கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2011.06

Page 1


Page 2
குனா
KUNA
AUThiniu
GS- Fittinĝ. (Alu
G framing (
Kalaimagal Vaam Alwal North West, Alvai.
07790835.9/
 
 

பெல்
A BEL
ITT) WOr|KS
minium Glass)
fDuro)
(Main Street, IVelliady. 0777387383

Page 3
ஆடு 8:3
ஆதைஇரிே பிரசன்ன இரி:ே கநவம்: ாஜ்: 2.ஞானசேகரன்
தவராஜா வசந்த6
60),
நூல் வ ン
"இரு
காாணி
 
 
 
 
 
 
 


Page 4
2011 ஆணி இதழ் - 33
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துஷ்யந்தன்
Lugbúuraffluír
கலாநிதி த.கலாமரிை as
வதாடர்புகளுக்கு :
ආගඛා ඌlébló சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி தமி அல்வாய் வடமேற்கு மதிக்கப்ப டுவ 9656T. கூறுகள் சிை GIീ6. காட்டப்பட்டுள் UU66DIT&S5 ÉGALLA ஆலோசகர் குழு: இவற்றிற்கும்
திரு.தெனியான் கொண்டிருப்ப திரு.கி.நடராஜா துஷ்பிரயோக பொருள் பால் விதாலைபேசி 0775991949 மாகிவிட்டன. 0212262225 என ஐயுறவு
நிலையில் ந
W கேள்விச் E-mail : jeevanathy(aiyahoo.com கள்விக் குறி இத்த வாங்கித் தொடர்புகள் GIGOT300TLD L Glor KBharaneetharan இம் மீட்சிக்கா Commercial Bank வதும் போது Nelliady காரணங்கலை A/C - 8108021808 பங்கு வகிக்க CCEYLKLY பாடறற வாழ சிந்தனையின் உள்ளது இந் தினதும் கவன இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து இச்சீர்கேடுகள் ஆக்கங்களின் கருத்துக்களுக்கும்|P-பி** அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் பிக"து புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் களுக்கு துரோ கொள்ளப்படுமி படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை ഉ_ങ്ങ്(B.
- ஆசிரியர்
ஜீவநதி -
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை வமாண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.
- பாரதிதாசன்
லாசார சீரழிவிலிருந்து
x6fäf* asra5írGöIIr9r?
ஜின் தொன்மையும் தமிழர் தம் கலாசாரமும் என்றும் து எம் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்த கலாசாரக் தவுற்று வருவதான நிலைமை இன்று பலராலும் சுட்டிக் ாளது. பத்திரிகைச் செய்திகள் கலாசாரச் சீரழிவுகள் ம்பெற்று வருவதைச் சான்றாதாரத்துடன் தெரிவிக்கின்றன. அப்பால் வெளிவராத கலாசாரச் சீர்கெடுகள் நிகழ்ந்து தான தகவல்களும் உண்டு. குறிப்பாக வன்புணர்வு, சிறுவர் ம், பாலியல் பிறழ்வுகள், கொலை, கொள்கை, போதைப் வனை போன்றவை இன்றைய சமூகத்தில் சர்வசாதாரண இதனால் எமது கலாசாரம் ஆட்டம் கண்டு வருகின்றதோ கொள்ள வேண்டிய நிலமை உருவாகி உள்ளது. இந் Tம் எங்கு சென்று கொண்டு இருக்கின்றோம் என்பது பாகவே உள்ளது.
கைய சீரழிவுகளிலிருந்து மீட்சிபெற வேண்டும் என்ற ரிடத்தும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் “ன நடவடிக்கைகள் நிறுவன ரீதியான முன்னெடுக்கப்படு |மானதாக இல்லை. இந்நிலைமை உருவாவதற்கான Tச் சிந்திப்பின் நவீன தொடர்பாடற் சாதனங்களும் முக்கிய lன்றமையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கட்டுப் க்கைப் போக்குகளும் எதிர்காலம் பற்றிய தெளிவான மையுமே இச்சீர்கேடுகள் பெருகுவதற்கு வாய்ப்பாக நிலமை மாற்றப்படவேண்டுமாயின் இது முழுச் சமூகத் ரிப்பைப் பெறவேண்டும். நிறுவன மயப்பட்ட நிலையில் ரிலிருந்து எமது சமுதாயத்தை மீட்டு எடுப்பதற்கான ள் முன் எடுக்கப்பட வேண்டும். இவற்றை உடனடியாக மேற் காலதாமதம் செய்வோமாயின் நாம் எமது சந்ததியினர் கம் இழைத்தவர்கள் ஆவோம்.
ஆசிரியர்
இதழ் 33

Page 5
மு.பொன்னம் பலத்தின் ”யதார்த்தமும் ஆத்மார்த்தமும்" கலை இலக்கியம் பற்றிய பொதுவான கட்டுரைகளையும், இலக்கியாசிரியர்கள் பற்றி விமர் சனங்களையும் கொண்டுள்ளது. பத்துக் கட்டுரை களைக் கொண்ட இந்நூலில் மு.பொ தனக்கேயுரிய ஆழமான பார்வையை ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுத்தியுள்ளார். "கலை என்றால் என்ன", "இலக்கியமும் இடது சாரியும்", "இனிவரும் இலக்கி யம்", "ஸென் பெளத்தமும் ஹைக்கு கவிதைகளும்", "கவிதையில் ஏன் நாடகம் எழுதவேண்டும்?", "கவிதை நாடகம் இரு தளப் பார்வை", "கலையும் விடுதலையும் ஆகியன பொதுவான கலை இலக்கியங்கள் பற்றிய கட்டுரைகள். "யுதார்த்தமும் ஆத்மார்த்தமும்” என்ற கட்டுரை இலங்கையிலுள்ள சில முக்கிய கவிஞர்க ளைப் பற்றிய விமர்சனமாகவும், சொல்லும் சொற்க் கடந்ததை சொல்லுதலும் கவிஞர் சு.வில்வரத்தினத் தினம் பற்றிய விம்சனமாகவும், "ஒரு கலைஞனின் தேடல்" சுந்தர ராமசாமியின் ஜே.ஜே சில குறிப்புகள் பற்றிய விமர்சனமாகவும் இருக்கிறது. நூற்று ஐம்பத்து நான்கு பக்கங்களைக் கொண்ட இந்நூல் ஏற்கனவே சஞ்சிகைகளில் வெளி வந்த கட்டுரைகளையும், வெளி வராத ஒரு கட்டுரையையும் கொண்டுள்ளது. தமிழியல் வெளியீடாக 1991ம் ஆண்டு வெளிவந்த இந்நூல் இன்றும் அதன் கருத்தின் ஆழத்தால் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. இந்நூலின் இரண்டாவது பதிப்பு அண்மை யில் வெளிவந்ததாக அறிகிறேன். அது இன்னும் என் பார்வைக்குக் கிட்டவில்லை.
இனி இந்நூலின் உள்ளடக்கத்துள் நுழை வோம். முதலில் மு.பொ.வின் "கலை என்றால் என்ன?” என்ற கட்டுரை பற்றி, கருப்பொருளும் ஒர உணர்வு களும், கலையும் அதன் இயக்கமும் என்ற உப பிரிவு களைக் கொண்ட அக்கட்டுரை "ஒரு சமூகப் பொருளா தார காலப் பின்னணியில் படைக்கப்பட்ட கலை இலக்கி யம் அக்கால கட்டம் நீங்கிய பின்பும் சுவைக்கக் கூடிய தாக இருப்பதன் காரணமென்ன” என்ற - மார்க்சே எழுப்பி விடை காணாத - கேள்விக்குப் பதிலளிக்க முயல்கிறது. இது பற்றி "மார்க்சியமும் இலக்கியமும்" என்ற தலைப்பில் றெஜி சிறிவர்த்தனா Lanka Guardian என்ற ஆங்கிலச் சஞ்சிகையில் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இச்சர்ச்சைகள் வெளிவந்த காலத்தில் அவை serious எழுத்தாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தின. ஒரு நூலுக்கு ஒற்றையான நிலையான கருத்து இருப்பதெனக் கூறுதல் வெறும் கற்பிதம்" என்றும் "அது மீண்டும் மீண்டும் தொடர்புபடுத்தப்பட்டு வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு வர்க்க சமூக, அரசியல் ரீதியாக திரட்டப்பட்டு புழக்கத்துக்கு விடப்பட்டு செயல்பட வேண்டும்" என்று றெஜி சிறிவர்த் தனா கூறுகிறார். இந்தக் கருத்தை மறுதலித்து “கலை இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ள ஆரம்பக் கருப்பொருள் மாற்றமுறுவதில்லை" "ஆனால் அவ் ஆரம்ப கருப்பொரு ளால் ஏவப்படும் ஒர உணர்வுகளே நேரத்துக்கு நேரம், காலத்துக்கு காலம் ஆளுக்கு ஆள் மாற்ற முறுகின்றன" என்கிறார் மு.பொ.
"கலை என்றால் என்ன?" என்ற தலைப்பில் ரோல்ஸ்ரோய் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்நூலை நான் உயர்தரவகுப்பிலிருந்த போது படித்த ஞாபகம் வருகிறது. அதன் உள்ளடக்கம் இப்போது நினைவில் இல்லை. என்றாலும் கலை பற்றி விளக்கம் சொல்வதில் ரோல்ஸ்ரோய் தோற்றுப் போயிருந்தார் என்று அப்போது எனக்குப்பட்டது. இப்போது அந்த நூலைத் திருப்ப வாசிக்க நேரின் என் கருத்து என்னவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. என்றாலும் இந்த விளக்கமளித்தல், வரைவிலக் கணப்படுத்தல் என்ற விடயங்களுள் (மொழிக்குள்ளும், கருத்துக்குள்ளும்) கலை பற்றிய உண்மைகளைக் கொண்டுவர முடியுமா என்ற சந்தேகம் எழுந்தவாறே உள்ளது. என்றாலும் விளக்கமுடியாதவற்றையும், வரை விலக்கணப்படுத்த முடியாதவற்றையும் அகப்படுத்தும் முயற்சியாகவே வாழ்க்கையும், கலை இலக்கியங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மு.பொ.வின் ஆழ உணர்வு கள் பற்றிய கருத்துக்கள் எனக்கும் உடன்பாடானவையே. அன்பு, காதல், நட்பு, தியாகம், அர்ப்பணிப்பு, போன்ற உயர் குணங்களும் பொறாமை, சுயநலம், ஏமாற்று, ஆணவம் போன்ற தீய குணங்களும் எம் பரிமாணத்தில் புதைந் துள்ளன என்றே கருதுகிறேன். தீய குணங்களிலிருந்து நல்ல குணங்களை நோக்கிய வளர்ச்சியையே ஆத்மிகம் இலக்காகக் கொண்டுள்ளது. இதன் பின்னணியிலையி லேயே மு.பொ. சொல்லும் அறிவு, அடிமனம், பேர்மனம், என்ற தளங்களும், ஆழ உணர்வுகள் காலத்துக்கு ஏற்ப ஒர உணர்வுகளாக (fringe thought) உணரப்படுவதும் விளங் கிக் கொள்ளப்பட வேண்டும். ளிப்பாட்டுக்கு

Page 6
எத்தனையோ உதாரணங்களைக் காட்டமுடியும். என் றாலும் இப்போது உடனடியாக ஞாபகத்துக்கு வரும் ஒரு உதாரணத்தைத் தருகிறேன். Shakespeare இன் Macbeth இல் வரும் பின்வரும் வரிகள் என் மனத்தில் ஆழம் சென்று எத்தனையோ பிரமாண்ட உணர்வுகளை எழுப்பு கின்றன:Macbethசொல்கிறான்.
...all ouryesterdays have lighted fools. The way to dusty death, out outbriefcandle Life's but a walking shadow, a poor player That struts and frets his hour upon the stage And then is heard no more it is a tale Told by an idiot, full of sound and fury Signifying nothing, அனுபவமே ஆசான் என்பார்கள். மக்பெத் பேராசை கொண்டு நம்பியவர்களைக் கொன்று அரசைக் கைப்பற்றியபோதும், கடைசியில் மனைவியும் பைத்திய மாகி இறந்து போகின்றபோது ஏற்படுகின்ற விரக்தியின் குரல் இது. ஷேக்ஸ்பியர் அவநம்பிக்கை வாதியல்ல. பேரியல்புகளை பல்வேறு கோணங்களில் ஆய்ந்த அவரது கதாபாத்திரங்களில் ஒன்று Macbeth. இராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் எவ்வளவோ காலத்தையும் தாண்டி இன்றும் இனிய அனுபவத்தைத் தருகின்றதென்றால் ஏன்? அண்மைக் கால இன்னொரு உதாரணம் "அகல்யா” புதுமைப் பித்தன், மஹாகவி மு.தளையசிங்கம் எனப்பலர் பல்வேறு கோணங்களில் மூலப்பாத்திரம் மாறுதல டையாமல் அலசியுள்ளனர். இதையே "ஓர உணர்வு" என்று மு.பொ. குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.
இரண்டாவது கட்டுரை "இலக்கியமும் இடதுசாரியும்". இது இவரது ஆரம்பகாலக் கட்டுரை களுள் ஒன்று. 1967இல் பேராதனைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது எழுதியது. "இலக்கியம் இப்போது மதங்களின் இடத்தைப் பிடித்து வருகிறது" என்ற ஜூலியன் ஹக்ஸ் லியின் மேற்கோளோடு தொடங்கும் கட்டுரை "மார்க்ஸ் பிரகடனப்படுத்திய கொள்கைகள் இன்னும் பல ஆண்டுகள் வரை பலரின் இலட்சியத்துக்குரிய களமாயும், கருத்தாயும் அரசோச்சப்போவது மறுக்கமுடியாத உண்மை. இன்று மார்க் சின் கருத்துகளால் பாதிக்கப் படாத எழுத்தாளர்களே இல்லை எனலாம்" என்று தொடர்கிறது. "கலைகலைக்காக காரர்களும்” விமர்சனத்துக் குள்ளாகின்றனர். "1848 ஐரோப்பிய புரட்சியின் தோல்வி பல முற்போக்கு கலைஞர்களின் மனதிலும் தோல்வி யைப் பாய்ச்சி அவர்களைத் தமக்குள்ளேயே பதுங்கச் செய்தது" இயந்திர வளர்ச்சியும் இரண்டு உலக யுத்தங்களின் போது மனித உயிர்கள் பட்ட உதாசீனமும் தனிமனிதனை மேவி வளரும் இன்றைய சமூக அமைப்பும் இன்றும் கூட பல உயர்ந்த கவிஞர்களைத் தமக்குள்ளேயே பதுங்கவைத்துப் பயங்கர தனி மனித வாதத்துக்கு இட்டுச்செல்கின்றன. "கலை கலைக்காகவே” என்பது அந்தத் தனிமனிதவாதத்தின் கருவி "கலை
ஜீவநதி

கலைக்காகவே" என்று வாதாடியோரும் இலக்கியத்தின் கண்டுபிடிப்பைத் தான் நடத்தினார்கள். ஒரு ஆத்ம விசாரணைத் தேடல், கண்டுபிடிப்பு (பெரும்பாலும் கண்டுபிடிக்கப்பட்டவை வெறும் உணர்ச்சிக் கூட்டங் களே தான்) ஆனால் இவர்கள் கண்டுபிடிக்கச் சென்ற இடத்திலிருந்து மீண்டும் திரும்பியதே இல்லை. அவர்களும் அவர்களது கண்டு பிடிப்புகளும் அவற்றால் விளையக்கூடிய பிரச்சாரமும் அவர்களோடேயே மாண் டொழிந்தன. அதனால் அவர்களது தேடலால், சமூகம் எந்தவிதப் பயனையும் கண்டதாகவில்லை, சமூகத்தை அனைத்து வளராத எந்தச் செயலும் இருந்தும் இல்லாததற்கும் சமமே" என்கிறார். இவ்வாறு இடது சாரிகள் பற்றியும், கலை கலைக்காககாரர்கள் பற்றியும் ஆழமாகவே ஆராயும் மு.பொ அடுத்து இலக்கியத்தில் cloudy Impenetrability-glacDGT55.5b5 6L (plgu IIT5 மூட்டச் செறிவு பற்றிப் பேசுகிறார். வாழ்க்கை வெளிப் படையான ஒன்றாகத் தோற்றம் தரினும் உண்மையில் அவ்வாறில்லை. வெளிப் படையாக தெரிவது தோற்றம் மட்டுமே, ஆழத்தில் புரியாத புதிர் முடிச்சுகளைக் கொண்டது. அந்தப் புரியாத புதிரின் மலிவான ரசனையே மர்மக் கதைகள், திரைப்படங்கள், துப்பறியும் கதைகள், ஆவலைத் தூண்டும் ஆச்சரிய சம்பவ கதைகள் திரைப்படங்கள் போன்றன. திகில் காட்சிகள், சண்டைக் காட்சிகள், பால் உணர்வை தூண்டும் காட்சிகள் ரசனைக்கு மனித இயல்புள் புதைந்துள்ள ஆழ் உணர்வுகள் காரணமாக இருக்கலாம். அதன் "உண்மைத்தன்மையை" திரித்து போலி ரசனையை வளர்த்து வியாபாரம் பண்ணு கிறார்கள். சோதிடசாஸ்திரம், மாந்திரீகம் போன்றவை கள் கூட "ஆழ உண்மையின் ஏதோ ஒரு முனையைத் தொடுவதாக நினைக்கின்றேன். அவை உண்மையான ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் போலியாக உபயோ கத்துக்கு விடப்பட்டிருப்பது தான் அவை பற்றிய விளக்கம் பெறுவதற்குத்தடையாக இருக்கிறது. இந்த இடத்தில் "இனிவரும் இலக்கியம்” என்ற கட்டுரை யிலிருந்து ஒரு மேற்கோளைத் தருவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அக்கட்டுரையில் மு.பொ. சொல்கிறார் "அறிவு வாதம் புனல்களின் தரவு களுக்கு முக்கியத்துவம் அளித்து புலன்களுக்கு அப்பாற் பட்ட மனத்தளங்களையும் அதன் விசாரணைகளையும் ஒதுக்கியபோது "விஞ்ஞானம்” பேணப்பட்டதாகத் தேறிய போதும் மனிதப் பேரியல்புகள்- அதன் வெளியீடுகளான கலைத்துவம் - சீர்குலைந்த தாகவே பல கலைஞர்கள் கருதினர். காரணம், அக ஆய்வு சம்பந்தமான கலையாக்கக் கண்டுபிடிப்புகள் கற்பனாவாதங்களாக ஒதுக்கப்பட்டன. இன்னும் ஒரு மேற்கோள் "இவர்களது (கலை கலைக்காக காரர்களது) இலக்கிய ஆக்கங்கள் விஞ்ஞானப் போக்குக்கு ஒத்தூது பவையாகவும் இல்லாமல், அதே நேரத்தில் பழைய ஆத்மிக கலைக்காரனின் அகஆய்வுச் சித்திரங்களாக
H இதழ் 33

Page 7
வும் இல்லாமல் தனித்து நின்றன. தனியுலகமெடுத்தன”. "இந்த புது அக ஆய்வின் உக்கிரமாக்கல் பழைய இலக்கியக்காரரின் மனத்துக்கு பழக்கப்பட்ட குறியீடு களையும் படிமங்களையும் நாடி நிற்காமல் புதுக் குறியீடுகளையும் படிமங்களையும் சூடிக்கொண்டன"
இந்த இடத்தில் ஒன்றைக் கவனிக்கவேண்டும். வேதம், உபநிடதம் போன்ற பழைய இலக்கியங்களில் வருகின்ற குறியீடுகளும் , மகாபாரதம், இராமாயணம் போன்ற காவியங்களில் வருகின்ற பாத்திரங்களும் "ஆழ உண்மைகளை" வாழ்க்கையோடு இயைபுற வைக்கும் முயற்சியில் ஈடுபாடு கொண்டிருந்தன. ஆனால் நவீன குறியீடுகளுக்கு அந்த ஆற்றல் இல்லை. பகுத்தறிவை மீறமுயன்றாலும், ஆழ்நம்பிக்கைகள் ஊடாக "உள்" செல்லும் வலுவற்றன. "ஆழ்நம்பிக்கை கள்” வாழ்க்கையில் முக்கியமான பாத்திரங்களை வகிக்கின்றன. ஆழ் நம்பிக்கைகள் இல்லையென்றால் வாழ்க்கை இல்லை. மனிதனை பெளதீக தளத்திலும் சரி, ஆத்மீகத் தளத்திலும் சரி இயங்கவைப்பது "ஆழ் நம்பிக்கைகளே பகுத்தறிவு ஏதோ ஒரு நம்பிக்கை மையத்தைப் பற்றிச் சுழலும். அடுத்து நடப்பது என்ன என்று தெரியாத Suspense தான் வாழ்க்கை என்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது. உண்மையைத் தேடிப் புறப்பட்ட "கலை கலைக்காக காரர்கள்" பகுத்தறிவைத் தாண்டிவிடவான முயற்சியிலும், அதனைத் தாண்ட பகுத்தறிவே தடையாக இருப்பதுமான "திரிசங்கு ஊசலில்" மாட்டித் தவிக்கின்றனர். வழி தெரியாது தவிக்கும் இன்றைய விஞ்ஞானம் அறிவியல் , அரசியல் போலவே கலை இலக்கியமும் முேலும் நகர இடமற்றுக் குழம்பிக் கிடக்கிறது. cul-de-sac. ஆனால் அந்த இடைத் தேக்கத்தை உடைத்துக் கொண்டு முன்னேறும் ஆற்றலை அந்தத் தேடலே உள்ளுறையாகக் கொண்டுள்ளது.
அடுத்த முக்கிய கட்டுரை “யதார்த்தமும் ஆத்மாத்தமும்" இது வரை தத்துவார்த்த ரீதியாக "கலை என்றர்ல் என்ன?” என்று பார்த்தோம். ஆனால் இந்தத் தத்துவ நோக்குகளை நவீன, பின்நவீனத்துவ கலை, இலக்கியங்களுக்கு அளவீடாகப் பிரயோகிக்கத் தொடங்குகிற போதே பிரச்சினைகள் உருவாகின்றன. காரணம், தத்துவம் வேறு, அனுபவம் வேறு. தத்துவ மாகப் புத்தியால் உணரப்படுபவை வாழ்வில் நிதர்சன மாக இருக்கவேண்டியது அவசியமில்லை. அனுபவம் நிகழ்பவற்றை உள்வாங்கி உண்மையாகவே உணர்வது. தத்துவத்துள் அடங்காதும், வார்த்தைகளால் சொல்ல முடியாதாகவும் இருக்கலாம். சோல்லமுடியாதவற்றை சொல்லமுனையும் போது கலை இலக்கியங்கள் உருவாகின்றன. வெறும் தரவுகள் கலை இலக்கியங்கள் ஆகா. தத்துவார்த்த நோக்கில் 1. மார்க்சிய கலை இலக்கியம் 2 மார்க்சியம் அல்லாத அறிவார்ந்த கலை இலக்கியம் 3. ஆத்மீக கலை இலக்கியம் என்று பெரு மட்டாக பிரித்துவிடலாம். இந்த மூன்று பிரிவுகளுக் குள்ளும் அனுபவச் செறிவைக் காட்டும் தரமான

இலக்கியங்களும் உள்ளன, கருத்துக்களை வலியுறுத்த முயன்று தரமற்றுச் சோடை போய்விட்ட கலை இலக்கியப் போலிகளும் உள்ளன. போலி சினிமாக் களும் தொலைக்காட்சி நாடகங்களும், கலை இலக்கி யம் என்ற பெயரில் செய்யப்படும் வேறு முயற்சிகளும் மனித இருப்பின் ஏதோ சில ஆழ் உணர்வுகளை ஏமாற்றாக உபயோகித்து பொது ஜனத் திரளைக் கவர் கின்றன. அதனால் அவன் சினிமாத் தியேட்டர்களின் "கியூ" வரிசைகளில் முண்டியடித்துக் கொண்டும் தொலைக்காட்சிப் பெட்டிகளோடு ஒட்டிக்கொண்டும் கிடக்கிறான். Serious கலை இலக்கியங்கள் இவற்றை ஆழமாகவும், வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் வகை யிலும் படைக்க முயல்கின்றன. கலை இலக்கியங்கள் ஆழ் அனுபவத்தை நோக்கிய பயணங்கள். நேரத்துக் கும் மனதுக்குமான தொடர்பில் கலை இலக்கியங்கள் பிறக்கின்றன. அவ "ஆழ்மனத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயல்கின்றன. இப்படிப் பார்க்கின்றபோது "ஆத்மீக இலக்கியங்களுக்கு பழைய இலக்கியங் களையே உதாரணம் காட்ட வேண்டியுள்ளது. நவீன பின் நவீனத்துவ இலக்கியங் கள் அறிவார்ந்த தேடல் கலை இலக்கியங்களாகவே உள்ளன. அந்த அறி வார்ந்த கலை இலக்கியங்கள் ஆத்மீகத்தைப் பின்னணி யாகக் கொள்ளாத வரைக்கும் உண்மையை நோக்கி நகரப் போவதில்லை என்கிறார் மு.பொ. அதையே அவர் "ஆத்மார்த்தம்” என்று குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். இந்தப் பின்னணியிலேயே மஹா கவியும், நீலாவணனும் ஒப்பிட்டு அலசப்படுகின்றனர். முரகையனும், தான் தோன்றிக் கவிராயரும் இழுக்கப் படுகின்றனர். மஹாகவியிடம் ஆத்மார்த்த நோக்கு குறைபாடும், மொழியின் கையாள்கையில் குறைபாடு களும் காணப்படுகின்றன என்றும் முருகையனின் ஒட்ட நறுக்கிய விஞ்ஞானப் பார்வை ஆத்மார்த்த ஆழத்துக்கு இட்டுச் செல்லவில்லை என்றும் மு.பொ. சுட்டிக் காட்டுகிறார். எனினும், மஹாகவியினதும் , முருகையனதும் தோல்வியடைந்த படைப்புகளாக என்னால் கருத முடியவில்லை. நான் முதல் முதல் படித்த மஹாகவியின் தேரும் திங்களும், அகல்யா என்ற படைப்புகள் என்னை மிகவும் கவர்ந்தன. மஹாகவியின் "கோடை"யும், "புதியதொரு வீடும்" முருகையனது "கடூழியமும்" மேடையில் பார்க்கக் கிடைத்தபோது என்னால் ரசிக்கக்கூடியதாக இருந்தது. முஹாகவி பழைய புலவர்களின் "மரபிறுக்கத்தை உடைத்துக் கொண்டு நவீன உலகுக்கு வந்துள்ளார். செய்யுளில் கவிதையைத் தருகிறபோது அதன் செயற்கைத் தன்மை கவிதை ஓட்டத்தில் சறுக்கலை ஏற்படுத்துகிறது என்று மு.பொ. சொல்வது உண்மை. அதேவேளை, செய்யுளின் “வித்துவார்த்த அழகும் மஹாகவியின் சில கவிதைகளில் லாவகமாக வருகின்றது. மஹாகவியின் "ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்" "கண்மணியாள் காதை" "குறும்பா"
இதழ் 33

Page 8
போன்றனவற்றை, மு.பொ. சுட்டிக் காட்டும் குறைகளையும் மீறி, இன்றும் என்னால் ரசிக்க முடிகிறது. சண்முகம் சிவலிங்கமும், நுஃமானும், யேசு ராசாவும் இன்னும் பலரும் அவர் தந்த Inspiration காரணமாக வளர்ந்துள்ளனர். நீலாவணனின் "ஓ வண்டிக்காரா"வின் ஆத்மீக ஆழம் மஹாகவியிடமோ, முருகையனிடமோ இல்லாதிருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் மன எல்லையுள் சிறப்பாகவே செயற் பட்டுள்ளனர். தரமான பல கவிதைகளைத் தந்துள்ளனர். நுஃமானை நினைக் கையில் "நேற்று மாலையும் இன்றைய காலையும்" "துப்பாக்கி அரக்கரும் மனித விதியும்” “புத்தரின் படுகொலை” போன்ற பல கவிதைகள் என் மனதில் ஓடி வருகின்றன. யேசுராசா அதிகம் எழுதா விட்டாலும் "சங்கம் புழைக்கும் மாயாகோவ்ஸ்க் கிக்கும்", "சுழல்", "கழலின் யதார்த்தம்", "புதிய சப்பாத்தின் கீழ், “போராளிகளும் இலக்கியக்காரர்களும்” போன்ற நிலைத்து நிற்கக்கூடிய கவிதைகளைத் தந்துள்ளார். சேரனும், வ.ஐ.ச.ஜெயபாலனும் நிச்சயமாகத் தமிழ் இலக்கியப் பரப்பில் முக்கிய இடம் பெறுவர். சு.வில்வ ரத்தினமும், சண்முகம் சிவலிங்கமும் ஈழத்து இரண்டு முக்கியமான கவிஞர்கள். "சொல்லும் சொற்க்கடந்த தைச் சொல்லுதலும்" என்ற கட்டுரையில் சு.வியின் கலைத்துவ ஆளுமை பற்றி அழகாவே காட்டியுள்ளார். சண்முகம் சிவலிங்கத்தைப் பற்றியும் ஆழமான விமர்சனத்தை வைத்துள்ளார். நானும் எனது "தேடலும் விமர்சனங்களும்” என்ற நூலில் இவ்விருவர் பற்றியும் விரிவாகவே எழுதியுள்ளேன்.
கடைசிக் கட்டுரை “ஒரு கலைஞனின் தேடல்" சுந்தர ராமசாமியின் "ஜே.ஜே. சிலகுறிப்புகள்” என்ற நாவல் பற்றியது. நூலில் ஆரம்பத்தில் கிளப்பப்பட்ட பிரச்சினைகளுக்கு "ஜே.ஜே. சில குறிப்புகள்" என்ற படைப்பை உதாரணமாகக் கொண்டு விடையளிக்க முயல்வது போலவே இருக்கிறது. "கலை என்றால் என்ன?","கலை இலக்கியங்களின் நோக்கங்கள் எவை?" "கலை கலைக்காககாரர்கள் எது வரை செல்கிறார்கள்?" "துளைத்தறிய முடியாத மூட்டச் செறிவு (cloudy Impenetrability) கலை இலக்கியங்களில் ஏன் நுழை கின்றன? அந்நியமாதல், இருப்புவாதம், ஆத்மார்த்தம் என்ற கருத்தாக்கங்கள் வாழ்க்கையை எவ்வாறு வழிப் படுத்துகின்றன?, "வாழ்க்கைக்கும் கலைக்கும் உள்ள தொடர்பு என்ன?" போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டு அவற்றிற்கு விடை தரமுயன்றுள்ளார் மு.பொ.
ஜே.ஜே.என்ற பாத்திரம் பற்றி மு.பொ. சொல்லுகிறார்.
"ஜே.ஜே. "ஒரு பிறத்தியான் அல்லது” "அந்நியன்" சமூகத்தோடு ஒத்தோடாது உள்ளொளி
ஜீவநதியின் நான்காவது ஆண்டு என்பதை வாசகர்களுக்கு ெ
ஜீவநதி

தேடும் ஒரு பிறத்தியான். இவன் தன் வாழ்க்கையில் தோற்றுப் போனவனாயினும் தான் வாழ்ந்த சூழலின் போலித்தனங்களையும் பொய்மையும் சாடுவதில் வெற்றி பெறுகிறான். இந்த ரீதியில் இவன் வரித்துக் கொண்ட வாழ்க்கையின் நோக்கே இதுவெனில் அந்த அளவில் இவன் வாழ்க்கையில் தோற்றுப்போனவன் என்று கூடச் சொல்ல முடியாது. அதாவது ஜே.ஜே. தன் வாழ்க்கையின் செய்தியைப் பூரணமாக உணர்ந்தே கடைசிவரை இயங்கியவன்"
ஆனால் ஜே.ஜே மேலைத்தேய காம்யூவின் - அந்நியன் அல்ல. கீழைத்தேய அந்நியன். சாதாரண துறவிலிருந்து பேர்ஞானம் வரையிலான "அந்நியம்” கீழைத்தேயத்திற்குரியது. அவன் "ஆழ்மனம்" "எல்லாம் ஒன்று” என்று கண்டுபிடிக்கும். அந்தக் கண்டு பிடிப்பி னுாடாக அக,புற எல்லைகளைக் கரைத்து முழமையான மனுத்துவத்தை உருவாக்க செயலில் இறங்குகிறான். இதையே மு.பொ. இக்கட்டுரை முழுதும் சொல்ல முனைகிறார். ஜே.ஜே. ஞானியின் எல்லையை எட்ட வில்லையாயினும் அவனது பயணம் அதை நோக்கிச் செல்கிறது. மேலைத்தேய "அந்நியன்" புத்தியின் இறுதி எல்லையில் வெறுமையைச் சந்திக்கிறான். Emptiness &toblog vague. bT6ir cup6T605 G8 IT6éré0T cil-de-sac. உண்மையில் எம் இருப்போ பிரபஞ்ச பெளதீக இருப்போ வெறுமையல்ல, உள்ளார்த்தமாக பல அற்புதங்கள் நிறைந்த மர்மம். அந்த மர்மக் களஞ்சியத்திலிருந்து எம் தனிப்பட்ட, சமூக வாழ்க்கைத் தேவைக்கேற்றவற்றைப் பெற்றுக்கொண்டு இந்த வாழ்க்கையை அற்புதமாக வாழலாம். பகுத்தறிவின் துணை அவசியம் தான். ஆழ்மனம், பேர் மனத் தளங்களுக்குள் நுழைவதற்கு அது தடையாகாது பார்த்துக் கொள்ளவேண்டியது முக்கியமானது. இதையே மு.பொ. இந்தக் கட்டுரையில் அழகாக விளங்கப்படுத்துகிறார்.
மு.பொன்னம்பலத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1968 காலங்களில் பழகியபோது அவரை ஒரு கவிஞராக மட்டுமல்ல, ஒரு விமர்சகராகவும் அறிந்திருந்தேன். "அறுபதுக்குப் பிறகு-பல்கலைக்கழக ஆக்க முயற்சிகள் பற்றி” என்ற கட்டுரையே நான் முதன்முதலில் வாசித்தது. அதைத் தொடர்ந்த உள்ளொளி, சத்தியம், பூரணி, அலை, மல்லிகை, காலம், காலச்சுவடு போன்ற பல சஞ்சிகை களிலும், பத்திரிகைகளிலும் பல கட்டுரைகளை எழுதி யுள்ளார். இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். அனைத்தும் தொகுக்கப்பட்டு நூலுருப்பெறின் ஈழத்து இலக்கிய உலகை இன்னும் விரிவாக அறிந்து கொள்ள புதிய வாயில் திறக்கும்.
லர் ஆகஸ்மாதம் வெளிவரவுள்ளது தரிவித்துக் கொள்கின்றோம்.
இதழ் 33

Page 9
அவளை எனக்கு ஒரு வருடமாகத் தெரியும். சின்னப் பெண். இருபது வயதிற்குள் தான் இருக்கும். ஆனால், அவளை நான் கண்ட கணத்திலிருந்து கண்ணிரும் கம்பலையுமாய்த்தான் கண்டிருக்கிறேன். எனது கிராமத்திற்கு அவள் வந்தபோது அப்படித்தானி ருந்தாள். மிகப் பெரிய இழப்பொன்று அவளுக்கு நேர்ந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். தாய் தகப்பன் ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள் என்றபடியான குடும்பம் அவளுடையது. அண்ணனை தடுப்பு முகாமிற்குக் கொண்டு பொய்விட்டார்களாம். இவர்கள் மூன்று பிள்ளைகளோடு, தாய், தகப்பன் மட்டுமே வந்தார்கள். ஒரு வருடத்திற்கு மேலாய் நிவாரணக் கிராமங்களில் நசுங்கிக் கிடந்த நிலை அவர் களின் முகங்களில் பிரதிபலித்தது. விசாரணைகள், பதிவுகள், விசாரணைகள், பதிவுகள் என்று மாறி, மாறி எதிர் கொண்ட அசெளகர்ய வேதனை அவர்களின் குரல்களிலும் எட்டிப் பார்த்தது. ஆனாலும், அவர் களைப் பதிவு செய்ய வேண்டிய கடமை என்னிடமிருந் தது. குடும்ப விபரம் அறிந்து எனது பதிவேட்டில் பேணிக் கொண்டேன். அவளது பெயர் தணிகா மற்றவர்களது பெயர் அவ்வளவு அதிகமாய்த் தேவைப்படாது என்பதால் அதனைத்தவிர்த்துக் கொள்கின்றேன்.
அண்ணன் தடுப்பு முகாமிற்குப் போய்விட்ட கவலை தான் அவள் கண்களில் அடிக்கடி கண்ணிராய் எட்டிப் பார்க்கிறதோ என நினைத்தேன். அப்படியும் தெரியவில்லை. ஏனென்றால் மற்ற இரு சிறுமிகளும் அவ்வாறான அதிகப்படி சோகத்தைக் காட்டவில்லை. அதே போல் அவள் தாயிடமும் இப்படி சட்டென்றவுடன் கண்ணிர் துளிர்த்துக் கொள்ளவில்லை. எப்படியிருந்த போதிலும், எனது கேள்விகளுக்கு அவள் தகப்பனே பதில் சொல்லிக் கொண்டிருந்த காரணத்தினாலோ அவள் என்னிடத்தில் அதிகம் பேசிக் கொள்ளவேண்டிய தேவை ஏற்படவில்லை.
 

