கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மல்லிகை 2011.06

Page 1
N
N N
W
 

SSSSMÈS
D,ာ်’ဂ်...J/ (2];_A်ကြီးရဲ့ခံ ജ്
உருவாக்கித் தந்த -
கலைஜன், இவன்!
விலை 40/-

Page 2
15 வருடத் திருமணசேவை நிறைவினை முன்னிட்டு வேல் அழுதன் பாரிய சேவைக் கட்டணக் குறைப்பு
விவரங்களுக்குத் தனிமனித நிறுவநர், 'சுயதெரிவுமுறை
முன்னோடி. முத்த புகழ் பூத்த சர்வதேச, சகலருக்கு மான திருமண் ஆலோசகர் / இற்றுப்படுத்துநர் குரும்ப சி.ழயூர் , மாலியழ வேல் அமுதறுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, சனி, ஞாயிறு நண்பகலி லேயோ தயங்காது தொடர்புகொள்ளலாம்
தொலைபேசி: 纷 2360488/ 2.360694/4873929
சந்திப்பு: முன்னேற்பாடு ஒழுங்குமுறை
8-3-3 மெற்றோ மாடிமனை (வெள்ளவத்தை காவல் நிலையத்திற்கு எதிராக நிலப் பக்கம், 339ஆம் ஒழுங்கை வழி) 55ம் ஒழுங்கை வெள்ளவத்தை கொழும்பு-06
துரித- சுலப மணமக்கள் தெரிவுக்குச் சாலச் சிறந்த முறை சுயதெரிவுமுறையே ரம்மிய-மகோன்னத மணவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் மாயெழுவேல் அமுதனே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆடுதல் பாடுதல் சித்திரம் &ঃচঃ Ν ஆதியிணைய கலைகளில் உள்ளம் ខ្សព្វេ ផ្លួវនាវ វិញ frr:683 f6 363 86688AGE: gësirë sisir
2.லகப் பாராளுமன்ற வரலாற்றிலேயே, ប៊្រុងបោះ៩ ហ្វ្រ.ផ្តេចថ្រាន្លំខ្លាំង ហ្កិច្ចំខ្លាំថ្ងៃយ៉ាំ தான் ஒர் இலக்கியச் சஞ்சிகை விதந்து பாரா 1.: பெற்ற பெறுமதி மிக்க சம்பவம் இடம் பெற்றுள்ளது. அங்கு பாராட்டப்பட்ட சஞ் Fis3-3. José5533. HSF356. ST HEPPså og Jൈ.1881 ഒൈ}: {}4, 7. 2001) !( செய்ததுடன் எதிர்காலச் சந்ததியினருக்காக ខ្សផ្ទុះ ឯគ្រៀង្ខំខ្លាំយុទ្រ រឺ វីខ្លះៗ ខ្លះខ្លាំក្ត...។ உலக வரலாற்றில் முதன் முதலில் சலு: லுக்குள் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகையும் மல்லிகையே தான்!
50 - ஆவது ஆண்டை நோக்கி. ខ្ចង្គ្រាំ
୫୫୫ । 'ഠ/%' ീഴൂ
ടർ0/, '%
12666ថាជា ខ្ល់ឈ្មោះវិស្ណុ ៦.៩តៅពុំសុ... តែនា
வரும் தொடர் சிற்றேடு மாத்திரமல்ல. அது ஒர் ஆரோக்கியமான இலக்கிய இயக்கமு 1 OFF gi b. Lipsis 5ới 575 ž8tiisi: GSASfikir sità எழுத்துக்களுக்கு எழுதியவர்களே
| unញ្ញរ. នៅតាវ៉ៅ
201/4, Sri Kathiresan St, Colombo - 13.
Te: 232O72 mallikaijeeva@yahoo.com
ខ្វល្លិ៍ ៣ញក្ដោយទឹក៏ភ្ញាគ្រូថ្ងៃទី மட்டத்திற்குக் கொண்டு 608ক্টোিড়ঘটে;
இன்று ஆறுதலாக இருந்து அனைத் தையும் சிந்தித்துப் பார்க்கின்றேன்.
உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பு மாநகரில் கோலாகலமாகவும், வெகு காத்திரமாகவும் நடந்து நான்கு மாதங்கள் உருண்டோடி விட்டன.
அந்த மகாநாட்டின் பெறுபேறுகளை ஆய்வுக் கூர்மையுடன் ஆழ்ந்தகன்று நோக்குகின்றேன். சிந்திக்கின்றேன்.
சர்வதேசமெங்கும் பரந்துபட்டு வாழ் கின்ற நம்மவர்களில் சில எழுத்தாளர் கள் 'இல்லை, இல்லை! நாங்க மாநாட்டை எதிர்க்கவேயில்லை! சும்மா ஒதுங்கித்தான் இருந்தோம். பார்வையாளர்களாகப் பார்த் துக்கொண்டிருந்தோம்' என இன்று சமா தானம் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
நடந்து முடிந்த அந்த சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களினது ஒன்றுகூடல், இப் பொழுதுதான் தனது வீச்சையும், வீரியத் தையும் காட்டத் தொடங்கியிருக்கின்றது.
ஒரு காலகட்டத்தில் தமிழ் என்றால் இந்தியாவில் தமிழ் நாடு, இலங்கையில் வட, கிழக்குப் பிரதேசங்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால், மலேசியா என்றிருந்தது.
இன்றோ, உலகப் பரப்பில் 52 நாடு களில் தமிழ் பேசப்படுகின்றது. தமிழ் விழாக் கள் நடத்தப்படுகின்றன. அந்த அந்தப் பிர தேசங்களில் இருந்தெல்லாம் தமிழ் மொழி யில் இலக்கிய சஞ்சிகைகள், சிற்றேடுகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.

Page 3
இது இன்றைய எதார்த்த உண்மை ஈழத்தமிழன் கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாகக் கொடுத்து வந்த பாரிய இழப்பின் பின் அறுவடையை, சர்வ அழி வின் பின்விளைவை ஆக்கபூர்வமான வழி களின் மூலம் இன்று ஸ்தாபித்துக் கொண்டு வருகின்றான். இயங்குகின்றான்.
இன்றைய சர்வதேசத் தமிழ் பரம் பலுக்கும் தமிழின் வீரியமிக்க ஆளுமைத் தாக்கத்திற்கும் இன்று உலகப் பரப்பெங் கும் பரந்து புலம்பெயர்ந்து வாழும் நம்ம வன்தான் என நெஞ்சு நிமிர்த்திக் கூறலாம் போலத் தெரிகின்றது.
இதனது சர்வதேச இலக்கிய உறவின் வெளிப்பாடுதான், கடந்த ஜனவரியில் நடந்த சர்வதேச எழுத்தாளர் மாநாடாகும்.
இன்று எமக்கு வரும் தொலைத் தொடர்புத் தகவல்கள் யாவுமே இதைத் தான் நிரூபிக்கின்றன.
நம்மை நெஞ்சு சிலிர்க்க வைக் கின்றன.
வேறெந்தக் காலகட்டங்களிலும் இல் லாத அவதூறுப் பிரசாரங்களும் எதிர் அபிப் பிராயங்களும் வேண்டுமென்றே புனையப் பட்டு, திட்டமிட்டே பரப்பப்பட்டு வந்தன.
மகாநாட்டாளர்கள் மிகமிக நிதானத் துடனும், புத்தி சாதுர்யத்துடனும் நடந்து கொண்டு, இத்தகைய அவதூறுகளைக் கணக்கெடுக்காமலே நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகவும், ஆக்கபூர்வமாகவும் நிகழ்த்தி முடித்து, இன்று சர்வதேசப் பெருமையைத் தமதாக்கிக் கொண்டுள் 6T60T fr.
அதனது வெளிப்பாடுகள்தான் இன்
றைக்குச் சர்வதேச உலகிலிருந்து தினம் தினம் வந்து குவியும் ஆற்றாத ஒலங்களும், பாவமன்னிப்புக் கீர்த்தனைகளும். இதுவே ஒரு பாடமாக அமையட்டும், அவர்களுக்கு.
இன்று தமிழ் மொழி என்ற பாஷை யைத் தெரியாத தேசங்களே உலகில் இல்லை எனப் பெருமிதத்துடன் சொல்லி 6SLsomb.
முன்னொரு காலத்தில் ஐரோப்பி யரின் ஆளுகைக்கும் ஆளுமைக்கும் உட்பட்ட நாடுகளில் தமிழ்மொழி பற்றித் தெரிந்திருந்தது என்னமோ உண்மை தான்!
அதுவும் அந்நிய ஆளும் கும்ப லுடன் தொடர்ந்த வந்த மதப் பரப்பி களின் மதத் தேவை கருதி, தமிழ் மொழி ஓரளவிற்கு உலக நாடுகள் பலவற்றிற்கும் பரவலாகத் தெரிந்திருந்ததும் வாஸ்தவம்தான்.
ஆனால், தமிழ் மொழியின் கனங் காத்திரம், அதனது இலக்கிய ஆளுமைச் சிறப்பு, தொன்மை போன்றவற்றை நேரடி யாகவும், எதார்த்தமாகவும் தெரிந்து, புரிந்து கொண்டது, எம்மவர்கள் பற்பல தேசங் களில் புலம்பெயர்ந்து குடியேறி, அந்த மண் ணின் புத்திரர்களாகப் பதிவு செய்துகொண் டதன் பின்னர்தான், தமிழ் என்றொரு பாஷை இந்த உலகில் இருக்கின்றது என்று ஐரோப்பியன், கனடியன், அவுஸ்தி ரேலியன் தெரிந்து, புரிந்து கொண்டான்.
இதனது ஒட்டுமொத்தப் பெறுபேறு தான் இலங்கைத் தலைநகரில் சமீபத்தில் நடந்தேறிய உலகத் தமிழ் எழுத்தாளர் களின் ஒன்றுகூடலாகும்.
مصادكه نعمحمحمسح>
summummaso

.ர் குற0 கை
தமிழ்நாட்டில்தான் எத்தனையோ மகத்தான தலைவர்கள், சாதனையாளர்கள்,
அரசியல் ஞானிகள் எல்லாம் இதுவரை தோன்றியுள்ளனர். பலர் மறைந்தும் போயுமுள்ளனர்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் முழு இந்தியத் தேசமுமே வியந்து பார்க்கத்தக்க அத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களும், தியாகிகளும் உதித்த நாடு, தமிழ்நாடு தமிழ் மண்
பெரியார், காமராஜர், ராஜாஜி, ஜீவா, சத்தியமூர்த்தி, பக்தவஸ்தலம், மூப்பனார், கக்கன், மதுரை வைத்தியநாதய்யர், பாலதண்டாயுதம், அண்ணா, கல்யாணசுந்தரம், நல்லக்கண்ணு, நெடுஞ்செழியன், மோகன் குமாரமங்கலம், எம்.ஜி.ஆர் என மக்கள் மனசுகளில் இன்று வரைக்கும் அழியாமல் தத்தமது நாமங்களைப் பதிய வைத்திருக்கும் பல்வேறு வகைப்பட்ட பெருந் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் தமிழக மண்ணில் இதுவரை வாழ்ந்து மடிந்து போயுள்ளனர். பலர் வரலாறு படைத்துள்ளனர். இன்றும் நின்று நிலைக்கின்றனர்.
இவர்களில் இன்று புத்தம் புது வரலாறு படைத்துள்ளவர்தான், நேற்றுவரை தமிழக முதல்வராக வீற்றிருந்து, இன்று எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வரமுடியாமல் அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டுவிட்ட கலைஞர் அவர்கள்.
பலர் இன்றைய ஆட்சி அதிகார வெற்றிக்கு ஜெயலலிதாதான் காரணம் என நம்புகின்றனர். இது தவறு. இது கூட, எம்.ஜி.ஆரின் வெற்றிகளில் ஒன்றுதான் ܀
கலைஞர் மகா மகா தந்திரசாலி. திட்டுமிட்டுக் காய் நகர்த்துவதில் விண்ணன்! அண்ணா வின் மனப் பலவீனங்களைப் புரிந்துகொண்டு, தமிழக அரசியலில் காய் நகர்த்தி, வெற்றி கண்டவர். மெல்ல மெல்ல நெடுஞ்செழியனை ஒரங்கட்டி, கட்சிக்குள் முக்கியத்துவம் பெற்றார். இதையடுத்து, எம்.ஜி.ஆரின் வெகுசனப் புகழை மதிப்பிழக்கச் செய்து இயக்கத்துக்குள் இருந்து ஒதுக்க முற்பட்டுச் செயற்பட்டார்.
கலைஞர் செய்த மிகப் பெரும் அரசியல் தவறு, இதுவேதான்! தோழர் கல்யாண சுந்தரத் தின் ஆழ்ந்தகன்ற அரசியல் விழிப்புணர்வுடனும், வழிகாட்டலுடனும் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் ஓர் அரசியல் சக்தியாகவே வெளிக்கிளம்பினார், ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்.
கலைஞர் இதைப் புரிந்துகொள்ளவேயில்லை. மாறாக, கட்சியை முழுவதுமே கைப்பற்றிக் கொண்டு கட்சிக்குள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் தனது குடும்ப அதிகாரத்தை விஸ்தரித் துக் கொண்டார். அரசியல், சினிமாத்துறை உட்பட சகல துறைகளிலும் குடும்பமே ஆதிக்கம் செலுத்தியது. டில்லியிலும் விஸ்தரிக்கப்பட்டது. அதன் பிரதிபலிப்புத்தான் கனிமொழியின் 2ஜி ஊழல் வழக்கு
ஆனால், கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கட்டம் கட்ட மாகத் தோல்வியைத் தழுவிக்கொண்டு வந்துள்ளார். கடைசியில் தமிழகம் இவரை மட்டுமல்ல, இவரது குடும்ப அரசியலையுமே நிராகரித்து விட்டது. விட்டு விடுங்கள் - முடிந்துபோன சங்கதி, இது

Page 4
தலையே தனது வாழ்வாக வாழும் கலைச்செல்வன் என்கிற ஆளுமை
- வதிரி சி. ரவீந்திரன்
வடமராட்சியில் கரவெட்டிக்கு என்று ஒரு வரலாற்றுப் பெருமை உண்டு. அதே போன்று கரவெட்டி பண்டிதர் க.வீரகத்திக்கும் ஒரு பெருமைமிகு வரலாறு இருக்கிறது. கலைஞர் கலைச்செல்வன் அவர்கள் கரவெட்டி பண்டிதரின் சீடனென அறிந்தபோது அவரிடத்தில் எனக்கு அலாதியான பிடிமானம் ஏற்பட்டதால், அவரோடு எனக்கு நெருக்கமான உறவு. இதனால் அவரது பரிமாணத்தின் பல பக்கங்களை தரிசிக்கும் வாய்ப்பைப் பெறமுடிந்தது.
பண்டிதர் வீரகத்தி அவர்களிடம் தமிழ் பயின்று - தமிழை சுவாசிக்கக் கற்றுக் கொண்ட கலைச்செல்வன் அவர்கள் சிரேட தராதரப் பத்திரப் பரீட்சைக்கு (S.S.C) 1960இல் மன்னவன் கந்தப்பு, பண்டிதர் த.தர்மலிங்கம், பண்டிதர் அருணாசலம் ஆகி யோரின் இலக்கிய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு, இலக்கிய பாடத்திலும் விசேட சித்தியை (DISTINCTION) பெற்றார். அதனால்தான் தமிழ் இன்று இவரிடத் தில் கைகட்டி சேவகம் செய்கிறது.
ஈழத்துத் தமிழ் நாடக வரலாற்றில் அறுபதுக்குப் பின்னரான காலகட்டத்தில் பிரதான கலைச் சிற்பியாகக் கருதப்படுபவர் கலைச்செல்வன் அவர்கள்.
ஒரு கலைஞன் பல்துறை சார்ந்த கலைஞனாக விளங்குவான். ஆனால், ஏதோ ஒரு துறையில்தான் அவனது ஈடுபாடும் திறமைகளும் வெளிப்படும். அவனால் வெளிக் கொணரப்படும் கலைத்துறையில் எல்லாச் சிறப்புகளும் பெற்று விளங்குபவர்களை ஒரு கைவிரலுக்குள் அடக்கி விடலாம். அந்தவகையில் இருவரையே என்னால் இற்றைவரை நோக்க முடிந்தது.
ஒருவர் பல்கலை வேந்தன் எனப் பெயர் பெற்று. மறைந்தும் மறையாத சில்லையூர் செல்வராசன அவர்கள், அடுத்தவர் கலாபூஷணம் கலைச்செல்வன்
மல்லிகை ஜூன் 2011 & 4

ஆவார். சில்லையூராரிடத்தில் இருந்த சில சிறப்பியல்புகள் கலைச்செல்வனார் இடத்திலும் காணலாம். வயது அறுப தைந்து தாண்டினாலும், வுாலிபத் தோற் றம். சில்லையூரான் போன்று நடையிலும் உடையிலும் செயல்பாட்டு முறையிலும் செழுமை காட்டுபவர்.
கலைவாழ்வில் ஐம்பது ஆண்டு களைக் கடந்த இப்பொன்விழாக் கலை ஞர் சாதித்தவை பல. அவை வானொலி, மேடை நாடகம், சினிமா, சின்னத்திரை, வில்லுப்பாட்டு, மெல்லிசை, ஊடகம் என்று விரிந்து, பரந்தது. எதிலுமே சோடை போகாது, எடுத்துக் கொண்ட எல்லாத்துறைகளிலும் தன் ஆற்றல் வேர் களை ஆழமாகப் பதித்தவர். எழுத் தாளர், நெறியாளர், நடிகர், கவிஞர், பாட கர், பத்திரிகையாளர், மேடைப் பேச் சாளர் எனப் பலராலும் வியந்துரைக்கப் பட்டார். அவரது அழகு தமிழ்ப் பேச்சைக் கேட்கின்றபோது சர்க்கரை இல்லாம லேயே காப்பி குடிக்கலாம்.
கொழும்பிலே கலைஞர்களின் குரு குலமாகத் திகழ்ந்த நாடகத் தந்தை. கே. பி.ஏ.இராஜேந்திரம் மாஸ்டரின் மனோற ஞ்சித கான சபாதான் கலைச்செல்வன் எனும் பல்கலைச் செல்வன் வளர்ந்த பாசறையாகும். எனினும் தனது கலைத் துறை குருவாக இவர் மதிப்பதுவும், துதிப்பதுவும், தமிழ் நாட்டைச் சேர்ந்த நாடகக் கலைஞர் எம்.என்.இராஜ ரத்தினம் பிள்ளை அவர்கள்தான்.
அரு. இராமநாதனின் அசோகன் காதல்’ என்ற நாவலை இளவரசன்’ என்ற பெயரில் வரலாற்று நாடகமாக்கி
(1959) கலைச்செல்வனை அதில் நடிக்க வைத்து அவரது ஆற்றல்களை அடை யாளப்படுத்தியவர்தான் இராஜரத்தினம் பிள்ளை.
இந்திய வடநாட்டைச் சேர்ந்த எல் பின்ஸ்டன் நாடகக் குழுவினரின் பார்சி முறையிலான நாடக மரபையொட்டிய நாடகங்களை, சிங்கள நாடகத்துறை யின் முன்னோடிகளான சட்டத்தரணிகள் சார்ளஸ் டயஸ், டொன் பெஸ்ரியன், ஜோன். டி. சில்வா போன்றோர் அரங்கேற் றலானார்கள். அவர்களைப் பின்பற்றி கலையரசு சொர்ணலிங்கத்தாரும் இரா ஜேந்திரம் மாஸ்டரும் நாடகங்களைத் தயாரித்தனர். இந்நாடகங்களில் (1940) ‘ராஜபாட்’ வேடம் போட்டவர் கலைச் செல்வனாரின் தந்தை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப் பிடுவது பொருத்தமானது. ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் இராஜேந்திரம் மாஸ்டரின நாடகப் பாரம்பரியம் என்ற ஒன்றுண்டு. அது வெறும் சினிமாப் பாரம்பரியம் அல்ல என்பது நோக்கற்பாலது. பதியப் படாத அந்நாடக மரபு பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதவுள்ளேன்.
கலைத்துவ நுட்பம் மிக்க தகைசார் அரங்கியலாளரான கலைஞர் கலைச் செல்வனது தனித்துவமிக்க நாடக முயற் சிகள் சிங்கள நவீன நாடக அரங்கின் முன்னோடிகள் ஹென்றி ஜயசேன. தம்மா ஜாகொட, சுகத பால டி. சில்வா போன்றோரின் நாடக முனைப்புகளை அடியொட்டியது என்பது நம்மில் பலருக் குத் தெரியாத சங்கதி. அவரது நாடகச் சிந்தனைகளில் முற்போக்குக் கருத்து
மல்லிகை ஜூன் 2011 & 5

Page 5
களை விதைத்தவர் அறிஞர் அ.ந.கந்த சாமி என்பதும் இன்னுமொரு உண்மை u T(5th.
றேடியோ சிலோன் சிறுவர் மலர் வானொலி நிகழ்ச்சியின் ஊடாக வெளி வந்த விருட்சங்களில் இவரும் ஒருவர். குஞ்சிதபாதம் மாமா (கூத்தாடி) அதன் பின்பு சரவணமுத்து மாமா ஆகியோர் சிறுவர் மலரில் மலரவைத்த மதிப்பிற் குரியவர்களாவர். சிறுவர் மலரில் தடம் பதித்த அனைவருமே பெயர் பெற்ற கலைஞர்களாக மிளிர்ந்துள்ளார்கள். அந்த வகையில் வானொலி கலைஞர் களில் அண்ணன் கலைச்செல்வனுக்கும் ஒரு தனியிடம் உண்டு.
அறுபதுகளில் வானொலித் தேர் வில் சித்தி பெற்று திரு. வி.ஏ.சிவஞானம், கலாஜோதி எஸ்.சண்முகநாதன், (சானா) ஜனாப் எம்.எச்.குத்துஸ் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் நாடகம், கிராம சஞ்சிகை, உரைச்சித்திரம், ஊடுருவல், கதம்பம், சிறுகதை என இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங் கெடுத்துக்கொண்டதுடன், படைப்பாளி யாகவும் முத்திரை பதித்துள்ளார்.
இதுவரை அறுபது நாடகங்களில் நடித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடவை மேடையேற்றம் கண்டுள்ள தோடு, இருபத்து நான்கு நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியுள்ளார். தினகரன் தமிழ் நாடக விழா, தேசிய நாடகவிழா, அரச நாடக விழா, கலாசார திணைக்கள நாடக விழா, மத்திய வங்கி நாடக விழா போன்றவற்றில் இவரது நெறியாள்கை யில் மேடையேறிய சுய ஆக்கங்களான மனித தர்மம், சிறுக்கியும் பொறுக்கியும்,
ஒரு கலைஞனின் கதை தழுவல் ஆக் கங்களான டைமன் ராணி, சக்காராம் பைண்டர், ஒத்தெல்லோ, அந்தனி ஜீவா எழுதிய அலைகள், அக்கினிப் பூக்கள் ஆகிய நாடகங்கள் இவரை சிறந்த நடி கர், சிறந்த தயாரிப்பாளர், சிறந்த இயக் குநர் எனப் பல விருதுகளுக்கு சொந்தக் காரராக்கியுள்ளது.
திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத் திய திரைப்படப் பிரதியாக்கப் போட்டி யில் இவர் எழுதிய சிவப்பு நிறத்தில் ஒரு பச்சைக் கிளி என்ற பிரதி சிறப்புப் பரிசைக் பெற்றது. அதேபோன்று, இவர் கதை, திரைக்கதை.வசனம் எழுதிய ஆத்மாவின் ராகங்கள், மக்கள் என் பக்கம், ஒரு மனிதன் இரு உலகம் (சிங் களம்) ஆகியவை திரைப்படக் கூட்டுத் தாபனத்தால் முதன்மை (A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவரது திரைக்கதை வசனத்தில் உருவான அமரர் வி.பி. கணேசன் தயாரித்த நான் உங்கள் தோழன், இலங்கையில் தயாரிக்கப்பட்ட படங்களில் அதிக வசூலைக் கொடுத்த படமாகும். கலைச் செல்வன் அண்ணனின் தயாரிப்பு மேற் பார்வையில் உருவான ஒருதலைக் காதல் எனும் டப்பிங்' படத்துக்கு O.C. I.C நிறுவனம் சிறந்த கலைநிர்மாணத் துக்கான விருதை வழங்கியுள்ளது. இத் திரைப்படத்தின் நாயகனுக்கும் 'ஷர்மிளா வின் இதயராகம் சினிமாவின் இரண்டா வது நாயகனான நடிகர் மோகன் குமா ருக்கும் இவரே பின்னணிக் குரல் கொடுத் துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
இருபது தொலைக்காட்சி நாடகங் களுக்கு மேல் நடித்துள்ள கலைச்
மல்லிகை ஜூன் 2011 奉

செல்வன் பன்னிரண்டு "டெலி டிராமா'க் களையும் எழுதியுள்ளார். ஜோசப் பெர் னாண்டே தயாரித்தளித்த மகரந்தம் எனும் வீடியோ ஆல்பத்தில் எழுத் தாக்கமும் இயக்கமும் இவருக்குரியதே. இவர் இயக்கிய காலஞ்சென்ற நடிகர் பூரீநிவாசகம் பூரீஹரன் தயாரித்த 'ஒத்தெல்லோ மேடை நாடகம் இறுவட்டு வடிவில் வெளியாகியுள்ளது. இறுவட்டு இலங்கையில் வெளியான முதல் மேடை நாடகமும் இதுவாகும். விருதுகளோடு வாழும் இப்பொன் விழாக் கலைஞரோடு கெளரவங்களும் பட்டங்களும் இணைந்து சங்கமிக்கின்றன. கலை ஞானி, கலாகேசரி, கலைஞர் திலகம், கலைச்சுடர், நாடகக் கலாபமணி, கலை யுலக நாயகன், இயக்குனர் சிகரம் எனப் பட்டங்களும் நீளுகின்றன. திருச்சிக் கலாசாரப் பேரவை புரட்சிக் கலைஞர் என்றும் கவியரசு வைரமுத்து 'கலை இலக்கிய நாயகன்’ என்றும் கெளரவித் துள்ளனர். கலாசார அமைச்சு கலா பூஷணம் எனும் கெளரவ விருதையும், (1998) கலாசார அமைச்சின் பொன் விழாவும் மரபுசார் நாடகக் கலையையும் உலகிற்கு அறிமுகப்படுத்துவதில்
பங்களிப்புச் செய்தமைக்காக விசேட
விருதையும் (2007) ஐந்து தசாப்த கால கலைப் பணியை கெளரவிக்கும் பொருட்டு தேசிய உயர்விருதுகளான முதுகலைஞர் விருதையும் (2008) வழங்கி இவரைப் பெருமைப்படுத்தியுள் ளது. இந்தக் கெளரவங்களைப் பெற்ற ஒரே கலைஞராக இவரே விளங்குவார்.
பத்திரிகைத் துறையில் விடிவு, சூரியன், கதிரவன் ஆகிய பத்திரிகை
களின் ஆசிரியராகவும், திரைக்கலை சினிமா சஞ்சிகையின் உதவி ஆசிரிய ராகவும் பணியாற்றியுள்ளார்.
கலைச் செல் வண் அவர்களின் மூன்று நாடகங்கள் நூல் வடிவம் பெற் றுள்ளன. ஒரு கலைஞனின் கதை புர வலர் புத்தகப் பூங்காவின் வெளியீடா கவும், சக்காராம் பைண்டர், மனித தர்மம் இலக்கிய முற்றத்தின் சார்பாகவும் வெளி வந்துள்ளன. ஒரு கலைஞனின் கதை 2008ஆம் ஆண்டின் சிறந்த நாடக இலக் கியத்திற்கான அரச சாகித்திய விருதை யும், சிறந்த நாடக நூலுக்கான யாழ். இலக்கியப் பேரவையின் விருதையும் பெற்றது. தமது முதல் நூலிலேயே இவ் விரு விருதுகளையும் பெற்ற கலைஞரும் இவரேயாவார்.
இப்பொழுது கலைச்செல்வனாரின் ஆற்றுகைகள் பல்கலைக்கழக மட்டத் திலும் பேராசிரியர்கள் மத்தியிலும் பெரி தும் பேசப்படுகிறது. இவரை உச்சத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற நாடகமான சிறுக்கியும் பொறுக்கியும நாடகத்தைப் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர் கள் அரங்கிற்கு அரசியல் பேசக் கற்றுக் கொடுத்த நாடகமென வர்ணிக்கிறார்.
சிங்களக் கலைஞர்கள் படிக்க வேண்டிய
எவ்வளவோ சங்கதிகள் இந்நாடகத்தில் உண்டு என இலங்கைக் கலைக்கழகத் தின் மாவத சஞ்சிகையில் குறிப்பிட்டுள் ளார் கலாநிதி சுசில் சிறிவர்தன. மெக் ஸிம் கோர்க்கியின் பாணியில் அமைந்த நாடகமென ஆங்கிலத் தினசரி ஒன்றில் திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் பதிவு செய்துள்ளார்.
மல்லிகை ஜூன் 2011 辜 7

Page 6
அர்ப்பணிப்பு மிக்க கலைஞர்களின் வாழ்க்கையை நாடக மேடைக்கு அறி முகப்படுத்தியதில் ஒரு கலைஞனின் கதைக்கு பெரும் பங்குண்டென பேரா சிரியர் துரை மனோகரன் குறிப்பிடுகிறார்.
அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த தமிழ் நாடக உலகை ஒத்தெல்லோ நாடகத்தின் மூலம் தலைநிமிரச் செய்த பெருமை கலைச்செல்வனையே சாரும் என்றும், கலைச்செல்வனது நாடகங்களை ஆய்வு செய்ய வேண்டுமென்றும் பேராசிரியர் சி.மெளனகுரு கருத்து வெளியிட்டுள் ளார். கலைஞர் கலைச்செல்வன் கடந்த அரை நூற்றாண்டுக் காலப்பகுதியில் கலைத்துறையில், குறிப்பாக ஈழத்தமிழ் நாடகத்துறையில் நாட்டிய சாதனை களையும் பெற்ற விருதுகள், பாராட்டு களையும் பார்த்து அவரிடத்திலிருந்த ஆற்றலை இளமையிலேயே அடை யாளம் கண்ட ஒருவன் என்ற முறையில் நான் பெருமகிழ்வு எய்துகிறேன் என எழுதுகிறார் பேராசிரியர் எஸ்.தில்லை நாதன் எழுதியுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் ஊடாக நாடகச் செயற்பாடுகள் வளர்ந்தது. பல்கலைக்கழகத்திற்கு வெளியிலிருந்து அச்செல்நெறியை கலைஞர் கலைச் செல்வன் திடப்படுத்தியுள்ளார் என பேரா சிரியர் சபா ஜெயராசா சுட்டிக் காட்டு கிறார். இவைகள் கலைச்செல்வன் அவர் களின் அரங்கியல் புலமைக்கும் , அரங்கச் செயற்பாடுகளின் ஆளுமைக் கும் எடுத்துக் காட்டாகும்.
கலைச்செல்வன் தேசிய நாடக குழுவில் அங்கம் வகிக்கும் காலம்தான் கலைஞர்களுக்கு பொற்காலமாகும். இதுவரை சிங்களக் கலைஞர்களுக்கு மட்டுமே கிடைத்துவந்த முதுகலைஞர் விருது இப்போது தமிழ்க் கலைஞர் களுக்கும் கிடைக்கிறதென்றால், சிங் களக் கலைஞர்களுக்குச் சமமாக பணப் பரிசுகளும் விருதுகளும் தமிழ்க் கலை ஞர்களுக்கும் வழங்கப்படுகிறதென்றால் அது அவரது முயற்சியின் பயனாகும். அது மாத்திரமின்றி. இம்முறை சிறுவர் நாடக விழாவும் குறு நாடக விழாவும் நடைபெறுவதற்கான அவரது நடவடிக் கைகளில் எனது பங்கும் உள்ளது என்பதில் எனக்குள்ளும் ஒரு மகிழ்வு.
இன்று நாடு பூராவும் அரங்கியல் படித்த, படிக்கும் மாணவ, மாணவி களுக்காக தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக நாடக பயிலரங்கு களை கலைச் செல்வன் அவர்கள் நடத்திக் கொண்டிருப்பது அவரது ஆற் றலுக்கும் ஆளுமைக்கும் ஒரு எடுத்துக் (BTLLTS5D,
சிரேஷ்ட கலைஞர் கலைச்செல் வனின் கலைவாழ்வுக்கு அவரது தந்தை அத்திவாரம் போட்டுவைத்தார். அவரது வளர்ச்சிப்படிக்கு அவரது துணைவியார் மஷாஹரிமா கலைச்செல்வன் உறு துணையாக இருப்பதால் தான் இன்று இவர் சிகரத்தின் சிகரமாக ஒளிர முடி கிறது. இவர் தம் கலைவாழ்வின் தடங்களை நன்கு புரிந்து கொண்ட மல்லிகை கலைச்செல்வன் பல்கலைச் செல்வனாக நீடு வாழ வாழ்த்துகிறது.
மல்லிகை ஜூன் 2011 & 8

