கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழர் மணமும் தாலியும்

Page 1
s
 


Page 2


Page 3

விஸ்வமலர் - 5
தமிழர் மணமும் தாலியும்
ஆசிரியர் விசுவகலாமணி, பண்டித இ. சி. கந்தைய ஆச்சாரியர்
1973
விலே ரூபா 2) ,

Page 4

YOGA SAMAJ ADYAR MADRAS - 20 20 - 7 - 73
கவியோகி மகரிஷி சுத்தானந்தபாரதியார் அவர்கள் வழங்கிய சிறப்புரை
விசுவகலாமணி திரு. இ. சி. க. ஆச்சாரியார் வாழ்க! வாழ்க!
தங்கள் ** தமிழர் மணமும் தாலியும் ' என்ற ஆராய்ச்சி மிக நன்ருயிருக்கிறது. திருமணமே மக்கள் வாழ்வின் மறு மலர்ச்சியாகும். மங்கலமான மனை யறத்தின் அரசியே மனைவி. மனைவிக்கு அறிகுறி மங்கல நாண் ஆகும் ; மாலை சூட்டலுமாகும்.
* சுமங்கலீரியம் வதூரிமாம்
ஸமேத மஸ்யத ஸெளபாக்ய மஸ்யை.” என வரும் மாங்கல்ய மந்திரம், "ஓம் ஸெளபாக்கியமஸ்து சுபமஸ்து" என்ற வாழ்த்துடன் முடிகிறது. " தாலி கட்டிய தாரத்தின் தனிப்பெருந்தகையே இல்லறமாகும்." ஒவ்வொரு சமயத்திலும் கணவன் மனைவி என்பதற்கு அறிகுறிகள் உண்டு.
பொதுவாக நமது சமுதாயத்தில் விசுவகருமாக்களுக்குப் புனித மான சிறப்புண்டு. அவர்களே மாங்கலியம் செய்து அதனுள்ளே சதிபதிகளின் பெயர்களை ஒர் தகட்டில் ( சட்டத்தில்) எழுதி அடக்கஞ் செய்து அமைக்கவேண்டும். அத்துடன் அவர்களே இல் லாள் ஆக்குதற்கு வீடு கட்டித் தரவேண்டும். தாலியே ஒரு பெண் ணின் காப்புநாண். தாலி கட்டிய பெண்ணை எ ல் லே ரா ரு ம் வணக்கமுடன் சுமங்கலி! என்று மரியாதை செய்வார்கள்.
நிறைமுறையான திருமணத்திற்கு முதன்மையாக நிலவுவது தாலியே ** உன் தாலியை அறுக்க " என்ருல் நம்மவருக்குப் பெரும் சினம் பற்றிக்கொள்ளும். மாலை சூட்டிய மனையிலமர்ந்த மங்கல வாழ்வே மாண்பாகும். ஒரை பார்த்துக் கூறை கொடுப் பது நமது வழக்கம்.

Page 5
நமது வேதாகம சித்தாந்த முறைப்படி நடக்கும் திருமண முறையை, "பாரத சக்தி” யில் இல்லற ஒழுக்கப் படலம், திரு மணப் படலம் இரண்டிலும் பாடியுள்ளேன்; காண்க. பந்தலமைத் தல், மணவறை வாழ்த்து, திருவிளக்கெடுத்தல், பாலிகை வைத் தல், வழிபாடு, சீர்களைக் கடவுளுக்கு நிவேதித்தல், புண்ணியப் புனல் தெளித்தல், புத்த முது உண்ணல், நவக்கிரக ஓமம், தீ வளர்த்தல், திருமணவுறுதி கூறல், மாங்கல்ய மாலை சூட்டல், பெரியார் வாழ்த்துதல் முதலிய பல சுபகாரியங்களால் விளங் கும் திருமணம் மனித வாழ்விற்கே மங்கல மறுமலர்ச்சியாகும்.
பலர் மங்கலநாணுடன் மாலை சூட்டி மோதிரம் மாற்றுவர். நமது யோகசமாசத்தில் 100/- ரூபா செலவில் திருமணம் நடாத்தி வருகின்ருேம்; இல்லற ஒழுக்கம் விளக்குகிருேம். ஆண்மகன் : "உன்னை வாழ்க்கைத்துணைவியாய் வரிக்கின்றேன். ஒன்ரும் இல்லற யோகம் புரிவோம். நீ என் சக்தி, நான் உன் சிவமே 1 மங்கல மாகுகவே குலவாழ்வே!" என்று மாலை சூட்டுகிருன். பெண்மணி : வடமீன் போன்ற திடமனதுடனே, இணைபிரியாமல் துணையாக என்றும் வாழ்வேன்" என்று மாலை சூட்டுகிருள். "பொலிக ! பொலிக! புதுமண வாழ்க்கை" என்று பெரியோர் வாழ்த்துகின் றனர். மாலை, மலர்மாலை மட்டும் அன்று மங்கலநானுடன் கோத்த மாலையும் ஆகும். "நாண் பூட்டிய வாழ்வு'தான் கல்ப்பத் தின் தகுதிக் குறிப்பாகும் (Certificate of conjugal lite). ஆனல், இந் தக்காலம் பெண்ணுரிமை கட்டுகளை மீறிக் களிநடம் புரிகிறது. தாலி கட்டுதல் அடிமைச் சின்னம்; விரும்பியகாமுகர் விரும்பியபடி அணைந்து ஆடிப்பாடிக் கூடிக் குதித்துக் கும்மாளம் போடலாம் ! என்ற அளவிற்கு உரிமை ஊரில் உலாவுகிறது.
'காந்தம் முனைமாறிக் கவர்வது போலுமே
மாந்தருள் ஆண்பெண் மயக்கு."
* பெண்ணிற் பிறங்கும் பெருங்கனலைப் புல்லினுல்
மண்வாழ்வு மங்கலவிண் ஞம்.”
பெண், குண்டலிக் காந்தக்கனல். திருமணம், சிவசக்தியோ கம். அவ் யோகத்தால் விளையும் போகமே பேரின்பமாகும். இதைச் சிவ-பார்வதி திருமணம் விளக்குகிறது. நமது இந்துசமயத் திரு மணம் வெறும் உடலுறுப்புகளின் பிணைப்பன்று; அஃது உயிர் உயிரணைப்பும் பிணைப்புமாகும். அது தாந்திரிகயோக சாதன

மாகும். " கைப்பிடித்தாலே கால் மணம், கட்டியணைத்தால் முழு மணம் ' என்பதன்று.
"பண்ணுடன் சுருதி போலப்
பகலுடன் கதிரே போலத் தண்பயி ரதனைத் தாங்கும்
தரையையும் போலக் காணும் கண்ணுடன் மணியைப் போலக்
கனியுடன் சாறும் போலே எண்ணுறு நலங்க ளேல்லாம்
ஈவது மணவாழ் வாமே." தங்கள் நூலைக் கற்கும் ஆண்-பெண்மணிகள் நிறைமுறை யாக மாலை சூடிக் குறைவில்லாது நீடு வாழ்க !
திருமணவாழ்வு சிவ-சக்தி யோகமாகும். ஓம் சக்தி-சிவசக்தி ! ஓம் சிவம் !
- சுத்தானந்தபாரதி

Page 6
兔、 சிவமயம்
கல்லை ஞானசம்பந்தர் ஆதீனம் ஆதீனகர்த்தர், பூரீலழரீ ஸ்வாமிகாதத்தம்பிரான் ஸ்வாமிகள் வழங்கிய
ஆசியுரை
s-owner-em
வறுத்தலைவிளானைச் சேர்ந்த பண்டிதர் இ. சி. கந்தைய ஆச் சாரியனருடைய பல நூல்களைப் பார்வையிட்டுள்ளோம். ஏறக் குறையப் பன்னிரண்டு ஆராய்ச்சி நூல்களும், மயிலை மருதடி விநாயகர் பேரில் சித்திரகவிப்பாமாலையும், தோத்திர கீர்த்தனங் களும் மற்றும் பல நூல்களும் எழுதியுள்ளார்கள். அவற்றுள் "தமிழர் மணமும் தாலியும் " என்பது சிகரமாயமைந்துளது. திருமணத்தில் முக்கியமானது மாங்கல்யம். அதன் தத்துவத்தை யும் முக்கியத்துவத்தையும் இந் நூல்மூலம் சிறப்புற , விளக்கி யுள்ளார் நமது ஆசிரியர்.
இக்கால அநாகரிகக் காதல் திருமண வாழ்க்கைக்கு இந் நூல் ஓர் எச்சரிக்கையாகவும் வழிகாட்டியாகவும் அமையும் சிந்தனைச் சிற்பியாகவும் திகழும்.
நம் பண்டிதருக்கு எல்லா நலன்களும் இடைக்கவும், இத் துறையில் மேன்மேலும் பல ஆராய்ச்சிகள் நடாத்தத் தீர்க்க ஆயுள் பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வழுத்தி ஆசீர்
வதிக்கின்ருேம்.
பூனிலழரீ ஸ்வாமிகள்.

ஓம்
சிவமயம்
முகவுரை
* எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருண் மெய்ப்பொருள் காண்ப தறிவு." --குறள்.
ஏதொரு பொருளை எவரெவர் வாயினின்று கேட்ட போதினும் தாம் அப்பொருளினது உண்மைப் பொருளை நுணுகி அறிந்து அதைக் கடைப்பிடித்து ஒழுகுவதே அறிவுடைப் பெருமக்களது சிறந்த பண்பாகும் என் பது வள்ளுவர் வாய்மொழியில் நின்றும் அறிந்து கொண்ட உண்மையாகும்.
ஆகவே, பல்லாயிர ஆண்டுகட்டு முன்னே நம் பண் டைத் தமிழகத்தில் வாழ்ந்த தலைசிறந்த தமிழ்ப் பெரியார்கள், நம் நாட்டவரது சரீரசுகத்தைப் பேணும் உயரிய சுகாதார ஒழுக்கத்திற்கியைய வாழ்ந்து காட் டிய பழக்க வழக்கங்களின் உண்மைத் தத்துவங்களை ஆழ்ந்து சிந்திக்காத மக்கள் சிலர் இஞ்ஞான்று தோன்றி யுள்ளார்கள்.
அவர்கள் தத்தம் மனம் போனவாறு அர்த்த மற்ற அந்நிய நாகரிக ஒழுக்கத்திற் சிக்கித் தாம் கெட்டொழிந்து கீழானதும் போதாது ஏனையோரை யும் கெடுத்துவிடக் கங்கணங்கட்டித் தமிழரொழுக் கத்திற்கு முழுமாருண மூடக் கொள்கைகளைப் பழக்கி முற்ருய்க் கெடுத்துவிட முயன்று வருகின்ருர்கள். ஆணுல், பொதுமக்களானேர் அன்னேரது மாய வலை யிற் சிக்கி மேலும் மாய்ந்து போகாது நன்மதியோடு வாழ்ந்து நற்பயன் பெற்றுய்யும் பண்டைத் தமிழரது வாழ்க்கைப் பாதைக்கு வழி காட்டிவிடும் நோக்குடன் தமிழர் நாட்டில் தொன்றுதொட்டு மணமகளுக்குத்

Page 7
தாலி அணிந்து ஒருவனுக்கே வரைவுடைய பெண் ணென உறுதிப்படுத்துவதாகிய திருமங்கலியம் அணி யும் வழக்கத்தை நிலைநாட்டவே, ‘* தமிழர் மணமும் தாலியும் ' என்ற பெயர் பூண்ட இச்சிறு கட்டுரையை வரையலானேம். இவற்றுட் பெரும்பாலன முன்னுள்ள ஆன்ருேர் வெளியிட்டவற்றைத் தழுவி அடியொற்றி எழுந்தனவேயாம். ஆகவே, இதனைக் கண்ணுறும் அறிஞ ரானேர் இதன் கண் விரவா நின்ற குற்றங்களை நீக்கிக் குணங்களை மாத்திரம் நாடி உவந்தேற்குமாறு பெரி தும் வேண்டுகின்றேன்.
"சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்ருேர்க் கணி." -குறள்.
வருத்தலவிளான் இங்ங்னம்
தெல்லிப்பளை இ. சி. க. ஆச்சாரியனுர் 1 - 5 - 1973

ஒம்
தமிழர் மணமும் தாலியும்
பூவுலகின் கண்ணே தோன்றி வாழ்ந்த பழங்காலத் தமிழரது பண்பாட்டொழுக்கங்களையும், கலைகளின் வளத்தையும், அரசியலாளரையும், அவர்களது நாட்டுச் செழுமையையும் குறித்து ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனர் கூறிய,
"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பே ரெல்லை அகத்தவர் வழங்கும் யாப்பின் வழியது என்மனுர் புலவர்." என்ற சூத்திரத்தினுல் அவர் வாழ்ந்த காலத்துக்கும் பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே தோன்றிய புலம் மிகுத்த மூதாதையோர் யாத்துப் பரிவோடு காத்து வைத்ததாகிய இயல்முறைகளைத் தழுவியே தாமும் அவற்றின் வழிநூலாகிய தொல்காப்பிய இலக்கண நூலைச் செய்ததாகக் கூறியுள்ளார் என்பது புலணுகின் றது. அத்துடன் ஆதித் தமிழர்களாகிய அவர்கள் வாழ்ந்த நாடும் மிக விசாலித்த பேரெல்லைகட்கு உட்பட்ட பெருந் தேசமாய் விளங்கியமையால் அதுவே பழைய மூநாடும், முதிய தமிழரும், அவர்களது தமிழும் தோன்றித் தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் வளர்க்கப் பெற்ற பெருமையாலன்றே "தமிழ்கூறு நல்லுலகம் ‘’ என்று பனம்பாரனர் என்னும் புலவர் பெருமிதத்தோடு கூறலானர். எனவே, ஆங்கு வாழ்ந்த முன்னேர் பெரிதும் இயற்கையோடியைந்து வாழ்ந்தமையாலும், முறிவின் ஏற்றத்தினுலும் மிக நுண்புலம் உடையோராய் விளங்கினர். அதனல் ஒழுக்கத்தில் முதிர்ந்து சகல தொழில்நுட்பத்திறன், தவநெறியிற் தமக்கிணையில்லாப் பெருமை, சீவகாருண்யசீலம், அன்புடைமை, அரசியல் நீதி, வீரபராக்கிரமம், நாற்படை வலிமை, கால் கலம் வானவூர்தி இயக்கங்களில் சிறந்த தேர்ச்சி, மாற்ருரை

