கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூகவியல்: கோட்பாட்டு மூலங்கள்

Page 1

என். சண்முகலிங்கன்

Page 2


Page 3

சமூகவியல்
கோட்பாட்டு மூலங்கள்
அமைப்பும் இயங்கியலும்
பேராசிரியர் என். சண்முகலிங்கன்

Page 4
Samookaviyal Kodpaddu Moolangal
Author : Prof. N.Shanmugalingan
C) : Mrs. Gowri Shanmugalingan
First Edition : 2008.12.26
Published by: Nagalingam Noolalayam, Jaffna.
Printed by : Harikanan Printers, Jaffna.
Price :350/-
ISBN 978-955-51,560-0-4

அப்பாவிற்கு.

Page 5

86DOffig60p
சமூகவியல் பயில்துறையின் புலமைப் பரப்பைத் தமிழ்ச் சூழலில் நிலைபெறச் செய்த பெருமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்குரியது.
இந்த வகையில் பெருமதிப்பிற்குரிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகவியல் பேராசிரியரும், இந்நாள் துணை வேந்தருமான பேராசிரியர் என். சண்முகலிங்கன் அவர்களின் பணி குறிப்பிடத்தக்கது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் பேராசிரியர் ஆக்கித் தந்துள்ள சமூகவியல், பண்பாட்டு மானுடவியல்சார்ந்த நூல்கள் இந்திய பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் பெருமதிப் பைப் பெற்றுள்ளன. பேராசிரியரோடு இணைந்து இலங்கை - இந்திய மானுடவியல் என்ற தலைப்பில் நூலொன்றினை வெளியி டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தமையை இங்கு மகிழ்ச்சியுடன் நினைவுகூறவிரும்புகின்றேன்.
சமூகவியல் கோட்பாட்டின் அடிப்படைகளைத் தொடக்க காலச் சிந்தனையாளர்களின் கருத்துநிலைகளினூடாக விளக்கும் சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள் எனும் இந்நூல் தமிழ்ச் சூழலில் சமூகவியல் சொல்லாடலை விரிவுபடுத்திக்கொள்ள பெரிதும் உதவும்.
துணைவேந்தருக்கான பாரிய பொறுப்புக்களிடையேயும் இந்நூலைத் தமிழுக்காக்கும் பேராசிரியரை வாழ்த்துவோம்.
நன்மதிப்புகளுடன் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் புதுச்சேரி
பக்தவத்சல பாரதி 13.12.2008

Page 6
பதிப்புரை
சமூகவியல் அறிவின் இன்றியமையாமை இன்று அனைத்துப் புலங்களிலும் உணரப்படுகின்றது. தமிழில் இந்தப் புதிய அறிவியலின் ஆழமான புரிதலை நோக்கமாகக் கொண்டு சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள் எனும் இந்நூலை வெளியிடத் தீர்மானித்தோம்.
தன் பதவி நிலை சார்ந்த நேர அழுத்தங்களிடையேயும் இதனைத் தன் காலக்கடமையாகக் கொண்டு சமூகவியல் சிந்தனையாளர் பற்றிய தன் நூலினை விரிவாக்கியும், இன்றைய சமூகத் தேவையினடியாக ஆழப்படுத்தியும் இந்நூலினை வடிவமைத்துள்ளார் எங்கள் பேராசிரியர் என்.சண்முகலிங்கன்.
அப்பாவின் நினைவுகளைக் காக்கும் எங்கள் நாகலிங்கம் நூலாலயத்தின் 10வது வெளியீடாக இந்நூல் அமைகின்றது.
தன் வாழ்நாள் முழுமையும் தான் வாழ்ந்த கிராம சமூக மேம்பாட்டுக்காய் அர்ப்பணிப்புடன் உழைத்த அப்பாவுக்கு உகந்த பொருளில் அமைந்த இந்நூலை அவர் பொன்னடிகளில் அர்ப்பணமாக்குவதில் பெருமிதமடைகின்றோம்.
இந்நூலுக்கான அணிந்துரையினை வழங்கிப் பெருமைப் படுத்தும் புகழ்பூத்த மானுடவியலாளர் முனைவர் பக்தவத்சல பாரதி அவர்களுக்கும், அழகுற நூலாக்கம் செய்துள்ள கரிகணன் பிறிண்டேர்ஸ் நிறுவனத்தினருக்கும் அன்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பேராசிரியர் மனோ சபாரத்தினம்
அதிபர் இல.134, புதிய கல்முனை வீதி நாகலிங்கம் நூலாலயம். மட்டக்களப்பு.

முன்னுரை
மனித சமூக அமைப் பின் தன்மையை, அதன் அசைவியக்கத்தைப் புரிந்து கொள்வதற்கான மனித ஆர்வம் தொன்மையானது. ஆனாலும் நியமமானதோர் அறிவியலாகச் சமூகம் பற்றிய விசாரணை மலர்ந்திடவும் அதன்வழி சமூகவியல் என்ற புதிய துறை பிறந்திடவும் பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நாம் காத்திருக்க நேர்ந்தது.
இக்காலத்து முனைப்புப் பெற்ற அறிவொளிக்காலச் சிந்தனை வீச்சும், அந்த சிந்தனை வீச்சின் வழியான சமுதாய, தொழிற்புரட்சிகளும் அன்று நிலவிய சமூக அமைப்புக்களில் பாரிய மாற்றங்களை விளைவித்தன. முடியாட்சிக்குப் பதிலாக சனநாயக ஆட்சிமுறை, மதச்சார்பின்மை ஆகிய கருத்தியல்கள் முதன்மை பெற்றன. இதுநாள்வரை நிலைபேறானவை எனக் கருதிய நம்பிக்கைகளும், வாழ்க்கைமுறைகளும் வலுவிழந்தன. தொழில் மயமாக்கத்து அலைகளிடை கிராமங்களிலிருந்து நகரை நோக்கிய அசைவினால் வீடும் தொழிற்புலமும் வேறாகும் நிலைமைகள் விளைந்தன. நகரமயமாக்கம் மனித சமூக நிறுவனங்களில் ஏற்படுத்திய அதிர்ச்சியான மாற்றங்களைப் புரிந்து கொள்வதற்கான புதிய அறிவின் தேவையைப் பெரிதும் உணர்த்தின.
கூடவே புதிய மாற்றங்கள் தந்த நம்பிக்கையின் அடிச்சுவட்டில் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான புதிய
விதிகளைக் காணும் தேவையும் உணரப்பட்டது.
புதிய இந்தச் சூழமைவின் பிறப்பிடமான பிரான்ஸ் நாட்டின் சிந்தனையாளரான அகஸ்ட் கொம்ற் (August comte) சமூகவியல் (Sociology) என்ற பெயரோடு இந்த அறிவுப் பயணத்தைத் தொடக்கிவைத்தார். அவரைத் தொடர்ந்து ஹேபட் ஸ்பென்சர்

Page 7
(Herbert Spencer), 5 TổoLOTë:6ħu (Karl Marx), 6 TL6lấio (GT6035D (Emil Durkhaim), Dj6iv Go6Just (Max webar), GgTîrg GoLDao (George Simmel) என நீளும் சிந்தனையாளர்களின் அறிவுத்திறத்தாலே சமூகவியல் எண்ணக்கருக்களும், கோட்பாடுகளும் வடிவம் பெற்றன.
GgFuu ibu Til quLudio (functionalism), LDII Tj, Suub (Marxism) 56)ILoTh9ulb (Neo Marxism), GaILIrfair Felphaluci) (Weberian Sociology), g60) 660) 6TuSugi) (Interactionism) GLJ65T60sfulf (feminism), u î6őTGOMGOT 56′GOTjög Gud, (Post Modernism), 36õTGONGOT அமைப்பியல் (Post Structuralism) என வேறுபடும் சமூகவியல் கோட்பாட்டுக் குழுமங்களை இன்றைய சமூகவியல் கோட்பாட்டுப்
புலத்திலே காணலாம்.
சமூக அமைப்புப் பற்றிய, அதன் அசைவியக்கம் பற்றிய பார்வையினடியாக இந்தக் கோட்பாட்டுக் குழுமங்களுக்குள் ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் இனம்காணமுடியும்.
உயிரியொன்றின் உடலமைப்பைப் போன்றே சமூகத்தின் அமைப்பும் அதன் உறுப்புக்களின் இசைவாக்கத்தினால் வடிவம் பெறுகின்றது. அமைப்பின் உள்ளும் புறமும் உள்ள விசைகளால் சமநிலை பாதிப்பிற்குள்ளாகின்றபோது, அந்தச் சமூக அமைப்புக் குள் நிகழும் இயக்கப்பாடுகளின்வழி மாறுபடும் சூழலுக்கு ஏற்ப மீண்டும் அமைப்பாக்கம் பெறுகின்றது எனச் செயற்பாட்டியல் கூறுகிறது. சமூகவியல் மூலவரான அகஸ்ற் கொம்ற், மற்றும் ஹேபட் ஸ்பென்சர், எமில் டுர்கைம் ஆகியோர் முன்வைத்த நேர்க்காட்சிவாத (Positivism) முறையியலினடியாக சமூக ஒருங்கிணைவின் வழியான சமூக அமைப்புப் பற்றிய விளக்கம் இவர்களால் முன்வைக்கப் பட்டது. மனித சிந்தனைப்பாங்கில் ஏற்பட்ட படிமலர்ச்சியின்
விளைவாகவே சமூக அமைப்புகளின் முன்னேற்றம் கருதப்பட்டது.
சமூக அமைப்புப் பற்றிய மார்க்சிய கோட்பாடானது ஏனைய கோட்பாடுகளினின்றும் தனித்துவமானதாக அமைந்தது. பொருளாதார உற்பத்தி உறவுகளினடியாகவே சமூக அமைப்பின் வடிவமும் தன்மையும் நிர்ணயமாகின்றது என்பது மார்க்சின்

கருத்தியலாகும். நிலவும் சமத்துவமற்ற அநீதியான சமூகக் கட்டமைப்பில் சமூக வகுப்புக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடும், அந்த முரண்பாட்டின் விளைவான போராட்டமும் புதிய சமூக அமைப்பைத் தோற்றுவிக்கின்றது. ஹெகல் என்ற மெய்யியலாளரின் கருத்துமுதல்வாதஇயங்கியலைத் தலைகீழாக்கி கருத்துக்குப் பதில் பொருளை நிர்ணயகாரணியாக்கிய மார்க்சின் இயங்கியல் பொருள்முதல் வாதமானது, சமூக வரலாற்றை விளக்குகின்ற அறிவியல் முறையாக மட்டும் அமைந்து விடாமல் சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களைக் கட்டமைப்பதற் கான புரட்சிகர செயற்றிட்டமாகவும் முன்வைக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட கோட்பாட்டுக் குழுமங்கள் பருநிலையில் சமூக அமைப்பின் பரிமாணங்களை நோக்கிய வேளை, சமூகத்தினை நுண்நிலையில் விளக்குவதாக இடைவினைக் கோட்பாடு அமைந்தது. சமூகமானது அதன் அங்கத்தினர் செயல் அனுபவங் களினடியாக வடிவம் பெறுகின்றது; சமூகச் செயலுக்கு அவர்கள் தரும் அர்த்தங்களினடியாகவே சமூக வடிவம் நிர்ணயமாகின்றது எனும் கருத்தியலினடியாகவே இடைவினையியல் தோற்றம் பெற்றது. இடைவினைகளின் வடிவமாக சமூகத்தைக்கண்ட ஜோர்ஜ் சிம்மல், மக்ஸ் வெபர் ஆகியோரின் சமூகவியல் சிந்தனைகளிடையே இந்த இடைவினையியல் சார்ந்த நுண்நிலைக் கோட்பாட்டின் மூலவேர்களைக் காணமுடியும்.
இவ்வாறே மார்க்சியத்திலிருந்து விமர்சனமார்க்சியம் பிறந்து, பின்னை நவீனத்துவத்தின் தோற்றத்துக்கான அடிப்படையானதும், பின்னைய கால வியாக்கியானங்களிடையே அது தன் மூலவேர் களைத் தொலைத்து நிற்பதுமான மாற்றங்களைச் சமூகவியல் கோட்பாட்டுப் புலத்து இன்றுவரை அவதானிக்கலாம்.
குழுமங்களாக, தீவுகளாக ஒன்றையொன்று புறந்தள்ளும் கோட்பாடுகளிடையே இணைவுகளைக் காணவும், அவற்றிடை இசைவுகளை ஏற்படுத்தவும் இன்றைய சமூகவியல் சிந்தனை யாளர்கள் எடுத்துவரும் முயற்சிகளும் எம் கவனத்துக்குரியன.

Page 8
இத்தகு பின்னணியில் சமூகம்பற்றிய புரிதலுக்கான சமூகவியல் கோட்பாட்டின் அடிப்படைகளைத் தரும் சமூகவியல் மூலவர்களின் மூலநூல்களை, மூலாதாரமான அவர்களின் கருத்துக்களை அவர்கள் கால சூழமைவில், அவர்களின் வாழ்வியல் பின்புலத்தில் நோக்குதலின் அவசியம் இன்று பெரிதும் உணரப்படும். இந்தத் தேவையின் கனிவாகவே சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள் அமைப்பும் இயங்கியலும் என்ற இந்த நூல் வடிவம் பெறுகின்றது.
பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன் துணைவேந்தர் துணைவேந்தர் அலுவலகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். 2008.12.26

பொருளடக்கம்
நேர்க்காட்சிவாத கோட்பாட்டின் மூலவர் 01
சமூகங்களின் படிமலர்ச்சி 21
இயங்கியல் பொருள்முதல் வாதம் 27
சமூக ஒருங்கிணைவின் அறிவியலாக சமூகவியல் 45
சமூக செயல் பற்றிய அகவய புரிதல் 69
இடைவினைகளின் வடிவமாக சமூகம் 97
பண்பாட்டு மனப்பாங்கின் இயக்கவியல் 107
மூலநூல்களின் பட்டியல் 120

Page 9

l
நேர்க்காட்சிவாத கோட்பாட்டின் மூலவர் Founder of Positivism
அன்பின்வழி மற்றவர்களுக்காக வாழுதல் எனும் பொதுநலநோக்கே மனித இனத்தின் எல்லையாகும்
- 965ñoñ) 626Tsos) (Auguste Comte)
சமூகவியல் என்ற புதிய அறிவியலின் தோற்றக்காரணராகி, சமூகவியலின் தந்தை எனும் பெருமை பெற்ற அகஸ்ற் கொம்ற் 1798ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் திகதி மொன்ற்பெலியரிற் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு விசுவாசமான கத்தோலிக்கர்; அரச ஊழியர்; ஒழுங்கான, நேர்மையான வாழ்க்கை நடத்தியவர். தனது தொழில், சமயம், குடும்பம் என்பவற்றிற்கெனத் தன்னை அர்ப்பணித்தவர். இளவயதிற் சிறியவனாகப் பல நோய்களின் வயப்பட்டிருந்தாலும், பள்ளிக்கூடத்திற் கெட்டிக்காரனாக இனங்காட்டினார் கொம்ற். தன் சொந்த நகரில் விளங்கிய இம்பீரியல் லைசியில் ஒன்பதாவது வயதிற் சேர்ந்து கொண்டார். தமது பணிகளில் மிகுந்த ஈடுபாடுகொண்ட அதேவேளையில் ஏனைய மாணவர்களிலிருந்து தனித்துவமானவ னாய், துடிப்பும் புரட்சிமனப்பாங்கும் கொண்டவனாயிருந்தார். பள்ளி வாழ்வின் ஆரம்ப நிலையிலேயே நிர்வாகிகளுக்கெதிராகவும், பெற்றோரின் அடிமை அரசியல் நிலைக்கெதிராகவும் தன்னை ஒரு குடியரசுவாதியாகப் பிரகடனப்படுத்தினார். சர்வாதிகார ஆட்சி யாளர்களை வெறுத்த கொம்ற், புரட்சியின் மகோன்னத நாட்களின் மறுமலர்ச்சியைக் காணவிழைந்தார். பள்ளிப்பருவத்தில் தமது கணித பேராசிரியர் டானியல் என்கொன்றி அவர்களது ஆளுமையின்பால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். கொம்ற் பரந்த அறிவும் கத்தோலிக்க மத ஈடுபாடும் கொள்ள இவரே காரணமானார். எனினும் பின்னாளில் இவர் கத்தோலிக்க மதத்தை நிராகரிக்கும் நிலைமையை காண (Լpւգ-Ալմ).
அமைப்பும் இயங்கியலும் O1

Page 10
தமது பதினாறாவது வயதில் ஈகோல் பல்தொழில் நுட்ப நிறுவனத்தின் அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றினார் கொம்ற். பிரான்சின் மிக மதிப்பார்ந்த இந்தக் கல்லூரியின் அனுமதித் தேர்வில் நான்காவதாக கொம்ற் தேறினார். இதனைத் தொடர்ந்து 1814 ஆகஸ்டில் பரிஸ் வந்து சேர்ந்தார். ஈகோல் பல்தொழில் நுட்பக் கல்லூரிப் பேராசிரியர்களில் பெரும்பாலானோர் கணிதம், பெளதிகம் ஆகிய துறைகளிலேயே பெரிதும் தேர்ந்தவர்களாக இருந்தார்கள். மனிதப் பண்பியல்களில் மிகக் குறைந்தளவு ஆர்வமே கொண்டிருந்தார்கள். ஆனால் தம்காலத்து ஏனைய சமூக மெய்யியலாளர்கள் போன்றே கொம்ற்ரும், பிரான்சியப் புரட்சியின் பாதகமான விளைவுகளிற் கருத்தினைச் செலுத்தினார். இதன்படி சமூகத்தின் முன்னேற்றத்தினையே தமது பிரதான இலக்காகக் கொண்டார்.
ஈகோல் பல்தொழில்நுட்பநிறுவனம் விஞ்ஞானக் கல்லூரி யாகவே ஆரம்பிக்கப்பட்டபோதும், சர்வாதிகாரி நெப்போலியன் அதனை இராணுவ மாதிரியாக ஒழுங்கமைத்திருந்தான். பொதுச் சேவைக்கான பொறியியலாளர்களை உருவாக்குதலே நோக்காக இருக்க, நெப்போலியன், அலுவலர்களை உற்பத்தி செய்யும் மையமாக அது அமையவேண்டுமென நிர்ப்பந்தித்தான். ஆனாலும் மாணவர்கள் அதனை ஒரு விஞ்ஞானக் கல்விக்கான மையமாகக் கருதி, மலரும் விஞ்ஞானிகளாகி, நெப்போலியனின் எண்ணத்துடன் முரண்பட்டனர். 1814 இல் அல்லிஸ் (Alies) பாரீசைத் தாக்கியபோது, ஈகோல் பல்தொழில்நுட்ப மாணவர்கள் எதிர்த்துப் போரிட்டனர். இந்தச் சூழல் கொம்ற்க்கு சலிப்பைத் தந்தபோதும், ஈகோல் பல்தொழினுட்பக் கல்லூரியின் சிறந்த விஞ்ஞானிகளின் நிழலில் இருக்கக் கிடைத்த வாய்ப்பை அனுபவித்தார். இக்கல்லூரியின் சிறப்புத் தகைமையைப் பெறுவதுடன், இங்கு ஒரு ஆசிரியராக எதிர்காலத்து விளங்க வேண்டுமெனவும் அவர் விரும்பினார். ஆயினும் தொடர்ந்தும் இவர் ஒரு கிளர்ச்சியாளராகவே அங்கு கருதப்பட்டார்.
நெப்போலியன் மீதான இவரது தொடர் வெறுப்பு, Bourbon அரசர்களின் மீள்வருகையின் பின் ஒப்பீட்டு அளவில் தணிந்தது
02 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

எனலாம். நெப்போலியன் மீண்டபோது முழுக்கல்லூரியும் அவன் முகாமில் சேர்ந்துகொண்டது. அவர்களிடையே புரட்சிகர தலை வராகக் கொம்ற்ரும் இருந்தார். வாட்டலூவின்பின் பரீஸ் வீழ்ச்சி கண்டபின், ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுக் கல்லூரி வழமைபோற் செயற்பட்டது. கொம்ற்ரும் தன் வழமையான கற்கைநெறிக்கு மீண்டார். ஆயினும் வழமைபோல, கல்லூரி, அதிகாரிகளுக் கெதிரான நிலைப்பாட்டுடனேயே கல்வியைத் தொடர்ந்தார்.
1816இல் நிர்வாகத்தின் பழையபாணியிலான பரீட்சை முறைக்கெதிராக ஆறு மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, அனைத்து மாணவர்களினதும் முழுமையான ஆதரவு கிடைத்தது. ஆளுநர் கல்லூரியை மூடுமாறு பணித்தார். கல்லூரி மீளமைக்கப்பட வேண்டும் எனவும், மாணவர்கள் மீளக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பணிக்கப்பட்டது. கொதிக்கும் மனநிலையோடு கொம்ற் மொன்ற்பெல்லியருக்குத் திரும்பினார். மீளவும் ஜூலை மாதம் பரீசுக்கு வந்து சேர்ந்தார். மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதன்மூலம் தம் வாழ்க்கையை ஒட்டினார். இந்த வேளையில், ஐக்கிய அமெரிக்காவுடன் பலவழித் தொடர்புகளைக் கொண்ட ஒரு ஜெனரலைச் சந்தித்தார். அவர் அமெரிக்காவிலுள்ள, ஈகோல் பல்தொழில் நுட்பக்கல்லூரியின் அமெரிக்க வளாகமொன் றில் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறினார். ஆயினும் கொம்ற்ரின் இந்த குடியகல்வுக் கனவு, குறித்த கல்லூரி மூடப்பட்டதாற் சாத்தியமாகவில்லை. தொடர்ந்து தனியாருக்கு, பாடம் சொல்லிக் கொடுப்பதுடன், ஆங்கிலத்திலிருந்து ஒரு கேத்திரகணித நூலை மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டார்.
1817இல் மிகமுக்கியமான ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. Industrie என்ற பருவ இதழின் இயக்குனரான ஹென்றி செயின் சைமன் உடனான கொம்ற்ரின் சந்திப்பு புதிய வாய்ப்புக்களை அவருக்குத் தந்தது. முறையியலின் வழிப்பட்ட சிறந்த பணியாளராகக் கொம்ற் இருந்தமையால், சைமன் தன் செயலாளராக அவரை ஏற்றுக் கொண்டார். இருவரும் இணைந்து செயற்பட்டனர். ஆரம்பத்தில் மாதம் 350 பிராங் கொமற்க்கு வேதனமாக வழங்கப்பட்டது. ஆயினும் சைமன் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியால்,
அமைப்பும் இயங்கியலும் O3

Page 11
அடிக்கடி வேதனம் இன்றியே கொம்ற் செயற்படவேண்டியிருந்தது. இதற்கு மேலாக கொம்ற், தன் புலமைத் தேடலின் வழி எதிர்கால வெகுமதியைக் கருத்திற்கொண்டு உழைத்தார் என்பதே பொருத்த மானது. 1817க்கும் 1823க்குமிடைப்பட்ட காலப்பகுதியில், கொம்ற்ரும் சைமனும் நெருங்கி இணைந்து சமூக மீளமைப்புக்கு இன்றியமை யாத விஞ்ஞானச் செயற்பாடுகள் என்ற தலைப்பிலான ஆய்வுப் LIGOlofluílőio FFIGLILL-GOTT. (The scientific operatury necessary for the reorganization of Society) GTGöt g) b 366 (T pTGOT 3606ooTj செயற்பாடுகளிடையேயும் 1824 இல் இருவரும் பிரிய நேர்ந்தது. இவர்களிடையேயான முரண்பாடு கருத்து நிலைசார்ந்ததாயும், பொருளாதாரம் தொடர்பானதாயுமிருந்தது. மக்களைத் தம்திட்டத் திற்கு எவ்வாறு வசப்படுத்துவது என்பதிற்றான் இவர்களது கருத்தியல் முரண்பாடு குவிந்திருந்தது. தீவிரவாதியான சைமன், உடனடியான சமூகச் சீர்திருத்தத்தின் அவசியத்தை வற்புறுத்தினார். தமது ஆதரவாளர்களான தாராண்மைக் கைத்தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களிடையே விழிப்புணர்வை முதலில் ஏற்படுத்தி, பிரான்சினது சமூக மீளமைப்பைக் காண விழைந்தார். ஆனால் கொம்ற்ரின் நிலைப்பாடு நடைமுறை சார்ந்த இந்த நடவடிக்கைக்குப் பதில், கோட்பாட்டு ரீதியான விஞ்ஞான அடிப்படைகளைக் காண்பதனையே அழுத்தி நின்றது. மேலும், தமது கோட்பாட்டிற்குச் சைமன் தந்த சமய அழுத்தத்தையும் கொம்ற் எதிர்த்தார். இக்காலத்து கொம்ற் தாராண்மை விடுதலை இதழியலாளராகவும் மேனிலை விஞ்ஞான குழாத்தைச் சேர்ந்த அறிஞராகவும் உலக அரங்கில் அறியப்பட்டிருந்தார். கொம்ற்ரைப் பொறுத்தவரை மகோன்னத மான அறிவியற் சாதனைகளை ஈட்டி, தேர்ந்த விஞ்ஞானிகளின் ஆதரவையும், ஆகர்சிப்பையும் பெற்றபோதும், தனித்தே செயற்பட வேண்டியநிலையேற்பட்டது. சமூகவியல் என்ற அறிவியல் உண்மை நிலைநாட்டப்பட்டபோதும் அதன் தந்தைக்கு ஒரு பதவியோ நிலையான வேதனமோ இல்லாத ஒரு நிலை.
1825 பெப்ரவரியில், கரோலின் மசினை (Caroline Massin)ஐ மணம் புரிந்துகொண்டார் கொம்ற். பல ஆண்டு காலம் கொம்ற்க்கு அறிமுகமான இவர், ஒரு சிறிய புத்தக நிலையத்தின் சொந்தக்காரர்.
04 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

இந்த மணவாழ்வு துயரமானது. பதினேழு வருடகால முரண் பாட்டினூடு தொடர்ந்த மகிழ்ச்சியற்ற இந்த வாழ்வு, 1842இல் இவர்கள் முற்றாகப் பிரிந்ததுடன் முடிந்தது. இவரது மணவாழ்வைப் பொருளாதாரமும் பாதித்ததெனலாம். தொடர்ந்து தனியாருக்குப் பாடம் சொல்லித்தந்ததுடன், மேலும் தீவிர அர்ப்பணிப்புடன் தமது ஆய்வுலகில் சஞ்சரித்தார் கொம்ற். விளைவாக இவரது மகத்தான ஆய்வு நூலான Positive Philosophy வடிவம் பெற்றது; 1830-1842 வரையான 12 வருட கால முயற்சி கனிந்தது. அவரது ஆய்வு முடிவுகளை மக்கள்முன் வைக்கும் நிலை ஏற்பட்டபோது அவருக் கென ஒர் உத்தியோகபூர்வமான பதவி இருந்ததில்லை. இதனால் கணக்காளர்களுக்கென ஒரு தனிப்பட்ட பயிற்சி நெறியினை ஒழுங்கு செய்து தனது நேர்க்காட்சிவாத / புற மெய்மை அறிவின் சாரத்தை அவர்கள் முன்வைத்தார்.
குறிப்பிடத்தக்க ஆளுமைகளான விஞ்ஞான அக்கடமி களைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் வொன் ஹம்போல்ற், (Alexander Von Humboldt) GlLITC56lflu16oT6ITUTSIT g-T6Tsiv GG),5Tuff (Charles Dunoyer), இன்னும் ஈகோல் பல்தொழினுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவ நண்பர்கள் எனத் தரமான ஆய்வாளர்கள் இவரது விரிவுரைகளுக்குச் சமுகம் தந்து கெளரவமளித்தனர்.
இவ்வேளை ஈகோல் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பேராசிரியர் பதவி ஒன்றினைப்பெற முயன்றும் அது கைகூடாமற் போனது. எனினும் பின்னாளில் பரீட்சகராகும் அந்தஸ்து மட்டும் கிடைத்தது. தனியார் பள்ளிக்கூடம் ஒன்றிற் கணித போதனைப் பணிமூலம் கிடைத்த வருமானத்தின் துணையோடு வாழ்வின் வறுமையோடு ஓரளவிற்கு அவரால் போராட முடிந்தது.
இந்தத் துயரமான நிலைமைகளிடையேயும் குறிப்பிடத்தக்க நன்மாணாக்கர்களைப் பெறும்பேறு கொம்ற்க்கு வாய்த்தது. இவர்களில் எமில்லிற்றயர் (Emile Litre), சேர் பிவெஸ்ரர் (Sir Bewster), ஜோன் ஸ்ருவட் மில் (John Stuart Mil) போன்றோர் குறிப்பிடத் தக்கவர்கள். மில், கொம்ற்க்கான பொருளாதாரத் தேவைகளிலும் உதவியாயிருந்தார். கூடவே கொம்ற்ரை நேசித்தவர்களிடம் இருந்து
அமைப்பும் இயங்கியலும் O5

Page 12
பொருளாதார உதவிகளைப் பெறவும் துணையானார். இக்காலத்தும் தன்னை அங்கீகரிக்க மறுத்தவர்களுடன் போராடுவதில் தீவிரமாக இயங்கினார் கொம்ற். தம்மை எதிர்த்தவர்கள் தொடர்பாக மிகக் கடுமையான கடிதங்களைப் பத்திரிகைகளுக்கு எழுதினார். 1944இல் ஈகோலிலே பல எதிரிகளை எதிர்கொள்ள நேர்ந்தது. விளைவாக இவரது பரீட்சகர் பதவி புதுப்பிக்கப்படாமற் போனது. அரைவாசி வருமானம் இழக்கப் பட்டது. இக்காலப்பகுதியிற்றான் குளோதில் டி வவுக்ஸ் (Clothilde de Vaux) என்னும் உயர் வகுப்புப் பெண்ணுடனான காதல் உறவு துளிர்த்தது. ஒரே ஒருவருட உறவுதான் இங்கும் மிஞ்சியது. காசநோயால் குளோதில் டியை இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை. இந்தத் துயரம் தந்த சுமையுடனேயே மீளவும் தீவிரமான ஆய்வில் தம்மை ஈடுபடுத்தினார் கொம்ற். இழந்துபோன காதலியின் உணர்வுத் தாக்கம் அவரது கருத்து நிலையிலும் வெளிப்பட்டது. 1844இல் 96)JU5) System de politique positive (DITG) வெளியானது. இந்நூலில் அறிவுக்கு மேலாக மனவெழுச்சியை அழுத்தும் கொம்ற்ரின் உளமாற்றத்தை ஆய்வாளர் இனங்காண்பர். நீண்ட காலமாக மேலாண்மை செலுத்திவந்த ஆணாதிக்க அறிவுக்கு மருந்தாகப் பெண்மையின் சக்தி மானிடத்தின் மேன்மைக்கு இன்றியமையாதது என்னும் அவரது கருத்தியல் இங்கு துலங்கும். இந்த யுகத்தின் பிரச்சினைகளுக்கு எல்லாம் உலகளாவிய அன்பு தான் தீர்வு என்ற கொம்றின் கருத்தை, அவரது மாணவரான ஜே.எஸ். மில்ஸ் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுபோலவே கொம்ற் முன்வைத்த மானுட சமயம் (Religion of Humanity) என்ற கருத்தியலும் இவர்களால் நிராகரிக்கப்படும். நேர்க்காட்சிவாதத்தின் பிதாமகர் மீளவும் இறையியல் நிலைக்குள் வீழ்ந்துவிட்டதான
விமர்சனங்கள் மேலெழும்.
ஒருபுறம் நண்பர்களை இழந்தநிலை; அதேவேளை புதிய திருச்சபையைச் சேர்ந்த பலர் கொம்ரின் கருத்துக்களால் கவரப்படும் நிலைமையினைக் காணமுடியும். 1848, பெப்ரவரி புரட்சியை தொடரும் சில நாட்களில் Society Positivist என்ற சங்கத்தை அமைத்தார். 50களின் ஆரம்பத்தில் இவரது போதனைகளின் பிரதான களமாக இந்நிலையம் விளங்கியது. இந்த அமைப்பின் கிளை நிலையங்கள் ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய
O6 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

நாடுகளில் அமைக்கப்பட்டன. வாரந்தோறும் இங்குள்ள தம் மாணவர்களுக்கு செய்திகளை அனுப்பிவந்தார் கொம்ற். புதன் கிழமை தவிர்ந்த ஒவ்வொரு நாள் மாலையிலும் ஏழு மணியில் இருந்து ஒன்பது மணிவரை இந்தப் புலனறிவாத சமூகத்தில் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இக்காலப்பகுதியில், புலனறிவாத திருச்சபையின் இரட்டை இலக்குகளாக ஒழுங்கும், முன்னேற்றமும் கொம்ரினால் முன்வைக்கப்பட்டபோதும், பின்னைய காலங்களில் ஒழுங்கு என்பதே முக்கியத்துவம் கொண்டதாக வெளிப்பட்டது. 1857 இல் புற்றுநோயினாற் பீடிக்கப்பெற்ற கொம்ற்ரின் மரணம் நிகழ்ந்தது. 5.91857இற் புலனறிவாத மயானத்தின் கல்லறைக்குள் கொம்ற்ரின் பூதவுடல் விதைக்கப்பட்டது. கொம்ற்க்கு மிகவும் விசுவாசமான மாணவர்களின் உடலங்களும் குருவின் நினைவுத் தூபிக்கு அருகிலேயே பின்னாளிற் புதைக்கப்பட்டமை குறிப்பி டத்தக்கது.
சமூகவியலுக்கான கொம்ற் அவர்களின் பிரதான பங்களிப்புக் களைப் பின்வரும் தலைப்புக்களின்கீழ் இனிக் காண்போம்.
நேர்க்காட்சிவாதம்
சமூகம் தொடர்பான இயற்கை வழி விஞ்ஞானம் ஒன்றினைக் காண்பதே கொம்ற் அவர்களின் பிரதான இலக்காகும். இது மனிதகுலத்தின் கடந்தகால வளர்ச்சியை விளக்குவதுடன் வருங்காலம் பற்றிய எதிர்வு கூறலாகவும் அமைந்தது. ஒழுங்கின்றி விபத்துப்போலவும், விதிகளற்றும் கிடந்ததாகக் கருதப்பட்ட இயற்கைப் பொருண்மைகளிடை ஒர் ஒழுங்கினைக் காண்பதில் இயற்கை விஞ்ஞானம் வெற்றிகண்டதாகக் கொம்ற் வாதிட்டார். இவ்வாறே சமூகத்தையும் விஞ்ஞானமுறையிற் கற்கவேண்டும் என்றார். இதற்கான ஒரு முறையியலாகவே Positivism என்பதனை இயற்கை விஞ்ஞான நுட்பங்களின் மாதிரிகளிலிருந்து உருவாக்கி னார். தமிழில் நேர்க்காட்சிவாதம், புறமெய்மைவாதம், புலனறி வாதம், நிச்சயவாதம், நேர்க்காட்சிவாதம் எனும் பெயர்களால் சமூகவியற் புலங்களில் இது வழங்கப்படுகின்றது. நேராகக் கண்ட உண்மைகளையன்றி பிறகொள்கைகள் எதனையும் அடிப்படை
அமைப்பும் இயங்கியலும் O7

Page 13
யாகக் கொள்ளாத தரிசனமாக இது அமைகின்றது. அறியப்படாத பிரபஞ்ச இரகசியங்களைத் தேடி இந்த தரிசனம் கவலை கொள்வ தில்லை. மனித வாழ்விற்குப் பயனான அறிவே இதன் எல்லை ஆகும். சமூக நலனும் சீர்திருத்தமுமே இதன் நோக்கமாகும்.
| g26,5 TGOTLD (Observation) O urf Gaylig56060T (Experiment) O 6pl'Liluautuj6 (Comparative Method)
என்பவற்றின் வழியாகவே சமூக முன்னேற்றம், சமூக ஒழுங்கு என்பவற்றிற்கான விதிகளை விளக்கமுடியும் என்றார் கொம்ற்.
அனைத்து விஞ்ஞானக் கோட்பாடுகளும் அவதானிக்கப் பட்ட உண்மைகளினடியாகவே அமையவேண்டும். அதேவேளை யாதேனுமொரு கோட்பாட்டின் வழிகாட்டலின்றி உண்மைகளை அவதானித்தலும் இயலாது. சமூக உண்மைகள் தொடர்பான யாதேனுமொரு கோட்பாட்டுடன் இணைத்து நோக்கும்போதே விஞ்ஞான ரீதியான அர்த்தத்தைக் காணமுடியும். அவதானங்களைத் தனித்து மேற்கொண்டபோதும் அவை புள்ளிவிபரங்கள், மற்றும் குறித்த விடயத்தின் இயங்குவிதிகள் என்பவற்றுடன் இணைத்தே நோக்கப்படவேண்டும் என்றும் கொம்ற் தனது முறையியலில்
விளக்குவார்.
சோதனை முறை கடினமானது. சமூக நிகழ்வுகளைப் பொறுத்தவரையிற் பகுதிநிலையிலேயே பயன்படுத்தக்கூடியது. எல்லா வேளைகளிலும் சமூக நிகழ்வுகள் தொடர்பான நேரடி அவதானம் சாத்தியப்படாதபோது இம்முறை பெரிதும் துணை யாகும். குறிப்பாகச் சமூக செயற்பாட்டிற் பாதிப்பான நோய்நிலை ஏற்படுகின்றபோது சில வகையான பரிசோதனை முறைகள் சாத்தியமாகலாம். நோய்நிலைக்குமுன்னைய நிலைமைகளை ஒப்பிடுவதன்மூலம் சமூக அறிவு இங்கே பெறப்படும். 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலப் பிரான்சிய சமூகத்தில், தான்கண்ட அனுபவங்களினடியாகவே கொம்ற் இதனை முன்வைத்தார்.
08| சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

சமூகவியலாளர்களின் விஞ்ஞான முறையியலின் மையமாக கொம்ற் குறிப்பிடும் ஒப்பியலாய்வும் முக்கியமானது. மனித சமூகங்களை விலங்கினங்களோடு ஒப்பிடும்போது, சமூக உறவுகள் தொடர்பான அடிப்படைக் கீற்றுக்களை அறியமுடியும். அவ்வாறே மனித உயிரிகளுக்கும், விலங்குகளுக்குமிடையிலான வேறுபாடு களையும் காணமுடியும். மனித சமூகங்களுக்கிடையிலான இத்தகைய ஒப்பீடுகளின் வழியான அறிவு, சமூகவியலுக்குப் பெரிதும் துணையாகவுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் முற்றிலும் தனித்தனியாக இயங்குகின்ற மனித சமூகங்களுக் கிடையிலான ஒப்பீடாக இது அமைந்தது. இம் முறையானது சமூகப்படிமலர்ச்சியின் வேறுபடும் நிலைமைகைளைத் தேடிக் காண்பதில் துணையானது. மனுக்குலம் முழுமையும் தனித்த, சீரான, ஒரேபாதையில் முன்னேற்றம் கண்டபோதிலும், வெவ்வேறு சமூகங் களும் பெருமளவிற் சமனற்ற வளர்ச்சி நிலைகளை, மேம்பாட்டி னைக் கொண்டிருப்பது, இங்கு கவனத்திற்குரியது. இந் நிலைமை களுக்கான காரணங்கள் இன்னமும் சிறியளவிலேயே அறியப் பட்டுள்ளன. மேம்பாட்டின் சில படிநிலைகள் தொடர்பாக நாகரிகங்களின் வரலாறு, எந்தவிதத் தடயங்களையும் விட்டுச் செல்லாதபோது ஒப்பியல் முறையில் இதனைக்காண்பது சிரம மானது என்பதும் இங்கு கவனத்திற்குரியதானது.
மரபுவழியான இம்மூன்று விஞ்ஞான முறைகளையும் சமூகவியல் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு மேலாக இவற்றில் வரலாற்று முறையின் (Historical method) இன்றியமையாமையையும் கொம்ற் பெரிதும் அழுத்தினார். மனிதத்துவத்தின் தொடர் நிலைகளை வரலாற்று ரீதியில் ஒப்பிடும் விஞ்ஞான முறையியலின் வழியாகவே அரசியல் தத்துவம் உருவானதுடன் விஞ்ஞானத்தின் துணை அடுக்காகவுமுள்ளது என்றார் கொம்ற். மனுக்குலத்தின் படிமலர்ச்சி நிலைகளை வரலாற்றுரீதியின் வழி ஒப்பிடுவதன் வழிதான் சமூகவியல் விசாரணையின் மையநிலை நிறைவு காணும். வரலாற்று ரீதியான படிமலர்ச்சிநிலையினை அறியாத சமூகவியல் அர்த்தமற்றது என்பதும் கொம்ற்ரின் அழுத்தமான கருத்துநிலை
uUT(95 LD.
அமைப்பும் இயங்கியலும் O9

Page 14
தொடக்க காலத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வுகள் விஞ்ஞானத்தில் இருப்பதாகக் கொம்ற் நம்பினார். பின்னாளில், சமூகவியலின் வளர்ச்சியுடன் விஞ்ஞானம் என்பது தான் தோற்றுவித்த நோய்களை மட்டுமே தீர்க்கவல்லது எனக் குறிப்பிட்டார்.
அறிவியல் படிமலர்ச்சியின் மூன்று கட்டங்கள்
ஆரம்பகாலத்து செயின் சைமனுடன் இணைந்து செயற்பட்ட வேளையிலே மனித குலத்து நிகழ்ந்து கொண்டிருந்த தொடர் மாற்றங்களைக் கொம்ற் ஆராய்ந்தார். விஞ்ஞான ரீதியான ஒப்பியல் ஆய்வின் வழி கொம்ற் முன்வைத்த முக்கியமான அறிவுக்கனியாக மனிதமுன்னேற்றத்திற்கான விதி அல்லது அறிவியல் படிமலர்ச்சியின் ep6örg UL4-5ao)6),56T upg5u gigs (The Law of three stages of intellectual evolution) எனும் தலைப்பிலான கொம்ற்ரின் ஆக்கம் அமைந்தது. மனிதப் பண்பின் வளர்ச்சியுடனும், தனிமனிதர்களின் வாழ்க்கை வட்டத்துடனும் வாழ்க்கைபற்றிய மனித விளக்கம் எவ்வாறு அமைந்தது என்பதனைக் கொம்ற் இந்நூலிலே தெளிவாக விளக்கினார். ஒரு தனியனின் மன வளர்ச்சிக்குச் சமாந்தரமாகவே மனித இனப் படிமலர்ச்சியும் அமைந்தது என்றார். மனித இனமானது குழந்தைப்பருவத்து அர்ப்பணிப்பான நம்பிக்கையாளராகவும், குமரப்பருவத்து விமர்சன மனப்பாங்குடனான நுண்பொருட் கோட்பாட்டுவாதியாகவும், முதிர்பருவத்து இயற்கையான தத்து வவியலாளனாகவும் விளங்குவதாகவும் கொம்ற் கூறினார்.
எங்கள் அறிவின் ஒவ்வொரு கூறும் பின்வரும் மூன்று படிநிலைகளைக் கடந்துவந்தது என்பது கொம்ற்ரின் படிமலர்ச்சி விதி ஆகும்.
முதல்நிலையான இறையியல் நிலையில் மனித மனமானது உலகநிகழ்வுகளுக்கெல்லாம் இயல்நிலை கடந்த சக்திகள்தான் காரணம் என நம்புகிறது. இறைசக்திகள்தாம் உலக உயிர்களை இயக்குவன, செயல்களை நிர்ணயிப்பன, அனைத்திற்கும் அவையே
1이 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