மாலை ஒன்பது மணியிருக்கும்.
அந்தக் கட்டிடத்தின் வலது பக்க எல்லைச் சுவரோடு அமைக்கப்பட்டிருக்கும் கம்பிக் கூட்டுக்குள் சுபத்திரா இருக்கிறாள். அமர்ந்திருக்கிறாள். இந்தக் கம்பிக் கூட்டுக்குள் வருவதும் அமர்வதும் போவதும் சுபத்திராவுக்குப் புதிய அநுபவங்களல்ல. பதினைந்து தடவைகளுக்கு மேல் இக்கூட்டுக்குள் வந்துபோன அநுபவம் அவளுக்குண்டு.
இந்த நாட்டின் சட்டதிட்டங்களை மீறித் தவறிழைத்தவர்களை இந்தக் கம்பிக் கூட்டுக்குள்ளத்தான் தங்கவைத்து விசாரணை நடத்துவார்கள். இந்தக் கட்டிடத்தைத் தொடர்ந்து எத்தனையோ கட்டிடங்கள் அமைந்துள்ளன. ஆனால் இந்தக் கட்டிடத்தைப் பார்க்கும்போது எங்களை அறியாமலேயே
மனதுக்குள் ஏதோ ஒருவித பீதி உணர்வு தோன்றும்.
- கே.ஆர். டேவிட்
அந்தக் கம்பிக் கூட்டுக்குள் இருபத்தைந்து, முப்பது பேர் வரையில் இருக்கின்றனர். இவர்களில் ஆறுபேர் பெண்கள். இந்தப் பெண்களில் சுபத்திராதான் இளையவள்.
கம்பிக் கூட்டின் வாசலில் இரண்டு காக்கிச்சட்டைக்காரர்கள் காவலுக்கு நிற்கின்றனர்.
சுபத்திரா மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுவும் சாதாரண கொலையல்ல. பிறந்த வடுமாறாத குழந்தையை குழி தோண்டிப் புதைத்த கொலைக் குற்றம்..!
சுபத்திரா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு விட்டாள்.
மல்லிகை ஜூன் 2011 & 9

Page 7
”இந்தக் குழந்தையைப் பெற்ற வள்நீதானே.” சட்டம் கேட்டது.
“ஓம்’ சுபத்திரா ஆமோதித்தாள்.
“இந்தக் குழந்தையைக் குழி தோண்டிப் புதைச்சது நீதானே?”
"பெத்த புள்ளையைப் புதைக்க வேண்டிய அவசியம் என்ன?’ சட்டம் காரணத்தைக் கேட்டது.
சுபத்திரா எதுவுமே கூறாமல் அழுதாள். இந்தக் கேள்விக்கு சுபத் திராவிடம் பதில் இல்லாமல் இல்லை. பூவரசம் இலையை மயிர்க்கொட்டி அரிப்பது போல் அவளது இதயத்தை அரித்துக் கொண்டிருக்கும் அந்தச் சம்பவத்தை அவளால் கூறமுடியும். அதன் பின்பு வரும் விளைவுகளுக்கு இவர்கள் untriy,6Trr?
'கள்ளப் புள்ளை பெத்திருப் பாள். பெத்துப் போட்டுக் கிடங்கு வெட்டிப் புதைச்சிருப்பாள்.” காக் கிச்சட்டைக்காரர்களும், கறுப்புக் கோட் போட்டவர்களும் இப்படித் தான் பேசிக்கொண்டனர். சுபத்திரா வின் செவிப்பறைகளிலும் இப்பேச்சுக் கள் விழுந்தன. இதுவரையில் இப்படி எத்தனையோ பேச்சுக்களைக் கேட்டு அவளது செவிப்பறைகள் மரத்துப் போய்விட்டன.
சுபத்திராவுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்பது அவளுக்குத் தெரியும். அதிலும் தனக்குக் கடுமை
பாதுகாப்பு கொடுப்
யான தீர்ப்புத்தான் வழங்கப்படும் என்பதையும் அவள் விளங்கி வைத் திருந்தாள். தனக்குக் கிடைக்கப் போகும் தீர்ப்பை எண்ணி அவள் கலங்கவில்லை! அவ்வளவிற்கு அவள் துணிச்சல் காரியில்ல. கடந்த ஐந்து மாதங்களாகக் கம்பிக் கூட்டுக்குள் அடைபட்டுக் கிடந்து. காக்கிச் சட்டைக்காரர்களினதும், கறுப்புக் கோட்காரர்களினதும் நடவடிக்கை களைப் பார்த்துப் பார்த்து அவளது மனம் கல்லாகி விட்டது. 3
அந்தக் கல்லுக்குள்ளும் நீர் சுரப் பது போல், அவளது தாய் மலர். தனிமைப்பட்டு அவதிப்படப் போகி றாள் என்பதை நினைத்துத்தான் அவள் கலங்குகிறாள்.
”. தங்கச்சி கவலைப்படாதை. நீ ஏன் கொலை செய்தாய் எண்ட உண்மை கடவுளுக்குத் தெரியும்.” சுபத்திராவுக்குப் பக்கத்தில் இருந் தவள் கூறுகிறாள்.
சுபத்திரா தனக்கு நடந்தவை களையும், தான் செய்தவற்றையும் விளக்கமாக அவளிடம் கூறியிருந் தாள்.
சுபத்திரா திரும்பி அவளைப் பார்க்கிறாள். குழந்தைப்பிள்ளை போல் அவளது உதடுகள் துடிக்க. அவளது கண்களிலிருந்து கண்ணிர் வடிகிறது.
"நான் என்னைப் பற்றிக் கவலைப் படவில்லை அக்கா. என்ரை அம்மா பாவம். இனிமேல் தனிச்சிருக்கப் போறா. நான் வீட்டை போறதுக்கு
மல்லிகை ஜூன் 2011 & 10

முதல் அம்மா செத்துப் போயிடுவா.” நாத் தளதளக்க, மனம் அவிந்து சுபத்திரா கூறுகிறாள்.
".. தங்கச்சி உன்ரைஅம்மா வந்து நிக்கிறா.” அவள் கூறுகிறாள். சுபத் திராவோடு சேர்ந்து பலதடவைகள் அவளும் இங்கு வந்ததால் சுபத்திரா வின் தாயைத் தெரிந்து வைத்திருந் தாள்.
தலையைக் குனிந்திருந்த சுபத் திரா நிமிர்ந்து கம்பிகளுக்கூடாக விறாந்தையைப் பார்க்கிறாள். அவளின் தாய் மலர் வேதனையில் வறண்டு சருகாகிப் போய் நிற்கிறாள்.
கம்பிக் கூட்டுக்குள் உள்ளவர் களின் உறவினர்கள் இந்த விறாந்தை யில் நின்றுதான் கம்பிக் கூட்டுக்குள் உள்ளவர்களை பார்ப்பார்கள். கம்பிக் கூட்டுக்குக் கிட்டப் போகவோ, பேசவோ அனுமதிக்கப்பட மாட் டார்கள்.
ஓசையும், உருவமுமற்ற பார் வைக் கோடுகளுக்கு மட்டும் அனுமதி உண்டு.
சுபத்திராவின் மரத்துப் போன இதயத்துள் தொப்புள் கொடி உறவின் துடிப்பு.
ஒரு மனிதனின் மனம் முதல் ஸ்பரிசிக்கின்ற உறவும், அவனது நாக்கு முதல் உச்சரிக்கின்ற வார்த் தையும் அம்மாதான். ஈடில்லாத ஒரு உறவு.
சுபத்திரா தாயைப் பார்க்கிறாள். அவளை அறியாமலேயே அவளது
கண்களிலிருந்து கண்ணிர் மாலை களாய் வடிகின்றது!
ஏழைகளுக்கும், அப்பாவிகளுக் கும் தங்களின் துயரங்களைக் கண்ணி ராய் இறக்கிவிட உதவுகின்ற வடிகால் தான் இந்தக் கண்கள்.!
பிறக்கின்ற அத்தனைக் குழந்தை களுமே அழுதுகொண்டுதான் பிறக் கின்றன. அப்படி அழத்தவறிய குழந் தைகளையும் முதுகில் தட்டி அழ வைக்கின்றனர். இதுவரையில் ஒரு குழந்தையாவது சிரித்துக்கொண்டு பிறந்ததாக எந்தப் பதிவும் இல்லை!
இந்த அழுகை. பிறக்கின்ற குழந்தைகளின் எதிர்கால வாழ்வு
பற்றிய ஒரு முன்னறிவித்தலா..?
கிராமத்திலேயே பிறந்து, கிரா மத்து மண்ணிலேயே மண்புழுக் களாய் ஊர்ந்து, கண்டதையும் திண்டு உடல் வளர்ந்ததே தவிர, அவர்களது உள்ளங்கள் வெறுமையாய்த்தான் கிடந்தன. வாழ்க்கையின் பொறிக் கிடக்குகளைச் சந்திக்கின்ற வாய்ப்பு கள் அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
சுபத்திராவும் இதற்கு விதிவிலக் கானவள் அல்ல. மிகவும் மென்மை யானவள். பொறுமைசாலி, அத்தோடு அப்பாவித்தனமானவள்.
சுபத்திரா தனக்குள் இப்படி யொரு கொலைத் துணிவு எப்படி வந்ததென்று இப்போதுதான் சிந்திக் கின்றாள். அவளாலேயே அவளை நம்பமுடியவில்லை.
மல்லிகை ஜூன் 2011 & 11

Page 8
புண்ணுடம்போடு, மண்வெட்டி யால் கிடங்கு வெட்டி, அந்தக் கிடங் கிற்குள் அந்தக் குழந்தையைப் போட்டு மண்ணால் மூடிய அந்தச் சம் பவம். ஒரு கனவு போலத்தான் அவளுக்குத் தெரிகின்றது.
அப்படிப்பட்ட அப்பாவியான சுபத்திரா. இன்று கொலைகாரியாக நிற்கிறாள்!
தாயைப் போகும்படி கைகளால் சைகை காட்டுகிறாள் சுபத்திரா. ஆனால் மலரோ, தனது வலது கையி லுள்ள ஐந்து விரல்களையும் விரித்து, நிமிர்த்தி, இடது கையிலுள்ள சுட்டு விரலை மடித்து, ஆறு விரல்களையும் உயர்த்திக் காட்டுகிறாள். ”உனக்கு ஆறு வருஷமாவது மறியல் தீரும் எண்டு வெளியிலை நிக்கிற எல்லோ ரும் கதைக்கினம்’ என்ற செய்தியைச் சூட்சுமமாக அவள் கூறுகின்றாள்.
சதை வடிந்து எலும்பாகி விட்ட அந்த ஆறு விரல்களும் நடுங்குகின்றன. சுபத்திராவால், மலரின் சூசகமான மொழியைப் புரிந்துகொள்ள முடிய வில்லை. கேள்விக்குறியோடு தாயைப் பார்க்கிறாள். மலர் திரும்பத் திரும்ப அந்த ஆறு விரல்களையும் காட்டு கிறாள்.
மலரைப் போகும்படி மீண்டும் கைகளால் சைகை காட்டுகிறாள், சுபத்திரா. ஆனால் மலரோ கைவிரல் களால் முகத்தைப் பொத்திக் கொண்டு அழுகிறாள்.
சுபத்திரா.
துரைராசா - மலர் இவர்கள்தான்
இவளின் பெற்றோர். சுபத்திரா இவர் களுக்கு ஒரே மகள்!
பரந்தன் சந்தியிலிருந்து புதுக்குடி யிருப்புக்குச் செல்லும் நீண்ட பாதை யில் அமைந்துள்ள சுதந்திரபுரக் கிரா மம்! இங்குதான் இவர்கள் வாழ்ந் தார்கள்.
சுதந்திரபுரச் சந்தியிலிருந்து கூப் பிடு தொலைவில் இடதுபக்கமாக ஒரு கிறிஸ்தவத் தேவாலயமும், இந்தத் தேவாலயத்தை மருவினாற் போல் ஒரு மண் ஒழுங்கையும் அமைந்துள்ளது. இந்த மண் ஒழுங்கையில் தேவாலயத் தின் பின்புறமாக மூங்கில் தடிகளால் கட்டப்பட்ட ஒரு படலையும், அந்தப் படலையை அடுத்து ஒரு குடிசை வீட் டையும் காணலாம். இன்னும் அழுத் திக் கூறினால் முற்றத்திலுள்ள பூவரசு மரத்தில் பாவிக்க முடியாத பத்தோ பதினைந்து சைக்கிள் ரயர்கள் கொழு வப்பட்டுள்ளன. அதுதான் துரைராசா குடும்பத்தின் குடி நிலம்.
அந்தத் கிறிஸ்தவ தேவாலய வாசலை அண்மித்து ஒரு பஸ்தரிப்பு நிலையமும், அந்த பஸ்தரிப்பு நிலை யத்தை மருவினாற் போல் ஒரு பாலை மரமும் நிற்கின்றது. இந்தப் பாலை மரத்தடியில் தென்னோலைகளால் அமைக்கப்பட்டதொரு சைக்கிள் கடை. இதுதான் துரைராசாவின் தொழிற் கூடம்!
மலரும், சுபத்திராவும் கிடுகு பின்
னப் போவார்கள்.
சுதந்திரபுரம் பாடசாலையில் ஆண்டு ஐந்து வரையிலான வகுப்புகள்
மட்டுந்தான் இருந்தன. துரை
மல்லிகை ஜூன் 2011 & 12

ராசாவுக்கு சுபத்திராவை எப்படியும் படிப்பிக்க வேணுமென்று ஆசை இருந் தது. அப்போதிருந்த போராட்ட சூழ லும், இளசுகளை இயக்கத்தில் சேர்க் கின்ற நடவடிக்கைகளும் துரைராசா வுக்கு மனப்பயத்தை ஏற்படுத்தின.
விடுதலை இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்பவர்களை இறந் தவர்களாகக் கருதுகின்ற ஒரு உணர்வு அப்போது மேலோங்கியிருந்தது.
கல்வியில்லாவிட்டாலும், பிள்ளை உயிரோடிருந்தால் போதும் என்ற முடிவில் சுபத்திராவை தங்களோடு வைத்துக்கொண்டான், துரைராசா.
எங்களோடு
சுபத்திராவின் படிப்புத் தடைபட் டது. வீட்டில் தனித்து நின்ற சுபத்திரா சில நாட்கள் தகப்பனோடு சைக்கிள் கடையில் நின்றாள். அந்தச் சூழல் அவளுக்குப் பிடிக்கவில்லை. தாயோடு கிடுகு பின்னப் போக ஆரம்பித்து விட்டாள்.
விடுதலைப் போராளிகள்தான் இந்த கிடுகு பின்னும் தொழில் ஸ்தாப னத்தையும் நடத்தினர்.
தென்னை ஒலைகளைக் கொள் வனவு செய்து, அவற்றை ஆற்றுநீரில் ஊறப் போட்டு கிழித்து அடுக்கியிருப் பார்கள். மலரும் சுபத்திராவும் இவர்க ளோடு இன்னும் பலரும் காலை எட்டு மணியளவில், அந்த மாமர நிழலில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து கொள்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குண் டிப் பலகையும் வழங்கப்பட்டுள்ளது.
காலை பத்துமணிக்கு ஒரு ரீயும், பன்னிரண்டரை மணியளவில் மத்தி யானச் சாப்பாடும், பிற்பகல் நான்கு மணியளவில் மீண்டும் ஒரு ரீயும் வழங்குவார்கள்.
ஒரு பாதி ஒலை பின்ன ஒரு ரூபா கூலியாகக் கொடுப்பார்கள். வேலை முடிய பின்னப்பட்ட கிடுகுகளை எண்ணி கணக்கு வைத்துக்கொள்வார் கள். தேவையானபோது கூலிக்காசைப் பெற்றுக்கொள்ளலாம். கொடுக்கல் வாங்கலில் எந்தப் பிசகும் இருக்காது. மிகவும் நேர்மையாக நடந்துகொள் வார்கள்.
காலையிலிருந்து மாலைவரை நாரியை வளைத்துக் குனிந்திருக்க வேண்டிய தொழில். முள்ளந்தண்டு எலும்பு வலி பொறுக்கமாட்டாமல் அழும்.!
தண்ணிர் சிந்தச் சிந்த ஒவ்வொரு ஒலையாக விரிப்பதும், விரித்த ஒலை யை முறித்து மடிப்பதும், தலை கட்டு வதும். கைவிரல்கள் தண்ணிரில் ஊறி வெளுறிப்போய்விடும்.
காலை எட்டுமணி தொடக்கம், பிற்பகல் ஐந்துமணி வரை முது கெலும்பை வில்லாய் வளைத்து கிடுகு பின்னி, கூனில்லாமல் இரைப்பையைக் கழுவி, படுத்துறங்கி, மறுநாள் எழுந் தால், அவர்களைப் பொறுத்த வரை யில் திருப்தியான வாழ்க்கை!
இப்படி வளர்ந்தவள்தான் சுபத் திரா. இன்று அவள் ஒரு கொலைகாரி.! சுபத்திராவோடு கிடுகு பின்னும் ஒருவராவது அவளை ஒரு கொலை காரியாக ஏற்றுக்கொள்ளவில்லை.
மல்லிகை ஜூன் 2011 & 13

Page 9
"ஒரு உயிரை அழிக்கும் அளவுக்கு சுபத்திரா வன்மம் கொண்டவளல்ல. இந்தக் தவிர்க்க முடியாததொரு காரணம் இருக்க வேணும். அந்தக் காரணந்தான் அவளைக் கொலை செய்யத் தூண்டி யிருக்கே தவிர, நிச்சயமாக அவள் கொலைகாரியல்ல.” அந்தக் கிடுகு பின்னும் ஸ்தாபனத்தை நடத்தி வரும் விடுதலைப் போராளி இப்படித் தான் கூறினான்.
கொலைக்குப் பின்னால்
சுபத்திரா தாயைப் போல் வளர்த் தியானவள். இருபத்தியொரு வயது. கறுப்பி. முகவெட்டானவள் என்றும் கூறமுடியாது. வஞ்சகமில்லாமல் வளர் ந்திருக்கும் அவளது கன்னிமைக் குருத் துச் சதைகள் அவளுக்கு ஒருவிதக் கவர்ச்சியைக் கொடுத்த தென்பது
உண்மைதான்.
இந்தக் கவர்ச்சி பற்றியோ, அல் லது அந்தக் கவர்ச்சியைக் கட்டுப்படுத் தும் நாகரிகச் சூட்சுமங்கள் பற்றியோ அவளுக்குத் தெரியாது. ஞாயிற்றுக் கிழமைகளில் கிடுகு பின்னும் ஸ்தாப னத்திற்கு விடுமுறை நாள். அன்றைய தினம் அயல்வீட்டுப் பிள்ளைகளோடு சேர்ந்து சில்லுக்கோடு விளையாடு வாள். அவள் குழந்தையாகவே இருந்தாள்.
உடலால் பருவமடைந்த ஒரு குழந்தைப் பிள்ளையவள்! இன்று அந்தக் குழந்தைப்பிள்ளை. குற்ற வாளியாகக் கம்பிக் கூட்டுக்குள்.
புலிப்போராளிகளுக்கும், இராணு வத்தினருக்குமிடையே இறுதி யுத்தம் நடந்துகொண்டிருந்தது. பல பக்கங்
களாலும்
னேறினர்.
இராணுவத்தினர் முன்
இராணுவம் கிளிநொச்சியைத் தாண்டி ஒரு அங்குலந்தானும் முன் னேற எங்கடை பொடியள் விடமாட் டாங்கள் இப்படித்தான் பொதுமக்கள் பேசிக்கொண்டனர். பேசியதென்ன? நூறு வீதம் நம்பினர். பொதுமக்களை விடுங்கள். அனுபவ மிக்க அரசியல் ஆய்வாளர்களும் இப்படித்தான் எதிர்வு கூறினர்!
நம்பிக்கைகள் சரிந்தன.!
இராணுவம் கிளிநொச்சியையும் தாண்டி. பரந்தன் சந்தியால் புதுக் குடியிருப்பு நோக்கி முன்னேறியது!
துரைராசாவின் சைக்கிள் கடைக் குப் பக்கத்தில் ஷெல் குண்டொன்று வீழ்ந்து வெடித்ததில்துரைராசாவோடு பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் உடல்கள் சிதறி பலியாகினர். மலரும் சுபத்திராவும் சகலதையும் இழந்து இடம்பெயர்ந்தனர்.
தொடர்ச்சியாக இடம்பெயர்ந்து மனம் சோர்ந்து. எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில். மக்க ளோடு மக்களாய் மலரும் சுபத்திரா வும் இராணுவத்திடம் சரணடைந் தனர்.
முட்கம்பி வேலிக்குள் கிடந்து பல விசாரணைகளுக்குள்ளாகி. அவர்கள் இருவரும் விடுதலையாகினர்.
சுதந்திரபுரத்திலுள்ள அவர்களது வீட்டுக்குப் போகக்கூடிய சூழல் இல்லாததால், முரசுமோட்டையில் தெரிந்த ஒருவரின் நிலத்தில் அரச
மல்லிகை ஜூன் 2011 & 14

சார்பற்ற நிறுவனம் ஒன்று கொடுத்த படங்கால் ஒரு கூடாரத்தை அமைத் துக் கொண்டனர். அப்பிரதேசம் கண் ணுக்கெட்டியதுரம் வரைமுற்ற வெளி போல் இருந்தது. இடையிடையே எட்ட எட்டவாக கூடாரங்களை மட் டும் காணக்கூடியதாக இருந்தது. முட் கம்பி வேலிக்குள்ளிருந்து இப்போது தான் சிலர் வந்து குடியேறிக்கொண்டி ருந்தனர்.
மாதத்தில் இரண்டோ, மூன்று தடவைகள் இராணுவத்தால் உலருண வுப் பொதிகள் வழங்கப்பட்டன.
பரந்தன் சந்தியால் புதுக்குடி யிருப்பு றோட்டில் இறங்கினால், வலது பக்கத்தில் ஒரு இராணுவ முகாமை முதலில் காணலாம். அந்த முகாமி லிருந்து அரைக்கிலோமீற்றர் தூரத்தில் இவர்களின் கூடாரம் அமைந்திருந்தது. இராணுவத்தால் கொடுக்கப்படு கின்ற உலர் உணவை அவித்துக் கொறிப்பதும், கூடாரத்துக்குள் முடங் குவதுந்தான் அவர்களின் வாழ்க்கை யாக இருந்தது. அங்கு புதிதாக வந்து குடியோறுபவர்களுக்கு கிடுகு அத்தி யாவசியமான தேவையாக இருந்தது. மலராலும் சுபத்திராவாலும் அந்தத் தொழிலைத் திறம்படச் செய்ய முடி யும். ஆனால் தென்னை மரங்கள் உயி ரோடு நிண்டால்தானே தென்னோ லைகள் கிடைக்கும். தென்னை மரங் கள் உட்பட அனைத்து மரங்களும் முண்டங்களாக நின்றன.
மரங்களின் அழிவைப் பார்த்து, மக்களின் அழிவைத் தீர்மானிக்கலாம்!
ஒருநாள் இரவு. பத்துமணிக்கு
மேலிருக்கும்.
பிற்பகல் ஆறுமணிக்குப் பிறகு வீதியில் இராணுவத்தினரையும், இரா ணுவ வாகனங்களையும், இராணு வத்தினர் தங்களின் பாதுகாப்புக்கென வளர்க்கின்ற நாய்களையும் தவிர, வேறெந்த உயிர்களையும் வெளியில் காணமுடியாது.
மயான அமைதி நிலவும்!
மலரின் கூடாரத்துள் மலரும் சுபத் திராவும் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களின் கூடாரத்துள் மனித வடிவி லான சில சொறிநாய்கள் புகுந்தன. தூங்கிக்கொண்டிருந்த மலரின் வாய்க் குள் துணியைத் திணித்து, கைகளைக் கட்டி கூடாரத்துள் ஒரு மூலையில் போட்டனர்.!
மலர் பாவம். வயது போனவள் தசை வடிந்து எலும் போடு ஒட்டிப் போன சுருங்கிய தோல். வந்தவர்கள் அவளை விரும்பவில்லை.
அமைந்திருக்கும் இறைச்சிக் கடைகளில். S வடிவி லான கம்பிகளில் தொங்கிக் கொண்டி
வரிசையாக
ருக்கும் இறைச்சித் துண்டங்களில் பல்லுக்கிதமான நாம்பன் மாட்டி
றைச்சியைத் தெரிவு செய்வது போல்..!
சுபத்திரா! ஊர்க்கோழி. அதிலும் கன்னிப்பேடு. பல்லுக்கிதமான
இறைச்சி.
சுபத்திரா கோழியாக நசுக்கப்பட் டாள். மரக்கொப்பில் உறங்கிக் கொண் டிருந்த கோழியை ஈரச்சாக் கால் மூடி. பெருவிரலாலும் சுட்டு விரலாலும் அதன் கழுத்தை நசிப்பது போல.
மல்லிகை ஜூன் 2011 & 15

Page 10
சுபத்திராவின் வாய்க்குள் துணி யைத் திணித்து. நசித்தனர். அவளால் குரல் வைக்கமுடியவில்லை.
கோழியின் கழுத்து நசிபடும் போது, கோழி தான் மரண வேதனை யில் சிறகுகளையும், கால்களையும் அடித்துக் கேருவதுபோல். சுபத்திரா கால்களையும், கைகளையும் அடித் தாள். அவளது கைக்குள் வந்தவளின் தலை சிக்கியது.தலைமயிரைப்பிடித்து விட எத்தனித்தாள்.
தலை மொட்டையாக வெட்டப் பட்டிருந்தது. தலையிலிருந்த கை வழுகி அவனது தோள் மூட்டில் விழுந் தது. சேட்கொலர் அவளது கைக்குள் சிக்கியது. கொலரைப் பிடித்து உலுப் பினாள். சாக்குப் போன்ற தடித்த துணி.
அடை வைத்த குஞ்சவிந்து கூழ் முட்டையாகி உடைந்து வழியும் கோழிமுட்டையின் வயிற்றைக் குமட்டும் மனம்..!
சுபத்திராவின் உயிர் அவலப் பட்டுத் துடித்தது!
வந்தது ஒருவரோ, இருவரோ அல்ல என்பதை மட்டும் அவளால் உணரமுடிந்தது. அவள் தனது சுய நினைவை இழந்து பிணம் போல் கிடந்தாள்.
தூக்கம் மரணத்தின் ஒத்திகை ஒன்று கூறுவார்கள். ஆனால் சுபத்திரா வுக்கு ஏற்பட்டது நிஜமான மரணத் தின் ஒத்திகை.!
மீனின் கண்ணிர், தண்ணிரோடு
கலப்பது போல் சுபத்திராவின் கண்
னிமையின் கண்ணிர். அவளது இத யத்தோடு கலந்தது.
விடியப்புறம் நான்கு மணியளவில் சுபத்திரா கண்விழித்தாள். அவளு டைய மனத்திரையில் அறுபட்ட படச் சுருளாய் நினைவுகள் ஓடின. உடலை அசைக்க முடியவில்லை. படுத்திருந்த படியே தலைமாட்டில் வைத்திருந்த நெருப்புப் பெட்டியைத் தேடினாள்.
சில தினங்களுக்கு முன்பு வாங்கப் பட்ட புதிய நெருப்புப் பெட்டி நெருப் புப் பெட்டி நசுங்கி. கிழிந்து. குச்சிகள் சிதறிக் கிடந்தன. ஒரு குச்சியைத் தேடி எடுத்து, நசிந்து கிழிந்த பெட்டியில் மருந்து பக்கத்தைத் தடவிப் பிடித்து குச்சைத் தேய்த்து குப்பிவிளக்கைக் கொழுத்தினாள்.
தாய் மலர். வாய்க்குள் துணி திணிக்கப்பட்ட நிலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில், கூடாரத்துள் ஒரு பக்கமாய் கிடந்தாள்.
அம்மா. சுபத்திரா ஈனக்குரலில்
அழைத்தாள். மலர் பதிலுக்கு முனங் கினாள்.
சுபத்திராவால் எழுந்து நடக்க முடியவில்லை. தார். றோட்டில் பின் கால்கள் இரண்டும் வாகனச் சக்கரத் துள் சிக்கி, நசிந்துபோன தவளை கால் களை இழுத்திழுத்து நகர்வது போல். சுபத்திரா இழுத்திழுத்து தாய்க்கருகே
வநதாள.
எந்தப் பிள்ளையும் பெற்ற தாயைப் பார்க்கக்கூடாத பார்வையை சுபத்திரா பார்த்தாள். அந்தச் சூழ்நிலை அப்படிப் பார்க்கத் தூண்டியது.
மல்லிகை ஜூன் 2011 & 16

தன்னைக் கடித்த சொறிநாய்கள் தாயையும்.? வந்தது சொறிநாய்கள். அவைகளுக்கு செக்கும் சிவலிங்கமும் ஒன்றுதான்.
தாயை மீண்டும் மீண்டும் பார்த் தாள். தாயில் எந்தவித மாற்றங்களும் இல்லை. அவளது இதயம் ஒருமுறை விம்மி ஆறுதல் பெருமூச்சு விட்டது.
சுபத்திராவிடிந்த பின்பும் தாயின் மடியில் கிடந்து அழுதாள்.
ஏழைகளுக்கு இந்தக் கண்களும், கண்ணிரும் இல்லையெனில் துயர வெக்கையில் கருகிச் சாம்பலாகிப் போயிருப்பார்கள். குடிசை வீடுக ளெல்லாம் சாம்பல் மேடுகளாய் மாறி யிருக்கும்!
சுபத்திராவைக் கடித்துக் குதறிய அந்தச் சொறிநாய்க் கூட்டத்தை, சுபத் திரா மட்டுமல்ல, மலரும் இனங்கண்டு கொண்டாள். ஆனால், முகங்களோ, பெயர்களோ அவர்களுக்குத் தெரி யாது. நமது மண்ணில் நடக்கின்ற சம்பவங்களுக்கெல்லாம் இனந்தெரி யாத நபர்கள் என்று கூறுவார்களே. அவர்கள்தான் இவர்கள்!
சுபத்திரா இஞ்சை நடந்தது பற்றியோ, இவங்கள் இஞ்சை வந்த வங்கள் எண்டது பற்றியோ கதைச்சுப் போடாதை. உவங்கள் பொல்லாத வங்கள். எங்கட உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்திப் போடுவாங்கள் மலர் அழுதபடி சுபத்திராவுக்குக் கூறினாள்.
குற்றவாளிகள் நிரபராதிகளாக வும். நிரபராதிகள் குற்றவாளிகளா கவும். ஒழிந்து வாழவேண்டியதொரு சமுகச் சூழல்...!
நடந்த சம்பவம் மரங்கொத்திக் குருவியாய் தினசரி சுபத்திராவின் மனதைக் கொத்திக் காயப்படுத்திக் கொண்டே இருந்தது.
இயற்கையின் நகர்வும், உடலில் இயக்கங்களும் தர்மத்திற்கும் அதர்மத் திற்கும் அப்பாற்பட்டதொரு தரிப் பற்ற ஒட்டம்!
சுபத்திராவின் உடலில் தாய்மைக் கான அறிகுறிகள் தென்பட்டன. தாயாகப் போகும் சுபத்திராவும், தாயான மலரும் கூடாரத்துள் அடை பட்டுக் கிடந்து அழுதனர்.
குழந்தை பிறக்கும்வரை எங்கே யாவது தலைமறைவாக இருந்து விட லாம் என்று எண்ணினர். எங்கே போவது? இந்தக் கோலத்தில் இவர் ᏍᎦ5 ᎧᏡᎠ ᎧYᎢ uurTrf ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்?
கர்ப்பிணிப் பெண்கள் ஆண் பப் பாசிப்பழமும், அன்னாசிப்பழமும் சாப் பிடக் கூடாதென்று கிராமப்புற பேச்சு வழக்கு. இப்போது மலருக்கு நினை வுக்கு வந்தது. நெஞ்சைநிமிர்த்தி நின்ற பனைமரங்களே குண்டுகளுக்கு இரை யாகி துண்டங்களாகி வட்டுகளை இழந்து முண்டங்களாய் நின்றன. ஆண் பப்பாசியை அவள் எங்கு தேடு Gauritait... ?
உடையார்கட்டில் ஒரு வைத்தியர் இருந்தவர். அவர் இப்படிப்பட்ட வைத்தியம் செய்பவர். அவர் இப் போது உயிரோடு இருக்கிறாரோ, இல்லையோ. யாரிடம் விசாரிப்பது?
மலரின் மனதில் ஒவ்வொரு கதவு களாகத் திறந்து. திறந்த கதவுகள் ஒவ்
மல்லிகை ஜூன் 2011 & 17

