ஒன்று. இன்று கிராமிய மேம்பாட்டில் தக்கதான நடைமுறைகள் என பின்வருவனவற்றை பல திட்டமிடலாளரும் கிராமிய சமூகவியலாளரும் முன்வைக்கின்றனர்,
0 சமூக அணிதிரட்டலும் (Social Mobilization) மக்கட் பங்களிப்பும்
(People Participation)
0 நெகிழ்ச்சித் தன்மையுடைய சமூக அமைப்பு
0 வாழ்வில் உயர்வு காண வேண்டும் எனும் அவா
0 கல்விக்கான அக்கறையும் விழிப்புணர்வும்
 
 
 

0துடிப்புள்ள இளைஞரது அர்ப்பணிப்புடனான சமூகப் பணி (Socialwork)
இவ்வாறான திட்டமிடல்கள் மூலம் பின்தங்கியுள்ள பல கிராமங்களில் கிராமிய மேம்பாட்டிற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் சமூகப் பொருளாதார அரசியல் பண்பாட்டு ரீதியில் ஒரு பல்துறை இணையத்தின் (Inter Disciplinary approach) 60.LDugg56) (3LDLDUTL9sib35T60T sel556). Tjib கிராமியப் பகுதிகளில் ஆழமாக்கப்படும் போது அடைந்து கொள்ள முடியாத தூரத்தில் இருப்பதாகத் தோன்றும் மேம்பாடு என்பது கைக்கெட்டும் தூரத்தில் அண்மித்து விடுவது உறுதி.
உசாத்துணைகள்:
Desai, Vasant (1988)-Rural Development vol-ll Himalaya publishing house
Myrdal, Gunnar (1963) - Economic theory and Under developed regions,
London Methuens.

Page 13
சமூகப்பன்னி Social work
வரதகௌரி опафajoieir B.A. (Hons)
சமூகப்பணி என்ற எண்ணக்கரு சமூகசேவை அல்லது புண்ணிய கருமம் என்பதற்கு அப்பால் தனிமனித - சூழல் பொருத்தப்பாட்டிற்கான அறிவியல் செயற்பாடாக பொருள் தருவது; உதவுதல் என்ற செயல்வழி மக்கள் தாங்களே தங்களுக்கு உதவும் அறிவை - திறனை - மனப்பாங்கினை வளர்க்கும் கலையாக இன்று வளர்ச்சி காண்பது.
"உதவுதல்" என்ற சமூக செயற்பாட்டின் வழி, மக்கள் தாங்களே தங்களுக்கு உதவும் வலுவூட்டும் ஆற்றலை சமூகப்பணி அறிவும் அனுபவமும் வழங்குகின்றன. இதற்கான ஒரு கல்விப்புலமாகவே அது
தனிநபர்கள் குடும்பம்
இன்று வளர்ச்சி கண்டுள்ளது.
சமூகப்பணியின் அடிப்படைத் தொழிற்பாடுகளாக சிகிச்சை வழி புனர்வாழ்வும், ஆறுதல் அளிக்கும்பணிகளும், பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் முற்பாதுகாப்பளித்தல் பணிகளும், இருக்கின்ற நிலையிலிருந்து சமூக தொழிற்பாட்டினை மேம்படச் செய்யும் பணிகளும் முக்கியம்
பெறுகின்றன.
 
 
 
 

சமூகப்பணியின் குறிப்பிடத்தக்க குணாம்சங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
0 மனிதன் சூழ்நிலையின் கைதி, சூழ்நிலைக்காரணிகளையும் மனித நடத் தையையும் முழுமையாக நோக்குவதனால் மனிதனுக்கு உதவுதல் மூலமாக தொழிற்பாட்டின் மேம்பாட்டுக்கு துணையாதல்.
0 குடும்ப முக்கியத்துவத்தினை அழுத்தும், சமூக தொழிற்பாட்டின் மேன்மைக்காக குடும்ப இடைவினையில் எழக் கூடிய பிரச்சினைகளை தீர்த்தலும், முற்பாதுகாப்பளித்து மேம்பாட்டுக்காக உழைத்தல்.
0மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான உதவுதலில் சமுதாய வளங்களை பயன்படுத்தல் மிகவும் முக்கியமானது. இதில் சமூகப்பணியாளர்கள் உதவிநாடிகளின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் சமுதாய வளங்களைப் பற்றிய திடமான அறிவினை சமூகப்பணியாளர் வழங்குதல். அத்துடன் ஆலோசனை வழங்கலும் (Referals) முக்கிய சேவையாக உள்ளது.
Dமேற்பார்வை என்பது சமூகப்பணிக்கல்வி தொழில் வாண்மை இரண்டுடனும் சேர்ந்ததாகவே உள்ளது. மேற்பார்வை செயல்முறை மூலமாக அனுபவமில்லாத சமூகப்பணியாளனுடைய தொழில் வாண்மையான செயல்முறைக்கு (நெறிப்படுத்துவது வழிகாட்டுவது) முக்கிய அங்கங்களாக சமூகப்பணியாளர்களுடைய திறனை அதிகரிக்க உதவுகின்றது. இந்த மேற்பார்வைக் கோலமானது காலத்திற்கு காலம் விரிவடைகிறது உதாரணமாக சுயநெறிப்படுத்தல். மேற்பார்வை (self supervision) fasurgs6it (3LDiUTfGO)6) (peer supervision) uri(35igib மேற்பார்வை (participatorysupervision)என விரிவடைகின்றது.
0சமூகப்பணிக்கல்வியானது தனித்துவமான வகுப்பறைக் கல்வியுடன் நடைமுறை களப்பணிஅனுபவத்துடனுமேயே பூர்த்திசெய்யப் படுவதனால் தொழில்வாண்மையான பரீட்சயத்திற்கு (professional
practice) தகுதி வாய்ந்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Page 14
செமூகப்பணி முறைகளான விடயப்பணி (case work) தனிநபர்களுடனும் குடும்பங்களுடனான் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நேரடி உறவு முறைப்பணியாக உள்ளது. குழுப்பணி (group Work) பிரச்சினைக்குரிய ஆட்களுடனான சமூகதொழிற்பாட்டில் விரும்பும் மாற்றத்தினைக் காண் பதற்கான கருவியாக குழுப்பணி பயன்படுகிறது. சமுதாய ஒழுங் கமைப்பு (Community Organization) சமூக நோயியலைத் தீர்த்தலுக்கான குழுக்களுக்கிடையிலான அணுகுமுறையாக சமுதாயதேவைகளை இனங்காணுதலுக்கும் விளங்குதலுக்கும். பூர்த்திசெய்தலுக்கும் உதவுதலுக்கும் பயன்படுகிறது. சமூகப்பணியில் சார்பாக பேசுதல் என்ற நடிபங்கினை பெரும்பாலும் விரும்பும் மாற்றத்தினை சமூகமட்டத்தில் ஏற்படுத்துவதற்காக, தேசிய மட்டத்தில் கொள்கை உருவாக்குவதற்காக பயன்படுத்துகிறார்கள்.
0 சமூகப்பணியாளர்கள் தங்களுக்கென தொழில்வாண்மையாளர்களின் சங்கத்தினை அமைத்து காலத்திற்கு காலம் தொழில்வாண்மைக்குரிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டு தங்களை இந்த சமூகப்பணி தொழில் வாண்மையின் அங்கத்துவத்தின் ஊடாக வளர்த்துக் கொள்கிறார்கள்.
Dஉறவுமுறை என்பது சமூகப்பணி செயல்முறையில் மிகவும் முக்கியமானது சமூகப்பணியாளன் - உதவிநாடி உறவுமுறையே சமூகப் பணியின் அடிக்கல்லாகும்.
0சமூகப்பணியில் சமூகநோக்குடன் உதவுவதற்கு சமூகவியல், மானுடவியல், சமூக உளவியல், பொருளியல், புவியியல், அரசறிவியல் போன்ற சமூகவிஞ்ஞானங்களின் அறிவு பயன்படுகிறது.
0 பெரும்பாலான சமூகப்பணியாளர்கள் முகவர் ஒழுங்கமைப்புக் களுடன் இணைந்து பணியாற்றுவதானால் கொள் கைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டு பலசேவைகளை பல வழிகளில் பெற்று உதவ முடிகிறது.

0தொழில்வாண்மையாளர், சமூகப்பணியாளர்கள் சம்பளத்துடனான பணிகளை சமூகநலன்புரி, சமூகசேவை அமைப்புக்களினுடாக ஆற்றி வருகிறார்கள்.
0சமூகப்பணியாளர்களின் இன்றைய போக்குகள் சேவைகளையும், நடவடிக்கைகளையும் இணைத்து, பல துறைகளையும் ஒருங்கிணைத்து சமூகப்பணியில் ஈடுபடுவதானால் அவர்கள் இணைப்பாளர்களாகவும் குழு முயற்சிக்கான ஒருங்கிணைப்பாளர்களாகவும் சமூகநலன்புரி, சமூகசேவை, சமூகப்பணி வழியாக சமூகமேம்பாட்டிற்காக மாற்றம் காண விழைபவர்களாகவும் உள்ளனர்.
0இன்றைய போக்காக தொழில்வாண்மையான சமூகப்பணி, சமூக
மேம்பாட்டை (Social Development) உருவாக்குவதற்கான சமூக சேவை,சமூகநலன்புரி, சமூககொள்கை ஆகியவற்றினடியாக உலக ரீதியான சமூக மேம்பாட்டினை காணவிழைகின்றது. உண்மையிலேயே தனியன் - குடும்பம் - குழு - சமுதாயம் என விரியும் சமூக புலங்களின் சீராக்கலின்வழி மேம்பாடு கைவசமாகிறது.
உசாத்துணைகள்:
Payne, Malcolm (1996) - Waat is Professional Social Work?, British
Association of Social workers, Venture Press, Great Britain
Skidmore, Rex, A (et al), (1991) - Introduction to Social Work, Prentice-Hall, Inc, U.S.A

Page 15
(குடும்பமும் உறவுமுறைகளும்
குரும்பம் Family
என்சுகன்யா
குடும்பம் என்பது உலகப் பொதுமையானது. ஆனால் அதன் அமைப்பு, நிர்வாகம் என்பன பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபடுவதாகக் காணப்படுகிறது. குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்கள் திருமணத்தினால், இரத்த உறவினால்,அல்லது தத்தெடுத்தலால் (adoption) ஒன்றுபட்ட வர்களாக இருக்கலாம்.
சமூக கலாசார சூழ்நிலைகளின் மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் திறந்த ஒரு அமைப்பே குடும்பம் என்பதால் அதற்கமைய குடும்பங்கள் தனிக்குடும்பம் (Nuclear family), விரிந்த குடும்பம் (Extended Family) என பொதுவாக வகைப்படுத்தப்படுகிறது. திருமணத்தின் மூலம் இணைந்த தம்பதிகள் தமது குழந்தைகளுடன் இணைந்து வாழும் போது அது தனிக்குடும்பம் எனப்படும். இத்தகைய குடும்ப அமைப்பே விரிந்த குடும்பம் தோன்றுவதற்கு அடிப்படையாகும். மூன்று தலைமுறையினர் அல்லது பிற உறவினர் இணைந்து ஒரே வீட்டில் வாழுதல் விரிந்த குடும்பமாகும். இங்கு அனைவரும் ஒன்றுபட்டு வாழ்வர்.
பிறேட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels-1884) குடும்பங்கள் சமூகத்தில் வேறுபட்ட நிலைகளில் காணப்படுவதற்கான காரணங்களை இனங்காட்டுவார். குடும்பத்தின்வழி சொத்துக்கள், ஆற்றல்கள், தனியுரிமை கள் என்பன நடிபங்குகளுக்கு ஏற்ப இடம்மாற்றப்படுகின்றன என்பது அவர் கருத்து.
நவீன முரண்பாட்டுக் கோட்பாட்டாளர்கள் குடும்ப அமைப்பு சமூக அநீதிகளுக்கு துணை போகின்றது என வாதிடுகின்றனர். குடும்ப வழி பால்நிலை( Gender) சார் பாரபட்சங்கள் பேணப்படுவதாக கூறுகின்றனர்.
சமூகத்தின் உறுதிக்கு நிறுவனங்களின் வளர்ச்சியும் அதில் உள்ள அங்கத்தவர்களின் செயற்பாடுகளும் இன்றியமையாதது என்பது, செயற்பாட்டு அணுகுமுறையாளர்களின் (Functionalist perspective)

உறுதியான கருத்தாகும். அதனடிப்படையில் ஒரு குடும்பத்தில் குறிப்பிடத்தக்க செயற்பாடுகளாக சமயம் சார்ந்த அனுஷ்டானப் பயிற்சிகள், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டுச் செயற்பாடுகள், விழாக்கள் என்பன அவசியமாகக் கருதப்பட்டாலும் குடும்பத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மிகமுக்கியமான 6 தொழில்களை William FOgbum வரையறுத்துள்ளார். அவற்றை நோக்கின்,
9ே மீள் உற்பத்தி 9 பாதுகாப்பளித்தல் O Felps DuuLDITd5856) 9 பாலியல் நடத்தைகளை பண்பாட்டுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தல் 9ே ஒருவருக்கொருவர் துணையாகவும் அன்பாகவும் இருத்தல் (Affection
and companionship) 0 சமூகத்தில் குறிப்பிடத்தக்க ஒரு அந்தஸ்தை வழங்குதல்
சமூகமாற்றங்களினால் முதல்நிலைக் குழுவான குடும்ப உறுப்பினர்களிடையான 2-06의 நெருக்கம் தளர்வு காண்பதும் உறுப்பினர்கள் மீதான சமூகநியமங்களும், நெறிமுறைகளும் தம்பால் பலவீனப்படுத்தும் குடும்ப நிலமைசாாந்த இன்றைய அனுபவமாகும்.
மரபு வழிச் சமூக குடும்பத்தின் வடிவம், நவீன சமூக நிலமை களிலிருந்து வேறுபடுவது.
மரபுவழிச் சமூகத்தில் குடும்பம்
9ே உறவு நிலையானது சமூகத்தினடியாகவே அமைகிறது. ஒருவரின் அனைத்துச் செயற்பாடுகளும் குழுநிலையின் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. 9 மகனது அந்தஸ்து, தொழில் என்பன அவனது தந்தையின் அந்தஸ்து,
தொழில் என்பவற்றாலேயே தீர்மானிக்கப்படுகிறது. 9 பெரும்பாலான உறுப்பினர்களின் பல்வேறுபட்ட நிறுவனங்களாகவும்
குடும்பமே விளங்குகிறது. 9 கூட்டுக்குடும்பமே அடிப்படையாகிறது. 9 பிள்ளைகளின் மீது பெற்றோரின் ஆதிக்கமும், பெண்கள் மீது
ஆண்களின் ஆதிக்கமும் செலுத்தப்படுகிறது. 9 உறவுநிலைப் பிணைப்பானது பொது குடும்பநலனையே
முக்கியப்படுத்துகிறது. 9 கடமை, மரபு, அதிகாரம் என்பவற்றுக்கு தனிமனிதர் அடங்கிப்
போவதுடன் "விதி" என்று வாழாவிருத்தல். 9 வீட்டுக்கும் சமுதாயத்திற்கும் இடையே மிகச்சிறிய வேறுபாடே
காணப்படும்; பெருமளவான நிறுவனங்கள் இல்லை.
ضلاھكك

Page 16
நவீன சமூகங்களில்
9 உறவு நிலையானது பொருளாதார அரசியல் சமூக வாழ்வினின்றும் தனித்ததாக அமைகிறது. ஒருவரின் தொழில் தேர்வானது அவரது உறவு நிலைகளுக்குப் புறம்பாக நிகழ்கிறது. சமூக அசைவு திறமைகளின் அடிப்படையில் நிகழ்கிறது. தொழில், பிறசெயற்பாடுகள் வீட்டுக்கு வெளியே நிகழ்கின்றன. தனிக்குடும்பமே அடிப்படை அலகாகிறது. பெற்றோர் பிள்ளைகளிடையேயும் ஆண்-பெண் இடையேயும் சார்ப ளவில் சமத்துவமான இலக்குகளும் நடைமுறைகளும் எதிர்பார்க்கப் படுகின்றன. 9ே தனிமனித முன்னேற்றத்தையோ, பொருளாதார நலன்களையோ உறவு
நிலைக் கடப்பாடுகள் கட்டுப்படுத்துவதில்லை. 9ே வீட்டிற்கும் வெளி உலகிற்கும் இடையில் தெளிவான வரையறை உண்டு. வெளியுலகம் புறவயமானது; போட்டியானது; அச்சுறுத்துவது.
:
காலம் காலமாக கணவன் உழைத்துக் கொடுத்தலிலும் மனைவி வீட்டைப்பராமரிப்பதிலும் தமது காலத்தைச் செலவிட்டனர். இன்றைய உலகில் இத்தகைய பழக்கங்கள் குறைந்து ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஆண், பெண் இருவரும் சேர்ந்து பகிர்ந்து கொண்டுவாழும் நிலைமை காணப்படுகிறது. எமது பண்பாட்டு புலங்களான போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மட்டுமன்றி இன்னும்பல பிரதேசங்களில் குடும்பங்கள் தாக்கப்பட்ட வண்ணமே உள்ளன. போரின் முடிவுறாத் தன்மை குடும்பங்களில் பல்வேறுபட்ட சிக்கல்களை ஏற்படுத்துகிறது. நிச்சயமற்ற எதிர்காலம், என்ன செய்யலாம் என்ற பெரும் கேள்வியை எழுப்புகிறது. நல்ல குடும்பம் என்பது எங்கள் விழுமியங்களுக்கு ஏற்ப எங்கள் சமூக அமைப்பில் நாம் காணவிரும்பும் சமூக அமைப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டியது.
உசாத்துணைகள்.
Macionis, Johns J (1996) - Society - the basics, Prentice Hall, New Jersey
சண்முகலிங்கன் , என். (2000) - சமுகமாற்றத்தில் பண்பாடு, சவுத்விசன்,
சென்னை
ھلاک کے

தேச வழமையில் குடும்பமும், ஆதன உரிமையும். Family and Property Rights in Thesawalamai
த.விஜயகலா
இலங்கை மக்களாகிய நாங்கள் பல்வேறு சட்டங்களால் ஆளப்பட்டு வருகின்றோம். அவற்றுள் தேசவழமைச் சட்டம் முக்கியமான ஒன்றாகும். ஒல்லாந்தரினால் கோவை செய்யப்பட்ட இத்தேசவழமைச் சட்டமானது இங்கு வாழும் தமிழர்களை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
தேசவழமைச் சட்டத்தின் ஏற்புடைமை என்பதில் இரண்டு விடயங் கள் பற்றி அறியலாம் அவை:-
1. எந்தெந்த ஆட்களுக்கு ஏற்புடையதாகும்
2. எந்தெந்த விடயங்களுக்கு ஏற்புடையதாகும்.
ஆள்சார் சட்டம் எனும் போது “யாழ்ப்பாணவாசி" என்ற பதத்துக் குள் உட்படுத்தப்படும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏதாவது ஒன்றில் அதாவது வடமாகாணத்தில் நிரந்தர வதிவிட உரிமையையும், வதிவிட எண்ணத் தையும் கொண்ட தமிழர் ஒருவர் தேசவழமைச் சட்டத்தால் ஆளப்பட தகுதியுடையவர் ஆவார். தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்ட பெண் தேசவழமைச் சட்டத்திற்கு உட்படாத ஆணைத் திருமணம் செய்து, அத்திருமணம் நிலைத்திருக்கின்ற காலத்தின் போது அவள் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டவள் ஆகமாட்டாள். ஆனால் தேசவழமைச் சட்டத் திற்கு உட்படாத பெண் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்ட ஆணைத் திருமணம் செய்கின்ற போது, அத்திருமணம் நிலைத்திருக்கின்ற காலத்தில் அவள் தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்டவள் ஆவாள். உதாரணம்: யாழ்ப்பாணத் தமிழரை திருமணம் புரிந்துள்ள சிங்கள, முஸ்லீம் பெண்கள்.
யாழ்ப்பாணத்தில் தற்காலிகமாக தங்கிவாழும் தமிழர்களுக்கோ.
«ίδ»

Page 17
இந்திய வம்சாவழித் தமிழர்களுக்கோ, தமிழ்மொழி பேசும் ஏனைய இனத்தவர்களுக்கோ தேசவழமைச் சட்டம் ஏற்புடையதாகாது. இடம்சார் என்ற வகையிலே மேலே குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களிலும் உள்ள அசையா ஆதனங்கள் எவருக்குச் சொந்தமாக இருப்பினும். அது தேசவழமைச் சட்டத்தாலேயே ஆளப்படும்.
குடும்பம் என்பது திருமண உறவின் வழி ஏற்படுத்தப்படுகிறது. திருமணத்தின் போது பல்வேறு ஆதனங்களுக்கு உரியவர்களாக கணவனும், மனைவியும் மாறுகின்றனர். எனவே ஆதனங்கள் தொடர்பாக கணவன் மனைவியின் உரிமைகள் தொடர்பாக தேச வழமை கூறும் வகையில் தனித்து நோக்கலாம்
1. திருமணம் செய்யப்போகும் ஆண்- பெண் சம்மதம்
2. பெற்றோரின் சம்மதம்
3. திறத்தவர்கள் தடுக்கப்பட்ட உறவுமுறைக்குள் திருமணம்
செய்தலாகாது.
4. திறத்தவர்கள் திருமண வயதை அடைந்திருத்தல் வேண்டும்
5. ஏற்கனவே திருமணம் செய்தவர் அத்திருமணம் வலுவில் இருக்கும்
போது வேறு திருமணம் செய்தலாகார்,
6. தேவையான சடங்குகள் நிகழ்த்தப்படுதல் வேண்டும்.
திருமணத்தினால் ஏற்படும் புதிய அந்தஸ்தினால் வேண்டிய சட்டக் கடப்பாடும், பிள்ளையை பராயமடையும் வரை பராமரிக்க வேண்டிய சட்டக்கடப்பாடும் கணவனுக்கு உண்டு. மவிையைக் காப்பாற்ற வேண்டிய சட்டக் கடப்பாடும், பிள்ளையை பராயமடையும் வரை பராமரிக்க வேண்டிய சட்டக் கடப்பாடும் கணவுனுக்கு உண்டு.
தேசவழமைச் சட்டத்திற்கு உட்பட்ட பெண் ஒருத்தி, அசையா ஆதனம் தொடர்பான எந்த உறுதியையும் தனது கணவனுடன் சேர்ந்தே எழுதவேண்டும் என்பது கட்டாயவிதி. 1911ம் ஆண்டின் 1ம் இலக்கக் கட்டளைச் சட்டத்தின் 8ம் பிரிவுப்படி மனைவியானவள் அவளது கணவனின் சம்மதமின்றி அவளது அசையா ஆதனத்தை பின்வரும்

காரணங்களைக் காட்டி மாவட்ட நீதிமன்றில் அனுமதியைப் பெற்ற பின்னரே கைமாற்றலாம்.
1. கணவனால் கைவிடப்பட்டிருத்தல்.
2. பரஸ்பர இணக்கத்தின் பேரில் அவர் தனது கணவனைவிட்டுப் பிரிந்து
வாழ்தல்.
3. நீதிமன்றக் கட்டளையால் அவளது கணவன் இரண்டு வருடத்திற்கு
மேற்பட்ட காலம் சிறையில் இருத்தல்.
4. அவளது கணவன் ஒரு பைத்தியக்காரனாக அல்லது முட்டாளாக
அல்லது அவன் எங்கு வாழ்ந்துவருகிறான் என்பது தெரியாதநிலை.
5. நியாயமற்ற முறையில் சம்மதம் தர மறுத்தல்.
6. மனைவியினதும் பிள்ளைகளினதும் நலனுக்காக கணவன் சம்மதம்
தேவையில்லை என்று தெரியுமிடத்து.
கணவன் - மனைவி இருவரும் சட்டப்படி விவாகரத்துப் பெற்றிருப்பின், கணவனை இழந்த விதவைப் பெண்ணும், திருமணம் ஆகாத பராயமடைந்த கன்னிப் பெண்ணும் தனது அசையும் அசையா ஆதனங்கள் எதனையும் சுயமாக தனியே எவரின் சம்மதமும் இன்றி உறுதி எழுதி கைமாற்றம் செய்யலாம். அதேபோன்று கணவன் தான் திருமணம் செய்வதற்கு முன்னர் அறுதி வாங்கிய ஆதனத்தையும், அவனுக்கு நன் கொடை, முதுசொம், உரிமைவழியாக வந்தடைந்த தேடிய தேட்டங் களையும் தன்எண்ணப்படி கைமாற்றஞ் செய்யலாம்.
தேசவழமைச் சட்டத்தின் கீழ் ஆதனங்கள் பின்வருமாறு வகைப்படுத் தப்பட்டுள்ளன.
1. முதுசொம் 2. சீதனம் 3. தேடிய தேட்டம் 4. உரிமை
பெற்றோர் அல்லது பெற்றோர் வழி மூதாதையர் இறப்பதனால் வழிவழியாக ஒருவரை வந்தடையும் ஆதனமே “முதுசொம்" எனப்படும். முதுச சொத்தை ஒருவர் விட்டு இறக்கும் போது அது அவரது பிள்ளைகளையே சென்றடையும். வாழ்க்கைத் துணை அதில் உரிமை
கோரமுடியாது.
دھنکے

Page 18
நடைபெறவிருக்கும் திருமணத்தை முன்னிட்டு பெற்றோர் தம் மகளுக்குக் கொடுப்பதே சீதனம் எனப்படும். சீதனம் திருமணத்தின் முன்னரோ திருமணத்தின் போதோ அல்லது திருமணத்தின் பின்னரோ கொடுக்கப்படலாம், சீதன ஆதனமானது மனைவியின் தனிப்பட்ட சொத்தாகும். கணவனுக்கு அதில் பங்கில்லை. சீதனத்தை பெற்றுக்கொண்ட பெண் அந்த ஆதனத்தைக் கைமாற்றஞ் செய்யாமல் இருந்தால் மட்டுமே, அவளது பிள்ளைகளுக்கு அது சமபங்காகச் சென்றடையும். பிள்ளைகள் இன்றி இறப்பாளாயின் சீதனத்தை யார் கொடுத்தார்களோ அவர்களுக்கே திரும்பிச் சென்றுவிடும். கொடுத்தவர்களும் இறந்திருப்பின் அவளது சகோதரர்களுக்கு சமபங்காகச் சென்றடையும். அசையாத ஆதனத்தைச் சீதனமாகப் பெற்றுக்கொண்ட பெண் அதன்பின்னர் அவளது பெற்றோர் இறப்பின் அவர்கள் சொத்தில் பங்கு கோரமுடியாது. ஆனால் அசையா ஆதனத்தைச் சீதனமாகப் பெறாது நன்கொடையாகப் பெற்றுக்கொண்ட பெண், பெற்றோர்கள் இறந்த பின்னர் அவர்கள் சொத்தில் பங்குகோர உரித்துடையவள். இதுவே நன்கொடைக் கும் சீதனத்திற்கும் இடையேயான முக்கிய வேறுபாடு நன்கொடை என்பது எவரும், எவருக்கும், எப்பொழுதும் எத்தனை தடவையும் கொடுக்கப்படாலம். ஆண் - பெண் வேறுபாடு கிடையாது. கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கொடுக்கலாம்.
திருமணம் நிலைத்திருக்கின்ற காலத்தில் கணவனால் அல்லது மனைவியால் அல்லது இருவரும் சேர்ந்து பெறும் இலாபங்கள் தேடிய தேட்டம் எனப்படும். கணவனோ மனைவியோ கொள்வனவு செய்தாலும் கணவன் - மனைவி இருவருக்கும் சமபங்கு உடையது. கணவனோ அல்லது மனைவியோ முதலில் இறந்தால் இறந்தவருக்குரிய பங்கின் அரைப்பங்கு உயிருடன் இருக்கும் வாழ்க்கைத் துணைக்குச் சென்றடையும். மற்றைய அரைப் பங்கு சீதனம் பெறாத பிள்ளைகளுக்குச் சென்றடையும். .
பெற்றோர் அல்லது மூதாதையர் தவிர்ந்த உறவினர் ஒருவர் இருக்கும் போது வழிவழியாக ஒருவரை வந்தடையும் ஆதனம் உரிமை எனப்படும். இது பெரும்பாலும் சொரியல் பங்காகவே வந்துசேரும்.

இவ்வாறாக கணவன் - மனைவியருக்கிடையே திருமணபந்தத்தில் வரும் உரிமைகளின் ஆட்சிபற்றி யாழ்ப்பாணத்தின் தேசவழமை சட்டங்கள் வறுவதை காணலாம்.
சாத்துணை: riRamanathan.T (1972) - Thesawalamai, Colombo.
м
లో ధ్య * ميغومي
X%م
*名。 ४६ ४, ४.४६ *
மூகவியல் சமூக ஆறிவரங்கம் இதிளும் மனித

Page 19
உறவு முறை Kinship
ச.பத்மநேசன்
பாரம்பரியமாக சமூகங்களை நிலைக்களனாய் ஆய்வு செய்யும் மானிடவியலாளர்களின் மகத்தான தேடல்களில் சமூகக்கட்டமைப்பிற்குள் சர்வவியாபகமாக செயல்படும் உறவுமுறை (Kinship) பற்றிய தேடல் முக்கிய இடம்பெறும்.சமூகக் குழுக்களின் தோற்றப்பாட்டிற்கும், நடத்தை யின் ஒழுங்கிற்கும், சமூகப்பிணைப்பிற்கும் (Social bond) (pdbdul urids 6)60TÜ Guglb so-6(p603 (p6060LD (Kinship systems) Fp85 அங்கிகாரத்திலும், மரபுவழி (Descent) திருமணத்தால் வருவிக்கும் பண்பாட்டு நடைமுறைத் தொடர்புகளுடனும், நடத்தைக் கோலங்க ளுடனும், உளப்பாங்குடனும் தங்கிநின்று ஒன்றாய் இணைந்து முழுமை பெறும். தனியன்களது தொடர்புகள் இவ் உறவு முறை நியமங்களாலேயே கட்டிக்காக்கப்படும். ஒருகுழு இன்னோர் குழுவுடன் இணைவதன் வழியும் ஒரு குழுவினுள் அந்நியர்களை இணைத்துக்கொள்வதன் வழி இதன் விரிவாக்கம் அமையும். இதன்வழியே இன்று உலகில் சில உறவுமுறை விதிகளை ஏற்படுத்தி குலம், கோத்திரம், கால்வழி, மரபுக்குழு போன்ற பல சிறு குழுக்களாக பிரித்து செயற்படுகின்றனர். சமூக அமைப்போடு தொடர்புடைய (Social structure) திருமணம், குடும்பம், மரபுமுறை உறவுக்குழுக்கள் போன்ற பல கூறுகளை புரிந்து கொள்வதில் உறவுமுறை ஆய்வுகள் பெரிதும் துணையாவன.
பல்வித குணஇயல்புகளால் வேறுபடும் சமூகங்களிடையே பல தரப்பட்ட உறவு முறைகள் இயங்குகின்றன. அவையாவன,
1. இரத்த உறவு (Geneologieal) திருமண உறவின் (Afinal)
விரிவாக்கத்தால் சமூக நோக்கங்கள் அங்கீகாரம் பெறுகின்றன.