மூலகாரணம் என்பது இக்காலத்துக்குரிய நம்பிக்கையாகும். இது சமயம் உண்டான பருவ காலம். அம்மை நோய், கொலரா போன்றவற்றினைத் தெய்வத்தின் கோபமாய், சாபமாய் சமூகங்கள் கொண்ட நம்பிக்கை இதன் வழியது. இவ்வாறே வெற்றி, வெள்ளம், பஞ்சம் எனத் தாம் எதிர்கொள்ளும் அனைத்திற்கும் தெய்வத்தை அல்லது ஆவியைக் காரணமாகக் காணும் இந்நிலையிலும் மூன்று கட்டங்களை அவதானிக்கலாம். தொடக்கத்தில் ஆவிக்கொள்கை (Fetishism), பின்னர் பல கடவுள் கொள்கை (Polytheism). இறுதியாக ஒரு கடவுள் கொள்கை (Monotheism) என இறையியல் நிலையின்
துணைநிலைகளையும் இனங்காட்டினார் கொம்ற்.
இரண்டாவது நிலையான நுண்பொருள் நிலையானது, தத்துவ ஞானம் வளர்ச்சி கண்டதன் விளைவானது. தான் கண்டவற்றின் பின்னாதாரமான பரமாத்திக உண்மைகளைக் கற்பனையிற் கருத்து
ருவாகக் காணும் பருவமாக இது அமைகின்றது என்றார் கொம்ற்.
/ ༄༽
முதிர்நிலை ட, நேர்க்காட்சிவாதநிலை (Positive stage)
(1800க்குப்பின்) விஞ்ஞானத்தின் மேலான நம்பிக்கைக்காலம்
உருமாற்ற நிலை -> நுண்பொருட்கோட்பாட்டுநிலை
(Metaphysical stage) (1300 - 1800) gopuSuái Saogu (Theological Stage) 1300 க்கு முற்பட்டது)
குழந்தைப்பருவம்-> இயல்நிலை கடந்த சக்திகள்
மீதான நம்பிக்கை أر ܢܠ
மூன்றாவது நிலையான புறமெய்மை நிலையானது, கற்பனை நீங்கிய விஞ்ஞான அறிவின் வளர்ச்சிப்பருவமாகும். அறிவுக்கு எட்டியதையே அளக்கின்ற இந்தப் பருவமே மனித மனச் செயற்பாட்டின் உச்ச நிலையான மெய்யறிவியல் நிலை என்பது கொம்ற்ரின் கருத்து. இந்நிலையில் மனித மனமானது நிகழ்வுகளின் அமைப்பு, உறவின் தன்மை, புலன் வழியாகக் கண்டறியும் தன்மை
அமைப்பும் இயங்கியலும் 11

Page 15
ஆகிய வழிமுறைகளிலேயேதான் அறிவைத் தேடுகின்றது. புலன் வழி அறியமுடியாதவற்றை விட்டு, புற மெய்மையான நிகழ்வுகள், இயக்கங்களின் விதிகளையே அறிய விளைகின்றது. மனித சிந்தையில் விளைகின்ற இந்த மாற்றமானது சமூகத்தின் பல்வேறு அமைப்புகளிலும் மேம்பாட்டினை விளைவிக்கின்றது என்பார்
கொம்ற்.
சமூகம்பற்றிய சிந்தனை இன்னமும் இறையியல் நிலையிலும், நுண்பொருட் கோட்பாட்டு நிலையிலுமே அதிகளவு இருப்பதாகக் கொம்ற் கருதினார். இந்த வகையில் முதன் முதலாகப் புற மெய்மையுடன் தொடர்புகொள்ளும் அறிவாக வானியலைக் கொம்ற் இனம் காண்பார். நிறைவான உச்சநிலை வளர்ச்சியாகப் புறமெய்மை வழி சமூகவியல் வளர்ச்சி காண்கின்றதென்பார் கொம்ற். மனித நடத்தை, பண்பாட்டுக் கோலங்களின் சிக்கல் நிலைமைகளிடை
இத்துறையின் வரவுதாமதமானது என்றும் குறிப்பிடுவார்.
கொம்ற்ரைப் பொறுத்தவரை மனித மனத்தின் ஒவ்வொரு படிநிலையும் அதன் உப படிநிலைகளும் ஒன்றிலிருந்து ஒன்று என்றவாறே தொடரக் காணலாம். பழைய அமைப்பு அழியாமல் புதியது தோன்ற முடியாது. புதியதன் தோற்றத்திற்கு பழைய உள ஒழுங்கு முற்றாக அகலுதல் இன்றியமையாததாகும். இந்த நிலையை எய்தும்வரை வரவிருக்கும் கால இயல்புகளைப் புரிதலும் இயலாது.
மனித மனத்தின் முற்போக்கான விடுதலையின் வளர்ச்சிப்படி நிலைகளிலேயே கொம்ற்ரின் சிந்தனை குவிந்திருந்தது. கூடவே இந்தப் படிநிலைகளுடன் தொடர்புடையதாக, சமாந்தரமாகக் காணப்பட்ட சமூக நிறுவனவமைப்புக்கள், சமூக ஒழுங்கின் தன்மை, மற்றும் மனித வாழ்வின் பொருளாதார, உணர்வு நிலைமைகள் அனைத்தையும் இணைத்தும் நோக்கினார் கொம்ற். இவை அனைத்தும் மனுக்குல நன்மையின் அடிப்படையில் அமைவதாகவும் நேர்காட்சிவாத நிலையில் அறிவியல் முன்னேற்றம் எய்தப்படுவ தாயும் நம்பினார் கொம்ற்.
12 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

/ கொம்ற் கருத்துநிலை אר
a ஒழுக்கம்சார் ஒழுங்குகள் (2650Tissu) சமூகத்தின் செயல்பாட்டுத் தேவைப்பாடுகள்
மொழி நுண்பொருள் \ \ /\ 0, \, கோட்பாட்டு நிலை உள்ளுணர்ச்சிப்பாங்கு - நுண்மதி - மனம் அறிவுசார் (நிலை ) சக்திகள் திரள் அறிவு நிை የዖ (சிந்தனை0 பொதுநலப்பண்பின் விரிவாக்கமும்
நிறுவனங்களின் முன்னேற்றமும்
வகுப்புக்கள்
Ν இறையியல் பொருள்சார் முதல் சொத்து (960pऊIां சக்திகள் படையியல் நிலை) (செயற்றிறன்)
திருப்தி தொழிற்பகுப்பு சுயதருப
کصر كطرح
இயற்கையில் மனிதன் பொருள்சார் தேவைகள் தொடர்பான மேம்பாட்டின் பந்தனைக்குட்படுத்தப்பட்ட செயற்பாடுகள் படிநிலைகள்
அறிவார்ந்த பொருள்சார் சமூகஅலகின் ஒழுங்கின் உணர்வு
Booooo Opaso 665 660s jd0060
இறையியல் இராணுவ குடும்பம் வீடுசார்ந்தது பிணைப்பு
மயமானது
ဒီမ္ယမ္းမ္ယ။ சட்டரீதியானது அரசு கூட்டுவாழ்வு பயபக்தி
மனிதகுலம் உலகளாவியது சாத்வீகம்
புறமெய்மை தொழில்சார்ந்தது
முதற்படிநிலையான இறையியல் தொடர்பாகவே ஒப்பீட்டளவில் விளக்கமான ஆய்வுகளை கொம்ற் முன்வைத்துள்ளாரெனலாம். இறையியல் நிலையை ஐந்து துணைப்பிரிவுகளாக வகுத்து இவை ஒவ்வொன்றும் முன்னேற்றத்திற்கு வழங்கியுள்ள பங்களிப்பினை
அமைப்பும் இயங்கியலும் 13

Page 16
இனங்காட்டுவார். துணைநிலைகள், அவற்றின் சமூகப்பங்களிப்பு கள் சார்ந்த கொம்ற்ரின் வகைப்பாடு பின்வருமாறு அமையும்.
போலிப்பொருள் வணக்கம் -> குடும்பம் N
பல்தெய்வ வணக்கம் -> அரசு, நிலவுடைமை
அறிவார்ந்த பல் தெய்வ விளக்கம் -> அறிவார்ந்த பங்களிப்பு
சமூகமட்டத்திலான ஒரு தெய்வ -> தந்தையர் தேசம் வணக்கம் தற்காப்புநிலையான ஒரு தெய்வ -> பெண்களினதும் வணக்கம் தொழிலாளர்களினதும்
விடுதலை الم
ஒவ்வோர் உளப் பருவத்திற்குமான இயல்புகளையும் அவற்றிற்கான சமூக அமைப்புக்களையும், அரசியல் ஆதிக்கங் களையும் கொம்ற் இணைத்து விளக்கினார். இறையியல் நிலை யானது குருமாரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது; இராணுவத்தால் ஆளப்படுவது. நுண்பொருட்கோட்பாட்டு நிலையானது, மத்திய கால மறுமலர்ச்சியுடன் இணைத்து நோக்கக்கூடியது. இது திருச் சபையினரதும் சட்டத்தரணிகளினதும் ஆதிக்கத்திற்குட்பட்டது. இவ்வேளை உதயமாகும் புறமெய்மை நிலையில், தொழில்துறை நிர்வாகிகளினதும், விஞ்ஞான ஒழுக்க வழிகாட்டிகளினதும், ஆட்சி இருக்குமென்றார் கொம்ற். இவ்வாறே முதல்நிலையில் குடும்பமே உலகப்பொதுவான சமூக அலகாகும். இரண்டாவது நிலையில் அரசுதான் சமூக முதன்மைபெறும். மூன்றாவதில் மனித இனமே செயற்பாட்டுக்குரிய சமூக அலகாகும். இவையனைத்துமே நிகழும் முற்போக்கான உளவிருத்தி மாற்றங்களுக்கு ஏற்பவே தோற்றம் பெறும்.
மனித முன்னேற்றத்துக்கான விதிகள் பற்றிய தமது விளக்கத்தில் அறிவியல் படிமலர்ச்சியின் அவசியத்தினை அழுத்திய போதிலும், ஏனைய செல்வாக்குக் காரணிகளையும் ஏற்றுக் கொள்கின்றார் கொம்ற். சமூக முன்னேற்ற வேகத்தினைத் தீர்மானிக் கும் பிரதான காரணியாகக் குடித்தொகை, வளர்ச்சியினைக் குறிப்பிடுகிறார். அதிகரிக்கும் குடித்தொகை, இருப்புக்கான புதிய
14 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

வழிகளைக்காண ஊக்குதலாகும்; புதிய தேவைகளினடியாக அறிவார்ந்த, ஒழுக்க விசைகளும் வளர்ச்சி காணும்; பெளதீக நிலையிலான அசமத்துவங்களும் இல்லாதொழிக்கப்படும். இவற்றினைவிடச் சமூகப் படிமலர்ச்சிக்கான மற்றொரு காரணியாக தொழிற்பிரிப்பையும் கொம்ற் இனங் காட்டுவதும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
அறிவியலின்படிநிலைகள்
விஞ்ஞானங்களின் படிமுறையமைப்புத் தொடர்பான கொம்ற் கருத்துநிலை அவரது படிமலர்ச்சி விதியின் வழியானது; வேறுபடும் துறைகளிடை தர்க்க ரீதியான தொடர்புண்டு; ஒவ்வொரு தொடர்நிலையும் முன்னைய காலத்துடன் கூட்டிணைவு கொண் டுள்ளது. அவற்றின்முன்னேற்ற வேகங்களில் வேறுபாடுண்டு.
அறிவியல் படிமுறையில் கணிதத்தை அடித்தளத்தில் வைத்த கொம்ற் அதற்கான காரணத்தையும் தெளிவாக கூறுவார். கணிதம் காட்டும் விடயங்கள் எங்கும் எதிலும் எளிதில் கண்டறியும் தன்மை கொண்டவை; புறபுலன்களால் அறிவதற்கு அப்பால் கருத்துருவ நிலையிலேயே தெரிந்து கொள்ளக் கூடியவை. இந்த அடிப்படையில்தான் கணிதவியலை மனிதனின் ஆதார கருவியாக வைக்கின்றார் கொம்ற். கணித அடிப்படையில் மனித மனம் சிந்தனை வெளியில் எங்கு வேண்டுமானாலும் செல்லமுடியும். ஏனைய அறிவியல்கள் கணிதத்தை சார்ந்து அதனை பயன்படுத்து கின்றன; கணிதமோ சுதந்திரமாய் செயற்படுகின்றது.
வானியல் நிகழ்வுகள் எளிமையாய், பொதுவாக மாறாத் தன்மை கொண்டவையாய் விளங்குகின்றன. மேலும் வானியல் இயக்கங்களை அளத்தலில் கணிதத்தின்துணை இன்றியமையாத தாய் உள்ளதால் கணிதத்துக்கு அடுத்தாக வானியலை வைத்தார் கொம்ற். பெளதீகவியலானது இரசாயனவியலைவிட அதிக பொதுத்தன்மையும், சுதந்திரத் தன்மையும் கொண்டதால் வானியலுக்கு அடுத்தபடியில் பெளதீகவியலையும், அடுத்து இரசாயனவியலையும் வைப்பதாக கூறுகின்றார் கொம்ற். யிரியலானது தனக்கு முன்னைய அனைத்து அறிவியல்களையும்
அமைப்பும் இயங்கியலும் 15

Page 17
சார்ந்திருப்பதனால் ஏனையவற்றின் மேலாக உயிரியலை வைக்கிறார்
9-eupé வியல்
வானியல் / கணிதவியல் \
விஞ்ஞானங்களின் படிநிலையில் சமூகவியலை உச்சியிலே
கொம்ற். காட்டுரு 1.2
வைப்பார் கொம்ற். ஏனைய அனைத்து விஞ்ஞானங்களும் சமூக விஞ்ஞானங்களுக்கான தயார் நிலைகளே என்றும் குறிப்பிடுவார்.
சமூகவியலின் பிரிவுகள் (Divisions of Sociology)
உயிரியலானது உடலியல் (Anatomy), உடற்றொழிலியல் (Physiology) என இரு பிரிவுகளாகவுள்ளமை போன்றே சமூகவியலை
պԼ0
1. நிலையியல் (Statics) 2. இயக்கவியல் (Dynamics)
என இரு கூறுகளாக பிரிக்க முடியுமென்பார் கொம்ற். இவற்றுள் சமூக நிலையியல் அடிப்படையானது. இப்பிரிவுகள் உண்மைகளுக்கிடையிலானதாக அல்லாமல் கோட்பாட்டின் இரு கூறுகளுக்கிடையிலானவை. சமூக இருப்பு நிலைமைகளின் நிலைபேறான ஒத்திசைவுத் தன்மையை ஒழுங்கு (Order) குறித்து நிற்கின்றது. சமூக வளர்ச்சியை விளக்குவதாய் முன்னேற்றம் (Progress) அமைகின்றது என்பார் கொம்ற். இங்கு ஒழுங்கு என்பது நிலையியலையும், முன்னேற்றமென்பது இயக்கவியலையும் சுட்டி நிற்கின்றன.
16 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்
 
 
 

சமூகநிலையியல்
மனித முன்னேற்றம் தொடர்பான தமது விதிகளின் வழி சமூக அசைவுக்கான அடிப்படைகளை கொம்ற் விளக்கினார். 1838 புதிய சமூகவியலுக்கான உருவைத்தந்தார் கொம்ற். சமூக ஒருங்கிசைவுக் கான அடிப்படைகளைத் தீர்மானிக்கும் காரணிகளாகச் சமூக ஒத்திசைவு என்ற புறமெய்மைக் கருத்தாக்கத்தினைச் சமூக நிலையியல் என்ற தமது எண்ணக்கருவாக்கத்தினுாடாகக் கொம்ற் ஆராய்ந்தார்.
சமூகவியலில் புள்ளிவிபரவியல் ஆய்வானது, சமூக அமைப்பின் வேறுபட்ட பகுதிகளுக்கிடையிலான செயல், எதிர்ச் செயல்சார் விதிகளை வெளிப்படுத்துகின்றது. சமூக முழுமையின் கூறுகளுக்கிடையிலான பரஸ்பர சமநிலையையும் இது ஆராய் கின்றது. சமூகத் தொகுதியின் பகுதிகளுக்கும் முழுமைக்குமிடையில் எப்பொழுதும் தடையிலாததோர் இசைவு காணப்படுகின்றது. இந்த இசைவு குழப்பப்படும் பொழுது நோய் நிலையாகின்றது. (Pathological conditions)
ஒர் அமைப்பாகச் சமூகப் பொருண்மை காணப்படுவதற்கான லைமையை விளக்கியதோடு அவ்வமைப்பின் கூறுகளுக்
த றுகளு கிடையிலான தொடர்புகளையும் கொம்ற் தெளிவுபடுத்தினார்.
西 L- Ավ p
ன்வ சPமகம் பற்றிய ரம்பகாலச் செயற்பாட்டியல்
த elp D 이월, D Lஆய்வாளராகக் கொம்ற்ரைக் கருதமுடியும். தமது நிலையியல் தொடர்பான ய்வில் சமூக உயிரியின் பகுதிகளுக்கிடையிலான,
elp குதகளு ,{{ی ஒருமைப்பாட்டிற்கான அடிப்படைகளின் இயல்புகளையும் மூலங் களையும் விரிவாகவே கொம்ற் விளக்கின்ார்.
சமூகவியலை உயிரியலுடன் இணைத்து கொம்ற் நோக்கிய போதும் சமூக உயிரிகளின் தனித்துவத்தையும் கொம்ற் ஏற்றுக் கொண்டார். சமூக ஒருங்கிணைவினை ஆத்மார்த்தமான பிணைப் புக்களின் வழியேதான் ஏற்படுத்த முடியும் என்றார். இதனால் அனைத்துச் சமயங்களுக்கும் மொழிக்கும் முக்கியத்துவம் தந்தார் கொம்ற்.
எங்கள் மூதாதையரின் தேடலில் உருப்பெற்ற பண் டாட்டினைத் தலைமுறை தலைமுறையாகக் கையளிக்கும் பிரதான
அமைப்பும் இயங்கியலும் 17

Page 18
கருவியாக மொழியைக் கொம்ற் சுட்டுவார். உலகளாவிய மொழிக் குடும்பத்திற் பங்குகொள்வதன்வழி, நாம் ஒரு மொழியியற் சமூகத்தின் பகுதிகள் ஆகின்றோம். மொழியானது எங்களை எங்கள் காலத்துச் சக மனிதர்களோடு மட்டும் தொடர்புகொள்ள வைக்க வில்லை; இன்றைய சமூகத்தை எம் முந்தையோர் சமூகத்துடன் இணைக்கும் பணியையும் அது ஆற்றுகின்றது. மனித வரலாற்றில் வாழும் அங்கத்தினரைவிட இறந்தவர்களே அதிகம். ஒரு பொது மொழியின்றி, சமூக ஒழுங்கோ, சமூக உறுதிப்பாடோ சாத்திய மில்லை எனக் கொம்ற் உறுதியாக நம்பினார்.
மொழியானது மனித சமூகத்தின் வாழ்வியலில் தவிர்க்க முடியாததொன் றெனினும் அது ஒர் ஊடகம் மட்டுமே என்பதனையும் கொம்ற் கவனிக்கத் தவறவில்லை. மொழியின் இந்த மட்டுப்பாட்டினைக் கருத்திற்கொண்டுதான், சமூகத்தை ஒருங்கிணைக்கும் விசையாகச் சமயத்தினை முதன்மைப்படுத்தினார் கொம்ற். எனினும் கொம்ற் சமயமானது தனது முனைப்பான இயல்புகளைவிட்டுச் சக மனிதருடன் அன்புகொள்ளுமாறு செய்யவல்லது என்றார்.
சமூக உறுதிப்பாட்டில் தொழிற்பிரிப்பின் முக்கியத்துவத் தினையும் கொம்ற் தம் ஆய்வுவழி வெளிப்படுத்தினார். ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் கூட்டுவாழ்வின் அடிப்படையாக இதனைச் சுட்டினார். அதேவேளை தொழிற் பிரிப்பின் பாதகமான மறுபக்கத்தையும் கொம்ற் அவதானிக்கத் தவறவில்லை. ஒவ்வொரு தனியனும் மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலையென்பது சிறப்புத்துவத் தேர்ச்சியினால் அர்த்தமிழந்து போகின்றமையை இனங்காட்டுவார். அனுகூலங்களைவிடப் பிரதிகூலங்களே அதிகரித்துச் செல்லும் நிலையில் இவ்வுலகத் தெய்வீக சக்திகள் இரண்டையும் முழுமையான இலக்கினைநோக்கி இணைத்தல் அவசியம் என்பார்.
அரசுபற்றிய தமது பகுப்பாய்வைக் குடும்பம்வரை கொம்ற் விரிவுபடுத்தினார். குடும்பத்திலேதான் மனிதனின் தன்முனைப்பான தன்மைகள் சீரமைக்கப்பட்டுச் சமூக நோக்கங்களுக்கான வாழ்வு தயாராகின்றது. பிறருக்காக வாழும் தன்மையைச் சமூக மயமாக்கலின்
18 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

வழி ஒரு குழந்தைக்கு ஊட்டும் அடிப்படை நிறுவனமாகக் குடும்பம் அமைந்திருக்கின்றது. இவ்வாறான நெருக்கமான உறவுகளின் வழிதான் மற்றவர்களுக்காக வாழவும், அதிலே நிறைவு காணவும் முடிகின்றது. இந்த உறவுப் பயிற்சி குடும்பத்துக்கு வெளியிலான பரந்த உறவுகளுக்கும் காலப் போக்கில் விரிகின்றது. இந்த அடிப்படையிற்றான் பல்வேறு சமூக இணைவுகளுக்குமான அடிப்படையாகக் குடும்பத்தினை முதன்மைப்படுத்தினார் கொம்ற். தாய்-தந்தை பாசம், பிள்ளைகள் மீதான பாசம், கணவன் - மனைவி இடையிலான அன்பு, சகோதர பாசம் எனும் உணர்வுகளின் வழி விரியும் உறவுகள் குடும்பத்திற்கும் அப்பால் சமூகம் வரை பயன்விளைகின்றது என்பது கொம்ற்ரின் கருத்தாகும். தாய் - தந்தையர் மீதான பாசமானது மிக அடிப்படையானதும் எளிமையானதும், உலகளாவியதுமான ஓர் அன்புப் பிணைப்பாகும். இவ்வாறான உறவும் உணர்வும் சமூக உறுதிப்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதன. இதுவே குடும்பத்திற்கு வெளியிலும் விரிந்து, குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் இடையிலான இணைவுக்கும் காலாகின்றது என்பார் கொம்ற்.
சமூகம் விரிவடைந்து மேலும் சிக்கலாகின்றபோது அரசின் செயற்பாடுகளும் பெரியளவில் அதிகரிக்கின்றன; அவசிய மாகின்றன. இந்நிலையில் அரசானது உன்னதமான பொதுநல உணர்வுகளை ஆளப்பதிக்கும், சமூக ஒழுக்கங்களை வெளிப் படுத்திச் சமூகத்தை நெறிப்படுத்தும் பெரும்பணியில் தம்மை அர்ப்பணிக்கவேண்டும் என்பதும் கொம்ற்ரின் கருத்துநிலையாகும்.
சமூக இயக்கவியல்
நிலையியல் தொடர்பான தமது ஆய்வுத் தேடலைத் தவிர்க்க முடியாதவாறு சமூக இயக்கவியலுடன் இணைந்த ஒன்றாகவே கொம்ற் கருதினார். சமூக இயக்கவியலை ஒர் ஒழுங்கின் விருத்தியென விளக்குவார் கொம்ற். ஒழுங்கினைத் தொடர்ந்து எப்பொழுதும் முன்னேற்றம் அமையும் என அழுத்தமாகவே குறிப்பிடுவார் கொம்ற். நிலையியல், இயக்கவியல் என்ற வகைப்பாடுகள் முறையியல், ஆய்வு நோக்கங்களிற்காகச் செயற் பட்டபோதும் அவை ஒன்றுடன் ஒன்று இசைவானவை என்பது கொம்ற்ரின் கருத்தாகும். செயற்பாட்டியல், படிமலர்ச்சிப்
அமைப்பும் இயங்கியலும் 19

Page 19
பகுப்பாய்வில் ஒன்றுடன் ஒன்று முரண்படுவதற்குப் பதில், ஒன்றில் ஒன்று முழுமை காண்கின்றன எனவும் கொம்ற் குறிப்பிடுவார்.
நெறிமுறைத்தத்துவம்
ஒர் எதிர்காலநேர்க்காட்சிவாத சமூகத்திற்கான சிக்கலான ஒரு மாதிரியைக் கொம்ற் விபரிக்கின்றார். இந்தச் சமூகமானது புதிய புற மெய்மை ! புலனறிவாத சமயக் குருமாரின் ஆத்ம சக்தியினாலும், வங்கி மற்றும் தொழிற்றுறைசார் நிபுணர்களினாலும், வழிப்படுத்தப் படும் என்பது கொம்ற்ரின் எதிர்பார்ப்பு. இவ்விஞ்ஞான, சமூகவிய லில் மதகுருமார் அறவழிகாட்டிகளாகவும், சமுதாயக் கட்டுப் பாட்டாளர்களாகவும், விளங்குவர். தம் அதியுயர் அறிவினைப் பயன்படுத்தி மக்கள் தம் கடமைகளைச் செய்யவும், நெறிமுறையான வாழ்வினை வாழவும் துணையாவார்கள். இவர்களே சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்குமான கல்வியை வழங்குபவர்களாகவும் அவர் திறன்கள் தொடர்பான மதிப்பீட்டாளர்களாகவும் விளங்குவர்; தமது அறிவின் வழி நல்லது கெட்டது எதுவென மக்களுக்கு உணர்த்தி அவர்களது கூட்டுக்கடமைகளையும் வலியுறுத்துவர்.
கொம்ற் அவர்களின் புதிய புற மெய்மை ஒழுங்கின் கோட்பாடாக அன்பு விளங்கும். அதனடிப்படையாக ஒழுங்கு அமையும். முன்னேற்றம் அதன் இலக்காகும். தன்முனைப்பான கடந்தகால வரலாற்று நிலைமைகள் அகன்று மற்றவர்களுக்காக வாழுதல் என்ற பொதுநல நிலையினை மனித இனம் அடையும். சமூகவியலாளர்கள், மனிதனின் கடந்தகால, நிகழ்கால விஞ்ஞான அறிவினை உள்வாங்கி எதிர்காலத்திற்கான பாதையினை எதிர்வுகூறி, சட்டபூர்வமாகத் தீர்மானிப்பார்கள். ஆத்மாவின் புறமெய்மை பொறிவலரான இவர்களை மனிதர் வணங்குவர். தன் இறுதி நாட்களில் மனித குலத்தின் அனைத்துத் துயரங்களினின்றும் விடுதலை தரவல்ல புதியதொரு சமயத்தின் தாபகராகத் தம்மைக் கொம்ற் கருதியிருந்தமையையும் இங்கு குறிப்பிடவேண்டும்.
20 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

2
fe|pölfilöblflsfir ugtDEUsää Evolution of Societies
உரிமைகளோடு மனிதர்களைச் சுதந்திரமாக வாழவைக்கும் சமூக
அமைப்பே உயர்வானது
- (6).psicus' 6th)6usiasi (Herbert Spencer)
சமூகவியல் தந்தையான கொம்ற் அவர்களின் சமூக நிலையியல், சமூக இயக்கவியற் கருத்துக்களில் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டு சமூகப் படிமலர்ச்சிக் கோட்பாட்டினை அறிமுகமாக்கிச் சமூகவியலின் இரண்டாவது தந்தையென அறிஞர்களாற் குறிப்பிடப்படும் ஸ்பென்சர், இங்கிலாந்தின் டெர்பி எனும் இடத்தில் 1820 ஏப்பிரல் 27ஆம் திகதி புகழ்பெற்ற ஜோர்ச் குடும்பத்தின் ஒரே மகனாய்ப் பிறந்தார். தந்தையார் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர்; சமயத்தாராண்மை வாதி. பிள்ளைப் பருவத்து "வருத்தக்காரப் பிள்ளையாகத் தளர்ந்த நிலையில் ஒழுங்காகப் பள்ளிசெல்ல முடியவில்லை. தாயும் தந்தையும் வீட்டில் தந்த கல்வி மட்டுமே வாய்த்தது. பதின்மூன்றாவது வயதிலே மதகுருவான இவரது மாமனார் ஒருவருடன் வாழும் வாய்ப்பிடை மெய்யியல், இயற்கை விஞ்ஞானம் பற்றிய அடிப்படைக் கல்வியைப் பயில முடிந்தது. தொடர்ந்து பதினாறாவது வயதிலே கணிதம், இயற்கை விஞ்ஞானம் பற்றிய முறையான கல்வியைக் காணும் பேறும் கிடைத்தது. எனினும் அவரது ஆத்மார்த்த ஈடுபாடு, ஒழுக்கவி யலிலும் அரசியலிலுமே குவிந்திருந்தது.
சிறிது காலம் பேர்மிங்ஹாம் புகையிரதப் பொறியியலாள ராகப் பணியாற்றி அந்த ஒப்பந்தம் முடிய மீளவும் 1941 இல் தாயாரிடம் மீண்டார் ஸ்பென்சர். தொடக்க காலத்திற் பல பொறியியல்சார் கட்டுரைகளை, துறைசார் ஏடுகளில் எழுதிப் புகழ்பெற்ற ஸ்பென்சர், பின்னாளில் தன் உண்மை ஆர்வத் துறைகளான சமூக அரசியல் விவகாரங்களைப் பற்றித் தீவிரவாத
அமைப்பும் இயங்கியலும் 21

Page 20
செய்தித் தாள்களுக்கு எழுதத் தொடங்கினார். இந்தவகையில் The Nonconformist இதழில் இவர் எழுதிய அரசின் பொருத்தமானபுலம்' பற்றிய கட்டுரை புகழ்பெற்றது. காவற்றுறை மற்றும் பாதுகாப்பு என்பன தனியார் துறையிடமே விடப்படவேண்டும் என்பதே இக்கட்டுாையின் அடிநாதமாகும்.
1948இல் லண்டன் Economist சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியேற்றார். இரண்டு ஆண்டுகளில் அவரது முதல் அரசியல் QLOưiuứìuảo J5ITGòITGöI Social Statics Gì6)IGifìuITGöIgl. 1882 (g)ảo Leader சஞ்சிகையில் வெளியான மேம்பாடு தொடர்பான கருதுகோளை விளக்கும் இவரது கட்டுரையும் குறிப்பான கவனத்தைப் பெற்றது. அக்காலத்து கொம்ற் மற்றும் அடிப்படை மாற்றவாதச் சிந்தனை யாளர்கள் பயன்படுத்திய Progress - முன்னேற்றம் எனும் பதத்திற்குப் பதிலாக Evolution-படிமலர்ச்சி எனும் பதத்தினைப் பயன்படுத்தினார் ஸ்பென்சர். ஒருபடித்தான தன்மையிலிருந்து பன்மை நிலைக்குச் சமூகம் மாறும் என்பது முன்னேற்றத்தின் உலகளாவிய விதி என்பார் ஸ்பென்சர். சேதன அசேதன > உயர் சேதன (சமூக)- மாற்றம் அனைத்துக்கும் பொதுவானதும் என்பார்.
1857 இல் இவரது மாமனார் காலமானதைத் தொடர்ந்து. அவருக்குச் சொந்தமான கணிசமானளவு சொத்து இவரது ஆய்வுகளுக்கும் பிரசுரங்களுக்குமான பெருநிதியமானது.
1862 géi), - First Principles, 1867 gai) - Principles of Biology (LIGoGlgriggs.gif) 1872gai) Principles of Psychology, 1883 - 1894 காலப்பகுதியில் Study of Descriptive Sociology, (எட்டுத் தொகுதிகள்) 1873இல் The Study of Sociology, எனும் ஸ்பென்சரின் பல ஆக்கங்கள் அறிவுலகைச் சேர்ந்தன. முழு ஐரோப்பாவிலும் ஈர்க்கப்படும் புலமை யாளர் பெருமை கிடைத்தது. ஜோன் ஸ்ருவட் மில், தொமஸ் ஹக்லி, ரைண்டால், ஜோர்ச் எலியற் போன்ற அறிஞர் குழாம் சூழவே காணப்பட்டார் ஸ்பென்சர். லாமார்க், சார்ல்ஸ் டார்வின் ஆகி யோரின் கருத்தியலின்மீது அளவார்ந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
வெற்றிபெற்ற நூலாசிரியரான ஸ்பென்சரின் ஆக்கங்கள் இங்கிலாந்து, அமெரிக்காவில் மட்டுமன்றி ஜேர்மன், ஸ்பானிஸ், இத்தாலிய, ரஷ்ய மொழியாக்கத்தின் வழி பல்வேறு புலங்களையும் சேர்ந்தது. பல்லாயிரம் பிரதிகள் விற்பனையானது. இவரது Principles
22 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

Biology ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின், பாடநூல் அங்கீகாரத் தைப் பெற்றது. யேல் பல்கலைக்கழகத்தில் வில்லியம் கிரஹாம் சம்னர் (Wilem Graham Summer), இவரது ஆய்வறிவினை வகுப்பறைப்
TLDTš56TTī.
தனித்துவத்தைக் காத்தபடி எப்படிச் சமுதாய வாழ்வினை அமைப்பது என்ற கருத்து நிலையையே வாழ்வாகக்கொண்டு நீண்ட பெரும் ஆய்வுகளை மேற்கொண்ட ஸ்பென்சர், தன் இறுதி நாட்களில் உள உடைவுக்குள்ளாகித் தனித்துப்போகும் நிலையேற் பட்டது. 1903 டிசெம்பர் 8ஆம் திகதி தனியனாய் டெர்பியில் காலமானார் ஸ்பென்சர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேலான கவனிப்பின்மைக்குப் பின், இப்பொழுது இவரது எழுத்துக்கள் மீள்மதிப்பீடு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பென்சரின் சமூகவியல் சிந்தனைகளில் உயிரினம்சார் ஒப்புமை, சமூகப் படிமலர்ச்சி மற்றும் சமூக வகைப்பாடு என்பன, இன்றைய சமூகவியலில் இடம்பிடித்துள்ளன.
சமூகம்சார் ஒப்புமை
தமது சமூகவியற் கோட்பாடு பற்றிய நூலிலே தமது ஒப்புமைக் கோட்பாட்டை விளக்கினார் ஸ்பென்சர். சமூகமானது உயிரினத்தை ஒத்தது எனும் கருத்துநிலையின் அடியாக இந்தக் கோட்பாட்டினை வடிவமைத்தார் ஸ்பென்சர்.
1. சமூகம், உயிரினம் இரண்டுமே வளர்ச்சியடைவன; குழந்தை மனிதனாக வளர்வதுபோல், சிறிய சமுதாயம் பெரு நகராகின்றது.இவ்வாறே சிற்றரசு பேரரசாகின்றது.
2. வளர்ச்சியின்போது சமூகத்தினதும் உயிரினங்களினதும் அமைப்புக்கள் சிக்கல் அடைவன வளர்ச்சிப் படிநிலையில் உறுப்புக்களும் வேறு வேறாவன. ஒத்திருந்த உறுப் புகளிடையே மாறுபாடுகள் தோற்றம் பெறுகின்றன. மாறும் உறுப்புக்களோ புதிய செயற்பாடுகளை மேற்கொள்கின்றன. இதன்வழி அமைப்புக்கள் சிக்கல் நிலையை எய்துகின்றன.
3. உறுப்புக்களிடையே வேறுபாடுகள், செயல்கள் விளைந்த போதும் அவற்றிடையே ஒன்றிலொன்று சார்ந்து இயங்கும் தன்மையையும் காணமுடியும்.
அமைப்பும் இயங்கியலும் 23

Page 21
4. எவ்வாறு ஒரு உயிரி தன் உறுப்புக்களைத்தாண்டி மீள நிலைக்க முடிகிறதோ அவ்வாறே சமூகமும் தன் பகுதிகளைக் கடந்துநிலைக்கக் கூடியது.
காட்டுரு2.1
சமூக நிலையியலும், சமூக இயக்கவியலும்
சமூகம் (நிறுவனங்களை உள்ளடக்கியது)
தொழிற்பாடு (Function)
(சமூக இயக்கவியல் மனித உடற்றொழிலியல் போல)
Felip, 660oGouluuốão(Social Statics) சமூகக் கட்டமைப்பு - மனித உடலியல் போல)
இவ்வாறாக உயிரின உள்ளமைப்பு முறைகளை ஒத்ததாகவே சமூக அமைப்பினையும் இனங்காண்பார் ஸ்பென்சர். உயிரிகளின் உறுப்புக்களுக்கான ஊட்டத்தினை வழங்குவதற்கு உணவு மண்டலம் காணப்படுவதனைப்போல், சமூகத்தின் தேவைகளை நிறைவாக்குவதற்கென உற்பத்தித் தொழில்கள் காணப்படுகின்றன. உடலின் பகுதிகளை இரத்தோட்டமண்டலம் இணைப் பதைப்போல சமூகத்தின் பகுதிகளைப் போக்குவரத்து, தொடர்பு சாதனங்கள் இணைத்து நிற்கின்றன. உடலைக் கட்டுப்படுத்த நரம்பு மண்டலம்; சமூகத்தைக் கட்டியாள அரசு.
காட்டுரு 2.2
உயிரினம் - சமூகம் செமிபாட்டு மண்டலம் - உற்பத்தித் தொழிலமைப்பு இரத்தோட்டமண்டலம் - போக்குவரத்துத்துறை நரம்புமண்டலம் - அரசாங்கம் முகுளம் - ராஜசபை சிறுமூளை - பிரபுக்கள்சபை பெருமூளை - மக்கள்சபை
24 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்
 

மேற்கண்ட ஒப்புமைகள் காணப்பட்டபோதும் இவற்றிற் கிடையிலான வேறுபாடுகளையும் ஸ்பென்சர் சுட்டத் தவறவில்லை.
1. உயிரினப் புறவடிவம் கட்புலனாவது. ஆனால், சமூகத்திற்கு
இவ்வாறான குறிப்பான வடிவம் இல்லை.
2. உயிரின அங்கங்கள் உடலோடு இணைந்தவை. ஆனால், சமூக
அங்கங்களோ தனித்தனியாக அமைந்திருப்பன.
3. உயிரின அங்கங்கள் நிலையான இட அமைவினைக் கொண்டன. ஆனால், சமூகப் பகுதிகளோ நிலையற்று அசையும் தன்மையின.
4. உயிரினங்களின் உணர்வென்பது, மூளையென்கின்ற ஒரு சிறுபகுதியிற் குவிந்திருக்கின்றது. ஆனால், சமூகத்திற் பரந்து காணப்படும் தனியன்கள். ஒவ்வொருவரிடமும் அது வியாபித்துள்ளது.
5. உயிரின உறுப்புக்கள் அவற்றின் நலனுக்காகவே இயங்குவன; ஆனால், சமூகமோ அதன் உறுப்புக்களின் நலனுக்காய் இயங்குகின்றது. இவ்வாறாக வேறுபாடுகளை இனங்காட்டியபோதும் "சமூகமே உயிரினம்தான்" எனும் தமது கருத்தாக்கத்தினின்றும் அவர் விலகியதில்லை.
ағepaышg шобоiáғаR
உயிரினங்களைப் போலவே சமூகமும் படிமலர்ச்சி காண்பது என்பது ஸ்பென்சரின் கருத்து நிலையாகும். டார்வினுடைய Origin of Species நூல் வெளிவருவதற்கு ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்னரேயே இக்கருத்தாக்கம் இவருக்குள் வெளிப்பட்டது. உயிரின் தொடக்கம்போல மிகச்சிறிய வடிவிலிருந்தே சமூகமும் படிப் படியாக விரிந்து செல்கின்றது. எளிமையான நிலையில் இருந்து சமூகப் படிமலர்ச்சிவழி சிக்கல் நிலையை எய்துகின்றது. பின்னர் அதுவே ஒரு கூட்டு இசைவு சமூகமாகின்றது. தனியே குடும்பங்களை அலகுகளாகக் கொண்ட எளிமையான நிலைமாறிக் குடும்பங்கள் ஒன்றிணைந்த புலங்கள் தோற்றம் பெற்றன. பின்னர் குலங்கள் இனக் குழுக்களாகின. அவையே தேசிய இனங்களாகவும், தனித்த அரசுகளாகவும் படிமலர்ச்சி காணுகின்றன. குடித்தொகை
அமைப்பும் இயங்கியலும் 25

Page 22
அதிகரிப்போடு சமூகத்தின் அலகுகளும் அளவும் விரிவு காணு கின்றன; சமூகப் படிமலர்ச்சி விளைவாகின்றது என்பார் ஸ்பென்சர்.
வேறுபடும் சமூகத்தன்மைகள்
ஒப்பியல் நோக்கிற் சமூகங்களை இராணுவ நிலைசார் சமூகம், தொழில்சார் சமூகம் என இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்குவார் ஸ்பென்சர். சமூகங்களிற்கிடையிலான உறவுகளின் அடிப்படையில் இந்தப் பாகுபாட்டினை முன்வைத்தார் ஸ்பென்சர். முன்னையது முரண்களும் குரோதங்களும் நிறைந்தது. பின்னையது சுமூகமான இசைந்த உறவுகளைக் கொண்டது என்கின்றார். இரண்டிலும் அதிகாரத்தன்மையிலும் வேறுபாடுகளைச் சுட்டுவார் ஸ்பென்சர். இராணுவ சமூக அமைப்பில் அதிகாரம் மையநிலைப் படுத்தப்பட்டிருக்கும். தொழில்சார் சமூகத்திலே பரவலாக்கப்பட்டி ருக்கும். இராணுவ சமூக அமைப்பிலே அனைத்துச் செயற்பாடு களும் நிபந்தனைப்படுத்தப்பட்டிருக்கும். ஒருவருக்கொருவரான உறவுகள் செயற்பாடுகள் எல்லாமே கட்டாயத்தின் பேரிலேயே இங்கு நடக்கின்றன. தொழில்சார் சமூகத்தில் எல்லாமே இயல் பாகவே நடக்கின்றன. இராணுவ, சமூக அமைப்பில் தனியன் களுக்கான உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிற் காணப்படும். ஆனால் தொழில்சார் சமூக நிலையில் தனியுரிமைகளோடு மனிதர்கள் சுதந்திரமாய் வாழ்வார்கள்.
ஸ்பென்சருடைய இவ்வகைப்பாடானது கட்டற்ற பொருளாதாரத்தை நிலைப்படுத்தி, அதன்வழி அக்காலத்து நிலவிய முதலாளித்துவச் சமூகத்திற்கு ஏற்படக்கூடிய கருத்துக்களின் பாதிப்புக்களினின்றும் அவ்வமைப்பைக் காக்கும் நோக்கிலானது எனும் விமர்சனங்கள் மார்க்ஸிய சிந்தனையாளர்களினால் முன்வைக்கப்பட்டமை இங்கு கவனத்திற்குரியது.
ஸ்பென்சருடைய கோட்பாடுகள் வெறும் மெய்யியல் விசாரங்களாகவே அமைந்தன எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. அறிவியல் நிலையில் தம் சிந்தனைகளை மேலும் தெளிவாகத் தருவதன்மூலம் நேர்க்காட்சிவாத சமூகவியலுக்குச் சிறப்பான முறையிற் பங்களித்திருக்கலாம் எனவும் இவ்விமர் சனங்கள் கூறுகின்றன.
26 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

3
இயங்கியல் பொருள்முதல் வாதம் Dialectical Meterialism
தத்துவவாதிகள் இதுவரை உலக நிகழ்வுகளுக்கு விளக்கம் மட்டுமே கொடுத்து வந்தனர்; எனினும் இப்பொழுதுள்ள பிரச்சினை அதை எப்படி
மாற்றுவது என்பதுதான்.
- a6Tisio orië,6ho (Karl Marx)
எல்லோர்க்கும் வாழ்வு என்ற சமநீதித் தத்துவத்தின் பொருள் சொல்லி, அதனை மெய்யாக்கும் வழியும் சொல்லி சமூக சிந்தனையாளர்களிடையே எண்ணற்ற மக்களைப் பின்பற்று வோராகக் கொண்டதத்துவஞானி கார்ல் மார்க்ஸ்.
மார்க்ஸிய சமூகவியல் எனும் பெயரில் புதிய புலமை மரபு இன்று முதன்மை பெறக்காரணரான கார்ல் மார்க்ஸ் பெரூசியாவின் ரிவெஸ் பிரதேசத்தில் ஒரு யூதக் குடும்பத்தில் 1818 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி பிறந்தார். கிறிஸ்தவ சமய ஞானஸ்நானம் பெற்றபோதும், சமயத்தினதோ இனத்தினதோ செல்வாக்கிற்குள்ளா காமலேயே வளர்ந்தார். தந்தையாரினதும், அவர் நண்பரான லுட்விக் வொன் வெஸ்பாவென் ஆகியோரின் வழியாகவும் அறிவொளிக்காலச் சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்டார். உள்ளூர் உயர் இலக்கணப் பள்ளியில் ஆரம்பக் கல்வியைப் பெற்றபின் பல்கலைக்கழகத்தில் ஒருவருட சட்டக்கல்வியைக் கற்றார். பின் பொன், பேர்லின் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். பேர்லின் பல்கலைக்கழகத்தில் இளைய ஹெகலியன் கோட்பாட்டாளருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றார். ஹெகலிய இயங்கியலை மனித சமூகத்தின் பொருள்சார் கோட்பாட்டிற்குப் பொருத்தமானதாக்கும் மாக்ஸின் ஆய்வுப்பணி இங்கேதான் தொடங்கியதெனலாம்.
அமைப்பும் இயங்கியலும் 27

