கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகில இலங்கைத் தமிழ்த் தின, திருகோணமலை விழா மலர் 1971

Page 1

9 / 1.

Page 2
விழாக்கு
gGO)ů M.
திருக்கோணமலை வட்ட

ழுத் தலைவர் :
ஷெரீப் அவர்கள், -ாரப் பிரதம கல்வி அதிகாரி.

Page 3
திருக்கோணம
86, 9-10 TD

கத் தமிழ்த் தின,
லை விழா மலர்
urgFiluri :
ராசரத்தினம் கேஸ்வரன்

Page 4
விழாமலர் வெளி
பண்டிதர் சி. வயிரமு புலவர் பெ, பொ. சி திரு. தா. பி. சுப்ட் செல்வி செந்தில்மணி திரு. வ. அ. இரா திரு. க. உமாமே

பீட்டுக் குழுவினர்:
த்து, B. A. அவர்கள் வசேகரனுர் அவர்கள் பிரமணியம் அவர்கள் ரி வடிவேலு அவர்கள் சரத்தினம் அவர்கள்
கஸ்வரன் அவர்கள்

Page 5
கெளரவ கல்
கலாநிதி, அல்ஹாஜ் பதியுத்தி
அகில இலங்கைத் தமிழ்த்தினத் மாக வெளியிடப்படும் மலருக்கு இ பெரு தோறு
C 1/60/ up It ii 6. (lst / 2. தோறு 62 62J6)f. df/1/0.
.ss) 76öf
} (O /انگینابع தமிழ் ä7് குறிப்
இவ்வருடம் திருக்கோணமலைய செய்திருப்பதும் மகிழ்வுறத்தக்க ஒரு மக்கள் வாழும் யாழ்ப்பாணம், மட்ட முன் இவ்விழாக் கொண்டாடப்பட் மன்றி, பல இனத்தவரும் வாழும் சிறப்பாக நடாத்தத் தமிழர், முஸ்லிம் கொடுத்துத் தேசிய ஒற்றுமையை அரசாங்கத்தின் முக்கிய நோக்கமும் அளவில்லா மகிழ்ச்சி யடைகின்றேன்
தமிழ்த்தின விழாவை ஞாபகப் இம்மலர் தமிழ்பேசும் மக்கனது ம1 ஆர்வங்கொண்ட அனைவரதுங் கரு எனது ஆவல். வெளியீட்டுக் குழுவி பிரார்த்திக்கின்றேன்.
6-9-71
 

வி அமைச்சர் ன் மகமூத் அவர்கள் வழங்கிய
செய்தி
தின் மூன்றவதாண்டு விழா ஞாபகார்த்த ந்த ஆசிச்செய்தியைக் கொடுப்பதில் மகிழ்ச்சி யடைகின்றேன். ஆண்டு 1ந் தமிழ்த்தினப் போட்டிகளை நடாத்தி வ, மாணவியரது அறிவையும் தமி பத்தையும் வளர்க்கக் கல்விப் பகுதி ]கின்றது. அதே நேரத்தில் வருடந் /ம் இப்படியாக ஒரு மலரையும் 'யிட்டு, நமது நாட்டின் கலை, கலா மொழித்திறன் ஆகியவை சம்பந்த ஆராய்ச்சியி லீடு பட்டுள்ளோரின் வை அனைவரும் அறியச் செய்ய, த்தின விழா சம்பந்தமான ஒழுங்கு செய்யுங் குழு முயற்சி செய்வது (பிடத்தக்க ஒரு முயற்சியாகும்.
பில் தமிழ்த்தின விழாவை ஒழுங்கு நிகழ்ச்சியாகும். பெரும்பாலும் தமிழ் .க்களப்பு ஆகிய இடங்களில் இதற்கு டது. தமிழ்பேசும் மக்கள் மட்டு திருக்கோணமலையில் இவ் விழாவைச் கள், சிங்களவர் தமது ஒத்துழைப்பைக் வலியுறுத்த முனைந்துள்ளனர். மக்கள் இதுவே என்பதனை நினைக்க நான்
f. படுத்தும் முகமாக வெளியிடப்படும் ட்டுமன்றி, கலை கலாசார வளர்ச்சியில் வூலமாக விளங்கவேண்டு மென்பதே ன் முயற்சி வெற்றிபெற இறைவனைப்
அல்ஹாஜ் பதியுத்தீன் மகமூத்
iii

Page 6
தகவல் ஒலிபரப்பு ெ ஜஞப் ஏ. எல். அப்துல் ஆசிச்
அகில இலங்கைத் தமிழ்த் தின வி பெறுவதையிட்டு என்னுடைய மகிழ்ச்சிய கொள்கிறேன்.
தமிழ் மொழியினைத் தாய் மொழியா, யாகக் கொண்டவர்களுக்கும், தமிழுக்கு வி செல்வங்களையும் பிரதிபலித்துக் காட்டுவத இன்றது. இவ்வேளையில் நம்முடைய முழு பெரும் வெற்றிகளை ஈட்டித்தரும், உலகிலு லும், நம் தமிழ் மொழியில் இருப்பதுபே அவற்றில் முழுமையாகத் தரிசிக்க முடி ஒன்றைக் குறித்தே நாம் தனிக் களிப்பும், !
தமிழ் மொழியில் உள்ள வளமும், து களில் இருந்தால் மட்டும் போதாது. அை சிந்தனையில், செயலில் இடம்பெறல் வேை எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் சிற்பி கத்திடம் இலங்கைப் பொதுமக்கள் கையளித் செயலாற்ற வேண்டும். அரசியல்வாதிகளை மாணவர்களாலும்தான் தமிழ்மொழி வளத்தி தேசிய வளத்துக்கு இந்நாட்டு மக்களில் சமூகத்திற்கு அவர்களால்தான் வித்திட முடி
மக்கள் மத்தியிலே விஷவித்தாக வ பிராயம் - பித்தலாட்டம் முதலானவற்ை யும் - உண்மையான நிலையையும் எடு வேண்டும். ** யுத்தத்தை மூட்டி மனித இன வாழ்வின் சகல கோணங்களிலும் பின்னி காண இந்த இழிவு ஒழிக்கப்படல் வேண் கலாசாரச் செம்மல்களாகிய ஆசிரிய சமூகம் வேண்டும். இந்தப் பணி, செம்மையாகத் யான வளர்ச்சியினை எவரும் தடை செய்ய
தமிழ் மொழி உலகத்தவர் அனைவரு யாகும். அஃது எந்தவொரு தனிப்பட்ட
திருக்கோணமலையில் தமிழ்த் தின விழா என்னுடைய வாழ்த்துக்களையும் ஆசிகளையு! வாழ்க தமிழ் வ
18-9-71
iv