Page 8
2 தமிழர் மணமும் தாலியும்
மயக்கவல்ல மாயச் செயல்கள், பற்பல எந்திரங்களா கிய மாயப் பொறிகள் அமைத்து மயங்கச்செய்தல் ஆதியவற்றிலெல்லாம் மிகத் திறம்படைத்த புசபல வீரர்களாகவும் விளங்கி வாழ்ந்தனர். அதனல் அவனி எங்கும் தமதாணை செலுத்தி உயர்ந்த நாகரிகத்தில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இலராய்த் தனிஅரசு புரிந்து தமிழ் மொழியையும், தமிழ் வளர்த்த சங்கத்தை யும் தங்கள் உயிர் போலத் தாபரித்தனர். சமய நெறியில் தளராது உழைத்தும் வாழ்ந்தனர். அதனல் அவர்களது சுகாதார விதிகளைத் தழுவிய பழக்க வழக்கங்கள் அனைத்தும் எக்காலத்தவராலும் ஒப்புக் கொண்டு பின்பற்றி ஒழுகக்கூடிய பான்மையில் மிக மலிந்திருந்தன.
அஃது அங்ங்னம் நிலவிவந்திருக்கவும் இக்காலத் தவர்களிற் சிலர் பழைய பழக்கவழக்கங்களையெல்லாம் அர்த்தமற்றதென அகற்றி நவீன ஒழுக்கங்களில் மோகங் கொண்டு தமிழர் பண்பாட்டினைக் கெடுக்க முனைந்து துர்ப்பிரசாரஞ் செய்துவருவதால் பொதுமக்கள் மனந் தேறுமாறு பண்டைக்காலத்து நம் முன்னேர் ஒழுகிக் காட்டிவந்த வழக்கங்களுள் ஒன்ருகிய தமிழர் மணமுறையையும் தாலி நாணின் இன்றியமையாச் சிறப்பையும் ஓரளவு ஆராய்வதே எமது நோக்கமாகும்.
முதலாவது, தமிழர் மணம் என்னும்போது மணம் என்ற சொல்லானது எதைக் குறிக்கின்றது என ஆராய வேண்டியதும் ஒன்ரு கும். ஆகவே, மணம் என்னும் சொல் மூக்கால் முகரும் நறுநாற்றத்திற்கும், ஆண் பெண் இருபாலாரது கல்யாணத்திற்கும் வழங்கப்படும். இவ்வாறு ஒரு சொல் இருபொருளில் வழங்கப் பெறுவதால்தான் திருமண வீடுகளில் நறுநாற்றங் கமழும் வாசனைத் திரவியங்களையும், சாம்பிராணி, குங்குலியம், அகில் முதலிய தூபங்களையும் பெரும் பாலும் நுகரும்படியாகச் செய்கின்றமையால் அங்கனம்

தமிழர் மணமும் தாலியும் 3
வழங்கப்பெறுவதாயிற்று. இவ்வுண்மையினை அகம் 107இல்
* பசுநனை நறுவீப் பருவப்பர லுறைப்ப
மணமனை கமழுங் கானந் துணையீ ரோதியென் ருேழியும் வருமே."
" வதுவை நாற்றம் புதுவது கஞல." - அகம் - 25 என வதுவை நாற்றமென மன்றல் மணத்தினையும் :
"மன்றல் வேங்கைக் கீழிருந்து
மணநயந் தனனம் மலைகிழவோனே!" Aly
எனக் கலித்தொகை 41இலும் இவ்வித நறுமணத் திற்கு " முருகு ' என்ற சொல்லையும் பாவித்தனர் என்பதைப் பட்டினப்பாலையில் 37இல் சொல்லப்பெறு கின்றது. அன்றியும், "முருகு' தெய்வப் பொருளுக்கும் உரியதாயிருத்தலின் ஐந்திணை ஐம்பது 59இல் 'புடை யெலாந் தெய்வங் கமழும் ' எனக் கூறி நறுமணங் கமழ்தலைத் தெய்வங் கமழ்தலாகக் கூறினர். இந்த நறுமணத்தினைத் தெய்வப் பெயரால் வழங்கியவாற்ருல் மணத்தின் உயர்வு எவ்வளவு சிறந்ததென்பது புலனம். மேலும் பெண்களது பூப்புக்காலத்தில் பெரும்பாலும் செம்பூச் சூடி நன்மணம் செய்வதாலும், மன்றல் நாட்களில் மாலை அணிவதையே தலைமையாகக் கருதியும் வந்தமையால் மணத்தின் மகிமையும் பொருளும் நன்கு புலனுதலைக் காணலாம்.
பொதுவாக, இந் நிலவுலகின்கண்ணேயுள்ள ஒரு குறித்த சமுதாயத்தினர் புகழ் மலிந்து மேலோங்கு வதற்குத் துணைபுரிவது அவர்களது மொழிவளமே என்பதில் ஐயமில்லை. ஆதலால், அம் மொழி சிறப்புறு வதும் அது வழங்கும் மக்களது நலமிகு நாகரிகத்தா லென்பது தெளிவு. அத்தகைய உயர்ந்த நாகரிகம் எங்கு நிலவுகின்றதோ அது வழங்குவதாகிய அந்த நாடும், நாட்டுக் குடிகளும், அவர்களது மொழியும் சிறப்புறக் காண்கின்ருேம்.

Page 9
4 தமிழர் மணமும் தாலியும்
அவ்வாறே நம் பண்டைத் தமிழகத்தில் வாழ்ந்த மக்களும் தம் நாட்டின் இயற்கை நிலைமைக்கியைந் ததும், சுகாதார வாழ்க்கைக்கு உகந்ததும், வாய்மை மிக்க சீவகாருண்யத்துடன் அன்புகெழீஇய ஒழுக்கத் துக்கு ஏற்றதுமாகிய உணவு, உடை, நடை, தொழில் ஆற்றல், கலையறிவு, கருத்துணர்வு, பிறர்க்குணர்த்தும் பல்கலை ஆற்றல், அரசியற் பண்பாடு, சமய தத்துவ விளக்கம் முதலியவைகளிலெல்லாம் மிகத் திறமையும் வாய்ந்து விளங்கினர். அத்துணைச் சிறப்போடு கூடிய அவர்களது வாழ்க்கைநெறி அவர்களை என்றும் இன்ப வாழ்வு எய்துதற்குத் துணைபுரிந்து நனிநாகரிக மக்களாக வாழச் செய்தது என்பதைப் பழைய தமிழ் இலக்கியங் களால் இன்று நாம் அறிகின் ருேம்.
எனவே, அப் பழைய இலக்கியங்களை அறியச்செய்து காண்பிக்கும் அரிய கண்ணுடியாகக்கொண்டு அக்கால வாழ்வின் உண்மைச் செயல்களின் சாயல்களை நாம் இன்று கண்டுகொள்ள முடிகின்றது. இது நாம் செய்து கொண்ட தவப்பயனென்றே கூறலாம்.
இவ்வாரு ன பழைய இலக்கிய அடிப்படையிலிருந் தும் வெளிப்போந்தனவே அக்கால இலக்கணங்களும் எனலாம். இத்தகைய இலக்கியத்தையும் இலக்கணத்தை யும் துணையாகக் கொண்டு மிக நுணுகி ஆராய்வோமா ஞல் அக்கால உண்மை நெறிகள் பலவும் தாமாகவே எளிதில் புலனுறக் காணலாம். அப் பண்டையோர் வாழ்க்கைப் பாதையில் பல்லாயிர ஆண்டுகளாக எடுத்துவந்த அரும்பெரும் உழைப்பின் பிரயாசையி ணுல் எழுந்ததாகிய இவ் இலக்கிய இலக்கணங்கள்தான் மக்களது வாழ்வு நெறியை இன்றும் உணர்த்துதற் குப் போதுமானவையாக இருக்கின்றன.
இவ் இலக்கிய இலக்கணங்களாகிய அவை எவர் களாலும் எக்காலத்தும் மாற்றப்படா இயல்புடைய பழந்தமிழ் மரபாக விளங்கத்தக்கவை என்பதிலும்

தமிழர் மணமும் தாலியும் 5
ஐயமில்லை. இத் தூய நெறிமுறைகளையே உயர்ந்தோர் வழக்கென அக்காலத் தமிழர் மொழிந்து போயினர். இதனைத் தொல்காப்பியத்திலும்,
" வழக்கெனப் படுவது உயர்ந்தோர் மேற்றே
நிகழ்ச்சி யவர்கட் டாக லான." என்று கூறுவது கொண்டும் அதனை அறியலாம்.
அவ் வழக்குகள் யாவும் நாடக வழக்கினும் உல கியல் வழக்கினும் பயிலப்பெற்று அதன் விளைவாகச் சிறந்த புலம்மிக்க புலவர் பலரது ஒப்பற்ற பாடல் கள் பலவையும் பெறுவன வாயின. அவைதான் அறம், பொருள், இன்பம் எனப்பெற்ற முப்பொருட்கும் உரிமை உடையனவாக யாக்கப்பெற்று இன்றும் விளங்கி வருகின்றதென்பது மிகவும் போற்றத்தக்கதன் ருே ? இதனையே தொல்காப்பியமும் இன்பத்தை முதலாக வைத்து,
"இன்பமும் பொருளும் அறனுமென் ருங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற்
காமக் கூட்டங் காணுங் காலை.” எனக் கூறியதால் அறியலாம். இம் மூன்றையும் அக் காலத்தே விளங்கிய பெரியோர் அததன் தன்மை வகையால் ** அகம் ', ' புறம் و و அதாவது காதல், வீரம் என இரண்டாகப் பிரித்துக்கொண்டனர்.
எனவே, அவை மூலமாக நாம் அறிந்துகொள்ள வேண்டுவதாவது யாதெனின் ; ஒரு பருவம் வந்த ஆணும் பருவமுடைய பெண்ணும் ஒத்த அன்பினிற் கூடி வாழவேண்டுமென்ற எண்ணம் இயல்பாகவே மனித உள்ளத்தில் உதித்தெழுகின்ற ஊற்றென்பது உறுதி. அதனல் இந்த இயல்பு விலங்கினங்கட்கும், பறவைகட் கும், மற்றும் செந்துக்களுக்கும் உண்டாதல் உண்மையே. இவ்வாறே மக்களினத்து ஒத்த அன்பும் பருவமுமுடைய ஒருவனும் ஒருத்தியும் மனமொருமித்துக் காமக் கூட்

Page 10
6 தமிழர் மணமும் தாலியும்
டங் கூடுகின்ற காலத்துப் பிறந்த அவ் ஒப்பற்ற இன்ப நுகர்ச்சி அவர்கள் அவ்வாறு கூடி மகிழ்ந்த பின்னர் அவ் இன்பத்தினை ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனகுமாறு, இவ்வாறிருந்தது 1 எனக் கூறமுடியாத தாயும், தத்தம் உள்ளத்துணர்வூடு மாத்திரம் நுகர்ந்து இன்புற்று மகிழ்வதோர் பொருளதாகவும் இருத்தலி னற்ருன் அதனை அவ்வித அகஉணர்ச்சி காரணமாக நிகழ்வது கண்டு அதனை 'அகம் ‘’ என்று பெயரிட்டு அழைக்கலாயினர். இதனைத்தான் காதல் எனவுங் கூறு வர். இவ்வாறு அகத்தே நிகழும் இன்பத்தை மாத்தி ரம் மிக உயர்ந்த சுகம் எனக் கருதியமையால் இவ் இன்பத்தைத் தவிர்ந்த மற்ற அறனும் பொருளும் அத்தகைய அன்புடையார் மாத்திரமன்றி மற்று எல் லோரானும் நுகர்ந்து உணரக்கூடியதாகவும் பிறருக்கு இயம்பத்தக்கதாகவும் இருத்தலால் அதனைப் 'புறம் " எனப் பிரித்து இவ் இரு ஒழுக்கங்களையுமே தம் வாழ்க் கைக்கு உறுதுணையாகப் பண்டையோர் கையாண்டு வந்துள்ளனர். இப் புறம் என்பதே வீரத்தைக் குறித் தது. இந்த அகம், புறம் என்ற இரண்டனுள்ளும் முதன்மையான அகப்பொருளாவது ‘களவு’, ‘கற்பு’ என்னும் இருவகை ஒழுக்க முறைகளை விளக்கி நின் றன. இதனையே தொல்காப்பியமும், ' மெய்பெறும் வகையே கைகோள் வகையே.’’ என்று கூறிற்று.
இவ் இரண்டும் பொதுவாக இல்லறத்துக்கு உரிய உடலும் உயிருமென அமைந்து விளங்கின. இவற்றுள் முதலாவதாய களவு என்பது, பொதுவாகக் காதலரிரு வர் கருத்தொருமித்துத் தாமறி புணர்ச்சியராய்த் தம்முட் கலக்கும் அன்பின் நிகழ்ச்சிகளைத் தத்தமக்குள் புலனுறுத்துவதாக மாத்திரம் அமையத்தக்கது.
அடுத்ததாகிய " கற்பு " என்பது, அங்ங்னம் கூடிக்
கலந்த அவ் இருவரும் தங்கள் களவுக் கூட்டம் உல குக்கு வசையாகாமைப்பொருட்டு உலகறிய ஆசாரி

தமிழர் மணமும் தாலியும் 7
யர் முதலிய உரவோர் முன்னிலையில் அவர்கள் தங் கள் ஆசியோடு வழங்கிய குரு முத்திரையாகிய திரு மங்கலியச் சின் முத்திரை எனப்பெற்ற தாலி தரித்துத் திருமணம் புரிந்து இருவரும் இல்லறமோம்பி நல்லறங் காத்து அறவோர்க்களித்தல், துறவோர்க்கெதிர்தல், தொல்லெதிர் சிறப்பொடு விருந்தினர்க் கோடல், ஐம் புலத்தாருேம்பல், அகதிகட் காத்தல் முதலிய அறச் செயல்களைக் கடைப்பிடித்து மேல்பதவியாகிய நல் லுலகு புகுதற்கு வழிபுகட்டும் அருள் நிகழ்ச்சிகளை விளக் குவதாகவும் அமைந்த ஒழுக்கப் பண்புகள் எனலாம். இவற்றுள் மேற்கூறிய களவு இன்னதென்பதைப் பின் வரும் பழைய செய்யுளாலும் நன்கு அறியலாம் :
* களவெனப் படுவது யாதென வினவில்
வன்கெழு முன்னகை வளங்கெழு கூந்தல் மூளைனயிற்று அமர்நகை ம.நல் லாளொடு தளையவிழ் தண்தார்க் காமன் அன்னேன் விளையாட் டிடமென வேறுமலை சாரல் மானினங் குருவியொடு கடிந்துவின் யாடும் ஆயருந் தோழியும் மருவிநன். கறியா மாயப் புணர்ச்சி என்மனுர் புலவர்” என்பது.
இவ்வாறு களவுக் கூட்டத்தினுல் ஏற்படும் புணர்ச்சி யும் மூவகைத்தென்பர் ஆன்றேர். அவை, முயங்க விரும் பிய இருவரதும் உள்ளப்புணர்ச்சியளவினதும், பிற சறியாவண்ணம் உடலுறு புணர்ச்சி மாத்திரத்தன இம், பாங்கனும் பாங்கியும் அறியக்கூடிய மெய்யுறு புணர்ச்சியாெேமனவும் நிகழும் மூவகையுமாம். இவ் வழக்கினை நன்காய்ந்த கம்பநா டர், சீதைக்கும் இரா மருக்கும் இடையில் ஏற்பட்ட உள்ளப் புணர்ச்சியை விளக்குமுகமாக :
** அண்ணலு நோக்கின னவளு நோக்கினள் ' என வும், ' இருவரும் மாறிப்புக் கிதய மெய்திஞர் ' என வும், " ஒருங்கியை இரண்டுடற் குயிரொன் ருயினர்'