Page 23
1841இல் ஜெனா பல்கலைக்கழகத்தில் இயற்கை மெய்யியல் தொடர்பான ஆய்வுக்கெனக் கலாநிதிப்பட்டம் இவருக்கு வழங்கப் பட்டது. பொன் பல்கலைக்கழகத்திற் பேராசிரியராகப் பணிபுரிய மார்க்ஸ் விரும்பியபோதும் அது கைகூடாமற் போனது. மாற்றங் களை விரும்பாத அன்றைய பெரூசிய அரசினால் சுதந்திரமாகச் சிந்திக்கின்ற மார்க்ஸ் போன்ற சுய சிந்தனையாளர்களை ஏற்க முடியவில்லை. இந்நிலையில் ஆசிரியப் பணியை மேற்கொள்ளும் தமது இலட்சியத்தை விரக்தியுடன் கைவிட்டு, 1842இல் புரட்சிகர செய்தித்தாளில் இணைந்துகொண்டார். இந்தச் செய்தித்தாளையும் பெரூசிய அரசினால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் அடுத்த ஆண்டிலே அதனை நிறுத்திவிட நேர்ந்தது.
1943ஆம் ஆண்டில் தன்பிள்ளைப்பருவ சிநேகிதியான ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலென்ஐத் திருமணம் செய்தார் மார்க்ஸ். இவரது மனைவி பிரஷ்ய பிரபுத்துவக் குடும்பம் ஒன்றினைச் சேர்ந்தவர். மிகப் பிற்போக்கான இவர்கள் குடும்பத்தின் எதிர்ப்புடனேயே திருமணம் நடந்தது.
1842 இலையுதிர் காலத்தில் மார்க்ஸ், பரீசுக்குச் சென்றார். அங்கேதான் தமது எதிர்கால நண்பரும் இணை ஆய்வாளருமான பிரட்றிக் ஏங்கல்ஸ்சை (Friedrich Engels) சந்தித்தார். பரீசிலும் மார்க்ஸின் எழுத்துக்கள் விரைவிலேயே சாதகமற்ற விமர்சனங் களுக்கு உள்ளாகின. இதனைத் தொடர்ந்து புரூசெல்சுக்குச் சென்றார் மார்க்ஸ். ஏங்கல்ஸ்சும் உடன் சென்றார். இங்கே இருவரும் தொழிலாளர் இயக்கத்தில் தீவிர பங்கேற்றதுடன் கம்யூனிஸ்ட் s' Saushai GasTairgosi, SL-5685 (Manifesto of the Communist Party) எழுதுவதில் இணைந்து செயற்பட்டனர். பிரான்சியப் புரட்சி ஆரம்பித்த கையோடு இது வெளியானது. பிரான்சியப் புரட்சியின் எதிரொலியை ஜேர்மனியிலும் காணலாம் என்ற நம்பிக்கையுடன் ஜேர்மனிக்குப் புறப்பட்ட மார்க்ஸ், புரட்சிகரக் கருத்துக்களைப் பரப்பும் நாளிதழ் ஒன்றினை மீளவும் ஆரம்பித்தார். இதனை விரும்பாத பெரூசிய மன்னன் மார்க்சைக் கைதுசெய்து அவர் சுதந்திரமான இருப்புக்குக் கேடு விளைவித்தார். விசாரணை மன்றம் மார்க்சைக் குற்றமற்றவராகக் கண்டபோதும் அவர் ஜேர்மனியி லிருந்து 1849இல் நாடு கடத்தப்பட்டார். தற்காலிகமாகச் சிறிது காலம் பிரான்சில் இருந்து பின் இங்கிலாந்துக்குச் சென்ற மார்க்ஸ், தன்
28 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

வாழ்நாளில் மிகுதிக் காலத்தை அங்கேயே கழித்தார். இங்கே தானாகவே ஏற்படுத்திக்கொண்ட தனிமைப்படுத்தலில், லண்டன் மியூசியத்திற் பொழுதுகளைக் களித்தார் மார்க்ஸ். தொழில்சார் முதலாளித்துவம் பற்றிய விமர்சனப் பகுப்பாய்வு அவரது இக்கால ஆய்வின் குவிமையமாக அமைந்தது. இக்காலத்து வறுமையின் விளிம்பில் அவர் சந்தித்த துயரங்கள் சொல்லொணாதவை. மனித விடுதலைக்கான மகத்தான ஆய்வுகளைத் தந்த கார்ல்மார்க்ஸ் தன் Das Capital நூலின் முதற்பாகத்தை நிறைவுசெய்யும் வேளை அவரது மூன்று பிள்ளைகளை வறுமையின் விளிம்பிற் போஷாக் கின்மையால் இழக்கும் கொடுமையைத் தாங்க வேண்டியவரானார். எனினும் இக்காலத்து ஜனநாயக இயக்கங்கள் மீளவும் தழைத்தபோது, மீண்டும் நடைமுறை இயக்கங்களில் ஈடுபட முடிந்தது. உலகப் புகழ்பெற்ற தொழிலாளர் சங்கமான முதலாவது அகிலம் நிறுவப்பட்டது. இதன் இதயமாகவும், ஆத்மாவாகவும் மார்க்ஸ் செயற்பட்டார். இந்நாட்களில் ஒரளவு அடிப்படை வாழ்வு வசதிகளைப்பெற முடிந்தது. உலகெங்கணுமிருந்த பல்வேறு சோசலிஸத் தலைவர்களின் மதிப்பார்ந்த சந்திப்புக்கள் வாய்த்தது.
எனினும் அகிலத்தில் மேற்கொண்ட கடுமையான பணிகளும், ஆழ்ந்த ஆய்வு ஈடுபாடும், வறுமையின் தாக்கமும் ஒருங்குசேர மார்க்ஸின் உடல்-நிலை பாதிக்கப்பட்டது. அதேவேளை 1881 டிசெம்பர் 2ஆம் திகதி மனைவி ஜென்னியின் மரணத் துயரையும் சந்திக்க நேர்ந்தது. தம் அன்புக்குரிய மூத்தமகளினதும் மனைவியி னதும் பிரிவுத்துயரில் இருந்து மீளமுடியாதவராக இறுதிவரை மார்க்ஸ் காணப்பட்டார். 1883 மார்ச் 14ஆம் திகதி நாற்காலியிற் சாய்ந்தவாறே அவரது இறுதி மூச்சு நின்றது லண்டன். ஹைகேட் மயானத்தில் மனைவி ஜென்னியின் கல்லறைக்கு அருகில் இறுதி உறக்கம் நிலைபேறானது.
சமூகநீதிக்கான மார்க்ஸின் ஆய்வுகள்
பெருமளவில் எழுதிய மார்க்ஸின் ஆக்கங்களை மதிப்பிட இந்தச் சிறு அத்தியாயத்தில் இயலாது எனலாம். இந்நிலையில் அவரது பிரதான ஆக்கங்கள் பற்றிய சுருக்கக் குறிப்பு ஒன்றினையே தரமுடியும்.
அமைப்பும் இயங்கியலும் 29

Page 24
1844ggio Holy Family 6T6irp (5T606) 6T(p560TTfr. 1845 Thesis of Feurback எனும் நூல் வெளியானது. இந்நூலில் மெய்யியலின் இலக்குப் பற்றிய தமது எண்ணக்கருவை மிகத்தெளிவாகவே மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
"இது நாள்வரை மெய்யியலாளர் உலகை விளங்குவதை மட்டுமே தம் இலக்காகக் கொண்டார்கள், உண்மையில் அதனை மாற்றுவதே
முக்கியமானது"
என்பது மார்க்ஸிய சித்தாந்தம். மார்க்ஸின் மெய்யியல் அணுகுமுறை ஹெகலிய நோக்குக்கு எதிர்த்திசையானது Manifesto of the Communist Party 1848 (3)á) GolgiftuuT6813). Felp3'j L.J.' Guslaöt முழுமையான கோட்பாடாகவும் அதற்கான தந்திரோபாயமாகவும் முதன்முதலில் எழுந்த நூல் என்ற பெருமையை இது பெறுகின்றது. வகுப்புக்களுக்கிடையிலான கடந்தகாலப் போராட்டங்கள் பற்றிய விபரமானதும் சாரமானதுமான மார்க்ஸின் கருத்தாக்கங்கள் இங்கே தரப்பட்டன. தொழிலாளர் வகுப்புக்கும், முதலாளித்துவ வகுப்புக் கும்இடையிலான நவீன முரண்பாடும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டன. இன்றைய முதலாளித்துவத்தின் அழிவை நோக்கிய தவிர்க்க முடியாத அசைவையும், தம்மைப்பிணைத்துள்ள சங்கிலியை அறுத்தெறிந்து சுதந்திரத்தின் புதிய யுகத்தையும், சமூக நீதியையும் நிலைநாட்டத் தொழிலாளர் மேற்கொள்ளவேண்டிய செயல்திட்டங்களையும் மிக விரிவாகவே இதிற் குறிப்பிட்டார் கார்ல் மார்க்ஸ்.
1847இல் Poverty of Philosophy மெய்யியலின் வறுமை என்ற நூல் வெளியானது. பிரான்சிய அராஜக சிந்தனையாளராகிய புரூடோனுக்கு எதிரான கண்டனமாக இந்நூல் அமைந்தது. இந்நூலிற் பொருளாதாரப் போராட்டங்களும், தொழிலாளர்களின் அமைப்புக்களும் சமூகத்தை நீதியானதும் சமத்துவமானதுமான பாதையில் இட்டுச்செல்ல இன்றியமையாததென விளக்குவார் மார்க்ஸ்.
மார்க்ஸின் தெளிந்த சிந்தையும், சமூக உணர்வும் அவரது சொற்கள் ஒவ்வொன்றிலும் உயிர்ப்பாய் வெளிப்பட்டன. வறுமையின் மெய்யியலுக்கான விமர்சனமாக மார்க்ஸ் முன்வைத்த
30 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

மெய்யறிவின் வறுமை நூலின் முகவுரையில் நறுக்குத் தெளிந்த மாதிரியாக இடம்பெற்ற மார்க்ஸின் வாசகங்களை இங்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
"திரு.புரூடோன் ஐரோப்பாவில் வினோதமான முறையில் தப்பாகப் புரிந்துகொள்ளப்படக்கூடிய துர்ரதிர்ஷ்டம் பெற்றிருக்கிறார். பிரான்சில் ஒரு நல்ல ஜேர்மன் மெய்யியல் அறிஞராக அவர் பெயர் பெற்றிருப்பதனால் ஒரு மோசமான பொருளாதாரவாதியாக இருக்க அவருக்கு உரிமையுண்டு. ஜெர்மனியில் பிரெஞ்சுப் பொருளாதார வாதிகளில் ஒருவராக அவர் பெயர் பெற்றிருப்பதனால் ஒரு மோசமான மெய்யியல் அறிஞராக இருக்க அவருக்கு உரிமையுண்டு. நான் ஒரே நேரத்தில் ஜெர்மனியனாகவும், பொருளாதாரவாதியாகவும் ஒருங்கே இருப்பதால் இந்தஇரட்டைப் பிழையைக் கண்டிக்க விரும்புகின்றேன்.
இந்த நன்றியற்ற பணியில், ஜெர்மன் மெய்யறிதலை விமர்சிக்க வும், அதேவேளையில் அரசியல், பொருளாதாரத்தைப் பற்றிச் சில ஆய்வுக்கூறுகளை அளிக்கவும் வேண்டியுள்ளதால் திரு. புரூடோன் பற்றிய என் விமர்சனத்தை அடிக்கடி கைவிடவேண்டி நேரிட்ட
a 0 கமையை வாசகர் புரிந்துகொள்வர்".
1851இல் வெளியான Eighteenth Brumaire நெப்போலியனின் யதார்த்த நிலைபற்றிய ஆழமான ஒரு பகுப்பாய்வுநூலாகும்.
A Contribution to the Critique of Political Economy, 1860ggio பிரசுரமானது. இந்நூலில் வரலாற்றின் மெய்யியல்பற்றிச் சுருக்கமாக மார்க்ஸ் குறிப்பிடுகின்றார். சிவில் சமூகத்தின் வடிவத்தினை அரசியல் பொருளாதாரத்திலேயே காணவேண்டும் என இந்நூலில் விளக்குவார் மார்க்ஸ்.
1847 இல் Das Capital முதல் தொகுதி வெளியானது. இரண்டாம் மூன்றாம் பாகங்கள், அவர் இறந்த பின் 1893, 1894ஆம் ஆண்டுகளில் வெளியானது. இந்நூல் முழுமையையும் சோசலிஸ விந்தனையே வியாபித்துள்ளது. மிகை இலாபம் (Surpus value) தொடர்பான மார்க்ஸியக் கோட்பாடும் இங்கு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அமைப்பும் இயங்கியலும் 31

Page 25
சுயநலத்தை வளர்த்த முதலாளித்துவம்
மார்க் ஸின் காலம் , தொழில்நுட்பத் துறையும் , தொழிற்றுறையும் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தகாலம். அரசியல், பொருளாதார, தேசிய வாதங்களின் தோற்றத்தை நேரடியாகவே காணும், உணரும் வயதில் இருந்தார் மார்க்ஸ். மிகவும் சக்தி வாய்ந்த, அதேவேளையில் சமனற்ற நிலைமைகள் தோற்றுவிக்கப்பட்டமை மார்க்ஸின் மனதிலே ஆழமான தாக்கத்தினை விளைவித்திருந்தது. ஒரு புறத்தே முதலாளிகளுக்குச் சொர்க்க நிலையும், மறுபுறத்தே தொழிலாள மக்களுக்கு மிகமோசமான நரக வாழ்வுமே கிடைப்பதனைக் கண்டார் மார்க்ஸ். கூலி மிகக்குறைந்ததாகவே இருந்தது; வேலை நேரமோ அதிகமாயிருந்தது. வேலையின்மை பில்லியன் கணக்கில் அபாயகரமாய் அதிகரித்துச் சென்றது. உடல் நலத்துக்கோ அடிப்படை வாழ்வுக்கோ பொருத்தமில்லாத நிலைமைகளில் ஏழை மக்கள் வாழவேண்டிய அவல நிலை காணப்பட்டது. முதலாளித்துவ நாகரிகமானது மனிதர்களுக்கிடையிலான அனைத்து உறவுகளையும் அறுத்துவிட்டது என்பார் மார்க்ஸ். நிர்வாணமான சுயநலம் மட்டுமே மிஞ்சியது என்பது மார்க்ஸின் சாரம்.
இந்தக் காலகட்டத்தில் தொழிற்சங்க இயக்கம் ஒரு குற்றவியல் இயக்கமாகக் கருதப்பட்டமையும் இங்கு கவனத்திற்குரியது. இந்நிலையிற் கூட்டுப் பேரம் பேசுதலுக்காய் ஒன்று படும் தொழிலாளர், இரக்க மற்ற துன்புறுத்தலுக்கு உள்ளாக வேண்டியிருந்தது. தேசங்களிடையே ஆழவேர்விட்ட வகுப்பு முரண்பாட்டைச் சமாளிக்க முடியவில்லை. முரண்நிலை மென்மேலும் அதிகரித்தே சென்றது.
மார்க்ஸின் மூலங்கள்
சிந்தனையாளர்கள் தமக்கு முன்னைய காலத்து அறிவுக் கலசத்திலிருந்து தம் கருத்தியல் மூலங்களைப் பெற்றுக் கொள்வதுண்டு. இந்த வகையில் மார்க்ஸ் தமக்கு முன்னைய அறிவுப் புலங்களைப் பயன்படுத்தினார். எனினும் மற்றவர்களோடு ஒப்பிட முடியாத அளவிற்குத் தொகுத்துத்தரும் திறனில் மார்க்ஸ் தனித்துவமாய் நிற்கின்றார். நீண்ட காலமாகத் தளர்நிலையிற் கவனம்
32 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

பெறாமற்கிடந்த மெய்யியல் அறிவானது இயக்கச் சக்திகொண்ட கோட்பாடாகவும், செயலுக்கான மகோன்னதத் தூண்டலாகவும் மாக்ஸினால் வடிவமைத்துத்தரப்பட்டது. தொழில்தான் அனைத்து விழுமியங்களுக்குமான மூலமும் அளவீடும் என்கின்ற றிக்காடோ கோட்பாட்டைத் தமது நோக்கிற்கு ஏற்பப் பயன்படுத்தினார் மார்க்ஸ். உலக வரலாற்றை எதிர்க்கருத்துக்களினது முரண்பாட்டின் விளைவாகக் கண்ட ஹெகலின் இயங்கியல் முறையையும் மார்க்ஸ் பயன்படுத்தினார். ஆனால் மறுதலையாக ஹெகலின் கருத்துக்குப் பதில் பொருளாதார விசைகளின் முரண்பாடாகவே மார்க்ஸ் வரலாற்றைக் கண்டார். டார்வினின் படிமலர்ச்சிக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தினை உணர்ந்த அரசியற் சிந்தனையாளர்களிடை யேயும் மார்க்ஸ் முதன்மை பெறுகிறார். இளம் ஹெகலியன்களுக்கு மார்க்ஸ் பெரிதும் கடமைப்பட்டுள்ளார். மனித இனம் எதிர் கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகளுக்குஏற்ப மெய்யியலை மீளமைக்கும் முறையியலை மார்க்ஸ் கற்றுக்கொள்ள இவர்கள் துணையானார்கள். மேலும் மனிதனை அவன் தர்க்கரீதியான கருத்தாக்கத்தினாலன்றிச் சமூகச் சூழலிற்றான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதனையும் இக்கால அறிவுப் புலத்திலிருந்தே மார்க்ஸ் பெற்றுக்கொண்டார். செயின் சைமனின் சோசலிஸக் கருத்துக்களும் மார்க்ஸை ஈர்த்துள்ளன. சமூக ஒழுங்கிற்கு இன்றியமையாத இயல்புகளினால் சொத்துடைமை இயல்புகள் பேணப்படுகின்றன என்பார் செயின் சைமன். இதனையே உற்பத்தி உறவுகள் என ஏற்றுக்கொள்வார் கார்ல் மார்க்ஸ். சமூக ஒழுங்குக்கு இன்றியமையாத இயல்பினை ஒவ்வொன்றிலிருந்தும் அதனதன் திறனுக்கு ஏற்ப, ஒவ்வொன்றுக்கும் அவற்றின் தேவைகளுக்கேற்ப என்பது மார்க்ஸின் சூத்திரம். இச்சிந்தனையின் மூலத்தினைப் பிரான்சின் சோசலிஸச் சிந்தனையாளரான லோய்ஸ் பிலாங்க் போதனைகளிடை காணமுடியும். தம் முன்னையோர்களின் பயனான சிந்தனைகளை ஏற்றுக்கொண்ட அதேவேளையிற் சமூகக்கேடான சிந்தனைகளுக்கெதிரான கண்டனங்களையும் மார்க்ஸ் முன் வைக்கத் தவறியதில்லை. எடுத்துக்காட்டாக புரூடோன் எழுதிய வறுமையின் மெய்யியலுக்கு எதிர்க்கண்டனமாக மார்க்ஸ் தமது வறுமையின் மெய்யியலை வெளியிட்டமையைக் கண்டோம். ஒட்டுமொத்தமாக நோக்குகையில் உலகளாவிய நிலையில் பிரயோகிக்கக்கூடிய சமூக மாற்றத்திற்கான ஒரு
அமைப்பும் இயங்கியலும் 33

Page 26
கோட்பாட்டினையும், அதன் செயற்பாட்டுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டத்தினையும் தன் பகுப்பாய்வுத்திறத்தாலே உலகிற்கு மார்க்ஸ் வகுத்துத் தந்தார் எனலாம்.
மார்க்சியத்தின்சாரம்
மார்க்சியச் சிந்தனையின் அடிப்படையான இயங்கியலானது வரலாற்றுப்பேர்க்கை, பழைய - புதிய விசைகளுக்கு இடையிலான முரண்பாடாகக் காண்கின்றது. ஹெகல் கருத்தியலுக்குத் தந்த இடத்தில், பொருளாதாரக் காரணிகளைப் பிரதியிட்டார் மார்க்ஸ். இதுதான் மார்க்ஸின் வரலாறு பற்றிய பொருளாதார விளக்கமாகும்.
"அனைத்துச் சமூக மாற்றங்களும், அரசியற்
புரட்சிகளும் மனித மூளைகளினாலோ அன்றி
உண்மை, நீதி பற்றிய அவர் ஞானத்தினாலோ
ஏற்படுபவை அல்ல; உற்பத்தி முறைகளிலும்
பரிமாற்றத்திலும் ஏற்படும் மாற்றங்களின் வழியானதே"
என்பது மார்க்ஸின் தெளிந்த ஞானமாகும். இந்த அணுகு முறையே மார்க்ஸின் இயங்கியல் பொருள் முதல்வாதமாகின்றது. கோட்பாடு - முரண்கோட்பாடு என்பவற்றிற்கிடையிலான முரணின் விளைவான இசைந்த புதுக்கோட்பாடுதான் மார்க்ஸ் குறிப்பிடும் புதிய பொருளாதார அமைப்பாகும். இங்கு கோட்பாடு - முரண்கோட்பாடு என்பன வகுப்புக்களையும் அவற்றிற்கிடை யிலான போராட்டச் செயற்பாட்டினையும் குறித்து நிற்கின்றது.
பொதுவான பொருளாதார ஆர்வங்களைக் கொண்ட ஒரு குழுவையே வகுப்பு என வரையறுத்தார் மார்க்ஸ். இவை ஏனைய குழுக்களினின்றும் அடிப்படையில் வேறுபடுகின்றன.ஒரு வகுப்பின் ஆர்வம் மற்றையதன் ஆர்வங்களினின்று முரண்படுகின்றது. இதனால்தான், நிலவும் சமூகம் என்பது வகுப்புக்களிற்கிடையிலான போராட்ட வரலாறே என்கின்றார் மார்க்ஸ்.
வகுப்புப் போராட்டமானது தொழிலாளர்களின் இடையறாத சுரண்டலின் வழி தீவிரமாக்கப்படுகின்றது. முதலாளித்துவ உற்பத்தி முறையின்கீழ் உற்பத்திச் சாதனங்களின் உரிமையாளர்களான
34 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

முதலாளிகள், கூலித்தொழிலாளர்களின் உழைப்பினைச் சுரண்டுகின்றார்கள். இந்தச் சுரண்டலானது மூலதனத்தின் வல்லமை, மற்றும் மிகை இலாபம் என்பவற்றினால் ஆளப்படுகின்றது.
இதனால் இரண்டு விளைவுகள் தோற்றம் பெறுகின்றன.
1. பாரிய வியாபார அலகுகளில் எப்பொழுதும் அதிகரிக்கும்
செல்வத்தின் செறிவு 2. எண்ணற்ற தொழிலாளர்களின் அதிகரிக்கும் துயரவாழ்வு
இதனால்தான் முதலாளித்துவம் தனக்குள்ளேயே தன்னை அழிக்கக் கூடிய விதைகளையும் கொண்டுள்ளது என்றார் மார்க்ஸ். முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் இந்த முரண்பாடும் அதிகரித்து, முதலாளித்துவம் சிதைவது தவிர்க்க முடியாததாகின்றது. இந்தச் சிதைவானது தானாகவே சோசலிஸத்திற்கான பாதையாகிவிடாது. இதற்குத் திட்டமிட்ட நுண்ணறிவுடனான செயல் அவசியம் என்பதனையும் மார்க்ஸ் வலியுறுத்துவார். இதுவே மார்க்ஸின் புரட்சிக் கோட்பாட்டின் விருத்திக்குக் காலானது. முதலாளித்துவ வகுப்பினரின் அரசை அழித்துத் தொழிலாளரின் அரசை அமைத்து வகுப்புகளற்ற ஒரு சமூக அமைப்புக்கு இட்டுச் செல்வதே அவர் நோக்காக இருந்தது. அரசு என்பது உற்பத்திச் சாதனங்களின் உடைமையானவர்களின் ஆர்வங்களைப் பிரதிபலிப்பதால் வகுப்பு களற்ற சமூகம், அரசு, அரசற்ற சமூகமாகும். வகுப்புக்கள் இல்லா தொழிக்கப்படுவதால், அரசும் வலிமையற்றதாகும். மார்க்ஸின் கருத்துநிலை அடிப்படை இவைதான்.
இயங்கியல் பொருள்முதல்வாதம்
உலகம் பற்றிய மார்க்ஸின் பார்வையானது இயங்கியல் பொருள்முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டது. யதார்த்த உலகின் அனுபவங்கள் எப்பொழுதும் மாறும் நிலையின; அவை இயங்கியல் முறையிலேயே நிகழ்வன எனும் எடுகோளினையே மார்க்ஸிய இயங்கியல் அடிப்படையாகக் கொண்டுள்ளது. மார்க்ஸிய இயங்கியலின்வழி வரலாற்று மாற்றங்களுக்கான விசைகளைக் கருத்துக்களிடையே காணமுடியாது. புறவயமான
மற்பத்திசார் ஆற்றல்களிலேயே அது தங்கியுள்ளது. இங்கு
அமைப்பும் இயங்கியலும் 35

Page 27
ஆற்றல்கள் எனும்போது, அது வெறும் பொருளாதாரப் பண்டங்களைக் குறித்திடவில்லை. உற்பத்தியில் தொடர்புபடும் உறவுகளையே மையப்படுத்தி நிற்கின்றது. அவையே சமூக அமைப்பையே நிர்ணயிக்கின்றன என மார்க்ஸின் பொருளாதார நிர்ணயக் கோட்பாடு தெளிவாக்குகின்றது.
பொருளாதார அமைப்பு மாறும்போது சமூக அமைப்பின் தன்மையும் மாறுகின்றது. சமூகத்து மேற்கட்டுமானங்களாக நிலவும் அரசு, மதம், கல்வி, குடும்பம் ஆகிய நிறுவனங்களும் கலை, இலக்கியம், சட்டம், மெய்யியல் போன்றனவும் பொருளாதார உறவுகள் எனும் அடிக்கட்டுமானத்தின் மீதே அமைகின்றன.
மார்க்ஸின் கருத்துநிலையைக் காட்டுரு 3.1தெளிவுபடுத்தும்.
காட்டுரு 3.1
அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானம் தொடர்பான மார்க்ஸிய காட்டுரு
சமூக மேற்கட்டுமானம்
சமூகத்தினுடைய ஏனைய கூறுகள் (உ-ம்) அரசியல் சமயம் குடும்பம். சமூக அடிக்கட்டுமானம் (பொருளாதார அடித்தளம்)
மனித வரலாற்றில் பொருளாதார அமைப்பு இதுவரை நான்கு நிலைகளைத் தாண்டி மாறி வந்துள்ளது என்பார் மார்க்ஸ். ஆரம்பத்தில் ஆசிய நிலை (Asiatic phase); அடுத்து தொன்மை நிலை (Ancient phase); அதனைத் தொடர்ந்து நிலமானிய நிலை Feudal phase); Gigi TLsrog (upg56) Torfggj6) ba)6) (Capitalistic phase). இந்நிலைகள் ஒவ்வொன்றும் முன்னைய நிலைகளுடன் முரண்பட்டு அதன் விளைவாகவே தோற்றம்பெறுகின்றன. (காட்டுரு 3.2) இன்றைய பொருளாதார அமைப்பானது புதிய நிலையொன்றைக்
36 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்
 
 
 
 
 
 

காட்டுரு 3.2
மார்க்ஸின் வரலாற்றுப் படிநிலை
நிலமானிய அமைப்பு முதலாளித்துவம்
நிலமானிய சமூக
அமைப்புக்கு சாதகமாக அமையும் அரசியல் கருத்தியல், சட்டவியல் சமயக் கூறுகள்
பழைய மேற்கட்டுமானத்தின் ; Wy உடைவு iy
உற்பத்தி உறவுகள் (வகுப்புக் கட்டமைப்பு) பிரபுக்கள் பண்ணையால்
உற்பத்தி வழிமுறைகள் அடிக்கட்டுமானம்
மாறறம (பொருளாதார உற்பத்தி வழிமுறைகள் அடித்தளம்)
(நிலத்தினை ஆதாரமாகக் கொண்ட உற்பத்தி)
குறிப்பு: உறுதியான அமைப்புக்குறிகள் முதல் நிலை விளைவு உண்டாக்குகின்ற, தொடர்புகளைப் பிரதிபலிக்கும். உடைந்த அம்புக்குறிகள் வழிநிலை விளைவு உண்டாக்குகின்ற தொடர்புகளை விளக்கும்.
கடக்கவுள்ளது. அதுவே மாற்றத்தின் எல்லை நிலை. அதுவே பொதுவுடைமை நிலை (Communistic phase). பொதுவுடைமை என்பது ஒர் இலட்சிய நிலை. இதனது தோற்றம் தவிர்க்க முடியாதது என்பது மார்க்ஸின் கருத்தியல்.
ஆசிய உற்பத்தி நிலை என்பது மிகவும் தொன்மையானது; பின்தங்கியது; நுகர்வுக்காக மட்டுமே உற்பத்தி அமைந்தது. இங்கு நிலம் தனியன்களின் உரிமையாக அன்றி, சமூக 260L60) Louis T35d காணப்பட்டது. இங்கு கூட்டு உழைப்பு பொதுவுடைமையை உறுதிப்படுத்தியது. லாப நோக்கிலான வாணிப உற்பத்திகளின் ஆரம்பத்துடன் நிலம், கால்நடை ஆகியவற்றில் தனிச் சொத்துரிமை தோன்றியது. ஆதிப் பொதுவுடைமை வாழ்வு மறைந்து, அடிமை களைக் கொண்ட ஒரு சமூகம் தோற்றம் பெற்றது. இங்கு நிலம், வசதி படைத்த பிரபுக்களின் உடைமையானது. இந்நிலங்கள் பாரிய
அமைப்பும் இயங்கியலும் 37

Page 28
பண்ணைகளாக உருமாற்றம் செய்யப்பட்டபோது பண்ணை அடிமைகள் தோற்றம் பெற்றனர். இந்நிலையில்தான் நிலமானிய அமைப்பின் தோற்றத்தினைக் காண்கின்றோம். அடிமைகள் மீதான சுரண்டல் அதிக அளவில் தொடர்ந்து பணப் பொருளாதாரம் தோற்றம் பெற்றபோது உழைப்பாளர்களின் ஊதியக் கோரிக்கைகள் மேலெழுந்தன. கூடவே புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்களும் எழுச்சி பெற்றன. விளைவாக முதலாளித்துவ அமைப்புத் தோற்றம் பெற்றது. இங்கு தன் உழைப்பை விற்பதைத் தவிர த் தொழிலாளர்களுக்கு வேறு மார்க்கம் இல்லை. செல்வம் சிலர் கைகளிலேயே குவிந்தது. தொழிலாளர் வறுமை பெருகியது. இந்த இரண்டு அணிகளிற்கும் இடையிலான போராட்டத்தில் தொழிலாளர்களின் வெற்றி தவிர்க்க முடியாதது. ஏனெனில் முதலாளித்துவம் அதன் சொந்த முரண்பாடுகளாலேயே மடிய வேண்டும் என்றார் மார்க்ஸ். மலரும் சோசலிஸ் சமூகத்தில் உற்பத்திச் சாதனங்கள் கூட்டுமைகளாக அனைத்து மக்களுக்கும் பொதுவாய் இருக்கும். இதனால் சுரண்டப்படுபவரும் இல்லை; அங்கு சுரண்டுபவரும் இல்லை என்பார்மார்க்ஸ்.
வகுப்புகளும் அவற்றிடையான போராட்டமும்
மார்க்ஸின் அரசியல் மெய்யியல், வகுப்பு என்பது மையநிலையானது. வகுப்புக்கள் தம் அளவில் கூட்டு ஒருமைப்பாடு கொண்டவை. தமக்கென நம்பிக்கைகள், ஊக்கங்கள், பாரம்பரியங் களைக் கொண்டுள்ளன. மார்க்ஸ் முக்கியமான இரண்டு வகுப்புக் களை இனங்காட்டினார். அடிமைகள் சமூகத்தில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டவாறு அடிமைகள் - அடிமைச் சொந்தக்காரர் என இரண்டு வகுப்புக்களைக் காணலாம். நிலவுடைமைச் சமூகத்தில் நிலப்பிரபுக்கள் - பணியாளர்கள் என வகுப்புக்கள் நிலவும். முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள் தொழிலாளர்கள் என வகுப்புப் பிரிவு அமையும். இந்த அடிப்படை வகுப்புக்களிடையான உறவுகள் எப்பொழுதும் ஒன்றுடன் ஒன்று முரண்படுவனவாகவே அமையும். இந்த முரண்பாட்டின் விளைவாகவே போராட்டம் நிகழ்கின்றது. இங்கு போராடுபவர்கள் தனியன்கள் அல்ல. சமூக குழுக்களாகவே இப்போரிற் சந்தித்துக்கொள்கிறார்கள். மனித வரலாறு முழுமையும் இவ்வாறான போராட்டங்கள் தொடரக் காணலாம்.
38| சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

மார்க்ஸினுடைய கருத்தில் வகுப்புப் போராட்டம் என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு செயல்திட்டமாகவே அமைவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இங்கு ஆதிக்க வகுப்பு என்பது நிலவும் ஓர் அமைப்புக்குச் சாதகமாக விளங்குவதும் இதனைத் தற்காத்துக் கொள்வதில் அரசும் அதன் இயந்திரங்களும் துணைபோவதும் மார்க்ஸினால் இனம் காட்டப்படும். இந்நிலையில்தான், உழைக்கும் மக்கள் தம் கூட்டுப்பலத்தின் வழி அரச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பார் மார்க்ஸ். புதிய அதிகாரத்திற்கான இந்த விசையை, பழைய சமூகத்திலிருந்து புதியதை பிறக்க வைப்பிக்கும் மருத்துவிச்சி என ஒப்பிடுவார் மார்க்ஸ். சோசலிஸ நிர்மாணத்திற் கான முன் தேவையாகப் புரட்சி வழியான அரசியல் அதிகாரத்திற் கான இன்றியமையாமையை இவ்வாறான ஒரு பின்புலத்திலேயே மார்க்ஸ் அழுத்தி நின்றார்.
வகுப்புகள் இல்லாத சமத்துவ சமூகம்
உயர் வகுப்பினரிடமிருந்து அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளர் எடுத்துக்கொண்டபின் புதியதோர் சமூக ஒழுங்கைக் கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபடுவர். புதிய அரசின் பொருளாதார ஆற்றலின்மீது புதிய அரசியலமைப்பு, நீதி, நிர்வாக அதிகாரம்; என்பவற்றினைக் கட்டியெழுப்புவர். இவ்வரசியல் நிறுவனங்கள் யாவும் தொழிலாளர் கட்சியின் வழிகாட்டலிற் செயற்படும். இதனைத் தொடர்ந்துதான் சோசலிஸ நிர்மாணத்திற்கான செயற் பாடுகள் தொடங்கும். நிலம் பொதுவுடைமையாக்கப்படும்: தொடர்பு போக்குவரத்து அனைத்தும் மையப்படுத்தப்படும். இலவச மான பொதுக்கல்வி அனைவருக்குமாகும். தொழிலாளர் சர்வாதி காரமானது ஒரு நிரந்தரமான அமைப்பு நிலையல்ல. அனைத்து வகுப்புக்களையும் இல்லாதொழிக்கும் ஒரு இடைக்கால ஏற்பாடே யாகும். சுதந்திரம், சமத்துவம் என்கின்ற இரட்டைக் கோட்பாடு களுடனான ஒரு சமூகத்தை ஒழுங்கமைக்கும் வரையே இதன் நீடிப்பு எனத் தெளிவாகவே குறிப்பிடுவார் மார்க்ஸ். புதிய இந்த யுகத்தில் எல்லோருமே உழைப்பாளர்களாக இருப்பார்கள். எந்த ஒரு தனியனோ, குழுவோ பிறர் உழைப்பில் வாழ அனுமதிக்கப் படமாட்டார்கள். ஒழுங்கமைக்கப்பட்ட சமூக அமைப்பு, திட்ட மிட்ட உற்பத்திமுறை. இதனால் மிகை இலாபம் சார்ந்த வீண்
அமைப்பும் இயங்கியலும் 39

Page 29
போட்டிகளுக்கு இடமில்லை. இங்கே "சும்மா" இருப்பவர் களுக்கோ குருவிச்சைகளுக்கோ இடமில்லை. உழைக்காத வருமானம் என்று ஒன்றே இருக்காது. உண்மையில் பொதுவுடமைச் சமூகம் என்பது உழைக்காதவன் உண்ணமாட்டான் எனும் தாரக மந்திரத்தின் அடிப்படையிலேயே இயங்கும். இங்கு பொருளாதாரப் பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்கப்படும். இது சமூகத்தின் அனைத்து அங்கத்தினருக்கும் சுதந்திரத்தை சாத்தியமாக்கும். கூடவே உள, உடல், உழைப்புக்களிடை எந்த ஒரு எதிர்விசையையும் பொதுவுடைமைச் சமூகம் சகித்துக்கொள்ளாது. எல்லோரும் வகுப்புப் பேதமின்றி இன்புற்றிருப்பார் என்பதுவே மார்க்ஸின் தரிசனமாகும்.
இதயமற்ற உலகின் இதயமாய் சமயம்
சமயங்கள் தொடர்பான மார்க்ஸின் விமர்சனம் யதார்த்தத் தினைத் தலைகீழாகப் புரட்டும் இறையியற் கோட்பாடுகளின் பகுப்பாய்வின் வழியானது. இயற்கையின் இரகசியங்கள் பற்றிய அறியாமையே இயல்நிலை கடந்த ஆற்றல்கள் மீதான நம்பிக்கை யின் அடிப்படையானது என்பார் மார்க்ஸ்.
மனிதன் என்று சொல்லும்போது மனிதனின், அரசின், சமுதாயத்தின் உலகம் என்றாகின்றது. இந்த அரசும் சமுதாயமும் நேர்எதிராய் மாற்றப்பட்ட உலகின் உணர்வாகிய சமயத்தைத் தோற்றுவிக்கின்றன. சமயம் என்பது அந்த உலகத்தின் பொதுவான மெய்யியலாகின்றது. இந்த உலகத்தின் பல்கலை அறிவாகவும் வெகுஜன தர்க்கமாகவும் அதன் செயற்பாடு அமைகின்றது. அதன் அறிவியல் அதிகாரத்தின் அடிப்படையாகின்றது; அதன் பயபக்தி, அதற்கான முழுமையாகின்றது. ஆறுதல் தருதலும், நியாயம் கற்பித்தலும், அதன் வியாபாரத்தன்மைகளாகின்றன. மனிதன் நிஜமாக இன்மையால் அதுவே அதீத கற்பனையில் நிஜமாக்கப்படு கின்றது. அதேவேளை சமய உலகில் வெளிப்படுத்தப்படும் துன்பமானது உண்மையுலகிற் காணப்படும் துன்பத்தின் வெளிப் பாடே. அதுவே உண்மையுலகின் துன்பத்தின் எதிர்ப்புக் குரலும் ஆகும். சமயம் என்பது அடக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சு ஆகும். இதயமற்ற உலகத்தின் இதயமாகும். ஆத்மா அற்ற நிலையில் உள்ள ஆத்மாவாகும் என்பது மார்க்ஸின் கருத்தியல்.
40 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

சமயத்தின் பெயரால் கம்பனிகள், நிதியங்கள், வங்கிகள், சாம்ராச்சியங்கள் என்பன கோடிக்கணக்கில் உழைப்பையும் பொருளையும் சுரண்டிய வரலாறுகளை, தம் கருத்து நிலைக்கான ஆதாரமாக எடுத்துக்காட்டுவார் மார்க்ஸ். "வறுமை நாங்கள் செய்த பாவத்தின் பலன் இதற்கான விமோசனம் சொர்க்கத்தில் கிடைக்கும்" என்கின்றதான பிரசாரங்களினால் முதலாளித்துவ அமைப்பின் காவலர்களால் தொழிலாளரை ஒரு மாயையில் வைத்திருக்க முடிகிறது. தமது துயரநிலைக்கான காரணங்களை அறிய முடியாத நிலைக்கு அவர்களை ஆளாக்க முடிகிறது. இந்த வகையில்தான் மக்களின் போதைப்பொருளாக சமயம் பயன்படுத்தப்படுகின்றது என்பது மார்க்ஸின் விமர்சனம்.
மனிதனுக்கும் மனிதனுக்கும், மனிதனுக்கும் இயற்கைக்கு மிடையில் அறிவார்ந்த தகுந்த உறவை உருவாக்குவதன்வழி சமயத்தின் இந்நிலைக்கு முடிவு காணலாம். முதலாளித்துவத்தால் வேண்டுமென்றே தோற்றுவிக்கப்பட்ட இந்த அற்புதநிலை அகன்றேயாகவேண்டும். அப்பொழுதுதான் யதார்த்த உலகின் வாழ்வு எல்லோருக்கும் கிட்டும் என்பது மார்க்ஸின் கருத்தாகும்.
தன்னையே தொலைக்கும் அன்னியமாதல்
அந்நியமாதல் (Alienation) என்ற பதம் கார்ல் மார்க்ஸின் பல எழுத்துக்களிடை பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறுமனே ஒரு கருத்தாக்கமாக இதனை மார்க்ஸ் அமைக்கவில்லை. முதலாளித்துவ உற்பத்தி முறையின் கீழான, மனிதன் நிலையைப் பகுப்பாய்வு செய்யவே இதனைப் பயன்படுத்தினார். தொழிலாளி உழைப்பின் உற்பத்தி அவனுக்குச் சொந்தமாய் இல்லை; அவன் கட்டுப்பாட்டில் இல்லை; ஆனால் அவன் மட்டும் அதனோடு பிணைக்கப் பட்டுள்ளான். தொழிலாளி தன் உழைப்பைத் தருகின்றான். தன் வாழ்வையே இந்த உற்பத்திக்காய்த் தருகின்றான். ஆனால் அந்த உழைப்பு அவனின்றும் அந்நியப்பட்டதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல, அதுவே அவனுக்கு எதிரான விசையாகியும் இருக் கின்றது. முதலாளித்துவத்தின்கீழ் தொழிலாளியின் உழைப்பே அவனை வரட்சி நிலைக்கு இட்டுச் சென்றது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பெறுமதியை அவன் உற்பத்தி செய்தானோ அந்தளவிற்கு அவன் பெறுமதியற்றவனானான். உற்பத்தியைச் சிறப்பான வடிவில் தருவதற்காக அவன் ஊனமானான்.
அமைப்பும் இயங்கியலும் 41