களரவ உதவியமைச்சர் மஜீது. பா. உ. அவர்களின் செய்தி
ழா இம்முறை, திருக்கோணமலையில் நடை பிணையும் - வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
கக் கொண்டவர்களுக்கும், போதன மொழி ழா எடுப்பதோடு தமிழில் உள்ள கலைச் ற்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக் த் திறமையினையும் ஈடுபடுத்தி உழைப்பது 1ள்ள எந்த மொழியினை எடுத்துக் கொண்டா ால், இயல், இசை, நாடகச் சிறப்புக்களை யாதிருப்பதை அவதானிக்கலாம். இஃது பெருமையும் அடையலாம்.
உப்பும், இனமையும் டண்டைய இலக்கியங் வ நமது உள்ளத்தில், உடம்பில், மூச்சில், ண்டும். ஆசிரிய சகோதர - சகோதரிகள்
கள். எனவே அவர்கள், மக்கள் அரசாங். திருக்கும் பெரும் பொறுப்பினை உணர்ந்து விட ஆசிரியர்களாலும், பெற்ருேர்கனாலும், னே உயர்த்திக்காட்ட முடியும். இந்நாட்டின் பெரும்பாலோர் விரும்புகின்ற சோஷலிச உயும் என்பதை அவர்கள் மறக்கலாகாது.
பிதைக்கப்படுகின்ற சந்தேகம் - தப்பபிப் ற ஒழித்துக்கட்டி, தெளிவான சிந்தனையை த்துரைக்க ஆசிரிய சமூகம், ஒன்று திரள த்தினை அழிக்கும் தப்பயிப்பிராய அரக்கன், க்கிடக்கும் தீராப்பீடை 1 சாந்தி சுபீட்சம் டும்’ என்ற கருத்தினை மனதிற் கொண்டு ம் தங்களுடைய பணியினை மேற்கொள்ள தொடருமானல் தமிழ் மொழியின் செழுமை முடியாத சூழ்நிலை உருவாகிவிடும்.
க்குஞ் சொந்தமான - உரிமையான மொழி இனத்தவருக்கும் சொந்தமானதல்ல.
வெற்றிபெற உழைத்துவரும் சகலருக்கும் ம் தெரிவித்துக்கொள்கிறேன்.
வளர்க ஒற்றுமை !
ஏ. எல். அப்துல் மஜீது

Page 7
திருக்கோணமலைப் ப திரு. பா. கேமிக
ஆசிச்
திருக்கோணமலை, ஈழநாட்டில் தமிழ இடங்களில் ஒன்ருகும். (* The Town Ceylon.)
ஈழநாட்டின் இலக்கிய பாரம்பரியம், தோன்றி வளர்ந்து வருகின்றது. ஈழத்துப் பூ 180இல் வாழ்ந்தவர் என்பது தமிழ் இல
ஈழநாட்டின் தமிழ் இலக்கியப் ப. களும் பங்குபற்றிச் சிறந்த பணியாற்றியு சட்டம்பி தம்பையர், கதிரித்தம்பிப் ! திரு. வே. அகிலேசபிள்ளை முதலானேர் 8 இன்ருர்கள்.
அகில இலங்கைத் தமிழ்த் தின விழா வது மிகவும் பொருத்தமானதாகும். திருக் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். அடைந்துள்ள சிறந்த வளர்ச்சிக்கு ஆசிரிய யைத் தெரிவித்துக்கொள்கிறேன். வருங்கான இன்னும் சிறந்த வளர்ச்சியுற ஆசிரி வேண்டுமென்பது என் அன்பான வேண் வெளியிடப்படும் இம்மலரின் மூலம் என கின்றேன்.
திருக்கோணமலை,
I 6-9-71.
飞系 Encyclopaedia Britanica Vol. 22, P

ாராளுமன்ற உறுப்பினர் ாதன் அவர்களின்
செய்தி
ர்கள் ஆதியில் குடியேறிய முதன்மையான was one of the first settlements in
ஈழத்துப் பூதன்றேவனர் காலம் முதலாகத் பூதன்றேவனர் கடைச்சங்க காலமாகிய கி. மு. க்கிய ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.
ணியில் திருக்கோணமலைத் தமிழ் அறிஞர் ள்ளனர். வித்துவான் சு. தம்பையாபிள்ளை, /6яр62Јў, திரு. த. கனகசுந்தரம்பிள்ளை, சிறந்த தமிழ் அறிஞர்கனாக விளங்கியிருக்
இவ்வாண்டு திருக்கோணமலையில் நடைபெறு கோணமலையில் இவ்விழா நடைபெறுவதில்
இன்று திருக்கோணமலை கல்வித்துறையில் பப் பெருந்தகையினருக்கு நான் என் நன்றி 2த்தில் திருக்கோணமலை, கல்வித் துறையில் பர்கள் சிறந்த முறையிற் பணியாற்ற 1டுகோள். தமிழ்த் தின விழாவையொட்டி * நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளு
பா. நேமிநாதன்
age 477.