Page 11
8 தமிழர் மணமும் தாலியும்
எனவும் கூறி விளக்கினர். அப்பால் மெய்யுறு புணர்ச்சி எய்தியமையைச் சுர மஞ்சரியில் :
* இன்றமி Nயற்கை இன்பம்
நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகர்தமக் கிலாத நீரார்." எனக் கூறப்பெற்றது. மேலும் கரணத்தொடு மணந்து கொள்வதை , ** நாட்கடி மாலையாற்கு நங்கையை நல்கினனே' என்பதனலும் புலனுறுத்தியமை யறிய
லாம்.
இவ்வாறு பழியொடு வருவதாகிய களவொழுக் கத்தால் வரும் இன்பத்தைப் பெரியோர் விரும்பாராத லால் கரணத்தொடு கொண்டு இல்லறம் பூண்டு கூடி வாழ்வதற்குரிய ம ண மக்க ளது ஒழுக்கத்தினையே தொன்றுதொட்டுத் தமிழரிடை நிலவிவரும் குற்றமற்ற மணமுறையாம் எனவும் ஆன்ருேர் வகுத்துக்கொண்ட
6.
இதனையே : " கழியாக் காதல ராயினுஞ் சான்றேர்
பழியொடு வருஉ மின்பம் வெஃகார் வரையி னெவனுே வான்றேய் வெற்ப கணக்குலை யிகுக்குங் கறியிவர் சிலம்பின் மணப்பருங் காமம் புணர்ந்தமை யறியார் தொன்றியன் மரபின் மன்ற லயரப் பெண்கோ ளொழுக்கங் கண்கொள நோக்கி" என அகம் 112இல் கூறியனவும்; இளங்கோ அடிகளார்,
"நிலையுயர் கடவுனின் னிணையடி தொழுதேம்
பலரறி மணமவர் படுகுவ ரெனவே” எனவும் ; 'அறுமுக ஒருவனின் னடியிணை தொழுதேம்
துறைமிசை நினதிரு திருவடி தொழுநர் பெறுகநன் மணம்விடு பிழைமண மெனவே, எனக் (சிலப்பதி - குன்ற) கூறிக் கடவுளே ! நின் திருவடி தொழுவார் பலரறிந்த நன்மணம் பெறுவார்ாகுக.

தமிழர் மணமும் தாலியும் 9
என்றும், அவர்க்குக் களவாகிய பிழைப்பட்ட மணத்தை விடுப்பாயாக! என்றும், நின் இணையடி தொழுதேம் என்ற தமிழ்நாட்டொழுக்கம் கூறலானர்.
இக் களவொழுக்கமே பெரிதும் பழந்தமிழ் மாந் தர் வாழ்வில் இடம்பெற்றிருந்து கற்புநெறிக்கு இட்டுச் சென்று வரைவு பெற்றபின் வசைபோக்கியதென்பது தெளிவு. அக்காலத்தில் இக் களவு ஒழுக்கம் பெரும் பாலும் மலைசார்ந்த இடங்களிலும், சிறுபான்மை வேறு பிற இடங்களிலுந்தான் நிகழ்ந்து வந்ததாகத் தோன்று கிறது. இவ் ஒழுக்கங்களுக்கேற்ப அவை நிகழும் நிலங் க்ளையும், அவைக்கேற்ற காலங்களையும் பாகுபடுத்தி இருந்தனர். இந்த நிலம், காலம் ஆகிய இரண்டிலு மிருந்தே ** கரு ’’, ‘* உரி ** என்ற இருபொருள்களும் தோன்றின. இவ்வித நிலமும் காலமுமாகிய இரண்டிலு மிருந்து தோன்ருத பொருள்கள் எதுவும் இல்லை என 60ուծ,
பொதுவாகத் தோற்றமும் ஈறும் அறியமுடியாத பொருளுக்கு இலக்கணங் கூறுவதும் இயலாததொன் றல்லவா ? ஆதலினற்ருன் தொல்காப்பியரும், தமிழகத் துக்கென அவரது முன்னேர் யாத்துவைத்த பழைய இலக்கணமே பிறஇடங்கட்கும் பொருந்தும் என்ற கருத் தினல் நிலத்துக்குத் தமிழ் நாட்டையும், பொழுது ஆகிய காலத்திற்கு ஒரு ஆண்டையும் ஏற்று இலக்கணங் கூறலாயினர்.
இத்தகைய அந்த முதற்பொருள்களிலிருந்து தோன்றுவன வைத்தான் கருப்பொருள்கள் என்பர். ானவே, தெய்வம், மக்கள், உணவு, தொழில் முதலிய அனைத்தும் கருப்பொருள்களாகும்.
wy! ys இந்தக் கருவும் உருவுமாகிய இரு பொருள்களும் மக்கள் ஒழுக்கத்துக்கு மிக முக்கிய அடிப்படையாக

Page 12
10 தமிழர் மணமும் தாலியும்
உள்ளன. அவ் இரண்டினடியாகத் தோன்றும் மக் கட்குரிய ஒழுக்கமே உரிப்பொருள்கள் எனப்பெற்றது.
அவ் ஒழுக்கமும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகைப்படும். இவற்றுக்குக் கருவும் கரு வுக்கு முதலும் தோற்றுவாயாக உள்ளன. ஆதலால் ஒழுக்கத்துக்குரிய நிலத்தை நான்காகப் பிரித்துக் கொண்டனர் ஆன்றேர். அதனல் பூவுலகு முழுமையை யும் "நானிலம் ‘’ என வழங்கப்பெற்றதையும் காண லாம். ஆனல், பாலை என்கின்ற ஒழுக்கம் அவ்வனைத் திற்கும் இடையே நிகழ்வதாலும் பொதுக்காரணமாக உள்ளதாலும் அதற்கெனத் தனிநிலம் அமைத்திலர். ஆயினும் :
'குறிஞ்சியும் பாலையும் முறைமையிற் றிரிந்து
நல்லியல் பழிந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்."
என்று கூறி அமைத்துக்கொண்டனர்.
இவ் ஐந்நிலங்களுக்குமேற்ற காலங்களாகச் சிறு பொழுது ஆறும், பெரும்பொழுது ஆறும் ஆகப் பன் னிரு காலப் பாகுபாடாகிய கதிரவன் செல்லுவதாகிய வடஅயனப் பாதை தென் அயனப் பாதைகளால் ஏற் படும் பருவகாலங்களைக் கணித்து அமைத்துக் கொண் டனர். இவற்றினடியாகக் காதலர்களுக்கிடையில் புணர் தல், இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் என்ற ஒழுக்கங்கள் ஐந்தும் தோன்றுகின்றன.
இவையன்றிச் சிறப்பில்லா ஒருதலைக் காமத்தை யும், பொருந்தாக் காமத்தையுங் கூட்டி ஒழுக்கம் எழு வகைத்து என்றும் கூறுவர். இவ் ஏழினையும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளே, பெருந் திணை என்ற பெயர்களாற் குறிப்பிட்டுள்ளனர்.
இவற்றுள் முன்னைய ஐந்துமே சிறப்புடையனவும் அன்பின் நிகழ்வனவுமாம். அதீனல் அதனை, " அன்பி

தமிழர் மணமும்தாலியும், 11
னைந்திணை ' என்ருர் ஆசிரியரும். இவ் இன்ப ஒழுக் கமே ' களவு " எனக் கூறப்பெற்றதை முன்னே கண் டோம். இக் களவொழுக்கத்துக்குரிய இடங்களாவன: மரம், செடி, கொடி செழித்து வளர்ந்ததாய், நெருக் கத்தால் மிக இருள் மன்னியதாய், தண்மையும் நன்மை யும் வாய்ந்த செம்மைசேர் சோலைகனினுாடே ஆங்கு ஆடிப் பொழுதுபோக்கி இன்புறுவதற்காக வலிமையும் அழகும் மெருமையும் இளமையும் அறிவும் ஆற்றலும் ஒருங்கே பொருந்திய ஒருவன் தனது தோழரை விலக் கித் தட்டந்தனியணுய் ஓரிடத்தே வந்து சேருவான். அவ்வாறே நிறைந்த அறிவும் அழகும் அச்சமும் நாணும் மடமும் கெழீஇய கன்னிகை ஒருத்தியும் தன் தோழியரை நீக்கி ஆடி மகிழ்வதற்காகக் காத்திராப் பிரகாரம் அச் சோலையினூடே மற்றும் ஒர் தனியிடம் வந்து சேருவாள். அங்ங்ணம் சென்ற அவ்விருவரும் :
"முன்னே வினையின் முறையால் களவியலால்
கன்னியைக் கண்டுடன் காதலித்துப் -பின்னர் உளந்திகழ ஆர்வம் உரைத்தொத் துறுதல் வளம்மிகு காந்தர்வ மணம்." எனவும் "ஒத்த குலத்தார் தமியரா யோரிடத்துத்
தத்தமிற் கண்டதம் மன்பினு -லுய்த்திட வந்தர மின்றிப் புணர்வ ததுவரோ கந்தருவ மென்ற கருத்து." எனவும் "முற்செய் வினையது முறையா வுண்மையி
ணுெத்த விருவரு முள்ளக நெகிழ்ந்து காட்சி யையந் தெரிதல் தேற்றலென நான்கிறந் தவட்கு நாணு மடனும் அச்சமும் பயிர்ப்பு மவற்கு முயிர்த்தகத் தடக்கிய அறிவு நிறைவு மோர்ப்புந் தேற்றமு மறைய வவர்க்கு மாண்டதோ ரிடத்தின் மெய்யுறு வகையு முள்ளல்ல துடம்புறப் படாத் தமிழியல் வழக்கமெனத் தன்னன்பு மிகை பெருகிய களவெனப் படுவது கீந்தருவ மணமே!" எனவும்

Page 13
12 தமிழர் மணமும் தாலியும்
அவிநயனர் கூறிய செய்யுள்களுக் கிணங்கத் தத்தம் நல்வினை வயத்தால் ஒருவரை ஒருவர் காணும் பாக்கியத் தைப் பெறுகின்றனர்.
இவ் இருவரும் பொதுவாக ஒத்தகுலனும் நலனும் எழிலும் பண்பும் கலையறிவும் பிறவும் வாய்க்கப் பெற்றவர்களாய் இருப்பர். ஆனல், இவ் இருவரும் இதுகாறும் வேருெருவரையும் கண்டு பரிசித்து அறி யாதவர்கள் தானே. ஆதலால் காட்சி மாத்திரத்தில் இருவரும் தத்தம் கருத்திழந்து நிற்கின்றனர். மனத் தினை ஊசலாட்டம் உறுத்துகின்றது. இந் நிலையிலே சற்றுத் தெளிவடைந்து தத்தம் உள்ளக்கருத்தை இரு வரும் அறிய முனைகின்றனர். இதற்கிடையில் ஐயம் தோன்றுகின்றது. அதனை வண்டும் இழையும் பூவும் பிறவும் போக்கி வைக்கின்றன. அதனல் ஐயம் நீங் கிய அவ்விருவரும் கருத்து நலனும் ஒப்பும் காண விழைந்தகாலை வேறுவகை ஏதுக்களையும் கையாள முடியாமையால் அவற்றை எளிதில் உணர்த்தவல்ல தத்தம் கண்களையே துணையாகவும் ஒருவரை ஒருவர் அளந்தறியும் அளவு கோலாகவும் கொண்டு அவரவர் உள்ளக் கருத்தைக் குறிப்பால் உணர்ந்து கொள்கின் றனர். இவ்வாறு கண்ணுெடு கண் பேசி இருவர்தம் உள்ளமும் பேசி முடித்து விடுகின்றனர். இத்தகைய இயல்பொத்தவரிடம் அன்பு தோன்றினல் எல்லை கடந்து பெருகி வளரத் தொடங்கி விடுகின்றதல்லவா ? அப்போ அவர்களது உள்ளம் வெய்யிலில் இட்ட மெழு கென இளகிவிடுகின்றது. அவ் அன்பு அவர்களிடையே சிற்சில உளக்குறிப்புக்களையும் தோற்றுவித்து விடுகின் fD gil.
அக் குறிப்பு. அவ்விருவரும் ஒருபோதும் ஒருவரை ஒருவர் இணைபிரியாது இயைந்து வாழ்வதையே உயி ராகக் கொண்டிருப்பதை உணர்த்தி விடுகின்றது. மேலும், அக் குறிப்புகளுக்கு உரிய மெய்ப்பாடுகளும்

தமிழர் மணமும் தாலியும் 3
அவர்களுக்கு உதவி புரிகின்றன. இவைதான் அவர்களை அடிக்கடி கூடி மகிழ்வதற்குத் தூண்டிவிடுகின்றன.
இவ்வாறு இக்காதலர் இருவரும் பலநாள் கூடி இன்புற்று மகிழ்கின்றனர். இப்படி எத்தனை நாட்களுக் குத்தான் உண்மையை மறைத்திருக்க முடியும்? நாளடை வில் அவர்கள் இருவரது களவொழுக்கத்தினைப் பாங்க னும் பாங்கியும் அறிந்துவிடுகின்றனர். அவர்கள் அறிந்தபோதிலும் அவரிருவரும் ஒத்த தன்மையராய் ஒழுகித் தத்தம் அன்பிற் பிணைந்த நடத்தையால் தலை மையை எய்திவிடுகின்றனர்.
இதுவரை தத்தம் தாய் தந்தையர்க்கு மகளும் மகனுமாக இருந்தவர்கள், இதுகாலை தலைமகனும் தலை மகளும் ஆகிவிட்டனர். அதனுல் அவர்களது தலைமைக்கு ஏற்ப ஒழுக்கமும் மாறிவிடுவது இயல்பாகும். ஆகவே, அவர்களிடம் இயற்கையாய் அமைந்துள்ள நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் செய்கையும் உண்டியும் பயில் வும் தலைவனது நிலையினும் பார்க்கத் தலைவியினிடம் சிறுது வேறுபட்டுத் தோன்றுவது இயல்புதானே. இவ் வேறுபாடுகள்தான் அவளது களவு ஒழுக்கத்தையும் பாங்கிக்கு எளிதில் உணர்த்திவிடுகின்றன. அதை அறிந்த பாங்கி தன் மதிவன்மையால் தலைவியின் அந் தரங்க நிலையை அறியுமாறு பல வழிகளைக் கையாள முற்படுகின்ருள். அப்படிப் பார்த்தவற்றுள் சிறப்பு டைய ஒருவழி பிறைதொழுக அழைத்தல் என்பது. அதனைக் கருவியாகக் கொண்டு தலைமகளைத் தோழி யானவள்,
"ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழுஉம்
புல்லென் மாலை."
என்ற அகப்பாட்டிற்கமையப் பிறை தொழ வருமாறு அழைக்கின்ருள். அவளோ இதுகாறும் தன் வாழ்வு நன்னெறியில் அமையவேண்டுமென எண்ணி இயற்கைப் பிறையை வணங்கும் வழக்கினைக் கைக்கொண்டொழு

