கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வங்கியியல் சட்டங்களும் நடைமுறைகளும் பகுதி 1

Page 1


Page 2


Page 3

வங்கியியல் சட்டங்களும் நடைமுறைகளும்
பாகம்
AW AND PRACTICE OF BANKING
PART
ஆக்கம் * ğ560)yréfarÄil as ib Urc5, A. I. B. (Cey.)
வணிக மஞ்சரி வெளியீடு - 1

Page 4
முதற் பதிப்பு - ஆவணி 1987
சகல உரிமைகளும் ஆக்கியோனுக்கே உரியவை
அச்சுப்பதிவு : திருமகள் அழுத்தகம் சன்னகம்

அணிந்துரை
வங்கியியல் சட்டமும் நடைமுறைகளும் என்ற இந் நூல் மிக வும் வரவேற்கத்தக்கதும் பாராட்டுதலுக்குரியதுமாகும். இவ்வாருன சட்ட நூல் ஒன்று தமிழில் வெளிவருவது மிகவும் பயன்தரக்கூடிய செயலாகும். ஆங்கில மொழியில் உள்ள வங்கியியல் சட்ட நூல் களைப் படித்துத் தெரிந்து கொள்வதற்குத் தேவையான ஆங்கில ஞானத்தைப் பெற்றிராத அனைவருக்கும் மிகவும் உகந்தநூல் இது எனக் கூறலாம். தமிழ்மொழி மூலம், "இலங்கை வங்கியாளர் நிறுவனம்” போன்றவை நடாத்தும் பரீட்சைகளுக்கும், மற்றும் வங்கிகளில் நடாத்தப்படும் உள்ளக பதவி உயர்வுப் பரீட்சைகளுக்குத் தோற் றும் வங்கி ஊழியர்களுக்கும் இந்நூல் பெரும் பயன் அளிக்கும் எனத் திடமாக நம்புகின்றேன்.
வெவ்வேறு தலைப்புக்களின் கீழ், வங்கியியல் சட்ட விளக்கங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நூலினை ஆக்கிய திரு. து. ரகு எனக்கு அநேக காலமாகவே நன்கு தெரிந்தவர். எமது நிறுவனத்தில் ஓர் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இவரது இந்த நன்முயற்சி மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைகின்றது. இதன் தொடர்ச்சியாக மற்றைய பகுதிகளையும் உள்ளடக்கிய முழு நூலினை அளிப்பது இவரது கடமையாக அமையும் என நான் கருதுகின்றேன்,
வங்கியியல் சட்டத்தையும் நடைமுறைகளையும் நன்கு கற்றிட ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் இந்நூல் வாசிக்க நேர்ந்தால் வாசிப்பின்பம் காண்பர் என்பதோடு வங்கியியல் சட்டம் மற்றும் நடைமுறைகள் என்பவை தொடர்பில் தாம் பெற்றுள்ள சட்ட ஞானத்தை மேலும் வளர்த்துக் கொள்ளக்கூடும் என்பது எனது திட மான நம்பிக்கையாகும். இந் நூலாசிரியர் இதனை ஒத்த இன்னும் பல நூல்களை எழுதி வெளியிட இறைவன் அருள்பாலிப்பார் என்பதில் ஐயமில்லை.
மக்கள் வங்கி, át. *jj19u/060ófuló, M. Com. பிரதேசத் தலைமை அலுவலகம், பிரதேசமுகாமையரினர் மட்டக்களப்பு.
1987-07- 5

Page 5
முன்னுரை
வங்கியியல் சட்டமும் நடைமுறைகளும் பற்றிய அறிவினை வங்கிகளில் கடமையாற்றும் ஒவ்வொருவரும் நன்கு பெற்றிருத்தல் அவசியம். வங்கியியல் டிப்ளோமா போன்ற இலங்கை வங்கியாளர் நிறுவனம் நடாத்தும் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கும், வங்கி களில் பதவி உயர்வுப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கும், மற்றும் பல்கலைக்கழக வணிகப் பட்டதாரி மாணவர்களுக்கும், மற்றையோ ருக்கும் இந்நூல் பெரிதும் உதவும் என நான் நம்புகின்றேன். மேற்குறிப் பிட்ட பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் அவற்றை நன்கு கற் றுக்கொள்வதற்குத் தமிழ் மொழியில் போதிய நூல்கள் காணப் படாமையால் பெரிதும் கஷ்டப்படுகின்றனர்.
இக்குறையாடடை அகற்றும் நோக்குடன் எம்மால் முன்னர் அச்சிட்டு வெளியிடப்பட்ட வினவிடைப் பிரசுரம் அநேகருக்குப் பயன்பட்டமையை என்னல் அறியக்கூடியதாக இருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக இந் நூலினை வெளியிட வேண்டுமென்ற ஆர்வம் என்னுள் எழுந்தது.
இந் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்பாடுதளே கருத்துக்களோ எனது சுய முயற்சியின் விளைவாக ஆக்கப்பட்டவையல்ல. அதற்கான ஆற்றலைப் பெற நான் இன்னும் கற்கவேண்டியன அதிகம் உண்டு. பல ஆங்கில அறிஞர்களின் நூல்களைத் தழுவியே இந் நூல் ஆக்கப் பட்டுள்ளது. ஆங்கில நூல்கன் நேரடியாகவே கற்போர் இன்னும் அதிக அறிவினைப் பெறமுடியும் என்பது எனது நம்பிக்கையாகும். இந்நூலைத் திறம்பட அழகிய தமிழில் எழுதும் தமிழ் அறிவு கூட எனக்கு உண்டு எனத் திடமாகக் கூறமுடியாதுள்ளது. இருந்த போதிலும் முடிந்தவரை முயற்சி செய்துள்ளேன். தமிழில் கூறப் பட்ட சட்ட விளக்கங்கன் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியு மயின் நான் எனது முயற்சியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளேன் எனக் கூறமுடியும்.
இந்நூலைக் குறுகிய காலத்தில் சிறப்பாக அச்சிட்டு உதவிய
சுன்னகம் திருமகள் அழுத்தகத்தினருக்கும் எனது நன்றி உரித் தாகுக. அத்தோடு இந்நூலின் பார்வைப் படிகளைப் பார்ப்பதில்

V
தனரா ஊக்கம் காட்டிய திரு. கல்வன் சேயோன் அவர்கட்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். இவர் காட்டிவரும் ஊக்கம் மென் மேலும் என்னை இதன் தொடர்ச்சியாகப் பகுதி 2இன் எழுதுவதற்குத் துண்டுதலாக அமைகின்றது என்ருல் அது மிகையாகாது.
எமது மதிப்பிற்குரிய மட்டக்களப்பு மக்கள் வங்கி, பிரதேச முகாமையானர் திரு. க. சுப்பிரமணியம் அவர்கள் ஆரம்ப காலத்தில் நான் வங்கிப் பதவி உயர்வுப் பரீட்சைகளுக்குக் கற்கின்ற போது வங்கியியல் சட்டங்களைத் திறம்படப் போதித்து என்போன்ற பலருக்கு ஊக்கம் அளித்தவர். அன்னர் எனது நூலுக்கு அணிந்துரை வழங்கியமையை ஒரு பெரும்பேருகவே கருதுகின்றேன்.
இந்நூலில குறைகள் உள்ளன என்பதைத் தெரிந்தும் அவசரம் அவசரமாக வெளியிடுகின்றேன். நிறைகொள்ளல் உங்கள் கடன். அத்துடன் எனது ஆக்கங்கட்கு உங்கள் தொடர்ந்த ஆதரவின் ந/டி நிற்கின்றேன்.
லேட்டன் வீதி, துரைசிங்கம் ரகு மானிப்பாய்.
1987-07-08

Page 6
8.
9.
10.
ll.
12.
13.
14
I5。
16.
7.
18.
பொருளடக்கம்
வங்கியாளரும் வாடிக்கையாளரும் வங்கியாளரும் அவரது இரகசியம் காக்கும் கடப்பாடும் தகுதிநிலை விசாரணைகளும் அவற்றுக்கு விடையிறுக்கும் முறைகளும் கொடுப்பனவுகளைத் தனதாக்கல் அல்லது கொடுப்பனவுகளின் ஒதுக்கீடு
சரியீடு செய்தல் . a கணக்குகள் ஆரம்பித்தலும் அவற்றைக் கொண்டு நடாத்துதலும் வங்கியாளரின் பணம் கொடுக்கும் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் . பணக் கொடுப்பனவு நிறுத்துதல்
வாடிக்கையாளரின் கணக்கினை மூடுதல் . பற்றுவரவுப் புத்தகமும் கணக்குக் கூற்றும் e 0, கைமாறும் தன்மை உண்டியல் ஒப்புக்கொள்ளல் அல்லது பொறுப்பேற்றுக்கொள்ளல் .
காசோலைகள் a s e. காசோலைகள் குறுக்குக் கோடிடப்படல் .
பணம் செலுத்தும் வங்கியாளர் is is சேகரிக்கும் வங்கியாளர் d வைத்திருப்பவன், பெறுமதிவழி வைத்திருப்பவன், முறைப்படி வைத்திருப்பவன் - புறக்குறிப்பிடுதல்
பக்கம்
16
22
28
36
43
52
56
62
7.
87
96.
104
14
I38
4.

அத்தியாயம் 1 வங்கியாளரும் வாடிக்கையாளரும்
anui SGua SMT i (Banker) :
வங்கியாளர் என்ற பதத்திற்கு இதுவரை நேரடியாக எந்தவிதமான வரைவிலக்கணமும் கூறப்படவில்லை. ஆனல் பலவித நியதிச் சட்டங்கள், ஒவ்வோர் குறித்த தேவைக்காகவும், நோக்கத்திற்காகவும், ஒவ்வோர் சந்தர்ப்பத்திலும், ஒவ்வொரு வரைவிலக்கணத்தைக் கூறுகின்றன. உதாரணமாக எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் (1927 இல. 25) பிரிவு 2 வங்கியாளர் என்ற பதத்தினை விளக்குகின்றது. "ஒரு தொகுதி ஆட்கள் ஒருங்கிணைந்தோ, இல்லாமலோ, வங்கித் தொழிலைக் கொண்டு நடத்துகின்றபோது, அவர்களை வங்கியாளர்" எனக் கூறுகின்றது. இதனை நாம் சுருக்கமாகக் கூறும்போது, "வங்கித் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற யாராவது ஒருவர் வங்கியாளர்" எனலாம். இவ்வாறு கூறப்படுவதினுல் "வங்கித் தொழில்" என்ருல் என்ன என்ற கேள்வி நம்மிடையே எழுவது இயல்பேயாகும்.
வங்கித் தொழில் : பாரம்பரிய வரைவிலக்கணம் :
வங்கித் தொழில் என்பதற்கு பாரம்&ரிய வரைவிலக்கணம் ஒன்று கூறப்பட்டுவந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு அண்மைக் காலத்தில் இங்கிலாந்தில் நடந்த வழக்கு ஒன்றில், மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில், கீழ்க் குறிப்பிடப்படும் தொழில்களைக் கொண்டு நடாத்தும் நிறுவனம் ஒன்றை வங்கியாளர் என்று குறிப்பிட லாம் எனக் கூறியது.
gå ösóL'ILL L- Augpš5 United Dominions Trust Ltd. v KirkWood (1966) என்பதாகும்.
இதற்கமைய குறித்த 3 தொழில்களைக் கொண்டு நடாத்தும் நிறுவனம் ஒன்று "வங்கி” ஒன்றின் குணுதிசயங்களைக் கொண்டு இருக்கும் எனக் கூறப்படுகின்றது,
அவையாவன :
1. தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தினைப் பெற்றுக் கொள்வதுடன், அவர்களுக்காக காசோலைகளையும் வேறு கருவிகளை யும் சேகரித்துக் கொடுக்கவேண்டும்.

Page 7
- 2 -
2. தம்மீது வரையப்பட்ட காசோலைகளையும் வேறு கட்டளைகளையும் ஏற்று, அவை கொடுப்பனவற்றிற்கு எனச் சமர்ப்பிக்கப்பட்டபோது அதற்கு அமைய நடந்து, உரிய முறையில் தமது வாடிக்கையாளர் களின் கணக்கில் அவற்றைப் பற்று (Debit) வைத்தல் வேண்டும். 3. நடைமுறைக் கணக்கொன்றினையோ அல்லது அதனை ஒத்த கணக்கு ஒன்றினையோ வைத்திருந்து, அதற்கான தமது புத்தகங்களில் அக்கணக்குகள் தொடர்பான பற்று வரவுகளைப் பதிதல் வேண்டும்.
எப்படியாயினும் இதுதான் வங்கித் தொழில் என்ருல் என்ன என்பதனை விளக்கும் ஒரு கட்டாய வரைவிலக்கணமாக அமையமாட் டாது என்பதனையும் நாம் அவதானிக்க வேண்டும். இது ஒரு நடைமுறை அனுபவ மூலம் நீதிமன்றங்கள் தீர்மானிக்கும் ஒரு விதியாகும். மேலும் இவ்விடத்தில் நாம் எமது அண்மைக்காலக் கம்பனிகள் தொடர்பான சட்டமூலம் பற்றி அறிந்து இருத்தல் அவசியம்.
1982ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க
கம்பனிகள் சட்டம்
இச் சட்டத்தின் மூலம் வங்கிகள் தொடர்பான ஏற்பாடுகள் கூறப்
பட்டுள்ளன. இச் சட்டம் 1982 மே மாதம் 20ஆம் திகதி அத்தாட்சிப்
படுத்தப்பட்டது.
இச் சட்டத்தின் பிரிவு 411இல் "வங்கித்தொழில் கம்பனி" என்பதன் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு "வங்கித்தொழில் கம்பனி" என்பது பின்வரும் தொழில் வகைக ளுள் ஏதேனும் ஒன்றில் அல்லது ஒன்றிற்கு மேற்பட்டவற்றில் அது ஈடுபட்டிருக்கின்ற போதிலும், காசோலை மூலமான, வரைவுமூலமான, அல்லது கட்டளை மூலமான கேட்கும்போதான மீளப் பெறுகைக்கு அமைவாக, எந்தக் கம்பனி நடப்புக் கணக்கில் அல்லது வேறுவகையிற் பண வைப்புக்களை ஏற்றுக்கொள்வதைத் தனது பிரதான தொழிலாகக் கொண்டு நடாத்துகின்றதோ அந்தக் கம்பனி என்று பொருள்படும். குறித்த தொழில் வகைகளில் முக்கியமானவை சில பின்வருமாறு :
1. பணத்தைக் கடன்வாங்குதல், திரட்டுதல் அல்லது எடுத்தல். கடன்
கொடுத்தல் அல்லது முற்பணம் கொடுத்தல்.
2. அரசாங்கத்திற்காக அல்லது உள்ளூர் அதிகார சபைகளுக்காக அல்லது வேறெவரேனும் ஆளுக்காக அல்லது ஆட்களுக்காக முகவ ராகப் பதிற் கடமையாற்றுதல்.
3. பொதுக் கடன்களுக்காகவும்,தனியார் கடன்களுக்காகவும் ஒப்பந்தம் செய்தலும், அதற்காகப் பேரம் பேசுதலும் அதன் வழங்குதலும்?

10.
I.
五罗。
18.
- 3 -
ஒவ்வொரு வகையான உத்தரவாதம், நட்டோத்திரவாத தொழிலைக் கொண்டு நடத்துதல்.
கைத்தொழில் முயற்சிகளுக்கு நிதியுதவி அளித்து அவற்றை மேம்படுத்துதல்,
நம்பிக்கைப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்றலும் நிறை
வேற்றலும்.
நிறைவேற்றுனராக நம்பிக்கைப் பொறுப்பாளராக மரணச் சொத்துக்களின் நிருவாகத்தைப் பொறுப்பேற்றல்.
வங்கித் தொழில், கணக்கீடு, பெறுமான மதிப்பீடு செயற்திட்டம் நாணய மதிப்பீடு போன்ற விடயங்கள் என்பவற்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்தல்.
வாடகைக் கொள்வனவு சேவைகள், தொழிற்சாலை வசதிகள், குத்தகை மற்றும் குதப்படுத்தல் ஆகிய தொழில்களில் ஈடு tu Fg5ão.
அபிவிருத்திக்காக நடுத்தர, நெடுங்காலக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல்.
முகாமை, உசாத்துணைச் சேவைகளில் ஈடுபடுதல்.
முன்புள்ள அல்லது புதிய தொழில் முயற்சி அல்லது கைத் தொழிலை மேம்படுத்த நிதியுதவியும், ஊக்குவிப்பும் அளித்தல்,
கம்பனி ஒன்றின் தொழில் மேம்பாட்டிற்கு அல்லது முன்னேற்றத்
திற்கு இடைநேர் விரிவான அல்லது உகந்த வேறு எல்லாவற் றையும் செய்தல்.
arg6&uJ6Ti (Customer):
வாடிக்கையாளர் என்ற பதத்திற்கு நியதிச்சட்ட ரீதியான வரை
விலக்கணம் கிடையாது. ஆனல் வங்கி ஒன்றுடன் தனது பெயரில் கணக்கினை ஆரம்பிப்பதற்கு ஒப்பந்தம் ஒன்றின் ஒருவர் உருவாக்கி இருந்தால், அன்னவரை வங்கியின் வாடிக்கையாளர் என்று அழைக் கலாம். எனத் தீர்க்கப்பட்ட வழக்குத் தீர்ப்புக்கள் கூறுகின்றன.
வங்கியுடன் பரிவர்த்தனை நெடுங்காலம் செய்து வரவேண்டும்
என்பது முக்கிய விடயமல்ல. உறவுமுறையானது ஓர் ஒப்பந்த ரீதி யானது என்றபடியால், வாடிக்கையாளர் ஒருவரின் விண்ணப்பம் அல்லது கோரிக்கை வங்கியினல் ஏற்கப்பட்ட உடனேயே அங்கு ஒப்பந்தம்

Page 8
- 4 -
உருவாகி உறவு முறையும் உருவாகி விடும். எவ்வளவு காலம் இவர்க ளிடையே பரிவர்த்தனை அல்லது கொடுக்கல் வாங்கல் நடந்தது என்பது முக்கியமல்ல. வாடிக்கையாளராக வர இருப்பவரின் விண்ணப்பம் வங்கியினுல் ஏற்கப்பட்ட உடனேயே அவர் வங்கியின் வாடிக்கையாள ராகி விடுகின்றர். Ladbroke w Todd (1914) என்ற வழக்கின் நிகழ்வுகள் பின்வருமாறு:
* பெறுபவன் கணக்கில் மட்டும்” என அறிவுறுத்தல் இடப்பட்ட காசோலை ஒன்று தபாலில் திருடப்பட்டது. மோசடிக்காரன், பெறுபவன் பெயரை மோசடியாக சாட்டுதல் செய்து தானே பெறுபவன் என நடித்து அப்பெயரில் கணக்கு ஒன்றினை வங்கியில் திறந்து கொண்டான். பின் அவனது வேண்டுகோளின் பெயரில் காசோலை விசேடமாக விரை வில் தீர்வையாக்கப்பட்டு அவனது கணக்கில் வரவு வைக்கப்பட, அடுத்த நாளே அத்தொகையை அவன் எடுத்துக்கொண்டு தலைமறை வாகி விட்டான். இங்கு வங்கி தனது வாடிக்கையாளன் ஒருவனுக்கே அக் காசோலையை சேகரித்தது என்றும், ஆனல் கணக்கு திறப்பதில் கவனமின்மையாக நடந்தது என்றும், எனவே தனக்குரிய சட்ட ரீதி யான பாதுகாப்பினை இழந்து விட்டது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. எனவே 1914ஆம் ஆண்டின்பின் தொடர்ந்து நெடுநாளைய பரி வர்த்தனை அல்லது கொடுக்கல் வாங்கல் ஏதாவது அங்கு இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்றும், கணக்கு ஆரம்பிப்பது காசோ லைகள் சேகரிப்பிற்கு என ஏற்கப்பட்ட உடனேயே உறவுமுறை உருவாகி விடும் என்றும், அந்த குறித்த நபர் வங்கியின் வாடிக்கையாளர் என்றும் கூறப்பட்டது.
1914ஆம் ஆண்டிற்குமுன், தொடர்ந்த பரிவர்த்தனையையும், கணக்கு ஒன்றினையும் கொண்டு நடாத்துதலே ஒரு வாடிக்கையாளன் என்ற பதத்தின் அர்த்தம் எனப் பொதுவாகக் கூறப்பட்டு வந்தது. இந் நிலைமை மேற்கூறிய 1914ஆம் ஆண்டு வழக்காகிய Ladbroke வழக்கின்யின் மாற்றம் அடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கணக்கு ஒன்று வாடிக்கையாளரால் வங்கியுடன் நடாத்தப்பட்டுக் கொண்டு இருப்பது முக்கியமானதாகும். ஒரு தனிப்பட்ட நபருக்கும், வங்கிக்கும் இடையில் எத்தனைமுறை பரிவர்த்தனைகள் நடைபெற்றன என்பது முக்கியமானதல்ல. உதாரணமாக தனக்குச் செலுத்தப்பட வேண்டிய பல காசோல்களை ஒருவர் ஒரு வங்கியில் மாற்றிக்கொண்டே வந்தாலும், அவர் தனது பெயரில் கணக்கு ஒன்றின் நடாத்துவதற்கு விண்ணப்பித்து, அதனை வங்கி ஏற்காதவரை அவர் வங்கியின் வாடிக்கை யாளர் ஆக வரமாட்டார்.
a grussiúd : Great Western Railway Co. v London and County
Banking Co. Ltd. (1901).

- 5 -
வங்கியாளரின் கடமைகள்:
வங்கியாளன், வாடிக்கையாளன் தலையாய உறவுமுறை கடன் பட்டோன்-கடன் கொடுத்தோன் உறவுமுறையாகும். அதாவது வங்கி யில் கணக்கொன்றினை ஆரம்பிப்பதற்காக வாடிக்கையாளராக வர இருப்பவர் ஒரு தொகைப் பணத்தினை வைப்பில் இடும்போது வங்கி கடன்பட்டவராகவும், வாடிக்கையாளர் கடன் கொடுத்த ஒருவராகவும் ஊகிக்கப்படும். இந்த உறவுமுறை ஒரு வாடிக்கையாளர் வங்கியிடம் இருந்து கடன்பெறத் தங்கி இருக்கும்போது மறுதலையாக அமையும். தன்னிடம் வைப்பிட்ட பணத்திற்கு வங்கி ஒரு நம்பிக்கைப் பொறுப் பாளன் எனக் கருதமுடியாது. வங்கியானது அப்பனத்தினைத் தன் விருப் பின்படி பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆஞல் கேள்வியின்போது அப்பணத்தொகையானது செலுத்தப்படக்கூடியதாக இருக்க வேண்டும். மேற்கூறிய கடன்பட்டோன், கடன்கொடுத்தோன் போன்ற எளிய உறவு முறையைத் தவிர வங்கிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே உட்கிடையாக அமைந்த பல்வேறு உறவு முறைகளும் காணப்படுகின் றன, இதனுல் வங்கிக்குப் பல கடமைகளும் ஏற்படுகின்றன. இவற்றில், சாதாரண முகவராண்மைக் கடமை மிக முக்கியமானதாகும். இக் கடமைகளும், உரிமைகளும் அநேக தீர்க்கப்பட்ட வழக்குகள்மூலம் smrsavrulu "G6iraMrs. Sav Gypäsuudmrs, Joachimson v Swiss Bank Corporation (1921) என்ற வழக்கில் முக்கிய கடமைகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
முக்கிய கடமைகள் : 1. வாடிக்கையாளரின் பணத்தினை ஏற்றுக்கொள்வதும் அவர்களது காசோலைகளையும் மற்றும் பிற கருவிகளையும் சேகரித்துக் கொடுப் பதற்காக ஏற்றுக்கொள்வதும். 2. வாடிக்கையாளரின் எழுத்தில் வழங்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எதிராக வைப்பிட்ட முழுத்தொகையையுமோ, ஒரு பகுதித் தொகையையோ வங்கி அலுவல் நேரத்துள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கிளையிலோ அல்லது முன்னரே ஒத்துக்கொண்ட வேறு ஒரு கிளையிலோ செலுத்துதல். 3. ஒரு வரவு மீதியான கணக்கினை மூடும்போது நியாயமான கால
அவகாசம் கொடுத்தல். 4. வாடிக்கையாளரின் கணக்குகள் தொடர்பான விவகாரங்களும், மீதி
களும் தொடர்பில் அவற்றின் இரகசியம் பேணுதல். இவைகள் முக்கிய கடமைகளாகக் குறிக்கப்படுகின்றன.

Page 9
- - 6 جلسه
வங்கியாளரின் உரிமைகள் :
கீழ்க்காணும் உரிமைகள் உட்கிடையானவையாகும்.
1. வங்கி தனது சே ைவகளுக்கு நியாயமான தரகு கட்டன மொன்றை அறவிட முடியும். வட்டி அறவிடும்போது ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒரு குறித்த காலத்தில், நேரத்தில் மட்டுமே அறவிட முடியும். மற்றும் நேரங்களில் வாடிக்கையாளரின் சம்மதம் இன்றி அறவிட முடியாது.
2. தனக்குப் பணம் தேவைப்பட்டபோது, கடன் கொடுத்தவனுகிய வாடிக்கையாளன் ஒருவன், கடன்பட்டவராகிய வங்கியை கேட்டே பணம் பெறுதல் வேண்டும். இந்த அமைப்பானது சாதாரண கடன்கொடுத்தோன் - கடன்பட்டோன் உறவு முறையில் இருந்து வேறுபடுவதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
3. வாடிக்கையாளன் ஒருவன் தான் வரையும் காசோலைகளுக்கு வங்கி பணம் கொடுக்க வேண்டுமாயின் தகுந்த ஒழுங்கு முறைகளை ஏற்கனவே செய்துகொண்டு இருக்க வேண்டும்.
4. மற்ற முகவர்களைப் போல் அல்லாது வங்கியானது (வங்கியும் ஒரு முகவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது) தனது வாடிக்கை யாளர்களின் பிணைகளின் மீது ஒரு பொதுப் பாத்திய (General 1ien) உரிமையைக் கொண்டு இருக்கும், உதாரணம் : சேகரிப்பிற்கு என இடப்பட்ட காசோலைகள், உண்டியல்கள், மற்றும் வாக்குறுதிச் சீட்டுக்கள் மற்றும் கூப்பன்கள் போன்றவை.
பொதுவாக கூறும் இடத்து வங்கியுடன் வைப்பில் இடப்பட்ட பிணைகள் அனைத்தும் மீது இங்கி யானது பாத்திய உரிமையைக் கொண்டுள்ளது போல் தெரிகின்றது. எனினும், இவ் பாத்திய உரிமைக்கு எதிராக ஒரு குறிப்பான அல்லது உட்கிடையான ஒப்பந்தம் ஒன்று அங்கு இருக்குமாயின் இப்பாத்திய உரிமை எழ மாட்டாது. உ + ம் : Brandao w Barnett (1846), வங்கியாளரின் பாத் திய உரிமை ஒரு வித்தியாசமானதாகும். நியாயமான அறிவித்தல் கொடுத்து பொருளை விற்கும் ஒரு உட்கிடையான அதிகாரத்தினை இந்தப் பாத்தியம் வங்கிக்கு வழங்குகின்றது. இதனலேயே Brandao v Barnett alypá6lai stTibGui) 19uru (Lord Campbell) g5őkor segy a GarLLDirgor "'all Saol- -2)...g5 ' ('' Implied pledge") star airi னித்தார்.
மேலும் பாதுகாப்பிற்கு என வைப்பில் இட்ட பொருட்களின் மீது வங்கி இப் பாத்திய உரிமையைக் கொண்டு இருக்கமாட்டாது.

- 7 -
a g-k 60Guur 6MTsiešu savo LD :
வாடிக்கையாளர் ஒருவர், தனது வங்கிக் கணக்கின் மீது காசோலை
களை வரையும்போது நியாயமான கவனம் செலுத்துதல் வேண்டும்.
இவ்வாறு கவனம் எடுப்பார் ஆயின் அதஞல் :
1. மோசடி அல்லது களவு ஒன்று நடைபெறுவதைத் தடுக்க முடியும்.
2. வங்கி தவருண முறையில் வழி நடாத்தப்படுவதைத் தவிர்க்க
(ւpւգսյւն .
இக் கடமைப்பாட்டிற்கு ஆதாரமாக பல தீர்க்கப்பட்ட வழக்குகள் அமைந்திருப்பதை நாம் கவனித்துக் கொள்ள முடியும். உ+ம்: London Joint Stock Bank v Macmillan and Arthur (1918).
இவ் வழக்கில் மோசடிக்கார எழுது வினைஞன் ஒருவன் E 2 பெறு மதிக்கு காசோலை ஒன்றை தயார் செய்து தனது வேலை கொள்வோ னிடம் கையொப்பம் பெற ஒழுங்கு செய்தான். அவன் தொகையை எழுத்தில் எழுதவில்லை. அதுமட்டுமின்றி 2 என்பதற்கும் E அடையாளத் திற்கும் இடையில் இடைவெளியையும் விட்டு இருந்தான். காசோலை இடப்பட்டபின் அதன் தொகையை மோசடியாக கி 120 என மாற்றிய துடன் அதற்கேற்றவாறு தொகையையும் எழுத்தில் எழுதிவிட்டான். அவன் இக் காசோலையை உரிய வங்கியில் மாற்றிப் பணமும் பெற்று விட்டான். பின்னர் இம் மோசடி கண்டுபிடிக்கப்பட்டபோது, வேலை கொள்வோன் இந்த மோசடித் தொ  ைகயா கி ய 8 18 தனது கனக்கில் பற்று வைக்க முடியாது என்றும் அந்தத் தொகையை மீள செலுத்துமாறும் வங்கி மீது வழக்கிட்டான். ஆனல் வழக்குத் தீர்ப் பில், வேல் கொள்வோன் தனது கவனமின்மைக்காக நட்டத்தினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், காரணம் வாடிக்கையாளரே இந்த மோசடி ஏற்படுவதற்கு வழி அமைத்துக் கொடுத்தார் என்றும் தீர்ப் பளிக்கப்பட்டது.
இனிமேல் நாம் குறிப்பிடப்போகும் வழக்கு மேற்கூறிய உதா ரணத்திற்கு வித்தியாசமான முறையில் அமைவதைக் கவனிக்கலாம். a -- id: Slingsby & Ors v District Bank Ltd. (1932). gaiagpaisai வாதிகள் ஒரு வழக்கறிஞர்களினல் எழுதப்பட்ட காசோலை ஒன்றிற்குக் கையொப்பம் இட்டனர். இக் காசோலை பெறுநரின் பெயருக்குப் பின்னல் ஓர் இடைவெளி விட்டே எழுதப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் பின் அந்த வழக்கறிஞர் மோசடியாக அந்த குறிப்பிட்ட பெறு Lugavsiy Gu Jiuq5ub 1 9aâ@páïo “Per Cumberbirch and Potts” Grasărp

Page 10
- 8 -
வாசகத்தை எழுதி உரிய முறையில் சாட்டுதல் செய்து பணத்தைப் பெற்றுக்கொண்டான். மோசடி கண்டுபிடிக்கப்பட்டதும் வாதிகள் இக் காசோலையின் தொகையைத் தமது கணக்கில் பற்று வைக்க முடி யாது என வாதிட்டனர். இங்கு நீதிமன்றம் தனது தீர்ப்பில், பிரதி வாதிகளாகிய வங்கி குறித்த வாடிக்கையாளரின் கணக்கினை, இக் காசோலையின் தொகையைக் கொண்டு பற்று வைக்க முடியாது எனத் தீர்த்தது. ஏனெனில் இப்போது காசோலையானது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் (1927) பிரிவு 64இன் கீழ் தவிர்க்கப்படக்கூடிய ஒன்ருகக் கருதலாம் என்றும், அத்துடன் வாதிகள் காசோலையை வரை யும்போது கவனமின்மையாக நடக்கவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது. எனினும் இவ்வழக்கில் நீதிமன்றம், வாடிக்கையாளர்க்ள் காசோலைகளை எழுதும்போது பெறுபவன் பெயருக்குப் பின்னல் கோடிட்டு இடைவெளி ஏற்படாதபடி நடந்துகொள்ளுதல், பின்னர் எழும் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய வகையில் அமையும் என்று அபிப்பிராயப் பட்டது. இதற்கான அறிவுறுத்தல்களைத் தற்போது வங்கிகள் தமது காசோலைப் புத்தகங்களில் எழுதப்படும் வாசகங்கள் மூலமாக வாடிக்கை யாளர் மத்தியில் பிரபல்யப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாம் இங்கு அண்மைக்கால வழக்கு ஒன்றின் தீர்ப்பினை யும் குறிப்பிடுதல் முக்கியமானது.
95.7 Jorth: Lumsden & Co. v London Trustee Savings Bank (1971). இவ்வழக்கில், வா தியான வர் காசோலை ஒன்றினை வரைந்து கையொப்பம் இடும்போது, பெறுபவரின் முதற்பெயரை (Surname) நிறைவு செய்யாது விட்டுவிட்டார். அத்துடன் இவ்வாறு பெயர் எழுதும்போது பெறுபவரின் பெயரின் முன் ஓர் இடைவெளியையும் விட்டு காசோலையை எழுதியிருந்தார். இங்கு கவனயீனத்திற்குப் பங்கு அளித்தமை (Contributory Negligence) என்ற காரணமாக அவரும் 10% பொறுப்பாக வேண்டும் என நீதிமன்றம் கூறியது.
மேற் கூறிய உதாரணங்கள் பலவற்றின் மூலம் ஒரு வாடிக்கை யாளர் காசோலையை எழுதும்போது எவ்வளவு தூரம் கவனமின்மை இன்றி, அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை எம்மால் நன்கு அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

அத்தியாயம் ? வங்கியாளரும் அவரது இரகசியம் காக்கும் கடப்பாடும்
சாதாரணமாக வங்கியில் வாடிக்கையாளன் ஒருவன் தன் பணத்தினை இட்டுக் கணக்கொன்றினை ஆரம்பிக்கும்போது வங்கி அவனிடம் கடன் பட்டதாகவும், அவ் வாடிக்கையாளன் கடன் வழங்கியவனுமாகக் கருதப்படுகின்றது. இதனுலேயே நாம் சாதாரணமாக வங்கி, வாடிக்கை யாளன் உறவு முறையில் தலையாய உறவுமுறையானது கடன்ட் டோன் ~ கடன் கொடுத்தோன் உறவுமுறை என்று கூறுகின்ருேம்.
ஆணுல் ஒரு சாதாரண கடன் எழங்கியவன் கடன்பட்டவன் உறவுமுறையில் சட்டரீதியாக அவர்களது பரி:ாற்ற இரகசியம் பேணப் படவேண்டும் என்ற கடமை அங்கு இல்லை என்பது நாம் நன்கு அறிந்த தாகும். உதாரணமாக தைத்த ஆடையொன்றினை ஒரு தையற் காரனிடம் இருந்து வாங்கும்போது, அந்த ஆடையை வெட்டிய விதம், அந்தத் துணியின் தரம், அதன் விலை விபரம் என்பனபற்றி அக்குறிப்பிட்ட தையற்காரன், அந்த ஆடையை வாங்கியவரின் நண் பனுக்குக் கூறினல், அந்த தையற்காரன் இரகசியம் வெளிப்படுத்தினுன் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகமாட்டான். இங்கு தையற்காரன், ஆடையை வாங்கியவனேடு ஏதாவது ஒப்பந்தம் செய்து அதனை மீறிய தாகவும் யாரும் கருதமுடியாது.
ஆஞல் வங்கி வாடிக்கையாளன் உறவு முறையிலேயே வங்கியானது தனது வாடிக்கையாளனின் கணக்கின்மீதி, அதன் பரிமாற்றங்கள், வேறு தகவல்கள் போன்றவற்றை தகுந்த நியாயமும், காரணமும் இன்றி வெளிப்படுத்தக்கூடாது என்பது ஒரு முக்கிய அம்சமாகும். எனவே தான் வங்கியில் புதிதாச் சேர்க்கப்படும் ஒவ்வொரு ஊழியனும் இதற் கான ஒரு பிரகடனத்தைச் செய்துகொள்ளுகின்ருன். இவனது அறியா மையால் வங்கி தனது நற்பெயரை இழப்பதோடு, பணரீதியிலும் நட்டங்களைச் சுமக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை க் குத் தள்ளப்பட லாம். இவ்வாறு இரகசியம் பேணும் தன்மையை நாம் முதலில் சட்ட ரீதியான நிலையிலும், பின்னர் நடைமுறையான ரீதியிலும் அணுகு தல் வேண்டும். சட்டம் எதனைக் கூறுகின்றது. நடைமுறையில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பன பற்றி நாம் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.

Page 11
--س۔ 10 -...............
வங்கியானது இரகசியம் காத்தல் வேண்டும் என்ற கடமைப்பாட் டினே மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு நட்டஈடு கோரி ஒரு வாடிக்கை யாளஞல் முதன்முதல் வழக்கொன்று 1850ஆம் ஆண்டில் தொடரப் பட்டது. Tassel v Cooper (1850) என்பதே இவ்வழக்காகும். வழக் கிடுவதற்கான ஏதுக்கள் இவ் வழக்கில் உண்டென்று கருதப்பட்டபோதி லும், வாதி வேறுநிலைகளில் வெற்றியடைந்தமையிஞல், தனது கோரிக்கையை வாபஸ்பெற்றுக்கொண்டார்.
வங்கியின் ஓர் அதிகாரியோ, எழுதுவினைஞனுே அல்லது கரும பீடத்தில் கடமையாற்றும் ஒருவரோ எக்காரனம் கொண்டும் கணக் கின் மீதி காசோலை ஒன்றுக்குப் பணம் செலுத்த எவ்வளவு தொகை குறைகின்றது என்பன போன்ற விபரங்களை வாடிக்கையாளன் தவிர்ந்து வேறு யாருக்காவது கூறுதல் தவருண செயலாகும். குறிப்பிட்ட காசோலை ஒன்றுக்குப் பணம் செலுத்துவதற்கு கணக்கில் போதிய நிதி இல்லாதபோது "பிறப்பித்தவரை விசாரிக்கவும்" என்ற குறிப்புடன் அதனைத் திருப்புதல் ஓர் அவதானமுடைய வங்கியாளன் கடைப்பிடிக்க வேண்டிய செயலாகும்.
1862ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்ட வழக்கொன்று இதற்கான அனு Uauáš Sðar GTLDášes' Lys "G967Masiv pg. Foster v Bank of London (1882) என்ற இவ் வழக்கில் கி 532 பெறுமதியான உண்டியல் ஒன்று வங்கியில் பணம் செலுத்தப்படுவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வுண்டியலை "வைத்திருப்பவள்" கொடுப்பளவிற்கு என அதனைச் சமர்ப்பித்தபோது, அதற்கு ப் பணம் செலுத்தப்படுவதற்கு $ 104 குறைவாகக் கணக்கில் இருக்கின்றது என்ற உண்மை வெளிப்படுத்தப் பட்டது. இதஞல் அவ் உண்டியல் வைத்திருப்பவன், அவ் "ஏற்றுக் கொண்டான்" கணக்கில் E 104 செலுத்திப் பணக் கொடுப்பனவினைப் பெற்றுக்கொண்டான். இதனுல் வாடிக்கையாளனின் கணக்கு விபரம் அவ்வுண்டியலை "வைத்திருப்பவனுக்கு" வெளிப்படுத்தப்பட்டது என்ற ரீதியில் வழக்கிடப்பட்டு, வழக்கில் வங்கி பொறுப்பாகவேண்டும் எனத் தீர்வாகியது. காலப்போக்கில் மேலும் பல பிரச்சனைகள் இரகசியம் பேணுதல் தொடர்பாக வங்கியாளருக்கு ஏற்பட்டது. 1888ஆம் ஆண் டில்தான் முதன் முதலில் இரகசியம் காக்கும் கடமைப்பாட்டிற்கு விதிவிலக்கு உண்டு என்று காணப்பட்டது. Hardy V Veasey (1868) என்ற வழக்கில் நீதிமன்றம் இம் முடிவிற்கு வந்ததும், வங்கியின் சார்பாகத் தீர்ப்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
எப்படியாயினும் 1924இல் தீர்க்கப்பட்ட வழக்கொன்றே இன்றும்
இக் கடமைப்பாட்டிற்கு வழிகாட்டும் அதிகாரம் கொண்ட ஒன்முக carrigagipsy. Tournier v National Provinicial and Union

--سہ 11 سے
Bank of England Ltd. (1924) argirl Gas gas (updiscussiaLorray வழக்காகும். இவ்வழக்கில் Tournier என்பவர் தான் வங்கியில் எடுத்த மேலதிகப் பற்றுக்கு, கிழமைக்கு கி 1 வீதம் அனுப்புவதாக ஒப்புக் கொண்டார். குறிப்பிட்ட கொடுப்பனவு அவரால் நடாத்தப்படாத போது அக் குறித்த வங்கியின் பதில் முகாமையாளர் Tournier வேலை செய்யும் தொழில் நிலையத்துடன் தொடர்பு கொண்டு, அவரது தற் போதைய விலாசத்தினை அறிய முற்பட்டார். ஆனல் துரதிர்ஷ்ட வச மாக இம் முகாமையாளர் அச் சம்பாஷணையின்போது, ரோணியர் சூதாட்டங்களிலும் ஈடுபடுவதனையும் குறிப்பிட்டுவிட்டார். இதன் காரணமாக ரோணியரின் வேலைக்கான "புதுப்பித்தல் மனு" மறுக்கப் பட்டது. எனவே அவர் வங்கியைத் தனக்கு ஏற்பட்ட நட்டங்களுக்காக வழக்கிட்டு அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.
இவ்வழக்கில் இருந்தே நீதிபதி ஒரு வங்கியானது பின்வரும் நாள்கு சந்தர்ப்பங்களில் மட்டும் இரகசியத்தினை வெளிப்படுத்துவது நியாய பூர்வமான ஒன்று என்ற முடிவிற்கு வந்தார். அந்நான்கு நிலைகளும் பின்வருமாறு சுருக்கமாக அமையும்.
சட்டத்தின் கட்டாயத்தின் கீழ் வெளிப்படுத்துகை, வெளிப்படுத்துகைக்கான பகிரங்கக் கடமை.
வங்கியின் நலனின் அக்கறை காரணமாக வெளிப்படுத்துகை,
:
வாடிக்கையாளரின் குறிப்பான அல்லது மறைமுகமான சம் மதத்தோடு செய்யப்படுகின்ற வெளிப்படுத்துகை.
சட்டத்தின் கட்டாயத்தின் கீழ் வெளிப்படுத்துதல்:
நாடாளுமன்றத்தினுல் ஆக்கப்படும் சட்டங்கள் மேன்மையான சட் டங்கள் ஆகும். வாடிக்கையாளனுடன் என்னதான் ஒப்பந்தம் கொண் டிருந்தபோதும், பாராளுமன்ற சட்ட விதிகள் பணித்தபோது, வங்கி அதற்கு அமைவாக நடந்துகொள்வதுதான் முறைமை. இலங்கையில் இவ்வாருண பாராளுமன்ற சட்டவாக்கங்கள் பல காணப் படுகின்றன. அதற்கு அமைய வங்கிகள் தமது வாடிக்கையாளரைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவதற்குக் கட்டாயப்படுத்தப்பட் டுள்ளன.
பின்வருவன இவ்வாருண சில கட்டாயச் சட்டங்களாகும். (அ) உள்நாட்டு இறைவரிச் சட்டம் 1963, பிரிவு 88
(Section 88 of the Inland Revenue Act. 1963)
(ஆ) 1953ஆம் ஆண்டு நாணய மாற்றுச் சட்டம் பிரிவு 39 (1)
(Section 39(1) of the Exchange Control Act. 1953)

Page 12
ہے۔۔۔۔ 12 ----
(இ) விசாரணை ஆணையாளர் சட்டம் 1948 பிரிவு 8 (1) அ
(Section 8(1)(a) of the Commission of Inquiry Act. 1948) (ஈ) நாணய விதிச் சட்டம் 1949 பிரிவு 28(5)
(Section 28 (5) of the Monetary Law Act. 1949)
(உ) ஏற்றுமதி இறக்குமதிக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1955 பிரிவு 4 (1) (Section 4(1) of the Import and Export Control Act. of 1955)
(ஊ) சாட்சிகள் கட்டளைச் சட்டம் 1895 பிரிவு 90 (அ)வும் (உ)வும்
(Section 90(a) and (e) or the Evidence Ordinance of 1895)
(எ) கூட்டுறவுச் சங்கங்கள் கட்டளைச் சட்டம் பிரிவு 61ம், கூட்டுறவு விரிவாக்க ஆணையாளர் கட்டளைச் சட்டம் (1945) பிரிவு 2ம் ம்ே. (Section 61 of the Co-op. Societies Ordinance and Section 2 and 3 of the C. C. D. Ordinance of 1945)
மேற்குறிப்பிட்ட சட்டங்களின் பிரகாரம் குறிப்பிட்ட சட்ட ரீதியான அதிகாரம் உடையவர்களுக்கு வங்கியானது தனது வாடிக்கையாளரின் கணக்கின் விபரங்களையும் அவர்கள் கேட்டுக்கொண்ட விபரங்களையும் வெளிப்படுத்த முடியுமென்பது அவதானிக்கத்தக்கது.
வெளிப்படுத்துகைக்கான பகிரங்கக் கடமை :
இவ்வாறன ஒரு சந்தர்ப்பம் மிக அரிதாகவே ஏற்படுகின்றது என்பது அவதானிக்கத்தக்கது. இந்நிலைமை நாட்டின் அவசரகால நிலைமைகளிலேயே உருவாகும். உதாரணமாக இங்கிலாந்தில் 2ஆம் உலக மகாயுத்தத்தின்போது யாராவது வாடிக்கையாளர்கள் எதிரிக ளுடன் வியாபாரப் பரிமாற்றம் ஏதாவது நிகழ்த்துகின்றனரோ என் பதை வெளிப்படுத்த வேண்டிய கடமைப்பாட்டினை வங்கி கொண் டிருந்தது. எப்படியாயினும் வங்கியாளர் இந்நிலையில் இரகசியம் ஏதாவது வெளிப்படுத்தும்போது, இவ்வாருன ஒரு பகிரங்கக் கடமை யிலேயே இதனைத் தாம் வெளிப்படுத்துகின்ருேம் என்பதில் மிக உறுதி யாகவும், அவதானமாகவும் நடந்துகொள்ளவேண்டுமென்பது மிக மிக அவசியமானதாகும்,
வங்கியின் நலனில் அக்கறை காரணமாக வெளிப்படுத்துகை:
இக்குறிப்பிட்ட விதிவிலக்கானது வங்கியொன்று தனது வாடிக்கை யாளருக்குக் கொடுத்த மேலதிகப்பற்று போன்ற முற்பணங்களுக்கு அவரை வழக்கிடும்போது ஏற்படுகின்றது. கொடுப்பனவினை நிகழ்த்து மாறு வங்கி கட்டளை அனுப்பும்போது அதில் மீதிபற்றிக் குறிப்பிட

- 13 -
வேண்டி ஏற்படும், அல்லது வாடிக்கையாளரால் வங்கிக்கு எதிராக நட வடிக்கை எடுக்கும்போதும் தன் நிலையைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் வங்கியானது கணக்கின் தன்மைபற்றி வெளிப்படுத்தவேண்டி ஏற்படும். வங்கியொன்றினைப் பொறுத்தவரை இவ்விரு முறைகளும் நடைமுறையாக அடிக்கடி எழுவது குறிப்பிடத்தக்கது. எப்படியாயினும் வங்கி தன்னைப் பாதுகாக்கும் நோக்குடன் இவ்விதிவிலக்கினைத் தன் பக்கம் வாதிடப் பற்றிப் பிடித்துக்கொள்ளும் என்பது அவதானிக்கத்தக்கது.
வாடிக்கையாளரின் குறிப்பான சம்மதத்தோடு வெளிப்படுத்துதல் :
இவ் விதிவிலக்கானது வாடிக்கையாளரின் சம்மதத்தோடு ஏற்படுவ தினுல் வங்கிக்குச் சாதகமாகவே எப்போதும் அமையும். வாடிக்கை யாளன் ஒருவன் தனது ஐந்தொகை போன்றவற்றைத் தயாரிப்பதற்காகத் தனது கணக்காளனுக்குக் கணக்கின் மீதியை அறிவிக்குமாறு குறிப்பாகக் கேட்பதுண்டு, அல்லது கணக்கின் உறுதிப்படுத்திய கூற்று ஒன்றினை அவனுக்கு வழங்குமாறும் கேட்பதுண்டு. வங்கி எப்போதும் இந் நிலை களில் வாடிக்கையாளரின் எழுத்தில் ஆன அறிவுறுத்தலைப் பெற்று தனது கோவைகளில் அதனை எப்போதும் வைத்திருக்கும். இதுவே நடைமுறைப் பிரயோகமுமாகும்.
மறைமுகமான சம்மதத்தோடு வெளிப்படுத்துகை :
இந்த விதிவிலக்கில் தங்கி வங்கி தகவல்களை வெளியிடுதல் வங்கி யைப் பொறுத்தவரை புத்திசாலித்தனமான செய்கை அல்ல என்பது கவனிக்கத்தக்கது. சில சமயங்களில் வங்கி வாடிக்கையாளரின் இயல் பான அல்லது மறைமுகமான சம்மதத்தினைப் பெற்றது என வாதிட வழி இருந்தும் அது தோல்விக்கு வழி வகுப்பதை வங்கி மறத்தல் கூடாது. மிகப் பிரபல்யமான வழக்காகிய Sunderland y Barclays Bank Ltd. (1938) என்பதில் இவ்வாருன ஆபத்துக்கள் விளங்கவைக்கப் பட்டன. இவ்வழக்கில் வங்கியால் கொடுப்பனவு செய்யாது திருப்பப் பட்ட காசோலை ஒன்றிற்காக திருமதி சண்டலன்ற் வங்கி முகாமை யாளருடன் தொலைபேசியில் விளக்கம் கேட்டு விவாதித்தபோது, அவரது கணவர் தொலைபேசி சம்பாஷணையில் குறுக்கிட்டு வங்கி முகாமையாள ருடள் கதைத்தபோது திருமதி சண்டலன்ற் சூதாட்டம் தொடர்பிலும் காசோலைகள் வரைவதுண்டு என்று முகாமையாளர் குறிப்பிடவேண்டி ஏற்பட்டது. இதனுல் ஒப்பந்த மீறுகை என்ற ரீதியில் வங்கி வழக் கிடப்பட்டபோது, திருமதி சண்டலன்ற் தன்னிடம் இருந்து தொலை பேசியினை தனது கணவன் வெடுக்கெனப் பிடுங்கியே கதைத்தார் என்றும்

Page 13
------ 14 س----
தான் அவரிடம் வலிந்து கையளிக்கவில்லை என்றும் கூறினர். ஆனல் உண்மையில் வங்கி முகாமையாளர் திருமதி சண்டலன்ற் தானே வலிந்து தொலைபேசியினைக் கணவரிடம் கையளித்தார் என்று எண்ணியே அவரிடம் விபரங்களைக் கூறினர். எனவே வங்கியானது வாடிக்கையாளரின் வலிந்த சம்மதம் அங்கு உண்டென்று கூறிய வாதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, எப்படியாயினும் வங்கியானது இவ்வழக்கில் தனது நலனின் அக்கறை காரணமாகவே வெளிப்படுத்துகை செய்யப்பட்டது என்ற வாதத்தில் வெற்றிபெற்றது. ஏனெனில் திருமதி சண்டலன்ற் தனது கனவனின் கணக்கின்மீதும் காசோலைகளை வரைவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இருந்தமையினுல் பின்ஞெருபோது திரு. சண்டலன்ற் வங்கியை ஏதா வது கேள்வி கேட்பதற்கு வாய்ப்பு ஏற்படலாம் என்பதே இதற்கான காரணமாகும்.
மேற்கூறிய நான்கு சந்தர்ப்பத்திலும் வங்கி வெளிப்படுத்துகையைச் செய்தாலும், அந்நிலையைப் பாதுகாத்துக்கொள்ளப் போதிய சான்றுகளைக் கொண்டிருத்தல் வேண்டும். வாடிக்கையாளரின் தராதரம், அந்தஸ்து போன்ற விபரங்களைப்பற்றி விசாரணை மேற்கொள்ளும் வங்கிகள், பதிவு செய்யப்பட்ட ஸ்தாபனங்கள் போன்றவற்றிற்குப் பதில் அளிக்கும் ஸ்தா பிக்கப்பட்ட பழக்கமானது நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்ருகும். இங்கு வாடிக்கையாளரின் இயல்பான சம்மதத்தினைப் பெற்றுள்ளதாக கருதக்கூடியபோதிலும், தான் பிரயோகிக்கும் சொற்பிரயோகத்தில் வங்கி எப்போதும் மிக்க அவதானமாக நடந்துகொள்ளவேண்டும். “எம்பக்கம் ஏதும் பொறுப்பின்றி" போன்ற சொற்ருெடரைக் கொண்ட பதிலே எப்போதும் பயன்படுத்துதல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் வங்கியின் புதிய வாடிக்கையாளராக வருகின்றபோது இது பற்றிய நல் அறிவை அவர் கொண்டிருப்பார் என்றே ஒவ்வொரு வங் கியும் ஊகிக்கும்.ஆனல் இதுபற்றிக் கணக்குத் திறக்கும்போது வாடிக்கை யாளர் குறிப்பிட்டுக் கூறுவாராக இருந்தால் வங்கி யி ன் நிலைமை மாறிவிடும். எப்படியாயினும் கணக்குத் திறக்கும்போதே தனது சம்மதம் இன்றி விசாரணை மேற்கொண்ட ஒருவருக்குப் பதில் அளிக்க வேண்டாம் என ஒரு வாடிக்கையாளர் கூறும்போது, வங்கி அதற்கு இணங்கிய போதும், பின்னர் வங்கிக்குப் பல இக்கட்டான நிலைமைகள் ஏற்படும். இவ்வாருன வழமைக்கு மாறுபட்ட கோரிக்கையைத் தனது பேரேடு களிலும், வேறு புத்தகங்களிலும், கோவைகளிலும் எவ்வாறு பதிவுகள் செய்து வைத்திருப்பது என்பது வங்கி  ைபடப் பொறுத்தவரை ஒரு நடைமுறைப் பிரச்சனையாகும். எனவே வங்கி இச் சந்தர்ப்பத்தில் அக் கணக்கினைத் திறந்து பின்னர் ஏதாவது நட்டங்கள் செலுத்துவ திலும் பார்க்க அக் கணக்கினைத் திறக்க மறுத்தலே சாலவும் சிறந்தது.

- 15 -
இதனுல் வங்கி ஒப்பந்தத்தை மீறி, இரகசியம் வெளிப்படுத்தியது என்ற பொறுப்புக்களுக்கும் ஆளாகமாட்டாது.
தொலைபேசிமூலம் தமது தனக்கு மீதிகள்பற்றி விசாரணைகள் மேற் கொள்ளும்போது வங்கி மிக அவதானமாக இருத்தல் வேண்டும். வாடிக்கையாளரின் குரலை அடையாளம் காணுதவிடத்து வங்கி மிக அவ தானமாக நடந்துகொள்ளவேண்டும். பொதுவாக அவதானம்மிக்க வங்கியாளர் ஒருவர் இவ்வாறன தொலைபேசி விசாரணைகளைத் தவிர்க்கவே முயலுவார்.
சிலசமயங்களில் வங்கியின் பெறுமதிமிக்க ஒரு வாடிக்கையாளர் தான் கொள்வனவு செய்துகொள்ளச் சென்ற கடை ஒன்றில் நின்று, தான் வழங்கும் காசோலையை ஏற்று பொருளைத் தருமாறு கேட்ப துண்டு. ஆனல் கடை உரிமையாளனுக்கு இவர்பற்றித் தெரியாத இடத்து, அவர்கள் வங்கியுடன் தொடர்புகொண்டு கணக்கு மீதிபற்றி அறிய முற்படலாம். இவ்வாறன சந்தர்ப்பத்தில் வங்கி அவதானமின்றி நடந்துகொண்டால் இரகசியம் வெளிப்படுத்தியமையால் ஒப்பந்த மீறுகை ஏற்படலாம். எனவே வங்கி தனது வாடிக்கையாளர்தான் அங்கு நிற்கின்ருர் என்பதனையும், அவர் அடையாளத்தை நிறுவக் கூடியவகையில் பிரத்தியேகமான சில கேள்விகளையும் அவரிடம் கேட் டுத் தன்நிலையை உறுதிப்படுத்துதல் அவசியம். சிலசமயங்களில் வாடிக்கையாளரின் குரல் வங்கிமுகாமையாளரால் அடையாளம் காணக் கூடிய சந்தர்ப்பமும் ஏற்படுவதுண்டு. இவ்வாறு வங்கி ஏதாவது வழியில் திருப்திகொண்ட இடத்து அவரது குறிப்பான சம்மதத்தினைப் பெற்றுக்கொண்டதாகக் கருதப்படும். இதன்பின் தேவையாயின் கடை உரிமையாளருக்குப் பணம் செலுத்த மீதி உள்ளதுபற்றிக் குறிப்பிட்டால் வங்கி அதற்கு எப்போதும் பொறுப்பாகும் எனக் கூறமுடியாது.
மேற்கூறப்பட்ட பல உதாரணங்களை மனதில்கொண்டு வங்கியில் கடமையாற்றும் ஓர் ஊழியன் எவ்வளவு முன்னெச்சரிக்கையுடனும் அவதானத்துடனும் தான் கடமைபுரிய வேண்டும் என்பதனை எம்மாற் கானக்கூடியதாக இருக்கும். வங்கியில் நாம் முதலில் படிக்கவேண்டிய பாலபாடம் இரகசியம் தொடர்பானதுதான் என்று கூறின் அது மிகை யாகாது. வங்கியில் கடமையாற்றும் ஊழியர்கள் தம்மிடையே சம்பாஷனை செய்யும்போது எக்காரணம் கொண்டும் வாடிக்கையாளரின் கணக்கு மீதி போன்றவற்றை வெளிப்படையாகக் கதைத்துக்கொள்ளல் dial-stigd.

Page 14
அத்தியாயம் 3 தகுதிரிலே விசாரணைகளும் அவற்றுக்கு விடையிறுக்கும் முறைகளும் (Status Opinion Given by Bankers)
வங்கியாளர் - வாடிக்கையாளர் உறவு முறையில் இரகசியம் காக்கும் கடமைப்பாடு ஒரு முக்கிய இடத்தினை வகிக்கின்றது. தனது வாடிக்கையாளர் ஒருவரின் விவகாரங்கள் அனைத்தையும் மிக அந்தரங்க மான முறையில் பேண வேண்டும் என்பது தலையாய கடமையாகும். இந்தக் கடமைப்பாடு பற்றி நாம் முன்னைய அத்தியாயத்தில் கூறிய Tournier வழக்கில் அறிந்து கொண்டோம்.
ஆணுல் எப்படியாயினும், வேறு வங்கிகள் போன்றவற்றில் இருந்து தனது வாடிக்கையாளர் பற்றிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு வங்கியாளர் தனது ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் வழங்குதல் ஸ்தாபிக்கப்பட்ட வழக்கமாக மாறி வந்துள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். இந்த நடைமுறையானது தற்காலத்தில் ஒரு வங்கியின் நாளாந்த வியாபார அலுவல்களில் ஒன்ரு க மாறி வருவதையும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. மேலும் இது வங்கி வழங்கும் சேவை களுள் ஒன்ருக உள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இதனுல் வங்கிக்குக் குறிப்பான சம்மதம் வாடிக்கையாளரினல் வழங்கப்பட்டுள்ளதாகவும் நாம் கருத இடமுண்டு. எப்படியாயினும் தனது அபிப்பிராயங்களை வங்கி வேறு ஒருவருக்கு வழங்குகையில் வாடிக்கையாளரின் சம்மதமோ அல்லது விருப்பமோ இன்றிச் செய்கின்றபோது வங்கியானது தனது கடமையில் இருந்து நழுவி நடந்துள்ளது போலவும் கருத இடமுண்டு. எனவே இந்நிலையில் வங்கி மிக அவதானமாக நடந்துகொள்ளுதல் வேண்டும்.
மேலும் திரு. L. C. Mather எனும் ஓர் அனுபவமிக்க வங்கியியல் நிபுணர் தனது நூலில் இதுபற்றிக் குறிப்பிடுகையில், இவ்வாறு வேறு வங்கிகள் போன்றவற்றில் இருந்து தகவல்களும், விசாரணைகளும் மேற்கொள்ளப்படும்போது, அதற்கு ப் பதில் அளிக்கும் வங்கியின் செயற்பாடு ஆனது ஓர் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறை அனுபவம் என்றும், இதுபற்றி ஒவ்வொரு வாடிக்கையாளரும் தனது கணக்கினை வங்கியுடன் ஆரம்பிக்கும்போதே அறிந்து இருக்கிருர் என்றும் ஊகித்து நியாயப்படுத்தலாம் என்றும் கூறுகின்றர்.

