கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா

Page 1
I.
 
 

త్రి
Jiu eng ரீத கங்காதரானந்தா
fsä

Page 2


Page 3

குரு வணக்கம்
ചെക്സി
ஞான ஒளி பரப்பி ஞான அருள் பொழியும் ஞான வள்ளலே என் குருநாதா. சுவாமி கெங்காதரானந்தா.
என் உள்ளமே அவர் வாழும் ஆலயமே உயிர் உருவமுள்ள பேசும் தெய்வமே நான் காணும் காட்சியும் அவர் உருவமே என் காதுகள் கேட்பதும் அவர் உபதேசமே. (ஞான ஒளி)
வா என்று சொன்னால் இன்பம் பொங்குதே போ என்று சொன்னால் துன்பம் போகுதே மெளனமாக இருந்தாலும் கண்கள் பேசுதே கை கூப்பினால் உங்கள் உள்ளம் பேசுதே . (ஞான ஒளி)
அடியார்கள் துன்பம் ஏற்கும் தீபமே அன்பர்கள் போற்றும் தெய்வ வள்ளலே எல்லாம் அறிந்த அருள் ஞானியே உங்கள் பாதமே கதி எங்கள் குருநாதரே . (ஞான ஒளி)

Page 4

பிரம்ம ஞானி புரீமத் சுவாமி கெங்காதரானந்தா

Page 5

dislims. GlassinglyTOrigiT
தா. சியாமளாதேவி

Page 6
நூற் தலைப்பு :
முதற் பதிப்பு :
பிரதிகள்
ஆக்கியோன் :
OD Îl50)LO
ଜୋରାଣୀi(6
ójflf6L面 :
பிரம்ம ஞானி பூரீமத் சுவாமி கங்காதரானந்தா
്യൺ 1993
OOO
தா.சியாமளாதேவி
சிவயோக சமாஜம்
சிவயோக சமாஜம்பிரதான விதி,
திடுகோணமலை, இலங்கை.
ബ്ലI് ിjിdൺ

அணிந்துரை
"பிரம்ம ஞானி பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா” என்னும் நூலின் கையெழுத்துப் பிரதியை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்று பெருமகிழ்ச்சியடைகிறேன்.
பிரம்மத்தையும், பிரம்ம சிருஷ்டியின் வியாபகத்தையும் பிரம்மஞானி ஒருவர்தான் அனுபூதியில் அனுபவிக்க முடியும் என்பதை இந்நூலின் வாயிலாக அறியக்கூடியதாயிருக்கின்றது. அந்த அனுபவங்களை எழுத்தோவியமாகப் படைப்பது சாமானியமான காரியமல்ல.
நூலாசிரியருடைய வேண்டுகோளின்படி நூலுக்கு அணிந்துரை வழங்க ஒப்புக் கொண்டபோது எனக்கு அச்சமும், தயக்கமும் ஏற்பட்டது. இதற்கு எந்தவகையில் நான் அருகதையுடையவன்? என்று சிந்தித்தபோது உள்ளுணர்வு என்னைத் தள்ளிச் சென்று மாணிக்கவாசகரின் திருவாசகம் ஒன்றைக் காட்டியது. இது சர்வவல்லமையுள்ள கோணேசப் பெருமானுடைய திருக்குறிப்பென்றே உணர்கிறேன்.
"வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் மனம் நின்பால் தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மையெல்லாந் தொழ வேண்டிச் குழ்த்து மதுகரம் முரலும் தாரோயை நாயடியேன் பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானுமுன்னைப் பரவுவனே"
என்பது அந்த வாசகம், வண்டுகள் மலரிலுள்ள தேனை உண்ணும் பொருட்டு மலரைச் சூழ்வதுபோல, வானவர்கள் ஆயுள், அதிகாரம் முதலிய பயன் கருதி இறைவனை வழிபடுகிறார்கள். மாணிக்கவாசகர் போன்ற ஞானிகள் பிறவி நீக்கத்துக்காக இறைவனை வழிபட்டு வணங்கினார் என்பது இந்தத் திருவாசகத்தில் பொதிந்துள்ள உட்பொருள்.
பிரம்மஞானி பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா என்ற தேன் கூட்டைச் சூழ்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருந்த சான்றோர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதை நூலா சிரியர்
இந்நூலினுள் கோடிட்டுக் காட்டுகின்றார்.
iii

Page 7
குறிப் பாகவும் , வெளிப்படையாகவும் காட்டப் பட்ட சான்றோர் களை நினைவுபடுத்திப் பார்க் கிறேன் . கம்பநாட்டாள்வார் இராமாயணத்தில் கூறிய பாடலொன்று நினைவுக்கு வருகிறது. இராமபிரான் மிதிலைநகர வீதியில் பவனியாகச் சென்று கொண்டிருக்கிறார்.
"தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற் கமலமன்ன தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக்கண்டார் ஊழ் கொண்ட சமயத் தன்னான் உருவுகண்டாரை ஒத்தார்"
பூரீ நாராயண மூர்த்தியுடைய திரு அவதாரங்களில் ஒன்றாகிய இராமபிரானுடைய தோள் அழகைக் கண்ட நங்கையர்கள் அதன் அழகில் கரைந்தார்கள். தாள்களின் அழகைக் கண்டாரில்லை. திருப்பாதங்களின் அழகில் மயங்கியவர்கள் கையழகைக் காணவில்லை. கையழகைக் கண்டவர்களும் அவ்வாறே. எவரேனும் பூரீராமனுடைய முழு அழகையும் கண்டாரல்லர், தசாவதாரங்களில் அந்தந்தச் சமயக் கோட்பாடுகளுக்கமைவான மூர்த்தங்களின் தத்துவத்தில் லயப் பட்டு நின்றார்களேயன்றி, பத்து அவதாரங்களையும் முழுமையாகப் பார்த்தவர்கள் யாருமில்லை என்று பேசுகின்றார்
RADIT.
பிரம்ம ஞானி பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் அருட்பொழிவை அனுபவித்த சான்றோர்கள் பலரும் இராமபிரானின் அழகை அனுபவித்த நங்கையர்கள் போலாவர் என்பது நூலாசிரியரின் கருத்து. யானை அழகைக் காண்பது போல நூலாசிரியர் சுவாமிஜீயை முழுமையாகக் காண்கிறார் என்பது, இந்நூலில் நிரூபணமாவதைப் படித்துப் பெருமைப்படுகிறேன்.
ரிஷிமூலம் , நதிமூலங்களை அறிய முயல்வது சீஷத்துவத்துக்கு ஒவ்வாததென்பது; தவயோகிகள், மகா முனிவர்களின் கருத்து. கேரளாவில் ஊற்றெடுத்து, அருவியாக, சிற்ராறாக, பேராறாக, நாடெங்கிலும் தவழவிட்டு, புண்ணிய பூமியாகிய திருக்கோணமலையில் பரவிப் பெருகிச் சங்கமமாகச் செய்து சுவாமிஜியின் வரலாற்றைப் படைத்திருக்கும் நூலாசிரியர் பாராட்டப்படவேண்டியவர்.

சுவாமிஜியுடைய அணுக்கத் தொண்டராயிருந்து, அவர் வாக்காகவே பெற்ற வரலாறுகளை இந்நூலில் ஆசிரியர் கால நிர்ணயங்களுடன் தருகிறார். நூலின் பல இடங்களிலும் பிரம் மஞானரி அருளிய அ முத வாச கங் கள் தரப்பட்டிருக்கின்றன. சுவாமிஜியினுடைய ஒவ்வொரு வார்த்தைகளுக்கும், ஒவ்வொரு செயல்களுக்கும் தெய்வீகமான தத் துவக் கருத்துக் களைக் காண் பதில் நூலாசிரியர் தத்துவஞானியாக விளங்குகின்றார்.
சுவாமிஜீயை அறியாதவர்கள் இந்நூலைப் படிக்க நேரும்போது, சுவாமிஜியை மானசீகக் குருவாக அனுசரிக்க இந்நூல் உந்துதல் செய்யும், அரை குறையாக அறிந்தவர்களைப் பூரண ஆத்மீக வாழ்வுக்கு நெறிப்படுத்தும். அணுக்கத் தொண்டர்களைப் பூரண சரணாகதியடையச் செய்யும்.
ஆத்மீக வார்த்தைகளையும், தத்துவக் கருத்துக்களையும் சரளமாகக் கையாளும் நூலாசிரியர் செல்வி தா. சியாமளா அவர்கள் குருதேவரின் அன்பிலும், அருளிலும், ஆசியிலும் கரைந்து சிவயோக சமாஜ யோகாச்சிரமத்தின் ஆக்கப் பணிகளுக்கு உபகாரியாகப் பல்லாண்டு வாழ சர்வேஸ் வரனாகிய மாதுமை அம்பாள் சமேத கோணேசப் பெருமான்
அருள்பாலிப்பாராக.
15, வித்தியாலயம் ஒழுங்கை, “ஞானசிரோன்மணி"
திருக்கோணமலை, சைவப் புலவர்-பண்டிதர்,
0-06-93. ஆர்.வடிவேல்.

Page 8
பதிப்புரை
பிரம்ம ஞானி கெங்காதரானந்தா சுவாமிஜி அவர்களின் வாழ்க்கைச் சரிதம் ஒரு நூலாக வடிவம் பெற்றுள்ளமை சுவாமிஜியின் பக்தர்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என்றே கருதவேண்டும். "வஜனாம்ருதம்" என்னும் நூலில் சுவாமிஜி அவர்கள் "துறவிகளின் பூர்வீக வரலாற்றை அறிய முயற்சிப்பது இறந்த குழந்தையின் சாதகம் வாசித்து அறிவதற்கு ஒப்பானது" என்று கூறியிருக்கிறார். இதற்கு இணங்க சுவாமிஜி அவர்கள் தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றி அவ்வளவாகக் கதைப்பதும் இல்லை, அத்தகைய கேள்விகளுக்கு உரிய பதில்களைக் கொடுப்பதும் இல்லை. ஆனால், செல்வி சியாமளாவிடம் காலத்துக்குக் காலம் தன்னுடைய வாழ்க்கையின் சில அம்சங்களைப் பற்றிய விவரங்களைக் கூறி இருக்கின்றார். சியாமளாவும் இத்தகைய விவரங்களை அவ்வப்போது குறிப்பெடுத்து சுவாமிஜி அவர்களிடம் காட்டி அவர்களின் அனுமதியைப் பெற்றுச் சேகரித்து வைத்திருக்கிறார். ஆங்கில இலக்கிய வரலாற்றில் Johnson என்னும் பிரபல ஆசிரியருக்கும், BOSWel என்னும் வரலாற்று ஆசிரியருக்கும் உள்ள தொடர்பு போன்று சுவாமிஜிக்கும் சியாமளாவிற்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டுள்ளது. சியாமளாவின் குறிப்புக்கள் இல்லாவிடின் சுவாமிஜியின் வாழ்க்கைச் சரிதம் யாவருக்கும் புரியாத ஒரு மர்மமாகவே இருக்கும். எனவே, சுவாமிஜியின் பக்தர்கள் சியாமளாவிற்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளனர்.
1921ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி ஆதிசங்கரர் பிறந்த கேரள நாட்டிலே கெங்காதரானந்தா சுவாமிஜி அவர்களும் பிறந்தார். இளம் வயதிலேயே சுவாமிஜி அவர்கள் செல்வத்தையும், சுகபோகங்களையும் துறந்து துறவற வாழ்க்கையிலே நாட்டம் காட்டினார்கள். பல சுவாமிகளுடன் சேர்ந்து இந்தியாவின் பல இடங்களுக்கும் யாத்திரை செய்து, தமது 19வது வயதிலே, 1940ம் ஆண்டளவில், இலங்கை வந்து சேர்ந்தார்கள். இங்கு 1940ஆம் ஆண்டு தொடக்கம் 1991ம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி வரை சுவாமிஜி தன்னுடைய தெய்வீகப் பணியை ஆற்றினார்கள். “கோயிலும் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமாமலையிலே’ பல வருட காலம் கடுந் தவம் புரிந்து பரிபூரண நிலை அடைந்தார்
vi

w
"ஞானி ஞானோ தயத்திற்குப் பின்னும் மக்களையும் மாநிலத்தையும் நன்றி உணர்வுடன் பார்க்கவேண்டும்" என்று சுவாமிஜி அவர்களே "வஜனாம்ருதம்" என்னும் நூலில் கூறியிருக்கிறார்கள். இதற்கிணங்க சுவாமிஜி தன்னுடைய ஞான வாழ்க்கையைத் திருகோணமலையில் "சிவயோக சமாஜம்” என்னும் ஆச்சிரமத்தை ஸ்தாபித்து ஆரம்பித்தார்கள்.
சுவாமிஜி அவர்கள் அன்பே வடிவானவர்கள். ஒவ்வொரு ஞானிக்கும் ஒவ்வொரு சிறப்பம்சம் உண்டு. "தாயினும் நல்ல தலைவன்” என்று போற்றும் வண்ணம் இன்முகம் காட்டி அன்பு சொரிந்து, ஆதரவு நல்கி, கருணை காட்டும் மகானாகத் திகழ்ந்தார்.
இலங்கையிலே ஆன்மீக வாழ்க்கைக்கு இரு துருவங்கள் உள்ளன. ஒன்று திருகோணமலை மற்றையது கதிர்காமம். சுவாமிஜி ஞானம் பெற்றது கோணமாமலையில்; காவியுடுத்தது கதிர்காமப் புண்ணியஸ்தலத்தில். சுவாமிஜி அவர்கள் இந்தியாவிலே பல புண்ணிய தலங்களைத் தரிசித்த பின் இலங்கைக்கு வந்து திருகோணமலையிலே தவமியற்றித் திருகோணமலையின் மகத்துவத்தைப் பற்றி இவ்வாறு கூறுகின்றார்:
"உட்க்கண் திறக்கும் திறவுகோல் இங்கு தான் உண்டு வேறு எங்கும் தேட வேண்டாம் உச்சி மலையில் தவக்குகையில் உள்ளடக்கி உள்நோக்கி இருந்தால் அகக்கண் திறக்கும் உண்மை”
சுவாமிஜி அவர்களின் வாழ்க்கையே ஒரு போதனை யாகத் திகழ்ந்தது. சுவாமிஜி அவர்கள் பக்த கோடிகளிடம் பணம் கேட்பதும் இல்லை, பெற்றதும் இல்லை. மற்றவர் கையை எதிர்பார்த்து வாழ்ந்ததும் இல்லை. சுவாமிஜி அவர்கள் பன்குளத்திலுள்ள சமாஜநெல்வயலிலே வியர்வை சிந்தக் கடுமையாக உழைத்து அதனால் பெற்ற வருமானத்தைக் கொண்டு அநாதை இல்லம் ஒன்றை நடத்தினார்கள். வெள்ளம், புயல் போன்ற அனர்த்தங்கள் ஏற்பட்ட காலங்களில் ஏழைகளைப் பராமரித்து, உணவு, உடைகொடுத்து வந்தார்கள். இப்படிப் பல பணிகளை சுவாமிஜி அவர்கள் தமது சொந்த
vii

Page 9
வருமானத்திலேயே ஆற்றி வந்தார். சுவாமிஜியின் ஆச்சிரமத்தில்பூஜை முறைகள் அணுவளவும் பிறழாது நடாத்தி, சத்சங்கம் ஒன்றை ஸ்தாபித்து, பக்தர்களை நல்வாழ்க்கையில், வழிநடத்தினார்கள். சுவாமிஜி கூறிய கூற்றுக்கள், எழுதிய குறிப்புக்கள், வழங்கிய அருளுரைகள் பலவற்றைச் சியாமளா அவர்கள் சேகரித்து வைத்துள்ளார்கள். இவற்றையும் நாங்கள் அச்சில் ஏற்றவேண்டும்.
சுவாமிஜி இளம் வயதிலே துறவறம் பூண்டாலும் அவருடைய துறவறம் மக்கள் சமுதாயத்தையே தன் குடும்பமாக ஏற்க உதவியது. ஒரு குடும்பத்தைக் கைவிட்ட சுவாமிஜிகள் துறவறம் பெற்ற பின்னர் ஒராயிரம் குடும்பங்களை ஏற்று நடத்தினார். தன்னுடைய பிறந்த பொன்னாட்டையும், பெற்ற குடும்பத்தையும் துறந்தாலும் இலங்கையில் வந்து பல ஆயிரம் குடும்பங்களின் பொறுப்பை ஏற்று, அவர்களுடைய துன்பங்களில் முகம்வாடி, அவர்களுடைய வெற்றியில் சந்தோஷம் அடைந்து, சுவாமிஜி ஒரு மாபெரும் குடும்பத் தலைவராக விளங்கினார்கள். இதுதான் உண்மையான துறவறம். எல்லாவற்றையும் ஒழித்து வாழ்வது துறவறமல்ல. சகல குடும்பங்களையும், சகல ஜீவராசிகளையும் தம்முடைய உடன் பிறப்பாக, தெய்வத்தின் பிரதி விம்பங்களாக கணிப்பதே உண்மையான துறவறம் என்பதைச் சுவாமிஜி அவர்கள் தம்முடைய வாழ்க்கையில் நடத்திக் காட்டினார்கள்.
அந்திம காலத்தில் சுவாமிஜியின் உடல்நலம் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. பக்தகோடிகள் பலருடைய உடல்நோய்களைத் தம்முடைய உடலிலே ஏற்று அவர்களுடைய கர்மபிணியிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் போது அந்தத் தாக்கம் சுவாமிஜியின் உடலை வாட்டியது. யோகாசனத்தில் தலைசிறந்த சுவாமிகள், ஆயுள்வேதக் கலையில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள். தன்னுடைய உடற் பிணிகளை எளிதாக தீர்த்திருக்க முடியும். ஆனால் சுவாமிகளின் உடம்பு பலவிதமானநோய்களின் போர்க்களமாகத் திகழ்ந்தது. அவரது எல்லையில்லா கருணையே இதற்குக் காரணம். சுவாமிகள் 1990, 1991ல் உடல் வேதனைகளால் பெரிதும் வருந்தினார். அவருடைய பாடலில் கூறியது போன்று "வேதனையும் சோதனையும் நிறைந்த உயிரோட்டம்” மாக அவருடைய வாழ்வு தோன்றியது.
viii

சுவாமிஜி ஒரு குடும்பஸ்தன் அல்ல. ஆனால், பக்தர்கள் தங்கள் குடும்பப்பிணக்குகள், குடும்பப் பிரச்சனைகளைத் தீர்க்க சுவாமியை யாசித்தார்கள். சுவாமிஜி அரசாங்க பதவி வகிக்கவில்லை. ஆனால் இடமாற்றம், உத்தியோகஉயர்வு போன்ற தங்களுடைய ஏக்கங்களை சுவாமிஜியின் பாதத்தில் சமர்ப்பித்தார்கள். மகனுக்குத் திருமணம், மகளுக்கு சீதனம் போன்ற விஷயங்களையும் சுவாமிஜியிடம் சமர்ப்பித்தார்கள். சுவாமிஜி அவர்கள் தன் கருணையால் இத்தகையப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். ஆனால் சுவாமிஜி அவர்கள் ஞானச் சுடராக விளங்கியும் அந்த ஞானத்தை உணர பலரும் விழையவில்லை.
"ஞான யோகக் கலையமுதாம் தேன் மதுவை வாரியுண்ண ஞான ரசிக தர்சிகரே வாரும் வாரும் உண்ண வாரீர்”
எனச் சுவாமிஜி அழைத்தும், விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான் ஞானயோக சுவையமுதத்தை உண்ணச் சென்றார்கள். இதனால் நாங்கள் பாக்கியம் பெற்றும் அபாக்கியசாலிகள் ஆகினோம்.
இந்த நூல் சுவாமிஜியின் ஞான தத்துவத்தை உலகிற்குப் பரப்பும் பெருநோக்குடன் அச்சிடப்படுகிறது. பலரும் படித்து ஆத்மீக வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பார்கள் என எதிர்பார்த்துத்தான் இந்நூல் எழுதப்பட்டது. அத்தகைய அடியார்களுக்கு சுவாமிஜியின் அருள் சுரந்து ஆக்கம் கொடுக்கும் என்பது திண்ணம்.
இந்த நூலை அச்சிடும்படி பணித்து அங்கீகாரம் வழங்கிய பூரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களுக்கும், திருகோணமலை சிவயோகசமாஜ அங்கத்தவர்களுக்கும் எங்கள் அன்புக் காணிக்கையை முதற் கண் சமர்ப்பிக்கிறோம்.

Page 10
இலக்கிய நயமும், பக்திப் பெருவெள்ளமும் கலந்த இந்நூல் ஒரு ஆத்மீக பொக்கிஷமாகத் திகழப்போகின்றது. இத்திருப்பணியைச் செவ்வனே செய்த சியாமளா அவர்களுக்கு நாங்கள் அனைவரும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
இந்நூல் அச்சேற்றுவதற்குப் பல வகையிலும் அயராது உதவி புரிந்த V.N.சிவராஜா குடும் பத்தினருக்கும் , M.சற்குணநாதன் குடும்பத்தினருக்கும், இந்நூலை அழகாகவும், கச்சிதமாகவும் குறுகிய காலத்தினுள் அச்சிட்டு உதவிய Sharp Graphics (Pvt) Ltd. D (fat) LDust 6ft (D5 digld Gurfg, lib நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.
மின்வலு எரிபொடுள் அமைச்சு கொடும்பு - 2. fì6)I. fl.IDIS)Îlh"h6)IIJ'b'I
26 - 07 - 1993.

đIDŮLIGIOOTLÊ
குரூர் பிரம்மா குரூர் விஷ்ணு/ குரூர் தேவோ மஹேச்வரஹ குரு சாக்ஷாத் பரப்பிரஹ்ம தஸ்மை பூனி குரவே நமஹ
ஓம் சற்குரு கெங்காதரானந்தாய நமோ நமஹ
1959 ஆம் ஆண்டின் பிற்பகுதி, அன்று நான் உலகம் அறியாத சிறுமி. எனது உடற்பிணிபோக்க, இலங்கையின் திருகோணமலை உப்பு வெளியில் அமைந்துள்ள, தனியார் மருத்துவமனை யொன்றை நாடிச் சென்றிருந்தேன்.
சிகிச்சை பெற்றபின் வாகனத்தை எதிர்பார்த்து வாசலில் காத்திருந்தேன்; இல்லை - இப்பிறவியின் இலட்சிய தெய்வத்தைத் தரிசிக்கும் பேற்றிற்காகவே, காவல் இருந்தேன் என்பதை அன்று நான் அறிந்திருக்கவில்லை. இந்தச் சிவபூமியில் ஜனனம் எடுத்ததன் பயனை அடைந்த புண்ணிய நாளாகவே அது எனக்கு அமைந்து விட்டது. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையையும் ஆழ்ந்து நோக்கினால் - அது பூர்வ ஜென்ம வாசனையின் பலா பலனுக்கேற்பவே அமைந்து விடுகிறது; அதே வேளை ஓர் உத்தமமான சற்குரு அமைந்து விடுவதும் அவரவர் செய்த பிராரப்த புண்ணிய பலனென்றே கூறலாம்.
முதல் தரிசனம் அன்று வாகனத்திற்காகக் காத்திருந்த வேளையிலே ஒளி நிறைந்த; பிரகாசமான; காவியுடை தரித்த ஒரு சிறிய திருவுருவம் என்னை நோக்கிக் கம்பீர நடையுடன் வந்து கொண்டிருப்பதை உன்னிப்பாக அவதானித்தேன். அவருக்கு அருகில் அந்த மருத்துவமனையின் வைத்திய அதிகாரி, டாக்டர். இராமநாதனும் வந்து கொண்டிருந்தார். இருவரும் என் அருகில் வந்தனர். என் பூர்வ புண்ணியம் - அந்த மகானின் கம்பீர நடை தடைப்பட்டது. டாக்டர், நோயாளி ஒருவரின் அவசர சிகிச்சைக்காகச் சென்று Gή Π ή .

Page 11
மருத்துவமனையின் முற்பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற் கென அமைந்த இடத்தினருகில் படிக்கட்டுகள். . . .
மேற்படியில்
ஆட்கொள்ள வந்த என் தெய்வம் மூன்றுபடிகளின் கீழ்
இந்தப் புண்ணிய ஆத்மா குரு தரிசனம்
இதை முதன் முறையாகப் பெறும் சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்ற இடம் அதுவேயாகும்
இந்த முதல் தரிசனம்; புண்ணிய தரிசனம்; என மனதைவிட்டு என்றும் அகலாது, அதனை நிறைத்து, ஆகர்ஷித்து நிற்கிறது. எனது அந்தராத்மா தன்னை மறந்த நிலையில் ஒரு தவிப்புடன் கூடிய ஆவலுடன் அவரைச் சிரசிலிருந்து பாதம்வரை பார்க்கின்றது.
செம்பொன் மேனி - விசாலமான நெற்றி - எடுப்பான நீண்ட நாசி - பிரபஞ்சத்தினசைவை உள்ளடக்கி நிற்கும் ஒளி நிறைந்த உருளும் விழிகள் - சர்வ சராசரங்களையும் தன் சிரிப்பால் ஈர்த்துக் கொள்ளும் புன்னகை - கோடி சூரியப் பிரகாசம் கொண்ட வசீகரமான தோற்றமது.
மனம் இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்தது. "மனமே! நீ வாழ்க்கையில் இதுவரை காணாத ஓர் அற்புத உணர்வையும் நிறைவையும் இங்கு காண்கிறாய்; மனித உருவாகத் தோன்றினாலும், அதற்கு அப்பாற்பட்டு, அதில்பட்டுச் சிதறும் ஒளியும், பிரகாசமும், அழகும் வேறுபட்டிருப்பதைக் பார்க்கின்றாய்; சராசரி மனிதனைப் போன்று, உள்ளும் புறமும் குறைபாடுகள் கொண்ட உருவமன்றி, பரிபூரணத்துவம் நிரம்பி வழியும் ஓர் அற்புதத் திருவுருவமாக மலர்ந்து நிற்கும் காட்சியைத்தான் நோக்குகின்றாய்”
சில நிமிட நேரம் மனம், அத் திருவுருவிலேயேலயித்து விடுகின்றது. குரு தரிசனம்-அன்று பசுமையாக மன ஆழத்தில் பதிந்து விட்டது.
xii

உலகத்தைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத-பக்குவப்படாத பிஞ்சு உள்ளத்திலேயே இத்தனை சக்தி வாய்ந்த சைதன்ய அலைகளை அத்திருவுருவம் எழுப்பித் தன்னை மறந்து லயிக்க வைத்ததென்றால், அப் பேரொளியின் மகத்துவத்தைச் சரியான முறையில், வார்த்தைகளில் வடிப்பதற்கு, சொற்களை இன்னும் நான் தேடிக் கொண்டுதான் இருக்கின்றேன். என்னைப் பொறுத்தவரை, இங்கே மொழி செயலற்றதாகவே காணப்படுகிறது.
புன்னகையால் பூத்து மலர்ந்த அத்திருவுருவை, என்னை மறந்து உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையிலே, "உங்களுடைய பெயரென்ன? அப்பாவின் பெயரென்ன? எங்கே இருக்கிறீர்கள்?’ என அவர் தொடுத்த வினாக்களுக்கு மெதுவாகப் பதிலளித்தேன்.
டாக்டர் அவ்வேளை அவ்விடத்தை வந்தடைந்ததும், சுவாமிஜியிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். "டாக்டர் சியாமளாவை ஒரு முறை ஆச்சிரமததுக்கு அழைத்து வாருங்கள்." வைத்திய அதிகாரியிடம் இப்படிக் கூறிய சுவாமிஜி, என் பக்கம் திரும்பி, "உங்களுடைய வீட்டுக்கு முன்னால்தான் எங்கள் ஆச்சிரமம் இருக்கிறது. வருகிறீர்களா?” என்று அழைத்தார். இந்தப் புனிதமான - மேன்மையான - புதுமையான பேரானந்தமான அனுபவத்தை நான் அடைவதற்கு முன்பு, வேறு எந்தத் துறவியின் தரிசனமும் எனக்குக் கிட்டியதில்லை; துறவிகள் பற்றி நான் அறிந்திருக்கவும் இல்லை.
இந்தச் சந்திப்பின் பின் - சுவாமிஜியின் கட்டளையை ஏற்று, ஆச்சிரமம் செல்லத் தொடங்கினேன். ஆச்சிரமம் - பாடசாலை - வீடு; இதுதான் அன்று நான் கண்ட உலகம் ஆயிற்று.
சிறுவயதில் தந்தையை இழந்து விட்ட எனக்கு, அன்னையின் பாதுகாப்பான வளர்ப்பு முறை, வேறு எங்குமே செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை. இல்லமும் குருவின் சந்நிதானமும் மட்டுமே தெரிந்து வளர்ந்தேன்.
Χiίί

Page 12
மலரும் நினைவுகள் அந்நாட்களில் - அன்புடன் அரவணைத்து, இனிமையாகப் பேசி, பல தத்துவக் கதைகள் கூறும் என் குருவைப் பின்நோக்கிப் பார்க்கிறேன்.
என் குருவின் தரிசனத்திற்காக ஆச்சிரமம் சென்று, பொழுது சாய்ந்து, வீடு திரும்பும் வேளை, வீதி வாசல் வரை வந்து நின்று, பயம் போக்கி, பாதுகாப்புடன் அனுப்பி வைத்த பக்குவத்தை - ஒரு கணம் நினைக்கின்றேன்;
என்குழந்தைத் தனமான வாத்திய இசையை, விருப்புடன் கேட்டுப் பழங்களும் தின்பண்டமும் கையில் தந்தனுப்பும் பேரன்பை - இன்று மீண்டும் அனுபவித்து நிற்கின்றேன்;
எம் குரு அன்புடன் கொடுக்கும் கனிகளை, எவரும் எடுத்துரைக் காமலே, என் அன்னை சகோதரர்களுக்குப் பிரசாதமாகப் பகிர்ந்து கொடுத்து நிறைவுபெறும் சிறுவயது நாட்களை, எண்ணிப் பார்க்கிறேன்.
விளையாட்டாகச் சோறும் கறியும் சமைத்த பெருமையில், அதைப் பக்குவமாக எடுத்துச் சென்று கொடுத்தபோது, பெருமை பேசி ஏற்றுக் கொண்ட, அந்தப் பெருந்தகையாளரின் பண்பை நினைந்து ஏங்கி நிற்கின்றேன்.
எம் குருவின் சந்நிதானம் சென்று திரும்பும், இரண்டொரு அன்பர்கள் எம்மில்லத்திற்கும் வருவதுண்டு; வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடமிருந்து ஒதுங்கி நிற்கும் நான், இந்தத் தவசிரேஷ்டரின் பெருமை பற்றிப் பேசும் அந்தப் பக்தரின் இடத்திற்கு, என்னை அறியாமலே சென்று, அவர் பேச்சுக்களைக் கேட்டு மகிழும் சுகானுபவத்தை - நினைந்து நிற்கின்றேன்;
பஜனை, லிகிதஜெபம் போன்ற சற்கருமங்களில் முழு விருப்புடன் பங்கு கொண்டு, அதிலடைந்த ஆத்ம சுகத்தை சிறிது சிந்தையில் நிறுத்திப் பார்க்கின்றேன்;
நிர்ப்பந்திக்காத - திணிக்கப்படாத - உள்ளார்த்தமான, - எம் குருவின் நாட்டத்தை நினைவு கூருகிறேன்.
Χιν

பூர்வ வினையின் தோஷங்களாக, எம் குடும்பத்தை அம்பாகத் துளைத்து நின்ற பிரச்சனைகளை - புற்றீசல் போல் மொய்த்து நின்ற சம்பவங்களை - நினைவில் நிறுத்துகிறேன்;
எம் தெய்வத்தின் அதீத சக்தியினால் பொறுத்துச் சகித்து முடிந்த அந்த அனுபவங்களை-ஒரு கணம் நிறுத்திப் பார்க்கிறேன்;
என் அன்னை சகோதரர்களுக்கு பிராரப்த வசத்தால் பற்றிக் கொண்ட கர்ம நோய்களுக்கு, அரு மருந்தாக அள்ளித் தந்து, வினை தீர்த்த பெரும் கருணையை-உள்ளம் கசிந்து நோக்குகின்றேன்.
"உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்” என்று நெஞ்சார நான் நோற்ற தவப்பயனாக - என்னை ஆட்கொள்ளத் திருவருள் பாலித்த, அந்த மகிமையான நிகழ்வு-வாழ்வின் அரிய பேறுபெற்ற அந்நாள்; - காலைப் பொழுதிலே நீராடி, தூய நெஞ்சோடு நாடி வந்த என்னைத் தன் மலரடிகளில் அமரச் செய்து, கண்மூடித் தியானத்திலிருந்து, சிறு பொழுதில் விழிமலர்ந்து, இதழ்கள் சப்தமின்றி மந்திர உச்சாடனம் செய்ய, எனக்குப் பக்குவமாகத் திருநீறிட்டு, மந்திரோபதேசத்தை என் செவிகளில் ஒதி, பிறவாப் பெரு வாழ்வுக்கு வழிகாட்டிய பெருங்கருணைப் பேராறாம், எம் குருதேவரின் அந்த அருட்பெரும் செயலை - வியந்து, விம்மி, விழி கசிந்து நிற்கிறேன்.
ஒரு சமயம் தைப்பொங்கல் திருநாளில், அன்போடு என்னை அழைத்து, யோகக்கலையாம் - யோகாசனப் பயிற்சிகளை குருமுகமாக நின்று, ஆர்வமுடன் பயிற்றுவித்த பெரும் பேற்றை - ஒரு கணம் சிந்தையில் நிறுத்திப் பார்க்கிறேன்.
எம் குருவின் கருணையுள்ளம், பேரன்பு, அற்புத செயற்பாடு - இவை எழுத்தில் அடங்காத ஊற்றுப் போன்றவை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீர்த்திட முடியாத நன்றிக் கடனைச் சுமந்து நிற்கும் நெஞ்சுடன் - என் குருவை சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
X W

Page 13
அருள் நிறைந்த சுவாமிஜியின் திருவருளால், ஆச்சிரமத்துடன் ஒட்டிய வாழ்க்கை சிறுவயதிலிருந்தே கிடைக்கப் பெற்றது. அக்காலந்தொட்டே என் மனதில் ஒரு பெரும் பகுதியை, சுவாமிஜியின் சிந்தனை நிறைத்து நின்றது. அந்த நினைவலைகள் இன்றுவரை இதயத் தியானமாகவே பரிணமித்து நிற்கின்றன.
எக் கருமத்தில் நான் ஈடுபட்டிருந்தாலும், சுவாமிஜியின் புனிதமான நினைவுகளும், அவரது கருணைமயமான வார்த்தைகளும், என் நெஞ்சின் அடியாழத்தில் எங்கோ இருந்து ஒலித்தபடியே இருக்கின்றது. இத்தகைய மனோநிலை எனக்குப் பழக்கப்பட்ட ஒரு அகச் செயற்பாடாக, இன்று வரை என்னுள் இரண்டறக் கலந்தே நிற்கின்றது.
உலகாயுதப் பிரச்சனைகளால் உடலாலும், மனத்தாலும், நெருக்குண்ட போதும், தன்னிலை குலையாமல், அவற்றைத் தாங்கி, இன்றும் தலை நிமிர்ந்து வாழ முடிகின்ற தென்றால் - மலையொத்த அந்த மனோபலம் எனக்கு எங்கிருந்து கிடைத்தது?
"பரப்பிரம்மமே குருவடிவெடுத்து வந்து என்னை ஆட்கொண்டு திருவருள் பாலித்ததால், நான் பெற்றுக் கொண்டதே இந்தப் பலம்", என்று கூறுவதே பொருத்தமாகும்.
காலப் போக்கில் எனது குடும்பம் முழுவதுமே, சுவாமிஜியைத் தரிசிப்பதிலும், ஆச்சிரம நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதிலும் மனசுகம் மிக அடைந்தது.
இந்தக் காலகட்டத்தில் சுவாமிஜி என்ற பேரொளியின் பிரகாசத்தை - அவருடைய சைதன்ய சக்தியை - அருளாட்சியை - ஆன்மீக விழிப்புடன் கூடி விளக்கி, மனதை ஊடுருவி ஆழமாகச் சென்று தொடும் வண்ணம் ஊட்டி, வளர்த்த பெருமை, 'சின்னசுவாமி’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும், வணக்கத்துக்குரிய சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களையே சாரும். சுவாமிஜியுடன் நெருக்கமான ஆத்மீகத் தொடர்பு கொள்ளும் காலத்திலேயே, சின்ன சுவாமிஜி அவர்களையும், தரிசிக்கவும், பழகவும் பேறு கிடைத்தது.
XW1

எனக்கு மூத்த இரு சகோதரர்கள், திரு. பத்மநாதன், திரு.பாக்கியநாதன் ஆகிய இருவரும், சுவாமிஜியின் பெருமையைப் பல சந்தர்ப்பங்களில் மன ஆழத்தில் ஊன்றி வித் திட்டதோடு சுவாமிஜியின் அருளுபதேசங்கள் புகைப்படங்கள் சேகரிப்பதில் உதவியாகவும் இருந்தவர்கள் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
இன்று நான், என் சக்திக்கு அப்பாற்பட்ட இத்தகைய ஒரு அரிய முயற்சியில் ஈடுபட்டுச் செயற்படுவதற்குரிய அத்திவாரத்தை இட்டவர், வணக்கத்துக்குரிய சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்கள் என்பதை இவ்விடத்தில் நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறேன்.
எப்பொழுது எம்மை, குருவாக நின்று ஏந்திக் கொண்டாரோ, அதிலிருந்து விடுபடுவதென்பது, நமக்கு அப்பாற்பட்ட செயலாகவே இருந்து வருகிறது.
சுவாமிஜியுடன்-ஆச்சிரமத்தோடு ஒட்டிய வாழ்க்கையில்-கண்டும், கேட்டும், அனுபவித்தும், உணர்ந்தும் கொண்டவை அநேகம்.
எம் இல்லத்திற்கும்-எம் குருவின் ஆச்சிரமத்துக்குமிடையே ஐம்பது யார் தூர இடைவெளிதான் உண்டு. நிலையற்ற வாழ்க்கையில் போராடிக்கொண்டிருக்கும், எந்த ஒரு பிரச்சனையையும், எம் குருவின் சந்நிதிக்கு ஒரு பொழுதுமே நான் சுமந்து கொண்டு சென்றதில்லை.
ஆறி உலர்ந்து போகும் லெளகீக விசயங்களுடன் செல்வதற்கு என்மனம் ஒரு போதும் இடந்தரவில்லை. அவரது பூர்வீகம்பற்றி, என்றுமே நானாக அவரிடம் கேட்டது கிடையாது. என்னை அழைத்து, அவர் முன்னே இருத்தி, அவர் சொல்லிக் கொண்டே போகும் விஷயங்களை நன்கு கேட்டு, மனதில் இருத்தி, அன்றே அவற்றுக்கு எழுத்துருவம் கொடுத்து விடுவேன்.
கவனமாகக் கேட்கும்படி அவர் கூறும் விடயங்களில், எதனையும் விட்டு விடக் கூடாதென்பதில் என் கவனம், மிகக் குவிந்து நிற்கும். தாம் எடுத்துக் கூறும் விஷயங்கள் பற்றி சுவாமிஜி கூறிய வாக்கியங்களில் பொதிந்து கிடக்கும் உண்மையை இப்போது ஒரளவு உணர முடிகிறது.
χνίί

Page 14
நான் சொல்வதில் சில இப்போது உடலுக்குடன் புரிந்து கொள்வீர்கள் இன்னும் சில சிறிது காலம் சென்ற பின் புரிந்து கொள்வீர்கள்; பல விஷயங்களைப் புரிந்து கொள்ளப் பல வருடங்கள் செல்லும்” என்பார்.
சிறுவயது முதற்கொண்டே, எப்போது குருஜியிடமிருந்து அழைப்பு வரும்? தரிசனம் கிட்டும்? என்று தாகத்துடன் காத்திருந்து காத்திருந்தே, அந்த ஞானப் பிளம்பை அணுகி வந்துள்ளேன். அத்தகைய சந்தர்ப்பங்களைத் தவறவிடாது இருக்கவேண்டும் என்பதற்காகவே, பல உலகியல் கருமங்களில் பங்கு கொள்ளாமல் உதறிவிட்டிருக்கிறேன்.
குடும்பத்தில் மூத்த பெண் என்ற முறைமையால், வீட்டில் கடமைகள் பல எனக்குண்டு. அவற்றில் ஈடுபட்டிருக்கும் வேளையில், குருஜியிடமிருந்து அழைப்பொன்று வரும். அடுத்த நிமிடமே என்னையறியாமல் குருவின் சந்நிதியில் நிற்பேன். அரைகுறையாக வீட்டில் நிறுத்திவிட்டு வந்த வேலைகளின் சிந்தனையே எனக்கு எழுவதில்லை. இதற்குக் காரணங்கள்
இரண்டு உண்டு.
முதலாவதும் முக்கியமானதுமான காரணம்; என் நெஞ்சத்தில் நீக்கமற நின்றிருந்த அருட்குருவின் தரிசனத்தின் பெரும் ஈர்ப்பு ஆகும்.
அடுத்தது; எந்த வேளையில் நான் இப்படி ஓடி மறைந்தாலும், குறையாய் விட்டு வந்த கடமைகள் அத்தனையையும், செவ்வனே நிறைவேற்றிவிட்டு, வீடு திரும்பும் என்னை, ஆவலுடன் காத்து நின்று, நான் பெற்றுச் சுமந்து வரும், அந்த உயர்ந்த அனுபவங்களைத் தானும் பகிர்ந்து கொள்வதிலே பெருமை அடையும், அன்பின் திருவடிவமான எனது அருமைத் தாயாரின் உயர்ந்த பண்பாகும்.
சுவாமிஜியின் திருப்பாதங்களில் நான் கொண்டிருந்த நம்பிக்கையும், ஈர்ப்பும்-எனது தாயாரினதும், சகோதர சகோதரிகளினதும், மறைமுகமான ஒத்துழைப்புமே, இத்தகைய ஒரு பெரு முயற்சியிலே அடியெடுத்து வைக்கக்கூடிய துணிவையும், துடிப்பையும் எனக்கு அளித்தன.
xviii

சுவாமிஜியின் ஒவ்வொரு செயற்பாட்டையும்,. என் சிற்றறிவுக்கு எட்டியவரை, உன்னிப்பாக-கவனமாக நோக்கி, அவற்றிற்கான விளக்கங்களையும் அவரிடமிருந்தே அறிந்து கொள்ளும் பேறும் எனக்குக் கிட்டியிருந்தது.
அவரது ஆக்கங்கள், நூல்கள் இவற்றை அருகிருந்து எழுதுவது; அவற்றில் அம்மகான் அவ்வப்போது தரும் விளக்கங்களைச் செவிமடுப்பது; செய்ய வேண்டிய பணிகளை இடும் அதே வேளை, நெஞ்சின் ஆழத்தில் பதியும்படி உபதேசங்களைத் திருவாய் மலர்ந்தருளுவதைக் கேட்டு அனுபவிப்பது; இவை அனைத்தும் கிடைத்தமை, நான் செய்த தவப் பயன் என்றே உணருகிறேன்.
எம் குருவின் நாபிக்கமலத்தினின்றும் பெருகி வரும் புனித ஒலி அலைகளை-அங்கிருந்து தெறித்த ஒலிக்கோவையின் மணிகளை-அமிர்த வர்ஷத்தினை-துளியும் விடாது, இரவு பகலாக, ஒவ்வொன்றாகக் கோர்த்து எடுத்த சிரமத்தை, எம் குரு மணிக்கே காணிக்கையாக சமர்ப்பணம் செய்கின்றேன்.
சுவாமிஜியின் நடைமுறை வாழ்க்கை, அம்மகான் மக்கட்குச் செய்த தியாகப்பணிகள் போன்றவற்றின் ஒரு சிறு தொகுப்பே ஞானச் சுடர்'
சுவாமிஜியோடு தொடர்பான, ஆத்மீக தத்துவங்களை விளக்கும், அரிய பல சம்பவங்களின் மற்றொரு தொகுப்பு குருமுகம்"
இவ்விரு நூல்களும், சுவாமிஜியின் நேரடிக் கண்காணிப்பில் அச்சாகி, நூல்வடிவு பெற்று, சிவயோக சமாஜத்தின் வெளியீடுகளாக, அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவரது ஆசியுடன் வெளியிடப்பட்டமை, நான் பெற்ற தவப்பயனாகும்.
இங்கே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும், சுவாமிஜியின் திருவாய் மலரிதழ்கள் சிந்திய நேரடி விளக்கங்கள் பல ஆண்டுகாலமாக, நாளேடுகளில் குறிக்கப்பட்டுத் தொடுக் கப்பட்டவை. சுவாமிஜியின் அருளாசியால் ஆகர்ஷிக்கப்பட்ட எந்த உள்ளமும் இதனைத் துல்லிமாக உணர்ந்து கொள்ளும் என்பது எனது நம்பிக்கை.
xix

Page 15
இந்தத் திவ்ய சரித்திரத்தினைக் கோவைப்படுத்தும் வேளையில், எனது கவனம் முக்கியமாக ஒரு விஷயத்தில் குவிந்து நின்றது. சுவாமிஜி அவர்கள் எனக்களித்த திவ்விய வாக்குகளின் தனித்துவமான உண்மைத் தன்மை, சிறிதும் பிசகாமல் இருக்க வேண்டும் என்பதே அதுவாகும். இந்த உண்மைத் தன்மையைப் பேணவேண்டுமென்பதில், அவரது சொந்த வசன நடையையே பின்பற்றி இதனை உருவாக்கும் பணியைப் பூரணப்படுத்தியுள்ளேன்.
எழுத்தார்வம், எழுத்துத் திறமை மிக்கவர்களைப் போல், கருத்துக்களை வெளிக் கொணர்ந்து காட்டும் ஆற்றலும், வரையறையான கட்டுப்பாடும் எனக்கில்லை. இவற்றுக்கு அப்பாற்பட்டு நின்று, என்னை வழிநடத்தும் பரமகுருவின் மேலுள்ள அபரிதமான பக்தி மேலீட்டினால், அவரது அருளாசியையும், அதற்கு மேலாக அவரிட்ட கட்டளையையும் சிரமேற்கொண்டு இவ்வரிய முயற்சியில் இறங்கினேன்.
அருட் பிரவாகமுள்ள எம்குருவை, நம் எளிய முயற்சியில் எடுத்துக்காட்ட முனைவது, பொங்கிப் பிரவகித்து ஒடும் கங்கை நீரை ஓர் குடத்துள் கொண்டுவர முயற்சிப்பது போன்றது தான்; சுவாமிஜியின் அழியாப் பெருமைக்கு மேலும் மெரு கூட்டும் தகுதியும் எனக்கில்லை.
மகான்கள் எப்படி இருப்பார்கள்? என்ன பேசுவார்கள்? அவர்களின் நடைமுறை எத்தகையது? என்பவை எல்லோரும் மேலோட்டமாக நடத்தும் பொது விசாரணையாகும். எத்தனையோ மகான்களுடைய திவ்விய சரித்திரங்களைக் கேட்கிறோம்; வாசிக்கிறோம்; அவர்களுடைய உபதேசங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்று, மனச்சுகம் அடைகிறோம். அவதார புருஷர்களோடு வாழ்ந்து, அவர்களுடைய சூழலிலே வளர்ந்து, அவர்களுடன் பழகி வாழ்கின்ற தவப் பயன் எல்லோருக்கும் கிட்டிவிடக்கூடிய வாய்ப்பு அல்ல.
எம் அன்புக்குரு, இந்த மண்ணுலகில் தெய்வப் பிறவியாக அவதரித்து வாழுகின்ற காலத்திலேயே பிறவி எடுத்து, அந்த மகானின் அருள் நிழலில் - சைதன்ய அலைகளின் பிணைப்பில் வாழக் கிடைத்த அத்தனை பக்தர்களும் பாக்கியசாலிகளே.
XX

சுவாமிஜி அவர்களது பெரும் கருணையும், திருவருளும் ஏதோ ஒரு பாங்கில் பக்தர்கள் ஒவ்வொருவரினதும் உடலின் எழுபத்தீராயிரம் நாடி நரம்புகளையும் தொட்டு நிற்கிறது. இயற்கையின் நியதியான மனித சுபாவங்களால் வேறுபட்டுத் தோன்றினாலும், இந்த அபூர்வ சக்தி, எல்லோரிடத்தும் ஒன்றாகவே பின்னிப் பிணைந்து நிற்கின்றது என்பது, அனுபவ பூர்வமாக எல்லோரும் உணர்ந்து நிற்கும் சத்தியமாகும்.
அளவில்லாப் பெருமையைத் தாங்கி நிற்கும், அவதார புருஷரான எம் குருவை, இப் பிறவியில் தரிசனம் பெற்ற புண்ணிய ஆத்மாவாக உயர்த்திக் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன். சுவாமிஜி என்ற சைதன்ய நதியில், அக்கரையிலோ-இக்கரையிலோ அன்றி அந்நதியில் மூழ்கியே திளைக்கும் பெரும் பேறு நம்மில் பலருக்குக் கிடைத்தது. அவரவர் கொள்கலனுக்குத் தக்க சைதன்யத்தை அள்ளிப் பருகியுள்ளனர்.
அவதார புருஷராகிய சுவாமிஜி என்ற பேரொளி காட்டிய வழியிலே சென்று, இப்பிறவியில் போதிய பக்குவத்தைப் பெறமுடியாவிடினும், அடுத்து வரும் பிறவிகளிலாவது, எம்மை நாமே உயர்த்திட வேண்டும் என்ற குறிக்கோளை வளர்த்துக் கொண்டு, அந்த அருட்கனலின் திருப்பாதகமலங்களைச் சென்றடைய, எல்லாம் வல்ல குருதேவரின் திருவருளை வேண்டிப் பணிவோமாக!
பிரம்ம ஞானியின் திவ்யவரலாற்றைக் கூறும் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கும் பேற்றினை, சுவாமிஜியின் அணுக்கத் தொண்டராக நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றவரும், அவரைத் தமது அருட்குருவாக ஏற்றுக் கொண்டவருமாகிய, ஞானசிரோன்மணி' பண்டிதர் இ.வடிவேல் அவர்கள் அடைந்து ள்ளார்கள். இத்தகைய அரியதோர் கைங்கரியத்தை நிறைவு செய்வதற்குரிய தகைமையும், திறமையும், பெருமையும் கொண்ட அவர்கட்கு, நன்றி என்ற ஒரு வார்த்தையால் எனது உள்ளத்தின் உணர்வுகளை முழுமையாகச் சமர்ப்பித்துவிட முடியாது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
xxi

Page 16
1959ஆம் ஆண்டில் திருகோணமலையில் பணிபுரிந்த காலம்முதல், சுவாமிஜியோடு ஆழமான பக்தி விசுவாசத்துடன் தொடர்பு கொண்டவர் திரு. சிவ. சீ. மாணிக்கவாசகர் அவர்கள் ஆவார். சிவயோக சமாஜ ஆச்சிரமத்தின் ஆத்மீகப் பணிகள் அத்தனையிலும் ஏதோ ஒரு வகையில் அவரது பங்களிப்பு தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது. இந்நூலுக்கு அவர் தந்த பதிப்புரையும் அணிசேர்த்து நிற்கிறது. இதுவும் குருவருளின் திருவருட்கடாட்சமே என்பதை மனதிற் கொண்டு அவர்கட்கும் என் நன்றியறிதலைச் சமாப்பிக்கிறேன்.
இந்த திவ்ய சரித்திரம் புத்தமாக மலர்ந்து, உருவாக்கம் பெறுவதற்கு, முழுமுதற் காரணமாக நான்சிந்தை கொள்ளத் தக்கவர், வணக்கத்திற்குரிய சுவாமிஜி ஜெகதீஸ்வரானந்தா ஆவார். நூல் கருவாகி, உருப்பெற்று, முழுமையடைந்துள்ள இந்த நிலையில், ஒவ்வொரு படிமுறையான முன்னேற்றத்திலும் அவரது அன்பு கலந்த ஆசியும், உற்சாகமும், ஊக்குவிப்பும் தோன்றாத் துணையாகி என்னை இயக்கி வந்ததை அனுபவபூர்வமாக உணர்ந்து வந்துள்ளேன். எண் சக்திக்கு அப்பாற்பட்ட இந்த அரிய சாதனைக்கு பிரம்மஞானி சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் அருட்பொழிவும், அருட்திரு பூரீமத் சவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களின் அருளாசியுடன் கூடிய வழிகாட்டுதலும் மட்டுமே பூர்த்தி செய்து நிற்பதனால், அத்தெய்வ புருஷர்களது பொற்பாத கமலங்களுக்கே இந்நூலைச் சமர்ப்பணம் ஆக்குகிறேன்.
71, பிரதான வீதி, திருகோணமலை, தா. சியாமளாதேவி.
XXii

O.
11.
12.
13.
14.
15,
16,
பொருளடக்கம்
அணிந்துரை
பதிப்புரை
சமர்ப்பணம்
தவஞானிகளின் மகிமை
பிறந்த மண்ணும் குடும்பச் சிறப்பும்
சித்தர் தந்த திருவாக்கு
மனம் கவர்ந்த மத யானைகள்
பெற்ற கல்வியும் கலைகளும்
இடையில் சில வார்த்தைகள்
சித்தர் மாமுகியின் சந்திப்பு
குரு சீட சந்திப்பு
புனித திரிவேணி தீர்த்தம்
ஈழத்தில் திரு மலரடிகள்
ஞானக்களமாக விளங்கிய திருக்கோணேஸ்வரம்
தொடர்ந்த பணிகள்
பாலயோகியை இனங்காட்டிய யோகர்
xxiii
iii
iV
ll
16
21
25
3O
33
37
47
55
6O

Page 17
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29,
3O.
3.
தில்லை நடராஜனுக்குத் திருக்கோயில் 64
சிவராத்திரி ஆத்ம ரகசியம்
நடைபாதையில் வழிகாட்டும் சற்குரு
வயலில் இயற்றிய உலகியல் தவம்
விழிநீர் சிந்த வைத்த பக்தன்
தொடர்ந்த ஆச்சிரமப் பணிகள்
விலங்குகள் வந்தணைந்தமை
கொம்மாதுறையில் அருள் வித்து
விபூதி மகிமை
கதிர்காம ஷேத்திராடனம்
ரோக ரகசியம்
வலுக்குன்றிய தூலசரீரம்
குருதேவரின் மகா சமாதி
அஸ்தி சமாதி லிங்கப் பிரதிஷ்டை
சற்குருவின் வழி நிற்போம்.
Xxiv
67
7
8O
86
90
O
O9
12
115
124
32
135
39

பிரம்ம ஞானி பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா
தவஞானிகளின் மகிமை
எல்லையற்ற பிரபஞ்சம்! இதில் வாழும் கோடானு கொடி உயிர்கள்; இவற்றின் நெறி பிறழாத செம்மையான இயக்கத்திற்கு, அனறு முதல் இன்றுவரை அச்சாணிபோன்று, இருந்து வந்துள்ளவர்கள் யார் என நோக்கினால்.
ஆம் . தவசிரேஷ்டர்களும், பெரும் மகான்களுமே, என்று பதில் கிடைக்கும். யுகத்திற்கு யுகம், காலத்திற்குக் காலம் ஏற்படும் உலக மாற்றங்கள், அதனால் ஏற்படும் குறைபாடுகள், இறைவனின் அவதார மகிமையினாலும், மகாபுருஷர்களினாலும், ஞானிகளாலும் நிறைவு பெறுகிறது. இறைவனுடைய அவதா ரங் கள் கூட வாழி வரின் சோதனைகளுக்குத் தப்பவில்லையென்று இதிகாச புராணங்கள் கூறுகின்றன.
தெய்வபுருஷரான பூரீ இராமனுக்குக் கூட எத்தனையோ சோதனைகள் ஏற்பட்டதை இராமாயணம் காட்டுகிறது. பூரீ இராமனை, மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தின் ஒரு அம்சமாகப் போற்றுவது யாவரும் அறிந்த விஷயமே.
பூரீ இராம சரிதத்தை நோக்கினால், அவரடைந்த இன்பத்தைவிட, துன்பமே எடையில் கூடிநிற்கக் காண்கிறோம். மகாபாரதத்தில் தர்ம விருட்சத்தின் வேர்களாக சான்றோர் போற்றும் தருமனும் சகோதரரும், தமது வாழ்க்கைப் பாதையில், இன்பம் கண்ட காலத்தினை விரல்விட்டு எண்ணி விடலாம் போல் தோன்றுகிறது.
மனிதப் பிறவி என்பது, துன்பத்தினின்றும் பிரிக்க முடியாதது. மனிதனாக உடலெடுத்த எவரும், இந்த நியதிக்கு விதி விலக்காக முடியாதவரே என்பதை, இதிகாச புராணங்கள் வழியாக சான்றோர்கள் எமக்கு வலியுறுத்தியுள்ளனர், ஆனால்.
- -

Page 18
இத் துன்பங்களை எதிர்கொள்ளும் முறையிலேதான் சாதாரண மனிதர்களிடமிருந்து அவதார புருஷர்கள் வேறுபடுகின்றனர். இன்பமும் துன்பமும், சுகமும் துக்கமும், வெப்பமும் குளிரும், எவனுக்குச் சமமாகப் படுகிறதோ - அந்தச் சமபாவனை கொண்டவரே மேன்மக்கள் ஆவார். அவர்கள் செய்யும் கருமங்கள் அனைத்தும், ஒரு உன்னத இலட்சியத்தின் அடிப்படையில் எழுகின்ற செயற்பாடுகளே. இதற்கான காரண காரியத்தைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவாற்றல் எமக்குக் கிடையாது.
இப்பூவுலகில் பிறவியெடுத்த மகான்கள், வாழ்க்கை என்ற போராட்டத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்று வாழ்ந்து காட்டி, சாதாரண மக்களுக்கு வழிகாட்டிகளாக என்றும் இருந்து வந்துள்ளனர். மனித உடலெடுத்து, உலக வாழ்க்கையுடன் தம்மையும் இணைத்துக் கொண்டதால்தான், வாழ்வின் தத்துவங்களை அவர்களால் வெளிப்படுத்த முடிந்தது.
எந்த நிலையிலும் அந்த சத்திய புருஷர்கள் தமது ஜீவித காலத்தை ஒரு தவமாக, யோகமாக மாற்றி அமைத்து, உலகை ஒரு சுபீட்சமான நிலைக்குக் கொண்டு செல்லவே மனிதப் பிறவியைப் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.
பிறப்பிலேயே பரிபூரணத்துவம் பெற்ற தவஞானிகள், பூவுலகில் பெறும் ஆத்ம பயிற்சிகள், அவர்களுக்கான பயிற்சிகள் அல்ல; உலகின் நன்மை கருதியே அவை காலத்துக்குக் காலம் நடைபெற்று வருகின்றன.
தீராத எண்ணச் சுழியிலே சுழன்று, தீராத துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கும் அஞ்ஞானிகளுக்கு, மீட்சியை யார் கொடுப்பார்?
மெய்போலத் தோன்றும், பொய்யுலகில் பிறந்து பொய்யான அன்பில் மயங்கும் மாயமயக்கத்தை யார் தெளிவிப்பார்?
இறைவனின் மெய்யன்பில் நீராடி நிற்கும் மனத்தால், அவனை நினைந்து நினைந்து உருகி, அந்த உள்ஒளியைக் காண்பதற்கு வழிகாட்டியாய் யார் தோன்றுவார்?
- 2

மகா ஞானிகள் இதற்காகவே பிறவியெடுத்து, இதற்காகவே காத்து நிற்கும் பெருங் கருணையுள்ளம் கொண்ட உத்தம சற்புருஷர்கள் ஆவார். அவர்களில் காடு வனாந்தரங் களில் தவமியற்றி, தம் உயர்ந்த குறிக்கோளை அடையும் மகான்களும் இருக்கின்றனர்.
அதைவிட, தமது கடுமையான தவயோக சித்தியால், தாமடைந்த உன்னதமான தவசக்திகளுடன், மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்கட்கு முன்மாதிரியாக இருந்து, தங்கள் செயற்பாடுகளின் மூலம் மனிதர்களை நெறிப்படுத்தி, தாமே அவர்களின் மன உடல் கஷ்டங்களை ஏற்கும், அபூர்வமான மகான்களையும் நாம் காணலாம்.
இத்தகைய பெருமகான்கள், ஞானிகள், சத்திய புருஷர்கள், பாரதம் என்ற புண்ணிய பூமியில் இருந்துதான் அநேகமாகத் தோன்றி, மக்களுக்கு இன்றும் அருள்மழை பொழிந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த ஞானப் பொழிவுமிக்க பாரதமண்ணில் பரம்பொருளை அடையத் துடித்த பாரத ரிஷிகள், அதனை அடைந்தும் அனுபவித்தும் காட்டினார்கள்.
தர்மம் குன்றி அதர்மம் ஓங்கி நிற்கின்ற போதிலெல்லாம், அந்த தர்மத்தை நிலைநாட்ட, அவதார புருஷர்கள், மண்ணுலகில் அவதரிப்பது, மனித குலத்தின் விமோசனத் திற்காகவே. இக்கருத்தினைக் கீதையிலே கண்ணன், பார்த்தனுக்கு உபதேசிப்பது போல், உலகுக்கே உபதேசிக்கின் றான்.
"பரித்ராணாய ஸாதூனாம் வினாலாய சதுஸ்க்ருதாம் தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே //
இப்படியாக ஒரு அவதார புருஷர் இவ்வுலகத்தில், நாம் வாழுகின்ற காலத்தில் அவதரித்து, நம்முடன் சேர்ந்து வாழ்ந்த பெறுதற்கரிய பேறு, பல்லாயிரக் கணக்கான உலக மக்களுக்குக் கிடைத்திருக்கிறது.