Page 14
14 தமிழர் மணமும் தாலியும்
கிய அவள் இப்போது தன் தலைமையால் தைரிய முற்றுத் தன்னினும் பார்க்க உயர்ந்துள்ள தலைவனைக் காட்டினும் பிறிதொரு தெய்வம் உலகில் இன்று என எண்ணிப் பிறைதொழ மறுத்து நிற்கின்ருள். அதனல் அவளது உண்மை ஒழுக்கம் தெரிந்து விடுகின்றது தோழிக்கு. அப்போ தலைவியானவள், இனிய்ேனும் இவ ளுக்கு உண்மையை மறைத்திருத்தல் தகாதென எண் னித் தலைவனேடு கூடி இருவருமாகத் தோழிமூலம் பெற்ருேரை இசைவித்தற்கான புத்தி கூறித் தேற்று வித்தற்கு வழிகளை மேற்கொள்ளுகின்றனர்.
அவ்வாறு குறை இரந்த தலைவனைத் தோழி சில போது மறுப்பதுமுண்டு. அப்படி மறுத்துவிடில் தலை வனே தான் மடலேறுவதாகக் கூறுவான். இப்படியான நிலைமைகளெய்திச் சிலபோது இருவர் கோரிக்கைகள் நிறைவுறக் காலம் நீடிப்பதும், நிறைவேருது போதலு முண்டு. இவ்வாருகத் தோழியரேயன்றித் தாய் முதலியோரும் தலைவியின் தவருன ஒழுக்கத்தை அறிந்து விடுகின்றனர். அப்போ தலைவியும் தோழியும் உண் மையை உணர்த்தி அவ்விருவரையும் நிலைத்த கூட் டம்பெற்று வாழ்விக்க முயல்கின்றனர். இந் நிலை யினையே "அறத்தொடு நிற்றல் ' என்று கூறப்பெறு கின்றது. இவ்வித நிலை எய்திவிட்டால் விரைவில் அவர்களுக்குக் கடிமணம் நடைபெறுவது உறுதியென்ரு கின்றது. விதிப்படி திருமணம் நிகழுமுன் அதற்கிடை யில் தலைமக்கள் இருவருமொத்து உடன் போதலு முண்டு. இப்போ இவர்கள் தலைவியும் தல்ைவனுமாக மாறிவிட்டனர் அல்லவா ?
அதன் பின்னர்தான் அவ்விருவரும் உலகறிய மணந்துகொள்ளும் மணவினைக்கும் மங்கலியத் திருத் தாலிக்குமாகப் பொருள் தேடும்பொருட்டுத் தலை வியைப் பிரிந்து தலைவனனவன், 'திரைகடலோடியும் திரவியந் தேடு' என்ற ஒளவைப்பிராட்டியாரது அமுத மொழிப்படி பிறநாடு செல்கின்றன். அத்தகைய பிரி

தமிழர் மணமும் தாலியும் 5
வில் தலைவியானவள் தனது கற்பாகிய ஒழுக்க நெறி யைக், கருதி ' காவல் தானே பாவையர்க்கழகு" என்ற தமிழ் மூதாட்டியார் மொழியையும் "தற்காத் துத் தற்கொண்டார்ப் பேணித் தகைசான்ற, சொற்காத் துச் சோர்விலாள் பெண்’ என்ற வள்ளுவர் வாக்கை யும் கைக்கொண்டு தன் மனந்தேறித் தலைவன் வருங் காறும் இல்லின்கண் இருக்கின்ருள். தலைவனே பிற நாடு சென்று பொருள் திரட்டி வந்து சேருகின்றன். பின்னர் மணவினை நடைபெறுகின்றது. அங்ங்ணம் நடக்கும்போது தாய் தந்தையர் தலைவியை நோக்கி, "மகளே ! இனிமேல் நின் கொளுநனக்காட்டினும் சிறந்த தெய்வம் பிறிதொன்றில்லை. "கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை " என்ற பிராட்டியார் மொழி யைக் கடைப்பிடிப்பதுடன் பெருங்கதையுள், உஞ்சைக் காண்டத்தில் :
" கையது வீழினுங் கணவ னல்லது
தெய்வ மறியாத் தேர்ந்துணர் காட்சிப்
படிவக் கற்பிற் பலகோ மகளிருள்" என்று கூறப்பெற்றமையையும் நன்குணர்ந்து கணவனது மொழியைத் தட்டாது அவனை என்றும் வழிபட்டு ஒழுகுக! அத்துடன் இதுபோன்ற ஆசாரியர் வாக்கை அனுதினம் பேணி அறவோர், அகதிகள் அனைவரையும் ஆதரித்து வாழுக!' என்று சான்ருேர் கூடிய அவையில் அறவுரைகள் போதிக்கின்றனர். அவ்வறவுரைகளுக்கு இழுக்கில்லாத ஒழுக்கத்தினின்றும் தவருத இவ்வித நிலையைத்தான் ' கற்பு " என்று சொல்லப்பெறுகின் றது. முன் களவுவழி நடந்தவர்களாகிய இவ்விருவரும் இப்போ கற்புநெறியிற் காலூன்றி நடக்க ஆரம்பிக் கின்றனர். ஆதலால், இதுவே பொய்யும் புனைவும் வழுவும் கலவாத அன்புநெறி வந்த கற்பு எனப் படுவதாயிற்று. சிற்சில தருணங்களில் காதலர் இருவரதும் அன்பு நிகழ்ச்சிகள் களவுவழி வாராமல் அவர்களை இசைபெற வாழ்விக்க எண்ணித் தலைவியின் 35 fou u săr trofir riř முதலியோர் முயன்று அவர்களுக்குத் திரு

Page 15
6 தமிழர் மணமும் தாலியும்
மணம் செய்து வைப்ப அவர் கற்புநெறியின் கணின்று இல்லறம் பேணுவதும் உண்டு. ஆனல், முன் தனித்துப் பிறருக்கஞ்சியும் வசைமொழிக்காளாகியும் நடந்து இன்புற்ற இழிந்த இயல்போடு வாழ்ந்த இவர்கள் இதுகாலை யாவரும் போற்ற இல்லறம் புரிந்து நல்லற மாக நாட்டு நலம்பேணி உலக இன்பங் கருதி இனிது வாழ முற்படுகின்றனர். அத்தகைய தூய இல்வாழ்வி ஞல் அவர்தம் நாடும் வீடும் பீடுடையவாகின்றதோடு ஏடுகளும் இசை பெற்றுக்கொள்ளுகின்றன. ஈற்றில் பேரின்ப வீடும் அவர்களது கைவசமாகிவிடுகின்றது. ஆனல், "காவல்தானே பாவையர்க்கழகு ' என்ற மூதாட்டியார் மொழிப்படி பண்டைக்கால மங்கையர் சிறிதும் கோட்டமின்றித் தம் நெஞ்சைத் தாமே நேர் நிறுத்தி ஒழுக்கத்தொடு வாழ்ந்தனர். அங்ங்னம் நெறி பிறழாது வாழ்ந்துவந்த வாழ்க்கையே மிகுதியும் இருந்துவந்தது. பின்னர் சிறுபான்மை அம்முறை வழு வாது பொய்யும் வழுவும் தோன்ருமைக்காகப் பண்டைக்கால உரவோர் மணவினை முறையாகிய மாங் கல்யம் பூட்டும் கரணச்சடங்கை யாத்து வைத்தனர். இதனைச் சிலப்பதிகாரம் :
*சலி யொருமீன் தகையாளக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்க னேன் பென்னை." எனவும்,
"நேரிறை முன்கை பற்றி நுமர்தர
நாடறி நன்மண மயர்கம் சின்னுள்" எனவும் கூறிக் கரணவதுவையை நாடறி நன்மணமாகக் குறிப்பதுங் காண்க.
அதனுலேயே வரைவுடையதிருமணம் மக்கள் சமு தாயத்துக்கு அவசியம் வேண்டியதாயிற்று. ஆசாரியர் முதலிய உரவோர் முன்னிலையில் வரைவு செய்யப்படும் அத்தகைய சீரியமணமின்றேல் காதலர் வாழ்வில் குணம் ஏற்படாதல்லவா? அதனற்ருன் திருமணவினைக்கு தாலி

தமிழர் மணமும் தாலியும் 7
முத்திரையோடு கூடிய தெய்வீகநாண் முதலிடம் பெற வேண்டிற்று. அதனுலன் ருே உலக வழக்கிலும் " தாலி பெண்ணுக்கு வேலி' என வழங்கலாயினர்.
இம் மணவினைச் சடங்கானது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு விதமாகச் செய்யப் பட்டு வருவதைக் கண்டும் கேட்டும் வருகின்ருேம்.
நாட்டு வேறுபாடுகள், இன வேறுபாடுகள், மொழி வேறுபாடுகள், சமய வேறுபாடுகள் இருந்தபோதிலுங் கூட ஆண், பெண் ஐக்கிய உறவு வரை வொடு நடை பெறவேணுமென்ற உணர்வு மாத்திரம் எல்லோர்க்கும் பொதுவாக அமைந்துள்ளதன்ருே ! பொதுவாக ஓர் ஆணும் பெண்ணும் முறைப்படி கூடிவாழும் குடும்ப வாழ்க்கையைச் சின்னபின்னமின்றிச் சிறப்பிப்பதற் காக ஏற்படுத்தப்பட்ட வழக்கு அல்லது சடங்கே திரு மணம் எனப்படும்.
இம் மணமுறையானது மணமக்களாகிய ஆணுன வன் பெண்ணை ஏமாற்ருமலும் பெண்ணனவள் ஆண்ை ஏமாற்ருதபடியும் ஒருவரை ஒருவர் முறைப்படி காத லித்துச் சதா நேர்நெறி ஒழுகிக் குடும்பவாழ்க்கையைச் செப்பஞ் செய்யுமாறு ஆசாரியர் முதலிய ஆன்ருேரால் பிரணவ அமைப்போடு கூடியதும் தெய்வ ஆணையைக் கொண்டு நாயகனது பாதம் மற்றும் மங்கலச் சின்னங் களைப் பொறிக்கப்பெற்றதுமாகிய திருத்தாலி முத்திரை கோக்கப்பெற்ற நாணினத் தரித்து வசை ஒழிப்பதற் கென ஏற்படுத்தப்பட்டதே திருமணச்சடங்கு எனலாம். இக் கருத்தினையே தொல்காப்பியமும் : .
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரண மென்ப." என்று கூறி விளக்கிற்று. ஆகவே, ஒருவனும் ஒருத்தியும் வசை யின்றி மு  ைற யெர டு வரைவுடையவர்களாகக் கொள்ளும் அத்தாட்சியைக் கொண்ட தெய்வீக முத்

Page 16
18 தமிழர் மணமும் தாலியும்
திரையால் வரைவுபெற்று மனையறம் பேணி வாழுவதே தமிழரது பாரம்பரிய மரபுக்குத் தகுதியெனக் கொள்ளப்பெற்று இன்றுகாறும் நடை முறையில் நிகழ்ந்து வரலாயிற்று. .
இதேபோன்று விலங்கு, பட்சி முதலிய கீழின உயிர் களே தத்தமக்கு வரைவுடையதாக ஒவ்வோர் சீவனை மாத்திரம் கூடிக்கொண்டு தத்தம் வாழ்க்கையை இந்த உலகில் இன்பகரமாக நடாத்தி வரும்போது இவற்றி னும் மேலாய் உயர்ந்த உயிரினமென்ன ஆறறிவு படைத்த மக்களானுேர் மாத்திரம் பல பெண்களை ஓர் ஆடவனும், பல ஆடவரை ஓர் பெண்ணும் கூடி வாழுவ தான இழிந்த வாழ்க்கையை மேற்கொள்வதானுல் அது நாகரிகமக்கள் வாழ்க்கையாகுமா? அதற்காக அல்லவா ஒருவன் ஒருத்தியை மாத்திரம் வரைவுடையவளாக்க் கொண்டு குடும்ப வாழ்க்கையை நடாத்த விதியமைக்க லாயினர் நம் தமிழ்ப் பேரறிஞரானுேர்,
முறைகேடாக வாழுகின்ற அற்ப செயலான கேவல நிலைகளால் உலகம் கெட்டொழியாது முறையொடு வாழுதற்கென்று மணவினைச் சடங்காக அந்நாட் டொட்டு ஆன்றேர்க்கிடையில் எழுந்துவந்த வழக்கமே இன்றுவரை நிலவி வருகின்றது. அக் கற்புநெறியைக் கைவிடாது காப்பதுவே இல்வாழ்வின் இணையற்ற இன்பமாகும்.
ஆகவே, ஆன்ருேரவையில் ஆணையொடு வரிந்து ஏற்றுக்கொண்ட கணவனிடத்திலே எவளொருத்தி தன் காதல் முழுவதையும் செலுத்தி இருப்பாளோ அவளே கற்புடைய நங்கையாகிருள். அவள் தனது தந்தை, தாய், சகோதரர்களிடத்து வைத்திருந்த அன்பானது மற்ருெருவகையில் பிரிந்து வேருகிக் கணவனிடம் மாத் திரம் அமைந்து விடுகிறதைக் காண்கின்ருேம். அதனல், கணவனே தன் இறுதிவரையுமுள்ள வாழ்க்கைத்துணை வன் ஆகிருன் என்று வலுப்பெற்று விடுகின்றது