Page 8
γi
மூதூர்ப் பாராளு திரு. அ. தங்க! ஆசிச்
அன்று அரசர் ஆண்டனர். மொழியை வளர்த்தனர்; போற் இல்லை. பதிலாக அரசு ஆளு எதிர்காலச் சிற்பிகளான, இன்ன களை ஊக்கப்படுத்தி வெளி இலங்கைப் பாடசாலைகளுக்கில களின் இறுதி நிகழ்ச்சி, தமிழ், குறித்து மகிழ்ச்சி.
வரலாறு, புவியியல், புராண துறைகளில், அகில உலக நகரில் இம்முறை, தமிழ்த் தின சிறப்பிக்கு முகமாகத் தரமா6 பெருமைக்குரிய செயல்களாகு
விழாவும் மலரும் சிறப்ெ என் ஆசிகளை அளிக்கிறேன்.
"கிளிவெட்டி,
6-9. , 97

நமன்ற உறுப்பினர் த்துரை அவர்களின்
செய்தி கூடவே, சங்கம் அமைத்து தமிழ் றினர். இன்று ஆளுவதற்கு அரசர் கிறது. அந்த அரசு இந்நாட்டின் றய மாணவ மணிகளின் ஆற்றல் க்கொணரும் முகமாக, அகில
டையே நடாத்தி முடித்த போட்டி த் தின விழாவாக நடைபெறுவது
ணம், இதிகாசம் போன்ற பல்வேறு ப் புகழ்வாய்ந்த திருக்கோணமலை விழா நடைபெறுவதும், அதனைச் ண மலர் ஒன்றை வெளியிடுவதும்
50.
பெய்தத் தமிழ்அன்னையை வேண்டி
அ. தங்கத்துரை

Page 9
கல்வி அமைச்சின் நி திரு. பி. 286
ஆசிச் தமிழ்மொழித் தினம் சம்பர் வெளியிடுவதில் மகிழ்ச்சியடை தமிழ்மொழி, தமிழிலக்கியம் ஆ திருக்கும் வழிகளுள் இதுவுெ மாணவர்கள் பங்கு கொள்ளும் மாணவர்களும் பெரும் நன்மை
இத் தினத்தைக் கொண் மொழியை வளர்த்து, மொழிை கண்டு, மொழியிலே பற்றை நாட்டுப் பற்றை வளர்ப்பதா( சமுதாயம் முன்னேற்றப் பாதை நயட்டிலே சாந்தி நிலவும். ெ போதிப்பதும், நாட்டின்மீது ஒரு சமுதாயத்தை உருவாக்குவது நாம் நிறைவேற்றக் கூடியனவா
தமிழ்மொழித் தினத்தால் முடையதாகுக என மனமார வி
கல்வி அமைச்சு,
கொழும்பு, 14-9- 1971.

ரந்தரக் காரியதரிசி ம அவர்களின்
செய்தி
ந்தமான இந்த ஆசிச் செய்தியை
கிறேன். கல்வித் திணைக்களம்
கியவற்றின் வளர்ச்சிக்காக வகுத் மான்ருகும். ஆயிரக்கணக்கான இத்தினத்தில் ஆசிரியர்களும்
யடைவாரென்பது திண்ணம்.
டாடுவதின் முக்கிய நோக்கம் யப் போதிப்பதில் முன்னேற்றங் யுண்டாக்கி அதன் வாயிலாக தம். மொழியால் ஒன்றுபட்ட் நயில் ஒன்று திரண்டு செல்வதால்
0ாழியையும் இலக்கியத்தையும்
பற்றும் விசுவாசமுங் கொண்ட துமே பள்ளிக்கூடங்கள் மூலமாக கும்.
நாம் பெறும் பலன் பூரண பாழ்த்துகிறேன்,
பி. உடகம
vii

Page 10
Viji
கல்வி அமைச்சின் பிர
திரு. யூ. டி. ஐ. சி
ஆசிச்
ஆரம்ப, கனிட்ட வகுப்புக்க அறிவை வளப்படுத்துவதற்க தினங்களைக் கல்வி அமைச்சு ஒ வாண்டு சிங்கள மொழித் தினம் , தினம் திருக்கோணமலையிலும் ந நடைபெறும் மொழித்தினங்களி கல்வி அமைச்சர் சமுகமளித்து யும் ஊக்குவிக்க இருப்பது மகி
திருக்கோணமலையில் நடைெ துறைகளிலும் நிறைவுபெறக் கரு கும் ஆசிரியர்களுக்கும் மாணவர் நன்றியையுந் தெரிவித்து இவ்வி கூறுகின்றேன்.
கல்வி அமைச்சு,
கொழும்பு , 16-Ꮽ -- Ꭵ 97 1 .

