கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை

Page 1
s. |
 


Page 2

நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை
ஆசிரியர் :
வை. அநவரதவிநாயகமூர்த்தி
வெளியீடு : கல்வி th. இந்து மன்றம்
காழும்பு-2

Page 3
கல்வி அமைச்சு இந்து மன்ற வெளியீடு-3
முதற் பதிப்பு 1978.
Ы0%) сеп 4-00
பதிப்புரிமை : ஆசிரியருக்கு உரியது.
அசுப்பதிப்பு :
விவேகானந்த அச்சகம் லிமிட்டட்
யாழ்ப்பாணம்.
NAKKERAR THANTHA NAN MURUGATRUP PADA
l'irst 'lition : 1978.
A i ! tlh ( ) r i V. ANAVARA"THAVINA"YAGA MO ORTHY
'blishers : Hindu Association, Ministry of Education
Colombo-2.
Print crs: Vivekananda Printers Lid, Jaffna.
Price : Rs. 4-00.

பொருளடக்கம்
ஆசியுரை
அணிந்துரை
சிறப்புப் பாயிரம்
ஆசியுரை
முன்னுரை
துதிப் பாடல்கள்
முருகனும் முருகாற்றுப்படையும் பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்
செந்தி முதல்வன்
பக்தர்கள் போற்றிப் பரவும்
பழநி மலை முருகன்
தந்தைக்கு உபதேசம் செய்த தனயன் குன்று தோறும் குடியிருக்கும் குமரன் பழமுதிர் சோலை மலை கிழவோன்
திருமுருகாற்றுப்படை
பக்கம்
11
17
24
31
39
46
58
60

Page 4
நல்ல திருஞானசம்பந்த ஆதீன குரு மஹா சந்நிதானம் பூநிலபூநீ சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளிய
ஆ சி யு  ைர
கல்வி அமைச் : இந்து மன்றம் வெளியிடும், ஆசிரியர், வை. அநவரதவிநாயகமூர்த்தி அவர்களது
“நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை ’ என்ற நூலைப் பார்வையிட்டோம். * பழமுதிர் சோலை மலைகிழவோன் ’’ என்னும் பகுதியில் ஒளவை யாரைத், தொடர்புபடுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது. திருமுருகனை, காதலாகி, கசிந்து, கண் னிர் மல்கி, நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்த்து, அ ன் பே நிறைந்து நிறைந்து, பக்தி செய்து சேவடி பட ரும் செம்மல் உள்ளம் பெறுவதற்கு, அவனது பேரருள் வெள்ளம் பிரவாகித்து ஒடும் ஆறுபடை வீடுகள் காட்டப்பட்டுள்ளன. இது ஒரு அருமை யான ஆராய்ச்சி நூல், இதன் ஆசிரியர் திரு. வை. அநவரதவிநாயகமூர்த்தி அவர்கள் நுண்ணிய நூலறிவு படைத்தவர். புலமை மரபு வழி வழி வந்தவர். அவர்களுடைய சேவை பாராட்டுதற்குரி 8Jது. அவர்களுக்கு முருகன் பேரருளால் சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு கிடைக்கத் திரு வருளைச் சிந்தித்து வாழ்த்துகின் ருேம்.
ஆறீலழறீ பரல்ாசாரிய ஸ்வாமிகள்
திருஞானசம்பந்தர் ஆதீனம் நல்லூர், யாழ்ப்பாணம்

சைவத்தமிழ்ப் பேரறிஞர், இலக்கிய கலாநிதி பண்டிதமணி
சி. கணபதிப்பிள்ளே அவர்கள் அளித்த அணிந்துரை
SqAAAAAAAAS AASSSLSLLLSLJSMM ALALALLSASEALSLSqqELLSSASLSSASSMSeeLSLSLSMSAeSMSMAASS
திருமுருகாற்றுப்படைக்கு அதில் வழங்குவ தொரு தொடரால் பெயரிடுவதனல் அத்தொடர்
* புலம் புரிந்துறையுஞ் செலவு ’,
செவ்வேற் சே எய் சேவடி படருஞ் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்புரிந்துறையுஞ் செலவு நீ நயந்தனையாயிற் பலவுடல் நன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதி நீ முன்னிய வினையே ’ ான்ற இத்துணையும் திருமுருகின் இருதயம். இதில் உயிர்ப்பாயதொரு தொடர்.
* புலம் புரிந்துறையும் செலவு ’’ இதில் ‘புலம் ' என்றது ஞானத்தை. அது சேவடி படருஞ் செம்மல் உள்ளத்தால் நலம்புரி கொள்கை தலைப்பட்ட வழித் தலைப்படுவது.
புரிதல் - (ஞானத்தை) சாதித்தல். அதன் விளைவு உறையும் செலவு 1.
உறையும் செலவாவது திருவடிக்கீழ் உறை தற்குபகாரமான ஒழுகலாறு, இச்செலவு அக விளைவு. புலம் பிரிந்துறையும் செலவின் வேருனது. உடலோம்பும் பொருட்டுப் புலம் பிரிந்துறை யும் செலவுகளைப் பெரும்பாணுற்றுப்படை முத
லியவைகளிற் காணலாம்.

Page 5
இங்கே புலம் இடம் என்னும் பொருட்டு. இடம் விட்டு இடம் பெயர்தல் பற்றிய ஆற்றுப் படைகளுக்கும் திருமுருகாற்றுப்படைக்கும் தூரம் பிரமாண்டமானது. அந்த ஆற்றுப்படைகள் வரிசையில் திருமுருகாற்றுப்படையை வைத்து எண்ணுவது தவறு. பத்துப்பாட்டு, வரிசை தெரி யாதவரின் கோப்பு. திருமுருகு, திருமுறை வரி சையைச் சேர்ந்தது. பதினேராந் திருமுறைக் கண்ணது. இது நிற்க.
திருமுருகனைப் பத்தி செய்து, சேவடி படருஞ் செம்மல் உள்ளம் பெறுதற்கு, அவன் அநுக்கிரகம் பிரவாகிக்கும் ஆறுபடை வீடுகள் காட்டப்பட் டிருக்கின்றன.
இப்படை வீடுகளின் அருமை பெருமைகளை சுப்பிரமணியப் பிரபாவம் பேசும் அருணுரல்கள் முகமாகவும், பிற்றைக்கால சரித்திர முகமாகவும் ஆராய்ந்த அருமையான ஆராய்ச்சி நூல்
* நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை ’
இதன் ஆசிரியர் திரு. வை. அநவரதவிநாயக மூர்த்தி அவர்கள். ஆசிரியர் அவர்களின் ஆராய்ச் சித்திறமும், பலவகை நூலறிவும், வழிவழி வந்த பரம்பரைப் புலமையும் பெரிதும் பாராட்டற்
f'TG)60T
கலாசாலை வீதி, திருநெல்வேலி. சி, கணபதிப்பிள்ளை

யா. /திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலய உப அதிபர், வித்துவான், பண்டிதர், இணுவையூர்
இ. திருநாவுக்கரசு அவர்கள்
* நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை ” நூலாசிரியர் மீது நுதலிய
சிறப்புப் பாயிரம்
நேரிசை ஆசிரியப்பா
உலகு புரந் தொளிரும் ஒண்டமிழ் முனிவரன் நிலவு புகழ்ப் பொதிகை நெடுவரை நிலைஇத் தண்டமிழ் வளர்ப்பத் தமிழ்ச்சங்கம் மருவி வெண்டலை மாலை விமலன் றன்னெடு வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தியிற் படைவீடு கொண்டுசூர் மாமுதல் தடிந்து முகிழ்நகைத் தேவ குஞ்சரி வதுவைகொண்டு நெகிழ்ந்தன்பு கூர் இந்தி ராதிபர் வாழ்வோங்க சுந்தரத் தோள்முசு குந்தன் ஆதியராம் பூதலத் தோர்க்குப் பெருவாழ்வு நல்கிய காதலன் குன்றெறி குமரவேள் வளர்த்த இன்றமிழ்க்கு உயிராம் இறையனர் களவியற்கு அந்தமில் சீருரை தந்து நன்மதுரை உப்பூரி கிழார்மகன் உருத்திர சன்மன்முன் ஒப்பிலா வரங்கேற்றிய உயர் முனிவரன் தவங்குன்ற அடைத்த தாட்பெரும் பூதம்மேல் பவக்கடல் குடித்தவை வேல்தொடு குமரன் பாதபங் கயங்கள் பணிந்து நக்கீரன் பாடிய நன்முரு கற்றுப் படைக்குச் சான்றேர் புகழத் தகுபொருள் விரித்தோன் ஈழநன் னுட்டின் எழிலுறு வதநDாம்

Page 6
சோழ நன் மரபினர் வாழும் யாழ்ப்பாணத்து முத்தமிழ் வளர்த்த முதுபெரும் புலவன் புத்தொளி தழைத்த பேராயிர வர்வழிச் செந்தமிழ் வளர்த்த சின் னத்தம் பிப் புலவர் வந்த வ தரித்த மாண்பெரு நகராம் ஈழத்துத் தஞ்சையென் றெண்டிசை பரவும் வேழத்து மாமுக விநாயகர் நிலைஇய தணிகை வேற்குமரன் தனி அரசோச்சும் இணுவைமா நகரிடை இயற்றமிழ் உணர்ந்து தனிவேல் முருகன் தணிகைப் புராணக்கு இனிதுரை தந்தநல் அம்பிகை பாகன் வித்தியா தானம் விருப்புறு மாசான் இருவா வடுதுறை மருவிய ஆதீன மகாசந்நி தானம் வாழ்த்தோடு வழங்கிய மகா வித்துவான் சைவமெய்ந்நெறி புரந்தோன் தலைமகளுகிய தலைமை ஆசிரியர் நாவலர் மரபுயர் யாழ்தமிழ்ச் சங்கத்து இயற்றமிழ் ஆசிரியர் என விரு தெய்திய வைத்திய லிங்க பிள்ளை புதல்வனுய் வந்தவ தரித்து வளர்கலை பயின்று வைதிக சைவத் திருவொடு மருவி மும்மொழி பயின்று செந்தமிழ்த்துறை மூழ்கி உதயம் இதழால் இதயம் கணிவித்து உலகுபுகழ் கொண்டு உயர்கல்வி அமைச்சில் கலைப்பெரு மன்றச் செயலதி பனுமாய்க் கல்விச் செல்வி கவின வெளியிட்டுயர் நிலைபெறு மரபுயர் அநவரத விநாயக மூர்த்தியென் றுயர்பெயர் தாங்கி விழுமிய சீர்த்திகொண்டோங்குசீர்ச் செம்மல் பார்த்திபர் பரவும் பண்பின் மேலோனே .

கல்வி அமைச்சு, இந்துமன்றத்தின் தலைவர், வித்தியாதிபதி திரு. கி. லக்ஷ்மணஐயர் அவர்கள் மனமுவந்து அளித்த
ஆசியுரை
மிகப் பழைய தமிழ் நூல்களாகிய சங்க நூல் கஃப் பத்துப் பாட்டு எட்டுத் தொகை என இரு பிரிவுகளாகக் குறிப்பிடுவது வழக்கம். பாக் களாக அமைந்த பத்து நூல்களைக் கொண்டது பத்துப் பாட்டு. அப் பத்துப் பாட்டுள்ளே மிக முக்கியமானதெனக் கருதத் தக்கது திருமுருகாற் றுப்படை முருகன் வீற்றிருக்கும் இடத்துக்கு வழிகாட்டுவது என்பதே இதன் பொருள். 'வழி காட்டி' என்ற பெயரை வைத்தே திருமுருகாற் றுப்படையைப் பற்றித் திரு. கி. வா. ஜகந்நா தன் அவர்கள் ஒரு நூல் எழுதியிருப்பதும் இங்கு (குறிப்பிடத்தக்கது.
பத்துப் பாட்டிலே பெரும்பானுற்றுப்படை, சிறுபாணுற்றுப்படை போன்ற வேறு ஆற்றுப் படை நூல்களும் இடம் பெறுகின்றன. ஆயி ஒனும் ஏனைய ஆற்றுப்படை நூல்களுக்கில்லாத தனிச் சிறப்புகள் பல திருமுருகாற்றுப்படைக்கு உள. ஏனைய ஆற்றுப் படைகள் ஒர் அரசன் இருக்குமிடத்துக்கேரி அல்லது வள்ளல் இருக்கும் இடத்துக்கோ வழி நீாட்டுவன. திருமுருகாற்றுப் படை முருகன் இருக்கும் இடங்களுக்கு வழிகாட்

Page 7
டும் சிறப்புடையது. ஏனைய ஆற்றுப்படைகள் இவ்வுலக வாழ்வுக்கு வேண்டிய பொன்னையும் பொருளையும் பெறுவதற்கு வழிகாட்டுவன. திரு முருகாற்றுப்படை இம்மைக்கு மட்டுமன்றி மறு மைக்கும் வழிகாட்டும் தனிச்சிறப்பையுடையது. திருமுருகாற்றுப்படை பத்துப் பாட்டுக்கே கட வுள் வாழ்த்தாகக் கருதப்படுவது. பத்துப் பாட் டுக்கு மட்டுமன்றிச் சங்க இலக்கியங்கள் அனைத் துக்குமே திருமுருகாற்றுப்படையைக் க ட வு ள் வாழ்த்தாகக் கருதும் மரபும் உண்டு.
இத்தகைய தனிச்சிறப்புகள் பல வும் பொருந்திய திருமுருகாற்றுப் படைக்கு திரு. அ. வி. மூர்த்தி அவர்கள் அரியதொரு விளக்கம் எழுதி வெளியிடுவது மகிழ்ச்சிக்குரியது. திரு. மூர்த்தி அவர்கள் தமிழிலும் சைவத்திலும் நல்ல ஈடுபாடும் ஆற்றலும் பொருந்தியவர். தமிழை யும் சைவத்தையும் பேணி வளர்த்த சிறந்த மர பிலே தோன்றியவர். திருமுருகாற்றுப்படையிலே சிறப்பாகப் பேசப்படும் ஆறுபடை வீடுகளையும், எளிமையும் இனிமையும் பொருந்திய நல்ல ஒட்ட முடைய நடையிலே அருமைாக விளக்கி இருப் பது மூர்த்தி அவர்களுடைய நூலிலே காணப்படும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்,

மூர்த்தி அவர்களது “ நக்கீரர் தந்த நன் முருகாற்றுப்படை " என்ற இந்த நூலைப் பண் டிதமணி கணபதிப்பிள்ளை அவர்கள் "அருமை யான ஆராய்ச்சி நூல் ' எனப் பாராட்டியுள் ளார். பண்டிதமணி அவர்களது இப்பாராட்டுக்கு மேல் வேறு எப்பாராட்டும் இந்நூலுக்குத்தேவை யில்லை என்றுகூடக் கொள்ளலாம்.
முருகனுக்கு விசேஷமான காலமாகிய கந்த சஷ்டி காலத்திலே இந்த நூல் வெளிவருவது மகிழ்ச்சி தருகின்றது.
மூர்த்தி அவர்களுடைய முந்திய வெளியீடு களைப் பாராட்டி வரவேற்ற சைவ உலகம், முரு கனது படை வீடுகளின் பெருமை கூறும் இந்த நூலையும் பாராட்டி வரவேற்கும் என்ப தி ல் ஐயமில்லை.
கல்வி அமைச்சு கொழும்பு-2. கி. லக்ஷமணஐயர்

Page 8
A.
முன்னுரை
*Menedigaw
அருவமும் உருவுமாகி அணுதியாய்ப் பல வாய் ஒன்ருய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக் கருணைகூர் முகங்களாறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே
ஒரு திருமுருகன் வந்தாங் குதித்தனன் உலகமுய்ய
- கந்தபுராணம்
செங்கேழ் அடுத்த சினவடி வேலும் திருமுகமும்
பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதுமைமலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கே என் முன்வந் தெதிர்நிற்பனே.
- கந்தரலங்காரம்
முருகன், தமிழர்கள் போற்றும் அழகுத் தெய்வம். பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந் துள்ள பரம்பொருள். வேண்டுவார் வேண்டு வதை வாரி வாரி வழங்கும் தெய்வம். கலியுகத் தில் கண்கண்ட கடவுள். சிவபெருமானே இளை யோனுக வந்து முருகனுகத் திகழ்கின்றர். "அறு முகம் அவனும் யாமும் பேதகம் அன்ருய் ' என்று கந்தபுராணம் கூறுகின்றது.
முருகனுக்கு, குகன்,சுப்பிரமணியன், குமாரன், கந்தன், சச்சிதானந்தன், வேலாயுதன், சண்மு கன், சரவணபவன், கார்த்திகேயன், விசாகன், கடம்பன், காங்கேயன் எனப் பல்வேறு நாமங்

கள் உள்ளன. அவற்றுள் எந்த நாமத்தைச் சொன்னுலும், கேட்டாலும். நினைத்தாலும் எமது உள்ளம் உருகும். மனக்கவலைகள் யாவும் தீரும். அளவில்லாத ஆனந்தம் பெருகும். ஒரு முறை நெஞ்சில் முருகா என்று நினைத்தால் குறிஞ்சிக் குமரன் இரு திருப்பாதங்களும் தோன்றக் காட்சி கொடுத்து ஆட்கொண்டருளுவான். பக்தர்களுக் காகக் காத்திருப்பவன் முருகன். அப்பா முருகா வா! வா ! என்று உள்ளன்போடு அழைத்தால் அவன் வந்து அருள் புரிவான் என்பது உறுதி. முருக நாமத்தை உச்சரிக்காத, அவன் புகழைப் பேசாத நாட்கள் எல்லாம் பிறவாத நாட்களே யாகும்.
ஒருகோடி முத்தந் தெள்ளிக் கொழிக்கும் கடற் செந்தில் பதியில் ஒரு நாள் உச்சிக்காலப் பூசையின்போது அழகு ததும்பும் ஆறுமுகப் பெருமானின் அருட் கோலத்தைக் கண்டதும் அடி யேனது உள்ளத்தில் நக்கீரரது திருமுருகாற்றுப் படை நினைவிற்கு வரவே அவன் சந்நிதியில் அப் பாடலைப் பக்தியோடு பாராயணம் பண்ணினேன்ற மீண்டும் மீண்டும் பாராயணம் செய்ய ஆறுபடை வீடுகளின் இனிய காட்சிகள் அடியேனது உள் ளத் திரையில் ஒவ்வொன்ருக இடம் பெற்றன. இதன் விளைவாக முருகனது ஆறுபடை வீட்டின் புகழ்பாடும் "நக்கீரர் தந்த நன்முருகாற்றுப்படை என்னும் நூலை எழுதி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் என்னுள்ளத்தில் உதித்தது. ஆறு படை வீடுகளைத் தரிசிக்கும் பாக்கியமும் கிடைத் தது. இரு கட்டுரைகள் ( செந்தி முதல்வன், பக்