Page 30
காட்டுரு 3.3
மார்க்ஸின் வரலாற்று இயங்கியல் பொருள்முதல் வாதம்
சமத்துவம் A
சமுகம்
நிறுவனங்களின் மேற்கட்டுமானம்
சோசலிஸம் - அரசு
* (அரசியல் அமைப்புக்கள்)
கருத்தியல்
கைத்தொழில்சார்
சட்டம் குடும்பம் கல்வி
முதலாளித்துவம் இராணுவ சமயமும்
அமைப்புக்கள் ஒழுக்கமும்
சமூகத்தின்பொருள்சார் அடிப்பை
உற்பத்தி சக்திகள் வகுப்புமுறைமை
நிலமானிய .
அமைப்பு
(அன்னியமாதல்) உற்பத்தி வழிமுறைகள் தொடர்பான மனித உறவுமுறைகள் சொத்து உறவுகள் + தொழிற்பகுப்பு)
உற்பத்திகள்
உற்பத்தி வழிமுறைகள் நடைமுறைச் செயற்பாடுகள், திறன்கள் நுட்பங்கள், உற்பத்திக் கருவிகள்
இயற்கை பொருள்சார் சூழலும் அதன் மூலவளங்களும்
தொன்மை .
நிலை
தொழிற் பிரிவின் வழியேதான் மனிதனைத் தன் உழைப்பில் இருந்து துண்டாடும் இந்த அந்நியமாதல் விளைகின்றது. மார்க்ஸ் மீண்டும் மத்தியகால உற்பத்தி முறைகளுக்கு மீள விரும்பவில்லை. ஆனால் இலாபமீட்டல் என்ற சாபக் கேட்டினின்றும் விடுபட்டபின், நவீன தொழிநுட்பமானது நவீன மனிதனை விடுவிக்கும் என நம்பினார். அதன் பின், சமூக உற்பத்தி முறையில் தீவிர பங்காளியாக அவன் தன்னைக் கருதி உழைப்பான். உண்மையில் இந்த ஈடுபாட்டு உணர்வானது புதிய திருப்தியை தரும்; இந்நிலையில் அந்நியமாதல் அகலும்.
அரசு பற்றியகோட்பாடு
அரசுபற்றிய மார்க்ஸின் கோட்பாடு அவர் விமர்சகர்கள் முன்வைப்பதுபோல எளிமையான ஒரு படித்தான விடயம் அல்ல.
42 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசியல் ஆற்றல் என்பது உண்மையில் ஒன்றையொன்று எதிர்க்கும் ஒரு வகுப்பின் ஒழுங்கமைக்கப்பட்ட ஆற்றல் என்பார் மார்க்ஸ். மார்க்ஸின் கருத்துநிலையின் சாரத்தைக் காட்டுரு 33 தெளிவாகச் சித்திரிக்கும். மார்க்ஸ் அரசின் தோற்றத்தைத் தனி உடைமையின் தோற்றத்துடன் இனம் காண்கின்றார். கூடவே ஏற்கனவே விளங்கியவாறு சமூகமானது இரண்டு எதிரெதிரான வகுப்புகளாக பிளவுபடுவதையும் சுட்டுகிறார். தனிச் சொத்துக்களை உடைமை யாகக் கொண்ட வகுப்புக்களே மேலாதிக்கச் சக்திகளாகின்றன. இவ் வகுப்பினர் மிகக் குறைந்தளவு எண்ணிக்கையினராக இருப்பதால் கட்டாய அதிகாரத்தின் மூலமே தமது ஆற்றலைத் தக்கவைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கின்றது. இந்த வகையில் சுரண்டும் சிறுபான்மையினர் கைகளிற் கிடைத்த வலிமையான ஆயுதமாகவே அரசு அமைகின்றது. இந்நிலையில் நிலவும்அரசின் முதன்மை நோக்கமென்பது மேலாதிக்கம் செலுத்தும் வகுப்பைப் பேணுவதே யாகும் என்பது வெளிப்படையாகும். உற்பத்திச் சாதனங்களின் உடைமையாளர்களின் பொருளாதார ஆர்வங்களைப் பாதுகாக்கும் பணி அதனாகின்றது. எனினும் தனியுடைமை, வகுப்புக்களிடையி லான போராட்டம் என்பவற்றிலேயே அதன் நிலைபேறு தங்கி யுள்ளது. சமூகமானது சுதந்திர, சமத்துவ இயல்பினை எய்தும்போது அங்கு ஆதிக்க அமைப்புக்களும் மறைந்துவிடுகின்றன எனத் தம் எழுத்துக்களிடையே மீள மீள வலியுறுத்துவார் மார்க்ஸ்.
மார்க்ஸின் கோட்பாடானது பொருண்மிய நியதிவாதமாக (Economic determinism) மட்டுப்பட்டுபோனது என விமர்சிக்கப் படுவதுண்டு. இவ்வாறே அதனைத் தொழில்நுட்ப நியதிவாதமாக வும் சிலர் விமர்சித்துள்ளனர். இவ்விமர்சனங்கள் தொடர்பாக லெனின் உட்பட மார்க்ஸிய அனுபவவாதிகள் பலர் உரிய விளக்கங் களைத் தந்துள்ளனர். பொருளாதார உறவுகளினடியான வகுப்பு முரண்பாடே வரலாற்றை இயக்கும் விசையென்பதனை இவர்கள் மீளவலியுறுத்தியதுடன், கார்ல்மாக்ஸ் வெறுமனே வரலாற்று ஆசிரியராக மட்டுப்படாத சமூகபுரட்சியாளர் என்பதனையும் தெளிவுபடுத்தினார். மார்க்ஸின் இயங்கியல் கோட்பாட்டினடிப் படையிற் சமூகபுரட்சியை நெறிப்படுத்திச் செயற்படுத்தியவர்களில் லெனின்,மாவோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1917இல் ரஷ்யாவில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து அங்கு சோஷலிஸ் அரசு நிறுவப்பட்டதும், அதன்பின்
அமைப்பும் இயங்கியலும் 43

Page 31
இரண்டாவது உலக யுத்தத்தினைத் தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும் சோஷலிஸ் அரசுகள் உருப்பெற்றமை வரலாறாகும்.
நடைமுறையில் சோஷலிஸ் அரசுகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் சர்வாதிகாரத் திசையிற் சென்ற இடங்களில், கார்ல் மார்க்ஸ் கண்ட சமத்துவ சுதந்திரக் கனவு தகர்ந்து போனமையும்
இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே மாக்ஸியக் கோட்பாட்டினை வளர்ப்பதாகக் கூறிக்கொண்டு நவமாக்ஸியவாதிகளும், அவர்களின் வழிவந்தோரும் முன்வைத்த கருத்தியல்களும் மாக்ஸியத்தை மேம்படுத்துவதாக அல்லாமல் அதனை வல்லமையற்ற ஒன்றாக ஆக்குதலிலேயே முடிந்து போயின என விமர்சர்கள் குறிப்பிடுகின்றமையும் இங்கு கவனத்திற்குரியது. மனிதர்களைச் சமூக அமைப்புக்களின் தாங்கி களாக நவமார்க்ஸிய சிந்தனையாளரான அல்துசார் மட்டுப் படுத்தினார் என விமர்சித்த ஈபி தொம்சன் எனும் அறிஞர் தம் நூலுக்குக் கோட்பாட்டின் வறுமை (Poverty of Theory) எனத் தலைப்பிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
எல்லாவித விமர்சனங்கள், எதிர்வியாக்கியானங்களையும் தாண்டி மனித விடுதலைக்கான ஆய்வுமுறையியலாகவும், நீதியான சமூகமாற்றத்துக்கான செயற்பாட்டு அறிவியலாகவும், மாக்ஸியம் நிலைபெறுகின்றது என்றால் மிகையில்லை.
உலகின் சமூகவியல், பொருளியல், அரசியற் சிந்தனைப் புலன்களில் மார்க்ஸின் செல்வாக்கும், வழிகாட்டலும் இன்றுவரை நிலைபெறக் காணலாம். உலகம் கண்ட மாற்றங்கள் பலவற்றின் இயங்குவிசையாக மார்க்ஸியம் வரலாற்றுடன் கலந்திருக்கின்றது. முரண்பாடும் மாற்றமும் பற்றிய மார்க்ஸின் பகுப்பாய்வுச் சட்டகம், எங்கள் சமூகவியல் மேம்பாட்டிற்கும் முறையியல் செழுமைக்கும் துணையாகியுள்ளது. இன்று மார்க்ஸிய சமூகவியலாகவே அது வடிவம் காண்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
44 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

4
felp5 95ilé650500T6lsÖT előíluGUT5 öFelp55ílusb Sociology as a science of Social integrating
சமூகம் என்பதுநம் அனைவரினதும் தந்தையாகும்;
எனவே கடவுளுக்கு செய்கின்றதான நன்றியை
சமூகத்துக்கும் நாம் கொடுக்க வேண்டும்.
–6Jósio (6i6oo6io (Emile Durkheim)
பிரான்சியக் கல்வியுலகின் முதன்மைக் கல்வியாளராகப் புகழ்பெறும் டுர்கைம், லொறெயினின் கிழக்குப் பிரான்ஸ் மாகாணமான எபிநோல் என்ற இடத்தில் 1858 ஏப்பிரல் 15ஆம் திகதி பிறந்தார். யூதமத புலமையாளர்களைக் கொண்ட குடும்பம். ஆரம்ப நாட்களில் யூதமதக் குருவாகும் எண்ணத்தோடு மரபுவழிக் கல்வியைத் தொடர்ந்தார் டுர்கைம். தல்மட் (Talmud)இல் ஹீப்ரூ மொழியைக் கற்றதோடு நியமக் கல்வியையும் ஒரு மதச்சார்பற்ற பள்ளிக்கூடத்திலேயே மேற்கொண்டார். பதின்மூன்றாவது வயதிலே யூதமத ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார் டுர்கைம். இதனைத் தொடர்ந்த காலப்பகுதியிற் கத்தோலிக்க ஆசிரியர் ஒருவரின் செல்வாக்கினாற் கத்தோலிக்க சமயத்தில் ஆர்வம் கொண்டார். எனினும் மிகவிரைவிலேயே தமது சமய ஈடுபாடுகளைக் கைவிட்டு, கடவுள் இருப்பை நிறுவுதல் இயலாது எனும் கொள்கையராய் மாறினார். எனினும், சமயம், ஒழுக்கம் தொடர்பான இவரின் ஆர்வம் தணிந்ததில்லை; இவரது கல்வியுலக ஆய்வுக்காலமெல்லாம் இவை மேலாதிக்கம் செலுத்தி வந்தமையை அவதானிக்கலாம்.
டீ-எபினோல் கல்லூரியின் மிகச் சிறந்ததொரு மாணவனாக டுர்கைம் விளங்கினார். பல பரிசுகளையும் பாராட்டுக்களையும் கெளரவங்களையும் பெற்றுக்கொண்டார். தம்முள் வளர்ந்த பெரிய
அமைப்பும் இயங்கியலும் 45

Page 32
இலட்சியங்களுடன் பரிஸிலுள்ள லைசிலோவிஸ் - லி - கிராண்ட் எனும் மதிப்பார்ந்த கல்லூரியிற் சேர்ந்தார். இங்குதான் பிரான்சின் உயர் குழாம்களுக்கான பயிற்சிக்களமான ஈகோல் நோமலியில் (Normale) சேருவதற்கான அனுமதிப் பரீட்சைக்குத் தோற்றினார். அரிதின் முயன்று 1879 இல் அனுமதி பெற்றார். ஈகோல் நோமலியில் பிரான்சின் அறிவியல் வாழ்வில் முக்கிய தடங்களைப் பதித்த பல அறிஞர்களை இங்குதான் சந்தித்தார் டுர்கைம். இங்கு எதிர் காலத்தில் சிறந்த சோஷலிஸ, மெய்யியல், உளவியல், அறிஞர்களாக மிளிரப்போகும் பலரை வகுப்புத் தோழர்களாகக் கொண்டிருந்தார் டுர்கைம். இவர்களில் ஹென்றி பேக்குசன், ஜேன் ஜருஸ், பியரே ஜெனற் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஈகோல் நோமலியின் அனுமதி பெற்றமையை ஒரு பெரும் சாதனையாகக் கருதியபோதும், அங்குபெற்ற அனுபவங்களிடை டுர்கைமினால் பெரிதும் மகிழ்ச்சி காணமுடியவில்லை. ஒழுக்கம் மற்றும் ஆழமான விஞ்ஞான அறிவுறுத்தல்கள் தொடர்பான வழிகாட்டல்களுக்கான தாகத்துடன் இருந்த டுர்கைமினால், இன்னமும் இலக்கியம், நுண்கலை ஆகிய துறைகளுக்கே அதிகளவு அழுத்தம் தந்த ஈகோலில் திருப்தி காண முடியவில்லை. விஞ்ஞானத்தின் புதிய கண்டுபிடிப்புக்கள் அல்லது கோட்பாடுக ளுக்குப் பதிலாக, கிரேக்க கவிதைகள், இலக்கியப் பாடல்களைப் படிப்பதே முக்கியமானது எனும் நிலையிலான கலைத்திட்டங்களை டுர்கைம் எதிர்த்தார்; மேலோட்டமான நிலையிலேயே கல்வி வழங்கப்படுவதை உணர்ந்தார் டுர்கைம்.
ஜேன் ஜவுறிஸ் (Jean, Jaures) போன்ற சில நண்பர்களைத் தேடிக்கொண்டபோதும் ஏனைய மாணவர்களால் தான்தோன்றித் தனமான ஒருவராகவே அவர் கணிக்கப்படும் நிலை காணப்பட்டது. அவ்வாறே பெரும்பாலான விரிவுரையாளர்களும், பேராசிரியர் களும்கூட அவர்மீது அதிருப்தி கொண்டிருந்தனர். எப்படியோ 1882இல் பட்டதாரியாகத் தேர்ச்சிபெற்று வெளியேறினார் டுர்கைம்.
டுர்கைமின் பேராசிரியர்களிற் பெரும்பாலானோர் அவர் மீது கோபம் கொண்டவர்களாய் அவரை வெறுத்தபோதும், வேறு சில பேராசிரியர்களுக்கு டுர்கைம் பெரிதும் கடப்பாடுடையவராக
46 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

விருந்தார். இவர்களில், Ancient city - புராதன நகரம் என்ற நூலை எழுதிய, கல்லூரிப் பணிப்பாளராக விளங்கிய புஸ்ரல் டி கொலங்ஸ் (Fuste de Coulanges) என்ற பெரும் வரலாற்றாசிரியர், மற்றும் மெய்யியலாளரான எமில் பொறோக்ஸ் (Emile Boutroux) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வரலாற்று ஆய்விற் கடுமையான விமர்சன முறையியலைப் பயன்படுத்துதலின் அவசியத்தை இவர்கள் தமக்கு உணர்த்தியதாக டுர்கைம் கூறுவார். விஞ்ஞானத்தின் மெய்யியல் தொடர்பான அணுகுமுறைகளை இவர்களிடம் தாம் கற்றுணர்ந்த தாக டுர்கைம் குறிப்பிடுவார். ஒரு மட்டப் பகுப்பாய்வில் இருந்து மற்றொரு மட்டத்திற்குச் செல்கையில் எழக்கூடிய தொடர்புகள் பற்றிய பகுப்பாய்வில் இவ் அணுகுமுறைகள் பெரிதும் பயன்பட்டன. டுர்கைமின் சமூகவியலிற் பிரதான தடத்தைப் பதிப்பனவாக இவ் அணுகுமுறைகள் விளங்கியதையும் நாம் காணமுடியும். இவ் அணுகுமுறைகளின் ஊடாகவே தம் ஆய்வுப் பொருளையும், வாழ்வு இலக்கினையும் டுர்கைம் இனங்கண்டுகொண்டார் என விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
டுர்கைமின் சிந்தனை, மரபுவழி மெய்யியலாளரின் தன்மையதல்ல. அக்காலத்துக் கற்பிக்கப்பட்ட மெய்யியலானது அன்றாட விவகாரங்களினின்றும் பெரிதும் விலகியதாக, அனாவசிய விடயங்கள் தொடர்பான "மயிர் பிய்த்தல்களாகவே" விளங்கக் கண்டார் டுர்கைம். இந்த யுகத்தைக் கட்டியாளும் பிரதான ஒழுக்கவியல் வினாக்களுக்கான விடைகளைப் பகுத்துணர்வதி லேயே தம்மை அர்ப்பணித்தார் டுர்கைம். கூடவே சமகாலச் சமூகத்தின் நடைமுறை விவகாரங்களுக்கு வழிகாட்டும் அறிவையும் கொடுக்க விரும்பினார். அக்கால அரசியல் உறுதிப்பாட்டிற்கும் ஒழுக்க நிலைபேற்றிற்கும் பங்களிக்கப் பெரிதும் விரும்பினார். உடையும் நிலையில் தளர்ந்திருந்த அன்றைய அரசியலில் உறுதிப்படுத்தும் ஒழுக்க வழிகாட்டலை வழங்குவதற்கு முழுமை யான விஞ்ஞானப் பயிற்சி அவசியம் எனக் கருதினார் டுர்கைம். இதற்கெனச் சமூகம் பற்றிய விஞ்ஞான ஆய்வையே தம் குவிமைய மாகக் கொண்டார் டுர்கைம்.
விஞ்ஞான ரீதியான சமூகவியற் கட்டமைப்பொன்றினை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்த டுர்கைம்
அமைப்பும் இயங்கியலும் 47

Page 33
இந்நோக்கில் இறுதிவரை விலகாமல் உழைத்தார். இதனை ஒரு முடிவு இலக்காக அன்றி, சமூக ஒழுக்கத் திசைக்கான ஒரு வழிகாட்டி யாகவே மேற்கொண்டார்.
அக்காலத்திற் சமூகவியல், கல்வி நிறுவனங்களில் ஒரு பாடநெறியாக இல்லாததால், மெய்யியல் ஆசிரியராகவே தம் பணியைத் தொடங்கினார் டுர்கைம். 1882-1887 காலப்பகுதியில் பரீசை அண்டிய எண்ணற்ற மாகாண லைசீஸ் பள்ளிகளில் மெய்யியலைக் கற்பித்தார். இவ்வேளையிலேயே லூயிஸ் டிரைபஸ் (Louise Dreyfus) எனும் மரபுவழி யூத குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை மணம் புரிந்தார் டுர்கைம். இவர்களது மணவாழ்வில் மாறி, அன்ரூ என இரண்டு குழந்தைச் செல்வங்கள். தன் கணவரின் ஆய்வு வாழ்வில் உறுதுணையாகவும், நல்லதோர் அம்மாவாகவும் லூயிஸ் விளங்கியதாக அறியமுடிகின்றது. இக்காலப்பகுதியில் ஒரு வருடம் மட்டும் உயர்கல்விக்கெனப் பரீஸிலும், ஜேர்மனியிலும் செலவுசெய்தார் டுர்கைம்.
ஜேர்மனியில் இருந்த காலத்திற் குறிப்பாக, கற்பித்தல்முறை, ஒழுக்க மெய்யியல், சமூக விஞ்ஞானங்கள் தொடர்பான ஆய்வுகளில் கருத்தைச் செலுத்தினார். டுர்கைமின் பெரும்பாலான பொழுதுகள் லிப்சிக்கிலுள்ள வில்ஹைம் வூண்ரின் உளவியல் ஆய்வுக் கூடத்தி லேயே கழிந்தது. விஞ்ஞான ரீதியான புறவயத்தன்மை, நுண்மை ஆகியவற்றில் பேரார்வம் கொண்டிருந்த டுர்கைம், அவற்றினை வூண்ரின் ஆய்வுகூடத்திலே நிதர்சனமாகக் கண்டார். ஒழுக்கக் கடமையின் சமூகவேர்களை அழுத்திய பல்வேறு ஜேர்மனிய சமூக விஞ்ஞானிகள், மெய்யியலாளர்களை மனமார அங்கீகரித்ததுடன், ஒழுக்கவியல் என்பது ஒரு தனித்துவமான விஞ்ஞானத்துறையாகும் என்ற அவர்களின் கருத்து நிலையுடனும் உடன்பட்டார். பின்னர் 1902இல் பரீஸ் பல்கலைக்கழகத்திற் பேராசிரியராகும் கெளரவம் அவருக்குக் கிடைக்கப்பெற்றது. இறுதிவரை பல்வேறு சமூக விஞ்ஞானத்துறைகளும் அவரது அரிய விரிவுரைகளாற் பயன் கண்டன. உலகப்போர் ஆரம்பித்தவேளை போர்ப்பணியில் பிரான்சிய மக்களிடை ஒருங்குணர்வை ஏற்படுத்திய டுர்கைம் அறிமுகம் செய்த பொறுமை, முயற்சி, நம்பிக்கை என்ற குறிக்கோளே
48 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

நாட்டின் போர்க்குரலாக ஏற்கப்பட்டது. எனினும் போரில் ஈடுபட்ட மகன் அன்ரூவின் இறப்பும், பிரெஞ்சு நாட்டின் தோல்வியும் அளவற்ற வேலைப்பளுவும் சேர்ந்து 1917இல் 59வது வயதில் அவர் வாழ்வை முடித்தன.
டுர்கைமின் ஆக்கங்கள்
டுர்கைம், அகஸ்ற் கொம்ற்ரின் செல்வாக்கிற்குப் பெரிதும் உட்பட்டிருந்தார். தனியன்களைச் சமூக யதார்த்தத்தின் சாரமாகக் காணும் டுர்கைமின் கருத்தும் புறமெய்மைவாதமும் கொம்ற், ஸ்பென்சர் ஆகியோரின் சமூகப்படிமலர்ச்சிக் கோட்பாட்டின் செல்வாக்கில் விளைந்தவை. டுர்கைமின் கூட்டுப்பிரதிநிதித்துவம் பற்றிய ஆய்விலே ஜேர்மனிய உளவியலின் செல்வாக்கினையும் இனங்காணமுடியும்.
இவரது நூல்களும் கட்டுரைகளும் 1885 முதல் அவர் மறையும்வரை ஒழுங்காகத் தொடர்ந்து வெளிவந்தன.
Girgo).5LÖgöT (upg56) (b. TGT60T The Division of Lobour of Society - சமூகத்தில் தொழிற்பிரிப்பு: 1883இல் வெளியானது. இது இவரது கலாநிதிப்பட்ட ஆய்வாகும். இரு ஆண்டுகள் கழித்து The Rules of Sociological Method - சமூகவியல் முறைக்கான விதிகள் பிரசுர
மானது.
1897இல் Suicide என்ற நூல் வெளியானது. இவரது இறுதி IGuT60T The Elementry forms of Religious life - JLou alm paíair அடிப்படை வடிவங்கள், 1912இற் பிரசுரமானது. தனியனும் கூட்டுப்பிரதிநிதித்துவமும் தொடர்பான புகழ்பெற்ற இவரது கட்டுரை 1924இல் வெளியானது.
சமூகவியலுக்கான டுர்கைமின் குறிப்பிடத்தக்க பங்களிப் புக்கள் ( ) சமூக உண்மைகள் (Social Facts)
(p60pufugi) (Methodology)
அமைப்பும் இயங்கியலும் 49

Page 34
செயற்பாட்டியல் பகுப்பாய்வு (FunctionalAnalysis) 3Felpés GI605üLIT(G (Social Typology) J-Loug56iT Jeup565ugi) (Sociology of Religion) Ji, Gil J56065 (Collective Consciousness) 3Felp5336) G5TflbLírfüL (Division of Labourin Society) அனோமி (Anomie)
gibGod, T66) (Suicide)
956 air Fepasofluigi) (Sociology of Knowledge)
GJFuujibLIIT'' quuổio Gíl6Tj35D (Functional explanation)
சமூக உண்மைகள் பற்றிய கல்வியாகச் சமூகவியல்
இறுதியான சமூக யதார்த்தம் தனியன் அல்ல; குழு என்பதே டுர்கைமின் உறுதியான கருத்தாகும். சமூக உண்மைகள் தனியன் களின் உண்மைகளாகக் குறுக்கிநோக்க முடியாதவை என்றார் டுர்கைம். இந்தவகையில் ஸ்பென்சரின் தனிமனித வாதத்தினின்றும் முரண்படுகின்றார் டுர்கைம்.
சமூக உண்மை என்ற பதம் சமூகத்துடன் தொடர்பான நிகழ்வை அல்லது விடயத்தைக் குறிக்கின்றது. சமூக வாழ்வின் யதார்த்தங்களைப் பெளதிக அல்லது உளவியற் பகுப்பாய்வுகளின் வழி விளக்குதல் சாத்தியமில்லை என்பது இன்று சமூகவியல் கல்வியில் மேலாதிக்கம் செலுத்தும் டுர்கைமின் சமூக உண்மைகள் பற்றிய பிரதான கருத்தாகும். சிந்திக்கும், உணரும் வழிவகைகளும், செயற்பாடும் ஒரு தனியனுக்குப் புறத்திருந்தே தரப்படுவன. எடுத்துக்காட்டாக, குடும்பக்கடமைகள், சமய அனுஷ்டானங்கள், பொது ஒழுக்கம், தொழில் அறம் என்பவற்றைக் குறிப்பிடலாம். உறுதியான சமூக அமைப்புக்கள் இல்லாதபோதும்கூட இந்தச் சமூக உண்மைகள் நிலவக் காணலாம்.
தனியன்களின் ஒழுங்கு, சமூக ஒழுங்கு எனும் உண்மை களிடையே முக்கிய வேறுபாடுகளைப் பகுத்துணரமுடியும். சில வகைச்சிந்தனைகளும் செயல்களும் மீளமீளச் செய்வதன் வழி ஒருவரில் விளைவிக்கும் தனித்துவமான நடத்தைக் கோலங்களை
50 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

தனியன்களின் ஒழுங்கு குறிக்கின்றது. சமூக ஒழுங்கு என்பது, சமூகவிதிகளின்வழி அமைகின்றது. இந்த இரண்டும் உண்மை, ஒழுங்குகள் தொடர்பான தனியன்நிலை, சமூகஉளவியல் சார்ந்தவை.
டுர்கைம், சமூக உண்மைகளைப் பொருட்களாகவே நோக்குகின்றார். அவருக்கு முன்னைய சிந்தனையாளர்களோ அவற்றினை எண்ணக்கருக்களாகவே கண்டனர். எண்ணக்கரு ரீதி யான சிந்தனையானது பொருளிலிருந்து வேறுபட்டது. டுர்கைமைப் பொறுத்தவரையில் அனைத்து அறிவுக் கூறுகளும் பொருளில் உள்ளடங்கியிருந்தன. அவற்றினைத் தனித்து உளச்செயற்பாட்டி னால் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது. மனதுக்குப் புறத்திலிருந்து எண்ணக்கருவுக்கான தரவுகளைப் பெறவேண்டி யுள்ளது. அவதானங்கள், பரிசோதனைகளின்வழி பெறப்படும் தரவுகளிலிருந்தே சாத்தியமான, உயர்ந்த அறிவுத் திறனைப் பெறமுடிகின்றது.
சமூகம் பற்றிய கற்கைகள், அகக்காட்சி முறையில் தங்கியிருக்க முடியாது என டுர்கைம் அழுத்தினார். சமூக உண்மைகள் தனிமனித விருப்பங்களின்வழி தோன்றியவை அல்ல; எனவே அவற்றினைத் தனியன்களின் கூட்டு வாழ்வுக்கான உண்மைகளிலிருந்தே உணர்ந்துகொள்ளவேண்டும். சமூக உண்மைகள் தன்மைாரீதியில் உளவியல்ரீதியான உண்மைகளினின்றும் வேறுபட்டுள்ளதால் இவைபற்றிய ஆய்வுகள் வெவ்வேறு மட்டப் பகுப்பாய்வினை வேண்டிநிற்கின்றன.
சமூக உண்மைகளை ஆராயும் முறையியல்
முறையியலுக்கான டுர்கைமின் பெறுமதியான பங்களிப் பானது அவரது பிரதான ஆய்வுகளிலெல்லாம் வெளிப்பட்டது. சமூக உண்மைகளைத் தனிமைப்படுத்தி அறிவதற்கான விதிகளை அவரது முறையியல் உள்ளடக்கியுள்ளது. முதல் நடிவடிக்கையாக முற்கற்பிதமான எண்ணங்களைத் துடைத்தெறியவேண்டும் என்பார் டுர்கைம். சமூக உண்மைகளை அவதானிப்பதன்வழி சாதாரண மனித சிந்தனையில் மேலாதிக்கம் செலுத்தும் தவறான கருத்துக் களை இனம்கண்டு அதிணின்றும் ஆய்வாளர் விடுபடவேண்டும்.
அமைப்பும் இயங்கியலும் 51

Page 35
அடுத்து அனைத்துச் சமூகவியல் ஆய்வின் உள்ளடக்கமும் சில பொதுவான புறவய இயல்புகளால் வரையறுக்கப்பட்டதாகவும் அமையவேண்டும் என்பார் டுர்கைம். மேலும், தனிமனித வெளிப் பாடுகளிலிருந்து சுதந்திரமான முறையிற் சமூக உண்மைகளை ஆய்வாளர் நோக்கவேண்டும். கூட்டு வழக்கங்களுக்கான நிரந்தர அடிப்படைகளைக் காணவேண்டும். இந்த வகையிற் சமூக
நியமங்களே அவர் ஆய்வுப்பொருளாக வேண்டும் என்பார்.
டுர்கைமின் பிரதான விதியானது சுதந்திரமான இந்தச் சமூக உண்மைகளினின்றும் பெறப்பட்டது. சமூக உண்மைகள் தொடர்பான உளவியல் ரீதியான விளக்கங்கள் அடிப்படையான சமூக வாழ்வின் யதார்த்தங்களைக் காட்டத்தவறி விட்டன. சமூக வாழ்வு பற்றிய விளக்கங்கள் சமூகத்தின் வழியேதான் விளக்கப்பட வேண்டும். அன்பு, சமயபக்தி, திருமண விசுவாசம் போன்ற கட்டுப்பாடான பிணைப்புக்களின் மூலங்கள் எல்லாம் தனியன் களுக்குப் புறத்தேயே உள்ளன. உண்மையிற் பெரும்பாலும் தனியன்களின் பிரக்ஞை மீதான, சமூக உண்மைகளின் அழுத்தல் களின் விளைவாகவே இவை அமைகின்றன என மீளமீளத் தன் எழுத்துக்களிற் கூட்டுச்சமூகப் பிரக்ஞையின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவார்டுர்கைம்.
டுர்கைமைப் பொறுத்தவரை மறைமுகமான பரிசோதனை அல்லது ஒப்பியல் முறை என்பது சமூகவியல் ஆய்வுக்குப் பொருத்தமான முறை என்றார். கொம்ற்ரின் வரலாற்று முறையை இவர் விமர்சித்தார். முன்னேற்றத்திற்கான நிலைமைகளை அறிவதால் மட்டும் காரணகாரியங்களை விளங்கிவிட முடியாது. இருவேறு நிலைகளை ஒப்பிடுவதே பொருத்தமானது என்றார். இங்கு ஒப்பியல் சமூகவியலானது ஒரு தனித்துறையாகக் கருதப்படவில்லை. படிமலர்ச்சியின்போது ஒரே காலப்பகுதிக்குரிய சமூகங்களுக்கிடையிலான ஒப்பீடாய் அவற்றிற்கிடையிலான வேறு பாடுகளைக் கருத்திற்கொள்வதாகவே அமையும். ஒரு மாறியில் ஏற்படும் மாற்றம் இன்னொன்றின் மாற்றத்துடன் யாதேனும் ஒரு சமூக உண்மையின் அடிப்படையில் நேரடியாகத் தொடர்புபடலாம் எனவும் டுர்கைம் வலியுறுத்தினார்.
52 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

செயற்பாட்டியல் பகுப்பாய்வு
விதிக்கோட்பாட்டு முறைகளுக்குப் பதிலாகச் செயற் பாட்டியல் அணுகுமுறைகளை அறிமுகம் செய்தார் டுர்கைம். ஒரு சமூகப் பொருண்மையை விளக்க முற்படும்போது, அது உண்டாக்கிய வினைத்திறனான விளைவுகளையும், அது நிறைவு செய்த செயற்பாட்டையும் கருத்திற்கொள்வது அவசியம் என்றார். செயற் பாட்டியற் பகுப்பாய்வினை இருவேறு படிமுறைகளின்வழி விளக்கினார் டுர்கைம். ஒன்று வரலாற்று ரீதியான விசாரணை. மற்றையது தனியன்களின் ஊக்கல்களினடியான விசாரணை. இவற்றில் இரண்டாவது வகை, சமூகவியல் விசாரணையில் எல்லைநிலை முக்கியத்துவம் மட்டுமே கொண்டது. விளைவுகளை எதிர்பார்க்க முடியாமலேயே தனியன்கள் செயற்படும் விடயங்களை மட்டுமே இவை விளக்கக்கூடியன. ஒரு சமூகப் பொருண்மையின் முழுமையான விளக்கத்திற்கு வரலாற்று மற்றும் செயற்பாட்டி யலாகிய இருவகைப் பகுப்பாய்வுகளும் இன்றியமையாதவை. ஒரு குறித்த தொகுதியில் அல்லது பகுதிக்கூறின் செயற்பாட்டிற்கு ஏன் ஒரு குறித்த அம்சம் இன்றியமையாததாய் அமைகின்றதென்பதைக் காண்பதிற் செயற்பாட்டியற் பகுப்பாய்வுத் துணையானது. எனவே தான் தோற்றக் காரணிகளையும் செயற்பாடுகளைத் தீர்மானிக்கின்ற காரணிகளையும் இணைத்து நோக்கவேண்டும் என்றார். தொழிற் பிரிப்பு, சமயவாழ்வின் அடிப்படை வடிவங்கள் ஆகிய இரண்டு பகுப்பாய்வுகளிலும் இக்கருத்து நிலையைத் தெளிவாகவே பயன் படுத்துவார் டுர்கைம்.
repb ഖഞങ്കtILI(B
டுர்கைம் சமூகம் பற்றிய ஒரு வகைப்பாட்டினைக் காண முனைந்தார். உயிரியல் உயிரிகளைப்போல ஒரே அலகுகளின் வெவ்வேறு செயற்கைகளின்வழி, வெவ்வேறு சமூகங்கள் தோன்று கின்றன என்றார் டுர்கைம். கூடவே சமூக உயிரியல் வகைப்பாடு களிடையே பிரதான வேறுபாடுகளையும் அவதானித்தார். மீளுருவாக்கம் தொடர்பாகச் சமூக உயிரிகளிடையிற் பரம்பரைச் செல்வாக்கு என ஒன்றில்லை என்றார். ஆனால் ஏனைய உயிரிகளைப் பொறுத்தவரை பரம்பரையின் செல்வாக்கு அதிக
அமைப்பும் இயங்கியலும் 53

Page 36
மானது. அத்தோடு சமூக உயிரிகளைத் திட்டமாக நோக்குவதும் கடினமானது. ஒன்றுடன் ஒன்று இணைந்து கலந்த பன்முகத் தன்மைகளைக் கருத்திற் கொள்வனவாகவே பகுப்பாய்வு அமையவேண்டும் எனவும் குறிப்பிடுவார் டுர்கைம். எவ்வா றெனினும் இவ்வாறான வகைப்பாட்டியலை மேலும் வளர்த் தெடுப்பதில் டுர்கைம் மட்டுப்பாடுகளைக் கண்டதாக ஆய்வாளர்
குறிப்பிடுவர்.
குலக்குறியம்பற்றிய டுர்கைமின் ஆய்வு
சமூக ஒழுங்கில் நிறைந்த ஆர்வம் கொண்டிருந்த டுர்கைம் கட்டுப்பாட்டில் தாக்கம் செலுத்தும் புறவிசைகள் பற்றி ஆழ ஆராய்ந்தார். தொடக்கநிலையில், சட்ட ஒழுங்கில் தம் கவனத்தைக் குவித்திருந்தபோதும் பின்னாட்களில் சமயத்தை நோக்கித் தம் கருத்தைச் செலுத்தினார். அவரது பார்வையிற் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யுமாறு தனியன்களைத் தூண்டும் உணர்வைச் சமயம் உருவாக்குவதாகக் கருதினார். சமூக ஒழுங்கை அச்சுறுத்தும் செயற்பாட்டை விளக்கும் ஆர்வத்தினாலும் அவர் சமயம்பற்றி ஆராய்ந்தார். இதன் விளைவாகவே இவரின் சமய வாழ்வின் அடிப்படை வடிவங்கள் எனும் மிக முக்கியமான நூல் உருப்பெற்றது.
இந்த ஆய்வுக்கென அருந்தா (Arunta) எனும் ஆஸ்திரேலிய பழங்குடிகளை வழிநிலைத்தரவுகளின்வழி தேர்ந்தெடுத்தார். படிமலர்ச்சியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த இப் பழங்குடி யினர் டுர்கைமின் ஆய்வுக்கான இலட்சிய மூலங்களாக அமைந்தனர். அகவயக் கூறுகள், நிறுவன ரீதியான இடைத்தொடர்புகள் என்பவற்றைப் பரிசோதனை ரீதியாக இவர்களிடையே அவதானிக்க முடிந்தது. இம் மக்களிடையே காணப்பட்ட சமயமான குலக்குறியம் (Totemism) டுர்கைமின் ஆய்வுப்பொருளானது.
குலக்குறியம் என்பது அகவய நம்பிக்கையைக் குறிக்கின்றது. குலக்குறியாக அமையும் புனிதப்பொருட்கள் 0 சமூகவிலக்குகளை (Social Taboo) மீறுபவர்களுக்குத் தண்டனை
தருகின்றன.
54 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

0 குறித்த குழுவில் அற ஒழுக்கப்பொறுப்புக்களை விதைக்கின்றன.
56öT5: American Museum of Natural History
குலக்குறியமானது விலங்கு, தாவரம் அல்லது யாதேனும் ஒரு இயற்கைப்பொருளாக அமைகின்றது. ஒரு குலத்தின் அல்லது குழுவின் புனித குலக்குறிக் கோட்பாட்டின் குறியீடாக வெளிப் படுகின்றது.
அருந்தாக்களின் வாழ்வு இருகூறுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
1) லெளகீக இலக்குகளுடனான செயலாக்கம் குறைந்த மந்தமான
சிறு குழுக்கள்.
2) கூட்டு வாழ்விற் செயற்றிறனோடு புனிதப்பொருட்களைச்
சார்ந்து இயங்கும் குழுக்கள்.
டுர்கைம் சமயப்பொருண்மையை தனியன்கள் சார்ந்த விடயமாக அன்றிச் சமூகப் பொருளாகக் கண்டார். அவரைப் பொறுத்தவரை சமயம் என்பது புனிதப் பொருட்கள் தொடர்பான ஒன்றிணைக்கப்பட்ட நம்பிக்கைகள், நடைமுறைகளின் தொகுதியா கவே அமைந்தது. சமயம் செயற்படுவதற்கான வினைத்திறனான விசையாகக் குழுவாழ்வு விளங்குவதாக டுர்கைம் குறிப்பிடுவார். சமயக் கருத்தும், நடைமுறைகளும் ஒரு குழுவின் குறியீடாக விளங்குவன. எந்த ஒரு சமூகத்திலும் புனிதப் பொருள்கள் - புனித பொருள்கள் அல்லாதவை எனப் பாகுபாடு தோன்றுகின்றபோது,
அமைப்பும் இயங்கியலும் 55

Page 37
சமயம் சார் பொருண்மையும் சமூகத்தில் தோற்றம்பெற்று விடுகின்றது என்பார் டுர்கைம்.
புனிதப் பொருட்கள் என்பன மனிதனுக்கு அப்பாற்பட்ட சமய நம்பிக்கைகள், சடங்குகள், தெய்வங்கள் இன்னும் சமயமதிப்பை வேண்டிநிற்கும் அனைத்தையும் உள்ளடக்குவன. புனிதப்பொருட்கள் எண்ணிறைந்தவை; அசாதாரணமானவை; எண்ணங்கடந்தவை. புனிதப்பொருள் வட்டத்தை அனைவரும் ஒரே தன்மையதாய்ப் புரிதல் இயலாது. வெவ்வேறு சமயங்களுக்கு ஏற்ப அவை வேறுபடுகின்றன. புனிதப்பொருட்களின் முக்கியத்துவம், புனிதப்பொருள்கள் அல்லாதவற்றினின்றும் அவை வேறுபடுகின்ற தன்மையில் தங்கியுள்ளன. புனிதப்பொருட்களைத் தொடக் கூடாது. தூய்மையின்றித்தொடவே முடியாது; புனிதம் அல்லாதவை யோ அன்றாடப் பயன்பாட்டுச் செயல்களாய் அமைவன. சமய நம்பிக்கையிற் புனிதக் குறியீடுகளும், நடைமுறைகளும் புறச் சூழலையே குறிக்கின்றன. அல்லது தனிமனித இயல்பிற்கான சமூக ஒழுக்க யதார்த்ததை வகுப்பன. சமயத்தின் மூலமும், இலக்கும் கூட்டு வாழ்க்கையே, ஒரு பொருளானது இயல்பிற் புனிதப் பொருளா கவோ, புனிதமற்ற பொருளாகவோ அமையலாம். ஆனால் மனிதர் தம் பயன்பாட்டு நிலையில் அதனை எவ்வாறு காண்கிறார்கள் என்பதனைப் பொறுத்தே அதன் நிலை தீர்மானமாகின்றது. எடுத்துக்காட்டாக, புனிதச் சடங்குகளில் முக்கியத்துவம் பெறும் "வைன்"ஐச் சுட்டுவார் டுர்கைம். இங்கு கிறிஸ்துவின் இரத்தக் குறியீடாக இது பயன்படுகின்றது; குடிவகையாக அல்ல. புனித செயற்பாடுகள் முடிவின் வழிமுறையாக அன்றி, வழிபாட்டு முறை யின் பகுதியாகவே அமைகின்றன. புனிதச் சடங்குகளிற் கலந்து கொள்வதன்வழி, சிறப்பான சமூக கெளரவம் கிடைக்கின்றது. சமயத்தின் சமூகச் செயற்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
சமயம் ஒரு சிறப்பான கூட்டுப் பொருண்மை. அது மனிதர்களை ஒன்றிணைக்கின்றது. சமயம் என்பது புனிதப் பொருட்கள் தொடர்பான நம்பிக்கைகள், நடைமுறைகளின் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு தொகுதி என்பார் டுர்கைம். புனித நம்பிக்
கைகளும், நடைமுறைகளும் மக்களை பழக்க சமுதாயமாக
ளு ந முறை 6(9
56 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

ஒன்றிணைக்கின்றன. மறுதலையாகச் சமயத்தின் விருத்திக்கு நம்பிக்கைகளின் கூட்டான பகிர்தல் இன்றியமையாதது. இது ஒரு ஆக்கமாக மட்டுமன்றிப் புனிதப் பொருள்களைக் கொண்டாடுதலின்
வழிதெய்வமாக்கும் செயன்முறையுமாகின்றது.
சமயம் என்பது சமூக வல்லமையின் சூழ்நிலைப் பிரதிபலிப் பின் சாரம் எனவும் டுர்கைம் குறிப்பிடுகிறார். மரபுவழிச்சமயத்தின் மறைவு என்பது சமூகக் குலைவாக அமையாது. ஆதி மனிதன் சமயப் பிரதிநிதித்துவங்களின் ஊடக வழியேதான் சமூகத்தில் தான் தங்கியுள்ளமையை உணர்ந்தான். நவீன மனிதன் இச் சமய ஊடக நிலைக் கருத்துக்களுக்குப் பதிலாகத் தர்க்கரீதியான பிரதியீடுகளைக் கண்டுகொள்ளவேண்டும் என்றார்.
சமயம் தொடர்பான லெளகீக ரீதியான சமூகவியல் விளக்கமானது, கடவுள் மீதான மனித உளச் சார்பினைச் சார்ந்தது. ஒரு சமூக உறுப்பினர் என்ற வகையிற் புறவயமான சில ஒழுக்க ஆற்றல்களில் தங்கியிருப்பதாக உணரும் நிலையிற் சமூகத்திற்காய்
மக்கள் வாழ்கின்றனர்.
டுர்கைமின் நோக்கில் சமூகம் என்பது நம் அனைவரினதும் தந்தையாகும். எனவே சமூகத்திற்குக் கடவுளுக்குச் செய்கின்றதான நன்றியை நாம் செலுத்தவேண்டும். இந்தவகையிற் புதியதொரு மனிதாபிமான வழிபாட்டு மரபை அறிமுகம் செய்யவிழைந்தார் டுர்கைம். சமூகத்தை ஒருங்கிணைக்கும் ஒழுக்க ஆளுமையை இதனாற் பெறமுடியும் எனக் கருதினார். குடியியல் இயக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களை ஒன்றுபட அழைத்தார் டுர்கைம். எமது இன்றைய இருப்பு சமூகமயமானது; சமூகம் எங்களை உயர்த்துதற்காக எங்களுக்குள் இயங்குவது என்பது டுர்கைமின் கருத்துநிலை.
சமயத்தின் பல்வேறு வடிவங்களையும் தனியே விபரிப் பதுடன் நின்றுவிடாமல், சமயத்தின் தொழிற்பாடுகளையும் விளக்குவதிற் கருத்தாக இருந்தார். இந்த வகையில் நான்கு பிரதான செயற்பாடுகளை இனங்காட்டுவார் டுர்கைம்.
அமைப்பும் இயங்கியலும் 57

Page 38
0 ஒழுக்காற்றுச் செயல்
சமயச்சடங்குகள் சமூக வாழ்வுக்கு மனிதனைத் தயார்ப் படுத்துவன. சுய ஒழுக்கம், சிலவகைத் துறவு நடவடிக்கையின் வழி ஒழுக்கச் செயற்பாட்டினை விளைவிக்கின்றன.
0 ஒருங்கிணைப்புச்செயல்
சமயச்சடங்குகளின்வழி சமய உறுதிப்பாட்டினை ஆக்குதல், மீள வலியுறுத்துதல், பராமரித்தல் ஆகியன நிகழ்கின்றன. சமயச் சடங்குகள் மக்களை ஒன்றிணைக்கின்றன. அதன்வழி பிணைப்புகள் உறுதிபெறுகின்றன. சமூகத்தின் உறுதிப்பாடும் பேணப்படுகின்றது.
0 பேணுகின்ற செயல்
சமய நடைமுறைகள் ஒரு குழுவின் சமூகப் பாரம்பரியங்களைப் பேணுவதுடன் அவற்றினை மீள் மறுமலர்ச்சி அடையவும் வைக்கின்றன. கூடவே நிலவும் விழுமியங்களை எதிர்காலச் சந்ததிக்குக் கடத்துவதின்வழி சமூகத் தொடர்ச்சியைப் பேணு தலில் துணையாகின்றன.
0 மதிப்பார்ந்த சமூக விசையாகும் செயல்
சமயம் தன் உயர்விசைச் செயற்பாட்டின்வழி விரக்தி உணர்வு களுக்கு எதிராகவும், நம்பிக்கை இழப்புக்களுக்குப் பதிலாகவும் நம்பிக்கையைத் தருகின்றது. எடுத்துக்காட்டாக இறப்பு முதலாய இழப்புகளிலிருந்து மீளுதற்கான சமநிலையைத் தருவதன் மூலம், தளரா மனதோடு மனித இருப்பும் அர்த்தங்களும் தொடரத் துணையாகின்றது.
foll (Binnytisogb(Collective Consciousness)
சமூக உண்மைகள் தொடர்பான டுர்கைமின் பல்வேறு பகுப் பாய்வுகளிடையேயும் கூட்டுப்பிரக்ஞை தொடர்பான விவாதங்க ளைக்காணமுடியும். கூட்டு வாழ்வில் தொடர்புபடும் விசைகளை இனங்காண்பதிற் பெரிதும் உழைத்தார் டுர்கைம். யதார்த்தத்தின் மதிப்பீடும், விழுமியங்களின் மதிப்பீடும் தொடர்பான தமது ஆய்வு
58 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

