கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பூங்காவனம் 2011.06

Page 1

ssN 2012-6700 தழ் - 05
Şoundation ເດດ

Page 2
With Best Compliments From:-
NGLISH COLLEGE
kend English School Sat & Sun
Morning Batch : 8.00 - 11.30 Evening Batch: 1.30 - 5.00
For Nursery to O/L students.
HEAD SCHOOL : 40, Dharmarama Road, Kalutara.
BRANCHES :45, Sheik Jamaldeen Road, Beruwela.
9, Lotus Road, Dharga Town. 564/A, Colombo Road, Gintota.
ONE OF THE BEST ENGLISH PROGRAMME IN THE ISLAND
www.edxlcollege.com Hotline: 0776320623
With Best Compliments From:-
Dr. M. Rifkhan Fareed BUMS (Col-SL), Dip. in. Coun UnaniPhysician/Psychological Counselor
Colombo HealthCentre
Colombo Health Centre
/бе மூல நோய் Y
Vitiligo வெண்குஷ்டம் Obesity/Over Weight sig5a5 g L-6) S603 Infertility பிள்ளைப் பேறின்மை Skin Deseases தோல் நோய்கள் Mental Disorders மனநோய்கள் Arthritis மூட்டு வாதம் Sciatica/Back Pain முதுகு வலி High Cholesterol. கொலஸ்டரோல் Diabetes நீரிழிவு
Migrain ஒற்றைத் தலைவலு
52, Kawdana Road Dehiwala, Sri Lanka.
Consultation Hours:-
Monday - Friday 9.00am - 6.00pm.
Saturday 9.00am - 5.00pm, (Appointments Only)
TP - 011 2727214 Mob - 0773308822
 
 
 
 
 
 
 
 
 
 
 

Best Queen Foundation வெளியீடு
பூங்காவனம்
இதழ் 05 - 2011 ஜூன்
SSN 2012 - 6700
ஆசிரியர் குழு
ரிம்ஸா முஹம்மத் எச்.எப். ரிஸ்னர் டப்ளியு.எம். வஸிர்
ஆலோசகர்
திருமதி. ஐரீனா முஸ்தபா
வங்கித் தொடர்புகளுக்கு
Commercial Bank,
Mount Lavinia Branch, Best Queen Foundation, A/C No :- 893.0016177.
என்ற இலக் கத்திற்கு காசு, காசோலைகளை வைப்பிலிட்டு அவற்றின் பற்றுச் சீட்டுக்களையும், அல்லது காசுக் கட்டளைகளாயின் (M.F. Rimza - Dehiwala Post Office) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் எமக்கு அனுப்ப வேண்டும்.
தனிப்பிரதி - 80/= தபால் மூலம் - 100/= வெளிநாடு - 2.5S
தொர்புகளுக்கு
"Poongavanam" 21 E, Sri Dharmapala Road, Mount Lavinia,
Sri Lanka.
Email:- bestaueen 12G)yahoo.com
Website:-
WWW bestdueen12.blogspot.com
Phone:-
O094 (O)77 5009 222 O094 (0)714403251
Ο094 (O) 71 9200580
புதிய ஆக்கங்களும், இச்சஞ்சிகை பற்றிய
விமர்சனங்களும்
எதிர்பார்க்கப்படுகின்றன. நூல் விமர்சனத்துக்கு அனுப்புபவர்கள் நூலின் இரண்டு பிரதிகளை அனுப்ப வேண்டும்.
-----------
L60)L I35(658(5 படைப்பாளிகளே பொறுப்பு. செவ்வைப்படுத்த ஆசிரியர் குழுவுக்கு l- s foLDuj605(6 السـ

Page 3
ஏக இறைவனின் நல்லருளாலும், உங்களனைவரின் ஊக்கத்தாலும் பூங்காவனம் சஞ்சிகையின் ஐந்தாவது இதழ் உங்கள் கரங்களில் தவழ்கிறது.
பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்று உலகின் பல்வேறு திக்குகளில் இருந்தும் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றை சொல்ல விரும்புகிறோம்.
அதாவது "பெண் விடுதலை’ என்ற பதம் கூறி நிற்பது வெறுமனே பெண்களுக்கான எல்லா சுதந்திரத்தையும் தந்து விடுங்கள் என்பது மட்டுமல்ல. கல்வி, தொழில், அரசியல், குடும்ப விவகாரங்கள் போன்றவற்றில் எங்களையும் இணைய விடுங்கள். எங்கள் திறமைகளைக் கண்டு கொள்ளுங்கள். அடுப்படியிலிருந்து எங்களை வெளியுலகுக்கு அழைத்துச் செல்லுங்கள். இவை எல்லாவற்றையும் நீங்களே முன்னின்று செய்து தாருங்கள் என்பதுதான்.
ஆண்களுக்கு பெண்கள் சமமானவர்கள் என்பதைத் தவிர நிகரானவர்கள் அல்லர். இதை பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களின் உடலமைப்பானது, பெண்களின் உடலமைப்பை விட பலம் கூடியது. ஆண்களின் மன வலிமையைவிட பெண்களின் மனது மென்மையானது. அப்படியிருக்க ஆண்களால் மாத்திரம் செய்ய முடிந்த குறிப்பிட்ட சில வேலைகளை பெண் விடுதலை என்று கூறிக்கொணடு தன் தலையில் சுமத்திக்கொள்வது மகா முட்டாள் தனம் என்பதே உண்மையாகும்.
பெண் விடுதலை என்ற சொல்லுக்கான விளக்கத்தை சிலர் தவறாக புரிந்து வைத்திருக்கின்றார்கள். குட்டைப் பாவாடை, இறுக்கமாக அணிந்த ஆடைகளுடன் சென்றாலும் தமக்கு ஆபத்து வருவதை ஆணாதிக்கம் என்று கூறுகிறார்கள். கவர்ச்சியான ஆடைகளை அணிந்துவிட்டு ஆண்களை மாத்திரம் குறை கூறும் பெண்களைப் பற்றி என்ன சொல்லப்போகிறோம்? தன் மனைவியரை பிற ஆடவரிடமிருந்து பத்திரப்படுத்தி வேறு பெண்களை ரசிக்கும் ஆண்களை எந்த வர்க்கத்தில் சேர்க்கப்போகிறோம்?
ஆண்களோ, பெண்களோ பார்வையைத் தாழ்த்திச்செல்வதே முறையாகும். இரு பாலாரும் கட்டுப்பாடுகளைப் பேணி நடப்பதே சிறப்பாகும். இவற்றைப்பற்றி நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். பெண் விடுதலை, ஆணாதிக்கம் என்பதை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டும். விளங்கி நடப்பார்கள் என்ற நம்பிக்கையோடு.
ஆசிரியர் குழு
 
 
 

பூங்காவினுள்ளே
நேர்காணல்
திருமதி. எம்.எஸ். தேவகெளரி
கவிதைகள்
எஸ். மஞ்சுலா
யாழ். ஜூமானா ஜூனைட் ஜெனீரா ஹைருள் அமான்
அ. பேனாட் முருகேசு பகீரதன் சூசை எட்வேர்ட் பதுளை பாஹிரா ஏ.சீ. ஐரீனா முஸ்தபா
6oT LITT 606 என். சந்திரசேகரன் நல்லை அமிழ்தன் நஸிஹா ஹலால்தீன்
வெலிப்பன்னை அத்தாஸ்
ஷெல்லிதாசன் எஸ். சாந்தி
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
afшагатb
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
சிறுகதைகளி
இக்ராம் எம். தாஹா சுமைரா அன்வர் மருதூர் ஜமால்தீன் வஸிலா ஜமால்தீன் எஸ்.ஆர். பாலசந்திரன்
கட்டுரைகள்
தம்பு சிவசுப்பிரமணியம் கா. விசயரத்தினம் எம்.எஸ்.எம். சப்ரி யோ. புரட்சி
நூல் அறிமுகம்
வாசகர் கடிதம்
நூலகர்பூங்கா

Page 4
திருமதி. எம்.எஸ். தேவகெளரி அவர்களுடனான
ஒரு நேர்காணல்
சந்திப்பு வெலிகம ரிம்ஸா முஹம்மத்
- - - - - - - - - - - - - - - - - - -
பெயர் - எம்.எஸ்.தேவகெளரி
பிறந்தது படித்தது - கிளிநொச்சி
பட்டப்படிப்பு - யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்(தமிழ் சிறப்பு)
கொழும்பு பல்கலைக்கழகம் பத்திரிகையியல் டிப்ளோமா
முதல் தொழில் - கல்வித்திணைக்களம் - எழுதுவினைஞர்
ஆர்வத்துடன் இணைந்தது - வீரகேசரி - பத்திரிகையாளர் (1993)
தினக்குரல் - ஞாயிறு பதிலாசிரியர் (1997)
|தற்போது - இலங்கை ,தழியல் கல்லுாரி விரிவுரையாளர். (2005-)
பிடித்தது - பயணங்கள்.
நூலானது - பல்கலைக்கழக ஆய்வு, 80களில் மல்லிகை விமர்சனங்கள்
பங்களிப்பு - ஊடகத்துறை பால்நிலை சமத்துவம் பற்றிய பயிற்சிப் பட்டறைகள் நடத்துதல், நூல்களை செம்மைப்படுத்தல் (bookediting) கல்வித் திணைக்களம், பெண்கள் தொடர்பூடக கூட்டமைப்பு.
G5ITLFruisg thevagowry Gigmail.com. السد --سس س- --------------- س - س -- -- سست -------------- سس۔ سس۔ سس۔ س- --------------------- --س- -سا
g56tful L 360600TL Liisabib - www.paadini.blogspot.com
1. இலங்கை ஊடகவியல் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் நீங்கள் அத்துறையைத் தேர்ந்தெடுத்தமைக்கான காரணம் என்ன?
ஊடகத்துறையை நான் தேர்ந்தெடுத்ததே சிந்தனைச் சுதந்திரத்திற்கான வழியாக அது இருந்ததாலேயே. அதை கற்பிக் கும் போதும் மற்றவர்களிடையே சிந்தனையை விரிவுபடுத்தி ஆளுமையில் பல பரிமாணங்களை ஏற்படுத்த முடியும் . அதை ஊடகங்களுடாக
 
 
 
 
 
 
 
 

வெளிப்படுத்தவும் முடியும். இந்த வழியை நான் மற்றவர்களுக்கு முறைமைப்படுத்தப்பட்ட கல்வியினுாடாக வழங்கும் போது தொழில் திருப்தி ஏற்படுகிறது.
2. ஏற்கனவே பத்திரிகைத்துறையில் கடமையாற்றிய நீங்கள், அந்த அனுபவம் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
அது எனக்கு ஒரு தொழிலாக தெரியவில்லை. வாழ்ந்ததே அதற்குள்தான். அதை வாசகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு. தவறுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற கவனம், பல ஊடகத்தொடர்பாளர்களை திருப்திப்படுத்வேண்டிய கடமை,எல்லாமே என்னை பட்டைதீட்டிக்கொள்ள சிறந்த அனுபவமாக இருந்தது.
3. நீங்கள் சிறுகதைத்துறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். தற்போதைய எழுத்து நிலை எவ்வாறு இருக்கிறது?
ஆம். உண்மைகளை மட்டுமே எழுதப் பழக்கிய பத்திரிகைத் துறையில் இணைந்த பின் கற்பனை பண்ண முடியவில்லை. இனி மீண்டும் முயற்சிக்க வேண்டும்.
4. ஊடக்கல்வியை கற்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
எதுவும் முறைமைப்படுத்தப்பட்ட கல்விமுறைக்குள்ளால் வரும் போது அதில் நேர்த்தி திறன் அதிகமாகவே இருக்கும்.ஊடகத்துறையும் அவ்வாறானதே. பயிற்சியினுாடாகத்தான் இதை நாம் வழங்குகின்றோம். இலகுவில் விரைவாக ஊடகத்துறை நுணக்கங்களைப் பெற்றுக்கொள்ள இத்தகைய கல்வியைப் பெறுவதே சிறந்த வழி.
5. ஊடகக் கல்வியானது படப்பிடிப்பு, செய்தி சேகரித்தல் போன்றவற்றில் எத்தகைய பங்களிப்பை வழங்குகிறது?
ஊடகக்கல்வி என்பது எழுதுவதற்கோ, செய்தி வாசிப்பதற்கோ பழகுவது மட்டுமல்ல. ஒரு ஊடகவியலாளன் பத்திரிகையுடன் இணைந்து வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு செய்தியைக் கண்டுபிடிப்பது, அதை சரிவர பெற்றுக்கொள்வது அதற்கான புகைப்படம் எடுப்பது, அதை கணினி மயப்படுத்துவது. சரி பிழை பார்ப்பது, பக்க வடிவமைப்புச் செய்வது என சகல துறைகளிலும் அறிமுறை, நடைமுறைப் பயிற்சியும் வழங்குகிறோம். இன்று நவீன ஊடகங்களின் வருகை ஊடக இணையத்தளங்களை உருவாக்கியுள்ளது. இது பல்லுாடக செயற்பாட்டைக்கொண்டது. அதாவது பத்திரிகை வானொலி தொலைக்காட்சி மூன்றும் இணைந்த செயற்பாடு. எனவே ஒரு ஊடகவியலாளனும் பல்துறைத் திறன் மிக்கவராக இருத்தல் வேண்டும். எனவே மாணவர்களுக்கு வெளியில் சென்று செய்தி சேகரிக்கவும் அதை எப்டி எழுதவேண்டும் என்றும் அதற்காக படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்றும் பக்கத்தை எப்படி வடிவமைக்கவேண்டும் என்றும்

Page 5
பயிற்சியளிக்கிறோம். இது இவை இன்றைய நவீன யுகத்தில் மிக முக்கியமானவை.
6. இன்று இலங்கையில் எத்தனை ஊடகக்கல்வி நிறுவனங்கள் தொழிற்படுகின்றன? அதில் எத்தனை மாணவர்கள் கல்வி கற்கின்றனர்? எத்தகைய தகைமை கொண்டோர் இந்தத் துறைக்குள் சேர்க்கப்படுகின்றனர் என்று கூறுங்கள்? அது பற்றி விரிவாக குறிப்பிடுவீர்களா?
ஊடககல்வி நிறுவனம் என்ற வகையில் முழுநேரக் கற்கை நெறியாக முதன் முதல் ஆரம்பித்ததும் தொடர்ந்து செல்வதும் இலங்கை ஊடகவியல் கல்லுாரி மட்டுமே. இது இலங்கையிலுள்ள ஊடக நிறுவனங்களின் தலைவர்களின் அமைப்பு, பத்திரிகையாசிரியர்களின் அமைப்பு, சுதந்திர ஊடகவியலாளர்கள் அமைப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் இணைந்த பல அமைப்புகள் இணைந்து உருவாக்கியதே (இலங்கை ஊடகவியல் கல்லுாரி0 இதற்கு ஆலோசனையும் அனுசரணையும் வழங்கி வருகிறது சுவீடன் நாட்டின் (போஜோ என்ற ஊடகவியற் கற்கைக்கான நிறுவனமும் 0சுவீடன் கல்மா பல்கலைக்கழகமும்,
இங்கே தமிழ், சிங்கள, ஆங்கில மொழிமூலம் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஆகிய பிரிவுகளில் கற்பிக்கப்படுகிறது. இது ஒருவருட ஊடகவியல் டிப்ளோமா பயிற்சி நெறி. திங்கள் தொடக்கம் வெள்ளி வரையான முழுநேர கற்கை நெறி. க.பொ.த உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்திபெற்ற ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்கள் பொதுப் பரீட்சை ஒன்றின் மூலம் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு மொழியிலும் ஒரு பிரிவில் 10 மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படுவர். பத்துப்பேருக்கும் சிறந்த பயிற்சி வழங்குவதே இதன் நோக்கம். நிரந்தர விரிவுரையாளர்களும் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் இங்கு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவர்.
7. ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். இலக்கியவாதிகள் ஊடகவியலாளராக இருக்கின்றனர் என்ற கருத்தோடு ஒன்றிக்கிறீர்களா? ஏன்?
ஊடகவியலாளர்கள் அனைவரும் இலக்கியவாதிகளல்லர். அதே போல் இலக்கியவாதிகளும் ஊடகவியலாளராக செயற்படுகின்றனர் என்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இலக்கிய வாதிகளில் சிலர் ஊடகவியலாளர்களாக இணைந்து செயலாற்றுகின்றனர். ஊடகவியல் என்பது உண்மையை துல்லியமாக பக்கசார்பின்றி முன்வைத்தலாகும். இதற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் இலக்கியவாதிகளின் சமூக ஆர்வம், மொழி ஆளுமை ஊடகவியல் துறைக்கு பெரிதும் கைகொடுக்கும். ஆரம்பத்தில் எழுதத் தெரிந்த இலக்கியவாதிகள் தான் ஊடகத்துறையில் இணைந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் கைலாசபதி
 
 

ஒரு சிறந்த இலக்கியவாதி விமர்சகள் ஆய்வாளர். அவள் தினகரன் ஆசிரியராக இருந்தவர்.
8. உங்களிடம் கல்வி கற்கும் மாணவர்களிடம் இலக்கிய ஆர்வத்தை எப்படி ஊக்குவிக்கலாம் என நினைக்கிறீர்கள்?
ஒரு ஊடகவியலாளனுக்கு எலி லாத் துறையிலும் கொஞ்சம் தெரிந்திருக்கவேண்டும்.அந்த வகையில் இலங்கை எழுத்தாளர்கள், சிறந்த நுால்கள, விமர்சனங்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுவோம். மாணவர்களும் தமது ஆர்வத்தால் எமது நூலக வளங்களை நன்கே பயன்படுத்துவர்.
9. ஊடகத்துறையில் ஏற்படும் சவால்கள் என்று எதையேனும் குறிப்பிடலாமா?
உண்மையை மிகச்சரியாக பக்க சார்பின்றி முன்வைத்தலே ஊடகத்தொழிலின் அடிப்படை அதுவே பெரிய சவால்தான். பிறரிடம் கருத்துருவாக்கம் செய்யும் ஊடகங்களை கையாள்வது தனிமனித ஆளுமையுடன் சம்பந்தப்பட்டது. ஒரு செய்தியை 5ஊடகவியலாளர்கள் இனம் கண்டாலும் அதை சரியாக ஊடகங்களில் முன்வைக்கும் திறன் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. எனவே ஊடகத்துறையே ஒரு சவால் மிக்க துறைதான். சிறந்த முறையில் பணியாற்றுவதற்கு வெளியிலிருந்தும் உள்ளுக்கு இருந்தும் பல தடைகள் பல வடிவங்களில் வரும். அவற்றை கடப்பதும் லாவகமாக கையாள்வதும் எம் முன் உள்ள சவால்தான்.
10. இளம் ஊடகவிளலாளருக்கு அலி லது ஊடகத் துறை மாணவர்களுக்கான உங்கள் ஆலோசனை என்ன?
ஊடகத்தினுாடாக வெளிவரும் ஒவ்வொரு சொல்லும் மக்களிடையே அதிக தாக்கத்தை விளைவிக்க வல்லன. மக்களிடையே கருத்துருவாக்கத்தை மேற்கொள்ள பாரியளவில் பங்களிப்பவை ஊடகங்களே. எனவே உண்மையான செய்திகளை துல்லியமாகவும் நியாயமாகவும் பக்கசார்பின்றியும் முன்வைக்க அதிகபட்சம் முயலவேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் யாருடைய தலையீட்டுக்காகவும் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல வேண்டாம். எப்போதும் ஊடகவியலாளருக்கான ஒழுக்க நியமங்களை கருத்தில் கொள்ளுங்கள்.
11. இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வைத்தியர், பொறியியலாளர், கணக்காளர் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வதைப்போல் ஊடகவியலாளர் (துழரசயெடளைவ) என்று சொல்லிப் பெருமைப்பட தொழில் வாண்மை (சழகநளளழையெட) மிக்க தொழிலாக இது மாறவேண்டும். அதற்காக தொழில் தகைமையை வளர்த்து உயர்தர ஊடக கலாசாரத்தை பேணிக்கொண்டு செயற்பட சகலரும் ஒத்துழைக்க வேண்டும்!!!

