கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளாதாரக் கொள்கைகள்

Page 1
憩
ငြိုးခြီးမြှို့၍
 

பற்றிய தொகுதி
队

Page 2

பொருளாதாரக் கொள்கைகள்
இருனோல்ட் ஹார்பேர்கர் போர்ஜ் லியுங்கிரன்
almgrU' BGI' ஜுவான் கார்லோஸ் டி பப்லோ
¤ເກົ່າມູrຫ້ຫ້h Innr. *diaWrirfii
டி. தனரா?
UUráfur
6Iü.Giarraf BrUmßu. புவியியல்துறை Glsrghud udaiacuášpsih
பொதுசன கல்வி நிகழ்ச்சித் திட்டம் Innfram fisuGuðið

Page 3
ECONOMIC POLICY
Arnold Harberger Robert Wade Borje Ljunggren Juan Carlos de Pablo
Translated by: M. Karunanithy and T.Thanaraj Edited by : S. Antony Norbert
First Published 1995
© Copy Right : Marga Institute
Type Setting: UniqueTypesetters,Wellawatte,Colombo - 6. Printing : Uni Arts (Pvt) Ltd., Colombo - 13.
Please address inquiries and orders to:
Newton Fernando Asst. Director Communication / Publication Division Marga Institute P.O.BOX 601 61, Isipathana Mawatha, Colombo - 5, Sri Lanka.
/ー །
ADVISORY COMMITTEE
Godfrey Gunatilleke Shelton Wanasinghe Newton Fernando S. Antony Norbert P.P.M. Gunatilleke Sarath Madduma
ل ܓܠ
This Series of Publication has the Financial Support of the Canadian International Development Agency (CIDA).

பொருளடக்கம்
முன்னுரை 4
பகுதி 1
பொருளாதாரக் கொள்கை பற்றிய சில படிப்பினைகள், 15
அரசு மற்றும் சந்தை என்பனவற்றின் பங்கு பற்றி ஆழமான புரிந்து கொள்ளல். 26
கிழக்காசியாவில் சந்தைகளை ஆட்சிபுரிதல் 35
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(vi)
(vii)
அறிமுகம் 35 கிழக்காசியப் பொருளாதார வெற்றியின் குறிகாட்டிகள் 35
விவாதம் 38
வளர்ச்சியைத் தோற்றுவிக்கும் சந்தைகளின்"
ஆற்றலை விருத்தி செய்வதற்கான அரச நடவடிக்கைகள், 43
கிழக்காசிய அரசுகளை ஒழுங்குபடுத்தியது Tsirst 53
விவாதத்திற்கான பதிலிறுப்பு. 58 முடிவுரை, 61
பகுதி 2
ஒரு பொருளாதார அமைச்சரின் படுதோல்வியைத் தடுத்து நிறுத்துவது எப்படி.
(II)
(II)
(III)
அறிமுகம் 69
பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்துடன் தொடர்பான தவறுகள். 72
பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்கல்,பரம்பல் (விரிவாக்கம்) தொடர்பான தவறுகள், 85 தனிப்பட்டதும் ஆளுமை தொடர்பானதுமான தவறுகள், 89

Page 4
முன்னுரை
இத் தொகுதியானது சந்தைப் பொருளாதாரத்தின் இயல்பும் அதன் செயற்பாடுகளும் பற்றிய ஐந்து வெளியீடுகளில் முதலாவதாகும். சனநாயகம் பற்றி வெளிவரவிருக்கின்ற ஐந்து நூல்வெளியீடுகளுடன் இணைந்தமுறையில், அதன் தொடர்ச்சியாக இது அமைந்திருக்கின்றது. வாசகர்களுக்குப் பொருளாதாரம் மற்றும் அரச முகாமைத்துவம் ஆகிய இரு முறைமைகளின் பிரதான அம்சங்களைத் தருவதற்கு இரு தொடர் வெளியீடுகள் மார்கா நிறுவகத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சமூக சிந்தனையாளர்கள் விவாதிப்பது போன்று பொருளாதாரம், அரச முகாமைத்துவம் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக இணைந்துள்ளது. சந்தைப் பொருளாதாரத்தினை நிர்வகிக்கவும், விருத்தி செய்யவும் முயற்சிக்கின்ற அதேவேளை, அவையின்றிச் சனநாயக நிறுவனங்களைப் பேணுவதும், வலுவூட்டுவதும் மிகக் கடினமானது. இரு முறைமைகளின் அடிப்படைகள் சிலவற்றினைப் பற்றிய விளக்கங்களை இவ் இரு வரிசைத் தொடர் வெளியீடுகள் எடுத்துக்காட்டுகின்றதுடன் சந்தைப் பொருளாதாரத்துக்குத் தளமாக அமையக் கூடிய சனநாயக முதிர்ச்சிக்கு இது மிக அவசியமானதாகும். இவ்விணைவானது உள்ளார்ந்தரீதியில் உறுதியாகவும் நீண்டகாலத்துக்கு நிலைக்கக் கூடிய ஆற்றலையும் கொண்டிருந்தாலும், சனநாயகரீதியற்ற அரசியல் முறைமைகளுக்கிடையில் சந்தைப் பொருளாதாரம் செயற்பட்டு நின்றதற்குப் பல உதாரணங்களை நாம் கொண்டுள்ளோம். இத்தகைய விடயங்களில் சிலவற்றைச்சனநாயகம் பற்றிய இந்நூல்வரிசைத்தொடரில் மிக ஆழமாக ஆராயப்படுகின்றதுடன் சந்தைப் பொருளாதாரத்துடனான அவற்றின் முக்கியத்துவமும் எடுத்துக் கூறப்படுகின்றது.
இத்தொகுதியில், இதன் தலையங்கம் கூறுவதுபோற் சந்தைப் பொருளாதாரம் எந்த வழிகளிற் செயற்படுகின்றது என்பது பற்றிய தெளிவான விளக்கத்தையும் ஏனைய பொருளாதார முறைமைகளுடன் ஒப்பிடும்போது ஏன் அது சிறந்ததாக உள்ளது என்பதற்குமான் விளக்கத்தையும் அளிக்கின்றது. சந்தைப் பொருளாதாரம் பற்றி அதற்கு சார்பாகவும் எதிராகவும் பல தவறான எண்ணக் கருக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் நீண்ட மரபினைக் கொண்டசோலிசக் கருத்தியலானது சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார முறைமைகள் பற்றிய சந்தேகத்தை வளர்க்கும் மனோபாவங்களைத் தோற்றுவித்துள்ளது. முதலாளித்துவம், சோசலிசம் திட்டமிட்ட பொருளாதாரம், சந்தைப் பொருளாதாரம் ஆகிய கருத்தாழம் மிக்க சொற்கள் பல காணப்படுவதுடன் ஒவ்வொன்றும் ஒருவரின் கருத்தியல் சார்பு நிலைக்கேற்ப நேர்கணிய, எதிர்கணிய பொருளைத் தருவதாக
4

உள்ளது. இத்தொடரில் வெளிவர இருக்கும் நூல்கள் இவற்றினைத் தெளிவுபடுத்தும் வகையில் காணப்படுகின்றது. ஸ்கண்டிநேவியப் பொருளாதாரங்களும், சந்தைப் பொருளாதாரத்துடனான அவற்றின் கலப்பும், சமூகநலன் மற்றும் பொதுச் சேவை முறைமைகளும் ஐக்கிய அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மிகவும் வேறுபட்டனவாக உள்ளன. மத்திய திட்டமிடப்பட்ட பொருளாதாரங்களைக் கொண்ட கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக அப்பொருளாதார முறைமையானது உடைந்து போவதற்கு முன்பேயே ஹங்கேரியானது சமூக சந்தை முறைமை அமைப்புக்கான ஒரு பரிசோதனையாக விளங்கியது.
யூகோஸ் செலாவியா, வேறுபட்ட சோசலிசமுறைமையாகச் சோவியத்தினின்றும் வித்தியாசமானதாகப் பரிணமித்தது. எனவே இத்தகைய சொற்களைப் பயன்படுத்தலில், பிரயோகித்தலில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். அத்துடன் பொருளாதாரப் பரிமாணங்கள் அரசியலிருந்து பிரித்தறியப் படவேண்டும் . பொருளாதார, அரசியல்ரீதியாகப் பூரணமான மனித ஒழுங்கு காணப்படாததினால் வன்மையான யதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவற்றைத் தொடங்க வேண்டிய தேவையுள்ளது. மனிதன் தேடுகின்ற முறைமை பூரணமற்றதொன்று. அது சமுதாயம் முழுவதற்கும், சாத்தியமான உயர் வாழ்க்கைத் தரத்தை அடைவதற்குக் கிடைக்கக் கூடிய வளங்களைப் பயன்படுத்தவதற்கு உதவுவதாக இருக்க வேண்டும்.
முதல் (Capital) என்பது முதலாளித்துவம் (Capitalism)என்ற சொல்லுடன் ஒத்த கருத்துடையதல்ல. இது பண்டைய பிரபுத்துவ, சோசலிச அல்லது முதலாளித்துவ முறைமையின் பிரதான கூறாக இருந்தது. முதல் என்பது ஒரு சமுதாயத்தின் உற்பத்திக்கான செல்வத்தைக் கொண்டிருக்கின்றதுடன் பயிர்செய்யக்கூடிய நிலம், கட்டிடங்கள், ஆலைகள், கருவிகள் போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட பல்வேறுபட்ட பெளதீக முதலையும் குறித்து நிற்கின்றது. தொழிலாள்ர், அறிவு, தொழிற்றிறன், நுட்பத்திறன் என்பன மனித முதல், இயற்கையினால் அளிக்கப்பட்ட கொடையாக உள்ள பெளதீகச் சூழல், அதில் காணப்படும். வாழ்க்கை ஆதாரத்துக்கும், பொருளாதாரப் பயன்பாட்டுக்கும் பயன்படுகின்ற வளங்கள் இயற்கை முதல் என முதல் பல வகைப்படும். ஒரு பொருளாதார முறைமை இம் முதலைப் பயன்படுத்தக் கூடியதாகவும் மக்களின் நலனை முற்றாக அடைந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டுமென்பதுடன் எதிர்காலத்துக்கு அவற்றைப் பேணிப் பாதுகாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
பேண்-தகு மனித அபிவிருத்தியானது (Sustainablehumandevelopment) அபிவிருத்திச் செயல்முறையை விளக்குவதற்குத் தற்போது பயன்படுத்தப்படுகின்ற சொல்லாகும். இத்தகைய அபிவிருத்திச்
5

Page 5
செயல்முறைகளுடன் தொடர்பாக முதலாளித்துவம், சோசலிசம் ஆகிய எண்ணக் கருக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு மீள் வரையறை செய்யப்படவேண்டும். பேண்-தகு மனித அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு எவ்வாறு இந்த முறைமைகள் தகுதிபெற்றுள்ளன என்பதை ஆராய வேண்டிய தேவை எமக்கு உள்ளது.
சந்தைப் பொருளாதாரம் ஒரு முறைமையாகவே காணப்படுகின்றதுடன் அது செல்வந்தர்களுக்குச் சார்பாகவும் , ஒப்புரவின்மையைத் தூண்டுவதாகவுமே கருதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு முறைமைக்குள் இயங்குகின்ற சந்தையில் வளங்களின் உரிமையும் அதற்கான அடைவும் ஒப்புரவற்ற முறையிலேயே பரம்பியுள்ளது. சந்தையும் இவ் ஒப்புரவற்ற தன்மைகளை அதிகரிக்கக் கூடும். ஏனெனில் வளங்களைக் கொண்டிருப்போர் செல்வத்தின் மீதும் மேலாண்மையைக் கொண்டிருப்பர். சந்தையின் உள்ளார்ந்த அம்சமானது உற்பத்தியாளர், விற்பனையாளர்களிடையே போட்டியைக் கொண்டிருப்பதே. ஆனால் இப்போட்டியானது சமனற்ற அடிப்படையில் ஆரம்பிக்கின்றது என சோசலிஸ்ட் சார்பான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.
சந்தைப் பொருளாதாரத்தின் மீதான விமர்சனமானது அம்முறைமையின் எதிர்கணியப் பண்பினையே முன்னிலைப் படுத்துவதாக உள்ளது. சந்தையைப் பொறுத்தவரை அவை சமூக, பொருளாதார அமைப்புக்களினால் சூழப்பட்டுள்ளதால் ஒப்புரவின் மைகளைச் சரிப்படுத்துவதற்குப் போதுமானதாக அவை காணப்படவில்லை. உண்மையானதும், திறமையானதுமான அரசியற்பொருளாதாரத்திலேயே பெருமளவு தங்கியுள்ளது. இக்காரணத்துக்காகத் தான் சனநாயக முறைமையானது, சந்தையைப் பேணிப்பாதுகாக்கின்ற, மேன்மைப் படுத்துகின்ற அரசியற் பொருளதாதாரத்தை உருவாக்குகின்ற சிறந்த வழியாக மாறுகின்றதுடன் அத்தகைய ஒரு அரசிற் பல்வேறு வகையான பொருளாதாரப் பிரிவுகளுக்கிடையில் ஒன்றுடன் ஒன்று பேரம் பேசவும், இணக்கத்துக்கு வரவும் சுதந்திரம் உள்ளது. இம் முறைமை ஓர் இயக்கச் செயல் முறையைக் கொண்டதாக இருப்பதுடன், தொழிலாளர் வேலையாட்கள், பங்கு முதலீட்டாளர்கள், நுகர்வோர் ஆகியோரின் முரண்படும் நலன்களைச் சமப்படுத்திச், சமரசத்துக்கும் முயற்சிக்கின்றது.
சந்தைப் பொருளாதாரம் திறமையாகச் செயற்படுவதுடன் ஏனைய சோசலிசக் கருத்தியலிருந்து வரும் திட்டமிட்ட பொருளாதாரத்திலும் பார்க்க மிக ஒப்புரவுத் தன்மையுடையதாகவும் இருக்கின்றது. கைத்தொழில்ரீதியாக முன்னேறிய சனநாயகங்களின் சந்தைப் பொருளாதாரம், மாக்சிய சோசலிசக் கருத்தியலிருந்து வளர்ச்சியடைந்த மத்திய திட்டமிடற் பொருளாதாரம் ஆகிய இரு பொருளாதாரங்களின் பிரதான அம்சங்கள் இத்தொகுதியில் ஆராயப்படுகின்றது. சந்தைப்
6

பொருளாதாரத்தை வேறுபடுத்திக் காட்டும் பிரதான காரணியானது நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சந்தைச் செயல்முறையே. இதனுTடாகவே பொருட்கள் சேவைகளின் பரம்பலும் உற்பத்தியும் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. நுகர்வோரின் முன் பல தெரிவுகளுக்கான வீச்சுக் காணப்படுவதுபோன்று உற்பத்தியாளர்கள், பங்கீட்டாளர் களுக்கிடையில் சந்தர்ப்பத்துக்கான சுதந்திரமும் காணப்படுகின்றது. இதனால் சந்தைப் பொருளாதாரம் மிகவும் நெகிழ்ச்சித் தன்மை யுடையதாகவும், நுகர்வு மற்றும் உற்பத்திச் சாத்தியங்களை வரிவாக்குவதற்கான பயனுறுதிவாய்ந்த கருவியாகவும் இருக்கின்றது.
மத்திய திட்டமிடற் பொருளாதாரம் இத்தகைய திறனாற்றலைக் கொண்டிருக்கவில்லை என்று "சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன” என்ற கட்டுரையின் ஆசிரியர்கள் விவாதிக்கின்றனர். ஏனெனில்பொருட்கள் சேவைகளின் நிரம்பலானது திட்டமிடல் நுட்பங்கள் மற்றும் முறையியல்களினூடாகத் தீர்மானிக்கப்படுகின்றதுடன் அவை மத்திய திட்டமிடல் முகவரகத்தில் பணிபுரியும் தொழில்நுணுக்க அறிஞர்களினாற் (Technocrates) பிரயோகிக்கப்படுகின்றது. அடிப்படைத்தேவைகளைத் திருப்தி செய்யும் சில பொருட்கள் சேவைகளைப் பொறுத்தவரையில் இந்நுட்பங்கள் அளவறியும் முறையில் நிர்ணயிப்பதற்குப் போதுமானது. ஆனால் அவை பரந்தளவான தெரிவுகளுடன் அல்லது வளர்ச்சியடைந்து வரும் நுகர்வோர் சமுதாயத்தினால் வேண்டப்படுகின்ற பல வகையான தரங்களின் வீச்சைக் கொண்ட தெரிவுகளுடன் ஒத்துப்போக மாட்டாது. மத்திய திட்டமிட்டபொருளாதாரங்கள், அவை வளர்ச்சிஅடையும்போதும், நுகர்வுப்போக்குகள் மாறுபடும்போதும்பொருளாதார முகாமைத்துவத்தின் பாரிய பிரச்சினைகளுக்குள் ஏன் தள்ளப்படுகின்றதென்பதற்கு இது ஒரு விளக்கமாக அமைகின்றது.
சந்தைப் பொருளாதாரம் பற்றிய பிரதான விமர்சனமானது அது முதலாளித்துவ முறைமையின் கருவியாகவும், எல்லாவகையான ஒப்புரவின்மைகளையும், சமூக நீதியின்மையையும் அதிகரிக்கின்றது என்பதே. சோசலிச அமைப்பின் மூலதத்துவத்தினை முன்மொழிபவர்கள் இத்தகைய பிரச்சினையானது உண்மையில் வளங்களின் தனியார் உடைமையில் தனது மூலவேர்களைக்கொண்டிருக்கின்றது என்றும் எல்லா உற்பத்திக்குரிய செல்வமும் பொதுமக்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டுமென்றும் வாதாடலாம். அரசினால் வழிநடாத்தப்படும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலிருந்து பெறப்பட்ட அனுபவத்தின்படி அரசுடை மையானது தன்னளவில் ஒப்புரவிற்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை வெளிப்படுத்தின. இங்கு பிரதானமானது வளங்களின் மீதான அதிக உரிமை என்ற விடயம் அல்ல அவற்றின் மீதான கட்டுப்பாடும் முகாமைத்துவமே முக்கியம்.

Page 6
அரச கட்டுப்பாட்டுப்பொருளாதாரங்களில் கட்டுப்பாடானது எப்பொழுதும் சுயநல நோக்குடைய அரசியல் அதிகார வர்க்கத்தினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் கைகளிலேயே காணப்படுகின்றது. சனநாயக சமூகங்களில் காணப்படும் அரசியல் அதிகாரவர்க்கத்தினர் மக்களுக்குப் பொறுப்புள்ளவர்களாக இருப்பதுபோல் இவர்கள் காணப்படமாட்டார்கள். இத்தகைய நிலைமைகளில் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரவர்க்கத்தினர் விகிதாசாரமற்ற முறையில் இலாபத்தைக் கைப்பற்றக்கூடும். தனியார் செல்வத்தின் உரிமை மீது காணப்படும் கட்டுப்பாடுகளின் காரணமாக இச் சமூகங்கள் அதீதமான செல்வத்தையும் நுகர்வுத்தன்மையையும் வெளிக்காட்ட விரும்புவதில்லை. யப்பான், தாய் வான், தென்கொரியா போன்ற தனியார் துறைச் சந்தைப் பொருளாதாரங்கள் ஒப்புரவுத்தன்மையுடைய வருமானப் பரம்பல் அமைப்புக்களைக் கொண்டுள்ளன. அத்துடன் அந்நாடுகளில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்குமிடையிலான வருமானத்தில் காணப்படும் வேறுபாடுகள் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவாகக் காணப்படுகின்றன.
ஒப்புரவின்மை பற்றிக் கூறும்போது ஒன்றை மனதிற் கொள்ள வேண்டும்.
ஒப்புரவின்மை மட்டமானது (degreeofinequality) மக்களின் நலன்பற்றிய
நிலைமையை வெளிக்காட்டும் குறிகாட்டி அல்ல. வருமான
ஒப்புரவின்மையானது சமுதாயங்கள் குறைந்த மட்ட வருமானத்தைக்
கொண்டிருக்கும்போது தாழ்ந்த நிலையிலும், பொருளாதாரங்கள்
வளர்ச்சியடையும்போது அதிகரித்தும், உயர்மட்ட அபிவிருத்தியை
அடையும்போது மீண்டும் குறைவடைந்தும் செல்லுகின்றதெனப்
பொருளியலாளர் கூறியுள்ளனர். அபிவிருத்திச் செயல் முறையானது
பொருத்தமாக நிர்வகிக்கப்படின் வருமான ஒப்புரவின்மைகளில் ஏற்படும்
சில அதிகரிப்பு வறுமையானவர்களின் விருத்திகளுடன் இணைந்து
செல்லும் என்பதை இது உணர்த்துகின்றது.பொருளாதார வளர்ச்சியின் :ல்வேறு சந்தர்ப்பங்களில் இது தெளிவாகியது. தென்கொரியா விரைவாக வளர்ச்சியடைந்த போது வருமான ஒப்புரவின்மை அகன்று
செல்லும்போக்குக் காணப்பட்டது. ஆனால், சிலர் ஏனையவர்களிலும்
பார்க்க அதிக நன்மையைப் பெற்றாலும் எல்லா வருமானப் பிரிவினரும் குறிப்பிடத்தக்களவு நன்மையடைந்தனர். இவ்வாறு நிகழ்ந்தற்குக்
காரணம், தென் கொரியாவின் அபிவிருத்தியானது பரந்த அடிப்படையில் அமைந்திருந்ததுடன் பொருளாதார அபிவிருத்தி மனித வள அபிவிருத்தியுடன் இணைந்திருந்தமையே ஆகும். இதற்கு மாறான முறைமைகள் ஏதேச்சாதிகாரத் தன்மையுடையதாக இருப்பதுடன்
அபிவிருத்திக்கான தூண்டுதல்களை எப்பொழுதும் குறைப்பனவாகவே
உள்ளதுடன் பொருளாதாரத்தேக்கத்தை உருவாக்குகின்றதினால் எல்லா வருமானப் பிரிவினரும் குறைந்த மட்டத்திலான நலனில்
சிக்கிவிடுகின்றனர்.

தனியார் சொத்துரிமை என்னும் எண்ணக்க்குர்ேலது ஜநாய்த்திலும், சந்தையிலும் ஓர் உள்ளார்ந்த அம்சமாகும். தனிப்பட்டவர்களின் சுதந்திரமானது ஒருவர் வளங்களை அனுபவிக்கவும், கட்டுப்படுத்தவும் கொண்டிருக்கக் கூடிய இயலளவுடன் தொடர்புபடுகின்றது. அதன்மீது ஏனையோர் உரிமை கொண்டாடவோ, ஆக்கிரமிக்கவோ முடியாதவாறு அரசினால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நோக்கில் அறிந்து கொள்ளப்படும் தனியார் சொத்து என்பது தனிப்பட்டவர்களின் உத்தரவாதம் என்பதுடன், தனிப்பட்டவர்களின் அந்தரங்கமாகவும் உள்ளது. அரச அதிகாரத்தில் இது வரையறைகளை ஏற்படுத்துகின்றது. தனியார் சொத்து, பயனுறுதி வாய்ந்த சந்தைப் பொருளாதாரம் செயற்படுவதற்கு இன்றியமையாதது. ஏனெனில் அது ஒன்றுதான் வேலை, சேமிப்பு, சொத்துக்களைப் பெறல் ஆகியவற்றுக்கான சிறந்த தூண்டுதல்களை அளிக்கின்றன. சீனாவில் இடம்பெற்ற விவசாயச் சீர்திருத்தங்கள் இவற்றினைத் தெளிவாக விளக்கிக் காட்டுகின்றன. கூட்டுப் பண்ணைகளிலிருந்து குடியிருப்பாளனின் பண்ணைகளாக மாற்றம் அடைந்தபோது விவசாயக் குடியிருப்பாளரின் சராசரி தேறிய வருமானமானது 1978 - 1985க்கு இடையில் மூன்று மடங்காக அதிகரித்தது. தனியார் தூண்டுதலின்மை எவ்வாறு ஒரு சமுதாயத்தின் தீர்மானத்திற் பரந்தளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதனைச் சூழற் பாதுகாப்பு மற்றும் சேதங்களிலிருந்து தெளிவாக விளக்கப்பட்டது.
எல்லோருக்கும் சொந்தமாக உள்ள சொத்துக்கள் எப்பொழுதும் தவறாகப் பயன்படுத்தப்படும் அல்லது அளவுக்கதிமாகச் சுரண்டப்படும் என்பதற்கு உதாரணமாகக் காடுகளிலும், மேச்சல் நிலங்களிலும் ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிடலாம். தனிப்பட்ட பிரிவினர் இதனைச் சொந்தமாகக் கொண்டிருப்பின் அதனைப் பாதுகாப்பதற்கும் , நிர்வகிப்பதற்கும் பொறுப்பாக இருக்கவேண்டும் . இதனைப் பயன்படுத்துவதற்கான தனிப்பட்டவர்களின் உரிமைகள், தனியார் உரிமைகள் என்ற அடிப்படையில் தெளிவாக வரையறை செய்யவேண்டும். அத்துடன் வளங்களைப் பாதுகாப்பதற்கும் அதன்நிலைநிற்கும்தன்மையை உறுதிசெய்வதற்கும் பாரிய தூண்டுதல் இருக்கவேண்டும். அரசுடமையும், பொதுசன சொத்தும் இதனையொத்த பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன. இதனைக் கவனமாகப் பயன்படுத்தவும், எதிர்காலப் பயன்பாட்டுக்காக இதனை நிர்வகிப்பதற்குமான துரண்டுதல்கள் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றன. ஏனெனில் இது ஒவ்வொருவரினதும் சொத்து என்பதால் எவரும் தனிப்பட்ட முறையிற் சொந்தம் கொண்டாட முடியாது. இத்தகைய காரணங்களினால்தான் பொதுவான அரசுடமை நிறுவனங்கள் பயனுறுதிவாய்ந்ததாகவும் இலாப நோக்குடையதாகவும் இருப்பதில்லை. உற்பத்தி மற்றும் வியாபாரம் போன்ற துறைகளில் சந்தைப்பொருளாதாரம் ஏன் தனியார் நிறுவனங்களிற் பெரிதும் தங்கியுள்ளதென்பதற்கு இதுவே பிரதான காரணமாகும்.
9

Page 7
அரசமுறைமையானது இலாபத்தை அடைவதற்குச் சுதந்திரமாக இயங்கக் கூடியவர்களைக் கொண்டுள்ளதேயன்றி அவர்களின் முயற்சிக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை. அரசுடமையைப் பெரிதும் கொண்ட ஒரு முறைமையில் அல்லது பொருட்களை அல்லது வருமான ஆதரவினை இலவசமாக அளிக்கின்ற பாரிய சமூக நல நிகழ்ச்சித் திட்டத்தினைக் கொண்ட முறைமைகளில், சந்தைப் பொருளாதாரத்திலும் பார்க்க அதிகமான "இலவசமாகச் சவாரி” செய்வோரைக் (free - riders) கொண்டுள்ளது. இதே வகையான பிரச்சினைகளினால்தான் இலங்கைப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகின்றது. இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் பொதுப்பணம் தொடர்பாக மிகவும் தாராளப் போக்கைக் கொண்டிருந்தன. பொதுமக்களும், சேவைகளையும் வருமானப் பரிமாற்றங்களையும் பரஸ்பரக் கொடுப்பனவு அல்லது முயற்சி இன்றி எதிர்பார்க்கின்ற போக்கினையும் கொண்டுள்ளனர்.
மரபுரீதியான சமூகங்களில் தனிப்பட்டோர், சமுதாயங்களின் உரிமைகள், கடப்பாடுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. அங்கு சமூக நடைமுறை, அதிகார அமைப்புக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவை சிலவேளைகளில் தனியார் சொத்துரிமை முறைமையின்றி இன்று சந்தைப் பொருளாதாரத்தில் காணப்படுவது போன்று மிகவும் தாக்கமுடையதாக இருந்தது. இத்தகைய சமூகக் கட்டுப்பாட்டு அமைப்புக்களைச், சமூக பொருளாதார மாற்றத்தின் சக்திகள் தவிர்க்கமுடியாதபடி அழித்துவிட்டன. எனவே புதிய அமைப்புக்கள், அபிவிருத்தி மற்றும் நவீனத்துவமான செயல் முறைகளில் மீளவும் கொண்டுவரப்படவேண்டும். சுதந்திரமான தடையற்ற வாங்கவும் விற்கவும் கூடிய தனியார் சொத்துரிமை அமைப்புக்கள், சொத்துக்கள், இத்தகைய பரிமாற்றங்களைக் கவனிப்பதற்கான சட்டங்கள் மற்றும் ஒப்பந்தரீதியான தொடர்புகள் சந்தைப்பொருளாதாரத்தில் இடம் பெறுகின்றன.
தனியார் சொத்துரிமை மற்றும் சந்தை அமைப்புக்கள் இவற்றுக்கே உரியது என்பது கருத்தல்ல. ஒவ்வொன்றிலும் பூரணத்துவமற்ற தன்மை காணப்படுகின்றதுடன் அவற்றினைத் திருத்துவதற்குத் தலையீடு மிக் அவசியமானது. சுதந்திர சந்தை அல்லது நிறைபோட்டிச் சந்தை காணப்படும் ஒரு முறைமை மிகச் சிறந்தது. ஆனால் யாதார்த்த உலகில் அது காணப்படவில்லை. அரசியற் பொருளியலாளர்கள் “சந்தைப் பொருளாதாரம் என்பது அரசின் பங்கினைக் குறைத்தல் என்பதன் கருத்தல்ல" என்று வாதாடுகின்றனர், "அரசானது வர்த்தக முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்குவதானது புதிய பங்காற்றலை மேற்கொள்வதற்காகவே இருக்கவேண்டும்” என்ற கருத்தினை மட்டுமே குறிக்கின்றது. பொருளியலாளர்களினால் “சந்தைகளின் செயலொழிவு” (marketfailures) என்று விபரிக்கப்பட்டவற்றில் பிரதான பங்கினை அரசு கொண்டுள்ளது. சந்தைச் சக்திகள் விதிமுறைகளை மீறிச் சுயமாகச்
10

செயற்படும் பொழுது இடம்பெறும் சூழல் மாசுபடலை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். போட்டியானது நெறிமுறையானதாக இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தவும், தனியுரிமை வளர்ச்சிகளைத் தடைசெய்தல், பயனுறுதிவாய்ந்த பொருளாதாரத்திற்கும், நுகர்வோரின் விருப்புக்கள் ஆகிய இரண்டிற்கும் ஊறு விளைவிக்கக்கூடிய சொத்துரிமை மற்றும் முகாமைத்துவ விடயங்களில் அரசு தலையீடு செய்தல் வேண்டும்.
அரசானது பரந்த வீச்சுக் கொண்ட பொதுசன பொருட்கள் குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு என்பதிலிருந்து பொதுச் சுகாதாரம், பொதுசனக் கல்வி, வீதிகள், துறைமுகங்கள், சக்தி ஆலைகள், தொலைத்தொடர்பு போன்ற பொருளாதாரக் கட்டுமானத்தின் பெரும் பங்கினுக்குப் பொறுப்புடையது எனக் கருதுதல் வேண்டும். இவற்றுக்குமேலாக, எதிர்காலச் சமுதாயத்தின் நோக்கினை விருத்தி செய்வதற்கும், அபிவிருத்திக்காக மக்களைத் தயார்ப்படுத்துவதற்குமான பொருளாதாரத்துக்கும் அரசு உதவவேண்டும். இதனால்தான் மேற்குச் சனநாயகங்களில் உள்ள சோசலிசக் கட்சிகள் “மத்திய திட்டமிட்டமுறைமையின் உடைவானது எவ்வகையிலும் கூட்டுப் பொறுப்பு மற்றும் பொதுமக்களின் பொறுப்புடைமை மீது அழுத்தங்களை முன்வைக்கின்ற சோசலிசக்கருத்தியலின் அடிப்படைகளைப்பலீனமடையச் செய்யவில்லை” என வாதிடுகின்றனர். எனவே சந்தைப் பொருளாதாரம் என்ற கட்டமைப்பினுள் புதிய சோசலிச நிகழ்ச்சி நிரலை அவர்கள் முன்
வைக்கலாம்.
இத்தொகுதியினை அடுத்து வெளிவரவிருக்கின்ற நான்கு வெளியீடுகளில் இத்தகைய பல விடயங்கள் ஆராயப்படவிருக்கின்றன. இரண்டாவது தொகுதியானது தேர்ந்த சில நாடுகளின் அனுபவங்கள், அவற்றிலிருந்து பெறப்பட்ட அபிவிருத்திப் படிப்பினைகள் பற்றி ஆராய்கின்றது. இந்நாடுகளின் பொருளாதாரக் கொள்கைகள், செயலாற்றங்கள் என்பன சந்தையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையுடைய நாடுகளுடனும் அரச கட்டுப்பாட்டு முறையைக் கொண்ட நாடுகளுடனும் ஒப்பீடு செய்யப்படுகின்றது. பொருளாதாரச் சீர்திருத்தங்களையும், சீரமைப்பையும் கொண்ட நாடுகள் பயனுறுதி வாய்ந்த முறையில் உலகப் பொருளாதாரத்துடன் தம்மை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துள்ளன. இந்நாடுகள் விரைவாக வளர்ச்சியடையவேண்டுமாக இருந்தால், மக்களின் வாழ்க்கைத்தர நிலைமைகளை விருத்தி செய்யவேண்டின் இந்நாடுகள் சர்வதேசரீதியாகப் போட்டியை உருவாக்க வேண்டியனவாகவும், தாம் உற்பத்தி செய்கின்ற பொருட்களை உலக சந்தையில் விற்பனை செய்யக்கூடிய தகுதியையுடையனவாகவும் மாறவேண்டும். வேறு மாற்று வழிகள் இல்லை. இதனை மேற்கொள்ளுவதற்கு இந்நாடுகளின் பொருளாதாரங்கள் திறந்த அமைப்புடையனவாக இருத்தல் வேண்டும். அதில் சந்தையானது பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வள ஒதுக்கீட்டுக்கான பிரதான ஊக்கியாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.
11

Page 8
இரண்டாவது தொகுதியில் காணப்படும் சில நாடுகளைப் பற்றிய சிறப்பான ஆய்வுகள் இவை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை விபரிக்கின்றன. அரசும் சந்தையும் என்ற மூன்றாவது தொகுதியில் ஆராயப்படுகின்ற சில விடயங்கள் இவ் அறிமுகத்தில் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. நான்காவது தொகுதியானது சந்தைப் பொருளாதாரத்துக்கு அடிப்படையான அபிவிருத்திக்கோட்பாடுகள் பற்றிய பிரதான கலைக்கூடச் சிந்தனைகளின் படைப்புக்கள் பற்றிய சில மாதிரியங்களைக் கொண்டுள்ளது. ஐந்தாவது தொகுதியானது தனியார்துறையின் பங்கும் தொழிற்துறையும் என்ற விடயத்தினை மையமாகக் கொண்டு வெளிவரவிருக்கின்றது.
கொட்பிரே குணதிலக மார்கா நிறுவகம்
12

1 பொருளாதாரக் கொள்கை பற்றிய சில படிப்பினைகள்
ஆனோல்ட் ஹார்பேர்கர்
2 அரசு மற்றும் சந்தை என்பனவற்றின் பங்கு பற்றிய
ஆழமான புரிந்து கொள்ளல்
போர்ஜ் லியுங்கிரன்
3 கிழக்காசியாவில் சந்தையை ஆட்சிபுரிதல்
றொபேட் வேட்
தமிழாக்கம்
மா. கருணாநிதி விரிவுரையாளர்
சமூக விஞ்ஞானக் கல்வித்துறை கொழும்புப் பல்கலைக்கழகம்
பொதுசன கல்வி நிகழ்ச்சித்திட்டம் மார்கா நிறுவகம்

Page 9

பொருளாதாரக் கொள்கை பற்றிய சில படிப்பினைகள்
பின்வருவன. நல்ல வளர்ச்சிக் கொள்கைகளுடன் இணைந்த முக்கிய பாடங்கள் பற்றிக்கொள்கை வகுக்கும் உயர் தொழிலோர் முன்வைத்த சில முடிவுகளாகும்.
1. பொருளாதாரக் கொள்கையாக்கத்தில் காணப்படும் தவறான
நுட்பவாதத்தைத் தவிர்த்தல்.
அடிக்கடி அநேகமான நாடுகளில் பொருளாதாரத் திட்டமிடற் பணியானது எதிர்காலப்பொருளாதார முன்னேற்றங்கள் பற்றிய எதிர்வுகூறல் என்றே கருதப்பட்டது. இத்தகையவை சில சந்தர்ப்பங்களில் மிக விரிவாகத் தனியார் கைத்தொழில்களின் ஐந்து அல்லது பத்து ஆண்டுக்கால உற்பத்திகளை எதிர்வு கூறுபவையாகவும் அமைந்தன. ஆயினும் இந்த நடைமுறை நல்ல பலன்களைத் தரவில்லை. சிறந்த ஆற்றல்களையும் பணத்தையும் விரயஞ் செய்வதாகவே அமைந்தன. உண்மையான பொருளாதாரக் கொள்கைப் பிரச்சினைகளை எதிர்த்தல் என்ற பணியிலிருந்து ஆற்றல் வாய்ந்தவர்களை அப்பால் ஈர்த்துச் சென்றமை நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்தன. அத்துடன் அரசியல் உறுதி மொழிகளாலும் பிரசாரங்களாலும் ஊழல் நிறைந்தவையாகவும் மாற்றப்பட்டன.
2. வரவு செலவுத் திட்டத்தைப் போதிய கட்டுப்பாட்டின் கீழ்
வைத்திருத்தல்.
வரவு செலவுத் திட்டம் சமப்பட வேணடும் என்பது அவசியமில்லை. ஆயினும் வரவு செலவுத் திட்டக் குறைநிலைக்கு ஓர் எல்லையுண்டு. வரவு செலவுத் திட்டத்தை வகுக்கும் அதிகாரமுள்ளவர்கள் வேண்டுதல்களுக்கெல்லாம் செலவு செய்ய முடியாது எனக் கூறத் தெரிந்தவர்களாகவும்இருக்கவேண்டும்.அரசாங்கமும் எப்பொழுதும் அதிக செலவுகள் குறித்து உண்டாகும் நெருக்கடிகளைத் தடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்,
15