2. இவ் சமூக அங்கீகார முறைமையின்வழி சமூக அமைப்பில்
குழுக்களாக நிலைப்படுத்தப்படுகின்றன.
3. அன்றாடவாழ்வில் மனிதர்களது குறிப்பிடட்பட்ட வழக்கம் இவ் உறவின்
நடத்தைகளால் ஒழுங்கு செய்யப்படுகின்றன.
4. உறவு முறைமையின் வழி பல்வகை உரிமைகளும் (Rights)
கடப்பாடுகளும் (Obligations) சமரசம் செய்யப்படுகின்றன.
5. பல உறவு முறைகளை சுட்டுவதற்கு பல்வகை மொழி வடிவங்கள்
(lingustic forms) Juu6őTLJ(Baé6ögB6OT.
இது ஓர் கற்கை நெறியாக முகிழ்ச்சி பெற இந்தியாவில் வாழும் தமிழர்களிடையே ஆய்வினை மேற்கொண்ட L.H.Morgn (Systems of consangunity and Affinily of the Human family - 1871) 6T6iru6 it அத்திவாரமிட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவைச் சேர்ந்த Kroeber (classificatoryststems of Relationship), Sriassorbó05& (3Fijibgs J.E.Mclennan (In Kinship and social organization - 1914) LDigib Malinowski and Radcliffe Brown (The Family Among the Australion Aborigines-1913), Radcliffe Brown (Introduction to Afrzcan ststems of Kinship and marriage -1950) sa5(3uJITOjib. FLÖuisito) 356t (3LDibuTL9sibg5 Murdock (Cross cultural study of family and kinship organization - 1949), Levi Strauss (1958) si(SuT(bib gg,6T (p60360LD, வளர்ச்சி போக்கு செயற்படும் திறன் ஆகியவற்றை பல்வேறு பண்பாட்டுபுலங்களில் ஆய்வு செய்து முடிவுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்துள்னர்.
எல்லா சமூகங்களும் பலவித உறவுமுறைகளை மரபுவழி இரத்தஉறவு திருமண உறவு மூலம் நிரல்படுத்துகின்றன. ஏதோ ஒரு வகையில் உயிர்களின் தொடர்புகளிலும் (Biological relationship) பண்பாட்டு பொருண்மைகளிலும் (Culturalphemomena) தங்கி நிற்கின்றது.
இ>

Page 20
இங்கு மரபுகளை பற்றி சற்று நோக்குவோம். மரபுவழி என்பது மானிடவியல் கலைச்சொற்பிரயோகத்தின்படி பண்பாட்டு ரீதியாக பெற்றோருடனான இணைப்பை சுட்டும் பல சமூகங்களில் குழுக்களின் உருவாக்கத்திற்கு அடிப்படைக் காரணி ஆகும். இரத்த உறவின்பாற்பட்ட உறவு. (Consanguinealkin) குறைந்தது இரண்டு வம்சாவழியூடுதான் நீடிக்கப்படும். வாழ்வில் முக்கிய தொழிற்பாட்டினை கொண்டியங்கும். உதாரணமாக குழந்தைகளின் சமூகமயமாக்கம், சொத்துகளை உபயோகித்தல், கையளித்தல், சமயச் சடங்குகளைப் பேணுதல், பிணக்குகளை தீர்த்தல், என்பன இதன் தொழிற்பாடே.
சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கென்றும் தனிப்பட்ட ஓர் உறவுக்கூட்டமுண்டு. தமக்குள் நெருக்கமுடையவர்களாகவும் வெவ்வேறு நிலைகளிலும் நெருங்கியவர்களாகவும் இவர்கள் அமைவர். இதன் செயற்படுமுறைமை கொண்டு மானுடவியலாளர் நான்கு வகைப்படுத்துவர்.
1.9056 upyL (Bilatenal or double descent)
2. (56LDyL (Unilineal descent)
3. FrfusioLDyL (Ambilineal or cognatic descent)
4. g6060TLDJL (Parallel descent)
இதனுள் ஒருவழிமரபு உலகின் பெரும்பாலான சமுதாயங்களில் நிலவும் உறவுமுறையாக உள்ளதால் அதுபற்றி நோக்குவோம். இவ்வுறவுமுறை இயக்கப்பாட்டில் இரு விதமான மரபுவழி விதிகள் (Decent Rules) மூலம் ஒரு வழிமரபாக குழுக்களிடையே அங்கத்தவர்கள் தொடர்பு
கொள்ள செயற்படும். இதன் வகைப்பாடுகளாவன. 1. 5560.56). (Patrilineal descent groups)
2.5Tuj6 (Matrilieal Descent groups)
தந்தைவழி
இதில் குடிவழி ஆண்கள் வழி தொடர்பு படுத்தப்படுவதால் இது
伞

ஆண்வழி/ தந்தைவழி ஆகும். இவ்வழி மரபுக்குழுக்களில் தந்தை வழியூடாக ஆண்மகனுக்கும், அவனது சகோதரனுக்கும் பின்னர் அவர்களின் ஆண்பிள்ளைகளுக்கே உரிமைகள் சமூக கடப்பாடுகள். சொத்துக்கள், கையளிக்கப்படுவதைக் காணலாம். பெண் பிள்ளைகளுக்கு இவ்வுரிமை இல்லை. எடுத்துக் காட்டாக நம் சமூகத்தை நோக்கின் ஆண் சந்ததி, இவர்களே துடக்குக்காரர், இரத்த உறவுக்காரர், இவர்களே சடங்காசார உரிமைகளுக்கு (கொள்ளிவைத்தல், திவசம் கொடுத்தல், இறப்புச்சடங்கு) உரியவர் என்பது கண்கூடு. முதுசம் வழங்குதலும் அவ்வாறே. இவ் அமைப்பினுள் ஆண்மகனைத் திருமணம் செய்யும் பெண்ணின் செயற்பாடு பல்வேறு சமூகங்களிலும் வேறுபடும் எடுத்துக் காட்டாக சில சமூகங்களில் பெண் தந்தையிடம் இருந்து உரிமைகளையும் சொத்துக்களையும் பெற்று விடுகின்றனர். பொதுவாகவே தந்தைவழியில் ஆண்மகன் தன் மனைவி மீதும், பிள்ளைகள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றான். காரணம் கணவனோடு மனைவியும் பிள்ளைகளும் பிணைக்கப்பட்டிருக்கின்றமையே.
இதனால் இவ் அமைப்பில் வரும் பெண்கள் அந்நியர்கள் மத்தியில் வாழ்கின்றமனப்பாங்கினையும் இறுக்கமான கட்டுப்பாடுகள். தடைகள் மத்தியில் வாழ்கின்றனர். கிழக்கு ஆபிரிக்காவில் (Sudan) வாழ்கின்ற Nuer எனும் மக்கட் குழுவின் தந்தை வழி பற்றி நோக்கின் உரிமைகள், முன்னுரிமைகள்(Privileges), கடப்பாடுகள் என்பன இவ்வழியூடு செயல்படுகின்றன. இதன் வழி நிலஉரிமை, சமய விழாக்களில் பங்கு பெறும் உரிமை அரசியல்நீதி (பஞ்சாயத்து உரிமை போன்ற) என்பன இடம் பெறும். தந்தைவழியானது பின்வரும் வரைபடம் மூலம் காட்டப்படும்.
sO A - soir(5,5605)
г. а O - பெண் (தாய்) O as = -மணஉறவு
நிறந்தீட்டப்பட்டவை O ae O E. தந்தைவழி
Pr i i f్మ పేజో*
伞

Page 21
தாழ்வழிமரவு
தாய்மூல்ம்'தொடர்புபடுத்தினால் அவரது மரபு தாய் வழிமரபாகும். ஒவ்வொரு சமூகங்களிலும் தாய் - பிள்ளைகள், சகோதரன் - சகோதரி இடையிலான பிணைப்பின் மூலம் அங்கிகாரம் பெறும். அநேக சமூகங்களில் தாய் - பிள்ளைகளுக்கு காப்புணர்வை ஏற்படுத்தவும், - தந்தை எனும் அந்தஸ்தையும் பெற்று விடுகின்றான். இதற்கு மறுதலையாகவே இங்கு தாயின் சகோதாரன் வழி ஆதிக்கமே மேலோங்கி நிற்கின்றது. அத்துடன் ஒரு ஆண்- ஒரு பெண்ணைத் திருமணம் செய்யும் போது பாலியல் தேவைகளையும், பொருளாதார உரிமைகளையும் பெற்றுவிடுகிறானே தவிர பிள்ளைகளின் உரிமைகளைப் பெறுவதில்லை. இங்கு ஒரு பெண் அவருடைய சகோதாரன், சகோதரிகள், சகோதரியின் பிள்ளைகள் தனது பிள்ளைகள் (ஆண் பிள்ளைகள் அல்ல) இவ்வாறான அமைப்பினைக் கொண்டிருக்கும். இங்கு பெண்ணின் ஆதிக்கம் மேலோங்கி இருப்பதனால் மற்றைய உறவு நிலைகளிலும் ஸ்திரத்தன்மை குறைவாக இருக்கும். எடுத்துக் காட்டாக இந்தியாவில் நாயர் (Nayar) அமைப்பை நோக்கின் கணவனுக்கோ, தந்தைக்கோ முக்கியத்துவம் இல்லாமலும் பெண்ணின் சகோதரர்களே ஆதிக்கம் பொறுப்பும் கொண்டவர்களாக செயற்படுவர். Wallace, (1976) ன் ஆய்வின் படி இவ் அமைப்பினுள் உயர் அரச பதவிகளும், வளங்களை நிர்ணயிக்கும் கட்டுப்பாடுகளை விதிக்கும் உரிமைகளும் ஆண்களுக்கே. அது தந்தையோ / கணவனோ அல்ல சகோதரனோ மாமனோ தான். அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் வாழும் Hopi எனும் அமைப்பில் தாய்வழி சமூகமுறைமை இன்று வரை நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆணோ. பெண்ணோ அவர்களது தாய்மனையே அவர்களது வீடாகும். சடங்குகள், மதவிழாக்கள். மனைவியைவிட்டு பிரிதல், விவாகரத்துப் பெறுதல் இவற்றிற்கு தாய்மனையையே நாடுவர். திருமணத்தின் பின்னும் ஆண்மகன் மனைவியுடன் இருப்பினும் தாய்மனையே அவனது குடிமனை ஆகும். தாய்வழி வரைபடம் பின்வருமாறு காட்டப்படும்.
لافقك

1۔ ^ "4۔
༠ A༨ ༈ ༠༠ །
தந்தைவழி மரபு, தாய்வழி மரபு, அகிய ஒரு வழி மரபுடைய சமூக அமைப்பில் மக்கள் பல குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு குழுவினரும் ஒரு பொதுவான மூதாதையரிடமிருந்து தோன்றியதாக கூறுவர் இவற்றை உள்ளடக்கிய குழு ஒரு வழி மரபுக்குழுக்கள் ஆகும். அவையே கால்வழி (Lineage), குலம் (clan), கூட்டம் (Phratry), பெருங்கூட்டம்
(Moiely) ஆகும். எனவே உறவின் வலைப்பின்னல் முழு சமூக அமைப்பையும் உள்ளடக்கவும் கூடும்.
இன்றைய நவீன தொழில் மயமாக்கப்பட்ட சமூகங்களில் (Societies) தொழில் குடியுரிமை பொருளாதாரம் அரசியல் ஈடுபாடு ஆகிய இயக்கத்தின்வழி தோற்றம் பெற்று அவ் அமைப்பு நடத்தையின் வழி குழுக்கள் உறவு முறைமையினை பேணுகின்றனர். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் சமூகநிறுவனங்களில் தனிக்குடும்பம் (nuclear family) மாத்திரமே ஒரு உறவு குழு ஆகவும் (தந்தை, தாய், பிள்ளைகளை மாத்திரம் கொண்டது) விழாக்கள். சடங்குகளில்தான் பாரிய குழுக்களுடன் சேர்ந்து உறவுமுறையினை பேணுகின்றமையை காணலாம். எனவே உறவுமுறையானது உலகின் பல்வேறு பண்பாட்டு சூழமைவுகளின் வழி வேறுபடுதலையே காண்கின்றோம். ஆனால் ஏலவே கண்ட சில முறைமைகளின் வழி சமூக அமைப்பு பேணுவது முக்கியம் பெறும் உறவுத் தொடர்பின் வலைப்பின்னலில் மனிதர்கள் ஒவ்வொரு கூறாக தொடுக்கப்பட்டுள்ளனர். இதுவே முழு சமூக உறவு
لاھوک

Page 22
வலைப்பின்னலின் ஒரு பகுதியாகும். இதனையே ரட்கிளிங்ல் பிறவுண் (RadclifeBrown) சமூக அமைப்பு என்கிறார்.
உசாத்துணைகள் Conrad Phillip Kottak (1997) - Anthropology - The Exploration of Human Diversity, The Mcgraw-Hill company, USA
f
பக்தவத்சலபாரதி, சீ (1999) - பண்பாட்டுமானுடவியல், சென்னை.
 

மட்டக்களப்பில் குடிமரபு Kudi system in Batticaloa
ஞாதில்லைநாதன் B.A. (Hons)
குடியமைப்பு என்பதன் விளக்கம்
பண்பாட்டினை வாழ்முறையாகக் கருதினால், மனிதனின் சடங்குகள். நம்பிக்கைகள். பழக்கவழக்கங்கள் இதன் கண் அடங்கிவிடுகின்றன. பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் சமூகத்தின் தேவைகளின் அடிப்படையில் தோன்றியவையாகும். அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என மானிடவியல் பேரறிஞர் டெயிலர் (Tylor), மலினோவ்ஸ்கி (Mainowaski) போன்றோர் கூறுகின்றனர். நம்பிக்கைகள் மரபு ரீதியாக பின்பற்றப்பட்டு வருகின்ற மட்டக்களப்பு சமூதாயம் ஒன்றில் தான் இந்தக் குடிமரபு முறை சந்ததி சந்ததியாக, தலைமுறை, தலைமுறையாக பேணப்பட்டு வருகின்றது. கிராமப்புற வழக்காற்றியல் மரபுகள். மக்களின் வாழ்க்கை வழியில் பல தலைமுறைகளாக தொடர்வன, இங்குள்ள சாதிஅமைப்புக்கள் ஒவ்வொன் றுக்குள்ளும் உள்ள ஓர் உபபிரிவுதான் குடிமரபு முறையாகும். ஒரு தாய் குழந்தையைப் பெற்றெடுப்பதன்மூலம் இக்குடிமரபு தொடர்ச்சியை ஏற்படுத்திக் கொள்கின்றார்கள். அதாவது இக்குடிமரபு முறையானது 5 Tu'i 6 ở Flypg5 Tuu (Matrilinial Society) SÐ6OLD' LuTaH5(86) பேணப்படுகின்றது. ஒரு தாயின் பிள்ளைகள் அனைவரும் தாயின் குடியாகவே கொள்ளப்படுவர். ஆனால் தகப்பனின் குடிமரபுமுறை தன் குழந்தைக்குப் பதிலாக அவரின் சகோதரியின் பிள்ளைகள் ஊடாகவே பேணப்படுகின்றது. ஒருவரது குடிமரபு அவரது தாய் வழியிலே தீர்மானிக் கப்படும். சமூக அங்கத்தினர் அனைவரும் ஏதாவது ஒரு குடியைச் சேர்ந்தவராக இருப்பர். உதாரணமாக, ஒரு தாய் பெத்தாக்கிழவி குடும்பமாக இருந்தால் பிள்ளைகள் அனைவரும் பெத்தாக்கிழவி குடும்ப மாகவே காணப்படுவர். ஆனால் அந்தக் குடும்பத் தலைவரான தந்தை

Page 23
பேனாட்சி வம்சமாகவோ அல்லது வேறு ஒரு குடியைச் சேர்ந்தவராகவோ
காணப்படுவார்.
汽、
г.
தாய்வழிமரபு
اة له. لم
A.
A
L-ை
N,
گ
ങ്ങ
முழுவதும் மையிடப்பட்ட பெண் உறவினர்கள் வழியே மரபு தொடர்பதைக் காணலாம் (V ). முழுவதும் மையிடப்பட்ட ஆண் உறவினர்களும் தாய் மரபைச் சேர்ந்தவர்களே. ஆனால் இவர்களின் மக்கள் இம் மரபைசேர்ந்தவர்களாக கருதப்பட மாட்டார்கள்.
திருமணச்சடங்கு, பூப்புநீராட்டுச் &LsÉG. மரணச்சடங்கு முதலானவற்றை எடுத்து நோக்கும்போது இதனை அறிந்து கொள்ள முடிகின்றது. கோயில் நிர்வாகத்திலும், கிராம நிர்வாகத்திலும் சமயச் சடங்குகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதையும், சில குடிகளுக்கென்று தனித்தனி கோயில்கள் அமைந்து இருப்பதையும் காணமுடிகிறது. ஒரே சாதியில் காணப்படும் குடிகளுக்கிடையிலும் அதிகார வேறுபாடும், அந்தஸ்து வேறுபாடும் ஆரம்பகாலம் தொடக்கம் இருந்து வந்ததை அறிய முடிகின்றது. இந்த குடிமரபு பண்பாடு என்பது மக்களால் ஆக்கப் பெற்ற கருவி. அந்த ஊடகத்தைக் கொண்டே மக்கள் தங்கள் உறவுகளினூடாக தமது வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்கின்றனர்.

ஒரு குடிமரபைச் சேர்ந்தவர் அந்த குடிமரபிற்குள் திருமணம் செய்ய முடியாது. ஏனெனில் ஒரே குடிமரபுமுறைக்குள் உள்ளோர் அவர் தம் இரத்தவழி உறவுடையவர்களாக காணப்படுவதனாலாகும். இரத்த உறவு (Consanguinity) வழியுடையோர் அனைவரும் ஒரு மூதாதையர் வழிவருவோர் என்பதால் அவர்களுக்குள் மணவுறவு கொள்வது விலக்காக (Taboo) உள்ளது. இந்த ஒரு குடிமரபுக்குள் உள்ளோர்கள் சகோதர சகோதரியாகவும் மாமன் மருமக்களாகவும் உறவுமுறை இருப்பதாலும் திருமணம் செய்வதில்லை. திருமணம் செய்பவர்கள் தமது குடியைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்வதில்லை. மச்சான் - மச்சாள் உறவுமுறை உள்ளதாக இருப்பவர்கள் திருமணம் செய்வார்கள். இங்கு சமூதாயம் ஏற்றுக் கொள்ளாது, தடை செய்துள்ள உறவுகளுக்கிடையே (ஒரே குடிமரபுக்கள்) பாலுறவு நிகழ்ந்தால் அது தகாப்புணர்ச்சி (Incest) எனப்படும். தகாப்புணர்ச்சி உறவுகள் எவை எவை என்பது குறித்து ஒவ்வொரு பண்பாடும் தனித்தனியான வரையறையை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இதனால் அந்தந்த குடிமரபுக்குள் திருமணம் செய்கின்ற அகமணம் (Endogamy) முறை இங்கு காணப்படுவது குறைவாகும். ஒரு குடிமரபினர் வேறு குடிமரபுக்குள் திருமணம் செய்கின்ற புறக்குழுமண (Exogamy) முறையை இங்கு பின்பற்றுதலையும் சுட்டிக்காட்டலாம். இந்தக் குடிகளின் வம்சாவழிகளையும் வழக்கங்களையும் விபரிக்கும் பாடல்கள் திருப்படை பத்ததியில் உள்ளன.
முற்காலத்தில் மட்டக்களப்பு சொத்து நிலைகளும் சமூக வழமைகளும் தாய் வழி உரிமை முறையினை அடிப்படையாகக் கொண்டு இருந்தன. அத்தகைய சமுதாயத்தில் நிலங்கள், சொத்துக்கள் முதலியவை பெண்ணின் உடமைகளாகவே கருதப்பட்டன. அவருடைய ஆண் சகோதரர்கள் அவற்றைப் பரிபாலனம் செய்வது முறைமை. சந்ததி வழிகள் தாய் வழி வயிற்றுவாராகும். இத்தகைய சமூக வழமைகளின் அடிப்படையிலே இக்குடி அமைப்பு மரபு முறையானது இங்கு தொடர்கிறது எனலாம் இக்குடிகள் ஒவ்வொன்றுக்குள்ளும் உபபிரிவுகள் காணப் படுகின்றன. இவ் உபபிரிவை வகுத்துவார் என்று அழைப்பர். இதை

Page 24
வறுகை, தத்தியார், கத்தறையார் போன்ற பெயர்களாலும் அழைக்க்கின்றனர். இந்த வயிற்றுவார் என்பதே பரம்பரை, வம்சம், வகையற போன்ற சொற்களாலும் வேறு தமிழ் சமுதாயங்களிலும் அழைக்கப்படுகின்றது. தமிழ் நாட்டு மானிடவியல் அறிஞர்கள் இதை கால் வழி எனவும் அழைக்கின்றனர். இது நன்றாக நினைவுபடுத்திப் பார்க்கக் கூடிய மூதாதையர்வழி தொடர்புபடுத்திக் கூறும் உறவுக் குழுவைக் குறிக்கும். இவ் வயிற்றுவாரில் உள்ளோர் அவர்களில் மூத்த மூதாதை யரையும், அவருக்கு அடுத்த வந்த மூதாதையர்களையும் தெளிவாகச் சுட்டிக்காட்டுவர். ஒரு வயிற்றுவாரைச் சேர்ந்த அனைவரும் ஒரு மூதாதையர் வழி தோன்றியவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் தம் வயிற்றுவாரைச் சேர்ந்தோரை மணந்து கொள்ள இயலாது. இதனால் வயிற்றுவார் என்பது ஒரு புறமண குழுவை சேர்ந்தவர்கள் எனக்கூறமுடியும். ஒரு தாய் வழியைச் சுற்றி விருத்தியான அனைத்துக் குடும்பங்களையும், இந்தத் தாயின் வயிற்றுவார் என்று அழைப்பர். அதாவது ஒரு தாயை அடியாகக்கொண்ட பரம்பரையினர் அன்ைவரும் அந்தத் தாயின் உறவு அனைவரையும் வயிற்றுவார் என்று அழைப்பர்.
குழுக்கள் அல்லது கூட்டம் (Bands and 6 oups)
arrisser (Caste)
குலம் (Cans) கோத்திரம் ゴ Sla
வயிற்றுவார்
என்ற பிரிவுகளின் அடிப்படையில் தான் இங்குள்ள சமூக கட்டமைப்பு காணப்படுகின்றது. இவ் வயிற்றுவார் என்பதனை ஒரு இறுக்கமான கூட்டுக் குடும்பத்துக்கு ஒப்பானதாக கருத முடியும். கிராம மக்களிடையே "அவன் நம்மட வகுத்துவார்", "அவர் அவியட வயிற்றுவார்" என உறவுத் தன்மை வடிவம் பெறுகிறது.

தொடக்கத்தில் மக்கள் இடம் விட்டு இடம் திரிந்த காலத்தில் அவர்களின் மூதாதையாகளின் வழிவழியாக வந்த 6) தலைமுறையினரை அடையாளம் காண முடியாதநிலை இருந்தது.
அதனால் அவர்கள் ஒரு தொன்மை மூதாதையரிடம் இருந்து (Mythical
Ancestor) தோன்றியதாக எண்ணிக் கொண்டனர். நாள்தோறும் சுற்றித் திரிந்த நிலைமாறி மக்கள், பின்னர் ஓரிடத்தில் நிலையாக வாழ முற்பட்டதால் காலப்போக்கில் அவர்கள் அந்த முதாதையரின் வழிவந்தவர்கள் என்பதை தெளிவாக இனம் கண்டு கொண்டனர். உண்மை மூதாதையரை (Real Ancestor) அடையாளம் காண முடிந்ததால் மக்களிடையே தொன்மையியல் சாராத மறையான குடிவழிமுறை தோன்றியது. இவ்வாறு ஒவ்வொரு குழுவினரும் முறைப்படியான குடிவழி தோற்றத்தை உணர முற்பட்ட பின் காலப்போக்கில் மூதாதையரோடு யார் யார் எல்லாம் நெருக்கமான உறவுப்பிணைப்பைக்கொண்டுள்ளார் என்றும் மற்றவர்கள் எந்தஅளவு விலகிநிற்கின்றனர் என்றும் எண்ணத் தொடங்கினர். இதன் விளைவாக உறவுநிலையில் தரப்பிரிப்புக்கள் ஏற்பட்டன. இவ்வாறு தரப்பிரிப்புக்கள் ஏற்பட்டு பின்பு அதற்குள் தனித்தனி குடி மரபு முறைகள் உருவாகின எனலாம்.
a FITäGISIDGUTEGGI :
Radcliffe, Brown (1965) - Structure and Function in Primitive
Society, Newyork: Freepress
நடராசா, எவ், எக்ஸ்.ஸி (1998) மட்டக்களப்பு மான்மியம், மட்டக்களப்பு
கலாசார பேரவை.
M பதில் யாராவதுஇதலைக் 53றித்தால் நான்தீகு இறக்கு

Page 25
இஸ்ரேலிய கிபுட்ஸ் The Israeli Kibbutz
ஜோன் பெட்போட் ( மொழி பெயர்ப்பு - அ.எ. றிச்சேட்)
'கிபுட்ஸ்' என்பது சமதர்ம அடிப்படையில் அமைந்த தன்னாட்சியுள்ள ஒரு குழுமமாகும். இதில் சகல உற்பத்திக் காரணிகளும் கூட்டாக குழுமத்துக்கே சொந்தமாகும். இது, சொந்தமானவை, உற்பத்தி செய்யப்பட்டவை, ஈட்டப்பட்டவை ஆகிய பொருள் அனைத்தும் சகல அங்கத்தவர்களுக்கிடையிலும் பகிரப்படும் ஒரு சமுதாயமாகும். இது ஒரு குறைபாடற்ற வாழ்க்கை முறையல்ல. ஆனால் நட்பு, சமத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த ஒரு வாழ்க்கை நடத்துவதற்கு செய்யப்படும் நேர்மையான முயற்சியாகும்.
1909இல் ஆரம்பிக்கப்பட்ட ‘கிபுட்ஸ் இயக்கமானது, பொதுவான நம்பிக்கைகளும், அபிலாஷைகளும் கொண்ட ஒரு மக்கள் குழுவினர்க்கு தமக்கென ஒரு வாழ்க்கை முறையை அமைத்து, விவசாயத்தின் அடிப்படையிலமைந்த ஒரு பொருளாதாரத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்த ஒரு வாய்ப்பை அளித்தது. அநேக கிபுட்ஸ்கள் ஆற்றலோடு பல்வகைப்பட்ட இலாபகரமான கைத்தொழில் உற்பத்திகளில் ஈடுபட்டு, காலணிமுதல் மிக நுட்பமான மின்சார சாதனங்கள் வரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை நடத்தி வருகின்றன. இப்பொருட்கள் உள்ளுர்ப்பாவனைக்கு பயன்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
ஆரம்ப காலத்தில் கிபுட்ஸ் பொதுச்சொத்தாக இருந்தது. குளியலறை கள் அனைவராலும் பயன்படுத்தப்பட்டது. ஆடை'நிலையத்தில் அனைத்து ஆடைகளும் உள்ளாடை உட்பட்ட அனைவர்க்கும் பொதுவானவை. கிபுட்ஸ் வாசி ஒரு கடிகாரம் தன்னும் வைத்திருக்க வில்லை. தனதென்று சொல்லிக் கொள்ளக்கூடிய நேரமே அவனுக்கு இல்லை. கிபுட்ஸில் ஒருவர் தனது சொந்தப் பணியையோ, விருப்பத்தையோ வெளிப்படுத்த

இடமிருக்கவில்லை. எல்லா விதத்திலும், எல்லா நேரத்திலும் அனைத்தும் கூட்டாண்மைக்கு உரியதாகும். கூட்டாண்மை அனைவருக்கும் உரியதாகவும் இருந்தன. இன்று பொருளாதார முன்னேற்றமும், அடிப்படை சமதர்மமும் சேர்ந்து ஒரு புதிய வாழ்க்கை முறையை அமைத்துள்ளன. பண்பாட்டு, பொருளாதார, கருத்தியல்சார் அம்சங்களில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வருகிறது. அப்படியாயின் இன்று ஒரு கிபுட்ஸ் வாசி (Kubbutznik) எவ்வாறு வாழ்கின்றான்.
வேலை
ஒரு கிபுட்ஸ் வாசிக்கு கிபுட்ஸில் எந்த வேலையும் கொடுக்கப்படலாம். சகல தொழில்களும் சமமாகக் கருதப்படுவதால் ஒருவரின் அந்தஸ்து இதனால் பாதிக்கப்படுவதில்லை. கிபுட்ஸ்சுக்கு வெளியே ஒருவர் தொழில் புரிய விரும்பினால் அவ்வாறு செய்யலாம். ஆனால் அவர் தமது வருவாயை கிபுட்ஸ்சுக்கே கொடுக்கவேண்டும்.
தனியன்களுக்கான திட்டம்
"ஒவ்வொருவருக்கும் தேவைக்கேற்றபடி" என்ற கொள்கைக்கேற்ப dL' 6m56ir Gaol)6Lb uigi LIGef airpg5. ("To each according to his needs') சேவைகள், இருப்பிடம், உடை, உணவு, கல்வி, சுகாதாரம், பராமரிப்பு ஆகிய வடிவங்களில் இத்தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. பாவனைப் பொருட்களுக்காகவும், ஆடம்பரப் பொருட்களுக் காகவும், கிபுட்ஸ் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் ஒரு சிறு தொகையை அளிக்கலாம்.
இருப்பிடமும்,பிள்ளைகளும்
அங்கத்தவர்கள் அறைகள், ஒரு சிறிய சமையலறை, குளியலறை, கழிவறை கொண்ட ஒற்றை அல்லது இரட்டைக் குடியிருப்புக்களில் வசிக்கின்றார்கள் பெரும்பாலான கிபுட்ஸ்களில் பிள்ளைகள் பெற்றேருடன் வாழாமல் விசேட சிறுவர் இல்லங்களில் வாழ்க்கின்றனர். பிள்ளைகள்
«eقك

Page 26
ஒன்றாக வாழ்ந்து, உணவுண்டு, படித்து வருவதனால் இளவயதிலேயே சமுதாய வாழ்க்கை இயல்பாகிறது. பகலில் தாய்மார் பிள்ளைகளை அடிக்கடி சந்திக்கின்றனர். வேலை முடிந்தபின் பெற்றோரும் பிள்ளைகளும் சில மணிநேரம் ஒன்றாகச் செலவிடுகின்றனர்.
so gol
கிபுட்ஸிலுள்ள அனைத்து உடைகளும் F6)6O)6 சீரமைப்பு பகுதியினால் கையாளப்படுகின்றன. சலவைக்கு போடப்படும் உடைகள் ஒரு வாரத்தில் கழுவி, அழுத்தி, சீரமைத்துக் திருப்பிக் கொடுக்கப் படுகின்றன. அதே கிபுட்ஸ்களில் ஒவ்வொரு அங்கத்தவருக்கும் சொந்தமான உடைகளின் பட்டியல் ஒன்று பேணப்படுகின்றது. ઈી60 ஆடைகள் பழுதுபட்டதும் உடனடியாகப் பதிலீடு செய்யப்படுகின்றன.
கிபுட்ஸ்கள் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு பெரும்பாலும் இயந்திரமயப்படுத் தப்பட்டிருந்தாலும் பொதுவாக அவ்விடங்களில் வேலையாட்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் இஸ்ரயேலுக்கு வரும் இளைஞர்கள் கிபுட்ஸின் அங்கத்தவர்களைப் போலவே கிபுட்ஸில் வாழ்ந்து வேலை செய்யும் ஒரு முறை பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. இந்த இளைஞர்கள் "தொண்டர்கள்" எனப்படுகின்றனர்.
polib Nobbs Jack, Fielding Roger, Hine Bob, Flemming Margaret
(1989)- Sociology (Third Edition) Macmillan Education Ltd,
 

சமயத்தின் சமூகவியல்
சமய அனுபவங்கள் Religious Experiences
S-SUTTG3ggsmössorsoorsir B.A (Hons)
மானுடத்தின் படிமலர்வில் மதம் இணையாத வரலாறே இல்லை என்பது பொதுவான ஒரு உண்மை. ஆதி மனிதனிடத்தே உள்ளுர இருந்த சிந்தனை ஆற்றல், மனித குலத்திடம் காலங்காலமாக நிலவிவந்த மரபுவழக்கங்கள், ஆதிகாலத்து மக்களிடம் நிலவிய மாந்திரீக கலைகள், இவை மனித வாழ்வின் பரிணாமத்தோடு சமயம் என்ற ஒரு சர்வவியாபக நிறுவனத்தின் தோற்றத்திற்கு காரணமாயின என்பது சமயம் பற்றிய ஆராய்பவர்களின் கருத்து.
மக்களது வழிபாடுகள் அனுசாரங்கள் கோட்பாடுகள் என்பவற்றை கொண்ட தொரு புனிதமான சடங்குகளின் தொகுப்பே சமயம் என்பது ஒரு மேலெழுந்த வாரியான விளக்கம். பெரும்பாலான சமயங்கள் "மெய்ப்பிக்காமலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பிக்கைகளை அடிப்படையாக" கொண்டவையாகும். சமயமானது "விலைமதிப்பிற்கரிய உயர்வையும் தவிர்க்க முடியாத கட்டுப்பாட்டு உணர்ச்சியையும் மனிதனில் உண்டாக்குவதற்கு காரணமாயிருந்து அவனுக்கு புனிததன்மையை கொடுக்கும் அமைப்பு" என்று குறிப்பிடப் படுவதை காணலாம்.
உலகத்தின் சமயங்களைப்பற்றி ஆராய்ந்த சமூகவியலாளர்கள், மானிடவியலாளர்கள் சமயங்களை பலவாறு தம்நோக்கில் விளக்கியுள்ளனர். பொதுவாக நாட்டார் சமயங்கள், உலகுதழுவிய சமயங்கள், இவை இரண்டுக்கும் இடையிலான சமயங்கள் என்று சமயங்கள் வகுக்கப்படுகின்றன.
எம்.என். பூரீநிவாசன் என்பவரின் கருத்துப்படி இந்தியாவில் நிலவிய FLDurslab6061T 36 if 936) gib5ugsbg58FLDuib (All Indian Hinduism), LDT85T600Tb 3Ts 9bgl 8LDub

Page 27
Hinduism), sig (858Ffgólu JT60T gbgb3FLDuub (Regional Hinduism), od 6ïTbi இந்துசமயம் (Local Hinduism) என்று வகுத்துக் காட்டுகின்றார். இன்னொரு அறிஞரான Redfield என்பவர் சமயங்களை பெரும் பண்பாட்டுக்குரியவை (Great Tradition) figu60iTUIT' (6565sfu506) (Little Tradition) 6T6örg வகுத்துக் காட்டுகின்றார். சமூகமானுடவியலாளர்களின் இத்தகைய வகைப்பாடுகள் ஒரு புறமிருக்க சமயத்தினுள்ளே "மதத்தல பிரிவுகள்" (Ecclesiaes), "LD56 (55a56ir" (Denominations), "LD5J fig36ir" (Sects), "மத அனுசரணை முறைகள் (Cult) என்ற சில சமய அக நிறுவனங்களை 6ig55g) Young, Dundes, J.MittonYinger, Jack Nusanpoter, Irvin Doress, Richardson போன்ற அறிஞர்கள் விளக்கி காட்டுகின்றனர்.
இவ்வாறு சமயங்கள் வகுத்து நோக்கப்படுகின்ற போதிலும் சமயங்கள் யாவற்றினுள்ளும் இழையோடி நிற்கும் சில பரிமாணங்கள் உள்ளன. சமய publis60556i (Religious Beliefs), FLDuáFaLig556i (Religious Rituals), FLDu (assur(656 (Religions Doctrines), FLDu
Sig)|Lj6)[Élæ6i (Religious Experiences) SYáélu LufluDT600IsÉlæ6úl6ö முழுமொத்தமாகவே சமயம் என்ற அறசமுதாயம் உருவாக்கம் பெறு கின்றது. சடங்குகள், சமயக் கே. பாடுகள், நம்பிக்கைகள் என்பன தொடர்பாக ஒரு சமயம் இன்னொரு சமயத்திலிருந்து வேறுபடுத்தப் படுகின்றது. எனினும், சமய அனுபவங்கள் என்பவை எந்தச் சமய பகுதிகளுக்கும் பொதுவானவையாகவே உள்ளன. ஏனெனில் சமயம் தரும் அனுபவங்கள் யாவும் மனிதனது சமூக வாழ்வுக்கே.
சமூக மனிதனுக்கு சமயம் தரும் அனுபவங்களை பகுப்பாய்வு செய்யும் Nadel என்ற அறிஞர் புரின் வருமாறு நான்கு உறுதிப்பயன்பாடுகளைக் கூறுகின்றார்.
1. பிரபஞ்சம் சார்ந்தவை 2. அறக் கோட்பாடுகள் சார்ந்தவை 3. சமூகக் கட்டுக்கோப்புகள் சார்ந்தவை 4. தனியன் பெறும் அனுபவம்
முதலில் எந்த ஒரு சமய அனுபவத்திலும் பிரபஞ்சம் தொடர்பான ஒரு பொதுமைப்பாடான கோட்பாடு உள்ளது. அது "கடவுளர்களின்

வரிசைநிலை, சொர்க்கம் நரகம்பற்றிய ஆய்வு, ஜிவமரணம் என்பன தொடர்பாக விளக்கம் தரும் என்று Dundes என்பவர் கூறுகிறார். இதுவே பிரபஞ்சம் சார்ந்தது (Cosmological) எனப்படுகின்றது.
இரண்டாவதாக, எந்த ஒரு சமயமும் சமூக மனிதனிடம் ஒரு ஒழுக்க வாழ்வினை ஏற்படுத்தி வைக்கின்றது. அனுட்டானங்கள், விதிமுறைகள் என்பவற்றை வகுத்துக் கூறும் சமயங்கள் ஒழுக்கவியல் வாழ்விற்கு வளமூட்டுகின்றன.
அடுத்ததாக, சமூகத்திலுள்ள குடும்பம், அரசு கல்வி, போன்ற பல்வேறுபட்ட நிறுவனங்களில் ஒன்றாக சமயமும் விளங்குகின்றது. இதனால் சமூகத்தில் சில கட்டுக்கோப்புகள் உருவாக்குவதற்கு சமயமும் ஒரு பிரதான காரணமாகி விடுகின்றது.
இறுதியாக, ஒரு தனிநபரின் சமூகமயமாக்கற் செயன்முறையில் dLDugbgld5(g) ஒரு தவிர்க்கமுடியாத பங்கு உண்டு. Harald Schielderup 6T6ÖTU6Irfl6öt ab(bögjÜLJọ Father religion, Mother religion, Self religion என்பன சிறுபிள்ளை பருவ விருத்திக்கு அவசியம் என்பார்.
சமயம் தரும் அனுபவங்களை சமூகவியல் கோட்பாடுகளின் அடியாக விளங்கிக் கொள்வது சமயத்தின் சமூகவியல் பார்வைக்குச் சாலப்பொருத்தமாகும். முதலிலே படிமலர்ச்சிக்கோட்பாட்டாளர்களின் நோக்கில் சமயம் தரும் அனுபவங்களை நோக்கலாம். இவர்கள் மன எழுச்சி சார்ந்த திருப்தியினை கொடுப்பதே சமயம் என கருதினர். Tylor, Muler போன்றவர்களின் கருத்துப்படி சமயம் சம்பந்தமான சடங்குகள், நம்பிக்கைகள் போன்றன யாவும் மனிதனது பய உணர்வு, குணமாக்கல் (Healings), உளத்திருப்தி என்பவற்றுக்கு துணை செய்வனவாகும்.
குறியீட்டு இடைவினை கோட்பாட்டாளர் (Symbolic Interactionist) கூறும் கருத்துக்கள் இன்னொரு வகையின. அதாவது இவர்கள் சமய சம்பந்தமான எதுவும் ஒரு தனியனின் இனங்காட்டலுக்கும், நேரடியான இடைவினைக்கும் அவசியமானவை என்று கூறுவர். உதாரணமாக
பி,

Page 28
நெற்றியிலே நாமம் இட்டுக் கொள்வது வைணவர்களின் குறியிட்ாவதையும் வழிபாட்டுத் தலத்திலே ஒன்று கூடி உறவாடுவதையும் கூறலாம். அத்தோடு சமூகத்தின் ஏனைய நிறுவனங்களினுள்ளே (குடும்பம், கல்விச்சாலை) தனது விழுமியங்களை உள்னுழைத்துக் கொண்டு ஊடாடுகின்ற நிறுவன LDIT856b சமயம் விளங்குகின்றது என விளக்குகின்றனர். உதாரணமாக பாடசாலைகளில் நடைபெறும் இறைவழிபாட்டு நிகழ்வுகளை கூறலாம்.
தொழிற்பாட்டுவாதிகளின் அணுகுமுறையில் Emile Durkheim, Talcott Parsons, போன்றவர்களின் கருத்துக்களின் பிரகாரம் நோக்கும் போது இவர்கள் தனிமனித தேவையினை அன்றி சமுதாயம் பற்றிய தேவையினையே வலியுறுத்தினர். இவர்கள் விழுமியஉணர்வு, ஒருங்கி ഞFഖ பகுதிகளிடையேயான ஊடாட்டம், மீள் உறுதிப்பாடு எனும் அனுபவங்களை கருத்தில் எடுத்தே சமய அனுபவங்களை இனங்காட்ட விளைந்துள்ளனர். தொழிற்பாட்டு வாதிகள் சமயந் தரும் அனுபவங்களை பின்வருமாறு கோடிட்டுக் காட்டுகின்றனர்.
0 மன எழுச்சி சார் இதமான நிலை (Emotionalcomfort) O depas -0.5 UTG (Social solidarity) 0 சமூக கட்டுப்பாடு (Socialcontrol) O depas S6036 (Social adaptation) 0 நாளாந்த வாழ்விற்கு வழிகாட்டுதல்
(Guideline foreveryday life) 0 அரசுக்கு உறுதுணையாதல்
(Supportforthe Government) O depas LDribpub (Social Change)
சமூகத்தில் வாழும் மனிதனிடத்தே அவனது சமூக ஊடாட்டங்களின் வழிவரும் பதட்டநிலைகள், மனவிறைப்பு நிலைகள், ஏக்கங்கள் என்பவற்றிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் சமயத்திற்குள் உண்டு, உதாரணமாக தியானம், விரதம், நூல்கட்டுதல், திருநீறு போடுதல், நேர்த்தி கழித்தல் போன்றன இத்தகையதொரு மனனழுச்சிசார் இதமான நிலையினை கொடுக்கின்றன.