Page 19
அவதார புருஷர் பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா
பாரதமாம் புண்ணிய பூமியில் அவதரித்து, சுகபோக ங்களைத் துறந்து, தேசசஞ்சாரியாகத் திரிந்து, எத்தனையோ கஷ்டங்களையெல்லாம் அனுபவித்து, இலங்கைக்கு வந்து, தட்சணகைலாயம் என்றழைக்கப்படும், சிவபுண்ணிய பூமியில்; மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றும் ஒருங்கேயமைந்த கோணேஸ்வர ஆலயத்தை ஞானக்களமாக அமைத்து, அங்குள்ள குகையில் கடுந்தவமியற்றி, அதன் பயனாகப் பெற்ற உயர்ந்த சிவயோகசித்தியை அடக்கத்துடன் தன்னகத்தே கொண்டு, இவ்விடத்திலேயே மக்களுடன் மக்களாக வாழ்ந்து, எண்ணற்ற மக்களின் மன அமைதிக்கும், சுபீட்சத்திற்கும், ஆத்மீக வளர்ச்சிக்கும், திருவருள் பொழிந்து, உலகெங்குமுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் மன உடல் கஷ்டங்களை, பரோபகார சிந்தையுடன் ஏற்று, அனுபவித்து, வாழ்ந்து காட்டி, மகாசமாதியடைந்து, இன்றும் என்றும், தெய்வீக நிலையில் நின்று, தம் சைதன்ய அலைகளைப் பரப்பி, அருள்புரிந்து கொண்டிருக்கும், அவதார புருஷர், பூரீமத் சுவாமி கெங்காதரானந்த மகராஜ் அவர்களின் திவ்ய சரிதத்தை நோக்குவோம். பிறந்த மண்ணும் குடும்பச் சிறப்பும்
பாரத புண்ணிய பூமியில், கேரளம் இயற்கை வளம் கொழிக்கும் அழகிய மாநிலமாகும். மகான்கள் பலரைத் தோற்றுவித்த பெருமை, அம் மண்ணுக்கு உண்டு. இந்த மாநிலத்தில் திருப்புரியூர், வயல் சார்ந்த மருதநில வளங்கொண்டது. இக் கிராமத்தினை சலசலத்தோடும் ஆறும், அதனருகே ஓங்கி வளர்ந்த தென்னந்தோப்புகளும், அழகு சேர்த்து நிற்பவைகளாகும். நமது திவ்விய சரித்திர புருஷரின் திருஅவதாரம் நிகழ்ந்த இடம் இந்தத் திருப்புரியூர் ஆகும்.
இத் திருவிடத்தில், நம்பூதிரி பிராமண உயர் குலத்திலே பிறந்த திரு சிவசங்கரன் அவர்களும், அவரது அழகும் பண்பும் மிக்க மனைவியும், கற்பனைக் கெட்டாத ஐஸ்வரியம் நிறைந்தவராய் வாழ்ந்து வந்தனர். மாசில்லாத நம்பூதிரி உயர் குலத்தில் வந்துதித்த சிவகங்சரனது தந்தை திரு. சக்தன் அவர்கள், ஆயுர்வேத வைத்தியத்தில் விசேட பாண்டித்தியம் பெற்றவர்.
- 4 -

பரம்பரையாகவே ஆயுர்வேத வைத்தியத்தில் அவர்கள் தலைசிறந்து விளங்கியமையால், அவர்கள் குடும்பத்தவர் அனைவரும் இத்துறையில் பெரும் பெயர்பெற்று விளங்கினர்.
சிவசங்கரனின் சகோதரர் ஏழுபேரின் குடும்பங்களும், அவரது மனைவியின் சகோதரிகளின் குடும்பங்களும் சேர்ந்து, ஒர் கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வந்தனர். இவர்களின் உறவினராய் அமைந்த முப்பது முப்பத்தைந்து குடும்பங்களும்கூட, அதே கிராமத்தில் செல்வம் கொழிக்கச் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர்.
இவ்வுயர் குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக, சக்தி வழிபாட்டில் ஆழமான பக்தி உடையவர்கள். தமது குடும்பத்திற்கென்றே "பகவதி ஷேத்திரம்" என்ற ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். திருவிழாப் போன்ற விசேட நாட்களில் வெளியிடத்தில் இருந்து, பெருமளவில் மக்கள் வந்து இதில் கலந்து கொள்வார்கள். இங்கு நடைபெறும் விழாக்களில் தேர்த்திருவிழா ஒருவகையில் விசேஷ பெருமை கொண்டது. தேவி பகவதியைத் தேரிலேற்றி, ஆலயத்தைச் சுற்றி பஜனைபாடியபடி, அன்னையை வலம்வரச் செய்யும் காட்சி அற்புதமானதாகும்.
இந்த நம்பூதிரி உயர் குடும்பத்தின் செல்வச் செழிப்பினை, பெண்கள் அணிந்த விலையுயர்ந்த இரத்தினாபரணங்களாலும், விலை மதிப்புமிக்க பட்டாடைகளினாலும் ஓரளவு ஊகித்துக் கொள்ளலாம். அக்காலத்திலே ஆண்கள் கரையில்லாததாக மாஞ்செஸ்ரர் - 1070, 2003 என்ற உயர்ந்த தரமான் வேட்டியைத் தவிர, வேறு கரையோடு கூடிய வேட்டிகளை அணியும் வழக்கமே இருந்ததில்லை.
சிவசங்கரனின் மனைவியார் அழகு நிரம்பப் பெற்றவர். சாந்தம் தவழ, முகம்மலர, அன்பும் கனிவும் ததும்ப, இதமான குரலில் அனைவருடனும் பேசிப் பழகுவார். அந்த உத்தமி எவரையும் உபசரிக்கும் பண்பு, அவர்களைக் கவர்ந்து, ஓர் மதிப்பையும், வாத்ஸல்யத்தையும் ஏற்படுத்திவிடும். கருத்தொரு மித்த சிவசங்கரன் தம்பதியர், வலதுகை கொடுப்பதை, இடது கை அறியாமலே, தான தருமங்கள் செய்வதில் மேம்பட்டு விளங்கி வந்தனர்.
- 5 -

Page 20
பரம்பரை பரம்பரையாக, இவர்களுக்கிருந்து வந்த பக்தி உணர்வு, சாதுக்கள் சந்நியாசிகளிடத்தில், ஆழமான ஆன்மீக நம்பிக்கையையும், விசுவாசத்தையும், தொண்டு புரியும் பாங்கினையும் இயல்பாகவே வளர்த்திருந்தது.
நாடிவரும் துறவிகளை இன்முகத்துடன் வரவேற்று, அவர்களுக்கென்றே தமது குடும்பத்தினர் பிரத்தியேகமாக அமைத்து வைத்திருக்கும் உறையுளில் தங்கவைத்து, உபசரித்துத் தக்க பணிவிடைகள் செய்து, அவர்களுடைய அருளாசியைப் பெற்று மனங்குளிர அனுப்பி வைப்பது, இவர்களின் வாழ்க்கை யின் இலட்சியமாக அமைந்தது. எல்லாவற்றையுமே துறந்து, தவயோக சாதனைகளுக் கென, தேச சஞ்சாரமாகச் சென்று கொண்டிருக்கும் தவ சிரேஷ்டர்களின் திருப்பாத கமலங்கள், தம் இல்லத்தில் படுவதை பெரும் பேறாகக் கருதித் தொண்டு புரிவதற்கென எந்நேரமும் காத்திருந்தனர்.
தெய்வ வழிபாட்டில் ஆழமான பக்தியுடைய சிவசங்கரன் தம்பதிகளுக்கு, திருமணமாகிப் பதினாறு வருட காலமாகியும், குழந்தைச் செல்வம் கிடைக்கவில்லை. சகலஜஸ் வரியங்கள் நிரம்பப் பெற்றிருந்தும், இப் பெருங்குறையை நிவர்த்தி செய்யமுடியவில்லை. இருந்தும் மனம் தளராது, இக்குறை நீங்குவதற்கு, இறைவனே வழிசெய்யவேண்டுமென, நெஞ்சார நினைந்து, அவனை வழிபட்டு வந்தனர்.
சித்தர் தந்த திருவாக்கு
குழந்தைச் செல்வத்திற்காக, நாளொருவண்ணம் ஏங்கித் தவமிருந்த சிவசங்கரன் தம்பதியினருக்கு, பதினாறு வருடங் களின் பின் அந்தத் திருவருட் கடாட்சம் கிட்டியது.
ஆம்; ஒருநாள் இவர்கள் இல்லத்தை நாடி, அதிசக்தி வாய்ந்த மகாசித்தர் ஒருவர் வந்தருளினார். இந்த மகானைப் பணிந்து, வரவேற்று உபசரித்தனர். அவ்வேளை தம்மை வாட்டிவரும் பெரும் வேதனை நீங்கி விமோசனம் ஏற்படப் போவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை.
சிவசங்கரன் தம்பதியினரின் பக்குவமான, பக்திபூர்வ மான அன்புகனிந்த உபசரிப்பால் அம்மகானின் உள்ளம் நெகிழ்ந்தது. அவர்களின் உள்ளக்கிடக்கையில் இருக்கும் பெரும் குறையை மனதிற் கொண்டு, திருவாக்கு ஒன்றினை அருளினார்.
6 -

"உங்கள் இல்லத்தில் சபரிமலை ஐயப்பனை முறைப்படி பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டல காலம் நியமம் தவறாது, விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். உலகை உய்விக்கவல்ல தெய்வாம்சம் நிறைந்த சற்புத்திரனை அடைவீர்கள். நீண்ட காலமாக உங்களுக்கு இருந்து வந்த பெருங்குறை நீங்கி, மனச்சுகம் வந்தடையும்". அந்த மகாசித்தரின் வாக்கை, தெய்வ வாக்காகவே ஏற்று, சிவசங்கரன் தம்பதிகள் மனம் பூரித்தனர்.
தமது இல்லத்தில் புனிதமான ஓர் இடத்தைத் தெரிந்து, வாழைத் தடலினால் சபரிமலை ஐயப்பனை பிரதிஷ்டை பண்ணி, பூஜையை ஆரம்பித்தனர். இந்த விசேஷ பூஜைக்கென, இரவு பகலாக நெய்விளக்கேற்றி, பஜனை வழிபாடுகள் இயற்றி, செலவைப் பாராது, ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவிட்டனர்.
சுவாமி ஐயப்பனுக்கென்று பிரத்தியேகமாகக் காவியச் சிந்து இருக்கின்றது. ஐயப்ப வழிபாடு செய்யுங் காலங்களில், கோயிலுக்கு மக்களை அழைத்துச் செல்லும் பிராமணர்கள், ஐயப்பனுக்கு உரு ஆடுபவர்கள், இந்தக் காவியச் சிந்தைப் பாடுவார்கள். இந்த விசேட ஐயப்ப வழிபாட்டிலும் இக் காவியச் சிந்தைப் பாடி, பூஜைகளை நடத்தினர்.
இல்லத்தில் இவ்வாறு ஐயப்ப பூஜை வழிபாடு இயற்றப்பட்ட இதே நேரத்தில், ஐயப்பனுக்கென்றே சிறப்பாக அமைந்த, சபரிமலை ஆலயம் முழுவதிலும், சுற்றிவர ஆயிரக்கணக்கில் நெய்விளக்குகள் ஏற்றி, ஐயப்ப சுவாமிக்கு நைவேத்தியமாகத் தேங்காய் உடைத்து, மூடியில் நெய்விட்டு எரித்து, விரதத்தைச் சிறப்பாகவும், பக்தியுடனும் அனுஷ்டித்தனர்.

Page 21
சற்குருவின் அற்புத ஜனனம்
இல்லத்தில் வெகு சிறப்பாக ஒரு மண்டல காலம், இப் பூஜை நடைபெற்றபின், அங்கு ஒரு அற்புத நிகழ்வாக சிவசங்கரனின் மனைவி கருவுற்றார். பதினாறு ஆண்டு காலம் பெறமுடியாதிருந்த பெரும் பேற்றை நிறைவு செய்ய இல்லம் நாடி வந்து ஆசி தந்த மகாசித்தரின் பெருமையையும், தமது தவப்பலனையும் நன்கு உணர்ந்து, ஆனந்த அருவி விழி வழி பாய, அந்த ஐயப்ப நாமத்தை இடையறாது ஓதி வந்தனர். தாய்மையின் பூரிப்பால் பொலிந்த அம்மாதரசி தன் தவப்பேற்றின் பயனாக வந்தடைய இருந்த மகப்பேற்றை எதிர்பார்த்து, கனவு பல கண்டு, களிப்போடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். ஐயிரண்டு திங்களால், 1921 ஆம் ஆண்டு ஆனி மாதம் இருபத்திரெண்டாம் திகதி, சுவாமி ஐயப்ப சாஸ்தாவினால், தெய்வாம்சம் பொருந்திய, அழகும் பிரகாசமும் நிறைந்த, ஓர் ஆண் குழந்தையை அந்தப் புண் ணியவதி பெற்றெடுத்தார் . பரம் பொருளாம் பரமேஸ்வரனின் இலட்சணங்களாக இத் தெய்வக் குழந்தையின் தலையில் சடையும், நெற்றியில் பிரகாசமாகத் துலங்கிய பிறைவடிவமும், ஒரு அவதாா புருஷர் என்பதை நிதர்சனமாக எடுத்துக் காட்டியது.
சிவசங்கரன் தம்பதியருக்கு, அருள் வாக்குக் கொடுத்து, சுவாமி ஐயப்பனின் விசேட பூஜையினை முன்னின்று நடத்திய மகாசித்தரின் திருக்கரங்களில், இந்தத் தெய்வக் குழந்தையை முதன் முதலாகப் பெற்றோர் கொடுத்தனர். அந்த அருள்மிகுந்த சித்தரையே, நாமகரணம் சூட்டும்படியும் பணிவுடன் வேண்டி நின்றனர்.
தன் கரங்களிலே, திரு விழிகள் மலர, தன்னை நோக்கி தெய்வீகப் புன்னகையுடன் தவழ்ந்த அந்தக் குழந்தையின் அற்புத தோற்றம் மகா சித்தரை மேனி சிலிர்க்க வைத்தது. தன்னை மறந்து, அக் குழந்தையின் தெய்வீக அம்சங்களை உற்று நோக்கினார்; விழி மூடி மெய் சிலிர்த்து நின்றார். ஒரு சில கணப்பொழுதுகள் ஓடி மறைந்தன. கெங்காதரன் கெங்காதரன், அந்த சித்த புருஷரின் திருநா, மீண்டும் மீண்டும் இந்த நாமத்தை உச்சரித்தது. ஆம்; மகா சித்தர்கள் வாக்குப் பொய்த்ததாக வரலாறே கிடையாதே !

பிறையும் - புனலும் - சடையும் தாங்கிய பொன்னார் மேனியனின் பொலிவான ஒரு நாமம், அந்த இல்லத்திலே இனி ஒயாமல் ஒலிக்க வேண்டுமென்பது தெய்வ சித்தம் போலும். சிவசங்கரன் என்ற வாய்நிறையும் நாமம் படைத்த தந்தைக்கு, கெங்காதரன் என்ற மற்றொரு திருநாமமும் பொருந்துகிறதல்லவா? இங்கு தந்தை-மகன் என்ற பேதமே தோன்றவில்லையல்லவா? அந்த மகாசித்தர், தெய்வீகக் குழந்தையின் பிறவியில் அமைந்த சடையை, ஐந்து வயது வரும்வரை மழிக்க வேண்டாமென்று பெற்றோரைக் கேட்டுக் G5n 6öoTL-nt ft.
ஐயப்ப சாஸ்தாவினால் குழந்தைச் செல்வம் கிடைத்த பின், சிவசங்கரனும் சகோதரர்களும், சபரிமலைக்குச் சென்று, ஐயப்பனுக்குச் செய்யவேண்டிய கடனை முடித்து வழிபட்டு வந்தனர். கோடீஸ்வரக் குடும்பத்தில் பிறந்த குழந்தை கெங்காதரனுக்கு, பெறுமதி மிக்க - விலை மதிக்க முடியாத ஆபரணங்களை அணிவித்தனர். கழுத்திலிருந்த கனமான தங்கச் சங்கிலியில், புலிநகம் இரண்டுக்கு நடுவில், சொஸ்தி ஆசனத்தில் இருந்தது போன்று, ஐயப்பனுடைய திருவுருவம் பதிக்கப்பட்டு இருந்தது.
பெற்றோரும், அவர்களது சகோதர சகோதரிகளும் இத் தெய்வக் குழந்தையை அன்புடனும் பாசத்துடனும் கவனித்து வந்தனர். இக் கூட்டுக் குடும்பத்தின் வாரிசுகளான சிறுகுழந்தைகள் முப்பத்தி இரண்டு பேரும் கூட, கெங்காதரனுக்குத் தனியான மதிப்புத் தந்து, அன்பு பாராட்டி வந்தனர். நாராயுணி, அம்மணி, கல்யாணி என்று அழைக்கப்படும் தாயாரின் சகோதரிகளில், நாராயணி என்ற சிறிய தாயார், இவரிடம் அதீதமான் வாத்ஸல்யத்துடன் பழகினார். கெங்காதரரின் தேவைகள் அனைத்தும் நாராயணியினாலேயே பூர்த்தி செய்யப்பட்டன.
இதனால் இயல்பாகவே தாயிடத்து நாட்டம் குறைந்த வராக, குழந்தை கெங்காதரன் வளர்ந்தார். ஆனால் தாயிடத்து அவர் பெருமதிப்பும்; மரியாதையும் கொண்டிருந்தார். விபரம் அறிந்த பின், தாயாரை எப்போது கண்டாலும் எழுந்து, ஒதுங்கி மரியாதை செய்யத் தவறியது கிடையாது. இத்தகைய குடும்பச் சூழல், எதிர்காலத்தில் துறவறத்தை மேற்கொள்வதற்கு இயற்கையாகவே சாதகமாயமைந்தது.
- 9 -

Page 22
தாயாரும் அவரது சகோதரிகளும், செல்லமாகஉண்ணி என்றே அழைப்பர். உண்ணி- இது செல்வமே என்று பொருள். தந்தையும் அவரது சகோதரர்களும் கெங்காதரன் என்றே அன்பு ததும்ப அழைத்தனர்.
சிற்றன்னை நாராயணி சிறுவன் கெங்காதரன் இவ்வுலகில் அவதரிக்கக் காரணமாயமைந்த அனைத்து நிகழ்ச்சிகளையும், கதைகதையாகக் கூறி வந்ததால், அவை சிறுவன் மனதில் ஆழமாகப் பதிந்தன.
சீரும் சிறப்புமாக வளர்ந்து வந்த அற்புதக் குழந்ததைக்கு, ஜாதகம் கணிக்கப் பெற்றோர் விரும்பினர். கேரளத்தில் திறமை வாய்ந்த சோதிடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் மிகவும் பாண்டித்தியம் பெற்றவரான, புருஷோத்தம நம்பூதிரி என்ற சோதிடரை அழைத்து, ஜாதகத்தைக் கணித்தனர். அப்பொழுது ஒரு குறிப்பிட்ட வயதில் மாரக தோஷம், கண்டங்கள், விபத்துக்கள் இருப்பதாகவும், பதினெட்டு அல்லது இருபது வயதுக்கு மேல், இந்த ஜாதகருக்கு ஆயுள் இல்லை என்றும் திட்டமாகக் கூறினார்.
இந்த சோதிட வாசகத்தினால் மனக்கிலேசம் கொண்டு வருந்திய சிவசங்கரன் தம்பதியினர், மகாசித்தரின் திருவாக்கி னால் வந்தவதரித்த இந்தத் தெய்வீகப் பிறவிக்கு நாளும் கோளும் என்ன செய்யும் என நினைத்துத் தம்மைத் தேற்றிக் கொண்டனர். இப்படியாகக் கிலேசமும், தெளிவும் மாறி மாறி ஏற்படுவது இவர்கள் வாழ்வில் சகஜமாகி விட்டது.
இத் தெய்வக் குழந்தையின் கைரேகையில், நிறைந்த செல்வம் செல்வாக்குப் பெறுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டதுடன், மற்றவர்கள் இவருடன் அணைந்து போற்றி, உயர் ஸ்தானத்தில் வைத்திருப்பார்கள் என்று காணப்பட்டதே ஒழிய, ஓர் உயர்ந்த தவயோக நிலையை அடையும் அடையாளங்கள் எதுவுமே காணப்பட வில்லை. சிறு பிராயத்திலிருந்தே அத்திருவுடல் மாசு மறு எதுவுமற்றே
95T 600 TL U LILL-ġ.
- O -

அற்புதம் நிகழ்ந்தமை
கெங்காதரன், இருந்து தவழ்ந்து விளையாடுகின்ற பருவத்திலே, அவர் ஒரு தெய்வீகப் பிறவியே என்பதை நிதர்சனமாக்கும் நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது. அந்த அற்புத சம்பவம் அறிந்த எவரையும், மெய் சிலிர்க்க வைப்பதாய் அமைந்தது.
ஒரு நாள் வெள்ளை நாகம் ஒன்று அக் குழந்தையின் கழுத்தைச் சுற்றி நின்று படம் எடுத்தது. இதனைக் கண்ட பெற்றோரும் குடும்பத்தவரும், செய்வதறியாது திகைத்தனர்.
இவர்களுடைய இல்லத்தில் எல்லோரும் விஷக்கடியில் பேர்போன வைத்தியர்கள். இருந்தும் அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. எவ்வளவோ பிரயத்தனப்பட்டும் நாகம் இறங்கவில்லை. ஒருநாள் முழுவதும் அக் குழந்தையின் கழுத்தைவிட்டு இறங்க மறுத்த நாகம், மறுநாள் தானாகவே இறங்கிப் போய்விட்டது.
இந்த அற்புத செயலைக் கண்டு, பெற்றாரும் உற்றாரும் அதிசயித்தனர். கழுத்தைச் சுற்றிய நாகம் இறங்கிய பின்னரும் குழந்தையின் கழுத்தில் அதனுடைய அடையாளம் அழியாமல் இருந்தமை, இக் குழந்தையின் அபூர்வமான பிறப்பின் மேன்மையை உணராதார்க்கும் உணர்த்தும் நிகழ்ச்சியாயிற்று.
மனம் கவர்ந்த மதயானைகள்
இந்த இல்லத்தின் ஐஸ்வரியத்திற்குச் சான்றாக, அவர்களால் வளர்க்கப்பட்ட மூன்று மத யானைகள் விளங்கின. மூன்று யானைகளை வளர்த்துப் பராமரிக்கக் கூடிய செல்வம் அவர்களிடம் நிறைந்திருந்தது.
இந்த யானைகள் உயரத்தால் கூடியவை; இலக்கூடிணம் பொருந்தியவை; இல்லத்துக்கு ஐஸ்வரியமாகவே இவற்றைக் கருதிப் பராமரித்தனர். ஒரு யானைக்கு கெங்காதரன் என்று தங்களது தவப்புதல்வருடைய நாமத்தையும் சூட்டியிருந்தனர். மற்றைய இரண்டும் கோவிந்தன் சிதம்பரன் என்று அழைக்கப்
6.
கெங்காதரன் என்ற யானை பதினாறடி உயரமானது; மிகவும் மூர்க்கமானது; அதனுடைய தந்தம் மட்டும் ஆறடி
- -

Page 23
நீளம் இருக்கும். அதைப் பராமரிக்க ஆறுபேரும், சிதம்பரனுக்காகவும் - கோவிந்தனுக்காவும், முறையே மும்மூன்று பேருமாக மொத்தம் பன்னிரண்டு பாகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
"கெங்காதரன்' என்ற யானை, அதன் தலையில் கற்கள் பதித்த தங்கத்தினால் ஆன பட்டம் வைத்து, பாகன்மாருடன், கோவில் உற்சவ காலங்களில் சென்றுவரும். திருவிழாவிற்குச் செல்லும்போது, அங்குள்ள பெரிய நீளமான வீதிகளைச் சுற்றிவர நீண்ட நேரம் எடுக்கும். அந்நேரத்தில் இந்த யானைக்கு நேராகக் கத்தியைப் பிடித்தபடி, ஆறு பாகன்களும் நிற்பார்கள். இல்லாவிடில் அருகிலிருக்கும் யானைகளைத் தந்தத்தால் குத்திச் சாகடித்து விடும்.
கோயில் உற்சவ காலத்தில், இவர்களது இல்லத்து யானையை நடுவில் விட்டுத் திருவாசி வைப்பார்கள். அத்துடன் அதிகமான யானைகள் அலங்கரிக்கப்பட்டு வீதிவலம் வரும். பூரம் என்று இதனைச் சொல்வார்கள். பூரம் என்றால் உற்சவம் என்று பொருள். திருவாசியோடு சுவாமியைத் தாங்கிவரும் கெங்காதரன் கற்கள் பதித்த நெற்றிப்பட்டம் சுடர்விட்டுப் பிரகாசிக்க, இராஜ சம்பீரத்துடன் அசைந்து நடந்து வரும். அதற்கு அணி செய்வதுபோல், ஏனைய யானைகள் அதனைத் தொடர்ந்து நடந்து வரும்காட்சி, உற்சவத்திற்கே பெருமையளிப்பதாகும்.
இவ்வேளையில், தேவ வாத்தியங்கள் எனப்படும் பதினெட்டு வகையான வாத்தியங்கள், ஒரே சமயத்தில் ஒலிக்கும். இந்த தெய்வீக நாத இசையைக் கேட்பவர் மெய்மறந்து, எங்கோ மேல் உலகில் சஞ்சரிப்பது போன்ற ஒர் பக்திப்பரவசமான நிலை மேலிடக் காணப்படுவர்.
இவற்றுள் 'தாயம்பகா' என்ற வாத்தியம் மிகச் சிறந்தது. மேளவாத்தியம், துளைவாத்தியம் என்பவை எல்லாம் இதில் அடங்கும். உற்சவ வேளையில், யானையில் சுவாமி வீதிவலம் வரும்போது, தூரத்தில் இருப்பவர், அந்தந்த நேரத்தில் கேட்கும் ஒலியைக் கொண்டே, ஊர்வலம் எத்திசையில் வருகிறது என்று திட்டமாகக் கூறுவார்கள். காரணம், குறிப்பிட்ட தூரங்களுக்கிடையில் குறிப்பிட்ட வாத்தியங்களே ஒலிக்கும்.
- 2 -

ஒவ்வொரு யானையின் மேலும் ஒரே நிறத்தில் குடைகள் இருக்கும். கண் வெட்டும் நேரத்திற்கிடையில் குடைகளின் நிறம் மாறுபடும். யானைகளுடைய கழுத்தில் காவி நிறத்தில் தடிப்பானதொரு வளையம் கட்டப்பட்டிருக்கும். கரிய நிறமேனியில் காவி நிற வளையம், பொலிவூட்டி நிற்கும். அதில் அலங்காரப் பொருட்களையும் கட்டி அழகு சேர்த்து விடுவர்.
சிவசங்கரன் குடும்பத்தவர்க்குச் சொந்தமான, தென்னந் தோப்புகளுக்கு யானைகளை உணவுக்காக அழைத்துச் செல்வர். அங்கு தென்னோலைகளை வெட்டி அடுக்கிவைத்தால், தும்பிக்கைகளினால் தூக்கி, தந்தங்களுக்கிடையில் வைத்து பாகனையும் தூக்கிக் கொண்டு, நொடிப் பொழுதில் வீடு வந்து சேர்ந்து விடும். விரைவாக நடந்து வருவதைப் பார்த்து ஆட்கள் விலகி நிற்பார்கள். உணவு உண்ணும் இடத்திற்கு வேளாவேளை அறிந்து, தாமே வந்து நிற்கும். சில சமயங்களில் பெரிய உருளிகளில் பால் பொங்கல் தயாரித்து, பெரிய உருண்டைகளாக்கி இந்த யானைகளுக்குக் கொடுத்தால், அவற்றை விரும்பித் துதிக்கையால் வாங்கி அப்படியே முழுவதையும் வாயினுள் அடக்கி விடும்.
இவர்கள் இல்லத்தில் பாத்திரங்கள் வைப்பதற்கென்றே சுரங்க அறைகள் கட்டப்பட்டிருந்தன. மிகவும் வசதிபடைத்த வரே அதனை வீடுகளில் கட்டிவைத்திருப்பர். அதற்குள், பதினைந்து இருபதுபேர் சேர்ந்து தூக்கக் கூடிய, துருப்பிடிக்காத நான்கு கைப்பிடிகள் கொண்ட தடிப்பான வெள்ளி உருளிகள் இருக்கும். ஒரே சமயத்தில் மூவாயிரம் பேருக்கு மேல் சாதம் கறி என்பவை இந்த உருளிகளில் தயார் பண்ணலாம்.
இல்லத்து யானைகள், பாகன் கையில் வைத்திருக்கும் அங்குசத்துக்குப் பயந்தே பாகனுக்குக் கட்டுப்பட்டு பணி செய்யும். ஆனால் சிவசங்கரன் குடும்ப அங்கத்தவர் சிறியவர் முதல் பெரியோர் வரை அனைவரிடத்தும் அன்பாகவும், விசுவாசமாகவும் அவை நடந்து கொள்ளும். பாகனால் கட்டுப்படுத்த முடியாத கோபமும் மதமும் கொண்டவேளை யிலும் கூட, தனது எஜமான் குடும்பத்தவர்கட்கு மட்டும் தணிந்து போய், அடங்கி நிற்பது அற்புதமேயாகும்.
இவற்றில் "கோவிந்தன்' எண்பத்தைந்து வயதுவரை வாழ்ந்தது. ஆறுமாத காலம் கோயில் உற்சவங்களில் ஈடுபடும்
13 -

Page 24
யானைகள், அடுத்த மூன்று மாதமும் மரங்கள் இழுக்கின்ற வேலையைச் செய்யும். மிகுதி மூன்று மாதகாலமும் நிறைய உணவளித்து, ஒய்வாக இருக்க விடுவார்கள். இந்நேரங்களில், இவர்கள் இல்லத்திற்குப் பக்கத்தில் இருக்கும் மலைச் சாரல்களுக்குச் சென்று இவை உலாவி வரும். மதம் அடங்கப் புணருவதற்காக, கன்னனுார்ப் பக்கமுள்ள மலைச்சாரலுக்கு அனுப்பி எடுப்பார்கள்.
கெங்காதரனைக் கூடிய கவனமாகப் பராமரித்தவன் அச்சுதன் என்னும் பாகனாகும். அவன் நன்றாக மது அருந்துவான். அப்படிக் குடித்துவிட்டு வழியிலெங்கேயும் விழுந்து படுத்துவிடும் பொழுது, தன் எசமானனைத் தூக்கிக்கொண்டு சென்று, தன்னைக் கட்டிவைக்கும் இடத்திற்குக். கொண்டு வந்து விடும்.
சிதம்பரன் என்ற யானைபற்றிய சுவையான சம்பவம் ஒன்றுண்டு. இந்த யானைக்குத் தன்பாகன் ஒருவனுடன் மிகுந்த பகைமை ஏற்பட்டிருந்தது. வழமைபோல் யானைகள் குளித்துக்கொண்டிருந்த நேரத்தில், சிதம்பரன் தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள நினைத்தது. தன் தந்தத்தினால் பாகனது விலாவில் நன்றாகக் குத்திவிட்டது. வலி பொறுக்க முடியாது அவன் அலற ஆரம்பித்தான். அவன் வேறுயாருமல்ல; கெங்காதரனைப் பராமரிக்கும் அச்சுதன்தான். அவன் கத்திய பின்பே, யானை தனது தவறை உணர்ந்தது. தான் குத்தியது தனது பகைவனல்ல; அச்சுதன் எனக் கண்டு கொண்டது.
உடனே அச்சுதன் நாயரைத் தன் துதிக்கையால் தூக்கிக் கொண்டு, மிக விரைவாகச் சென்று, தன் எஜமானது இல்லத்தை அடைந்தது. அங்கு பயங்கரமாகப் பிளிறி, வீட்டிலுள்ளோர்க்கு, நடந்த அசம்பாவிதத்தை உணர்த்திவிட்டது. நடந்ததை அறிந்த சிவசங்கரன் குடும்பத்தவர், அச்சுதனை உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தனர். இந்தப் பயங்கர சம்பவத்திலிருந்து அச்சுதன் நாயர், தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
இல்லத்தில் ஐஸ்வரியமாக வளர்க்கப்பட்ட, யானைகளின் இயல்புகளும் குணாம்சங்களும், பாலனாக இருந்த கெங்காதரனு க்கு மன ஆழத்தில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது. கடல் கடந்து சென்று தவக் கோலத்தை ஏற்ற பின்னரும், யானைகளிடத்து அவர் காட்டும் பேரன்புக்கும், அவைபற்றி முகமலர்ந்து பேசுவதற்கும் இதுவே காரணமாயிற்று.
- 4 -

பால்ய நினைவுகள்
பாலன் கெங்காதரன் பிறந்து வளர்ந்த சூழல், மிகவும் மனோரம்யமானது. நாற்பது ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில், பசுமை போர்த்த மலையும் மலைச்சாரலும் கூடிய பிரதேசத்தில் பெரும்மாளிகை போன்ற இல்லம் அமைந்திருந்தது.
இந்த அமைதியான சூழலிலே வளைந்தோடும் நீண்ட ஆற்றின் இரு கரைகளிலும் தென்னந்தோப்பு வளர்ந்திருந்தது. ஆற்றுநீர் சிறுவாய்க்கால்களாக வெட்டப்பட்டுத் தென்னந்தோப் பின் இடையிடையே சிற்றாறுகள்ாகக் காணப்பட்டு அழகூட்டி இருந்தது. தென்னையின் உச்சியில் மிகப் பெரிய தேங்காய்கள் குலைகுலையாகச் சுமை தாங்கமுடியாமல் காய்த்துக் குலுங்கும். முற்றிப் பழுத்த தேங்காய்கள் ஆற்றிலேயே விழுந்து விடும். இதனால் நீண்ட பெரிய வள்ளங்களில் சென்றுதான் ஆற்றில் மிதந்தோடும் தேங்காய்களைச் சேகரிப்பார்கள்.
பாலன் கெங்காதரனும் சிலசமயங்களில் ஆற்றில் வள்ளம் வலித்துச் செல்லும் இனிமையான அனுபவத்தைப் பெற்றோருக்குத் தெரியாமலே பெற்றிருக்கின்றார். ஆனந்தமாக இப்படி வள்ளத்தில் சென்ற சந்தர்ப்பங்களில், எதிர்பாராத விதமாக விபத்துக்களில் சிக்கித்தப்பித்துக் கொண்ட சம்பவங்களும் உண்டு.
தெய்வக் குழந்தை கெங்காதரன் இல்லத்தில் இருந்த சமயத்தில், பொழுது புலரும் அதிகாலைப் பொழுதில் சுற்றாடலில் உள்ள வீடுகளில் இருந்து, ஹார்மோனியத்தோடு இசைந்த இனிமையான பாடல்களால் அவர் மனம் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தது. அமைதியான அந்தப் பொழுதிலே அந்த இனிய இசை, அவரது இதய வீணையின் ஆத்ம கானத்தை மீட்டி, அதில் லயிக்கச் செய்து விட்டதும் உண்டு.
செல்வச் செழிப்பில் திள்ைத்திருந்த இவர்களுக்கு ஸ்நானம் செய்வதற்கெனத் தனியாகக் குளம் கட்டப்பட்டிருந்தது. நம்பூதிரி குடும்பத்தினர் மாத்திரமே இதனை உபயோகிப்பார்கள். இவ்வுயர் குடும்பத்தினர் இல்லத்தில் இருந்து வெளியே புறப்படுகையில், பணியாட்கள் பிரத்தியேகமான மிகப் பெரிய குடை ஒன்றை விரித்துத் தாங்கிச் செல்ல அதனுள் நடந்து செல்வர். வழியிற் செல்வோர் இந்த நம்பூதிரி பிராமண குடும்பத்தவர்களுக்கு தமது மரியாதையை அடக்கமாகத் தெரிவிக்கும் வகையில் விலகிநின்று வழிவிடுவார்கள்.
- S -

Page 25
இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த பல ஏக்கர் நில புலன்களைக் கவனித்து, அதில் தொழில் புரிய நிறையக் குடிமக்கள் இருந்தனர். மாளிகை ஒத்த இல்லத்திலிருந்து வெகு தூரத்தில் நான்கைந்து பெரிய குடிசைகளைக்கட்டி, அதில் குடும்பங்களாகத் தொழிலாளர்களைக் குடியமர்த்தி இருந்தனர்.
அக்குடும்பத்தின் தேவைகளையும் சிவசங்கரன் குடும்பத்தவரே கவனித்து வந்தனர். இவர்கள் மேற்சட்டை ஒன்றும் அணியாமல், இடையிலே ஒரு துண்டை மட்டும் கட்டியிருப்பார்கள். ஆஜானுபாகுவான தோற்றம் கொண்ட வர்கள்; கடும் உழைப்பினால் உடல் உருண்டு திரண்டு காணப்படும். தம் உடல் உழைப்புக்கேற்ப நிறையவே உண்பார்கள். தம் எஜமானரிடம் பக்தி விசுவாசம் கொண்டவராய், அவர்கள் நாவால் இட்ட பணியைத் தலையாற் செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.
அந்த சிறுபராயத்திலேயே, பாலன் கெங்காதரனுக்கு, இந்தக் கடுமையான உழைப்பாளிகள், மக்களாக வாம்ர்
நத էP (59. 岛P历凸
நிலைமை, பல சந்தர்ப்பங்களில் மனதை ஆழத் தொட்டது.
பெற்ற கல்வியும் கலைகளும்
பதினாறு வருட காலம் குழந்தைச் செல்வம் இல்லாதிருந்து ஐயப்ப சாஸ்தாவினால் கிடைத்த தெய்வக் குழந்தையைச், செல்வப் பூரிப்புடன் வளர்த்து வந்தனர் ஆதர்ச தம்பதியர்.
கண்ணை இமை காப்பது போன்று தம் கைச் சிறகுக்குள் வைத்துக் கண்காணித்தனர். விலை உயர்ந்த உலோகத் தட்டில் இக் குழந்தைக்கு உணவளித்தனர் என்றால், அவர்கள் வாழ்வின் வளத்தையும், வளர்ப்பு முறையையும் மேற்கொண்டு வர்ணிக்கத் தேவையில்லை.
கல்விகற்கும் வயதை அடைந்த சிறுவன் கெங்காதரன், பாடசாலைக்கு அனுப்பப்பட்டார். தனக்குக் கற்பித்த ஆசிரியர்களை விட, அவர் நெஞ்சிலே தனியிடம் பிடித்துக் கொண்ட ஆசிரியர் ஒருவர் பற்றி, அவர் நெஞ்சம் என்றும் நினைந்து, மகிழ்வதுண்டு.
- 6 -

‘லில்லி ரீச்சர்' - இதுதான் அவர் பெயர். இவர் படித்த பாடசாலைக்கு அருகிலேயே அமைந்திருந்த பெண்கள் கல்லூரியின் அதிபராக இருந்தவரே இந்த லில்லி ரீச்சர். கிறிஸ்தவ மதத்தவரானாலும், சமயத்துவேஷம் சிறிதும் இல்லாத வெள்ளை உள்ளம் கொண்டவர்.
சிறுவன் கெங்காதரனை தனது கல்லூரி வாசலில் எப்போது கண்டாலும் அன்பு குழைய, கனிவோடு அழைத்து அனைத்து மகிழ்வார். அவர் உள்ளங் கைககளிலே வட்டமாக விளங்கும் மருதாணியின் அழகை, சிறுவன் கெங்காதரன் கண் கொட்டாமல் பார்த்துப் பெருமகிழ்ச்சி கொள்வான். தெய்வக் களை நிரம்பப் பெற்ற சிறுவனின் வசீகரத் தோற்றத்தினால் ஈர்ப்புடைய நெஞ்சினை உடையவரே அந்த லில்லி ரீச்சர் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
பாடசாலைக் கல்வியோடு மட்டும், பெற்றோர் நிறுத்திவிடவில்லை. வேதங்கள், சாஸ்திரங்கள், சங்கீதம், ஆயுர்வேதம், இவற்றையெல்லாம் கூட ஒரே சமயத்தில் கற்க வேண்டிய சந்தர்ப்பம் இவருக்கு ஏற்பட்டது. இல்லத்திலே இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
இவருக்குக் கற்பித்த ஆசான்கள் ஒருமுறை கூறியவுடனே, அதைக் கிரகித்துத் தன்வயமாக்கி, மீண்டும் அட்சரம் பிசகாமல் ஒப்புவித்த பேராற்றலைக் கண்டு மலைத்தனர். இதை முற்பிறவித் தொடர்பென்பதா. . . . .p
இவற்றையெல்லாம் கற்கின்ற பொழுதிலே, தாம் முன்பே கற்றுணர்ந்த ஒன்றை, மீண்டும் மீட்பதான ஓர் உணர்வையே அக் குழந்தை பெற்றுக் கொண்டது. பாரதம், சித்தர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், ஒரு முறை படித்ததும் அப்படியே மனதில் பதிந்து விடும். பஜ கோவிந்தத்தில் உள்ள முப்பதாறு சுலோகங்களும், மன ஆழத்தில் தண்ணீர் போன்று தெளிந்திருந்தது.
தெய்வபர்லனுக்கு சாஸ்திரீய முறைப்படி, சங்கீதத்தைக் கற்றுக் கொடுத்தவர் அனந்த பாகவதர் ஆவார். அனந்தன் என்றுதான் அவரை எல்லோரும் அழைப்பார்கள். கேரளத்தைச் சேர்ந்த திருவனந்தபுரம் அவரது ஊராகும். ஐம்பதுக்கு மேற்பட்ட கீர்த்தனைகளும், வர்ணங்களும் இவரிடத்தில் பயின்றிருக்கிறார் என்றால், சாஸ்திரீக சங்கீதத்தில் எத்தகைய பாண்டித்தியத்தை இந்த இளைஞன் பெற்றிருக்கின்றார் என்பதைக் கூறவேண்டியதில்லை.
- 7 -

Page 26
சிறந்ததோர் சங்கீத வித்துவானாக மட்டுமன்றி, புகழ் பெற்ற நடிகனாகவும் பாகவதர் விளங்கினார். மேடை நாடகங்கள் பலவற்றைத் தானே நெறிப்படுத்தும் திறனும் நிறையப் பெற்றவர். பாகவதர் என்ற லட்சுஷ்ணத்திற்கேற்ப அவர் கேசம் நீண்டு வளர்ந்திருக்கும்.
இவற்றைவிட, வாட்பயிற்சி, சிலம்படி, சண்டைப் பயிற்சி, மற்றும் சகலவிதமான பயிற்சிகளையும், சிறந்த கலைகளாகக் கருதிப் பயிற்றுவித்தனர். இவற்றுக்கெல்லாம் ஆசானாக 'கோவிந்தகுரு" என்பவர் இருந்தார். கறுத்த நிறமும், எடுப்பான உயரமும்; திடகாத்திரமான உடற்கட்டும் உள்ளவர். அங்குள்ள மக்கள், நம்பிக்கைக்குப் பாத்திரமான பாதுகாப்பளிக்கும் மனிதராக அவரைக் கருதினர்.
கோவிந்த குரு பயிற்சி கொடுக்கும் போது, கூர்மையான வாள் கொண்டு சண்டை செய்யப் பயிற்றுவார். இடையிலே அணிகின்ற ஒரு வகையான சுருள்வாளை உருவி எடுப்பதற்கு, தனித்துவமான நீண்ட பயிற்சி வேண்டும். அதனைச் சரியாகச் சுழற்றி, விசிறி எடுக்காவிட்டால், அது வைத்திருப்பவனையே வெட்டிவிடும். அந்தச் சுருள் வாளின் நுனியிலே, சுண்ணாம்பைத் தடவி, இப்படிச் சரியான முறையிலே உருவி எடுத்தால், முன்னே நூறுபேர் நின்றாலும், அத்தனை பேருடைய கழுத்திலும் ஒரு காயமும் படாமலே, அந்தச் சுண்ணாம்பின் அடையாளத்தைப் பதித்து விடலாம் என்று கூறுவார்கள்.
கோவிந்த குரு அளித்த மற்று மொரு அற்புதமான பயிற்சி ஒரு காலை நிறுத்தி ஊன்றி, அதை அசையாமல் வைத்திருப்பதாகும். பெரிய அளவிலான நெல்லிக்காய்களை நிலத்தில் பரவி அதன்மேல் காலை அசைக்காமல் நிறுத்துவது, இதற்குரிய கடுமையான பயிற்சியாகும். இந்தப் பயிற்சியில் தேர்ந்தவர், ஒரு காலை அப்படி உறதியாக நிறுத்தி வைப்பாரானால், ஒரு யானையின் பலத்தினால் கூட, அந்தக் காலை அசைத்திட முடியாது. இந்த அற்புத பயிற்சிக்கு, சுவடு என்று பெயர்.
கோவிந்த குருவிடம் ஐந்து வருடங்கள் இல்லத்தில் பெற்ற பயிற்சியை அடுத்து விசேஷமாகப் பயிற்சி பெறவும் ஒழுங்குகள் செய்தனர். மலை அடிவாரத்திலிருந்த பூரீதரன் என்ற குருஓவ இல்லத்திற்கு அழைத்து வந்து மூன்று மாத காலம் பயிற்சி அளித்தனர்.
- 18

அகத்தில் அரும்பும் துறவு
பாலன் கெங்காதரனின் இல்லத்தில் ஏகாதசி போன்ற மகாவிரதங்களை பக்தி சிரத்தையுடன் அனுஷ்டிப்பார்கள். அத்துடன் ஆவணி ஒனம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். கேரளாவில் அந்நேரம் ஆவணி ஒணம் ஏழு நாட்களுக்குக் கொண்டாடப்படுவது வழக்கம். பண்டிகைக்கு ஒரு மாதத்திற்கு முன்பே, இதற்கான ஆயத்தங்கள் செய்வார்கள். பண்டிகை காலத்தில் ஒய்வாக இருந்து அந்த நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கு ஏற்றாற்போல், நீண்டகாலம் வைத்திருக்கக் கூடிய உணவு வகைகளைச் செய்து வைத்து விடுவர்.
சிவசங்கரனது இல்லத்தில், இந்தப் பண்டிகை நாட்களில், கோலமிட்டு, இல்லத்தை அலங்கரித்து, வகைவகையாகப் பட்சணங்கள் செய்து, வெகு விமரிசையாகக் கொண்டாடு வார்கள். குதூகலமான இந்தப் பண்டிகையில் இடம் பெறும் கேளிக்கைகள் எவற்றிலுமே சிறுவன் கெங்காதரனின் மனம் சற்றும் நாட்டமின்றி இருந்தது. அந்தத் தெய்வப் பாலனுக்கு பிறவியிலிருந்தே, பிரேயஸ் (காரியலாபம்) என்று கருதியோ, சிரேயஸ் (ஆத்மலாபம்) என்று கருதியோ எதுவுமே இருக்கவில்லை.
பண்டிகை நாட்களில் நாட்டம் இல்லாதது போன்று, இல்லத்தில் விசேஷமாகத் தயாரிக்கப்படும் உணவு வகைகளிலும் அவருக்கு விருப்பம் இருக்கவில்லை. இத் தெய்வ மகனுக்கென, சில குறிப்பிட்ட பிரத்தியேகமான சமையலைச் செய்து கொடுப்பார்கள்.
பாடசாலையில் கல்வி பயிலும் காலத்தில், அவருடன் பயின்ற சக மாணவர்களுடன் தமது குடும்பச் செல்வ நிலையை சிறிதும் வெளிப்படுத்தாமல், அந்நியோன்னிய சிநேக பாவத்துடன் பழகி வந்தார். இல்லத்தில் உணவு விசயத்திலிருந்த விசேஷ கவனிப்பைப் பொருட்படுத்தாது, வீட்டாருக்குத் தெரியாமல், பாடசாலைக்குச் சிநேகிதர் கொண்டு வரும் உணவையும் ஏற்று உண்டார்.
மரவள்ளி, பயறு, ரொட்டி போன்ற இல்லத்தில் தவிர்க்கப்பட்ட உணவு வகைகளைப் பேதமின்றி மகிழ்வுடன் ஏற்றார். தனது நண்பனான காதர் கொண்டு வரும்
- 19 -

Page 27
மென்மையும் ருசியும் கொண்ட ரொட்டிகளைச் சாப்பிடுவதில் பாலன் கெங்காதரனுக்கு ஒரு அலாதியான பிரியம். மற்றொரு நண்பன் கொண்டு வரும் பயறையும் மரவள்ளியையும், இவ்வாறே பெருவிருப்புடன் பகிர்ந்து கொள்வார்.
அவர் இல்லத்தைப் பொறுத்தவரை இப் பண்டங்கள், உழைக்கும் தொழிலாளர்க்கே உரியதாக வழங்கப்பட்டன. எனவே இந்த அனுபவங்களை அவர் என்றும் வீட்டில் பிரஸ்தாபித்தது கிடையாது. இந்த இளம் வயதிலேயே, சிறுவன் கெங்காதரனிடம், அரும்பு கட்டிய சமத்துவ நோக்கினை இந்நிகழ்ச்சி கூறாமல் கூறுகின்றது.
உறவின் துறவு
சிவசங்கரனின் இல்லத்துக்கு முன் கூறியது போல், சாதுக்கள் சந்நியாசிகள் தங்கிச் செல்லும் வழக்கம், நீண்ட காலமாக இருந்து வந்தது. வந்து தங்கிச் செல்லும் துறவிகளுக்கென்றே, இவர்களுக்குச் சொந்தமான நிலத்தில், சகல வசதிகளுடனும் கூடிய உறைவிடங்கள் தனியாக அமைக்கப்பட்டிருந்தன.
சிவசங்கரன் தம்பதிகளின் பக்தியான உபசரிப்பு, சாது சந்நியாசிகளின் மனதைப் பெரிதும் கவர்ந்திருந்தது. பட்டும் பீதாம்பரமும் அணிந்து வளர்ந்த சிறுவன் கெங்காதரனின் உள்ளம், அங்கு வந்து தங்கிச் செல்லுகின்ற, சாது சந்நியாசிகள் அணிந்துவரும் காவியுடையினால் அவரை அறியாமலே கவரப்பட்டது.
சாதுக்களுடன் நெருங்கிப் பழகுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். இந்தப் பழக்கத்தில் சிறுபிராய முதல் உள்ளூர வெளிப்படாமல் இருந்து வந்த ஆத்மீகத் துடிப்பு, வீட்டை விட்டு வெளியேறி அவர்களுடன் சென்றுவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை உண்டு பண்ணியது.
பல சமயங்களில், யாரும் அறியாமல், இவர்களுக்குப் பின்னால் சென்றிருக்கிறார். ஆனால் தம் தவப்புதல்வனைக் காணாது ஏங்கித் தவித்த பெற்றோர், அவரை சாதுக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்தே, தேடிப் பிடித்து மீட்டுவரவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர்.
- 20

எனினும் சிறுவன் கெங்காதரனுக்கோ, இல்லத்திலிருந்து வாழ்ந்த காலம் முழுமையும், ஒரு பொறியில் அகப்பட்டுக் கொண்டிருந்த உணர்வைத்தான் அளித்தது.
நாளுக்கு நாள், அங்கிருக்கும் சுகபோகங்களைத் துறந்து, சாதுக்களின் வழிகாட்டலிலே சென்று விடவேண்டும் என்ற தணியாத - தாகம் அதிகரித்தது. இந்த ஒரு உட்தாக மேலீட்டினால், ஒரு நாள் அவருடைய பெற்றோருக்குத் தெரியாமலே சாது ஒருவருடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
மனத்தால் கலந்து வாழாவிடினும், மற்றவர்களால் கருதப்பட்ட அந்த லெளகீக வாழ்க்கைக்கும் அன்றோடு விடை கொடுத்தார் இந்த இளம் துறவி. இல்லத்தை நீங்கி அவர் எடுத்து வைத்த காலடி மானசீகமாய் அவருக்கு நன்கு தெரிந்த ஆத்மீகப் பாதையின் ஆரம்பத்தைக் காட்டியது.
இடையில் சில வார்த்தைகள்
லெளகீக உலகிலிருந்து முற்றாகத் தன்னை விடுவித்து கொண்ட இந்த உத்தம சற்புருஷரின் வாழ்க்கைச் சம்பவங்களை, படிமுறையான ஒழுங்கில் விளக்குவதென்பது முடியாத காரியமே. எனினும் அவரது பரமார்த்திக வாழ்க்கையில், ஆங்காங்கே சம்பவித்த நிகழ்ச்சிகளை அவரது திருவாக்கினாலே பெற்று மனதில் இருத்தி, கோவைப்படுத்தித் தருகிறேன்.
கலைஞர் உறவு
ஒரு சமயம் இந்த சந்நியாசிகளின் பின்னே, தன்னை மறந்து சென்றுவிட்ட இந்த இளம் துறவி, கோயம்புத்தூரில் தனித்து விடப்பட்டார். பசி என்றால் என்னவென்றே அறியாது வளர்ந்த இவர், கையில் காசின்றி கவனிப்பார் யாருமின்றித், தனித்தவராய் அவ்விடத்தில் அலைந்தார்.
கோயம்புத்துார் புகையிரத நிலையம், அவருக்குத் தஞ்சமளித்தது. அந்தப் புகையிரத நிலைய அதிகாரியின் கண்ணில் நம் கெங்காதரன் பட்டுவிட்டார். காந்தம் இழுக்கும் இரும்பைப் போல அருகிலே ஈர்ப்புண்டு வந்த அதிகாரி, கெங்காதரனின் உண்மை நிலையை அறிந்து கொள்ள அதிக நேரம் பிடிக்க வில்லை. தனது பூர்வீகத்தை அதிகாரி உரையாடி அறிந்து கொண்டு விடவே தனது இல்லத்தவர்க்குத் தெரியப்படுத்தக் கூடாதென்ற உறுதி மொழியையும் பெற்றுக் கொண்டார்.
- 2 -