தமிழர் மணமும் தாலியும் 19
அவளுக்கு. அதனல் மிகத் தூய இனிய இல்வாழ்க்கைக்கு இருவரும் பிரியா விரதம் பூண்டிருக்கின்றனர். இவ் விரதத்தை உலகினர்க்கு அறியச்செய்வதற்கும் தனக் கோர் அரிய காப்பாக இருந்து தன் கணவனைச் சதா உள்ளும் புறமும் வைத்து நினைவூட்டி ஒழுகுவதற்கு மாகவே ஆசாரியர் மூலம் மங்கல்யம் என்னும் திருத் தாலி முத்திரையானது அவசியம் ஏற்படலாயிற்று.
இவ்விரதத்தினின்று இம்மியள மவனும் பிசகாது காத்திருப்பவளாய்க் கணவனைத் தவிர வேறுயாரையுங் கனவிலுங் கருதிக்கொள்ளாதவளாய்க் கணவனுக்கு வாய்க்கின்ற இன்பங்களையும் துன்பங்களையும் தன்னு டையதாகவே முழுமனதோடு ஏற்றுக்கொண்டு தன் கணவனுக்கு என்றென்றும் மனைவியாக மாத்திரமன்றித் தோழியாகவும் தாயாகவும் மதிபுகலும் மந்திரியாகவும் இருப்பவள்தான் முறையான கற்புடைய மங்கை என்று சொல்லலாம்.
ஆகவே, ஓர் கன்னிப்பெண்ணை மணந்துகொள்ள விரும்பும் ஆடவனனவன், அந்தண்ர் ஆகிய ஆசாரியர், மற்றும் ஆன்ருேர்களாகிய பெருமக்கள் குழுமியிருக் கும் அவையின் கண் அவரனைவரும் ஒப்புக்கொண்டு ஆசி நல்கி வாழ்த்துமாறு ஆசாரியரானவர் பத்திசிரத்தை யோடு மந்திரபூர்வமாக ஆக்கி அருளிய திருமாங்கல்ய் முத்திரையை மணமகனனவன் பருத்திநூலில் கோத்து மணமகளது கழுத்தில் அணிந்துகொள்வது பண்டைத் தமிழர் வழக்காகும்.
இத் திருமாங்கல்ய முத்திரையைப் பருத்திநூலில் மாத்திரம் கோத்துக் கட்டவேண்டும் என்பதையும் பிற கருமங்களேயும் " கோபிலஸ்மிருதி ' - ஆ. உகசு ஆம் சுலோகத்தில் :
"ஹரித்ராகுங்குமஞ்சைவ தாம்பூலம்கஜ்ஜனம்ததா
கார்ப்பாஸதந்துமாத்ணே மங்கள்யாபரணம்ததா

Page 17
2በ தமிழர் மணமும் தாலியும்
தேஜஸம்ஸ்காரகபt கரகர்ணுதிபூஷணம் பார்த்துராயுஷ்யமிச்சத்தி தூவுயேந்ந பதிவ்ரதா"
என்று கூறப்பெற்ற இதன் பொருளாவது :
" ஓர் கற்புடைப் பெண்ணுனவள் மஞ்சள், குங் குமம், வெற்றிலை, பாக்கு, கண்ணுக்கு எழுதும் மை, பருத்தியினலே உண்டாக்கப்பெற்ற நூலில் கோத்த திருமாங்கல்யம், தலைவாரிக் கட்டி முடித்தல், கைகள், காதுகள் முதலான அங்கங்களில் அணியும் ஆபரணங்கள் முதலியவற்றைப் பத்தாவின் ஆயுளைக் கோரும் அப் பதி விரதையானவள் என்றும் நீக்காதிருக்கக்கடவள் ' என்பது. இத் தெய்வ அம்சமாகிய திருமாங்கல்ய முத் திரையானது பெண்கள் சாதாரணமாக அணியப்பெறு கின்ற ஏனைய நகைகள் போல வெறும் அலங்கார அணி யாகக் கருதக்கூடியதல்ல. அது சர்வசாஸ்திர சம்மத மும், தெய்வீக ஆணை உடையதும் இல்வாழ்க்கைக் கிர மத்தை நேர் நெறிப்படுத்துவதும் ஆகிய பிரம முத்திரை யாகும். இது, மக்கள் நாகரிகம் தோன்றிய காலந் தொட்டு இன்றுகாறும் நிலவிவரும் தமிழரது சிறந்த வழக்கமென்பதில் எட்டுணையும் இழுக்கில்லை.
இவ்வாறு இன்பகரமான இல்வாழ்வு பூண்ட இவர்க ளிருவரும் :
"இல்வாழ்வா னென்பான் இயல்புடைய முவர்க்கும்
நல்லாற்றி னின்ற துணை." என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க மனையறம் புரியும் விரதம் பூண்ட வதுவும் வரனும் இல்வாழ்க்கையை இனிது தொடங்கு முகத்தாற்ருன் வரைவுபெறும் வாய்மையைக் கொண்ட தாலியாகிய உறுதிப்பட்டயம் உதிக்கலாயிற்று. இத் தகைப் ப்ெருமை வாய்ந்த தாலிமுத்திரையை முறைப் படி கோத்து அணியும் வழக்கினைக் கைவிட்டு 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழவல" என்ற விதியாற் சமாதானங்கூறி இக்கால நவீன் நாகரிகத்தைப் பின்

தமிழர் மணமும் தாலியும் 21
பற்றிப் பொன்னலாகிய சரட்டினுள் பட்டுநூல் அல்லது பருத்திநூலினைச் செலுத்தி அழகுக்குத் தாலி அணியும் வழக்கினை மேற்கொள்ளலாயினர். மங்கலச் சின்னமும் மந்திரசக்தியும் வாய்ந்த தாலிமுத்திரையை அணிவித்து மணமக்களாக்கும் தத்துவம் பெற்ற ஆசாரியர் தாலி யாகிய தெய்வீக முத்திரையை ஆக்குதற்கு இறைவனது அருளும் ஆணையும் மிக அவசியமாதலால் அக்காலத் தமிழ்ப் பெரியார்கள் வழிபாடாற்றி வந்த இயற்கைத் தெய்வங்களெனக் கருதப்பட்ட ஞாயிறு, திங்கள் என் பவற்ருேடு மங்கலப் பொருள்களான குருவினது எழுத் தாணி, ஓங்கார மந்திர வடிவம், சங்கு சக்கரம், தாமரை மலர், நாயகனது இருபா தச்சின்னம் முதலிய குறிகளைக் கொண்ட வடிவில் அழகுற ஆக்குவர். இப்படிச் சிற்ப சாத்திரவிதி முறையால் அ  ைமத்த தாலிநாணின் அணியவேண்டிய உண்மையை 'விஸ்வகர்மீய " சிற்ப நூலில் பஞ்சம அத்தியாயம் 17 முதல் ஆரம்பிக்கும் சுலோகங்களிலும் :
"மாங்கல்யம் விஸ்வரூபம் பிரணவம் ஓங்காரருபேயோ அகார உகரயோச் சைவ மகாரோதீய தேஸ்ருதி: அகாரே வர்த்துலாகாரம் உகரரே சதுரஸ்த்ததா: மகாரேத் ரிகோணம்ஸ்யாத் துவீபாதம் ஏகத்வாரயோ சோமார்க்க சக்ரபாணம் ஸ்யாத் மாங்கல்யம் விதீலட்சணம்:” என்று கூறப்பெற்றதான இதன் சாராம்சமாவது : திருமாங்கலியமானது பிரணவமென்னும் ஓங்கார மாய் அவ்வோங்காரத்து மூலஎழுத்துக்களாகிய அகார உகார மகாரங்கள் அடங்குமிடத்து அகாரம் சக்கரவடி வாய்த் தலையாகவும் உகாரம் சதுரவடிவாய் மார்பாக வும் மகாரம் முக்கோணவடிவாய்க் காலோடு சேர்ந்த மர்மத்தானமாகவும் கொண்ட விநாயகவடிவை மத்தி யாக வைத்து இருமருங்கும் நாயகனது பாதச்சின்னம் பொறித்து அப்பாதங்களில் திருவீற்றிருப்பதாகிய கமலம், சங்குசக்கரம், சந்திரசூரியர், அம்சங்களையும் அமைத்து நடுவே ஓர் துவாரஞ்செய்து பருத்திநூல்ால்

Page 18
&岛 தமிழர் மணமும் தாலியும்
கோக்கக்கூடியதாக முடிப்பதே அந்த மாங்கல்ய முத் திரையாம் என்பது.
இத்தகைப் பெருமை வாய்ந்த தாலிக்கு மங்கலம் என்ற பெயர் வழங்கப்பெற்றது யாதுக்கெனின், என்றும் மனைக்கு மாண்பையும் மலர்ந்த இன்பத்தையும் தரு வதாற்ருன் அங்ங்ணம் அப்பெயர் வழங்கலாயிற்று. தாலியை மங்கலியம் என்ற சொல்லினல் குறிப்பிட்ட மையால் அதன் பொருளும் மங்கல +இயம் = மங்கலி யம்; அதாவது மனைவாழ்க்கைக்கு அணியை, அழகை , இன்பத்தைக் கொடுக்கும்படியாகக் குரவனல் இயற்றப் பெற்ற ஆபரணம் என்னும் பொருளைக் கொண்டுள்ள தாயிற்று. மங்கலம்= இன்பம், அழகு, மகிழ்ச்சி. இயம்= இயற்றப்பெற்ற ஆபரணம் என்ற பொருளேக்கொண் டுள்ளமையாற்ருன் வள்ளுவன் :
"மங்கல மென்ப மனமாட்சி மற்றுஅதன்
நன்கலன் நன்மக்கட் பேறு." என்று கூறி ஆசாரியனுல் மணமக்களது மனைவாழ்க்கைக்கு அழகும் இன்பமுந் தருமாறு ஆக்கித் தரப்பெற்ற தெய்வீக ஆபரணமே தாலியாகும். ஆனல், அத்தாலியைப் பெற்று மனைவாழ்க்கையை ஏற்றுக்கொண்ட காதலர்களுக்கு மேலும் ஒப்பற்ற ஆபரணமாக விளங்குவதாவது அவர் கள் சிறந்த மக்களைப் பெற்று வாழுதல்தான் என்று மிக அழகாகக் கூறி விளக்கலாஞர்.
அதனற்ருன் ஒளவைப்பிராட்டியாரும் : " பொற் ருலியோ டெவையும்போம் " என்று பொன்னினல் ஆக்கித் தரப்பெற்ற தாலியினைப் பெண்ணுக்கேற்றி மங்கலியம் பூண்ட பெண் எனச் சிறப்பித்துமுள்ளார். இங்ங்ணம் பொன்னிலான திருமாங்கலியத்தைக் குறித்து கந்தபுராணத்தில்: "மங்கலநாணே மணிக்களமார்த்து' ன்னக் கூறியதால் பொற்ருலி கோக்கப்பெற்ற சரட் டினை மற்றும் ஆபரணங்கள் தரித்துள்ள கழுத்தில் மேலும் கட்டி என்று பொருளினேத் துலக்கப்பெற்றது.

தமிழர் மணமும் தாலியும் 23
அப்பொருள் கொண்டுதான் ?? அரிச்சந்திர புராண ** த் தில் : ** முன்னமே மங்கலம் பூண்ட மொய்குழல்" எனவும் 'கம் பராமாயணத்தில் : **மங்கலத் தாலி நாண் தன்னை ** எனவும் ** பெரியபுராண ' த்தில் : ** மங்கலம் பொலியச் செய்த மணவினை ஒலை ஏந்தி" எனவும் ; ' பைம்பொன் நாண் காப்புச் செய்தார்’ எனவும் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவா ரத்தில் : “ மைந்தர் கொணர் மங்கிலியத்தில் ** எனவும் கூறப்பெற்றவாற்ருல் இவ்வுண்மைகள் புல ன தல் காண்க.
இவ்வாறு ஆசாரசுத்தியுடனும் மனத்தூய்மையுட னும் மிகு பத்திசிரத்தையுடனும் மந்திரபூர்வமாகச் சிருட்டிக்கப்பெற்ற தாலியை ஆசாரியரானவர் அகம் கனிந்த ஆசியுடன் வாழ்த்திக் காதலனது கையிற் கொடுக்க அவன் வேதவாக்கிய மந்திரமாகிய :
*மங்கல்யம் தந்துனுனே மமஜீவனஹேதுணு
கண்டேயத்ணுமி சுபஹே த்வம் ஜீவசரதாம்சதம்."
என்ற சுலோகத்தைச் சொல்லி, அதாவது : ** ஒ கன்னிகையே ! நீ எனது நல்வாழ்க்கையின் பொருட்டு சுபத்தைக் கொடுப்பதான இந்த மங்கல்ய முத்திரை கோக்கப்பெற்ற நாணின உனது கழுத்திற் பூட்டுகின் றேன். அதனல் எப்பொழும் சுபசீவியாக என்னுடன் கூடி இல்லறந் நடாத்திப் பூரணஆயுளுடன் வாழ்வாயாக ** என்று சொல்லித் தலைவி கழுத்தில் தரிக்கச்செய்வர். அப் பால் " நீவிர் இருவீரும் இன்றுதொடக்கம் ஒருவரை ஒருவர் இணைபிரியாது இல்லறக் கடமைகளில் எள்ளவும் மாருது ஒழுகி இறைவனைப் போற்றி வாழ்வீர்களாக 11 என ஆசிமொழிகளும் அறஉரைகளும் கூறித் தேற்றுவர். அப்போ கன்னிகையை நோக்கி, 'இப்போ நினது நாய கன் கட்டிய தாலி முத்திரையில் அவனது இருபா தச் சின்னங்களும், தேவர், குரு முதலியோர்களது ஆணைக் குறிகளும், நித்திய மங்கலப் பொருள்களும் அமைந் திருப்பதால் சதா நாய்கனை உள்ளத்திருத்தி உபசரித்து