நூலிற் சமூக இலட்சியங்களுக்கும் கூட்டுப் பிரக்ஞைக்கும் இடையிலான தொடர்பை விளக்கினார் டுர்கைம். ஒன்றையொன்று இவை எவ்வாறு வளர்க்கின்றன என்பதைத் தெளிவாக்கினார். சமூகக் கருத்தியல்கள் கூட்டுப்பிரக்ஞையைத் தோற்றுவிக்கின்றன. அவை தனியன்களின் கருத்தாக்கத்திற் சுதந்திரமாய் நிலை பெறுகின்றன. அதேவேளை விழுமியங்கள் தனிமனிதர்களுக்கான பொது மனச்சாட்சியாய் உருப்பெறுகின்றன. டுர்கைமின் கருத்திற் சமயம், சட்டம், ஒழுக்கம், பொருளாதாரம் என்பன விழுமியங் களினதும் கருத்து நிலைகளினதும் தொகுதியாகவே கொள்ளப் படுகின்றன.
டுர்கைம் ஒவ்வொரு தனியன்களிலும் இரண்டு பிரக்ஞை நிலைகளை அவதானிக்கின்றார். ஒன்று தனியன்களுக்கே உரியது; மற்றையது குழுவுடன் பகிர்ந்து கொள்ளப்படுவது. அதுவே கூட்டுப் பிரக்ஞை எனப்படுகின்றது. இக்கூட்டு உணர்வினை அதன் பகுதிகளின் கூட்டாக விளங்கிவிடக்கூடாது. குழுவின் சிந்தனை, உணர்வு, செயல் என்பன அவற்றை ஆக்கும் தனியன்களில் நின்று வேறுபடுவன. எனவே குழு நடத்தை தொடர்பான பகுப்பாய்வு என்பது, கூட்டுப் பொருண்மை பற்றிய ஆய்வில் இருந்தே தொடங்கப்பட வேண்டும். கூட்டுப்பொருண்மை என்பது தனியன் களின்மீது வலிமையான அழுத்தத்தை செலுத்துகின்றது. தனியன் களுக்குப் பொதுவான இயற்பண்புகள் யாவும், இந்த அழுத்தத்தின் விளைவுகளே என்பார் டுர்கைம்.
ஆயினும் தன் தொழிற்பிரிப்பு என்ற ஆய்வினுள்ளே கூட்டுப் பிரக்ஞை என்பது, சராசரி மனிதரின் பிரதிநிதித்துவ உணர்வு நிலைகளின் கூட்டாக டுர்கைமினால் விளக்கப்படுவதும் இங்கு நம் கவனத்திற்குரியது. இங்கு சமூகப்பொருண்மையானது தொழிற் பிரிப்பின்விளைவாக நோக்கப்பட்டது. தற்கொலை பற்றிய தம் கோட்பாட்டிலும், தற்கொலை வீதத்திற் காணப்படும் வேறு பாட்டினை சமூக வேறுபாடுகளின் விளைவாகவே டுர்கைம் காண்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அமைப்பும் இயங்கியலும் 59

Page 39
சமூக உறுதிப்பாடும் சமூகத்தில் தொழிற்பிரிப்பும்
சமூகத்தின் தொழிற்பிரிப்பு என்ற இவரின் நூலில் சமூகப் படிமலர்ச்சியின் தன்மை மற்றும் விளைவுகள் பற்றி கருத்தைச் செலுத்தினார் டுர்கைம். ஆதி, நவீன சமூகங்களிடையில் வேறுபாடுகளை அவதானித்தார். அதிகரிக்கும் தெழிற்பிரிப்பு, சமூக உறுதிப்பாட்டின் தன்மை என்பவற்றில் இந்த வேறுபாட்டினை இனங்காட்டினார் டுர்கைம். ஆதிச் சமூகங்களைத் தொழிற் புரட்சிக்கு பிந்திய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முன்னையவை இயல்பான உறுதிப்பாடு (Mechanical Solidarity) கொண்டவை. பின்னயவை அமைப்பு ரீதியான உறுதிப்பாடு (Organic Solidarity) கொண்டவை என வகுத்துக் கூறுவார் டுர்கைம். ஆதிச்சமூகங்களின் தொழிற் பிரிப்பானது மிக எளிதானது. தனியன்கள் சார்பளவில் ஒத்ததன்மையன. இயல்பான உறுதிப்பாட்டின்வழி இதன் அங்கத்தினர் ஒன்றிணைக்கப்பட்டுள்ளனர். இங்கே சட்ட அமைப்பு என்பது கூட்டு எண்ணத்தை மீறுபவர்களை தண்டிப்பதன் வழி, அதனைப் பாதுகாத்து ஒழுக்கச்சமநிலையைப் பேணி நிற்கின்றது. அடக்குமுறை, குற்றவியற்சட்டம் போன்ற கடின நடைமுறைகளின் வழி சமூகக்கட்டுப்பாடு இங்கே வெளிப்படுத்தப்படுகின்றது. இவ்வாறான சமூகங்களில் ஒழுக்கச் சட்டப் பொறுப்புணர்வு என்பது கூட்டு, சமூக அந்தஸ்து நிலைமைகளாக மரபுவழி நிர்ணயமா கின்றன. வாழ்வின் ஒரு சிறு பகுதி மட்டும் ஒப்பந்தக் கோட்டின் வழி கட்டுப்படுத்தப்படுகின்றது. இது மனிதர்களின் ஒத்ததன்மையின் விளைவாகவும், அதன் பலமாகவும் அமைகின்றது.
நவீன தொழில்வளர்ச்சி அடைந்த சமூகங்களில் தனியன்கள் வேறுபடும் ஆளுமைகளைக் கொண்டிருக்கிறார்கள். இதன்வழி வேறுபட்ட அனுபவங்களை, செயற்பாடுகளை வெளிப்படுத்து கிறார்கள். இந்நிலையில் அமைப்பு ரீதியான உறுதிப்பாட்டினா லேயே இவர்கள் இணைக்கப்படுகிறார்கள். இங்கு தனியன்களுக் கிடையிலான ஒத்த தன்மைக்குப் பதிலாக வேறுபாடுகளே இணைவின் அடிப்படையாகின்றது. இது தொழிற்பிரிப்பின் விளைவாகவும் அமைகின்றது. தொழிற்பிரிப்பும், அதன் விளைவாக மனிதரிடை காணப்படும் சமமின்மையும், சமூகத்தில் மனிதர்
60 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

ஒருவரில் ஒருவர் தங்கிநிற்க வழிசெய்கின்றது. தங்கிநிற்றல் என்பது மனித உளநிலை, ஒழுக்கநிலை மற்றுமமைப்பு ரீதியான ஒழுக்கநிலை என்பவற்றில் தங்கியுள்ளது. அமைப்பு ரீதியான உறுதிப்பாடு அதிகரிக்கும்போது, கூட்டுப் பிரக்ஞையின் முக்கியத்துவம் குறைகின்றது. சமூகத்தில் மனிதனை இணைப்பதற்கான பொது நம்பிக்கைகளின் தேவை இல்லாது போவதன் விளைவே இந்நிலையாகும். இதனால் அடக்குமுறைகளின் துணையுடன் குடியியல் சட்டங்களுக்குப் பதிலாக குடியியல் நிர்வாக விதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. வளர்ச்சியடைந்த சமூகங்களில், உயர்நிலை உறுதிப்பாட்டுடன் சமத்துவத்தின் உயர் விழுமியங்கள், தாராண்மை, சகோதரத்துவம், நீதி போன்ற ஒழுக்க நிலையைப் பிரதிபலிக்கும் கூறுகள் வெளிப்படும் என்றார் டுர்கைம். தனிமனித வாதம் ஒருபோதும் சமூக உறுதிப்பாட்டை விளைவிக்காது என்பதனையும் கூடவே குறிப்பிடுவார். அத்துடன் சமாதானமான பயன்பாடுள்ள ஒப்பந்தங்களே நவீன சமூகத்தின் பிரதான உறுதிப்பாட்டுக் காரணிகள் என்றும் டுர்கைம் குறிப்பிடுவார்.
இந்நூலின் இரண்டாம் பாகத்திலே அதிகரித்து வரும் தொழிற்பிரிப்பின் விளைவுகளை விரிவாக ஆராய்ந்தார் டுர்கைம். தொழிற் பிரிப்பானது பொருளாதார உற்பத்தியில் நல்ல விளைவுகளைத் தருவதுடன், தனியன்களின் செல்வவிருத்திக்கும் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்கான ஆசைகளைப் பூர்த்தி செய்யும் எனும் அக்காலத்துப் பயன்பாட்டுவாதிகளின் கருத்தியலோடு டுர்கைம் முரண்படுகின்றார். மனித உயிரிகள் ஓர் அளவுக்குத்தான் பொருளாதாரப் பண்டங்களை அனுபவிக்கலாம். அதிகரிக்கும் உற்பத்திக்கு மகிழ்ச்சிதான் ஊக்கமெனில், அவர்கள் எப்பொழுதோ உற்பத்தியை நிறுத்தியிருப்பார்கள். மகிழ்ச்சி என்பது சமூக நலத்துடன் தொடர்பானது என்பது டுர்கைம் கருத்துநிலையாகும்.
இதற்கும் மேலதிகமான வடிவவியல் சார்ந்த விளக்கத்தையும் டுர்கைம் முன்வைத்தார். இதன்படி தொழிற்பிரிப்பு என்பது, அதிகரித்த குடித்தொகையினால் ஏற்பட்ட சமூக மாற்றத்தின் விளைவு என்கின்றார். குடித்தொகை அதிகரிப்பு தனியன்களி டையே போட்டியைச் செறிவாக்குகின்றது. தனியன்கள் பிழைப்
அமைப்பும் இயங்கியலும் 61

Page 40
பிற்கான சிறப்புத் தேர்ச்சியையும் அது தூண்டிநிற்கின்றது. எனினும் குடித்தொகை வளர்ச்சியுடன் மட்டும் சமூக உறுதிப்பாட்டினை முழுமையாக இணைத்துக் கூறிவிடமுடியாது எனும் டுர்கைமின் கருத்தும் இங்கே கவனத்திற்குரியது.
அனோமிநிலை
டுர்கைமின் அனோமி பற்றிய பகுப்பாய்வானது தற்கொலை பற்றிய அவரின் ஆய்வின் ஒரு பகுதியாகும். உள்ளவன் தன்னிடம் உள்ளதற்குமதிகமாய் இன்னும் அதிகமாய் வேண்டி நிற்கின்றான். இதனாற் பெறப்படும் திருப்தி என்பது, தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் பதில் மேலும் தூண்டுவதாகவே அமைகின்றது என டுர்கைம் கூறுவார். மனித ஆசைகள் எல்லையற்றவை. எல்லையற்ற இந்த ஆசைகள், சமூகக் கட்டுப்பாட்டின்வழி வழிப்படுத்தப்பட வேண்டியவை. இந்த வகையிற் சமூகமானது, மனித ஆசைகளை மட்டுப்படுத்தும் ஓர் ஒழுங்கு விசையாகத் தொழிற்படுகின்றது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தில் தனியன்களின் இயல்பான விருப்பங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இங்கே ஒவ்வொருவரும் தமது இலக்குகளுக்கு அப்பாற் செல்வதில்லை.
தனியன்களின் இயல்பான ஆசைகள் தொடர்பான கட்டுப்படுத்தும் ஆற்றல் சமூகத்தில் தளர்கின்றபோது, சமூக ஒழுங்குகள் உடைவதுடன் தனியன்கள் தமது சொந்தத் தடத்திலேயே விடப்படுகின்றார்கள். இந்த நிலையே அனோமி எனப்படுகின்றது. முழுச்சமூகம் அல்லது அதன் சில கூறுகளான குழுக்களிடையே சார்பளவிலான நியம மறுநிலை காணப்படுவ தையே இது குறித்துநிற்கின்றது. பொதுநியமங்களால் தனியன் களின் விருப்பங்கள் ஒழுங்குபடுத்தப்பட முடியாத ஒருநிலையே இதுவாகும். இந்நிலையில் தமது இலக்குகளை எய்துவதில் ஒழுக்க வழிகாட்டல் எதுவுமின்றி தனியன்கள் விடப்படுகின்றனர். அனோமியானது உண்மையில் முழுமையான நியமமறுநிலையை குறித்தாலும், நடைமுறையில் சமூகங்கள் அதிக அல்லது குறைந்த அளவில் நியம விதிகளைக்கொண்டிருக்கலாம். இதற்கு மேலாக எந்த ஒரு சமூகத்திலும் உள்ள குழுக்களுக்கிடையிலான
62 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

அவர்களுக்கு பிரச்சினை தரும் அனோமியின் அளவு வேறுபடலாம். எடுத்துக்காட்டாக சமூக மாற்றமானது, முழுச்சமூகத்திலோ அன்றி அதன் சில பகுதிகளிலோ அனோமி நிலையைத் தோற்றுவிக்கலாம். இதேபோல அழுத்தமானது கீழ்நோக்கிய அசைவிற்கு வழி வகுக்கும்போது பாதிக்கப்படும் மனிதர் வாழ்வில் ஒழுங்குக் குலைவு அதிகரிக்கும். சமூகக் கட்டமைப்பு வலைப்பின்னலை குழப்பக்கூடிய எந்த ஒரு திடீர் மாற்றமும் அனோமியை விளைவிக்கக்கூடியன. பொருளாதார செழிப்புநிலை, மனித ஆசைகளை தூண்டி அனோமி நிலை அபாயத்தை ஏற்படுத்துவதாக டுர்கைம் விளக்குகின்றார். மனித ஆசைகளின் பூர்த்தி என்பது கையிலுள்ள வளங்களில் தங்கியுள்ளதால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்ட வறியவர்கள் அனோமி நிலையினால் பீடிக்கப்படுவது குறைவாக உள்ளதென்று டுர்கைம் குறிப்பிடுவது கவனத்திற்குரியதாகும்.
தற்கொலை சமூகத்தின் விளைபொருள்
தற்கொலை பற்றிய தம் ஆய்விலே பரிசோதனைத்
தரவுகளுக்குக் கோட்பாட்டு வடிவம் தரும் டுர்கைமின் ஆய்வார்வம் வெளிப்படக்காணலாம். தற்கொலை என்பதனை ஒரு உள்நோக் கான, சுயமான செயலாக வரையறுக்கத்தயங்கினார் டுர்கைம். பதிலாக தற்கொலை என்பதனை ஒரு சமூக விளைவாகவே நோக்குவார் டுர்கைம். தமது கருத்தினை நிறுவும் நோக்கிற் புள்ளிவிபரவியற் பகுப்பாய்வைப் பயன்படுத்துவார் டுர்கைம். இப்பகுப்பாய்வின் வழி, 0 தற்கொலைக்கு உளவியல், மரபுரிமையியல், சூழலியல்,
புவியியல், இனவியல் காரணிகளை முன்வைத்த முன்னைக்
கோட்பாடுகளை மறுதலிப்பார். 0 தம் சொந்த கோட்டு விளக்கமான தற்கொலையின் அடிப்படை
யான சமூக உண்மையை விளக்குவார்.
தற்கொலை வீதத்திற்கும் குழுக்களுக்கிடையிலான இணைவு
நிலை, முக்கிய கூட்டுச்செயற்பாடு என்பவற்றிற்கிடையிலான இணைவினை வெளிப்படுத்துவதன்வழி சமூகக் காரணிகளின்
அமைப்பும் இயங்கியலும் 63

Page 41
செல்வாக்கினை ஆழ நிறுவினார் டுர்கைம்.
டுர்கைமின் ஆய்வு, சமூக உறுதிப்பாடு எனும் கருத்தியலின் அடிப்படையிலானது. பல்துறைக்கான நோக்கிலானது. உளவியலின் தளத்திலிருந்து சமூக விவகாரமாகத் தற்கொலையை விளக்கியது.
தற்கொலை வீதமானது ஒரு குழுவிற் குறைவாகவும், இன்னொரு குழுவில் அதிகமாகவும் உள்ளது ஏன்? குறித்த ஒரு சூழமைவு இன்னொரு சூழமைவை விட அதிகளவான தற்கொலைக்குக் காரணமாவது ஏன்? - என்பனவற்றுக்கு விடை தேடும் பாதையில் டுர்கைமின் ஆய்வு வினாக்கள் அமைந்தன.
அதிகமானது தன்முனைப்பு பொதுநலம்
-9
kS. 당 g
ܒܝ s C9 re. S. குறைவானது
குறை ஒருங் அதிகமானது வானது கிணைவு
ஒருங்கிணைவு, ஒழுங்குபடுத்தல் எனும் இரண்டு சாரா மாற்றங்களினடியாகத் தற்கொலையை விளக்கினார் டுர்கைம். இவை இரண்டும் மிக அதிகமாகிறபோதும், மிகக் குறை வாகின்றபோதும் தற்கொலைக்கான சாத்தியம் ஏற்படுகின்றது.
சமூக ஒருங்கிணைவின் உச்சமான பொது நலமோ, மிகக்குறைந்தளவு ஒருங்கிணைவிற்குக் காலான தன் முனைப்போ தற்கொலை அதிகரிப்புக்கு வழிசமைக்கின்றன. அல்லாத அதிகளவான ஒருங்கமைவுக் கட்டுப்பாடோ குறைந்தளவான ஒருங்கமைவு நிலைதரும் அனோமி நிலைமையோ தற்கொலை அதிகரிப்பில் முடிகின்றது.
64 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

அதிகமானது அனோமி விதிவசக்கோட்பாடு
குறைவானது
குறை ஒழுங்கு அதிகமானது வானது படுத்தல்
நவீன உலகில் தன்முனைப்பும், நியம மறுநிலைமையான அனோமியும் தற்கொலைக்கான முதன்மைக் காரணிகளாகின்றன. சமயம், குடும்பம், அரசியல் ஆகிய அனைத்து நிறுவனங்களிடை யேயும் டுர்கைம் தன்முனைப்பின் வழியான தற்கொலை அதிகரிப்பு நிதர்சனமாகவுள்ளது.
மற்றைய அங்கத்தவர்களைவிடத் தன்னை உயர்வாகக் கருதுகின்ற வேளைகளில் தன்முனைப்புக் குழுக்களிடையே தொடர்பாடல் தளர்ந்துபோகின்றது. இதன்வழி சமுதாய நெருக்கமும் சமூகக் கட்டுப்பாடும் பலவீனமாகிவிடுகின்றது. ஒருங்கமைவு தளர்ந்துபோதல் அல்லது நியமமறு நிலையாகவே அனோமி விளங்குகின்றது.
சுதந்திரச் சிந்தனையாளரிடை உச்ச தற்கொலை வீதம் காணப்படுவதைக் குறிப்பாகச் சுட்டினார் டுர்கைம். அடுத்ததாகப் புரட்ஸ்தாந்து மதத்தினரிடையே அதிகரித்த தற்கொலை வீதமும், கத்தோலிக்கரிடையே குறைந்தளவு வீதமும், யூதரிடையே மிகக் குறைந்தளவு வீதமும் இடம்பெறுவதை இனங்காட்டுவார். இந்த வேறுபாடுகளை வெறுமனே அவர்களின் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் அவர் விளக்கவில்லை. இச் சமயக்குழுக்களிடையே காணப்படக்கூடிய உறவு நெருக்க அளவின் வழியிலேயே விளக்கு கின்றார்.
ஒட்டுமொத்தமாகச் சமூகக் கட்டமைப்பின் வேறுபாடு களினடியாகவே தற்கொலை வீதமும் வேறுபடுவதாகக் கூறுவார்
அமைப்பும் இயங்கியலும் 65

Page 42
டுர்கைம். குறிப்பாகச் சமூக உறுதிப்பாட்டின் வகை, அளவு என்பவற்றிற் காணப்படும் வேறுபாடுகளினடியாகவே தற்கொலை வீதமும் அமையும் என்கின்றார்.
தற்கொலையாளருக்கும் சமூகத்திற்குமிடையிலான உறவின்
வழி, மூன்றுவகைத் தற்கொலைகளை டுர்கைம் இனங்காண்கிறார்.
g56örpooooor L55sib6asnooooo (Egoistic Suicide)
சார்பளவில் தளர்ச்சியான குழுஉறவுகளின் விளைவாக தன்முனைப்புத் தற்கொலையை விளக்குகிறார் டுர்கைம். குழு வாழ்விற் போதுமான அளவு பங்குபற்றுதல் இன்மையால் இது விளைகின்றது என்கிறார். சமூகத்திலிருந்து விடுபட்டு அதன்மீது குறைந்தளவு பெறுமதியையே தரும்போது தனியன்கள் தமது சொந்தத் தடத்துக்குள்ளேயே விழுத்தப்படுகின்றார்கள். இவ்வாறு தனிக்கும் தனியன்கள் தமது இருப்புக்குக் காரணம் ஏதும் காணமுடியாத நிலையில் தன்முனைப்புத் தற்கொலை நிகழ்கின்றது. புரட்டஸ்தாந்து சமயிகளிடமும், திருமணமாகாதவரிடமும் இவ்வகைத் தற்கொலை மிகுந்திருப்பதனையும் டுர்கைம் சுட்டுகிறார்.
e(36OTITLógib6lasnooooo (Anomic Suicide)
அனோமி தற்கொலையானது சமூக நியமங்களில் ஏற்படுகின்ற உடைவுகளினால் விளைவது; திடீர் சமூக மாற்றங்களினால் ஊக்குவிக்கப்படுவது என விளக்குகின்றார் டுர்கைம். சமூகமானது தனியன்களின்மீது, அவர்களது எல்லையில்லா ஆசைகள்மீது மட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால், செல்வச்செழிப்பான காலப்பகுதிகளில் மரபு வழி விழுமியங்கள் இலகுவிற் கைவிடப் பட்டுப் புதிய நியமங்கள் நிலை நாட்டப்படுகின்றன. ஆனால், எல்லை யில்லாத ஆசைகள் உடனடியாகவோ, அன்றி சற்றுக் காலம் தள்ளியோ விரக்தி நிலைமைக்கு இட்டுச்சென்று, அனோமி தற்கொலைக்கு வழியாகின்றது என்கின்றார் டுர்கைம். இதனாற்றான் போர்க் காலங்களில் தற்கொலை வீதம் குறைந்துள்ளது என்பதனையும் சுட்டுகின்றார். இக்காலத்து தனியன்கள்மீது உறுதியான கட்டுப்பாடு உள்ளதால் தற்கொலையும் குறைகின்றது.
66 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

சமூக ஒழுங்கமை வின்மையின் விளைவான உச்ச மன அழுத்தத்தினாலும் அதிகளவு எண்ணிக்கையானோர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதனையும் டுர்கைம் குறிப்பிடுவார்.
6LIITg5Goğö jöfb6lēSTGODIL (Atuistic)
பொதுநல நோக்கிலான தற்கொடையானது தனியன் களிடையே காணப்படும் அளவுக்குமிஞ்சிய உறுதி, ஒழுங்கின் விளைவென்கிறார் டுர்கைம். அளவுக்கு மிஞ்சிய தனிமனித வாதம், அளவுக்கு மிஞ்சிய ஒழுங்குக் கட்டுப்பாடு ஆகிய இரண்டிலும் இவ்வகைத் தற்கொலை சம்பந்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக இந்து சதி வழக்கத்தினைக் குறிப்பிடலாம். சமூக நியமத்தின் அழுத்தத்தினை விருப்புடன் ஏற்று, தன் உயிரையே தரும் இவ்வழக்கினைப்போல பல எடுத்துக்காட்டுக்களை முன்வைப்பார்
டுர்கைம்.
1897இற் பிரசுரமான டுர்கைமின் தற்கொலை ஆய்வானது இன்றைக்கும் குறிப்பிடத்தக்கதொரு ஆய்வாக, சமூகவியற் புலத்து நிமிர்ந்து நிற்கின்றது. தன்காலத்து உயிரியல், உளவியல் அடிப்படை யிலான கோட்பாடுகளைப் புறந்தள்ளி டுர்கைமின் சமூக வியல் அடிப்படையிலான தற்கொலைக்கோட்பாடு நிலைபேறான தொரு கோட்பாடாக விளங்குகின்றது.
அறிவின் சமூகவியல்
அறிவின் சமூகவியல் முன்னோடிகளில் ஒருவராக டுர்கைம் கணிக்கப்படுகின்றார். தம் முன்னையோர் கருத்துக்களை மேலும் விளக்கமாக வகைப்பாடு செய்து சமூக அறிகையின் அடிப்படை களை இனங்காட்டினார் டுர்கைம். அவரது அறிவின் சமூகவியலா னது, மனித சிந்தனை, வெளி, காலம் என்பவற்றைப் புரிந்து கொள்ளும், விளங்கிக்கொள்ளும் சமூக வாழ்வுக் கோலங்களின் பகுப்பாய்வினைக் குறித்து நிற்பது எனலாம். மனித சிந்தனையின் அடிப்படை வகைகள் பற்றிய தம் சமூகவியல் விளக்கத்திற் காலம், வெளி பற்றிய எண்ணக்கருக்கள், சமூக உற்பத்திகள் என்கின்றார். ஆதிச் சமூகங்களின் சமூக அமைப்புக்கள், அவற்றைச் சூழ்ந்த
அமைப்பும் இயங்கியலும் 67

Page 43
உலகின் ஆதிவெளி அமைப்புக்களாக இருக்கும். இது போலவே நாள், கிழமை, மாதம், வருடம் என்பனவெல்லாம் சடங்குகளின், திருவிழாக்களின் பருவ மீள்பொழுதுகளே. நாட்காட்டி - கலண்டர் என்பது கூட்டுவாழ்வின் லயத்தினை வெளிப்படுத்துவதுடன் அதன் ஒழுங்கினையும் உறுதிப்படுத்தி நிற்கின்றது எனவும் விளக்குவார் டுர்கைம்.
சாரமாக நோக்குகையிற் சமூக வாழ்விற் பண்பாட்டில் - சமூக அமைப்பில் ஒருங்கிணைப்பினை விளைவிக்கும் சமூக உண்மை களைத் தேடும் அறிவாகச் சமூகவியல் வளர்ச்சிகான டுர்கைமின்
ஆய்வு அனுபவங்கள் பெருந்துணையாகின்றன எனலாம்.
68| சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

导
சமூகச் செயல் பற்றிய அகவய புரிதல் Subjective inderstanding of Social Action
மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல; அவர்களது செயல்களுக்கு அவர்கள் தருகின்ற அகவய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதன் மூலமே மனித சமூக நடத்தைகளை விளங்கிக்கொள்ளலாம்
- மக்ஸ் வெபர் (Max Weber)
சமூகவியலிற் சமூகச் செயல் பற்றிய கவனிப்பைத் தந்து இன்றைய குறியீட்டு இடைவினையில், தோற்றப்பாட்டியல், இனக்குழுமமுறையியல் போன்ற சமூகவியற் கோட்பாடுகளுக்கான ஊற்றுக்கண் எனப் பெருமைப்படுத்தப்படும் மக்ஸ் வெபர், ஜேர்மனியில் மத்தியதரக் குடும்பமொன்றில் 1864 ஏப்ரல் 21ஆம் திகதி பிறந்தார். செல்ஸ்போர்க், கத்தோலிக்கத் தண்டணைக்குட்பட்டு அகதிகளாகிப் புரட்டஸ்தாந்து மதத்தைத் தழுவிய குடும்பத்தின் வழித்தோன்றல். வெபரின் தந்தையார் ஒரு முதன்மையான யூரி. தாயார் ஒரு செல்வந்தக்குடும்பத்தைச் சேர்ந்தவர். கல்வினின் சமயப் பிரிவில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். கடமையிற் கருத்தாய் இருக்கும் கல்வினின் சமய இயல்பு, தாயினுாடாக வெபரைச் சேர்ந்தது. மத்தியதர வகுப்புச் சூழலில் வளர்க்கப்பட்டபோதும் தாராண்மை, மனிதாபிமான விழுமியங்கள் இளமைப்பருவச் சமூகமயமாக்கலிலேயே வெபருக்கு வாய்த்தன.
மிகச்சிறந்த சட்ட, பொருளியற் கல்வியைப் பெற்றுக் கொண்டதுடன், தம் குடும்பத் தொடர்புகளுக்கூடாக முன்னிலை அரசியல்வாதிகள், அறிஞர்களுடனான உறவின்வழி அசாதாரண அறிவியல் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார் வெபர். கூடவே ஆழ்ந்த ஒரு வாசகராகவும் திகழ்ந்தார். தனது பதினான்காவது வயதிலேயே ஹோமர், லிவி போன்றோர் பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார் வெபர். பல்கலைக்கழகம் புகுமுன்னரேயே கதே
அமைப்பும் இயங்கியலும் 69

Page 44
(Goethe), ஸ்பைனோசா (Spinoza), கான்ற் (Kant) போன்றோரைப் பற்றிய அறிவையும் நிறையப் பெற்றிருந்தார்.
கல்விப்பின்னணியும் அரசியல் வாழ்வும்
ஹைடில்பேர்க் பல்கலைக்கழகத்தில் மூன்று தவணை கற்றபின் ஸ்ராஸ்பேர்கில் ராணுவ சேவைக்கெனச் சென்றார் வெபர். இராணுவச் சேவையிலிருந்து மீண்டதும் பேர்லின் பல்கலைக் கழகத்திலும், பின் கொட்டிங்கன் பல்கலைக்கழகத்திலும் கற்றுச் சட்டமாணிப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தன் ஆர்வத்துறையான பொருளியலுக்கு மாறினார்.
சிறிது காலம் பேர்ளின் பல்கலைக்கழகத்தில் தமது ஆசிரியரான ஜேகப் கோல்ஸ் கிமிட்ற் (Jacap Goldschmidt)க்குப் பதிலாகக் கடமையாற்றினார். இக்காலத்திற்றான் மரியானா g)Ö60) 60Tög; sî (Marianne Schnitger)&9 LD 600T lb Lrflbg, Tff. 960 காலத்தின்பின் பிறைபேர்க் பல்கலைக்கழகத்தில் (Freiburg) பொருளியற் பேராசிரியராக நியமனம் பெற்றார், 1895இல் இவர் நிகழ்த்திய தேசிய அரசும் பொருளாதாரக் கொள்கையும் பற்றிய தொடக்க உரையிடையே இவரது உயர் அறிவுத்திறன் வெளிப் பட்டது. அவரது தேசியவாதம் பரந்த அறிஞர் குழாத்தையும், அரசியல் உலகையும் எட்டியது. இந்தப் புகழ் ஹைடில்பேர்க் பல்கலைக்கழகத்தில் இவரது ஆசிரியரான கார்ல்நீஸ்ஸைத் தொடர்ந்து பேராசிரியராகும் வாய்ப்பைத்தேடிக் கொடுத்தது. ஹைடில்பேர்க்கில் தம் முன்னைய உயர் ஆசிரியர்களோடு தொடர்பு கொள்ள முடிந்ததுடன், அக்காலத்து அறிஞர் குழாத்துடன் நட்புப் பூணவும் வழி செய்தது. வெபரின் வீடு பல்வேறு அறிஞர்களின் செழுமையான சிந்தனைகள் பிறக்கும் களமானது. எனினும் இடையிலே சிலகாலம் பாரிய உளநோயால் வெபரின் ஆய்வு முயற்சிகள் தடைப்பட்டது. ஆனாலும் மீளவும் 1918 இல் வியன்னா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகித் தன் ஆய்வுகளை முன்னெடுக்க முடிந்தது. ஒரு வருடத்தின்பின் மூனிச் பல்கலைக்கழக அழைப்பை ஏற்று அங்கு சென்றார். "விஞ்ஞானம் ஒரு தொழிலாகவும், அரசியல் ஒரு தொழிலாகவும்" எனும் இவரது பிரபல்யமான விரிவுரை, இங்குதான் நிகழ்த்தப்பட்டது. மூனிச்சில் கடமைபுரியும் வேளையிலேயே 1920 யூன் மாதம் 24ஆம் திகதி நியூமோனியாவினாற் காலமானார் வெபர்.
70 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

தம் வாழ்வின் இறுதி மூன்றாண்டு காலப்பகுதியில் வெபர் அரசியல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வத்தை வளர்த்திருந்தார். எண்ணிறைந்த பத்திரிகைக்கட்டுரைகள், அறிக்கைகளை வெளியிட்டு ஜேர்மனிய அரசியல் அமைப்பில் மாற்றத்தைவேண்டி நின்றார். பொறுப்புவாய்ந்த சனநாயக அரசு ஒன்றின் அவசியம் பற்றியும், அதன் அதிகார எல்லைகள் பற்றியும் இவற்றிலே தெளிவாக விளக்கினார். புதிதாக அமைக்கப்பட்ட Deutsche Demokraische partie யின் ஸ்தாபக உறுப்பினராகவும், முக்கிய செயல் வீரராகவும் வெபர் விளங்கினார். Versailes சமாதான மாநாட்டிற்குச் சென்ற ஜேர்மனியப் பிரதிநிதிகளின் ஆலோசகராக விளங்கியதுடன் சமாதான உணர்வுடையவர்களின் குரலாகவும் ஒலித்தார் வெபர். மாணவர் அவைகள், கல்வியாளர் குழாம்களிலெல்லாம் அறிவார்ந்த ஜனநாயக அமைப்பின் அவசியம் பற்றிய கருத்துரைகளை வழங்கினார். புதியதொரு ஜேர்மனிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைவதிலும் ஈடுபட்டார். இந்த அனைத்து நிலைமைகளிலும் சுதந்திரமான அரசியல் நிலைப்பாட்டினையே வெபர் கொண்டி ருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெபரின் ஆக்கங்கள்
ஜேர்மனிய சமூகவியல் இன்று அமெரிக்காவிலும் ஏனைய உலக நாடுகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கங்களின் மூலம் அறியப்பட்டுள்ளது. இவரது ஆக்கங்கள் சமூகவியற் கோட்பாட்டு, முறையியல் வளர்ச்சியிற் பெரும்பங்களிப்புக்களைச் செய்துள்ளன. உளவியலை மையமாகக்கொண்ட 20ஆம் நூற்றாண்டின் சமூகவியற் போக்கினை வெபரின் ஆக்கங்கள் பிரதிபலித்தன.
0 வெபர் தன் கலாநிதிப்பட்ட ஆய்விற்கென மத்திய காலத்து, வர்த்தக சமூகங்களின் வரலாற்றினை (History of commerical Societies in the middle ages) Gigsbg|Gd, T65TLITs. GurT(56fugjib சட்ட வரலாறும் இணைந்த இவ்வாய்வு,1889இல் எழுதப்பட்டது.
0 கலாநிதிப்பட்ட ஆய்வைத்தொடர்ந்து எழுதப்பட்ட முக்கியமான ஆய்வு, உரோமானிய விவசாய வரலாறு. (Roman Agrarian History), இது 1891இல் எழுதப்பட்டது.
அமைப்பும் இயங்கியலும் 71

Page 45
இதனைத்தொடர்ந்து எஸ் எல்பியன் விவசாயத் தொழிலாளர் கள் பற்றி நிறையவே எழுதினார் வெபர்.
வெபரின் மிகப் பிரபலமான ஆய்வான புரட்டஸ்தாந்து ஒழுக்கமும் முதலாளித்துவ எழுச்சியும் (The Protestant ethic and spirt of Capitalism) 1906 g) á GGI6sfluT6ðIgl. g)J6öTC) கருத்தியல்களுக்குமிடையிலான உறவுபற்றிய ஒரு பகுப்பாய்வாக இது அமைந்தது. மேற்கு ஐரோப்பிய, அமெரிக்க வரலாறு களை அடிப்படையாகக் கொண்டது இவ்ஆய்வு. இக்கருப்பொருளா னது உலகின் ஏனைய பிரதான சமயங்களையும், அவை அமைந்த பொருளாதாரப் பின்புலங்களையும் ஆராய்ந்து, உலகின் ஏனைய பகுதிகளில் முதலாளித்துவம் ஏன் விருத்தியாகவில்லை எனக் காணத் துணையானது.
போர்க்காலத்தில் வெபர் தமது சமயத்தின் சமூகவியல் (Sociology of Religion) என்ற பூரணப்படுத்தப்படாமலிருந்த ஆய்வுப் பணியை நிறைவு செய்வதில் ஈடுபட்டார். இவ்வாய்வானது தொகுக்கப் பட்டு நான்கு நூல்களாக வெளியானது. 1. The Hindu Social system - gig, JLDud Jep3,960LD'll 2. The Religion of China : Confucianism and taoism) - Sf6OT FLDuub:
கொன்பியூசியனிசமும்தாவோயிசமும் 3. Ancient Judaism-LJTg560Tg5 Tuily to 4. The Sociology of Religion - FLDu5Si65T felp565udio
போருக்குப் பிந்திய காலப்பகுதியில் சமூகவியற் கோட்பாடு தொடர்பான தமது பிரதான ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். பொருளாதாரமும் சமூகமும் தொடர்பான உச்சமானதோர் ஆய்வுச்செல்வமாக இது மதிப்பிடப்படுகின்றது, அந்நாளில் முதன்மையான ஜேர்மனிய சமூக விஞ்ஞானிகள் பலருடைய பங்களிப்புக்களை உள்ளடக்கியது, எனினும் இதனை நிறைவு செய்ய முன்னரேயே வெபர் காலமானார். வெபரினால் மட்டும் எழுதப்பட்ட பகுதிகளை ரல்கொட் பார்சன் (Talcott Parsons) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பொருளாதாரச் சமூக அமைப்புக்களின் கோட்பாடு என்ற தலைப்பிலான நூலாக 1947 இல் வெளியிட்டார்.
72 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

0 இதேபோன்று மூனிச்சில் இவர் நிகழ்த்திய தொடர் விரிவுரைகள் பொதுப் பொருளாதார வரலாறு General Economic History என்ற தலைப்பில் அவர் மறைவிற்குப்பின் வெளியிடப்பட்டது.
0 வெபரின் பல்வேறு கட்டுரைகளையும் உள்ளடக்கி From Max Weber: Essays in Sociology GT6iTD 9,606)'LouT60T Gog, T(5'il (5T6) 1946 இல் வெளியானது. எச். எச். கிர்த், சீ டபிள்யூ மில்ஸ் ஆகியோர் மொழி பெயர்த்திருந்தார்கள். Sociology and Social Policy - சமூகவியலும் சமூகக் கொள்கையும், Sociology and Economic History - சமூகவியலும் பொருளியல் வரலாறும் ஆகிய முக்கிய கட்டுரைகளையும் இது உள்ளடக்கி இருந்தது.
0 சமூகவியலும் அதன் முறையியலும் தொடர்பான நிறைவுபெறாத 96 (560LL gulo Max Weber on the Methodology of the Social Science - சமூக விஞ்ஞானங்களின் முறையியல் பற்றி மக்ஸ் வெபர், என்ற தலைப்பில் 1949இல் வெளியிடப்பட்டது. எட்வேட் ஏ.ஹில்ஸ், ஹென்றி ஏ. பின்ச் ஆகியோர் மொழிபெயர்த்து, இந்நூலைத் தொகுத்திருந்தார்கள்.
மக்ஸ் வெபரின் அறிவியல் பின்புலம்
மக்ஸ்வெபரில் செல்வாக்குச் செலுத்திய அறிவியல் மரபுகளை அறியாமல், அவரின் சமூகவியலை முழுமையாக விளங்கிக்கொள்ள
முடியாது. மக்ஸ்வெபரின் சிந்தனையிற் செல்வாக்குச் செலுத்திய மரபுகள் பல.
இறையியல் தொடர்பான இவரது ஆழ்ந்த வாசிப்பும்; செம்மையான தத்துவார்த்த அமைப்புகளில் அவருக்கிருந்த அறிமுகமும் அவரது ஆக்கங்களில் தெளிவாகப் புலப்படுகின்றன. அவரது மாமியார் ஒருவரின் தூண்டுதலாலேயே சமயம் தொடர்பான ஆய்வுகளில் அதிகளவில் ஈடுபட்டதாக அறியமுடிகின்றது. புரட்டஸ்தாந்து ஒழுக்கத்தில் அவர் கொண்ட ஈடுபாடே, புரட்டஸ்தாந்து ஒழுக்கமும் முதலாளித்துவமும் சார்ந்த ஆய்விற்கு வழிவகுத்தது. இதனைவிடப் பொருளியல் வரலாற்று ஆசிரியர்கள், வரலாற்றுப் பொருளியலாளர்கள் ஆகியோரின் செல்வாக்கினையும் இவரிற் காணலாம். இந்தவகையில் வில்ஹைம் றொச்சர், கால் நீஸ்
அமைப்பும் இயங்கியலும் 73

Page 46
போன்ற அவரது ஆசிரியர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். வெபர் தமது பொருளியல் வரலாறு, சமூகவியல் தொடர்பான அணுகு முறைகளைப் பெரும்பாலும் வரலாற்றுப் பள்ளியில் இருந்தே பெற்றுக்கொண்டார். பொருளியல் வரலாறு தொடர்பான இவரது பன்முகஅறிவும், சட்டம் தொடர்பான அறிவும் இவரது எழுத்துக் களில் முதன்மையாய் அழுத்தப்படக் காணலாம்.
ஜேர்மனிய அறிவியற் சூழலில் ஆதிக்கம் செலுத்திய, மீள்மலர்ச்சி கண்ட கான்டின் மெய்யியல், இவரது முறையியலில் பெரிதும் செல்வாக்கினைச் செலுத்துவதைக் காணலாம். பொருள் சார் உலகிற்கும் விழுமியங்களில் தாக்கம் செலுத்தும் தெய்வீக உலகிற்கும் இடையிலான வெளியை நிரப்பும் பாலமாக இவரது ஆக்கங்கள் அமைந்தன.
வெபரிற் செல்வாக்குச்செலுத்திய அறிஞர்களிடை, சிம்மல் (Simme), ரொனிஸ் (Tonnies) ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். G6) uń 35 LD5 Communal – Associative 2 p6,56 lub półu GT GổST GOOTj 35(5 GOM GJ GJIT Gof Gmú66ðIT Gemenschaft - Geselleschaft வகைப்பாட்டிலிருந்தே பெற்றுக்கொண்டார். வெபரின் தனிப்பட்ட நண்பராக விளங்கிய சிம்மலின் சமூக வடிவங்கள் தொடர்பான எண்ணக்கரு வெபரின் இலட்சிய வகைகளுடன் பெரிதும் ஒத்திருக்கக் காணலாம். தொழில்துறை முதலாளித்து வத்தின் தோற்றத்திற் பணத்தின் முக்கியத்துவம் பற்றிய வெபரின் அழுத்த மானது, சிம்மலின் பணத்தின் மெய்யியல் என்ற எண்ணக் கருவிலிருந்து பெறப்பட்டது எனலாம். வெபரின் முறையியற் கருத்துக்களிலும் சிம்மலின் வரலாற்று மெய்யியல் பிரச்சினை என்ற நூலின் செல்வாக்கினை ஒரளவிற்குக் காணமுடியும். வெபரின் வாழ்நாள் முழுமையும் அவர்மீது செல்வாக்குச் செலுத்திய இருபெரும் மேதைகளான பிரெட்றிக் நீட்சே, கார்ல் மார்க்ஸ் ஆகிய இருவரையும் பற்றி இங்கு சிறப்பாகக் குறிப்பிடவேண்டும். கருத்துக்களினதும், ஆர்வங்களினதும் சமூகவியல் பற்றிய வெபரின் சிந்தனையில் இவ்விருவரின் முக்கியமான தடங்களைக்கான முடியும். நீட்சேயின் செல்வாக்கு வெபரின் விலகிச்செல்லுதல் (Disenchantment), 56) is diggiTft 560)Gogold (Charisma) 9, SuGuib5gi)
74 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