Page 9
தர்கள் பரவிப் போற்றும் பழனி மலை முருகன் ) தினகரன் வார மஞ்சரிக்காக எழுதியுதவினேன். இதனைத் தொடர்ந்து 'பரங்குன்றில் பன்னிருகைக் கோமான் ", "" தந்தைக்கு உபதேசம் செய்த தனயன் ', ' குன்று தோறும் குடியிருக்கும் குமரன் ", பழமுதிர் சோலைமலை கிழவோன் ?? என்னும் கட்டுரைகளையும் எழுதி முடித்து இந்த நூலை உருவாக்கினேன். அடியேனது இந்த நன் முயற்சிக்கு கல்வி அமைச்சு இந்து மன்றத்தின் செயற்குழு ஊக்கம் அளித்ததோடு மன்றத்தின் ஆதரவில் நூலை வெளியிட முன்வந்தது.
இந் நூலுக்கு நல்லை திருஞானசம்பந்த ஆதீன குரு மஹாசந்நிதானம் பூரீலபூரீ சுவாமிநாததேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அடியே னது அன்பின் வேண்டுகோளை ஏற்று ஆசியுரை வழங்கியிருக்கின்ருர்கள். அத்துடன் எமது பேரன் புக்கும் மதிப்புக்குமுரியவரும் தமிழ் முதறிஞரு மான இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை அவர்கள் மனமுவந்து அளித்த நல் லாசிகள் இந் நூலுக்குச் சிறந்த அணிகலனுக அமைந்துள்ளன.
கல்வி அமைச்சு இந்து மன்றத்தின் தலைவ ரும், வித்தியாதிபதியுமான திரு. கி. லக்ஷமண ஐயர் அவர்கள் தமிழ்ப்புலமை சான்ற செம்மல். சைவ சாஸ்திரங்களில் துறை தோய்ந்தவர். அப் பெரியார் அன்புடன் அளித்த அணிந்துரை சிந் தனக்கு நல்ல விருந்தாக இருக்கிறது. இந்தப் பேரறிஞர் மூவருக்கும் அடியேனது இதயபூர்வ மான நன்றி உரித்தாகுக.

திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாலய உப அதிபர் வித்துவான், சைவப்புலவர், பண் டிதர் இ. திருநாவுக்கரசு அவர்கள் சிறந்த முருக பக்தர், சைவ சமயப்பிரசாரகர். நேரிசை ஆசி ரியப்பாவினல் சிறப்புப்பாயிரம் அளித்ததுடன் இந் நூல் அச்சாகும் பொழுது அச்சுத்தாள்களை ஒப்பு நோக்கிப் பேருதவி புரிந்துள்ளார்.
இந்நூலின் முகப்பினை அலங்கரிக்கும் முருக னின் திருக்கோலத்தை மூவர்ணத்தில் அமைத்துத் தந்தவர் மெய்கண்டான் அச் சக அதிபர் திரு. நா. இரத்தினசபாபதி அவர்கள். மிகவும் குறுகிய காலத்தில் இந்நூலைத் திறம்பட அச்சிட் டவர்கள் யாழ்ப்பாணம், விவேகானந்தா அச்ச கத்தினர். இவர்களுக்கும் அடியேனது ம ன மார்ந்த நன்றி.
இறுதியாக இந்நூல் வெளிவருவதற்குப் பல வகையிலும் ஆக்கமும் ஊக்கமும் அளித்த அன் பர்கள் எல்லோருக்கும் எமது உளங்கனிந்த அன் பும் நன்றியும் உரியதாகுக.
இந்த அரும் பெரும் பணியில் அடியேன ஈடுபடச் செய்த ஆறுமுகப்பெருமானின் பேரன் பையும் திருவருளிையும் வியந்து போற்றுவதுடன்

Page 10
அவரின் திருவடித் தாமரைகளை சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையும் அடியணுக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி.
கல்வி அமைச்சு கொழும்பு-2. வை. அநவரதவிநாயகமூர்த்தி I-Il-78
****^^Nw****/* wv/**L.
8 அன்னேயும் பிதாவும் முன்னறி தெய் வம் என்ற ஆன்ருேர் வாய்மொழிக் கிணங்க வாழ்நாளெல்லாம் அடியேன் வாஞ்சையுடன் போற்றி வரும் என் அன் புத் தெய்வம் அன்னை செல்லம்மாவுக்கும் ஆருயிர்த் தந்தை இயற்றமிழ் ஆசான் வைத்தியலிங்கபிள்ளை அவர் க ஞ க் கும்
அன்புக் கணிக்கை.
NMMNNu"N" Maraavan M."

விநாயகர் வணக்கம்
திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும் கருணை பூக்கவும் தீமையைக் காய்க்கவும் பருவமாய் நமது உள்ளம் பழுக்கவும் பெருகும் ஆளத்துப் பிள்ளையைப் பேணுவாம்.
ஐந்து கரத்தனை யானை மூகத்தனை இந்தி னிளம்பிறை போலு மெயிற்றனை நந்தி மகன்றனே ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கு மண்ணிற்கு நாதனுமாந் தன்மையினுற் கண்ணிற் பணிமின் கன்ந்து.

Page 11
சுப்பிரமணியர் துதி
மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினுல் அளக்கொணுமல் நிறைவுடன் யாண்டுமாகி நின்றிடும் நிமலமூர்த்தி அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந் தருளிஞனே.
கோலமா மஞ்ஞை தன்னில் குலவிய குமரன் தன்னைப் பாலன்என் றிருந்தேன் அந்நாள் பரிசிவை உணர்ந்தி லேன் மாலயன் தனக்கும் ஏனை வானவர் தமக்கும் யார்க்கும் (யான் மூலகா ரணமாய் நின்ற மூர்த்திஇம் மூர்த்தியன்ருே.
தீயவை புரிந்தா ரேனும் குமரவேள் திருமுன் உற்றல் தூயவர் ஆகி மேலைத் தொல்கதி அடைவர் என்கை ஆயவும் வேண்டும் கொல்லோ அடுசமர் இந்நாள்செய்த மாயையின்மகனும் அன்றே வரம்பிலாஅருள்பெற் றுய்ந்தான்
-ைகந்தபுராணம்
 

ଜ୍ଞ 863
Χ
Wዘ)
Ա);/} էի ყmü ի

Page 12

一 3 一
முருகனும் முருகாற்றுப்படையும்
முருகன் அழகுத் தெய்வம்; கண்கண்ட தெய்வம். முருகன் என்ருல் இளமையை உடையவன்; அழகுடை பவன்; மணம் உடையவன்; தெய்வத்தன்மை உடைய வன் என நான்கு விதமாகப் பொருள் கொள்ளலாம். தம்முடைய அழகு, இளமை முதலியன என்றும் நிலை பெற்று நிற்பவையல்ல; அவை அழியும் தன்மை வாய்ந் தவை. ஆனல் முருகனது அழகு, இளமை முதலியனவோ என்றும் நிலைபெற்று நிற்பன.
முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முருகனை, தகன், சுப்பிரமணியன், குமரன், கந்தன், வேலாயுதன், சிண்முகன், கார்த்திகேயன், சரவணபவன், கடம்பன், தாங்கேயன் எனப் பலவாருகப் பக்தர்கள் போற்றி வழி படுவார்கள். முருகன் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் திருத்தலங்களுட் சிறந்த ஆறுபடை வீடுகளைப் பற்றியும், அங்கு எழுந்தருளி நின்று அடியார்களுக்கு அருள் புரியும் சிறப்பையும் எடுத்துக்கூறுவது " திருமுரு காற்றுப்படை ' என்னும் நூல். பிறவிப்பிணி போக்கும் பேரமிழ்தம் என்று இத்திருமுருகாற்றுப்படையைக் கூற லாம். முருகன் அருளை நாடி வருவோருக்கு வழிப்படுத் தும் சிறந்த நூலாக இது அமைந்துள்ளது. புலவராற் றுப்படையெனவும், முருகு எனவும் வழங்கப்பட்டு வரும் இப்பனுவல் 317 அடிகள் உள்ள ஆசிரியப்பாவால் ஆக்கப் பெற்றது. கடைச்சங்கப் புலவர்களான கபிலர், பரண ரோடு வைத்து மதிப்பிடத்தக்க பெரும்புலமை படைத்த அருட்கவிஞருள் தலைமைபெற்ற நக்கீரரே இந்த நன்முரு காற்றுப்படையை நமக்கு அளித்தவர். பத்துப்பாட்டு என்னும் நூலுக்குத் திருமுருகாற்றுப்படையே கடவுள் வாழ்த்தாக உள்ளது. பக்திரசம் ததும்பும் இப்பாமாலை இளமையும், அழகும் என்றும் நிறைந்து விளங்கும் முரு

Page 13
سس۔ 4 سس۔
கன்பால் வீடு பெறுவதற்குச் சமைந்தாஞேர் இரவலனை வீடு பெற்றன் ஒருவன் அக்கடவுளிடத்தே ஆற்றுப்படுத்தி அதற்குரிய வழிவகைகளை விளக்கிக் கூறுகின்றது.
ஆற்றுப்படை என்பது ஆறு + படை என்னும் இரு சொற்களும் புணர்ந்து ஆற்றுப்படை என்று ஆகி வழியில் செலுத்துதல் என்னும் பொருள்படும். 'திருமுருகாற்றுப் படை ' என்னும் தொடர் மொழிக் கண்ணுள்ள திரு ' என்பது திருக்கோயில், திருக்குளம் என வழக்கில் இருப் பதுபோல் திருவருட் சக்தி பதிதலைக் குறிப்பால் உணர்த் தும் ஓர் மொழியாம். முருகு ’ என்பது இளமையைக் குறிக்கும் ஒர் பண்புச்சொல். அது ஈண்டு அவ்விளமையை என்றும் தம்பாற் கொண்டு விளங்கும் முருகனுக்காயிற்று. ஆற்றுப்படை, அகவற்பாவால் விறலி, பாணர், கூத்தர், பொருநர் ஆகிய நால்வருள் ஒருவர் பரிசு பெற ப் போவோரைப், பரிசுபெற்று வருவார் ஆற்றிடைக் கண்டு தலைவன் கீர்த்தியும், கொடையும், கொற்றமும் சொல்வது
‘* கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிங் பெற்ற பெருவளம் பெருஅர்க்கு அறிவுறிஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும் ” என ஆற்றுப்படையின் இலக்கணத்தைத் தொல் காப்பியம் நன்கு விளக்குகின்றது.
இத் திருமூருகாற்றுப்படையில், வீடு பெற்றனுெரு வன். வீடு பெறுவதற்குச் சமைந்த ஓர் இரவலனை முருக னிடத்து ஆற்றுப்படுத்திய விதம் புகழ்ந்து போற்றுதற் குரியது இவ்வாற்றுப்படையுள் வீடு பெற்ருனெருவன் அது பெருதானை நோக்கி 'நீ வீடு பேறு கருதினையாயின் முருகனிடத்துச் செல்க' என்றனன். பெருதான் அம் முருகன் எங்கு எழுந்தருளியிருப்பான்? அவன் இயல்புஎன்ன? என்று கேட்க, அவனே பரங்குன்றில் உள்ளான். ՎԱՍ)

- 5 -
முகமும் பன்னிரு கைகளும் உடையவன் என்றன். அப் பொழுது இரவலன், வீடு அருளுந்தன்மையுடையானே முருகன் என ஐயுற்ருன். "நீ ஐயுறேல், அவனே முத்தேவர்க் கும் அருள்புரிந்தவன். முப்பத்து முக்கோடி தேவரும், பதி னெண் கணங்களும் தன்னை வழிபட நின்றன் ஆவினன்குடி யில்" என்ருன். அங்ங்ணமாயின் எவ்வாறு அவனை வழிபட வேண்டுமென்று கேட்க, அதற்கு ஏரகத்தில் அந்தணர் ழிபடு முறைகளையும், அவர்கள் உச்சரிக்கும் ஆறெழுத் ாகிய " சடட்சர " மந்திரத்தையும் உபதேசித்தான். மலும் இரவலனுக்கு முருகனது இயல்புகளையும், அவனை ழிபடும் முறைகளையும் விரிவாக எடுத்துரைத்தான் வீடுபெற்றேன். அப்பனே! நீ கவலையடைய வேண்டாம், ருகனே முற்கூறிய இடங்களில் மட்டுமன்று; சீர்கெழு ழவு, மேவரு நிலை, வெறியயர்களன் காடு, கவின் பெறு ருத்தி, கந்துடை நிலை முதலியன இன்னும் பலவிடங் ளிேல் நீ எங்கு காண விரும்புகிருயோ ஆண்டாண்டுக் அாணப்படுவன் என்றும், மலைமகள் மகனே ! மாற்றேர் கற்றே ! மாலை மார்ப ! நூலறி புலவ ! என்று நீ விரும்பும் சொற்களால் அப்பெருமானைப் புகழ்ந்து துதிக் கலாம். விண்ணுலகத்தவர்க்கு மட்டும் அருள் செய்பவன் அல்லன். அவனே வேண்டுவார் வேண்டுவதை அருளும் வள்ளல் தன்னை நாடிவரும் யாவர்க்கும் நிச்சயம் அருள் புரிவான். நீ அவ்விடத்துச் செல்க என்று ஆற்றுப்படுத் இயவாறு அருமையிலும் அருமையாம்.
இனி, ஆறுமுகப் பெருமான் பரங்குன்றில் பன்னிரு கைக் கோமானுக, செந்தி முதல்வனுக, பக்தர்கள் போற் றிப் பரவும் பழநிமலை முருகனக, தந்தைக்கு உபதேசம் செய்த தனயணுக, குன்றுதோறும் குடியிருக்கும் குமரஞக, பழமுதிர்சோலை மலை கிழவோனக எழுந்தருளியிருந்து அருள் வழங்கும் இனிய காட்சிகளை அடுத்துவரும் பகுதி களில் படித்து இன்புறுவோம்.

Page 14
- 6 -
பரங்குன்றில் பன்னிருகைக் கோமான்
** இருப்பரங் குறைத்திடும் எஃக வேலுடைப்
பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன் மிசை விருப்பரங் கமலிடை விளங்கக் காட்டிய திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம்
- கந்தபுராணம் ( துதிப் பாடல் )
முருகப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஆறு படை வீடுகளில் முதற்கண் நக்கீரரால் சிறப்பித்துக் கூறப்பெற்றது திருப்பரங்குன்றம் ஆகும். சங்க காலத் திலே சீரும் சிறப்பும் பெற்று விளங்கிய இத்தலம் பாண்டிநாட்டுப் பாடல் பெற்ற பதினன்கு தலங்களில் முதன்மை பெற்று விளங்குகிறது. திரு+பரம்+குன்றம் திருப்பரங்குன்றம் என வழங்கப்பட்டு வருகிறது. அழ கிய பரம்பொருளை - இறைவனக் கொண்ட மலை என்று பொருள்படும். மதுரைக்குத் தென்மேற்குப் பக்கமாக ஆறு மைல் தூரத்தில் திருப்பரங்குன்றம் இருக்கிறது. ஆனல் திருமுருகாற்றுப்படையில் திருப்பரங்குன்றம் மது ரைக்கு மேற்கில் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது முருகவேள் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் தலமாதலோடு பரமசிவனுடைய தலங்களிலும் ஒன்ருகும். முருகவேளுக்கே சிறப்பாகவுள்ள மற்றத் தலங்களிலும் திருப்பரங்குன்றம் முருகனுக்கும் சிவனுக்கும் பொது வாக உள்ளமை கருதியும் தம் நகருக்கு அருகில் உள் ளமை கருதியும் நக்கீரரால் முதற்கண் வைக்கப்பட்டது. அன்றியும், நக்கீரர் பூதத்தால் பரங்குன்றம் உ ள் ள குகையின்கண் சிறை வைக்கப்பட்டு அக்குகையிலிருந்து

- 7 -
முருகக் கடவுளைப் பாடத் தொடங்கினராதலின் முதலா வதாக அக்குகை பொருந்திய குன்றின் கண் எழுந்தருளி யுள்ள கடவுளைப் பாடினரென்றும் கொள்ளலாம்.
பண்டைத் தமிழர்கள் இயற்கை எழில் தாண்டவ மாடும் மலையினையே இறைவன் திருக்கோலமாகக் கொண்டு வழிபடலாயினர். சிவலிங்க உருவிலே காட்சியளிக்கும் இத்தலத்து மலையினைச் சிவமாகவே கருதி வழிபட்டால் தொல்வினைகள் எல்லாம் நம்மை விட்டுத் தொலைந்து போகும் என்று நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் பாடி புள்ளார்.
குன்றின் அடிவாரத்தில் முருகனது கோயில் உள்ளது. தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதும் இத் திருப்பரங்குன்றத்தில் தான். எனவே, முருகன் இங்கு மணவாளக்கோலத்துடன் காட்சி தருகிருர், தேவர்க ளுக்கு இடையருத துன்பம் விளைவித்த சூரபதுமன் முதலிய அசுரர்களை அழித்து அவர்களது துயரைக் களைந்த முருகப்பெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந் திரன் தன் புதல்வியாகிய தெய்வயானையை முருகப்பெ ருமானுக்குத் திருமணம் செய்து வைத்தான் எனக் கந்தபுராணம் கூறுகின்றது. பங்குனி உத்தர நன்னளிலே இத்திருமணம் , நிகழ்ந்ததாகக் கருதி இவ் விழாவைத் திருப்பரங்குன்றத்தில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகிருர்கள்
கடைச் சங்கப் புலவர் குழாத்துள் தலைமை பெற் றிருந்த தக்கீரர் ஒரு சமயம் தீர்த்த யாத்திரை செய்யப் புறப்பட்டார். செல்லும் வழியில் குளம் ஒன்றில் நீராடி விட்டு அதன் கரையோரத்தில் உள்ள அரச மரத்தின்