Page 28
அவரது பசியினை ஆற்றிய அதிகாரி அவ்வூரின் மிகப் பெரிய தனவந்தர் ஒருவர் வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்றார். "இராதா கிருஷ்ண ஐயர்' என்பது அந்தத் தனவந் தரின் பெயர். அந்த வீட்டில் இல்லாத ஒரே ஒரு செல்வம் மழலைச் செல்வமே. ஐயரின் மனைவி இந்த பால துறவியின் பால்வடியும் வதனத்தால் தன் மனதை முற்றாகவே பறிகொடுத்தார். அவர் மட்டுமென்ன கெங்காதரரின் ரூப செளந்தரியமும், தெய்வீகக் களையும், யாரைத்தான் தன் பால் ஈர்த்து விடாது?
அன்று முதல் இன்று வரை இசைத் துறையில் பெயர்போனவராக பாரதத்தில் மட்டுமல்ல உலகெல்லாம் புகழ்பரப்பி நிற்பவர் எம்.எஸ். சுப்புலகூழ்மி அவர்கள். ஒரு தடவை ஐயரவர்களின் இல்லத்தில் வந்து தங்கிய வேளை, இந்த தெய்வீகக் களைபொலியும், இளைஞன் அவர் கண்ணில் பட்டு விட்டார். அவரை அணைத்து, அன்போடு பேசி மகிழ்ந்த, எம்.எஸ். அவர்கள் தமது வாசஸ்தலமான பாலக்காடு என்ற இடத்திற்கு ஐயரின் அனுமதியுடன் அழைத்துச் சென்றார்.
அவரோடு தங்கியிருந்து ஒன்றரை மாதகாலத்தில், தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன், வைக்கம் வாசு போன்ற பிரபல்யமான கலைஞர்களையெல்லாம் இளைஞன் கெங்காதரன் சந்தித்து உரையாடினார். அவ்வேளை தியாகராஜ பாகவதரின் ஆஜானுபாகுவான தோற்றம்; தூயவேட்டிசால்வை; தோள்வரை வளர்ந்த சிகை என்றிவை இளைஞனின் உள்ளத்தில் மதிப்பினை ஏற்படுத்தியது.
வைக்கம் வாசு எனப்படும் திரு வாசு தேவன், இந்தியாவிலேயே தலைசிறந்த நாடக நடிகர்; வைக்கம் என்ற ஊர் இவரது தாயகம். மனைவி தங்கமும் கணவரைப் போன்றே புகழ் பெற்றவர்; இத்தம்பதியர்க்குப் பிள்ளைச் செல்வம் இல்லாத காரணத்தால், பாலக் காட்டில் கெங்காதரரோடு, நெருக்கமாகப் பிள்ளைப் பாசத்துடன் பழகி வந்தார்.
- 22 -

கலைஞர் கிருஷ்ணன் அவர்கள் இந்த இளம் துறவியை எம்.எஸ் அவர்கள் வீட்டில் சந்தித்த, அந்தப் பசுமையான நினைவுகளை நீண்ட காலம் மறக்காமலே இருந்தார் என்பதற்கு ஒரு சம்பவம் உண்டு. சுமார் இருபது வருடங்களின் பின் கலை நிகழ்ச்சிக்காக இலங்கையின் திருகோணமலைக்கு விஜயம் செய்த என்.எஸ்.கே. அவர்கள், வடகரை வீதியில் தம் தவவாழ்வை ஆரம்பித்திருந்த இந்த பாலயோகியை கோணேசர் ஆலயத்திற்கு தபசாதனைக்கென சென்று கொண்டிருந்த வேளையிலே சந்தித்தார். அவ்வேளை இன்னாரென அடையாளங் கண்டு, அளவளாவிய சம்பவம் இடம் பெற்றது.
எளிமை தந்த ஆனந்தம்
அடுத்து நீலகிரியை நாடிச் செல்கின்ற நம் குருவைத் தொடர்வோம்.
அது எல்லையற்ற மணற்பரப்பை உடைய பரந்த வனாந்தர வெளி, அதனூடாக இந்த இளைஞன் தண்ணிரை மட்டுமே கிடைத்த இடங்களில் அருந்தி விட்டு இரவுபகலாக நடையைத் தொடர்ந்தார். ஆறுநாட்கள் இவ்வாறு கழிந்தபின் ஓர் சத்திரம் தென்பட்டது. தன்களை நீங்க அங்கே படுத்துவிட்டார். எங்கோ தூரத்திலிருந்து புல்லாங்குழலின் மதுரமான இனிய கானம், காற்றோடு கலந்து மிதந்து வந்து நெஞ்சைத் தொட்டது. மெல்ல எழுந்த இந்த இளந்துறவி ஓசையைத் தொடர்ந்து நடக்கலானார்.
அது ஒரு நாவல் மரம்; ஒர் ஆசனம் அமைத்தது போன்று இரு கிளைகள் கெவர் விட்டு வள்ர்ந்திருந்தன. அந்த இடையில் அமர்ந்தபடி, தன்னை மறந்த நிலையில் புல்லாங்குழலினை அனைத்துயிரும் மயங்கி நிற்கும்படி இனிமை பொங்க வாசித்துக் கொண்டிருந்தார். அவர் உடலில் கந்தலான வேட்டியும் சட்டையும் மட்டுமே காணப்பட்டன. அணிந் திருந்த உடையும் கையில் புல் லாங் குழலும் தவிர வேறெதுவும் அவரிடம் காணப்படவில்லை.
சுவாமிஜியைக் கண்டதும் புல்லாங்குழல் இசைப்பதை உடனே நிறுத்தினார். மரத்தினின்று இறங்கி அருகில் வந்து கன்னட மொழியில் பேசலானார். சுவாமிஜி கூறிய பதிலினை அவரால் விளங்கிக்கொள்ள முடிந்தது. காடுமேடெல்லாம்சுற்றி அலைந்துகொண்டிருக்கும் இந்த உன்னததுறவி சுவாமிஜியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு நடக்கலானார்.
- 25 -

Page 29
சிறிது தூரத்தில் அமைந்திருந்த இடையர் சேரியை அவர்கள் அடைந்தனர். இவர்கள் இருவரையும் ஒருங்கே கண்ட அந்த இடையர்கள் அவர்களுக்கெனத் தனியாகக் குடிசை ஒன்றமைத்து, அவர்களுக்கு வேண்டிய வசதியனைத் தையும் இயன்றவரை செய்து உபசரித்தனர்.
தாமே பயிரிட்ட சோளத்திலிருந்து உணவு தயாரித்து பரிவாகப் பரிமாறினர். செம்மறி ஆடுகளை வளர்ப்பதுதான் இவர்கள் தொழில். ஆயர் பாடியில் மாடுகள் மேய்த்துவரும் பாலகிருஷ்ணன் போன்று, சுவாமிஜி அவர்களும் இந்தச் செம்மறி ஆடுகளை மேய்ப்பவருடன் கூடவே சென்று மேய்த்து வருவதில் தனி இன்பம் கண்டார். இப்படியாக ஒரு மாத காலம் அங்கு கழிந்தது.
இவ்வாறாகச் சுற்றி வந்த வேளையில் சுவாமிஜி நீலகிரியை வந்தடைந்தார். மேகம் வந்து தங்கிச் செல்லும் மலைச்சாரல்கள் பசுமை போர்த்து எழில் கொஞ்ச விளங்கும் இடம் நீலகிரியாகும். மலைச்சாரல்களின் அடிவாரத்தில் தோடர் இனம் கூட்டமாக வாழ்ந்து வந்தது. இவர்கள் புராதன காலத்து வேடர்வழி வந்தவர்கள். பிரபஞ்சாநதி அவர்கள் இருக்கும் இடத்து வளைந்தோடி வளம் பெருக்கிக் கொண்டிருந்தது.
காட்டுமிராண்டிகளை ஒத்த மகாமுரடர்கள் இந்தத் தோடர் இனத்தவர் ஆவார். சுவாமிஜி இவ்விடத்தை அணுகியதுமே அவரது திவ்வியமான திருவடிவம் அந்த முரட்டு உள்ளங்களிலும் ஓர் கசிவினை ஏற்படுத்திவிட்டது. சுவாமிஜியை அன்புடன் வரவேற்று, நதிக்கரையின் அருகில் குடிலொன்றை அவருக்காகவே அமைத்தன்ர். தமது பிரதான உணவான கிழங்கினை மிகவும் பக்குவமாக நெருப்பிலே சுட்டு, பூப்போல வெடித்து மலர்ந்த பக்குவத்தில் அன்புடன் உணவாகக் கொடுத்தனர். கொத்துக் கொத்தாக பழுத்துக் குலுங்கும் திராட்சை போன்ற ஒருவகைக் கனிகளை மரத்திலேறி ஆய்ந்து அதையும் அன்புடன் உண்ணுவித்தனர்.
உருளைக்கிழங்கு பயிரிடுவதை தமது ஜீவனோ பாயமாகக் கொண்ட மக்கள் அவர்கள். விளைந்த கிழங்கினை நீலகிரி நகருக்கு எடுத்துச் சென்று விற்பர். அவர்களது அன்புடன் கூடிய உபசாரத்தில் திளைத்தபடி ஒன்றரை மாத காலத்தை அவ்விடத்திற் கழித்தார்.
-24

சித்தர் மாமுகியின் சந்திப்பு
இப்படியாக தேச சஞ்சாரியாகத் தனி வழியே சென்று கொண்டிருக்கும் வேளையில், ஒரு மகாசித்தரைக் காணும் சந்தர்ப்பம் நம் குருவுக்கு ஏற்பட்டது. அவரே சித்தர் மாமுகி ஆவார். கறுத்த மெலிந்த உயரமான தோற்றம் உடலில் உடையே இல்லை; கண்கள் மேலே சொருகியபடியே இருக்கும்; கடற்கரை ஓரங்களில் திரிந்து கொண்டிருக்கும் வேளையில் எப்போதும் பலர் அவரைச் சூழ்ந்து இருப்பார்கள், இதற்குக் காரணம் ஒன்று உண்டு; அவர் எப்போதாவது மனம் வைத்து அங்குள்ள வலைகளில் ஏதாவது ஒன்றில் கை வைத்து விட்டாரானால், அந்த வலையின் சொந்தக்காரனுக்கு ராஜயோகம்தான். அன்று முழுவதும் வலையில் மீன்மலையாகக் குவிந்து விடும்.
இந்த சித்த புருஷரைப் போன்று இன்னொருவரையும் சுவாமிஜி சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் அவருக்கும் சுவாமிஜிக்கும் இடையில் ஏற்பட்ட ஆன்மீகத் தொடர்பு போல சித்தர் மாமுகிக்கும் சுவாமிஜிக்கும் இருக்கவில்லை.
நயன தீட்சை
மாயைக்கும் அப்பாற்பட்ட உன்னத நிலையில் இருந்த அந்த சித்த புருஷரின் நயன தீட்சையினால் ஈர்க்கப்பட்டு அந்த ஞான அமிர்த கலசத்திலிருந்து பெற்றுக் கொண்ட சக்தி அனுபவங்கள், அவதார புருஷர்ாகிய சுவாமிஜிக்கு, அம்மகானை குருவாக ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த நிலையை ஏற்படுத்தியது. அவரது பெயர் பாலகிருஷ்ண நாயர். 'பாம்பு கோவிந்தன்' என்றே பிற்காலத்தில் எல்லோரும் அழைத்தனர்.
இவர் சுவாமிஜியின் பாடசாலை அதிபராக இருந்தவர். அவரது வாழ்க்கையில் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட சம்பவம், யதார்த்தமான சத்தியத்தை அடைய வேண்டுமென்ற ஆத்மீக பாதைக்குத் திசை திருப்பியது.
இவர் கடமைபுரிந்த பாடசாலையின் கட்டிட வேலைக்காக மரப்பலகைகள் ஒரு புறமாக அடுக்கப்பட்டி ருந்தன. நீண்ட நாட்கள் அவை பாவிக்கப்படாதிருந்ததால் விஷப் பாம்புகள் அதற்குள் வாசம் செய்யலாயின. இதனால் மாணவர் எவரும் அப்பகுதிக்குள் செல்ல அதிபர் அனுமதிக்கவில்லை. ஒரு நாள்.
- 25 -

Page 30
சிறுவர் சிலர் இப்பலகைகள் மேலேறி விளையாடிக் கொண்டிருந்தனர். தற்செயலாக இதனைக் கண்ணுற்ற அதிபர் கோபம் கொண்டு கையிலகப் பட்ட மாணவனுக்கு ஓங்கியடித்தார். எதிர்பாராத விபரீதம் ஒன்று இதனால் நிகழ்ந்தது. அடிப்பட்ட சிறுவன் மூர்ச்சையானான்; அடங்கிய மூச்சு மீண்டும் திரும்பவேயில்லை.
சிறுவனின் அவலமான முடிவு அதிபரை நிலை குலைத்து விட்டது. ஊரே அவருக்கெதிராகத் திரண்டெழுந்தது. பலன்-அதிபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டார்.
தற்செயலாக நிகழ்ந்த இந்த அசம்பாவிதத்தின் தாத்பரியத்தை உணர்ந்து கொள்ள முடியாமல், அதிபர் சிறையில் மனம் வெதும்பினார். இறுதியில் அவர் ஓர் தீர்மானத்துக்கு வந்தார். இவ் வழக்கின் முடிபு இன்னதென்பதை ஊகித்துக் கொண்டவர், இறந்த குழந்தையின் வறிய பெற்றோர்க்குத் தன் பெருஞ் சொத்தின் பாதியை நன்கொடையாக எழுதிய பின், மீதியைத் தன் மனைவிக்கும் மகளுக்கும் எழுதினார்.
விதிவசத்தால் நிகழ்ந்து விட்ட தம் குழந்தையின் துர்மரணத்துக்காக அதிபரை தண்டனைக்குள்ளாக்குவதில் எந்தவித பலனும் தமக்கு ஏற்படப் போவதில்லை என்று உணர்ந்த சிறுவனின் பெற்றோர், அதிபருக்கெதிரான தமது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். விசாரணையின் பின் அதிபர் விடுதலை செய்யப்பட்டார்.
அன்றே தேச சஞ்சாரியாகப் புறப்பட்ட அவரைக் குடும்பத்தவரோ அறிந்தவரோ பலகாலம் காணவில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் வடக்க நாதர் ஆலயத்தில் உருமாற்றம் அடைந்த நிலையில் இவர் காணப்பட்டார். ஊண் உறக்கம் எதுவுமின்றி, வாயினுள் போடுவது எதுவான்ாலும் ஏற்றுக் கொள்வார். சுய அறிவு இல்லாத அவருக்கு, கள்ளைப் பருக்கி விடுவார்கள்; பச்சை மீனை உண்ணக் கொடுப்பார்கள்; சலனமேதுமின்றியே இவற்றை விழுங்கி விடுவார்.
- 26 -

இந்த அதிசக்தி வாய்ந்த சித்தர் படுத்திருக்கும் வேளையில், அவருக்கு அருகில் உத்தம தாயை ஒத்த அன்போடு கூடிய பசு, தனது இரண்டு முன்னங்கால்களையும் உடலின் இரு பக்கங்களிலும் வைத்து, அம் மகானின் திருவாய்க்கு நேராகத் தமது முலைக்காம்பு இருக்கக் கூடியதாக நின்று, வாய்க்குள் பசும்பாலைச் சொரிந்து விடும். இந்த மகானின் மகத்துவத்தை விளக்குவதற்கு இதைவிட வேறு என்ன சான்று பகரமுடியும்?
சுய பிரக்ஞை இல்லாத அவருக்கு இடுப்பில் சாக்கை நாடாவினால் கட்டி விடுவார்கள். அது கிழிந்து விட்டால் மீண்டும் யாராவது மாற்றி விடுவார். கோவிந்தனுடைய ஆலயத்தில் படுத்திருக்கும் வேளையில் பாம்புகள் இவருடலில் ஊர்ந்து செல்லும். பாம்புப் புற்றில் கையை விட்டாரானால் அவை கைகளைச் சுற்றிக் கொள்ளும். கோவிந்தனுடைய ஆலயத்தில் இத்தகைய காட்சிகளைக் கண்டே அவரைப் 'பாம்பு கோவிந்தன்' என்று எல்லோரும் அழைக்கத் தொடங்கினர்.
ஒரு சமயம் இந்த மகான் ஒரு புடவைக்கடைக்குள் சென்று நின்றார். இவரது தோற்றத்தைக் கண்ட கடையாட்கள் ஏளனஞ்செய்து வெளியே போகும்படி துரத்தினர். இச் சம்பவத்தை எவருமே ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஆனால் அந்தக்கடையில் இருந்த சில சேலைகளும், துணிகளும் எடுப்பாரின்றித் தாமாகவே பறந்து, வீதியில் சென்று கொண்டிருந்த ஆட்களின் உடலிலே சுற்றிக் கொண்டன. இந்த அசாதாரண நிகழ்ச்சியின் காரணம் என்னவாக இருக்கலாம் என்று அச்சத்துடன் ஆராய்ந்து பார்த்த கடைக்காரர், கடைசியாகத் தீர விசாரித்த பின் ஒரு முடிவுக்கு வந்தார்.
தன் வேலையாட்களால் துரத்தப்பட்ட எளிமைக் கோலங்கொண்ட மகாபுருஷரை எங்கும் தேடலானார். மைதான மொன்றில் படுத்திருந்த அந்த சித்த புருஷரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டதன் பின்பே அந்தச் சம்பவத்தை நிறுத்த முடிந்தது.
- 27 .

Page 31
பிற்காலத்தில் அவர் தேசாந்திரியாகத் திரிந்த வேளையில் அவரது மனைவியும் மகளும் அவருடன் சேர்ந்தே சுற்றித் திரிந்தனர்.
மோனநிலையிருக்கும் அந்த மகான், எப்பொழுதாவது அருமையாகவே ஒளிவீசம் ஞான விழிகளை மலர்த்திப் பார்ப்பதுண்டு. அப்படியான ஒரு பொழுதிலே அந்த ஒளி மழையில் அவதார புருஷராகிய சுவாமிஜி நனைந்து முழுக நேரிட்டது. எல்லாம் கடந்த நிலையில் உலாவித் திரியும் அந்த மகா ஞானியிடமிருந்து, அநேக உயர்ந்த ஆத்மீக அனுபவங்களை நயன தீட்சையினாலேயே சுவாமிஜி கிரகித்துக் கொண்டார்.
கோடீஸ்வரர் சந்திப்பு
தேசாந்திரியாக சுவாமிஜி அலைகின்ற நேரங்களில் சாது சந்நியாசிகள் தாமாகவே வந்து அவருடன் சேர்ந்து கொள்வதுண்டு. இப்படியாக பல ஊர்களையும் கண்டு சென்ற நம்குரு, சாது ஒருவர் தொடர வட இந்தியாவைச் சென்றடைந்தார். அங்கு கல்கத்தா நகரில் சாதுவை விட்டுத் தனியாகப் பிரிய வேண்டி நேரிட்டது. அந்த இளவயதில், கண்காணாத தேசத்தில், முன்பின் தெரியாத மனிதர்கள் மத்தியில், நிராதரவான நிலையில் தனித்து விடப்பட்டார் கெங்காதரன்.
ஆத்ம பலமும் இலட்சிய நோக்கும் வைராக்கியமும் கொண்ட இவருக்குத் தனிமை ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. சில நாட்கள் அன்ன ஆகாரமின்றி அலைந்து, கடைசியாக காளிகோட்டம் என்ற இடத்தில் ஒரு காளி Gsnufaair வெளிப்புறத்தே அமர்ந்திருந்தார்.
சிறுவயதிலிருந்தே ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதற்கு அவரது மனம் ஒருபோதும் இசைந்ததில்லை. இதற்கு அவர் கூறிய காரணம் ஒன்றுண்டு. “தனக்கு நன்கு தெரிந்த - தன்னை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த அந்த சைதன்யப் பொழிவை - பரம் பொருளை - ப்ரம்மசொரூபத்தை குறிப்பிட்ட குறுகிய வட்டத்துள் நான் சுவைக்க விரும்பவில்லை." என்பதாகும்.
- 28

ஆலயத்தின் வெளியே அமர்ந்திருந்த வேளையிலே ஆலய வழிபாட்டுக்கென பலர் அங்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். அந்நேரம் - தோற்றத்திலே பிரபு என மதிக்கத்தக்க மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். பின்னே அவரது காரிய தரிசி தொடர்ந்து வந்தார். வெளிமண்டபத்தில் நடப்பதைக் கவனித்தபடி படுத்திருந்த இளைஞனின் மலரொத்த முகமண்டலத்தின் மேல் கோடீஸ்வரர் கண்கள் பதிந்தன. மந்திர சக்தியால் கட்டுண்டாற்போல அவர் நடை தயங்கியது.
ஒளிவீசிய அந்த முகத்தின் தனித்துவமான தேஜஸ் தான் அவர் தயக்கத்தின் காரணம் எனலாமா? தனது ஆத்மார்த்த வாழ்க்கையில் முன்னேறத் துடித்துக் கொண்டிருந்த இளைஞனுக்கு, தற்காலிகமான ஓர் புகலிடத்தைத் தேடித் தருவதற்குத் திருவருள் தான் கைகூடியதா?.
கோடீஸ்வரன் இளைஞன் அருகில் வந்தார். ஆறு நாட்கள் குழாய் நீரைமட்டும் குடித்து, பசியால் வாடிச் சோர்ந்திருந்த அந்தத் திரு வடிவின் தேவையைக் குறிப்பாலுணர்ந்து, பழமும் மிட்டாயும் தயிரும் வருவித்து அன்போடு உண்ணக் கொடுத்தார். இவர் கல்கத்தாவிலே பலகோடி ரூபா பெறுமதி வாய்ந்த சொத்துக்களுக்கு அதிபதியாவார். தீனதயாளன் - இதுவே அவரது பெயராயினும், அவரோடு நெருங்கிப் பழகியவர், அவரைத் தயா' என்றே அழைப்பார்கள். பல மொழிகளைச் சரளமாகப் பேசவல்ல ஆற்றலுடையவர் இந்தப் பிரபு. இளைஞன் கெங்காதரனுடன் கேரள மொழியில் சரளமாக உரையாடத் தொடங்கினார்.
அவர் பேசப்பேச, அந்தக் கனிந்த குழைந்த பேச்சினால் முற்றிலும் அவரது அன்புப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டார் சுவாமிஜி, இதுவரை பந்த பாசங்களால் பெருமளவில் ஆட்கொள்ளப்படாத அந்த இள நெஞ்சத்தைப் பிரபுவின் வார்த்தைகள் உலுக்கிவிட்டன. தன்னை அனைத்து மடியிலமர்த்திப் பேசாத குறையாக அன்பைப் பொழிந்த 5 TL, GO) GITGGO GOT GIBT jif? "My Dearest Boy! What is Your Caste?" என்று கேட்டார். இளைஞனின் முகத்திலே ஒரு புன் சிரிப்பு மின்னலைப் போல் தோன்றி மறைந்தது. "என் ஜாதி என்ன என்பது என்னைப் பார்க்கத் தெரியவில்லையா? கண்ணால் பார்த்துத் தெரியாத ஒன்றை, நாவால் எப்படி விளக்க முடியும்? இந்தப் பதில் பிரபுவை அதிர வைத்தது.
99 -

Page 32
பிரபுவின் உள்ளத்தில் இளைஞன் மேல் ஏற்பட்ட காரணந் தெரியாத ஒரு பிணைப்பு, மேலும் இறுகியது என்றுதான் கூறவேண்டும். கோடீஸ்வரனின் அன்புக் கட்டளையை மீறமுடியாத நிலையில் இளைஞன் அவருடன் இல்லம் சென்றார். பிரம்மாண்டமான மாளிகை போன்ற வாசஸ்தலம்; அந்தக் கோடீஸ்வரனின் சொத்துக்களுக்கெல்லாம் மேம்பட்ட சொத்தாக அழகிய ஏக புத்திரி சிநேகலதா: அரண்மனையின் அத்தனை பணிகளையும் ஆற்றுவதற்கு வேலையாட்கள் பலர்; இவர்கள்தான் அந்த மாளிகையில் காணப்பட்டவர்கள்.
ஒரு வாரம் கழிந்தது. அன்று காலை உணவின் பின் பிரபு இளைஞனுடன் சாவகாசமாக அமர்ந்து பேசத் தொடங்கினார். அனுஜா (தம்பி என்று பொருள்) உனது பூர்வீசம், உனது வாழ்க்கைமுறை, உனது அளவற்ற தேஜஸ், இவை அனைத்தும் இந்த ஒரு வார காலத்துள் என்னை ஒரு முடிவு எடுக்க வைத்துவிட்டது. எனது சொத்து-சுகம்உடமைகள் அனைத்தையும் உன்னிடத்தில் ஒப்படைக்கவே நான் விரும்புகிறேன். தீர்க்கமாக யோசித்தே நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.
'காளிகா நரகம்" என்றொரு கொடிய நரகம் இருக்கின்றது. அத்தகைய கோடானு கோடி நரகங்கள் சேர்ந்தால் ஏற்படும் வேதனை உணர்வுதான், இளைஞன் கெங்காதரனை அக்கணத்தில் வந்து தாக்கியது. உடனே, “இவ்விடத்தை விட்டு எங்காவது போய்விடவேண்டும்; இங்கிருந்து விலகிச் சென்றுவிட வேண்டும்" என்ற சிந்தனை அலைகளே, அந்த இளம் துறவுள்ளத்தில் இடைவிடாமல் ஒலிக்க ஆரம்பித்தது.
குருச்ட சந்திப்பு
அன்று ஞாயிற்றுக்கிழமை; வழமையாக அவர்கள் செல்லும் காளி கோயிலுக்கு கெங்காதரரையும் அழைத்துக் கொண்டு பிரபு சென்றார். இளைஞன் மனதிலோ அமைதியில்லை. அந்தப் பந்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டுமென்ற தீவிர சிந்தனை, மீண்டும் மீண்டும் மேலோங்கியபடி இருந்தது. ஆலய வழிபாட்டிற்கு மக்கள் திரண்டிருந்த நேரமது
- O -

திடீரென்று இளைஞன் கெங்காதரன் தோளிலே மின்சாரம் பாய்ந்தது போன்றதோர் உணர்வு, அவரைத் திடுக்கிட வைத்தது; திரும்பிப் பார்க்கவும் வைத்தது. அங்கே-அவர் கண்கள் கண்ட அந்தக் காட்சி.
சாந்தமும் பிரகாசமும் தவழுகின்ற திருமுகம்; சுமார் நாற்பத்தைந்து வயதேயாயினும் இளமகான் போன்ற ஓர் திருத்தோற்றம்; தன் தோளைத் தீண்டியவரைக் கணப்பொழுதில் மனதில் மதிப்பீடு செய்து கொண்டார்.
இங்கேயும் ஓர் அற்புதம்; இந்த தேஜஸ் நிறைந்த திருத்தோற்றத்தை இதற்கு முன்பு எப்போதோ ஒருமுறை தான் பார்த்தது போன்ற உணர்வை அடைந்தார் இளைஞன் கெங்காதரன்.
அந்த மகான் திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகள், அவரது இந்த நினைப்பை ஊர்ஜிதப்படுத்தியது. தோளில் கையை வைத்தபடியே, "நீ மீண்டும் வலைக்குள் அகப்பட்டு விட்டாயா? என்ற ஆழமான கேள்வி, அவரது திருவாயிலிருந்து எழுந்தது. இந்தக் கேள்வியினாலும் அவரிடம் காணப்பட்ட விசேட தவவலிமையினாலும் ஈர்க்கப்பட்டு, தான் இல்லத்தி லிருந்து வெளியேறிய குறிக்கோள் அங்கு நிறைவடைய, அக்கணமே மானசீக குருவாக அந்த மகானை ஏற்றுக் கொண்டார்.
அதே சமயம், அத்தவஞானியும் அவ்விடத்திலேயே தனது தவசக்தி வலிமையால், இந்தப் பூவுலகில் அவதார புருஷராக அவதரித்த இந்த இளைஞனின் விசேஷ தெய்வாம்சங்களை ஞானத்தினாலறிந்து, மனம் மகிழ்ந்து அவரை ஏற்றுக் கொண்டார். மறுகணம் ஆலயத்திலிருந்தவர் எவரும் காணாதபடி, சித்து வலிமையினால் அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
31

Page 33
3 Thbij LUTUT
இளந் துறவி குருவாக ஏற்றுக் கொண்ட மகான், காஷ்மீர் ராஜவம்சத்தைச் சேர்ந்த இளவரசருடைய புத்திரன் ஆவார். சாந்த கிரி பாபா என்ற திருநாமத்தையுடைய இவர், ( 6 Tiib. T. 6îGF. Lu'Lg5nTrif? (M.A. Hons.). g5 Dg5 ராஜபோகங்களைத் துறந்து, தம் தவவலிமையால் உன்னதமான ஞானநிலையை அடைந்தவர். இராஜ வம்சத்திற்கே உரித்தான ஆறடி உயரமும், அதற்கேற்ற எடுப்பான அழகான சிவந்த தோற்றமும் உடையவர். தலைமுடியை நீளமாக வளர்த்து, இடுப்பில் மட்டும் ஒரு சிறிய துண்டு கட்டியிருந்தார். பிற் காலத்தில் சுவாமிஜி தனது உத்தம குருவின் இலட்சணங்களை எடுத்துக் கூறிய வேளைகளில், கேட்பவர் மேனி சிலிர்த்து, மயிர்க்கூச்செறியும்படி, உணர்ச்சிப் பிளம்பாக நின்று, வார்த்தைகளைத் தெரிந்து பிரயோகிப்பார்.
இளைஞரான கெங்காதரர், இந்த சித்த புருஷருடன் அங்கிருந்து வெளியேறி அவர் செல்லுமிடமெல்லாம் பின் தொடர்ந்தார். ஒரே இடத்தில் அவர்கள் தங்காது, ஒருமாத காலத்தினுள் கல்கத்தா பம்பாய் அஸ்ஸாம் ஆகிய இடங்களுக்கு இருவருமாகப் பயணம் செய்தனர். கடைசியாக அந்த மகானும், அவரால் ஆட்கொள்ளப்பட்ட சீடனும் கற்கோட்டம் மலையடிவாரத்தை வந்தடைந்தனர்.
எழில் பொங்கும் கேரளமும், செந்தமிழ் முழங்கும் தமிழ்நாடும் சேருமிடமிது; இவ்விடத்தில் உத்தம குருவினால் சிஷ்யனுக்கு இரு மாத காலங்கள், ஆத்ம தாகத்திற்கான கடும்பயிற்சி அளிக்கப்பட்டது. குருவிற்கும் சிஷ்யனுக்கும் இடையே இருந்த தொடர்பு அன்பின் அடிப்படையிலேயே அமைந்தது. குருவின் பேரன்பிற்குக் கட்டுப்பட்டு, தன்னை முழுமையாக அர்ப்பணித்து குருவுடன் உறவாடினார். எல்லாமாக இந்த மகானுடன் சேர்ந்து இருக்கக் கிடைத்த காலம், மூன்று மாதங்களேயாயினும், முப்பது வருஷங்களுக்கான கடுமையான ஆத்மீக அனுபவங்களை இந்த இளம் துறவி பெற்றார்.
ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கைக்குத்தான் வந்த சமயம், திருக்கோணமலை என்ற புண்ணிய பூமிக்கும் வந்து சென்றதாக, உத்தம குருவான சாந்தகிரிபாபா, தமது சிஷ்யரிடம் கூறினார். அந்நேரம் இலங்கையைச் சேர்ந்த திருகோணமலை என்ற
- 32

இடம் எப்படி உளது என்பது தெரியாத காலத்திலேயே, குருசிஷ்ய சந்திப்பில் அறிந்து கொண்டார். தமது சிஷ்யனின் அதீதமான பக்தியையும் வைராக்கியத்தையும் - தவம் மேற் கொள்ளும் வலிமையையும் கண் டு, அந்த மலையடிவாரத்திலேயே தனியாக விட்டு மறைந்தார்.
அந்த மலையடிவாரத்தில் ஒளஷத மூலிகைகள் நிறைந்து நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. கொடிய விலங்குகள் ஒரு புறமும், கொடிய மனிதர்கள் ஒருபுறமும் வாழுமிடம் அதுவாகும். புதிய மனிதரைக் கண்டால், கொன்று விடுவது இங்குள்ளவர்களின் சுபாவம். இத்தகைய கொடூரமான காட்டில் வயதில் சிறியவரும் தோற்றத்தில் இளைஞனுமான சுவாமிஜி தனித்து விடப்பட்டார்.
அங்கிருந்து தமது பயணத்தைத் தொடர்ந்து பெரும்காடு வனாந்தரங்களையெல்லாம் சுற்றி வந்தார். அவ்வேளை கோயம்புத்தூருக்கும், நீலகிரிக்குமிடையில் உள்ள பவானி நதியோரம் வந்து சேர்ந்தார். சுவாமிஜி இப்படி ஊர் ஊராகச் சுற்றிய வேளையில் அவருடன் வேறு துறவிகள் ஓரிருவராவது வந்து சேர்ந்து விடுவர். இப்படியாக ஒரு துறவியோடு சேர்ந்து செல்லும் போது நீலகிரிக்கருகில் உள்ள காட்டில் அன்னசத்திரம் ஒன்றைக் கண்டார். இருவருமாக இரவு வேளைபடுத்துறங்கினர். அதிகாலை எழுந்து பார்த்த பொழுது அருகில் உறங்கிய துறவியைக் காணவில்லை. தேச சஞ்சாரத்தின் போது உற்ற துணையாகத் துறவிகள் சேர்ந்து வருவதும், திடீரென மறைவதும் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகவே அவ்வப்போது சுவாமிஜிக்கு இருந்து வந்தது.
புனித திரிவேணி தீர்த்தம்
ஒரு சமயம் அலகாபாத் என்ற இடத்திற்கும் செல்லும் சந்தர்ப்பம் சுவாமிஜிக்கு ஏற்பட்டது. வட இந்தியாவில் இவ்விடத்தில்தான், புண்ணிய கங்கை, புனித ஜமுனை, பரிசுத்தமான சரஸ்வதி, ஆகிய இம்மூன்று அற்புத தீர்த்தங்களும் ஒன்று சேருகின்றன. இவ்விடமே திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகின்றது. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விசேஷமாக நடைபெறுகின்ற இப்புனித கங்கையின்
- 33.

Page 34
தீர்த்தோற்சவத்தில், சுவாமிஜி பங்கு கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இவ் விழாவில் கலந்து நற்கதி பெறவென்று இலட்சக் கணக்கான பக்தர்கள் இந்தியாவின் நாலா பக்கங்களிலிருந்தும் கூடுவது வழக்கமாகும் . இவ்விழாநடைபெறும் ஒவ்வோர் தடவையிலும் சுமார் எழுநூறு எண்ணுறு பேருக்கு மேல், நெரிசலில் அகப்பட்டு இறந்து விடுவது வழக்கம். இந்த அகால மரணங்களையிட்டு அரசோ அல்லது இனஜனங்களோ கவலைப்படுவது கிடையாது. ஏனெனில் அவ்வுயிர்கள் சுவர்க்கத்தையே அடைந்துவிடும் என்ற திடமான நம்பிக்கையே அதற்குக் காரணமாகும். இந்த தீர்த்தோற்சவத்திற்கென பல இலட்சக் கணக்கான ரூபாய்களை அரசு செலவு செய்வதுண்டு.
பார்க்குமிடமெங்கும் சாதுக்கள் சந்நியாசிகளின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. அவர்களுக்கென பர்னசாலைகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்தன. சாதுக்களில், சிலர் உடலில் உடையே காணப்படவில்லை. மெல்லிய துணியில் கோவணம் மட்டுமே அவர்களது ஆடையெனக் கூறும்படியாயமைந்திருந்தது. "நர்ஸாக்கள்” இப்படித்தான் இவர்களை அழைத்தார்கள். இவர்களது தோற்றம் பார்க்கப் பயங்கரமானது. கண்கள் சிவந்து தலைமுடி நீண்டு வளர்ந்து காணப்பட்டது. வட இந்தியாவின் சிந்து மக்கள் சாதுக்கள், சந்நியாசிகளைத் தங்கள் கண்கண்ட தெய்வமாகவே வைத்து வழிபடுவார்கள். மலைகள், குகைகள், காடு, வனாந்தரங்கள் இவற்றில் மறைவாக அமர்ந்து தவசாதனைகளில் இத்தவயோகிகள் ஈடுபட்டிருப்பார்கள். இக் கடும்தவத்தால் அஷ்டமாசித்திகளை அடைந்த இம்மகான்கள், மனித சமுதாயத்தின் மேற்கொண்ட கருணையினால் அவர்களது விமோசனத்தைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்த்தாடன உற்சவத்தில் கலந்து கொள்வார்கள். எந்த ஆலயத் தெய்வங்களும், இந்தத் தீர்த்தத் தலத்திற்கு எழுந்தருளுவதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அப்படியானால் - இவ்விழாவில் முக்கியத்துவம்
யாருக்கென நோக்கினால், முன் குறிப்பிடப்பட்ட சாதுக்கள்,
சந்நியாசிகள், ஞானிகள் - இந்த வரிசையில் ஆத்ம ஞானம்
அடைந்தவர்கள் தான் இந்தப் புண்ணிய தீர்த்தோற்சவத்தைத்
- 54

துவக்கி வைப்பவர் ஆவார். இவர்கள் நீரில் இறங்கித் தீர்த்தமாடிய பின்பே இந்தப் புனித கங்கையில் கலந்து விட்ட அவர்களது சைதன்யப் பெருக்கினால், தம்மையும் தூய்மை செய்திடவென்று மக்கள் இறங்கி நீராடுவர். அவதார புருஷராகிய நமது சுவாமிஜியின் திருமேனியின் ஸ்பரிசம், திரிவேணி சங்கமத்தின் கங்கைப் பிரவாகத்தில் கலந்து, அதன் புனிதத்தை மேலும் உயர்த்தியது. அதன் வழி பாரத மக்களுக்கும் அப்பேறு கிட்டியது.
திரிவேணி சங்கமத்தையடுத்து ரிஷிகேசம், ஹிமாலயம் போன்ற புனித இடங்களில் காணப்படும் நதி ஓட்டத்தில், பிரதேங்கள், அசுத்தங்கள் மிதந்து வந்தாலும் கூட நிறைந்த சைதன்ய சக்தியும் அருட் பொழிவும் நிறைந்திருப்பது பெரும் அற்புதமே.
இமயத்தில் குருதேவர்
தமது புனித யாத்திரையை இமாசலம் நோக்கித் திருப்பிய சுவாமிஜி பாரத மண்ணில் தோன்றிய பெரும் தவஞானிகளின் தவப்பொழிவினை தரிசிக்கவும் அனுபவிக்கவும் ஆர்வம்கொண்டு சென்றார். பல முனி சிரேஷ்டர்களின் தவச்சாலைகளாய் அமைந்த குகைகளையும் பாறைகளையும் தேடிச் சென்று பார்வையிட்டார்.
அவ்வேளை ஒரு பழுத்த ஞானியின் தவ நிலையத்தைச் சென்றடைந்தார். அங்கு அவர் அடைந்ததும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அதிவிசேஷமான குளிர்மையான ஓர் அற்புத உணர்வை அடைந்தார். காரணம்; இந்த இடம் பல்லாண்டுகளுக்கு முன் பிரசித்தி வாய்ந்த அகஸ்திய முனிவர் தவம் இயற்றிய இடம் இதுவாகும். அந்த மாமுனியின் சைதன்ய பேரலைகள் அவ்விடம் முழுவதும் வியாபித்திருந்த மையே காரணமாகும். தொடர்ந்து வந்த பல முனிசிரேஷ்டர் களின் தவச்சாலையாகவும் இவ்விடம் விளங்கி வந்துள்ளது.
சுவாமிஜி சென்றவேளை அங்கு வாழ்ந்து கொண்டி
ருந்தவர் சுமார் நூற்றிருபது வயதுடைய ஒரு தவசிரேஷ்டரா
வார். எவ்ரையும் வரவேற்று உபசரிக்க முடியாத நிலையில்
இருந்தாலும், அந்த ஞானி இந்த இளம் துறவியின் சக்தி
35

Page 35
மகிமையினால் கவரப்பட்டு அன்புடன் உபசரித்தார். ரொட்டி போன்ற ஒருவகை உணவைத் தயாரித்துக் கொடுத்து மிக்க மகிழ்வுடன் உரையாடினார். தவ வலிமைநாடி வந்த சாதுக்கள் - சந்நியாசிகள் - தவசிரேஷ்டர்கள் காலங்காலமாக இருந்து தவமியற்றும் இப்புண்ணிய பூமியில் சில காலம் தங்கியிருந்தபின், மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார் சுவாமிஜி,
முஸ்லிம் சூபியின் சந்திப்பு
இந்தியாவின் வட எல்லையிலிருக்கும் இமயத்திலிருந்து, தெற்கே கன்னியாகுமரிவரை உள்ள, எல்லா ஆச்சிரமங்க ளையுமே சுவாமிஜி சென்று பார்வையிட்டார். எந்த இடத்திலும் தொடர்ந்து தங்கியிருப்பதை அவர் மனம் விரும்பவில்லை.
சுவாமிஜி அவர்களது தேச யாத்திரை இப்படித் தொடர்ந்து கொண்டிருந்தவேளை ஒரு சமயம் வாகனம் ஒன்றில் அவர் பயணம் செய்ய நேரிட்டது. அது மேற்கூரையி ல்லாத வண்டி, கீழே தளத்திற்கு மரப்பலகை இடப்பட்டிருந்தது. வாகனத்தின் இருபுறமும் பிடித்துக் கொண்டு நிற்பதற்கு இரும்புக் கைப்பிடி அமைந்திருந்தது. பிரயாணம் தொடர்ந்து கொண்டிருந்த வேளை, தன் பின்னே நின்றவரை சுவாமிஜி திரும்பிப் பார்த்தார். பார்த்த ஒரே பார்வையில் நின்றிருந்தவரின் சக்தி விசேஷத்தால் சுவாமிஜி கவரப்பட்டார். அவருடன் அளவளாவ வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.
அவர் ஒரு முஸ்லீம் சூஃபி. இந்த சூஃபி தன் முன்னே நின்றிருந்த மனிதர் ஒருவரின் கழுத்தைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்த சால்வையின் இரு தொங்கல்களிலும் இழுப்பட்டிருந்த நூலை, சிறிது சிறிதாகச் சேர்த்து முடிந்து கொண்டே இருந்தார். இவ்வாறு கைகள் வேலையில் ஈடுபட்ட நேரம் முழுவதும், அவர் பார்வை தன் மேலேயே இருப்பதை சுவாமிஜி நன்கு அவதானித்தார். சூஃபியின் இந்தச் செயற்பாடு, சுவாமிஜிக்கும் அவருக்குமிடையே ஆத்மீக பரிபாஷையாகவே அமைந்தது.
வண்டி ஓரிடத்தே நின்றது: சூஃபி இறங்கினார்; அவரைத் தொடர்ந்து சுவாமிஜியும் இறங்கிவிட்டார். அவரை
- 36

கதிர்பார்த்து நின்றவரைப் போல சூஃபி, "குட்டி நீ எங்கே போகிறாய்?" என்று வினவினார். மலையாளத்தில் இவ்வாறு வினா எழுப்பியவர் தொடர்ந்து, “நீ என்னுடன் வா" என அழைத்தார். சூஃபியின் இருப்பிடத்தை இருவரும் அடைந்தனர். நன்கு உபசரித்து உணவளிக்க ஆயத்தமான சூஃபி, "நீ மாமிசம் சாப்பிடுவதில்லையா?" என்று கேட்டார். 'இல்லை’ என்று பதில் வரவே, வெளியே சென்று அவல் வாங்கி வந்தார். தனது கைகளாலேயே அதனைக் குழைத்து அன்புடன் சுவாமிஜிக்கு அருந்தக் கொடுத்தார். அமிர்தம் போன்று இருந்த அந்த அவலை உண்டு நீரும் குடித்தவருக்கு, ஓர் புதிய பலமும் சக்தியும் புத்துணர்வும் ஏற்பட்டது போன்ற உணர்வு மேலோங்கியது.
இருவரும் உரையாடத் தொடங்கினர். ஆழமான உள்ளார்த்தம் நிரம்பிய தீர்க்க தரிசனமான சம்பாஷணை இருவருக்குமிடையே நிகழ்ந்தது. இந்த இளம் துறவியிடம் காணப்பட்ட தெய்வாம்சங்களையும், அதீதமான சக்தியையும் தனது ஆத்ம வலிமையால் அறிந்து கொண்ட சூஃபி, அவர் ஆத்மீகத் துறையில் அடையவிருக்கும் உன்னத நிலையினைத் தீர்க்க தரிசனமாக எடுத்துரைத்தார்.
"உனது முப்பத்திரெண்டாவது வயதில் நீ கடுந்தவ சாதனையால் உயர்ந்த யோக சித்தி பெற்று உன்னத ஞான நிலையை அடைவாய்; இந்த உன்னத நிலை, சமுத்திரம் கடந்து சென்றுதான் உனக்குக் கிடைக்கப் போகிறது." சூஃபியின் நல்லாசியுடன் அவரிடம் விடைபெற்று அவ்விடத்தை விட்டுப்புறப்பட்டார் சுவாமிஜி.
ஈழத்தில் திருமலரடிகள்
இலங்கையின்கிழக்கில் அமைந்த திருக்கோண மலையை நாடிவர மனதில் சங்கற்பம் எடுத்துக்கொண்ட சுவாமிஜி, தன் யாத்திரையைத் தொடர்ந்தார். இவ்வேளையில் சுவாமிஜியின் திருவுடலில் காணப்பட்ட தெய்வாம்சங்களான, நெற்றியில் துலங்கிய பிறை வடிவும், கழுத்திற் சுற்றிய வெள்ளை நாகத்தின் அடையாளமும் நீங்கின.
இயற்கை வளம் கொழிக்கும் அழகிய தீவான இலங்கை மண்ணில் 1940 ஆம் ஆண்டில் தமது ஆத்மீகப் பணிக்கு
- S -

Page 36
அத்திவாரமாகத் தமது திருப்பாத கமலங்களைப் பதித்தார். வரலாற்றுப் புகழ்மிக்க இந்து சமுத்திரத்தின் முத்துப் போன்ற ஈழத் திருநாடு செய்த தவப்பயன் இது.
இலங்கைக்கு வந்த ஆரம்ப காலத்தில், சிங்கள மக்களுடன் சேர்ந்து பழகவும் தங்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர்கள் பலருடன் பழகும் வாய்ப்பும் ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் வைத்தியத் துறையில் அம் மக்களுக்குப் பணியாற்றியதால் அவர்கள் பேரன்புக்கு ஆட்பட்டார்.
சுவாமிஜியின் அழகான தோற்றம்: அன்புகலந்த இதமான பேச்சு; இவற்றால் கவரப்பட்ட சிங்கள மக்கள், இவரது அழகிய தோற்றத்தைக் கருத்திற் கொண்டு ‘சுது மாத்தயா' (வெள்ளை ஐயா) என்று அன்போடு அழைத்தனர். அவர்களுடன் ஏற்பட்ட அந்நியோன்யமான உறவு, சிங்கள மொழியைச் சரளமாகப் பேசும் பழக்கத்தை அவருக்கு அளித்தது.
அடுத்து சுவாமிஜி யாழ்ப்பாணக்குடா நாட்டை அடைந்தார். தம்மை இனங் கண்டுகொள்ள முடியாத நிலையில் அவர் வாழ்ந்தாலும், வைத்தியத் துறையில் அவருக்கிருந்த ஈடு இணையற்ற திறமை, ஆயுர் வேத வைத்தியர்கள் பலரை இவரிடம் வரவைத்தது.
எங்கிருந்த போதும், எதனைச் செய்த போதும், இவரது எண்ணக் கருவில் உறுதியாக நிலைத்து விட்ட நோக்கிலேயே அவரது சிந்தனை விழிப்பாகச் செயற்பட்டது. திருக்கோணமலை என்ற சிவபூமியைச் சென்றடையும் நாளைக் கருத்துடன் காத்திருந்தார். இதற்கான வேளையும் வந்தது.
தட்சண கைலாயம் என்ற திருக்கோணேஸ்வரத்தின் சிவபூமியில் சுவாமிஜியின் திருமலரடிகள் பதித்த நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவையாகும்.
- 38 -

தட்சண கைலாய தரிசனம்
பாரதத்தினின்றும் கடல்கடந்து வந்து இலங்கையின் திருக்கோணமலை என்ற புண்ணிய பூமியில் திருப்பாதங்கள் தரித்த பொழுது குருவினது திருவாக்கு இங்கு நிறைவு பெற்றது. பூரீ மாதுமை சமேத கோணை நாயகர் நிலையாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் பாடல்பெற்ற கோணேஸ்வர ஆலயம்; சர்வதேச மையமாக உலகத்தில் குறிக்கப்படும் மலையரண்களும், அலைமோதும் கடற் பரப்புகளும் கொண்டு விளங்கும் இயற்கைத் துறைமுகம்; அற்புதமான கனல் ஏறும் ஏழு கிணறுகளைக் கொண்ட வெந்நீர் ஊற்றுக்கள்; பிரசித்தமான விமானத் தளம்; கடற்படைத் தளம்; இவை அனைத்தும் கொண்ட எழில் நிறைந்த இடம் திருக்கோணமலை.
இங்குள்ள ஒவ்வொர் இடங்களையும் சுவாமிஜி நன்றாக ஆராய்ந்தார். தமக்கென ஓர் இடத்தைத் தெரிவு செய்வதற்கு அவர் உளங்கொண்டார். ஆச்சிரமங்கள், பர்ண சாலைகள் நதிக் கரையோடு கூடிய ஏகாந்தமான சூழ்நிலையில் அமைவதே பொருத்தமாகும் என்பதை அவர் கருத்திற் கொண்டு, திருக்கோணமலையின் மூதூர்ப் பகுதியில் ஓர் இடத்தைத் தெரிவு செய்தார்.
மலைநாட்டில் ஹட்டன் சமவெளியில் ஊற்றெடுத்துப் பெருகி, கண்டியை வளைத்து வளங் கூட்டி, வட கிழக்காக ஓடி வந்து, வெருகல் கங்கை இங்கு பாய்கிறது. இப்பகுதியில் அமைந்த "அகஸ்தியர் ஸ்தாபனம்' என்ற நிலையத்தைத் தேர்ந்தெடுத்தார். இவ்விடத்தில் அகஸ்தியரை ஸ்தாபனம் பண்ணி, சிவபூஜையும் செய்யப்படுகின்றது. சுவாமிஜி இப்புனித இடத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்.
ஆனாலும் திருக்கோணேஸ்வர ஆலய மகிமை அவரை வெகு விரைவில் ஈர்த்து விடவே, திருகோணமலை நகரில் கோணேசர் ஆலயத்தின் அண்மையில் தமது இருப்பிடத்தை மாற்றியமைத்துக் கொண்டார்.
- 39 -

Page 37
வடகரை வாசமும் தவசாதனையும்
நகரில் ஆங்காங்கே சில இடங்களில் இருந்த பொழுதும் 1953 ஆம் ஆண்டளவில் திருகோணமலையின் வடகரை வீதியில் ஒலையால் அமைந்த சிறிய வீடொன்றில், தமது யோக சாதனைகளின் பயிற்சியை மேற்கொள்ளும் பொருட்டு சுவாமிஜி குடியமர்ந்தார். இந்தச் சிறிய இல்லம், முன்பகுதி ஒடுங்கிய நீளமான மண்டபத்தையும் , அதனோடு சேர்ந்தாற்போல் இரண்டுபடுக்கை அறைகளையும் கொண்டது.
இடது பக்கம் இருந்த அறையை சுவாமிஜி அவர்கள் தமது யோகசாதனைகளுக்கெனத் தெரிவு செய்திருந்தார். அந்த வீட்டின் உரிமையாளரின் குடும்பத்தினர், சுவாமிஜியின் ஆத்ம சாதனைகளுக்குப் பெரிதும் உதவியாயிருந்தனர். அவர்கள் மட்டுமன்றி, அந்த வளவில் வசித்த அவர்களின் சகோதர சகோதரிகளும் ஒற்றுமை மிக்க கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்து வந்தனர்.
சுவாமிஜியிடம் அமைந்த அற்புத விசேஷ சக்திகளை அறியாத காலத்திலேயே, இல்லிடம் அளித்து உபசரித்து அவரது சாதனைகட்குத் தடங்கல் ஏதும் ஏற்படாது உதவியாக இருந்த அக் குடும்பத்தினர் போற்றப்பட வேண்டியவாகள்.
சுவாமிஜி தாம் தேர்ந்தேடுத்த இடது பக்க அறையை ஓர் தபச்சாலையாக மாற்றி அமைத்தார். அறையின் வலது பக்கத்தில் ஒரு அடிச் சதுரம் ஒன்று ஓம குண்டமாக அமைக் கப்பட்டிருந்தது. அதன் நேரே சுவரிலே கணப்பொழுதும் தம் நெஞ்சை விட்டு நீங்காத பரமேஸ்வரனாம் பரம்பொருளின் திவ்விய திருமுகம் பொலியும் நிழற்படம்; ப்ரம்ம சொரூபனாய் - பிரேம சொரூபனாய் - சாந்த சொரூபனாய் - சத்ய சொரூபனாய் - தியான சொரூபனாய் அரைவிழி மலர்ந்தும் மலராது விளங்கிய; எம்பெருமானின் திருத்தோள்களிலே தவழ்ந்து அணியாய் விளங்கியவை மானிடரஞ்சும் சர்ப்பங்களே. கருநீலம், சாம்பர், கருமை வர்ணங்களின் கலவையிலே, தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருந்த
- 40

அந்தப் பரமேஸ்வரனின் திருவுருவப் படத்தின் முன்னாக அமர்ந்து கொண்டே, ஓம குண்டத்தில் உரிய ஆகுதிப் பொருட்களை இட்டுத் தனது தவத்தினை நாளிலும் பொழுதிலும் இந்த இளயோகி இயற்றலானார்.
ஒன்றல்ல - இரண்டல்ல - பத்து, பன்னிரண்டு, பதினான்கு நாட்கள் கூட உணவு மறந்து - உறக்கம் துறந்து - உலக நினைவு கூட இழந்து, தன்னைத் தவத்தீயிலே தகித்துக் கொண்ட அற்புதச் செயல், வீட்டிலுள்ளவரையும், அயலவரையும் அளவிட முடியாத அச்சத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியது. இங்ங்னம் ஊண் உறக்கமின்றி தன்ன்ை உருக்கி நாட்கணக்கில் இருந்தபொழுது, "நான் இறந்தாலும் இறப்பேனே தவிர, அவனை அடையாமல் விட மாட்டேன்" என்ற வைராக்கியம், தனது அனுபவத்தில் பிரதிபலித்ததை, பிற்காலத்தில் கூறிய பொழுது, திடமும் உறுதியும் கொண்ட சத்திய வாசகமாகவே அவை காணப்பட்டன.
அந்த வீட்டிலிருந்த முதிர்ந்த அம்மையார், இந்தக் கடும் தபசியின் சாதனைகட்கு, எள்ளளவேனும இடையூறு வராமல் தம்மாலியன்ற பணி விடைகள் அனைத்தையும் முழு மனதுடன் செய்து உதவினார். அவருக்கு இத்தகைய ஓர் தவசிரேஷ்டருக்குப் பணிவிடைகள் செய்யும் அரிய வாய்ப்புக் கிடைத்தமை, அவர் செய்த தவப் பயனே.
சுவாமிஜி இவ்வாறு தொடர்ந்து தவசாதனையில் நாட்கணக்கில் அமர்ந்து கொண்ட வேளைகளிலெல்லாம், கதவை மெல்ல நீக்கி, பாத்திரமொன்றில் நீர் நிறைத்து, அதனை மெல்ல உள்ளே வைத்து விடுவார். வெளியார் எவராலும் சுவாமிஜியின் தவசாதனைக்கு இடையூறு நேரவில்லை என்றால் அதற்குக் காரணம், இந்த அம்மையார் தாமாகவே வலிந்து ஏற்றுச் செய்து கொண்டிருந்த தன்னலமற்ற பணிவிடைகளே ஆகும். தாளிட்டுத் தவசாதனைகள் மேற் கொள்ளும் வேளைகளில் அவரிடத்திலிருந்த கமண்டலத்திலிருந்து நீரை எடுத்து அருந்துவார்.
- 4 -