இனங்காணப்படலாம். அடுக்கமைவு, பொருளாதார நடத்தை தொடர்பான வெபரின் கோட்பாட்டின் வேர்களை மார்க்ஸிய
பொருளியலிலும், சமூகவியலிலும் காணலாம்.
சமூகவியலுக்கான வெபரின் பங்களிப்புக்கள்
சமூகவியற் கோட்பாட்டிற்கும் முறையியலுக்கும் வெபர் ஈந்த பங்களிப்புக்களைப் பகுத்துணரும் நோக்கிற் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
0 சமூக விஞ்ஞானங்களின் மெய்யியல்
(Philosophy of Social Science) 0 சமூகவியலும் சமூகச் செயலும் (Sociology and Social action) (p65Dufugi) J-l' L5th (Methodological framework) Jep5-9(63,566 Log (Social stratification) g-LDug Sait felp),6fugi) (Sociology of Religion)
9,566öT Feup565ugi) (Sociology of knowledge) பகுத்தறிவும் பணிக்குழுவாட்சியும் (Rationality and Bureaucracy) அதிகாரத்தின் நிறுவனமயமாக்கம் (Institutionalization of Authority)
O
சமூக விஞ்ஞானங்களின் மெய்யியல்
வெபரின் அணுகுமுறையினை, அக்காலத்து ஜேர்மனியிற் செல்வாக்குச் செலுத்திய அறிவியற்சூழலின் பின்னணியிலேயே விளங்கிக்கொள்ள முடியும். சமூகவிஞ்ஞானங்கள் தொடர்பான வெபரின் விளக்கங்கள், அவரது கால நேர்க்காட்சிவாதத்தின் விளைவாகவும் எதிர்வினையாகவும் அமைந்தன எனலாம். புறமெய்மைவாத உளவியலாளர், தமது நோக்கில் மனிதனைப் பற்றிய உலகளாவிய பொதுமைப்படுத்தல்களைச் செய்தார்கள். வெளித்தெரிகின்ற, மீள மீளச் செய்யப்படுகின்ற நடத்தைகளை மட்டுமே இவர்கள் கருத்திற் கொண்டார்கள். குறிப்பிட்ட காலம், இடம் தொடர்பாக மனிதரின் ஒத்த செயற்பாடுகளையே தம் பகுப்பாய்விற்கென இவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
அமைப்பும் இயங்கியலும் 75

Page 47
இயற்கை, சமூக விஞ்ஞானங்கள் இரண்டினதும் இலக்குகள் அடிப்படையில் ஒன்றானவை எனும் நேர்காட்சிவாதிகளின் கருத்தை வெபர் நிராகரித்தார். மனிதர் ஏனைய பொருட்களினின் றும் வேறுபட்டவர்கள், வெளிப்படையான நடத்தைகளின் வழி மட்டுமன்றி, அவற்றிற்குப் பின்னாலுள்ள ஊக்கல்களின் வழியாக வும் விளக்கப்பட வேண்டியவர்கள் என்பது வெபரின் கருத்தியல். ஜேர்மனிய பண்பாட்டாளர்களினதும் வரலாற்றினதும் இராச்சிய மாக விஞ்ஞானம் கருதப்படுவதனை வெபர் ஏற்றுக்கொள்ள வில்லை. இயற்கை உலகினை ஆளும் ஒழுங்குகளைப் போன்றதே, மனித செயற்பாடுகளும், எனினும் சட்ட ரீதியான புதுமைப்படுத்தல் களைச் செய்வது சாத்தியமானது அல்ல என்றார் வெபர். விஞ்ஞான முறையியலைப் பொறுத்தவரை அது இயற்கை விஞ்ஞானமோ சமூக விஞ்ஞானமோ பொதுமைப்படுத்தல், சாரமாகத் தொகுத்துக் கூறல் என்ற படிமுறைகளையே எப்பொழுதும் கொண்டிருக்க வேண்டும் என வரலாற்றியலாளருக்கு முரண்பட்ட கருத்தையே வெபர் கொண்டிருந்தார். பொதுமைப்படுத்தலை வெபர் ஏற்றுக்கொண்டபோது, மனிதரிற் பிரயோகிப்பதில் எச்சரிக்கையாக இருந்தார். சமூக விஞ்ஞானங்களின் பொருள் இயற்கை விஞ்ஞானங் களினின்றும் வேறுபடுவதால், மனிதப் பண்பாடு தொடர்பான கற்கைகளிற் பொதுமையாக்க முறையியலை மீளமைத்தலின் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தத் தேவையினை நிறைவு செய்யும் பொருட்டே, இன்று விதந்து போற்றப்படும் இலட்சிய வகை (deal Type) என்ற தம் கோட்பாட்டினை உருவாக்கினார். இவற்றிற்குப் புறம்பாக விழுமிய செல்வாக்குடன் இணைந்த பிரச்சினைத் தேர்வு, சமூக ஆய்வில் நடுநிலையான விழுமியமுறை எனும் வெபரின் கருத்தாக்கங்களும் கவனத்திற்குரியன.
வெபரின் நோக்கில் சமூக, இயற்கை விஞ்ஞானங்களுக் கிடையிலான வேறுபாடுகள், ஆய்வாளர்களின் அறிகை உள்நோக்கங்களினடியாகவே வேறுபடுகின்றன. இத்தேர்வானது ஆய்வாளர்களின் விழுமியங்களினாலும், அவர் சார்ந்த குழு ஆர்வங்களினாலும் தீர்மானிக்கப்படுகின்றன. இயற்கை விஞ்ஞா னங்கள்போலன்றி சமூக விஞ்ஞானங்களில் இந்நிலைமையைக் காண எடுத்துக்காட்டுக்களுடன் முன்வைத்தார் வெபர். புவியீர்ப்பு
76 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

என்ற எண்ணக்கரு புவியில் எங்கெங்குகானிலும் ஒரேதன்மை யதாய் அமைந்திருக்கும். ஆனால், முரண்பாட்டுச் செயல் என்பது வேறுபட்ட நிலைமைகளில் வெவ்வேறு வழிகளில் விளக்கப் படலாம். ஆய்வாளர்களின் விழுமியங்கள் ஆய்வு பொருள்சார்ந்த முதன்மையைத் தீர்மானிக்கலாம்.
இயற்கை விஞ்ஞானிகள் இயற்கை நிகழ்வுகள் தொடர்பான உண்மைகளைக் காண்பதில் ஆர்வமாக உள்ளனர்; இவை தொடர்பான கருத்துரு விதிகளை இவர்களால் வகுக்க முடிகின்றது. இவ்வாறான விதிவடிவிற் பொதுமையாக்கல்களைச் செய்யச் சமூக விஞ்ஞானிகள் முற்படும்போது, குறித்த தன்மைகளுடன் செயற் படும் பாத்திரங்களையும், அந்தச் செயல்களுக்கு அவர்கள் கொள்ளும் அர்த்தங்களையும் காண்பதில் ஆர்வமாய் இருக்கின் றார்கள். சமூக விஞ்ஞானிகள் பொதுமையாக்கல் முறைகளைப் பயன்படுத்தும் பொழுது யதார்த்த மாதிரிகள், ஒத்த கூறுகளினடி யாகவே தமது முடிவுகளைப் பெறுகின்றனர். தனியன்களின் செயல்கள் தனித்தனியாக அறியப்பட்டு அவற்றிலிருந்தே கோட்பாட்டுப் புதுமையாக்கம் பெறப்படும். தனிநபர் அணுகு முறையானது குழுநிலைக் கூறுகளைப் புறக்கணித்து, பொருண்மை யின் குறிப்பான கூறுகளிலேயே கருத்துச் செலுத்தும் நிலையாகும். இந்த இரண்டு அணுகுமுறைகளுமே ஏற்றுக்கொள்ளக் கூடியன தான். இவற்றுள் ஒன்றைவிட ஒன்று முதன்மையானதென்றோ சிறந்ததென்றோ கூற முடியாது.
விழுமியம் கடந்த நடுநிலை
சமூக அறிவியல்களின் மெய்யியல் தொடர்பான வெபரின் மற்றொரு கருத்தாக விழுமிய நடுநிலையைக் குறிப்பிடலாம். இம்முறையியலின்வழி ஆய்வாளரின் விருப்பார்வச் சிந்தனைக்குள் கட்டுப்படாத நிலையில் உண்மையைக் காண்பதே அவர் நோக்காகும். ஒரு பிரச்சினையைத் தேர்கையில் ஆய்வாளர் நடு நிலையாளராக இருக்கவேண்டும். விஞ்ஞானிகள் எப்பொழுதும் உண்மையில் வழுவாது, நேர்மையாக ஆய்வின் உயர் கோட் பாடுகளில் உறுதியாக இருக்கவேண்டும் என்பார் வெபர். உண்மையைத் திரிபுபடுத்தும் தம் உணர்வுகளை மறுப்பதுடன்,
அமைப்பும் இயங்கியலும் 77

Page 48
புறத்திருந்து வரக்கூடிய அழுத்தங்களைத் தடுப்பவராகவும் ஆய்வாளர் அமையவேண்டும் என்பார். விஞ்ஞானம் நடுநிலை விழுமியத்துடன் விளங்க வேண்டும். அரசு, நண்பர் என்ற செல்வாக்குகளுக்கப்பால் தம் புறவயத்தன்மையில் வழுவாது விஞ்ஞானிகள் விளங்கவேண்டும். தாம்பெற்ற தரவுகளில் தமது விழுமியங்களை நுழைக்கக்கூடாது. தம் விருப்பார்வங்களுக்குப் பணியாது ஆய்வுதரும் முடிவுகளை அவ்வாறே வெளியிட வேண்டும். இதன்வழி விழுமிய நடுநிலை என்பது, விஞ்ஞானி களுக்கான நியமக்கட்டளை ஆகும். விஞ்ஞானி என்ற தம் பாத்திரத்தை விஞ்ஞானத்தின் அறங்களின் வழிநின்றே நாம் நிறைவு செய்யவேண்டும் என வெபர் உறுதியாய்க் கூறுவார். அத்துடன் இது தான் சரியான விழுமியம் என்று தீர்ப்புச் சொல்லவல்ல பாத்திரமாகத் தம்மை விஞ்ஞானிகள் கருதுவதும்சரி அல்ல; உண்மைகள் மதிப்பீடு களின்மேல் செல்வாக்குச் செலுத்துதல் கூடாது. உண்மைகளும் விழுமியங்களும் தர்க்கரீதியாக ஒன்றிலிருந்து ஒன்று சுதந்திர மானவை; தொடர்பான உண்மைகளின் துணையுடன் விழுமியங் களை மதிப்பிட முடிந்தாலும், அவை ஒன்றில் ஒன்று தங்கியவை அல்ல என்பது வெபரின் உறுதியான கருத்தாகும்.
சமூகச்செயல்பற்றிய அறிவியல்
சமூகவியல், சமூகச்செயல் தொடர்பான முழுமையானதொரு விஞ்ஞானம் என மக்ஸ் வெபர் கருதினார். சமூகவியலைச் சமூகஅமைப்பின் வழிகண்ட தம் முன்னோரிடமிருந்து மக்ஸ் வெபர் வேறுபடுகின்றார். தனிமனிதப் பாத்திரங்களிலேயே வெபரின் குவிமையமிருந்தது. வெபரின் பார்வையிற் சமூகவியலானது, சமூகச் செயலை விளங்கி, அதன்வழி செயலுக்கான காரண விளைவுகளைக் காணும் ஒரு விஞ்ஞானமாகவே அமைகின்றது. குறித்த ஒரு சமூக - வரலாற்று நிலைமையில், ஒருவர் தமது செயலுக்கு அகவயமாகக் கொடுக்கின்ற அர்த்தத்திலேயே வெபரின் குவிமையம் இருந்தது. அர்த்தம் தவிர்த்த நடத்தை என்பது சமூகவியலுக்கு அப்பாற் பட்டதென வெபர் வாதிடுகின்றார்.
தொடக்கத்திலேயே நடத்தை, செயல், சமூகச்செயல் என்பவற்றினை வேறுபடுத்தினார் வெபர். நடத்தை என்பது
78 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

செயலாகாது. யாதேனுமொரு நடிகரும் ஒருதொகுதி பாத்திரங்களும் வேண்டும், அல்லது ஒரு பண்பாடும், அதற்கான சில அர்த்தங்களைத் தருவோரும் வேண்டும். மனித உயிரிகள் இயந்திரப்பாங்காக இயங்குவதில்லை. பரஸ்பர உள்நோக்கங்களின் எதிர்பார்ப்புக் களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கிலேயே அர்த்தமுடன் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இடைவினை கொள்கின்றார்கள். எனவே ஒரு செயல் சமூகத்தன்மையானதாக, அது ஏனையோரை மையமாகக் கொண்டமைதல் இன்றியமையாதது. சமூகச் செயலின் நிகழ்வு களும், மனித நிகழ்வுகளின் ஒழுங்கும் அகவய அர்த்தங்களின் வழியேதான் விளங்கிக்கொள்ளப்படலாம். எனவே, வெபரின் மனிதச்செயல் என்ற சட்டகமானது, செயலைச் செய்பவரது அகவயக் காரணிகளை, அவற்றிற்குப் பொறுப்பான ஊக்கங்களை, செயலின் பரந்த உள்ளடக்கத்தைக் கருத்திற் கொள்வதனடியாகவே புரிந்துகொள்ள முடியும் என்பதனையே வலியுறுத்துகின்றது எனலாம்.
சமூகச் செயலின் இலட்சிய வகைகள்
வெபரின் சமூகவியல், நான்கு பிரதான இலட்சிய வகைகளாகச் சமூகச் செயலை வகைப்படுத்துகின்றது.
இலக்கினை மையமாகக் கொண்ட தர்க்கரீதியான செயல்
இலக்கினை மையமாகக் கொண்ட தர்க்க ரீதியான செயலானது முடிவு, வழி எனும் இரண்டு அம்சங்களிலும் தர்க்கரீதியான தெரிவுகளைக் கொண்டமைகின்றது. பல்வேறு இலக்குகளிடையே உச்ச அடைவுக்கானவை தேர்ந்து கொள்ளப்படுவதுடன், அடையும் வழியைத் தேர்கின்றபோது வினைத்திறனுடைய தொழில்நுட்பம், ஏற்படக் கூடிய செலவு என்பனவும் கருத்திற் கொள்ளப் படுகின்றன.
0 தர்க்கரீதியான செயல்
தர்க்கரீதியான செயலானது விழுமியத்தை மையமாகக் கொண்டது. அத்தியாவசியமெனக் கருதும் ஓர் இலக்கினை நோக்கிய கடின முயற்சியாக இது அமையும். இந்தத் தேர்வு
அமைப்பும் இயங்கியலும் 79

Page 49
தர்க்கரீதியற்றும் அமையலாம். அனாவசியமான வழிகள் தொடர்பான தர்க்கரீதியான மதிப்பீடுகள் செய்யப்பட்டா லும் எந்தவித ஆய்வுமின்றி முடிவு இங்கு ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. இலக்கு, போதுமானளவு பெறுமதிகொண்ட தாக அமைவதுடன் அதுவே செயலைக் கட்டாயப்படுத்துவ தாகவும் விளங்குகின்றது. கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த வினைத்திறனான வழிமுறைகள் தேர்ந்தெடுக்கப்படு கின்றன. அதன்போது ஏற்படக்கூடிய செலவையோ ஏனைய விழுமியங்களையோ கருத்திற்கொள்ளாது இலக்கே இங்கு குறியாகிறது.
0 மரபுவழியான செயல்
மரபுவழிச்செயலானது தர்க்கத்தன்மை குறைந்தது; பாரம் பரிய சிந்தனை வழக்கங்களினால் வழிப்படுத்தப்படுகின்றது. இலக்னிகப் பற்றியோ, வழிமுறை பற்றியோ, செயல்திறன் பற்றியோ எந்தவிதக் கணிப்பும் இல்லாமல் அமைவதனால் இது தர்க்கரீதியற்றதாகின்றது. ஏற்கனவே நிலைநாட்டப் பட்டுள்ள இலக்கு வழிக் கோலங்களை, எந்தவிதக் கேள்வியும் இன்றி வழிபாடாக ஏற்றுக்கொள்ளும், பின் பற்றும் நிலையாக இது அமைகின்றது.
0 உணர்வுவழிச்செயல்
உணர்வுவழிச் செயலானது தர்க்கரீதியான அடிப்படையாக அமையாமல் மரபு வழியானதாகவே விளங்கக்காணலாம். வழிமுறைகள், இலக்குகள் தொடர்பான தர்க்கரீதியான கணிப்பீடுகளிலும் பார்க்க மனவெழுச்சி நிலையினாலேயே பெரிதும் தீர்மானமாகின்றன. தனிப்பட்ட உணர்வுகளின் அகநிலைகள், மனவெழுச்சிகள், உணர்வு நிலைகள், இங்கு ஒர் இலக்கினை அடைவதற்கான வழிமுறைகளாகின்றன.
தமது ஆய்வுகள் அனைத்திலும் வெபர் இதனைப் பயன்படுத்துவதனைக் காணலாம். மென்மேலும் சிக்கலான சமூக உறவு அமைப்புக்களின் வகையீடு, தொகையீடுகளையெல்லாம் சமூக உறவுகள் தொடர்பான வகைப்பாட்டின் வழி ஒழுங்காக்குவதே வெபரின் இலக்காகவிருந்தது.
80 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

கருத்து நிலையிற் சமூக அமைப்புப் பற்றிய பொதுமைப் படுத்தல் திட்டமொன்றை வெபர் வகுத்திருந்தார். இத்திட்டத்தின் அடிப்படைக் கூறுகள் செயலின் வகைகளல்ல; அமைப்பியற் கூறுகளே; சமூகச் செயல் வகைப்பாட்டிற் குறிப்பிட்டவாறு தொடக்கப்புள்ளியில் தர்க்கரீதியான வழிகள் - இலக்குகள் என்ற பகுப்பாய்வைக் காணலாம். ஆனால், செயலானது தனியே குறித்த இலக்குகளை மட்டும் கொண்டது அல்ல. சமூகத்தொகுதிகளிற் காணப்படும் ஒழுங்கானது எத்தகைய நிலைமைகளில் இலக்குகளை அணுகலாம் என்பதனை வரையறுத்தும் நிற்கின்றது. வெபரைப் பொறுத்தவரை சமூக வாழ்வில் ஒழுங்குத்தொகுதிகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. அவையே அதிகாரத்திற்குச் சட்டபூர்வ அந்தஸ்துத் தருவன. வழிகள்-இலக்குகள் தொகுதிக்குக் காலாகும் அடிப்படை விழுமியங்களையும் சட்டபூர்வத் தன்மையின் கூறுகளையும் தொடர்புபடுத்தி வெபர் நோக்குவதும் இங்கு கவனத்திற்குரியது.
வெபரின் முறையியல் அடிப்படைகள்
சமூக விஞ்ஞானங்களின் முறையியலுக்கான வெபரின் பங்களிப்புக்களில் அவரது ஒழுக்க நடுநிலைச் சட்டகம், இலட்சிய வகை என்ற எண்ணக்கரு ஆகியன குறிப்பான கவனம் பெறுவன.
ஒழுக்கநிலைச் சட்டகம்
வெபரின் ஒழுக்க நடுநிலை தொடர்பான சட்டகத்தை ஒரு முறையியல் விதியாகக்கொள்வது கடினமெனினும் ஆய்வுகளில் அதன் அவசியத்தைப் புறக்கணிக்க முடியாது. உண்மைகள் தொடர் பான மதிப்பீட்டிலிருந்து விழுமியம் தொடர்பான மதிப்பீட்டினைப் பிரித்து நோக்கவும், ஆசை, ஆர்வங்களின் செல்வாக்குகளினின்றும் விடுபட்டுச் சுதந்திரமாக நியாயங்களைப் புரியவும் இது துணை செய் கின்றது. உண்மையற்றவைகளிலிருந்து உண்மையை அறிவதிலுள்ள சிரமங்களையும், விழுமிய நடுநிலை மூலம் தவிர்க்க முடிகின்றது.
இலட்சிய வகைமாதிரி
இலட்சிய வகை என்பது பகுப்பாய்விற்கான ஓர் உள ஏற்பாடு எனலாம். ஒத்த, வேறுபட்ட தன்மைகளை உறுதியாக அளக்கும்
அமைப்பும் இயங்கியலும் 81

Page 50
அளவுகோலாக இது அமைகிறது. இலட்சிய வகையானது ஒழுக்க இலட்சியங்களுக்கு அல்லது புள்ளிவிபர ஒப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படலாம். இலட்சியவகை எப்பொழுதும் உண்மை யதார்த்தத்திற்குப் பொருந்துவதில்லை. வெபரின் இலட்சிய வகை களில் தனியன்களின் செயல்களுக்குப் பதிலாகச் சமூகப் பொருண் மைக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. இலட்சிய வகையென்பது ஒரு கருதுகோள் அல்ல; கருதுகோளை அமைப்பதற்குத் துணையாவது. இதனை ஒப்பீட்டு நோக்கிற்காகவே உருவாக்கினார் வெபர். ஒழுங்காக உள்ள விசையுடன் ஏனையவை எவ்வளவு தூரம் விலகியுள்ளன என்பதனைக் காணும் அளவு கருவியாக இதனைப் பயன்படுத்தினார்.
இந்த நடைமுறையின் தொடர்பறு பிரச்சினைகளையும் வெபர் குறிப்பிட்டார். தூயவகைத் தர்க்கரீதியான செயலை உரு வாக்கியதுடன், தர்க்கரீதியற்ற செயலை இலட்சிய வகையின் விலகல் களாகக் கொள்ளமுடியும் என்ற கருத்தையும் முன்வைத்தார். அவர் முன்வைத்த சமூகச் செயல் தொடர்பான நான்கு வகைப்பாடுகளில் இரண்டு தர்க்கரீதியானவை. ஏனையவை, மரபு வழியான உணர்வு
நிலைப்பட்டவை.
"வெபரின் பொருளாதாரமும் சமூகமும்" என்ற ஆக்கமானது இலட்சியவகைகளின் தொகுதியொன்றினை உருவாக்கும் முயற்சி யாகும். இதனைக் கோட்பாட்டுக் கருத்துருவ வடிவில் உருவாக்கி, ஒவ்வொரு இயற்பண்புகளையும் உரிய வரலாற்று நிலைமைகளுடன் விபரமாக விளக்கினார் வெபர். இந்த இலட்சிய வகைகளைச் சுருக்க மான தொகுத்தறி படிமுறைகளின்வழி அவர் உருவாக்கவில்லை. சில பண்புகளை உள்ளுணர்வாகத் தேர்ந்ததுடன் பொருத்தமான தரவு களின் நியமமற்ற பகுப்பாய்வுகளின் வழிதான் உருவாக்கினார்.
வெபர் மூன்று இலட்சிய வகைகளை இனங்கண்டு வேறுபடுத்துகிறார்.  ெபுரட்டஸ்தாந்து ஒழுக்கம், நவீன முதலாளித்துவம் போன்ற வரலாற்று நிலைமைகளில் வேர் விட்டுள்ள இலட்சிய வகைகள், இவை, குறித்த வரலாற்றுக்காலங்களுக்கும், பண்பாட்டுப் பரப்புக்களுக்குமே உரியன.
82 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

0 பணிக்குழுவாட்சி அல்லது நிலமானிய அமைப்போடு தொடர்பு படும் சமூக யதார்த்தக்கூறுகளின் நிலைமைகள், இவையும் வேறுபடும் வரலாற்றுப் பண்பாட்டு நிலைமைகளைக் காட்டுவன.
0 குறித்ததொரு வகை நடத்தையின் தர்க்கரீதியான மீளுருவாக்கல் நிலை, முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருளியல்
கோட்பாடுகளும் இந்த வகைக்குள் அமைவன.
சமூகச் செயலை பகுப்பாய்வுசெய்தல்
சமூகவியலானது சமூகச் செயல் பற்றிய ஒரு விஞ்ஞானமாக அமைகின்றது, சமூகச் செயலுக்கான காரண விளக்கங்களை அது தருகின்றது. நடத்தைச் செயலையும், சமூகச் செயலையும் வெபர் வேறுபடுத்துகின்றார். செய்யப்படும் செயலுக்குக் குறித்த பண்பாடு அர்த்தம் தருகின்றபொழுதே, அது செயலாகின்றது. அதுபோலவே செயலென்பது சமூகச் செயலாக, ஏனைய சமூக அங்கத்தினரு டனானதாக அமைவது அவசியம் எனவும் வெபரினால் வலியுறுத்தப் பட்டது. மனிதர்கள் இயந்திரமாகச் செயற்படுபவர்களல்ல; பரஸ்பர உள்நோக்கான எதிர்பார்ப்புக்களைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் ஒருவருக்கொருவர் அர்த்தம் தரும் வண்ணமே செயற்படுகின்றனர். வெபரின் பார்வையில் புரிதல் இரண்டு வகைகளில் அமையலாம்.
0 நேரடி அவதானத்தின் வழியான புரிதல் 0 அகவய அர்த்தங்களை விளங்கும் புரிதல்
நேரடி அவதானத்தின் வழியான புரிதல் என்பது, மேலும் வகைப்படுத்தப்படலாம். கருத்துக்களின் நேரடித் தர்க்கரீதியான புரிதல், தர்க்க ரீதியற்ற மனவெழுச்சி எதிர்விளைவுகளின் அவதான ரீதியான புரிதல், செயலின் தர்க்கரீதியான புரிதல், செயலின் தர்க்கரீதியான அவதானவழிபுரிதல் என அவை அமையும்.
நாம் ஒரு செயலின் அகவயமான அர்த்தத்தை நேரடி அவதானத்தின்மூலம் விளங்கிக் கொள்ளும்போது, அது கருத்துக் கள்ளின் தர்க்கரீதியான புரிதலாகின்றது. தனியன்களின் மனவெழுச் சியை முகபாவ அங்க அசைவுகள் போன்றவற்றின்வழி புரிதல் மனவெழுச்சி, எதிர்ச்செயல் பற்றிய தர்க்கரீதியற்ற புரிதலாகின்றது.
அமைப்பும் இயங்கியலும் 83

Page 51
வெளிப்படையாகத் தெரியும் நடத்தை அல்லது செயல்களின் வழியான புரிதலே தர்க்கரீதியான அவதானவழி புரிதல் ஆகின்றது. ஒருவரின் செயல்கள், மனவெழுச்சிகள் அல்லது அவரது வார்த்தை களின் அகவய அர்த்தங்கள் போன்றவற்றினை அவர் ஊக்கல்களின் வழி நாம் புரிதலே, விளக்க ரீதியான புரிதல் எனப்படும். இத் தர்க்க ரீதியான புரிதலின்போது ஒரு தனியன் என்ன செய்கிறான் என்பதனை மட்டுமன்றி, ஏன் அவ்வாறு செய்கிறான் என்பதனையும் அறிவது அவசியம். எடுத்துக்காட்டாக ஒருவர் ஒரு பூந்தோட்டத்தில் பூக்கொய்கின்றார் என எடுத்துக்கொண்டால், அதனை விற்பதற் காகவா அல்லது தன் அன்புக்குரிய ஒருவருக்குக் கொடுப்பதற்காகவா அன்றேல் கோபத்தினால் மரத்திலிருந்து கொய்கிறாரா எனக் காண வேண்டியது அவசியம்.
வெபரைப் பொறுத்தவரை சமூகப் பொருண்மையின் உச்சப் புரிதலானது போதுமானளவு அர்த்தமட்டத்தை விளங்குதலில் தங்கியுள்ளது. போதுமானளவு அர்த்தமட்டம் என்பது எங்களின் மரபுவழிச் சிந்தனை, உணர்வுவழித் தெரியும் அர்த்தத்தினைவிட அதிகமானது.
செயலுக்கான காரணம் சிந்தனை நியமங்களினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது; நிகழ்வுகளின் விளக்கமென்பது தற்காலிக போதுமான புரிதல் என்றே சொல்லவேண்டும். இந்தத் தற்காலிகப் புரிதலின்போது புதுமையாக்கலைப் புள்ளிவிபரவியல் ரீதியாக அடையமுடியும். அவ்வாறு விளக்க முடியாதவற்றைப் பொறுத்தவரை அவற்றினை அதிகளவிலான வரலாற்று அல்லது நிகழ்காலப் படிமுறைகளுடன் ஒப்பிட்டு அறிய முடியும். பின் நாட்களில் சமூக வரலாற்று நிலையில் இவ்வாறான ஒப்பீட்டு முறையினைப் பயன்படுத்துவது சாத்தியமற்றது என்பதனை உணர்ந்துகொண்ட வெபர் நிகழ்வுகளைக் கற்பனாரீதியில் மீளமைத்துத் தர்க்கரீதியான பகுப்பாய்வுகளை மேற்கொள்ளும் கற்பனாரீதியான பரிசோதனை என்ற முறையை அறிமுகம் செய்தார்.
காரணகாரியத்தன்மையும் நிகழ்தகவும்
சமூக உறவு, ஒழுங்கமைக்கப்பட்ட குழு, வெளிப்படையான கட்டுப்பாடு, மரபுவழி மற்றும் சட்ட ரீதியான கட்டுப்பாடுகள்
84 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

தொடர்பான வரைவிலக்கணத்தில் ஏற்படக்கூடிய மாற்றம் தொடர் பான நிகழ்தகவினை, வெபர் அடிக்கடி அழுத்துவதனைக் காண லாம், வெபரைப் பொறுத்தவரை புறவயமான உறுதிப்பாட்டினைக் காண்பதென்பது மிகக் கடினமான ஒரு விடயமே. எனவேதான் மாறும் தற்காலிகமான ஒரு நிகழ்தகவுச் சட்டகத்திற்குள்ளேதான் செயற்படவேண்டும் என்றார் வெபர். அவரது வரைவிலக்கணங்கள் செயற்பாட்டின்பாற்பட்டவை; நேரடியான பரிசோதனை ஆய்வுகளிற் பயன்படுத்தப்படக் கூடியவை.
மத்தியதர வகுப்புப் பற்றிய வெபரின் கவனிப்பு
வகுப்பு, அந்தஸ்து, அதிகாரம்
கார்ல் மார்க்ஸினாற் பெரிதும் கவனத்திற் கொள்ளப்படாத மத்திய தர வகுப்பில் வெபர் அக்கறை கொண்டிருந்தார். அடுக்கமைவின் பொருளியல் அடிப்படைகளின் முக்கியத்துவத்தை வெபர் ஏற்றுக்கொண்டார். வகுப்புப் பற்றிய தம் வரையறையிற் பின்வரும் பொதுப்பண்புகளைக் கொண்ட மனிதரை ஒரு வகுப்பினுள் அடக்குவார் வெபர்.
0 வாழ்க்கை வாய்ப்புக்களிற் குறித்ததற்காலிகக்கூறுகளைப் பொது
வாகக் கொண்டவர்கள்.
0 இந்தக் கூறுகள் பெரும்பாலும் பொருட்களை உடைமையாகக் கொள்ளுதல், வருமானத்திற்கான வாய்ப்புக்கள் ஆகிய பொருளியல் ஆர்வங்கள் தொடர்பானவை.
0 பண்டங்கள் அல்லது ஊழியர் சந்தையினாற் கட்டுப்படுத்தப் படும் வகுப்பு நிலைமைகளைப் பிரதிபலிப்பவர்களை உள்ளடக்கியவை.
வகுப்பு நிலைமை தொடர்பான காரணங்களுக்கும் நிலைமை களுக்கும் இடையிலான தொடர்பு வெளிப்படையாக உணரப்
படும்பொழுதே, கூட்டுவகுப்புச்செயல் எழும் என்கிறார் வெபர்.
வகுப்பு நிலைமையானது பொருட்களின் நிரம்பல், புற வாழ்க்கை நிலைமைகள், தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவற்றின் வாய்ப்புக்களின் வழியே வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த வாய்ப்பானது குறித்த ஒரு பொருளாதார ஒழுங்கிற் பொருட்
அமைப்பும் இயங்கியலும் 85

Page 52
களை அல்லது திறன்களைப் பெறக்கூடிய சக்தியின் பாற்பட்டது. ஒரே வகுப்பு நிலைமையிலுள்ள யாதேனுமொரு மக்கள் குழுவினர் வகுப்பு என்பதனுள் அடங்குகிறார்கள். மக்களிடை சொத்துக்களின், விநியோகத்தின்வழியும் குறிப்பான வாழ்க்கை வாய்ப்புக்கள் ஏற்படலாம். சந்தை நிலைமையிற் பொருளற்றவர்கள், உயர் பெறுமதிப் பொருட்களுக்கான போட்டியிலிருந்து விலக்கப்பட்டி ருப்பார்கள். இப்பொருட்கள் ஏனையோரின் தனியுரிமைக்குரிய தாகும். சொத்துடைமை அற்ற மக்களால் எட்டப்படமுடியாத விலை களையும் இவை கொண்டிருக்கும். இவர்களாற் கொடுப்பதற்கென உள்ளது இவர்களின் சேவை மட்டுமே. அதேவேளை, இந்த உற்பத்திப் பொருட்களும் அவர் ஊழியத்தின்வழி உருவானதாக இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தமது உற்பத்திகளைத் தாம் உடைமையாகக் கொள்ளமுடியாத நிலையே காணப்படும். இந்தச் சொத்துடைமைக் குழுவானது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தமது முதலை விற்று இலாபம் தேடுவதாகவோ அமையும். ஒரு சரியான சந்தை நிலைமை காணப்படும்போதே இது சாத்தியமாகும்.
சொத்துடைமை, சொத்துடைமையிற் குறைபாட்டு நிலை என்பதே அனைத்து வகுப்புப் பிரிவுகளினதும் அடிப்படையாகும். இந்த வகைகளுக்கு உள்ளேயும் மீள்வருமானம் தரக்கூடியதாகப் பயன்தரக்கூடிய சொத்துக்கள், சேவைகள் என மேலும் வேறுபாடு களைக் காணலாம். வதிவிடக் கட்டிடங்கள், உற்பத்தி நிறுவமைப்புக் கள், களஞ்சியங்கள், விவசாய நிலங்கள், சுரங்கங்கள், கால்நடைகள், அடிமைகள் என உடைமைகள் வேறுபடலாம்.
சொத்துடைமை அற்ற மக்களை அவர்கள் வழங்கும் சேவை களின் அடிப்படையிலும், தொடர்ந்தோ அன்றி தொடர்பற்றோ அவர் சேவைகளைப் பெறுபவர்களிடம் அவர் கொண்டுள்ள உறவின் அடிப்படையிலும் வேறுபடுத்தலாம். வகுப்பு நிலைமை யானது சந்தைநிலைமையில் தங்கியுள்ளது.
மேலதிக அடுக்கமைவு வகையாக அந்தஸ்துக் குழு என்ற ஒரு வகைப்பாட்டை முன்வைத்தார் வெபர். சந்தை, உற்பத்தி முறை களினாலன்றி ஒருவரின் நுகர்வுக் கோலங்களினடியாக இந்த
86 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

வகுப்பை வெபர் வரையறுக்கின்றார். முழுக்க முழுக்க உற்பத்திப் பரப்பினுள்ளேயே தமது சிந்தையைச் செலுத்தியதால் மேற்கண்ட வகைப்பாட்டை மார்க்ஸ் கவனியாதுவிட்டுவிட்டார் என வெபர் கருதினார். தனியே பொருளாதார அடிப்படையில் மட்டுமன்றி ஏனைய காரணங்களையும் உள்ளடக்கிய வெபரின் பார்வை அந்தஸ்துப் பரிமாணங்களின் அடிப்படையில் வகுப்புக்களை வகைப்படுத்த இடமளித்தது. வேறுபடும் அந்தஸ்துக் குழுக்களிடை யிலான இடைவினைகளிடை கட்டுப்பாடுகள் சமூகத் தூரம் என்பவற்றினை இனங்காட்டிய வெபர், ஒரு குறித்த குழு அங்கத்தினருக்கு ஏனைய குழுவினர் கெளரவத்தைத் தருகின்றவரை அவர் அதே அந்தஸ்துக் குழுவில் அங்கத்துவம் பெறமுடியும், அவமதிப்பைத் தருகின்ற பொழுது அதனினின்றும் விலக்கப்படுவார். இதன்படி குழுக்களுக்கிடையிலான சமூகத்துாரம் பேணப்படும்.
ஒரு வகுப்பில் ஒருவர் பெறும் இடத்திற்கும், அந்தஸ்து ஒழுங்கிற் பெறும் நிலைக்கும் உயர்ந்த இணைவு காணப்படுவதை ஆய்வு அனுபவமாக உணரலாம். எடுத்துக்காட்டாக, முதலாளித்துவ சமூகங்களிற் பொருளாதார ரீதியிற் செல்வாக்குப்பெறும் வகுப்பு, காலப்போக்கில் உயர்அந்தஸ்தையும் பெறக்காணலாம். அதே வேளையிற் சொத்துடைமை அற்ற மக்களும்கூட அதே அந்தஸ்துக் குழுவில் இடம்பெறக்கூடும். தமது முன்னைய அந்தஸ்தின்வழி, கணிசமானளவு செல்வாக்கைப் பலவீனமான பொருளாதார நிலையிலும் இவர்கள் கொண்டிருக்கக் காணலாம்.
வெபரின் பார்வையில் ஒவ்வொரு சமூகமும் வேறுபடும் வாழ்க்கைப்பாங்குகள், உலகம் பற்றிய பார்வைகளின்வழி குழுக்களாகவும், அடுக்குகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பான வகுப்புக்கள் எனப்படுகின்றன. அந்தஸ்து வகுப்புக் குழுக்களிடை முரண்பாடுகள் இருந்தபோதிலும் இக்குழுக்களின் அங்கத்தினர் ஒரளவிற்கு மேலாதிக்கம் பெற்றுக்கொள்கின்ற
நிலைமைகளையும் காணமுடியும்.
அடுக்கமைவின் மற்றொரு பிரதான பரிமாணமாக அரசியல் அதிகாரத்தையும் வெபர் குறிப்பிடுகின்றார். வகுப்பு, அந்தஸ்து என்பவற்றிற்குச் சமாந்தரமாகவே அரசியல் அதிகாரத்தை வெபர்
அமைப்பும் இயங்கியலும் 87

Page 53
குறிப்பிடுகின்றார். ஒட்டுமொத்தமாக நோக்குகையிற் சமூக
அடுக்கமைவின் பின்வரும் மூன்று பரிமாணங்களும் முழுமையான
பகுப்பாய்விற்கு அவசியம் என்கிறார் வெபர். )ெ வகுப்பு (பொருளாதார ரீதியானது) 0 அந்தஸ்து (சமூக கெளரவம் சார்ந்தது) 0 அதிகாரம் (அரசியல் ரீதியானது)
அதிகாரம் தொடர்பான வெபரின் பகுப்பாய்வில் மார்க்ஸின் கருத்தியலுடன் வெபர் உடன்பட்டபோதும், அதனை மேலும் மீளமைப்புச் செய்துள்ளமையைக் காணலாம். மார்க்ஸ் கருத்து நிலையில் அதிகாரம் என்பது எப்பொழுதும் பொருளாதார உறவு களின் அடிப்படையிலானது. உற்பத்திச் சாதனங்களைச் சொந்த மாகக் கொண்டவர்களே, நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அரசியல் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள். நவீன சமூகங்களிற் பொருளாதார அதிகாரங்களே மேலாதிக்கம் செலுத்தும் என்கின்ற மார்க்ஸின் கருத்துடன் வெபர் உடன்படுவார். எனினும் பொருளா தார அடிப்படையற்ற ஏனைய நிலைமைகளினாலும் அதிகாரம் வாய்க்கப்பெறலாம் என்பார். எடுத்துக்காட்டாக ஒரு பாரிய பணிக் குழுவாட்சி அமைப்பில் உயர்நிலை மேலதிகாரி வெறுமனே சம்பளத்திற்குப் பணியாற்றுபவராக இருந்தபோதிலும் நிறைந்த அதிகாரத்தினைக் கொண்டவராக விளங்குகின்றமையைக் குறிப்பிடுவார்.
ஒரு செயலிற் பங்குகொள்ளும்போது ஏனையோர் எதிர்த்தாலும்கூட ஒருவர் அல்லது ஒரு குழு தமது சொந்தச் சக்திகளினாற் பெறக்கூடிய வாய்ப்பாகவே அதிகாரத்தை வெபர் கருதுகின்றார்.
சமூக நிலைமைகளுக்கு ஏற்ப அதிகார அடிப்படைகளும் வேறுபடுவன என்ற கருத்தையும் வெபர் கொண்டிருந்தார். மனிதர்கள் எப்பொழுதுமே பொருளாதார உயர்வுக்காக மட்டும் உழைப்பவர்கள் அல்ல. அதிகாரத்திற்கான முயற்சி என்பது சமூக மதிப்பின்பாற்பட்டதுமாகும். தனியே பொருளாதார அதிகாரம் மட்டும் சமூக மதிப்பிற்கான வழியாகாது. அவ்வாறே அதிகாரந்தான் சமூக மதிப்பிற்கான அடிப்படையுமாகாது. சமூக மதிப்பானது
88 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

பொருளாதார, அரசியல் அதிகாரங்களுக்கான அடிப்படையாக அமையலாம். அதிகாரமும் மதிப்பும் சட்ட ஒழுங்கால் அங்கீகரிக்கப்படலாம். இதனாற் சட்ட ஒழுங்கானது அதிகாரத்தை அல்லது மதிப்பைக் கொண்டிருப்பதற்கான ஒரு மேலதிகக் காரணியாகும். ஒரு சமூகத்திற் குழுக்களிடையே சமூக மதிப்பு எவ்வாறு பிரித்துத் தரப்பட்டுள்ளதென்பதனையே சமூக ஒழுங்கு என்பது குறிக்கின்றது. இந்நிலையில் வகுப்பு, அந்தஸ்துக் குழுக்கள், கட்சிகள் என்பவற்றிடையே ஒரு சமூகத்தின் அதிகாரங்கள் வகுத்துத் தரப்பட்டுள்ளன எனலாம்,
LIGoofláisgbdgoIIT'af (Bureaucracy)
அதிகாரம், வல்லமை ஆகியவற்றின் தன்மை, பகுத்தறிவின் வழியான தர்க்கரீதியான செயற்பாடு தொடர்பான வெபரின் ஆய்வானது பாரிய அரசியல் தீர்வாக, பொருளாதார புலன் களிலுள்ள நிறுவமைப்புக்களின் செயன்முறைகளை ஆராயும் ஈடுபாட்டை வெபருக்குத் தந்தது. நவீன நிறுவமைப்புக்களில் மேலாதிக்கம் செலுத்தும் அமைப்பியற் கூறுகளாக, பணிக்குழு வாட்சிக் கூட்டிணைப்புகளை வெபர் கருதுகிறார். இவை இலக்கு களையும் வழிமுறைகளையும் மரபுவழியாக அன்றித் தர்க்கரீதியாக நிர்ணயிக்கின்றன. இதன்வழி அலுவலகங்கள் குறிப்பான பொறுப்புக்களைக் கொண்டிருப்பதுடன் சங்கிலித்தொடரான பொதுநடைமுறைகளால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
பணிக்குழுவாட்சியின் முக்கிய இயல்புகள்
1. விதிகள் அல்லது சட்டங்கள் அல்லது நிர்வாக ஒழுங்கு முறைகளால் ஒழுங்கமைக்கப்பட்ட நிலையான உத்தியோகபூர்வ நீதி வரம்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
2. 1. பணிக்குழு அதிகாரமானது உத்யோகபூர்வமான கடமை
களாக, ஒழுங்கான செயற்பாடுகளாக வகுக்கப்பட்டுள்ளன. i. கடமைகளைச் செய்விப்பதற்கான கட்டளைகளை வழங்கும் அதிகாரமும் சட்ட விதிகளால் வகுத்துத் தரப்பட்டுள்ளன.
அமைப்பும் இயங்கியலும் 89

Page 54
i. இந்தக் கடமைகளை ஒழுங்காகவும் தொடர்ந்தும் நிறைவு
செய்வதற்கான முறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அடுக்கமைவு ஒழுங்கில் உயர்துணை அலுவலர்கள் எனத் தரப்படுத்தப்பட்டுள்ளன. கீழ்மட்ட அலுவல்களை உயர்நிலை அலுவலர்கள் மேற்பார்வை செய்வதற்கான ஏற்பாடுகளும்
உள்ளன.
முகாமைத்துவம், பேணப்படும் கோவைகளின் அடிப்படையில் அமைகின்றது. இக்கோவைகளை, நடைமுறைப்படுத்தற்கான கருவிகளுடன் ஓர் ஆளணியினர் பொது அலுவலகங்களில் நியமிக்கப்படுகின்றனர்.
அலுவலக முகாமைத்துவமானது நிபுணத்துவப் பயிற்சியுடனான நவீன சிறப்புத்துவத் தேர்ச்சியினைக் கொண்டுள்ளது.
அலுவலகமானது முழுமையாக விருத்தி அடையும் நிலையில், அலுவலகச் செயற்பாடானது அலுவலர்களின் முழுமையான வினைத்திறனான செயற்பாட்டை வேண்டிநிற்கின்றது.
நிலையாகவும் தெளிவாகவும், வகுக்கப்பட்டுள்ள பொதுவான விதிகளையே முகாமை பின்பற்றுகின்றது. இந்த விதிகள் தொடர்பான அறிவு என்பது, நிர்வாக அல்லது வியாபார முகாமைத்துவம் தொடர்பான சிறப்பான தொழிநுட்பப் பயிற்சியினை வேண்டிநிற்கிறது.
பணிநிலைநியமங்கள்
1.
90
ஒரு அலுவலகத் தொழிலில் இருத்தல் என்பது, குறித்த தொழில் சார் நியமப் பயிற்சியுடனான சிறப்புத் தொழிநுட்பத் தேர்ச்சியை வேண்டிநிற்கின்றது. அலுவலர்களின் நிலைகளே அவர்களது உறவுகளின் உள்ளக அமைப்பைத் தீர்மானிப்பன. ஒரு தொழி லினை ஏற்கின்றமை குறித்த முகாமைத்துவத்தின் குறிப்பான எதிர்பார்ப்புக்களுக்குக் கடப்பாடாகுதல் என்றாகிறது.
உறவுகள் தற்சார்பற்றவை; விசுவாசமென்பது செயற்பாட்டு நோக்கங்களுக்கான அர்ப்பணிப்பாகவே அமையவேண்டும்.
சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