Page 6
முதிர் கன்னிகள்!
சில்லறையாய் சேமித்த காசும் செல்லாக் காசானது. கல்யான சந்தையில் என்னை கரைசேர்க்க என் அன்னைக்கும் முடியவில்லை!
ஆகையினால் பாவை நானும் கடல்தாண்டி பாலைவன பூமியில் கண்ணீரால் கரைகின்றேன்!
என் வாழ்க்கை படகினைக் கரையேற்ற ஆண்மகனைப் பெற்றவளோ சிந்திக்காமல் கேட்கின்றாள் சீ என்ற சீதனத்தை!
சீரழிகின்ற கன்னியரின் வாழ்க்கை தான் எத்தனையோ? சிந்திக்கவும் மனமில்லை.
வருடங்களிரண்டு முடிவுற்று மணமகளாகும
கனவுகளோடு தாய்மண்ணில் கால் வைத்தேன்!
கற்பையும் சந்தேகக் கண்கொண்டு நோக்குகின்ற இந்த சமுதாயத்தில் கனவுகள் காணலாக செல்ல.
முதிர் கன்னிகளாக தனிமையில் பாவை எங்கள் வாழ்க்கையும் கழிகின்றதே அனுதினமும்!!!
எஸ். மஞ்சுளா கிரிஎல்ல
சிந்தித்தால்...! ஏய் மனிதனே! உனை விளிக்கும் போதே விழித்துக்கொள்ளு!
எழுந்து வீறுநடைபோடு. உணர்விழக்கும் முன்பே புதிதாய் ஜனனித்து அவனிக்கு புறப்படு!
புயல் சீறலாம். பூகம்பத்தில் நீ புரளலாம். உன் புலம்ப்ல் உன்னையே கொல்லலாம்!
ஐம்பூதங்களும் L6)6öldb60)6]T set.d5856)Tib. ஆறுயிரே நெஞ்சை அறையலாம்.!
தினமொரு போர் அறைகூவலாம். அடைக்கலம் தேடி மனம் ஏங்கலாம்!
ஆனால்.
ஒரு நிமிடம் சிந்தித்தால் இவ்வுலகே உன் பிடியில்தான்!
பிடரியில் அடிக்கும் வெயில் கூட நீ முயன்றால். புன்னகைத்து பூக்கலாய் உதிரலாம்!
உன் தேகத்தில் துளிர்க்கும் வியர்வை நீர் கூட மழை முத்துக்களாய் கவிபாடலாம்!!!
யாழ். ஜுமானா ஜூனைட்
புத்தளம்
566)
 
 

சீரறி இரடவூரில இதகுதி
முறிUஇரசனைக்குறிடி
(தியத்தலாவ 68.6t. ரிஸ்னற
சிறுவர்களுக்கான இலக்கியங்கள் படைப்பது பெரும் சிரமம். கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதை விட குழந்தை இலக்கியத்தை படைப்பது மிகவும் கஷ்டமான வித்தை என்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மேற்சொன்ன கருத்தையெல்லாம் தகர்த்து ஆரம்பகால படைப்புகளையெல்லாம் கொடிய சுனாமி கொண்டு சென்ற போதிலும், சிறுவர்களுக்கு தன்னால் முடிந்த தொண்டுகளை செய்யும் நல்ல நோக்கத்துடன், துணிச்சலாக காத்திரமானதொரு சிறுவர் தொகுதியை கிண்ணியாவிலிருந்து திருமதி. பாயிஷா அலி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.
சிகரம் தொட வா என்ற தலைப்பில் அமைந்திருக்கும் இந்த நூல் தி குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய இலக்கிய மன்றத்தால் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 35 பக்கங்களில் 22 கவிதைகளை உள்ளடக்கி இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.
கண்ணியமாக வாழ்ந்திடுவோம் சிகரம் தொட வா, வண்ணக்கவிதைகள் படைட்போமா, துணைவருவாயா வெண்ணிலவே, அம்மாவின் முத்தம் வானவில்லை ரசித்திடுவோம், துளியே துளியே விழுந்திடு, நவீன ஆமையும் முயலும் கதை, கற்போம் கணனி, அட்பமும் பூனைக்குட்டிகளும், தண்ணீர். தண்ணிர், முயலின் தந்திரம், செல்ல நாய்க்குட்டி, உலகை வெல்வோம் நிச்சயமே, எறும்பும் வெட்டுக்கிளியும், நல்ல விருந்து, உணர்ந்திடுவாய், செல்லிடத்தொலைபேசி, வெற்றிக்கனியை சுவைப்போம், எங்களுர் கிண்ணியா, சின்னச்சிட்டுக்குருவிகளே, மீன்கள் வளர்ப்போமே என்ற தலைப்பிலான கவிதைகளை தாங்கியிருக்கிறது இட்புத்தகம்
எளியமையான சொல் நடையுடன் சிறுவர்கள் சீக்கிரம் புரிந்துகொள்ளுமளவுக்கு விடயங்களை நுட்பமாகவும் கருத்துள்ளவையாகவும் யாத்துள்ளர் திருமதி பாயிஷா அலி அவர்கள் வசனங்களில் எதுகை மோனை அமைப்பு ரசிக்கத்தக்க விதமாகவும், சிறுவர்கள் இலகுவில் பாடல்களை நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையாகவும் எழுதியிருக்கிறார்.
'கண்ணியமாகவே வாழ்ந்திடுவோம் என்ற கவிதையில்
சொல்லும் கலிமா பொருளுணர்வோம் ஐந்து நேரம் தொழுதிடுவோம் செல்வம் தனிலே ஸ்காத் ஈந்து சிறப்பாய் நோன்பு நோற்றிடுவோம்.

Page 7
என்ற பாடலடிகளினூடாக இஸ்லாத்தின் அடிப்படைகளை மாணவர்களைக் கவரும் வண்ணம் சொல்லியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பாக சிகரம் தொட வா என்ற கவிதை, சின்னஞ்சிறார்களுக்கு துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் தரும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வண்ணக் கவிதைகள் படைப்போமா எனும் கவிதையில் சிறுவர்களும் இலக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்கான
வழிவகைகளைக் கீழுள்ளவாறு கூறியிருக்கிறார்.
. காற்றும் கடலும் மழையும் பார் களிப்பாய் நீந்தும் மீன்கள் பார் நாற்றும் வயலும் கதிரும் பார் நல்ல கவிதை நீ படைப்பாய்
வீட்டில் கோழி பூனை பார் வெள்ளைக் கொக்கும் முயலும் பார் கூட்டில் பேசும் கிளிகள் பார் கொட்டும் கவிதை மழை போலே.
துணை வருவாயா வெண்ணிலவே' என்ற கவிதை சிறுவர்களுக்கு மட்டுமானதன்று. அதில் பொதிந்துள்ள சேதிகள் ஏராளம் ஊர் உறங்கும் வேளையில் ஒளிவீசும் நிலாவிடம் உலகத்தாரின் உளக்கரைகளை நீக்குமாறு கோரிக்கை விடுகிறார் ஆசிரியர். அது போலவே மேகமெனும் துன்பங்கள் சந்திரனை மறைக்கையில் முட்டிமோதும் தைரியம் போல், சோகங்கள் மனிதனை ஆட்கொள்ளும் போது அதிலிருந்து மீள்வது எவ்வாறு என்று தன் மன ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.
தாயின் முத்தத்தில் ஒளிந்திருக்கும் சுகானுபவத்தை 'அம்மாவின் முத்தம் கவிதை உணர்த்திச்செல்கிறது. பொம்மையாலும், பூக்களாலும், வேறு விளையாட்டுப் பொருட்களாலும் அமைதிப்படுத்த முடியாத குழந்தையை தாயின் அணைத்துத் தரும் முத்தம் சுகமாய் துயில்கொள்ளச் செய்கிறது.
மேலும் இன்றைய நூற்றாண்டில் சிறுவர் முதல் அனைவரையும் கட்டிய் போட்டிருக்கும் சாதனம் கணனியாகும். கணனி கற்காதிருந்தால் எதிர்காலத்தில் தொழிலே இல்லை என்ற நிலை இன்று நிலவி வருகிறது. அதனடிப்படையில் கணணியை பயனுள்ள விதத்தில் கற்க வேண்டும் என்ற கருத்தை கற்போம் கணனி' எனும் கவிதை எடுத்தியம்புகிறது.
குரங்கிடம் அப்பம் கொடுத்து ஏமாந்த பூனைக்குட்டிகள் பற்றி சிறுவயதில் படித்திருப்போம். ஆனால் இந்தத் தொகுதியில் எழுதப்பட்டிருக்கும் 'அட்பமும் பூனைக்குட்டியும் என்ற கவிதை நயக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலடிகள் பின்வருமாறு.
. சண்டையிட்டது குட்டிகளும் சமனாய் அட்பம் பிரித்திடவே கண்டே வந்தார் குரங்காரும் கணக்காய் பகிர்வேன்’ என்றாரே
 
 
 

வேண்டாம் நீங்கள் வஞ்சகராம்" வீட்டில் பாட்டி சொன்னார்கள் துண்டு துண்டாய் விழுங்கிடுவீர் துர விலகிடுவீர் குரங்காரே.'
அதே போன்று ஆரம்ப வகுப்புகளில் பக்கம் பக்கமாக வாசித்த முயல் சிங்கத்தின் கதையை வெகு சுவாரஷ்யமாக 20 வரிகளில் சின்ன முயலின் தந்திரம் என்ற கவிதையூடாக சொல்லப்பட்டிருப்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எதிரிகளையும் மன்னித்தல் தான் நற்பண்பு என்பதை கொக்கும் நரியும் என்ற கவிதை காட்டி நிற்கிறது. தட்டில் உள்ள பாலை நெடிய சொண்டால் பருகிட முடியாமல் கொக்கு தவிக்கும் போது நரி குறுநகை செய்கிறது. ஆனால் அடுத்த நாள் கொக்கின் வீட்டில் நரிக்கு அறுசுவை உணவு விருந்தாய் கிடைக்கிறது. பலி வாங்கபப்படுவேனோ என்று எண்ணிய நரி இறுதியில் கொக்கிடம் மன்னிட்பு கேட்கிறது. மிகவும் அழகாகவும் கருத்தாழமும் மிக்க கவிதை இது சிறுவர்கள் மனதில் இனிமேல் இவ்வாறான கவிதைகள் தான் பதிக்கட்பட வேண்டும். அதனால் பகைமை எல்லோராலும் மிதிக்கப்பட வேண்டும் என்பதை நன்றாக விளக்கியிருக்கிறர் பாயிஷா அலி அவர்கள்.
தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலத்தில் அதே வேகத்தில் செல்லிடத்தொலைபேசிகளும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. அதிலும் ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி ஏன் பாடசாலை மாணவர்களும் இன்று கைத்தொலைட்பேசி பாவிப்பது கண்கூடு. ஆகவே தொலைபேசியானது தொல்லைபேசி ஆகிவிடக்கூடாது என்ற அறிவுரையை செல்லிடத்தொலைபேசி என்ற கவிதையில் இழையோடச் செய்திருக்கிறார் நூலாசிரியர். இவ்வாறு பல, விடயங்களை ஏந்தி புதுப்பொலிவுடன் சிறார்கள் மகிழும் வண்ணம் வெளிவந்திருக்கிறது இட்புத்தகம். பெற்றோர், ஆசிரியர்கள் இதை குழந்தைகளுக்கு பெற்றுக்கொடுத்து, அவற்றைக் கற்றுக்கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும் இலகுவாக குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவிடும் வகையில் மொழி நடை தடுமாற்றமின்றி வெளிவந்திருக்கும் இட்புத்தகத்தை போன்று இன்னும் பல படைப்புக்களைத் தரவேண்டும் என்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!
நூலின் பெயர் - சிகரம் தொட வா (சிறுவர் கவிதைகள்)
நூலாசிரியர் - கிண்ணியா எஸ். பாயிஸா அலி
முகவரி - அலி அரிசி ஆலை, மட்டக்களட்பு வீதி, கிண்ணியா 03.
வெளியீடு - தி குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய
இலக்கிய மன்றம்
விலை - 100/=

Page 8
மதித்திடும் உலகம்!
கல்வி கற்கும் போதினிலே கனிவு காட்ட யாருமில்லை பதவி ஒன்றைப் பெற்றாலோ LITTGF(pl. 16D(Cb60őr8!
குணம் அழகாய் இருந்தாலும் குவலயத்தில் மதிப்பாரில்லை பணம் வந்து சேர்ந்தாளோ பணிபுரிய பலருண்டு!
குடிசையினில் வாழ்ந்தாலோ குசலம் கேட்க ஆளில்லை கல்வீட்டில் வசித்தாலோ கனிவு காட்டப் பலருண்டு!
உயர்வாக இருந்தால் தான் உலகம் எம்மை மதித்திடும் குறைவாக வாழ்ந்தாலோ குவலயமே வெறுத்திடும்!!!
LMMkSLLCCCS LCLCLGSGSSCSSSSSS SLSSSLSSSMSMSMS SMSSSLSLLkSkSkSkMkS SeSCLSCLGGLCSSS LSGSSSLCLLLL LSCCCSGGSS SLLLLLSSCSSSSSS SLLMLLLLSSSLLLSLSS SLLSCS LLLSLLLkMLkLS
штЈ5. கவிதையின் சக்கரம். சூரியனின் மறுவிம்பம்!
காக்கைக் குருவி ஜி" எங்கள் ஜாதி. கடலும் மலையும் 6Tileóil 9 in Li) 6T6örg சிநேகிதம் உரைத்த அவன் கரம் சோர்ந்து விடவில்லை.
ஜெனீ%
மனிதர்கள் பலவிதம்!
சிரித்துச் சிரித்துப் பழகிடுவார் சிறந்தவர் எனும் நினைவோடு ஊறு ஒன்று இழைத்திடுவார் - நம் உயர்வைக் கண்டும் வெறுத்திடுவார்
உயர்வுகள் பேசி நடந்திடுவார் உத்தமர் போன்றே நடித்திடுவார் பிரிவு ஒன்றைத் தந்திடுவார் - பின் போலி மனித ராகிடுவார்
கேட்கக் கேட்கக் கொடுத்தாலோ காசினியில் என்றும் நல்லவர்தான் முடியாத போது இல்லையென்றால் மக்கள் முன்னே கெட்டவர் தான்
நடப்பது எல்லாம் சரியென்றால் நாட்டில் அவர் சிறந்தவர் தான் தட்டி யதனைக் கேட்டுவிட்டால் தரணிக் கெல்லாம் தகாதவர் தான்!!!
ரமணிறருதி
அவன் சக்கரம் எனில்
நான் சுழற்சி. அவன் திரி. நான் ஒளி ܐ؟
காலத்தால் அழியாத کھ
!மூத்த கவி வாழ்க لام
அன்று பாரதி என்ற மனிதன். இன்று உலகம் போற்றும் மகா கவி!!!
 