- 17 -
வங்கியாளரின் பொறுப்புக்கள் :
இவ்வாறு விசாரணைகளுக்குப் பதில் அளிக்கும்போது வங்கிக்கும் கில பொறுப்புக்கள் ஏற்படலாம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஏற்படும் பொறுப்புக்களை 3 தலைப்பின் கீழ் Spurniru u Gverb.
தனது சொந்த வாடிக்கையாளரினுல் ஏற்படுத்தப்படும் குற்றச்சாட்டு. இதன்மூலம் அவர் தான் அங்கீகாரம் அளிக்கப்படாத நிலையில் தனது விவகாரங்களை வெளிப்படுத்தினர் எனக் கூறலாம். 2. தனது சொந்த வாடிக்கையாளர் ஒருவர், தன்னைப்பற்றிக் கொடுத்த தகவல் அல்லது அபிப்பிராயம் தனக்குச் சாதகமாக இல்லாது இருக்கின்றது என்றும் அதனுல் தனக்கு நட்டங்கள் ஏற்பட்டன என்றும் கூறுதல். 3. மூன்ரும் திறத்தவர்களினுல் ஏற்படுத்தப்படும் உரிமைக் கொண் டாட்டம் அல்லது உரிமை கோரல் இவற்றை நாம் விளக்க
bras sotnuountb. 1. சம்மதம் இன்றி விவகாரங்களை வெளிப்படுத்தியமை
என்ற பொறுப்பு:
இதனை நாம் ஒப்பந்த மீறுகை என்றும் வேறுவிதத்தில் கூறலாம். அதாவது வாடிக்கையாளரின் இரகசியம் காக்கப்படுதல் வேண்டும் என்றும், இவ்வாறு தகவல் கொடுத்தமையினல் அந்த ஒப்பந்தம் மீறப் பட்டுள்ளது என்றும் ஒரு வாடிக்கையாளர் குற்றம் சாட்ட முடியும். அதாவது சில சமயங்களில் வாடிக்கையாளரினல் இவ்வாறு தகவல் கொடுப்பதற்கு அதிகாரம் அளிக்கப்படாது இருக்கலாம். அல்லது சில சமயங்களில் கொடுத்த தகவல் சம்மத வரம்பிற்கு மேற்பட்டதாக இருக்கலாம். இந்த இரண்டு நிலைகளிலும் ஒரு வாடிக்கையாளர் தனது வங்கியைப் பொறுப்பாக்க முடியும்.
2. கொடுத்த தகவல் சாதகமற்ற ஒன்று என்றும்
அதனுல் ஏற்படும் நட்டத்திற்கான பொறுப்பு: சிலசமயங்களில் வங்கி கொடுத்த தகவல்களை வாடிக்கையாளர் ஒருவர் தனக்கு அவதூருணவை எனவும் கருதல்ாம். இதஞலும் வங் கிக்குப் பொறுப்புக்கள் ஏற்படும். இப் பொறுப்புக்களில் இருந்து நீங்க வங்கி பல நியாயப்படுத்தல்களைக் கூறவேண்டி ஏற்படும். அதாவது சில சமயம் கொடுத்த தகவல் உண்மையாகவே சரியானதாயின் பொறுப்புக்கள் ஏற்படமாட்டா. அதே போல தகவல் அளிக்கும் சுதந்திரம் தமக்கு உண்டு என்றும் வங்கி கூறமுடியும், தகவல் கொடுக்கும்
2

Page 15
18
போது நேர்மையாகவும், நன்னம்பிக்கையிலும் அதே நேரம் குரோத எண்ணம் இன்றியும் கொடுத்தால் மட்டுமே இந்த சுதந்திர தன்மையைக் காரணமாகக் காட்ட முடியும்.
3. மூன்றம் திறத்தவர்களினுல் ஏற்படுத்தப்படும் உரிமைக் கொண்டாட்டம்
asong selfsonid Giss U6) (Claims by Third Parties) இங்கு நாம் மூன்ரும் திறத்தவர் எனக் குறிப்பிடும்போது அது விசாரணையை மேற்கொண்டவரையே கருதுகின்றது (enquirer) விசா ரணைக்குப் பதில் கொடுத்த வங்கி ஒன்றுக்கும், விசாரணையை மேற் கொண்ட ஒருவருக்கும் இடையே எந்தவிதமான ஒப்பந்தரீதியான உறவு முறையும் கிடையாது. வங்கி ஒன்றிடம் கேட்கப்பட்ட விசா ரணைக்குப் பதில் கூறவில்லை என்ற காரணம் காட்டி வழக்கிட முடி யாது. ஆணுல் மறுபக்கத்தில் பார்க்கும்போது, வங்கி அளித்த தகவ லின் அடிப்படையில் அதனை நம்பி நாம் நட்டத்திற்கு ஆளாகிவிட் டோம் என மூன்ரும் திறத்தவர் ஒருவர் கூறுகின்றுபோது அதற்கான நட்டத்திற்கு வங்கி ஒன்று ஆளாகவேண்டி ஏற்படலாம்.
இவ்வாறு வங்கி பொறுப்பாகும்போது அங்கு மூன்ரும் திறத்தவர் களால் ஏற்படுத்தப்படும் உரிமைக் கோரல்கள் (Claims) 2 காரணங்களில் தங்கி இருக்கும்.
(அ) கவனமின்மை அல்லது கவனமின்மைத் தீங்கு. (ஆ) மோசடி அல்லது மோசடியாகத் திரித்துக் கூறல்.
(அ) கவனமின்மைக்கான பொறுப்பு:
ஆரம்பகாலத்தில் விசாரணையின்போது கவனமின்மை யாகக் கொடுத்த பதில்களுக்குப் பொறுப்பாக மாட்டாது என்றே கருதப்பட்டுவந்தது. ஆணுல் விசாரணையை மேற் கொண்ட வருடன் ஒரு ஒப்பந்த உறவோ அல்லது ஓர் நம்பக உறவு முறையோ வங்கிக்கு இருந்தால் இது வேறுபடும் என்றும் கருதப்பட்டு வந்தது. ஆளுல் Hedely Byrமe (1963) வழக்குத் தீர்ப்பின் பின் இந் நெடுநாளைய கருத்தில் மாற்றம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Hedley Byrne & Co. Ltd. v Heller and Partners Ltd. (1963) வழக்கின் நிகழ்வுகள் பின்வருமாறு:
Hedley Byrne & Co. GT6örug Giúdaith Lur Gyp s au fi as 6ir gaumr tř sair. GurfasGMT autš6 National Provincial Bank Ltd. --Estå. இந்த விளம்பர நிறுவனம், East power Ltd. என்ற நிறுவனத்துடன் $100000 பவுண்கள் தொகையான ஒரு வியாபாரத்தைக் கொண்டு நடாத்தும் நோக்கோடு அவர்களது நம்பகத்தன்மை, உண்மைத்

حس۔ 19 حس۔
தன்மை, நிதிநிலைமை போன்றவற்றைப் பற்றி அறியுமாறு தமது வங்கி urraraou (N. P. Bank Ltd.). கேட்டுக்கொண்டது. இவ் வங்கி Heller & Partners Ltd. இடம் விசாரணையை மேற்கொண்டது. இங்கு H. P. Ltd. East power பற்றிய தமது பதிலைக் கொடுத்தது. இவ்வாறு கொடுத்த பதில் பின்வருமாறு: அமைந்தது. " உங்களது பிரத்தியேக தேவைக்காகவும் வங்கியினதோ அதன் உத்தியோகத்தர் மீதோ எந்த வித பொறுப்பும் இன்றி நாம் கூறுவதாவது நம்பகத்தன்மையுடைய கம்பனி தமது சாதாரண வியாபார அலுவல்களைப் பொறுத்தவரை சிறந்தது எனக் க்ருதப்படக்கூடியது. உங்களது தொகையானது நாம் பழக்கப்படுத்தப்பட்ட தொகையைவிடப் பெரியதாக இருக்கின்றது" எனக் கொடுக்கப்பட்டது. -
காலப்போக்கில் East power Co. Ltd. ஒடுக்கிப்பக்டிது. R. B. & Co., Ltd. இந்த பதிலினை நம்பி தாம். கி 1700 சவுணகள் வரை இழந்துவிட்டதாகவும் அதனை ஈடுசிெங்க்யாறும் Nee & Partners Ltd. இற்கு எதிராக வழக்கிட்டது. இங்கு சிதில் கானமின்மையாகத் தரப்பட்டது எனவும் கூறப்பட்டது; ஆரம்ப விசாரணையில் Heller Ltd. தகுந்த கவனமின்றிப் பதில் கோடுத்தமை பிழையான ஒரு செயலாக இருந்தபோதும், அவர்களுக்குக் கவனம் எடுக்க வேண்டும் என்ற கடமைப்பாடு இல்லாமையால், இந்த அடிப்படையில் அவர்கள் பொறுப்பாகமாட்டார்கள் எனவும் தீர்க்கப்பட்டது. மேலும் இதனை விசாரித்த நீதிபதி இங்கு ஒரு நம்பக உறவு முறையைத் தம்மால் கான முடியாது இருக்கின்றது என்றும் தமது தீர்ப்பில் கூறிஞர்.
ஆனல் இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றமும், பிரபுக்கள் சபையும் முன்னேய தீர்ப்பினை ஏற்றுக்கொண்டபோதும், பிரபுக்கள் சபையின் தீர்ப்பின் படி, "எம் பக்கம் ஏதும் பொறுப்பின்றி” என்ற வாசகம் பயன் படுத்தப்படாது விட்டு இருப்பின் தீர்ப்பு மாறி அமையும் என்பதனை உறுதிப்படுத்தியது. அதாவது எம்பக்கம் ஏதும் பொறுப்பின்றி என்ற வாசகம் ஒன்றே (Disclaimer clause) இங்கு எதிராளியைக் காப் பாற்றியது என்பது அவதானிக்கத்தக்கது.
எனவே, இத்தீர்ப்பின் மூலம் மறுப்பு வாசகம் பயன்படுத்தப்படாது பதில் கொடுபடும் இடத்து, பின்னர் எழுப்பப்படும் நட்டக் கோரிக் கைகள் (Claims) ஏற்கப்படும் என்று காணப்பட்டது. அதேநேரம் கொடுத்த பதிலும் கவனமின்மையாகக் கொடுக்கப்பட்டது என்பதும் நிறுவப்படவேண்டும்.
(b) மோசடி அல்லது மோசடியாகத் திரித்துக்கூறல் :
மோசடியாகத் திரித்துப் பதில் கூறும் நிகழ்ச்சி மிக அரிதானதாகும். ஒருபோதும் ஒரு வங்கி வேண்டுமென்றே ஒரு பதிலை மோசடியாகத்

Page 16
- 20 -
திரித்துக் கூறமாட்டாது. இவ்வாறு செய்தால் தீங்கியல் அடிப்படையில் வங்கி வழக்கிடப்பட முடியும்.
Gunyth, Banbury v Bank of Montreal (1918) Grairio alpdissi) கபடமற்ற முறையில், திரித்து பதில் கூறியிருந்தால் கூட ஒரு வங்கி பொறுப்பாக மாட்டாது என்றும், ஆளுல் மோசடியாகவே திரித்துக் கூறியிருந்தால் பொறுப்பாகும் என்றும் காணப்பட்டது. மேலும் கூறிய பதிலானது எழுத்தில் இருந்து, பதில் கூறியவர் தமது கையொப்பத்தையும் இட்டு இருந்தால் பொறுப்பாகவேண்டி ஏற்படும். வங்கிகள் சாதாரணமாக தமது பதிலின் கீழ் கையொப்பம் இடுவதில்லை. இதன் காரணமாக அவை மோசடி என்ற தலைப்பின் கீழ் பொறுப்பாக வேண்டி ஏற்படுவதில்லை.
விசாரணைக்கான பதில்கள் தொடர்பில் நடைமுறை ஆலோசனைகள் :
நாம் இதுவரை வங்கியொன்று விசாரணைகளுக்குப் பதில் அளிக் கும் போது அதற்கு எவ்வகையான பொறுப்புக்கள் ஏற்படும் என்ப தனைப் பற்றி ஆராய்ந்தோம். சாதாரணமாக வங்கி ஒன்று இவ்வாறு விசாரணைக்குப் பதில்கள் கொடுக்கின்றபோது பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்: 1. வாடிக்கையாளரின் கணக்கு மீதி பற்றி அவரது சம்மதமின்றி எக்
காலத்தும் வெளிப்படுத்துதல் கூடாது.
2. கொடுக்கப்பட்ட பதில் நேரடியாகவே தனது வாடிக்கையாளர் பற்றிய தராதரத்தைக் குறிப்பிடாது, விசாரணையை மேற்கொண்ட ஒருவர் தான் பெற்ற பதிலினை அலசி ஆராய்ந்தே ஒரு முடி வைப் பெறத்தக்கதாக அமைதல் வேண்டும்.
3. வங்கி விசாரணைக்கான பதில் ஒன்று வழங்கும்போது வெளியிடங் களில் இருந்தும் தகவல்களைத் திரட்டிக் கொடுக்கவேண்டும் என்ற கடமைப்பாடு கிடையாது. அதேநேரம் தன்வசமுள்ள மிக முக்கிய தகவல்களை எந்தக் காரணம் கொண்டும் ஒளித்து மறைக்கக் darts.
சிலசமயங்களில் விசாரணையானது ஒரு தனிப்பட்ட வாடிக்கை யாளர் பற்றி வரலாம். ஆஞல் அவர் இன்னுெரு நிறுவனத்தில் பணிப்பாளராகவோ, பிரதான பங்காளராகவோ இருக்கும்போது அந் நிறுவனத்தினது தன்மைகளையும் நிதிநிலைமைகளையும் கருத் தில் கொள்ளவேண்டும்.இவ்வாறு வேறு கம்பனியில் பணிப்பாளராக இருக்கும்போது நிதி வசதியின்மை காரணமாக அக் கம்பனி நிரந்தரமாகவே குலைக்கப்படுவதற்கான நடபடி முறைகள் நடை பெற்றுக்கொண்டு இருக்கலாம். எனவே அவரது தனிப்பட்ட

.
8.
- 21 -
கணக்குப் பற்றிய விசாரணையில் இது பற்றியும் கருத்தில் எடுக்க வேண்டும்.
* எம்பக்கம் ஏதும் பொறுப்பின்றி " என்ற மறுப்பு வாசகம் எப்போதும் கொடுக்கப்படும் பதிலிலும், தொலைபேசி விசாரணைப் பதிலிலும் கொடுக்கப்படுதல் வேண்டும்.
ஒரு கடன் முறியானது (Debenture ) வங்கியின் பெயரில் இருந் தால் அதுபற்றித் தவருது குறிப்பிடப்படுதல் வேண்டும்.
தொலைபேசி விசாரணைக்கான அதிகாரங்கள் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும், கொடுக்கப்படும் பதில்களும் கவனமாகப் பதிந்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும். எப்போதும் மறுப்பு வாசகம் பயன்படுத்தப்படுதல் வேண்டும். மேலும் தொலைபேசி விசாரணைகள் யாவும் எழுத்தில் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.
நேரில் கேட்கும் விசாரணைகளுக்கு உரிய பதில் நேரடியாக்க் கொடுக்கப்படுதல் தவிர்க்க வேண்டும். இந்நிலையில் வாடிக்கையா ளரின் சம்மதம் பெற்ருல்மட்டுமே பதில் கொடுக்கலாம்.
கேட்கப்பட்ட விசாரணைகள் யாவும் நன்கு கவனமாகப் பதிவு செய்து வைத்திருத்தல் வேண்டும். இதனல் எதிர்காலத்தில் இது ஒரு வழிகாட்டியாக வைத்திருக்கப்படுவதுடன், புதுப்பிக்கப்பட வேண்டிய விசாரணைகள் ( Renewal enquiries ) குறித்துக்கொள் ளவும் வசதிஏற்படும். அத்துடன் ஒரு வாடிக்கையாளரின் மொத்த கடப்பாடுகள் பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ளமுடியும்.

Page 17
அத்தியாயம் 4
கொடுப்பனவுகளைத் தனதாக்கல் அல்லது கொடுப்பனவுகளின் ஒதுக்கீடு (Appropriation of Payments)
ஒரு கடன் கொடுத்தவனுக்கும் (Creditor) கடன்பட்டவனுக்கும் இடையில் பலவிதமான கடன்கள் நிலுவையாக இருக்கும்போது, கடன் பட்டவன் மீளக் கொடுத்த தொகையானது முழுக் கடனையுமே தீர்ப்ப தற்குப் போதாமையாக இருக்கும்போது, இவ்வாறு கொடுத்த ஒரு தொகையை எந்தக் கடனுக்கு வரவு வைப்பது என்பது கேள்விக்குரிய விடயமாகும். இவ்வாருன ஒரு சந்தர்ப்பத்திலேயே நம் கொடுப்பனவு களில் ஒதுக்கீடுபற்றிய விதிகளையும், நடபடி முறைகளையும் நன்கு அறிந்து இருத்தல் அவசியமாகின்றது. இது ஒரு வங்கியாளனுக்கு முக்கிய விடயமாக அமைவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விதிமுறைகளை நாம் 3 முக்கிய தல்ப்புக்களின்கீழ் ஆராயலாம்.
1. கடன்பட்டவனுல் ஒதுக்கீடு செய்தல்.
2. கடன் கொடுத்தவனல் ஒதுக்கீடு செய்தல்.
3. கடன்பட்டவன், கடன் கொடுத்தவன் இருவருமே ஒதுக்கீடு செய்யாத இடத்து ஒரு பொது விதி மூலம் ஒதுக்கீடு செய்தல்.
1. &Lsirut'Laisosi) segui,SG costigi) (Appropriation by Debtor):
எப்போதும் கடன்பட்டவனுக்கே ஒதுக்கீடு செய்யும் முன்னுரிமை வழங்கப்படும். எந்தக் கடனுக்குத் தான் கொடுத்த தொகையை ஒதுக்கீடு செய்யலாம் என்பதனை அவரே தீர்மானிப்பார். ஆணுல் கடன் மீளச் செலுத்தும் தருணத்திலேயே இவ்வாறு செய்துகொள்ள முடியும். இவ்வாறு ஒதுக்கீடு செய்தல் வெளிப்படையான நடத்தைமூலமோ அல்லது உட்கிடையான நடத்தை மூலமோ ஏற்படும்.
உதாரணமாக, A என்னும் (கடன்பட்டவன்) ஒருவன் B என்பவ னுக்கு (கடன்கொடுத்தோன்) முறையே 1000/-, 2000/- என இரு கடன்கள் செலுத்தவேண்டும் எனக் கொள்வோம். இங்கு A, ரூபா 2000/- மட்டும் கொடுக்கின்றபோது உட்கிடையான நடத்தைமூலம் யாம் 2000/= ருபா கடனுக்கே இந்தத் தொகை ஒதுக்கீடு செய்யப்படும் என ஊகிக்கலாம். இங்கு இது ஓர் ஊகமான செயலேயாகும்.

- 23 -
இவ்வாறு கடன்பட்ட வன் தனது முன்னுரிமையைப் பயன்படுத்தும் போது குறித்த கடன் ஒன்று அதிக காலமாக நிலுவையானதாக இருக் கலாம். அல்லது சிலசமயங்களில் கால மட்டுப்பாட்டினல் நடபடி முறை அற்றுப்போவதற்கு இருக்கும் கடனுக இருக்கலாம். எப்படி இருப் பினும், இந் நிலையிலும் கடன்பட்டவன் தான் விரும்பியவாறு மீளச் செலுத்திய தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்க முடியும் ஆனல் ஒரு கடன்பட்டவன் வெறுமனே தனது புத்தகங்களில் தன்னிஷ்டமாகப் பதிவுகளைச் செய்து வைத்துக்கொள்வது ஏற்கப்படுவதில்லை. எனவே வெளிப்படுத்தப்படாத ஒதுக்கீடு சாதாரணமாக ஏற்கப்படுவதில்லை.
மேலும் ஒரு வாடிக்கையாளன் கடன் கணக்கு நடைமுறைக் கணக்கு என இரு கணக்குகளை வெவ்வேருகக் கொண்டுள்ளபோது, தனது நடைமுறைக் கணக்கிற்கு மட்டும் வரவுவைப்பதற்கு என ஒரு காசோலையை வைப்பிட முடியும்.
அதுபோல வாடிக்கையாளர் தனது நடைமுறைக் கணக்கில் ஒரு குறிப்பிட்ட காசோலைக்குப் பணம் செலுத்தவும் என வேறு ஒரு காசோ லையையோ அல்லது பணத்தினையோ வைப்பிட முடியும். இவ்வாறு கூறப்பட்டால் வங்கியானது அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். ஆனல் இது நடைமுறையில் வங்கிக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் செயலாகும். காரணம் இதற்கான பதிவுகளை வங்கி செய்து கொள்தலும் கவனமெடுத்தலும், பிறசெயற்பாடுகளும், நடைமுறைக் கணக்கு ஒன்றினை நடத்துவதைச் சிரமமாக்கும். எனவே. இவ்வாருன செயற்பாடு ஒன்றிற்கு வங்கி இனங்குவதை எப்போதும் குறைத்துக் கொள்ளவேண்டும். வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்து தன் விருப்பப் படி ஒதுக்கீடுகளைச் செய்வதைத் தவிர்க்குமாறு வங்கி அவரைக் கேட்டுக் கொள்ளவேண்டும்.
2. slair QassTGiu Guosis sid:SG Galisi) (Appropriation by Creditor):
கடன்பட்டவன் ஒதுக்கீடுகளைச் செய்யாதபோது, கடன் கொடுத்த வனே தனது விருப்பப்படி செய்துகொள்ளமுடியும். அதாவது கடன் பட்டவனுக்குச் சந்தர்ப்பம் ஒன்று இருந்தும் அவ்வாறு அவர் செய்ய வில்லை என்றபோது கடன் கொடுத்தவன் தனது விருப்பப்படி செய்து கொள்ளமுடியும்.
ஏதாவது காரணமாக கடன் கொடுத்தவன் கையில் கடன்பட்டவ Eன் பணம் கிடைக்கின்றபோது, தனது விருப்பப்படி ஒதுக்கீடுசெய்து கொள்ள முடியாது. கடன்பட்டவன் தனது விருப்பத்தைத் தெரிவிப்ப தற்குச் சந்தர்ப்பம் கொடுக்கப்படவேண்டும். ஆனலும் வங்கி ஒன் றிற்கு ஏதாவது பணம், கடன்பட்டவர் சார்பாகக் கிடைக்கும்போது,

Page 18
- 24 -
வங்கி வாடிக்கையாளனின் (கடன்பட்டவன்) சம்மதத்தைக் குறிப் பாகவே பெற்றிருப்பதாக ஊகித்துத் தன் விருப்பில் ஒதுக்கீடு செய்வது நடைமுறையில் ஏற்கப்பட்ட ஒன்ருகும். 3. கடன் பட்டவன், கடன் கொடுத்தவன் இருவருமே ஒதுக்கீடு செய்யாது
விடும்போது பொதுவிதிமூலம் தீர்மானித்தல். இந்தப் பொதுவிதியானது கிளேட்டன் வழக்கு Clayton Case (1816) மூலம் ஏற்படுத்தப்பட்டது எனலாம். இக் கிளேட்டன் விதி அல்லது வழக்கு பின்வரும் பெயரினல் அழைக்கப்படும். Devaynes v Noble இவ்விதியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :
கடன்பட்டவனே அல்லது கடன் கொடுத்தவனே ஒதுக்கீடு செய் யாது இருக்கின்ற ஒரு நிலையில், ஒரு முறிக்கப்படாத (unbroken) நடைமுறைக் கணக்கு அங்கு இருக்குமாயின், ஒதுக்கீடு பின்வருமாறு ஊகிக்கப்படும் :
(a) ஒரு கணக்குத் தொடர்ந்து நடாத்தப்பட்டுக் கொண்டு இருந் தால் அல்லது வரவு மீதியாகச் சென்றுகொண்டிருந்தால் (goes into credit) அக் கணக்கில் முதல் செலுத்தப்பட்ட அதாவது வரவாக வைக்கப்பட்ட தொகை, அக்கணக்கில் இருந்து முதன் முதலாகக் கொடுப்பனவு செய்த தொகையால் குறைக்கப்படும்.
(b) ஒரு கணக்குத் தொடர்ந்து நடாத்தப்பட்டுக் கொண்டு இருந் தால் அல்லது செலவு மீதியாகச் சென்றுகொண்டு இருந்தால் (goes into debit) முதலில் அக்கணக்கில் இருந்து செலுத்தப்பட்ட தொகையானது முதலில் அக் கணக்கில் வரவு வைத்த தொகையால் மீளச் சமப்படுத்தப் படும் அல்லது குறைக்கப்படும். இதுவே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிளேட்டன் விதியின் சுருக்கமாகும்
இவ்விதியானது அனுபவ ரீதியாகவும் நடைமுறை ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன் பிரதானமாக ஒரு பற்றுக் கணக்கினைப் (Debit Account) பொறுத்தவரை மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் இவ் விதியானது ஓர் ஊகமேயாகும். முறையான நிறுவல் ஒன்றின் மூலம் இவ்விதியானது தள்ளுபடி செய்யப்படலாம். அத்தோடு இவ்விதியானது இரண்டு கணக்குகளுக்கிடையே பிரயோகிக்க முடியாது. ஆனல் ஒவ்வொரு கணக்கிற்கும் தனித்தனியே பிரயோகிக்க முடியும். ஆனல் இரண்டு கணக்குகளை (two accounts) ஒன்ருக நாம் கருதும்போது இவ்விதியினைப் பிரயோகிக்கமுடியும். மேலும் ஒரு தனிப் பட்டவன் கணக்கு ஒன்றில், நம்பிக்கைப் பொறுப்பு மீதியும், தனிப் பட்ட சொந்த மீதியும் ஒன்ருக இருக்கும்போது, ஒரு வாடிக்கையாளன் முதலில் தனது சொந்த மீதியை அல்லது தொகையையே எடுத்ததாக

- 25 -
ஊகிக்கப்படும். கிளேட்டன் விதி இந்நிலையில் பிரயோகிக்கப்படமாட்
lets.
கிளேட்டன் விதியின் பிரயோகத்தினை விளக்கும் உதாரணம்:
பின்வருவது A, B என்போரில் நடைமுறைக் கணக்கு ஏட்டின்
பகுதியாகும். இங்கு தனியானதும், கூட்டானதுமான பொறுப்பு ஏற்
றுக்கொள்ளப்பட்டது எனக் கொள்வோம்.
நடைமுறைக் கணக்கு ஏடு
திகதி விபரம் Luig (Dr.) suu 6 (Cr) மீதி
1986
ഞ5 1 மீதியாக 500 (Dr.)
3 காசாக 200 (sey) | 300 (Dr.)
4 医疗&Ff了ó 300 (g) (20
8 காசோலைக்கு 400 400 (Dr.)
10 காசோலைக்கு 500 900 (Dr.)
2 4o (g)| 500 Dr,)
16 காசோலைக்கு 600 1100 (Dr.)
இங்கு அ எனக் குறிப்பிடப்பட்ட வரவு தொகையான ரூபா 200 ஆரம்ப பற்று மீதியை ஓரளவு குறைக்கின்றது என்பது நன்கு புலனுகின் றது. மேலும் ஆ எனக் குறிப்பிடப்பட்ட வரவு தொகை ரூபா 300 பற்று மீதியை முழுதாகவே இல்லாது செய்து கணக்கு எந்த நிலுவையும் இன்றியதாக மாறுகின்றது. அதுபோல 12ஆம் திகதி காசாக இடப் பட்ட ரூபா 400 (இ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது). 8ஆம் திகதி காசோலை ஒன்றிற்குச் செலுத்திய ரூபா 400இனக் குறைக்கின்றது. எனவே 12 ஆம் திகதியில் இருக்கும் பற்று மீதியாகிய ரூபா 500 10ஆம் திகதி செலுத்தப்பட்ட காசோலையின் தொகையாலேயே ஏற்படு
மேலும் இப்போது குறித்த வங்கியானது 11ஆம் திகதி A என்ப வர் இறந்துவிட்டார் என்ற செய்தியைப் பெறுகின்றது. ஆணுலும் கணக்கானது தொடர்ந்தும் நடாத்தப்பட அனுமதிக்கப்படுகின்றது. பின்னர் 12ஆம் திகதி காசாக வைக்கப்பட்ட தொகையான ரூபா 400 (இ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது , A என்பவரின் அல்லது அவர் வாரிசின் பொறுப்பினைக் குறைக்கின்றது. காரணம் கிளேட்டன் விதி

Page 19
- 26 -
யின் தொழிற்பாடேயாகும். எனவே 16ஆம் திகதியில் கணக்கின் பற்று மீதி ரூபா 1100 ஆக இருந்தபோதிலும், A என்பவரின் வாரிசு வங்கிக்கு ரூபா 500ற்கு மட்டுமே பொறுப்பாவர். இங்கு 11ஆம் திகதியே இறப்பு பற்றிய அறிவித்தல் கிடைத்ததும் வங்கிக் கணக்கினை நிறுத்தியிருந்தால் Aயின் வாரிசின் பொறுப்பும் அதிகரித்து இருக்கும். வங்கியும் தன் நிலையைப் பாதுகாத்து இருக்கலாம்.
எனவே, வங்கி ஒன்று இறப்புப்பற்றிய அறிவித்தல் கிடைத்தும் வாடிக்கையாளரின் கணக்கினை நிறுத்தாது தொடர்ந்து நடாத்தவிடுவ திஞல் எவ்வாறு நட்டத்திற்கு ஆளாக முடியும் என்பதனை மேற்கூறிய உதாரணம் மூலம் நாம் நன்கு அறியக்கூடியதாக இருக்கிறது.
எனவேதான் இறப்பு அல்லது வகையற்றுப்போதல் போன்ற பிற அறிவித்தல்கள் கிடைத்ததும் வங்கி ஒன்று வாடிக்கையாளரின் கணக் கினை உடனே கோடிட்டு நிறுத்தி தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்கின்றது. இல்லாவிடின் நட்டத்திற்கு ஆ6ாாகவேண்டி ஏற்படும். இந்நிலையில் தேவையாயின் ஒரு புதிய கணக்குத் திறந்து வருங்கால நட வடிக்கைகளுக்கு அனுமதிக்கலாம். வங்கி ஒன்றிற்கு கிளேட்டின் விதி பிரயோகிக்கப்படுவதஞல் ஏற்படும்
நன்மைகளும் தீமைகளும் :
வங்கிக்கு பாதிப்பு ஏற்படும் நிலைமைகள் :
(1) கூட்டுக் கணக்கு ஒன்றில் ஒரு கணக்குடைமையாளர் இறந்து போனுல் அல்லது வகையற்றுப் போனுல் அல்லது மனநிலை பாதிக்கப் பட்டுப்போளுல் அதற்கு கணக்கு மீதி பற்ருக இருக்கும்போதும் (Debit Balance), தனியானதும் கூட்டானதுமான பொறுப்பு எடுக்கப்பட்டுள்ள போதும், வங்கி கனக்கினை நிறுத்தாது தொடர்ந்து நடாத்த விட்டால் கிளேட்டன் விதி பிரயோகத்தினுல் பாதிப்பே ஏற்படும்.
(2) ஓர் உத்தரவாதியிடம் இருந்து, உத்தரவாதத்தினை முடிவிற்குக் கொண்டுவருவது பற்றிய அறிவிப்பு வங்கிக்கு கிடைக்கப் பெற்று அந்த அறிவித்தல் காலம் நடந்து முடிந்து விட்டால், வங்கியானது குறித்த உத்தரவாத கணக்கினைத் தொடர்ந்து நடாத்துவதற்கு விட்டால் அதனுல் வங்கிக்குப் பாதகம் ஏற்படும்.
(3) ஒர் உத்தரவாதியின் இறப்போ அல்லது அவரது வகையற்றுப் போகும் நிலை பற்றிய அறிவித்தலோ கிடைத்ததும் வங்கி கணக் கினை நிறுத்த வேண்டும். இல்லாவிடின் பாதகமே வங்கிக்கு ஏற்படும். (மேற் காட்டிய உதாரண விளக்கத்தினைப் பார்க்கலாம்).
(4) வங்கி ஒன்று ஆரம்ப ஈட்டிற்குப் பணம் கொடுத்ததாக இருக்கும் போது, இரண்டாவது ஈடு ஒன்று பணம் பெற்றவனுல் உருவாக்கப்

سیسے 27 ۔۔۔۔۔۔
படுகின்றது என்ற அறிவித்தல் கிடைக்கும்போது, அவரது கணக் கினை நிறுத்தாது விட்டால் கிளேட்டன் விதி தொழிற்படுவதனுல் வங்கிக்குப் பாதகமே ஏற்படும். இவ்வாறு அமைந்த ஒரு சந்தர்ப் tuigfig D-5T UTGITTLDīres Deely v Lloyds Bank Ltd. (1912) Guypáš கின் நிகழ்வினை உதாரணமாகக் காட்டலாம்.
வங்கிக்கு நன்மை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் :
(7)
(2)
கம்பனி ஒரு மேலதிகப் பற்று வழங்கப்பட்ட ஒரு நடைமுறைக் கணக்கினையும், ஊதிய முற்பணம் வழங்கும் ஒரு புறம்பான கனக்கு ஒன்றினையும் கொண்டு நடாத்தும்போது கிளேட்டன் விதி பிர யோகிக்கப்பட்டு மேலதிகப்பற்று கணக்கில் வங்கிக்குப் பாதகமாக அமைந்தாலும், 2ஆவது கணக்காகிய ஊதிய முற்பணக் கணக்கில் பிரயோகிக்கப்படமாட்டாது. இந் நிலைமை வங்கிக்குச் சாதகமாக அமைவது குறிப்பிடத்தக்கது.
ஒரு கம்பனி வங்கியொன்றிற்குக் கடன்பட்டு இருக்கும்போது தற்போது நிலுவையாக உள்ள கடன்களை உத்தரவாதப்படுத்து வதற்காக ஒரு பொருட் பிணைப் பொறுப்பினை வங்கி பெற்று வைத் திருக்கின்ற போது இவ்வாறு பெற்ற திகதியில் இருந்து 12 மாதங் களுக்குள் கம்பனி ஒடுக்கப்பட்டால் இப் பொறுப்பினை உரு வாக்கிய நேரத்தில் கம்பனி வகையற்ற நிலையில் இருந்ததாகக் கருதி அப் பொறுப்பு பெறுமதியற்றுப் போகலாம். ஆளுல் இந் நிலையில் கம்பனியின் ஒடுக்குதலின் முன் நடைபெற்ற பரிவர்த்தனை களில் கிளேட்டன் விதியின் பிரயோகம் நடைமுறைப் படுவதினுல் இவ்வாறு பெற்ற பொறுப்புக்கு எதிராக வங்கி ஒர் பெறுமதி யைப் பெறக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் உள்ள கம்பனியின் கணக்கு ஒன்றில் கிளேட்டன் விதிப் பிரயோகம் வங்கிக்குச் சாதகமாகவே அமைகின்றது.

Page 20
அத்தியாயம் 5 soîu9C6 Gls-Ligs6o (Set-off)
ஒரு கடஞ்ளிக்கு சில சமயங்களில் அவனுக்குக் கடன் கொடுத்தவ ஞலேயே வேறு ஏதாவது வகைகளில் உடனும் செலுத்தப்படவேண்டிய தொகைகள் இருப்பதுண்டு, இவ்வாறு செலுத்தப்பட வேண்டிய தொகைகளைக் கருத்தில் கொண்டு, அங்கு கடனளி செலுத்த வேண்டிய தேறிய தொகையினைக் கணக்கிட்டுக் கொள்வதற்குச் சட்டரீதியான ஓர் உரிமை அவனுக்குக் (கடனுளி) கிடைக்கின்றது. இந்தச் சட்டரீதியான உரிமையே சரியீடு செய்தல் எனப்படும். இந்தச் சட்டரீதியான உரிமை கடன்பட்டவனுக்கே ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒரு சாதாரண கடன்பட்டோன் கடன் கொடுத்தோன் உறவு முறையில், அவர்களது நாளாந்த வியாபார அலுவல் முறையில், தமக்கிடையே பெறவேண்டியவற்றையும், செலுத்தவேண்டியவற்றை யும் கணக்கிட்டு சரியீடு எனும் செயற்பாட்டினைச் செய்து கொள்ள (tpւգայւն .
உதாரணமாக, B என்பவர் ரூபா 100/- பெறுமதியான சில வகைத் தானியங்களை A என்பவரிடம் இருந்து வாங்குகின்றர். இதேபோல் B என்பவர் ரூபா 500/- பெறுமதியான அலுமினியப் பொருட்களை Aக்கு விற்பனை செய்கின்ருர். இங்கு 8 தனக்குச் சேரவேண்டிய தொகையாகிய ரூபா 500/- இனை தான் செலுத்தவேண்டிய 1000/-ற்கு எதிராகச் சரியீடு செய்து மிகுதி ரூபா 500/- ஐச் செலுத்த முடியும். இது B க்குரிய சட்டரீதியான உரிமையும் ஆகும். இதனையே நாம் B க்குரிய சரியீடு செய்யும் உரிமை ஸ்னக் கூறுகின்ருேம்.
ஆஞல் வங்கி-வாடிக்கையாளர் உறவுமுறையில் ஒரு வங்கியானது தான் விரும்பியபோதோ அல்லது எப்போதுமோ இவ்வாறு சரியீட்டு உரிமையைப் பயன்படுத்த முடியாது. இது சில சட்ட திட்டங்களுக்கு அமையவே செய்துகொள்ளப்பட முடியும். எனவே இதுவே ஒரு வங்கியாளன் வாடிக்கையாளன் உறவுமுறைக்கும் சாதாரண ஒரு கடன்பட்டோன் கடன் கொடுத்தோன் உறவு முறைக்கும் இடையில் உள்ள வேறுபாடுமாகும்.
இயல்பாகவே சரியீடு செய்யும் உரிமை: (Automatic Right of Set-off)
பின்வரும் சந்தர்ப்பங்களில் இயல்பாகவே சரியீடு செய்யும் நியதிச் சட்ட அல்லது பொதுச்சட்ட உரிமை ஏற்படுகின்றது. இச் சந்தர்ப் பங்களில் எல்லாம் கணக்குகள் யாவும் உடனே நிறுத்தப்படுகின்றமை கவனிக்கத்தக்கது.

- 29 -
(1) வாடிக்கையாளன் ஒருவனது இறப்பு. மனநோயால் பீடிக்கப் படுதல் (Mental incapacity), வகையற்றுப் போதல் போன்ற நிலைமைகள்.
(2) ஒரு நிறுவனம் வகையற்றுப் போதல் அல்லது காலாவதியாதல் அல்லது ஒரு கம்பனி ஒடுக்கப்படுதல் போன்ற நிலைமைகள்.
(3) ஒரு தடைஉத்தரவு அறிவித்தல் வங்கிக்கு வழங்கப்படும்போது,
(4) வங்கிக்குக் கொடுத்த பிணையின் மேலாக ஒரு இரண்டாவது ஈடு வைக்கப்பட்டுள்ளது பற்றிய அறிவித்தல் வங்கிக்கு வழங்கப்படும் போது.
ஒரு வாடிக்கையாளர் இறக்கின்றபோது, அவரது நடைமுறைக் கணக்கால் வங்கிக்கு ரூபா 400/- கொடுக்கவேண்டி இருப்பின், அதே நேரம் அவருக்கு வைப்புக் கணக்கு ஒன்றில் ரூபா 100/- இருக் கின்றபோது, இயல்பான சரியீடு ஒன்றினை வங்கி செய்துகொண்டு மிகுதி ரூபா 300/-ற்கு இறந்தவரின் வாரிசிடம் அல்லது சட்டபூர்வ உரிமையாளரிடம் கேள்வி ஒன்றினை எழுப்பமுடியும். இதுபோலவே மனநோயிஞல் பீடிக்கப்பட்டதற்கான முறையான அறிவித்தல் கிடைக் கின்றபோதும் ஒரு வங்கி நடந்துகொள்ள முடியும்.
ஒரு வங்கி முடிவு நோக்கிச் செல்கின்றபோதும், ஒடுக்கப்படுகின்ற போதும் வங்கி ஒன்று தனது சரியீடு செய்யும் உரிமையைப் பயன் படுத்த முடியும். இங்கு நாம் பின்வரும் முக்கிய வழக்கினைக் குறிப் பிடலாம்.
National West Minister Bank Ltd. v. Halesowen Press Work and Assemblies Ltd. (1972)
இங்கு வாதி கம்பனியானது West Minister வங்கியுடன் இரண்டு கணக்குகளே நடாத்தி வந்தது. 1ஆவது கணக்கு நடைமுறைப் படுத் தப்படாது 8 11388 மேலதிகப் பற்றுடன் இருந்தது. வங்கியின் சரியீடு செய்யும் உரிமையைக் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுக்கு அமைய சில காலத்திற்குப் பிரயோகிக்கமாட்டாது என்ற உத்தரவாதத்தின் மீது 2ஆவது இலக்கக் கணக்கு ஒன்று திறக்கப்பட்டு அது நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆனல் சில மாதத்துள் கம்பனியின் நிதி நிலைமை போதியதாக இல்லாதபடியால் அதனை ஒடுக்குவதற்கு நடபடி முறைகள் மேற்கொள்ளப்பட்ட வேளையில், இந்த 2ஆவது கணக்கில் இடப்பட்ட E 8611 தொகைக்கான காசோலை ஒன்றினை வங்கி முந்திய 8 11338 ற்கு ாதிராகச் சரியீடு செய்தது. இங்கு கம்பனியின் ஒடுக்குவோன் இவ்வாறு வங்கி செய்தமை பிழையான செயல் என்றும், இந்த 2ஆவது கணக் கில் உள்ள தொகையைத் திருப்பித்தரவேண்டும் என்றும் வழக்கிட்ட போது, மேல் நீதிமன்றம் இந்த வாதம் ஏற்கப்படமுடியாது என்று

Page 21
- 30 -
கூறியது. ஆணுல் மீள் விசாரணை மன்றம் ஒடுக்குவோரின் வாதத்தினை ஏற்றது. ஆனல் இறுதியில் பிரபுக்கள் சபை தமது தீர்ப்பில் வங்கி யானது கம்பனி ஒன்று ஒடுக்கப்படும் சந்தர்ப்பத்தில் சரியீடு செய்து கொள்ளமுடியும் என தீர்ப்பு அளித்தது.
ஏதாவது நிகழ்வுகள் நடந்து கணக்குகள் நிறுத்தப்படாத
நிலையில் சரியீடு செய்தல்: (Where accounts are not Stopped) இதனைப் பின்வரும் உப தலைப்புக்களில் நாம் ஆராயலாம்.
(a) வாடிக்கையாளர் இரண்டு நடைமுறைக் கணக்குகளைக் கொண்டு
இருக்கின்ற சந்தர்ப்பம்:
இங்கு நாம் மேலதிகப் பற்றுக்கான ஒப்பந்தம் எதுவும் இல்லை என ஊகிப்போம். இப்போது முதலாவது கணக்கில் ரூபா 500 வரவாக(credit) இருக்கின்றது. இரண்டாவது கணக்கு ரூபா 400/- மேலதிகப் பற்ருக இருக்கின்றது எனக்கொள்வோம். இந் நிலையில் வங்கியானது, வாடிக்கை யாளர் எழுதும் 100/ற்கு மேலதிகமான எந்தக் காசோலைக்கும் பனம் செலுத்த மறுக்கலாம். அதுபோல வாடிக்கையாளர் ஒருவர் தனது வரவு மீதியான தொகையாகிய ரூபா 500/- இனைத் தனக்குச் செலுத்து மாறு கேட்கும்போது வங்கி ரூபா 400/- இன எடுத்து வைத்துக் கொள்ள உரிமை உண்டு.
இதே நிலை ஒரு வாடிக்கையாளர் ஒரு வங்கியின் வெவ்வேறு இருகிளை களிலும் கணக்கு வைத்திருக்கும்போதும் ஏற்படும். உதாரணமாக (Garn nett v Mcke wen (1872) srsö, so aupéS6) 6urrgés) nurrorff London and County Bank 6T6arro Gutissueir Buckingham Sahnusyth, Leighto Buzzard கிளையிலும் ஒவ்வோர் கணக்கினைக் கொண்டு இருந்தார். ஒரு கிளையில் கீ42, 15s, 11d மேலதிகப் பற்றும் மறுகிளையில் வரவு மீதி யாக $42, 18S, 10dயும் இருந்தது. வரவு மீதியாக இருந்த கணக்கில் 2ே3, 3sற்கு 3 காசோலைகள் வரையப்பட்டன. இவற்றிற்குப் பணம் கொடுக்கக் குறித்த கிளை மறுத்துவிட்டது. மேலதிகப் பற்றுக்கான ஒப் பந்தம் எதுவும் அங்கு இல்லாத இடத்து வங்கி செய்தமை சரியான செயல் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
(b) வாடிக்கையாளர் ஒரு வைப்புக்கணக்கும் நடைமுறைக் கணக்கு ஒன்றும்
வைத்திருக்கின்ற சந்தர்ப்பம்: வாடிக்கையாளர் ஒருவர் தனது நடைமுறைக் கணக்கில் ஒரு காசோலையை வரைந்து கொடுத்தபோது அவரது கணக்கில் அக் குறிப் பிட்ட காசோலைக்குப் பணம் செலுத்தப் போதிய நிதி வசதி இல்லை எனக் கொள்வோம். ஆனல் அதே வாடிக்கையாளர் வைப்புக்

- 3
கணக்கொன்றினைக் கொண்டுள்ளபோது இந்தத் தொகை ஒரளவு போதிய தாக உள்ளபோதும், வங்கி இந்த வைப்புக் கணக்கினைக் கருத்தில் கொண்டு அவரது அக்காசோலைக்கு பணம் செலுத்துவது வழக்கம், இதனை வேறு விதமாகக் கூறுவதாயின் வங்கி தனது சரியீடு செய்கின்ற உரிமையில் தங்கியே இவ்வாறு செய்கின்றது எனலாம்.
(c) வாடிக்கையாளர் கடன் கணக்கு ஒன்றினையும், நடைமுறைக் கணக்
கொன்றினையும் கொண்டு இருக்கும் சந்தர்ப்பம்: ஒரு வாடிக்கையாளர் கடன் கணக்கு ஒன்றினையும் நடைமுறைக் கனக்கினையும் வைத்திருக்கின்றபோது ஒரு நியாயமான அறிவித்தல் வாடிக்கையாளருக்குக் கொடுக்காது இரண்டு கணக்கினையும் சேர்க்க முடியாது. ஆனல் கடன் கணக்கிற்குரிய மாதாந்த தவணைப் பணத்தினை உரிய திகதியில் கட்டத் தவறும்போது இந்நிலை மாறுபடும். இங்கு நாம் பின்வரும் வழக்குப் பற்றி அறிந்து இருத்தல் அவசியம்.
Buckingham & Co. v London & Midland Bank Ltd. (1895)
இவ்வழக்கில் в எனப்படும் வாடிக்கையாளர் நெடுநாளாக வங்கி யில் கணக்குகளை நடாத்தி வருபவர்ஆவார். ஒரு சமயம் அவருக்கு கடன் கணக்கால் $600 பற்முகவும் (Debit) நடைமுறைக்கணக்கால் கி160 வரவாகவும் இருந்தது. வாடிக்கையாளரால் கடன் கணக்கிற்குக் கொடுத்த பிணையின் பெறுமதியில் திருப்தி அடையாத வங்கி திடீரென நடைமுறைக்கணக்கு மீதியினைக் கடன் கணக்கிற்கு மாற்றிவிட்டு, இது பற்றி வாடிக்கையாளருக்கு அறிவித்தது. இதன் காரணமாக வாடிக்கை யாளரினல் எழுதப்பட்ட பல காசோலைகள் பனம் இன்றித் திருப்பப் பட்டன. வங்கிக்கு எதிராக எடுக்கப்பட்ட வழக்கில் வங்கி செய்த செயல் பிழையானதென்று வாடிக்கையாளருக்கு E 500வரை நட்டஈடு செலுத்தும்படி கட்டளை இடப்பட்டது. இதற்கு ஒரு நியாயமான அறிவித்தல் கொடுபடவில்லை என்றும் கூறப்பட்டது.
சில சந்தர்ப்பங்களில் வாடிக்கையாளர்கள் இரண்டு அல்லது மேற் பட்ட கணக்குகளை நடாத்தி வருவதுண்டு. ஒரு கணக்கோ அல்லது மேற்பட்ட கணக்கோ மேலதிகப் பற்முக இருக்கும். சில கணக்குகள் வரவு மீதியாக இருக்கும். இவ்வாருண வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கி எப்போதும் ஒரு சரியீடு செய்யும் உரிமைக் கடிதத்தைப் பெற்று வைத்துக்கொள்ளும். இதன்மூலம் கணக்குகளைச் சரியீடு செய்ய அதிகாரம் பெறப்பட்டு இருக்கும். அதாவது எந்நேரமும் முன்அறிவித்தல் இன்றிச் சரியீடு செய்யலாம். இவ்வாருண அதிகாரத்தினைப் பெற்று வைத்திருத் தல் சில சமயங்களில் பயன் கொடுக்கும். ஆனல் இதனையே வங்கி தனக்குச் சாதகமாக வாதமிட எப்போதும் பயன்படுத்த முடியுமா என்பது சந்தேகத்திற்கு இடமான ஒன்று என்பது இங்கு குறிப்பிடத் As6d.

Page 22
- 32 -
சரியீடு செய்யும் உரிமை இல்லாத சந்தர்ப்பங்கள் (No Right of Set-off)
பின்வரும் சந்தர்ப்பங்களில் வங்கிக்கு சரியீடு செய்கின்ற உரிமை கிடைக்க மாட்டாது. (1) ஒரு தனிப்பட்ட பற்று மீதியான கணக்கும், ஒரு நம்பிக்கைப்
பொறுப்பு வரவு மீதியான கணக்கும். உதாரணங்கள் : (a). சு. சுந்தரம் - உதைபந்தாட்ட கழகக் கணக்கு.
(b) சு. சுந்தரம் - பொலிஸ் கணக்கு. இவ்வாறு உள்ள போது சரியீடு செய்ய முடியாது. (2) இறந்த ஒருவரின் வரவு மீதியான கணக்கும், நிறைவேற்றுனரின்
பற்று மீதியான கணக்கும். இந்நிலையில் சரியீடு செய்யப்பட முடியாது. அதுபோல் இந்நிலை மாறி அமைந்தாலும் செய்யப்பட முடியாது. (3) ஏதாவது விசேட ஒப்பந்தங்கள் இல்லாத போது, ஒரு வாடிக்கை யாளருக்கு உண்டியல்களைக் கழிவுசெய்து கொடுத்த வகையால் அவ்வப்போது ஏற்படும் பொறுப்புகளுக்காக அவரது வரவு மீதியான கணக்கு ஒன்றினைச் சரியீடு செய்ய முடியாது. ஆணுல் வாடிக்கையாளர் வகையற்றுப் போளுல் இந் நிலையில் மாற்றம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. (4) ஒரு வழக்கறிஞரின் வாடிக்கையாளரின் கணக்கினையும், அவ்வழக் கறிஞரின் மேலதிகப் பற்று கணக்கு ஒன்றினையும் சரியீடு செய்து கொள்ள முடியாது.
சரியீடு செய்யப்படத்தக்க கணக்குகள் (Accounts which may be Set - off)
இந் நிலைகளில் நியாயமான அறிவித்தல் குறிப்பாக செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், வழக்கமான முறைகள் போன்றவற்றில் தங்கியே சரியீடு செய்யப்படலாம். பின்வரும் சந்தர்ப்பங்களை இங்கு நாம் உதாரணங் களாகக் கூறலாம். (1) வாடிக்கையாளர் ஒருவரின் வரவு மீதியான கணக்கும், பற்று மீதி யான கணக்கும். உ + ம்: உத்தியோகப் பற்ருன கணக்குகள் அதா வது காரியாலய கணக்குகள், ஏதாவது வைப்புக் கணக்குகள் போன்றவை. (2) ஒரு வரவு மீதியான தனிப்பட்ட கணக்கும் பற்று மீதியான நம் பிக்கைக் கணக்கு ஒன்றும். இங்கு தனிப்பட்ட கணக்கு உரிமை யாளர் தனி நம்பிக்கைப் பொறுப்பாளராக இருத்தல் வேண்டும்.