"மகளுக்கு என்ன பிரச்சினை.? ஏன் அடிக்கடி அழுறா..?" என்றேன் அவள் தந்தையிடம்.
"அங்கை பட்ட கஷ்ரங்கள் ஆருக்குத்தான்
மறக்கும். நாங்கள் பல்லைக் கடிச்சுத் தாங்கப் பாக்கிறம்.
அவள் தாங்கேலாம அழுறாள்." என்றபடி அந்த விடயத்தை நழுவ விட்டார் தந்தை. அத்தோடு அவளது தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நானும் வேறு கேள்விகளைத் தொடுக்கவில்லை.
அவளது குடும்பம் முள்ளியவளையைச் சேர்ந்தது. இடம்பெயர்ந்த முகாம் வாழ்க்கை வாழ்ந்த பிறகு அவர்களை வெளியே எடுப்பதற்கு இணுவி லிலுள்ள தூரத்து மாமன் குடும்பம் இணங்கிய பிறகே, அவர்கள் யாழ்ப்பாணம் அனுப்பப்பட்ட மக்களோடு,
மக்களாக வந்து சேர்ந்திருந்தனர். அவளது Lorrupt,
இணுவிலில் ஆசிரியராக இருக்கின்றார். அவருடனான பழக்கம் இவர்கள் மீது ஒரு நல்லபிப்பிராயத்தையே எனக்கு ஏற்படுத்திற்று.
அவளுடைய தகப்பன் முள்ளியவளையிலே வியாபாரம் செய்து வந்ததாகவும், அவளது தமையனும் வியாபாரத்தையே முன்னெடுத்ததாகவும் போரின் கடுமையோடு அவன் இயக்கத்திற்குப் போய் விட்ட தாகவும், தணிகாவிற்கும் அப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என்பதற்காக, சொந்தத்திற்குள் ஒரு பையனைப் பார்த்து அவளுக்குக் கல்யாணம் கட்டி வைத்ததாகவும், காலப்போக்கில் அவளது மாமா மூலம் எனக்குத் தகவல்கள் வந்தன. அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற செய்தி ன்னக்குப் புதிதாக இருந்த போதிலும், எனக்கு ஆச்சரியமாயிருக்கவில்லை. ஏனென்றால், வன்னியில் அன்றைக்கிருந்த சூழ்நிலை யில் இளம் வயதுத் திருமணங்கள் அதிகம் நிகழ்ந்தி ருப்பதை எனது நாளாந்த கடமைகளினூடு அவதானித் திருக்கின்றேன். பதினெட்டுப் பத்தொன்பது வயது களிலிருப்பவர்களெல்லாம், இளம் தாய்களாகவும்

Page 10
கர்ப்பிணிகளாகவும் இருப்பதை எனது குடும்ப விபரத்திரட்டில் பதிய வேண்டியிருக்கிறது. அவர்களுக் கான உதவிகளை நிறுவனங்கள் செய்ய முற்படுகின்ற போது. இவ்விபரங்களை அவர்களுக்கு வழங்க வேண்டியிருப்பதனால் வன்னியிலிருந்து வந்தவர்களின் இத்தகைய விபரங்கள் என் பதிவேட்டில் பதியப்பட்டே இருக்கிறது. எனினும் தணிகாவைப் பொறுத்தவரை அவளுக்குக் குழந்தைகள் இல்லாத காரணத்தினாலும், அவளைப் பெற்றோர் தமது குடும்ப அட்டையிலேயே இதுவரை பதிவு செய்திருப்பதனாலும், அவ்வாறான தகவல்கள் என் பதிவேட்டில் இருக்கவில்லை. எனினும் என் நினைவு எனும் பதிவேட்டில் இவற்றை தணிகாவின் மாமானார் பதிவு செய்தார்.
ஆனால், அவளது கணவன் இப்போது ங்கே..? என்பது எனது அடுத்த கேள்வியாய் எழுந்தது. அவனையும் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் சென்று விட்டார்களோ..? அதனால் தான் தாங்க முடியாது அவள் அழுது தீர்க்கிறாளோ..? எனக் கேள்வி எழுந்தது. ஆனால் அதற்கு தணிகாவின் மாமா சொன்ன பதில் எனக்கு அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது. அவளது கணவன் இறந்து விட்டதாக அறிந்த செய்தியே அது. ருமணம் முடித்த ஆறேழு மாதங்கள் முடியும் முன்னரே அடிக்கடி இடம்பெயர்ந்து, இவர்களை ஓரிடத்தில் தங்க வைத்து விட்டுக் கடைக்குப் போனபோது அவன் குண்டு வீச்சுக்கு இலக்காகிப் படுகாயமடைந்ததாகவும், இரண்டு நாட்களாய் அவனை "சாறம்" ஒன்றில் போட்டுத் துக்கிக் கொண்டு இடம் பெயர்ந்ததாகவும், போதிய சிகிச்சைகளின்றி வேதனை யின் வலியோடு அவன் உயிரிழந்ததாகவும் அவள் அருகிருந்து அவன் துடிதுடித்ததைப் பார்த்ததனால் நினைத்த கணத்திலே அழுது துடிக்கிறாள் என்பதையும் அவள் ம்ாமா சொன்ன போது என் மனதிலும் வலி மிகுந்தது. இந்த வயதில் அவளை ஒரு இளம் விதவை யாக என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. கணவன் இறந்தாலும் அவளை ஒரு விதவையாக அடையாளப்படுத்தாமல், அவளுக்கு ஒரு பாதுகாப்பை யும் ஏற்படுத்திக் கொடுக்குமுகமாக முகாமில் அவளைத் தனது மகளாகவே, அவளது தந்தை பதிவு செய்து வைத்ததனால், தொடர்ச்சியாக அவள் அவரது குடும்பத்தில் ஒருத்தியாகவே அங்கிருந்தவர்களால்
டையாளம் காணப்பட்டிருந்தாள்.
"ஏன். அவள் தனிய விதவை எண்டு பதிஞ்சிருந்தால் விதவைகளுக்குக் குடுக்கிற உதவிகள் ஏதும் அவளுக்குக் கிடைக்கும்" என்றேன் அவளது மாமாவிடம்.
"சீச்சீ. அப்படி விதவை எண்ணுறதாலை கிடைக்கிற உதவிகளை அவளும் விரும்பமாட்டாள். தகப்பனும் விரும்பமாட்டான். அதுகள் ஒரு காலத்திலை நல்லா இருந்த குடும்பம். இப்ப முகாமுக்கை இருந்து வந்ததெண்டாப் போலை அதுகளிண்டை தன்மானம் கொஞ்சமும் குறையேல்லை. எங்கட வீட்டிலை
 
 
 
 
 
 

தங்கியிருக்கிறதோடை சரி. வேறை உதவிகளை என்னட்டையும் எதிர்பார்க்கிறேல்லை அதுகள். என்றார் அவர்.
எனக்கு அவள் அதிசயப் பிறவியாகத் தோன்றி னாள். தங்கள் கைம்மை நிலையினால் எத்தனையோ பெண்கள் உதவிகோரிக் கொண்டுவந்திருக்கின்றார்கள். ஆனால். இவள். தகப்பனின் நிழலில் ஒதுங்கி யிருப்பதால் அவளுக்கு எந்த உதவியும் தேவைப்பட வில்லையோ..?
காலப்போக்கில் இவள் தகப்பன் ஒரு சிறிய வியாபாரம் தொடங்கியிருப்பதாக அறிந்தேன். அவளும் இடையில் ஒரு தடவை எனது அலுவலகத்திற்கு வந்திருந்தாள். வழமையாக அவளது தகப்பனே என்னிடம் வந்து செல்லும் நிலையில் அவள் வந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திற்று. தனது தங்கை யரில் ஒருத்தியை அழைத்து வந்திருந்தாள். ஒரு விண்ணப்பப்படிவத்தில் கையொப்பம் கேட்டு என்னிடம் படிவத்தை தந்தாள். ஏதோ வேலைக்கு விண்ணப்பிக் கிறாள் போல. என நினைத்துத்தான் அந்தப்படிவத்தை வாங்கினேன். ஆனால், அதைப் பார்த்ததும் மறுபடியும் ஆச்சரியமானேன். A
ஏனென்றால், அது க.பொ.த.உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பபப் படிவம். தனிப்பட்ட முறையில் தோற்றுவதற்கான விண்ணப்பப்படிவம் கிராம அலுவலரும் கையொப்பமிட வேண்டி இருந்தது.
“என்னம்மா ஏ.எல் எடுக்கேல்லையோ ஒருக்காலும்.” என்றேன்.
அவள் கண்கள் கலங்கின. "இல்லை சேர். படிச்சுக் கொண்டிருக்கேக்கை சண்டைவந்து எல்லாம் குழம்பிப் போச்சு." என்றாள்.
“இப்ப என்னென்டு படிக்கிறீர்.” என்றேன். "நோட்ஸ் எல்லாம் வாங்கி வைச்சிருக்கிறன் வீட்டிலையிருந்துதான் படிக்கிறன்"
"கிளாசுக் கொண்டும் போறேல்லையே." “மற்ஸ், சயன்ஸ் எண்டா தான் கிளாசுக்குப் போக வேணும். அங்க பயோசயன்ஸ் தான் படிச்சன் இனி, அது சரி வரா. 'ஆர்ட்ஸ் தான் எடுக்கப் போறன் வீட்டிலையிருந்து படிக்கலாம்."
கண்கள் கலங்கியிருந்தாலும், அவளத விடாமுயற்சி கண்டு வியந்தபடி கையொப்பமிட்டுக் கொடுத்தேன்.
அதன் பிறகு, அவள் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதாக அவளது தகப்பனும் மாமனும் என்னிடம் அலுவலாக வந்து போகும் வேளைகளில் நான் அறிந்து கொண்டேன்.
பரீட்சைகள் நெருங்கி வந்து அவை முடிந்தும் விட்டன. அவள் நன்றாக செய்திருப்பதாகச் சொன்னார்கள்.
பெறுபேறுகள் வந்தபோது அவளுக்குத் திருப்தியளிக்கக் கூடிய பெறுபேறுகளாய் அவை அமைந்தன. பல்கலைக்கழகத்திற்குப் போவதற்கு அவளுடைய பெறுபேறுகள் போதுமாவென அவள்

Page 11
மாமாவிடம் கேட்டேன். அப்போது அவர் சொன்ன பதில் எனக்கு மேலும் வியப்பூட்டியது. பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கான தகுதிப்பாட்டை அவளது பெறுபேறு கொண்டிருக்கும் போதும் அவள் பல்கலைக்கழகத்திற் கான முதல் படிவம் அனுப்பவில்லை என்றார். எவ்வளவு ஆர்வமாகப் படித்தாள். தனது சொந்தக் காலில் நின்று படித்து முன்னேறி தன் துன்பங்களை மறக்க முயற்சிக்கிறாள் என்று பார்த்தால், இவள் ஏன் இப்படி..? எனக் குழம்பபினேன்.
"ஏன் கெட்டத்தனமாய் படிச்ச பிள்ளை தானை. தொடர்ந்து படிக்கட்டுமன்." என்றேன்.
"நீங்கள் இப்படிச் சொல்லுறியள். கூடப்படிச்ச ள்ளையஞம் வந்து அட்வைஸ் பண்ணுதுகள். ஆனா வள் கேக்கிறாளில்லை."
"ஏனாம்.?” "அங்கை கம்பசிலை படிப்பை விட கூத்தும், கும்பாளமுமா இருக்குமாம். அங்கை போனத் தன்ரை வேதனைதான் மிஞ்சும் எண்டு சொல்லுறாள்."
நான் வாயடைத்துப் போனேன். எந்தவித துயரங்களும் இல்லாமல் மனது வெறும் பளிங்காக இருக்கையில் பல்கலைக்கழகச் சூழல் இதமாகவும், மகிழ்வாகவும் இருக்கும் தான். ஆனால். இவளுக்கு.? அவளது எண்ணத்தில் உண்மைத் தன்மையை என்னால் w உணர்ந்து கொள்ள முடிந்தது.
"அப்ப, ஏன் இவ்வளவு கஷ்ரப்பட்டுப் படிச்ச வெள். நோமலா மூண்டு பாடம் பாஸ் பண்ணியிருந்தாக்
காணும் தானே.”
"அவளுக்குக் கொலிஜூக்குப் போற ஐடியா இருக்கு."
"அங்கை மட்டும் சமவயசுப் பிள்ளையஸ் கூத்தும், கும்மாளமுமா இருக்க மாட்டினமாமோ..?” கேலியாகக் கேட்டேன்.
"அதுக்கு அவள் சொல்லுறாள் கம்பசை விடக் கொலிஜ் பறவாயில்லையாம். ரீச்சர்மாரை உருவாக்கிற இடம் எண்ட படியால் டிசிப்பிளின் இருக்குமெண்ணி றாள். அதோட ஹோஸ்டலிலை தான் கட்டாயம் நிக்க வேணும் எண்ணிறதாலை அவள் அதை விரும்புறாள். றைஞ்சபட்சம் தெரிஞ்ச முகங்களிலையிருந்து தள்ளி இருக்கலாம் எண்டதுக்காகவாவது அவள் கொலிஜ்ஜைத் தான் விரும்புறாள்."
அவள் நிதானமாத் தான் சிந்திக்கிறாள். பல்கலைக்கழகம் சென்று படித்து விட்டு வேலைக்குக் காத்திருப்பதை விட கல்விக் கல்லூரிக்குச் சென்று ஆசிரியப் பயிற்சி முடித்து ஆசிரியையாக வருவது அவளுக்கு நல்லது தான். அவளது உளக் காயங்களுக் |கும் ஒரு ஆறுதலாக இருக்கும்.
நாட்கள் நகர் ந் தோடின. அவர்களது வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் இல்லை. ஒரே சீராகக்காலம் நகர்ந்து கொண்டிருந்தது.
மறுபடியும் ஒருநாள் அவள் தன் தங்கையோடு வந்தாள். நற்சான்றுச் சான்றிதழ் தேவை என்றாள். என்ன தேவைக் கென்று கேட்டபோது கல்விக் கல்லூரி
8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

談
நேர்முகத் தேர்வுக்கென்றாள்.
அவள் கல்விக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தது மிகவும் நல்ல விடயம் என்றும், கல்லூரி முடிந்ததும் ஆசிரியராகி விடலாம் என்றும் அவளை மெச்சியபடி, அவளது அடிமனக் கவலைகள் எனக்குத் தெரியாததைப் போல் காட்டிக் கொண்டு அவளது சுயவிபரங்களை விசாரித்துப் படிவத்தை நிரப்பியவாறே அவளிடம் கையெழுத்துப் பெற்று விட்டு சான்றிதழைக் கிளித்துக் கொடுத்தேன்.
"இதை கொண்டு போய் ஏ.ஜி.ஏ.ஒவ்விசிலை சைன் வாங்கும் பிள்ளை” என்றேன். அவள் மீண்டும் தயங்கிநின்றாள்.
“வேறை ஏதேன் அலுவலோ பிள்ளை. என்றேன்.
அவள் வாங்கில் இருந்த மற்ற இரண்டு பேரைத்தயக்கமாய் ஏறிட்டாள்.
"நீர் இரும் பிள்ளை. நான் அவையளிண்டை அலுவலைக் கவனிச்சிட்டு வாறன்." என்றேன், அவளின் தயக்கத்தை உணர்ந்து.
366ir eLDU66b6(d6). "பரவாயில்லை சேர்.” என்றபடியே நின்றாள். நான் வந்திருந்தவர்களைக் கூப்பிட்டேன். அவர்கள் காணிப்பிணக்கிலை றிமாண்டில் சென்ற ஒருவனைப் பிணை எடுப்பதற்கு தமது சொத்து விடயத்தை உறுதிப்படுத்துவதற்கு வந்திருந்தனர். ஆவணங்களைப் பரிசீலித்துவிட்டு அவசரமாகக் கையொப்பமிட்டுக் கொடுத்தேன்.
வந்தவர்கள் போய்விட்டனர். மீண்டும் அவளை அழைத்து என் முன் அமரச் செய்தேன். அவளது தங்கை வாங்கில் அமர்ந்தபடி வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"எனக்கு ஒரு உதவி செய்ய வேணும் சேர். அவள்தலை குனிந்தபடியே கேட்டாள்.
அவள் என்னிடம் உதவி கேட்கிறாள் என்பதே எனக்கு வியப்பை ஏற்படுத்திற்று. குடும்பத்தில் ஏதாவது பிரச்சினையா..? அவளது குடும்பம் அப்படிப்பட்டது அல்லவே.?
ॐ

Page 12
“என்னம்மா என்ன விஷயம்.? என்றேன். "வன்னிலை எனக்குக் கலியாணம் நடந்தது சேர்." என்றாள்.
"தெரியும்” என்றேன். "அவர். அவர். சண்டை நேரம் செத்துப் போனார்” அவள் கண்கள் கலங்கின.
வீட்டில் மறுமணத்திற்கு வற்புறுத்துகின்றார் களோ? அதில் விருப்பமில்லாமல் என்னிடம் முறையிட வந்தாளோ? என ஒரு கணம் எனக்குத் தோன்றிற்று.
"அதுவும் தெரியுமம் மா. அப்ப என்ன பிரச்சினை.” 漆 அவள் கண்களைத் துடைத்த படிநிமிர்ந்தாள்.
"கொலிஜ்ஜிலை சேருறதெண்டா கலியாணம் செய்திருக்கக் கூடாதாம். அன்மரீட் சேர்ட்டிபிக்கெற் கேக்கினம்."
திடுக்கிட்டேன். இதை நான் எப்படி மறந்தேன்? ஒவ்வொரு வருடமும் கல்விக்கல்லூரிக்குத் தெரிவாகும் பிள்ளைகள் திருமணமாகாத சான்றிதழ் பெற்றுக் கொள்ள என்னிடம் வருவதை எப்படி மறந்தேன்?
இப்போது அவள் என்னிடம் எதிர்பார்ப்பது என்ன.? திருமணமாகாதவள் என்று நான் உறுதிப்
அல்லவா..? எந்த நொடியில் என் மேலதிகாரிகள் அவ்விடயத்தைக் கண்டு பிடித்தாலும் என் வேலை போய்விடப் போவது உறுதி.
என் மனம் கொந்தளித்தது. "கலியாணமான பிள்ளையெண்டு தெரிஞ்சும் நான் என்னென்டம்மா கலியாணம் ஆகேல்லையெண்டு "சேர்ட்டிபிகேற்" தாற.?
அவள் கண்கள் மறுபடி கலங்கின. "அவர் இப்ப இல்லை. நான் என்ரை குடும்பத்துக்கு பாரமா இருக்க விரும்பேல்லை சேர். நீங்களும் அப்பிடித்தரேலாதெண்டா விடுங்கோ சேர்."
அவள் எங்கோ பார்த்தபடி பேசினாள். எனக்கு அவளது நிலை சடுதியாக உறைத்தது. படித்த குறையில் திருமணம் முடித்து, அந்த வாழ்வை 猩 அரைகுறையில் பறிகொடுத்து முகாமில் அடைபட்டு, மீண்டு வந்து , உறவினர் வீட்டு மூலையில் ஒதுங்கி கஷ்டப்பட்டு படித்து, பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகத் தக்க புள்ளிகள் பெற்றும், அதற்கு விண்ணப் பிக்காமல், கல்விக் கல்லூரியில் அனுமதி கிடைக்கும் என்று மலை
போல் நம்பியிருந்தவளுக்கு இப்படி ஒரு காரணத்தினால் அவளது எதிர்காலம் கேள்விக்குறியாகுமா..?
அவள் மேலான பரிதாபம் மேலோங்குகிறது. xxxx; ஆனால் அவளது எதிர்காலத்துக்கு இரங்கி
எனது எதிர்காலத்தைப் பழாக்குவதா..?
"கொலிஜூக்குப் போறதெண்டா கலியாணம் செய்யாமலிருக்கோணும் எண்ட எங்களுக்குத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவளோடு வந்ததங்கை.
எனக்கு அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாதது கவலையை அளித்தது. இதுவரை அவர்கள் ஒருநாளுமே என்னிடம் உதவி என்று வந்ததில்லை. இப்படி வரும்போது என்னால் உதவி செய்ய முடியாதிருக்கின்றதே. வன்னியில் முடித்த திருமணம் தானே. யாருக்குத் தெரிந்து விடப் போகிறது என்று கையொப்பமிட்டுக் கொடுக்கலாம் ஆனால், என் மேல் பொறாமை பிடித்தவர்கள் என்னை எப்படி மாட்டி விடுவது? என்று காத்திருப்பவர்கள் மத்தியில் இந்தச் செய்தி எட்டி விட்டால். கடவுளே. இவர்களுக்கு என்னால் எப்படி உதவ முடியும்.?
சட்டென்று எனக்கு அந்த சந்தேகம் தோன்றி யது. அவளுக்கு இப்போது இருபது வயதென்றால் கூட திருமணம் நடந்தேறிய காலப் பகுதியில் பதினெட்டு வயது தாண்டியிருக்குமா..? என்றால் சந்தேகம் தானே. எப்படி திருமணப்பதிவு நடந்திருக்கும்.? நினைவில் பளிச்சிட சட்டென்று கேட்டேன்.
"கலியாணம் பதிஞ்சதோம்மா..?” அவள் கண்கள் கலங்கக்கூறினாள். "பதியேல்லை, கோயிலிலை தான். தாலி கட்டின."
"அப்பாடா” என மூச்சு விட்டேன். "கடிதத்தைத் தாரும். கையெழுத்து வச்சுத் தாறன்” என்றேன்.
அவள் கையோடு கொண்டு வந்திருந்த கடிதத்தைத் தந்தாள்.
அதன் கீழ் அவளுக்குத் திருமணமாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கையொப்பமிட்டு எனது இறப்பர்ஸ்ராம்பை அடித்து அவளிடம் கொடுத்தேன்.
“தாங்க்ஸ் சேர், உங்கட உதவியை எண்டைக்குமே நான் மறக்கமாட்டன்." என்றபடியே அவள் எழுந்தாள்.
"நான் கையெழுத்து வைச்சுத் தந்திட்டன் ஆனா, கலியாணம் ஆகேல்லையெண்டு நிரூபிக்கிறது உம்மடகையிலைதான் இருக்கு. இப்பிடி எல்லா இடமும் அழுது, உம்மை நீரே காட்டிக் குடுத்திடாதேயும்
என்னைப் பார்த்து புன்னகைக்க முயன்றாள். இந்த வலியும் வேதனையும் எப்படி மறந்து போகும். எனச் சொல்வதுபோலிருந்தது அந்தப் புன்னகை.
எனது மனதிலும் அவளது பாரம் தொற்றிக் கொண்டது.
ஆனால், வெகு விரைவிலேயே அந்தப் பாரம் இறங்கி விடும் வகையிலான ஒரு செயலைச் செய்திருக் கிறேன் என்பது மனதிற்குப் பெரும் ஆறுதலைத் தந்தது.
வாசலைப் பார்த்தேன். அவள் தரிடமாக நடந்து போய் க் கொண்டிருந்தாள்.

Page 13
என்பதில் அனுபவி உளநலத் தம்குடும்! மேம்பாட் எழுச்சி
மகிழ்ச்சி சிந்தனை கேடுவிை உணரப்ப மனப்பாங் இது நாள விளைவுக ஏற்றுக்கெ பெண்ணி
யுள்ளது. மனப்பாங் பெண்களு
தீவிர
அல்லது 6 அதிலிருந் கசப்பான
உருவாக்கு சிக்மண்ட் தீவிர பெ பாதிக்கப்ட பாதிப்புகள் ஒரு குறிட் எனபதை
ஆணுக்கும வகையில் 560र्ण(8 6ा, வளர்ச்சி த முழுப்பின தீவிரபெண பெண் இரு அத்தகைய ஏற்றுக்கெ மாறாகக் க சமுதாயத்த என்பதை உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଜୋ பண்கள் சமத்துவமாக நடாத்தப்பட வேண்டும் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது. அவர்கள் க்கும் வீண் துன்பங்கள் நீக்கப்பட்டு அவர்கள் தாடும், உடல்நலத்தோடும், நீண்ட ஆயுளோடும், வாழ்ந்து த்திற்கு மாத்திரமன்று சமூகத்திற்கும், முழு உலகின் டுக்குமே பங்களிப்புச் செய்யவேண்டும். பெண்ணிய பல நல்ல மாற்றங்களை உருவாக்கி வருவதையிட்டு தருகின்றது. அதேவேளை தவறான பெண்ணியச் 5ள், அணுகுமுறைகள் குடும்பம், சமூகம் அனைத்திற்குமே ளவிக்கவல்லன என்பது சிலபெண்ணியவாதிகளால் டவேண்டும். தீவிர பெண்ணியவாளர்கள் தவறான கு, கருத்துப் பரப்பல், போன்றவற்றைக் கொண்டுள்ளனர். டைவில் பெண்கள் சமத்துவம் உருவாவதற்கு எதிரான ளையே ஏற்படுத்த கூடியவை. பல நல்ல சமூகங்களால் ாள்ளப்பட்ட வழமைகள், நன்னெறிகளை மீறும் எந்த பஇயக்கமும் குறைந்த ஆயுள் கொண்டதாகவே இருக்கும். நாட்டுக் கத்தோலிக்கதிருச்சபையில் 70களில் எழுந்த பண்ணிய வாதம் கத்தோலிக்கர்களாலேயேஒதுக்கித் டு இன்று அதுபற்றி எவருமே கதைக்காத நிலை உருவாகி அந்நிலை இங்கு உருவாகாதவாறு தம் அணுகுமுறை, கு என்பனவற்றில் முன்னெச்சரிக்கையாக நடப்பது க்கே ஒட்டுமொத்தமாக நல்லது.
பெண்ணிய வாதத்தின் உளவியல்
ஊற்றுகள்
ஆண்கள் மட்டில் ஆத்திரத்துடன் பெண்ணியம் பேசும் எழுதும் பெண்கள் தம்ஆத்திரத்தின் மூலத்தை அறிந்து து விடுபட முயலவேண்டும். ஒருவரோடு ஏற்பட்ட அனுபவம் அவர் சார்ந்த பாலார் மீது ஒரு வெறுப்பை குவது அனுபவ உண்மை. இதையே உளவியலாளரான புரொய்ட் உறவுப்பெயர்ச்சி (transference) என்றார். ண்ணியவாளர்கள் தாம் யாரால், எவ்வாறு, எப்போது Iட்டார்கள் என்பதை அடையாளம் கண்டு அவற்றின் ரிலிருந்துகுணமடைய முயலவேண்டும். தமது அனுபவம் பிட்ட தனிப்பட்ட நபருக்கும் தனக்குமுள்ள பிரச்சினை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் எனக்கும் "அந்த லிடையே நிகழ்ந்த கசப்பான அனுபவம் ஏற்பட எந்தெந்த நான் காரணமாக இருந்தேன்?" என்பதை அடையாளம் திர்காலத்தில் அவற்றை நீக்கிக்கொள்ள முயல்வதே 5ரும். என்னிலை ஒரு பிழையுமில்லை, அவரிலைதான் )ழயும் என்கின்ற மனப்பாங்கோடு செயற்படுவது ர்ணியவாளர்களை வேண்டப்படாத முள்ளாக ஆண் சாராருமே நோக்கும் நிலையை உருவாக்கும். அத்தோடு கசப்பான அனுபவங்கள் காரணமாக நான் சமூகத்தில் ாள்ளப்பட்ட நெறிமுறைகளுக்கும் நன்னெறிக்கும் 5ருத்துக்கூறுவது எனக்கும், என் பிள்ளைகளுக்கும், என் நிற்கும், குறிப்பாகப் பெண்களுக்கும் கேடு விளைவிக்கும் உணர்ந்து செயற்படுவது நல்லது.