Page 15
- 8 -
நிழலில் சிவவழிபாடு செய்து கொண்டிருந்தார். அந் நேரத்தில் அரச மரத்திலிருந்து ஒர் இலை அவருக்கு முன்னே பாதி நீரிலும் பாதி தரையிலும் விழுந்தது. நீரிலே வீழ்ந்த பாதி மீனும், தரையில் வீழ்ந்த பாதி பறவை யுமாகி மீன் பறவையை நீரினுள் இழுக்கப் பறவை மீனை நீரில் இழுத்தது. நக்கீர தேவர் அப் புதுமையைக் கண்டு மிகவும் வியப்படைந்தார். சிவ வழிபாட்டிற்கு தவறு உண்டாயிற்று. அவ்விடத்திலே சிவவழிபாட்டில் வழுவினவர்களாகிய தொளாயிரத்துத் தொண்ணுாற் முென்பதின்மரை ஒரு மலைக்குகைக்குள்ளே அடைத்து வைத்துக்கொண்டு மேலும் ஒருவருக்காகக் காத்துக் கொண்டிருந்த கரிய பூதம் ஒன்று நக்கீரரைத் தூக்கிச் சென்று, அக்குகையினுள்ளே அடைத்து ஆயிரவராக்கி தன் கொள்கைப்படி உண்ணுவதற்கு நீராடப் போயிற்று. முன் அடைபட்டவர் எல்லோரும் நக்கீரரிடம் முறை யிட்டார்கள். ** இதுகாறும் உயிரோடிருந்த நாங்கள் இன்றைக்கு உம்மாலே இப்பூதத்திற்கு இரையாகும் காலம் நெருங்கிவிட்டது ' என்று அழுதார்கள். அடி யார்களை ஆட்கொண்டருளும் முருகன் அருளை நாடிஞல் அன்றி இப்பூதத்தினின்றும் தப்பமுடியாது என்று உணர்ந் தார் நக்கீரதேவர். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்போன் அல்லவா நமது குருநாதன் என்று நெஞ் சுருகினர். பாமாலைக்கே வசப்படுவான் நமது பச்சை மயில் ஏறிவரும் பாலன் என்று பரவசமடைந்தார். திருமுருகாற்றுப்படை என்னும் அருள் நூலையே பாடி விட்டார். கருணையங்கடலாகிய முருகப்பெருமான் தமது திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தைச் செலுத்திப் பூதத்தைக் கொன்று நக்கீரதேவர் உட்பட ஆயிரவரை யும் சிறை வீடு செய்து காத்தருளினர் என்பது கதை,

- 9 -
பரங்குன்றில் பன்னிருகைக் கோமானின் அருளை நக்கீரர் எவ்வாறு பெற்ருர் என்னும் வரலாற்றை பகழிக் கூத்தர் தமது ' திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழில்"
" ஏர் கொண்ட பொய்கைதனில் நிற்கு மொரு
இலை கீழ் விழில் பறவையாம் இது நிற்க நீர் விழில் கயலாம் இதன்றியோர்
இலையங்கு மிங்குமாகப் பார் கொண்ட பாதியும் பறவைதா ஞகஅப்
பாதியுஞ் சேல தாகப் பார் கொண்டி ழுக்கஅது நீர் கொண்டி ழுக்கஇப்
படிகண்ட ததிசய மென நீர் கொண்ட வாவிதனில் நிற்கு மொரு பேழ்வாய்
நெடும்பூதம் அதுகொண்டு போய் நீள் வரை யெடுத்ததன் கீழ்வைக்கும் அதுகண்டு
நீதிநூல் மங்கா மலே சீர் கொண்ட நக்கீர னைச்சிறை விடுத்தவா
செங்கீரை ஆடிஅரு ளே திரையெறியும் அலைவாய் உகந்தவடி வேலனே
செங்கீரை ஆடிஅரு ளே " என நயம்படக் கூறியுள்ளார்.
இத் திருப்பரங்குன்றம் சங்க இலக்கியமான பரி பாடலிலும், மதுரைக் காஞ்சி, கலித்தொகை முதலிய நூல்களிலும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. திருமணக் கோலத்தில் விளங்கும் குமாரப்பெருமான் திருப்பரங் குன்றத்தில் தன்னை வழிபடுவோரது வறுமையைப் போக்கி வளமெலாந் தருவதோடு நோயற்ற வாழ்வா கிய குறைவற்ற செல்வுத்தையும் கொடுக்கின்றன்.
திருப்பரங்குன்றத்தின் சிறப்பைக் கூறவந்த நக்கீரர் முதலில் மதுரையைப் பற்றிப் பெருமை படக் கூறுகின் முர். சிற்றுார் ஒன்றைக் குறிப்பிடும்போது அ த ன்

Page 16
- 10 -
அருகேயுள்ள பேரூரை முதலில் சொல்லிப் பின்பு அத னைச் சொல்வது தொன்றுதொட்டு ஒரு மரபாக இருந்து வந்துள்ளது. அவ்வாறே நக்கீரரும் மாட மாளிகை கள் நிறைந்த மதுரை மாநகரின் அழகை வருணித்து விட்டுப் பின்பு திருப்பரங்குன்றத்தின் பு க  ைழ க் கூறுகின்ருர்.
திருப்பரங்குன்றத்தின் அடிவாரத்தில் எங்கே பார்த் தாலும் நீண்டு விரிந்த வயல்களைக் காணலாம். அவை நல்ல வளமுடையனவாக நன்கு உழுது பயிரிடப்பட்டுக் காட்சியளிக்கின்றன. கரிய சேறு நிரம்பிய அந்த வய லின் ஒரங்களில் நீர் தேங்கி நிற்கும். அங்கெல்லாம் முறுக்கு அவிழ்ந்து மலர்ந்த முள் செறிந்த தண்டுகளை உடைய தாமரை மலரில் வண்டுகள் இரவு முழுவதும் தூங்குகின்றன. காலையில் தாமரை இதழ்கள் விரிந்த தும் அந்தத் தாமரைத் தேனைச் சுவைத்த வண்டுகள் வெளியே கிளம்பித் தேன் மணம் கமழுகின்ற நெய்தல் மலரில் தேனைக் குடித்து ஆரவாரிக்கின்றன. பகலவன் படிப்படியாக மேலெழுந்துவர, ஆனந்த சா க ர த் தி ல் மிதந்த அந்த வண்டுகளும் மெல்ல மெல்லப் பறந்து மலையின் மேலே உள்ள சுனைகளுக்கு வந்துவிட்டன. மகளிரின் கண்கள்போல மலர்ந்துள்ள அழகிய சுனைப் பூக்களில் வண்டுகள் கூட்டம் கூட்டமாய்ச் சென்று அங்கேயுள்ள தேனையும் உண்டு ரீங்காரம் சிெய்து கொண் டிருக்கின்றன. இத்தகைய இயற்கை வளம் வாய்ந்த பரங்குன்றில் பன்னிருகைக் கோமான் அடியார்களுக்கு அருள் புரிய மனமுவந்து எழுந்தருளியிருப்பான். ஆகவே, காலம் தாழ்த்தாது அங்கு சென்ருல் கலியுகவரதஞ கிய கந்தவேளைத் தரிசித்து அவனது திருவடித் தாமரை தனில் உள்ள தேனை உண்டு இன்பம் பெறலாம் என நக்கீரர் நமக்கெல்லாம் வழிகாட்டுகிருர்,

سبــ 11 صـ
செந் தி முதல்வன்
Arrowmemwe
* சூரலை வாயிடைத் தொலைத்து மார்பு கீண்டு)
ஈரலை வாயிடும் எஃகம் ஏந்தியே வேரலை வாய்தரு வெள்ளி வெற்பொரீஇச் சீரலை வாய்வரு சேயைப் போற்றுவாம்
9 y
- கந்தபுராணம் (துதிப்பாடல்)
நீலத்திரைக்கடல் அதன் கரையில் அழகுடன் கம்பீர மாகக் காட்சியளிக்கும் கலியுகவரதனின் கோயில், இடை யிடையே சோகைள் நிறைந்த மணல்மேடு: இவையெல் லாம் ஒருங்கே அமைந்த காட்சி இன்பம் தரவல்ல இயற்கை வனப்பு மிகுந்ததாகும். இக்காட்சியில் உள்ளத் தைப் பறிகொடுத்த கச்சியப்ப சிவாச்சாரிய சுவாமிகள்,
‘சுரமது கடந்து நீங்கிச் சோதிவேலுடைய வள்ளல்
விரிபுனல் சடிலத் தண்ணல் மேவு செங்குன்றுார் நோக்கிப் பருமணி வயிரம் முத்தம் பலவளம் பிறவும் ஆழித் திரையெறி அலைவா யாகும் செந்திமா நகரம் புக்கான்." என்று திருச்செந்தூரின் சிறப்பையும் அங்கு முருகப்பெரு மான் வந்து தங்கியதையும் அழகாக எடுத்துக்கூறுகின்றர்.
முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும் முருகன் கோயில் கொண்டிருக்கும் முக்கிய தலங்கள் ஆறுபடை வீடுகள் எனப்படும். இவ்வாறு படைவீடுகளில் மிகச் சிறந்து விளங்குவது திருச்செந்தூர். சங்க காலத்திலி ருந்த நக்கீரரும் ஆதி சங்கரரும் இத்தலத்தின் சிறப்பை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாடியுள்ளனர் என்பது இதன் பழமைன்ய நன்கு புலப்படுத்தும். திருச் செந்தூர் என்ற சொல்லுக்குப் புனிதமும் வளமும் பொருந் திய வெற்றி நகர் எனவும் செல்வமும் வெற்றியும் அருள

Page 17
- 12 -
வல்ல ஸ்தலம் என்றும் பொருள் கூறுவர். அழகிய சிறப் புப் பொருந்திய அலைகளையுடைய சமுத்திரக் கரையில் இத்தலம் இருப்பதால் திருச்சீரலைவாய் எனவும் வழங்கப் பட்டு வருகின்றது. * நாமனுரரலைவாய் ' என மற்ருெரு திருநாமமும் உண்டு. வியாழபகவாளுல் பூசிக்கப்பட்ட காரணத்தினுல் திருச்செந்தூர் பிரசித்தி பெற்ற வியாழ வுேத்திரமாகவும் போற்றப்படுகின்றது. முருகப்பெருமா னும் தேவர்களும் இந்தத் தலத்தில் தங்கி ஜெயம் பெற் றதினல் ஜெயந்தி மாநகரம் என்னும் பெயரைச் செந்தி லுக்கு வழங்கினர்கள்.
செந்திலின் சிறப்பைப் பழைய தமிழ் இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன. " வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில் ' என்று புறநானூறிலும் ** திருமணி விளக் கின் அலைவாய் ' என்று அகநானூறிலும் , ** முருகன் தீம்புனல் அலைவாய் ' என்று தொல்காப்பியச் சூத்திரத் திலும், “ சீர்கெழு செந்தில் ' எனச் சிலப்பதிகாரத்தி லும், ' உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர் அலைவாய்” எனத் திருமுருகாற்றுப் படையிலும் இத்திருப்பதியின் பெருமை கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய எடுத்துக் காட்டு களிலிருந்து சங்க காலத்தில் இத்தலம் எத்துணைச் சிறப் புடன் விளங்கியது என்பது வெள்ளிடைமலை, நினைத்த மாத்திரத்திலே முத்தியை அடைதற்குரிய ஒரே இடம் முரு கன் இருப்பிடமாகிய திருச்செந்தூரேயாகும்.
தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை நகருக்கு 36 மைல் தென்கிழக்கே திருச்செந்தூர் உள்ளது. இப்பதி பாடல் பெற்ற ஸ்தலமாகும். செந்தி முதல்வனின் ஆலயம் அலைவந்து மோதுக் கடற்கரை அருகே அழகுற அமைக்கப்பட்டுள்ளது. கந்தமாதன பர்வ த த்  ைத க் குடைந்து இங்குள்ள ஆலயம் முன்பு அமைக்கப்பட்டது இதற்குச் சான்ரு கப் பிரகாரத்தில்"பள்ளி கொண்ட பெரு மாளும் கஜலட்சுமியும் காட்சி தருகின்றனர். இங்கே நினைவுகளாகிய அலைகள் வந்து அன்பே உருவான ஆண்

-سس- 3 1 --
டவன் திருவடிகளில் அடங்கி ஒடுங்கி விடுகின்றன. இக் காரணத்தினலே தான் அலைவாய் என்று மற்றெரு பெய ரும் இப்பதிக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுருங்கக் கூறின் பிறவிப் பெருங்கடலின் துறைமுகப்பட்டினமாக இது விளங்குகிறது. ஆழ்கடலைத் தாண்ட தோணி உதவும். அதுபோலப் பிறவிப் பெருங்கடலைக் கடந்து கரை சேர் வதற்கு உற்ற துணையாக அமைவது ஆறுமுகப்பெருமா னின் பாதாரவிந்தங்களே.
திருச்செந்தூர் ஆலயத்தில் மூலஸ்தானத்தில் எழுந்த ருளியிருக்கும் முருகன் ஒரு முகத்துடன் கிழக்கு நோக்கி நிற்கின்ற திருக்கோலத்திலே காட்சி தருகின்றன். உற்சவ மூர்த்தி ஆறு திருமுகங்களுடன் அலங்காரமாகக் காட்சி யளிக்கின்றர். இப்பெருமானின் திருவுருவம், காண்பவர்க வின் கண்களையும் மனத்தையும் கவர்ந்து மெய்மறக்கச் செய்யும். எண்ணுந் தோறும் உள்ளம் உவகையால் பூரிப் படையும். திருச்செந்தில் நகரில் அரசு புரியும் பெருமானே! கருணைக் கடலே ! அன்பர் மனத்துறையும் ஆண்டவனே ! கந்தா ! கடம்பா ! வினை தீர்க்கும் வேலவா குன்று தோருடும் குமரனே 1 வள்ளி மணவாளனே ! என்று அடி யார்கள் பலர் அவரது சந்நிதானத்தில் நின்று அழுது வேண்டும் காட்சியைத் தினமும் காணலாம். செந் தி ற் குமரனது இளமை அழகையும் மேனியின் வண்ணப் பொலி வையும் வீரச் சிறப்பையும் வியந்து பாராட்டாத புலவர் களே இல்லை.
முருகப்பெருமானுடைய ஆறு திருமுகங்களும் அவைகள் ஆற்றும் திருச்செயல்களைப் பற்றியும் நக்கீரர் மிகவும் அழ எாக எடுத்துக் கூறி ஆறுமுகங்களிலும் பொலிந்துள்ள கருணையில் நம்மை எல்லாம் திளைக்கும்படி செய்கிருர், இருள் மிகுந்த உலகம் ஒளியுடன் திகழ கதிர்பரப்புகின்றது ஒரு முகம். தன்னைத் துதித்து வணங்கும் அன்பர்களுக்கு வேண் டிய வரங்களை அன்புடன் அருளுகின்றது ஒரு முகம். மந்திர விதிப்படி முறை தவருது அந்தணர்கள் இயற்றும் பாகங்க

Page 18
- 14 -
ளுக்கு இடையூறு வாராமல் பாதுகாக்கின்றது . ஒருமுகம். தெளிவற்ற பகுதிகளை எல்லாம் தெரியப்படுத்தி திசைகளை விளக்கமுறச் செய்கின்றது ஒரு முகம், அசுர குணங்களே அழித்துக் கருணை பாலிக்கின்றது ஒரு முகம் குறக்குலக் கொடியான வள்ளி நாயகியோடு புன்னகைபூத்து இன்பம் அனுபவித்து மகிழ்கின்றது ஒரு முகம். இவ்வாருக ஆண்வனின் ஆறு திருமுகங்களும் தனித்தனியே புரியும் தொழில் களும் அவற்றுள் ஒவ்வொரு முகத்திற்கும் இவ்விரண்டு கைகள் இனமாய் பன்னிரண்டு திருக்கரங்களும் அருளும் கருமங்களும் திருமுருகாற்றுப் படையில் கூறியிருப்பது கற்றுணுர்ந்து இன்புறத்தக்கது. ஆறுமுகப் பெருமான், தான் என்றும் மங்காத பேரொளியாக செந்தில் பதியில் எழுந்தளியிருந்து அடியார்களுக்கு அருள்புரிந்து வருவதை அங்கு அடிக்கடி நிகழும் அற்புதச் செயல்கள் வாயிலாக உலக மக்களுக்கு உணர்த்தி வருகிருர். கலியுகத்தில் கண் க்ண்ட தெய்வம் அவனன்ருே.
17-ஆம் நூற்ருண்டு. மதுரையிலிருந்து நாயக்க மன் னர்கள் ஆட்சிபுரிந்த காலம். டச்சு நாட்டுக் கடற்கொள் ளைக்காரர், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் திருச்செந் தூர்க் கோயிலில் புகுந்து கற்சிலைகளை எல்லாம் உடைத்த னர். தெற்கு முகம் நோக்கி வீற்றிருந்த பஞ்சலோகங் களால் உருவாக்கப்பட்ட ஆறுமுகப்பெருமானின் விக்கிர கத்தை தங்கமென நினைத்து அதனைத் தூக்கித் தங்களின் கப்பலுக்குக் கொண்டு சென்றனர் நாயக்க மன்னர்களி டமோ வலிமை மிகுந்த கடற்படையில்லை. கப்பல் புறப் பட்டு சிறிது நேரம் கழிந்திருக்கும். திடீரெனப் பெரும் புயல் அடித்தது. அத்துடன் இடியும் மழையும் சேர்ந்து கொண்டன. கடல் கொந்தளிக்கவே கப்பலும் தத்தளித் தது. இயற்கையின் இந்தச் சீற்றத்தைக் கண்ணுற்ற கடற் கொள்ளைக்காரர் பயந்து திருவுருவத்தைக் கயிற்றில் கட் டிக் கடலில் இறக்கி விட்டுச் சென்றனர். இயற்சையின் சினம் தணிந்தது. ஆலயத்தில் ஆறுமுகப்பெருமானின் திருவுருவத்தைக் காணுது பக்தர்கள் ஆற்முெணுத் துயர்