Page 38
உலகியல் பரித்தியாகம்
நான் என்பதை அழித்து விட்டவர்க்கே ஆத்ம சாதனைகள் சித்தியைத் தரும் என்பது ஆன்மஞானிகள் அனுபவமாகும் . குடிப் பரிறப் பரினாலும் , அழகுத் தோற்றத்தினாலும் நினைப்பதை முடிக்கும் வைராக்கிய சித்தத்தினாலும் உயர்ந்து விளங்கிய சுவாமிஜி, தன்னைத் தானே தாழ்த்திக் கொள்ளும் பல ஆத்ம பயிற்சிகளிலே உட்படுத்திக் கொண்டார்.
வடகரை வீதி கடைகள் நிறைந்த ஜன சந்தடி மிகுந்த இடமாகும். சுவாமிஜி வாழ்ந்த குடிசை அருகில் அமைந்திருந்த வெளியில் தான், அப்பகுதி முழுவதிலும் சேகரிக்கப்படும் குப்பை கூளங்கள் கொட்டப்படும் வழக்கம் இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து பல நாட்கள் அவதானித்திருந்த சுவாமிஜி, ஒரு நாள் செயற்பாட்டில் இறங்கினார்.
ஓரிரவு எல்லோரும் நித்திரையில் ஆழ்ந்த பின், மண்வெட்டியை அந்தத் திருக்கரங்கள் தாங்கித், துரிதகதியில் செயற்படத் தொடங்கியது. ஆம், இரவோடிரவாக அகழ்ந்த பெரிய குழியினுள் அத்தனை குப்பைகளையும் இட்டு மூடி, விடியுமுன்பே அவ்விடத்தைத் தூய்மை செய்து விட்டார். மறுநாட் காலை, இந்தத் துறவியின் தனித்து நின்று செயற்பட்ட செயற்றிறனைக் கண்டு போற்றி வியக்காதவரே அச் சூழலில் இல்லை எனலாம். அந்த நிலத்தில் வாழை, புடோல் போன்ற பயிரினங்களைச் சிறிது நாளின் பின் ஆர்வமுடன் பயிரிட்டார். இங்கு ஒரு வாழை போட்ட விசித்திரமான குலையை ஒரு அன்பர் புகைப்படமாக்கி பத்திரிகையிலும் பிரசுரமாக வழி செய்தார்.
அதிகாலையில் எழுந்துவிடும் சுவாமிஜி, மற்றவர் கண் விழிக்கும் முன்பே எழுந்து, அந்தக் குடிலின் சூழலைக் கூட்டித் தூய்மைப்படுத்திவிடுவார்; தமக்குரிய உணவைத் தானே சமைத்துக் கொள்வார். அவர் புனிதக் கரங்கள் பட்டுத் தயாரான அந்த எளிமையான உணவைப் பகிர்ந்து கொள்வதில், அவர் வாழ்ந்த இடத்துக் குழந்தைகள் பெருமையும், பெருமகிழ்வும் அடைந்திடுவார். தமது சமையல் வேலைகளுக்குத் தேவையான விறகைக் கூடத் தனது திருக்கரங்களால் கோடரி கொண்டு தறித்து ஒழுங்காக அடுக்கி வைத்திருப்பார்.
- 492 -

தன்னைக் கீழான நிலைக்கு உட்படுத்துகின்ற இத்தகைய செயற்பாடுகளைச் சுவாமிஜி செய்யும் வேளையிலெல்லாம் அவ்வீட்டில் வாழ்ந்த முதிர்ந்த அம்மையார், பதறி ஓடோடி வருவார்; தலையிலே கையை வைத்தபடி எதுவும் செய்ய முடியாமல் ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டே இருப்பார்; இவர் செயற்பாடுகளை எதிர்த்துத் தடுப்பதற்கு மற்றவர்களுக்குத் தைரியம் இருக்கவில்லை. இப்படி உடலுழைப்பில் ஈடுபட ஆரம்பித்த அந்த நாட்களில் மண்வெட்டியும் கோடரியும் கைகளில் ஏந்தியதால் அந்தப் பூங்கரங்கள் கொப்பளித்து புண்ணாகிக் காய்த்து விட்டன. இதை எண்ணெய் பூசிக்கசக்கிப் பழைய நிலைக்குக் கொண்டுவர நாட்கள் பல சென்றன.
இவ்விடத்தில் வாழ்ந்த நாட்களில் சிலவேளை உணவருந்த மண் சட்டியினையே உபயோகித்தார் . உண்ணுவதற்கான பாத்திரங்கள இருந்தும் தாமாகவே இவ்விடயத்திலும் ஒரு எளிமையை உருவாக்கிக் கொண்டார். இது தவிர, வாழையிலையிலேதான் சுவாமிஜி விரும்பி உண்ணும் வழக்கத்தை இறுதிவரை கொண்டிருந்தார்.
தமது இல்லத்திலிருந்து வெளியேறிய பின், எத்தனையோ சந்தர்ப்பங்களில் - எத்தனையோ நாட்கள் அவர் உணவின்றிப் பொழுதைப் போக்கியதுண்டு. ஆனால் தான் முன்னெடுத்துச் சென்ற உயர்ந்த இலட்சியத்திலேயே சிந்தை ஒருமித்துச் செயற்பட்ட காரணத்தால், பசியின் கடுந்தாக்கத்தை அவர் ஒரு போதும் அனுபவித்ததேயில்லை. ஆனால் பசி என்று தன்னை நாடி வந்து துன்புற்றவரின் வாடிய முகத்தைக் கண்டால் அதைத் தாங்கிக் கொள்ளும் மனோபலம் என்றுமே சுவாமிஜிக்கு இருந்ததில்லை. உடனடியாகத் தன்னிடம் இருககும் எதையாவது, மற்றவர் அறியாவண்ணம் கொடுத்து விடுவார்.
கனதியாக அவர் இடையில் அணிவிக்கப்பட்ட தங்கச் சங்கிலி அவர் தம் இல்லத்தினின்று வரும் போதே அவருடன் இருந்த ஆபரணமாகும். உடல் பருமன் அடைவதற்கு ஏற்றபடி நெகிழ்த்தி அணியத் தகுந்தாற் போல் இச்சங்கிலி இரட்டை வடமாக அமைந்திருந்தது. இந்தத் தங்க அரைஞாண், கைகளில் கிடந்த நான்கைந்து மோதிரங்கள், மணிக்கூடு இவற்றை யெல்லாம் ஒவ்வொன்றாக தன்னிடம் தேவையென வந்தவர் கட்கு மனமுவந்தே கொடுத்து உதவியிருக்கிறார்.
- 43

Page 39
தனது இல் லத்திலிருந்து வெளியேறியபோது அவரிடத்தில் ஏடு ஒன்றும் கைவசம் இருந்தது. அஷ்டமாசித்திகள் பற்றியதாகிய அந்த ஏடு போன்று இன்னும் பல அரிய ஏட்டுச் சுவடிகளும் அபூர்வமான ஆபரணாதிகளும் அவர்களது குடும்பத்தின் பூர்வீகச் சொத்துக்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்தன. சுவாமிஜி கையோடு கொண்டு வந்த அந்த ஏட்டினை அதன் பெருமை அறிந்த ஒரு வரை கேரளத்தின் திருவனந்தபுரத்தில் சந்தித்த வேளை அவரிடமே கொடுத்து விட்டார். அதில் தேவ ரகசியங்களெல்லாம் அடங்கியிருந்தன.
துறவி என்றிருப்பவன், தனக்கென்று எதனையும் தேடி வைக்காதவன்; நாளைய தேவை பற்றி நினைவில்லாதவன். இந்தத் தகைமை தனக்கு வேண்டும் என்று நினைத்த நம் குருதேவர் மாற்றி உடுத்திட இரண்டு வேட்டியும் உடலைப் போர்த்திட ஒரு மேல் துண்டையும் மட்டும் வைத்துக் கொண்டு தன்னிடத்தில் இருந்த ஏனைய பொருட்கள் அனைத்தையும் உதறித் தள்ளினார். கல்லினுள் தேரையையும் காக்கின்ற இறைவன் தன்னையும் காத்திடுவான் என்ற பரிபூரண சரணாகதி நிலையில் எழுந்த வைராக்கியத்தின் பிரதிபலிப்பே அவரது பற்றறுத்த செயலுக்குக் காரணமாகியது.
யோக சித்தியின் வெளிப்பாடு
சுவாமிஜி வாசஞ் செய்த வடகரை வீதியின் சூழல் எதற்கும் அஞ்சாத வீர உணர்ச்சி கொண்ட மீனவர்களின் குடியிருப்புகளால் சூழப்பட்டு இருந்தது. நகருக்குள் அவ்வப்பொழுது எழும் பிரச்சனைகளின் பிரதிபலிப்பினை, இப்பகுதியில் தெளிவாகக் காணலாம். இத்தகைய ஓர் சூழ்நிலையிலே இங்கு வாழ்ந்த மக்கள் சுவாமிஜியிடம் பக்தியும், அன்பும், பணிவும் பூண்டிருந்தார்கள்.
ஒரு சமயம் தனது அறையினுள் தபசாதனைகளை மேற்கொண்டு அதில் ஆழ்ந்திருந்தார் சுவாமிஜி, நகரத்தில் காலத்துக்குக் காலம் ஏற்படும் அமைதியற்ற சூழ்நிலையால் ஒரு பதற்ற நிலை அன்றைய தினமும் நிலவியது.
இவை அனைத்தையும் கடந்த ஒரு உயர்ந்த உன்னத நிலையில் தன்னை ஐக்கியமாக்கி அமர்ந்திருந்த சுவாமிஜி புறச் சூழலின் தாக்கத்தை அறிந்தாரில்லை. ஆனால்
- 44 -

அப்பகுதியில் வாழ்ந்த வீர இளைஞர்கள் பலர் சுவாமிஜியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தம்முடையதே என்ற பொறுப்புணர்வுடன் அந்த மனையைச் சுற்றிக்காவல் இருந்தனர்.
திடீரென்று அறையினுள் இருந்து ஓர் பெருஞ் சத்தம்; காத்து நின்று வாலிபர்களையும், அயலில் இருந்த மக்களையும் அதிரவைத்த இந்த ஒலிதான் என்ன? பீதியுற்றுக் கதவினைப் பலமாகத் தட்டிய ஓசையினால் இவ்வுலக நினைவை அடைந்தார் சுவாமிஜி, தாம் பெற்ற தவநிலையின் சுகானுபவத்தைத் தாங்க முடியாமல் வாய்விட்டழுத அவரது குரல் ஒலியே மற்றவரிடையே இத்தகையதொரு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண் விழித்த பின்பே அந்தத் தவசிரேஷ்டரால் அறிய முடிந்தது.
சுவாமிஜியின் பூர்வீகத்தில் நிழற்படங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் பாலன் கெங்காதரரின் ரூப செளந்தர்யத்தை நம்மில் எவரும் காணும் வாய்ப்பை பெறவில்லை. ஈழமண்ணில் அவர் காலடி எடுத்து வைத்த பின்பு இங்கு யோகாசனப் பயிற்சிகள் ஹட யோக சாதனைகள் தொடர்பான புகைப்படங்கள் பல நிலைகளில் நிறைய எடுக்கப்பட்டன.
சுவாமிஜி யோகாசனப் பயிற்சிகளைச் செய்யும் போது எடுத்த அவரது நிழற்படங்களின் தொகுப்பு ஒன்று உண்டு. இவை எடுக்கப்பட்ட சந்தர்ப்பம் எதுவெனில் சுமார் பதினான்கு நாட்கள் சுவாமிஜி கடுந் தவசியற்றிய பின்பே இப் புகைப்படங்களை எடுத்தார்.
அந்தப் புகைப்படங்கள் உடற்தசைவற்றி மெலிந்த அவரது திருமேனியைப் படம் பிடித்திருந்த போதிலும், அவற்றில் உள்ளே கனன்று கொண்டிருந்த ஆத்ம சைதன்யத்தின் ஒளிர்வை தெளிவாகக் காணக்கூடியதாகவே இருந்தது. யோகாசனத்தில் தனது முதற் சீடன் என சுவாமிஜியால் குறிப்பிடப்படும் ஒரு அன்பரே இப்படங்களை எடுத்தவர். இவர் ஸ்ரூடியோ காசில் (Studio Castle) என்ற புகைப்பட நிலைய உரிமையாளராக இருந்தவர்.
- 45 -

Page 40
சுவாமிஜியின் யோகாசனப் புகைப்படங்களுடன் கூடிய கட்டுரை ஒன்று "ஹடயோக சாரம்" என்ற தலைப்பில் 12, 12. 1971 ஞாயிறு வீரகேசரியில் பிரசுரமாகியது குறிப்பிடத்தக்கது.
ஹட யோக வித்தைகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் சுவாமிஜி, சாதனைகள் செய்யும்போது நேராகப்படுத்திருக்கும் உடலை அப்படியே அந்தரத்தில் மேலே எழுப்பி நிற்க வைக்கும் அபூர்வ ஆற்றலைப் பெற்றிருந்தார். இவ்வாறே ஒரு சமயம் கப்பிரிகொலாவ என்ற இடத்திலே நீருக்கு மேலே தன் உடலை மிதக்க விட்ட அற்புத காட்சியை அங்கு வந்து கண்ட அமெரிக்கர்கள் பல நிலைகளில் சுவாமிஜியை படம் பிடித்து அமெரிக்கா சென்றபின் அப்படங்களை அனுப்பி வைத்தனர்.
நீரில் மிதக்கும் இந்த வித்தை யோக சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது. இதன் ரகசியம் சுவாசப் பயிற்சியில்தான் அடங்கி இருக்கிறது. சுவாசத்தை எவ்வளவுக்கு உள் இழுத்து நிறுத்தி வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவுக்கு உடலை இலகுவாக்கி நீரில் மிதக்க வைக்கலாம்நாளடைவில் இந்த வித்தைகளை சுவாமிஜி முற்றாகத் கைவிட்டார். அதற்கான காரணத்தை அவரது வார்த்தை களிலேயே குறிப்பிடுகிறேன்.
"இந்தப் பறவைகள் கூடத்தான் பரவெளியில் அந்தரத்தில் பறக்கின்றன. ஆகவே இதில் என்ன பெரும் சாதனை இருக்கின்றது." என்று நினைத்து இந்த வித்தைகளைத் தவிர்த்து விட்டேன்.
இத்தகைய கடும் யோக சாதனைகளை மேற்கொள்ளும் முன்னரே சுவாமிஜி "ஹரி ராம் ராம் ஹரி ஹரி" என்ற பூரீ ராம நாம ஜெபத்தில் தோய்ந்து, நிலைத்து நின்று, அந்த ஜெப சித்தியின் பயனைக் கண்டு கொண்டார்.
அடுத்து நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தைக் கணப் பொழுதும் இடையறாது ஸ்மரித்து, நாத்தழும் பேறலானார். நீர்கூட அரு ந்தாது இந்தப் பஞ்சாட்சர ஜெபத்திலே ஒன்றிப் போன அவர் மனோநிலையை சுவாமிஜியின் வார்த்தைகளிலேயே காட்டுவது சாலப் பொருத்தமானது.
- 46 .

"நான் முன்பு யோக சாதனைகள் செய்கின்ற நேரத்திலே ஐந்தெழுத்தை என் நா இடையறாது ஒதிக் கொண்டே இருக்கும். அந்நேரம் வாயில் நீரை ஊற்றுவதற்குக்கூட என் மனம் இடந்தரவில்லை. ஏன் தெரியுமா? வாய் நிறைந்து வியாபித்து நிற்கும் அந்தத் திவ்விய நாமத்தின் ஒலி அலைகள், எனது வாயினுள் அப்படியே நிலைத்திருக்க வேண்டுமென்று நான் நினைத்ததனாலேதான்."
யோக சாதனைகளில் படிப்படியாக முன்னேறி புதிய அனுபவங்களை அடைந்த வேளையிலே சைவ சித்தாந்தத்தில் கூறப்பட்ட யோக சாதனைகளோடு, அவற்றை ஒப்பிட்டு சுவாமிஜி நோக்கியுள்ளார். வியக்கத்தக்க வகையில் தத்துவ ரீதியில் முழுமையாக அவை ஒத்திருப்பதைக் கண்டு ஆத்ம திருப்தி அடைந்தார்.
ஞானக் களமாக விளங்கிய திருக்கோணேஸ்வரம்
சுவாமிஜி குடியிருந்த இல்லத்தில் மட்டுமன்றி இவ்வூரில் அமைந்த பாடல் பெற்ற ஸ்தலமாகிய கடல் சூழ்ந்த சித்தர்களின் சைதன்யம் நிறையப்பெற்ற திருக்கோணேஸ்வர ஆலயத்தையும் தமது தவயோகத்திற்குரிய இடமாகத் தெரிவு செய்து சென்று வரலானார்.
வடக்கே இமயம் முதல் தெற்கே மாத்தறை வரை தேச சஞ்சாரியாகத் திரிந்த சுவாமிஜி அவர்களின் திருப்பாதங்கள் தீண்டாத முக்கியத்துவம் வாய்ந்த திருத்தலம் ஒன்று உண்டு. அது தான் சபரிமலை.
ஐயப்ப சாஸ்தாவினால் பிறந்தும் அந்த சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை சுவாமிஜி தரிசிக்கவே இல்லை. சபரிமலை செல்லும் பாதை அந்நாட்களில் யானை புலி கரடி போன்ற பயங்கர விலங்குகள் நடமாடும் பகுதியில் அமைந்திருந்தது. இம் மலைக்குச் செல்லும் வழியில் அமைந்த பம்பா நதி வரைக்கும் பயணம் செய்த சுவாமிஜி அவர்கள் சபரிமலையானைத் தரிசிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லாததால் அங்கு செல்லவேயில்லை.
- 47

Page 41
இதுபற்றிய சுவாமிஜியின் வார்த்தைகள் இவையாகும். "பரமேஸ்வரன் - எனக்கும் ஹரிக்கும் பிறந்தவன் தானே அந்த ஐயப்பன். அங்கே ஏன் போகிறாய்? இங்கே வா என்று கோணேசர் பூமிக்கே கொண்டு வந்து விட்டான்; இங்கேயே இருக்கும்படி சத்தியம் வேறு வாங்கி விட்டான்."
திருக்கோணேஸ்வர ஆலயம் - அருள்மிகு கோரக்க முனிவர் கடுந்தவமியற்றி அதனால் கைவரப்பெற்ற ஆத்ம சக்தி அனைத்தும் ஒரு இயந்திரத்தில் பிரதிஷ்ா~" செய்யப்பட்டதால் மகிமை பெருகிய சைதன்ய அலைகளைக் கொண்ட திருத்தலமாகியது.
சிவபூமியாகிய சக்தி கடாட்சம் நிறைந்த இப் புனித இடம் சுவாமிஜியின் தவ சாதனைக்கு ஒரு ஞானக்களமாக அமைந்தது. சிலகாலம் நாள்தோறும் வடகரை வீதியிலிருந்து திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு நடந்து செல்வார்.
ஆலயத்திற்குச் செல்லும் வேளைகளில் சில சமயங்களில் ஒரு சிலரை அழைத்துச் செல்வதுண்டு. இவ்வாறு சென்ற வேளையிலே நடந்த ஒரு சுவையான சம்பவம் இது; திருகோணமலை இலங்கை வங்கியில் கடமை புரிந்த ஒரு அன்பரையும் இன்னொருவரையும் தன்னுடன் கூட்டிக் கொண்டு வழமை போல் பிற்பகல் மூன்று மணி அளவில் ஆலயத்தை நோக்கி சுவாமிஜி சென்று கொண்டிருந்தார்.
போகும் வழியிலே வழமையாக அவர் சந்திக்கின்ற பாம்பாட்டி ஒருவன் இருந்தான். இவனது தொழில் பாம்பையும் கீரியையும் மோதவிட்டு வேடிக்கை காண்பிப்பதாகும். அத்தோடு பாம்பையும் நன்றாக ஆட்டிக் காண்பிப்பான். சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் விரும்பிய பணத்தைக் கொடுப்பார்கள்.
அன்று சுவாமிஜி சென்ற வேளையிலே ஒரு பெரிய கூட்டம் பாம்பாட்டியைச் சுற்றி நின்றிருந்தது. அவர்களில் சிலர் வெள்ளைக்காரர்கள். பாம்பாட்டி வெகு ஆர்ப்பாட்டமாக பின்வருமாறு கூறத் தொடங்கினான்.
"இதோ பாருங்கள்; என்னிடம் ஒரு மகா சக்தி வாய்ந்த மருந்து இருக்கிறது. இந்தப் பெட்டிக்குள் அடங்கிக் கிடக்கும் நாகத்தை கையினால் பிடிப்பேன்; சொன்னபடியெல்லாம்
- 48 -

ஆட வைப்பேன் இதையெல்லாம் எப்படிச் செய்கிறேன் என்று தெரியுமா?" என்று , கூடி நின்றவர்களைக் கவரும் படியாக வார்த்தை ஜாலம் காட்டியபடியே தன் கையில் ஏதோ ஒரு பொருளை வைத்துக் கொண்டு "இது ஒரு மகா சக்தி வாய்ந்த ஒரு மருந்து. இது இல்லாவிட்டால், இந்த நாகத்தைத் தொடக்கூட முடியாது" என்று முழக்கமிட்டான். எல்லோரும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக நின்றார்கள்.
இந்த நேரத்தில் சுவாமிஜி மெல்ல கூட்டத்திலிருந்து ஓரடி முன்வைத்து அவனை நோக்கினார். அவர் திருவாயிலிருந்து இந்த வார்த்தைகள் பிறந்தன. "இந்த மருந்து இல்லாமலே நான் உனது பாம்பைப் பிடித்துக் காட்டட்டுமா? என்ன பந்தயம் வைக்கலாம்?"
ஒரு கணம் அவ்விடத்திலே அசாதாரண அமைதி நிலவியது. இத்தகைய ஒரு சவாலை பாம்பாட்டி நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் அதிர்ச்சியை ஒருவாறு சமாளித்துக் கொண்டான். இருபத்தைந்து ரூபாய் என்று அஞ்சாதவன் போல உரத்த குரலில் கூறினான். தன்னோடு சவால் விட்டவர், எப்படித் தன்னை வென்றுவிட முடியும் என்ற ஒரு அலட்சியம் அவனுடைய உள்ளத்தில் எழுந்ததை முகத்திலிருந்து உணரக்கூடியதாயிருந்தது.
யாருமே எதிர்பாராத வகையில் சுவாமிஜி அந்தப் பாம்பிருந்த பெட்டிக்கருகில் ஒரே எட்டில் சென்றார். அந்நேரம் பார்த்து பெட்டியிலிருந்து பாம்பு சீறியபடி எழுப்பிப் படம் எடுத்தது. விழி மூடித் திறக்கும் நேரத்தில் அதன் தலையை எட்டிப்பிடித்து விட்டது சுவாமிஜியின் திருக்கரங்கள். கூடி நின்றவர் திகைத்துச் சிலைபோல் நின்றனர்.
இந்தச் சம்பவத்தைப் பிற்காலத்தில் சுவாமிஜி கூறிய வேளையில் அவர் இறுதியாகக் கூறிய வாசகங்கள் இவையாகும். "அந்த நேரத்தில் பாம்பைப் பிடிக்கின்ற நேரம்; இப்போது பாம்போடு இருக்கின்ற நேரம்" இதனுடைய உட்பொருளை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
- 49 -

Page 42
திருக்கோணேஸ்வர ஆலயம் ஏகாக்ர சிந்தையுடன் தவசாதனைகள் மேற் கொள்ளும் தவ யோகிகளுக்கு உகந்ததான சூழலை உடையது. கற்பாறைகளாலான குகைகள் பலவற்றைக் கொண்டது. மெல்லென்று ஒலிக்கும் கடலலையும், அதனைத் தாங்கித் தவழ்ந்து வரும் தென்றலும், எல்லையற்றுப் பரந்து காணும் மாசற்ற நீலவானும், அதன் மடியிலே தவழ்வது போல நீலக் கடலும், இன்னும் ஆழ்ந்து கிடக்கும் பசுமை போர்த்த பற்றைக் காடுகளும், பார்க்கின்ற கண்களுக்கும் பேரழகை அனுபவிக்கும் நெஞ்சத்திற்கும் ஒர் தெய்வீக அனுபவத்தைத் தரவல்லவை.
இவ்விடத்தில் சுவாமிஜி தேர்ந்தெடுத்த குகையானது எவரும் இலகுவில் உட்புக முடியாத இடத்தில் அமைந்திருந்தது. சற்றுக் கவலையீனமாக காலை நகர்த்தினாலும் மிக உயரமாயமைந்த அந்தக் குகையிலிருந்து தவறி விழுந்து பல பாறைகளில் மோதிச் சிதற நேரிடும்.
இங்குதான் தனது தவசாதனையின் உன்னத நிலையை அடையும் கடும்முயற்சியை மேற்கொள்ளலானார்.
வைக்ாசி விசாகப் பெளர்ணமியில்
பூத்த ஞான மலர்
தனது உன்னத இலட்சியமே ஒரே பற்றுக்கோடாகத் தன் முன்னே நிறுத்தி இத்தனை காலமும் அவர் துறந்திட்ட சுகங்கள் தான் எத்தனை எத்தனை! !
சாதாரணமாகச் சைவ உணவு உண்போருக்கு அவசியமான நெய்பால், தயிர், முருங்கைக்காய், பாகற்காய் போன்றவற்றை முற்றாகத் தம் உணவு முறையினின்றும் நீக்கி விட்டார்; உணவின் அளவையும் உண்ணும் நேரங்களினையும் மிகவும் குறைத்துக் கொண்டார்.
அதற்கு அடுத்த நிலையில் உணவேதுமின்றி நாட்கணக் கில் ஜீவிக்கும் மனோபலத்தைப் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொண்டார். இவ்வாறு பதினாறு ஆண்டுகளுக்கு மேலாகக் கொண்ட பயிற்சிகளினாலே ஜம்புலன்களையும் தன்வயமாக்கி ஆண்டு கொண்டிருந்த அந்தஞானிக்கு திருக்கோணேஸ் வரத்தின் தெய்வீகச் சூழல் பெருந்துணையாய் அமைவதாயிற்று. தான் தெரிந்தெடுத்த மலைக்குகைக்குள் சென்றதுமே தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.
- 50 -

திருக்கோணேஸ்வரத்துக்கு வர ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் தியானத்தை முடித்து வீட்டினைச் சென்றடைந்து விடுவார். ஆனால் நாளாவட்டத்தில் ஆழ்ந்த தியானத்தில் தன்னை மறந்து அமர்ந்து விட்ட வேளைகளில் சில நாட்களுக்குத் கூடத் தமது இருப்பிடத்திற்கு வராமல் இரவு பகலாகத் தியானத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டார்.
கற்பாறைகளுக்கிடையே அமர்ந்து மனத்தாலும் உடலாலும் கல்போலவே அசைவற்று நிலைபெற்ற தவசியின் உடல்மேல், திருக்கோணேஸ்வரத்தை இருப்பிடமாகக் கொண்ட குரங்கினங்கள் அச் சமேதுமின்றி பாறைகளில் ஏறி விளையாடுவது போலவே அவரது பொன்மேனியிலும் ஏறிக் குதித்து விளையாடின. அங்கு உலாவித் திரியும் பாம்புகளும் கற்பாறையாகவே கருதியதால் அந்த மேனியைத் தொட்டுத் தழுவி ஏறி இறங்கிச் சென்றன.
தன்னை வெற்றி கொண்ட அந்தத் தன்னிகரில்லா ஞானிக்குத் தீங்கு செய்ய உலகத்தில் எந்த சக்தியும் இருக்க முடியாது என்பதற்கு இவை சான்றுகள் அல்லவா? இன்னொரு வகையில் நோக்கினால் ஆழ்ந்த தியான நிலையில் மனித உடலின் இயல்பான தன்மைகள் முற்றாக அற்றுப் போவதால், உடலுக்கும் பெளதீகப் பொருட்களுக்கும் வேறுபாடு இல்லையென்றாகிவிடுகிறது. இதனால் விஷஜந்துகளுக்குக் கூட தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட முடியாது.
கோணேசர் ஆலயத்தில் காவலாளியாக அந்நேரம் ஒரு இளைஞன் பணிபுரிந்தார். நாள்தோறும் திருக்கோணை நாதரின் மரகதக்கால் சிலம்பொலி நாதத்தை மானசீகமாகக் கேட்பதற்கு அவரது தாளினை நாடி வந்து கொண்டிருந்த இந்த இளந்துறவியின் வசீகரத் தோற்றத்தினாலும், அதிகம் பேசிடாத அமைதியான போக்கினாலும், தீராத தாகம் கொண்டவர் போல் செய்கின்ற தவ சாதனைகளின் மகிமையினாலும், இக் காவலாளி அவரிடம் பெரும் மதிப்புக் கொண்டவனாயினான்.
இதனால் சுவாமிஜி தவமிருந்த குகைக்குள் அடிக்கடி சென்று அக்கறையுடன் அவரைக் கண்காணிப்பது அவன் வழக்கமாயிற்று. அவ்வேளைகளில் அவரருகே ஓடி விளையாடும்
- 5 -

Page 43
குரங்குகளை அவன் விரட்டிவிடுவான். அந்தத் தவஞானிக்குத் தான் செய்யக்கூடிய ஒரு சிறு பணிவிடையாக, தனக்குற்ற பெரும் பேறாக இதைக் கருதி வந்தான். ஒரு நாள் இந்தக் காவலாளி கோயில் நிர்வாகிகளுடன் சிறு பிரச்சனையினால் வாக்குவாதப்பட்டுக் கொண்டு சுவாமிஜி தியானம் செய்து கொண்டிருந்த குகைக்குள் வந்து அசையமாட்டேன் என்று பிடிவாதமாக அமர்ந்துவிட்டான். இந்த நிலையில் சுவாமிஜி கோயில் நிர்வாகிகளைக் கண்டு குகைக்குள் அழைத்து வந்து காவலாளியுடன் ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து எல்லோரையும் அந்த ஆபத்தான குகையினின்றும் வெளியே அனுப்பி வைத்தார்.
இராப்பகல் பேதமின்றி குகைக்குள் தியான சமாதியில் அமர்ந்திருந்து விட்டு சுவாமிஜி வீடு செல்வது நாளாவட்டத்தில் அவரை அறிந்தவர்களுக்கு சர்வ சாதாரண நிகழ்ச்சிபோல் ஆகிவிட்டது. ஒரு தடவை சுவாமிஜி பல நாட்கள் கடும் தபசினை இடைவிடாத மேற்கொண்டபின் அமைதி தவழும் முகத்தோடு குகையினை விட்டு வெளியே வந்தார்.
சதைப்பிடிப்பற்று உடல் மெலிந்திருந்தாலும், அந்த மலர் முகமோ உள்ளத்தின் அசையாத நிலைப்பாட்டை கண்கள்வழி பார்ப்பவர்க்கு உணர்த்துவதாய் அமைந்தது. ஒளி பிரவகிக்கும் அந்த மலர் விழிகளை மூடியபடி எம் பெருமான் கோணைநாதனின் திருச்சந்நிதானத்தின் மூலஸ்தானத்தை நோக்கியபடி சற்று நேரம் அசைய்ாது நின்றார். சுவாமிஜி திடீரென்று தம்மிடத்தில் இருந்து சிகப்புக்கல் ஒளி வீசும் ஒரு மோதிரத்தை மூலஸ்தானத்திற்கு நேரே சமுத்திரத்தில் விட்டெறிந்தார். இந்த மோதிரம் சுவாமிஜியினுடைய பூர்வீக சொத்துக்களில் ஒன்றாகும். அந்த மோதிரத்தில் பதித்திருந்த கல், முருக்கம் பூவை ஒத்த செந்நிறமானது. இது ரசமணியுள்ள மோதிரமாகும். துரிசு என்ற பொருளை நிறைய இட்டு நன்றாக எரிக்க அதனுள் இடப்பட்ட செம்பானது புடம் போடப்பட்டதாகும். இப்படி பலமுறை புடம்போட்ட செம்பினை எடுத்து மருந்து வகைகள் சேர்த்து அந்த உலோகத்தினால் இந்த மோதிரம் செய்யப்பட்டு சிகப்புக் கல் பதிக்கப்பட்டது.
இந்த மோதிரத்தை அணிந்தால் காரிய சித்திகள் தாமே வந்தடையும். விஷ ஐந்துக்களால் எவ்வித தீங்கும் ஏற்படாது. இத்தகைய மகா சக்தி வாய்ந்த இந்த மோதிரத்தை
- 52

துச்சமாய் எண்ணி, தன்னை ஆட்கொண்ட குருமணிக்கே அர்ப்பணித்து விட்டாற்போல் ஆழ்கடலினுள் மறைத்துவிட்டார் சுவாமிஜி, இதை வைத்திருப்பவன் நற்குண நற்செயல்கள் அற்றவனாக இருக்கும் பட்சத்தில் தகாத காரியங்களுக்கு இது பயன்படவேண்டிவரும். அப்படி ஒரு போதும் நடக்கக்கூடாது என்ற எண்ணத்திலேதான் அதனைக் கடலுக்குக் காணிக்கை ஆக்கினேன், என்று குருதேவர் இச் சம்பவம்பற்றிக் குறிப்பிட்டு ள்ளார்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தேவர்களாலும் முனிவர்களாலும் பூஜிக்கப்பட்ட புனித தலமே தட்சணகைலாய மாம் திருக்கோணேஸ்வரம். இத்தல மகிமையின் பெருமை //ாலறுவாயனாம் ஞானசம்பந்தப் பெருமானின் திருநாவினால் பாடல் பெற்ற மகிமையைக் கொண்டது.
கோரக்க முனிவர் என்ற மகாசிரேஷ்டரான ஒரு தபஞானியினால் ஸ்தாபிக்கப்பட்டது இப் புனித ஸ்தலமாகும். 'கோரக் முனிவர் செய்த தவப்பயனால் திருமலை வந்தமர்ந்த திருமலைத் தேவா" என்ற எமது சுவாமிஜியின் பாடல் அடிகள் இக்கருத்தையே அரண் செய்து நிற்கின்றன.
திருக்கோணேஸ்வரத்தைப் பற்றி முதன் முதலாக சுவாமிஜி அவரது குருவான சாந்தகிரி பாபாவிடமிருந்தே அறிந்து கொண்டார். ஈழமணித் திருநாட்டில் தாம் தரிசித்த புனித ஸ்தலங்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்ட வேளையில் திருக்கோணேஸ்வரத்தின் தனித்துவமான மகிமையை சாந்தகிரி பாபா அவர்கள் எடுத்துக் கூறிய முறையினால்தானோ என்னவோ தனது குறியிடமாக இந்த திருக்கோணேஸ்வரத்தை நம் குருநாதர் மனதிலே பதித்துக் கொண்டார்.
சுவாமிஜி சந்தித்த முஸ்லீம் ஞானி கூட நீ கடல் கடந்து சென்று உனது முப்பத்திரண்டாவது வயதிலே தவசித்தி அடைவாய் என்று கூறிய அமிர்த வசனமும் சுவாமிஜியின் மனதில் ஆழமானதொரு நிலைப்பாட்டை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
இலங்கையில் திருமலரடிகள் பதித்த சுவாமிஜி இவ்வழகிய தீவின் எழில் கொஞ்சும் ஊர்கள் பலவற்றைச் சென்றடைந்த போதிலும் அங்கெல்லாம் நிலைத்திருக்கும் நோக்கம் அவருக்கு எழுந்ததேயில்லை.
- 53 -

Page 44
ஒரு மாவீரன் கையிலுள்ள வில்லில் இருந்து விடப்படும் அம்பு தன் குறியிடத்திலன்றி வேறெங்கும் நிலைத்திடாது அல்லவா? இவ்வாறே மகாமேரு மலை ஒத்த வலிமை கொண்ட நெஞ்சினோடு இலங்கை வந்தடைந்த இந்த சற்புருஷர் நெஞ்சிலே குறியாகக் கொண்டிருந்த திருக்கோணேஸ்வரத்திலே தான் நிலைத்து நின்றார். தமது லட்சிய நோக்கு நிறைவுறும் புண்ணிய பூமி இதுதான் என்பதை அந்தப் பவித்திரமான உள்ளம் தெளிவாக என்றோ உணர்ந்திருந்தது.
ஆகவேதான் திருக்கோணேஸ்வரத்திலே அவரது கடும் தபசு மெல்ல மெல்லக் கனலாகிப் பொங்கிப் பிரவகித்து, நாம் கற்பனையும் செய்ய முடியாத அந்தப் பெருநிலைக்கு அம்மகாஞானியை கொண்டு வந்து நிறுத்தியது.
வைகாசி மாதத்தில் வரும் விசாக பூரணை தினம்; தெய்வீகப் பொழிவு பொங்கிப் பிரவகிக்கும் புனிதமான தினம்; நம் சரித்திர தெய்வ புருஷரின் ஆத்மீக சாதனை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய பரிபூரணத்துவம் பெற்ற தினம்; சிவயோக வித்தையால் சரமேற்றி நடுநாடி பிளந்தெடுத்து சிவயோக நுண் பொருளாம் சிவாமிர்தத்தை அவர் சுவைத்துச் சுவைத்து, அதில் அமிழ்ந்து அமிழ்ந்து, தன்னை மறந்து, தன்நாமம் கெட்டு, தன் குருமணியோடு தன்னை இணைத்துக் கொண்ட தினம் ஆகும்.
சுமார் பதினெட்டு ஆண்டு காலமாக கடும் தவ சாதனைகளை விடாப்பிடியாக மேற்கொண்டு வந்த நம் குருநாதர், இந்த வைகாசிப் பெளர்ணமியிலே ஞான லய யோகத்தினால் நாத விந்துவாம் ஹரனை, நாத ரூப வடிவிலே கண்டு கொண்டார் என்று கூறலாமா?
தென்கைலை மாமலையில் நர்த்தனமாடும் நர்த்தக மணியின் மரகதக் கால் சிலம்பொலி கேட்கவென்றே நாடித் தேடி ஓடிவந்த தனக்கினியவனை, வருக வருக என்று வரவேற்று வரம் தந்து மகிழ்ந்தான் நம் கோணைநாதன் என்று கூறிடலாமா?
- 54

தங்கத் தமிழில் நொந்து நொந்து உருகி அவர் திருப்புகழ் பாடி வாழும் நல் அடியாரை, தங்கப் பாத மலரில் அணைத்திடுவாய் என்று நெஞ்சுருகி வேண்டுகோள் விடுத்த, அந்தத் தங்க மனத்தின் புடம் போட்ட செம்மையினைக் கண்டு கொண்டதால் அருள் சுரந்தான் கோணமாமலையான் என்றுதான் கூறுவோமா?
தவப் பயன் விளைந்தது; அகக் கண் திறந்தது; சிவயோக சித்தியின் மகிமை தெளிந்தது. தாம் சிவயோக சித்தி பெற்ற வகையினை தேன் மொழியாம் தீந்தமிழில் சுவாமிஜி வடித்து வைத்திருக்கும் வார்த்தைகள் இவை:
உட்கண் திறக்கும் திறவுகோல் இங்குதான்
உண்டு வேறு எங்கும் தேட வேண்டாம்
உச்சி மலையில் தவக்குகையில்
உள்ளடக்கி உள்நோக்கி இருந்தால்
அகக் கண் திறக்கும் உண்மை.
தொடர்ந்த பணிகள்
வடகரை வீதியில் ஆரம்ப காலத்தில் சுவாமிஜி தபயோக சாதனைகளில் அதிக நேரம் ஈடுபாடு கொண்டிருந்த மையால் மக்களுடன் நேரத்தைச் செலவிடும் சந்தர்ப்பம் குறைவாகவே இருந்தது.
ஆனால் நாளாவட்டத்தில் சுவாமிஜியிடம் காணப்பட்ட அதி அற்புத சக்தியினாலும் ஆத்மீக அனுபவங்களினாலும் திருமலை வாழ் மக்களில் பெரும் பதவி வகித்தவர் முதல், சாதாரண பாமரர் வரை, மலரில் மகரந்தத் தேன் உண்ணும் வண்டாக மொய்த்தனர்.
ஆரம்ப காலத்தில் வைத்தியத் துறையில் தமது பணியை ஆரம்பித்ததினால் மக்கள் பெரிதும் கவரப்பட்டனர். தமது கர்ம நோய்களைத் தீர்க்க அந்த மண்குடிலை நோக்கிப் பலரும் வரத் தொடங்கினர். நாளடைவில் அம்மகானிடம் பெற்றுக் கொள்ள இன்னும் நிறைய ஆத்ம சக்தி இருப்பதாக உணர்ந்து கொண்டனர்.
... 55 .

Page 45
சிலகாலத்தின்பின் ஆத்மீகத் துறையின் பணி அங்கு தொடர்ந்தது. ஆத்மீகத் துறைக்கு அஸ்திவாரமாக உடலும் உள்ளமும் உறுதி பெற யோகாசனமும் கூட்டு வழிபாடும் ஆரம்பிக்கப்பட்டன. பலதரப்பட்ட மக்கள் சாதி சமய பேதமின்றி யோகாசனத்தைப் பயில்வதற்கு இந்த அற்புத புருஷரை நாடினர்.
பரம்பொருளான சிவனின் திருவுருவ நிழல் படத்தை வைத்து அக் குடிலில் கூட்டு வழிபாடும் ஆரம்பிக்கப்பட்டது. கருணையே உருவெடுத்து மந்தகாச புன்னகை பூத்து கழுத்திலும் உடலிலும் பாம்புகள் ஆபரணமாக அணி செய்து வடிவெடுத்து நிற்கும் இத்திருவுருவ நிழற்படம் தனித்துவமானது.
திருகோணமலையில் பெரும் பதவி வகித்த அரசாங்க அதிபர், வன்னியனார், உடையார், ஆங்கில வைத்தியர்கள் மற்றும் பெரும் உத்தியோகஸ்தர்கள், சாதாரண தொழிலாளர்கள் இந்த ஆத்மீக சற்கருமங்களில் கலந்து சிவயோக சித்தரின் ஆசி பெற்றுச் சென்றனர்.
கதிர்காமப் பேறு
சுவாமிஜி வடகரை வீதியில் இருந்த சமயம் திருகோணமலை வன்னியனாராக இருந்த திரு சரவண முத்து அவர்களும், குமாரசாமி உடையாரும், ஆத்மீக தாகம் கொண்டு சுவாமிஜியுடன் மிக நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தார்கள். சுவாமிஜியின் வழிகாட்டலில் ஆத்மீகப் பயிற்சிகளை முறைப்படி அவர்கள் செய்து வந்தனர். பெரிய பதவியில் இருந்த அவர்கள் நிர்வாகத்தில் கூடிய அதிகாரம் உடையவர்கள்.
இவர்களது பதவிக் காலத்தில் கதிர்காமம் இப்பொழுது இருப்பது போல் இருக்கவில்லை. ஆதி மூலத்தில் யந்திரம் வைக்கப்பட்டு தற்சமயம் இருப்பது போன்று திரை போட்டு மறைக்கப்படவில்லை. யந்திரத்தைச் சுற்றித் தகரத்தால் அடைக்கப்பட்டு கப்புறாளையினால் பூஜை செய்யப்பட்டது. காலத்திற்குக் காலம் தகரங்களைக் கழற்றி மாற்றுவார்கள். இதற்குப் பொறுப்பாக ஒரு வன்னியனாரைத் தெரிந்து எடுப்பார்கள். அவரது பொறுப்பிலேதான் யந்திரம் , மிகக் கவனமாக எடுக்கப்படும் . அந்நேரம் சரவணமுத்து வன்னியனார் பதுளை பண்டார வளைப் பகுதிக்கு
- 56 -

வன்னியனாராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். எனவே கதிர்காம ஆதி மூலத் தகரங்களை மாற்றும் பொறுப்பு சரவணமுத்து வன்னியனாருக்கே ஒப்படைக்கப்பட்டிருந்தது. ஒரு மகா சித்தரின் ஆத்ம சக்தி நிறைந்த இடத்தைத் தரிசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் வன்னியனார் பெருமிதம் கொண்டு சுவாமிஜியையும் தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றார்.
அருள்மிகு சுவாமிஜியும் வன்னியனாரும் கப்புறாளையின் இல்லத்தில் தங்கி, மறுதினம் இருவரும் அவருடன் ஆலயத்திற்குச் சென்றனர். அந்த ஷேத்திரத்தின் சைதன்யமும், அற்புத சக்தியும் நிறைந்த ஆதி மூலத்திற்குப் பாதங்களை அடியெடுத்து வைத்த பொழுது வார்த்தைகளினால் கூறமுடியாதவாறு மெய்சிலிர்த்தனர். எல்லா உணர்வுகளும் அடங்கிய ஒரு நிலை ஏற்பட்டது.
அதற்குள் இருந்த யந்திரத் தகட்டைக் கப்புறாளையுடன் சேர்ந்து சுவாமிஜி எடுத்துப் பார்த்தார். நான்கு பக்கமும் சிறிது அரித்துக் காணப்படினும் அதில் சொல்லொணா அபார அற்புத சக்தி நிறைந்திருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
அருள் மிகு முத்துலிங்க சுவாமிகள் தம்மிடத்து உயர்ந்தெழுந்த தவசுவாலையின் சக்தியை சண்முக சக்கரத்தில் ஆவாகனம் செய்து அங்கு பிரதிஷ்டை செய்த அந்த யந்திரத் தகட்டில், கடுமையான தவசக்திகள் நிரம்பப் பெற்ற சித்த புருஷராகிய சுவாமிஜி அவர்களின் திருக்கரத்தின் ஸ்பரிசமும் பட்டதனால் தன் சக்தி விசேஷத்தை மேலும் அதிகரித்துக் கொண்டது.
மிகவும் சக்தி வாய்ந்த பிரசித்தமான ஆலயங்களில் யோகிகள் ஞானிகள் தங்களது தவசக்திகளையெல்லாம் ஒன்று கூட்டி யந்திரத்தில் பிரதிஷ்டை பண்ணியுள்ளனர். அவை காலம் செல்லச் செல்ல மிகவும் பிரசித்தமான அற்புதங்கள் நிறைந்ததாக அதன் பேரலைகள் எங்கும் பரவிக் கொண்டிருக்கும்.
- 57 -

Page 46
அச்சில் ஆக்கங்கள்
சுவாமிஜி வடகரை வீதியில் இருந்த இல்லத்தின் உரிமையாளரின் மைத்துனர் சில சமயங்களில் தேவார திருவாசகங்களை நன்றாக மனமுருகிப் பாடுவார். அதனைக் கேட்பவர்கள் மனம் தானாகவே கசிந்து போகும் வண்ணம் உருக்கமாக இருக்கும்.
ஆர்வமுடன் இவரது பாடலைக் கவனித்த சுவாமிஜி இந்த தேவார திருவாசகங்களைப் படித்துப் பொருளறிய விரும்பி அவரிடத்திலே கேட்டுக் கொண்டார். முதன் முதலாக "பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து" என்ற திருவாசகத்தைப் படித்துப் பின் ஒரு மாத காலத்திற்குள் தேவாரங்களையும் அதன் பொருளையும் நன்கு கற்றுத் தேறினார்.
பத்திரிகைக்கு எழுதும் அளவிற்கு மிகத் துரித கதியில் தமிழ் மொழியில் ஆற்றல் உண்டாகியது. ஆத்ம ஜோதி என்ற ஆன்மீக சஞ்சிகைக்கு ஆத்மீகக் கட்டுரைகள் எழுதலானார். முதன் முதலாக எழுதிய கட்டுரை "பிரம்மச்சரியம்” என்பதாகும். ஆன்மீக சம்பந்தமான கதைகள் கவிதைகள் கூட எழுதியுள்ளார். கேரளத்தில் வெளியாகிய “மாத்ரு பூமி" என்ற மலையாள சஞ்சிகையிலும் அவரது ஆக்கங்கள் அவ்வப்போது பிரசுரமாகின.
சுவாமிஜி என்ற ஞானப் பிளம்பின் அருள் ஒளியை அங்கு நாடி வந்தவர்களில் பண்டிதர் ஒருவரும் குறிப்பிடத் தக்கவர். ஆன்மீகத் துடிப்புடன் நாடிய அவருக்கு இந்த மகானுடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் பேறு கிட்டி இருந்தது. அந்த உத்தம பக்தன் இடத்தில் தமது தமிழாக்கங் களைக் கொடுத்துத் திருத்தங்களைச் செய்து கொள்வார்.
தேவி என்ன செய்தாள்
மாத்ரு பூமி என்ற சஞ்சிகையில் சுவாமிஜி எழுதிய முதல் சிறுகதை," தேவி என்ன செய்தாள்” என்ற தலைப்பைக் கொண்டு வெளி வந்தது. தெய்வத்திடமே நீதி கேட்கும் அஞ்சாமையை உடையவர் நம் சற்குரு என்பதைப் பளிங்கெனக் காட்டும் கதை இதுவாகும்.
- 58 -

யானைப் பாகன் ஒருவன் தேவி உபாசனையில் மிகவும் பக்தி கொண்டவனாய் வாழ்ந்து வந்தான். தனது யானையிடத்தும் அவனுக்கு அளவற்ற வாஞ்சை இருந்தது. ஒரு நாள் பாகன் தனது யானையைக் குளிப்பாட்டுவதற்காக ஆற்றங்கரைக்கு இட்டுச் சென்றான். கரையில் இருந்த பெரிய மரத்தின் வேரில் யானையைக் கட்டி விட்டு அதனைக் குளிப்பாட்டத் தொடங்கினான்.
அது ஒரு காட்டாறு; காட்டாறு என்பது நிலையான நீரோட்டத்தை - பிரவாகத்தைக் கொண்டிருக்காது. பாதத்தை மட்டும் நனைத்தபடி ஒரு சமயம் ஒடிக் கொண்டிருக்கும் நீர் மட்டம், திடீரென்று எங்கிருந்தோபெருகி வரும் பெருவெள்ளத்தால் ஒரு பனைமரத்தையே புரட்டி அடித்துத், தூக்கிச் செல்லக்கூடிய பெரு வெள்ளத்தைக் கொண்ட தாக மாறிவிடும். வந்ததைப் போலவே அந்த வெள்ளப் பெருக்கு திடீரென்று வற்றி வரண்டு மறைந்து விடுவதும் உண்டு.
அந்நேரம் திடீரென்று முன் கூறியது போல காட்டாற்றிலே வெள்ளம் அடித்துப் புரண்டு பெருகலாயிற்று. யானையை மூடுகின்ற அளவுக்கு நீர் மட்டம் உயரத் தொடங்கியது. பதறிய பாகன் யானையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால், அதனுடைய காலைக் கட்டியிருந்த தாம்புக் கயிற்றின் முடிச்சை அவிழ்ப்பதற்காக, நீரின் அடியிலே சென்று முயற்சித்துக் கொண்டிருந்தான்.
தனது எஜமானை வெள்ளத்தில் போகாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் யானை தனது தும்பிக்கையை உயர்த்தியபடி தனது காற்கட்டை கழற்றப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தது.
இவ்வாறு இரு உயிர்கள் ஜீவ மரணப் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையிலே அந்த யானையின் அசுர பலத்தினால் மரத்தின் வேர்கள் முற்றாக மண்ணினின்று மேலே இழுத்தெறியப்பட்டன. மரம் மேலே எழுந்த வேகத்தினால் யானையும் பாகனும் ஆற்று வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்கள். தேவியை தினமும் உபாலித்த யானைப்பாகனுக்கு தேவி என்ன செய்தாள்?.
- 59.