Page 14
எத்தகைய தீவிர செயற்பாட்டின் பின்னணி யிலும் உணர்ச்சி அனுபவக் காரணிகள் மறைந்திருக்கும். ஆண்களுக்கு எதிரான மனப்பாங்கு வளர்ச்சிப் பருவத் தின் வெவ்வேறு கட்டங்களில் உருவாகுவதுண்டு. அத்த கைய உருவாக்கத்தின் வரலாற்றை மீளநோக்கிப்பார்த்து அடையாளம் கண்டு தம் காயங்கள் குணம்பெற வழி தேடுவது அவசியமானது.
குழந்தைப் பருவம்:
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் பல்வகை துர்ப்பிரயோகங்களைஅனுபவித்திருத்தல், அப்பா, அம்மாவைத் துர்ப்பிரயோகம் செய்தமை அல்லது தாக்கியமை, அவரைக் கைவிட்டுச் சென்று வேறொருத்தி யைத் திருமணம் முடித்தமை என்பன ஆணுக்கு எதிரான மனப்பாங்கை சிறுவர் மனதில் உருவாக்கும்.
கட்டிளம்பருவம்:
கட்டிளம் பருவத்தில் பாலியல் அல்லது பாலியல் சாராத துர்ப்பிரயோகங்கள், காதலித்தவர் ஏமாற்றியமை அல்லது கைவிட்டுச் சென்றமை என்பன அத்தகைய மனப்பாங்கு உருவாகப் பங்களிப்புச் செய்கின்றது.
வளர்ந்தோர் பருவம்:
திருமண வாழ்வில் கணவனால் துர்ப்பிர யோகத்திற்கு உள்ளாதல், கைவிடப்படல், வன்தாக்குதல் மற்றும் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாதல் ஆண் களுக்கு எதிரான மனப்பாங்கை உருவாக்கி விடுகின்றன. மேலும் தொழிலிடத்தில் ஆண்ஒருவருடன் ஏற்பட்ட கசப்பான தொழில் அனுபவம் ஆண்களுக்கு எதிரான மனப்பாங்கை உருவாக்கும். உ-ம். இடம்பெறும் பாலி யல் தொந்தரவு, பெண்ணென்றதால் தாழ்வாக நடத்தப் படல், உயர்பதவி வழங்க முன்வராமை, ஆணுடன் வேறு உறவு அல்லது தொழில் பிரச்சினை.
தவறான அணுகுமுறைகள்
ஆண்களை எதிரிகளாக நோக்கும் மனப் பாங்கோடு சமத்துவத்தை உருவாக்க முயல்வது: ஆண் களை எதிரிகளாகக் கருதிச் சண்டையிட்டு அல்லது அவர் களுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புரை செய்வது உறவில் நெருக்கீட்டை ஏற்படுத்திச் செயற்படுவது பெண்கள் சமத்துவத்திற்கு எதிரான கருத்தையே உருவாக்கும் என்பதை உணர்வது நல்லது. உரிமையைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்படக்கூடியது. ஆனால் ஆண்களுடன் நல்லு றவைப் பேணும் விதமாக உரிமை களைப் பெறுவது இன்னும் சிறந்தது. ஆண்களுடனான உறவைச் சேதப் படுத்தியவாறு தம்முரிமை பெற முயல்வது உரிமையைப் பெற்றுத்தரக்கூடும். ஆனால் உரிமையை விடப் ஏனைய பல நன்மைகளை இழக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஜீவநதி

2. ஆண்களைப் போல் உடுப்பது, தொழில் பார்ப்பது, வாகனம் ஒட்டுவது, உயர்பதவியில் இருப்பது, குறிப்பிட்ட துறையில் உயர்ந்திருப்பது சமத்துவத்தின் அடையாளம் என்று கருதிப் பிரச்சாரம் செய்வது: இவ்விடயங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பெண்களுக்கு ஒரு நல்ல வளர்ச்சி என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆனால் அவையே சமத்துவத்தின் வெளியடையாளங்களாகக் கருதுவது பலவீனமான எண்ணமேயாகும். பெண்களுக்கென்று தனித்துவமான பண்புகள் அவர்களது ஆளுமையில் இயல்பாகவே உண்டு. கனிவு. இதம், பொறுமை, சகிப்புத்தன்மை, ஆழமான புரிந்துணர்வு, பிறரது கருத்துகளைக் கருத்தி லெடுத்துச் செயற்படுதல், உள்ளுணர்வு என்பன நல்லற விற்குப் பங்களிப்புச் செய்யும் சிறந்த பண்புகள். இவை பேணப்பட வேண்டும்.இதை எந்தப் பிள்ளையும் தன் தாயிடமிருந்து வரவேற்று மகிழும். அந்த வகையில் பெண்ணாய்வாளர்கள் ஆண்பெண்களிடையே காணப் படும் உளவியல் ரீதியான வேறுபாடுகளை அறிவதற் கான முயற்சிகளை மேற்கொள்வது பொருத்தமானது.
3. குடும்பம் என்ற ஒன்று உருவாகுவ தால்தானே குடும்ப வன்முறை இடம்பெறுகின்றது. அதை நிறுத்த வேண்டுமானால் பெண்கள் திருமணம் முடிக்கா திருப்பதே நல்லது. எந்தச் சமூகம்குடும்பம் என்ற ஒன்று இல்லாது வாழ்கின்றன?. மிருகங்களிடையேகூட குடும்ப அமைப்பு உண்டு. குடும்பம் என்பது இல்லையென்றால் சமூகம் எப்படி மாற்றமடையும் என்று சிந்திப்பது நல்லது. குடும்பம் வேண்டாம் என்று வாழ்ந்த ஹிப்பிகளின் வாழ்வு எவ்வாறு தோல்வியில் முடிந்தது என்ற வராலாற்று உண்மையை மீட்டுப் பார்ப்பது நல்லது. குடும்பமில்லாத எத்தகைய சமூதாயத்தை இவர்கள் கற்பனை செய்கின்றார்கள்?அத்தகைய சமுதாயத்தில் என்னென்ன இழக்கப்படும்? அத்தகைய சமூகத்தில் பிறக்கும் பிள்ளைகளில் ஏற்படக்கூடிய உளவியல் பாதிப்புகள் எவை? உண்மையான அன்புநிலை, ஒழுக்க நிலை எப்படி இருக்கும் என்று யதார்த்த பூர்வமாகச் சிந்தித்து தவறானகருத்துப் பரப்புதலை நிறுத்துவது நல்லது.
4. ஒரு பெண் பலரை மணம் முடிக்கலாம் என்ற நிலை இருந்தது. அந்நிலை மீள உருவாகவேண்டும். பாண்டவர் கதைத் திரெளபதையைக் கருத்தில் கொண்டு இவர்கள் கூறக்கூடும்.பெண் தனக்கு விரும்பிய துணையாளைத் தெரிவு செய்ய சுயம்வரம் முறை நடந்ததாக இலக்கியம் கூறுகின்றது. இவைகூட நடை முறை நிலையைச் சொன்னதாக அன்றி, உருவாக வேண்டியஇலட்சிய நிலையை முன்வைத்து உருவாக்கப் பட்ட இலக்கியமாகவே கொள்ளப்பட வேண்டும்.மேற்கு நாடுகளில் விரும்பியவோரு கூடி வாழல், மலிந்துபோன விவாக இரத்துகள் என்பனவற்றால் அங்கு ஏற்பட்டுள்ள
இதழ் 33

Page 15
சீரழிவுகள், பிறந்த பிள்ளைகளில் ஏற்பட்ட பாரிய தாக்கங்கள் பற்றி ஆழமாய்ச் சிந்திப்போர் இத்தகைய தவறான சிந்தனையை ஆதரிக்கமாட்டார்கள். ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மிருக கூட்டத்திலும் உண்டுஎன்பதை டிஸ்கவரி சனல், அனிமல் பிளானற், நாசனல் யோக்கிறயி போன்ற ஊடக நிகழ்ச்சிகளில் காணலாம். விதிவிலக்காக மாத்திரமே சில நாடுகளில் பலதார மணம் உண்டு.
5. ஆண் வேறு பெண்களுடன் பழகலாம் என்றால் பெண்களுக்கும் அதே உரிமை உண்டு. இதனால் ஏற்படக்கூடிய கணவன் மனைவியிடையே ஏற்படும் குடும்பப் பிரச்சினை, திருமணத்தின்போது பெண் பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய பிரச்சினை. போன்ற வற்றைச்சிந்திப்பது நல்லது. வெளிநாடுகளில் தமிழ் பெண்கள் இந்த உரிமையை வலியுறுத்தமுயன்று குடும்பவாழ்வை அழித்த அனுபவங்கள் பல உண்டு என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும். இந்நிலை மேற்கு நாட்டவர்களிலேயே ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்று. மேற்குநாட்டு ஆண்கள் ஆசியப் பெண்களைத் தற்போது மணம் முடிக்க விரும்புதாக சுவிஸ்நாட்டிற்கு சென்றபோது சிலர் சொன்னார்கள். அவர்கள் எதை விரும்பி இதனை நாடுகின்றனர் என்று சிந்திப்பது நல்லது? திருமணமான பெண் திருமணமான இன்னொரு ஆணுடன் உறவாடும் உரிமையுடன் நடந்து டயானா விவாவகரத்து, சாள்ஸ் முடியிழந்த நிலை,பற்றிச் சிந்தித்துப் பார்த்தால் உண்மைநிலை புரியும்.
6. சம்மதமென்றால் செக்ஸ்: ஒரு ஆணும் பெண்ணும் சம்மதம் என்றால் அவர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடலாம் என்ற தப்பான சிந்தனை பல ஆண்களிடம்மாத்திரமல்ல பெண்களிடமும் உண்டு. ஒரு சந்தர்ப்பத்தில் இத்தகைய கருத்துகள் பலரிடமிருந்து வந்ததை அவதானித்தபோது அவர்களைச் சிந்திக்க வைக்க நான்பின்வரும் கேள்விகளைக் கேட்டேன்: உங்களுக்கு ஒரு குமர்ப்பிள்ளை இருந்து, அவள் உங்களிடம், நானும் ஒரு பையனும் பாலுறவு கொள்ளச் சம்மதித்திட்டம் என்றுசொன்னால் அனுமதி கொடுப்பி யளா? அனைவரும் மெளனம் காத்தனர். பலருடன் சம்மதத்துடன் பாலியல் நடத்தையில் ஈடுபடும் ஒரு இளைஞன் அல்லது யுவதியை உன்மகன்(ள்) அல்லது அக்கா அண்ணா அல்லது தம்பிதங்கச்சிக்குத் திருமணம் செய்துகொடுப்பியளா? என்று அடுத்துக் கேட்டேன். தடுமாறினார்கள். தவறான பாலியல் உரிமைகள் பற்றிக் கருத்துப் பரப்புவது பெண்கள் அடிமைகளாக நடாத்தப் படுதலுக்கே இறுதியில் வழியமைக்குமன்றி சமத்துவத் திற்கு வழியமைக்காது. அதற்காக பெண் எந்த ஆணோடு பேசினாலும் சந்தேகம் கொண்டு கொடுமைக்கு உட்படுத்துவது தொடரவிடவேண்டும் என்பது என் கருத் தல்ல. ஆண்கள் உறவுப் பொறாமையைக் கையாள்
ஜீவநதி- - 1

வதில் முதிர்ச்சிபெறப் பெண்கள் உதவிசெய்யலாம்.
7. பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெற வழக்குப்போட வேண்டும். நியாயமான எல்லாநல்ல முறைகளும் தோற்றுபோய் விட்டது என்பதைப் பலதடவை நிச்சயப்படுத்திய பின்னர்நியாயமான தன் உரிமையைப் பெற்றுக்கொள்ள பெண்கள் வழக்குத் தொடுப்பது சரியானது.காதலித்து ஏமாற்றுவோர்மீது பெண்கள் ஏன் வழக்குப் போடுவதில்லை? திருமண வாய்ப்பை அழித்து விடும் என்ற அச்சம். தனக்குரிய சொத்தினை மீளப்பெற்றுக்கொள்ள வழக்குப் போடுவது தவறில்லை. கொடுத்த சீதனக் காசு மீளக்கொடுக்கப்பட வேண்டிய கட்டத்தில் மறுக்கும் போது தொடுக்கப் படலாம். ஆனால் இது பெண்கள் எடுத்ததெற்கெல்லாம் வழக்கை நாடும் தவறான மனப்பாங்கை உருவாக்காத படி பார்த்துக் கொள்வதும், நல்ல முறைகள் அனைத் தையும் அடையாளம் கண்டு பயன்படுத்தக்கற்றுக் கொள்வதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
8. தனித்தனியாக வங்கிக் கணக்கு வைத்திருக்க வேண்டும். தனித்தனியாக வங்கிக்கணக்கு வைத்திருப்பதில் தவறேதுமில்லை. அது இருவரும் தனித் துருவங்களாக வாழ்கின்றனர் என்பதன் வெளிப்பாடாக இருக்குமாயின் அது குடும்ப வாழ்வுக்கு ஆரோக்கியமானதல்ல. மேற்கு நாட்டில் நிகழ்ந்த ஒரு உள ஆற்றுப்படுத்தல் அனுபவம் ஒன்றைப் பகிர்கின் றேன். "எனக்கு என்ர வேலை இருக்கு, என்ர காரிருக்கு, என்ர வங்கிக் கணக்கிருக்கு." என்று திமிர் மனப்பான்மையோடு மனைவி வாழ்ந்தார். 65வயதில் கணவன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியபோது அதிர்ந்தே போனார்.
சமத்துவம் உருவாக பெண்கள் ஆற்ற வேண்டிய பணிகள்
1.பிள்ளையினது விபயரில் தாயிண் பெயர்:
தம் பிள்ளைகளின் பெயரில் தாயின்பெயரை அல்லது தாய் பெயரின் முதலெழுத்தை பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் சேர்க்கும் முறையை அறிமுகம் செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் பெண்கள் மேற்கொள்ள வேண்டும். பிலிப்பைன் நாட்டில் பிள்ளை யின் பெயர் முதலிலும் தாய்பெயரின் முதலெழுத்தும், கடைசியாகத் தந்தையின் பெயரும் கொண்டதாகவே ஒருபிள்ளையின் பெயர் அமைகின்றது. இது தாயின் பங்களிப்பை மதிப்பதாகக் கொள்ளவேண்டும். பெண்ணியவாதிகளின் ஆக்கங்களில் இவ்விடயம் கருத்தில்கொள்ளப்பட்டதை அறியேன்.
2. பேண் சமத்துவ சமுதாயம் பெண்கள் சமத்துவம் நிறைந்த சமுதாயம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெளிவாய்த் தெரியாது. அப்படி ஒரு சமுதாயம் உருவாகுவது பல தீயவிளைவுகள் பிரச்சினைகளுக்குக்
团一 இதழ் 33

Page 16
காரணமாகிவிடும் என்ற அச்சம் பல ஆண்களிடம் மட்டு மல்ல பெண்களிடமும் உண்டு. பெண்கள் சயிக்கிள் ஒட ஆரம்பித்தபோது வயதானபெண்களின் நக்கல் நளினம் என் கருத்தை நிரூபிக்கும். எனவே அத்தகைய ஒரு சமுதாயத்தை யதார்த்த பூர்வமாக, சமூக விழுமியங்கள், நன்னெறிக்கு ஒப்ப விபரிப்பது நல்ல விளைவுகளை ஏற்படுத்த வழிவகுக்கலாம்.
3. பெண்களிடையே சமத்துவம்:
பெண்கள் ஏனைய பெண்களைச் சமத்துவத்தோடு நடாத்தும்நிலை வளர்க்கப்பட வேண்டிய முக்கிய மனப்பாங்காகும். மாமி, மருமகள், மச்சாள்மார் உறவுகள், தொழிலிடப் பெண்கள். ஒருவர் மற்றவரின் உரிமையை மதித்து நடக்கும் நிலையை உருவாக்கும் போது ஆண்களிலும் பெண்கள் பற்றிய சமத்துவ உணர்வு உருவாகப்பங்களிப்புச் செய்யும்.
4. சமஉரிமை மறுக்கப்பட்டசாதியப்பெண்களின்சமத்துவம்:
சமஉரிமை மறுக்கும் சாதியைச் சேர்ந்த எத்தனை பெண்ணியவாளர்கள் சமஉரிமை மறுக்கப் பட்ட சமூகத்தைச்சார்ந்த பெண்களைச் சமமாகக் கருதி நடத்துகின்றனர்? அதற்கு முன் வருவார்களா? பெண்ணியம் பற்றிப் பேசுகின்றவர்கள் சாதி ரீதியாக சமத்துவம் மறுக்கப்படும் ஏனைய பெண்களுக்குத் தனித்துவமான பிரச்சினைகள் உண்டு என்பதைக் கருத்திலெடுத்து இயங்கவேண்டும். சாதிய சமத்துவம் மறுக்கும் பெண்ணியவாளர்கள் சாதிய சமஉரிமை மறுக்கப்படும் பெண்களை சமமாக நடாத்த ஆக்கபூர்வ மான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். பெண் பெண் ணுக்கே சாதிரீதியாக உரிமை மறுப்பு களைச்செய்து கொண்டு ஆண்களிடம் சமத்துவம் கேட்பது வேடிக்கை.
5. சாதிய சமத்துவப் பங்களிப்பு:
சமத் தவம் , நீதி என்பன கொணர் ட சமுதாயத்தை உருவாக்க முயற்சி எடுக்கும்போது அது பெண்ணியத்தில் மட்டுமல்ல அனைத்துவிடயத்திலும் இம் மதிப்பீடுகளை உருவாக்கும். பெண்கள் சமத்துவ மின்மை தொடர்வதற்குச் சாதிய சமத்துவமின்மையும் பங்களிப்புச் செய்யும் ஒரு விடயம். ஏனென்றால் சாதிய சமஉரிமை மறுப்பு சமத்துவம், நீதி பேணும் மனப்பாங்கை அழித்துவிட்டது மாத்திரமன்றி, பிறர் தம் அநீதிகளால், பாரபட்சங்களால், துன்பங்களை அனுபவிக்கும்போது அதை உணரும் ஒத்துணர்வு அற்ற மனப்பாங்கையும் உருவாக்கிவிட்டது. இன்னொரு வரைத் தாழ்வாக நடாத்துவது மற்றவரில் பாரிய உள, சமூகத்தீமைகளை விளைவிக்கின்றது என்ற உணர்வை இல்லாமல் செய்கின்றது. ஒரு விடயத்தில்பேணப்படும் தவறான மனப்பாங்கு இன்னொரு துறைக்கு மாற்றப் பட்டு அங்கு செல்வாக்குச்செலுத்தும் என்பது உளவியல் உண்மை. ஆகவே பெண்ணியவாளர் தம் மனதில் பரந்த
ஜீவநதி
1.

ஒட்டுமொத்த நீதிபற்றிச் சிந்தித்துச் செயற்படுவதுதான் உண்மையானது நேர்மையானது. பாலியல் ரீதியான சமத்துவம் பற்றிச் சிந்திப்பவர்கள் நீதி அல்லது சமத்துவம்பற்றிச் சிந்திப்பதை விட "என் பிரச்சினை தீர்ந்தால் போதும்" என்ற சுயநலநோக்கோடுதான் செயற்படுகின்றனர். இதை மாற்ற முயலவேண்டும்.
6. பாலியல் வலுவூட்டல்கள் பெண்கள் ஆண்களைப் இன் பப் பொருளாகப் பாவிக்கின்றனர் என்ற பெண் ணிய வாளர்களின் கருத்து முற்றிலும் பொய்யல்ல. ஆனால் "ஆண்கள் எங்கள் அழகுக்கு, கவர்ச்சிக்கு, பாலின்பத்திற்கு அடிமையாகி விடு பவர்கள்” என்ற நினைப்போடு பெண்கள் தம் காரியங் களைப் பார்க்க முயல்வது ஆண்கள் அவர்களை இன்பப் பொருளாகப் பயன்படுத்துவதை வலுப்படுத்து வதாகவே அமையுமேயன்றி நிறுத்தப்போவதில்லை. அந்த வகையில் பெண்களிலேயே மாற்றம் தேவை. விளம்பரங்கள், சினிமாவில் "அங்கம் காட்டல்”, ஆபாசப் படத்தயாரிப்புகள், விபச்சாரம்.என்பன "என்னை இன்பப் பொருளாகக் காண், அனுபவி" என்ற உண்மையைத் தானே ஆண்களுக்குக் கூறிநிற்கின்றன. அவ்வாறே பெண் எழுத்தாளர்கள் பாலியல் நடத்தை களை விபரிப்பது எதைச் சாதிப்பதற்கு? பெண்கள் தம் காரியங்கள் பார்க்கப் பாலியல் கவர்ச்சி காட்டிக் கொண்டு எம்மை இன்பப் பொருளாக நடாத்து கிறார்களே என்று முறையிடுவதை எவர்தான் கேட்பர்? பெண் தன் உடலைப் புனிதமான ஒன்றாகக் கருதி நடப்பின், காமுகர்களைத் தவிர ஏனைய ஆண்கள் பெண்களின் உடலைப் புனிதமானதாகக்கருதும் நிலை உருவாகும்.
7. சட்டங்களில் மாற்றம்:
பெண்கள் தம்மைப் பாதிக்கும் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை களை மேற்கொள் வேண்டும். பாலியல் துர்ப்பிர யோகம், வன்புணர்ச்சி, பெண்களைத் தொந்தரவு செய்தல், பெண்களை பாலியல் ரீதியாக வரவேற்க முயலுதல் (பகிடிவதை எனப்படும் வதைவடிவ வர வேற்பு), மற்றும் இவை தொடர்பான விசாரணை முறை கள், என்பனவற்றோடு சொத்துரிமை. போன்றவை தொடர்பாகத் தம்மைப் பாதிக்கும் சட்டங்களை அடை யாளம்கண்டு அவற்றை மாற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முடிவுறிை:
பெண்கள் சமத்துவ உருவாக்குதல் ஆண் களில் மாத்திரமன்றி பெண்கள் கையிலும் உள்ளது. எனவே சமத்துவத்தை உருவாக்க சமாந்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். சமூக நன்னெறிக்கு, நீதிக்கு, உரிமைக்கு உட்பட்ட சமத்துவ உருவாக்கமே நீண்டகாலம் நிலைத்துநிற்கும்.
4.
இதழ் 33

Page 17
கொட்டோ கொட்டென
கொட்டிய மழை போய் 6i (SL60TT UIT6 goOT
வெய்யிலும் கொளுத்துது
வெள்ளத்தால் ஊரே
வேருடன் நகர்ந்தது
வெந்துயர் கொடுமையுள்
மக்களும் நனைந்தனர்!
பயிர்களும் அழிந்தன
உயிர்களும் தொலைந்தன
பார்க்கும் திசையெலாம், அகதிகள் 2
ஊர்வலம் தெரிந்தது.
கடுகதியாகவே
காலமும் சூழன்றிட
கடுங்கோடை வந்தது 6
ஆட்சியை செலுத்திட
应
பயிரை வேவிய LI
வெள்ளமும் எங்கே
பாய்ந்து ஓடிய, குறு g
நதிகளும் எங்கே
நிரம்பிய நீர் நிலை
கிணறுகள் எங்கே
நீச்சலடித்திட்ட c
ஒடையும் எங்கே!
왕
கானல் நீர் தான் 6
மாயமும் காட்டுது
வேனில் வந்ததால்
வெடித்தன நிலங்களும்
鸟
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருகிட நீரின்றி
உயிரினம் அலையுது
உருகிய தெருக்களில் பாதம் ஒட்டியே கொதிக்குது
கரக் கொட்டகை
தரப்பாள் நிழல்களில்
பாரிகிறார் ஏழைகள்
போக்கிட மின்றியே!
)ாடி வீட்டிலே
ஏ.சி யும் விசிறியும் ஓடியே உள்ளவன்
வியர்வையை உறிஞ்சுது!
உச்சி வெய்யிலின்
உஷ்ணத்தின் காங்கையால, சிலர்
ஆதாம் ஏவாளாய்
ஆகிடத் துடிக்கின்றார்!
ான்னதான் செய்யினும்
இயற்கையின் மாற்றத்தை
நடுத்திட வந்தவன், இந்த
தரணியில் யாரடா?
- ஷெல்லிதாசன்

Page 18
சந்திப்பு
(5.ugagger
யாழ்ப்பணம் இணுவிலில் பிறந்த இவர் பாடசாலையில் படித்த காலத்திலேயே பேச்சுப் போட்டிகளிலும், எழுத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பல பரிசில்களைப் பெற்றார். 1973இல் இவர் கவிதை எழுத ஆரம்பித்ததன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். 80 மேற்பட்ட சிறுகதைகளையும், பல கட்டுரை களையும் இவர் எழுதியுள்ளார். அரும்பு, கற்பகம், அர்ச்சுனா, ஒலை, தமிழ் தென்றல் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்தவர். "சொந்தமண்" என்ற சிறுகதைத் தொகுதியை யும். முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட் டுள்ளார். இன்று ஈழத்தின் பல பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுகதை, கட்டுரை விமர்சனம் ஆகியவற்றை எழுதி வருகின்றார். ஆளுமை மிக்க சிறந்ததொரு படைப்பாளியுடனான நேர் காணலை ஜீவநதி வாசகர்களுக்காக தருகின்றோம்.
ஜீவநதி
 

1. இலக்கிய உலலில் உங்கள் பிரவேசம்
எவ்வாறு அமைந்தது?
கொக்குவில் இந்துக் கல்லூரியில் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம், எனது வகுப்பு நண்பர்கள் ஒரு சிலருடன் சேர்ந்து ‘அரும்பு என்ற சஞ்சிகையை ஆரம்பித்தோம். அதில் எனது கன்னிப் படைப்பான கல்வியின் முக்கியத்துவம் என்னும் கட்டுரை இடம்பெற்றிருந்தது. அரசாங்க எழுது வினைஞராக கொழும்பு உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தில் கடமையாற்ற வந்தபோது, அங்கு இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களைச் சந்தித்தேன். ஏனது மனத்தில் புதைந்திருந்த சஞ்சிகை வெளியிடும் ஆர்வத் தை அவர்களிடம் தெரிவித்தபோது, ஆரம்பிக்கு மாறும் தாங்கள் அதற்கு உதவிபுரிவதாகவும் தெரிவித்தார்கள்.
"கற்பகம்' என்ற பெயரில் கலை, இலக்கிய, பொருளாதார சஞ்சிகையை ஆரம்பித்தேன். இரு மாத சஞ்சிகையான கற்பகம் 1970ஆம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் முதலாவது இதழை பிரசவித்தது. பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இராணி அப்புக்காத்து இரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் குத்துவிளக்கு புகழ் வி.எஸ்.துரைராசா முதல் பிரதியைப் பெற்றுச் சிறப்பித்தார். கொழும்பிலுள்ள அரச திணைக்களங்களில் பல தமிழ் அலுவலர்கள் பணியாற்றி யமையால் கற்பகம் ஆயிரம் பிரதிகளும் நண்பர்களின் உதவியால் விற்றுத் தீர்ந்துவிட்டன. இச்சஞ்சிகையின் வருகையுடன் பிரபல எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோரின் நட்புக் கிடைத்தது. என்னைப் பலர் உற்சாகப்படுத்தினார்கள். முதல் இதழில் எனது குட்டிக் கதை ஒன்றும், “ஆசிரியர் தலையங்கமும் பலரைக் கவர்ந்ததாலோ என்னவோ தெரியவில்லை, அவர்கள் நேரடியாக என்னைச் சந்தித்தும், கடித மூலமும் தங்கள் மனப் பதிவுகளைத் தெரிவித்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். பல இடங்களில் எனக்குக் கிடைத்த தூண்டுதல், எழுத்துத் துறையில் தடம் பதிக்க காரணமாக அமைந்தது.
2. நீங்கள் பல்வேறு இலக்கிய வகைமைகளில் பரிச்சயமுள்ளவர். அவற்றுள் எவ்வகை இலக்கியம் படைப்பதில் அதிக ஆர்வத் தைக் கொண்டிருக்கிறீர்கள்? அதற்கான காரணத்தையும் கூறுங்கள்.
இலக்கியம் மக்களுக்காக என்ற அசைக்க முடியாத கொள்கையில் பற்றுறுதி கொண்டவன். எனவே மக்களுக்காக இலக்கியம் படைக்கும் யதார்த்தப் போக்கு என் எழுத்துக்களின் அடிநாதமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் மூடக் கொள்கைகள், மூட நம்பிக்கை களுக்கு எதிராகக் குட்டிக் கதைகளை எழுதி வந்தேன். தொடர்ந்து சிறுகதைகளை எழுத ஆரம்பித்தேன். "எழுது வதில் எனக்கு எதுவித சிரமமுமில்லை. ஏன் என்றால் எனக்குத் தெரிந்தவற்றைத் தான் நான் எழுதுகின்றேன். எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி நான் ஒருபோதும் எழுதுவதில்லை" என்று அடிப்படைப் பெருமக்களின் அனுபவப் பெரும் செல்வனான உலகம் போற்றும்
6 இதழ் 33

Page 19
முற்போக்கு எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி கூறி வைத்தார். அவருடைய கூற்றில் எனக்குப் பூரண உடன் பாடு ஏற்பட்டமையால் எனக்குத் தெரிந்தவற்றையே எழுதி வருகின்றேன். சமுதாயத்தில் நான் கண்டு தரிசித்த தரிசனங்களையே எனது சிறுகதைகள் ஊடாகச் சொல்லியுள்ளேன். என்னால் எழுதப்பட்ட சிறுகதைகள் (59) யாவும் இலங்கையில் வெளிவரும் பத்திரிகையிலும், இலங்கை இந்தியச் சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.
என் நெஞ்சை நெருடிய சம்பவங்கள், என் மனதில் நீண்ட காலமாகத் தேக்கி வைத்த உள்ளக் கிடக்கைகள், அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் எதிரான போக்குகள் போன்றவற்றை உள்வாங்கி யதார்த்தமாக என் சிறுகதைகளை எழுதியமையால் அவை முற் போக்குக் கருத்துகளைக் கொண்டனவாக அமைந்திருக் கின்றன. யுத்தத்தால் ஏற்பட்ட இடப் பெயர்வுகள் மற்றும் புலம்பெயர்வுகள், சுனாமி ஆழிப் பேரலைகள் ஏற்படுத்திய அனர்த்தங்கள், பெண்களின் அவலங்கள், அகதி வாழ்க்கையின் அல்லோலங்கள், வெளிநாட்டு பணிப்பெண்களாகச் சென்று வந்தவர்களின் சோக வரலாறுகள், குடும்பப் பிரச்சினைகள், வெளிநாட்டுக்குப் போகும் பிள்ளைகளின் போக்குகள், ஏழ்மை, ஏற்றத் தாழ்வுகள், சுரண்டல், ஏமாற்றங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்களைக் கருப் பொருளாகக் கொண்டு எனது சிறுகதைகளை எழுதிவந்துள்ளேன்.
கவிதைகளைப் பொறுத்தளவில் அவ்வளவாக ஈடுபாடு காட்டாவிட்டாலும், எனது கவிதைகள் அனுராத புரம் கலைச் சங்கத் தொகுப்பான 'புத்துலகம் படைப் போம் என்ற தொகுப்பிலும், "ஈழமணி என்ற பத்திரிகை யிலும், ஞானம் சஞ்சிகைகளிலும், சுடர் ஒளியிலும் வெளிவந்துள்ளன.
பத்திரிகைத் துறையைப் பொறுத்தளவில் யாழ்ப்பாணம் உதயன், கொழும்பு சுடர் ஒளி ஆகிய வற்றில் கடமையாற்றியுள்ளேன். சுடர் ஒளியில் கலைப் பூங்கா என்ற பக்கத்தில் மூன்று வருடங்களாக எழுத்துலகப் பிரபலங்களைப் பற்றியும் இலக்கிய விடயங்களைப் பற்றியும் எழுதியுள்ளேன். சுடர் ஒளியில் நூல் விமர்சனங்களைத் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றேன். சுடர் ஒளி வார மலரில் 35க்கும் மேற்பட்டஉண்மைக்கதைகளை எழுதியுள்ளேன்.
பத்தி எழுத்துக்களை நிறையவே எழுதி யுள்ளேன். தினகரனில் கூடு சந்தி என்ற பகுதியிலும், தினக்குரலில் நிகழ்வுகள் நினைவுகள் என்ற பகுதி யிலும், ஞானம், மல்லிகை ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதிவந்துள்ளேன்.
எனது கட்டுரைகள், விமர்சனங்கள் இலங்கை யில் வெளிவருகின்ற எல்லா தமிழ்ப் பத்திரிகை களிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்தவண்ணம் உள்ளன.
கற்பகம், தமிழ்த் தென்றல், ஒலை ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்துள்ளேன்.
என்னுடைய இலக்கியப் பங்களிப்புகள்
ஜீவநதி

பல்துறை சார்ந்ததாக இன்று அமைந்துவிட்டன. சிறுகதை, கட்டுரை, பக்தி, திறனாய்வு, கவிதை, நேர்காணல், மொழிபெயர்ப்பு, பத்திரிகை, சஞ்சிகை என்று பரந்திருப்பதை வாசகர்கள் நன்கு அறிவார்கள்.
3. நீங்கள் நம்பும் இலக்கியச் சித்தாந்தம்
பற்றிக்கூறுங்கள்.
ஒரு படைப்பாளி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அவனது படைப்பை மட்டும் பாருங்கள் என்ற வாதம் வலுவாக நிலவும் இக்காலத்தில், அதை ஏற்றுக்கொள்ளமுடியாதவனாக-ஒரு எழுத்தாளன்தான் எழுதுவதைப் போல் வாழ்ந்து காட்டவேண்டும் என்பதில் நம்பிக்கையுள்ளவன். அதுவும் மாக்சிம் கார்க்கி கூறியது போல “படைப்பாளி என்பவன் தன் படைப்பிற்கும் மேம் பட்டவனாக விளங்க வேண்டும்" என்பதை மனப்பூர்வ மாக ஏற்றுக்கொள்பவன். இலங்கையைப் பொறுத்தள வில் மூத்த முற்போக்கு எழுத்தாளர் நீர்வை பொன் னையன், தமிழகத்தைப் பொறுத்தளவில் குசின்னப்ப பாரதி ஆகியோர் தனி மனிதர்களல்ல. அவர்கள் இலக்கிய இயக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு மனச்சாட்சியுள்ள எழுத்தாளனின் கடமை மனித குல சமுதாயத்தின் வேதனைக்கான காரணத்தை அப்பட்டமாகச் சொல்லுவது தான். அது தான் ஒரு முதலாளித்துவ சமுதாயத்தை சமதர்ம சமுதாயமாக மாற்ற உதவும். அதற்கேற்றவாறு மக்களின் மனப் போக்கையும் மாற்றமுடியும்.
முற்போக்கு இலக்கிய உலகில், ஏழை எளிய மக்களின் தோழனாக, உழைப்பாளி மக்களின் குரலாக, மார்க்சிய கொள்கைக் கோட்பாட்டை விடாப்பிடியாகப் பின்பற்றுபவராக, பாட்டாளி வர்க்க இலக்கியம் படைத் திட்ட முன்னோடிகளின் வழியை உறுதியாகப் பற்றிக் கொண்டு புதிய சகாப்தம் படைக்க, சோசலிச யதார்த்த வாதத்திற்கு எடுத்துக்காட்டான படைப்பாளிகளின் படைப்புகளை மதிப்பவனாக உள்ளேன்.
4. முற் 8 பாக்கு இலங் லியவாறிகளுள் உங்களுக்கு மிகவும் பிடித்தமானவர் பற்றிக்கூறுவீர்களா?
ஈழத்து இலக்கியவானில் "இமயம்" என உயர்ந்து நின்ற பேராசிரியர் க.கைலாசபதி எனக்கு மட்டுமல்ல, முற்போக்கு எழுத்தாளராக தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர்களுக்கு எல்லாம் வழிகாட்டியாக இருந்துள்ளார். அவர் தினகரன் ஆசிரியராக இருந்த காலத்தில் இலக்கியத் துறைக்கு ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியன. அதே வேளை பல எழுத்தாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து அவர்களை எழுத்துத் துறையில் கால் பதிக்க வைத்தவர். மார்க்சியக் கோட் பாட்டின் தளத்தில் நின்று இலக்கிய விமர்சனங்களை முன்வைத்தவர். இவர் வழி நின்று பேராசிரியர் நா.வானமாமலை தமிழ்நாட்டில் விமர்சனத் துறையை முன்னெடுத்தார். பேராசிரியர் க.கைலாசபதி ஒப்பியல் நோக்கில் பல கட்டுரைகளையும் நூல்களையும் தந்தவர்.
7- இதழ் 33