- 15 -
அடைந்தனர். அங்குமிங்கும் தேடி அலைந்தனர். இது என்ன இறைவனின் சோதனையோ என ஏங்கித்தவித்தனர்.
வடமலையப்பபிள்ளை என்பவர் சிறந்த முருகபக்தர். கருணையே வடிவான கார்த்திகேயன் இவரது கனவிலே தோன்றி தான் இருக்கும் இடத்தைக் குறிக்கும் முகமாக கடலில் சிறிது தூரம் சென்றதும் அங்கு ஒரு எலுமிச்சம் பழம் மிதக்கும் என்றும்; அந்த இடத்துக்கு மே லே வானத்தில் கருடன் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என அடையாளத்தைக் கூறி மறைந்தார். திடுக்கிட்டு விழித் தெழுந்த பிள்ளை அவர்கள் திருச்செந்தூர் முதல்வனின் திருவருளை எண்ணி வியந்தார். அடுத்த நாள் பிள்ளையன் வேறு சிலரையும் சேர்த்துக் கொண்டு வள்ளத்தில் சென்று அடையாளம் காணப்பட்ட இடத்தில் பக்திப் பெருக்கால் க்டலில் குதித்தார், ச முத் தி ர ம் ஆழமில்லாதவாறு அவருக்குத் தோன்றியது. மூழ்கி எழுந்தார். முதலில் நடராஜர் சிலை கிடைத்தது. பின்னர் ஆறுமுகப்பெருமா னின் திருவுருவத்தைக் கண்டதும் கண்களில் ஆனந்தக் கண்ணிர் மல்க அதனைக் கட்டியணைத்து வள்ளத்தில் ஏற்றி ஆலயத்துக்குக் கொண்டு வந்து சேர்த்தார். பக்தர்களும் பன்னிருகரமுடைய பெருமானின் திருவருளை வியந்து ஆனந்த சாகரத்தில் திளைத்தனர். இன்றும் செந்தில் ஆண்டவன் சந்நிதியில் இத்திருவுருவங்களையே நாம் காணக்கூடியதாக இருக்கிறது. இவைகள், கி. பி. 1653-ம் ஆண்டு தை மாதம் 29-ம் திகதி வெள்ளிக்கிழமையன்று தான் கடலிலிருந்து எடுக்கப்பட்டதாகக் கல்வெட்டுக்களி லிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. ஆறுமுகப்பெருமான் திருவுருவத்தில் மீன்கள் கொத்திய தடங்களை இன்றும் நாம் காணலாம்.
மேலும் இன்னுமொரு நிகழ்ச்சியைக் கூறுவோம் 1803-ம் ஆண்டில் திருநெல்வேலியில் ஆங்கிலேயக் கலெக் டராக இருந்த லூஷிங்கடன் து ைர திருச்செந்தூரில் முகாமிட்டிருந்தார். ஒரு நாள் ஆலயத்தில் வசந்த மண் டபத்தில் ஆறுமுகப்பெருமானை அலங்காரமாக எழுந்தரு ளப்பண்ணி அடியார்கள் இருமருங்கிலும் நின்று விசிறிக்

Page 19
- 16 -
கொண்டிருந்ததைத் துரை கண்ணுற்ருர், அங்கு குழுமியி ருந்த பக்தர்களை நோக்கி ' உங்கள் தெ ய் வத் தி ற் கு வியர்வை அரும்புகிறதா ?? என அவர் கேலியாகக் கேட் டார். * ஆம் ’ என அன்பர்கள் ஒரு வார்த்தையில் பதில் அளித்தனர். இதனை நிரூபித்துக் காண்பிக்கவேண்டு மென அவர் விரும்பவே அர்ச்சகர்கள் ஆறுமுகப் பெரு மானின் திருவுருவத்தில் உள்ள மாலைகளையெல்லாம் களைந்து விட்டுக் கோடித்துணியை விக்கிரகத்தின் மேல் போர்த்தி ஞர்கள். சிறிது நேரம் கழிந்தது, என்ன ஆச்சரியம். துணி முழுவதும் நனைந்ததோடு வியர்வை நீர் தரையிலும் ஒட ஆரம்பித்தது. கோலமா மஞ்ஞை மீது குலவும் குமரனின் பெருமையை உணர்ந்த கலெக்டர் பக்தி வசப்பட்டவராக எம்பெருமானைப் பணிந்து பல வெள்ளிப் பாத்திரங்களைக் காணிக்கையாகச் செலுத்தினுர்.
பூரீ சங்கராச்சாரிய சுவாமிகள் தனக்கு ஏ ற் பட் ட நோயின் வேதனை தாங்காது திருச்செந்தூர் முருகன் மீது பூரீ சுப்பிரமணிய புஜங்க ஸ்தோத்திரம பாடி, அந் த நோயின் கொடுமையிலிருந்து விடுதலை பெற்ருர், ஐந்து வயது வரை ஊமையாக இருந்த குமரகுருபரர், அவரது பெற்றேர்கள் செந்தி முதல்வன் சந்நிதியில் அனுட்டித்த விரதத்தின் பயஞல் ஊமைத் தன்மை நீங்கப் பெற்று கந்தர் கலிவெண்பா பாடி முடித்தார்.
திருச்செந்தூரில் நடைபெறும் விழாக்களில் முருகப் பெருமானின் திருஅவதாரத்தைக் குறிக்கும் வைகாசி விசாகமும், சூரபத்மனை அழித்து ஆட்கொண்ட, கந்த சஷ்டி விழாவும் மிகவும் முக்கியமானவை. முருகப்பெருமானது பன்னீர் இலை விபூதிப் பிரசாதம், மகிமை வாய்ந்தது. அதனை அன்போடு பூசியமாத்திரத்தில் சகல விதமான பிணிகளும் நீங்கப்பெறும். மே லா ன நல்வாழ்வையும் அடியார்கள் அடைவார்கள்.
* வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்கிடுமே - செந்திநகர்ச் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவு வாராதே வினை ".

- l? -
பக்தர்கள் போற்றிப் பரவும் பழனிமலை முருகன்
was galaswers
காவினன் குடிலுறு காமர் பொன்னகர் மேவினன் குடிவர விளியச் சூர்முதல் பூவினன் குடிலையம் பொருட்கு மாலுற ஆவினன் குடிவரும் அமலன் போற்றுவாம்.
- கந்தபுராணம் (துதிப்பாடல்
பழமையும் பெருமையும் வாய்ந்த தலம் பழனி. இத்திருப்பதி தொன்மைச் சேரனலும், தென்னவனகிய பாண்டியனுலும் ஒருங்கே போற்றப்பட்ட சிறப்பினை உடையது. அத்துடன் சங்ககால இலக்கியங்களும் புரா ணங்களும் இப்பதியைப் பலவாரு கப் பா ரா ட் டி ப் புகழ்ந்துள்ளன.
கடைச் சங்க காலத்தில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பேகன் என்பவன் கொங்கு நாட்டை ஆண்டு வந்தான். அவனது முழுப்பெயர் வையாவிக் கோப்பெரும் பேகன் ஆகும். அந்த நாட்டின் ஒரு பகுதியாகப் பழனி விளங்கியதென்றும். அக்காலத்தில் அந்நகர் பொதினி என அழைக்கப்பட்டு வந்ததென்றும் அகநானூற்றிலிருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. ஒரு சிலர் * பொதினி ? என்னும் இந்தப் பெயரே நாளடைவில் பழனி என மாற்றம் அடைந்ததாகக் கூறுகிருர்கள்.
முழவுறழ் திணி தோணெடு வேளரவி, பொன் னுடை நெடுநகர்ப் பொதினி " என அகநானூறு கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது. பண்டைக் காலத்தில் திருவாவி னன்குடி என்று வழங்கப்பட்டு வந்த தலமே பழனியாகும்.

Page 20
- 18 -
திரு, என்பது இலக்குமியைக் குறித்தது. ஆ- காமதேனு. இனன் - சூரியன், கு - பூமி, டி - இந்திரன் எ ன் று பொருள்படும். ஆகவே, இவர்கள் பூசித்த தலமாகையால் இப்பெயர் பெற்றது. இருந்தும், ஒரு சிலர் அடிவாரத்தி லுள்ள ஆலயத்தை ஆவினன்குடி என்றும் மலைக்கு மேல் இருக்கின்ற பதியைப் பழனி என்றும் கூறுகிருர்கள். ஆனல் இரண்டும் இணைந்துதான் மூன்ருவது படை வீடாகக் கருதப்படுகிறது. திருவாவினன்குடிக்கு ஆதியில் சித்தன் வாழ்வு என்ற பெயர் இருந்ததாகத் திருமுருகாற்றுப் படைக்கு உரை எழுதிய நச்சினர்க்கினியர் கூறுகிருர். சித்தன் என்மூல் முருகன். நமது தமிழ் மூதாட்டியா ராகிய ஒளவையாரும்,
* நல்லம்பர் நல்ல குடியுடைத்து சித்தன் வாழ்வு
இல்லந்தொறும் மூன்று ஏரி உடைத்து - நல்லரவம் பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டிய நின் நாட்டுடைத்து நல்ல தமிழ் ".
எனச் சித்தன் வாழ்வைச் சிறப்பித்துக் கூறுகின்றர். பரமேஸ்வரனும் பார்வதியும் பச்சிளம் குழந்தையாகிய முருகனை ‘ ஞானப் பழம் நீ " என்று ஆராக் காதலுடன் அழைத்ததன் காரணமாக அப்பெருமான் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் இப்பதிக்கும் பழம் நீ எனத் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வந்தது. காலப் போக்கில் அச்சொல் மருவி பழநி என அழைக்கப்பட்டு வருகிறது. பழ இனங்கள் சூழ்ந்த இடமாக இருப்பதால் பழனி என வழங்கப்பட்டு வருகிறது எனவும் ஒரு சாரார் கூறுவர்.
கயிலையங்கிரியில் பரமேஸ்வரன் பார்வதி சமேதர ராக வீற்றிருக்கிருர், குழந்தைகளான ஐங்கரனும் ஆறு

- 19 -
முகனும் அவர்கள் முன்னிலையில் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றனர். அன்புச் செல்வங்களான குழந்தை களின் விளையாட்டை உலக மாதாவாகிய உ  ைம யு ம் சிவனும் ரசித்த வண்ணம் இருக்கின்றனர். அம்மையை யும் அப்பனையும் தரிசிப்பதற்காக நாரத முனிவர் அங்கு வருகின்ருர், பெரியவர்களிடம் செல்லும்போது வெறுங் கையுடன் செல்வது அவ்வளவு நல்லதல்ல என்று எண்ணி ஒரு மாங்கனியையும் எடுத்துச் சென்ருர் . நாரத முனிவர் கலகப் பிரியராயிற்றே. தான் கொண்டு வந்த மாங் கணியை இறைவனது பாதாரவிந்தங்களில் அர்ப்பணமாக வைத்து வணங்கினர். அமலனும் அக்கனியை அன்புடன் ஏற்று அம்பிகையின் கரங்களில் ஒப்படைக்கிருர், மாங் கணியைக் கண்டதும் அதைப் பெறுவதற்கு கணபதியும் கந்தனும் ஆசையுடன் ஓடி வருகின்றனர். உலகத்து உயிர்களுக்கு உண்மையைப் போதிக்க உளம் கொண்ட உமாமகேஸ்வரன், அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு போட்டியை ஏற்படுத்துகிருர். உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிருரோ அவருக்கே இந்த மாங்கனி உரியது என்று எம்பெருமான் கூறியதும் முருகன் உடனே உலகை வலம் வர மயில் மீது புறப்பட்டார். தொந்தி வயிற் றுடன் எவ்வாறு ஒரு நொடிக்குள் உலகத்தை வலம் வருவது என்று விநாயகர் சிறிது நேரம் சிந்திக்கிருர், திடீரென அவருக்கு ஒரு யோ ச னை தோன்றுகிறது. அம்மையையும் அப்பனையும் மூன்று தரம் வலம் வந்து மாங்கனியையும் பெற்றுவிடுகிருர், காடு மலைகளைக் கடந்து அகில உலகத்தையும் சுற்றிக் கொண்டு வந்து இறங்கு கிருர் முருகப் பெருமான், கணபதியின் கையில் மாங்கனி coući கண்டதும் கோபாவேசத்துடன் கைலையைவிட்டுப் புறப்படுகிறர். தெற்கு நோக்கி வரும்போது வழியில் பழனியில் நெல்லிவனம் அடர்ந்துள்ள்பகுதியில் தங்குகிருர்,

Page 21
- 20 -
முருகனைப் பிரிந்த பரமசிவனும் பார்வதியும் திருவா வினன்குடிக்கு வந்து தங்கள் அருமைக் குழந்தை அங்கு ஆண்டிக் கோலத்துடன் நிற்பதைக் கண்டார்கள். நான் மறை போற்றும் ஞானப்பழம் அல்லவா நீ. இன்னமும் சிறு குழந்தையாக விளையாடித் திரியலாமா? அன்பர்கள் அநவரதமும் நாடிவரும் அன்புப் பழம் நீ அல்லவோ, அப்படியிருக்க வேறு பழம் உனக்கு எதற்கு? என்று ஆறுதல் கூறிஞர்கள். * பழம் நீ " என்று அழைத்த பெயரே நாளடைவில் பழநி என மருவி ஆறுமுகப் பெரு மான் ஆண்டிக் கோலத்துடன் காட்சி தரும் அப்பதிக்கு வழங்கப்படலாயிற்று.
கூறு படையாளுங் குன்றக் குறைப் பெருங் குன்று ஞானப் பேறுடைப் பழநி யென்னப் பெயரது மருவி யெங்க ளாறு மாமுகன் வைகு நகரமு மன்று தொட்டு வீறு தொல் பழநி யென்றே விளம்பின வுலக மூன்றும் ".
- பழனி ஸ்தல புராணம்
அகத்திய முனிவரும், விநாயகன் மாங்கனி பெ ற் ற, நிகழ்ச்சியை தாம் இயற்றிய பிள்ளேயார் கதையில்,
"ஈண்டு மாங்கனியை வேண்டி இறைவனே வலஞ் செய்தங்கன் நீண்ட கை முதல்வா என்று நினைப்பவர் தலைவா போற்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
இறைவனல் படைக்கப்பட்ட புவனங்கள் யாவும் அவனுள் அடங்கி இருக்கின்றன. எனவே சக்தியும் சிவமு மாக விளங்கும் ஆண்டவனே வலம் வந்தால் அகிலத்தையே வலம் வருவதற்கு ஒப்பாகும் என்ப து இங்கு தெளி வாக உணர்த்தப்பட்டுள்ளது.