Emile Durkheim இன் கருத்துக்களின் பிரகாரம் நோக்கும் போது,
கூட்டுணர்வு (Collective consiousness), கூட்டுப்பிரதிநிதித்துவம் (Collective representation) போன்றவற்றுக்கு சமயம் துணை செய்
கின்றது. சமுதாயத்தின் ஒருங்கிசைவான இயக்கத்துக்கும் உறுதிப் பாட்டிற்கும் சமயம் என்ற நிறுவனத்தின் பங்கும் அவசியமாக உள்ளது.
சமயம் சமூகமனிதனுக்கு சிலவகை நியமங்கள், விழுமியங்கள் என்பவற்றை போதித்து வருகின்றது. அதன் மூலம் சமூக கட்டுப்பாடு வளர்வதற்கு சமயம் காரணமாகின்றது. இதை செய்: இன்னதை செய்யாதே, இன்னது செய்தால் இன்னது விளையும் என்று சதாசமயம் போதிப்பதன் விளைவு அதுவேயாகும். இதன் மூலம் சமயம் நாளாந்த மனித வாழ்வுக்கு வழிகாட்டும் நிறுவனமாகவும் அமைகின்றது.
சமயம் சமூகத்தினை தேக்க நிலையில் வைத்திருக்கும் நிறுவனம் என ஒருபுறம் சிலர் விமர்சித்து வந்த போதிலும் வரலாற்றின் சில நிலைகளில் அதன் வழி சில மறுமலர்ச்சிகளும் உருவாகியுள்ளன. உதாரணமாக புரட்டஸ்தாந்து எழுச்சி இன் வழி உதயமான முதலாளித்துவம் பற்றிய Weber இன் சிந்தனைகளையும், இந்திய மரபிலே தோன்றிய வீரசைவ மரபின் சிந்தனைகளையும் குறிப்பிடலாம். இதன் வழி சமூகமாற்றத்தில் சமயத்தின் பங்கினையும் விளங்கிக் கொள்ளலாம்.
தொழிற்பாட்டுவாதிகளின் இத்தகைய நேரான பார்வைக்கு முற்றிலும் மாறான வகையிலே Karl Marx, Engels போன்ற முரண்பாட்டுக் கோட்பாட்டாளர்களின் கருத்துகள் அமைந்தன. Religion is an illusion என்று கூறும் மாக்ஸ், சமயத்தின் தோற்றம் பற்றிய அடிப்படை கருத்தாக்கமாக Festishism இணை கருதுகின்றார். Festishism என்பது முதலாளி, தொழிலாளி வர்க்கப் பரிணாமத்தை நேர் ஒத்ததே என்றார். அதாவது "புவர்பாக்" என்பவர் “தனக்குள் ஏலவே சுயமாக உள்ளதை மறந்து அவற்றை வெளியில்தேட முற்பட்டதன் (Selfprojection) விளைவே கடவுள் என்று கூறும் கருத்தை ஏற்று, மாக்ஸ் கடவுளிலிருந்து மனிதன் அந்நியப்படுவதை சமயம் ஊக்குவிப்பதால், தான் காணும் கம்யூனிச சமுதாயத்தில் சமயம் வாழ்விழந்து போகும் என்று விளக்குகின்றார். முரண்பாட்டு கோட்பாட்டாளரின் கருத்துக்களின் பிரகாரம் சமயம் என்பது

Page 29
சமூக சமமின்மையின் பிரதிபலிப்பாகவும், சமூக சமமின்மையின் சட்ட பூர்வமான நியாயப்படுத்தலாகவும் கொள்ளப்படுகின்றது.
இவற்றின்வழி தொழிற்பாட்டுவாதிகளின் எதிர்பார்ப்புக்கு எதிரான சில எதிர்தொழிற்பாடுகளும் (Dyfunctions) சமுதாயத்தில் சமயம் தரும் அனுபவமாகிவிடுகின்றன. அதாவது யுத்தங்கள், சமமின்மை போன்ற வற்றிற்கும் சமயம் காரணமாகிவிடுகின்றது. உதாரணமாக சமயத்தின் கூட்டாளியாக சாதியம் (Caste) இந்து சமுதாயத்தில் உள்ளது. அவ்வாறே சமய அடிப்படை வாதத்தின் விளைவுகளாக இந்து - இஸ்லாம், இஸ்லாம்கிறிஸ்தவம் போன்றவற்றுக்கு இடையிலான யுத்தங்கள் உருவாகியுள்ளன. சமய சிந்தனைகள் சில சமூகசமமின்மை, பால்நிலை வேறுபாடு போன்றவற்றுக்கு துாபமிட்டே வருகின்றன.
இவற்றின் வழி மானுட சமுதாயத்தில் சமயம் என்பது நேரானதும் (Positive), எதிரானதுமான (Negative) அனுபவங்களை தந்தபோதிலும் இன்று உலகம் முழுவதையும் ஒன்று திரட்டும் ஒரு நிறுவனமாக அன்றி ஒரு புறம் அடிப்படைவாதம் (Fundementalism), மதப்பன்மைவாதம் (Religious Pluralism), up60LD6ITTg5b (Conservertism) என்பவற்றுக்கும் மறுபுறம் பகுத்தறிவுவாதம் (Rationalism), தனித்துவவாதம் (Individualism), மதச்சார்பின்மை (Secularism) போன்றவற்றுக்கும் இடையிலான போட்டி நிலைகளில் தடுமாறி நிலைமாறும் நிறுவனமாக இருப்பதை காணலாம். சுருங்க கூறுவதாயின் சமயத்தின் சமூகவியல் (Sociology of Religion) 6T6irug FLDujögsir egdu6) (Politics of Religion) என்பதோடு கைகோர்த்து செல்லுமொன்றாகவே இன்று பெரிதும் உணரப்படும்.
உசாத்துணைகள்
Wulff, David.M. (1991) - Psychology of Religion, N.Y.John Wiley and
Sons
Henslin, James.M (1995) - Sociology A Down to Earth Approach, Allyn and Bacon.

மதச்சார்பின்மை Secularization
SITTJIES Ursprrrggsir B.A (Hons)
சமூக நிறுவனங்களில் ஒன்றாகக் கருதப்படும் மதம்பற்றி சமூகவியல் அக்கறை கொண்டுள்ளது. இதனால் சமயத்தின் சமூகவியல்
(Sociology of Religion) LD5lb usibaul 3560Tg5) sugges6061T விரிவுபடுத்தியுள்ளது. இன்று மதம் பற்றிய சமூகவியலின் பார்வை இரு வேறு எண்ணக்கருக்களின் மீது மையங்கொண்டு முனைப்புப் பெறுகின்றது.
1. LD5 sequgOL6)ingbib (Religious fundamentalism)
2. LD5öF5FITffîlsöï60bLD (Secularization)
இவ்விரு எண்ணக்கருக்களும் இரு துருவங்களாக ஒன்றை மறுதலித்து மற்றயது மேற்கிளம்ப முனைந்த வண்ணம் உள்ளன. இருந்தாலும் இன்று உலகின் குரலாக மேலோங்கி ஒலிப்பது மதச்சார்பின்மையே. மூன்றாம் உலக நாடுகளின் சமூகப் புலங்களில் அதிகமாகத் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றுக்கிடையிலான முரண்பாட்டிற்கு மூலமாக இன்று இனங்காணப்பட்ட அம்சம் மத அடிப்படைவாதம். இதனைச் சமயப் பிடிவாதம் என்று சுருக்கமாக விளக்கலாம் மதத்தின் சில கூறுகளை ஆவேசமாக மிகைப்படுத்துகின்ற போக்கையே இவ் மத அடிப்படைவாதம் குறித்து நிற்கிறது. பழமை பேணும் பண்பு, மதசகிப்புத்தன்மை இல்லாமை, பிற்போக்குச் சிந்தனை, தீவிரப்போக்கு பலாத்கார வழிகளைக் கையாண்டு தமது கருத்துக்களை நிலை நிறுத்துதல் போன்ற பல அம்சங்கள் இவ் மத அடிப்படைவாதத்தில் இனம் கண்டு கொள்ளலாம்.
இத்தகைய தீவிரப் போக்கைக் கண்டித்து நவீன உலகின் அழிவுச் சக்தியாக மதம் உருவாகி விடாது தடுக்கும் முயற்சியின் விளைவாக முகிழ்த்த எண்ணக்கரு இன்று வன்மை பெற்று செயற்பட்டு வருவதை பல
«ΩΣ

Page 30
ஆய்வுகள் நிருபித்துள்ளன. பல சமூகவியல் அறிஞர்கள் இன்றும் இது பற்றிய ஆய்வுகளில் அக்கறை செலுத்தி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இவர்களின் கருத்துப்படி மதச்சார்பின்மை என்பது, ஏனைய சமூக நிறுவனங்களிடை மதத்திற்கான செல்வாக்கு படிப்படியாக குறைந்து செல்வதை விளக்குவது எனலாம்.
மனிதனின் மேம்பாட்டிற்கு அவனது உழைப்பு மட்டுமே மூலமாக இருக்குமே தவிர அங்கு மதத்திற்கு எந்த வேலையும் இல்லை என்று கிரேக்க தொல்சீர்பண்பாட்டாளர் கருதினர். மனிதாபிமானம் (Humani tarianism) என்ற பண்பே மனிதனால் வளர்க்கப்பட வேண்டும். இது அவனது தனித் தன்மை, திறமை, ஆற்றல், பகுத்தறிவு மனித உணர்வு என்பதை வளர்ப்பதாக இருக்கும். இதற்கு மதமோ கடவுளோ குறுக்கே நிற்க முடியாது என்று கூறுகிறது. ஆனால் ஆரம்ப கால ஐரோப்பா கி.பி 5ம் நூற்றாண்டளவில் மதச்சார்பின்மைக்கு மாறுபட்ட விளக்கம் தர முனைந்துள்ளது. கிறிஸ்தவ மதம் ஆட்சியில் வந்தபோது.
"இறைவனுக்கு கட்டுப்படுதலையும் அடங்கி இருத்தலையும் இறைவன் வரவேற்று தன் அருட்கொடைகளை மாந்தர்க்கு அளிக்கின்றான். இவ்வுலகம் மாயை, மறு உலகம் நிரந்தரமானது. எனவே அரசியலில் மன் ஈர்களின் கொள்கைகளும் மதச்சார்புடையனவாகவே அமைய வேண்டும்"
என்ற கருத்தை வலியுறுத்தி மதச்சார்புக்கு வழிவகுத்தது இக் கருத்துக்கு அன்று நிலவிய நிலப்பிரபுத்துவ முறை (Feudalism) பண்ணை முறை (Monorial System) என்பன துணை நின்றன. ஆனால் இவ் முறைக்கு எதிராக நிலங்களில் இருந்து வேளாண்மை மக்களின் விடுதலை உறுதிப்படவே அவ் மக்கள் கிராமங்களை விட்டு நகரங்களுக்கு குடியேற ஆரம்பித்தனர். இதனால் மதத்தின் பிடி தளர்ந்து சமயச்சார்பின்மை வளரத் தொடங்கியது.
கி.பி 16ம், 17ம் நூற்றாண்டுகளில் தோன்றிய வணிகப்புரட்சி, மதச்சார்பின்மை மேலும் வேரூன்றி மலர்ச்சி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தது. இதனைத் தொடர்ந்த அறிவொளிக்காலம் மக்கள் மத்தியில்
பி,

பகுத்தறிவுச் சிந்தனையை (Rationalism) வளர்த்தது. மனிதனின் உண்மையான கலக்கமற்ற சீரிய சிந்தனையிலும் ஆழமான பகுத்தறிவிலுமே மனிதனின் உயர்வு அடங்கியுள்ளது என்றும் பகுத்தறிவு வாதத்தில் கடவுட்கோட்பாட்டிற்கு இடமில்லை என்றும் வலியுறுத்தப்பட்டது. இது தவிர கி.பி 18ம், 19ம் நூற்றாண்டுகளில் பல்வேறு நாடுகளிடையே தோன்றி வெடித்த புரட்சிகளின் வெற்றி இறைவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை, அச்சம் முதலியன தளர்ச்சியுறக் காரணமாகியது.
இந் நிலை இன்றும் மேலைத் தேய சமூகங்களில் தொடர்ந்தவண்ணம் இருப்பதை பல சமூகவியலாளர்களின் ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன. பிரையன் வில்சன் (Bryan Wilson) என்ற அறிஞர் மேற்கொண்ட ஆய்வின் மூலம் மதச்சார்பின்மை என்பது 5FLOUL சிந்தனைகள் அனுசாரங்கள், சமய நிறுவனங்கள் ஆகியன சமூக முக்கியத்துவத்தினை இழப்பதேயாகும் என்று கூறுகின்றார் இவர் கருத்தைப் பரிசீலிப்பது போல ஜே.எம் மோகி (J.M.Mogey) என்பவர் தனது BITGOTéu Family and Neighbourhood - (1950) 6T6iTug56) "solub போதல்" (Church going) பற்றி அதிகம் கூறியுள்ளார். மதச்சார்பின்மைக்கான சில அணுகுமுறைகளினுடாக மேற்குலகச் சமூகப் புலங்களில் செய்யப்படட ஆய்வுகள் மேலும் இக்கருத்தினை வலியுறுத்தி நிற்கின்றன. அமைப்பு பெற்ற மதங்களில் இவ் அணுகுமுறைகள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டன. மேற்குலகச் சமூகப் புலங்களில் செய்யப்பட்ட ஆய்வுகள் மேலும் இக்கருத்தினை வலியுறுத்தி நிற்கின்றன.
a urálg5libgig56ö (Participation)
D தொடர்பற்ற நிலையும் வேற்றுமையாக்கமும்
(Disengagement and Differentiation)
LD5u6160LD6hingbib (Religious pluralism) அமைப்புப் பெற்ற மதங்களில் மக்களின் பங்கேற்பு எத்தகையதாக
இருக்கிறது, என்பது பற்றி ஆய்வுகளில் "பிராயன் வில்சன்” (Bryan Wilson) என்பவரின் ஆய்வு முக்கியமானது. இவரின் கருத்துப்படி அமைப்புப் பெற்ற
«ھوکے

Page 31
திருச்சபையின் செயற்பாடுகளில் மக்கள் பங்கேற்பதில் ஏற்பட்ட வீழ்ச்சி மனிதனின் எண்ணங்கள், செயல்கள் என்பவற்றின் மீது மதம் நேரடியாகச் செலுத்தி வந்த செல்வாக்கை அது இழந்து கொண்டிருக்கும் விதத்தையே காட்டுகிறது என்கிறார். இவரது முக்கிய நூல் சமகால சமயம் தொடர்பான நிலைமாற்றம் பற்றி மேலும் விரிவாக விளக்கி நிற்கிறது. பீற்றர் கிளஸ்னர் (Peter Glassner) என்பவர் தனது மதச்சார்பின்மையின் சமூகவியல் (Socilogy of Secularization, 1977) என்ற நூலில் மத நம்பிக்கை உள்ள ஒருவன் ஆலயம் செல்வான் என்றும் ஆலய செயற்பாடுகளில் பங்குகொள்வான் என்றும் பாரம்பரிய கருத்தை வலியுறுத்தியுள்ளார். இதனால் அமைப்புப்பெற்ற மதங்களின் செயற்பாடுகளில் மக்களின் பங்கேற்பு வீழ்ச்சியைக் கொண்டு மதநம்பிக்கை குறைந்து வருவதாக இவ் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். ஆனால் றொபேட் பெலர் (Robert N.Bellah) என்ற அறிஞர், அமைப்புப் பெற்ற மதங்களின் வீழ்ச்சிக்கு மதநம்பிக்கை ஈடுபாடுகள் என்பவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சியே காரணம் என்று கூற முடியாது என்கிறார்.
அதாவது மதக் குழுக்களின் போதனையில் இருந்து சுயமான கொள்கை விளக்கத்திற்கு வந்திருக்கிறார்களே தவிர மத நம்பிக்கை அல்லது ஈடுபாடு மக்களிடம் குறையவில்லை என்ற மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார். இவ்வாறு பங்கேற்பு தொடர்பாக விளக்கம் கொடுப்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் அமைப்புப் பெற்ற மதங்களின் செயற்பாடுகளில் மக்களின் பங்கேற்பு பெரும்பாலான ஐரோப்பிய நாட்டில் வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதில் கருத்து வேற்றுமை இல்லை.
"தொடர்பற்ற நிலை" (Disengagement) பற்றி நோக்கும்போது ஆரம்ப காலங்களில் குறிப்பாக மத்திய கால ஐரோப்பாவில் மதத்தினது செல்வாக்கு மேலோங்கிக் காணப்பட்டது. அன்ைத்து நிறுவனங்களும் திருச்சபையின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கிவந்தன. ஆனால் இன்றைய ஐரோப்பாவில் மதத்தைவிட உலகியல் கருத்துக்களே முக்கியம் பெற்றுக் காணப்படுகிறது. மதம் அல்லது திருச்சபை இன்றைய ஐரோப்பாவில் விலகியே இருக்கிறது. இதையே "டேவிட் மார்ட்டின்" (David Martin)
ھك

6T66Tu61st b60Tg5 'Sociology of English Religion' (1967) 6T6p BIT6 gub தொடர்பற்ற நிலை என்ற பதத்தின் ஊடாக கடந்தகால சமூகத்தில் இருந்த மதம் என்ற நிறுவனத்தின் செல்வாக்கு செல்வம் கட்டுப்பாடு என்பவற்றில் இருந்து சமூகம் அறுக்கப்படும் நிலையே தொடர்பற்ற நிலை என விளக்கினார்.
JGoGast' UTidgit 6) (Talcot Parsons) 6T6öru6lf "Religious perspective in Sociology and Social psychology' (1967) 6T6ir bro56) வேற்றுமையாக்கம் (Differentitation) பற்றிக் கூறுகிறார். இவர் சமூகத்தில் இருந்து மதத்தின் தொடர்பை ஒரேயடியாக துண்டிக்க முடியாது என்று கூறுகிறார். நிறுவனம் என்ற முறையில் திருச்சபை தன்வசம் இருந்த பல வினைமுறைகளை இழந்துவிட்டதே தவிர முற்று முழுதாக சமூக முறையில் இருந்து அதனை பிரித்துவிட முடியாது என்று கூறுகிறார்.
LD5 u660)LD6hist35lb Luigi (Religious Pluralism) (BIT disgub (UTg) மதச்சார்பின்மைக்கு இது எடுத்துக் காட்டாக இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர். குறிப்பாக "பீற்ற பேகர்", "லக்மான்" (Peter berger and Lackmann) (SuT6(3Brist (Socilogy of Religion and sociology of Knowledge' (1969) என்ற நூலில் சமயக் கிளைகள் உருவாகியமை மதத்தினது செல்வாக்குக் குறையக் காரணமாகியது எனக் கூறுகிறார்கள். அமைப்புப் பெற்ற மதம் மேலும் பல கூறுகளாக பிரிவதால் சமூகத்தின் மீது மதம் வைத்திருந்த பிடி தளரும். உதாரணமாக அமெரிக்காவில் "Krishna Consciousness Movement'. 'Christion world liberation front', (3LT6örg கிளைகள் அதிகரித்து வருகின்றமை
மேலே பார்த்த மூன்று அணுகுமுறைகளோடும்
* பொதுமைப்படுத்தல் 2. தனித்தன்மை அளித்தல் 3. உருமாற்றம் 4. பரிசுத் தன்மை கெடல்
பொதுமைப்படுத்தல் பற்றி நோக்கும் போது ரல்கொட் பார்சன் இன்கருத்து இங்கு முதன்மை பெறுகிறது. இவர் சமய விழுமியங்களே சமூக விழுமியங்களாக பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுகிறார்.
«ίδ»

Page 32
உதாரணமாக அமெரிக்க சமூகம் உயர்ந்த நெறிமுறைகளைக் கொண்ட சமூகமாகத் திகழ்வதற்கு கிறிஸ்தவ மதத்தின் மதிப்பீடுகள், விழுமியங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதே காரணம் என்கிறார். ஆனால் தற்போது சமய விழுமியங்களை சமூக விழுமியங்களாக திட்டவட்டமாக கருதமுடியாத போதிலும் அவை கிறிஸ்தவ விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதை மறுப்பதற்கில்லை. நம்பிக்கைகள், செயற்பாடுகளைத் திட்டவட்டமாக நெறிப்படுத்தாவிட்டாலும் சமூக விழுமியங்களை ஒருங்கிணைப்பதால் அவை நடத்தைக்கு ஒரு பொது வழிகாட்டியாக இருக்கிறது. இதனையே "பார்சன்" சமய விழுமியங்களின் பொதுமையாக்கமாக விளக்கினார். ஆனால் தொழிற்பாட்டு ரீதியில் சமய மதிப்பீடுகள் பொதுமைப்பட்ட சமூகவிழுமியங்களாக இன்று கருதப்படுவதில்லை.
தனித்தன்மையளித்தல் இன்று மேலைப்புலங்களில் அதிக முக்கியத்துவம் பெறும் எண்ணக்கருவாகும். ஒரு மனிதன் தனது வாழ்வின் அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் சுயமாக செயற்படுபவனாக இருப்பதை இன்றைய உலகு அதிகம் வரவேற்கிறது. இதனால் மனிதனை மதச்சார்பற்றவன், ஒரு பொருள் முதல்வாதி, மனிதத் தன்மையற்றவன், சுயநலக்காரன் என்று பகுப்பாய்வு செய்வது அடிப்படையில் தவறானது என்று "றொபேட் பெலா" (Robert N.Betah) கூறுகிறார். மனிதன் தனது வாழ்விற்கான அர்த்தத்தை ஆலயத்துள் அடங்கி நின்று தேடமுடியாது என்கிறார். கூட்டு வழிபாட்டில் இருந்து விலகி இன்று ஒவ்வொருவரும் தமக்கான தனியான கொள்கை விளக்கத்துடன் தனிப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார்கள் இதனால் இவர்கள் மத நம்பிக்கை அற்ற வர்கள் என்று அர்த்தம் கொள்ள முடியாது மாறாக தமது வாழ்வின் ஒரு பகுதியே மதம் என கருதுபவர்களாக இருக்கிறார்கள் எனக் கூறுகிறார்.
gd (bLDTBgbub (Transformation) ubió “LDä56müoG6JU†” (Max Weber) இன் கருத்து இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. ஆரம்பத்தில் சமூகத்தின் பல மதிப்பீடுகளுக்கு மதம் மூலமாக இருந்தது. ஆனால் இன்று மதத்தோடு அவற்றுக்கு இருந்த தொடர்பு அறுந்துவிட்டது என்று மக்ஸ் வெபர் இன் ஆய்வுகள் கூறுகின்றன. முக்கியமாக புரட்டஸ்தாந்த மதத்தின் எழுச்சியும்

அது உலகியல் விடயங்களுக்கு காட்டிய ஊக்குவிப்பும். போதனைகளை ஒரு பகுத்தறிவு ரீதியான சிந்தனைக்கு உட்படுத்தியது. இந்நிலை ஆரம்பகாலத்தில் இருந்த முதலாளித்துவ எதிர்ப்பு நிலையை மழுங்கச் செய்து சமூகத்தை ஒன்றிணைக்கும் ஒரு புதிய முதலாளித்துவ முறையினை தோற்றுவித்தது. சமூகத்தின் இப் புதிய உருமாற்றத்துக்கு புரட்டஸ்தாந்து மதத்தின் இரு காரணிகளை வெபர் முக்கியப் படுத்துகிறார்.
1. சமயச்சார்பற்ற உளச்சார்பை ஏற்படுத்துவதில் பணத்திற்கு இருந்த
செல்வாக்கு
2. கைத்தொழில் சார்ந்த சமூகத்தில் இயந்திர உற்பத்தி
நோக்கிய அவருடைய நோக்கு
இன்று மேற்கத்தய சமூகம் தனது பரிசுத்த தனத்தை இழந்து கொண்டு இருக்கிறது. மதத்தில் இருந்து மனிதன் விடுதலை பெற்றுவிட்டதே இதற்குக் காரணம் என்பதை விளக்குவதாகவே "பரிசுத்த தன்மை கெடல்" என்ற பதம் உள்ளது. ஆரம்பத்தில் மனிதன் தனக்கு அப்பாற்பட்ட மேலான சக்தி பற்றிய நம்பிக்கை கொண்டவனாக இருந்தான். ஆனால் இன்றைய மனிதனின் உணர்வுகள் உலகியல் சார்ந்ததாகிவிட்டது. உலகின் செயற்பாட்டிற்கும் ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் இச் சக்திகளே காரணம் என்ற நிலை மாறி இன்றைய சமூகம் அறிவு சார்ந்ததாகவும், பகுத்தறிவுத்தன்மை கொண்டும் உலகியல் விடயங்களை ஆராய்கின்றது. என மக்ஸ் வெபர் கூறுகிறார். இயற்கைக்கு மேற்பட்டது எல்லாம் சமூகத்தில் இருந்து அகற்றப்பட்டுவிட்டன. இப்பொழுது செயற்படுகின்ற நெறிப்படுத்தும் செயற்பாடுகள் அறிவு ரீதியானதும் தர்க்க ரீதியானதும் என்ற வெபரின் கருத்து இதன் அடிப்படையிலானது.
தென்னாசிய நாடுகளில் மதச்சார்பின்மை
காலனித்துவ ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளாக உள்ள இத் தென்னாசிய நாடுகள் மூன்றாம் உலக நாடுகளின் நிலைகளை இன்று அதிகமாகப் பிரதிபலித்து வருகின்றன. குறைவிருத்தி நாடுகளாக மேற்குலக நாடுகளால் கருதப்படும் இந்நாடுகளில் மதத்தின்
ۓ تھک

Page 33
செல்வாக்கு அதிகமாக உள்ளது. அது மட்டுமல்ல இங்கு வாழும் மக்களிடையே காணப்படும் முரண்பாட்டிற்கு மதமே மூல காரணமாக உள்ளது என கருதப்படுகிறது. இதனாலேயே மேற்குலகில் இருந்து தருவிக்கப்பட்ட எண்ணக்கருவான மதச்சார்பின்மைக்கு இங்கு அதிகம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இந்தியா தன்னை ஒருமதச்சார்பற்ற அரசியலைக் கொண்ட நாடாக அறிவித்துள்ளது. இதற்கு அந் நாட்டில் இருக்கும் பன்மதச் சமூகங்களில் ஏற்படக்கூடிய முரண்பாடுகைளை தவிர்ப்பது நோக்கமாக இருக்கிறது. ஆனால் நடைமுறையில் இது சாத்தியப்படவில்லை.
இங்கு மட்டுமல்ல பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு போன்ற நாடுகள் பிரதான மதமாக இஸ்லாம் மதத்தை கொண்டுள்ளன. பாகிஸ்தானில் இந்துக்களுக்கெதிரான பலாத்காரம் கட்டவிழ்த்து. விடப்பட்டுள்ளதுடன் அதனை விட மோசமாக ஒரே மதத்தின் வெவ்வேறு பிரிவினரான ஷியாக்கள், சுன்னி (Sunnis) என்பன தமக்கிடையே முரண்பட்டு மோதிக்கொள்கின்றன. பங்களாதேஷில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எப்போதும் பூசல்கள் இடம் பெறுகின்றன. அண்மையில் இந்தியாவில் இடம் பெற்ற பாபர் மசூதிப் பிரச்சினை பங்களாதேஷிலும் எதிரொலித்தது. இங்கு வாழும் முஸ்லிம்களால் இந்துக்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாம் அரச மதமாக இருப்பதால் தீவிரவாத முஸ்லீம் கட்சிகளால் அங்கு பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. பூட்டானும் தனது முடியாட்சியை பெளத்த கலாசாரத்துடன் அறிமுகப் படுத்த முனைந்ததால் அங்குள்ள வேற்று இனத்தவரின் எதிர்ப்புக்கு உள்ளானது. நேபாளம் உலகின் இந்து அரசாக விளங்குகிறது. அதன் அரசியல் திட்டங்கள் இதைப் பிரதிபலிக்கின்றன. இதனால் நேபாளத்தில் வாழும் சிறுபான்மை பெளத்த மதத்தினர் அதிருப்தி கொண்டுள்ளனர். நாட்டைப் பன்மத அரசு கொண்டதாக மாற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
இலங்கை சுதந்திரத்தின் பின் யாப்பு ரீதியாக ஒரு மதச்சார்பற்ற நாடாகவே விளங்கியது. இங்கு வாழும் மக்களுக்கு விரும்பிய மதத்தைப்

பின்பற்றும் சுதந்திரம் அளிக்கப்பட்டது. ஆனால் 1956ல் எஸ். டபிள்யூ ஆர்.டி பண்டாரநாயக்கா தேசிய வாதத்தைச் சிங்களத் தேசிய வாதமாக இனம் காட்டி பெளத்த மதத்தை எந்த வகையிலும் பேணிப்பாதுகாக்கும் ஒரு நாடாக இலங்கையை சித்தரிக்க முனைந்தார். இன்று வரை இந்த முதன்மை அரசயாப்புக்களால் உறுதிசெய்யப்படும். இவ்வாறு தென்னாசிய நாடுகளின் பன்மதச் சமூகங்கள் மதரீதியான வேறுபாட்டால் தமக்குள் முரண்பட்டுக் கிடக்கின்றன. இந் நிலை தொடருமாயின் இந்நாடுகளுக் கிடையிலான உறவு நிலை பாதிக்கப்பட்டு முரண்பாடுகள் அதிகரிக்கும். இதனால் இவை மத அடிப்படை வாதத்தின் பிடியைத் தளர்த்தி தமது நாடுகளின் மேம்பாடு பற்றிச் சிந்திக்கத் தலைப்பட வேண்டியது அவசியமாகிறது.
sa erijäjGOGOT
Gould, A (1978) - The secularization of social order, Chanakya publication, Delhi.