 
 

| ിജിധഥ இக்ராம் எம்.தாஹா
“மகள்! உம்மா எங்க?"
நாசிக் மாமாவின் குரல் கேட்டு, முற்றம் கூட்டிக்கொண்டிருந்த ஹாஜரா, தன் வேலையை அப்படியே பாதியில் நிறுத்திவிட்டு, “வாங்க மாமா." என்று அவரை வீட்டிற்குள் அழைத்துச்சென்றாள்.
"உம்மா! உம்மா!" ஹாஜராவின் குரல் கேட்டு கிணற்றடியிலிருந்து பேகம் அவசரமாக வந்தார். தன் நானாவைக் கண்டதும், “நானா சொகமா இருக்கீங்களா?” எனக் குசலம் விசாரித்தார்.
“அல்லாஹற்வின் கிருபயால சொகம்.” என்றார் நாசிக்.
“மகள் நீ மாமாக்கு டி ஊத்தி வா” என பேகம் மகளைப் பார்த்துச் சொல்ல, ஹாஜராவும் தாயின் கட்டளைக்கு செவி சாய்த்தவளாய் அடுக்களைக்குள் நுழைந்தாள்.
“என்ன நானா சுபஹிலே அவசரமா இந்தப் பக்கம் வந்திருக்கீங்க?"
"தங்கச்சி. நீ சென்ன விசயம் பத்தி விசாரிச்சு பாத்தேன். பக்கத்தூரில ஒரு பொடியனப்பத்தி தெரிஞ்ச ஒருத்தர் சென்னாரு நீ சரின்னு சென்னா இப்போ அந்த ஊர்பக்கம் போறதால பேசிட்டு வரத்தான் உங்ககிட்ட ஒரு வார்த்த கேட்டுவிட்டுப் போக வந்தன்."
“எங்கிட்ட எனதியன் கேக்கிறதுக்கு. எனக்கு இவள கர சேக்கும் வர நிம்மதியில்ல. அவள் இன்னும் படிச்சனும்னு செல்றா"
"இங்க பாரு தங்கச்சி. அவள் படிச்சு கிளிச்சது போதும். பொம்புள புள்ளகள் ஆக்கவும் தைக்கவும் பழகிக்கொண்டா போதும். இதுக்கு மேல படிச்சு என்ன செய்ய?
"அததான் நானா நானும் செல்றன். அவள்ட வாப்பா மவுத்தான பொறவு நானும் 9ம் ஆண்டிலே ஸ்கூல் போறத நிப்பாட்டி கல்யாணம் பண்ண தானே பார்த்தேன். ஒங்களுக்கே தெரியும் தானே. அவள் புடிவாதம் புடிச்சதால ஓஎல் வர படிச்ச வெச்சன். இனி படிச்சது போதும். அவசரமா தாருக்கு சரி கட்டிக்கொடுத்தா ஏன்ட கடமயும் முடியும்.”

Page 9
"இந்த பொடியன் ஒரு ஹாஜியார் கிட்ட வேல செய்றானாம். நல்ல உழைப்பாளியாம். நான் இன்னைக்கே பேசுறன்.”
"ஓ நானா! சும்மா சுனக்க தேவயில்ல. அவசரமா செஞ்சு முடிச்சா எனக்கும்
நிம்மதி."
மாமாவும் உம்மாவும் பேசிக்கொண்டிருந்த அத்தனை விடயத்தையும் டி கோப்பையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஹாஜராவுக்கு மனசே குழம்பியது. நெஞ்சு வெடிக்கப் போவது போல் இருந்தது. இருந்தும் மனசுக்குள் ஒரு முடிவு எடுத்தவளாய் டீ கோப்பையை மாமாவிடம் நீட்டியவள்,
"மாமா!! எனக்கு இப்போ கலியாணம் பேசவேணாம். நான் ஏஎல் படிச்சனும்." என கடு கடுப்புடன் ஒரே வார்த்தையில் தன் எதிர்ப்பை முன்வைத்தாள்.
"இங்க பாரு மகள். இனி படிச்சது போதும். நீ அங்க இங்க படிச்ச போயி சும்மா அந்த இந்த கதகள் வரும். சும்மா உம்மாவுக்கும் குடும்பத்துக்கும் தானே கெட்டபேரு? பொம்புள புள்ளன்னா அதயு ஒழுக்கமா ஊட்டோட இருந்தா போதும்!" மாமா ஹாஜராவைப் பார்த்துச் சொன்னார்.
“என்ன மாமா. சும்மா வாய்க்கு வந்த மாதிரி பேசுறீங்க? அப்போ ஒங்கட மகன் கம்பஸ் போறார் இல்லயா? அவர் தாரோடயும் சுத்துறாரா?” ஹாஜரா பேசி முடிப்பதற்குள்,
"வயசுக்கு வந்தவங்க முன்னால இப்புடியா பேசுற? மூடு வாய!!" என பேகம் தன் மகளின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். வலி தாங்க முடியமால் கன்னத்தை பிடித்த படி, "ஆய். உம்மோ!!" என்று கத்தினாள். அதே நேரம், “அவள் கேட்டதில என்ன தப்பு இருக்கு?” என்ற படி நாசிக் மாமாவின் மகன் லாபிர் அவ்விடம் வந்தான்.
"லாபிர் நீ இங்க எதுக்கு.?
"நீங்க எதுக்கு வந்தோ அத நிப்பாட்டத்தான் நான் வந்தன். இவ்வளவு நேரம் இங்க பேசினது எல்லாத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தன். வாப்பா! நீங்க எனக்கு டொக்டர் பொண்ணுதான் தேடுறீங்க. ஏன் சாதாரண பொம்புலய எனக்கு முடிக்க ஏலாதா?”
“மகேன் வாப்பாகிட்ட என்ன கேக்குறீங்க. நீங்க டொக்டருக்கு படிச்சிருக்கீங்க. உங்க அந்தஸ்திற்கு ஏத்த ஜோடிய தானே தேடணும்.” என்றார் பேகம்.
‘மாமி! அப்போ வாப்பா தேடுறது ஒரு படிச்ச பொண்ணு. அப்போ ஏன் ஹாஜராவ படிச்சவெக்க மாட்டீங்க. ஏன் தான் இப்படி எல்லாரும் பொம்புள புள்ள அடுப்படிக்கு மட்டும் தான்னு மூடத்தனமா இருக்கீங்க! ஆனா படிச்ச மகனுக்கு படிச்ச பொண்தான் தேடுவீங்க?"
"லாபிர். நீ செல்றது சரி. ஆனா அது எங்க குடும்பத்துக்கு சரி வராது.
கலை இலக்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 

நாங்க மார்க்கப் பற்றோட ஒழுக்கமா வாழனும். கம்பஸ் கிம்பஸ் போய் சும்ம லவ்வு கிவ்வுனு நாற வரும்”
“என்ன வாப்பா நீங்க செல்றீங்க? நீங்க எனக்கு தேடுற டொக்டர் பொண்ணும் ஒரு கம்பஸ்ல படிச்சுத்தானே இருப்பா. அப்போ நீங்க செல்ற மாதிரி அவளும் லவ் பண்ணி சுத்தி திரிஞ்சி இருப்பாளோ? அப்படிப்பட்ட பொண்ணயா எனக்கு கட்டி தரப்போறிங்க?"
"அது வந்து. எல்லாரும் அப்பிடி இல்ல தானே.”
"ஆ. அதத்தான் நானும் செல்றன். ஒன்னு ரெண்டு பேரு செய்ற தவறுக்கு எல்லாரும் குத்தம் இல்ல தானே? இஸ்லாம் பொம்புளகளுக்கு அவங்கட பாதுகாப்புக்கும் சமுதாய சீராக்கத்துக்கும் சில நல்ல கட்டுக்கோப்புகள செல்லியிருக்கு. அதே நேரம் பூரண சுதந்திரத்தயும் கொடுத்துத்தான் இருக்குது. அந்த சுதந்திரத்துக்கு பாதகம் செய்யாம, மார்க்கப் பற்றோட நல்ல படிச்ச பெண் சமுதாயத்த நாங்களும் உருவாக்கணும். படிச்சு ஜொப் செய்யணும் என்டு கட்டாயம் இல்ல. எல்லா துறைலயும் படிக்கணும். அப்போ நல்ல குடும்பம்-நல்ல சமூகம்-நல்ல நாடு உருவாகும். பொம்புள ஆக்கத்தெரிந்தால் மட்டும் போதும் என்ட கொள்கை மாறி, ஆக்க மட்டுமில்ல சகல துறையிலயும் பங்காற்றக் கூடியவளாக நல்ல குடும்பத்தலைவியா வரணும். ஹாஜாராவுக்கு இப்பதான் சின்ன வயசு, முதல்ல அவளுக்கு ஏ.எல் செய்ய விடுங்க. அப்புறம் கலியாணம் செஞ்சு கொடுக்கலாம்.” என சொல்ல வேண்டிய அத்தனையையும் நிதானமாகவும் தெளிவாகவும் லாபிர், வாப்பாவிடம் மாமியிடமும் எடுத்துச் சொன்னான். நாசிக் மாமாவும் பேகமும் லாபிரின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்து தலைகுனிந்து மெளனமாய் நின்றனர்.
“மச்சான். அல்ஹம்துலில்லாஹற். ஏன்ட உரிமைக்காக குரல் கொடுத்து நியாயத்த புரிய வெச்சிட்டீங்க. ஜஸாகல்லாஹ் ஹைர்" என்று லாபிருக்கு நன்றியைத் தெரிவித்த ஹாஜரா,
"சில பொம்புளகள் எங்களுக்கு கெடச்ச சுதந்திரத்த, கட்டுக்கோப்ப மீறி நடந்து குடும்பத்துக்கும் சமூகத்தும் கெட்டபேரு வாங்கித்தாரவங்களும் இருக்கத்தான் செய்றாங்க, இன்சா அல்லாஹற் நான் இஸ்லாம் சொன்ன வரம்புக்குள்ள நல்லா படிச்சு சமூகத்துக்கு நல்லவளா இருப்பேன். இன்ஷா அல்லாஹற். எனக்கு துஆ செய்ங்க!" என உம்மாவையும் நாசிக் மாமவையும் பார்த்து, தன் கண்களிலிருந்து வடிந்து கொண்டிருந்த கண்ணிரைத் துடைத்தபடி சொன்னாள்.
"சந்தோசமா இரு. எல்லாம் ஹைரா நடக்கும்!” என நாசிக் மாமா தன் சம்மதத்தை சொல்ல, ஹாஜராவின் உம்மாவும் புன்முறுவளுடன் மகளின் தலையை வருடினார்.
தன் உரிமைக்காக குரல் கொடுத்த மச்சான் லாபிருக்கு டி தயார்செய்து வருவதற்காக ஹாஜரா சந்தோசத்துடன் அடுக்களைக்குள் நுழைந்தாள்!!!
gay இலக்கி Japa சஞ்சிகை Yvwv

Page 10
மூக்கின் நுனியை ஈரமாக்கும் இரண்டாயிரம் ரூபாவுடன்
அமைதியான பனி இரவு. ஊரவிட்டு வந்தேன். தூரத்தில் பட்டும் படாமலும் இன்று ஊர்சேரப் போகிறேன் கேட்கும் பாட்டொலி! பல லட்சங்களுடன்!
எனினும் இல்லை 'இனிமைகள்! இதயத்துள் ஏதோ கலப்பது
போல் உணர்வு. தொலைந்த காலங்கள் விரல்களிடையே ஏதோ இளமைக் காலங்கள். பிடிபடுவதாய் ஸ்பரிசம்! இப்போது முடி நரைத்து
t முப்பது ஆண்டுகளாகிறது!!! ஏதோ சிந்தனை - அது என்ன என்று புரியவில்லை? தொலைந்த நாட்களின் - முருகேசு பகிரதன் நினைவுகள் மட்டும் இன்னும்.
புத்தர் இயேசு போன்றோர் ஒரு தடவையே வந்தனர், ஹிட்லரானவர் வந்துகொண்டே இருக்கிறார்
கடவுளின் உண்மையான பக்தனுக்கு அருள் கிடைக்கும் இடையில் பூசகருக்கு வேலை என்ன
பேரழகியை மனைவியாய் அடைந்தவன், அயலானை பேரளவில் சந்தேகப்படுவான்
ஒருமகனை இழந்து தவித்தேன் முழுப்பிள்ளைகளையும் பறிகொடுத்த தாயைக் காணும் வரை
நம்மை விட துயரப்படுவார் நமக்குப் பக்கத்தில் இருந்து கொண்டே தான் இருப்பார்
கட்டழகியால் கணவன் படும் அவஸ்தை தெரிந்தாலும்
அடைய அவதிப்படுகிறார் அவளை - சூசை எட்வேர்ட்
 
 
 

தம்பு சிவசுப்பிரமணியம்
வங்கம் தந்த பெருமகனார், உலகம் போற்றும் ஒப்பற்ற இலக்கிய மேதை ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்ததின விழாவை அனைத்துலக மக்களும் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், இவர் பற்றிய சிந்தனைகளை பூங்காவனம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.
இப் பரந்துபட்ட உலகில் ஏதோ ஒரு துறையில் பிரகாசித்தவர்கள் வரலாற்றில் என்றும் மதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இலக்கியத்துக்காக நோபல் பரிசைப்பெற்ற கவிமேதை ரவீந்திரநாத் தாகூர் இந்திய மக்களின் மதிப்புக்குரிய புருஷராக பெரிதும் போற்றப்படுவதுடன் உலகெங்கும் வாழும் இலக்கிய ஆர்வலர்களின் மனங்களிலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார். இந்திய நாட்டின் தேசியகீதத்தை வங்க மொழியில் ஆக்கிக்கொடுத்தவர் என்ற வகையிலும் அவரது நினைவுகள் நிரந்தரமாக நிலைத்து விட்டன.
தேவேந்திரநாத் - சாரதாமணி தம்பதியருக்கு பதினான்காவது குழந்தையாக 1861.05.07ல் ரவீந்திரநாத் தாகூர் பிறந்தார். பெரிய குடும்பத்தில் கடைசிக் குழந்தையும் அவரே. அவருடைய மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாக கல்வி, கலை, இலக்கியம், ஓவியம், ஆன்மீகம் ஆகிய துறைகளில் சிறந்தவர்களாய் இருந்து வந்துள்ளார்கள். தாகூரின் மூத்த சகோதரர் ஜித்தேந்திரநாத் தாகூர், கணித மேதையாகவும், தத்துவ ஞானியாகவும், கவிஞராகவும இருந்துள்ளார். தாகூரின் இண்டாவது சகோதரர் இந்தியாவிலேயே முதல்முறையாக நிர்வாகசேவை தேர்வில் தேறி கலக்டராகப் பணியாற்றினார். பகவத்கீதை, மேகதூதம் ஆகியவற்றை வங்காள மொழியில் மொழிபெயர்த்துமுள்ளார். வங்காளத்தின் புகழ்பெற்ற நாடகங்களை எழுதியது மட்டுமல்லாமல் சிறந்த இசைமேதையாகவும் இருந்த ஜோதிந்திரநாத் என்பவரும் தாகூரின் சகோதரரே. இவரது சகோதரி சொர்ணகுமாரி இந்தியாவிலேயே நாவல் எழுதிய முதல் பெண்மணி. அவர் பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
இத்தகைய கலை இலக்கிய பாரம்பரியத்திலிருந்து வந்தபோதிலும் பள்ளிக்கூடம் செல்வதிலோ, பாடங்களைப் படிப்பதிலோ தாகூர் அக்கறை காட்டாதபடியால் ஆசிரியர்கள் அவரை குறைகூறிக்கொண்டே இருந்தார்கள். ஆசிரியர்கள் மீதான வெறுப்பால் அவரது கல்வியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அனைத்து மாணவர்களிலும் நான் மட்டுமே முட்டாளாக இருக்கிறேன். அது எனக்கே தெரிந்த பிறகும் என்னிடத்தில் அதற்கான வெட்கமோ, வருத்தமோ, வேதனையோ, மாறுதலோ, ஆர்வமோ துளியும உண்டாவில்லை' என்று தாகூர் படிக்கும் காலத்தில் கூறி வந்ததாக அறிய முடிகிறது.

Page 11
மிகப்பெரிய சீமான் வீட்டுப்பிள்ளையாக தாகூர் இருந்தபோதிலும் எளிய உடைகளையே அவர் அணிந்துகொள்ள நேர்ந்தது. தாகூர் தன் தாயாரால் வளர்க்கப்பட்டதை விட வேலைக்காரர்களால்தான் அதிகம் வளர்க்கப்பட்டார். வேலைக்காரர்களின் அறையில் உறங்குவதும் கூட சகஜமாயிற்று. இதனால் ஏழைகளைப் போலவே வளர்க்கப்பட்டு வந்தார். மின்சாரம் என்றால் என்னவென்றே உணராத காலம். மாலை வேளைகளில் வீட்டின் ஒவ்வொரு அறையிலும் பணியாளர்கள் விளக்குகளை ஏற்றுவார்கள். விளக்கேற்றிய பின் குழந்தைகள் விளையாடக்கூடாது என்பது தாகூர் வீட்டில் நிலவிய சட்டம். அந்த நேரத்தில் வேலைக்காரர்கள் கதை சொல்லத் தொடங்குவார்கள். இராமாயணம், மகா பாரதம், கர்ண பரம்பரைக் கதைகள் எல்லாம் அறைகளில் எதிரொலிக்கும். பாடம் கேட்பதைவிட கதை கேட்பதில் தாகூருக்கு பிரியம் அதிகமாகவே இருந்தது. அக்கதைகளைக் கேட்டுக்கேட்டு தாகூர் புதிய புதிய கற்பனைகளை வளர்த்துக்கொண்டார்.
தாகூரின் இளம் பராயக் கவனமெல்லாம் இயற்கையை அணுவணுவாக ரசிப்பதிலேயே இருந்தது. அன்றைய சூழலில் அவரது வீட்டுக்கு வெளியே ஒரு குளம் இருந்தது. கால்வாய்களின் வழியாக நீர் குளத்தை வந்தடையும். தாகூருக்கு அந்தக்குளமும் அதைச்சுற்றியிருக்கும் மரங்களும் எப்போதும் வேடிக்கைப் பொருளாக இருந்தன. குளத்தில் குளிக்கும் மனிதர்களின் கும்மாளங்களையும் வாத்து, அன்னப்பட்சி ஆகியன குளத்தில் அழகாக நீந்தும் காட்சிகளையும் பார்த்து ரசிப்பார்.
மிக குறுகிய காலப்பகுதிக்குள் மிக அதிகமான பள்ளிகளில் படித்த பெருமை தாகூருக்கே உரியது. தன் மனம் போனபோக்கில் அவர் பள்ளிகளை தேர்ந்தெடுத்துக்கொண்டே போனார். படிப்பு விடுபட்டுவிடக்கூடாது. எப்படியாவது தாகூர் படித்தால் போதும் என்று அவரது குடும்பத்தவர்களும் நினைத்தார்கள். தாகூர் குழந்தை அல்ல. அவருக்கும் சில பொறுப்புக்கள் உள்ளன என்று அறிவுறுத்தும் விதமாக அவருக்கு பிரம்மோபதேசம் நடைபெற்றது. தந்தையாரே தன் மகனுக்கு பூனூல் அணிவிக்கும் சடங்கை நடத்தினார். அத்துடன் புதிய வேத பாடங்களை சொல்லியும் கொடுத்தார். அதனால் தாகூர், காயத்திரி மந்திரம் சொல்வதில் மிகுந்த ஈடுபாடும் அக்கறையும் காட்டினார். தந்தையுடன் புண்ணிய தளங்களுக்குச் சென்று கும்பிடும் சாக்கில் படிப்புக்கு கும்பிடுபோட்டார் தாகூர்.
தாகூர் எழுத ஆரம்பித்த காலத்தில் அவரின் எழுத்துக்களுக்கு முதல் ரசிகையாக இருந்து உற்சாகப்படுத்தியவர் அவரது அண்ணனின் மனைவி காத்பரி தேவி ஆவார். அவர் குடும்பத்தில் எல்லோருமே சிறந்த நூல்களை வாசிப்பதில் போட்டி போட்டார்கள். அப்பொழுது தாகூர் அருகிலிருந்து அவர்கள் படிப்பதை அக்கறையுடன் கேட்பார். தாகூரின் சகோதரர் காளிதாசர் எழுதிய மேகதுTதச் செய்யுள்களை பாடியபடி மழையை ரசித்துக்கொண்டிருந்தார்.
தாகூரின் காதுகளில் அந்தச் செய்யுளின் ஓசை தேனாகப் பாய்ந்தன. அவை அவரது எதிர்காலக் கவிதையாக்க முயற்சிக்கும் பெரும் துணை நின்றன.
சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பதன் மூலமே தலைசிறந்த புதிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் உருவாக முடியும். தாகூர், சேக்ஷ்பியரின்
| EN” 0க்கிய ga ဂြိါတွား
 