Page 20
நான் 'கற்பகம்’ ஆசிரியராக இருந்த காலத்தில், பேராசிரியர் க.கைலாசபதியைத் தினமும் மாலை வேளைகளில் சந்தித்து வெள்ளவத்தை தொடக்கம் பம்பலப்பிட்டி வரை புகையிரதப் பாதையில் நடந்து சென்று திரும்பும் வரை இலக்கிய சம்பந்தமான விடயங்களைப் பற்றி கலந்துரையாடிய அந்தப் பசுமை யான நினைவுகளை இப்பொழுதும் எண்ணிப் பார்த்து மகிழ்கின்றேன். முற்போக்கு இலக்கியவாதிகளாக இன்றும் முகிழ்ந்து நிற்கும் செகணேசலிங்கள், நீர்வை பொன்னையன் ஆகியோரும் என்னால் மதிக்கப்படும் படைப்பாளிகளாக இருக்கின்றனர்.
5. ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் மூத்திரை
பதித்தவர்கள் பற்றிக்கூறுவீர்களா?
இது ஒரு நீண்ட விடைக்கான ஒரு கேள்வியாக இருந்தபோதிலும் முக்கியமானவர்களைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிடலாம் என எண்ணுகின்றேன். ஈழகேசரிக் காலம் தொடங்கி மறுமலர்ச்சிக் காலம், சுதந்திரன் காலம், தினகரன் காலம் போன்ற காலப் பகுதியில் முகிழ்த்தெழுந்த எழுத்தாளர்களைத் தொடர்ந்து வெளிவந்த முற்போக்கு எழுத்தாளர்களே ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முத்திரை பதித்தவர்களாக இருக்கின்றார்கள். எனது நாற்பது வருட கால அனுபவத்தில், யதார்த்த இலக்கியம் படைத்தவர்களைப் பட்டியல் இடுவது இக்கேள்விக்குப்பதிலாக அமையும்.
பாரதி சஞ்சிகை ஆசிரியர் கே.கணேஷ், அ.ந.கந்தசாமி, சில்லையூர் செல்வராசன், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் கா.சிவத்தம்பி, அ.முகம்மது சமீம், டொமினிக் ஜீவா, கேடானியல், க.பசுபதி, நீர்வை பொன்னையன், செ.கணேசலிங்கன், இ.முருகையன், இளங்கீரன், செ.யோகநாதன், செ.கதிர்காமநாதன், தெணியான், செம்பியன் செல்வன், அங்கையன் கைலாசநாதன், ஏ.இக்பால், என்.கே.ரகுநாதன் ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
மேலும் பேராசிரியர் சபா ஜெயராசா, பேராசிரியர் சி.மெளனகுரு, பேராசிரியர் சி.சிவசேகரம், பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோரும் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தங்களாலான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணம் வீசும் என்ற வகையில் ஒரு சிலரை இங்கு குறிப்பிட்டே யாகவேண்டும். கனக செந்திநாதன், வ.அ.இராசரத் தினம், வித்துவான் வேந்தனார், வ.இராசையா, மா.பால சிங்கம், கே.ஆர்.டேவிட் சொக்கன், செங்கை ஆழியான், கல்வயல் வே.குமாரசாமி, தெளிவத்தை யோசப் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாகின்றனர்.
6. இளமைக் காலத்தில் உங்களை அதிகம் தாக்கத்துக்குள்ளாக்கிய இலக்கியப் படைப்புகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவீர்களா?
மாக்ஸிம் கார்க்கியின் தாய், நான் பயின்ற பல்கலைக்கழகம், நான் பெற்ற பயிற்சிகள் ஆகிய
ஜீவநதி 1

நூல்கள் மூன்றையும் சொந்தப் பணத்தில் வாங்கி (1965) பலமுறை படித்துள்ளேன். காண்டேகர் எழுதிய நாவல்கள் சிலவற்றை விரும்பிப் படித்திருக்கின்றேன். துகழி சிவசங்கரப்பிள்ளையின் 'செம்மீன், தோட்டியின் மகன்' ஆகிய நாவல்கள் என்னைப் பெரிதும் ஈர்த்துள்ளன. சே.கணேசலிங்கனின் நீண்ட பயணம், இளங்கீரனின் அவளுக்கு ஒரு வேலை வேண்டும் ஆகிய நாவல்கள் குறிப்பிடக்கூடியன. டொமினிக் ஜீவா வின் தண்ணீரும் கண்ணிரும், நீர்வை பொன்னை யனின் மேடும் பள்ளமும் ஆகிய சிறுகதைகள் ஒடுக்கப் பட்ட மக்களின் குரல்களாக ஒலித்தன. பேராசிரியர் க.கைலாசபதியின் ஆக்கங்கள் எல்லாவற்றையும் தேடிப் படித்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளார்ந்த கருத்துக்களை அறிந்துகொள்வதில் மிகுந்த அக்கறை காட்டியுள்ளேன். என்னுடைய வாசிப்புப் பழக்கமே ஒரு படைப்பாளியாக என்னை ஆக்கியுள்ளது.
7. பேராசிரியர் க.கைலாசுபதியைக் குறித்து சில படைப்பாளிகள் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள் ஒத்துக் கொள்ளப்படத் தக்கனவா?
பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் மாக்ஸிச சித்தாந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் நின்று இலக்கியத்தை நோக்கி தமது விமர்சனங்களை முன் வைக்கும் ஒரு கொள்கைவாதி. முதலாளித்துவத்தின் பிடியில் அடக்கி ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், நிலப் பிரபுத்துவ ஆதிக்கத்தினால் அல்லலுறும் விவசாயிகள், சாதியத்தின் பெயரால் ஒதுக்கப்பட்ட மக்கள், பணம் பட்ைத்தவர்களால் சுரண்டலுக்குள்ளாகும் ஏழைகள் என்ற வகையில் பாதிக்கப்பட்டவர்களை முன்னிலைப் படுத்தி அவர்களின் விடிவை நோக்கிய ஆக்கங்களைப் படைப்பவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என்ற வட்டத்துக்குள் உள்வாங்கப்படுகின்றார்கள். இவர் களிலும் மாக்ஸிச சித்தாந்தக் கோட்பாட்டுக்கு ஏற்ற வகையில் இலக்கியம் படைப்பவர்களின் படைப்புகளை மட்டுமே பேராசிரியர் க.கைலாசபதி விமர்சனக் கண் கொண்டு நோக்கினார்.
ஆகவே பிற்போக்குவாதிகளால் முன்வைக்கப் படும் குற்றச்சாட்டுக்கள் அவர்களின் கையாலாகத் தன்மையையே வெளிக்காட்டுகின்றன. "மக்கள் இலக்கியம் படைக்கத் தெரியாதவர்கள் மார் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. சில கனவான்கள் கைலாசபதி தங்களைத் தூக்கிவிடவில்லை என்று நீண்ட காலமாக அரைத்த மாவை அரைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்படிச் சொல்வதற்கு அவர்களுக்கு வெட்கம் இல்லையா? கைலாசபதி ஏன் உங்களைத் தூக்கிவிடவேண்டும்? அவர் எதிர்பார்த்த முற் போக்கு இலக்கியம் உங்களால் படைக்கப்படாத போது அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததில் தவறு ஒன்றும் இல்லையே!
பேராசிரியர் க.கைலாசபதி ஓர் இலக்கிய இமயம். அந்த இமயத்துடன் கிட்ட நெருங்க
இதழ் 33

Page 21
முடியாதவர்கள், அவர் மரணித்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அவர் மேல் வக்கிரம் கொண்டிருப்பது வேடிக்கையாயிருக்கிறது.
மாக்ஸிசம் விஞ்ஞானரீதியான ஒரு சித்தாந்தம். மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக கார்ல் மார்க்ஸ் என்ற தத்துவஞானியால் உருவாக்கப் பட்ட சித்தாந்தக் கோட்பாடு. பேராசிரியர் க.கைலாசபதி யினால் இலக்கியமாக ஏற்றுக் கொள்ளப்படாத ஆக்கங் களை உருவாக்கியவர்கள், அவர் மேல் குற்றச்சாட்டுகள் சுமத்துவதை மட்டுமே கருத்தில் கொண்டு காலத்தை வீணாக்காமல், மாக்ஸிசம் பற்றிய முழுமையான அறிவை, முழுமையாக பெற்றுக்கொண்டு மக்கள் இலக்கியம் படைக்க முற்படுங்கள் என்று வேண்டு கின்றேன்.அத்தகைய இலக்கியங்களே மக்களால் மதிக்கப்பட்டு நீண்டு நிலைத்து நிற்கும். இதுவே யதார்த்தம்.
(8):தலித் இலக்கியம்? பற்றிய உங்கள்
மதிப்பீடுயாது?
1956 இல் ஏற்ப்பட்ட, சோஷலிசப் பாதையைக் காட்டிய ஆட்சி மாற்றம் இலக்கியத்துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் இலக்கிய வரலாற்றில் புதிய வீச்சைக் காணக்கூடியதாக இருந்தது. முற்போக்கு இலக்கிய வாதிகளின் காலம் பொற்காலம் என்று பெருமைபடச் சொல்லலாம். 'இலக்கியம் மக்களுக்காக என்ற எண்ணக்கரு முதன்மை பெற்று நிற்க, முற்போக்கு எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை வெளிக் கொணர்ந்தார்கள். மக்களின் அடக்கு முறைக்கு எதிரான போராட்டங்களையும், வர்க்க முரண்பாடுகளையும், சாதிக் கொடுமையின் அவலங்களையும் முன்னிலைப் படுத்தி தமது எழுத்தாக்கங்களை முன்வைத்தனர். இந்தியாவில் தலித் இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே யாழ்ப்பாணத்து சாதி வெறிக்கு எதிராக, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக தமது படைப்புக்களை வீறு நடையுடன் கே.டானியல் வெளிக்கொணர்ந்தார். அந்த வகையில் டானியலின் பஞ்சமர்', 'கானல்’ ஆகிய படைப்புக்கள் கவனத்திற் குரியது. மேலும் டொமினிக் ஜீவா, தெணியான், என்.கே. ரகுநாதன், அகஸ்தியர் ஆகியோர் சாதியத்திற்கெதிரான படைப்புக்களை முன்வைத்தனர். 1964 இல் 'பிணைப்பு என்னும் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் தடம் பதித்த தெணியான் சாதியத்திற்கெதிரான வகையில் நாற்பது சிறுகதை வரை எழுதியதாக அறிய முடிகின்றது. பொற் சிறையில் வாழும் புனிதர்கள் இவருடைய நாவல் சாதியத்தைப் பற்றிக் கூறுகின்றது. சாதியத்திற்கு எதிராக கவிதைகள் படைத்தவர்கள் வரிசையில் க.பசுபதியும், சுபத்திரனும் முன்னிற்கின்றார்கள்.
சாதியத்திற்கு எதிரான போராட்டங்களான ஆலயப்பிரவேசம், தேனீர்க்கடைப் பிரவேசம், பொதுக் கிணறுகளில் தண்ணீர் அள்ளுதல், சமபந்திப் போசனம் ஆகியன உச்சக்கட்டத்தில் இருந்த காலப்பகுதியை அண்டி எழுதப்பட்ட படைப்புகள் மக்கள் மத்தியில்
ஜீவநதி

பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியமை மறைக்க முடியாத உண்மை. யுத்தத்துடனான இடப்பெயர்வு, புலம்பெயர்வு என்பன மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை ஏற்படுத்திய போதிலும் சிலர் சாதியத்தை இன்றும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
காலத்துக்குக்காலம் மாற்றங்கள் ஏற்படும் போது அவை சார்ந்த வகையில் இலக்கியப் போக்கு களும் மாற்றம் பெறுகின்றன. அன்று சாதியத்திற்கு எதிராக இருந்த இலக்கிய வீச்சை இன்று காண முடியவில்லை என்று சொல்வதும் பொருந்தும்.
(9) ஈழத்து இலக்கியத்தின் இன்றைய போக்கு
எவ்வாறுள்ளது?
இலக்கியத்திற்கு இலக்கு இருக்க வேண்டும். இலக்கு இல்லாத எழுத்தை இலக்கியமாகக் கொள்ள முடியாது. இலக்கு மக்கள் மேம்பாட்டைக் கொண்டதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மூத்த முற்போக்கு எழுத்தாளர்கள் தமது படைப்புக்களை உயிர்த்துடிப்புள்ள வகையில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். செ.கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், தெணியான் போன்றவர்கள் காத்திரமான படைப்புக்களைத் தந்த வண்ண முள்ளார்கள். பலர் தடம் மாறிச் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. مح
இன்று பலர் எழுத்துத் துறையில் ஈடுபட்டிருப் பதைக் காணமுடிகின்றது. புத்தக வெளியீடுகளும் ஏராள மாக வந்த வண்ணம் உள்ளன. கதை எழுத வேண்டும், நூல் வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர என்ன இலக்குடன் நாம் எழுத வேண்டும் என்ற தெளிவின்மையே முதன்மை பெற்று நிற்பதை அவதானிக்க முடிகின்றது.
"இலக்கியம் காலத்தின் கண்ணாடி, மக்கள், மக்களே வரலாற்றின் உந்து சக்தி. இலக்கியப் படைப்புகள் அந்த மக்களின் வாழ்வை அவர்களின் இன்ப துன்பங்களை, போராட்டங்களை அவர்களது உணர்வு களைப் பிரதிபலிக்க வேண்டும். இயற்கையுடன் மக்களையும் அவர்களது வாழ்வியலையும் இணைக் காமல் படைப்புக்கள் புனைவதில் பிரயோசனமில்லை. அப்படைப்புக்களால் மக்களுக்கு பலனேதுமில்லை. ஒரு படைப்புக்கு உருவமும் உள்ளடக்கமும் அவசியம். உள்ளடக்கம் இல்லாத ஆக்கம் வெறும் சடம். அதில் உயிாத் துடிப்பில்லை. ஊருவம் இல்லாத படைப்பு அது வெறும் கருத்து மாத்திரம் தான். உருவத்தினதும் உள்ளடக்கத்தினதும் சங்கமத்தில் தான் உண்மையான, உயிர்த்த துடிப்புள்ள படைப்பு ஜனனிக்கிறது" என்று ஒரு முதுபெரும் எழுத்தாளர் கூறியுள்ளார்.
இந்த விளக்கம் பலருக்குப் பயன்படும் என எண்ணுகின்றேன். தலைக்கணம் கொண்டவர்கள், ஒருவருக் கொருவர் முதுகுசொறிபவர்களால் ஆரோக்கியமான இலக்கியத்தை முன்வைக்க முடியாது.
"சகல கலை வடிவங்களின் தாயாக மக்கள் போராட்டம் இருக்க வேண்டும். மக்களிடமும், ஒடுக்கு
H இதழ் 33

Page 22
முறைக்கு எதிரான அவர்களது போராட்டங்களிலும் ஒரு கலைஞன் அக்கறை செலுத்தாவிட்டால், அவன் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கி எறியப்படுவான் என்று தெலுங்குக் கவிஞன் கும்மாட்டி விட் டலு கூறிய கருத்துக் கள் இனி றைய எழுத்தாளர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.
(0) பாலியல் பிரச்சினைகளை அண்மைக் கா ைஎழுத்தாளர்கள் சிலர் அப்பட்டமாக எழுதி விரசத்தைத் தூண்டுகிறார்களே இது ஆரோக்கியமானதா?
இன்றைய மனித வாழ்க்கையின் ஓட்டத்துடன் பாலியல் பிரச்சினைகள் மனிதக்கட்டுப்பாடுகளையும் மீறி விஸ்பரூபம் எடுத்துள்ள நிலையில் பெற்றோர் களும் சம்பந்தப்பட்டவர்களும் செய்வதறியாது ஏங்கித் தவிக்கிறார்கள். இதற்கான அடிப்படைக் காரணங்கள் கண்டறியப்பட்டு அத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்கக் கையாளப்பட வேண்டிய வழி முறைகளை முன்னிறுத்தி எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களைப் படைக்க வேண்டும். மக்களை நல்வழிப்படுத்தக் கூடிய கருத்துக்களை முன்வைக்கும் போது விரசத்தைத் தூண்டக் கூடிய சொல்லாடல்களைத் தவிர்க்க வேண்டி யது எழுத்தாளர்களின் கடமை. அதுவே ஆரோக்கிய மானது.
() பும்ைபெயர் இலக்கிய மூண்னேற்றம் கண்டு வருவது ஆரோக்கியமான செயற் பாடு என்று பலர் சொல்லி வருகின்றார் கள். அது பற்றி உங்கள் அபிப்பிராயம் 6τύυρυτα, βδυbόΦύ7
உண்மையை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.உண்மையில் இலங்கை எழுத்தாளர்கள் பலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்து வருகின்றனர். அவர்களில் சிலர் ஈழத்து மண்வாசனையுடையதான படைப்புக்களைச் சுதந்திரமாக எழுதி வருகின்றார்கள். மேலும் எமது கலாசாரம் பண்பாட்டுடன் கூடிய ஆக்கங் களை படைப்பதையும் காண்கின்றோம். இந்தத் தலைமுறை எழுத்தாளர்களின் வருங்கால சந்ததியினர் வேற்று மொழிகளைக் கற்றுக் கொண்டு, அந்தந்த நாட்டு கலாசாரங்களைப் பின்பற்றிக் கொண்டு வாழுகின்ற போது அவர்களிடம் ஆரோக்கியமான இலக்கியப்
KBharameethaan
ஜீவநதி
 

பங்களிப்பை எதிர் பார்க்க முடியுமா? வருங்காலந்தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.
(2) பல வேலைகளுக்கு மத்தியிலும், நீங்கள் எழுதுவதற்குத் தேவையான நேரத்தை எவ்வாறு ஒதுக்கிக்கொள்கிறீர்கள்?
"எழுதுவது ஒரு தவம்” என்று சொல்லு வார்கள். எனவே எனது குடும்பப் பணிகளுக்கு அப்பால், எனக்குக் கிடைக்கும் நேரம் முழுவதையும் எழுத்துப் பணிக்கே அர்ப்பணிக்கின்றேன். நான் பல்துறை சார்ந்த இலக்கியப் பணிகளை மேற்கொண்டு வருவதால், நூல் களை வாசிப்பதுடன் தேடல்களையும் மேற்கொண்டு வருகின்றேன். அதன் பின் எழுதத் தொடங்கும் போது தேவை அறிந்து முக்கியமானதற்கு முன்னுரிமை கொடுத்து எழுதி வருகின்றேன். தனிமையான கழலை ஏற்படுத்திக் கொண்டு எழுத முற்படும்போது எழுதுவது மனஎழுச்சியைத் தருவதாக இருக்கின்றது. எனவே தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கின்றேன். அது என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பதாக உணர்கின்றேன்.
(3) இலங்கையில் நூல்விமர்சனங்களை மிகப் பெருமளவில் நீங்கள் செய்து வருவதாக அறிகின்றேன். அது எப்படிச் சாத்தியமாலினிறது? அதறி கான காரணத்தைக்கூறமுடியுமா?
உண்மை தானி . எனது அணுகுமுறை வித்தியாசமானது. மேலும் இலங்கையில் வருகின்ற எல்லாப் பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் எனது எழுத்துக்கு ஆதரவு தந்து உற்சாகப்படுத்துகின்றன. நூல் களை முழமையாக வாசித்து அவற்றில் பொதிந்துள்ள அம்சங்களை வாசகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி வருவதால், என் எழுத்துக்காக நான் சொல்லும் விதத்தை அறிந்துகொள்வதற்காக தங்களுடைய படைப் புக்களை இலங்கை எழுத்தாளர்கள் பலர் நேரிலும், அஞ்சலிலும் தந்த வண்ணம் இருக்கின்றார்கள். நானும் அதை என் பணியாக ஏற்று என்னால் முடிந்தளவு திறனாய்வைச் சுதந்திரமாகச் செய்து வருகின்றேன்.
என்னை நேர்காணல் கண்ட ஜீவநதிக்கும் அதன் வாசகர்களுக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
5ĩ][ổ
=$35US
OH இதழ் 33

Page 23
ÜÚlgas GöIGOIJTs
சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு தமிழகத்தி லிருந்து வருகை தந்த மூத்த படைப்பாளி கு.சின்னப்பபாரதி யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார். இங்கு பல சந்திப்புக்களை நடபத்தினார். அதன் அங்கமாக 'ஜீவநதி குடும் பத்தினரும் அவருடனான சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். எமது மூத்த எழுத்தாளர் தெணியான் தலைமையில் இடம் பெற்ற சந்திப்பில் தனது அரசியல் இலக்கிய நிலைப்பாட்டினை முன்வைத்து அனுபவங் |களை அவையில் பகிர்ந்து கொண்டார். முற் போக்கு இலக் கசியம் , யதார்த்தவாத இலக்கியம், அதன் அழகியல் பிரச்சினைகள் என நிறையவே கருத்துப் பகிர்வு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு அவையில் இருந்தது. எனினும் நேர அவகாசமின்மையால் அது சாத்தியப்படாமல் போயிற்று.
அவர் தனது பகிர்வில் பல விடயங் களைத் தொட்டுச் சென்றார். முற்போக்கு பகிர்வ இலக்கியம், மார்க்சியத் தத்துவம் இரண்டு இன்ை 8 தளத்திலும் உறுதியாக நின்று, கள ஆய்வில் படிக்க தான் பெற்ற அனுபவங்களைப் படைப்பாக்கம் செல்ெ செய்கின்ற அவரது இலக்கிய முறைமை அவர் மீது எனக்குநல்ல மதிப்பினை ஏற்படுத்தியது. H6ODLO இச்சந்திப்பில் இந்தியாவின் முக்கிய பிரேம் படைப்பாளியான பிரேம்சந்த் பற்றியும், படைத் அவரது "கோதானம்" நாவல் பற்றியும் குறிப் (1919) பிட்டார். அது இந்தியாவில் எழுதப்பட்ட முதலா இந்நா வது யதார்த்தவாத நாவல் என்ற தகவலையும் அனுப தந்திருந்தார். நாவலை இள வயதில் வாசித்தது ஞாபகத்தில் எழ, இந்திய நாவல்களில் நெரு முதன்மையானது என்ற அவரது கருத்து மக்கள் 'கோதானம் நாவலை மீள் வாசிப்புச் செய்யத் வலிக தூண்டியது. தேர்ந்த நூல்களின் வாசிப்பில் மண்டி எனக்குத் தூண்டுதல்களை எப்போதும் சுரண் தருகின்ற நல்ல வாசகரும், கவிஞருமான எனும் வே.ஐ.வரதராஜன் மூலம் அந்நாவலை மறு இந்நா வாசிப்புச் செய்யக் கிடைத்தது. அந்த நாவலை மகாக மீள் வாசிப்புக்கு உட்படுத்தியபோது என்னில் சிலாக் ஏற்பட்ட அதிர்வுகளை ஜீவநதி வாசகர்களுடன் இலக்கி
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| செய்யும் ஆவலில் இக்கட்டுரையை எழுதுகிறேன். றய இளம் படைப்பாளிகள், வாசகர்கள் நிச்சயம் வேண்டிய நாவல் இது. அதன் மூலம் தமது படைப்பாக்கச் நறியினை வகுத்துக்கொள்ளமுடியும்.
இந்தியக் கிராமங்களில் நிலைத்த சுரண்டல் சமூக ப்பின் கொடுமைகளைக் கண்டு உள்ளம் உருகிய சந்த் காலத்தால் அழியாத அமர இலக்கியங்களைப் தார். இந்தியில் வெளிவந்த முதல் நாவல் “சேவாசதனம் அவருடையது. "கோதான் (1936) அவரது கடைசி நாவல். "வல் உருவாவதற்கு அவரது சொந்த கிராமத்தின் வங்களே வாய்ப்பாக அமைந்தது.
கிராமத்தில் ஏழை விவசாயக் குடியானவர்களுடன் ங்கிப் பழகும் பிரேம்சந்தின் இந்நாவலில் அடித்தள ரின் பிரச்சினைகளின் ஆழமும், யதார்த்த வாழ்வின் ளும் சுமைகளும், துயரங்களும், அவர்களிடையே 2யிருக்கும் அறியாமையும், மேட்டுக் குடியினரின் -லும் இயல்பாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது. கோதானம்
இந்நாவல் 1936 - ல் வெளிவந்தபோது விமர்சகர்கள் வலை "இந்தியக் குடியானவரின் வாழ்க்கையெனும் ாவியம்" எனக் குறிப்பிட்டனர். இது பற்றி க.நா.சு.வே த்ெதுக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. "திறந்த பத்து கிய நாவல்களில் ஒன்றான பிரேம்சந்தின் கோதானம்'
இதழ் 33

Page 24
நாவல் மாறும் தன்மையும், நிரந்தர இயல்புகளும் கூடிய இலக்கியச் சூழ்நிலையின் அதிநுட்பங்களை வெற்றி கரமாக வெளிப்படுத்துகிறது என்பது நிதர்சனம்" எனக் கூறியுள்ளார்.
இன்றும் சுரண்டலுக்கு உள்ளாகி வலிகளைத் தாங்கி வாழும் இந்தியக் கிராம அடிநிலை மக்களின் வாழ்வியலைத் தரிசிக்கவும், பிரச்சினைகளுக்கு நிரந்தர மான தீர்வு நோக்கிச் சிந்திக்கவும் வழிகாட்டக்கூடிய மிகச்சிறந்த படைப்பே'கோதானம் என்ற நாவலாகும்.
இந்தி நாவல் உலகின் முதல் யதார்த்தவாத முற்போக்கு எழுத்தாளர் என்ற கெளரவத்தினைப் பெற்ற பிரேம்சந்த், தனி மனிதன், குடும்பம், சமுதாயம், பொருளாதாரம், மரபார்ந்த நம்பிக்கைகள், மூட நம்பிக் கைகள், முற்போக்கு அரசியல் என ஒட்டுமொத்தமாக அனைத்தையும் இந்நாவலில் கருப்பொருளாகக் கொண்டு இந்நாவலைப் படைத்துள்ளார். பாத்திரப் படைப்பு, கலை நேர்த்தி, கிராமிய மணம், சமுதாய எழுச்சி என அனைத்து அம்சங்களிலும் உன்னதமான படைப்பாக விளங்குவது கோதானம்.
நாவலின் கதைச் சுருக்கம் இது தான். ஐமீன்தார் முறையை எதிர்த்த பிரேம்சந்த் நாவலின் கதாநாயகனான ஹோரியை உயிர்த் துடிப்புள்ள பாத்திரமாகச் சித்திரித்துள்ளார். மண்ணை நம்பி வாழும் இக்குடியானவன் பரம்பரைப் பழக்க வழக்கங் களுக்கும், நம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டுப் போனவன். சுரண்டலிற்குப் பலியாகி கடனில் மூழ்கி உயிர்துறக்கிறான். தன் வீட்டில் வாசலில் ஒரு பசு மாடு கட்டி வளர்க்கவேண்டும் என்ற ஆசையில் வாழும் அவனது மண்ணின்பாலுள்ள பாசமும் அளவிட முடியாதவை. வீட்டில் ஒரு பசு இருப்பதுதான் வளமான வாழ்வைத் தரும், நிறைவைத் தரும் என நினைத்து அதற்காகவே பல்வேறு துன்பங்களையும் எதிர் கொள்கின்றான். தனது இக்கனவை நனவாக்கித் தன் பேரனுக்குப் பால் தர ஒரு பசு வாங்கவேண்டும் என்று கூலி வேலை செய்து, கல் சுமந்து பாடுபடும் அவன் முடிவில் அக்கனவு நனவாகாமலே உயிர் துறக்கிறான். ஹோரியின் மனைவி தனியா இந்நாவலில் மிகச் சிறப்பான அழுத்தமான பாத்திரமாகப் படைக்கப் பட்டுள்ளாள். அந்நிலை எதிர்த்துக் குரல் கொடுக்கும் பாத்திரம் இது. நாவலின் முடிவு சோகமானது. வாசகர்களின் கண்ணில் நீரை வரவழைக்கிறது.
ஹோரியின் குடும்பத்தை பணம் படைத்த நிலச் சுவாந்தர்கள், கோயில் பூசாரிகள், அரச அதிகாரிகள், ஜமீன்தார்கள், லேவாதேவிக்காரர்கள், கிராமத்துப் பஞ்சாயத்தார் என அனைவரும் ஓரணியில் நின்று சுரண்டி வாழ்கின்றனர். இவர்களது கோரமான சுரண்டலுக்கு ஈடுகொடுத்து கண்ணிர் விட்டு கலைந்து போகின்ற அவலம் மிகுந்த வரலாறே இந்நாவலின் கருப்பொருளாகும்.
இந்நாவல் கதைப் போக்கில் இந்தியக் கிராம வாழ்வின் அவலங்களின் விரிவைத் துளாவும் யதார்த்த
ஜீவநதி

நாவலுக்குரிய பண்புடன், பிரச்சாரமெதுவுமின்றி படைக்கப்பட்டுள்ளது. நாவலின் ஆரம்பமே நெருக்கடி யான வாழ்வின்சுமையுடன் ஆரம்பிக்கின்றது. அதன் பின் அவ்வாழ்வின் அவலங்கள், நெருக்கடிகள் தோன்றக் காரணங்கள், பதற்றங்கள், மோதல்கள், உணர்வுகளின் இறுக்கங்கள் என யதார்த்த உலகைக் கண்முன் நிறுத்த பிரேம்சந்த் காட்டும் பின்னணிச் செய்திகளும், தடயங் களும், காட்சிகளும் இயல்பாக கலை நேர்த்தியுடன் படைக்கப்பட்டுள்ளன. யதார்த்தத்தை இறுகப் பற்ற விளையும் ஆளுமையின் வெளிப்பாடு இது எனலாம்.
இந்தியப் பண்பாட்டின் இயங்குவிசையான சாதியமும், தீண்டாமையும் சிதைவதிலும், அழிவதிலும் தனக்கிருந்த விருப்பத்தினை இந்நாவலில் பல இடங்களில் காட்டியுள்ளார். பிராமணன் சக்கிலியப் பெண் உறவு, ஹோவர் சக்கிலியப் பெண் உறவு, மாலதி போன்ற புத்திஜீவியின் சமுதாய நோக்கு என்பவற்றின் மூலம் காட்டியுள்ளார். அத்துடன் இந்தியக் கிராம மொன்றில் மேல்சாதியினருக்கும், தீண்டத்தகாதசாதியி னருக்கும் இடையில்ான தொடர்புகள் முற்றிலும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டவையே என்பதை நாவல் சிறப்பாகக் காட்டுகிறது.
சமூக உறவுகள் என்பன எப்போது உடைமை உறவுகளில் கிடத்தப்பட்டுள்ளன என்ற கார்ல் மாக்ஸ்சின் கூற்றுக் கமைய இந்த உறவுகளும் உடைமை உறவுகளேயன்றி வேறல்ல என்பதை இந்நாவல் அழகாக எடுத்துக் கூறியுள்ளது.
நாவலின் நாயகன் ஹோரி இறந்தபோது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்து வழக்கப்படி பசு தானம் கொடு என தாதாதீன் என்ற பிராமணர் கேட்கிறார். இறந்தவனின் மனைவி தனியாவுக்கு உள்ளம் பொங்கிக் குமைகிறது. எல்லாம் முடிந்து போன இந்நிலையிலுமா சுரண்டல்? காலங் காலமாகத் தொடர்ந்து வரும் மூட நம்பிக்கை, சுரண்டல் போக்கு அனைத்தையும் மறுதலிக்கு வகையில் தனியா அழுத்தமாகப் பேசுகிறாள். "ஐயா பிராமணரே, தாதாதீன் மகாராசாவே. பசுவும் கிடையாது, கன்றுக் குட்டியும் கிடையாது. தானம் கொடுக்கக் கடைசி நாளில் கல்லுடைத்தகூலி இருபது அணா தான் மிச்சம்.அதுதான் என் கணவனுக்கான கோ தானம்" என்கிறாள். இங்கு தனியா காட்டும் அழுத்தமும் மறுதலிப்பும் ஓர் அற்புதமான திருப்பு மையமான குறியீடு. அதிகார வர்க்கத்தையே நடுங்க வைக்கும் அற்புதமான படைப்பு.
தாய்மைக் கனிவு, கருணை, உறுதிப்பாடு, இறுக்கம், எழுச்சி, மனிதாபிமானம் ஆகிய பண்புக ளோடு, மரபு குடும்பம், சமுதாயம் ஆகியவற்றால் நைந்து போய் உருகித் தவிக்கும் ஒரு பெண் பாத்திரமாக தனியாவை படைத்துள்ளார் பிரேம்சந்த்.
பிரேம்சந்த்தின் கோதானம் என்ற இந்நாவல் மிகச் சக்தி வாய்ந்தது. காலத்தைக் கடந்து நிற்கும் அற்புதமான படைப்பு. கிராம வாழ்வின் தளத்தில் பிரிக்கமுடியாத - ஒண்டறக் கலந்த சுரண்டல், ஏற்றத்
22 இதழ் 33

Page 25
தாழ்வின் அபத்த நிலையை வாசகன் உணரும்படியும், மனச்சாட்சியினை விழிக்கச் செய்யும் வகையிலும் இந்நாவல் எழுதப்பட்டிருப்பது நாம் பெறுகின்ற அனுபவமாகும். அந்த வகையில், இந்தியப் பண்பாட்டில் நிலைபெற்றுள்ள ஜாதி, மனம், சுரண்டல் வாழ்நிலை ஏற்றத் தாழ்வுகள் என்பன சாதாரண மனிதனின் வாழ்வைச் சிதைப் பதில் மிகக் கூர்மையாகச் செயற்படுபவை. இவை பற்றிய எதிர்வினை - விமர்சனப் பார்வை பிரேம்சந்திடம் இருந்தது. இவற்றை கலாரீதியாக வெளிப்படுத்தியுள்ள அவர் மனித உரிமைகள் மீது எத்தகைய நம்பிக்கை கொண்டவர்
அடிபணிந்து செல்லவேண்டிய நிர்க்கதியில் மனிதம் சிக்குண்டு கொள்கிறது. எப்படியாகிப் போனோம்
இப்படி? என்று
எண்ணியபடியே ஆண்டுகளுக்கு மட்டும் தானே விடை கொடுக்கின்றோம். எங்கள் அவலச் சுமைகளை எப்படி இறக்கி வைக்கப் போகிறோம்? பாலைவனமாக்கப்பட்டிருக்கும் - இப்
எப்படி சொல்வது? சொல்லப்படாமலும்
 
 

என்பதை நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியக் கிராமத்து அடிநிலை மாந்தர்களின் உணர்வுகளை யதார்த்தபூர்வமாகச் சொல்லும் இந்நாவல், யதார்த்தவாத முற்போக்கு இலக்கியத்தின் முன் உதாரணமாகக் கொள்ளலாம்.
இந்திய இலக்கியத்தில் மக்கள் இலக்கியம், முற்போக்கு இலக்கியம் என்ற திசை மார்க்கத்துக்கு வழிகாட்டிய இந் நாவலை இனி றை இளம் தலைமுறையினர் வாசிக்கவேண்டும். பிரேம்சந்தின் படைப்பாற்றல் பற்றியும், அவரது முற்போக்குச் சிந்தனைகள் பற்றியும் விவாதிக்கவேண்டும்.
ളരൈക്ര
முளைவிடும் ற
எம் மனவெளி தனில் நிலவொளி படரும் காலம் தை எதுவோ..?
இத்தனை காலமாய் 6 முகாரியை மாத்திரமே
மீட்டித் திரிந்த GD எம் இதய வீணைகளில் 6) ஏதற்காக
பூபாளத்தை மீட்ட முனைவதாக பாசாங்கு செய்து கொள்கிறீர்? நொந்து போன எங்கள் இதயங்கள் நொந்ததாகவே இருக்கட்டும். இந்த மண்ணில் ஆழப் புதைந்து கிடப்பவை பிணங்கள் மட்டுமல்ல எங்கள் உணர்வுகளும் தான் என்றுரைத்தபடியே வாழ்ந்து கொள்வோம்.
- வெ.துஷ்யந்தன்
3. இதழ் 33