Page 47
LIIGU) (BILITé660)|III (960IbilbTILLgIII (BILITAISÍ
திருகோணமலை தனியார் வைத்தியசாலையில் பணிபுரிந்த டாக்டர் ஒருவர் சுவாமிஜி அங்கிருந்த சமயம் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அவர் யோகர் சுவாமிகளுடன் மிகுந்த ஈடுபாடும் அவரின் அருளாசியும் பெற்றவர்.
ஓய்வு பெற்று திருகோணமலை தனியார் வைத்திய சாலைக்குப் பதவியேற்க யாழ்ப்பாணத்திலிருந்து வந்த சமயம் யோகா சுவாமிகளிடம் விடைபெறச் சென்றார். "திருகோணமலையில் ஒரு பாலயோகி இருக்கிறார். போய்ப் பார்" என்று விடை கொடுத்து அனுப்பியிருந்தார். அவருடைய சொற்பிரகாரம், டாக்டர் இராமநாதன் அவர்கள் யோகர் சுவாமிகள் கூறிய இந்த அற்புத பாலயோகியைத் தரிசிக்க வந்து ஆசியும் பெற்றார். சுவாமிஜி இந்த டாக்டருடன் அவர் பணிபுரிந்த வைத்தியசாலை வாகனத்தில் பலமுறை அருள்மிகு கதிர்காம சுேத்திரத்திற்கு சென்று வந்திருக்கின்றார்.
இவ்வாறு ஒரு முறை அருள் நிறைந்த கதிர்காமத்திற்கு டாக்டரையும் உடன் அழைத்து சுவாமிஜி சென்றிருந்தார். பார்ப்போர் கண்களுக்கு அளவிற் சிறியதாயும், ஆத்ம சைதன்யத்தால் மகா சிரேஷ்டமானதுமான கதிர்காமத்தின் மூலஸ்தானத்தின் முன்னே அசையாத பாவை போன்று பல மணி நேரம் தியானத்தில் ஆழ்ந்து தன்னை மறந்திருந்தார். கண் விழித்துச் சுய நினைவை அடைந்த நேரத்திலே தன்னைச் சூழ்ந்து நின்ற அந்தத் தெய்வீகப் பேரலைகளின் அதிர்வு அடங் காத நிலையிலேயே தன்னிடத் து விலையேறப்பட்டதாக அதுகாலவரை இருந்த தங்கச் சங்கிலி ஒன்றினை ஆலய உண்டியவில் சேர்த்து விட்டார். இது சுமார் ஆறு, ஏழு பவுண்கள் வரை எடை கொண்டது.
அந்தச் சங்கிலியில் புலிநகத்தை வைத்துத் தங்கத்தால் கட்டப்பட்டிருந்தது. அதன் மேல் சொஸ்தி ஆசனத்தில் ஐயப்பனின் திருவுருவமும் பதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆபரணத்தைப் பதினான்கு பதினைந்து வயது வரை சுவாமிஜி இல்லத்தில் அணிந்திருந்தார்.
- SO -

வைராக்கியத்தை விழிகளில் தேக்கி நிற்கும் இளம் துறவி

Page 48
ஜிவித லட்சியத்தை எதிர்வு காணும் தோற்றம்
 

-| 1 1 ̄ ܐ
를
அருள் ஒளி நிறைந்த திருக்கோணேஸ்வரம்
வடகரை விதி மனையின் இன்றைய தோற்றம்

Page 49
யாகத் தீ வளர்த்த ஓம குண்டம்
 

தவக்கனல் பொங்கும் யோகாசனத் தோற்றம்

Page 50
தோற்ற
d60s
GI
 


Page 51
தவப் பொலிவு துலங்கும் சற்குரு
 

தமது இல் லத்திலிருந்து வெளியேறும் போது அணிந்திருந்த ஆபரணம் இதுவாகும். புலிநகம் கோர்த்த சங்கிலியைக் காவலன் என்று கருதி இல்லத்தில் அணிவது வழககம, ്യേ
Eri, T Ti -
சிவயோக சித்தி தந்த யோகாச்சிரமம்
நாட்கள் செல்லச் செல்ல இந்த மகாபுருஷரின் அருட்சக்தியின் பெருமையை மக்கள் உணரத் தொடங்கினர். அதன் விளைவாகப் பலர் இந்த ஒலைக் குடிலை நோக்கி வர ஆரம்பித்தனர். கூட்டு வழிபாட்டில் கலந்து ஆத்மசுகமடைந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்ததனால் அங்கு இடவசதிக் குறைவு ஏற்பட்டது.
மக்களின் வருகையையும் இடவசதியையும் கருத்திற் கொண்டு திருகோணமலையின் பிரதான வீதியிலமைந்த ஒரு நிலத்தை சுவாமிஜி அவர்கள் தெரிவு செய்தார். அந்நிலத்தை குத்தகையாகப் பெற்றுப் பின் விலையாக வாங்கிக் கொண்டார்.
இத் தவஞானியிடம் தம்மை முழுமையாக அர்ப்பணித்து ஈடுபாடு கொண்ட பல பக்தர்கள் ஒன்று சேர்ந்து கட்டி எழுப்பிய, "சிவயோக சமாஜ யோகாச்சிரமம்" என்ற ஆன்மீக ஸ்தாபனம் 1959ம் ஆண்டு வைகாசி விசாசுதினத்தன்று ஆரம்பிக்கப்பட்டது. தூய வெள்ளை வேட்டியும் மேல் துண்டும் அணிந்தபடியே தன் பக்தர்களுக்குக் காட்சியளித்த சுவாமிஜி மகாஞானிகளுக்கே உரித்தான காவி உடையை ஏற்று ஆத்மீகப் பணியை சிவயோக சமாஜ யோகாச்சிரமத்திலே தொடர்ந்தார்.
அபரிதமான சக்தி வாய்ந்த இத்தவ சிரேஷ்டர் இல்லத்திலிருந்து வெளியேறியது முதல் உன்னத குறிக்கோளை அடைந்த பின்பும் தமது இல்லத்துடன் எந்த விதமான தொடர்பையும் வைத்திருக்கவில்லை. அங்கிருந்து வருபவர்கள் இம்மகானைத் தரிசிக்கும் சந்தர்ப்பங்களில் பூர்வீசும் அதன் தொடர்புடைய பேச்சு, சம்பவங்கள் எதனையும் பேசாதபடி உறுதிப்படுத்திய பின் அவர்களுடன் மேற் கொண்டு பேசுவார்.
- 1 - li j 58 68

Page 52
இளமைக் கால மலரும் நினைவுகள்
ஒரு சமயம் இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து ஒரு அன்பர் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் திருகோணமலை மண்ணிற்கும், தன் உறவினருடன் தங்கிச் செல்வதற்கு வந்திருந்த பொழுது அவர் மூலம் சுவாமிஜியைத் தரிசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
கேரளத்திலிருந்து வந்த அன்பர் தவஞானியான சுவாமிஜியுடன் பள்ளிப் பருவத்தில் பாடசாலையில் ஒன்றாகக் கல்வி பயின்ற பேறு பெற்றவர். இருவரும் பால்ய சிநேகிதர்கள். அவர்களுடைய நட்பு மிகவும் நெருக்கமானது. திரும்பவும் இருவரும் சந்தித்துக் கொள்வதற்கு அத்தகைய ஆன்ம நேயமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா?
தொழில் விஷயமாக இலங்கைக்கு வந்து இங்கிருந்து டுபாய் செல்லும் நோக்குடன் வந்த அந்த அன்பருக்கு சுவாமிஜியைச் சந்திக்கும் சந்தர்ப்பம் எதிர்பாராத விதமாகவே அமைந்தது. அநேக ஆண்டுகளுக்குப் பின் இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது வார்த்தைகளால் கூறமுடியாத தவிப்புமிக்க உணர்வில் இருவரும் கரைந்தனர்.
அங்கு வந்தவருடைய சிந்தனையில் இளமைக் காலத்தில் தாம் பகிர்ந்த கொண்ட சம்பவங்கள் அடுக்கடுக்காகப் பொங்கி வரவே அச் சம்பவங்களை மீட்டெடுத்துக் கூற முற்பட்டார்.
சீரும் சிறப்பும் மிக்க செல்வ குடும்பத்தில் பிறந்த இளைஞன் கெங்காதரன் இறந்து விட்டான் என்றே தீர்மானித்து இருந்ததாக அவர் கூறினார். கேரளத்திலிருந்து உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் அழைத்து வந்து திரும்பவும் சுவாமிஜி பிறந்த மண்ணிற்கு அழைத்துச் செல்ல வேண்டும், என்று விடாப்பிடியாக நின்று வற்புறுத்தினார்.
“எந்தக் காரணம் கொண்டும், இந்த நிமிடத்திலிருந்து, பழைய கதைகள் - அதன் தொடர்பான பேச்சுக்கள் எதுவும் பேசமாட்டேன் என்று எனக்கு சத்தியம் செய்து தாருங்கள் அதன் பிறகு தொடர்ந்து மேலே பேசுங்கள்” என்று சமாதானத்துடன் கூடிய ஓர் வேண்டுகோளை சுவாமிஜி அவரிடத்தில் விடுத்தார்.
- 62 -

அம்மகான் கேட்டுக் கொண்ட சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அமைதி அடைந்து தன் குடும்ப விசயங்களை மட்டும் ஆர்வமுடன் பேசினார். ஞானச் சுடராகப் பிரகாசித்து நிற்கும் தவஞானியை தரிசித்த உள்ள நிறைவுடன் விடை பெற்றுச் சென்றார் அந்த அன்பர்.
இங்ங்ணம் இல்லத்திலிருந்து வெளியேறிய பின்பு எக் காலத்திலும் ஒரு தபால் அட்டை முதற்கொண்டு பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பித் தொடர்பு வைத்துக் கொள்ளாதவர் இந்த மகானாவார்.
ஞான குரு
வடகரை வீதியில் ஆரம்பித்த பிரார்த்தனை யோகாசன வகுப்புகள் வைத்தியப் பணி தொடர்ந்தும் சிவயோக சமாஜ யோகாச்சிரமத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாட்கள் செல்லச் செல்ல இங்கு வருகை தந்த மக்களின் எண்ணிக்கை பன்மடங்காகியது.
கடும் தவமியற்றி தெய்வீக புருஷராகத் திகழ்ந்த சுவாமிஜியின் எளிமையான வாழ்க்கை முறையையும் தன்னலம் கருதாது தொண்டாற்றும் பணியையும் கண்டு பக்தர்கள் தமது வாழ்க்கைப் பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் அவருடன் பகிர்ந்து மன ஆறுதலையும் பல அற்புத அனுபவங்களையும் பெற்றனர்.
அவரது பெரும் கருணையும் பேரருளும் எல்லா வற்றிற்கும் மேலாக அவரது கனிவான தோற்றமும் பக்தர்களை அவர்பால் ஈர்த்து, பூஜிப்பதற்குரிய மகான் ஆக்கியது. பல பக்தர்களுடைய உலகியல் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களது வாழ்க்கையை நெறிப்படுத்தும் உயர்ந்த ஆத்மீகப் பணியினால், வணக்கத்திற்குரிய சற்குருவென்ற உன்னத ஸ்தானம் பலரது சிந்தையில் இடம்பிடித்தது.
வாழ்க்கைப் பிரச்சனை ஆத்மீகத்துறை இவற்றிற்கு வழிகாட்டியாக இருந்தது மட்டுமன்றி இந்த யோகாச்சிர மத்தினூடே பல சமூக சேவைகள் செய்வதிலும் மிக ஆர்வத்துடன் செயற்பட்டார்.
- SS

Page 53
தில்லை நடராஜனுக்குத் திருக்கோயில்
1960ம் ஆண்டளவில் திருக்கோணமலை நகரிலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலிருக்கும் "கன்னியா" என்ற இடத்தில் தில்லை நடராஜனுக்கோர் நடேசர் ஆலயம் அமைப்பதற்கெனத் திருவுளம் கொண்டார்.
அதற்கான இரண்டு ஏக்கர் நிலப்பரப்பை ஒரு கொடை வள்ளல் ஆத்மீக சிந்தையுடன் மனமுவந்து அளித்தார். இவர் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். இந்தக் கொடை வள்ளலின் தொடர்பு சுவாமிஜி கோணேஸ்வர ஆலயத்தில் தவமியற்றிய காலத்திலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் நடேசர் ஆலயம் அமைக்கத் தெரிவு செய்த இடத்தினருகே முற்பக்கத்தில் ஒரு நீண்ட மண்டபம் கட்டுவித்தார். அதில் ஒவ்வொரு பெளர்ணமிக்கும் "அந்தர் யோகம்” என்ற அழகு பெயரில் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார்.
யோகாச்சிரமத்தை நாடிவந்த கல்விமான்கள் பெரும் பதவி வகித்தவர்கள் ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் எனப் பலதரத்தினர் இதில் கலந்து கொண்டனர். அருள்மிகு சுவாமிஜியின் உரைகள், சந்தேகம் தெளிதல், ஆன்மீக சம்பந்தமான வகுப்புகள், வேதம் அதிலுள்ள சுலோகங்கள் பற்றிய விளக்கங்கள் என்பன இடம் பெற்றன.
காலையில் சென்று இச் சத்சங்கத்தில் கலந்து மதிய போசனமருந்தி மாலைவரை நிகழச்சிகளில் பங்கு கொண்டு வீடு திரும்பும் அவர்கள், நிர்மலமான நீலவானத்தில் சிறகுகளை அடித்து சுதந்திரமாகப் பறந்து செல்லும் பட்சிகள் போன்று மனதில் எந்தவித உலகியல் பாரமுமின்றி மகிழ்வுடன் செல்வார்கள். சில சமயங்களில் அந்தர் யோக நிகழ்ச்சி யோகாச்சிரம மண்டபத்திலும் நிகழ்வதுண்டு.
ஆலயத்தை அமைப்பதற்கு முன் சிலகாலம் இந்தத் தரையில் காய்கறித் தோட்டத்தை மிகுந்த விருப்புடன் செய்வித்தார். கத்தரி - மிளகாய் - பயிற்றை - தக்காளி போன்ற பயிரினங்கள் அங்கு செழிப்பாக வளர்ந்தன.
- 64

சுவாமிஜியுடன் உதவியாக இருந்த ஒரு தொழிலாளி இந்தத் தோட்டத்தை மிகவும் கவனத்துடன் பராமரித்து வந்தார். காலை வேளையில் பச்சைப் பசேலென்று குளிர்மையுடன் காட்சி தரும் பயிரினங்களைச் சுற்றி வந்து நின்று பார்த்து, முகம் மலர்ந்து ரசிப்பதில் தனியானதொரு இன்பம் அடைவார்.
தோட்டப் பயிர் மட்டுமன்றி பசு வளர்ப்பதிலும் சுவாமிஜி மிகவும் ஆர்வம் காட்டினார். பணியாட்களைக் கொண்டு அவற்றைக் கவனத்துடன் பராமரிப்பதில் உள்ளம் நிறைவடைவார். உயிரினங்கள் எதுவாகினும் பேதமின்றிக் காட்டிய அக்கறைக்கும் அதன் அன்புக்கும் ஆட்பட்டமைக்கு ஒரு சம்பவம் உண்டு.
ஒரு சமயம் அங்கு வளர்ந்த பசு ஒன்று காணாமல் போய்விட்டது. விசாரித்ததில் வேறு ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டிருப்பதாக சுவாமிஜிக்கு செய்தி கிடைத்தது. உடனே தன் மேல் துண்டை எடுத்து தலையில் ஒரு முண்டாசு கட்டிக் கொண்டு, கயிற்றை வளையம் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டு கம்பீர நடையுடன் பசுவைத் தேடிச் சென்றார்.
சென்ற இடத்தில் சுவாமிஜி தன்னைத் தேடி வருவதனை மோப்பத்தால் அறிந்து கொண்ட பசு கதறத் தொடங்கியது. பசுவின் இச் செயல் சுவாமிஜியின் மனதைப் பெரிதும் நெகிழச் செய்தது. பசுவைக் கட்டி வைத்த நபர், சுவாமிஜியை எதிர்பாராது அங்கு கண்டதும், செய்வதறியாது பயந்து நடுங்கித் தாமதமின்றிக் கட்டை அவிழ்த்து சுவாமிஜியிடம் ஒப்படைத்தார்.
ஆலய உருவாக்கத்தில் அருட்குருவின் உடல் உழைப்பு
சுவாமிஜி அவர்கள் கன்னியா - நடேசர் ஆலயக் கட்டிட ஆக்கத்திற்கென அரும்பாடு பட்டார். அங்குள்ள நிலத்தைப் பண்படுத்தி எடுப்பதில் பக்தர்களுடன் தாமும் முழுமூச்சாக ஈடுபட்டார். நடேசர் ஆலய உருவாக்கத்தில் உணவு உறக்கமின்றிக் கழிந்தநாட்கள் எத்தனையோ! அத்தனை மிகக் கடுமையான உடற்கவுடங்களை அம்மகான் அனுபவித்துத் தான் மக்களுக்கென நடேசர் ஆலயம் ஒன்றை உருவாக்கினார்.
- 65.

Page 54
இந்த நடேசர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்ட வகையினைப் பற்றி சுவாமிஜி பேசும் பொழுது கேட்போருக்கு உள்ளம் கசிந்து கண்கள் பனித்துவிடும். மற்றைய இடங்களில் கட்டப்பட்ட ஆலயங்கள் போன்று உருவாகியதல்ல இந்த நடேசர் ஆலயம்.
இந்த ஆலயத்தின் ஸ்தாபகராம் சுவாமிஜி அவர்கள், தானே முன்னின்று கூலியாளாகி; ஸ்தபதியாகி; தச்சனாகி மேற் பார்வை செய்யும் மேஸ்திரியும் ஆகி; ஆகம விதி கூறி வழி நடத்தும் அந்தணனுமாகி, ஆலயத்தை முழுமையும் அழகும் பெற நிர்மாணித்து; குட முழுக்கினைச் சிறப்புற நடாத்தி; தன் ஆத்ம சைதன்யம் அத்தனையையும் ஆலயத்தின் கர்ப்பக் கிரகத்தில் தேக்கி வைத்திட்டார்.
அவரது புனித திருக்கரங்கள், கோயில் திருப்பணிக்காக மண்ணை அரித்தது: கல்லைச் சுமந்தது; குடிப்பதற்குத் தகுந்த நந்நீரைத் தூரச் சென்று சுமந்து வந்தது. உடலைப் போஷிக்க உணவு சமைத்து நேரம் கழிந்திடக் கூடாதென்று கஞ்சியை மட்டும் தயாரித்து அருந்தி தன் கருமமே கண்ணாகினார் சுவாமிஜி.
இலங்கையைப் பொறுத்தவரை இந்து சமுதாயத்திற்குப் பெரும் வரப்பிரசாதம் இந்த நடேசர் ஆலயம் எனலாம். அருட்கனலாம் சுவாமிஜியின் ஆத்ம சக்தியை ஒன்று கூட்டி வேண்டுவார் வேண்டுவதைப் பெறும் பொருட்டு 1972 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அத்துடன் நித்திய பூஜையும் வருடத்தில் ஆறு முறை வரும் நடேசர் அபிஷேகமும், மகாசிவராத்திரி திருவெம்பாவை போன்ற விசேஷ காலங்களில் விசேஷ பூஜைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றன. சுவாமிஜியின் மேற்பார்வையிலேயே இக்கருமங்கள் நடைபெற்று வந்தன. நாளடைவில் அருள்மிகு நடேசர் ஆலயத்தைச் சேர்ந்த அதன்சுற்றுப் பகுதி 'சிவயோக புரம்' என்றே மக்களால் அழைக்கப்பட்டது.
- 68 -

சிவராத்திரி ஆத்ம ரகசியம்
நடேசர் ஆலயத்தில் சிவராத்திரி வைபவம் மிகச் சிறப்பாக நடைப்பெறுவது வழக்கம். நான்கு ஜாமப் பூஜைகளும் கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெறும். அர்த்த ஜாமப் பூஜைக்குப் பின் மூலஸ்தானத்திற்கு நேராக ஆலய முன்றலில் வரிசைக் கிரமமாக பல பொங்கற் பானைகள் வைத்து பக்தர்கள் பொங்கலிடுவது கண் கொள்ளாக் காட்சியாகும். இது சுவாமிஜியின் ஏற்பாட்டிலேயே நடைபெற்றது.
யோகாச்சிரமத்திலிருந்து ஆச்சிரம பக்தர்களுடைய பொங்கலிடும் பானைகள், தேவையான பொருட்கள் யாவற்றையும் தமது உழவு யந்திரத்தில் ஆலயத்திற்குத் தருவித்து சகல ஒழுங்குளையும் சுவாமிஜி கச்சிதமாக மேற்கொள்வார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நடுநிசிக்கு மேல் இம் மகான் தமது அறைக் கதவுகளைப் பூட்டிக் கொண்டு அதனுள் ஆழ்ந்து விடுவார். இந்தச் செயற்பாட்டில் ஒரு உயரிய ஆத்ம ரகசியமே புதைந்து கிடந்தது. அநேகமாக ஒவ்வொரு சிவராத்திரி தினத்திலும் சுவாமிஜியின் நெருங்கிய தொடர்புடைய பக்தர்கள் தேகவியோகம் செய்வது வழக்கம். அத்தகைய பேற்றை அடைந்த பக்தர்கள் உண்மையிலே பாக்கியசாலிகளே
கோடீஸ்வரன் பெற்ற தவப்பயன்
சுவாமிஜி இல்லத்திலிருந்து வெளியேறிய பின், கல்கத்தாவில் காளி கோயிலில் ஒரு கோடீஸ்வரனைச் சந்தித்த சம்பவம் முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவரது ஏகபுத்திரி சிநேகலதாவின் கணவர், இந்திய அரசாங்கத்தில் உயர் பதவி வகித்தவர். திரு. கிருஷ்ணமேனன் பதவியிலிருந்த காலத்தில் இலங்கை இந்தியா சம்பந்தமான கருமமாக இவர்கள் இலங்கைக்கு வர வேண்டிய சந்தர்ப்பம் கிடைத் திருந்தது. அச்சமயம் திருகோணமலைக்கும் வந்து மூன்று தினங்கள் தங்கியிருந்தார்கள்.
- 67

Page 55
சந்தர்ப்ப வசத்தால் இத் தம்பதியருக்கு சுவாமிஜியைத் தரிசிக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. சுவாமிஜி பன்மதவாச்சி வயலில் இருந்த நேரத்திலேயே இவர்களது சந்திப்பு இடம்பெற்றது. மனம் விட்டுக் கலந்து பேசிய அவர்கள், இந்த பிரம்ம் ஞானியின் தரிசனம் கிடைக்கப் பெற்ற உள்ள நிறைவுடனேயே இந்தியா திரும்பினர்.
ஒரு சமயம் சுவாமிஜி, ஒரு சந்தர்ப்பத்தில் சில வாரங்கள் கோடீஸ்வரன் தீனதயாளனுடன் தமக்கு ஏற்பட்ட ஆத்மார்த்தமான தொடர்பினை மனதிற் கொண்டு “உங்களது ஆத்ம சுத்திக்காக” என்று தனது அருளாசியுடன் கூடிய ஓர் கடிதத்தை எழுதி அனுப்பி வைத்தார்.
இக்கடிதத்தை சிவராத்திரி புண்ணிய தினத்தன்று பெற்றுக் கொள்ளும் பெரும் பாக்கியத்தை அப் புண்ணிய ஆத்மா அடைந்தது. தவஞானியின் புனித கரங்கள் தீட்டிய திவ்விய வாசகங்கள் பொறித்த இக் கடிதத்தை நெஞ்சில் தாங்கியபடியே அவரது ஆத்மா அமைதியாகப் பிரிந்தது.
பேறுபெற்ற ஐரோப்பிய பெண்துறவி
நான்கு வருடங்கள் இந்து தத்துவ சாஸ்திரம் (Hindu Philosophy) படித்த ஐரோப்பிய பெண் தத்துவ ஞானி - மேரி என்பவர், ஆன்மீக உந்துதலினால் சிவயோக சமாஜ யோகாச்சிரமத்திற்கு வந்த பொழுது சுவாமிஜியின் நடைமுறை வாழ்க்கையினாலும் அவருடைய ஆன்மீக போதனைகளினாலும் வெகுவாகக் கவரப்பட்டார். அப்பெண்ணிடம் இருந்த ஆன்மீக தாகம் சுவாமிஜியின் அருள் நிழலிலும் ஆத்மீக சூழலிலும் அவர் வாழ வேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்தியது.
தமது தவ வாழ்க்கையை ஆச்சிரமத்திலேயே தொடர்வதற்கு சுவாமிஜியிடம் விடாப்பிடியாக வலியுறுத்தி வேண்டி நின்றார். இப்படியுள்ளதொரு வாழ்க்கையை இங்கு மேற்கொள்வது பொருத்தமற்ற செயலென விளக்கமாக எடுத்துக் கூறி, அந்தப் பெண்ணை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
- 68

மேரி என்ற இப்பெண், ஹொலிவூட்டில் உள்ள பிரபல வியாபாரியின் மகள். இங்கிருந்து சென்ற மேரி ஹொலிவூட்டில் இருக்கும் தமது வீடு, வாசல், ஆடம்பர நகர வாழ்க்கை அத்தனையும் துறந்து, பேக் என்ற கிராமத்தில் ஆடம்பரமற்ற குடிசையில் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.
நான்கைந்து வருட காலமாக காவியுடை தரித்து தமது ஆத்மீகப் பயிற்சியை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார். அந்த உத்தம துறவியின் புண்ணிய ஆத்மாவும் ஒரு சிவராத்திரி புண்ணிய தினத்தன்றே அந்த உடலை விட்டுப் பிரிந்தது.
ஜனனத்தின் ஆத்மரகசியம்
ஜீவாத்மாக்களின் தேகவியோகத்தில் மட்டுமன்றி அவர்களது ஜனனத்திலும் சுவாமிஜி தொடர்புடையவராக இருந்துள்ளார் என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுவது டொருத்தமானதாகும்.
சுவாமிஜியின் பணிவிடைகளுக்கே தம்மை அர்ப்பணம் செய்து அவரது அருள் நிழலில் ஆத்ம சுகம் அடைந்து கொண்டிருந்த குடும்பத்தவர்க்கு, முத்ததோர் ஆண்மகவும் அடுத்து மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். குறைவற்ற குழந்தைச் செல்வத்துடன் வாழ்ந்து வந்த அத் தம்பதியினருக்கு ஒருநாள் சுவாமிஜியிடமிருந்து அழைப்பொன்று வந்தது.
சுவாமிஜியைச் சென்றடைந்த இருவருக்கும் கட்டளை யொன்று பிறப்பிக்கப்பட்டது. தமது குருவினால் சொல்லப்பட்ட எந்த விடயத்தையும் ஏன் - எதற்கு என்று வினாவிச் செயற்படும் வழக்கத்திற்கு என்றுமே அவர்கள் இடமளித்த தில்லை. குருவாக நின்று வழி நடத்தும் அந்தத் துறவியிடம் காணப்பட்ட விசேஷமான அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். சிவயோக சித்தர்களின் சிறப்பான வசீகரம்தான் இதற்குக் காரணமாகும்.
“ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற மூல நட்சத்திரத்தில் அந்தணர் ஒருவரை இல்லத்துக்கு அழைத்து, கும்பம் வைத்து, பூஜைகள் செய்து, அவர் மனம் குளிர குருதானம் வழங்குங்கள்;
பன்னிரண்டு மாதங்கள் இவ்வாறு வழிபாட்டைச் செய்து
- 69

Page 56
வாருங்கள்." இதுவே அத்தம்பதியருக்குக் கூறப்பட்ட திருவாக்காகும். சற்குருவின் திருவாக்கினை நினைந்து வியப்பும் பெருமகிழ்வும் அடைந்த இத்தம்பதியினர், இக் கைங்கரியத்தை ஒரு பெரும் பேறாகவே கருதிச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்ற முழுமனதோடு அம்மகானைப் பணிந்து செயற்பட ஆரம்பித்தனர்.
அடுத்த மாதமே மூலநட்சத்திர தினத்தன்று குறித்த நியமம் தவறாது தூய உள்ளத்துடன் ஒரு தவத்தை மேற்கொள்வது போல, அந்தணரை அழைத்து வழிபாடியற்றி மனம் குளிரக் குருதானம் தந்து பக்தி சிரத்தையோடு குருவின் கட்டளையை நிறைவேற்றினர். பதினொரு மாதங்கள் இவ்வாறு நியமத்தோடு இல்லத்தை ஆலயமாக்கி தாம் அனுஷ்டிக்கும் பூஜா பலனை அறியாமலே, குருபக்தி துணை நிற்க இக் கைங்கரியம் நடைபெற்று வந்தது. இந்தப் பூஜையில் கிரியைகளை மேற்கொண்ட அந்தணர் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் பிரதம பூஜகராக விளங்கியவர். இவர் கிரியா முறைகளில் வேத முறை பிறழாது நியமத்தோடு வழிபாடியற்றுபவர் என்ற பெருமதிப்பை மக்களிடையே பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பன்னிரண்டாம் மாதம் பிறந்தது. அம்மாதத்தில் வரும் மூலநட்சத்திரத்தன்று மேற்கொள்ளப்பட வேண்டிய பூஜை தானங்கள் , கோணைநாதனுடைய திருச் சந்நிதானத்திலேயே நடக்க வேண்டும் என்று திருவருள் கூடியது போலும். குருக்கள் அவர்களுக்கு ஆலயத்தில் அந்நேரம் இடம் பெற்ற விசேட கிரியைகளில் ஈடுபடவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாலேயே இந்த இல்ல பூஜை ஆலயத்தில் இடம் பெறவேண்டியதாயிற்று.
இவ்வாறு சிறப்புற சுவாமிஜியின் திருவாக்கினை மிக பக்தி சிரத்தையோடு நிறைவு செய்தனர் இத் தம்பதியினர். அடுத்த மாதமே கருவுற்றார் இப்புண்ணியவதி. பத்தாம் மாதம் மூல நட்சத்திரத்திலேயே அவர் அழகும் பிரகாசமும் மிக்க ஆண்மகவைப் பெற்றெடுத்தார். பன்னிரண்டு மாதங்கள் மூல நட்சத்திரத்தில் தாம் நோற்ற நோன்பும், மூல நட்சத்திரத்தில் தாம் பெற்றெடுத்த குழந்தையின் ஜனனமும்
- 70 -

வார்த்தைகளால் விளக்க முடியாத வகையில் இணைந்து விளங்கிற்று என்பதை அத்தம்பதியினர் உணர்ந்து, சற்குருவின் மேல் அவர்கள் கொண்ட பக்தியினால் மனம் நெகிழ்ந்தனர்.
திரிகாலமும் உணர்ந்த ஞானியர் ஜீவாத்மாக்களின் போக்கும் வரவும் தெரிந்து கொண்டவர்கள். புண்ணிய ஜீவர்களின் ஜனனத்தை உருவாக்கும் சக்தி அவர்களுக்கு உண்டு என்பதை மகரிஷிகளின் வரலாறுகள் சான்று பகருகின்றன. ஆத்மாக்களின் ஜனனத்திலும் - மரணத்திலும் சுவாமிஜியினுடைய தொடர்பு ஆத்ம ரகசியமானதே. அது மட்டுமன்றி தமது பக்தனின் பக்தி விசுவாசமும் திடமான நம்பிக்கையும் - சரணாகதியும் ஒத்திசைந்து இருக்கும் பட்சத்தில் காரண காரியத்தோடு கூடிய சந்தர்ப்பத்தில், அவர்கள் மரணம் பல தடவைகள் கடந்து சென்ற அற்புத செயற்ப்ாட்டை இப் பிரம்ம ஞானி ஆத்ம கசிவுடன் குறிப்பிட்டுள்ளது கருத்திற் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
நடைபாதையில் வழிகாட்டும் சற்குரு
மார்கழித் திருவெம்பாவை; - புனிதமயமான இந்நாட்கள் பத்தும் சிவயோக சமாஜ யோகாச்சிரமத்தையும், சிவயோகபுரம் நடேசர் ஆலயத்தையும் இணைக்கும் பாலமாக விளங்கியது எனலாம். புலர்ந்தும் புலராத அதிகாலைப் பொழுதில் ஆச்சிரம பக்தர் ஒருவரின் தலைமையில் சிவயோக சமாஜ யோகாச்சிரமத்திலிருந்து திருப்பள்ளியெழுச்சி திருவெம்பாவை இவற்றைப் பாடியபடி பஜனைக் குழுவொன்று நடேசரால யத்தைச் சென்றடையும்.
அந்த வேளையில் நடந்து வரும் அடியாரின் களையும் குளிரும் தீர்க்கவெனப் பந்தல் அமைத்துச் சுடுபானம் வழங்குவதை, அப்பகுதிகளில் வாழும் மக்கள் பெரும் பேறாகவே கருதினர். பஜனைக் குழு நடேசராலயம் சென்றடைந்த பின்பே அழகிய சிற்றம்பலமுடையானுக்குத் திருவெம்பாவைப் பூஜை வழிபாடு ஆரம்பிப்பது வழக்கம்.
பத்தாம்நாள்; ஆரூர்த்திரா தரிசனத்தன்று இந்த நடைபஜனையின் மகிமை பலபடி உயர்ந்தே விளங்கும். அழகிய நடராஜரின் சிறிய திருவுருவச் சிலையொன்று ஆச்சிரமத்தினின்றும் ஊர்வலத்தின் முன்பாக எடுத்துச்
- 7 -

Page 57
செல்லப்படும். அதன் பக்கத்தில் மாதுமை அம்பாள் சமேத கோணைநாதப் பெருமானுக்கே உரித்தான பாபநாசச் சுனையின் தீர்த்த நீரைக்கொண்ட புனித கலத்தை ஒரு பக்தர் தாங்கி வருவார்.
ஞானவழி காட்டும் சற்குரு நடைபாதையிலும் வழிகாட்டி வர, பக்தர் கூட்டமாகத் திரண்டு அவர்பாதச் சுவட்டைப் பின்பற்றிச் செல்வர்.
பத்தாம் நாள், வளர்ந்த அழகுத் திங்கள் குளிர்ந்த கதிர் பரப்பி வானிலே கொலுவிருக்க; மனித சஞ்சடியற்று மோனம் தவமிருக்க, அந்தப் புனித வேளையிலே உள்ளமெல்லாம் பக்தியும் பரவசமும் பொங் கிட ஆண்டாளினதும், மணிவாசகரினதும், பாடல்களை இசைத்தபடி தம் சற்குருவோடு சேர்ந்து செல்லும் இந்த உயர்ந்த சுகானுபவத்தைப் பெற்றவர்கள் என்றுமே இதனை மறந்திடமுடியாது.
ஊர்வ்லம் ஆலயத்தை அடைந்ததும் மூலமூர்த்தி கர்ப்பக் கிரகத்தின் முன்பாக உள்ள மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அதேவேளை கர்ப்பக் கிரகத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட சிறிய நடராஜர் விக்கிரகம் வைக்கப்பட்டிருக்கும்.
தில்லையம்பலவனுக்கு அன்று, அபிஷேகத் தீர்த்தமாக தம்மை ஆண்டு கொண்ட அந்தக் கோணைநாதனுக்குரிய பாபநாசச்சுனைநீர் சொரியப்படுவது கண்டு பக்தர்கள் மனம் குளிர்ந்திடும் வேளை, அந்த சத்திய புருஷர் எத்துணை உயர்ந்த தெய்வீகப் பேரின்பத்தை அடைந்திடுவார் என்று கூறவே வேண்டியதில்லை.
அதிகாலைப் பொழுதில் ஆரம்பமாகி எம்பெருமான் நடேசருக்கு விசேட அபிஷேகங்கள் பூஜைகள் முடிந்த பின் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படும். தொடர்ந்து அலகிலா விளையாட்டுடை நடேசனின் ஆனந்தத் திருநடனத்தைப் பக்தர்கள் கண் குளிரக் காண்பதற்கு ஆலய பிரகாரத்தைச் சுற்றி நடராசப் பெருமானின் திருவடிவம் திருவாசியில் திருமாலியங்களால் பொலிவுற அலங்கரிக்கப்பட்டு, திருவீதியில் வலம்வரும்.
- 72

சிவயோக புரத்து நடேசராலயத்தில் மற்றெங்குமில்லாத சிறப்புடன் கூடிய அம்சங்கள், சுவாமிஜியின் ஒப்பற்ற தனித்துவமான செயற்திறனை சொல்லாமற் சொல்லி நிற்கும்.
முன்னே கற்பூரச் சட்டி ஏந்திய பெண்கள் ஒழுங்காகச் செல்வர். கற்பூர தீபத்தினின்றும் புறப்படும் சுடர் ஒளியும், அது கமழும் தூயமணமும் அந்தப் பிரதேசம் முழுவதையும் ஒளிமயமாக்கிப் புனிதமாக்கி பார்ப்போரை மெய்மறக்கச் செய்து நிற்கும். சுவாமிஜியின் அருள் வழியில் ஒழுகும் அத்தனை பக்தர்களும் கற்பூரச் சட்டி எடுக்கும் இந்தப் புனித நிகழ்ச்சியில் தவறாது பங்கு கொள்வர். இது சுவாமிஜியினால் தன் அடியவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு காத்திரமான கட்டளை என்றே கொள்ள வேண்டும். இதை ஒரு பாரம்பரியமாக்கி நடேசராலயத்தில் என்றும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே சுவாமிஜியின் பெருவிருப்பமாகும்.
கற்பூரச் சட்டியைத் தொடர்ந்து காவடி ஏந்திய அடியார் கூட்டம் சிவயோகபுர சுற்றாடலின் நாலா புறங்களிலுமிருந்து வந்து கலந்து இந்த விழாவைச் சிறப்பிப்பதற்கு சுவாமிஜியே ஒழுங்குகளை ஆக்கிக் கொடுத்தார்.
சிறுவர்கள் ஆண்கள் எனப் பலரும் காவடி ஆடும் கூட்டத்தில் காணப்பட்டனர். பெண்களில் சிலர் பாற்செம்பு எடுத்தனர். அடுத்து பரமேஸ்வரனின் திவ்ய திருநாமங்களை நாம பஜனையாக ஒதிச் செல்லும் பஜனைக் கோஷ்டியைக் காணலாம். இந்த நிகழ்ச்சிக்கு மங்களம் கூட்டுவதற்கென நாதஸ்வரம் தவில் வாத்தியக் கச்சேரி செய்வோர், எம் பெருமானுக்கு முன்பாக இசை மழை பொழிந்தபடி செல்வர்.
நடேசப் பெருமானின் திருநடனம் ஆலய முன்றலை அடைந்ததும் சிவயோகபுரத்தானுக்கென்றே இயற்றப்பட்ட ஊஞ்சல், பராக்கு, எச்சரிக்கை, லாலி இசைக்கப்பட்டு தொடர்ந்து மங்களம் பாடி நடேசப்பெருமானின் திருநடனம் நிறைவு செய்யப்படும்.
- 75 -

Page 58
இத்தனை நிகழ்ச்சிகளையும் தனது நேரடி மேற்பார்வை யில் செம்மையாக ஒழுங்குபடுத்தி நிர்வகித்து நடாத்தி நிறைவு செய்வதில் சுவாமிஜிக்கு நிகர் அவராகத்தான் இருக்கமுடியும்.
அன்றைய விழாவின் சிகரம் போல் அமைவது பிரசாதமாக வழங்கப்படும் கறியமுதாகும். பத்தாம் நாள் திருவிழா முடிய அழகிய நடராஜன் சந்நிதியை அடுத்து விளங்கும் மண்டபங்களில் பல வரிசைகளில் அமர்ந்து ஆரூத்ரா தரிசனம் காண வந்த அடியாரும் சுவாமிஜியின் பக்தர்களும் இக்கறியமுதினை திவ்வியாமிர்தமாக நினைந்து உண்பர்.
இந்த இடத்தில் ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற தாரக மந்திரம் நிதர்சனப்படுவதைக் கண்ணாரக் காணலாம். அரச உத்தியோகஸ்தர் செல்வச் செழிப்புமிக்கவர், நடுத்தர வர்க்கத்தினர், பாமரர், ஏழைகள் எனப் பல படித்தரத்தில் இருப்பவரும் சமபந்தி போஜனம் செய்யும் ஓர் இடமாக அவ்வேளை அம் மண்டபம் மாறிவிடும்.
மகிமை கொண்ட தீர்த்தம்
1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற திருவெம்பாவையின் இறுதித் தினம்; விசேஷமான ஆரூத்ராதரிசன நாள்; விடிகாலை நடைபெற்ற அபிஷேகமும் பூஜையும்; அன்று பக்தர்கள் பெற்றுக் கொண்ட பவித்திரமான தீர்த்தமும் பஞ்சாமிர்தமும் அற்புதமானவை.
ஆலயத்தில் வழங்கப்பட்ட அபூர்வ மூலிகைகளாலான ஒளஷத தீர்த்தம், பஞ்சாமிர்தம் இவற்றின் மகிமையை சுவாமிஜியிடம் நேரில் கண்ட அனுபவத்தை அற்புதம் என்று கூறாமல் என்னவென்பது?
வாடிச் சுருங்கிச் சருகாய்க் காய்ந்து இருந்த ஜீவமுலிகையின் மேல் நன்கு கொதிநிலை ஏறிய நீரை ஊற்றிய அக்கணமே பேரதிசயம் அங்கு நிகழ்ந்தது. காய்ந்து கிடந்த அம்மூலிகை; தண்டு விரிந்து இலைகள் பரப்பி அவ்விலைகள் பச்சைப் பசேலென்று பெரிதாக மலர்ந்து பொலிந்து
- 74

விளங்கியது. மீண்டும் அது பழைய நிலையை அடையவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தலைமுடி போன்று மெல்லியதாக நீண்டு விளங்கியது மற்றொரு மூலிகை. இதன் மேல் நீரை ஊற்றியதும் இது சுழன்று கொண்டே இருந்தது.
இத்தகைய அபூர்வ மூலிகைகளுடன் வேறு ஒளஷதங்களும், தேன் நெய் இவற்றையும் சேர்த்துப் பக்குவமாகத் தயார் செய்த அபூர்வ தீர்த்தத்தின் மகிமையையும் சுவாமிஜி சொல்லாமல் விட்டு விடவில்லை. புதுப்பொலிவு பெற்ற ஜீவ மூலிகைகள் போலவே இந்த ஒளஷத தீர்த்தம் உடலில் சேரும் பொழுது உடல் உறுப்புக்கள் கலங்கள் புதுப்பிக்கப்பட்டு புத்துணர்ச்சி அடைந்து அளப்பரிய மாற்றத்தை உண்டு பண்ணும். தீராத நோயைத் தீர்க்கவும் வல்லது இத் தீர்த்தமாகும்.
இவற்றைப் போன்ற பல அபூர்வ மூலிகைகளை சுவாமிஜி கதிர்காம யாத்திரை சென்ற சமயத்தில் "சீதா பாத்' என்ற இடத்திலும் பொத்துவில் லெளகலை என்ற இடத்திலும் பெற்றுக் கொண்டார். தலைமுடிபோன்ற மெல்லிய மூலிகையை சுவாமிஜியிடம் சிறு வயதிலிருந்தே அவரது அரவணைப்பிலும் ஆச்சிரம சூழலிலும் வளர்ந்த ஒரு இளைஞனிடம் பெற்றுக் கொண்டார்.
பலகாலமாக சுவாமிஜியிடம் இருந்த இந்த ஜீவ மூலிகைகளைக் கொண்டு செய்யக் கூடிய காயகல்ப்பத்தினால் ஒரிருவர் தீர்க்காயுள் பெறுவதைவிட, நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அந்த விசேஷ ஒள்வுதங்கள் பகிர்ந்தளிக்கப் படுவதையே பெருமைதரும் நோக்காகக் கொண்டு சுவாமிஜி இந்த விசேஷ தீர்த்தத்தைத் தயார் செய்தார்.
இங்கு வழங்கப்பட்ட பஞ்சாமிர்தத்தின் விசேஷ அம்சம்; முதலாண்டு திருவெம்பாவையின் போது சுவாமிஜியால் எடுத்து வைத்துப் பாதுகாக்கப்பட்ட கதலி வாழைப்பழம் ஒன்றும், சிறு துண்டுகளாக நறுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. இத்தகைய அபூர்வ தீர்த்தமும், பஞ்சாமிர்தமும் கிடைக்கப் பெற்றவர்கள் பேறு பெற்றவர்களே.
- 75.

Page 59
இறைகுரு தரிசன மகிமை
சிவயோகபுர நடேசராலயத்தின் விசேஷமானதொரு
பெருமை இங்கு கிடைக்கும், இருவகை தரிசனமேயாகும்.
இறை தரிசனம்; குரு தரிசனம்.
அழகிய சிற்றம் பலமுடையானான நடராஜப் பெருமானின் திருவுருவ தரிசனமே "இறைதரிசனம்". இவ்வாலயத்தை உருவாக்கி நிர்வகித்து மக்களைப் பயன் கொள்ளவைத்த பிரம்ம ஞானியைக் கண்குளிரக் கண்டு தரிசித்து, அவர்தம் திருப்பாதக் கமலங்களைத் தொட்டு வணங்கக் கிடைக்கப் பெற்றது குரு தரிசனம்.
இவ்வகையான தரிசன மகிமை; கதிர்காம ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு கால கட்டத்தில் அங்கு செல்லும் பக்தர்கட்கு கிடைத்தது. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் திருக்கோணேஸ்வர ஆலயத்திலும் இந்தத் தரிசன மகிமை நிகழ்ந்து வந்தது.
1972ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பத்து ஆண்டுகளாக பக்தர்கட்கு அருள்கூட்டி இருவகை தரிசனமும் தந்து நின்ற நடேசராலய மகிமை, எதிர்காலத்தில் உலகம் போற்றிப் பரவும் வகையில் அமையவுள்ளது. அதன் மகிமையை அதனைச் சென்று தரிசித்துப் பேறு பெறவுள்ள அந்த எதிர்காலச் சந்ததியினர் இவ்வாறு இருவகை தரிசனம் பெறும் வாய்ப்பினை அடைந்த அடியார்களின் பாக்கியத்தை நினைத்துப் பேசுவதில் எல்லையில்லா ஆனந்தத்தினை அடையவே செய்வார் என்பதை சுவாமிஜி சொல்லாமல் சொல்லி விளக்கியுள்ளார்.
நீங்காத இடம் பெற்ற மதயானை
நர்த்தனமாடும் தில்லை நடராஜன் வீற்றிருக்கும் சிவயோகபுரத்தில், அதற்கு அழகு சேர்த்தாற் போல், ஒரு லக்ஷணமான யானை வளர்க்க வேண்டும் என்ற பெருவிருப்பு சுவாமிஜியின் உள்ளத்தில் நீண்ட நாட்களாகக் குடிகொண்டிருந்தது. அந்நேரத்தில் திருகோணமலை மாவட்டத்தில் வனபரிபாலன உத்தியோகஸ்தராகப் பணி
- 76 -

புரிந்த தம் ஆத்மர்த்த பக்தனிடம், சுவாமிஜி இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். அவர் மூலம் குட்டி யானை ஒன்றை விலை பேசிய போதும், அதற்குரிய லக்ஷணங்கள் அமையாத காரணத்தால், அந்த நோக்கத்தைக் கைவிட்டார். சுவாமிஜியின் இல்லத்தில் வளர்ந்த யானைகளின் மேல் அவர் கொண்ட அளவிலா அன்பும் கருணையும், இவ்விடயத்தில் பல தடவைகள் விடாது மேற்கொண்ட முயற்சிக்குக் காரணமாக அமைந்திருந்தது.
சுவாமிஜி பிரயாணங்களை மேற்கொள்ளும் காலங்களில், வழியில் யானைகளைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்து விட்டால், அவரது உற்சாகம் கரைபுரண்டு ஓடும். வாகனத்தை நிறுத்தி, அந்தப் பேறு பெற்ற யானைகளைக் கனிவோடு நோக்கி மகிழ்வார். பாகனோடு சந்திக்கும் யானைகளுக்கு பழம் தருவித்து பணமும் சேர்த்துக் கொடுத்த சம்பவங்களும் உண்டு.
சைதன்யம் பொங்கிப் பிரவகிக்கும் சக்தி நிறைந்த சிவயோகபுர சூழலிலே, நூற்றுக்கு மேற்பட்ட சைவ மணம் கமழும் குடும்பங்கள் அமைதியுடன் ஆனந்தமாக வாழ, தன் போன்புக்குரிய கஜபதி, அசைந்து நடைபோட்டுத் தன் பக்தர் ஒவ்வொருவரினதும் இல்லம் சென்று, மகிழ்வுடன் உணவை ஏற்று, மிகுதிக் காலம் மரம் இழுக்கும் பணி செய்து வரும் அக்காட்சியை மனக்கண் முன் நிறுத்தி பார்க்கையில், உள்ளம் மகிழ்ச்சியால் நிறைவதாகக் கூறிய குருஜியின் வாசகங்கள், நாட்டின் சீர்குலைந்த சூழ் நிலையினால் நிறைவேறாமலே கழிந்து விட்டது.
என்றும் பொலிந்து நிற்கும் ஆத்மசைதன்யம்
1972ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட சிவயோகபுர நடேசராலயம் நியமம் தவறாத நித்திய பூஜைகளோடு சிறப்பாக நடைப்பெற்று வந்தது. ஈழத்தில் அம்பலத்தாடும் அரசனுக்கு அமைக்கப்பட்ட இரண்டாவது ஆலயம் இதுவாகும்.
- 77 -

Page 60
கர்ப்பக்கிரகத்தோடு கூடிய மண்டபம் இணைந்து விளங்கிய நடேசராலயம் படிப்படியாக மண்டபங்கள் பல கொண்டதாக விஸ்தரிக்கப்பட்டது. ஆகம விதி அனைத்தும் நன்கறிந்த சுவாமிஜியின் அறிவுறுத்தலின்படி கைதேர்ந்த ஸ்தபதியினால், கண்கவரும் ஆழகிய சித்திர வேலைப்பாடு களுடன் ஆலயம் பொலிவு பெற்று விளங்கியது.
ஆலய முன்புற பிரகாரத்தில் உயர்ந்தோங்கிய மணிக்கோபுரம், நாற்றிசையும் கம்பீர நாதத்துடன் ஒலி எழுப்பி அடியார் நெஞ்சில் பக்தி கூட்டும் மணியுடன் சேர்ந்து அமைக்கப்பட்டிருந்தது. பிரணவ சொரூபனாம் ஆனைமுகன்; கலியுக வரதனாம் கந்தன் காவல் தெய்வம் வைரவர்; மூவடியால் உலகளந்த திருமால், ஆகிய அனைவரும் தனித்தனி முர்த்தங்களாக ஆலய பிரகாரத்தில் விதிப்படி எழுந்தருளி இருந்தனர்.
நடேசர் ஆலயம் செம்மையாக நிர்மாணிப்பதற்கென வேண்டிய பொருள் அனைத்தும், சுவாமிஜி அவர்களின் கடும் உழைப்பினால் தனது வயலில் இருந்து பெற்ற பணமும், சுவாமிஜியின் அருள் ஒளியில் ஆத்ம சுகமும் லெளகீக சுகமும் மிகப் பெற்ற பக்தர்களிடமிருந்து மனமுவந்து பெற்றுக் கொண்ட காணிக்கையுமே ஆகும்.
இவ்வாலயத்தின் கும்பாபிஷேக காலம் முதல் அருள் ஒளி வீசிக் கொண்டிருந்த நடேசராலயம், திருக்கோணமலை மாவட்டத்தில் பாதுகாப்பு நிலைமை சீர்குலைந்து அமைதியற்ற நிலை தலை தூக்கியிருந்த வேளையிலே, 1983 ஆம் ஆண்டில் நகர்ப்புறச் சூழலின் எல்லைக்கப்பால் அமைந்திருந்த காரனத்தால் பெரும் சோதனைக்கு உட்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அந்நேரத்தில் மனித சஞ்சாரம் அதிகமற்ற ஏகாந்தமான இனிய சூழலிலே, பல்வேறு இனத்தவரும் குடியிருந்த பகுதியிலே அமைதி நிறைந்து விளங்கிய அவ்வாலயத்தின் சூழலே, அது தகர்க்கப்பட்டமைக்கும் காரணமாயிற்று என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மையாகும்.
- B -
 
 
 
 
 
 
 
 
 

__-_3ల அகம் குளிர்ந்து அடியாரை வரவேற்கும் அன்புக் குரு

Page 61
அடியார் இதயத்தில் அமர்ந்து கொண்ட சற்குரு
 

யோகத் திருவுரு

Page 62
நடேசராலய கும்பாபிஷேக பெருவிழா
 

இங்குள்ள விக்கிரகங்களில் அணியப்பட்டிருந்த ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆனால் அந்த நகைகள் மீண்டும் நடேசர் ஆலயத்திற்கே கொண்டு வரப்பட்டு ஆலயத்தின் பின்புறமாக வீசப்பட்டுக் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இக்களவு நடைபெற்ற ஒரு வாரத்தின் பின் அரசாங்க அதிபரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்ட ஜீப் வண்டியில் சுவாமிஜி தமது பக்தன் ஒருவரை மட்டும் தம்மோடு அழைத்துக் கொண்டு சிவயோகபுரம் சென்றார். அரச அதிபர் வலிந்து தர முன்வந்த படையினரின் பாதுகாப்பை அவர் நிராகரித்துவிட்டே அங்கு சென்றார். அந்நாட்களில் கன்னியாவை ஒட்டிய அப்பகுதி பாதுகாப்பற்றதாக, மக்கள் நடமாட அஞ்சிய ஒரு பிரதேசமாகவே இருந்தது. ஆலயத்தினை அடைந்து அனைத்து விக்கிரகங்களையும் பக்தனின் உதவியோடு ஆச்சிரமத்திற்கே கொண்டு வந்து சேர்த்து விட்டார் சுவாமிஜி,
ஒருவார கால இடைவெளியில் மீண்டும் நடேசராலயம், மடம், மடப்பள்ளி அனைத்தும் உடைத்து எறியப்பட்டன. இவ்வாலய விக்கிரகங்கள் - பற்றி பக்தர்கள் பலரும் உண்மையறியாது கவலை அடைந்தார்கள். இவ்விக்கிரகங்கள் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட சம்பவத்தை ஆச்சிரம பக்தர்களே அறிந்து கொள்ளப் பலமாத காலம் பிடித்தது.
தொகுத்து நோக்கும் பொழுது ஆச்சிரமத்தின் நெருங்கிய அடியார் கூட்டத்தில் இவ்வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர் இல்லையே எனலாம். தாக்கப்படவேண்டியவற்றினை சுவாமிஜியின் பேரருள் காத்து எதிர்கால சமூகத்திற்குக் கையளிக்கத் தயாராக வைத்துள்ளது.
பொது சன நூலகம் யாழ்ப்பாணம்.
- 7 -

Page 63
வயலில் இயற்றிய உலகியல் தவம்
சிவயோக சமாஜ-யோகாச்சிரமப் பணிகளால் காந்தம் போல் கவரப்பட்ட பெரும் பதவி வகித்தவர்களில், திருகோணமலை அரசாங்க அதிபராக அந்நேரத்தில் கடமைபுரிந்தவரும் ஒருவராவர். 1960ம் ஆண்டளவில் காடாக இருந்த இருபத்தைந்து ஏக்கர் நிலம் அரசாங்கத்தினால் ஆச்சிரமத்திற்குக் கொடுக்கப்பட்டது. இது நகரிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில் அமைந்த பன்மதவாச்சி என்ற இடமாகும்.
அவ்வேளை அச்சம் தரத்தக்க காட்டு விலங்குகளின் உறைவிடமாக அந்தக் காடு விளங்கியது. அந்தக் காடுகள் களனிகளான வகை சுவாமிஜியைப் பொறுத்தவரை, உழைப்பின் மகிமையை உலகுக்கெல்லாம் செயற்பாட்டிலே காட்டிய ஒரு
நிகழ்வாகும்.
காடுகள் வெட்டுவதும் எரிப்பதும் அதில் பங்கு கொண்ட ஆச்சிரம பக்தர்களிடத்திலும் தொழிலாளர் களிடத்திலும் பிரித்துக் கொடுக்கப்பட்டு கொடிய வெயிலையும் பனியையும் பொருட்படுத்தாமல் நிகழ்ந்தது. இவ்வேளையில் உழைப்பாளருக் கிடையே தனக்கென்றும் ஒரு பங்கைத் தனிப்படுத்தி துப்பரவு செய்ய ஒதுக்கிக் கொண்டார் சுவாமிஜி.
கடும் தபசு செய்து உள்ளத்தைப் புடம் போட்டு உறுதி வாய்ந்த தங்கமாக மாற்றி வைத்திருந்த அந்தத் தவஞானி இங்கே உடல் உழைப்பை மூலதனமாக்கி, தனது இரத்தத்தையே வியர்வையாகச் சிந்திப் பாடுபடும் பாட்டாளி மக்களின் ஒருவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டு, ஈடு இணையற்ற ஆத்மதிருப்தியை அதில் கண்டார்.
பூப் போன்று சிவந்த அத் திருமேனி வெயிலாலும் பணியாலும் நிறம் மாறி உருமாறிற்று. மலரிதழ் போன்று மென்மையான அந்தப் பொற்கரங்கள் மண்வெட்டியும் கோடரியும் பிடித்து மண்ணையும் மரத்தையும் வெட்டி உழைத்ததால் புண்ணாகிக் காய்த்தன.
- 80 -

இந்த ஆரம்ப நிலையிலே வயலிலே நிரந்தரமான கட்டிடங்கள் எதுவும் கிடையாது. இதனால் இரவில் படுப்பதற்கு பரண்கள் அமைத்து அதில் படுப்பார்கள். இத்தகைய பரண்கள் காவல் செய்பவர்களுக்காக வயல் வெளிகளில் ஆங்காங்கே கட்டப்பட்டிருக்கும்.
பலமான கம்பு தடிகளை வெட்டி அதை நான்கு புறமும் நட்டு, குறிக்கப்பட்ட உயரத்தில் இருக்கை போன்று அமைப்பார்கள். இதன் மேல் சாக்குகளை விரித்து காவல் செய்பவர் படுத்துக் கொள்ளுவர். செப்பமற்ற கம்புகளாலான படுக்கை என்பதால் இதில் படுப்பவர்களுக்கு மிகுந்த உடல் நோவை இது தரும். இதற்கு மேலே சிறு கூரையும் வேயப்பட்டிருக்கும்.
ஒரு சமயம் பரண் அமைப்பதற்கு தேவையான கம்பு தடிகளை வெட்ட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டபொழுது நிகழ்ந்த சுவையான சம்பவம் இதுவாகும்.
அந்நேரத்தில் வயலிலே காவலுக்காக சுவாமிஜியோடு ஒருவன் தங்கி இருந்தான். சிவந்த மேனியும் கவர்ச்சியான தோற்றமும் கொண்டவன். பரண் கட்டுவதற்கு வேண்டிய கம்புதடிகளை வெட்டுவதற்கென்று ஒரு நாள் இந்த இளைஞனையும் அழைத்துக் கொண்டு சுவாமிஜி புறப்பட்டார். பெருமளவு நிலப்பரப்பு வயலுக்கென்று வெட்டித் துப்பரவு செய்யப்பட்டிருந்தமையால் அடர்ந்த காட்டுப்பகுதியை நாடி இருவரும் காட்டுக் கத்தியோடு சென்றனர். கம்பு தடிகளை வெட்டி ஒரு பெரிய கட்டாகக் கட்டி, அவர்கள் சுமந்தபடியே திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
வழியில் ஒரு ஆறு; அது நீரின்றிவற்றி வரண்டு காணப்பட்டது. களைப்பு மிகுதியால் சிறிது காலாற வேண்டுமென்று நினைத்து அந்த ஆற்றங்கரைப் பக்கமாகத் துண்டை விரித்து சுவாமிஜி படுத்து விட்டார். ஆற்றின் மறுகரையில் காவலாளியும் படுத்துக் கொண்டான்.
ஆற்றங்கரையோரமாக உயர்ந்த பெரிய பாலைமரங்கள்; அந்நேரம் பாலைப்பழம் பழுக்கின்ற காலமென்பதால் மரம் நிறையப் பழங்கள்; களையோடு படுத்திருந்த இருவரையும்
- 81 -

Page 64
திடுக்கிட வைத்தது திடீரென்று எழுந்த, ஒரு பயங்கர அலறல். இதுவரை தான் கேட்டறியாத மகா பயங்கரமானதொரு ஒலியாக சுவாமிஜி அதை உணர்ந்தார்.
பாலை மரத்திலிருந்து ஒரு பெரிய கரடி இந்தப் பயங்கர சத்தத்தை எழுப்பியபடி தொப்பென்று கீழே குதித்தது. தனது பூதாகாரமான உடலை அசைத்தபடி, அதே பயங்கர ஒலியோடு சுவாமிஜி நின்ற இடத்திற்கு அருகே நெருங்கி வரலாயிற்று.
கையிலே காட்டுக் கத்தியைத் தவிர வேறு எதுவும் அவரிடத்து இல்லை. உடலெல்லாம் வியர்வையில் தோய்ந்து விட்டது. கத்தியை ஓங்கியபடி தன்னை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த அந்தக் கரடியை, சுவாமிஜி கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றார். அவருள்ளத்தில் தெளிவான சிந்தனைக் கீற்றுக்கள் சில பளிச்சிட்டன. “எனக்கு இப்போது மரணம் இல்லை. அது எப்பொழுது சம்பவிக்கும் என்பது எனக்குத் திடமாகத் தெரியும்". ஆகவே தன்னையும், தன் நிலையையும் கணப்பொழுதில் உணர்ந்து கொண்ட திரிஞானி அசையாமல் நின்றார்.
சுவாமிஜியோடு துணையாக வந்த காவலாளி பீதி கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் ஒரே ஒட்டமாக வயலுக்கு ஓடி விட்டான். ஓலமிட்டபடி அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருந்த கரடி, சுவாமிஜி நின்ற திசையை சற்று நேரம் நின்று உற்று நோக்கியது. என்ன நினைத்துக் கொண்டதோ தன் எதிரே நின்ற தவசிரேஷ்டரின் சக்தி மிகுந்த் அதிர்வலைகளின் வீச்சிற்குக் கட்டுண்டாற்போல் தன் பாதையை மாற்றி காட்டுக்குள் சென்று மறைந்தது.
அந்த இடத்திலேயே சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசுப்படுத்திக் கொண்டார் சுவாமிஜி, பின் மெல்ல நடந்து வயலை வந்தடைந்தவர், அங்கு காவலாளி வந்து சேர்ந்து விட்டதைக் கண்டார்; அவனருகில் சென்று அவன் சட்டையைச் சேர்த்துப் பிடித்து கன்னத்தில் ஓர் அறை வைத்தார். இதை எதிர்பாராததால் அவன் நிலை குலைந்து நினைவிழந்தான்; இந் நிலை சிறிது நேரம் நீடித்தது.
- 82 -