- 21 -
பழநி மலை அடிவாரத்தில் திருவாவினன்குடி ஆலயம் மைந்துள்ளது. இத்தத் திருத்தலத்தில் வடகிழக்குப் துகுதியில் சரவணப் பொய்கை இருக்கிறது. இது ஒரு டிண்ணிய தீர்த்தமாகும். பழநி ஆண்டவனைத் தரிசிக்க கருபவர்கள் இப்பொய்கையில் நீராடிவிட்டுத்தான் செல் ல்ார்கள். திருவாவினன்குடியில் முருகன் ம யி ல் மீ து அமர்ந்த வண்ணம் குழந்தை வேலாயுத சுவாமி என்னும் நாமத்துடன் அடியார்களுக்குக் காட்சி தருகின்ருர். இவ் ஆலயத்தை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் மூன்ருவது ஆடை வீடாகக் குறிப்பிடுகின் ருர். இப்பெருமானை வழி டிட்ட பின்னரே மலைக் கோயிலுக்குப் போவது வழக்க டிாக இருந்து வருகிறது. பங்குனி மாதத்தில் திருவா வினன்குடிக் கோயிலில் பத்து நாட்கள் மிகவும் சிறப்பாக கற்சவம் நடைபெறும். உற்சவங்களுக்குப் பக்தர்கள் ஆயிரக் கணக்கில் வந்து சேருவார்கள். அத் துட ன் காவடிகளுடன் முருகனுடைய புகழைப் பாடிக் கொண்டு பக்தர்கள் வருவது கண்கொள்ளாக் காட்சி டிாகும். பழனி மலைக் கோவிலிலும் பங்குனி உத்தரத் தன்று தங்கரதத்தில் உற்சவ மூர்த்தியான சின்னக் குமரர் திருவுலா வருவார்.
திருவாவினன்குடியில் தேவகுஞ்சரியுடன் எழுந்தருளி யிருக்கும் முருகனைத் தரிசிப்பதற்கு முனிவர்கள் தலைமை யில் ஒரு பெரும் கூட்டமே வந்து கொண்டிருக்கிறது. இந்தப் பெரிய கூட்டத்தில் யார் யார் இருக்கிருர்கள். முருகனே நாடிவரக் கா ர ண ம் என்ன? அவர்களுக்கு இருக்கும் குறைதான் என்ன? நக்கீரர் தமது திருமுரு காற்றுப்படையில் நல்ல அழகாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.
மரவுரி தரித்து நரைத்த முடியுடன் தவமே வடி வெடுத்து வந்தாற் போல முனிவர்கள் முன்னே வழி

Page 22
- 22 -
நடத்திச் செல்ல அவர்களைத் தொடர்ந்து ஆடல் பாடல் களில் வல்ல கந்தருவர்கள் யாழை வாசித்து இனிய பாட்டைப் பாடிக் கொண்டு வருகிருர்கள். அடுத்தாற் போலத் தேவர்கள், திருமால், சிவன், இந்திரன் என ஒரு பெரும் கூட்டமே வருகிறது. ஆனல் இத்தக் கூட்டத்தில் படைத்தல் தொழில் புரியும் பிரமனைக் காணவேயில்லை. மும்மூர்த்திகளில் ஒருவனக இருந்தும் பிரமன் சிறையில் அடைபட்டு இருக்கிருன். அகந்தையினல் மு ரு கனை அவமதித்ததோடு " ஓம் " என்னும் பிரணவத்துக்குப் (சொல்லுக்குப்) பொருள் தெரியாது மயங்கினமையினல் பிரமனுக்குச் சிறைவாசம் கிடைத்தது. படைப்புத் தொழிலோ நின்று போயிற்று. பிரமன் செய்த தவறை மன்னித்து அவனைச் சிறையிலிருந்தும் வி டு விக் க வே முருகனது அருளை நாடி வந்திருக்கிருர்கள். மேலும் முப்பத்துமூவரோடு, தேவர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னவர், கிம்புருடர், இயக்கர், விஞ்சையர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், பூதர், பைசாசனர், தாராகணங்களும், நாமர், ஆகாசவாசிகள், போகபூமி யோர் என்று சொல்லப்படுகின்ற பதினெண் கணங்களும் அவர்களுடன் கூடி வந்து தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டும்படியாகத் திருவாவினன்குடியிலே, குற்றமற்ற கொள்கையினையுடைய அறக் கற்பு வாய்ந்த தெய்வானை யாருடன் சில நாட்கள் எழுந்தருளியிருப்பான் என அழகாகக் கூறுகிருர் நக்கீரர்.
பழனிப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருமலை 450 அடி உயரமுடையது. மலை உச்சியில் ஞானதண்டா யுதபாணியின் ஆலயம் அழகாக அமைந்துள்ளது. தன்னை நாடிவரும் பக்தர்களுக்கெல்லாம் சகல சுகபோகங்களை யும் அள்ளிக் கொடுத்துவிட்டு தனக்கென ஒன்றையும் வைத்துக் கொள்ளாமல் ஆண்டிக் கோலத்துடன் முருகன் காட்சி த்ருகின்றர். ஒளி பொருந்திய திருமுகமும் அருள்

- 23 -
கனிந்த திருநோக்கமும் புன்னகை தவழும் திருவாயுட னும் மேற்கு நோக்கி நிற்கும் குமரனது திருக்கோலம் காண்போரைப் பரவசம் அடையச் செய்யும். இப்பெரு மானுடைய திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட பால், தேன் முதலியவைகளை உண்பவர் தமக்குள்ள பல நோய்கள் நீங்கப்பெற்று அமிர்தம் உண்டவரில் நலமுடன் வாழ்கின்றனர். மலையில் உள்ள ஆலயத்திற்கு ஏறிச் செல்வதற்கு 697 படிகள் உள்ளன. பழனி மலையைச் சுற்றி அழகான கிரிப்பிரகாரம் உண்டு. அது ஒன்றே கால் மைல் சுற்றளவுடையது. பழனி ஆண்டவனைத் தரிசிக்க மலையில் ஏறிச் செல்லும் போது இரு மருங்கி லும் நாம் காணும் இயற்கைக் காட்சிகள் இன்பம் தர வல்லன. கடம்பு முதலிய பல வகை மரங்கள் செழித்து ஓங்கி வளர்ந்துள்ளன. இந்தக் கடம்ப மரங்களிலிருந்து வீசும் காற்று மலையேறும் மக்களின் உடற் பிணியைப் போக்கி உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்க வல்லது. அடியார் சுள் மலை உச்சியில் ஆண்டவனைத் தரிசிப்பதற்குப் படிகளில் ரறிச் செல்லும்போது அரோகரா! அரோகரா!! என்று ஆனந்தமாக ஆடிப்பாடித் தமது வினைகளைப் போக்கு கிருர்கள். பழனிமலைக் கிரிபிரதட்சணம் செய்பவரது தீரா நோய்களும் தீர்ந்துவிடுகின்றன. த ம்  ைம அன்போடு வழிபடுவோரது உடற்பிணி, பிறவிப்பிணி இரண்டையும் நீக்கிப் போகமும் மோட்சமும் அளிக்கும் ஞானதண்டா யுதபாணியாக பழனி மலையில் முருகன் விளங்குகிருன். அப்பெருமான நாமும் வழிபட்டு நற்கதி அடைவோமாக.
" படிக்கின்றிலை பழனித் திருநாமம் படிப்பவர் தாள்
முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமலிட்டு மிடிக்கின்றிலை பரமானந்த மேற்கொள விம்மி விம்மி நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே '.
- கந்தரலங்காரம்

Page 23
- 24 -
தந்தைக்கு உபதேசம் செய்த தனயன்
reafa
நீரகத் தேதனே நினையும் அன்பிஞேர் பேரகத் தலமரும் பிறவி நீத்திடும் தாரகத் துருவமாந் தலைமை எய்திய ஏரகத் தறுமுகன் அடிகள் ஏத்துவாம் ".
- கந்தபுராணம் (துதிப்பாடல்)
படைத்தல், காத்தல் அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியன பஞ்சகிருத்தியங்கள் என்று கூறப்படும். இவற்றுள் படைத்தல் தொழில் புரிபவன் பிரமன். சயிலையங்கிரியில் முன்ஞெரு காலத்தில் ஒரு திருவிளையா டல் நடைபெற்றது. ஞாலத்தைப் படைக்கும் நான்முக இறுக்கும் ஞானக் குழந்தையாகிய முருகனுக்குமிடையே ஒரு சிறு சச்சரவு ஏற்பட்டது. சயிலையங்கிரிக்கு வரும் இந்திரன் முதலிய தேவர்கள் எல்லாரும் பரமேஸ்வரனை யும் உலக மாதாவாகிய உமையம்மையாரையும் வழிபட்ட பின்னர் முருகனையும் போற்றித் துதித்துச் செல்வார்கள். ஆனல் நான்முகனே, அகிலத்தைப் படைக்கும் ஆற்றல் பெற்றவன் நானே என்னும் அகந்தையினல், அங்கு விளை யாடிக் கொண்டிருந்த பாலமுருகனை சிறுவன் என நினைத்து வணங்காமல் சென்றுவிட்டான். இந்திரன் முதலிய தேவர் கள் எல்லோரும் போற்றித் துதிக்கின்ற இளமை எழில் கொஞ்சும் இறைவனை அயன் செருக்கினல் மதிக்கவில்லை. அவனது அகந்தையைப் போக்குக் கருதிய ஆறுமுகவன் அவனை அழைத்துப் பிரணவப் பொருளுக்கு உரை கூறும் டடி கேட்டான். வேதங்களையே ஒதிக் கொண்டிருப்பதனல் வேதன் எனப் பெயர் பெற்ற நான்முகன் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்துக்குப் பொருள் கூற முடியாது திகைத்

- 25 -
தான். பிரணவத்தின் பொருள் தெரியாது பிரம்மா எவ் வாறு படைத்தல் தொழில் செய்ய முடியும் என்று கூறி அவனது சிரசிலே குட்டி அவனைச் சிறையில் தள்ளிவிடுகி றர். பின்னர் முருகப்பெருமான் தானே ஒரு திருமுகத்துட னும் நான்கு திருக்கரங்களுடனும் சிருட்டித் தொழிலில் ஈடுபட்டார். ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையும் மற்றொரு திருக்கரத்தில் கமண்டலமும் கொண்டு ஏனைய திருக்கரங் கள் இரண்டும் வரதமும் அபயமும் வழங்க முருகன் படைப்புத் தொழில் புரிந்த சிறப்பைக் கந்தபுராணம் ,
* ஒரு கரந்தனில் கண்டிகை வடம் பரித்து ஒரு தண்
கர தலந்தனில் குண்டிகை தரித்திரு கரங்கள் வரத மோட பயந்தரப் பரம்பொருள் மகஞேர் திருமுகங் கொடு சதுர்முகன் போல் விதி செய்தான் ’
என அழகாக எடுத்துக் கூறுகின்றது.
பிரம்ம தேவனைச் சிறை வைத்துவிட்டு முருகன் தானே சிருட்டித் தொழில் செய்வதை அறிந்த சிவபிரான் குமரனிடம் கா ர ன ம் கேட்கின்றர். பிரணவத்தின் பொருள் தெரியாது பிரமன் எவ்வாறு சிருட்டித் தொழில் புரிய முடியும் என்று வினவுகிருர் முருகன். வேதங்களை ஓதிக் கொண்டிருக்கும் பிரமனுக்கே தெரியாத பிரண வத்தின் பொருளை உன்னுல் கூற முடியுமா? எ ன் று தனயனைத் தந்தையாகிய ப ர ம சி வ ன் கேட்கவே, முருசனும் தன் தந்தையின் மடிமீது அமர்ந்து குருமூர்த்தி யாகப் பிரணவப் பொருளை அவரது திருச்செவிகளிலே உபதேசித்தருளினர்.
முருகப் பெருமான் குருநாதராக இருந்து சிவபெரு மானுக்கு உபதேசித்த இடம் தான் சுவாமிமலை என
அழைக்கப்படுகின்றது. இத்திருத்தலத்தையே திருவேரகம்

Page 24
-- ۔ 26 -۔
என அறிஞர்கள் கொள்ளுகின்றனர். நாலாவது படை வீடாக நக்கீரரால் பாடப்பெற்ற திருவேரகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து மேற்குப் பக்கமாக ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தைக் குறிப் பிட வந்த முருக பக்தரான அருணகிரிநாதர் த ம து திருப்புகழில்,
* குருவா பரற்கு முபதேசம் வைத்த
குகனே குறத்தி D5 HTs குளிர்கா மிகுந்த வளர் பூதமெத்து
குடகாவிரிக்கு 6nut шп6uпfї திருவேரகத்தி லுறை வா யுமைக்கோர்
சிறுவா கரிக்கு மிளையோனே திருமால் தனக்கு மருகா வரக்கர்
சிரமே துணித்த பெருமாளே’.
என்று அழகாகப் பாடியிருக்கிருர்,
சோழ நாட்டுத் தலங்களுள் சிறப்புடன் விளங்குவது திருவேரகம். காவிரிக்கரையில் அமைந்துள்ள இப்படை வீடு சுவாமியாகிய தந்தைக்கு முருகப் பெருமான் (தனயன்) குருவாக விளங்கியபடியால் சுவாமிமலை என்றும் குருமலை என்றும் காரணப் பெயர் கொண்டு அழைக்கப் படுகின்றது. தந்தைக்கு உபதேசம் செய்த காரணத்தால் தனயனும் தகப்பன் சாமி எனப் பெயர் பெற்று விளங்குகிருர்,
சிவபெருமான் சீடராகவும் முருகப் பெருமான் குரு வாகவும் விளங்கியதை உலக மக்களுக்கு உணர்த்தக் கருதியே சுவாமிமலை ஆலயத்தில் சிவபெருமானின் சந்நிதி மலையின் கீழ்ப் பாகத்திலும், முருகன் சந்நிதி மலையின் மேல் பாகத்திலும் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

- 27 -
முருகன் குருவாக அ ம ர் ந் து சிவபெருமானுக்கு உபதேசம் செய்ததைக் கூற வந்த அரு ண கி ரி நா த
சுவாமிகள்,
நாதா, குமரா நமவென் றரஞர் ஒதா யெனவோ தியதெப் பொருள்தான் வேதா முதல்விண் ணவர்கு டுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே.
என்று தமது கந்தர் அநுபூதியில் "குமரா ! தந்தைக்கு உபதேசித்தது எத்தகைய பொருள், அதையே அடியே னுக்கும் உபதேசித்தருளுவீராக’ எ ன் று முருகனிடம் வேண்டுகின்ருர்,
திருமுருகாற்றுப்படைக்கு உரை தந்த நச்சினர்க் கினியர், திருவேரகத்தை "மலைநாட்டகத்து ஒரு திருப்பதி" என்று குறிப்பிடுகிருர். ஆனல் அருணகிரிநாத சுவாமி களோ "தனி ஏரகத்தின் முருகோனே தரு காவிரிக்கு வடபாரிசத்தில் சமர் வேல் எடுத்த பெருமாளே என்றும் * காவிரி யாற்றுக்குளேவரு - வளமைச் சோழ நன்னட் டுக்குள் ஏரக - நகரின் சீர்பெறு மோட்சத்தையே தரு பெருமாளே என்றும் தெளிவாகத் திருவேரகம் காவிரிக் கரையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறர். அருணகிரியாரின் அருள்வாக்கையே அறிஞர்கள் கைக்கொண்டு சுவாமி மலையே திருவேரகம் என்று போற்றி வருகின்றனர். ஏரகத்திற்குச் சுவாமிமலை என்று வழங்கப்படுவது, “ஏரக வெற்பெனு மற்புதமிக்க சுவாமிமலைப்பதி மெச்சிய சற்சன? என அருணகிரிநாத சுவாமிகள் வாக்கால் அறியப்படும்.
p
சுவாமிமலைக் கோயில் இயற்கை அழகு கொஞ்சும் சூழலில் மூன்று கோபுரங்களுடனும் மூன்று பிரகாரங்

Page 25
- 28 -
களுடனும் அமைந்துள்ளது. மலை உச்சியை அடைவதற்கு அறுபது படிகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த அறுபது படிகளும் பிரபவ முதல் அக்ஷய வருடம் ஈருக வுள்ள அறுபது தமிழ் வருடங்களின் அதி தேவதைகளைக் குறிப்பதாகவும் இந்தப் படிகளின் மீது ஏறிச் செல்வது இறைவன் கருணையினல் ஆண்டுகள் அனைத்தையும் ஆனந்த மாகக் கழித்து விடலாம் என்னும் ஒரு ஐதிகம் உண்டு.
சிவபெருமான் ஞானுேபதேசம் பெற்ற தலமாக இத்திருவேரகம் (சுவாமிமலை) சிறந்து விளங்குகின்றது. ஆகவே இங்கு பூணுால் அணியும் சடங்கு செய்தல் மிகவும் விசேடமாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு முடி எடுத்தல், காது குத்தல் முதலிய சடங்குகளும் இங்கு நிறைவேற்றப்படுகின்றன.
புகழ்பெற்ற முருகன் பதியாகத் திகழும் திருவேர கத்துக்குச் செல்லும் வழியில் பாடல் பெற்ற தலம் திருவலஞ்சுழி, இத்தலத்தினில் எழுத்தருளியிருக்கும் வெள்ளை விநாயகரை முதற்கண் தரிசித்து விட்டுத்தான் பக்தர்கள் சுவாமிநாதனை வழிபடச் செல்வது வழக்கம். சோழர் தம் குலக்கொடியாகிய காவிரியாறு திருவலஞ்சுழி என்னும் ஆலயப் பிரதேசத்தை வலமாகச் சுழித்து வணங்கிச் சென்ற காரணத்தால் இத்தலம் ‘திருவலஞ்சுழி’ எனப் பெயர் பெற்றுள்ளது. திருவலஞ்சுழி தேவாரப் பாடல்கள் பெற்ற ஒரு திருத்தலம். அப்பரும் ஞான சம்பந்தரும் இங்கு கோயில் கொண்டு எழுந்தருளியிருக் கும் சிவபெருமானைப் போற்றிப் பாடியுள்ளார்கள். கடல் நுரையால் தோன்றிய காரணத்தீ ல் வெள்ளை விநாயகர் என்னும் திருநாமம் ஏற்பட்டது. இந்த சுவேத விநாயக மூர்த்தியின் கீர்த்தியோ அளவிடற்கரியது.

--س۔ 29 سے
திருவேரகத்தின் சிறப்பைக் கூற வந்த நக்கீரர், முதற் சண் அங்கே முருகனை வழிபடும் செம்மை மிக்க அந்தணர்களின் ஒழுக்க நெறியினை எடுத்து விளக்குகின் ருர் . இவ்வந்தணர்கள் தாய் வழியிலும் தந்தை வழியிலும் தலைமுறை தலைமுறையாக ஒழுக்கத்தையே சொத்தாக உடைய நன்கு மதிக்கப்பட்ட குடிகளிலே தோன்றியவர் கன். நாற்பத்தெட்டு ஆண்டுகள் அதுவும் இளமைப் பிராயத்தில் பிரமச்சரிய விரதம் பூண்ட பெருமதிப்புக் குரியவர்கள், பிரமச்சரிய விரதத்தை முறையாக அனுட் டித்த பின்னரே இல்லறம் என்னும் நல்லறத்தை மேற் கொண்டு வாழும் பேறு பெற்றவர்கள், நாற்பத்தெட்டு ஆண்டுகளும் குருகுல வாசம் செய்து கல்வி கற்று பிரமச் சரிய விரதத்தைக் காத்துப் பூரண பக்குவம் அடைந்த் பின்னரே திருமணம் செய்துகொள்ளும் பண்பு உடைய வர்கள். முருகன் அருளால் தமக்கு வேண்டியனவெல் லாம் குறைவின்றிக் கிடைக்கப் பெறுவதால் திருவேர கத்தை விட்டு நீங்காமல் அந்தணர்கள் பண்டைக் காலந் தொட்டே வாழ்ந்து வருகிருர்கள். இவர்களைத் தொல் குடி என்று நக்கீரர் குறிப்பிடுகிறர்.
அந்தணர்கள் தங்களுக்குரிய ஒதுதல், ஒதுவித்தல் ஈதல், ஏற்றல், வேள்வி செய்தல், செய்வித்தல் என்று சொல்லப்படுகின்ற ஆறு தொழில்களிலும் இலக்கணம் வழாது நடப்பவர்கள்' ஆகவணியம், தக்கிணுக்கிணி, தாருக பத்தியம் என்ற மூன்று அக்கினிகளைப் போற்றும் இயல்புடையவர்கள் செந்தண்மை பூண்டவர்கள்.