- 33 -
(3) வரவு மீதியான தனிப்பட்ட கணக்கு ஒன்றும், கூட்டான அல்லது பங்குடைமைக் கணக்கு ஒன்றும், இங்கு தனியானதும் கூட்டானதுமான பொறுப்பு ஏற்படுத்தப்பட்டு இருத்தல் அவசிய மானதாகும்.
(4) வரவு மீதியான நடைமுறைக் கணக்கு ஒன்றும், கடன் கணக்கு
ஒன்றும்.
வாடிக்கையாளரின் கணக்கில் உள்ள பணம் ஓர் நம்பிக்கைப் பொறுப்பில் உள்ளது என வங்கி அறிந்தால் அல்லது அறியவரு கின்றபோது எக் காரணம் கொண்டும் தனது சரியீடு செய்யும் உரிமையைப் பயன்படுத்த முடியாது. மேலும் உட்கிடையான நம் பிக்கைப் பொறுப்பு ஒன்று உள்ளது என அறிகின்றபோது எக்கார ணம் கொண்டும் சரியீடு செய்யப்படுதல் , ஆகாது. g)ai “” e L* கிடையான நம்பிக்கைப் பொறுப்பு' என்ற நிலை வங்கியின் சரியீடு செய்யும் உரிமையைக் கவர்ந்துவிடும். இதற்கு உதாரணமாக தரம் Barclays Bank Ltd. v. Quist Close Investment Ltd. (1968) stairp வழக்கினைக் கூறலாம்.
மேலும், இங்கு முன்னர் குறிப்பிடப்பட்ட சந்தர்ப்பங்களாகிய (2), (3), (4) போன்றவற்றில் வங்கியானது வாழ்க்கையாளரின் மரணம் வகையற்றுப் போதல், ஒடுக்கப்படுதல், அல்லது மனநிலை பாதிக்கப் படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் சரியீடு செய்வதற்கு இயல்பாகவே முயற்சிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சரியீடு செய்தல்பற்றிய தற்கால நடைமுறைப் பிரயோகத் தொகுப்பு:
வாடிக்கையாளரால் வரையப்பட்ட காசோலைகளுக்குப் பணம் செலுத்துவதைத் தீர்மானிப்பதற்கு முன்னர், அவரால் நடாத்தப்படும் கணக்குகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு அவற்றிற்கிடையே சரி யீட்டினைச் செய்ததன் பின்னரே அவரது காசோலைகளுக்குப் பணம் செலுத் துவதா அல்லது மறுத்து விடுவதா என்பதனை வங்கி ஒன்று தீர்மானிக் கும். இந்த நடைமுறை பற்றி வாடிக்கையாளர் ஒருவர் இரண்டா வது கணக்கு ஒன்றினைத் திறந்த உடனே அவருக்கு வழக்கமாக அறி விக்கப்படும். இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் வங்கிக்கும், வாடிக்கை யாளருக்கும் இடிையில் எந்தவிதமான குறிப்பான ஒப்பந்தமோ அல்லது உட்கிடை ஒப்பந்தமோ இல்லை எனக் கொண்டு பின்வரும் உதாரணத்தை மனதில் கொள்ளல் வேண்டும்.
3

Page 23
- 34 -
வாடிக்கையாளர் தனது கணக்கில் உள்ள மீதிக்கு மேலதிக மான ஒரு தொகைக்கு காசோலை ஒன்றினைத் தனது முதலாவது கணக்கில் வரைகின்ருர் எனக் கொள்வோம். இந்நிலையில் வங்கி அவரது இரண்டாவது கணக்கில் உள்ள வரவு மீதியான தொகையினைக் கருத்தில் கொண்டு முதலாவது கணக்கில் வரைந்த காசோலைக்குப் பணம் செலுத்துவது வழமையாகும். இதனுல் வருங்காலத்தில் பிரச்சினை வங்கிக்கு உருவாகும் என்பதனை நாம் அறியலாம். அதாவது இரண்டா வது இலக்கக் கணக்கில் வரவு மீதிக்குள் வரைந்த காசோலைகளுக்குப் பணம் செலுத்த வேண்டிய நிலையும் உருவாகும். எனவே இதுபற்றி வங்கி உடனே வாடிக்கையாளருடன் தொடர்பு கொண்டு இந்நிலைபற்றி அவருக்கு எடுத்துக் கூறவேண்டும். அவர் மேலும் காசோலைகளை எழு தாது இங்கு நடைபெற்றவைகளைச் சீர்செய்து கொள்ளுமாறு வேண்டப் படுதல் வேண்டும். இதனுல் ஏற்பட இருக்கும் பிரச்சினேகளை வங்கி தவிர்த்துக்கொள்ள முடியும்.
கருத்தில் கொள்ளவேண்டிய மேதிைக குறிப்புகள்:
(1) வங்கி ஒன்றில் வைப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவருக்கே செலுத்தப்பட வேண்டியதும் ஆளுல் வேறு ஒரு வங்கியின்மீது வரையப்பட்டதுமான காசோலை ஒன்றினைக் காசாக்கிப் பணம் பெற அனுமதித்துள்ளதாகக் கருதுவோம். ஆனல் பின் இந்தக் காசோலை கொடுப்பனவிற்கு எனக் குறித்த வங்கிக்குச் சமர்ப்பிக்கப்பட்டபோது பணம் கொடுக்கப்படாது மறுக்கப்பட்டால் அவரது வைப்புக் கணக்கினை அக் காசோலையின் தொகைக்கு எதிரா கச் சரியீடு செய்கின்ற உரிமை வங்கிக்குக் கிடைக்கும்.
(2) உத்தரவாதி ஒருவரின் வரவு மீதியான கணக்கில் இருக்கும் தொகை யினை, அவரது உத்தரவாதத்தின்கீழ் ஏற்படும் பொறுப்பிற்கு எதி ராகச் சரியீடு செய்யப்பட முடியுமா என்பது ஒரு கேள்விக்குரிய விடயமாகும்.
இங்கு குறித்த உத்தரவாதமானது கேள்வியின்போது பணம் செலுத்தப்பட வேண்டிய ஒன்ருக இருப்பின் (The guarantee is payable on demand), வங்கியினல் கேள்வி எழுப்பப்படும்வரை, உத்தர வாதியினல் உத்தரவாதத்தொகை அல்லது கடன்தொகை செலுத்தப்பட Gaging usaiah). gifilah) Bradford Old Bank v Sutcliffe (1918) என்ற வழக்கில் காணப்பட்டது.
எனவே, இவ்வாறு கேள்வி ஒன்று எழுப்பப்படும்வரை சரியீடு செய்யும் உரிமை வங்கிக்குக் கிடைக்கமாட்டாது. ஆனல் கேள்வி உண்டாக்கப்

- 35 -
பட்ட உடனே சரியீடு செய்யும் உரிமையைப் பிரயோகிக்க முடியும் ஆனல் சில உத்தரவாத ஒப்பந்தங்களுக்கு அமைய இவ்வாறு முன் கேள்வி ஒன்று எழுப்பாமலேயே சரியீடு செய்யும் உரிமையை வங்கி பெற (1pւգայւհ.
(3) ஒரு நிறுவனத்தின் கணக்கு ஒன்று மேலதிகப் பற்று நிலையில் இருக் கின்றது. அதே நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஒவ்வொருவரது கணக்கும் வரவு மீதியான நிலையில் இருக்கின்றது. இந் நிலையில் வங்கியானது அவர்களது தனிப்பட்ட கணக்குகளைச் சரியீடு செய்து நிறுவனத்தின் மேலதிக பற்றிற்குப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
ஏதாவது விசேடமாக அல்லது குறித்துச் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் இருந்தால் அன்றி வங்கி இவ்வாறு சரியீடு செய்துகொள்ள முடியாது. வகையற்ற செயல்முறையில்கூட முதலில் ஒரு பங்குதாரரின் தனிப்பட்ட சொத்து அவரது தனிப்பட்ட கடன்களுக்கே முதலில் செலுத்தப்பட வேண்டும். வகையறைச் சட்டம் (1914) பிரிவு 33 (6) இதுபற்றிக் கூறு கின்றது.
ஆளுல் பங்காளர்கள் தனியாகவும் கூட்டாகவும் பொறுப்பு என்ற நிலை ஏற்படும்போதும், இணையாகப் பொறுப்பு என ஏற்படும்போதும், பங்குடைமையின் பொறுப்புக்களுக்கு அவர்களை ஆளாக்க வங்கிக்கு உரிமை உண்டு. எனவே வங்கி அவர்களது தனிப்பட்ட வரவு மீதிகளை பங்குடைமையின் பொறுப்புக்களுக்கு எதிராகச் சரியீடு செய்ய முடியும்

Page 24
அத்தியாயம் 6 கணக்குகள் ஆரம்பித்தலும் அவற்றைக் கொண்டு கடாத்துதலும் (Opening and Conducting Accounts)
வங்கி ஒன்று ஒருவரின் காசோலையை முதன்முதலாகப் பெற்று அதனைச் சேகரிப்பதற்காக ஏற்றுக்கொண்டதுமே வங்கி-வாடிக்கையாளர் உறவுமுறை ஆரம்பமாகின்றது எனக் கூறப்படும். எப்படியாயினும் ஒரு கனக்கினை வாடிக்கையாளருக்கு ஆரம்பித்துக் கொடுப்பதிலும், அக் கணக்கினை நடாத்திக்கொண்டு இருக்கும்போதும் வங்கியானது சில பாதுகாப்புக்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப் பிடிக்க வேண்டும். இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதினுல் நிலைமாறல் போன்ற தவறுகளுக்கு எதிராக ஒரு சட்டரீதி யான பாதுகாப்பினை வங்கி பெற்றுக்கொள்ள முடியும். இல்லாதுவிடின் ஒப்பற்ற மீறுகை போன்ற குற்றங்களுக்கு வங்கி ஆளாக வேண்டி ஏற் LGh.
வாடிக்கையாளராக வர இருப்பவரின் நன்நடத்தை, அவரது நிதி நிலைமை, அவரது தொழிலின் தன்மை, அவரது தொழில் கொடுப்ப வரின் பெயர் விலாசம் போன்றவற்றை வங்கி அறிந்து அதில் திருப்தி அடைதல் வேண்டும். இவ்விபரங்களைப் பின்வரும் முறைகளில் அறிந்து கொள்ள முடியும்.
(அ) ஏற்கனவே வாடிக்கையாளராக உள்ள ஒருவரின் நேரடி அறிமுகத்தி ஞல் அல்லது வேறு கிளை ஒன்றில் இருந்து அல்லது வேறு ஒரு வங்கி யிடம் இருந்து அறிந்து கொள்ள முடியும். வாய்மூலமாக அறிமுகம் செய்யப்படும்போது இதுபற்றி வங்கி தனது பதிவேடுகளில் குறித்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
(ஆ) ஒரு விண்ணப்பதாரரின் வேலை கொள்வோனிடமிருந்து விசாரணை மேற்கொள்ளலாம். இது பெரும்பாலும் விரும்பத்தக்கதாகும்.
இவ்வாறு விசாரணை செய்து கொள்வதினுல்,
(1) வாடிக்கையாளரின் நற்பெயர் அல்லது அவரது கீர்த்தி நிறுவப்
படலாம்.
(2) மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் (பிரிவு 88) பாதுகாப்
பினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

-سس 37 سس
வாடிக்கையாளரின் நற்பெயர், அல்லது கீர்த்தி பற்றி அறிந்து கொள்ளுவதினுல் ஒரு திருப்தியற்ற கணக்கு ஆரம்பிக்கப்படுதலையும் அதனுல் ஏற்படும் சங்கடங்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும். மேலும் மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பைப் பெறுவதாயின் கணக்கு ஒன்று ஆரம்பித்த போது அவசியமான நடபடி முறைகள் கடைப்பிடிக்கப்பட்டதாகவும், கவனமின்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும் நிறுவுதல் வேண்டும்.
(1) வாடிக்கையாளராக வர இருப்பவர் பற்றி ஓர் தகுந்த விசாரணை செய்யப்படுதல் அவசியமானதாகும். இந்த விசாரணையின் அவசியத் தன்மையை நாம் பின்வரும் வழக்கின் மூலம் அறியலாம்.
a -- h : Ladbroke v Todd (1914)
Ladbroke a rair uaisir go book maker garroir gajai Aargil வாடிக்கையாளன் ஒருவனுக்கு ஒரு காசோலையை வழங்கினன்? இக்காசோலை தபாலில் களவாடப்பட்டு, அக் கள்வஞல் மோசடி யாகப் புறக்குறிப்பிடப்பட்டது. கள்வன் காசோலையைப் பிரதிவாதி வங்கியின் கணக்கில் செலுத்தி, விரைவான தீர்வைமுலம் அதன் பெறுமதியைப் பெற்றுக்கொண்டான். இங்கு வங்கியின் மீது வழக்கிடப்பட்டபோது, விசாரணைகள் மேற்கொள்ளாது விட்டமை காரணமாகத் தனது சட்டரீதியான பாதுகாப்பினை இழந்ததுடன் கவனமின்மையாக நடந்தமையும் நிறுவப்பட்டது. எனவே வங்கி அக்காசோலைத் தொகைக்குப் பொறுப்பாகவேண்டி ஏற்பட்டது.
(2) மேலும் விசாரணை மேற்கொண்டபோது மத்தியஸ்தராக இருந்த நபர் வங்கிக்குத் தெரியாதவராகவும், அறிந்து கண்டுபிடிக்க முடி யாதவராகவும் இருக்கின்ற இடத்து வங்கி தனது பாதுகாப்பினை இழக்கவேண்டி ஏற்படும். இங்கும் வங்கி கவனமின்மையாக நடந்துகொண்டமைக்காகக் குற்றம் சாட்டப்படும்.
2 - th: Guardians of St. John's Hamstead v Barclays Bank
Ltd. (1923)
இவ்வழக்கில் ஒருவர் தன்னை D. Stewart என விபரித்து தான் D. Stewart & Company 6Tairp Guuilai 69uruntutub GarutaugTsayub கூறிஞர். இங்கு இந்தப் புதிய நபருக்குக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. இவரது உண்மையான நிலைபற்றி அறிவதற்கு வங்கியினுல் எந்த முயற்சி யும் எடுக்கப்படவில்லை. இங்கு வேடிக்கை என்னவென்முல், ஒரு திறமை யான விசாரணை மேற்கொள்ளப்பட்டு அது எழுத்திலும் பெறப்பட்டது. இந்த விசாரணைக்குப் பதில் கொடுத்தவர் ஒரு அன்னியர் ஆவார் இங்கு உண்மையில் விசாரணைக்கு ஆன பதிவினை அப் புதிய வாடிக்கை

Page 25
س- 38 ----
யாளர் தானே கொடுத்து இருந்தார். எனவே இங்கு மேற்கொண்ட விசாரணையின் உண்மை நிலை பற்றி வங்கி ஆராயாதபடியால், கவன மின்மைக்கு ஆளாக்கப்பட்டு, சட்டரீதியான பாதுகாப்பினை இழந்தது.
இதே விதமான அம்சத்தைக் கொண்ட பின்வரும் வழக்குப் பற்றி யும் நாம் இங்கு குறிப்பிடவேண்டும்.
Nu-Stilo Footwear Ltd. v Lloyds Bank Ltd. (1956)
இவ்வழக்கில் மோசடிக்காரன், தனது நிலைபற்றி விசாரிக்க மத்தி யஸ்தராக இன்னெருவரின் பெயரைக் கொடுத்தான். வங்கி அவரிடம் விசாரித்தது. அவர் சிறந்த முறையில் பதில் கொடுத்தார். மேலும் Lloyds வங்கியானது இந்த மத்தியஸ்தர் பற்றி அவரது வங்கியிடமும் விசாரித்தபோது, அவ்வங்கியும் இவர் ஆட்களை அறிமுகப்படுத்தத் தகுதி உடையவர் எனக் கூறியது. இங்கு 9 காசோல்கள் தொடர்பில் E 5027 பெறுமதிக்கு மோசடி நடந்தபோது வழக்கு எழுந்தது. வழக்கில் வங்கி விசாரணை மேற்கொண்ட முறைகளில் கவனமின்மையாக நடக்கவில்லை எனத் தீர்க்கப்பட்டது.
(3) வங்கி ஒன்று ஒருவருக்குக் கணக்கு ஒன்றினை ஆரம்பிட்பதற்கு முன்னர் அப்புதிய வாடிக்கையாளரின் வேலே கொள்வோனின் பெயரை யும் அவரது வேலையின் இயல்பு பற்றியும் நன்கு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனுல் பின்னர் ஏற்படும் பின்விளைவுகளைத் தவிர்த்துக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன், வங்கி கவனமின்மை காரணமாகத் தனது பாதுகாப்பின் இழக்காமலும் நில் கொள்ள (tpւգԱյմ - 2.+ b : E. B. Savory & Company v Lloyds Bank Ltd. (1932) இவ்வழக்குமூலம், நாம் ஒரு வங்கியானது கணக்கு ஒன்றினை
ஆரம்பிக்கும்போது போதியளவு கவனம் எடுக்கத்தான் வேண்டும்
என்பதனை நிலைநிறுத்துவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
B. B. Savory & Co. எனும் பங்குத்தரகர் கம்பனியில் இரண்டு நேர்மையற்ற எழுதுவினைஞர்கள் கடமையாற்றினர். கம்பனியினல் மூன்ரும் நபர்கள் சார்பாக எழுதப்பட்ட காவிக்குரிய காசோலைகள் பலவற்றை இவர்கள் திருடி மோசடி செய்தார்கள். இப்படி மோசடி யாக எடுத்த காசோலைகளை இவர்கள் Lloyds வங்கியின் நகரகிளையில் வைப்பிட்டு, கிராமப்புற கிளையொன்றில் உள்ள கணக்கில் வரவில் (Credit) இட ஒழுங்குகள் செய்தார்கள். ஒரு சந்தர்ப்பத்தில் கணக் கானது ஒரு எழுதுவினைஞனின் பெயரிலேயே இருந்தது. மற்றச் சந்தர்ப் பத்தில் இன்னுெருவனின் மனைவியின் பெயரில் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் மோசடிக்காக அதாவது நிலைமாறலுக்காக வங்கிக்கு எதிராக வழக்கிடப்பட்டது.

سس۔ 39 ------
இங்கு நாம் முதலில் எழுதுவினைஞனின் பெயரில் இருந்த கணக் கினைக் கவனிப்போம். இங்கு வங்கி கணக்கினை ஆரம்பிக்கும்போது வேலை கொள்வோனின் பெயரைப் பெற்றுக்கொள்ளாதபடியால் கவன மின்மையாக நடந்தது எனப்பட்டது. வெறுமனே அவர் "பங்குத் தரகர் " ஒருவரின் எழுதுவினைஞன் என்று பெற்றுக் கொண்டமை மட்டும் திருப்திதரக் கூடியது அல்ல. மேலும் நகரக் கிளையிலேயே காசோலை இடப்பட்டது. எனவே கணக்கு நடாத்தப்படும் கிராமக் கிளையில் வெறுமனே வரவுப்பத்திரத்தைத்தான் பார்க்க முடியுமே தவிர, சேகரிப்பிற்கு இடப்பட்ட காசோலை யாரால் எழுதப்பட்டது என்பது பற்றி அறிய முடியாது. விபரத்தை அறியக் கூடிய வாய்ப்பு தகரக் கிளைக்கே இருந்தது. எனவே கணக்கு நடாத்தப்படும் கிராமச் கிளையானது பொறுப்புக்களுக்கு ஆளாகவேண்டி ஏற்பட்டது.
இங்கு நாம் அடுத்து எழுதுவினைஞனின் மனைவியின் பெயரில் இருந்த கணக்கினைப் பார்ப்போம். இங்கு அந்தப் பெண்ணின் கணவனின் தொழில் அல்லது தொழில் கொடுப்போனின் விலாசத்தையும் வங்கி பெற்றிருக்கவில்லை. இவை கணக்கு ஆரம்பிக்கும்போது பெறப்பட வேண்டும். எனவே இங்கும் வங்கி கவனமின்மையாக நடந்துகொண் டமையாகக் காணப்பட்டது.
இங்கு நாம் மேலே குறிப்பிட்ட B. B. Savory வழக்கின் பின், கணக்குகளை ஆரம்பிக்கும்போது வேலை விபரம் பற்றி முழு விபரமும் சேகரிக்கத் தொடங்கின. ஆனல் எப்படியாயினும் ஒரு வாடிக்கை யாளன் தனது வேலை கொள்வோனை மாற்றிக் கொண்ட இடத்து அது பற்றிய ஒவ்வொரு விபரத்தையும் அறிய வேண்டிய அவசியம் வங்கிக்கு கிடையாது. இந்த முடிவினை நாம் பின்வரும் வழக்கில் கானக்கூடிய தாக இருக்கின்றது.
a -- th: Orbit Mining & Trading Co. Ltd. v Westminister
Bank Ltd. (1962).
இச் சந்தர்ப்பத்தில் நாம் வங்கி ஒருவருக்குக் கனக்கொன்றினை ஆரம்பிக்கும்போது விசாரணை ம்ேற்கொள்ளுதல், சில சம்பிரதாய நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றிற்கு அண்மைக்கால வழக் கொன்றினைப்பற்றி அறிந்து இருத்தல் அவசியமானதாகும். இவ் வழக்கு வங்கிக்கு எவ்வளவுதூரம் சாதகமாக அமைந்திருக்கின்றது என்பதனை யும் கவனிக்க வேண்டும்.
2 - th: Marfani & Co. Ltd. v Midland Bank Ltd. (1958)
இங்கு K எனப்படும் பாகிஸ்தானியன் ஒருவன், தன்னை E என்ற பெயரில் மற்றுமொரு பாகிஸ்தானிய உண்டிச்சாலை உரிமையாளனுகிய Aக்கு அறிமுகப்படுத்தி அவனுடன் நட்புறவு கொண்டாடி வந்தான்

Page 26
۔۔۔۔۔۔ 40 سس۔
பின்னர் இந்த K என்பவன் Midland Bankற்கு E என அறிமுகம் செய்து தான் ஓர் உண்டிச்சாலை உரிமையாளனுக மாற இருப்பதாகக் கூறி, தான் நட்புரிமைகொண்டுள்ள மற்ற உண்டிச்சால் உரிமையாள ணுகி Aயின் பெயரைத் தனது மத்தியஸ்தனுசு விசாரிப்பதற்குக் கொடுத் தான். இவனைவிட மேலும் ஒரு பாகிஸ்தானியனையும் மத்தியஸ்தனுகக் கொடுத்தான். வங்கி மேற்கொண்ட விசாரணையின் பதிலை எதிர் பார்த்து இருக்கையில், வங்கியானது B யை காசாக 80 யை அவனது கணக்கில் இடவும், பின் அடுத்த நாள் கி 3000 பெறுமதியான காசோலை ஒன்றையும் கணக்கில் இடவும் அனுமதித்தது. உண்மையில் இந்தக் காசோலை Kயின் வேலை கொள்வோனகிய M இனல் அவரது கடன் கொடுத்தோன் ஒருவராகிய E எனும் உண்மையான நபரின் பெயரில் எழுதப்பட்டு, M இனல் கையொப்பம் இட வைக்கப்பட்டது. வங்கியின் விசாரணையின்போது A யின் வாய்மூல விடை கிடைத்தது அதில் E என்பவர் தனக்குச் சிலகாலமாகத் தெரிந்தவர் என்றும், அவர் ஒரு உண்டிச்சாலையாளஞக விரைவில் வர இருப்பவர் என்றும் பதில் கூறிஞர். இரண்டாவது விசாரணைக்குப் பதில் கிடைக்கவில்லை. எனவே இதன்பின் வங்கி E ந்கு காசோலைப் புத்தகம் ஒன்றை வழங்கியதுடன் & 3000 காசோலையையும் விரைவு தீர்வை மூலம் கணக்கில் வரவு வைத்து, கனக்கு மீதியில் பெரும் பகுதியை எடுக்கவும் அனுமதித்தது.
எனவே Martani Co., Ltd, நிலைமாறல் ஏற்படுத்தப்பட்டு விட்ட தென்றும், வங்கி கணக்கு ஆரம்பிப்பதிலும், சேகரிப்பிலும் கவன மின்மையாக நடந்துகொண்டது என்றும், இதன் அடிப்படையில் வங்கியை வழக்கிட்டனர்.
ஆனல் வழக்கினை விசாரித்த நீதிபதியும், மேன்முறையீட்டு நீதி மன்றமும் வங்கி கவனமின்மையாக நடந்துகொள்ளவில்லை என்றே தீர்ப்பளித்தனர். அவர்கள் தமது தீர்ப்பில் வங்கி தான் கவனமின்மை யாக நடந்து கொள்ளவில்லை என்பதை நிறுவியுள்ளது என்றும் கூறினர். ஆணுல் வாதிகள் தரப்பில் வாதிடும்போது பின்வருமாறு கூறப்பட்டது.
(II) வாடிக்கையாளராக வர இருந்தவரை, அவரது ஆளடையாளம் அவரது கடவுச்சீட்டு போன்றவற்றைப் பார்த்துத் திருப்தியான முறையில் நிறுவவில்லை என்றும்,
(2) அவரது முன்னைய தொழில் விபரங்கள் பெறப்படவில்லை என்றும்,
(3) A யினுடைய விசாரணைப் பதில் மட்டுமே பெறப்பட்டதே ஒழிய
இரண்டாவது பதிலினைப் பெறவில்லை என்றும்,

ہوئی۔ 41 جب
(4) வரவு சிட்டையில் எழுதிய எழுத்தும் காசோலையை வரைந்த எழுத்தும் பற்றி ஆராயவில்லை என்றும், ஏதாவது நம்பக உறவு முறை இருந்தமை பற்றி கருத்தில் கொள்ளவில்லை என்றும் வாதிடப்பட்டது.
ஆனல் நீதிமன்றம் இவற்றை ஏற்க மறுத்து, நல்ல திருப்தியான வாடிக்கையாளர் ஒருவரின் அறிமுகமே வங்கியைக் கணக்கினை ஆரம்பிக்க அனுமதித்தது என்றும் தீர்ப்பில் கூறியது. எனவே இவ்வழக்கு வங்கிக்குச் சாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஞல் மிக அண்மையில் நடைபெற்ற வழக்கொன்றில் தீர்ப்பு வேறுவிதமாக அமைந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
a.--th: Lumsden & Co. v London Trustee Savings Bank (1971)
இவ்வழக்கில் வாடிக்கையாளராக வர இருக்கும் நபரும் அவரது மத்தியஸ்தரும் (Referee) தொழில் ரீதியான நபர்கள் என்றும், அவுஸ்திரேலியாவில் இருந்து அண்மையில் வந்தடைந்தவர்கள் என்றும், இங்கு வங்கி வாடிக்கையாளராக வர இருப்பவரின் கடவுச்சீட்டைப் பரிசீலனை செய்யவில்லை என்றும், மத்தியஸ்தராக இருந்தவர் தனது வங்கியின் பெயரை மேலும் விசாரணைக்காகக் கொடுக்கவில்லை என்றும், இதன் காரணமாக வங்கி கணக்கினை ஆரம்பிக்கும்போது கவன மின்மையாக நடந்தது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மேற்கூறிய உதாரணங்கள் யாவற்றிலும் இருந்து வங்கி ஒன்று கணக்கு ஒன்றினை ஒருவரின் பெயரில் ஆரம்பிக்கும்போது எத்துணை முன்னெச்சரிக்கையுடனும், கவனத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதனை எம்மால் அறியக் கூடியதாக இருக்கின்றது.
வைப்புக் கணக்கு ஒன்றினை ஆரம்பித்தல் :
வைப்புக் கணக்கு ஒன்றினை ஆரம்பிக்கும் போது சாதாரணமாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. ஆனல் காசோலை ஒன்றினை ஆரம்ப வைப்பாக இட்டுக் கணக்கினை ஆரம்பிக்கும்போதும் அல்லது காசோலைகளைக் காலப்போக்கில் வைப்பிடச் சந்தர்ப்பம் இருக்கின்ற போதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
பணத்தினை வைப்பிட்டவரே தன் கையொப்பத்தின் இட்டு மீளக் கேட்கும்போது பெருந்தொகைப்பணம் அனேகமாக மீள வழங்கப் படும். இங்கு அவரது கையொப்பம் உறுதிப்படுத்தப்பட்டு பணம் வழங்கப்படும். பெரும்பாலும் வைப்புக் கணக்கில் பரிவர்த்தளை ஒரே முறையிலேயே நடந்து முடிந்து விடும். சேமிப்புக் கணக்குப் போன்ற வற்றில் பகுதிபகுதியாகச் செலுத்தப்படுவதும் உண்டு.

Page 27
- 42 -
வைப்புக்கணக்கிண் ஆரம்பிக்கும்போது விசாரணை மேற்கொள்ளப் படுவதில்லை. ஆளுல் இதனைத் தொடர்ந்து நடைமுறைக் கணக்கு ஆரம்பிக்கும்போது விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமா? உண்மை யில் இது விவாதிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். உண்மையில் வைப்புக் கணக்கு வாடிக்கையாளர் ஒருவரின் தராதரம், நிலை, நேர்மை போன்றவற்றை அவர் கணக்கு நடாத்தும் காலத்துள் வங்கி யாளர் பெற்றுக்கொள்ளும் தன்மையைக் கொண்டு நாம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பதனைத் தீர்மானிக்கலாம். கணக்கு ஒன்று அண்மையில் ஆரம்பிக்கப்பட்டதாயின் இதுபற்றி அறிய வங்கிக்குச் சந்தர்ப்பம் குறைவு. எனவே விசாரணை மேற்கொள்ளுதல் அவசிய மாகும.
இங்கு வங்கி இந்தத் தீர்மானத்தை மேற்கொள்ளுவது முற்றிலும் ஒரு நடைமுறை அனுபவமாகும். கணக்கு ஒன்றினை நடாத்திப் பெறும் இலாபத்திலும்பார்க்க ஏதாவது தவறு ஏற்பட்டு வங்கிக்கு ஏற்படும் இழப்பு பெரியதாகும். எனவே வங்கி இந்நிலைகளில், சந்தர்ப்பங்களில், மிக்க அவதானத்துடன் நடந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

அத்தியாயம்
வங்கியாளரின் பணம் கொடுக்கும் அதிகாரத்தைத்
தீர்மானிக்கும் காரணிகள் (Termination of Banker's Authority to Pay)
வாடிக்கையாளர் ஒருவர் தான் வங்கியுடன் நடத்தும் கணக்கில் இருந்து விரும்பியபோது போதியளவு பணம் இருந்தால் மீளப் பெற் றுக்கொள்ள முடியும். வாடிக்கையாளர் இவ்வாருன ஒரு நிலையில் எழுப்பும் கேள்விகளுக்கு அமைய வங்கி பணம் செலுத்தவேண்டும், ஆணுல் சில சந்தர்ப்பங்களில் வங்கியாளரின் இவ்வாறு பணம் கொடுக் கும் அதிகாரம் நிறுத்தப்படுவதும் உண்டு. இவ்வாருண பணம் கொடுக் கும் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் சில கீழே விபரிக் கப்பட்டுள்ளன. அவைகளாவன :
1. வாடிக்கையாளரின் கணக்கின்மீது அல்லது அவரால் ஏற்படுத்தப் பட்ட ஒழுங்கு அக் காசோலைக்குப் பணம் செலுத்தப் போதியதாக இல்லாத சந்தர்ப்பங்கள். 2. காசோலையில் கொடுப்பனவு வாடிக்கையாளரால் நிறுத்தப்படு கின்ற சந்தர்ப்பம். இந்நிலையில் வாடிக்கையாளரின் அறிவுறுத்தல் எழுத்தில் இருப்பதுடன் அவரால் கையொப்பம் இடப்பட்டும் இருத்தல் வேண்டும். 3. வாடிக்கையாளர் ஒருவர் இறந்துவிட்டதாலோ அல்லது மனநில் பாதிக்கப்பட்டு இருக்கின்ருர் என அறிவித்தல் ஒன்று கிடைக்கின்ற போது இங்கு அறிவித்தல் முக்கியமானது. வாடிக்கையாளர் ஒருவர் இறந்துவிட்டார் என்ற அறிவித்தல் வங்கிக்குக் கிடைக்காதவரை அவரால் எழுதப்பட்ட காசோலைகளுக்கு வங்கி பணம் செலுத்த முடியும். இதற்காக வங்கி பொறுப்பாகமாட்டாது. ஆனல் அறி வித்தல் கிடைத்த கணமே வங்கி அவதானமாக நடந்துகொள்ள வேண்டும். வாடிக்கையாளரின் இறப்புப் பற்றிய அறிவித்தலினுல் பணம் கொடுப்பது தீர்மானிக்கப்படுகின்றது என்பதனை எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 75 (a) கூறுகின்றது. 4. வாடிக்கையாளர் ஒருவர் கடன் தீர்க்க வகையற்றவர் அல்லது வகையறைவு செயல் ஒன்று புரிவதாக அறிவித்தல் கிடைத்ததும் பணம் கொடுக்கும் அதிகாரம் நிறுத்தப்படும். இவ்வாருண் அறிவித் தல் ஒன்று கிடைக்கப்பெற்றதும் மூன்ருவது நபர்கள் சார்பாக வாடிக்கையாளரிஞல் எழுதப்பட்ட காசோலைகள் எவற்றிற்கும் பணம்

Page 28
--سس 44 وی۔ ۔۔
செலுத்துதல் ஆகாது. ஆனல் தனது தேவைக்கு எனத் தனது சார் பாகவே எழுதிய காசோலைகளுக்கு வரவு மீதியாக (Credit Balance) அவர் கணக்கு இருந்தால் பணம் செலுத்தலாம். ஆனல் இவ்வாறு செலுத்துதலும், ஒரு பெறுகைக் கட்டளை (Receiving Order) விடுக்கப்பட்டதும் நிறுத்தப்படவேண்டும். வாடிக்கையாளன் ஒருவனுக்கு எதிராக கடன்தீர்க்க வகையற்றவன் என மனு (Petition) ஒன்று சமர்ப்பிக்கப்படுகின்றது என அறி கின்றபோது வங்கியின் பணம் செலுத்தும் அதிகாரம் தீர்மானிக்கப் படுகின்றது.
ஒருவனுல் கடன் தீர்க்க வகையற்றவன் ஆகும் செயல்கள் செய்யப்படுவதாக அறிகின்றபோது இந்தச் செயலின் அடிப்படையில் மனு (Petition) ஒன்று கடன் கொடுத்தோன் (Creditor) ஒருவனுல் சமர்ப்பிக்கப்படும். சில அம்சங்களில் கடன்பட்டவன் தானே தனக்கு எதிராக மனு ஒன்றினைச் சமர்ப்பிப்பதும் உண்டு. இவ்வா ருண மனுவொன்று சமர்ப்பிக்கப்படுவதாக அறிகின்றபோது வங்கி யின் பணம் கொடுக்கும் அதிகாரம் தீர்மானிக்கப்படுகிறது.
வாடிக்கையாளருக்கு எதிராக நீதிமன்றினுல் பெறுகைக் கட்டளை பிறப்பிக்கப்படும்போது அல்லது ஒரு கம்பனியின் ஒடுக்குதலுக்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது வங்கியின் பணம்கொடுக்கும் அதிகாரம் தீர்மானிக்கப்படுகின்றது. இங்கு வங்கி இதுபற்றி அறிந் தாலும் அல்லது அறியாவிட்டாலும்கூட குறிப்பிட்டநபரின் கணக்கி லிருந்து பணம் செலுத்தும் அதிகாரம் தீர்மானிக்கப்படுகின்றது
இந்த "பெறுகைக்கட்டளை" யானது மனுவொன்று நீதிமன் றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்றம் திருப்திப்பட்ட இடத்து மட்டுமே பிறப்பிக்கப்படும். இக் கட்டளை வர்த்தமாணிமூலம் பிரகடனப்படுத்தப்படும். வாடிக்கையளர் ஒருவரின் கணக்கில் உள்ள மீதியானது (Balance) sy aptirá) diet) LDL its (Assignment by the Customer) CoastGas கப்பலுகின்றதாக அறிகின்றபோது பணம் கொடுக்கும் அதிகாரம் தீர்மானிக்கப்படும். (இவ்வாறு உரிமை மாற்றிக்கொடுத்தல் வகை யறைவு செயல்களில் ஒன்ருகும்).
வங்கியின்மீது வாடிக்கையாளரின் கணக்குத் தொடர்பாகத் தடுத்தற் கட்டளை ஒன்று (Prohibitory Notice) வழங்கப்பட்டு, அவரது கணக்கில் உள்ள மிகுதி (Balance) யாவும் அதற்காகச் சேர்க்கப்படுகின்றபோது பணம் கொடுக்கும் அதிகாரம் தீர்மானிக் கப்படுகின்றது. சிலசமயம் ஏதாவது உத்தரவுகள் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும்போதும் பணம் கொடுக்கும் அதிகாரம் தீர் மானிக்கப்படும். காசோலை ஒன்றினைச் சமர்ப்பிப்பவரின் உரிமையில் உள்ள ஏதாவது குறைகள் பற்றிய அறிவித்தல் ஒன்று வங்கிக்குக் கிடைத்தால் உடனே வங்கியின் பணம் கொடுக்கும் அதிகாரம் தீர்மானிக்கப்
படும்.

- 45
சில சமயங்களில் பெறுபவன் (Payee) காசோலையைத் தொலைத்து விட்டு வங்கிக்கு இதுபற்றி அறிவித்தால் வங்கி இந்நிலையில் அவ தானமாக நடந்து, காசோலையை வரைந்தவன் மூலம் கொடுப் பனவை நிறுத்த முயற்சிக்கலாம். இதனிடையே மோசடியாளன் காசோலையைச் சமர்ப்பித்தால், வரைந்தவரின் அறிவுறுத்தல் கிடைக்கும்வரை கொடுப்பனவினை இடை நிறுத்தலாம்.
10. சில சமயங்களில் வாடிக்கையாளர் அல்லது காசோலையின் பணம் பெறுபவன் (Payee) இவர்களில் யாராவது விடுவிக்கப்படாத வகை usbpalaiv (an undischarged bankrupt) 6T6ir D 9 stafssoi) கிடைக்குமாயின், இதனுல் வங்கியின் பணம் கொடுக்கும் அதிகாரம் தீர்மானிக்கப்படும்.
வகையறைவு செயலின் படிமுறைகள், இறுதியில் வழக்குத் தீர்ப் பின் (Adjudication order) பின் முடிவுறும் செயல் நடைபெற்று வகையற்றவன் விடுவிக்கப்படுவான். இது அனேகமாக வழக்குத் தீர்ப்பின் திகதியில் இருந்து 5 வருடத்தின் பின்பே நிகழும். அது வரை வாடிக்கையாளன் விடுவிக்கப்படாத வகையற்றவன் எனக் கூறப்படுவான்,
11. காசோலைகளை வரைவதில் தனது நம்பிக்கைப் பொறுப்பை மீறி ஒரு வாடிக்கையாளர் நடந்துகொள்வதாக அறிவித்தல் ஒன்று கிடைக்குமாயின் வங்கியாளரின் பணம் கொடுக்கும் அதிகாரம் தீர்மானிக்கப்படும்.
Foxton v Manchester and Liverpool District Banking Co. (1881)
இவ்வழக்கில் இரண்டு நிறைவேற்றுனர்கள் பிரதிவாதி வங்கியில் நம்பிக்கைப் பொறுப்புக் கணக்கு வைத்திருந்தனர். அதேநேரம் அவர்கள் அதே வங்கியில் தமது சொந்தக் கணக்குகளையும் வைத் திருந்தனர். இவர்களது இந்தச் சொந்தக் கணக்குகள் மேலதிகப் பற்று நிலையில் இருந்தன. இந்த மேலதிகப் பற்றினைக் குறைக்கு மாறு வங்கியினுல் கட்டாயப்படுத்தப்பட்டனர். இருவரும் ஒரு கணிச மான தொகையினைத் தமது நிறைவேற்றுனர் கணக்கில் இருந்து மாற்றி மேலதிகப் பற்றினைக் குறைக்குமாறு வங்கியினல் கட்டா யப்படுத்தப்பட்டனர். இருவரும் ஒரு கணிசமான தொகையினைத் தமது நிறைவேற்றுனர் கணக்கிலிருந்து மாற்றி மேலதிகப் பற் றினக் குறைத்தனர். இவர்களது இறப்பின் பின்னர் சில பயன் பெறுவோர் வங்கிக்கு எதிராக வழக்கிட்டு இவ்வாறு மாற்றிய பணத்தினை மீளப் பெறுவதில் வெற்றிகண்டனர். எனவே நம்பிக் கைப் பொறுப்பினே மீறுவதாக அறிந்ததும் கொடுப்பனவினை நிறுத்தவேண்டும்.

Page 29
அத்தியாயம் 8
பணக்கொடுப்பனவு நிறுத்துதல் (Countermand of Payment by the Drawer)
பணக் கொடுப்பனவினை நிறுத்துதல் என்று கூறும்பொழுது எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 75 (a) யினை இங்கு நாம் மனதில் கொள்ளுதல் முக்கியமானதாகும். இதற்கு அமைய, தன்மீது வரையப்பட்ட காசோலை ஒன்றிற்குப் பணம் செலுத்தும் வங்கியின் அதி காரமும், கடமையும் குறித்த வாடிக்கையாளர் பணம் கொடுப்பதை நிறுத்தவும் என்ற கட்டளையினுல் தீர்மானிக்கப்படுகின்றது.
காசோலை ஒன்று களவாடப்பட்டபோதோ அல்லது தொலைந்து விட்ட சமயத்திலோ, வாடிக்கையாளரினல் கொடுப்பனவு நிறுத்தப்படு கின்றது. சில சமயங்களில் பணம் பெறுனரால் (Payee) வழங்கப்பட்ட பொருட்கள் ஏதாவது குறைபாடுகளைக் கொண்டு இருக்கும்போது கொடுப்பனவு நிறுத்தப்படும். வெறுமனே கொடுப்பனவினைச் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தலை வழங்குவதனுல் மட்டும் ஒரு வாடிக்கையாளர் தனது பொறுப்பில் இருந்து நீங்கிவிட்டதாகக் கருத Gւpւգաո Ցl. காசோலையானது கைமாறி ஒரு சிறந்த உரித்தினைக் கொண்ட மூன்ரும் நபர் ஒருவரின் கையில் கிடைக்கும்போது வரைந்தவர் அவருக்குப் பதில் கூறியாகவேண்டும், காசோலையை வரைப வர்கள் அனேகர் இந்த உண்மையை உணரத் தவறிவிடுகின்றனர் என்ருல் அது மிகையாகாது.
காசோல் ஒன்றிற்குப் பனங் கொடுப்பனவு செய்யவேண்டாம் எனக் கொடுக்கப்படும் அறிவுறுத்தலானது எழுத்தில் இருப்பதுடன், அது வாடிக்கையாளரினல் கையொப்பம் இடப்பட்டும் இருக்கவேண்டும். மேலும் அவ் அறிவித்தல் இருபொருள்படும் வகையில் இருத்தல்கூடாது. தெளிவான அறிவுறுத்தலாக இருத்தல் வேண்டும். மேலும் கவனிக்கப் படவேண்டிய சில அம்சங்கள் பின்வருமாறு:
அறிவுறுத்தல் வங்கிக்கு நேராகக் கிடைத்தல்வேண்டும்:
வாடிகையாளர் கொடுக்கும் இந்த அறிவித்தலானது வங்கியின் கைகளுக்கு நேராகக் கிடைக்கவேண்டும். அதாவது வங்கியின் கவனத் திற்கு நேராகக் கொண்டுவரப்படவேண்டும்.

- 47 -
a + b: Curtice v London City & Midland Bank Ltd. (1908)
இந்த வழக்கில், காசோலை ஒன்றின் கொடுப்பணவினை நிறுத்துவ தற்காக ஒரு தந்தி அனுப்பப்பட்டது. இந்தத் தந்தியானது தபால் பகுதி சேவகளுல் குறித்த தினம் மாலையில் வங்கித் தபால் பெட்டி யில் இடப்பட்டது. உண்மையில் தந்தி ஒரு ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி கொடுபட்டது. இந்தத் தந்தியானது நவம்பர் 2 வரை இந்தப் பெட்டியிலிருந்து எடுபடவில்லை. இதனிடையே காசோலைக்கு நவம்பர் 1ஆம் திகதி பணம் செலுத்தப்பட்டது. வாடிக்கையாளர் தான் வாங்க இருந்த குதிரைகளின் பெறுமதிக்கே காசோலையை வழங்கினர். ஆனல் குதிரைகள் வாக்களித்தபடி வழங்கப்படவில்லை. எனவே நட்டத்திறகு வங்கிக்கு எதிராக வழக்கிடப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் காசோலைக்குப் பணம் செலுத்தப்பட்ட நேரம்வரை முறையான அறிவித்தல் வங்கிக்குக் கொடுபடவில்லை என்ற ரீதியில் வழக்கினை வங்கிக்குச் சார்பாகத் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தபால் பெட்டி கவனிக்கப்படவில்லை என்றும் இது வங்கியின் கவனமின்மையைக் காட்டுகின்றது என்றும், வழக்கிடப்பட்டு இருந்தால் நட்டங்களுக்கும் பரிகாரம் பெறப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
காசோலையின் சரியான இலக்கம் எப்போதும் கொடுபடல்வேண்டும்
பிழையான காசோலை இலக்கத்தினைக் கொடுத்தால் வாடிக்கை யாளர் நினைத்தவாறு காசோலையின் கொடுப்பனவு நிறுத்தப்பட மாட்டாது. இதனை விளக்க நாம் பின்வரும் உதாரணத்தைக் கூறலாம்.
Westminister Bank Ltd. v Bilton (1962)
H என்ற வாடிக்கையாளர் தான் வரைந்த காசோலை ஒன்றின் கொடுப்பனவை நிறுத்த எண்ணி, வங்கிக்குப் பிழையான ஒரு இலக்கத் தைக் கொடுத்துவிட்டார். நிறுத்தும் கட்டளை தந்திமூலம் கொடுபட் டது. பின்னர் இது தொலைபேசிமூலம் உறுதிப்படுத்தப்பட்டது. ஆனல் தொலைபேசியில் உறுதிப்படுத்தப்படும்போது இலக்கம் குறிப்பிடப் படவில்லை. இங்கு கொடுப்பனவு நிறுத்தவேண்டிய காசோலை இலக்கம் 117285 ஆகும். ஆஞல் மேற்கூறியவாறு கொடுத்த இலக்கம் 117283 ஆகும். இன்னெரு காசோலை அதே தொகைக்கு அதே பெறுபவனுக்கு எழுதப்பட்டிருந்தது. இதன் இலக்கம் 117285. இக் காசோலை கொடுப் பணவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டுப் பணம் கொடுபட்டுவிட்டது. உண்மை வில் வாடிக்கையாளர் நிறுத்த நினைத்தது இந்த 117285 இலக்கக் காசோலையாகும். எனவே தன் நட்டத்திற்கு வங்கியை வழக்கிட்டார். அதுமட்டுமன்றி இந்தக் காசோலைக்குப் பணம் வங்கியினுல் செலுத்தப் பட்டபடியால் அதனைத் தொடர்ந்து வேறு காசோலைகளும் போதிய பணமின்றித் திருப்பப்பட்டன.
இங்கு இறுதியாகப் பிரபுக்கள் சபை தமது தீர்ப்பில் வங்கியின் சார்பாகத் தீர்ப்பினை வழங்கியதுடன், வங்கியானது பிரதிக் காசோ

Page 30
- 48 -
லைக்கே பணம் செலுத்தினுேம் என நினைத்தது தவறு அல்ல என்றும், காசோலைகளை இனம் காண இவற்றின் இலக்கமே வழிகாட்டுகின்றது என்றும், எனவே வங்கி கவனமின்மையாக நடந்துகொள்ளவில்லை என்றும் கூறினர்.
தொலைபேசிமூலம், அல்லது தந்திமூலம் கொடுப்பனவினை நிறுத்துதல்:
தொலைபேசி மூலமும் தந்தி மூலமும் கொடுப்பனவை நிறுத்தும் படி வாடிக்கையாளர்கள் வங்கியைக் கேட்பதுண்டு. இங்கு வங்கி சிற்று அவதானமாக நடந்துகொள்ளவேண்டும். இருமுறைகளிலும் வாடிக்க்ள் யாளரின் உறுதிப்பாடு எழுத்துமூலம் பெறப்படுதல் வேண்டும். மேலும் காசோலைகளைத் திருப்பும்போது அவற்றிற்குக் குறிப்பு எழுதுவதிலும் அவதானமாக நடக்கவேண்டும். உதாரணமாகத் தொலைபேசி மூலம் கொடுத்த அறிவுறுத்தல் உறுதிப்படுத்தப்படுவதின்முன் காசோலையைத் திருப்பவேண்டி ஏற்படின் காசோலையில் குறிப்பு பின்வருமாறு எழுதப் படுதல் வேண்டும்.
* கொடுப்பனவு தொலைபேசிமூலம் நிறுத்தப்பட்டுள்ளது. உறுதிப் படுத்தலை எதிர்பார்த்து நிற்கின்ருேம்'. இவ்வாறு எழுதுதல் வங்கி யைப் பாதுகாக்கக்கூடிய குறிப்பாகக் கருதப்படும்.
கொடுப்பனவினை நிறுத்துவதற்கான காலக்கெடு :
வங்கியால் பணம் கொடுக்கும்வரை வாடிக்கையாளர் தான்வரைந்த காசோலை ஒன்றின் கொடுப்பனவினை நிறுத்துவதற்கு உரிமைகொண்டு இருப்பார். வாடிக்கையாளரினல் இடப்பட்ட இக்கட்டளை எப்போ தும் வலுவில் இருக்கும். எந்தக் காரணம்கொண்டும் வங்கி ஒரு குறித்த எல்லயை நிர்ணயிக்கமுடியாது. உதாரணமாக 3 மாதங்கள், 6 மாதங் கள் என எல்லை ஒன்றை வகுக்க முடியாது. வங்கி, தாம் கொடுப் பனவு நிறுத்தப்பட்ட காசோலைக்குப் பணம் செலுத்தப்பட்டால் பொறுப்பில்லை என, நிறுத்தும் அறிவித்தலைப் பெறும்போது வாடிக்கை யாளருக்குக் கூறினலும், வங்கி எப்போதும் பொறுப்பாகவேண்டியே ஏற்படும்.
ஒரு விசேட தீர்வைவழிமூலம் ஒரு குறித்த காசோலைக்குப் பணம் கொடுக்கப்பட்டுவிட்டால், அல்லது கொடுக்கப்படும் என உறுதிப்படுத் தப்பட்டால், இந்நிலையில் வாடிக்கையாளர் கொடுப்பனவினை நிறுத்த ՓւգԱյո Ֆl.
திறந்த காசோலை ஒன்றிற்குக் கருமபீடத்தின் ஊடாகப் பணத் தினைச் செலுத்தும்வரை, கொடுப்பனவினை நிறுத்தமுடியும். பணம் கருமபீடத்தில் வைத்து அதனை வாடிக்கையாளர் எடுக்கும் கணம்வரை கொடுப்பனவினை நிறுத்த முடியும். இதனை நாம் Chambers W Miller (1862) வழக்கின் தீர்ப்பில் இருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது.

-س- 49 س--
மேலும் வங்கியின் கிளையொன்றின் வாடிக்கையாளர் ஒருவர் வரைந்த காசோலையை, அதே கிளையில் கணக்கு வைத்திருக்கும் வேறு வாடிக்கையாளர் ஒருவர் தனதுகணக்கில் வரவுவைத்தால், காசோலையை வரைந்தவர் வங்கி வியாபார அலுவல் முடியும்வரை, கொடுப்பனவினை நிறுத்த முடியும். ஆனல் காசோலையை வைப்பில் இட்ட வாடிக்கை யாளர் அந்தக் குறிப்பிட்ட காசோலைக்குப் பணம் கொடுப்பனவு செய் யப்பட்டதா எனக் கேட்டு, வங்கியும் அதற்கு "ஆம்" எனப் பதில் கொடுத்து இருந்தால் இங்கு நிலைமை மாறுபடும் என்பது அவதானிக் கத்தக்கது.
வங்கியானது தனது நியம வியாபார அலுவல் நேரத்தின்பின் ஒரு நியாயமான காலம்வரை தனது வியாபார அலுவல்களை நிறைவு செய்துகொள்வதற்கு அனுமதிக்கப்படும். வியாபார அலுவல் முடியும் நேரத்தின் சற்று முன் வங்கியின் உள்ளே புகுந்தவர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட காசோலைக்கு உரிய பணத்தினை வங்கி வியாபார அலுவல் நேரத்தின்பின் பெற்ருலும்கூட அக் குறித்த காசோலைக்குரிய பணக் கொடுப்பனவினை வரைந்தவரால் நிறுத்த முடியாது,
2- + Lb : Bains v National Provincial Bank Ltd. (1927) இங்கு வாதி ஒரு காசோலையை 8 200ற்கு Wood என்பவர் பெயரில் வரைந்து அதனை வங்கி வியாபாரம் மூடும் நேரமாகிய 3 மணி (பிற் பகல்) வரை தாமதிக்க வைத்துக் கொடுத்தார். திரு. Wood அதன் கொடுப்பனவினைப் பெருமல் இருக்கச் செய்வதற்காகவே இவ்வாறு தாம தித்துக் கொடுத்தார். ஆனல் திரு.Wood அக் காசோலையை 3.05 மணிக்கு 65 smíšs National Provincial enurằGAufsãw Harrogate 69&trupið GlasmrGiv' பணவிற்குச் சமர்ப்பித்தார். காசோலையும் இதே கிளையின் மேல்தான் வரையப்பட்டு இருந்தது. இங்கு வங்கி அவருக்குப் பணத்தினைச் செலுத்தி விட்டது. அடுத்தநாள் காலை வங்கி திறந்த உடனே வாதி அக் காசோலையின் கொடுப்பனவினை நிறுத்த முயற்சித்தார். ஆனல் ஏற் கனவே காசோலைக்குப் பணம் கொடுப்பனவு செய்யப்பட்டு விட்டது என அறிவிக்கப்பட்டது. இதனுல் வங்கிக்கு எதிராக வாடிக்கையாளர் வழக்கிட்டார். ஆனல் Lord Hewart, L. C. J. வழக்கின் தீர்ப்பினை வங்கிக்குச் சாதகமாகவே தீர்த்தார். வங்கி தனது பிரகடனப்படுத்தப் பட்ட வியாபார அலுவல் நேரத்தின்பின் ஒரு நியாயமான கால எல்லைக்குள் பணக் கொடுப்பணவினைச் செய்ய முடியும் என்றும், காசோ லைக்கு உரிய முறையில் பணம் செலுத்தப்பட்டால் அதன்பின் கொடுப் பனவை நிறுத்த முடியாது என்றும் தீர்ப்பு அளித்தார். கொடுப்பனவு நிறுத்தத்திற்கு அதிகாரம் பெற்றவர்கள்: (Person having Authority to Countermand)
நிறைவேற்றுனர்கள், நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், பங்குடைமை யாளர்கள் போன்றேரில், இவர்களில் யாராவது ஒருவர் (பல நிறை
4.

Page 31
- 50 -
வேற்றுரைகள் உள்ளபோது அவர்களில் ஒருவர்) தங்களால் வரையப் பட்ட காசோலை ஒன்றின் கொடுப்பனவினை நிறுத்தலாம். ஆனல் இவ் வாறு கொடுப்பனவு நிறுத்தப்பட்ட காசோலை ஒன்றின் தடை அறிவித் தலை நீக்கும்போது அதிகாரம் அளிக்கப்பட்ட கையொப்பம் இடும் அனைவரதும் அறிவுறுத்தலைப் பெறுதல் வேண்டும். அல்லது அதற்குப் பதிலாக வேறு காசோலை ஒன்றினை வழங்குமாறு வங்கி கேட்கலாம். இதுபோல ஒரு கம்பனியால் வழங்கப்பட்ட காசோலையின் கொடுப் பணவினை கம்பனிச் செயலாளர் நிறுத்த முடியும். ஆனல் ஆணைப் பத்திரத்தில் (Mandate) குறிப்பிட்டபடி உடனே உறுதிப்பாடு பெறப் படுதல் வேண்டும். மேலும் தடை உத்தரவினை நீக்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட கையொப்பதாரிகள் அனைவரதும் அறிவுறுத்தல் பெறப் படுதல் வேண்டும்.
ஒருவர் வரைந்த காசோலை ஒன்றினுடைய பெறுனி (Payee) அக் காசோலையைத் தொலைத்துவிட்டால் அல்லது களவு கொடுத்துவிட்டால் அதன் கொடுப்பணவினை நிறுத்துவதற்கு முயற்சிக்கலாம், ஆளுல் இவரை உடனே வரைந்தவருடனும் தொடர்புகொள்ளுமாறு ஆலோசனை கூறப் படுதல் வேண்டும். இதனைத் தொடர்ந்து வரைபவர் நிறுத்தும் கட் டளையை வழங்குவார். வரைந்தவருடன் தொடர்பு கொள்ள முடியாத நிuையில், தேவையாயின் வங்கி பெறுனியின் வேண்டுகோளை நிராகரிக்க முடியும். ஆனலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை மனதில் கொண்டு இங்கு செயற்படுதல் வேண்டும். உதாரணமாக அந்தக் குறிப்பிட்ட காசோலை தீர்வை மூலம் சமர்ப்பிக்கப்படும் போது, அங்கு சாட்டுதல் ஒன்றும் காணப்படும் இடத்து, இதனையே சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கு 'காசோலையின் சாட்டுதலின் உறுதிப்படுத்தல் தேவைப் LIGSaisogi ' (Endorsement requires Confirmation) 6Tairo got புடன் திருப்பப்படலாம், இங்கு சிலசமயம், இவ்வாறு செய்வதினுல் வங்கியின் வாடிக்கையாளரின் நலனும் பேணப்படும். இந்நிலையில் காசோலையின் கொடுப்பனவினைப் பிற்போட்டமைக்கோ அல்லது மறுத் தமைக்கோ வங்கி ஒருபோதும் அதனைச் சமர்ப்பித்தவருக்குப் பொறுப்பாக மாட்டாது. தனது வாடிக்கையாளர் ஒருவருக்கே எப்போதும் வங்கி பொறுப்பாக வேண்டி ஏற்படும். எனவேதான் கொடுப்பனவினைத் தள்ளிப் போடுவதினுல் எந்தப் பாதகமும் வங்கிக்கு ஏற்படாது.
கொடுப்பனவு நிறுத்தப்பட்ட காசோலை ஒன்றிற்குப் பணம் கொடுக் கப்பட்டால் அத்தொகையினல் வாடிக்கையாளரின் கணக்கினேப் பற்று (Debit) வைக்க முடியாது. எவ்வளவு விரைவில் இந்தப் பணம் திருப்பிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவில் மீளவும் வாடிக்கையாளருக்குக் கொடுக்க வேண்டும். சில சமயம் இவ்வாறு கொடுப்பதை நிறுத்தப் பட்ட காசோலைகளுக்குப் பணம் வழங்குவதினுல் வேறு காசோலைகள்கூட போதிய பணம்இன்றித் திருப்பவேண்டி ஏற்படலாம். எனவேதான் வங்கி மிக அவதானமாக நடந்துகொள்ளுதல் இன்றியமையாததாகும்.

- 51 -
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் பின்வரும் வழக்கினையும் மனதில் Gastoirer Galvativ(9th. Barclays Bank Ltd. v. W. J. Simms Son and Cooke (Southern) and Another (1979). g)aivalypš66) aurugá60) surren ரால் கொடுப்பளவு நிறுத்தப்பட்ட காசோல் ஒன்றிற்கு வங்கி பணம் கொடுத்தபோது அதனைப் பெறுனியிடம் (Payee) இருந்து அறவிடுவதற்கு வங்கியானது நீதிமன்றத்தினுல் அனுமதிக்கப்பட்டது. இங்கு தவறுதலின் slighuaol- airprGlarudrás (goal disgy (Money has been paid under Mistake of fact). அது மட்டுமன்றி பணம் பெறுபவன் இவ்வாறு பணத்தினைப் பெற்றமையால் தனது நிலையை எந்த விதத்திலாவது மாற்றிக்கொள்ளவில்லை என்று நிரூபித்தால், இவ்வாறு அவனிடம் இருந்து பணத்தினை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலதிக குறிப்புகள் :
ஒரு வாடிக்கையாளர் உள்ளுர் நிறுவனமொன்றிற்குச் சென்று ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்குகின்றர். அதற்காக அவர் ரூபா 5000ற்கான காசோலை ஒன்றினை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தார். பின்னர் தான் வாங்கிய குளிர்சாதனப்பெட்டி சிறந்த முறையில் வேலை செய்யவில்லை எனக் கண்ட அவர் உடனே அக்குறித்த காசோலையின் கொடுப்பனவினை நிறுத்துமாறு வங்கிக்குத் தொலைபேசி மூலம் அறிவித் தார். இந்நிலையில் வங்கி அவரை இதனை எழுத்தில் உறுதிப்படுத்து மாறு கேட்டுக்கொண்டது. இவர் இதனை உடனே செய்யாது. சில நாட்களின் பிள் உறுதிப்படுத்தல் கடிதத்தோடு வங்கிக்கு வந்தார். ஆனல் இதனிடையே அக்காசோலையின் கொடுப்பனவு செய்யப்பட்டு விட்டது. இங்கு வாடிக்கையாளர் காசோலையின் சரியான விபரங்களைக் கொடுத்து இருந்தால் தொலைபேசி அறிவுறுத்தலே போதுமானது. அப்படியாயின் வங்கி பொறுப்பாக வேண்டியே ஏற்படும்.
ஆணுல் இங்கு வாடிக்கையாளருக்கு அந்த குளிர்சாதனப்பெட்டி மூலம் சில அசெளகரியங்கள் ஏற்பட்டதே ஒழிய, உண்மையான நட்டம் ஏற்படவில்லை. அது புதிதாக இருப்பதினுல் அதனைத் திருத்தி எடுக்க முடியும். மேலும் உத்தரவாதப் பொறுப்பின் கீழும் அதனைத் திருத்தி எடுக்க முடியும். இவ்வாறு எல்லாம் செய்ய முடியாதபோதே வாடிக்கை யாளர் முழு நட்டத்தினை அனுபவிப்பார்.
இங்கு வாடிக்கையாளர் இவை பற்றி எல்லாம் கருத்தில் எடுக்காது தனது காசோலைக்குரிய பணத்தினை வங்கியை மீள அளிக்குமாறு கேட்டால் வங்கி திருப்பிக் கொடுக்க வேண்டும். ஆணுல் இதன்பின் வாடிக்கையாளர் காசோலைப் பணத்தினையும் குளிர்சாதனப் பெட்டியை யும் ஏக காலத்தில் அனுபவிக்க முடியாது. எனவே வங்கி குளிர்சாதனப் பெட்டியை எடுத்து அதனை விற்றவருக்கே திருப்பிக் கொடுக்க முடியாது விடின், அதனை விற்பதற்கு ஒழுங்குகளை மேற்கொள்ளலாம். இங்கு இதஞல் வங்கி முழுத்தொகையாகிய ரூபா 5000/யும் இழக்க வேண்டி ஏற்பட மாட்டாது. அவதானமிக்க வங்கியாளர் ஒருவர் மேற்கூறிய பிரச்சினைகளின்போது இவ்வாறு நடந்துகொள்ளுதல் சாலவும் சிறந்த
5ftejo.