Page 34
பரம்பரையும் சூழலும் Hereditary and Environment
எம். மதனமோகன்
ஆளுமை என்பது தொடர்பாக சாதாரண மக்கள் தொட்டு பல்வேறு உளவியல் அறிஞர்வரை பலரும் பல கருத்துக்களை முன்வைத்தனர். அந்தவகையில் சாதாரணமாக பொது மக்கள் உடல் தோற்றத்தையே குறிப்பிடுகின்றார்கள். அதாவது உயர்ந்தும் வசீகரமுமான முகமுடைய ஒருவனையே ஆளுமை உடையவர் என்றும், இவ் வரையறையிற்குள் உட்படாதவர்கள் ஆளுமை அற்றவர் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் உளவியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆளுமை உண்டு என்கின்றனர். மனிதனது ஆளுமையானது. அவனது நிரந்தரமான உடல் உள இயல்புகளின் அடிப்படையாகும். ஒரு பிறந்த குழந்தை, பிள்ளைப்பருவம், குமரப்பருவம், கடந்து முதிர்வுப் பருவத்தை அடையும் வரை உடல் உள இயல்புகள் மாற்றமுறுகின்றன. அதே வேளை நிரந்தரமான இயல்புகளும் அவர்களிடம் காணப்படும். இவ்வாறான நிரந்தர அடையாள இயல்புகளையும், போக்குகளையும், நடத்தைக ளையும் ஒருங்கே ஆளுமை எனக் கூறுகின்றனர். சிலர் மரபால் அமையும் உடலமைப்பே ஆளுமைக்குக் காரணம் என்றும், வேறு சிலர் சூழலே காரணம் என்று கூறுகின்றனர். உண்மையில் இவை இரண்டுமே ஒருங்கே காரணமாகும்.
சந்ததி சந்ததியாக நிறமூர்த்தங்களினூடாக (Chromosomes) பரம்பரை அலகுகள் கடத்தப்படுகின்றன. இவ்வாறே துணிவுள்ள திடமான மனமும் அவனது தாய் தந்தையரூடாகக் கடத்தப்படுகின்றது. கோழையாக இருக்கும் பெற்றோருக்கும் வீரமகன் பிறக்கலாம். பெற்றோரில் இந்த இயல்பு ஆதிக்கம் அற்றதாகக் காணப்படினும் மூன்றாவது தலைமுறையில் வீரிய முடையதாக அல்லது செயற்பாடு உடையதாக காணப்படுகின்றது என பிறப்புரிமையியல் (Genetics) கூறுகின்றது. இவற்றையெல்லாம்,

பிரபல விஞ்ஞானியாகிய கிரகர்மெண்டல் பரம்பரையலகுகளின் நுணுக்கமான பரிசோதனைகள் மூலம் நிரூபித்துள்ளார்.
பரம்பரை என்பது கருவுற்ற ஒரு முட்டையில் அடங்கியுள்ள எல்லாப் பண்புகளையும் குறிப்பதாகும். கரு உருவாகும் போதே பரம்பரை இயல்புகள் நிர்ணயிக்கப்படுகின்றன. தனது பெற்றோர்கள் முன்னோர்கள் ஆகியோரிடமிருந்து ஒரு குழந்தை பிறப்பிலேயே பெற்றுள்ள உடல் உளப்பண்புகள் பரம்பரையால் வந்தவையெனலாம்.
பரம்பரைப்பண்புகளில் சில குழந்தை பிறக்கும் போதே வெளிப்படையாய் காணப்படுகின்றன. வேறுசில குழந்தைகள் பிறந்து ஓரளவு முதிர்ச்சி பெற்றபின் வெளிப்படுவனவாம். குழந்தையின் தோற்றம் அதன் பெற்றோரின் பாலணுக்களின் சேர்க்கையினின்றும் எழுவதாகும். ஒரு தாயின் முட்டையும் தந்தையின் விந்தணுவும் ஒன்று சோர்ந்து கரு உருவாகும்போது மனித வாழ்க்கையும் ஆரம்பமாகிறது. கருக்கட்டிய முட்டையானது பல்வேறு கலங்களாகப் பெருகி உடலங்கங்களாகின்றன. ஒவ்வொரு கலத்தின் கருவிலும் நிறமூர்த்தவுருக்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு உயிரினத்திற்கும் வரையறுத்த எண்ணிக்கையான நிறமூர்த்தங்கள் காணப்படுகின்றன.
பரம்பரை ஆய்வுகளின் டி மனிதக்கலம் ஒவ்வொன்றிலும் 46 நிறமூர்த்தங்கள் உள்ளன எனக் கூறப்படுகின்றன. இவற்றில் தாயிடமிருந்து 23ம் தந்தையிடமிருந்து 23ம் பெறப்பட்டவையாகும். இந்த நிறமூர்த்தங் களிலேயே பரம்பரையலகுகள் (Genes) காணப்படுகின்றன. இந்த அலகுகளே பரம்பரையாக இயல்புகளை கடத்துகின்றன. பெற்றோரில் முட்டையும் விந்தும் உற்பத்தியாகும் போது நிறமூர்த்த எண்ணிக்கை அரைப்பங் காக்கப்படுகின்றது. அதாவது ஏற்கனவே ஒவ்வொன்றிலும் உள்ள 46 நிறமூர்த்தங்களில் 23 மட்டுமே இணைகின்றன. அடுத்த சந்ததியில் இவை மீண்டும் சேரும்போதே நிறமூர்த்த எண்ணிக்கை தொடர்ந்தும் 46 ஆக பேணப்படுகின்றது. ஒவ்வொரு முட்டையும்.விந்தும் ஒரேமாதிரியான பரம்பரையலகுகளைக் கொண்ட நிறமூர்த்தங்களைப் பெறுவதில்லை நிறமூர்த்தங்களின் சேர்க்கையானது எழுமாறாகவே நிகழ்கின்றது. இதனாலேயே ஒத்த இரட்டையர் தவிர்ந்த

Page 35
சகோதரர்களுக்கிடையில் வேற்றுமை காணப்படுகின்றது.
அடுத்து ஆளுமை வளர்ச்சியில் சூழலின் தாக்கத்தை நோக்கின் ஒரு மனிதனது வளர்ச்சியையும், நடத்தை முறையினையும் அவனுக்கு புறத்தேயிருந்து கட்டுப்படுத்தும் பல்வேறு காரணிகளே சூழல் ஆகும். சூழலின் செல்வாக்கானது குழந்தையானது தாயின் வயிற்றில் தோன்றி வளருகையிலேயே அதனைப்பாதிக்கத் தொடங்குகின்றது. கருவானது முதலில் தாயின் கருப்பை ஆகிய சூழலில் வளருகின்றது. தாயின் உணவூட்டம். சுரப்பிகளின் தொழிற்பாடு ஆகியன கருவின் வளர்ச்சியைப் பாதிக்கும். சூழற்காரணிகளாகும். கலங்கள் பிரிந்து பெருகும்போது ஒன்று மற்றையதில் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவாகவே சிசுவின் பல்வேறு அங்கங்கள் உருவாகின்றன. சிசுவின் இறுதி வளர்ச்சியில் தாயின் சுரப்பிகளினின்றும் வெளியாகும் திரவங்களும் சிசுவின் வளர்ச்சியில் தாக்கம் கொண்டுள்ளன. சுரப்பிகளின் அளவுக்கு மீறிய அல்லது குறைந்த தொழிற்பாடு சிசுவின் உடற் கூறுபாடுகளை ஏற்படுத்தும், பிறப்பின் பின் குழந்தையின் சூழல் சிக்கலாகி விடும். அதன் பெளதீகிச்சூழல் மாத்திரமன்றிச் சமூகச்சூழல் மொழிபண்பாடு ஆகியனவும் குழந்தையின் வளர்ச்சியில் தாக்கம் கொண்டன. இவற்றின் முழு விளைவாகவே பிள்ளையின் நடத்தைக்கோலம் உருவாகின்றது.
சூழற்காரணிகளால் கரு வளர்சசியின்போது பல ஊனங்கள் விளைகின்றன. கருப்பையில் சிசுவைச்சுற்றி தொப்புள்கொடி முறுக்குவதன் விளைவாக சில அங்க ஊனங்கள் ஏற்படுகின்றன. தாயின் உடலில் சீனிக்குறைவு, சுண்ணாம்புச்சத்துகுறைவு ஆகியன காரணமாகப் பாரிசவாதம், வலிப்பு, ஊனமான மூளைவளர்ச்சி ஆகியன உண்டா கின்றன. குழந்தை பிறந்தபின் புறச்சூழல்காரணிகள் பல்வேறு வகைப் பட்டுள்ளமையால் அவைபல வகை விளைவுகளை கொடுக்கும். உதாரணமாக ஒரே வீட்டில் வாழும் இரு சகோதரர்கூட ஒரே சூழலைப் பெற்றிருப்பதில்லை இதனால் அவர்கள் வேறுபட்ட மனப்பான்மை நாட்டம் உடையவராகின்றனர்.
அரிஸ்ரோட்டில், மனிதன் பிறக்கும்போது ஒரு வெற்று உயிரியாகவே பிறக்கின்றான். மனிதனது மனம்பிறக்கும் போது

வெற்றுப்பலகையாகும் பின்னர்தான் மனத்தில் பதிவுகள் உருவாகின்றன என்பார். குழந்தை மண்ணில் பிறக்கும் போது சூழலுக்கேற்ற பண்பாட்டு பழக்கவழக்கம் கலாசாரம் என்பவற்றில் வளர்க்கப்படுகின்றது. குழந்தையின் மனம் களிமண்ணைப்போன்றது. சூழ்நிலை அதற்கு எந்த வடிவத்தை வேண்டுமானாலும் அமைக்கலாம். எனவே கருப்பை சூழலில் வெற்றுப்பலகையாக இருக்கின்ற குழந்தையின் மனம் பின்பு சூழலில் ஒவ்வொரு செல்வாக்காலும், செயலாலும் உருப்பெற்றுக் கொண்டிருக் கின்றது. பார்க்கும் பொருள் சம்பவம், அயலில் பேசுகின்ற மொழி, சகபாடிகள், உணர்வுகள், குடும்பம் என்பன போன்ற பல சூழல் செல்வாக்குகள் இவற்றை தூண்டுவனவாக உள்ளன.
அதாவது ஓர் அமைதியான சூழலில் ஒருவனது தேவைகள் நிறைவேற்றப்படும்போது அவன் குணங்கள் சிந்திக்கும் திறனாகவும் எதையும் துணிந்து செயற்படுபவனாகவும், இரக்கம் அன்பு, சாந்தம் போன்ற உயர்ந்த பண்புகளைக் கொண்டவனாகவும் வளருவான் அமைதியுற்ற போர்க்காலச் சூழ்நிலையில் ஒரு குழந்தை வளரும் போது அக்குழந்தை எதற்கும் பயந்தவனாகவும், துணிவற்றமனமும் விரக்தி மனப்பான்மை கொண்டவனாகவும் வளர்ந்து சமூகத்தில் ஒரு விலகல் நடத்தையுடன் கூடியதாக உள்ளது. அத்தோடு அவனது ஆளுமையும் எப்போதும் நிலையான தன்மை உடையது என சொல்லமுடியாது. சூழ்நிலைக்கு தக்கபடி மாறுகின்ற தன்மை கொண்டது.
John Dollard என்பவர் ஆளுமை என்பது பழக்க வழக்கத்தால் அல்லது கற்றல் முறையால் ஏற்படுகிறது என கூறினார். Skinnerஒருவனது ஆளுமைபற்றி தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அவன் வாழ்ந்த சூழல் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்கின்றார். அறிகைக் கோட்பாட்டாளர்களும் ஆளுமைக்கு சூழல்தான் முக்கியமானதென Jingglassiro60 ft. Evironment. Behaviour, Cognition 3606) ep6örab ஒருவனது ஆளுமை விருத்திக்குத் தேவை என்றும் இவை சூழலில் இருந்து தான் கிடைக்கின்றன என்றும் சூழலின் முக்கியத்துவத்தினை குறிப்பிடுகின்றனர்.

Page 36
ஒருவரது ஆளுமையில் ஆசிரியரது செல்வாக்கு, சமூக நிறுவனங்களின் செயற்பாடுகள், சமூக பொருளாதார நிறுவனங்களின் தாக்கங்கள் என்பன செல்வாக்கு செலுத்துகின்றன. இவையாவும் சூழற்காரணிகளாகும் லைசென்கோ எனும் அறிஞர் சூழ்நிலையானது பரம்பரையலகுகளின் அமைப்பையும் அவற்றினின்று எழும் பண்புகளின் இயல்புகளையும் மாற்றும் வலிமை பெற்றதாகக் கருதுகின்றார். டிகண்டோல், பாக்ஸி போன்றோரின் ஆய்வுகள் ஒருவரது அறிவுத்திறனும், அவனது சூழ்நிலையின் தன்மையை பொறுத்தது என நிறுவினார்.
மாறுபட்ட சூழ்நிலைகளில் தனித்தனியே வளர்க்கப்பட்ட ஒருகருவிரட்டையர் பற்றிய ஆய்வுகள். இவ்விரட்டையர்களின் வளர்ச்சியிலும் நடத்தை முறைகளிலும் அவர்களது சூழல்கள் பெருமளவில் வேறுபாடுகளை தோற்றுவித்துள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளன. சிறில்பேர்ட் போன்றோர் குழந்தைகள் நெறிபிறழ்வதற்கும் பின்னர் குற்றவாளிகள் ஆவதற்கும் அவர்களது சூழ்நிலையே முக்கியகாரணம் என கூறியுள்ளனர். இயல்பாக போதிய நுண்ணறிவைப் பெற்றிராத குழந்தைகளும் பல்வேறு சிறப்பு முறைகளின் வழியே கற்பிக்கப்படின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெறுவர் என்பது, இன்றைய கல்வியியலாளரின் கருத்து ஆகும்.
சூழல் வாதியான வாட்சன் என்பவர் "என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள் அவர்கள் எத்தகையவர்களாக வரவேண்டும் என முன்னரே கூறிவிடுங்கள் அவர்களது பரம்பரைபற்றி எனக்கு சிறிதும் கவலையில்லை சூழ்நிலையை தகுந்தவாறு மாற்றியமைத்தே அக் குழந்தைகளை பேரறிஞர்களாகவோ, பெருங்குற்றவாளிகளாகவோ வளருமாறு செய்து காட்டுகின்றேன்" என்று கூறியமை இங்கு கவனத்திற்குரியதாகும்.
எனவே மனித வளர்ச்சிக்கு பரம்பரை, சூழல் ஆகிய இரண்டுமே இன்றியமையாதன. மனித வளர்ச்சிக்கு பரம்பரையும் சூழலும் ஒன்றையொன்று சார்ந்தே இயங்குபவை ஆகும். ஒருவரது நடத்தையும் உடலியற்பண்புகளும் அவரது பரம்பரை இயல்புகளினாலும் அவர் வாழும் சூழலினாலும் உருவாகின்றன என்ற கருத்தே இன்று ஏற்றுக் கொள்ளப்

படுகிறது. நுண்மதி பரம்பரையில் மாத்திரமின்றிச் சூழலிலும் தங்கி யுள்ளது எனக் கருதப்படுகின்றது. சூழலைச் சிறப்பாக அமைப்பதன் மூலம் பரம்பரையினால் ஏற்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தியாக்க முடியும். சிறந்தகல்வி முறையானது, ஒவ்வொரு குழந்தைக்கும் அது எத்தகைய குடும்பத்திலிருந்து வந்ததாயினும் அதனிடமுள்ள எல்லா ஆற்றல்களும் நற்பண்புகளும் முழுவளர்ச்சி பெறக்கூடிய கற்றல் சூழ்நிலையை ஏற்படுத்தித்தருவதாய் இருத்தல் வேண்டும்.
உசாத்துணை Hjelle, LarryE (1992) - Current Research and application in
Personality Theories, McGraw hill, Inc

Page 37
மன அழுத்தம் Mental Stress
6Tib. TITF6Smasib B.A (Hons)
நாளாந்தம் மன அழுத்தங்களை வெற்றி கொள்வது எப்படி என்பதை அறியாது இன்றைய நவீன அவசர உலகில் எந்த ஒரு தனிமனிதனும் மன அழுத்தத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. அதிகமானோர் நாளாந்த வாழ்வில் எப்படி இதனை வெற்றி கொள்வது என மனப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு மனிதன் மீது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் உடல், உளரீதியான பாதிப்பே மனஅழுத்தம் எனப்படும், மன அழுத்தம் மிகவும் பாரதுாரமானதல்ல அதில் இருந்து விடுபட பல வழிகள் உண்டு. வாழ்க்கையை நாம் இலகுவாக எடுத்துக் கொள்வதன் மூலமும் உளரீதியாக அதனை அணுகுவதன் மூலமும் சிலவழி முறைகளை கையாள்வதன் மூலமும் இதனை வெற்றி கொள்ளலாம்,
மன உளைச்சலும் மன அழுத்தமும் மனித வாழ்வில் இரண்டறக் கலந்த ஒன்று. சிலர் இம் மன அழுத்தத த வாழ்வில் ஒரு சவாலாக ஏற்று பிரச்சினைக்கு முகம் கொடுக்கிறார்கள். சிலர் அப்படியே இடிந்து போய் விடுகிறார்கள். மன அழுத்தம் வாழ்வில் உந்து சக்தியாக அமைவதும் உண்டு என MalcomTees எனும் அறிஞர் கூறுகிறார்.
எமது நாளாந்த வாழ்வில் ஏற்படும் மன அழுத்தங்களையும் மன உளைச்சல்களையும் ஒரு சிறு திட்டமிடல் அணுகுமுறை மூலம் குறைத்துக் கொள்ளலாம். சிலர் எதுவித திட்டங்களும் தமது உள்ளத்தில் இல்லாத காரணத்தினால் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு என்ன விடையெனில்
1. நல்ல திட்டமிடல் 2. நாளாந்த கடமைகளை ஒழுங்குபடுத்தல்
3. தெளிவான சிந்தனையைக் கொண்டிருத்தல்
Kíò)

4. ஒரு செயற்பாட்டை குறைந்த காலத்தில் நிறைவேற்ற
முயற்சித்தல்.
மனஅழுத்தத்தின் பண்பு
ஒருவனது உணர்வையும் எண்ணத்தின் போக்கையும் அல்லது உடல் நிலையையும் பாதிப்பதாக மன அழுத்தம் இருப்பதனால் 6905 மனிதனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் ஒவ்வொன்றும் அவனது வேலைச் சூழலை பாதிப்படையச் செய்கிறது. ஒரு நிறுவனத்தலைவர் நிறுவனத்திற்கு வெளியே உள்ள சக்தியினால் ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியாவிடினும் நிறுவன காரணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். தொழிலில் ஏற்படும் மன அழுத்தம் நிச்சயமாக விரும்பத்தகாதது அல்லது ஓரளவான மன அழுத்தம் பலரிடம் செயல் திறனைக் கூட்டுகிறது. மிதமிஞ்சிய மன அழுத்தம் உடலிலும் உள்ளத்திலும் கோளாறுகளை ஏற்படுத்துவதன் மூலமாக செயல் திறனைக் குறைக்கும். மனஅழுத்தம் தொடர்ந்து இருந்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம் மனித உடல் அமைப்பு மன அழுத்தத்தினால் ஏற்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் தன்மை அற்றது. வாழ்கையில் மன அழுத்தத்தை தடுக்க ஒரே வழி அதனை ஏற்றுக் கொள்ளப்பழக வேண்டும்,
மன அழுத்தத்தின் விளைவாக பின்வருவன சேரலாம்
கவலைநிலை ஏற்படும் 0 உற்சாகமின்மை தோன்றும் 0 உயர் இரத்த அழுத்தம் உண்டாகும் 0 நித்திரையின்மை 0 பாலுறவில் விருப்பமின்மை 0 மதுபாவனை 0 வாய்வுக் கோளறு 0 தோல் வியாதி 0 வயிற்றுப் புண் 0மனநோய்
நீண்ட கால் மனஅழுத்தம் மாரடைப்பு, சிறுநீரகவியாதிகள் என்பனவற்றில் முடியலாம். ஆராய்ச்சியாளர்கள் மன அழுத்தத்தின் பல கட்டங்களை ஆய்வு செய்து அறிந்துள்ளார்கள். அவை பின்வரும் நான்கு கட்டங்களாக விளக்கப்படும்.

Page 38
1. உடலில் ஏற்படும் பாதிப்பு
9 அதிர்ச்சி 0அதிகரித்த இதயத்துடிப்பு 0 உடல்வெப்பநிலைகுறைவு பயம் 0 எதிர்பார்ப்பு 2.தனியாள் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முயலும் போது உளரீதியான
எதிர்ப்பு உணர்வலைகள் தொழில்படத் தொடங்கும்.
3.தனியாளினால் சூழ்நிலையைக் கட்டுப்படுத்த முடியுமானால் ஆபத்து
எதிர்பார்ப்புகள் குறையும்.
4.தனியாள் சந்தர்ப்பத்தை கட்டுப்படுத்த தவறுமிடத்து பாரிய பிரதிபலிப்பு ஏற்படும். அதாவது மனக்குழப்பம், நோய்கள், பின்வாங்கல், மதுப்பழக்கம், போதைப்பழக்கம், தற்கொலை என்பன ஏற்படலாம். D6 அழுத்தத்திற்கான காரணங்கள்
D60 அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் உண்டு. குறிப்பாக எங்களுடைய செயற்பாடுகளை மற்றவர்கள் மதிப்பீடு செய்யும் போது நாம் மன அழுத்தம் கொள்கின்றோம். அத்துடன் தொழிலில் ஏற்படும் முரண்பாடும் சந்தேகங்களும் மன அழுத்தத்திற்கு காரணமாக அமையும், தொழிலாளரைப் பொறுத்து மன அழுத்தம் கூடுகின்ற சந்தர்ப்பமாக அவர்களுடைய மேலதிகாரிகளிடம் முரண்பாடு ஏற்படும் வேளையினைக் குறிப்பிடலாம்.
சத்தம், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் போன்ற காரணிகளும் மன அழுத்தத்திற்கு ஏதுவாக அமைவன குடும்பப் பிரச்சினைகளும் நிதிசம்பந்தமான பிரச்சினைகளும் மனஅழுத்தம் தோன்றுவதற்கு வழிவகுப்பன.
இவற்றை விட ஒரு ஊழியர் அநேகமான நிலைமைகளில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு அவையாவன
0 இறுக்கமான தொழில் பற்றிய விதிமுறைகள் சட்டங்கள் 0 அருமையான வளத்திற்கு போட்டி 0 தொழிலாளர் இடையான சந்தேக உறவு 0 தகுதிக்கு மேற்பட்ட எதிர்பார்ப்பு

மன அழுத்தம் பற்றிய ஆய்வுகள் பல்வேறு மனஅழுத்த ஆழ்நிலைகளை இனங்காட்டும். இந்த சூழ்நிலைகள் எந்த அளவு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் ஒர் அளவுத்திட்டத்தையும் நிர்மாணித்துள்ளார்கள். மனிதவாழ்வில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகளும் மன அழுத்த மதிப்பீடுகளும் கீழே தரப்பட்டுள்ளன.
நிகழ்வுகள் மனஅழுத்த மதிப்பீடு கணவன்/மனவிை இறப்பு 100 விவாகரத்து 73 கணவன் / மனைவி பிரிந்து வாழ்தல் 65 df60)V6)IIalb 63 திருமணம் 50 வேலையில்லாப் பிரச்சனை 47 கர்ப்பம் தரித்த நிலை 40 பாலியல் கஷ்டங்கள் 39 நிதி நிலையில் ஏற்படும் மாற்றம் 38 நெருங்கிய நண்பன் இழப்பு 37 பாடசாலை தொடக்கம்/முடிவு 26 விடுமாறுதல் 20 நித்திரையில் ஏற்படும் மாறுதல் 15 மனச்சாட்சி மாறும் போது 11
மேற்கூறப்பட்ட காரணங்களின் மூலமாக மன அழுத்தங்கள் என்ன என்ன விகிதங்களில் ஏற்படுமென்பதை இதன் உதவியுடன் நாமும் எமது வாழ்வில் புரிந்து கொள்ளலாம். மனஅழுத்தத்தைக் கட்டுப்பருத்துதல்
நாம் மன அழுத்தத்தை முற்றாக தடுக்க இயலாவிடினும் அவற்றை குறைத்து எமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் வழி வகை களை பற்றி விரிவாக ஆராய வேண்டியுள்ளது. கவனம் செலுத்த வேண்டி யவிடயத்தில் புலனை செலுத்தி காலத்தை அதற்கென ஒதுக்கி அதன்படி வேலை செய்தால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். இவ்வாறான செயற் பாடுகளினால் மன ஆறுதல் கிட்டும். இதனால் பயப்படத் தேவையில்லை, வேலை திறம்பட நடக்கும். மேலும் ஒரு நேரம் ஒரு வேலையை மட்டும் செய்ய வேண்டும். ஒரு நபர் ஒரு வேலையை முடிக்கும் வரை

Page 39
மற்றையதைப்பற்றி யோசிக்கக் கூடாது. அதாவது மனதை அங்கலாய்க்க விடக்கூடாது. இதனால் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும். மனஅழுத்தத்தை குறைக்க கையாளும் உத்திகளில் ஒன்று ஓய்வு எடுத்தல் ஆகும். வாழ்க்கை என்பது நூறுமீற்றர் அதிவேக ஓட்டப்பந்தயமல்ல. அது ஓர் ஆறுதலான பல தடைகளை தாண்டும் ஓட்டம் நாம் எப்போதும் அதிவேக ஓட்டத்தில் இருந்தால் எமது இலக்கை அடைய முடியாது. ஆகையால்தான் மனிதன் இயற்கையின் வழியை பின்பற்ற வேண்டும். மனித உடலின் இயக்கம் இயற்கையோடு இணைந்த உடலில் உள்ள ஒவ்வொரு தசையும் சுருங்கி விரிவடைவதும், இதயத்துடிப்பும் ஒரே சீராகவே நடைபெறுகின்றது. உள்ளும் புறமும் முன்னும் பின்னும் சக்தியை வெளிப்படுத்தி மீளப் பெறுவது முயற்சியும் ஓய்வுமே ஆகும். மனிதனது நாளாந்த வாழ்வில் ஒரு பொழுது ஓய்வு எடுத்தபின் முயற்சி செய்யும் பொழுது புத்துணர்வு ஏற்படுவதை உணரலாம். இங்கு பிற்பக்கமாக சாய்ந்து படுத்து இழைப்பாறும் போது மெதுவாகவும் மென்மையாகவும் மூச்சை சுவாசித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு எதாவது அமைதியான ஒரு காட்சியை நினைவுக்கு கொண்டு வரும்போது மனம் சாந்தியடையும். இந்நிலையில் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை.
மனதில் ஆர்ப்பாட்ட நிலை ஏற்படும் போது மூச்சை மிகவும் மெதுவாக சுவாசித்து உள்வாங்கி வெடி விடல் வேண்டும். இதனால் அமைதி கிட்டும். உள்ளமும் உடலும் வேறு அல்ல; எவ்வித கவலை தரும் சூழ்நிலையையும் நாம் மாற்றலாம். உனது பிரச்சினைக்கு முகம் கொடு. அதில் இருந்து தப்பி ஓடாதே. கவலையை பெரிதுபடுத்தக்கூடாது. மிகவும் அமைதியாக இருந்து பிரச்சினை எதுவென அலசி ஆராய்ந்து எமது பிரச்சினையை ஒப்பீடு செய்து, பிரச்சினைக்கு முகங்கொடுக்கப்பழகி கொண்டு விட்டேன் என எண்ணிக் கொள்ள வேண்டும். வாழ்வில் சந்தோசத்திற்கான ஒரே வழி கவலையைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது தான்.
உடலை நல்ல நிலையில் வைத்திருப்பதன் மூலம் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். உடற்பயிற்சி பதட்டத்தையும்,

அங்கலாய்ப்பையும், மன அழுத்தத்தையும் குறைக்கும் பயிற்சி மூலம் நாடித்துடிப்பு, இரத்தஅழுத்தம் குறைவதுடன் மறு நடவடிக்கையாக சக்தி அதிகரிக்கும். வாழ்க்கை ஒருவிருப்பாக அமையும்.
பொழுது போக்கு நேரத்தில் தொழில் பற்றி சிந்திக்கக் கூடாது. இந்த நேரத்தில் புதிய சூழ்நிலைகளில் சுற்றுலா செல்வதாக அமைவது சிறப்பானது. இது மன மகிழ்ச்சியைத் தருவதால் மன அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
மன அழுத்தம் ஏற்படுபவர்கள் உளவியல் ஆலோசகர்களை அணுகலாம். இதன் மூலம் தன் நம்பிக்கை, புரிந்துணர்வு, சுயகட்டுப்பாடு, தொடர்பாடல் முறை, உணர்வுத் தாக்கத்தில் இருந்து விடுபடல், பகுப்பாய்வுக்கான சிந்தனை என்பன வாய்க்கும்; மனசமநிலை ஏற்படுத்தும்; மன அழுத்தம் அகலும்.
மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இசைக்கும் உண்டு. மெல்லிய இசைகளை கேட்பதன் மூலமாக மனதில் ஏற்படும் அழுத்தத்தினைக் குறைக்க முடியும்.
குறிப்பிட்ட அளவு மன அழுத்தம் வரவேற்கத்தக்கதாகும். திறமையான செயற்பாட்டிற்கு உந்து சக்தியாக அமையும் என்பதும் இங்கு கவனத்திற்குரியது.
உசாத்துணை Hamsher, J (1973) - Psychology and social Issues, new York: The mal. Millan Company.
பிறர் மகிழ்ச்கிாக இருக்க வியெழுது வழி கண்டு
இங்கம் கல்

Page 40
சமூகம் சார் உளவியல் - ஒர் அறிமுகம் Societal Psychology - An Introduction
6LITgsisir s9b6TTsaOrbisid B.A (Hons)
சமூகவியல் எனும் கற்கைநெறியில் அண்மைக்காலங்களில் முகிழ்த்துள்ள கிளைகளில் ஒன்றாக சமூகம் சார் உளவியல் விளங்குகின்றது. சமூகம் சார் உளவியலானது, சமூக நிகழ்வு, நிறுவனங்கள் மற்றும் பண்பாடு, சமூக அங்கத்தவர்க்கிடையேயான இடைவினை போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. பொதுவாக கூறுமிடத்து சமூக உளவியலில் விடுபட்ட சமூக பரிமாணங்களை சமூகம் சார் உளவியலானது அழுத்தி நிற்கின்றது எனலாம். அதாவது சமூக உளவியலின் நீண்ட "விருத்தித்தேவையை" பூர்த்தி செய்வதாக சமூகம் சார் உளவியல் அமைவதோடு, இதனை சமூகவியல் சார் உளவியல் (Sociolgical Psychology) என்றும் கூறுவர். மானுடவியல், அரசறிவியல், பொருளியல் போன்ற பிற சமூக விஞ்ஞான கற்கைகளுடனான சமூக வாழ்வு பற்றிய ஒரு உளவியல் கற்கை நெறியாக இது அமைகின்றது. மேலும் பிரயோகத்துறையில், கோட்பாட்டு ரீதியிலான அகநோக்குகளில் (Theoretical insights) அழுத்தம் கொடுப்பதால், இதனை பிரயோக சமூக
6T6ju6) (Applied Social Psychology) 6T6ögtb 960) plug|Goir(6.
கடந்த நான்கு தசாப்தங்களாக, சமூக உளவியலானது தனியனது சிந்தனைகள், உணர்வுகள் செயல்பாடுகளில் கூடிய கவனம் செலுத்தி வருகின்ற அதேவேளை சூழல், பண்பாடு, சமூகம்சார் நிறுவனங்கள் போன்றவற்றிக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் சமூகம்சார் உளவியலானது, சமூக உளவியலின் வெற்றிடம் நோக்கி நகர ஆரம்பித்தது எனலாம். லூவின் (Lewin, 1948) என்பவரே சமூகம் சார் அணுகுமுறைக்கு அடித்தளம் இட்டவராவார். ஆனால் இவரது இழப்பு S66) gi(g)(up60060)u (Societal Approach) (3LDBGET60ii (6 (8LDibu(655
முடியாத தடைக்கல் ஆனது

சமூகம் சார் உளவியலில், சூழல் (Environment) பற்றிய அம்சங்கள் மிக முக்கியமாக துலங்குவது ஏற்கனவே குறிப்பிடப்பட்டதொன்று. சமூக உளவியலாளர் கோட்பாட்டு அகநோக்குகளிலும், மக்கட்தொடர்பாடல், இடைவினை போன்றவற்றிலும் மட்டுமே கருத்தூன்றி நின்றனர். இவ்வரையறுக்கப்பட்ட பார்வையின் வினைப்பயன் மிகப்பாரியது என (8abfa56ör(Gergen, 1978), GALDT6ð08a51T6îlä (Moscovic, 1975), GIBT6ð086ØTTT (ROSnow, 1981) போன்ற அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். ஏன், சமூக உளவியலாளரை, உளவியலாளரையும் கூட, சூழல் - சூழல் பற்றிய அம்சங்களை இக்கற்கை நெறிகளில் புறக்கணிக்கப்படலாகாது என (B6 (Dewey, 1899),656 air (Lewin 1951), p66)6d. (Brunswik, 1952), ஹிலார்ட் (Hilard, 1977), டோயிஸ் (Doise, 1978) போன்ற அறிஞர்கள் இயம்பி வந்ததாக ஹிமல்வீட் (Himelweit, 1998) எனும் சமூகம் சார் உளவியலாளர் கூறுகின்றார். இறுதியில் சமூகம் சார் உளவியலில், சூழல், பண்பாடு, உளப்பாங்குகள், விழுமியங்கள் போன்ற சமூக அம்சங்கள், புதிய அணுகுமுறைக்கூடாக உள்ளடக்கப்படுகின்றன.
சமுகம் சார் உளவியலை வரையறை செய்யும் சில மெய்மை விளக்கங்கள்
Some propositions that charPcterize societalpsychology
கீழே கொடுக்கப்படுகின்ற கருத்துரைகளானது, பல வருடங்களுக்கு
முன்பு டுவி(Dewey), வூண்ட்(Wundt), உவில்லியம் ஜேம்ஸ் (William James) போன்ற அறிஞர்களால் முன் வைக்கப்பட்டதாக ஹிமல்வீட்
(Himmetweit, 1998) எனும் சமூகம் சார் உளவியலாளர் கூறுகின்றார்.
சமுக பண்பாட்டு உள்ளடக்கத்தினூடு கற்பதற்கான தேவை (Need to be studied in a sociocultural context)
மனிதன் இயல்பாய் அமையும் பண்பாட்டில் பிறந்து அதனது செயற்பாடுகளுக்கு சமூகமயமாக்கப்படுகிறான். சமூக உளவியலாளரின் கருத்துப்படி, அவர்களது ஆர்வமானது, இதற்கான சமூக நிறுவனங்களது மோடிகளையும் மக்களது சிந்தனை செயற்பாடு சார் பண்பாட்டுத்

Page 41
தாக்கங்களையுமே மையப்படுத்துவதாக அமைகிறது. ஒரு பண்பாட்டு நடத்தையானது இன்னொரு பண்பாட்டில் செயற்படுத்தப்படும் போது சிறு வேறுபட்ட கருத்துக்களையும் காரண காரிய தொடர்புகளையும் கொண்டிருக்கலாம். எனவே சாம்சன்(Sampson, 1988) எனும் சமூகம் சார் உளவியலாளர், தன்னிலையிலிருந்து மற்றவனுக்கு (Self-to-Other) எனும் பண்பாடு சார்ந்தஉணர்வை இருவேறுபட்ட வடிவங்களுக்கூடாக விளக்குகின்றார். இவர் முதலாவதாக குறிப்பிடும் "சுய உள்ளடக்கமான" p56060LITGOrg (Self- contained), is Tait - LDip616it (Self -other) sigib கருத்தியலை மிகப்பலமாகக் கொண்டிருக்கும் அமெரிக்கப்பண்பாட்டை பிரதிபலிப்பதோடு, இரண்டாவது வடிவமான பதிக்கப்பட்ட தற்படிவத்திற்கு (Embedded Self) முற்றிலும் வேறுபட்டதாகக் காணப்படுகிறது. இவ்வகையானது, யப்பான் பண்பாடு போன்ற பண்பாடுகளை பிரதிபலிப்பதாக அமைகின்றது. இங்கு தனியன் ஒருவன் பண்பாட்டின் அடிப்படையிலேயே "இன்னவன்" என்று முத்திரையிடப்படுகிறான்.
எனவே பண்பாடென்பது சமூக பொருளாதார அடிப்படைகளுக்கூடாக விழுமிய முறைழைகள், சமூகமயமாக்கல் போன்றவற்றின் விருத்திக்கு அடிப்பண்டயாக அமைகின்றது. ஆகவே பண்பாடு பற்றிய அழுத்தங்கள், LJU60i LIFT(6 பற்றிய தேடல்கள் என்பன பண்பாட்டிடை ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது சமூகம் சார் உளவியலாளரது கருத்தாகும்.
மெய்ப்பொருளியலின்படி தனியனும் கூட்டுமமும் பிரிக்கமுடியாதவை (Ontologically individual and collectivity are inseperable)
69(5 சமூகப்பண்பாடானது சமூக நிகழ்வுகளுக்கு அர்த்தம் கொடுப்பதாகவும், விழுமிய முறைமைகள், சமூக பிரதிநிதித்துவம், தனியன்களிடை உறவுகள், நியமங்களை உறுதிப்பாடு செய்வதாகவும் செயல்ப்படுகிறது. எனவே தனியன் தனக்கெனும் நியமங்கள், உறவுகள் விழுமியங்களை சமூகப்பண்பாட்டிலிருந்தே பெற்றுக்கொள்கிறான். இந்த வகையில் தனியனும் கூட்டுமமும் பிரிக்கமுடியாதன என்பதில் சமூகம் சார் உளவியல் அழுத்தம் கொடுக்கிறது.