Page 26
நி()ைல மாற்றம்
அன்று,
அப்புவும் ஆச்சியும்
கட்டி வாழ்ந்த
ஒலைக் குடிசை
விறகாச்சு
படுத்துறங்கிய கட்டில் கால்கள் அடுப்புக்கு இரையாச்சு
சமைத்துச் சாப்பிட்ட சட்டி பானை ஒடாச்சு
அப்பு கட்டிய வேட்டி விளக்குக்கு திரியாச்சு
ஆச்சி கட்டிய கைத்தறிச்சேலை பட்டத்துக்கு
வாலாச்சு
இன்று,
நினைவில் மறைத்து வைத்திருந்த அடையாள அட்டையும் அரச படையால் பறிச்சாச்சு
நிலையாய் இருந்த நிலமும் இராணுவ முகாமாச்சு அதனால் நாங்கள் இப்போ அகதியானோம்
- அபிசெகன்
滚接、滚
 
 
 
 

—Çiu) LZaught still
ចាប-បាលីថាយចr
அனல் காற்றில் விசவாயு கலந்தெரித்த பூமி அதில் விளைந்த இளந்துளிர்கள் தீய்ந்தழிந்து கனகாலம் ஆகவில்லை.
முதுமரங்கள் விழிவறளச் சுரசரக்கும் காவோலையாகும். a. துயர்வாழ்வில்
மணல் கூடத்
தீய்ந்தெரிந்து
கரியாகச் சாகும். -
பிணம் திண்னிக் கரும்பறவை கரைந்தழுது தேனொழுகப் பேசும். பொய்யான உறுதி பலவுதிர்த்து உள்ளரங்கில் தலை நுளைக்கப் பார்க்கும். தரை தின்ன கறையானாய் அரித்தரித்துப் பரவும். பிறர் மண்ணை ஏப்பமிடும் வழியனைத்தும் நாடும்.
துயர் சிந்தி வாழ்வொடுங்கி தலை சாய்க்கும் சேற்றெருமை அல்ல. துளிநீரும் கடலாகப் பரந்தெழுப் படகாகி மிதப்பர்.
பனங்கொட்டை முளைவிட்டு வடலியென வளரும். இவர் வாழ்வு கருகாது வளவெங்கும் நிமிரும்.
- எம்.கே.முருகானந்தன்

Page 27
ஜீவநதி
மூடமையில் அறிவுடையோர் என நினைத்தல் மூடமைதான்/ வேடமிட்டு நடிப்பதெல்லாம்
வேற்றுமையே ஆகிடினும்
நாடுவது அறிவினைத்தான் நாட்டம் உடன் கூடி நிற்கும்! ஆடுமட்டும் ஆடிவிட்டு ஒய்ந்துலகைப் பார்ப் போருண்டு!
பார்த்தவைகள் காட்சியாகும் பலம் மனதில் ஆர்த்தவைகள் பார்த்தவனின் கண்களுக்குள் படிந்துவிடும் அதனறிவு பார்த்தவனைச் சார்ந்தது தான் பட்டு நிற்கும் பல விழிகள் பார்க்காது அறிவதுவும் பலனறிவுள் ஆழ்ந்தது தான்/
அறிவெண்ப தறிந்தவையே அறியாததும் அறிவே! அறிவினுக்கு எல்லை வகுத் தாக்குதலே அறிவீனம்
அறிவுடையோர் யாரென்ப
தறிந்திடுதல் முடிந்திடுமோ?
அறிவும் அறியாமை யாவும் அறிவினுள்ளே அமைந்தது தான்!
எல்லாம் அறிந்து விட்டோம் எனத் தாள மிடுவதுவும்
எல்லா மாக்கி விட்டோம் எனப் பெருமை கொள்வதுவும் வென்றுவிட்டோ மெனப்பலவும் வியந்தாக்கிக் கொண்டவைகள் இன்றியற்கை அழிந்ததினால் இயற்றியவன் காக்கவில்லை!
மனிதன் படைப்பினுக்கும் இயற்கை அழிவினுக்கும் மனிதன் அறிவினுக்கும் மறைந்திருக்கும் பொருளினுக்கும் இனியும் இடை நடுவே எதுவுமில்லை என்பதையே
 
 
 
 
 
 
 

மனிதன் அறிந்துடனே மாற்றமுடன் காணவேண்டும்!
செயற்றிறமை யெல்லாம் சேர்ந்து விட்ட காரணத்தால் செய்தவையால் ப்ெருமை கொண்டு சேர்த்த பொருள் இழந்திடினும் செய்தவற்றின் சிறப்புலகில் செறிந்ததினால் உயர்வு கண்டு செய்தவைகள் அழிந்து விடாச் செயற்றிறனே அற்று நின்றார்/
செய்தவைகள் நிலைத்து நிற்கும் சிறப்புடைய உலக மொன்றைச் செய்த பின்தான் மனிதனுடைச் செயற்பாடு நிலைத்து நிற்கும் செய்ய முடியா துலகில் செய்தவற்றைக் காப்பாற்றும் செயற்பாட்டில் செய்தவைகள் செத்தொழியும் இயல்பு காணிர்/
அறியாமையும் அறிவே அறிந்தவையும் தானறிவே குறைகாண எதுவுமில்லை குறைந்து விடின் எதனையுமே குறை நிரப்ப முடிவதில்லை குறை தீர்க்கும் வல்லமைகள் குவலயத்துக் குள்ளதல்ல குறைவே நீ குறைந்தொழிவாய்!
- கவிஞர்.ஏ.இக்பால்
漆

Page 28
அதிகாலை ஐந்து மணி இ பெளர்ணமி நிலவு பிரகாசமாக எ கொண்டிருந்தது. வெளியே ஏதோ கேட்டுத் திடீரெனக் கண் விழித்தார் இ சிங்கம். பேச்சுக் குரல்கள் கேட்கின்ற6 சிங்களத்தில் தான் கதைக்கின்றார்கள் சத்தங்களும் தெளிவாய்க் கேட்கி ராணுவம் வந்துவிட்டதை உணர இ சிங்கத்துக்கு அதிக நேரம் பிடிக்கல் அவர் மெதுவாக மனைவியைத் யெழுப்பினார். அதேநேரம் "பங்கருக்கு இருக்கிறது, எல்லாரும் வெளியே என்று ராணுவத்தினர் சிங்களத்தில் க யிடவே எல்லோரும் அலறியடித்துக் ெ எழுந்து உட்கார்ந்தனர். "ராணுவம் வந் நான் போய் அவங்களோடை கதை சத்தம் போடாமல் இருங்கோ” என்று களுக்குக் கூறிய இரத்தினசிங்கம், கை தூக்கியபடி பங்கரை விட்டு வெளியே வ "பங்கருககுள” யார யார கிறது?" என்று ராணுவத்தினர் சிங்க கேட்டார்கள். இரத்தினசிங்கம் முன்பு 6 பில் கடை வைத்திருந்தவர். சிங்களம் கத் தெரியும். எண்பத்து மூன்றுக் கலவர வந்து முள்ளிவாய்க்காலில் செற்றில "எனது மனைவி ராசம்மா, மகள் அவவின் பிள்ளைகள் இரண்டு பேர் L இருக்கிறோம்" என்று இரத்தின சிங்களத்தில் பதிலளித்ததைக் கண்டு ப யடைந்தோ என்னவோ ராணுவத்தின நாங்கள் உங்களை ஒன்றும் மாட்டோம், எல்லாரையும் வெளியே சொல்லுங்க” என்றார்கள். இரத்தின மீண்டும் பதுங்கு குழிக்குள் இ “பிரச்சினையில்லை, எல்லாரும் வெளி வாருங்கோ” என்று கூறியதும், எல்
 

ருக்கும். றித்துக் சத்தம் இரத்தின ன. ஆம், பூட்ஸ் ன்ெறன. இரத்தின 56b606). தட்டி
நள யார வாங்க”
ட்டளை
காண்டு திட்டுது, க்கிறன், மற்றவர் களைத் பந்தார்.
இருக் 5ளத்தில் கொழும் நன்றா ாத்துடன் ானவர். பிரதீபா, பங்கரில்
fìIBjöLô மகிழ்ச்சி ".
Ꮚl8- u] u ]
ப வரச்
சிங்கம் இறங்கி யாலை )லாரும்
தயங்கித் தயங்கி ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள். இவ்வாறே ராணுவத்தினர் பல பதுங்கு குழிகளில் இருந்தும் ஆட்களை வெளியே அழைத்து எல்லோரையும் இடைத் தங்கல் முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். மூன்று நாட்களின் பின்பு மீண்டும் எல்லோரை யும் வாகனங்களில் ஏற்றினார்கள். புதுக்குடி யிருப்புச் சந்திக்குச் சென்று, அங்கிருந்து கற்சிலைமடு றோட்டால் திரும்பி, ஒட்டுசுட்டான் ஊடாக மாங்குளத்தை அடைந்து, கனகராயன் குளம், புளியங்குளம், ஓமந்தை வழியாக
வாகனங்கள் ஓடிக் கொண்டேயிருந்தன.
எல்லா ஊர்களுமே கட்டிடங்கள் தரைமட்ட மாகி அழிந்து போயிருக்கக் காணப்பட்டன. வவுனியா விவசாய ஆராய்ச்சி நிலையத்தைக் கடந்து சென்றதும் பட்டணப் பக்கம் செல்லாமல், மேற்காகத் திரும்பி மன்னார் றோட்டால் வாகனங்கள் ஓடுகின்றன. மன்னாருக்குத் தான் கொண்டு போகிறார்கள் என்று எல்லோரும் எண்ணினார்கள். திடீரென்று ஓரிடத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. எட்டிப் பார்த்தால் எல்லா இடமும் நீல நிறமாகத் தெரிகின்றது. மன்னார்க் கடலோ என்று அனைவரும் மயங்கினர். பின்பு நன்றாகப் பார்த்தபோது அலை கடல் அல்ல, அவை அகதிகளுக்கான நீல நிறத்திலான கூடாரங்கள் என்பதை அறிய முடிந்தது. யாரோ சொன்னார்கள். "இது செட்டி குளப் பிரதேசம், காடுகளை வெளியாக்கிக் கூடாரம் அமைத்துள்ளார்கள்" என்று. "எல் லோரும் வாகனங்களை விட்டு இறங்குங்கள்” என்று ராணுவத்தினர் கட்டளை யிட்டார்கள். "இதோ இந்தக் கூடாரங்கள் தான் உங்களுக்கான இருப்பிடங்கள், ஒவ்வொரு கூடாரத்திலும் ஐந்தாறு பேர் வீதம் தங்கலாம், எல்லாக் கூடாரங்களுக்கும் இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன, எந்தெந்தக் கூடாரத்தில் யார் யார் இருக்கிறார்கள் என்று நாளை தொடக்கம் பதிவேடுகளில் பதிவு செய்வோம்" என்று ராணுவத்தினரும், சிவில் அதிகாரிகளும் சிங்களத்திலும் தமிழிலுமாக விளக்கம் அளித்தார்கள். மக்கள் தமது தலைவிதியை நன்கு புரிந்து கொண்டவர்களாக, "யாழ்தேவிப்
புகைவண்டியில் கோணர் சீற் பிடிப்பது போல” s மும்முரமாக இயங்கித் தத்தமக்குரிய கூடாரங் களைத் தெரிவு செய்வதில் ஈடுபட்டார்கள். "எல்லோரும் தத்தமது கூடாரங்களிலேயே தங்கியிருக்கவேண்டும், முட்கம்பி வேலி களைத் தாண்டி எங்கும் போக முயற்சிக்
இதழ் 33

Page 29
கக்கூடாது, மக்களுடன் மக்களாகப் போராளிகள் யாராவது இருந்தால் அவர்கள் உண்மையைக் கூறி எம்மிடம் சரணடையவேண்டும்" என்று ராணுவத் தினரும் அவர்களுடன் நின்ற தமிழ் மொழிபெயர்ப் பாளர்களும் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துக் கொண்டேயிருந்தார்கள். எல்லோருக்கும் சாப்பாடு கொடுக்கப் போவதாகக் கூறப்பட்டது. ஆயினும் இரவு ஒன்பது மணியாகியும் சாப்பாடு வந்து சேரவில்லை.
கூடாரங்கள் நன்கு திட்டமிட்டு வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கூடாரத் (சுமார் 100 கூடாரம்) தொகுதிகளையும் சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. நிலத்துக்குக் கொங்கிறீற் போடாமல் வெறுந் தரையாக விடப்பட்டிருந்தது. "மழை பெய்தால் கூடாரத்துள் வெள்ளம் வரும்" என்று மக்கள் பசிக் கொண்டார்கள். "வைகாசி மாதம் சோழகக் காற்று அடிக்கத் தொடங்கிவிட்டது, அதனால் இப்போதைக்கு மழை பெய்யாது” என்று வேறு சிலர் சமாதானம் சொன்னார்கள். கையிலிருந்த துண்டுகள் துணிகளைப் பாய் போல விரித்துப் போட்டு நித்திரை கொள்ளத் தலைப்பட்டனர் பலர். குண்டுச் சத்தங்களும், ஷெல் சத்தங்களும் இல்லாதபடியால் அவர்கள் நிம்மதியாக நித்திரை செய்தார்கள். மனைவி பிள்ளை கள் உறங்கிவிட்டபோதிலும் இரத்தினசிங்கத்துக்கு நித்திரை வரவில்லை. அவர் மெதுவாகக் கூடாரத்தி லிருந்து வெளியே வந்து தரையில் உட்கார்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அகதிகள் தானே என்று வித்தியாசம் காட்டாமல் வழமை போலவே பிரகாசமாக எறித்துக் கொண்டிருந்தது. ராணுவத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வைத்திருந்த வானொலியில் "நிலவே என்னிடம் நெருங்காதே. நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை" என்ற சினிமாப் பாட்டுப் போய்க் கொண்டிருந்தது. நிலத்தில் துவாயை விரித்து அதில் மெதுவாகச் சரிந்து கொண்டார் இரத்தினசிங்கம். சிறிது நேரத்தில் கண்ணயர்ந்து தூங்கிப் போனார்.
அடுத்த பொழுதும் விடிந்தது. காகங்களின் கா,
கா சத்தமும் குயில்களின் கூ, கூ குரல்களும் எங்கோ தூரத்தில் கேட்டவண்ணம் இருந்தது. "தேநீரும், பணிசும் கொடுக்கப்படும், எல்லோரும் கியூ வரிசையில் நின்று
விடுத்தது. நித்திரை விட்டெழுந்த ராசம்மா "நேற்றிரவு கணவர் எங்கேயென்று பார்க்காமல் நித்திரையாகிப் போனேனே" என்று கவலைப்பட்டப்படி முற்றத்தில் படுத்திருந்த கணவரை "இஞ்சேருங்கோ, இஞ்சே
ருங்கோ” என்று தட்டி எழுப்பினாள். இரத்தினசிங்கம் எழும்பவில்லை. ஏனென்றால் அவர் நிரந்தர நித்திரை யில் ஆழ்ந்து போனார். ஐயோ, எங்களை விட்டிட்டுப் போட்டியளே என்று ராசம்மா நெஞ்சில் அடித்துக் குளறத் தொடங்கினாள்.
 

சிறப்பு எது எனின்
கொடியென்றால் சுற்றி வளைத்துக் கொண்டு பற்றிப் படர கொழு கொம்புகள் தேவை அல்லது மரங்களின் தயவு தாட்சன்யம் தேவை
அதுமட்டுமல்ல சூரிய வெளிச்சத்தை நாட மரங்களுடன் போட்டி போட வேண்டியும் வரும்
&
இடையிலே கொடியாட கொடியிலே கனியாட. என பொய்யுரைக்கும் புலவர்களின் பொல்லாத வர்ணனைகளுக்கும் ஆளாக நேரிடலாம்
கொடிகள் சிறுபான்மைகளென அரசியல்வாதிகள் வாதிடலாம் அவர்கள் பெரும்பான்மை மரங்களை அனுசரித்து வாழும்படி சிறுபான்மைக் கொடிகளுக்கு உபதேசமும் செய்யலாம்
அதனால் கொடிகளாக வாழ்வதை விட மரங்களாக வாழ்வதில் தான் சிறப்புக்கள் அதிகம்.
- உ.நிசார்
क्षै।
- இதழ் 33

Page 30
என் மீது மிகுந்த விசுவாசமுள்ள நண்பர் ஒருவர் இருக்கின்றார். அவர் ஒரு புத்தகப் பிரியர். நிறையப் புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்குவார். காணும்போதெல்லாம் கையில் ஒரு புத்தகமாவது வைத்திருப்பார். ஆனால் அவற்றை அவர் ஒருபோதும் வாசிப்பதில்லை. இதைக் கற்பூரம் கொழுத்திக் கையால் அடித்துச் சொல்லவும் நான் தயார். வாசினையின் வாசனை அவரிடம் வசப்பட்டதே கிடையாது. வீட்டின் வருவிருந்தினர் வரவேற்பறையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அலுமாரிகளில் புத்தகங்களை அழகாக அடுக்கி வைத்திருக்கிறார். ஒருவேளை, ஓய்வுபெற்ற பின்னர் வாசிக்கும் நீண்டகாலத் திட்டம் ஏதேனும் அவர் மனதில் இருக்குமோ என எவரும் எண்ணக்கூடும் இல்லவேயில்லை. எனக்குத் தெரிய, அதற்கான சாத்தியங்கள் எதுவுமேயில்லை. "முயல் பிடிக்கும் நாயை மூஞ்சியில் தெரியாதா”, என்ன?
சமூக அந்தஸ்துடன் கூடிய அடையாளம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கென விரும்பியோ, விரும்பாமலோ மனிதன் தினம் தினம் ஆலாய்ப் பறந்து திரிவதை அண்மைக் காலங்களில் அவதானிக்க முடிகிறது. சமூகத்தின் அங்கமான ஒவ்வொரு மனிதனிட மும் இயற்கையாகவே உள்ள ஓர் இயல்பூக்கம் இது என்பது உளவியல் உண்மை. மிதமான இந்த ஊக்கம் வரவேற்கத்தக்கது என்பதுவும் உண்மையே. ஆனால் மிதமிஞ்சிய இந்த ஊக்கம்தான் முகத்தில் சந்தனம் பூசுவதற்குப் பதிலாகச் சில சமயங்களில் சாணியை அள்ளி வீசிவிடுகின்றது. தன்னை ஒரு புத்தகப் புழுவாக வும், அதன் வழியாக ஓர் அறிவாளியாகவும் சமூகத் திற்குக் "காட்டுவதில்" எனது நண்பருக்கு ஏற்படும் புளுகம், சுயதிருப்தி, போலிக் கெளரவம் என்பன யாவும் இவ்வகைப்பட்டனவே! புகழின் காலடியில் போதை வஸ்துகள் எம்மாத்திரம்? இவ்வாறாகப் பலருக்குப் போதையேறக் காரணமாய் விளங்கும் இந்த "அறிவு” பற்றிய ஒரு சிந்தனைத் தெளிவுக்குக் காள்கோளிடும் முதன் முயற்சியே இச்சிறு கட்டுரையாகும்.
"அறிவு" என்றால் என்ன என்ற வினாவுக்கு ஏற்ற விளக்கத்தை அறிவாளிகள் இன்னமும்தான் துழாவிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறம் நடந்து
ஜீவநதி 28
 

கொண்டிருக்கும் தறுவாயில், இந்த அறிவைப் பட்டறிவு, பகுத்தறிவு, படிப்பறிவு, இயற்கையறிவு, எழுத்தறிவு, கல்வியறிவு, உணர்வறிவு, தொழில்சார் அறிவு, துறைசார் அறிவு, அனுபவ அறிவு, ஆள்மன அறிவு, பொது அறிவு, போலி அறிவு, பேரறிவு, சிற்றறிவு எனப் பல்வேறு வகை களாகத் தொடர்ந்து பகுத்தும் வகுத்தும், ஆனை பார்த்த அந்தகர்களாய்ப் பலரும் ஆராய்ந்து வருகிறார்கள்.
"உணர்வதனால் அல்லது அனுபவத்தினால் அல்லது கல்வியினால் பெறப்படும் வல்லமையும் திறனுமே அறிவு" என்று ஒக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி, அர்த்தம் கூறுகிறது. உணர்தலும், அனுபவம் பெறுதலும், அவற்றின் வழியாகக் கற்பதும், கருவறையிலிருந்து ஆரம்பித்து, கல்லறைவரை தொடரும் காரியங்கள் என்பது நான் கருவுருவிலிருந்த காலத்திலேயே என் காதில் விழுந்த செய்தி. இவ்விதமாக அறிவு என்பது எந்த ஒருவருக்கும், அவரது பிறப்பு முதற்கொண்டு இறப்பு வரை கிடைக்கப்பெறும் ஓர் அரிய செல்வம் என்பது கண்கூடு. அறிவெனப்படுவது "கற்றோர்க்கு மட்டும் கிட்டும் கலைமகள் கடாட்ஷம்" என்பது வெறும் கண் துடைப் பு! அவரவர் துறைகளில் அனைவரும் அறிவாளிகள் என்பதுதான் உண்மை!
அறிவு எமது வாழ்வுக்கு முக்கியம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. ஆனால் அந்த அறிவு ஒரு மட்டுப்படுத்தலுக்கு உட்படக்கூடியது என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. சிந்தனை என்பது அறிவின் வாயிலாகத் தெரிந்துகொண்டவற்றால் ஏற்படும் ஒருவித தாக்கம் (reaction) ஆகும். இந்தச் சிந்தனைதான் மனதை வடிவமைக்கின்றது. ஏற்கனவே தெரிந்த தகவல்களாலும், அனுபவங்களாலும், உணர்வுகளாலும் பெறப்படும் அறிவைக்கொண்டு வடிவமைக்கப்படும் மனமானது, எவ்வாறு சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இயங்க முடியும்? எனவேதான், மனம் முன் நிபந்தனைக்கு உட்பட்டது, ஏற்கனவே இடம் பெற்ற எண்ணற்ற எண்ணங்களால் வடிவமைக்கப்பட்டது; இவ்வாறு சிந்தனையைத் தூண்டும் அறிவு என்பது காலம் கடந்தது, அந்த அறிவிலிருந்து விடுபடாவிடின் உண்மையான மானுட உயர்வு மட்டுப் படுத்தப் பட்டுவிடுகிறது; வெறுமனே அறிவின் சேகரிப்பில் இந்த மானுட உயர்வு
இதழ் 33

Page 31
தங்கி இருப்பதில்லை; இந்த உண்மையை விளங்கிக் கொள்வதுதான் அறிவியக்கத்தின் உள்ளொளியைப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறையாகும் என்று நவீன மெய்யியற் சிந்தனையாளர்கள் கருதுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அறிவு என்ற நிலையத்தில் இருந்து மேற்கிளம்பும் சிந்தனையின் வழியாகத்தான் நாங்கள் எந்த ஒரு செயலையும் மதிப்பிடுகிறோம்ரூ நியாயப்படுத்துகிறோம். அதன் வாயிலாக நாங்கள் அச்செயலை ஒன்றில் ஏற்றுக் கொள்கிறோம் அல்லது குறைகூறி நிராகரிக்கிறோம். ஆனால் இந்த அறிவோ கடந்தகாலத்துக்குரியதே அன்றி, நிகழ்காலத்தையோ அல்லது எதிர்காலத்தையோ அறியாதது; அவற்றை, அனுமானிக்க மட்டுமே தெரிந்தது. ஆகவே, கடந்த காலத்தைக் கரைத்துக் குடித்தவனாகத் தன்னைக் கருதும் பேர் அறிவாளி ஒருவன், நிகழ்காலத்தையும் எதிர்காலத் தையும் தீர்க்கமாக அறியாதவன் என்பதுவே உண்மை. இதனை நிறுவும் வகையிலான நடத்தைகளைக் கொண்ட போலி அறிவாளிகள் பலரை நாம் அன்றாட வாழ்வில் அவ்வப்போது சந்தித்து வருகிறோம். இந்த மெத்தப் படித்தவர்களெனப் பீத்திக் கொள்பவர்களிடமிருந்து, படித்ததை நீக்கிவிட்டால், அவர்கள் வெற்றுக் கலன் களாகிநிற்கும் சோகத்தை இன்றும் காணலாம்!
உணர்வதனால் அல்லது அனுபவத்தினால் அல்லது கல்வியினால் தகவல்களையும் விளக்கங்களை யும் செயற்திறன்களையும் பெற்று, அறிவைச் சேகரித் தல், எமது வாழ்வில் தொடர்ச்சியாக இடம்பெறும் ஒரு செயன்முறையாகும். வெறுமனே அறிவைச் சேகரிக்கும் இந்தச் செயன்முறையினால் மேலும் சில தீங்குகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. அறிவு பணத்தை ஒத்தது என்றும், எவ்வளவு அதிகம் அதனைச் சேகரிக்கிறோமோ அவ்வளவு அதிகம் அதனை மேலும் மேலும் சேகரிக்க ஆவாவுறுவோம் என்றும் கொன்ஃபியூஸியஸ் கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது. அறிவு சமூகத்தில் ஒருவித மதிப்பையும் கெளரவத்தையும் தரும் என்ற எதிர்பார்ப்பினால் மனித மனம் தூண்டுதலுக்கு உள்ளாகிறது. அது ஒருவகைப் போதையாகத் தலைக்கேறிவிடுகிறது. இவ்வாறு ஒருவித வெறியோடு அறிவைச் சேகரித்து, அதனைச் சமய சந்தர்ப்பம் அறிந்து, சாதுரியமாக வெளிப்படுத்தும் ஒருவனைப் பார்த்து, பிறர் வாயடைத்துப் போய் விடுகின்றனர். பயத்துடன் கலந்த மரியாதையை சமூகம் அவன்மீது செலுத்துகிறது. விளைவாக, ஆணவம் அவனை ஆட்கொண்டுவிடுகிறது. உண்மையறிவின் வெளிப்பாடான தன்னடக்கம் இங்கு செத்துவிடுகிறது. தன்னகங்காரம் அவனை உச்சாணிக் கொம்புக்கு இட்டுச் சென்றுவிடுகின்றது.
தகவல்களைச் சேகரிப்பதும், அவற்றைத் தெளிவுறவே வெளிப்படுத்துவதும்தான் அறிவு ஆகிவிட
ஜீவநதி

முடியுமா? இன்றைய நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப யுகத்தில் இவ்விருகாரியங்களையும் செவ்வனே செய்து முடிப்பதில் எவ்வித சிரமமோ சிக்கலோ கிடையாது. குறிப்பாக, கணினியும் இணையத் தளங்களும் பாவனைக்கு வந்த பின்னர், எவரும் எந்த ஒரு விடயம் தொடர்பான தகவல்களையும் நினைத்த மாத்திரத்தே இலகுவாகத் திரட்டிக்கொள்ள முடியும். அபரிமிதமாகத் தேங்கிக் கிடக்கும் தகவல்களையும் செய்திகளையும் ஒவ்வொருவரும் தத்தமது கொள்கலன்களின் கொள்ளளவுக்கு ஏற்ப, அள்ளி எடுத்துக்கொள்ள முடியும். இவ்விதமாகத் தொழில் நுட்ப வசதியைப் பாவித்து, மின்தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்தும், வெட்டியொட்டியும் - செய்திகளையும் தகவல்களையும் திரட்டிக் கட்டுரையாகவோ, கதையாகவோ, கவிதை யாகவோ அல்லது வேறு எந்த விவரணமாகவோ வெளிப்படுத்துபவர்கள் வெறும் தொகுப்பாளிகளே அன்றி படைப்பாளிகளோ, அறிவாளிகள் அல்லர். அவர் களது தலைகளை நிரப்பி இருப்பவை வெறும் தகவல் களும் செய்திகளுமே அன்றி, அது உண்மையறிவு அல்ல. ஆகவே, உண்மையான அறிவு என்பது எது? இந்த அறிவைத் தன்னகத்தே கொண்ட அறிவாளி என்பவன் யார்? "வெறும் தகவல்கள் ஒருபோதும் அறிவாகிவிட முடியாது" என நவீனகால அறிவியல் மேதை அயன்ஸ்ரீன் ஒருமுறை கூறினார். தகவல்களை அடுக்கி அடுக்கிச் சேமித்தல் அறிவு எனப்படுமாயின், அவற்றை இலகுபடுத்திப் பயனுறுவதே மெய்யறிவு என்றும் சிலர் கூறுவர். அறிவை அல்லது அனுபவத்தை முழுமையாக உபயோகித்து, நடைமுறைக்கு ஒத்த முடிவுகளும் மதிப்பீடுகளும் செய்து, மிகக் குறைந்த நேரத்தையும் சக்தியையும் பயன்படுத்தி, மிகக் கூடிய பலாபலனைப் பெறும் ஆற்றல்தான் மெய்யறிவு அல்லது மதிநுட்பம் எனப்படும். திரட்டிச் சேகரிக்கும் அறிவானது, கொள்கலனில் சேமிக்கும் குடிநீர் போல, அள்ள அள்ளக் குறைந்து போகும். சேகரித்த அறிவிலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பெறப்படும் மெய்யறிவோ கிணற்றுநீர் போல, அள்ள அள்ளக் குறையாது ஊற்றெடுத்துப் பெருகிக் கொண்டிருக்கும். இந்த மெய்யறிவுதான் இன்றைய சமூகத்தின் உடனடித் தேவையே அல்லாமல், வெறுமனே நூல்களை வாசிப்பதனாலோ அல்லது இணையத் தளங்களில் தகவல்களைத் திரட்டுவதாலோ மட்டும் கிடைக்கும், மேம்போக்கான அறிவை மெய்யான நுண்ணறிவென நம்புதல், காயைக் கனியென நம்பி ஏமாந்த கதைக்கு ஒப்பாகும்.
இந்த மகத்தான உண்மையை உணர்ந்தவ ராகத்தான், எனது நண்பரும் தாம் விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கும் நூல்களைப் படிப்பதனைக் காலம் தாழ்த்தி வருவதாக, இப்போதைக்கு நாம் "வசதி கருதி நம்பிக் கவலைகளைவோமாக!
இதழ் 33

Page 32
எனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியான அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் 1998ல் மல்லிகைப்
பந்தல் வெளியீடாக வெளிவந்தது என்பதை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இந்த நூலின் வெளியீட்டுவிழா 0908-1998 அன்று கண்டி சிட்டிமிஷன் மண்டபத்தில் வெகு கோலாகலமாக இடம்பெற்றது. 3 வெகு கோலாகலமாக என்று நான் குறிப்பிடு வதற்கு ஒரு காரணமுண்டு. இந்தநூல் வெளியீட்டு விழா விற்கு அப்போதைய கலாசார சமய விவகார அமைச்சர் திரு.லக்ஷ்மன் ஜயக்கொடி பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
அக் காலகட்டத்தில் உள்நாட்டுப்போர் உக்கிர மடைந்திருந்தது. ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு அரசாங்க அமைச்சர் வருகை தருவதானால் பெரும் பாதுகாப்பு முன் னேற்பாடுகள் இடம்பெறும். முப்படைகளைச் சேர்ந்தவர்கள் விழாமண்டபத்தைச் சூழ்ந்து பாதுகாப்பில் ஈடுபடுவர். இரகசியப் பொலிசார் கண்காணிப்பில் ரோந்து நடத்துவர். அமைச்சருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சூழ வருவர்.
பொதுவாக நான் அரசியல்வாதிகளுடன் அதிக தொடர்புகள் உடையவனல்லன். எனினும் கண்டி மாவட்டப் ாராளுமன்ற உறுப்பினர் திரு.இராஜரட்னம் என்னுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். நான் தொழில் புரிந்து கொண்டிருந்த பெருந்தோட்டத்தின் எல்லைக்கு அண்மித்தாக அவரது இல்லம் அமைந்தி ருந்தது. அவர் ஒரு தொழிற்சங்கவாதியாகவும் இருந்தார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர்களில் ஒருவரான அவரிடம் தோட்டத் தொழிலாளர்கள் பலரும் அடிக்கடி சென்று அவரைச் சந்தித்து தமது தேவைகளை நிறைவு செய்வர்.
அவர் எனது இலக்கியச் செயற்பாடுகள் பற்றியும் தொழிலாளர்களின் சமூக மேம்பாட்டுக்காக நான் ஆற்றி வரும் பணிகள் பற்றியும் தொழிலாளர்கள் கூறக் கேட்டு அறிந்திருந்தார். எனது மலையக நாவல்களான 'குருதி மலை, "லயத்துச் சிறைகள், கவ்வாத்து ஆகியவற்றை வாசித்தும் இருந்தார். இந்நிலையில் ஒருநாள் அவர் தன்னை வந்து சந்திக்கும் படி எனக் குச் செய்தி அனுப்பியிருந்தார். நான் அவரிடம் சென்றபொழுது எனது இலக்கிய פי முயற்சிகளைப் பாராட்டியதோடு லயத்துச் சிறைகள் நாவலின் இரண்டாம் பதிப்பை வெளிக்கொணர வேண்டும்
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எனவும் அதற்கான செலவைத் தனது நிதியிலிருந்து ஒதுக் கித்தரமுடியும் எனவும் கூறினார். அத்தோடு எதிர்காலத் தில் எனது நூல் வெளியீடுகளுக்கு தன்னையும் அழைத் தால் தான் மகிழ்வுடன் கலந்து கொள்ளமுடியும் எனவும் கூறினார்.
இத்தகைய பின்னணியிலேதான் நான் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் சிறுகதைத் தொகுதி யின் வெளியீட்டுவிழாவிற்கு அவரை அழைத்தேன்.
அப்போது அவர், அந்த வெளியீட்டுவிழாவுக்கு கலாசார அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடியையும் அழைத்தால் நல்லது. அவரைத் தன்னால் அழைத்துவர முடியும் என்றார். நான் தயங்கினேன். எனது தயக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. வெளியிடவிருக்கும் சிறுகதைத் தொகுதியில் மூன்று போர்க்காலக் கதைகள் இருக்கின்றன. நான் ஒரு யாழ்ப்பாணத்தான். நான் எழுதிய அந்தக் கதைகளில் இராணுவத்தினராலும் சிங்கள இனவாதிகளாலும் தமிழ்மக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் விவரணமாகியிருந்தன. சோதனை என்னும் கதை கொழும்பில் ஓர் இயக்கப்போராளி எவ்வாறு கரந் துறைகிறான் என்பதை விளக்கும் கதை. இக்கதைகள்பற்றி விழாவில் விமர்சகர்கள் பிரஸ்தாபிக்கத்தான் செய்வார் கள். அதனைச் செவிமடுக்கும் கலாசார அமைச்சர் தவறாக எடுத்துவிடவும் கூடும். என்னையும் ஒரு கொட்டியா வாக கருதவும் கூடும் என்பதே எனது கலக்கம்.
இந்த விபரத்தை நான் மந்திரியிடம்கூறி, அமைச்சரை அழைப்பதைத் தவிர்ப்போம் என்றேன்.
ஆனால் அவரோ எனது நியாயப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. பயப்படாதீர்கள் நீங்கள் நினைப்பது போல எதுவும் நடந்துவிடாது. எதுவந்தாலும் நான் சமாளித்துக் கொள்வேன். எனது பிரதேசத்தில் நிகழவிருக்கும் இலக்கிய நிகழ்வில் அமைச்சர் கலந்து கொள்வது எனக்கும் பெருமை உங்களுக்கும் பெருமை
என்றார். என்னால் மறுத்துப் பேசமுடியவில்லை. கிணறுவெட்டப் பூதம் புறப்பட்ட கதையாக ஆகி விடக் கூடாதே என்று எனது மனம் அடித்துக்கொண்டே இருந்தது.
மேலும் அமைச்சர் ஒருவர் விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வரும்போது தகுதிவாய்ந்த ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கவேண்டியிருந்தது. தலைவர் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி வேண்டிய இடங்களில் அமைச்சருக்கு விளக்கமளித்து விழாவில் கலந்து
65p 33