Page 32
அத்தியாயம் 9 வாடிக்கையாளரின் கணக்கினை மூடுதல் (Closing an Account)
வாடிக்கையாளர் ஒருவர் தான் வங்கி ஒன்றுடன் கொண்டுள்ள கணக்கு ஒன்றினை மூடிவிடலாம். அல்லது வங்கி ஒன்று தனது வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கினை மூடிவிடலாம். இந்த நிலைகளில் வங்கி, வாடிக்கையாளர் உறவுமுறை ஒரு முடிவிற்குக் கொண்டு வரப் படுகின்றது. கொள்கையளவில், ஒரு வங்கியாளர், வாடிக்கையாளர் உறவு முறையானது மற்றும் சாதாரன ஒப்பந்த உறவு முறைகள் போன்று, இருபக்கத்தினரும் ஒத்து இணங்குவதின் மூலம் முடிவிற்குக் கொண்டுவரப்படலாம். ஆணுல் நடைமுறையில் உறவு முறையானது ஒரு கட்சிக்காரர் மட்டும் ஒரு புடையாக விரும்புவதின் மூலம் முடி விற்குக் கொண்டுவரப்படுகின்றது. எனவே நாம் ** கணக்கினை மூடுதல்" என்பது பற்றி ஆராயும்போது இரு தலைப்புக்களின் கீழ் ஆராய்கின் ருேம். அவையாவன:-
(1) வாடிக்கையாளரே கணக்கினை மூடுதல்,
(2) வங்கியாளரே தனது வாடிக்கையாளரின் கணக்கினை மூடுதல்,
வாடிக்கையாளர் தனது நடைமுறைக்கணக்கொன்றினை மூடுதல் :
ஒருவரின் நடைமுறைக் கணக்கொன்றில் உள்ள வரவு மீதியானது வங்கியிஞல், வாடிக்கையாளரின் கேள்வியின் போது செலுத்தப்பட் வேண்டியதாகும். வாடிக்கையாளர் தனது கணக்கில் உள்ள மீதி முழுவதையும் எடுக்கின்றபோது அது கணக்கினை மூடுவதாக அமைய மாட்டாது. எனவே இவ்வாறு வாடிக்கையாளர் ஒருவர் தனது முழுப் பணத்தினையும் எடுக்கின்ற சமயம், அவதானமிக்க வங்கியாளர் ஒருவர், கடிதம் ஒன்றினையும் தனது வாடிக்கையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாதுவிடின் வங்கி சில சமயங்களில் நட்டங்களைச் சுமக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஒன்று உருவாகலாம்.
a snipreordnr.s, Wilson v Midland Bank Ltd.
இவ்வழக்கில் வங்கியானது வாதியினுல் வரையப்பட்ட 850ற்குரிய காசோலை ஒன்றினை "கணக்கு இல்லை" (No Account) என்ற குறிப் புடன் தவறுதலாகத் திருப்பிவிட்டது.வங்கி தனது வாதத்தில் வாடிக்கை யாளர் முகாமையாளருடன் தொலைபேசியில் சம்பாவித்தபோது

- 53 -
தனது கணக்கினை மூடிக் கொள்வதாகக் கூறினர் எனக் குறிப்பிட்டது. ஆஞல் அவர் சாட்சியமளிக்கையில் தான் இவ்வாறு கூறியது நினை வில்லை என்றும், தான் கணக்கினை மூடும் எண்ணம் கொண்டிருக்க வில்லை என்றும் கூறினர். மேலும் இச் சம்பாஷணையின் சில நாட்களின் பின் தனது கணக்கில் வரவு வைப்பதற்கு E 403 பவுண்களை "லொயிட்ஸ்" வங்கி மூலம் அனுப்பியும் வைத்தார். ஆனல் இப் பணம் தவறுதலாக Midland வங்கியினுல் இன்னும் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. எனவே தான் குறிப்பிட்ட காசோலை சம்ார்ப்பிக்கப்பட்டபோது "கணக்கு இல்லை" என வங்கியினல் பணக் கொடுப்பனவு மறுக்கப்பட்டது.
இங்கு நீதிபதி Sachs. J என்பவர் வாதிக்கு ஒப்பந்த மீறுகைக்காக 82 பவுண் பெயரளவு நட்டமும், அவதூறுக்காக E 210 பவுண்கள் நட்டமும் வழங்கும்படி வங்கிக்கு கட்டளை இட்டார்.
ஒரு வாடிக்கையாளர் தனது மேலதிகப் பற்றுக்கொண்ட நடை முறைக் கணக்கினை மூடும்போது, தான் பெற்ற மேலதிக எடுப்பினையும், செலுத்தப்படவேண்டிய வங்கி கட்டணங்களையும் செலுத்திவிட்டுக் கனக்கினை மூடிக் கொள்ள முடியும்.
வைப்புக் கணக்குகள் போன்றவற்றை மூடும்போது 7 நாட்கள் முன்னறிவித்தல் கொடுத்து மூடிக் கொள்ளமுடியும். மேலும் சேமிப்பு கணக்கொன்றினை முன்னறிவித்தல் இன்றி தனது கேள்வியின்போது மூடிக்கொள்ளமுடியும்.
வங்கியே வாடிக்கையாளரின் கணக்கினை மூடுதல்:
வங்கியொன்று வாடிக்கையாளரின் கணக்கினை மூடும் நிலை பல சந்தர்ப்பங்களில் ஏற்படலாம். இவ்வாறு செய்கின்றபோது நியாய மான கால முன்னறிவித்தல் ஒன்று வாடிக்கையாளருக்குக் கொடுக்கப் படவேண்டும். இதன் மூலம் அவர் வேறு மாற்று ஒழுங்குகளைச் செய்துகொள்ளமுடியும். நியாயமான கால அறிவித்தல் என்ருல் என்ன என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகும். இது சில நாட்களாக இருக்கலாம். இதனைத் தீர்மானிப்பதற்கு நாம் கணக்கின் வகை, சூழ் நிலைகள் போன்றவற்றை ஆராய்ந்தே செய்தல் வேண்டும்.
வங்கி ஒன்று வாடிக்கையாளரின் கணக்கினை மூடுவது பற்றி மிகப் பழைய வழக்கு ஒன்று விபரிக்கின்றது.
estproarth; Buckingham & Co. v London and Midland Bank
Ltd. (1895)

Page 33
۔۔۔۔۔۔ 54 ..................ہ
இவ்வழக்கில் வாடிக்கையாளருக்கு இரு கணக்குகள் இருந்தன. ஒன்று நடைமுறைக் கணக்கு, மற்றது கடன் கணக்காகும். நடைமுறைக் கணக்கினைத் திடீரென மூடி அதில் உள்ள தொகையைக் கடன் கணக் கிற்கு வங்கி மாற்றியது. இதனல் வாடிக்கையாளருக்கு நட்டம் ஏற் படுத்தப்பட்டது என்று காணப்பட்டது. இங்கு வாடிக்கையாளர் தனக்கு நியாயமான கால அறிவித்தல் ஒன்று தரப்படவில்லை என்று வாதிட்டு அதில் வெற்றியும் பெற்ருர்,
மேலும், பின்னர் வந்த வழக்கு ஒன்றில் அறிவித்தல் கொடுக்கப் பட்டே கணக்கினை மூடியபோதும் அது ஒரு நியாயமான கால அறிவித் தல் அல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. adl -- b : Prosperity Ltd. v Lloyds Bank Ltd. (1923).
இங்கு கம்பனி ஒன்று ஒர் உலகளாவிய புதுவகையான புத்திசாது ரியம் மிக்க காப்புறுதித் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தியது. இத் திட்டம் எவ்வாறு செயற்படுத்தப்படும் என்பதும் வங்கி முகாமையா ளருக்கு விளங்க வைக்கப்பட்டது. அவரும் அதனை ஏற்றுக் கணக்கு ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனல் குறித்த லொயிற்ஸ் வங்கியின் மூத்த அதிகாரிகள், இந்தக் காப்புறுதித் திட்டம் பற்றிப் பத்திரிகை கள் கண்டனமாக விமர்சித்தமையைக் கண்டு இந்தக் கம்பனியுடன் தொடர்ந்தும் கணக்கு நடத்த விருப்பமின்றி, கணக்கினை மூடுவதற்கு ஒருமாதகால அவகாசம் கொடுத்தனர். கம்பனியானது இந்த ஒரு மாதகால அவகாசம் போதாது என்றும், தாம் வேறு ஒழுங்குகளை இதனிடையே செய்ய முடியாது என்றும் வாதிட்டது. McCardie, J. தனது தீர்ப்பில் இங்கு கொடுத்த கால அவகாசம் நியாயமானது அல்ல என்று தீர்ப்பிரே அளித்தார். அவர் தனது தீர்ப்பில் எவ்வளவுகாலம் இங்கு நியாயமான கால அவகாசம் எனக் கொள்ளமுடியும் என்ப தனைக் குறிப்பிடவில்லை. இதனைத் தொடர்ந்து இங்கு ஒரு பேச்சு வார்த்தை ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் ஒரு குறித்த எல்லை நிர்ண யித்த காலம்வரை குறிப்பிட்ட கம்பனிக்கு, வங்கியாளராகக் கடமை யாற்ற வங்கி இணங்கிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வரவுமீதியான ஒரு திருப்தியற்ற கணக்கினை மூடுதல்: (Closing an Unsatisfactory Credit Account)
வாடிக்கையாளர் தான் வரைந்த காசோலைகளுக்குப் போதிய பணம் வைப்பில் இடாது, அல்லது மாற்று ஒழுங்குகள் செய்யாது தொடர்ந்து காசோலைகளை எழுதி வழங்கிக்கொண்டு இருப்பாராயின் அக் கணக்கு திருப்தியற்ற ஒரு கணக்கு எனப்படும். இதஞல் வங்கிக்குப் பல அசெளகரியங்கள் ஏற்படும். இந்நிலைகளில் வங்கி தனது வாடிக்கை யாளரை அவரது கணக்கினை மூடிக்கொள்ளுமாறு வற்புறுத்தும். மேலும் வங்கி அவரைத் தனது கணக்கில் உள்ள பணம் முழுவதையும் மீளப் பெற்றுக்கொண்டு உபயோகிக்காத காசோலைகளையும் திருப்பித் தருமாறு கோரும்.

- 55 -
வாடிக்கையாளர் இவ்வாருன வங்கியின் கோரிக்கைக்கு ஒத்து ழைக்க மறுக்கும்போது மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு வங்கி ஒரு சம்பிரதாயமான, எழுத்தில்ஆன அறிவித்தல் கொடுத்து ஒரு நியாயமான காலத்துள் கணக்கினை மூடிக்கொள்ளுமாறு வாடிக்கை யாளரைக் கேட்கும். இங்கு இதற்கு என ஒரு முடிவாக்கும் திகதியும் குறிப்பிடப்படும். அதன்பின்னர் அவரது கணக்கு மீதியானது அவருக்கு
ரியமுறையில் அனுப்பிவைக்கப்படும். அதன்பின் எழுதப்படும் காசோ கள் யாவும் திருப்பி அனுப்பப்படும். அதுபோல அவரால் அவர்
கன்னக்கிற்கு வைப்பிடப்படும் தொகைகள் யாவும் அவருக்கே திருப்பி அனுப்பப்படும்.
திருப்தியற்ற பற்றுமீதியான கணக்கினை மூடுதல் : (Closing an Unsatisfactory debit Account)
வாடிக்கையாளர் ஒருவருக்கு சாதாரண வங்கிச் சட்டதிட்டங் களுக்கு அமைய மேலதிகப் பற்று வழங்கப்படுவது இயல்பாகும். இந்த மேலதிகப் பற்றுத் தொகையானது கேள்வியின் போது மீளச் செலுத் தப்பட வேண்டியதாகும். ஆணுல் நீண்டகாலம் ஒன்றிற்கு இந்த வசதி அளிக்கப்படும் என வங்கி வாக்களித்து இருந்தால் இவ்வாறு கேள்வி யின்போது அந்த மேலதிகப் பற்று செலுத்தப்படவேண்டிய அவசியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவற்றைக்கொண்டு பார்க்கும்போது சாதாரண நடைமுறையில், திருப்தியற்றதும், மேலதிகப்பற்று நிலையை அடைந்ததுமான கணக் கொன்றினை மூடிவிடுவதில் வங்கிக்கு எவ்வித சிரமமும் இல்லை.
ஆணுல் கணக்கொன்ருனது, ஏற்படுத்திக்கொண்ட ஒரு எல்லையி னுள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தால் வங்கி நினைத்தவாறு அக் கனக்கினை மூடிவிட முடியாது. இந்நிலையில் வங்கி அவதானமாக நடந்துகொள்ளவேண்டும். சிலசமயங்களில் மேலதிகப்பற்று நிலையில் உள்ள கணக்கில், வாடிக்கையாளர் ஒருவர் பணத்தினைக் காசாக வைப் பில் இட்டு, தான் மேலும் எழுத இருக்கும் காசோலைகளுக்குப் பணம் செலுத்துமாறு கேட்கச் சந்தர்ப்பம் உண்டு. இந்நிலைகளில் வங்கி அவ தானமாக நடந்துகொள்ளவேண்டும்.
இறுதியாக நாம் ஒரு முக்கிய குறிப்பினை மனதில் கொள்ள வேண் டும். வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்கினைச் சில சட்டமுரணுரை தேவைகளுக்காகப் பயன்படுத்திவருவது காணப்பட்டால், வங்கி அவ ருக்கு நியாயமான கால அவகாசம் போன்றவற்றைக் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. இங்கு 24 மணிநேரகால அவகாசத்திலேயே வங்கி அவரது கணக்கினை மூடிவிட முடியும். இவ்வாறு செய்தபோது வங்கியொன்றினைப் பொறுப்பாக்க வாடிக்கையாளரால் முடியாது என் பதும் குறிப்பிடத்தக்கது.

Page 34
அத்தியாயம் 10
பற்றுவரவுப் புத்தகமும் கணக்குக் கூற்றும் (Pass books and Statements)
ஒரு வாடிக்கையாளர் வங்கியொன்றுடன் கணக்கொன்றின் ஆரம் பிக்கும்போது வங்கி அவரது பரிவர்த்தனைகளை ஒரு பற்றுவரவுப் பு தகத்திலோ அல்லது ஒரு கணக்குக் கூற்றிலோ பதிவுசெய்து அத வாடிக்கையாளருக்குக் கொடுத்தல் வேண்டும். இவ்வாறு கொடுத்தல் ஒரு குறித்தகால இடைவெளியில் அல்லது வாடிக்கையாளரால் கேள் எழுப்பிய ஒரு நியாயமான காலத்தினுள் செய்தல் வேண்டும் என்பது உட்கிடையான கடமையாகும்.
வங்கியானது இவ்வாறு பதிவுகள் செய்துகொடுக்கும்போது அதி கூடிய கவனம் எடுக்கவேண்டும் என்பது யாவரும் எதிர்பார்க்கும் ஒன்றேயாகும். அவதானமும் முன்னெச்சரிக்கையும் உள்ள வாடிக்கை யாளர் ஒருவர் தனது கூற்றுகளை அவதானமாகப் பரிசீலனை செய்து அதாவது தவறுகள், விடுவிப்புகள் இருந்தால் அவற்றை வங்கியின் கவனத்திற்கு உடனே கொண்டுவருவார். இவ்வாறு கொண்டுவரப்படும் முறைப்பாடுகளுள் அனேகமானவை எவ்வித பிரச்சினையும் இன்றித் திருத்தப்படுவதுண்டு. ஆனல் வாடிக்கையாளர் எப்போதும் தனது கூற்றுக்களைப் பரிசீலனை செய்யவேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்றே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஏற்படும் பிரச்சினைகளைக் காலத்துக்குக்காலம் நீதிமன்றங்கள் தீர்த்துவைப்பதற்கு முனந்துள்ளன.
இங்கு ஏற்படும் பிரச்சினைகளை நாம் இரண்டு தலைப்புக்களில் ஆரா uavrub: . 1. வாடிக்கையாளருக்குச் சாதகமாகப் பிழைகள் ஏற்படுதல்.
2. வாடிக்கையாளருக்குப் பாதகமாகப் பிழைகள் ஏற்படுதல்.
வாடிக்கையாளருக்குச் சாதகமாகப் பிழைகள் ஏற்படுதல்:
இங்கு நாம் வாடிக்கையாளரின் கணக்கு ஒன்று மேலதிகமான தொகையொன்றினுல் வரவு வைக்கப்படுவதையே குறிப்பிடுகின்ருேம்.
உதாரணமாக : "X" என்பவருக்கு வரவு வைக்க வேண்டிய தொகையாகிய ரூபா "A", தவறுதலாக "Y" எனும் வாடிக்கையா ளரின் கணக்கில் வரவு வைக்கப்படுதலை இங்கு நாம் குறிப்பிடலாம். இதனைத் தொடர்ந்து இந்தப் பிழை கண்டுபிடிக்கப்படாமலே பின், பற்றுவரவுப் புத்தகமோ அல்லது வங்கிக்கூற்ருே அவருக்கு அனுப்பப் பட்டுவிட்டால் இது வங்கிக்கு எதிரான ஒரு முதல்தர சான்முக அமை கின்றது. இவ்வாறு ஒருபிழை நடந்துவிட்டால் அப்போதும்' வங்கி

سیسے 57 ۔۔۔سی۔
தவறுதலின் அடிப்படையில் இவ்வாறு நடந்துவிட்டது எனக் காட்டுவ தற்கு முயற்சிக்கும். வாடிக்கையாளர் ஒருவர் வங்கி தனக்கு அளித்த கூற்றில் தங்கி தனது நிலையை மாற்றிக்கொண்டு விட்டார் எனக் காட்டும்போதெல்லாம் வங்கி இவ்வாறு தவறுதலாக வரவுவைத்த தொகையை மீளவும் பெற முடியாது போவதுண்டு. வாடிக்கையாள ரும் ஒரு நன்னம்பிக்கையிலேயே தான் நடந்துகொண்டுவிட்டதாகக் கூறுவார். இவ்வாறன ஒரு நிலை வங்கிக்குத் தர்மசங்கடத்தையே கொடுக்கும்.
பின்வரும் உதாரணம் மூலம் நாம் மேற்கூறியவற்றை விளக்கக் கூடியதாக இருக்கின்றது.
e -- b : Lloyds Bank Ltd. v Brooks (1950) இங்கு, பலவருடங்களாக லொயிட்ஸ் வங்கியின் முதலீட்டுப் பிரிவு Miss Brooks என்பவரின் கணக்கில் சில குறிப்பிட்ட வகை இரண் டாவது விருப்பத்திற்குரிய பங்குகளின் பங்கு லாபங்களை வரவு வைத்து வந்தது. இவ்வாறு வரவுவைத்த தொகை கி 1108 ஆகும். இந்த குறித்த வகை இரண்டாவது விருப்ப பங்குகளுக்கு Miss Brooks உரித்துடையவர் அல்லர். ஆணுல் Miss Brooks அதே கம்பனியில் முதல் விருப்பத்திற் குரிய பங்குகளின் பங்கு இலாபத்தின் ஒரு நம்பிக்கைப் பொறுப்பா ளர் என்ற ரீதியில் உரித்துடையவர் ஆவர். இங்கு தவறு வெளிப்பட்ட போது, வங்கியானது Miss Brooksஇன் கணக்கில் இருந்து தவறுத லாக வரவு வைத்த தொகையை மீளப்பெற முயற்சித்தது. ஆனல் அவர் வங்கியின் கூற்று அறிக்கையில் தங்கி தான் தன் நிலையை மாற்றிக் கொண்டதாகக் கூறினர். அதாவது தான் கூடிய வருமானம் கிடைக் கின்றதென்ற நம்பிக்கையில் தனது செலவினையும் கூட்டிக்கொண்ட தாக வாதிட்டார். இவரது வாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வங்கி மேலதிகமாக வரவுவைத்த தொகையை மீளப் பெறமுடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒரு வியாபாரி தனது நாளாந்தக் கணக்கு விபரங்களைக் கவனமாக அவதானிக்கவேண்டிய நிலையில் இருப்பார். இவ்வாருன ஒருவர் தான் நன்னம்பிக்கையில் நடந்து தன் நிலையை மாற்றிக்கொண்டதாக வாதாடி நீதிமன்றத்துக்கு ஏதாவது சாட்டுக்கள் கூற முடியாது. இதுபோல ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி தனது பதிவேடுகளைப் பார்த்து தனது கணக்குகளைச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. எனவே இவ்வாருன நிலையில் அம்மூதாட்டி தான் வங்கிக் கணக்குக் கூற்றில் தங்கித் தன் நிலையை மாற்றிக்கொண்ட தாக வாதிடும்போது அதனே ஏற்றுக்கொள்ளலாம். எனவே மொத்தத் தில் பார்க்கும்போது இங்கு ஏற்படும் இழப்புக்கள், இலாபங்கள்ப்ற்றித் தீர்மானிக்கும்போது ஒவ்வொரு தனி நிலையையும் அலசி ஆராய்ந்தே ஒரு முடிவிற்கு வரக்கூடியதாக இருக்கும்.

Page 35
--سس۔ 58 .........ی۔
Skyring v Green wood (1825) Graårsmo augp&6áv SPB grnt Sprav அதிகாரியின் கணக்கு மேலதிக தொகைகளால் வரவு வைக்கப்பட்ட போது, இங்கு குறித்த நபர் மோசடி இல்லாது தன்னிலையை மாற் றிக் கொண்டார் என்றும், எனவே அந்த மேலதிக தொகையை மீளப் பெற முடியாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும் ஒரு வாடிக்கையாளர் தனக்குச் சாதகமாக ஒரு தவறு நடந்துள்ளது எனத் தெரிந்துகொண்டு அதனைத் தளக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு தவருண பதிவு நடந்து அது பற்றி வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படாதவரை, அல்லது அதுபற்றி அவர் அறிந்திராதவரை, தான் அத் தவருண பதிவில் தங்கித் தன்நிலையை மாற்றிக்கொண்டேன் என வாதிடவும் முடியாது.
மேலும் அண்மைக் காலத்தில் நடந்த வழக்கொன்றில் ஒரு மாறு தல் ஏற்பட்டமை இங்கு அவதானிக்கத்தக்கது. அதாவது United Overseas Bank y Jiwami (1976) என்ற வழக்கில் தடத்தல் கோட் டினே (Estoppel) சாதகமாக்கிக் கொள்வதாயின் கீழ் குறிப்பிடப்படும் 3 நிபந்தனைகள் திருப்தி செய்யப்படுதல் வேண்டும். இங்கு தடத்தல் கோட்பாடு என்ன என்பதனையும் நாம் அறிந்துகொள்ள வேண்டி யுள்ளது. அதாவது தனக்கு ஒருவர் லாபம்தரும் வகையில் பிழையாக நடந்து கொள்கிருர் என்பதனை அறிந்து இருந்து, அதனைத் தடுக்காது இறுதியில் அந்த இலாபத்தினை அனுபவிக்க முயற்சிப்பதைத் தடத் தல் கோட்பாடு என எளிமையான விளக்கம் கொடுக்கலாம்.
3 நிபந்தனைகள் :
1. சரியான தகவலைக் கொடுக்கவேண்டும் என்ற ஒரு கடமை அங்கு இருந்தது. ஆனல் அக் கடமை சரிவரச் செய்யப்பட வில்லை. அல்லது கணக்கில் உள்ள மீதி தொடரில் ஒரு பிறழ் பகர்வு (Misrepresentation) இருந்தது. அதற்கு வங்கியே பொறுப்பாக இருந்தது.
2. பிழையான பதிவுபற்றிய தகவல் வாடிக்கையாளரைத் திசை
திருப்ப வைத்துவிட்டது என நிறுவப்படுதல் வேண்டும்.
3. தவருண நம்பிக்கையின் காரணமாக வாடிக்கையாளர் ஒருவர் தன் நிலையை அதற்கேற்ப மாற்றிக்கொண்டு நடந்துவிட்டார் என்றும், இப்போது அவரைத் திருப்பிச் செலுத்துமாறு கேட்பது ஒரு நியாயமற்ற செயல் என்றும் நிறுவவேண்டும்.
வாடிக்கையாளருக்குப் பாதகமாகப் பிழைகள் ஏற்படுதல்:
வாடிக்கையாளர் ஒருவருக்குப் பாதகமாகப் பிழைகள் 2 பிரதான வழிகளில் ஏற்படலாம்.

۔۔۔۔۔ 59 بسی۔
(அ) வங்கியின் தவறல் ஏற்பட்ல்:
உதாரணமாக வங்கியானது இன்ஞெரு வாடிக்கையாளரின் காசோலையினுல் பிறிதொரு வாடிக்கையாளரின் கணக்கினைப் பற்று வைத்தல் அல்லது ஒரு வாடிக்கையாளரின் கணக்கிற்கு வரவு வைக்கவேண்டிய தொகையை வரவுவைக்கத் தவறி இன்னுெரு வரீன் கணக்கில் வரவு வைத்தல்.
(ஆ) அதிகாரம் இல்லாது இயங்குதல்:
உதாரணமாக வங்கியொன்று மோசடி செய்யப்பட்ட கையொப் பம் கொண்ட காசோலையால் வாடிக்கையாளரில் கணக்கிறுேப் பற்று (Debit) வைத்தல்.
சாதாரணமாக வாடிக்கையாளர் ஒருவர் தான் எந்த எந்தக் காசோலைகளை வரைந்தார் என்றும், தனது கணக்குக் கூற்றிளை எப் போது பெற்ருர் என்பதிலும் கவனமாக இருத்தல் வேண்டும். மேலும் அவதானமிக்க ஒருவராயின் தனது கூற்றினைப் பரிசீலனை செய்தும் இருத்தல் வேண்டும். இதற்கு வாடிக்கையாளர் ஒருவர் தான் பெற்ற கணக்குக் கூற்றின் ஒரு நியாயமான காலத்துள் பரிசீலனை செய்து பிழைகள், தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்ற ஓர் உட்கிடையான கடமையைக்கொண்டு இருக் கின்ருர் எனக் கருதக்கூடியதாக இருக்கின்றது. உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் இது ஒரு சட்டமாக இருக்கின்றது என்பதனை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும். ஆளுல் இங்கிலாந் தில் இவ்வாருண் சட்டம் காணப்படவில்லை. இலங்கையிலும் இதனை is cos SaGu distadorial Gasir Dgi. Chatterton v London and County Bank (1891) என்ற வழக்கில் வாடிக்கையாளரின் பற்று வரவுப் புத்தகத்தில் உள்ள பதிவுகள் யாவும் பரிசீலனை செய்யப்பட்டு அதற் கான அடையாளமும் இடப்பட்டன. உண்மையில் வாடிக்கையாளர் வங்கிக்கு சென்று வங்கி பேரேட்டில் இருந்து ஒவ்வொரு பதிவாக வாசிக்க வைத்து தனது புத்தகத்தைச் சரிபார்த்தார். ஆனல் ஏறத்தாழ 11 மாதங்களின்பின் 25 காசோலைகள் மட்டில் தான் வரையாதவை எனக் கண்டுகொண்டார். அவரது கையொப்பம் அவரது எழுது வினைஞணுல் மோசடியாக இடப்பட்டு காசாக்கப்பட்டுள்ளது. இங்கு இவ்வாறு அதிகாரம் இன்றி இயங்கியமையால் தனது கணக்கில் அத் தொகையை மீள வரவுவைக்க வேண்டும் என வாதிட்டார். இவ் வழக்கில், Lord Esher என்பவர், வாடிக்கையாளர் தமது கணக்கு கூற்றுக்களை அல்லது பற்று வரவு ஏடுகளைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை என்று கூறி வாடிக்கையாளரின் சார்பாகவே தீர்ப்பு வழங்கிஞர்.

Page 36
--س سے 60 -۔
Kepitigolla Rubber Estates Ltd. v. National Bank of India Ltd. (1909)
இவ்வழக்கில், குறித்த கம்பனியின் செயலாளர் இரண்டு மாதங்க ளுக்கு மேலாக காசோலைகளை மோசடியாக்க் கையொப்பம் இட்டு மோசடி செய்தான். பற்றுவரவுப் புத்தகம் பல தடவை அக்காலத்துள் பதிவு செய்யப்பட்டுக் கொடுக்கப்பட்டது. பணிப்பாளர்கள் அதனைப் பரிசீலனை செய்யவில்லை. இற்கு மோசடி செய்யப்பட்ட அக்காசோலையின் தொகை களைக் கொண்டு கம்பனியின் கணக்கினைப் பற்று வைக்க முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி Bray தனது தீர்ப்பில் வாடிக்கையாளர் தமது பற்றுவரவுப் புத்தகங்களைப் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கடமையோ கட்டுப்பாடோ இல்லை என்று கூறிஞர்.
மேலும் வங்கிகள் யாவும் வாடிக்கையாளர்கள் தமது கணக்குக் கூற் நினைச் சரிபார்த்து நியாயமான காலத்துள் எதாவது தவறுகளைக் கண்டு கொள்ள வேண்டும் என வற்புறுத்துமாயின், இச்செயற்பாடு வாடிக்கை யாளருக்கு ஒரு கடமையாக மாறிவிடும். இவ்வாறு கண்டுபிடிக்காது விட்டால் வாடிக்கையாளர் கவனமின்மையாக நடந்துகொண்டார் எனவும் வாதிடலாம். எனவேதான் நீதிமன்றங்கள் இவ்வாருன ஒரு கடமையை வாடிக்கையாளர்கள்மேல் சுமத்த விரும்பவில்லை. கடமை ஒன்று இல்லாதபோது கவனமின்மை என்பதும் எழமாட்டது.
வாடிக்கையாளரின் வரவு ஒன்று மாறி இன்ஞெருவரின் கனக் கிற்குப் பதிவு செய்யப்பட்டு விட்டால், இங்கு வங்கிக்கு எந்தப் பாது காப்பும் கிடையாது, குறித்த நபரின் கணக்கு உடனே அவரது தொகையால் வரவு (Credit) வைக்கப்படுதல் வேண்டும்.
ஒரு வாடிக்கையாளரின் கணக்கில் தவருக பற்று வைத்த தொகையைத் தவறு கண்டுபிடிக்கப்பட்ட உடனே வரவு வைப்பதற்கு முயற்சிக்க வேண்டும். யாருடைய கணக்கில் உண்மையாகப் பற்று வைக்க வேண்டுமோ அவரது கணக்கினைப் பற்றுவைக்க (Debit) வேண்டும். இங்கு இவ்வாறு பற்று வைக்கும்போது இதுபற்றி ஒரு மன்னிப்புக் கோரி பற்று வைப்பதற்கான சிட்டையும் (Advice Memo) அனுப்புதல் வேண்டும். நடைமுறைப் பிரயோகங்கள் : (a) பிழைகளைத் திருத்திக்கொள்ளுதல் :
வங்கியொன்று பற்று வைக்கும்போதோ, வரவு வைக்கும்போதோ தவறு ஒன்றினைச் செய்து விட்டால் நட்டங்கள் அனேகமாக அரிதாகவே ஏற்படுகின்றன எனலாம். ஏனெனில் அநேக தவறுகள் வாடிக்கையாள ருடன் தொடர்பு கொள்வதற்கு முன்னரேயே திருத்தப்பட்டு விடுகின் றன. மேலும் அனேக வாடிக்கையாளர்கள் இதனைப் பெரிதுபடுத்தாது வங்கி மன்னிப்புக் கோரும்போது ஏற்றுக் கொள்கின்றனர். ஆளுல்

- 61 -
இவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்பதற்காக வங்கி கவன மெடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை எனக் கருத முடியாது. பின்வரும் அபாயங்களையும் வங்கி எதிர்நோக்க வேண்டும்.
(1) தவருகப் பற்று வைத்தமையாலோ அல்லது வரவு வைக்காமையி ஞலோ வாடிக்கையாளரின் காசோலைகளைச் சில சந்தர்ப்பங்களில் பணம் கொடுக்காது திருப்பவேண்டி ஏற்படும்.
(2) வாடிக்கையாளர் தனது கணக்கில் உள்ள வரவு மீதியான தொகையை நம்பி தனது நிலையை அதற்கேற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கலாம்.
(3) சில சமயம் யாருடைய கணக்கில் உண்மையாகவே பற்று வைக்க வேண்டுமோ அக்கணக்குடைமையாளர் இடைப்பட்ட காலத்தில் இறந்து போகலாம், வகையற்றுப் போகலாம், அல்லது மன நோயால் பீடிக்கப்பட்டு இருக்கலாம்.
மேலும் இங்கு மேலே ஒன்றில் கூறிய நிகழ்வு நடந்ததும் வாடிக்கை யாளரிடம் வங்கி மன்னிப்புக் கோருவதுடன் அக்காசோலையின் பெறுணி (Payee) இடத்தும் மன்னிப்புக் கோர வேண்டும். மேலும் அப் பெறு பவனை அல்லது பெறுனியை அக் காசோலையை மீண்டும் கொடுப்பன விற்குச் சமர்ப்பிக்குமாறு கேட்டலும் வேண்டும்.
(b) சட்டரீதியான பாதுகாப்புக்களை நடைமுறையில் கொண்டுவருதல் :
சில நாடுகளில் வங்கிகளைப் பாதுகாக்கச் சட்டரீதியான பாதுகாப் புக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது வாடிக்கையாளர்கள் குறித்த சில காலத்துள் தமது கணக்கின் சரி பிழை பற்றி உறுதிப்படுத்த வேண்டும் என்ற கடமை அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. உதாரண மாக அமெரிக்க நாட்டு சடடங்கள் இவ்வாறு அமைந்துள்ளன. இதற்கு உதாரணமாக,
Leather Manufacturer’s National Bank v Morgen (1885) arcèso வழக்கினை நாம் இங்கு குறிப்பிடலாம். இங்கிலாந்து சட்டங்களில் இவ் வாறு காணப்படாத போதும், இவ்வாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொள்வது பிரச்சினைகளை இலகுவாக்கும் என்ற கருத்து நிலவுகின்றது. இதற்கு அமைய வங்கியொன்று வாடிக்கையாளர்களின் கணக்குப் புத் தகங்களை அல்லது கூற்றுக்களைக் கிரமமாக அனுப்பி அதனை வாடிக்கை யாளர்களை நன்கு பரிசீலனை செய்யுமாறும், தவறுகளையும் விடுவிப்புக் களையும் தமது கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்கின்றன. இதனல் வங்கி மட்டுமல்ல வாடிக்கையாளரும் நன்மை அடைவர் என்ற கருத்து நிலவுகின்றது.

Page 37
அத்தியாயம் 11 கைமாறும் தன்மை adsuergh Fergs GOT KSH si : (Negotiable Instruments)
கைமாறும் சாதனங்கள் அல்லது கருவிகள் என்பன வர்த்தக பரி வர்த்தண்யின்போது கொடுப்பனவினை உறுதிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆவணங்களாகும்.
இன்றைய காலகட்டத்தில் கைமாறும் சாதனங்களின் பிரதான வகைகளாக நாம் பின்வருவனவற்றை, உதாரணங்களாகக் கூறலாம்.
Politanoof
1. Lorribljaiwgudia air (Bills of Exchange)
2. காசோலைகள் (இது ஒரு குறித்த வகையான மாற்றுண்டியல்
ஆகும்). 3. art digoyal Luis Sprisoir (Promissory notes)
உ + ம் : வங்கித்தாள்கள், பங்கிலாப ஆணைகள், காவிக்குரிய கடன்முறிகள், திறைசேரி உண்டியல்கள்.
கைமாறும் சாதனங்களின் குளுதிசயங்கள் :
(Legal characteristics) 1. கைமாறும் சாதனங்களின் உரித்தானது வழங்குதல் மூலம் LDiff) splitulanth. கட்டளைக்குச் செலுத்தப்படவேண்டிய சாதனங்கள் சாட்டுதல் செய்யப்படுவதின் மூலமும், தொடர்ந்து வழங்குதல் மூலமும் உரித்து மாற்றப்படலாம்.
2. நல்லெண்ணத்துடன் செயலாற்றி, மாற்றிக் கொடுப்பவரின் உரிமையில் உள்ள குறை ஏதாவதுபற்றி அறியாது. பெறு மதிக்காக அதனைப் பெறும் எவரும், முன்னர் அதனை வைத் திருந்த ஆட்களின் உரிமைகளில் உள்ள குறையைக் கருதாது ஒரு நல்ல உரித்தை அடைகின்றவராகின்ருர்,
3. கைமாறும் சாதனத்தை வைத்திருப்பவர் தனது சொந்தப் பெய
ரிலேயே வழக்குத் தொடுக்கலாம் 4. கைமாறும் சாதனத்தினை வைத்திருப்பவர் தனது உரித்தினை நிறுவுவதற்காக அது தொடர்பிலான முன்னைய கட்சிக்காரருக்கு அறிவித்தல் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை,

- 63 -
ஒருவர் மோசடியாக ஒரு கருவியை அல்லது சாதனத்தைப் பெற் முல் அதற்கு அவர் ஒரு சிறந்த உரித்தினைப் பெறமாட்டார். ஆனல் இவர் இதனை இன்னுெருவருக்குப் பெறுமதிக்காக மாற்றிக் கொடுக்கின் ருர் என்றும், மாற்றிப்பெற்ற இப்புதியவர். நல்லெண்ணத்துடனும், பெறுமதிக்காகவும் அச் சாதனத்தைப்பெற்ருல் ஒரு சிறந்த உரித்தினைப் பெறுகின்ருர், எனவே மோசடியாகப் பெற்றவர் உரிமையை என்றும் பெறமாட்டார். ஆனல் மோசடி செய்தவரிடம் இருந்து மற்ருெருவர் நல்லெண்ணத்திலும், பெறுமதிக்கும் என அதே சாதனத்தைப் பெறும் போது ஒரு சிறந்த உரித்தினைப் பெறுகின்ருர். இவ்வாறு பெற்று இருக் கும்போது முன்னர் அதனுடன் தொடர்புடையவர்களைவிடத் தன் னுரிமையை நில்நாட்டக்கூடிய நிலையில் இருப்பார்.
Lorrigadiriyusi) (Bill of Exchange):
ஒரு நாணய மாற்றுண்டியல் என்பது ஆளொருவரால் இன்ஞெரு வருக்கு முகவரி இடப்பட்டு. வழங்குபவரால் ஒப்பமிடப்பட்டு, எவருக்கு முகவரி யிடப்பட்டதோ அந்த ஆளை, நிச்சயமான ஒரு தொகைப் பணத்தைக் கோரிக்கையின்மேல் அல்லது நிருணயிக்கப்பட்ட அல்லது தீர்மானிக்கப்படக்கூடிய எதிர்காலத்தில், குறித்துரைக்கப்பட்ட ஆளொருவருக்கு அல்லது அவரது கட்டளை கொண்டவருக்கு அல்லது காவுநருக்குச் செலுத்தும்படி தேவைப்படுத்தும் நிபந்தனை அற்ற எழுத்திலான ஒரு கட்டளையாகும்.
மேற்கூறிய வரைவிலக்கணம் எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் (1927) பிரிவு 3 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளமை இங்கு கவ விக்கத்தக்கது. இந்தச் சட்டரீதியான வரைவிலக்கணத்தை நாம் சற்று விளக்கமாக ஆராய்வது சாலவும் சிறந்தது.
(1) Subs2Tuibro slaf (an unconditional order):
ஓர் உண்டியலானது பணம் செலுத்துவதற்கான ஒரு கட்டளையைக் கொண்டு இருத்தல்வேண்டும். பணத்தைச் செலுத்துமாறு கேட்பது வெறும் வேண்டுகோளாக இருத்தல் கூடாது. உண்மையில் தற்பொ ழுது எல்லா உண்டியல்களுமே "செலுத்தவும்" எனக் குறிப்பிட்டு தட்டிக் கழிக்கக் கூடாத ஒன்ருகவே இருக்கின்றன.
நிபந்தனையற்றது எனக் குறிப்பிடும்போது, வரைந்தவருக்கும் வரையப்பட்டு இருப்பவருக்கும் இடையே ஒரு நிபந்தனை அற்ற ஒன் ருகும். நிபந்தனையான கட்டளை நடைமுறைப்படுத்த முடியாததாகும்.
a + th: Bavins Junior and Sims v London and S. W. Bank
(1900)

Page 38
- 64 -
இந்த வழக்கில் ஒருசாதனம் பணம் செலுத்தவும் என்ற ஒருகட்டளை யைக் கொண்டிருந்தது. ஆனல் பற்றுச்சீட்டுப் படிவத்தின் அடியில் உரியமுறையில் கையொப்பம் இடப்பட்டு, முத்திரை இடப்பட்டுத் திகதி இடப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இங்கு அக் குறிப்பிட்ட சாதனம் மேலே குறிப்பிட்ட மாற்றுண்டியல் கட்டளைச் சட்டப் பிரிவு 3(1)இன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனத் தீர்க்கப்பட்டது.
"செலுத்தவும்" என்ற கட்டளையானது வருங்காலத்தில் நிகழ இருக்கும் ஒரு நிச்சயமற்ற நிகழ்வினை அடிப்படையாக அல்லது அந் நிகழ்வில் தங்கியிருக்குமாயின், அக் கட்டளை நிபந்தனையான கட்டளை யாகவே கருதப்படும். தொடர்ந்து நடக்கவிருக்கும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு ஒன்று உண்டியல் ஒன்றைப் பெறுமதிமிக்க ஒன்ருக மாற்ற LDITL-Frgil. 2. 6Tugës Sishin 60.T (in writing)
உண்டியல் ஒன்று எந்தப் பாஷையிலும் எழுதப்பட்டு இருக் கலாம், அதுபோல அது எடுத்துக் கொடுக்கக்கூடிய எந்த ஒரு பொரு விலும் எழுதப்பட்டு இருக்கலாம். உலோகம் தவிர்ந்த பொருளாக இருக்கவேண்டும்.
மாற்று உண்டியல் கட்டளைச்சட்டத்தின்படி எழுத்தில் என்பது அச்சிடுதலையும் (print) உள்ளடக்குகின்றது. ஒரு தட்டச்சு யந்திரத்தில் தயாரிக்கப்பட்ட காசோலை அல்லது உண்டியலும் ஏற்றுக்கொள்ளப் படும். ஆளுல் மோசடியாக மாற்றங்கள் செய்துகொள்ள இவ்வாறு தட்டச்சு யந்திரத்தில் (Type Writer) தயாரிக்கப்பட்ட காசோலைகள் வசதியாக அமைவதினுல் அனேகமான வங்கிகள் இவ்வாறு செய்வதனை ஊக்கப்படுத்துவதில்லை. தற்காலத்தில் விசேடமாகத் தயாரிக்கப்பட்ட இயந்திரங்களில் காசோலைகள், உண்டியல்கள் எழுதப்படும் மை மூலமே எழுதித் தயாரிப்பதற்கு எப்போதும் ஊக்குவிக்கப்படுதல் சிறந்தது ஆகும். தற்காலத்தில் வங்கியினுல் விசேடமாக அச்சிடப்பட்ட விசேட படிவங்களே காசோலைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வாடிக்கை யாளர் தான் விரும்பியவாறு விரும்பிய பொருட்களில் எழுதாது, இவ்வாறு குறிப்பிடப்பட்ட படிவங்களையே காசோலைகளாகப் பயன் படுத்தவேண்டும் என்று கணக்கு ஒன்று திறக்கும்போதே வாடிக்கை யாளருக்குத் தெளிவாக விளக்கப்படும். இதனுல் மோசடிகளைத் தவிர்த் துக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
3. ஆளொருவரால் இன்னுெருவருக்கு முகவரி இடப்பட்டது
(addressed by one person to another) ஒரு சாதனம் வங்கியாளர் ஒருவரால் தன்மீதே வரையப்பட்டு இருக்குமாயின் அது மாற்றுண்டியல் அல்ல. அதாவது வரைந்தவ ரும் வரையப்பட்டு இருப்பவரும் ஒரேநபராக இருப்பின் அது ஒரு வாக்குறுதிப்பத்திரமாக இருக்குமே ஒழிய மாற்றுண்டியல் அல்ல. இங்கு ஆளொருவரால் இன்னெருவருக்கு முகவரி இடப்படவில்லை.

— 65 —
இங்கு நாம் மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் (1927) பிரிவு 5(2)இனக் கவனிப்பது முக்கியமானது ஆகும். இப் பிரிவு பின்வருமாறு கூறுகின்றது:
" ஓர் உண்டியலை வரைந்தவரும், வரையப்பட்டு இருப்பவரும் ஒரேநபராக இருப்பின் அல்லது வரையப்பட்டு இருப்பவர் (drawee) ஒரு போலியான அல்லது அருவமான ஆளாக இருப்பின் அல்லது ஒரு நபர் ஒப்பந்தம் செய்யத் தகுதியற்றவராக இருப்பின், அவ்வுண்டி யலை வைத்திருப்பவர் தனது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அதனை ஒரு மாற்றுண்டியலாகவோ அல்லது வாக்குறுதிப் பத்திரமாகவோ கரு தலாம்.”
வரையப்பட்டு இருப்பவர் எப்போதும் பெயரிடப்பட்டு இருத்தல் வேண்டும். அல்லது ஒரு நியாயமான நிச்சயத்தன்மையோடு அவரை அடையாளம் காணப்படக்கூடியதாக இருத்தல் வேண்டும். ஓர் உண்டியல் ஒன்று, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் மீது வரையப் பட்டு இருக்கலாம். இவர்கள் பங்காளர்களாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். (இங்கு பிரிவு 6(1), (ே2) இனைப் பார்க்கவும்.)
4. aliaSurrory Toi) sulfillu'.G. ... (Signed by the person giving it)
கையொப்பம் கட்டாயமாக வரைபவரால் அல்லது அவரது முக வரால் இடப்படுதல் வேண்டும். இடப்படும் கையொப்பம் வியாபாரப் பெயரிலும் இருக்கலாம்.
கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களைப் பொறுத் தவரை அதன் இலச்சினையே கையொப்பத்திற்குச் சமமானதாகும்ரு (பிரிவு 93 (2)இகளப் பார்க்கவும்.)
சில பெரிய கம்பணிகள், கூட்டுத்தாபனங்கள் போன்றவை தமது வங்கி யாளருக்கு உரிய முறையில் நட்டோத்திரவாத உறுதிப்பாடு கொடுத்து, கையொப்பமிடவேண்டியவர்களின் நேரடியான கையொப்பத்தை இடாது அதன் சரியான பிரதியை (Facsimile Signature) காசோல் களில் அச்சிட்டுக் காசோலைகள் போன்ற சாதனங்களை வழங்குவதுண்டு. இந்நிலைகளில் ஒரு பிரச்சினை எழுவதுண்டு. அதாவது இவ்வாறு வழங்கப் பட்ட சாதனம் ஒரு பெறுமதிமிக்க காசோலையா ? அத்துடன் இவ்வாறு கையொப்பம் இடப்பட்ட காசோலையை வரைந்தவர் ஏதாவது பிரச்சிர அது தொடர்பில் எழுகின்றபோது பொறுப்பாவாரா என்பதும் கேள் விக்குரிய விடயமாகும்.
5

Page 39
--۔ 66 س۔۔۔۔
இலங்கையில் தீர்க்கப்பட்ட வழக்கு ஒன்று இங்கு முக்கியமாகக் saladistulCavaiwGub. Meyappan v Manchanayake 196 (NLR 529). இவ்வழக்கில் உயர் நீதிமன்றம், கையொப்பம் இடவேண்டிய வரின் கையொப்பத்தின் சரியான பிரதியை மீள அச்சிடுதல் ஒரு முறை யான அல்லது உகந்த கையொப்பம் அல்ல எனக் கூறியது.
எனவே ஆங்கில விதிகள் எவ்வாறு கூறியபோதும் இலங்கையில் எமது நீதிமன்றத் தீர்ப்பு மேற்கண்டவாறுகூறியிருப்பதை நாம் கருத்தில் கொள்ளல் வேண்டும்.
5. கோரிக்கையின்மேல் அல்லது நிருணயிக்கப்பட்ட அல்லது தீர்மானிக்கப்
படக்கூடிய எதிர்காலத்தில்
... On demand, or at a fixed or determinable future time ...... 99
ஓர் உண்டியல் பின்வரும் நிலைகளில் கோரிக்கையின்மேல் அல்லது கேள்வியின்போது செலுத்தப்படவேண்டியதாகும்.
(அ) உண்டியலின் தரிசனத்தின்போது அல்லது கோரிக்கை ஏற் படுத்தப்பட்டால் அல்லது சமர்ப்பிக்கப்படும்போது செலுத் தப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தால் (மா.உ. க. சட்டப் பிரிவு 10 (1) (a)யைப் பார்க்கவும்). (ஆ) கொடுப்பனவிற்கு எனக் காலநேரம் குறிப்பிடப்படாதபோது
(Sofiary 10 (II) (b) )
(இ) ஏற்றுக்கொள்பவர் அல்லது சாட்டுதல் செய்பவரைப் பொறுத் தவரை உண்டியல் ஒன்று காலம் கடந்து இருந்தால் (பிரிவு 10 (2)இனைப் பார்க்கவும்).
காசோலை எனப்படுவது கேள்வியின்போது அல்லது கோரிக்கையின் மேல் பணம் செலுத்தப்படவேண்டிய ஒரு மாற்றுண்டியலாகும். அனேக மான உண்டியல்களில் ' தரிசனத்தின்பின் X நாட்களில் " பணம் செலுத்தப்படவேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதாவது வரையுனி (Drawee) ஏற்றுக் கொள்வதற்காகக் சமர்ப்பித்த போது அவர் அதனைத் தரிசித்த அல்லது கண்ணுற்ற நேரத்தில் இருந்து குறித்த நாட்களுக்குள் செலுத்தவும் என்பதே இதன் அர்த்தமாகும்.
சில உண்டியல்கள் நிச்சயமான வருங்கால நிகழ்வு ஒன்றின் போதே செலுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கக்கூடிய ஒன்ருக இருக்கும். இந்நிலை யில் உண்டியலானது ஒப்புக்கொள்ளப்பட்டு இருந்தால் கூட கொடுப் பனவு திகதி தீர்மானிக்கப்பட்டு இருப்பதில்லை.

ہس۔ 67 ~~~--
மேலும் சில நிலைகளில், ஒரு உண்டியல் கொடுப்பனவை ஒரு நிர்ணயித்த அல்லது தீர்மானிக்கப்படக்கூடிய எதிர்கால திகதியாகக் கொள்வதின் மூலம், அவ்வுண்டியலோடு தொடர்புடைய கட்சிக்காரர் களின் பொறுப்புக்களை நிலைப்படுத்தமுடியும்; உண்டியலைக் கொடுப்பன விற்குச் சமர்ப்பித்துக்கொள்ள முடியும் தேவை ஏற்படின் மறுத்தமை பற்றிய அறிவித்தலைக் கொடுக்கமுடியும். எனவேதான் ஒரு உண்டிய லின் கொடுப்பனவு திகதியை நிர்ணயித்த அல்லது தீர்மானிக்கப்படக் கூடிய எதிர்கால திகதியாக வைப்பதினுல் எவ்வளவு தூரம் நன்மை ஏற்படும் என்பதை, மேற்கூறியதன் மூலம் அறிந்துகொள்ளக்கூடிய தாக இருக்கின்றது.
(6) நிச்சயமான ஒரு தொகைப் பணத்தை. .
(A Sum Certain in Money) ஒரு உண்டியலின் கீழ் எந்தளவு தொகை செலுத்தப்படவேண்டும்
என்பது நிச்சயமானதாகவே எப்போதும் இருத்தல் வேண்டும். ஆனல்,
இந்தத் தொகை
(அ) வட்டியுடன் செலுத்தப்படலாம்.
(ஆ) குறிப்பிட்ட தவணைப்பனமாகச் செலுத்தப்படலாம்.
(இ) குறித்த தவனைப் பணமாகச் செலுத்தப்படவேண்டி இருக்கின்ற போது, ஒரு தவனைப் பணம் தானும் கட்டத்தவறியபோது முழுப்பணமுமே செலுத்தப்பட வேண்டி ஏற்படும்.
(ஈ) ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட நாணயமாற்று விகிதத்திற்கு
அமையவும் செலுத்தப்படலாம்.
(இங்கு மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 9 (1) a, b, c, d, யைப் பார்க்கவும்.)
மேலும், மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தின்படி செலுத்தப் படவேண்டிய பணமானது எழுத்திலும், இலக்கத்திலும் குறிப்பிடப் பட்டு இருத்தல் வேண்டும் என்பதற்கு ஆதாரம் இல்லை. ஆணுல் நடைமுறையில் தொகையானது எழுத்திலும், இலக்கத்திலும் குறிப் பிடப்படுகின்றது. அப்படி ஒரு உண்டியலில் எழுத்திலும், இலக்கத்தி லும் குறிப்பிடப்பட்டுள்ள போது, இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணுக இருப்பின், எழுத்தில் எந்த தொகை குறிப் பி டப் பட்டுள்ளதோ அத் தொகையே செலுத்தப்படவேண்டியதாகும். (இங்கு மா. உ. க. சட்டப் பிரிவு 9 (2) இனைப் பார்க்கவும்.)

Page 40
- 68 -
மேலும் ஒரு தொகைப் பணத்தினை வட்டியுடன் செலுத்தவும் என உண்டியவில் குறிப்பிடப்பட்டுள்ளபோது, ஏதாவது அங்கு குறிப்பாகக் கூறப்படாத இடத்து, வட்டியானது உண்டியலின் திகதியில் இருந்து கணக்கிடப்படும். உண்டியலில் திகதி இடப்படாத இடத்து அது வழங்கப்பட்ட திகதியில் இருந்து கணக்கிடப்படுதல் வேண்டும். இங்கு பிரிவு 9 (3) யைப் பார்க்கவும்.
(7) குறித்துரைக்கப்பட்ட ஆளொருவருக்கு அல்லது அவரது கட்டளை
கொண்டவருக்கு அல்லது காவுநருக்கு 0. “......to or to the order of a specified person, or to bearer..." உண்டியல் ஒன்று, குறிப்பிடப்பட்ட நபர் ஒருவருக்குச் செலுத்தப் படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தால் அல்லது குறித்த நபரால் சுட்டிக்காட்டப்பட்ட யாராவது ஒருவருக்குச் செலுத்தப்பட வேண்டும் என இருந்தால் அது கட்டளைக்கு செலுத்தப்படவேண்டிய உண்டியல் எனப்படும். அதாவது உண்டியலானது ** Pay X” or * Pay X or Order" என இருப்பதனையே குறிப்பிடுகின்ருேம்.
மேலும் உண்டியல் ஒன்று காவிக்குச் செலுத்தப்படக் கூடியதாக இல்லாத சமயம், அவ்வுண்டியலில் பெறுனி (Payee) யின் பெயர் குறிப்பிடப்பட்டு இருத்தல் வேண்டும். அல்லது பெறுனியின் பெயர் ஒரு நிச்சயத்தன்மையோடு இருத்தல் வேண்டும். (பிரிவு 7 (1) இனைப் பார்க்கவும்.)
மேலும் ஒரு உண்டியல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர் களுக்குச் செலுத்தப்படக் கூடியதாகப் பிறப்பிக்கப்படலாம். அல்லது பலருள் ஒரு வருக்கு ச் செலுத்தப்படக்கூடியதாகவோ இருக்கலாம். அதுபோல் இருவரில் ஒரு வருக்குச் செலுத்தப்படக்கூடியதாகவும் இருக்கலாம். (பிரிவு 7(2) இனைப் பார்க்கவும்.)
மேலும் ஒரு உண்டியலின் பெறுனி (Payee) போலியான ஆளாக அல்லது அருவமான ஆளாக இருப்பின் (Fictitious) அல்லது உயிர் வாழாத (non-existing) ஆளாக இருப்பின் அவ்வுண்டியல் காவிக்குச் செலுத்தப்படக்கூடியதாகக் கருதப்படலாம். (பிரிவு (7) இேனே ப் பார்க்கவும்.)
உண்டியல் ஒன்று வெற்றுச் சாட்டுதல் செய்யப்பட்டுள்ள போதும், காவுநருக்கு என வழங்கப்பட்டுள்ள போதும் அதனைக் காவிக்குச் செலுத் தப்படக்கூடிய உண்டியல் என நாம் கருதலாம்.
வாடிக்கையாளர்கள் சில சமயங்களில் தமது காசோலைகளை Cash or Order என வரைவதும் உண்டு. இவ்வாருன சாதனம் ஒரு காசோலை அல்ல. ஏனெனில் ரொக்கம் (cash) என்பதனை நாம்

- 69 -
குறித்துரைக்கப்பட்ட ஒரு நபராகக் கருதமுடியாது. ஆஞலும் இவை காசுக் கொடுப்பனவினைப் பொறுத்தவரை, பெறுமதிமிக்க ஒரு சாதன மாகக் கருதி குறித்த தொகை அவருக்கே வழங்கப்படும்.
உண்டியலோடு சம்பந்தப்பட்ட நபர்களும் அவர்களின் பொறுப்புக்களும்
(Liability of Parties)
உண்டியலோடு சம்பந்தப்பட்டோர் :
உண்டியலுடன் மூவர் பிரதானமாகச் சம்பந்த்பிட்டு இருப்பர். 1. Gw6oprijgsauri (Drawer) 2. ஏற்றுக்கொண்டவர் அல்லது ஒப்புக்கொண்டவர் (Aceptor) 3. சாட்டுதல் செய்தவர் (Indorser)
பொறுப்புக்களுக்கான நிபந்தனைகள் :
ஒர் உண்டியலின் கீழ் பொறுப்பாவதற்கு ஒருவர் பின்வரும் நிபந் தனைகளைப் பூர்த்தி செய்து இருத்தல் வேண்டும். (அ) உண்டியலில் அவரே கட்டாயமாகக் கையொப்பம் இடுே இருத்தல்
வேண்டும். (ஆ) அவரே அதனை வழங்கி இருத்தல் வேண்டும். (இ) அவர் ஒப்பந்தம்செய்யும் தகைமையைக் கொண்டவராக இருத்தல்
வேண்டும். (ஈ) அவர் மதிபலனைப் (Consideration) பெற்றிருத்தல் வேண்டும்.
இந் நான்கினையும் ஒருவர் பூர்த்தி செய்து இருந்தால் அக் குறிப்பிட்ட உண்டியல் தொடர்பில் பொறுப்பாக வேண்டி ஏற்படும். இவற்றைச் சற்று விரிவாக ஆராய்வோம்.
(அ) உண்டியலில் அவரே கட்டாயமாகக் கையொப்பம் இட்டு இருத்தல்
வேண்டும்:
மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 23இன் படி ஒருவர் உண்டியலில் தான் கையொப்பம் இடாதபோது பொறுப்பாகமாட்டார். ஒரு முதல்வரின் சார்பாக முகவர் கையொப்பம் இடுகின்றபோது, தான் அவர் சார்பாகவே கையொப்பம் இடுகின்றேன் என்பதனைத் Gas6mflaJnráŝes(3aJ6ä7G9ub... g)asñé5/7ás 9y6Jiř “Per pro” 9y6i6vg “for and on behalf of” எனக் குறிப்பிட்டு அதனைத் தொடர்ந்து தனது முதல் வரின் பெயரையும் தெளிவாகக் குறிப்பிடவேண்டும். இவ்வாறு தான் முகவராக இயங்குவதனைத் தெளிவாகக் காட்டாதபோது அவர் பொறுப் பாக வேண்டி ஏற்படும்.

Page 41
- 70 -
மேலும் முகவர் ஒருவர் தொழிற்படும்போது, ஓர் ஒப்பந்தம் மூலம், தானே பொறுப்பாவர் எனத் தெளிவாகக் குறித்து உடன் படிக்கை ஒன்றினைக் குறித்த நபர்களிடையே செய்துள்ளபோது மேற் குறித்த சொற்ருெடர்களையும் கருதாதுவிட்டு, முகவரே தனிப்பட்ட முறையில் அவ்வுண்டியல் தொடர்பில் பொறுப்பாகவேண்டி ஏற்படும். gsibg a situatorudits Drth Rolfe Lubell & Co. v. Keith and Another (1979) என்ற வழக்கினைக் குறிப்பிடலாம்.
மேலும் மோசடியான அல்லது அங்கீரிக்கப்படாத கையொப்பம்
ஒன்று நடைமுறைப்படுத்த முடியாத ஒன்ருகும். (இங்கு மா. உ. க. சட்டப் பிரிவு 24இனைப் பார்க்கவும்.)
(ஆ) அவரே அதனை வழங்கி இருத்தல் வேண்டும்:
எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 21 (1) இதுபற்றிக் கூறுகின்றது. இதற்கு அமைய ஒப்பந்தம் நிறைவு செய்யப்படவேண் டின் உண்டியல் வழங்கப்பட்டு இருத்தல்வேண்டும். (Delivery to Complete Contract). Gudgyth 620 a.airlgusi apielhauspur (Until delivery) அவ்வுண்டியல் மீதான எந்த ஒப்பந்தமும் (அதனை வரைந் தவர் செய்தாலோ, ஒத்துக்கொண்டவர் செய்தாலோ, அல்லது சாட்டுதல் செய்தவர் செய்தாலோ ) நிறைவு செய்யப்படாததும் தவிர்க்கப்படத்தக்கதும் ஆகும். ஒரு முறையான உண்மையான உடமை மாற்றம் ஒருவரிடம் இருந்து மற்றும் ஒருவருக்குச் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.
(இ) அவர் ஒப்பந்தம் செய்யும் தகைமை கொண்டு இருக்கவேண்டும்
ஒப்பந்தம் செய்யும் தகைமையும், சம்பந்தப்பட்ட நபர் என்ற முறையில் பொறுப்பாகும் தன்மையும் ஒன்றுக்கு ஒன்று சமமாக அமைந்தவையாகும். இவ்வாறு ஒப்பந்தம் செய்யும் தகைமை இலங்கை யில் நிலவும் சட்டமுறையினல் தீர்மானிக்கப்படும். குறிப்பாக இங்கு ரோமன் டச்சு சட்டம் கூறும் முறைக்கு அமையவே ஒப்பந்த தகைமை தீர்மானிக்கப்படும் எனக் கூறின் மிகையாகாது.
(ஈ) மதிபலன் பெற்று இருத்தல் வேண்டும்:
உண்டியலோடு சம்பந்தப்பட்ட கட்சிக்காரர் ஒருவர் அது சம்பந்த மாக ஏதாவது பொறுப்புக்களைச் சுமக்கவேண்டுமாயின், அவர் அங்கு ஏதாவது ஒரு மதிபலனைப் பெற்று இருத்தல் வேண்டும். இங்கு நாம் மதிபலன் என்ருல் என்ன என்பதற்குச் சுருக்கமாக விளக்கம் பெறுதல் அவசியமாகும். பணம் கொடுப்பதாகக் கொடுத்த வாக்குறுதிக்குப் பிரதிபலனுக ஒரு பெறுமதி கொடுக்கப்படுதலையே மதிபலன் என நாம் சுருக்கமாக விளக்கலாம்.