சூழல் பற்றிய அறிவு, அதன் பண்புகள் பற்றிய கற்கையின் தேவை (Need for the study of environment and its characteristics)
பிறன்ஸ்விக்(Brunswik, 1957) எனும் சமூகம் சார் அணுகுமுறையாளர் "உயிரியும் சூழலும் ஒரு கட்டடத்தின் இரு தூண்கள்" என "சூழல்" எனும் எண்ணக்கருவிற்கு அழுத்தம் கொடுக்கிறார். சமூகம் சார் தனியனது இயற்பண்புகள், அவனது நாளாந்த வாழ்வின் கட்டமைப்பு போன்றன அவன் வாழுகின்ற சூழலை அடிப்படையாகக் கொண்டதாக அமைகின்றது
என்கிறார் ஜகோடா(Jahoda, 1967) எனும் மற்றொரு அறிஞர்.
சமுக நிறுவனங்களை மக்கள் உருவாக்குகின்றனர், அதேவேளை அந்நிறுவனங்கள் மக்களை வெளிப்படுத்துகின்றன (People create social organization, Social organization recast people)
சமூக நியமங்கள் கடப்பாடுகள் ஒழுங்கு முறைகளில் சமூகம் சார் உளவியல் அக்கறை கொண்டுள்ளது தெரிந்ததே. மேற்படி சமூக அம்சங்களின் வரலாறானது சமூகநிறுவனங்களுடாக கிளர்ந்தெழுகின்ற விடத்து, சமூக நிறுவனங்கள், அவற்றின் வெளிப்பாடுகள், அவை சார்ந்த மக்களின் நடத்தைகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
Gasmoum'GusörsDIDeun Séssär &56osa (Needfor theoreticalpluralism)
சமூக விஞ்ஞான கற்கை நெறிகளிலே கோட்பாடுகளின் செல்வாக்கு மிக அதிகமானது. ஆனால் தனியே ஒரு கோட்பாடானது குறிப்பிட்ட ஒரு துறையின் அல்லது அணுகுமுறையின் ஆர்வம் முழுமையையும் உள்ளடக்கும் என கூறமுடியாது. மேற்றன்(Merton, 1948)எனும் சமூகவியலாளர், பல கோட்பாடுகளின் பிரயோகத்தை "விலகல் நடத்தை" எனும் அணுகுமுறைக்குள் உள்ளடக்குகின்றார். இந்த வகையில் சமூகம் சார் உளவியலானது தனியே ஓரிரு கோட்பாடுகளை மையப்படுத்தாமல், பல்வகைக் கோட்பாட்டு அணுகுமுறையின் தேவையை குறித்து நிற்கிறது.
upopold eleggypeppufeir eledrub (Necessity of systems approach)
சமூகம் சார் உளவியலானது, தனியே கிடைக்கின்ற தரவுகளைக்

Page 42
கொண்டு கருதுகோளை அமைப்பது அல்லாமல் கொண்டு செலுத்தப்படுகின்ற ஆய்வினை இன்னுமின்னுமாய் கடைந்தெடுப்பதாக காணப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. எனவே இங்கு முறைமை அணுகுமுறையின் கையாளுகை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. எடுத்துக்காட்டாக, தேசிய புள்ளி விபரப்படி, மத்தியதரவர்க்க பிள்ளைகளை விட தொழிலாளர் வர்க்கப்பிள்ளைகள் அதிகளவில் பாடசாலை இடைவிலகுகின்றனரெனில், சமூக வர்க்கத்திற்கும் - பாடசாலை இடைவிலகலுக்குமான தெடர்பினை ஒரு முறைமை அணுகு முறைக்கூடாக நோக்கின் அது சிறந்த முடிவினை கொண்டுவரும் என்பதனை இவ்வுளவியல் கூறி நிற்கிறது.
aFQpas obtielsö efQpu6u QGurr6 (Value-free in social research)
ஆய்வாளன் ஒருவன் ஏதோ ஒரு வகையான சமூகப்பண்பாட்டு விழுமியங்களினால் பிணைக்கப்பட்டுள்ளவனாக காணப்படுவான். இந்நிலையில் குறிப்பிட்ட சமூகத்தைப்பற்றிய அச்சமூகம் சார்ந்த ஆய்வானது ஆய்வின் முடிவானது பாராபட்சமற்றதாக காணப்பட வேண்டுமெனின், ஆய்வாளன் சுயாதீனமானவனாக, விழுமியங்களிலிருந்து விடுபட்டவனாக இருக்கவேண்டும். எனவே ஆய்வில் விழுமிய விடுபாட்டினை சமூகம் சார் உளவியல் முக்கியப்படுத்துகின்றது.
முடிவாக கூறுமிடத்து சமூகம் சார் உளவியலானது, சமூக உளவியலின் 905 U19LD6)i&id 6 (555 (Evolutionary Development) 6T6ig 8ingb6)Tib. தனியே சமூகம் சார் உள்ளார்ந்த நிகழ்வுகளை கருத்தில் கொள்ளாமல் வெளிப்புற நிகழ்வுகளின் அடிப்படையிலும் கூட சமூக விஞ்ஞான கற்றை நெறிகளுக்கு துணைபோகின்றது என்பது இங்கு உணரப்பட வேண்டிய ஒன்று. இந்நிலையில் சமூகவியலில், சமூகம் சார் உளவியலின் முகிழ்ச்சியானது, சமூக அடிப்படைகள் பற்றிய விவாதத்திற்கும், சமூக பிரச்சினைகள் பற்றிய தெளிவான விளக்கத்திற்கும், கோட்பாட்டு பிரயோகவியலின் நம்பகத்தன்மைக்கும் பெருந்துணையாகின்றதெனலாம்.
لاھوک

உசாத்துணைகள் Himmelweit & Coaskel (1998) - Societal Psychology, Sage Publication, New Delhi. Lazarsfeld, Sewell & Wilexisky (1973) The uses of Sociology, Inc Publisher, New York Ogburn & Nimkoff (1953) - A. Hand Book of Sociology, Routledge & Keganpaul Ltd;

Page 43
உளவியல் ஆய்வு முறைகள் Psychological Research method
விக்னேஸ்வரி இராமலிங்கம்
உலகப்புகழ் பெற்ற உளவியலாளர் ஒருவர் "எது எது நிலவுகின்றதோ அது ஒரு சில அளவுக்கு உட்படும் தன்மையுடன்தான் நிலவுகின்றது. அப்படி அளவுக்கு உட்படும் தன்மையில் நிலவுகின்ற எதுவும் அளந்து அறியக் கூடியனவே" எனக் குறிப்பிடுகின்றார். இந்த வகையில் மனித நடத்தைகளைப் பாதிக்கும் பல்வேறு காரணிகளை ஒவ்வொன்றாகத் தனிப்படுத்துவதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் எந்த ஒன்று இல்லாதபோது அல்லது எந்தக்காரணி செயற்படும் போது மனித நடத்தை மாறுபாடு அடைகின்றது என்பதை சமூக உளவியலாளர் கண்டறிந்தள்ளனர்.
ஆய்வு என்பது மெய்மையினைக் கண்டறியும் புலமைப் பயிற்சியாகக் காணப்படுகின்றது. விதிகள், சந்தர்ப்பங்கள், தோற்றப் பாடுகள், பண்புகள், அமைப்புக்கள், கூறுகள், அலகுகள் என்றவாறு எவற்றை அடியொற்றியும் ஆய்வுகளை அமைக்கலாம். மேலும் ஆய்வு என்பது தொடர்ச்சியான தேடலை முன்னெடுக்கின்றது. தேடில் தொடர்ச்சியாக இருப்பதனால் அதற்கு முடிவில்லை. அறிவின் எல்லைகளை ஆய்வுகள் முன்நோக்கி நகர்த்தியவண்ணமுள்ளன. முடிவில்லாத ஆய்வு பல்வேறு கிளைகளாகப் பிரிந்து இன்று வளர்ச்சியுற்று வருகின்றது.
பொது அறிவு, அனுபவ அறிவு போன்றவற்றில் உள்ள குறைகளைக்களையவே உளவியலில் முறைகள் தோற்றம் பெற்றன. உளவியலானது ஏனைய சமூகஅறிவியல் ஆய்வு முறைகளுடன் தனது ஆய்வு முறைகளை இசைவாக்கி பயன்படுத்துகின்றது. இவ்வகையில் உளவியலிலே பயன்படுத்தப்படும் ஆய்வு முறைகளாக அகநோக்கு முறை
(introspection), உற்றுநோக்கல் முறை, நேர்காணல் முறை, பரிசோதனை

முறை, தனியாள் வரலாற்று ஆய்வு, விருத்தி முறை, வினாக்கொத்துமுறை என்பன காணப்படுகின்றன. இவ் ஆய்வு முறைகள் ஒவ்வொன்றிலும் சிறப்பம்சங்களும், மட்டுப்படுத்தல்களும் காணப் படுகின்றன.
உளவியல் ஆய்வு முறைகளில் நாம் அகநோக்கு முறையினை முக்கியமாக மாற்றியமைத்தவர் EPTichener ஆவார். இம்முறையில் ஆராய்ச்சியாளனின் மனமே ஆய்வுகளமாகக் காணப்படுகின்றது. அகநோக்காளன் ஒருவனை ஆய்வுக்குட்படுத்துவதை மனதளவில் நோக்கி அவனின் இயல்பு, நடத்தை, செயல் அனைத்தையும் ஆய்வு செய்தலைக் குறிக்கும் பாரம்பரிய ஒரு முறையாக இது காணப்பட்ட போதிலும் இம்முறையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இம் முறையைக் கையாளுபவருடைய தனிச்சிறப்பு, அனுபவம், முதிர்ச்சி என்பன நோக்குவதற்குரியனவாகும். ஆய்வென்ற நிலையில் அமையும் போது கோபம், காதல் போன்ற குறிப்பிடத்தக்க உணர்வுகள் இல்லாமல் போகின்றது. இதுவோர் 9léᏏ6ᏂᎥᏓᏗ l1ᏝᎥᎢ 60Ꭲ ஆய்வுமுறையாகக் காணப்படுவதனால் ஆய்வாளர்கள் தமக்குள் ஏற்படும் LD6 உணர்ச்சிகளையும் எழுச்சிகளையுமே கண்டறிந்தனர். மேலும் தன்னையே ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஆய்வின் நிலை ஆய்வின் பெறுமானத் தைப் பாதிக்கவல்லதாக உள்ளது. இவ் ஆய்வுமுறையானது குழந்தை கள், விலங்குகள், பிறப்பு நடத்தையுடையவர்கள் பழங்குடிமக்கள் போன்றவர் களிடத்தில் பெரிதும் பயன்படுத்தமுடியாத தொன்றாகும். உற்றுநோக்கல் முறையினை நோக்குவோமாயின் மனித நடத்தைகளை உற்றுநோக்கி நடத்தைகளை ஆராய்ந்து அதன்வழி பிரச்சினைகளைத் தீர்க்க முயல்வது இம் முறையாகும். அமைப்புக்கள், விளையாட்டுக் குழுக்கள் போன்றவற்றின் நடத்தையை ஆராய இம் முறையே பெரிதும் உதவுகின்றது. உற்று நோக்கலில் ஒருவரது விருப்பு, வெறுப்பு நடுநிலையில் நின்று எந்த விதக் கொள்கைப் பற்றும் இல்லாமல் ஒரு நடத்தையினை உற்று ஆராயும் போது அதன் காரணிகள், இயல்புகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிய முடியும் உற்றுநோக்கல் முறையானது இரு வழிகளில் நோக்கப்படுகின்றது. 1. பங்கேற்பு அவதானம் 2. பங்குபெறா அவதானம்

Page 44
ஆய்வாளன் ஆய்வினை மேற்கொள்ளும் போது அவ் ஆய்வுக் களத்தில் தாமும் ஒருவராக இணைந்து ஆய்வினை மேற்கொள்ளுதல் பங்குபற்றல் அவதானமாகும். இது எல்லாச்சந்தர்ப்பத்திலும் பொருத்த மானதொரு ஆய்வுமுறையாக இருப்பதில்லை. உதாரணமாக விபச்சார விடுதியொன்றில் ஆய்வினை மேற்கொள்ளும் போது ஆய்வாளன் தானும் அதில் ஒரு அங்கத்தவனாக மாறுதல் சாத்தியப்படாது போகலாம்.
ஆய்வொன்றினை மேற்கொள்ளும் போது ஆய்வாளனாக மட்டும் இருந்து ஆய்வினை மேற்கொள்ளல் பங்குபற்றா அவதானமாகும். இங்கு சில சந்தர்ப்பங்களில் நாம் தகவல்களை தவறவிடலாம். ஏனெனில் ஆய்வுக்குட்படுத்துபவர் உண்மையான முழுத்தகவல்களையும் வெளிப்படுத்துவார் என்பது நிச்சயமற்றதாகும்.
நேர்காணல் முறையே நோக்குவோமாயின் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட சமூகநிகழ்ச்சியால் உறவுகொண்ட ஒவ்வொருவரையும் நேரடியாகக் கண்டு பேசி, நிகழ்ச்சிகளைப் பற்றிய உண்மைகளைப் பெறும் முறையே இதுவாகும். இம்முறையில் விபரங்களைச் சேகரிக்க முற்படும் போது வினா விடைகளின் வழி உண்மைகளை அறிவதைவிட செய்திகளை அளிப்போரின் பாவனைகள், பேச்சு, செயற்பாடுகள் மூலம் எளிதில் உண்மைநிலையை அறிந்த கொள்ள Tம். பொதுமக்கள் கருத்தைச் சேகரிப்பதற்கு இம்முறையே சாலச் சிறந்தது. பேட்டி காண்பவரின் அனுபவ முதிர்ச்சி பழகும் திறன், மொழிப்பயிற்சி பொறுமை முதலியன இம்முறையைக் கையாளுபவரின் பண்புகளாகக் காணப்படுகின்றன.
us(33 Ng560)6OT (p60p60)u (Experimental method) (8biTdisasoit உளவியலில் அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒரு முறையாக இது காணப்படுகின்றது. இயற்கை விஞ்ஞானம் போல் உளவியலிலும் பரிசோதனைகளை ஏற்பாடு செய்தல, நுணுக்கமாக அவதானம் செய்தல், தரவு சேகரித்தல், முடிவுகளைப்பற்றி அனுமானம் செய்தல், அவற்றைப் பரீட்சித்தல் போன்ற விஞ்ஞான முறைகள் கையாளப்படுகின்றன. இம்முறையில் இன்றுபல தொழில்நுட்ப முறைகள் கையாளப்படுகின்றன.

பரிசோதனை முறை முற்றிலும் புறவயமான (objective method) ஒரு ஆய்வு முறையாகும். அதாவது ஆய்வாளனுடைய சுய விருப்பு வெறுப்புக்களுக்கு பரிசோதனை முறையில் இடமில்லை. பரிசோதனை களைத் திட்டமிடல். பெறுபேறுகளைப் பதிவு செய்தல், துலங்கலைப் பதிவு செய்தல் என்பவற்றிலே ஆய்வாளன் தரப்பட்ட அளவுமுறையைப் பின்பற்றி நிற்க வேண்டுமேதவிர அளவீடுகளைக் குறைத்தோ கூட்டியோ எழுத முடியாது பரிசோதனை முறையில் அகவயப்பண்பை வலியுறுத்துவதற்காக எழுமாற்றாக்கல் அல்லது எழுந்தமானமாக்கல் (Randomisation) என்ற உபாயம் கையாளப்படுகின்றது. பரிசோதனை முறையின் அடுத்த அம்சம் கட்டுப்படுத்திய குழு, பரிசோதனைக்குழு என்ற நிலைகளில் ஆய்வை முன் எடுத்தலாகும். பரிசோதனை முறையில் கவனிக்கப்பட வேண்டிய பண்புகளாக சாத்தியப்பாடு (feasibility), பொருண்மை (significant), பயனுடைமை (utility), திட்ப நுட்பமான அளவிட்டுக் கருவிகளைப் JuJGirl (B5gg56), (measurment evaluation) LD5 (6, 6T60360Tisab(50566 என்பன காணப்படுகின்றன.
தனியாள் வரலாற்று ஆய்வு முறையை நோக்கின் (Case history method) இது தனிநபர் பற்றிய விரிவான ஆய்வாகும். குறிப்பாக பிறழ்வு நடத்தை உடையோர்களையும். மனநோயாளர்களையும் உளத்தடு மாற்றம் உடையவர்களையும் நோக்குவதற்கு உதவுவது தனியாள் வரலாற்று முறையாகும். சுயசரிதம் சிறைச்சாலை - நாட் குறிப்பேடு போன்றவற்றில் இருந்து தனியன்களைப்பற்றிய செய்தி சேகரிக்கப்படும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு மனித நடத்தைகளுடைய முரண்பாடுகளை பல்வேறு கோணங்களில் இருந்து பெறுதல் இலகுவாகின்றது. இத்தரவுகளின் ஊடாக நல்லதொரு ஆய்வாளன் பிரச்சினைக்கு மூலங்களையும் தீர்வுகளையும் எடுத்தாள்வது சாத்தியமாகும். ஒருவரின் பிறழ்வான நடத்தைக்குரிய காரணங்கள், ஒருவரின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் உரிய காரணிகள், ஒருவருக்கு எத்தகைய ஆற்றுப்படுத்தலை வழங்கலாம் என்பவற்றை அறிந்து கொள்வதற்கு இம்முறை பெரிதும்
பயன்படுகின்றது.

Page 45
விருத்தி முறையை நோக்கின் ஒரு மனிதனின் விருத்தியை சிறுபராயத்திலிருந்து உடல் நிலை, உளநிலை, மனவெழுச்சிநிலை என்ற பல்வேறு தளங்களில் நின்று ஆய்வு செய்தலைக் குறிக்கும். ஒருவர் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை அவரது விருத்தியை ஆராய்தல் நேர்கோட்டு ஆய்வு முறையாகும். ஒரே வயதிலுள்ள பலரை வைத்து ஆராய்தல் குறுக்குமுக ஆய்வாகும். ஒரு மனிதனின் விருத்தியில் சமூக பண்பாட்டு பொருளாதாரக் காரணிகள் பெரிதும் செல்வாக்கு செலுத்து கின்றன. எனவே சமூக பொருளாதாரக் காரணிகளை நோக்காது தனித்து ஒருவரது உடல் உள விருத்திகளை மட்டும் ஆய்வுக்கு எடுத்துக கொள்வது பொருத்தமற்றது. எனவே இம்முறை உளவியல் ஆய்வு முறைக ளிலே பொருத்தமற்ற தொன்றாகக் காணப்படுகின்றது.
வினாக்கொத்து முறையும் உளவியல் ஆய்வு முறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகக் காணப்படுகின்றது. பல்வேறு கோணங்களில் இருந்தும் வினாக்களைத் தயாரித்து அவற்றின் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் முறையாகும். வினாநிரலில் வினா நேரிடையானதாகவும் எளிதானதாகவும் இருத்தல் அவசியமானதாகும்.
இவற்றை விட உளவியலில் புள்ளி முறை, கனவுகளின் பகுப்பாய்வு, வாழ்க்கைச் சம்பவம் பதிவேடுகள், வரலாற்றியல் ஆய்வு, விபரண ஆய்வு, செயற்றொகுதி ஆய்வு போன்ற பல ஆய்வுகள் காணப்படுகின்றன. இவற்றைக் கொண்டு மேற்படி கருத்துக்களை தொகுத்து நோக்கும் போது உளவியலிலே பயன்படுத்தப்படும் இவ் ஆய்வு முறைகள் தனிநபர், சமூகம் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வழிசமைத்ததோடு மட்டுமல்லாமல் இத்துறைசார் வளர்ச்சிக்கு பல்வேறு வகையிலும் துணை புரிந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உசாத்துணை
Hayes, W(1 994)-Foundations of psychology, Newyork: Raledge Co.
κΩΣ

சமூக ஆய்வில் கணணி. ஓர் அறிமுகம் Computer in Social research - An Introdution
ஏ. அமுதினி
கணணிகள் பற்றிய அறிவும் அனுபவமும் இன்று வாழ்வின் அனைத்து புலங்களிலும் உணரப்படும். பின்னைத் தொழிற் சமூகத்தின் (Post industrial Society) முனைப்பான அம்சமாக கணணியின் பயன்பாடு வியாபிக்கும். இந்த வகையில் சமூகவியல் ஆய்விலும் அதன் துணை பல்வேறு வகைகளிலும் பயன்படும். இந்த வகைகளில் கணணி தொடர்பான இந்த அறிமுக குறிப்பு, ஆய்வு முறையியல் சார் கல்வி முக்கியத்துவத்தினை பெறுகின்றது.
Charles Babbage என்பவரைத் தனது தந்தையாகக் கொண்ட கணணியின் வரைவிலக்கணமானது பின்வருமாறு அமைகின்றது. அதாவது உள்ளிடு (Input) செய்யும் தரவுகளைத் தானாக ஏற்று அவற்றைச் சேமிப்பகத்தில் சேமித்து வைத்து, அவற்றை செய்முறைக்குட்படுத்தி அச்செய்முறையின் முடிவான தகவல்களைத் தானாகவே மின்சார்த் துடிப்புகள் மூலம் வழங்கக் கூடிய ஒரு இலத்திரனியல் கருவி என்று பொருள் கொள்ளப்படும். இயல்பு, இயலளவு, தேவை என்பவற்றின் அடிப்புடையில் கணனி சம்பந்தப்பட்ட பெளதீக இயந்திரசாதனங்கள் அனைத்தும் வன்தன்னி (Hard Ware) என்றும், கணனியில் செயற்பாட்டை மேற்கொள்வாதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை அல்லது விளக்கிய விபரங்களைக் கொண்ட திட்டங்கள் மென்தன்னி (Soft Ware) என்றும் கணணியை இயக்கவும், அதில் தொழிற்பாடுகளை மேற்கொள்ளவும் பொறுப்பான ஆளணியினரை உயிர்த்தன்னி (Life warel Human Ware) என்றும் அழைப்பர்.
கணணி முறைமையினை (Computer System) உருவாக்கும் அடிப்படை அம்சங்கள் ஐந்து காணப்படுகின்றன. அவை வருமாறு:
ΚΩΣ

Page 46
1. ) 6irofG (Input)
2. G616su (Output)
3. கட்டுப்பாட்டலகு (Controlunit) 4. 61605 d560oigt 35(555 ge6)g5 (Arithmetic & Logical Unit) 5. f60601635lb (Memory)
Input Unit H-> - * |Output Unit
Auxiliary Memory (External Memory
உள்ளிரு (InPut):-வெளியிலிருந்து கணகூக்கு கொடுக்கப்படும் தரவுகள்
66155s,1356it (data and instructions), D 6irstG எனப்படும்.
வெளியீடு (Output)- கணணிக்கு கொடுக்கப்பட்ட தரவுகளை
செயன்முறைக்குட்படுத்தி வெளிவரும் விளைவு வெளியீடு எனப்படும்.
உதாரணமாக இரு மாணவர்களின் புள்ளிகளின் அடிப்படையில் அவர்கள் தரத்தினை அறியும் போது கொடுக்கப்படும் புள்ளிகள் (உ-ம்: 85,50) உள்ளிடு என்றும் இத் தரவு கணணியில் செய்முறைக்குள்ளாகி வெளிவரும் தகவல் தரம் (AC) என்பது வெளியீடாக (Output) ஆக்கும்
«ΩΣ
திறன் கணணிக்கு உண்டு.

Data 85/50
PROCESS STORAGE
-> A/C
கட்டுப்பாட்டு அலகு நினைவகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தின் கட்டளைகளை முறைப்படி எடுத்து செயற்படுவதை கட்டுப்பாட்டு அலகு செய்கின்றது. அதாவது கணணியில் சகல தொழிற்பாடுகளையும் கட்டுப்படுத்தி வழிநடத்தும் பகுதி கட்டுப்பாட்டுப் பகுதியாகும்.
எண்கணித தருக்க அலகு. கணித தர்க்க ரீதியான செயற்பாடுகளைத் துரிதமாகக் கணிக்கும் அற்றலுடையது இதுவாகும்.
நினைவம் :- கணணியினுள்ளே அதன் மூளை என அழைக்கப்படும்
நினைவகமானது மேலும் இரண்டு வகைப்படும்.
1. Ram: Random Access Memory - gig blTib 35J656061T அழித்து, கழித்து புதிது புதிதாக எந்த அளவிலும் எப்போதும் எழுதலாம். 2. Rom-Read only memory- Srig56irst 6Luries606T B600T60furtso பெற்று உபயோகிக்க முடியும் அவற்றை அழிக்கவோ புதிதாக எழுதவோ (Լplջեւ IIT5l.
கணணியின் வேகமான செயற்பாட்டின் மூலம் ஒரு மனிதன் 10 மணித்தியாலங்களில் செய்து முடிக்கக் கூடிய வேலையை ஒரு நிமிடத்தில் செய்து முடிக்க முடியும். ஆய்வின் விபரங்கள் முழுவதையும் பெற்று அதிலுள்ள ஒவ்வொரு கட்டளைகளையும் தானாகவே செற்படுத்தி

Page 47
முடிக்கும் ஆற்றல் கணணிக்கு உண்டு. பல்வேறு தேவைகளுக்கு மாற்றிப் பாவிக்கக் கூடிய நெகிழ்தன்மை கொண்டிருக்கின்றன. தானாகவே உள்ளகப் பரிசோதனைகளை மேற்கொண்டு நம்பத்தகுந்ததும் சரியானதுமான தகவல்களை வெளியிடும் ஆற்றல் வாய்ந்தது. அதிவேகமான நினைவக ஆற்றலைக் கொண்டுள்ளமையும் கணணியின் சிறப்பம்சமாகும். சமூகவியல் ஆய்வுகளில் கணணி இடம் இன்று பிரதான இடத்தை வகிக்கின்றது.
சமூகவியல் ஆய்வாளன் தான் ஆய்வுக்களத்தில் பெற்றுக் கொண்ட தரவினை அட்டவணைப்படுத்தும் வசதிகள் கணணியில் உண்டு. ஏற்கனவே கணணியில் தொகுத்து வைக்கப்பட்டுள்ள ஆவணப்பதிவுகள் Work sheets 6Tau6 gigs) ugbg 216 ipsig File name Gd5TG5g) சேமித்து வைக்கக்கூடிய வசதிகள் கணணியில் உண்டு. எமக்கு தேவையான நேரத்தில் அதனை எடுத்து பார்க்கலாம். இவற்றை விட 'Hard disk, Floppy disk GLIT6ög36)ßßDYb g5J6)8560)6Mé GéFlÖäbg5. 606)lög5) பயன்படுத்தலாம். கணிதம், அறிவியல்துறை, இயற்கைக் காட்சி 660 Q60601ögh b6060ÜLä585(SPld CD Rom as6it (Compackt Disk Rom) தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் பலதரப்பட்ட ஆய்விற்கான தரவுகளைப் பெறலாம். 16 'nrk Sheet கொண்டது ஒரு Work book ஆகும். இவ்வாறான அமைப்பைக் கொண்ட தொகுப்பாக Ms-Excel காணப்படுகின்றது. இவற்றில் ஏராளமான விடயங்களை தயாரித்து சேமிக்க முடியும். சமூகவியலின் அளவு சார் பகுப்பாய்வுகளுக்கு Ms-Excel சிறந்த தொகுதியாகும். உதாரணமாக யாழ் மாவட்டத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு என்று எடுக்க வேண்டுமென்றால் சாதாரணமாக நாமாக மொத்தம் காணும் போது பிரிவுகள் ஏற்படலாம்.
இக்குறைகளை நிவர்த்தி செய்யும் விதமான பல செயற்பாடுகள் (Functions) Ms-Excel 65g)6i BIT600TLJG56örp60T. Sum 6igib Function மூலம் ஒரு நொடியில் மொத்தத்தை கணிக்கலாம். அது போல பெரிய தரவினை எடுப்பதற்கு max, சிறிய தரவினைக் கணிப்பிட min, ஒரு

எண்ணை இன்னுமொரு எண்ணால் பிரிக்கும் போது வரும் முறைகளை Div என்பதன் மூலமும், நேரான பெறுமானம் கணிக்க ABS சராசரி Average, நிலை- Rankபோன்ற பல Function பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக 2,3,4,4,547 ஆகிய தரவுகளின் ஆகாரம் காணவேண்டு மென்றால் Mode 6 gub Function Ju6tLIGib. கணணியில் type செய்த தரவில் ஏதாவது பிழையா? Cut எனும் கட்டளை மூலம் நீக்கலாம். குறிப்பிட்ட தரவினை வேறொரு இடத்தில் பதியவேண்டுமா? இதற்கு copy எனும் கட்டளை பயன்படுத்தலாம் copy செய்த தரவினை விரும்பிய இடத்தில் Paste செய்யலாம். பெறப்பட்ட தரவுகளை வரைபடமாக்குவதற் கான வசதிகளும் கணணியில் உண்டு. தரவுகளை பல நிறங்களைப் பயன்படுத்தி வேறுபடுத்தலாம்.
மேலும் ஒரு modem, ஒரு கணனி தொலைபேசித் தொடர் என்பன இருந்தால் இணைய (internet) தொடர்புகளை ஏற்படுத்தலாம். இதனால் உலகத்தில் எந்த மூலையுடனும் விரல் சொடுக்கும் நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். இணையம் ஊடாக ஏராளமான தகவல்களைப் பெற்று சமூகவியல் ஆய்வினை விருத்தி செய்யலாம். இணைய (வலைப்பின்னல்) என்பதனுள் இரண்டு விடயங்கள் அடங்குகின்றன.
1. LAN - (Local Area Network) 05 (5. Li'l 65uuj6)
பிரதேசத்தினுள்ளே ஏற்படுத்தப்படும் வலைப்பின்னல்.
2. WAN (Wide Area Net work) Lu6o 5T(Ba5(6L6OTT6OT 660d6d'IL î6őTGOT6id தொடர்பு. இவை மூலம் நாடுகளின் சமூக பொருளாதார கலாசாரத் தரவுகளை அறிந்து எமது நாட்டுடன் ஒப்பிட்டு ஆராய முடியும்.
இறுதியாக சமூக ஆய்வில் கணணியை பயன்படுத்தும் போது கணணிச் செயற்பாட்டின் வெற்றி, கணணித் தொழில் நுட்பத்தின் திறனைப் பூரணமாகப் பயன்படுதுவதிலும் அதன் சரியான செயற்பாட்டிலுமே தங்கியுள்ளது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
22تک

Page 48
கோட்பாடுகள்
தமிழகத்தில் சாதியமும் கருத்தியலும் Castism and Ideology in Tamilnadu
LID.56nhuugibjösof B.A. (Hons)
சாதிய ஒழிப்பு தொடர்பான போராட்டங்கள் 20ம் நூற்றாண்டின், ஆரம்ப மற்றும் மத்திய பகுதிகளில் தமிழகம், ஈழம் ஆகிய பகுதிகளில் முனைப்பான சமூகப் போராட்டங்களாக விளங்கின. தமிழகத்தை பொறுத்தவரையில் 1930, 40 களில் சாதிஒழிப்பு போராட்டமானது பெரியாரின் தலைமையில் தீவிரமடைந்து காணப்பட்டது. சாதிகளுக்கு அடிப்படையான பிராமணிய எதிர்ப்பும் அதனோடு சேர்ந்து பூனூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, ராமர்பட எரிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு, காந்திபட எரிப்பு, தேசியக் கொடி எரிப்பு, அரசியல் சட்டப் புத்தக எரிப்பு என பலவழிகளில் பெரியாரது சாதி ஒழிப்புப் போராட்டம் விரியும், பெரியாரது போராட்டங்கள் தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூட நம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறி வுவாத சிந்தனையை முன்வைத்து அதன் மூலம் தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பது பெரியாரின் போராட்ட அடிப்படை.
தமிழகத்தில் சாதி ஒழிப்பு, அனைவருக்கும் சமஉரிமை ஆகிய போராட்டங்கள் இரு தடங்களில் சென்றது.
1. பெரியாரியம் சார்ந்த கருத்தியல் 2. மாக்சிசம் சார்ந்த கருத்தியல்
தமிழகத்தில் பெரியாரது கருத்துக்கள் சாதிஒழிப்பில் பெற்ற செல்வாக்கை மாக்சிச வாதிகளால் பெறமுடியாமல் போய்விட்டது. பெரியாரது போராட்டமானது. பின்னர் கீழ் நிலையில் உள்ளவனது அந்தஸ்தை உயர்த்துவதற்கான கோட்டா முறையாக மாறியது. பெரியாரது இந்நிலைப்பாடு, இன்று தமிழகத்தில் சாதிரீதியான கட்சிகளின் தோற்றத்திற்கும், சாதிப் போராட்டங்கள் ஏற்படுவதற்கும் காரணமாகி விடுகின்ற தன்மையை காணக் கூடியதாக உள்ளது. தேசப்பற்று தமிழ்

பற்று, பகுத்தறிவு இயக்கம் எல்லாம் போய் சாதி என்ற மந்திரச் சொல்லே தமிழகத்தை இன்ற ஆட்டிப்படைக்கின்றது. சாதிஒழிப்பு, சமநீதி இவையாவும் சமூகசீர்திருத்தப் பிரச்சினைகள் என்ற நிலையிலிருந்து அரசியல் ஆயுதங்களாக மாறி விட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் சாதிஒழிப்புப் போராட்டங்கள் தோற்று விட்டனவா? என்ற கேள்வி இன்று எழுகின்றது. தமிழகத்திலிருந்து மாக்சிசவாதிகளின் போராட்ட வழிமுறைகளும், பெரியாரியத்தின் அணுகுமுறைகளும் ஒரு புள்ளியில் சந்தித்து இரண்டும் இணைந்து போராட்டப் பாதையை ஒரே திசையில் செலுத்தியிருந்தால் இன்று தமிழகத்தில் சாதிப்பிரிவுகள் இருந்திருக்க சாத்தியமில்லை. இன்று அல்துாசரின் விமர்சனங்களின் வழி இவ்விரு சிந்தனைப் போக்குகளையும் இணையவைத்து புதியதொரு தளத்தை உருவாக்கும் முயற்சிகள் தமிழகச் சூழலில் நடைபெறுகின்றன. இன்று தமிழகத்தில் தமிழ்தேசியம், தமிழ்தீவிரவாதம் என்ற கருத்தியல்களும் முன்வைக்கப்படுகின்றன. பெரியாரின் சிந்தனைவழி சாதிவேறுபாடுகள் அற்ற சுயமரியாதை உடைய தமிழ்சமூகத்தை உருவாக்குவதே இவ் அமைப்புக்களின் நோக்கமாகும்.
தமிழகத்தில் மாக்சியர்களை பொறுத்தவரையில் 1933 வரை பெரியாருடன் இணைந்து செயற்பட்டனர். அதன் பின் அவர்கள் பிரிந்துசென்று செயற்படவேண்டியநிலை ஏற்பட்டது. இவர்கள் தமிழன், தமிழ்மரபு, தமிழ்தேசியம் என்பனவற்றை விட இந்திய தேசியம் என்பதை பார்த்தார்கள். இதற்கும் ஒரு படிமேலே சென்று உலகளாவிய மனிதத்துவத்தை வலியுறுத்தினர். சாதி அமைப்பைப் புறம்தள்ளி, தொழிலாளர் என்ற வகையில் சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்களை வர்க்கரீதியில் அணிதிரட்ட முயன்றனர். இவ்வாறு அணிதிரளும் போது சாதிவேறுபாடுகளை மறுத்து ஒரு இலட்சியத்திற்காக அணிதிரண்டு போராடும் போது தொடர் போராட்டங்களின் வழி சாதி வேறுபாடுகள் ஒழிந்து சமத்துவமான சமூகம் ஒன்று மலர வழி ஏற்படும் என்று கூறினர்.
தமிழ்சமூகத்தின் சாதிஒழிப்பிற்கான போராட்ட வழிமுறை கருத்தியல்களின் வழி வேறுபட்டாலும் இவை தொடர்பான சாதகமான சில செயற்பாடுகள் அரசியல் அதிகாரத்தின் வழிதான் செய்ய முடிந்தது. பெரியாரைப் பொறுத்தவரையில் சமூகத்தை சிர்திருத்த நினைப்பவன் அரசியல் பதவிகளுக்கு போட்டியிடக் கூடாது என்பது அவரது நிலைப்பாடு.