Page 33
கொள்வோரையும் அறிமுகம் செய்து விழாவின் நிகழ்வு களையும் அமைச்சருக்கு ஆங்கிலத்தில் எடுத்துக் கூறக் கூடியவராக இருக்கவேண்டும். பேச்சாளர்களின் உரை களின் சாராம்சங்களை அமைச்சருக்கு விளங்கப்படுத்தக் கூடியவராக இருத்தல் வேண்டும். இவற்றிற்குப் பொருத்த மானவராகப் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் விளங்கி னார். அவரையே விழாவின் தலைவராகத் தேர்ந்தெடுத் தேன்.
பேராசிரியருக்கும் எனக்கும் இடையில் நெருக்க மான உறவு இருந்தது. எனது இலக்கியத் தடத்தில் எனக்குக் கிடைத்த உறவுகளில் பேராசிரியருக்கு முக்கிய இட முண்டு. எனது ‘குருதிமலை’ நாவல் தமிழகத்தில் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.க்குப் பாடநூலாகியபோது அங்கு தேவையான பிரதிகளைக் கொண்டு சென்று சேர்த்தவர் பேராசிரியர். அப்போதிருந்து இன்றுவரை அவருடன் நெருக்கமான உறவினைப் பேணிவருகிறேன். கோகாலையில் எனது லயத்துச் சிறைகள் நாவல் அறிமுக விழாவின் போதும் அவர் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டார். அதன் பின்னர் நான் எந்த இலக்கிய விழா வினை ஏற்பாடு செய்தாலும் அதிலே பேராசிரியருக்கு முக்கிய இடமளித்துவந்திருக்கிறேன்.
'அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் சிறுகதைத் தொகுதி மல்லிகைப் பந்தல் வெளியீடாகையால் வெளியீட்டுரையை ஆற்றுவதற்கு டொமினிக் ஜீவாவை வேண்டினேன்.
வெளியிடவிருக்கும் சிறுகதைத் தொகுதியில் சீட்டரிசி, திருப்புமுனைத் தரிப்புகள் ஆகிய இரண்டு மலையகச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இச்சிறுகதை கள் மலையகக் கல்வியோடு சம்பந்தப்பட்டவை. சீட்டரிசி துரைவி வெளியீட்டகத்தின் மலையகச் சிறுகதைத் தொகுதியான உழைக்கப் பிறந்தவர்கள் தொகுதிக்காக 1997ல் எழுதப்பட்டது. துரைவி அவர்களையும் இந்த வெளியீட்டு விழாவுக்கு அழைப்பதென முடிவுசெய்தேன். துரைவியின்மேல் எனக்குப் பெரும் அபிமானம் இருந்தது. அவரை நான் கொழும்பில் நடைபெற்ற எனது லயத்துச் சிறைகள் நாவல் வெளியீட்டிலேதான் முதன் முதலில் சந்தித்தேன். அப்போது அவர் எனது கைகளை அன்புடன் பற்றி, "உங்களது லயத்துச் சிறைகள் நாவலை நான் வாசித்து விட்டேன். ஆனாலும் எனக்கு உங்களது 'குருதிமலை நாவல்தான் அதிகம் பிடித்திருக்கிறது. அதில் இருக்கும் விறுவிறுப்பும் ஆழமான சமூகப்பார்வையும் லயத்துச் சிறைகளில் அமையவில்லை" என்றார்.
ஓர் எழுத்தாளனை முதன் முதலில் சந்திக்கும் போதே அவனது படைப்புகள் பற்றி விமர்சிக்கும் அளவுக்கு அவருக்கு இருந்த இலக்கியப் பரிச்சயம் அவர்மேல் எனக்குப் பெருமதிப்பு ஏற்படவைத்தது. பரந்துபட்ட வாசிப்புப் பழக்கம் கொண்ட துரைவி, 1996ல் மலையகச் சிறுகதைகள் என்ற நூலை வெளிக்கொணர்ந்ததன் மூலம் தனது துரைவி வெளியீட்டகத்தை ஆரம்பித்தார். வெகு வேகமாக ஒன்பது நூல்களை வெளிக் கொணர்ந்து சாதனை படைத்தார். அவரை இந்த வெளியீட்டுவிழாவுக்கு
ஜீவநதி -3

விசேட அதிதியாக அழைப்பதென முடிவுசெய்தேன்.
கொழும்பிலிருந்து துரைவியுடன் டொமினிக் ஜீவா, மேமன்கவி, ரத்தினசபாபதி ஐயர் ஆகியோர் துரைவியின் வாகனத்தில் வந்திருந்தனர். பண்டாரவளை யிலிருந்து நண்பர் புலோலியூர் சதாசிவம் அவர்களும் வந்திருந்தார். அன்று மாலை நடைபெறவிருந்த விழாவுக்கு பகலே இவர்கள் யாவரும் வந்து சேர்ந்து விட்டனர். அன்று பகல் எனது இல்லத்தில் இவர்கள் யாபேருக்கும் விருந்தளித்து மகிழ்ந்தோம். அன்றைய விருந்து ஓர் இலக்கிய விருந்தாகவும் அமைந்தது. பகல் போசனத்தின் பின் நீண்டநேரம் வரவேற்பறையில் இருந்து இலக்கிய விடயங்கள் பற்றிப் பலதும் பத்தும் பேசி மகிழ்ந்தோம்.
டொமினிக் ஜீவாவுக்கு பயணக் களைப்பு. சிறிதுநேரம் ஒய்வெடுக்கப்போவதாகக் கூறினார். அவர் 1994ல் எனது கண்டி வீட்டுக்கு வந்தவர். டாக்டர் எஸ். முருகானந்தன் எழுதிய மல்லிகைப்பந்தல் வெளியீடான 'மீன்குஞ்சுகள் வெளியீடு கண்டியில் இடம்பெற்ற போது அவர்களுக்கு இராப்போசன விருந்தளித்தேன். அன்று டொமினிக்ஸீவா எனது இல்லத்திலேதான் தங்கினார். அதனால் எனது வீட்டின் மேல்மாடியிலுள்ள விருந்தினர் தங்கும் அறை அவருக்கு அத்துப்படி நேராகச் சென்று அங்கிருந்த கட்டிலில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டார். இந்த விருந்தினர் அறைக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், சமயப்பிரமுகர்கள் கண்டிக்கு வரும்போது எனது இல்லத்தில் அவர்களை உபசரித்து விருந்தளிக்கும் வழக்கத்தை நானும் மனைவி யும் கொண்டிருந்தோம். பேராசிரியர் சண்முகதாஸ், செங்கை ஆழியான் குடும்பத்தினர், செம்பியன் செல்வன், புத்தொளி சிவபாதம், பேராசிரியர் நா.சுப்பிரமணியன் ஆகியோர் உட்பட பல யாழ்ப்பாணத்து எழுத்தாளர்களும் எனது இல்லத்தில் இந்த அறையில் தங்கியிருக்கிறார்கள். திரு.வன்னியகுலம் தனது மகனுடன் வந்து தங்கிச் சென்றிருக்கிறார். பிரேம்ஜி ஞானசுந்தரம், சோமகாந்தன், பத்மாசோமகாந்தன், ருரீதரசிங், கம்பவாரிதி ஆகியோரை யும் எங்களது இல்லத்தில் உபசரித்து மகிழ்ந்திருக் கிறோம். கண்டிக்கு வரும் எழுத்தாளர்கள் எவரும் எவ்வித தயக்கமுமின்றித் தங்கக் கூடிய இடமாக எனது இல்லம் விளங்கிவந்திருக்கிறது என்பது எனது இலக்கியத் தடத்தில் இடம்பெற வேண்டிய செய்தி என்பதால் இதனை இங்கு பதிவுசெய்துள்ளேன்.
அன்றைய வெளியீட்டு விழாவினை ஏற்பாடு செய்யும் பொறுப்பினை கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவர் இரா. அ. இராமன் அவர்களிடம் ஒப்படைத்திருந்தேன். இலக்கிய விழாக்களை நடத்து வதில் தனக்கென ஒரு தனித்துவத்தைக் கொண்டவர் இராமன். எதையும் திட்டமிட்டு ஒழுங்காகச் செய்து முடிப்பதில் தனித்திறமை வாய்ந்தவர். இலங்கையில் இலக்கியத்தின் மீதும் எழுத்தின் மீதும் புத்தகத்தின் மீதும் ஆர்வமும் அக்கறையும் இருப்பவர்களுக்கு இராமனைத் தெரியாமல் இருப்பதற்கு நியாயமில்லை. மக்கள் கலை
இதழ் 33

Page 34
இலக்கிய ஒன்றியத்தின்மூலம் எழுத்தாளர்களை ஊக்கு விக்கும் முகமாக பல நூல்களைப் பிரசுரித்து வெளியீட்டு விழாக் களையும் நடத்திக் கொடுத்து எழுத்தாளர்களைப் பல வழிகளிலும் கெளரவிக்கும் பணிகளை மேற்கொள் ளும் இலக்கியச் செயற்பாட்டாளர். எனது இலக்கிய வாழ்விலும் அவருடனான உறவு மறக்க முடியாததொன்று.
நான் மேலே குறிப்பிட்டது போன்று பெரும் பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியிலேதான் அன்றைய வெளியீட்டுவிழா இடம்பெற்றது. கண்டிநகரிலும் இராணுவ வாகனங்களின் முஸ்தீப்பு ஒரு அரசியல் பிரமுகரின் வருகையைக் கட்டியங்கூறிக் கொண்டிருந்தது. ஆனாலும் விழா எவ்வித அசம்பாவிதங்களுமின்றி மிகச்சிறப்பாக நடைபெற்றது.
விழாவுக்கு வந்த பிரமுகர்கள் ஒவ்வொருவரை யும் தனித்தனியாக அமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்தார் பேராசிரியர் சோ.சந்திரசேகரன். வேளி யீட்டுரை செய்த டொமினிக் ஜீவா, பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட துரைவி ஆகியோர் அமைச்சரால் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டனர். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.இராஜரத்தினம், மத்தியமாகாண இந்துமாமன்றத் துணைத்தலைவர் நாகலிங்கம் இரத்தின சபாபதி, சேவா ஜோதி எஸ். முத்தையா ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பிரம்மருநீ பிரேமானந்தக் குருக்கள் ஆசி வழங்கினார் அசோகா வித்தியாலய அதிபர் செ. நடராஜா, எழுத்தாளர் சாரல் நாடன், கலாநிதி துரை மனோகரன் ஆகியோர் விமர்சனஉரைநிகழ்த்தினர்.
இந்தச் சிறுகதைத் தொகுதிக்கு மிகப் பொருத்த மான ஒரு முன்னுரையை எழுதியவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக விளங்கும் க.அருணாசலம் அவர்கள். நான் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக கலை மாணி பட்டப்படிப்புக்கு தமிழையும் ஒரு பாடமாகக் கற்ற போது எனக்கு ஆசானாக விளங்கியவர் பேராசிரியர் அருணாசலம் அவர்கள். எனது படைப்புகளை அவ்வப் போது வாசித்து ஊக்கம் தரும் அவர் எனது இலக்கிய வாழ்க்கையின் ஏற்றத்திலும் பெரும்பங்குகொள்பவர்.
பேராசிரியர் இந்தச்சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை பற்றி பிரபல விமர்சகரான கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் பின்வருமாறு விதந்து பேசுகிறார். "இத்தொகுப்பில் விசேடமாகக் குறிப்பிடப்பட வேண்டிய வற்றுள் ஒன்று இதில் இடம் பெற்றுள்ள அணிந்துரை யாகும். அணிந்துரை மாத்திரமல்ல அருமையானதிறனாய் வாகவும் பேராசிரியர் க.அருணாசலம் தந்துள்ளார்.” (48)
பேராசிரியர் எழுதிய முன்னுரையின் இறுதிப் பகுதி பின்வருமாறு அமைந்துள்ளது:-
இலக்கியத்தின் உருவமும் உள்ளடக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவையாகும். ஓர் இலக்கியத்தின் கருத்துக்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அந்தளவுக்குக் கலைத்துவமும் முக்கியத்துவம் பெற வேண்டும். திருஞானசேகரன் அவர் கள் கதைகளின் உள்ளடக்கத்தில் மட்டுமன்றி உருவ
ஜீவநதி

அமைதியிலும் தீவிர கவனம் செலுத்தியுள்ளமையை அனேமாக எல்லாக்கதைகளிலும் காண முடிகிறது. உள்ள டக்கங்களுக்கேற்ற மிகப் பொருத்தமான தலைப்புகள், உயிர்த்துடிப்பு மிக்க நடை, மிகப் பொருத்தமான கதைத் திருப்பங்கள், சிந்தனையைத் தூண்டும் முடிவுகள், பண்பு நலனை வெளிப்படுத்தும் பாத்திர வார்ப்புகள், உவமைப் பிரயோகங்கள், கச்சிதமான வருணனைகள் முதலியன அவரது கதைகளுக்குத்தனிச்சுவையை அளிக்கின்றன.
ஆசிரியரது பார்வையும் சிந்தனைகளும் 1950 முதல் இற்றை வரை இலங்கையின் இனப்பிரச்சினை முதல் இன்று அசுர வேகத்தில் பரவிவரும் "ராக்கிங் கொடுமைகள் வரை 1960 களில் கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய சாதிப் போராட்டம் முதல் இன்றைய யுத்தக் கெடுபிடிகள் வரை, மலையகத் தொழிலாளரின் அவலம் மிக்க வாழ்க்கை முதல் இந்நாட்டினதும் இனங்களினதும் நலன் வரை ஊடுருவி நிற்பதை அவதானிக்கலாம். இத்தொகுதியில் அமைந்துள்ள கதைகள் பல ஈழத்துத் தமிழ்ச்சிறுகதை வளர்ச்சிக்கு வளம் சேர்ப்பனவாக அமைந்துள்ளன என்பதில் ஐயமில்லை."
ராக்கிங் என்ற தலைப்பில் அமைந்த சிறுகதை யொன்று இத்தொகுப்பில் அடங்கியுள்ளது. இந்தக் கதை என்னுள் தோன்றிய முறைபற்றி இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானது. வரப்பிரகாஷ் என்ற மாணவன் பேராத னைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் பாடக் கற்கை நெறிக்கு தெரிவானபோது சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கிறான். குடுமையான பகிடிவதை காரணமாக அவனது உயிர் பிரிந்து விட்டது. இந்த மாணவனின் தந்தை செல்வப்பிரகாஷ் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் ஒரு சாலை மாணவராக என்னோடு கல்வி கற்றவர். ஊரெழு என்னும் கிராமத்தைச் சேர்ந்த இவர் எனது நெருங்கிய நண்பராகவும் இருந்தார். நண்பனின் மகன் பகிடிவதைக்குள்ளாக்கப்பட்டு இறந்த செய்தியைப் பத்திரிகையில் பார்த்த போது நான் அதிர்ச்சி யடைந்தேன். அந்தச்சம்பவம் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாங்கவொனா வேதனையை ஏற்படுத்தி யது. "இது பல்கலைக்கழக மரபாம்” மாணவர்கள் சொல் கிறார்கள். சிந்தித்துப் பார்த்ததில் வரப்பிரகாஷைக் கொலைசெய்யும் நோக்கம் அந்த மாணவர்களுக்கு இருந்திருக்க முடியாது. விளையாட்டு வினையாகிவிட்டது. விதியும் விளையாடிவிட்டது.
பெற்றுவரும் ராக்கிங் பின்னர் கொடூர வதைகளாக மாறியதும், பல்கலைக்கழகங்களோடு அமையாது ஏனைய உயர் கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பாடசாலைகள், முதலியவற்றிலும் கொடூர வதையாக பயங்கரம் மிக்க குரூர நோயாக மிக வேகமாகத் தொற்றிப்பரவி வருவதும் இக் கொடூர வதையை நிறுத்தப் பல்கலைக்கழக அதிகாரி களும் ஆட்சியாளர்களும் மேற்கொள்ளும் பகீரதப்பிரயத் தனம் பயனளிக்காது போவதையும் வெளிக் கொணரும் நோக்கத்துடன் இந்தக்கதையை எழுதினேன்.
மேற்குறிப்பிட்ட இக்கதை எனது மகன் பாலச்
இதழ் 33

Page 35
சந்திரனின் வேண்டுகோளுக்கு அமைய எழுதப்பெற்றது. அவர் அப்போது கண்டியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் வகுப்பு மாணவராக இருந்தார். அதே நேரத்தில் ஈ.பி.ஐ. என்ற தனியார் கல்வி நிறுவனத்திலும் மேலதிகக் கல்வி பெற்று வந்தார். அந்தத் தனியார் நிறுவனத்தில் தார்மீகக் கலைமன்றம் என்ற அமைப்புக்கு அக்காலப்பகுதியில் அவர் தலைவராக இருந்தார். அந்த மன்றத்தின் ஆண்டு விழாவில் சுவடுகள் என்ற சஞ்சிகை யும் வெளியிடப்பட்டது. அந்தச் சஞ்சிகைக்கு கதையொன்று எழுதித்தரும்படி மகன் என்னைக் கேட்டபோது, மனக்கிடங் கில் கிடந்த மேற்படி சம்பவம் விழித்துக் கொண்டது. அதனையே நான் கதையாக வடித்திருந்தேன். அந்தக் கதையை வாசித்த கலாநிதி துரைமனோகரன் அவர்கள் என்னைச் சந்தித்தபோது அக்கதைபற்றிச் சிலாகித்துக் கூறியதோடு அடுத்து வெளிவரவிருக்கும் எனது சிறுகதைத் தொகுதியில் அச்சிறுகதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார். அதற்கமையவே ராக்கிங் என்ற சிறுகதை இச்சிறுகதைத் தொகுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
இந்தத் தொகுப் பரிலுள்ள இன்னுமொரு கதையான கடமை 1965 இல் கலைச்செல்வியில் எழுதப் பட்டது. அந்தக் கதை எனது தொழில் அனுபவத்தோடு சம்பந்தப்பட்டது.
கொழும் பில் தனியார் மருத்துவமனை ஒன்றினை நடத்தும் ஒரு பிரபல டாக்டரிடம் ஒரு நாள் ஒர் இளம் யுவதி வைத்தியத்திற்காக வருகிறாள். பதினைந்தே வயதான மீனா என்ற பெயருடைய அந்த யுவதி ஒருவனால் ஏமாற்றப்பட்டு கருவுற்றிருக்கிறாள். அந்தக்கருவைக் கலைத்து விடும்படி டாக்டரிடம் வேண்டுகிறாள்.
டாக்டர் வைத்தியத்துறையில் பிரபல்யம் மிக்க வராக இருந்த போதிலும் குடும்ப வாழ்வில் அவருக்குக் குழந்தைகள் ஏதும் இல்லை. அவரது வைத்தியத்தில் நம்பிக்கை வைக்காத அவரது மனைவி மகப்பேற்று வைத்தியத்துறையில் புகழ் பெற்ற ஏனைய வைத்தியர்கள் பலரிடமும் வைத்தியம் செய்து வருகிறாள். ஆனால் எவ்வித பலனும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது வயிற்றில் வளரும் கருவைக்கலைத்துவிடும் படி கேட்கும் அந்த யுவதிக்கு அவர் வைத்தியம் செய்யாது கருவில் இருக்கும் குழந்தை நன்றாக வளரக்கூடிய மருந்துகளை கொடுத்து விடுகிறார். கதையின் பிற்பகுதி பின்வருமாறு அமைகிறது:
"இன்னும் சிறிது காலத்தில் மீனாவின் அடிவயிற்றில் இருக்கும் கரு நெளிந்து கொடுக்கும். நல்ல தொரு போஷாக்கைப் பெற்ற மகிழ்ச்சியில் பூரிப்படையும். தான் உயிருடன் நல்ல முறையில் வளர்ந்து வருவதையும் அவளுக்குத்தன் அசைவுகளால் உணர்த்தும்.
மீனா..? என் மேல் ஆத்திரம் அடைவாள். தன்னை ஏமாற்றிவிட்டதாகச் சபிப்பாள். ஆனாலும் அவளுக்குள் உருவாகி வரும் கரு எனக்கு நன்றி சொல்லும், மனதாரப் போற்றும். என்றும் என்னை வாழ்த்திக்கொண்டே இருக்கும். வைத்தியனுடைய கடமையைச் சரிவரச் செய்த
ഖ്യ്രി

உணர்வில் எனது மனம் மகிழ்கிறது.
ஐந்தாறு மாதங்கள் கழிந்தன. எனது மனைவி தினசரியை வாசிக்க நான் சாய்வு நாற்காலியில் இருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தேன். வெகுகாலத்திற்குப் பின் இப்போது தான் என் மனைவி சந்தோஷமாக இருக்கிறாள். என்றுமே இல்லாத புது அழகு அவளிடத்தில் மின்னியது. எனது மனம் சந்தோஷத்தில் நிரவி வழிந்தது.
"கடமையைச் செய் கருணை பெறுவாய்” என்று பத்திரிகையின் பின்பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் போடப்பட்டிருந்த வாசகம் என் கண்களைக் கவர்ந்தது. அந்த வாசகத்தில் லயித்துப் போய் மனம் அதனைச் சுற்றி வளைய காலத்தின் சுழற்சியில் மலர்ந்து கொண்டிருந்த எனது வாழ்க்கையை மெஞ்ஞானக் கண்களால் அழகு பார்த்து மகிழ்தேன்.
ஏதேதோ புதினங்களை வாசிக்கும் பொழுது கவரப்படாத என் கவனம் திடீரென்று திரும்புகிறது.
இளம்பெண் தற்கொலை பதினைந்தே வயது நிரம்பிய மீனா என்ற பெண் தற்கொலை புரிந்து கொண்டாள். இப்பெண் இறக்கும்போது கருவுற்றிருந்தாள். மனைவி தொடர்ந்து வாசித்தாள். என்னால் தொடர்ந்து கேட்க முடியவில்லை. அன்று ஒரு உயிரைக் காப்பாற்ற முனைந்தேன். கடமையைச் சரிவரச் செய்த நினைவில் மகிழ்ந்தேன். ஆனால் இன்று
இரு உயிர்கள் சிதைந்துவிட்டனவே. மீனாவின் கோரிக்கையை நிறைவேற்றியிருந்தால்?
மனச்சுவர்கள் பொருக்குடைந்து சரிவதைப் போன்ற ஒரு பிரமை, மன உழைச்சலைத்தாங்க முடியாது கண்களை மூடிக்கொண்டு புரண்டேன். என் கடமையைத் தான் செய்தேன் என்ற நினைவு எனது வேதனையைக் கரைக்க முயன்றுகொண்டிருந்தது." என அக்கதை முடி வடைகிறது.
அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் சிறுகதைத் தொகுதி வெளிவந்த இரண்டு கிழமைகளுக்குள் களுத்துறை பெரியாஸ்பத்திரியில் மகப்பேற்று நிபுணராகக் கடமை ஆற்றிக்கொண்டிருந்த டாக்டர் எம்.எல்.நஜிமுதீன் என்பவரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.
நான் மேலே விபரித்த கடமை என்ற கதை அவரது உள்ளத்தில் ஏற்படுத்திய தாக்கம் அவரை அந்தக் கடிதத்தை எழுத வைத்துவிட்டது. ஆங்கிலத்தில் அமைந்த அந்தக்கடிதத்தின் தமிழாக்கத்தைக் கீழேதருகிறேன்:
"உங்களது 'அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதியை வாசிக்கும் பேறு கிடைத்தது.
அதில் உள்ள பதினொரு சிறுகதைகளையும் வாசித்தபோது அவற்றால் நான் பெரிதும் கவரப்பட்டேன். பெரு மகிழ்ச்சியடைந்தேன். இனப்பிரச்சினை தொடர்பான உங்களது முதலாவது கதை விமர்சனத்துக்கு அப்பாற் பட்டது. இனப்பிரச்சினைக்கான காரணத்தை விவாதத்துக்கு அப்பாற்பட்ட முறையில் விளக்கியிருக்கிறீர்கள். கடைசிக் கதையான கடமை எனது மனதை மிக ஆழமாகத் தொட்டு விட்டது. நான்கூட கருச்சிதைவு செய்வதில்லை. நீங்கள் சரியான முறையில் மீனா என்ற பாத்திரத்தை அணுகி யுள்ளீர்கள் என்பதனை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
இதழ் 33

Page 36
உங்களது அச்சொட்டான சொற்பிரயோகமும் நடைச் சிறப்பும் வாசிப்பை வளமாக்குகின்றன. அணுகுவதற்கு கடினமான சமகாலப்பிரச்சனைகளை மிக லாவகமாக இலகுவான முறையில் அணுகியுள்ளீர்கள்.
நீங்கள் தொடர்ந்தும் இத்தகைய படைப்புகளை வெளிக்கொணரவேண்டுமென விரும்பிப் பிரார்த்திக் கிறேன். தமிழ் உலகு என்றும் உங்களது படைப்புகளுக்காக உங்களை நினைவுகூரும்."
வாசகர்களுடமிருந்து கடிதங்கள் வரும்போது என்றைக்குமே நான் அவற்றிற்குப் பதில் எழுதுவதில்லை. பத்தோடு பதினொன்றாக இக்கடிதத்தையும் கோவையில் போட்டுவைத்தேன். அப்படி எழுதாமல்விட்டது தவறு என்பதை உணரும் சந்தர்ப்பம் ஒன்று எனக்குப் பின்னர் ஏற்பட்டது.
சரியாக மூன்று வருடங்கள் கழித்து அவரிட மிருந்து ஒரு தொலைபேசிச் செய்திவந்தது.தான் 'இஸ்லா மும் குடும்பத்திட்டமும் என்று ஒரு நூல் எழுதியிருப்பதாக வும் கண்டியில் நடைபெறவிருக்கும் அந்த நூலின் அறிமுக விழாவில் என்னை விமர்சன உரை ஆற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அப்போது தான் அவரும் ஓர் எழுத்தாளர், சமூக மருத்துவ அறிவியல் நூல்களை எழுதுபவர் என்பது எனக்குத் தெரியவந்தது. அதற்கும் மேலாக அவர் எனது எழுத்தின் காரணமாக என்மேல் வைத்திருக்கும் அபிமானமும் என்னைச் சிலிர்க்கவைத்தது.
அவருடைய நூல் அறிமுகவிழாவில் நான் கலந்து கொண்டேன். அந்தவிழாவில் இன்னுமொரு பேச்சாளராக கலாநிதி எம்.ஏ.நுஃமான் அவர்களும் கலந்து கொண்டார். நான் பேசும்போது, எனது சிறுகதைத் தொகுதிக்கு அவர் எழுதிய விமர்சனக்கடிதத்தை பற்றிப் பிரஸ்தாபித்து, கடமை' என்னும் கதையில் எனது முடிவினை அவர் ஆமோதித்ததையும் குறிப்பிட்டதோடு அவரது கடிதத்திற்கு நான் பதில் எழுதாமல்விட்ட தவறினையும் குறிப்பிட்டுவிட்டே எனது பேச்சைத் தொடங்கினேன். எனக்குப் பின்னர் பேசிய கலாநிதி நுஃமான், எனது பேச்சைக் கேட்டுவிட்டு, அந்த மீனா என்ற பாத்திரத்தின் கருவைக் கலைக்காமல் விட்டது வைத்தியர் செய்த தவறு. இன்று போர்க்காலச் சூழலில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி கர்ப்பம் தரிக்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எனவே இப்படியான கழல் நிலவும் இக்கால கட்டத்தில் வைத்தியர்கள் நிதானமாகச் சிந்தித்து செயற்படவேண்டும் என்றார்.
மகப்பேற்று நிபுணரான டாக்டர் எம்.எல். நஜிமுதீன் அவர்களுடன் எனக்கு நட்பை ஏற்படுத்தியது எனது கடமை என்ற சிறுகதை. இன்று அவர் எங்கள் குடும்பத்தின் நெருங்கிய நண்பராக இருக்கிறார். எனது மகன் பாலச்சந்திரனின் மனைவி மதுராவுக்கு 2010ல் மகப்பேற்றுச் சத்திரசிகிச்சை செய்தவரும் அவரேதான். அந்தக் குழந்தையின் நாமகரணச் சடங்கின்போது எங்கள் இல்லத்திற்கு நேரில் வந்து குழந்தையை ஆசீர்வதித்துப் பரிசளித்தார் டாக்டர் நஜிமுதீன். இப்படியாக பெரிய மனிதர்களின் உறவினையும் தரவல்லது இலக்கியம்.
ஜீவநதி

4.
எனது இலக்கியத்தடத்தில் எனது எழுத்தின் மூலம் எனக்கு நண்பர்களானவர்கள் பலர். இந்த அத்தியாயத்தில் அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் குறிப்பிட்டுள்ளேன்.
அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற எனது சிறுகதைத் தொகுதி சப்பிரகமுவ பல்கலைக் கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டுள்ளது என்பதை முன்னர் ஓர் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். அது தொடர்பாக சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் வெளியிட்ட(2011) கட்டுரைக் கோவையில் சப்பிரகமுவ பல்கலைக்கழக மொழித்துறை முதுநிலை விரிவுரை யாளர் கலாநிதி கனக சபாபதி நாகேஸ்வரன் அவர்கள் எழுதிய, "ஈழத்து இலக்கிய வளர்ச்சி வரலாற்றில் சப்பிரகமுவ பல்கலைக்கழக மொழித்துறையில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சிகள்” என்ற கட்டுரையில் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்:
"அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்னும் சிறுகதைத் தொகுப்பு சிறப்பானது. அல்சேஷன் பேரின வாதிகளின் குறியீடு?. பூனைக்குட்டி பேரினவாதிகளின் கொடுமைகளை எதிர்க்கத் துணிந்துவிட்ட சிறுபான்மை மக்களின் குறீயீடு. இச்சிறுகதைத் தொகுதி இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் பி.ஏ தமிழ் சிறப்ப்ப் பயிலும் பல்கலைக்கழக மாணாக்கருக்குப் பாட நூலா கவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது(49)"
அரசாங்கத்தின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகம் ஒன்றில் இனப்பிரச்சனை தொடர்பான மூன்று கதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதி - அதுவும் இராணுவத்தினர் போராளிகள் ஆகியோரின் செயற் பாடுகள் பற்றி - போராட்டம் பற்றி விபரிக்கும் கதைகள் அடங்கிய தொகுதி பாடநூலாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருப்பது எனது எழுத்து வன்மைக்குக் கிடைத்த வெற்றி என நான்கருதுகிறேன்.
ஈழத்தில் இதுவரை அண்ணளவாக 750 சிறுகதைத் தொகுதிகள் வரை வெளிவந்துள்ளன என அறிய முடிகிறது. அவற்றுள் இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்துறை வரலாற்றில் இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுதிகளே பாடநூலாகும் தகுதி பெற்றுள்ளன. யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம்', அ.செ.முருகானந்தனின் மனித மாடு, ரஞ்சகுமாரின் 'கோசலை ஆகியனவும் தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சி.வைத்திலிங்கத்தின் கங்கா கீதமும் சப்ரகமுவப் பல்கலைக்கழகத்தில் தி. ஞானசேகரனின் "அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் ஆகிய தொகுதிகளே அவையாகும்.
(இனி அடுத்த இதழில்)
உசாத்துணை (48) ஞாயிறு தினக்குரல் 23-05-1999 - இலக்கியக் குரல் (49)கட்டுரைக்கோவை(2010-சர்வதேச எழுத்தாளர் ஒன்றியம் பக்.296
இதழ் 33