எடுத்துக்காட்டாக, நவீன சமூகங்களில் அரசியல் அலுவலர்கள், ஒரு ஆட்சியாளரின் தனிப்பட்ட சேவகர்கள் அல்ல.
நவீன அலுவலர்கள் தனித்துவமான சமூக மதிப்பைப் பெறுகிறார்கள். இவர்களது சமூக நிலைமையானது ஏற்கனவே வகுக்கப்பட்ட விதிகளின் வழியானது. நவீன சமூகத்திற் பயிற்சி பெற்ற நிபுணர்களுக்குப் பெறுமதியான இடம் வழங்கப்படு கின்றன. இந்நிலைமைகளை இவர்கள் தமது சமூக, பொருளா தார வாய்ப்புக்களின் வழியே எய்துகிறார்கள். இந்தப் பயிற்சிக் கான சான்றிதழ்கள், இவரது தகுதிநிலைகளை உறுதிப்படுத்து கின்றன.
தூயவகைப் பணிக்குழுவாட்சி அலுவலகர், உயர்அதிகாரியினால் நியமிக்கப்படுபவராகவே இருக்கின்றார். நியமிக்கப்பட்ட உத்தியோகச் செயற்பாடுகள், தனிஉறவுகள், சாதாரண விதிகளின் வழி அமைவதாலும், தெரிவு தராதரங்களின்வழி மேற்கொள்ளப் படுவதாலும், அடுக்கமைவில் ஒருவரில் ஒருவர் தங்கிநிற்கும் தன்மை குறைவாகவே உள்ளது.
ஒருவரது பதவிக்காலம் முன்னரே நிர்ணயிக்கப்பட்டதாக
இருக்கின்றது. இதனால் தொழிலிற் சுதந்திரமான செயற் பாட்டிற்கான கால உத்தரவாதம் உறுதியாகின்றது எனலாம்.
அலுவலர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்ட வேதனத்தையும், முதுமைப் பருவத்திற்கான ஓய்வூதியப் பாதுகாப்பையும் கொண்டிருக்கின்றார்கள். வேதனமானது செய்யப்பட்ட வேலை யின் அடிப்படையில் அல்லாமல், ஒருவரின் தகைமையில் அல்லது சேவைக்காலம் என்பவற்றினடியாகவே வழங்கப் படுகின்றது.
பொதுச்சேவை அடுக்கமைவு ஒழுங்கில் அலுவலர் ஒருவர் கீழ் நிலையிலிருந்து உயர் நிலையான பதவிகள்வரை பெற வாய்ப்பு இருக்கிறது. சராசரி அலுவலர் ஒருவர் எப்பொழுதும் இத்தகு ஏற்பாட்டினைப் பெரிதும் விரும்புகிறார். குறைந்த பட்சம் வேதனத்தின் அதிகரிப்பையேனும் வேண்டுகின்றனர். இந்தச் சம்பள அதிகரிப்பு ஏற்பாட்டினைத் தமது மூப்புரிமை அடிப்படையிலும், தரங்களின் அடிப்படையிலும் வேண்டி
அமைப்பும் இயங்கியலும் 91

Page 55
நிற்கின்றனர். இதற்கெனப் பரீட்சை ஏற்பாடுகளை அலுவலகங் கள் கொண்டுள்ளன. இவை அலுவலரைத் தகைமை பெறுமாறு ஊக்கும் காரணிகளாகின்றன.
நவீன யுகத்தின் தனித்துவ அமைப்பு
தர்க்கரீதியான கோட்பாடுகளினடியாக ஒழுங்கமைக் கப்பட்டுள்ள பணிக்குழுவாட்சியானது நவீன யுகத்தின் தனித்துவ மான ஒரு மைல்கல் என வெபர் குறிப்பிடுகின்றார். ஓர் அரசு மையப்படுத்தியதன் அரசியல் அதிகார வளங்களைச் செயற் படுத்தவும், பொருளாதார வளங்களைக் கையாளவும் கூடிய ஓர் அமைப்பாகப் பணிக்குழுவாட்சி அமைகின்றது. நவீன அரசு, நவீன பொருளாதாரம், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றைச் சீராக்கக் கிடைத்ததோர் வரப்பிரசாதமாகவே பணிக்குழுவாட்சி அமைப்பை வெபர் கருதுகின்றார். அனைத்துவகை நிர்வாக வடிவங்களையும் விட நுட்பமானதாகப் பணிக்குழுவாட்சி விளங்குகின்றது என்பது வெபரின் கணிப்பீடாகும்.
பணிக்குழுவாட்சியின் எதிர்த்தொழிற்பாடு
பணிக்குழுவாட்சியின் நலன்களை அழுத்திய அதேவேளை யில் அதன் எதிர்த் தொழிற்பாடுகளையும் வெபர் குறிப்பிடுவார். முடிவுகளைத் திட்டமிட்டுக் கணிக்கக்கூடிய நிலையே இவ்வமைப் பின் பிரதான அநுகூலமாகும். எனினும் தனிப்பட்டவர்களுக்குரிய விடயங்களை அணுகுவதில் நவீன தர்க்கரீதியான பணிக்குழு அமைப்பின் சட்டங்கள் போதுமானவையாக இல்லாமையை வெபர் சுட்டுகிறார். நடைமுறையில் நிலவும் தளர்வினைச் சரிசெய்யக் கூடிய ஆளுமைமிக்க தலைவர்களின் தோற்றத்தில் வெபர் நம்பிக்கை கொண்டிருந்தார். எதிர்காலமென்பது ஏடனின் பூந்தோட்ட மாகவன்றி இரும்புக்கூடமாகவே அமையலாம். நவீன வாழ்வின் அனைத்துப் பரப்புகளிலும் ஒருவர் பாரிய அளவிலான அமைப்பில் இணைந்து, தன் தனிப்பட்ட விருப்பங்களைத் தியாகம் செய்து, தன் பொதுவான இலக்குகளை நிறைவேற்றுதலின் வழிதான் சமூக முக்கியத்துவம் வாய்ந்த செயலில் ஈடுபடமுடியும் என்றார்.
921 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

கருத்துக்களின் மட்டுப்பாடு
நவீன முதலாளித்துவத்தின் தோற்றத்திற் சமயக் கருத்துக் களின் செல்வாக்குப் பற்றிய அழுத்தத்தில் வெபர், கார்ல் மார்க்ஸினின்றும் வேறுபடுகின்றார். கார்ல் மார்க்ஸின் மீது மிகுந்த மதிப்புக்கொண்டிருந்தபோதும், மார்க்ஸின் தனித்த பொருளாதார அடிக்கட்டுமானத்தின் மீதே பண்பாட்டு மேற்கட்டுமானம் என்ற கருத்தினை வெபர் ஏற்கவில்லை. அறிவார்ந்த உளத்தின் விருத்தி யான விஞ்ஞான, அரசியல், சமயப் பரப்புகள் அனைத்தும் ஒன்றிலொன்று செல்வாக்குச் செலுத்திய போதிலும் சார்பளவில் தனித்துவமானவை என்றார். ஒரு கருத்துருவத்திற்கும் பொருளாதார ஆர்வத்திற்கும் முன் நிர்ணயமான இசைவேதும் இல்லை என்பார் வெபர். பல எடுத்துக்காட்டின்வழி வெபர் தனது கருத்தியலை விளக்குவார்.
கருத்தியல் தொகுதிக்கும், சமூகக் கட்டமைப்புக்கும் இடையிலான தொடர்பு பன்முகப்பட்டது; வேறுபாடுகளைக் கொண்டது; பரஸ்பரமானது என்பார் வெபர். அடிக்கட்டுமானம் மேற்கட்டுமானத்திற் செல்வாக்குச் செலுத்துவது போலவே மறுதலையான செல்வாக்கினையும் அவதானிக்க முடியும் என்கிறார்
வெபர்.
வெயர் இனங்காட்டும் மூவகை அதிகாரங்கள்
அதிகார உறவுகள் தொடர்பான தமது விளக்கத்தில் வல்லமையை வரையறுப்பதுடன் அதனை அதிகாரத்தினின்றும் வேறுபடுத்தியும் காட்டுகின்றார். ஒரு சமூக உறவமைப்புக்குள் ஒருவர் தம் எண்ணப்படி செயற்படுவதற்கான நிகழ்தகவே வல்லமை எனும் வெபர், அந்தக் கட்டளைகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நிகழ்தகவு என்ற கருத்தாக்கத்தையும் கூடவே முன்வைக்கிறார். சட்டபூர்வத்தன்மைதான், தனியன்கள் தாமாகவே தமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் கட்டளையை ஏற்குமாறுசெய்கின்றது. கூடவே வல்லமையை அதிகாரமாக மாற்றுகின்றது. சட்டபூர்வத் தன்மைகளின் அடிப்படையில் மூன்று தூயவகை அதிகாரங்களை வேறுபடுத்திக் காட்டுகின்றார் வெபர்.
அமைப்பும் இயங்கியலும் 93

Page 56
0 தர்க்கரீதியான சட்டபூர்வ அதிகாரம் 0 மரபுவழி அதிகாரம் 0 தனித்துவ ஆளுமை வழியான (Charismatic) அதிகாரம்
இந்த அதிகார வகைகள் அதிகாரத்தினதும் மேலைப் புலத்தில் ஆற்றலின் வரலாற்றினையும் பிரதிபலிப்பன. முதலிரண்டும் சமூகவியல் முக்கியத்துவம் கொண்டவை. இவ்வதிகார வகைகள் அனைத்தினையும் பொறுத்தவரையிலும் வல்லமை தொடர்பான தனியன்களின்நம்பிக்கையும் முக்கியமானதென்பார் வெபர்.
தர்க்கரீதியான சட்டபூர்வ அதிகாரமானது தர்க்க அடிப்படைகளால் ஆனது. நவீன சமூகங்களின் அதிகரித்துவரும் அடுக்கமைவு உறவுகள் இவ்வகையில் அடங்குகின்றன. இந்த அதிகார அமைப்பில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளின் அடிப்படையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட பணிப்புகளைச் செய்யும் பொறுப்பினை ஒருவர் கொண்டுள்ளார் என்ற நம்பிக்கையினடி யாகவே இங்கு தனியன்கள் செயற்படுகின்றார்கள். தற்சார்பற்ற விதிகளால் நிலைநாட்டப்பட்ட இந்த அதிகாரமானது சமத்துவத்தை யும், தர்க்கரீதியான வல்லமை உறவுகளையும் உணர்த்துகிறது.
மரபுவழி அதிகாரமானது தொழிற்சமூகத்திற்கு முன்னைய காலத்து மேலாதிக்கமாக விளங்கியது; மரபின்வழி தரப்பட்டது என்ற நம்பிக்கையினை அடிப்படையாகக் கொண்டது. இங்கு புறவயமான விதிகளின்வழி உறவுகள் அமைவதில்லை. மரபுவழி கையளிக்கப் பட்ட விதிகளின் வழிதான் அதிகாரம் பெறப்படுகின்றது. குரு-சிஷ்ய, எஜமான்-பணியாள் உறவுகளில் இதனை அவதானிக்கலாம். சமூகங் களிடையே நிலவும் தந்தைவழி அதிகாரமும் இவ்வகையினதே. இவ்வகை அதிகார அமைப்பின் நியமங்கள் மீறப்படமுடியாதவை.
ஆளுமைத் தனித்துவத்தின் வழியான அதிகாரம் Charisma என்ற கருத்தாக்கத்தின் வழியானது. வழமைக்குப் புறம்பான உன்னத ஆளுமைத்திறனைக் குறித்து நிற்பது. குறிப்பிட்ட சக்தி உண்மை யானதா? ஊகிக்கப்பட்டதா? -என்பது இங்கு முக்கியம் அல்ல; ஒருவரின் ஆளுமையை வியந்து மற்றவர் அவரிடத்துத் தம்மை அர்ப்பணிப்பதன்வழி பெறப்படுகின்றது. இந்த அதிகாரம் ஏனைய அதிகாரவகைகளைவிட மேலான வல்லமை கொண்டதாக
94 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

அமையலாம். அற்புதங்கள், வெற்றிகள் போன்ற சாதனைகளின்வழி இங்கு வல்லமை மீதான நம்பிக்கை நிலைநாட்டப்படுகின்றது. இந்நிலைமைகளில் தளர்வு ஏற்படும்போது நம்பிக்கையும் அதிகார மும் தளர்வடைந்து போகலாம். இதனாற்றான் இவ்வகை அதிகாரம் நிலைபேறான ஒன்றல்ல என்கிறார் வெபர். நிலவும் ஒழுங்குக்கும் கட்டுப்படாத ஒன்று என்பதால் இது புரட்சிகரமான ஒன்றாகவும் கருதப்படலாம் என வெபர் குறிப்பிடுவதனையும் இங்கு கருத்திற் கொள்ளலாம்.
அதிகார வகைகள் பற்றிய தமது ஆய்வில், இலட்சியவகைப் பகுப்பாய்வினைக் கருவியாகப் பயன்படுத்திய போதிலும், நடைமுறையில் இம் மூவகை அதிகாரங்களும் இசைந்து காணப்படலாம் என்பதனையும் வெபர் ஏற்றுக்கொண்டார். எடுத்துக்காட்டாக, ஹிட்லரின் மேலாதிக்கத்தினைக் குறிப்பிடுவார். ஹிட்லரின் மேலாதிக்கம் கணிசமானளவு அவர் ஆளுமையின் பாற் பட்டதெனினும் ஜேர்மனிய சட்ட அமைப்புத் தந்த தர்க்கரீதியான அதிகாரமும், ஜேர்மனிய நாட்டார் மரபுவழி பெறப்பட்ட தேசியக்கூறுகளின் தாக்கமும் கூடவே கலந்துள்ளமையை உணர முடியும் என்பார் வெபர்.
தர்க்க சிந்தனையும் மதசார்பின்மையும்
முன்னைய காலத்தில் ஆளுமைத் திறன்கொண்ட வீரர்களின் தனிப்பட்ட வேண்டுதல், ஒழுக்க நியமங்கள், அருள் , அர்ப்பணிப்பு போன்றவற்றினால் ஆளப்பட்ட சமூக நிலைமை நவீன யுகத்தில் தர்க்கரீதியானதாகவும் எதிர்வு கூறக்கூடியதாகவும் அமைந்தது. இவ் விருத்திநிலையானது சமயத்தின் சமூகவியலாக விளக்கப்பட் டுள்ளது. சட்டப்புலத்திலும் மாற்றங்களை வெபர் அவதானித்தார். அறிவார்ந்த தலைவர்கள், முதியோர்களிடமிருந்து நீதி என்ற நிலைமை நவீன உலகில் தனித்துவமான நீதியமைப்புக்களிடம் என மாற்றங்காண்பதினைச் சுட்டுகிறார். அரசியல் அதிகார விருத்தியிலும் தர்க்கரீதியான சட்டவழி ஆட்சி மாற்றங்களை இனங்காட்டுகிறார். இசைகூட இதற்கு விதிவிலக்காகவில்லை. ஆதி இசைப்புலத்தின் இயல்பான, ஆற்றொழுக்கான எழுச்சிநிலைமை புதிய சிம்பனி கூட்டிசையில் திட்டமிட்ட கடுமையான விதிகளுக்குட்படுவதையும் எடுத்துக்காட்டுகிறார்.
அமைப்பும் இயங்கியலும் 95

Page 57
புரட்டஸ்தாந்து அறநெறியும் முதலாளித்துவ உயிர்ப்பும்
புரட்டஸ்தாந்து அறநெறி முதலாளித்துவத்தின் எழுச்சியும் தொடர்பான வெபரின் கட்டுரையிலே, சமய நம்பிக்கைகளைச் சமூக நிறுவனங்களுடன்தொடர்புபடுத்துகிறார். ஒத்திசைவு, வேறுபாடு என்ற இரண்டு முக்கியமான நோக்குகளில் தன் பகுப்பாய்வுகளை மேற்கொண்டார் வெபர். முதலாளித்துவம் வளர்ச்சி காண்பதற்கு மக்களிடத்துக்கொண்ட இசைவான பண்பாட்டுக் கூறுகள் அவசியமாகும். புரட்டஸ்தாந்து சமயம் குறிப்பாகக் கல்வினிசம், செய்யும் தொழிலே தெய்வம் என்பதான கருத்தியலை முன்வைத்தபோது அது இலகுவாக மக்களிடத்துச் செல்வாக்குச் செலுத்தியது.
கத்தோலிக்க சமயத்தினரைவிடச் செழிப்பான பொருளாதார வாழ்விற் புரட்டஸ்தாந்து சமயத்தினர் காணப்படுவதற்கு இதனையே அடிப்படையாகக் காண்பார் வெபர். வேறுபாடு தொடர் பான வெபரின் கோட்பாட்டுக்கு ஆதாரமாகவும் முதலாளித்துவம் வேகமாக வளர்ச்சிகண்ட புரட்டஸ்தாந்து நாடுகளையே எடுத்துக் காட்டாகக் குறிப்பிடுவார் வெபர். தனது ஆய்வினைத் தெளிவாக்கு தற்காக உலக சமயங்கள் பலவற்றினை ஒப்பியற் பகுப்பாய்வாக நோக்குவார் வெபர். இந்த வகையில் யூதாயிசம், கொன்பியூசனிசம், இந்துசமயம் ஆகியன முதலாளித்துவ வளர்ச்சிக்குத் தடையாக அமைந்ததையும் தன் ஆய்விடைஎடுத்து விளக்குவார் வெபர். பொருளாதார நடத்தையினைத் தீர்மானிக்கும் சமய நம்பிக்கைகள் பற்றி வெபர் அதிகளவு அழுத்தம் கொடுத்துவிட்டார் என்பதான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும், சமயத்தின் சமூகவியலில் வெபரின் கருத்தாக்கம் இன்னமும் செல்வாக்குச் செலுத்தக்
காணலாம்.
ஒட்டுமொத்தமாக நோக்குகையிற் சமூகவியலிற் சமூக வாழ்வின் அகவய புரிதலின் முக்கியத்துவத்தை உணர்த்தி, கூடவே மார்க்ஸ் அழுத்திய பொருளாதார விசைகளுக்கான இடத்தினையும் தந்து சமூகவியல் கோட்பாட்டின் முழுதளாவிய செல்நெறிக்கு வித்திட்டவராக வெபரின் ஆய்வனுபவங்கள் கணிப்பிடப் படுகின்றன.
96 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

(6
660L69606066f6ër 6lIgbILDIT5 &epsib Society as interaction
நவீன வாழ்வில் தனியன் பெறுமதி பணப்பெறுமதியால் மட்டுப்பட்டது; உறவுகளும் அதன்வழியே அமையும் பண்பாட்டுத் துயரம் விளைந்தது.
GgTig filolosio (George Simmel)
சமூகவியல் துறையின் தொடக்க காலச் சிந்தனையாளர்களிற் சிம்மலுக்குத் தனியான இடம்உண்டு. சமூக இடைவினைச் செயன்முறையினை நுண்நிலையில் ஆராய்ந்த தொல்சீர் சிந்தனை யாளராக இவர் போற்றப்படுகின்றார். மாக்ஸ், டுர்கைம் ஆகியோர் கருத்தியலில் வேறுபட்டபோதும் சமூகக் கட்டமைப்பு நிலைகளி லேயே தங்கள் கவனத்தைக் குவித்திருந்தனர். சமூக யதார்த்தம் பற்றிய வெபரின் பார்வை தனியன்களை மையமாகக்கொண்ட அகவயமான சமூகச் செயல் பற்றிய பகுப்பாய்வாக அமைந்திருந்தது. அதேவேளை இப்பகுப்பாய்வுகள் சமூகக்கட்டமைப்பு, பண்பாட்டு நிலைகளை மையமாகக்கொண்ட பிரதான வரலாற்று மாற்றங்களை இனங்காட்டுவதனையே நோக்காகக் கொண்டிருந்தன. சிம்மலின் ஆய்வுகளோ தனியன்களுக்கிடையிலான இடைவினைகளுக்கு முக்கியத்துவம் தந்தன; சமூகவியலின் வளர்ச்சிக்கான புதிய திசையினை இனங்காட்டின.
1858ல் பேர்ளின் நகரின் மையப்பகுதியில் ஜோர்ஜ் சிம்மல் பிறந்தார். உயர் மத்தியதர வகுப்புக் குடும்பம். இளவயதிலேயே தந்தையாரை இழந்த நிலையில், தாயார் மறுமணம் செய்ய அவருடனான உறவும் தொலைந்துபோனது. தந்தையின் நண்பர் ஒருவரின் அரவணைப்பு அவரது பொருளாதார, கல்வித் தேவைகளிற் பெருந்துணையானது.
1881இல் பேர்ளின் பல்கலைக்கழகத்திற் கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டார் சிம்மல். அதே பல்கலைக்
அமைப்பும் இயங்கியலும் 97

Page 58
கழகத்தில் 1885ல் விரிவுரையாளரானார். மாணவர்களின் விருப்பத்துக்குரிய மிகச்சிறந்த ஆசிரியராக, மிகக்குறுகிய காலத்தி லேயே புகழ்பெற்றார். பரந்த அவர் அறிவும், ஞானமும் மாணவர் களை மட்டுமன்றி, பேர்ளின் நகரின் புலமைசார் மேட்டுக் குடியின ரையும் பெரிதும் ஈர்த்தது.
தெளிந்த நல்ல அறிவு, ஞானம், தரமான ஆய்வுப் படைப்புகளின் மத்தியிலும் சிம்மலின் தொழில்சார் அங்கீகாரம் கவலை தருவதாகவே அமைந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகாலம் மாணவர்களின் கட்டணத்தில் தங்கியிருக்கும் பிரத்தியேக பேராசிரியர் பதவியே அவருக்குக் கிடைத்தது. நிதியீட்டமில்லாத கெளரவ பதவி இது.
1914 இல் பேர்ளினை விட்டு விலகி ஸ்ராஸ்பேர்க் பல்கலைக் கழகத்து (University of Strasbourg) முழுமையான பேராசிரியராகப் பதவியேற்றபோதும், போர்நிலைச் சூழலினால் அவரது பல்கலைக் கழக வாழ்வு தடைப்பட்டது.
உத்தியோகபூர்வமான அங்கீகாரங்கள் மட்டுப்பட்டபோதும் அறிவொளி பாய்ச்சிய அவர் விரிவுரைகளின்வழி பலரை அவரால் ஈர்க்க முடிந்தது. கல்வியுலகின் மிகச்சிறந்த புலமையாளர்கள் பலரின் நட்பு அவருக்கு வாய்த்தது.
வெபர், ரொனிஸ் (Tonnies) ஆகியோருடன் இணைந்து ஜேர்மன் சமூகவியற் சமூகம் தோற்றம்பெறச் சிம்மல் உதவினார்.
அந்நாட்களிற் பதவி அங்கீகாரம்பெற்ற கொம்ற் போன் றோருக்கு நிகரான பட்டத்தினைப் பெற்றிருந்தபோதும் சிம்மல் உரிய அங்கீகாரம் பெறாமற் போனதில் அவரின் யூதமத மூலம் காரணமாகலாம் எனக் கொசர் (Coser), ஸ்பைக்மன் (Spykmann) ஆகியோர் குறிப்பிடுகின்றனர். இதனைவிட அவரது ஆய்வு ஆர்வங்கள் பரந்திருந்தன. அக்காலத்து முதன்மைபெற்ற புலமை மரபுகளை ஆழப்படுத்துவனவாக இல்லாமல், மரபுகளினின்றும் விலகியவையாக தனிப்பட்ட அவரது ஆர்வங்களைப் பிரதிபலிப் பனவாகவே அமைந்தன.
98 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

இயற்கை உலகுக்கும், மனித நடத்தை - பண்பாடு சார்ந்த உலகுக்குமிடையிலான தனித்துவ வேறுபாட்டினைச் சிம்மல் தன் எழுத்துக்களிடையே துல்லியமாகவே புலப்படுத்தினார். உலக ளாவிய தீர்மான விதிகளைக்கொண்ட சமூகவியல் எனும் கொம்ற் போன்றோரின் கருத்தியலுக்கு மாறாகச் சிம்மலின் கருத்தியல் அமைந்தவாற்றினை அவர்காலத்து ஜெர்மனிய சமூகவியலாளர் களான வில்கெம் டில்த்தி (Wilhelm Dithey) போன்றோர் விரிவாக எழுதியுள்ளனர்.
நிறுவனமயப்பட்ட புலமை வாழ்வில்லாத நிலையில் உரிய சமூகப் புலமைசார் விமர்சனங்களைச் சந்திக்கும் வாய்ப்பு சிம்மலுக்குக் குறைவாகவே இருந்தது. இதனால் எதிர் கலாசார அல்லது உப பண்பாட்டு நிலையிலான ஒரு புலமை மரபினுள்ளேயே சிம்மலின் சிந்தனை வளர்ச்சிகண்டது.
சிம்மலின் சமூகச் சூழல்
சிம்மலின் காலத்துப் பேர்ளின், பல படித்தான புலமை நீரோட்டங்களைக் கொண்டிருந்தது. இவை அனைத்தினதும் தாக்கங்கள் சிம்மலின் சிந்தனையிற் செல்வாக்குச் செலுத்தின. பரு நிலையில் முதலாளித்துவப் பொருளாதாரச் சூழலில் தீவிர நகரமய மாக்கம் நடந்தது. முதலாளித்துவத் தொழிலாளி வகுப்பினர் அதிகரித்தனர். இதனைவிட நிலமானியமேட்டுக்குடி விழுமியங் களுடன் அக்காலத்து இராணுவ ஒழுக்கநிலைக் கருத்துக்களும் ஒன்றித்திருந்தன.
காலப்போக்கிற் புலமைமரபானது நடைமுறைச் சமூக, அரசியல் விவகாரங்களிலிருந்து விலகியதாய் அமைந்தது. அரசியல் ரீதியாக ஈடுபாடு கொள்ளாத இந்தத் தன்மையையே சிம்மலும் பிரதிபலித்தார். எனினும் போரின் பலமான தாக்கத்தில் ஒரு தேசியவாத நேசிப்பாளராகச் சிம்மல் பரிமளிப்பது தவிர்க்கமுடியாத தாகியது எனக் கொசர் ஒரு தடவை குறிப்பிடுகின்றமை இங்கு கவனத்திற்குரியது. எல்லைப்படுத்தப்பட்டு, பற்றின்றியிருந்த நிலை தந்த தாங்கமுடியாத உளத்திரட்சியின் விளைவாகவே இந்த மாற்றத்தினை நாம் விளங்கிக்கொள்ளமுடியும்.
அமைப்பும் இயங்கியலும் 99

Page 59
பரஸ்பர இடைவினை வழியான சமூகத்தோற்றம்
உளவியலிலிருந்தும் சமூக உளவியல், வரலாற்றின் மெய்யியல் ஆகியவற்றிலிருந்தும் வேறுபட்ட தனித்துவமான துறையாகச் சமூகவியலைச் சிம்மல் இனங்காட்டினார். தனியன்களுக்கிடை யிலான சமூக இடைவினையின் வழியாகவே சமூகம் தோற்றம் பெறுகின்றது என்பது சிம்மலின் கருத்தியல், சமூகம் என்பது வெறுமனே தனியன்களைக் கொண்ட புறவயத் தொகுதியாக அல்லாமல் பரஸ்பரம் ஒருவரில்ஒருவர் செலுத்தும் செல்வாக்கு, ஒருவரோடுஒருவர் கொண்ட உறவு என்பவற்றினடியானது என்பார் சிம்மல்.
சிம்மலின் கருத்தினை விளக்குதற்கு அன்றாட வாழ்வியல் எடுத்துக்காட்டுக்கள் பலவற்றைக் கூறமுடியும். ஒரு பஸ்தரிப்பு நிலையத்திற் காத்திருக்கும் மக்கள் தனியன்களாகவே உள்ளனர். ஆனால், பஸ் இன்று வராது என்று அறியவரும்போது அவர்களுக்குள் அந்நிலை பற்றிய விமர்சனப் பரிமாற்றமாகவும், மாற்று ஏற்பாடு பற்றிய உரையாடல்களின் வழியாகவும், சமூக இடைவினையும் அதன்வழி சமூகமும் தோற்றம்பெற்று வருகின்ற மையை இதற்கான ஓர் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம்.
தற்காலிகமாகப் பஸ்தரிப்புநிலையத்திற் சந்தித்து அமைகின்ற தற்காலிகப் பயண உறவுகளிலிருந்து நெருக்கமான நிலைபேறான நட்பு, குடும்ப உறவுகள்வரை சமூக இடைவினையின் முக்கியத்து வத்தினை உணரலாம்.
இடைவினைச் செயன்முறையின் உருவமும் உள்ளடக்கமும்
சிம்மலின் அணுகுமுறையை விளங்கிக்கொள்வதற்கு இடைவினையின் உருவம், உள்ளடக்கம் பற்றிய தெளிவு இன்றியமை யாதது. இடைவினைச் செயன்முறையின் உருவம், உள்ளடக்கம் ஆகியவற்றினை வேறுபடுத்தி நிலைநாட்டுதலிற் சிம்மல் ஆர்வம் கொண்டிருந்தார்.
சமூகவாழ்வின் உள்ளடக்கங்கள் பல. பாலியல் இயல்பூக்கங் கள், புறவயமான ஆர்வங்கள், சமய உணர்வுகள், தற்காப்பு, விளையாட்டு, உதவி சார்ந்தவை என எண்ணிறைந்த இலக்குகள்
100 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

மனிதரோடு மனிதரை இணைத்து வாழவும், எதிர்த்துத் தள்ளவும் காரணங்களாகின்றன; பிறர்மீது செல்வாக்குச் செலுத்தவும், பிறர் செல்வாக்குக்கு உட்படவும் காரணமாகின்றன.
மேற்கண்ட இலக்குகள் மட்டும் சமூகமாகிவிடுவதில்லை. மேற்கண்ட இலக்குகளினடியாக மனிதர்கள் பல்வேறு வடிவங்களி னுாடாக இடைவினை கொள்ளும்போதே சமூகம் தோற்றம் பெறுகின்றது.
மேலாண்மையும் அடங்கிப்போதலும், போட்டி, தொழிற் பிரிப்பு, கட்சிகளின் உருவாக்கம், பிரதிநிதித்துவப்படுத்தல் எனப் பல்வேறு வடிவங்களைத் தன் ஆய்வுகளின்வழி எடுத்துக்காட்டுவார் சிம்மல். அரசு, சமயக் குழு, பாடசாலை, குடும்பம், பொருளாதார அமையம் என இந்த வடிவங்கள் வெளிப்படக்கூடிய இடங்களையும் இனங்காட்டுவார்.
உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான தெளிவான ஒரு உதாரணமாக வகுப்பறையொன்றினைக் கருத்திற்கொள்ளலாம். சமூகவியல், உளவியல் ஆகிய இரண்டு பாடநெறிகளுக்கான இடைவினை வடிவம் ஒன்றானபோதிலும் பாடப்பொருண்மை வேறுபட்டமைதலைக் குறிப்பிடலாம்.
சமூகத்தன்மை
உருவத்துக்கும் உள்ளடக்கத்துக்குமான உறவு இயக்கவியல் தன்மையது. வேறுபட்ட இலக்குகளை அடைதற்கான வழிமுறை களாக இடைவினையமைந்தபோதும் இலக்குகளிலிருந்து விடுபட்ட சமூகத்தன்மையாக அவை நிலைபெறுவதும் உண்டு.
மேலாண்மையும் அடங்கிப்போதலும்
Dominance and Submission
மேலாண்மையும் அடங்கிப்போதலும் பற்றிச் சிம்மலின்
வாதமானது அவரின் நியாயமான பகுப்பாய்வுக்கான வழிமுறை
யாகவே விளக்கப்படுகின்றது. மேலெழுந்த பார்வையில் இந்த
வடிவங்கள் ஒரு வழியான மேலாண்மையிலிருந்து அடங்கியோ,
பலர்மீதான செல்வாக்காகவோ தெரியலாம். ஆயினும் பரஸ்பர
அமைப்பும் இயங்கியலும் 101

Page 60
இடைவினை நிலைமை இங்கு அருகியுள்ளதாகப் பொருள்கொள்ள முடியாது என்பார் சிம்மல். மிக அருந்தலான சந்தர்ப்பங்களிலேதான் அடங்கிப்போகின்றவர் மீது மேலாண்மை கொள்பவர்கள் சற்றேனும் கவனம் கொள்வதில்லை எனலாம். பல சந்தர்ப்பங்களில் மேலாண்மை செலுத்துபவர் மற்றவரின் தேவைகள், ஆசைகளைக் கருத்திற் கொள்பவராக உள்ளமையை எடுத்துக்காட்டுவார் சிம்மல். அவரை அடக்கி ஆள்வதற்கேனும் இதனைச் செய்ய முன்னையவர் கடப்பாடுடையவராகின்றார். இந்தளவிற்கு மேலாண்மை செலுத்துபவர்மீது அடங்கிப்போபவரின் செல்வாக்குள்ளமையை 18ஆம், 19ஆம் நூற்றாண்டுப் புலமை வரலாறு பற்றிய தன் எழுத்துக்களிடையே தெளிவுபடுத்துவார் சிம்மல்.
தனியன்களின்கீழான அடங்கிப்போதலும் குழுஅமைப்பின் கீழான அடங்கிப்போதலும்
தனியன் ஒருவரின் கீழான அடங்கிப்போதல், பன்மையான தனியன்களைக் கொண்ட குழுவின்கீழ் பணிந்து போதல் ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாட்டினையும் சிம்மல் தெளிவு படுத்துவார். தனியனின் கீழான பணிதல் என்பது, பணிந்து நடப்பவர்களை ஒரு பொது நோக்கில் ஒருங்கிணைய வைக்கும் தலைமைத்துவ வல்லமையாகக் கருதப்படுகின்றது, எனினும், பல சந்தர்ப்பங்களில் தனியன்களின் கீழான பணிதலானது தலைமைக்கு எதிரான செயற்பாட்டையும் தூண்டுவதாக அமையலாம். பொது வான இந்த எதிர்ப்புநிலை குழு ஒருமைப்பாடாகப் பரிணமிப் பதனையும் காணமுடியும். தலைமையுடன் இனங்காணல், தலைமைக்கு எதிராக குழுவாதல் ஆகிய இருநிலைமைகளின் கூட்டாகவும் யதார்த்தநிலை அமையலாம்.
எதிரான இனத்துவக் குழுக்கள் பொதுவான சமயத்தின்கீழ் ஒன்றுபடலாம். அவ்வாறே எதிரான சமூக வகுப்புக்கள் அந்நிய எதிரியை எதிர்ப்பதில் ஒன்றுபடலாம்.
சொந்தக் குழுவைச் சேர்ந்தவரின் மேலாண்மையா, பிறத்தியாரின் மேலாண்மையா என்ற விடயம் பற்றியும் சிம்மல் கருத்துச் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
அந்தஸ்தில் தாழ்நிலையில் உள்ளவர்கள் தம்குழுவைச்
சேர்ந்தவரின் மேலாண்மையை விரும்புவதில்லை. அவ்வாறே உயர்
102 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

அந்தஸ்து குழுமங்கள் தம் வகுப்பினரின் மேலாண்மையையே ஒப்பிட்டளவில் விரும்பி வேண்டுகின்றனர் என்பதனை உரிய எடுத்துக்காட்டுக்களுடன் சிம்மல் விளக்கினார். அவரது விளக்கங் கள் எங்களது சாதிய, சமூக அடுக்கமைவு சார்ந்த நிலைமைகளிற் பெரிதும் பொருந்துகின்றமையை எங்கள் புலத்து சமூகவியல் ஆய்வு அனுபவங்கள் உறுதி செய்கின்றமையையும் ஈண்டு குறிப்பிடலாம்.
ஒன்றுக்கு மேற்பட்டோரின்கீழ் இணங்கிப்போதல்: நலன்களும் நலக்கேடுகளும்
தனியனின் கீழான பணிதலிலிருந்து பன்மை நிலையான ஒன்றுக்கு மேற்பட்டோரின்கீழ் பணிதல் பலவழிகளில் வேறுபடு கின்றது. பின்னையது பெருமளவுக்குப் புறவயமானதாய் அமையக் காணலாம். இதன் விளைவாக நீதியான, சமத்துவமான அல்லது அதிகம் பாதிப்பில்லாத உறவுநிலை சாத்தியமாகலாம். அதே வேளையில் தனிப்பட்ட ஈடுபாடு குறைவாக உள்ள நிலையில் தனியன்கள் மீதான அதிகளவு சுரண்டல் நிலைமை ஏற்படலாம்.
துணைநிலையாளரிடை முரண்பாடுகள் தோன்றுமிடத்து இந்த முரணின் இரையாக மேலாண்மைக்கு முற்றிலும் விசுவாசமாய்ப்போக நிர்ப்பந்திக்கப்படலாம். இரண்டு மேலதிகாரி களின்கீழ் இருவருக்கும் விசுவாசமாயிருத்தல் என்பது முரண் பாட்டினை விளைவிக்கலாம். இந்த முரண்பாடுகளுக்கு இணங்கிப் போகின்றவர் உணர்வுநிலை சார்ந்த ஒன்றாகப் பெரும்பாலும் தன்வயப்படுத்தப்படலாம்.
சமூக உறவுகளில் பணத்தின் முக்கியத்துவம்
பெரும்பாலான நவீன சமூக உறவுகளின் தர்க்கத் தன்மையும், புறவயத்தன்மை, தொழிற்பாடு என்பன யாவும் பணத்தினாற் குறியீடாக்கம் செய்யப்படுகின்றது. பணத்தின் மெய்யியல் என்ற தலைப்பிலான தன் கட்டுரையொன்றின்வழி இந்தக் கருத்தியலை விரிவாக்கினார் சிம்மல். புறவயமான, நியமமான பெறுமதியின்வழி பரிமாற்றங்களின்போதான ஒப்பீடு சாத்தியமானது. பணத்தினால் பரிமாற்ற எல்லைகள் விரிந்தன. தங்கள் தேவைகள் அனைத்தையும் தனியன்கள் பணம் எனும் ஊடகத்தின்வழி பெறமுடிந்தது. பணப்
அமைப்பும் இயங்கியலும் 103

Page 61
பெறுமதியென்பது பொருளினதோ, சேவையினதோ தகைமை யினடியாகவோ நிர்ணயமாகின்றது. மரபுவழியாற் பரஸ்பர உரிமைகள், கடப்பாடுகளின்படியான நியமமற்ற சமூக உறவுகள்
இதனால் வலுவிழந்தன.
இந்நிலையினடியாக நவீன வாழ்வில் ஒரு தனியனின் பெறுமதியை பணப்பெறுமதியால் மதிப்பிடும் நிலைமை உருவானது. நவீன வாழ்வின் இந்நிலை பற்றிய விமர்சனங்கள் பல எழுந்த போதும், பணத்தின் அளவே வாழ்வு என்பது யதார்த்தமானது. சமூகத்தில் ஒருவரைப் பற்றிய மதிப்பீடு என்பது எவ்வளவு பணம் உழைக்கின்றார் அல்லது எவ்வளவு சேமித்துள்ளார் அல்லது எவ்வளவு பொருள்பண்டங்களைச் சேகரித்துள்ளார் என்பதாகவே அமைந்துவிடவும் காணலாம். இதேபோல இந்த பணத்தினடி யாகவே தனிப்பட்ட உறவுகள் தோற்றம் பெறுவதும், வளர்ச்சி காண்பதும் இயல்பானது.
பணமானது தனியன்களின் சுதந்திரத்தை அதிகரிப்பதாகவும் அமைந்திடக்காணலாம். அதிக பணம் உள்ளவனுக்கான தேவைகளை நிறைவுசெய்யும் எல்லையும் அதிகமானதாகவே அமைந்தது. தனியன்களின் வாழ்வானது மரபுகள், வழக் காறுகளின்வழி தீர்மானமாதற்குப் பதிலாக பணத்தினடியாக தீர்மானமானது. சாரமாகக் குறிப்பிடுவதானால் முன்னைய வரலாற்றுக் காலத்து மேலாண்மை செலுத்திய சமூகப் வடிவங்களி னதும் வேறுபட்டதாகச் சமூக வடிவங்களை நவீன வாழ்வு எமக் காக்கியது. நவீன சமூக நிலைமையின் நலன்களையும், நலக்கேடு களையும் சிம்மல் ஆழநோக்கி விளக்கினார். நவீன பண்பாடு பற்றிய சிம்மலின் இருநிலைப்பட்ட நோக்கினை அவரின் ஆய்வுகள், எழுத்துக்களின்வழி பரிசீலிப்பது பொருத்தமானது.
தனியன்களின் ஆக்கத்திறனும், பண்பாட்டு நியமங்களும்
பண்பாடு தொடர்பான சிம்மலின் இயங்கியற் பகுப்பாய்வின் வழியான புலத்துக்கும் உள்ளடக்கத்திற்குமிடையிலான தொடர் பினை இங்கு மீளக் கருத்திற்கொள்கின்றோம். பண்பாடு என்பது தனியன்களின் ஆக்கத்திறன்வழியான உற்பத்தியாகும். அதே வேளை பண்பாட்டு வடிவங்கள் ஏற்கனவே நிலைபெற்றனவாயு
104 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

முள்ளன. இந்நிலையில் அகவயமான வாழ்வியற் படிமுறைகள் தொடர்ந்து ஆக்கத்திறனான பண்பாடுகளைப் படைக்கும்வேளை புறவயமான பண்பாடு நியமங்களுடன் முரண்நிலைகளைத் தோற்று விக்கலாம். இந்த முரண் அழுத்தங்களிடையே 'பண்பாட்டின் துயரம்' (tragedy of culture) விளைகின்றது என்பார் சிம்மல். நவீன UGóTuT' L-6) (plyGóTUT(63,6T (The Conflict in Modern Culture) 6Tg)|Lo நூலில் இதனை விரிவாக விளக்குவார். நிலவும் பண்பாட்டு நியமங்களாகிய எல்லைகளைத் தாண்டிய ஆக்கதிறனான பண் பாட்டு வடிவங்களின் பாய்ச்சலின் இன்றியமையாமை இங்கு விரிவாகச் சிம்மலினால் ஆராயப்பட்டுள்ளது. கலை, மெய்யியல், இலக்கியம், சட்ட அரசியல் அமைவுகள், சமயம், விஞ்ஞானம் ஆகிய அனைத்துமுகங்களிலும் இவ்வாறான புதிய வடிவங்களின் தோற்றம் ubpólu Élo GJ (Nietzsche), GiuGJ5ITLSlašT 5916)|ň (schopenhauer)GLUTGšTp மெய்யியலாளர்களின் கருத்துகளை மேற்கோள்காட்டி தனது கருத்தியலைநிலைநாட்டுவார் சிம்மல்.
வரலாற்றின் அனைத்துக் கட்டங்களும், அனைத்து மாற்றங் களும் இந்தப் புத்தாக்கமும் அதன்போதான பேராட்டமுமாகவே தொடர்கின்றமைய்ை உரியிள்டுத்துக்காட்டுகளுடன் விளக்குவார் சிம்மல். மாற்றமடைகின்ற கலைக்கொள்கைகளிலிருந்து பொருளா தாரம் சார்ந்த கருத்தியல்கள்வரை சிம்மலின் பகுப்பாய்வின் எல்லைகளைக் காணலாம். மனிதனாற் படைக்கப்பட்ட பொருட்களே புறவயமான சந்தை விதிகளின்கீழ் படைத்த மனிதன் விருப்புகளைத் தேவைகளைத் தாண்டித் தனித்துநிற்கின்றமை பற்றிய கார்ல்மாக்ஸின் கருத்தியலை வழிமொழிவதாகச் சிம்மலின் விளக்கங்கள் அமைகின்றமை குறிப்பிடத்தக்கது. தனது சொந்த ஆக்க சக்தியிலிருந்து தனியன்கள் அந்நியப்பட்டுப் போகின்றமை சிம்மலின் எழுத்துக்களில் தெளிவுபடுத்தப்படும்.
மேற்குறித்த முரண்நிலைகள் சமூகங்களின் அளவு, சிக்கல் தன்மை, வரலாற்று நீட்சி போன்றவற்றிற்கு ஏற்ப மாறுபடுகின்ற மையையும் சிம்மல் குறிப்பிடுவார். எளிமையான சிறிய சமூகங்களில் அனைத்து அங்கத்தினர்களும் நெருங்கிய உறவினைப் பேண முடிவதுடன், ஒத்த சமூக அனுபவங்களிடை வழக்காறுகள், சமூக விழுமியங்கள், பண்பாட்டின் குறியீடுகளைப் பகிர்ந்துகொள்ளு
அமைப்பும் இயங்கியலும் 105