தி மகா வித்தியாதிபதி றிசேணு அவர்களின்
செய்தி
ரிலே மாணவர்களது தாய்மொழி 1க அனைத்திலங்கை மொழித் முங்கு செய்திருக்கின்றது. இவ் மாத்தறையிலும், தமிழ் மொழித் டைபெறுகின்றன. இவ்வாண்டு ன் நிறைவரங்குகளுக்குக் கெளரவ மாணவர்களையும் ஆசிரியர்களை
ழ்ச்சிக்குரியதொன்ருகும்.
பறும் தமிழ்மொழித் தினம் சகல நமமாற்றுஞ் சகல அதிகாரிகளுக் களுக்கும் எனது பாராட்டுதலையும் விழா இனிது நிறைவேற நல்லாசி
யூ. டி. ஐ. சிறிசேன

Page 11
கல்வி அமைச்சி திரு. வே. நடரா
ஆசிச்
கல்வி அமைச்சு, பாடசாலைகளிலே பகுதியாக அகில இலங்கைத் தமிழ்மொழி
மொழித்தினம், மொழிப்பாடத்திற்குரிய இது மொழிப்பாடத்திற்குரிய சிறந்த பிரே தினத்தின் முக்கிய அங்கமான மொழித்திறன் விடயங்களுடன் தொடர்புடையன வாதல) மாணவர் கற்கவும் ஏதுவாகும். வகுப்பு மாணவர் ஆயத்தம் செய்வதால், சகல ம1 வாசித்தல், எழுதுதல், பேசுதல் ஆகியவை
கல்வித்துறையில் இன்று ஏற்பட்டுே மொழிகள் ஆட்சித் துறையிலும் கல்வித் து இத்தினம் உணர்த்துகின்றது. சிந்தனைத்திற வைகளை மாணவரிடத்தில் உருவாக்கி நர்ட்டி
மொழித்தினத் திட்டத்திற்காகக் கல்வி கின்றது. இதனை நன்கு நடைமுறைப்ப்டு யுள்ளது.
வரலாற்றுப் பெருமை பெற்ற திருமை திறன் போட்டிகளோடு, கல்விப் பொருட் பெறுகின்றது. கெளரவ கல்வி அமைச்சர் மிக மகிழ்ச்சிக்குரியதாகும். கல்வி அமைச் தின விழா இதுவேயாம். ஆகவே, இல் பெருமை பெற்றதாகும்.
இவ்விழ4 எல்லா வகைகளிலும் பெ காலக் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளி1 விரும்புகின்றேன்.
கல்வி அமைச்சு,
கொழும்பு 2, 6-9 - 7.
ii

ன் வித்தியாதிபதி "சா அவர்களின்
66 fud
நடைமுறைப்படுத்தும் மொழித்திட்டத்தின் த் தினம் நிகழ்கின்றது.
இணைப்பாடவிதான முயற்சிகளுள் ஒன்ருகும். பாகப் பயிற்சியாக அமைகின்றது. மொழித் போட்டிகள், வகுப்புக்களின் o:* 1ற் கருத்துடன் ஆசிரியர்கள் கற்பிக்கவும் நிலையில் மொழித்திறன் போட்டிகளுக்கு 1ணவரது மொழித்திறனும் வளர்ச்சியடையும். களிற் காணப்படும் குறைபாடுகள் நீங்கும்.
ள்ள மறுமலர்ச்சியையும், எங்கள் தேசிய துறையிலும் அடைந்துள்ள முதன்மையையும் ன், நல்ல பண்புகள், தேசியப்பற்று ஆகிய -ன் வருங்கால வளர்ச்சிக்கு வழி வகுக்கின்றது.
அமைச்சு, சகல ஊக்கங்களையும் அளிக் த்துவதிலேயே இதன் பெரும்பயன் தங்கி
லயிலே நிகழும் இவ்விழாவினிலே மொழித் காட்சியும், கலாச்சார நிகழ்ச்சிகளுள் இடம்
அவர்கள் இவ்விழாவிலே பங்குபற்றுதல் சர் ஒருவர் கலந்துகொள்ளும் முதற் தமிழ்த் விழா முன்னைய தமிழ்த்தின விழாக்களிலும்
நஞ் சிறப்பும் பயனும் உள்ளதாகவும், வருங் ப்யதாகவும் அமைய வேண்டுமெனப் பெரிதும்
Ge. L-TF
ix

Page 12
கிழக்குப் பிராந்தி
ஜனுப். முகம்மது
ஆசிச்
அகில இலங்கைத் தமிழ்த் தின விழா நடைபெறுவதையிட்டு நான் பெரு மகிழ் களப்பில் நடந்ததைவிட, திருக்கோணம என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில் டாக்டர் அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூத் அவ கலந்து கொள்வதனுல் இவ்விழா இன்னும்
கிழக்கு மாகாணம் புண்ணியம் செ மாவட்டம் தமிழை வளர்த்தது. அதற்.ெ மேன்மேலும் அணி செய்கிறது. தமிழுக்கு மரபை, பாரம்பரியத்தை வளர்க்கிறது. சமாதானத்தையும், சமதர்மத்தையும் வ திருநாடு இன்று சமாதானத்தையே தேட வாக்குவதற்கு - கிழக்கு மாகாணம் முயற் பதைக் கூறிக்கொள்வதில் பெருமையடை!
இன்றைய இளம் சந்ததியினருக்கு ந என்ன ? பண்டைய பாரம்பரியத்தை, ம கட்டுக்கோப்பைச் சின்னுபின்னமாக்காமல் அறிவை வழங்குவதுதான் இன்றைய கல்வி மாக எம் முன்னேர்களினுற் பாதுகாக்க களினற் சீர்குலையக்கூடாது.
வரலாற்றில் - சாம்ராச்சியங்கள் வீழ் உண்மையில் பழைய நாகரிகத்தின் அத்தி யையே எடுத்துக் காட்டுகின்றன.
இன்றைய மனிதனின் வாழ்வில் பல்ல அவனுடைய உருவ அமைப்பிலும் சரி, சரி... . இந்த வளர்ச்சியைத்தான் ந வளர்ந்துவந்த இந்த நாகரிகத்தில் ஊ சமுதாயமாற்றத்தைப் பலவந்தமாகக் கொ நாமே குத்திக்கொள்வதற்கொப்பாகும்.
X