Page 26
- 30 -
* அந்தணர் என்போர் அறவோர் மற்றெல்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் " என்னும் வள்ளுவர் வாக்குக்கு இலக்கணமாக அமைந்தவர்கள், சிறந்த முருக பக்தர்கள், ஓம் சரவணபவ ’ என்ற மந்திரத்தை உள் ளன்போடு உச்சரித்துக் கொண்டு இருப்பவர்கள், இரு பிறப்பாளர் என்று இவர்களை நக்கீரர் குறிப்பிடுகிருர். பூனூற் சடங்குக்கு முன் ஒரு பிறப்பும் அதன்பின் மற் ருெரு பிறப்பும் உடையவர்களாக அந்தணர் கருதப் படுவதால் அவர்களை இரு பிறப்பாளர் என்று நக்கீரர் குறிப்பிட்டது இங்கு கவனிக்கத்தக்கது. இவர்கள் மூன்று முப்புரி நூல்களை அணிந்திருக்கிருர்கள். அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு ஆடையை உலர்த்தாமல் ஈரமாகவே உடுத்தபடி கைகளை உச்சியிற் குவித்த வண்ணம் முருகனைப் புகழ்ந்து ஆறெழுத்தாகிய சடசஷர மந்திரத்தை வாய்க் குள்ளே உச்சரித்துக் கொண்டு மணம் கமழும் நறு மலர் களை ஏந்தி வழிபாடு செய்யும் தன்மையை நல்ல அழகாக எடுத்துக் கூறி, இவ்வழிபாட்டுக்கு மகிழ்ந்து முருகன் திருவேரகத்தில் தங்கியிருப்பான் என்றும் கூறுகிருர், நக்கீரர். தன்னை அன்புடன் நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் சுவாமிநாதன் சகல செல்வங்களும் அருளி
வருவது கண்கூடு.
 

- 3I -
குன்று தோறும் குடியிருக்கும் குமரன்
*" ஒன்றுதொ ருடலை ஒருவி ஆவி மெய்
துன்றுதொ ருடலைத் தொடங்கி ஐவகை மன்றுதொ றடிய வள்ளல் காமுறக் குன்றுதொ ருடிய குமரற் போற்றுவாம் ',
- கந்தபுராணம்
நம் முன்ஞேர்கள் நிலப்பரப்பை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை, என ஐந்து வகையாக வகுத் தனர். அவற்றுள், மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் என வழங்கப்பட்டு வந்தது. மலைச்சாரல்களில் மலரும் குறிஞ்சி மலரைக் கொண்டே இந்த நிலத்துக்கு” குறிஞ்சி என்னும் பெயர் வந்தது. உலகம் தோன்றிய போது மலையே முதற்கண் எழுந்தது என்பது ஆராய்ச்சி யாளர் முடியாகும். அந்த மலைக்கு அதிபதியாக விளங்கும் ஆறுமுகவனைக் குறிஞ்சிக் குமரன் எ ன் று அன்புடன் அடியார்கள் போற்றி வருவதில் வியப்பில்லை. அழகும் இளமையும் ததும்பும் தமிழ்த் தெய்வம் அவனே, "சேயோன் மேய மைவரை உலகமும்" என்று மிகப் பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியம் குமரனைக் குறிஞ்சி நிலத் தெய்வமாகப் புகழ்ந்து கூறுகின்றது. இங்கு சேயோன் என்னும் சொல்லுக்கு, குழந்தை வடிவத்தை உடையவன், சிவந்த மேனியை உடையவன், தொலைவில் உள்ளோன் என்று பொருள் கொள்ளலாம். "விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ" என்று நக்கீரர் குறிஞ்சி நிலத் தெய்வ மான முருகனை வாயார வாழ்த்துகின்ருர், வளம் பல பெற்ற குறிஞ்சி நிலம் இயற்கையின் ஒப்பற்ற எழிலைக் காட்டுவதால் முருகன் விரும் பும் உறைவிட மாக

Page 27
حے سے۔ 32 ہسست۔
அமைந்தது, "மலை யாவையும் மேவிய தம்பிரானே', 'பல குன்றிலுமமர்ந்த பெருமானே என்பன அருணகிரி நாதர் வாக்காகும்.
குறிஞ்சி நிலத் தலைவனுக விளங்கும் குமரன் குன்று கள் தோறும் குடியிருப்பான். தன்னை நாடி வரும் அன்பர் களுக்கு அவ்வப்போது ஏற்படும் மலைபோன்ற துயரங்களை யும் ஒரு கணப்பொழுதில் தீர்த்து வைக்கும் பெரும் கருணையை உலகுக்கு உணர்த்துவதற்குப் போலும் முருகன் மலை மீது அமர்ந்திருக்கின்றன். இளமையே வடிவெடுத் தவனுகக் குமரன் விளங்குகின்றன். இளமையைக் கண்டு இன்பம் கொள்ளாத மக்கள் யார் இவ்வுலகில் இருக் கிருர்கள். ஐந்தாவது படை வீடாகக் கொள்ளப்பட்ட த்ன்று தோருடல் மற்றைய படை வீடுகளைப் போல ஒரு குறிப்பிட்ட தலமாக அமையாது குமரன் குடிகொண்டி ருக்கும் எல்லாக் குன்றுகளேயும் குறிப்பதாகவே அறிஞர் கள் கருதுகின்றனர். ஆகவே குன்றுதோருடல் என்பது தொகைத் தலமாகும். மேலும் இப்படைவீடு இறைவ னுடைய சர்வ வியாபகத் தன்மையை மக்களுக்கு எடுத்து நன்கு உணர்த்துகின்றது.
குறிஞ்சி நிலத்தில் ஆங்காங்கே குறவர்கள் வாழ் கின் ருர்கள். அவர்கள் தங்கள் குலதெய்வமான குமர னிடத்துக் குன்ருத பக்தி உடையவர்கள். தங்கள் வாழ் விலும் தாழ்விலும் துணை நிற்பவன் அவன் ஒருவனே என்னும் தளராத நம்பிக்கை கொண்டவர்கள். முருகனை வேண்டிப் பெரும் வழிபாடு செய்வார்கள். அப்பெரு மானின் அருட்கருணையைக் கூறவந்த நக்கீரர், முதற் கண் அக்குன்றுகளில் வாழும் குறவர்கள் முருகனை வேண்டி நடத்தும் வெறியாடு களங்களிலே, வேலன் (பூசாரி)

سمح 3 3 مس۔
வெறியாட்டினையும் எடுத்து இயம்பிவிட்டுக் குறவர் மகளிர் முருகனை வணங்கிக் குரவைக் கூத்தாடுதலையும் அவர்களது பக்திக்குக் கட்டுப்பட்ட குமரன் அம்மகளிரோடு கரம் பற்றி ஆடுதலையும் அழகாகக் கூறியிருக்கின்ருர், வேலைக் கையிற் பிடித்து ஆடுவதால் இவனுக்கு வேலன் என்பது பெயராயிற்று. இவன் ஆவேசங் கொண்டு வெறி பிடித் தவனைப் போல ஆடிக் குறி முதலியன சொல்லுதல் பண்டைக் கால வழக்கு.
பச்சிலைக் கொடியிலே நறுமணம் கமழும் சாதிக்காய் களை இடையே இட்டு அழகிய அம்பருத்தூணி போன்ற தக்கோலக் காய்களையும் கலந்து காட்டு மல்லிகை மலரு டனே வெண் டா வளிப் பூவினையும் சேர்த்து அழகுறத் தொடுத்த பாஃயை அணிந்து கொண்டும் மணமுள்ள செஞ்சாந்தினை மார்பில் பூசிக் கொண்டும் கையில் வேல் ஏந்தியவண்ணம் வேலன் காட்சி அளிப்பதை நயம்பட
எடுத்துரைக்கின்ருர் நக்கீரர்.
மலை நிலத்துக்குரிய தொண்டகம் எ ன் னு ம் சிறு பறையை முழக்கி குறவர் ஒரு வருக்கொருவர் கைகோத்து ஆடும் குரவைக் கூத்து ஆடுகின்றனர். நீண்டு வளர்ந் துள்ள மூங்கில் மரங்களின் உச்சியிலே தேன் கூடுகள் காணப்படும் அவற்றில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த தேனைக் குறவர்கள் எடுத்துக்கொண்டு வந்து பக்குவப் படுத்தி அதனைக் கள்ளாக ஆக்கி வைத்திருப்பார்கள். மலையகத்தில் சிறு குடிசைகளில் வாழும் தம் உறவினரு டன் சேர்ந்து இந்தக் கள்ளைக் குடித்து முருகனைப் போற்றி ஆடிப்பாடுவார்கள். குறவர்கள் ஆடும் குரவைக் கூத்தைக் கண்டு களிப்புற்ற கானவர் மகளிரும், விரலால் வலிந்து மலரச் செய்த நறுமணம் கமழும் பூக்களைச் குடிக்

Page 28
- }4 -
கொண்டு அவர்களுடன் சேர்ந்து ஆடுவார்கள். கான வர்கள் பக்தி மேலீட்டால் ஆடிப்பாட முருகனும் பார்த் துக் கொண்டிருப்பான ? அவன் கருணைக்கடல் அல்லவா! சிவந்த திருமேனியுடன் செந்நிற ஆடையை உடுத்தபடி இடுப்பிலே கச்சையையும் கால்களிலே கழல்களையும் அணிந்தவண்ணம் தோன்றுகின்றன். பலவகை வாத்திய இசையினை முழக்கிக் கொண்டு ஆட்டிலும், சிலசமயங்களில் சேவற் கொடியை ஏந்தியவண்ணம் மயில் மீதும் வருவான். இப்படியாக முருகன் மகளிருடன் குன்றுகள் தோறும் ஆடிப்பாடி அடியார்களுக்கு அரு ள் புரி யும் பெருங் கருணையை நக்கீரர் அழகாக எடுத்துக் கூறியிருப்பது படித்து இன்புறத் தக்கதாகும்.
அருணகிரிநாதர் தமது திருப்புகழிலே குன்று தோறும் குடியிருக்கும் குமரனை அ ழ கா கப் பாடியிருக்கிருர். திருத்தணிகை, திருச்செங்கோடு, கதிர்காமம், குற்ருலம், மயிலமலை, விராலி மலை, குன்றக்குடி முதலிய தலங்களை ஒவ்வொன்ருகப் பாடியிருக்கின்ருர், என்றும் இளையவனுக, அழகளுக, இனியனுக விளங்கும் முருகனை - குன்றுகள் தோறும் ஆடிவரும் குமரனை அருணகிரிநாதர் அழகாகப் போற்றிப் பரவுகின்ருர். அவரால் புகழ்ந்து பாடப்பெற்ற திருத்தலங்களுள் திருத்தணிகை, திருச்செங்கோடு, கதிர் காமம் என்னும் தலங்களைப் பற்றியும் அவைகளின் சிறப்பையும் எடுத்துக் கூறுவோம்.
திருத்தணிகை :
* வரையிடங்களிற் சிறந்ததித் தணிகை மா ல் வரையே எனக் கந்தபுராணம் சிறப்பித்துக் கூறும், திருத்தணிகை அறுமுகப் பெருமானுக்கு உவந்த திருத் தலங்களுள் ஒன்ருக விளங்குகின்றது. அருணகிரிநாதர்

- 35 -
தமது திருப்புகழில் பல இடங்களில் இத் தலத்தைத் துதித்துப் பாடியுள்ளார். * புவிமீதே பிரபலமுள்ள சுத் தத்தணிமலை’ என்றும் இமையவர் பணி திருத்தணி பொற்பதி " என்றும் ? எத்திக்கு முள்ள புகழ் வெற்றித் திருத்தணி " என்றும் திருப்புகழ் போற்றுகின்றது.
இத்தலத்தின் பெருமையைக் கூறவந்த தணிகைப் புராணமும், யாரொருவர் திருத்தணியின் பெயரைச் சொன்னலும் நினைத்தாலும், இதன் திசையை நோக்கி வழிபட்டாலும் அவர் பல பிறவிகள் செய்து வந்த தீவினைகள் எல்லாம் நீங்கிப் பேரின்பம் பெறுவார் எனக் கூறுகின்றது. சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் என்னும் அசுரர்களோடும் மற்றும் வள்ளியம்மன் சுற்றத்தவரான வேடர்களோடும் புரிந்த போரின் கோபம் தணிந்து இங்கு வந்து முருகன் அமர்ந்தபடியால் செருத்தணி (செருகோபம், தணி - தணிதல்) என இத்தலம் முன்பு காரணப் பெயருடன் விளங்கியது. காலம் செல்லச் செல்ல செருத் தணி என்னும் பெயர் திருத்தணி என மருவி இன்றும் இத்தலம் இப்பெயருடனேயே விளங்குகின்றது. ஆணவம் கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் ஆன்மாக்களைப் பிணைத்துள்ளன. இந்த மும்மலங்களே சூரபத்மன், சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களைக் குறித்து நிற் கின்றன. எனவே எம்பெருமானகிய முருகனும் தன்னை நாடிவரும் பக்தர்களை மும்மலம் என்னும் பிடியிலிருந்து விடுவித்து ஆட்கொண்டருளுகின்றர். செங்கண் வெய்ய சூர்ச் செருத்தொழிலினுஞ் சிலைவேடர் தங்களிற் செயுஞ் செருத்தொழி லினுந்தணிந் திட்டே இங்கு வந்தியாம் இருத்தலால் செருத்தணி யென்றேர் மங்கலந்தரு பெயரினைப் பெற்றதிவ் வரையே. எனக் கந்தபுராணம் கூறுகின்றது.

Page 29
--س۔ 36 سسسے
இத்தலத்தில் சாந்த சொரூபியாக விளங்கும் முருகன் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் அமைதியை அளிக்கின்றர். மேலும் இப்பதியில் ஆண்டு தோறும் நடக் கும் கந்தசட்டி விழ 1ா வில் சூரசம்ஹார உற்சவம் நடைபெறுவதில்லை.
திருச்செங்கோடு :
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று அருணகிரிநாதரால் பு க ழ் ந் து போற்றப்பட்ட ஆறுமுகப் பெருமான் அடியார்களுக்கு அருள்பாலிக்கும் வண்ணம் திருச்செங்கோட்டில் எழுந் தருளியிருக்கின்றன். இந்த முருகன் மீது அருணகிரி நாதருக்கு அளவுகடந்த பக்தி இருந்தபடியால் இப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் திருத்தலத்தைப் பற்றிக் கந்தர் அலங்காரத்திலும், திருப்புகழிலும், கந்தர் அநுபூதியிலும் பெருமைபடப் பாடியிருக்கிருர். திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளால் பாடப்பட்ட கொடிமாடச் செங்குன்றுார் என்னும் தலமும் இதுவாகும். மலையடி வாரத்தில் கருணைக்கடலாகிய “ஆறுமுகப் பெகுமான் வள்ளி, தெய்வயானை சமேதராக அடியார்களுக்குக் காட்சி கொடுத்த வண்ணம் இருக்கின்றர்.
 

கதிர்காமம் :
ஈழத்தில் முருகப் பெருமானது திருத்தலங்களுள்
சிறந்து விளங்குவது கதிர்காமம். திருப்புகழ் பாடிய அருணகிரியாரும்,
மருவும் அடியார்கள் மனதில் விளையாடும்
மரகத மயூரப் பெருமாள் காண்,
மணி தரளம் வீசி அணி அருவி சூழ
மருவு கதிர்காமப் - பெருமாள் காண்
என்று மாணிக்கக் கங்கையின் கரையிலே ஆறுமுகச் செவ் வேள் கோயில் கொண்டெழுந்தருளி இருக்கும் கதிர்கா மத்தைப் போற்றிப் பரவுகின்ருர், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இத்திருப்பதியில் நடைபெறும் விழாக்களைக் கண்டுகளிக்க ஈழத்தில் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் செல்வார்கள். கதிர்காமம், கார்த்திகேயன் உவந்து எழுந் தருளியிருக்கும் தலமாதம். கதிர் என்ருல் ஒளி, காமம் என்ருல் அன்பு, தன்னிடத்து அன்பு கொண்டு தன்னை நாடி வருபவர்களுக்கு முருகன் சோதி வடிவாய்க் காட்சி கொடுத்துக் கருணை புரிகின்றுன் என்பது கருத்து.