 

“ஹேம்லெட்’ நாடக வசனங்களைத் தொடர்ந்து வாசித்து வந்தார். காளிதாசரின் படைப்புக்கள் அவரது கைகளில் தவழ்ந்து கொண்டிருந்தன. அதுவே ஆரம்ப காலத்தில் அவரது கவிதைகளுக்கான எரிபொருளாக இருந்தது.
1874 இல் தாகூரின் அபிலாஷை என்ற கவிதை முதன் முதலில் பத்திரிகை ஒன்றில் வெளிவந்தது. 13வது வயதில் அவரது முதல் கவிதை நூலாகிய “கபிகாஹினி” வெளிவந்தது. தம்பியின் கவிதையாற்றலைக் கண்டு வியந்த அண்ணன் ஜிதேந்திரநாத் அவருக்குக் களம் அமைத்துக்கொடுத்து கவிதையாற்றலை வெளிப்படுத்தும் நோக்கில் “பாரதி” என்ற இலக்கியப் பத்திரிகையை ஆரம்பித்தார். தாகூருக்கு அதில் எழுத நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவரது எழுத்துப்பட்டறை அதிலிருந்து ஆரம்பமானது எனலாம்.
சில வருடங்கள் கழித்து தாகூரின் "சந்தா சங்கீத்" வெளியானது. வங்கத்தின் இலக்கிய உலக பிதாமகனாகப் போற்றப்பட்ட பக்கீம் சந்திர சட்டர்ஜி அவர்கள் தாகூரின் மேதமையை மனம்விட்டுப் பாராட்டினார்.
1901 ஆம் ஆண்டு தமது 40 ஆவது வயதில் தாகூர் தம்மால் எழுதப்பட்ட அத்தனை கவிதைகளையும் ஒரே நூலாகத் தொகுத்தார். அதில் 21 படைப்புக்கள் இடம்பெற்றன. அத்துடன் "சொனார் தோரி' என்ற புதிய புத்தகமும் இருந்தது. அதுவே தாகூர் எழுதியதில் சிறந்த நூலாகப் பாராட்டப்பட்டது. தாகூர் தாம் பெங்காளியில் எழுதிய இறைவணக்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதுவே "கீதாஞ்சலி’ என பெயர்பெற்றது. “கீதாஞ்சலி கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது.
1913ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும் என்று நோபல் பரிசுக்குழு முடிவு செய்திருந்தது. அப்பரிசு கீதாஞ்சலியின் சிறப்புக்காக ரவீந்திரநாத் தாகூருக்குக் கிடைத்தது. இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமை தாகூரைச் சென்றடைந்தது.
தாகூர் தமது தந்தையார் அமைத்த 'சாந்தி நிகேதன்' எனும் ப்ரார்த்தன்ைக் கூடத்தில் தமக்கு விருப்பமான குருகுலக் கல்வி முறையை தமது பிள்ளைகளுக்காக ஆரம்பித்தார். தாகூர் 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெறும் ஐந்து மாணவர்களுடன் தொடங்கிய பள்ளியில் ஒருவர் அவரது சொந்த மகனாவார்.
ஆங்கில வழிக் கல்வி, இந்தியப் பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு எதிரானது என்றார். தாய் மொழியான வங்க மொழியில்தான் தமது மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க வேண்டும் என்று பாடுபட்டார்.
ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட பள்ளி இன்று 'பத - பாவனா’ என்று அழைக்கப்படுகின்றது. 9 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளி தனது நூற்றாண்டைக் கொண்டாடியது. இன்று மிகப்பெரிய பள்ளியாக வளர்ந்து நிற்கும் இது, மேற்கு வங்க மாநிலம் முழுவதிலுமிருந்தும் மாணவர்களைக்
۱) ۹۱م.)؛ ",۱۰۲ زن ۲۰۱۰ لان . it, "Alt th ,۱۹۱ و ۱۲ و دu ,(n .

Page 12
கொண்டுள்ளதுமான பிரபல கல்வி நிறுவனமாக விளங்குகின்றது. வாழ்வில் பல்வேறு பிரிவுகளிலிருந்தும், நாட்டின் மற்ற பிற மாநிலங்களிலிருந்தும் கூட மாணவர்கள் அவரது பள்ளியில் சேரத் தொடங்கினர். தங்கள் பிள்ளைகளைக் கட்டுப்படுத்த இயலாத பெற்றோருங்கூட அவர்களை சாந்தி நிகேதனுக்கு அனுப்பி வைத்தனர். நகரங்களிலிருந்து வெகு தொலைவில் சாந்தி நிகேதன் அமைந்திருந்தமையால் அங்கு பயிலும் மாணவர்கள் இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்தனர்.
பள்ளியின் வழக்கமான பாட திட்டத்துடன் இசை, நடனம், ஓவியம், நாட்டுப்புறக்கலைகள், கை வேலைப்பாடுகள் மற்றும் நாடக - நடிப்பு போன்றவை பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டன. பிற்பகலில் அவர்கள் பள்ளியில் விளையாடி மகிழ்ந்தனர். ஒவ்வொரு செவ்வாயன்றும் ஆச்சிரமத்தில் இலக்கிய கூட்டங்கள் நடைபெறும் மாணவர்கள் அங்கு தங்கள் கதைகள் மற்றும் கவிதைகளைப் படித்துக்காட்டுவர். பாடி ஆடி மகிழ்வதுடன் சிறு நாடகங்களையும் அங்கேற்றுவர்.
உங்களை வெளிப்படுத்திக் கொள்ளுங்கள்' என்ற கவிஞரின் கூற்றுக்கமைவாகவும், கைவினைக் கலை வகுப்புக்களிலும், தோட்டக்கலை வகுப்புக் களிலும் மாணவர்களுக்கு உடல் உழைப்பும் கற்றுக் கொடுக்கப்பட்டது. அங்க அவயவங்களை உபயோகிப்பதன் மூலம் மந்தமான மாணவர்கள் கூட பள்ளிப்படிப்புகளில் சிறந்து விளங்க முடியும் என்று தாகூர் நம்பினார்.
சுற்றுச் சூழலில் இருந்தோ அல்லது தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களிடமிருந்தோதான் மாணவர்கள் அறிவை உள்வாங்கிக் கொள்கிறார்கள். குழந்தைகளிடம் உறங்கிக்கொண்டிருக்கும் கர்மா, அறிவு, பிரேமை ஆகிய குணங்களை வெளிக்கொண்டு வர ஒரு உகந்த சூழ்நிலையை பள்ளியில் உருவாக்குவது அவசியம் என்று கருதி சாந்தி நிகேதனின் குழந்தைகளின் கல்விக்கென மிக பொருத்தமான சூழலை உருவாக்குவதில் மிகுந்த அக்கறை காட்டினார். ரவீந்திரநாத் தாகூரின் பெயரை "சாந்தி நிகேதன் இன்றும் நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
தாகூரின் இலக்கியங்களும் கட்டுரைகளும், கலைப்படைப்புகளும், நூல்களிலும் வெளிப்படுத்துகின்ற மனிதத்துவ பொதுமைவாதம் பல்வேறு அடித்தளங்களைக் கொண்டிருந்தன. குறிப்பாக உப நிடத மெய்யியல், சூபித்துவ மெய்யியல், பெளத்த மெய்யியல் போன்ற பல்வேறுபட்ட பொதுமைத்துவம் சார்ந்த மெய்யியல் மரபுகள் அவரது கவிதை உள்ளிட்ட அனைத்து ஆக்க இலக்கியங்களுக்கும் அடிப்படையாக அமைந்தன. இந்திய தத்துவ தரிசனங்களை ஆழ் பார்வையை அடிப்படையாக் கொண்டு விளங்குகின்றமையானது அவரது படைப்புகளுக்கு அடிப்படையாக இருக்கின்ற தளம் ஆழ்பார்வை என்பதாகும்.
இந்திய மெய்யியலின் சுய வெளிப்பாடு எல்லா உயிரினங்களின் ஒருமைப்பாட்டையும் மையப்படுத்துவதாகும். இவ்வாறான தனித்துவமான இந்திய தன்மையைத் தாகூரின் படைப்புகள் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக அவரது ‘ஆக்க ஒருமை' என்ற நூலில் தமக்குள்ளே இருக்கின்ற ஒருமை பற்றிய உணர்வின் மகிழ்வு வெளிப்பாட்டை உணர்த்தியுள்ளார். அவரது
 
 
 
 
 
 

பரந்த மனப்பாங்கும், ஆழமான பொதுமைசார் அறவியலும் அவரது கீதாஞ்சலியில் பரக்கக் காணலாம்.
எங்கே மனம் அச்சமற்றும், சிரம் பெருமிதத்தால் உயர்ந்தும் இருக்கிறதோ எங்கே அறிவு சுயமாக செயற்படுகின்றதோ எங்கே உலகம் உறவின் குறுகிற எல்லைகளினால் துண்டாடப்படாமல் இருக்கிறதோ எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழத்திலிருந்து வெளிப்படுகின்றதோ எங்கே சோர்வற்ற முயற்சிகள் முழுமையைத் தேடி விரைகின்றதோ எங்கே நியாயத்தின் தெளிந்த நீரோடை வழிமாறி அநீதியின் பாலை நிலத்தினுாடாகப் பாயாமல் இருக்கின்றதோ எங்கே மனம் எப்போதும் விசாலமுறும் எண்ணங்களினாலும், செயல்களினாலும் உன்னால் வழிநடத்திச் செல்லப்படுகின்றதோ அங்கே அந்த விடுதலையின் சுவர்க்கத்தில் என் பிதாவே, என் தாய்நாடு விழிப்புறட்டும்!
(கீதாஞ்சலி - 35)
உண்மைத் தளத்தின் வெளிப்பாடாக மனத்தின் எண்ணங்களை வெளிப்படுத்துகின்ற அற்புதமான கவித்துவப் படைப்பர்க அமைந்திருக்கின்றது. வங்கம் தந்த நாவல் இலக்கிய இமயம் சரத் சந்திரர், தாகூரின் சமகாலத்தவர். 15 வயது இளையவர். தாகூர் அவரின் இலக்கிய படைப்புகளை மிகவும் நேசித்தவர்.
'இன்பத்திலும், துன்பத்திலும், சந்திப்பிலும், பிரிவிலும், சுழன்றுவரும் இயற்கை விசித்திரத்தை அவர் வங்காளிகளுக்கு நன்றாக எடுத்துக்காட்டினார். வங்க மக்களின் நிலைத்த மகிழ்ச்சியே இதற்கு எடுத்துக்காட்டு. வேறு எந்த எழுத்தாளரும் இந்தத் திருப்தியை அளிக்கவில்லை. சரத் சந்திரரைப் போல் எவருமே அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொள்ளவில்லை' என்று தாகூர் புகழாரம் சூட்டியுள்ளார். என்னே அவருடைய பெருந்தன்மை! மற்றவர்களின் ஆற்றலை மதித்துப் போற்றும் பண்புடையவராக தாகூர் இருந்துள்ளார்.
வங்கக் கவி ரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை கெளரவித்து இலங்கைத் தபால் திணைக்களம் ஞாபகர்த்த முத்திரையை வெளியிட்டுள்ளது.
உலகம் போற்றிய உத்தமக் கவிஞர் 1861ம் ஆண்டு பிறந்து எண்பது ஆண்டுகள் வாழ்ந்து அளப்பரிய சேவைகள் பல ஆற்றி 1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி இயற்கையெய்தினார். அவரை, 150வது ஜனன தின விழாக் கொண்டாடும் வேளையில் நாமும் போற்றி மகிழ்வோம்!!!

Page 13
தன்னம்பிக்கையற்ற காற்றை சுவாசிக்கும் உனக்கு தரை விருட்சங்களெல்லாம் அந்தரத்தில் சலங்கை கட்டியாடுவதாக மாய தோற்றங்கள் மனதை மருட்டும்! வேதாளங்களின் நடமாட்டம் வீதியெங்கும். பதுங்கியிருக்கும் உண்மைகள் வெளியில் வரப் பயப்பட்டு கண்ணிர் சிந்தும்!
வானமாக விரிந்திருந்த மனதை ஊனமாக்கி
உருக்குலையச் செய்து
சலனங்களையும், சஞ்சலங்களையும்
தலைமேல் சுமத்திடும்!
மானிட தர்மங்கள் தோற்றுப்போன கதையாக பகைமை, வஞ்சகம், சினம் அகங்களை ஆட்சி செய்து முகங்களில் பாசி படரச்செய்திடும். விரக்தி மனத்தின் விம்பங்கள் விலங்கு மனத்தின் விதியை உறுதியாக்கிடும்!
ஒளிகொடுக்கும் சூரியனிடம் களங்கம் தென்படும் தூது செல்லும் புறாக்களிடம்
துப்பாக்கி ரவை பதுங்கியருக்கும்.
துளைத்துக்கொண்டிருக்கும் வண்டாக சந்தேக கோடுகளின் வீரியம் சந்தோஷ விழிகளுக்குள் துன்பவரி பாடல்களை சொந்தமாக்கிடும்!!!
பதுளை - பாஹிரா
கணிததிகற்
Luffy(3D. நீ எங்கிருக்கிறாய்? அலுத்துப்போனேன் என்னைத் தேடித்தேடி!
பல உள்ளங்களில் f
இருப்பதாய் நம்பி பல முறைகள் ஏமாந்து போனேன் நான் திருந்தவில்லை!
வார்த்தைகளில் மட்டும் உன்னைக் காண்கிறேன் மிகையாக.
ஆனால். அவை வெறும் வார்த்தைகளாக மட்டும் தான்!
நான் தேடுவது நிஜத்தில் உயிராக. உணர்வாக. உறவாக!!!
ஏ.சீ. கரீனா முஸ்தபா dalajlaflUL
கலை இலக்கிய
 
 
 
 

சிறுகதை - மல்லவப்பிட்டி சுமைரா அன்வர்
மேகலாவின் அழுகை இன்னும் ஓயவில்லை. வீடே மயானமானது. எல்லோர் மனதிலும் வெறுமை. வார்த்தையால் விபரிக்க இயலாத அசூசை. யாரை நோவதென்றே புரியவில்லை. பொழுது நத்தை வேகத்தில் நகர எதிலுமே பிடிப்பில்லாமல் வாழ்க்கை அதன்போக்கில் செல்ல விடிவு பிற்காதா என்ற ஏக்கத்தோடு ஒவ்வொரு நாளும் கழிகிறது.
அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்ச்சிகளால் என் கணவரின் இதயம் பலமிழந்து, இதய நோயாளியாகிப் போனார் அவர். மகள் மேகலாவைப் பற்றி பேசவே தேவையில்லை. யெளவனப்பூரிப்பு எழில் கோலமிட வாக்கும் வசீகரமும் அதற்கேயுரிய பணி புகளும் நிரம் பப் பெற்று தேவதையாக உலவிக்கொண்டிருந்தவள், நிலநடுக்கங்களால் குழைந்துபோன ஜப்பானாய் நொந்து நொறுங்கிப் போனாள்.
அவள் பட்ட அவமானமென்ன லேசானதா? குற்றமே செய்யாமல் அல்லவா அவளுக்கு இந்தத் தண்டனை. என் இதயம் எகிறிக் குதித்தது. கண்கள் சுனாமியைத் தோற்றுவித்தது. இவ்வளவு நடந்தபின்னும் பிரக்ஞையோடு இருப்பவள் நான் மட்டுமே. நானும் அழுது தீர்த்தேன். என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். மேகலாவைப் பார்த்தேன். சுருட்டிவைத்த பஞ்சுப் பொதியாய் கட்டிலில் கிடந்தாள். பெற்ற மனம் எரிந்தது. அவளிடம் ஓடினேன். அவள் தலையை என் மடிமீது வைத்து வருடினேன். கண்களைத் திறந்து பார்த்தவாறு.
'ஹஎனம்ம எனக்கு மட்டும் இந்தத் தண்டனை? நான் ஒழுக்கம் கெட்டவளா? சொல்லம்மா.” கேட்டுவிட்டு ஒரு குழந்தையாக தேம்பியழுதாள்.
பதில்கூறத் தெரியாமல் நான் தவித்தேன். என் மனம் இரண்டு தசாப்தங்கள் பின்னோக்கிப்போனது.
XXXXXXXXXX
அன்று மேகலாவுக்கு வயது ஐந்து, வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுமார் நாற்பது வயதுடைய எங்கள் அயலவர் ஒருவர் மேகலாவுக்கு இனிப்பு கொடுத்து மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்று. குழந்தை வீறிடும் சத்தம் கேட்க பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்க்கும் போது அங்கே நடந்த காட்சியைக் கண்டு அதிர்ந்தவர்களால் செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே அமர்களமானது. என் கணவர் பொலிசில் §: அந்த நபர் கைது செய்யப்பட்டார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட

Page 14
மேகலாவுக்கு "எதுவும் நடக்கவில்லை' என்பதை பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. அப்பாடா என்று தலடைந்தோம். பயத்தாலேயே குழந்தை வீறிட்டுள்ளது. அசம் பாவிதம்’ நிகழாமல் தெயப் வாதனமாக பாதுகாக்கப்பட்டுள்ளாள் மேகலா. ஆனால் ஊர் வாயைத்தான் மூட முடியவில்லை. சிறிது காலம் மேகலாவே ஊரின் வாய்க்கு அவலானாள். பெண்பிள்ளை அவள் எதிர்காலம் பாதிக்கும் என்று நாம் பயந்தோம். பெருளாதார கஷடம் காரணமாக ஊரைவிட்டு வெளியில் போகவும் முடியவில்லை. வாழ்க்கைக்கு முகம்கொடுக்கத் தயாரானோம்.
மேகலாவின் சம்பவத்தை ஊர் மெதுமெதுவாக மறக்கத் தொடங்கியது. நாமும் அமைதியடைந்தோம். இருபது வருடங்கள் ஓடியேவிட்டன. மேகலா வளர்ந்து வாலிப வயதை அடைந்துவிட்டாள். அவளுக்கு 'அந்த சம்பவம்' தெரியாது. ஏன் நாமும் கூட மறந்தே போனோம். மேகலாவுக்கு வரன் பார்க்கத் தொடங்கினோம். அழகே உருவானவளும், நல்ல தொழிலில் இருப்பவளுமான மேகலாவை திருமணம் முடித்துக் கொடுப்பது சிரமமிருக்காது என்பது எங்களது கணிப்பாக இருந்தது. நல்ல வரன்களும் வந்தன. பேச்சுவார்த்தைகள் முடியும் தருவாயில் காரணம் சொல்லாமலேயே விலகிச் சென்றார்கள். இந்தப் புதிர் என்னவென்று தான் விளங்கவேயில்லை.
கடைசியாக மேகலாவைப் பார்க்க வந்தவன் திவாகர். ஜோடிப் பொருத்தம் உட்பட எல்லா பொருத்தமும் சிறப்பாக அமைந்தது. திருமண நாள் பற்றிய பதவறுத்தையும் முடிந்த நிலையில் மொட்டைக் கடித ரூபத்தில் வந்தது சாதனை.
மேகலாவின் ஐந்து வயது சம்பவம் யாருடையதோ கற்பனை வளத்துடன் அசிங்கமாக விஸ்வரூபமாக விபரிக்கப்பட்டிருந்தது. அக்கடிதத்துடன் "இதை தான் நம்பவில்லை என்றும், விசாரித்ததில் அப்படியொரு சம்பவம் நிகழ்ந்த உண்மை தெரியவந்தது என்றும், தான் நல்ல குடும்பத்ச்ை சேர்ந்தவர் என்பதால் இந்த சம்பந்தத்துக்கு உடன்பட முடியாதென்றும் தன்னை மன்னிக்குமாறும் வேணி டி மாப் பிள்ளைப் பையன் நேர்மையான கனவானாக ஒதுங்கிக்கொண்டான்.
இறந்தகாலம் பற்றி அறிந்துகொண்ட மேகலா துடித்தாள். அவமானத்தால் புழுங்கினாள். சமூகத்துக்கு முகம்கொடுக்க முடியாமல் வெட்கப்பட்டாள். தவித்தாள். குற்றுயிராகி நிலைகுலைந்து போனாள். பிய்த்தெறிந்த ரோஜா மாலையாய் மனதளவில் சிதைந்து போனாள். ஒரு குழந்தை. அதுவும் தவறு நடக்காதபோது யூகங்களும், கற்பனைகளும், கணிப்புகளும் பூகம்பமாகி இன்று வாழ்வையே சீரழித்துவிட்டது. செய்யாத குற்றத்துக்கு தண்டனை. ஆயுள்தண்டனையும் வழங்கிற்று. யாரை நோவதென்றே புரியவில்லை.
"நான் ஒழுக்கங்கெட்டவளா? சொல்லம்மா."
மேகலாவின் ஏக்கம் நிறைந்த வினா திரும்பத்திரும்ப என்னுள் எதிரொலித்தது. விடை தெரியாதவினா என் வயிற்றில் புளியைக் கரைத்தது. பயங்கரமான எதிர்காலத்துக்கு கம்கொடுக்கத் தயாராவதைத் தவிர வேறெதுவுமே எனக்குத் தோன்றவில்லை!!!
560að g6l6l0libatu Japa, a SfGODA,
 
 
 

உன்னைக் காதலித்த குற்றத்துக்காக நான் அடுப்பின் மேற்தட்டில் தொங்கிக் கருவாடாகிறேன். கண்களுக்கும் கன்னங்களுக்கும் படிமம் தேடி அலைகிற கவிஞனைப் போல!
உன் உறவுக்காகவும் நெருக்கத்துக்காகவும் ஓடித் திரிந்ததால் இப்போது உத்தரிக்கிறேன்!
உன்னை விட உங்கள் வீட்டுவாசலில் உள்ள தென்னை மரத்திற்குத்தெரியும் நான் குதிகாலில் நடந்த கதை
- நீலாபாலன்
இப்ப வருவாய். இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவாய் என்று வேலியின் இந்தப்பக்கம் இருந்து தோலிக்கருவாடாய் காய்ந்த அந்த நிமிஷங்களை இப்போது நினைத்தாலும் உள்நாக்கும் இனிக்கும்!
அது. அசுத்தப்படாத அனுபவங்கள்!
வாழ்வில் அனுபவம் கலக்க வேண்டும் அனுபவம் கலந்தால் மனிதம் பொன்னாகும் வாழ்க்கை புடம் போடப்படும்
ᏞᏝ60Itb நெருப்புக்குளிப்பது சுத்தம் பெறவே!!!
வாசகர் கவனத்திற்கு
சந்தாதாரராக இணைந்து கொள்ளுங்கள். அது பூங்காவனம் சஞ்சிகை தொடர்ந்து வெளிவருவதையும், கிடைப்பதையும் உறுதி செய்யும். சந்தாதாரராக இணைந்து கொள்பவர்கள் ஆகக் குறைந்தது 500/= வை சந்தாவாக செலுத்தவும். பக்கச்சார்பற்ற முறையில் எழுதப்பட்ட, தெளிவான கையெழுத்தில் அமைந்த, இதுவரை பிரசுரமாகாத (சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள் A4 தாளில் 03 பக்கங்களுக்குள்) ஆக்கங்களையே பூங்காவனம் எதிர்பார்க்கிறது. பூங்காவனம் இதழில் விளம்பரங்களைப் பிரசுரிக்க மற்றும் கொடுப்பனவுகள், சந்தா, விற்பனை முகவர்களின் தொடர்புகள் ஆகியவற்றுக்கு 077 5009 222 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்!
- ஆசிரியர் குழு -
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 15
ற்கட்டுற்றிைவுவிகள்
|நுணாவிலூர் கா. விசயரத்தினம்
ஆறறிவுடைய விலங்குகளும் பறவையும் ஒரு சில உள்ளன என்று தொல்காப்பியனார் சூத்திரமமைத்துக் காட்டியுள்ளார். அவையாவன கிளி, குரங்கு, யானை என்பனவாம்.
இந்தியத் தாவரவிஞ்ஞான மேதை யெகதீஸ் சந்திர போஸ் (legadish Chandra Bose, 30.11.1858-23.11.1937) 916)Ij66i 5T6nyiabel36g) 2 Luij, உணர்வு, அறிவு உள்ளதென்பதை நிரூபித்துக் காட்டிப் பரிசும் பாராட்டும் பெற்றுக்கொண்டார்.
ஆனால் இதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தொல்காப்பியனார் தாவரத்தின் உயிர், உணர்வு, அறிவு பற்றியும், மற்ற உயிரினங்களின் அறிவு, உணர்வு, உயிர் பற்றியும் விபரமாக எடுத்துக் கூறிச் சூத்திரங்கள் அமைத்தமையைக் காண்க.
சூரிய குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் பூமிக் கோளில்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. வாழவும் முடியும். மற்றைய எட்டுக் கோள்களில் உயிரினங்கள் வாழ முடியாது. பூமிக்கு இஃது ஒரு சிறப்பு. இதனால் பூமியானது ஓர் உயிர்ப் பூவுலகாய் மிளிர்கின்றது. பூமியில் உயிரினங்கள் இல்லை எனில் அஃது ஒரு வறண்ட வனாந்தரமே. உயிருள்ள ஒன்றுதான் பிறக்கவும், இறக்கவும் முடியும். உயிரில்லை எனின் பிறப்பும், இறப்பும் இல்லை. மனிதன் மட்டும்தான் பிறக்கின்றான், இறக்கின்றான் என்றில்லை. ஓரறிவுள்ள புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியவற்றிலிருந்து ஆறறிவுள்ள மனிதன்வரை பிறப்பதும், இறப்பதும் நியதி. உயிர் தனித்து வாழாது. உடலும் தனித்து வாழாது. உயிர் நிலைத்திருப்பின் அதற்கு ஓர் உடல் வேண்டும். உடலுக்கும் ஓர் உயிர் வேண்டும். உயிருக்குச் சாவில்லை. உடலுக்கு உயிர் பிரிந்ததும் சாவுண்டு.
புல், பூண்டு, செடி, கொடி, மரம் ஆகியனவுக்கு உயிர் இல்லை என்று கூறுவோர் பலர் இருந்தகாலமது. இவைகள் நடமாட்டமற்று ஒரேயிடத்தில் நிலைத்திருந்த காரணத்தால் இவைகளுக்கு உயிர் இல்லையென்ற முடிவுக்கு வந்தனர் போலும். பூமியானது உருண்டை இல்லையென்றும், அது தட்டைதான் என்று கூறுபவர்களும் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். விஞ்ஞான அறிவு எல்லா மக்கள் மனங்களையும் போய்ச் சேரவில்லை என்பது ஓர் உண்மைச் செய்தியாகும்.
இதன் பின்புதான் மக்களும் புல், பூண்டு, செடி, கொடி, மரம் போன்றவற்றுக்கும் உண்டென்ற நிலைப்பாட்டுக்கு வந்தனர் என்று கூறலாம். அதில் تالابه கீழ்க்காட்டிய சூத்திரத்தில் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நான்கறிவுயிர்,
 
 
 

ஐந்தறிவுயிர், ஆறறிவுயிர் ஆகிய ஆறு வகையான உயிரினங்களில் உலகத்து எல்லா உயிரினங்களையும் அடக்கிக் கூறப்பட்ட சிறப்பினையும் காண்கின்றோம்.
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. (பொருள். 571)
ஓரறிவு உயிராவது உடம்பினாலே அறிவது. ஈரறிவு உயிராவது உடம்பினாலும் வாயினாலும் அறிவது. மூவறிவு உயிராவது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் அறிவது. நாலறிவு உயிராவது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் அறிவது. ஐந்தறிவு உயிராவது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் அறிவது. ஆறறிவு உயிராவது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணினாலும் செவியினாலும் மனத்தினாலும் அறிவது. இவ்வகையால் உயிர்கள் ஆறு வகை ஆயின. மேலும் தொல்காப்பியனார் ஓரறிவிலிருந்து ஆறறிவுக்குரிய உயிரினங்களின் பெயர்ப் பட்டியலையும் தனித்தனியே தந்துள்ள சூத்திரச் சிறப்பினையும் காண்போம்.
1. ஓரறிவு உயிர்கள்
புல்லும் மரனும் ஓரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே. - (பொருள். 572)
2. ஈரறிவு உயிர்கள்
நந்தும் முரளும் ஈரறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - (பொருள். 573)
3. மூவறிவு உயிர்கள்
சிதலும் எறும்பும் மூவறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - (பொருள். 574)
4. நாலறிவு உயிர்கள்
நண்டும் தும்பியும் நான்கறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - (பொருள். 575)
5. ஐயறிவு உயிர்கள்
மாவும் புள்ளும் ஐயறி வினவே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - (பொருள். 576)
6. ஆறறிவு உயிர்கள்
மக்கள் தாமே ஆறறி வுயிரே பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - (பொருள். 577)

Page 16
புல், மரம், கொடி, தாமரை ஆகியவை ஓரறிவு உடையனவென்றும் நந்தும், முரளும், சங்கு, நத்தை, அலகு, நொள்ளை, சிப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன ஈரறிவு உடையனவென்றும் சிதலும், எறும்பும், அட்டை முதலியன மூவறிவினை உடையனவென்றும் நண்டு, தும்பி, ஞமிறு, சுரும்பு போன்றவை நான்கு அறிவினை உடையனவென்றும் நாற்கால் விலங்குகள், பறவைகள், பாம்பு, மீன், முதலை, ஆமை என்பன ஐவகை அறிவினை உடையனவென்றும் மக்கள், தேவர், அசுரர், இயக்கர், முதலாயினார் ஆறறிவு உயிர்கள் என்றும் கூறி உலக உயிரனைத்தையும் ஆறு வகையில் அடக்கிக் காண்பித்தவர் தொல்காப்பியர்.
இவற்றை ஊன்றிக் கவனித்தால், தொல்காப்பியர் காலத்தில் தாவரவியல், உடற்கூற்றியல், பறவையியல், விலங்கியல் போன்ற விஞ்ஞானத் துறைகளில் மேம்பட்டிருந்தமை புலனாகின்றது மாணிக்கவாசகர் தாம் இயற்றிய சிவபுராணத்தில் புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், மிருகமாய், பறவையாய், பாம்பாய், கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், அசுரராய், முனிவராய், தேவராய் இவ்வுலகில் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் என்று கூறுகின்றார்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்மிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர்ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
மேலும் அவர் பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் மெய்கழல்கள் வெல்க என்றும், மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி என்றும் கூறிப் பிறப்பற்ற நிலையை நாடிச் செல்கின்றார்.
இன்னும் வீணே பிறந்திறந்து வேசற்றேன் என்று தான் பிறந்து, இறந்து சோர்வடைகின்ற நிலையினைக் குறிப்பிடுகின்றார் தாயுமானவர். மேலும் அவர் எத்தனை பிறப்போ, எத்தனை இறப்போ எளியேனுக்கு என்று தான் எடுத்த பல பிறவிகளை நினைந்து கசிந்து மனமுருகி இப் பாடலை வடித்துள்ளார்.
எத்தனை பிறப்போ எத்தனை இறப்போ எளியனேற் கிதுவரை அமைத்த தத்தனை யெல்லாம் அறிந்தநீ அறிவை அறிவிலி அறிகிலேன் அந்தோ.
இனித்தான் நாம் தலையங்கச் செய்திக்குள் நுழையவுள்ளோம். ஆறறிவுடைய விலங்குகளும் பறவையும் ஒருசில உள்ளன என்று தொல்காப்பியனார் சூத்திரமமைத்து ஆறறிவு, ஒரு முடிவு என்ற பகுதியில் காட்டியுள்ளார்.
 