Page 11
வொன்றும் தானாகவே மூடிக் கொண் டன. கோவணத்தோடு படுத்திருப்ப
வர்களால் இழுத்துப் போர்க்க முடியுமா?
சுபத்திரா பிள்ளை வயிற்றோடு வெளுறிப்போய் கூடாரத்துக் குள்ளேயே கிடந்தாள் முந்நூறு நாட்கள்.
பத்தாவது மாதம், ஒருநாள் இரவு. சுபத்திராவுக்கு குழந்தை பிறந்தது. மலர்தான் மருத்துவிச்சியாக நின்றாள். ஆண் குழந்தை!
சுபத்திரா அந்தக் குழந்தையைப் பார்த்தாள். அவளது தாய்மையில் இலேசானதொரு வன்ம உணர்வு படர்ந்தது.
நாய் முயலைத் துரத்தும். முயல் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்த வரை ஓடும். ஓட முடியாத நிலை ஏற்படும்போது. திரும்பி நாயைப் பார்த்துச் சீறும். அதுபோல இதுவரையில் பிள்ளை வயிற்றோடு கூடாரத்துக்குள் படுத்தாள். இப் போது பிள்ளை பிறந்துவிட்டது. அது உடம்பு புரட்டி, தவழ்ந்து, நடக்கத் தான் போகின்றது. கூடாரத்துக்கு வெளியே வரத்தான் போகின்றது.
நான் வேசை
இந்தக் குழந்தை வேசை மகன்..!
இந்தக் குழந்தை வேணுமா? இப்படியொரு கேள்வி சுபத்திராவின் இதயத்துள் போர்ப்பேரிகையாய்
அதிர்ந்தது.!
அவளது தாய்மை DD355g/l
இந்தச் சமுதாயம் அவளுக்கு ஒரே இரவில் அதர்மத்தைக் கற்பித்தது. அந்த அதர்மத்தை இப்போது அவள் கையிலெடுத்தாள்.
இறுகி.
மலரும், சுபத்திராவும் இரவோடு இரவாக வீட்டின் பின்புறத்தில் கிடங்கு வெட்டிக் குழந்தையைப் புதைத்து விட்டனர்!
மூன்றாவது நாள்.
நடந்த யுத்தத்தின் போது எப் படியோ தப்பிப் பிழைத்து அங்கொன் றும் இங்கொன்றுமாய் திரியும் சில ஊர் நாய்கள். அந்தப் புதைகுழியை மோப் பம் பிடித்து. கால்களால் கிண்டி. குழந்தையை வெளியே இழுத்து. கடித்துக் குதறி.
சிலர் கண்டு. பாதுகாப்பு படை யினர் வந்து.
சுபத்திரா செய்யப் பட்டாள்.
கைது
அவளின் புண்ணுடம்பை அர சாங்க வைத்தியர்கள் உறுதிப்படுத் தினர். சுபத்திரா குற்றத்தை ஒத்துக் கொண்டுவிட்டாள்.
இன்று தீர்ப்பு.
இந்தச் சுபத்திராவை வரவேற்ற கூட்டுக்குள்ளே எத்தனையோ சுபத்தி ராக்கள் இருக்கின்றனர்.
ஆனால், கூட்டுக்குள்ளே சொறி நாய்கள் ஒன்றுகூட இல்லை.!
மல்லிகை ஜூன் 2011 & 18

ஈழத்து மூத்த சஞ்சிகைகளில் ஒன்றான கலைச்செல்வி சஞ்சிகை பற்றிய ஒரு கண்ணோட்டம்
- தவராஜா வசந்தன்
யாழ் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆதரவுடன் 1958 - 1966 காலப்பகுதியில் 'சிற்பி சரவணபவன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த மாத இதழ் கலைச்செல்வி ஆகும்.
ஈழத்து இதழியலுக்கு கலைச்செல்வி சஞ்சிகை ஆற்றிய பணி மகத்தானது. கலைச் செல்வி சஞ்சிகையானது தமிழர்களின் மொழி, கலை, கலாசாரம் ஆகியவற்றின் தொன்மை மணங்குன்றாத புதுமை மெருகேற்ற நோக்கமாகக் கொண்டமைந்தது. இச்சஞ்சிகையின் தோற்றத்தினால் பல இலக்கிய கர்த்தாக்கள், எழுத்தாளர்கள் தோன்றினர். இச்சஞ்சிகையில் நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், கருத் தோட்டம், பலதும் பத்தும், பதிலும் பரிசும், வளரும் தமிழ், பட்பட், நாடக விமர்சனங்கள், நாடக எழுத்துருக்கள், ஈழத்து நாடகம் சார் தகவல்கள் வெளிப்படுத்தல் வலம் வந்தன. இதழியல் சேவைக்கு அப்பால் சஞ்சிகைக் குழு சார்பாக கலை விழாக்கள், நாடக விழாக்கள், நாடகப் போட்டிகள், நூல் வெளியீடுகள் போன்ற சமூகப் பணிகளும் முன் னெடுக்கப்பட்டன. ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையைச் செழுமைப்படுத்தி வரும் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், யாழ். மங்கை, மயிலன், பெனடிக்ற் பாலன், தி.ஞானசேகரம், தெணியான், மட்டுவிலான், முகிலன், ச.வே.பஞ்சாட்சரம், செ.கதிர்காம நாதன் போன்றோர் கலைச்செல்வி பண்ணையில் வளர்ந்தவர்களேயாவர். 1958-1966 வரையான 8 ஆண்டுகுள் சிற்பி அவர்களின் தனி முயற்சியால் 71 பிரதிகள் வெளியிடப் பட்டன. இவரால் ஈழத்து இலக்கியப் போக்கின் மறுபுறத்திற்கான தளம் திறக்கப்பட்டது. ஈழத்தில் எந்தத் தமிழ் இலக்கிய கருத்தாடல்களிலும், கலைச்செல்வி சஞ்சிகையின் தனித்துவம் பற்றிக் கதைப்பதற்குத் தவறுவதேயில்லை. இதற்கு இச்சஞ்சிகையின் தரமே காரணம் என்றால் மிகையாகாது.
மல்லிகை ஜூன் 2011 & 19

Page 12
கலைச்செல்வி சஞ்சிகை ஆசிரியர் சிற்பி சரவணபவன் அவர்களுடனான நாடகத் துறை சார்பான கலந்துரையாடல்.
நீங்கள் நாடகத்துறையில் ஈடுபாடு கொள் வதற்கு தூண்டுகோலாக அமைந்த விடயங்களைக் கூறுக.
நான் சிறுவயது முதலே இலக்கியத் தில் ஆர்வம் கொண்டதுடன், புராண இதி காசங்கள், நன்னெறி இலக்கியங்களைப் படித்துப் பாண்டித்தியம் பெற்றிருந்தேன். மேற்படிப்பை மேற்கொள்ள இந்தியா சென்றபோது, டி.கே.சண்முகம் சகோதரர் களின் இரத்த பாசம், கள்வனின் காதலி, முள்ளின் ரோஜா நாடகங்கள், தியாகராஜ பாகவதர், சங்கரதாஸ் சுவாமிகளின் நாட கங்களைப் பார்த்து ரசித்தேன். இந்நாடக எழுத்துரு போல, நீதி புகட்டும் எழுத்துருக் களை எழுத வேண்டும் என்ற அவா என்னிடம் அப்போதே ஏற்பட்டது.
நீங்கள் எந்த வயதிலிருந்து, எவ்வகையில் நாடகத்துறையில் ஈடுபாடு கொண்டுள் offss?
நான் இந்தியாவிலிருந்து இளைஞ னாக வந்தபோது, சில எழுத்துருக்களை எழுதி உள்ளேன். அவ்வெழுத்துருக்கள் யாவும் சமூகத்தில் காணப்படும் போலி நம்பிக்கைகளைக் காட்டுவதாகவும், சமூ கத்திற்கு நீதியைப் புகட்டி நன்னெறிப் படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இதை விடக் கலைச்செல்வி சஞ்சிகை சார்பாக நாடக எழுத்துருப் போட்டி, வவுனியாவில் நடைபெற்ற கலைவிழாவில் நாடகப் போட்டியை உள்ளடக்கியமை, 1958-1966 வரை தமிழர் வாழ் பகுதியில் மேடை
யேற்றிய நாடகங்களுக்கான விமர்சனங் களும், தரமான நாடக எழுத்துருக்களை கலைச்செல்வி சஞ்சிகையில் பிரசுரித் தமையும் குறிப்பிடத்தக்கன.
உங்களது நாடக எழுத்தாகப் பணி பற்றிக் கூறுங்கள்?
நாடகம் என்பது படித்தவர், பாமரர் அனைவரையும் விளங்கச் செய்யும் ஊடக மாகும். நீதி வென்றது, பாசம், உரிமைப் போர் முதலிய நாடகங்களை எழுதியுள் ளேன். இவை சமூகத்தின் விழுமியப் பண்புகளான அன்பு, சத்தியம், நேர்மை, ஒற்றுமை முதலிய உயர் விழுமியங்களை பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன. முத லில் நாடகம் எழுத முன்பே நாடகப் பாத் திரங்கள். பாத்திர குணவியல்புகள் படமாக ஒடும். அதனை எழுத்தில் வடிப்பதே எனது வேலையாகும். நான் எழுதிய எழுத்துருக் களில் எப்போதும், வில்லன் பாத்திரத்திற்கு உயர்ந்த மதிப்பு வழங்குவதில்லை. சமூகத்திற்குத் தவறான செய்தியை வழங்கக் கூடாது என்பதே யாகும். எனது நாடக எழுத்துருக்கள் வாசிப்பதற்கான சட்டமாகவே காணப்படும். இதற்கு இரத்தமும் சதையும் கொடுத்து உயிர்ப்பூட்டும் வேலை குழந்தை சண்முக
காரணம்,
லிங்கத்தின் உடையதேயாகும்.
அக்கால நாடகக் கலைஞர்களுடன் எவ் வகையில் தொடர்பினைப் பேணினிர்கள்?
நாடக எழுத்துரு எழுதுவதுடன் கலைச்செல்வி சஞ்சிகையில் அக்காலத் தில் மேடையிடப்பட்ட நாடகங்களுக்கு விமர்சனம் எழுதினேன். இதனால் ஈழத்து நாடகக் கலைஞர்களான சொர்ண லிங்கன், அரசு, விதானை செல்வரத்தினம்,
மல்லிகை ஜூன் 2011 & 20

ஆரம்பகால நாடகச் செயற்பாட்டுக்கும் தற்கால நாடகச் செயற்பாட்டுக்குமிடையே எவ்வாறான வேறுபாட்டைக் காண்
கிறீர்கள்?
ஆரம்பகாலத்தில் புராண, இதிகாச சரித்திரக் கதைகள் சமூகத்தின் உயர் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட நாடகங்களே மேடையேறுவது வழமையாகும். தற்போது சமூகப் பிரச் சினைகளை வெளிப்படுத்தும் ஊடகமாக வும், மக்களுக்கு விழிப்புணர்வு, சுகாதார பழக்க வழக்கங்கள், அறிவுபூட்டுதல், உளச் சிகிச்சை என சமூகத் தேவைகளைக் கருத்திற் கொண்டு மேடையேற்றப்படு கின்றன.
உங்களது நாடகத்துறை ஈடுபாட்டுக்கு ஊக்குவிப்புக்கள், விருதுகள் எவ்வகை யில் அமைந்தது என்பது பற்றிக் கூற {ւpլջԱպԼpn?
ஊக்குவிப்பது எனும்போது நாடகப் பகுதியை கலைச்செல்வி சஞ்சிகையில் பிரசுரித்தபோது வாசகர்களிடமிருந்து வர
வேற்புடன் நாடகம்சார் விடயங்களைத் தந் துதவினார்கள். நான் செங்குந்தாக் கல் லூரி மாணவர்களைக் கொண்டு பழக்கிய உரிமைப் போர் என்ற நாடகம் கலைக் கழக நாடகப் போட்டியில் பரிசினைப் பெற்று பலரது பாராட்டைப் பெற்றது குறிப் பிடத்தக்கது. விருதுகள் நாடகம் சார்பாக கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு நான் நாடகத்தில் ஈடுபடவும் இல்லை.
இன்று நாடகத்துறையில் ஈடுபடுகின்ற இளங்கலைஞர்களுக்கு நீங்கள் கூறக் கூடிய ஆலோசனை என்ன?
உண்மை, நேர்மை, அன்பு, ஒற்றுமை போன்ற உயர் விழுமியங்களைக் கொண்ட நாடகங்களை மேடையேற்றிச் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும். வில்லன் பாத் திரம் போன்ற மாறுபாடான பாத்திரத்திற்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. இது சமூகத்தைச் சீர்கெடுத்து விடும். இன்றைய சமூகத்தினர் எதிர் கொள்ளும் சவால்கட்கு முகம் கொடுக்கக் கூடிய நாடகங்களை மேடையேற்றி சமூகத்தை நல்வழியில் மாற்ற வேண்டும்.
மல்லிகை ஜூன் 2011 第21

Page 13
குழந்தை ம. சண்முகலிங்கம் போன் றோரின் நாடகக் கருத்தாடல்கள், நாடகத் தயாரிப்புக்கள், நாடக மேடையேற்றங் களை நேரடியாகப் பார்த்து விமர்சனம் செய்தேன். நானும் குழந்தை Sirஉம் யாழ். செங்குந்தாக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது வருடாந்த சுடரொளி மாண வர் மன்ற சஞ்சிகை வெளியீட்டு விழாவின் போது ஒரு நாடகம் நிகழ்த்துவது வழமை. நான் நாடக எழுத்துருவை எழுத, குழந்தை பழக்கி மேடையேற்றுவது வழக்கமாக இருந்தது. இவ்வாறு நான் பழக்கிய உரிமைப் போர் என்ற நாடகம் 1965ஆம் ஆண்டு கலைக்கழக நாடகப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. உங்களது கலைச்செல்வி சஞ்சிகையில் நாடகப் பகுதியைச் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எவ்வகையில் தோன்றி யது? நாடகத்துறையை எவ்வகையில் வளப்படுத்தினீர்கள்?
நாடகத்தின் மூலமே இலகுவாகச் சமூகத்தை நல்வழிப்படுத்தும் செய்தி களைக் கூறி அனைவரையும் சென்றடை யச் செய்யலாம் என்பதனை உணர்ந்தேன். கலைச்செல்வி இலக்கியச் சஞ்சிகை என்ப தால் நாடகப் பகுதியையும் உள்ளடக்க வாய்ப்பாக அமைந்தது. 1958-1966 காலப் பகுதியில் தரமான பல நாடகங்கள் மேடை யேற்றப்பட்டன. இதனை அனைவரும் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. கலைச்செல்வி சஞ்சிகை ஒர் இலக்கியச் சஞ்சிகை என்பதால் நாடகத் தினை ஒரு பகுதியாக அடக்க முடிந்தது. அந்தவகையில் அஸ்தமனம், வாழாதே, எழுத்தாளர் காதலி, மனிதன் மாறிவிட் டான், மனிதனா நீ?, நல்லதும் கெட்டதும்,
நெஞ்சில் ஒர் ஆலயம், சிலம்பு பிறந்தது, தேரோட்டி மகன், போனது போகட்டும், புலித்தேவன், மனிதவலை, எங்கிருந் தாலும் வாழ்க, பக்த மீரா, பிணம் பேசு கிறது, திப்பு சுல்தான், வெளிவேசம், சிங்க கிரி காவலன், நெஞ்சில் நீ, ஆவது பெண் னாலே, தியாகராஜ நாடகம் போன்ற வற்றுக்கு நாடக விமர்சனமும், கண் ணம்மா, பொன்னம்மா, ஏன் காதலித்தாய், ஒசி திலகம் போன்ற தரமான நாடக எழுத் துருக்களைப் பிரசுரித்தமை, இலங்கைக் கலைக்கழகத் தமிழ் நாடகக் குழுவின் செயற்பாடுகள், அரங்கியலாளரான சொர்ணலிங்கம், குழந்தை ம.சண்முக லிங்கம் போன்றோரைப் பற்றி ஏரி. பொன்னுத்துரை எழுதிய கட்டுரைகள், வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் முத்தமிழ் விழா, கலைவிழா, வானொலி கலைவிழா போன்றவற்றைக் கலைச் செல்வி சஞ்சிகை சார்பாக நிகழ்த்தி சஞ்சிகையில் அவைசார் தகவல்களை பிர சுரித்தோம். மேலும் சஞ்சிகையில் வளரும் தமிழ் என்ற பகுதியில், நாடகப் பகுதியை உள்ளடக்கியிருந்தேன். இதனால் சிறந்த நாடகக் கலைஞர்களுடன் தொடர்பினைப் பேண முடிந்தது.
உங்களது நாடக ஈடுபாட்டுக்கு சமூக அங்கீகாரம் எப்படி இருந்தது?
நான் ஏற்கனவே கூறியதுபோல் 3 நாடக எழுத்துருக்கள் மட்டுமே எழுதி உள் ளேன். மற்றப்படி கலைச்செல்வி சஞ்சிகை சார்பாக நாடகம் சார் விமர்சனங்கள், நாட கம் சார் விடயங்களை எழுதியுள்ளேன். இவை மக்களை நல்வழிப்படுத்தியிருப்பின் அதுவே எனக்களிக்கும் சமூக அங்கீகாரம் எனக்கொள்வேன்.
மல்லிகை ஜூன் 2011 22

"உதுக்கு நான் ஒத்துக்கொள்ள மாட்டன்! இவ்வளவு நாளும் அப்பிடியே தானை இருந்தது. பிறகென்ன..?’ ரமணனின் குரலின் ஆவேசம் அவளைத் திடுக்கிட வைத்தது.
இவ்வளவு நாளும் வேறையடா. ஆனா. இப்ப.” ஜனதாவின் குரல் கெஞ்சிற்று.
ஏன் இப்ப மட்டும் என்னவாம்.?”
‘என்ன தெரியாத மாதிரிக் கேக்கிறாய். நிறுவனகாரர், ஒவ்விஸ்காரர், ஊராக்களுக்குள்ளை ஒரு மாதிரிக் கிடக்கடா.”
”உனக்கு ஒரு மாதிரிக் கிடக்கு. ஆனா எனக்கு. எந்த நேரமும் நெஞ்சு திடுக் திடுக்கெண்டு கிடக்கு. ஜனதா.”
பார் க் க ப் மாகத் தான் ஆ ன எ ல் இ தொடர்ந்தால் புதிதாக க் கிடைத்திருக்கின்
ந ண் 9.
களுக்கிடையே இவள் ஒரு கேலிப் பொருள் ஆகி விடலாம். இப் போதுதான் ஏ.எல். படிப்பதற்காக ஸ்கூலில் சேர்ந்திருக்கின்றாள். சிலவேளை இதன் காரணமாகவே அவள் படிப்பும் குழம்பி விடலாம்.
"ஜனதா உங்கை என்ன பிள்ளை செய்யிறாய். அம்மாவுக்கேதேன் அடுப் படிக்கை உதவி செய். போ. போ.” கிணற்றடிக்கு முகம் கழுவ வந்த திருஞானம் கட்டளையிடும் தோரணையில் சொன்னார்.
ரமணனின் முகம் சுருங்கிப் போனது. அவருக்கும் அவனைப் பார்க்கப் பிடிக்க வில்லை என்பது அவர் முகத்தைத் திருப்பிய விதத்தில் தெரிந்தது.துலாக் கயிற்றைக் கிணற்றில் அமிழ்த்தி அள்ளிய நீர் வாளியை அவரிடம் கொடுத்துவிட்டு அப்பால் நகர்ந்தான்.
வேலிக் கரையோரம் நின்ற மல்லிகைச் செடிக்குப்பாத்தி கட்டிக்கொண்டிருந் தவனை விலத்திக் கொண்டு போகையில் திருஞானம் சத்தமாய்ச் சொன்னார்.
'உந்தப் பூக்கண்டுகளோடை மினக்கடுறதை விட்டுட்டு தேசிக்கும், கொய்
மல்லிகை ஜூன் 2011 & 23

Page 14
யாக்கும் தண்ணியை ஊத்து.
பிரியோசனமாயிருக்கும்.”
அவன் எதுவும் சொல்லமாட்டா மல் நின்றிருந்தான். குத்தல் கதை யென்று புரிந்தது. உள்ளிருக்கின்ற கருத் தின் அடிப்படையில்தான் வார்த்தை
களும் வந்து விழுகின்றன.
' கவலைப்படாதை யுங்கோ சித்தப்பா.நான் வயறிங் வேலை பழகப் போறன்.” என்று வாயில் வந்த வார்த் தைகளை அடக்கிக் கொண்டான். அவர் அவனை ஏதாவது சொன்னால் கூட அவன் அதற்கு எதுவும் சொல்லி விடக் கூடாது. அதுதான் மரியாதை. ஜனதாவோடு எப்படி வேண்டுமா னாலும் கதைக்கலாம். ஆனால் சித் தப்பா, சித்தி. அவர்களின் மேல் அவன் மட்டுமரியாதையோடுதான் பழக வேண்டும்.
அவனது அம்மா, அப்பா, சகோ தரங்கள் என்று யாராவது இங்கு இருந் திருந்தால் நிலைமை வேறு. ஆனால், இப்போது. அவர்கள் அவனைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகி விட்டது. ஆனால், அதற்கு முதலே அவன் அவர்களை விட்டுப் பிரிந்து விட்டான். அவனைத் தேடிக் களைத்து அவன் வரமாட்டான் என்று தீர்மான மான பிறகுதான் அவர்கள் தலை மன்னார் சென்று எப்படியோ வள்ளத் திற்குப் பல லட்ச ரூபா கொடுத்து உயிரைக் கையில் பிடித்து, இராமேஸ் வரக் கரைக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே அவர்கள் என்ன கஷ்டப்பட்டி ருந்தாலும், உயிர்பயம் ஒன்றுமட்டும் நீங்கியவர்களாய் வாழ்ந்திருப்பார்கள்.
இவன் மீண்டும் வாளியில் நீர் சுமந்து மல்லிகைக்கும், தேசி, கொய்யா வுக்கும் நீரூற்றி விட்டு உள்ளே வந் தான். விறாந்தையில் யாரும் இல்லை. அவரவர்தத்தம்பாட்டில் உள்ளொடுங் கியிருந்தனர். இவன் விறாந்தையின் ஒருபுறத்தில் சுவரோடு சாய்ந்து நிலத் தில் உட்கார்ந்தான். முதுகில், பூச்சுப் பூசாத சுவர் கரகரத்தது. சித்தப்பா உழைத்துக் கட்டிய வீடு. முற்றாகப் பூர்த்தியாக முதலே இடம்பெயர்ந்து வன்னிக்குப் போகவேண்டி வந்து விட்டது. தொடர்ச்சியாக இவர்கள் வராமலே போய்விட வேறு யாரோ தெரிந்தவர்களைப் பக்கத்து வீட்டு மாமா குடியிருத்திவிட்டார். இப் போது இவர்கள் வருகின்றார்கள் என்ற வுடன் அவர்களை எழுப்புவதற்கு பெரிய சிரமப்பட வேண்டி வந்து விட்டது. ஒரு மாதம், இரு மாதம் தவணை சொல்லிக் கடைசியில் அவர் கள் வீட்டை விட்டு எழும்புவதற்கு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அது வரைக்கும், பக்கத்து வீட்டு மாமா ஒதுக் கிக் கொடுத்த ஒரு அறைக்குள்தான் இவர்கள் சீவியம் கழிந்தது.
”எங்கட வீட்டை அவர் இருந்து கொண்டு சேட்டை விடுறார்.நாங்கள் விட்டிட்டு இருக்கிறதோ...' என சித்தப்பா கெம்பினார்.
’கொஞ்சம் அடங்கியிரு திரு ஞானம். காலம் கெட்டுக் கிடக்கு. அவன் அங்கினை பொலிசிலை, ஆமிலை செல்வாக்குள்ள ஆள். நீங்கள் காம்பிலை இருந்து இப்பதான் விடுபட்டு வந்திருக்கிறீங்கள். இன்னும் விசாரணையள் முடியேல்லை. அடிக் கடி வந்து விசாரிப்பாங்கள் போலை
மல்லிகை ஜூன் 2011 & 24

கிடக்கு. உவங்கள் ஏதும் கல்லுக்குத்தி விட்டாங்கள் எண்டா உங்களுக்குத் தான் சோலி.”
சித்தப்பா அத்தோடு அடங்கிப் போனார். அவர் வரையில் வன்னிக்குப் போனதும், அதன் பின்னரான அவலங் களும் அவரைப் போதும் போது மென்று சொல்ல வைத்துக்கொண்டி ருந்தன. இதற்கு மேல் அவர் சோதனை களை எதிர்கொள்ளத் தயாராயில்லை. அந்த வகையில் வந்த இந்த சோதனை யும். மனிதாபிமானமும், பாசமும் போட்டி போட்டுக்கொண்டு நிற்க, அந்த நேரம் மனதிற்குத் தோன்றியதை செய்துவிட்டு இப்போது என்ன செய்வ தென்று தெரியாமல் தடுமாறுகிறார்.
அவர் வரையில் அது இலகுவானது தான். அதை ஒன்றுமில்லை என்று சொல்லி விலத்தி விடலாம். ஆனால் அதன் பிறகு அவனது வாழ்க்கை. எப் படித் திசைதிரும்பும் என்று தெரியாம லல்லவா இருக்கிறது. இப்போது இருக் கின்ற பாதுகாப்புணர்வு விடுபட்டுப் போகும் கணத்தை அவனால் யோசிக்க முடியவில்லை. குறைந்த பட்சம் அவ னது குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து திரும்பும் வரையிலாவது அந்தப் பொய் யைப் பேணிக்கொண்டிருக்கத்தான் வேண்டும்.
அவனுக்குத் தேனிர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், அந்த நொடியில் கேட்கின்ற மனத் தெம்பு அவனிடமில்லை. வழக்கமாக அடுக்களைக்குள்ளேயே போய் சித்தி யிடம் உரிமையோடு கேட்கிறவன் முகட்டைப் பார்த்தபடியே உட்கார்ந்
திருந்தான். பின் வளவில் அவனது வீடும் இருந்தது. ஆனால் அது ஷெல் லுக்குச் சேதமடைந்து ஜன்னல்கள், கூரைகள் இழந்து இடிபாடுகளோடு பற்றைகள் படர்ந்து கிடக்கிறது. பகல் இவன் கூடுதலாக அங்குதான் செலவழிக்கிறான். தனது குடும்பம் வருகின்றபோது அங்கு தங்கு வதற்கு ஏற்றவகையில், இரண்டு காணி களுக்கும் இடையில் வேலி போடா திருந்த அந்தக் காலகட்டத்தில் அவ னும், சகோதரர்களும் ஜனதாவோடும் மற்றச் சிறிசுகளோடும் அங்குதான் ஒடியாடி விளையாடியிருந்தார்கள். அதன்பின் காணி எல்லையில் வேலிகள்
பொழுதுகளில்
அடைத்துப் பிரித்துப் போனாலும் ஒன் றாக விளையாடிய சந்தோசமான அநுபவங்கள் இன்னும் மறக்கவில்லை. அவனுடைய அம்மாவும், ஜனதா வுடைய அம்மாவும் சகோதரிகள். அம் மப்பா அவர்கள் இருவருக்கும் சீதன மாய் வழங்கிய காணித்துண்டுகள் அவை. அவற்றைப் பாழ்பட விட்டு விட்டு ஓடவேண்டி வந்ததே அவனா லும், வாசனாலும்தான். வாசன் ஜனதா வின் அண்ணன். இரண்டு பேரும் ஒன் றாய்த்தான் படித்துக்கொண்டிருந்தார் கள். அதே போல் ஒன்றாகத்தான் ஊரைவிட்டுக் காணாமலும் போனார் கள். அவர்கள் காணாமல் போன பிறகு பெற்றவர்களால் ஊரில் வசிக்க முடி யாமல் போகவே, அவர்களும் போர் துரத்திய ஒருநாளில் வன்னிக்கு ஓடி னார்கள். கடையில் எங்கெல்லாமோ ஒடித் தேடியும் பிள்ளைகளைக் காண முடியாமல் போகவே, இவனது பெற் றோர் வள்ளமேறித் தமிழ்நாட்டுக்குப் போய்விட்டனர். இவனுக்கு வலிப்பு
மல்லிகை ஜூன் 2011 3 25

Page 15
வந்ததன் காரணமாகப் போன இடத் தில் நின்று நிலைக்கமாட்டாமல் திரும்பி வந்தான். இவனது பெற்றோர் போய்விட்ட நிலையிலும், வாசன் போன கவலையினாலும் திருஞான மும், மனைவியும் ரமணனைத் தம் பொறுப்பில் எடுத்துக்கொண்டனர்.
“இந்தாடாப்பா, தேத்தண்ணி. யோசினையை விட்டிட்டுக் குடி.” சித்தியின் ஆதரவான குரல் கேட்டுக் கலைகிறான், ரமணன்.
தேனீர்ப் பேணியை வாங்கி உறிஞ்சுகிறான். உள்ளே ஜனதா உரத்த குரலில் படித்துக்கொண்டிருப்பது கேட்கிறது.
எங்கேயாவது போக வேண்டும். ஏதாவது செய்ய வேண்டும். ஆனால் எங்கே போவது? என்ன செய்வது? குடும்பம் என்று ஒன்று இல்லாத நிலையில்.
சுயதொழிலுக்கென்று ஏதாவது உதவி வழங்கும் பட்சத்தில் தொடர லாம். ஆனால், அதற்கும் எத்தனை கேள்விக் கொத்துக்கள். குடும்ப விபரங்கள் கேட்டு.
அப்பா ஜி.எஸ். ஏதோ விதை வெங்காயத்துக்குப் பதியச் சொன்ன வர். சின்னவன் சத்தமாய்ச் சொல்லிக் கொண்டு வந்தான்.
ஏனப்பா, Gurruiu
ஒருக்காப் பதிஞ்சுபோட்டு வாங்கோவன். என் னெண்டால் இப்ப முன்னுக்குப் போனாத்தான் கிடைக்கும். சித்தி தனக்குத் தெரிந்த அனுபவத்தை வார்த்தையாக்கினாள்.
‘பதியுறதெல்லாம் சரி. ஆனாப் போகேக்கை மற்ற விசயத்தையும் கதைச்சுத் தீர்க்கவெல்லே வேணும்.”
சித்தப்பாவின் குரல் மெதுவாக வந்தது. அவனுக்கு விளங்கிவிட்டது.
இப்போது விஷயம் அவனில் வந்து நின்றது.
நான் மாட்டன். நான் தர மாட்டன். என்ரை காட்டை. அவன் மனதுக்குள் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறான்.
உள்ளே ஜனதாவின் குரல்
அடங்கிவிட்டது.
'அக்கா இந்தக் கணக்கு எப்பிடி யக்கா செய்யிறது.” புவிதாவின் குரல் கேட்கிறது.
‘போடி. நேரகாலம் தெரியா
மல்.’ ஜனதாவின் குரல் சினக்கிறது.
சித்தப்பா செருமுகிறார். அவனுக் குப் புரிகிறது, ஏதோ ஒரு புராணம் ஆரம்பமாகப் போகிறதென்று.
சின்னவன் புத்தகப்பையை விசிறி யெறிந்து விட்டு அடுக்களைக்குள் ஆரவாரம் போடுகிறான். சித்தி அவனுக்கு வேண்டியதைக் கொடுத்த படியே இங்கே செவி கொடுக்கிறாள்.
”அந்த நேரம் வில்லங்கமான நேரம் எண்டிட்டு அப்பிடி ஒரு காரியத் தைச் செய்தம். அதுக்காக, அதையே இறுக்கிப் பிடிச்சுக்கொண்டிருக்கக் கூடாதம்பி.”
“நான் ஒண்டும் இறுக்கிப் பிடிக்
மல்லிகை ஜூன் 2011 & 26