ய வித்தியாதிபதி
சமீம் அவர்களின்
செய்தி
இவ்வாண்டும் கிழக்குப் பிராந்தியத்திலேயே
ரச்சியடைகிறேன். கடந்த ஆண்டு மட்டக் லயில் இவ்வாண்டு சிறப்பாக நடைபெறும் லை. எமது மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் ர்கள் இவ்விழாவில் பிரதம அதிதியாகக்
சிறப்படைகிறது.
ய்த பூமி. பண்டைய காலத்தில் மதுரை காப்ப இன்று கிழக்கு மாகாணம் தமிழுக்கு } அணி செய்வதால்-தமிழ்ப் பண்பாட்டை, தமிழ்ப் பண்பாட்டின் அத்திபாரமான ார்க்கிறது. எமது தாய்நாடான ஈழமணித் டி அலைகிறது. அந்தச் சமாதானத்தை உரு சிகள் செய்து முன்னணியில் நிற்கிறது என் கிறேன்.
ாம் வழங்கும் கல்வியின் முக்கிய நோக்கம் ரபை, பண்பாட்டைப் பாதுகாத்து சமூகக்
புதிய சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய யின் முக்கிய நோக்கமாகும். காலம் கால ப்பட்டு வந்த பண்பாடு புதிய மாற்றங்
ந்தன, நாகரிகங்கள் அழிந்தன என்பவை பாரத்தில் புதிய நாகரிகம் எழுந்த கதை
}ாயிரம் வருடங்களின் வளர்ச்சியிருக்கிறது. அன்ருட வாழ்க்கையிலும் சரி, அறிவிலும் ாம் காண்கிருேம், வாழையடி வாழையாக றிய சமூகப் கட்டுக்கோப்பை உடைத்து, "ண்டுவர எத்தனிப்பது நம்முடைய கண்ணை இது வரலாறு தெரியாதவர்களின் சிறு

Page 13
பிள்ளைத்தனமான செய்கையாகும். மாற் தோன்றவேண்டும். அப்படித் தோன்றும்ே இயற்ைைக.
பண்டைய காலத்தில் தோன்றிய எத்த விட்டன. ஆனல் தமிழ்மொழி இன்றும் யாக இருப்பதற்குக் காரணம் அது வளர் நாடுகளில் சாம்ராச்சியங்கள் தோன்றியி தமிழ் நாகரிகம், பண்பாடு என்றும் அ கின்றன. சமாதானத்தின் மூலமே இந்த
போர்களும், யுத்தங்களும் மன்னர்களி அப் போர்கள் சமுதாயத்தைப் பாதிக்கவில் அடியில் அமைதி தோன்றுவது போல, த வந்திருக்கின்றது. இந்தச் சமாதானம் எ ஈழநாட்டு இளம் சந்ததியினர். எதிர்காலத் வேண்டுமானுல், அவர்களிடையே சமாதா சமாதானத்தை இளம் சந்ததியினரிடையே மூலமும், சமாதானத்தையே அடிப்படை வளர்ப்பதன் மூலமும் இந்தச் சமாதான
ஆகவே, தமிழை வளர்ப்பதன்மூலம் தி பண்பாட்டை வளர்ப்பதன் மூலம் சமாதா சமுதாயத்தை வளர்க்கிருேம். அந்த வ தின விழா ஒரு மைல் கல்லாக அமையும் எ

றங்கள் சமுதாயம் என்ற அமைப்பிலேயே பாது பழையது மாறிப் புதியது அமைவது
நனையோ மொழிகள் இன்று அழிந்தொழிந்து தன் மரபோடு உருவம் மாருமல் பசுமை *த்துவந்த பண்பாடாகும். தமிழ் வளர்த்த ருக்கின்றன; அழிந்திருக்கின்றன. ஆனல், ழியாமல் மேன்மேலும் வளர்ந்து வந்திருக் ப் பண்பாடு வளர்ந்திருக்கின்றது.
டையேதான் ஏற்பட்டிருக்கின்றன. ஆனல் லை, ஆழ்கடலில் புயல் வீசினலும், கடலின் தமிழ்ச் சமுதாயம் அமைதியாகவே இருந்து மக்கு இன்று மிகவும் அவசியமாகும். நம் ந்தில் அறிவில், ஆற்றலில் ஏறுநடை போட ானம் நிலவவேண்டியது அவசியம். இந்தச் புகுத்தவேண்டியது நம்பொறுப்பு. கல்வியின் யாகக் கொண்டுள்ள எமது பண்பாட்டை த்தை நிலவச் செய்யலாம்.
தமிழ்ப்பண்பாட்டை வளர்க்கிறுேம். தமிழ்ப் னம் என்ற பண்பைப் போற்றி வளர்க்கும்
ளர்ச்சியை ஏற்படுத்துவதில் இத் தமிழ்த் “ன்பதில் நான் பெரிதும் பூரிப்படைகிறேன்.
க்கம்,
முகம்மது சமீம்
Xi

Page 14
திருக்கோணமலை மாவட்ட
தமிழ்த்தின விழா-1971 ஆலே
திரு. கனகரத்தினம் செல்


Page 15
தமிழ்த்தின
திரு. பெ. பொ. சி
நீண்டபெரு மாவலியும் நீர்பா நீண்டுயர்ந்த மாமலைக ளோடு நீண்டுவளர் தென்னைமரத் தே நீண்டதமிழ்ப் பா வளமும் சோ
தமிழ்பயிலும் மாணவர்கள் த எமதரசின் கல்வியமைச் செண் தமிழ்த்தினமொன் றேற்படுத்தி
தமதரிய மேம்பாட்டைக் காட்
சிறப்பிக்க வந்திருக்கும் செய்ய உறுப்பினராய் நின்றுபணி யா பொறுப்புடைய நல்லமைச்ச ( சிறப்புடையார் யாவருக்கும் ே
தினத்தினுள் சிறந்தது தமிழ்த் மனத்தினுள் பிறந்தது ; தமிழ் நினைத்திடற் கரியது ; நிறைத6 இனத்தினை உயர்த்திட எழுந்த
ஆயிரத்துத் தொளாயிரத்தின் ஆண்டினிலே ஒக்டோபர் சேயர்மகிழ் நல்லிரண்டாந் ே
திருக்கோண மாமலையில் தூயதமிழ்த் தினவிழாவே வா திசையுனது புகழ்பரப்பி இ நீயமுத வளமாக்கி நிறைவு ந
நீடூழி நிலைபெற்று வாழி