Page 49
ஆனால் அரசியல் பதவிகளில் இருப்பவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். இதன் மூலம் சாதித்த முக்கிய விடயம், இடஒதுக்கீடு என்பதாகும். இந்து சமூக அமைப்பில் தாழ்த்தப்பட்டவர்கள் எத்துறையிலும் போட்டியிட்டு முன்னேற முடியாதநிலை இருந்தது. அனைவருக்கும் சமஉரிமை என்பதை பிராமணரும் உயர் வர்க்கத்தினருமே அனுபவிக்கின்றனர். சலுகைகள் பல பெற்ற வகுப்பினர்களாக இவர்களே உள்ளனர். இவர்களைப்போல ஏனைய வர்களும் சமூகத்தில் உயர் நிலை பெறவேண்டும் என்றால் ஒவ்வொரு வகுப்பாரும் முன்னேற வேண்டும் என்றார்.
பெரியார் 1921ல் நீதிக்கட்சி ஆட்சியில்இருந்தபோது 66% இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தார். 1928இல் முத்தையா முதலியார் அமைச்சராக இருந்தபோது 80% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தார். காங்கிரஸ் இதை எதிர்த்தாலும் பெரியாரின் பலத்த ஆதரவு காரணமாக இது நிறைவேற்றப்பட்டது. 1950 இல் சென்னை உயர்நீதி மன்றம் இடஒதுக்கீடு சட்டவிரோதமானது என கூறியது. இதற்கு எதிராக பெரியார் பலபோராட்டங்களை நடத்தியதின் வழி 1951இல் இது தொடர்பாக அரசியல் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. பெரியாரது போராட்டங்களின் பயனாக பெற்ற இட ஒதுக்கீடு இன்றுவரை தொடர்வதை நாங்கள் காணலாம்.
சாதியத்தை நிலைநிறுத்தும் பா. aய அடக்கு முறைகளிலிருந்து நிங்கி தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு தனித்தமிழ் நாடுதான் சிறந்த தீர்வு என்று கண்ட பெரியார். 1938ல் தமிழ்தேசியத்தை முன்வைத்தார். 1939 இல் தமிழ்நாடு தமிழருக்கே என்பதை மாற்றி திராவிடநாடு திராவிடர்க்கே என்றார். மொழிவழி மாநிலங்கள் பிரிந்ததன் பின்னர் 1972இல் மீண்டும் தமிழ்நாடு தமிழருக்கே என்றார். சாதி ஒழிப்பின் இன்னொரு வடிவமாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் 1971இல் பெரியாரின் வாரிசுகளான தி.மு.க வினால் சட்டசபைக்கு கொண்டு வரப்பட்டது. இது செல்லுபடியாகாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது.
DIT disdais கோட்பாட்டாளர்கள் வர்க்கபுரட்சி என்பதையே வலியுறுத்திவந்தனர். ஆனால் வர்க்கரீதியில் மக்களை பெரும் படையாக அணிதிரட்ட இவர்களால் முடியவில்லை. இவர்களுக்கு இருந்த

இன்னொருசிக்கல் வர்க்கப்பார்வையா? சாதிப்பார்வையா? என்பது.இவர்கள் மாக்சியத்தை அப்படியே உள்வாங்கி தமிழகச் சூழலில் பயன்படுத்த முனைந்தனர். தமிழக சாதியச்சிக்கல் சூழலை இவர்கள் கருத்தில் எடுக்கவில்லை. வரட்டுமாக்சிசத்தையும், ரஷ்ய உதாரணத்தையுமே இவர்கள் பின்பற்றிவந்தனர். சூழலில் பயன்படுத்த முனைந்தனர். தமிழக சாதியச்சிக்கல் சூழலை இவர்கள் கருத்தில் எடுக்கவில்லை.
மாக்சிச கருத்தியல்கள், பெரியாரிய கருத்தியல்கள் என்பனவற்றோடு இதன் ஒருகட்ட வளர்ச்சியாக தலித் அரசியல் என்பதையும் தமிழகச் சூழலில் காண்கின்றோம். இட ஒதுக்கீடு என்பதற்கும், தமிழ் தேசியத்திற்கும் இவர்கள் அதிக அழுத்தம் தருகின்றனர். இவர்களது எழுச்சியைக்கண்ட ஏனைய சாதிக்காரர்கள் இவர்களுக்கு எதிராக அமைப்புப்பெற்றுள்ளனர். இது தமிழகத்தில் சாதிச்சிக்கல்களை இறுகவைத்துள்ளது. தலித்களைப் பொறுத்தவரையில் ஈழதேசியத்தின் வழி, ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்ற எண்ணக் கருவையும் கொண்டுள்ளனர். இன்று தமிழகத்தில் பல்வேறு இயக்கங்களிற்குள்ளும் முரண்பாடுகள் உள்ளன. ஒருகோட்பாட்டைப் பின்பற்றுவனவற்றிற்குள்ளும் கூட பல்வேறு முரண்பாடுகள் தோன்றி பல்வேறு தளங்களில் செயற்படுகின்றன. இவர்கள் யாவரிலும் மக்கள் விடுதலை என்ற எண்ணக்கருவே அடிநாதமாக உள்ளது.
தமிழக சாதி ஒழிப்பு போராட்ட விடயத்தில் பெரியாரும், மாக்சியரும் பிரிந்தது பெரும் பின்னடைவாகும். இந்நிலையில் மாக்சிக இயக்கங்கள் பல மாக்சிச விமர்சனங்களை உள்வாங்கி தம்மை மாற்றியமைத்துக் கொண்டன. அதே போல பெரியாரிய அமைப்புக்களும் மாக்சிச கூறுகளை உள்வாங்கி அமைப்புரீதியாக செயற்படுகின்ற நிலமை ஏற்பட்டுள்ளது. அல்துசரின் மாக்சிசம் தொடர்பான விமர்சனங்களும், புதிய தேடல்களும் தமிழக மாக்சிச, பெரியாரியக்க தளங்களில் பல்வேறு விதங்களில் செயற்படுகின்றன.
DTë fletë கோட்பாட்டின்வழி சமூக அடிக்கட்டுமானம் மாறினால்தான் மேற்கட்டுமானம் மாறும் என்றார்கள். இதன் மூலம் புதிய சமூக உறவுகள் உண்டாகும் என்றார்கள். இந்திய சமூகம் பிறப்பிலேயே அடிமை முறையைக் கொண்ட சமூகமாகும். இதனை தகர்ப்பது மிகவும் கடினமான விடயமாகும். பெரியார் அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் என்ற

Page 50
நிலைகளை ஏற்றுக்கொள்ளர்மல் சமூக அந்தஸ்திற்கு அழுத்தம் தந்து செயற்பட்டார். இத் ஒவ்வ்ோரு வகுப்பாரையும் முன்னேற்றும் என நம்பினார். இது ஒடுக்கப்பட்ட சாதிகள் அரசியல் நிலையில் தம்மை உணர பயன்பட்டது. பல சுருக்குகளைக் கொண்ட சாதிய அமைப்பில் சாதியை ஒழிக்க இது எந்த வகையிலும் பயன்படவில்லை. அதேவேளை, சாதிகள் அரசியல் முக்கியம் பெறவே வழிவகுத்தது.
இன்று மாக்சிய லெனினிய அமைப்புக்களும் சரி, திராவிடர் இயக்கங்களும் சரி ஓரணியில் இல்லை. திராவிடர் இயக்கங்களின் செயற்களம் தமிழகத்துடனேயே இருந்தது. ஏனைய திராவிட மொழிக் குடும்பங்களுக்கு பரவவில்லை. மாக்சிசத்தை பொறுத்தவரையில் இது பெருமளவு மேலைத்தேய சூழலை உள்வாங்கியுள்ளது. இந்திய தமிழக சூழலுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றத்தவறியது. மேலும் தமிழ் தேசியம் என்பதில் மாக்சியர்களுக்கு உடன்பாடு இல்லை. இவ்வாறு பார்ப்பது குறுகிய பார்வை என்று கூறினர். உலக மனிதனை முன்வைப்பதே இவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றங்களை மாக்சிசம் உடனுக்குடன் உள்வாங்கவில்லை வளர்ச்சி குன்றி அது சுருங்கத் தொடங்கிவிட்டது.
ஒட்டு மொத்தத்தில் இவர்கள் கோட்பாட்டுரீதியில் பல்வேறு பக்கம் பிரிந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஓரணியில் திரட்டி செயற்படவைப்பது முக்கியமாகும். இவர்கள் இருவரதும் சிந்தனைகளை ஒன்று திரட்டி மாக்சியத்தில் பெரியாரையும, பெரியாரில் மாக்சிசத்தையும் கண்டு பொருத்தமான முறையில் கருத்தியல் இசைவு காண்பதே சாதிய கொடுமையின் முடிவுக்கு வழி என்பதே இன்றைய சமூக ஆய்வுகள் உணர்த்தும் உண்மை எனலாம்.
உசாத்துணைகள் கருணா மனோகரன் (1995) திராவிடத்தால் வீழ்ந்தோமா? சாதியத்தால் வீழ்ந்தோமா? சமூகநீதி பதிப்பகம், திருப்பூர்
அம்பேத்கர் (1993) - தாழ்த்தப்பட்டோரும் இந்துக்களும், சமூகநீதி பதிப்பகம், திருப்பூர்.

புலனறிவாதமும், தோற்றப்பாட்டியலும்
. ஓர் ஒப்பியல் நோக்கு POSITIVISMAND PHENOMENOLOGY
- A Comparative perspective
s.sr.gsfäFCBFŮ B.A (Hons)
சமூகவியல் கோட்பாட்டு மரபென்பது காலத்திற்கு காலம் வேறுபடும் முறையியல் அடிப்படைகளை உள்ளடக்கும். இம்முறையியல் 于Tf அடிப்படைகளையும், வகைமாதிரிகளையும் பகுப்பாய்வு செய்வதென்பது காத்திரமானது. இவ்வாய்வணுகுமுறைகள் இத்துறையில் இருந்துவரும் பெரும் விவாதங்களின் அடிப்படையில் எடுத்தாராயப்படு கின்றன. அதாவது மனிதனையும், சமூகத்தையும் பற்றிய ஆய்வில் புலனறிவாத/நேர்க்காட்சிவாத அணுகுமுறைக்கெதிராக தோற்றப்பாட்டியல் அணுகுமுறை இன்று அறிமுகமாகும். சற்று விரிவாகக் குறிப்பிட்டால் புறவயத்தன்மைக்கெதிரான அகவயத்தன்மை நோக்காகும் (Objectivity VSSUS subjectivity). நவகால சமூகவியல் கோட்பாட்டு மரபென்பது இவ்வாய்வணுகுமுறைகளை வேறுபடும் நோக்கு நிலைகளில் குறிப்பாக, bj60irbó06),(micro) இடைநிலை, (meso) பருநிலை (macro) சமூக பகுப்பாய்வுகளாய் வளர்த்தெடுப்பதாகவும், அவற்றினை இணைத்துருவாக்கு
65T356b (Synthesize) si6OLDuib.(Rob, 1998)
இக்கட்டுரையானது சமூகவியலில் இன்று G3Lu&F' Lu (6 Lb சமூகப்பகுப்பாய்விற்கான அடிப்படைகளை பிரதான சமூகவியல் சட்டகங்களின் வழி (Sociological Paradigms) தெளிவாக்குவதாக அமைகின்றது.
LoGo Sarabib pipelagigspapuras:(Positivism as a perspectives)
கால மாற்றத்தின்போது புதிய அனுபவச் செய்திகள் வெளிச்சத்திற்கு வருகின்றது. புதிய, புதிய கருத்துக்கள் உருவாகின்றன. விஞ்ஞான

Page 51
உளம்கொள்பாங்கு விருத்தியடைகின்றது. கூடவே அறிவின் கிளைகளும் வளர்ச்சியடையும். சிந்தனைகளின் வேறுபடும் குழுமங்கள் உதயமாகும். காலமாற்றத்துடன் அறிவின் புதிய பல கிளைகள் தோன்றும் அறிவின் குறிப்பிடத்தக்க குழுமமாக புலனறிவாதம்/நேர்க்காட்சி வாதம் முகிழ்க்கும். இதுவே சமூகவியலின் அடிப்படைக்கு காலாகிய முதற்குழுமம் எனலாம். (Das. 1993).
9iserbph Glasmübsi (Auguste Comte - 1798-1857)
சமூகவியல் எனும் சொல்லை முதன்முதலில் அறிமுகம் செய்தவர் அகஸ்கொம்ற். இத்துறையின் ஸ்தாபகரும் இவரே. இதன் வழி இரசாயனம், உயிரியல் போன்ற இயற்கை விஞ்ஞானங்களின் முறையியல்களையும், அடிப்படைகளையும் பயன்படுத்தி ஒரு சமூக விஞ்ஞானத்தை அமைக்க முடியுமெனக் கருதினார். மேலும் சமூகத்தின் படிமலர்ச்சி மாறாத சில விதிகளுக்கமைந்திருந்தது.
"சமூக விஞ்ஞானத்தில், பெளதீக விஞ்ஞானப் படிமுறைகளைப் புகுத்தி, அனுபவரீதியான தரவுகளின் வழி சமூகத்தின் நடைமுறைகளை ஆராய முடியும் என்ற நே'கே புலனறிவாதம் அல்லது நேர்க்காட்சிவாதம் ஆகும்.~ கொம்ற்
இவ்விதியானது சமூக உலகம் பற்றிய கோட்பாட்டு உருவாக்கத்திலிருந்தும், அதன்மேல் மேற்கொள்ளப்படும் ஆய்விலிருந்தும் தருவிக்கப்படுவதாய் அமைகின்றது. ஆய்வென்பது அனுபவத்தால் பெறப்படும் ஆய்வாய் அமைய வேண்டுமென்கின்றார். இங்கு ஆய்வினையும், அதன்வழி பெறப்படும் கோட்பாட்டு உருவாக்கத்தின் முக்கியத்துவத் தையும் அவர் அழுத்துகின்றார். மேலும் இவர் சமூகவியலுக்குரிய நான்கு அடிப்படை முறையியல்களையும் முன்வைத்துள்ளார். அவையாவன: அவதானம், பரிசோதனைமுறை, ஒப்பீட்டாய்வு, வரலாற்றியல் ஆய்வு என்பவாகும். இன் நான்குவகை முறையியல்களும் யதார்த்த சமூக

உலகின், அனுபவவழி அறிவினை பெறுவதற்கான சமூக ஆய்வுமுறையியல் வழிமுறைகளாகும் என்பார். மேலும் புலனறிவாத விஞ்ஞானங்களை வகைப்படுத்திய விதமும் இங்கு குறிப்பிடத்தக்கது 6I6OT6v)ITüb.(Haralambos, 1992)
புலனறிவாத/ நேர்க்காட்சிவாத நோக்கின் பிரதான அடிப்படைகள்:
(The Basic Assumptions of Positivism)
சமூகவியலைப் பொறுத்தமட்டில் புலனறிவாத அணுகுமுறை
பின்வரும் அடிப்படைகளைக் கொண்டது.
O இயற்கை விஞ்ஞானத்தின் ஆய்வுப்பொருளான சடப்பொருட்களின் நடத்தைகள் எவ்வாறு மாறுபடாதிருக்கின்றனவோ, அவ்வாறே மனிதனுடைய நடத்தையும் காரண-காரிய விதிகளினால் (Principles ofcauseandeffect)ஆளப்படுவதென இது காட்டும்.
O சடப்பொருட்களின் நடத்தையைப் போல் மனித நடத்தையும், புறவயரீதியில் அளக்க முடியும் என்பதாகும். அதாவது சடப்பொருட்களின் நடத்தை நிறை, வெப்பம், அமுக்கம் போன்ற அளவீடுகளால் அளக்கப்படுவதுபோல், மனித நடத்தையையும் அளவிட முறையியல்களை கண்டுகொள்ள முடியும் என்பதாகும்.
O புலனறிவாத நோக்கு நேரடியாக அவதானிக்கப்படக்கூடிய நடத்தைக்கும் உண்மைகட்கும் குறிப்பாக முக்கியத்துவம் அளிக்கின்றது. அவதானிக்கப்பட்ட நடத்தையை விளக்க, அதன்பின் கோட்பாடுகள் உண்டாக்கப்படலாம்.
O அவதானிக்க முடியாத அர்த்தங்கள், உணர்வுகள், நோக்கங்கள் (meanings, Feelings, Purposes) sašu BITU600 isding 356i முக்கியமானவையல்ல, அவை பிழையான வழியில் இட்டுச் செல்லலாம் என நியாயம் கற்பிக்கின்றது.
O சடப்பொருட்களுக்கு அர்த்தமும், நோக்கமும் இல்லாதபடியால் இயற்கை விஞ்ஞானிகள் அவற்றை ஆராய்வதில்லை. குறிப்பாய் அணுக்களும், அணுத்திரண்மங்களும் (Atoms and Molecules) அர்த்தத்துக்கமைய செயற்படுவதில்லை. புறத்தூண்டிகளின்

Page 52
தாக்கத்துக்கமையவே செயற்படுகின்றன. ஒரு புறத்தூண்டியாகிய வெப்பம், சடப்பொருட்களுக்குள் செலுத்தப் பட்டால் சடப்பொருள் தாக்கமடையும். இயற்கை விஞ்ஞானிகளின் பணி இத்தாக்கத்தை அவதானித்து, அளந்து, பின்னர் விளக்குவது ஆகும்.
O புலனறிவாதிகளின் நோக்கும், மேலே கூறப்பட்ட ஒரு நியாயத்தையே காட்டும், மனிதர் புறத்தூண்டிகளால் தாக்கமடைகின்றார்கள். இத்தாக்கத்தின் அடிப்படையில் அவர்களின் நடத்தையை
விளக்கலாம் என்பாகும்.(May 1996)
புலனறிவாதமும், முறைமைக்கோட்பாடுகளும் (Positivism and Systems Theory)
சமூகவியலில் முறைமைக்கோட்பாடு காத்திரமானது. இவை புலனறிவாத அணுகுமுறையைக் கைக்கொள்கின்றது. 'மாக்ஸிசம்' புலனறிவாத அணுகுமுறையாக பல சமயங்களில் கருதப்படுகின்றது. ஏனெனில் பொருளாதார அடிக்கட்டுமான அமைப்பின் தூண்டுதலால் ஏற்படும் தாக்கமே மனிதநடத்தை என அது கருதுகின்றது. பின்வரும் காட்டுரு இதனை தெளிவுபடுத்தும்:
சமுகம் தொடர்பான மார்க்ஸின் காட்டுரு.
வரைபடத்தின் பிரகாரம்; பொருளாதார : 919g556Tib (Economic Base) Fepa5 அடிக்கட்டுமானத்தினுள் பிரதான மானது. அதன்வழி மனித உறவுநிலை தீர்மானிக்கப்படுகின்றது. இவ்உறவின் வழி உண்டாகும் சமூகவிசைதான் சமூக மேற்கட்டுமானத்தின் மேம்பாட் டுக்கு அடிப்படையாகின்றது. அதாவது
@一ü」幽塑 母 கீழ்இருந்து மேல்நோக்கிய சமூக
மாற்றம் இங்கு வாய்க்கப் பெறுகின்றது.
பொருளாதார அடித்தளம்
epsold Cutt, and Payne,1984.
சமூக மேற்கட்டுமானம்
 
 
 
 

செயற்பாட்டில் வாதம் அல்லது "உடன்பாட்டு அணுகுமுறை" (Consensus approach) இதே விதமாகவே நோக்கப்பட்டுள்ளது. சமூக அங்கத்தவர்களின் நடத்தை என்பது சமூக அமைப்பின் செயற்பாட்டு முன்தேவைப்பாட்டினால் (Functionalprerequisites) ஏற்படும் விளைவு எனக் கருதப்படலாம். முறைமைக் கோட்பாடுகள் பற்றிய இத்தகைய நோக்குகள் சிக்கலான கோட்பாடுகளை ஓரளவு அளவுமீறி எளிமைப்படுத்துவது போல் தோன்றுகின்றன. ஆயினும் முறைமைக் கோட்பாடுகள், புலனறிவாதத்திற்கு மிகவும் அண்மித்ததோர் கோட்பாடு என்றே கூறமுடியும் (Turner, 1974).
சமுகவியலில் தோற்றப்பாட்டியல் நோக்கு
(Phenomenological perspectives in Sociology)
சமூகவியலில் தோற்றப்பாட்டியல் நோக்கானது புலனறிவாத அடிப்படைகள் யாவற்றையும் புறக்கணிக்கின்றது. சமூகவிஞ்ஞானத் தினதும், இயற்கை விஞ்ஞானத்தினதும் விடயங்கள் அடிப்படையில் வித்தியாசமானவை என்று கூறுகின்றனர். இதனால் இயற்கை விஞ்ஞான முறையியல்களும், அடிப்படைகளும் மனிதனைப் பற்றிய ஆய்வில் பொருத்தமற்றவை எனலாம். மேலும் சடப்பொருள் உணர்வில்லாமலே புறத்தூண்டியால் தாக்கமுறுகிறது. இதனால் இயற்கை விஞ்ஞானி அதனை விளக்குவதற்காக அதனை அவதானிக்கவும், அளவிடவும், வெளியிலிருந்து ஒரு தருக்க முறையை அதன் மீது சுமத்தவும் முடிகிறது. சடப்பொருளின் உணர்வு பற்றிய உள்ளார்ந்த தருக்கமுறையை ஆராய வேண்டிய அவசியம் அவருக்கில்லை.
சடப்பொருட்களைப் போலல்லாது மனிதனிடம் உணர்வுண்டு, நினைவுகள், உணர்வுகள், அர்த்தங்கள், நோக்கங்கள், உயிர்வாழும் உணர்வு என்பன உள்ளன. இதன் காரணமாக அவனது செயற்பாடுகள் அர்த்தமுள்ளவை. மேலும் சந்தர்ப்பங்களின் தன்மையறிந்து தனது செயற்பாடுகட்கும் பிறரின் செயற்பாடுகட்கும் அர்த்தம் கொடுக்கின்றான்.
(Paul Johnson, 1981)

Page 53
இதன் விளைவாக அவன் வெறுமனே புறத்தூண்டிகளால் தாக்கமுறுவதில்லை. அவன் நடந்து கொள்வது மட்டுமல்ல, அவன் செயற்படுகின்றான்.
பண்பாட்டு மானுடவியல்சார் நோக்குகளில், குறிப்பாய் தொன்மைக்
குடிகளின் வாழ்வியலில்; எரிமலை, வெப்பம் போன்றவற்றினால் ஏற்படும் தியைக் கண்டு எவ்வாறு நடந்து கொண்டிருப்பான்? வெப்பத்தை உணர்ந்தவன் எப்போதும் ஒரேவிதமாய் நடந்து கொள்ளவில்லை. அதற்கு அவன் எத்தனையோ அர்த்தங்களைக் கொடுத்தான். இவ் அர்த்தங்கள் அவன் செயலை நெறிப்படுத்தியது. உதாரணமாக: நெருப்பை வெப்பத்திற்கு காரணமாய்க் கண்டு தன் இருப்பிடத்தை குளிர்போக்கப் பயன்படுத்தினான், அதனை பாதுகாப்பாய்க் கருதி காட்டு விலங்குகளைத் துரத்தப்பயன்படுத்தினான். الزنك பண்டங்களின் பண்பை மாற்றுகிறதெனக் கண்டு உணவைச்சமைக்கவும், மரஈட்டிகளின் கூரைக் கடினப்படுத்தவும் பயன்படுத்தினான்.
இம்மனிதன் நெருப்புக்கு எதிர்ச்செயலாற்றவில்லை. அவன் அதற்கு கொடுக்கும் அர்த்தங்களுக்கமைய அதன்மீது செயலாற்றுகின்றான்.
(Kottak, 1997).
மேலும் வெறுமனே வெளியிலிருந்து செயற்பாட்டை அவதானித்து வெளித்தருக்க முறையை அதன்மீது பயன்படுத்த (ԼplգԱIT5l. செயற்படுவோனின் செயற்பாடுகளை நெறிப்படுத்தும் உள்ளார்ந்த தருக்க முறையை அவன் விளங்கிக் கொள்ளவேண்டும். அகவய அர்த்தங்களால் செயற்பாடு நிகழ்வதாயின் அச்செயலை விளங்கிக்கொள்ள சமூகவியலாளன் அவ்வர்த்தங்களைக் கண்டு பிடிக்கவேண்டும்.
இந்தவகையில் தொல்சீர் சமூகவியலாளரான மக்ஸ்வெபரின் பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கதெனலாம். பருநிலைசார் சமூகவியலை
(Macro sociology), (bj60örbo6) felp3565uj6) (Micro sociology)

ஆய்வணுகுமுறைகளின் வழி வளர்த்தெடுத்த பெருமை இவரைச்சாரும். இவர் முன்வைத்த முறையியல்கள் சமூகவியலில் இன்றும் முதன்மை
Qugtb. (Ritzer, 1992).
மக்ஸ்வெபரின் முறையியல் (1864 - 1920)
(Max Weber's methodology)
தோற்றப்பாட்டியல் நோக்கினை விபரமாகக் கோடிட்டுக் காட்டிய சமூகவியலாளர்களுள் முக்கியமானவர் மக்ஸ்வெபர். இவரின் Gafujibur' 1966, Fepas6 u6) 66Tisassiss6it (Sociological Explanation of
Action), "செயற்படுவோரின் அகவய உள்ளார்ந்த மனநிலையை அவதானித்து கோட்பாடு சார்ந்த பொருள் விளக்கம் காண்பதோடு தொடங்க வேண்டும் என்று கூறுகிறார். மக்ஸ் வெபரின் பிரதான முறையியல் அடிப்படைகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
Diffsagsirpson-(Verstehen method)
ஒரு நோக்கத்தின் அடிப்படையில் அல்லது பகுத்தறிவிற்கு இயைந்த வகையில், ஓர் இலட்சிய நடவடிக்கையின் உதவியுடன், "குறைவிலா நிறைவுடை முழுமை விளக்கம்" அல்லது "உள்ளதை உள்ளவாறு கூறும் விதம்" என்ற முறையினால் விளக்கம் அளிக்கப்படுகின்ற அனுமானம் அல்லது புள்ளியல் பொதுமைகளின் சேர்க்கையே சமூகவியல்
(p6oogpupTg5b (Gisbert, 1964)
காரணகாரியத்தொடர்பு (Causality)
வெபரின் காரணகாரியத்தன்மை (1968) கருதுவது யாதெனில், ஒரு
நிகழ்வுக்கான நிகழ்தகவு என்பது, அன்நிகழ்வுக்கு இன்னோர் நிகழ்வு
அடிப்படையாக அமையும் என்பதனைக் குறிக்கும்.
d-35TJ600TLDITEs:
Xஎன்பது நிகழுமாயின் y என்பதும் நிகழ்வதற்கான சாத்தியம் உண்டு

Page 54
MualGros (Ideal types)
வெபரின் முறையியல்களுள் இலட்சிய வகையும் ஒன்று. சமூகவியலாளரின் பொறுப்புணர்வென்பது இவ்வாறான எண்ணக்கரு சார் கருவிகளை விருத்தியாக்குவதென்பதாகும். மேலும் பகுப்பாய்வுக்கான ஒரு உளஏற்பாடு எனலாம். ஒத்த, வேறுபட்ட தன்மைகளை உறுதியாக அளக்கும் அளவுகோலாக இது அமைகின்றது. இவ்வாறான காத்திரமான எண்ணக்கரு சார் கருவிகள் "இலட்சியவகை" எனப்படுகின்றது.
Gifuguðu BG6aDao (Value neutrality)
"விழுமியங்களிலிருந்து விடுபடல்" என்பது காத்திரமானது. ஆய்வாளனின் விருப்பார்வ சிந்தனைக்குள் கட்டுப்படாத நிலையில் உண்மைகளைக் காண்பதே அவர்நோக்கமாகும். ஒரு பிரச்சினையை தேர்கையில் ஆய்வாளர் நடுநிலையாளராக இருக்கவேண்டும். சமூக விஞ்ஞானிகள் எப்போதும் உண்மை வழுவாது நேர்மையாக, ஆய்வின் உயர்கோட்பாடுகளில் உறுதியாக இருக்கவேண்டும். உண்மையை திரிபுபடுத்தும் தம் உணர்வுகளை மறுப்பதுடன், புறத்திலிருந்து வரக்கூடிய அழுத்தங்களையும் தடுப்பவராக ஆய்வாளர் அமைய வேண்டும் என்கின்றார்
G6juj (Fletcher, 1971):
இடைவினைக்கோட்பாடு இதே போன்று ஒரு அணுகுமுறையைக் கையாண்டு இடைவினை செயற்பாட்டுக்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கின்றது. புலனறிவாதிகள் உண்மைகள் . காரணகாரிய உறவுகளுக்கு அழுத்தம் கொருக்க இடைவினையாளர்கள், உள்நோக்குக்கும், விளக்கத்திற்கும் அழுத்தம் கொருப்பர்.
தோற்றப்பாட்டியல் நோக்கானது அல்பிரட் ஸ்குட்ஸின் (Alfred schutz - 1899/1959) முக்கிய பணிகளுடன் சமூகவியலில் இடம்பெறும். குறிப்பாய் Lisi GT36) 6 (bib Lipsi(Susly, (35TLD6ft 605LD6ir (Peter Berger and Thomas Luckmann) போன்றோரின் ஆய்வுகளுடன் இன்நோக்குநிலை g56flá dpulp Gugjib. (56tLITui social construction of Reality, (1966)

எனும் நூலின் வழி சமூகக்கட்டமைப்பு, சமூக செயல் ஆகிய, கோட்பாட்டின்
இரு
கூறுகளையும் இணைக்கும் பணி இடம்பெறும். இதன்வழி,
சமூகவியலில் இன்று முதன்மை பெறும் இனவகை முறையியல் குழுமம்
(School of ethnomethodology)66Ty 6.55L6OTf 6T60TGomb.
தோற்றப்பாட்டியல் நோக்குநிலையின் பிரதான அடிப்படைகளை
பின்வருமாறுவகைப்படுத்தலாம்:
நாளாந்த வாழ்வு பற்றிய விபரிப்பும், பகுப்பாய்வும் தான் இதன் பிரதான இலக்குகளாய் அமையும். நாளாந்த அறிவு எப்போதும் வகைப்பாட்டினால் (Typification) பண்புப்படுத்தப்படுகின்றது. நடைமுறைப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஏற்றவகையில் இவை நெறிப்படுத்தப்பட்டுள்ளன. பொதுப்புலன் உணர்வு (Commonsense knowledge), பொருள் விளக்கம் (Interpretation) என்பன தோற்றப்பாட்டியலின் பிரதான sellguusoL56i 6T60Tsuito.(Marshall, 1998)
திறனாய்வு
தோற்றப்பாட்டியல் நோக்கில் செயற்படுவோனின் சிந்தையுள் செல்ல முடியாததாகையால் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதற்கு பொருள் விளக்கத்தையும், உள்ளுணர்வையுமே அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
புறநிலையிலிருந்து அளவிடுவது சாத்தியமற்றதாயும், இயற்கை விஞ்ஞானங்களின் சரிநுட்ப அளவும் இங்கு சாத்தியமாகாது எனலாம். தொடர்ந்து நடைபெறும் இடைவினை செயற்பாடுகளில் அர்த்தங்கள் சதாமாறிக்கொண்டிருப்பதனால் எளிமையான காரணகாரியத் தொடர்புகளை நிறுவுவது சாத்தியமல்ல. ஆகவே சில சமூகவியலாளர்கள் சமூகச் செயலின் பொருள்விளக்கத்திற் குட்பட்டது தான் சமூகவியல் என்றும், தோற்றப்பாட்டியல் அணுகுமுறை சிலசமயங்களில் பொருள் விளக்க ச so"
(Interpretive Sociology) என்றும் குறிப்பிடப்படுகின்றது.