 

அவையாவன கிளி, குரங்கு, யானை என்பனவாம். இவையும் ஆறறிவு கொண்டவையாகக் கணிக்கப்படும் என்றும் கூறுகின்றார்
ஒருசார் விலங்கும் உளவென மொழிப. - (பொருள். 578)
அக்காலத்தில் கிளி, குரங்கு, யானை போன்றவற்றின் அறிவுத்திறன் மிகுந்திருந்த காரணத்தால் அவற்றையும் ஆறறிவு உயிர்களாகக் கருதப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் போலும். இன்னும் கிளி, மைனா ஆகிய பறவைகளை மக்கள் கூடுகளில் அடைத்து வைத்து அவைகளுக்குப் பேச்சுப் பயிற்சி அளித்து வருவதை நாம் அவதானித்து வந்துள்ளோம். இப்பறவைகள் வீட்டில் உள்ளவர்களை ஐயா, அம்மா என்றும், யாராவது வீட்டுக்கு வந்தால் அவர்களுக்கு காலை வந்தனம், வணக்கம் கூறுவதையும, இவைகள் ஆங்கிலத்திலும் பேசுவதையும் நாம் அவதானித்தும் உள்ளோம்.
மேலும் குரங்கு, யானை போன்ற மிருகங்களை மனித கட்டுப்பாட்டுக்குள் அடக்கி வைத்து, அவைகளுக்கு நற்செயல்களைப் பழக்கி, அதனால் நன்மை அடையும் மக்களையும் நாம் காண்கின்றோம். மனிதனால் முடியாத செயல்களை யானை ஒரு சொற்ப நேரத்தில் செய்து முடிப்பதையும் நாம் கண்டு மகிழ்கின்றோம். இன்னும் மிருகக்காட்சிச் சாலைகளில் பயிற்றப்பட்ட யானைகளைக் கொண்டு ஒற்றைக் காலில் நிற்பதும், வீணை வாசிப்பதும், பாகனைத் தூக்கி ஆகாயத்தில் வைத்திருப்பதும், நாலு ஐந்து யானைகள் சேர்ந்து வட்டமாக ஓடுவதும், சிறிய ஆசனத்தில் , குந்தி இருப்பதும், சபையோருக்கு நன்றி கூறிச் செல்வதும் ஆகிய யானை நடனம் நடாத்தப்படுவதையும் இன்றும் காண்கின்றோம்.
தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் நிலவியிருந்த சமூக அமைப்புகள், ஒழுக்க விழுமியங்கள், தனிமனிதப் பண்புகள், ஆடை அணிகலன்கள், மக்களிடையே வழக்கிலிருந்த கற்பொழுக்கம், களவொழக்கம், கைக்கிளை, பெருந்திணை, அக்காலத்தில் காணப்பட்ட சாதிய வளமைகள், பரத்தைமை, கரணம், திருமணங்கள் போன்ற செய்திகளைத் தம் பிற்சந்ததியினருக்கு விட்டுச் சென்ற பெருமை தொல்காப்பியனாரின் பரந்த நோக்கை எடுத்துக் காட்டுகின்றது. தொல்காப்பியத்தை ஆழ்ந்து ஆய்வு கொண்டால் அதிலடங்கிய பொக்கிஷங்கள் பல வெளிவந்து மக்களை மேன்மேலும் அறிவூட்டும் என்பது திடமான உண்மையாகும்!!!
*பூங்காவனம்” கிடைக்குமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலை கொழும்பு - 06 பெஸ்ட் குயின் பவுண்டேஷன் - கல்கிசை
இலக்கிய ಆpಶ சஞ்சிகை it iiiirii

Page 17
நாளும்.
நலிவுற்ற நிலையில் நாட்டில் எங்களுக்கு - ஒரு நாளை மலராதா? இல்லை ஒருநாளும் மலராதா?
சுமைதாங்கிகளான எம் சோகங்களுக்கெல்லாம் எப்போது ஒரு சுகம் கிடைக்கும்? அதற்காய் எப்போது மற்றவர்களின் அகம் திறக்கும்!
எம்மவரின் ஏமாற்றங்கள் ஏக்கங்கள் அவலக்குரல் ஈனச்சாவு இரக்கமில்லா கொடுமைகள் எப்போது தெரியவரும்? அப்போது அவற்றுக்கு தெளிவு வரும்!
மிஞ்சியவர்களுக்காய் ஒரு மீள்கட்டுமானம் எப்போது வரும்? இனியும் எஞ்சியவர்களுக்காய் ஒரு எழுச்சிக் கட்டுமானம் எப்போது வரும்?
இறத்தோட்டை என். சந்திரசேகரன்
மழலை போல் தவழ்ந்திட வேண்டும்!
மேகத்து நிலவை கரங்களால் | stygbgó (36):60óGtb!
தோன்றும் சூரியனை தோளில் சுமந்திட வேண்டும்!
தேசம் வாழ்த்த வாளில் நடந்திட வேண்டும்!
காண்டை நெருஞ்சிகளை தீயில் கொளுத்திட வேண்டும்!
அலையும் மக்கள் e(ഗ്ഗങ്ങb நீங்கிட வேண்டும்!
கலையும் இலக்கியமும்
DibëE63)6 நிமிர்த்த வேண்டும்!
களனியும் கல்வியும் நம் தேசத்தை
நந்தவனமாக்க வேண்டும்!!!
நல்லை அமிழ்தன்
*!。島んい。
 
 

உருவகக் கதை
மருதூர் ஜமால்தீன்
வழமை போன்று எனது வீட்டின் வளவில் வெளியில் அமைந்துள்ள மரத்தின் கீழே ஓர் நாட்காலியை எடுத்து வந்து அமர்ந்துகொள்கிறேன்.
அந்திமாலை வேளையின் சுகமான தென்றலை சுதந்திரமாக சுவாசித்தவனாய் கையோடு கொண்டு வந்த அறிவுநூலைப் படிக்க ஆரம்பிக்கிறேன்.
எங்கிருந்தோ வந்த அந்தக் காகம் எனது தலைக்கு மேலுள்ள மரத்தின் கிளையில் அமர்ந்து கரைவதற்கு ஆரம்பித்தது. இது அன்றாடம் நிகழும் ஆத்திரமூட்டும் செயற்பாடு. புத்தகத்துடன் வந்தமர்ந்தால் புரியாத காக்கையும் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். காதினுள் கரையும் அந்த ஒலி கன்றாவியாகும்.
இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நான் அந்தக் காகத்திடமே கோபத்துடன் கேள்வியைத் தொடுக்கிறேன்.
காக்கையே! உனக்கு நான் என்ன அநியாயம் செய்தேன்? ஏன் என்னை இம்சைப்படுத்துகிறாய். உனக்கு சுதந்திரமாக கரைவதற்கு இங்கு எத்தனையோ மரங்கள் உண்டு. யாருமற்ற இடம் சென்று உன் இஷ்டப்படி நீ கத்தலாமே. கிடைக்கும் நேரத்தில் ஒரு நூலைப் படித்து அறிவு பெறுவோம் என்றால் நானிருக்கும் இடம் வந்து தொல்லை தருகிறாயே. எத்தனையோ மனிதர்கள் எப்படியெல்லாமோ பொழுதை வீணாகக் கழிக்கிறார்கள். அங்கு நீ சென்று அவர்களை தொல்லைப்படுத்தினால் அது உனக்கு நன்மை தரும் வழியாக அமையலாமே என்று வாய்க்கு வந்தவாறு பொரிந்து தள்ளுகிறேன்.
எனது கோபத்தின் வேகத்தையுணர்ந்த அக்காகம் சற்றுப்பொறுத்து பேச ஆரம்பித்தது. ‘மனிதனே! உனது கூற்றில் உண்மையுள்ளதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, நான் கூறுவதை நீ எண்ணிப் பார்த்து நியாயம் யார் பக்கம் உள்ளது என்பதை உணர்ந்துகொள். உனது இனத்தவர்களில் அநேகர்

Page 18
3A
காலையில் எழுந்தால் இரவு வரை அல்ல அதைத் தாண்டியும் ஒலி சத்தத்துடனேயே பொழுதைக் கழிக்கிறார்கள். கையடக்கத் தொலைபேசி என்ற ஒரு பொருளை கையோடு வைத்திருக்கிறார்கள். நீ வீட்டில் இருந்தாலும், பயணம் சென்றாலும், புத்தகம் படித்தாலும் அதன் ஒசை பொறுக்க முடியவில்லையே. அத்தகைய மனிதர்களுக்கு ஒரு வார்த்தையேனும் உன்னால் ஏச முடியாமல் இருக்கிறாய்' என்று கூறி மேனியை உலுக்கி விட்டு மீண்டும் தொடர்ந்தது.
அது மட்டுமா? நீ வீட்டிற்குள் சுதந்திரமாகவா இருக்கிறாய்? அங்கும் ஏதோ வானொலியாம். அதன் பாட்டும் இரைச்சலும், தொலைக்காட்சி என்ற பெட்டியால் எத்தனையோ தொல்லைகள், வீட்டிலுள்ளவர்களின் வீண் கதைகள், பிறரைப் பற்றிய வம்புப்பேச்சு என்றெல்லாம் நடக்கிறதே. அதையெல்லாம் கேட்டும் வாய்மூடி பொறுமையாய் இருக்கிறாய். நான் கரைந்தால் மட்டும் ஏச்சும்பேச்சும் எரிந்து விரட்டுதலுமாக இருக்கிறாய். இது நியாயமா? உனது இனம் என்பதால் தானா இந்தப் பாரபட்சம் காட்டுகிறாய்? என்று மறுகேள்வி கேட்டது காகம்.
நியாயத்தைப் பேச எனக்கென்ன தகுதியிருக்கிறது. நாங்கள் இறைவனின் உயர்ந்த படைப்பான மனித இனத்தவர்கள். உனக்கு ஞாபகமிருக்கட்டும் என்றேன் சற்று கர்வத்துடன்.
காகத்துக்கும் கோபம் வந்துவிட்டது. ‘மனிதனே! உனது இனத்தவர்கள் மட்டும் எதனால் உயர்ந்தவர்கள்? எங்களை விட உங்களிடத்தில் தான் போட்டி, பொறாமை, வஞ்சகம், பெருமை, கழுத்தறுப்பு, குழிபறிப்பு, உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்று ஆயிரம் பிரிவினைகளை வைத்துக்கொண்டு அலைகிறீர்கள். நியாயம் அநியாயம் பற்றி பேசுவதற்கு உனக்கு எந்தத் தகுதியுமில்லை'
மீண்டும் காகம் தொடர்ந்தது. ‘மனிதனே ஒன்றை மட்டும் தெரிந்துகொள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு படைப்புகளுக்கும் ஒவ்வொரு வாழ்க்கைமுறை இருக்கிறது. நீங்கள் உயர்ந்த படைப்பென்றால் உங்களிடம் அன்பு, பண்பு, நீதி, நேர்மை, நியாயம், ஒழுக்கம், ஒற்றுமை போன்ற உங்களை சிறந்தவர்களாக்கும் மனித இனத்தின் இலக்குடன் நீங்கள் அனைவரும் வாழ்வதாக இருந்தால் எனக்கு நியாயம் கூற உனக்குத் தகுதியிருக்கிறது. இல்லையானால் இறைவன் படைப்பில் நீங்கள் மோசமானவர்களே' என கூறிவிட்டு காகம் கரைந்துகொண்டே பறந்தது.
காகத்தின் கூற்றில் நியாயம் இருப்பதாகக் கண்ட நான், மனித சமூகத்தில் உள்ள நிலையை எண்ணி வெட்கித்து தலைகுனிந்து புத்தகத்தைக் கையிலெடுத்து வீட்டை நோக்கி நடக்கின்றேன்!!!
 
 
 

பெண்ணொன்றை பெற்றிட்டால் பெரும்சுமைதான் பெற்றோர்க்கு. பெண்பார்க்க வந்திட்டால் பெருமூச்சு
உற்றோர்க்கு
கார் என்றும் வளவென்றும் பொன் என்றும் பொருளென்றும் சீ தனமாய் சீதனத்தை வேண்டிடவே
முன்நிற்பார்!
சீதனத்தை தந்தாலோ சீராக செய்திடுவோம். இல்லாமல் போனாலோ பெண் வேண்டாம் என நிற்பார்!
சோகத்தின் வாசல்தனை திறந்துவிடும் சீதனத்தை முழுவதுமாய் ஒழித்திடவே பெண்ணினமே முன்வாரீர்!!!
நஸிஹா ஹலால்தீன் தியத்தலாவ.
566)
இலக்கி
சமூக
உயிரினங்களுக்குரியது DJ600TLD.
இன்று அவன். நாளை நீ!
பிறப்புக்கு முன் மரணம் உறுதியானது அதற்காக நீ அதிர்ச்சிகொள்வதேன்?
பகைமைத்தனம் காட்டியவன் மரணித்தான் எனில் குதுகலித்தல் மனிததர்மமாகுமா?
மரணத்தை மிகைத்தோன்
எவனுமில்லை. அது வரும்நேரம்
யாரும் அறிந்ததில்லை!
நோயில் தான் மரணம் என்றில்லை. எதிர்பாராத நாளிலும் வந்துவிடலாம்!
மரணவேதனை தாங்க முடியாது. அது தெரிந்தால் மனிதன் தூங்க முடியாது!
ஏகனிடம் இறைஞ்சி நிம்மதியை வேண்டிடுவோம். நல்மரணம் எமை ஆட்கொள்ள
அவனிடமே இறைஞ்சிடுவோம்!!!
வெலிப்பன்னை அத்தாஸ்
சஞ்சிகை

Page 19
பொய்யின் கையில் ஆர்ம் பூட்டுக்கள், மெய்யின் கையில் ஒற்றைச் சாவி
|பூவெலிகட எம்.எஸ்.எம். சப்ரி
முழுப் பிரபஞ்சத்தையும் எவ்வித முன்மாதிரியுமின்றி படைத்து, அதில் பூமி எனும் சிறிய கோள்தனில் எண்ணிலடங்கா ஜீவராசிகளைப்படைத்து, அதில் தனது பிரதிநிதியான மனிதனை ஏனைய படைப்பினங்களிலும் பார்க்க ஓர் உயர்ந்த அந்தஸ்துக் கொண்ட சிருஷ்டியாகப் படைத்தான். அந்த ஏக சக்தி வல்லோன் ஈடு இணையற்ற இரட்சகனின் நிலையான பெயர்த் திருநாமத்தை என்றும் மனதில் ஓதி உண்மையான வெற்றியைப் பெறவேண்டும் என்ற அவாவுடன் இவ்வுலகில் தீனுக்காக உழைத்துவரும் ஓர் இறையடியான் என்ற ஒப்பற்ற உளப்பெருமையுடன் கருத்துக்களை மேற்கொண்ட தலைப்பையொட்டிக் கூற விழைகின்றேன்.
ஏக வல்லவனாம் இறைவன் தன் அருள் மறையாம் திருமறையில் இப்பிரபஞ்சத்தை, தான் எதைக்கொண்டு, எதற்காகப் படைத்தான் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துரைக்கின்றான். வஹியை மாத்திரம் பற்றுக்கோடாகக் கொண்டு உருவாக்கம் பெற்ற இறைவேதமாகிய திருக்குர்ஆன் அன்றும், இன்றும், என்றும் குறை அறிவு படைத்த மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் சத்திய வேதமாகும். இந்த வேதம் குறைகளேதுமற்ற நிறைவான வேதமாகும். ஒரு மனிதன் ஈருலக வாழ்க்கையிலும் உண்மையான வெற்றியைப் பெறத்தேவையான அனைத்து வழிவகைகளையும் இதன் கண் கூறியுள்ளான். அவ்வாறான இணைதுணையற்ற இவ்வேதமானது இப்பிரபஞ்சத்தை தூயவனாம் அல்லாஹற் எதைக்கொண்டு படைத்தான் என்பதை கீழ்வரும் வசனத்தில் தெளிவாக எடுத்துரைக்கின்றான். “வானங்களையும், பூமியையும் அவற்றிடையே உள்ளவற்றையும் நாம் விளையாட்டுக்காகப் படைக்கவில்லை. அவ்விரண்டையும் நாம் சத்தியத்தைக் கொண்டு மாத்திரம் படைத்தோம். எனினும் அவர்களில் பெரும்பாலானோர் இதனை அறியமாட்டார்கள். நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்தான் அவர்கள் யாவருக்கும் குறிப்பிட்ட தவணையாகும்”. (அத்துகான்: 38-40)
மேற்கூறப்பட்ட திருவசனமானது இறைவன் இப்பிரபஞ்சம் முழுவதையும் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டே படைத்து நிலைபெறச் செய்துள்ளான் என்பதை சுட்டி நிற்கின்றது. மேலான இறைவன் தனது பிரதிநிதித்துவக் கடமைகளை மனிதனிடம் வழங்கி அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும்படி கட்டனை பிறப்பிக்கின்றான். அதோடு மனிதனுக்கு செயல் சுதந்திரத்தையும் அளித்துள்ளான். மனிதனைவிட மேலான
 
 
 
 

மலக்குகளுக்கு வழங்கப்படாத செயல் சுதந்திரத்தை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான் என்பது எத்தகைய பாக்கியம். நமது சிந்தனையைத் தீட்டுவோம். மனிதனது கற்பனைக்கு எட்டாத இறைவனின் மாபெரும் அருட்கொடையாக அமைந்த உயர்ந்த சுவனபதியை எப்படியாவது மனிதன் பெறவேண்டும். அதற்கான உழைப்பை பூமியில் செய்வதினுTடு இலட்சியத்துடன் அமையும் பூவுலக வாழ்க்கை செம்மையுறும் பாங்கு இறைவனது எத்தகைய ஒரு திட்டமிடல் என்பதை நம்மால் சிந்திக்க முடிகின்றதா? அவன் மனிதனுக்கு வழங்கியுள்ள சொற்ப அறிவைக்கொண்டு மனிதன் இந்த உலகில் எந்தளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளான். இப்பிரபஞ்சத்தின் எல்லைவரை சென்று பார்த்தால் அவனது விஞ்ஞான அறிவு ஒரு மாபெரும் தேடலையே மேற்கொள்கின்றது. மனிதனுக்கு அறிவைத் தந்த இறைவனையே இல்லை என்று சொல்லுமளவிற்கு அவனது வெற்றிகள் தான்தோன்றித்தனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய மனிதர்களுக்கு மத்தியில் உண்மை நிலையை சரிவர உணர்ந்து இவ்வுலக வாழ்க்கையை வாழும் ஒரு மனித இனமாக முஸ்லிம்களை இவ்வுலகில் தேர்ந்தெடுத்துள்ளமை நாம் செய்த பெரும் பாக்கியமென்றே கருத வேண்டும். தூயவனின் சத்திய மார்க்கத்தை இவ்வுலகில் நேர்வழியைப் பெரும் மார்க்கமாக கருதி அவன் விருப்பு, வெறுப்புக்களுக்கு இசைந்தபடி, குவலயம் போற்றும் கோமான் ஏந்தல் நபி, சத்தியப் போதகர், சன்மார்க்கத் தூதுவன், மனிதர்களில் இணையற்ற உத்தமர் எங்கள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் சிறப்புக்களை அறிந்து அவர் வாழ்ந்து காட்டிய முறையில் மனிதன் முழுவாழ்க்கையையும் வாழும் சந்தர்ப்பத்தில் ஈருலகிலும் வெற்றி நிச்சயமே. இத்தகைய உயர்வான இலட்சியத்துடன் கூடிய, புவிவாழ்க்கையில் முஸ்லிம்களாகிய நாம் இறைவனுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றி இக்கடமைகளை இவ்வுலகில் செய்வதினுாடு அவற்றால் இங்ங்கனம் மலரும் நல்லொழுக்கமுடைய குணங்களும் நம்மில் ஏற்பட்டு, பிற மனிதர்களுக்குச் செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் நிறைவேற்றி வாழ அர்த்தமுள்ள ஒரு உலக வாழ்க்கையை இறைவன் எமக்குப் பரிசளித்துள்ளான்.
இறைவனின் அருட்கொடையால் எமக்குக் கிடைத்த இவ்வாழ்வை நாம் சிறப்பாக வாழக் கடமைப்பட்டுள்ளோம். இறைவன் விரும்பும் வண்ணம் அதாவது இஸ்லாம் விரும்பும் அமைப்பில் எமது வாழ்க்கை அமைந்துள்ளதா? மேலைத்தேய நாட்டு மக்களின் கலாச்சாரத்தையும், பாரம்பரியங்களையும் நம்மவர்கள் பின்பற்றி நவநாகரிக உலக மோகங்களில் சிக்கித் தவிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் தொட்டு பல் விழுந்த கிழவர்கள் ஈறாக நமது சமூகத்தில் உள்ள ஒருசிலர் சடவாத சிந்தனையில் மூழ்கியுள்ளனர். இவ்வுலகில் நிம்மதியும் இறையருளுமின்றி தவிக்கும் அவர்கள் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சிக்கு வித்திட்ட பல காரணிகளை, ஒழுக்கவீனங்களை நீண்ட பட்டியலிட்டு சொல் லிக் கொணி டே போகலாம் . அதில் முதன் மையானது பொய்யுரைத்தலாகும். இன்று அநேகமானோரின் பேச்சில் நூற்றுக்கு ஒரு வீதமாவது பொய் கலவாத பேச்சேயில்லை என்று கூறலாம். வெறும் சுயநலத்திற்காகவும், அற்ப உலக இலாபங்களுக்காகவும் மனிதர்கள்
கலை இலக்கிய சமுக சஞ்சில