Page 19
24 தமிழர் மணமும் தாலியும்
இன்பத்தோடு வாழ்வாயாக!' எனவும் நன்மதி கூறுதல் மரபாகும்.
இவ்வாறு அவனிமாந்தரை ஒன்றுகூட்டி வாழ வைக்கும் ஒருமைப்பாட்டின் பெருமைக்கும், மக்கள் பாலுள்ள பத்திக்கும் பாத்திரராய் இருப்பது கருதி அப் பொற்கொல் ஆசாரியரை " விஸ்வைக்கியர் ", " விஸ் வெக்ஞர் ', 'பத்தர்”, “எக்ஞசாலையர்", "அக்கசாலையர்" முதலிய அன்புப் பெயர்களால் அழைக்கலா யினர். இவற்றுள் விஸ்வைக்கியர் என்னும் பெயரில் உள்ள பொருட்பொலிவாவது: விஸ்வ+ஐக்கியர் = விஸ் வைக்கியர் என்ருகி உலக மக்களை ஒன்றுகூட்டி ஐக்கியம் செய்வோர், உலகின் உறவு கூட்டுவோர் எனவும்; விஸ் வெக்ஞர் என்ருல் விஸ்வ+எக்ஞர் = விஸ்வெக்ஞர் என் முகி மிக மேல்ான, மகத்தான, உயர்ந்த யாகம் செய் வோர் என்ற பொருளுடனும், உலக மக்களை ஒன்று சேர்த்து வைப்பதாகிய எக்ஞம் புரியும் அன்பின், பக்தி யின் பெருக்கால் திருமாங்கல்யமுத்திரையை ஆக்குதற்கு மந்திரபூர்வமாக தமது யாககுண்டத்தில் அக்கினியை வளர்த்து அதிலே பொன்னினை உருக்கித் திருத்தாலி செய்வதால் அப்பெயரையும்; அக்கசாலையர் என்றதால் அக்கம் = பொன் ஆய், பொற்பணிகள் பல புரியும் சாலை யுடையோர், அரசர்க்கு நாணயம் செய்யும் சாலையாளர் எனவும்; உலகிலுள்ள ஆண் பெண் ஆகிய இருபாலா ரையும் அவர்கள் மாட்டுள்ள அன்பின் பெருக்கால் ஒருவரை ஒருவர் பற்றச்செய்தல், சேர்த்து, கூட்டி வைத்தற்குரிய முத்திரை அருளும் கர்த்தர் என்பதால் பற்றர் - பத்தர் என்பதோடு அவர்கள் தங்கள் எக்ஞ குண்டத்தில் வளர்க்கும் அக்கினியில் சிறிய சிறிய பொன்னின் பொடித்துகள்களைப் பற்பல வடிவில் அமைத்துப் பற்றவைத்துப் பணதிகள் பல புரிவதால் பற்றவைக்கும் செயல் கருதிப் பற்றர்-பத்தர் எனவும் அழைக்கப்பெறலாயினர். அத்துடன், திருத்தாலி

தமிழர் மணமும் தாலியும் 23
செய்யவேண்டிய விஸ்வக்ஞ ஆச்சாரியரானவர் சாமானி யமான மனிதர்போன்றவரல்ல.
" சில்ப்பீனுே ஹிர்தயம் ப்ரஹ்மா
ஜூகரெள விஷ்ணு சங்கரெள
சந்திரார்க்க அக்னி நேத்ரஞ்ச
சரீரம் சர்வ தேவதா? என்று சிற்பசாத்திரம் கூறுவதால் பொதுவாக சிற்பா சாரியனுடைய இரு தயத்திலே பிரமாவும், கைகளிரண்டிலும் சிவனும் விண்டுவும் இருத்தலுடன் கண்களிலே சந்திரன் சூரி யன் அக்கினிகளும், மற்றச் சரீரம் முழுமையிலும் சகல தேவர்களும் வசிக்கின்றர்கள் என்று எவ்வளவோ மகத்துவமாகக் கூறுவதையும் காண்கின்ருேம் அல் லவா ? மேலும் அவரோ மிகத் தூய உள்ளத்தின ராய் அங்கவீனம் இல்லாது சிற்பம், ஓவியம் முதலிய கலைவல்லுனராய், முக்கால சந்தியாவந்தனம் முடித்து ஆசாரசீலராய் ஒழுகித் தமது அக்கினிகாரியக் கடமை களை மந்திரபூர்வமாகச் செய்பவராய், பொய் பேசாத சாந்த குண சம்பன்னராய், என்றும் இன்பவார்த்தை பகர்வதோடு பிறர் பொருளில் விருப்பில்லாதவராய் உள்ளவரே தாலியமைக்கத் தகுதியுடையோராவர். இன்னும் அவர் அக்கின்காரியம் புரியும் யாக குண்ட இடமும் சுத்த சாணத்தால் சதுரமாக மெழுகிக் கோலமிட்டுப் பட்டுத்துணியால் நாற்புறமும் சுற்றிப் பக வத் தியானத்துடன் இயல்பான நெருப்புண்டாக்கி அதிலே பொன்னினை உருக்கித் தட்டித் திருமங்கல்யம் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்தபின் நல்ல சுபஒரை யில் ஒர் பட்டுத்துணியில் அல்லது தாமரை, ருே சா, மல்லிகை முதலிய மலர் இதழ்களிலாவது வைத்து மூடித் தராசில் எடை இடாதபடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே உரியவர்களிடம் கொடுத்தல் வேண்டும். அங்ங்ணம் கொடுக்குங்காலை ஆச்சாரியரது கையிலிருந்து தாலியை வாங்குபவர்களாகிய மணமகன், மணமகளது தந்தை தாய்ர் ஆச்சாரியரை அஞ்சலிசெய்து ஒர் புதிய தட்டில் ஆடை, பொற்பணம், தாம்பூலதட்சணை, பழ வர்க்கங்களை வைத்து வ்ழங்குதல் முறையாகும்.

Page 20
26 தமிழர் மணமும் தாலியும்
இவ்வாறு ஆசாரியரை மகிழ்வித்துப் பூரண பத்தி யொடு செய்வித்துத் தீர்க்காயுளையும் இன்பவாழ்வையும் தேடுவதை விடுத்து ஆசாரமென்பதை அணுவளவு மறி யாத அந்நிய சாதியார்களது நகைக்கடைகளிலே சென்று அங்கே பல அமங்கலிகளது தாலியும் மற்றும் குற்ற மாய்க் கழிக்கப்பெற்ற நகைகளும் புதுப்பித்துக் கண் ணுக்குக் கவர்ச்சியாக வைத்திருப்பதால் எளிதிற் பெறும் வசதியை மாத்திரம் கருதி விலைக்கு வாங்கிய அமங் கலிகளின் தாலியைப் புதிய திருமணத் தம்பதிகளுக்கு அணியச்செய்தல் எவ்வளவு தோஷமாகும்; அவர்களது நீண்ட வாழ்வுக்குத் தாழ்வேற்படுத்துவதுமாகும் என் பதை எண்ணுகின்றர்களில்லை. என்னே தமிழர் செய்கை,
செம்மணச் செல்வர்களாய் நல்லொழுக்குடைய ஆசாரியர் நன்முகூர்த்த ஒரையிலே தாலி செய்ய ஆரம் பித்த அக்கினிகாரியக் கிரியை நடைபெறும் வைபவ ஒழுங்குகளின் நிகழ்ச்சிமூலமும் நாளுக்கு உருக்கப்பெற்ற பொன்னின் வடிவத்தையும் உருகும் நிலை யையுங் கொண்டு மணமக்களது வாழ்க்கைத் தரத்தையும் பிற பலாபலன்களையும் அன்புடைய ஆசாரியரானவர் நடக் கப்போகும் உண்மைச் சம்பவங்களேயும் எளிதிற் கூற முடியுமல்லவா? இஃது ஒர் அனுபவ உண்மை என்பதை அறியாதாருமுளரோ !
இவ்வாறு அவர் செய்யும் தாலிகளில் அவரவர் குலமுறைகட்கேற்பப் பலதரப்படச் செய்யும் வழக்க முண்டு. அவைகளுட் சில பிள்ளையார் தாலி, கொம்புத் தாலி, குண்டுத்தாலி, முறிச்சுக்குத்துத் தாலி, சிறுதாலி, பார்ப்பனத் தாலி, உட்கழுத்துத் தாலி, பொட்டுத்தாலி இரட்டைத்தாலி, தொங்குதாலி, தொடர்தாலி, புருத் தாலி, குருசுத்தாலி, ஐம்படைத்தாலி என்பனவாம். இந்த ஐம்படைத் தாலியினப் பஞ்சாயுதம் எனவும் கூறுவர். இது பெரும்பாலும் சிறுவர்களேத் துட்ட தெய்வங்களின் தோஷமனுகாவண்ணம் காவலாக அணிந்து காப்பது. そ m

தமிழர் மணமும் தாலியும் 27
பொதுவாகத் தாலியினைப் பூர்வ காலத்து ஆசாரிய ரானேர், அதாவது கற்காலங்களைக் கடந்து உலோக காலம் ஏற்படுவதற்குமுன் அக்கால வழக்கின்படி பனை ஒலையிலே தமது எழுத்தாணிகொண்டு காதலர் இரு வரையும் வரைவுடையராக்குதற்கு உரிய அத்தாட்சிச் சாதன முத்திரையாக இருவர் பெயர்களையும் வரைந்து அதைச் சுற்றி ஓங்காரயந்திரத்தைப் பொறித்து அதன் நடுவே எழுத்தாணிக் குறியமைத்து அதன் இருமருங் கும் காதலனது பாதசின்னமெழுதி மந்திரபூர்வமாகத் தியானித்து, ' புதுத் தம்பதிகளாகிய நீவீர் இருவீரும் இன்றுமுதல் எக்காரணங்கொண்டும் ஒருவரை ஒருவர் பிரியமாட்டோம் ' என்ற ஆணைபெற்று அந்த இயந்திர ஒலையாகிய தாலியே உலகறியும் அத்தாட்சிச் சின்ன மாகக் கொண்டு மஞ்சட் காப்பிட்டுச் சாம் பி ராணித் தூபதீபங் காட்டிப் பத்தியொடு புஷ்பங்களால் அர்ச்சித்து ஒலையைச் சுருள்செய்து பருத்திநூலில் மாட் டிக் காதலன் கையிலே கொடுத்துக் காதலியின் நெஞ் சிலே அந்தத் தாலியாகிய முத்திரைஓலை படியும்வண் ணம் கழுத்திலே மாட்டித் தொங்கச் செய்யும் வழக்கத் தைக் கையாண்டு வந்தனர்.
எனவே, தாலம் என்று பனைக்குப் பெயர் வழங்கும். ஆகவே, அத் தாலத்து இலையில் மேற்படி விஷயங்களை வரைந்து அணியப்பெற்றமையால் " தாலி " எனப் பெயர் பெறலாயிற்று. அத்துடன் பிறிதொருவகையில் அதாவது தலைவனது தாள் அமைந்த சின்னம் பொறித்து அம் முத்திரைஒலையைத் தலைவிக்கு ஈவதால் தாள்+ஈ=தாளி-எனப்பெற்று நாளடைவில் தாலி எனப் பெறலாயிற்று என்பாருமுளர். இது மாத்திர மல்ல, அப் பழங்காலத்திலும் இடைக் காலங்களிலும் பனை ஓலைகளிலேயே சகல கலைகளையும் மந்திரதந்திரங் கள் ஒவியங்களையுங்கூட எழுதும் வழக்கு இருந்துவத் தது. அத்துடன் பெண்கள் காதில் அணியும் தோடா னது பனைஒலையினைச் சுருள்செய்து அழகுற அணிந்து

Page 21
盛& தமிழர் மணமும் தாலியும்
வந்தமையால் அதனைக் 'காதோலை" என வழங்கிய வழக்கம் இன்றும் வழங்கக் காண்கின்ருேமல்லவா ? அக் காலத்தில் தமிழகத்தில் மந்திரவிதிகள், இயந்திரமுறை கள், தந்திர வகைகள் இருந்தைமையாலல்லவா புட்கர ஞர் என்னும் புலவர் தமது மந்திரநூலில்:
"வச்சிரம் வாவி நிறைமதி முக்கோண
நெற்றிநேர் வாங்கல் வியங் கறுத்தல் உட்சக் கரவட்டத் துட்புள்ளி என்பதே '», புட்கரனுர் கண்ட புணர்ப்பு" எனக் கூறப்பெற் றுள்ளதுகொண்டு அறியலாம்.
பொதுவாக மக்கள் நாகரிகம் படிப்படியே முதிர்ச்சி யுற்று வளர்ந்துகொண்டே வருதல் நாம் அறிந்த உண்மையாகும். ஆகவே கற்கால உலகில் வாழ்ந்த மக்கள் கல்லினலியன்ற ஆயுதங்கள் கொண்டு தத்தம் தேவைகளைப் பூர்த்தியாக்கினர். அவ்வாறே உலோக காலம் ஏற்பட்டதும் அக்காலத்தவர்கள் இரும்பு, செம்பு, வெள்ளி முதலிய உலோகங்களால் இயன்ற யூயுதங்களைத் தங்கள் செயலிஞரல் நிருமித்த கருவிகள் மூலம் தங்கள் தேவைகளை நிறைவேற்றினர். ஆகவே, அந்த உலோக காலந் தொட்டுப் பொன்னினல் தாலி செய்தணியும் வழக்கமும், அதற்குமுன் ஒலைகளினல் சமைக்கப்பெற்ற தாலிகளை அணியும் வழக்கமும் உதித்த தென்பதே உறுதியாயிற்று.
இங்ங்ணம் பல்லூாழி காலங்களுக்கு முன்கூட்டியே பொன்னணிகள் செய்து அணியப்பெற்று வந்திருக்க வும் பொருமை உள்ளம் படைத்த அற்பமதியினர் சிலர், பொன்னினல் தாலி செய்து அணிவது அர்த்த மற்றது; மகிமையற்றது என்று கூறிப் பாமர மக்களை மயக்கி வருதல் எவ்வளவு கொடுமையும், பாவமும், தமிழர் பண்பாட்டிற்கு அடுக்காததுமாகும். இவ்வித துர்ப்பிரசாரத்தின்மூலம் தங்களுக்குப் பெரும் புகழ் சம்பாதிக்கும் நோக்குடன் தங்களைப் புலவர், பண்டிதர் என்ற புனைபட்டங்களால் அனிழக்கச்செய்து, தமிழர்