கேல்லை சித்தப்பா.. எனக்குப் பய மாய்க் கிடக்கு. இன்னும் கொஞ்சக் காலம் இப்பிடியே இருக்கட்டும் எண்டுதானை.’ சொல்ல நினைத் தாலும் வார்த்தைகள் வெளியே வரவில்லை.
சித்தி அடுக்களை வாயிலருகே வந்து கதவு நிலையோடு சாய்ந்து அமர்கிறாள்.
"அவள் இப்ப படிச்சுக்கொண்டிருக் கிறயிள்ளை. ஆரும் ஏதேன் தப்பாய் சொன்னாலும் ஏங்கிப்போயிடுவாள்.”
"அவள் படிக்கட்டும். அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்.?
“அவள் அப்பன்.”
உனக்குத் தங்கச்சி
சித்தப்பாவின் குரல் ஆழமாக அழுத்தமாக எழுகிறது. அவன் சட் டென்று அதிர்ந்து போகிறான்.
அப்படியென்றால், அப்படியென் றால் அவன் அவளைத் தப்பான முறை யில் எண்ணிவிடுவான் என்று அவர் எண்ணுகின்றாரா? இவ்வளவு நாளும் ஒரே கூடாரத்தில் ஒன்றாயிருந்து ஒரே குடும்பமாயிருந்ததால் அவள் மேல் அவனுக்குத் தப்பான அபிப்பிராயம் வந்துவிட்டதாய் எண்ணுகிறாரா..? இப்படி நெறிபிறழ்ந்த செயலில் நானே ஈடுபடுவேன் என்று இவரால் எப்படி எண்ண முடிந்தது..?
ஜனதா கூட அப்பிடித்தான் எண்ணிவிட்டாளா..?
சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படுத் திய ஒரு உறவுநிலையை தான்
தொடர்ந்தும் வலுப்படுத்த முயற்சிப்ப தாய் எண்ணிவிட்டாளா? இவ்வளவு கேவலமாய் அவனை ஏன் எண்ணி விட்டார்கள் எல்லாரும்.
அவன் வேக வேகமாய் எழுந்து தனது உடுப்புகள் நிறைந்திருந்த பயணப் பையை இழுத்தெடுத்தான். அதற்குள் அடியில் வைக்கப்பட்டிருந்த பொலித் தீன் பையை வேகமாக இழுத்தான். அதனைப் பிரித்தபோது அதற்குள்ளி ருந்த சிதறிய உலர் உணவு அட்டைகளை யும், அடையாள அட்டைகளையும் தெரிந்தெடுத்தான். குடும்ப அட்டைகள் முகாமிலும், இங்கும் வழங்கப்பட்டிருந் தன. இரண்டிலும் குடும்பத் தலைவன் எனும் இடத்தில் அவன் பெயரும் அடுத்து அவள் பெயரும் எழுதப்பட்டிருந்தன. முகாமில் வழங்கப்பட்ட அடையாள அட்டை களும் இருந்தன. அதிலும் அவ ளது அடையாள அட்டையில் அவளது பெயர் ரமணன்"ஜனதா என்றே குறிப் பிடப்பட்டிருந்தது.
அக்கறையாக அவற்றை எடுத்த வன் ஒருகணம் பேச்சின்றிப் பார்த்து விட்டு அவற்றை அப்பிடியே சித்தப்பா விடம் நீட்டினான்.
"நாளைக்கு மட்டும் ஏன் சித்தப்பா காவலிருக்கிறீங்கள். இண்டைக்கே கொண்டு கொண்டு போய்க் குடுத்து அவளிண்டை பேரை உங்க காட்டுக்கு மாத்தியெடுங்கோ' என்றான். தொடர்ந்து உள்ளே பார்த்து, ஜனதா ஒரு பேப்பரும் பேனையும் கொண்டு வா’ என்றான். மெளனமாய் அவள் கொண்டுவந்து கொடுத்த தாளில் அவள் பின்வருமாறு எழுதினான்.
சிவசுப்பிரமணியம் ரமணன் ஆகிய நான் இவ்விடத்தில் வெளிப்படுத்திக்
மல்லிகை ஜூன் 2011 & 27

Page 16
கொள்வது யாதெனில், நான் திருமண மாகாதவன் எனவும், எனது சித்தப்பா வாகிய திருஞானம் குடும்பத்தினருடன் வசித்தேன் எனவும், முகாமில் இருந்த போது நான் தனியொருவனாக இருந்த தாலும், எனது வயது எனக்கு அச்சுறுத்த லாக இருந்த காரணத்தினாலும் எனது சித்தப்பா மகளாகிய ஜனதாவின் கணவன் என்று பதிவு செய்திருந்தேன் என்பதையும், தற்போது விடுவிக்கப்பட் டுள்ள காரணத்தினால் எனது மனைவி எனப் பெயர் பதிந்துள்ள ஜனதாவை, அவளது தந்தையின் குடும்ப அட்டையில் சேர்த்து எனக்குத் தனியான பதிவை மேற்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இதற்காக என்னை மன்னிக்கும்மாறும் கேட்டுக்கொள் கிறேன்.
உண்மையுள்ள சி.ரமணன்.
கடிதத்தை எழுதி சித்தப்பாவிடம் கொடுத்துவிட்டுப் பின்வளவை நோக்கி நடந்தான்.
“எங்கையடா போறாய்..?’ என்று பதறினாள் சித்தி.
“என்ரை வீடு. நான்தானை சீர்ப் படுத்த வேணும்.” என்றபடியே அவன் தொடர்ந்து நடந்தான்.
'நான் வீட்டாலை வெளிக்கிடச் சொல்லேல்லையே!’ என்றார் சித் தப்பா. அவரது பேச்சிலிருந்த கோபங் கள் மறைந்து இப்போது சிறு பதட்டம் தெரிந்தது.
‘என்னண்டாலும் நீங்கள் என்னை நம்பேல்லையே சித்தப்பா.”
என்ற வனின் குரல் உடைந்திருந்தது.
“நம்பாட்டில் காம்பிலை என்ரை பிள்ளையை உன்ரை மணிசி எண்டு பதி யச் சம்மதிச்சிருக்க மாட்டன்ரா. சித் தப்பாவின் குரல் அவனை நிறுத்தியது.
"ஆனா இப்பவும் பேரை நீக் காட்டில் பிறகு வீண் கதையள் வரும். அவளுக்கும் நான் கலியாணங் கட்டி வைக்கவெல்லே வேணும்.’ என்று தணிந்த குரலில் கூறிய சித்தப்பாவின் கருத்திலிருந்த நியாயத்தை அவனால் மறுக்க முடியவில்லை.
“போகாதையடா. ரமணன்' என்ற ஜனதாவின் குரலில் வேதனை யின் துளிர்ப்பை இனங்கண்ட அவன் மெளனமாகத் திரும்பி உள்ளே வந்தான். வாசலில் அவன் நீரூற்றிய மல்லி கையின் மொட்டுடைந்து சிறுவாசம் கமழத் தொடங்கியிருந்தது.
மல்லிகை ஜூன் 2011 & 28
 

கங்காரு நாட்டுக் காகிதம்
உழைப்புக்கு சரில்(தை
- முருகபூபதி
நீர்கொழும்பு அல்ஹிலால் மகா வித்தியாலயத்தில் படித்த காலத்தில் எங்கள் அதிபர் ஜப்பார் அவர்கள் காலையில் நடைபெறும் அசெம்பிளியில் புனித திருக்குர்ஆனிலிருந்து சில வாசகங்களை குறிப்பிட்டு உரையாற்றுவார். எனக்கு இன்றும் சில வாசகங்கள் நினைவில் தங்கியிருக்கின்றன.
உழைப்பவனின் வியர்வை காயுமுன்பே, அவனுக்குரிய கூலியை கொடுத்து விடு என்று ஒரு வாசகம். அந்த இளமைப் பருவத்தில் அதன் உள்ளார்ந்த அர்த்தம் குறித்து நான் ஆராயவில்லை. அதற்கு அப்பா, அம்மா உழைப்பில் வாழ்ந்ததும், வேலைக்குச் செல்லாத பருவமும் காரணமாக இருக்கலாம்.
ஆனால், வயது சக்கரம் பூட்டிக்கொண்டு வேகமாக ஒடும்போது, உழைப்பின் மகிமை புலப்படுகிறது. உழைத்தால்தான் வீடும் நாடும் முன்னேறும். உழைப்புக்கு முக்கியத்துவம் தராமல் மொழி, இனம், சாதி, சமயம் என்று சதா சிந்தித்து அதற்காகவே போராடிக் கொண்டிருக்கும் தேசங்கள் பின்தங்கிப்போய்விடும்.
அகன்ற வீதிகளில் வாகனத்தில் பயணிக்கும்போது, அந்த வீதியை அமைத்து செப்ப னிடுவதற்காக இரவு, பகல் என்று பாராமல் வியர்வையும், சில சமயங்களில் விபத்தினால் காயப்பட்டு இரத்தம் சிந்தியும், உயிரையும் இழந்த வீதி நிர்மாண தொழிலாளர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க மாட்டோம்.
ஆனால், வீதியில் எங்காவது பள்ளமும் திட்டியும் தோன்றி பயணத்தை தாமதப்படுத் தினால், என்ன ரோடு போட்டிருக்கிறான் என்று அந்த முகம் தெரியாத தொழிலாளர்களை திட்டிக்கொண்டே செல்வோம். மழை, வெள்ளம் வீதியை சேதப்படுத்தியிருந்தாலும் மழையை எவரும் வையமாட்டார்கள்.
1972-74 காலப்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடலில் வீதி அகலப்படுத்தி நிர் மாணிக்கும் பொழுது நான் அங்கே தொழிலாளர்களை மேய்க்கும் ஒவளியராக வேலை செய்திருக்கிறேன். அந்த வெய்யிலில் கறுத்துப் போயிருக்கிறேன். வெயிலுக்கு ஒதுங்க மல்லிகை ஜூன் 2011 & 29

Page 17
மரம்கூட அங்கில்லை. அந்தத் தொழி லாளர்களுடன் ஆடிப்பாடி வேலை செய்த அலுப்பில்லாத அக்காலம் என்னைப் பொறுத்தவரையில் ஒரு பொற்காலந்தான். மூவினத்து தொழிலாளர்களும் ஒற்றுமை யாக வேலை செய்தார்கள். தற்காலிக ஒப் பந்தத்தில் அந்த வீதி நிர்மாணிப்பு வேலை முடிந்ததும், எங்கள் வேலையும் முடிந்து விடும்.
இப்பொழுது, இலங்கையில் வீதி களை நிர்மாணிக்க புனரமைக்க இந்தியா வும், சீனாவும் வந்திருப்பதாக அறிகின் றோம். எல்லாம் ஒப்பந்த அடிப்படையில் தான். w
அவுஸ்திரேலியாவில் கணவனும் மனைவியும் உழைத்தால்தான் வீட்டுக் காக வங்கியில் பெற்ற கடனை வட்டியுடன் உரிய காலத்தில் செலுத்தி வீட்டை மீட்க முடியும். திங்கள் முதல் வெள்ளி வரையில் உழைப்பதுடன் நில்லாமல் சனி, ஞாயிறு தினங்களிலும் வேலைகள் கிடைக்காதா என்று எதிர்பார்த்திருக்கும் எம்மவர் இங்கு ஏராளம். வீட்டுக்கடன் மற்றும் பிள்ளை களின் படிப்புச் செலவுகளுடன் ஊரிலிருக் கும் இனசனத்துக்கு உதவும் நல்லெண் ணமும் சேர்ந்துகொள்ளும்.
வெளியே சென்று இயந்திரமாக உழைக்கின்ற அதேசமயம், வீட்டு வேலை களை பங்குபோட்டுக் கொள்ளவும் வேண் டும். இந்த வார விடுமுறையில் வீட்டை, மலசலகூடத்தை, குளியல் அறையை சுத் தம் செய்தல் உட்பட உடைகளைத் துவைத்து உலர வைத்து எடுக்கும் பணியை மனைவி செய்தால், அடுத்த வாரம் அதே பணிகளை கணவன் செய்ய
வேண்டும். வளர்ந்த பிள்ளைகள் இருந் தால் அவர்கள் செய்ய வேண்டும். முறை வைத்து மேற்கொள்ளப்படும் இந்நடை முறை பிசகினால் யாராவது ஒருவர் பட்டினி கிடக்கவும் தயாராக வேண்டும்.
இலங்கை, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் சமையலறை என்பது ஏதோ மனைவிக்கு மாத்திரமே சொந்தமானது என்ற சிந்தனையிருப்பதனால் பல கண வன்மார்கள் இன்னமும் தேநீர், கோப்பி தயாரிக்கவும் தெரியாமல் இருக்கின்றனர். நாம் அதிக தூரம் செல்ல வேண்டாம். தங்கள் மனைவி, குழந்தைகளுக்கு தேநீர், கோப்பி, உணவு தயாரித்து கொடுத்த எழுத்தாள பிரம்மாக்கள் எம்மத்தியில் எத்தனைபேர் இருக்கிறார்கள்?
கறியில் உப்பு, புளி சுவை இல்லை யென்று மனைவிமாரை அடித்து விரட்டிய கல்லானாலும், புல்லானாலும் ஆன கண வர்கள் அன்றும் இருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள். கல்லையும், புல்லையும் சமைத்துக் கொடுத்து கொழுப்பை அடக்க வேண்டும் என்கிறாள் ஒரு பாதிக்கப்பட்ட பெண்.
ஏனென்று கேட்டபோது, அரிசியில் கல்லும், கீரையில் புல்லும் இருக்கிறது 6 sorpts TITLE.
இந்த இலட்சணத்தில் இன்றைக்கும், ஒரு கணவனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு மனைவி இருக்கிறாள் என்று எம்மவர் கள் புலுடா விட்டுக்கொண்டிருக்கிறார்கள். சென்ற இடமெல்லாம் கிடைத்த பொன்னாடைகளை ஒரு எழுத்தாளர் மனைவிக்கு கொடுத்து, ரவிக்கை தைத்துக் கொள்ளச் சொன்னாராம்.
மல்லிகை ஜூன் 2011 * 30

தமிழகத்திலிருந்து இலங்கை வந்து தமிழர் வாழும் ஊர்களில் பேசச்சென்ற போது கிடைத்த ஏராளமான பொன்னாடை களையெல்லாம் விற்று காசாக்கித் தரு மாறு தம்மை அழைத்த பிரமுகரைக் கேட்டுக்கொண்டாராம், ஒரு பேச்சாளர்.
இப்படிப் பொன்னாடைகள் பன்னா டைகளான கதைகள் ஏராளம், பொன்னா டைகளை, பூமாலைகளை நிராகரிக்கும் கலாசாரம் உருவாக வேண்டும் என்று நாம் கடந்த ஜனவரியில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பகிரங்க மாகப் பேசியோ எழுதியோ தீர்மானிக்காது போனாலும், அவை இரண்டையும் மாநாடு நடந்த மண்டபங்களின் பக்கம் எட்டியும் பார்க்க அனுமதிக்கவில்லை.
இது எமது மாநாட்டுக்கு ஒரு பிளஸ் பொயின்ற்தான்.
இவ்வாறு நீங்கள் பொன்னாடையை யும், பூமாலைகளையும் நிராகரித்தால், இந்த நிராகரிப்பு அவற்றைத் தயாரிக்கும் உழைப்பாளிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் அல்லவா? என்று ஒரு விமர்சனம் எனது செவிக்கு எட்டியது. அந்த உழைப் பினை நம்பி வாழும் தொழிலாளர்களை பற்றி சற்று சிந்திக்கவும் என்றது, செவியை நாடிய குரல்.
எம்மவர்கள் கோயில்கள் கட்டிக் கொண்டும், இருப்பதை இடித்து புனர மைத்து புதுப்பித்தும் கொண்டிருக்கிறார் கள். புனரமைப்பு முடிந்ததும் கும்பாபிஷே கம் நடக்கும். அங்கெல்லாம் பொன் னாடைகளுக்கும், பூமாலைகளுக்கும் நிறைய தேவைகள் இருக்கும். அதனால்
அவற்றை தயாரிக்கும் உழைப்பாளரின் வயிற்றில் அடி விழாது என்று ஆறுதல் சொன்னேன்.
மாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கு நடத்தி, அதிலே அவுஸ்திரேலிய தமிழ்ச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு BeingAlive நூலை வெளியிட்டிருந்தோம். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் இருபது அவுஸ்திரேலிய எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளை தொகுத்து உயிர்ப்பு என்ற தொகுப்பை வெளியிட்டேன். அதில் எனது கதை இல்லை, கனடாவிலிருந்து இங்கு வந்திருந்த மொழிபெயர்ப்பாளர் திருமதி சியாமளா நவரட்ணம் அவர்களிடம் அதனைக் கொடுத்து அதிலிருக்கும் கதை களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தரு மாறு கேட்டிருந்தேன். எனது கதை அதி லில்லாமையினால் எனது கதையொன்றை யும் கேட்டுப் பெற்று, சுமார் ஆறுமாத காலத் தில் மொழிபெயர்த்து தந்தார்.
குறிப்பிட ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைத்ததும் எழுதியவர்களின் பார்வைக்கு அனுப்பி கருத்துக் கேட்டிருந்தேன். அவர் களது அனுமதியுடன் வெளியிடும் நல் லெண்ணத்திலேயே தபாலிலும் மின்னஞ் சலிலும் உரியவர்களுக்கு அனுப்பினேன். சிலர், சில சில திருத்தங்களுடன் தந்தனர். ஆனால், சிலர் தமது கதைகளை வெளியிட உடன்படவில்லை.
மாநாட்டுக்கு எதிராக சில புலம்பெயர்ந் தவர்கள் கூப்பாடு போட்டதனால், எங்கே தம்மையும் இந்த புலம்பெயர் கும்பல் புறக் கணித்து விடுமோ என்று அஞ்சி, கொழும் பில் மாநாடு நடைபெறுவதனால் தமது கதைகளை வெளியிட வேண்டாம் என்று சந்தர்ப்பவாத சூழ்நிலைக் கைதிகளாகி
மல்லிகை ஜூன் 2011 & 31

Page 18
விட்டனர். பற்றும் வேண்டும்.
எனினும் மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு படைப்பை மொழிபெயர்ப்பதற்குப் சியாமளா நவரட்ணம், மற்றும் அத்தொகுப் பின்னாலிருக்கும் உழைப்பு மகத்தானது. பில் ஒரு சிறுகதையை மொழிபெயர்த் மரியாதைக்குரியது. உழைப்புக்கு மரி திருந்த நவீனன் ராஜதுரையினதும் யாதை செலுத்தத் தெரியாதவர்களை நாம் உழைப்பை மதித்த நாம் நூலை வெளியிட் எப்படி அழைப்பது? (3-mb. னால் 15 ககைகளே ஆங்கில
அத 8 MWA di 西 ஆ நடிப்புச் சுதேசிகள் கவிதையில் பாரதி தொகுப்பில் இடம்பெற்றன.
இப்படியும் சொல்லியிருக்கிறார். G DIT LÓGuuutuus.fi 6 hins 4.
rý தறகு த es) ஊக்கமும் உள்வலியும் உண்மை வேண்டும். கடின உழைப்பும் தேவை
யிற் பற்றுமில்லா மாக்களுக்கோர் ஊக்கமும் உள்வலியும் உண்மைப் கணமும் - கிளியே வாழத்தகுதியுண்டோ?
ཡོད༽
மல்லிகை ஆண்டுச் சந்தாதாரராகச் சேருபவர்கள் கவனத்திற்கு.
ஓராண்டுச் சந்தாவுக்குக் குறைந்தது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
வங்கித் தொடர்புகளுக்கு: Dominic Jeeva 072010004231- Hatton National Bank. Sea Street, Colombo - 1.
காசோலை அனுப்புபவர்கள் Dominic Jeeva எனக் குறிப்பிடவும். காசோலை அனுப்பு வோர் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, Dominie Jeeva என எழுதுவோர் இந்தப் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ வேறெதுவும் கண்டிப்பாக எழுதக் கூடாது. a Taiássi l-606T glgojüLju6.Jfrassi Dominic Jeeva. Kotahena, P.O. 6760Tä g5gólülSl G அனுப்பவும்.
தனித்தனி இதழ்களைப் பெற விரும்புவோர் 5 பத்து ரூபா தபாற் தலைகளையனுப்பியும்
பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 201/4, முறி கதிரேசன் வீதி, கொழும்பு 13. தொலைபேசி : 2320721
மல்லிகை ஜூன் 2011 & 32
 

வேர்விட்டுக் கழன்று போகாத, தெய்வீகத் தமிழ் மண்ணின் புனிதப் பெருமைகளுக்கெல்லாம் ஒரு நித்திய களை போல் வந்துசேர்ந்த அந்தத் திருமண அழைப்பிதழ், கவனிப்பாரற்று, மேசை மீது அநாதையாய் கிடந்தது. அதைப் பார்க்க நேர்ந்த பாவத்தை எப்படிக் கழுவுவது என்று புரியாமல், ரமணன் வெகுநேரமாய்நிலைதடுமாறிநின்றுகொண்டிருந்தான்.திருமண காரியத்துக்குரிய, எந்தவித மங்களச் சாயலுமில்லாமல் முற்றாகத் தமிழ் ஒழிந்துபோன வெறுமையை உள்வாங்கிப் பிரதிபலிப்பது போலவே, அர்த்தமிழந்த வெறும் அட்டையாய், இது அவன் கண்களை எரித்தது. தனி ஆங்கிலத்தில், மூலக்கூறு ஒழிந்தாற் போல, ፴GUă நிலைமை. அப்படித் தமிழை மட்டுமல்ல, கொண்ட உறவையும் மறக்க, நாங்கள் என்ன பாவம் செய்தோம்? அதைப் பார்வையால் தீண்டக்கூட மனம் கூசியது.
இத்தனைக்கும் அவனுடனான உறவை அங்கீகரித்து, வாகீசன் அதை ஒன்றும் நேரிடையாக அவனுக்கு அனுப்பியிருக்கவில்லை. மாறாக, அவனது சகோதரனே மனம் கேளாமல், அதை அனுப்பியிருந்தான். வாகீசனென்பது பெயரளவில் மாத்திரம்தான். அவனொரு மறத்தமிழன். அவன் தானொரு பெருமைக்குரிய தமிழ் பெருங்குடிமகன் என்பதை மறந்தே அந்தக்காலக் கணக்கு. ஒரு யுகம் போலாகிறது. எல்லாம் அமெரிக்கா மண்ணில் காலூன்ற நேர்ந்த கொடுமையால் வந்த வினைதான். அங்கு போவதற்கு முன் அவன் நிலைமை வேறு. சிறுவயதில் எல்லோரோடும் கள்ளம் கபடமின்றிப் சரளமாகப் பழகும் வெள்ளை உள்ளம் அவனுக்கு. ஒன்றுவிட்ட அண்ணன் என்ற நெருங்கிய உறவுக்கப்பால், ரமண னோடு கூடுதலான ஒட்டுதல் அவனுக்கு. நெடுக ரமணன் ரமணனென்று அவன் பின்னாலேயே சுற்றித் திரிவான். محکم
எந்தப் பேதமுமின்றி, அடிக்கடி ரமணன் வீட்டிற்கு வந்து போவான். ரமணனின் அம்மாவைப் பெரியம்மா என்று வாஞ்சை محکم யோடு அழைத்தபடியே வருவான். அவள் கைப்பக்கு வத்திலே, அவன் மிக ரசித்துச்சாப்பிட்ட ஒன்று, சோற்றுக்கு (P வைக்கும் சொதிதான். அதுவும் மாங்காய் போட்ட * சொதி, அதை வாங்கிச் சாப்பிடவே, வீட்டில் محکمے
领 வன்பமியாய் கிடப்பான்.
8% அவன் ஒரு டாக்டராய் படித்து SS گی முன்னேறி அமெரிக்கா போனபின்,(P s Nỳ 6。 பழசெல்லாம் அடியோடு மறந்து محکمے s حصي போனான். உறவை மறந்தால் கூடப் பரவாயில்லை. அடியோடு அவன் த மி  ைழ ே ደራ° LO AD jb gSJKM)
மல்லிகை ஜூன் 2011 & 33

Page 19
விட்டதுதான் பொறுக்கமுடியாத Øp® கலியின் சாபமாய், ரமணனுக்கு
நெஞ்சை எரித்தது.
அவன் ஒரு சாதாரண தந்தைக்குப் பிறந்திருந்தாலாவது, இதைப் பொறுத் துக் கொள்ளலாம். அவனின்தந்தையோ, தமிழின் ஒரு குலவிளக்கு. தமிழ் பண்டித ராக இருந்து, பணியாற்றியவர். மூச்சிலே தமிழ் மணக்க வாழ்ந்த மகான். அப்பேர்ப் பட்டவரின் மகனா இன்று இப்படிநிலை தடுமாறிப் போனான்? அவனுக்கு ஒரே யொரு மகன்தான். அவனுக்கு அமெரிக்க வெள்ளைக்காரியோடு நடக்க இருக்கிற கல்யாணத்திற்காகத்தான் இப்படி ஒரு அழைப்பிதழ். தமிழ் ஒழிந்துபோன வெறுமையுடன், ரமணனின் கைக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் நடக்க இருக்கிற அந்தக் கல்யாணம், தமிழ் சம்பிரதாயம் ஒழிந்த போன, ஒரு வறட்டுச் சடங்குதான். முற் றாகத் தமிழ் ஒழிந்துபோனபின், சமயரீதி யான கலாசார வைபவங்கள் எடுபடுமா? இப்படித் தங்களுடைய பாரம்பரிய அடையாளங்களைத் தொலைத்துவிட்டு, வெறுமையாய் நிற்கிற வாசீகனை, உற வென்று நினைப்பதுகூட, அபத்தமென்று பட்டது. அவனோடு இதைப் பற்றித் தர்க்கிப்பது முடியாத காரியம்.
அவன் அவ்வளவு தூரம் அந்நியப் பட்டு போயிருக்கிறான். இதை அப் படியே விடுவதற்கு இது ஒன்றும் சாதாரண விடயமல்ல. எங்கள் அழிவு களுக்கு இதுவும் வழிகோலும். ஒரு தனிமனிதனின் இத்தகைய சிறுமைத் தனங்களுடன் கூடிய விழுக்காடு பாரதூரமாக ஒட்டுமொத்த சமூகத் தையே பாதிக்கவும் கூடும்.
எங்கள் அழிவுகள் இப்படித்தான் தொடங்கியிருக்க வேண்டும். யாருட னாவது போய், இந்த விடயம் குறித்து மனம் விட்டுப் பேசினால் நல்லது என்று பட்டது. யாரோடு பேசுவது.? ஆத்மார்த் தமாகப் பேசுவதற்கு, நெருங்கிய உற வாக, அண்ணனின் ஞாபகம் வந்தது. அவர் கொட்டாஞ்சேனையில் இருக் கிறார். இதற்காக வேலை மினக்கெட்டு, நீண்டதூரம் பஸ் ஏறிப்போக வேண்டும். பரவாயில்லை. அண்ணனைப் போன்ற ஒரு படிப்பு மேதையால்தான், இது குறித்துச் சீரிய சிந்தனையுடன் நேர்மை யாகப் பேசமுடியும். அவர் ஒரு பி.ஏ. பட்டதாரி ஆசிரியர். தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேறிய ஒரு நன்ன டைத்தையுள்ள ஆசிரியர் திலகம், அவர் அவரிடம் போனால், உணர்ச்சிப் பூர்வ மாக, இதைப் பற்றி நிறைய விவாதிக்க (1Քւգաւb. அழைப்பிதழையும் எடுத்துக் கொண்டு, ரமணன் அவரைக் காணப்போகும் போது, அவர் வீட்டில் ஒய்வாக இருந் தார். மகன் வாங்கிக் கொடுத்த சொந்த வீடுதான். மகன் இங்கேயே பட்டயக் கணக்காளனாக இருக்கிறான்.
நல்ல வெயிலில், மாலை வேளையில் தான் திடீரென்று மழை பெய்யும். அப் படிப் பெய்வதாலோ என்னவோ பகலில் முகடு பிளந்து வெய்யில் தகித்தது. அந்தச் சூட்டை உள்வாங்கியவாறே குளிர்ச்சி யைத் தேடி வந்திருப்பது போல அவன் நிலைமை. அண்ணன் மகிழ்ச்சியோடு அவனை வரவேற்றார்.
‘வா ரமணன்! உதென்ன கை யிலை கடிதம்?”
'வாசீகனிடமிருந்து, குறுக்குவழி யிலை எனக்கொரு அழைப்பிதழ் வந்
மல்லிகை ஜூன் 2011 & 34

திருக்கு. மனம் கேளாமல் அவன் சகோ தரன்தான், இதை எனக்கு அனுப்பினது. உங்களை ஏனோ தவறவிட்டிட்டான். பார்க்கிறியளே?”
அவர் வாங்கிப் பார்த்துவிட்டுக் கேட்டார், “என்ன இது, மொட்டை யாக இருக்கு?
6
‘எல்லாம் சகவாச தோஷம்தான். சின்ன வயதிலே சுத்தமான வெள்ளைக் காரத்தனத்தின் மீது அவனுக்கொரு அதீத ஈடுபாடு. நாம் எப்படி நினைக்கி றோமோ, அப்படியே ஆகிவிடுனம். அவன் நினைச்சதுதான் நடந்திருக்கு. இந்த வெள்ளைக்காரத்தனம். எப்படிக் கொடிகட்டிப் பறக்குது, பாத்தியளே? தமிழும் தமிழ் சாதியும் எப்படி அழிந்து போனாலும் அவனுக்கென்ன என்ற மாதிரித்தான். இது ஒரு மேல்பூச்சுச் சாயம். இது எடுபடுமென்று நீங்கள் நம்புரியளே?”
“இது அவன்ரை இடத்திலை சகஜ மாகப் படலாம். இப்படி ஒன்றல்ல, ஆயி ரம் நடக்கும். இந்தக் கலாசாரத் திரிபு களுக்கு நீயோ நானோ என்ன செய்ய முடியும்? இதை ஒரு குல அழிவென்று விட்டுவிட வேண்டியதுதான்.”
“இது உங்களுக்கு ஒன்றுமேயில் லாமல் போன சர்வ நாசமாகப்பட வில்லையா?”
“எனக்குப் புரியுது ரமணா. இதிலே, இந்த வெறும் மொட்டைக் கடிதத்திலே உருக்கொண்டு நிற்கிற தமிழின் அழிவு, பச்சையான ஒரு தேசத்துரோகம் மாதிரி, உன்னை வதைச்சுக் கொண்டிருக்கு. இதி லிருந்து நீ மீள வேண்டுமானால், அவன் மாற வேணும். பூர்வீகம் மறக்காத ஒரு தமிழனாய், அவன் இனி மாறுவது எப்படி சாத்தியம்? இதை வெறும் கற்பனையிலே
தான் பார்க்க வேணும்.”
”எங்கடை துயரத்திற்கு இதுதான் தீர்வா?”
”வேறு எப்படி வரவேண்டுமென்று நீ விரும்புகிறாய்? உனக்காகவோ அல்லது ஒட்டுமொத்த எங்களின் தமிழ் பாரம் பரியம் மாறாத சமூகத்துக்காகவோ அவன் இனி மாறுவது எவ்வளவு தூரம் சரிவருமென்று நீ நம்புகிறாய்? உறவு முகமே அவனுக்கு மறந்து போச்சு. தமிழ் இனி எப்படிநினைவுக்கு வரும்?”
‘அண்ணா! உறவைவிடத் தமிழ் முக்கியமில்லையா? தமிழ் மூச்சடங்கிப் போன, ஒரு செத்தப்பிணத்தையே நேரில் கண்ட வறட்சி எனக்கு. இதி லேயே நான் எரிஞ்சு போறன். சவக்களை வீசுகிற இந்தக் கடிதத்தை நான் தொட் டதே தீட்டுக்குளிச்ச மாதிரியிருக்கு. இதிலிருந்து எனக்கு மீட்சி வேணுமென் றால், எதை நம்புறது?
'நீ தமிழனாக இரு. அதுவே போதும்!”
அதன் பிறகு அவன் குழப்பம் நீங்கி அமைதியானான். தமிழ் தொலைத்தவர் கள் நடுவே சாசுவதமான ஒரு தமிழ் நெருப்பாய், அவன் தன்னை உணர்ந் தான். அந்த நெருப்பு அணையாதிருக்கும் வரை, தமிழ் ஒழிந்துபோன எப்பேர்ப் பட்ட கறையும்தன்னை நெருங்கி வரவே அஞ்சும் என்று அவனுக்குப்பட்டது. அந்த படுதலின் உச்சஸ்தானத்தில் நின்ற வாறே பார்க்கையில், தூரத்தில் சென்று மறைந்து ஒழிந்துபோன ஒரு தமிழனின் விழுக்காட்டையே உள்வாங்கிப் பிரதி பலிக்கும் அந்தத் திருமண அழைப்பிதழ் சோபையிழந்த, வெறும் கருந்தீட்டு நிழ லாய் அவன் கண்களோடு வெளிச்சமா காமல், இருள் அப்பிக் கிடந்தது.
மல்லிகை ஜூன் 2011 & 35