Page 55
o எத்தனையோ சமூகவியலாளர்கள் புலனறிவாத நோக்கு சமூகவாழ்வு பற்றி திரிபுபட்ட ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறுவர். வெளித்தூண்டுதலுக்கு அமைய சுயமுயற்சியில்லாமல் இயங்கும் ஒருவனாக மனிதனைக் காட்டப் பார்க்கிறதென்றும், தனது சொந்த சமூகத்தைப் படைக்க ஆற்றலுடன் செயற்படும் ஒருவனாக அவனைக் காட்டவில்லையென்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
o சில சமூகவியலாளர்கள் முக்கியமாக "பொருள் விளக்கக் காட்சியினர்" (Interpretationalists) நேர்க்காட்சிவாதக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சில அறிஞர்கள் முற்று முழுவதுமாக இதனை நிராகரித்துள்ளனர். வேறு சிலர் இதனை சில அழுத்தம் திருத்தங்களுடன் உள்வாங்கிக் கொண்டுள்ளனர். இருப்பினும் இவ்வணுகுமுறை சமூகவியலில் இருந்து முற்றுமுழுவதுமாய் மறைந்து போகவில்லை. மாறாக இன்னும் இக்கோட்பாட்டினை பின்னைப்புலனறிவாத சூழமைவில் (the Context
of Post-positivism) felps6 usi) is60iiGQassrsitépg). (Bottomore,
1957).
O பொருளாதார அடிக்கட்டுமானம், சமூக முறைமைகளின் தேவை
போன்ற பல்வேறு சக்திகள், அழுத்தங்களுக்கமைய நடந்து கொள்பனவாகக் மனிதன் காட்டப்படுகின்றான்.
பீற்றர்பேர்கர், "சமூகமானது ஒரு பொம்மலாட்டம் போலவும், அதன் அங்கத்தவர்கள் கண்ணுக்குத் தெரியாத நூல்களில் துள்ளி ஆடிக்கொண்டு தமக்குக் கொடுக்கப்பட்ட பாகங்களை சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கும் பொம்மைகளைப் போலும் கருதப்படுவதாகக் கூறுவார்.
மேலும் சமூகம், விழுமியங்களையும், நியமங்களையும், நடிபங்குகளையும் ஊட்டுகின்றது. மனிதர் நூல் &ւլգա பொம்மைகளைப்போல் அவற்றின் படி நடக்கின்றனர். தோற்றப்
பாட்டியலின் படி, மனிதன் தனக்கு வெளியேயுள்ள சமூக நியதிகளுக்கு எதிர்ச்செயல் காட்டிக்கொண்டும், அதன்படி நடந்து கொண்டும்

இருக்கவில்லை. அவன் நடத்தப்படுவது மாத்திரமல்ல, அவன் நடத்துகின்றான். பிறருடன் இடைவினை கொள்ளும்போது அவன் தனது சொந்த அர்த்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறான். தனது மெய்மையை தானே அமைத்துக் கொள்கிறான். ஆகவே தனது செயற்பாடுகளை தானே நெறிப்படுத்துகின்றான்.
நிறைவுக்குறிப்பு:
புலனறிவாதத்துக்கும், தோற்றப்பாட்டியலுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் இங்கு குறித்துக்காட்டப்பட்டுள்ளது போல் அத்தனை தெளிவாக வரையறுக்கக்கூடியதல்ல. ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை புலனறிவாதம் சார்ந்ததா? தோற்றப்பாட்டியல் சார்ந்ததா? என்று தீர்மானிப்பது பற்றி நியாயமான அளவு தர்க்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எத்தனையோ கோட்பாடுகள் இவை இரண்டிற்கும் இடைப்பட்டனவாயிருப்பதால், அளவுத்தரத்தைக் கொண்டே அதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாய் இன்றை சமூகவியல் கோட்பாடுகளை, பருநிலை, இடைநிலை, நுண்நிலை கோட்பாடுகளாய் வகைப்படுத்துவதும், பின்னாலே அவற்றினை ஒன்றிணைக்கும் முயற்சிகளும் இன்றைய சமூகவியலில் கோட்பாட்டு மரபு கண்டு கொள்ள முடிகின்றது.
உசாத்துணைகள்
Bottomore, Tom and Nisbert Robert (1979) - A History of Sociological Analysis; Heine mann London;
Fletcher, Ronald (1971) - Themaking of Sociology, Nelsons University Press,
Haralambos M.and R.M.Heald (1992) - Sociology;Themes and Perspective; Oxford University Press,
Johnson Doyle, Paul (1981) - Sociological Theory; Classical Founders and Contemporary Perspectives; John Wiley & Sons;
Kottak conrad phillip (1996) - Anthropology, The mcgraw-Hill, Companies, Inc,
May Tim, (1996) - Situating Social Theory, Open University Press,

Page 56
Marshall Gordon, (1998) - Oxford Dictionary of Sociology, Oxford University
Press, 4
Ritzer George (1992) - Classical Sociological Theory; Mcgraw-Hill, Inc,.
Stones Rob (ed.) (1998) - Key Sociological Thinkers; Macmillan Press Ltd.
Turner H.Jonathan (1974.)- The structure of Sociological Theory, The porsey,
illinosis.
*அரங்கில் Kಿ ாளரும்
 

மானுடவியல்
அவுஸ்திரேலிய முதுகுடியினர் Australian Aborigines
சுஜீவா ராஜரட்ணம்
பழங்குடி சமூகம் பற்றி பலரும் பலவாறு விளக்கம் கூறுவர் ஒருவரது தலைமைத்துவத்தினைக் கொண்டு ஒத்த நடைமுறைகள் பழக்க வழக்கங்கள், வழக்குகள், மரபுகள் போன்றவற்றினுாடு முற்றிலும் வேறுபட்ட நாகரிக சமூகத்திற்கு எதிர்ப்பட்ட வாழ்க்கை நடை முறைகளை கொண்ட குறிப்பிட்ட சில மக்கள் கூட்டங்களை பழங்குடிகள்
எனக் கூறுவர். மோர்கன் (Morgan) என்பவர் பழங்குடி சமூகமானது ஒரு சமூக நிறுவனமே அல்லாது அரசியல் நிறுவனம் அல்ல எனக் கூறுகின்றார். இது உறவு முறைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. பழங்குடி சமூகத்தை எளிமையான சமூகம் எனக்கூறுவர் மானிடவியலாளர். இவை அங்கத்தவர் எண்ணிக்கையில் சிறியவை. சமூக, சட்ட, ஒழுக்க, சமய நடத்தைகளில் கடும் போக்கினைக் கொண்டவை. வழக்காறுகளும் ஒழுக்காறுகளும் மாறுபடாத மக்கள் கூட்டத்தினர் இவர்கள். மலினோவ்ஸ்கியினால்
செய்யப்பட்ட மெலனோசிய ரொப்பியன் (Tropian) தீவுகள் பற்றிய ஆய்வு,
வோர்ட்ஸ் (Fortes) இன் கானா(Ghana) டலன் (Talensi) மக்கள் பற்றிய
ஆய்வு, மக்கவிட் (Maguet) றுவாண்டாவில் (Ruanda) உள்ள மத்திய ஆபிரிக்க பழங்குடிகள் பற்றி மேற்கொண்ட ஆய்வுகள் சிறந்த எடுத்துக் காட்டுகளாக உள்ளன. இந்த வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள பிரசித்தி பெற்ற முதுகுடியினர் பற்றிய ஓர் அறிமுகமாக இக்கட்டுரையமைகின்றது.
அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் எனப்படும் Abringines ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன்பே காணப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆதிக் குடிகள் ஆரம்பத்தில்

Page 57
தெற்காசிய நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்தனர் எனவும் கருதப்படுகின்றது. இவர்கள் முதலில் அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கரைகளில் குடியேறிப்பின்னர் படிப்படியாக ஏனைய கரையோரங்களில் குடியேறினர். எல்லா முதுகுடியினரும் ஒரே மாதிரி இல்லா விட்டாலும்
இவர்களில் பிரதானமானவர்களை "ஒஸ்ரொலொயிட்ஸ்" (Australoids) என அழைப்பர். 10000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் அரிப்பினால் தஸ்மேனியா அவுஸ்திரேலியாவில் இருந்து பிரிக்கப்பட்ட போது ஒரு சிறு பகுதி முதுகுடியினர்கள் தஸ்மேனியாவில் தனிமைப்படுத்தப்பட்டனர். காலப்போக்கில் இவர்கள் ஒரு புதிய இனமான நெருறோரொயிட் (Negrotoid) என அழைக்கப்படடனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது தொழிலாக கொண்டதுடன் கூடாரங்களிலும், கற்குகைகளிலும் வாழ்ந்து வந்தார்கள்
பிரித்தானியர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய ST6)LDITau 1788ல் ஏறத்தாழ 300000 முதுகுடியினர் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. ஆனால் பிரித்தானிய குடியேற்ற வாசிகள் பூர்வீகக் குடிகள் வாழ்ந்த கண்டத்தை அபகரித்து உரிமை கொண்டாடினர். அத்துடன் இந்த பழங்குடியினரை விலங்குகளை வேட்டையாடுவது போல வேட்டையாடத் தொடங்கினர். இதனால் நிலைகுலைந்த ஆதிவாசிகள் மறைந்திருந்து போர் புரிந்தனர். தம்மை பாதுகாக்க வரண்ட காட்டுப்பகுதிகளை நோக்கிச் செல்லலாயினர். வெள்ளையருடன் வந்த தொற்று நோய்கள் ஆதிவாசிகளின் உயிரை எடுத்தது. படிப்பறிவு அனுபவமற்ற இந்த ஆதிவாசிகள் மதுபானங்களில் தம்மை அடிமையாக்கினர். அத்தோடு சமூக சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் ஆளாகினர். அன்றைய அரசாங்கம் பின்தங்கிய இம் மக்களை எந்த விதத்திலும் முன்னேற்ற விரும்பவில்லை. இறுதியில் இவ் ஆதிவாசிகளுக்கு வாக்குரிமையும் மறுக்கப்பட்டது. எனவே பிரித்தானியர், தம்மை முதுகுடியினராக (Aborigins) அங்கிகரிக் காததால் இவர்கள் பிரித்தானியரை எதிரிகளாக கருதத் தொடங்கினர். ஆரம்பத்தில் குடியேறிய பிரித்தானியர்களுக்கும் முதுகுடியினருக்கும் பிரச்சினை ஏற்படவில்லை. காலஞ்செல்லச் செல்லமுரண்பாடுகள் முற்றிய போது முதுகுடியினரை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சில இன முதுகுடி (Aborigin) மக்கள் இந்திய, இலங்கை மக்களின் தோற்றத்தை கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்கள் தெற்காசிய நாடுகளில் இருந்து வந்து குடியேறினர் என்பதற்கு நியாயமான சான்றுகள் உண்டு என தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன.
ஆதிவாசிகளுடைய மிகவும் தனித்துவமான ஆயுதம் பூமரங் (Boomerang). இவர்களுக்கே உரிய இவ் ஆயுதத்தின் மூலம் தான் காட்டுக்குள் மறைந்திருந்து வேட்டையாடுவதுடன் போரும் புரிந்தனர்.
1938ம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலிய தினத்தன்று அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் சம உரிமைகோரினர். 1967ம் ஆண்டு முதுகுடியினருக்கு வாக்குரிமை அளிப்பது சம்மந்தமாக நடத்தப்பட்ட கருத்து கணிப்பு ஒன்றில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான இம் மக்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்கின்ற அவுஸ்திரேலியரின் விரும்பம் வெளிப்பட்டது. 1970ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம் பூர்வீகக் குடிகளின் உரிமைகளை மதிக்கத் தொடங்கியது. அத்தோடு வாக்குரிமையும் அளித்தது. அவர்களது முன்னேற்றத்துக்கென ஒரு அமைச்சரவையும் அமைக்கப்பட்டது.
இன்றைய நிலை
2000ம் ஆண்டில் Reconciation என்று ஆதிவாசிகளுக்கும் மற்றைய குடியேற்ற வாசிகளுக்கும் இடையில் ஒரு புதிய நட்புறவு உருவாக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் ஆதிவாசிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு மன்னிப்புக் கோரியுள்ளனர். இந்த வேளையில் தற்போதைய அரசாங்கம் பூர்வீகக் குடிகளிடம் மன்னிப்புக் கோரமுடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமும், கோபமும் அடைந்த இந்த பூர்வீகக் குடிகள் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை உலகிற்கு தெரியப்படுத்த ஆயத்தமாயினர் 2000ம் ஆண்டு அவுஸ்திரேலிய தலைநகரம் சிட்னியில் நடைபெற்ற போது ஒலிம்பிக்ஸ் பந்தம் பூர்வீக குடிப்பெண்ணிடம் தரப்பட்டது. இந்தப் பெண்

Page 58
வெறுங்காலுடன் ஒலிம்பிக் பந்தத்தை ஏந்திய வண்ணம் குளிர்ந்த வீதிகளில் ஓடி வந்தார். இவர் கூறியது என்ன வென்றால் "எம்மின மக்கள் காலாகாலமாக காலுக்கு எதுவும் அணியாமல் வாழ்ந்து வந்தனர். வெறுங்காலுடன் எனது இப்பந்தத்தை ஏந்திச் செல்வதே சிறப்பெனக்கருதுகின்றேன்" என்பதாகும்.
இத்தீபம் இறுதியில் Cathy Freeman எனும் முதுகுடியினரால் ஏற்றி வைக்கப்பட்து. இதைவிட தங்களது இதிகாசங்களையும் புராணங்களையும் தங்களது மனக் கருத்தில் எழும் சிந்தனைகளையும் பாடல் மூலம் சித்தரிப்பது அப்பொறிஜின்களின் வழமை. இந்த வகையில் Yothuyinci, Christi Anano போன்ற பூர்வீகக் குடிகளில் சிறந்து விளங்கும் பாடகர்கள் 696 Stbids (pL9666 (3UTg, "This is our land give it back 616irpo 6l360Tib கொண்ட பாடலை இசைத்ததுடன் தாம் அணிந்திருந்த ஆடையில் "Sorry" என்ற வார்த்தையை பதித்திருத்தல் மூலம் அவுஸ்திரேலிய அரசாங்கம் கேட்கத் தவறிய "மன்னிப்பை" தாமே கேட்டும் கொண்டனர். அவுஸ்திரேலிய முதுகுடியினரின் இந்த வெளிப்பாடானது, இன்று பாதிப்புக்குள்ளாகும் பல்வேறு பழங்குடியினரினதும் அகநிலைமைக்கான ஒரு குறிகாட்டியாக உணரப்படுகின்றது.
உசாத்துணைகள்
Encyclopaedia of social sciences - Vol. 1&2 Encyclopaedia of Britannia - Vol1 கலப்பை (2001) - சிட்னி பல்கலைக்கழக தமிழ் மன்ற வெளியீடு
 

இனக்குழும இசை Ethno- music
Nassruum ófsITTsaOribassair B.A. (Hons)
வாழுகின்ற ஒவ்வாரு இனக்குழுமங்களும் தன் பண்பாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப தம் இருப்பினை வடிவமைத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை ஒரு முக்கிய பண்பாட்டுக் கூறு. இசை
என்பது ஒன்றுதான். அதில் தனிச்சுர இசை அமைப்பு (Melody), கூட்டுச்சுர இசை அமைப்பு (Harmony) என்ற இரு வகைப்பாடுகளுண்டு. இந்த வகைப்பாடுகளின் செயற்பாடுதான் ஒவ்வொரு இசையையும் ஒன்றில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. இவ்விரண்டில் ஏதோ ஒன்றைப் பின்பற்றியே ஒவ்வொரு இனமும் தனக்குரிய இசையை வெளிப்படுத் துகின்றன. இவற்றோடு ஒவ்வொரு இனமும் வாழுகின்ற சூழல் அவற்றின் பண்பாடு என்பனவும் இவற்றின் வேறுபாட்டிற்குக் காரணமாயமைகின்றன. இதனை வெளிப்படுத்தும் இன்றைய இசையின் மானுடவியல் (Anthropology of Music) இன குழுமை இசை (Ethnomusic) சார் ஆய்வுகளின் தரவுகள், இன்றைய பண்பாட்டிடை ஆய்வுகளுக்கு பெருந்துணையாவன. இந்த வகையில் சில பண்பாடுகளின் இசை வடிவங்கள் பற்றிய ஆய்வுத் தேடல்கள் இங்கு பதிவு பெறுகின்றன.
சீனப் பண்பாட்டில் இசை
சீனப் பண்பாடு உலக நாகரிகங்களின் தோற்றுவாய்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு இசை என்ற பண்பாட்டுக்கூறு உலகளாவிய பரந்த சிந்தனையாகப் பார்க்கப்படுகிறது. சுவர்க்கத்துக்கும் பூமியின் உற்பத்திகளுக்குமான அதாவது மானுட,அதிமானுட ஒத்திசைவை இங்கு காட்டி நிற்கின்றது.
இசையின் பண்பு அழகியலாயிருந்தாலும் இங்கு உணர்வை சுட்டுவதாயன்றி வெளிப்படையான உண்மைகளைப் பேசுவதே குவிவுமைய
மாயிருந்தது.

Page 59
சீன மரபின் முக்கிய ஒலியியல் பண்பாடாக "கங் - சுங்" (Huang
Chung) காணப்படுகிறது. சீன இசை மரபுக் கோலங்கள் ஒரு கூட்டுச் சுர இசை அமைப்பை கொண்டமைந்தன.
கர்நாடக, உறிந்துஸ்தானி இசை மரபுகளில் கானகாலம் முக்கியமாகக் குறிப்பிடப்படுவது போல இங்கும் அளிக்கைகளின் போதான கானகாலம் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இசைக் கோலங்களின் (Melodies) வடிவமைப்பு அளிக்கைக்குரிய காலநேரத்தில் தங்கியுள்ளது.
இந்த இசைமரபு தன் தனித்துவத்தைக் காக்க அன்று முதல் முயன்று வருகிறது. இசை மரபிலே பொதுவாகப் புனிதம்சார், கிராமியம்சார் இசை வடிவங்கள் பேணப்பட்டு வந்தன. எவ்வாறு பறை போன்ற இசைக்கருவிகள் தமிழ் மரபிற்கு மரபுவழி இசைக் கருவிகளாகக் கொள்ளப்படுகின்றனவோ அவ்வாறு சீன மரபிலும் மரபுவழி இசைக் d5(56.856m (T60T Chin (Zither), Pipa (Lute) 6T6iru6) is BIT (36)(3u இசைக்கப்படுகின்றன.
இன்றைய காலகட்டங்களிலே சீன இசைமரபிலே இசைவடிவங்கள் அரசியல் நிலைகளிலும் பிரசார ஊடகமாக பயன்படுத்தப்பட்டுவருகிறன.
இது பண்பாட்டுப் புரட்சியாக (Cultural Revolution) மாறியிருக்கிறது.
ஆபிரிக்கக் கறுப்பினய் பண்பாட்டில் இசை
இங்கு இசையும் பாடலும் வேட்டைச் சடங்குகளோடு தொடர்புபட்ட (Hunting rites) (5 lujieb LLDT60T Uggsustab 3(555Bg5). தமிழர் இனமரபியல் போல குணமாக்கும் சடங்குகளிலும் அதிசயிக்கத்தக்க மந்திர சக்தியை இசை பெற்றுத் தருகிறது என்கின்றனர். குணமாக்கும் சடங்கின் மந்திரவாதி (Healing Magician) மிக நுட்பமான ஒலி நுணுக்கங்களை ஏற்படுத்தி பாடல்களைப் பாடுகிறார்.
இங்கு ஒலி ஓசை வேறுபாடுகளின் மூலம் கருத்தியல் நிலைகள் படிமமாக்கப்படுகிறது. தாழ் ஒலி இசைகள் (Low Pitched tones) கெட்ட ஆவிகளை மென்மையான குழல் ஓசைகள் நல்ல ஆவிகளையும் குறித்து
ھ0 کے

நிற்பதாக இங்கு கொள்ளப்படுகிறது.
ஆபிரிக்காவில் கறுப்பர், வெள்ளையர் என்ற இன பேதங்களும் இவர்களுக்கிடையிலான பகையுணர்வுகளின் விளைவுகளும் இன்றும் காணப்பட்டு வருகின்ற போதிலும் இவர்கள் தமக்குரிய அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டு வருகின்றனர்.
இவர்களில் தெருவோரக் கலைஞர்கள் அதிகமானவர் இருக்கின்றனர். தம் மரபினுாடான இசையை அழியாமல் காப்பதோடு அவர்கள் வாழ்வின் ஆதாரங்களாக இசை அமைக்கிறது.
எவ்வாறு தமிழின இசைமரபில் ஒலி பிரதான இடம் பெறுகிறதோ அவ்வாறே இங்கும் சீர்ப்பிரமாணம் (Rhythm) முக்கியமாகக் கொள்ளப்படுகிறது. இது இவர்களின் பூர்வீகத்திலிருந்ருந்தே சமயத்தோடும் மந்திரத்தோடும் கூடி வளர்ந்தது.
இங்கு Drum என்னும் இசைக்கருவி முக்கியம் பெறுகிறது. இது Talking Drum" என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பாடலுக்காகவே பயன்படுத்தப்பட்டது. தமிழ் மரபிலும் பறையடித்துச் சேதி சொல்லும் வழக்கம் இருந்தது. இங்கு ஆபிரிக்காவில் சீர்ப்பிரமாணம் என்பது ஒரு மொழியாக கொள்ளப்படுகிறது. இதன் லயஒழுங்கினைக் கொண்டு என்ன சொல்லப்படுகறது என்று அறிந்து கொள்கிறார்கள்.
தமிழ் மரபில் உடுக்கு, தவில், நாதஸ்வரம் என்பன எவ்வாறு சமயச் சடங்குகளோடு தொடர்பு கொண்டிருக்கின்றனவோ அவ்வாறே துளைக்கருவிகள், நரம்புக் கருவிகள் மந்திரத்தின் சொத்து (Magical Properties) எனச் சிறப்பிக்கப்படுகிறது.
இனக்குழும போட்டி பூசல்கள் இருப்பினும் இளம் தலைமுறையினர் இரு இனத்துவக் குழுமங்களும் இணைந்த இசைமரபு ஒன்றை உருவாக்கி வருகின்றனர். வெள்ளை இனக்குழுமத்தைச் சேர்ந்தவரும் கறுப்பினக் கலைஞரும் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலே ஊக்கம் காட்டி வருகின்றனர். அரசியல் சட்டத்தின் படி இது தடைசெய்யப்பட்டபோதும் இவர்கள் இதை உடைத்து வெற்றியும் கண்டுவருகின்றனர். இவர்கள் தமது

Page 60
கூட்டிசை பற்றிக் குறிப்பிடும்போது "கறுப்பரும் வெள்ளையரும் இணைந்து வந்து இசையை அனுபவிக்கலாம். ஆனால் எம்மை பொறுத்தவரையில் இசை என்பது உணர்வாயிருக்கிறது" என்கிறார்கள். இசை என்பது ஒரு உலகளாவிய பொதுவடிவம் என்பது புலனாகிறது.
இதேவேளையில் தமிழிசை மரபில் சடங்குகளின்போது புராணங்கள் படிப்பதுபோல தமது குறித்த சடங்குகளின் போது எழுதாக் கலைகளான இசையூடாக நாட்டின் வரலாறு பற்றியும், அதன் இசைமரபு பற்றியும் அதில் தம் பங்கு என்ன என்பது பற்றியும் ஒரு மீள் உருவாக்கம் செய்யப்பட்டும் வருகின்றது.
இலத்தீன் அமெரிக்கப்பண்பாட்டில் இசை
இலத்தீன் அமெரிக்கா தன் அரசியல் நிலைகளிலே அவ்வப்போது ஆக்கிரமிப்புக்களையும் மாற்றங்களையும் சமூகவியல் நிலையிலே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில் தனக்கென விடுதலை வேண்டி நிற்கும் நிலையிலே ஏனைய பண்பாட்டுக் கூறுகளிலே சுய்த்தைத் தேடிய அதேநேரம் இசைக்கூறுகளிலும் கண்டது. தமிழிசை மரபிலே எழுச்சிப்பாடல்கள் போன்ற ஆக்க இசைத்தோற்றங்கள் போல இங்கும் தனித்துவம் தேடப்பட்டதன்வழி 1969 இல் சிலியில் நடைபெற்ற நூவா கன்சியன் (Nueva Cancion) என்ற புதிய பாடல் இயக்கம் தோற்றம் பெற்றது. இது லத்தின் அமெரிக்க நாடுகள் பலவற்றின் மரபுவழி இசைமூலங்களின் சங்கமமாய், தேசியக் குறியீடாக உணரப்பட்டது.
தேசியத்தின் மூலவேர்களைத் தேடுகின்ற பாதையிலே நாட்டார் இசை மரபுகளைக் கண்டு புதுமைகாண முயன்றனர். இந்த வகையிலே Margot Loyola, Violeta Parra (SLIT6ro siglb60bLD56ñ6ó 6llaETLL6536) இது முன்னெடுக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய பண்பாட்டில் இசை
குலமரபுக் குழுக்களிடையே பல்வேறுபட்ட பல கூறுகள்
காணப்படுகின்றபோதிலும் அவுஸ்திரேலிய அபோரிஜின்ஸ் இவர்களுடைய
άδ,

இசை மரபு பொதுவான ஒரு பண்பாட்டு வேரைக்கொண்டது. தமிழ் இன இசை மரபிலே சமூகத்தின் செயற்பாட்டிலும் சமய வாழ்வுக்கும் இசை ஒரு முக்கிய பங்கு ஏற்றுள்ளதுபோல இங்கும் சமூக சமய வாழ்வுக்கும் இசை ஒரு முக்கிய பங்கு ஏற்றுள்ளது. இந்த முக்கியத்துவம் இவர்களது பண்பாட்டின் குலக்குறிய மரபினுடாக (Totemism) வந்தது. இவர்களது ஒவ்வொருவரின் பாடலிலும் அவர்களது குலக்குறியம் பற்றிப் பேசப்பட்டிருக்கும். இது மரபுவழியாகவே தோன்றிவந்தது.
இவர்களது இசை வடிவங்கள் கூட கூட்டிசை வடிவமாகவே காணப்படுகிறது. இவ்வடிவத்துக்கென இங்கு கிறிற்றாரும் (Guitar),
பியானோவும் (Piano) பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மரபிலும் இசை தொடர்பாடலுக்குரியதாக அமைகிறது. பொதுவாக படிப்பறிவற்ற சமூகங்களிலே இசைதான் தொடர்பாடல் ஊடகமாக பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் அதிமானுடத் துடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒன்றாகவும் இசை இம்மரபிலே பார்க்கப் படுகிறது.
யப்பானியபண்பாட்டில் இசை
யப்பான் தனக்குரிய இசையையும் பண்பாட்டையும் சீனாவிலிருந்து பெற்றுக்கொண்டது. நவீன தொழில்நுட்பத்திலே மிகவும் சிறந்த நிலையிலே இது விளங்கியிருந்தாலும் தன் பண்பாட்டு அடையாளங் களோடு இணைந்து வாழ்வதிலும் உலக நாடுகளில் முதன்மையாக திகழ்கின்றது.
யப்பானிய இசையும் ஏனைய பண்பாடுகளைப்போல புனிதத்துடன் இணைக்கப்பட்டதாகவும் காணப்படுகிறது. யப்பானிய இசைமரபு இரு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது.
1. புனிதத்துடன் தொடர்புபட்டது
2. மதச்சார்பற்ற மேலைத்தேய இசையுடன் தொடர்புபட்டது.
மதச்சார்பற்ற மேலைத்தேய இசையுடன் தொடர்புள்ள இசை மரபானது 16ம் நூற்றாண்டில் தான் உள்வாங்கப்பட்டது.
பி,

Page 61
இவர்களுற்_தமது இனமரபியல் இசை மரபுகளின் வேர்களின் ஊடாக "புதிய்"நவீன இசைக்கோல வடிவங்களைப் படைப்பதிலே முனைப்பாக இருக்கின்றனர். தமிழ் மரபியலில் "எமது பாடல்கள்” என்கின்ற உள்ளத்து உணர்வின்வழி பிறந்த ஆக்க இசை மரபுபோல யப்பானிலும் பாடல்களைத் தாமே யாத்து பாடுவதில் ஆர்வமாயுள்ளனர். உலக பொருளாதாரத்துக்கு இவர்களது பொருளாதார வலு பலமாயிருப்பதுபோல இவர்களது இசைவடிவமும் உலக இசைக்குரிய ஒரு வழங்கலாக இருப்பதனையும் காணமுடிகிறது.
உசாத்துணைகள் Roshmi, A. 1972 - Man and Music in India, Indian Institute of Advanced
Study, சண்முகலிங்கன், என் (1986) - லத்தின் அமெரிக்க புதிய பாடல் இயக்கம், ஊற்று
தொகுப்பு 14, இல 4, ஊற்று நிறுவனம், யாழ்ப்பாணம்.
 