ー71 ー
பொறுப்புக்களின் ஒழுங்குமுறை: (Order of Liability)
உண்டியல் ஒன்று ஒத்துக்கொள்ளப்படும் அல்லது ஏற்றுக்கொள் ளப்படும் வரை வரைந்தவரே பிரதான கடன்பட்டவராவர். இவரே முதன்மைப் பொறுப்புக்களைக் கொண்டு இருப்பார். இந்நிலையில் உண்டியல் ஒன்று கைமாற்றப்பட்டால், அதனைச் சாட்டுதல் செய்தவர் இடைநிலைப் பொறுப்புக்களை ஏற்பார். இங்கு சாட்டுதல் செய்தவர் வரைந்தவருக்கு உத்தரவாதியாக அமைகின்ருர் எனவும் கருதலாம். ஆளுல் உண்டியல் ஒன்று ஒத்துக்கொள்ளப்பட்டதும் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்டதும் ஏற்றுக்கொண்டவர் (வரையப்பட்டு இருப்பவர்) முதன்மைக் கடனுளியாக மாறுகின்ருர். இந்நிலையில் வரைந்தவரும், சாட்டுதல் செய்தவர்களும் அவ்வுண்டியல் தொடர்பில் உத்தரவாதிக ளாக மாறுகின்றனர் என நாம் கொள்ளமுடியும்,
இந்த நிலையில் உண்டியல் ஒன்று தொடர்பாக, ஒத்துக்கொண்ட வரி, சாட்டுதல் செய்தோர் என்ற ஒழுங்கில் அவர்கள் மீது குறித்த தொகைக்காக வழக்கிடமுடியும். ஒவ்வொருவரும் அவ்வுண்டியலின் முழுத் தொகைக்கும் பொறுப்பாவார்கள். அவர்கள் தனித்தனியாகவோ கூட்டாகவோ வழக்கிடப்படமுடியும். அதாவது தனியாகவும், இணை யாகவும் அவர்கள் பொறுப்பாவார்கள்.
வரைந்தவரின் பொறுப்புக்கள்:
(Liability of drawer)
இதனைப்பற்றி எமது உண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 55 (1)
விளக்குகின்றது.
இங்கு வரைந்தவர், உண்டியல் சமர்ப்பிக்கப்பட்டபோது உரிய முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பணம் செலுத்தப்படும் என்று உறுதி அளிக்கின்ருர். மேலும் உண்டியல் ஒன்றுக்குப் பணம் செலுத்த மறுக்கப்பட்டபோது அதற்கு உரிய தொகையை ஒரு "கொண்டிருப்போ னுக்கோ’ (Holder) அல்லது சாட்டுதல் செய்தவனுக்கோ (Indorser) செலுத்துவதற்கு உறுதி அளிக்கின்ருர், ஆளுல் இவ்வாறு பணம் கொடுக்க மறுக்கப்பட்ட ஒரு நிலையில் என்ன முறைகளை உரியவர்கள் கடைப்பிடிக்கவேண்டுமோ அந்த முறைகளையும், நடவடிக்கைகளையும் கைக்கொண்டு இருக்கவேண்டும்.
மேலும் ஒரு குறிப்பிட்ட உண்டியலை ஈற்றில் உடமையாளர் (Holder in due Course) sessä GolesmrGẩ7GB6iraMT SP(augës, Sav Gu-uutiši களை அறிய வைப்பதற்கு வரைந்தவர் பொறுப்பாவார். அதாவது உண்டியல் பெறுணியின் நிலைபற்றியும் (Payees Existence), அப் பெறுனி அவ்வுண்டியலைச் சாட்டுதல் செய்வதற்கு அந்நேரம் பெற் றிருந்த தகுதியற்றியும் அறியவைப்பதற்கு மறுத்தல் ஆகாது.

Page 42
- 72 -
ஏற்றுக்கொண்ட அல்லது ஒப்புக்கொண்டவரின் பொறுப்புக்கள் : (Liability of Acceptor).
இதனைப்பற்றி எமது மா. உ. க. சட்டம் பிரிவு 54 கூறுகின்றது.
(1) உண்டியல் ஒன்றினை ஒப்புக்கொண்டவர் தான் ஒப்புக்கொண்ட நிபந்தனைக்கு அமைய அவ்வுண்டியலுக்குப் பணம் செலுத்துவதற்கு உறுதி அளிக்கின்ருர்,
(2) ஓர் உண்டியல் தொடர்பாக ஈற்றில் உடமையாளர் ஒருவர் சில தகவல்களை ஒப்புக்கொண்டவரிடம் கேட்கலாம். அதாவது அந்த உண்டியலை வரைந்தவரின் நிலையையோ, அவரது கையொப்பத் தின் உண்மைத் தன்மையையோ, வரைந்தவருக்கு அதனை வரைய உள்ள அதிகாரங்கள் பற்றிய தகவல்களைக் கேட்கும்போது அந்த ஈற்றில் உடமையாளருக்கு அவற்றைத் தெரியப்படுத்துவதற்கு மறுத்தல் ஆகாது.
(3) உண்டியல் ஒன்று வரைந்தவரின் கட்டளை க் குச் செலுத்தப்பட வேண்டி உள்ள சந்தர்ப்பத்தில், அவ்வரைந்தவர் அந்நேரம் அதனைச் சாட்டுதல் செய்ய உள்ள தகைமைபற்றிய விபரத்தை ஈற்றில் உடைமையாளர் ஒருவருக்குக் கொடுப்பதற்கு மறுத்தல் ஆகாது. ஆனல் இங்கு இவ்வாறு செய்கின்றபோது அந்தச் சாட்டுதலின் பெறுமதிபற்றியோ அல்லது அதன் உண்மைத்தன்மை பற்றியோ கூறவேண்டும் என்ற அவசியம் இல்லை.
(4) உண்டியல் ஒன்று மூன்ரும் நபர் ஒருவரின் கட்டளைக்குச் செலுத் தப்பட வேண்டி இருப்பின், பெறுனியின் நிலை, அவரது சாட்டு தல் செய்யும் அப்போதைய தகைமை (சாட்டுதலின் உண்மைத் தன்மை அல்லது சாட்டுதலின் செல்லுபடியாகும் தன்மை அல்ல) பற்றிய விபரத்தை அவ்வுண்டியலின் ஈற்றில் உடமையாளர் ஒரு வருக்குத் தெரியப்படுத்த மறுத்தல் ஆகாது.
சாட்டுதல் செய்தவரின் பொறுப்புக்கள் :
(Liabiliy of Indorser)
இதுபற்றி மா. உ. க. சட்டம் பிரிவு 55 (2) விளக்கம் அளிக்
கின்றது.
(1) குறித்த உண்டியல் ஒன்று உரிய முறையில் ஒப்புக்கொள்ளப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்ட போது பணம் செலுத்தப்படும் எனச் சாட்டுதல் செய்த ஒருவர் உறுதி அளிக்கின்ருர்,

ܚܩܗ 73 ܚ
(2) உண்டியல் ஒன்று மறுக்கப்பட்டபோது இதன் விளைவாக யார் யாருக்குப் பணம் செலுத்தப்பட வேண்டுமோ அவர்களுக்குரிய நட்டத்தை ஈடுசெய்வதற்கு உறுதி அளிக்கின்ருர், ஆளுல் இங்கு மறுக்கப்பட்டமையின்போது கைக்கொள்ளப்படவேண்டிய நடை முறைகள் கைக்கொள்ளப்பட்டு இருத்தல் வேண்டும்.
(3) உண்டியலை வரைந்தவரின் கையொப்பத்தின் உண்மை நிலையையும் அதன் முறைமையையும் பற்றி, ஈற்றில் உடமையாளர் ஒருவர் கேட்கும் போது மறுதலித்தோ, தெரியாது என்றே கூறுதல் ஆகாது. அதுபோல் தனக்கு முன்னர் சாட்டுதல் செய்தவர்கள் பற்றிய விபரத்தையும் தெரிவிக்க மறுக்கக் கூடாது.
(4) மேலும் தான் சாட்டுதல் செய்ததன்பின், தன்னைத் தொடர்ந்து அவ்வுண்டியலைப் பெற்றவருக்கு அதாவது சாட்டப்பட்டவருக்கு (Indorsee) –
(அ) தான் சாட்டுதல் செய்யும்போது அது ஒரு வலிதான உண்டி
பல் என்ற விபரத்தையும்,
(ஆ) தனக்கு அவ்வுண்டியல் மீது உள்ள உரித்து சிறந்தது என்ற
விபரத்தையும்
எடுத்துக் கூற மறுக்கக் கூடாது.
குறிப்பு:
ஒரு உண்டியலை வரைந்தவர் அல்லது சாட்டுதல் செய்பவர் **8agu’il 2å Gasles (pourraoun ''' (Without recourse or Sans recours) என்ற சொற்ருெடரைப் பாவித்து சாட்டுதல் செய்ய முடியும். இதஞல் அவருக்குப்பின் அவ்வுண்டியலை வைத்திருக்கும் யாருக்கும் தான்பொறுப்பு இல்லை என்றும். ஏற்படும் சகல பொறுப்புக்களில் இருந்தும் தான் நீங்கிவிட்டதாகவும் அறிவுறுத்தப்படும். இதனை எமது மா. உ. க. சட்டம் பிரிவு 16 (a) கூறுகின்றது.

Page 43
அத்தியாயம் 12 உண்டியலை ஒப்புக்கொள்ளல் அல்லது பொறுப்பேற்றுக்கொள்ளல் (Acceptance of a Bill )
உண்டியல் ஒன்றினை வரைந்தவர், அதனை உரியமுறையில் ஒருவர் ஒப்புக்கொள்ள அல்லது பொறுப்பேற்கமுன்னர் சுழற்சியில் விடலாம். அதுபோல் ஒப்புக்கொண்டபின்னரும் அவ் உண்டியல் சுழற்சியில் விடப் படலாம். ஆனல் உண்டியல் ஒப்புக்கொண்டபின்னர் சுழற்சியில் இருக்கு மாயின் அதஞல் அவ்வுண்டியலைப் பெறுபவனுக்கு (Payee) மிகுந்த tாதுகாப்புக் கிடைக்கும். சில உண்டியல்கள் அதன் கொடுப்பனவிற்கு எனக் கோரிக்கை எழுப்பமுன்னர் வரையப்பட்டிருப்போன்மீது ஒப்புக் கொள்வதற்காகக் கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். ஆளுல் சில உண்டியல்கள் இவ்வாறு செய்யப்படத் தேவையில்லை.
(அ) ஒப்புக்கொள்ளுதல் என்பதன் விளக்கம்:
எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டப்பிரிவு 17 (1) இது பற்றிக் கூறுகின்றது. இதற்கு அமைய குறிப்பிட்ட உண்டியல் ஒன்று பார்மீது என்ன கட்டளைக்கு வரையப்பட்டுள்ளதோ, அதற்குரிய தனது சம்மதத் தினை, வரையப்பட்டு இருப்பவர், வரைந்தவருக்குக் காட்டும் ஓர் அறி குறியே, ஓர் உண்டியலை ஒப்புக்கொள்ளல் என்பதாகும்.
மேலும் பிரிவு 17 (2)ற்கு அமைய ஒப்புக்கொள்ளல் பின்வருமாறு இருத்தல் வேண்டும். அதாவது ஒப்புக்கொண்டமை அவ்வுண்டியலி லேயே எழுதப்பட்டு இருத்தல்வேண்டும். அத்துடன் ஒப்புக்கொள்பவ ரால் கையொப்பம் இடப்பட்டும் இருத்தல் வேண்டும். மேலும் ஒருவர் வெறுமனே தனது கையொப்பத்தினை இடுதல் ஒப்புக்கொண்டமைக்கு அடையாளமாகும்.
ஓர் உண்டியலை ஒப்புக்கொள்வதின்மூலம் அவ்வுண்டியல் கொடுப் பணவிற்குச் சமர்ப்பிக்கப்படும்போது தான் பணம் செலுத்துவதாக ஒரு வர் உறுதியளிக்கின்ருர், இவ்வாறு உறுதி அளிப்பவரையே வரையப் பட்டு இருப்போன் (Drawee) என்போம். இங்கு அவ்வுண்டியலுக் சூரிய பெறுபலன் ( Consideration ), அதனைப் பெறுபவன் (Payee) அல்லது பின்னர் அதனை வைத்திருப்பவன் ஒருவஞல் கொடுபட்டு இருக்கும் என ஊகிக்கப்படும்.

س 75 ميسي.
மேலும் உண்டியல் ஒன்றினை வரைந்தவர் கையொப்பம் இடமுள் னரும் அவ்வுண்டியல் ஒப்புக்கொள்ளப்படலாம். அதுபோல உண்டி யல் தவணை கடந்து இருக்கும்போதோ, முன்னர் ஒருதரம் பணம் கொடுக்க மறுக்கப்பட்டுள்ளபோதோ கூட ஒப்புக்கொள்ளப்படலாம்.
குறித்த உண்டியல் ஒன்று தரிசன உண்டியல் எனக் கொள்வோம். அது ஒப்புக்கொள்ளாமை காரணமாகப் பணம் கொடுக்க மறுக்கப்பட் டுள்ளது எனவும் கொள்வோம். இதன்பின்னர், அவ் உண்டியலை "வரை யப்பட்டு இருப்பவன்" பொறுப்பேற்றுக்கொண்டால், தற்பொழுது அவ்வுண்டியலை "வைத்திருப்பவன்’ (Bolder) அவ்வுண்டியலை ஒப்புக் கொண்ட உண்மையான திகதி, முன்னர் சமர்ப்பித்து மறுக்கப்பட்ட திகதியாகக் கருத முடியும். (பிரிவு 18 (c) இனைப் பார்க்கவும்.)
(ஆ) ஒப்புக்கொள்வதற்காகச் சமர்ப்பித்தல்
பின்வருவரும் நிலைகளிலேயே ஒப்புக்கொள்வதற்காகச் சமர்ப்பிக்கப் படுதல் வேண்டும். 1. தரிசனத்தின்பின் செலுத்தப்படவேண்டிய உண்டியல்கள். 2. சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் எனக் குறிப்பாகக் குறிப்பிடப்பட்டு
இருப்பவை. (பிரிவு 39 (1), (2) இனைப் பார்க்கவும்) 3 வரையப்பட்டு இருப்பவரின் வியாபார அல்லது வதிவிட இடத்தை விட வேறு ஓர் இடத்தில் செலுத்தப்படவேண்டும் எனக் குறிப் பிடப்பட்டு இருப்பவை (பிரிவு 39 (1),"(2) இனைப் பார்க்கவும்.)
எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 41 (2)இல் கூறப் பட்டுள்ளவாறு பின்வரும் நில்களில் ஒப்புக்கொள்வதற்காகச் சமர்ப் பிக்கப்படுதல் மன்னிக்கப்படும். அத்துடன் அவ்வுண்டியல் ஒப்புக் கொள்ளாமையால் மறுக்கப்பட்டுள்ளது என்றும் கருதிக் கொள்ள (урцgицшѣ.
(அ) வரையப்பட்டு இருப்பவன் இறந்துபோனல் அல்லது வகை யற்றுப்போஞல் அல்லது ஒரு போலியான அல்லது அருவ நபராக இருந்தால் அல்லது அவ்வுண்டியலை ஒப்புக்கொள்ளக்கூடிய ஒப்பற்ற தகமை அற்றவராக இருந்தால்.
(ஆ) சமர்ப்பித்தல் முடியாத ஒரு செயலாக இருக்கின்றபோது அதாவது போதிய சிரத்தை எடுத்தும் வரையப்பட்டு இருப்பவனைக் கண்டுபிடிக்க முடியாது இருக்கின்ற நிலை.
ஒப்புக்கொள்வதற்காகச் சமர்ப்பித்தல் எல்லா நிலைகளிலும் செய் யப்படவேண்டும் என ஆலோசனை வழங்கப்படுகின்றது. இதற்கு முக் கியமாக இரண்டு காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன.

Page 44
---- 70 -----
1. உண்டியல்ப் பொறுப்பேற்றுக்கொண்ட உடனே, அவ்வுண்டியல் தொடர்பான பொறுப்புகள் ஒப்புக்கொண்டவர் அல்லது பொறுப் பேற்றுக்கொண்டவர் மீது சுமத்தப்படுகின்றது.
2. சிலசமயம் பொறுப்பேற்க மறுக்கப்பட்டால், அவ்வுண்டியல் வைத்திருப்பவர் (Holder) தனக்குமுன் அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்களை, திருப்பிக் கேட்கும் உரிமையை (Right of recourse) உடனே பெறுகின்ருர்,
உண்டியல் சமர்ப்பிக்கப்படுதல்பற்றிய விதிகள் :
ஓர் உண்டியல் ஒரு குறித்த திகதியில் செலுத்தப்படவேண்டி இருப்பின் அது தவணை கடக்கமுன்னர் ஒப்புக்கொள்வதற்காகச் சமர்ப் பிக்கப்படுதல் வேண்டும்.
ஓர் உண்டியல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரையப்பட் டோர்களுக்கு (Drawees) விலாசம் இடப்பட்டு இருப்பின் அவர்கள் பங்காளர்களாக இல்லாத இடத்து, அவர்கள் அனைவருக்குமே சமர்ப் பிக்கப்படுதல்வேண்டும். இவர்களில் ஒருவர் மற்றவர்கள்சார்பில் ஏற்றுக் கொள்ள அங்கீகாரம் பெற்று இருப்பின், அந்த ஒருவருக்கு மட்டுமே சமர்ப்பித்தல் போதுமானது.
* வரையப்பட்டு இருப்பவன் '' ஒருவன் இறந்துவிட்டால் அவ னது தனிப்பட்ட பிரதிநிதிக்கு உண்டியலைச் சமர்ப்பிக்கவேண்டும்.
மேலும், "வரையப்பட்டு இருப்பவன்" ஒருவன் வகையற்றுப் போனுல், உண்டியலை அவனுக்குச் சமர்ப்பிக்கலாம். அல்லது அவனது நம்பிக்கைக்குப் பொறுப்பானவரிடம் சமர்ப்பிக்கலாம்.
சமர்ப்பித்தல் ஓர் உடன்படிக்கை மூலமோ, நடைமுறை மூலமோ அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றபோது, தபாற்கந்தோர்ஊடாகச் சமர்ப்பித் தல் போதுமானது ஆகும்.
உண்டியலைச் சமர்ப்பிக்வேண்டிய திகதி ஒரு வங்கி விடுமுறை
நாளாயின் அடுத்துவரும் வியாபார நாளில் சமர்ப்பக்கப்படலாம்.
இங்கு எமது மா. உ. க. சட்டப்பிரிவு 41 (I) 3- f வரை ւյmriձ&aյւհ.
மேலதிகக் குறிப்புக்கள்:
(1) குறித்த உண்டியல் ஒரு சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக் கிழமையில் செலுத்தப்படவேண்டியதாக அமைகின்றது. அது எந்த வங்கியால் பணம் செலுத்தப்படவேண்டுமோ அந்த வங்கிக்கு வெள்ளிக் கிழமை சமர்ப்பிக்கப்பட்டால் அந்த உண்டியலை அடுத்த திங்கட்கிழமை வரை பணத்தினை அதற்குச் செலுத்துவதற்காக, அதனை அன்றே திருப்பாது தம்மிடம் வைத்திருக்கமுடியுமா என்ற கேள்வி எழலாம்.

- 77 -
இங்கு அவ்வுண்டியல் உரிய முறையில் வெள்ளிக்கிழமை கரும பீடத்தின் ஊடாக அல்லது தீர்வையூடாகச் சமர்ப்பிக்கப்பட்டு இருந் திால், அதனை அடுத்த திங்கட்கிழமை வரை வைத்திருக்காது "இன்னும் கொடுபடவேண்டியதில்லை" (Not yet due) என்ற குறிப்புடன் திருப்பி அனுப்பலாம். ஆளுல் தபால்மூலம் நேரடியாக வங்கிக்கு அனுப்பப் பட்டு இருந்தால் அதனை அடுத்த திங்கட்கிழமை வரை வைத்திருக்க
@)f7fl ,
(2) உண்டியல் ஒன்று தைமாதம் 5ஆம் திகதி பணம் கொடு படவேண்டி உள்ளது. இவ் உண்டியல் கொடுப்பனவிற்காகத் தை மாதம் 6ஆம் திகதி சமர்ப்பிக்கப்படுகின்றது.
இவ்வாறு சமர்ப்பிக்கப்படுதல் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதா என்ற பிரச்சனை எழுகின்றது.
உண்மையில் இவ்வாறு சமர்ப்பிக்கப்படுதல் நியாயப்படுத்தப்படக் கூடியது அல்ல. பின்வரும் வழக்கினை நாம் மனதில் கொள்ளவேண்டும்.
Hamilton Finance Co. Ltd. v Coverly. Westray Walbaum
and Tosetti and Portland Finance Co. Ltd. (1969) என்ற வழக்கில் எமது மா.உ. க. சட்டப் பிரிவு 45இனக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது. இதன்படி கேள்வியின் போது செலுத்தப்படவேண்டியது அல்லாத உண்டியல் ஒன்ருக இருந் தால் அது கொடுபடவேண்டிய உரிய தினதியில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
இங்கு உண்டியல் ஒன்று 01-01-1966 ஆகிய சனிக்கிழமையில் செலுத்தப்படவேண்டியது ஆகும். இது முதல்நாளே சேகரிப்பிற்காக அனுப்பப்பட்டபோதும், 04-01-1966 வரை அது கிடைக்கவில்லை. இங்கு புதுவருட தபால் விநியோக தாமதம் காரணமாகவே இவ்வாறு நடந்தாலும் இவ்வாறு சமர்ப்பித்தல் நியாயப்படுத்தமுடியாது எனப் tull-st
வங்கிகள் தமது வாடிக்கையாளர்களின் முகவர்களாக இயங்கு கின்றன. இவ்வாறு இயங்கும் போது உரிய கவனம் முழுதும் எடுக்கப் பட்டே சேகரிப்புக்களைச் செய்யவேண்டும். இவ்வாறு உரிய கவனம் எடுக்கத் தவறும்போது தமது முதல்வருக்குப் பொறுப்பாகவேண்டி ஏற் படும். ஒரு வங்கியால் ஓர் உண்டியல் செலுத்தப்படவேண்டி இருக்கும் நிலையில், சேகரிப்புமூலம் சமர்ப்பிக்கும் மறு வங்கி ஒன்று உரிய நேரத் தில் அதாவது நேரகாலத்துடனேயே கிடைக்கக் கூடிய வகையில் அனுப்ப வேண்டும். இதனுல் உரிய திகதியில் பணம் செலுத்தப்படும்.

Page 45
- 78 -
(3) உண்டியல் ஒன்று கொ டு ப் பன விற்க r க 4ஆம் திகதி திங்கட்கிழமை வைகாசிமாதம் சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளது. இவ் வாறு சமர்ப்பிக்கப்படுவது தபால் பகுதி வேலை நிறுத்தம் காரணமாகத் தாமதப்பட்டது. இந்நிலையில் உண்டியலைச் சமர்ப்பிக்கின்ற ஒரு வங்கி யின் நிலை என்ன என்ற கேள்வி எழலாம்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் சமர்ப்பிக்கும் வங்கியின் தாமதம் நியா யப்படுத்தப்படக் கூடியதாகும். எமது மா. உ. க. சட்டம் பிரிவு 46 () இன் படி சமர்ப்பிக்கும் வங்கி ஒன்றின் கட்டுப்பாட்டிற்கு அப் பாற்பட்ட ஒரு நிகழ்ச்சியால் சமர்ப்பித்தல் தாமதப்பட்டால் அது மன்னிக்கப்படக் கூடியதாகும். இவ்வாறு தமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியால் இது போல நடந்தால் அதனை வங்கியின் கவனமின்மை என்ருே, தவருண நடத்தை என்றே, அல்லது பிழை என்ருே குற்றம் சுமத்த முடியாது.
உண்டியல் மறுக்கப்படுதல்
(Dishonour of a bill)
உண்டியல் ஒன்று இரண்டு வழிகளில் மறுக்கப்படலாம்.
(1) ஒப்புக்கொள்ளாமையினல் மறுக்கப்படுதல். (By non-acceptance)
(2) கொடுப்பனவினைச் செய்யாது விடுவதினுல்.
ஒத்துக்கொள்ளாமையினல் மறுக்கப்படுதல் பற்றி எமது மா. உ. க, சட்டப் பிரிவு 43 கூறுகின்றது. உண்டியல் ஆனது ஏற்றுக்கொள்வதற் காக அல்லது ஒப்புக்கொள்ளப்படுவதற்காக உரியமுறையில் சமர்ப்பிக்கப் படும்போது, மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தில் எவ்வாறு ஒப்புக் கொள்ளப்படவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளதோ அதற்குஅமைய ஒப்புக் கொள்ள மறுக்கப்பட்டால், அதனை நாம் ஒப்புக்கொள்ளாமையினுல் மறுக்கப்படுதல் என்று கூறுவோம்.
மாற்றுண்டியல் சட்டவிதிகளின்படி ஒட்புக்கொள்ளாமையினுல் உண்டியல் மறுக்கப்பட்டால், அதனை " வைத்திருப்பன் ஒருவனுக்கு அதனை வரைந்தவன்மீதோ, அல்லது சாட்டுதல் செய்து கொடுத்தோர் மீதோ திருப்பிக் கேட்கும் உரிமை கொடுக்கப்படுகின்றது.
மேலும் கொடுப்பனவினைச் செய்யாது விடுவதினுலும் உண்டியல் ஒன்று மறுக்கப்படலாம். இதுபற்றி மா. உ. க. சட்டம் பிரிவு 47 கூறுகின்றது.
ஓர் உண்டியலானது உரிய முறையில், கொடுப்பனவிற்காகச் சமர்ப் பிக்கப்பட்டுக் கொடுப்பனவுமறுக்கப்பட்டால் அல்லது கொடுப்பனவினைப் பெறமுடியாதபோது அதனை நாம் கொடுப்பனவு செய்யாது மறுக்கப் பட்ட உண்டியல் எனலாம்.

--۔ 79 سس۔
இதனுல் மாற்றுண்டியல் விதிகளுக்கு அமைய, வைத்திருப்பவன் ஒருவனுக்கு நாம் முன்னர் கூறியவாறு வரைந்தவர் மீதோ அல்லது அதனைச் சாட்டுதல் செய்தவர்கள் மீதோ உடனடியாகத் திருப்பிக் Gas Gúb 2-flanuò så upp (an immediate right of recourse) FGDL-lšESúh.
மறுத்தமை பற்றிய அறிவித்தல் : (Notice of dishonour)
எமது மா. உ. கட்டளைச் சட்டம் பிரிவு 48இற்கு அமைய உண்டியல் ஒன்று ஒப்புக்கொள்ளாமையினலோ அல்லது கொடுப்பன வினைச் செய்யாது விடுவதினலோ மறுக்கப்பட்டால், இவ்வாறு மறுக்கப் பட்டது பற்றிய அறிவித்தல் உண்டியலை வரைந்தவருக்கோ அல்லது உண்டியலைச் சாட்டுதல் செய்தவர்களுக்கோ கொடுக்கப்படுதல் வேண்டும். இவ்வாறு அறிவித்தல் கொடுபடாதிருக்கும்போது வரைந்தவரும், சாட் டுதல்கள் செய்தவரும் தமது பொறுப்புக்களில் இருந்து நீங்கியவர்க ளாகக் கருதப்படுவார்கள்.
மறுத்தமை பற்றிய அறிவித்தல் கொடுப்பதில் உள்ள தாமதம்:
மறுத்தமை பற்றிய அறிவித்தல் கொடுப்பது தாமதப்படுத்தப்படு வது சிலசமயங்களில் மன்னிக்கப்படும். அதாவது அறிவித்தல் கொடுக்க வேண்டியவரின் சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் இது இருந்துவிட் டால் மன்னிக்கப்படும். இவ்வாறு அவரது சக்திக்கு அப்பாற்பட்டு இருந்தால் அவரது பிழையாலோ, தவருண நடத்தையாலோ, கவன மின்மையாலோ நடந்தது எனக் கூறமுடியாது.
மறுத்தமை பற்றிய அறிவித்தல் அவசியமற்ற சந்தர்ப்பங்கள்
எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 50 இதுபற்றிக் கூறுகின்றது.
(1) நியாயமான கவனமும் முயற்சியும் எடுத்தும் அறிவித்தலைக் கொடுக்கமுடியாத ஒருநிலையைக் குறிப்பிடலாம். உதாரணமாக யாருக்கு அறிவித்தல் கொடுக்க வேண்டுமோ அவரைக் கண்டு பிடிக்க முடியாது இருக்கின்ற நிலையைக் கூறலாம்.
(2) இவ்வாறு அறிவித்தல் கொடுக்கவேண்டும் என்பது தவிர்க்கலாம் என்பதை உட்கிடையாகவோ, வெளிப்படையாகவோ கூறி இருக் கின்ற சந்தர்ப்பங்கள்.
(3) வரைந்தவரைப் பொறுத்தவரையில் பின்வரும் சந்தர்ப்பங்களில்
அறிவித்தல் அவசியம் இல்லை. (அ) வரைந்தவரும், வரையப்பட்டு இருப்பவரும் ஒரே நபராக
இருந்தால்,

Page 46
- 80 -
(ஆ) வரையப்பட்டு இருப்பவர் ஒரு போலியான நபராக இருந்தால்
அல்லது ஒப்பந்த தகைமை அற்றவராக இருந்தால்,
(இ) வரைந்த நபருக்கே கொடுப்பனவிற்கும் என சமர்ப்பிக்கப்
பட வேண்டி இருக்கின்றபோது,
(ஈ) பொறுப்பேற்றுக்கொண்டு பணம் செலுத்தவேண்டும் என்ற எந்தவித கடப்பாடும் வரைந்தவருக்கும் வரையப்பட்டு இருப்பவருக்கும் அல்லது ஒப்புக்கொண்டவருக்கும் இடையே இல்லாதபோது,
உதாரணமாக, ஒரு மேலதிக எடுப்பு வசதி ஏற்படுத்திக் கொள்ளாத நடைமுறைக் கணக்கில் போதிய நிதிவசதி இல்லாதபோது வாடிக்கையாளரால் எழுதப்படும் காசோலை களுக்குப் பணம் கொடுக்கவேண்டும்என்ற கடப்பாடு இல்லை.
(உ) வரைந்தவர் பணக் கொடுப்பனவினை ரத்துச்செய்துள்ளபோது.
4. சாட்டுதல் செய்தவரைப் பொறுத்தவரை பின்வரும் சந்தர்ப்பங்
களில் அறிவித்தல் அவசியம் இல்லை.
(அ) வரையப்பட்டு இருப்பவர் ஒரு போலியான நபராக (Ficti tious Person) இருந்தால் அல்லது ஒப்பந்த தகைமை அற்றவ ராக இருந்தால் அத்துடன் சாட்டுதல் செய்தவர் இதனைச் சாட்டுதல் செய்யும்போதே அறிந்து இருந்தார் என்ருல் அறி வித்தல் அவசியம் இல்லை.
(ஆ) சாட்டுதல் செய்த நபருக்கே அந்த உண்டியல் சமர்ப்பிக்கப்பட
வேண்டி இருக்குமாயின் அறிவித்தல் அவசியம் இல்லை.
(இ) "பிரதிபலன்" பெருது உண்டியல் என்று ஒத்துக்கொண்ட போதோ அல்லது உருவாக்கப்பட்டபோதோ அறிவித்தல் அவ சியம் இல்லை.
மறுத்தமைபற்றிய அறிவித்தல் கொடுக்கும் வழிமுறைகள்: (Methods of giving notice)
இங்கு முதலில் குறிப்பிட்ட உண்டியலானது உரியமுறையில் அடை யாளம் காணப்படுதல் வேண்டும். அது உள்நாட்டு உண்டியலாயின் மறுத்தமை பற்றிய அறிவித்தல் எந்த விதமாகவும் அமையலாம். ஆஞல் ஒரு வெளிநாட்டு உண்டியல் ஒன்றிற்குக் குறிப்பிடுகையும் ஆட்சேபிப்பும் செய்யப்படுதல் வேண்டும் (Must be noted and Protested), மா. உ. க. சட்டம் பிரிவு 49(12)ன்படி, இந்த அறிவித்தல் ஆனது உண்டியல் மறுக்கப்பட்ட உடனே கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் ஒரு நியாயமான காலத்துள் இந்த அறிவித்தல் வழங்கப் படுதல் வேண்டும் எனக் கூறப்படுகின்றது.

一 8t 一
சம்பந்தப்பட்ட நபர்கள் அநேகமாக ஒரே இடத்தில் அதாவது ஒரே தபால் விநியோக மாவட்டத்தில் இருந்தால் இந்த அறிவித்தல் மறுக்கப்பட்டபின் அதே நாளில் வழங்கப்படுதல் வேண்டும்.
நபர்கள் வெவ்வேறு இடங்களில் இருந்தால் மறுக்கப்பட்டபின் அதே நாளில் அன்றைய தபாலில் சேர்க்கப்படக்கூடிய விதத்தில் கொடுபட வேண்டும். அன்று தபாலில் கொடுபட முடியாதபோது மட்டும் அடுத்த நாள் தபாலில் கொடுக்கக்கூடியவாறு செய்தல் வேண்டும்.
மறுத்தமைபற்றிய அறிவித்தல் எப்போது கிடைத்தது என்பதே முக்கியமானதாகும். அது எப்போது அனுப்பப்பட்டது என்பது முக் கியம் இல்லை. உண்டியல்கள் மறுக்கப்படமுன் அறிவித்தல் கொடுத்தால் அது செல்லுபடியற்றதாகும். ஆனல் மறுக்கப்படமுன்னரே அறிவித்தல் தபாலில் இடப்பட்டது என்ற காரணம் காட்டி அறிவித்தல் செல்லு படியற்றது என வாதிட முடியாது.
a + b : Eaglehill v J. Needham Builders Ltd. (1973)
என்ற வழக்கில், உண்டியல் ஒன்று சமர்ப்பிக்கப் பட்டால் அது மறுக்கப்படும் என்று வாதிக்கு முன்னரேயே தெரிந்து இருந்தது. எனவே அவர் ஏற்கனவே முற்திகதியிட்ட ஓர் அறிவித்தலைத் தயார் செய்து வைத்திருந்தார். ஆனல் தவறுதலாக இவ்வாறு தயாரித்து வைத்திருந்த அறிவித்தலை நேரத்துடன் தபாலில் இட்டுவிட்டார். இந்த அறிவித்தல் உண்டியல் மறுக்கப்பட்ட திகதியிலேயே கிட்டத் தட்ட அதே நேரத்திலேயே கிடைத்தது. இங்கு இந்த மறுத்தமை பற்றிய அறிவித்தல் செல்லுபடியானது எனத் தீர்க்கப்பட்டது. காரணம் இங்கு உண்டியல் மறுக்கப்பட முன்னரேயே அறிவித்தல் கிடைத் தது என்பதற்குப் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்ல் என்பது குறிப் பிடத்தக்கது.
(5a)aicansub ey'Gssilb (Noting and Protest);
குறிப்பிடுகை, ஆட்சேபிப்பு பற்றி மாற்றுண்டியல் கட்டளைச் சட் .ம் பிரிவு 51 கூறுகின்றது.
ஓர் உள்நாட்டு உண்டியல் ஏற்றுக் கொள்ளாமையினலோ அல்லது பணம் கொடுப்பனவு செய்யாமையினலோ மறுக்கப்பட்டால் இதுபற்றி குறிப்பிடுகை செய்யலாம். ஆனல் ஒரு வரைந்தவருக்கோ அல்லது சாட்டுதல் செய்தவருக்கு எதிராகவோ திருப்பிக் கேட்கும் உரிமையைப் பாதுகாக்கக் கட்டாயம் குறிப்பிடுதலோ, ஆட்சேபிப்போ செய்யவேண்டும் என்பது அவசியமல்ல.
6

Page 47
- 82 -
மேலும் ஓர் உண்டியலின் முகப்பினைப் பொறுத்தவரை அது வெளி நாட்டு உண்டியலாகக் காணப்பட்டால், அவ் உண்டியல் ஏற்றுக்கொள் ளாமை காரணமாக மறுக்கப்பட்டால், இவ்வாறு ஏற்றுக்கொள்ளா மைக்கு ஆட்சேபிப்புத் தெரிவித்தல் வேண்டும். அதுபோல் கொடுப் பனவு செய்யாது மறுக்கப்பட்டாலும் அவ் உண்டியல் உரிய முறையில் கொடுப்பனவு செய்யாது விட்டமைக்காக ஆட்சேபனை தெரிவித்தல் வேண்டும். இவ்வாறு ஆட்சேபனை செய்யாது விடும்போது அவ்வுண் டியல் தொடர்பில் அதனை வரைந்தவரும், சாட்டுதல் செய்தவர்களும் தமது பொறுப்பில் இருந்து நீங்கிவிடுவார்கள். வெளிநாட்டு உண்டியல் (Foreign Bl) அல்லாத இடத்து ஆட்சேபிப்பு அவசியம் இல்லை.
ஓர் உண்டியல் ஏற்றுக்கொள்ளாமைக்கு என ஆட்சேபிக்கப்பட்டு இருக்கும்போது அதனைத் தொடர்ந்து பணம் கொடுபடாமைக்கும் ஆட்சேபிக்கப்படலாம்.
இங்கு இரண்டு செயற்பாடுகளிலும் ஒரு சட்டத்தரணி சம்பந்தப் படுகின்ருர். இங்கு குறிப்பிடுகையின்போது, கொடுபட்ட பதில்களை அவர் உண்டியலிலேயே குறிப்பிடுவார். ஆனல் ஆட்சேபிப்பு ஆனது ஒரு முறையான பிரகடனமூலம் வெளிப்படுத்தப்படும். இதன் அவர் உறுதிப்படுத்துவதுடன் பொருத்தமான காரணங்களையும் அவர் குறிப்பிடு வார். இந்தப் பிரகடனமும், குறிப்பிடப்பட்ட உண்டியலும் (Noted Bill) யசரிடம் இருந்து கொடுப்பனவு பெறப்பட வேண்டுமோ அவருக்கு அனுப்பி வைக்கப்படும்.
சில சமயங்களில் ஒரு சட்டத்தரணியின் சேவை இவ்வாறு செய்வ தற்குப் பெறப்பட முடியாத சந்தர்ப்பங்களில் அவ்விடத்து ஒரு குடி யிருப்பாளர் (House Holder) இரண்டு சாட்சியங்களின் உதவியோடு இவ்வாருன ஒரு பத்திரத்தைக் கையொப்பமிட்டு வழங்கலாம். எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 96ல் இது பற்றிக் குறிப்பிட்டு இருப்பதுடன் ஆட்சேபனை மாதிரிப் படிவ பின்னிணைப்பொன்றும் இணைக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
ஓர் உண்டியலுக்குக் குறிப்பிடுகை தேவைப்படும் இடத்து, அது மறுக்கப்பட்ட அன்றே குறிப்பிடப்படுதல் வேண்டும். அல்லது அடுத்த வேலைநாளிலும் செய்யப்படலாம். ஆட்சேபிப்பு இதன்பின் செய்யப்படலாம்.
இங்கு ஆட்சேபிப்புச் செய்வதில் உள்ள தாமதம் சில சந்தர்ப்பங்களில் மன்னிக்கப்படும். அதாவது மறுத்தமை பற்றிய அறிவித்தலுக்குக் கூறப் பட்ட அதே நிபந்தனைகளுக்கு அமைய இங்கும் மன்னிப்புக் கொடுக்கப் படும் என்பது அவதானிக்கத்தக்கது.

سس۔ 83 سس۔
உண்டியல் ஒன்றினை ஒப்புக்கொண்டவர் அல்லது பொறுப்பேற்றுக் கொண்டவர் வகையற்றவராக மாறினுல் அல்லது உரிய திகதியின் முன் கொடுப்பனவுகளை இடைநிறுத்தினல், உண்டியலை வைத்திருக்கும் ஒருவர் வேறு நல்ல பிணை ஒன்றினைப் பெறுவதற்காக வரைந்தவருக்கு அல்லது சாட்டுதல் செய்தவருக்கு எதிராக ஆட்சேபிப்பு ஒன்றிக்னச் சட்டத்தரணி மூலம் செய்யலாம்.
கெளரவ பொறுப்பேற்றலும், கொடுப்பனவு செய்தலும்: (Aeceptance and payment for honour)
ஒரு மாற்றுண்டியல் ஏற்றுக்கொள்ளாமை காரணமாக பணக் கொடுப்பனவு மறுக்கப்பட்டு அதற்காக ஆட்சேபிப்புத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது அல்லது வேறு ஒரு நல்லபிணை தருமாறு ஆட்சேபிப்புச் செய்யப்பட்டுள்ளது எனக் கொள்வோம். இவ்வாருன நிலையில் இந்த உண்டியலானது, அதனுடைய முழுத்தொகைக்குமோ அல்லது பகுதி யான தொகைக்கோ, ஏற்கனவே அந்த உண்டியலோடு தொடர்பில் லாத ஒரு நபரால் கெளரவத்திற்காகப் பொறுப்பேற்கப்படலாம். இதனை நாம் கெளரவ பொறுப்பேற்றல் என்று கூறுவோம்.
இங்கு உண்டியலை வைத்திருப்பவரின் சம்மதத்தோடுதான் கெளரவப் பொறுப்பு ஏற்றல் செய்யமுடியும். இவ்வாறு பொறுப்பேற்றல் அவ் உண்டியலில் எழுதப்பட்டு இருப்பதுடன் ஏற்றுக்கொள்பவரால் கையொப்பம் இடப்பட்டும் இருத்தல் வேண்டும். மேலும் கெளரவத் திற்காக ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிடப்படுதல் வேண்டும். யார் சார்பாக கெளரவப்பொறுப்பு ஏற்படுகின்றது எனக் குறிப்பிடப்படாத இடத்து வரைந்தவரின் சார்பாகவே ஏற்கப்படுகின்றது என ஊகிக்கப் படும்.
கெளரவத்திற்காகப் பொறுப்பேற்றுக் கொண்டவர் அவ் உண்டியல் வைத்திருப்பவருக்குப் பொறுப்பாவார். அதுபோலத்தான் யார்சார்பில் பொறுப்பேற்றுக் கொண்டாரோ அதன்பின் அதனுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவருக்கும் பொறுப்பாவார். மேலும் கெளரவப் பொறுப் பேற்றவர், உரியமுறையில் உண்டியல் சமர்ப்பிக்கப்படும் போது தான் ஒத்துக்கொண்ட நோக்கத்திற்கு அமையப் பணம் செலுத்துவதாகக் கூறு கின்றர். ஆனல் முதலில் உண்டியல் வரையப்பட்டு இருப்பவருக்கு (Drawee) சமர்ப்பிக்கப்பட்டு அவர் பணம் கொடுப்பனவு செய்யாது விடுதல்வேண்டும். அத்துடன் உரிய முறையில் கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்கப்பட்டு இருத்தலும் வேண்டும். அத்துடன் கொடுப்பனவு செய்யாது விட்டமைக்கு ஆட்சேபிப்பும் செய்திருத்தல் வேண்டும். மேலும் இந்த விபரங்களை அவர் பெற்றும் இருத்தல் வேண்டும். (u?tfhey 66 (1)இனப் பார்க்கவும்.)

Page 48
- 84 -
உண்டியல் மறுக்கப்பட்டதற்கான நட்டங்கள் : (Damages for dishonour)
இங்கு மா. உ. க. சட்டப் பிரிவு 57இனைப் பார்க்கவும், உண்டியல் ஒன்று கொடுப்பனவு மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை " வைத்திருப்பவர்', அதற்குப் பொறுப்பான எந்த ஒரு நபரிடம் இருந்தும் அறவிடலாம். இதன்பின் யார் பணம் கொடுத்தாரோ, அவர், தனக்கு முன் உள்ள கட்சிக்காரரிடமிருந்து அறவிடலாம். இப்படியே இது தொடர்ந்து கொண்டு செல்லும். இறுதியில் இப்பொறுப்பு பொறுப்பேற்ற நபர்மேல் சுமத்தப்படும். உண்டியல் ஏற்றுக்கொள்ளப் படாத ஒன்ருக இருக்குமாயின் இக்கடப்பாடு வரைந்தவர்மேல் சுமத்தப் LuGb.
ஒரு உண்டியலைப் பொறுத்தவரை ஏற்படும் நட்டத்தின் அளவு பின்வருமாறு அமையும் . 1. உண்டியலின் தொகை செலுத்தப்பட வேண்டும்.
2. உண்டியல் கோரிக்கையின் மேல் செலுத்தப்பட வேண்டியதாக இருக்குமாயின், கொடுப்பனவிற்கு எனச் சமர்ப்பித்த திகதியில் இருந்து அத்தொகைக்கான வட்டி செலுத்தப்படவேண்டும். அல்லது, வேறு சந்தர்ப்பங்களாயின் உண்டியலின் முதிர்வு திகதியில் இருந்து வட்டி செலுத்தப்படவேண்டும்.
3. குறிப்பிடுகைக்கும், ஆட்சேபிப்புக்குமான செலவுகளும் செலுத்தப்
படல்வேண்டும்.
உண்டியல் ஒன்றின் விடுவிப்பு:
(Discharge of a bill)
உண்டியல் ஒன்று பின்வரும் சந்தர்ப்பங்களில் விடுவிக்கப்பட்டதாகக்
கருதப்படும்.
1. நெறிமுறையில் அல்லது ஈற்றில் கொடுப்பனவு செய்யப்படுவதினுல்
(Payment in due Course)
2. gangair epaub (By Merger)
3. தள்ளி வைப்பதின் அல்லது கைவிடுவதன்மூலம் (By Renunciation)
4. garŝisë @Fuičiau S6ăr yp6vb (By Cancellation)
5. Q5ggs (unt:5io) unniù spias6fe96ò (By Material alteration)
இவைபற்றி சற்று விரிவாகக் கூறப்படுவது இங்கு அவசியமாகின்றது. 1. நெறிமுறையில் அல்லது ஈற்றில் கொடுப்பனவு செய்யப்படுவதினுல்:
இதுபற்றி எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 59 (1) கூறுகின்றது.

س- 85 ---
உண்டியல் ஒன்றினை வரைந்தவர் அல்லது ஏற்றுக் கொண்டவர் சார்பாக், அவ் உண்டியலின் முதிர்வு திகதியின் போது அல்லது முதிர் வின் பின், அதனை வைத்திருப்பவருக்கு, நன்னம்பிக்கையிலும், அவர் வைத்திருக்கும் உண்டியலின் உரித்தில் ஏதாவது குறைகள் இருக்கின்றது என்பதனை அறியாதவரையிலும், கொடுப்பனவு செய்யப்பட்டு இருந் தால், இவ்வாறு கொடுப்பனவு செய்வதனை ஈற்றில் கொடுப்பனவு செய்தமையாகக் கருதப்படும்.
2. இணைவதன் மூலம் :
இங்கு ஒப்புக்கொண்டவர் அல்லது பொறுப்பேற்றுக் கொண்டவரே உண்டியலினை அதன் முதிர்வின்போது அல்லது முதிர்வின்பின் தன் சொந்த உரித்தில் வைத்திருப்பவராக மாறுதலைக் குறிப்பிடுகின்றது. (பிரிவு 62 இனைப் பார்க்கவும்.)
3. தள்ளிவைத்தல் அல்லது கைவிடுவதன்மூலம் :
இங்கு மா. உ. க. சட்டம் பிரிவு 62 (1) ஐப் பார்க்கவும்.
ஒரு உண்டியலை வைத்திருப்பவர் அதன் முதிர்வின்போது அல்லது Gypsite air Seir (at or after its maturity) disi Sprudrasayth, puiskey அற்ற முறையிலும், அவ் உண்டியலை ஏற்றுக்கொண்டவருக்கு எதிராக தன் உரிமைகளைக் கைவிடுவதின்மூலம் உண்டியல் ஒன்று விடுவிக்கப்
L6arrth.
இவ்வாறு கைவிடுதல் எழுத்தில் இருத்தல் வேண்டும். அல்லது அவ்வுண்டியலைப் பொறுப்பேற்றுக் கொண்டவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும்.
இது போல " வைத்திருப்பவன்’ ஒவ்வொருவரும் தமது உரிமை களை, தமக்கு நேர்முன்னக உள்ள ஒவ்வொருவருக்கும் எதிராக அவ் உண்டியலின் முதிர்வின் போதோ அல்லது முதிர்வின் பின்போ கைவிட லாம். ஆனல் கைவிடுவதென்ற அறிவித்தல் கொடுக்கப்படாதபோது, ஈற்றில் உடமையாளர் ஒருவரின் உரிமைகள் இதனுல் பாதிக்கப்பட மாட்டாது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. (பிரிவு 62 (2) இனைப் Lurrriřářsayub.)
4. இரத்துச் செய்வதன்மூலம் :
ஒரு உண்டியலை " வைத்திருப்பவன் " ஒருவனுல் அல்லது அவனது முகவரால் வேண்டுமென்றே இரத்துச் செய்யும் நோக்குடன், வெளித் தெரியக் கூடிய வகையில் இரத்துச்செய்வதினுல் உண்டியல் ஒன்று விடுவிக்கப்படும். (பிரிவு 63 (1) இனைப் பார்க்கவும்.)

Page 49
- 86 -
ஒருநோக்கம் இன்றியோ, அல்லது ஒரு தவறுதலின் காரண மாகவோ, அல்லது உண்டியலை வைத்திருப்பவன் ஒருவனின் அதிகாரம் இன்றியோ செய்யப்பட்ட இரத்தாக்கல் செல்லுபடியற்றதாகும். ஆஞல் செல்லுபடியற்றது எனக் கூறும் ஒருவரே அதனை நிறுவும் சுமையையும் ஏற்றுக்கொள்கின்ருர். உண்டியல் ஒன்றினை " வைத்திருப்பவன் அவ் உண்டியல் முழுவதையுமே இரத்துச் செய்யலாம். அல்லது தனக்கு முந்திய ஒரு கட்சிக்காரராகிய கையொப்பதாரியை இரத்துச் செய்ய ontub. இந்த இரண்டாவது முறை இரத்துச் செய்தல் அந்தக் குறிப் பிட்ட நபரை அவரது பொறுப்புக்களில் இருந்து விடுவிப்பதுடன், அவருக்கு எதிராக * திருப்பிக்கேட்கும் உரிமையைக் கொண்டுள்ள சாட்டுதல் செய்வோரையும் விடுவிக்கின்றது.
(இங்கு எமது மாற்றுண்டியல் கட்டளேச் சட்டம் பிரிவு 63 (1), (2), (3) என்பவற்றைப் பார்க்கவும்.)
5. கருவூல (பாதிப்புறு) மாற்றங்களிளுல் :
ஒரு உண்டியலின் செயற்பாடுகளை அல்லது அதன் வியாபார விளைவு களை (Business effect) அல்லது அவ்வுண்டியலோடு தொடர்புடைய கட்சிக்காரரின் பொறுப்புக்களை மாற்றி அமைக்கக் கூடிய எந்தத் திருத்த மும் கருவூல திருத்தம் அல்லது கருவூல மாற்றம் என அழைக்கப்படும்.
இவ்வாறன கருவூல மாற்றங்கள் சில பின்வருமாறு : திகதி, செலுத்தப்படவேண்டிய தொகை, கொடுப்பளவு செய்யும் காலம், கொடுப்பனவு செய்யும் இடம் போன்றவையாகும். அத்துடன் ஒரு 2-6öruglaucij Grunrgyouras ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும்போது, ஏற்றுக்கொண்டவரின் சம்மதமின்றி, பணம் செலுத்தும் இடத்தில் வேறு ஒரு இடத்தையும் சேர்த்தல் போன்றவையும் கருவூல மாற்ற மாகும். (பிரிவு 64 (2) இனைப் பார்க்கவும்.)
எனவே மேற்கூறிய கருவூலமாற்றங்கள் உண்டியலில் ஏற்பட்டால் அவ் உண்டியல் விடுவிக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

அத்தியாயம் 13
காசோலைகள் ( Cheques)
காசோலைகளின் வளர்ச்சி பிரித்தானிய வங்கியல் முறையின் அபி விருத்திக்கு ஒரு சான்ருகும். காசோலைகளின் வளர்ச்சியிஞல் பண நோட்டுக்களினதும், நாணயக் குற்றிகளினதும் புளக்கம் நன்கு குறைக் கப்பட்டது. இவ்வாறு காசோலைப் பணப்புளக்க முறை வளர்ச்சி யடைய ஒரு நூற்ருண்டு காலத்திற்கும் அதிகமான காலம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது. முதலில் மாற்றுண்டியல்கள் 12ஆம் நூற்ருண்டில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், பிரித்தானியாவில் 16ஆம் நூற் ருண்டுவரை பொதுவான புளக்கத்திற்கு இவை வரவில்லை. வியாபாரி களிஞல் வெளிநாட்டு கொடுப்பனவுகளைத் தீர்த்துக் கொள்வதற்கு முதன் முதலில் மாற்றுஉண்டியல்கள் பயன்படுத்தப்பட்டாலும், காலப் போக்கில் உள்நாட்டிலும் கொடுப்பனவுகளைத் தீர்த்துக்கொள்ளுவதற் குப் பயன்படுத்தப்பட்டன. ஆரம்பகாலத்தில் வங்கியல் முறை பொற் கொல்லர் செயற்பாடுகள் மூலம் வளர்ச்சியடைந்தது, இவர்கள் தம்மி டம் வைப்பில் இட்டவர்களுக்கு சிட்டை ஒன்று வழங்கித் தாம் பெற்றுக்கொண்டமையை அத்தாட்சிப்படுத்தினர்கள். பின்னர், காலப் போக்கில், வைப்பில் இட்டவர்களுக்குத் தமக்குத் தேவையானபோது தேவையான பணத்தினைப் பெறவேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதஞல் மாற்றங்கள் ஏற்படவேண்டிய அவசியம் காணப்பட்டது.
1826இல் கூட்டுப் பங்குத் தொகுதி வங்கிகள் ஆரம்பிக்கப்படு வதற்கு முன்னர் தனிப்பட்ட வங்கிகள் மூன்று படிமுறைகளைக் கடந்து வரவேண்டி இருந்தது. ஆரம்பத்தில் முற்ருக வைப்புக்கணக்கு வங்கிக ளாகவே இருந்தன. கேள்வியின்போது கொடுப்பனவு செய்யப்படக் கூடியதான வங்கித்தாள்களை, தம்முடன் பெறுமதியானவற்றை வைப் பில் இட்டவர்களுக்கு பொறுப்பேற்றுக்கொண்டமைக்கு அத்தாட்சி யாக இவ் வங்கிகள் வழங்கின. இரண்டாவது படிமுறையில், வங்கி கள் அப்படியான வங்கித் தாள்களைக் கடன்படுவோருக்கும், வைப்பில் இடுவோருக்கும் வழங்கிவந்தன. பின்னர் மூன்ருவது படிமுறையில் வைப்புக்களை ஏற்றுக்கொண்டு வங்கித்தாள்களை வழங்குவதற்குப் பதி லாக, வைப்பில் இட்டவர்களை வங்கியின்மீது ஒரு மாற்றுண்டியலை வரைந்து தேவையானபோது பணத்தினை மீளப் பெற அனுமதித்தனர். பின்னர் காலப்போக்கில் இவ்வாறு தேவையானபோது பணத்திக்ன மீளப் பெறுவதற்குரிய படிவங்கள் கொண்ட சிறு புத்தகக் கட்டுகளே வழங்கினர். இந்த நடபடிமுறையே "காசோலை நடைமுறை விருத்தி யடைய முன்னுேடியாக அமைந்தது.

Page 50
- 88 -
காசோலை - வரைவிலக்கணம்
காசோலை எனப்படுவது ஒரு வங்கியின்மீது வரையப்பட்டதும் கேள்வியின்போது பணக் கொடுப்பனவு செய்யப்படவேண்டியதுமான ஒரு மாற்றுண்டியலாகும்.
எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 72 இதுபற்றிக் கூறு கின்றது.
எனவே ஒரு ஆவணமானது காசோலையாக இருப்பதாயின், அவ் ஆவணம் மா. உ. ச. சட்டம் பிரிவு 3 (1) இனைத் திருப்திப்படுத்த வேண்டும்.
குறிப்பு: பிரிவு 3(1) ஒரு மாற்று உண்டியலின் வரைவிலக்கணத் தினைக் கூறுகின்றது. இதுபற்றி ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது.
மேலும் காசோலை என்பது எந்த வங்கியின்மீது வரையப்பட்டுள் ளதோ, அந்த வங்கியின்மீது எழுப்பப்படும் கேள்விக்கு, அதில் குறிப்பி டப்பட்ட பெறுனி ஒருவனுக்கு, குறித்த தொகையொன்றினைச் செலுத் துமாறு, வரைபவரால் வழங்கப்பட்ட எழுத்தில் உள்ள ஒரு வாக் குறுதி என்றும் கூறலாம்.
வங்கியாளரைப் பொறுத்தவரை காசோலை இரட்டைத் தன்மை கொண்ட ஆவணமாகும். ஒருவகையில் பார்க்கும்போது மாற்றுண்டி யல் கட்டளைச்சட்டத்திற்கு அமைந்த ஒரு சாதனமாக அமைவதினுல், ஒரு கைமாறும் சாதனமாக (Negotiable instrument) அமைகின்றது. மறுபக்கத்தில் பார்க்கும்போது வங்கியின் வாடிக்கையாளரிஞல் வங்கிக்கு வழங்கப்பட்ட ஒரு ஆணைப் பத்திரமாக (Mandate) அமைகின்றது. இந்த ஆணைப்பத்திரத்திற்கு அமைய எந்த வங்கியில் அது வரையப் பட்டுள்ளதோ அந்த வங்கியை, ஒரு குறித்த நபருக்குக் குறிப்பிட்ட தொகையொன்றினை ஒரு குறித்த திகதியில் அல்லது அதன்பின்னர் செலுத்துமாறு கேட்கப்படுகின்றது.
காசோலைகளையும் வேறு உண்டியல்களையும் ஒப்பிடுதல் : (Cheques and other (Bills Compared)
காசோலை என்பது ஒரு குறிப்பிட்ட வகை மாற்றுண்டியல் ஆகும். ஆஞல் காசோலைகள் தொடர்பானவரை, சட்டமானது சாதாரணமாற் றுண்டியல் தொடர்பான சட்டங்களில் இருந்து வேறுபடுகின்றது. அவையாவன :

--ཀན་ལོ་89 ཡང་ན་གམ་
1. Likolassrsists) (Acceptance)
எந்த வங்கியின்மீது காசோலை வரையப்பட்டுள்ளதோ அந்த வங்கி யினுல் அக் காசோலை ஒப்புக்கொள்ளப்பட அல்லது பொறுப்பேற்றுக் கொள்ளப்படவேண்டியதில்லை. எனவே ஏற்றுக்கொள்ளலுக்கான விதி முறைகள் காசோலைகளுக்கு ஏற்புடையதாகமாட்டாது. எனவேதான் வங்கி ஒன்று காசோலை ஒன்றினைக் கொண்டிருப்பவனுக்கு (Holder of 2 cheque) பணம் செலுத்தாதபோதும் அது பொறுப்பாக்கப்படுவதில்லை. வரைந்தவரும், சாட்டுதல் செய்தவருமே காசோலைக்குப் பொறுப்பாவார் கள். உண்டியல் ஒன்று யார்மீது வரையப்பட்டுள்ளதோ அவர் அதனை ஒப்புக்கொள்ளும்வரை அவர் பொறுப்புக்களை ஏற்கமாட்டார். உண்டியல் ஒன்று பொதுவாக ஒப்புக்கொண்டாலே பெறுமதி மிக்க ஒன்ருக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. V−
2. காசோலை கட்டாயமாக வங்கியாளர்மீது வரையப்படுதல் வேண்டும். ஆணுல் உண்டியல் ஒன்று யார்மீதும் வரையப்படலாம்.
3. காசோலைக்குக் கேள்வியின்போது பணம் செலுத்தப்பட வேண்' டும். உண்டியல் கேள்வியின் போது பணம் செலுத்தப்பட வேண்டிய தாகவோ, இல்லாமலோ இருக்கலாம்.
4. மாற்றுண்டியல்கள் உரிய திகதிகளில் கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக் கப்படுதல் வேண்டும். எனினும் கேள்வி உண்டியல் ஆன காசோலை ஒரு நியாயமான காலத்திற்குள் கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்கப்படலாம்.
5. குறுக்குக் கோடிடல் சம்பந்தமான விதிகள் காசோலைகளுக்கே எல்லைப்படுத்தப்படுகின்றது. மாற்றுண்டியல்கள் குறுக்குக் கோடிடப்பட முடியாதனவாகும்.
6. காசோலைகளைச் சேகரிக்கும் போதோ அல்லது பணம் வழங்கும் போதோ குறித்த வங்கிகளுக்குச் சட்டங்களினுல் பாதுகாப்பு அளிக்கப் படுகின்றது. ஆனல் மாற்றுண்டியல்களைச் சேகரிக்கும்போதும், பணம் செலுத்தும்போதும் வங்கிகள் பாதுகாக்கப்படுவதில்லை.
7. மாற்றுண்டியல் ஒன்றில் "கைமாறத்தகாதது" என்று குறிப்பிடு வது வெறுமனே மாற்றப்படாமையையே குறிக்கின்றது.ஆனல் காசோலை ஒன்றில் " கைமாறத்தகாதது ”” எனக் குறுக்குக்கோடு இடுவது. முன் னர் வைத்திருந்தவர் கொண்டிருந்ததை விடச் சிறப்பான உரித்தினைப் பின்னர் பெறுபவர் பெறமாட்டார் என்பதனையே குறிக்கின்றது.
8. காசோலை ஒன்று கொடுப்பனவு செய்யப்படாது நிறுத்தப்பட லாம். அத்தோடு வரையப்பட்டுள்ளவரின் இறப்பும்.அவரது செலுத்தும் கடமையை இரத்துச் செய்கின்றது. ஆனல் மாற்றுண்டியல் ஒன்றினைப் பொறுப்பேற்றுக்கொண்டபின் கொடுப்பனவை நிறுத்தமுடியாது.