Page 20
இலத்திபதி உட்டம் நடத்துஉேரே!
- அன்புமனி
1. உரிய நேரத்தில் கூட்டத்தைக் கண்டிப்பாக ஆரம்பியுங்கள்
பிரதம விருந்தினர் வரவில்லை என்றோ, கூட்டம் சேரவில்லை என்றோ பல்வேறு விதமான காரணங்களைக் கூறிக்கொண்டு கூட்டம் ஆரம்பிப்பதைத் தாமதிக்காதீர்கள். கூட்டம் தாமதமாகும் என்பதனாலேயே விருந்தினர்கள் தாமதமாக வருகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். அவர்களுக்காகக் காத்திராமல் உரிய நேரத்தில் கூட்டத்தை ஆரம்பியுங்கள். விருந்தினர்கள் வந்துசேரும் நேரத்தில் இணைந்துகொள்ளட்டும்.
2. விருந்தினர்கள் வரவு
உரிய நேரத்தில் நிகழ்வுக்குச் சமூகம் கொடுங்கள். நேரம் தவறும் உங்களால், நேரத்துக்கு வந்து சேர்ந்த ஏனையோர் காய வேண்டுமா? மனச்சாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்.
3. மங்கள விளக்கேற்றல்
கூட்டத்துக்கு வரும் விருந்தினர் அத்தனைபேரும் மங்கள விளக்கேற்ற வேண்டுமா? ஒருவர் ஏற்றினால் போதாதா? ஒருவரே - ஒருவர் மட்டுமே மங்கள விளக்கேற்ற வேண்டும் என்பதைக் கண்டிப்பாகக் கடைப்பிடியுங்கள்.
4. அனாவசிய உரைகள் தேவையா?
இறை வணக்கம் அல்லது தமிழ் வாழ்த்து ஏதாவது ஒன்று இடம்பெற்றால் போதும்.
தமிழ் வாழ்த்தே போதுமானது. வரவேற்புரை, அறிமுக உரை எல்லாம் தேவையா? தலை
மையுரை இடம்பெறுவதால் இவை எதுவுமே தேவையில்லை. இவற்றை நீக்கி விடுங்கள்.
5. பேச்சாளருக்கு நேரம் ஒதுக்குங்கள்
ஒரு பேச்சாளர் - அவர் எத்தகைய கொம்பனாக இருந்தாலும், பத்து நிமிடத்துக்கு மேலே பேசக்கூடாது. குறித்த நேரத்துக்குள் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடிப்பதே அவரது திறமை எனக்கொள்ள வேண்டும். தவிர்க்க முடியாத பட்சத்தில் 15
நிமிடங்களங் ஒதுக்கலாம்.
மல்லிகை ஜூன் 2011 * 36

6. நூல் விமர்சன உரை
ஒவ்வொரு கதையாக விமர்சிப்பது அனாவசியம். நூலின் சிறப்பம்சங்கள் மட்டுமே விமர்சன உரையில் இடம்பெற வேண்டும். ஆகக்கூடியது 15 நிமிடங் களுக்கு மேல் இவ்வுரை நீடிக்கக் கூடாது.
7. பேச்சாளருக்குத் தலைப்பாக்கட்டு அறிவிப்பாளர் கவனிக்க வேண்டிய விடயம் இது. ஒரு பேச்சாளர் பேசி முடித் ததும் அவரைப் பற்றிக் கூறவேண்டிய அவசியம் இல்லை. சபையோர் அவர் பேச்சு முழுவதையும் கேட்டவர்கள்தானே? அப்புறம் அந்தப் பேச்சை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
8. பேச்சாளரைப் பற்றிய
அறிமுகம்
இரண்டு அல்லது மூன்று வரிகளில் பேச்சாளர் அறிமுகம் முடிய வேண்டும். அனாவசியமாக நீட்டுவது நேர விரயம் ஆகும்.
9. நூல் விசேட பிரதிகள் பெறுதல்
பலர் இதில் நிறைய ஏமாற்று வேலை களைச் செய்கின்றனர். நூலின் விலை 250/- என இருக்கும். ஆனால் அவர் கொடுத்த என்வலப்பினுள் நூறு ரூபாதான் இருக்கும். யோருக்கு இனம்காட்ட வேண்டும். எப்படி?
இத்தகையோரை சபை
10. மொய் எழுதுவது போல் பெயர்
வாசிக்கப்பட வேண்டும் விசேட பிரதி பெற்றவர் தட்டில் வைத்த என்வலப்பை உடனே பிரித்து அவரது பெயரும் தொகையும் வாசிக்கப்பட வேண்டும்,
11. நேரத்தை மீறுபவரைத் தடுத்து
நிறுத்தல் நேரம் முடிந்ததும் மேசையில் உள்ள மணியை அடிக்க வேண்டும். ஒரு நிமிடத் திற்குள் அவர் வெளியேறாவிட்டால் தலை வர் அடுத்தவரது பெயரை அறிவிக்க வேண்டும். முந்திய பேச்சாளரை ஒரு நாசூக்காக அழைத்துச் செல்ல வேண்டும்.
12. நடனம், பாடல்
பேச்சுகளுக்கு இடையே நடனம் அல்லது பாடல் இடம்பெறுவதானால், மேடையமைப்பை மாற்றாமல் அதே மேடையிலேயே இடம்பெற வேண்டும். அதற்கேற்ற வகையில் மேடையைத் தயார் செய்திருக்க வேண்டும்.
3. சிறப்புப் பிரதிகளை பலர்
வழங்குவது
இது ஒரு அநாகரிகமான பழக்கம். ஒவ்வொரு விருந்தினரும் மேடைக்கு வந்து இரண்டு அல்லது மூன்று பிரதிகளை வழங்கிவிட்டுச் செல்வது. மீண்டும் மற் றொருவர் மேடையில் ஏறிச் சில பிரதி களை வழங்குவது தேவைதானா? சபை யோருக்கு எரிச்சலூட்டும் விடயம் இது. எனவே ஒருவரே சிறப்பிப் பிரதிகளை வழங்க வேண்டும்.
14. கெளரவித்தல்
யாராவது ஒருவரை மேடையில் கெளரவிப்பதானால் ஒருவர் பொன்னாடை, இன்னொருவர் விருது, மற்றொருவர் சான் றிதழ் என்றில்லாமல் அனைத்தையும் ஒருவரே வழங்க வேண்டும்.
மல்லிகை ஜூன் 2011 & 37

Page 21
15. நன்றியுரை
இது தேவையே இல்லை. நிகழ்ச்சி முடிந்ததும் சபையோர் எழும்பி விடுகின் றனர். நன்றியுரை அநேகமாக வெற்றுக் கதிரைகளுக்கே வழங்கப்படும். அதுமட்டு மல்ல, நன்றியுரையினால் எந்தப் பயனும் இல்லை என்பதும் முக்கியம்.
16. நோக்கத்தைப் புரிந்து
கொள்ளுங்கள் எந்த ஒரு கூட்டம் நடைபெறும்போது, அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளுங் கள். அதை ஒட்டியே சகல நிகழ்வுகளும் நடைபெற வேண்டும். அனாவசிய வளர்த் தல்கள், இடைச்செருகல்கள் இடம்பெறக் கூடாது. சகல நடவடிக்கைகளும் நறுக்குத் தெறித்தாற் போல் அமைய வேண்டும். தலைவர் இதை நெறிப்படுத்த வேண்டும். இலக்கியக் கூட்டம், நூல் வெளியீடு, சமயக் கூட்டம் முதலியவற்றுக்கேற்ப நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
17. ஒலிபெருக்கிக் கட்டுப்பாடு
ஒலிபெருக்கிச் சத்தம் காதைப் பிளப்பதாக அமையக் கூடாது. அளவான சத்தமாக இருக்கவேண்டும். நிகழ்ச்சிக்குப் பொருத்தமான பாடல் இடம்பெற வேண் டும். இலக்கிய நிகழ்வானால், தமிழ் பற்றிய பாடல்கள் இடம்பெற வேண்டும். சமய நிகழ்வானால் பக்திப் பாடல்கள் இடம்பெற வேண்டும். மங்கள நிகழ்வானால் நாதஸ் வரம் இடம்பெற வேண்டும். இசை நிகழ் வானால் கர்நாடக சங்கீதம் இடம்பெற வேண்டும்.
18. ஒலிபெருக்கி ஊழியருக்கான
அறிவுறுத்தல் ஒலிபெருக்கி ஊழியருக்கு முதல் நாளே தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப் பட வேண்டும். எக்காரணம் கொண்டும் காமா சோமா பாடல்கள், டப்பாங்குத்துப் பாடல்கள் இடம்பெறக் கூடாது.
19. ஒலிபெருக்கி உபயோகம்
ஒவ்வொரு பேச்சாளரும் பேச வரும் போது ஒலிபெருக்கி ஊழியர் வந்து, குழப்பக் கூடாது. ஒலிபெருக்கியை உயர்த்தி அல்லது பணித்து வைத்துக் கொள்வதை பேச்சாளரே செய்துகொள்ள வேண்டும்.
20. JġibLunTL LITTassiT
நிகழ்ச்சி நடைபெறும்போது ஏற்பாட் டார்கள் மேடையிலோ, சபையிலோ குறுக்கும் நெடுக்குமாக நடமாடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அனாவசிய மாக குசுகுசு பேச்சு நிகழ்த்துவதைத் தவிர்க்க வேண்டும்.
21. கூட்டம் நடைபெறும் மொத்த
நேரம் ஒரு கூட்டம் இரண்டு மணி நேரத் துக்கு மேல் நீடிக்கக் கூடாது. கூட்டம் ஆரம் பிக்கும் நேரமும், முடிவுறும் நேரமும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட வேண்டும். ஒவ்வொரு பேச்சாளருக்கும் உரிய நேரம், நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட வேண்டும். எந்தவொரு கூட்டமும் ஐ.நா.சபைக் கூட்டம் போல் கச்சிதமாக நடைபெற வேண்டும்.
மல்லிகை ஜூன் 2011 * 38

இரவும் பகலும் கதை பேசும் அந்திப் பொழுதில், ஆதவன் மேற்கு வானின் மலைத்தொடர்களுக்கிடையில் பல வர்ண ஜாலங்களை காட்டிக்கொண்டிருந்தான். அவனுடைய வெப்பம் குறையக் குறைய குளிர் கொஞ்சம் கொஞ்சமாக குதூகலிக்க தொடங்கியிருந்தது. அப்பொழுது அந்திநேரத் தென்றல் ஒன்று என் மேனியை தடவிச் சென்று என்னுள் ஒரு சிலுசிலுப்பை ஏற்படுத்தியது. மைனாக் குருவிகள் கீச் கீச் என சப்தம் எழுப்பிக்கொண்டே தங்கள் கூடுகளுக்கு விரைவாக பறந்தோடிக் கொண்டிருந்தன.
இவ்வியற்கை அழகில் நான் இலயத் திருந்த பொழுது ர்ர். ப்பீப். ர்ர். பீப்பீப். கார் ஒன்று வேகமாக கொங்ரீட் போட்டிருந்த அந்த அழகான பாதையில் வேகமாக சென்றது.
இப்பொழுது சூரியன் மறைந்து இருள் பரவ ஆரம்பித்திருந்த நேரம். எம்மைப் போலவே சுற்றுவட்டாரத்தில் வீட்டுத் தோட்டத்துடன் கூடிய தனித் தனி வீடுகளிலும் மின்சாரக் குமிழ்களின் மின்னொளி L ● பிரகாசிக்கத் தொடங்கியிருந்தது. இதற்கு காரண (ყ2ჭნტ] சத்தியராஜ் கர்த்தாவான மின்மாற்றி (டிரான்ஸ்போமர்) தூரத்தில் விளையாட்டு மைதானத்தின் ஒதுக்குப்புறத்தில் பாதுகாப்பு வேலிகளுக்கிடையில் கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.
விளையாட்டு மைதானத்தின் ஐந்து பக்கங்களிலும் உள்ள போக்கஸ் லைட்டு களின் சில மின்குமிழ்கள் ஒளியை உமிழ்ந்து, சர்வதேச தரத்திலான அப்பெரிய விளை யாட்டு மைதானத்திற்கு ஒளியூட்டிக் கொண்டிருந்தன.
இப்போது இருள் கொஞ்சம் அதிகமாக திரட்சியடையவே நான் வீட்டிற்குள் சொல்கின்றேன். விசாலமான வீட்டு முன் அறையினுள் உள்ள சோபாவில் தொப்பென அமர்ந்து கொள்கிறேன். டி.வி. ரிமோட் கொன்றோலை எடுத்து தூரத்தில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியை இயக்குகிறேன். நேத்ரா டி.வி.யில் இரவு நேரச் செய்திகள் துல்லியமாக டிஜிட்டல் தரத்தில் ஒளி-ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
"அண்ணா டீ" என்று அன்பாக கூறிய தங்கை மீனா, அழகிய ஓவிய வேலைப் பாடுகளுடைய டீ கப் ஒன்றிலிருந்து சுடச்சுட ஆவி பறக்கும் தேநீரை நீட்டுகிறாள். அவளின் காதுகளில் அணிவிக்கப்பட்டிருந்த தோடுகள் மின்னொளிபட்டு தகதகவென மின்னி தாங்கள் தங்கம்தான் என்பதனை பறைசாற்றின.
தேநீர் கோப்பையை உதடுகளின் அருகில் கொண்டு சென்றபோது ஒர் இனிய வாசனை என் நாசியில் பட்டு என்னை களிப்பில் ஆழ்த்துகின்றது. அது இலங்கையிலே
மல்லிகை ஜூன் 2011 & 39

Page 22
தயாராகும் உயர்ரக தேயிலை என் பதனை அதன் சுவையை உணர்ந்த நாக்கு எனக்கு உணர்த்துகிறது. சுவை யறிந்து தேநீர் முழுவதையும் பருகு கிறேன்
பின் மெதுவாக எழுந்து எனது தனி யறை நோக்கிநகர்கின்றேன். அங்கே ஒரு அலுமாரியில் கண்ணுக்கு அழகான பல் துறை சார்ந்த புத்தகங்கள் அடுக்கி வைக் கப்பட்டிருந்தன. பக்கத்தில் என்னுடைய கண்ணியமான கணணிக்கு முன்போய் அமர்ந்து அதனை இயக்குகிறேன். பின் என் கைவிரல்கள் கணணி மவுசை அழுத் துவதும் பின் விசைப்பலகையில் நர்த்தன மாடுவதுமாக இருந்தன. நான் என்னு டைய ஈமெயில் ஐடிக்குச் சென்று எனக்கு வந்திருந்த உள்நாட்டு - வெளிநாட்டு மின் னஞ்சல்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தேன்.
”கண்ணா சாப்பிட வாப்பா.” என் அம்மாவின் அழைப்பு குரல் கேட்டு, நேரம் சென்றதே தெரியாமல் இருந்த நான், கணணியை நிறுத்திவிட்டு குளியல் அறை நோக்கி வில்லில் இருந்து புறப் பட்ட அம்பு போல விரைகின்றேன்.
முற்றிலும் மாபிள் (டைல்ஸ்) பதிக் கப்பட்ட குளியலறையில் மூடியிருந்த தண்ணிர் குழாயிலிருந்து தண்ணிர் சொட்டுச் சொட்டாக கீழுள்ள வெள்ளைநிற தொட்டியினுள் கொட்டிக் கொண்டிருந்தது. குழாயைத் திறந்த போது பீறிட்டுக்கொண்டு வந்த தண் னில் என்னிரு கைகளைக் கழுவு கிறேன். எந்நேரமும் இங்கு தண்ணிருக் குப் பஞ்சமில்லை என்பதனை கொட்டிக் கொண்டிருக்கும் தண்ணிர் எனக்கு சுட்டி நின்றது.
சமையல் அறைக்கு அடுத்துள்ள அறையில் நீண்ட சாப்பாட்டு மேசைக்கு முன்னாலுள்ள நாற்காலியில் அமர்ந்து ம்ேசையை நோட்டமிடுகின்றேன். சோறு ஒரு பாத்திரத்தில் குவியலாக குவிக்கபட்டிருந்தது. பக்கத்தில் மூன்று விதமான கறிகளும் தனித்தனியாக பாத் திரங்களில் உள்ளன. கூடவே, சிறுகீரை யும் பழவகையும். எனக்கு பேரானந்தம். மெதுவாக சமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கிறேன். அம்மா’ கேஸ் அடுப்பை அனைத்துவிட்டு வந்துகொண்டிருக் கிறாள்.
திடீரென என்னுடல் சில்லிடுகிறது. என்ன குளிர் அது. என் மனம் பரிதவிக் கின்றது. சட்டென கண் விழிக்கிறேன். எனக்கு மேலே ஒட்டடை படிந்த தகரக் கூரை தெரிகின்றது. நான் யதார்த்த உல கில் இப்போது இருப்பதும், நான் இது வரை கண்டது ஒரு சுகமான கனவு என் பதும் இப்போது எனக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கியது. பூமி யின் குளிர்தன்மை மேலெழுந்து விரிந்து கிடக்கும் பாயையும் மீறி படுத்துக்கிடந்த என்னுடலை ஊசிபோலக் குத்துகிறது.
வெளியில் விளையாடும் சிறுவர் களின் உற்சாக குரல்கள் லயத்து அறை யொன்றில் படுத்துக்கிடக்கும் என் காது களுக்கு தெளிவாகக் கேட்கின்றது. லயத்து கோடிதான் இங்கே விளை யாட்டு மைதானம்.
'அண்ணா எழும்பண்ணா. இவ் வளோ நேரமாகியும் படுத்து கெடக் கிற.' முன் அறையில் இருந்து தங்கை மீனாவின் குரல் கேட்கின்றது. நான் மெதுவாக எழும்புகிறேன். பக்கத்தி லுள்ள பலகை மேசையில் சிமினி லாம்பு ஒன்று அணைக்கப்பட்டிருந்தது. சிமினி
மல்லிகை ஜூன் 2011 & 40

யில் கரி சற்று அதிகமாகவே படிந் திருந்தது.
ம். எத்தனை காலமாக இத்தோட் டத்து மக்கள் மின்சார வசதிக்காகப் போராடி, ஏங்கிக் காத்திருக்கிறார்கள். காலங்கள் வீணாகியதுதான் மிச்சம். இன்னும் மின்சாரம் வரவில்லையே. இர வானால் அன்றாட வேலைகளை செய்ய எவ்வளவு கஷ்டம். ஒழுங்காக் படிக்க முடியாது, சமைக்க முடியாது, தொலைக் காட்சி பார்க்க முடியாது, வானொலி கேட்க முடியாது. இன்னும் எத்தனை எத்தனையோ.
மின்சார வசதிக்காக தொழிற்சங்க காரியாலயங்களுக்கு ஏறி-இறங்கி வேண் டாம் என்றநிலையாகி விட்டது. மின்சார சபைக்கு உரியமுறையில் தெரியப்படுத்தி யும், எந்தப் பலனும் இல்லை. இலங்கை யின் மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட அறுபது சகவிகிதம் நீர்மின் உற்பத்தி. அந் நீர்மின்சாரத்தை வழங்குவது மலையகத் தின் மலைகளிலிருந்து ஓடிவரும் நதிகளே! ஆனால், மலையகத்திலுள்ள எமது தோட்டத்துக்கு மின்சார வசதியே இல்லை.
மலையகத்தின் தோட்டப் பகுதிகள் பலவற்றிற்கும் இதே நிலைமைதான். இலங்கையின் உல்லாச விடுதிகளில் தேவையற்று ஒளிரும் மின் குமிழ்களின் மின்சாரத்தை சேமித்தால் கூட மலைய கத்தின் முழுவதிலுமுள்ள தோட்டப் பகுதிகளுக்கு ஒளியேற்றலாமே. என் மனம் ஆதங்கப்படுகின்றது. நானும் எனது இளைஞர் மன்ற தோழர்களும் இணைந்து இந்த தோட்டப் பகுதிக்கு மின்சாரம் வழங்க எவ்வளவோ முயன் றும் எல்லாம் விழலுக்கிறைத்த நீர் என்ற நிலையாகி விட்டது.
இஸ்தோப்புக்கு பக்கத்தில் இருக் கும் அறையில்தான் அக்காவும் அவ ளுடைய இரண்டு பிள்ளைகளும் வசிக் கிறார்கள். மச்சான் (அக்காவின் கணவர்) பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இன்றுடன் மூன்று வருடங்களுக்கு மேலாகி விட்டது. எந்த முடிவும் இல்லை. பத்து அடி குடிலுக்குள் மூன்று சின்னஞ் சிறிய அறையுடனும் வெளியில் ஒரு குசினியுடனும் வாழும் எம்மவருக்கு விடிவு வராதா...? என் மனம் ஏங்கியது.
வெளியில் வந்துநின்று வானத்தைப் பார்க்கிறேன். வானம் ஒரே மப்பும் மந் தாரமுமாக காட்சி தருகின்றது. சூரியன் மேகத் திசைகளுக்குள் ஒழிந்துகொண் டான்.
"இந்தா அண்ணா. பல்ல வெலக்கு” என்று தங்கை மீனா எனது உள்ளங்கை யில் பற்பொடியை கொட்டி வெள்ளை நிற வாளியொன்றில் தண்ணிரை வைத்து விட்டு வாடிய முகத்தோடு, பித்தளை தோடுகள் அணிந்திருந்த அவள் வேக மாக குசினிக்குள் சென்று மறைகிறாள்.
நான் ஆட்காட்டி விரலால் பல் பொடியை எடுத்து பற்களில் வைத்து தேய்த்துக்கொண்டே, தண்ணிர் வாளி யையும் தூக்கிக் கொண்டே லயத்தின் ஒரு கோடியில் இருக்கும் மலசல கூடம் நோக்கி நடக்கின்றேன்.
லயத்தின் கோடியில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பக்கத்தில் ஐந்தே ஐந்து மலசல கூடங்கள் நிற்கின்றன. இந்த லயத்திலுள்ள இருபது குடும்பமும் இந்த ஐந்து மலசல கூடங்களைத்தான் பாவிக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட் டம். இதுவே பல பிரச்சினைகளை எம் இருபது குடும்பங்களுக்கிடையே ஏற் படுத்தியிருக்கிறது.
மல்லிகை ஜூன் 2011 & 41

Page 23
சுத்தமில்லாத, மலசலசுட மண மும், அங்கு குவிந்திருந்த குப்பையின் மணமும், யாரோ புகைத்திருந்த பீடியின் மணமும் ஒன்றுசேர்ந்து எனக்கு குடலை பிரட்டி எடுக்கின்றது. மலசல கூடத்துக் குள் நுழைந்த நான் காலைக் கடனை கழித்துவிட்டு குழாயடிக்கு (பீலி கரை) விரைகின்றேன்.
குழாயடி (பீலிக்கரை).
குழாயைத் திறந்தால் நீர்வர மறுத் தது. இது இன்றைக்கு மட்டுமா வழமை யான விடயம்தானே? என்னை ஆறுதல் படுத்திக் கொண்டேன். இலங்கையில் நதிகள் பிறந்து தவளும் எம் மலையக மண்ணில் உள்ள எம் தோட்டத்துக்கு தண்ணிர் இல்லை. சிரிப்பதா? அழுவதா? என்று எனக்குத் தெரிவில்லை. இனி என்ன செய்வது? ஆற்றுக்குத்தான் போக வேண்டும். ஆற்றை நோக்கி நடக் கின்றேன்.
ஆற்றுநீரில் கைகால் முகம் கழுவி விட்டு நேராக லயத்துக் காம்பிராவுக்கு (வீடு.?) வந்த நான் குசினிக்குச் செல் கிறேன். அங்கு தங்கை மீனா ஈரவிற குடன் ஒரு சிவில் யுத்தமே நடத்திக் கொண்டிருந்தாள்.
‘அண்ணா அந்த தேத்தண்ணிய குடி.’ ஒரு நெளிந்த நிறம் மங்கிய குவளை ஒன்றில் தேநீர் ஆறிப்போய் இருந்தது. சீனிச் சாடியைப் பார்க்கின் றேன். சீனிச் சாடி வெறுமையாய் இருந் தது. சீனி விலை கொந்தளிக்கும் அலை போல உயர்ந்து வந்து எம் போன்ற குடும்பங்களை ஆட்டங்காண வைத்துக் கொண்டிருக்கிறது உணர்ந்து கொண்ட, நான் தேநீரை மட்டும் பருகுகின்றேன்.
என்பதனை
கசப்பான மருந்தொன்று வாயில் பட்டு தொண்டையைக் கரிப்பது போல் இருந்தது. வெளிநாடுகளுக்கு முதற்தர தேயிலையை வழங்கும் தேயிலை தேசத் தொழிலாளர்களுக்கு சுவையான தேநீர் கிடைப்பது குதிரைக் கொம்புதான். தேயிலைத் தூளின் சக்கையை அல்லவா உண்மையான தேயிலைத் தூள் என்று மனக்கணக்குப் போட்டு தேநீர் குடிக்க வேண்டியுள்ளது. என் மனம் அங்கலாய்க் கின்றது.
"அண்ணா. சாப்பிடு.” மீண்டும் தங்கை ஒரு பாத்திரத்தில் பாதி கரிகிய ரொட்டித் துண்டும், பக்கத்தில் கொஞ் சம் தேங்காய் சம்பலும் இருக்கிறது.
'அம்மா சாப்பிட்டாங்களா..?” நான் கேட்டேன்.
'ம். அவங்க சாப்பிட்டுட்டு மொதல்லயே வேலய்க்கு போயிட் டாங்க.”
பிரித்தானியர் காலம் முதல் இன்று வரை உழைக்கும் தேயிலைத் தேச தொழிலாளர்களின் பிரதான உணவு இந்தக் கோதுமைமா ரொட்டியும், தேங்காய் சம்பலும்தான். அதிலும் தற் போது இந்த இரட்டையர்களின் திடீர் விலையேற்றம் எம் போன்ற தேயிலை தேச தொழிலாளர்களின் வயிற் றெரிச்சலை அதிகரித்தவண்ணமுள்ளது. நாய் போல உழைத்தாலும், வாய்ச்சோறு இல்லை என்பது எவ்வளவு பொருத்தம்.
சாப்பிட்டு விட்டு கைகழுவும் நேரம் வெளியில் திமுதிமுவென பலர் வரும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க் கின்றேன். அங்கே எம் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் இருபது பேரும்
வந்திருந்தனர்.
மல்லிகை ஜூன் 2011 தீ 42

‘ராஜன் எல்லாஞ் சரி. உள்ளு ராட்சி எலக்ஷனுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யுற நாள் நாளைக்கி. அது சம்பந்தமா தெளிவுபடுத்தி இன்னக்கி ஒரு சின்ன மீட்டிங் எங்க வீட்ல இருக்கு தானே..! தோட்டத்து ஆளுங்களோட ஆதரவும் நம்ப இளைஞர் மன்றத்துக்கு கூடிக்கிட்டே இருக்கு. இந்த எலக் ஷன்ல நிக்கப் போற நீ இப்படியா சொணங்கிட்டு இருக்கிறது. s போவோம்.' செயலாளர் சுரேஷ் என்னை அவசரப்படுத்தினான். உடன் இருந்த இருபது இளைஞர்களின் நெஞ்சில் உறுதியும் கண்களில் தன்னம் பிக்கையும் ஒளியிட்டுக்கொண்டிருந்தன.
“சுயேட்சை வேட்பாளராக உள்ளூ ராட்சி தேர்தலில் போட்டியிடும் நான் வெற்றிப் பெற்றவுடன் இருநூறு வருட காலமாக இந்நாட்டுக்காக உழைத்தே உருக்குலைந்து போய் இன்னும் அடிப் படை வசதிகள்கூட கிடைக்காமல் அல்லற்படும் எம் தேயிலை தேசத்தின் மக்களுக்கு அவ்வடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பேன்’ என்று மனதில் திடமாக எண்ணிக்கொண்டே நானும் என் சக இளைஞர் மன்ற உறுப்பினர் களும் சேறும் சகதியும், குன்றும் குழியு மான தோட்டத்துப் பாதையில் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல நடந்துகொண்டிருக் கின்றோம்.
மேகத்திரைகளைச் சற்று விலக்கிய சூரியனின் ஒளிக்கிரணங்கள் மெல்ல மெல்ல தோட்டப் பகுதியின்மேல் பரவிக்கொண்டிருக்கிறது.
لنامهٔ
薯毒飘
! . - - - - - , ,
垂
1. Ι
HAPP
廿 سسته.مسه -- H rt- --
H -H 一一十 ܕܚ ܚܘܼ 甘 ±
w H 再
rm *一 二 甲 O O فلمـ -- H --- تنه- لسلها
十廿 --
Hسسلم
Excellent Photographers E Modern Computerized
Photography
For Wedding Portraits
& Child Sittings
Photo Copies of Identity Cards (NIC), Passport & Driving Licences Within 15 Minutes
--
E 300, Modera Street,
Colombo - 15. Tel: 2526345
--
--
---
--- tilt-i-H
ロ
; : . . ; | . . i : .
í * 1-- τ --
: t
மல்லிகை ஜூன் 2011 & 43

Page 24
ஆக்கிரமிப்புக்கள் எப்போதும் ஒருபக்கம் சார்ந்தவையே!
ஏனெனில் Sbắfồöf6f6fiqä56f6őr ypps ITöpffò ஆண்களால்தான் வடிவமைக்கப்பட்டுள்ளன.
6j56)TIT655T(86.JIT 6T6raor(8LDII - யுத்த ஆயுதங்கள்
அனைத்தும் (86 freibólfr P LifLIITöfflesGO) 6Tf
BLITGO...
ஒர் இனக்குழுமம் இன்னோர் இனக்குழுமத்தின் ஆண் குழுமத்தை DuffûI6ÓIudbẾD, PSILOTIDIráfòöffò, சிறையிட்டுக் குதூகலிக்கும்!
மற்றும், அச்சுறுத்தி மெளனிகளாக்கி இளம் பெண்கள் மீது முழுக்கவனத்தையும் குவிக்கும்.!
பச்சை உடைகளின்
வன்புணர்வுகள்
நீள.நீள. ஆக்கிரமிப்புகளும் நீண்டுகொண்டே போகும்!
விதவைகள் அதிகமாகி போன தமிழ் தேசமதில் விதவைகளின் 5oH6) Iörn (83.560p60I 6Tór6Or68LDIT... ஒருபிடி சோறு தொண்டைக்குள் இறங்க இல்லையேல் -
ஒரு முழம் கயிறு தொண்டையை இறுக்க!
மல்லிகை ஜூன் 2011 & 44

டபிள்யு. எல். ஏ. டி. பீற்றர் 6 joTS5T66laöT டிங்கி ஜீவகாருண்யத்தின் அலைச்சல்
- 6apuavasa7
1978ஆம் ஆண்டளவில் தமிழகத்து முக்கியமான ஒரு விமர்சகரான வெங்கட்சாமி நாதன் திரைக்கதை வசனம் எழுதி, இந்தியா வின் மிக முக்கியமான ஒரு வகையில் சொல்வதானால், கலகத் தன்மை மிக்க ஓர் இயக்குனரான ரித்வித் கடகின் மாணவரான மலையாள திரைப்பட இயக்குனர் ஜோன் 9|Sly as Tub (John Abraham) Suásálu 'அக்ரஹாரத்தில் கழுதை' என்றொரு தமிழ்ப் படம் வெளிவந்தது. திரையரங்குகளில் பார்க் கக் கிடைக்காத அத்திரைப்படம், (இணைய உபாயத்தில் சமீபத்தில் பார்க்கக் கிடைத் தது.) தமிழ் படம் என்ற வகையிலும், முற் றிலும் வேறுபட்ட பாணியில், வணிக சினிமா வின் தன்மைகள் இல்லாத முறையில் உரு வாக்கப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் V தமிழகத்தின் இசைக் கலைஞர் எம்.பி.சீனி வாசன் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அப்படத்திற்கு அவரே இசையமைத்திருந் தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்திரைப்படத்தின் பிரதி அந்த காலகட்டத்தில் ஒரு நூலாகவும் வெளிவந்தது. அத்திரைப்படத்தின் மையப் பாத்திரமாக ஒரு கழுதை நடித் திருந்தமையும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம்.
2008ஆம் ஆண்டு டபிள்யு.எல்.ஏ.டி.பீற்றர் வணபிதா சிங்களத்தில் எழுதி, எம்.எச். எம்.ஹசன் அவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பில் கொடகே வெளியீடாக வெளிவந்த டிங்கி என்ற நாவலை படிக்கக் கையில் எடுத்தவுடன், உடனடியாக “அக்ரஹாரத்தில் கழுதை
மல்லிகை ஜூன் 2011 & 45