எந்தக் குற்றத்துக்கும் பிராயச்சித்தம் உண்டு. ஆனால் இத்தகைய துரோகத்துக்கு மீட்சி கிடையாது என்பது சான்றோர் வாக்கு. தனது துரோகச் செயலை உணரவேண்டுமென்பதற் காகவே அவனை அடித்ததாக அச்சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசினார் சுவாமிஜி, மயங்கிக் கிடந்த காவலாளியை கன்னத்தில் தட்டிக் கொடுத்து அவனது மயக்கத்தைத் தெளிவித்தார்.
சிவயோக சமாஜத்திற்குச் சொந்தமான வயல் நிலங்கள் ஒரு வருடத்திலோ, இரு வருடங்களிலோ களனிகள் ஆக்கப்பட்டவையல்ல, சிறிது சிறிதாகச் சுவாமிஜியினதும் அவர் சேர்த்துக் கொண்ட தொழிலாளிகளினதும் கடுமையான வியர்வை சிந்திய உழைப்பினால் திருத்தப்பட்டு பொன் விளையும் பூமியாக மலர்ந்தவை அவை.
பல ஏக்கர் விஸ்தீரணமான அந்த வயல் வரம்புகளிலே சுவாமிஜியின் திருப்பாதங்கள் தீண்டாத இடமே இல்லை எனலாம். விதை விதைக்கும் போதும், நாற்று நடும்போதும், களை எடுத் துப் பசளை தந்து பயிர் காத் து அறுவடையாக்கிச்சூடு அடிக்கும் போதும், உருவிலே துறவியாகி உள்ளத்தால் அயராது உழைக்கும் பாட்டாளியாகி, மெலிந்து கறுத்து உருக்குலைந்து நிற்கும் அத்தவ வடிவைத் தரிசித்த வேளைகளில் கலங்காத நெஞ்சமும் கசிந்து கரையும்.
அத்தனை பெரிய வயலின் அதிபதியாக அன்றி வயலில் வேலை செய்ய வந்த தொழிலாளர்கட்கும், தனது திருக்கரத்தாலேயே உணவு பாகம் செய்வார். தனது திருக்கரத்தால் உண்ணும் கலங்களைக் கழுவி உணவு பரிமாறி பரிவுடன் உண்ண வைக்கும் செயலானது, சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் செயற்பாடாகவே அமைந்தி ருந்தது.
சுவாமிஜியிடத்தில் வேலை செய்வதற்குத் தொழிலாளிகள், என்றுமே பின் நிற்பதில்லை. வயலிலே இறங்கி விட்டால் அவரது சுறுசுறுப்பும் செயற்பாடும் தொழிலாளர்களையும் அவ்விதமே இயக்கிவிடும். இதனால் வேலை மிகத் துரிதமாக, சம்பூரணமாக சுவாமிஜியின் மேற் பார்வையில் அவரது பங்களிப்போடு நிறைவு பெறும்.
- 83 -

Page 65
வயல் அறுவடை முடிந்ததும், தன்னிடம் பணி செய்த தொழிலாளர்களின் ஊதியத்தை அளிப்பதோடு மட்டுமன்றி அவர்கள் உழைப்பிற்கு மதிப்பளித்து வந்த லாபத்தினை நெல்லாகவும் அள்ளி வழங்கி, இருப்பிட வசதிகளையும் சீர்படுத்த உதவி மனநிறைவோடு அவர்கள் செல்வதைக் கண்டு அகம் குளிர்ந்திடுவார் அந்த உலகியல் ஞானி. தொழிலாளர்களின் உழைப்பில் கிடைக்கும் லாபத்தில் சமபங்கை அவனுக்கே அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த சித்தாந்தத்தை சுவாமிஜி தாமே செயற்படுத்தி வந்துள்ளார். ஆத்மீகத்தில் சுவாமிஜி காட்டிய சமதர்மம் அதுவாகும்.
தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு, நிலையான பாதையைக் காட்டுவதற்கு, கடும் தபசினால் அமைத்த சிவயோக சமாஜ ஆச்சிரமத்திலே, அமைதியாகத் தன் ஆத்மீகப் பணி தொடர்வதற்கு அந்த மகானுக்கு எந்தவித கஷ்டங்களும் இருக்கவில்லை. அவர் தேவை அறிந்து வேண்டியதையெல்லாம் வேண்டியவாறு அள்ளிக் கொடுக்க, எத்தனையோ செல்வந்தர்கள் அவர் அனுமதி கேட்டுக் காத்திருந்தனர். உடல் வருந்தாமல் அமைதியாக வாழக்கூடிய இந்த வாய்ப்பை எல்லாம் துச்சமாக உதறிவிட்டு, பன்மதவாச்சி என்ற காட்டுப் பகுதியிலே வருடத்தின் அரைவாசிப் பகுதியைச் சேற்றிலும் சகதியிலும் நின்று, வெயிலும் பணியும் தாங்கி, ஊண் உறக்கம் துறந்து உழைத்த, அந்தப் புதுமைத் துறவியைப் பலவாறாக விமர்சித்தவர்களும் இருக்கத்தான் செய்தனர்.
உண்மையில் தைத்திரியோபநிஷத்திலே வரும் கருத்துக்கு வரைவிலக்கணமாகவே, சுவாமிஜி அவர்கள் வாழ்ந்து காட்டினார் என்பதற்குப் பின்வரும் வாக்கியங்களே சான்றாகும்.
"உணவுற்பத்தியைப் பெருக்குவாயாக உனக்கு மட்டுமல்ல எல்லோருக்குமாகவும் உற்பத்தி செய்; உற்பத்தி செய்த உணவை மனச் சோர்வின்றி ஈஸ்வர சிந்தையுடன் பசித்தவனுக்கு அன்போடு வழங்கு; இங்ங்னம் செய்தவன், மகா விரதங்கள் அனைத்தின் பலனையும் தடையின்றி
அடைவான்."
- தைத்திரியோபநிஷத்து.
- 84 -

இது தவிர, தொழிலாளவர்க்கத்தின் மேல் சுவாமிஜி கொண்டுள்ள அளவில்லா அன்பையும், அக்கறையையும் காணக்கூடிய விதத்தில், ஒரு பெரும் உண்மையும் அதில் புதைந்து இருக்கின்றது. ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறையுள் அத்தனையும் கிடைக்கப்பெற்ற, நடுத்தர வகுப்பினர்க்கு ஆத்மீக நல்வழியை நெறிப்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் சுவாமிஜிக்கு நிறைய இருந்தது.
ஆனால், ஒருவேளை உணவுக்காக அன்றாடம் வியர்வை சிந்தி உழைக்கும் தொழிலாளர்களது தேவை; அவர்கள் பற்றி எரியும் வயிற்றுப் பசிபோக்க உணவும், உடுக்கும் ஆடையுமேயாகும். அங்கு ஆத்மீகம் பற்றிச் சிந்திப்பதற்கு அவர்களுக்கு நேரம் - நினைப்பு எதுவுமே இல்லை.
இப்படிப்பட்டவர்களுக்கு சுவாமிஜி வழங்கியது, ஆத்மீகமல்ல. பசித்த வயிற்றுக்குச் சாதமும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குமான பாரிய பணியைத்தான் அவர்களுக்கு சுவாமிஜி ஆற்றினார். அவரிடம் தொழில் செய்து சென்ற கூலியாட்கள், என்றுமே மனம் கோணிச் சென்றது கிடையாது. ஆயிரக்கணக்கான பாமர மக்களுடைய இதயத் துடிப்பைத் தன் துடிப்பாகக் கருதி அவர்களுக்கு சுவாமிஜி பணியாற்றியமை, அவர்கள் என்றுமே மறந்திட
(ւpւգ-աո Ց].
பாட்டாளிகள் தோழர்
1980ம் ஆண்டின் கடைசிப் பகுதியில், பன்மதவாச்சிப் பகுதியில் வேளாண்மை, தோட்டப்பயிர் செய்து கடினமாக உழைக்கும் தொழிலாளர்களுக்கென ஒரு கழகத்தை ஏற்படுத்து வதில் சுவாமிஜி ஆர்வம் காட்டினார். அங்குள்ள பாட்டாளி வர்க்கத்தினர் யாவரையும் ஒன்று கூட்டி, ஒரு குழு ஒன்றை முதலில் அமைத்தார்.
அவர்களுக்குள்ளேயே தலைவர்-காரியதரிசியை தெரிவு செய்து மேலும் உற்சாகப்படுத்தினார். அந்தக் குழுவுக்கு மூன்று அருமையான பெயர்களைத் தெரிவு செய்து. அதில்
- 85

Page 66
ஒன்றைத் தேர்ந்தெடுக்க அத் தொழிலாளர்களின் விருப்பத்துக்கே விட்டு விட்டார். வள்ளுவர் விவசாயக் கழகம், நெல்மணிக் கழகம், புதிர்மணிக் கழகம் எனத் இத் தவஞானியினால் தேர்ந்த தலைப்புக்களில், 'நெல்மணிக் கழகம்'என்ற மணியான பெயரினையே அவர்கள் விருப்புடன் தேர்ந்தெடுத்தனர்.
'நெல்மணிக் கழகம்' உருவானதை அடுத்து, சிவயோகபுரம் நடேசர் ஆலயத்தில் திருவெம்பாவை நடைபெற இருந்தது. பிரகாரத்தைச் சுத்தம் செய்ய இக்கழகத்தினருக்கும் வாய்ப்பினை அளித்த சுவாமிஜி, காவி வர்ணத்தில் அவர்கள் கழகக் கொடியினைத் தாங்கி, ஊர்வலமாக இவ்வாலயத்தின் சிரமதானப் பணியில் வந்து கலந்திடச் செய்தார்.
தொழிலாளர் வர்க்கத்தினரின் அடையாளம் என நினைப்பவர்க்கும், ஆத்மீக நிறமென நினைப்பவர்க்கும் ஒரே சமயத்தில் மனத் திருப்தி தரும் வகையில் இக்கொடி அமைந்திருந்தது. நடேசராலயத்தை சமரசம் உலாவும் இடமாக மாற்றியமைத்த சுவாமிஜியின் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
இவர்களுக்கென ஒரு கழககீதம், மனித உடலில் அமைந்த அன்மைய கோசத்தை விளக்குவதுடன், அயல் நாட்டில் கையேந்தி உண்ணாமல், நாமே பாடுபட்டு உழைத்து, நெல் விளைத்து, நிறைந்து வழியவைத்து உண்ணுவோம் என்று பொருள் தந்து, பாட்டாளி வர்க்கத்தின் உழைப்பின் மேன்மையை நன்குணர்த்தும்படி சுவாமிஜியால் யாத்து அளிக்கப்பட்டது.
ஒரு தொழிலாளர் சமுதாயத்தையே பன்மதவாச்சிப் பகுதியில் உருவாக்கி, உரமூட்டி, வளர்த்த பெருமையை என்றுமே அவர்கள் மறந்திடப் போவதில்லை.
விழிநீர் சிந்தவைத்த பக்தன்
பன்மதவாச்சியில் வயற்செய்கையானது, ஒருமுறை பயங்கர நோயினால் முற்றாகவே அழிந்துவிடும் நிலையை உருவாக்கியது. பல ஏக்கர் கணக்கான நிலங்கள், அப் பிரதேசத்தில் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. பெற்றெடுத்த - 88 -

குழந்தை, கண் முன்னாலேயே, அணு அணுவாக உயிர் பிரிவதைப் பார்த்துத் துடிக்கும் தாயின் நிலையில்தான் தமது வயல் நிலைப்பாடும் இருப்பதாக ஒரு சமயம் சுவாமிஜி எடுத்துக் கூறினார்.
அவரது மனோநிலை, தனது பிள்ளை போன்று ஆச்சிரமத்தில் வளர்ந்து இள வயதில் அகால மரணத்தால், இவ்வுலகை நீத்த, ஒரு புண்ணிய ஜீவனை அக் கணம் நினைவுக்குக் கொண்டு வந்தது. எவ்வளவுதான் உயர்ந்த ஞான நிலையை அடைந்த பொழுதிலும், கருணையே வடிவான அவரது மன ஆழத்தைத் தொட்டுத் திருவிழிகளில் கண்ணிர் சிந்தவைத்த ஒரே சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
திருகோணமலை மூதூர்ப்பகுதியில், கிளிவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அந்த இளைஞன், சிறுவனாக இருந்த பொழுதே சுவாமிஜியிடம் வந்து சேரும் பேற்றைப் பெற்றிருந்தார். ஆச்சிரமத்திலேயே இருந்து கொண்டு பாடசாலைக்குச் சென்று வந்தார். அதுமட்டுமன்றி சுவாமிஜியின் பேரன்புக்கு ஆளாகிய இவர் தன்னால் முடிந்தளவு சுவாமிஜிக்குப் பணி செய்வதிலும் மனமகிழ்வுடன் செயற்பட்டார். சுவாமிஜிக்குத் தேவையான வெளிவேலைகள் அனைத்தையும் கச்சிதமாக முடித்துக் கொடுப்பார்.
நீர் இறைக்கும் யந்திரம் ஆச்சிரமத்தில் இல்லாத காலம் அது; அதிகாலையிலே எழுந்து விடும் அவர், எவர் கட்டளையையும் எதிர்பாராமலே நிறைந்த ஆர்வத்தோடு கிணற்றிலிருந்து நீர் எடுத்து சுவாமிஜி ஸ்நானம் செய்வதற்கான தொட்டியை நிரப்பி விடுவார். அந்த நித்திய கருமத்தை தனது முக்கிய பணியாகக் கருதி, நிறைவேற்றிய பின்பே, ஏனைய தன் சொந்தக் கருமங்களைச் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.
சிரித்த முகம்; கலகலப்பான பேச்சு; சிவந்த மெல்லிய
ஒற்றை நாடியான சரீரம். கள்ளமின்றித் துள்ளித் திரிந்த அந்த இளைஞன், சுவாமிஜியின் மனதைப் பெரிதும் கவர்ந்தான்
- 87 -

Page 67
என்றால், மற்றவர்களைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. பாடசாலைக் கல்வியைத் தொடராததால் தனக்கொருவேலை பெற்றுத் தர வேண் டு மென் று சுவாமிஜி யிடம் கேட்டுக்கொண்டான். இவரது விருப்பத்தை பூர்த்தி செய்ய, நீர்பாசன இலாகாவில் சாரதியாக ஒரு வேலை பெற்றுக் கொடுத்தார்.
ஆச்சிரமத்திலே வளர்ந்தாலும், ஒரு செல்வமும் செல்வாக்கும் உள்ள பிள்ளையைப் போலவே, நடை, உடை, பாவனைகளில் விளங்கி வந்தார். மாலையில் நன்கு அலங்காரம் செய்து கொண்டு சுவாமிஜியின் எதிரில் வந்து நின்று; அச்சமோ, ஒளிவுமறைவோ இன்றித் தான் போகப் போகும் இடத்தைச் சொல்லி விடை கேட்பார். சுவாமிஜியும் மறுத்தொரு வார்த்தை பேசாமல், வேண்டிய பணம் கையில் கொடுத்து அனுப்பி வைப்பார்.
தனது சம்பளப் பணம் வந்ததுமே அதை அப்படியே சுவாமிஜியின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, மனநிறைவோடு வெளியேறிவிடும் அவர், தன் தேவைக்கெல்லாம் சுவாமிஜியிடமே பணத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். தந்தை மகனுக்கிடையே இருந்த, அன்புப் பிணைப்பை இவ்வாறு அவர் தானே வளர்த்திருந்தார். ஒரு சுதந்திரப் பறவை போன்று அந்த இளைஞன் வாழ்ந்த தன்னலமற்ற இந்த வாழ்க்கையைப் பார்த்து, ஆச்சரியப்படாத பக்தர்களே. இல்லை எனலாம்.
ஆனால், அவரது வாழ்க்கையின் பின்னணியில் புதைந்து கிடந்த ஜீவரகசியத்தைச் சுவாமிஜி தெரிந்து கொண்டு, அவரது போக்கிற்கே அனுசரணையாக விட்டு விட்டார் என்பதை எவரும் புரிந்திருக்கவில்லை.
இவருக்குப் பதிவுத் திருமணமாகி, மூன்றாம் மாதம் அந்தப் பயங்கர நிகழ்வு இடம்பெற்றது. வேலைத்தலத்தில் நாய் ஒன்று கடித்ததால், காய்ச்சல் ஏற்பட்டு ஆச்சிரமத்தில் தனது அறையில் சுருண்டு கிடந்தார். சுவாமிஜி, சமாஜ பக்தர் மூலம், அவரை வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தார். விசர் நாய் கடித்திருந்ததனால் நிலைமை மோசமடைந்து வைத்தியர்கள் கைவிட்டனர்.
- 88 -

"எத்தனை இலட்சம் செலவாயினும் அவரைச் சுகப் படுத்துங்கள்" என்ற சுவாமிஜியின் கட்டளையை ஏற்று, ஆச்சிரமத்தோடு நெருங்கிய பக்தர்கள், "ஒருவில்' என்ற இடத்திலுள்ள விஷகடி வைத்தியரிடம் கொண்டு சென்றனர்.
பலனின்றி மீண்டும் ஆச்சிரமம் அழைத்து வரப்பட்டார். முகத்தில் வீசும் காற்றும், ஒளியும், பட முடியாமல் காரிலிருந்து இறங்க மறுத்துக் கத்தி, ஓலமிட்ட அந்த இளைஞன், ‘சுவாமிஜி இறங்கச் சொல்கிறார்" என்ற மந்திரவார்த்தைக்குக் கட்டுப்பட்டார். கடைசி என விஷகடி மருத்துவர் கொடுத்த மருந்தினையும் சுவாமிஜியின் பெயரைச் சொல்லியே ஊட்டி விட்டனர். ஆயினும் பலன் ........... பூஜ்யமே.
அதிகாலையில், அவரது ஆத்மா பிரியும் முன்பே, சுவாமிஜியின் அன்றக் கதவுகள் தாள்பாள் இடப்பட்டன. உலகியல்ரீதியாக இடம்பெற்ற ஒரு துர்மரணத்திற்காக, மனம் உருகிக் கண்ணிர் சிந்திய சம்பவம், சுவாமிஜியைப் பொறுத்தவரை இது ஒன்றே என அவரே குறிப்பிட்டுள்ளார்.
அந்த இளைஞன், விஷநாய்க்கடியினால் இறந்ததால், அவரைத் தாங்கிச் சென்ற ஆச்சிரம பக்தர் உடலிலும், ஆடைகளிலும், அவரது உமிழ் நீர் வடிந்து இருந்தது. தொற்று நீக்கும் ஊசி மருந்தை அவர்கள் கட்டாயம் ஏற்ற வேண்டும் என வைத்தியர் கூறியும், சுவாமிஜி, தடுப்பூசி ஏற்றுவதற்கு அவர்களை அனுமதிக்கவில்லை.
இந்த விஷயத்தில், உங்களை நான் ஈடுபட வைத்ததனால் அதனால் விளையும் பலாபலன்களையும் இங்கேயே விட்டு விடுங்கள் என்று அப்பேச்சுக்கு, சுவாமிஜி முற்றுப்புள்ளி வைத்தார். அந்த மூவரும், விஷத்தடுப்பூசியை, ஏற்றுக் கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
89 -

Page 68
தொடர்ந்த ஆச்சிரமப் பணிகள் (9) A5nTD LuasDGIT
ஆச்சிரமப் பணிகளிலே, முடிமணியாய் இன்றும் திகழ்ந்து வருவது சனிக்கிழமைகளில் சுவாமிஜியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நாமபஜனையாகும். கலிகாலத்தில் வேதனையும் சோதனையும் நிறைந்த வாழ்வின் உயிரோட்டத்தில், மனிதனுக்குத் தெப்பமாகி உதவக் கூடியது இசையோடு கூடிய இனிய பாடல்களே.
"நான் வைகுண்டம் - கைலாசம் - யோகிகளின் இதயம் முதலியவற்றில் மாத்திரம் இருப்பவன் அல்ல; எந்த இடத்திலிருந்து பக்தர்கள் என்னுடைய நாமங்களைக் களங்கமற்ற மனத்துடன் பாடிப் புகழ்ந்து கொண்டிருக்கின்றார் களோ, அந்த இடத்தில் என்னுடைய முழு ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறேன். இவ்வண்ணம் நாம பஜனையின் பெரும் மகிமையை விஷ்ணு புராணம் கூறுகின்றது." பலர் ஒன்று கூடி அமர்ந்து, மன ஒருமைப்பட்டு இசைக்கும் பிரார்த்தனையிலே ஈடுபடுவதனால், மனச் சஞ்சலங்கள் நீங்குகின்றன; மனத்தில் சாந்தி பிறக்கின்றது. அற்புத தெய்வீக அனுபவங்கள் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப்படுவதை அறிந்திடலாம். தமது வாழ்க்கையின் பிரச்சனைகளை வென்றெடுக்கக் கூடிய ஒரு புத்துணர்ச்சி யையும் பெறமுடிகிறது என்பதில் அசையாத நம்பிக்கையை ஊட்டி, பஜனையில் ஈடுபட வைத்தவர் சுவாமிஜி.
யோகாச்சிரமத்தில் பஜனை நாட்களில் எமது பாரம்பரிய கலை கலாச்சாரங்களின் அழகுக் கலைகளான மலர் மாலைகள் கட்டுதலும், கோலமிடுதலும், பிரசாதங்கள் தயாரித்தலும், சுவாமிஜியின் அறிவுறுத்தலின் பிரகாரம், இளம் பெண்கள் ஆர்வத்தோடு பங்கு கொண்டு பயிற்சிபெறும் கூடமாகவே ஆச்சிரமம் அமைந்திருந்தது.
நாம பஜனையில் இசைக்கப்படும் பாடல்கள், இசை வல்லுனரான சுவாமிஜியினால் எழுதப்பட்டு இசையமைக்கப் பட்டவை. சில பாடல்கள் - மந்திரங்கள் இவற்றின் இசையமைப்பில், சிவயோக சமாஜத்தின் ஆஸ்தானக் கலைஞர்கள் என்று ஏற்றுக் கொண்டவர்களின் பங்களிப்பையும் சுவாமிஜி பெற்றுக் கொண்டதுண்டு. பஜனைப் பாடல்கள்
- 90

அனைத் தும் 9 (05 ஒழுங் கில் அமைக் கப் பட்டு, தொகுதிகளாக்கப்பட்டு, சுவாமிஜியின் நேரடிக் கண்காணிப்பில் இசைக்கப்பட்டவை. வயலின், மிருதங்கம், ஹார்மோனியம், சித்தார் போன்ற வாத்தியங்கள் ஒத்திசைக்க: பக்தி பரிமளிக்க; இதய ஆழத்தில் ஊடுருவிச் சென்று பரந்து நிற்க: ஆத்ம சுகத்தை நல்கி நிற்பவை இந்த பஜனைப் பாடல்கள்.
தன்னை நாடி வரும் அடியார்களின் உள்ளத்தில் சாத்வீக குணம் தலையெடுத்து வளர்ந்திடவும், சமூகம் நலன் பெறவும் கருதி, சுவாமிஜி மேற்கொண்ட சற்கருமங்களில் ஒன்று உண்டு. வாரந்தோறும் பஜனை மண்டபத்தில் கருவறைக்கு நேரே அமைந்த ஓம குண்டத்தில், ஆகுதிப் பொருட்களை இடும் கிரியை வழிபாட்டினால், இப் பொருட்கள் பிரிகை அடைந்து எழும் புகை மண்டலம், மண்டபம் முழுவதிலும் வியாபித்து நிற்கும். இதில் தோய்ந்திடும் உடலும் உள்ளமும் சாத்வீக உணர்வலைகளின் எழுச்சியை அடைந்து பயன் மிகக் கொடுத்தன என்பதில் ஐயமில்லை.
இந்த நாம பஜனையின் முழுப்பயனையும் தன்னை நாடி வருகின்ற அத்தனை பக்தர்களும் பங்கு கொண்டு பயன் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், சுவாமிஜி எடுத்துக் கொண்ட சிரத்தையை, அம்மகானை அணுகிய ஒவ்வொரு பக்தனும் நன்கு உணர்ந்திருந்தார்.
சனிக்கிழமை; இந்த நாள் சிவயோக சமாஜ ஆச்சிரமத்தைப் பொறுத்தவரை மிக முக்கியமானதும் ப்வித்திரமானதும் ஆகும். ஆச்சிரம பக்தர்கள், அன்றைய தினத்தில் தமது லெளகீக தேவைகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இப் புனித இடத்தை நாடி வந்து, அமைதியான - சைதன்யம் நிறைந்த சூழலிலே, மன ஆழத்தைத் தொடக்கூடிய பாடல்களை, இராக - தாள - லயம் பிசகாது, தாமும் சேர்ந்து இசைத்து, தெய்வீக சுகத்தை அடையும் முகமாக இந்த நாம பஜனையை சுவாமிஜி ஆக்கித் தந்துள்ளார்.
சிவயோக சமாஜயோகாச்சிரமத்தில் நாம பஜனை நடைபெற்ற சமயம் அங்கு குறிப்பிடக்கூடியதொரு சிறப்பம்சம் இடம்பெற்றது. குருதேவரின் பிரசன்னமே அதுவாகும். பிற்பகல் ஆறரை மணிக்கு ஆரம்பமாகி, ஏழரை மணிக்கு பஜனை நிறைவடையும். கருவறையின் வலப்பக்கத்தில் இடப்பட்ட
- 91 -

Page 69
புலித்தோலின் மேல் தெய்வீகப் பொலிவுடன் அமர்ந்திருப்பார் குருஜி. திருவிழிகள் தியான நிலையில் கீழ்நோக்கி இருக்கும். தாள வாத்தியங்களோடு இசை வல்லுனர் பஜனையைப் பக்தியோடு உருகி இசைக்க, அதனை மீட்டுப் பாடி, மனம் குவிய வைக்கும் அற்புத சூழலின் மகத்துவம், சற்குருவின் பிரசன்னத்தால் பலகோடியாகப் பொங்கிப் பெருகி நிற்கும்.
தீபாராதனை முடிந்த பின், மண்டபத்தின் மூன்று பக்கங்களிலும் சுவரோரமாய் அமைதியோடு நிற்கும் பக்தர்களை ஒவ்வொருவராக சுவாமிஜி அருகிலே சென்று, நின்று, அன்புடன் விசாரித்து, இருகரம் கூப்பி வணங்கிச் செல்லும் அந்த இனிய வாய்ப்புக்காகவே, பஜனையை நாடி எத்தனையோ பேர் தவறாது வருவர்.
இந்த நாம பஜனை, வருடத்தில் ஒரு முறை தைப்பொங்கல் தினத்தன்று காலை, விசேஷ பஜனையாக சுவாமிஜியின்ால் ஆச்சிரமத்தில் நடாத்தப்பட்டது. சமாஜத்தின் முற்றத்தில் மெழுகிக் கோலமிட்டு பொங்கலிட்டு, பஜனையின் பின் சுவாமிஜியோடு பக்தர்கள் சமபந்தியில் இருந்து பொங்கல் அமுதுண்டு, தம் அருட்குருவின் ஆசி பெற்று, மனம் நிறைந்து எதிர் காலத்தை மகிழ்வுடன் வரவேற்கத் தயாரான மனோநிலையில் இல்லம் ஏகுவர்.
ஆச்சிரமத்தில் ஆரம்பித்த நாம பஜனை பின் கொழும்பு மட்டக்களப்பு, கொம்மாதுறை, யாழ்ப்பாணம், அப்புத்தளை ஆகிய வெளி இடங்களிலும், வெளிநாடாகிய லண்டன் நகரிலும் சுவாமிஜியின் அருளாசியுடன் நடைபெற்று வருகின்றது.
பஜனையின் நாத அலைகள் ஆச்சிரமத்தில் மட்டு மல்லாது, அங்கு வரும் பக்தர்கள் இல்லங்களிலும் ஒலித்து அருள் அமிர்தம் பொழிய வேண்டும் என்ற சுவாமிஜியின் பெருநோக்கம் 'இல்லபஜனை' என்ற பெயரில் நிகழ்ந்து வந்தது. ஒரு ஆச்சிரம அன்பர் வீட்டில் அது நிகழும்போது சுவாமிஜியின் பக்தர்கள் அனைவருமே அங்கு சமூகமளிக்க வேண்டும் என்ற சுவாமிஜியின் கட்டளை அனைவராலும் பேணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
- 92

ஆச்சிரமத்தில் மட்டுமன்றி, திருகோணமலை நகரை அடுத்துள்ள கிராமப் புறங்களிலும் இந்த பஜனை நடத்தப்படவேண்டுமென்ற பெரு விருப்பத்தை சத்சங்க வேளைகளில் பலதடவைகள் சுவாமிஜி எடுத்துக் கூறியுள்ளார். நாட்டின் சீர்குலைந்த சூழ்நிலையால், இந்தப் பயன் தரும் முயற்சி, நடைமுறைப்படுத்த முடியவில்லை. அந்தப் பெருமகானின் அருள்வாக்கு, எதிர் காலத்தில் நிறைவுபெறும் என்பதில் ஐயமில்லை.
நாட்டின் சூழ்நிலை சீர்குலைந்து போன காரணத்தால் இறுதிச் சில வருடங்கள், நாமபஜனை, சிவராத்திரி, நவராத்திரி, நடேசர் பெளர்ணமிபூஜை, ஏகாதசி ஆகிய நிகழ்ச்சிகள், திருகோணமலையில் தமது அருளாசிக்குரிய பக்தனின் கல்லூரி வீதியில் அமைந்த இல்லத்தில் ஒழுங்கு செய்து, குருதேவரும் அங்கு பிரசன்னமாகி இருந்து நடத்தி வந்தார்.
பஜனையில் பெருகிடும் ஆத்ம அனுபூதி
பஜனைப் பாடலில் சிவயோக சித்தியால் தாம் பெற்ற சிவயோக நுண்பொருளின் திருப்பாதத்தை அடைந்துவிட்ட மகிமையை, சுவாமிஜி நான்கு விருத்தப் பாக்களிலே அற்புதமாக அமைத்துச் சேர்த்துள்ளார்.
இதே போன்று தாம் அடைந்த உயர்ந்த ஆத்ம ஞான சுகம் தன்னை தமக்குத் தந்தருளிய தென்கைலை மாமலையில் வீற்றிருக்கும் மரகதமணியாம் பரமேஸ்வரனின் மரகதக்கால் சிலம்பொலி கேட்டு, அவரைச் சரண் அடைந்ததாகக் கூறும் பாடலும் பஜனையில் இணைக்கப்பட்டுள்ளது. "மரகத மலை போன்ற' என்ற இப்பாடலின் பெருமையை வார்த்தைகளில் வடித்திட முடியாது.
ஐந்தெழுத்தோதி நின்ற என்ற திருப்பாடலும், வாழ்க வாழ்கவே' என்ற பாடலும் பஜனைத் தொகுப்புக்களில் இறுதிப் பாடல்களாக அமைக்கப்பட்டவை. தமக்கு சிவயோக சித்தி தந்த குருமணியின் திருப்பாதகமலங்களை இதில் வெளிப்படுத்திக் காட்டியுள்ளார்.
93 -

Page 70
ஏனைய பஜனைப் பாடல்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் பொழுது அவை அவரவர் உள்ளப் பக்குவத்திற்கேற்ப உள் உணர்வுகளைத் தட்டி எழுப்பி வளர்த்தெடுக்க வல்லவையாக விளங்குவதை அனுபவத்தில் உணர்ந்தவர்கள் பலராகும்.
பஜனையின் ஆரம்பத்தில் இசைக்கப்படும் குருவணக்கப் பாடல், சுவாமிஜியின் பூரண ஆசியுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகும். "ஞானஒளிபெருக்கி” என்று ஆரம்பமாகும் இப்பாடல் சுவாமிஜியின் அருளாசிக்குரிய பக்தனால் இயற்றப்பட்டு, இசையமைப்பாளரான மற்றொரு பக்தனால் இசையமைக்கப் பட்டது. பாடலும் இசையும் ஒத்திசைந்து இப் பாடலில் மிளிரும் பக்குவத்தை குருஜி உள்ளம் நெகிழ்ந்து கூறியது குறிப்பிடத்தக்கது.
(ஆ) நவராத்திரி
பூரட்டாதி மாதத்தின் வளர்பிறையில் வரும் தசரா என வழங்கும் நவராத்திரி, ஆச்சிரமத்தைப் பொறுத்தவரை, மிகக் கலகலப்பாக, கலை உணர்வு பொங்கி மிளிரும் சிறந்த விழாவாக சுவாமிஜி அமைத்திருந்தார்.
இவ்விழா ஆரம்பிக்கும் முன்பே ஒன்பது நாட்களுக்கு மான பூஜைப் பொறுப்புக்கள், தலைமை, சமாஜ குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், சிவயோக சமாஜ ஆஸ்தான வித்துவான்களின் இசை, வாத்தியக் கச்சேரிகள், லயவிந்நியாசம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் சுவாமிஜியின் நேரடி மேற்பார்வையில் ஒழுங்காக நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுவிடும். மேலும் வெளியூரிலிருக்கும் பிரசித்தமான கலைஞர்கள், பேச்சாளர்கள், போன்றவர்களின் நிகழ்ச்சிகளும் அதில் மேலும் பெருமை சேர்த்து நிற்கும்.
நவராத்திரி ஆரம்பநாட்களின் முன்னாளிலே, ஆச்சிரம மண்டபத்தின் வல்ப்பக்கத்தில் படிப்படியாகக் கொலு அலங்காரம் ஆரம்பமாகும். அழகிய காவிவர்ணக் கரையமைந்த துணியினால் அலங்கரிக்கப்பட்ட படிவரிசையில், சுவாமிஜி தாமே தேர்ந்து தெரிந்து சேகரிக்கப்பட்ட பல்வேறு வகை பொம்மைகளை, வரிசையாக அடுக்கி அழகு செய்யும் பணியில் தலைமை வகிப்பார்.
- 94 -

நவராத்திரியின் ஆரம்ப முதல் நாள், காலை கணபதி ஹோமத்துடன் சுவாமிஜி ஆரம்பிப்பார். அன்று காலையே ஆச்சிரம மண்டபம் மலர்ச்சரங்களால் அலங்கரிக்கப்பட்டு பொலிந்து காணப்படும். மண்டபத்தின் உள்ளிருந்து தெருவாயில் வரை, மாவிலையும் மகர தோரணங்களும் தென்றலில் அசைந்தாட, மங்களம் விளங்கும் வாழைகள் நிறைகுலையுடன் காட்சி தரும். அத்தோடு இளநீர்க்குலைகளும் தென்னம் பாளைகளும் மேலும் மெருகூட்டி நிற்கும்.
மண்டபத்தின் முன் வாயிலில் மெழுக்கிட்டு, அழகுக் கோலங்கள் நாளுக்கு ஒன்றாகப் பக்தியும் கலை உணர்வும் பொங்க,சுவாமிஜியின் வ ழிகாட்டலில் ஆச்சிரம மங்கையர்களால் அமைக்கப்பட்டிருக்கும். மாக்கோலம் -நெற்கோலம் - வண்ணப் பூக்கோலம் - பல நிறங்கள் கலந்த தேங்காய் பூக்கோலம், நவராத்திரி விழாவுக்கே பெரும் சிறப்பைத் தந்து நிற்கும்.
தாம் விரும்பிய வகையில் கோலம் அமைப்பதற்கென்றே, மலர்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தருவித்து, வேண்டிய வழிமுறைகளை பக்குவமாய் எடுத்துக் கூறி, தமது நேரடி மேற்பார்வையில் அக் கோலங்களை அமைப்பித்து, அதில் ஈடுபடுவோர்க்கும், அதை ரசிப்பவர்க்கும், மனோலயத்தையும் உற்சாகத்தையும் வியப்பையும் அளிக்கின்ற தனித்துவமான செயற்பாட்டை, சுவாமிஜியிடமன்றி வேறெவரிடமும் காண (pig-il fligi!.
மண்டப வாயிலில் மட்டுமன்றி, மண்டபத்தின் உள்ளும் வரிவரியாகப் போடப்பட்ட மாக்கோலம் அழகுடன் விளங்கும். மாலையில் அம்பிகையும் - லக்ஷமியும் - வாணி சரஸ்வதியும் மலர்மாலைகள் கொண்டு கண்ணைக் கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டு, கொலுவின் மேல் வரிசையில் வண்ண விளக்குகளுடன் திகழும்.
இந்நாட்களின் கலைநிகழ்ச்சிகளில் ஆச்சிரமத்தின் சமய கலை கலாச்சார வகுப்பு மாணவர்க்கு ஓர் தனித்த இடத்தை என்றும் சுவாமிஜி வழங்கி வந்தார். உள்ளுர் வெளியூர்க் கலைஞர்களின் திறமைகளை கெளரவிக்கவும், பொது மக்கள் அவற்றைக் கண்டு, கேட்டு ரசிக்கவும் இந்த நவராத்திரி விழாவை சுவாமிஜி அவர்கள் பயன்படுத்தினார்.
- 95 -

Page 71
(இ) சத்சங்கம்
சுவாமிஜி அவர்களின் பணிப்பின் பேரில் 1977 ஆம் ஆண்டு பதின்ான்காம் திகதி, தைப்பொங்கல் தினத்தன்று சத்சங்கம் ஒன்று ஆச்சிரம மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது மாதம் இருமுறை வரும் ஏகாதசி தினங்களை, சத்சங்கம் கூடுகின்ற நாட்களாக சுவாமிஜி தெரிவு செய்திருந்தார். இதற்குப் பெரும் முக்கியத்துவம் அளிக்கும் விதத்தில் இரண்டு மணித்தியாலங்களை ஒதுக்கியிருந்தார். ஜெபம், தியானம் நூல்வாசித்தல், விகித ஜெபம், அன்பர் உரை ஆகிய நிகழ்ச்சிகள் இதில் இடம் பெற்றன.
ஒவ்வொரு சத்சங்கத்திலும் பக்தர் ஒருவர், அன்பர் உரையிலே இடம் பெறுவதுண்டு. ஆத்மீகம் தொடர்பான தலைப்புகளில் அவர்கள் பேச்சு அமைந்திருந்தது. தம்மைத் தாமே ஆத்ம பரிசோதனை செய்திடும் வாய்ப்பை அன்பர் உரை மூலம் சுவாமிஜி அவர்கள், ஆச்சிரம பக்தர்களுக்கு அமைத்துத் தந்திருந்தார்.
இந்த சத்சங்க நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டி பொலிவு பெறச் செய்தது, நிகழ்ச்சி முடிவில் அருள்மிகு சுவாமிஜி அவர்கள் பக்தர்களுக்கு வழங்கிய அருளுரையாகும். சத்சங்க வேளையில் அருளுரை வழங்க சுவாமிஜி முன்வந்த காரணம் கருத்தில் கொள்ளத்தக்கதாகும். தூய நெஞ்சோடு ஆத்மீக தாகம் மிகுந்துவர தன்னை நெருங்கி நிற்கும் பக்தர் உள்ளுணர்வின் துடிப்பின் வலிமையே, அவரை அமிர்தம் போன்ற அருளுரைகளை வழங்கி, அவர்கள் தாகம் தீர்க்கத் துரண்டியது என்பதை அம்மகானே பல தடவை எடுத்துக் கூறியுள்ளார்.
குருதேவரினால் உருவாக்கப்பட்ட சத்சங்கத்தினால், யாவரும் வியக்கத்தக்க வகையில் ஆச்சிரம பக்தர்களைக் கொண்டே மாபெரும் பொருட்காட்சி ஒன்றை ஆத்மீக அடிப்படையில் 3-5-1977 இல் திருகோணமலை விக்னேஸ்வரா பாடசாலையில் சுவாமிஜி அவர்கள் ஒழுங்கு செய்து நடாத்தி வைத்தார். இப் பொருட்காட்சி இருதினங்கள் அங்கு நடைபெற்றது. அதனின்றும் பெற்றுக் கொண்ட வருவாயில் பக்தர்கள் மனம் குளிர, நடேசர் ஆலய மணி மண்டபத்திற்குச் செலவு செய்தார்.
- ஒ6 -

காடு திருத்தும் கடும் உழைப்பில் தோள் கொடுத்த திருத் தோற்றம்
உழைப்பின் பயனில் பூரிப்பு

Page 72
நாம பஜனையில் ஞான குருவின் பிரசன்னம்
 

-_ -No.
|-
ஞானச் சுடர் ஏற்றும் தீபச்சுடர்

Page 73
பாதாத்திரை செல்லும் அற்புதத் திருக்கோலம்
பிரபஞ்சத்தில் கரைந்து நிற்கும் பிரம்ம ஞானி (கதிர்காமம்)
 
 
 
 
 
 
 

சிவயோக சமாஜ சத்சங்கத்தினர் முழுமன ஈடுபாட்டுடன் செயற்பட்டு ஆச்சிரமத்திற்கு மனமுவந்து அளித்த, ஆளுயர்ந்த தீபவிளக்கை, அகம் குளிர ஏற்று, அவர்களது இருதய சுத்தியுடன் கூடிய வேண்டுகோளையும் தமது ஹ்ருதயத்தில் இருத்தி, அவ்விளக்கில் தீபம் ஏற்றியமை, சுவாமிஜியின் ஆத்மீக சரித்திரத்திலே இதுவே முதல் தடவையாகும்.
(ஈ) அனாதை இல்லம்
சுவாமிஜியின் ஆச்சிரமப் பணிகளில் முக்கிய அங்கமாகத் திகழ்ந்தது சிறுவர்களுக்கான புகலிடம் ஆகும். வறிய குழந்தைகள் பலர் உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படைத் தேவைகளைக் குறைவறப் பெற்று வாழவேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் சுவாமிஜி,
இங்கு தாய் அல்லது தந்தையை இழந்த வறிய பிள்ளைகளே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் நன்னடத்தைப் பிணையில் நீதிமன்றத்தினால் அனுப்பி வைக்கப்பட்ட ஆண்பிள்ளைகள் பலரும் காலத்துக்குக் காலம் வந்தபோது சேர்த்துக் கொள்ளப்பட்டனர். நல்லதொரு சூழலிலே வளரக்கூடியதொரு வாய்ப்பை அவர்களுக்கு ஆச்சிரமம் நல்கியது எனலாம்.
தத்தம் சொந்த இல்லங்களில் வாழும் ஏனைய குழந்தைகளைப் போலவே இவர்களும், எல்லா விடயங்களிலும் நிறைவு பெற்று விளங்கினர். இவ்வில்லத்தில் வாழ்ந்த அனைத்து மாணவர்களும் பாடசாலைசென்று கல்வி கற்றனர். அவர்களில் சிலர் இன்றும் அரச உயர் பதவிகளில் இருந்த போதும், தம்மை உயர்த்திவிட்ட ஸ்தாபனத்தையும், அதன் தலைவரையும் நினைவு கூறத் தவறுவதில்லை.
ஏட்டுக் கல்வியோடு தமக்கென்று ஒரு கைத்தொழில் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உயர் நோக்கில், இவர்களுக்கு பிரம்புக்கூடை பின்னும் பயிற்சியும் ஆசிரியரை நியமித்து முறையாகப் பயிற்றுவித்தார். இந்த நுட்பமான கைப்பணித்துறையில் சுவாமிஜி நிபுனர் என்பதற்கு அவர் திருக்கரங்கள் பட்டு உருவான அழகிய கூடையே தக்க சான்றாகும். அது இன்றும் ஆச்சிரமத்தில் பேணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-- ହ7 =

Page 74
(உ) சமயகலாச்சார வகுப்பு
சைதன்யம் நிறைந்த யோகாச்சிரம மண்டபத்தில் பிரதி ஞாயிறு தோறும் நடைபெறும் சமயகலாச்சார வகுப்புக்கள் சுவாமிஜியின் வழிகாட்டலில் நடாத்தப்பட்டு வந்தன. இளந்தளிர் களான மாணவ மாணவியரை நமது சமய கலாச்சாரத்தை இன்னதென செயன்முறையில் எடுத்துக்காட்டி வழி நடத்துவதால், உயர்ந்த பண்புகளோடு கூடிய ஒரு நல்ல சமுதாயத்ததை எதிர் காலத்தில் உருவாக்க முடியும் என்பது சுவாமிஜியின் திடமான கொள்கையாகும்.
கலாச்சார வகுப்பு நேரத்தில் மாணவர்களுக்கு செயற்கரிய சக்திகளை தவப்பயனால் ஈட்டிக் கொண்ட மகரிஷிகள் - தவஞானிகள் - யோகிகள் ஆகியோரது உன்னதமான சரித்திரங்களை எடுத்துக் கூறுவதன் மூலம் அவர்கள் பிஞ்சு உள்ளங்களில் ஆழப்பதித்து விடவேண்டும் என்பதே சுவாமிஜியின் பெருநோக்கமாகும்.
(ஊ) யோகாசன வகுப்பு
பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் யோகக்கலைகளில் ஒன்றான யோகாசனத்தைப் பயிற்றுவிக்கும் வகுப்புக்கள் சிவயோக சமாஜ ஆச்சிரம மண்டபத்தில் இடம் பெற்றன. உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்க்கே ஆத்மீக செயற்பாடுகள் நலன்தர வல்லதாகும் என்பதை நோக்காகக் கொண்டு இந்த யோகாசன வகுப்புக்களை சுவாமிஜி தமது ஆணைப்படி நடத்துவித்தார். தீராத நோய்கள் பலவற்றுக்கும் சிறந்த மருந்தாக, சுவாமிஜி அவர்களின் அறிவுரைப்படி பயின்றவர்கள் குணமடைந்தும் இருக்கின்றனர். சுவாமிஜியிடம் இந்த யோகாசனத்தைப் பயன் கொண்டவர் இலங்கையர் மட்டுமன்றி வெளிநாட்டவர்களும் உள்ளவர்.
(எ) கர்நாடக இசை வகுப்புகள்
இறைவன் இசை வடிவானவன்; இந்த நாதப் பிரம்மத்தின் பெருமை சிவயோக சமாஜ ஆச்சிரமத்தைப் பொறுத்தவரை நன்கு உணரப்பட்ட ஓர் அம்சமாகும். கர்நாடக இசை, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் போன்ற வாத்தியங்களின் இனிய ஒலி இந்த ஆச்சிரம மண்டபத்தில் எதிரொலித்து, தெய்வீகத்தை மேலும் பெருகும்படி செய்து நிற்கும். இத் துறைகளில் கைதேர்ந்த சிவயோக சமாஜ
- 98 -

ஆஸ்தான வித்துவான்கள் இசையில் ஆழ்ந்த ஞானம் உடைய சுவாமிஜியின் பணிப்பின்படி இவ்வகுப்புக்களை இங்கு ஓர் ஒழுங்கில் நடத்தி வந்தனர்.
(ஏ) கதிர்காமம் பாதயாத்திரையாகச் செல்லும் அடியார்களுக்கு அமுது கொடுத்தல்
ஒவ்வொரு வருடமும் ஆனிமாதத்தில் பாத யாத்திரையாகச் செல்லும் கதிர்காம யாத்திரீகர்களை உபசரித்து, அமுதளிக்கும் பணி, சுவாமிஜியினால் சமாஜத்தில் ஒழுங்காக நடைபெற்றுவந்த ஒரு நிகழ்ச்சியாகும்.
(ஒ) பள்ளி மாணவர் பஜனை
சிவயோக சமாஜ ஆச்சிரமச் சூழலில் அமைந்த பாடசாலை விக்னேஸ்வரா மகா வித்தியாலயம். இப்பாடசாலை யின் இந்து மாணவர், பிரதி வெள்ளிக்கிழமை தோறும், ஆச்சிரம மண்டபத்திற்கு ஒழுங்காக வந்து அமர்ந்து, பஜனைபாடி, விபூதி சந்தனம் பெற்றுச் செல்வதற்கு ஏற்ற வாய்ப்பினை சுவாமிஜி ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்தப் Lull-gil.
(ஓ) சொற்பொழிவுகள்
திருகோணமலைக்கு அவ்வப்போது வருகை தரும் சமயப்பெரியார், அறிஞர்கள், சுவாமிஜியின் தரிசனம்பெற ஆச்சிரமத்திற்கும் வருவதுண்டு. அவர்கள் உரைகளைக் கேட்கும் வாய்ப்பை ஆச்சிரம பக்தர்களுக்கு சனிக்கிழமை பஜனையின் பின்பு சுவாமிஜி ஏற்படுத்திக் கொடுத்து வந்துள்ளார்.
தானதர்மங்கள்
பற்றுக்கோடு தேடிவந்த வயது முதிர்ந்தவர்க்கு சுவாமிஜி, வேண்டும் பொழுதெல்லாம் பொருள் தந்து அவர் மனக்குறைகள் தீர்த்து வைப்பார். வறியவர் பலர் தம் குறைதீர சுவாமிஜியிடம் வேண்டும் பொருள்களைப் பெற்றுச் சென்றதுண்டு.
தம் கல்வியைத் தொடர வகையற்று வந்தவர்க்கும், உற்சாகமளித்துப் பொருள் கொடுத்து, அவர் வாழ்வுக்கு ஒளி கூட்டி வைத்த சுவாமிஜியின் செயற்பாடுகளை எல்லாம் இந்த ஏட்டிலே அடக்குவது இயலாது செயலாகும்.
- 99.

Page 75
வள்ளலாய் வாழ்ந்த அந்த மகானின் அருட் கொடைகள், பொருட் கொடைகள், ஒன்றையொன்று மிஞ்சியதாய் இருப்பதால், வரையறை செய்திட முடியாத தலைப்பாகவே இது அமைந்துள்ளது.
அடுத்தவர் அறியாதபடி மனம் நிறைந்து, அவர் அள்ளிக் கொடுத்த தானதருமங்களின் அளப்பரும் சுமையால், கொடுத்துச் சிவந்தன அம்மகானின் திருக்கரங்கள் என்று மட்டுமே கூறி இதை நிறைவு செய்யலாம்.
வைத்தியப்பணி
பரம்பரை பரம்பரையாக சுவாமிஜியின் பூர்வீக சொத்தாகவும் அவரது மனவிருப்புக்குரிய கலையாகவும் திகழ்ந்தது ஆயுர்வேதவைத்தியமாகும். இதில் வைத்தீஸ்வரனாகத் திகழ்ந்த இத் தவசிரேஷ்டர், தாம் விரும்பி வைத்தியம் செய்வதற்குக் கிடைக்கப் பெற்ற பக்தர்கள் பெரும் பாக்கியசாலிகளே.
நோயுற்றவர் தமது உடற்துயரை எடுத்துக் கூறுகின்ற வேளையில், சுவாமிஜி திருவாய் மலர்ந்தருளும் வார்த்தைகளே, நோயில் பாதியைத் தீர்த்துவிட்டதாகப் பலர் மனம் கசிந்து தம் அனுபவத்தைக் கூறுவதுண்டு. இவ்வாறு கொடிய கர்ம நோய்களைத் தீர்த்துக் கொண்டவர்கள் பலர், குருதேவரின் அற்புதகரமான வைத்தியப் பணிக்கு சாட்சியாக விளங்கு கின்றனர்.
ஈழத்தில் கிடைக்காத அருமையான ஒளஷதங்களை இந்தியாவிலிருந்து தருவித்து தமது வைத்தியப் பணியினைத் தொடர்ந்தார். எந்தவித பிரதிபலனும் கருதாமல் இம்மகான் ஆற்றிய வைத்தியப் பணியை என்றுமே அதன் தொடர்புடையவர்கள் மறந்திட முடியாது.
உலகுக்கு உவந்தளித்த படைப்புக்கள்
ஒவ்வொரு தனி மனிதனுக்கும், உலகியல் வாழ்விற்குத் தேவையான அத்தனை துறைகளிலும், சுவாமிஜியின் எழுத்துப் படைப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஞானமண்டலம்; வஜனாம்ருதம்; அலையாத இன்பம்; மெய்யுணர்வு ஆலயம் போன்றவை அந்த வெளியீடுகளாகும்.
- TOO

விஞ்ஞானரீதியாக- மெய்ஞானரீதியாக - சாஸ்திரரீதியாக - உலகியல் ரீதியாக, மனித வாழ்க்கைப் போராட்டங்களுக்கும், ஆத்மீக உயர்வுக்கும் விடை விழைபவர்க்கெல்லாம், வேண்டிய விளக்கங்கள், சுவாமிஜியின் எழுத்துப் படைப்புக்களில் தெளிவாகவும் - இலகு நடையிலும் தரப்பட்டுள்ளன.
எத்தனை ஆண்டுகள் வரினும், பயன் தந்து, போற்றப்பட வேண்டியவையாக உலகுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை வடித்துத் தந்த அருட்சிற்பி, இப் பூவுலகில் இல்லாத காலத்தும், அவை என்றும் சிரஞ்சீவிப் படைப்புகளாகவே திகழ்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
விலங்குகள் வந்தணைந்தமை
சிவயோகாச்சிரமச்சூழல், உலகின் நாலாபக்கங் களினின்றும் மக்களைக் கவர்ந்திழுக்கும் காந்த மலை போன்று விளங்கி வந்துள்ளது. சுவாமிஜியின் திவ்ய தரிசனம் பெற விளைந்தவர், ஆத்மீக நாட்டத்தால் உந்தப்பட்டவர்; கர்ம தோஷங்களுக்குப் பரிகாரம் காண வேண்டியவர்; உயிரிழப்புக்களால் ஆறுதல் தேடியவர்; அனைவர்க்கும் தன் அருள் மழையால் ஆத்ம சுகம் தந்து, ஆலவிருட்சமாகப் படர்ந்து நின்ற அச்சத்திய புருஷரை, எதிர்பாராத வகையில் பூர்வ புண்ணியப் பலன் வந்தணைய, கண்டு தரிசித்து பேறு பெற்றவரும் பலர் உண்டு.
மனிதர்க்கு மட்டுமன்றி ஐயறிவு கொண்ட விலங்குகட்கும் அறிவு குறைந்த ஊர்வனவற்றுக்கும், இந்த அருள் விருட்சம் நிழல் தந்து, சுகம் தந்த நிகழ்வுகளும், அவற்றின் சம்பவங்களுமே இதில் இடம் பெற உள்ளவை.
(அ) ஆச்சிரமத்தின் பின்பக்கம் சமையலறையில் உள்ள பெட்டகத்தின் மேலும், உணவுப் பொருட்கள் வைக்கும் அலுமாரியின் மேற் தட்டிலும், ஓரறிவுடைய எறும்பினங்களுக்கு சுவாமிஜி உணவளித்துப் போஷிக்கப்படும் காட்சியினைக் கண்டவர் கசிந்திருப்பர்.
பெட்டகத்தின் ஒரு புறத்தில் துப்பரவான கடதாசி மேல் பக்குவமாக வைக்கப்பட்ட பாண்துண்டை சாரி சாரியாக ஊர்ந்துவரும் எறும்புகள் உண்டு, அரித்துச் சிதறிவிட்டி ருக்கும்.
- O -

Page 76
அலுமாரி மேற்தட்டில் ஒரு முடியில் வைக்கப்பட்ட பாணும் பாதாம் பருப்பும் இவ்வாறே அரிபட்டுச் சிந்திக் காணப்படும். எறும்பின் சுவையினை பலவாறு பரீட்சித்துப் பார்த்தறிந்து பின்பே, பாணும் - பாதாம் பருப்பும் எடுத்து வைக்கப்பட்டன என்பதைக் கேட்டால் உள்ளம் நெகிழாது இருக்க முடியுமா?
எறும்புகளின் சுறுசுறுப்பு - உழைப்பு - உற்சாகம் - ஒற்றுமை இவற்றை, அக்காட்சியைப் பார்த்தவர்க்கெல்லாம் வியந்து கூறி மகிழும், உயர்ந்த நெஞ்சம் சுவாமிஜியினுடையது.
(ஆ) சுவாமிஜி பக்தர்களுக்குத் தரிசனமளிக்கும் அறையின் ஒரு பக்கத்தில் நிலைக்கண்ணாடியுடனமைந்த மேசைஒன்றி ருந்தது. ஒரு சிட்டுக் குருவி - சிலகாலம் அந்த மேசையில் வந்து கண்ணாடிக்கெதிரே அமர்ந்து கொள்ளும்.
எதிரே காணும் தனது பிம்பத்தை தன்னை மறந்து உற்று நோக்கியபடியே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் வியப்பூட்டும் இக் காட்சியை, சுவாமிஜியைத் தரிசிக்கச் சென்ற பக்தர்கள் பலர் கண்டு ஆச்சரியப்பட்டதுண்டு. குருவிக்கு உகந்த தானியங்கள் அதனருகே சுவாமிஜியின் திருக்கரங்களால் தூவி விட்டிருக்கக் காணலாம்.
(இ) மதிய நேரமானால் ஆச்சிரம வேலியிலே காகக் கூட்டம் வந்தமர்ந்து விடும். தமது உணவுக்காகக் காத்துக் கரைந்து நிற்கும் அவற்றுக்கு உணவளித்து, உண்பதிலே தனி இன்பம் கண்டிடுவார். நேரம் தவறாது, காக்கையின் செயற்பாட்டைக் கண்டு மகிழ்ந்து குறிப்பால் மற்றவர்க்கும் உணர்த்திடுவார்.
(ஈ) ஆச்சிரமத்தில் காலத்திற்குக் காலம், வந்தனையும் பூனைகளை சுவாமிஜி அன்போடு பராமரித்து வந்தார். அவற்றின் இயல்பான சுபாவத்துக்கு மாறாக, குறித்த வேளைகளில் குறித்த இடத்தில் வந்து தமது உணவை அருந்தும்.
சுவாமிஜி வெளியே சென்று ஆச்சிரமம் திரும்பும் போதெல்லாம், இந்தப் பூனைகளே ஓடி வந்து வரவேற்று, சுவாமிஜியின் அறைக் கதவு திறக்கும் வரை காத்திருந்து செல்லும் சம்பவமும் இங்கு குறிப்பிடக் கூடியதே.
- 102 -