Page 51
سس- 90 --سس
5Tull assrGarran) (Stale cheque):
நாட்பட்ட காசோலை என்னும்போது நாம் அதன் கொடுப்பன வினைப் பொறுத்தே கருதுகின்ருேம்.
ஒரு காசோலை கணிசமான காலப் பகுதியினுள் கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்கப்படாது. சுழற்சியில் இருக்குமாயின் அதனை நாட்பட்ட காசோலை எனலாம்.
அநேகமான வங்கிகள் ஆறுமாதத்திற்கு மேற்பட்ட காலத்திற்குச் சுழற்சியில் உள்ள காசோலைகளுக்கு வரைந்தவரின் உறுதிப்பாடு இன்றிப் பனம் கொடுக்க மறுக்கின்றன.
salar slis 5 stress 2h) (Overdue cheque):
தவணை கடந்த காசோலை என்னும்போது நாம் அதன் கைமாறும் தன்மையினைக் கொண்டே கருதுகின்ருேம்.
ஒரு காசோல் நியாயமற்ற காலப்பகுதியில் சுழற்சியில் இருக்கு மாயின் அது தவணைகடந்த காசோலை எனப்படும்.
தவணை கடந்த காசோல் ஒன்றினை ஒருவர் எடுத்து வைத்திருப்பா ராயின் அவர் அதற்கு ஈற்றில் உடைமையாளராக மாறமுடியாது.
நியாயமற்ற காலப்பகுதி என்ருல் என்ன என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்படத்தக்கது. உதாரணமாக, ஒரு காசோலையை வரைந்தவர் அக் காசோலை உடனே கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமெனக் கருதியிருந்தால் மூன்று நாட்கள் ஒரு நியாயமற்ற காலப்பகுதி என Wheeler v young (1897) என்ற வழக்கில் தீர்க்கப் full-gil.
திகதி இடப்படாததும், பின் திகதி இடப்பட்டதுமான காசோலைகள்: (Undated and Post dated cheques) திகதி இடப்படாத காசோலைகள்:
திகதி இடப்படாத காசோலை ஒன்று கொடுப்பனவிற்குச் சமர்ப் பிக்கப்படும்போது வங்கியானது கொடுப்பனவுசெய்யாது திருப்பலாம். அல்லது ஒரு சரியான உத்தேச திகதியின் இட்டு அதற்குப் பணத்தினைச் செலுத்தலாம். இவ்வாறு செய்யும் முறையே சாதாரணமாகக் கள்டைப் பிடிக்கப்படுகின்றது.
எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 3 (4) (a) ற்கு அமைய ஒரு மாற்றுண்டியல் (காசோல் உட்பட) திகதி இடப்படவில்லை என்பதற்காக அது பெறுமதியற்ற ஒன்ருக மாறிவிடமாட்டாது எனக் கூறுகின்றது.

سس۔ 91 ۔
Griffiths V Dalton என்ற வழக்கில், திகதி இடப்படாத காசோல்ை ஒன்றினை வைத்திருப்பவன் ஒருவன் திகதியினை இட்டு நிரப்ப அதிகாரம் கொண்டவர் எனத் தீர்க்கப்பட்டது. எமது மா. உ. க. சட்டம் பிரிவு 20 இலும் இதனையே குறிப்பிடுகின்றது. ஆனல் அவர் இவ்வாறு செய்வ தனை ஒரு நியாயமானகால எல்லைக்குள் செய்தல் வேண்டும்.
சாதாரணமாக வங்கிகள் திகதி இடப்படாதபோது ஒரு சரியான உத்தேச திகதியினை இட்டுப் பணம் செலுத்திவந்தாலும், காசோலை யின் தொகை, வரைந்தவரின் ஸ்திரத்தன்மை, சூழ்நிலைக் காரணிகள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டும். இந்நிலையில் காசோலை யைத் திருப்புவதாயின் " திகதி இடப்படவில்லை” (Undated), திகதி நிறைவு செய்யப்படவில்லை (Date in complete) போன்ற குறிப்புடன் திருப்பலாம். ۔۔۔۔
பின் திகதி இடப்பட்ட காசோலைகள்:
கொடுப்பனவிற்கு எனச் சமர்ப்பிக்கப்பட்ட திகதி ஒன்றினைவிடப்
பின்னர் வரும் திகதி ஒன்றினைக் காசோலை கொண்டு இருக்குமாயில்
அது பிற் திகதி இடப்பட்ட காசோலை எனப்படும்.
ஒரு காசோலை பிற்திகதி இடப்பட்டு இருந்து உரிய திகதியின் முன் செலுத்தும் வங்கி ஒன்று பணத்தினைச் செலுத்தினுல் அது வாடிக்கையாளரின் ஆணைக்கு எதிராகச் செய்யப்பட்ட செயலாக அமை யும். இதனுல் வாடிக்கையாளர் அத் தொகை கொண்டு தனது கணக்கு பற்று (Debit) வைக்கப்படுவதை அனுமதிக்க மறுக்கவும் கூடும்.
ஒரு பிற் திகதி இடப்பட்ட காசோலைக்குப் பணம் செலுத்தினுல் பின்வரும் ஆபத்துக்கள் உருவாகலாம் :-
(1) காசோலைக்குப் பணம் செலுத்தவேண்டிய உரிய திகதி வர முன்னர் வாடிக்கையாளர் அதன் கொடுப்பனவினை நிறுத்தலாம்.
(2) உரிய திகதி வரும்வரை காசோலையை இடைநிறுத்தி வைத் திருந்தால், இக்காலப் பகுதிக்குள் வாடிக்கையாளர் வகையற்றுப் போகலாம் அல்லது இறந்து போகலாம்.
(3) இக் குறிப்பிட்ட காசோலைக்கு முன்னரேயே பணம் செலுத்து வதிஞல், பின்னர் வரும் காசோலைகள் போதிய பணமின்றித் திருப்புப் படும். இதஞல் ஏற்படும் நட்டங்களே வங்கி ஏற்கவேண்டி தேகும்.
பிற்திகதி இடப்பட்ட காசோல்ைகள் தொடர்பில் நாம் ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டும். ஒரு பிற்திகதி இடப்பட்ட காசோல் அத்திகதிக்கு முன்னரேயே அவரது கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளது எனக் கொள்வோம். ஆனல் இந்தக் குறிப்பிட்ட காசோமூைலம்

Page 52
ہے۔ 92 ۔۔۔۔۔۔۔
செய்து கொடுப்பளவு நிச்சயமாகப் பின்வரும் திகதி ஒன்றில் செய்யப்பட வேண்டியது ஒன்று என்றும் கொள்வோம். அதாவது ஒரு வருமானவரி கொடுப்பனவு செய்யவேண்டியுள்ள நிலைமையை இங்கு குறிப்பிடலாம். எனவே ஒரு மனுநீதி அடிப்படையில் (equity) இவ்வாறு செலுத்திய தொகையைத் தனக்கு மீண்டும் தருமாறு ஒரு வாடிக்கையாளர் கேட்பது முறையாகாது. ஆளுல் தேவையாயின் அவர் " பெயரளவு நட்டம் " ஒன்றினைக் கோரலாம்.
பிற்திகதி இடப்பட்ட காசோலைகள் பற்றிய மேலதிக குறிப்புக்கள் :
1. ஒரு வாடிக்கையாளர் தனது கணக்கில் வரவு வைப்பதற்கு என ஒரு காசோலையை ஜனவரி 25இல் வங்கியில் இடுகின்ருர், அக்காசோலை ஜனவரி 27 என பிற்திகதி இடப்பட்ட ஒன்ருகும். இக்காசோலைக்கு எதிராக வங்கி அவரைப் பணம் எடுக்கவும் அனுமதிக்கின்றது. உரிய திகதியில் கொடுப்பனவிற்காக அக்காசோலை சமர்ப்பிக்கப்பட்டபோது அக்காசோலை ' வரைந்தவர் இறந்துவிட்டார்” என்ற குறிப்புடன் திருப்பப்படுகின்றது. வாடிக்கையாளர் 26ஆம் திகதியே இறந்தார் எனவும் கூறப்படுகின்றது. அவரின் கணக்கில் எந்தவிதமான மீதியும் இல்லை. அத்துடன் அவர் இருக்கும் பணத்தைக் கூட அவ்வப்போது எடுக்கும் பழக்கமும் உடையவர். இவ்வாருன ஒரு நிலையில் வங்கியா னது இறந்தவரின் பிரதிநிதியிடம் இருந்து இத்தொகையைக் கேட்க முடியுமா என்ற பிரச்சினை எழுகின்றது.
உண்மையில் காசோலை ஒன்று பிற்திகதி இடப்பட்டது என்ற காரண மாக அது செல்லுபடியற்ற ஒன்ருகக் கருதமுடியாது. {பிரிவு 13 (3) இனைப் பார்க்கவும்). இங்கு வங்கி, ஈற்றில் உடமையாளராக, அக்காசோலையைக் கொண்டு இருப்பவராக மாறமாட்டாது எனக் கருத ஏதாவது காரணங் கள் இருந்தால் அன்றி மற்றும் நிலைகளில் இறந்தவரின் சொத்தில் இருந்து திருப்பிக்கேட்கும் உரிமையைக் கொண்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. X என்னும் வாடிக்கையாளர் தனது வங்கியின் மீது ஒக்டோபர் 25ஆம் திகதியிட்ட காசோலை ஒன்றினை வரைகின்ருர். இக்காசோலை ஒக்டோபர் 23ஆம் திகதியே கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்கப்படுகின்றது. இங்கு வங்கி அக்காசோலையைப் " பிறப்பித்தவரை விசாரிக்கவும் " என்ற குறிப்புடன் திருப்புகின்றது. ஆனல் "X" என்பவர் ஒக்டோபர் 25ஆம் திகதிக்கு முன்னரோ அல்லது அன்ருே போதியளவு பணத்தினைத் தனது கணக்கில் இட்டு, வங்கி இவ்வாறு பதில் கூறிக் காசோலையைத் திருப்பியது தனக்கு நட்டத்தினை ஏற்படுத்திவிட்டது எனக் குற்றம் சுமத்துகின்றர். இங்கு இவர் வங்கிக்கு எதிராக என்ன பரிகாரங்களைக் கொண்டிருப்பார் என நாம் ஆராய்வது அவசியமானதாகும்.

-سه 93 س
இவ்வாருன ஒரு நிலையில் உண்மையிலேயே வங்கியினல் கொடுக்க வேண்டிய பதில் ** காசோலை பிற்திகதி இடப்பட்டது" என்பதாகும். இங்கு "X" என்பவர் தனது கண்ணியத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு இருக்கின்றது என்று வாதிடுவது ஏற்கக்கூடிய ஒன்றேயாகும். ஆணுல் இவ்வாருன நிலைமைகளில் வங்கியானது நடந்தவற்றை விளக்கி ஒரு கடிதம் பெறுனிக்கு (Payee) அனுப்புவதே இப்பிரச்சினையைச் சுமுக மாகத் தீர்த்து வைப்பதற்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
3. வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்கிற்கு வரவு வைப்பதற் காக ஒரு பிற்திகதியிடப்பட்ட காசோலை ஒன்றினைத் தபால் மூலம் அனுப்பி வைக்கின்றர். இந்தக் காசோலையை வங்கி கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்காமல் வாடிக்கையாளருக்கே திருப்பி அனுப்பலாமா என்பது ஒரு பிரச்சினையாகும்.
உண்மையில் இவ்வாருன நிலைமையில் வங்கி அக்காசோலையை உடன் கொடுப்பனவிற்காகச் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது அவரது அறிவுறுத்தல்களை எதிர்பார்த்து அக்காசோலையை வைத்திருப்பதாக அல்லது அக்காசோலையின் வெளிப்படையான திகதி வரும்வரை வைத் திருப்பதாக அறிவிக்க வேண்டும். இந்த நடைமுறைகளே ஒரு அவதானமுள்ள வங்கியாளனுக்கு உகந்தது ஆகும்.
காசோலையும் திகதியும் தொடர்பில் மேலும் சில விளக்கக் குறிப்புக்கள் :
1. ஒரு காசோலை நவம்பர் 31 எனத் திகதி இடப்பட்டுள்ளது. இந்தக் காசோலை மற்ற எல்லா விதத்திலும் ஒழுங்கானதாக இருக் கின்றது. இக்காசோலை நவம்பர் 30ஆம் திகதி கொடுப்பனவிற்குச் சமர்ப் பிக்கப்பட்டால் கொடுப்பனவினை வங்கி செய்யலாமா என்பது ஒரு பிரச்சினையாகும். இங்கு நவம்பர் 31 என்பது எப்போதுமே இருக்க முடியாத திகதியாகும். எனவே நவம்பர் 30ஆம் திகதி கொடுப்பனவினைச் செய்யமுடியும்.
2. ஒரு காசோலையின் திகதி ஜனவரி 4 என இருந்து அது பின்னர் 6ஆம் திகதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இக் காசோலை ஜனவரி மாதம் 10ஆம் திகதி கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்கப்படுகின்றது. இங்கு பணம் செலுத்தும் வங்கி திகதியில் செய்யப்பட்ட திருத்தம் காசோலையை வரைந்தவரினுல் அங்கீகரிக்கப்படவேண்டும் எனக் கேட்க முடியுமா என்ற கேள்வி ஒன்று எழுகின்றது.
உண்மையில், மா. உ. க. சட்டம் பிரிவு 64(2)இற்கு அய9மய திகதி
யில் ஏற்படுத்தப்படும் மாற்றம் காசோலையைப் பொறுத்தவரை ஒரு asoga LOIT foldfresh (Material alteration). Tarca విశr

Page 53
---- 94 --س-
மாற்றத்திற்கு வரைந்தவரின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியது முக்கிய மானதாகும். ஆனல் இங்கு குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இவ்வாறு வரைந்தவரின் அங்கீகாரத்தைப் பெறுவது நடைமுறை அனுபவத்தில் அவசியம்தான என்பது ஐயுறவானதாகும்.
காசோலையும் அதன் தொகையும் பற்றிய நடைமுறைப் பிரச்சினைகள்:
இங்கு நாம் காசோலையும் அதன் தொகையும் பற்றிய விடயத்தில் சில நடைமுறைப் பிரச்சினைகளைக் கவனிப்போம்,
(1) ஒரு காசோலையின் தொகை எழுத்தில் மட்டும் எழுதப்பட் டுள்ளது. இலக்கத்தில் எழுதப்படவில்லை. இங்கு காசோலையை அது நிறைவுசெய்யப்படவில்லை என்ற ரீதியில் திருப்ப முடியுமா என்ற கேள்வி எழலாம். உண்மையில் இங்கு காசோலையானது நிறைவு செய்யப் படாத ஒன்று அல்ல. அது அமைந்த விதமே பிழையானது (Unusual in form). எனவே காசோலைக்குப் பணம் செலுத்தப்படவேண்டும்.
(2) ஒரு காசோலையின் பெறுமதி அதிகமான தொகையில் இருந்து குறைந்த ஒரு தொகைக்கு மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக ரூபா 50/- என்பது ரூபா 301- ஆக மாற்றப்பட்டுள்ளது. இங்கு இந்த திருத்தம் வரைந்தவரினல் அங்கீகரிக்கப்படாத நிலையில் கொடுப்பன வினே வெற்றிகரமாகச் செய்யமுடியுமா என்ற கேள்வி எழுகின்றது.
உண்மையில் இங்கு காசோலையைத் திருப்புதலே சிறந்த வழியாகும். ஏனெனில் இது ஒரு கருவூல மாற்றமாகும். (64 (1) இனைப் பார்க்கவும்.) ஆனல் நடைமுறையில் இக் காசோலைக்குச் சில சமயங்களில் பணம் செலுத்தப்படுவதும் உண்டு. காசோலையின் தொகையை இங்கு நாம் அற்பமான தொகை எனக் கருதமுடியுமாளுல் மட்டுமே இது ஏற்கப் படக்கூடியது ஆகும்.
3. ஒரு காசோலையின் தொகை ரூபா 40/- என எழுதப்பட்டுள் ளது. ஆனல் இதே காசோலையில் ' ரூபா 15/-ற்குக் கீழ் " என்ற சொற்ருெடர் ஒன்றும் காணப்படுகின்றது. இங்கு இக் காசோலை கொடுப்பனவிற்கு எனச் சமர்ப்பிக்கப்பட்டால், இப் பிரச்சனையைத் தெளிவுபடுத்துவதற்காகத் திருப்பி அனுப்பப்படுதல் வேண்டும். இவ் வாறு செய்யாவிடின் வங்கி பொறுப்புகளைச் சுமக்கவேண்டி ஏற்படும்.
4. ஒரு வாடிக்கையாளரின் கணக்கில் வரவுமீதியாக (Credit Balance) ரூபா 100/- இருக்கின்றது. அவரது இந்தக் கணக்கில் வரை யப்பட்ட பின்வரும் காசோலைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

- 95 -
(அ) ரூபா 50/- கொண்ட காசோலை ஒன்று தீர்வையூடாகக் கிடைக்கின்றது. அத்துடன் ரூபா 70/- கொண்ட காசோலை ஒன்று கரும பீடத்தின் ஊடாகக் கிடைக்கின்றது. அல்லது
(ஆ) ரூபா 50/- ரூபா 70/- கொண்ட இரு காசோலைகள் ஒரே தீர்வையின் ஊடாகக் கிடைக்கின்றன. அல்லது,
(இ) இரண்டு காசோலைகள் ஒவ்வொன்றும் ரூபா 70/- கொண் டவை. இரண்டுமே ஒரே தீர்வையினுரடாகக் கிடைக்கின்றன. இங்கு வங்கியானது வாடிக்கையாளனுக்கு மேலதிக எடுப்பு வழங்க விரும்பாத இடத்து இவைகளில் எந்தக் காசோலைக்குப் பணம்செலுத்தலாம் என்பது கேள்விக்குரிய ஒரு விடயமாகும்.
இங்கு எந்தக் காசேலையைப் பணம் கொடுப்பனவு செய்யாது திருப்புவது அல்லது எதற்குக் கொடுப்பணவினைச் செய்வது என்பது வங்கியாளரைப்பொறுத்த விடயமாகும்.இவ்வாறு செய்வதில் வங்கி சுதந் திரத்தைக் கொண்டுள்ளது. தானே தேர்வு செய்துகொள்ள முடியும். ஆனல் நடைமுறையில் வாடிக்கையாளருக்கு நட்டம் ஏற்படுத்தாத வகையில் நடந்துகொள்ளுதல் அவசியமானதாகும். இங்கு காசோலையின் தொகையினையும், பெயரிடப்பட்ட பெறுனியிஸ் (Named Payee) தன்மையையும் கொண்டு இதனைத் தீர்மானிக்கலாம். இங்கு வாடிக்கை யாளரை விசாரிப்பதன்மூலமும், விசேட விசாரணைகளை மேற்கொள்ளுவ தன் மூலமும் ஒரு முடிவிற்கு வரலாம். சாதாரண நடைமுறையில் காசோலைகள் எந்த ஒழுங்கில் சமர்ப்பிக்கப்பட்டனவோ அதே ஒழுங்கு முறையில் பணம் செலுத்தப்படல்வேண்டுமாயினும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காசோலைகள் ஒரே நேரத்தில் சமர்ப்பிக்கப்படும் போது எதற்குப் பணம் செலுத்துவது என்பதனை ஒரு வங்கி தனது முழுமையான சுதந்திரத் தன்மையுடன் தீர்மானிக்கமுடியும்.

Page 54
அத்தியாயம் 14 காசோலைகள் குறுக்குக் கோடிடப்படல்
கோடிடலின் ஆரம்பம்:
ஆங்கிலப் பொதுச் சட்ட விதிக்கு அமைய, ஒரு காசோலையைத் தபாலில் அனுப்பும்போது அது கடன் கொடுத்தவனை அடைவதற்கு முன்னர் தொலைந்து விட்டால் அது கடனை அடைக்கப் பயன்பட்ட தாகக் கருத முடியாது. ஆணுல் கடன் கொடுத்தவன் இவ்வாறு தபா லில் அனுப்புமாறு கேட்டு இருந்தால் நிலைமை வித்தியாசமாகக் கருதப்படும்.
காசோலையை வரைபவர் ஒருவர் தனது சொந்த நலனில் அக்கறை கொண்டு, எப்போதும் அந்நியன் ஒருவன் அதன் பெறுமதியைப் பெற்றுவிடாது இருப்பதற்கேற்றவகையிலேயே காசோலையை வரை வார். வரைபவர் ஒரு திறந்த காசோலையை (Open cheque) (குறுக்குக் கோடு இடப்படாத காசோலை) வரைந்தால் கள்வன் ஒருவன் அதனை மோசடி செய்து, கொடுப்பனவினை, வரையப்பட்டுள்ள வங்கியிடம் இருந்து பெற்றுவிடுவான். பெயர் குறித்த பெறுனி அல்லது அவன் கட்டளைக்கு என வரைந்தாலும் மோசடியான சாட்டுதல் செய்யப் படலாம்.
எனவே பொதுவான விதியாக வரைபவர் ஒருபோதுமே ஒரு திறந்த காசோலையை ஒரு மூன்ரும் நபர் சார்பாக வரைதல் ஆகாது. இதன் காரணமாகக் குறுக்குக் கோடிடப்பட்ட காசோலைகள் வரைதல் ஆரம்ப மானது. 18ஆம் நூற்ருண்டின் இறுதிக்காலப் பகுதியிலேயே குறுக்குக் கோடிடும் நடைமுறை ஆரம்பமாகியது. ஆரம்ப கட்டத்தில் வங்கி யாளர் தீர்வையகத்திலேயே இந் நடைமுறை ஆரம்பமானது எனலாம். இங்கு சேகரிக்கும் வங்கியாளர்கள் தமது காசோலையை அடையாளம் கானத் தமது வங்கியின் பெயரைக் காசோலைக்குக் குறுக்கே அதன் முகப்பில் எழுத ஆரம்பித்தனர்.
பின்னர் படிப்படியாகக் காசோலைகளை வரைபவர்களும் இந்த நடைமுறையை அறிந்து, தாம் வழங்கும் காசோலைகளைப் பெறுபவன் அல்லது பெறுனி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயரை அக் காசோலையின் முகப்பில் குறுக்கே எழுதினர். எனவே கொடுப்பன வானது அவ்வாறு பெயரிட்ட வங்கியாளருக்கே கொடுக்கும்படி அமைந் தது. இப்படியான குறுக்குக் கோடு இடுதலை நாம் விசேட முறை கோடிடல் என அழைப்போம்.

கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர் தெரியாதபோது இரண்டு கோடுகளுக்கு இடையே " & Co" என எழுதினர். இதனல் காசோலை யின் கொடுப்பனவு ஒரு வங்கிக் கணக்கிள் ஊடாகவே கொடுக்கவேண் டும் என்றும், பெறுனிக்கு நேரடியாகக் கொடுக்க வேண்டாம் என் றும் அர்த்தம் கொள்ளப்பட்டது.
ஆரம்பகாலத்தில் குறுக்குக்கோடிடலுக்குச் சட்டரீதியான அந்தஸ்துப் பெறுவது கஷ்டமானதாக இருந்தபோதும், தற்போது இது சட்ட வலுவினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறுக்குக் கோடிடல் ஒரு காசோலையின் கருவூலப் பகுதியாக மாறியுள்ளது. எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 78 இதுபற்றிக் கூறுகின்றது. எனவே ஒரு குறுக் குக் கோடிடல் செய்யப்படும் அங்கீகரிக்கப்படாத திருத்தம் காசோலையை அதன் தன்மையில் இருந்து விடுவித்துவிடும். இவ்வாறு திருத்தப்பட் டால் அது வரைந்தவரால் அங்கீகரிக்கப்படல் வேண்டும்.
குறுக்குக் கோடு இடுதல்:
காசோலையின் முகப்பில் இரு சமாந்தரக் கோடுகளை இடுதலையும்
அதனுள் தேவைக்கேற்றவாறு ஏதாவது சொற்ருெடர்களேச் சேர்ப்ப
தனையும் குறுக்குக் கோடிடல் எனலாம்.
குறுக்குக்கோடு இடுவதிளுல் வரைபவருக்குக் கிட்டும் மேலதிக பாதுகாப்புக்கள் : 1. காசோலையின் பெறுமதியை மோசடியாகப் பெறுதல் சிரமமாக்கப்
படுகின்றது. 2. மோசடிகளைக் கண்டு பிடிப்பதற்குப் போதியகால அவகாசம் கிடைக்
கின்றது. 3. சேகரிக்கும் வங்கி மூலம் மோசடிக் கூட்டத்தினை அல்லது அவர் களத் தொடர்ந்து பெறுமதியைப் பெற்றவர்களின் தொடர்பு முறையை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. 4. தான் வரைந்த காசோலை ஒன்றின் கொடுப்பனவினை ஏதாவது காரணமாக நிறுத்தவேண்டுமாயின் அதற்கான போதிய கால அவகாசம் வரைபவருக்குக் கிடைக்கின்றது.
5. கைமாறத்தகாதது" போன்ற குறுக்குக் கோடிடும் முறையானது
மேலதிக சிறந்த பாதுகாப்பின வழங்குகின்றது.
(5g & 5d., Gs, LL6 sin a 6.0&assir (Types of Crossing):
பொதுவான கோடிடல், சிறப்பான கோடிடல் என இருவகையான கோடிடும் முறை இருந்தபோதும் நடைமுறையில் இதனை 4 வகைக ளாகப் பிரித்தே ஆராய்கின்ருேம்.
7

Page 55
- 98 -
1. பொதுவானது (General): J
குறுக்காகச் செல்லும் இரண்டு சமாந்தரக் கோடுகள் காசோலையின் முகப்பில் இடப்பட்டு ** and company " அல்லது " கைமாறத் தகாதது" என்ற சொற்ருெடர்களை அதனிடையே கொண்டோ அல்லது இல்லாமலோ இருத்தலையே பொதுவான கோடிடல் என்கின்ருேம். (மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 76 (1) இனைப் பார்க்கவும்.)
பொதுவாகக் கோடிடப்பட்ட காசோலை ஒன்றிற்கு ஒரு வங்கிக் கணக்கின் ஊடாகவே பணம் செலுத்தப்படும். ஒருபோதும் அதனை " வைத்திருப்பவனுக்கு" நேரடியாகப் பணம் செலுத்தப்படமாட்டாது.
2. splutors (Special):
சிறப்பான கோடிடல் , ஒரு வங்கியின் பெயரினைக் கொண்டிருப்ப துடன், அவ்வங்கிக்கே கொடுப்பனவு செய்யப்படவேண்டும் எனவும் கூறுகின்றது. இவ்வாறு ஒரு வங்கியின் பெயர் மட்டும் இருப்பதுவே கோடிடலுக்குச் சமமானதாகும். இரண்டு சமாந்தர குறுக்குக் கோடுகள் இருக்கவேண்டும் என்பது அவசியமற்றதாகும். இங்கு கைமாறத் தகாதது என்ற சொற்ருெடரும் சேர்க்கப்படலாம். (மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 76 (8)இனைப் பார்க்கவும்.)
3. '' instost p55am.g5s' (Not negotiable):
கைமாறத்தகாதது என்ற சொற்ருெடரைப் புகுத்திக் காசோலை ஒன்று குறுக்குக் கோடிடப்படலாம். மேலதிகமாக இச் சொற்ருெட ரால் குறுக்குக் கோடு இடப்படுவதனுல் அக் காசோலையின் கைமாறும் தன்மையை அழித்து விடலாம். ஆணுல் காசோலையின் மாற்றப்படும் தன்மையில் எந்த விளைவும் ஏற்படமாட்டாது.
எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 81க்கு அமையக் கைமாறத்தகாதது என்று கோடிடப்பட்ட காசோலை ஒன்றினை ஒருவர் வைத்திருக்கும்போது, அதனை அவர் யாரிடம் இருந்து பெற்ருரோ அவரைவிட ஒரு சிறந்த உரித்தினை அக் காசோலே மீது கொண்டிருக் கவோ அத்துடன் ஒரு சிறப்பான உரித்தினை அக் காசோலைக்கு அவரால் கொடுக்கவோ முடியாதநிலையில் இருப்பார்.
ஒரு எழுதுவினைஞன் தனது வேல்கொள்பவனிடம் (employer) இருந்து அவரால் கையொப்பம் இடப்பட்ட காசோலையை மோசடியாக எடுக்கின்றன்.இது ஒரு வெற்றுக்காசோலையாகவே களவாடப்படுகின்றது. இங்கு மோசடியாக "அ" என்பவனுக்குப் பணம் பெறக்கூடியவகையில் அக் காசோலை அவ் எழுதுவினைஞனல் மாற்றப்படுகின்றது. ஆனல் அக் காசோலை கைமாறத்தகாதது எனக் குறுக்குக் கோடிடப்பட்டுள்ளது. இங்கு வேலை கொள்பவன் எந்தநேரமும்"அ"விடம் இருந்து அவன்பெற்ற

حس ، 99 س۔
தொகையை அறவிட உரிமைகொண்டு இருப்பான். ஏனெனில் தனக்கு இல்லாத ஒரு உரிமையை அந்த எழுதுவினைஞன் பெறமுடியாது. அதுபோ லத் தனக்கு உரிமையில்லாத ஒன்றை "அ"விற்குக் கொடுக்கவும் முடி யாது. ஏனெனில் காசோலை "கைமாறத் தகாதது" எனக் குறுக்குக் கோடிடப்பட்டுள்ளது.
* கைமாறத்தகாதது " என்று குறுக்குக் கோடு இடுவதினுல் காசோலையை வரைந்தவரின் சிறப்பான உரித்துப் பாதுகாக்கப்படுகின் றது. அது மட்டுமன்றி அவரைத் தொடர்ந்து பெறுபவரின் சிறப்பான உரித்தும் பாதுகாக்கப்படுகின்றது. மேலும் வாடிக்கையாளர்கள் தமது காசோலைகள் அனைத்தையும் இவ்வாறு குறுக்குக் கோடிட்டு வைத் திருந்தால் தமது சிறப்பான உரித்தினை எப்போதும் பாதுகாத் துக்கொள்ள முடியும்.
காவிக்குச் செலுத்தப்பட வேண்டிய ஒரு காசோலை அல்லது உண்மை யான வெற்றுச் சாட்டுதல் கொண்ட கட்டளைக்குச் செலுத்தப்படவேண் டிய ஒரு காசோலை, ஒரு கள்வனுல் மாற்றம் செய்யப்பட்டு இருக்குமாயின் அக் காசோலையை ஈற்றில் உடமையாளராகப் பெற்ற ஒருவன், சிறந்த உரித்தினைப் பெறுகின்றன். ஆணுல் இதே காசோலை "கைமாறத் தகாதது" எனக் கோடிடப்பட்டு இருக்குமாயின் யாருமே சிறப்பா உரித்தின் எக்காலத்திலும் பெறமுடியாது.
மேலும் "P" என்பவர் * D ' என்பவருக்குச் சில வேலைகளைச் செய்து, தருவதாக ஒப்புக்கொள்கிருர். இதன் காரணமாக "D" முற்பணம் வழங்கத் தீர்மானித்து ஒரு காசோலையை வரைந்து "P" க்குக் கொடுக் கின்ருர். ஆணுல் "P" குறித்த வேலையைச் செய்து கொடுக்காது விடுவ துடன் அக் காசோலையையும் வேறு ஒருவருக்கு மாற்றம் செய்து கொடுக் கின்ருர். இங்கு அக் காசோலை "கைமாறத்தகாதது" எனக் குறுக்குக் கோடிடப்பட்டுள்ளது எனக் கொள்வோம். எனவே "P" யிடம் இருந்து காசோலையைப் பெற்ற எவரும் "D" யைவிடச் சிறப்பான உரித்திரைப் பெற முடியாது.
உதாரணங்கள்:
நாகூர் பிச்சை எதிர் கணபதிப்பிள்ளை (1963). இவ் வழக்கில் முதலாம் பிரதிவாதி உற்பத்திப் பொருட்களின் விநியோகத்தில் ஈடுபட்டு இருப் பவராவார். இவர் ஒரு காசோலையை இரண்டாம் . பிரதிவாதியின் சார்பில் வரைந்து தனக்குச் சில பொருட்களே விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் கொடுத்தார். காசோலை "கைமாறத்தகாதது" எனக் குறுக்கு கோடிடப்பட்டு இருந்தது. குறிப்பிட்ட பொருட்களை வழங் காமையினல், முதலாம் பிரதிவாதி அக் காசோலைக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என வங்கிக்குக் கடிதம் மூலம் அறிவித்தார். இத

Page 56
س- 100 --س-
னிடையே இரண்டாம் பிரதிவாதி இதுபற்றி எதுவுமே அறியாதவராக, முதலாம் பிரதிவாதி கொடுப்பணவினை நிறுத்துவதற்கு முன்னர் அக் காசோலையைச் சாட்டுதல் செய்து இவ்வழக்கின் வாதிக்கு வழங்கி விட்டார். இதன்பின் வாதி, காசோலையைத் தனது வங்கியில் சேகரிப் பிற்குச் சமர்ப்பிக்க அதற்கு முதலாம் பிரதிவாதியின் வங்கியினல் கொடுப்பனவு மறுக்கப்பட்டது.
இங்கு வாதியானவர், வரைந்தவர் என்றமுறையில் முதலாம் பிரதி வாதி மீதும், சாட்டுதல் செய்தவர் என்ற முறையில் இரண்டாம் பிரதி வாதி மீதும் ரூபா 500ன பெறுமதிக்கு வழக்கிட்டார். உயர் நீதிமன் pêSei Sugissir (L. B. de Silva J, Abeysundara J) gurgia டாம் பிரதிவாதி பொறுப்பாகவேண்டி இருந்தபோதிலும் முதலாம் பிரதிவாதி (வரைந்தவர்) பொறுப்பாக மாட்டார் எனத் தீர்ப்பு அளித் தனர்.
நீதிபதிகள் தமது தீர்ப்பில் மா. உ. க. சட்டம் பிரிவு 81இன ஆதாரம்காட்டி, இரண்டாம் பிரதிவாதி தாம் குறிப்பிட்டபடி பொருட் களை வழங்காதபடியால் ஒரு சிறப்பான உரித்தினைப் பெறமாட்டார். எனவே தனக்கு இல்லாத உரிமையை வாதிக்குக் கொடுக்கமுடியாது. எனவே இங்கு வாதியும் முதலாம் பிரதிவாதியும் சிறந்த உரித்தினைப் பெறமுடியாது. எனவே வாதி, முதலாம் பிரதிவாதிக்கு எதிரான வழக் கிடும் உரிமையை இழக்கின்ருர் எனக் கூறினர்.
Gungyth Seyed Mohamed v Ibrahim (1966) 6Teir paypassaid "கைமாறத்தகாதது" எனக் குறுக்குக் கோடிடப்பட்ட காசோலை ஒன்று தொலைந்தால், அதனை எடுக்கின்ற எவரும் ஓர் உரித்தினை அதன் மேல் பெற முடியாது என்றும், உரித்தின மாற்றிக் கொடுக்கவும் முடியாது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
4. Gugu Ausör SRVIT&S5 (Account Payee) :
சரியாகக் கூறுவதாயின். இந்தச் சொற்ருெடர் எந்த ஒரு குறுக்குக் கோடிடலினதும் பகுதியல்ல. இவ்வாருண கோடிடல் சேகரிக்கும் வங் கிக்குரிய ஒர் அறிவுறுத்தலாகும். சேகரிக்கும் வங்கி பணத்திரைப் பெற்றதும் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனை நெறிப்படுத்து வதாக இது அமையும்.
கைமாறத்தகாதது என்ற குறுக்குக் கோடிடல் இங்கிலாந்தில் பாராளுமன்ற சட்டத்திகுல் 1878இல் அறிமுகப்படுத்தப்பட்டதாக அறியப்படுகின்றது. இதற்குச் சில ஆண்டுகளின் முன்னர் காசோலைகளை வரைபவர்கள் மோசடி, களவு போன்றவற்றில் இருந்து தம்மைப் பாது

- 1 Ul -
காத்துக்கொள்ள வேறு ஒரு முறையைக் கையாண்டனர். அதாவது * பெறுபவன் கணக்கிற்கு" அல்லது "குறிப்பிட்டவரின் கணக்கிற்கு" (For the Account of ... or Account Payee) Graip GamibQoylfashirt பாவித்துக் குறுக்குக் கோடிட்டனர்.
Bellamy v Marjori banks (1852) 676irp apdisasi (5 assroarrah) '''Bank of England, for account of the Accountant General'' 676tra குறுக்குக் கோடிடப்பட்டது. பெறுபவள் கணக்கிற்கு என்ற சொற் ருெடர் பின்னர் உருவாகிய ஒரு முறையாகும். 1852 ஆண்டு காலத் தில் மேற்கூறியவாறு கோடிடப்பட்டதனைக் காட்டவே மேற்கூறிய வழக்கு இங்கு குறிப்பிடப்படுகின்றது.
ஆளுல் தற்போது பெறுபவன் கணக்கிற்கு என்பது குறுக்குக் கோடிடல்போல் இருந்தாலும் சட்டரீதியான விளைவினைக் கொண் டிருக்கவில்லை. எந்த ஒரு பாராளுமன்றச் சட்டமும் இது பற்றிக் கூற வில்லை. ஆனல் இப்படி இருந்த போதிலும் நீதிமன்றங்கள் இதனை அங்கீகரித்து இதனை ச் சேகரிக்கும் வங்கிக்கான எச்சரிக்கையாகக் கருதுகின்றன. உண்மையான உரித்தாளி அல்லாத இன்ஞெருவருக்குப் பளத்தினைச் சேகரித்துக் கொடுத்தால் சேகரிக்கும் வங்கி பொறுப் பாகவேண்டி ஏற்படும். எந்தவிதமான விசாரணையும் இன்றி தகுந்த விளக்கமும் இன்றிச் சேகரித்தால் அது வங்கியாளரின் கவனயீனத்தைக் காட்டும். செலுத்தும் வங்கி இந்தக் குறுக்குக் கோடிடல் பற்றி அக்கறை கொள்ளத் தேவையில்லை.
Akrokerri (Atlantic) Mines Ltd. v. Economic Bank (1904) Grsip வழக்கில், Bigham J என்பவர், account A. B. என்ற சொல் பணத் தினைப் பெறும் வங்கிக்கான ஒரு வெறும் வழிகாட்டலேயாகும் என்றும் இவ்வாறு பணம் பெறப்பட்டதும் அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கூறும் அறிவுறுத்தலே என்றும் கூறினர்.
மேலும் இச் சொற்ருெடர் ஒரு காசோலையின் கைமாறும் தன்மை யினைப் (Negotiability) பாதிக்கமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசோலேயில் யார் குறுக்குக்கோடிடலாம்:
எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 77 யார் ஒருவர் காசோலையில் குறுக்குக்கோடிடலாம் என்பது பற்றிக் கூறுகின்றது.
1. காசோலை வரைந்தவரால் பொதுவாக அல்லது சிறப்பாகக் குறுக்குக்
கோடிடப்படலாம்.

Page 57
- 102 -
2. ஒரு காசோலை குறுக்குக்கோடிடப்படவில்லையாயின் அதனே வைத் திருப்பவர் பொதுவாகவோ அல்லது சிறப்பாகவோ தானே கோடிட аутib.
3. ஒரு காசோலை பொதுவாகக் கோடிடப்பட்டு இருக்கும்போது அதனை
வைத்திருப்பவர் சிறப்பாகக் குறுக்குக் கோடிடலாம்.
4 ஒரு காசோலை பொதுவாக அல்லது சிறப்பாகக் கோடிடப்பட்டு இருக்கும்போது அதனை வைத்திருப்பவர் " கைமாறத்தகாதது" என்ற சொற்களைச் சேர்த்துக் கொள்ளலாம்,
5. ஒரு காசோலை சிறப்பாக குறுக்குக் கோடிடப்பட்டு இருக்கும் போது, அக்காசோலை எந்த வங்கியாளருக்குக் குறுக்குக் கோடிடப்பட்டுள்ளதோ அந்த வங்கியாளர் அதனை மேலும் சிறப் பாக ஒருவங்கியாளருக்குச் சேகரிப்பிற்குஎனக் குறுக்குக்கோடிடலாம்.
6. ஒரு வங்கியாளருக்கு சேகரிப்பிற்கு என அனுப்பப்பட்ட காசோலை ஒன்று குறுக்குக் கோடிடப்படாமலோ அல்லது பொதுவாகக் குறுக்குக்கோடிடப்பட்டோ இருக்குமாயின் அந்தவங்கி தனக்கு எனச் சிறப்பாக அக்காசோலையைக் குறுக்குக் கோடிட்டுக் க்ொள்ளலாம்,
குறுக்குக் கோடிட்ட காசோலைகள் பற்றிய மேலும் சில விளக்கங்கள் :
1. சமர்ப்பிக்கப்பட்ட காசோலை ஒன்று அதற்குக் குறுக்கே X என்ற அடையாளத்தினைக் கொண்டுள்ளபோது, இதனை நாம் குறுக்குக் கோடிடல் ஆகக் கருதமுடியுமா என்றும், இவ்வாறு இருத்தல் அக் காசோலையை இரத்துச் செய்வதாகவோ அல்லது செல்லுபடியற்ற தாகவோ மாற்ற முடியுமா என்றும் கேள்வி எழலாம்.
இத்தகைய அடையாளம் மா. உ. க. சட்டம் பிரிவு 76ற்கு அமைய குறுக்குக் கோடிடல் ஆகமாட்டாது. ஆனல் வங்கி ஒன்று உண்மையில் இரத்துச் செய்வதற்காக இடப்பட்ட அடையாளமா என்பதனை விசா ரித்து அறிந்துகொள்ளவேண்டும்.
2. "பொதுவாக " கோடிடப்பட்ட காசோலை ஒன்று வரைந்த வங்கியின் கருமபீடத்தில் கொடுப்பனவிற்கு எனப் பெறுபவஞல் (?ayee) சமர்ப்பிக்கப்படுகின்றது. இப்பெறுபவனை வங்கிக்கு நேரடியாகவே நன்கு தெரியும். இவ்வாருன, க்ாசோலைக்கு வங்கி பணம் கொடுத்தால் அது நியாயப்படுத்தப்பட முடியுமா என்ற கேள்வி எழலாம்.

-- 103 س--
குறுக்குக் கோடிடப்பட்ட காசோக்ைகு ஒரு வங்கிக் கணக்கு ஊடாகவே பணம் செலுத்தப்பட வேண்டும் என்பதே அர்த்தமாகும். ஆனல் இங்கு பெறுபவனே வங்கிக்கு நேரடியாகவே நன்கு தெரியும், இங்கு உண்மையான உரித்தாளி அவர்தான் என்பதில் ஐயுறவு இல்லாத படியால் வங்கிக்கு ஊறு அல்லது சிரமம் ஏற்படமாட்டாது. பணம் இவ்வாறு செலுத்தப்பட்டாலும் வங்கியானது அந்த உண்மையான உரித்தாளிக்கு மட்டுமே பொறுப்பானதாகும். (மா. உ. க. சட்டம் பிரிவு 79 (2) )
ஆணுல் இங்கு காசோலை பெறுபவளுல் மோசடியாக வரைந்தவ னிடம் இருந்து பெறப்பட்டு இருத்தல் ஆகாது.
3. இரண்டு சமாந்தர குறுக்குக் கோடுகளோ அல்லது ஒரு வங்கி யின் பெயரோ குறிப்பிடப்படாது, ஒரு காசோலையில் " கைமாறத் தகாதது ' (Not Negotiable) என்ற சொற்ருெடர் எழுதப்பட்டுள்ளது. இவ்வாருண காசோல் ஒன்றினை மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளுக்கு அமைய குறுக்குக் கோடிட்ட காசோலை எனக் கருத முடியுமா? இவ்வாருன காசோலைக்கு அது வரையப்பட்டுள்ள வங்கி கருமபீடத்தின் ஊடாகப் பணம் வழங்க முடியுமா என்ற கேள்வியும் எழலாம்.
எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 76ம், 81ம் * கைமாறத்தகாதது" என்பது ஒரு சாதாரண குறுக்குக் கோடிடலோடு மேலதிகமாகச் சேர்க்கப்பட்ட ஒருசொல்லாகும் என்றே உட்பொருள்படக் கூறுகின்றது. எனவே இச் சொற்ருெடரை மட்டும் கொண்டு இத் தகைய காசோலைகளைக் குறுக்குக் கோடிடப்பட்ட காசோலைகள் எனக் கொள்ளலாமா எனச் சந்தேகம் எழுகின்றது. எனவே ஏதாவது மேற் கோள்களைக் காட்டி நிறுவும் வரை இதனை ஒரு குறுக்குக் கோடிடல் ஆகக் கருதுவது ஒரு அவதானமான அல்லது முன் எச்சரிக்கையான செயற்பாடாகமட்டுமே அமையும்.

Page 58
அத்தியாயம் 15 பணம் செலுத்தும் வங்கியாளர் (The Paying Banker)
ஒரு வங்கியின்மீது வரையப்பட்ட காசோலைகளுக்குப் பணம் வழங் குவது அவ் வங்கியின் தலையாய கடமையாகும். ஒரு தீர்வையகத்தின் ஊடாகச் சமர்ப்பிக்கப்படும் காசோலைகள் பணம் கொடுக்காது திருப் பப்படும்போது அதற்கான மறுமொழியை (answer) அதாவது திருப் புவதற்கான காரணத்தை அக்காசோலையில் எழுதவேண்டும். இது தீர்வையக விதியாகும். தீர்வையகத்தின் ஊடாக அல்லது வேறுமுறை யிற் கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்கப்படும் காசோலையிலும் இவ்வாறு மறுத்தமைக்கான காரணம் எழுதப்படவேண்டும் என்று ஏற்றுக்கொள் ளப்பட்டுள்ளது.
ஒரு வங்கியின்மீது வரையப்படும் காசோலைகளுக்குப் பணம் கொடுக்கப்படவேண்டும் என்பது ஒர் ஒப்பந்தரீதியான கடமையாகும். ஆளுல் இவ்வாறு பனம் செலுத்துவதற்குக் காசோலைகள் யாவும் -
1. தகுந்தமுறையில் எழுதப்பட்டு இருத்தல்வேண்டும். 2. போதியளவு பணவசதி இருத்தல்வேண்டும். அல்லது மேலதிக எடுப்பு ஒழுங்கு மேற்கொள்ளப்பட்டு இருக்கவேண்டும். 3. வாடிக்கையாளர் தமது பணம் செலுத்தும் அதிகாரத்தைத்
தவிர்ந்தவராக இருத்தல் ஆகாது. 4. கொடுப்பனவிற்கு ஏதாவது சட்டப்படியான தடைகள் இருத்
தல் ஆகாது.
பணம் கொடுக்கும் வங்கியால் ஒரு காசோலைக்கு நெறிமுறையில் பணம் செலுத்தப்பட்டால் ( payment in due course ) அக் காசோலே விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படும்.
பணம் செலுத்தும் வங்கியாளருக்கு ஏற்படக்கூடிய பொறுப்புக்கள்: ( Possible Liability of a Paying Banker )
பணம் செலுத்தும் வங்கியாளருக்கு ஏற்படக்கூடிய பொறுப்புகள் சில: (அ) தவருணமுறையில் ஒரு கணக்கினைப் பற்றுவைத்தல் (ஆ) காசோலைகளுக்குத் தவருகப் பணம் தராது விடுதல். (இ) ஒரு காசோலையின் உண்மையான உரித்தாளிக்கான பொறுப்
புகள்,

مسس سے 05! ......................
(அ) தவறன முறையில் ஒரு கணக்கினைப் பற்றுவைத்தல்:
(Wrongful debit of an account) ஒரு வாடிக்கையாளரின் கணக்கினைத் தவருண முறையில் பற்று வைத்தால் அதற்காக ஒரு வங்கியாளர் நட்டங்களைத் தனது வாடிக்கை யாளருக்குச் செலுத்தவேண்டி ஏற்படும். பின்வரும் 4 சந்தர்ப்பங்களில் இவ்வாறு செலுத்தவேண்டி ஏற்படலாம்.
(i) காசோலையின் கொடுப்பனவினைத் தனது வாடிக்கையாளர் ஒருவர் நிறுத்தியபில், அதற்குரிய பணத்தினைச் செலுத்துதல் ஆகாது.
(ii) ஒரு பிற்திகதியிட்ட காசோலைக்கு உரிய திகதி வரமுன்னர் பணம் செலுத்துதல் ஆகாது. இதனுல் உரிய திகதியிள்முன் வாடிக்கையாளர் அக் காசோலையின் கொடுப்பனவினை நிறுத் தலாம். அல்லது இவ்வாறு நிறுத்திய காசோலைக்குப் பணம் செலுத்துவதனுல் வேறு காசோலைகள் பணம் இன்றித் திருப்பப் படக்கூடும்.
(it) காசோலையில் உள்ள வாடிக்கையாளரின் கையொப்பம் மோசடி செய்யப்பட்டு இருக்கும்போது பற்றுவைத்தல் ஆகாது. (ம. உ. க. சட்டம் பிரிவு 24 இனப் பார்க்கவும்.)
இங்கு வாடிக்கையாளரின் ஆணைக்கு எதிராக நடந்துகொண்டது போல் கருதப்படும். இவ்வாறு பற்றுவைத்தால் அத் தொகை வாடிக்கை யாளருக்கு மீளச் செலுத்தப்படுதல் வேண்டும்.
ஆளுல் தடத்தற் கோட்பாட்டிற்கு (Estoppel) அமைய சில சமயங்களில் வாடிக்கையாளர், மோசடியான கையொப்பம் கொண்டுள்ள காசோலை என வாதிடும் ஒரு நிலையில் இருந்து தடுக்கவோ தவிர்க் கவோ படுகின்ருர்,
உதாரணமாக 3
1. இடப்பட்ட கையொப்பம் அவருடையதுதான் என வங்கியை
நம்பக்கூடியதாக இட்டுச்செல்லும் சந்தர்ப்பம்.
2. மோசடிபற்றி அறிந்து இருந்து அதுபற்றி வங்கிக்கு நேரகாலத் துடன் அறிவித்து மோசடி செய்வதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு அளிக்காது இருக்கும் சந்தர்ப்பம்.
3. வங்கிக்கு உரிய நேரத்தில் அறிவிக்காது விட்டு அதனுல் மோசடிக்காரன் தனது மோசடியைத் தொடர்ந்தும் செய்ய வாய்ப்பு ஏற்படுத்தல்
a + b : Greenwood v Martins Bank Ltd. (1933)

Page 59
-------- 106 سس۔
இவ் வழக்கில் ஒரு மனைவி தனது கணவனின் கையொப்பத்தை மோசடி செய்திருந்தும் காசோலைகளுக்கு வங்கியினுல் உரிய முறைப் படி பணம் செலுத்தப்பட்டது. இம் மோசடியைக் கண்டுபிடித்தும் அது பற்றி கணவன் வங்கிக்கு அறிவிக்கவில்லை. ஆனல் தனது மனைவியை இதனைத் தொடர்ந்து இனிமேல் செய்யவேண்டாம் எனக் கூறியிருந் தார். சில காலத்தின்பின் மனைவி தற்கொலை செய்துகொண்டாள். இதன்பின்னரே கணவன் மோசடி செய்யப்பட்ட காசோலைகளுக்கு உரிய பணத்தினை மீள அளிக்குமாறு வங்கிக்கு எதிராகக் கோரிக்கை எழுப்பிஞர். இங்கு அவரது தாமதம் காரணமாக அக் குறித்த கையொப்பம்பற்றி வாதிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். அதாவது அவருடைய தாமதத்தினுல் மோசடி செய்யப்பட்ட கையொப்பம் தன்னுடையது அல்லவென்று மறுக்கும் வாய்ப்பை இழக் sairGyi (Tairgub appa) Tib. (Because of his delay he was estopped from denying the forged signature as his own). Gudeyub as is gill போது மோசடி செய்தவருக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்க முடி யாத நிலையில் இருக்கின்றது. எனவே இங்கு குறித்த வாடிக்கையாள ரின் கணக்கினைப் பற்று வைக்க முடியும்,
(iv) வாடிக்கையாளரின் சம்மதம் இன்றிக் காசோலையில் மாற்றம்
செய்யப்பட்டு இருக்கும்போது பற்றுவைத்தல் ஆகாது;
சாதாரணமாக இவ்வாறு செய்தல் காசோலையின் தொகையை மோசடியாக அதிகரிக்கும் செயலாகக் கருதப்படும். காசோலையில் வெறு மனே பார்க்கக்கூடிய வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தால் அத் திருத்தத்திற்குச் சம்மதம் அளிக்காதோர் அனைவருக்கும் எதிராக அக் காசோலை செல்லுபடியற்ற ஒன்ருகும். ஆனல் புலஞகாத திருத்தமாயின் அக் காசோலையை ஈற்றில் உடமையாளனுகக் கொண்டுள்ள ஒருவன், அக் காசோலை ஆரம்பத்தில் எத்தொகைக்கு எழுதப்பட்டுள்ளதோ அத் தொகைக்கு உரிமை உடையவன் ஆவான். இது தவிர அக் காசோலை யைச் சமர்ப்பிக்கும் யாரும் எதற்கும் அருகதையற்றவர்கள் ஆவார்கள். (மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 64 (i) இனைப் பார்க்கவும்.)
ஏதாவது வகையில் ஏற்படக்கூடிய மோசடியான திருத்தங்களைத் தவிர்க்கக்கூடியவகையில் மிக அவதானமாக எப்போதும் காசோலைகளை வாடிக்கையாளர் வரையவேண்டும். வாடிக்கையாளர் கவனயீன மாக நடந்து அவரே வசதி ஏற்படுத்திக்கொடுத்தால் அவரது கணக்கி னைப் பற்று வைக்க வங்கியால் முடியும்.
a + b : London Joint Stock Bank Ltd. v Mac Millan and Arthur (1918; - -

جیسے 107 -۔
மக்மில்லன் விதியால் வங்கிக்கு பாதுகாப்பு பின்வரும் நிலகளில் மட்டுமே கிடைக்கும். (அ) காசோலைக்கு மட்டுமே பாதுகாப்பு உண்டு.
(ஆ) காசோலையில் ஏற்பட்ட திருத்தம் கண்ணிற்குப் புலனுகாததாக
இருத்தல் வேண்டும்.
(இ) வாடிக்கையாளரின் கவனயீனமே மோசடித் திருத்தத்திற்கு
வழி வகுத்ததாக இருத்தல்வேண்டும்.
மோசடியாகத் திருத்தப்பட்ட காசோலைகளுக்குப் பணம் செலுத்தி ஏதுமறியாதவகையில் ஒரு வங்கி பலியாவது மிக அரிதாக நடக்கும் ஒரு செய்முறையாகும். அநேகமாக கண்ணிற்குப் புலனுகாத் திருத்தல் கள் வாடிக்கையாளரின் கவனயீனத்தாலேயே ஏற்படுகின்றன. இதஞலேயே மக்மில்லன் விதியில் வங்கி தங்கி நிற்கவேண்டி ஏற்ப கின்றது.
(ஆ) காசோலைகளுக்குத் தவருகப் பணம் தராது விடுதல் :
(Wrongful dishonour of a cheque) இவ்வாறு காசோலைகளுக்குத் தவருகப் பணம் தராதுவிடுவதினுல் ஒரு வங்கி தனது வாடிக்கையாளருடனன ஒப்பந்த மீறுகைக்கும் அத்துடன் அவதூறுக்கும் பொறுப்பாகி நட்டங்களைச் செலுத்தவேண்டி ஏற்படும்"
அவதூறுக்கான வழக்கானது, காசோலைக்குப் பணம் கொடுக்க மறுப் பதற்காக வங்கியிஞல் கொடுக்கப்பட்ட மறுமொழி அல்லது காரணத் தின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது.
காசோலைக்குத் தவருகப் பணம் தராது அதஞல் ஒப்பந்த மீறுகை ஏற்படல்:
தனது வாடிக்கையாளர் ஒருவரின் காசோலைக்குப் பணம் தராது விடும்போது, அவ்வாடிக்கையாளரின் கெளரவம் அல்லது அந்தஸ்திற்கு ஊறு ஏற்படுத்தப்படும் என்று ஒவ்வொரு பணம் செலுத்தும் வங்கி யாளரும் மனதில் கொள்ள வேண்டும். பணம் பெருத காசோலை சிறிய தொகை கொண்டதாக இருந்தால் இதனுல் ஏற்படும் தட்டம் மிகக் கூடுதலாக இருக்கும்.
a + b : Marzetti v Williams (1830)
கொள்கையளவில் உண்மையான நட்டம. வாடிக்கையாளருக்கு ஏற்பட்டது என்பதை நிரூபிக்காமலேயே அவருக்குச் சாதாரண நட்ட ஈடு வழங்கப்படலாம்.
se + ib. . Rolin. v. Steward - (854.