தமிழர் மணமும் தாலியும் w 9
சீர்திருத்தத்துக்குப் பாடுபடுவார் போல நடித்து இந் நாள் வெளிவரும் போலிப் புலவர்கள் இன்று இந்நாட் டில் கிளர்ச்சிசெய்து அந்நிய நாகரிக ஒழுக்கமென்னும் சூறைக் காற்ருல் தாக்குண்டு மயக்கங்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் பரம்பரைத் தமிழர் பண்பாட்டிற்கும் கலாச்சாரத்துக்கும் முழுமாரு ய், இயற்கை வளத்துக்கு முரண்பாடுடையதாக இருக்குமாறு உடற் சுகாதார விதிக்கமைய அனுசரித்து வருவதும், பண்டுதொட்டுக் குடுமி வைக்கப்பெற்றிருந்ததுமாகிய அழகிய தலையினை மொட்டையடித்துக் குருெப்’ எடுத்து முழிவிசேஷத்துக் கும் உதவாதபடி செய்துவருதல், தங்கள் நாட்டின் தேச சுவாத்தியத்துக்கு உகந்த உடைகளாகிய வேட்டி அணி தலை வெறுத்துக் குளிர்ப் பிரதேசத்து மக்களனிவதே போன்ற முழுக்காற்சட்டை, அரைக் காற்சட்டை அணி தல், இயற்கை விதிக்கமைவாகத் தமிழர் அணிகின்ற கெள பீனந் தரித்து மானங்காத்தலை அறவே கைவிட் டொழுகும் அற்ப பழக்கம், மேலும் தங்களைத் தமிழர் எனச் சொல்லிக்கொள்வது சரியல்ல என மதித்துச் சிங் களர், துலுக்கர் அணிகின்ற சார உடைகளைத் தாங்களு மணிந்து சிங்களவர் துலுக்கர்களாக மாறித் தமிழர் மரபை அடியோடு மறத்தல் முதலிய அநாசாரங்களைக் கையாண்டு வருதலையும், இது மாத்திரமன்றி மற்றுப் பெண்களோ என்ருல் இயற்கையாக பெண்தன்மைக் கமைவுடைய நாணம், மடம், அச்சம், பயிற்பு என்ற நற்பண்புகளைக் கைவிட்டு, பெண்களது இயற்கை மானங்காக்கும் பழக்கமின்றி அவர்களது இயற்கை உடலமைப்பிற்கும் சுகாதார முறைகளுக்குமிணங்க அதாவது பெண்களுக்கு மாதவிடாய் வருங் காலங்களில் பெரும்பாலும் 4 நாட்கள் வரையும் சிலரது உடல் நிலையைப் பொறுத்து மேலதிக நாட்களுக்கும் அழுக்கு வெளிப்படுவது வழக்கமென அறிந்தே அவர்கள் அணிய வேண்டிய சேலை 16 முழமும் பல நிறங்கொண்டவையாக வும் இருத்தல் வேண்டும் என்னும் விதியை அக்காலப் பெரியோர் வகுத்துள்ளனர் என்பதைச் சிந்திக்க வேண்

Page 22
3. தமிழர் மணமும் தாலியும்
டாமா? அத்துடன் ஆடவர் தாங்கள் அணிவதாகிய 4 முழ வேட்டியை அணிவதில் பின்வாங்காது தங்கள் கணைக்கால் மறைய உடுப்பதைப் பார்த்தேனும் திருந்த நடந்து தங்கள் மானத்தைக் காக்க விரும்பாது வெறும் நிர்வாணிகளாக நடமாடல் எத்துணை வெட்கக்கேடு என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்கவேண்டாமா ?
பெண் மானத்தைக் காப்பதற்குப் .ொருந்துமாறு அணிந்துவந்த 16 முழச் சேலையைப் பதினறில் ஒன்ருகச் சுருக்கி அரை தெரியக்கூடிய நிர்வாண உடைகளை உடுத்தி நாகரிக நங்கைகளாக வெளியில் நடமாடி வரு தலுடன், காமசிருங்காரங்களைப் பெரிதும் காட்டுவதா கிய சினிமாப் படக்காட்சிகளை நாள்தோறும் பார்க்கும் பழக்கத்தால் மயக்கங் கொண்டு நாணம் வெட்க மென்னும் குணங்களை நாரியரெல்லாம் நாட்டைவிட்டுத் துரந்தி கூடா ஒழுக்கங்களே குடிப்பழக்கமாக்கிக் கொண்டு தங்கள் மார் பின் இயற்கை உறுப்பு முழுமை பும் தெரியும்படியான கச்சினையும் மஸ்லின், நெற் துணிகளையும் அணிந்து ஆடவர் சமுதாயத்தினரை அநோகதிக்காளாக்கி வருவதனல் எதிர்காலச் சந்ததி எவ்வாருகுமோ அறிகிலோம். எனவே கவியின் வனப் பைக் கூறப்புகுந்த அக்காலப் புலவர் ஒருவர் பெண் களின் உடை அலங்கார்த்தை ஒப்பிட்டு:
"குச்சிலிய மாதர் குயமுங் கொழும்போகம்
மெச்சீலங்கை மாதர் வியன்றனமும்-சிச்சீ தெலுங்க மடமாதர் சிங்காரக் கொங்கைக் கலிங்கமது போலுங் கவி" என்று கூறிய பிராரம் குச்சிலியநாட்டு மங்கையர்களது மார்பான தும் இலங்கை மாதர்களது தனமும் துணியால் மறைக் கப்படாது வெளிப்படத் தோற்றி மிக அருவருப்பைத் தருவது போலவும் எனக் குறிப்பிட்டு உண்மையாக சொல்லழகும் பொருள் ஆழமும் இலக்கண அமைதியும் கொண்ட கவியோ என்ருல், தெலுங்கமட மாதர்களது கொங்கையானது முன்னே கீச்சினல் இறுகக் கட்டி

தமிழர் மணமும் தாலியும் 3
மறைத்தலுடன் மேலும் மற்றேர் தாவணித் துணியி ணுல் அழகுபெற மூடியிருப்பதேபோன்று கவியானது சொல்லழகும் பொருளாழமும் பொருந்திச் சாதாரண மாகப் பார்த்தமாத்திரத்தில் சொல் விளங்காமலும் ஆழ்ந்து பார்க்கினும் பொருள் விளங்காமலும் இருப்ப தொத்து முன்னே கச்சினல் மூடிமறைக்கப்பட்ட தனத் தினை மேலும் தாவணித் துணியினல் மறைத்து அழகு பெறச் செய்தமைபோன்றதே கவியின் உண்மைத்தரம் என்பதுபோல சொல்லும் பொருளும் பொதியப்பெருது யாக்கப்பெற்ற கவியானது ஆடையணியாத நிர்வாண நிலையிலுள்ள பெண்போலவும் என உவமித்தும்; சொல்லால் மாத்திரமன்றிப் பொருள் ஆழங் கொண் டுள்ள கவி ஆயின் மாந்தர் எளிதில் அதை உணர்ந்து இரசிக்க முடியாததுபோல, கச்சினல் மறைந்திருந்த தன மானது மேலும் தாவணித் துணியினுல் மறைக்கப் பட்டு நிறைந்த அழகினைக் கொடுப்பதேபோன்று தற் கால மாந்தரும் தங்கள் உடைகளை அணியும் போது இயற்கை உறுப்புக்களாகிய மர்மத்தானங்கள் சிறிதும் தெரியாதவண்ணம் அணிந்து தங்களுக்குரிய நாணம், மடம், அச்சம், பயிற்பு என்ற நான்கு பெண்மைக் குணங் களையும் கைக்கொண்டு ஒழுகுவதே நம் தமிழர் பண் பாட்டிற்கு ஒத்ததாகும். அல்லாத உடைகள் நிர்வாண நிலையினவே என்க.
இவ்வாருக நம் பண்டைத் தமிழகத்து நிலவிவந்த பரம்பரைப் பண்பாட்டொழுக்கங்களெல்லாம் பயனற் றுப் பாழாய்ப் புதையுண்டு வருதலை எங்கள் நாட்டுப் பண்டிதப் பெருமக்கள் நாள்தோறும் பார்த்திருந்தும் அவைகளை அகற்றுதற்கான பரிகாரந் தேடுகின்ருர்களா என்ருல் இல்லவே இல்லை, இக் கேவல ஒழுக்கங் களால் தழிழர் சமுதாயம் தரைமட்டமாய்ச் சீரணித் துச் செல்வதைச் சிறிதும் சிந்தியாது வாளா இருந்து கண்மூடிகளாகக் காலங்கடத்தி வருவதால் மாத்திர மன்றித் தமிழினத்திற்கு மிக முக்கியமாகக் கையாளப்

Page 23
32 தமிழர் மணமும் தாலியும்
பெற்று வருவத்ாகியதும் தழிழர் வழக்கங்களுள் தலை சிறந்து போற்றப்பெற்று வருவதுமாகிய திருமங்கலி யத் தாலியணியும் வழக்கில் மாத்திரம் அர்த்தமில்லை; மகிமை இல்லை எனப் பறைசாற்ற முன்வந்துள்ளதினற் பயனென்னே ? என்னே இவரின் மதியின் வன்மை ? இனியேனுந் திருந்தித் தழிழ்மரபை, தமிழர் மானத்தை, பரம்பரைத் தமிழர் பண்பாடாகிய பழக்க வழக்கங் களைக் காப்பாற்ற முன்வருவார்களா ?
இன்னேரது துர்ப்பிரசாரம் இவ்வாருக, உண்மை யளவில் தாலிமுத்திரையின் பெருமையையும் அதை அணிவதினுல் ஏற்படக்கூடிய நன்மைகளையும் பின் வரும் ஆதாரங்களாலாவது இனிது அறிதல்கூடுமெனக் கருதி அவற்றை ஈண்டு தருவாம். இங்ங்னங் கரண முறையாக வரித்த மணமுறையினை அடியார்க்குநல் Gorr ii:-
நேரிறைமுன் பற்றி துமர்தர நாடறி நன்மண மயர்கம் சின்னுள், ' எனவும் விளக்கி அன்றுதொட்டு இன்றுகாறும் களவிற் கூட்டமில்லாத கரணச் சடங்கே தமிழகத்து நிலவிய துடன், கரண வதுவைக்காலத்தில் மாங்கல்ய முத்திரை பூட்டிய பின்னரே கன்னிப் பெண்ணுனவள் மங்கல மடந்தையாதலும் இம்மாங்கல்ய முத்திரை மகளிர்க்கு இன்றியமையாமையும் விளக்க: **ஈகை யரிய இழையணி மகளிரொடு ** எனப் புறம் 127இலும் அதன் உரையில் * பிறிதோரணிகலமும் இன்றிக் கொடுத்தற்கரிய மங் கலிய சூத்திரத்தை அணிந்த மகளிருடனே ? எனவும் கூறலாயினர்.
இம் மங்கல அணி இழந்தவனையும் புறம் 261இல் " கழிகல மகடூஉ' எனவும், சிலப்பதிகாரத்தில் 'மங்கலவணி யிற் பிறிதணி மகிழாள்", "மங்கல அணி எழுந்தது", "மாங்கல்ய சூத்திரம் வலஞ்செய்தது' எனவும், கம்பர் : "மங்கலக் கழுத்துக் கெல்லாம் தானணி யாயபோது தனக்கண்ணியாது மாதோ’ என்ருர்

தமிழர் மணமும் தாலியும் 33
புறம் 224. ' மெல்லிய மகளிரு மிழைகளைத் தனரே. " இழை - அருங்கல அணியாய தாலி என்க. கந்தபுராணத்தில் :
* கனிந்து காதலர் கட்டிய தாலியை
நினைந்து நெஞ்சில் நிறுத்துவ ரென்றுமே புனைந்த பூணெவை யாயினும் போக்குவர் வனந்த கற்பு வழிக்கொண்ட மாதரே” எனக் கூறுவதால், கற்புடைய மங்கையானவள் மற் றெந்த நகைகளையும் எக்காலங்களிலும் கழற்றலாம்; ஆணுல், தாலியாகிய மங்கலிய முத்திரையை மாத்திரம் தன் நாயகனது ஆயுளைக் கருதி ஒருபோதும் நீக்கமாட் டாள் என்ற கருத்திலும் ; பின்பு :
* மங்கல நாணை மணிக்கள மார்த்து
நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான்' எனவும் கூறியதுடன்; கம்பராமாயணம்:
* மங்கலத் தாலிநாண் தன்னை மற்றையோர் அங்கையில் வாங்கின ரெவரு மின்றியே கொங்கையில் வீழ்ந்தன குறித்த வாற்றின லிங்கித னற்புத மின்னுங் கேட்டியால் ' எனவும் ; மேலும் இராமாயணத்தில் கூறப்பெற்ற இராமனது முன்னேனும் அவனது 21ஆம் தலைமுறைப் பாட்டனுமாகிய அரிச்சந்திரனை, அரிச்சந்திர புராணம்
"கன்னியென் றெண்ணினங் கன்னியோ வலன்
முன்னமே மங்கலம் பூண்ட மொய்குழல்” எனவும்; மேலும் அப்புராணத்தில் சந்திரமதிக்குக் கன் னிமைப் பருவத்திலே சிவானுக்கிரகத்தினுல் அருளப் பெற்றிருந்த தாலியானது அவளது நாயகனுக்கே அன்றி ஏனையோருக்குக் காணமுடியாதவண்ணம் அணி யப்பெற் றிருந்தமையால் அதனை அவளது நாயகனு கிய அரிச்சந்திரனனவன் விசுவாமித்திரனது கொடுமை யால் அரசிழந்து மனைவி மக்களைப் பிரிந்து சுடலை காக்கின்ற வெட்டியானக மாறியிருந்த காலத்தில் சந்திரமதியானவள் அர வந்தீண்டி இறந்த தன் மகனை எடுத்துச் சென்று அச் சுடலையில் வைத்துக் காசு

Page 24
34 தமிழர் மணமும் தாலியும்
கொடாமலே சுடுதற்கு முயன்றபோது, அரிச்சந்திரனல் தடுக்கப்பெற்றுக் கூலி கொடுக்குமாறு பலவந்தப்படுத்தி யதனல், சந்திரமதியோ ‘ஐயனே! நான் ஓர் ஏழைப் பணிப்பெண் " என்று இரங்கிக் கூறியபோது அவனே அவளை மிக அச்சுறுத்தி, "உன் கழுத்தில் இருக்கும் தாலியினை விற்றுத் தருவாயாக’ என்று அதட்டினன். அதுகேட்ட சந்திரமதியோ இடியேறுண்ட அரவம் போல் ஒடுங்கி மனம் புழுங்கி அலறி அழுது, "ஐயகோ! தேவர்களுங் காணமுடியாத என் தாலியை இந்த நீச ஞனவன் பார்க்க நேர்ந்ததே எனக் கரைந்தாள்’ என்று கூறப்பெற்றமையால், இரண்டாவது யுகமாகிய திரேதா யுகத்திலுங்கூடப் பொற்றலிச் சின் முத்திரையை அணி யும் வழக்கு இருந்தமையும் புலனம். அத்துடன் தமிழ் மூதாட்டியாரான ஒளவைப்பிராட்டியாரும்:
"தாயோ டறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்
சேயோடு தான்பெற்ற செல்வம்போம் - ஆயவாழ்(வு) உற்ற ருடன்போம் உடன்பிறப்பாற் ருேள்வலிபோம்
பொற்றலி யோடெவையும் போம்." எனவும், பெரியபுராணம் : "மங்கலம் பொலியச் செய்த
மணவினை ஒலை யேந்தி." என்றும்,
* பணைமுர சியம்ப வாழ்த்திப்
பைம்பொன்நாண் காப்புச் செய்தார்.” எனவும், கூறிற்று. மேலும் திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் தேவரத் தில்: -
"கோலநன் மேனியின் மாதர் மைந்தர்கொணர் மங்கிலி யத்தில் காலமும் பொய்க்கி னும்தாம் வழுவா தியற்றும் கலிக்காமூர்” எனவும் கூறப்பெற்றதோடு, "நெடுநல்வாடை" என்ற சங்கநூலில் :
* ஆரத் தாங்கிய அலர்முல யாகத்துப்
பின்னமை நெடுவீழ் தாள்த்துணை துறந்து நன்னுத லுலறிய சின் மெல் லோதி” எனக் கூறி ஓர் நங்கையானவள் முன்னே தான் வழமையாக அணிந்திருந்த முத்தினற் செய்த ஆர