Page 30
- 38 -
கதிர்காமத்தில் முருகனை உருவத் திருமேனியுடன் அடியார்கள் காண்பதில்லை. மூலஸ்தானத்தில் எப்போதும் ஒரு திரைச்சீலை காணப்படும். உள்ளே பொற்றகட்டில் அமைத்த யந்திரம் அடங்கிய பெட்டி இருப்பதாகவும் அந்த யந்திரத்தில் தெய்வீக அருள் தோன்றுவதாகவும் நம்பப்படுகிறது. இந்தப் பெட்டியைத் தான் ஆடி மாதத் திலும் கார்த்திகை மாதத்திலும் நடைபெறும் பெரு விழாக்களில் யானையின் முதுகில் வைத்து வீதிவலம் கொண்டு வருவது வழக்கம். அருவமும் உருவுமாகி விளங் ஆகும் ஆறுமுகப் பெருமானைக் கதிர்காமத்தில் கண்ணுற் தண்டு அவன் அருட்பேறு பெற்றவர்கள் பலர். கதிர்காமக் கந்தனின் நாமத்தை இடைவிடாது உச்சரித்து அவன் திருவருள் பெற்று உய்ந்தவர் இன்னும் பலர். நாமும் அப்பெருமானைப் போற்றித் துதிப்போமாக.
* இறவாமற் பிறவாமல் எனயாள் சற்குருவாகிப்
பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
- திருப்புகழ்
 

-- 39 س
பழமுதிர்சோலை மலைகிழவோன்
* எழமுதி ரைப்புனத்து இறைவி முன்புதன்
கிழமுதிர் இளநலங்கிடைப்ப முன்னவன் மழமுதிர் களிறென வருதல் வேண்டிய பழமுதிர் சோலையம் பகவற் போற்றுவாம் "
- கந்தபுராணம் (துதிப்பாடல்)
நக்கீரர் தாம் உரைத்த நன் முருகாற்றுப்படையில் இறுதியாக, இயற்கை வனப்பு மிக்க பழமுதிர் சோலை யின் சிறப்பை எடுத்துக் கூறுகிருர் .
இயற்கையின் எழிலில் இன்பம் காண்பவர்கள் புலவர் பெருமக்கள். நக்கீரர் அதற்கு விதிவிலக்கல்லர். பழமுதிர் சோலையின் இயற்கை வனப்பை எவ்வாறு எடுத்து இயம்பு கிருர் என்பதைக் கவனிப்போம். மலையின் உச்சியில் சிறிய கிளைகளாக ஆரம்பித்த அருவி, வரும் வழியில் ஒன்று சேர்ந்து பேரருவியாகிக்கீழ் நோக்கிப் பாய்கின்றது. உயரத்தில் ஆங்காங்கே தெரியும் சிறிய அகுவிகள் வெள்ளை வெளேரென்று துணியாலான கொடிகள் அசைவது போலக் காட்சியளிக்கின்றன அருவி கீழ்நோக்கி வரும் போது, அருகில் உள்ள அகிற் கட்டைகளைச் சுமந்து கொண்டு வருகிறது. பெருந்தாரையாகி வேகம் பெற்று வரும்போது சந்தன மரங்களை வேரோடும் பெயர்த்து உருட்டிக் கொண்டும் Gkr கூடுகளைச் சிதைத்துக் கொண் டும் பாயத் தொடங்குகிறது. பழுத்து வெடித்த பலாப் பழங்களிலிருந்து உதிர்ந்து விழும் சுளைகளும் அருவியுடன்

Page 31
- 40 -
கலக்கின்றன. மரங்களில் வாழும் கருங்குரங்குகள் குளி ரால் நடுங்குகின்றன. அங்கே உலாவித் திரியும் கருமை யான பெண் யானைகளும் அருவி வீசும் துளிகளால் குளிர்
அடைந்து காணப்படுகின்றன.
பெரிய ஆண் யானைகளின் மு த்  ைத யு  ைட ய வெண்மையான தந்தங்களை வாரிக்கொண்டு வரும் அருவி, வாழை மரங்களை முறித்துக் கொண்டும், இளநீர்க் குலை களை உதிர்த்துக் கொண்டும் வருகின்றது. அங்கேயுள்ள பறவைகளும் மிருகங்களும் அருவி விழும் ஓசையைக் கேட்டு அஞ்சி ஒடுகின்றன. காட்டுப் பசுவின் காளை மலை உச்சியிலிருந்து அதிரும்படி முழங்குகின்றது. ஆனல் மலை உச்சியிலிருந்து கீழ் நோக்கி வரும் அருவியின் ஓசை இடையீடு இல்லாமல் இழும் என முழங்கிக் கொண்டே யிருக்கிறது என்று நக்கீரர் நயம்பட எடுத்துக் கூறியிருப் பது படித்து இன்புறத்தக்கது. இத்தகைய இயற்கை நலம் பெற்ற பழமுதிர்சோலை மலைக்குத் தலைவனுக இருப் பவன் முருகனே என்றும் அப்பெருமான் எழுந்தருளி யிருக்கும் பல்வேறு இடங்களையும் அவனது திருநாமங் களையும், அவனை ஏத்தும் முறையையும் எ டு த் து விளக்குகின்றர்.
முருகன், தன்னை வழிபடுவதற்கெனக் கட்டி எழுப்பப் பெற்ற ஆலயங்களில் மாத்திரம் இருந்து அன்பர்களுக்கு அருள்புரிபவனல்லன். அவனே எங்கும் நிறைந்துள்ளான். இயற்கை எழில் தவழும் இடங்களில் எல்லாம் அவனைக் காணலாம். தமிழ் நாட்டில் ஊர் தோறும் முருகனுக்கு விழா எடுப்பார்கள், சிறிய தினை அரிசியை மலர்களோடு கலந்து வைத்து வழிபடுவார்கள். அதன்பின் ஆட்டுக்

- 41 -
கடாவை அறுத்துப் பலியிட்டுக் கோழிக் கொடியை நிறுத்தி அதில் முருகன் எழுந்தருளியிருப்பதாகக் கருதி விழாக் கொண்டாடுவார்கள். அவ்விழாக்களை நடத்தும் அடியார்களது அன்புக்கு அடிமையாகி அங்கேயும் எழுந் தருளியிருப்பான். அன்பர்கள் தன்னைப் போற்றித் துதிப் பதஞலே அவர்களுக்கு அருள்புரிய வேண்டி வெறியாடு களத்திலும், காட்டிலும், சோலையிலும், ஆற்றின் நடுவில் உள்ள அழகிய இட்டுகளிலும் ஆற்றங்கரையிலும், குளக் கரையிலும் இன்றும் பல்வேறு இடங்களிலும், நாற்சந்தி, மூச்சந்திகளிலும், புதுப் பூக்களையுடைய கடம்ப மரத்தி லும், பெரிய மரக்கடியிலும் சபை கூடும் அம்பலத்திலும் பசுக்கள் உராய்ந்து கொள்ளும் தறிகள் உள்ள இடங் களிலும் இன்னும் வேறுபல இடங்களிலும், நீ எங்கு காண விரும்புகிருயோ ஆண்டாண்டுக் காணப்படுபவன். இவ்வாறு முருகன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன். அன்பர்கள் விரும்பிச் செய்யும் வழிபாடுகளை மனமார ஏற்று அவர்களுக்கு அருள்புரிவான் குறிஞ்சிக் குமரன் என்று கூறிவிட்டு வேறு விதமான வழிபாட்டு முறையை யும் எடுத்து விளக்குகிருர்,
மலைக் கோயில்களில் குறப்பெண்கள் முருகனுக்கு விழா எடுக்கின்றனர். சேவற் கொடியை நிறுத்தி அலங் காரங்கள் செய்து குறிஞ்சிக் குமரன் புகழ்பாடி வழிபாடு செய்கிருர்கள். கோயில்களில் நெய்யோடு வெண் சிறு கடுகை அரைத்துக் கலந்து ஆறெழுத்து மந்திரத்தை உச்சரித்த வண்ணம் தட்வுகின்றனர். அழகிய நறு மலர் களைத் தூவி, தலைகுனிந்து கை குவித்து கலியுக வரத ஞகிய கந்தப் பெருமானை வழிபடுகின்றனர். வெவ்வேறு நிறங்களையுடைய இரண்டு ஆடைகளை உள்ளொன்றும்

Page 32
--سس۔ 42 --سے
புறமொன்றுமாக உடுத்து சிவப்பு நூலைக் கையில் காப் பாகக் கட்டிக் கொள்ளுகிறர்கள். கொழுத்த ஆட்டுக் கடாவை அறுத்து அதன் இரத்தத்துடன் வெண்மையான அரிசியைக் கலந்து சிறு பலியாக நிவேதிக்கிருர்கள். மஞ்சளை அரைத்து சத்தனத்துடன் கலந்து எங்கும் தெளிக் கிருர்கள். செவ்வலரி மாலைகளைத் துண்டு துண்டாக அறுத் துத் தொங்க விடுகிருர்கள். குறிஞ்சிப் பண்களைப்பாடிப் பல நிறப் பூக்களைத் தூவிக் குமரனைப் போற்றித் துதிக் கின்றனர். இங்ங்ணம் வழிபாடு நடைபெறுகின்ற இடத் திலும் முருகன் எழுந்தருளியிருப்பான். இவ்வாறு அன்பர் கள் வழிபடுகின்ற நிலையைக் கூறிய நக்கீரர் நம்மை முருகனிடம் வழிப்படுத்தப் பெரிதும் விரும்பி மேலும் கூறுகிருர். அவன் எந்த இடத்தில் இருந்தாலும் நீ அவனை நேரிற் காணும் பொழுது இனிய முகத்தோடு கையைத் தலைமேல் குவித்து வணங்கி அவனுடைய பாதகமலங்களை உன் தலையில் உறுமாறு வணங்கி வாழ்த்து வாயாகுக. குழவியே! மைந்தரேறே புலவரேறே! என்று உனக்குத் தெரிந்த சொற்களால் அவனை வாயாரப் புகழ்ந்து துதிக்கலாம். தேவர்க்கு மட்டும் அருள் செய்ப வன் அல்லன், அவனே வேண்டுவார் வேண்டுவதை அருளும் வள்ளல். தன்னைத் தேடி வரும் யாவர்க்கும் நிச்சயம் அருள்புரிவான்.
இவ்வாறு ஆற்றுப்படுத்திய அருட்கவிஞர் நக்கீரர், எல்லாவற்றிலும் சிறந்த பெறுதற்கரிய பரிசிலாகிய வீடு பேற்றினை - மரணமிலாப் பெருவgழ்வை முருகன் நல்கும் முறையையும் விவரித்துக் கூறுகிருர்.
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே விளங்குகின்ற கந்தவேளின் அரு ளை யு ம்

- 43 -
வீரத்தையும் வெற்றியையும் வாழ்த்தி வணங்கும் போது அப்பெருமான் தெய்வத்தன்மை நிரம்பியதாயும், வலிமை மி க் க தா யு ம், ஆகாயத்தை அளாவுகின்றதாயுமுள்ள உயர்ந்த வடிவுடன் தோன்றுவான். அத்தோற்றம் அன்பர்க்கு அச்சத்தையும் வருத்தத்தையும் கொடுக்கு மாதலால் உயர்ந்தோங்கி நின்ற அவ்வடிவத்தை உள்ள டக்கிக் கொண்டு, மணங்கமழும் தெய்வத் தன்மையுடைய பழமையான தனது இளமை நலத்துடன் அஞ்சேல் என்று அபயமளித்து இனிய வார்த்தைகள் கூறிப் பெறுவதற்கு அரியதுமாகிய வீடுபேற்றினை அடைய அருளுவான், அந்தப் பழமுதிர்சோலை மலைகிழவோன் என்று உறுதியாகக் கூறி நன்முருகாற்றுப்படையை நிறைவு செய்கிருர் நக்கீரர்.
பழமுதிர்சோலை என்னும் தலம் மதுரைக்கு அருகில் உள்ளது. பழமுதிர்சோலை என்பதற்குப் பழம் முற்றின சோலை என்று நச்விஞர்க்கினியர் என்னும் புலவர் விளக்கம் கூறியுள்ளார். முதிர்ந்த பழங்களையுடைய சோலைகள் சூழ்ந்த மலை என்னும் பொருள்பட பரிதியார் கருத்துத் தெரிவிக்கின்ருர், பழமுதிர்சோலை என்னும் சொல்லைப் பழம் + உதிர் + சோலை எனப் பிரித்து பழம் உதிரப்பட்ட சோலைகளையுடைய மலை என வேறு உரையாசிரியரும் பொருள் கூறியுள்ளனர். அழகர் மலை எனவும் இத்தலம் வழங்கப்பட்டு வருகிறது. திருமாலிருங்குன்றம், சோலைமலை என்றும் சிலர் வழங்கி வருகின்றனர். ஒரு காலத்தில் திருமாலிருஞ் சோலைமலையாகிய அழகர் கோயிலே பழ முதிர்சோலையாகவும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். பண்டைக் காலத்தில் இங்கே முருகன் கோயிலும் திருமால் கோயிலும் ஒருங்கே இருந்து, சைவ வைஷ்ணவ ஒற்றுமை யைப் புலப்படுத்தியிருக்கும். திருமால் அழகர் மலையின் அடிவாரத்தில் கோயில் கொண்டிருப்பதைப் போன்று

Page 33
一 44 一
ஆறுமுகப் பெருமானும் மலையின் மீது எழுந்தருளியிருந்து அடியார்களுக்கு அருள் பாலிக்கின்ருர். பழமுதிர்சோலை ஆலயம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் முருக பக்தர்கள் ஆதிகாலத்தில் வேலைச் சிலை வடிவமாக வைத்து வணங்கி யிருக்கிருர்கள் என்பது அறியக்கூடியதாக இருக்கிறது.
தமிழ் மூதாட்டி ஒளவைப் பிராட்டியார் மதுரைக்குச் செல்லும் வழியில், முருகப் பெருமான் மாட்டுக்காரச் சிறுவனப் போன்ற வடிவுடன் ஒரு நாவல் மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தார். நெடுந் தூரம் வழி நடந்து களைத்துப் போயிருந்த மூதாட்டியின் பசியைப் போக்கக் கருதிய அச்சிறுவன் நாவற் பழங்கள் வேண்டுமா எனப் பரிவுடன் விஞவிஞன். சிறுவனின் இனிய மொழியைக் கேட்டு மகிழ்வுற்ற ஒளவையார் நாவற்பழம் வேண்டு மெனக் கூறவே, சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற கேள்வி சிறுவனிடமிருந்து வந்தது. ஒளவையாரும் ஒரு கணம் திகைத்து சுட்ட பழமாகத் தரும்படி வேண்டினர். சிறுவனும் மரக் கிளையை நன்ருகக் குலுக்கவே கனிந்த பழங்கள் மணலின் மேல் உதிர்ந்து விழுந்தன. கீழே விழுந்த பழங்களில் மணல் ஒட்டிக் கொண்டிருக்கவே ஒளவையார் ஒவ்வொன் ருக எடுத்து மண்ணைப் போக்க வாயால் ஊதினர். பாட்டி! பழம் நன்முகச் சுடுகின்றதா என்று அந்தச் சிறுவன் கேட்கவே மூதாட்டியாரும் தன் அறிவின் சிறுமையை யோசித்துக் கண்கலங்கிஞர். இத் தமிழ் மூதாட்டி வாயிலாக உலக மக்களுக்குப் பல நீதிகளை எடுத்துக் கூறத் திருவுளம் கொண்ட முருகனும் வருந்திய ஒளவையாருக்குத் தன்

- 45 -
சுயவடிவைக் காட்டிச் சில வினக்களைக் கேட்டுப் பதிலும் கூற வைத்துவிடுகிருர். பழங்களை உதிர்த்ததால் பழம் உதிர் சோலை என அன்று தொட்டு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாருக, இத் திருமுருகாற்றுப்படை முருகப் பிரானுடைய அருங்குளுதிசயங்களையும் வீர பராக்கிரமங் களையும் அருள் விசேடங்களையும், ஆறுபடை வீடுகளின் சிறப்பையும் எடுத்துரைக்கின்றபடியால், இத் தெய்வப் பனுவலை அனுதினமும் அன்போடு பாராயணம் பண்ணு வோர்க்கு ஆண்டவன் அறுமுகப் பெருமான் திருவருள்" புரிவான் என்பது ஆன்ருேர் துணிபு.
* ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசி ரடியா ரெல்லாம் ".