Page 60
- 108 -
பல வழக்குகளில் மிகப் பெரிய தொகைகளும் இழப்பீடாகக் கொடுக் கப்பட்டுள்ளன.
ஆஞல், இதனைவிட நியாயமான கருத்து ஒன்று இன்றைய நீதி மன்றங்களிடையே நிலவி வருகின்றது. வாடிக்கையாளர் தனக்கு வங்கியின் செயலினல் சிறப்பான நட்டங்கள் ஏற்பட்டுள்ளன என்று நிரூபித்தால் அல்லது வாடிக்கையாளர் ஒரு வியாபாரி அல்லது வர்த் தகர் ஆக இருந்தால் தவிர, மற்றும் நிலைகளில் பெயரளவு நட்ட ஈடு மாத்திரம் அளிக்கப்படும்.
எனவே வியாபாரத் தொழிலில் ஈடுபடாத வாடிக்கையாளர் ஒருவர் தனக்குச் சிறப்பான நட்டங்கள் ஏற்பட்டது என நிரூபிக்க வேண்டும். இதில் தவறினல் அவருக்குப் பெயரளவு நட்டம் மட்டுமே கொடுபடும். Evans v London and Provincial Bank (1917) arai to a piadi) 205 கடற்படை அதிகாரியின் மனைவி தனது காசோலைக்குப் பணம்தர மறுத் தமைக்காக வழக்குத் தொடர்ந்தார். இங்கு இவள் அலைக்கழிக்கப் பட்டாள் என்பதனைத் தவிர அவளுக்கு எந்தவித நட்டமும் ஏற்பட வில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு சிலிங் மட்டும் நட்டஈடாக வழங்கியது.
சிறப்பான நட்டங்கள் ஏற்பட்டன என்பது பற்றி வாடிக்கை யாளரே நிறுவவேண்டும். சிறப்பான நட்டங்கள் சில அபூர்வ சந்தர்ப் Luršvas6rfflsio GTAfðLUG967 av spisav. D-5T UTGJØTuorres Meyer Marr’s and Co. v London and West Minister Banking Co. (1885) grairsp agpaisai) வாடிக்கையாளர் ஒருவர் காசோலைக்குப் பணம் கொடுக்கத் தவறியமை யினல் பொருட்களை விற்பவன் அவனுடன் தொடர்ந்து வியாபாரத்தை வைத்திருக்க விரும்பவில்லை. என்றும் இதஞல் குறிப்பிட்ட சில பொருட் களைப் பெறுவது முடியாது போய்விட்டது என்றும் கூறிஞன்.
வாடிக்கையாளர் ஒரு வியாபாரி அல்லது வர்த்தகராக இருப்பின் காசோலைக்குத் தவறுதலாகப் பணம் கொடுக்க மறுத்தமைக்கு நட்ட டுகளைப் பெறுவதில் அவர் உண்மையான அல்லது சிறப்பான நட்ட மெதுவும் ஏற்பட்டது என்று நிரூபிக்கத் தேவையில்லை. மேலும் தீர்க்கப் பட்ட வழக்குகளின்படி, ஒரு வழக்கறிஞர், ஒரு ஏலதாரர், ஒரு பங்குத் தரகர், ஒரு தோட்ட முகவர் . ஏதேனும் வகை வர்த்தக முகவர் ஆகி யோர் ஒரு வியாபாரியின் அதே நிலையில் வைத்துக் கணிக்கப்படுவர்.
அவதூறுக்கான நட்ட ஈடுகள் :
ஒப்பந்த மீறுகைக்காக நட்ட ஈடுகரேக் கோருவதற்குப் பதிலாக அல்லது ஒப்பந்த மீறுகைக்கு நட்ட ஈடுகள் கேட்பதுடன் ஒரு வாடிக்கை யாளர் பணம்கொடுக்க மறுக்கப்பட்ட காசோலைகளுக்குக்கொடுக்கப்பட்ட மறுமொழி ஒரு அவதாருகும் என்று அவதூறுக்கான தட்ட ஈடுகளைக் கோரலாம். ஒப்பந்த முறிவுக்கு நீதிமன்றத்தால் பெயரளவு நட்டவீடுகள்

سسسس 109
மாத்திரம் வழங்கப்படுமாயினும் பயன்படுத்தப்பட்ட சொற்களில் காணப்படும் அவதூறுக்காக சாதாரண நட்ட ஈடுகளும் அதேவழக்கில் கோரப்படலாம்.
22- + b : Baker v Australia and Newzealand Bank (1958)
இந்த வழக்கில் வாடிக்கையாளரின் கணக்கிற்கு வைப்பிட்ட தொகை வேருெருவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனல் வாடிக்கையாளரின் காசோலைகள் மீள சமர்ப்பிக்கவும்" (Present again) என்ற குறிப்புடன் திருப்பப்பட்டன. எனவேதான் வழக்கிட்ட போது ஒப்பந்த முறிவிற்கும், பயன்படுத்திய சொல்லினல் ஏற்பட்ட அவதூறுக்கும் என நட்டங்கள் செலுத்தப்பட்டன.
திருப்பி அனுப்பப்படும் காசோலைகள்மீது எழுதும் சொற்களைப் பற்றி வங்கியாளன் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். போதிய øáivalv ” (Not Sufficient), “ SpišasissGrås GuosiðLL-G96ît Garg ” (Exceeds Arrangement) ஆகிய சொற்கள் நிலத்த அவதூறு எனத் தீர்க்கப் பட்டுள்ளன.
so. 4 b : Cavidson v Barclays Bank Ltd. (1940)
ஆரம்பத்தில் ஆங்கில நீதிமன்றங்கள் " பிறப்பித்தவரை விசாரிக்க வும் " (Refer to Drawer) என்ற சொற்கள் அவதூருனவை அல்ல என்றே அபிப்பிராயம் கொண்டு இருந்தன. ஆங்கில நீதிமன்றங்கள் "நாங்கள் பணம் செலுத்தவில்லை, காசோலையை எழுதியவரிடம் சென்று ஏன் என அவரிடம் கேட்கவும்" என்ருே அல்லது *" காசோலையை எழுதியவரிடம் சென்று அவரைப் பணம் செலுத்தும்படி கேட்க " என்ற சாதாரணமான கருத்தைக் கொண்டுள்ள கூற்ருகவே இவற்ன்றகருதின.வேறு ஒரு ஆங்கில நீதிபதி பின்வருமாறு கூறினர். "அந் நேரத்தில் அவர்கள் பணம் செலுத்தவில்லை. பணம் வேண்டி நிற்பவர் காசோலையை எழுதியவரிடம் சென்று அதற்கான விளக்கத்தைக் கேட்க வேண்டும்" என்ற கருத்துப்பட கவனமாகத் தேர்ந்தெடுத்த சொற்களின் அமைப்பாகும் என்ருர். அவர் மேலும் இச்சொல் காசோலையை எழுதிய வரின் கடன் இறுக்க முடியும் தன்மை, நம்பிக்கை, நல்லெண்ணம் ஆகிய வற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்று என்னுல் பொருள் கொள்ள முடியவில்ல்ை. மேலும் சரியாக சிந்தனை செய்யும் மனிதனின் முன்னுல் காசோல்யை எழுதிய ஒருவர் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுக் கேலி செய்யப்படுவார் என்ற கருத்தொன்றினையும் இச் சொற்களில் இருந்து என்ஞல் புரியமுடியவில்லை என்றும் கூறிஞர்.
ஆளுல் மேற் கூறப்பட்ட கூற்றின் பொருள் கோடல்மீது கொண் டுள்ள நம்பிக்கையை Pyke w Hibernian Bank (1950) என்ற ஐரிஷ்

Page 61
- 110 -
உயர் நீதிமன்றத் தீர்ப்புக் குலைந்துவிட்டது. இங்கு "பிறப்பித்தவரை விசாரிக்கவும்" என எழுதியது அவதூருனது எனத் தீர்க்கப்பட்டது. இது ஐரிஷ் (Irish) நீதிமன்றத் தீர்ப்பு என்றபடியால் ஆங்கில அல்லது இலங்கை நீதி ம ன் றங்களைக் கட்டுப்படுத்தாது என்பது கவனிக்கத் தக்கது.
எனவே ' பிறப்பித்தவரை விசாரிக்கவும் " என்ற கூற்றின் சட்ட முறையான பொருள் கோடல் அவதூறைப் பொறுத்தவரை இன்ன மும் ஓர் இயற்பாடாகவே உள்ளது. பொதுமக்கள் பார்வையில் அவர் கவி ஒரே ஒரு வெளிப்படையான கருத்தினையே கொண்டு இருப்பார்கள். எனவே இக் கூற்றினைப் பயன்படுத்தும்போது பொது விதிமுறையான தற்றுணிபின்படியே பயன்படுத்தல் முறையானதாகும்.
செயல்முறைப் பிரயோகம் :
காசோலைக்குப் பணம் தராதபோது அதற்கு நியாயமான கார னம் எதனையும் சுட்டிக்காட்டுதலே சாலச் சிறந்த செயற்பாடு ஆகும். விடை கொடுக்கும்போது அதிக கவனம் செலுத்தவேண்டும். தவறு ஏதும் நடந்தால் பெறுபவன் ( Payee ) மனதில் ஏற்படும் தவருன அபிப்பிராயங்களை நீக்க முயலுதல் வேண்டும். வங்கியின் சிறு தவறி ளுல் இப்படி ஏற்பட்டுவிட்டது என்று சுட்டிக்காட்டி, வாடிக்கையாள ரின் பிழை அங்கு இல்லை எனக் குறிப்பிடுதல் வேண்டும். இதற்காக ஒரு மன்னிப்புக் கடிதம் விளக்கத்துடன் உடனே எழுதப்பட வேண்டும். இவ்வாறு செய்வதினுல் எமது வாடிக்கையாளரின் கோபத் தைப் போக்கடிக்க முடியும்,
தவறு நடந்தபின் காரணம் கூறிக்கொண்டு இருப்பது மடமை யாகும். வங்கி விட்ட தவறில் தான் இலாபம் பெற வாடிக்கையாளன் தீர்மானித்திருந்தால் அன்றி இவ்வாறு மன்னிப்புக்கோருவதனுல் நிவா ரணம் பெற முடியும். w
(இ) ஒரு காசோலையின் உண்மையான உரித்தாளிக்கான
பொறுப்புக்கள்: எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 59க்கு அமைய ஒரு காசோலையின் கொடுப்பனவானது அதனைக் கொண்டிருப்பவனுக்கு " நம்பிக்கையிலும், அதனைக் கொண்டிருப்பவரின் உரித்தின் குறைபற்றியும் அறியாது செய்யப்பட்டு இருப்பின், அக் காசோலைக்கு உரியமுறையில் பணம் வழங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும். ஒரு காசோலைக்குஉரிமை இல்லாத ஒருவருக்குப் பணம் கொடுப்பனவு செய்யப்பட்டு இருக்கு மாயின் பொதுச் சட்ட விதிக்கு அமைய வங்கி உண்மையான உரித் தாளிக்கு நிலைமாறலுக்காகப் பொறுப்பானியாகவேண்டி ஏற்படும்.

---- {!l --س-
ஒரு காசோலையைச் சமர்ப்பிப்பவன் உண்மையான உரித்தாளியாக இருப்பானே என அறிந்துகொள்வது வங்கியைப் பொறுத்தவரையில் ஒரு கஷ்டமான செயலாகும். எப்படியாயினும் முடிந்தளவு அவதான மெடுத்து இவ்வாறு நிகழ்ந்துவிடாது இருப்பதற்கு வங்கி முயலுதல் வேண்டும். இவ்வாறு நிலைமாறல் நடந்தாலும் வங்கிக்குச் சில பாது காப்புக்கள் உண்டு. ஆனல் அந்தப் பாதுகாப்புக்களை வங்கி நாடுவதா யின் அது சில முற்தேவைப்பாடுகளை நிறைவுசெய்து இருத்தல் வேண்டும்.
எனவே சுருங்கக் கூறின் நிலைமாறல் ஏற்படாது இருக்க வங்கி முடிந்தளவு பாதுகாப்பு எடுத்தல் அவசியமானதாகும்,
பணம் செலுத்தும் வங்கியாளருக்கான பாதுகாப்புகள் (Protection for The Paying Banker)
(அ) காலக்கிரமத்தில் கொடுப்பனவு செய்தல் அல்லது நெறிமுறைக்
Glasm6ủusơTa (Payment in due course): (மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 59இனை இங்கு பார்க்க வேண்டும்.)
ஒர் உண்டியலின் முதிர்வில் அல்லது முதிர்வின்பின் அதனைக் "கொண்டிருப்பவன்" ஒருவனுக்கு நன்னம்பிக்கையிலும், அவருக்கு உள்ள உரித்தின் குறைபற்றி அறியாதும், கொடுப்பவுை வங்கியினுல் செய்யப்பட்டு இருக்குமாயின், காலக்கிரமத்தில் அல்லது நெறி முறையில் கொடுப்பனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும். இதனுல் அக் காசோலையோடு தொடர்புடைய நபர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார் கள்.
எனவே பிரிவு 59ற்கு அமைய இவ்வாறு கொடுப்பனவு செய்யப் பட்டு இருந்தால் செலுத்தும் வங்கியாளர் பாதுகாக்கப்படுவார்.
(ஆ) மோசடியான அல்லது அங்கீகரிக்கப்படாத சாட்டுதலுக்கு எதிராக
செலுத்தும் வங்கியாளருக்கான பாதுகாப்பு: இதனை எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 60 விளக்கு கின்றது எனக் கூறலாம்.
ஒரு வங்கியாளர் திறந்த அல்லது குறுக்குக் கோடிட்ட காசோலை ஒன்றிற்கு அக் காசோலை மோசடியான அல்லது அங்கீகரிக்கப்படாத சாட்டுதல் கொண்டுள்ளபோதும், நன்னம்பிக்கையிலும், சாதாரண வங்கி கிரம அலுவல் முறைக்கும் அமையப் பணம் செலுத்தி இருந்தால், உண்மையான உரித்தாளிக்கு எதிராகப் பாதுகாப்புக் களைப் பெற்றுக்கொள்வார்.

Page 62
- 112 -
(i) scinatibia&onsist (in good faith):
காசோலையில் இடப்பட்ட சாட்டுதல் மோசடியானது என்று அறிந்து இருந்தும் கொடுப்பனவு செய்தால் அதனை நன்னம்பிக்கையில் செய்யப்பட்டது என்று கூறமுடியாது. ஆனல் கவனயீனமான கொடுப் பனவு}(a negligent payment) பாதுகாக்கப்பட்டுள்ளது.
a + b : Carpenter's Co. v. British Mutual Banking Co. (1938)
எனவே நன்னம்பிக்கையில் கொடுப்பனவு என்பது ஒரு நேர்மை யான செலுத்துகையையே கருதுகின்றது.
(ii) சாதாரண வங்கி கிரம அலுவல்முறையில்: (in the ordinary course of business)
தற்கால வங்கி நடைமுறைக்கு அமையவும், சாதாரன வங்கி அலுவல் நேரத்திலும் கொடுப்பனவு செய்யப்பட்டு இருந்தால் அதனை இவ்வாறு அழைக்கலாம். உதாரணமாக, ஒரு குறுக்குக் கோடிட்ட காசோலை ஒரு வங்கிக் கணக்கின் ஊடாகவே செலுத்தப்பட வேண்டும். அதுபோல ஒரு திறந்த காசோலை கருமபீடத்தின் ஊடாகப் பணமாக்கப் படலாம். ஆனல் உரிய முறையில் சாட்டுதல் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்.
வழக்கமாக காசோல்யைச் சமர்ப்பிக்காத ஒருவருக்கு, உதாரணமாக காரியாலய சேவகன் (office boy) ஒருவனுக்கு, ஒரு திறந்த காசோலை யின் கொடுப்பனவினைச் செய்து இருந்தால் அதுவும் குறிப்பாக ஒரு பெரிய தொகைகொண்ட காசோலைக்குப் பணம் கொடுப்பனவு செய்து இருந்தால் இதன சாதாரண வங்கி கிரம அலுவலுக்கு அமையப் பணம் வழங்கப்பட்டது எனக் கூறமுடியாது.
(இ) குறுக்குக் கோடிட்ட் காசோலைகளுக்குப் பாதுகாப்பு:
குறுக்குக் கோடிட்ட காசோல்கள் ஆயின் அவற்றிற்குப் பணம் செலுத்தப்படும்போது அவை தொடர்பான பாதுகாப்பு மாற்றுண் யல் கட்டளைச் சட்டம் பிரிவு 79 (2) இலும், பிரிவு 80 இலும் கூறப் பட்ட நிபந்தனைகளுக்கு அமையக் கிடைக்கின்றது.
மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 79 (2) இல் உள்ள நிபந் தண்களுக்கு அமைய ஒரு காசோலையில் குறுக்குக் கோடிடல் தெளிவாகத் தெரியாத போதும் அல்லது குறுக்குக் கோடுகள் அழிக்கப்பட்டு இருக் கும் போதும் அல்லது இதில் ஏதாவது புகுத்தல்கள். அல்லது திருத்தங் கள், செய்து அவை புலப்படாது இருக்கும்போதும், அக்காசோலைக்குக் கொடுப்பனவானது நன்னம்பிக்கையுடனும், கவனயீனம் இன்றியும் செய்யப்பட்டு இருந்தால், செலுத்தும் வங்கி பாதுகாப்பிளைப் பெற்றுக் கொள்ளும்.
மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 80ற்கு அமைய ஒரு செலுத்தும் வங்கி ஒரு காசோலைக்கு நன்னம்பிக்கையுடனும், கவனயீன மின்றியும், அங்குள்ள குறுக்குக் கோடிடலுக்கு அமையப் பணம்

- 113 -
செலுத்தி இருந்தால், உண்மையான உரித்தாளிக்கான பொறுப்புக் களுக்கு எதிராக பாதுகாப்புப் பெறுகின்றது.
இவ்வாறு பணம் செலுத்தி இருந்தால், உண்மையான உரித் தாளிக்குப் பணம் செலுத்திய அதே நிலையிலேயே வங்கியாளன் ஒருவன் வைக்கப்படுவான். எனவே வாடிக்கையாளரின் கணக்கினை இந்தக் காசோலைத் தொகையைக் கொண்டு பற்று வைக்க முடியும். இந்தப் பிரிவின்கீழ், வேறு ஏதாவது கருவூலமாற்றங்கள் காணப்படின் பாது காப்பு வழங்கப்படமாட்டாது. அப்படி வேறு மாற்றங்கள் இருந் தால் அக்காசோலை செல்லுபடியற்றதாகும் (பிரிவு 64 (1) இனைப் பார்க் கவும்.)
மேலும், நாம் மேலே கூறியபடி 79(2)ற்கு அமைய, குறுக்குக் கோடிடலில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கே பாதுகாப்புக் கிடைக்கின் pது. மேலும் அத்திருத்தம் கட்புலனுகாததாகவும் இருத்தல் வேண்டும்.
குறிப்பு:
இங்கிலாந்தில் காசோலைச் சட்டம் 1957 Cheques Act. (1957) பிரிவு 1 (1) ற்கு அமைய சாட்டுதல் செய்யப்படாததும், ஒழுங்கற்ற முறையில் சாட்டுதல் செய்யப்பட்டதுமான காசோலைகளுக்குப் பணம் வங்கியில் செலுத்தப்பட்டு இருந்தால் அதற்கான பாதுகாப்பு வழங்கப் படுகின்றது.
இதற்கு அமைய ஒரு வங்கியின் மீது வரையப்பட்ட காசோல் ஒன்றிற்குப் பணம் செலுத்தும் போது, அங்கு சாட்டுதல் செய்யப்படாத இடத்தோ அல்லது ஒழுங்கற்ற முறையில் சாட்டுதல் செய்யப்பட்டு இருக்கும் போதோ அக காசோலைக்கு நன்னம்பிக்கையுடனும், சாதாரண வங்கி கிரம அலுவல்முறையிலும் பணம் செலுத்தி இருந்தால், அங்கு நெறிமுறையில் பணம் கொடுப்பனவு செய்யப்பட்டுளளதாகக் கருதப் UOb.
மேலும் வங்கியாளர்கள் முழுதாக காசோலைகள் சட்டம் 1957 பிரிவு 1 இல் தங்கியிருக்கவில்லை. அத்துடன் 1957இல் The Committee of London Clearing Bankers -6) 6TG4ssiul 'll - so gif மானத்திற்கு அமைய பின்வரும் சாதனங்கள் அல்லது ஆவணங்கள் கொடுப்பனவு செய்யமுன் சாட்டுதல் செய்யப்படுவது அவசியமாக்கப் பட்டது.
eya) at T6627 - (அ) காசோலைகளை அல்லது மற்றும் கருவிகளைக் கருமபீடத்தில் காசாக மாற்றும்போது சாட்டுதல் செய்யப்படவேண்டும். இங்கு வாடிக்கை யாளர் தனது சொந்தக் காசோலையைக் காசாக்கும் போதும் சாட்டு தல் தேவையானதாகும். (ஆ) கட்டளைக் காசோலைகள் கைமாற்றப்படும்போது,
(இ) வாக்குறுதிப் பத்திரங்கள். (ஈ) பிரயாணிகள் காசோலைகள்
8

Page 63
அத்தியாயம் 16 சேகரிக்கும் வங்கியாளர் ( Collecting Banker )
ஒரு வங்கியைப் பொறுத்தவரை நாளாந்தம் எத்தனையோ காசோலை களும் பிறசாதனங்களும் சேகரிப்பிற்காகப் பெறப்படுகின்றன. ஒவ்வொரு காசோலையையும் அவை வரையப்பட்டுள்ள வங்கியைக்கொண்டு அவற் றிற்குத் தனித்தனியே சேகரிப்பிற்கு அனுப்புவது சிரமமான ஒரு காரிய மாகும். இதற்காகத் தீர்வையகங்கள் உருவாக்கப்பட்டு அவற்றிற்கு ஊடாக இவை அந்தந்த வங்கிகளுக்கு அனுப்பப்படுகின்றன. இது தனிப்பட்ட, ஒரு வங்கியின் வேலைப்பழுவினைக் குறைக்கின்றது.
வங்கியினல் சேகரிக்கப்படும் காசோலைகளை 3 வகையாகப் பிரித்துக் கூறலாம் :
1. சேகரிக்கும் வங்கியின் அதே கிளைமீதே வரையப்பட்ட காசோ
லைகள்.
2. சேகரிக்கும் வங்கியின் வேறு கிளைகள் மீது வரையப்பட்ட
காசோலைகள்.
3. வேறு வங்கிகள்மீது வரையப்பட்ட காசோலைகள்,
மேற்குறிப்பட்டவகைக் காசோலைகள் யாவும் ஒரு சேகரிக்கும் வங் கியினுல் தனது வாடிக்கையாளருக்குச் சேகரித்துக் கொடுக்கப்படுகின் றன. இதனுல் சேகரிக்கும் வங்கிக்கு எனச் சில கடமைகள் உருவாகின் றன. இவ்வாருண் சேகரிக்கும் வங்கியின் கடமைகள் ஆவன:
1. சரியான தீர்வை ஊடகத்தைத் தேர்ந்து எடுத்தல் 2. வழங்கப்பட்ட குறித்த காலத்துள் காசோலையைக் கொடுப்பன
விற்குச் சமர்ப்பித்தல். 3. காசோலையின் கொடுப்பனவு மறுக்கப்பட்ட இடத்து அதற்
குரிய அறிவித்தலை வழங்கல். 1. சரியான தீர்வை ஊடகத்தைச் தேர்ந்து எடுத்தல்
காசோலைகளைச் சேகரித்துக் கொடுப்பதனப் பொறுத்தவரையில் வங்கிகள் தமது வாடிக்கையாளரின் முகவராகச் செயற்படுகின்றன. எனவே அங்கு கவனமும் நுட்பமும் இருக்கவேண்டும் என்ற கடப் பாடு உருவாகின்றது. எனவே உகந்த தீர்வை ஊடகத்தைத் தேர்ந்து

سس۔ 5! 1 ۔ سس۔
எடுத்து, அதன்மூலம் மிக விரைவில் காசோலைகளைத் தீர்வையாக்கி அவரது கணக்கில் வரவுவைக்கவேண்டும். இவ்வாறு செய்யத் தவறுகின்ற போது நட்டங்களை ஏற்கவேண்டி ஏற்படலாம்.
D -- tib : Formam v Bank of England (1902)
இங்கு வாடிக்கையாளரினல் சேகரிப்பிற்கு என 8500 காசோலை ஒன்று இடப்பட்டது. இக் காசோலை இடப்பட்டபோது வாடிக்கை யாளரின் கணக்கில் கி 103 மட்டுமே மீதியாக இருந்தது. வாடிக்கை யாளர் இக் காசோலையை எதிர்பார்த்து E239ற்கு ஒரு காசோ லையை எழுதி வழங்கிஞர். இக் காசோலைக்குப் போதிய பணம் இல்லை என்ற காரணத்தினுல் கொடுப்பனவு மறுக்கப்பட்டது. வாடிக்கையாளர் காசோலைச் சேகரிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் விளைந்த நட்டத்துக்கும், காசோலைக்குக் கொடுப்பனவு செய்யப்படா மைக்கும் ஒப்பந்த மீறுகைக்குமாக வழக்கிட்டார்.
இங்கு வாடிக்கையாளர் இட்ட காசோலையை நகர தீர்வைக்கு (Town Clearing) அனுப்புவதற்குப் பதிலாக நாட்டுப்புற தீர்வையகத் திற்கு (Country Clearing) வங்கியினுல் அனுப்பப்பட்டமையால் காசோ லையின் தீர்வையைப் பெறுவதில் தாமதமேற்பட்டது. வங்கியின் தவறிஞல் உரிய காலப்பகுதியில் தீர்வையாக்கி வரவு வைக்கப்படவில்லை எனக் கூறப்பட்டு வாடிக்கையாளருக்கு & 75 நட்டம் செலுத்தப்பட வேண்டுமெனத் தீர்க்கப்பட்டது.
2. வழங்கப்பட்ட குறித்த காலத்துள் காசோலையைக் கொடுப்பனவிற்குச்
சமர்ப்பித்தல்:
முன்னர் குறிப்பிட்டபடி ஒரு வங்கியாளரிடம் காசோலையைக் கையளித்தவிடத்து, அதனை உரிய கவனமெடுத்துக் கொடுப்பனவிற் குச் சமர்ப்பித்தல்வேண்டும். தன்னிடம் கொடுக்கப்பட்ட காசோ லையை மறந்துவிட்டு பின்னர் அதுபற்றி யோசித்துவிட்டால் இங்கு உரிய கவனம் எடுக்கப்பட்டது எனக் கூறமுடியாது. (இவ்வாறு நடப்பது ஒர் அரிதான செயற்பாடாகவே இருக்கும்). இங்கு வாடிக்கையாளருக்கு ஏற்படும் நட்டத்தினை வங்கியே பொறுப்பேற்கவேண்டி ஏற்படலாம். உதாரணமாக ஒரு காசோலையை வரைந்தவர், வழக்குத் தீர்ப்புப் பெறப்பட்ட வகையற்றவணுக மாறிவிடல் (Adjudicated bankrupt). இவ்வாறு தாமதிப்பதினுல் வங்கி சில சமயங்களில் வகையறைவுச் செயலினுல் சில பங்கு இலாபங்களை மட்டுமே பெறக்கூடியதாக இருக்கும். முழுத்தொகையும் பெறப்படமுடியாதுபோகலாம். எனவே தாமதம் கார ணமாக ஏற்பட்ட நட்டத்தினை வாடிக்கையாளருக்கு வங்கி சிலசமயங் களில் வழங்கவேண்டி ஏற்படும்.

Page 64
-ســ 116 س-سد
இங்கு வழங்கப்பட்ட குறித்த காலம் எவ்வளவு என்பது நியதிச் சட்டத்தினல் குறிப்பிடப்படுவதில்லை. இது நாளாந்த நடைமுறை அனுபவங்களைக்கொண்டு தீர்மானிக்கப்பட்டதாகும். சேகரிப்பிற்கு எனப் பெறப்பட்ட அன்றே கொடுப்பனவிற்கு அனுப்பவேண்டும் என்ற கட் டாய விதி இல்லாதபோதும் அடுத்த தபால் நேரம் வரையோ, அடுத்த நாள் வரையோ பொறுக்கலாம். எனினும் முடிந்தளவு விரைவில் அனுப்ப வேண்டும் என்பதே நடைமுறை விதியாகும்.
3. காசோலைக்குக் கொடுப்பனவு மறுக்கப்பட்ட இடத்து
அதற்குரிய அறிவித்தலை வழங்குதல் : காசோலைகள் சேகரிப்பிற்கு எனக் கொடுக்கப்பட்டபோது அவை கொடுப்பனவு மறுக்கப்பட்ட உடனே தகுந்த அறிவித்தல் உடனடி யாகக் குறித்த வாடிக்கையாளருக்குக் கொடுக்கப்படுதல் வேண்டும்.
குறிப்பிட்ட, பணம் செலுத்தப்படாத சாதனம் வங்கிக்குக் கிடைத்த அதே தினமே எழுத்து மூலமான அறிவித்தலை வாடிக்கை யாளருக்குக் கொடுத்தல் வேண்டும். இதனைத் தொடர்ந்து வாடிக்கை யாளர் தேவை ஏற்படின் தனக்கு முன் உள்ள கட்சிக்காரருக்கு இந்த அறிவித்தலை வழங்குவார். இதனுல் அவர் தன் உரிமையை அவர்களுக்கு எதிராக நிலைநாட்டிக்கொள்ள முடியும். இவ்வாறு மறுக்கப்பட்டமை பற்றி அறிவித்தலை உரிய முறையில் கொடுக்காதபோது மற்றக் கட்சிக் காரர்கள் தமது பொறுப்பில் இருந்து நீங்கி விடுவார்கள். எனவே தான் அறிவித்தல் முக்கியம் என நாம் கருதுகின்ருேம்.
சில சமயம் காசோலைகள் ** பிறப்பித்தவரை விசாரிக்கவும்-மீளச் afuerill disajib '' (Refcr to Drawer - Please represent) -96.60s * பிற்திகதி இடப்பட்டது " போன்ற குறிப்புகளுடன் கொடுப்பனவு மறுக்கப்பட்டுத் திருப்பப்படுவதுண்டு. இந்த நிலைகளில் வங்கி வாடிக்கையாளருக்குக் காசோலையைத் திருப்பி அனுப்பாது செலுத்தும் வங்கிக்கு மீள அதனைச் சமர்ப்பிப்பதுண்டு. ஆனல் எப்படியாயினும் முதலில் மறுக்கப்பட்டமைபற்றிய அறிவித்தல் வாடிக்கையாளருக்குக் கொடுக்கப்படுதல்வேண்டும்.
மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்திற்கு அமைய மறுத்தமைக்கான அறிவித்தல் வழங்கப்படுதல் அவசியமானதாகும். தவறும்போது நட்டங் கள் ஏற்படலாம். எனவேதான் மறுத்தமை பற்றிய அறிவித்தல் அவசியமானதாகும்.
சேகரிக்கும் வங்கிக்கு ஏற்படக்கூடிய பொறுப்புக்கள் : (Possible Liability of a Collecting Banker)
சேகரிக்கும் வங்கி ஒன்று சேகரிப்புத் தொடர்பாக, தனது வாடிக்கை யாளருக்கும் காசோலையின் உண்மையான உரித்தாளிக்கும் பொறுப் பாக வேண்டி ஏற்படும்.

- 117 -
1. தனது வாடிக்கையாளருக்குப் பொறுப்பாதல் :
வாடிக்கையாளரின் காசோலைகள் மற்றும் மாற்றுண்டியல்களைச் சேகரிக்கும்போது வங்கி அவரது முகவராகவே இயங்குகின்றது.
மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 45இல் கொடுப்பனவிற்கு என எவ்வாறு ஒரு உண்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என விளக்க மாகக் கூறப்பட்டுள்ளது. இதனைவிடக் கொடுப்பனவிற்கு எனச் சமர்ப் பிப்பதில் சில ஸ்தாபிக்கப்பட்ட நடைமுறைகளும் உண்டு. இவ் இரண்டு முறைகளுக்கும் அமைய ஒரு கருவியைக் கொடுப்பனவிற்குச் சமர்ப்பிக்க வங்கி தவறுகின்றபோது தனது வாடிக்கையாளருக்கு ஒப்பந்த மீறுகைக்காகப் பொறுப்பாக வேண்டி ஏற்படும்.
இதுபோல மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 48இல் மறுத் தமை பற்றிய அறிவித்தல் பற்றியும், இவ்வாறு அறிவித்தல் கொடுக் காத போது ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இது போல பிரிவு 49இல் மறுத்தமைபற்றிய அறிவித்தலுக்கான விதிகள் SRa) sapulul Gaitatay. (Rules as to notice of dishonour.)
இவ்வாறு கூறப்பட்டவற்றைச் செய்யத் தவறும்போது ஒரு வங்கி தனது வாடிக்கையாளரின் முகவர் என்ற முறையில் அவருக்குப் பொறுப்பாக வேண்டி ஏற்படும்.
2. காசோலையின் உண்மையான உரித்தாளிக்கான பொறுப்புக்கள் :
ஒரு காசோலையின் உண்மையான உரித்தாளியாக ஒருவர் இருப்பார். சில சமயங்களில் வங்கி அந்தக் காசோலைக்கு உரிமையே இல்லாத ஒருவருக்கு அதனைச் சேகரித்துக் கொடுத்து விடுவதும் உண்டு. இவ் வாறு செய்யப்பட்டால் வங்கியானது அந்தக் குறிப்பிட்ட உண்மையான உரித்தாளிக்கு நிலைமாறல் தீங்கிற்குப் (Tort of Conversion) பொறுப் பாக வேண்டி ஏற்படும்.
சேகரிக்கும் வங்கிக்கான நியதிச்சட்ட பாதுகாப்புக்கள் : (Statutory Protection for Collecting Bankers)
சேகரிக்கும் வங்கிக்கான பாதுகாப்புக்கள் எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 82இன் கீழும், இங்கிலாந்தில் காசோலைகள் கட்டளைச் சட்டம் 1957 பிரிவு 4 இன் கீழும் வழங்கப்பட்டுள்ளன.
பிரிவு 82 () பின்வருமாறு கூறுகின்றது :
ஒரு வங்கி நன்னம்பிக்கையுடனும் கவனயீனம் இன்றியும் காசோலை ஒன்றின் கொடுப்பனவினை, அது பொதுவாகக் கோடிடப்பட்ட போதோ அல்லது வங்கிக்கு என விசேடமாகக் குறுக்குக் கோடிட்ட போதோ, அந்த காசோலைக்கு அந்த வாடிக்கையாளர் உரிமையற்றவ

Page 65
--سس۔ 118 --سم۔
ராக இருந்தாலோ அல்லது பிழையான உரித்தினைக் கொண்டு இருந்தாலோ வெறுமனே அக்காசோலையின் கொடுப்பனவினைத் தனது வாடிக்கையாளருக்குப் பெற்றுக் கொண்டது என்ற ரீதியில் உண்மை யான உரித்தாளிக்கு எந்தவிதப் பொறுப்பிற்கும் வங்கி ஆளாக மாட்டாது.
இங்கிலாந்தில் காசோலைகள் கட்டளைச் சட்டம் 1957 பிரிவு 4 இன் கீழ் தற்போது பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. பிரிவு 4 பின்வரு மாறு கூறுகின்றது ;
* வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒரு கருவி மீது உரிமை இல்லாத போதும் அல்லது தீங்கான உரிமையைக் கொண்டிருக்கின்ற போதும் நன்னம்பிக்கையுடனும் கவனயீனம் இன்றியும், (அ) இப்பிரிவு பிரயோகிக்கக் கூடிய கருவி ஒன்றின் கொடுப்பாைவை
வாடிக்கையாளருக்காகப் பெற்றுள்ளபோதும், (ஆ) வாடிக்கையாளரின் கணக்கில் அந்தக் கருவியின் தொகையை
முன்னரே வரவு வைத்திருக்கும் போதும்;
வங்கியானது வெறுமனே கொடுப்பனவினைப் பெற்றுக் கொண்டது என்ற ரீதியில், ஏற்படுகின்ற பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்ட தாகக் கருதப்படும்.
மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 82 இன் கீழ் பாதுகாப்பு பெறப்பட வேண்டுமாயின் பின்வரும் 3 தேவைப்பாடுகளும் விளக்க மாகப் பொருள்படுத்தி விளக்கம் கொடுக்க வேண்டும்.
1. வங்கியாளர் கட்டாயமாகக் கொடுப்பனவினைப் பெறுதல் வேண்டும்.
(Must receive payment)
2. ஒரு வாடிக்கையாளருக்காக கொடுப்பனவு பெறப்பட்டிருத்தல்
Galator Gib. (for a Customer)
3. நன்னம்பிக்கையுடனும் கவனயீனமின்றியும் கொடுப்பனவு பெறப் uligodsói Gagar(Sub (in good faith and without negligence).
இதனை மேலும் விளக்கமாக ஆராய்வோம்:
1. கொடுப்பனவினைப் பெறுதல் (Receiving Payment:
ஒரு காசோலையின் மூலம் கிடைக்கும் தொகையினை வங்கி ஒன்று தனது வாடிக்கையாளருக்காக ஒரு முகவராக இயங்கிப் பெறுதல் வேண்டும்.

- 119 -
கொடுப்பனவினைப் Gugsai) (receive payment) grairus sity வரும் வழக்கில் ஒரு முக்கிய சர்ச்சைக்குள்ளானது
Capital and Counties Bank Ltd. v Gordon (1903 676ir so வழக்கில் இப்பிரச்சினை எழுந்தது.
ஒரு காசோலையின் கொடுப்பனவைத் தீர்வையகத்தின் ஊடாகச் செலுத்தும் வங்கியிடம்இருந்து பெறமுன்பு வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைத்தால் அதனை வாடிக்கையாளருக்காகப் பெறப்பட்டது என்று கூறலாமா என்ற பிரச்சினை தோன்றுவது இயல்பானதேயாகும்" ே வழக்கில் Gordon என்பவர் சவப்பெட்டி உற்பத்தியாளர் ஆவார். இவர் ஒரு எழுதுவினைஞனை வேலைக்கு அமர்த்தி இருந்தார். இவன் Gorden னுடைய தொடர்பாளர்களிடம் இருந்து பெறும் காசோ லைகளைக் களவாகப்பெற்று அவற்றைப் பிரதிவாதி வங்கியில்Varner & Co. என்ற பெயரில் ஆரம்பித்த கணக்கில் வரவு வைத்தான். இங்கு காசோலைகள் வைப்பிலிட்ட உடனே வழமையான முறைப்படி இந்த எழுதுவினைஞன் அவற்றிற்கு எதிராகக் காசினைப் பெற்றுக்கொள்வது வழக்கமாகும். Gorden மோசடியைக் கண்டு பிடித்ததும் வங்கிக்கு எதிராக வழக்கிட, வங்கி தனது பாதுகாப்பிற்கு பிரிவு 82ஐ நாடியது.
வங்கி கீழ் நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற போதும் பிரபுக்கள் சபை வங்கிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியது. மக்நோட்டன் பிரபு தமது தீர்ப்பில் பின்வருமாறு கூறினர் :
* பிரிவு 82 எப்போதும் ஒரு வங்கி தனது வாடிக்கையாளருக்கு எனக் கொடுப்பனவினைப் பெறும்போதே பிரயோகிக்கப்படலாம். அதா வது வங்கி ஒரு முகவராக இயங்க வேண்டும். ஆனல் இங்கு காசோலை யின் பெறுமதியை ஏற்கனவே வங்கி வாடிக்கையாளருக்குக் கொடுத்து விட்டு தான் ஒரு பெறுமதிக்காக கொண்டிருப்போன் என்ற ரீதியில் தான் இந்தக் கொடுப்பனவினைச் செலுத்தும் வங்கியிடம் இருந்து பெற் றது. எனவே இங்கு வங்கி முகவராக இயங்கவில்லை" எனக் கூறி வங் கிக்கு எதிராகவே தமது தீர்ப்பினை வழங்கினர்.
இந்தத் தீர்ப்பின் மூலம் வங்கிகள் வட்டாரத்தில் ஒரு பீதி ஏற் படத் தொடங்கியது. இதனல் நியதிச்சட்டங்கள் மூலம் ஒரு பாது காப்புக் கொடுக்கவேண்டிய நிலைமை உருவாகியது. எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 82 (2) இன் வாயிலாக இந்தப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Page 66
س۔ 120 سست۔
இதற்கு அமைய, காசோலை ஒன்றின் கொடுப்பணவினைப் பெற முன்னர், வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைத்தாலும் பிரிவு 82இன் கீழ் ஒரு வங்கி பாதுகாப்பினைப் பெற்றுக்கொள்ள முடியும். (எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் (1927) பிரிவு52(2)இனைப் பார்க்கவும்.)
(2) (5 Surf gifnsurrónico isstres for a customer):
நாம் முன்னர் பார்த்தது போல ** வாடிக்கையாளர் ** என்ற சொல்லுக்கு ஒரு நியதிச் சட்ட வரைவிலக்கணம் கிடையாது. நீதிமன்றத் திற்கு வந்த சில வழக்குகளின் தீர்ப்பினைப் பார்ப்பதின் மூலமே இதற்கு algoposadissoorib GasnGáis (plguyub. Great Western Railway Co. Ltd." v London and County Banking Co. Ltd. (1901) Grairsp apiásá) நாம் முன்னர் பார்த்தது போல ஏதாவது ஒருவகைக் கணக்கு ஒன் றினை வங்கியுடன் கொண்டு இருப்பவரே வாடிக்கையாளர் எனப் படுவார்.
seepai) Woods v Martins Bank Ltd. and Another (1958) 6Tairp வழக்கில் வங்கி முகாமையாளர் கொடுத்த அறிவுரைக்கு அமைய வாதி யானவர் தனது பணத்தைச் சில முதவிடுகளில் இடுமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். இவ்வாறு முதலீடு செய்தமை வங்கியுடன் ஒரு கணக்கினை அவர் திறப்பதற்கு 3 கிழமைக்கு முன்னரே நடந்தது. இங்கு வாடிக்கையாளரின் அறிவுறுத்தலை ஏற்று வங்கி முதலிட்ட திகதி யில் இருந்தே வங்கி - வாடிக்கையாளர் உறவு முறை ஆரம்பித்து விட்டது என நீதிமன்றம் தீர்த்தது.
எனவே வாடிக்கையாளர் என நாம் இங்கு குறிப்பிடுவது வங்கி யுடன் தனது பெயரில் கணக்கு ஒன்றினைத் திறப்பதற்காக ஒப்பந்தம் செய்துகொண்ட ஒரு நபரையே ஆகும். இவ்வாருன வாடிக்கையாளர் ஒருவருக்கே நாம் சேகரிப்பினைச் செய்தோம் என ஒரு வங்கி கூறும்போது பிரிவு 82இன்கீழ் பாதுகாப்பினை நாடமுடியும்.
(3) நன்னம்பிக்கையுடனும் கவனயீனமின்றியும்
(un) bfirst Tibaldssonsulsi (in good faith) எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 92 இது பற்றி விளக்குகின்றது. நன்னம்பிக்கையில் நடந்தது எனக் கூறும்போது அது நேர்மையாகச் செய்யப்படுவதைக் குறிப்பிடுகின்றதே தவிர, அது கவன வீனமின்றிச் செய்யப்பட்டதோ இல்லையோ என்பது தேவையற்றதாகும்.
இங்கு நேர்மையே முக்கியமான தேவைப்பாடாகும். தற்காலத்து வங்கி முறைகளில் வங்கியானது நேர்மையற்ற பரிவர்த்தனையைச் செய்கின்றது என குற்றம்சாட்டப்படுவது மிகவும் அரிதானதாகும்.

اس ۔ 121 سس۔
() assau TufsTid sõrg ( Without Negligence); ;
எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 82 ()ற்கு அமையப் பாதுகாப்புப் பெறுவதாயின் சேகரிக்கும் வங்கி ஒன்று கவனயீனம் இன்றி இயங்குதல்வேண்டும். "கவனயீனம்" என்பதற்குச் சட்டரீதி யான வியாக்கியானம் எதுவும் மாற்றுண்டியல் கட்டளைச்சட்டத்தில் கிடையாது. ஒவ்வொரு நிலையிலும் எவ்வளவுதூரம் கவனம் எடுக்க வேண்டும் என்பதனை முற்கூட்டியே தீர்மானிக்க முடியாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் அலசி ஆராய்வதன் மூலமே எவ்வளவுதூரம் கவனம் எடுத்திருக்கவேண்டும், கவனத்தின் அளவு எவ்வளவு என்பதனைத் தீர்மா னிக்க முடியும். ஒரே விதியைக்கொண்டு இதன் அளவை எல்லாச் சந்தர்ப்பத்திலும் தீர்மானிக்கமுடியாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வளவு கவனம் எடுத்திருக்கவேண்டும். அந்த அளவு கவனம் அங்கு எடுக்கப்படவில்லை. எனவே அது கவனயீனம் எனத் தீர்மானிக்கப் t. Ott,
வங்கியாளர் கவனயீன குற்றச்சாட்டுக்கு ஆளாகும் சந்தர்ப்பங்கள் :
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கவனயீனம் என்பது ஒவ்வொரு அர்த்தத்தில் காணப்படும் . ஒவ்வொரு சொந்த நிகழ்வையும் கொண்டே இதனைத் தீர்மானிக்கலாம்.
எதிர்வாதியிஞல் எதிர்பார்க்கப்படாது வாதிக்கு எதிராகச் சேதத் தில் முடிவடையும் ஒரு சட்டமுறையான கடமை மீறுதல் கவனயீனத் தீங்கு ஆகும். எனவே கவனயீனத் தீங்கின் அடிப்படைத் தேவைகள் பின்வருமாறு :
1. கவனமெடுக்கவேண்டும் என்ற சட்டமுறையான கடமை
அக்கடமை மீறப்பட்டிருத்தல். .ே அம் மீறுதலால் விளைந்த சேதமும் சேதத்தால் ஏற்பட்ட நட்
டங்களும்.
வங்கியாளர் கவனயீனமாக நடந்துகொண்டாரா என்பது ஒவ் வொரு விடயத்தின் நிகழ்வுகளிலுமிருந்து தீர்மானிக்கப்படும். கவன யீனம் என்பது தற்பொழுது கவனம் எடுக்கவேண்டிய அளவு என்ப துடன் சமமாக அமைந்துள்ளது.
குறிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒரு நியாயமான மனிதன் எதனைச் செய்திருப்பாஞே அதனைச் செய்யாது விடுதக்ை"கவனயீனமாகக் க்ருத லாம். பின்வரும் சந்தர்ப்பங்களில் வங்கியாளர் கவனயீனக் குற்றச்சர்ட் டுக்கு ஆளாக்கப்படலாம்.

Page 67
- 122 -
1. கணக்கொன்றினத் திறப்பதற்கு முன்னர் நியாயமான விசாரணை
களை மேற்கொள்ளாது விடுதல்:
gafig 2.5/Turabarudrs Ladbroke & Co. v Todd (1914) Grair so வழக்கினைக் குறிப்பிடலாம். இங்கு "பெறுபவன் கணக்கிற்கு’ எனக் குறுக்குக் கோடிடப்பட்ட காசோலை ஒன்று தபாலில் களவாடப்பட்டது. கள்வன், பெறுபவனின் பெயரை மோசடியாகச் சாட்டுதல் செய்து, பிரதிவாதி வங்கியிடம் தானே பெறுபவன் எனக்காட்டி அங்கு கணக்கு ஒன்றினை ஆரம்பித்தான். அவன் வேண்டுகோளுக்கு அமைய அடுத்த நாள் அக் காசோலை விசேட முறையில் தீர்வையாக்கப்பட்டது. அதன் பெறுமதியை எடுத்துக்கொண்டு அவன்தலை மறைவாகிவிட்டான். இங்கு அவனை வங்கியின் வாடிக்கையாளனுகக் கருதியபோதிலும், கணக் குத் திறப்பதில் உரிய நடைமுறைகள் கடைப்பிடிக்காதபடியால் கவன யீனத்துக்கு வங்கி ஆளாகியது. எனவே வங்கி மா.உ.க.சட்டம் பிரிவு 82 (1)இனத் தனது பாதுகாப்பிற்காக நாடமுடியவில்லை. இங்கு புதிய வாடிக்கையாளர் வங்கிக்குத் தெரியாதவராக இருக்கும்போது அவரைப்பற்றி வங்கி விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை. எனவே இது கவனயீனமாக அமைந்தது.
வாடிக்கையாளராக வர இருப்பவர் ஏற்கனவே வங்கிக்குத் தெரிந் தவராகவும், அவர் ஒரு தகுந்த மனிதர் என வங்கி அறிந்தும் இருக்கு மாயின் இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளத் தேவையில்லை. அல்லது வங்கிக்கு நன்கு தெரிந்த ஒருவர் அவரை அறிமுகம் செய்யும்போதும் விசாரனை அவசியமில்லை.
2. வாடிக்கையாளரின் தொழில் கொடுப்பவரின் பெயர் விபரத்தை அறியாது விடுதல், அல்லது மணம் முடித்த பெண் வாடிக்கையாள ராக இருப்பின் அவரின் கணவனின் தொழில் கொடுப்பவரின் விபரத்தை அறியாது விடுதல்:
a-artigranzrub: E. B. Savory & Co. v Lloyds Bank Ltd. (1932).
இந்த வழக்கில் வங்கி கவனயீனமாக நடந்தது என்றே தீர்ப்பளிக் கப்பட்ட்து. இவ்வழக்கின் விபரத்தை நாம் ஏற்கனவே வேறு ஓர் அத்தியாயத்தில் பார்த்தோம்.
gigs alpisair Sith 98kar Marfani & Co. Ltd. v Midland Bank (1968) என்ற வழக்கின் தீர்ப்போடு ஒப்பிட்டுப் பார்த்தல்வேண்டும். இந்த வழக்கின் விபரமும் முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு வங்கி கவனயீனமாக நடக்கவில்லை என்றே தீர்ப்பளிக்கப்பட்டது.

......سس۔ 123 ----
3, விசாரணை மேற்கொண்டபோது மத்தியஸ்தராக இருந்த நபர் வங்கிக்குத் தெரியாதவராக இருக்குமிடத்து, அந்த மத்தியஸ்தரை அல்லது விசாரணையை மேற்கொண்டு ஆராயாதுவிடுதல்:
a- + th: Guardians of St. Johns Hampstead v Barclays Bank
Ltd. (1923)
இங்கு வாடிக்கையாளர் ஒருவர் ஒரு பொய்யான பெயரில் கணக் கொன்றினை ஆரம்பித்தார். அவர் தனது உண்மையான பெயரை மத்தியஸ்தராகக் கொடுத்தார். திறமையான விசாரணை மேற் கொள்ளப்பட்டு அது எழுத்தில் பெறப்பட்டிருந்தபோதும் மேற் கொண்ட விசாரணையின் உண்மை நிலைபற்றி வங்கி ஆராயவில்லை என்பதனல் வங்கி கவனயீனத்துக்கு ஆளாகியது.
Disas augp&&&OT ABIT Lò Nu-Stilo Footwear Ltd. v Lloyds Bank Ltd. (1956) என்ற வழக்குடன் ஒப்புநோக்குதல் வேண்டும். இவ் வழக்கில் வங்கி விசாரணை மேற்கொண்ட முறைகளில் கவனயீனமாக நடக்க வில்லை எனத் தீர்க்கப்பட்டது.
4. வியாபாரப் பெயர்கள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய வியாபாரப் பதிவுச்
சான்றிதழை வங்கி ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆராய்தல் மிக அவசியமானதாகும். இதனையும் பதிவு இடாப்பினையும் ஆராய்ந்த பின்பே, வியாபாரப் பெயரில் கணக்குத் திறக்க அனுமதித்தல் வேண்டும்.
இங்கு வாடிக்கையாளர் தனது சொந்தப் பெயர் அல்லாத வியா பாரப் பெயரில் வியாபாரம் செய்யும் போதே இவ்வாறு ஆராய்தல் முக்கியமானதாகும், வியாபாரப் பெயரில் உள்ள காசோலைகள் அவரது சொந்தக்கணக்கில் இடப்படலாம். இதனுல் வங்கி கவனயீனத்துக்கு ஆளாக வேண்டி நேரிடும்.
d. -- it Smith and Baldwin v Barclays Bank Ltd. (1944).
இந்த வழக்கில் Argus Press நிறுவனத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய காசோலைகளை, Bray என்னும் ஒரு வாடிக்கையாளர் தனது கணக்கில் இடுவதை வங்கி முகாமையாளர் அவதானித்தார். இதுபற்றி விசாரித்தபோது Bray தானே அந்த நிறுவனத்தின் சொந்தக்கார்ன், என வங்கியை நம்பவைத்தான். ஒரு வியாபாரப் பதிவுச் சான்றிதழ்ைக் காட் டிஞன். அதில் அவனே தனிப்பட்ட உரிமையாளர் எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது.ஆனல் உண்மையில் அந்த நிறுவனத்தின்சொந்தக்காரர் Smith என்பவரும், Baldwin என்பவருமாவார்கள். ஆனல் இவ்ர்கள்.நிறுவனத்

Page 68
- 124 -
தைத் தமது பெயரில் பதிவுசெய்து இருக்கவில்லை. நிறுவனத்திற்குச் சேர வேண்டிய பல காசோலைகளை Bray தனது கணக்கில் இட்டுப் பெற்றுக் கொண்டார். பின்னர் Smith, Baldwin ஆகியோர் நிலைமாறலுக்காக வங்கியை வழக்கிட்டனர். ஆனல் வங்கி வியாபாரப் பதிவுச் சான் றிதழைப் பார்த்தது என்ற ரீதியில் வங்கி கவனயீனத்துக்கு ஆளாக மாட்டாது எனத் தீர்க்கப்பட்டது. ஆனல் உண்மையில் இந்தப் பதிவுச் சான்றிதழ் மோசடியாகவே பெறப்பட்டிருந்தது.
5. ஒரு கம்பனிக்குச் செலுத்தப்பட வேண்டிய காசோலைகளை, அக் கம்பனி
உத்தியோகத்தன் ஒருவனின் கணக்கில் வரவு வைத்தல்: இந்தத் தத்துவம் தனி மனிதனின் கம்பனி ஒன்றுக்குப் (a one man Company) СӘштсpiš4яub.
se. -- th: A. L. Underwood v Bank of Liverpool and
Martins Ltd. (1924)
இந்த வழக்கில், ஒரு கம்பனிக்குச் செலுத்தப்படவேண்டிய காசோலைகள் முகாமைப் பணிப்பாளரினல் சாட்டுதல் செய்யப்பட்டு அவரது தனிப்பட்ட கணக்கிற்கு வங்கியினல் பல வருடங்களாக ஏற்கப் பட்டு வந்தன. இறுதியில் கம்பனிப் பணத்தினைத் தவறுதலாக மாற்றி ஒரு பணிப்பாளரின் கணக்கில் வங்கி வரவு வைத்துவிட்டது என்ற ரீதியில் வங்கிக்கு எதிராக வழக்கிடப்பட்டது;
இவ்வாருன ஒரு நிலையில் வங்கி விசாரணையை மேற்கொண்டு இருந்திருக்கவேண்டும் என்றும், அவ்வாறு செய்யாது விட்டபடியால கவனயீனத்துக்கு ஆளாகிவிட்டது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
6. ஒரு முகவரின் அல்லது ஒரு வேலையாளின் தனிப்பட்ட கணக்கிற்கு, தனது முதல்வரின் அல்லது வேலைகொள்வோனின் கணக்கில் இருந்து தானே முகவர் என்ற ரீதியில் வரைந்தகாசோலைகளை வரவு வைத்தல்:
a -- th: Midland Bank Ltd. v. Reckitt (1933)
is agpi Sá) Lord Terrington Tsirtualif Sir Harold Reckitt 6tair பவருக்கு ஒருதத்துவகாரணுக இயங்கினர். இவருக்கு Midland Bankஇல் ஒரு மேலதிகப் பற்றுக் கணக்கு இருந்தது. இதற்குப் பணம் செலுத்தும் ஒழுங்கு முறை திருப்தியில்லாது இருந்தபடியால், மீளச் செலுத்துமாறு வற்புறுத்தப்பட்டது. Lord T. தான் தத்துவகாரணுக இயக்கும் கணக்கில் இருந்து காசோலைகளைத் தனது சார்பாகவே வரைந்து மேலதிகப்பற்றை மீளச் செலுத்தினர்.
இங்கு வங்கி தகுந்த விசாரணை மேற்கொள்ளவில்லை என்று காணப் பட்டுக் கவனயீனத்துக்கு ஆளாகியது.

- 125 -
ஒரு முகவரின் சார்பாக எழுதப்பட்ட காசோலையை அவர் முகவ ராகவே அதனைப் பெறுவதாகக் குறிப்பிடப்பட்டு இருக்கும் போதும், அவரின் தனிப்பட்ட கணக்கிற்குச் சேகரித்துக் கொடுத்தல்:
s. -- th: Marquess of Bute v Barclays Bank Ltd. (1954)
இங்கு வாதிகளான பண்ணையாளர்களின் முன்னுள் முகாமையாளர் திரு. McGaw என்பவர் சார்பாக மூன்று கொடுப்பனவு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. அவை பின்வருமாறு வரையப்பட்டு இருந்தன. '' Pay D. McGaw for Marquess of Bute'. Sol. McGaw sers பெயரில் Barclays வங்கியில் ஒரு கணக்கினை ஆரம்பித்தார். இந்தக் கனக்கில் இந்தக் காசோலைகள் சேகரித்துக் கொடுக்கப்பட்டன. தகுந்த விசாரணையை மேற்கொள்ளாது வங்கி சேகரித்துக் கொடுத்தமையிஞல் வங்கி பொறுப்பாகவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இது வங்கியின் கவனயீனத்தைக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டது.
8. ஒரு வரையறுக்கப்பட்ட கம்பனிக்குச் செலுத்தப்பட வேண்டிய காசோலை யைப் போதியளவு விசாரணையை மேற்கொள்ளாது இன்ஞெரு கம்பனி யின் கணக்கிற்குச் சேகரித்துக் கொடுத்தல்:
a + b : London and Montrose Ship Building and Repairing
Co. Ltd. v Barclays Bank Ltd. (1926)
சாதாரணமாக ஒரு கம்பனியின் காசோலையை இன்னெரு கம்பனிக்கு மாற்றுவது ஓர் அரிதான செயலாகும். ஆனல் காசோலையின் பெறுணி யாக இருக்கும் கம்பனி விசேடமாகச் சாட்டுதல் செய்தே மாற்றம் செய்யலாம். மற்றச் சந்தர்ப்பங்களில் எல்லாம் இவ்வாறு செய்தால் அது வங்கியின் கவனயீனத்தையே காட்டுகின்றது. .
9. தனது வாடிக்கையாளரின் கொள்ளல் கொடுத்தலுக்கு மேற்பட்ட
தொகைகொண்ட காசோலையை, அதுவும் குறிப்பாக மூன்றம் நபர்
காசோலைகளை, தகுந்த விசாரனை விளக்கம் இன்றி அவரது கணக் கிற்குச் சேகரித்துக் கொடுத்தல்:
so -- th: Nu-Stilo Footwear Ltd. v Lloyds Bank Ltd. (1956)
வாதி கம்பனியின் செயலாளர் ஊகப் பெயரில் கனக் கொன்றினை வங்கியுடன் ஆரம்பித்துக்கொண்டார். தனது சொந்தப் பெயரை விசாரணையை மேற்கொள்வதற்காக் கொடுத்து இருந்தார். பின்னர் தனது கம்பனியால் வரையப்பட்ட மூன்ரும் நபர்களுக்குச் செலுத்தப்படவேண்டிய காசோலைகளேத் தனது கணக்கில் வரவு வைக்கச்

Page 69
............ے۔ 126 سس۔
செலுத்தினுர், இவ்வாறன காசோலைகளின் மொத்தத் தொகை E 4855 வரையாகும். இவரது புதிய வியாபார நடவடிக்கை களுக்கு இவ்வாருண தொகை ஏற்றதல்ல என்றும் வங்கி இதுபற்றி விசாரணையை மேற்கொள்ளவில்லை என்றும் காணப்பட்டது. எனவே கவனயீனம் இங்கு நிறுவப்பட்டது.
10. ஒரு வாடிக்கையாளரின் கடந்த கால நடத்தையில் திருப்தியில்லாத இடத்து மூன்றம் நபர்களுக்கு உரிய காசோலைகளைத் தகுந்த விசா ரணை இன்றி அவரது கணக்கில் சேகரித்துக் கொடுத்தல் :
2 + b : Motor Traders Guarantee Corporation Ltd. v Midland
Bank Ltd. (1937)
இங்கு ஒரு வாடிக்கையாளர் இவ்வழக்கின் வாதியைத் தூண்டி கார் பரிவர்த்தனையில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் மீது "கைமா றத் தகாதது" எனக் குறுக்குக் கோடிடப்பட்ட காசோலையை வரையச் செய்தார். அதே வாடிக்கையாளர் அந்தக் கார் நிறுவனத்தின் சாட்டு தலை மோசடி செய்து தனது கணக்கில் அக் காசோலையைச் செலுத்தி ஞர். வங்கியில் காசோலையை ஏற்ற காசாளர் கேட்ட கேள்விகளுக்குத் தகுந்த விளக்கமும் அளித்து, அக் காசோலை தனக்குக் கைமாற்றப் பட்டுள்ளது என்றும் கூறினர்.
ஆளுல் இந்த வாடிக்கையாளரின் கணக்கில் கடந்த 8 மாத காலத் தில் மட்டும் 35 காசோலைகள் பணம் கொடுப்பனவு செய்யாது திருப்பப் பட்டிருந்தன. மேலும் அந்த வங்கியின் சட்டதிட்டங்களுக்கு அமைய வங்கி முகாமையாளரே இவ்வாருன காசோலைகளை ஏற்று வரவு வைப்ப தன் அங்கீகரிக்க வேண்டும் என்றும் காணப்பட்டது. எனவே இங்கு வங்கி கவனயீனமாக நடந்தது எனக் காணப்பட்டது.
11. “பெறுபவன் கணக்கிற்கு மட்டும் " எனக் குறிப்பிடப்பட்ட காசோலை களைப் போதியளவு விசாரணை, விளக்கம் இன்றி, அக் காசோலையின் வெறுபவர் தவிர்ந்த வேறு ஆட்களுக்குச் சேகரித்துக் கொடுத்தல்:
a + th: House Property Co. of London Ltd. and others v London County & Westminister Bank Ltd. (1915)
இங்கு இவ்வாருன சொற்ருெடராகிய "பெறுபவன் கணக்கிற்கு மட்டும்” எனக் காசோலை வரையப்பட்டிருப்பின் வங்கி முறையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும். விசாரணையின் கேள்விகளுக்குத் தகுந்த விளக்கம் அளிக்கப்படுமாயின் வங்கி மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புத் தேடமுடியும். இக் குறிப்பிட்ட வழக்கில் Rowlatt , என்பவரின் கருத்துப்படி கவனயீனம்நிலவியது எளக் காணப்

- 127 -
பட்டு, பிரிவு 82 இன் கீழ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று தீர்ப் பளிக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு பின்னர் வந்த வழக்கொன்றி லும் Scrutton L. J. என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதா as A. L. Underwood Ltd. v Bank of Liverpool and Martins (1924) என்பதே அந்த வழக்காகும்.
12. சூழ்நிலைக் காரணிகள் விசாரணையை வேண்டி நின்றும், மூன்ரும் நபருக்குரிய காசோலைகளைத் தகுந்த விசாரணைகள் இன்றிச் சேகரித்துக் கொடுத்தல் :
a + b : Baker v Barclays Bank Ltd. (1955)
ஒரு பங்குடமைக்குச் செலுத்தப்படவேண்டிய காசோலைகள் அதற்கு உரிமையே இல்லாத மூன்ரும் நபரின் கணக்கிற்குச் சேகரித்துக் கொடுக் கப்பட்டன. இங்கு வங்கி விசாரணை மேற்கொண்டபோது, பங்குடமை யில் சேரமுன் அதன் நிதி விவகாரங்களில் ஈடுபட்டு இருப்பதாக விளக் கம் வாடிக்கையாளரினுல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் விசாரணையை மேற்கொள்ளாது விட்டமை வங்கியின் கவனயீனத்தைக் காட்டுவதாக உள்ளது எனக் காணப்பட்டது.