Page 37
நூல் விமர்சனம்
வித்தியாசமானதும், மிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒரு நூல் நமது நாட்டில் அண்மையில் வெளிவந்திருக்கின்றது. இந்த நாட்டின் நூல் வெளியீட்டு வரலாற்றில், இந்த நூல் மிகுந்த கவனத்துக்குரிய ஒன்று. நாட்டு நடப்புகளைச் செய்திகளாகத் தாங்கி, தினமும் வெளிவந்துகொண்டிருக்கும் தினசரிப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியத் தலையங்கங்கள் சில நூலாகத் தொகுக்கப் பெற்று வெளிவருவதென்பது வெகு அபூர்வ மான ஒரு காரியம். தினக்குரல் பிரதம ஆசிரியர் வீதனபாலசிங்கம் அவர்களின் ஆசிரியத் தலையங்கங் களின் தொகுப்பான, “ஊருக்கு. நல்லது சொல்வேன்" என்பது இந்த நூல். இந்த நூலுக்கு முன்னர் ஈழநாடு சபாரத்தினம் அவர்களின் இதே போன்ற ஒரேயொரு நூல் நமது நாட்டில் வெளிவந்திருக்கின்றது. பத்திரிகை ஆசிரியர்கள் தமது பத்திரிகைகளில் ஆசிரியத் தலையங்கங்களை எழுதுகின்றபொழுது, ஏனைய எழுத்தாளர்கள் போன்று தமது எழுத்துக்களை நூலாக்கம் செய்யவேண்டும் என்னும் நோக்கத்துடன் எழுதுவதில்லை.
தினசரிப் பத்திரிகைகளின் பிரதான நோக்கம் மக்களுக்கு வேண்டிய செய்திகளை உடனுக்குடன் வழங்குவது தான். செய்திகளை வழங்குகின்ற முறைமை, குறிப்பிட்ட சில செய்திகளை முக்கியத்துவப் படுத்திக் கொடுக்கும் நோக்கு என்பவற்றால் பத்திரிகைகள் தமக்கென்று ஒரு கருத்து நிலையை உருவாக்கி விடுகின்றன. பத்திரிகை ஒவ்வொன்றுக்கும் அதற்கென்று ஒரு முகம் உண்டு. நமது நாட்டில் வெளி வந்து கொண்டிருக்கும் தமிழ்த் தினசரிகள் அனைத்தை யும் எடுத்து, குறித்த ஒரு தினத்தில் அவற்றை அவதானித்துப் பார்த்தால், இப்பத்திரிகை ஒவ்வொன்றும் முக்கியத்துவப்படுத்தி இருக்கும் பிரதான செய்தி, ஆசிரியத் தலையங்கம் அனைத்தும் வேறுபட்டிருப்ப தனைக் கண்டு கொள்ளலாம். இவற்றுள் ஆசிரியத் தலை யங்கம் என்பது விசேட கவனத்துக்குரிய அம்சமாகவே தினசரியில் இடம்பெறுகின்றது. ... "
பத்திரிகைகளில் ஆசிரியத் தலையங்கம் எழுதுவதென்பது தொழில் முறை சார்ந்த கடமையாகக் கருதி, ஏனோ தானோவென எழுதப்படுமானால்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தகைய எழுத்தினால் எந்தவிதப் பயனும் விளையப் போவதில்லை. நிதானமான பொறுப்புணர்ச்சியுடனும், ஆழமான தெளிந்த நோக்குடனும் எழுதப்பட வேண்டியது ஆசிரியத் தலையங்கம். மக்கள் மத்தியில் பரந்த பார்வையை வளர்க்கவும் வழிகாட்டலைச் செய்யவும் தகுந்ததாகவே அமையவேண்டும். பிரதான மான குறித்த ஒரு பிரச்சினை பற்றி இந்தப் பத்திரிகை ஆசிரியர் என்ன கருத்துச் சொல்லுகின்றாரென மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து அறியத் தகுந்தவண்ணம் ஆசிரியத் தலையங்கம் விளங்கவேண்டும். வெகுஜன அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவது மாத்திரமல்லாது, அதனை உருவாக்கவும் வேண்டும், நடுநிலை, ஆழ்ந்த நுண்ணிய சமூக நோக்கு, தற்றுணிவு என்பன ஆசிரியருக்கு மிக அவசியமானவை.
குறிப்பிட்ட இந்த ஆற்றல்களைத் தமக்குரிய வையாகக் கொண்டிருப்பவர் தான் தினக்குரல் ஆசிரியர் வீதனபாலசிங்கம். தொழில் சார்ந்த தமது கடமையாக ஆசிரியத் தலையங்கம் எழுதும்போதும், அதனை எத்தகைய நோக்குடன் எழுதுகின்றார் என்பதனைப் பின்வருமாறு கூறுகின்றார்:-
'தினக்குரலின் ஆசிரியர் என்ற வகையில் நான் தலையங்கங்களைத் தீட்டும்போது ஏதோ வெற்று
မ္ပိဒ္ဓိ ×২×২

Page 38
வார்த்தைகளினால் “அந்த இடத்தை" வயிற்றுப் பிழைப்புக்காக நிரப்பி வைப்போமே என்று ஒரு போதுமே நினைத்ததில்லை. எனது வாழ்நாளில் சமுதாயத்திற்கு என்னாலியன்றவரை பயனுறுதியுடை யதாக எதையாவது செய்யக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த பத்திரிகைத் துறையை சாத்திய மானளவுக்கு (பலவிதமான மட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும்) பயன்படுத்த முயற்சித்து வந்திருக் கின்றேன். வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய 20 வருட காலத்திலும் தற்போது தினக்குரலில் கடந்த 15 வருடங்களாகவும் இதை என்னால் செய்யக்கூடியதாக இருந்ததை, இருப்பதை வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பேறாகக் கருதுகிறேன். சமூக அவலங்களையும் அன்றாட நிகழ்வுகளையும் தலையங்கமாக தினமும் பதிவு செய்து கொள்வதற்கு தினக்குரல் எனக்கு வாய்ப்பைத் தந்து கொண்டிருக்கிறது" (ஆசிரியரின் அடி மனத்திலிருந்து.)
இந்த நாட்டில் நிலவிய மிக மிக நெருக்கடி யான காலகட்டத்தில் இந்த ஆசிரியத்தலையங்கங்களை எழுதி இருக்கின்றார் என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. சமூகப் பொறுப்புடன் இவைகளை எழுதி இருப்பதே, இவைகள் பெறுமதி மிக்க கலைகளாக விளங்குவதற்குரிய காரணம் எனலாம். பத்திரிகைகள் என்ன! கலை, இலக்கியச் சஞ்சிகை ஆசிரியர்களே, ஒரு சொல்லே தமக்கு ஆபத்தாக முடிந்து விடுமோவென அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலகட்டத்தில் துணிச்சலான இந்தத் தலையங்கங்கள் எழுதப் பெற்றிருப்பதுஓர் அதிசயந்தான்.
எனக்கு ஓர் அனுபவம். நான் எழுதிய சிறுகதை ஒன்றில் ஒரு வாக்கியம், "இந்தத் தேசத்தில் எதுவும் நடக்கலாம்" என எழுதி இருந்தேன். அந்தச் சிறுகதையைப் பிரசுரித்த சஞ்சிகை ஆசிரியர் அந்த வாக்கியத்தை எவ்வாறு மாற்றிவிட்டார் தெரியுமா? இந்த நேரத்தில் எதுவும் நடக்கலாம்” என மாற்றஞ் செய்திருந்தார். "தேசம்" என்ற சொல் "நேரம்" என, தற்காப்புணர்வோடு ஆசிரியர் மாற்றஞ் செய்திருப்பது கண்டு,எனக்குள் நகைத்துக்கொண்டேன்.
இத்தகைய ஒரு சூழ்நிலையில் தமக்குச் சிக்கலைத் தரத் தகுந்த பிரச்சினையான விடயங்கள் பற்றியெல்லாம் துணிச்சலுடன் தனபாலசிங்கத்தினால் எழுதுவதற்கு முடிந்தது, எழுதுகின்றது. அடிப்படையில் அதற்கு பின்னணியாகவுள்ள நியாயங்களையும் அவர் கூற்றுக்கூடாகவே உணர்ந்து கொள்ளலாம்:-
"மிகவும் இளவயதில் இருந்தே இடதுசாரிச் சிந்தனைகளினால் கவரப்பட்ட எனக்கு காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் என்.சண்முகதாசன், கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் மாஸ்டர் மற்றும் உறவுக்காரரென பீக்கிங் வானொலி பாரதிநேசன் சின்னத்தம்பி போன்றவர்
ஜீவநதி

களுடன் நெருக்கமாகப் பழகிக் கொள்வதற்கு கிடைத்த வாய்ப்பு எனது பத்திரிகைத் துறை வாழ்க்கையைச் செழுமைப்படுத்துவதற்கு பெருமளவுக்கு உதவியதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகின்றேன். என்னைச் சுற்றியிருக்கும் சமூகத்தை அவர்கள் எனக்குத் தந்துவிட்டுச் சென்ற அரியத்தின் ஊடாகவே இன்றும் நான் பார்க்கிறேன். எனது சிந்தனையையும் வாழ்க்கைச் செல்நெறியையும் தீர்மானித்ததில் அவர்கள் மூவரும் ஆற்றிய வழிகாட்டல் பங்களிப்பு வார்த்தைகளில் வர்ணிக்க முடியாததாகும்” (ஆசிரியரின் அடிமனத்திலிருந்து.)
தினக்குரலில் இது வரை வெளிவந்திருக்கும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட தனபாலசிங்கத்தின் ஆசிரியத் தலையங்கங்களில் இருந்து நூறு தலையங் கங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு நூலாகத் தொகுத்துத் தந்துள்ளார்கள். புரவலர் புத்தகப் பூங்காவின் இருபத்தேழாவது வெளியீடாக இந்த நூல் சிறப்பான கட்டமைப்புகளுடன் தயாரிக்கப் பெற்றுள்ளது.
தினக்குரலில் அவ்வப்போது தனித்தனியே இவ்வாசிரியத் தலையங்கத்தைப் படித்தபோது உள்ளத்தில் உண்டான தாக்கத்திலும் பார்க்க, முழுமையான ஒரு நூலாகப் படிக்கின்றபோது மிக உயர்ந்த பரிமாணத்தை இது பெறுகின்றது. பண்டித ஜவகர்லால் நேரு சிறைவாசம் அனுபவித்த சமயத்தில் அங்கிருந்து மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள், இந்த நூலைப் படிக்கின்றபோது நினைவுக்கு வருகின்றன. அந்தக் கடிதங்கள் உலக வரலாறு' என்னும் பாரிய நூலாகத் தொகுக்கப் பெற்று வெளிவந்தன. நேரு வரலாற்றையே மகள் இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் எழுதியிருக்கும் ஆசிரியத் தலையங்கங்கள் ஒரு வகையில் பொது மக்களுக்கு எழுதிய கடிதங்களாகவே தோன்றுகின்றன. நேரு எழுதியது வரலாற்றுப் பாடந்தான். தனபாலசிங்கம் எதிர்காலத்தில் வரலாறாகப் போகும் சம காலத் தகவல்களை எழுதியிருக்கின்றார். இந்த நாட்டு வரலாற்றினைப் படிக்கப் போகும் வரலாற்று மாணவனுக்கு சிறந்த வரலாற்றுப் பாட நூலாக, வரலாற்று ஆதாரமாக, ஆவணமாக இந்த நூலைத் தந்திருக்கின்றார். நாடு, சமூகம், அரசியல், பெரியார்கள், உலக நாடுகள், இன முரண்பாடு. எனப் பரந்த தளத்தில் நின்று தெளிந்த கருத்துச் செறிவுடன் தனபாலசிங்கத்தின் குரல் ஒலிப் பதனைக் கேட்கமுடிகின்றது. ஊருக்கு. நல்லது சொல்வேன்" எனத் தன்னிலைப்பட்டுப் பேசுகின்றார். இந்த நூல் படிக்கப்படவேண்டியது மாத்திரமல்லாது. வரலாற்று ஆவணமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியதும் எனலாம்.
இதழ் 33

Page 39
தமிழ்நாட்டின் பெருவிழா அரங்க வடிவமாக தெருக்கூத்து காணப்படுகின்றது. மக்களை ஒருங்கி ணைக்கும் வல்லமை கொண்ட சடங்கு அரங்க வடிவ மாக தர்மபுரி மாவட்டம், வடஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, சிங்கின்புட் மாவட்டங்களில் இதிகாசக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப் படுகின்றன.
ஆற்றுகைச் சிறப்புக்கள்
தெருக்கூத்தானது திரெளபதை அம்மன் கோயில் உற்சவத்தில் 10-18ம் நாள் திருவிழாக் காலத்தில் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும். கோயிலின் மேற்கு, வடக்குப் பார்த்து திறந்தவெளித் தன்மையுடைய அரங்கு அழக்ைகப்படும். இது மைய ஆற்றுகை வெளி யாகவும், அதுசார்ந்த கிராமத்தின் பகுதிகளான தெரு, வயல் வெளிகள் அரங்காகி கிராமமே இதிகாச கிராமமாகத் தொழிற்படும்.
தெருக்கூத்தரங்கு 1. முன்அரங்கு - (சபை) 2. பின்னரங்கு - (கொட்டகை)
5. ஆர்மோனியக்காரர்
6.மேளமடிப்பவர்
7. முகவீணை வாசிப்பவர் 8. தாளம் போடுபவர், பிற்பாட்டுக்காரர் 9. பதிவான விசுப்பலகை (கூத்தர் அமரும் இடம்) 10. ஒப்பனை அறையில் இருந்து கூத்தர் வரும் வழி 11. திரைச்சேலை பிடிக்கும் இடம்.
12,13. விளக்கு
14,15,16. பார்ப்போர் அமருமிடம்
2
3 4 5 6 7 8
| 5
] 6 | 12 ] 13 4
15 மைய ஆற்றுகை வெளி (களரி) மூன்று பக்கமும் திறவுண்ட தன்மையாகவும் பின்னால் அணி யறை(GreenRoom) காணப்படும் அணிஅறையினுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 5GTJ (1821 GT8-556i
வேடம் கட்டுபவர் ஆற்றுகை நிகழும் போது பிற்பாட்டுக் காரர் உடன் சேர்ந்து பாடுதல், அசரீதி ஒலி எழுப்பு வார்கள். அணியறை ஆற்றுகைக்கழத்தில் நீட்சியாகத் தொழிற்படும் மைய ஆற்றுகை வெளி தவிர அர்ச்சுனன் தபசுக்காக நாட்டப்பட்ட மரத்திலும்(80அடி). விராட பருவம்(ஆணிரை மீட்பு) வயல் வெளிகளிலும் நிகழும். ஆலய வழிபாடு செய்து காப்புக் கட்டி அம்மன் புகழ் பாடி ஆற்றுகை ஆரம்பமாகும், பார்வையாளரை ஒன்றினைக்க மிருதங்கத்தில்(சாப்பு) வாசிக்கப்படும். அது களரி கூட்டுதல் எனப்படுகிறது.
தெருக்கூத்தின் பாத்திரங்களில் 99% காலப்பிரிவு வழி நின்று பார்த்தால் இறந்துபோன காலத்திற்கு உரியவை. கட்டியக்காரன். கோமாளி போன்றன நிகழ்காலத்திற்கு உரியவையாகும். இங்கு உரையாடல், பாடல்களுக்கு ஊடாக கதை நகர்த்தப் படும். பிற்பாட்டுக்காரர்களின் பாடல்கள் ஆர்மோனி யம், முக வீணை, மத்தளம், தாளம். சுருதிப் பெட்டி போன்றவற்றின் இசைகள் மூலம் ஆற்றுகை முழுமை யடையும். மேடைப் பொருளாக களரியில் ஒரு வாங்கு மட்டும் பயன்படும். இது சிம்மாசனமாக படுக்கையாக, இரதமாக, தேவைக்கேற்ப பயன்படுத்தப் படும். நடிகர்களின் பெருங்காட்சிப் பண்பைத் தோற்று விக்க பெரிய புஜ கீர்த்திகள், கிரீடங்கள். செவிப் பூக்கள், மார்புப் பதக்கங்கள் பயன்படும். விரிந்த அரை யாடையும் அதனுற் கால் மட்டும் நீண்ட காற்சட்டையும் மேலே மேற் சட்டையும் பாத்திரங்கள் அணியும் முகம் சார் பகுதிகளான கண்கள், இமை, புருவம், நாடி கன்னப்பகுதிகளில் நிறக் குறியீடுகள் மூலம் பாத்திரப் பண்பை வெளிப்படுத்தும் வகையில் நுட்பமாக ஒப்பனை மேற்கொள்ளப்படும். ஒளியூட்டலுக்காக ஆரம்பகாலத்தில் பாரிய தாச்சிகளும், பிற்ப்பட்ட காலத்தில் வாயு விளக்குகள். தைல விளக்குகளும், தற்காலத்தில் மின்சார விளக்குகளும் பயன் படுத்தப்படுகின்றன.
பெருங்காட்சி பண்பை வெளிப்படுத்தும் வகையில் 50 அடி நீளமான துரியோதனனின் படுகளச்சிலை உடைக்கப்படுவதுடன் தெருக்கூத்து ஆற்றுகை முழுமை பெறும். இங்கு பார்வையாள பக்தர்கள், பார்வையாளர் பங்கு கொள்வோராகத் தொழிற்படுகின்றனர். கிராமமே அரங்காக மாறும் தன்மை, மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செல்லும் தன்மையினாலேயே தெருக் கூத்து ஆற்றுகை பெருவிழா ஆற்றுகையாக இன்றும் தமிழ்நாட்டில் தனித்துவம் இழக்காது நிகழ்த்தப்படுகிறது,

Page 40
மகிழ்ந்த காலங்கள்
1. முற்றத்து மா மரத்தின்
அணில் கோதிய பழமதனை கற்கள் கொண் டெறிந்து ஒடிப் பொறுக் கியுடன் தேடிச் சுவைக் கையிலே தோன்றி யதொரு இன்பம் காணி
2. முற்றத்தில் கோல மிட்டு வாழையுடன் தோரணங்கள்
4. பச்சிளம் பாலகனாய் பள்ளிக்குச் செல்வதற்காய் உச்சிமுகர்ந்தும் அன்னை
ت დზზ 6. மண மகனாய் மாலையிட்டு لأوركتهم
இனிமையாய் செவியில் சேரும் பதமான உணர்வு போல பாசத்தின் விளைவாய் மிளிரும்
 
 
 
 
 
 
 
 
 
 

அவள் மீண்டும் வரும் வரை
நாளொன்றில் அழகு நிலா மங்கை, வான வீதியில் உல்லாச உலாப் போனாள். அமாவாசை அரக்கனர் அவாக் கொண்டு கணப் பொழுதில் அவளை விழுங்கி விட்டான். கூட நின்ற நட்சத்திரத் தோழியர் திகைத்தழுதனர் இயற்கை வேந்தனிடமிருந்து அவசர கட்டளை பிறந்தது. தேடி அலைந்து பிடித்தனர் அவளை. தினம் பதினைந்து கழித்து நிலா மகள் உடல் சிதைந்து போயிற்று. பாவம் நட்சத்திரத் தோழியர். கண்களில் கண்ணிர்த் துளிகள். அவள் வருவாளா அவள் வருவாளா என எதிர்பார்த்து இருந்தனர். நித்திரை தொலைத்தவர்களாய். எதிர் பார்ப்பு, ஏமாற்றத்தின் சிம்மாசனத்தில் அரசோச்சி அவள் மீண்டு வரும் வரை.
- ரமணன்

Page 41
溪 繆 燃
縱
ġ繆
$$$$
縱 溪
क्षं क्षे
:
 

வெள்ளவத்தையில் இருக்கும் தொடர் மாடிக் ந்தில் இரண்டாம் மாடியில் இருந்து ஜன்னல் வழியாக பில் பார்வையைச் செலுத்தினேன். மாமரம், தென்னை என்று பக்கத்து வளவில் பச்சைப்பசேல் என்ற காட்சி ளூக்கு குளிர்மையை வழங்கியது. அந்த வளவில் லக்காட்சி அன்ரனாவுக்காக நடப்பட்ட ஒரு உயர்ந்த புக் கம்பம் காட்சி தந்தது. அன்ரனா அதில் இல்லை. கம்பம் தான் இப்பொழுது இருக்கிறது.
அன்று வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சி தந்தது. பெய்யும் அறிகுறிகள் இருப்பதாகத் தெரிந்தது. காற்று க வீசிக் கொண்டிருந்தது. ஜன்னல் அருகில் வந்திருந்து பில் பார்வையைச் செலுத்துகின்றேன்.
கிளியின் ஒசை வந்த பக்கம் திரும்பிப் பார்க்கின்றேன். இருப்புக் கம்பத்தின் உச்சியில் இருந்த படி கிளி ஓசை பிய படி இருந்தது. நான் அதைப்பார்த்து இரசித்துக் Tடிருந்தேன் முன் வீட்டு ஜன்னல் ஊடாக நீளமான தனது pல சீப்பினால் சீவியபடி அந்த அழகான நங்கையும் ன் குரலை இரசிப்பதை அவதானித்தேன் சற்று நேரத்தில் றந்து விட்டது. -
கிளி பறந்து போனதும் அந்தக் கம்பத்தில் வந்திருந்த காகம் சத்தமாகக் கரைந்து கொண்டிருந்தது. "காகம் கத்தி விருந்தாளிகள் வீட்டிற்கு வருவார்கள்” என்று எனது தாயார் نیسم பதில் சொன்ன ஞாபகம் என் மனதில் ஊசல் ஆடியது. இ
அப்படியிருக்க முடியாது. அது ஒரு மூடக் கொள்கை' உள்மனம் எனக்கு வற்புறுத்தியது. அப்பொழுது வீட்டின் ப்பு மணிச்சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்க்கிறேன். டு அழகான பெண் பிள்ளைகள் வாசலில் நிற்கிறார்கள். 1ள் குடிசன மதிப்பீடு எடுப்பதற்காக வந்திருக்கிறோம் ா வரலாமா?" என்று கேட்க "தாராளமாக" என்று கூறிட ளை அமர வைக்கின்றேன். அவர்கள் என்னிடம் கேட்டை விகளுக்கு பதில் சொல்ல, அவர்கள் கொண்டு வந்த தில் பதிந்து கொண்டு சென்று விட்டார்கள் நான் பச்சாத்தி விட்டு ஜன்னல் அருகில் வந்து மீண்டும் ன்றேன்.
காகம் அந்த இடத்தை விட்டுப் போகவில்லை. கம்பத்தில் படி கத்திக் கொண்டே இருந்தது. வீட்டுக் அழைப்பு மணி து. மீண்டும் கதவைத் திறக்கிறேன். "ஓ! சுந்தரமா, என்ன ”, “தெரியாத சும்மா வந்தேன்” என்றார். அவர் என்னிடம் து காசு வாங்கத்தான் என்பது எனக்குத் தெரியும் "நான் மாக வெளியில் போக வேண்டும் என்ன விசயம்
லுங்கள்” என்றேன். "ஒரு முன்னூறு ரூபா காசு அவசரமாக ம் அதுதான் வந்தனான்" என்றார். காசு கொடுக்காவிட்டால் மல் இருந்து அலட்டிக் கொண்டிருப்பார் என்று எண்ணி க் கொடுத்து ஆளை அனுப்பி விட்டேன். அம்மா சொன்ன த்தான் காகம் கத்தி, கிளியும் காகமும் வந்தனவோ என்று ரி எனக்குள் சிரிக்கின்றேன். மீண்டும் ஜன்னல் அருகில் நந்து காகத்தைப் பார்க்கின்றேன். அதைக் காணவில்லை. வேளையில் முன் வீட்டுப் பெண் என்னைப் பார்த்து றாள். ஏன் என்று தெரியவில்லை. து ༤་༠༠
毅

Page 42
பெண் என்பவள் சக்தியின் வடிவம். தாய்மை யின் தியாகம் என பம்மாத்துப் பண்ணியபடியே பெண் களை அடிமை கொண்டுள்ளது ஆணாதிக்க சமுதாயம். தாய்மை, சக்தி என்று பேச்சுக்கு சொன்னாலும், பெண்ணை கடவுளாக வேண்டாம், மனிதப் பிறவியாகக் கூட ஆணாதிக்கம் மதிக்கவில்லை என்பது நவ யுகத்திலும் பிசுறு இன்றித் தொடர்கின்றது.
பெண் ஏன் இரண்டாம் பட்சமாக்கப்பட்டாள்? பெண்ணிடமிருந்த உரிமையும் சமத்துவ நிலையும் ஏன் பறிக்கப்பட்டது? நிலவுடமைத் சாத்தானே பெண்ணை நிலமற்றவளாக்கி, நிலையிழக்க வைத்ததை யாரும் மறுக்க முடியாது. நிலவுடமைச் சமுதாயத்தின் உருவாக்கம், நிலத்தை ஆணுடையதாக்கியது. அன்று தொட்டே பெண்ணைப் பின் தள்ளுவதற்கு ஏற்றவாறு அன்றாட வாழ்வையும் அது சார்ந்த சடங்குகளையும் ஆணாதிக்கம் ஏற்படுத்தியது மதமும், கலாசாரமும் இதற்கு துணையாகின. எமது சமுதாயத்தில் பெண் என்பவள் பின்நிலைப்படுத்தப்படுமாறு அம்சங்கள் கட்டமைக்கப்பட்டன. ஆணாதிக்கத்தின் அதிகார ஆசை யினாலும், நிலவுடமை பேணலினாலும், தன் தலை முறைக்கான சொத்து கடத்தலினாலும் பெண் உரிமை யற்றவள் ஆக்கப்பட்டாள். ஒரு பரம்பரையின் உரு வாக்கம், வம்சவிருத்தி என்பன பெண் கருவறையின் வழியாக உருவாகினாலும், அது அவளுடைய தலை முறையாகக் கணக்கெடுக்கப்படுவதில்லை. ஆண் வழி சமுதாயமாகவே தலைமுறைகள் தொடர்கின்றன. இந்த தலைமுறை தனதாகவே இருக்க வேண்டும் என்ற கபட நோக்கத்துடனேயே பெண்ணிற்கு கற்பு எனும் திரை போடப்பட்டது.
ஒரு பெண் வாழும் நிலத்துடன் இணைந்ததா கவும், அந்நிலத்தின் இயல்பு, விவசாயப் பயன்பாடு என்ப வற்றுடன் அவள் கொண்டிருந்த உறவு முறையாகவும் அவளுக்கு இருந்த நிலவுடமை பறிக்கப்பட்டு அவள் சொத்துரிமையற்றவளாக்கப்பட்டாள். பெண்ணின் வாழ்வின் நீரோட்டத்தை, நிலத்தோடான அவள் உரிமையை தனது அதிகாரச் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு கட்டமைத்த ஆணாதிக்கம் அதுவே நியதி என்பதுவாய்பெண்ணை வெறும் உடமையாக்கினான்.
பெண் இன்று விழித்தெழுந்து, அக்கட்டமைப் புக்களை கட்டுடைத்து தனக்கான அதிகார எல்லையை விரிவு படுத்தி, ஆண்வர்க்கத்துடன் சமத்துவ உரிமை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோரி போராடுகிறாள். இந்தப் போராட்டம் கூட ஒரு குறிக்கப்பட்ட எல்லைக்குள்ளாகவே நகரமுடிகின்றது. ஏற்கனவே இயங்கி வருகின்ற கட்டமைப்புக்கு உள்ளாகவே விடுதலையின் எல்லையும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. புதிய கருத்துக்களைக் கூட அதிகாரப் படிநிலைகளை அனுசரித்தே உருவாகி வருவதனால், பெண்விடுதலை முன்னெடுப்புக்களில் ஒரு மந்த நிலையே காணமுடிகின்றது. அதிகார மையம் ஆணாதிக்கத்தின் வசம் இருக்கும் வரை இந்த விடுதலைப் பயணத்தில் ஆர்முடுகலை ஏற்படுத்தல் மெத்தனமாகவே இருக்கும். பெண் விடுதலை முன்னெடுப்புக்கு, பெண்ணின் புரட்சி கருத்து மாத்திரம் போதாமலிருக்கிறது. அதில் ஆண்களின் பங்காற்றலும் ஆணாதிக்கத்தின் மாற்றுச் சிந்தனைகளும் அவசியம்.
பெண் தனிப்பட்ட சத்தியாக அடையாளப் படுத்தப்படவேண்டுமானால், மரபுவழிப்பட்ட சிலையில் பெண்ணை வம்ச விருத்திக்கான சாதனம் என்பதான உணர்வு நிலையில் மாற்றம் காண வேண்டும். சக உயிரான, சமத்துவமான பிறவியாக பெண்ணை ஏற்றிட தடையாக இருக்கும் ஆணாதிக்க சிந்தனைகள், ஆண் மேலாதிக்க கருத்தியலாக இருந்து அழுத்தும் நிலை மாற வேண்டும். பாரம்பரியத்தைப் போற்றும் பெண் ணின் உணர்வு நிலையும் பெண் ணிய முன்னெடுப்புக்கு தடையாக இருக்கின்றது. மதமும் பண்பாட்டு விழுமியங்களும் பெண்ணை வெறும் உடலாக, மணமற்ற உயிராக, போசிக்கின்ற பொருளாக மாற்றி வைத்துள்ளன. இவ்வாறான பெண்ணின் விம்பமானது, பெண்ணை மேலும் ஆழ்கிணற்றிலிருந்து வெளியேறாத நிலையிலே வைத்திருப்பதைக் காண முடிகின்றது. பண்ணியம் என்றதும் காதைப் பொத்தும் பெண்கள் சிலர் இதற்கு சான்றாகின்றனர்.
தியாகம், அன்பு, நன்றி, நாணயம், கற்பு எல்லாம் இருபாலாருக்கும் எனும்போது ஏற்புடையதே. எனினும் பெண்ணுக்கு மட்டும் இவை அணிகலனாகும் போது சமத்துவம் பிசுபிசுத்துப் போகின்றது. உடலுறவு மூலம் கிடைக்கும் இன்பம் சிற்றின்பம், புலன்களை அடக்கி ஆழ்வதே பேரின்பம் என பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அது பெண்களுக்கே வலியுறுத்தப் படுகிறது. பாலுறவு பற்றிய கண்ணோட்டத்திலும் ஆண் சுகந்திரமுடையவனாக, வெளிப்படையாக உரையாடக் கூடியவனாக இருக்கின்றான். பெண்ணோ வெளிப் படையாக தனது இயல்பான பாலியல் உணர்வை வெளிக்காட்ட முடியாதவளாகவே இருக்கிறாள். வெளியிட்டால் நடத்தை கெட்டவளாக்கப்படுகிறாள்.
இன்று பெண்ணுக்கு தாய்மைத் தியாக வடிவமும், சக்தித் தெய்வ மகுடமும் தேவையில்லை. இப்போலிகளால் பெண்ணின் கண்கள் மறைக்கப்படு கின்றன. பெண்ணைப் பெண்ணாக சம உரிமையுள்ள மானுடப் பிறவியாக மதித்தால் அது போதும் அவள் உயர்வுக்கு

Page 43
அண்மையில் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடாத்திய வருடாந்த விருது வழங்கும் வைபவத்தின் போது காவியம் என்ற பகுதியில் “நெருப்பிடை நீந்தும் நிலாக்கள்" என்ற காவியத்துக்கு ரூபா10000 பணப்பரிசுடன் தமிழியல் விருதும் பெற்ற நிலா தமிழின்தாசன் நீண்ட காலம் ஈழத்துக் கவிதை உலகில் நிலைத்திருப்பவர். வீச்சான கவிதைகளை எழுதி வருபவர். இதுவரை 4 கவிதை
நூல்களை வெளியிட்டவர்.
அக்காவியம் 1985-86 காலப்பகுதியில்
எழுதப்பட்டது. "தொண்டன்" சஞ்கிகையில் தொடராக வெளிவந்தது. 2009 இல் மணிமேகலைப் பிரசுரமாக நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலின் முன்னுரையில் ".1983 இல் சுவாலை விட்டெரிந்த யூலைக் கலவரத்தின் படுபயங்கரத்தை உலகமே கண்டும். கேட்டு அதிர்ச்சிக் குள்ளானதை யாவரும் அறிவர். ஒரு காதல் காவியத்தின் மூலம் எனது உறவுகள் பட்ட துயரத்தைச் சிறிது தொட்டுக் காட்ட முயன்றிருக்கிறேன். அவ்வளவு தான்" என்கிறார் ஆசிரியர்.
திருகோணமலை நிலாவெளியைப் பிறப்பிட மாகக் கொண்ட நிலா தமிழ்தாசனின் இயற்பெயர் "மிக்கேல் அருள் மொழி ராஜா. தமிழின் தாசனாகவே வாழ்ந்து வரும் இவர், தனது புனைபெயரை அவ்வாறு வைத்துக் கொண்டதில் ஆச்சரியமேயில்லை. இவர் "மஞ்சுளா மணாளன்", "நிலவூர் மஞ்சு தாசன்", "தென்
தமிழ்க் கவிக்கோ” முதலிய புனைபெயர்களிலும்
கவிதைகளை எழுதியுள்ளார். இவரது கவிதைகள்
வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, சுதந்திரன், ஈழநாடு போன்ற நாளேடுகளிலும், சிரித்திரன், தொண்டன், புதிய உலகம், சுமைதாங்கி போன்ற சஞ்சிகைகளிலும்
வெளிவந்துள்ளன. நாளை(1993), புலர்வு(1994),
இளைஞர் ஏற்க வேண்டிய சபதம்(2009) முதலிய
கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
இக்காவியத்தில் இடம்பெறும் ஒவ்வொரு
 
 
 

கவிதையிலும் கவிச்செழுமை நிறைந்து காணப்படு கிறது. இவரது கவித் திறன் "தமிழ்த் தாய் வாழ்த்திலேயே புலப்படுகிறது. "பண்ணார் பைந்தமிழே, பார் புகழும் முத்தமிழே எண்ணாதொரு கணழ மிகுந்தறியேன் - பெண்ணே தாயாக உனை எண்ணித்தலை சாய்த்தடி பணிந்தேன். சேயோனுக்குன்னருளைச் சேர்"
12 அங்கங்களைக் கொண்ட இக்காவியத் தில், ஒவ்வொரு அங்கத்திலும் 12 கவிதைகள் (செய்யுள்கள்) அடங்கியுள்ளன. (இறுதி அத்தியா யத்தில் 17 கவிதைகள்) இவை ஒவ்வொன்றிலும் உள்ள சொல் வீச்சும் கவிநயமும் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. இவருடைய கவிதை மொழி எப்போதுமே உள்ளத்தைக் கிளுகிளுக்கச் செய்யும். உள்ளத்தில் உள்ளது கவிதை, இன்ப உருவெடுப்பது கவிதை எனப்பாடினார் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை. உண்மையான கவிதையில் நாம் அதைத் தரிசிக்கலாம். இக்காவியத்தில் உள்ள எல்லாக் கவிதை களுமே, அழகான மொழியினால் சிறப்புப் பெறுகின்றன. உதாரணமாக:
தாழைப்பூகடற்கரைக்கு அழைப்பு நல்கும் தரமான மணம் வீசி மூக்கையள்ளும்"
"மொழியழகு தமிழ் பேசும் இன்பமாந்தர் முறுவலுடன் வருவோரை உபசரிப்பர்”
கவிஞரின் கவிதைகளில் சொக்கிப் போன சுவைஞர்கள் பலர் எழுதிய சிறு குறிப்புக்களும் இந்நூலில் இடம்பெறுகின்றன. 8
இவரது "இளைஞர்கள் ஏற்க வேண்டிய சபதம்" கவிதைத் தொகுதி 51 கவிதைகளைக் கொண்டது. சென்னை மணிமேகலைப் பிரசுரமாக 2009ல் வெளிவந்தது. இந்நூலின் காணிக்கை உரை நம்மைக் கவர்கின்றது. "அமரத்துவம் அடைந்த, சிந்தை நிறைந்த தமிழ்க் கவிஞர்களான இ.முருகையன், திருகோணமலை கவிராயர், நாவண்ணன் ஆகிய மூவருக்கும்" - அது ஒரு வித்தியாசமான சமர்ப்பணம் அல்லவா? கவிஞர் தனது முன்னுரையில் ஒரு சுவையான சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார். - கவிஞர் சிறுவனாக இருந்தபோது அவரது தந்தையார் சுகவீனம் முற்று வைத்தியசாலையில் இருந்தபோது அவரைப் பார்க்க இவர் சென்றிருக்கிறார். ‘எப்படியப்பா இருக்கு? என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவர் தந்தை கவிதையிலேயே பதில் சொல்லியிருக்கிறார்.
'ஆசுபத்திமூலை, நான் ஆடிவந்த சோலை நேசிகுத்துற ஊசி- என்னை நோக வைக்கிற ஈட்டி" தன்னைவிடப் பெரிய கவிஞனாக தன் மகன் வருவான் என அவர் அப்போது கனவு கண்டிருக்க