வாழ்த்து
வசேகரன்
'யும் ஆறுகளும்
சிறு குன்றுகளும், ாப்புகளும் நெல்வயலும் fழ நீர்நாட்டில், I
ம்மொழியில் தேர்ச்சியுற 1ணியமைத் திட்டபடி த்ெ தக்கபே ரீட்டியவர் டுகின்ற இவ்விழாவில்,
2
பெரி யோர்த மக்கும் ற்றுகின்ற உத்தமர்க்கும் ரோடுபணி யாற்றுகின்ற செந்தமிழால் வாழ்த்துகிருேம்.
*தினம் அமைச்சர் மணச் சிறப்பால்
வப் புதல்வர்
து இன்றே, 4
எழுபத் தோராம் மாதம் பள்ளிச்
நதி தன்னில்
நடக்கும் நல்ல
ழி : எட்டுத்
இளைஞர் வாழ்வை
ல்கி
நீயே. 5
xi ii

Page 16
பாடசாலை கல்லூரி பள்ளிக்கூடம்
நாடுசெழிக்க நல்லமைச்சர் பீடுபெறநம் மாணவர்கள் பிறந்: வீடுவீடாய்த் தமிழ்மணக்க 6
கலைகள் பயிலும் மான
கற்றுத் தேர் உலகில் பயிலும் மொ உயர்ந்து விள புலமை வளரச் செய். புகழ்சேர் அ6 நலமார் தொண்டு இ நாட்டில் ஓங்!
வாழி கல்வி அமைச்ச
வாழி கல்வி வாழி கல்வித் திணைக்
வாழி கல்வி
வாழி கல்வி கற்றுவரு வளமார் இவ வாழி கல்விக் கூடங்க வாழி தமிழை
தமிழ்த்தின விழா
தமிழ்மணங் கமழும் தமிழ்த்தின ( அமிழ்தினும் இனிய அரியநல் லுல இமிழ்கடல் இலங்ை இளைஞரின் இ குமணணுர் உள்ளம்
கொடைநலம்
Χιν

யாவினுமே நன்குவகுத்துத் திட்டமிட்டுப் நநாட்டிற் கணிசெய்ய விரைந்துசெய்யும் பணிவாழ்க
ணவர்கள் ந்து தமிழ்மொழியை ாழிகளைப்போல் ாங்கி மேன்மையுறப் துவரும் மைச்சர் பெருமகனர் லங்கைவள கி வாழியவே.
Friu u 6Ooi) ; அலுவலகம் ; களங்கள் ; பயிற்றிடுவோர் ; ம் ாமைச் சமுதாயம்; ள் ; ழ வளர்ப்பவரே.
மலர் வாழ்த்து
புதுமைத் விழா வுதித்த
மலரே ரைகள் தாங்கி க நாட்டின்
லக்காய் நின்று போலக்
பொலிய வாழி,

Page 17
நுழைவு
அகில இலங்கைப் ப தினப் போட்டியும் விழா கோணமலையில் நடைபெ விழா நினைவாக ஒரு ம6 என விழாக் குழு தீர்மா வெளியிடும் வாய்ப்பை
குறுகிய காலத்தில் -ப இம்மலரை வெளியிட ( ஏற்பட்டது. பல த கட்டுரைகள் கோரியிரு தபாலில் வந்துகொண்டி வேலைகளையுஞ் செய் எனவே ஓரளவுக்கே 6 முடிந்தது.
இம் மலருக்கு ஆசி பெரியோருக்கும், கட்டு தமிழறிஞருக்கும், மலர்க் மலரைக் குறுகிய காலத் சுன்னுகம், திருமகள் எமது மனமார்ந்த நன்றி

ாயில்
ாடசாலைகளின் தமிழ்த் வும் இவ்வாண்டு திருக் றுவதாக முடிபானதும் 0ர் வெளியிடவேண்டும் னித்தது ; அம்மலரை
எமக்களித்தது.
தினைந்தே நாட்களில் - வேண்டிய நிர்ப்பந்தம் மிழ் அறிஞர்களிடம் ந்தோம். கட்டுரைகள் ருக்கையிலேயே பிரசுர துகொண்டிருந்தோம். எம்மால் மரபு பேண
ச் செய்தி தந்துதவிய ரைகள் எழுதி உதவிய குழு உறுப்பினருக்கும், தில் அழகுற அச்சிட்ட அழுத்தகத்தினருக்கும்
வ. அ. இராசரத்தினம் க. உமாமகேஸ்வரன்
XV

Page 18
XVI
இம்மலரி
கட்டுரைகள்
சுவாமி விபுல பண்டிதமணி
பேராசிரியர் சு அல்ஹாஜ் ஐ செந்தமிழ்மண சைவப்புலவர் ஜணுப் எஸ். இரசிகமணி ச திருமதி கங்ே கலாநிதி க. 6 ஏ. எம். ஏ. திரு. வ. அ. இரா. சிவலி திரு. ஏ. பி.
கலாகேசரி ஆ
கவிதைகள்
வித்துவான் : பண்டிதர் க. t. J Grở đi) đã mỉìu
* அம்பி "
ஆடலிறை
இ, நாகராஜ வ. இளையதம்
* சுமுகன் "

. . . . .0ة
ாநந்தர் சி. கணபதிப்பிள்ளை 5லாநிதி சு. வித்தியானந்தன்
எல். எம் மஷ்ஹ"சர் ரி பொ. கிருஷ்ணபிள்ளை
இ. வடிவேல் எம். கமாலுத்தீன் ான க. செந்திநாதன் கஸ்வரி கந்தையா கைலாசபதி அஸிஸ்
இராசரத்தினம்
ங்கம்
வி. கோமஸ்
யூ. தம்பித்துரை
க. வேந்தனர்
சச்சிதானந்தன்
ப்பர்
9.