Page 10
வரவு செலவுத் திட்ட வரன்முறைகளுக்கு முன்னர், அரசாங்கமும் வரவு செலவுத் திட்டத்தை வகுக்கும் அதிகாரம் பெற்றவர்களும் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கான காலம் சீர்குலைந்துள்ளது. சில சுழிவு நெளிவுகளும் அங்கு இருக்க வேண்டும். (இது ஓரளவுக்குக் கட்டாயமானது) அதிகாரம் பெற்றவர்கள் பெரும்பாலான நேரங்களில் வளைந்து கொடுப்பார்களானால், புதிய நம்பிக்கை வாய்ந்தவர்களிடமிருந்து அணை கடந்த வெள்ளம்போல்வரும் அநேக வேண்டுதல்களுக்கு இடமளிக்க வேண்டியிருக்கும்.
3. பணவீக்கச் சக்திகளை நியாயமான கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருத்தல்.
சிறிய நாடொன்றிலே பொருளாதார அபிவிருத்தியை ஊக்குவிக்க உலகப் பொருளாதாரத்தின் நடைமுறைப் பணவீக்க வீதத்துடன் ஒத்துப்போதல் அனுகூலமான கொள்கையாக இருக்கும். ஆயினும் காரணம் எதுவாக இருந்தாலும் உயர்வீதம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அது மிதமானதாகவும் உறுதியானதாகவும் பேணப்பட வேண்டும்.
போருக்குப் பிந்திய காலத்தில் நிலவிய பிரதான பணவீக்கங்கள் மிகையான நிதிப்பற்றாக்குறையின் விளைவாக இருந்தன. இச் சந்தர்ப்பத்தில் அச்சகங்களின் உதவியுடன் மட்டும் அரசாங்கங்களுக்கு நிதியை வழங்க முடிந்தது. 1960களில் ஆர்ஜென்ரீனா, சிலி, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இவை நிஜமானதாக இருந்தன. மற்றும் ஆபிரிக்காவின் பணவீக்க சக்திகளின்தோற்றத்துக்கும் அவை உதவின எனலாம். அடிக்கடி மாறும் தன்மைகொண்ட தனியார்துறையினருக்குக் கடன்களை வழங்கப் பணத்தை அச்சடித்தல் மூலம் பணவீக்கக் காரணிகளிலிருந்து விடுபடுதல் சாத்தியமாகும். உருகுவேயில் இரண்டு தசாப்தங்களுக்கு மேல் நடந்ததுபோலவும் பிரேசிலில் 1960களின் நடுப்பகுதியில் ஆரம்பித்து ஒரு தசாப்தமாக நிலவியது போலவும் இது அமைந்தது.
பணவீக்கம் வளர்ச்சியை இரு வழிகளில் கட்டுப்படுத்துகிறது. முதலாவதாக, வளங்களின் தாழ் பெறுமதியிலிருந்து உயர்வான பெறுமதிப்பயன்பாடுகளுக்குச் சார்புரீதியான விலைகள் வழிகாட்டும் அடிப்படைச் செயற்பாட்டைக் குலைப்பதாக அண்மகிறது. உண்மையிலே வளர்ச்சியின் மிக முக்கிய அம்சங்கள் வளமுதலீடுகளாகவே இடம்பெறுகின்றன.சார்பளவில் உயர் உற்பத்தி விலைகள் உள்ள சந்தர்ப்பங்களிலும் இம்முதலீடுகள் இடம்பெறுகின்றன. உள்ளிடுகைச் செலவுகள் குறைவாக இருக்கும். செயல்முறை விடயங்கள் ஒப்பீட்டு விலைகளுக்குத் தெளிவான அடையாளமாகவும் விளங்கும். மறுபுறத்தில் பணவீக்கமானது - வசதியற்றதாகவும் அதனால் எதிர்பாராததாகவும் இருக்கும்போது. அத்தகைய சைகைகள் (signals) உண்மையான மற்றும்
16

சார்பளவான விலையுயர்வுகள் ஆகியவற்றுக்கிடையேயுள்ள வேறுபாடுகள் நன்கு புலப்படாதவையாகவும் இருக்கும்.
பணவீக்கத்தினால் ஏற்படக்கூடிய இரண்டாவது பிரச்சினை, பணவீக்கத்தைச் சரியாக மதிப்பிடுபவர்களுக்கு வெகுமதி வழங்குவதனால் உண்டாகிறது. அதனால் மக்களிடமிருந்து பணம் பெறுபவர்கள் அதனை ஒன்றில் மிகக் குறைவானது அல்லது மிகக் கூடியது என ஊகிக்கின்றனர். பணவீக்கத்தை அனுமானித்தல் பொருளாதார வளர்ச்சிக்கு உதவப் போவதில்லை. அதனால் பணவீக்கமானது உற்பத்தி வளங்களை உற்பத்தியல்லாத நோக்கங்களுக்குத் திசை திருப்புகிறது.
இறுதியாகப், பணவீக்கமானது, விசேடமாக அது எதிர்பார்க்கப் படாதபோதும் குறிகாட்டியாக மாற்றப்படாதபோதும் பொருளாதாரத் துறைகளுக்கும் குழுக்களுக்குமிடையே செல்வத்தை மாற்றுவதில் உறுதிப்பாடின்மையைத் தோற்றுவிக்கிறது. ஊதியத்துக்கும் முயற்சிக்கும் இடையேயுள்ள தொடர்புகளை அறுத்துவிடுகிறது. அத்துடன் இழப்பினால் மனத்தாங்கலடைந்தவர்கள் அரசியற் போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
4. சர்வதேச வர்த்தகத்தினைப் பயனுடையதாக்கல்
கொள்கை உருவாக்கத்தில் ஈடுபடும் உயர்தொழிலோர் இதயபூர்வமான சுதந்திர வியாபாரிகளாவர். ஆயினும் கொள்கையாக்கும் மகாநாடுகளில் அவர்கள் இதனை ஆதரித்துப் பேசக்கூடாது. அரசியல் ரீதியான பாதுகாப்புவாதம் போன்று இது ஒரு தெளிவான விடயமாக உள்ளது. அவ்வாறாயினும் ஏனைய குழுக்களுடன் உயர்தொழில் வகுப்பினர் கொண்டிருக்கும் நம்பிக்கை அவர்களுடைய தீர்மானத்திலேயே தங்கியிருக்கிறது. ஆகவே சுதந்திர வர்த்தகத்தைத் திறந்த மனதுடன் வரவேற்பதற்குப் பதிலாகத் தற்காலக் கொள்கை வகுப்போர் சார்பளவில் திறந்த பொருளாதாரத்துக்கும், மூடிய பொருளாதாரத்துக்குமிடையே காணப்படும் உபாயங்களின் தெரிவுபற்றி வலியுறுத்த முயற்சிக்கின்றனர்.
திறந்த பொருளாதாரம் என்பது சார்பளவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான உயர்மட்ட ஏற்றுமதியையும், உயர்மட்ட இறக்குமதியையும் குறிக்கிறது. இதற்கு மாறான கருத்தை மூடிய பொருளாதாரம் தருகிறது.குறைவான இறக்குமதியும் (இறக்குமதித் தடைகள் காரணமாக) குறைவான ஏற்றுமதியும், இறக்குமதிச் சட்டத்தின் மீதான கட்டுப்பாடும் மறைமுகமான ஒரு தடையாக விளங்குகிறது. இவை மாற்று வீதங்களில் உள்ள மாற்றங்களுக்குக் காரணமாக இருப்பதள் மூலம் அவ்வாறு விளங்குகிறது. அதனால் ஏற்றுமதிப் பொருட்களின் விலையைக் குறைக்கின்றது. ஏற்றுமதிகளின் மூலமாக இறக்கு
17

Page 11
மதிக்கான கொடுப்பனவுகள் செய்யப்படுகின்றமை இதற்குக் காரணமாகும். அத்துடன் ஒரு விடயத்தைக் கட்டுப்படுத்தினால் மற்றையதையும் கட்டுப்படுத்வேண்டிய அவசியமும் உண்டு. ஆகவே இறக்குமதியைப் பாதுகாத்தால் ஏற்றுதிப் பாதுகாப்பை இழக்க வேணடி நேரிடும். வினைத்திறன் குறைந்த இறக்குமதிப் போட்டியுடன் கூடிய கைத்தொழில்கள் பாதுகாப்பு என்ற வகையில் வினைத்திறன் மிக்க வள ஒதுக்கீடுகளைச் சிதைத்து விடுகின்றன. திறமையுள்ள ஏற்றுமதிக் கைத்தொழில்களிலிருந்து வளங்களைத் (மூலதனமும் உழைப்பும்) திசை திருப்புகிறது. இத் தொகுதியில் வியாபாரத் தடைகளைத் தாராள மயமாக்கலின் மூலம் அடைந்த முன்னேற்றங்களைத் தாய்வான் எடுத்துக் காட்டுகிறது. 1950களின் தொடக்கத்தில் இடம்பெற்ற தாராளமய மாக்கலுடன் அதனையடுத்து வந்த இரண்டரைத் தசாப்தங்களில் உண்மையான வர்த்தகப் பெருக்கம் ஏற்பட்டது. தாய்வானின் ஏற்றுமதி மூலம் கிடைத்த வருமானமும் 1950க்கும் 1980க்குமிடையில் 200 மடங்கு அதிகரித்தது.
இக் கட்டத்தில் கொள்கையுருவாக்கும் உயர்தொழில் வகுப்பினரின் பணியானது சீர்குலைவுகளை நிதானமான போக்குடையதாக மாற்றுதலாக அமைந்தது. வர்த்தகத்தின் அளவினை அதன் உள்ளார்ந்த சக்திக்குக் கீழ் குறைந்துபோவதைத் தடுத்தல் இதற்குரிய வழியாக இருந்தது.
5. வர்த்தகத் தடைகளின் போக்கும், சில வகைகளும்
ஏனையவற்றிலும் பார்க்க மிகவும் மோசமானவை.
1960களிலிருந்து கட்டுப்பாட்டுச் செயல்முறைகள் பற்றிய பொருளியலாளர் களின் விளக்கமானது முன்னோக்கிப் பெரும் அடியெடுத்து வைத்தது. இது "பயனுறுதி வாய்ந்த பாதுகாப்பு" (effective protection) என்பதன் கருத்தியல் ரீதியான விருத்தியுடன் தோன்றியது என்கின்றனர். ஏனைய விடயங்களின் மத்தியில் இறுதி உற்பத்திக்கு விதிக்கப்பட்ட அதேயளவு சுங்கத் தீர்வை சக்திமிக்க பாதுகாப்பின் வேறுபட்ட அளவுகளை நன்கு எடுத்துக் காட்டலாம். இவை உற்பத்திச் செயல்முறையில் இறக்குமதி செய்யப்பட்ட உள்ளிடுகைகள் எத்தகைய முக்கியத்துவம் பெறுகின்றன என்பதிலும், அவற்றுக்கு எவ்வாறு வரி விதிக்கப்படுகிறது என்பதிலும் தங்கியிருக்கும். சக்திமிக்க பாதுகாப்பு வீதங்களின் வேறுபாடுகளுக்கு உத்தரவாதமளித்தல் நிச்சயமான ஒரு வழிமுறையாக இருக்கலாம் என்பது (இறுதி உற்பத்திகளின் மீதான பெயரளவுப் பாதுகாப்பு வீதங்களிலும் இவை நிதானமாகக் கடைப்பிடிக்கப்பட்டாலுங் கூட) பெயரளவுப் பாதுகாப்பு வீதத்தினைச் சகல உற்பத்திகளுக்கும் ஒரே விதமாக விதித்தலைக் கருதுகிறது. பொருட்பட்டியலில் மூலப் பொருட்களையும் மூலதனப் பொருட்களையும் உள்ளடக்குவதை இது வெளிப்படையாகக் கருதினாலும் இவை ஒரு சீரான பாதுகாப்புவீதம் என்பதற்கு உட்படுகிறது.
18

நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டபொருள் அல்லது அவ்வாறு இல்லாவிட்டாலும் கூட ஒரு சீரான வீதத்துக்கு உட்படுகின்றன. இவை உற்பத்திக்கான சக்திமிக்க பாதுகாப்பில் நேர்மையைக் கடைப்பிடிக்கு மளவுக்கு உள்ளது. அவ்வகையில் உள்ளீடாகவும் அவை விளங்கமுடியும். சகல பெயரளவுப் பாதுகாப்பு வீதங்களும் சமமாக இருக்கும்போது, பயன்பாட்டு வீதங்களும் அப்பெயரளவு வீதத்துக்குச் சமனாக இருக்கும். ஒரு சீரான சுங்கத்தீர்வை வீதம் மட்டுமே தன்னிச்சையாக நிச்சயமற்ற தன்மைகளையும் சீர்குலைவு வேறுபாடுகளையும் தவிர்க்கிறது. சுங்கத்தீர்வை அட்டவணைகளைப் பெருஞ் சமநிலையுடையதாகச் சீர்திருத்தியமைத்தல் என்பது உயர்தொழிலோர் சிறப்பு வகுப்பினரால் ஆதரிக்கப்பட்ட மிக முக்கிய சீர்திருத்தமாகும்.
6. இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மிகையாக இருந்தால் அவற்றை நேரடியாகக் கட்டுப்படுத்துதல் அரசியல் ரீதியாகச்சாத்தியமற்றது. ஏற்றுமதிக்கான ஊக்குவிப்புகளை அதிகரிப்பதன் மூலம் பிரச்சினைகள் மீது மறைமுகமான தாக்குதல்களை மேற்கொள்ளல்.
இவை ஏற்றுமதிக்கு எதிரான பக்கச் சார்புகளை ஈடுசெய்ய உதவுகின்றன. அவை இறக்குமதிகளிற் கட்டுப்பாடுகளை உண்டாக்கும். ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கேற்ற இயல்பான சாதனமாக உற்பத்தியின்போது ஏற்படும் மறைமுக எல்லை வரியை விலக்குதலாகும். அத்தகைய விலக்குதல்கள் சுங்கத்தீர்வை மற்றும் வியாபாரம் சம்பந்தமான பொது உடன்படிக் கையின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் பல நாடுகளில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது.நேரடி வரி விலக்கு மற்றும் நேரடி மானியங்கள் என்பன ஏற்றுமதியை ஊக்குவிக்கும் ஏனைய வழிமுறைகளாகும். "காற்” (GATT) மூலம் இது அங்கீகரிக்கப்பட வில்லையாயினும் பிந்திய அம்சம் சில நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு எல்லைவரை அவை ஏற்கப்பட்டுள்ளன. இவ்வாறான சமநிலைப்படுத்தும் வழிமுறைகளை முழுமையாகப் பயன்படுத்தும் போது அப்பயன்பாடு மேலும் சரிசெய்யப்பட வேண்டியதுடன் சீர்குலைவுக்கான புதிய மூலகமாகவும் மாறுகிறது.
7. வரிமுறைமைகளை எளிமைப்படுத்தல், நிருவகிக்க இலகுவாக விருத்தல் (இயலக் கூடியளவுக்கு), நடுவு நிலைமை என்பன வள ஒதுக்கீட்டு விடயத்தில் சீர்குலைவுகளை உண்டாக்காமல் இருக்கும்.
இந்த மூன்று நோக்கங்களையும் நிறைவு செய்வதற்கேற்ற சிறந்த வரிப் பெறுமானம் சேர்க்கப்பட்ட வரியாகும். இது முதன்முதலாகப் பிரான்சில் 1950 களின் ஆரம்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வரி கம்யூனிச
19

Page 12
நாடுகளல்லாதவற்றில் மிக முக்கியமான வருமான மூலகமாக இருந்தது. அதனுடைய நடுவுநிலைமைத் தன்மை, அதன் முக்கிய பண்புக் கூறுகள் பொருட்களின் உற்பத்திப் படிமுறைகளுக்கூடாக உண்டாகிறது. இவ்வுற்பத்திகளுக்கு அவற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் பெறுமானம் சேர்க்கப்பட்ட வரி விதிக்கப்படுகிறது. அவை இறுதி உற்பத்தியாக உருப்பெறும்போது அதன் ஒவ்வொரு கூறும் அல்லது தொகுதியும் ஒரு தடவையே வரிவிதிப்புக்கு உட்படும். விற்பனை வரிமுறைக்குப் பதிலாக, இவ் வரிமுறை அறிமுகம் செய்யப்பட்ட சில நாடுகளில் பெரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உற்பத்தித் தொடர்ச் செயற்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான வரி விதித்தலை இது தவிர்க்கிறது. பல சந்தர்ப்பங்களில் உற்பத்தியின் ஆரம்ப கட்டத்தில் பெறுமானம் சேர்க்கப்பட்ட முறையில் வரிவிதித்தலுக்கு முடிவு கட்டியது. மற்றும் பலம் வாய்ந்த செயற்கையான ஊக்குவிப்புக்களாளது உற்பத்திச் செயல் முறையில் குத்தான ஒன்றிணைப்பையும் தோற்றுவித்தது.
8. மேலதிக வருமான வரி வீதத்தைத் தவிர்த்தல்.
எத்தகைய வருமானத்திலும் 50 சதவீதத்திற்கு மேற்பட்டவரியை விதித்தல் பொருளாதாரரீதியாக நன்மை தராது. அத்தகைய வரி வீதங்கள் நடத்தைகளைச்சீர்குலைத்துப் பொருளாதாரச் செயற்பாடுகளுக்கும் பாரிய ஊக்குவிப்பின்மைகளைத் தோற்றுவிக்கும். வருமானத்தையும் கொடுப்பதில்லை. பொதுவாகக் கொள்கை வகுக்கும் உயர் தொழிலோர் கவனமாகவும் விவேகமாகவும் வகுக்கப்படும் வரியமைப்புக்கு ஆதரவு நல்குகின்றனர். தமது விசேட கவனத்தை (அ) வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் மூலதனத்தைச் சரியாகப் பெற்றுக்கொள்ள இடமளிக்கப்படுகிறது. (ஆ) வரி நோக்கங்களுக்காக வருமானத்தைக் கணக்கிடுதல் மற்றும் வரிப்பொறுப்புகளின் விளைவுகள் ஆகியவற்றில் முழுமையான சீர்குலைவுகளை ஏற்படுத்தாவண்ணம் பணவீக்கத்தைத் தடுத்தல்.
9. குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்கு வரி ஊக்குவிப்புகளின்
மேலதிகப் பயன்பாட்டைத் தடுத்தல்,
இத்தகைய ஊக்குவிப்புகள் மூன்றாம் உலக நாடுகள் பலவற்றில் பொதுவாகக் காணப்பட்டன. வடகிழக்கு மற்றும் அமேஷோனியா ஆகிய இடங்களில் பிரேசில் சட்டம் முதலீட்டுக்குச் சாதகமாக இருத்தல் ஒரு நல்ல உதாரணமாகும். இச்சட்டத்தின்படிஇன்னொரு பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனம் அரசாங்கத்துக்குக் கூட்டுத்தாபன வருமான வரி 1000 இல் 500 ஐப் பயன்படுத்தி வட கிழக்கிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டங்களுக்கு முதலீடு செய்கிறது. அத்துடன் மிகுதி 500 மாத்திரம் வரியாகச் செலுத்த வேண்டியுள்ளது. உண்மையில் நிறுவனம் இவ்வாறு முதலீடு செய்யாவிட்டால் அது அரசாங்கத்துக்குச் சொந்தமான பணமாக
20

இருக்கும். ஆனால் வருமானத்தைக் காட்டுமாறு நிறுவனம் கோரப்படலாம். பதிலாக நிறுவனமானது 200 அல்லது 300 ஐ மாத்திரம் எடுத்து முதலீடு செய்வதும் நன்மையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாகப் பணத்தை அதிகளவில் இழக்கக் கூடிய முதலீடுகளைச் செய்தாலுங்கூட.
இன்னொரு அம்சமாக முதலீட்டுவரிக் கடனைக் குறிப்பிடலாம். இது 30 சதவீதமாக இருந்தது. 1970 களின் நடுப்பகுதியில் பொலீவியாவில் நடைமுறையிலிருந்தது. இச் சட்டத்தின்படி ஒரு நிறுவனம் 1000 முதலீடு செய்யக்கூடியதாயினும் பணத்தைப் பொறுத்தளவில் 700 மட்டுமே ஈடுபடுத்தப்பட்டது. மிகுதியாயுள்ள 300 உம் அரசாங்கத்துக்கு வரியாகச் சென்றடைந்தது எனக் கூறலாம். அத்தகைய நிறுவனம் உறுதியானதாக இருந்து அதன் முதலீடுகள் சார்பளவில் துரித பயன்களைத் 900 ஆக உற்பத்தி செய்யுமானால், பொருளாதார நோக்கில் அந்த முதலீடும் பயனற்றதாகவே இருக்கும் (1000 முதலீட்டுக்குப் பதிலாக 900 கிடைக்கிறது). சகல விதமான முதலீட்டு வரிக் கடன் திட்டங்களும் இந்த அடிப்படைக் குறைபாடுகளை அனுபவிக்கின்றது. பொலீவியாவின் விடயத்தில் இது வெளிப்படையாக உள்ளது. ஏனெனில் மிக உயர்ந்த 30 சதவீதத்திலேயே வரிக் கடன்கள் வழங்கப்பட்டன.
10. விலை மற்றும் வேதனக் (Wage) கட்டுப்பாடுகளை மிதமான
போக்கில் பயன்படுத்தல் .
பொருளாதாரரீதியாக அவை மிக அருமையாகவே நியாயப்படுத்தப் படுகின்றன. எனவே மிகக் குறைந்த மட்டத்திற் பொருளாதாரரீதியற்ற குறிக்கோள்களை அவை பிரதிநிதித்துவம் செய்கின்றன. பொருளாதார இலக்குகளை அத்துமீறுகின்றன. இவை விரக்தியடையச் செய்யும் நோக்கினைக் கொண்டனவாகவும் உள. விலை மற்றும் கூலி பற்றிய கட்டுப்பாடுகள் குறிப்பாக விலைகள் வகிக்க வேண்டிய முக்கிய குறிகாட்டும் பணிகளைச் சீர்குலைக்கும் நோக்குடையவை. அதாவது விலைகள் குறைந்த பெறுமதியிலிருந்து உயர் பெறுமதிப் பயன்பாட்டுக்கு மூலவளங்களை உட்படுத்துகிறது. உயர் விலைகள் அருமைத்தன்மையை எடுத்துக்காட்டுவனவாகவும் மற்றும் பிரச்சினைக்குரிய நடவடிக்கை களின்பால் மூலவளங்களை ஈர்ப்பனவாகவும் உள்ளன. குறைந்த விலைகள் அபரிமிதத்தைப் பிரதிபலிக்கின்றன. அத்துடன் தேவையற்ற மேலதிக வளங்களை விலக்கி விடுகின்றன. அநேகமான விலைக் கட்டுப்பாடுகள் பாதுகாப்பு நோக்கில் எப்பொழுதும் விலைகளைக் குறைவாகப் பேணவே முற்படுகின்றன. அல்லது அடிக்கடி மாறும் சூழ்நிலைகளினால் நிலைபெற்றிருக்கவேண்டிய விலையை அழிய விடாமற் பாதுகாக்கவேண்டும் என்பதுமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் விலைக்கட்டுப்பாடுகளின் விளைவுகள் பின்வருமாறு அமையும்,
21

Page 13
(அ) தாழ்வான கட்டுப்பாட்டு விலைக்குப் பதிலிறுக்கும் வகையில் உற்பத்தியானது அதிகரிக்கத் தவறிவிடுகிறது. மற்றும் அருந்தலின் காரணமாக அவை வீழ்ச்சியடையவும் கூடும்.
(ஆ) கள்ளச் சந்தைகள் தோன்றும். குறைந்த விலைகளைப் பேண அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் சில கொள்வனவாளர்களை விரக்தியடைச் செய்யும். விலை மற்றும் கூலிக் கட்டுப்பாடுகள் என்ற சகதிக்குள் அரசாங்க முயற்சியினால் ஏற்படும் சிறிதளவு நன்மையேனும் கிடைப்பதில்லை.
11. கிடைப்புப் பங்கு (Quotas) அனுமதிப் பத்திரங்கள் மற்றும்
அதனைப் போன்ற தொகைரீதியான கட்டுப்பாடுகள்
வெளியீடுகள், இறக்குமதிகள், ஏற்றுமதிகள் மற்றும் ஏனைய பொருளாதார மாறிகள் ஆகியவற்றின் மீதான கட்டுப்பாடுகள் பல்வேறுவகையான விலைக் கட்டுப்பாடுகளுடன் ஒன்றின் பின் ஒன்றாக வந்து கொண்டிருப்பதைக் காணலாம். இவ்வாறான நடைமுறைகளில் மிக அருமையாகவே முன்பின் முரண்பாடற்ற வகையில் பொருளாதார மெய்ப்பிப்பைக் காணக்கூடியதாக உள்ளது. இக் காரணத்தால் கொள்கை வகுப்போர் அவற்றைச் சந்தேகக் கண்களுடன் நோக்குகின்றனர். பொதுவாக இவ்வாறான கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்ட நிரம்பலைக் கேள்வியாளர்களுக்கிடையே பங்கீடு செய்யும் விலையிலும் பார்க்கச் சிலவகை நியதிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளன என இயல்பாகச் சுட்டிக்காட்டுகின்றன. இது இலகுவில் பாரபட்சங்களுக்கு இடமளிக்கிறது. நடைமுறையில் ஊழல்களையும் தோற்றுவிக்கும். ஆகவே இத்தகைய தொகைரீதியான கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தின் பயனுறுதி வாய்ந்த தன்மையை வழக்கமாகக் குறைக்கும் எனலாம்.
12. கொள்கை வகுக்கும் உயர்தொழில் வகுப்பினர் பொதுத்துறை
முயற்சிகளுடன் இணைந்த பிரச்சினைகளைத் தொழில்நுட்ப நோக்கிலேயே பார்க்கின்றனர்.
உயர்தொழில் வகுப்பினர் பொது முயற்சி தொடர்பாக ஓர் உறுதியான கருத்தியல் சார்ந்த நிலைப்பாட்டையே எடுத்துக்கொள்கின்றனர். எவரும் எப்பொழுதும் பொறாமையுடையவர்களாக இருக்கமாட்டார்கள் என்பதற்குச் சான்றுகளைத் தொகுத்துக் கொண்ட வேளையில் சில பொதுத்துறை முயற்சியாளர் மேற்கூறியவற்றை அறிந்து, பின்பற்றி வந்தனர். வெற்றி தோல்விகளுக்கிடையேயுள்ள வேறுபாடுகளை நோக்கும்போது ஒருமுயற்சியாளன்என்றவகையில் நடந்துகொள்வதற்கு அரசாங்கம் இடமளித்த வேளையில் பொதுத்துறை முயற்சியாளர்கள் அவற்றை முழுமையாகப் பின்பற்றினர் எனச் சுருக்கமாகக் கூறலாம்.
22

அரசாங்கம் தனது பொருளாதாரமல்லாத குறிக்கோள்களையடையப் பொதுத்துறை முயற்சியாளரை ஒரு கருவியாகப் பயன்படுத்தினால், அவர்களுடைய பொருளாதார நடைமுறைகள் போன்ற தவிர்க்க முடியாத வெற்றிகள் ஆபத்தானவையாக மாறுகின்றன. இவ்வாறான பல வழிமுறைகள் மூலம் அரசாங்கம் தமது முயற்சியாளரின் பொருளாதாரத் தொழிற்பாடுகளை அத்துமீறியுள்ளது எனலாம். அவை பொது முயற்சியாளர் விற்பனை செய்யும் பொருட்கள், சேவைகளின் விலைகளைச் செயற்கையாகக் குறைந்த மட்டத்தில் பேணிவந்தன. இவ்வியல்பு மின்சாரம், வாயு மற்றும் தொலைபேசிக் கம்பனிகளுக்கும் ஏனைய பொதுப்பயன்பாடுகளுக்கும் பொருந்தும். குறைந்த விலைகளினுாடாகக் கம்பனிகளுக்கான நிதி வசதிகள் கட்டுப்படுத்தப்பட்டதன் விளைவாகச், சேவைகளின் தரம் பேணமுடியாமற் போனது. உள்ளிடுகைக் கொடுப்பனவுகளைச் சந்தை விலைகளின் படி கொடுக்குமாறு வேண்டப்பட்டன. குறிப்பாக உடலுழைப்பாளருக்கும் சாதனங்களுக்கும் சட்டப்படி இவ்வாறு வழங்கியமை குறைந்த விலை வளங்களைச் சர்வதேச சந்தைகளில் இருந்து முயற்சியாளர்கள் பெற்றுக்கொள்வதைத் தடை செய்தது. அவர்கள் வகுத்த உயர் சம்பளங்கள் (வழக்கமாக உயர் அரசாங்க உத்தியோகத்தரின் சம்பளத்துடன் தொடர்புடையது) தனியார் சந்தைகளிலுள்ள பிரதான வர்த்தக நிருவாகிகளின் சம்பளத்திலும் பார்க்க மிகக் குறைந்ததாகக் காணப்பட்டன. இத்தகைய சூழ்நிலையிலும் பொது முயற்சியாளர்கள் தனியார்துறை முயற்சியாளருடன் ஒப்பிடக் கூடிய அளவுக்கு முகாமையாளர்களைக் கொண்டிருந்தனர். குறிப்பாக அர்ப்பணிப்புடன் பணிகளில் ஈடுபடும் சிலர் பணரீதியாகப் பலவகைத் தியாகங்களைச் செய்தமை இதற்குக் காரணமாகும். மேலும், பல பொதுத் துறை முயற்சிகளுக்குக் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்வதிலிருந்து வழக்கம்போல விலக்களிக்கப்பட்டிருந்தது. இவை தோல்விகளுக்கும் மாறுபட்ட சூழ்நிலைகளுக்குமிடையே வேறுபாடுகளை எப்பொழுதும் உண்டாக்குகின்றன. கோரிக்கைகள் முன்வைக்கப் படும்போது உற்பத்தியைக் கைவிடுதல், தொழிற்சாலையை மூடுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட நிலைமைகள் பொருளாதாரத்தின் மாறுபாடான நிலைமைகளுக்கும், பொதுத்துறை முயற்சிகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்குகின்றன எனக் கொள்கை வகுப்போர் அறிவர். இருந்தும் பொதுத்துறைமுயற்சியானது பொருளாதார வினைத்தி:னுக்கு இயல்பான தடையாக உள்ளதெனவும் அவர்கள் உணர்ந்துள்:னர். எனினும் பல பொதுமுயற்சியாளர்கள் (பல்வேறு நாடுகளில்) இவ்வாறான தடைகளை வெற்றிகொண்டு அவற்றை நன்மை தரும் வகையிலும் மாற்றியுள்ளனர். சில சந்தர்ப்பங்களில் பொருளாதாரப் பெறுபேறுகள் மிகச் சிறந்தவையாகவும் உள்ளன. இத்தகைய வெற்றிகள் அரசாங்கத்துக்கும் முயற்சியாளருக்குமிடையே நிலவிய புரிந்துணர்வின்
23

Page 14
மூலமாகவே பெறப்பட்டன எனலாம். இவ் விடயத்தில் முயற்சியாளர் பொருளாதாரத்துக்கு எதிரான முறையில் நடந்து கொள்வதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை அல்லது நெருக்கடிக்குட்படுத்தப்படவில்லை. கொள்கை வகுப்போர் இவற்றை ஏனையவற்றுக்கும் ஒரு மாதிரியாகக் கொள்கின்றனர்.
13. இறுதியாக, பொதுத்துறை மற்றும் தனியார்துறைச்செயற் பாடுகளின் நடவடிக்கைக்குத் தெளிவான, வரையறையான ஒர் எல்லையை வகுத்தல்.
ஒரு துறையில் இருவர் போட்டியிடும் போது அவர்களுடைய நடவடிக்கைகளை ஒரே சட்டத்தின் மூலம் நெறிப்படுத்தல் என்பதைக் குறிப்பிடலாம். எழுந்தமானமாக அல்லது மனம் போனபோக்கில் எவ்விதமான இழப்பீடுமின்றிப் பறிமுதல் செய்தல் ஒருவகையான மற்றும் புரிந்துகொள்ளக் கூடிய எதிர்விளைவுகளை உண்டாக்குகிறது. துறை ரீதியாக அவர்கள் பயமுறுத்தப்படுகிறார்கள் எனக் கருதினால் (பறிமுதல் செய்யப்பட்ட பின்னரும்கூட) தனிப்பட்ட உரிமையாளர்கள் உடனடி முதலீடுகளைச் செய்வதில்லை; சேமிப்பு வீதம் வீழ்ச்சியடையும்; முதலீடுகள் வெளிநாடுகளுக்குச் செல்லும், கபடத்தனமாக அல்லது வஞ்சனையாக (கறுப்புப்பணம், ஏற்றுமதி விலைப்பட்டியல் குறைவாகவும், இறக்குமதி விலைப்பட்டியல் உயர்வாகவும் இருத்தல்) நடந்துகொண்டால் இவ்வாறான விளைவுகள் ஏற்படும். இரு தரப்பு எதிர்நடவடிக்கைகளுக்கும் பல உதாரணங்கள் உள்ளன. எழுந்தமானமாகவும் பறிமுதலுக்குப் போதியளவு இழப்பீடுகள் வழங்கப்படா நிலையிலும் ஒருநாடு நன்மைகளை அனுபவித்தல் மிகவும் அருமையான விடயமாக இருக்கும்.
உண்மையான நோக்கில் தனியார் துறை நடவடிக்கைகளுக்கும் பொதுத்துறை நடவடிக்கைகளுக்குமிடையே ஒரு தெளிவான எல்லையை ஃரைய முடியும். இவ்வ்ெல்லையைத் தெளிவாகக் கொண்ட நாடுகளுள் ஐக்கிய அமெரிக்காவும் ஒன்று. மின்சாரக் கம்பனிகள், கடத்து முறைமைகள், எல்லைப் பிரதேசங்களில் இடம்பெற்றிருக்கும் ஏனைய பொதுப்பயன்பாடுகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். ஆயினும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பலவற்றில், பெரும்பாலும் எல்லாக் கைத்தொழில் தொகுதிகளும் பொதுத்துறை முயற்சியாளரைப் பரவலாகக் கொண்டிருக்கின்றன.இவ்விடயங்களில் உயர் தொழில்வகிப்போரதுநிலை தெளிவாகவுள்ளது. எனவே பொதுத்துறையும் தனியார்துறையும் ஒரே வரிச் சட்டங்களை, ஒரே விதிமுறைகள், சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சுதந்திரமாகப் போட்டியிட இடமளிக்க வேண்டும். சில பிரச்சினைக்குரிய விடயங்களில் ஒரு பொதுத்துறை முயற்சியாளர் போட்டியிட முடியாதபோது (அ) அது அமிழ்ந்து போகட்டும். (ஆ) அது பிழைத்திருக்க வேண்டுமென்பதற்காக அதனை விடுவித்தல் ஆனால்,
24

(இ) விலைகளைக் குறைத்தல் மற்றும் இழப்புகளை ஏற்படுத்தல் மூலம் அதனை ஒரு சட்டரீதியாகத் தகுதியற்ற தனியார் முயற்சியாக மாற இடமளிக்கக்கூடாது. பின்னர் இவற்றுக்குப் பொதுத் திறைசேரியின் மூலமாகவே நிதி வழங்கப்படுகிறது.
மேலே எடுத்துக் காட்டப்பட்ட பின்னணிகள் கொள்கை வகுக்கும் உயர்தொழில் வகுப்பினரின் சிந்தனை வழிமுறைக்குரிய சில அகக் காட்சிகளைத் தரும் எனலாம். இத்தகைய உதாரணங்களிலிருந்து, கொள்கை வகுப்போர் பொருளாதாரக் கொள்கை நன்றாக உள்ள சந்தர்ப்பங்களையும், பரிகாரம் தேட முடியாத அளவுக்குச்சீர்குலைந்துள்ள சந்தர்ப்பங்களையும் தெளிவாக இனங்காணலாம் என நம்புகிறார்கள். சில விடயங்களைப் பாகுபடுத்திப் பார்த்தலும் கடினம் என்பதும் தெளிவாக உள்ளது. நல்லதும் கூடாததுமான அம்சங்கள் சிக்கல் வாய்ந்த முறையில் கலந்திருக்கும் வேளைகளில், உயர்தொழிலில் ஈடுபடுவோர் ஒன்றிலிருந்து மற்றையதைக் கூறக்கூடிய தமது ஆற்றலில் நம்பிக்கையுடையோராக இருத்தல் வேண்டும். இறுதியாக இத்தகைய அடிப்படையில், நல்ல கொள்கை குறிப்பிட்ட கனமான கருத்தியல் அல்லது அரசியல் உரத்த குரல்களுக்கு இடமளிக்கவில்லை என்பதும் தெளிவாக உள்ளது. நிச்சயமாக ஒரு நல்ல கொள்கை ஐரோப்பிய சமூக சனநாயகவாதிகள், அல்லது கிறித்தவ சனநாயகவாதிகள் அல்லது சோசலிசவாதிகள் ஆகியோரின் கைகளிலும் மற்றும் பிரித்தானிய கொன்சவேட்டிவ் அல்லது தொழிற்கட்சியாளரிடமும் அல்லது அமெரிக்க சனநாயகவாதிகள் அல்லது குடியரசுவாதிகளிள் கைகளிலும் நடைமுறைப்படுத்தக் கூடியவாறு இடம்பெற வேண்டும். அல்லது அரசியல் அதிகாரத்தைக் கூட்டக்கூடிய அரசியல் குழுக்களிடம் நல்ல எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உலகின் கம்யூனிசம் அல்லாத நாடுகளில் கையளிக்கலாம்.
25