சமூக - மானுடவியல் புலமாக கட்டடக்கலை Architecture as a site for social Anthropology
கலாநிதி என். சண்முகலிங்கன்
கட்டடக்கலை என்பது மனித நாகரிகத்தின் குறிகாட்டியாக கொள்ளப்படுவது. இதன் வழி மனிதனின் புலமை சார் ஆக்கத்திறன் வளர்ச்சியின் வெளிப்பாடாகவும் கருதப்படுவது. காட்டுமரப் பொந்துகளில் - குகைகளில் வாழ்ந்த ஆதிமனிதனிலிருந்து நாட்டு-நகர அமைப்புகளைக் காணும் நவீன மனிதன் வரை கட்டடக்கலை வரலாறு நீள்வது. மனித பண்பாட்டு இயக்கங்கள் - வரலாறுகள் யாவும் இந்தக் கலையின் மேம்பாட்டிலே கலந்து இசைந்துள்ளன. கட்டடம் என்பது வெறுமனே சடப்பொருள்களின் கலவையாய் முடிவதில்லை. வாழும் சமூகத்தின் இருப்பிடமாய், அதன் வாழ்வுக் கோலங்களின் வடிவமைப்பாய் காலவெளியையும் தாண்டி வாழ்வது. பொருள்சார் சமூக உண்மைக்கு எடுத்துக்காட்டாக தொல்சீர் சமூகவியலாளரான Durkheim கட்டடக் கலையை காண்பது இந்த வகையில்தான். இந்த தளத்தில்தான் மானுடவியல், சமூகவியல் ஆகிய அறிவுபுலங்களும் கட்டடக்கலையும் சந்தித்துக் கொள்கின்றன.
மனித இனம் பற்றிய முழுதளாவிய அறிவுத்திரளான மானுடவியலின் கட்டடக்கலை சார் ஆர்வம் அதன் தொடக்க கால முதலே முளைவிடுவது. மனித படிமலர்ச்சி தொடர்பான அதன் தேடல்களிடை ஆதிசமூக அமைப்புகளை-உறவுகளை தெரிந்து கொள்வதில், தெளிந்து கொள்வதில் வாழிட கோலங்கள் பற்றிய ஆய்வுகள் பெரிதும் துணையாகியுள்ளன. அவ்வாறே நவீன சமூக மாற்றங்களிடை, நகரமயமாக்க அலைகளிடை மனித வாழ்வின் நிலைமைகளை வெளிப்படுத்தும் சமூகவியலாளர்களின் குவிமையமாகவும் இந்த வாழிட அமைப்புகள் முக்கியத்துவம் பெறும். சமூக அமைப்பினை புரிந்து கொள்ளுதற்கான ஆய்வுத்தளமாக மட்டுமன்றி
அதனை வடிவமைக்கும் மீளுருவாக்கும் / புத்தாக்கம் செய்யும் அறிவுத்
)ெ

Page 62
தளமாகவும் சமூகவியல் கட்டடக் கலையுடன் கைகோர்க்கும். இன்று (upg565763)LD (ougjib Community as Architecture 616 B 6iffb95 எண்ணக் கருவாக்கத்தின் வழி இந்த அறிவுத் துறைகளின் இணைசெயற்பாடுகளும், உறவுத் தொடர்புகளும் வடிவம் பெறும்.
இந்த உறவுத் தொடர்புகளின் விளக்கமாகவே இவ்வாய்வுத் தேடல் அமைகின்றது. கட்டடக்கலையின் சமுகத் தளம் தொடர்பான கடந்தகால மானுடவியல் - சமுகவியல் ஆய்வு அனுபவங்களின் பகுப்பாய்வாக அமையும் இந்த தேடலானது, கட்டடக்கலையின் சமூக பரிமாணம் தொடர்பான தூய அறிவுத் திரளுக்கு பங்களிப்பதுடன், இந்த அறிவின்வழி எதிர்கால சமூக கட்டுமான பணிகளுக்கான திசையினையும் சுட்டிநிற்கும். இந்த வகையில் இது பிரயோக அறிவியல் பயன்பாடு கொண்டதாகவும் 960)LDulb.
II
கட்டடக்கலை வரலாறு என்பது மனித இனவரலாற்ாகவே பதிவுபெறுவது. சமூக சூழலுடனான மனித இசைவாக்க செயன்முறையாகவே கட்டடக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும். திறந்த வெளி தொடர்பான பயம் தந்த Ag0raphobia நிலைமைக்கு மருந்தாக
Sągó Pleistocene LD6óî59Dlä5g5 (g5605 JITILLDITG5lb. இந்த குகை வாழ்வின் மட்டுப்பாடுகள் மீள அவனை வெளிக்கு இழுத்து வரும். சூழல் அவனை கட்டடக்கலைஞனாக வடிவமைக்கும். பனியோ, மண்ணோ, புல்லோ, கல்லோ எல்லாமே அவன் ஆக்கத்திறத்தால் மூலப் பொருட்களாகும்.
எக்ஸிமோவரின் Igl00S இல்லம், பனியினால் ஆக்கப்படும். இவ்வாறே ஏனைய இனக்குழுக்களும் தத்தம் தட்ப வெப்ப நிலைமைகளுக்கு ஏற்ப வடிவங்களை காணும். வன வாழ்வின் வெப்பம் தணிக்கும் மண் கூரைகள், மழை காலத்து அழிவுகளையும் சந்திக்கும். ஆங்காங்கே கல்வீடுகள் தோற்றம் பெறும். (Maya, Incas, Aztats போன்ற பழங்குடியினரிடைதான் ஆரம்ப கல்வீடுகளின்தோற்றத்தை ஆய்வுகள் காட்டும்).
تھهك

வாழும் காலம், வாழ்வின் நிரந்தரம் வீடமைப்பின் தன்மையை தீர்மானிக்கும். உணவைத் தேடி சேகரிக்கும் கால வாழ்விடை மெல்லிய
புல்லினாலான கூடுபோன்ற வீடுகளே (Wickiup) போதுமானவையாக கருதப்படும். அதிக இழப்பு இன்றி அவற்றை விட்டுச் செல்லவும் முடிகிறது. ஓரளவுக்கு நிலையான வாழ்வினைக் கண்ட வேட்டைச் சமூகங்களில் இருப்பிடம் எளிமையானதோர் கூடாரமாக அமைந்தது. அமைப்பு ரீதியில் மிக உன்னதமான புத்தாக்கமாக விளங்கியது. சுமையற்றது; எங்கும் எடுத்து செல்லவல்லது. இன்றைய உயர்கட்டடக் கலை இலக்கணமாக
(p66,606155 LIGLD "The most work from the least material' goods கணத்தின் இலக்கியமாகவே அன்றைய ஆதிமனிதன் ஆக்கத்திறனை
மானுடவியல் ஆய்வாளர் விதந்து நிற்பர் (FitchandBranch,1960:136).
நிரந்தரமான குடியிருப்புக்களுக்கான பொருளாதார சூழலை விவசாய சமூக அமைப்புதான் தரும். விவசாய பொருளாதார தேவைகளுக்கு ஏற்ற முறையில் விரிவான வாழிட அமைப்புகள் உருவாகும். வீடமைப்புக்கும்
சமூகவாழ்வுக்குமிடையிலான தொடர்புகளை ஆய்ந்த L.H.Morgan இன் இனக்குழு ஒப்பாய்வுகளிடை இந்த வாழிட அமைப்புகளின் சமூகப் பரிமாணங்கள் வெளிப்படக்காணலாம். (Morgan, 18812) ஆதி பொதுவு டைமை வாழ்வின் சின்னங்களாக அக்கால பாரிய வாழிடங்களை இனங்காட்டுவார் மோர்கன். கூட்டு குடும்ப வாழ்க்கை, உறவு வலைப் பின்னல், ஆண்-பெண் பருவ அடிப்படையிலான ஏற்பாடுகள் என சமூக எண்ணக்கருக்களினடியான புதியபல ஆய்வுகளும் மோர்கனைத் தொடர்ந்து
மேற்கொள்ளப்படும். (Lewis and Clark, 1804; Malinowski, 1930;
Meggitte, 1964). Iragய0is மக்களின் நீளவீடுகள், வடஅமெரிக்கா, வட ஆசிய பழங்குடியினரின் குழிவீடுகள் (Pit house) என பல்வேறு கட்டட வகைகளை இந்த ஆய்வுகள் வெளிப்படுத்தும்,
கட்டடக்கலையின் படிமலர்ச்சிதொடர்பான மேற்கண்ட ஆய்வுத்தரவு உணர்த்தும் மற்றொரு உண்மையும் இங்கு கவனத்திற்குரியதாகும். கால வெளியில் நிலைபெறும் கட்டட முறைமைகள், குறித்த பண்பாட்டின்
இ.

Page 63
தனித்துவமாக பேணப்படும்போது புதிய பயனான மாற்றங்களும் கூட கவனம் பெறாதுபோகலாம். அயலில் அழகிய கல்வீட்டு கட்டட முறைகள் அறிமுகமான பின்பும் கூட மிக நீண்ட காலமாக தமது மரவீடுகளிலேயே வாழ்க்கையை தொடர்ந்த Navahos மக்களின் அனுபவம் இங்கு எடுத்துக்காட்டாகலாம். இரண்டாம் உலக யுத்தத்தினை தொடர்ந்தே எளிமையான மேலை பாணி வீடுகளை Navah0S அமைக்கத் தொடங்குவர். இந்த காலப்பகுதியில் இவர்கள் தமது பாரம்பரிய வாழ்வு அடையாள பண்புகளை கைவிட்டிருந்தனர் என்ற மானுடவியல் ஆய்வுக் குறிப்பும் இங்கு கவனம் பெறும் (Bereman, 1971). எங்கள் புலங்களின் கூட்டு வாழ்வுக் களங்களான வீடமைப்புகள் இறந்துபோக நவீன மேலை வடிவமைப்புகள் இன்று எங்களை சேர்வதும் இதன் வழி எங்கள் சமூக குடும்ப உறவுகள் துண்டாடப்படுவதும், தூரத்தள்ளி வைக்கப்படுவதும் இத்தகு மாற்றங்களை ஒத்தனவாய் கவனம் பெறலாம்.
கட்டடக்கலையின் இந்த பண்பாட்டு சூழமைவு தன்மையானது அதன் வடிவமைப்பு, சமூகப்பொருண்மை, பயன்பாடு எனும் அனைத்து முகங்களிலும் வெளிப்படக்காணலாம். பண்பாட்டு மரபாக அது நிலை பெறும் போது கட்டட கலைக்கான தொழிநுட்பவிதிகள் - முறைமை களுக்கு அப்பால் குறித்த புலத்து மக்களின் பிரபஞ்ச நோக்கு, நம்பிக்கை, இந்த நம்பிக்கைக்கு பின்னாலுள்ள கருதபதியல் தளம், அதன் அரசியல், அதிகார பின்னணி என்பனவும் கூட நிர்ணய காரணிகளாகலாம்.
கூட்டு வாழ்வின் இன்றியமையாமையை வடிவமைத்த புராதன மனிதன் குடியிருப்புகளிலேயே அவனுக்குள் நிலை பெற்றிருந்த பால்நிலை சார் நம்பிக்கைகள் வெளிப்படுவதைக் காணமுடியும். பெண்களின் தூய்மையின்மை தொடர்பான ragnols மக்களின் கருத்தியல், இருபாலாரையும் ஒரே நெடிய வீட்டினுள் பிரித்து வைத்தலுக்கான ஏற்பாடுகளின் வழிபுலனாகும். எங்கள் பண்பாட்டு புலங்களில் சாதிய அமைப்பின் இலக்கணத்துக்கு அமைய கோயில்கள் தொடங்கி குடியிருப்புக்கள் வரை அமைக்கப்பட்டமையும் இங்கு எடுத்துக்
காட்டுகளாகலாம்,

"அந்தணர் தென்திசை, ஆயர் மேல் திசை வந்திடு வணிகர், நல்வடக்கு வான்திசை தொந்தமில் சூத்திரர் தோன்றுங் கீழ் திசை பிந்திய நடுவத பிரமன் தானமே
சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீடு இங்கு சாஸ்திரமாகும்.
(சிற்றம்பலம் சாஸ்திரியார். n.d). சாதிக்கு என்று மண், மரம் என அனைத்திலும் வேறுபடுத்தல்கள்.
நால்வருணம் தொடர்பான இந்த வகைப்பாடுகளிடையும் பயன்
நிலைகருதிய செயற்பாட்டியல் (Functional) காரணிகளை இன்றைய ஆய்வு அவதானங்கள் வெளிப்படுத்தும்.
வீட்டிற்குள் அமையப்பெறும் முற்றம் நீள்சதுர வடிவில், கிழக்கு மேற்காக நீளமும், வடக்கு தெற்காக அகலமும் கொண்டதாக விளங்கும்போது சூரியபத்தி எனப்படுகின்றது. கிழக்கு மேற்கு அகலம் குறைவாகவும், வடக்கு தெற்கு நீளம் அதிமாகவும் உள்ள போது சந்திரபத்தி எனப்படுகிறது. சூரியபத்தியில் சூரிய ஒளி அதிகநேரம் இடம்பெறும். சந்திரபத்தி முற்றத்தில் சூரிய ஒளி குறுகிய நேரமே இடம்பெறும். பட்டுத்துணிகளை காய வைத்தல், தானிய மணிகளை உலரவைத்தல் ஆகிய தேவைகளைக் கொண்ட பிராமணர் அல்லாதோர் சூரிய பத்தி முற்றத்தை ஏற்க வேண்டும். எனும் மனையடி சாஸ்திர குறிப்பிடை இந்த செற்பாட்டியல் பதிவுகள் வெளிப்படும் (பூபதி ராஜன், 1992)
இவ்வாறான மரபுவழி கட்டடகலை சார் நம்பிக்கைகளும் நடைமுறைகளும் மக்களின் அக (emic), புற (etic) நோக்குகளின் வடிவங்களாக மானுடவியல், சமூகவியல் ஆய்வுகளின் ஆர்வப்புலங்களாய்
பலவாழ்வியல் தரிசனங்களுக்கு வழிசமைக்கும்.
கட்டடகலை தொடர்பான மரபுவழி நோக்குகள் அனைத்துமே
வி,

Page 64
மேற்காட்டிய செயற்பாட்டியல் நோக்கிலான சமூகஅமைப்பு, அதன் இசைவான செயற்பாடு என்ற வரையறைக்குள் நோக்கும்போதே அர்த்தம் தரும்.
தனியன்களின் மனைகளுக்கான அடிப்படைகளில் மட்டுமன்றி பெரும் வழிபாட்டு மையங்களின் கட்டடக்கலை மரபின் விளக்கமாகவும் கூட மக்களின் அகவய, புறவய கருத்தாக்கங்கள் வெளிப்பட காணலாம். பெளத்த-இந்து கட்டடக்கலை தொடர்பான அவதானிப்புகள் தரும் வட்ட - சதுர அடித்தள வடிவங்களுக்கான வியாக்கியானங்களிடை இதனை அவதானிக்கலாம். பெளத்த விகாரைகளின் தளவட்டமென்பது தனியே தர்மசக்ர பிரதிபலிப்பாகவோ, எல்லையிலா புனித பொருளை வலம்வரும் பெளத்த சடங்குக்கான தளமாகவோ மட்டும் அமைந்து விடவில்லை. சதுர வடிவிலான வேதகால பலிபீடத்திற்கு மாற்றாகவும் வடிவம் பெறுவது (Grover, 1980)
இவ்வாறே தளம் தரும் சமூக விளக்கங்கள் போல கோயில் உட்பிரகாரங்களுக்குள்ளேயும் பல்வேறு இயல்நிலைகடந்த வாழ்வியல் கோலங்களின் வடிவமைப்புகளை காணமுடிகிறது. வெளிச்சுவர் பூச்சிலேயே பண்பாட்டின்சூருகுளிர் குறியீட்டமர்வு (Hot-C001Symbolism) சித்திரிப்பாகும்.
மரணம், ஜனனம் என்ற வாழ்க்கை வட்ட எல்லைகளின் தளமாகவே அமையும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் உட்பிரகாரம் தொடர்பான ஆய்வாளரின் அனுபவத்தினை இங்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடலாம்.
இவ்வாறே கட்டடக்கலை வழியாக வாழ்வியல் மரபுகள், அவைசார்ந்த வியாக்கியானங்கள் என்பனவெல்லாம் காலங்காலமாக கடத்தப்படுவன. இந்த வகையில் இந்து பெளத்த ஆலயங்களின் வாயில்களையும் உள்ளரங்குகளையும் அலங்கரிக்கும் சிற்பங்கள் வெளிப்படுத்தும் ஐதீகங்கள், வழக்கடிபாடுகள் என்பன ஆர்வமான சமூக மானுடவியல் ஆய்வு மூலங்களாவன. தன் ஆய்வு ஆய்வனுபவ சாரமாக இந்திய கட்டடக்கலை அனுபவத்தை Thinking in Stone என மேலை ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுவார். சிந்திப்பது என்பதற்கும் அப்பால் அதுவே செயலை
ٹھیک

தூண்டும் எழுச்சிக் குரலாகவும் கதைகள் பேசுவதனை இங்கு உணரமுடியும்.
பாரம்பரியமான கட்டடக்கலை வடிவங்கள் ஒரு பண்பாட்டின் அரும்பெரும் பொக்கிஷங்களாக பேணப்படுவது இந்த அடிப்படையில் தான். பல்வேறு சமூக நிலைமைகளில் அழிந்துபோன அல்லது அழிக்கப்பட்ட கட்டடக்கலை வடிவங்களை மீளமைக்கும் பணிகள் இன்றைய தேசிய எழுச்சிகளின் மைய உயிர்ப்பாக அமைவதும் இந்த வகையில்தான்.
III
மரபுவழியான கட்டடக்கலை சார்ந்த இந்த ஆய்வவதானங்களின் தரிசனத்தின் முழுமையான புரிதல் என்பது இயங்கியல் நிலையிலான
முரண்பாட்டு அணுகுமுறைக்கு (Conflict Approach) எங்களை அழைத்து செல்வது தவிர்க்க முடியாததாகும்.
வீடு பற்றிய-கட்டடக்கலை பற்றிய அத்தனை தரிசனங்களும் சொத்துஉடைமை தொடர்பான பொருள்சார் அறிகைக்கு எங்களை இட்டுச் செல்வன. "வீடமைய நிலம் வேண்டும்" "நிலத்திலே வீடமையை பொருள் வேண்டும்" என்ற நவீன சமூக விதிகளிடை, சாஸ்திர விதிகளெலாம் நிலவும் சமூக அமைப்பினை உறுதிசெய்யும், செயற்பாட்டியல் வியாக்கியானங்களாகவே முடிந்து போவன.
"வீடு கட்ட அதிஷ்டம், அல்லது ஜாதக அமைப்பு வேண்டும். அது லேசான காரிய மல்ல. அவ்வாறின்றேல் அத்தனை கோடி மக்களுக்கும் ஆளுக்கு சொந்த வீடென்று இருக்குமே” (பூபதிராஜன்,1992)
எனும் மனையடி சாஸ்திர விளக்கத்தின் பொருளை, பொருள்சார் தளத்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும். நிலவுடைமை சமூகத்தின் மிகை உற்பத்தி-உபரி இலாபம் தந்த செல்வக் குவியல்களிடை தான் மாபெரும் கலைக்கோயில்களிலிருந்து மாடமாளிகைகள் வரை எழமுடிந்தது. பின்னைய தொழில் வளர்ச்சி நிலைமைகளிலும் இதே கதைதான். மிகை லாபமே கட்டடகலையின் தீர்மான காரணியானது.
ٹھیکے

Page 65
இத்தகைய ஒருவின்ன்னியிலேயே வசதிகளேதுமற்ற, நிலையில்லாத குடியிருப்புகளும், நெருக்கடியான சேரிவாழ்வும் கட்டடக்கலையின் வேண்டாப் பிள்ளைகளாக இன்றுவரை தொடரக் காணலாம்.
சமூகஅடுக்கமைவின் தொடர்ச்சிக்கும் நிலைபேற்றுக்கும் அடிப்படையாய் மனிதநாகரிகத்தின் குறிகாட்டியாக கருதப்பட்ட கட்டடக்கலை, மனித வேறுபாடுகளைப் பேணும் வளர்க்கும் கருவியாகும் நிலை கவனம் பெறவேண்டும். மகோன்னதமான பல்வேறு கட்டடக்கலை வடிவமைப்புக்கும் பின்னணியான பொருள் பலம், அதிகார பலம் என்பவற்றினடியாக, இந்த அமைப்புகளுக்காக தங்கள் உழைப்பினை மட்டுமன்றி உயிர்களையும் கூட தரநேர்ந்த அடிமைகள், கூலி தொழிலாளிகளான கைவினைஞர் பற்றிய தரிசனங்களை இன்றைய சமூகவியல் ஆய்வுகள் வெளிக்கொணர்வது இவ்வாறானதொரு கருத்தியல் தளத்தில்தான். (Kumar, 1965)
கால வெளியிடை கட்டடக்கலையும் முழுதளாவிய சுயதரிசனத்தடன் ஒட்டுமொத்தமான சமூகமேம்பாட்டுக்கான
சட்டகமாக மாற்றம் காண வேண்டும்
இந்த ஆய்வுத் தரிசனத்தின் நிறைவுக்குறிப்பாக முன்வைக்கப்படும் மேற்கண்ட கூற்றினை, சமுதாய திட்டமிடல் சார்ந்த Community as Architecture எனும் எண்ணக்கருவாக்கத்தின் வழியான அறிவுக்கனியாக கொள்ள முடியும்.
"அனைவருக்கும் வசிப்பிட வசதி” எனும் ஐ.நா.மனித உரிமை சாசனங்களிலிருந்து அவற்றின் நடைமுறைக்கான இன்றைய சமூக திட்டமிடல் பணிகள் அனைத்திலும் இந்த மேம்பாட்டுக்கான மூச்சினை 5ft 600T (plgud,
சமூக மேம்பாடு தொடர்பான இன்றைய திட்டமிடல்களின் யதார்த்தம் பற்றிய கேள்வியும் இங்கு தவிர்க்க முடியாததாகும். மேம்பாடு என்பதே
دھكك
 

மேலைமயமாக்கம் தான் எனும் கருத்தியல் ஆதிக்கம் எங்கள் நகரத்து திட்டமிடல்களில்-வடிவமைப்புகளில் புலப்படும். மரபுவழி பண்பாட்டு அம்சங்களைக் கருத்தில் கொள்ளாமலேயே அனைத்து விரிவாக்கங்களும் நடக்கும்.
எளிமையான-சமூக உறவுகளின் இசைவுமையமான கிராமிய வாழ்வினை, முகம் தொலைக்கும் நகரங்களாக்கும் திசையிலேயே திட்ட வரைபுகள் எழுதப்படும்.
தோலிருக்கச் சுளைவிழுங்கிய கதையாக இழக்கப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள், அடையாளங்கள் மீளபெற முடியாதனவாகவே போகும் ஆபத்துவளரும். நகரமயமாக்கம் காணாமலேயே நகரத்துவம் (Urbanism) வாழ்க்கை முறையாகும். வீடிருக்க வீட்டின் பெருந்தலைவர் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்படுவார். நவீன தொடர்பியல் அலைகளிடை உலகமே வீட்டுக்குள் தெரியும். சுயம் பற்றிய பிரக்ஞையே, இந்த உலக மயமாக்க அலைகளில் துரும்பென அல்லாடும். கட்டடம் உட்பட சமூக கட்டமைப்புகளே இந்த மாற்றங்களிடை ஆட்டம் காணும்.
எமது புலங்களில் கட்டடக்கலை தொடர்பான இந்த மாற்றங்கள் பற்றிய விமர்சனங்களோ, விளக்கங்களோ மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இந்தவகையில் மானுடவியலாளர் சசங்கபெரேராவின் தலைநகர் கட்டடக்கலை வடிவங்கள் தொடர்பான அண்மைய ஆய்வு அவதானங்கள்
கவனத்திற்குரியன (Perera, 1999).
எங்கள் புலங்களில், குறிப்பாக எங்கள் பல்கலைக்கழக நுண்கலைத்துறையினை தளமாகக் கொண்டு இப்பொழுதுதான் இந்த திசையிலான உரையாடல்கள் தொடக்கம்பெற்றுள்ளன எனலாம். போருக்குப் பிந்திய புனர்நிர்மாணம் பற்றிய இன்றைய செயற்பாடுகளிடை யுத்த அழிபாடுகளை மீளமைத்து விட முடியலாம். ஆனால் சுய-பண்பாட்டு தளத்திலிருந்து வெளிப்பாட்டு பண்பாட்டு (Expressive culture) வடிவமாக கட்டடக்கலையை காண்பதிலேயே, இன்றைய தேசிய எழுச்சி என்பது அர்த்தம் பெறமுடியும்.
άδ,

Page 66
மனித வாழ்வை புதுக்கிய, சமூக வாழ்வின் அர்த்தங்களை அழகாக்கிய முன்னைக் கட்டடக்கலைஞர்களின் அனுபவங்கள் உரிய முறையில் இன்றைய ஆக்கங்களிடை இணைவு பெற வேண்டும். இந்த வகையில் சமூக கட்டடக்கலைஞர்களான Gropius, Lecorbusier போன்றோரின் முன்னோடி செயற்பாடுகள் புதிய திசைக்கான வழிகாட்டிகளாகலாம். ஜோன் டூயியின் அனுபவவழி கற்றலுக்கு உடனேயே கட்டட வடிவம் தந்து அதன் நடைமுறைக்கான நிர்ப்பந்த விசையுமாகிய William Lescaze போன்றோரின் சமூக மேம்பாட்டு உணர்வு, இந்தப் புலமெலாம் நிறைந்திட வேண்டும்.
எதிர்காலத்தின் கட்டுமானப் பணிகளிலே கட்டடக்கலைஞனுக்குரிய புதிய பாத்திரமும் இங்கு உணரப்பட வேண்டும்.
புதிய கட்டடக்கலைஞன் தனியன் அல்லன், சமூக கொள்கை வகுப்பு படிமுறையிலிருந்து சமூக புத்தாக்க செயல்முறைவரை தொடர்புபடும் அனைவருடனும் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ளது. சமூக-அரசியல் கலையாக வடிவம் பெறும் கட்டடக்கலை ஆக்க செயற்பாடுகளில் (Մ(ք சமுதாயத்தினது இசைவும் பங்கேற்பும் அவசியமாகிறது. கட்டடக் கலைஞன், ஆக்கங்களை தருவது என்பதற்கு மேல் ஆக்கும் திறனை தருவது எனும் விரிந்த பொருள் விளக்கமாக, அனைத்து செயற்பாடு களையும் ஒருங்கிணைக்கும் ஓர் இணைப்பாளராகவே இந்த புதிய பாத்திரத்தில் இன்று எதிர்பார்க்கப்படுகின்றான்.
எனும் முழுதளாவிய மேம்பாட்டு இலக்குடன் எதிர்கால பணிகளை கட்டடக்கலைஞன் நெறிப்படுத்த வேண்டும். மனித - சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்ட மானுடவியலாளர்களும் சமூகவியலாளர்களும் என்றும் அவர்களோடு உடனிருப்பர்.
ٹھیک
 

உசாத்துணைகள் Berreman, Serald & Others (1971) -Anthropology Today, GRM Books California.
Fitch.J.M & D.P.Branch (1960)-Primitive Architecture and Climate, Scientific American, Vol 207:136.
Grover, Satish (1980)-The Architecture of India-Buddhist and Hindu, Vikas Pub, House Ltd, India. Kumar, Dharma (1965) - Land and Caste in South India, Cambridge Press, Univ.ofCambridge Malinowski, B (1930) - Culture, Encyclopaedia of the Social Sciences, Vol 4: 632. Meggitti, M.J. (1964)-Male-Female Relationship in the Highlands of Australian New Guinea. American Anthropologist, Vol.66: 207, Part2, Special Publication, Morgan, L.H (1981) - Houses and House Life of the American Aborigines, Contributions to American Ethnology,Vol.4 Perera, Sasanka (1999) - Distributions of my Visual Space: Issues of Architecture, Taste & Imagination, The World According to me, International Centre for Studies, Colombo.
சிற்றம்புலம் சாஸ்திரியார்.சி (n) - சோதிட இரத்தினசேகரம், மணமகள் புத்தகசாலை, கல்முனை, பூபதிராஜன், A.M.பிள்ளை (எ) மயிலை 1992 - மனையடி சாஸ்திரம், குமரி பதிப்பகழ், நாகபட்டினம்,
முறியூ இதற்கு? அறிவுக்கு
வழிந்து மற்ற மனிதனுக்கு உதவிாரி
நானாறி வழிவதற்கு
ஐஇவர இரிறர்

Page 67
சுகாதாரமே சுகநலம்
சுவையான சுகாதாரமான
பாண்,பனிஸ், கேக்,
மற்றும் இனிய சிற்றுண்டி வகைகளுக்கு
பெரிய மதவடி , சுன்னாகம்
உங்கள் அண்புக்குரியவர்களுக்கான தரமான அண்பளிப்புப் பொருட்களை தேர்ந்தது கொள்ள
് ഖയ്ക്കേ മി. മൺ تتشتت نت للخلذلتنلناخات الشلكا للنت
உங்கள் பலசரக்குத் தேவைகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்குகிறார்கள்.
குகன்ஸ்ரோஸ்
180, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
 

எங்கள் தேசத்தின் தொழில்வளம் காப்போம்
For quality
6 Rice mill machineries 6 Electric motors 6) MEM Starters, Engineering Tools, 6 Power Tools, wood working Machines, 6 Generators and other Accessories
手 K.R.Sivaloganathan & Co
96, Stanly Road, Jaffna.
穹021一3347
சுதேசிய உற்பத்திகளே எங்கள் தெரிவுகளாகட்டும்
தூய்மையான அண்:ை தயாரிப்புகளை கேட்டுவாங்குங்கள் * அண்ணாகோப்பி (X அண்ணா பற்பொடி * வறுத்த அரிசிமா * Bilm IDT yruler reu *ஜீவாகாரம் • 0 (n %Ꮝ, 1ᏍᎢ 68ᏯᎦ/7:Ꮓ/Ꮓ7860Ꭷ9 * புழுக்கொடியல் * தோசைமா
மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
இல4, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.

Page 68
கணணி தொழினுட்பவழி அழகிய பதிப்புகள் காண்போம்
நீ வளர்வாய் தமிழில் சமூகவியலை எழுதும் மானுடமே, எங்கள் தேசத்து அறிவொளியாய் நீ வளர்வாய்
- செல்வா ~
* உங்கள் அறிவியல் நூல்கள்
* ஆக்க இலக்கியங்கள்
* அன்புக்குரியவர்களின்
மங்கள வைபவ அழைப்பிதழ்கள்
அனைத்தையும் அழகான
கணணிப்பதிப்பில் பெற்றுக் கொள்ள
செல்வா இணணி பதிப்பகம்
க.செல்வச் சந்திரன், வல்வெட்டித்தறை வீதி, நாவலடி, இமையாணன் மேற்கு, உடுப்பிட்டி,
 

சுகாதாரமான உணவுகளையே உண்போம்
© ഉീഓമയ്മ, മാമ്മൂഞ്ചിക്ക്(ജൂ
ബ്ള്യുഗ്രz'g -്വീഴ്ത്ത് 3) உங்கன் வைபவங்களுக்கவேண்டி2
ബഗ്ഗ്മൈ குதித்தவேனைன் செய்து பெற்றுக்கொண்ன
சைவ . அசைவ உணவகம்
கே.கே. எஸ் வீதி, சுன்னாகம்.
சிறப்பான தரமான தொடர்பாடலுக்கான
மின் உபகரணங்கள் வசதிகளைப் பெற்றக் கொள்ள
அன்ரனாக்கள்
ரேடியோ உதிரிப்பாகங்களை gleader
பெற்றுக்கொள்ள O *Vヘ。 ரெலிகொம்யுனிகேசன் எலெக்ரிகல்ஸ்
击 & உள்ளுர் இல: வெளியூர் இல: 2 02I ~ 3568 O094 - 213568 எலக்ரொனிங் O21 0, 9 356 ۔۔۔ O094 - 213569
O70 - 212683 O094 - 70212683 O70 - 213022 O094 - 70213022
Fax 021-3568
24, கே.கே.எஸ். வீதி,
50, கே.கே.எஸ் வீதி, O
dró060s,850
சுன்னாகம்

Page 69
அழகுணர்வு வழி மனதை மேம்படுத்துவோம் நவீன வடிவமைப்புகளில் அழகிய தங்க நகைகளை
குறித்த தவணையில் உத்தரவாதத்துடன் 2 கரட்டில் செய்து பெற்றுக் கொள்ள
சிறி வாணி நதை மாடம்
தாங்கப்பவுண் நகை வியாபாரம்
173, கஸ்தாரியார் வீதி, யாழ்ப்பாணம்.
வீடியோ, ஒடியோ கசற், ரேடியோ, .கக்கடிகாரம், சுவர்மணிக்கூடு,
கண்ணாடி வழங்குகின்றார்கள் பிலிம் றோல் மற்றும் அன்பளிப்புப்
பொருட்கள் அனைத்தையும்
துஷி ஓங் 6 மலிவு விலையில் பெற்றுக்கொள்ள துஷா ஒண் 道 ரெனித்மல்ரிே
தெளிந்த நல் பார்வைக்கு
கண்பரிசோதித்து,
2Ju'Alia Ohficiau4 Zen GAM,
544, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம். Dr. சுப்பிரமணியம் வீதி,
021-3461 சுன்னாகம்.
 

நிதர்சனமான தனித்துவமான நவீன எழில் கொஞ்சும்
அழகிய நிழல்படங்களுக்கு தங்க ஆபரணங்களுக்கு
நிக்கொண் போட்டோனி
டாக்டர் சுப்பிரமணியம் வீதி, KKS வீதி, சுன்னாகம். சுன்னாகம்,
அழகுணர்வு மனதை மேம்படுத்துகின்றது
தரமான தையற் பொருட்கள், கவறிங் நகைகள், அழகு சாதனப்பொருட்கள் கடிகார வகைகள், சில்வர் பொருட்கள், சிறுவர் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் அனைத்தப் பொருட்களுக்கும்
கனகா தயாபரண் பாண்ஸி பலஸ் Kahaga Thyapa'ah Fancy Palace
64, கஸ்தாரியார் வீதி, யாழ்ப்பாணம்.

Page 70
எங்கள் அழகுணர்ச்சியை மேம்படுத்துவோம்
எழில் குன்றா அழகிய 22 கரட் தங்க பவுணி நகைகளை குறித்த தவணையில் உத்தரவாதத்துடன் செய்து பெற்றுக் கொள்ள
தி நஇதுங்கா
213C கஸ்தாரியார் வீதி, யாழ்ப்பாணம்.
தொடர்பாடல்வழி உறவுகளை வளர்ப்போம்.
L) துல்லியமான தொடர்பாடல் L பகல் - இரவு சேவை
ரெலிகொம் - தொலைநகல் (பக்ஸ்) போட்டோஸ்ரெற் - லெமினேசன்
அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள சண்ராஜ் கொம்பிளெக்ஸ் SAW RAW COMPLEX
138, கே.கே.எஸ். வீதி, சுன்னாகம்,
 

மானிடரின் மாண்புதனை மானிலத்தில் நயமாக எடுத்தியம்பிட வந்ததித்த மானுட(ம்)மே உந்தன் நான்காவது வெளியீட்டை தமிழுக்காக்க தடிதடிக்கும் சமூகவியல் சமூகம் வாழ்க! வாழ்க!
-சுந்தர்சன் ஸ்தாபனத்தினர்
தரமான மின்சார உபகரணங்கள் மின் நீர் இறைக்கும் இயந்திரங்கள் மின் அலங்கார உபகரணங்கள் மின் அழுத்திகள் மின் விசிறிகள் மின் அடுப்புக்கள் றைஸ் குக்கர்கள்
மின் குமிழ்கள் மின் இணைப்பு வயறிங் பொருட்கள்
மின்சாரத்தில் இயங்கும் சமையலறை உபகரணங்கள்
மற்றும் PVC நீர்குழாய்கள் அவற்றின் இணைப்புகள் பீலிவகைகள் அவற்றின் இணைப்புகள் இன்னும் மின்சாரத்தில் இயங்கும் பரிசுப் பொருட்கள் இத்தனையையும் ஒரே இடத்தில் நிதானம் - நியாயம் - உத்தரவாதத்துடன் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள கூடிய ஒரே ஸ்தாபனம்
மத்திய சந்தை முன்பாக பிரதான வீதி, மானிப்பாய்.

Page 71
கலைஅழகே மன அழகு
தரமான கவறிங் கோல்ட் நகைகள், மேக்கப் செற், பரதநாட்டிய செற் சாறிபோடர், லேஸ், நால்வகைகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள
சிவரகின்
SVKN
Fancg
159, நவீன சந்தை, மின்சார நிலையவிதி, யாழ்ப்பாணம். "
அலங்காரக்கலை அழகினை வளர்ப்போம்
உங்கள் இளமைக்கு மேலும் மெருகூடட்டும்
ിഖ് 22 [' ) IIIIIt பெற்றிட யாழ் நகரில் சிறந்கு எப்தாபனம்
நீத்திய கல்யாணி நகை மாளிகை
தங்கப்பவுண் நகை வியாபாரம்
so
127, கஸ்தாரியார் வீதி, யாழ்ப்பாணம்
 

வணிகக் கலையின் நுட்பங்கள் தேர்வோம்
உங்களுக்குத் தேவையான அனைத்தைம் ஒரே சுடரையின் கீழ் நிறைவுசெய்திட
லிங்கம் ஸ்ரோர்ஸ்
பலசரக்கு கடை
ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
Uuói 6v67rab sorÚGuarab
விவசாய இரசாயன கிருமி நாசினி வகைகள், உர வகைகள் விற்பனையின் முன்னோடி. விவசாயிகளின் நண்பன்
பருத்தித்துறை ഖ്
புத்தார்

Page 72
இறக்குமதி செய்யப்பட்ட தரமான தணிவகைகளுக்கும் தையல் வேலைகளுக்கும் éFusrørsrés Šiganas Textiles &P Tailoring
77, கஸ்தாரியார் வீதி, யாழ்ப்பாணம்.
என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு
- திருவள்ளுவர்
எங்கள் மானுடம் சிறந்திட துணையான அனைத்து உள்ளங்களுக்கும்
எல்லையில்லா
எங்கள் அன்பும் நன்றியும்
-சமூகவியல்சமூகம்
 


Page 73


Page 74