Page 44
மாட்டார் அல்லவா? கவிஞர் செ.குணரத்தினம் பின்வருமாறு கவிஞர் பற்றி கூறுகின்றார். " கிழக்கு மாகாணத்திற்குரிய கவி வளத்தினையும், கவிதைச் சிறப்பினையும் கவிஞர் நிலா தமிழின்தாசன் "நாளை என்ற கவிதை நூலைப் படித்த போது கண்டுணர்ந்து மகிழ்ந்தேன். இத்தகைய சிறப்பான கவிஞரைப் பற்றி அதுவரை அறியாதிருந்தது என் தவறுதான் என உணர்ந்தேன்” என்றார்.
இந்நூலின் முதற் கவிதையாக "இளைஞர்கள் ஏற்க வேண்டிய சபதம்" என்ற கவிதையே இந்நூலின் முதற் கவிதையாக அமைகின்றது.
"பஞ்சனை மெத்தையிற றுயில்வேன் பாடலை நான் இனிப் பயில்வேன் நெஞ்சினில் வஞ்சியை அணையேன் - இன்ப நினையொடுநாணினி இணையேன்." இவ்வாறு தொடரும் கவிதைகளில் இளைஞர்கள் எளிய வாழ்வில் ஈடுபடவேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்படுகின்றது. இதுநடைமுறைச் சாத்தியமா? என்பது வேறுவிடயம். இன்று நாகரீக மோகத்தில் மூழ்கி, தம்மை மறந்து தாய்தந்தையரை, சகோதரிகளை மறந்து தலைகால் தெரியாமல் குதிக்கும் இளைஞர்கள் இதுபற்றி சிந்திக்கவேண்டும். இன்றைய சமூகத்தில் புரையோடிப் போயுள்ள பல்வேறு பிரச்சினை கள், இவரது கவிதைகளின் பாடுபொருளாக அமை கின்றது. பொதுவாக சமூக அவலங்களைப் பாடுவதுதான் கவிஞர்களின் இயல்பு. பாரதி முதல் பட்டுக்கோட்டை வரை இதையேதான் செய்தனர் ஆனாலும் பாடும் முறையில் ஒவ்வொரு கவிஞருக்கும் உரிய தனித்து வத்தை நாம் அவதானிக்கலாம். அதுவே கவிஞனின் வெற்றி ஆகிறது.
மஹாகவி'யின் குறும்பா பிரபலமானது. அவ்வடிவில் ஒரு கவிதையை கவிஞரும் எழுதியுள்ளார். அக்கவிதையில் ஏழு அடிகள் உள்ளன. அவ் குறும்பாவில் சில அடிகள் வருமாறு:
"பேசுவது வாயாலே புத்தம் பிழிகறிார் நாள்தேறும் ரத்தம் கூசாமல குறையாமல கொலை நூறுதினம் பண்ணி தேசமெலாம் சுற்றுகிறார் நித்தம்” "வீழ்ந்த ஆலமரமும் விழு தெறியும் நினைவு களும்" என்ற கவிதை உள்ளத்தைப் பிழிகிறது. அதில் சில வரிகள் பின்வருமாறு:
"ஓ எனது அன்பிற்குரிய ஆலமரமே! நீஅடிசாய்ந்தாய் என்றும் அவலச் செய்தியறிந்து கவலைப்படுகிறேன்" இவ்வாறு நீள்கிறது அக்கவிதை. மரபுக் கவிதைகளுடன் புதுக் கவிதைகளும் நிறைந்த இக்கவிதைநூல் கவிஞரின் வித்தியாசமான கவித் திறனுக்கும், கவிஆளுமைக்கும் சான்றாகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீராத மன நதி ஒட்டம்
சொந்த மண்ணிலி எனக்கோ சொல்ல முgயாத சோகங்கள் எனைச் சுற்றி. ଶ୍ରେରjö |DගIභික් புண் கிளறும் கொடுரமான காகங்கள்
வெந்துபோன எண் உள்ளத்தில் வந்துபோனவை துன்பம் மட்டுமே. நாதியற்ற எண் ffiගඛ தேதியற்ற pജ്ഞഖ (3Drids(8).J.
தீர்ந்துவிட முடியாத ආක්u ඉගාLආග67 வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்தினேன். என் கண்ணீருக்குள் ஆயிரம் bQఐ606061 ܝ 9laDL6Tవీd(8Da!
சொல்லிலி) தீராத சோகங்கள் ഴ്സുpർ ബ്രൈ' வாட்டுகிறது. கேள்விக்குறியாய் ഞ്ച് ട്രൂu காலம் வந்து காட்டுகிறது:
சீரான கதியினில் 6|6ff |iddot [56 &l55iପ୍ରjö துயரச்சூரியன் சுட்டெரித்து வரட்சியாக்கிப் போனது
உப்பளமாய் பஐந்த இன்பங்களை மாத்திரம் பருகிவிட்டு. அப்பளமாய் மனசுடைத்து கீறல் தருவதும் எனது???
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

Page 45
|
EGITEITLOGOJITHSLDT EGGOTLb? dibanan;
அந்தரத்தில் தொங்கும் பூமி அதனர் உள்ளே அந்தரத்தின் வேகம்
96). Jes J456 பொங்கி வழியும் சுவர்ணம் கதிரவனால், காலையொடு மாலை ஆத்மாவின் சுயம் பிரகாசம் போல் கிட்ட நெருங்கி வரும் உண்மை கவலைப்படுத்தும் சமூகப் பயன்பாட்டில் அகம் செழுமை மனம் எழுச்சி அணி திரட்டும் இலட்சியமாய் கபட நாடகம் முகமூடி அடையாளம் அரசியல் நீக்கி மக்கள் பிரச்சினை பேதம் பேசும் எழுத்து மனக்கவலை மாற்றி மாற்றி தனக்கு உவமை இல்லாதான் மயக்கச் சூழலில் கவலையால் மாற்றம் அன்புடன் நாம் உருகி நீ நெஞ்சில் கை வைத்துப் பேசு ஆத்ம செளந்தர்யம் அங்க சவுந்தர்யம் மண்ணிலே மிஞ்சும் வசந்தம் எத்தனை நினைவு வரும் வசந்தம் வருமோ பூவும் வரும்
காயும்
வரும் பிஞ்சு வரும் கனியும்
வரவும் இரதி மதன மனோலய தீரும் ஆத்ம பயம் சேரும் ஆத்ம பலம் தகிட தகிடதோம் தீரும் ஆத்ம பயன் சேரும் அதிக பலம் அன்பே உன் வசமோ அன்பே அன்பே உன் பலமோ மாசை மணி வீணையில் தேனிசை தர யாதோ
கண்கை கட்டிலி
கனவுகள் காலடி
என்னே
எனர் கன
எவரெவி எங்கொ
ஆண்களு பெண்க அர்த்தமி ஏதேதே
ஏதும் ப 6T6orust
என்னை எங்கொ
அணியை அடியே6 பெண்ை பெரும்ப
கறுப்புை காரிகை பொறுப் புத்தியும்
மதிமுகம் மங்கை
மகிழ்வெ
0ለ`00I}00ለ`፴
"வாழ்க்ை வாழ்வே. 60JᏯ-6ᏈᏊ
வனிதை
"எல்லாம் இறப்பே
 

貓
சொல்ல முடிந்திட்ட
சொப்பனாங்கள்
ள மூடி நான் இரைந்து மறைந்தாள் ஸ் சாய்ந்திட இன்னொருத்தி. ர் கோடியென் தேடும். "காதல் உறவது
கன்னியமானது" 霹 வா அறியேன் கட்டியம் கூறினாள் ாவில் மட்டும் கோதையொருத்தி. பரோ வருவர் ங்கோ திரிவர். "காதல் என்பது
கண்கட்டு வித்தை" நம் வருவர் போதம் உரைத்தாள் ளும் வருவர் பேதையொருத்தி. |6ს6ს/rt:06ს ா உரைப்பர். "பாச பந்தங்கள்
பலம் மிகக் கொண்டவை கராமல் நேசம் விதைத்தாள் ட்டில் கிடக்கும் நங்கையொருத்தி. ாயும் தம்முடன்
ங்கோ அழைப்பர்.
oό 6/76υραώ
ர் கனவில் மச் சாதிக்கே ங்கு உண்டு.
ட அணிந்தொரு
வந்தாள்
புடன் ஏதேதோ சொன்னாள்.
கொண்டொரு வந்தாள் - நான்
ாடு நகைக்கையில்
ப் ஆனாள்.
ரக வாழத்தான், ாம் வா” என்று பேசினாள் யொருத்தி.
ம் மாயை,
உண்மை’
"வேசத்தின் மறுபெயர் பாசம்” என்று விளக்கம் தந்தாள் வேறொருத்தி.
எதைத்தான் ஏற்பது எதை நான் மறுப்பது என் நிலை எனக்கே புரியவில்லை.
இதுபிழை இதுசரி இப்படித்தான் என எடுத்துச் சொல்லவும் எவருமில்லை.
நிஜ வாழ்க்கையில் நிம்மதி இழந்தவர் கனவினை யாசித்துக் கண்ணயர்வர்.
கனவே கலகத்தின் கருவென்றானால் N. கதியற்ற மானுடர் :رمز எங்கு செல்வர்?
மன்னுரான் ஷிஹார் r

Page 46
1) மன்னூரான் “வழிஹாரின் "ஒரு யுகத்தின் சோகம்’
(கவிதைத் தொகுப்பு)
"மன்னுாரான்” என்ற புனைபெயரில் பல
கவிதைகளுக்கூடாக ஏலவே அறியப்பட்ட வழிஹார் என்னும் இளம் கவிஞனின் முதல் தொகுப்பாக வெளி வந்திருக்கிறது ஒரு யுகத்தின் சோகம் என்ற இந்நூல். புதுக் கவிதையின் வீச்சு புதிய பரிமாணங்களுடன் வீறாக பயணித்துக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நூல்களில் சில நூல்கள் நெஞ்சை மயிலிறகால் வருடிச் செல்லும் உணர்வினை ஏற்படுத்தி விடுகின்றன. இவ் உணர்வு நிலைக்கு நூலின் உள்ளே குடிகொண்டிருக்கும் கவிதை கள் மாத்திரம் காரணமாகி விடுவதில்லை. நூலின் வடிவம், அமைப்பு சார் வெளிப்பாட்டு உத்திகளின் பங்கு காத்திரமாகி விடுகின்றது.
இந்நிலையில் "ஒரு யுகத்தின் சோகம்" என்னும் இந்நூலின் தலைப்பு மனம் விட்டுச் சொல்ல வேண்டுமானால் ஒரு யுகத்தையே கண் முன்னால் கொண்டு வருகின்றது. எவ்வளவோ விடயங்கள் நம்மைக் கடந்து போயினும் அவை உணர்வு ரீதியாக ஏற்படுத்துகின்ற தாக்க நிலை அளப்பரியது. இந்நிலை யில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக மனிதத்தை கூறு போட்ட யுத்தம் முடிவடைந்த நிலையில் வெளிவந்திருக்கும் இந்நூல் உண்மையில் யதார்த்த சிருஷ்டிப்பு எனலாம்.
நூல் - ஒரு யுகத்தின் சோகம் வெளியீடு - மன்னார்
எழுத்தாளர் சங்கம் விலை - 18O/-
மன்னார் எழுத்தாளர் பேரவையின் வெளி யீடாக கண்கவர் வர்ண அட்டைப் படத்துடன் வெளி வந்திருக்கும் இத்தொகுப்பினுள் மொத்தம் 45 கவிதைகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. கவி மனம் என்பது பரந்து பட்டது. பரந்துபட்ட உணர்வை உள் வாங்கியிருக்கும் இந்நூலின் படைப்பாளி மன்னூரான் ஒவ்வொரு கவிதைகளிலும் பல்வேறுபட்ட உணர்வு களை தூண்டியிருக்கின்றார். இந்நூலை ஆழ வாசிப்புக் குட்படுத்துகின்றபோது ஒரு உண்மை தெளிவாகின்றது.
ஜீவநதி 4.
 
 
 

மன்னுTரான் தனியே புதுக் கவிதைகளில் மட்டுமல்லாது மரபுக் கவிதைகளின் மீதான அவரது புலமையையும், ஆற்றலையும் அறிய முடிகின்றது. பல
கவிதைகள் பரிசில் பெற்ற கவிதைகளாகவும்
இந்நூலினை அலங்கரித்துக் கொள்கின்றன. குறிப்பாக "மனிதம் இன்னும் மரிக்கவில்லை" என்ற கவிதையில் "போரென்னும் பொல்லாத அக்கினிக்குள் அன்றாடம் பஸ்பமாகிக் கொண்டிருப்பது மனிதர்கள் மட்டுமா? இல்லையில்லை மனிதமும்தான்" என்ற வரிகள் நெஞ்சைத் தொடுகின்றன.
இவ்வாறு பல அரிய கவிதைகளை உரிய காலப் பகுதியில் தொகுப் பாக்கியிருக்கும் "மன்னூரானை பாராட்டமுடியும். ஏலவே நூலின் உள்ளே மன்னூரான் குறிப்பிட்டது போல என்னுடைய கவிதைகள் காலம் கடந்தவையே தவிர காலாவதி யாகிப் போனவை அல்ல. காலாவதியாவதற்கு இவை யொன்றும் உணவுகள் இல்லையே, உணர்வுகள் என்ற இவரது உணர்ச்சி மிகு வசனங்கள் இந்நூலுக்கு நன்றாகப் பொருந்தியிருக்கின்றன என்று கூறலாம். அழகான அட்டைப் படம், நூல் அமைப்பு, கவிதைகளின் கனதி என்பவற்றின் ஊடே இந்நூலை பார்க்கின்ற போது எதிர்காலத்தில் கவிதை வானில் நம்பிக்கை தரும் ஒரு கவிஞனாக மன்னூரான் வலம் வருவார் என்று சொல்லிக் கொள்ளமுடியும்.
- வெதுஷ்யந்தன்
2) உ.நிசாரின்
“நல்ல தங்காள்” (சிறுவர் பாடல்கள்-07)
உநிசாரின் "நல்ல தங்காள்” என்னும் சிறுவர் பாடல்கள் தொகுதி இவரது 7ஆவது சிறுவர்கள் பாடல் தொகுதியாக வெளிவந்துள்ளது. ஈழத்து இலக்கியத்துறையில் சிறுகதை, கவிதை, சிறுவர் கதை எனப் பல்துறைசார்ந்த படைப்புகளை சிறப்பாக வெளிக்கொணர்ந்து வருபவராக இந்நூலாசிரியர் திகழ்கின்றார். இத்தொகுப்பில் 22 சிறுவர் பாடல்கள் உள்ளன. அழகான வண்ணப்படங்கள் பாடல்கள் அருகே பேடப்பட்டுள்ளமை சிறுவர்களை மேலும் கவரும் என்பதில் ஐயம் இல்லை.
சிறுவர்களுக்கான படைப்பு என்னும் வரையறையில் இருந்து சற்றும் விலகாது ஓசை
இதழ் 33

Page 47
நயத்துடன் சிறுவர்கள் பாடி மகிழக் கூடியதாக இவரது பாடல்கள் அனைத்துமே உள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே ஒலியமைப்புடன், அழகான அபிநயத் துடன் பாடக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது.
உதாரணமாக:
"algoof(36) algoof(86) 6Js T 6). T 6).JIT அன்பு கொள்வேன் வாவா வா கனிந்த கனியைக் கடித்துவிட்டு கனிவுடன் ஓடி வா வா வா”
நூல் - நல்ல தங்காள் வெளியீடு- பானு பதிப்பகம்
விலை - 100/-
இத்தொகுப்பில் காணப்படும் பாடல்கள் அனைத்தும் சிறுவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதுடன் சிறுவர்களுக்கு அறநெறிக் கருத்துக்களையும் கூறுகின்றன. உதாரணமாக போதை பற்றிய விழிப் புணர்வு தரும் பாடலாக பின்வரும் பாடல் காணப்படு கின்றது.
"நல்லதம்பி நல்ல தங்காள் நலமுடன் அதைக் கேளு-நீ தொல்லையின்றி உலகில் வாழ பொல்லாப் போதை தவிர்ப்போம் கள்ளமில்லா உள்ள முள்ள நல்ல பிள்ளை உனக்கு - ஏன் அல்லல் வேண்டும் என உணர்ந்து பொல்லாப் போதை மறப்பாய்." இந்நூலில் உள்ள சிறுவர்கள் பாடல்களை ஒட்டுமொத்தமாக நோக்கும் போது அனைத்து பாடல் களும் சிறுவர் மனதைக் கவரும் என்பதில் ஐயம் இல்லை. பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு நல்ல தொரு நூலை வழங்கிய உநிசார் பாராட்டிற்குரியவர்.
ー óH「TöF5千60TGöI
3. ஷெல்லிதாசனின்
“செம்மாதுளம்பூ” (கவிதைத் தொகுப்பு)
பேரம்பலம் கனகரத்தினம் என்ற இயற்பெயர் கொண்ட ஷெல்லிதாசனின் முதலாவது கவிதைத் தொகுப்பானது "நீங்களும் எழுதலாம் வெளியீடாக"
 

வெளிவந்துள்ளது. 40 வருடங்களுக்கு மேலாக சிறந்த கவிதைகள் பலவற்றை இலக்கிய உலகிற்கு தந்து கொண்டு இருப்பவர் ஷெல்லிதாசன். முற்போக்குக் கவிஞர் குழாத்தினருள் ஒருவராகவும், ஈழத்து மெல்லி சைப் பாடலாசிரியராக காணப்படுகின்றார். இந்நூலிற் குரிய அணிந்துரையை பேராசிரியர் செ.யோகராசா எழுதியுள்ளார்.
இந்நூலில் 38 கவிதைகளும் 13 மெல்லிசைப் பாடல்களும் அடங்கியுள்ளன. கவிஞரின் கவிதைகள் ஈழத்தின் முக்கியமான பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. தொழிலாளர்களின் அறியாமை, தொழிலாளர் போராட்டம் என்பவை தொடர்பாக இவரால் எழுதப்பட்ட கவிதைகள் மிகவும் வீச்சாகவும் காணப்படுகிறது. சமூகத்தின் மீதான அக்கறைகள் இவரின் இத்தொகுதியில் உள்ள கவிதைகள் ஊடு வெளிப்படுகிறது.
நூல் - செம்மாதுளம்பூ வெளியீடு-நீங்களும் எழுதலாம்
விலை - 200/-
భ్యఖ్య
கவிதை புனைபவர்கள் மக்கள் அவலங்களை கவிதையாக புனைய வேண்டுமென, "பூச்சியத்துள்ளே இராச்சியம்” என்றும் கவிதையில் பின்வருமாறு சிறப்புற கூறுகின்றார்.
அழகு தமிழை வளர்ப்பதுவாய் அழகிய கவிதை புனைவதுவாய் எண்ணி எதுகை மோனைக்குள் இயங்கும் கவிஞர் பெருங்குலமே அகன்ற உலகப் பரப்பினிலே அல்லலுற்றுதினமலையும் மனிதகுலத்தின் அவலங்களை மறந்து தூங்கிப் போனதுமேன?
கவிஞரின் கவிதைகள் அனைத்துமே அவரது அனுபவ முதிர்வை காட்டுகின்றன. கவிதைக்குரிய வரன்முறை கள் சற்றேனும் பிசகாமல் கவிதைகள் அனைத்தும் இலகு தமிழில் புனையப்பட்டு இருப்பது சிறப்பு. கவிஞரிடம் இருந்து இன்றும் பல இதுபோன்ற நல்ல படைப்புகள் வெளிவரவேண்டும்.
- அர்ச்சுனன்
இதழ் 33

Page 48
86જી90 66068
1) அவை (Forum) கலை இலக்கியவட்டத்தின் 34 அ பெற்றது. இந்நிகழ்விற்கு எழுத்தாளர் தெணியான் த:ை விரிவுரையாளர் இ.இராஜேஸ்கண்ணன் கலந்து கொ6 பகிர்வுகளை கூறினார். 2ஆவது நிகழ்வாக திரு.வே.சிவ இடம்பெற்றது. வாழ்த்துரைகளை திரு.ஆகசி.கந்தசாமி, தி ஏற்புரையை திரு.வே.சிவராஜலிங்கம் நிகழ்த்தினார். நன்ற
2) பெரிய தம்பி ஐங்கரன் எழுதிய "கறுப்பும!ை பொன்னையா பெரியதம்பியின் நினைவு நிகழ்வும் 2 திருமதிதி,சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. வெளி பற்றிய உரைகளை ஜீவநதி ஆசிரியர் க.பரணிதரன், க நன்றியுரையை பெரிய ஐங்கரன்நிகழ்த்தினார்.
з) அவை (Forum) கலை இலக்கியவட்டத்தின் 35 அ பெற்றது. இந்நிகழ்விற்கு எழுத்தாளர் தெணியான் தலைை வெதுஷ்யந்தன் நிகழ்த்தினார்.வருகையாளராக யாழ்.தே கமலநாதன் கலந்து கொண்டு "சிறுவர் அரங்கின் சிற நிகழ்வாக புலோலியூர் ஆ.இரத்தினவேலோனின் புதிய L அறிமுக உரையை யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாள களை ஆசிரியர் திரு.வேல்நந்தகுமார், முகாமைத்துவ அலு புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் நிகழ்த்தினார். நன்றிய
4) யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலைஅரங்க த.கலாமணியின் அண்ணாவியத்தில் 30.04.2011, 01.05. சபாவின் "சத்தியவான் சாவித்திரி, யாழ். நாட்டார் வழக்கி நாளும் மேடையேற்றப்பட்டது.
ஜீவநதி 4.
 
 
 
 

fs
நிய நிகழ்வுகள்
ஆவது ஒன்று கூடல் கலைஅகத்தில் 24.04.2011 அன்று இடம் லமை வகித்தார். வருகையாளராக யாழ்பல்கலைக்கழக 0ண்டு தனது யப்பான் பயணம் தொடர்பான அனுபவப் ராஜலிங்கம் அவர்களுக்கு பணிநயப்பு பாராட்டுவிழாவும் ரு.சீ.இராஜநாயகம், திரு.கி.கணேசன் ஆகியோர் கூறினர். றியுரையை கலாநிதித.கலாமணி நல்கினார்.
ழ” என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவும், அமரர் 2.04.2011 அன்று யா/புற்றளை மகாவித்தியாலயத்தில் யீட்டுரையை புலோலியூர் வேல்நந்தன் சிகழ்தினார். நூல் லாசார உத்தியோகத்தர் குறஜிபன் ஆகியோர் கூறினர்.
ஆவது ஒன்று கூடல் கலைஅகத்தில் 08.05.2011 அன்று இடம் மை வகித்தார். வரவேற்புரையை ஜீவநதி துணையாசிரியர் நசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் திரு.கே.ஆர். ப்புக்கள்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். 2ஆவது பயணம் நூல் அறிமுக அரங்கு இடம்பெற்றது. நூல் பற்றிய ார் திரு.இ.இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். கருத்துரை லுவலர் திருமதி த.கவிதா ஆகியோர் நல்கினர். ஏற்புரையை |ரையை ஜீவநதி ஆசிரியர் க.பரணிதரன் நல்கினார்.
கில் வரலாற்றுத்துறையினரின் அனுசரனையுடன் கலாநிதி 2011 ஆகிய தினங்களில் அல்வாய் மனோகர கான நாடக யற் கழகத்தின் "பூதத் தம்பி” ஆகிய இருநாடகங்களும் இரு
6 இதழ் 33

Page 49
5) யாழ்.தேசியக் கல்வியியற்கல்லூரி கலைஅரங்கி த.கலாமணியின் அண்ணாவியத்தில் 12.05.2011 அன்று சாவித்திரி, யாழ். நாட்டார் வழக்கியற் கழகத்தின் "பூதத் இந்நிகழ்வின் இறுதி நிகழ்வாக பூதத்தம்பி நாடகத்தில் சாவித்திரி நாடகத்தில் சாவித்திரியாக நடித்த சி.சஜீவன் அ போர்த்து யாழ்.தேசியக் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி எ
ఖీ 鷲2麟畿徽
6) "மன்னூரான்” எனும் புனைபெயரில் எழுதிவரு யுகத்தின் சோகம்" 27.03.2011 அன்று மன்னார் அல்பேரவையினால் வெளியீடு செய்யப்பட்டது. மன்னார் பேரவையின் போஷகருமாகிய அருட்திரு. தமிழ்நேசன் நிகழ்வின் பிரதம அதிதியாக மன்னார் வலயக் கல்விப் ப சிறப்பித்தார். இந்நூலுக்கான மதிப்பீட்டுரையினை விமர்சகருமாகிய திரு.பா.தர்மராஜா அவர்கள் வழங்க சிறப்பித்த இவ்வெளியீட்டு விழாவில் மன்னார் அமுதன்,க கவிஞர் சுஜானா உள்ளிட்ட கலை இலக்கியவாதிகள் பலரு
கடந்த காலங்கள் காரிருளினையே
கக்கி விட்டுச் சென்றிருக்கின்றன
காரிருளினைப் போக்குவதும்
கறைகளினை நீக்குவதும் - நமது கடமையாக இருக்கிறது
மலர்ச்சியையே - இனி மணி வேண்டிக் A. கிடக்கிறது
ஜீவநதி -
 

ல்ெ பிரம்மருநீகே.வீரமணிஐயர் நினைவுநிகழ்வாக கலாநிதி அல்வாய் மனோகர கான நாடக சபாவின் "சத்தியவான் தம்பி” ஆகிய இரு நாடகங்களும் மேடையேற்றப்பட்டது. பூதத்தம்பியாக நடித்த கலாநிதி தகலாமணி, சத்தியவான் ஆகியோரின் நடிப்பை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை ஸ்.கமலநாதன் கெளரவப்படுத்தினார்.
ம் மன்னுாரான் ஷிஹாரின் கவிதைத் தொகுதியாகிய “ஒரு அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில், மன்னார் எழுத்தாளர் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் மன்னார் எழுத்தாளர் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற இவ்வெளியீட்டு னிப்பாளர் உயர்திரு.எம்.ஆபேல் றெவல் அவர்கள் கலந்து மடு வலய ஆசிரிய ஆலோசகரும் பிரபல இலக்கிய யிெருந்தார்கள். பல கெளரவ, சிறப்பு அதிதிகள் கலந்து விஞர் அமல்ராஜ், துறையுரான்சிவாநந்தன், மக்கள் காதர், நம் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
உலா வருவோம்
சுவாசக் காற்றில் இன்னும் சுடுகாட்டு நாற்றம் வேண்டாம்
வேற்றுமையிதனை வேரோடே விலக்குவோம் ஒற்றுமையதனையே ஒரு மனதாய் உருவாக்குவோம்
ஆம் . இருள் கலைப்போம் ஒளியேற்றுவோம் ஒளியிலேயே உலா வருவோம்
ඕෂී( 33

Page 50
1)
卧U所ü 極
கலைஞர்கள் அனைவரும் "காலத்தின் கண்ணாடிகள்” ( பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதை நினைத்து ெ "வாய்ப் பிறப்பு, இதனூடாக ஆதி கால மனிதர்கள் எட் என்பற்றையும் அழகாக எடுத்தியம்பியது. தங்களின் ": இங்கனமான படைப்புகளை நான் எதிர்பார்க்கிறேன். நடை களத்தின் பிரதிபலிப்பாக அமைந்தது என்பதை அவர்களின் வாய்ப் பிறப்புக்கு மீண்டும் எனது வாழ்த்து இருக்கின்றன.
காலநதியின்
தடத்தில்
புதிய பிறப்பாய்
ஓர்
ஜீவநதி,
கலை நீரோடையில்
கலக்கட்டும்.
2) சித்திரை இதழில் உரையாடலில் மாற்றப்படவேண்டி
3)
மீள்பார்வை செய்ய வைக்கிறது.தெணியானின் வாழ்வு "மனவைரம் சிறுகதைகள் சிந்தையை கவர்ந்தன. கவிை மேலும் மெருகூட்டுகின்றன.
ஜீவநதி (32) வைகாசி 2011 இதழ் வாசித்தேன். கே.ஆ சிறுகதை இன்றைய யுகத்துக்குப் பொருத்தமான சி செயல்பாடுகள் நடத்தப்படுகின்றனவோ அவற்றுக்கெதிர் முள்ளிவாய்க்கால் உட்பட மனிதநேயம் பிழைக்கின்ற 8 ஆனால் மூப்பனார் சபையின் பெரிய நாயகர் இலங்ை ஏற்றுக் கொள்ளப்பட்டே ஆகவேண்டும். உலகில் நட மூப்பனாரின் மூல மந்திரமே அடிப்படையாக உள்ளது.
தவிர இன்னொரு விடயம் இச்சந்தர்ப்பத்தில் இலங்கையில் தமிழ் மூலம் வாசிப்பு மிகக் குறைவாகே அவர்களும் வாசிப்புமுறையில் பல்வேறு தரத்தினர். எ6 பத்திரிகை எனப் பார்க்கும்போது 80%ஆகக் நுழைந்துள்ளனர். (வரையறுக்கப்பட்ட வாசிப்பளவே ச போய் இப்பக்கம் வளர்ச்சி அடைந்தால் மேலே சொ பிரகாரம் தமிழ் பேசும் சமூகத்துக்கு வழங்கப்பட்டாலு அவை செல்லுமா? என்பதும் கேள்விக் குறியாகவே உள் சமூகத்துக்கு ஆபத்தான ஒரு நிலையை இது ே முன்வைத்துக் கொண்டே இருக்கவேண்டிய நிலையில் மனிதனை மனிதன் ஏய்க்கும் நிலை உருவாக வாய்ப்பு என்று அர்த்தப்படுத்துவதன்று. அச்சுப் பிரதிகள் வ வலியுறுத்தப்படுகிறது. நிறைய வாசிப்பதனால் தான் உரி பிரதிகளை வெளியிடுகின்றனரோ அவை தொடர்பா அவசியமும் அவசரமுமாக உள்ளது என்ற கருத்தையும்
ஜீவநதி 48

guilt bir
அறிஞர்கள் பலரின் கூற்று. அங்கனமாக தங்களின் ஜீவநதி பருமிதம் அடைகின்றேன். மேலும் என்னைக் கவர்ந்தது படி வாழ்ந்தார்கள், அவர்களுடைய நாகரிகம், பண்பாடு வாய்ப் பிறப்பு” என்னை நன்றாக கவர்ந்தது. தொடர்ந்தும் இப்படைப்பாளி அவர்கட்கு எனது பாராட்டுக்கள். மொழி குறிப்பிட முடியாமல், இருக்க முடியவில்லை. "புரதானி” க்கள்,ஜீவநதி கவிதைகள், சிறுகதைகள் யாவும் சிறப்பாக
- கி.தவராசா (முள்ளியவளை)
2யவை எனும் கட்டுரை எமது பேச்சுக்களையும் ஒரு பதற்காகத் தான், றாதிகாவின் எத்தனங்கள், சிவதாசனின் தகளும், ஏனைய படைப்புக்களும் ஜீவநதியின் தரத்திற்கு
- ஷெல்லிதாசன் (திருகோணமலை)
ர்.டேவிட் உருவகப்படுத்தியிருந்த 'ஆத்மாவின் ராகங்கள் ருஷ்டி, மனித நேயம் எங்கெல்லாம் அழிந்தொழியச் ரான கருத்துக்களை முன்வைப்பது மனிதப் பண்பு, லிபியா, இடங்கள் உறுதியாகச் சுட்டிக் காட்டப்படத்தான் வேண்டும். கை பற்றிப் பேச எந்தத் தகைமையும் அற்றவர் என்பதும் க்கும் எல்லா அடாவடித்தனங்களுக்கும் இந்தப் பெரிய
சுட்டிக் காட்டப்படுவது பொருத்தமானது. சாதாரணமாக வே (சனத்தொகையில் சுமார் 40மூ) இருந்து வந்துள்ளது. னினும் இன்றைய இந்தத் தொகையினரும் நூல், சஞ்சிகை, குறைந்துள்ளது. 20%மும் கணினி இணையத்துள் கணினி இணையத்தில் வாசித்து அறிகின்றனர்.) இவ்வாறு ன்ன பிரகாரம் அச்சுப் பிரதிகளில் விடயங்கள் தேவைப் ம் மக்கள் மத்தியில் அவை எடுபடுமா? மக்கள் மத்திக்கு
T6াgl. தாற்றுவிக்கும். உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் மக்கள் அவை பயன்படாவிடின் மனிதப் பண்பே எடுபட்டுப் போய் ஸ்ளது. இப்படிக் கூறும்போது இணையத்துள் நுழையாதீர்! ாசித்தல் மேலும் மேலும் பெருகவேண்டும் என்பதே சிய பயன் சமூகத்துக்குக் கிட்டும். எனவே எவரெவர் அச்சுப் ன வாசகர் வட்டங்கள் உயிர்ப்பிக்கப்படுவது மிக மிக இச்சந்தர்ப்பத்தில் முன்வைக்கின்றேன். - ஏ.எச்.எம்.அத்தாஸ் ஜே.பி. (வெலிப்பன்னை)
இதழ் 33
B

Page 51
இ0த்தின்
வைண்டி
அன்
0ேAட்டேw
செய்து கெAறக்
Kodikamam Veethy, Nelliady.
 

க்கு/மும்.
கொடிகாமம் வீதி, நெல்லியடி.

Page 52