Page 70
அத்தியாயம் 17
வைத்திருப்பவன், பெறுமதிவழி வைத்திருப்பவன், முறைப்படி வைத்திருப்பவன்
(Holder, Holder for value, Holder in due course)
soažegůualais (Holder):
இதற்குரிய வரைவிலக்கணம் மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 2இல் கூறப்பட்டுள்ளது.
ஒரு உண்டியலின் பெறுனர் ஆகவோ, சாட்டுதல் செய்யப்பட்டவ ஞகவோ இருந்து அவ்வுண்டியலைத் தனது உடமையில் கொண்டிருப்பவனை அல்லது காவிக்குரிய உண்டியலை வைத்திருப்பவனை, " வைத்திருப்பவன்" எனக் கூறலாம்.
எனவே உண்டியல் ஒன்றை தனது உடமையில் கொண்டிருக்காத வரை அவனை வைத்திருப்போன் எனக் கூற முடியாது. எப்படியாயினும் ஒவ்வொரு " வைத்திருப்போனும் " அந்த உண்டியலை தனது உடமை யிலேயே வைத்திருப்பான். ஆனல் தனது உடமையில் வைத்திருக்கின் முன் என்பதற்காக ஒருவனை நாம் வைத்திருப்பவன் எனக் கூற (pigtliftgif
உதாரணமாக ஒரு காசோலை "அ"விற்கு அல்லது அவர் கட்டளைக்குச் செலுத்தப்படத் தக்கதாக இருக்கும்போது, "அ"வினல் அது "ஆ" என்ப வருக்குச் சாட்டுதல் செய்யப்படாமல் மாற்றப்படுவதாகக் கொள்வோம்.
இங்கு "ஆ" காசோலையின் உடமை கொள்வோஞக இருப்பான். ஆணுல் நிச்சயமாக அவன்அதனை "வைத்திருப்போன்"ஆக மாறமாட்டான். ஏனெனில் "ஆ" வைத்திருப்போன் என்பதற்கு உரிய வரைவிலக்கணத் துள் அடங்கமாட்டான்.
வைத்திருப்போரின் உரிமைகளும் அதிகாரங்களும்:
(Holder's rights and powers)
பின்வருவன ஒரு காசோல்யை வைத்திருப்போனின் மிக முக்கிய
உரிமைகளும் அதிகாரங்களும் ஆகும்.

--۔۔ 129 -۔
1. விசேட சாட்டுதல் செய்தல்:
வெற்றுச் சாட்டுதல் செய்யப்பட்ட காசோலை ஒன்றினை வைத்திருப் போனக உள்ள ஒருவன் அதன் வெற்றுச் சாட்டுதலை விசேட சாட்டுத லாக மாற்ற முடியும் (சாட்டுதலை புறக்குறிப்பிடுதல் என்றும் கூறலாம்).
2. குறுக்குக் கோடிடல் :
ஒரு காசோலை குறுக்குக் கோடிடப்படாத இடத்து அதனை வைத் திருப்போன் பொதுவாகவோ அல்லது விசேடமாகவோ அதனைக் குறுக்குக் கோடிடலாம். காசோலை பொதுவாகக் கோடிடப்பட்டு இருந்தால் அதனை விசேடமாகக் குறுக்குக் கோடிடலாம். மேலும் பொதுவாகவோ அல்லது விசேடமாகவோ கோடிடப்பட்டு உள்ளபோது கொண்டிருப்போன் அல்லது வைத்திருப்போன் அங்கு "கைமாறத்தகாதது” என்ற சொற் களையும் சேர்க்கலாம்.
3. பிரதி காசோலை பெறுதல் :
ஒரு காசோலையானது அது தவணைகடக்க முன்னர் தொலைந்துவிட் டால், அதனை வைத்திருப்போனுக முன்னர் யார் இருந்தாரோ அவர் ஒரு பிரதிக் காசோலையை அதற்குப் பதிலாக அதே நிபந்தனைகளுக்கு அமைய அதனை வரைந்தவரிடமிருந்து பெற முடியும். ஆனல் இங்கு வரைந்தவர் பிணை அல்லது நட்டோத்தரவாதத்தைக் கோரலாம். வரைபவர் பிரதி காசோலை வழங்க மறுத்தால் அவரை அதற்காக வற்புறுத்தும் உரிமையைக் கொண்டிருப்பார். ஆணுல் சாட்டுதல் செய்த ஒருவரை பிரதி காசோலையிலும் புதிதாகச் சாட்டுதல் செய்து தரும்படி வற்புறுத்த முடியாது.
4. கைமாறுதல் (Negotiation) :
ஒரு காசோலையை வைத்திருப்பவன் அந்தக் காசோலையை இன் னுெருவருக்குக் கைமாற்ற முடியும். ஆளுல் மாற்றங்களைத் தவிர்க்கும் வாசகங்களோ அல்லது ஏதாவது மாற்றம் செய்தல் ஆகாது என்ற உள் நோக்கமோ அங்கு காணப்படுமாயின் இவ்வாறு கைமாறுதல் விதி விலக்காக அமையும். மேலும் ஒரு காசோலை வரையறுக்கப்பட்ட சாட்டுதல் செய்யப்பட்டு இருந்தாலும் மேலும் கைமாற்றம் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.
எப்படியாயினும் சாதாரணமாக ஒரு காசோலையை வைத்திருப்பவன் அதனை இன்னும் ஒருவனுக்குக் கைமாற்றும் உரிமையைக் கொண்டு இருப்பான். மேலும் வைத்திருப்போன் ஒருவன் ஒரு காசோலைமீது உரிமை இல்லாதபோதும் அல்லது தீங்கான உரிமையைக் கொண்டு இருக்கும்போதும், சிலசமயங்களில் அதனைக் கைமாற்றும் உரிமையைக் கொண்டு இருப்பான்.
9

Page 71
مسه، 130 ـ
உதாரணமாக ஒரு கள்வன் காவிக்குச் செலுத்தப்படக்கூடிய காசோல் ஒன்றினைத் திருடி, நன்னம்பிக்கையில் அதற்குப் பெறுமதி கொடுத்த ஒருவனுக்குக் கைமாற்றுகின்ருன். இக்காசோலையுடன் தொடர் பான ஏனைய நிபந்தனேகளையும் இவன் பூர்த்திசெய்வாஞயின் இவன் அக் காசோலையின் " முறைப்படி வைத்திருப்பவனுக" மாறுவான். இங்கு மற்ற நிபந்தனைகள் என்பது மா. உ. க. சட்டம் பிரிவு 29இல் குறிப்பிடப்பட்டவையாகும். இந்தச் சந்தர்ப்பத்தில் அந்தக் கள்வன் காசோலையின் "வைத்திருப்பவனுக" இருந்து, தான் அவ்வாறு செய்ய உரிமை இல்லாதபோதும். கைமாற்றம் செய்யும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றன். 5. FLorůš55sü (Presentation):
ஒரு காசோலையை வைத்திருப்போன்’ அதனை இன்ஞெருவனுக்குக் கைமாறிக் கொடுக்காதபோது, அந்தக் கர்சோலை எந்த வங்கியின் மீது வரையப்பட்டுள்ளதோ அந்த வங்கிக்குக் கொடுப்பனவிற்காகச் சமர்ப் பிக்கலாம். அந்தக் காசோலை திறந்த காசோலையாக இருப்பின் நேரடி யாகவே வரையப்பட்ட வங்கிக்குத் தானே எடுத்துச் சென்று காசாக அதனை மாற்றிப் பெற்றுக்கொள்ளலாம். ஆனல் அந்தக் காசோலை குறுக்குக் கோடிடப்பட்டு இருந்தால் இவ்வாறு காசாகப் பெறமுடியாது. ஆளுல் ஒரு வங்கியில் கணக்கின் ஊடாகக் கொடுப்பனவிற்குச் சமர்ப் பிக்கலாம்.
6. Dglissanid Libu organissi) (Notice of Dishonour):
ஒரு காசோலையை வைத்திருப்போன்" அதனைக் கொடுப்பனவிற்கு எனச் சமர்ப்பித்து அதற்குக் கொடுப்பனவு செய்யப்படாதபோது தனக்கு முன் உள்ள கட்சிக்காரர்களுக்கு அதற்குரிய அறிவித்தலை உடன் கொடுத்தல் வேண்டும். இதனுல் அவர்களது பொறுப்பின் தன்மையை அவர்களுக்கு எடுத்துக்காட்ட முடியும். இங்கு தனக்கு முன் உள்ள கட்சிக் காரர் எனும்போது அது வரைந்தவரையும், சாட்டுதல் செய்தவர்களையும் உள்ளடக்கும். அவர்களுக்கு நிச்சயமாக மறுத்தமை பற்றிய அறிவித்தல் கொடுத்தல் வேண்டும். இதனுல் அவர்களுக்குப் பொறுப்பினை ஏற்படுத்த ՓւգԱյւb. 7. Gup&Gib alshanud (Right of Action):
ஒரு "வைத்திருப்போன்" தனது சொந்தப் பெயரில் வழக்கிடும் உரிமையானது, கைமாறும் சாதனங்களின் குணுதிசயங்களில் முக்கிய மான ஒன்ருகும். தனக்கு முன்னுள்ள ஒரு கட்சிக்காரர் மீதோ அல்லது மேற்பட்டவர்கள் மீதோ வழக்கிடும் உரிமையை அவன் கொண்டிருப் பான். இவ்வாருன வழக்கிடும் உரிமையில் வெற்றி பெறுவது அவன் கொண்டிருப்போஞக மட்டும் கருதப்படுகின்ருனு அல்லது ஈற்றில் உடமை யாளஞகக் கருதப்படுகின்ருஞ என்பதிலேயே பெரிதும் தங்கி நிற்கின்

- 131 -
posv. AF dibanólái R.L.-Gourou unrem (G95 (Holder in due course) g)g'Lu'avoir தான் யாரிடம் இருந்து அந்தக் காசோலையைப் பெற்றனே அவனைவிட ஒரு சிறந்த உரித்தினைப் பெறக்கூடும். ஆனல் "வைத்திருப்பவன்" தான் யாரிடம் இருந்து பெற்ருனே அவனைவிட சிறந்த உரித்தினப் பெறமுடியாது.
பெறுமதி வழி வைத்திருப்பவர் : (Holder for Value)
எச் சந்தர்ப்பத்திலாவது பெறுமதி வழங்கப்பட்ட உண்டியல் வைத்திருப்பவன் பெறுமதிவழி வைத்திருப்பவன் ஆவான். அதனை வைத்திருக்கும் ஒருவன் தானே அதற்குரிய பெறுமதியைக் கொடுத் திருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. பெறுமதிவழி வைத்திருக்கும் ஒருவணுல்தான் அவ்வுண்டியலுக்குப் பெறுமதி கொடுக்கமுன் அவ் வுண்டியலுக்கு கட்சிக்காரர்களாக வந்த அனைவருக்கும் எதிராகத் தனது (வழக்கிடும்) உரிமையை நிறைவேற்ற முடியும்.
உ -ம் : A என்பவர் B என்பவர் சார்பில் ஒரு காசோலையை வரைகின்றர். B என்பவர் அதற்குரிய பெறுமதியைப் பெற்றுக்கொண்டு C என்பவர் சார்பாகச் சாட்டுதல் செய்து அவருக்குக் கொடுக்கின்ருர். C என்பவர் இப்போது இதனை D என்பவருக்குக் கொடையாக அளிக் கின்றர். இப்போது D அதன் பெறுமதிவழி வைத்திருப்பவன் ஆகின் ருர். D என்பவர் தான் அதற்குரிய பெறுமதியைக் கொடுக்காதபோதும் பெறுமதிக்காகக் கொண்டிருப்போன் எனக் கருதப்படுவார். இவர் தனது (வழக்கிடும்) உரிமையை Aஇற்கு எதிராகவும் Bக்கு எதிராகவும் நிறை வேற்ற முடியும். ஆனல் Cக்கு எதிராக நிறைவேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம் எப்போதும் வைத்திருப்போனை பெறுமதிவழி வைத் திருப்பவன் ஆக ஊகிக்கும். ஆணுல் ஒரு வைத்திருப்பவனுே அல்லது பெறு மதிவழி வைத்திருப்பவனுே தனக்கு அதனை மாற்றிக்கொடுத்தவர் கொண் டிருந்ததைவிட ஒரு கிறந்த உரித்தினைப்பெற முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.
முறைப்படி வைத்திருப்பவர் அல்லது ஈற்றில் உடமையாளர்: (Holder in due course) வரைவிலக்கணம்:
எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 29 (I) இதற்கான விளக்கத்தினைத் தருகின்றது.
ஒரு உண்டியல் அதன் முகப்பினைப் பொறுத்தவரை ஒழுங்காகவும், நிறைவு செய்யப்பட்டதுமானதாக இருக்கும்போதும் பின்வரும் நிபந் தனைகளுக்கு அமைய உள்ளபோதும் அதனை வைத்திருப்பவன் ஒருவன் முறைப்படி வைத்திருப்பவன் ஆகக் கருதப்படுவான். அந் நிபந்தனைகள் ஆவன: O

Page 72
- 132 -
(அ) அந்த உண்டியல் தவணை கடந்ததாக மாற முன்னர் அவர் அதன் உடமையாளராகி இருத்தல் வேண்டும். அதற்கு ஏற்கனவே கொடுப்பனவு மறுக்கப்பட்டிருப்பினுங்கூட இவ்விடயம் பற்றி அவர் அறியாதிருத்தல் வேண்டும். அத்துடன்,
(ஆ) அவர் அந்த உண்டியலை நன்னம்பிக்கையுடனும் பெறுமதிக்காக வும் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், தனக்கு அவ்வுண்டியலை மாற்றம் செய்தவரின் உரித்தில் ஏதாவது குறைபாடுகள் காணப் பட்டபோதும் அவை பற்றி இவர் அறிந்திருத்தல் ஆகாது.
இத்தகையவரே ஈற்றில் உடமையாளர் அல்லது முறைப்படி வைத்திருப்பவர் ஆவார். இதன் நாம் மேலும் விரிவாக ஆராய்வோம்.
முறைப்படி வைத்திருப்பவன் ஒருவனுக்கு உள்ள தேவைப்பாடுகள் : (Requirements for a holder in due Course)
1. முகத்தோற்றத்தில் உண்டியல் பூரணமானதாகவும் ஒழுங்கானதாகவும்
இருத்தல் வேண்டும் : இங்கு உண்டியல் நிறைவு செய்யப்பட்ட முறையும் அதன் ஒழுங்கு முறையும்தான் விசேடமாகக் குறிப்பிடப்படும். நிறைவு செய்யப்பட்டு இருத்தல் வேண்டும் என்பது அந்த உண்டியல் வரையப் பட்டு உள்ள முறையையே கருதுகின்றது. மற்றும், உண்டியலின் முகப்பு எனும்போது அது அந்த உண்டியலின் இரு பக்கத்தினையுமே உள்ளடக்குகின்றது.
a -- b : Arab Bank v Ross (1952)
ஒரு திகதியிடப்படாத உண்டியல், ஒரு தொகை குறிப்பிடப் படாத உண்டியல், அவசியமான கையொப்பம் இல்லாது. இருக்கும் உண்டியல் (உ + ம் : சாட்டுதல்) போன்றவை நிறைவு செய்யப்படாத உண்டியலுக்கு உதாரணங்களாகும். ஓர் உண்டியல் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பதற்காக அதனை நாம் நிறைவு செய்யப்படாத ஒன்று எனக் கருத முடியாது.
ஓர் உண்டியலின் பெறுநரின் பெயருக்கும் அவரது சாட்டுதலுக்கும் இடையில் பாரதூரமான வித்தியாசம் தெளிவாகக் காணப்படுமாயின் அந்தச் சாட்டுதலை நாம் ஒழுங்கற்றது எனக் கூறமுடியும். இந்த வித்தி யாசம் சாட்டுதலின் உண்மைத் தன்மையில் சந்தேகங்களை ஏற்படுத்தும்.
a -- bi Arab Bank v Ross (1952)
இந்த வழக்கில் வங்கி இரண்டு வாக்குறுதிப் பத்திரங்களைக் GastairG goisy. Jasal guairGlh 'Fathi and Faysal Nabulsy Company" என்பதன் சார்பாக வரையப்பட்டு இருந்தன.ஒரு பங்காளர்

- 133 -
Djës e Gåsvig-Lu6v35&IT “ Fathi and Faysal Nabulsy ” GT6wd சிரட்டுதல்செய்து கழிவிற்கு மாற்றிக் கொண்டார். இங்கு Company என்ற சொல் விடப்பட்டுவிட்டது. எனவே இங்கு சாட்டுதல் ஒழுங் கற்றது எனக் காணப்பட்டது. எனவே வங்கிகள் அந்த இரண்டு வாக்குறுதிப் பத்திரங்களுக்கும் " முறைப்புடி வைத்திருப்போன்" எனக் கூறமுடியாது என்று காணப்பட்டது. ஆளுல் பெறுமதிவழி வைத்திருப் போன் எனப்படலாம் எனக் கூறப்பட்டது.
குறிப்பு
இவ்வழக்கில் கூறப்பட்ட விளக்கங்களில் இருந்து வங்கி பெறுமதி வழி வைத்திருப்போன் எனக் கானப்பட்டு அதஞல் அவர்கள் உரிமை பெறுமதியானது என்றும், எனவே இப்பத்திரங்கள் தொடர் பில் தம் உரிமையை நடைமுறைப்படுத்த முடியும் எனக் காணப்பட் டமை அவதானிக்கத்தக்கது.
2. உண்டியலை வைத்திருப்பவன் அவ்வுண்டியல் தவணை கடக்கமுன்
அதன்ைப் பெற்றிருத்தல் வேண்டும் : காசோலை ஒரு உண்டியல் என்ற முறையில் அது கேள்வியின் போது பணம் செலுத்தப்பட வேண்டியது ஆகும். ஒரு நியாயமற்ற காலப்பகுதியில் அந்த உண்டியல் சுழற்சியில் இருக்குமாயின் அது தவணை கடந்த உண்டியல் எனப்படும். நியாயமான காலம் என்பது கேள்விக்குரிய ஒன்ருகும்.
3. முன்னர் மறுக்கப்பட்டிருப்பினும்கூட அவனுக்கு அதுபற்றித்
தெரியாது இருத்தல் வேண்டும்: ஒருவன் முறைப்படி வைத்திருப்பவன் ஆக வருவதற்கு அந்தக் குறிப்பிட்ட உண்டியல் முன்னர் மறுக்கப்பட்டமை பற்றிய அறிவித்தல் பற்றி அறியாது இருத்தல் வேண்டும். ஒரு காசோலை முன்னர் மறுக் கப்பட்டு இருந்தால் அதன்மேல் ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கும்" இவ்வாறு இருந்தால் மாற்றிப் பெற்றவன் (Transferee) அவ் உண்டி யல் முன்னர் கொடுப்பனவு மறுக்கப்பட்டது என்பது பற்றி நன்கு அறிந்து இருப்பான்.
ஒரு வங்கி காசோலை ஒன்றிற்குக் கொடுப்பனவு மறுக்கும்போது அதற்கான காரணத்தினைக் குறிப்பிடுவதினுல், பின்னர் அதனைத் தொடர்ந்து பெறுவோர் அதற்கு " முறைப்படி வைத்திருப்பவன்' ஆக வரமுடியாது தடுக்கப்படுகின்றனர்.
4. உண்டியலை வைத்திருப்பவன் அதனை நன்னம்பிக்கையில் பெற்
றிருத்தல் வேண்டும் : வெறும் கவனயீனம் மட்டும் காணப்பட்டால் அங்கு நன்னம்பிக்கை
இல்லை எனக் கூறமுடியாது. எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம்

Page 73
---- 134 --سسه
பிரிவு 92, ஒரு செயலில் கவனயீனம் காணப்பட்டபோதும் கட்டாய மாக, நேர்மையாகச் செயற்பட்டு இருத்தல்வேண்டும் எனக் கூறு கின்றது.
2 + Lћ: Raphael and another v Bank of England (1855)
இவ் வழக்கில் களவாடப்பட்ட சில நாணயத்தாள்களின் இலக்கங் கள் வங்கிகளுக்கும், நாணயமாற்று முகவர் நிலையங்களுக்கும் சுற்று நிருப வடிவில் அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்த அறிவித்தல் இவ் வழக்கின் வாதிகளுக்கும் அவர்களிடம் மாற்றுவதற்குச் சமர்ப்பிக்கப்படலாம் என்ற எண்ணத்தில் அனுப்பப்பட்டு இருந்தன. இந்தச் சுற்று நிருபத்தினைக் கவனிக்காது, தொலைந்த நாணயத்தாள் ஒன்று இவர்களால் மாற்றிக் கொடுக்கப்பட்டது. மாற்றிக்கொள்ள வந்தவரின் கடவுச்சீட்டு பார்க்கப்பட்டு அவரது கையொப்பமும் விலாசமும் குறிக்கப்பட்டது. இங்கு வாதிகள் கவனமின்மையாக நடந்துகொண்ட போதிலும் அவற்றை மாற்றிக்கொடுக்கும் போது நன்னம்பிக்கையில் பெற்றுக் கொண்டமையினல், அதன் பெறுமதிக்கு உரிமை உடையவர்கள் எனக் காணப்பட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இன்னுமொரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த விடயம் பின்வரும் வழக்கினை அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டது.
Banca Popolare di Novaro v John Livanos & Sons (1965)
இங்கு ஒரவஞ்சக கடனடைப்பு (Fraudulent Preference) செய்வ தற்காக ஒரு உண்டியல் கைமாற்றப்படுமாயின் நன்னம்பிக்கையுடன் அவ் உண்டியல் எடுக்கப்பட்டது எனக் கூறமுடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
5. உண்டியலை வைத்திருப்பவன் அதனைப் பெறுமதிக்காக வைத்திருக்க
வேண்டும் : பெறுமதி என்பது " பெறுமதியான மதிபலன்" என வரைவிலக் கணப்படுத்தப்படுகின்றது. இங்கு ** வைத்திருப்பவன் " ஒருவன் தானே பெறுமதியான மதிபலனைக் கொடுத்து இருக்க வேண்டும். எப்போதோ ஒரு சமயத்தில் " மதிபலன்" கொடுக்கப்பட்டது. எனவே அது போதுமானது எனக் கூறமுடியாது
இவ்விடத்தில் நாம் * பெறுமதிவழி வைத்திருப்பவன்" என்ற ஒருவரைப் பொறுத்தளவில் உள்ள வித்தியாசத்தை உணரவேண்டும். இவரைப் பொறுத்தமட்டில் எப்போதோ ஒருவரால் பெறுமதி கொடுத்தால் போதுமானது. ஆனல் முறைப்படி வைத்திருப்பவனைப் பொறுத்தவரையில் அவனே பெறுமதியான மதிபலரைக் கொடுத்து இருக்கவேண்டும்.

ہے۔۔ 135 س۔
இங்கு சில சமயங்களில் ஒரு கேள்வி எழுவதுண்டு. ஒரு மாற்றம் செய்து பெற்றவர் (Transferee) முழுப் பெறுமதி அல்லது பூரண மதி பலனையும் கொடுத்து இருக்கவேண்டுமா, அல்லது பகுதியான ஒரு பெறு மதி கொடுத்தால் மட்டும் போதுமா என்பதே அக் கேள்வியாகும். ஆனல் முழுப் பெறுமதியும் கொடுத்து இருக்கத்தான் வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. சில வங்கி வழக்குகளில் ஒரு காசோலையின் முழுப் பெறுமதியும் கொடுக்காது விட்ட சமயங்களிலும் வங்கிகள் தாம் " முறைப்படி வைத்திருப்போன்" என்பதனை நிறுவுவதில் வெற்றி பெற்றுள்ளன. ஆனல் எப்படியாயினும் முழு மதிபலனும் கொடுக்காத இடத்து அது ஒரு தீதான நம்பிக்கையையே (Bad faith) காட்டுகின்றது.
உதாரணமாக ஒருவன் ரூபா 1000/- பெறுமதி கொண்ட காசோலை யில் ஒரு தீங்கான உரித்தினைக்கொண்டபோது அதனை ஒருவனுக்கு ரூ. 900/-ற்கு மாற்றிக் கொடுக்க எண்ண, அதனை மாற்றிப் பெறுபவனும் அவ்வாறு இனங்கிச் செய்வான் ஆயின், அவன் நிச்சயமாக அந்தக் காசோலேக்கு "முறைப்படி வைத்திருப்பவன்” ஆக மாறமுடியாது. இங்கு நீதிமன்றம் இவ்வாருன நிலை ஒன்றினைத் தீதான நம்பிக்கையையே காட்டுவதாக ஊகிக்கும். ஒரு நேர்மையான மனிதன் ஒருபோதும் ரூ. 1000/-ற்கான காசோலைக்குப் பதிலாக ரூ. 900/-ஐக் கொடுக்கமாட் t-noir.
ஆணுல் உண்டியலைக்கொண்டு இருப்பவன் அதன்மீது ஒரு பாத் திய உரிமையைக்கொண்டு இருக்கும்போது, அவர் கொண்டுள்ள பாத் திய உரிமைத் தொகைக்கு அவ்வுண்டியலைப் பெறுமதிவழி வைத்திருப் போன் ஆகக் கருதப்படுவான். மேலும் அவன் உண்டியலின் பெறுமதி யிலும் குறைந்த தொகைக்குப் பாத்திய உரிமை ஒன்றினை நேர்மை யான முறையில் கொண்டு இருந்தால், இங்கு அவனை நாம் முறைப்படி வைத்திருப்போன் ஆகக் கருதமுடியும் என்பது அவதானிக்கத்தக்கது.
6. உண்டியலைக் கைமாற்றிக் கொடுக்கும் நேரத்தில் மாற்றிக் கொடுத்த வரின் உரிமையில் உள்ள தவறுகள்பற்றி அறியாதவராக இருத்தல் வேண்டும், மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தில் "உரிமையில் உள்ள தவறுகள்" (Defect of title) என்ருல் என்ன என்று விளக்கம் கொடுபடவில்லை. ஆனல் சில உதாரணங்கல் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அவையாவன: காசோலையை மோசடியாகப் பெறுதல், பயம், வற்புறுத்தல் போன்ற வற்ருல் பெறுதல், அல்லது சட்ட ரீதியற்ற வழிகளில் பெறுதல், அல் லது சட்ட விரோதமான பிரதிபலன் மூலம் பெறுதல் போன்றவை யாகும், உரிமையில் உள்ள தவறுகள்பற்றி அறிதல் எந்தவிதமாகவும் அமையலாம். ஏதோ ஒரு தவறு இருக்கின்றது, ஆனல் அது எப்படி யானது என்று அறிந்திராத இடத்திற்கூட தவறு பற்றி அறியவில்லை என வாதிட முடியாது.

Page 74
- 136 -
முக்கிய குறிப்புகள் :
1. ஒவ்வொரு “வைத்திருப்பவனும்", அங்கு ஏதாவது மோசடி, சட்டபூர்வமற்றதன்மை போன்றவை அவ்வுண்டியலை ஏற்றுக்கொள்வ தில் அல்லது வழங்குவதில் அல்லது கைமாற்றுதலில் இடம்பெற்றதுஎன்று நிறுவும்வரை, அவன் முறைப்படி வைத்திருப்பவன் என்றே கருதப்படு வான். ஆனல் சொல்லப்பட்ட மோசடி, அச்சுறுத்தல், வற்புறுத்தல் போன்றவையின் பின்பு பெறுமதியானது அந்தக் காசோலைக்கு நன் னம்பிக்கையில் கொடுபட்டது என்பதனை நிறுவும் சுமையானது அதனை வைத்திருப்பவனைச் சாரும்.
2. ஒரு காசோலையின் பெறுனர் (Payee) ஒருபோதும் அதனை முறைப்படி வைத்திருப்பவனக முடியாது. உண்டியலானது அவருக்கு வழங்கப்பட்டுள்ளமை, உண்மையேயாயினும் அது அவருக்குக் கைமாற் றப்படவில்லை. எனவே காசோலையின் பெறுனர் எவரும் முறைப் படி வைத்திருப்பவர் ஆகமாட்டார்.
a- + b: Re Jones Ltd. v Waring and Gillow Ltd. (1926)
3. ஒரு கட்டளைக்குச் செலுத்தப்படக்கூடிய உண்டியலை அது மோசடியான சாட்டுதல்கொண்டுள்ளபோது பெற்றுக்கொண்ட ஒருவர் அதனை வைத்திருப்பவனுக மாறமுடியாது. எனவே *முறைப்படி வைத் திருப்பவ"ஞகவும் மாறமுடியாது. அவனை நாம் பிழையானவழியில் Gsir alsh 606,66Gie a6ör (Wrongful Possessor) 6T6örG|D Sysnpés Փւգաւb.
முறைப்படி வைத்திருப்பவனின் உரிமைகள்:
(Rights of the holder in due course)
1. முறைப்படி வைத்திருப்பவன் தனது சொந்தப் பெயரில், அவ்
வுண்டியலுக்குத் தனக்கு முன் தொடர்புள்ளவர்களை வழக்கிட முடியும்.
2. முறைப்படி வைத்திருப்பவன் அல்லது ஈற்றில் உடமையாளன் ஒருவன் ஒரு உண்டியலோடு தொடர்புள்ள எல்லா ஒப்புரவுகளிலும் (Equities) இருந்து அதனை நீக்கித் தான் எடுத்துக்கொள்ள முடியும். அவ்வுண்டியலின் உரிமையில் ஏற்படும் எந்த எதிர்வாதங்களையும் வெற்றி கொண்டு தன்வசம் கொள்ளமுடியும். உண்டியலை உரிமைமாற்றிக் கொண்டிருப்பவர் கொண்டிருந்த உரிமையைவிட ஒரு சிறந்த உரித்தினை ஈற்றில் உடமையாளன் ஒருவன் பெற்றுக்கொள்ளமுடியும்.
ஆளுல் "கைமாறத்தகாதது" எனக் குறுக்குக்கோடு இடப்பட்டு இருத் தால், முன்னர் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதனை வைத்திருப்ப வர் முறைப்படி வைத்திருப்பவர் ஆகமுடியாது. இங்கு எப்போதுமே உரிமையில் ஒரு குறைபாடு இருந்தபடியே இருக்கும்.

- 137 -
3. முறைப்படி வைத்திருப்பவன் ஒருவன் தனது உரித்தின் முறைப்படி வைத்திருப்போன் என்ற அந்தஸ்தில் இருந்துகொண்டு, பெறுமதிக்காகவோ, அல்லது நன்கொடையாகவோ மாற்றிக் கொடுக்க முடியும், ஆஞல் அவ்வாறு பெறும் நபர் அந்த உண்டியலைப் பாதிக் கும் வகையில் ஏதாவது தவறுகளைப் புரிந்த கட்சிக்காரராக மட்டும் இருத்தல் ஆகாது.
முறைப்படி வைத்திருப்பவன் ஒருவன ஈற்றில் முறைமையாளன் என்றும் கூறுவோம். இவனது நிலை மிகவும் ஸ்திரமானது. அவரால் அந்த உண்டியல் தொடர்பில் கொடுப்பனவினைச் செய்யுமாறு மிகத் திடமாக வற்புறுத்த முடியும். பிரிவு 29 (1)இல் கூறப்பட்டவற்றைத் திருப்தி செய்ய முடியாதபோது மட்டுமே ஒருவரின் இந்த ஸ்திர நிலை ஆட்டம் காணும்.
பெறுமதிக்காக வைத்திருப்போளுக வங்கியாளன்: (Banker as holder for value)
மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 8இன் கீழ் ஒரு வங்கி யாளன் தனது வாடிக்கையாளனின் காசோலைகளைச் சேகரித்துக் கொடுக் கும் முகவராகக் கடமையாற்றும்போது ஏற்படும் நிலைமாறல்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இங்கு வாடிக்கையாளனுக்காக வெறு மனே கொடுப்பனவினைப் பெற்றுக் கொடுத்தது அல்லது முதலிலேயே வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைத்துவிட்டு அந்தத் தொகையை அதற்காகத் தனக்குப் பெற்றுக்கொண்டது என்ற ரீதியில் இந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது.
எப்படியாயினும் ஒரு மதிபலனை அல்லது பெறுமதியை வாடிக்கை யாளருக்குக் கொடுத்துவிட்டு பெறுமதிக்காக வைத்திருப்பவனுகவே வங்கி கடமையாற்றுகின்றது. எனவே இங்கு இவ்வாறு செய்கின்ற போது முகவராண்மை இரத்துச் செய்யப்படுகின்றது என்றும் கூறலாம். இவ்வாறு பெறுமதிக்காக உண்டியலை வங்கி வைத்திருக்கும் 4 சந்தர்ப் பங்களை இங்கு நாம் ஆராய்வேம். அவையாவன :
1. ஒரு காசோலைக்குப் பெறுமதியைக் கொடுத்திருக்கும் சந்தர்ப்பம்:
இங்கு ஒரு உதாரணத்தினை நாம் குறிப்பிடலாம். Y எனப்படும் வங்கி ஒன்று Z எனப்படும் வங்கியின்மீது வரையப்பட்ட காசோலை களைக் காசாக மாற்றிக்கொடுத்து, Z வங்கியின் வாடிக்கையாளருக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கலாம். ஆளுல் இங்கு இரு வங்கிகளுக் கும் இடையில் சிறந்த வரவுவைக்கும் முறை இல்லாது இருத்தல் வேண்டும்.

Page 75
--س۔ 138 -----
2. ஒரு மேலதிகப்பற்றை மீளச் செலுத்துவதற்கு என விசேடமாகக் குறிப்
பிடப்பட்டு அனுப்பப்பட்ட காசோலை ஒன்றினைப் பெற்றிருக்கும் சந்தர்ப்பம்
உ + ம்: ஒரு முதிர்ச்சியடைந்த ஆஸ்திப்பத்திரத்தின் (Endow. ment Policy) மூலம் கிடைத்த தொகைக்குரிய 8500 பெறுமதியான காசோல் ஒன்று, நெடுங்காலம் நிலுவையாக இருந்த G5 மேலதிகப்பற்றினை நிரந்தரமாகக் குறைப்பதற்காக வங்கியில் செலுத் தப்பட்டது. இங்கு பெறுமதிக்கு வங்கி அக் காசோலையைக் கொண் டுள்ளதாகக் கருதப்படும்.
gigs is Tib M'Lean v Clydesdale Banking Co. (1883 Taip வழக்கின் சாரத்தை அறிதல் முக்கியமானது. இங்கு Clydesdale வங்கி யில் ஒரு மேலதிகப் பற்றினை ஒரு வாடிக்கையாளர் கொண்டு இருந் தார். இவர் MLean என்ற நபரைத் தூண்டி தனதுசார்பில் 8 265 பெறுமதியான ஒரு காசோலையை வரையச் செய்து பெற்ருர். இவர் பின்னர் இக் காசோலையை Clydesdale வங்கியில் உள்ள தனது கனக் கில் இட்டார். அக் காசோலை இவரது கணக்கின் மேலதிகப் பற்றினைக் குறைப்பதற்காகச் சேகரிக்கப்பட்டது. ஆளுல் வரைந்தவராகிய MPLean அதன் கொடுப்பனவை நிறுத்திவிட்டார். கொடுப்பனவு நிறுத்தப்பட்ட அக் காசோலை வங்கிக்குத் திருப்பப்பட்டது. வங்கியானது வரைந்தவருக்கு எதிராக இத்தொகைக்கு வழக்கிட்டது. பிரபுக்கள் சபை வங்கிக்குச் சாதகமாகவே தீர்ப்பினை வழங்கி வங்கி பெறுமதிக்காக கொண்டிருப்போன் என்று கூறியது. ஏனெனில் வங்கிக்குச் சேரவேண் டிய ஒரு தொகையினைக் குறைப்பதற்கென்றே அது வைப்பில் இடப் பட்டது என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. தற்காலத்தில் இந்தக் கொள்கை எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 27 (1) (b)யின் மூலம் உறுதிப்படுத்தப் படுகின்றது.
மேலும் சாதாரண கிரம அலுவல் முறைகளுக்கு அமைய ஒரு மேலதிகப் பற்று கணக்கிற்கு வரவு வைப்பதற்கு எனப் பெறப்பட்ட காசோலைகளின் மீது வங்கி ஒன்று பெறுமதிக்காக வைத்திருப்போன் எனக் கூறமுடியாது.
3. வங்கிக்கு ஒரு காசோலைமீது பாத்திய உரிமை உள்ள சந்தர்ப்பம்:
(Lien on Cheque) ஒரு காசோலையை வாடிக்கையாளர் ஒருவர் தனது கணக்கில் வரவு வைப்பதற்காக வங்கியில் செலுத்துகின்ருர். இந்தக் காசோலை கொடுப்பனவு செய்யப்படாது திருப்பப்படுகின்றது. இங்கு வாடிக்கை யாளர் வங்கியில் கடன்பட்டவராகவும் இருக்கின்ருர், ன்னவே வங்கி யானது அந்தக் காசோலையின் தொகைக்குச் சமமாக வாடிக்கையாளரின் கணக்கின்மீது ஒரு பாத்திய உரிமையைக் கொண்டு இருக்கும்.

- 139 -
ஒரு காசோலையை வைத்திருப்பவன் அதன்மீது பாத்திய உரிமை யைக் கொண்டுள்ளபோது அந்தப் பாத்திய உரிமையின் அளவிற்கு அவளேப் பெறுமதி வழி வைத்திருப்பவனுகக் கருதலாம். (மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 27 (3)இனைப் பார்க்கவும்.)
வங்கி ஒன்றிடம் வாடிக்கையாளர் கடன்பட்டு இருக்கும்போது, வங்கியின் உடமையில் கொடுக்கப்பட்ட ஒரு காசோமீைது பாத்திய உரிமையை (தான் தடுத்து வைத்திருக்கும் உரிமை) அவ் வங்கி கொண்டு இருக்கும். இங்கு வங்கி தனது உரிமையைக் குறிப்பாகவோ, உட்கிடை யாகவோ விட்டுக் கொடுப்பதாகக் கூறியிருந்தால் தவிர மற்றும் சந்தர்ப் பங்களில் எல்லாம் இப்பாத்திய உரிமையைக் கொண்டு இருக்கும். இந்தச் சட்டவிதிகள் மூலம் வங்கிக் கணக்கில் வைப்பில் இடப்பட்ட காசோலை கள் மீது வங்கி பாத்திய உரிமையைக்கொண்டு இருக்கும். இங்கு காசோல் தீர்வையாக்கிப் பெறமுன் வாடிக்கையாளர் அத் தொகையைப் பெற அனுமதிக்காதபோதும் வங்கிக்கு இந்தப் பாத்திய உரிமை கிடைக் கும். ஒரு வாடிக்கையாளரின் கணக்கினை மேலதிகப் பற்று நிலைக்கு வரவிட்ட காரணமே வங்கி பாத்திய உரிமையை நிலைநாட்டப் போது udfrøorg.
பின்வரும் அண்மைக்கால வழக்குகள் எமக்கு மூக்கியமானவையாக அமைகின்றன.
a- + th: Rekeever (a bankrupt) Ex parte the Trustee of the
property of the Bankrupt v Midland Bank (1967)
இங்கு திருமதி Keever, Midland வங்கியின் வாடிக்கை யாளர். இவர் முறிவுச்செயல் ஒன்றினை 5-10-62இல் இழைத்தார். 12-10-62இல் மனு ஒன்று இதற்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. நவம்பர் 16இல் பெறுகைக் கட்டளை (Receiving Order) பிறப்பிக்கப்பட்டது. நவம்பர் 30இல் வங்குரோத்து ஆனவராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. கி 3000 காசோலை ஒன்று நவம்பர் 15இல் திருமதி Keeverஆல் அவரது கணக்கில் இடப்பட்டது. இந்தக் காசோலை பெறுகைக் கட்டளை பிறப்பிக்கப்பட்ட தினத்தில் தீர்வையாக்கப்பட்டது. இந்த நேரம் திருமதி Keeverற்கு வங்கியில் E350 மேலதிகப் பற்று ஒன்றும் காணப்பட்டது. இந்தத் தொகையை வங்கி தனதாக்கிக் கொண்டது. இதனை எதிர்த்து நம்பிக்கைப் பொறுப்பாளன் வாதிட்டார். இங்கு வங்கிக்கு அந்தக் காசோலைமீது ஒரு பாத்திய உரிமை உண்டு எனக் காணப்பட்டது. பாத்திய உரிமை பெறுகைக்கட்டளை வழங்கப்பட முன்னரே ஏற்பட்டது எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Page 76
- 140 -
Guogyub Barclays Bank Ltd. v Astley Industrial Trust Ltd. (1970) என்ற வழக்கினையும் பார்ப்போம். இவ் வழக்கிலும் வங்கிக்குப் பாத்திய உரிமை கிடைத்தது. ஆனல் இங்கு பிரதிவாதி நிறுவனம் அந்தக் குறிப்பிட்ட காசோலையைக் "கைமாறத் தகாதது" எனக் குறுக்குக் கோடிட்டு இருந்தால் நிலைமை மாறி அமைந்திருக்கும். அவ்வாறு செய்து இருந்தால் வங்கி ஒரு சிறந்த உரித்தினைப் பெற்றிருக்க முடி யாது. காரணம் வாடிக்கையாளர் ஒரு சிறந்த உரித்தினைப் பெற்று இருக்கமுடியாமையே யாகும்.
4. தனது கணக்கில் வரவு வைப்பதற்கு என இடப்பட்ட காசோலைகளை தீர்வையாக்கி வரவு வைக்கமுன்னர் அதற்கு எதிராகப் பணத்தினைப் பெறுவதற்குக் குறிப்பாகவோ அல்லது உட்கிடையாகவோ அனுமதித்து இருக்கும் சந்தர்ப்பம்: இங்கு நிலைமைகள் மாறி மாறி அமைந்தமை குறிப்பிடத்தக்கது. தீர்வையாக்கப்படாத காசோலைக்கு எதிராகப் பணம் கொடுக்கப் பட்டால் வங்கி அந்தக் காசோல்மீது **பெறுமதிவழி வைத்திருப்போன்" எனக் கருதப்படமுடியுமா என்பதற்கு ஒரு திட்டமான விடையை நீதி மன்றத் தீர்ப்புக்கள் தரவில்லை என்றே கூறவேண்டும்.
பின்வரும் வழக்குகளில் தான் பெறுமதிவழி வைத்திருப்பவன் என்பதனை நிறுவுவதில் வங்கி வெற்றிபெற முடியவில்லை.
2. -- th: 1. А. L. Underwood Ltd. v Barclays Bank Ltd. (1924) 2. Westminister Bank Ltd. v Zang (1965) இந்த வழக்குகளில் எல்லாம் வங்கியின் பணம் கட்டும் படிவங் களில், தீர்வை யாக்கப்படாத காசோலைகளுக்குப் பணம் செலுத்தப் படுவது பின்போடப்படல் வேண்டும் எனக் காணப்பட்டது. இங்கு ஒரு மாற்று ஒழுங்குமுறை இருந்தது என்பதனை நிறுவுவதில் வங்கி கள் தவறிவிட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆனல் பின்வரும் வழக்குகளில் * பெறுமதிவழி வைத்திருப்பவன் " என்பதனை நிறுவுவதில் வங்கிகள் வெற்றி கண்டன:
உ + ம் :
(1) Lloyds Bank Ltd, v Hornby (1933) (2) Midland Bank v Charles Simpson Motors Ltd. (1961) (3) Barclays Bank v Harding (1962) (4) Midland Bank Ltd. v. R. W. Harris Ltd. (1963)
எனவே மேற்குறிப்பிட்ட 4நிலைமைகளின்கீழும் ஒரு வங்கி காசோலை ஒன்று தொடர்பாக பெறுமதிவழி வைத்திருப்போளுகக் கருதப்படும்.

அத்தியாயம் 18
புறக்குறிப்பிடுதல் (Endorsement)
கீழே நாம் விவரிக்கப் போகும் முறைகளுக்கு அமைய, ஒரு காசோலையை வைத்திருப்பவன், அதனை இன்னெருவருக்குக் கைமாற்றம் செய்யலாம். ஒர் உண்டியலில் மாற்றம் செய்தல் தவிர்க்கப்பட் டுள்ளது எனக் கூறப்பட்டு இருந்தால் அல்லது அது மாற்றப்படத் தகாதது என்ற ஓர் அர்த்தத்துடன் காணப்பட்டால் அந்த உண்டியல் கைமாற்றப்பட முடியாது. ஆளுல் தொடர்பான கட்சிக்காரர் இடையே அது பெறுமதி மிக்கதாகும். இதனை எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 8 (1) கூறுகின்றது.
காவிக்குச் செலுத்தப்பட வேண்டிய காசோலை ஒன்று அதனே வழங்குவதன் மூலம் (Delivery alone) கைமாற்றம் செய்யப்படுகின்றது. ஆளுல் கட்டளைக்குச் செலுத்தப்பட வேண்டிய காசோலை ஒன்று அதனை வைத்திருப்பவனல் புறக்குறிப்பு இடுவதன்மூலமும் தொடர்ந்து அதனை வழங்குவதின் மூலமும் நிறைவு செய்யப்படுகின்றது. எனவே இங்கு நாம் புறக்குறிப்பிடுதல் என்ருல் என்ன அதன் விளக்கம் என்ன என்பவற்றைப் பற்றி ஆராய வேண்டியுள்ளது.
புறக்குறிப்பிடுதல் (Endorsement):
எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள புறக் குறிப்பிடுதல் என்பதன் வரைவிலக்கணம் தெளிவானதல்ல. புறக்குறிப்பிடுதல் எனப்படுவது உண்டியலை புறக்குறிப்பிட்டு பின் வழங்குவதின் மூலமே முடிவுறும் செயல் எனக் கூறப்படுகின்றது. 469á) National Bank v Peterson (1909) Tairo Gassical thats வழக்கு ஒன்றில் அதனை விசாரித்த நீதிபதி கைமாறும் சாதனங்கள் தொடர்பில் புறக்குறிப்பிடுதல் எனப்படுவது மூன்று அர்த்தங்களில் காணப்படும் என்ருர்,
பொது அறிவுப்படி, ஒரு உண்டியலின் பின்பக்கத்தில் இடப்படும் ஒவ்வொரு கையொப்பமும் ஒரு புறக்குறிப்பு ஆகும். ஆளடையாளம் காணப்படுவதற்காகவோ அல்லது பெற்றுக்கொண்டமையை உறுதிப் படுத்துவதற்காகவோ கையெழுத்து இடப்பட்டிருப்பினும் கூட அவை புறக்குறிப்புகளே என நீதிபதி தீர்ப்பளித்தார்,
உண்டியலின் பின் பக்கத்தில் ஒரு பெயரை கையொப்பமாக இடுவதின் மூலம் புறக்குறிப்பிடுதல்செய்பவர்அதற்குரிய பொறுப்புக்களை ஏற்கின்ருர் என்றும் வேருெரு அர்த்தததில் கூறலாம். பிறிதொரு

Page 77
حصہ۔ 142 مص۔
அர்த்தத்தில் காசோலையின் பின்பக்கத்தில் "* வைத்திருப்பவளுல் s (Holder) அல்லது அவனது முறையான அங்கீகாரம் பெற்ற முகவரினல் கையொப்பம் இடப்பட்டு அதனை வழங்குதலும் புறக்குறிப் பி9ேதலேயாகும். இதனுல் வைத்திருப்பவன் ஒருவன் தனது கட்டளைக்குச் செலுத்தப்பட வேண்டிய உண்டியலை இன்னும் ஒருவனுக்குக் கைமாற்றம் செய்து அவரைப் புதிய " வைத்திருப்பவஞ’க மாற்றுகின்ருர். இவ்வாறு செய்யப்படும் செயலை புறக்குறிப்பிடுதல் எனக் கூறலாம்.
எனவே சுருக்கமாகக் கூறின், புறக்குறிப்பிடுதல் என்பதற்கு ஒரு திடமான வரைவிலக்கணம் இல்லை என்றே கூறலாம். மேற்கூறியவை ஒவ்வொரு நிகழ்விற்கும் பொருந்தக் கூடியவகையில், கூறப்படும் வரை விலக்கணங்களாகும்.
பெறுமதியான புறக்குறிப்பிடுதலுக்குரிய தேவைப்பாடுகள் : (Requisites of a Valid Endorsement)
எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் (பிரிவு 32) இது பற்றிய விளக்கத்தைக் கொடுக்கின்றது. பின்வரும் நிபந்தனைகள் முக்கிய மானவையாகும்.
1. புறக்குறிப்பிடுதல் ஆனது குறித்த உண்டியலிலேயே எழுதப் பட்டு புறக்குறிப்பிடுபவரால் கையொப்பம் இடப்படுதல்வேண்டும்,
மேலதிக சொற்களேதுமின்றி எளிமையான கையொப்பம் மட்டும் காணப்படினும்கூட அது வலுவுள்ள புறக்குறிப்பாக அமையும்.
2. புறக்குறிப்பிடுதல் ஆனது குறித்த உண்டியல் முழுவதற்குமே பொருத்தமானது. உண்டியலின் குறித்த ஒரு பகுதிக்குமட்டும் புறக் குறிப்பிடமுடியாது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு வெவ் விேருக மாற்றப்படக் கூடியவகையில் புறக்குறிப்பிடவும் முடியாது. இவ் வாறு புறக்குறிப்பிடுதல்செய்து உண்டியகிை கைமாற்றம் செய்ய (1pւգԱյո շw.
3. ஒரு உண்டியல் இரண்டு அல்லது மேற்பட்ட பெறுனர்களின் அல்லது சாட்டப்பட்டோர்களின் (Endorsees) கட்டளைக்குச் செலுத்தப் படவேண்டியிருப்பின், குறிப்பாக இவர்கள் பங்காளர்களாக இல்லாது இருப்பின், எல்லோருமே புறக்குறிப்பிடுதல் செய்ய வேண்டும். ஆனல் ஒருவர் மற்றவரின் சார்பில் புறக்குறிப்பிட அதிகாரம் பெற்று இருப் பின் இவ்வாறு எல்லோரும் புறக்குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.
4. ஓர் உண்டியலின் பெறுபவர்கள் அல்லது சாட்டப்பட்டு இருப்போரின் (Endorsees) பதவி அல்லது பெயர் பிழையாக எழுத்துக்

-س- 143 -س
கூட்டப்பட்டு இருப்பின் அங்கு எவ்வாறு எழுத்துக் கூட்டப்பட்டு இருந் ததோ அவ்வாறே புறக்குறிப்பிடுதல் அவசியம். மேலும் அவர் சரியான முறையில் எழுத விரும்பின் மேலதிகமாகத் தனது பெயரைச் சரியான முறையில் எழுத்துக்கூட்டி எழுதலாம்.
5. ஓர் உண்டியலில் இரண்டு அல்லது மேற்பட்ட புறக் குறிப் புக்கள் இருக்குமாயின் அவை காணப்படும் ஒழுங்கு முறையிலேயே புறக்குறிப்பிடப்பட்டதாகக் கருதப்படும். ஆனல் இதற்கு முரணுக ஏதா வது கருத்துக்கள் இருக்குமாயின் அது நிறுவப்படுதல் வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
6. ஒரு புறக்குறிப்பிடுதல் ஆனது வெற்றுனதாகவோ அல்லது விசேடமானதாகவோ செய்யப்படலாம். அத்தோடு சாட்டுதலை வரை யறுக்கக்கூடியவகையிலும் சொற்கள் சேர்க்கப்படலாம்.
புறக்குறிப்பின் வகைகள்:
1. Galibgor pigspol (Blank Endorsement): ஒரு வெற்ருன புறக்குறிப்பு எந்த ஒரு புறக்குறிப்பிடப்பட்டு இருப்போனை அல்லது சாட்டப்படுவோனை (Endorsee)யும் சுட்டுவ தில்லை. இவ்வாறு வெற்று சாட்டுதல் அல்லது புறக்குறிப்பிடுதல் செய்யப்பட்ட ஒரு உண்டியல் காவிக்குச் செலுத்தப்படக்கூடிய உண்டிய லாக மாறுகின்றது. இதனை எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 34 (1) விளக்குகின்றது. வெற்ருன புறக்குறிப்புகொண்ட காசோலை ஒன்று சாதாரண வழங்கலின் மூலம் கைமாற்றப்படலாம்.
உ + ம்: காசோலை ஒன்று AB என்பவருக்கு அல்லது அவர் சட்ட ளைக்குச் செலுத்தப்பட வேண்டும் என்ருல் காசோலையில் AB என lso digslist Lira Gurgaudrows. (a cheque payable to AB or order and endorsed 'AB's
எனவே வெற்ருன புறக்குறிப்பிடுதல் புறக்குறிப்பிடுபவனின் ஒரு கையொப்பத்தை மட்டுமே கொண்டிருக்கும்.
2. ssicsL pagipil (Special Endorsement):
விசேட புறக்குறிப்பிடுதல் உண்டியலை யாருடைய கட்டளைக்கு அல்லது யாருக்கு செலுத்தப்பட வேண்டும் என்பதனைச் குறித்துரைக் கின்றது. (எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 34 (2)இனைப் பார்க்கவும்.) உதாரணமாக ஒரு காசோலையானது AB அல்லது அவர் கட்டளைக்குச் செலுத்தப்படவேண்டியுள்ளது. இக்காசோலை பின்வருமாறு

Page 78
- 144 -
புறக்குறிப்பிடப்படும். CDற்கு அல்லது கட்டளைக்குச் செலுத்தவும். gouth AB (a cheque payable to AB or Order and endorsed pay CD or Order AB.) g)gy 60GBFL Limo š5móLÜL 4.-6ão GTGYLÜLu@ub.
ஒரு வெற்ருக புறக்குறிப்பிடப்பட்ட உண்டியலை வைத்திருப்பவன்' எவனும் அதனை விசேடமான புறக்குறிப்பிடலாக மாற்றலாம். இந் நிலையில் உண்டியலைச் சாட்டுதல் செய்தவரின் கையொப்பத்திற்கு மேல் பணம் செலுத்தப்பட வேண்டிய அறிவுறுத்தலைக் குறிப்பிட்டு இவ்வாறு செய்யலாம்.
ஆளுல் இங்கு ஒரு பிரச்சினை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு காசோலை ஆரம்பத்திலேயே காவிக்குச் செலுத்தப்பட வேண்டியதாக எழுதப்பட்டு இருப்பின் அதன் வருங்காலம் முழுதுமே அது காவிக் குரியதாக இருக்கும். ஒரு விசேட புறக்குறிப்பிடல் அதனைக் குறிப்பிட்ட ஒருவரின் கட்டளைக்குச் செலுத்தப்பட வேண்டியதாக மாற்ற மாட்டாது. ஆஞல் எப்படியாயினும் ஒரு காசோலை ஆரம்பத்திலேயே கட்டளைக்குச் செலுத்தப்பட வேண்டியதாக எழுதப்பட்டிருந்து வெற்று புறக்குறிப் பிடப்பட்டு அதன்பின் விசேட சாட்டுதல் செய்யப்பட்டால் இது பெறுமதியானதாகவும் நடைமுறைப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
3. 5uj5526 T. GaSTSTL pše5ů (Conditional endorsement):
சில சமயங்களில் உண்டியல் ஒன்று நிபந்தனையுடன் புறக்குறிப்
L9Li Gaggiv69. Dass protatDires 'Pay Suntharam etc. on passing
his Institute of Bankers exams' 6tar fillissar glullanth.
எமது மாற்றுண்டியல் கட்டளைச்சட்டம் பிரிவு 33 இதுபற்றிக் கூறு கின்றது. இந்த நிபந்தனை பணம் செலுத்துபவனல் (by the payer) புறக்கணிக்கவும் படலாம். சாட்டப்படுவோனுக்கு (to the endorsee) பணம் செலுத்தப்படுவதே முக்கியமானதாக இருக்குமே ஒழிய நிபந்தனை நிறைவேற்றப்படுவது முக்கியமானதல்ல.
4. alanguangpossrairl pigsail (Restrictive endorsement):
மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 85 (I) இதனை விளக்கு கின்றது.
புறக்குறிப்பானது வரையறைகொண்டதாக இருக்குமாயின் அந்த உண்டியல் அதன்பின்னர் கைமாற்றப்படலாகாது. மேலும் அங்கு குறிப்பிட்டவாறு இயங்குவதற்கான அதிகாரம் கொடுக்கப் படுகின்றதே ஒழிய உண்டியலின் சொத்தாண்மையை மாற்ற முடியாது என்றும் கூறுகின்றது. உதாரணமாக ஒரு உண்டியலில் பின்வரு மாறு வரையறைச்ொண்ட புறக்குறிப்புக்கள் இருக்கலாம்.

- 145 -
'Pay D only' syaivas Pay D for the account of 'X' syá as Pay D or Order for Collection Tairuarda yapaluitesis. இங்கு இவ்வாறு குறிப்பிடப்பட்டு அதன் கீழ் புறக்குறிப்பிடுபவரால் கையொப்பமும் இடப்பட்டிருப்பின் அது வரையறைகொண்ட புறக் குறிப்பாக அமையும்.
" ) இற்கு மட்டும் செலுத்தலாம்" என வரையறையிட்டு புறக் குறிப்புச் செய்வதினுல் புறக்குறிப்பிடுபவன் (endorser) அந்தஉண்டியலின் சொத்தாண்மையைப் புறக்குறிப்பிடப்படுவோனுக்கு மாற்றுகின்ருனே ஒழிய மேற்கொண்டு எந்த ஒரு கைமாற்றமும் செய்தல் தவிர்க்கப் படுகின்றது. ஆனல் காசோலைகளில் இவ்வாறு புறக்குறிப்பிடப்படுவது வெகு அருமையாகவே இடம்பெறுகின்றது.
மேலும் எமது மாற்றுண்டியல் கட்டளைச் சட்டம் பிரிவு 35 (2) இல் கூறப்பட்டவாறு, வரையறைகொண்ட புறக்குறிப்பிடுதலானது சாட்டப் படுவோனுக்கு (endorsee) அந்த உண்டியலின் கொடுப்பனவினைப் பெறும் உரிமையைக் கொடுப்பதுடன், சாட்டுதல் செய்தவன் யாரை வழக்கிட முடியுமோ அவர்களை வழக்கிடும் உரிமையையும் கொடுக் கின்றது. ஆனல் தனது உரிமைகளை மாற்றிக் கொடுப்பதற்கு எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. ஆஞல் இதனைக் குறிப்பாக அங்கீகரித் திருந்தால் நிலை மாறுபடும்.
மேலும் ஒரு வரையறைகொண்ட புறக்குறிப்பிடுதல் அல்லது சாட்டு தல், மேலும் மாற்றப்படுவதனை அங்கீகரிக்கும்போது தொடர்ந்துவரும் எல்லா சாட்டப்பட்டு இருப்போரும் (endorsee), முதல் சாட்டப் பட்டு இருப்போன் கொண்டுள்ள உரிமைகளையும் பொறுப்புக்களையும் அடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (இங்கு பிரிவு 35 (3) இனைப் பார்க்கவும்.)
புறக் குறிப்பிடுதலில் மேலும் சில வகைகள் காணப்பட்ட்ாலும் இந் நான்குமே பிரதானமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Page 79
இதே நூலாசிரியான் ஆக்கமாகத் தொடர்ந்து
வங்கியியல் சட்டங்களும் iGl-ഗ്രഞ്ഞുക്കുബ്രb
LUFT&Sub II
விரைவில் வெளிவரும்.


Page 80


Page 81