Page 20
பொய்யையே பேசுகிறார்கள். பொய்யால் விளைவதனைத்தும் தீமையேயன்றி வேறில்லை. நம் வாழ்வில் தீமைகள் மிகைத்தால் நிச்சயம் நாம் ஒதுங்க வேண்டிய இடம் கொடிய நரகமாகும். உலகிலே இதன் கொடிய விளைவுகளை நாம் அனுபவிப்போம். உண்மைக்கு என்றுமே அழிவில்லை. என்றாவது ஒரு நாள் பொய் வெளிப்பட்டே தீரும்.
குடும்ப வாழ்க்கையில் கணவன் - மனைவிக்கிடையில் அதிகரித்த மோதல்களும் பெருகிவரும் விவாக விடுதலைகளுக்கும் காரணம் பொய்யே ஆகும். தொழில் வியாபார முயற்சிகள் எதிர்பார்த்த அளவு அடைவுகளை பெறமுடியாமைக்கு பொய்யே முதற்காரணமாகும். சமூகத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு அமைதியின்மையைத் தோற்றுவிப்பதில் பொய் வகிக்கும் பங்கு அளப்பரியது.
உலகம் முழுவதும் நிறைந்திருப்பது சத்தியமொன்று மாத்திரமே. அதில் மனிதன் ஏன்தான் பொய்யை நாடுகிறான். உண்மையானது என்றுமே மன அமைதியைத்தான் தோற்றுவிக்கும். பொய்யானது என்றும் சஞ்சலங்களையே ஏற்படுத்தும். உண்மையால் வரும் உயர்வுகள் பல இருக்க ஏன் நாம் பொய் சொல்லி நரகிற்கு இரையாக வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில
“. ஒவ்வொரு ஆத்மாவும் அது தேடிக் கொண்டதற்கு தக்க கூலியை அநியாயம் செய்யப்படாமல் பெற்றுக் கொள்வதற்கே” (அல்ஜாஸியா:22) மேற்கண்டவாறு கூறுவதினுாடு தான் எதற்காக உலகை சத்தியத்தின் அடிப்படையாகப் படைத்தான் என்பதை அழகாக எடுத்துக் கூறுகின்றான்.
பிறரை நகைப்பில் ஆழ்த்தக் கூறும் பொய்களையோ, சிறார்களிடம் வேலை வாங்கக் கூறும் பொய்களையோ இஸ்லாம் அனுமதிக்காத போது நாவிற்கு வரும் பொய்களையெல்லாம் அடுக்கடுக்காய். ஒரு பொய் சொல்லி அதை மறைக்க மேலும் ஒன்பது பொய்கனைச் சொல்லும் விடயத்தை மாத்திரம் அனுமதித்துவிடுமா? இன்று பல மனித உறவுகள் பிளவுற்று நிற்பதற்குப் பொய் காரணமாக அமைந்துள்ளது.
பாலையும், கள்ளையும் ஒருங்கே நோக்கும்போது அவை பார்வைக்கு ஒன்று போலத் தோன்றினாலும் அவற்றை அருந்துவதினால் வரும் விளைவுகள் வெவ்வேறானது. சாதாரண மனிதனுக்கு வழங்கப்பட்ட ஆறு அறிவைவிடவும் இறைவன் எமக்கு வஹியின் மூலம் தெளிவான அறிவையும் தந்துள்ளான். அது எமக்கு இவ்வுலகில் போதுமான மெய்ஞ்ஞான அறிவாகும். அது விஞ்ஞானத்தையும் மிகைத்த அறிவு என்பதை சிந்திப்பவர்கள் தெரிந்துகொள்வார்கள். நரகப்படுகுழிக்குள் நம்மைத் தள்ளிவிடும் முனாபிக்தனமான குணங்களில் ஒன்றான பொய்யை முழுமையாகக் களைந்து எங்கும், எதிலும், எப்போதும் உண்மையை உணர்ந்து, உரைத்து உத்தமமாய் வாழ்வோம். பொய்யின் கையில் மர்மமான ஆயிரம் பூட்டுக்கள் பூட்டப்பட்டுள்ளன. ஆனால் அம் மர்மங்களை வாழ்வில் களைந்து தெளிவான உள்ளத்துடன் வாழ உண்மை என்ற ஒற்றைச் சாவி போதுமானது. அதனால் எதையும் துறந்து வெற்றி பெறலாம்!!!
 
 

வசந்தத்தின் வாசல் கதவைத்தட்டி பூபாளம் பாடி நிற்கும் இளையவளே. புதியவளே!
இனிமைக்கு இனிமை வழங்கும் என் ட்ரிய தோழியே.
கட்டிளம் பருவத்தை கடந்து வந்தவள் தான் நானும் கூட!
அதன் ஆள அகலத்தை ஆசை அவலங்களை விவேகமற்ற சிலவேகத்தால் விளைந்த விபரீதங்களை எதிர்கொண்டு வந்தவள் நானென்பதால் நீயும் அதுபோல. வேண்டவே வேண்டாமடி!
வெண்மையிலே சிறு தூசி விழுந்தாலும் அதன் தன்மையை இழந்துவிடும். பெண்மைக்கும் வெண்மைக்கும் பிறக்கும்போதே உறவுமுறை உண்டு!
தூய நீரோடையில் கல்லெறிந்து சலனத்தை ஏற்படுத்தி
தம் பால் உனது கவனத்தை கையகப்படுத்த கயவர்கள் கூட்டமொன்று விழிப்புடன் இயங்குகிறது!
குறும்பேச்சுக்களை (SMS) இரவுபகல் குறும்பாக பேசிப்பேசியே விபரீத எண்ணவிதை தூவி வேடிக்கை பார்க்க வவிைசி வசப்படுத்தி உனது வாழ்வில் விளையாடி விட எத்தனிப்புக்கள் ஏராளம்!
ஒருகண இமை மூடலால் தன்னையும் தன்னோடு சேர்ந்தவர்களையும் எமலோகம் அனுப்பிவிடும் வண்டிச்சாரதி போல உனது சில கணப்பொழுது மயக்கங்களும் கூட உன்னை மட்டுமல்ல உன்னோடு சேர்ந்தவர்களையும் சீரழித்து விடலாம்.
எனவே உனது ஒவ்வொரு காலடியும் ஏற்றத்துக்காக மட்டுமாய் அடி எடுத்து வைக்கட்டும்!
உன்னைத் தீர்மானிப்பவள் நீயே. நீயே தானடி. வேறு எவருக்காகவும் இருக்கவே கூடாதடி!!!
ஷெல்லிதாசன்

Page 21
ஏறாவூர் வளியீலா ஜமால்தீன்
ஒரு நாளா. இரண்டு நாளா..? ஒரு மாத காலமாக அடைமழை இடிமின்னல் வேறு. கடுமையான குளிர் அவ்வாறான சீரற்ற காலநிலை மக்களை மிகவும் வாட்டியது. பயங்கரவாதப் பிரச்சினையால் விடுபட்ட மக்களுக்கு வெள்ள அனர்த்தம் மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்தது போல் இருந்தது. மழை காலம் வந்தாலே உணவுப் பொருட்களை பதுக்கி வைக்கும் வர்த்தகர்கள் ஒரு புறம், சாமான்களின் விலையேற்றம் மறுபுறம். அன்றாடம் பிழைக்கும் மக்களை வறுமை வாட்டியது.
"வெயில் முகத்தையே காணல்ல. கழுவின உடுப்பெல்லாம் ஒரு பேசன் நிறைய அப்படியே இருக்கு. எங்க காயப்போடுற. ம்” என்று முணுமுணுத்துக் கொள்கிறாள் நஸிரா. “கேஸஉம் தீர்ந்து போயிற்று. கொள்ளியும் எரியுதில்ல. எப்படித்தான் இன்டைக்கு புள்ளைகளுக்கு ஆக்கிப்போடுவேனோ” என்று கூறிக் கொண்டே தன் அன்றாட வேலையில் ஈடுபடுகிறாள் நஸயீரா.
கதவு தட்டும் சத்தம் கேட்டு ஓடிப்போய் கதவைத் திறக்கிறாள். தன் கணவர் அப்துல்லாஹற் நனைந்து ஒழுகிய உடலோடும், சைக்கிளில் கட்டப்பட்ட மரக்கரிப் பெட்டியோடும் நிற்கிறார். “இன்றைக்கு யாவாரமே இல்ல புள்ள. ரோட்டெல்லாம் சரியான தண்ணி. கடையெல்லாம் பூட்டிக் கிடக்கு. வெள்ளம் ஊர் பூரா பரவி வருகுது. மரக்கறியெல்லாம் அப்படியே எடுத்திட்டு வந்திட்டன். இன்டைக்கு நஷ்டம்தான்” கணவன் கூறிமுடித்தார். என்ன செய்வது யா அல்லாஹற் நஸிரா மனதிற்குள் பிரார்த்தித்துக் கொண்டாள்.
XXXXXXXXXX
அந்த ஊரில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவள்தான் நஸிரா. ஐந்து பிள்ளைகள். கணவன் அப்துல்லாஹற் மரக்கறி வியாபாரம் செய்து வந்தான். அவளும் சிறு கைத்தொழில் செய்து வருமானத்தை ஈட்டி வந்தாள். கஷ்டத்துக்கு மத்தியில் குடும்ப வண்டி ஒருவாறு ஓடியது. மூத்தவள் பெண் பிள்ளை. சாதாரண தரம் எழுதிவிட்டு வீட்டில் இருக்கிறாள். இரண்டாவது மகன் சாஜித் பதினாலு வயது. மற்ற மூவரும் சிரியவர்கள். சாஜித் துடிதுடிப்பான சிறுவன். மழைக் காலம் வந்தாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். மகனைப் பாதுகாப்பதே பெரும் பாடாகிவிட்டது.
ஒரு கிழமையாக கடும் மழையும் குளிரும் இருந்ததால் அடுப்பை எரிக்கவும் மிகவும் சிரமமாக இருந்தது. கஷ்டத்துக்கு மத்தியில் பகலுணவை சமைத்து பிள்ளைகளுக்கு பரிமாறிவிட்டாள் நஸிரா. சிறிய மகள்,
“உம்மா தண்ணி வாசல் படியில ஏறிட்டு. இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கு ஏறிடும். என்ன செய்றிங்க. வாங்க எங்கயாச்சும் போவோம்” என்று
 
 

கத்தினாள். "எங்க போற மகள்? இருங்க. எல்லாத்துக்கும் அல்லாஹற்தான் இருக்கான்” என்று மகளைத் தேற்றினாள் நஸிரா.
XXXXXXXXXX
பகல் சாப்பிட்டுவிட்டு விளையாடப்போன மகன் சாஜித்தை இன்னும் காணவில்லை. நஸிராவுக்கு யோசனையாக இருந்தது. வெளியில்போன கணவனும் இன்னும் வரவில்லை. குளம் திறந்துவிடப்பட்டதால் அவதானமாக இருக்குமாறு அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நினைத்து கலங்கிய நஸ்ரீரா தனது உறவினர் வீட்டுக்கும்போய் மகனைப்பற்றி விசாரித்தாள். கணவனுக்கும் விடயம் தெரிந்து எல்லா இடமும் போய்த் தேடினார்கள். எங்கும் அவன் இல்லை. அன்றைய இரவு கணவனும் மனைவியும் தூங்கவில்லை.
சிறுவர்கள் கூட்டமாக இருந்து விளையாடிய இடத்தக்கு சாஜித் சென்றிருக்கிறான். அங்கு அனைவரும் மீன்பிடித்து விளையாடும்போது சாஜித்தும் விளையாடினான். அப்போது அவனது செருப்பு கழன்றுவிட அதைப் பிடிப்பதற்காக தண்ணிருக்குள் காலை வைத்தவனை நீர் தனக்கு இரையாக்கிக்கொண்டது. அருகே இருந்த சிறுவர்கள் பயத்தில் ஓடிவிட மறுநாள் காலையில் சாஜித்தின் மையத்து கரை ஒதுங்கியது. விடயம் கேள்விப்பட்ட நஸிராவும் கணவனும் கதறியழ அந்த பரிதாப காட்சியைப் பார்க்க முடியாமல் ஊரார்கள், குடும்பத்தார் மாத்திரமன்றி சுளியோடிகள், இராணுவத்தினர் ஆகியோரும் கதிகலங்கி நின்றார்கள். சாஜித் வரைந்த ஓவியம் அவளது நினைவுக்கு வந்து நஸ்ரீராவின் அழுகையை அதிகமாக்கியது!!!
வாழ்க்கை ஒட்டத்தின் அந்தம் நீ. S SS SS qqq S S LLq SS SS SS முற்றுப்புள்ளியும் நீ! உணர்ச்சிகளின் ஓய்வு நீ. உதிரத்தின் உறைவு நீ.
மானிடரின் செருக்கை உடலின் அழிவு நீ.
மறைப்பவன் நீ. உற்றவர்களின் பிரிவு நீ!
மேனி மெய்யென வாழ்வோரை J
பொய்யெனக் காட்டுபவன் நீ! உன்னை விதியென்று வியப்பதா?
பொன்னும் பொருளும் மதியென்று மறுப்பதா?
உனக்கு தந்தாலும் சதியென்று குமுறுவதா? அதற்கெல்லாம்
மசியாதவன் நீ! உன்னை நினைத்து
கலங்குகிறோம் உருவமற்றவன் நீ. மானிடர் நாம் பேதமற்றவன் நீ. 创 நிதமும்!!! மனிதனின் இதயத்துடிப்பை அணைப்பவன் நீ! - நுகேகொட எஸ். சாந்தி

Page 22
மரணித்து விட்டதாக
மனதைக் கொன்று விடும் படியாக
செய்திகள் வந்தன.
தங்கை தங்கை என்று தயவாய் அழைக்கும் பூரீதர் அண்ணா. சொல் எங்கு சென்றாய் எம்மை விட்டு விட்டு?
காலன் உன்னை கைது செய்தானா? எம்மை கதற விட்டு அந்தக் காலன் உன்னை கைது செய்தானா?
ஓவியம் கேட்க வந்தேன் ஒருநாள் உன்னைத் தேடி. எல்லாவற்றையும் கொடுத்தாய் நீ தேடித் தேடி
கலைத்துறையில் - நீ படைத்த காவியங்கள். என்றும் காலத்தால் மறையாத ஒவியங்கள்!
பல்கலைத் தென்றல் என்ற பட்டம் பெற்ற நீ எம் அனைவர் மனதிலும் சூறாவளியைத் தந்தது ஏன் உன் பிரிவால்?
அமரர் பூரீதர் பிச்சை
வெலிகம ரிம்ஸா முஹம்மத்
உன் தாயும் தாய் மாமனும் மட்டுமன்றி
யாவரும் துடித்துப் போகிறோம். இதயம் வெடித்துப்
(3LJTg5(33Tib
கலைக்காக வாழ்ந்தாய்
கண் போன பின்னும் சளைக்காது வாழ்ந்தாய்
岛
நோயுற்ற போது கூட உன்னைக் காண வராதவர்கள். இன்று உன்னை எண்ணி புலம்பும் சேதிகள் தெரியுமா உனக்கு?
பூரீ அண்ணா. நீ எப்போதுமே என் மனதில் வாழும் கவிதை. என்றும் மறையாத புதுக்கவிதை!!!
குறிப்பு :
ாவுக்காக.
 