Page 15
2
அரசு மற்றும் சந்தை என்பனவற்றின் பங்கு பற்றிய ஆழமான புரிந்து கொள்ளல்
மூன்றாவது உலக சமுதாயங்கள் குடியேற்ற ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் அவை தமது ஆற்றல்களை வளர்த்து அவற்றினூடாகப் புதிய பலாபலன்களைப் பெறலாம் என்ற நம்பிக்கை அதிகளவிற் காணப்பட்டது. (Migdal,1988) சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு அரசே முன்னின்று உதவ வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் “அபிவிருத்தி” (Development) பற்றிய கருத்து உருவாக்கப்பட்டது. அபிவிருத்திவாதம் (Developmentalism), அரசின் தலையீடு ஆகிய சிந்தனைகள் ஒன்றிணைந்தவை என்றே கருதப்பட்டன. இவ்வகையில் கொள்கைகளும் திட்டமிடலும் ஏராளமான வாய்ப்புகளைத் தருவனவாகக் கருதப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளின் தலைவர்கள் மட்டுமன்றி முழுச் சர்வதேச சமுதாயமும் அபிவிருத்தி என்பது ஒரு “சமூகச் செய்முறை” எனக் கொள்ளத் தொடங்கினர். ஐந்தாண்டுத் திட்டங்கள் இல்லாத ஒரு நாடு முறையாகச் செயற்படுவதாகக் கருதப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையும் அதன் ஏனைய அமைப்புகளும் ஒரு தசாப்தத்தில் அல்லது ஒரு குறிப்பிட்ட துறையில் அடையப்படவேண்டிய இலக்குகளையும் நியமங்களையும் வரையறுத்தன. அமெரிக்கச்சமூக விஞ்ஞானிகள், மிக்டால் கூறுவதுபோல அபிவிருத்திப் பணிகள் மீதான ஆர்வத்துடன் அரசின் சார்பில் செயற்படத் தொடங்கினர். பின் தங்கிய நிலையிலிருந்து நவீனத்துவம் நோக்கிய சமூகங்களின் உருமாற்றத்தில் அரசுக்கு முக்கிய பங்கு உண்டு என்பதைப் பல்பக்க, இருபக்க அபிவிருத்தி முகவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
சோசலிச நாடுகளில் அபிவிருத்தியை அரசு ரீதியாக நோக்க முற்பட்டனர். அவை வள ஒதுக் கீட்டுக்கு மத்திய திட்டமிடலே இயல்பான வழிமுறையெனக் கொண்டன. அரசுச் சொத்துடைமையும் கூட்டுச் சொத்துடைமையும் ஊக்குவிக்கப்பட்டன. அருமையாகக் காணப்படும் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்த்த் திட்டமிடலே முக்கிய வழிமுறையாயிற்று. தனியார் துறையும் சந்தை நிலைமைகளும் பொருளாதார முறையின் ஒரு பகுதியே. அவை அபிவிருத்திக்கு அதிகம் பயன்படாது சுரண்டலில் ஈடுபடுவதாகக் கருதப்பட்டது. இவ்வாறான சமூகப் பொறுப்பற்ற நிறுவனங்கள் பொருட்கள் சேவைகளின் விலைகளை நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது. சர்வதேசச்சந்தை என்பது வளர்முக நாடுகளைப் பிறநாடுகளில் தங்கிநிற்கும் நிலைமையை ஏற்படுத்துகின்றன.
26

ஆயினும், சமகாலப் பொருளாதார முறைகளில் அரசின் பங்கு தீவிரமடைந்தது. பெரும்பாலான வளர்முக நாடுகள் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தின் இறுதிமுனையில் குழுவாக ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது (Perkins, W 1989).
சந்தை நிலைமையில் ஏற்படும் தவறுகளைத் (market failures) திருத்தியமைப்பதில் அரசுக்குத் திட்டவட்டமான பங்கு உண்டு எனக் கருதப்பட்டது. 1850கள் தொடக்கம் இந்த அணுகுமுறை முக்கியத்துவம் பெற்றது. ஆயினும் இவ்வணுகுமுறை மீதான நம்பிக்கை பின்னர் தளர்ந்தது. அரசாங்கம் இழைக்கின்ற தவறுகள் ஒரு பாரதூரமான பிரச்சினையெனத் தெளிவுபடுத்தப்பட்டது. (Wade, R1990). பெரும்பாலான சமுதாயங்களில் அரசு அதிமுக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. ஆயினும் வரையறுக்கப்பட்ட நோக்குகளையடையத் தேவையான ஆற்றலை அரசு கொண்டிருக்கவில்லை. அரசு இருவகையான இயல்புகளையுடையது. முதலாவது சமூகங்கள்மீது ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல்; இரண்டாவது இலக்குகளின் அடிப்படையில் சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவதில் அரசின் ஆற்றலின்மை. இன்றைய மூள்றாவது உலகநாடுகளை இதனடிப்படையிலேயே புரிந்து கொள்ள முடியும் (migdal, U.S, 1988). அரசின் அதிகாரபீடங்கள் தமது பணிகளை நிறைவேற்றுவதற்குச் சமமான அளவில் ஆற்றலுடையவை என அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது.
பல்வேறு நாடுகளின் “அபிவிருத்திக்கான ஆற்றல்களில்” (developmental capacities) மிகக்கூடிய வேறுபாடுகள் இருப்பது தெளிவாகும். சில நாடுகள் மிகச் சிறப்பாக அபிவிருத்தியடைந்துள்ளன. வேறு சிலநாடுகள் அடிப்படையான அரச பணிகளைக் கூடச் சரியாக ஆற்றவில்லை. இவ்வாறான செயலாற்ற வேறுபாடுகள் காரணமாக "அபிவிருத்தியை நாடும் அரசினுடைய’ இயல்புகள் எவை என்பதைப் பற்றி ஆராய்வதை முக்கிய பணியாக்கியுள்ளன. அத்துடன் வெவ்வேறு வகையான ஆட்சிமுறைகளின் கீழ் அரசுக்கும் சந்தைக்கும் இடையிலுள்ள தொடர்புகளின் இயல்புகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் ஏற்பட்டது.
அபிவிருத்திக்கான அரசின் இயல்புகள் பற்றிய ஆய்வில் முக்கிய இடம் பெறுவன சுயாட்சி, செயலாற்றல், ஆட்சித்தொழில் ஆகிய மூன்று எண்ணக்கருக்களாகும். முதலாவது அம்சமான சுயாட்சி என்பது அரசு குறைந்தபட்சம் வரைவு செய்து நடைமுறைப்படுத்தும் இலக்குகளானது, சமூகக் குழுக்கள், வகுப்புகள் அல்லது சமூகம் என்பவற்றின் கோரிக்கைகளையும் நலன்களையும் பிரதிபலிப்பதாய் அமையக்கூடாது என்பதாகும். இரண்டாவது அம்சம் ஆற்றல் என்பது மிகத்திறமைவாய்ந்த அதிகாரவர்க்க அமைப்பு ஒன்று இருப்பதையும் அதனைப் பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியத்துவமளிக்கும் அரசியல் அதிகாரக் குழாம் ஒன்று
27

Page 16
வழிநடத்திச் செல்வதையும் காணலாம். மூன்றாவது அம்சம் அரசினுடைய ஆற்றல் பற்றியது. அதாவது அரசு தனக்கு அனுகூலமான முறையில் சூழலை உருவாக்கிக் கொள்வதை இவ் அம்சம் குறிக்கும். கொள்கைச் சீர்திருத்தம் பற்றிச் ஸ்ரீபன் ஹகார்ட் (Stephan Haggard) பின்வருமாறு விளக்குகின்றார். "ஒரு நிறுவனம் என்ற முறையில் அரசுக்குச் சில இயல்புகள் உண்டு; சமூக சக்திகளில் இருந்து விடுபட்டு சுயமாக இயங்கும் தன்மை, கொள்கை வகுக்கும் அமைப்புகளுக்கு இருக்க வேண்டிய இயைபாக்கம், கொள்கையை உருவாக்கும் கருவிகள் இருக்கின்ற நிலைமை; இவ்வியல்புகள் பற்றிய பகுப்பாய்வைக் கொண்டே கொள்கைச் சீர்திருத்தங்களை விளங்கிக் கொள்ளலாம்” என்பது அவர் கருத்து.
இவை யாவும் அரசின் நிறுவனரீதியான ஆற்றலுடன் (lnstitutional Capacity) தொடர்புடையவை. ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதாரச் சூழ்நிலையில் பின்பற்றப்படக் கூடிய யதார்த்த பூர்வமான நீண்டகால அபிவிருத்திக் கொள்கைகளை வரைறை செய்யும் அரசின் ஆற்றலை இது குறிக்கும். கிழக்காசியாவின் புதிய கைத்தொழில்நாடுகளைக் கட்டியெழுப்ப உதவிய கொள்கைகளானது கட்டுப்பாடற்ற நிலையில் சந்தை எவ்வாறு செயற்பட நேரிடும் என்பதற்கு உதாரணங்களாக எடுத்துக் கூறப்படுகின்றன. உலக நாடுகள் சந்தையை அடிப்படையாகக் கொண்ட தலையீட்டுக் கொள்கையைக் கவனமான முறையில் பின்பற்றுமிடத்து எவற்றைச் சாதிக்க முடியும் என்பதைப் பற்றிய பல பகுப்பாய்வுகள் உண்டு. இவற்றில் சித்தாந்தச் சார்புகள் அதிகம் இல்லை. ஆயினும் கொரியா, தாய்வான் ஆகிய நாடுகள் வெற்றியடைந்த வரலாற்றை நோக்குமிடத்து இவ்விடயம் சற்றுச் சிக்கலானதாகும். இந் நாடுகள் சற்று எதேச்சாதிகார ஆட்சிமுறைகளைக் கொண்டவை. பன்மைச்சனநாயகப் பண்புகளைவிடச் சால்மர்ஸ் ஜோன்சன் (Chalmers Johnson)வகுத்த முதலாளித்துவ அபிவிருத்தி கொண்ட அரச மாதிரிகைக்கே இந் நாடுகள் பொருந்துவனவாயுள்ளன.
போதியளவு கவனத்துடன் தலையீட்டுக் கொள்கை வகுக்கப்படா விட்டால் அதன் விளைவுகள் பாரதூரமானவை என்பதில் கருத்து வேறுபாடுகளில்லை. கடந்த தசாப்தங்களில் இதற்கான பல உதாரணங்களைக் காணலாம். மற்றொரு அடிப்படை உண்மை, இவ்வாறு நிறுவனரீதியாக, அவதானமாகக் கொள்கைகளைக் கையாள்வது செயற்கையான முறையில் செய்துகொள்ள முடியாது. நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதற்கு நீண்ட காலம் செல்லும். இது பெருமளவுக்குத் தனிப்பட்ட ஒவ்வொரு நாட்டினதும் பண்பாடு, கல்விநிலை மற்றும் சில அடிப்படை இயல்புகளிலும் தங்கியுள்ளது; மற்றும் வளர்ச்சிச் சமன்பாட்டின் “எஞ்சிய' காரணியின் அம்சங்களுடன் தொடர்புடைய இயல்புகளிலும் இவ்விடயம் தங்கியுள்ளது. எனினும் எந்த நாட்டையும் அரசும் சந்தையும் என்ற நிலைமைக்கு இறக்கிவிட முடியாது.
28

போல் ஸ்ரீட்டன் (Paul streeten) குறிப்பிடுவதுபோல அரசும் சந்தையும் "செயற்பாட்டில் பங்குகொள்வோர் அனைவரையும் இழந்துவிடுவதில்லை”. அத்துடன் அரசு அரசியல் அதிகாரத்தின் உண்மையான கட்டியங் கூறுபவன்போல அமைந்துகொள்கிறது. (Streeten, 1992; Hyden, 1991).
"குடியியல் சமூகம்’ எனச் சுட்டப்படும் விடயம் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். பல்வேறுவகைப்பட்ட சர்வாதிகார அரசுகள் சகல சமூக இயக்கங்களையும் கட்டுப்படுத்த முயன்றன. ஆயினும் இன்று இக் குடியியற் சமூகம் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மீண்டும் உதயமாவதை நாம் காணமுடிகின்றது.
இவ்விரண்டு பரிமாணங்களையும் உள்ளடக்கி நோக்கக்கூடிய மரபுவழி அணுகுமுறைக்கு மாறான ஒரு புதிய எண்ணக்கரு அமைப்பு ஒன்று தேவைப்படுகின்றது. கோரான் ஹைடன் (Horan Hyden) என்பார் பயன்படுத்திய பொதுத்துறை மண்டலம் (Public realm) என்ற எண்ணக் கரு அமைப்பு இதற்கு நன்கு பயன்படக் கூடியது . இது அரசையும் சமூகத்தையும் உள்ளடக்கியது. பொதுத்துறைக்கும் தனிப்பட்டவற்றுக்கு மிடையே திட்டவட்டமான எல்லை வகுக்கப்பட்டால், ஹைடன் எடுத்துக்காட்டியபடி குடிசார் பொதுத்துறைமண்டலம்(CivicPublicream) எந்தளவுக்கு வளர்ச்சி பெற்றிருக்கின்றது என்பதும் அரசுசார்ந்த, குடிசார் சமூகம் சார்ந்த அரசியல்வாதிகள் எவ்வாறு அதனை நிருவகித்துப் பேணி வருகின்றார்கள் என்பதும் முக்கியமானது. ஆட்சியின் இயல்பு அடிப்படை விதிகளின் தொகுதியிலிருந்து அறியக் கூடியது. இவற்றைக் கொண்டே பொதுத்துறை ஆட்சியின் எல்லை ஒழுங்குபடுத்தப்படுகின்றது. இவற்றிலுள்ள இரண்டு அடிப்படை வகைகளுள் ஒன்று அரசுரீதியானது, மற்றது சந்தை அடிப்படையிலான தாராண்மை வாதம், ஆட்சியமைப்புகள் எவ்வாறு நிருவகிக்கப்படுகின்றன என்பதிலிருந்து ஆட்சிமுறையின் இயல்புகளை விளங்கிக் கொள்ள முடியும். ஆட்சிமுறை என்பது அதீத அரசியலைக் கையாள முற்படுகிறது. சட்ட உரிமை (legitimacy) என்பது ஒரு சார்ந்த மாறியாகும். அதாவது ஆட்சியமைப்பின் வினைத்திறனுடன் கூடிய ஆட்சியின் விளைவே இதுவாகும், சட்ட உரிமையானது ஆட்சியமைப்பின் அதிகாரம் நம்பிக்கைப் பொறுப்புக் கூறும் தன்மை, பரஸ்பரத் தன்மை ஆகிய கூறுகளுடன் இணைந்து கொள்ளுகின்றது (Hyden,1991), அரசு, சந்தை என்பவற்றின் உண்மையான இயல்புகளை இவ்வாறான அபிவிருத்தி தொடர்பான நிலைப்பாட்டிலிருந்து நன்கு விளங்கிக்கொள்ள முடியும். இவற்றை இரு துருவங்கள், வெவ்வேறுபட்ட கூறுகள் என்றமுறையில் அவற்றைச்சரியாகப்புரிந்துகொள்வதற்கில்லை.
கடந்த தசாப்தத்தில் பெரும்பாலான வளர்முக நாடுகளில் அரசின் பங்கு புதிதாக வரையறை செய்யப்பட்டது. இவ்வாறான நிலைமை ஏற்படப்
29

Page 17
பல காரணிகள் பொறுப்பாக இருந்தன. ஐக்கிய அமெரிக்கா, பெரிய பிரித்தானியா ஆகிய நாடுகளில் அரசின் குறைந்த பட்சத் தலையீடு ஒரு கோட்பாடாக முன்வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் தலையீட்டை அகற்றி சந்தைகள் உருவாக வேண்டும் எனச் சந்தைக்கு இலட்சிய பூர்வமான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அரசின் பலவீனங்கள் பற்றி மிகவும் பெரிதுபடுத்திக் கூறப்பட்டது. சாப்பிரோவும் ரெய்லரும் (shaptro and Taylor) எடுத்துக் கூறியபடி இம் மாதிரிகையில் ஒரு தனித்தன்மை வாய்ந்த இசைவின்மை காணப்பட்டது. அரசியலற்களம் முற்றாக ஆதரவுதேடுவோர், தனியுரிமைகளைக் கட்டியெழுப்ப முயல்வோரினால் நிரப்பப்பட்டுக் காணப்பட்டது. தொடர்ந்து பொருளாதாரமுறை பெருமளவுக்குப் போட்டிமயமானதாகக் காணப்பட்டது. இக் கோட்பாடு சிதைவுற்ற வளர்முக நாடுகளின் பொருளாதார விளைவுகளைப் பொறுத்தவரையில் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. மேலும் இவற்றின் அரசியற் பங்குபற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒர் அவசியமும் எழுந்தது. கடந்த காலங்களில் அரசு ஒர் ஒழுங்குபடுத்தும் நிறுவனமாக வளர்ச்சியுற்றுப் பல வழிகளிலும் அபிவிருத்திக்குத் தடையானதொன்றாக அமைந்தது. ஆயினும் ஆரம்பத்தில் அர்சு அபிவிருத்திக்கு உதவுமென்றே கருதப்பட்டது. பின்னர் அரசுக்குரிய சட்டவுரிமையென்பது இழக்கப்பட்டு விட்டது. எதிர்பார்ப்புகளின் ஒரு சிறுபகுதியைக்கூட அரசியல் அதிகாரப் பிரிவினரும் குறைந்த ஊதியம் பெற்ற சிவில்சேவையினரும் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.
பெரும்பாலான வளர்முக நாடுகளில் மிகப் பாரதுTரமான நிலைமை காணப்படுகிறது. சமாளிக்க முடியாத அளவுக்கு வெளிநாட்டுக் கடன்கள் உள்ளன. பேரினப் பொருளாதாரத்துறையில் கடுமையான சமமின்மையும் வளர்ச்சிக் குறைவும் காணப்படுகிறது. இவை யாவும் கடந்த தசாப்தத்தில் அசாதாரணமான சீர்திருத்தங்களும் சீராக்கங்களும் செய்யப்படக் காரணமாயின. வளர்முக நாடுகள் தமது நச்சு வளையத்தை உடைத்தெறியக் கடன்பெறுவது, சீராக்கங்களைச் செய்யவேண்டிய ஒரு தேவையேற்பட்டது. இந்நாடுகளில் இப்பாரதூரமான நிலைமையும் கடன் வழங்கும் நாடுகளின் கோட்பாடுகளும் இணைந்து ஒரு தீவிர மாற்றத்துக்கு வழிகோலின.
இன்று ஏறத்தாழ 57 வளர்முக நாடுகள், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து பல அமைப்புச் சீராக்க நிகழ்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. பல சந்தர்ப்பங்களில் உலக வங்கியின் தலைமையில் இயங்கும் ஆலோசனைக்குழுவின் வழிகாட்டலுடன் உதவி வழங்கப்படுகிறது. பேரினப்பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், சரியான விலைகளை நிலை நாட்டுதல், நிதிச் சந்தைச் சீர்திருத்தங்கள், சட்ட நிறுவனரீதியான அமைப்புகளை ஒழுங்குபடுத்தல், ஆகிய நோக்கங்களை நிறைவு செய்யும் வகையில் இந்நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
30

சோசலிசமுறைமை அமைப்பிலிருந்து சந்தைப்பொருளாதார முறைமைக்கு மாறிச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளைப் பொறுத்தவரையில் இந் நிகழ்சித் திட்டங்கள் விரிவானவையெனக் கொள்ளலாம். செக் நாட்டு நிதிமந்திரி வொகிலேவ கிலாஸ் (Vaclav Klaus) என்பவரின் கூற்றின்படி இவ்வாறான பொருளாதார அமைப்பு மாற்ற நடவடிக்கையைச் சதுரங்க விளையாட்டுடன் ஒப்பிடமுடியும். எவ்வாறு காய்களை நகர்த்துதல் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அடிப்படை உபாயங்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். ஆயினும் 15 ஆவது அல்லது 25 ஆவது முறை காயை நகர்த்திய பின்னர் ஏற்படக்கூடிய நிலையை அறிந்து கொள்ள முடியாது (Fisher, 1991). இவ் ஒப்புவமை கூட இச் செயற்பாட்டின் அரசியல் பரிமாணத்தைச் சரியாக விளக்காது. அதிஷ்டவசமாக வளர்முக நாடுகளின் சோசலிச நாடுகள் (வியட்னாம் உட்பட) இவ்வாறான ஒரு முறையையே அறிமுகம் செய்தது. பொருளாதார முறைகள்தொடர்ந்து கிராமச்சார்புடையனவாய் விளங்கின. கனரகக் கைத்தொழில் பெரியளவில் வளர்ச்சிபெறவில்லை. விலைக்கட்டுப்பாட்டு முறைக்கு அப்பால் சந்தைகள் முக்கிய இடத்தை வகிக்கவில்லை. இந் நிலைமைகளில் நாடுகள் சில அனுகூலங்களுடன் சந்தைப் பொருளாதார முறையை நாடின. பல சந்தர்ப்பங்களில் கிழக்கு ஐரோப்பாவை வழி நடாத்திய கம்யூனிசத்தைவிடக் குறைந்த பட்சமாக அவை குறிப்பிடப்பட்டன. ஆரம்பத்தில் மிக விரைவாகக் காரியங்களை முடித்துவிட வேண்டும் என்னும் நோக்கில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் முக்கிய அம்சம் ஒதுக்கீட்டு ரீதியான வினைத் திறனைப் (allocative efficiency) பொருளாதார அமைப்பில் ஏற்படுத்துவதாகும். இவ்வாறான செயற்பாட்டின்போது உற்பத்திவினைத்திறனைப் (productive efficiency) பாதிக்கும் சில குழுப்பங்கள் ஏற்படத்தான் செய்தன. ஆயினும் அமைப்பினைத் தூய்மைப்படுத்தும் பணியில் இவை விரும்பத்தக்க அம்சங்களாகவும் தவிர்க்க முடியாதவையாகவும் அமைந்தன.
இன்று மற்றுமொரு புதிய சீரான அணுகுமுறை பின்பற்றப்படுகின்றது. "வேறுபட்ட அரசாங்கம்" என்பது மீண்டும் இரவுக் காவலாளியின் பணிகளுக்குத் திரும்பிச் செல்வதைக் கருதாது என்றும் நடுநிலையாகச் செயற்படுவதைக் கருதாது என்றும் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது (Dahrendorf R 1987). 1991 ஆம் ஆண்டு உலக அபிவிருத்தி அறிக்கை "அபிவிருத்திக்கான சவால்களை" இன்றுவரை பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்ய முற்படுகின்றது. "இலகுவான முறையில்" சந்தைகள் தொழிற்படும் அம்சங்களில் அரசாங்கத்தின் பணி குறைவாக உள்ளது. அல்லது நன்முறையில் செயற்பட வைக்கலாம். அதேவேளையில் சந்தைகள் மட்டும் தனித்தியங்க முடியாத விடயங்களில் அரசாங்கம் அதிகளவில் ஈடுபட வேண்டிய தேவையும் உண்டு. இவற்றுக்கு மேலாகக் கல்வி, சுகாதாரம், போஷாக்கு, குடும்பத் திட்டமிடல் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் முதலீடு
31

Page 18
செய்வதையும் சமூக, பெளதீக, நிர்வாக, ஒழுங்குமுறைகள் மற்றும் தரமான சட்ட அமைப்பு என்பவற்றைக் கட்டியெழுப்புதல், பொதுச் செலவுகளுக்கு நிதிப்படுத்தும் வகையில் வளங்களை நகர்த்துதல் என்பன பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான அத்திவாரத்தை வழங்கும். இவையின்றி எவற்றையும் அடையமுடியாது (World Development Report, 1991).
அதே வேளையில் “மாறிவரும் பொருளாதாரங்களுடன் எந்தவொரு சீர்திருத்தமும் பொருந்துவதாக இல்லை”. இச் சந்தர்ப்பத்தில் கருத்தொருங்கிணைப்புப் பற்றிப் பேசுவதற்குக் காரணமும் உண்டு. கடந்த 10 ஆண்டுகால நோக்கில், முன்னைய காலங்களிலும் பார்க்க "விரும்பிய விளைவுகள்” என்ற அம்சம் அதன் ஆற்றலிலும் நிறுவன உருவாக்கத்திலும் முக்கியமானதொன்றாகக் கருதப்பட்டது. உலக அபிவிருத்தி அறிக்கையிலே எடுத்துக்கூறப்பட்ட தொழிற்பாடுகள் யாவும் அரசுக்கான உயர் ஒழுங்குகளாக அமைந்தன. இவை சிறப்பாக ஆற்றல்களைப் பேணுபவையாக உள்ளன. “வெபருடைய" அடிப்படைத் தொழிற்பாடு களான பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் போன்றவற்றை மட்டுமன்றிச், சூழலைப் பாதுகாத்தல் என்ற முக்கிய தொழிற்பாட்டையும் தவிர்த்துக் கொண்டன.
ஏறக்குறைய எல்லா நாடுகளும் நீண்டகாலமாகச் சுவீடனுடன் சீடா (SIDA) நிறுவனத்தினூடாக ஒத்துழைத்து வருகின்றன. இந்நாடுகள் யாவும் அரசின் பங்கினை வரையறை செய்து கொள்ளவும் முயற்சி செய்து வருகின்றன. அமைப்புரீதியான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டியிருப்பதால் பெரும்பாலான விடயங்களில் (அங்கோலா, எதியோப்பியா, மொசாம்பிக், நிக்கராகுவா, வியட்னாம் போன்று) சீர்திருத்தங்களுக்கு உள்ளாகவேண்டியுமேற்படுகிறது. இவ்வாறான கடுமையான பணியை மேற்கொள்ளும் அதே வேளையில், சனநாயக முறையிலமைந்த தேர்தல்களை அறிமுகம் செய்வதன் மூலம் தமது அரசியலமைப்பையும் மாற்றியமைத்து வருகின்றன. பல சந்தர்ப்பங் களிலே இந்நாடுகள் போருக்கும் சமாதானத்துக்குமிடையேயுள்ள ஒடுங்கிய பாதை வழியாகச் செல்லவேண்டியுள்ளது. சீடா போன்ற நன்கொடை வழங்கும் நிறுவனங்களின் நாடுகளுக்காக, நன்கொடை பெறும் நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளிலும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்கின்றன. ஆரம்பசுகாதார நடவடிக்கைகளுக்கு உதவி செய்தல் போன்ற மரபு முறையான செயற்திட்டங்கள் காலப் போக்கில் பயன்பாடுடையவையாகக் காணப்படவில்லை. தாதிமார்கள், ஏனைய பணியாளர்களுடைய வேதனத்தின் மெய்ப்பெறுமானம் உயர்வடைந்த போதிலும் முக்கியமான மருந்துவகைகள், சாதனங் களை வழங்குவதில் தரக்குறைவு உண்டு, பொருளாதார நிலைமை
32

முன்னேற்றமடைந்தாலொழிய வேறுவகையில் நாட்டில் முன்னேற்றம் நிகழாது என்பது தெளிவு. உதவிகள் ஒருவகையில் நாட்டின் வருமானத்தை ஒழுங்குபடுத்தினவாயினும் அவை அமைப்புரீதியான சீராக்கல் நிகழ்ச்சித் திட்டங்களுக்கு வழங்கும் நிதியுதவியின் அளவிலேயே தங்கியிருந்தன. இவ்வாறான நிதியுதவிகள் நிதி, வங்கியியல், முகாமைத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் நிறுவன கட்டமைப்பு வளர்ச்சிக்கே வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சென்மதிநிலுவை மற்றும் இறக்குமதியுதவிகள் என்ற வகையில் வழங்கப்பட்ட உதவிகள் புதியனவாக இருக்கவில்லை. ஆயினும் அவை வழங்கப்பட்ட முறையிற் பொருளாதாரச் சீர்குலைவை உண்டாக்கின. தனிப்பட்ட முகவர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட வேளையில், அரசாங்கம் பேரினப் பொருளியல் பற்றிய விவகாரங்களை வெளிப்படுத்தாமலும் இருந்தது. உதவி சம்பந்தமான தொடர்புகள் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் நடவடிக்கையை இலகுபடுத்தியது. கைத்தொழில்துறையில் அரசுகளால் பெறப்பட்ட உதவிகள் தனியார் துறைக்குப் பெரிதும் பொருந்துவதாக இருக்கும். இவ்வுதவிகள் பயன்பாடுடையவையாக இருக்கத்தக்க வகையில் தகுந்த முறையில் வழங்கப்படுகின்றன. மீளமைப்புக்கும், சீர்திருத்தங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்குதல் என்பதிலும் பார்க்கச் செயற்திட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளுடன் இணைந்தவையாகக் காணப்படுகின்றன.
கடந்த சில வருடங்களாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சில தனிப்பட்ட கொள்கைகளிலும் உதவிகளிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. எனினும் தேவைகளும் பெருமளவில் நிறைவேற்றப்படவேண்டியிருந்தன. அதற்கேற்ப அபிவிருத்திஉதவிகளும் வழங்கப்படலாயின. இவ்வுதவிகள் சிறு சிறு கூறுகளாக வழங்கப்பட்டன. உதவி பெறும் நாடுகளின் நிர்வாகம் நன்கொடை வழங்கும் ஒழுங்குமுறைகளை எளிதாகக் கையாளமுடியாத நிலைக்குத் தள்ளுகின்றன. இவை சில சமயங்களில் "உதவிக்கான எதிர் வாதங்களையும்" ஏற்படுத்துகின்றன.
சீடா நிறுவனத்துள் குறைந்த நன்கொடை அடிப்படையில் உதவியை வழங்கும் பொருட்டுப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அவை முறைப்படியும் அமைக்கப்பட்டன. சீர்திருத்தப் பணிகளுடன் கூடியனவாகவும் விளங்கின. வகை சொல்லக் கூடிய அளவுக்கு சந்தை உறவுகளும் காணப்பட்டன. அரசு, சந்தை ஆகியவற்றின் பங்கினை இவை ஆழமாகப் புரிந்து கொள்ளச் செய்வதுடன், எவ்வாறு இவையிரண்டையும் வினைத்திறன் மிக்க ஆட்சிமுறை மேம்படுத்தலாம் என்பது உதவி - தொடர்புகளை வரையறை செய்ய முயற்சிக்கும்போது முக்கியத்துவம் பெறுகிறது.
33

Page 19
. Dahrendorf, Ralf (1987); "Changing Perceptions of the Role of Government" in Interdependence and Co-operation in Tomorow's World. A symposium making the twenty -fifth anniversary of OECD, Paris; OECD.
. Fisher, Stanley and Alan Gelb (1991); "The Process of Socialist Economic transformation", Journal of Economic Perspectives vol 5, No, 4, pp.91-105.
. Hyden, Goran and Michel Bratton (1992); governance and Politics
in Africa, boulder, Co, Lynne Rienner Publishers.
Migdal, Joel (1988); Strong Societies and Weak States. State Society Relations and state Capabilies in the third world. Princeton, NJ, Princeton University Press.
. Perkins, Dwight (1989) ; "Economic Systems Reforms in Developing Countries “. Development Discussion paper No 307, Cambridge, Havard institute for International Development.
. Streeten, Paul (1992); "Market and States; Against Minimalism'.
Draft paper.
... Wade, Robert (1990); Governing the market, EconomicTheory and the Role ofGovernment in East Asian Industrialisation. Princeton, NJ, Princeton University Press.
. World Bank (1991); Meeting the challenges of Communism. World
Development Report 1991, Washington D.C., World Bank.
米冰冰米米
34

s
கிழக்காசியாவிலுள்ள சந்தைகளை ஆட்சி புரிதல்
(1) அறிமுகம்
இக்கட்டுரை தைவான் கொரியா ஆகிய நாடுகளில் உள்ள அரசு - சந்தைகளிடையே நிலவும் ஊடாட்டங்களை மையமாகக் கொண்டது. (ஜப்பான் மற்றும் ஹொங்கொங் போன்றவற்றையும் குறிப்பிடுகிறது.) குறிப்பாக இந்நாடுகள் அரசு- சந்தை என்பவற்றின் இருவழிநிலைக் கட்டுப்பாட்டிலிருந்து எவ்வாறு தப்பித்துக்கொண்டன என்பவற்றையும் தெளிவுபடுத்துகின்றது. இருவழிநிலை என்பது பெரிய அத்துடன் சிறந்த சந்தைகள் எப்பொழுதும் பெரியதும் சிறந்ததுமான நாடுகளை எதிர்பார்த்திருக்கின்றன. ஆனால் பெரிய நாடுகள் எப்பொழுதும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன, அகற்றுகின்றன அல்லது சந்தைகளை உருச்சிதைக்கின்றன என்ற விடயத்துக்கு வருமுன்னர் இக்கட்டுரை கிழக்காசியாவின் பொருளாதாரச் செயலாற்றங்களை விளக்குகின்றது. பின்னர் பொருளாதார அபிவிருத்தியில் அரசாங்கத்தின் பங்கு என்னவென்பதையும் விபரிக்கிறது. இறுதியாக, சில வினாக்களுக்கு விடைதகும்வகையில் பொருளாதாரம் மற்றும் அரசியற் கொள்கைகள் பற்றிய சில பொது முடிவுகளையும் எடுத்துக்கூறுகிறது.
(II) கிழக்காசியப் பொருளாதார வெற்றியின் குறிகாட்டிகள்
முதலாவதாக, தாய்வான்கொரியா ஆகிய இருநாடுகளின் பொருளாதாரச் செயலாற்றங்களைப் பரீட்சயமற்ற இருகாரணிகளினடிப்படையில் நோக்குவோம். முதலாவது ஒருநாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியின் தலா டொலர் பெறுமானத்தினை மைய நாடுகளின் குறிப்பாக வடமேற்கு ஐரோப்பா, வடஅமெரிக்கா ஆகியவற்றின் நீண்டகாலச் சராசரியுடன் ஒப்பிடுதல். இத்தகைய அளவீடு பல பிரச்சினைகளைக் கொண்டதாயினும் (இது அதிகாரச் சமநிலையை நிலைநிறுத்துவதில் சீராக்கம் செய்யப்படவேண்டும் அல்லது நாணயமாற்று வீதத்திலுள்ள தளம்பல்களையும் வர்த்தகமாற்று வீதத்தையும் அறியவேண்டும்). தற்பொழுதுள்ள நோக்கங்களுக்கு அவை பயன்பாடுடையவை.
அட்டவணை 1 உலக நாடுகள், பிரதேசங்களுக்ான பொருளாதாரச் செயலாற்றங்களின் புள்ளி விபரங்களை எடுத்துக்காட்டுகிறது.
35

Page 20
அட்டவணை 1: ஒப்பீட்டுரீதியான பொருளாதாரச் செயலாற்றங்கள்
1938, 1960 1980 1988
மையநாடுகள் (வடமேற்கு ஐரோப்பா, வடஅமெரிக்கா,அவுஸ்திரேலியா,
நியூசிலாந்து) 100 100 100 100
கிழக்கு ஆசியா யப்பான் 21 23 76 .118 தென் கொரியா 8 13 20
தென் ஐரோப்பா: இத்தாலி 32 37 61 75
ஸ்பெயின் 42 19 48 43.
லத்தீன் அமெரிக்கா 20 17 20 1.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா 12 11 7
தென் தென்ஆபிரிக்கா: மேற்கும் சிழக்கும் தெற்கும் மத்தியும் 25 11 re- 6
தென்ஆசியா 8 4. 2 2
தென்கிழக்கு ஆசியா 7 6 4
பூகோஸ்லாவியா 41 28 23 14
Measure; GNP per capita weighted by population, expressed as ratio of
"Core' s"
Source: G. Arrighi, 1990, "World income inequalities and the future of Socialism", Mimeo, Brandel center, Binghampton, NY; state University of Newyork.
கொரியாவின் நிலைமைகள் பற்றி மூன்று விடயங்களைக் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக, 1960 இல் நிலவியிருந்த உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் கொரியா மிகக் கீழ்நிலையில் இருந்தது. இலத்தீன் அமெரிக்காவிலும் பார்க்க மிகவும் தாழ்நிலைமையிலும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா என்பவற்றிலும் குறைந்தநிலையிலும் காணப்பட்டது. தெற்கு மற்றும் மத்திய
36

ஆபிரிக்காவிலும்பார்க்கக் கீழ்நிலையில் இருந்தது. தென்கிழக்கு ஆசியநாடுகளை ஏறக்குறைய ஒத்ததாக ஆனால் மேற்கு, கிழக்கு ஆபிரிக்காவிலும் பார்க்க உயர்வாகவும் விளங்கியது. இரண்டாவதாக கொரியா மிகவிரைவாக வளர்ச்சியடைந்தது. 1988 அளவில் அதனுடைய விகிதாசாரம், 30 ஆண்டுகளுக்கு முன்னர் அது குறைந்து காணப்பட்ட நாடுகளைவிட உயர்ந்து விளங்கியது. மூன்றாவதாக கொரியா பெற்ற நன்மைகள் ஏற்ற இறக்கமுடையவை. 1980 களில் 13 வீதமாக இருந்த நிலை 1988 இல் 20 சதவீதமாக மாற்றம்பெற்றது. இத்தசாப்தத்திலே, உலகின் வறியநாடுகள் பெரும்பாலானவற்றின் பொருளாதாரச் செயலாற்றங்கள் சார்பளவில் படுமோசமானநிலைக்குத் தள்ளப்பட்டன.
உதாரணமாக, பிறேசிலில் 1960இல் 12 சதவீதத்திலிருந்து (தலா டொலர் மொத்தத் தேசிய உற்பத்தியின் பெறுமதி வடமேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகியவற்றின் சராசரியின் 12 சதவீதம்) 1980 இல் 18 சதவீதமாக உயர்வடைந்து, மீண்டும் 1988 இல் 12 சத வீதமாக மாறியது. கொரியா மாத்திரம் போதியளவு அபிவிருத்தியடையும் நாடாக மாறியதுடன் மைய நாடுகளின் தரத்துக்கு 1980 களில் தனது நிலையை மேம்படுத்தியது.
இரண்டாவது குறிகாட்டி பொருளாதார இன்னல் (economic hardship) பற்றிய அளவீடாகும். (தேர்ச்சிபெறாத ஓர் ஆண்தொழிலாளிதனது அடிப்படை உணவில் 100 கிலோ கிராமைப் பெறுவதற்குச் சமமான சம்பளம்பெறும் மணித்தியாலங்களின் எண்ணிக்கையாகும். இந்த அளவீடும் பல பிரச்சினைகளையுடையது. இது உணவுச் செலவினை உள்ளடக்க வேண்டும் என்பது வெளிப்படையானது. ஆனால் வாழிடச் செலவு மற்றும் வேலைக்கான சாத்தியக்கூறுகள் என்பவற்றையும் உள்ளடக்க வேண்டும். ஆயினும் அளவீடானது காலத்தினுTடாகவும் நாடுகளுக்கிடையே மேலோட்டமாகவும் அத்துடன் ஸ்திரமாகவும் ஒப்பீடுகளைச் செய்ய இடமளிக்கின்றது. அதன் பிரதிபலன்கள் சில பின்வருமாறு.
பிரான்சிலும் ஜேர்மனியிலும் 17 ஆம் நூற்றாண்டிலிருந்து 19 ஆம் நூற்றாண்டின் இறுதிவரையிலும் கோதுமையின் விலையையும் ஒரு கட்டிடத் தொழிலாளி அல்லது செங்கல் உற்பத்தியாளரின் சம்பளத்தையும் நிய்மமாகப் பயன்படுத்திப்பார்க்கும்போது இது 100 மணித்தியாலங்களுக்கு மேலாக இருந்தது. 1700க்கும் 1860க்கும் இடையில் நிகழ்ந்த அவதானங்களின்மூன்றில்ஒரு பங்கின்படி 200 மணித்தியாலங்கள் அல்லது அதற்கு மேலாக இருந்தன.
Sitsits 1920 - 30 40 - 60 மணித்தியாலம் இந்தியா (டெல்கி) 1991 140 - 170 மணித்தியாலம்
37