Page 19
கவியும்
சுவாமி வி
திருமழி யழகுடைச் செழும்பொருள் தானே
உவகை நீர்மையது; ஆங்கள் வுவகை
பன்னுட் கழியினும் கழியா வியல்பிற்
றண்டா வின்பக் தந்துநிற் பதுவே ? என ஆங்கிலமொழிப் பெரும் புலவ ராகிய கீற்சு (Keats) என்பவர் தாம் இயற்றிய எந்திமியோன் (Endymion) என்னும் பெருங் காப்பியத்திற்குத் தோற்றுவாய் கூறினர். ‘அழகுடைப் பொருள் என்றும் உவகை தருவது ; அழியா வின்பத்தின் நீர்மையது ; ஆதலின், அதுவே புலவராற்பாடுதற் கமைந்தது ' என்பது கீற்சு நிறுவிய முடிவு. இப்புலவர் தாமே மற்ருெரு செய்யுளகத்து,
அழகே உண்மை, உண்மையே அழகென
உலகினில் அறிந்தோர் அறிவுபிற வேண்டார்’ எனக் கூறினர். ஈண்டு அழகிற்கு உண்மை ஒப்புடைப் பொருளாகக் கூறப்பட்டது.
அறிவு, இச்சை, செயல் (ஞான சத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி) எனும் மனநீர்மை மூன்றனுள் அறிவு உண்மைப்பா லது , இச்சை அழகின் பாலது செயல் செம்மைப்பாலது. உண்மை, அழகு, செம்மை என்பன முறையே அழிவு, இச்சை, செயலுக்கு எல்லையாகவும் நிலைக்களமாகவும் அமைந்தன.
மனநீர்மை மூன்ருயினும் மனம் ஒன்றே.ஆதலினுலே உண்மை, அழகு, செம்மை யென்பன தம்முள்ளே ஒப் புடையவாயின. அழகே உண்மை, உண்மையே அழகு; அழகே செம்மை, செம்மையே அழகு ; உண்மையே செம்மை, செம்மையே உண்மை.

சால்பும்
புலாநந்தர்
செம்மை, உண்மை, அழகென் னும் இவற்றை வடநூலார் சிவம், சத்தியம், சுந்தரம் என்பர் ; ஆங்கில DIT Giri Goodness, Truth, Beauty
66. If T.
* நெஞ்சத்து நல்லம் யாமென் னும் நடுவுநிலைமையாற் கல்வி யழகே யழகு’ என்பது ‘நெஞ்சத்து நல்லம்’ எனச் செம்மையும், கல்வியழகு என அறிவும், அழகின் வேறின்மை யாதல் கூறப்பட்டது. ‘உருவின் மிக்க தோர் உடம்பினைப் பெற்ருேரும் கல்வியறிவில்லாதவழி அறிவுடை யோரால் அழகிலரெனக் கருதப் படுவராதலின், கல்வியழகே யழகு என்னுமிடத்து வந்த ஏகாரம் பிரி நிலையும் தேற்றமுமாயிற்று.
அழகும் உண்மையும் கவிப்பொரு ளாயினவாறுபோலச் செம்மை வயத் ததாகிய சால்பும் கவிப்பொருளா யிற்று. காப்பியத் தலைவனிடம் காணப்படும் சால்பே காப்பியக் கவி கள் விரித்துக் கூறும் பெரும்பொருள்.
வாழ்க்கையிலே சால்பு வாய்ந்தோ ஞகிய கவிஞனுெருவன் சால்பினைக் கவிப்பொருளாகக்கொண்டு செய்யுள் செய்வானுயின், அச்செய்யுள் இனி மையும் மாண்பும் உறுதியுந் தந்து மிளிருமென்பது அறிஞராயினருக்கு உடம்பாடேயாம்.
புதுவதுகிளந்த யாப்பின்மேற்’ ருகிய கவிதை பேருவரவிற்ருகிய இக் காலத்திலே, தோன்மைகலஞ் சிறிதுங் குன்ருத செய்யுள் செய்யும் புலவர் மிகச் சிலரேயாவர். அப் புல வர்