 
 
 
 

கவிதைகள்
யோ.புரட்சி வள்ளுவர்புரம்
உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்கிறோம். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பது விஞ்ஞான செயற்பாடுகளால் நூறு வீதம் ஈடேறுகிறது. அது கலை இலக்கியத்தில் ஈடேறுகிறதா? பழையன கழிந்து தான் புதியன புக வேண்டும் என கலை வற்புறுத்த முடியாது. பழையன இருக்கவே புதியனவையும் புகுத்திக்கொள்ளலாம். ཚིག་རྒྱ་ பதிலாக புதிய திருக்குறளை ஏற்படுத்தலாமா? புதிய இராமாயணம் படைக்கலாமா? ஆனால் படைக்கக்கூடிய விடயங்களில் புதியனவற்றை படைத்துக்கொண்டே இருக்கிறோம். மரபுக்கவிதைகள் இருக்கும்போதே நவீன கவிதைகளைப் படைக்கிறோம். பாரம்பரிய தமிழ் இசையைத் தாண்டி மேற்கத்தேய இசையையும் பாவிக்கிறோம். இவை சூழல் கருதிய மாற்றங்களாகும்.
இந்த நிலையிலே தான் கவிதையின் போக்கிலே ஒருவித படைப்பு முயற்சி. இதன் உயர்வு தாழ்வினை, சீரிய, நேர்மையுள்ள படைப்பாளர்களும், விமர்சகர்களும் தீர்மானிப்பார்கள். ஈரடிக் கவிதை என இதற்கு பெயரிட்டிருக்கிறேன். இதிலே முதல்வரி கவிதையின் தலைப்பாகவும், அடுத்த வரி கவிதையாகவும் வரும். இரண்டும் சேர்ந்தாலே இக்கவி நிறைவாகும். ஒருவரிக்குள் ஒரு பாடுபொருளை அடக்குவதென்பது இன்றைய விஞ்ஞான கணிணியில் சிறிய நினைவகத்தில் கோடான கோடி தகவல்களை சேமிப்பது போன்றது. ஒரு வரியே ஒப்பற்ற ஆளத்தைச் சுட்ட வேண்டும். ஒரு வரி என்பதற்காக அதன் தன்மை மீறி கணக்கற்ற சொற்களைப் போட்டு அதை நீட்ட முடியாது. இரண்டு வரையான சொற்களில் சொல்லி முடிப்பதே சிறப்பானது. நாம் சில மிகச்சிறிய கவிதைகளைப் படித்திருப்போம். மிகப்பெரிய விடயத்தையும் அதில் சுருக்கமாக அடக்கியிருப்பார்கள். மூன்று வரிகள் கொண்ட ஜப்பானியரின் ஹைக்கூ பார்த்து நாம் அதிசயிக்கவில்லையா? மேற்குலகம் விஞ்ஞானத்தால் செயற்பாடுகளை சுருக்கும்போது கவிதையில் ஒரு சுருக்க முயற்சியே இது.
பாடுபொருளை ஒரே வரிக்குள் கவித்துவமாகவும், ஆழம் நிறைந்த சொல்லூடாக நேர்த்தியாக சொல்வதும், தலைப்போடு ஒருவரியும் சேர்ந்து இருவரி கொண்டதே ஈரடிக் கவிதை ஆகிறது. பிற கவிதைகள் போலவே இதிலும் படைப்பாளரின் திறனே கவிதையினை வாழ வைக்கும். வாசிப்போரின் மனதிலும் பதிவினை ஏற்படுத்தும். இதோ சில ஈரடிக் கவிதைகள்.
மது Kr மானம் தீப்பெட்டி நீர் வடிவ நெருப்பு I இன்னொரு உனதுயிர் கையிலடங்கும் எரிமலை
ரொபோ LDFTL96f(6 கறிவேப்பிக்ைகுச்சி உயிரற்ற விசுவாசி முற்றமில்லா மாளிகை 1 பாரம்பரிய ஏழைத்தோடு

Page 23
சிறுகதை - எஸ்.ஆர். பாலசந்திரன்
காலைப்பொழுது. நேரம் எட்டுமணி இருக்கும். சுங்கப் பணிப்பாளராக கடமை புரிந்து தற்போது ஓய்வுபெற்றிருக்கும் சிவநாதன் பத்திரிகையில் மூழ்கியிருந்தார். மனைவி பத்மா, மகன் அலுவலகத்துக்கு சாப்பாடு கொண்டு செல்வதற்காய் மும்முரமாய் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். அவளது எண்ணங்கள் யாவும் மகனின் திருமணம் பற்றியே இருந்தன. எனினும் அவன் செய்திருக்கும் காரியத்தில் மூளை குழம்பிப்போனாள் பதமா.
ஆம். கணேசன் பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்டு தனியார் கம்பனி ஒன்றில் உயர் அதிகாரியாக கடமை புரிகிறான். அவன் தன்னோடு வேலைபார்க்கும் சந்தமாலி என்ற சிங்களப் பெண்ணைக் காதலிக்கிறான். இந்தக் காதலுக்கு சிவநாதனை விட பத்மா தான் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறாள். இதுதான் அந்த வீட்டில் நடந்துகொண்டிருக்கும் அன்றாட பிரச்சனை.
'அம்மா சர்ப்பாடு ரெடியா என்ற மகனின் குரலைக்கேட்டு சுயநினைவுக்கு வந்த அவள், கணவரையும் காலைச் சாப்பாட்டுக்காக அழைத்தாள். சாப்பிடும் நேரத்தில் மகனிடம் எதுவும் கேட்கக்கூடாது. கோபத்தில் சாப்பிடாமல் போனாலும் போய்விடுவான். மகனிடம் எப்படிக்கேட்பது என கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
'அம்மா. இட்லி சூப்பர்மா' என்றான் மகன் கணேசன். உண்மையோ பொய்யோ மகன் கூறிய வார்த்தைகளால் நெகிழ்ந்துபோன தாய், இதுதான் சந்தர்ப்பம் என்று வாயைத் திறந்தாள்.
"ஆமா ராசா. இப்படி வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுறவளையல்லோ
கலியாணம் முடிக்க வேணும். கிரிபத், கொக்கிஸ்காரியை முடிச்சியண்டால் எப்படிப்பா? என்றாள்.
'அம்மா! உங்களுக்கு 1983 கலவரம் மறந்துவிட்டதா? பக்கத்துவிட்டு பியதாச அங்கிள் தானே ஓடிவந்து எங்களை தனது வீட்டில் வைத்திருந்தவர். அவருடைய மனைவியும், மகளும் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டார்கள்? கலவரம் அடங்கும் வரை எம்மை யாழ்ப்பாணம் போக வேண்டாம் என்று பியதாச அங்கிள் சொன்னவரல்லோ. நாம் தான் அவர்களை மீறி மாமா
 
 

வீட்டுக்குப் போனோம். 'நிலமை சீராகிவிட்டது. எப்போது திரும்பப் போகிறீர்கள் என்று மாமா எங்களை மறைமுகமாக அவர் வீட்டிலிருந்து வெளியேற்றவில்லையா? நாங்க திரும்பி போனபோதும் கூட பியதாச குடும்பம் எவ்வளவு மனிசத்தன்மையா எங்களிடம் நடந்தவங்கள்?
அம்மா! அரசியல்வாதிகளின் தவறால் தானம்மா இனங்களுக்கிடையே பிரச்சனை வந்தது. இன்னும் சுயநலத்துக்காகத்தான் இனவாதம் பற்றி பேசுகிறார்கள். எங்கடை ஆக்கள் மட்டும் என்ன அப்பாவிகளா? 1990 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை 24 மணிநேர காலக்கெடுவில் உடுத்த துணியோடு துரத்தினார்கள் தானே? இந்தியாவில் பாபர் மசூதியை இடிக்கவில்லையா? செய்வதை செய்துவிட்டு அது தவறு என்றும் எம்மவர்களே தான் கூறித் திரிகின்றார்கள். இனத்துவேசம் சிலருக்கு பிழைப்பாகியிருக்கிறது அம்மா. ப்ளிஸ் புரிந்துகொள்ளுங்கள்’ கணேசன் தனது பக்க நியாயத்தை எடுத்துக் கூறினான்.
மகன் கூறுவதை கேட்டு சிலையாகி நின்ற பத்மா அப்படியானால் உனது திருமணம் இன ஒற்றுமைக்கு வழிகாட்டியா’ என்றாள்.
நிச்சயமாக அம்மா! எனினும் இன ஒற்றுமைக்காக நான் காதலிக்கவில்லை. ஆனால் எனது காதலுக்கு இனவேற்றுமை தடையாக" இருக்கக்கூடாது என்கிறேன்’
‘சரி ராசா. அவ எங்களை வைத்துப் பார்ப்பாளா?
'அம்மா. சந்தமாலி நல்ல குடும்பத்துப் பெண். நீங்களும் சந்தமாலியும் அன்பாய் இருந்தால் எனக்கும் எவ்வளவு சந்தோஷம் அம்மா. நீங்க நல்ல மாமியாராய் இருங்கோ. அவளும் மாமியார் மெச்சும் மருமகளாய் இருப்பாள்' என்றான்.
‘என்னதான் இருந்தாலும் அவள் வேற்றுமதப் பெண்தானே? அதுதான் எனக்கு யோசனையா இருக்குப்பா' என்றாள் தாய் பத்மா.
'அதுசரி. பெரியப்பாவின் மருமகள் பணக்காரி. அவள் தமிழ்தானே? திருமணம் முடித்து மூன்று வருடங்களில் மாமா மாமியை வீட்ட்ைவிட்டு வெளியேற்றவில்லையா? அம்மா! உங்கள் இருவரின் சம்மதத்தோடும் ஆசீரவாதத்தோடும் தான் நான் திருமணம் முடிப்பேன். ஆனால் நான் திருமணம் முடிக்கும் பெண் நிச்சமாய் சந்தமாலி தான் என்று சொல்லி விட்டு சென்றான் கணேசன்.
பத்மா யோசனையில் ஆழ்ந்தாள். கணேசன் கூறியவை முழுதும் சரி என்று அவள் மனம் கூறியது!!!
கலை இலக்கிய சமூக சஞ்சிகை

Page 24
பெயர்-வீழ்ச்சிக் கும்மி (கவிதை) நூலாசிரியர்-தாமரைத்தீவான் தொலைபேசி - O26 5670707 வெளியீடு-கலைப்பிரியன் 6. f6Oda) - 4O/r
25 பக்கங்களைக் கொண்டு கைக்கு அடக்கமாகவும், கருத்து செறிவுள்ள நூறு பாடல்களைத் தாங்கியும் வெளிவந்திருக்கிறது தாமரைத் தீவான் எழுதிய வீழ்ச்சிக்கும்மி என்ற புத்தகம், ஆளுநர் விருது, கலாபூஷணம் விருது ஆகிய பட்டங்களைப் பெற்றவரும், மரபு சார்ந்த கவிதைகளைப் படைத்து வரும் மூத்த கவிஞர்களில் ஒருவருமான தாமரைத்தீவானின் இப்புத்தகத்தில் வளமான சொற்கள் எங்கும் பரந்து காணப்படுகின்றது. தாமரைத் தீவானின் 21வது நூலான வீழ்ச்சிக்கும்மி, கலைப்பிரியன் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. தமிழர் வரலாறு, போர்ச்சூழல், அரசியல் போன்ற அம்சங்களைத் தாங்கி இப்பாடல்களை யாத்துள்ளார் கவிஞர். இப்புத்தகத்தை வாசிக்க நீங்களும் முந்திக்கொள்ளுங்கள்.
பெயர்-உள்ளக் கிடக்கைகள் (கவிதை) நூலாசிரியர்-புவிலக்ஷி කෝණතඛතා - 1CC/=
ஒரு இறுக்கமான வாழ்தலுக்குள் என் இளமைக் காலங்களை கண்ணிருடன் கரைய விட்டுக் கொணி டிருக்கின்ற எனது உணர்வுகளின் , உணர்ச்சிகளின் வெளிப்படுகையானது கவிதைப் பூக்களாக சிதறி விடுகின்ற நீண்ட நெடிய கண்ணிரின் கதைகளை கேட்க என் அருகில் யாருமில்லை' என்ற கவிஞரின் என்னுரையில் சமூக விடுதலைக்காக போராடக்கூடிய வகையில் அவர் கவிதைகள் படைத்திருப்பதை உணர முடிகிறது. அகதி வாழ்க்கை, சமாதானம், சீதனம், ஊடகத்துறை போன்ற பல அம்சங்களை மையமாக வைத்து 23 கவிதைகள், 31 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. மதுவினால் கேடுகெட்டு வாழ்வோருக்கு ஆலோசனை கூறும் கவிதைகளும், பெண்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் கவிதைகளும் இந்த கவிதைத் தொகுதியில் காணப்படுகின்றன. வாசிக்கலாம். U fis856) Tib.
கலை இலக்கிய Jepan சஞ்சிகை
 
 
 
 
 

பூங்காவனம் பற்றி வாசகர்கள்
அழகிய முறையில், ஆழமான விடயதானங்களைக் கொண்டு பூத்துச் சிரிக்கும் பூங்காவனம், தனது நறுமணத்தால் என் இதயம் கவர்ந்தது. நாட்டின் பல்வேறு திசைப் படைப்பாளிகளும் பூங்காவனத்துக்கு பங்களிப்பு செய்திருப்பது வரவேற்கத்தக்க விடயமாகும்.
இன, மத வேறுபாடுகளைக் கடந்து சிந்திக்கும் ஆற்றல் கொண்ட ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
கவிஞர் ஷெல்லிதாசன்
சமீப காலமாக நான் மிகவும் விரும்பிப்படிக்கும கலை இலக்கிய சஞ்சிகைகளுள் பூங்காவனம் சஞ்சிகை முக்கியமான ஒன்றாகும். தளிர் விட்டெழும் புதிய படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுத்து அவர்களது எழுத்துக்களுக்கு உரமூட்டும் வகையில் அவர்களது புத்தாக்கங்களை புகைப்படங்களுடன் பிரசுரிப்பது, நான் இச்சஞ்சிகையை விரும்பிப் படிக்கக் காரணமாகும். அது என்னை மிகவும் கவர்ந்தீர்த்தது.
அன்று பல சிறுகதை ஜாம்பவான்கள் உருவாக இந்தியாவின் மணிக்கொடி சஞ்சிகை இளம் எழுத்தாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியது போன்று, இன்றைய தலைமுறையினருக்கு பூங்காவனம் இலைமறை காய்களாக உள்ள திறமையானவர்களுக்கு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுப்பது என்னுள் பேருவகையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பணி மேலும் பல ஆண்டுகளுககு தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
முஹம்மத் சப்ரி - பூவலிகடை
பூங்காவனம் நான்காவது சஞ்சிகையை வாசித்தேன். அருமையான படைப்புக்ளைப் பிரசுத்திருக்கிறீர்கள். நன்றி. பூங்காவனம் சஞ்சிகையை தொடர்ந்து வாசிக்கும் வாசகன் என்ற வகையில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் சமமாக நடாத்தி ஆக்கங்கள் பிரசுரிக்கும் ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த UTJT (8ä5856i!
பொல்கஹவெல - சப்ரான் முஹம்மத்
Categocio მიაძiშfმu; зорѣ gidion, M: N

Page 25
பெயர்-பெருவெள்ளக்காவியம் (கவிதை) நூலாசிரியர்-மருதூர் ஜமால்தீன் தொலைபேசி - O752 798958 வெளியீடு-மருதம் கலை இலக்கிய வட்டம் 6.f606 - 20/=
பெயர்-முஹம்மது(ஸல்) புகழ்மாலை (கவிதை) நூலாசிரியர்-மருதுர் ஜமால்தீன் 65II6O)a)(3 Jaf - O752 798 958 வெளியீடு-மருதம் கலை இலக்கிய வட்டம் 6,606 - 3Of
அக்கு: பெயர்-அக்குரோணி (கவிதை)
?ဂ္ဂိ நூலாசிரியர்-மன்னார் அமுதன்
தொலைபேசி - O71 444224 வெளியீடு-மன்னார் எழுத்தாளர் பேரவை afsoda - 25C/=
பெயர்-முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் நூலாசிரியர் - த. சிவசுப்பிரமணியம் (தம்புசிவா) வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட். விலை-50/- (இந்திய விலை)
 
 
 
 
 
 

பெயர்-ஒரு யுகத்தின் சோகம் (கவிதை) நூலாசிரியர்-மன்னுரான் ஷிஹார் G).5II6O)6)63Ljaf - O7) 45OOl8l வெளியீடு- மன்னார் எழுத்தாளர் பேரவை விலை-18O/=
tးရှိစ္ဆ!၄%ကို
பெயர்-ஒரு காலம் இருந்தது (கவிதை) நூலாசிரியர்-மூதுர்முகைதீன் வெளியீடு-மூதுர் கலை இலக்கிய ஒன்றியம் 6.5606 - 15O/F
: :ள்ே
பெயர்-புதிய பாதை (கவிதை) நூலாசிரியர்-செ. ஞானராசா தொலைபேசி - O26 3267891 வெளியீடு-சர்வீனா வெளியீட்டகம் விலை-125/-
பெயர்-கண்ணிர் வரைந்த கோடுகள் (கவிதை) நூலாசிரியர் - நிஹாஸா நிஸார் 6) IT60)apC3Lief - O77 44246O4 வெளியீடு-வேகம் பதிப்பகம்
කiඛතබර් - 12C/=
Togoஇலக்கிய Japa, சஞ்சிகை

Page 26
༈ Genuine Jewellery & Latest Designs
Address : No. 76, Galle Road, Moratuwa, Sri Lanka.
Te : 01.1732.9999,072732.9999,0777 8.89923
With Best Compliments From:- J.P. Jayaram J.P
%င့ဖြိုဖွံဖြိုး၊ *** AKWA KWA Y is Proprietor
DEALERS INJUTE GUNNY BAGS, TEACHEST, TWENE & POLY THENE IMPORTERS OF ALL TYPE OF JUTE FTEM S., PA PER INDIAN'S, CHINESE JAPANE 'S CELLOPHANE
Address : 118/7, S.R. Sarawanamuthu Mw, (Wolfendhal Street), Colombo - 13, Sri Lanka.
Te : 011 2445615, 2348430, 2345099, 2345142 Fax : 94- 1 - 2330164.
E-mail : jaya ramb@slit.net.lk
With Best Compliments From:-
Address : No. 16, Ediriveera Avenue, Dehiwala, Sri Lanka.
Mobile (0773235543
"தென்றலின் வேகம்’ கவிதைத் தொகுதியைப் பெற விரும்புவர்கள்
Bank Of Ceylon, Dehiwala Branch, M.F. Rimza, ACNo 1-2017143 என்ற இலக்கத்திற்கு 200/= காசை வைப்பிலிட்டு அதன் பற்றுச்சீட்டையும், காசுக் கட்டளைகளாயின் (M.F Rimza - Dehiwala Post Office) என்று குறிப்பிட்டு அதற்கான பற்றுச்சீட்டையும் பின்வரும் முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
Rimza Mohamed, 21 E. Sri Dharmapala Road, Mount Lavinia. Mobile: - 077 5009 222
க்கிய சமூக சஞ்சிகை
 
 
 
 
 
 
 
 
 

With Best Compliments From...
LUCKYLAND BISCUITTMANUFACTURERS
NATTARANPOTHA, KUNDASALE, SRI LANKA TEL-0094-081-24205742420217. FAX-0094-081-2420740 Email-luckylandG}sitnet. Ik

Page 27
With Best Compliments From.