Page 21
ஆபிரிக்கா (கேப்ரவுண்) 1991 50 மணித்தியாலம் தாய்வான் (தைப்பி) 1950 களில் 150 - 200 மணித்தியாலம் (1700 - 1850 இடைப்பட்ட காலத்தில் அதன் சராசரி பிரான்சிலும் பார்க்கச் சற்றுக்குறைவாகக் காணப்பட்டது).
தாய்வான் (தைப்பி) 1980 களின் தொடக்கத்தில் கால் நூற்றாண்டின் (25 வருடங்கள்) பின்னர் 40 - 60 மணித்தியாலம்
அமெரிக்க அரசுகள் (வடகிழக்கு நகரம்) 1980 களின் நடுப்பகுதியில் உபயோகித்த மிகக்குறைந்த சட்டரீதியான கூலி; 15 மணித்தியாலம்
இத்தரவுகள் முதல்தொகுதியைப் போல, தலா மொத்தத் தேசிய உற்பத்தியில் உண்டான மாறுதல்களின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுவதாக அமையும். இவை கிழக்காசியாவில் நிகழ்ந்துள்ளதுடன் உலகின் வேறெந்த இடத்திலும் இல்லாதளவுக்குப் பெரிதாகவும் இருந்தது. வாழ்க்கைத்தரத்திலும் பாரிய வேறுபாடு காணப்பட்டது.
(III) 6aîSau T5 Lib (Debate)
1. புதிய தாராண்மைவாத நோக்கு
கிழக்காசியப் பொருளாதாரத்தின் வெற்றிக்கான காரணிகள் எவை? பொருளியல் வல்லுனர் க்கும் பிரதான சர்வதேச நிதி நிறுவனங்களுக்குமிடையே நிலவிய கருத்து என்னவெனில், கிழக்காசிய நாடுகளின் அரசாங்கங்கள் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகள், முதலாளித்துவச் சந்தைப்பொருளாதாரம் உள்ளடங்கிய இயல்பான வளர்ச்சிப் போக்கினைத் தடைசெய்யாமல் இருந்தமையே அதன் வெற்றிக்குக் காரணம் என்பதாகும். அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அரசாங்கங்களும் இத்தகைய கட்டுப்பாடுகளைப் பயில முயற்சிக்கவில்லை. அந்நாடுகளின் மக்களும் அதன் விளைவைப் பெற்றுக் கொண்டனர்.
இந்தப் புதிய தாராண்மைவாதம் கிழக்காசியாவின் அண்மிய சுதந்திர வர்த்தக ஆட்சி, நிலையான நாணய மாற்றுவீதம், பழமைபேண் அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டமிடல், உயர்வான மெய்வட்டி வீதங்கள், மற்றும் சுதந்திரமான தொழிற்சந்தை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. ஹொங்கொங் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
38

அட்டவணை 2: கிழக்கு ஆசியா
சனத்தொகை | சராசரி 56urGDP || 5 TT9 fl GDP 1989(மில்) வருடாந்த 1989 US$ வளர்ச்சி
சனத்தொகை (1985-89)
வளர்ச்சி
யப்பான் 124 0.4 23,033 4.5 தெ.கொரியா 43 1.0 4,968 10.4 தாய்வான் 20 1.2 6,889 10. 0 ஹொங்கொங் 6 0.8 10,916 8.9 சீனா 1001 1.4 371. 11.6
Source: Asia Year Book 1991.p.6-7.
ஆனால், கடந்த தசாப்தத்தில் இக்கருத்துப்பற்றிய பிரச்சினைகளுக்குப் பல சான்றுகளும் தெரிவிக்கப்பட்டன. இச்சான்றுகள் பின்வருவனவற்றை எடுத்துக் கூறுகின்றன. தாய்வானும் கொரியாவும் 1. வழமைக்கு மாறாகத் தாராள வர்த்தக அரசுகளை வைத்திருக்கவில்லை. 2 சில விடயங்களில் அவற்றின் பொதுத்துறைகள் பெரியனவாக இருந்தன. 3. கொரியாவின் உயர்வான மெய் வட்டிவீதம் ஒரு சில வருடங்கள் மட்டுமே வங்கிமுறைமையினூடாக விதிக்கப்பட்டது. இது 1967 தொடக்கம் 1971 வரை நிகழ்ந்தது. அதன்பின்னர் அவை மிகக்குறைவாக அல்லது எதிர்மறை நிலையில் காணப்பட்டன. 4. இருநாடுகளும் நன்கு கட்டப்படுத்தப்பட்ட நிதிநடைமுறைகளை இறுக்கமாகக் கடைப்பிடித்தன. (1980களின் ஆரம்ப காலம்வரை கொரிய வங்கிகள் யாவும் அரசுடைமையாக இருந்தன)
தாய்வானில் தற்பொழுது பெயரளவில் தனியார் மயப்படுத்தப்படும் செயல்முறை நிகழ்ந்துவருகிறது. அத்துடன் 5. இரண்டு அரசாங்கங்களும் குறிப்பிட்ட சில கைத்தொழில்களை மேம்படுத்தும் கொள்கையைத் தொடர்ந்தும் கடைப்பிடித்ததுடன், நோக்கத்துடனான மற்றும் மானிய அடிப்படைக் கடன்களை வழங்கின. நிதிச்சலுகைகள் கொடுக்கப்பட்டன. இலாப நடவடிக்கைகளை மாற்றும் பாதுகாப்புகளும் மேற்கொள்ளப் பட்டன. இவ்வகையான சான்றுகளுடன் எதிர்நோக்கிய போது, புதிய தாராண்மைவாதப் பொருளியலாளர்கள் தமது அடிப்படை மூல விளக்கங்களைப் பின்வரும்மூன்று வழிகளில் ஒன்றாக மாற்றியமைத்தனர். உதாரணமாகக் கொரியா, 1960 தொடக்கம் 1985 வரை ஒப்பீட்டளவில் உயர்மட்டப் பாதுகாப்பைப் பெற்றிருந்தது. ஆனால் பின்னர் எவ்வித முயற்சிகளுமின்றிக் காணப்பட்டது. சுதந்திரவர்த்தகத்துக்குப் புதிய தாராண்மை விதியமைப்பு எவ்விதம் தடையாக இருக்கும் என்பதற்கு இது ஒரு புதிய சான்றாகும்.
39

Page 22
கொரியாவும் தாய்வானும் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிக்க வில்லையென்பதை ஏனைய புதிய தாராண்மை வாதிகள் ஏற்றுக்கொண்டனர். அதாவது அரசு பொருளாதாரத்தில் பிரதான பங்கினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும். பின்னர், பிரதான பங்கில் உள்ளடக்கத்தைக் குறிப்பிடும்பொழுது அவை கல்விபோன்ற பொதுப் பொருட்களை வழங்குதல்பற்றியே வலியுறுத்துகின்றன. அத்துடன் அரச கொள்கைகள் பற்றிக் கூறும் பொழுது அவை விலைகளைத் திரிவுபடுத்துவனவாகவும் அல்லது சந்தையின் மாற்றுக்களைத் தடுப்பனவாகவும் இருந்தன. அரசாங்கங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றிய விளக்கங்களையும் புதிய தாராண்மைவாத விதியமைப்புடன் இது பேணுகிறது.
மூன்றாவது குழுவொன்று இத்தகைய பல்வேறு திரிபுகளை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இத்திரிபுகள் ஒன்றையொன்று இல்லாமல் செய்வதில் போதியளவு சமநிலைப்பட்டனவாகவும் உள்ளன எனவும் பின்னர் கூறுகிறது. இந்தத் திரிபுகள் ஒரு சுதந்திர சந்தையைப் "பாவனைசெய்கிறது". திரிபடையும் கொள்கை ஒழுங்குகள் ஒரேதரத்தில் மீளப்பெறப்பட்டால் வள ஒதுக்கீட்டில் குறுகிய காலப் பாதிப்புகளை விட மேலதிகமாக எவையும் ஏற்படா என இக்குழு மேலும் விளக்குகிறது. பிரடெரிக் பேர்ஜருடைய (Frederick Berger) வார்த்தையில் கூறினால், கொரியாவை உதாரணமாகக் கொள்வதில் உள்ள சிக்கலானது அரசில் தலையிடுவோரின் மனப்பாங்கானது மிதமான ஊக்குவிப்புகளைப் பிரயோகிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது; இவை உற்பத்திகளின் சார்பளவான விலைகளுடன் மிகநெருங்கியவையாக உள்ளன. சுதந்திர வர்த்தகச் சூழலில் இவை இடம்பெறும் எனலாம்.
ஜெகதீஸ் பகவதி (Jegadish Bhagwai) என்பவரும் பெருமளவுக்கு இப்போக்கினையே ஏற்றுக்கொள்கிறார். "தூரகிழக்குநாடுகளின் ஃபாருளாதாரம் (ஹொங்கொங் தவிர) ஏற்றுமதி ஊக்குவிப்பு (export promotion) உபாயத்துடன் நெருங்கியவையாய் இருந்தன. (ஏற்றுமதி ஊக்குவிப்பு உபாயமானது ஏற்றுமதிகளுக்குச் சமமான இறக்குமதிகளின் சராசரியான பயனுறுதிவாய்ந்த நாணயவீதத்தினைப் பெறுவதை உள்ளடக்கியதாக இருக்கும்). பொருளாதார அமைப்பு முறையில் அரசாங்கம் முக்கிய செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய தலையீடுஒருபெறுமதிவாய்ந்த அம்சமாக இருக்கலாம். அவ்வாறிருப்பினும் அவை ஏற்றுமதி ஊக்குவிப்புப் பணிகளை வெற்றியடையச் செய்துள்ளன. "குறிப்பிடத்தக்க அரசாங்க நடவடிக்கை"யான பாரிய பெறுமதி (Great Value) என்பதன் கூறுகள் யாவை? பாரிய பெறுமதியில் உண்டாகும் தலையீடுகள் வளி*யறுக்கப்பட்டவை. அவை உற்பத்தியாளரின் மனங்களில் தேவையான நம்பிக்கையை உருவாக்குகிறது. அதனால் அரசாங்கங்களின் ஈடுபாடுஏற்றுமதி ஊக்குவிப்பில் மிகுந்து காணப்பட்டது.
40

(ஆயினும் இவ் வகையான தலையீடுகள் எவையெனக் குறிப்பிடப்படவில்லை) ஏற்றுமதி ஊக்குவிப்பானது தெரிவுசெய்யப்பட்ட சில துணிகளின் இறக்குமதி நிலைமைகளை உள்ளடக்கியனவாக முன்னர் இருக்கவில்லை. ஆயினும் அவர் இத்தகைய இணைப்பில் கவனஞ் செலுத்தவுமில்லை. கிழக்காசிய நாடுகளைப் பொறுத்தளவில் குறிப்பிடத்தக்களவு அரசாங்கத் தலையீடு உள்ளது என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் இத்தலையீடுகள் அவர்கள் எதிர்பார்த்த அளவிலும் பார்க்கக் கூடுதலாக உதவின. புதுப் பண்டைய வளர்ச்சி (New classicalGrowth) நிலைமைகளை மீளவலியுறுத்தல் மற்றும் உருவாக்குதல் மூலம் அவ்வாறுசெய்தனர். இந்நியதிகளை நிறைவுசெய்யாத தலையீடுகள் முதற்குழுவினரைப்போல எற்றுக்கொள்ளப்பட்டது. இவ் உபாயத்துக்கு அல்லது தேற்றங்களுக்கு எவ்வித விளைவுகளும் இல்லை என்ற காரணத்தால் அவை பின்னர் பொருட்படுத்தப்படவுமில்லை.
இத்தகைய வழிமுறைகளில் ஒன்று அல்லது பலவற்றில் புதியதாரண்மைவாதப் பொருளியலாளர் (1) கொரியா, தாய்வான், யப்பான் ஆகிய நாடுகள் தலையிடா வர்த்தகத்தில் இணைந்து கொள்ளவில்லையென அறிவார்கள். (2) எவ்வாறாயினும் அரசதலையீடு புதியதாராண்மைவாதக் கோட்பாடுகளுடன் பெருமளவுக்கு இணைந்திருந்தன. (இது சுதந்திர சந்தையைப் பாவனை செய்கிறது). தலையீடுகள் குறிப்பிட்ட கோட்பாடுகளுடன் ஒன்றிணைந்து காணப்படுபவை; தவிர்க்கப்படக்கூடியளவுக்கு முக்கியம் வாய்ந்தவையல்ல எனக் கூறிவிடமுடியாது. இறுதியாகக் கூறப்பட்ட இக்கருத்துக்குச் சான்றுகளும் இல்லை. இக்கருத்து ஓர் எடுகோளை அடிப்படையாகக் கொண்டு தொடர்கிறது. தேற்றம் சரியாக இருக்கவேண்டும். ஆகவே தேற்றத்துடன் யாதாயினும் விடயம் சேர்க்கப்பட்டிருப்பின், அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதற்கும் ஆதாரங்கள் இருக்கவேண்டும். இவ்வகையில் தரவுகளுடன் மேற்கோள்களும் பேணப்பட்டன. அவை விடயங்களை அணுகும் முறையில் குழப்பங்களை ஏற்படுத்தும். (இது ஒரு வகைப் பாதுகாப்பு என்பது பற்றிப் புதியதாராண்மை வாதிகள் அதிகளவுக்குக் கவலைப்படவில்லை) இத்தரவுகளைப் பற்றிய அக்கறையற்ற போக்கு பகவதி, ஆன்குரூகர், ஜேம்ஸ்றிடல் போன்றோரும் ஏனையோருமாகிய தலைசிறந்த வர்த்தகக்கொள்கைப்பொருளியலாளர்கள் கிழக்காசிய வர்த்தக ஆட்சியுடன் மிகுந்த ஈடுபாடுகொள்வதைத் தவிர்த்துக் கொண்டனர். அதனைப்பற்றி இங்கு கூறுவோம்.
2. அரசு - சந்தை ஊடாட்டங்கள்
புதிய தாராண்மைவாதம் என்ற விளக்கத்தின் பின்னணியில் - எளிமையான மற்றும் திருத்தியமைக்கப்பட்ட கூற்றுக்கள் இரண்டும் - ஒரு கொள்கையும்
41

Page 23
இடம்பெறுகின்றன. இவை அரசுக்கும் சந்தைக்குமிடையே நிலவும் ஊடாட்டமானது ஒரு நச்சுவளையம் (Viciouscircle) போன்றுஇருப்பதாகக் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.
1. மேலதிகமானதும் கடுமையானதுமான அரச நடவடிக்கைகள் சந்தைகளைச் சிதைவுபடுத்துகின்றன. (பொதுப் பொருட்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்தல் தவிர, பகவதியின் கருத்தின்படி, உற்பத்தியாளரின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் கொள்கைகளின் மூலம் அரசாங்கம் ஏற்றுமதி ஊக்குவிப்பு உபாயத்தினை உறுதியாகக் க்டைப்பிடிக்கும் என்பதாகும்)
2. இவ்வாறான சீர் குலைந்த சந்தைகளின் மூலம் நன்மையடைவோர் அந்நன் மைகளைப் பயன்படுத்தி அரசினை மேலும் ஊழல் நிறைந்ததாக ஆக்குகின்றனர்.
இதற்கான தீர்வு அரச ஒதுக்கீடுகளினூடாக வரும் மொத்தத் தேசிய உற்பத்தியின் சிறிதளவு பங்கு ஆரோக்கியமான சந்தைகள் தோன்ற இடமளிக்கும். கிழக்காசிய மற்றும் லத்தீன் அமெரிக்க விடயங்கள், விவாதத்தின் இருபக்க உண்மைகளையும் வெளிபடுத்த எடுத்தாளப்படுகின்றன.
பிரதான விடயத்துக்கு அப்பால் பகுப்பாய்வாளர்கள் பலர் , அரசின்பங்கினையே வலியுறுத்துகின்றனர். இவ்வாறான அரசு சார்பு அறிஞர்கள் (Statists) அரச - சந்தை ஊடாட்டச் செயற்பாட்டை நல்லியக்க முடைய வளையம் (virtuous circle) என விளக்கமளிக்கின்றனர்.
1. மேலதிக மற்றும் சக்திவாய்ந்த அரச நடவடிக்கைகள் வினைத்திறன்மிக்கதும் நிலைகுலையாது பேணக்கூடியதுமான சந்தைகளுக்கு அதிகளவில் உதவுகின்றன. அடிப்படை வசதிகளை வழங்குதல், கல்வி, சொத்துரிமையை வலுப்படுத்துதல், பெரும் அளவுத்திட்டச் சிக்கனங்களுக்கும் தனிப்பட்ட ஏகபோகவுரிமை விதிகளுக்குள் அடங்கும் சிக்கனமின்மைகளுக்கும் உட்படும் பண்டங்கள், பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமெனக் கருதப்படும் அதிக நுழைவுத்தடை கொண்ட கைத் தொழில்களில் முதலீடுசெய்தல் ' என்பவற்றின் மூலம் சந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.
2. இத்தகைய சந்தைகளுக்குக் கிடைக்கும் ஊக்குவிப்புகள், போட்டிகள், பின்னுTட்டல்கள் என்பன அரசுக்காகச் செயற்படுபவர்களை வினைத்திறன் மிக்கவர்களாகவும் பயன்பாடுடையவர்களாகவும் பேண உதவுகின்றன.
42

கிழக்காசியாவுக்கும் லத்தீன் அமெரிக்காவுக்கும் இடையேயுள்ள வேறுபாடு அரசின் பருமனில் தங்கியிருக்கவில்லை. ஆனால், கிழக்காசியா அரச அதிகாரத்தை மிகுந்தகட்டுப்பாட்டுடனும் தேசியப் பொருளாதார அக்கறையுடனும் பயன்படுத்துகிறது என்பதிலேயே தங்கியிருக் கிறது. பொதுவாக நோக்குமிடத்து இரு ஆதாரங்களிலும் தெளிவான உண்மையுண்டு. பாரிய மற்றும் சிறந்த சந்தைகளுக்குப் பெரிய, சிறந்த நாடுகள் தேவைப்படுகின்றன. இத்தருணத்திற் பெரிய அரசுகள் சந்தைகளைக் கட்டுப்படுத்த அல்லது அவற்றை அகற்றவே விரும்புகின்றன. மைக்கேல் லிப்ரன் (Michael Lipton) என்பாருடைய ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளின் படி இதுவே அரசு - சந்தைக் கட்டுப்பாடாகவுள்ளது. அரசு - சந்தைக் கட்டுப்பாடுகளானது எமது கவனத்தைக் கிழக்காசியா பற்றிய இருபெரும் கேள்விகளின்பால் ஈர்க்கிறது. இவை அரசு அல்லது சந்தைபற்றிய பழைய சிந்தனை என்ற வலையிலிருந்து விடுபட எமக்கு உதவலாம்.
1. சந்தைகளை விரிவுபடுத்த அல்லது அவற்றின் தொழிற்பாடுகளை மேம்படுத்தக் கிழக்காசிய அரசுகள் என்ன செய்தன? சிறப்பாக வளர்ச்சியைத் தூண்டும் அல்லது புதிய வளங்களைப் பயன்படுத்தும் சந்தைகளின் ஆற்றல் என்றவகையில் இது அமைகிறது. (கிடைக்கின்ற வளங்களின் பயன்பாட்டில் வினைத்திறனைத் தூண்டும் அவர்களுடைய ஆற்றலில் வேறுபாடுகள் உள்ளதுபோல) இத்துடன் இன்னுமொரு உப வினாவாக, அரசாங்கம் செய்யவேண்டியது என்ன, செய்யக்கூடாதது என்ன என்னும் விடயத்திற் புதிய தாராண்மை வாதக் கருத்துடன் இவை எந்தளவுக்கு இணைந்துள்ளன எனக் கேட்கலாம்.
2. இக்கட்டுப்பாடுகளின் இரண்டாவது அம்சமாகக் கிழக்காசிய அரசுகளைஅவற்றினது வளர்ச்சியின் ஆகக்குறைந்த நிலைக்குத் தள்ளிவிடவோ அல்லது நிலைகுலையச் செய்யவோ விடாமல் பாதுகாத்தவை எவை? பாரியளவில் "அரசாங்கத் தோல்விகள் ஏன் ஏற்படவில்லை" என்பனவும் அமைகின்றன.
(IV) வர்ச்சியை உருவாக்கும் சந்தைகளின் ஆற்றலை
மேம்படுத்தும் அரச நடவடிக்கைகள்
தாய்வான் கொரியா போன்ற நாடுகளினது கைத்தொழிற் கொள்கையின் முக்கிய அம்சம் கட்டுப்படுத்தப்பட்ட சந்தையாகும். இவ்வமைப்பில் பெரும்பாலும் (1) தனிப்பட்ட முயற்சியாளர் போட்டியிடுகின்றனர்; சில சமயங்களில் ஒத்துழைப்பும் நல்குகின்றனர். (2) அரச மேற்பார்வையின் கீழ் (3) கல்விக்கெனப் பெரியளவில் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்கள் உண்டாகின்றன. இவ்வமைப்பில் பெருமளவுக்குச் சமூக,
43

Page 24
பொருளாதாரத் துறைகளில் அரசாங்கக் கட்டுப்பாடு பற்றிய கொள்கை ஒழுங்குகளும் போட்டிகளும் ஏற்படலாயின. இப் போட்டி அநேகமாக ஏற்றுமதிச் சந்தைகளில் காணப்பட்டது. உள்நாட்டுச் சந்தைகளில் எதிர்நோக்கிய போட்டிகளானது கட்டுப்பாடுகள் மூலம் பாதுகாக்கப்பட்டன. சமூக, பொருளாதாரத் துறைகளில் அரசாங்கக் கட்டுப்பாட்டுக் கொள்கை ஒழுங்குகளுக்குப் பொருளாதாரக் கொள்கைகளாலோ, அல்லது வாக்குத் தேடும் அரசியல்வாதிகளின் விருப்பின் பேரிலோ வழிகாட்டப்படவில்லை. நாட்டின் வளங்களை நிருவகிக்கத்தெரிந்த தொழில்நுட்பவியலாளர்கள் குறிப்பாக (1) கைத்தொழில்கள் இராணுவரீதியான சுயதேவையைப் பூர்த்திசெய்ய வேண்டிய அவசியமுண்டு. (2) நிறுவன ஒழுங்கமைப்பு யப்பானிய மாதிரியை ஏற்றல் (3) ஏற்றுமதிச் சந்தைகளால் உண்டாகும் பாதிப்புகள் (4) முதலீடு மற்றும் இடைநிலைப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தனிப்பட்டதேவைகள் என்பவற்றின்மீது தமது கவனத்தைச் செலுத்தினர். இத்தகைய முதலீடுகள் மூலம் பெறப்பட்ட நியதிகளின்படி, அதிகார வர்க்கத்தினரால் நன்கு செய்யமுடியாது எனப் புதுப்பழம் பொருளியலாளர் கூறுவதைச் செய்து காட்டினர். அவர்கள் சில கைத்தொழில்களைத் தெரிவுசெய்து முன்னேற்றினார்கள். அவற்றுக்கு வளங்களைப் பயன்படுத்தவும் ஊக்கமளித்தனர். அதற்கப்பால், தனிப்பட்ட கம்பனிகள் ஆபத்துகளை எதிர்நோக்கவும் தயாராக இருந்தன.
ஆளுகைக்கு உட்பட்ட சந்தைகளுடன் கொரியாவும் தாய்வானும் பின்வருவனவற்றைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. (1) அளவுத் திட்டச்சிக்கனம் - இது சர்வதேச சந்தையில் நிலவிய பரந்த பொருளாதார இடைவெளியுடன் கூடியதாகக் காணப்பட்டது (2) போட்டிகளின் மூலம் தூண்டப்பட்ட புத்தூக்கங்கள் (3) உள்நாட்டுச் சந்தையில், உள்நாட்டு உற்பத்தியாளரைச் சர்வதேசப் போட்டிகளிலிருந்து பாதுகாத்தல் (4) பொருளாதாரத்தில் எதிர்கால வளர்ச்சி குறித்து எதிர்நோக்கவேண்டிய ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ளல் அல்லது இலாபத்தில் அதிகரிப்பு என்பவற்றை அரசாங்கம் முக்கியமாகக் கருதியது. இருநாடுகளுக்கும், உலகளாவிய சர்வதேசமயப்படுதல் என்னும் நிலையிலிருந்து, தேசிய ஆள்புல எல்லைக்குள், வள ஒதுக்கீடுகளில் அரசியல்ரீதியாகத் தீர்மானிக்கப்பட்டசாதகமான ஊடுருவல்களை மேற்கொள்ளவும்முடிந்தது. உற்பத்தியமைப்பினை ஒன்றிணைத்தலும் மாற்றியமைத்தலும் முதலீட்டுக் கட்டுப்பாட்டாளர் அனுமதித்த அளவிலும் பார்க்க உலகளாவிய மட்டத்திற்கு இலாபத்தைக் கூட்டிக்கொள்ளல் மிக வேகமாக நிகழ்ந்தது.
இத்தகைய இணைப்பினை ஏனைய வளர்முக நாடுகள் எய்தவில்லை. உதாரணமாக சீனா, இந்தியா, கிழக்கு ஐரோப்பா ஆகியநாடுகள் போதியளவுக்குச் சமூக, பொருளாதாரத் துறைகளில் அரசாங்கக் கட்டுப்பாடுபற்றிய கொள்கை ஒழுங்குகளை எவ்விதமான
44

போட்டிகளுமின்றி, கிழக்கு ஐரோப்பாவின் தொடர்பின்றித் தமது தேர்ச்சி மட்டத்தை உயர்த்திக்கொள்வதில் குறைந்தளவிலேயே ஈடுபாடுகாட்டின. கிழக்காசியாவில் நிலவிய அரச செயற்பாடுகளில் காணப்பட்ட இரு பகுதிகளான கல்வியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொள்வோம். அரச ஏற்பாடுகளும் மற்றும் கல்வியை வழங்குதல் கூட அவற்றின் வெளிநிலை மற்றும் பொதுப்பொருட்பண்பு காரணமாகப் புதிய தாராண்மைவாதம் என்னும் பரிகாரத்துடன் ஒரு சீரானதன்மையினவாகக் கருதப்பட்டன. பாதுகாப்பு பொதுவாக ஒரு சீரான தன்மையினதாகக் கருதப்படவில்லை
கல்வி
கொரியா, தாய்வான் மற்றும் யப்பான் ஆகிய நாடுகளைப்பற்றிக் குறிப்பிடக்கூடிய முக்கிய விடயமொன்று உண்டு. தொழிற்படையில் உள்ள தேர்ச்சிபெற்றவர்களுக்கும் அடிப்படைத் தேர்ச்சிபெற்றவர்கள், தேர்ச்சிபெறாதவர்கள் என்போருக்கிடையே உள்ள விகிதாசாரத்தில் கடந்த 40 ஆண்டுகளாக அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இவை அவர்களது கல்விமட்டத்தை மட்டும் அடிப்படையாகக்கொண்டு அளவிடப்படவில்லை. (அட்டவணை - 3) கல்வியின் உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. உயர்விகிதாசாரம் மொத்தத்தில் பொறியியல் அல்லது விஞ்ஞானம் சார்ந்ததாக உள்ளது. 20 மில்லியன் மக்களுள் தாய்வானின் கனிஷ்டநிலைக் கல்லூரிகள் 1980 களில் 20,000 பொறியியல் டிப்ளோமா தகுதிபெற்றவர்களை உருவாக்கியது. பல்கலைக்கழகங்கள் 10,000 பொறியியற் பட்டதாரிகளை உருவாக்கின. (ஐ.அமெரிக்க தொகையுடன் ஒப்பிடுகையில் 70 சதவீதம் அதிகமானது) 1960 ஆம் ஆண்டு தொடக்கம் வெளியேறிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் நாலிலொரு பங்கினர் பொறியியலாளர்கள் (சட்டத்துறைப் பட்டதாரிகள் 1.2 சதவீதம்) 1980களிலே உயர்கல்விபெற்றோரில் விஞ்ஞானமும் பொறியியலும் கற்ற மாணவர் தொகை முன்றிலொருபங்காகவும் 1980களில் அரைப்பங்காகவும் இருந்தது.
கிழக்காசியாவின் வரலாற்றில் மக்களுடைய தேர்ச்சிமட்டத்தில் உண்டாகும் விரைவான அதிகரிப்பு அடிப்படைமுக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். உற்பத்திகளில் வடக்கு - தெற்கு வர்த்தகம் பற்றிய அண்மைக்கால ஆராய்ச்சிகளில் அதன்முக்கியத்துவம் தங்கியுள்ளது. "மனிதத்திறன்களின் வேறுபாடுகளிலேயே இந்த வர்த்தகம் முழுமையாகத் தங்கியுள்ளது என்ற முடிவையும் இது தருகிறது. மற்றும் மூலதனம் கிடைக்கக்கூடிய அளவின் வேறுபாடுகளில் அவை தங்கியிருக்கவில்லை. இவற்றின் மூலம் வடக்கு-தெற்கு வர்த்தக நிலைமைகளில் காணப்படும்.
45

Page 25
அட்டவணை 3: தொழிற்படையினரின் கல்விநிலை
மூன்றாம்நிலைக் கல்வித் தகமையுடையோர் எண்ணிக்கை 100
X தொழிற்படையில் உள்ளோரில் மூன்றாம் நிலைக்கல்வித் தகமையற்றோர்
ஆரம்பநிலை பிந்தியநிலை வளர்ச்சிவீதம்
(1960 களில்) (1980 அல்லது 81) வருடாந்தம்
தாய்வான் 5.1 13.0 6.9 கொரியா 4.5 8.5 4.6 ஹொங்கொங் 4.6 8.2 3.0 சிங்கப்பூர் 2.4 3.7 4.4 தாய்லாந்து 0.4 4.4 10.1 இந்தியா 1.0 5.0 8.4 எகிப்து 2.0 5.8 6.9 யப்பான் 7.1 21.5 5.7 ஐ. அமெரிக்கா 23.8 70,6 4.8
Source: wood, 1990
ஒப்பீட்டுரீதியான முன்னேற்றமானது தொழிற்படையின் தேர்ச்சி அல்லது திறன்களின் கூட்டில் தங்கியுள்ளது. அத்துடன் உயர்ந்த கூலியைப் பெறும் நோக்கிலும் அரசினுடைய முன்னேற்றம் நிகழ்கிறது. இவையாவும் தேர்ச்சி, அடிப்படைத்தேர்ச்சி, தேர்ச்சியின்மை ஆகியவற்றின் விகிதத்தில் தங்கியுள்ளன. இப் பின்னணியில் உற்பத்திவகைகள் அவ் உற்பத்திக்குத் தேவையான திறன்களின் இணைப்பைப் பொறுத்து வரிசைப்படுத்தப் படுகின்றன என்ற கருத்தும் உண்டு. மற்றும் அந்த உற்பத்திவகைகள் நாட்டுக்கும் எக்காலத்துக்கும் பொருந்துவனவாக இருத்தல் வேண்டும். (ஒப்பீட்டுரீதியான அனுகூலம் இந்த அடிப்படையில் அமைதல் வேண்டும்) தேர்ச்சி, அடிப்படைத் திறன்களில் தேர்ச்சி, தேர்ச்சியின்மை என்பவற்றுக்கான விகிதம் திறன்களின் அருமையையும் வெவ்வேறுமட்டத் திறன்களின் சார்பளவிலான செலவினங்களையும் தீர்மானிக்கிறது. முதலீட்டு வாய்ப்புகள் இத்திறன்களின் மட்டத்திலுள்ள பல்வேறு இணைப்புகளை வேண்டிநிற்கிறது. ஆகவேதான் தொழில்நுட்பக் கல்வி பெற்றோரின் தொகை உழைப்போர் மத்தியில் பெருகியிருந்தது. தாய்வானும் யப்பானும் தேர்ச்சிபெற்ற தொழிலாளரின் சார்பளவிலான செலவினைத் தாழ் நிலையில் கொண்டிருந்தது. இவை அதிக திறன் செறிவுடைய முதலீடுகளுக்கு இடமளித்தன. உயர் சம்பளத்துக்கான நடவடிக்கைகள் வளம்பெறலாயின.
46

கல்விபற்றிய அரசின் கொள்கை என்ன? தேர்ச்சி பெற்றவர்களின் வருகை குடிமக்களின் விருப்பப்படி அமைந்தது எனக் கூறமுடியாது. தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பல மனிதவலுத் திட்டங்களினூடாக அரசாங்கம் கல்விக்கான கேள்வியைத் தூண்டியது. தாய்வானில், பல்வேறுபாடங்களில் ஏற்பட்ட சேர்வுவீத விரிவாக்கம் அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைக்குச் சென்றோரிடையே நிலவிய சமநிலை, முழுமையான வரிவாக்க வீதம், கல்விக்கான மொத்தத் தேசிய உற்பத்தியின் விகிதம் என்பன இத்தகைய இலக்குகளுடன் நெருங்கிய முறையில் இணைந்து சென்றன. மேலும் இவ் இலக்குகளில் பல குடி மக்களின் கேள்விக்கு எதிரிடையாகவும் இருந்தன. உதாரணமாக, பின் கனிஷ்ட உயர், இடைநிலைப்பாடசாலைகளுக்கான சேர்வுவீதம், தொழில்நிறுவனங்களில் தொழிற்கல்விக்கும், செயல் சாரா கல்விக்குமான வீதாசாரத்தை 1963 இல் 40:60ஆக இருந்து 1986 இல் 69:31 என உயர்த்தியது. செயல்சாரா நிறுவனங்களின் (academic institutions) வளர்ச்சி வேண்டுமென்று கட்டுப்படுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்களில் கல்வியில் தனியார் விளைவுவீதம் தொழில்சார் நிறுவனங்களின் (vocational institutions) கல்வியிலும் பார்க்க உயர்வானதாகக் காண்ப்பட்டது. செயல்சாராக் கல்வி நிறுவனங்களின் விரிவைக் கட்டுப்படுத்தல் தனியார் கேள்விக்கு எதிராக அமைந்தது. சுருங்கக்கூறின் கல்வியின் முக்கியத்துவம் நன்கு அறியப்பட்ட போதிலும் தாய்வான் அரசாங்கம் தனியார் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சந்தர்ப்பங்களை அதிகரித்துக் கொள்ளவில்லை.
urgast ü (Protection)
சர்வதேச வர்த்தகத்தில் நுகர்வோரின் விருப்பங்களுக்கு இடமளிக்கும் விடயத்தில் கிழக்காசிய அரசாங்கங்கள் குறைந்தளவிலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மூன்று கிழக்காசிய நாடுகளும் வர்த்தக அமைப்பை நெருங்கிய முறையில் முகாமைத்துவம் செய்தன. (யப்பானைப் பொறுத்த வரையில் பெரும்பாலான பாதுகாப்புகள் 1970 க்கும் 1980 க்கும் இடையில் அகற்றப்பட்டன.) அவர்களுடைய ஆட்சிமுறைகள் பிரதான அம்சங்களில் முன்னுக்குப்பின் முரணாகக் காணப்பட்டன. நன்கு சீர்திருத்தியமைக்கப்பட்ட வர்த்தக ஆட்சி முன்பு இருந்தும் கூட பல்வேறுவழிகளில் முரண்பாடுகள் நிலவின. உதாரணமாக பெலாபலஸ்சா (Bela Balassa) என்ற சட்டத்தரணி தனது குறிப்புகளில் உற்பத்தி என்ற வகையில் சில சிறப்பு ஊக்கங்களைக் கொடுக்கின்றனர். (1) புறத்துரண்டுதல்கள் (2) தேர்ச்சிபெறாத தொழிலாளரின் பொருளாதாரச் செலவுக்கு மேலான சந்தைக் கூலிகள். இறக்குமதிக் கோட்டாவை நீக்குதலுக்குச் சார்பான கருத்துரைகளையும், ஏறக்குறைய 10 சதவீதமளவில் சுங்கத்தீர்வைப் பாதுகாப்பை ஒருநிலையில் பேணுதல்பற்றியும் குறிப்பிடுகின்றார். வளர்ந்துவரும் கைத்தொழில் என்றவகையில் புதிய நிறுவனங்களுக்கு உயர்மட்டப்பாதுகாப்பு
47