Page 62
தலும் சாத்தியமாகின்றது. இங்கு தனியன்களின் ஆக்கத்திறன் அதிகளவில் வளர்ச்சிபெறாமல் அல்லது ஊக்குவிக்கப்படாமற் போகலாம். எனினும், சமூகப் பயனான புத்தாக்கங்கள் நிகழ்கையில் அவை உடனடியாக நிலவும் பண்பாட்டுத் தளத்தினுள் ஒன்றிணைக் கப்படும் வாய்ப்பும், அனைவராலும் புரிந்துகொள்ளப்படுதலும் அதிகமாய் உள்ளன என்பார் சிம்மல்.
அதேவேளை சமூகம் விருத்தியடைந்து சிக்கலானதாகும் போது உறவுகளின் நெருக்கமும், ஒத்ததன்மையும் பேணப்பட முடியாமற் போகின்றன. உடனே அதிகரித்த குடித்தொகையின் விளைவாக அதிகளவானோர் பண்பாட்டிற்கான தம் ஆக்கப் பங்களிப்புகளை வழங்கும் நிலைமையும் உருவாகின்றது. சமூகம் பன்முகப்பட்டதால் மாறும் நிலையில் நிகழும் சிறப்பான மாற்றங்கள் அனைவரும் அறியமுடியாததாக, அறிந்தாலும் புரிந்திடமுடியாத தாக அமைந்துவிடுகின்றமையும் சிம்மலினாற் சுட்டிக் காட்டப்படும்.
106 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

7
u6řTLTLS LD50TůLITTň65ČT 8uš56řLib Dynamics of Cultural Mentalities
புலனுணர்வின் இன்பமே எல்லை என்றவாறு நியமங்கள், விழுமியங்களைத் தொலைக்கும் சமூகங்கள் நெருக்கடிக்குள் துயரப்படு கின்றன.
Lýsibýýủo 6NaFT GJITäófsö (Pitirim Sorokin)
பண்பாட்டு மனப்பாங்கின் இயக்கவியல் பற்றிய ஆய்வு அனுபவங்களினால் சமூகவியற் கோட்பாட்டு வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்த பிற்றிறிம் சொரோக்கின், 1889ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் திகதி ரஷ்ய நாட்டின் ஒலக்டோ மாநிலத்திற் பிறந்தார். தந்தையார் ஒரு சிற்பி. இளவயதிலேயே தாயை இழந்த துயருடன், குடிகாரத் தந்தையினால் வீட்டைவிட்டுத் துரத்தப்பட்ட அவலத்தை யும் அனுபவிக்க நேர்ந்தது.
குலைந்த குடும்பச் சூழலினாற் பதினான்காவது வயதிலேயே பள்ளிக்கூடத்திற் காலடிவைக்கும் துர்ப்பாக்கியம். வறிய மாணவர்களுக்கான நிதி உதவியுடன் ஆர்வமாகக் கல்வியைத் தொடர்ந்தார் சொரோக்கின். பல்வேறு நூல்களையும், செய்தித் தாள்களையும் தேடிப்படித்த சொரோக்கின், ரஷ்ய நாட்டில் தம் மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களையிட்டுப் பெரிதும் கவலை கொண்டார். சமூகப்படிமலர்ச்சி, சமூகப்புரட்சி எனும் இரு தளங்களிலும் இவரது சிந்தனை வீச்சுக்களைச் சமூகத்துக்காக்கிய வண்ணம், மக்கள் பொதுவுடைமைப் புரட்சிக் கட்சியில் இணைந்து கொண்டார். விவசாயிகளின் மத்தியில் உரையாடிய வேளையில் 1906 இல் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். சிறைச்சாலை யையும் கல்விச்சாலையாக்கி அங்கே கால்மார்க்ஸ், லெனின் போன்ற அறிஞர்களின் ஆக்கங்களை ஆழக் கற்றார் சொரோக்கின் சிறையில் தாம் சந்தித்த அரசியல் சார்ந்த குற்றவாளிகள் பற்றிய அனுபவக்
அமைப்பும் இயங்கியலும் 107

Page 63
குறிப்புகளிலிருந்து பின்நாளில் பல நல்ல ஆய்வுரைகளை அவரால் நிகழ்த்த முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழகக் கல்விக்கான ஆர்வம் மேலிட இரவுப் பாடசாலைகளிற் சேர்ந்து பாடங்களைத் தயார்ப்படுத்தினார் சொரோக்கின். சிறுவர்களுக்குப் பாடம்சொல்லிக் கொடுத்து வருகின்ற வருமானத்தில் தன் இருப்பிடம், தங்கைக்கான கல்விச் செலவுகளையும் சமாளித்து வந்தார். இக்காலத்திற் பேராசிரியர் ஐகோவ் அவர்களின் அறிமுகமும் அன்பும் கிடைக்கப்பெற்றார். அவரது உதவியுடன் பல்கலைக்கழக அனுமதித் தேர்வுக்கான நூல்களை வாங்கிப் படித்து உளவியல்சார் நரம்பியல் கற்கை நெறியில் இணைந்து கொண்டார். பல்கலைக்கழகத்தில் தனித்துவத் திறமைகளால் ஈர்க்கப்பட்ட சொரோக்கினின் சமூகவியற் பேராசிரியர்கள் கோவ்லோவ்ஸ்கி, றொபேட்டி ஆகியோரின் நட்புக்குரியவரானார். சமூகப்புரட்சி பற்றிய கருத்துக்களாற் பல மாணவர்களையும், ஆசிரியர்களையும் தன்வசமாக்கிக்கொண்டார்.
மாணவராக இருந்த காலத்திலேயே சமூகவியல், மானுடவியல், பொருளியல் சார்ந்த புகழ்பெற்ற ஆய்வுச் சஞ்சிகைகளில் இவரது எழுத்துக்கள் பிரசுரமாயின. இக்காலத்தில் இவர் எழுதிய குற்றமும் தண்டனையும், (Crime and Punishment), சேவையும் வெகுமதியும் (Service and Reward) எனும் கட்டுரைகள் பலரது கருத்தையும் ஈர்த்தன. பல்கலைக்கழகத்திற் குற்றவியலும் தண்டனையும் எனும் தலைப்பில் இவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையும் பெரும் அங்கீகாரத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அனைத்து ரஷ்ய விவசாயிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் வெற்றிகண்ட சொரோக்கின் இதற்கென ஒரு மாநாட்டையும் கூட்டியிருந்தார். 1917இல் 28ஆம் வயதில் தன்னோடு பல்கலைக்கழகத்திற் கூடப்படித்த எலினா பெட்ரோன்வா UTJfašTGiu6 (Elena Patonva Baratinsky)225 Sq5LD603Tub Gguůg கொண்டார்.
இக் காலத்துப் பிரதமராக இருந்த கொன்ஸ்கியின் செயலாளராகப் பணிபுரியும் வாய்ப்பும் ஏற்பட்டது. பின்னர் அரசு
108 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

மாற்றம் ஏற்பட்டபொழுது புரட்சிக்கு எதிரானவர் எனும் எண்ணத்தில் இவரைக் கைதுசெய்ய முயன்றது அரசு. சிறிது காலம் தலை மறைவு வாழ்வின்பின் தாமாகவே சரணடைந்தார் சொரோக்கின் மரண தண்டனையென உறுதியாக நம்பப்பட்ட போதும் லெனின் அரசில் இவரை அறிந்த, புரிந்த பலர் இருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பீட்டஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்தார். சமூக அமைப்புக்கள் (Systems of Society) எனும் ஆய்வு கட்டுரையினைச் சமர்ப்பித்து 1927 இல் கலாநிதிப் பட்டம் பெற்றார். இதே பல்கலைக் கழகத்திற் சமூகவியல்துறைத் தலைவராகும் வாய்ப்பினைப் பெற்றார். இக்காலத்துச் சமூகச் சூழமைவிற் காணப்பட்ட நெருக்கடிகளை ஆழ ஆராய்ந்து ஆவணப்படுத்தினார் சொரோக்கின். இந்த வகையில் 1922 இல் இவர் எழுதிய மனித சமூக QITposi) Lil' LGofusiast GadioIT5(5 (The Influence of Hunger on Human Society Life) எனும் நூல் குறிப்பிடத்தக்கது.
மீளவும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில், பீட்டர்ஸ் பேக் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறியதுடன் நாட்டைவிட்டும் புலம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்டார் சொரோக்கின், செக்கோசிலாவாக்கியாவில் அரசியல் தஞ்சம் புகுந்து, பின் அங்கிருந்து அமெரிக்கா சேர்ந்தார். 1924இல் மீளவும் தன் புலமைப்பணியை மினசோட்டா பல்கலைக்கழகத்தில் அதிதிப் பேராசிரியராகத் தொடங்கினார். இக்காலப்பகுதியில் இவரது மனைவியும் அப்பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்ட ஆய்வினை நிறைவு செய்தார். 1925 இல் ஹம்லின் பல்கலைக்கழகத்திற் பேராசிரிய பதவியைப் பெற்றுப் பலநூல்களின் ஆசிரியரானார். 1927 இல் வெளியாகிய சமூக அசைவு (Social Mobility), நிகழ்கால சமூகவியற் கோட்பாடுகள் ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. கிராமிய - நகர சமூகவியல் பற்றிய இவரது பெறுமதிமிக்க நூல் 1928 இல் வெளியானது.
இந்த நூல்கள் தந்த புகழின்வழி, புகழ்பெற்ற ஹவாட் பல்கலைக்கழகத்தில் (Harvard University) சமூகவியல்துறையின் பேராசிரியர் பதவி இவர் வசமானது. சமூகவியலுக்கான இவரது
அமைப்பும் இயங்கியலும் 109

Page 64
அர்ப்பணிப்பான பங்களிப்பின் சின்னமாக ஹாவாட்டில் இவர் தொடக்கிய புத்தாக்கத் தற்கொடைக்கான நிலையம் (Center for Creative Altruism) இன்றுவரை நிலைபெற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.
ஹவாட் பல்கலைக்கழகத்திற் சொரோக்கின் பணியாற்றிய வேளையிற் பொருளியற் பேராசிரியராக விளங்கிய ரல்கொட் பார்சனின் (Talcott Parsons) நட்பும் இணை ஆய்வுக்கான வாய்ப்பும் ஏற்பட்டது. ரொபேட் மேட்டன் (Robert Merton), கிங்ஸ்லி டேவிஸ் (Kingsely Davis), 66ioGuelps (Wilbert Moore) GuTGöTGOTOBL60TT60T உறவும் வாய்த்தது. சொரொக்கினின் கருத்தியலை கல்வியுல கெங்கணும் அறியத் தருவதில் இவர்கள் பெருந்துணையாயினர்.1940 3,6ff) Jepsu6óTUIT' (6 guid, Giugi) (Social and Cultural Dynamics) எனும் நூல் தொகுதிகளாக, பல்கலைக்கழகத்தின் துணையுடன் வெளியாகின.
மேலை உலக வரலாற்றிற் புராதன கிரேக்க காலமுதல் இருபதாம் நூற்றாண்டுவரை ஒவ்வொரு கால கட்டங்களிலும் மேலாண்மை செலுத்திய பண்பாட்டு மனோபாவங்கள் பற்றிய
விரிவான ஆய்வாக இவை அமைந்தன.
பத்து ஆண்டுகள் ஹவாட் பல்கலைக்கழகச் சமூகவியற் துறையிற் பணியாற்றி அந்தப் பதவியிலிருந்து விலகிய சொரோக்கின் தொடர்ந்தும் பல நூல்களை எழுதிச் சமூகவியல் அறிவுத் திரளுக்காக்கினார்.
6 Tril 5,6it 5TG 55 Gbcbddy,Lq(Crisis of our Age), 1941
O gurfaol. LD6fgg)) to Jeup5(pub (Men and Society in Clamity), 1942
O Logofg, gaOTiggit Légit 5ft DIT600TL (The reconstraction of Humanity),
1948
0 பொதுநல அன்பும் நடத்தையும் பற்றிய ஆய்வு (Exploration in
Altruistic love and Behavior), 1980
110 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

O Gop(555.45|TG) 556öT Feup5 (optsufugi) (Social Philosophies of an
age of crisis), 1950
என வெளிவந்த சொரொக்கினின் நூல்கள், புதிய பல
உள்ளடக்கங்களைச் சமூகவியலுக்காக்கியது.
பண்பாட்டுக் கூறுகளிடையேயான உறவின் வகைகள்
பண்பாட்டினை இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மக்கள் உணர்ந்து செயற்படும் கட்டமைப்பாக வரைவிலக்கணம் செய்வார் சொரோக்கின். பண்பாட்டின் பல்வேறு கூறுகளுக் கிடையிலான உறவானது நான்கு வகைகளாய் அமையலாம் என்பார் சொரோக்கின். 1. இடஅமைவுசார்ந்த ஒழுங்கமைப்பு 2. புறக்காரணிகளாலான இணைவு 3. காரணம் பற்றிய செயற்பாட்டு ஒன்றிணைவு 4. அகவய இணைவு
என இவற்றினைத் தகுந்த எடுத்துக்காட்டுக்களுடன் விளக்குவார்.
குறித்த ஒரு இடத்திற் பல பண்பாட்டுப் பொருட்கள் இருப்பதற்கு அவை இருக்கும் இடம் காரணமாகின்றமையை ஒரு குப்பைத் தொட்டியிற் பல்வேறு பொருட்கள் ஒருங்குசேர இருத்தலுக்கு ஒப்பிடுவார்.
பண்பாட்டுமனப்பIங்கின் வகைகள்
ஒன்றிணைந்த பண்பாட்டு அமைப்புப் பற்றிய புரிதலுக்கான திறவுகோலாகப் பண்பாட்டு மனப்பாங்கு உள்ளது. ஒரு சமூக பண்பாட்டுத் தொகுதிக்கான அடிப்படையாக உலகம் பற்றிய பார்வை அமைதலை இந்த எண்ணக்கருவானது உணர்த்தி
நிற்கின்றது.
அமைப்பும் இயங்கியலும் 111

Page 65
புலன்களின்வழி உணரப்படுகின்ற பொருள்சார் உலகப் பார்வை, புலன்களைக் கடந்த பொருள்சார் உலகுக்கு அப்பாற்பட்ட தான அனுபவப் பார்வை, இந்த இருநிலைக்குமிடையிலான பொருள்சார் - பொருள்சாரா உலகங்களை உள்ளடக்கிய அனுபவப் பார்வை எனப் பண்பாடு பற்றிய அனுபவப்பரப்பின்நிகழ்தகவினைச்
சுட்டுவார் சொரொக்கின்.
பண்பாட்டின் அக - புறப் பண்புகள் பற்றிய தன் பகுப்பாய்விடை, மனித இயல்பு, மனித அடிப்படைத் தேவைகளின் திருப்திநிலை பற்றிய சில வினாக்களையும் சொரொக்கின் எழுப்புவார். மனித தேவைகள் உடல் சார்ந்தவையா, ஆன்மீகம் சார்ந்தவையா? இவை எந்தெந்த அளவுகளில் நிறைவு செய்யப்பட வேண்டியன? மனித தேவைகளின் பூாத்தியின்போது சுயம் மாற்றியமைக்கப்படுகின்றதா. (இதன் வழி தேவை குறைகின்றது) அல்லது சூழல் மாற்றியமைக்கப்படுகின்றதா (இதன் வழி அவர்கள் திருப்தி நிலையை அடைகின்றனர்) என்ற வினாக்களினூடாகப் பண்பாட்டு மனப்பாங்குகளை இனங்காட்டுவார் சொரோக்கின். இந்தப் பகுப்பாய்வின் அடிப்படையில், மூன்று பண்பாட்டு மனப்பாங்குகளையும், பல உபவகைகளையும் இனங்காட்டுவார்.
1. கருத்துநிலைப்பண்பாடு
புலன்களாற் புரிந்துகொள்ள முடியாத, பொருள் சாராப்
பண்பாட்டு நிலையில் உலகம் ஒரு மாயையாய், தற்காலிகமானதாய் உணரப்படுகின்றது. இறுதி யதார்த்தமென்பது கடவுளின் உலகமாய் அல்லது முத்தி நிலையாக அல்லது பொருள்சாரா இயல்நிலை கடந்த நிரந்தரமாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையில் இயலுமான அளவுக்கு மனிதப் பொருள்சார் தேவைகள் குறுக்கப்பட்டு இயல்நிலை கடந்த வாழ்தலுக்கான தயார்ப்படுத்தல் நிகழ்கின்றது. அதேவேளை இவ்வுலகப் பொருள்சார் வாழ்வினை மறுஉலக வாழ்வுடன் இசைவாக்கம்
செய்யும் உருமாற்றத்தினையும் இலக்காகக் கொள்கின்றது.
112 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

2. Loogirafrirl IodorLITG (Sensate Cultural)
எங்கள் புலன்களால் அனுபவிக்கப்படும் பொருள்சார் உலகை மட்டும் யதார்த்தமாகக் காணும் பிரஜையாகப் புலன்சார் பண்பாடு விளக்கப்படுகின்றது. புலன் கடந்த உயர் விளக்கங்களை இது மறுக்கின்றது.
புலன்சார் பண்பாட்டு நிலையிலும் செயல் தன்மைமிக்கது, செயல் தன்மையற்றது என்ற நிலைப்பாடுகளை இனங்காட்டும் சொரொக்கின் செயல்தன்மை மனிதப் பொருள்சார் தேவைகளைக் கொண்ட நிலையில், கூடுமான அளவிற் பூர்த்தி செய்வதையே இலக்காகக் கொண்டது. மனிதத் திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் ஏற்றவகையிற் பெளதிக உலகின் வளங்களை உருமாற்றம் செய்வதே இதன் செயற்பாடாகின்றது. தொழினுட்ப வளர்ச்சி, அறிவியல் விருத்தி, மருத்துவ முன்னேற்றம் என்பன இதன் குறிப்பான கவன எல்லைகளாகின்றன.
செயல்தன்மையற்ற புலன்சார் பண்பாடானது புலன்களின் இன்பமே வாழ்வின் எல்லையெனக் கொள்கின்றது. நாளை இறப்பதன்முன் உண், குடி, மணம்முடி' என்பதான மகுடவாசகத்து டன் நீண்டகால இலக்குகள் ஏதுமின்றியிருக்கின்ற இந்நிலையைக் குருவிச்சையான சுரண்டல் நிலை என விமர்சிப்பார் சொரோக்கின்.
இந்த இருநிலைகளுக்கும் அப்பால் புலன்களின் இன்பத்துக்கு இலட்சிய ரீதியான தர்க்க நியாயப்பாடுகளை வழங்கி அதனை புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட விழுமிய நிலையுடன் இணைத்து விளக்குகின்ற நம்பிக்கையற்ற புலன்சர்ர் பண்பாட்டு நிலைமை யையும் சொரோக்கின் எடுத்துக்காட்டுவார்.
3. &cts Booooough esoobg, LIOrior Ir(6856ir (Mixed Cultures)
கருத்துரிமைப் பண்பாடும், புலன்சார் பண்பாடும் கலந்த ஒரு நிலையாக இதனை இனங்காட்டுவார் சொரோக்கின். கலப்புப் பண்பாட்டு மனப்பாங்கினுள்ளும் இரண்டு வகைகள் உள்ளதாகக் குறிப்பிடுவார் சொரோக்கின்.
அமைப்பும் இயங்கியலும் 113

Page 66
1) கருத்துநிலை சார்ந்த, புலனுணர்வு சார்ந்ததுமான மனப்பாங்கு களின் கலப்புநிலை: இங்கு இரண்டையும் தெளிவான வரையறையுடன் காணமுடியும். இவை இரண்டும் ஒழுங்கமைக் கப்பட்ட முறையிலும், தர்க்க அடிப்படையிலும் தொடர்பு படுத்தப்பட்டிருக்கும்.
2) கருத்தியற் போலியான பண்பாடு: இந்த மனப்பாங்கானது புலனுணர்ந்த அணுகுமுறையின் மேலாதிக்கத்திற்குட்பட்டி ருக்கும். ஆனாலும் கருத்துநிலைக் கூறுகள் சமாந்தரமாக, அதேவேளை எதிர்நிலை நோக்குடன் அமைந்திருக்கும். முன்னைய வகைபோல அன்றி இங்கு இரு எதிரெதிரான நோக்குகளும் ஒழுங்கமைப்பான முறையில் ஒன்றிணைக்கப்படா மல், இருவேறு தளங்களில் அடுக்கடுக்காய்க் காணப்படும்.
எண்ணிறைந்த பொருள்சார் காவிகளின்வழி இந்தப் பண்பாட்டு மனப்பாங்குகள் புறவயமாக்கப்பட்டு, சமூக நியமங் களையும் தனியன்களின் நடத்தைகளையும் ஆட்சி செய்கின்றன.
ஒவியம், சிற்பம், இசை, கட்டடக் கலை போன்ற பல்வேறு கலைவடிவங்களினூடாகக் கருத்துநிலைப் பண்பாட்டு மனப்பாங் கானது குறியீட்டு நிலையில் வெளிப்படுத்தப்படுகின்ற மையை விரிவாக ஆராய்ந்தார் சொரோக்கின். மத்திய காலத்துக்குரிய பெரும்பாலான சமயம் சார்ந்த ஒவியங்கள், அனுபவப்பொருள் கடந்த குறியீட்டு வெளிப்பாடுகளாக அமைந்தன. அதேவேளை ஏனைய இவ்வுலகிற்கேயான புலனுணர்வு சார்ந்த கலைப்படைப்புக் களுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக மனப்பதிவுவாத (Impressonistic) ஒவியங்களைக் குறிப்பிடுவார் சொரோக்கின்,
மேற்காட்டியவாறு கலைப்படைப்புக்கள் மட்டுமன்றி ஏனைய சமூக நிறுவனங்களின் வழியாகவும் மேலாண்மைகொண்ட பண்பாட்டுப் பொருண்மைகள் வெளிப்படுத்தப்படுகின்றமையை குடும்பம், பொருளாதாரம், அரசியல் ஆகிய நிறுவனங்களை நியமப்படுத்தும் பண்பாட்டு மனப்பாங்குகளை இனங்காட்டுவதன் வழி தெளிவுபடுத்துவார் சொரோக்கின் பண்பாட்டு அர்த்தங்கள் -
114 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

விழுமியங்கள் - நியமங்கள் என்பவற்றினை மையமாகக்கொண்டு சமூகக் குழுக்கள் கட்டமைக்கப்படுகின்றமையை விளக்கிய சொரோக்கின், சமூகக் குழுக்களை இதயத்துக்கும் அதனைக் கட்டமைக்கும் விழுமிய - நியமங்களை உயிருக்கும் ஒப்பிடுவதன் மூலம் இவற்றின் பிரிக்கமுடியாத நிலைமையினை உணர்த்துவார் சொரோக்கின்.
சொரோக்கினது பண்பாட்டு மனப்பாங்கு பற்றிய கருத்தாக்கத்தினை, கொம்ரின் மனித அறிவு விருத்தியின் படிநிலை களுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் நோக்கமுடியும் என விமர்சகர் கள் குறிப்பிடுவர்.
இருவரது கருத்தியல்களும் பண்பாட்டு மனப்பாங்குகளை மையமாகக் கொண்டுள்ளன. உலகுபற்றிய நோக்கின்வழி சமூக - பண்பாட்டு யதார்த்தத்தினை நிர்ணயிப்பனவாகவும் உள்ளன. மேற்கண்டவாறு ஒப்புமையுள்ள போதும், கொம்றின் நோக்கில் மனித வரலாறானது நேர்கோட்டிலான முன்னேற்றமாகின்றது. விஞ்ஞானத்தின் விருத்தியினை அடிப்படையாகக்கொண்டு எதிர்காலத்தை நோக்கி இம்மாற்றம் நிகழ்கின்றது. சொரோக்கி னைப் பொறுத்தவரை மூன்றுவகையாக அவர் இனங்காட்டும் பண்பாட்டு மனப்பாங்குகளும் சுழற்சிப் பாங்கில் நிகழ்கின்றன.
சொரோக்கினின் இந்தக் கருத்துநிலை, புராதன கிரேக்க காலமுதல் இருபதாம் நூற்றாண்டு கால வகையிற் பல்வேறு கால கட்டங்களிலும் மேலாண்மை செலுத்திய மனப்பாங்கு மாற்றங் களைத் தகுந்த எடுத்துக்காட்டுகளினடியாக விளக்குவார்.
சுழலாகப் பண்பாட்டு மனப்பாங்குகள் ஏற்ற இறக்கம் காணுதற்கான அடிப்படைகளை ஆராய்ந்த சொரோக்கின் உள்ளார்ந்த மாற்றம் (immanentchange), எல்லைகள் (limits) எனும் தன் கொள்கையினடியாக விளக்கமும் தருவார்.
ஒரு சமூகப் பண்பாட்டுத் தொகுதியில் நிகழும் மாற்றமானது அதன் உள்ளார்ந்த காரணிகளாலேயே நிகழ்கின்றன. புறக்காரணி
அமைப்பும் இயங்கியலும் 115

Page 67
கள் அவற்றினைத் துரிதப்படுத்தலாம்; அன்றிப் பின்னோக்கி
நகர்த்தலாம்.
சமூகப் பண்பாட்டுத் தொகுதிகள் தொடர்ந்து வாழும் இயங்கும் தொகுதிகளாகும். அவற்றினால் நிலையாக இருத்தல் என்பது இயலாது. சமூகங்களின் உள்ளார்ந்த வல்லமைகளின்வழி, தனியன்களின் ஆக்கத்திறன் செயற்பாடுகளின்வழி தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்கின்றன. சமூகப் பண்பாட்டு அமைப்பின் அனைத்துப் பகுதிகளும் ஒரே வேகத்தில் மாற்றமடைவதில்லை. மற்றப்படி முறையில் அனைத்து பகுதிகளும் தம் உச்சவிருத்தி முழுமையை அடைந்தபின் மாற்றுப் பண்பாட்டு மனப்பாங்குகள்
மேலாண்மைக்குள்ளாகின்றன.
ஒரே திசையில் எல்லையில்லாமற் சமூகப் பண்பாட்டுத் தொகுதிகள் தொடரமுடியாமையையே சொரோக்கின் 'எல்லை' கோட்பாடு குறித்து நிற்கின்றது. குறித்ததொரு பண்பாட்டு மனப்பாங்கு உச்சநிலைவரை விருத்தியடைந்ததும் மாற்றத்தின் திசை மறுதலையாகின்றது. எதிரான பண்பாட்டு மனப்பாங்கானது மீள விருத்தியடைந்து அதன் உச்சமட்டத்தையடைகின்றது. இதன்பின் மீளவும் மறுதலையான திசையில் மாற்றம் நடந்து தொடங்கிய நிலைக்கு மீள்கின்றது.
மேலை நாகரிகங்களின் வீழ்ச்சிகளுக்குப் பின்னால் புலன்சார் பண்பாட்டு மனப்பாங்குகளின் விருத்தியும், அவற்றின் விளைவான ஒழுங்குநிலை சார்ந்த ஒருமைப்பாடு குலைந்து போவதும் செரோக்கினால் தெளிவுபடுத்தப்பட்டது.
1) புலன்சார் விழுமியங்களின் மேலாண்மையில், உண்மைக்கும் பொய்க்கும், சரிக்கும் பிழைக்கும், அழகுக்கும் அசிங்கத்திற்கும், எதிரான விழுமியங்களும் நேரான விழுமியங்களுக்கு மிடையிலான எல்லைக்கோடுகள் அதிகரிக்கின்றன.
2) குரூரமான விசைகளின் வழி தனியன்களுக்கும், சமூகக் குழுக்களுக்குமிடையிலான உறவுகளை நிர்ப்பந்தப்படுத்தும்
116| சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

நிலைமைகளின் போது பெருவல்லமையே நெறிமுறை யென்றாகிறது. விளைவாக போர், புரட்சி, கிளர்ச்சி, குழப்பங்கள், குரூரங்கள் என்பனவே மிஞ்சுகின்றன. மனிதனுக்கு எதிராக மனிதன், இனங்களுக்கு எதிராக இனங்கள், தேசங்களுக்கு எதிராகத் தேசங்கள் என முரண்நிலை விளைகின்றது.
ஒழுக்க, உள, சமூக, ஒருமைப்பாட்டு மேலாண்மை அதிகரிக்கும்போது ஆக்கத்திறனான புலன்சார் மனப்பாங்கு நலிவடைகின்றது. இதன்வழி பொருள்சார் விழுமியங்கள் வீழ்ச்சியடைகின்றது. இந்நிலை வாழ்க்கைப் பாதுகாப்புப் பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றது. தற்கொலை, உளநோய்கள், குற்றம் ஆகியனவும் அதிகரிக்கின்றன.
இந்தநெறியால் மக்கள் இருவேறு பிரிவினராகின்றனர் என்பார் சொரோக்கின். புலன்சார் இன்பத்தை முதன்மைப்படுத்தி நாளை இறப்பதன்முன் உண், குடி, காதல் செய்' என்றவாறு ஒரு பிரிவினரும் புலன்சார் விழுமியங்களுக்கு எதிராக துறவு நிலையை முதன்மைப்படுத்துவோருமாக, இந்த இரு பிரிவினரையும் இனங்காட்டுவார் சொரோக்கின்.
தனிமனித ஆளுமை
ஆளுமை பற்றிய சொரோக்கின் தன் எழுத்துக்களில் மிகவும் விரிவாகவும் நுண்ணியதாகவும் விளக்கினார். சமூகப் பண்பாட்டுப் புலத்தை வெளிப்படுத்துவதாக அமையும் ஆளுமைக் கூறுகள் தனியன்களின் தோற்றத்திற்கு முன்னமே தோற்றம்பெற்று விடு கின்றன. உயிரிலுள்ள உடலின் குணநலன்களைச் சமூகப் பண்பாட்டு உலகம் தீர்மானிப்பதுடன் இறப்புவரை தொடர்கின்றது எனச் சொரோக்கின் குறிப்பிடுவார்.
Fepas 31(Bissolno (Social stratification)
சமூக அடுக்கமைவு பற்றிய சொரோக்கின் ஆய்வுகள் பெரு மதிப்பைப் பெறுவன. சமூக அடுக்கமைவு என்பதனைச் சமூகக் குழுக்களின் நிலைத்த பண்பாகக் குறிப்பிடும் சொரோக்கின்,
அமைப்பும் இயங்கியலும் 117

Page 68
குறித்தவொரு சமூகப்புலத்து வாழும் மக்களை வகுப்புகளாற் பிரித்து, தர அடிப்படையில் அடுக்கமைவாக்கி நோக்குதலே சமூக அடுக்கமைவு என வரைவிலக்கணமும் தருவார்.
சமூக அடுக்கமைவில்
1. பொருளாதாரம் சார் அடுக்கமைவு 2. அரசியல் சார் அடுக்கமைவு 3. தொழில்நிலைசார் அடுக்கமைவு எனப் பிரிவுகளையும் இனங்
காட்டுவார்.
அனைத்துச் சமூகங்களிலும் அடுக்கமைவு உள்ளது என்பது சொரோக்கினின் வாதமாகும். பொதுவுடைமைச் சமூகங்களும்கூட இதற்குவிதிவிலக்கில்லையென்பார். இந்த அடுக்கமைவுகள் நிலையான செயல் அல்ல; ஒரு காலகட்டத்து அடுக்கமைவில் மேனிலையில் இருப்பவர்கள் இன்னொருவேளை தாழ்நிலையை அடையலாம். இத்தகு அடுக்கமைவு ஏற்ற இறக்கங்கள் குழு நிலையிலோ,தேச மட்டத்திலே நிகழலாம் என்பார் சொரோக்கின்.
afelpes soofo (Social Mobility)
ஒரு சமூக நிலையில் இன்னொரு நிலைக்கு அசைகின்றமை அனைத்துச் சமூகங்களிலும் நடக்கின்றது; இந்த அசைவானது சிலசமூகங்களில் அதிகமாகத் காணப்படலாம். சிலவற்றிலோ அடுக்குகள் இறுக்கமாய் அசைவுக்குத் தடையாக விளங்கலாம்.
சில சமூக நிறுவமைப்புக்களில் தனிமனிதர்கள் ஒரு அடுக்கிலிருந்து இன்னொன்றுக்கு மாறுதலுக்கான வாய்ப்புக்கள் அதிகமாயுள்ளன. இராணுவ அமைப்புக்களிற் போர்க்காலங்களில் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வுகளின் வழி ஒரு அடுக்கிலிருந்து மற்ற அடுக்குக்கான அசைவு சாத்தியமாகின்றமையை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுவார்.
இத்தகைய சமூக அசைவானது நன்மைகளைத் தரும் அதே வேளையில், தீமைகளுக்கும் காலாகலாம். தனிமனித முயற்சியின்
118 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

வழியான மேல்நோக்கிய அசைவானது அத்தனியன் சார்ந்த குழுவின் அமைப்பிலும் உயர்வினைத் தரலாம். அதேவேளை சமூகத்திலி ருந்து ஒதுக்கப்படுதல், சுற்றம் தொலைந்த கவலை என்னும் பாதக நிலைமைகளும் ஏற்படலாம் எனச் சொரோக்கின் விளக்குவார்.
அண்மித்த எதிர்காலம் பற்றிய அவநம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும், நீண்ட காலஓட்டத்திற் புதிய நம்பிக்கைக்குரிய காலம் மலரும் எனும் நம்பிக்கையினைச் சொரோக்கின் வெளிப் படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
‘புலனுணர்வின் இன்பமே வாழ்வின் எல்லை' என்றவாறு சமூக நிய்மங்கள், விழுமியங்களைத் தொலைத்து, தனிமனிதர்களும், சமூகக்குழுக்கள், தேசங்களும் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி கள் பற்றிய சொரோக்கினின் புலமைத் தரிசனங்கள் மேலைதேசங் களை மையமாகக் கொண்டன. எனினும் அவரின் தீர்க்கதரிசனம் இன்று உலக முழுமைக்கும் பயன்படுகின்றது. போர் வழியான அழிவுகள், மனித அவலங்கள், பெருகும் அனோமி, அர்த்தம் அறியா வாழ்வு நிலைகள் என இன்றைய உலககெங்கணும் பெருகும் துயர நிலைகளைப் புரிந்துகொள்ள சொரோக்கினின் சமூகவியற் சிந்தனைகள் பெருந்துணையாகும் என விமர்சகர்கள் குறிப்பிடுவர்.
அமைப்பும் இயங்கியலும் 119

Page 69
மூலநூல்களின் பட்டியல்
Comte, Auguste
1830-1842 The Positive Philosophy. New York: AMS Press.
1974
1851-1854
1976
System of Positive Philosophy, 4 vols. New York: Burt Franklin
Durkheim, Emile
1893/1960
1893/1964
1895/1964
1897/1951
1900/1973
1912-1965
Montesquieu and Rousseau: Forerunners of Sociology. Ann Arbour: University of Michigan Press.
The Division of Labor in Society, New York: Free Press.
The Rules of Sociological Method. New York: Free Press.
Suicide. New York: Free Press.
'Sociology in France in the Nineteenth Century." In R. Bellah (ed.), Emile Durkheim: On Morality and
Society, Chicago: University of Chicago Press:3-32
The Elementary Forms of Religious Life. New York: Free PreSS.
120 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

1913-1914 Pragmatism and Sociology, Cambridge: Cambridge 1983 University Press.
1914/1973 "The Dualism of Human Nature and its Social Condition.' In R.Bellah (ed.), Emile Durkheim: On Morality and Society. Chicago: University of Chicago
PreSS:149-163
1922/1956 Education and Sociology. New York: Free Press.
1928/1962 Socialism. New York: Collier Books.
1957 Professional Ethics and Civil Morals. London:
Routledge and Kegan Paul
1973 Moral Education: A Study in the Theory and Application of the Sociology of Education. New York:
Free Press.
Durkheim, Emile, and Mauss, Marcel
1903/1963 Primitive Classification. Chicago: University of
Chicago Press.
Marx, Karl
1842/1977 "Communism and the Augsburger Allegemeine Zeitung.“ In D.McLellan (ed.), Karl Marx: Selected Writings. New York: Oxford University Press;20
1847/1963 The Poverty of Philosophy, New York: International
Publishers.
அமைப்பும் இயங்கியலும் 121

Page 70
1852-1970
1857-1858
1964
1857-1858
1947
1859-1970
1862-1863
1963
1862-1863
1968
1867-1967
1869/1963
1932/1964
"The Eighteenth Brumaire of Louis Bonaparte'. In R.C.Tucker (ed.), The Marx-Engels Reader. New York: Norton; 436-525.
Pre-Capitalist Economic Formations. Eric. J. Hobsbawm (ed.), New Yorki: International Publishers.
The Grundrisse: Foundationsofthe Critique of Political Economy. New York: Random House.
A Contribution to the Critique of Political Economy. New York: International Publishers.
Theories of Surplus Value, Part Moscow: Progress Publishers.
Theories of Surplus Value, Partill Moscow: Progress Publishers.
Capital: A Critique of Political Economy, Vol.1. New York: International Publishers.
The 18th Brumaire of Louis Bonaparte. New York: International Publishers.
The Economic and Philosophic Manuscripts of 1844, Dirk J.Stuik (ed.). New York: international Publishers.
Marx, Karl, and Engels, Friedrich
1845/1956
The Holy Family. Moscow: foreign Language Publishing House.
122 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

1845-1846/
1970
The German Ideology, Part 1 C.J.Arthur (ed.). New York: International Publishers.
1848/1948 Manifesto of the communist Party, New York:
International Publishers.
Simmel, Georg
1903/1971 "The Metropolis and Mental Life." In D. Levine (ed.), Georg Simmel. Chicago: University of Chicago Press:
324-339.
1904/1971 "Fashion." In D. Levine (ed.), Georg Simmel. Chicago:
University of Chicago Press:294-323.
1906/1950 "The Secret and the Secret society." In K.H. Wolff (ed.), The Sociology of Georg Sinnel. New York: Free
Press: 307-376.
1907/1978 The Philosophy of Money, Tom Bottomore and David Frisby (eds. and trans.), London: Routledge and kegan
Paul.
1908/1950a "Subordination undera Principle." In K. Wolff (ed. and trans.), The Sociology of Georg Simmel. New York:
Free Press: 250-267.
1908/1950b "Types of Social Relationships by Degrees of
Reciprocal Knowledge of the Participants." In K. Wolff (ed. and trans.), The Sociology of Georg Simmel. New York: Free PreSS:317-329.
அமைப்பும் இயங்கியலும் 123

Page 71
1908/1955
1908/1959a
1908/1959b
1908/1971a
1908/1971b
1908/1971c
1908/1971d
1918/1971
1921/1968
1950
Conflict and the Web of Group Affiliations. New York: Free Press.
"How is society Possible?" In K. Wolff (ed.), Essays in Sociology, Philosophy and Aesthetics. New York: HarperTorchbooks:337-356.
"The Problem of Sociology." In K. Wolff (ed.), Essays in Sociology, Philosophy and Aesthetics. New York: HarperTorchbooks: 310-336.
"Group Expansions and the Development of individuality." In D. Levine (ed.), Georg Simmel. Chicago: University of Chicago Press: 251-293.
"The Stranger." In D. Levine (ed.), Georg Simmel. Chicago: University of Chicago Press: 143-149.
"The Poor." In D. Levine (ed.), Georg simmel. Chicago: University of Chicago Press: 150-178.
"Domination." In D. Levine (ed.), Georg Simmel. Chicago: University of Chicago Press: 96-120.
"The Transcendent Character of Life." In D. Levine (ed.), Georg Simmel. Chicago: University of Chicago Press: 353-374.
"The Conflict in Modern Culture." Ink.P. Etzkorn (ed.), Georg simmel. New York: Teachers College, Columbia University:11-25.
The Sociology of Georg Simmel, Kurt Wolff (ed. and
124 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

1984
1991
trans.). New York: Free Press.
On Women, Sexuality and Love, Guy Oakes (trans.) Newhaven: Yale University Press.
"Money in Modern culture." Theory, Culture and Society 8:17-31.
Sorokin, Pitirim
1928 Contemporary Sociological Theory New York: Harper.
1937-1941 Social and Cultural Dynamics : 4 Vols. New York:
American Book.
1956 Fads and Foibles in Modern Sociology and Related
Sciences, Chicago: Regnery.
1963 A long Journey : The Autobiography of Pitirim
Sorokin, New Haven: College and University Press.
Spencer, Herbert
1850 Social Statics, London: Routledge.
1854-1859 EduCCtion: Intellectual, Moral, and Physical Patterns,
NJ: Littlefield.
1855 Principles of Psychology, 3rded. 2vols. NY:Appleton.
1858-1874 Essays: Scientific, Political, and Speculative. 3 vols.
NY:Appleton.
அமைப்பும் இயங்கியலும் 125

Page 72
1864-1867 The Principles of Biology, 2 vols. NY:Appleton.
1873 The study of Sociology, Ann Arbor: University of
Michigan Press.
1873-1934. Descriptive Sociology; or Group of Sociological Facts, Classified and Arranged by Herbert Spencer, 17 Vols. London: Williams & Norgate.
1904 An Autobiography. 2Vols. London: Watts.
Weber, Max
1895-1989 "The National State and Economic Policy." In KTribe
(ed.), Reading MVeber, London:Routledge:188-209.
1896-1906/ "The Agrarian Sociology of Ancient Civilizations.
1976 London:NLB
1903-1906 Roscher and Knies: The Logical Problems of
1975 Historical Economics. New York: Free Press.
1903-1917 The Methodology of the SocialSciences, Edward
1949 Shill and Hentry Finch (eds), New York: Free Press.
1904-1905/. The Protestant Ethic and the Spirit of Capitalism.
1958 New York: Scribner's.
1906/1985 "Churches'and 'Sects' in North America: An
Ecclesiastical Socio - Political Sketch." Sociological Ineory3:7-13.
126 சமூகவியல் கோட்பாட்டு மூலங்கள்

1915/1958
1916/1964/
1916/1917/
1958
1921/1958
1921/1963
1921/1968
1922-1923
1958
1927/1981
"Religious Rejections of the World and Their Directions." In H.H.Gerth and C.W. Mills (eds.), from Max Weber: Essays in Sociology, New York: Oxford University Press: 323-359
The Religion of China: Confucianism and Taolen,
New York: Macmillan.
The Religion of India; The sociology of Hindulism and Buddhism. Glencoe, Ill.:Free Press.
The Rational and Social Foundations of Muslc. Carbondale:Southern Illinois University Press,
The sociology of Religion. Boston: Beacon Press.
Economy and Society, 3 vols. Totowa, N.J.; Bed
minister PreSS.
"The Social Psychology of the World Religions."In H.H. Derth and C.W. Mills (eds.), From Max Weber: Essays in Sociology. New York Oxford University
Press:267-301.
General Economic History, New Brunswick, N.J.
Transaction Books.
அமைப்பும் இயங்கியலும் 127

Page 73


Page 74
சமூகவியல் பயில்துறையின் புலமைப் பரப்பை தமிழ்ச் சூழலில் நிலைபெறச் செய்த பெருமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குரியது. இந்த வகையில் பெருமதிப்புக்குரிய
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியரும் இந்நாள் துணைவேந்தருமான பேராசியர் என்.சண்முகலிங்கன் அவர்களின் பணி குறிப்பிடத்தக்கது.
சமூகவியல் கோட்பாட்டின் மூலங்களை தொடக்ககால சிந்தனையாளர்களின் கருத்துநிலைகளினூடாக விளக்கும் பேராசிரியரின் இந்நூல் தமிழ்ச் சூழலில் சமூகவியல் சொல்லாடலை விரிவு படுத்திக் கொள்ள பெரிதும் துணையாகும்.
முனைவர் பக்தவத்சல பாரதி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்
ਕੁਰਸੀ
955-51.56O-O-4