Page 25
என்ற திரைப்படமே எனக்கு நினைவுக்கு வந்தது. எல்லாவற்றிலும் தமிழர் நாம்தான் முதல் என்ற பொது புத்தி மனோபாவத் தில், வனபிதா அவர்கள் அத்திரைப்படத் தைப் பற்றி அறிந்திருப்பாரோ, அதன் தாக்கத்தில் 'டிங்கி’ என்ற நாவலை எழுதி இருப்பாரோ என்ற ஐயம், இந்த நாவலின் முதல் பக்கங்களில் அந்த நாவலுக்கான எந்த வகையான உரைகளோ, மூலமொழி நாவலாசிரியரைப் பற்றியோ, மொழிபெயர்ப் பாளர் பற்றிய குறிப்புகளோ இடம்பெறாத நிலையில், நான் அப்படியான ஒரு ஐயத் திற்கு ஆட்பட்டேன். ஆனால், அதிர்ஷ்ட வசமாக டிங்கி’ என்ற அந்த நாவலின் பின்
ட்டையில் இந்த நாவலைப் பற்றி 20.03. 1965ஆம் ஆண்டு தினமின பத்திரிகையில் இந்த நாவல் பற்றி வலகெதர சோமாலோக தேரர் அவர்கள் எழுதிய ஒரு சிறு குறிப்பு, எனது மேற்சொன்ன எனது ஐயத்தை இல் லாமல் செய்துவிட்டது. அதாவது வணபிதா அவர்கள் 1965இல் இந்த நாவலை எழுதி யுள்ளார். ஆனால், 'அக்ரஹாரத்தில் கழுதை வெளிவந்ததோ 1978இல், ஆனா லும் கழுதையை இலக்கிய நாயகனாக ஆக்கிய பெருமை தமிழர்களான நம்மைத் தான் சாரும். எம் மகாகவி பாரதி கழுதை ஒன்றை வைத்து தன் பாணியில் ஒரு கல கம் செய்து, அந்த கழுதைக்கு ஓர் இலக் கிய அந்தஸ்து கொடுத்த பெருமை நம் மையே சாரும். 'அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படப் பிரதி உருவாகுவதற்கு மகாகவி பாரதியின் வாழ்க்கையில் நடந்த அந்தச் சம்பவமும் (Impression) ஆக அமைந்தது என்று வெங்கட்சாமிநாதனோ, ஜோன் ஆபிரகாமோ குறிப்பிட்டதாக ஞாபகம்,
இயக்குனர் ஜோன் ஆபிரகாமின் அக்ரஹாரத்தில் கழுதை’ என்ற அத் திரைப்படத்திலும் வனபிதா அவர்களின் டிங்கி நாவலிலும் கழுதை ஒன்று சம்பந்தப் பட்டது என்ற ஒன்றோ அவ்விரு படைப்பு களின் பொதுத்தன்மையே தவிர, இவ்விரு பிரதிகளும் வெவ்வேறு தளத்தில் இயங்கு பவை. ஆனாலும் அபூர்வமான முறையில் இவ்விரு பிரதிகளிலும் முறையே சில ஒற் றுமைகள் இடம்பெற்றிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அவை பற்றி டிங்கி நாவலை விரிவாகப் பேசும் பொழுது தெரிய வரும்.
அதற்கு முன்னதாக இந்த நாவலை எழுதிய டபிள்யு.எல்.ஏ.டி.பீற்றர் வனபிதா அவர்களைப் பற்றி சிறிது தெரிந்து Qasirsits Tsorb.
வண அருட்தந்தை கலாநிதி தொன் பீற்றர் சிறந்த கல்விமான். கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் பல உயர் பதவிகளை வகித்தவர். பல கல்வி நிறுவனங்களில் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமை யாற்றியவர். சமயும் சார்ந்த பல நூல்களை மட்டுமன்றி, கல்வித்துறை சம்பந்தமான நூல்களையும், அத்தோடு பல இலக்கிய நூல்களையும், வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். குறிப்பாக சிறுவர் இலக் கியத்துறையில் இவரது ஆர்வம் தனி யானது. இந்த வகையில் டிங்கி எனும் இந்த நாவலின் தமிழ்பெயர்ப்பின் பின் அட்டையில் இடம்பெற்றுள்ள வலகெதர சோமாலோக தேரர் அவர்கள் குறிப்பின்படி, "கொழும்பில் ஒரு பாடசாலையில் வசித்த டிங்கி என்ற பெயர் பெற்ற ஒர் கழுதை பற்றி அப்பாடசாலை அதிபர் எழுதிய கதை’ என்கின்ற பொழுது, கொழும்பில் ஒரு
மல்லிகை ஜூன் 2011 & 46

பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய அதிபர் வணபிதா அவர்களே அந்த அதிபர் எனத் தெரிகிறது.
வணபிதா அவர்கள் அதிபராக பணி யாற்றிய கொழும்பில் அமைந்துள்ள பாட சாலைக்கு வந்துசேரும் கழுதை ஒன்று, தனது கடந்த காலத்தை மீட்டிப் பார்த்து, தான் பட்ட துன்பங்களை, அது சந்திக்கும் பல வகையான மனிதர்களைப் பற்றிச் சொல்வதே டிங்கி என்ற இந்த நாவலின் உள்ளடக்கம். அந்த உள்ளடக்கத்தின் வழியாக கதைசொல்லியான கழுதை, மனித சமூகத்தினரால் மிருகங்கள் படும் இன்னல்களை எடுத்துக்காட்டுவதோடு, மிருகங்களின் பக்க நியாயங்கள், நிர்ப்பந் தங்கள் என்பன பற்றியெல்லாம் பேசிச் செல்லுகின்றது.
பொதுவாக கழுதையானது எல்லாச் சமூகங்களிலும் அலட்சியப்படுத்தப்படு கின்ற, அவமானத்திற்குரிய ஒரு மிருக மாகவே பார்க்கப்படுகின்றது. அதன் இருப்பை, அபசகுனம் என்று கருதுகின்ற சமூகங்களும் உண்டு. அதன் முகத்தில் முழித்தால் நல்ல சகுனம் என்று கருது கின்ற சமூகங்களும் உண்டு. உலகின் பல மொழிகளில் நிலவும் பழமொழி களிலும், முதுமொழிகளிலும் கழுதை என் பது அவமானத்தின் சின்னமாகவே முன் வைக்கப்படுகின்றது. அதேவேளை கிரா மங்களில் (குறிப்பாக இந்தியக் கிராமங் களில்) தவறு செய்தவனுக்கு தண்டனை யாக அவன்மீது கரும்புள்ளிகள் இடப்பட்டு, கழுதை மீது அமர வைத்து ஊர் முழுவதும் ஊர்வலம் போக வைப்பது போன்ற பஞ்சாயத்து தீர்ப்புகளில் கழுதையும்
அவமானப்படுத்தப்படுகிறது. டிங்கி
நாவலின் கதாநாயகனான டிங்கி என்ற அந்த கழுதையும் இவ்வாறான பலவித மான முறைகளில் அது சந்திக்கின்ற மனிதர்களால் கேவலப்படுத்தப்படுகிறது.
இவ்விடத்தில் மகாகவி பாரதி ஒரு கழுதையை அக்ரஹாரத்தில் கொண்டு வருவதனால் எதிர்கொண்ட எதிர்ப்பும், அக்ரஹாரத்தில் கழுதை எனும் திரைப் படத்தின் கல்லூரி ஆசிரியரான நாராயண சுவாமி ஒரு கழுதைக் குட்டியை அக்ரஹா ரத்தில் அமைந்துள்ள தன் வீட்டுக்கு கொண்டு செல்லும்பொழுது, சந்திக்கினற பிரச்சினைகளும் நினைவுக்கு வருகின் றன. அதேமாதிரி டிங்கியில் வரும் கழுதை யும் அதுவொரு கழுதையர்க இருந்தமை யால் மட்டுமே அது எதிர்கொள்கின்ற இன் னல்களை இந்த நாவல் முழுதும் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
டிங்கி என்ற அக் கழுதை தன் கதையை அதற்கு நினைவு வந்த நாள் தொடக்கம் வாழ்ந்த மன்னார் பிரதேசத்தி லிருந்து தொடங்குகிறது. மன்னார் பிர தேசத்திலிருந்து தன் கதையைச் சொல் லத் தொடங்கும் டிங்கி, தன்னைப் போன்ற மிருகங்கள் மனிதர்களாலும், இயற்கைச் சூழல்களாலும் எதிர்கொள்கின்ற விபத்துக் களைப் பற்றி விபரிக்கின்றது. கடலில் இழுத்துச் செல்லப்படும், மற்றும் புகையிரத வண்டியில் விபத்துக்குள்ளாகுதல் போன்ற பல நிகழ்வுகளைச் சொல்லுகின்றது.
நாம் மேலே குறிப்பிட்டது போல், கழுதை நம்பிக்கைகளில் ஒன்றான கழுதையின் சத்தத்தைக் கேட்டால், தென் னோலைகளை வண்டுகள் சாப்பிடாது என்ற ஒரு நம்பிக்கையும் அன்று தென்னந்
மல்லிகை ஜூன் 2011 & 47

Page 26
தோட்டம் செய்வோர் மத்தியில் நிலவிய்து. அந்த நம்பிக்கையே மன்னாரில் வசித்துக் கொண்டிருந்த அந்தக் கழுதை நாகஹா வத்த எனும் இடத்தில் அமைந்திருந்த தென்னந் தோட்டத்திற்கு கொண்டு செல் லப்பட்டதற்கு காரணமாக அமைகிறது. இதுவே டிங்கியின் முதலாவது இடப்பெயர் வாக அமைகின்றது. அந்த தென்னந் தோட்டத்திற்கு அது எடுத்துச் செல்லப்பட் டாலும், அது கொண்டு செல்லப்பட்ட நோக்கம் நிறைவேறவில்லை. அதாவது கழுதையின் சப்தத்தால் தென்னோலை களை வண்டுகள் அரிக்காது என்பது வெறும் புரளி என்பதை அந்தத் தோட்ட முதலாளி உணர்ந்துகொண்டாலும், டிங்கியை விரட்டவில்லை. ஆனாலும் அந் தத் தோட்டத்து மூத்த காவலாளியும், முத லாளியின் மகளும் டிங்கி மீது அன்பு செலுத்துகின்றனர். முதலாளியின் ஆண் பிள்ளைகளும், தோட்டத்து இளைய பணி யாளர்களும் டிங்கியை நடத்துகின்ற முறை, அதற்கு அவர்கள் செய்கின்ற கொடுமைகளைத் தாங்காது தருணம் பார்த்து அந்தத் தோட்டத்திலிருந்து தப்பி யோடி பல இடங்களில் அலைகின்றது.
அப்படி அலையும் பொழுது, இடைக் கிடையே மனிதர்களால் மேலும் பல இன் னல்களைச் சந்திக்கின்றது. அதன் காரண மாக மனிதர்களின் சகவாசமே வேண்டா மென்று ஒரு காட்டுக்குள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது. அந்தக் காட்டின் வழி யாகத்தான் வளதெனியா என்ற கிராமம் உள்ளது. அவ்வழியாக வந்துபோகும் மனி தர்கள் அதனை அபூர்வமாகப் பார்ப்ப தோடு, அக்காட்டில் அபூர்வமான உருவத் தில் உலாவும் ஒரு பேயாகவும் பேசப்படு
கிறது. அதற்குக் காரணம் அது ஒளிந் திருக்கும் காட்டின் அருகே அமைந்திருக் கும் சுடுகாடானது இறந்த ஒரு பணக் காரரின் நிலம் என்றும், முழுமனதுடன் அந்த நிலத்தை சுடுகாட்டிற்காக அவர் கொடுக்காததன் காரணத்தால் குதிரை மாதிரியான உருவம் கொண்ட மிருகம் மீது அவர் உலாவுவதாக டிங்கியை இணைத்து ஒரு வதந்தியும் அக்கிராமத் தில் பரவுகிறது. இப்படியாக டிங்கி தான் சந்தித்த பலவிதமான அனுபவங்களை சொல்லிக்கொண்டு போகிறது. அவ்வா றான அதனுடைய கதை சொல்லுதல் வெறுமனே தன்னுடைய கதையை மட்டும் சொல்லாது அக்காலகட்ட இயற்கை சூழலையும், அக்காலகட்ட உயர் வர்க்க குடும்பங்களின் பிரச்சினைகள் பற்றியும், கிராமிய வாழ்வு, அச்சூழலிலான வறுமைப் பட்ட மக்களின் வாழ்க்கை முறை களையும் தன் கதையுடன் இணைத்துச் சொல்லுகின்றது.
நாம் முன்பு குறிப்பிட்டது போல், ஜோன் ஆபிரகாம் அக்ரஹாரத்தில் கழுதை கதை பிரதிக்கும், வணபிதா பீற்றர் அவர்கள் டிங்கி என்ற நாவலின் பிரதிக்கு மிடையில் மிக அபூர்வமான ஒற்றுமைகள் சொல்வது என்றால், இரண்டிலும் கழுதை என்ற ஜிவி மையப் பாத்திரமாக இருக் கிறது. அக்கழுதையை அரவணைப்பதும் பராமரிப்பதும் கல்வியாளர்கள். (அக்ர ஹாரத்தில் கழுதையில் கல்லூரி ஆசிரியர் நாராயணசுவாமி, டிங்கி நாவலில் வண பிதா பீற்றர் அவர்கள்) டிங்கி நாவலில் காட்டுக்குள் ஒளிந்திருக்கும் கழுதை பேயாகப் பார்க்கப்படுகிறது. அக்ரஹாரத் தில் கழுதையில் அக்ரஹாரத்து மனுஷர்
மல்லிகை ஜூன் 2011 & 48

களால் அடித்துக் கொல்லப்படும் கழுதை பின் அவர்களால் பேயாகப் பார்க்கப்படு கிறது. (பின் அக்கழுதைக்காக அவர்கள் ஒரு கோவில் கட்ட முயற்சிப்பது என்ப தெல்லாம் வேறு கதை.) அடுத்து இரு பிரதி களிலும் வருகின்ற கல்லூரிகள், அதிபர் கள், பாதிரியார்கள் இப்படியான பல ஒற்றுமைகளைச் சொல்லலாம். 1965ஆம் ஆண்டு சிங்கள டிங்கி வந்திருக்க, அக்ர ஹாரத்தில் கழுதை 1978ஆம் ஆண்டு தமிழில் வந்துள்ளது. அப்படியான ஒரு நிலையில் இரண்டு பிரதிகளுக்கு மிடையில் பல அபூர்வமான ஒற்றுமைகள்.
எந்தவிதமான ஆர்ப்பாட்ட நடையு மின்றி சரளமாக ஒரு கழுதையின் வாக்கு மூலத்தின் ஊடாக மனிதர்களுக்கும், மிரு கங்களுக்குமிடையிலான உறவு, மனிதர் களால் ஏற்படும் நெருக்கடிகள் பற்றி வண பிதா இந்த நாவலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாவல் பற்றி வலகெதர சோமா லோக தேர அவர்கள் தினமின பத்திரிகை யில், மர்மச்சுவை ஆகிய உணர்வுகளைத் தரும் என்று எழுதியுள்ளார். ஆனால் இதை தமிழில் ஆழ்ந்து நோக்கும் பொழுது, அவ்விரு சுவைகளையும் கான முடியவில்லை. இந்த இழப்புக்கு மொழி பெயர்ப்பு ஒரு காரணமாக இருக்கலாம்.
இக்கதையில் நகைச்சுவை,
கதையாகும்’
அதாவது சிங்கள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யும்போது ஏற்படும் தொனியினால் இந்த இழப்பு ஏற் பட்டிருக்கக்கூடும். ஆனாலும் இந்த உணர்வுகளின் இழப்புக்குப் பின்னாலும் அச்சுப் பிழைகளால் ஏற்படும் தடங் களையும் மீறி, மூல மொழி படைப்
பாளியான வனபிதா அவர்களின் மொழி நடையின் சிறப்பானது, இந்த நாவலை படிக்கக் கூடியதாக ஆக்கியிருப்பதோடு, நாவலில் சொல்ல முயற்சிக்கும் செய்தி யின் காத்திரம் அதன் வீச்சுடனேயே தமி ழில் வந்துசேருவதற்கு வழி வகுத்திருக் கிறது.
கழுதை என்ற மிருகம் பற்றிய அசூசையான ஒரு கருத்து நிலைக்கு எதி ரான ஓர் ஆவணமாக டிங்கி என்ற நாவல் அமைவதோடு, ஒரு கழுதையை கதை சொல்லியாக ஆக்கி தந்ததன் மூலம், ஒட்டுமொத்த மிருகங்கள் மீத நாம் கொள்ள வேண்டிய பாசம், கருணை என் பதைப் பற்றிய அக்கறை நமக்குள் ஏற்படும் வகையிலான உணர்ச்சிபூர்வமான நிலை
க்கு நம்மை இட்டுச்செல்கிறது என்பதே இந்நாவலின் வெற்றியாகும்."
மல்லிகை ஜூன் 2011 & 49

Page 27
தலைகீழ்
- வேல் அமுதன்
நல்லதம்பிக்கு வயது நாற்பத்தெட்டு. அவர் இங்கிலாந்து வாசி. சுப்பர் மார்க்கட் ஒன்றினை அங்கே திறம்பட நடத்தி வருகின்றார். இருந்தும், அவர் இன்னமும் கட்டைப் பிரமச்சாரி, அதே நேரம் ஒழுக்கசீலன். மது, மாது பக்கம் மறந்தும் தலை வைத்துப் படுத்தறியாதவர்.
பிரமச்சாரியாக இருப்பதும், பிராணனைப் பிடித்தபடி இரவு பகல் எனப் பாராது, கடுமை யாக அவர் உழைப்பதும், தனக்கிளைய நாலு சகோதரிகளைச் கரை சேர்ப்பதற்காகவே
தங்கைமாரை மூத்தவர் பராமரிப்பது ஏன் என்ற கேள்வி சிலசமயம் உங்களுக்குள் எழக்
கூடும்.
அதுவொரு பெரிய சோகக் கதை
1985ஆம் ஆண்டு நல்லதம்பியின் தந்தை முத்துலிங்கம் தமது மண் ஒழுங்கையால் நடந்து, பிரதான வீதியில் இறங்கி, தான் போக நினைத்த இடத்திற்குப் போய்க்கொண்டிருந்தார். கண்மண் தெரியாமல் வேகமாக வந்த இராணுவ வண்டி, அவரின் உயிரைக் குடித்து - அவரின் குடும்பத்தை அநாதரவாளராக்கி விட்டது. அன்று தொட்ட தோஷம், நல்லதம்பியை இங்கிலாந்து போகச் செய்து - கடும் உழைப்பாளி ஆக்கி, பிரமச்சரியம் அனுஷ்டிக்க வைத்துவிட்டது.
நல்லதம்பியின் உழைப்பின் விளைவாக இன்று அவரின் சகோதரிகள் கரை சேர்த்ததும் அல்லாமல், சுமாராகவும், சுகமாகவும் வாழ்கின்றார்கள்.
கடந்த இருபத்தாறு வருட இங்கிலாந்து வாழ்வில் இரண்டே இரண்டு தடவைகள் மாத்திரம் நல்லதம்பி இலங்கைக்கு வந்துபோனவர்தான்!
முதற்தடவையாக, 2001ஆம் ஆண்டு நல்லதம்பி கொழும்புக்கு வந்தபோது, இரு சகோதரிகள் மணம் முடித்தவர்களாக, மூன்று அறை அப்பாட்மென்ட் ஒன்றில் வசித்து வந்தனர். மற்றைய இரு சகோதரிகளும் பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு மாணவிகளாகி இருந்தனர். சகோதரிகளின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு சொக்கிலேற், ரொபி வகைகள் கொடுத்தபோது, "அச்சா மாமா, அச்சா மாமா” எனத் துள்ளிக் குதித்து மகிழ்ந்து சாப்பிட்டனர்.
இரண்டாம் தடவையாக, இவ்வாண்டு தமது செய்த ஊரில் திருத்தியமைக்கப்பட்டு, அழகு படுத்திய தமது பரம்பரை வீட்டிற்கு வந்தபோது முதற்தடவை வந்தபோது கொண்டுவந்தவற்றை விட பல விலை உயர்ந்த இனிப்பு வகைகளை அள்ளிக்கொண்டு வந்தார். இனிப்பு வகைகளை மருமக்களுக்கு வழங்கியபோது, வரவேற்பு இல்லை. முதப்பிரதிபலிப்பும் இல்லை. ஒரிருவர் "அங்கிள் வெளிநாட்டுப் போத்தல் ஏதாவது கொண்டுவரவில்லையா?” எனத் துணிந்து கேட் டமை நல்லதம்பியை கதிகலங்க வைத்ததோடு, தம் தியாகம் வீண்போய்விட்டது எனக் கண் கலங்கவும் வைத்துவிட்டது.
மல்லிகை ஜூன் 2011 & 50

உமது உரத்த குரல்களும் உயர்ந்த கரங்களும் துணிவு, துணிவு எனக் கைகொட்டிக் கொண்டன.!
எம்மால் முடியும் நிச்சயம் முடியும்! எனச் சூழ்ந்த சபையினில் போர்க்குரல்
எழுப்பினிர்!
பேசாதிருக்கின்ற பேடிகாள்.
நீர் இங்கு எதற்கு இருக்கிறீர்..? எனக் குனிந்த தலைகளைக் குத்தியும் காட்டினிர்!
உமது ஆர்ப்பரிப்பில் மகிழ்ந்துதான் போனேன்!
இந்தச் சபைதனைக் கொண்டு நடத்திடும் தலைமை உங்களின் கரத்தில் வழங்கலாம் எனவும் எண்ணினேன்!
விடிந்த பொழுதினில் களத்தில் இறங்கிய கால்கள் எத்தனை எனக் கனக்கை எடுக்கிறேன்!
- 2/7taff/a/627
கரங்கள் உயர்த்திய முகங்கள் எங்கெனத் தேடிப் பார்க்கிறேன்!
குனிந்து சபைதனில் இருந்த முகங்களும் உழுது புதுக்கிடக் கலப்பை ஏந்தின!
கரங்கள் உயர்த்திய உம்மைத் தேடினேன்!
ஒருமுகம் தானும் அகப்படவில்லையே!
வாயில் மட்டுமே நீவிர் வல்லவர் செயவில் அல்ல என்பதை உணர்ந்ததால் உம்மைப் பார்த்து நான் இன்று சொல்கிறேன்
பேசாதிருப்பதே உமக்கு நல்லது!
செயலில் சொல்தனைக்
காட்டும் வரைதனில்.
பேசாதிருப்பதே உமக்கு நல்லது!
மல்லிகை ஜூன் 2011 & 51

Page 28
நெஞ்சில் நிலுைத்து இலக்கிய நிகழ்வுகள் - 20
- மு.பவர்
இறந்த காலத்தை உயிர்பித்துக் கொண்டிருக்கிறேன், நான். நிகழ்காலத்தை , மறந்து, எந்த நிகழ்வினையும் குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைக்கும் பழக்கமில்லை, எனக்கு நீண்ட காலங்களாய் அவை, கல்லில் எழுத்துப் போல் மனதில் பதிந்து போன நினைவுத் தடங்கள். அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் உவகை யடைகிறேன்.
எனக்கு இடுப்புக்குக் கீழ் பலவீனம், கண் பார்வைக் குறைவு, உடல் உபாதையும், கடும் சோர்வும் எல்லாமும்தான். வைக்கம் பவரீர் சொன்னது போல, நீண்ட ஆயுள் சிறிதும் நம் கைவசமில்லை. பழைய நினைவுகளின் சிதறல் பூவிதழ்களாய் உதிர்ந்த வண்ணமேயிருக்கின்றன. நோயின் தாக்கம் ஓர்மையாய் இயங்கவிடாமல் தடுத்த போதும், வாசிப்பு - எழுத்து நமது குருதி நாளங்களில் கலந்து, (மனைவி, மக்களைப் போல்) நிராகரிக்க இயலாத அம்சங்களாகி விட்டன.
பல சந்தர்ப்பங்களிலும் எனது துயர் சார்ந்த இருப்புக்கு இரங்கி, என்னைத் தேடி வந்து நேசக்கரம் நீட்டி, உதவிகள் புரிந்த எனதன்பின் இலக்கிய நண்பர்கள் சிலரை நன்றிப் பெருக்கோடு நினைத்துப் பார்க்கிறேன். என் வாழ்வனுபவத்தில் ஊக்க மாத்திரைகள் போல், என்னில் உறைந்து நீண்ட நாட்களாக என்னைப் போஷிக்கும் இரு நெஞ்சங்களைப் பற்றி இங்கு பதிவது கடமையென நினைக்கிறேன்.
அந்த இருவரும் இலக்கிய உலகோடு பரீட்சயம் உள்ளவர்கள்தான். 60களின் முற்பகுதியில் எங்களூர் பாடசாலையில் மீலாதுன் நபி விழா நடந்து கொண்டிருந்தது. மாணவ, மாணவிகள் உற்சாகமாகப் பங்குபற்றிக் கொண்டிருந்தார்கள். நடுவர்கள் சிலரில் நானும் ஒருவன்.
கறுத்த தோற்றமும், கணிரென்ற குரலும் கொண்ட ஒரு மாணவனின் உரை என்னை வெகுவாக கவர்ந்து, ஈர்த்து அவரை முதலாம் இடத்திற்கு தெரிவு செய்வதற்கு புள்ளிகள் இட்டேன். எனது முடிஜிற்கு சக நடுவர்கள் ஒப்புதல் அளித்தனர். மாணவன் முதற் பரிசை பெற்றுக்கொண்டு வந்து நன்றி தெரிவித்து எனது கரம் குலுக்கினான்.
மல்லிகை ஜூன் 2011 & 52

“நீர் எதிர்காலத்தில் ஏதாவது ஒரு துறை யில் சிறந்து விளங்குவீர்” என வாழ்த்தி னேன். பின்னாளில் என் வாக்குப் பலித்தது. ဂိဇာလခံ့ၾ دختlی ఏసెబ %2 - الأهلهونيه
அவர்தான் நாடறிந்த ஊடகவிய லாளர் - கலாபூஷணம் - எம்.ஏ.எம். நிலாம். இந்த நாட்டின் புகழ் பூத்த அரசியல்வாதிகளாக இருக்கட்டும், கலை இலக்கியவாதிகளாயிருக்கட்டும், புரவலர்கள், சமூக நலன் விரும்பிகள், பத்திரிகையாளர்கள் அத்தனை பேரோ டும் மிக நெருங்கி பரீட்சயம் கொண்டவர் தான், நிலாம். கவிதை - சிறுகதை - ஆய்வு என நீண்டகாலங்களாக அவரது பங்களிப்பு தொடர்ந்தாலும், எந்த இடத் திலும் காணக்கூடிய ஒரு பத்திரிகையாள னாகவே அனைவரினாலும் இனங் காணப்பட்டுள்ளவர்.
இவர் ஒரு முனைப்பான பத்திரிகை யாளனாகப் பரிமாணம் பெறுவதற்கு, வாழ்நாளில் கொடுத்த விலை அதிகம். பட்ட துயரங்கள் பல. அவர் என்னையும் அருகே வைத்துக்கொண்டு, தன் அடிக்கடி கூறும் வார்த்தைகள், இவை.
மனைவியிடம்
மறைந்த எனது வாப்பா, “மடையா இந்த எழுத்து உனக்கு சோறு போடு மாடா?” என்று கேட்பார். நீண்ட கால மாக எழுத்துத்தான் எனக்குச் சோறு போடுகிறது. அதைப் பார்த்து சந்தோஷிப் பதற்கு வாப்பா உயிருடன் இல்லை.
இந்த நிலைக்கு என்னை உருவாக்கிய வர் மு.பவரீர்தான்” என்று பெருமையோடு கூறுவார்.
அதுமட்டுமல்ல, என் ஊக்குவிப் பினால் உருவான பலர் இந்த பவரை மறந்து போனார்கள். நிலாம், மேடைகள் தோறும் எனது வழிகாட்டி மு.பவரீர் என்று கூறுவார். 35 ஆண்டு காலமாக எனது அனைத்து இலக்கிய முயற்சி களுக்கும் ஒரு உடன்பிறந்த சகோதர னாக தோளோடு தோள் நின்று எனக்கு ஒத்தாசை புரிந்து வருபவர், நிலாம். ஊடகவியலாளராக சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு விஜயம் செய்து வந்தவர்.
எங்களூரில் ஏழைக் குமர்களின் திருமண விடயங்களுக்கு பலரும் இவர் உதவியினை நாடுவார்கள். அடிப்படை யில், இவர் ஒரு வசதி படைத்தவரல்ல. செல்வந்தர்கள் பலரின் செல்லப்பிள்ளை. தன் செல்வாக்கைப் பிரயோகித்து, பிரச் சினையில் சிக்கித் தவிக்கும் பல இலக்கியவாதிகளுக்கு உதவிகள் பெற்றுக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தப் பெரிய இலக்கிய ஜாம்ப வான்களையும் சொந்தக் கிராமத்திற்கு அழைத்து வருவதில் கடும் சுறுசுறுப் பாளர், இலக்கிய வட்டத்தின் செயலாள ரான இவரது அழைப்பிற்கு கனம் பண் ணாத இலக்கியவாதிகள் மிகச் சிலரே. தோப்பில் முஹம்மது மீரான் இரண்டு தடவைகள் இங்கு வந்து சென்றுள்ளார். பேராசிரியர் அ.மாக்ஸ் எமது இலக்கிய
மல்லிகை ஜூன் 2011 * 53

Page 29
வட்டத்திற்கு வந்து உரையாற்றி விட்டு, ஒரு இரவு விருந்தாளியாக இவர் இல்லத் தில் தங்கிவிட்டுப் (3 6Tr T, லெ.முருகபூபதி தாயகம் வரும்போதெல் லாம் நீண்ட நாள் நட்பை கனம் பண்ணும் விதமாக நமது இலக்கியச் சந்திப்பில் ஆர்வத்தோடு கலந்து கொள்வார்.
முன்பெல்லாம் எனது வீட்டில் வயதுக்கு வந்த மூன்று நான்கு பெண் பிள்ளைகள் வரிசையாக நிற்பார்கள். (எனக்கு ஐந்து பெண்பிள்ளைகள்) இவர்களது கழுத்தில் தாலி விழ, நானும் எனது மனைவியும் அரும்பாடு பட்டிருக்கிறோம். 83ஆம் ஆண்டு எனது மூத்த மகள் சீமாவின் திரு மணம் நிச்சயமாயிற்று. 50 ஆயிரம் ரொக்கம், 50 ஆயிரம் நகை. இவற்றை துரிதகெதியில் திரட்டுவது பெரும் பாடாகி விட்டது. இந்நாட்களில் இத் தொகை பெரியது.
நாளும் திகதியும் நெருங்க அடிவயிற்றில் தீப்பற்றியெரிய ஆரம்பித்தது. நிலாம் கைகொடுத்தார். ‘கவலையை விடுங்கள். எனக்கு
நெருங்க
நெருக்கமான வள்ளல்கள் இருக் கிறார்கள். இந்தத் தொகையின் பாதியையேனும் திரட்டித் தருவேன்’ என்று நெஞ்சில் பாலை வார்த்தார். திருமணம் நடந்தது.
அது மட்டுமல்ல, மற்றப் பிள்ளை களின் திருமணங்களின் போதும்
நிறையவே உதவிகள் புரிந்தார். என் வீட்டார் அவரை ஒரு குடும்ப உற வாகவே இன்றும் கணித்து அன்பு செலுத்துவர். இத்தனை நல்லியல்பு கொண்ட இந்த மனிதரிடம் ஒரு பல வீனம் உள்ளது என்று சிலர் குறை சொல்ல நான் கேட்டிருக்கிறேன். த்ெதில் ဂိရှ်ဇာလခံ့ခံ့). ఏసెబ %22 - ثم يعلمؤه
பலவீனம், எந்த மனிதரிடத்தில் தான் இல்லை? அந்தக் குற்றச்சாட்டு இதுதான். சிலபேருக்கு சில விஷயங் களை செய்து தருவதாக உறுதி யளித்து விட்டு, அதைத் தவற விட்டு விடுவார் என்பதே. இது குறித்து நான்
அவரைக் கண்டித்ததுண்டு. அவர் கூறுவார்,
"நான் யாரையும் அலட்சியம் செய் பவனல்ல. எனது தொழில் சார்ந்த வேலைப்பளு. நேரமின்மை, இயந்திரத் தனமாக ஒடித்திரிய வேண்டும். இத னால் சிலருடைய வேண்டுதல்கள் நிறைவேற்றும் சாத்தியமற்றுப் போகிறது. என்ன செய்யலாம்?” என்று விடையளிப்பார்.
ஊடகவியலாளன் என்பவன் சதா வும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டி யவன். சாரைப் பாம்புக்கு துணியில் மண்ணெண்ணை முக்கிப் பூசினால் அது தலைதெறிக்க ஒடித் திரியும். பத்திரிகையாளனின் நிலையும் இது
மல்லிகை ஜூன் 2011 & 54