Page 26
வழங்கப்பட வேண்டும் எனவும் ஏற்றுக் கொள்கின்றார். ஆயினும் அது 20 சதவீதத்துக்கு மேற்பட்டதாக இருக்கக் கூடாது; மற்றும் குழந்தை நிலைக் கைத்தொழில்கள் அல்லது நிறுவனங்கள் என்ற வகையில் அவற்றுக்கிடையே வேறுபாடுகளும் இல்லை. இவ்வகையான பாதுகாப்பு 8 தொடக்கம் 10 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கவில்லை.
அடுத்து தாய்வான் மீது கவனத்தைச் செலுத்தலாம். தாராண்மை வர்த்தக ஆட்சிக்குத் தாய்வான் சிறந்த ஓர் உதாரணமாக முன்வைக்கப்படுகிறது. 1969 க்கு முன்னரிலிருந்து லீயும் லியாங்கும் (Lee and Liang) தமது ஆய்வுகளுக்குப் பயன்படுத்திய தரவுகள் இக்கருத்துக்கான பிரதான சான்றாகும். அக்காலத்தில் தாய்வான் ஒப்பீட்டளவில் குறைந்த மட்டத்திலான பாதுகாப்பினைக் கொண்டிருந்ததாக இவ் ஆய்வு குறிப்பிடுகிறது. குறிப்பாக உற்பத்தியைப்பொறுத்து இது நிலவியது. ஆயினும் இரண்டு அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. (1) நாம் சிறிதளவேனும் உடன்படாமலிருந்தாலும் கூட லீ, லியாங் ஆகியோரது ஆய்வின் முடிவுகள் கைத்தொழில்களிடையே சிறப்புக்கைத்தொழில் மற்றும் வர்த்தக பக்கச் சார்புகளைக் காட்டி நிற்கின்றன. (அதாவது கைத்தொழில்களிடையே வேறுபாடுகள் காணப்படுமளவுக்கு முக்கிய வேறுபாடுகள் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஊக்குவிப்பைப் பொறுத்தும் முனைப்படைகின்றன) ஏற்றுமதி செய்வதற்கு அல்லது உள்ளூர்ச்சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதற்கு வழங்கப்படும் ஊக்குவிப்புச் சமநிலையிலும் கைத்தொழில்களுக்கிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. (2) யாதாயினும் சந்தர்ப்பத்தில் முகப்பெறுமானங்களைக்கொண்டு விளைவுகளை ஏற்றுக்கொள்வதையிட்டு நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டமுறையியல் சம்பந்தமான பிரச்சினைகள் கருதுகின்றன. குறிப்பாகச் சில எடுகோள்களும் தவிர்ப்புகளும் ஏறக்குறைய ஒத்த பாதிப்புக்களை உண்டாக்கும் அளவு அதன் உண்மை நிலையிலும் பார்க்கக் குறைவாக உள்ளது. (ஊக்குவிப்பின் உண்மையான அளவில் ஒருமைப்பாடின்மை) அல்லது பாதுகாப்பு வழங்கப்படும் சராசரி மட்டம் அதன் உண்மைநிலையிலும் குறைவாக இருப்பதைக் காணலாம்.
பிந்தியகாலத்தில் கிடைக்கப்பெற்ற ஏனைய சில சான்றுகள் கூறுவது என்னவெனில் குறிப்பிடத்தக்க ஆனால் வழமைக்கு மாறாகக் குறைந்து இராத நீடித்து நிலவும் பாதுகாப்பாகும். உதாரணமாக (1) 1984 இல், தாராண்மைவாதம் பற்றி அதிகம் எடுத்துக் கூறப்பட்ட பின்னர், தாய் வானின் இறக்குமதிகளில் 54 சதவீதம் பல்வேறுபட்ட di Esiastside is sits surras assolserfsir (Nontariff Barriers) epub ஈடுசெய்யப்படுகிறது. இங்கே முக்கியமாகக் கருதப்படும் விடயம் இறக்குமதிக்கான முன்னனுமதியாகும். இந்த அனுமதியைப் பதிலீட்டுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்திசெய்வோர் அல்லது அரசாங்கத்
48

திணைக்களம் பெற்றிருக்கவேண்டும். உதாரணமாகப் பாரிய உருக்கு உற்பத்தியில் ஈடுபடும் கம்பனியொன்று குறிப்பாக 1987 வரை "சீன உருக்கு" கம்பனி சகல உருக்கு இறக்குமதிகளுக்கும் அனுமதியை வழங்க வேண்டியிருந்தது. (2) 1984 இல் சட்டரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சுங்கத் தீர்வை 31 சதவீதமாக இருந்தது. இது ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் உள்ளதுபோல சுங்கத்தீர்வையும் ஏனைய வர்த்தகக் கட்டணங்களும் 34 சதவீதமாக இருந்தது. இருப்பினும் தாய்வான் நாட்டின் சுங்கத்தீர்வை அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் சராசரிகளைப்பார்க்கிலும் மிக வேகமாகக் குறைவடைந்து சென்றது. இவற்றிலிருந்து தாய்வானுடைய சட்டரீதியான சுங்கத்தீர்வை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சராசரிகளிலும் பார்க்க உயர்வானது என நாம் அனுமானிக்கலாம்.
புதியபழைமைவாதக் கருத்துரையின்படி பாதுகாப்பு என்பது நான்கு பிரதான பாதிப்புகளையுடையது.
(1) சர்வதேச மட்டத்திற்குத் தமது செலவுகளைக் குறைத்துக்கொள்ள உயர் பாதுகாப்பு உள்நாட்டு உற்பத்தியாளர் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது. அல்லது விலக்குகிறது. (2) உயர்கட்டுப்பாடுகள் கைத்தொழில்களுக்கிடையிலுள்ள பாதுகாப்பு மட்டங்களில் விரிவினை உண்டாக்குகிறது. திட்டமிடப்படாத பொருத்தமற்ற ஊக்குவிப்புக்களினால் இது ஏற்படலாம். (3) உயர் பாதுகாப்புகள் விவசாயத்தையும் ஏற்றுமதியையும்
பாதிக்கிறது. (4) உயர்பாதுகாப்புகள் வாடகையைக் கூட்டுவதனால் அவை சமூக
இழப்புகளுக்குக் காரணமாகின்றன.
இத்தகைய பாதிப்புகளுள் இரண்டினை மட்டும் இங்கு கவனத்திற் கொள்ளலாம். இப்பாதுகாப்பு எவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. (1) சர்வதேசப் போட்டிகளின் விளைவாக உள்ளூர் உற்பத்தியாளர் மீது ஏற்படுத்தப்படும் நெருக்கடிகளை நீக்குதல் கூடாது எனவும் (2) ஏற்றுமதிகளைப் பாதிக்கக் கூடாது எனவும் கூறப்படுகிறது. இங்கே கூறப்படும் முக்கிய கருத்து என்னவெனில், ஏற்றுமதிகளின் மீது அரசாங்கத்தின் வலியுறுத்தல்கள் கடுமையாக இருக்கும் சந்தர்ப்பங்களிலேயே பாதுகாப்புக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. ஏற்றுமதியாளருக்கான ஒரு விஷேட ஆட்சிமுறையை அரசாங்கம் உருவாக்கியது. அவை இறக்குமதிசெய்யப்பட்ட உள்ளிடுகைகளைத் துரிதமாகப் பெற உதவின. மற்றும் உலக விலையை ஒத்தவையாகவும் இருந்தன. இதனால் அவர்களுடைய முதலீட்டுத் தேவையினைச் சாதாரண வங்கி வட்டி வீதத்திலும் பார்க்கக் குறைந்த
49

Page 27
நிலையில் ஈடுசெய்யக் கூடியதாக இருந்தது. இவ்விரு வசதிகளும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட விதிகளின்படி நடைமுறைப்படுத்தப்படலாயிற்று. ஏற்றுமதியாளருக்கு அவை சுலபமாகக் கிடைக்கும் வாய்ப்பும் காணப்பட்டது. அரசாங்கமானது ஏற்றுமதிப் பெறுபேறுகளை நியதியாகக்கொண்டு பரந்தமுறையிற் தீர்மானங்களை மேற்கொள்கிறது. யாதாயினும் ஒரு காரணத்துக்காக நிறுவன மொன்றுக்கு உதவி தேவைப்படுமெனின் (திட்டமிட்ட நிலப்பகுதிக்கு வெளியே ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டால் அதற்கான தண்டனையைத் தவிர்க்க) அந்நிறுவனத்தின் ஏற்றுமதிச் செயலாற்றங்கள் நல்லனவாக இருந்தால், வேண்டுகோள் சாதகமானமுறையில் கவனிக்கப்படும். "ஏற்றுமதியை விளையாட்டுக் கோட்பாடு” (game theory) என்னும் பதத்தில் அரச - வர்த்தகத் தொடர்பில் குவிபுள்ளி (focal point) என அழைக்கப்படுகிறது. இருபக்கத்து விளையாட்டு வீரர்களும் ஏற்றுமதிச் செயலாற்றங்களை எதிர்பாராத சந்தர்ப்பங்களில் ஏற்படும் தீர்ப்புகளுக்கான கோட்பாடாகப் பயன்படுத்தமுடியுமென அறிவார்கள். ஆகவே நிறுவனங்கள் ஏற்றுமதிகளைத் தெரிவுசெய்தலானது வெறுமனே பல்வேறுவகையான ஏற்றுமதி ஊக்குவிப்புகளைப் பெறுவதற்காகவன்றி அவை எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் தமது தொடர்புகளைக் கட்டியெப்ப உதவும் நன்மதிப்பாகவும் இருக்கும். இவ்வடிப்படையில் அரசாங்கம் உருவாக்கிய 6JðgpyuDg6láš “saortsFrrúd“ (government - created exportculture) sörgp6TG).
பாதுகாப்பளிக்கப்பட்ட உள்நாட்டு வியாபாரத்தை நிறுவனங்கள் அனுபவித்தாலுங்கூட அவை ஏற்றுமதிச் சந்தைகளில் பிரவேசிப்பதற்குப் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தன. உள்நாட்டு வியாபாரத்தைப் பாதுகாத்தல் என்பதால் அவர்களை வித்தியாசமான விலைகளை நடைமுறைப்படுத்த அவை அனுமதித்தன. உள்நாட்டு விற்பனைகளில் உயர்விலைகளை விதிக்கச் செய்தன. உயர்ந்த இலாபங்களைப் பயன்படுத்தி அளவுகளை உறுதிசெய்வதற்கும் போட்டி மிகுந்த ஏற்றுமதிகளுக்கும் மானியம் வழங்கப்பட்டது.
சில பாரிய கைத்தொழில் நிறுவனங்கள் கூட, நேரடியாகச் சிறுதொகைப் பொருட்களை ஏற்றுமதி செய்தபோதும் அவை நிரந்தரப் பாதுகாப்பினை அனுபவித்தன எனலாம். போட்டிகாரணமாகக் கஷ்டங்களை எதிர்நோக்கியவை, சர்வதேசநிலைக்குச் செலவுகளைக் குறைக்க வேண்டியதாயிற்று. இறக்குமதிப் பிரதியீட்டுப்பொருட்களின் செலவிலும் பார்க்க விலை அதிகமாக இருந்தால் ஏற்றுமதிசெய்பவர்கள், அதிகளவில் இறக்குமதிக்கு இடமளிக்க உதவுமாறு அரசாங்கத்துக்கு மனுச்செய்யலாம். அதனால் அவர்களுக்கு நன்மையும் விளையக்கூடும். (குறிப்பிட்ட இரசாயனப் பொருளின் மொத்தப் பயன்பாட்டில் இறக்குமதிக்கு அனுமதிக்கக்கூடிய விகிதாசாரம் உதாரணமாக 40 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக வரையறுக்கப்பட்ட காலத்துக்கு மட்டும்உயர்த்தப்படலாம்).
50

வேறு வார்த்தைகளில் கூறுவதாயின், சுங்கத்தீர்வை தவிர்ந்த ஏனைய தடைகளின்மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு நிபந்தனைகளுடன் கூடியவையாக இருக்கவில்லை.
மேல்மட்ட நிறுவனங்களுக்கும் கீழ்மட்டப் பாவனையாளருக்குமிடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற அரசாங்கம் எப்பொழுதும் ஆதரவளிக்கிறது. (உதாரணம் பெற்றோலிய இரசாயனப் பொருட்கள்) மேல்மட்ட நிறுவனங்களின் ஆர்வத்தைச் சமநிலைப்படுத்தல் இதன் நோக்கமாகும். இது உள்நாட்டுக்கேள்விகள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறது. இத்தகைய சமநிலை தற்கால ஏற்றுமதிகளின் போட்டிநிலைமைக்கும் அரசாங்கத்தின் திடமான நம்பிக்கைக்குமிடையே உடன்பாடுகளை ஏற்படுத்துதல் பற்றியும் குறிப்பிடுகின்றது. அதாவது கைத்தொழில் அமைப்பானது உயர்பெறுமதி சேர்க்கப்பட்ட நடவடிக்கைகளை நோக்கி மாற்றமடைய வேண்டும்; இவை நெறிப்படுத்தப்படாத சந்தைச் சக்திகளின் உற்பத்தியிலும் பார்க்கத் துரிதமாகவும் இடம்பெறவேண்டும்.
நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்குமிடையே வர்த்தகத்தை இலகுபடுத்துவதற்கு அரசாங்கமானது, பல்வேறு தொழில்நுட்பங்களின் நீண்டகால நன்மைகள், பொருட்கள் மற்றும் வெளிநாட்டுச் சந்தைகள் ஆகியவற்றை மதிப்பிடுவதற்குக் குறிப்பிடத்தக்களவு வளங்களை ஈடுபடுத்துகிறது. அத்துடன் உள்நாட்டு உற்பத்தியாளருக்கும் வெளிநாட்டுக் கொள்வனவாளருக்கும் நடைமுறைச் சந்தை பற்றிய போதியளவு தகவல்களையும் அளிக்கிறது.
பின்வரும் விடயத்தில், கைத்தொழில் மாற்றத்துக்கு உதவும் அளவுரீதியான வர்த்தக முகாமைத்துவத்தின் இன்னொரு பயன்பாட்டைக் காணலாம். மாபெரும் பல்தேசியக்கம்பனியொன்று தாய்வானில் உற்பத்தியொன்றில் ஈடுபடுகிறது. அவ்வுற்பத்திக்கு மிகத்தூய்மையான இரசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இவ்வாறான தூய்மைகொண்ட அந்த இரசாயனப் பொருளை உள்நாட்டு உற்பத்தியாளரால் வழங்க முடியாது. அத்துடன் அவற்றை இறக்குமதிசெய்யக் கம்பனிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில், இரசாயனப் பொருளைப் பரிசோதிக்கும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை அதிகாரிகள் மிகத்தூய்மையான உற்பத்திகள் தாய்வான் உற்பத்தியாளரின் தொழில்நுட்ப ஆற்றலுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் எனச் சிந்திக்க ஆரம்பித்தனர். இதற்கான சாத்தியக் கூறுகளை அவர்கள் உற்பத்தியாளருடன் கலந்துரையாடினர். பல்தேசியக்கம்பணிகளுடனும் அதுபற்றிக் கலந்துரையாடினார். இயந்திரம் மற்றும் தொழில் நுட்பங்களில் போதியளவு முதலீடுகளை அவர்கள் மேற்கொண்டார்களாயின் அவர்களுடைய விற்பனைக்கு உத்தரவாத மளிக்கும் உள்ளூர் உற்பத்தியாளருடன் பல்தேசியக் கம்பனிகள் கொள்வனவு உடன்படிக்கையொன்றைச் செய்யுமாறும் ஊக்குவித்தனர்.
51

Page 28
மற்றும் பல்தேசியக் கம்பனிகள் மீது நம்பிக்கையின்மையும் காணப்பட்டது. ஆயினும் சிறிது காலத்தின் பின்னர் இரசாயனப் பொருட்களை இறக்குமதிசெய்தல் அதன் பிரயோகம் ஆகியன இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டமை கண்டு கொள்ளப்பட்டது. இதில் தாமதமும் நிலவியது. இத் தாமதம் நீடித்துச் சென்றது. இதிலிருந்து பின்வருவனவற்றை அறிந்துகொள்ளலாம். உள்நாட்டு விநியோகஸ் தர்களுடன் கொள்வனவு உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டது. அத்துடன் அதன் தரத்தையும் கூட்டியது. கைத்தொழில்கள் பலவற்றுக்கும் பரவியது. தைவானின் கைத்தொழிற் கொள்கையை வகுக்கும் உத்தியோகத்தர்கள் உற்பத்தியமைப்பு முறையை எவ்வாறு உலக இயல்புக்குப் பொருத்தமான நடவடிக்கையாக மாற்றலாமென இடித்துரைத்தனர். ஆனால் இவை தொழிற்படுவதற்கும் உலக சந்தை விலையிலும் பார்க்க அதிகளவில் விலையைக் கூட்டாமல் இருப்பதற்கும் ஆயத்தமாக இருக்கவேண்டும்.
சுருங்கக் கூறின் உற்பத்தியாளர் பாதுகாப்பினை நிருவகிக்க முன்பு, தாய்வானுடைய பாதுகாப்பு ஆட்சி உருப்பெற்ற விதத்தையும் பரவலான ஏற்றுமதி நடவடிக்கைகளில் அந்நாடு இணைந்து கொண்ட விதத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. எனினும் உள்நாட்டுச் செலவுகளிலும் ஏற்றுமதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட கைத்தொழில் மாற்று உபாயங்கள் எதிர்வு கூறப்பட்ட பாதுகாப்புச் செலவினங்களிலும் பார்க்கக் குறைநிரப்பீடுகளைச் செய்யலாம். அத்துடன் மிகச் சுருக்கமாகப் பாதுகாப்பானது, உயர் பெறுமதி சேர்க்கப்பட்ட செயற்பாடுகளில் ஒப்பீட்டுமுறையிலான முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கு எவ்விதம் உதவியிருக்கலாம் எனவும் கூறுகிறது. இவை “செயல்மூலம் கற்றல்” (Leaning - by doing) என்பதன் மூலம் திறன்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கிழக்காசிய வர்த்தக ஆட்சியும் பொதுவாக அவர்களுடைய கைத்தொழிற் கொள்கைகளும் அரசாங்க உத்தியோகத்திலீடுபடும் 30 வயதைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் தமது எண்ணப்படி நடந்துகொள்ளப் பெரிதும் இடமளித்தது. அரசாங்கத்தினுடைய புதிய தாராண்மைவாத அணுகுமுறையின்படி இவ்வாறான நடத்தை திட்டமிட்டவாறு துஷ்பிரயோகம் செய்யப்படும் என நம்பலாம். இதுபற்றிய கருத்துகளை வழங்குவது கடினமாக இருந்தாலும் "விருப்பப்படி நடப்பதைத் துஷ்பிரயோகஞ் செய்தல்" (Misuse of discretion) என்பதை வரையறை செய்வோம். தாய்வானிலும் கொரியாவிலும் இவை தாமதமாகவே இடம்பெற்றன. இவை அரச - சந்தைக் கட்டுப்பாடு பற்றிய சிக்கல்களில் இருதலைக்கொள்ளி நிலைமையின் இரண்டாவது கட்டத்துக்கு எம்மை இட்டுச் செல்கிறது.
52

(V) கிழக்காசிய அரசுகளை ஒழுங்குப்படுத்தியது என்ன?
பெரிய அரசுகள் எப்பொழுதும் சந்தைகளில் தலையிடுதல், கட்டுப்படுத்தல் அல்லது அகற்றுதலில் விருப்பமும் ஆற்றலும் உடையவை, இவ்வழியே அவை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. புதுப் பழம் பொருளியலில் மூன்று பரந்த கருத்துரைகள் உள. அவை மேற்கூறிய போக்கினை விளக்கவல்லன. அவற்றுள் ஒன்று அரசாங்க உத்தியோகத்தர்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன அல்லது தவறானவை என்பதாகும். அரசாங்கம் அதன் நோக்கங்களை நிறைவு செய்யும் ஆற்றலுக்கு இது பிரச்சினையாகவுள்ளது. (அதனுடைய நோக்கம் எத்தகையனவாக இருந்தாலும்) இரண்டாவது கருத்தாக அரசாங்கத் தலையீட்டின் காரணமாக வளங்களை விரயம் செய்வோருக்கு அல்லது உற்பத்தியாக்கம் தராதவகையில் பயன்படுத்தும் தனிப்பட்ட முகவர்களுக்கு வாடகையை விதிக்கிறது. விரும்பிய விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அதன் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் ஆற்றலைச் சந்தேகிக்கிறது. (ஏனெனில் செலவினங்கள், அரசாங்கம் விதித்த வாடகையை அறவிட உற்பத்தியாக்கம் தராத வளங்களைப் பயன்படுத்தினால் அவை நன்மைகளை விஞ்சுவதாக அமைந்து விடுகின்றன) மூன்றாவது கருத்தாக அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது முகவர்களின் பொது நோக்கங்களுடன் தொடர்புடையவையாக இருந்தால் மாத்திரமே சில குறிக்கோள்களை அடையமுற்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுடைய நடத்தை வர்த்தகர்களுடைய இலாப நோக்கங்களினால் கட்டுப்படுத்தப்படுவது குறைவு. இத்தகைய கருத்துரை அரசாங்கத்தின் உண்மைக்குறிகோள்களுடன் பொருந்துமளவுக்குச் சந்தைகள் மூலம் உண்டாகும் தோல்விகளைச் சீர்செய்ய வேண்டும். பொது ஆர்வத்தை மேம்படுத்த வேண்டும்.
சுருக்கமாகக் கூறினால், புதுப்பழைமைவாதக் கருத்தின்படி, அரசாங்கம் பெரியதாகவும் அதிகளவுக்குச் செயற்பாடுடையதாகவும் மாறும்போது அதன் வளர்ச்சிக்கான தொடர்முயற்சிகள் பொருளாதார நடைமுறைகளை மாற்றுவதுடன் வளர்ச்சிக்கு ஆபத்தாகவும் அமைந்து விடும் . கிழக்காசியாவில் இத்தகைய போக்குகளைத் தடைசெய்வது என்ன? இது முக்கியமானதொரு வினாவாகும். இதற்கு இலேசான விடை யொன்றில்லை. நாம் சில வகை முன்னேற்றங்களை அடையலாம். சிலவற்றை முழுமையாகத் தவிர்க்கலாம். பிரதேசவாரியாகக் குறிப்பிடக் கூடியதும் வரலாற்றுரீதியாகத் தனித்தன்மை வாய்ந்ததுமான விளக்கங்களை, கிழக்காசிய நிகழ்வுகளை மேலே எடுத்துக் கூறப்பட்ட "அரசாங்கத்தின் தோல் வி” என்னும் மூன்று புதுப்பழமைவாதச் சான்றாதாரங்களினூடாகப் பார்ப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Page 29
g556) sissiT (Information)
தகவல்பற்றிய பிரச்சினைகள் பலவழிகளிலே இலகு படுத்தப்பட்டுள்ளன. முதலாவதாக சிவில்சேவை இன்னும் ஒரு கற்றோர் தொழிலாக விளங்குகிறது. தனியார் துறையினரின் சம்பளம் உயர்வாக உள்ளன. இவை முறைப்பாடுகளையும் அதிகாரவர்க்க முகவர்களுக்கிடையே நிலவும் இசைவற்ற தகவல் பிரச்சினைகளையும் வெற்றி கொள்ள உதவுகின்றன. இரண்டாவதாக, பொருளாதார அதிகாரவர்க்க ஆட்சி எப்பொழுதும் உயர் தொழில்நுட்ப வல்லுனர்களைப் பதவிக்கு அமர்த்துகிறது. இதனால் முதலாவது பாதிப்பு மீளவலியுறுத்தப்படுகிறது. மூன்றாவதாக மையப் பொருளாதார அதிகார வர்க்கத்தினரைச் சூழ்ந்துகாணப்படும் ஆராய்ச்சி மற்றும் சேவை நிறுவனங்களில் காணப்படும் வல்லுனர்கள், தகவல்கள் மீது மத்திய உத்தியோகத்தர்கள் கவனம் கொள்கின்றனர். உதாரணமாக மின்னியல் பிரிவுகளுள் ஒன்றினது பாதுகாப்புப் பற்றித் தாய்வான் உத்தியோகத்தர்கள் தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டிய தேவையேற்படும்பொழுது அவர்கள் மின்னியல் ஆராய்ச்சியும் சேவையும் 6T6irp 5gshi soriilio (Electronics Research and Service Organisation) இருந்து ஆலோசனை பெறுகிறார்கள். இந்த நிறுவனத்தில் 1987 ஆம் ஆண்டில் 1,700 பேர் பணிபுரிந்தனர். இந்த ஆராய்ச்சி மற்றும் சேவை நிறுவனமானது மத்திய அரசாங்க சேவையிலும் பார்க்க நெகிழ்ச்சியான முறையில் தனித்துறைநிபுணர்களைப் பணிக்கமர்த்த முடியும்.
நான்காவதாக அரசாங்கம் தொடர்ந்தும் தகவல்களைச் சேகரிக்க முதலீடு செய்கிறது. தகவல்களைப் பெற்றுக் கொள்கிறது நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளவை எவை, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளவை எவை என 48 மணித்தியாலத்துக்குள் உத்தியோகத்தரால் அறிந்துகொள்ள முடியும். கைத்தொழில் அபிவிருத்திப் பணியக உத்தியோகத்தர்கள், நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் பலவற்றுக்கும் மாதத்தில் சில நாட்கள் சென்று அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பை ஏற்கிறார்கள். ஏற்றுமதித் தரக்கட்டுப்பபாட்டுத் திட்டம், (Export Quality Control Scheme) தரக் கட்டுப்பாட்டு வல்லுனர் குழுவினால் ஆகக் குறைந்தது வருடத்துக்கு ஒரு முறையேனும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது இவர்களே தொழிற்சாலைத் தரக் கட்டுப்பாட்டு முறையைத் தரப்படுத்துபவர்களுமாவர். (தரம் கூடும்போது பரிசோதனைக் கட்டணம் குறையும்) இவ்விரு வழிகள் இருந்தாலும் (கைத்தொழில் அபிவிருத்தியில் பணியக உத்தியோகத்தர்கள், தரக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள் தொழிற்சாலைக்குச் சென்று பார்வையிடல்) அரசாங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளலானது உற்பத்திநிலைமைகளைப்பற்றிய விரிவான அறிவு மற்றும் ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நிதி சம்பந்தமானவை இரகசியமானவையாக இருப்பதினால் அவை அடிப்படையாகக் கொள்ளப்படுவதில்லை.
54

இறுதியாகக், கைத்தொழில் கொள்கைகளைத் தமக்கென ஆக்குவோர், அவற்றின் செயலாற்றங்களின் மீது நிபந்தனைகளின் கீழ் பலவகையான பொது உதவிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒப்பீட்டளவில் அவை செயலாற்றக் குறிகாட்டிகளை அவதானிக்க இலகுவாக அமைகின்றன. (குறிப்பாக ஏற்றுமதிகள், அல்லது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கிடையே விலைகளில் நிலவும் இடைவெளியை அறிய) இவை தகவல்பற்றிய பிரச்சினையை இலகுபடுத்துகின்றன. சுருக்கமாகக் கூறினால், மத்திய பொருளாதார அதிகார வர்க்கத்தினருக்குப் பெருந்தொகையான தகவல்கள் கிடைக்கின்றன. மற்றும் உயர்நிலைத்தீர்மானம் மேற்கொள்வோரிடையேயும் கீழ் நிலை உத்தியோகத்தரிடையேயும் தகவல்கள் இசைவின்மையை உண்டாக்குகிறது. மற்றும் அரசுக்கும் இலக்குப்பிரிவினருக்குமிடையேயும் இசைவின்மை நிலவுகிறது. இவை செயலாற்றக் குறிகாட்டிகளினாலும் உயர்ந்தோர் குழாத்தினாலும் நீதியான, நேர்மையான தகவல்களினாலும் பரிசீலிக்கப்படுகின்றன.
சுய இலாபம் தேடும் உத்தியோகத்தரும் வாடகை சேகரிக்கும் தனிப்பட்ட் முகவர்களும்
புதுப்பழைமைவாத ஈடுபாடுகளாவன; உத்தியோகத்தர்கள் தமது விவேகத்தை வரவுசெலவுகள் மீது காட்டுதல், தமது பொது நோக்கங்களுக்கு உடன்பாடுடையனவாக இருந்தால் மாத்திரமே இலக்குகளையடைய அனுமதியளித்தல், அவை நன்நோக்குடையவையாக இருந்தாலும் கூட, உற்பத்தியாக்கமற்ற வாடகையை விதித்தல் என்பனவாகும். தாய்வானில் தொழிற்படும் பல காரணிகள் இப்பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதைக் காணமுடியும். உயர்மட்டத்திலுள்ள திறன்கள் அரசாங்க சேவைகளால் ஈர்க்கப்படுகின்றன. குறிப்பாகத் தொழில்நுட்பப் பயிற்சியுடன் கூடிய திறன்கள் பற்றி முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன் கருத்து என்னவெனில் ஏனைய விடயங்களுக்கு மத்தியில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமதுஅறிவாற்றல் மற்றும் தொழில்நுட்பப்பண்புகள் என்ற நியமங்கள் மூலம் தமது நடத்தைகளை வழிப்படுத்தக்கூடியவர்களாக உள்ளனர். அதேவேளையில் நன்மைகளை எதிர்பார்க்கும் போட்டிக்குழுக்களின் பிடிக்குள்ளும் அவர்கள் சிக்கிக்கொள்ளவில்லை. பொருளாதாரத்தில் ஆர்வம்கொண்ட பிரிவினருக்குச் சுதந்திரம் இல்லை; சிவில் சேவையிலுள்ள சட்டத்தினுடாகச் சுதந்தி:த்தை அனுபவிக்கின்றனர். மறுபக்கத்தில், இந்த உத்தியோகத்தர்கள், வல்லுனர்களின் மேற்பார்வைக்கு உள்ளாகின்றனர். மைய அதிகார வர்க்கத்தினரின் செல்வாக்குக்கும் உட்படுகின்றனர். குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் சேவை முகவர்களின் செல்வாக்கும் உண்டு. அத்துடன் அரசாங்கத்தினைப் பற்றிய பொருளாதார விமர்சனங்களைச் செய்யும் சுதந்திரம் பத்திரிகைகளுக்கும் உண்டு. கைத்தொழில் உத்தியோகத்தர்கள்
55

Page 30
வர்த்தகப் பத்திரிகைகளைக் கவனமாகப் படிக்கின்றனர். மேலும் வினையாற்றல் நிலைமைகள் பல்வகைப்பட்ட அரசாங்க உதவிகளுடனும் இணைந்துள்ளன. இவை உதவிகளைப் பெறுவோரை மாத்திரமன்றிக் கொடுப்போரையும் கட்டுப்படுத்துகிறது. உத்தியோகத்தர்களும், அவர்களது சொந்த நடவடிக்கைகளும் அதே செயலாற்றக்குறிகாட்டிகளால் அளவிடப்படலாம் என அறிவார்கள். ஒரு நிறுவனம் அல்லது நிறுவனங்கள் தமது ஆற்றல்களைச் செயலாற்ற நிலைமைகளுக்கு உரியதாகக் காட்டினால் (உதாரணம் - ஏற்றுமதிகள்) அவை தகுதியற்ற அல்லது இலஞ்சம் எதிர்பார்க்கும் அதிகாரிகளால் அழிக்கப்படுகிறது. இதற்கு வேறொரு வழிவகையுண்டு. உண்மையிலே அதே உற்பத்தி நிலைமைகள் அதிகாரிகளுக்குத் தெளிவான குறிகாட்டிகளை வழங்கும்போது அந்நிலைமைகளை அடைவதற்கு "அவர்களுடைய நிறுவனங்களுக்கு எந்த வழிகளில் உதவலாம் எனச் சிந்திக்க ஊக்கமளிக்கின்றன. ஆகவே செயலாற்ற நிலைமைகள் தகவல்பற்றிய பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி சுய இலாபம் தேடும் அதிகார வர்க்கத்தினருக்கும், தனிப்பட்டமுகவர்களின் வாடகை தேடும் பிரச்சினைகளுக்கும் உதவுகின்றன.
ஆகவே உறுதியாக வாடகையை விதிக்கும் போது, (ஏனைய நிறுவனங்களிலும் பார்க்கச் சில நிறுவனங்களுக்கு அதிகளவில் உதவியை வழங்குவதன் மூலம் ) வாடகை தேடுவோர்க்கு ஒதுக்கப்படும் -வளம் ஓரளவுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய அரசியற் பொருளாதாரத்தில், அரசாங்க ஒதுக்கீடுகளைத் திருத்தியமைப்பதற்கான சந்தர்ப்பங்கள் குறைவாக உள்ளன. மேலும் அரசாங்கத்தால் விதிக்கப்படும் கைத்தொழில் வாடகை, அதிக உற்பத்திக்கு வழிகோலியுள்ளது. ஏனெனில் பரந்த போட்டி - கூட்டு ஊக்குவிப்பு என்பன வாடகை - பெறும் நிறுவனங்களை எதிர்நோக்குகிறது. ஏனெனில் தேவையானவிடத்து அரசாங்கம் வாடகை விதிக்கும் தலையீடுகளிலிருந்து ஒதுக்கிக் கொள்கின்றன.
இது, தாய்வானிலும் கொரியாவிலும் புதுப்பழமைக் கோட்பாடு எதிர்வுகூறியதிலும் பார்க்க, “அரசாங்கத்தின் தோல்வி” குறைந்தளவில் இருந்தது ஏன் என விளங்கிக்கொள்ள உதவுகிறது. மேற்கு நாட்டு நிறுவன அமைப்புகளிலே புதுப்பழைமைக் கோட்பாடு வெகுவாக ஊன்றியுள்ளது. அவற்றின் சில அம்சங்களை அவதானிக்கவும் முடியும். ஆயினும் ஒப்பீட்டு நோக்கில் அவை எடுத்தாளப்பட முடியாதவை. உதாரணமாகத் தாய்வானும் கொரியாவும் பலநூற்றாண்டுகளாகச் சந்தைகளிலும் தனியார் சொத்துகளிலும் பெருமளவுக்குச் சிக்கனங்களைக் கடைப்பிடித்து வந்துள்ளன. ரூஷியா, சீனா, வியட்நாம் மற்றும் ஏனைய நாடுகள் போலன்றி இந்நாடுகள் சந்தேகத்துக்கிடமான புகழ்ச்சிகளை ஏற்றுக்கொண்டதில்லை. தனிப்பட்ட முதலாளித்துவவாதிகளால் பொருளாதாரத்தின் ஆக்கந்தரும் சொத்துகள் கட்டுப்படுத்தப்படுகின்றன
56

என்பதன்பொருள், அரசாங்க உத்தியோகத்தர்கள், தமது தீர்மானங்கள் இலாபமீட்டுவதை எவ்விதம் பாதிக்கிறது என்பதிலே கவனஞ்செலுத்த வேண்டும் என்கிறது.
இன்னொருவகையில் தாய்வானும் கொரியாவும் மேற்கு நாடுகளிலும் பார்க்க மேலே சொல்லப்பட்ட விடயங்களுடன் நெருக்கமுடையனவாகக் காணப்படுகின்றன. அண்மைக்காலம் வரையில் அவர்களுடைய அரசாங்கம் சனநாயகத்தின் ஆகக்குறைந்த நிபந்தனைகளைக் கூட அடைந்துகொள்ள வில்லை. அங்கேயுள்ள ஆளுங்கட்சி தேர்தல்களின் மூலம் அதிகாரத்தை இழந்துவருகிறது. மக்கள் சமுதாயம் வேண்டுமென்றே பலவீனப்படுத்தப் பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் கட்டளைப்படி நடைபெறுகிறது. குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளின்படி 1970களிலும் 1980களின் ஆரம்பத்திலும் இடைத்தரவருமானம் பெறும் நாடுகளின் வரிசையில் இவை உயர் நிலையை வகிக்கவில்லை. சனநாயகமும் மக்கள் சமூகமும் இல்லாதிருந்தமை அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு அவர்களுடைய நோக்கங்களை அமுல்படுத்த இலகுவாக இருந்தது. அவ்வாறாயின் தேசிய பொருளாதார வளர்ச்சிக் குறிக்கோள்களுடன் ஒத்துப்போகும்படி இவ்வாறான நோக்கங்களைப் பேணியது என்ன? (மயன்மார் விடயத்தில் இது முரண்படுகிறது).
இச்சந்தர்ப்பத்தில் “அண்மிய" காரணங்களைவிட வரலாற்றுரீதியாகக் குறிப்பிடப்பட்ட மற்றும் சந்தர்ப்பக் காரணங்களே தேவைப்படுகின்றன. தாய்வான், கொரியா ஆகிய நாடுகளின் உத்தியோகத்தர்களின் பண்பாட்டு மாதிரிகை அதிகாரங்கள், சீனப் பேரரசு மற்றும் கொரிய இராச்சியங்களின் மத்திய மயப்படுத்தப்பட்ட ஆட்சியமைப்பு, பொருளாதாரம் என்பவற்றின்மூலம் பல நூற்றாண்டுகளாகப் பெறப்பட்ட அனுபவவாயிலாகப் பிறப்பிக்கப்படுகின்றன. அண்மைக் காலங்களிலே இப்பண்பாட்டு மாதிரிகை போர்களில் ஈடுபடும் நிறுவனரீதியான கொடூரக்காரர்கள் (தாய்வானின் விடயத்தில் மட்டும் கொரியாவிலன்று) தடைசெய்வோரினால் மீணடும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தாய்வானிய உள்ளூர் மக்களால் அந்நியப்படுத்தப்பட்டதொன்றாகவும் கருதப்படுகிறது. தாய்வானும் தென் கொரியாவும் கூட்டு நாடுகளாக விளங் குகையில் அக் கூட்டினைத் தொடர்ந்து பேணுவதிலும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குகின்றன. புறவயமான அச்சுறுத்தல்கள் நன்றாகத் தொழிற்படுவதற்குத் தூண்டுதலளித்தல், உள்நாட்டுப் போட்டி யின்மையால் ஈடுசெய்யப்படலாம். இதனை உள்ளூர் எதிர்கட்சியினர் ஆட்சியாளர்மீது தமது அதிகாரங்களைப் பயன்படுத்திக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். இறுதியாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பொருளாதாரரீதியாகத் தாம் தோல்வியடைவர் என அறிந்திருந்தனர். அத்துடன் அரசாங்கம் மட்டுமல்லாமல் அரசும் நாடும் நிலைத்துநிற்பதற்கு வேண்டிய இடர் நிலையை அறிந்திருக்கவில்லை. கிழக்காசிய
57