தமிழர் மணமும் தாலியும் 35
மானது கச்சு (இறவுக்கை) சுமந்துள்ள பருத்த முலையையுடைய மார்பினிடத்தே இருப்பதுடன், பின் னராகிய இப்பொழுது குத்துதலமைந்த நெடிய தாலி நானும் ஒன்று மிகுதியாகத் தூங்குதலால், அதாவது தாலியானது மார்பினிடத்தே வீழ்ந்து தொங்கக் கிடத் தலினுல் அத்தாலி ** நெடுவீழ் ' எனப்பெற்றதுடன் தாலியாகிய ஒலைச்சுருளின் கண் பொறிக்கப்பெற் றிருந்த, தன் நாயகனது இருபாத சின்னமாகிய முத் திரை அத்தாலியில் அமைந்திருந்தமையால் 'நெடுவீழ்' எனச் சிறப்பித்தவாறுங் காண்க. மேலும் ஒரு சந்தர்ப் பத்தில் ஒளவைப்பிராட்டியார் :
* அம்மான் மகளே அடியென்ருற் சீயென்பாள் கம்மாளன் ருலி கழுத்திலுறிற் -செம்மான் செருப்பா லடித்துதைத்துச் சீறிமிக வைதாலும் இருப்ப வரிவனிறைவ னன்று." எனவும்: பின்னர் மற்றுமோர் புலவர்
" வாலி பிறந்து அமிர்தமுண் டாயிற்று வளைகடலில் முலி பிறந்து அமிர்தமுண் டாயிற்று முத்தமிழ்நூல் வேலி பிறந்து பயிருமுண் டாயிற்று விஸ்வகர்மர் தாலி பிறந்தல்ல வோதந் தாரந்த மக்கென்றதே!” என்றெல்லாம் போற்றிப் புகழப்பெற்றமையுங் காண லாம். மேலும் இப் பாடலில் மூன்ரும் அடியில் வந் துள்ள 'பயிருமுண்டாயிற்று" என்பது, "பலனு முண் டாயிற்று ' என்றும் பாடம். அத்துடன் புறப்பொருள் வெண்பாமாலையில் : . . . .
" கொய்தார மார்பிற் கொழுநன் றணந்தபின்
பெய்வளை யாட்குப் பிறிதில்லை -வெய்ய வழிமறையு மின்றி வழக்கொழியா வாயில் நளிமனைக்கு நற்றுணே நாண்.” என்று தாலி சிறப்பிக்கப்பெற்றுள்ளது.
மேற்காட்டப்பெற்ற பிரமாண ஏதுக்களால் பிரதி பாதிக்கப்பெற்றவாறு ஓர் மங்கையானவள் திருமணஞ் செய்து ஒர் ஆடவனுக்கு ஆட்பட்டவள் என்று

Page 25
36 தமிழர் மணமும் தாலியும்
ஏனையோர் அவளைக் கண்டு காமுருவண்ணம் அவளைக் கற்புடையவளாக்கி வரைவுசெய்த சிறந்த தத்துவ மானது அத் தாலிமுத்திரையில் தங்கியுள்ளதை ஊன்றி உணர்மின்கள்; உண்மை தெரியுங்கள். மேலும், தாலி யின் இன்றியமையாச் சிறப்பினை உண்ர்ந்தன்ருே, தொன்றுதொட்டுத் தமிழகத்தில் தலையாய புதுமணத் தம்பதிகள் திருமங்கல்யமாகிய தாலி தரித்து வரைவு பெற்றமையை உலகறியும் மணச்சடங்காக நிறைவேற்றி வரும் வழக்கம் நிலவி வருகின்றதன் ருே !
அத்துடன் அவர்களுக்கு அறுபதாவது வயது பூர்த்தி யாகும் காலத்தில் இரண்டாவது திருமணமானது பூரணுயுளுடன் வாழும்பொருட்டு நடைபெறுவதும் வழக்காகும். அப்படி நடைபெறுங்கால் தாலியினை மறுமுறை புதுப்பித்து வரனனவன் ப்ெண்ணுக்குக் கட்டும் " சட்டியப்த பூர்த்தி விழா “ ச் சடங்கு நடை பெற்று வருவதும் பண்டைக்கால மரபாகலின் தாலி யின் மகத்துவம் தெற்றெனப் புலனுதல் காண்க. மேலும், பொதுவாக மக்கள் தாலியின் மகத்துவத்தை நன்குணர்ந்தல்லவா " தாலியறுந்தது ' என்ற அமங் கல வார்த்தைக்கு நன்மொழியாக அமையுமாறு "இடக்கரடக்கல்’ விதிக்கிணங்க 'தாலி பெருகிற்று' எனச் சிறப்பித்துக் கூறும் வழக்கமும் தமிழகத்தில் பண்டுதொட்டு நிலவி வருகின்றது. மகமதியர் மணம் முடித்தற்குப் பெண்ணுக்குக் கட்டும் 'சவடி’’ என்னும் தாலியில் அவர்களது சமயானுசாரப்படி புனிதக் குறியாகக் கொள்ளுகின்ற பிறைச்சந்திரனையும் நட்சத் திரச் சின்னத்தையும் பொறித்து அதனையே மண மக்களது சத்தியத் தெய்வ முத்திரையாகக் கொண்டு இல்லறம் பூண்டு வாழ முற்படுவதையும் நோக்கத் தகும். அடுத்து ;
அதுபோலவே கிறித்தவர்கள் தங்களது சமயக் கொள்கைப்பிரகாரம் தாலியில் மகிமையான பைபிள் என்ற வேதப் புத்தகச் சின்னத்தையும் பரிசுத்தக்

தமிழர் மணமும் தாலியும் 37
குறியாகிய புரு வடிவையும் தெய்வ அம்சமாகக் கருதி
அமைத்து நெறிதவருத முத்திரையாக அணிந்துவரும் வழக்கமும் உண்டல்லவா ?
இவ்வாறு தமிழர் உலகியலுக்கொத்தவகையில் உயர்ந்த மணமுறை ஒழுக்கம் உள்ளப் புணர்ச்சி அற்ற பின்னர் ஆன்ருேர் அவையின் கண் கரணத்தொடு வரைந்து வாழ்வதே முறையான வாழ்வு என்பது தெளிவாகும்.
இத்தகைப் பெருமைக்கிலக்காய் இருப்பதாலன்ருே தாலி முத்திரைக்குச் சாதி மத பேதமின்றித் தாரணி இன்றும் என்றும் மதிப்புத் தந்து வணங்கிவருகின்றது. அத்துடன் கன்னியொருத்தியின் களவொழுக்கத்தைக் கடிந்து, கற்புடையவளாக்கிக் காதலர் இருவரையும் கலந்த அன்பினுற் பிணிக்கும் கயிருக நின்று தெய்வ அருளைப் பெறச்செய்வது இந்தத் தாலியாகிய மாங் கல்ய சூத்திரமே எனக் கூறுதல் மிகையாகுமா ?
இத்தகைப் பெருமைவாய்ந்த தாலியணிந்து இன்ப வாழ்வு வாழுவதாகிய வாய்ப்பைப் பெறுகின்ற வழக்க மும் இல்லாதொழியுமானல் இவ் அவனி மாந்தர் வாழ் வெல்லாம் முறைகேடாகத் தவறி மிகுந்த அல்லோல கல்லோலத்துக்கிடனய் என்றும் அந்தகார நிலைக்குக் கொண்டு செலுத்தி ஒழியாப் பூசலுடன் முட்டுறுத்திக் கொடிய கேட்டிற்கே வழிகாட்டுமென்பது திண்ண மல்லவா ? நிற்க,
இவ் உயர்ந்த அருட்பொலிவையும் அற்புத சக்தி யையும் பெற்றுள்ள திருத்தாலி அணிந்து சாந்தநிலை யோடு வாழ்ந்துவரக்கூடிய வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளாமையினலல்லவா இன்று மேல்நாடுகளாகிய ஐரோப்பிய அமெரிக்க நாடுகளனைத்திலும் வதிவோரிற் பலர் சீரான மணவாழ்வின் நற்பண்புகளை அனுபவித்து இன்புறும் வாய்ப்பின்றி, நாணமற்று மானங்கெட்டு

Page 26
38 தமிழர் மணமும் தாலியும்
நாள்தோறும் அவர்கள் கையாண்டுவரும் முறைகெட்ட அநாகரிகப் பழக்க முதிர்வால் ஒழியா அவத்தைக் குள்ளாகி வருகின்றனர். அத்துடன் அந் நாடுகளில் காந்தர்வ விவாகம் புரிந்த தம்பதிகளிற் பலர் விவாக ரத்துச் செய்துகொள்ளும் நிலை நாளுக்குநாள் பெருகி அவ்வாறு விவாகரத்துச் செய்யும் வழக்கமானது அந்தந்த நாடுகளில் இதுவுமோர் கலாச்சாரப் பண் பாகுமோ எனக் கருதுமளவிற்கு முன்னேறி வருகின்ற தென்ருல் அந் நாடுகளின் நாகரிக முன்னேற்றம் எத்துணைக் கீழ்தரத்துக்குச் சென்றுகொண்டிருக்கின்ற தென்பதை அறிந்துகொள்ளலாம். அதுவுமன்றி மற்று மோர் புதுமையானது: உலகில் ஒருபோதும் கண்டு கேட்டிராத வகையில் தாம் அறுபதுக்கு மேற்பட்ட தொகையான பெண்களை மணந்துகொண்ட 90 வயதான தாத்தா ஒருவரே சென்ற ஆண்டில் தாம் ஓர் அரிய சாதனையைச் செய்துவிட்டதாகச் சிறிதும் வெட்க மின்றிக் கூற முன்வந்தாராதலால் இவர் மாத்திரமல்ல அந் நாடுகளில் பொதுவாக வரைவுடைய மணத்தை வெறுத்துத் தாலியற்ற வாழ்க்கையால் சோலியுற்று அலைவதையும் உலகுக்கு அம்பலப்படுத்தி வருவதையும் அறியும்போது ஆர்தான் நகைகொள்ளாதிருக்கமுடியும்?
இவ்வித கேவல நிலைகளை அகற்றி மனித உணர் வோடு மக்கள் வாழவேண்டுமென்ற குறிக்கேரளுடன் மனித உடற்கலையின் மிகக் கூர்ந்த நுணுக்கங்களை நன்கு அறிந்திருந்த அக்காலத் தமிழ்ப் பெருமக்கள் உலகில் /இல்வாழ்க்கையைச் சீராக நடாத்தவேண்டு மானல்/ ஒரு ஆடவனுக்கு ஒரேயொரு பெண்தான் வரைவுடையவளாகக் கொள்ளவேண்டுமென்ற விதியை மனித்னது உடலுறுதியும் உள்ளத் தூய்மையும் உண்மை யான் கலாச்சார ஒழுக்கப் பண்பும் கருதி ஆதிகாலத் தில் உள்ள நம் பெரியோர் விதித்துள்ளனர் என்பது நன்கு தெளிவாயிற்று. ஆனல், தாலியற்ற வாழ்வோ சோலியுற்று வீழ்வு ! தாலி பெற்று வாழ்தல் சாலு மெந்த நாளும் !
நலம் !

இந் நூல் வெளியீட்டுக்குப் பண உதவி புரிந்த பேரன்பர்களுக்கும் , அச்சுப்பதிவை அழகுறச் செய் துதவிய தெல்லிப்பழைக் குகன் அச்சகத்தாருக்கும், முகப்பு அட்டைப்படப் புளொக்கை (Block) மூல வரை தலுக்கு முரணின்றிச் செய்துதவிய அரசினர் சித்திரக் கல்வியதிகாரி திரு. ஆ. தம்பித்துரை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
- இ. சி. க. ஆச்சாரி
பிழை திருத்தம்
பக்கம் au í பிழை திருத்தம்
9 28 உருவு உரியு 25 4. ஜூகரெள சகரெள 31 17 மாந்தரும் LDITSCD is 岛2,丑5 முன்மற்றி முன்கைபற்றி
35 18 அமிர்த (էP5 8)

Page 27


Page 28


Page 29
இந்நூல் ஆசிரியரின் விஸ்வமலர்த்
3.
:
4。
7. 8.
0.
1.
2.
3. ★14。 责15。
ஆராய்ச்சி நூல்களும், மறு
ത്ത ബി--—
முத்துக்குமராச்சாரியசுவாமிகள் சீவி தமிழகத் தனிப்பெருந் தலைநகர் நவராத்திரி விரதமும், அதன் தத் தமிழர் மணமும் தாலியும் சமூக சஞ்சீவி .
அச்சேரு நூல்க மயிலை மருதடி விநாயகர்பேரில் சிச் மாந்தைமாநகர் அன்றும் இன்றும் ஈழத்து ஊரும் பேரும். மனையும் கலேயும், நயினுதீவின் தொன்மையும் நாக நாகபூஷணி அம்பாள் தோத்திரப்
( : மயிலை மருதடி விநாயகர் தோத்தி கதிர்காமப் பதிகம். திருக்கேதீஸ்வரர் உயிர்வருக்க மா! மாவைக் கந்தர் தோத்திர மா?ல. நல்லை வடிவேலர் பதிகம். தையிட்டிக் குருந்தடி அம்பாள் ெ தவத்திரு தம்பிப்பிள்ளை மற்றும் பல பதிகங்கள், ஊஞ்சல்: முதிய உலகமும் முதன்மைத் த சிவன், விண்டு, விநாயகர், முருக பூர்வீ
நட்சத்திரக் குறியீடுள்ளவை ஆ!
இந்த அரிய நூல்களை வெளியிடுத
அன்பர்களது பூரண ஆதரவை எதி
* அறிவுச் சுடரக வெள்ளாங்குளம் ஐ.
(ஈழம்) "
குகன் அச்சகம், தெல்லிப்பழை
 
 

தொகுதிகளாகிய நூல்களும்
eb. 3. சரிதை . 3 - 00 அ3 ... 1 - 00 துவமும் 1 - 50 sSS 2 - 00 og Aales es 50
円
திரக்கவிப் பாமாலை,
ط |
!,ഖങ്ങി அம்மையும்.
பாமாலை
சித்திரக் கவியுடன்.) ர ர்ேத்தனே மாலை.
பரப்பிரசாதியாகிய ச் சுவாமிகள் சரிதை
கள்
மிழரும். ன் முதலியோர க தத்துவ விளக்கம்,
ராய்ச்சி நூல்கள்.
ற்குத் தமிழபிமான Iர்பார்க்கின்ருேம்.
O.