Page 34
- 46 -
6.
சிவமயம் திருச்சிற்றம்பலம் நக்கீரதேவ நாயனுர் அருளிய திருமுருகாற்றுப் படை
1. திருப்பரங்குன்றம்
உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓஅற இமைக்கும் சேண்விளங்கு அவிர்ஒளி உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை மறுஇல் கற்பின் வாள்நுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பின் வள்உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்நறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து உருள்பூந் தண்தார் புரளும் மார்பினன் மால்வரை நிவந்த சேண் உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடிக்
10
கணைக்கால் வாங்கிய நுசுப்பின் பணைத்தோள்
கோபத்து அன்ன தோயாப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந்து இயற்ருக் கவின் பெறு வனப்பின்
I 5
நாவலொடு பெயரிய பொலமீபுனை அவிர்இழைச்
சேண்இகந்து விளங்கும் செயிர்தீர் மேனித் துணையோர் ஆய்ந்த இணைஈர் ஒதிச்
20

- 47 -
செங்கால் வெட்சிச் சீறிதழ் இடைஇடுபு பைந்தாள் குவளைத் தூஇதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேம்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25 துவர முடித்த துகள்அறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கரும்தகட்டு உளைப்பூ மருதின் ஒள்இணர் அட்டிக் கிளைக்கவின்று எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30 வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறும்குறடு உரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேம்கமழ் மருது இணர்கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் 35 வேங்கை நுண்தாது அப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வேன்றுஅடு விறற்கொடி வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் 40 சூர்அர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் பார்முதிர் பணிக்கடல் கலங்க உள்புக்குச் 45 சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல் உலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை அலைக்கும் காதின் பினர்மோட்டு 50

Page 35
حس۔ 48 ۔
உருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூர்உகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றுஅடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55 நிணம்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இணர் மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து 60 எய்யாநல் இசைச் செவ்வேல் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்புரிந்து உறையும் செலவுநீ நயந்தனை ஆயின் பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப 65 இன்னே பெறுதிநீ முன்னிய வினையே செருப்புகன்று எடுத்த சேண்உயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போர்அரு வாயில் திருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70 மாடம் மலிமறுகில் கூடற் குடவயின் இரும்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக் கண்போல் மலர்ந்த காமர் சீனமலர் 75 அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று,

-- ۔ 49 ----
2. திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல் வாடா மாலை ஒடையொடு துயல்வரப் படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் 80 கூற்றத்து அன்ன மாற்றரும் மொய்ம்பின் கால்கிளர்ந்து அன்ன வேழம் மேல்கொண்டு ஐவேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி மின் உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப &5 நகைதாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தம் தொழில் முடிமார் மனன்நேர்பு எழுதரு வாள் நிற முகனே 90 மாஇருள் ஞாலம் மறுஇன்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம், ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம்கொடுத் தன்றே, ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ 95 அந்தணர் வேள்வி ஒர்க்கும்மே, ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏம்உற நாடித் திங்கள் போலத் திசைவிளக்கும்மே ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட்டன்றே
(ஒருமுகம் I 00 குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே ஆங்குஅம் மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு 105

Page 36
- 50 -
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை; நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை
(அசைஇயது ஒருகை; அங்குசம் கடாவ ஒருகை; இருகை 110 ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப; ஒருகை மார்பொடு விளங்க; ஒருகை தாரொடு பொலிய, ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப; ஒருகை பாடுஇன் படுமணி இரட்ட ஒருகை 5 நீல் நிற விசும்பின் மலிதுளி பொழிய; ஒருகை வான்அர மகளிர்க்கு வதுவைசூட்ட ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிர்எழுந்து இசைப்ப வால்வளை நரல 120 உரம் தலைக்கொண்ட உரும்இடி முரசமொடு பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பு ஆருக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே;
(அதாஅன்று, 125
3. திருவாவினன்குடி
சீரை தைஇய உடுக்கையர் சீரோடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசுஅற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் 130

- 51 -
பலஉடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்ருேர் அறியா அறிவினர் கற்றேர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடும்சினம் கடிந்த காட்சியர் இடும்பை I 35 யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனிஇல் காட்சி முனிவர் முன்புகப் புகைமுகந்து அன்ன மாசுஇல் தூஉடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் 1 40 நல்லியாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் மெல்மொழி மேவலர் இன்நரம்பு உளர நோய்இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர்தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்உரை கடுக்கும் திதலையர் இன்நகைப் 145 பருமம் தாங்கிய பணிந்துஎந்து அல்குல் மாசுஇல் மகளிரொடு மறுஇன்றி விளங்கக் கடுவொடு ஒடுங்கிய தூம்புஉடை வால் எயிற்று அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150 புள்அணி நீள்கொடிச் செல்வனும் வெள்ஏறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல் 155 வேள்வி முற்றிய வென்றுஅடு கொற்றத்து ஈர்இரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நல்நகர் நிலைஇய 160

Page 37
- 52 -
உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக ஏமுறும் ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவுஇல் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் I 65 பகலில் தோன்றும் இகல்இல் காட்சி நால்வேறு இயற்கைப் பதினுெரு மூவரோடு ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத்து அன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந்து அன்ன செலவினர் வளிஇடைத் 170 தீஎழுந்து அன்ன திறலினர் தீப்பட உரும்இடித்து அன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெருமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துஉடன் காணத் தாவுஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் 175 ஆவினன் குடி அசைதலும் உரியன்; அதாஅன்று,
4. திருவேரகம்
இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான்கு இரட்டி இளமைநல் யாண்டு ஆறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை 180 மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து 185

- 53 -
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி விரைஉறு நறுமலர் ஏந்திப் பெரிதுஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று,
5. குன்றுதோறடல்
பைங்கொடி நறைக்காய் இடைஇடுபு வேலன் 190 அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூ தாளம் தொடுத்த கண்ணியன் நறும்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந் தொழில் வல்வில் கொலைஇய கானவர் நீடுஅமை விளைந்த தேன்கள் தேறல் 195 குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரல்உளர்ப்ப அவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் 200 முடித்த குல்லை இலைஉடை நறும்பூச் செங்கால் மராஅத்த வால்இணர் இடைஇடுபு சுரும்புஉணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண்டு அன்ன மடநடை மகளிரொடு 205 செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்தளிர், துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் தகரன் மஞ்ஞையன் புகர்இல் சேவல் அம் 210

Page 38
-س- 4 5 --
கொடியன் நெடியன் தொடிஅணி தோளன் நரம்பு ஆர்த்துஅன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுஉறழ் தடக்கையின் இயல ஏந்தி 2I 5 மென்தோள் பல்பிணை தழீஇத் தலைத்தந்து குன்றுதோ ருடலும் நின்றதன் பண்பே; அதாஅன்று,
6. பழமுதிர் சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊர்ஊர் கொண்ட சீர்கெழு விழவினும் 220 ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறிஅயர் களனும் காடும் காவும் கவின் பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் 225 மன்றமும் பொதியிலும் கந்துஉடை நிலையினும் மாண்தலைக் கொடியொடும் மண்ணி அமைவர நெய்யோடு ஐயவிஅப்பி ஐது உரைத்துக் குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுஉடன் உடீஇச் 230 செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மத வலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇத் தூவ்ெஸ் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 235

-س- 5 5 --
பெரும்தண் கணவீர நறுந்தண் மாலை துணைஅற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நல்நகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழ்இசை அருவியொடு இன்இயம் கறங்க 240 உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகுஇயம் நிறுத்து முரணினர் உட்க முருகுஆற்றுப் படுத்த உருகெழு வியன்நகர் ஆடுகளம் சிலம்பப் பாடிப் பல உடன் 245 கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டு ஆண்டு உறைதலும் அறிந்தஅறே ஆண்டு ஆண்டு ஆயினும் ஆகக் காண்தக 250 முந்துநீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் கால்உற வணங்கி நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ 255 ஆல்கெழு கடவுள் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றேர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழைஅணி சிறப்பிற் பழையோள் குழவி வாஞேர் வணங்கு வில்தானத் தலைவ 260 மாலை மார்ப நூல்அறி புலவ செருவில் ஒருவ பெர்ருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ 265

Page 39
- 56 -
குன்றம் கொன்ற குன்றக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் ஏறே அரும்பெறல் மரபிற் பெரும் பெயர் முருக நசையுநர்க்கு ஆர்த்தும் இசைபேர் ஆள 270 அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டுஅமர் கடந்தநின் வென்றுஆடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின் மத வலி 275 போர்மிகு பொருந குரிசில் எனப்பல போன்அறி அளவையின் ஏத்தி ஆனது நின்அளந்து அறிதல் மன்உயிர்க்கு அருமையின் நின்அடி உள்ளி வந்தனென் நின்னெடு புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் 280 குறித்தது மொழியா அளவையில் குறித்துஉடன் வேறுபல் உருவிற் குறும்பல் கூளியர் சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்துஎன 285 இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தான்வந்து எய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத்து இளநலம் காட்டி 290 அஞ்சல் ஒம்புமதி அறிவல்நின் வரவுஎன அன்புஉடை நன்மொழி அளைஇ விளிவுஇன்று இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒருநீ ஆகத் தோன்ற விழுமிய பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன் 295

- 57 -
வேறுபல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆரம் முழுமுதல் உருட்டி வேரல் பூஉடை அலங்குசினை புலம்பவேர் கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த தண்கமழ் அலர்இருல் சிதையநன் பல 300 ஆசினி முதுசுளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துஉடை வான்கோடு தழீஇத் தத்துற்று 305 நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் 31 () கோழி வயப்பெடை இரியக் கேழலொடு இரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடா அடி உளியம் பெருங்கல் விடர் அளைச் செறியக் கருங்கோட்டு ஆமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின்று 315 இழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே.

Page 40
--- 8 5 س--
தனி வெண்பாக்கள்
~~~~
குன்றம் எறிந்தாய் குரைகடலில் குர்தடிந்தாய் புன்தலைய பூதப் பொருபடையாய் - என்றும் இளையாய் அழகியாய் ஏறுார்ந்தான் ஏறே உளையாய் என்உள்ளத் துறை. l.
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங்கு அமரர்இடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல். 2.
வீரவேல் தாரைவேல் விண்ணுேர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்புங் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.
3.
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்கும் கொன்னவில்வேல் சூர்தடிந்த கொற்றவா - முன்னம் பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும். 4.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா வாஞேர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தி வாழ்வே. 5

- 59 -
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சல்என வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகாஎன் ருேதுவார் முன். 6.
முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். 7.
காக்கக் கட வியநீ காவா திருந்தக் கால்
ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி. 8.
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான் தன் பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுருகாற் றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல். 9.
நக்கீரர் தாம் உரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாடோறும் சாற்றினல் - முற்கோல மாமுருகன் வந்து மனக் கவலை தீர்த்தருளித் தான் நினைத்த எல்லாம் தரும். 10.
முற்றும்

Page 41
அருட் கவிஞர் நக்கீரர்
நக்கீரர் பெரும் புலவர்; முருகன் அருள் பெற்ற சிறந்த கவிஞர். (கன்றுதோறும் குடியிருக்கும் குமர னிடத்து மிகுந்த பற்றுக் கொண்டவர். முருகன் முன்னி யது முடிக்கும் திறலோன் ' என்று புறம் 56-ம் பாட லில் கூறுகிருர், பக்திச் சுவை, பா நயம் மிக்க நல்ல தொரு நூலைத் தந்துள்ளார். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த புலவர் கட்கெல்லாம் தலைமை பூண்டு அச் சங்கத்தைச் சிறப்புறச் செய்துள்ளார். * கீரர் ’ என்பது இவரது இயற்பெயர். இப்பெயர் கொண்டோர் பலர் அக்காலத்தில் இருந்தனரெனத் தெரிகிறது. கல்விப் புலமையோடு தெய்வ பக்தியும் நிறைந்து விளங்கியவர் தக்கீரனுரே ஆவர். 'ந' என்பது சிறப்புப் பொருளைத் தருவதோர் இடைச்சொல். இவரை மதுரைக் கணக் க்ாயஞர் மகளுர் நக்கீரர் என்பர். ஆகவே, இவர் மதுரையில் பிறந்து வாழ்ந்தவர் என்பது புலனுகின்றது. கணக்காயனர் என்பது ஆசிரியருக்குப் பெயராக அக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. நக்கீரனரின் தந்தை யாரும் சிறந்த நல்லிசைப் புலவர்.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால் வகை அறங்களையும் இனிது தெளிவுறுத்தும் பாடல்கள் பலவற்றை நானிலத்துக்கு நல்கியவர் நக்கீரர். எட்டுத் தொகையில் ஒன்ருக விளங்குவது பத்துப்பாட்டு. திரு முருகாற்றுப்படையும், நெடுநல்வாடையும் இவர் பாடி யன. அத்துடன் அகநானூற்றில் பதினறு பாடல்களும், நற்றிணையில் ஏ மு பாடல்களும், குறுந்தொகையில் எட்டுப் பாடல்களும் , புறநானூற்றில் மூன்று பாடல் களும், திருவள்ளுவ மாலையில் ஒரு வெண்பாவும் இன் னும் சில வெண்பா க்களும் இவரால் பாடப்பட்டன என அறியக்கூடியதாக இருக்கிறது. இவர் கரிகாற் சோழனைப் பற்றிப் பாடியிருப்பதால் இவரது காலம் கி. பி. முதலாம் நூற்ருண்டு என்று ஆராய்ச்சியாளர் கூறுவா,

- 6l -
நம்பியாண்டார் நம்பிகள் தமது திருத்தொண்டர் திருவந்தாதியில்,
தரணியிற் பொய்மை யிலாத் தமிழ்ச்
சங்க மதிற் கபிலர்
பரணர் நக் கீரர் முதனுற் பத் தொன்பது பல் புலவோர்
அருணமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவியல
பாடும் புலவர்களே '
என மதுரையில் தமிழ்ச்சங்கம் விளங்கியதையும் கபிலர்,
பரணர், நக்கீரர் முதலிய நாற்பத்தொன்பது புலவர்
பெருமக்களது பொய்யடிமை இல்லாச் சிறப்பையும்
க்கிக் கூறியுள்ளார்.
தருமி என்னும் பக்தனுக்காக சோமசுந்தரப் பெரு மான் பாடிக் கொடுத்த
கொங்கு தேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோ நீ யறியும் பூவே
என்னும் செய்யுள், ஒரு தலைவன் தன் தலைவியினுடைய அழகைப் பாராட்டுவதோடு முக்கியமாக அவள் கூந்த ஆறுக்குள்ள இயற்கை மணத்தை எடுத்துக் கூறுவதாக அமைந்தது. அச்செய்யுளில் பொருட்குற்றம் கண்டார் நக்கீரர். ஆயிரம் பொன் கொண்ட பொற்கிழியைத் தருமி பெற்றுக் கொள்ளாதவாறு தடுத்தார். தருமி ஓடோடிச் சென்று ஆல்வாய்ப் பெருமானிடம் அழுது முறையிட்டார். உடனே சோமசுந்தரக் கடவுள் தருமி யைத் தேற்றிவிட்டு, ஒரு புலவரைப் போல வேடந் தாங்கி, விபூதியைத் திரிபுண்டரமாகத் தரித்து, சண்டிகை ப த க் க ம், குண்டலம், மோதிரம் முதலியவைகளை

Page 42
-- 62 . . سییت
அணிந்து, திருவடிகளிலே பாதுகையுடன் சங்க மண்ட பத்திற்குச் சென்று அங்கிருந்த புலவர்களை நோக்கி, * நமது செய்யுளுக்குக் குற்றம் சொன்னவர் யார் ?? என்று கேட்டார். நக்கீரர் அஞ்சாது, * நானே சொன் னேன் " என்று சுடறியதும் இரு புலவர்களுக்குமிடையில் சொற்போர் தொடங்கியது. அகந்தை கொண்ட நக் கீரரை நல்வழிப்படுத்தத் திருவுளம் கொண்ட இறைவன் தமது நெற்றிக் கண்ணைக் காட்டினர். நெற்றிக்கண் ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று அச்சமின்றி, ஆலவாய் அவிர் சடைக் கடவுளுடன் வாதிட்டார் நக் கீரர். சோமசுந்தரக் கடவுளின் நெற்றிக்கண்ணிலிருந்து புறப்பட்ட கொடுந்தழலின் வெப்பத்தைத் தாங்கமுடி யாது பொற்ருமரை வாவியில் விழுந்தார். நக்கீரந் படும் துயரை அறிந்த சங்கப் புலவர்கள், ஓடோடி சென்று ஆலவாய்ப் பெருமானிடம் முறையிட்டார்கள் கல்விச் செருக்கினல் அறிவழிந்த நக்கீரனைக் காத்தரு வேண்டும் என்று மன்ருடி வேண்டினர்கள். இறைவனுே மீனுகூழியம்மை சமேதராக எழுந்தருளித் தமது அருட் கண்ணினலே நோக்க, நக்கீரரும் அம்மை அப்பனது பெருங்கருணைக் க ட லி ல் திளைத்துத் துதி பாடினர். திருவாலவாய்ப் பெருமானும் மனமிரங்கி அ வ  ைர க் கரை சேர்த்தார்.
அருட் கவிஞராகிய நக்கீரருக்கு, குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனிடத்தே அளவு கடந்த ப க் தி இருந்ததை அவரது திருமுருகாற்றுப்படையிலிருந்தி அறியக்கூடியதாக இருக்கிறது. முருகன் திருவடிய்ை எண்ணும் உள்ளமே சிறந்த உள்ளம் என்னும் உண்மை யை உலகுக்கு உணர்த்தப் போந்த நக்கீரர்,
எய்யா நல்லிசைச் செவ்விேற் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு ' எ ன் று அழகாகக் கூறியிருப்பது படித்து இன்புறத் தக்கது. ܚܫܚ --
 
 


Page 43
த கால் நூ ற் எழுத்துப் பணியில் ஈடு சிறந்த எழுத்தாளர், உதயம் 9 லக்கிய சஞ்சிகையின் கெளரவ ப் பணியாற்றியவர், ச ம ய த் கல்வி அமைச்சு இந்து மன்றத் னே நாள் துணைத்தலைவர்; தற்போ லாளர். தமிழகத்தில் ஒன்பதாம் - ப் புத் தக த் தி ல் இவரது டம் பெற்றுள்ளது.
* 米。米 * 来
ஒரு அருமையான ஆராய்ச்சி நூல். ரியர் କ୍ରିଓ, ଗଣ୍ଠି ଭିy. அநவரதவிநாயக வர்கள் நுண்ணிய நூலறிவு படைத் மை மரபு வழி வழி வந்தவர்கள் P- ULI 6 பாராட்டுதற்குரியது
பூர்
நல்லே ஆதீனம்.
ருகனைப் பத்தி செய்து, சேவடி படருஞ் செய ਓਲ பிரவாகிக்கும் ஆறு படைவீடுகள் க
டைவீடுகளின் அருமை பெருமைகளே சுப்பிரம ள் முகமாகவும் பிற்றைக்கால சரித்திர முகம ாய்ச்சி நூல் நக்கீரர் தந்த நன் முருகாற்றுப் பதிக பரதவிநாயகமூர்த்தி அவர்கள், ஆசிரியர் அவர் நூலறிவும் வழிவழி வந்த பரம்பரைப் புலமை
இலக்கிய * -- சி. கணபதி
ருகாற்றுப்படையிலே சிறப்பாகப் பேசப்படும் ம் இனிமையும் பொருந்திய நல்ல ஒட்டமுடை தப்பது மூர்த்தி அவர்களுடைய நூலிலுே கா 5.
ఇ
 
 
 
 
 
 
 

ம்மல் உள்ளம் பெறுதற்கு, ாட்டப்பட்டிருக்கின்றன.
னியப் பிரபாவம் பேசும் ாகவும் ஆராய்ந்த அருமை இதன் ஆசிரியர் திரு. * களின் ஆராய்ச்சித் திறமும் யும் பெரிதும் பாராட்டற்
லாநிதி, பண்டிதமணி
ஆறுபடை வீடுகளேயும், ய நடையிலே அருமையாக ணப்படும் குறிப்பிடத்தக்க
0 :first to soir gur fr