Page 31
அரசாங்கங்கள் இதற்கு முரணாக, துரிதப்பொருளாதார வளர்ச்சியும் சமூக உறுதிப்பாடும் இல்லாமல் இத்தகைய பேரச்சதைக் வீழ்ச்சியுறச்செய்யலாம் என அறிவர். இவை தேசியப் பாதுகாப்புக்கும் பொருளாதாரப் பலத்துக்குமிடையே வழக்கத்துக்கு மாறான நெருங்கியபிணைப்பு உருவாக வழிகோலின. தொடக்க காலத்தில் யப்பானைப் போல வளங்களை நெறிப்படுத்துவதற்குப், பொருளாதார அதிகார வர்க்கத்தினருக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்ததனால் அதுவே உற்பத்திப் போட்டியை உறுதிசெய்துகொண்டன. அதன் விளைவாகக் குறிக்கோள் விரிவுபடுத்தப்பட்டது. "இது செய்யமுடியும் ” “செய்ய வேண்டும்" என்ற மனப் பாங்குடன் இயலக்கூடியளவுக்கு விரைவாக முன்னேறிய மேற்கு நாடுகளின் கூட்டத்தினுள் யப்பானும் சேர்ந்துகொள்ள உதவியது. இந்நாடுகள் யப்பானுக்கு அருகில் இருப்பதால் "அயலவர் பாதிப்பு" முக்கியமாக உள்ளது. இப்பாதிப்பு நேரடியாக வெளியே செல்லும் யப்பானிய முதலீடுகளைப் பெறுதல், அவற்றைக் கைப்பற்றுவது எப்படி என்பதற்கான "தகவல்களை” வழங்குதல் என்ற இரு வகையிலும் இடம்பெறலாம். தாய்வான், கொரியா ஆகிய நாடுகளின் ஆட்சியாளர்கள் யப்பானின் போருக்கு முந்திய, போருக்குப் பின்னைய அனுபவங்களை நன்கு அறிந்துள்ளனர். கட்டுப்பாடுடைய ஓர் அரசு இராணுவ மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை அடைய முடியும் என்பதற்கு ஒரு தெளிவான மாதிரியை இது வழங்குகிறது. அத்தகைய மாதிரி முக்கியமான அரசாங்க முகவர்களுக்குக் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்ட நிறுவனப் பண்பாடு ஒன்றை உருவாக்க உதவியது.
இத்தகைய பல்வேறுபட்ட எதிரான போக்குடைய நிலைமைகள் ஒத்திசைவான தேசியப் பொருளாதார உபாயங்களைத் தோற்றுவிக்க உதவும்; அத்துடன் உபாயங்களைச் செயல்படுத்தும் ஆற்றலையும் வழங்கும். எல்லாவற்றிலும் மேலாக அரசாங்கத்தின் “வெற்றிக்கான முக்கிய நிபந்தனைகளைத் தாய்வானும் கொரியாவும் எவ்வாறு அடைந்தன என்பதை விளக்கவும் அவை உதவும். அதாவது தேசியநலன் என்னும் நோக்கில் சந்தைகளில் தலையிடுகின்றவர்கள் மனப்பூர்வமான அக்கறையுடையவர்களாக இருத்தல் வேண்டும். பரந்த இலக்குகளையும், குறிப்பான கொள்கைகளையும் மாற்றியமைக்கும் திறனுடையவர்களாக இருக்க வேண்டும். அத்துடன் மிகச்சரியான தகவல்களைப் பேணவேண்டும். இத்தகவல்கள் தனிப்பட்ட முகவர்கள் மற்றும் உதவியாளர்களின் ஆற்றல்கள், நடத்தைகள் பற்றியனவாக அமைய வேண்டும்.
6. விவாதத்திற்கான பதிலிறுப்பு
மேற்கூறிய விளக்கமானது, ஏனைய அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளும்
தமது பொருளாதாரங்களை மாற்றியமைக்க முடியும் என்பதற்குரிய
வாய்ப்புகள் பற்றியும்; கொரியாவும் தாய்வானும் அணுகுகின்ற
58

அதேவீதத்தில் கட்டமைப்புக் குப் பொருந்தக்கூடிய வகையில் போதியளவுக்கு வருமானத்தை விரைவாகப்பெருக்கிக்கொள்ளல் பற்றியும் கூறுகின்றது. இதற்கான வாய்ப்புகள் புதிய தாராண்மைவாதக் கருத்துகள் எம்மை நம்பவைத்த அளவிலும் பார்க்கக் குறைவாகவே உள்ளது.
கொரியாவும் தாய்வானும் தமது செயற்பாடுகளைக் கட்டியெழுப்பியுள்ளன. போட்டி சம்பந்தமான முக்கிய கொள்கை இணைப்புகளை உருவாக்கவும் அவற்றை நிலைத்திருக்கச் செய்யவும் தேவையான அரசியல் நிபந்தனைகள், சமூக பொருளாதாரத் துறைகளில் அரசாங்கக் கட்டுப்பாடுபற்றிய கொள்கைகள் மற்றும் கல்வி போன்றவற்றை வேறுபல அரசுகள் அடைந்துகொள்ளல் சற்றுக்கட்டுப்பாடான விடயமாக இருந்தது. இவ் இணைப்புகளின் இறுக்கமானதன்மை புற எல்லைகளிலிருந்து உப எல்லைப்பகுதிக்கும், உப எல்யிைலிருந்து மையப் பகுதிக்கும் நிகழ்ந்த நாட்டின் நகர்வினை, கட்ந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அவதானித்ததன் அடிப்படையில் அதன் மேல் நோக்கிய அசைவில் காட்டிய முக்கியத்துவம் அபூர்வமாக இருந்தது. மறுபுறத்தில் நம்பிக்கை வாய்ந்த முடிவுகளுக்கான சில குறிகாட்டிகளைக் கவனத்திற்கு எடுக்க வேண்டும். முதலாவதாக ஆசியாவில் காணப்படும் நிறுவன ஒழுங்கமைப்புகளிற் பல நீண்டகால வரலாற்றின் அல்லது பண்பாட்டின் விளைவுகளன்று. அவை வேண்டுமென்றே செய்யப்பட்ட அத்துடன் நிகழ்கால வடிவமாகும். இரண்டாவதாக மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா என்பவற்றுடன் சீனாவின் கரையோர மாகாணங்களும் மிகக்கீழ்மட்டத்திலிருந்து 1980களில் மிகவிரைவாக வளர்ச்சியடைந்து வருகின்றன. அவற்றின் வளர்ச்சி கிழக்காசியாவின் “அழைப்பின்பேரில்" நிகழ்ந்தவை. அந்நாடுகள் தென்கிழக்காசியாவில் பெருமளவில் முதலீடு செய்கின்றன. அவை நிலைத்து நிற்குமா? உண்மையில் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் கடன்களாலும், ஏற்றுமதிச் சந்தைகளில் நிலவும் ஆசியாவின் போட்டியினாலும் நசுக்கப்பட்டுள்ளன. இவை உப எல்லைகளிலிருந்து எல்லையை நோக்கி வீழ்ச்சி அடைந்து செல்கின்றன. அவற்றுள் சில ஆசிய நாடுகள் வந்துசேர இடமளித்துள்ளன. அநேகமாகக் கல்வியறிவற்ற தொழிற்படையைக்கெகாண்ட பிரித்தானியா நீண்டகாலந் தொடங்கி மிகைப்பெறுமதிசெய்யப்பட்ட நாணயமாற்று வீதம் காரணமாகத் தனது ஈடுபாடுகளைத் தற்பொழுது குறைத்துக் கொண்டுள்ளது. இது மைய நாடுகளிலிருந்து மிகவிரைவாக எல்லைப்புறத்துக்கு விலகிச் செல்லும்பொழுது, தாய்வான் கொரியா, சிங்கப்பூர், ஸ்பெயின் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு இடங் கொடுக்கிறது. அவை மைய நாடுகள் போலச் செயற்பட்டு உலகளாவிய போட்டியை இன்னுங் கூட்டிக் கொள்கின்றன.
மறுபுறத்தில் மேலும் இரண்டு காரணிகளைக் குறிப்பிடலாம். ஒன்று உலகளாவிய மந்தநிலையாகும். உலகமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருடாந்த வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்து செல்கிறது. 1960 - 70 இல்
59

Page 32
4. 9 சதவீதமாக இருந்து 1970 - 80 இல் 3.5 சதவீதமாகவும் 1980 - 89 இல் 2.9 சதவீதமாகவும் இவ்வளர்ச்சி வீதம் காண்பட்டது. உலகப் பொருளாதாரத்தில் புதிதாக இணைந்து கொள்ளும் நாடுகளின் வியாபாரம் அதிகரித்துச்சென்றாலும் இவற்றை வர்த்தக வளர்ச்சி என்பதிலும் பார்க்க வர்த்தகப் போக்கினில் ஏற்பட்ட மாற்றம் என்றே கருதலாம். உண்மையில் இவ்வாறு செய்வது கடினமானது. மேற்கு நாடுகளில் வளர்ந்து வரும் பாதுகாப்பு, உலகப் பெருமந்தம் காரணமாகத் தூண்டப்பட்டது. இரண்டாவது காரணமாக தென்கிழக்காசிய நாடுகளின் கைத்தொழி லாக்கத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர் முன்னணி வகிக்கின்றனர். இவர்கள் உள்நாட்டு விநியோகஸ்தர்களுடனும், குறைந்த அளவுக்குப் பாவனையாளர்களுடனும் , தொடர்புள்ளவர்கள். உதாரணமாகத் தாய்லாந்தின் “முதலீட்டு வேகம்” 1987 - 88 இல், 75 சதவீதமான முதலீட்டுத் திட்டங்கள் தாய்லாந்தின் முதலீட்டுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இவை வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கிடைத்தன. அதில் அரைப்பங்கு யப்பானுடையது. உள்நாட்டு மின்னியக்க நுகர்பொருட்கள் யப்பானிய நிறுவனங்களால் தாய்லாந்திலும் மலேசியாவிலும் உற்பத்தி செய்யப்பட்டவை 30 சதவீதமாக மட்டும் காணப்பட்டன. அத்துடன் உள்ளூரில் உற்பத்திக்கான உதிரிப்பாகங்களும் யப்பானிலிருந்தே வந்தன. தாய்வானும் கொரியாவும் அவற்றினுடைய கைத்தொழிலாக்கத்தில் சமநிலையில் இல்லை எனினும் அந்நாடுகளில் வெளிநாட்டு ஆதிக்கம் குறைவாக இருந்தது என்பது தெளிவு. அத்தகைய வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர்ப் பொருளாதாரத்திலும் நிலையான இடம்பெற்றிருந்தன. இவ்வாறு செய்தமைக்கு அரசாங்கத்துக்கு நன்றி செலுத்த வேண்டும். (இவ்விடயத்தில் மிகத் தூய்மையான இரசாயனப் பொருள் பற்றி ஞாபகமூட்டலாம்).
பெரிய அளவுத் திட்டத்தில் பதிலிறுப்புக்கான வாய்ப்புக்கள் சிறிதாக இருந்தால் புதிய கைத்தொழில் மய நாடுகள், வெற்றியடைந்த கிழக்காசிய நாடுகளின் விடயத்திருந்து அநேகமான விடயங்களைக் கற்றுக் கொள்ள முடியாது என்பது கருத்தல்ல. பெரும்பாலான மாற்றக் கூடிய அறிவு என்பது குறிப்பான நிறுவனத்திட்டத்தில் தங்கியிருக்கிறது. உதாரணமாக உள்நாட்டு உற்பத்திகளுக்குச் சிலவகைப் பாதுகாப்புகள் வழங்கப்பட்டிருப்பின் இறக்குமதி செய்யப்படும் உள்ளிடுகைகளுக்கும் ஏற்றுமதிகளுக்கும் சுங்கத்தீர்வை விதிப்பதிலிருந்து விதிவிலக்களிப்பதும் அவசியமானது. ஆகவே உலக சந்தை விலையில் ஏற்றுமதி உள்ளிடுகைகளைப் பெறமுடியும். இவ்வாறான சுங்கத்தீர்வைத்தள்ளுபடித் திட்டத்தை எவ்வாறு ஒழுங்கு செய்ய வேண்டுமெனத் தாய்வானும் கொரியாவும் அறிந்துள்ளன. புதிதாக வருவோரைப் புறக்கணித்தல் நியாயமற்ற செயலாக அமையும்.
60

7. முடிவுரை
1. கைத்தொழிற் கொள்கைகளின் பங்கு
விரைவான கைத்தொழிலாக்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் களின் முன்னேற்றம் விரோதமானதல்ல எனக் கொரியா, தாய்வான், யப்பான் போன்ற நாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில்களின் முன்னேற்றம் கைத்தொழிலாக்கத்தைத் துரிதப்படுத்தக் கூடுமெனினும் தேசிய மற்றும் சமூக நன்மைகளைக் கொண்டு வருமா என்பதும் இன்னொரு வினாவாகும். இவற்றிற்கு முடிவான, நிச்சயமான சான்றுகள் இருபக்கத்திலும் இல்லை. சான்றுகளில் காணப்படும் சமநிலை, வாதத்திற்குச் சாதகமாக உள்ளது என்பதே தனிப்பட்ட முடியவாகும். அதாவது கொரியா, யப்பான், தாய் வான் ஆகிய நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட கைத்தொழில் கொள்கைகள் அவற்றினது சர்வதேசரீதியான போட்டித்தன்மையுடைய கைத்தொழி லாக்கத்தக்கு உதவியதா?
இவ் விடயத்தை மேலும் சரிசெய்துகொள்ள, இருவகையான "அரசாங்கத்தலையீடு'களுக்கிடையே வேறுபாடுகாணவேண்டிய தேவை எமக்கு உண்டு. சந்தைக்கு வழிகாட்டுதலும் சந்தையைப் பின்பற்றுதலும் என அவை அமைகின்றன. சந்தையைப் பின்பற்றுதல் என்பது, நடைமுறையில் தனிப்பட்ட வர்த்தகர்கள் பொறுப்பேற்கவிருக்கும் செயற்திட்டங்களுக்கு அரசாங்கம் உதவி செய்தலாகும். சந்தைக்கு வழிகாட்டல் என்பது, நடைமுறை விலையில் தனிப்பட்ட வர்த்தகர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளாத திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லலாகும். இவ்வழிகாட்டல் இருவகையில் அமையலாம். திட்டங்களை முன்னெடுத்துச் செல்லல் என்ற நடவடிக்கை நடைமுறை விலைகளில் நிலைத்திருக்க முடியாது. ஆனால் தகுதியான நிழல்விலைகளில் தொடர்ந்து நிலைத்து நிற்கக் கூடியவை (L1) தகுதியான நிழல் விலைகளில் நிலைத்துநிற்க முடியாத இடத்தும் முன்னர் இருந்தநிலையில் திட்டங்களை மேற்கொள்ளல் (L2). கிழக்காசிய கைத்தொழிலாக்கத்தில் அரசாங்கத்தின் பங்கினை அவதானிக்கும்பொழுது நீண்டகாலமாக இவ்வாறான பங்கேற்புகளுக்கிடையே அரசாங்கத்தின் தலையீட்டுக் கோலங்கள் மாறிவருகின்றமையைக் காணலாம். இத் தருணத்தில் ஏனைய கைத்தொழில்களில் எவ்வகைத் தலையீடுகளையும் காணமுடியவில்லை, அநேகமாகச் சந்தையைப் பொறுத்த அரசாங்கத் தலைமைத்துவம் L1 வகையைச் சேர்ந்தன போலத் தெரிகிறது. ஆனால் L2 இலும் சில உண்டு. அவை திரும்பி வந்துள்ளன; முன்னரிருந்த நிலைக்குத் திரும்பியுள்ளதுடன் வெற்றியளிக்கக் கூடியவையுமாகும். கொரிய உருக்குக்கைத்தொழில் இதற்கு நல்ல உதாரணமாகும். ஏதாயினும் விடயத்தில் (L1) அல்லது L2 வகையை நடைமுறைப்படுத்தலானது,
61

Page 33
கைத்தொழில் முன்னேற்றத்துக்கு அரசாங்கத்தின் பங்களிப்பு புதிய தாராண்மை முறைமையிலிருந்து அதிகதூரம் விலகிச் சென்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
கைத்தொழில் கொள்கைகளின் வெற்றிக்கு வேண்டிய மேலோட்டமான நிலைமைகளாக மேலே கொடுக்கப்பட்டவற்றை ஆகக் குறைந்த மட்டத்திலேனும் அடைவது கடினமாகும். ஆகவே L2 ஐ அடைய முயற்சிப்பது அறிவீனம். L1 ஐக்கூடத் தெரிந்தெடுத்தே செய்யவேண்டும். பெருந்தொகையான கைத்தொழில் முன்னேற்றங்கள் பின்பற்றுதல் வகையினவாகவும் தொடர்ச்சியான உதவியைப் பெற்ற ஏற்றுமதிச் செயலாற்றமுடையதாக இருத்தலும் பிரதான அம்சமாக இருத்தல் வேண்டும்.
2. கல்வி
ஒரு நாட்டிலுள்ள தேர்ச்சிபெற்றோருக்கும் , அடிப்படைத் தேர்ச்சியுடையோருக்கும் அடிப்படைத் தேர்ச்சியடையாதோருக்கும் இடையேயுள்ள விகிதாசாரத்தில் மாற்றம் உண்டாகும் பொழுது அவை செயற்பாடுகளின் ஒப்பீட்டுரீதியான முன்னேற்றத்துக்குப் பயன்படக் கூடியதாகவும் இருக்கும். அவை உயர் வருமானம் பெறவும் உதவும்.
3 வர்த்தகக் கொள்கை
(i) வர்த்தகக் கொள்கையானது (வெளிநோக்கித் திசைப்டுத்தல், உள்நோக்கி திசைப்படுத்தல்) வர்த்தக அமைப்பினை விளக்குவதில் முக்கியத்துவம்பெறும் துணைநிலை மாறியாகும். இது திறன்களை இணைப்பதற்குச் சமனானது. மற்றும் இயற்கை வளப் பயன்பாட்டு உரிமை வழங்குதலும் முக்கியமானது. (ii) வர்த்தக ஆட்சி, மொத்தரீதியான வர்த்தகநிலைமை, (பகவதியினுடைய ஏற்றுமதி மேம்பாடு தொடர்பான நிலைமைகளை அடைகிறது) நிலையான வேறுபாடுகளைக் கொண்டிருக்கும் கைத்தொழில் கொள்கை ஊக்குவிப்புகளால் கைத்தொழில்களுக்குக் கிடைத்த உந்துதல்களின் அளவுக்கும் அல்லது உள்ளூர்ச் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்ட அளவுக்குமிடையேயுள்ள வேறுபாடுகள் நிலையாகக் காணப்பட்டன. இவற்றினிடையே இணைப்புகளை எவ்விதம் நடைமுறையிலும், கொள்கைரீதியாகவும்செய்து கொள்ளலாம் என்பது ஆராய்ச்சி செய்யப்படக் கூடிய பிரதான தலைப்புகளுள் ஒன்றாக உள்ளது. (ii) வர்த்தகக்கொள்கைகள் சம்பந்தமாகக் கிடைக்கும் பெருந்தொகையான புதியதாராண்மைவாதக் கருத்துகள் பாதுகாப்பினை வழங்குவதிலே பகுபடாத்தன்மையினவாக இருப்பதால் அவை தவறானவையாக உள்ளன. பாதுகாப்புச்செலவுகளும், நிறுவனச்செயற்பாடுகளில் பெருமளவுக்குத்தங்கியுள்ளன. வித்தியாசமான
62

பாதுகாப்பு “ஒப்பந்தங்களின்” ஊக்குவிப்பு விளைவுகள் பெருமளவுக்கு ஆராய்ச்சி நோக்குக்கு உத்தரவாதமளிக்கிறது. சிறப்பாாக எத்தகைய நிலைமைகளின் கீழ் பாதுகாப்பானது முதலீடுகளுக்குத் தூண்டுதலளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் செயல் மூலம் கற்றல் வினைத்திறனின்மைகளையும் வாடகை - தேடலையும் ஈடுசெய்யும்.
4. வர்த்தகப் பாதுகாப்பும் சமூகப் பாதுகாப்பும்
கிழக்காசியாவில் கைத்தொழில் முன்னேற்றத்துக்கான சாதனமாக மட்டும் பாதுகாப்புப் பயன்படுத்தப்படவில்லை. சர்வதேச சந்தைகளின் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்வழியாகவும் இது அமைகிறது. அரசாங்கங்கள் பாதுகாப்பின் அளவினைக் குறைத்ததன் விளைவாக அவை உள்நாட்டுக் காப்புறுதியின் மீது நலன் பேணல் மற்றும் மாற்றுக் கொடுப்பனவு என்ற வகையில் செலவுகளை ஏற்கின்றன. இந்த வகையில் உலகின் அனுபவங்கள் முன்னேற்றமடைந்த18 நாடுகளில் டேவிட் கமரூன் (Davidcameron) என்பார் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளுடன் ஒத்துச் செல்கின்றன. அதாவது "திறந்த பொருளாதார அமைப்பைக் கொண்ட நாடுகளில் மூடிய பொருளாதார அம்ைப்பைக் கொண்ட நாடுகளிலும் பார்க்கப் பொது முதலீடுகள் அதிகரித்துச்சென்றமையைக் காணமுடிந்தது. வருமான உப வழிகளுக்கும் சமூகக் காப்புறுதிக்கும் உண்டான செலவுகள் பொதுப்பொருளாதார விரிவாக்கத்துக்கு உதவிய பிரதான மூலகமாகவும் இருந்தது. இவ்விடயம் புதிய சர்வதேசப் போட்டிகள் மூலமும் வலியுறுத்தப்பட்டது. இதனால் ஒரு தசாப்தத்தின் அரைவாசிக் காலப்பகுதிக்குள் ஒரு நாட்டில் நிறுவப்படும் கைத்தொழில்கள் மூலம் இன்னொரு நாட்டிலுள்ள போட்டியாளர்களைத் தவிர்த்துக் கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகளும் ஏற்பட்டன. இதில் பல சீராக்கற் பிரச்சினைகளும் இருந்தன. இத்தோற்றப்பாட்டினை அடம் சிமித்தும், டேவிட் நிக்காடோவும் அறியாதிருந்தனர்.
5. சமூக, பொருளாதாரத்துறைகளில் அரசாங்கக்
கட்டுப்பாடுபற்றிய கொள்கை ஒழுங்குகள்
கொரியா, தாய் வான் , யப்பான் ஆகிய நாடுகள் தமது முன்னேறி பாடுகளையும் தந்திரோபாயத் திட்டங்களையும் உபயோகிப்பதற்கு "முன்னோடி முகவர்களைப்" பயன்படுத்தின. ஒரு வகையில் தனிப்பட்ட வர்த்தகர்களுக்கு இவற்றினைச் செய்துகொள்ள முடியாது. இத்தகைய முன்னோடி முகவர்களுக்கு (யப்பானில் MIT, தாய்வானில் கைத்தொழில் அபிவிருத்திப் பணியகம், கொரியாவில் பொருளாதாரத் திட்டமிடற் சபை) அரசாங்கத்தில் பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நீண்டகாலக் கண்ணோட்டத்தில் தேசிய விவகாரங்களுக்கு ஆதரவு தேடுபவர்கள் போன்று செயற்பட்டுள்ளனர்.
63

Page 34
இந்நிறுவனங்களிலே சமூகத்தில் உள்ள ஆற்றல் வாய்ந்தவர்கள் பணியாற்றினர். (உத்தியோகத்தவர்களாக இருந்தவர்கள் பலர் பொருளியலாளர்கள் அல்லர்) ஒப்பீட்டளவில் சிறிதளவு வளங்கள் மீது கட்டுப்பாடுகளை வைத்திருக்க அவர்களால் முடிந்தது. இவற்றைப் பொறுத்தவரையில் அரசாங்கங்கள் அவர்களுக்கு வழங்கிய பிரதான இடம் சற்றுக் கடினமாக இருந்தது. ஆயினும் கிழக்காசிய நாடுகளின் பொருளாதார அதிகார வர்க்க ஒழுங்கமைப்பு மற்றும் நடைமுறைகள் பற்றியபோதிய அறிவு எமக்கு இல்லையென்பதை வலியுறுத்த வேணடும். குறிப்பாக உத்தியோகத்தர்களுக்கான ஊக்குவிப்புகள், அதிகார உறவுகளின் பண்புகள் பற்றிய அறிவு இல்லை எனக் கூறலாம்.
6. அரசு - சமூக உறவுகள்
முன்னோடி முகவர் அரச சாதனங்களின் ஒருபகுதியை உருவாக்கியுள்ளன. அவை ஏனைய சமூகங்களிலும் பார்க்க உயர் மட்டத்திலான தன்னாதிக்கத்தையுடையன. (யப்பானின் விடயத்தில் 1970 க்கு முன்) இது உண்மையில் ஒரு நிர்ப்பந்திக்கப்பட்ட அரசியல் நிலைமையாகும். ஒரு நிறுவனத்தில் அதிகளவுக்கு ஒத்துழைப்புக் கிடைத்தால் அங்கு சாத்தியக்கூறுகளும் நிறையவுண்டு. அத்தன்மை அரச தன்னாதிக்கத்துக்குத் துணையாகவும் விளங்கமுடியும். மற்றும் ஐக்கிய அரசுகளின் பன்மைவாதப் பாணியிலான சுதந்திர வர்த்தகத்திலும் பார்க்க வினைத்திறன்மிக்கதாகவும் இருக்கும். ஐக்கிய அரசுகளின் உள்நாட்டுக் கொள்கையில் காண்ப்படும் அசைவற்ற தன்மையில் சீர்குலைவையும் இவை உருவாக்கக் கூடியவை எனலாம்.
7. சனநாயகமும் மனித உரிமைகளும்
கிழக்காசிய அரசுகள் உலகளாவிய மட்டத்தில் இலாபம் தேடும் மத்தியப்படுத்தப்பட்ட வர்த்தகர்களால் வள ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுவதை விரும்பவில்லை. இதனிலும் மேலாக அவர்கள் உரிமையாளர்களினதும் முகாமையாளர்களினதும் முதலீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துவைத்துள்ளன. இதன்மூலம் முதலீடுகளை ஆக்கவும் தேசிய எல்லைக்குள் அவற்றை மீள்முதலீடுசெய்யவும் முடிந்தது. மேலும் அரசியலடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட முன்னுரிமைகளுக்கேற்ப முதலீடுகளை மேற்கொண்டனர். (கொரியா, தாய்வான்,ஆகிய நாடுகளின் விடயத்தில் சனநாயகமுறையல்லாததாகவும் யப்பானின் விடயத்தில் முரண்பாடான சனநாயகமாகவும் அமைந்தது.)
மேற்கூறிய அனுபவங்களுக்குமுரணாக நடைமுறையில் விமர்சிக்கப்படாத சனநாயத் தழுவல்களையும் மனித உரிமைகளையும் "சுதந்திர சந்தை" என்னும்பொருளாதாரக்கோட்பாட்டின் அரசியல்ரீதியான இணைப்பாகக்
64

கருதவேண்டும். மீளமைப்புக்கும் அபிவிருத்திக்குமான புதிய ஐரோப்பிய வங்கி மட்டுமன்றி பழையதும், வெளித்தோற்றத்தில் அரசியல் சாராத பல தொடர்புகள் கொண்ட நிதிநிறுவனங்கள் (உலகவங்கி, IMF) என்பனவும் இன்று சனநாயகத்தையும் மனித உரிமையையும் கடன்வழங்குவதற்குரிய நிபந்தனையாகப் பேணத் தொடங்கியுள்ளன. இதன்முலம் இறைமை பற்றிய தமது முன்னைய கருத்தினை முழுமனதுடன் திருத்தியமைத்துக் கொள்கின்றன.
சனநாயகமும் மனித உரிமையும் என்ற அடிப்படையில் ஆதரவுபெற்ற அரசியல் மாற்றங்களைக் கருத்திற் கொள்ளும் போது அவை பல் தேசிய முதலீட்டுக் கட்டுப்பாட்டாளர்களால் தேசிய அரசியல் மீது பாரியளவில் செல்வாக்குச் செலுத்த வழிகோலுகிறது. "மனித உரிமைகள்" (human rights) என்பது ஒருவருடைய பொருளாதார உடைமைகளை அவருடைய விருப்பின்பேரில் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறது. ஆகவே, கிழக்காசிய நாடுகள் இவற்றை மேலோட்டமாக நடைமுறைப்படுத்தியபோது அவை மனித உரிமைகளை மீறுவதாகக் காணப்படுவதுடன் தேசியமட்டத் தேர்தல்களின்போது வெளியேயுள்ள குழுக்கள் அங்கு பணத்தைக் கொட்டுவதற்கும் இடமளித்தது. இவை முடிவுகளைத் தீர்மானிக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவும் இருந்தது. (அண்மையில் நிக்கராகுவாவில் நடந்தது போன்று) இக்கோட்பாடுகள் ஒழுங்குபாடுகளை நியாயமென நிரூபிக்கலாம். இவை தேசிய அரசினை ஓர் அரசியல்களம் என்ற நிலைக்குக் குறைத்துவிடுகிறது. மற்றும் தேசிய எல்லைக்குள் வாழும் மக்கள் குழுக்களிடையே காணப்படும் விட்டுக் கொடுக்குமியல்பையும் ஒதுக்கிவைக்கிறது. அவை மேற்கூறிய இயல்புகளை அடைவதைக் கடினமாக்கும்போது முதலீட்டின்மீது கட்டுபாடுகளை அல்லது தடைகளை ஏற்படுத்தும் . சிறப்பாகத் தேசிய ரீதியாக அசையும் முதலீடுகள் இத்தன்மைக்கு உட்படுகின்றன. இருப்பினும் அத்தகைய சில கட்டுப்பாடுகள் இன்றியும், வினைத்திறன்மிக்க அரசியற்களமின்றியும் குறிப்பிட்ட நாடு உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் விரைவாகக் காலடி எடுத்துவைக்க முடியாது. இவற்றையே கிழக்காசிய அனுபவங்களும் எடுத்துக் காட்டுகின்றன.
உசாத்துணைகள்
1. Robert Wade (1990): Governing the Market: Economic Theory and the Role of Government in East Asian Industrialisation, Princeton : Princeton University Press.
2. ............ (1992): East Asia's economic sucess : Conflicting Paradigms, Partial
insights, shaky evidence. World Politics. January.
65

Page 35
3. Frederick Berger (1979): Korea's experience with export - led industrial development, in B-de Vries (ed), Export Promotion Policies, Staff Working Paper No 313, washington D.C. World Bank. 4. Jagdish Bhagwati (1988): Export-promoting trade strategy issues and evidence.
World Bank Research Observer 3 (1), January. 5. Michael Lipton (1991): The State - Market dilemma, civil society and structural
adjustment, The Round Table, 317, pp. 21-31. 6. Adrian Wood (1990): A new - old theoretical view of North - South trade, employment and wages. Discussion paper 292, Institute of Development Studies, Susex University. 7. Bela Balassa, etal (1982): Developmentstrategiesin semi-industrial Economics,
Baltimore, Johns Hopkins University Press. 8. Eryan R. etal (1988): The profile of protectionin developing countries, Discussion
paper 21, Geneva: UNCTAD. 9. Glovanni Arrighi and Jessica Drangel (1986): The Stratification of the world economy: an exploration of the semi peripheral zone. Review 10 (1), summer. pp 9.-74. 10.Etsuro Ishigami (1991) : Japanese business in ASEAN countries: New - industrialisation or Japanisation?, IDS Bulletin 22 (2), PP21 - 28.

பகுதி 2
ஒரு பொருளாதார அமைச்சரின் |படுதோல்வியைத் தடுத்து நிறுத்துவது
61 fiLII?
ஆர்ஜென்ரீனாவின் 20 ஆண்டுகாலப் பொருளாதாரக் கொள்கை கற்றுத்தரும் படிப்பினைகள்
ஜுவான் கார்லோஸ் டி பப்லோ
தமிழாக்கம்
டி. தனராஜ் செயற்றிட்ட அதிகாரி கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை தேசியக் கல்வி நிறுவகம், மகரகம.
பொதுசன கல்வி நிகழ்ச்சித் திட்டம் மார்கா நிறுவகம்

Page 36

ஒரு பொருளாதார அமைச்சரின் படுதோல்வியைத் தடுத்து நிறுத்துவது எப்படி?
ஆர்ஜென்டினாவின் 20 ஆண்டுகாலப் பொருளாதாரக் கொள்கை கற்றுத்தரும் படிப்பினைகள்
அறிமுகம்
கடந்த இரு தசாப்தங்களாக ஆர்ஜென்டீனாவின் பொருளாதாரக் கொள்கையை அவதானிப்பதே எனது தொழில்சார் வாழ்வின் நாளாந்தக் கருமமாக இருந்து வந்துள்ளது. அத்துடன் உலகப் பொருளாதார விவகாரங்களை அவதானித்து நாட்டின் வர்த்தக சமூகத்திற்கும் பொது மக்களுக்கும் விளங்க வைப்பதும் எனது பணியாக இருந்து வந்துள்ளது. இப்பணியை நான் கருத்தரங்குகள், கூட்டங்கள், கட்டுரைகள், வானொலி மற்றும் தொலைக்காட்சிப் பேட்டிகள் வாயிலாக ஆற்றியுள்ளேன்.
இவ்வனுபவங்கள் எனது நிதி நிலையை உயர்த்தின. தொழில்ரீதியாக கிளர்ச்சியூட்டுபவையாகவும் அதே நேரத்தில் சங்கடமானதாகவும் இருந்தன. 1968களின் நடுப்பகுதியிலிருந்து 1987 ஆம் ஆண்டின் இறுதிவரை நான் 19 பொருளாதார அமைச்சர்களைப் பார்த்துள்ளேன். இவ்வமைச்சர்களின் சராசரிப்பதவிக்காலம் சராசரி 375 நாட்கள் மட்டுமே. இக் காலகட்டத்தில் சர்வதேச நியமங்களின் அடிப்படையில் நாட்டின் “மிகக் குறைந்த பொருளாதார சாத்னை" யானது புள்ளிவிபரங்கள் மூலம் காட்டமுடிகின்றது. கடந்த 20ஆண்டுகளில் ஆர்ஜென்டீனாவில் விலைவாசிகள் 30 மில்லியன் மடங்கு (இது மாதாந்த 8 வீத பணவீக்கத்துக்குச் சமனாகும்) அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் தலா வருமானம் எவ்வித மாற்றத்துக்கும் உள்ளாகவில்லை.
இக்கட்டுரையில் நான் சில அமைச்சர்களின் முக்கிய தோல்விகளை விவாதிக்க உள்ளேன். இவ்வமைச்சர்களின் நிர்வாகங்களை நான் நுணுகி ஆராய்ந்துள்ளேன். இத் தோல்விகளானது அவற்றின் பொருள் அடிப்படையில் பட்டியல்படுத்திவிளக்கப்படுகின்றது. ஆர்ஜென்டீனாவின் எதிர்காலப் பொருளாதார அமைச்சரோ அல்லது வேறெந்த நாட்டினதும் அமைச்சரோ இவைகளைக் கண்ணுற்று இவ்வாறான பெரும் தவறுகள்ை
| 69"

Page 37
மீண்டும் விடாமல் தவிர்க்க முடியும். இவ்வாறு நடந்து இன்னும் அவ்வமைச்சர் தோல்வியடைந்தால் அதன் பொருள் அவர் புதிய தவறுகளை விட்டிருப்பார் என்பதாகும். எதிர்பார்க்கும் பெறுபேறுகளின் அடிப்படையில் அவரது பொருளாதார முகாமைத்துவம் மிகவும் தூரதிர்ஷ்ட்டமானதுதான். ஆனால் பொருளியல் ஆய்வைப் பொறுத்தவரையில் அது மிகவும் பயன் உள்ளதாகும்.
இவ்விடயம் பற்றி நான் பலநூறு பத்திரிகைக் கட்டுரைகளையும் பல் புத்தகங்களையும் எழுதியுள்ளேன். ஆனால் இம்முறை இக்கட்டுரையில் ஒரு புதிய அணுகுமுறையைப் பிரயோகிக்க முனைகிறேன். இந்நூலின் அமைப்பும் எனது இயல்பான அவசரமும் வாசகர் உள்ளத்தில் சில ஐயங்களை எழுப்பக்கூடும். அதாவது ஒரு பொருளாதார அமைச்சரின் பொறுப்புகளை நான் மிகச் சாதாரணமானது என நினைப்பதாகவும் அதன் விளைவாக இத்தகைய சாதாரண காரியங்களைக்கூடச் செய்ய முடியாத அளவுக்குத் திறமையற்ற மனிதர்களைப் பொருளாதார அமைச்சர்களாகக் கொண்டிருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆர்ஜெண்டீனா தள்ளப்பட்டிருக்கிறது என அவர்கள் சந்தேகிக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. எனது தொழில்சார் நிலையிலும் தனிப்பட்ட முறையிலும் இப் பொருளாதார அமைச்சர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். உண்மையில் சிலவேளை நான் பொருளாதார அமைச்சராக நியமிக்கப்பட்டால் (அது மிகவும் வருந்த வேண்டிய விடயம) இங்கு நான் தெளிவாக சுட்டிக்காட்டும் அதே “தவறுகளை” நானும் விடவேண்டிய குற்றத்துக்கு ஆளாவேன். எதிர்காலத்தில் சிறந்த பொருளாதாரத் தீர்மானங்களை மேற்கொள்ளலில் பயன்படக்கூடிய இப்பாடங்களை, இவ்வமைச்சர்கள் மீது எனக்குள்ள தனிப்பட்ட அல்லது தொழில்சார் உணர்வுகளின் காரணமாக, அசட்டை செய்வேனாகில் அது இங்கு எனது நோக்கத்துக்கு எதிராக நான் செய்யும் துரோகமாகும். இப்பாடங்களின் முக்கியத்துவம் நீக்கப்பட்டால் பொருளாதார முயற்சிகளின் எதிர்காலத் தலைவர்களுக்கு அது துர்பாக்கியமானதாகும். ஓர் இலட்சியப் பொருளாதார அமைச்சர் என்பவர் அடிப்படையில் “ஒரு சமநிலையான தீர்மானம் மேற்கொள்பவராவர்”. அத்துடன் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் காணப்படும் எதிரெதிர் துருவ நிலைகளிலிருந்து (Extreme opposites) எவ்வாறு தன்னை விடுவித்துக் கொள்வது என்பதைத் தெரிந்திருப்பார். (உதாரணமாக அவர் புள்ளிவிபரங்களை நிராகரிப்பவர் அல்லர். அதே நேரத்தில் புள்ளி விபரங்களில் ஒரேயடியாக மயங்கி விழுபவருமல்லர்). ஆகவே பெரும்பாலான தவறுகளானது குறைந்த சாதனைகளினால் அல்லது ஆகக் கூடிய சாதனைகளினாலேயே நேர்ந்துள்ளன. மேலும் ஒரு நிறுவனரீதியான பார்வையில் ஒரு பொருளாதார அலி மச்சர் என்பவர் அடிப்படையில் ஒரு “பூரணத்துவமிக்க முகாமையாளராக” இருக்க வேண்டும்.
70

எமது பட்டியல் அமைப்பின் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைச்சர் பின்வருனவற்றை நம்பினால் நிச்சயமாகப் பிரச்சினைக்குள்ளாவார்.
தனது அரசாங்கத்தின் அரசியல் அதிகாரமும், அரசாங்கத்தில் தனது அதிகாரமும் வரையறை இல்லாதவை; நேரம் நிச்சயமாக தனது பக்கத்தில் உள்ளது; ஒவ்வொரு விடயமும் பற்றி ஆலோசிப்பதற்கு நேரம் உண்டு; பொருளியற் பிரச்சினைகள் குறித்த விளக்கம் தனது ஆலோசகர்களுக்கு முக்கியமானது, தனக்கல்ல;
புள்ளிவிபரங்கள் முழு உண்மையையும் தெரிவிக்கின்றன அல்லது அவை பொய்களை மட்டுமே காட்டுகின்றன; சந்தர்ப்பங்களைக் கைநழுவவிடும் ஆட்கள் நிறையவே இருக்கிறார்கள்;
தனியார்துறை சொல்லும் எல்லாவற்றையும் நம்பவேண்டும்; அல்லது எதனையும் நம்பக்கூடாது;
பொருளாதார விவகாரங்களைச் சட்டவாக்கத்தினால் ஒழுங்குபடுத்த முடியும். அத்துடன் அமுல்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள் வெறுமனே அமுலாக்கல் பிரச்சினைகள் மட்டுமே ; பொருளாதாரக் கொள்கை அமுலாக்கல் முழுவதையும் மற்றவர்களுக்கு அதிகாரப் பகிர்வு செய்துவிட முடியும்; தான் சொல்வது எல்லாமே நேரடியாகவும், விகற்பமில்லாமலும் சொல்லப்படுகின்றன;
கொள்கைகள், நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் கடைசி ஆய்வில் மக்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்;
உடனடியாக வேலைத் திட்டங்களுக்கு அனுமதி பெறமுடியும்; பொருளாதாரக் கொள்கைகளுக்கு அங்கீகாரம் பெறுவது பத்திரிகையாளர்களைப் பொறுத்த விடயம்;
கருமமாற்றுவதில் மரபுரீதியான முறைகளைப் பின்பற்றுவது அர்த்தமற்றது; அல்லது அம்முறைகள்தான் எல்லாமே என்பது; அவரது முயற்சிகள் அனைத்தும் பாராட்டப்படும் அல்லது வரலாறு அவரை நன்றியுடன் நினைவு கூரும்;
அவருக்கு முந்திய அமைச்சர்கள் தோல்வியுற்றதன் காரணம் அவர்களின் திறமையின்மையே;
பொருளாதார அமைச்சராக வருவதற்கு எவரும் காத்திருக்கவில்லை.
71.