தான். நிலாம் மற்றவர்களுக்கு உதவி கள் செய்து வந்துள்ளாரே தவிர, தன் சொந்த வாழ்க்கையை உயர்த்திக் கொண்டவரல்ல. இவரைப் பற்றி பதிவுகள் பரவலாக சஞ்சிகைகளில் வெளிவராது இருப்பது கவலைக்குரிய
விடயம்.
ဂိဇာလခံ့မှ دخمlی ఏసెబ %الديمونيه ー23
என்னால் மறக்கவியலாத மனித நேயம் மிக்கவர் ஜெயகாந்தன். நான் முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்த எனது நீண்ட கால இலக்கிய நண்பர். அமரர் நீர்கொழும்பூர் முத்துலிங்கத் தின் இளைய மகன்தான் ஜெய காந்தன். இளைஞனாயிருந்தாலும் எதையும் கூர்ந்தறியும் தேடல் மிக்கவர் இவர்.
கலை இலக்கியங்களோடு நிறை யவே ஈடுபாடு மிக்கவர். இவரது வாசிப்புத் திறனுக்கு ஒரு சான்று,
எஸ்.இராமகிருஷ்ணனின் துயில்
நாவல். பி.டி.குரூஸின், ஆழி சூழ் உலகு நாவல். இரண்டையும் வாசிக் கும்படி எனக்கு சமீபத்தில் கொண்டு வந்து தந்தார். இரண்டையும் படிப்ப தென்றால், ஆயிரம் பக்கங்களுக்கு மேல் வரும். வாசித்துக் கொண்டிருக் கிறேன், களையும் சோம்பலையும் மறந்து.
வழக்கமான உபாதை
இளங்கீரன் சொன்னது போல, ஜெயகாந்தனை எனது பெறாமகனாக நினைத்து அவரை வாழ்த்துவேன். அலுப்பு சலிப்பில்லாமல் எனது நோயுற்ற இருப்புக்காய், வைத்திய செலவுகளுக்காய் எனக்குத் தாராள மாய் உதவுவார். s
இவருக்கு என் இறப்புவரையில் நான் நன்றிக்கடன் பட்டவன். அந்த நதியும் அதன் மக்களும் என்ற தன் தந்தையின் நாவலை அச்சிட்டு வெளி யீட்டு விழாவினையும் நடத்தினார். மறைந்த தந்தை முத்துலிங்கத்தின் மீது மாறாப் பாசம் கொண்டவர்.
அந்த, வெளியீட்டு விழாவில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, இதழியல் கல்லூரி தேவகெளரி, மேமன்கவி, நான் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தோம். பத்துக்கு மேற்பட்ட காத்திரமான சிறுகதை களைப் படைத்துள்ளார்.
ஜெயகாந்தன் கூறுவார், “என் மறைந்த தந்தையின் நெருங்கிய இலக்கிய நண்பர் நீங்கள். 6 6йп தந்தைக்குச் செய்யும் கைமாறாய் கருதி உங்களுக்கு எல்லா உதவி களையும் தவறாமல் செய்வேன். கவலைப்படாதீர்கள்” என்று. இப்படி ஒருவரின் உள்ளார்ந்த நேசிப்பு என் ஆன்மாவை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.
மல்லிகை ஜூன் 2011 奉 55

Page 30
கவன ஈர்ப்Wை எuறத்ქxიuრ་აr ஆகாயப் பூக்கள்
- பிரகலாத ஆனந்த்
மாலினி பொன்சேகா தாய் பாத்திரத்தில் நடித்து, சர்வதேச விருது பெற்ற அற்புதமான திரைப்படம்தான் அகசின குசும். இத்திரைப்படம் இப்போது தமிழில் தயாரிக்கப்பட்டு ஆகாயப் பூக்கள் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. தாய் பாத்திரத்தில் மாலினி பொன்சேகாவே தமிழிலும் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் சிங்களத்தில் வெளியான போது மிகப் பெரும் வெற்றியை ஈட்டியது. சர்வதேச திரைப்பட விழாக்களில் இரு இடங்களில் மாலினி பொன்சேகா சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
சிங்களத்தில் வெளியானபோது இந்த திரைப்படத்தைப் பார்க்கத் தவறிய நான், சினிசிட்டி திரை அரங்கிற்கு சென்றேன். அங்கு மாப்பிள்ளை, பவானி, சிங்கம் புலி முதலான படங்களுடன் ஆகாயப் பூக்கள் திரைப்படமும் வெவ்வேறு அரங்குகளில் காண்பிக்கப்பட்டது. அனுமதிச் சீட்டைப் பெறுவதற்கு பெரிய வரிசை காத்திருந்தது. விசாரித்தபோது, அனைத்து திரைப்படங்களுக்கும் ஒரே இடத்தில்தான் ரிக்கட் வழங்கப்படுவதாகக் கூறினார்கள். ஒருவாறு வரிசையில் நின்று முன்னேறி சென்ற எனக்கு ஏமாற்றமே காத்திருந்தது. கொஞ்சம் பொறுத்திருங்கள். வேறு யாராவது வந்தால் - போதுமான பார்வையாளர்கள் வந்தால் படம் காண்பிக்கப்படும் என்றார்கள். மாப்பிள்ளை படம் ஹவுஸ் புல்லாகி விட்டது. பவானி படத்திற்கு கணிசமானோர் வந்திருந்தார்கள். ஆகாயப் பூக்களுக்கு நானும் இன்னொருவரும் மட்டுந்தான். ஏனைய திரைப்படங்கள் ஆரம்பமான பின்னர், நாம் இருவர் மட்டும் ஏமாற்றத்துடன் திரும்பினோம். தமிழ்த் திரைப்படத்துறை இலங்கையில் முன்னேறவில்லை என்ற ஆதங்கம் பல முனைகளில் இருந்தாலும், தமிழ்த் திரைப்படங்களுக்கு வரவேற்பில்லை என்பதும் மனதை நெருடியது.
மல்லிகை ஜூன் 2011 & 56

இப்படியான தரமான படங்கள் நிராகரிக்கப்படும் போது, இலங்கையில் யார் துணிந்து திரைப்படங்களை தயாரிக்க முன்வருவார்கள்? தென் னிந்திய மசாலாத் திரைப்படங்களில் ஊறிப்போன மட்டமான ரசனைப் போக்கு மிக்க நமது ரசிகர்கள் நல்ல படங்களை வரவேற்க மாட்டார்கள் என்பது ஒருபுறமிருக்க, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படங்களை மட்டுப்படுத் தாத வரை எமது தமிழ்ச் சினிமா தலை யெடுக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். ஆகாயப் பூக்கள் திரைப்படம் வரவேற்பைப் பெறாமைக்கு இன்னொரு காரணம், போதிய விளம்பரம் இல்லாமை ஆகும். இன்றைய உலகில் விளம்பரம் இல்லாமல் எதையுமே சந்தைப்படுத்த
(plguung.
இனித் திரைப்படத்தைப் பார்ப் போம். தாய் சேய் பாசத்தை, தவிப்பை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட உன்னதமான ஒரு படைப்பு ஆகாயப் பூக்கள். சிங்களச் சூழலுக்கு ஏற்றதான கதையமைப்பு. எனினும் தமிழ்ப் பெண்ணாகவே மாலினி நடிக்கிறார்.
ஒரு பிரபலமான திரைப்பட நடிகை, தனது வாழ்வின் பிற்காலத்தில், வீட்டை வாடகைக்குக் கொடுத்து, அந்த வருவாயிலேயே தனிமையில் வாழும் (வாடும்) சோகமான கதை. இப்பாத்திரமாகவே மாலினி இப்படத்
தில் வாழ்ந்திருக்கிறார். இளமையில் திரையுலகுக்கு கால் எடுத்து வைத் ததால், கணவனையும், மகளையும் பிரி கின்ற அவலம். பணம் நிறைய சம் பாதித்தாலும், வாழ்வில் மகிழ்ச்சியற்ற நிலை. உறவுகளைப் பிரிந்து தனி மரமாக, பின்னாளில் வாடும் அவலம், மகள் ஒரு கிளப்பில் வேலை செய்வ தாக அறிந்த தாய் படும் அவஸ்தை. மகளைக் காணவும், தன்னோடு சேர்க் கவும் எடுக்கும் முயற்சிகள், மகளின் படம் முழுவதும் மனதை ஒன்ற வைக்கிறது. இயல்பான
דס6 ד6 ט6 קrbl60ז60 LD
படப்பிடிப்பு, தொகுப்பு, படடோபடமற்ற கதை நகர்த்தல் என சிறப்பாக அமைந் துள்ளது. பண்பட்ட இயக்குநர் பிரசன்ன விதானகேயின் கைவண்ணத்தில் படம் அற்புதமாக அமைந்துள்ளது. நல்ல படங்களை விரும்பும் அனை வரும் பார்க்க வேண்டிய திரைப்படம்
ஆகாயப் பூக்கள்.

Page 31
D sio 6S 6odas, Lort ir ėjo 2001 இதழில் நீங்கள் எழுதியிருந்த இதற்குத் தானா, நாடுபூராவும் இரவிரவாக அலைந்து திரிந்தோம்? என்ற மகுடத்தின் கீழான ஆசிரியத் தலையங்கம் என்னை வெகு வாகக்
கவர்ந்துவிட்டது. எவ் வளவு யதார்த்தமான உண்மை யொன்றினைப் பொறுப்புணர்ச்சியுடன் நீங்கள்
எழுதியிருக்கிறீர்கள்.
தற்போதைய இலக்கிய உலகின் பொய்யும் வழுவும் புரையோடிப் போயுள்ளன. இதை எவ்வாறு சீர்செய்யப் போகின்றோம்? என்ற கேள்வி மலைபோல் எம்மை அச்சுறுத்தி நிற்கின்றது.
தற்போது இடம்பெறும் நூல் வெளியீட்டு விழாக்கள் உண்மையில் எமது இலக்கிய வளர்ச்சியை கோடிகாட்டி நிற்கின்றனவா?
ஒரே நாளில் பன்னிரண்டு சிறுகதைகளை எழுதி, மறுநாள் புத்தகமாக அச்சிட்டு, அடுத்தநாள் வெளியீட்டு விழாக்கள் வைத்துப் பணச்சடங்கு நடத்துவதே சர்வ சாதாரணமாகி விட்டது, நமது மண்ணில்,
1968களில் பேராசிரியர் கைலாசபதியின் தலைமையில் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இந்திய சஞ்சிகைகளுக்குத் தீ வைத்த நிகழ்ச்சி, இன்று எவருக்குமே ஞாபகமிருப்பதாகத் தெரியவில்லை. இந்தியக் குப்பை இலக்கியங் களைத் தடை செய்' என்ற கோஷத்தின் மத்தியிலே அங்கிருந்து வரும் சஞ்சிகை களுக்கு அன்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இன்று, அதே நிலை ஈழத்து இலக்கியத்திற்கும் ஏற்பட்டு விடுமோ? என அஞ்ச வேண்டியுள்ளது. இளந்தலைமுறையினர் மிக மலினமான வகையிலே இலக்கியத் தகவல்களைப் பெறவும், அவற்றைப் பயன்படுத்தவும் முயல்கின்றனர். நவீன கணனி வலையமைப்பு அவர்களுக்கு வேண்டியவற்றை வேண்டிய வேளையில் தருகின்றது. தாம் எழுதுகின்ற விடயம் பற்றி எந்தவிதமான வாசிப்பும் தேடலும் தெளிவும் அற்ற நிலையிலே கணனி வலையமைப்பிலிருந்து இலகுவாக விடயதானங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். அவற்றை தமது ஆக்கங்கள் போல கட்டுரையாகவும், நூலாகவும் வெளியிடுகின்றனர். தமக்கு முற்றிலும் தொடர்பில்லாத துறை பற்றி பேராசான்கள் போல் எழுதிவிடுகின்றனர். பல்கலைக்கழக தொடர்பு உள்ளவர்கள் அங்கு
மல்லிகை ஜூன் 2011 & 58
 

விரிவுரையாளர்களால் வழங்கப்படும் குறிப்புக்களை தமது ஆக்கம் போலப் பிரசுரஞ் செய்து விடுகின்றனர். அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட நூலொன்றிலுள்ள கட்டுரைகள் பல் கலைக்கழகத்திலே முதுகலைமாணி மாணவர்களுக்கு வழங்கபபட்ட குறிப்பு களிலிருந்து திருடப்பட்டவை என தெரிய வந்துள்ளது. இது சுத்த அயோக்கியத் தனம் அல்லவா?
வன்னி மக்கள் தலைமுறை தலை முறையாகத் தாங்க முடியாத சோகங் களைச் சுமந்து திரிகின்றனர். ஆனால், வன்னி எந்தத் திசையில் உள்ளது என்பதையே அறியாத எம்மவர்கள் வன்னி பற்றியும், அதன் எதிர்காலம் பற்றியும் இலக்கியம் படைக்க முயல்வது எவ்வளவு போலித்தனமானது? இத் தகை போலிகளே இன்று இலக்கிய வானில் பிரகாசிக்க முயல்கின்றனர்.
நல்ல சிறுகதைகளையோ, நாவல் களையோ படிக்காமல் சிறுகதைகளைப் படைக்கின்றனர். உண்மையில் இவற்றை விட கட்டுரைகள் இலக்கியத் தரம் வாய்ந்தனவாக உள்ளன. வசனங் களை சிறு சிறு வரிகளாக உடைத்து எழுதிவிட்டு, கவிதை என்கின்றனர். கவிதைக்குரிய எந்த அம்சங்களையும் இவற்றில் காணமுடிவதில்லை. கவிதை கள் அதை எழுதுபவர்களுக்கு மட்டுமே விளங்கும் தன்மை கொண்டனவாக உள்ளன. மற்றவர்களின் மேல் உள்ள கோபம், குரோதம் போன்றவற்றை
வெளிப்படுத்துவதே அவற்றின் இலக் காகவும் உள்ளன. முகமனுக்காக விமர்சனம் செய்கின்றவர்கள் இருக்கும் வரை இத்தகைய போக்கினைத் தடுத்து நிறுத்துவது சாத்தியமற்றதே.
அதேவேளை பிரசுரக் கர்த்தாக்களுக் கும் இது பற்றிய பெரும் பொறுப்பு உண்டு. வந்ததை எல்லாம் பிரசுரிக்காது, தரமானதைப் பிரசுரிக்க முனைந்தால் இந்த நிலையைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் பிரசுர கர்த்தாக்கள் எந்தள வுக்கு நிதானமாகச் செயற்படுகின்றனர் என்பது கேள்விக்குறியே! ஏனெனில் தேசிய நலனுக்காக, சமூக மேம்பாட்டிற் காக பிரசுரங்கள் வெளிவந்த காலம் போய், குடும்பத்தின் மேன்மைக்காக பதிப்புப் பணிகள் இடம்பெறும் போது தர மான இலக்கியம் என்பது வெறும் பகற் கனவாகவே அமைந்துவிடும்.
இது, ஈழத்து இலக்கியம் என்ற மகோன்னத எண்ணக் கருவைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுமோ என நான் அஞ்சுகிறேன். கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக இரவு பகல் பாராது, ஊன் உறக்கம் இல்லாது கண் னிர் விட்டே வளர்த்த ஈழத்து இலக்கியம் என்ற மகோன்னதம், குரங்கின் கைப் பட்ட பூமாலையாகி விடக்கூடாது என மெய்யாகவே நான் கவலைப்படு கின்றேன்.
தெல்லிப்பளை கா.அன்னபூரணி
மல்லிகைக்குக் கடிதம் எழுத
மல்லிகை ஜூன் 2011 & 59

Page 32
வேண்டும் என பலமுறை முயற்சித்தும் வேலைப்பளு காரணமாக அது ஈடேறவே யில்லை!
உங்களை உலகத் தமிழ் எழுத் தாளர் மகாநாட்டில்தான் முதன் முதலில் நேரில் சந்தித்துச் சற்று ஆறுதலாகக் கதைக்க முடிந்தது.
அந்த நேரடிச் சந்திப்பையும் நாங்கள் இருவரும் சாப்பாட்டு நேரம் ஒன்றாக இருந்து மனசு விட்டுக் கதைத்ததையும் நினைத்து நினைத்து இன்றுவரைக்கும் சந்தோஷப்படுகின்றேன்.
மல்லிகை எனக்குத் தவறாமல் கிடைத்து வருகின்றது. உண்மையைச் சொல்லப் போனால், மல்லிகையின் ஒவ் வொரு பக்கத்தையும் எழுத்தெண்ணிப் படித்து வருகின்றேன்.
மீண்டும் ஒருதடவை கொழும்பு வர உத்தேசம். உங்களை நேரில் வந்து பார்க்க, பலதும் பத்தும் மனம்விட்டுக் கதைக்கப் பெரிய ஆசை. நீங்கள் அந்தச் சமயத்தில் மல்லிகையில் இருப்பீர் களோ? என்ற சந்தேகம் வேறு.
இந்த ஆண்டு ஜூன் 27ந் திகதி உங்களது 85வது பிறந்த நாள் என்பதை எனது நாட்குறிப்பில் பதிந்து வைத் துள்ளேன்.
அந்தத் தேதியில் நான் கொழும்பில் தங்கி இருக்க வேண்டும் என ஆசிக் கின்றேன். நேரில் உங்களை வந்து வாழ்த்த வேண்டுமென்பதே என் மன ஆசை.
மாதா மாதம் மல்லிகை தபாலில் வந்ததும் உங்களைத்தான் முதலில் மன சிற்குள் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்வேன்.
இந்த வயதிலும் இத்தனை சுறு சுறுப்புடன் கூடிய வாலிப வேகத்துடன் இயங்கி வருவதே, ஒரு கொடைதானே?
மகாநாட்டில் உங்களின் உற்சாக மான நடமாட்டத்தை வியந்து எனக்குள் நானே வியப்படைந்திருக்கின்றேன்.
ஒருதடவை எங்களது ஊர்ப்பக்கம் ஒருக்கா வந்து போங்களேன். உங்களது வருகை பல இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.
உங்களது தினசரி நடவடிக்கைகள் என்னென்ன வகையானவையாக இருக்கும்? என அறிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மன ஆசை எனக்குண்டு.
எதற்கும் தொடர்புகளைப் புதுப் பித்துக் கொள்வதை விட்டுவிடாதீர்கள்?
கல்முனை 6Tib.seu600Tusuer
2 –5öT60)LD60)uué Gl8-ff6ö60 (3Liss60160, இன்றைய கொழும்பு இலக்கிய உலகமே சும்மா சப்பென்றுதான் இருக்கின்றது. ஒப்புக்கு இடைக்கிடையே புதுமுகங்களின் புத்தக வெளியீடுகள் தலைகாட்டி மறை கின்றன.
இந்த நிலையை ஒரளவு மாற்றி யமைக்க வேண்டியது, நீண்ட காலமாக இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கி
மல்லிகை ஜூன் 2011 & 60

வருபவர்களையே சாரும்.
நவீன அச்சுச் சாதன வளர்ச்சிகள் வந்துவிட்டதினால், அடிக்கடி தரமற்ற நூல் கள் பெரும் விளம்பரங்களுடன் பொது மார்க்கட்டில் அரங்கேறி ஜொலிக்கின்றன. இன்னும் போனால், எழுத்தை வைத்தே பகிரங்க
பச்சையாகச் சொல்லப்
மாகப் பணச்சடங்குகள் நடந்தேறி வரு கின்றன.
ஒருகாலத்தில் ஒரு நூல் வெளிவந்து விட்டதென்றால், அதையொட்டி ஒரு சில மாதங்களுக்கு இலக்கிய உலகில் அதைப் பற்றிய பேச்சாகவே இருக்கும்.
இன்று புத்தக் வெளியீட்டு நிலைமை அப்படியா இருக்கின்றது? மிக மிக மலினப் பட்டுப் போய்விட்டது, நூல் வெளியீட்டுத் துறை.
முன்னொரு முறை யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டையிலும், பின்னர் புத் தளத்திலும் எழுத்தாளர் சுதாராஜின் இல் லத்திலும் நடைபெற்றது போல இலக்கிய வாதிகளின் இலக்கியம் பேசாத சந்திப்பு என்ற தலைப்பில் எழுத்தாளர் பலரும் கூடி ஒருநாளைச் சந்தோஷமாகப் போக்கலாமல்லவா?
எழுத்தாளர் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கதைப்பதற்கே நேரமில்லா மல் ஒதுங்கி ஒதுங்கிப் போய்க்கொண்டி ருப்பது வளர்ந்து வரும் நமது இலக்கி யத்திற்கு நல்லதா? என்பதை ஏன் இவர்கள் கவனத்தில் கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
படைப்பாளிகளிடம் கருத்து முரண்
பாடுகள், அபிப்பிராய வித்தியாசங்கள் நிலவுவது இயல்பானதுதான். ஆனால், தொடர்ந்து பகைமை பாராட்டி, விலகிச் செல்லக்கூடாது. அது பெரும் தப்பு
கொழும்பு 6 எஸ்.சுதாகரன்
யாழ்ப்பாணத்தில் அந்தக் காலத்தில் அந்தச் சிற்றொழுங்கைக்குள் மல்லிகைக் காரியாலயம் இயங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில், ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ நான் மல்லி கைக்கு வந்து போனதை ஞாபகப்படுத்து கின்றேன்.
அந்தச் சமயத்தில் அங்கு உங் களுடன் பணியாற்றிய சந்திரசேகரத்தை யும் நான் நேரில் கண்டு, சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்தேன்.
கொழும்பிற்கு மல்லிகை இடம்மாறி வந்த காலகட்டத்தில் முன்னர் ஒருநாள் உங்களது கதிரேசன் மேல் மாடிக்கு வந்து போனதாக ஞாபகம். ஆண்டு மல ரொன்றும் கையுடன் வாங்கி வந்தேன்.
மல்லிகை தொடராக எனக்குப் படிக்கக் கிடைப்பதேயில்லை.
இருந்தாலும் உங்களையும், மல்லி கையையும் அடிக்கடி நான் நினைத்துப் பார்ப்பது வழக்கம்,
இந்தக் காலவோட்டத்தில் ஒரு தடவையாவது நேரில் வந்து உங்களைச் சந்திக்க வேண்டுமென்பது எனது பெரு விருப்பம், பல காலம் நாம் நேரில் சந்திக்கவில்லையே தவிர, உங்களை யும் மல்லிகையையும் நான் நினைக்காத
மல்லிகை ஜூன் ဖွံ့စို့န#1ချွံ၏oန္နာ6လ.
கடிதம் போட்டால் எனக்கெல்லாம் உங்களது கைப்படப் பதில் கடிதம் ஏதும்

Page 33
6 9 விடிவெள்ளி s.6v. VpH6ungswigr VgrGřvuřil
- பத்மா சோமகாந்தன்
‘விடிவெள்ளிமுத்தையா, சமூகத் தொண்டன் முத்தையா, ஹெட்மாஸ்டர், கே.பி.எம். விடிவெள்ளி, சமூகத்தொண்டன், ஆசிரியர் என்றெல்லாம் அவரவர் தரத்திற்கும் தொடர்புக்குமேற்பக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டவர்தான் 'விடிவெள்ளி' என்ற புனை பெயருக்கு உரித்தானவரான கே.பி.முத்தையா அவர்கள்.
இவருடைய சொந்த இடம் யாழ்ப்பாணம் சுண்டிக்குளியாக அமைந்தாலும், யாழ்நகரின் வீதிகள், பாடசாலைகள், தமிழ்மொழி தொடர்பான நிகழ்ச்சிகள், எழுத்தாளர்கள் சந்திப்புக்கள் என எங்குமே பிரசன்னமாக இருப்பார். முத்துப் போன்ற பல் வரிசை பளிச்சிட பெரியோர் முதல் பாலர் வரை, பார்த்ததும் பணிவான அன்பு ததும்பும் ஒரு புன்சிரிப்பு; நலம் விசாரிப்பு; மலர்ந்த மகிழ்ச்சியான உபசரிக்கும் வார்த்தைகள் பொதிந்த உரை யாடலுடன் ஏதாவது பேசத் தொடங்குவார். பாடசாலை தவிர்ந்த ஏனைய நேரங்களில் தனது வழுக்கல் தலையை யாழ்ப்பாணக் கடும் சூட்டிலிருந்து பாதுகாக்கத் தொப்பி யணிந்த படி, சாதாரண ஒரு சேர்ட், வெள்ளை வேட்டியுடன் அப்போதைய பெரும்பாலான யாழ் மக்களின் தேசிய வாகனமாகப் போற்றிப் பாதுகாக்கப்படும் இரட்டைச் சில்லு பைசிக்கிள் வண்டியிலேயே சுண்டிக்குளி தொடக்கம் மருதனாமடம் அதற்கு அப்பாலும் பயணித்து மக்கள் சேவையே மகேசன் சேவையாக உழைத்த பெருமகன்தான் இந்த ‘விடிவெள்ளி முத்தையா என்பவர்; நவஜீவனம் என்ற அமைப்பில் இணைந்தும் ஆற்றிய பணிகளோ அளப்பரியன.
"கதியற்றவர்களுக்குத் தொண்டு செய்வதுதான் சமயத்தின் குறிக்கோளாகவும் இருக்க வேண்டும்” என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைக்கு உயிரூட்டுபவராகவே கிறிஸ்தவ சமயத்தவரான இவர் அல்லல்படும் ஏழை எளியவருக்கும், துன்பத்தால் துவண்டு நலிந் தோருக்கும் தன்னால் முடிந்தளவு உதவி செய்து, பலருடைய மனங்களில் வாழ்ந்து கொண்டேயிருப்பவர். சமய வேறுபாடு இன்றி இந்துக்கள், முஸ்லிம்கள் என யாவரிடமுமே அன்புடனும் பரிவுடனும் நடந்து பலருடைய கவனத்தையும் கவர்ந்து கொண்ட ‘விடி வெள்ளி ஆங்கில அறிஞன் பேகனின், "அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும்
மல்லிகை ஜூன் 2011 & 62

படங்களே; அவர்கள் பேசும் பேச்சு ஜீவ னில்லாத கிங்கிணி ஓசை’ என்பதை நன்கு உணர்ந்து தனது குடும்பத்தில், பாட சாலையில் மாணவர் ஆசிரியர்களுடன், வெளியே எழுத்தாளர், நண்பர்கள் ஏனைய தொடர்புள்ளோர் யாவரிடமும் சுமுகமாக வும், அன்பாகவும் அவர்களது துன்ப துய ரங்கள் நீக்கப் பெரிதும் முயற்சி செய்தும் உதவியவர் என்பது யாவருமறிந்த உண்மையே.
‘விடிவெள்ளி' என்ற அருமையான புனைபெயரைச் சூடிக்கொண்ட கா.பே. முத்தையா அவர்கள் நாவலோ, சிறுகதை களோ எழுதியதாக நான் அறியவில்லை. ஆனால், மரபுவழி மலர்ந்த கவிஞன் இவர். யாழ்ப்பாணம் சனசமூக சமாஜத்தின் வெளி யீடான சமூகத் தொண்டன்’ என்ற இத ழின் ஆசிரியராக நீண்ட காலம் பணி புரிந் தார். மாதாந்தம் தவிர வருடத்தில் ஒரு தடவையாவது சமூகத் தொண்டன் ஆண்டு மலர் கனதியும் காத்திரமுமான இதழாக வெளிவந்ததுண்டு. நாமெல்லாம் இளம்பராயத்தில் சமூகத் தொண்டனில் எழுதிய நினைவுகளும் நிழலிடுகிறது. அக் காலத்தில்தான் விடிவெள்ளி அவர்களுக் கும் டாக்டர் நந்தி, சொக்கன், சோம காந்தன், வரதர், நாவேந்தன், புத்தொளி சச்சிதானந்தம், கனகசெந்திநாதன், சிற்பி, செங்கை ஆழியான், டானியல், ஜீவா எனப் பலருடனும் நட்பும் தொடர்புகளும் வளர்ந் தன. இவ்விதழ்கள் தயாரிப்பில் திரு. சோம காந்தனும் கூட ஈடுபட்டிருந்தமையை அவ் விதழ்களே பேசும். அவ்வப்போது பல புதிய புதிய கருத்துக்களடங்கிய அற்புதமான கட்டுரைகளை விவேகி, கலைச்செல்வி மற்றும் பத்திரிகைகளிலும் கா.பே.மு.
எழுதியுள்ளார். சனசமூக நிலையங்கள் மூலம் எழுச்சி மிக்க ஏராளமான நிகழ்ச்சி களை ஏற்படுத்தி மக்களிடையே பொது நலச் சேவை, கடன் உதவி, பாரதி, காந்தி போன்றோருக்கான விழாக்கள் ஆகிய வற்றையெல்லாம் ஒழுங்கு செய்து நடாத் தியதுடன் நாட்டுப்பாடல், நடனம், கும்மி, கோலாட்டம் போன்ற கலைகளையெல் லாம் இளம் சமுதாயத்தினரிடையே வளர்த்தெடுப்பதற்குப் பெரும் பாடுபட்டவர் கா.பே.முத்தையா அவர்கள். சனசமூக சமாஜத்தின் தலைமைப் பொறுப்பையேற் றிருந்த, திருவாளர் ஈ.பி.இராசையா அவர்களும் ஏனைய உறுப்பினரும்கூட முத்தையா மாஸ்ரர் மீது மிகுந்த நம்பிக் கையும் விசுவாசமும் கொண்டிருந்தமை யால், அவரே முழுப்பொறுப்பையும் ஏற்று நடத்தினார். இச்சமூக நிலையங்கள் தத் தம் பகுதிகளுக்கு வாசிகசாலைகளையும் ஆரம்பித்திருந்தன. அநேகமான மக்கள் இவ்வாசிகசாலைகளையே பத்திரிகை கள், சஞ்சிகைகள், நூல்கள் வாசிக்கப்
பயன்படுத்தினர்.
பாடசாலையிலும் மாணவருடைய கல்வி, ஒழுக்கம், சுத்தம், பண்பாடு பழக்க வழக்கங்களில் கருத்தும் கண்காணிப்பும் மிக்க தலைமை ஆசிரியராக இருந்து பணி புரிந்ததோடு, ஆசிரியர்களிடமும் அன் பாகவும், ஆதரவாகவும் நடந்து பூரணமாக அவர்களுடைய சேவையைப் பெற்றுக் கொண்டு, திறம்படப் பாடசாலை நடாத்தும் ஒரு முன்னோடி அதிபராக இனங்காணப் பட்டார். அயல் பாடசாலை அதிபர் களோடும், ஆசிரிய மாணவர்களோடும் சுமுகமான உறவைப் பேணி எல்லோரும் வரவேற்றுப் பாராட்டும் வகையில் தமது
மல்லிகை ஜூன் 2011 & 63