(உ) ஆச்சிரம அன்பர் ஒருவர், பால் நிறம் கொண்ட அழகிய முயல் ஒன்றைக் கொண்டு வந்து சுவாமிஜியிடம் அளித்தார். ஆச்சிரம அடுக்களையில் சுதந்திரமாக ஒடித்திரியும் அதன் கண்கவர் அழகைத், தன்னை நாடி வரும் பக்தர்களை அழைத்துச் சென்று ஆர்வமாகக் காட்டி அறிமுகம் செய்து வைக்கும் சுவாமிஜியின் விசாலமான சித்தத்தின் பெருமையை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
(ஊ) திருக்கோணேஸ்வர ஆலய சூழல், மானும் மந்தியும் மகிழ்ந்து திரியும் அமைவு கொண்டது. ஒரு சமயம், இவ்விடத்துக்குச் சொந்தமான மான் ஒன்று, கர்ப்பமான நிலையில், புண்ணிய தினமாகிய சிவராத்திரி தினத்தன்று, யோகாச்சிரமத்தை வந்தடைந்தது.
சுவாமிஜியின் யாகசாலை போன்ற, புனிதம் பெற்ற பாகசாலையாம் சமையலறையினை, தற்காலிக இருப்பிடமாக்கி, அடம்பன் கொடியை உணவாகக் கொடுத்து, பரிவோடு பராமரித்த பேரன்பு கொண்ட நெஞ்சம் சுவாமிஜியினுடையது.
நாளடைவில் ஆச்சிரமத்தின் முன்புறத்தே, இடது பக்கமாக பெரிதான ஒரு கூடமைத்து, அதனுள் சுதந்திரமாக உலாவி வர, வசதியும் பாதுகாப்பும் அமைத்துக் கொடுத்தார்.
தனது அறையினின்றும் ஸ்நானஞ் செய்வதற்காக வரும், காலை மாலை இரு வேளைகளிலும், தம் திருக்கரங்களால் அதை ஸ்பரிசித்து, கனிவோடு பேசி, உணவளித்துச் செல்லத் தவறவேமாட்டார். அருட்பொழிவு மிகுந்த இந்த இடத்தில் தங்கியிருந்த அம்மான், ஒரு நாள் தானாகவே அங்கிருந்து போய்விட்டது. பேறுபெற்ற இம் மானுக்கு சுவாமிஜியினால் அன்புடன் சூட்டப்பட்ட நாமகரணம் "பஞ்சமி” ஆகும்.
(எ) மற்றொரு சமயம், பெண்மயில் ஒன்றும், முட்டைகள் சிலவும், ஆச்சிரமத்துக்கு வந்து சேர்ந்தன. ஆச்சிரம மண்டபத்தின் வெளியே ஒரு புறத்தில், ஒரு நடுத்தர மயில்கூடு அமைத்து, பராமரிக்க வசதிகளை சுவாமிஜி செய்து கொடுத்தார். நன்கு பழகியபின் அம்மயில் ஆச்சிரம சூழலில் உலாவித் திரியும் காட்சி அபூர்வமான அழகுடையது.
- O -

Page 77
(ஏ) பொதுவாக, ஆச்சிரமத்தில் நாய் வளர்க்கும் வழக்கம் ஒரு போதும் இருந்ததில்லை. ஒரு சமயம், மட்டக்களப்புக்கு சென்றிருந்த வேளையில், வாழைச்சேனையி லுள்ள பக்தர் ஒருவர் மூலம், அவர் வீட்டில் இருந்த உயர் ஜாதி நாய்கள் இரண்டினை, சுவாமிஜி தருவித்தார்.
ஆச்சிரம சூழலில், அந்த மகானுக்குத் தொண்டாற்று வதைப் பேறாகக் கொண்டு வாழ்ந்த, ஆச்சிரம பக்தையை அழைத்தார். ஹரிவேந்தன், உடையார் எனத் தம்மால் பெயரிட்ட அந்த நாய்களில், 'விரும்பிய ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார்.
ஹரிவேந்தன், மூர்க்க சுபாவத்தால், சுவாமிஜியின் பார்வையில் பாதுகாப்பாக கட்டி வளர்க்கப்பட்டது. பொழுது சாய்ந்த பின், ஆச்சிரம முற்றத்தில், மடிக்கக் கூடிய கன்வஸ் கட்டிலில் சுவாமிஜி, ஏகாந்தமாய் படுத்திருப்பார். ஹரிவேந்தன் இந்நேரம் சுவாமிஜியின் காலடியில் சென்று, அடங்கி ஒடுங்கி - சுருண்டு படுத்திருக்கும்.
மனிதர்களை அழைத்து கரிசனம் கொடுப்பது போன்று, நாயையும் காத்திருந்து, தரிசனம் கொடுத்திடுவார் அந்த மகான், உடையாரை அழைத்து வரும்படி ஆச்சிரம பையன்களை அனுப்பி வைப் பார். முன்னங் கால்கள் இரண்டையும் பையன் கைகளில் பிடித்திருக்க, இருகாலால் நடந்து குதூகலமாகத் தன்னை நோக்கி வரும் உடையாரைக் கண்ணுற்றதும், சுவாமிஜியின் திருமுகமும் பூரித்து மலர்ந்து விடும். பாணும், பிஸ்கட்டும் தந்து அதனை அன்போடு தட்டிக் கொடுத்திடுவார். வாலை அசைத்தபடியே உடையார் சுற்றிச் சுற்றி, தனது உணர்வுகளை அம்மகானுக்குத் தெரிவித்துவிடும்.
ஆச்சிரமத்தில் வளரும் ஹரிவேந்தனின் உணவைக்கூட, சாதம் கறியுடன் நெய்சேர்த்துக் குழைத்து, அதனைருசிபார்த்த பின்பே சாப்பிடவெனக்கொடுத்து விடுவார். சமையலறையின் உள்ளே, அல்லது ஆச்சிரம மண்டபத்திற்குள்ளே, ஹரிவேந்தன் காலடி வைத்தது கிடையாது. சமையலறைப் புறத்தையொட்டி அமைந்த பின் வாசலில் வந்து நின்று அவரைக் கண்கொட்டாது பார்த்து நிற்கும். குரு தரிசனத்தின் மகிமை உணர்ந்த உயிர்ப் பிராணியாகவே வேந்தன் விளங்கிற்று.
- 104 -

சிவயோகபுரத்தரசர், நடேசர் தம் ஆலயத்துடன் நெருக்கமான தொடர்புடைய வரலாறு கொண்ட "றொபின்' என்ற நாயின் சரித்திரம் நெஞ்சைத் தொடுவதாகும்.
இந்நாய் குட்டியாக ஆச்சிரமத்தின் எதிர்ப்பக்கத்தில் அமைந்த, சுவாமிஜியின் பக்தையின் வீட்டில் வளர்ந்தது. றொபினின் அழகைக் கண்டு சுவாமிஜியிடம் ஒட்டி உறவாடி வாழ்ந்த பக்தை ஒருவர் அதனைக் கேட்டுப் பெற்றுத் தங்கள் வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டார். அவர்கள் இல்லம் ஆச்சிரம எல்லைக்குள் அமைந்திருந்தது. ஒரு சமயம், ஸ்நானம் செய்வதற்கு, குளியலறைக்கு வந்த சுவாமிஜியின் கண்ணில் றொபின் பட்டுவிட்டது.
றொபினைக் கேட்டுப் பெற்றுக்கொண்ட சுவாமிஜி, தமது காரிலேயே அதனை நடேசராலயத்திற்குக் கொண்டு சேர்த்திட்டார். இதனால் றொபினின் வாசஸ்தலமாக நடேசராலயம் விதிகூட்ட அமைந்துவிட்டது. "உனது வினைகளை இங்கேயே தீர்த்துக் கொள்' என்று சொல்லாமல் சொல்லி விட்டாரோ என்னவோ, சுத்த சைவ உணவையே உண்டு கொண்டு, ஆலயச் சூழலை விட்டு, வேறு எங்குமே செல்லாமல் றொபின் வளர்ந்து வந்தது.
சுவாமிஜியின் கார் நடேசராலயத்தில் எப்போது போய் நின்றாலும், வெகு தூரத்திலேயே, அதன் வருகையை உணர்ந்து கொண்டது போல், பாய்ந்து வந்து, வாசலருகில் நின்று, வந்திறங்கும் சுவாமிஜியை வரவேற்பது போல் பார்த்தபடியே நிற்கும் அற்புதக் காட்சியை காண்பவர் மெய் சிலிர்க்கும். சுவாமிஜி அறையினுள் சென்று தம் கதிரையில் அமர்ந்ததும், அவர் பின்னே சென்று, எதிரில் அவரை நிமிர்ந்து பார்த்தபடி உட்கார்ந்து விடும். சுவாமிஜி, "றொபின்' என்று கனிவுடன் அழைத்துப் பேசிய பின்னர் அவர் காலடியிலேயே சுருண்டு படுத்துவிடும்.
றொபினின் அற்புதகரமான செயற்பாட்டை, நடேசராலய பூஜை நடைபெறும் வேளையில், அதில் கலந்து கொண்ட பக்தர்கள், நிதர்சனமாகக் கண்டு மெய்மறந்த நாட்க்ள் பலவாகும்.
- TOS

Page 78
எம்பெருமான் நடேசருக்கு, விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறுகின்ற காலங்களில் மூலமூர்த்திக்குப் பஞ்சாராத்தி யினை அந்தணர் காட்டும் அந்த நேரத்தில் - கலீர் என்றொலிக்கும் சிறுமணிகளின் ஆரவாரம்; சங்கொலியின் கெம்பீர நாதம்; மெய்யரும்பிச் சிரமேற் கைகுவித்த பக்தர்கள் எழுப்பும் 'அரோகரா’ என்ற புனித கோஷம்; அத்தனையும் பக்திப் பரவசத்தை ஊட்டி நிற்கும்.
இவற்றை எல்லாம் மிஞ்சி, ஊ. . . . ஊ. . . . .. . என்று றொபின் எழும்பும் அந்த சங்கநாதம் . . அப்பப்பா, அதைக் கேட்டு மனம் தடுமாறாதவரே இல்லை எனலாம்.
உயர்ந்த கர்ப்பக்கிரகத்தை ஒட்டி, அதே உயரத்தில் அபிஷேக அலங்காரம் நடைபெறும் அர்த்தமண்டபம் அமைந்துள்ளது. அம்மண்டபத்தினின்றும் படிக்கட்டுகள் பல வரிசையாக அமைந்திருக்கும். அந்தப் படிகளின் கீழ்தான், அகன்ற மற்ற மண்டபம் மக்கள் நின்று வழிபடுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்தது.
கற்பூர ஆராத்தி காட்டும் அந்த வேளையில், சுவாமிஜியின் அறையிலும், ஆலய சுற்றாடலிலும் சுற்றித் திரியும் றொபின், எங்கிருந்தாலும் ஓடோடி வரும். ஆட்களை விலக்கிப் புகுந்து, முன்னோக்கி வந்து, வரிசையாய் அமைந்த படிகளின் கீழ்ப்படியின் நடுவில் நின்று ஓசை எழுப்பும் காட்சி, காண்பவரைத் திகைக்க வைத்து மெய்சிலிர்க்க வைக்கும். இந்த அற்புதக் காட்சி பற்றிப் பலரும் சுவாமிஜியிடம் மனம் நெகிழ்ந்து எடுத்துக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஜீவனின் இணக்கம் தமக்கு ஏற்பட்டதை நினைவு கூர்ந்து பேசிய வேளை, இத்தகைய உயிரினங்களின் தொடர்பை ஓர்
கதை மூலம் விளக்கினார்.
சீரடி சர்யி பாபா ஒர் மகாஞானி. இவர் ஒரு சமயம் தன் பக்தர்களுடன் பாதை வழியே சென்று கொண்டிருந்தார். எதிரில் ஓர் பெரிய ஆட்டு மந்தை; அதனை மேய்ப்பவன் சிறு கோலோடு அவற்றுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.
- 106 -

ஆட்டு மந்தை தம்மை நெருங்கிய வேளை சீரடிசாயி பாபாவின் நடை தடைப்பட்டது; அந்த மந்தையை, அவரது விழிகள் மேலோட்டமாக ஆராய்ந்தன. மந்தை மேய்ப்பவனை மெல்ல அருகிலே அழைத்தார். குறிப்பாக இரண்டு ஆடுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றினைத் தமக்கு விலைக்குத் தரமுடியுமா எனக் கேட்டார்.
தனது ஆடுகளைப் பிரிய மனமில்லாத போதிலும், ஞானியின் தோற்றத்தைக் கண்டு, மனம் சலனப்பட்ட மந்தை மேய்ப்பவன், ஒரு தந்திரம் செய்தான். அவ்விரு ஆடுகளுக்கும் அவன் கூறிய விலை, கேட்பவரைத் திகைக்க வைக்கும்படி மிகக் கூடுதலாக இருந்தது.
புன்னகை மாறாத வதனத்துடன் பாபா, அவன் கேட்ட தொகைக்கு அதிகமாகவே பொருள் கொடுத்து அவற்றைப் பெற்றுக் கொண்டார். நல்ல வகையில் உணவு தந்து, தகுந்த பாதுகாப்புடன் அவற்றைச் சிரத்தையுடன் வளர்க்கும்படி சீடர்களுக்குக் கட்டளை பிறந்தது.
இச் சம்பவம் இவரது பக்தர்களைப் பொறுத்தமட்டில் புரியாத புதிராகவே இருந்தது. ஒரு நாள் பாபா அவர்கள் தன் பக்தர்களுடன் சாவகாசமாகப் பேசிக் கொண்டிருந்த வேளையிலே ஒரு பக்தர், “பாபா நீங்கள் அன்று அந்த ஆட்டுமந்தையைக் கண்ட நேரத்தில், நின்று நிதானித்து, குறிப்பிட்ட இரண்டு ஆடுகளை அத்தனை விலை கொடுத்து வாங்கனீர்களே, அதை இப்போதும் கண்ணும் கருத்துமாய் போஷிக்கின்றீர்களே. இதன் காரணத்தை நாங்கள் அறிந்து கொள்ளலாமா?" என்று கேட்டார்.
பாபா, வினாவிய பக்தரைப் பரிவுடன் நோக்கினார். ஏதோ பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தது போல், அவர் முகம் ஆழமான சிந்தனையில் தோய்ந்தது. ஓரிரு நிமிடங்கள் நிலவிய அமைதியை சீரடி பாபாவின் மென்மையான குரல் மெல்லக் கலைத்தது.
"ஆம் நல்ல கேள்வி ஒன்று கேட்டீர்கள் இந்த உயிர்கள் என்னிடத்து ஆழமான பக்திகொண்டு வாழ்ந்த பக்தர்கள். சகோதரர்களான இந்த இளைஞர்கள் இருவருமே ஒரு விபத்தில் மாண்டுவிட்டனர். இப்போது தான், தமக்குரிய இடத்தை மீண்டும் வந்து அடைந்து விட்டார்கள்”.
- 107 -

Page 79
இதைப் போன்ற ஒரு காரணம் அமைந்திருந்ததாலேயே றொபினும் இவ்விடத்தினை வந்தடைந்தது என இதன் தொடர்பை சுவாமிஜி விளக்கினார். இவ்வரலாறு உணர்த்தும் ஜன் மத் தொடர்பினை இத்தகைய ஞானிகளாலன்றி மற்றெவராலும் அறிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாது அல்லவா?
(ஒ) சிவயோக சமாஜத்திலும் நடேசராலயத்திலும் விலங்குகளின் தொடர்பினை சுவாமிஜி பெற்றிருந்தாற் போலவே, வயலிலும், மனம் நெகிழ்ந்து பல தடவை கூறிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அது வேளாண்மைக் காலம்; சுவாமிஜி வயலிலேயே தொடர்ந்து ஓரிரு நாட்கள் தங்கி விடுவது வழக்கம். உச்சி வேளை, கொழுத்தும் வெயிலில் வயல் வரம்பில் ஏறி இறங்கி, கருமங்களைக் கவனித்து விட்டுத் தங்கி இருக்கும் மடத்தை வந்தடைந்தார்.
வெயிலில் சென்று வந்த வெப்பம் நீங்க, மடத்தினருகே தண்ணிரை வரவழைத்து, தம் திருமேனியைக் கழுவ ஆரம்பித்தார். பலவருட காலம் சுவாமிஜி தன் உடற்துாய்மை செய்வதற்கு, புற்று மண், காவி, பயறு இவைகளையே பயன்படுத்தி வந்தார். வயலுக்குச் செல்ல ஆரம்பித்த பின்பே அழுக்கு நீங்க, சவர்க்காரம் பாவிக்க ஆரம்பித்தார்.
சுவாமிஜியின் திருஉடலைக் கழுவிய நீர் அருகே இருந்த சிறு குழி ஒன்றினுள் ஒடிச் சென்று தேங்கியது. அவ்வேளை, நாகம் ஒன்று சரசரவென்று தயக்கம் இன்றி சுவாமிஜி குளித்துக் கொண்டிருந்த அவ்விடத்தை நோக்கி வந்தது. அச்சமற்றதாக அந்தக் குழிக்குள் தலையை அமிழ்த்தி நீரை அருந்தலானது.
இமை கொட்டாது அக்காட்சியில் ஆழ்ந்து விட்ட சுவாமிஜி, மெல்ல மேலும் சிறிது நீரை அக்குழிக்குள் வார்த்தார். நாகம் அஞ்சவில்லை. தொடர்ந்து நீரை அருந்திக் கொண்டே இருந்தது. தாகம் தீர்ந்தாற்போல், மெல்ல நிமிர்ந்து எழுந்து தன் படத்தை எடுத்துக் காட்டியது. அதன் விழிகளில் பொங்கிய நன்றிப் பிரவாகம்தான், சுவாமிஜியின் நாடி நரம்புகளை யெல்லாம் அசைத்து விட்டது.
- O8 -

இச்சம்பவத்தை பல தடவை ஆழ்ந்த உணர்வுடன் எடுத்துக் கூறியதோடு, இச்சம்பவத்தின் எதிரொலியாகவே, உயிரினங்கள் காட்டும் இந்த நன்றி உணர்வின் பிரதிபலிப்பை மனித சமுதாயமே! உன்னிடத்தில் காண முடியுமா என வினா எழுப்பி, ஓர் அமிர்த வசனத்தையே உடனும் குறித்துக் கொண்டார்.
கொம்மாதுறையில் அருள்வித்து
மட்டக்களப்பிலிருந்து சுமார் பத்துமைல் தொலைவில் அமைந்த கொம்மாதுறையில் ஓர் இல்லம், சிவயோக சமாஜத்தின் கிளையாகப் பதியப்பட்டு இயங்கி வந்த பெருமையைக் கொண்டது. இவ்விடத்தில் தமது இல்லத்தையே ஓர் ஆச்சிரமமாக மாற்றி, சுவாமிஜி வகுத்த வழியிலே இம்மியும் பிசகாது. அவரது பூரண அருளாசியுடன் கருமமாற்றி வந்தவர்கள், சுவாமிஜியிடம் குருபக்தியும் அசையாத நம்பிக்கையும் கொண்ட ஒரு குடும்பம் ஆகும்.
பிரதி சனிக்கிழமைகளில் தமது இல்லத்தில் இந்த நாம பஜனையை பக்தி சிரத்தையோடு, நியமந்தப்பாது நடத்தினர் என்பது மாத்திரமல்ல, இந்த இடத்தைச் சூழ அமைந்த சுமார் பன்னிரண்டு கிராமங்களில் பஜனையைப் பரப்பிய பெருமை அந்த இல்லத்தலைவியையே சார்ந்தது. சுவாச நோய்கொண்ட தன் உடற் கஷ்டத்தையும் பொருட்படுத்தாது, வாகன வசதியற்ற இவ்விடங்களுக்கு மாட்டு வண்டியிலும் நடையிலும் சென்று, சுவாமிஜியின் உள்ளக்கருவில் மலர்ந்த பெரு விருப்பத்தை நிறைவேற்றும் செயற்பாட்டினை ஒரு யக்ஞமாகவே கருதி வளர்த்து வந்தனர். இச் செயற்பாட்டினை சுவாமிஜி உள்ளக் கசிவோடு கனிந்து பேசிய பேரருளைப் பெற்றவர் இவர் என்பதைக் கூறாமல் விட்டுவிட முடியவில்லை.
இவர்களது தன்னலமற்ற திடமான குருபக்தியானது, கொம்மாதுறையைச் சூழ்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு இத் தெய்வபுருஷரின் பேரருட் பொழிவினை அறிந்திடவும்,
O9 -

Page 80
அனுபவிக்கவும் வாய்ப்பை நல்கியது. இங்கு "கெங்காதரானந்தா பாலர் பாடசாலை, சமயகலாச்சார வகுப்பு, மாதர் சங்கம், யோகாசன வகுப்பு என்பவை சுவாமிஜியின் அருளாசியுடன்
சிறப்பாக நடைபெற்றுவந்த முக்கிய கருமங்களாகும்.
1990 ஆம் ஆண்டு மட்டக்களப்புப் பிரதேசமே வன்செயல் அலைகளால் தாக்குண்டு எல்லா மக்களும் நிலைகுலைந்து போன சந்தர்ப்பத்தில், கொம்மாதுறையிலும் அதே பயங்கர நிலைதான் தலைவிரித்தாடியது. அவ்விடத்தைச் சூழ்ந்த இருபது மைல் சுற்றாடலில் குடிமக்கள் இடம் பெயர்ந்து சுடுகாடு போல் காட்சிதர, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அப்பகுதி இருந்த நேரமது; மனித சஞ்சாரமற்ற அந்த இடத்தில் தன்னந் தனியாக ஒரு குடும்பம் வாழ்ந்ததென்றால் அது சுவாமிஜியிடம் அசையாத நம்பிக்கையும் பக்தியும் கொண்ட அந்தக் குடும்பத்தினரேயாகும். இதனைப் பலர் வியந்து கூறியதாக, அருட்குருவே தம் பக்தர்களிடம் உள்ளம் மலர்ந்து கூறிய நிகழ்வு இது.
சுவாமிஜியின் திவ்விய தரிசனம் இந்த ஆச்சிரமம் போன்ற இல்லத்திலேதான், ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவ்வப்போது கிடைக்கப்பெற்று வந்தது. கொம்மா துறைக்கு விஜயம் செய்யும் நாட்களில் சுவாமிஜியின் தரிப்பிடமாக இவ்விடம் அமைந்தமை, இந்த இடத்தில் தூய அருட் பொழிவை பெருக்கி நிற்கிறது என்பது நிதர்சன உண்மையாகும்.
- O -

விபூதி மகிமை
சுவாமிஜியிடமுள்ள மகிமை மிக்க விபூதியைப் பெறும் பெறுதற்கரிய பேறு, ஆச்சிரம பக்தர்களுக்கு, வருடத்தில் இருமுறை கிடைப்பதுண்டு. சித்திரை வருடப் பிறப்பன்று இவ் அபூர்வ விபூதியும், கைவிசேஷமும், மலரும் வழங்கி, அன்புடன் அனுப்பி வைக்கும் அருட்குருவின் ஆசி பெற்றவர்க்கு, அவ்வருடம் அமைதியும் திருப்தியும் மிக்கதாக அமைந்திடும் என்ற பெருநம்பிக்கை சுடர்விட்டு மகிழ்வூட்டி நிற்கும்.
பூரீ வைகுண்ட ஏகாதசி தினம், மார் கழித் திருவெம்பாவை தினத்துள் அமைந்து வருவது. இந்நாள் ஆச்சிரமத்தைப் பொறுத்தவரை மிகவும் விசேஷமான தினமாகும். மாலை ஆறுமணி முதல் அதிகாலை வரை, பூஜை, நாராயண பஜனை, சொற்பொழிவு, இசைநிகழ்ச்சி எனப் பல இடம் பெறும்.
பிரம்ம முகூர்த்த வேளையிலே இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல, அருள்மிகு சுவாமிஜி அவ்வேளை தரிசனம் தந்து, அருளுரை வழங்குவார். பூஜை வழிபாட்டின் முடிவில், சுவாமிஜி தமது திருக்கரத்தால், விபூதி வழங்கி ஆசி தந்து தம் பக்தரை அனுப்பி வைப்பார்.
தம்மை நாடிவந்து அருள் வேண்டும் பக்தருக்கு மட்டுமன்றி, கள்ளமற்ற உள்ளத்தோடு தன்னை நெஞ்சில் இருத்தி குருவாக நினைந்த பக்தர்கள் வராதவிடத்து, அவர்களை வரவழைத்து அந்த திவ்விய பிரசாதத்தை வழங்கி மகிழ்வார்; சில சமயம் அவர் இடம் தேடி அனுப்பியும் வைப்பார். குருவைத் தேடி பக்தர் வருவது இயல்பான சம்பவம்; வலிந்து அழைத்து தரிசனம் தருவது, அவர்கள் பக்திக்குக் கட்டுண்ட குருவின் கருணையைத்தான் நிதர்சனப்படுத்துகிறது.
சுவாமிஜி மேற்கொண்ட கடும் தபசுகளின்போது, அவரது திருநா ஓயாது ஸ்மரித்த மந்திர ஒலிகளினால், மகிமை ஏறப்பெற்றதே சுவாமிஜி பிரசாதமாக அளிக்கும் விபூதியாகும். மகத்துவம் வாய்ந்த இந்நீற்றினை அழகிய சிறிய வெள்ளிப் பேழை ஒன்றினுள் பத்திரமாக வைத்திருப்பார். சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட விபூதியுடன் இதனைக் கலந்தே, இவ்விசேஷ தினங்களில் பக்தர்களுக்கு வழங்குவது அவர் வழக்கம்.
- -

Page 81
குருவின் திருக்கரத்தால் திருநீறு பெறுவதே மகாவிசேஷம் என்பர்; இங்கு மந்திர வலிவுடன் கூடிய புனிதமான விபூதியை தன் அடியார் பெற்றிட சுவாமிஜி தந்த வாய்ப்பு, மகாசிரேஷ்டமானது அல்லவா?
கதிர்காம ஷேத்திராடனம்
"புனித யாத்திரைகள், ஆலய தரிசனம் போன்றவைகளை இறைவனோடு இணையும் முறையில், திரிகரண சுத்தியுடன், சிறுமைக் குணங்கள் நீங்கச் செய். அழுக்காறுகள் நீங்கும் வண்ணம் அது புனிதமாய் இருக்கட்டும்."
சுவாமிஜியின் வஜனாம்ருதத்தில் ஒர்துளி அமிர்தம் இதுவாகும். திருகோணமலையில் வாழ்ந்த சற்குருவின், பாதகமலங்களைச் சரணடைந்த பக்தர்கள் பெற்ற பெரும் பேறுகளில் ஒன்று, அவருடன் ஷேத்திராடனம் செய்யும் வாய்ப்புப் பெற்றமையே. இலங்கையின் புண்ணிய தலங்களில் முதன்மை தந்து, சுவாமிஜி யாத்திரை மேற்கொண்டது கதிர்காமம் ஷேத்திரமாகும். ஞான மண்டலம் என்ற சுவாமிஜியினுடைய நூலிலும், கதிர்காம ஷேத்திரம் பற்றிய கட்டுரை எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கு, தனித்த குடும்பங்களாக சுவாமிஜி அழைத்துச் *சென்றவர்களும் உண்டு. நான்கைந்து குடும்பங்களைச் சேர்த்துச் சென்றதும் உண்டு. ஐம்பதுக்கு மேலான சமாஜ பக்தர்களை வாகனம் ஒழுங்கு செய்து, இவ்வாலயத்துக்கு தல யாத்திரை அழைத்தும் செல்லப்பட்டுமுள்ளனர்.
இது தவிர, பலதடவைகள் பாதயாத்திரை மேற்கொண்டு, அடியார் பலருடன் சுவாமிஜியும் சென்ற சந்தர்ப்பங்களும் உண்டு. அருட் குருவின் வழி நடத்தலில் இந்த தல யாத்திரைகளில் அவர்கள் பெற்ற அற்புதமான அனுபவங்கள் பலவாகும்.
கதிர்காம ஷேத்திரத்துக்குச் சென்ற போதெல்லாம் சுவாமிஜி அச்சிறு ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறத்தில் அல்லது முன்னால் பலமணி நேரத்தைச் செலவிடுவார்.
- 2 -

நிமிர்ந்த அவர் திருவடிவம் விழி மூடி கைகள் முன்னே பின்னிய நிலையில், அசையாது நிற்கும் வேளையில், அவரது ஆத்ம சைதன்யம் சர்வசராசரங்களின் உயிர்த் துடிப்போடு பரவி நிற்கும் அந்தப் பெருநிலை காண்போரையெல்லாம் மெய்சிலிர்த்து, மனம் நெகிழ்ந்திடச் செய்ததுண்டு.
பல தடவைகள் கதிர்காமஷேத்திரம் சென்ற, இத் தவஞானியின் நிறைந்த தபசக்திகளும், அவ்விடத்தில் வியாபித்து நிற்கிறது என்பது சத்திய உண்மையாகும்.
தேச சஞ்சாரம்
ஆறுமாத காலம், வயல் வேலைகளில் தன்னைப்
பூரணமாகக் கரைத்துக் கொள்ளும் சுவாமிஜி மிகுதி ஆறுமாத
காலத்தை ஆச்சிரமத்திலும் வெளியிடங்களிலும் கழிப்பதுண்டு.
கொழும்பு, மட்டக்களப்பு, கொம்மாதுறை, வாகனேரி, அக்கரைப்பற்று, பொத்துவில், உகந்தை வாழைச்சேனை, திருக்கேதீஸ்வரம், வவுனியா, யாழ்ப்பாணம், வாகரை வெருகல், கண்டி பண்டாரவளை, என இலங்கையில் சுவாமிஜி செல்லாத இடங்கள் இல்லை என்றே கூறலாம். எனினும் கொழும்புக்கும் மட்டக்களப்புக்குமே பல தடவைகள் தம் பயணத்தை மேற்கொள்வது வழக்கம். தனது தேச சஞ்சாரத்தின்போது பல பக்தர்கள் அந்தந்த சந்தர்ப்பங்களில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையிலுள்ள இடங்களுக்கு மட்டுமன்றி இந்திய நாட்டுக்கும் சுவாமிஜி பல தடவைகள் சென்று வந்துள்ளார். ஒரு சமயம் அங்குள்ள ஒரு பிராமண குடும்பத்தவரின் களங்கமற்ற பக்தி விசுவாசத்தினால் அவர்களது வேண்டு கோளை ஏற்று அவர்கள் இல்லம் சென்றார். தொடர்ந்து ஐந்து நாட்கள் சென்று அவர்களது ஏற்பாட்டினை நிராகரிக்க முடியாமல் சத்சங்கம் நடாத்தினார்.
மனிதன் மனிதனாக வாழ்வது எப்படி? ஈஸ்வர தரிசனத்துக்குரிய பக்குவநிலையை அவன் எப்போது அடைகிறான் என்ற பொருளில், பகவத் கீதையை மேற்கோள் காட்டி, சுவாமிஜியின் அருளுரை அவர்களுக்குக் கிடைக்கும் பேறு கிட்டியது.
- S -

Page 82
சுவாமிஜி வயலுக்குப் புறப்படும் நேரத்திலும், வெளியிடங்களுக்குப் புறப்படும் நேரத்திலும், அவருடன் காவி நிறக் கூடை ஒன்றும் தவறாமல் செல்லும். அழகாக ஒழுங்காக மடிக்கப்பட்ட காவி உடை, சீப்பு இவற்றுடன் தவறாமல் இடம் பெறுவது, கறுப்பு வர்ண பிளக் மாஜிக் (BlackMagic) என எழுதப்பட்ட நடுத்தர அளவிலான தகரப் பெட்டியாகும்.
"இந்தப் பெட்டிக்குள் இருப்பதெல்லாம் பரம ரகசியமானது. இந்த உலகமே இதற்குள் அடக்கம்" என்று ஹாஸ்யமாகக் கூறிச் சிரித்திடுவார் சுவாமிஜி, அதற்குள் அத்தியாவசியப் பொருட்களான ஒளஷதப் பற்பொடி, பல்துலக்குவதற்கு வேப்பங்குச்சி, நாத்துாய்மைக்கு தென்னை ஈர்க்கு, முதலுதவிக்கான ஆயுர்வேத மருந்துக் குளிகைகள், நெருப்புப் பெட்டி, கத்தரிக்கோல், லைற்றர் (Lighter) பணம், இவை பக்குவமாக அடுக்கப்பட்டு சில ஏலக்காய்களும்
இடம் பெற்றிருக்கும்.
ஊதுபத்தி கொழுத்துவதற்கே லைற்றர். தான் தங்கி இருக்கும் இடத்தில் ஆழ்ந்த தியானத்தில் சுவாமிஜி நீண்ட பொழுதாக அமர்ந்து விடும் சந்தர்ப்பங்களுமுண்டு. மீண்டும் இவ்வுலக நினைவுக்கு வரும் வேளை, உலர்ந்த நெஞ்சுக்கும், தொண்டைக்கும் தெம்பாக ஒரு ஏலக்காய் வேண்டப்படும் பொருளாகும். இதுவே அந்தப் பெட்டியின் ரகசியம்.
சுவாமிஜி ஆச்சிரமத்திலிருந்து எங்கு புறப்படும் போதும், அவரைத் தாங்கிச் செல்வது அழகிய சிகப்பு வர்ண மோட்டார் வாகனமாகும். அதில் கம்பீரமாக அமர்ந்து செல்லும் காட்சி அற்புதகரமானது. சுவாமிஜியின் ஆத்ம சக்தியால் முற்றாக ஈர்த்தெடுக்கப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், சுவாமிஜியின் பிரயாண தேவையை மனதிற் கொண்டான். அல்லும் பகலும் இதே சிந்தனையுடன் சிறுகச் சிறுக சேர்த்தெடுத்த அந்த உழைப்பின் மகிமையால் பெறப்பட்டதே இந்த வாகனமென்று, மனம் நெகிழ்ந்து குருதேவர் இந்த மோட்டார் வாகனத்தைப்பற்றிக் குறிப்பிட்டு ள்ளார்.
- 1 14 -

ரோக ரகசியம்
ஆச்சிரமக் கருமங்கள், வயல் வேலைகள், ஆலயத் திருப்பணிகள் அனைத்தையும் தனித்துவமான முறையிலே நிர்வகித்து வந்த அதேவேளை, தன்னை நாடிவந்த அடியவர் குறைபோக்கி, துயர் துடைத்து, மனசுகம் அளிப்பதிலும் சுவாமிஜி பின்னிற்கவில்லை.
இந்தக் கருமங்களை ஆற்றிக் கொண்டிருந்த சமயத்தில், பலதடவை, காலத்திற்குக் காலம், அவர் திருமேனி நோய்வாய்ப்பட்டதுண்டு. திருகோணமலையில், ஆச்சிரமத்தில் இவ்வாறு உடல் பாதிப்புற்ற வேளைகளில் சிகிச்சை அளித்தவர் பலராவர். குறிப்பிட்ட வேளைகளில், குறிப்பிட்ட ஒருவரை வலிந்து அழைத்து, சிகிச்சை மேற்கொள்ள வைப்பது சுவாமிஜியின் வழக்கம்.
ஒரு சமயம், வயிற்றில் ஏற்பட்ட கடுமையான நோயினால் தாக்கப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் செல்ல நேரிட்டது. பொறியியலாளர் அன்பர் ஒருவரின் இல்லத்தில் தங்கி இருந்தபடி, விசேஷ வைத்திய நிபுணரை வரவழைத்துச் சிகிச்சை மேற்கொண்டார் சுவாமிஜி, இந்த வைத்திய நிபுணர், யாழ்ப்பாண நகரில், அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த சிங்கள இளைஞராவர். அந்த இளம் வயதிலேயே தன் அன்பு மனைவியை புற்றுநோய்க்குப் பறிகொடுத்தவர். இதனால் சேவையே இலட்சியமாகக் கொண்டு பணி புரிந்து வந்த இவர், ஆத்மீக பாதையிலே தமது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார்.
இவரது உளப்போக்கிற்கு அமைந்தாற் போல், சுவாமிஜிக்குச் சிகிச்சையளிக்கும் அரியபேறு இவருக்குக் கிட்டியது. பல்வேறு சோதனைகளுக்கும் சுவாமிஜியை உட்படுத்தியபோது, சுவாமிஜியின் உடல் நிலையில், திடீர் திடீர் எனக்காணப்பட்ட மாற்றங்கள் அவரைத் தடுமாற வைத்தது. எந்த நோய்க்குத் தான் சிகிச்சையை ஆரம்பிப்பாரோ, அந்த நோய் மறுநாள் பரிசோதனையில் இருந்த சுவடேதெரியாத ஒரு உடல் நிலையுடன் சுவாமிஜி காணப்படுவார்.
- 15 -

Page 83
சுவாமிஜியின் வயிற்றுறுப்புகள் அனைத்தும், மாற்றமின்றி, வழமையைவிட மிக நேர்த்தியாக இருப்பதைக் கண்டு, சுவாமிஜியின் உடற்கோளாறு இன்னதென்று தம்மால் அறிய முடியாத நிலையில், இது (Saint Desease) "செயின்ற் டிசீஸ்" என முடிவாகக் கூறிவிட்டார், சுவாமிஜியின் மேல் அவர் கொண்டிருந்த பெருமதிப்பு:இவற்றால் பன்மடங்கு அதிகரித்தது.
இந்த "செயின்ட் டிசீஸ்" (Saint Desease) என்பதுபற்றி சுவாமிஜி வருமாறு கூறியுள்ளார். இராமக்கிருஷ்ணதாஸர் என்றொரு மகான் "செயின்ற் டிசீஸ்" என்ற பெயரில் ஒரு நூலையே எழுதி இருக்கிறார். அவர் ஒவ்வொரு துறவிகளிடத்தும், கூடவே இருந்து, அவர்களது நோய்கள், அதற்கான காரணங்கள் இவற்றை நேரடியாகக் கண்டு, அதிலடங்கியுள்ள அற்புதங்கள் அனைத்தையும் ஆராய்ந்து எழுதியதே இந்த நூலாகும்.
மற்றொரு சமயம், சுவாமிஜியின், செம்மலர் ஒத்த பாத விரல்கள் பத்திலும், கொப்புளங்கள் தோன்றி, வெடித்துப் புண்கள் ஏற்படலாயின. இந்த வேதனையினால் சுரமும் கண்டது. சுவாமிஜியின் திருவுடல் படுக்கையில் துவண்டு கிடந்தது. எட்டு நாட்கள் தொடர்ந்த இந்த உடல் உபாதைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் பலன் காணாமல், பக்தர்கள் ஏற்பாட்டினை ஏற்று, யாழ்ப்பாணத்தைச் சுவாமிஜி சென்றடைந்தார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி, "மத்திய தனியார் மருத்துவமனையில்’ (Central Nusing Home) தங்கிச் சிகிச்சைகளை மேற்கொண்டார்.
சுவாமிஜியின் இந்த வைத்திய சிகிச்சை நேரத்தில், மிகுந்த சிரத்தையோடு, வைத்தியமனையில் சிகிச்சை அளித்ததில் இருந்து, ஆச்சிரமம் திரும்பிய பின்னரும் அவரைக் கவனிக்கும் பணியினை மேற்கொண்ட டாக்டர் சுவாமிஜியின் பக்தர்களில் ஒருவரே ஆவார்.
தமது உடல் நலிவுற்ற வேறு பல சந்தர்ப்பங்களில், கொழும்பிலுள்ள, தனியார் மருத்துவமனையாகிய, "இரட்ணம் வைத்தியசாலையில், பல தடவைகள் தங்கிச் சிகிச்சை பெற்றுள்ளார். அந்த வேளைகளிலெல்லாம், கொழும்பைச் சேர்ந்த சுவாமிஜியின் பக்தர்கள், அவருக்கு வேண்டிய பணிவிடைகளை இரவு பகல் பாராது, குரு பணியாக நினைந்து மனமுவந்து செய்வது சாதாரண ஓர் நிகழ்ச்சியாகும்.
- 16 1 ܗ

மட்டக்களப்பிலும் தமது சுகவீனத்துக்குச் சிகிச்சை, பெற, தனியார் மருத்துவமனையான "செல்லையா நேசிங்ஹோம் இல் ஒரு வாரம் தங்கியிருந்தார். இப்படியாக, சுவாமிஜி வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் பலவாகும். அவதார புருஷராகப் போற்றப்படும் இந்த மகானுக்கு இந்த உடல் உபாதைகள் ஏன் ஏற்பட வேண்டும்?
இந்த வினாவுக்கான விடையை சுவாமிஜி அவர்களின் கூற்றிலேயே நாம் பார்க்கலாம்.
“இந்த உடம்பு கர்மவினையை அனுபவிக்க வென்று எடுக்கப்பட்டதல்ல. கர்மவினைகள் அணுகப்போவதுமில்லை. அப்படியிருந்தும் இந்த உடலுக்கு நோய் ஏற்படுகிறது. இது ஏன்? நோய் எனக்கல்ல; பஞ்ச பூதங்களால் ஆன சரீரத்துக்கே வருகிறது; அதற்கும் உபாதைகள் வருவது சகஜம்தான்; சரீரத்தைச் சரிவரக் கவனிக்காத நேரங்களிலும் நோய் ஏற்படலாம். இதுவும் ஒரு காரணம்; மற்றது பரோபகாரார்த்த விதமாக நடந்து கொண்டாலும் உபாதை ஏற்படலாம்; இது ஒரு விதத்தில் பெரிய தியாகந்தானே? பூரீ இராமகிருஷ்ணருக்கு இறுதிக் காலத்தில் கடுமையான நோய் ஏற்பட்டது. அது அவரின் சரீரத்துக்கே தவிர, அவரை - அவரது ஆத்மாவை - எதுவும் செய்து விடவில்லை."
பரோபகாரார்த்த விதமாக நடந்து கொண்டாலும் உபாதை ஏற்படலாம் என்ற சுவாமிஜியின் கூற்று, -ՉեքւDո 607 உட்பொருளைக் கொண்டது. நோய்களால் அல்லலுற்றுத் தன்னை நாடி வரும் தன் பக்தர் களின் உடல் உபாதைகளினின்று, அவர்களைக் காப்பாற்ற வேண்டும், என்று அந்த மகான் நினைத்துச் செயற்பட்ட வேளைகளில் அவர் உடல் படுக்கையில் வீழ்ந்து துயரை அனுபவித்தது.
சிலவேளை, இரண்டொரு நாட்களாக அது இருந்து ள்ளது. பல தடவை, அது வேதனைதரும் வாரங்களாகக் கூட நீடித்ததுண்டு. ஆனால் வைத்தியசாலையினின்று அம்மகான் ஆச்சிரமம் திரும்பி வந்தபின், அவரைத் தரிசிப்பவர் அந்த நோயின் சுவடே தெரியாமல், தெய்வீகப் பொலிவு திகழ, தம் மோடு சாதாரணமாகச் சம்பா ஷித்து மகிழும் குருதேவரைத்தான் கண்டார்கள்.
- 17

Page 84
இதனால், சுவாமிஜி வைத்திய சிகிச்சை மேற் கொள்வதும், மீண்டும் ஆச்சிரமம் திரும்புவதும், சர்வ சாதாரண நிகழ்ச்சிகளாகவே, ஆச்சிரம பக்தர்களுக்கு இருந்து வந்துள்ளது. நாட்டின் அமைதி சீர்குலைந்த காலகட்டங்களில், தமது பக்தர்கள் பாதிப்படையாமல் காக்கப்பட்ட சமயங்களிலும், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டமையை, அவருடன் நெருங்கி நின்ற தொண்டர்கள் தம் உள்ளுணர்வால் உணர்ந்தே வந்துள்ளனர்.
"ரோக ரகசியம்' என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட விடயங்களில், சுவாமிஜி ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டி விளக்கமளித்த சம்பவம் ஒன்றுண்டு.
மார்கழி மாதத்தில் திருவெம்பாவையின் ஆரம்பதினத் தன்று நிகழ்ந்த நிகழ்வே இதுவாகும். சுவாமிஜி, கையிலே முழுமையாக ஒரு கதலி வாழைப் பழத்தை எடுத்துக் காட்டினார். மஞ்சள் வர்ணத்தோடு கூடி இடையிடையே சிறிது கருமை சேர்ந்து காணப்பட்ட அப்பழம், சென்ற திருவெம்பாவையின் ஆரூத்ரா தரிசனத்தின் போது, சுவாமிஜியால் எடுத்துப் பாதுகாக்கப்பட்டது. பத்து நாட்கள் கழிந்தால் அப்பழம், ஒரு வருடகாலமாகப் பதன் கெடாமல் காக்கப்பட்டு வந்துள்ளது. அப்பழத்தை முழுமையாகக் கையில் எடுத்துக் காட்டிய சுவாமிஜி, இந்த அற்புதத்தைப் பற்றிக் கூறினார்.
"சுவாமிஜிக்கு ஏன் வருத்தம் வரவேண்டும்? இதை அவரால் மாற்ற முடியாதா? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். சிருஷ்டி - ஸ்திதி - சம்ஹாரம் செய்கின்ற எனக்கு, மாற்றமுடியாத காரியம் எதுவுமில்லை, பிறரிடம் கர்ம வினைகளை வாங்கிக் கொள்ளவும், சுகத்தைக் கொடுக்கவுமே நான் பிறந்தேன். அற்ப கருமங்களை சாதித்துவிட்டே இந்த மனிதர்கள் எப்படி எல்லாம் பேசுகிறார்கள். ரோக சம்பந்தமான ரகசியங்கள் நிறைய இருக்கின்றன. இன்னும் ஆழமாக அறிவு விரிவடைந்து வரும் போது, ரோக ரகசியங்கள் பற்றித் தெரிந்து கொள்வீர்கள்."
- 18 ؟ -

சுவாமிஜியின் சொல்லும் செயற்பாடும், நமது சிற்றறிவால் எடைபோடுவதற்கு அரிதானசெயலாகும் என்பதை நினைக்கை யில் இத்தலைப்பின் பொருத்தப்பாடு புலப்படுகிற தல்லவா?
தவப்பயன் பெற்ற தொண்டு
ஒரு தவஞானியோடு, அவர் வாழ்ந்து காலத்திலே
வாழ்ந்து, பூர்வ ஜென்ம நல்வினை வந்தெய்திட, அவரோடு
தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, பயன் பெற்றவர் பலராவர்.
எனினும், உலகின் உயர்ச்சியை நோக்கி, செயற்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருந்த, அந்த மகா சிரேஷ்டருக்கும் உலகியல் தேவைகள் என்று சில இருக்கத்தான் செய்தது. இத்தகைய பணிபுரிய தவப்பேறு பெற்றவர்களின் பெருமையை வரையறுப்பது முடியாத காரியம்.
இத் தவ சிரேஷ்டரின் உறைவிடத்தைத் தூய்மை செய்தல்; உணவு பாகம் செய்தல்; அழைத்த குரலுக்கு, இட்ட பணியை உடனும் முடித்திடுதல், அவரது ஆக்கங்களுக்கு எழுத்துருவம் கொடுக்கும் பணியில் ஈடுபடுதல்; அவர் செல்லுமிடங்களுக் கெல்லாம் உதவியாகச் செல்லல்; அம்மகானால் திட்டமிட்டு, ஆணை இடப்படுகின்ற பாரிய கருமங்களில், தமக்கென இடப்பட்ட பணிகளை செவ்வனே நிறைவேற்றுதல், நோயுற்ற வேளைகளிலெல்லாம், வேண்டும் பணிவிடைகளைப் பக்குவமாகச் செய்தல்; என இது போன்ற பல்வேறுபட்ட தொண்டின் மகத்துவம் அளப்பரியது.
இத்தகைய பணிகளில் சில நாட்கள் சுவாமிஜிக்குத் தொண்டாற்றும் பேறு பெற்றவர்களும் உண்டு; சில மாதங்கள் தொடர்ந்து தம் சேவையை அளித்தவர்களும் இருக்கின்றார்கள். வருடக் கணக்கிலே சுவாமிஜி இட்ட கட்டளைகளை நிறைவேற்றி வந்தவர்கள், அம்மகானோடு வாழ்ந்த காலம் முழுமையும் பணி செய்தவர்கள் என, இந்த வகையிலே பேறு பெற்ற பக்தர்களை, சுவாமிஜியினுடைய திவ்ய சரித்திரத்தோடு தொடர்பு படுத்திப் பார்க்கின்ற பொழுது அவர்களது தவப்பயனின் மகிமை புலனாகிறது.
- 19 -

Page 85
இப்படியான, புனிதப் பணி செய்வதற்கு அருட் குருவினால் கிடைத்த அரிய வாய்ப்பினை, தமது குருவுக்குச் செய்யும் தவப் பயன் எனக் கொண்டார்களே அன்றி, தாம் பணி செய்ததாக அவர்கள் என்றுமே எண்ணியதில்லை. குருதேவருக்கு, அவரவர் ஆற்றிய தொண்டு, அந்தந்த நிலைகளில் மகா சிரேஷ்டமானதும் கிடைத்தற்கரிய தொரு பேறுமேயாகும்.
பாரதத்தில் பெற்ற கண் சிகிச்சை
1989ஆம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு, ஞானிஒளி பரப்பிய, ஞான விளக்காகத் திகழ்ந்த, அந்த உருண்டோடும் அழகிய கருவிழிகளில் ஏற்பட்ட கோளாறினால், குருதேவருக்குப் பார்வை சிறிது மங்கத் தொடங்கியது. இதற்கு முன், கொழும்பில் சுவாமிஜிக்கு அளிக்கப்பட்ட கண் சிகிச்சை பலனளிக்கவில்லை.
இதே ஆண்டு, பாரதத்திற்குச் சென்று, அங்கு உலகப் புகழ் பெற்ற, க்ண் வைத்திய நிபுணரான டாக்டர் அகர்வால் அவர்களது கண் வைத்திய சாலையில், லேசர் சிகிச்சையை மேற்கொண்டார்.
இந்த சிகிச்சையை மேற்கொண்ட பின், ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பரிசோதனைக்காகப் பாரதம் சென்றார். சுவாமிஜிக்கு சிகிச்சை அளிக்கும் சந்தர்ப்பத்தின்போது, அவரது பேரன்பினால் கவரப்பட்ட, கண் வைத்திய நிபுனர்களான அக் குடும்ப அங்கத்தவர்கள், சுவாமிஜியிடம் பெரு மதிப்பும் - பக்தியும் - விசுவாசமும் கொண்டனர்.
ஒரு சமயம், வெளிநாட்டிலிருந்து தமது வைத்திய சாலைக்கெனத் தருவித்த, கண் சிகிச்சை இயந்திரத்தை, சுவாமிஜியின் திருக்கரங்களினால் திறந்து வைக்கவேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக் கொண்டனர்.
மிக நுண்ணிய ஒரு புள்ளி அளவினை, பெரிய உருவாகக் காண்பிக்கக் கூடியது அந்த இயந்திரம். உலகாயுத சம்பிரதாயங்களில், எக் காலத்திலும் கலந்து கொள்வதற்கு விரும்பாத சுவாமிஜி, அவர்களது ஆழ்ந்த பக்தி விசேஷத்தினால் கவரப்பட்டு, மறுப்புக் கூறாமல், அக் கண் சிகிச்சை யந்திரத்தின் மேல் தம் திருக்கரங்களை வைத்து ஆசீர்வதித்தார்.
- 120

மழலைகளின் அன்புறவில் மனங்கலந்த மலர்ச்சிரிப்பு

Page 86
霹_辜*
பாறையும் பெருவிருட்சமும் சேர்ந்த ஏகாந்த சூழலில் திரிஞானி
பொத்துவிலில் பர்னசாலையாக மாறிய அன்பரில்லும்
 
 

தேச சஞ்சாரத்தில் கண்ட கஜபதிக்கு கணி கொடுக்கும் களிப்பு

Page 87
பக்தனின் காணிக்கையை ஏற்றுக்கொண்ட அன்பு நெஞ்சம்
பாரதத்தில் கண் சிகிச்சை பந்திரத்தை இயக்கி ஆசீர்வதித்தல்
 

தவஞானியின் அருளாட்சி
சுவாமிஜி அவர்களின் கடும் தபசினால் பெற்ற ஆத்ம
சக்தியும், திருவருட்கடாட்சமும் உலகெங்கணும் உள்ள
பல்லாயிரக் கணக்கான மக்களுக்குக் கிடைத்துள்ளது.
குழந்தைகள் - இளைஞர்கள் - இளம் பெண்கள் - வயதிற் கூடியவர்கள் - அரசியல்வாதிகள் - நாஸ்திகர் - படித்தவர் - பாமரர் - ஏழை - செல்வந்தர் இப்பேர்ப்பட்ட சமுதாயத்தில் காணும் வெவ்வேறு படித் தரத்தில் உள்ளவர்களும் சுவாமிஜியின் தரிசனம் கண்டு சென்றுள்ளனர்.
எத்தகைய பல்வேறுபட்ட ஒன்றுக்கொன்று எதிர்திசை யான குண இயல்புகளை இவர்கள் கொண்டிருந்த பொழுதும், தமது ஆத்ம வலிமையினால் கவர்ந்திழுத்த பெருமை சுவாமிஜிக்கு உரியதாகும். ஜாதி - மதம்-இனம்-நாடு இவற்றால் வேறுபட்ட பலர் சுவாமிஜியின் அன்புக்குப் பாத்திரமாகி அவரைப் பணிந்து நிற்பர். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற உன்னத கோட்பாடு, சிவயோக சமாஜ யோகாச்சிரமத்தில் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட இடமாகவே காணப்பட்டது.
இத்தவஞானியை நம்பி வந்தவர் எல்லோரும், தாம் கொண்டு வந்த பிரச்சனைகள் அற்புதமாகத் தீர்ந்து, அல்லது குறைந்து சுகமடையும் நிலையை அடைந்து வந்தனர். தீர்வுகளை அவர் சந்நிதானத்திலே, முதற் சந்திப்பிலேயே அடைந்தவரும் உண்டு இல்லம் ஏகிய பின் முடிவு கண்டவரும் உண்டு சிறிது கால இடைவெளியில் பயன் கொண்டவரும் உண்டு.
தன்னைத் தேடி வரும் பக்தன், தூரத்தில் வரும் போதே, அவர்கள் வரும் நோக்கத்தினைத் தெரிந்து விடும் திரிகாலஞானி, அவர் பேசு முன்பே, வந்த கருமத்துக்குரிய தீர்வினைத் தெளிவாகக் கூறி, அவரது உள்ளக் குமுறலை அமைதியடையச் செய்த சம்பவங்களும் உண்டு. இந்த அற்புத சக்தியை நிதர்சனமாகக்கண்டவர் வியந்து, கசிந்து பேசுவதுண்டு.
பிராரப்த கர்மங்களினின்றும் எவரும் தப்பித்துக் கொள்வது இயலாத காரியமே. எனினும் தன்னைச் சரணடைந்த பக்தன், இன்னலுற்றுக் கலங்கும் வேளைகளில், தனது ஆத்ம சக்தியினால், அந்தத் துயரத்தின் தாக்கங்களைக் குறைத்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்துக்காத்து வந்தவர் இந்த தவசிரேஷ்டராவார்.
- 121 -

Page 88
ஒவ்வொரு தனி மனிதனையும் ஆத்மீக சற்கருமங்களில் ஈடுபடுத்தி, அதன் மூலம் மன அமைதியை இப் பிரம்ம ஞானி தேடித் தந்திருப்பது, இன்றைய யந்திர உலகைப் பொறுத்த வரை, பெரும் வரப்பிரசாதம் என்றே கூறலாம். பிறப்பினுடைய நோக்கத்தை, ஒவ்வொரு ஜீவனுக்கும் உணர்த்தி நிற்கும் பெருமுயற்சியில், மறைமுகமாகப் பல செயற்பாடுகளின் மூலம் வளர்த்து வந்துள்ளார் என்பதனை ஆழமாக நோக்கின் தெளிவாகப் புலப்படும்.
ஆச்சிரமத்தில் வழிவகுத்து இடம் பெற்ற நிகழ்ச்சிகள் யாவும், அகத் தூய்மைக்கு இட்டுச் செல்லும் பணிகளேயாகும். சுவாமிஜியின் எந்த ஒரு வழிகாட்டலிலும் நிர்ப்பந்தம் - அதிகாரம் இருந்ததில்லை. அவரவர் தமது சுபாவ குற்றங்களி னின்றும் தாமாகவே உணர்ந்து திருந்தி விடுவர். ஏதோ ஒரு சந்தர்ப்ப வசத்தால், சுவாமிஜியின் அருள் அலைகளில் உட்பட்ட காரணத்தால், தமது முன்னைய வாழ்க்கையை முற்றாக மாற்றி அமைத்துக் கொண்டு, உள்ளத்தால் உயர்ந்து, ஆத்மீக நெறியில் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர் வரலாறுகளும் பல உண்டு.
இலங்கையின் பல பாகங்களில் மட்டும் மல்லாது, கடல் கடந்த நாடுகளிலும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, சுவாமிஜியின் திருவருட் கடாட்சம் கிடைத்துக் கொண்டி ருக்கிறது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், அவரை நினைக்கும் தோறும், அவரது தெய்வீக அலைகளால் காக்கப் பட்ட அற்புத அனுபவங்களையும் பலர் பெற்றுள்ளனர்.
இலங்கையின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலி ருந்தும், எண்ணிலடங்காத கடிதங்கள் நாள்தோறும் சுவாமிஜியின் ஆச்சிரமத்திற்கு வந்து குவிந்த வண்ணமே இருக்கும். அவற்றை எழுதிய மாத்திரத்திலேயே வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து மனசுகம் அடைந்துள்ளனர். அருட்குருவை முன் வைத்து, தமக்கேற்பட்ட பிரச்சனைகளால் அலைகின்ற தமது மனநிலையை, வார்த்தைகளில் வடித்து, கடிதமாக எழுதும் வேளையில், தீர்வை நோக்கி உள்ளமானது, தம் சற்குருவின், சைதன்யப் பேரலைகளோடு ஒன்றித்து விடுகிறது.
- 29

நாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பற்ற ஒரு கால கட்டத்தில், அவரது பக்தர்கள் பாதிப்படையாமல் காக்கப்பட்டமை பெரும் அற்புதமே. அதன் சாட்சியாக அனுபவித்தவர்கள் உள்ளம் கசிந்து, பக்தி மேலிடக் கூறுகின்றபொழுது, மேலும் அம்மகானின் மேலுள்ள நம்பிக்கையும் விசுவாசமும் பன்மடங்கு பெருகிடவே மெய்சிலிர்த்துக் காணப்படுவர். இத்தகைய அனர்த்தங்களின் போது, விலைமதிக்கமுடியாத எத்தனையோ உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.
அத்தகைய ஒரு சூழ்நிலையில்; சுவாமிஜி சிலகாலம் ஆச்சிரமத்தின் மேல் தளத்தில் அமைந்த ஓர் அறையில், மாலை ஐந்து மணிக்குச் சென்று தாள்ப்பாள் இட்டுக் கொள்வார். இரவு ஏழு மணிக்குப் பின், தமது தியானத்தை முடித்துக் கொண்டு, அந்த அறையினின்றும் கீழே இறங்கி வருவார். "தவ யோகங்கள் செய்த காலத்தில் எந்தவித பலாபலனும் கருதாமல் நிஷ்காமிய தபசு செய்தேன். இப்போது காமிய தபசு செய்கிறேன்" என்று சுவாமிஜி மனம் உருகிக் கூறினார். மனித உயிர்களின் மேற்கொண்ட கருணையினாலும், உலக சேமத்திற்காகவும் இத் தவஞானி காமிய தபசினை மேற்கொண்டார். இப்படியாக வார்த்தைகளுள் அடக்க முடியாத எத்தனையோ தியாகங்களைப் புரிவதற்கு இந்த மனுக்குலத்துக்காக சுவாமிஜி தன் கடுமையான தபசக்திகளைச் செலவிட்டார்.
ஒவ்வொரு மனிதனும் கிரகஸ்த வாழ்க்கையில் இருந்து கொண்டு, அவரவர்க்குள்ள கடமைகளைச் சரிவரச்செய்து, ஆன்மீக வழியில் முன்னேறுவதற்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உயர்ந்த கோட்பாட்டை, தம் பக்தர்கட்கு - பக்குவமாக எடுத்துக் கூறி, அனுபவத்தில் உணர்த்தியவர் சுவாமிஜியாகும். கடமைகளின் பலாபலன் களினால் கிடைப்பது மலராக - மணலாக எதுவாக இருந்தாலும், ஈஸ்வரப் பிரசாதமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய சமபாவத்தை உணர்த்துவதில், சுவாமிஜி கண்ணும் கருத்துமாகப் பக்தரிடையே செயற்பட்டார்.
இல்லற தர்மத்தைச் சரிவரச் செய்யும் பட்சத்திலேயே, ஈஸ்வர தரிசனத்துக்கு ஆளாக முடியும் என்ற உயர்ந்த சித்தாந்தத்தை இலகுவாகப் பக்தர்களுக்கு உணர்த்தி விட்டவரும்
- 25 -

Page 89
இந்த மகானே ஆகும். தன்னைச் சரணடைந்தோர்க்கும். அமைதி தேடி வந்தோர்க்கும், நோயுற்றவர்க்கும், தம் தவசக்தியால் தீர்த்து வைத்து, சுகமளித்த இம்மகான் அடுத்தவர் அறியாமலே செயற்பட்டார். இவ்வாறு பெரும் அற்புதங்கள் செய்த இந்தத் தவஞானி, தன்னால் நன்மைகளும், ஆறுதலும் அடைந்த எவரது வாழ்க்கை அனுபவங்களையும் பிரபல்யப்படுத்தியதில்லை. பக்தர்கள் தாம் அடைந்த சுகானுபவத்தை நெஞ்சுருகி கண்ணிர் மல்கி, கூறுகின்ற பொழுதுதான் அவரது அற்புத செயல் வெளிப்படும் வாய்ப்புப் பெறுகிறது.
சுவாமிஜியின் திரிகாலத்தை உணர்த்தும் தீர்க்க தரிசனம், திருவருட் கொடை இவைகளால் பயனடைந்த பக்தர்கள் கூறும் அற்புதங்களை ஒவ்வொன்றாக விவரிக்க முனைந்தால், அதுவே ஒரு தனிநூலாக வடிவெடுத்து விடும். எல்லையற்ற அற்புதங்கள் செய்த இந்தத் தவஞானி, இப்பூவுலகிலே நடமாடுகின்ற ஓர் அன்புத் தெய்வமாகவே காட்சி அளித்தார். அம்மகானைத் தரிசித்த பேறு பெற்றவர்களும், அவரது திருவருட் செயலை அறிந்து பூஜிப்பவர்களும் இம் மண்ணுலகில் பிறவி எடுத்த பலனை அடைந்தவர்கள் ஆவார்.
வலுக்குன்றிய தூலசரீரம்
எண்ணற்ற பக்தர்களுக்குத் தன் ஆத்மசைதன்ய அலைகளை அள்ளி வீசிக் கொண்டிருந்த சுவாமிஜி, இறுதியாக வாழ்ந்த சுமார் எட்டு ஒன்பது வருடங்கள், இப்பூவுலக வாழ்க்கையினின்றும் திரும்புவதற்கு சூசகமான சில வார்த்தைகளை, இடையிடையே கூறக் கேட்கக் கூடியதாயி ருந்தது.
"நான் தபசியற்றிய காலங்களில் இருந்தது போன்று பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன். உணவு, விசயத்தில் அக்காலத்தில் இருந்தது போன்றே குறைந்து வருகிறது. அந்நேரத்தில் யாருடைய தொடர்பையும் தவிர்த்தது போன்ற அந்த நிலைப்பாடும் வந்து கொண்டிருக்கிறது. இங்கு வந்த பணி முடிவடைந்து விட்டது. நான் போகின்ற காலத்தை நீட்டிக் கொள்வதும், இருக்கின்ற காலத்தை குறைத்துக் கொள்வதும் என்னிடத்திலேயே தங்கியிருக்கிறது.
- 124 -

வாகனத்திற்காகப் பேரூந்து நிலையங்களில் நிற்பது போன்று நின்று கொண்டிருக்கும் நான் விரும்பிய நேரம் போகலாம்; அல்லது விட்டு விடலாம். அடிக்கடி வெளியூர்களுக்கும் பயணம் செய்கிறேன். இந்த பந்தம் என்பது இருக்கக் கூடாது. நான் இல்லாத நேரங்களிலும் அந்தந்தக் கருமங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இதன் ரகசியம்." இவ்வாறான சுவாமிஜியின் உள்ளார்த்தமான வார்த்தைகள் அவரது ஆழத்தை எடை போடமுடியாத புதிராகவே இருந்து வந்தது.
1990 ஆம் ஆண்டு - பிற்பகுதி, பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் உடல் மனக் கஷ்டங்களை ஏற்றுக் கொண்ட தியாகசீலரின் பஞ்சபூதங்களாலான உடலுறுப்புகள் வலுவிழக்கத் தொடங்கின. ஞான விளக்காகப் பிரகாசித்த
இருவிழிகளின் புறத்தோற்றம், சிறிது மங்கத் தொடங்கியது.
அந்தச் சாந்தி தவழும் திருமுகத்தின் திரு நாவினின்றும் உட்செல்லும் உணவுக் குழாய், உணவை ஏற்க மறுத்து எரிவை ஏற்படுத்தியது. தமது ஆயிரக்கணக்கான பக்தர்களின் ஜென்ம சுமைகளை ஏற்றுச் சுகமளித்த திருப்பாத கமலங்கள், வழமைக்கு மாறாக வீக்கமுறத் தொடங்கின; இருக்கையில் இருந்து எழுந்து கம்பீர நடைபோடும் செம்மலர்ப்பாதங்கள், மழலைச் செல்வம் தத்தி நடைபோடுவதுபோல அடியெடுத்து வைத்து நடக்கும் நிலைக்கு ஆளாயின.
குருதேவரின் திருவுடலைச் சுற்றிய குருதியமுக்கம், ஏறியிறங்க ஆரம்பித்தது. வழமையான உணவு முறை மாறி, இலகுவாகச் சமிபாடடையும் உணவை மட்டும் உடல் ஏற்கத் தொடங்கியது. ஆண்டாண்டு காலமாக இருவேளை குளிர்ந்த நீரில் மூழ்கிவரும் இத்தவஞானியின் திருவுடல், வாரத்திற்கு ஒருமுறை வெந்நீரில் ஸ்நானம் செய்யும் நிலையை அடைந்தது. நாள்தோறும் இருவேளை மாற்றப்படும் இத்தவயோக சித்தரின் மேனியிலுள்ள காவி வஸ்திரம், வாரம் ஒருமுறை மாற்றப்படத் தொடங்கியது.
- 25 -

Page 90
எந்நேரமும் உற்சாகத்துடன் ஒய்வின்றி எழுந்து நடமாடும் தவஞானியின் நாட்கள் படுக்கையிலேயே கழியத் தொடங்கின. தரிசிக்க வரும் தம் பக்தர்களை முகமலர்வுடன் வரவேற்று, சுமையேற்கும் குருதேவர், படுத்தபடியே தரிசனம் அளிக்கும் நிலையில் காணப்பட்டார்.
உலகாயுதக் கருமங்கள் ஒவ்வொன்றாக இத் தவஞானியை விட்டுக் கழன்று சென்று கொண்டிருந்தன. உணவு - உடை - உறக்கம் இவற்றோடுதான் அத்தவஞானி உயிர்வாழ வேண்டும் என்றில்லை. மக்களுடைய துன்பங்களைத் தாம் ஏற்கவென்றே பிறவியெடுத்த மெய்ஞானி, முதிர்ந்த நிலையில் அமைதியுடன் முகம் மலர்ந்து காணப்பட்டார்.
"நான் உற்சாகமாக இருந்து கருமங்கள் பணிகள் செய்து கொண்டிருந்த நேரத்தில் இங்கு வர்ஷித்துப் பொழிந்ததைப் பெற எல்லோருக்கும் கிடைக்கவில்லை. எதுவுமே வேண்டாம் என்று படுக்கையில் இருக்கும் நேரத்தில் உலகம் முழுவதும் திரண்டு வந்து கொண்டிருக்கிறது. என்னிடத்தில் இந்தப் பிரபஞ்சத்திற்கான கடவுச் சீட்டே இருக்கிறது. எப்போது விரும்பினாலும் போகலாம் - வரலாம். சித்த கணத்துடன் சேர்ந்துவிடத் தோன்றுகிறது. கைலாசத்தில் கோரம் போதாது என்று எனக்கு அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. உங்கள் குருவுக்கு இப்படி ஒரு அழைப்பு வருவதையிட்டு, பக்தர்களாகிய நீங்கள், பெருமைப்படவேண்டுமே தவிர, கவலைப்படக் கூடாது. ஆனாலும் எங்கிருந்தாலும் நீங்கள் என்னை நினைக்கின்ற நேரத்தில் அக்கணமே அவ்விடத்தில் நிற்பேன்" என்று அம்மகான் அந்நேரத்தில் கூறிய வாசகங்கள் எவ்வளவு அர்த்த புஷ்டி நிறைந்தவை.
1990 ஆம் ஆண்டு மார்கழி மாதம்; இந்த சித்த புருஷரின் உடலில் இருந்த உபாதை சிறிது மோசமான நிலையை அடைந்தது. வைத்தியர்கள் தம்மாலான சிகிச்சையை அளித்தனர். மகா ஞானியின் சித்தம் எங்கோ இருக்கையில். அது பலனளிக்கவில்லை. அதே மாதம் பன்னிரண்டாந்திகதி, கொழும்பு வைத்தியசாலைக்குச் செல்வதெனத் தீர்மானிக் கப்பட்டது. மறுநாள் செல்வதற்கென பிரயாண ஒழுங்குகளை பக்தர்களைக் கொண்டே செய்வித்தார். பதின்மூன்றாந் திகதி, வெள்ளிக்கிழமை காலை, சிவயோக சமாஜ யோகாச்சிரமத்தி லிருந்து புறப்படுவதற்குத் தயாரானார்.
- 126 -

காலை மணி பதினொன்று முப்பது; தவப் பொழிவும் பேரருளும், கம்பீரமும் கொண்ட அந்தப் பிரம்ம ஞானி முதிர்ந்த தோற்றத்துடனும், தள்ளாடிய நடையுடனும், கனிந்த பார்வையுடனும், தன் பக்தர்கள் ஒவ்வொருவரிடமும் நடுங்கிய தம்திருக்கரங்களைக் கைகூப்பி விடைபெற்றுக் கொண்டிருந்தார். அப்புனித இடத்திற்குப் பேரொளி ஊட்டும் தம் குருதேவர், திரும்பவும் நலமுடன் ஆச்சிரமம் திரும்புவாரென, பக்தர்கள் நம்பியிருந்தனர். இத்தனை வருடகாலம், அவ்விடத்தில் வாழ்ந்து, அருளொளி பெருக்கி, எல்லாவற்றையுமே துறந்து பற்றற்றுச் செல்லும் மகா ஞானியை யாருமே அன்று புரிந்திருக்கவில்லை.
இந்தியாவின் கேரளத்தில் பிறந்து, தமது இலட்சிய குறிக்கோளுக்காக அங்கு பலபாகங்களுக்கும் சென்று, காடு வனாந்தரங்களில் அலைந்து, எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து, இலங்கைக்கு வந்து, திருகோணமலை என்ற புண்ணிய பூமியைத் தெரிவு செய்து, ஜனசந்தடியும் நெருக்கடியும் நிறைந்த சூழலில் தமது தபசாதனைகளை மேற்கொண்டு, திருக்கோணேஸ்வர ஆலயக் குகைக்குள் கடுமையான தவமியற்றி, சிவஞான சித்தி பெற்று, பிரதான வீதியில் சிவயோக சமாஜ யோகாச்சிரமம் அமைத்து, காடு திருத்தி, களனிகளாக்கி, நடேசர் ஆலயம் அமைத்து, ஆச்சிரமத்தில் ஆத்மீக உயர்வுக்கான நிகழ்ச்சிகளை வழியமைத்து, அநாதைகளுக்கென இல்லம் அமைத்து, எத்தனையோ பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல் மனக்கஷ்டங்களைத் தாமே ஏற்று சுகமளித்து, ஆன்மீக வழி காட்டி, அவர்களின் ஒரே ஆதாரமாக நின்று, அருள் கொடுத்த தவஞானி, இந்த சிவ புண்ணிய பூமியை விட்டுச் செல்வதற்கு ஆயத்தமானார். பக்தர்களிடம் விடை பெற்ற அம்மகான் கொழும்புக்குப் பயணமானார்.
இரட்ணம் வைத்தியசாலையில்
கொழும்பில், ரெட்ணம் தனியார் வைத்தியசாலையில் சுவாமிஜி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை மேற்கொண்டு ஓரிரு நாட்கள் பக்தர்களுடன் சிறிது அளவளாவினர். பின் அந்த நிலையையும் கடந்தார். நாளுக்கு நாள் அந்த யோகி சித்தரின் உடலில் காணப்பட்ட உபாதை கூடிக்கொண்டு இருந்ததே தவிர, குறையவில்லை. நீராகாரத்துடன் படுக்கையில் சுருண்டு கொண்டது அத்திருவுடல்.
- 127.

Page 91
ரெட்ணம் வைத்திய சாலையின் உடற்கூற்று வைத்திய அதிகாரிகள் இருவர், சுவாமிஜியின் வைத்திய சிகிச்சையைப் பொறுப்பேற்று, சிகிச்சை அளித்தார்கள். நாளொரு வண்ணம், உடல்நிலை மோசமடைவதைக் கண்டு, இந்தமகான் வழிநடத்திய பக்தர்கள் மனம் வெந்தனர். இரவு பகலாக, ஊண் உறக்கமின்றி, மாறி மாறித் தம் குருதேவருக்குப் பணிவிடைகள் செய்தனர். இப் பூவுலகில் அத்தவஞானி தம்முடன் இருக்கப் போகும் குறுகிய நாட்களை அறியாத பக்தர்கள் நலமுடன் திரும்புவார் என நம்பிக்கை கொண்டு பணி புரிந்தனர்.
பல்லாண்டு காலமாக தமது பக்தர்கள் சுகமடைய, அவர்களது உடற்கவுடங்களையும், மனக் கஷ்டங்களையும், தன் உடலிலும் மனதிலும் தேக்கி வைத்த சுமையை, இரவும் பகலும் இடைவிடாமல் அங்கு அனுபவித்துக் கொண்டிருந்தார். அப்படியுள்ள கடுமையான வேதனையைத் தொடர்ந்தும் தாங்கமுடியாமல், குருதேவர் வாய் விட்டுக் கதறிய துன்பச் செயல், பக்தர்களைக் கண்ணிர் சிந்த வைத்தது. தாங்க முடியாத வேதனையால் துடிதுடித்துக் கதறிய சத்தம் வைத்தியசாலையின் அப்பகுதியில் எதிரொலிக்கச் செய்தது.
தம் குருதேவர் படும் வேதனையைக் கண்டு சகிக்க முடியாத ஒரு பக்தன், "சுவாமிஜி தாங்கள் ஏன் இப்படிக் கடுமையான வேதனையையும் கஷ்டங் களையும் அனுபவிக்கிறீர்கள் என்று மனம் ஆற்றுமையினால் அருகே சென்று வினாவினார். "இதைவிட ஆனந்தம் வேறில்லை" என்ற உறுதியான பதிலே, இந்தத் தியாகப்பிரம்மத்திடமிருந்து வந்தது. பார்ப்போர் துயரப்படும் விதத்தில் அத்தெய்வ புருஷரின் திருவுடலில் உள்ள அங்கங்களில் சிகிச்சைக்காகக் குழாய்களும், ஊசிகளும் பொருத்தப்பட்டிருந்தது. குருதேவரின் இந்தக் காட்சி, பக்தர்களுக்குச் சொல்லொணாத் துன்பத்தைத் தந்து மனதை உருக்கியது.
கஷ்டமான உடல் உபாதையிலும், கடுமையான மருத்துவ சிகிச்சையிலும் இந்த மகாஞானி, தமது உடல் கஷ்ட நிலைக்கு அப்பாற்பட்ட சில சம்பவங்களை, அற்புதங்களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். சில புண்ணிய சீலர்களை அழைத்தும் தரிசனம் தந்தார். காரணம்; இத்தகைய தெய்வீக சக்திகள் நிரம்பப் பெற்ற மகான்களுக்கு, உடலின் உபாதைகள் ஒருபோதும் ஆத்மாவைத் தீண்டுவதில்லை.
- S28 -

சுவாமிஜி, வைத்தியசாலையில் கடும் நோயோடு போராடிக் கொண்டிருக்கிறாரே என்று மனம் பதறி ஓடோடியும் வந்த தன் ஆத்மார்த்த பக்தர்களை, இருவிழிகள் மலர நோக்கி, அவர் நலன் விசாரித்து, அன்புடன் இனிய வார்த்தைகளால் அரவணைத்த அருமை கண்டு, மலைத்தவர்கள் பலர் உண்டு.
குருதேவர் பட்ட வேதனை சிகிச்சையின் தாக்கங்கள்; இவற்றுடன் சற்றும் தொடர்பில்லாத இச்செயற்பாடு, அவரது திடமான ஆத்ம சைதன்யத்தின் பொழிவை, இத்தகைய உலகியல் துன்பங்கள் சிறிதும் நெருங்க முடியாதிருந்த அற்புத நிலையை, தெய்வீக புருஷ லட்சணத்தை பக்தர்கள் நிதர்சனமாக உணர்ந்து கொள்ள வைத்தது.
1991 ஆம் ஆண்டு - மாசிமாத நடுப்பகுதியில் தம் குருதேவர் குணமடைவார் என்ற நம்பிக்கையின் உறுதி, சிறிது தளரத் தொடங்கியது. சிகிச்சை அளித்தும் நாளுக்கு நாள் வைத்தியரினால் புரிந்து கொள்ள முடியாத, உடலில் ஏற்படும் புதிய மாற்றங்களை அவர்கள் யோகிகள் ஞானிகளின் உடலில் ஏற்படும் நோய்கள் (Saint Desease) கண்டு பிடிக்க முடியாதவை என்று, ஒரே வாக்கியத்தில் கூறித் தமது கடமைக்காகவே சிகிச்சை அளித்தனர்.
உடற்கவுடங்களினாலும், கடுமையான வைத்திய சிகிச்சையினாலும், அந்த நிர்மலமான மேனிபட்ட கஷ்டங்களும் வேதனைகளும், வார்த்தைகளுள் அடக்க முடியாதவை. அவரது திருவுடல், கர்ம வினையை அனுபவிக்க எடுக்கப்பட்டதல்ல. மனித உடல் எடுத்த காரணத்தால், பஞ்ச பூதங்களாலான அந்த சரீரத்துக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பல்லாயிரக் கணக்கான தம் பக்தர்களின் உடல் நோய்களையும், மனக் கஷ்டங்களையும், பரோபகரார்த்த விதமாக, தாமே ஏற்று அனுபவிக்கும் எல்லையில்லா உச்ச வரம்பின் தியாகம் தான் அது.
சுவாமிஜியின் திருவுடல் இப்பூவுலகில் வாழப்போகும்
கடைசிவாரம்; அத்திருவுருவின் சிரசின் மேல் நீண்டு
சுருண்டிருந்த கேசத்தை மழித்து விடும்படி, தம்மை இரவு
- 29.

Page 92
பகலாக அர்ப்பணித்துப் பணிகள் செய்த பக்தனிடம் கடுமையாகப் பணித்தார். இந்தக் கருமத்தை தமது ஆத்மார்த்த பக்தன் செய்வதற்கு துணிய மாட்டார் என்பதனால், அந்தக் கட்டளையில் கடுமை தொனித்தது. அத் திருவுடலின் சிரசின் கேசங்கள் நீக்கப்பட்டன.
மூன்று நாட்கள் கழித்து, சாந்தியும் கருணையும் தவழும் குருதேவரின் திருமுகத்தில் மெருகூட்டி நிற்கும் தாடியின் அலைபோன்ற கேசங்களையும், மீசையையும் மழிக்கும்படி கட்டளையிட்டார். இந்த பிரம்ம ஞானி பக்தர்கள் தரிசிக்கின்ற நேரத்தில், தமது திருக்கரங்களினால் வருடிக் கொடுக்கும், நெளிந்த வெள்ளிக் கேசங்களை நீக்க, பக்தன் மனம் குன்றிய போதும், குருவின் கட்டளையை நிறைவேற்றினார். இந்நிலையில் இம்மகான் இத்தனையாண்டு காலம் தரிசனம் அளித்த தோற்றம் நீங்கி, புதிய தோற்றத்தில் காட்சி அளித்தார்.
சரீரம் தான் பல கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், இத்தவஞானி பக்தர்களிடம் பணித்தவை, ஆரோக்கியமான, அர்த்தபுஷ்டியான, திடமான செயற்பாடு களாகவே காணப்பட்டது அற்புதகரமாக இருந்தது. பதினான்காம் திகதி மாசிமாதம்; வைத்திய சிகிச்சை நேரத்தில் தாம் உடனடியாக இந்தியா செல்ல வேண்டுமென்று கட்டளை பிறப்பித்தார். பதினெட்டாம் திகதி சென்னை செல்ல விமான ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது. எனினும் பதினைந்தாம் திகதி காலை அன்றைய தினமே பாரதத்திற்குச் செல்ல வேண்டுமென உறுதியாக உத்தரவிட்டார். இறுதியாக சில நாட்கள், அத்தவஞானியின் திருநா, வார்த்தைகளைப் பிசகாமல் கூறுவதற்கும் கூட ஒத்துழைக்க மறுத்தது.
உத்தம குருவின் கட்டளையை ஏற்று, அன்றே பாரதம் செல்வதற்குப் பக்தர்கள் ஒழுங்குகளைச் செய்தனர். இது மனிதனுடைய அறிவுக்கு உட்பட்டு, அவர்களது சொந்த முயற்சியினால் செய்ய முடிந்த கருமம் அன்று. மகான் எடுத்த முடிவு தடங்கலின்றி நடந்து கொண்டிருந்தது. தமது பயணத்திற்கு வழிஅனுப்பப் பக்தர் வருவதைத் தவிர்த்த அந்தத் தீர்க்கதரிசி, வைத்தியசாலையிலேயே பக்தர்களுக்கு விடைகொடுத்தார்.
- 30ܫܰ1 -

புறப்படும் சமயம், அந்த மகானது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. உடலுணர்வுகள் தளர்ச்சியடைந்தன. மதியம் மூன்று மணியளவில் விமான நிலையத்தை அடைந்தபோதும், அன்று இரவு பத்து மணி அளவிலேயே, விமானம் இத்தவஞானியைச் சுமந்து கொண்டு தன் பயணத்தை ஆரம்பித்தது.
அதேசமயம், தாம் பிறந்து வளர்ந்த தாயகமான பாரத மண்ணை விட்டு, வெளியேறி, ஐம்பத்தொரு ஆண்டுகள் தமது கடுமையான தபசக்தியைப் பல்லாயிரம் மக்களுக்குப் பகிர்ந்தளித்து; ஆத்மசுகமளித்து; ஆன்மீக வழிக்கு முன்னேற்றி: அவர்கள் கஷ்டங்களைத் தாமே ஏற்று; அனுபவித்து, தாம் வந்த திசை நோக்கி அதே பாரத மண்ணிற்குப் பயணமானார்.
பாரத மண்ணில் ப்ரம்ம ஞானி
15 - 2 - 91 இரவு பதினொன்று முப்பது மணி அளவில் சென்னை கெஸ்ட் வைத்தியசாலையில் (Guest Hospital) இத்தவயோகி அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலை ஒழுங்கு விதிப்படி சுவாமிஜியுடன் ஒருவர் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்பட்டது. சுவாமிஜிக்கு இறுதி நேரம் பணிவிடை செய்யப் பேறு பெற்ற அந்தப் பக்தன், இரவு முழுவதும் விழித்திருந்து, பணியாற்றினார். காலைவரை எந்தவிதமான முன்னேற்றமும் அந்தத் திருவுடலில் காணப்படவில்லை.
பேச்சற்று இருந்தபொழுதிலும், அதிகாலை தமது பக்தனின் வேண்டுகோளை ஏற்று, சிறிது தேநீர் அருந்தினார். காலை ஒன்பது முப்பது மணியளவில் வைத்தியர்கள் பரிசோதித்தனர். தேவையான மருத்துவக் கணிப்புக்களை மேற்கொள்ளும்படி தாதியர் பணிக்கப்பட்டனர்.
வைத்தியர்கள் சென்றபின், தன் பக்தனின் வேண்டு கோளைத் திருப்தி செய்ய, சாத்துக்குடி பழரசத்தில், ஆறு ஏழு கரண்டிகள் வரை தன் திருவாயைத் திறந்து பருகினார். பத்து மணியளவில் இந்தத் தவஞானியினுடைய தூல சரீரத்தை இயக்கிக் கொண்டிருந்த சுவாசம், கடுமையாகத் துரிதமாக இயங்கத் தொடங்கியது. அவரது திருநாபிக்கமலத்திலிருந்து எழுந்த ஆழமான மூச்சு, மிக விரைந்து இயங்கியதால், அவரது திருவுடல், மேலும் கீழுமாக அதிர வைத்தது.
- S -

Page 93
இத்தகைய உள்ளத்தைப் பிழிந்த காட்சியைப் பார்த்து, சகித்து நிற்க முடியாத நிலையில் அந்நேரம் அருகில் நின்றிருந்த இரண்டு பக்தர்களும், வைத்தியரும் - தாதியர்களும் அறைக்குள் நுழைய அவர்கள் வெளியேறினர். ஆயிரக்கணக்கில் தன்னைச் சுற்றி நின்ற பக்தர்களின் பற்றைத் துறந்து, இலங்கையை விட்டு பாரத மண்ணைச் சென்றடைந்த இத்தவஞானி, இறுதி நேரத்திலும், பக்தர்களிடமிருந்து நீங்கித், தனித்திருக்கும் தமது நோக்கில் வெற்றி கண்டார். உடலின் ஜீவத் துடிப்பாக நின்ற, பிராண மூச்சு, மேலும் கீழும் விரைந்து சென்று இறுதி நிலையை அண்மித் து விட்டசமயத்திலும் அவரது ஆத்மசைதன்யம் திடமாக இயங்கிக் கொண்டிருந்தது. நிலைமையைப் புரிந்து கொண்டு தேவையை உணர்ந்ததாதியர், பிராணவாயுவை சுவாமிஜியினுடைய திருவு டலில் செலுத்துவதற்காக துரிதமாகஇயங்க ஆரம்பித்தனர்.
குருதேவரின் மகாசமாதி
1991, பதினாறாம் திகதி - சனிக்கிழமை - காலை பதினொரு மணி, பூரட்டாதி நட்சத்திரம்-ஞான ஒளிபெருக்கி ஞான அருள் பொழிந்த அந்த ஞானவள்ளல் மகா சமாதி அடைந்தார். ஆனாலும் அந்த சைதன்யப் பேரொளியின் ஆத்மப் பிரவாகம், அடுத்த தெய்வீக உலகிலே, தமது நுண்ணிய தெய்வீக அலைகளால், தம் பக்தர்கள் அத்தனை பேரையும் அரவணைத்தபடி, அலையெறிந்து எங்கும் பரந்து வியாபித்து நினறது.
சுவாமிஜியின் சிவசாயுச்ச மகா சமாதி உலகெங்கணும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அதிர்ச்சியையும், தாங்கமுடியாத வேதனையையும் அளித்தது. அன்றைய தினமே, இரவு பதினொரு மணிக்கு, தூயதிருவுடலைத் தாங்கிய பேழை, கொழும்பிற்குக் கொண்டு வரப்பட்டது. துரித கதியில் பயணக் கருமங்கள் அந்த மகானின் அனுக்கிரகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அற்புதத்தைக் கண்டு பக்தர்கள் அதிசயித்தனர்.
17-2-91 அதிகாலை, பம்பலப்பிட்டி பிரான்சிஸ் மகாதேவா அவென்யூவில் பக்தர்கள் இல்லங்களில், மகா சமாதி அடைந்த சுவாமிஜியின் திருவுடல், தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
32

ஸ்தாபகரை எதிர்கொண்ட யோகாச்சிரமம்
திருகோணமலை சிவயோக சமாஜ யோகாச்சிரமம், அதை ஸ்தாபித்த ஸ்தாபகரது மகாசமாதி நிலை கண்டு, அதன் சரித்திரத்திலேயே எதிர் கொள்ளாத ஒரு துன்பச் சூழ்நிலையை அங்கு கண்டது. தாய்ப்பசுவைக் காணாத கன்றின் பரதவிப்பும், தாயினும் சாலப் பரிந்து நின்று கருணை தந்த தலைவனை நினைந்து விம்மி விம்மிக் கதறும் அழுகைக் குரலும், தம் குருவை நினைந்து, கண்ணிருடன் கசிந்து பாடும் பஜனைப்பாடலும், அங்கு ஒவ்வோர் இடமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
நாட்டின் சீர்குலைந்த சூழ்நிலையின் காரணமாக, களையிழந்து கருமங்கள் நடைபெறாது இருந்த மண்டபம், ஸ்தாபித்த மகானை எதிர்கொள்ள, அலங்காரமாகப் புதுப் பொலிவு பெற்றது. ஆச்சிரம வாயிலில் பச்சை வாழைகள் கட்டப்பட்டு, தோரணங்களால் அலங்கரித்து, "பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் சிவசாயுச்ச சமாதி" என்ற பெயரைத் தாங்கிய திரையும் கட்டப்பட்டிருந்தது. ஆச்சிரம மண்டபத்தில் 'அன்பு இல்ல மாணவர்கள் அமைதியாக இருந்து, தேவார திரு வாசகங்களைப் பாடினர் . திருகோணமலை நகரமே தாங்க முடியாத பேரிழப்பால் திரண்டிருந்து இந்த மகானைத் தரிசிக்கக் காத்திருந்தது.
அக்னியுடன் சங்கமித்த திருவுடல்
மதியம் இரண்டு முப்பது மணியளவில், கொழும்பிலிந்து மகா சமாதயடைநத தவஞானியின் திருவுடலைத் தாங்கிய பேழை ஆச்சிரமத்தை வந்தடைந்தது. பக்தர்கள், ஊர்மக்கள் யாவரும் கதறியபடியே முண்டியடித்துக் கொண்டு தரிசிக்கச் சென்றனர். குழந்தைகள் - பெண்கள் யாவரினதும் அழுகுரலுக்கிடையே, பஜனைப் பாடல்கள், தேவார திருவாசகங் கள், துயரம் தோய்ந்த ஒலி அலைகளாக மேலோங்கி நின்றது.
திறக்கப்பட்ட பேழையில், சாந்திதவழும் திருமுகத்தில், மழித்த சிரசும் - தாடி மீசை நீக்கிய வெறுமையும், பக்தர்களுக்குப் புதிய தோற்றத்தையும், "எங்கள் சுவாமிஜியா" என்ற வியப்பையும் அளித்தது. ‘எங்கள் குருதேவர் சமாதியடைய வில்லை. எம்முடன் இருக்கிறார்" என்ற தைரியத்தை-நம்பிக்கை யை சமாதிநிலையிலும் அந்தமகான் வழங்கிக் கொண்டிருந்தார்.
- S -

Page 94
கொழும்பு, மட்டக்களப்பு, கொம்மாதுறை, யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய இடங்களிலிருந்தும், நூற்றுக் கணக்கான மக்கள்தம் குருதேவரை இறுதியாகத்திருவுடலோடு தரிசிப்பதற்கு ஓடோடியும் வந்தனர். அம்மகானின் திருவுடலுக்கு மலர் மாலைகள் சாத்தி வணங்கினர். இயற்கை நியதிப்படி ஒவ்வொரு மனிதனும் மனித சுபாவங்களால் மாறுப்பட்ட போதும், சுவாமிஜி என்ற பேரொலியின் ஈர்ப்பினால், ஒருவரோடொருவர் பின்னிப் பிணைந்திருந்த அம்மகானது பக்தர்கள், அவ்விடத்தில் சந்தித்துக் கொண்ட பொழுது, யாருக்கு யார் ஆறுதல் தரமுடியும் என்ற நிலையில், குருதேவரின் சமாதிநிலையை ஜீரணிக்க முடியாமல், கட்டித் தழுவிக் கதறி அழுதனர்.
மாலை ஐந்து மணிக்கு சுவாமிஜியின் திருவுடலைத் தாங்கிய பேழையை, அந்த மகானுக்குச் செய்யும் இறுதிப் பணியாகக் கருதி, பக்தர்கள் தம் தோள்களிலேயே அதனைச் சுமந்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இத்தவ சிரேஷ்டரின் சமாதி ஊர்வலத்தில் பெருந்திரளான மக்கள்; பெண்கள்குழந்தைகள் உட்பட பலரும் தேவார பாராயணத்துடன் பின் தொடர்ந்து சென்றனர்.
பிரதான வீதி வழியாகச் சென்ற ஊர்வலத்தில், ஒவ்வொரு இல்லத்திலும் பூரணகும்பம் வைத்து மலர் மாலைகள் சாத்தி, தமது வணக்கத்தைச் செலுத்தினர். திறந்து பேழையில், மலர்களால் நிரப்பப் பெற்ற திருவுடல், மாறி மாறிப் பக்தர்களால் தாங்கிச் செல்லப்பட்டது. பெருந்தொகையான மக்கள் இந்த சமாதி ஊர்வலத்தில் கலந்து கொண்டமையால், ஊர்வலம் தாமதமாகியே இந்து மயானத்தை அடைந்தது.
வீதிகளும், இந்து மயானமும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மயானத்தின் ஒரு புறத்தில் சதுர வடிவில் பச்சை வாழைகள் நடப்பட்டு, தோரணங்களால் அலங்கரித்து, மையத்தில் விறகுகள் அடுக்கப்பட்டு, அதன் மேல் சந்தனக் கட்டைகள் போடப்பட்டிருந்தன.
சுவாமிஜியின் திருவுடலைத் தாங்கிய பேழை அங்கு நுழைந்ததும், மக்கள் நெரிசல்பட்டு அம்மகானை இறுதியாகத் தரிசிக்கச் சென்ற பொழுது, ஒழுங்கை நிலைநாட்ட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆண்கள் பெண்கள், குழந்தைகள் யாவரும் தங்கள் குருவை அந்த மயான சூழலில் வைத்துப் பார்க்க முடியாமல் கதறினர்.
- 134

மாலை ஆறுமணியளவில் சுவாமிஜியின் பேழை மையத்தில் வைக்கப்பட்டது. இறுதியில் அங்குள்ளோர் யாவரினதும் வாயினின்றும் 'சுவாமிஜி என்று ஒரே சமயத்தில் கதறி எழுந்த பேரலையினுள் தீ மூட்டப்பட்டது.
அஸ்தி சமாதி லிங்கப் பிரதிஷ்டை
18-3-91 மறுநாள் காலை எடுக்கப்பட்ட தவஞானியின் அஸ்தி, திருக்கோணை நாதனுக்கு அரண் செய்து நிற்கும், அழகும் பொலிவும் நிறைந்து பரந்து நின்று, நீள் அலைகள் பாய்கின்ற, புண்ணிய சமுத்திரத்தில் கரைக்கப்பட்டு அதில் சங்கமித்தது. அஸ்தியில் ஒரு பகுதி, சிவயோக சமாஜ யோகாச்சிரமத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அருள் நிறைந்த ஆச்சிரம மண்டபத்தின் வலது பக்கம், பிரம்ம ஞானி வசித்து வந்த உறைவிடமும், இடதுபக்கம் நூலகமும், இரண்டிற்கும் நடுவிலே கருவறை போன்று இந்த தீர்க்கதரிசியால் அமைக்கப்பட்ட உயர்ந்த பீடமும் காணப்பட்டது. குருதேவரின் அறை வாயிலில், "You are born for Higher things" 676ärp Splu 96ör 2 uusi GpsT 5 556og55 குறிக்கும் வாசகமும், மறுபுறமுள்ள அறை வாயிலில், 'Contentment is Natural Wealth', Gust gJub 676örp LD607GLD G)Lu76öt செய்யும் மருந்து என்ற கருத்தைத் தாங்கிய வாசகமும், கருவறை வாயிலில் ‘சிவ சிவ' என்ற சிவநாமமும் எழுதப்பட்டிருந்தது.
கடும் தபயோகங்களை மேற்கொண்டு, தபசித்திகளைப் பெற்று, யோகாச்சிரமத்தை நிறுவிய தவஞானியின் புனித அஸ்தி, நடுவில் உள்ள பீடத்தின் மையத்தில் பக்தி சிரத்தையுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல்லாண்டு காலங்களுக்கு முன் வடகரைவீதியில் தபசாதனைகளை மேற்கொண்ட பொழுது, சுவாமிஜி பூஜித்த, அழகும் அருளும் மிக்க சிவனது அற்புத நிழலுருவம், பீடத்திற்கு மேல் சுவரில் பொருத்தப்பட்டது. காலாகாலமாக அங்கிருந்த பரம்பொருளின் திருவுருவம் அதன் சத்தியப் பொருளுடன் ஒன்று கூடி இரண்டறக் கலந்தது. குருதேவரின் அஸ்தி சமாதிக்கு மேல், நடேசர்சிலை வைக்கப்பட்டது.
- 3S.

Page 95
அதேவருடம், ஆனிமாதம் ஏழாம் திகதி அப்பிரம்ம ஞானியின் அஸ்தி சமாதிக்கு மேல், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடாகியிருந்தது. இந்த சிவலிங்கத்தை காஞ்சி காமகோடி அருட்திரு காஞ்சிப் பெரியாரைக் குருவாகவும் அவரது அருளாசியைப் பெற்றவருமான, பூரீமத் சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷிஓம் ஷர் அவர்களே இந்தியாவிலிருந்து கொண்டு வந்தவர். இந்த சிவலிங்கம் சுவாமிஜியின் ஸ்தாபனத்துக்கு திருவருள் கூடி வந்த சரித்திரம் அற்புதமானது.
சுவாமிஜி, தமது பக்தர்களுக்கு, தரிசனமளிப்பதற்காக கொழும்பு, கிறீன்லன்ட்ஸ் ஹோட்டலில் ஒரு சமயம் தங்கியிருந்தார். அந்நேரம், பூரீமத் சுவாமி ஷிஓம்ஷர் அவர்கள் இத்தவஞானியைத் தரிசிப்பதற்காக அங்கு சென்றிருந்தார். சில நிமிடங்களே இவர்களது சந்திப்பு அமைந்தது.
சுவாமிஜியின் சைதன்யப் பேரலைகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட சுவாமி ஷிஓம்ஷர்; திருவருள் கூடினால், பாரதத்திலிருந்து ஐந்து சிவலிங்கங்களைக் கொண்டு வரப்போவதாகவும், அதில் ஒவ்வொன்றையும், இலங்கையின் ஒவ்வொரு பாகத்திற்கும் அனுப்ப போவதாகவும், கிழக்குப் பகுதிக்கு உரிய சிவலிங்கத்தை சுவாமிஜியிடமே கொடுக்கப் போவதாகவும், பணிவுடன் கூறினார். அத்தகைய ஒரு எதிர்பார்ப்பை அவரிடத்தில் காத்திருந்து கேட்டது போன்று, அந்தத் தீர்க்கதரிசியின் திருமுகம் மலர்ந்து, கைகளைக் கொட்டி, 'அச்சா' என்று கூறி அழகாகச்சிரித்தார். அந்நேரத்தி லேயே தமது உளவிருப்பு நிறைவேறிய உணர்வு, பூரீமத் சுவாமி ஷிஓம்ஷருக்குக் கிடைக்கப்பெற்று, விடை பெற்றார்.
ஏற்கனவே அமைந்த கரு, பூரீமத் சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷிஓம்ஷர் அவர்களால் சிவலிங்கம்; கையளிக்கப்பட்டது. 7-6-91, காலை சிவயோக சமாஜ யோகாச்சிரமத்தில், பூனிமத் சுவாமி கெங்காதரானந்தாஜியின் அஸ்தி சமாதிக்கு மேல், ஆகம விதிப்படி கிரியைகள் செய்து, இச்சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தமது குருதேவரின் மகா சமாதிக்கு வந்தது போன்று, அஸ்தி சமாதி லிங்கப் பிரதிஷ்டைக்கும் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து, கலந்து, தரிசித்துச்
36 -

சென்றனர். தொடர்ந்து ஒரு மண்டல காலம் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, 21-7-91 இல் கும்பாபிஷேக தின மண்டல பூர்த்தியும் அஷ்டோத்திர சத சங்காபிஷேகமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்தும் அங்கு அஸ்தி சமாதி லிங்கத்திற்கு அந்தணரினால் நாள் தோறும் பூஜைக் கருமங்கள் செய்யப்பட்டு வருகிறது.
சுவாமி கெங்காதரானந்தா
சமாதியின் புதுப்பொலிவு
குருதேவரின் மகாசமாதியின் பின், அவரது வெளியீடான
'வஜனாம்ருதம்' என்ற அரிய நூலை, ஆங்கிலத்தில் மொழி
GMLu uuri šg, "Nectoreous Sentences" 6T 6ör p g5 Goo GaoLü L foi
வெளியிடுவதற்கு, ஏற்பாடு செய்யப்பட்டது.
அஸ்தி சமாதி லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்ட கருவறையின் வாயில் முகப்பில், "ஓம் கெங்காதரானந்தாய நம” என்ற குருதேவரின் திருநாமம் எழுதப்பட்டிருந்தது. நூல் வெளியீட்டு விழாவின்போது 'சிவயோக சமாஜ யோகாச்சிரமம்" என்று பொறித்திருந்த ஆச்சிரம முகப்பில், "பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா சமாதி" என்ற திருநாமப் பலகையை, கெளரவ இந்து சமய, இந்து கலாச்சார, ராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ் அவர்கள் திரைநீக்கம் செய்தார்கள். உள்ளே மண்டபத்தில், அஸ்தி சமாதி லிங்கத்தின் வெளிப்புறத்தின் இரு பக்கமும், குருதேவரின் திருவுருவ நிழற்படங்களை, கெளரவ துறைமுக கப்பற்றுறை ராஜாங்க அமைச்சர் எம்.எச். மஃஹரூப் அவர்களும் வட கிழக்கு மாகாண சபை கெளரவ ஆளுனர் லெப்டினன் ஜெனரல் , நளின் செனவிரட்ணா அவர்களும், திரை நீக்கம் செய்தனர்.
சிவலிங்கப் பேரழகு
பக்தர்கள் சென்று தரிசித்து மனசுகமடையும் குருஜியின் அறையில், சுவாமிஜி இருந்து பேசும் கட்டிலில், வழமையாக இத்தவஞானி பக்தர்களைப் பார்த்துப் பேசுவது போன்று, கருணையோடு கூடிய, மனதை நெகிழ்த்தி, விழிநீர் சிந்தவைக்கும் பெரிய திருவுருவ நிழற்படம் வைக்கப்பட்டிருக்கிறது. எத்திசையில் நின்று அத் திருவுருவை நோக்கினாலும், நோக்குபவரை அருள் சுரந்து அடைக்கலம் தந்திடும்
- 137 -

Page 96
அபூர்வமான விழித்தாமரைகள் அமைந்திருப்பது அந்த நிழற்படத்தின் விசேஷ அம்சமாகும். பக்தர்கள் அதன் முன் போடப்பட்டுள்ள புற்பாயில் அமர்ந்து, தம் குருஜியுடன் பேசி
மனநிறைவுடன் செல்கின்றனர்.
ஆச்சிரமத்தில் காணப்படும் குருதேவரின் நிழல் உருவங்களுக்கு நாளாந்தம் மலர்களும், மாலைகளும் சாத்தி, அவரை வணங்கி, தமது துன்பதுயரங்களைக் கூறி, இன்றும் ஆறுதல் அடைந்து செல்கின்றனர். மகாஞானியின் அஸ்தி சமாதி லிங்கத்திற்கு முன் தம் குருவின் பிரதி விம்பத்தைப் அதில் கண்டு பக்தர்கள் ஆறுதலும் மன அமைதியும் அடைகின்றனர்.
அஸ்தி சமாதிக்கு மேல் வைக்கப்பட்டிருக்கின்ற சக்தி வாய்ந்த சிவலிங்கத்தின் பேரழகு அற்புதகரமானது. மேலே காவி கலந்த நிறத்தாலானது அந்த சுயம்புலிங்கம். அதன் கீழமைந்த ஆவுடையைச் சுற்றி, காவி நிறத் துணியால் அலங்கரித்து விட்டாலோ, அத்திருவடிவம் கண்கொள்ளாக் காட்சிதனைக் காட்டி நிற்கும். அருள்மயமான அந்தத் தெய்வீக புருஷரே தம் முன்னால் தரிசனம் தருவது போன்று மெய்சிலிர்க்கும் அற்புத அனுபவத்தைப் பக்தர்கள் பெற்று
வருகின்றனர்.
சுவாமிஜி எம்மோடு இருக்கின்றார்; பேசுகின்றார்; நம்மை வழிநடத்துகின்றார்; நன்மைகளைத் தருகின்றார்; என்ற தைரியம், ஆறுதல் அவர்களை அரவணைத்து நிற்கிறது. சுவாமிஜியின் அஸ்தி சமாதி வைக்கப்பட்டு, அதன் மேல் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சலனமின்றி பரிபூரண ஒளிப்பிழம்பாக அம் மகான் அங்கு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார். நம் அனைவரையும் பேரன்பால் ஈர்த்த, வேதனை தீர்த்த, நல்வழிகாட்டிய, கேட்பதை அள்ளித் தந்த, ஆன்மீக உயர்வளித்த, முக்காலமும் உணர்ந்த திரிஞானி இன்று சமாதியில் அமர்ந்து அருள் பரப்பிக் கொண்டிருக்கி ன்றார்.
- B -

சற்குருவின் வழி நிற்போம்
பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் மனக் கஷ்டங்களை ஏற்று, உடற் கஷ்டங்களால் வருந்தி, துயர் துடைத்த மகான், தியாகப் பிழம்பாகச் சமாதியில் வீற்றிருக்கின்றார்.
எல்லையில்லாத் தியாகங்களைச் செய்து, கருணை மழை பொழிந்த அம்மகானுக்கு, பக்தர்கள் என்ன கடன் செய்யப் போகின்றனர்?
அவரவர் ஆத்ம தாகத்திற்கு ஆன்மீகவித்திட்ட அருட் கடலுக்கு என்ன பணி செய்யக் காத்திருக்கின்றனர்?
திருவுடலோடு இருந்த போதும், மகா சமாதி அடைந்த பின்பும், அம்மகானின் அருள்பிரவாக ஊற்றிற்கு என்ன கைமாறு செய்யப் போகின்றனர்?
வர்ணிக்க முடியாத எல்லையில்லாத தியாகங்களைச் செய்த குருமணிக்கு, இப்பிறவி மட்டுமல்ல-எத்தனையோ பிறவிகளுக்கும் பக்தர்கள் நன்றிக் கடன் பட்டிருக்கின்றனர். குருதேவர் திருவுடலால் வாழ்ந்து மகா சமாதி அடைந்தாலும் அடுத்த தெய்வீக உலகிலே, தமது நுண்ணிய தெய்வீக சரீரத்துடன், தமது பக்தர்களுக்குத் தொடர்ந்தும் உடலோடு கூடியிருந்தபோது செய்த அத்தனை அருட் செயல்களையும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்; அருள் பாலிப்பார் என்பது பக்தர்களுக்கு ஆறுதல் அளிக்கின்றது. நம் அருட்குரு இப் பூவுலகில் வாழ்ந்த காலத்தில், திருவாய் மலர்ந்தருளிய சத்திய வாக்கும் இதுவேயாகும்.
எனவே வரப் போகும் எத்தனை ஆண்டுகள் மேற்கொண்டு கழிந்தாலும், நேரில் இப் பிரம்ம ஞானியைத் தரிசிக்கும் பேற்றை அடைந்தவரும், அடையாதவரும், இம் முக்காலமும் உணர்ந்த மகாஞானியை வேண்டி நின்றால், வேண்டுவார் இறைஞ்சி வேண்டுவதை, அவரது திருவருளால் நிச்சயம் பெறுவர்.
இந்தியாவின் கேரளத்தில் ஜனித்து, இலங்கையின் பாடல்பெற்ற ஸ்தலம் அமைந்த திருகோணமலையில், தன் திருவுடலைச் சமாதியாக்கிய தெய்வீக புருஷர், பூறிமத் சுவாமி
- 139 -

Page 97
கெங்காதரானந்தா அவர்கள், ஓர் பிரம்மஞானி என்பதை அவரது வாழ்வும், அவரிடத்து மலர்ந்து மணம் பரப்பி நிலைத்து நிற்கும் ஆத்ம சைதன்யமும், தெற்றெனக் காட்டி நிற்கின்றன.
சத்திய சொரூபமாக - சாந்த சொரூபமாக - சச்சிதானந்த சொரூபமாக, மரணமிலாப் பெருவாழ்வினைக் கொண்ட பிரம்ம ஞானியின் மலர் ஒத்த தாளிணைகளைப் பணிந்திடின், அதன் சைதன்ய சக்தி என்றும் வழிநடத்திச் செல்லும் - என்றும் இன்பமே பெருகும் - சாந்தி பொழியும்.
ஓம் சாந்தி - சாந்தி - சாந்தி
குருதேவரின் ஆத்ம அனுபூதி மலர்ந்து மணம் கமழும் பஜனைப் பாடல்கள்
இராகம் : சகானா (1) மரகத மலை போன்ற தென் கயிலை மாமலையில்
நர்த்தனம் ஆடும் நர்த்தக மணியே மரகதக் கால் சிலம்பொலி கேட்க திருமலை இறைவா
வந்தேன் உன் தாள் இணைக்கு வருக வருக என்று வரவேற்று வரம் தந்த வரதநாயகா வரருஜி ருஜித்தோர் இகருஜி அறியார் சிவனே சிவனே.
இராகம் : காபி நீராம்பல் பூமணத்தை நீர்வாழ் நீரினம் நுகர்வதில்லை நீரலையில் கலந்து வரும் சிலம்பொலி நாதத்தை
மூடர்கள் மூடதையால் உணர்வாரில்லை. மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் என்ற முப்பெரும் ஸ்தல
பெருமையை உணர்ந்தோர். முப்பும் பிணியும் அகற்றி முக்திஇன்பம் அடைவார்
ஐயம் இல்லை என் ஐயனே.
- 40 -

இராகம் : சிந்து பைரவி உட்கண் திறக்கும் திறவுகோல் இங்குதான் உண்டு
வேறு எங்கும் தேட வேண்டாம் உச்சிமலையில் தவக்குகையில் உள்ளடக்கி
உள்நோக்கி இருந்தால் அகக்கண் திறக்கும் உண்மை கோரக்க முனிவர் செய்த தவப் பயனால் திருமலையில்
வந்தமர்ந்த திருமலைத் தேவா கொடுமைகளை மாளவைத்து அருள் புரியும்
அருட் பெரும் கருணைக் கடலே !
இராகம் : மலஹரி வேதனையும் சோதனையும் நிறைந்த உயிரோட்டம்
நிற்கும் வேளையில் உயிர்ப்பிக்கும் இரட்சகனே வத்சலப் பிரியனே உன் திருத்தாள் மகிமையை எவ்வாறு
எடுத்துரைப்பேன் சின்மையானந்தனே தெட்சண கயிலைமலை அமிர்தா உன் பொற்பாதத்தை
பத்ர புஷ்பம் தூவிப் பூஜிக்க அருள் புரிவாய்
இராகம் : மத்தியமாவதி மிலேச்சரால் அழித்தும் அழியாமல் நின்று செங்கதிர்
வீசி நிற்கும் செஞ்சடையவனே மானசீக லிங்கத்தை மனதால் பூஜை செய்து மெளனமாய் இருக்கும் மெளனிகளாலன்றி உன்னை வேறார் அறிவார் தங்கத் தமிழில் நொந்து நொந்து உருகி உன்
திருப்புகழ் பாடி வாழும் நல் அடியாரை தங்கப் பாத மலரில் வைத்து அணைத்திடுவாய்
சோபித லிங்க அருள்மணியே.
(அ) இராகம் - மோகனம் சிவயோக சித்தகலை கண்டு தெளிந்து சிவத்தெளிவார்ந்த சிவயோக சித்தர்கள் உண்ணும் சிவாமிர்த மதுரமே சிவயோக வித்தையால் சரமேற்றி நடுநாடி பிளந்தெடுத்த சிவயோக நுண்பொருளாம் உன் திருப்பாதமே சிவபதமே.
(ஆ) சித்தமெல்லாம் உனது சிவ சிவனே
மோகமனம் ஒடுங்கி மோன நிலை கண்ட மோன சுகம் தான் ஆத்ம சுகம் - சிவ சிவ சிவனே
(சித்தமெல்லாம்)
- 41 -

Page 98
(இ)பொய்யர் தம் வஞ்ச மனப்புரங்கறுத்து புரிந்திடும் பொய்ப் - புரட்டு
மெய்யுடை நெஞ்சப் புரத்தறுவாசல் எனை இனி என்
= செய்யும் பொய்யுற வாடிடும் பொய் மனத்தார் உறவு புனர்ப்பறுத்து பொய்மையை நீக்கி மெய்ஞான சுத்த சிவ நிலை உணர்ந்தேன் - ஜெகத்தீரே.
(ஈ) இனி என்ன துன்பமோ - சிவ சிவனே
அன்று முதல் இன்றளவில் ஆரமுதம் பொழிந்தனையே - சிவ சிவன்ே !rg്വമെടാn கலந்திரு தாக (இனி என்ன) காலிசனயில் ச5 து 3டுபன்சிலுசினே -இரவிசான்ன (உ) வேட்கை தரும் வேதனையால் வெந்துருகும்
மேனியொடு மனமும் அருள் வேட்கை தரும் வேதியனின் வேதியினில்
விளங்கும் அருள் உணர்வென்றும் நீக்கமிலா நின்றொளிரும் வெண்ணிலவால் நீராம்பல்
மலர்தல் போன்று ஆக்க வினை வேதனைகள் தீர்ந்து பிரசாந்த நிலை
அடைந்த மனமே மனம்
இராகம் : ஆரபி
ஐந்தெழுத் தோதி நின்ற அகமுக மகிமையாலே பந்த பாசங்கள் தந்த பற்றெனும் வேட்கை ஓய்ந்து சந்ததம் நெஞ்சில் ஊறும் சந்தேகம் அகற்றி ஞான அந்தமில் அமிர்தம் ஈந்த அடியினை வாழ்க வாழ்க.
இராகம் : சுனாதவினோதினி
வாழ்க வாழ்கவே என் சங்கரன் திருவடி வாழ்க வாழ்கவே மெய்கண்டான் திருப்பாதம் வாழ்க வாழ்கவே செஞ்சடையான் சேவடி வாழ்க வாழ்கவே சிவயோக சித்தி தந்த குருமணியின் திருப்பாதமே.
- 142 -

உறையுளில் இன்றைய தரிசனம்

Page 99
க பிரதிஷ்டை
சிவலிங்
 

சுவாமி கெங்காதரானந்தா சமாதி

Page 100
முந்தை வினை உவந்தேற்கும் செங்கமலப் பொற்பாதம்
155868
مکsستہ (2 کل 0 || ""
 

- 14로 -

Page 101


Page 102


Page 103