Page 38
இக் கட்டுரையானது நான்கு முக்கிய பகுதிகளைக் கொண்டுள்ளது. மேற்கூறிய விடயங்களில் பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்துடன் தொடர்புபட்டிருப்பவற்றை முற்பகுதி முறைப்படுத்துகிறது. இரண்டாவது பகுதி பொருளாதார கொள்கை அமுலாக்கம், அங்கீகாரம் பெறுதல் ஆகியவற்றை முறைப்படுத்துகிறது. மூன்றாவது பகுதி ஆளுமை தொடர்பான தவறுகளுடன் தொடர்புபட்டுள்ளது. கடைசிப் பகுதி றொபர்ட்டோ ரி. அல்மன், ஜோர்ஜ் லெஹ்பே ஆகிய இரு முன்னைய பொருளாதார அமைச்சர்களின் இக்கட்டுரை பற்றிய கருத்துக்களைக் கொண்டுள்ளது. ஆர்ஜென்டீனாவின் இவ்விரு அமைச்சர்களும் இவ்விடயத்தில் கருத்துக் கூறுவதற்கு மிகவும் தகுதிகொண்டவர்களாவர். இவற்றைப் பொருளாதார அமைச்சராக வரக்கூடிய எவரும் (அல்லது ஒரு பொருளாதார அமைச்சர் தொழிற்படுவதை விளங்கிக் கொள்ள) எளிதாக விளங்கிக் கொள்ள முடியும்.
பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்துடன் தொடர்பான தவறுகள்
ஒரு பொறியியலாளர் குழுவுக்குங்த் தலைமை தாங்கும் ஒருவர் தனது வேலையின் முழு பரிமாணங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லாதவிடத்து அவர் முகம் கொடுக்க வேண்டிய சிரமங்களைப் பற்றி முதலாவது வகையான "தவறுகள்”தொடர்புடையன. ஒருபொருளாதாரக் கொள்கை தோல்வியைத் தழுவக் கூடாது எனில் அது தொாழில்நுட்ப - தொழில்சார் தகைமைகளுக்கு (இவை அவசியமானவை. ஆனால் வெற்றிக்குப் போதுமானவை அல்ல) மேலதிகமாகப் பின்வரும் இரு விடயங்களில் காலூன்றி நிற்க வேண்டும். அதாவது;
(1) அரசாங்கத்தின் அரசியல் அதிகாரம் மற்றும் கொள்கையை அமுல் நடத்தும்பொருளாதார அமைச்சரின் அதிகாரம்பற்றிய பூரணமான விளக்கம்
(11) பொருளாதாரக் கொள்கையின் இயங்குமுறை பற்றிய உறுதியான விளக்கம். அதேவேளை தோல்வியைத் தழுவ விரும்பாத ஒரு பொருளாதார அமைச்சரின் செல்வாக்குகள் குறிப்பாக தனது கட்சிக்காரர்கள் தொடர்பாக ஓர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இந்த வகையில் பின்வரும் தவறுகள் தெளிவானவை.
72 .

1. அரசாங்கத்தின் அரசியல் அதிகாரமும், அவ்வரசாங்கத்தில் தனது அரசியல் அதிகாரமும் வரையறையில்லாதவை என்ற நம்பிக்கை.
ஓர் உறுதியான தொழில்நுட்ப அத்திவாரம், அரசியல் அதிகாரம் போன்றவை ஒரு வெற்றிகரமான பொருளாதாரக் கொள்கையின் உருவாக்கத்தில் தவிர்க்க முடியாத “உள்ளீடுகள்” ஆகும் . ஒர் அரசாங்கத்தின் பொருளாதார இலக்குகள் முழுவதும் சிறந்தவையாக இருக்கலாம், ஆனால் அரசியல் அதிகாரம், நம்பகத் தன்மை (Credibility) இன்றி, பொருளாதார அமைச்சராகக் கடவுளே பதவியேற்றுக் கொண்டாலும்கூட இவ்விலக்குகளை அடையமுடியாது. அதேபோல மிகவும் நம்பிக்கை கொண்ட அரசாங்கங்கள் கூடத் தொழில்நுட்ப ரீதியாக திலையற்றதான அல்லது தனது இலக்குகளுடன் சம்பந்தமில்லாத ஒரு ப்ொருளாதார வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயன்றால் அது தோல்வியடையும்.
ஒரு பொருளாதாரத் திட்டத்தில் இங்கு ஏற்படும் தவறு என்னவெனில் அரசியல் அதிகாரமும், உறுதியான தொழில் நுட்ப அத்திவாரமும் ஒன்றுக்கொன்று மாற்றீடு என்று நம்புவதாகும். உண்மையில் இவை இரண்டும் ஒன்றில் ஒன்று தங்கி இருக்கின்றன. இவ்வாறு தவறாக நம்புவதினால் இன்னொரு விளைவும் ஏற்படலாம். அதாவது ஒரு பொருளாதாரக் கொள்கையை அமுல் செய்வதில், வலிமையான தொழில்நுட்ப அத்திவாரம் இல்லாத நிலையை அரசியல் அதிகாரத்தைக் கொண்டு நிரந்தரமாக ஈடுகட்டிவிடலாம் என்ற குருட்டு நம்பிக்கையாகும்.
இந்தத் தவறு ஒரு புது நிர்வாகத்தின் ஆரம்பத்திலேயே பெரும்பாலும் இழைக்கப்படுகிறது. இது சதிமுயற்சியின் காரணமாக ஏற்படும் நிர்வாகத்துக்கும், சனநாயகரீதியாக ஏற்படும் நிர்வாகத்திற்கும் பொருத்தமானதே. ஏனெனில் எந்த நிர்வாகத்தினதும் ஆரம்பநிலையில் அரசியல் அதிகாரம் அபரிதமாகக் காணப்படுகிறது. இது, ஆர்ஜென்டீனாவின் சகல பொருளாதார வரலாறுகளிலும் "தவறவிட்ட” சந்தர்ப்பங்கள் (Missed opportunities) பற்றி ஏன் கூறப்படுகிறது என்பதை விளக்கும்.
உண்மையில் இந்தத் தவறு பொதுவாக மந்திரிமாரை விட நிர்வாகங்களுக்கே பொருந்தும். அதிகாரத்தை இழந்து நீண்டகாலம் இருந்தவர்களின் கைகளில் திடீரென அதிகாரம் வந்து சேர வழிவகுக்கும் ஒரு நிறுவனரீதியான நிலையற்றதன்மைக்குக் (lnstitutional instability) கொடுக்கப்படும் விலையாகும். இவ்வேளைகளில் அரசாங்கத்தின் பதவிகள் பேச்சுத் திறமை, நற்குணங்கள் கொண்ட தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்தப் பண்புகள் ஓர் அரசாங்கத்தை நடத்தவதற்குத் தேவையான நடைமுறைத் தகுதிகள் அல்ல, மேலும் அவை ஒரு பதவிக்குத்
73

Page 39
தேவையான தகைமைகளும் அல்ல. பொதுவாகக் கூறினால் பொருளாதார அமைச்சர்களின் “தொழில்நுட்பத் தகைமைகளானது" நிர்வாகத்தில் (Technical qualifications) காலம் செல்லச் செல்ல அதிகரிக்கிறது.
அரசாங்கம் - சமுதாயம் ஆகியவற்றுக்கு இடையிலான அதிகார உறவுகள் மட்டுமின்றிப் பொருளாதார அமைச்சருக்கும் அரசாங்கத்துக்கும் உள்ள அதிகார உறவுகள் பற்றியும் ஆராய வேண்டும். ஒரு பொருளாதார மந்திரியைப் பொறுத்தவரையில் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளின் "கருக்கொள்ளல்” ஆனது நாட்டின் நிர்வாகத் தலைவருடன் (ஆர்ஜென்டீனாவின் சனாதிபதி) தொடங்க வேண்டும். பொதுவாகப் பொருளாதார ஆய்வுகள் தொடர்பாக நிர்வாகத் தலைவர் எதுவும் அறிந்திருக்கமாட்டார். அத்துடன் அதை அறியும் ஆர்வமும் அவரிடம் இருக்காது.
இவ்வாறு கூறுவது ஒரு சனாதிபதியைப் பொருளியலாளராக மாற்றுவதாகாது. அவ்வாறு நினைப்பதென்பது சுகாதார அமைச்சரை ஒரு மருத்துவராக அல்லது பொதுப்பணி மற்றும் சேவைகள் அமைச்சரைப் பொறியியலாளராக மாற்றுவதற்கு ஒப்பானது. இங்கு முக்கியமானது என்னவெனில் நிர்வாகத் தலைவர் என்பவர் பொருளியலின் மூல தத்துவங்களான அருமை, சாதனப் பங்கீடு முதலியவற்றையும் மாற்று அணுகு முறைகளையும் தெரிந்திருக்க வேண்டும் என்பதே.
எனவே ஒரு பொருளாதார அமைச்சருக்கு இவ் வடிப் படைத் தத்துவங்களைச் சனாதிபதியின் சிந்தனையோட்டத்தில் இணைப்பது மிகவும் முக்கியமானதாகும். இதனைச் செய்வதற்கு முதலில் இம் மூலதத்துவங்கள் முக்கியமானவை என்பதைப் பொருளாதார அமைச்சர் நம்பவேண்டும். அவ்வாறு அவர் தானே நம் பாவிட்டால், சனாதிபதியானவர் "டொன் ஜோசே" (Don Jose) போலத்தான் நடந்து கொள்வார். ஒரு நாட்டிய நாடகத்தில் டொன்ஜோசே விரக்தியுற்ற கார்மென்னிடம் (carmen) பின்வருமாறு கேட்கிறான். "நீதான் கார்மென் என்று நீயே நம்பாவிட்டால் வேறு யார் நம்பப் போகிறார்கள்?” சனாதிபதியின் பொருளாதார விடய ஞானத்தில் இக் கோட்பாடுகளைத் திணிப்பதற்குப் பொருளாதார அமைச்சர் முயற்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சனாதிபதியின் உணர்வுகளின் வெளிப்பாடான சகல கற்பனையான காரணங்களும், அவருடன் தொடர்பு கொள்ளும் ஏனைய நபர்களின் கற்பனாவாதங்களும் ஈடுபாடுகளும் சேர்ந்த ஒரு கலவையே அவரது பொருளாதார அறிவின் அடித்தளமாகிவிடும். இதில் எந்த வழியிலும் பொருளாதாரக் கொள்கையானது போதுமான அளவு புறநிலைச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டமையாது. இதன் விளைவாக ஒரு மாபெரும் தவறு(கள்) ஏற்படும்.
74

(2) நேரம் (Time) நிச்சயமாகத் தனது பக்கத்தில் உள்ளது என்ற
நம்பிக்கை.
இந்த வரைவிலக்கணத்தின் அடிப்டையில் ஒரு பொருளாதார அமைச்சர் தன்னைத்தானே எந்தவேளையிலும் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கியமான கேள்வி இதுதான். "நிகழ்காலப்பொருளாதாரக் கொள்கையில் நேரம் என்னும் மூலகம் என்ன பங்கு வகிக்கிறது? அது எமக்குச் சார்பாகவா, எதிராகவா அல்லது நடுநிலையாகவா உள்ளது?”
பொருளாதாரக் கொள்கையை உருவாக்குபவர்கள் நேரம் தமக்கு எதிராக இயங்குவதாக முடிவு கூறுகிறார்கள். அவர்கள் செயற்படாவிட்டால் பொருளாதாரச் சூழ்நிலை வீழ்ச்சி அடையும் . இவ் விடயத்தில் செயற்படாமை என்னும் தவறு அரசியற் குழப்பங்கள் தொடர்பான பயத்தில் தங்கியுள்ளது.
இந்தத் தவறு ஒரு மிகத் தெளிவான விளைவை உருவாக்குகிறது. இவ் விளைவானது 'தீ விபத்துக்கான அறிகுறிகள் காலையில் தென்பட்டபோது அதனை அணைத்துவிடத் தைரியம் இல்லாததால் பின்னேரத்தில் தீயணைப்புப் படையை அழைக்கும் நிலை ஏற்படுவதற்கு” ஒப்பானது. இது ஒரு பொருளாதாரக் கொள்கை சார்ந்த பிரச்சினை. எனினும் இதன் மொத்தப் பிரச்சினையின் காரணம் சாதாரணமாக சமமின்மையின் தொழில்நுட்பரீதியான சீர்கேடு மாத்திரமல்ல தனியார் துறையினரிடமிருந்து எதிர்பார்க்கக்கூடிய பிரதிபலிப்புகளும்தான். சமமின்மை அதிகரிக்கும்போது தனியார்துறை தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நடந்து கொள்ளும் முறையானது சமமின்மையை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளுகிறது. பெற்றோல் வழங்கல் குறையும்போது தமது பெற்றோல் தாங்கிகளை நிரப்பிக் கொள்ள முண்டியடித்தல், டொலர்களின் இருப்பு குறைதல். அதேநேரத்தில் தமது டொலர் இருப்பை உயர்த்திக் கொள்ளுதல் போன்றன பிரதியீட்டுச் செயலாகவும் உள்ளது.
இத்தவறுக்கு முகம் கொடுப்பதற்கு நாம் இருவழி அணுகு முறையை விதந்துரைக்கிறோம். அதாவது இச் சமநிலைத் தளம்பல் ஏற்கனவே இருக்குமாயின் அரசியல் விளைவுகளையோ அல்லது எதிர்பார்ப்புக்களைப் பற்றியோ கவலைப்படாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல். இது நடவடிக்கையைத் தாமதித்து எடுப்பதால் ஏற்படும் செலவுகளைவிடக் குறைவானது. இத்துடன் தடுப்பு நடவடிக்கையும் முக்கியமானது. அதாவது ஒரு பொருளாதார வேலைத் திட்டம் சமமின்மையைக் கொண்டிருக்கக் கூடாது. இதற்கான காரணத்தை “வாட்டர்கேட் ஊழல் விவகாரத்தில்” நடந்த ஒரு சம்பவம் தெளிவாக விளக்குகிறது. இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட ஒரு நபர் தனது விடுதலைக்காகத் தகவல் கொடுக்கச் சம்மதித்தார். என்ன காரணத்துக்காக அவர் தகவல் தரத் தீர்மானித்தார்
75

Page 40
என்பதைப் பற்றி விசாரித்தபோது அவர் பின்வருமாறு கூறினார். "உன்னுடைய முகத்தில் சுவர் இடிக்கும்போது உண்மையைச் சொல்லிவிடு என்று எனது தந்தை எனக்குக் கூறியுள்ளார்”. இந்தப்பதிலின் இன்னொரு பரிமாணம். "எனது தந்தை எப்போதும் உண்மை சொல்லுமாறு எனக்குப் படிப்பித்துள்ளார். அவ்வாறு உண்மையே கூறினால் எனது முதுகில் சுவர் இடிக்கும் நிலைக்கு நான் ஒருபோதும் தள்ளப்படமாட்டேன்.”
ஆர்ஜென்டீனாவின் பொருளாதார வரலாறு"நேரத்தின் முக்கிய பங்கினை ஏற்றுக்கொள்ளத் தவறியதால் ஏற்பட்டதோல்விகள்” என்னும் தவறுகளால் நிரம்பியுள்ளது. இந்தத் தவறுகளுக்காகப் பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவோர் உண்மையில் பெரியதொரு விலையைக் கொடுத்துள்ளனர்.
(3) விடயங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குப் போதுமான அவகாசம்
உண்டு என்னும் நம்பிக்கை.
இக் கருத்து ஏற்கனவே பொருளாதார அமைச்சில் பணியாற்றுவோருக்குப் பொருத்தமானதல்ல. மாறாக எதிர்காலத்தில் அரசாங்கத்தில் தீர்மானம் மேற்கொள்ளும் நிலையை அடையப்போகும் நிலையிலுள்ளோருக்கு ஒரு முன்னறிவிப்பு ஆகும். எந்தவொரு அமைச்சரும் தான் பதவியிலிருக்கும்போது ஒரு வேலைத் திட்டத்தை உருவாக்குவதைப் பின்போடுவாரெனில் இறுதியில் அவர் கொள்கை தொடர்பான தனது சகல கட்டுப்பாடுகளையும் அதிகாரத்துவம் அல்லது தமக்கு சார்பானவர்கள் போன்ற விரும்பத்தகாத வட்டங்களிடம்தான் கையளிப்பார். குறிப்பான புள்ளிவிபரங்களின் (அநேகமாக இது பதவியில் இல்லாதவர்களுக்குக் கிடைக்காது) அடிப்படையில் தனது "குறிக்கோள்களை இன்னும் கூர்மையாக்கிக் கொள்வது” என்பது ஒரு விடயம். தனது அரசாங்கக் கடமைகளைச் செய்யும் நேரத்தில் சகல விடயங்களையும் பற்றிச் சிந்திக்க நிறைய அவகாசம் இருப்பதாக நம்பிக்கொண்டிருப்பது இன்னொரு விடயம்.
இவ்விடயத்தை ஹென்றி கீசிங்கர் (Henry Kissinger) தனது நினைவுக் குறிப்புகளில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். தீர்மானம் எப்படி மேற்கொள்வதென்பதைத் தெரிந்திருப்பதையும் என்ன தீர்மானம் மேற்கொள்வது என்பதைத் தெரிந்திருப்பதையும் அவர் தெளிவாக வேறுபடுத்தியுள்ளார். கீஸிங்கர் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டிலுள்ள “தந்திரோபாயங்களை” அரசாங்கத்திற் பணியாற்றியதன்மூலம் ஏற்கனவே தெரிந்துவைத்திருந்தார். எனவேதான் பதவியேற்ற தருணத்திலேயே தான் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களின் உள்ளடக்கத்தைத் தெரிந்து வைத்திருந்தார்.
76

(4) பொருளாதாரப் பிரச்சினைகளைத் தனது ஆலோசனையாளர்கள் தெரிந்து வைத்திருந்தால்போதும், தனக்கு அவை முக்கியமல்ல என்ற நம்பிக்கை.
"பொருளாதார அமைச்சர் ஓர் அரசியல்வாதியாக இருக்க வேண்டும், ஒரு தொழில் நுட்பவியலாளராக அல்ல." “பொருளாதாரத்தை பொருளியலாளரிடம் மட்டும் விட்டுவிட முடியாது. ஏனெனில் அது மிக முக்கியமானது." அடிக்கடி வெளிப்படுத்தப்படும் இத்தகைய கூற்றுக்கள் பெரிய உண்மையை மட்டுமல்ல பெரியதொரு பொய்மையையும் கொண்டுள்ளன.
இத்தகைய கூற்றுக்கள் அரசியற் தீர்மானங்களுக்கு அரசியல் பிரமாணத்தின் (Criteria) பிரயோகமும் தேவை (அதாவது செயலாற்றக் கூடிய பல மாற்றிடுகளுக்கு மத்தியில் சிறந்த பொருளாதாரக் கொள்கையைத் தெரிவு செய்தல் அடிப்படையில் ஒர் அரசியற் செயற்பாடு ஆகும்) எனக் கூறுகின்றன எனக்கொண்டால் அவை சிறந்ததொரு உண்மையைப் புலப்படுத்துகின்றன. ஆனால் இக்கூற்றுக்களின் பொருள், பொருளியல் நிபுணர்கள் அரசியல்வாதிகளின் திருப்திக்காகத் தொழில்நுட்பரீதியில் மிக மோசமான ஆலோசனைகளைத்தான் வழங்கவேண்டும் என்றால் இக் கூற்றுக்கள் ஒரு பெரிய பொய்மையையே காட்டி நிற்கின்றன. இதன் அடிப்படையில் பொருளாதார அமைச்சர் தொழில்நுட்பப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சதாகாலமும்முயன்றுகொண்டிருப்பார். அல்லது அவற்றை முற்றாக நிராகரித்திருப்பார்.
மிகையான அதிகார ஒப்படைப்பு இங்கு ஏற்படும் தவறு. ஒரு நல்ல பொருளாதார அமைச்சர் தனது தீர்மானங்கள் தொடர்பாக ஒரு முகான்மத்துவரீதியான அணுகு முறையையும், மனப்பான்மையையும் கொண்டிருப்பார். மேலும் இவை நடைமுறையில் பொருந்தும் வகையில் அவர் தொழிற்படுவார். தான் விரும்பும் மாற்றங்களை அமுல்படுத்த என்னமாதிரியான சீர்திருத்தங்கள் தேவை என்பதைப் பொருளியல் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து அறிந்து கொள்வார். அதே வேளை நடைமுறைப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்பதை அறிந்து கொள்ளத் தொழில்நுட்ப மட்டத்தில் போதுமான விடயங்களை அவர் அறிந்திருக்கவும் வேண்டும்.
ஒரு பொருளாதார அமைச்சர் பொருளாதார நிபுணர்களுக்கு எதிராக இருவகையான தவறுகளை விடமுடியும். ஒன்று மிகையான தவறுகள். Lofbos (56DD6hull 56) glassir. (Sins of excess or insufficiency) கெய்ன்ஸ் குறிப்பிட்டதுபோல அவர் செயலுTக்கமுள்ள நவீன பொருளியலாளரை “வெறும் தத்துவார்த்திகள்” எனக் கருதி அவர்களது
77

Page 41
கருத்துக்களுக்குச் செவி சாய்க்காமல் பழைய பொருளியலாளரின் கோட்பாடுகளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும்போது குறைவு அல்லது போதாமை (insuliciency) என்னும் தவறுகளைச் செய்கிறார். மறுதலையாகப் பொருளியல் வரலாறு அல்லது வரலாறு பற்றிய விளக்கமில்லாமல் வெறுமனே தமது தொழில்நுட்ப அறிவை உயர்த்திப்பிடிக்கும் பொருளியலாளரின் அறிவுரைகளையும் ஆலோசனை களையும் பக்தியுடன் பின்பற்றும்போது அவர் மிகை (excess) என்னும் தவறுகளை விடுகிறார்.
(5) புள்ளிவிபரங்கள் சகல உண்மைகளையும் தருகின்றன அல்லது
அவை சொல்பவை எல்லாமே பொய்கள் என்னும் நம்பிக்கை.
பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் அலுவலர்கள் தமது தனிப்பட்ட, நெருக்கமான நுண்பாகப் பொருளியல்சார் அனுபவங்களின் பாற்பட்ட கருத்துக்களை ஒழுங்குபடுத்தச், சிறப்பாகப் பேரினப் பொருளியல்சார் புள்ளிவிபரங்கள் இன்றியமையாதவை. இறுதி ஆய்வில் பிரச்சினைகளைப் புறவயமாக விளங்கிக் கொள்வதற்குப் பொருளியலா ளர்களுக்குப் புள்ளி விபரங்கள் உதவுகின்றன. அதாவது நேரம் உட்பட ஒவ்வொரு அம்சத்திலும் ஏற்படும் வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள முடிகிறது.
எவ்வாறெனினும் கோட்பாடு மற்றும் நடைமுறைக் காரணங்களுக்காக புள்ளி விபரங்கள் யதார்த்த நிலையை முழுமையாகக் காட்டுவதில்லை. ஒரு கருத்தினை அளவீடு செய்யும்போது கருத்தியல்ரீதியான சிக்கல்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக ஒரு நபரின் அல்லது சமுதாயத்தின் நலன்களை எவ்வாறு அளவீடு செய்ய முடியும். பல்வகைச் சுட்டிகளின் பெருக்கத்தினால் இப்பிரச்சினை மேலும் சிக்கலடையக்கூடும். நடைமுறை ரீதியாகப் புள்ளிவிபரங்களைத் திரட்டிச், சீராக்கிப், பயன்படுத்தல் தொடர்பாக ஏற்படும்பாரிய செலவுகள் இம்முழுச்செயலையும் தடுத்துவிடக் கூடும். தவிர்த்துவிடும் தவறு என்பது (Simotomission) புள்ளிவிபரங்களை அசட்டை செய்வதிலும் நேரடியான ஆனால் நுண்பொருளியல்சார் அவதானங்கள் முழுவதனையும் தழுவாது தீர்மானங்களை மேற் கொள்ளுதலில் தங்கியிருத்தலால் ஏற்படுகிறது. மிகை என்னும் தவறு, தீர்மானம் மேற்கொள்ளலில் தரம் என்பதைக் கவனத்தில் கொள்ளாது நேரடியாகப் புள்ளி விபரங்களில் தங்கியிருப்பதனால் ஏற்படுகிறது.
ஒரு சரியான மத்திய வழி, புள்ளிவிபரங்களை நீச்சலுடைக்கு ஒப்பிடுவதன் மூலம் சொல்லப்படுகிறது. அதாவது நீச்சலுடை வெளிக்காட்டுவது முக்கியம். ஆனால் அது மறைப்பது அடிப்படையானது (Whatthey reveal is important, but what they cover up is fundamental). G, sirof sur நிபுணனின் முன்னிலையில் இக்கூற்றினை இவ்வாறு நிறைவுசெய்யலாம்.
78

“ஏனெனில் அது மறைப்பது அடிப்படையானது என்றாலும்கூட அது காட்டுவது முக்கியமானது. ”
(6) சந்தர்ப்பங்களைக் கை நழுவவிடும் மனிதர்கள் இருக்கிறார்கள்
என்னும் நம்பிக்கை
பிள்ளைகளால் உடைத்தெறியக் கூடிய விளையாட்டுப் பொருட்கள் நிலைப்பதில்லை. அதேபோல மக்களுக்கு ஏற்றவிதத்தில் அமையாத எந்தவொரு வேலைத் திட்டமும் நிலைக்காது. மக்கள் தேவதைகளாக இல்லாமலிருப்பது உண்மையில் பரிதாபகரமானது. நாம் எல்லோரும் தேவதைகளாக இருப்பின் மீள் ஒதுக்கீடு செய்யப்படும் வளங்களின் விளைவுகளைப் பற்றி எண்ணியதுண்டா. பாதுகாப்புச் செலவுகள், நீதிமன்ற நிறுவனங்கள் போன்ற மக்களின் இவ்வாறான தேவைகளை ஈடுசெய்வதற்காக எவ்வளவு வளங்கள் செலவழிக்கப்படுகின்றன.
எவ்வாறெனினும் மனிதன் மனிதனே ஒழுக்கவியலாளரும், சமயவாதிகளும் தொழில்ரீதியாக மனிதனைச் சீர்திருத்துவதற்கு முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொரு முயற்சியிலும் தொழில்கள், பொறுப்புகள் மனிதனை மனிதனாகவே ஏற்றுக்கொள்ள வேண்டுமெனக் கூறுகின்றன. இவ்வடிப்படையை ஏற்றுக்கொண்டு ஆக்கப்படுகின்ற காரணத்தினால் பொருளாதாரத் திட்டங்கள் செயலாக்கரீதியில் பெறுமதிமிக்கவை. இதே காரணத்தினால்தான் அதாவது மனிதனின் இயல்பை ஏற்றுக்கொள்கின்ற காரணத்தினால் சில நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அடம்ஸ்சிமித்தின் அடிப்படைவிதிகள் பெறுமதிமிக்கவையாகவும் பொருத்தமானவையாகவும் காணப்படுகின்றன.
இங்கு அமைச்சர் விடும் தவறு யாதெனில் தன்னுடைய கொள்கை வெறி றியடைவதற்காக வித்தியாசமான மனித நடத்தையில் தங்கியிருத்தலாகும். அதாவது மக்கள் கொள்கை மாற்றத்தைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டுமெனவும், சந்தர்ப்பங்களைக் கை நழுவவிட வேண்டும் எனவும் எதிர்பார்த்தலாகும். வரலாறு எமக்கு உணர்த்துவது என்னவெனில் இவ்வாறான நம்பிக்கைகள் கடதாசிகளிலும், கார்ட்டூன் சித்திரங்களிலும் தான் இருக்கும் என்பதே.
இச் சூழ்நிலையில் மனிதனுக்கும் அவனது பங்குக்கும் (role) அடிப்படை வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு அமைச்சர் மனித நடத்தையைத் தனிப்பட்ட ரீதியில் அல்லாது பாத்திரத்தின் அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர் பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும்போது, பொருளாதாரத்தின் தீர்க்கமான இயக்கத்தையும் அதன் விளைவாக எதிர்காலக் கொள்கைகளுக்கு ஏற்படும் உண்மையான பிரதிபலிப்புகளையும் புரிந்துகொள்ள முடியும், அதாவது "கசாப்புக் கடைக்காரனும், வாடகைக் கார் ஓட்டுநரும்,
79

Page 42
சொத்துடைமையாளனும் நான் அவர்களாக இருந்தால் என்ன செய்வேனோ அதையேதான் அவர்களும் செய்வார்கள் என்பதை அவர் நினைவிலிருத்திக் கொள்ளவேண்டும்.
இந்த அணுகுமுறையின்படி, பொருளாதாரக் கொள்கையை உருவாக்கும் அரசாங்க அலுவலர் இதனைக் கவனத்திற் கொள்ள வேண்டும். நான் நுண்பொருளியல் அடிப்படையில் (அதாவது தனிநபர் தீர்மானம் மேற்கொள்ளும் மட்டத்தில்) எதனை “வாங்க" மாட்டேனோ அதனை நான் மற்றவர்களுக்கு “விற்க” வும் முடியாது. உதாரணமாக வாடகைக் கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் அரசாங்க அலுவலர்கள் வாடகைக்கு விடப்படும் எத்தனை வீடுகளைச் சொந்தமாகக் கொண்டிருக்கிறார்கள். வட்டி விகிதத்தைப் பணவீக்க விகிதத்திற்குக் கீழ் நிறுத்தி வைக்கும் மத்திய வங்கி அதிகாரிகள் தமது மொத்தச் சொத்துக்களில் எத்தனை வீதத்தைச் சேமிப்பு வங்கியில் வைத்திருக்கிறார்கள்.
(7) கொள்கைகள் அல்லது நடவடிக்கைகளை விளக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இறுதி ஆய்வில் மக்கள் அதனை விளங்கிக் கொள்ளமாட்டார்கள் என்னும் நம்பிக்கை.
ஒரு பொருளாதார அமைச்சர் செய்யக்கூடிய இன்னொரு தவறு எல்லா விடயங்களும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன அல்லது எல்லாவற்றையும்விடத் தான் விரைந்து செயலாற்றுவதாகவும் எண்ணிக் கொள்ளுதல். இந்த மனப்பான்மை காரணமாகக் கொள்கை தொடர்பான ஒரு தீவிரச் செயலாண்மையை (activism) நடைமுறைப்படுத்தக்கூடும். உதாரணமாகத் தகவல்களை மறைத்தல் அல்லது அதன் முக்கியத்துவம் நீங்கும்வரை அதன் வெளியீட்டைத் தாமதப்படுத்தல் முதலியன. அல்லது அவர் டொலரின் கள்ளச் சந்தைவிலை, விலைச் சுட்டிகள் முதலான தரவுகளை முற்றாகத் தடுத்துவைப்பதன் மூலம் இதனைச் செய்யக்கூடும். இம் மனப்பான்மை நுண்பொருளியல் அடிப்படையில் நவீன "வாங்க” விரும்பாத பொருளாதாரத் திட்டங்களை நாட்டு மக்களை "வாங்க” வைக்கும் சட்டவாக்கங்களை அனுமதிக்க அவரைத் தூண்டலாம். (இங்கு வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை உருவாக்குபவர்கள் தமது சொந்த வீடுகளை வாடகைக்கு விடுவார்களா என்னும் உதாரணத்தை நினைவுபடுத்துக). இறுதியாக இத்தகைய தவறு மேற்கூறிய தவறுடன் சம்பந்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தனது பொருளாதாரக் கொள்கைகளுக்குப் பொதுமக்களிடமிருந்து எதிர்பாராத வகையில் எதிர்ப்புகள் கிளம்பும்போது அவற்றைப் பகுத்தறிவற்றவை எனவும் அசாதாரணமானவை எனவும் நிராகரித்தும் விடுகிறார். இதற்கு நல்ல உதாரணம் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் அதே தருணம் பெற்றோலை நிரப்பிக்கொள்ள மக்கள் அவதிப்படும்போது ஆர்ஜென்டீனா அதிகாரிகள் வெளிப்படுத்தும் கோபமாகும்.
80

சூழ்நிலைகள் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகளைப் பாரிய "உயிருள்ள பொருளாதாரப் பாடசாலைகளாக” (living school of economics) மாற்றியுள்ளன. பொருளாதார நாடகத்தில் பங்கெடுக்கும் ஒரு சராசரி மனிதன் பொருளாதார கலைச்சொற்களை அறியாதவனாக இருக்கலாம். ஆனால் அவன் தப்பிப் பிழைக்கும் காரணத்தால் அவன் பொருளாதாரக் கோட்பாடுகளை அறிவான் என்பதற்கு நிரூபணமாகவும் உள்ளான். ஒரு குழம்பிய சூழ்நிலையில் அவன் கருத்தியல் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்கக்கூடும். ஆனால் அவன் பணரீதியில் கஷ்டப்படமாட்டான். அத்துடன் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் சில காரணிகளை மக்கள் இனங்கண்டு கொண்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் ஆர்ஜென்டீனா போன்ற நாடுகள் அதனைச் சமநிலைப்படுத்துவதற்காக மிக விரைந்து செயலாற்றுகின்றன.
ஆர்ஜென்டீனா விடயத்தில் பகுத்தறிவுக்கு உடன்பாடான எதிர்பார்ப்புகள் மட்டுமல்ல"அதீத பகுத்தறிவு" (superational) சார்பான எதிர்பார்ப்புகளும் உண்டு என நான் நம்புகிறேன். இங்கு அரசின் பொருளாதாரக் கொள்கை தொழில்நுட்பரீதியில் நடைமுறைப்படுத்த முடியாது என மக்கள் எதிர்நோக்குகின்றனர். எனவே அதிலிருந்து தப்பிக்க "நோவாவின் கப்பல்” (Noah's Ark) மாதிரியைப் பின்பற்றுகின்றனர். ஆர்ஜென்டீனா போன்ற நாடுகளில் பொருளாதார அமைச்சர்தான் தனது மக்களைவிடப்புத்திசாலி என்று எண்ணிக் கொள்கிறார். ஆனால் அவர் தன் மக்களைவிட மிகவும் முட்டாளாவார்.
இத்தகைய தவறுகளுடன் மற்ற எல்லைக்கும் பொருளாதார அமைச்சர் சென்றுவிடக் கூடாது. தீவிர ஆய்வுக்கு ஒரு முழுமையான மாற்றீடுதான் “பேச்சுவார்த்தை" (dialogue) என நம்புவதே அந்த எல்லை. ஆர்ஜென்டீனாவின் சகல பொருளாதார அமைச்சர்களிடம் காணப்பட்ட மிக மோசமான தவறு சுயாதீன நடத்தையிலும் (Voluntarism) அதன் கருவியான “பேச்சுவார்த்தையிலும்” உள்ள நம்பிக்கையாகும். நாட்டு மக்கள் தமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்ளைத் தமது நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளமாட்டார்கள் என்று நம்புவதே சுயாதீன நடத்தையாகும் . சமூக ஒற்றுமை, தேசபக்தி, முறைமையைக் காத்துக்கொள்ளல் போன்ற விழுமியங்களைக் காத்துக்கொள்வதற்காகவே அவர்கள் அவற்றைத் தவிர்க்கின்றனர். பொருளாதாரக் கொள்கை இலக்குகளை அடைய இந்த நம்பிக்கை உதவுவதுபோலத் தோன்றுகிறது. இதற்காகப் பயன்படுத்தப்படும் கருவிகள் பொருளியல் ஆய்வின்படி காத்திரமானவை அல்ல. பொருளாதாரக் கொள்கைகள் வெற்றியடைந்த நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் சுயாதீன நடத்தையில் நம்பிக்கை கொண்ட அமைச்சர்கள் ஆகியோரின் அணுகுமுறைகளை ஒப்பிட்டுப் பார்க்க இது மிகவும் உதவியாக உள்ளது.
81