Page 34
பாடசாலை நடத்தைக் கோலங்களைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தினார். வாசிப்பில் மாணவருக்கு ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தினார்.
கருத்தாழம் மிக்க விடயங்களை எளிமையாகவும், இனிமையாகவும், சுருக்கமாகவும், கவர்ச்சிகரமாகவும் உரையாற்றும் வல்லமை படைத்த ‘விடிவெள்ளி அவர்கள் தனது சொற் பொழிவுகளினால் பலரது கவனத்தையும் கவர்ந்தவராவார். அதேவேளை இரு கோபக்காரர் அல்லது மாறுபட்ட கருத் துக்களால் சண்டை பிடித்தோரையும் இதமாகப் பேசிச் சமாதானம் செய்து வைப்பதில் ஒரு நிபுணரேதான்.
திருமணம், மணமுறிவு, காதல் பிரச்சினைகள், குடும்பத்துள் சண்டை, காணித் தகராறு, எல்லைச் சண்டை, சாதிப் பிரச்சினை, பணமுடை, (86.606) தேடல் எனச் சமூகத்தில் இடம்பெறும் சகல கோளாறுகளையும் தீர்த்து வைக்கும் நீதிமன்றத்தின் மையமே இவர்தானோ? என எண்ணக்கூடிய வகையில் பலருடைய பிரச்சினைகள்ை யும் தனது கரங்களில் ஏற்றுக்கொண்டு
அதற்கான தீர்வையோ, நிவாரணத்
தையோ தேடி பைசிக்கிள் வண்டியில் அவர் அலையும் அலைச்சலோ சொல்லி மாளாது. கர்த்தர் திட்டமிட்டுத்தான் இந் தத் தொண்டனை இப்பூவுலகிற்கு அனுப்பி வைத்தாரோ எனவே எண்ணத் தோன்றுகிறது. கட்டுரையாளரின் திரு மணத்தை ஒழுங்கு செய்து வைத்து, எம்மைப் பெருமையடைய வைத்தமை
யும் இப்பெரியவருக்கே உரியதென்பதை நன்றியுடன் கூறிவைக்க விரும்புகிறேன்.
எனது தந்தையார் வேத சாஸ்திரங் களையெல்லாம் நன்கு கற்றறிந்து அவற்றை நடைமுறைப்படுத்தும் வெகு ஐதீகமான குருக்கள். ஏனைய சமயத்த வர்களோடு எவ்வித தொடர்புமற்று இருந் தவர். ஆனாலும் அவருக்கு சுபைர் இளங்கீரன், கா,ப்ே.முத்தையா ஆகி யோர் மிக நெருங்கிய நண்பர்கள் மாதிரி. அத்தனை தூரம் அவர்கள் பழகிக் கொள்ளும் பாங்கு வேற்று மதத்தவர் என்ற வேற்றுமையை நீக்கி உள்ளன் போடு பழகும் நல் வாய்ப்பை நல்கி யுள்ளது. அநேகமாகக் கிழமையில் ஒரிரு தடவைகளாவது கா.பே.மு. எம்மில்லம் வந்து எமது தந்தையாருடனும் தாயாருட னும் விவாதித்துக் கொண்டிருப்பார். அவர்களோடு சிலவேளைகளில் சொக் கன், நந்தி ஆகியோரும் இணைந்து கொள்வதற்கு காலகதியில் விடிவெள்ளி எமது குடும்ப நண்பராகிக் கொண்டார்.
அப்போது விவேகி என்றொரு இத ழும் வெளிவந்ததுண்டு. அதிலும் செம் பியன் செல்வன், செங்கை ஆழியான் போன்ற பலரும் எழுதியதாக ஞாபகம், வெளியுலகத் தொடர்புகள் குறைந்திருந் தாலும், உள்ளூர் வட்டாரங்களிலேயே கிளை விடும் சிந்தனைகளுள்ள பலர் பல விதத்திலும் தமது முகிழ்ப்பை அடை யாளங் காட்டியுள்ளனர் என்பதையே நாம் உணரக் கூடியதாக இவையெல் லாம் எமக்குக் கதை சொல்கின்றன.
மல்லிகை ஜூன் 2011 & 64

கா.பே.முத்தையா அவர்களுக்குக் கைவந்த கலை கவிதையாகும், இன்று போல் அக்காலத்தில் தொலைபேசிக் கதறல்கள் இல்லை. கடிதமே பெரும் தொடர்புச் சாதனம். கா.பே.மு. அவர்கள், நாமும் தன்னைப் போல் கவிதை எழுதப் பழக வேண்டுமென்ற துடிப்புடன், ஒரு போஸ்ட் காட்டில் கவிதையிலேயே பேசு வார். அதுவும் கவிதை யாப்பில் மிகக் கடுமையான நான்கு வரி வெண்பாவில், வெண்சீர் வெண்டலை எங்கே சிறிது பிழைத்தாலும் பாலில் கறுப்புப் போல் அப்படியே காட்டிக் கொடுத்துவிடும் பிழையை. எனவே நாமும் வெண்பாவில் பதில் எழுதுவதென்பது சற்றுத் திணறல் தான். என்றாலும் மக்கு என்று காட்டிக் கொள்ளவும் மனம் ஒருப்படாதேதிக்கித் திணறிச் சரியாகவே எழுதி அனுப்ப முயலுவோம். இப்பயிற்சியெல்லாம் பின் னாளில் நாம் சுதந்திரனில் இடம் பெற்றிருந்த வெண்பாப் போட்டியில் பங்கு பற்றிப் பரிசில்கள் பெற எமக்கு உதவி யாக அமைந்தன.
எலிசபெத் பேக்கர் அம்மையார் இறை பணியோடு மக்களுக்கான ஊழி யப் பணியாக கிராமங்கள் தோறும் உள்ள வீடுகளுக்குச் சென்று நலம் விசாரிப்பதும், அன்றாடப் பணிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை புகட்டு வதோடு மேலதிகமாக உதவுவதும், ஞாயிறு போன்ற ஓய்வுநாட்களில் பாடம் நடத்துவதோடு, காற்சட்டை உத்தி யோகத்தில் மோகமுற்று விவசாயத்தைப் புறக்கணித்து வந்த இளம் சந்ததிக்கு
உழவே உலகத்தார்க்கு ஆணிவேரென உணர்த்தியும், உழவுத் தொழில் விவசாயத்தை முன்னெடுக்கவும், வலது குறைந்த மாற்றுத் திறனாளிகளுக்கும், வயது முதிந்தோர், நோயாளர்களைப் பராமரிக்கவும் நவஜீவனம் என்ற அமைப் பைச் சமூகப் பணிக்காக ஆரம்பித்து வைத்தார். அவ்வமைப்பின் இலட்சிய மான பிரார்த்தனைப் பாடல் இது. இப்பாடலை யாத்தவர் கே.பி.முத்தையா அவர்கள்.
திருவருளாலே ஒரு குலமாய்
திகழ்ந்திடுவோம் நாம் கருத்தி
லொன்னால் தரு நவஜீவனம் நற்கனியாய்
திருத்துவமே எம் பலமாய் சரணம் சரணம் சரணம்
அன்பரின் கரத்தினுள்
அடிமைகளாய் அளித்துவிட்டோம் எம்மைப் பலியாய்
அன்னை மரி சுதனார் அவர்தம் அன்பினால் எம்மை ஆண்டுகொண்டார்
சரணம் சரணம் சரணம்
, என இப்பாடல் தொடர்ந்தும் பல அழகான வரிகளை உள்ளடக்கிய தாகவும், தன்னலமற்ற இப்பணிகளைப் பற்றி திரு. சா.அ.தருமரத்தினம் அவர் கள் தம் கட்டுரையொன்றில் குறிப்பிட் டுள்ளார். அர்த்தம் பொதிந்த அருமை யான இப்பாடலை நவஜீவனத்திற்காகப் புனைந்தளித்த பெருமையும் தமிழறிஞர் கே.பி.முத்தையா அவர்களுக்கே உரிய தாகும். மேலும் பாடசாலைக் கல்வி
மல்லிகை ஜூன் 2011 & 65

Page 35
கற்பித்தல், தமிழ் மொழி தொடர்பான பல ஆக்கங்களைப் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வெளியிட்டி ருந்தாலும், யாழ் நகரில் இடம்பெற்ற வஞ் செயல்கள், போர் என்பவற்றால் இவற்றை மீட்டெடுக்க முடியுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அருமை யான சில கட்டுரைகளைத் தான் நடாத் திய கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் எழுதிய சிறப்பு கா.பே.மு.வுக்கு உண் டென்றும் அவரை நாம் நினைவு கூர வேண்டியது மிகமிக அவசியமெனவும் கலைச்செல்வி ஆசிரியர் திரு. ਲ6u6ਹo பவன் (சிற்பி) அவர்கள் ஒரு சந்தர்ப் பத்தில் பசுமையான பழைய நினைவு களை மீட்டுக் குறிப்பிட்டிருந்தார்.
ஒரு மனிதனின் "பூரணத்துவமான மும்முனை வாழ்வான தானும் தனது தொழிலோடு தொடர்பான வாழ்வு, குடும்ப வாழ்வு, பொதுப்பணிகளோடு செயற்படும் சமூக வாழ்வு என்ற முத்தரப்புக் கடமை களையும் வெகு சிறப்பாகவும், பிறர் பாராட்டும் வகையில் வெற்றிகரமாகவும், வெகு நேர்த்தியாகவும் செய்து முடித்த நிறைவோடு இருந்த கே.பி.எம். அவர்கள் இலேசான நெஞ்சுவலியால் யாழ் பெரி யாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஒரிரு நாட்களால் 1964ஆம் ஆண்டு மே மாதம் 25ந் திகதி இயற்கையெய்தினார். மறுநாளே இந்தியப் பிரதமர் ஜவஹர் லால் நேருவும் மரணமான செய்தியை யாவரும் நினைவிலிருத்தியிருப்பர்.
இவருடைய மரணத்தால் மனைவி யார் ஜெபமணி தொடக்கம் குழந்தைகள் ஜெபராணி, ஜெபராஜா, ஜெயதேவி, ஜெபானந்தன், ஜெபமலர் உட்பட யாழ்நகர் முழுவதையுமே சோகம் அப்பிக் கொண்டதெனலாம். எழுத்தாளர்கள், கலைஞர்கள், தமிழாசான்கள், அறி ஞர்கள், சமூகப்பணியாளர்கள், தேவன் விசுவாசிகள், அடிமட்ட மக்கள் என சகல w மத்தியிலும் விடிவெள்ளியின் மறைவு பெரும் இருளையே கவிழ்த்து விட்டது.
தளங்களிலுள்ளோர்
திருவிழாக்களின் போது ஏற்படும் வாணவேடிக்கைகளின் சத்தம், பொங் கலின் போது சீனவெடி முழக்கம், மரண ஊர்வலங்களின் போது அடிக்கப்படும் பறையொலி, பெரும் விருட்சங்களைத் தறிக்கும் போது ஏற்படும் அதிர்வு ஒலி என்பன தவிர வேறெவ்வித அசம்பா விதங்களோ, அதிர்வுகளோ, வெடிச் சத்தங்களோ கேட்டறியாத 1964களி லான யாழ்ப்பாண அமைதிச் சூழலில், சமூகத் தொண்டன்’ முத்தையாவின் மறைவு பெரும் அதிர்வை ஏற்படுத்திப் பல உள்ளங்களில் வலியைத் தோற்று வித்த உண்மையை இன்றும் நாம் நினைவு கூறுகிறோம்.
அன்புக்கு ஆணவம் இல்லை; பகைமை இல்லை; சுயநலம் இல்லை; வேற்றுமையில்லை; அன்பே அறம், அன்பே ஆண்டவன்
மல்லிகை ஜூன் 2011 & 66

கவனத்திற்கு வந்த சில நூல்கள் \ற்றில் சிறு குறிகள்
கே.விஜயனின் பலே பலே வைத்தியர்
- கே.எஸ்.சிவகுமாரன்
இலக்கிய உலகில், முக்கியமாக ஈழத்து இலக்கியப்படுதாவில் நன்கறியப்பட்ட போதிலும், அதிகம் கணிக்கப்படாத ஒருவர் கே.விஜயன். இவர் இதழியலாளராக இருந்தவர். இப்பொழுது ஞானம் இதழில் பத்தி எழுத்தாளராக எழுதி வருபவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம், அங்கதச் சுவை தரும் கண்டனம், வானொலி நாடகம் போன்ற துறைகளில் ஈடுபாடுடையவர். மேடையிலும் ஆழமான கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடியவர். விவாதங்களில், பொதுவாக எதிர்க் கருத்து களைத் தெரிவித்து, விவாதங்களுக்குச் சூடு கொடுக்க முயன்று மகிழ்ச்சி கொள்பவர். நிறைய வாசிப்பவர். மலையாளக் கதைகள் சிலவற்றைத் தமிழில் தந்திருக்கிறார். மார்க்சிய சிந்தனையுடையவர். அதேவேளை கலைகளை இரசித்து அனுபவிக்கக் கூடிய புலமையும், முதிர்ச்சிப் பக்குவமும் கொண்டவர்.
ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கு மொழிபெயர்க்கும் முயற்சிகளையும் மேற் கொள்பவர்.
‘வீரகேசரி’ பத்திரிகையில் சில மாதங்கள் இணை ஆசிரியராகப் பதவி வகித்த பொழுது, நடைமுறை இதழியல் (Practical Journalism) பரிச்சயமுடையவராக இவர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்ததை அவதானித்தேன்.
நூல் வடிவில் இவர் எழுதிய ஆக்கங்கள் பரிசில்களைப் பெற்றமையும், இவருடைய எழுத்துத் திறனைப் பறை சாற்றும்,
மல்லிகை ஜூன் 2011 தீ 67

Page 36
இவருடைய எழுத்து நடை பன் முகத் தன்மை கொண்டதாக (Varied Styles) இருப்பதும் அவதானிக்கத் தக்கது.
அழகான சிரித்த முகத்தையுடைய விஜயன், தொழிலாள வர்க்கச் சூழலில் வளர்ந்து, வாழ்க்கையின் ஏற்றத் தாழ்வு களை உணர்ந்தவர், கேரள மாநிலப் பூர்வீகம் கொண்ட இவரின் எழுத்துக் களில் மலையாள இலக்கியச் சிற்பி களின் தாக்கத்தை உணர முடிகிறது.
அவ்வாறான ஓர் ஆக்கமாக அவ ருடைய பலே பலே வைத்தியர்' என்ற நூல் வெளிவந்திருக்கிறது.
பெரும்பாலும் சிறுவர்களைக் கவரக் கூடியதும், பெரியவர்களையும் திருப்திப் படுத்தக் கூடியதுமான ஒரு 98 பக்கப் புத்தகத்தை வித்தியாசமான சித்திர அட்டையுடன் விஜயன் வெளியிட்டிருக் கிறார். இந்தப் புத்தகத்தை 23/49, மயூரா பிளேஸ், ஹவ்லொக் வீதி, கொழும்பு 06 என்ற முகவரியிலிருந்து பெற்றுக் GassrsiT6T6)Tib.
இருபது குறுங்கதைகள் கொண்ட இந்நூலின் மூலக்கதைகள் மலையாளத் திலிருந்து ஆங்கிலத்துக்கும், அதி லிருந்து தமிழுக்கும் இப்பொழுது வந்திருக்கின்றன.
நூலாசிரியர் தமது என்னுரையில் குறிப்பிடுவதைத் தகவலாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மலையாளச் சிறுவர்களின் குட்டிக் கதைகள், Tolstoiயின் குட்டிக் கதை களை உள்வாங்கி வடிவமும் நிகழ்வு களும் வித்தியாசமாக மீள் உருவாக்கம் செய்யப்பட்ட கதைகள் இவை. நமது சிறுவர்களின் வாசிப்பிற்கும் இரசனைக் கும் ஏற்ப எழுத முயன்றிருக்கிறேன்.
இந்தப் புத்தகத்தின் சிறப்புகளுள் ‘சாமியின் ஓவியம், அனுர்ஜனின் வடி வமைப்பு, சிவரஞ்சனியின் கணனி ஆகியன எனலாம்.
இக்கதைகளில் நகைச்சுவை மிளிர் கிறது. நூலாசிரியரின் கருத்தின்படி சிறுவர்களுக்கான படைப்புகளில் போதனை இருத்தல் கூடாது. அவர் கூறு கிறார்; ”உட்கரு கதையோட்டத்துடன் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத் தன்மை சித்திரங்களாக உருவாக்கப்படல் வேண்டும். எளிமை யான மொழிநடை இதற்குப் பெரும் துணையாக அமையும்.”
கே. விஜயன் இதுவரை வெளியிட்ட
நூல்கள், இரண்டு நாவல்கள், (விடிவு
கால நட்சத்திரம், மனநதியின் சிறு அலைகள்) ஒரு சிறுகதைத் தொகுப்பு. (அன்னையின் நிழல்)
இந்த அவருடைய புதிய நூலில் 20 சின்னச் சின்னக் கதைகள் இடம் பெற்றுள்ளன. சுவாரஸ்யமாக எழுதப் படித்துப் பாருங்கள். இரசனைக்குரியது இந்த
பட்டுள்ளன. நீங்களே
மல்லிகை ஜூன் 2011 & 68

ဇွဲ`နွဲ့နွဲ့ခဲ့မဲ့နွဲ့နဲ့ဇွဲ၊
ရွဲ့ Š ১৯৯২
F8
`இ தமிழ் சினிமா நடிகர்களை அரசியல் அதிகாரம் நெருங்குவதற்குக் காரணம் என்ன?
Liostistimír 6Tib. D-Luugisioson
* ஆரம்பத்தில் கிடைக்கும் வெகுசனப் புகழ், இந்தப் புகழ் ஏணியே, நடிகர் எம்.ஜி.ஆரைத் தமிழக முதலமைச்சர் பதவியில் உட்கார வைத்தது. அதேசமயம் அவரது காலகட்டத்தில் வாழ்ந்த, நடிப்பில் சிறந்தவ ரெனச் சகலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவாஜிகணேசன் ஒரு தொகுதியில் கூட நின்று வெற்றி பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமாப் புகழ் இருட்டறை வெளிச்சம்! அவ்வளவுதான்.
ஒருகாலத்தில் தமிழ்நாட்டின் முடிகடா மன்னன் எனப் புகழப்பட்டதியாகராஜ பாகவதர், பிற்காலத்தில் சென்னை மவுண்ட் ரோட்டில் ஒர் ஆட்டோவைக் கைதட்டி நிறுத்திய போது, ஆட்டோ ஒட்டி நின்று திரும்பிப் பார்த்து விட்டு. நிறுத்தியவர் பாகவதர் எனத் தெரிந்ததும், ஆட்டோவை நிறுத்தாமல் போனதும் ଗ୍ଯାନ୍ତି வரலாறாகும்.
இ, நியாயமான சமூகசிந்தனையும், யோக்கிய மனப்பான்மையமுள்ளவர்கள் இலங்கை மண்ணில் தேர்தலில் நின்று வெற்றிபெறமுடியவில்லையே, என்ன காரணம்?
புத்தளம் எம். சலீம்
* யோக்கியமானவர்களும், நேர்மையானவர்களும் ஒதுங்கி ஒதுங்கிப்போக, சாக்கடை மனப்பான்மை கொண்ட சந்தர்ப்பவாதிகள் அரசியலில் நுழைந்து, நல்லவர்களையும், வல்லவர்களையும் ஓரங்கட்டி விடுகின்றனர். அல்லது நாளடைவில் தங்களைப் போல் ஒருவராக அவரையும் மாற்றியமைத்து விடு
மல்லிகை ஜூன் 2011 & 69

Page 37
கின்றனர். இனி இளந்தலைமுறையினரிடமிருந்து தான் மக்கள் தலைவர்கள் உருவாக வேண்டும்.
SÅ Locio Guqtapes 95 g5 TLDTGor 68 Gošefluu do, Gnu gooTub... U cibé5gtoGo éša5gpé5 não é5qsiT, 9 uJff கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், பொது நூலகங்களுக்கு ஏதாவத அனுசரணை யில் தொடர்ந்தது அனுப்பி வைத்தால் GTGöTETP
Losil sorrir
ஆர். சிவதேவி
* மல்லிகை இதழ்களைத்தான் எம்மால் அச்சிட முடிகின்றது. அதைத் தபாலில் சேர்க்க அஞ்சல்தலை களையும் எம்மால் அச்சிட முடியாது. பலர் இதைக் கவனத்தில் கொள்வதேயில்லை!
இலக்கியச் சவLால் கதையளக்கும்போது மட்டும், சந்தா அனுப்பிவைத்திருந்தேன். ஒழுங்காக மல்லிகை கிடைப்பதேயில்லை என பந்தா காட்டு வதில் மட்டும் சிலர் சளைப்பதேயில்லை.
கணணியில் பதிந்திருக்கும் சந்தாதாரர் களின் வயர், முகவரிகளைத் தேடிப் பார்த்தால், இவர்களது முகவரிகிட்டும். சுமார் நான்கு ஆண்டு களுக்கு முன் னரே இவர்களது சந்தாக் காலம் முடிவடைந்திருக்கும்.
இ மல்லிகையின் ஆரம்பகால இலக்கிய 5Godoru fra5Coo CMT S Goo Lä5ddf5Goou Guiu rằJa5cir நினைத்துப் பார்ப்பதுண்டாரி
உரும்பிராய். எஸ். தவயோகன்
* ஆரம்ப காலங்களிலிருந்து மல்லிகைக்காக மன மறிந்து பாடுபட்ட பலர் இன்று வெளிநாடு சென்று விட்டனர். இன்னுஞ் சிலர் மறைந்துபோய் விட்டனர். ஊரிலுள்ள பலரோ, வயோதியம் காரண மாக இலக்கிய உலகிலிருந்து வராம்ப ரொம்பத் துரப்போய் விட்டனர்.
இருந்தும், ஆரம்ப காலகட்டத்தில் இருந்து மல்லிகைக்கு மனசார உழைத்த நண்பர்களை நான் அடிக்கடிநினைத்துப்பார்ப்பதில் தவறுவதேயில்லை!
இ மல்லிகையின் பழைய பிரதிகளில் சில எனக்குத் தேவைப்பருகின்றன. தேவை யான பிரதிகளைப் பெற்றுக்கொள்ள
pupuloT
si66Trrsb. எஸ். சிவநேசன்
* நேரில் வந்து தேடினால் பெற்றுக்கொள்ள லாம். அவற்றைத் தேடி அனுப்ப இப்போதைக்கு எம்மால் முடியாது
இ உங்களுடைய இலக்கிய அநபவங் களைப் படித்தறியப் பெரிதும் ஆசைப்பரு கின்றேன். அதற்காக நானென்ன செய்ய Genյ6ԾօTԱյլbք
தெல்லிப்பழை கே.கணேசன்
* தொடர்ந்து மல்லிகை இதழைப் படித்து வாருங்கள். ஓரளவு எனது வரலாற்றுச் சுருக்கம் புரியும். இன்னும் அறியவேண்டி ஏற்பட்டால், எனது சுயவரலாற்று நூல்களைப் படித்துப் பாருங்கள்.
இ உங்களது கடந்தகால மல்லிகை வர லாற்று அநபவங்களை இனிமேலாவது நூலுருவில் எழுதி வெளியிட்டால் என்ன?
புத்தளம். ஆர்.நாகேந்திரன்
* எத்தனை எத்தனையோ வாழ்வாதார இலக்கிய நேரடி அநுபவங்களை எழுத்தில் வடிக்க வேண்டு மென்பதுதான் எனது நீண்டநாளைய ஆசை. உண்மையைச் சொல்லுகின்றேன், மல்லிகைக்காக நான் தினசரிஉழைப்பதில் எனது நேரத்தின் பெரும் பகுதியைச் செலவிட்டு விடுகின்றேன்.
மல்லிகை ஜூன் 2011 奉 70

& உங்களிடம் உங்களுக்குப் பிடித்தமான GUBörĒJSõGooTiib GTGÖTGUTf
திருமலை. எஸ்.சிவகுமார்
* கடந்த அரை நூற்றாண்டு காலகட்டம் நெருக்க மாகமல்லிகை என்ற இலக்கிய ஏட்டைத் தொடர்ந்து நடத்திவருகின்றேன். இடையே புலப்பெயர்வு, பாரிய பொருளாதார நெருக்கடிகளுக்குள் உள்ளாளக்கப் பட்டு, அதையெல்லாம் தவிர்த்து, இன்று நிலைத்து நிற்கின்றேன்.
இடையே எனது இலக்கிய நேர்மையை பற்றிய அவதூறு வதந்திகள். இவைகள் அனைத்தையும் கடந்து இன்று நிமிர்ந்துநிற்கின்றேனே, அந்தமிகப் பெரிய ஆழ்ந்த மனத்திடம்தான் எனது மிகப்பெருங் குணம் என இப்போது நான் நம்புகின்றேன்.
& நீங்கள் நண்பர்களை எப்படித் தேர்வு Ghafüg) Uyp5élgöTÓföGTf
வங்காலை. எஸ்.செல்வநாதன்
o Brör Bja:Turaba)6Irö GöIůGLIITü BĽųů பாராட்டுபவனல்ல. அதற்கு எனக்கென்று நேரமும் கிடைப்பதில்லை. நண்பர்கள்தான் என்னை நட்புப் பாராட்டிப் பழகுகின்றனர். பழகுகின்றவர்களை யெல்லாம் நான் மனதுக்குகந்த நண்பர்களாகக் கருதுவதில்லை.
ஆத்ம நட்பு என்பது தன்னை அடிக்கடி வெளிக் காட்டிக் கொள்வதுமல்ல!
ČSA ocio cocopas u 5 Gör é9*GooÜ u l-Lorra5&s
கலைஞர்கள், இலக்கியவாதிகளின் உரு வங்களைப் பதிப்பிக்க வேண்டுமென்ற ஆரோக்கியமான யோசனை உங்களுக்கு எப்படி வந்தது?
தெஹிவளை. சி.மிலன்
* ஆரம்ப காலங்களில், நான் இலக்கிய உலகில் காலகட்டங்களில் தாமரை, சரஸ்வதி என்ற தமிழ கத்து இலக்கிய இதழ்கள் எல்லாம் கலைஞர் களினது, படைப்பாளிகளினது உருவங்களை ©ILOL) பதிப்பித்துத் தனது வாசக மட்டத் தினருக்கு அவர்களை அறிமுகம் செய்து வந்ததை ஓர் இலக்கியக் கடமையாகவே செய்துவந்துள்ளன.
இலங்கைத் தமிழ்ப் படைப்பாளிகளும் இத் தகைய அட்டைப்படப் பதிவுகளில் இடம்பெற்ற வர்களே! இந்த ஆரோக்கியமான அணுகுமுறையை மல்லிகை தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. இது தொடர்கதை. மேலும் மேலும் தொடரும்.
$ 50-வது ஆண்டுமலரை எங்களது கரங் களில் தந்துதான் முடிப்பீர்கள்ாரி
சில்லாலை, எம்.எம். இம்மானுவேல்
* கண்டிப்பாகக் காத்திருங்கள். ஐம்பதாவது ஆண்டுமலர் உங்களது கரங்களைத் தேடிவரும். அதில் எனது கைப்பட ஆசிரியரத் தலையங்கத்தை நானே எழுதியிருப்பேன்.
இ இன்றுவரைக்கும் நீங்கள் நெஞ்சார நேசித்துவரும் எழுத்தாளர் யார் - யார்?
மருதானை. ஆர்.மோகனதாஸ்
* நமது இலக்கியத்தை நெஞ்சு குளிர நேசித்து வரும் சகலரையும் நான் மெய்யாகவே நேசிக்கப் பழகியவன்தான். கடந்த காலங்களில் என்னைத் தெரிந்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.
நான் இன்றுவரைக்கும் நெஞ்சில் நிறுத்தி நேசித்துவரும் எழுத்தாளர் ஒருவர் உண்டு. அவரது BITIDňD ST.(88.ä563Fč56)JTĽebTIT.
மல்லிகை ஜூன் 2011 & 71

Page 38
இ எழுத்தாளர் சுந்தர ராமசாமியை நீங்கள் நேரடியாகச் சந்தித்து உரையாடி
Lugiraffesarm?
சி.சுமதி
மல்லாகம்.
* இரண்டு தடவைகள் சந்தித்துள்ளேன். ஒரு தடவை நாகர்கோயிலிலும், அடுத்த தடவை சென்னையில் காலச்சுவடு நடத்திய இலக்கிய விழா விலும் நேரில் கண்டு பேசியுள்ளேன்.
இ. நான் உங்களை வருடா வருடம் வெகு
* உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். அதென்ன கம்பன் விழா என்றால் அதற்கு அதித அக்கறை காட்டி வருகின்றிர்கள். arcôrgo escooTib 2ção
தெஹிவளை. எல்.செல்வநாதன்
* கம்பன்கழகத்தினர், குறிப்பாக விஜயராஜ் அவர் களினது அர்ப்பணிப்பு உழைப்பு அந்தக் காலத்தி லிருந்தே என் நெஞ்சில் சுவறிவிட்ட ஒரு ஆத்ம பந்தம். தன்னை ஒப்புக்கொடுத்துப் பொதுவாழ்வில் அர்ப்பணித்து உழைப்பது என்பது கம்பன் கழகத் தினரது சேவையில்தான் நான் நிதர்சனமாகக் கண்டுணர்ந்துள்ளேன். அதனது பெறுபேறுதான் எனது நெருக்கமும், இதய நட்பும்.
>S மாதா மாதம் நமது இலக்கியவாதிகள்
ஒருங்கு சேர்ந்து இலக்கியவாதிகளின் இலக்கியம் பேசாத சந்திப்பு என்ற தலைப் பில் ஒன்றுகடிக் கதைத்தால் என்ன? உண் மையைச்சொல்லப்போனால்,நீங்கள் இந்த விஷயத்தில் மனசுவைத்துப் பாருபட்டால் தான் இது நடைமுறையில் சாத்தியப்படும் என நம்புகின்றேன். முயற்சிப்பீர்களா?
வெள்ளவத்தை. ஆர்.தவபாலன்
* முன்னொருகாலத்தில் நண்பர் சுதாராஜ் அவர் களினது ஆனைக்கோட்டை இல்லத்திலும், அவரது புத்தளம் வீட்டிலும் இச்சந்திப்பு ஒழுங்கு செய்திருந்
göITň.
பார்க்க, பழக, மனந்திறந்து கதைக்க வித்தி LIFTarIDIT00T é9 gobioaTEDT5 €335 6Sc55535. 66örgp வரைக்கும் அவை பேசப்படுபவையாக இருக் கின்றன.
மீண்டும் முயன்றுதான் பார்க்கலாமே!
সুৈ। ৭৮-6ugচ ஆண்டுமலர் தயாரிப்பு வேலை
களை இப்போதே ஆரம்பித்துவிட்டிர்களா? மலர் ஒன்றைத் தயாரிக்க உங்களுக்கு எத்தனை மாதங்கள் தேவைப்படும்?
அநுராபுரம், எம்.எம்.ரத்னவேல்
* காத்திரமான ஆண்டுமலர் ஒன்றைத் தயாரிக்க бтüшgiцір ஆறுமாதங்கள் (5061 LILOTib. அடுத்துவரும் ஆண்டு மலருக்கான ஆயத்த வேலைகளை இப்போதே ஆரம்பித்து விட்டேன். மல்லிகை மலருக்கு எழுதும் நண்பர்களும் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது.
Sa SiguGoLogoLu eigoLuty Gnungi. GinupTas
கள், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அழைப்புக்கள் அடிக்கடி வரக்ககூடும். இத் தகைய அழைப்பக்கள் எல்லாவற்றையும் நீங்கள் கவனத்தில் கொள்வதுண்டா?
சி.ரவீந்திரன்
* அதையேன் கேட்கிறீர்கள், இந்த அவலத்தை?
666tum.
போக்குவரத்துப் பிரச்சினைதான் வாரிய சங்கடம். பஸ் பிரயாணத்திற்குத் தேகம் இடம் கொடுப்ப தில்லை. எனவே, அழைப்பவர்கள் போக்குவரத்தை ஒழுங்கு செய்வது நல்லது.
201/4, முரீகதிரேசன் வீதி, கொழும்பு 13 முகவரியில் வசிப்பவரும், மல்லிகை ஆசிரியரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா அவர்களுக்காக, கொழும்பு விவேகானந்த மேடு, 103A, இலக்கத்திலுள்ள Lakshmi Printers அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

0ff=
DATABASE PRINTING BROCHURES, CATALOGUES, SOUVENIRS, BOOKMARKS, GREETING CARDS, NAME TAGS, CD/DVD COVERS, COLOUR BODATA, STICKERS INVITATION CARDS, PROJECT REPORTS BOOK COVER, MENU CARDS, THANKING CARDS, CERTIFICATES, BOOKS, POSTERS, CD STOMER, PLASTIC CARDS, SCRATCH CARDS, VISTING CARDS.
HAPPY DIGITAL CENTRE (PVT) LTD
Digital Colour Lab a Digital Offset Press
No. 75 1/1, Sri Sumanatissa Mawatha, Colombo - 12.
el: +94 11 4937336, +94 11 7394592 Web: www.hdck.com, E-mail happy2002Olive.com

Page 39
%, , , ZzzzZ) !sZ, Z, Z, Ź,
耀)Lae
| 229)||14, Santhosh Plazasst Floor, Main Street,Colombo 11. Tel.|(8885,| 077.9004828 ||!