Page 43
சுயாதீனமான அணுகுமுறை நல்ல பெறுபேறுகளைத் தருவதில்லை. ஆனால் செலவு மிகுந்தவை. எப்போதும் அரிதாக விளங்கும் மனித, மூலப் பொருள் வளங்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தும் நிலையிலிருந்து அவற்றைப் பிரயோசனமற்ற நிலைக்கு மாற்றுகின்றன. பொருளாதார அமைச்சருக்குப் பொருளாதாரக் கொள்கையின் திட்டமிடல் , அமுலாக்கலிலிருந்து ஒரு திசை திருப்பலாக இது அமைகின்றது. ஆனால் தனியார் துறைக்குப் பொருளாதாரக் கொள்கை அமைப்புக்குள் ஆக்கபூர்வமான போட்டி நடவடிக்கைகளிலிருந்து திசைதிருப்பப்படும் ஒரு விடயமாக அமைகிறது. அமைச்சரும் அவர் இணங்க வைக்க முயற்சி செய்யும் தனியார் துறையும் எதிரும் புதிருமாக இருப்பதால் “பேச்சு வார்த்தை"யின் பயனின்மை தெளிவானதாகும். பேச்சுவார்த்தையில் அமைச்சர் இணங்க வைக்க முயற்சி செய்கிறார். மறுதலையாக தனியார் துறை அமைச்சருக்கு எதிரான வாதங்களை வைக்க விரும்புவதில்லை. இவ்வாறு செய்யுமிடத்து வரிவிதிப்பு, திடீர்க் கணக்காய்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படலாம் என்ற பயம் அவர்களிடம் உண்டு. தனியார் துறை அமைச்சர் சொல்லுவதைக் கவனமாகக் கேட்டு அவரைப் பாராட்டுகிறது. ஆனால் பின்னர் பொருளியலாளர் எதிர்வுகூறுவதைப்போல நடந்துகொள்கிறது. அதாவது தனது தனிப்பட்ட இலாபங்களை உச்சப்படுத்திக் கொள்கிறது.
இவ்வாறான நிலைமைகளில் ஒரு பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் நேரடியான அனுபவமுள்ள ஒருவரால்தான் இவ்வனுபவங்கள் எவ்வளவு நேரவிரயம், மனித சக்திவிரயம் ஆகியவற்றுடன் கூடிய விரக்தி என்பது விளங்கும்.
(8) தனியார்துறை சொல்லும் சகலவற்றிலும் நம்பிக்கை அல்லது
அவர்கள் சொல்லும் எதிலும் நம்பிக்கையின்மை
உலகில் ஒவ்வொரு பொருளியல் உயிரியும் (econamic actor) தனது தன்ரிப்பட்ட நலன்களை உச்சப்படுத்திக் கொள்ள முனைகிற்து. ஆர்ஜென்டீனா போன்ற அரச கட்டுப்பாடுகள் (இவை இயல்பாகவே பாகுபாடானவை) கொண்ட ஒரு பொருளாதாரத்தில் தனியார்துறையின் நலன்கள் என்பது பெருமளவுக்குப் பொருளாதாரக் கொள்கைகளின் செயற்பாடுகளாகும். மாறாகப், பொருளாதார கொள்கைகள் என்பது பொருளாதாரப் பிரச்சினைகள், அவற்றின் தீர்வு ஆகியவற்றைப் பொருளாதாரக் கொள்கையை உருவாக்குபவர்கள் எவ்வாறு உணர்கிறார்கள் என்ற செயன்முறையாகும். இந்நிலையில் தகவல், பேச்சுவார்த்தைக்கான ஆயுதமாக (negotlating tool) அமைகிறது. தனியார்துறையினர் தமது நலன்களை உச்சப்படுத்திக் கொள்ளவும் பொருளாதார அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளவும் (அதாவது அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனத் தான் விரும்புவதை மட்டும்) தகவல் ஒரு கருவியாகப் பயன்படுகிறது.
82

தகவல்களைப் புள்ளிவிபரங்கள் வழங்குகின்றன. தனிப்பட்ட வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தொடர்பாகப் பொருளாதார அமைச்சர் மிகை அல்லது குறை தவறுகளை விடக்கூடும். எனினும் இங்குள்ள பிரச்சினை வித்தியாசமானது. ஒன்று தகவல்களுடன் இணைந்துவரும் தவிர்க்க முடியாத தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள்: மற்றது தகவல்களை வெளிப்படையாகவே அரசியல்மயப்படுத்தல் (politicisation of information) 6Tairussted.
இந்த யதார்த்தத்தின் அடிப்படையில் பொருளாதார அமைச்சர் சில அத்துமீறல்களைக் (Transgressions) கையாளலாம். அதாவது தனியார்துறை தரும் தகவல்கள் யாவும் பக்கம் சார்ந்தவை என அவற்றை முற்றுமுழுதாக நிராகரிக்கலாம். அல்லது தகவலின்மையைவிடத் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் மேலானவை என்ற அடிப்படையில் அவற்றைத் தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம். முதலாவது தவறு தனியார் துறை தரக்கூடிய பயன்தரு தகவல்களையும் கூட நிராகரிப்பதாகும். இரண்டாவது தவறு தகவல்கள் சுயநலன்கள் அடிப்படையில் திரிபுபட்டிருப்பதைக் கண்டுகொள்ளத் தவறுவதாகும். தனியார்துறையினரை அவர்களது பிரதிநிதிகள் ஊடாகச் சந்திக்கும் அரசாங்க அதிகாரி தனியார்துறையினரைச் "சிலருரிமையாக்க” (olgopolize) அல்லது தனியுரிமையாக்க (monopolze) முயல்வதை உணரவேண்டும். இதன் காரணம் என்னவெனில் ஓர் அரசாங்க அதிகாரி தனியார்துறையினரைக் கலந்தாலோசிக்க அழைக்கும்போது அவர்கள் தமது பிரிவுகளை மறந்து ஒற்றுமையாகிவிடுவார்கள்.
(9) சட்டவாக்கம் பொருளாதார விவகாரங்களை ஒழுங்குபடுத்தி விடும் எனவும் அமுலாக்கற் பிரச்சினை வெறுமனே நிறைவேற்றுப் பிரச்சினை மட்டுமே என்னும் நம்பிக்கை,
இந்தத் தவறு சட்டவரம்பு (legality), சட்டவிரோதம் (legality) என்னும் இரு மட்டங்களில் தன்னை இனங்காட்டி நிற்கிறது. ஓர் ஆய்வுக்காக வரிவிதிப்புக்கோட்பாட்டின் சொற்களஞ்சியம் பிரயோசனமானது. இந்தக் கோட்பாடு ஒரு வரிவிதிப்பின் அல்லது வரி நீக்கத்தின் தாக்கத்தை உண்மையாக அனுபவிப்பவர்கள் யார் என்பதை ஆராய்கிறது. ஒரு வரிவிதிப்பிலிருந்து தப்பித்தல், தவிர்த்தல் ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இக்கோட்பாட்டின் ஓர் அம்சமாகும். உதாரணமாக கஸ்டார்ட் கிறீமின் (Custard Cream) நுகர்வில் வரிவிதிக்கப்படும்போது ஒருவர் "சொக்லட்” சாப்பிடத் தொடங்கினால் அவர் வரியிலிருந்து தப்பிக்கிறார்; கஸ்டாட் கிறீமை சாப்பிட்டுக்கொண்டு அதே நேரத்தில் வரியைக் கட்டாதுவிடும் ஒருவர் வரியைத் தவிர்த்துக் கொள்கிறார்.
83

Page 44
சட்டவரம்பு மட்டத்தில் விடப்படும் தவறு யாதெனில் பொருட்களுக்கும் பொருளியற் காரணிகளுக்கும் இடையில் உள்ள மாற்றிடு மற்றும் குறைநிரப்பு உறவுகளை மறப்பதாகும் . ஒழுங்கு விதிகளையும் சட்டங்களையும் உருவாக்குபவர்கள் பொருட்களும் பொருளாதாரக் காரணிகளும் எவ்வித சம்பந்தமுமில்லாமல் தனித்தனியாக இயங்குவதாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மை அதுவல்ல என்பதைத் தெரிந்து கொள்ளும்போது ஒழுங்குவிதிகளின் அல்லது சட்டங்களின் எல்லைகளை விஸ்தரிக்க முயலுகின்றனர். விலைக்கட்டுப்பாட்டுச் சபையில் ஏற்படும் நடவடிக்கைகள் அவற்றின் எதிர்விளைவுகள் ஆகியவற்றின் தொடர்ச்சி இதற்கு நல்ல உதாரணமாகும். வெதுப்பிமீது வரிவிதிக்கும்போது பேக்கரிக்காரர்கள் வரிவிதிப்புக்கு உட்படாத புதிய ரொட்டியை ஆக்குவார்கள். உடனே அரசாங்கமானது ஒழுங்குவிதிகளின் எல்லைகளை அகற்றி அவ்வாறான புதிய வெதுப்பிகள் செய்வதைத் தடைசெய்கிறது.
சட்டவிரோதம் என்னும் மட்டத்தில் பொருளியற்கூறுகள் சட்ட விதி களுக்கு உட்படுவதில் இலாப நட்டம் பார்க்கமாட்டார்கள் என அனுமானிப்பதில்தான் தவறு தங்கியுள்ளது. மாறாக ஒவ்வொருவரும் சட்ட விதிகளுக்கு உட்படுவார்கள். இச்சட்ட விதிகளுக்கு முரண்படுவதால் ஏற்படும் நட்டம், சட்டத்துக்கு உட்படுவதால் ஏற்படும் நன்மைகளைவிட மிகக் குறைவானதாக இருந்தபோதும் ஒவ்வொருவரும் சட்டத்துக்கு அமைவாக நடப்பதையே விரும்புகிறார்கள்.
ஒழுங்குவிதிகளில் எல்லைகள் தொடர்பான முக்கிய அம்சம் யாதெனில் வரி தவிர்ப்பினால் ஏற்படக்கூடிய நன்மைகளாகும். விதிகளின் எல்லைகள் எவ்வளவு விரிவுபட்டிருக்கின்றனவோ அவ்வளவுக்கு வரிதவிர்ப்பின் நன்மைகளும் அதிகரிக்கும்.
வரிவிதிப்பு முறைகளை உருவாக்குபவர்கள்தான் இத்தகைய தவறுகளை விடுகிறார்கள். எனெனில் கட்டுப்பாடு மற்றும் உண்மையறியும் (verifcation) விடயங்கள் “நிறைவேற்றுப் பிரச்சினைகள்" என்று இவர்கள் ஆரம்பத்திலேயே தீர்மானித்துக் கொள்கின்றனர். வரிஏய்ப்பு, தப்பித்தல் தொடர்பாக ஆக்கப்படும் திட்டங்கள் வரித் தவிர்ப்பை ஊக்குவிக்கின்றன. சமுதாய நலனில் அக்கறை கொண்டுள்ள பொருத்தமான அணுகுமுறை என்னவெனில் யதார்த்தத்தில் வரி ஏய்ப்பு, வரித் தவிர்ப்பு ஆகியவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்தை விளங்கிக்கொண்டு அதே நேரத்தில் சமூக நலன்களை உச்சப்படுத்திக்கொள்ளும் முறையேயாகும்.
84

பொருளாதாரக் கொள்கையின் அமுலாக்கல், பரம்பல் (விரிவாக்கம்) தொடர்பான தவறுகள்
ஒரு பொருளியலாளர் குழுவை வழிநடத்தும் ஒருவர் பொருளாதாரக் கொள்கைகளின் அமுலாக்கம், விரிவாக்கம் ஆகியவற்றைவிட மிக முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என எண்ணினால் பல கஷ்டங்களைப் பற்றியே இந்த இரண்டாவது வகையான தவறுகள் விளக்குகின்றன.
வெற்றிகரமான பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதில் தொழில்நுட்ப இசைவாக்கம் மட்டும் போதுமானதல்ல என மேலே விளக்கப்பட்டது. பொருளாதார அமைச்சர் தனது பொருளாதாரக் கொள்கைகளின் அமுலாக்கம், செயற்பாடுகளைக் கவனித்தல் அதன் பரம்பல் ஆகியவற்றில் தானே நேரடியாக ஈடுபடுதல் அவரைப் பொறுத்த ஒரு முகாமைத்துவ விடயமாகும். இது தொடர்பான சில முக்கியமான தவறுகள் பின்னால் எடுத்துக் காட்டப்படுகின்றன.
(10) பொருளாதாரக் கொள்கை அமுலாக்கலை அப்படியே முழுமையாக மற்றவர்களுக்குக் கையளித்துவிட முடியும் என்ற நம்பிக்கை
"ஒரு தேசிய வங்கியின் தலைவர், குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் பணிப்பாளர் சபையில் சில தீர்மானங்கள் மேற்கொள்வதோடு தனது பணி முடிந்துவிட்டதாகக் கருதிக்கொண்டு வரலாற்றின் புகழுரைக்காகக் காத்திருப்பாரெனில் அவர் நிச்சயமாகத் தோல்வியைத்தான் தழுவுவார். நிதிக்கொள்கை ஒவ்வொரு நிமிடமும் ஆக்கப்படுகிறது. இருப்புத் தேவைகள், வட்டி வீதங்கள் மற்றும் நிதி முறைமையில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் உறுதிப்பாடுகளுக்கு அமைய அது ஆக்கப்படுகிறது. மத்தியவங்கியின்மையச்சட்டகம் (mainframe) இயங்கும் எவ்வேளையிலும் அது ஆக்கப்படுகிறது. ஊழியர் மனப்பாங்குகளைத் தீர்மானித்தல் மற்றும் நிதிச்சந்தை நிலவரங்களை அறியமுற்படும்போதும் நிதிக்கொள்கை ஆக்கப்படுகிறது”.
பாராட்டுக்குரிய இக்கூற்று ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டின் மத்தியவங்கியின் முன்னாள் தலைவர் ஒருவருடையதாகும். நாம் முன்னர் குறிப்பிட்டதுபோல பொருளாதார அமைச்சர் வங்கிகள், உள்நாட்டு வரிசேர்ப்புச் சேவை மற்றும் சுங்கத்திணைக்களம் ஆகியவற்றின் கடமைகளைத் தன்தலைமீது போட்டுக்கொள்ள வேண்டும் என்பதல்ல.
85

Page 45
ஆனால் கருமச் செயற்பாடுகள் பற்றிய காத்திரமான அறிவை அவர் பெற்றிருக்க வேண்டுமென்பதே முக்கியமானது. இதன் மூலம் அவர் பொருளாதாரக்கொள்கையைத் திட்டமிடும்போதே தனது ஆலோசனைகள் எவ்வாறு பல்வேறு மட்டங்களிலும் செயற்படும், அவற்றின் நடைமுறை விளைவுகள் என்ன என்பவற்றைப் பற்றித் தெளிவான, உறுதியான விளக்கத்தை அவர் கொண்டிருப்பார்.
ஒரு வெற்றிகரமான பொருளாதார அமைச்சர் என்பவர் தனது முதலாவது முயற்சியிலிருந்தே பெறுபேறுகள் பற்றிச்சிந்திப்பார். தனது பொருளாதாரக் கொள்கையில் தனது இலக்குகள் எவ்வாறு உறுதியாக வெற்றிபெறும் என்பதைப் பற்றிய தூர நோக்கையும் கொண்டிருப்பார்.
(11) தான் சொல்பவைகள் யாவும் நேரடியாகவும், தெளிவாகவும், சந்தேகத்துக்கு இடமில்லாமலும் சொல்லப்படுகின்றன என்னும் நம்பிக்கை.
உங்களது இளமைக் காலத்தில் நீங்கள் இந்த விளையாட்டை விளையாடி இருக்கிறீர்களா?அதாவதுமுதலாவது பிள்ளை இரண்டாவது பிள்ளையிடம் ஒரு செய்தியை மிக இரகசியமாகச் சொல்லுவார்; இரண்டாவது பிள்ளை மூன்றாவது பிள்ளையிடம் தொடர்வார். செய்தி கடைசிப் பிள்ளையை அடைந்தவுடன் அவர் தான் கேட்டதை உரத்துச் சொல்லுவார். இரண்டுக்கும் இருக்கும் வேறுபாடுகள் பிள்ளைகளைப்போல் எம்மையும் சிரிக்க வைக்கும்.
இப்போது நாம் பிள்ளைகளல்ல. ஓர் அமைச்சர்தான் மிகத் தெளிவாகத் தகவல்களைக்கூறுகிறார் என நினைக்கும் இச்சூழ்நிலையில் சிரிப்பைவிட வேறு என்ன விடயம் தோன்றுகிறது. ஆர்ஜென்டீனாவில் பத்திரிகையாளர்கள் தமது கருத்துக்களைத் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள் என்று அரசாங்க அதிகாரிகள் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். சிலவேளை இந்த நிலைமைக்குப் பத்திரிகைத்துறை சதி செய்கிறதா என்று எண்ண வைத்துவிடுகிறது. உண்மையில் இது தகவற் கருத்துக்களைப் பரிமாறும்போதுள்ள உள்ளார்ந்த சிரமங்களை விளங்கிக்கொள்ளத் தவறுவதால் ஏற்படும் தவறாகும். ஏன் பொருளாதார அமைச்சர் இவ்வாறு கூறுகிறார் என்பதைக் கவனிப்போம்.
(12) தனது வேலைத் திட்டம் உடனடியாக அங்கீகாரம் பெற்றுவிடும்
என்னும் நம்பிக்கை.
தமது தீர்மானங்களில் தனியார்துறையினர் அரசாங்கத்தின் தவறான
பொருளாதாரக் கொள்கைகளை இணைத்துக் கொள்ளும் வேகத்திற்கும், தமது தீர்மானங்களில் பொருத்தமான பொருளாதாரக் கொள்கைகளை
86

இணைத்துக்கொள்ளும் வேகத்திற்கும் பாரிய வேறுபாடு காணப்படுகிறது. ஆர்ஜென்டீனாவின் அனுபவங்களுக்கு ஒரு அறிவுபூர்வமான எதிர்பார்ப்புக் கருதுகோளைப் பயன்படுத்தினால் மேற்கூறிய தன்மை தெளிவாகத் துலங்கும்.
இதனை நாம் பின்வருமாறு விளங்கிக் கொள்வோம். ஒரு சாதாரண ஆர்ஜென்டீனாவின் குடிமகனுக்கு அரசாங்கத்தின் தொழில்நுட்பரீதியாகக் குறைபாடுள்ள பொருளாதார வேலைத் திட்டம் பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை விளங்கிக் கொள்ளச் சில மணித்தியாலங்கள் போதுமானது. அத்துடன் அதற்கெதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர் நடவடிக்கை மேற்கொள்ளுகிறார். அரசாங்கத்தின் இந்தக் குறைபாடுள்ள வேலைத்திட்டத்தை எதிர்ப்பதைவிட அதனோடு சேர்ந்து நிற்பதே தனது நலன்களுக்கு உகந்தது என்பதைப் புரிந்துகொள்ளப் பல வருடங்கள் அவரால் காத்திருக்கவும் முடியும். பலதசாப்தங்களாக ஆர்ஜெர்ன்டீனாவில் மக்கள் அரசாங்கம் ஒரு பொருளாதாரக் குறைபாட்டை அகற்றுவதற்கு உருவாக்கப்படும் எந்தவொரு பொருளாதாரக் கொள்கையும் இறுதியில் குப்பைத் தொட்டியில் எறியப்படும் என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே ஆர்ஜென்டீனா போன்ற நாடுகளில் அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் தமது இலக்குகளை அடையும் என மக்களை நம்பவைப்பது இலகுவான காரியமல்ல.
மனித ஊக்கிகளை (motivations) அனுமானிப்பதில் பொருளியலாளர் வார்த்தைகளைவிடச் செயலுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மக்களின் சிந்தனையோட்டத்தை அறிவதில் மக்கள் சொல்லுவதைவிட மக்கள் என்ன செய்கிறார்கள் அல்லது செய்யவில்லை என்பதுதான் உதவியாக உள்ளது. எனவே இவ்விடயத்தில் வெறும் வார்த்தைகள் மக்களைக் கவரமாட்டா. மக்களைக் கவரும் ஒரே வழி ஒழுங்காக உருவமைக்கப்பட்ட சீரான செயலாக்கம் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் மட்டுமே.
(13) பொருளாதாரக் கொள்கைகளுக்கு மக்களின் அங்கீகாரம் பெறுவது பத்திரிகையாளரின் பொறுப்பு என்னும் நம்பிக்கை
அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மக்களின் ஆாளாந்த வாழ்க்கையில் காணப்படும் அம்சங்களில் பாதிப்பை செலுத்துகிறது. இந்தச் சூழ்நிலையில் உத்தியோகரீதியான பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகளைத் தவிர, பொருளாதார அமைச்சருக்கும் சமூகத்தின் பொருளாதார உறுப்பினர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்துவதில் பொதுசனத் தொடர்பு சாதனங்கள் தவிர்க்க முடியாதபடி முக்கியத்துவம் பெறுகிறது. தனிநபருக்கும் பங்குக்கும் (role) உள்ள தெளிவான வேறுபாட்டின்
87

Page 46
அடிப்படையில் ஒன்றை நினைவிலிருத்த வேண்டும். அதாவது"நாம் பத்திரிகையாளர்களாய் இருந்தால் என்ன செய்வோமோ அதையேதான் பத்திரிகையாளர்கள் செய்கிறார்கள்’. அதனையே இன்னும் சிறப்பாகக் கூறினால் “பொதுசனத் தொடர்பு சாதனங்களின் எசமானர்களாக நாம் இருந்தால் நாம் என்ன செய்வோமோ அதைத்தான் அந்த எசமானர்கள் செய்கிறார்கள்”. பொருளாதார அமைச்சின் பத்திரிகைத் தொடர்பு “ஸார்கள்” (press Czars) விதிவிலக்கானவர்கள் அல்லர்.
“பொருளாதாரக் கொள்கையை மக்களிடையே பரவச் செய்யும் காரியத்தை பத்திரிகையாளர்கள் செய்வார்கள். ஆகவே பொருளாதார மந்திரி இதைப் புற்றி அலட்டிக்கொள்ள வேண்டியதில்ல்ை” என்பதுதான் இங்கு ஏற்படும் தவறு. ஆனால் உண்மையில் பொருளாதார அமைச்சர் பொதுசனத் தொடர்பு சாதனங்களுக்கு ஊடாகத் தனது பொருளாதாரக் கொள்கைக்கு மக்கள் அங்கீகாரத்தைத் தேடுவதற்கும் பத்திரிகையாளருடன் ஓர் இடைத் தொடர்பை வைத்திருப்பதற்கும் கடமைப்பட்டுள்ளார். இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவரது கொள்கையின் வெற்றி சனாதிபதி, மந்திரிசபையினரின் விளக்கத்தில் மட்டுமல்லாது மக்களினது விளக்கத்திலும் தங்கியுள்ளது. மக்கள் எவ்வளவு தூரம் விடயங்களை அறிந்திருக்கிறார்களோ அவ்வளவு தூரம் பொருளாதாரம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் அவர்களது தெரிவு சிறப்பான்தாக இருக்கும். மக்கள் இவ்வாறு பழக்கப்படும்போது பொருளாதார அமைச்சர்களின் கடமைகளும் இலகுவானதாக மாறும்.
(14) பாரம்பரியரீதியாக விடயங்களைச் செய்வது அர்த்தமற்றது அல்லது அவவாறு மட்டுமே செய்யவேண்டும் என்னும் நம்பிக்கை
ஒரு பொருளாதாரக் கொள்கை வெற்றி பெறவேண்டுமெனில் அது எதிர்வுகூறும் தன்மையை (predictability) உருவாக்கி அதனைப் பேணவும் வேண்டும். அது நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாகச் சடங்குகள் அதாவது நடைமுறைகள், ஒழுங்குவிதிகள், நேர அட்டவணைகள் முதலியவை-தனியார்துறையின் எதிர்பார்ப்புகளில் செல்வாக்குச்செலுத்துவதற்கு மிகவும் முக்கியமானவை. புள்ளிவிபரங்களை ஒழுங்காக வெளியிடுவது எதிர்வுகூறலை உருவாக்குவதற்கு உதவும். உதாரணமாக மத்தியவங்கி ஒரு வாராந்த ஐந்தொகை அறிக்கையை வெளியிடுவதில்லை. இதனால் முழு நிதித்துறை முறைமையிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறன சடங்குகள் மற்றும் பாரம்பரிய விதிமுறைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் எந்தவொரு பொருளாதார அமைச்சரும் தோல்வியையே தழுவுவார். எதிர்பாராத சீற்றங்களை வெளிப்படுத்தித் தனது அலுவலர்களைச் செயலற்றவர் களாக்கும் ஒரு பொருளாதார அமைச்சரும் “விசர் பிடித்தவர்” என்ற
88

பட்டத்தையும் பெற்றுக்கொண்டுதோல்லியையே தழுவுவார். இவ்வாறான தோல்விக்கான அறிகுறிகள் உலகெங்கும் பொதுவாகக் காணப்பட்டாலும் ஆர்ஜென்டீனாவின் அமைச்சர்களுக்கு இவை மிகவும் விசீேலூனவை.
தனிப்பட்டதும் (personal) ஆளுமை தொடர்பானதுமான தவறுகள்
பாரம்பரியமான பொருளாதாரக் கொள்கை நிபுணர்களான ஜேன் டிம்பேர்ஜன், றொபர்ட் மண்டேல், றிச்சர்ட் லிப்ஸி, மற்றும் செல்வின் லஸ்காஸ்டர் போன்றவர்களின் முக்கியமான ஆனால் குறைபாடுள்ள ஆய்வுகள் பின்வருமாறு கூறுகின்றன: அதாவது பொருளாதார அமைச்சர் எல்லாம் தெரிந்தவர், ஊழல்களுக்கு உட்படாதவர்; தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ என்ன ஏற்பட்டாலும் சமுதாயத்தின் நலன்களுக்கு உகந்த மிகச் சிறந்த பொருளாதார இலக்குகளை அடைவதே அவரின் இலட்சியம். சுருக்கமாகச் சொன்னால் இந்தத் தத்துவம் அமைச்சர் சாதாரண மனிதன் அல்ல எனக் கூறுகிறது. ஆனால் அமைச்சர் என்பவர் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு சாதாரண மனிதனாவார். எனவே திட்டமிடல், அமுலாக்கம் ஆகியவை தொடர்பாக ஏற்படக்கூடிய தவறுகளில் "தவறிய தேவதை'யான (அல்லது "நிமிர்ந்து நிற்கும் மனிதக் குரங்கு" என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்) அமைச்சரின் தவறுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த வகையில் பின்வரும் அத்துமீறல்கள் மிகவும் தெளிவானவை.
(15) தனது முயற்சிகள் பாராட்டைப் பெறும் அல்லது வரலாறு தன்னை
நன்றியுடன் நினைவு கூரும் என்னும் நம்பிக்கை
ஒவ்வொருமுறை நான் இந்த விடயத்தைப்பற்றி ஆய்வு செய்யும்போதும் 1962 இல் பொருளாதார அமைச்சராகக் கடமை ஏற்றதும் பெடறிகோ பினடோ கூறிய வார்த்தைகள் எனது நினைவுக்கு வருவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை.
“67வயதாகும்ஒருவர் தனது 50 ஆண்டுகால அரசியல்வாழ்வில் அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்கும்போது - அதுவும் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் அதே பதவியை மூன்றாவது முறையாக ஏற்கும்போது - பெரிய மனத்திருப்தி தனக்காக்காத்திருக்கிறது என்னும் பிரமையுடன் இருந்துவிட முடியாது".
89

Page 47
தற்போதைய பொருளாதார அமைச்சர் சமூகத்தில் குறிப்பாகத் தனியார்துறையின் மரியாதைக்குப் பாத்திரமாக இருப்பதால் தனது முயற்சிகள் பாராட்டப்படும் என்று எண்ணுவதில் இங்கு தவறு தங்கியிருக்கவில்லை. தனியார்துறையிலிருந்து வரும் பாராட்டு விசேட நலன்களைப் பிரதிபலிப்பதால் பக்கச்சார்புடையது. அதிலே இங்கு தவறின் காரணம் தனியார்துறையின் சிலரது ஒருமுகப்பட்ட நலன்கள் மற்றவரது பரந்துபட்ட நலன்களோடு (உதாரணமாகச் சப்பாத்து உற்பத்தியாளரும் அதன் நுகர்வோரும்) முரண்பட்டு அதன் பெறுபேறாக உற்பத்திவரிகளை உயர்த்தும்போது அமைச்சர் பாராட்டப்படுகிறார்.
"இப்போது என்ன நடக்கிறது" என்பதில்தான் பாராட்டுத் தொடர்பான தவறின் மூலம் தங்கியுள்ளது. மறுதலையாக எதிர்காலம் தொடர்பான தவறு (sinof posterity) -அதாவது வரலாறு தன்னை மதிக்கும் என்பதில் நம்பிக்கை-எதிர்காலத்துடன்தொடர்புள்ளது. இந்த அத்துமீறலை விளக்க நாம் மரியாதையுடனும் பெருமையுடனும் நினைவுகூரும் முன்னைய பொருளதார மந்திரிகள் யார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்விரண்டு தவறுகளுக்கும் ஒரு பரந்துபட்ட தொடர்பு உண்டு. ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இவை முரண்படுகின்றன. ஏனெனில் நிகழ்கால பாராட்டு என்பது பாராட்டுபவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தொழில்சார் பொறுப்புடைமைகளைப் பலியிடுதலாகும். வரலாற்றைத் திருப்திப்படுத்த முனையும்போது ஏற்படும் தவறு வரலாற்றுக்காக உழைக்கும் தோல்வியைத் தன்னுள் கொண்டிருப்பது விசித்திரமானது, இன்னொரு விதமாகக் கூறினால் ஒருவர் நிகழ்காலப் பாராட்டை அல்லது எதிர்காலப் பாராட்டைப் பெறலாம்; இரண்டையும் பெற முடியாது.
இறுதிவரை நிலைக்கும் பெறுமதிமிக்கவற்றையும் அதைப்போல தோற்றமளிக்கும் பொய்யான பெறுமானங்களையும் காலம் தெளிவாக இனம் பிரித்துக் காட்டுகிறது. அரிஸ்டோட்டில், பாக், அடம் ஸ்மித், பிதாகோரஸ் மற்றும் சேக்ஸ்பியர் ஆகியோருக்கிடையிலுள்ள பொதுமை யாது? அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது துறையில் நீண்டு நிலைக்கும் பெறுமதியுள்ள ஒன்றினை உருவாக்கியிருக்கிறார்கள். இன்று புகழடைந்திருக்கும் சங்கீதவிற்பன்னர்களை நாம் அறிவோம். ஆனால் அவர்கள் தமது வாழ்வில் தமது உழைப்புக்காக எவராலும் பாராட்டப்படவில்லை.
(16) தனக்கு முன்னிருந்தவர் திறமையின்மை காரணமாகவே
தோல்வியடைந்தார்கள் என்னும் நம்பிக்கை
நான் 1960களின் முற்பகுதியில் கல்லூரியில் மாணவனாக இருந்தேன். பேரினப் பொருளியல் வகுப்புகளில் பெருமந்தம் (Great Depression)
90

(1930 - 40) பற்றி கூறிய எனது ஆசிரியர்கள் பெருமந்தம் பத்தாண்டுகள் நீடித்ததன் காரணம் அப்போதைய பழம் பொருளியலாளரும், பொருளாதார அமைச்சர்களும் தொழிலின்மை 25 வீதமாக இருந்தபோதிலும் அதைப்பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை என்று எண்ணியதே என்று கூறினர். கெயின்ஸ் வரும்வரையும் இக்கருத்து நிலவியது. நான் மாணவன் என்ற நிலையில், இதெல்லாம் அப்போதைய பொருளியலாளர், பொருளாதார அமைச்சர்களின் திறமையின்மை யினாலேயே ஏற்பட்டது என்று எண்ணினேன். எனவே எனக்கு இது ஒருபோதும் ஏற்படாது என்றும் எண்ணினேன். (இது எனது உயர்வு மனப்பான்மைச் சிக்கல் (superiority complex) மற்றும் எனது பேராசிரியர்களின் வரலாற்றாய்யு ஆகிய இரண்டினது இணைப்பால் ஏற்பட்டது. அவர்கள் பொருளாதாரத்தின் பங்குதாரர்கள் அனைவரையும் முழுமுட்டாள்களாகக் காட்டினர்)
கடந்த ஐந்தாண்டுகளாகக் கடன் நெருக்கடிக்கு நாம் ஆட்பட்டுள்ளோம். இந்நூற்றாண்டின் இறுதியில் பொருளாதாரத்தைப் பற்றிக் கற்பவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன். என்னைப் பொறுத்தவுரையில் 50 ஆண்டுகளுக்கு நடந்த சம்பவங்களுக்கு ஒரு தனிநபரின் திறமையின்மைதான் காரணம் என நினைக்கும் எளிய அணுகுமுறையை நான் கைவிட்டுவிட்டேன்.
இதன் பொருள் திறமையின்மை என்பது இல்லாத ஒன்று என்பதல்ல; அது சகலவற்றையும் பூரணமாக விளக்கிவிடாது என்பதுதான். அந்நேரத்திலிருந்த கருத்துக்களும் அதிகாரத்தின் வரையறைகளும் அவற்றுடன் அதிஷ்டமும் சேர்ந்தே இதற்குப் பங்கேற்கின்றன.
(17) அடுத்த பொருளாதார அமைச்சராக வருவதற்கு யாரும்
காத்துக்கொண்டிருக்கவில்லை என்னும் நம்பிக்கை
பதவிக்கு வந்ததும் பொருளாதார அமைச்சர்களின் சிந்தனைகளில் இதுவும் ஒன்று என நான் உள்ளூர உணர்கிறேன். அதாவது, "மூளை ஒழுங்காக உள்ள எவரும் எவ்வாறு இந்தத் தொழிலை விரும்பமுடியும்? சம்பளமோ மிகக் குறைவு; அவமதிப்புகளோ ஏராளம்: இந்தச் செயற்பாட்டில் நண்பர்களை இழப்பதுதான் நாம் செய்யும் ஒரே பணி". இந்தக் கேள்வி உள்ளும் புறமும் உண்மையெனில் ஓர் உண்மையை கவனத்திற் கொள்ளவில்லை. அதாவது தற்போதைய அமைச்சரும் அமைச்சர் தெரிவில் ஒரு வேட்பாளராக இருந்தவர்; எனவே அவரது தீர்ப்பு இங்கு பிரச்சினைக்கு உரியது.
ஏனெனில் அதிகாரம் ஒரு மனித வேட்கை. புகழ், அதிஷ்டம், பாலுணர்வு சூதாட்டம் என்பவற்றைப்போல முடிவு என்பது அதிலேயே உள்ளமைந்
91

Page 48
துள்ளது. முரண்பட்ட "புறவயமான” குறிகாட்டிகளுக்கு மத்தியிலும் சகல சக்திகளையும் ஒன்றிணைத்துத் திரட்டக் கூடியது. எனவே பொருளாத அமைச்சர் தனது சுமைகளை உணர்கிறார். தான் பதவியேற்ற கொண்டதால் இனியும் அப்பதவிக்கு ஒருவரும் காத்திருக்கவில்லை நம்புகிறார். இருந்தும் அவர் விடும் தவறு இறுதியில் அவரது பதவிய்ை பலியெடுக்கிறது.
இறுதியாக, இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அதாவது சகல அமைச்சர்களும் நியாயமற்ற ஒரு பதவிப் போட்டிக்கு உட்படுகிறார்கள். அரசியல்வாதிகள் அடிக்கடி கிரஷாமின் விதி (Gresham's Law) பொருளியலாளர் மற்றும் பணம் ஆகியவற்றில் செயற்படுவதைக் காண்கிறார்கள். அதாவது தரக்குறைவான பொருளியலாளர் தரம் கூடிய பொருளியலாளரின் இடத்தைப் பிடித்துக் கொள்வார். ஒரு அரசியல்வாதி இரு பொருளியலாளரிடம் ஆலோசனை கேட்கிறார் என் வைத்துக்கொள்வோம். ஒருவர் ஒரு விடயத்தைச் செய்யமுடியும் என் மற்றவர் செய்யமுடியாது என்றும் கூறினால் இரண்டாமவர் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகிறார். இங்கு முடியாது என்று சொல்பவர்தான் தற்போதைய பொருளாதர அமைச்சர். அவரால்தான், அப்பதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேட்பாளரைவிடத் தவறுகளுடன்இணைந்துள்ள செலவுகளைப் பற்றி நன்றாக உணர்ந்துகொள்ள முடியும்.
92


Page 49
ട്ടി
- -
-
PRINTED BYUNIEARTS (PVT) LTD.