Page 20
வரிசையிலே முதற்கண் வைத்து எண் ணுதற்குரிய வெள்ளக்கால்கிழார் இயற்றிய தனிச் செய்யுளகத்துக் காணப்படும் கவியழகுகள் பல துறைய. அவை அனைத்தினையும் ஆராய்ந்து கூறப்புகின் உரை பெருகு மாதலின், மக்களைத் தேவராக்கும் நீர்மையதாகிய “ சால்பு' என்னும் பெரும் பொருளினைக் குறித்து, வாழ்க்கையிலே சால்பு வாய்ந்த இப் பெருங் கவி கூறிய பல கவிதை களிலே ஒரு சிலவற்றை யாராய்ந்து அவை தம்முட் பொதிந்த அழகினை எடுத்துக் காட்டுதலே கவியும் சால் பும் என்னும் இப் பொருளுரையின் நோக்கமாகும்,
* அன்புநா ணுெப்புரவு கண் ணுேட்டம் வாய்மையோ, டைந்து சால் பூன்றிய தூண் என ஆசிரியர் திருவள்ளுவனுர் சால்பிற்கு நிலைபே ருவன இவையெனக் கூறுமுகத்தாற் சால்பினது வரைவிலக்கணங் கூறி ஞர். சுற்றத்தார் மேலே யன்றிப் பிறர்மேலு முளதாய அன்பும், பழி பாவங்களினுல் நாணலும், யாவர் மாட்டும் ஒப்புரவு செய்தலும், பழையார்மேற் கண்ணுேடலும், எவ்விடத்தும் மெய்ம்மை கூறலுமே சால்பிற்கு நிலைபேருவன.
என்றும் கல்லோரிணக்கமே நான்இணங் கிடுக நல்லோர் நினைவே நான் நினைந் திடுக ; நல்லோர் உரையே நான் உரைத் திடுக; நல்லோர் நடையே நான் நடந் திடுக;
உயிர்களை வருத்தல் ஒழிவே னுக; உயிர்போ மெனினுமெய் உரைப்பே ஞக ; களவினைக் கனவினுங் கருதே கை;
S S q S S S SSS S L S S S S CS SS SS SS SSS SS SS SS iiS z S S S S S S S SL S S SLL LLLL S

அயலவர் பொருளினை அவாவே னுக; அவர்கள் தம் வாழ்வுகண் டழுக்கறே னுக ; அவர்செயும் நன்றியை அயர்த்திடே கை; முன்புயின் பவர்பழி மொழியே னுக ; எங்கணும் அவர்புகழ் இயம்புவே னுக ; அவர்குறை காண்டலிற் குருடனே ஞக அவர்மறை கேட்டலிற் செவிடனே ஞக; அவர்க்கின்னு கூறலில் ஊமனே ஞக அவர்க்கூறு செய்தலில் முடவனே கை; அவர்கேடு சூழ்தலில் அறிவிலே ஞக; எனைக்கெடுத்தவர்க்கும்கன் றியற்றுவே னுக; கைதவர் தம்மையும் வாழ்த்துவே னுக; வெறுத்தவ ரெவரையும் விரும்புவே னுக; ஒறுத்தவ ருக்கும் உதவுவே னுக ; பகைவர்க்கும் அன்புசெய் பண்பினே கை; இத்தனை நல்லொழுக் கியைந்துளே மென்று பெருமைப ராட்டிடும் பிழையிலே ஞக
என்னை எவரும் இகழினும் புகழினும் செல்வம் என்னைச் சேரினும் தீரினும் இன்றே இறக்கினும் என்றும் இருக்கினும் எவ்வெவ் வின்பையும் எய்துதற் கெனினும் எவ்வெத் துன்பையும் இரித்தற் கெனினும் உண்மை வழுவி ஒழுகே னுக;
எச்செய லெனினும்யான் இயற்றிட 5ேருமேல் என்மனம் அமைதியை இழந்திடா தாக; வருத்தம்என் மனத்தினை வருத்திடா தாக; கடல்மலை வளம் இடு காடுகள் முதலா வெருவிடு தனியிடம் மேவினே ஞயினும் பாய்புலி பிடிக்கினும் பாம்பு கடிக்கினும் என்மனம் நடுக்கினை எய்திடா தாக; அலையா உறுதியுற் றசைக்கவொண் ணேனுய் வச்சிர வெற்பென வற்பினை உற்று விருப்புறு பொருள்கள் விட்டு விலகினும் வெறுப்புறு பொருள்கள் மேவிச் சேரினும் ஒழுக்கம் வழுக்கா உளத்தே னுக;
எனக் கவி ஆண்டவனை வேண்டு முகத்தால் மேலும் மேலும் பெறு தற்குத் தாம் அவாவிய சால்பு எனும் அழியாச் செல்வத்தின் நல்லியல் புகளை வகுத்துரைக்கின்ருர்,

Page 21
யாம் முன்னர்க் காட்டிய ஐந்தி னேடு ‘அழுக்கா றவாவெகுளி யின் ஞச்சொன்னன்கும் இழுக்காவியன்ற அறமும், அஞ்சாமை யீகை, அறிவு ஊக்கம்’ எனும் நான்கும், குடிமை யும், மானமும், பெருமையும், பண் புடைமையும் இதனுட் கூறப்படுதல் காண்க.
* நல்லொழுக் கத்துடன் வாழ்தலே நீடித்த
நல்வாழ்க்கை யாகும் நடைபிறழ்ந்த புல்லொழுக் கம்முடை யோர்கீடு வாழ்ந்தாலும் பொன்றின வர்களே யென்றறிவீர்? எனவும்,
உண்மைக்கு மேலாம் மதமில்லை ; எல்லா
உயிர்க்கன் பின் மிக்கதோர் பத்தியில்லை; வண்மைக்கு மேலுப காரமில்லை; நல்
வசனத்தின் மேலுப சாரமில்லை? எனவும்,
* ஒக்க ஊக்கமோ டுறுதிகம்
உளத்தினுக் குதவி எனவும்,
* விண்ணி டிந்து விழுந்திடு மாயினும் மண்ணில் நீதி வழங்கக் கடவதே ? எனவும்,
* மெய்ம்மைதேர் அறிவினை மேவி யுள்ளவர்
செம்மனப் பாக்கியச் சிறப்பின் ஒப்பிலார் ; தம்மைத்தாம்உடையர்; அத்தகைமைசார்ந்திலா மம்மர்மன் னவரினும் சிறந்த மன்னரே? எனவும்,
உண்மையி னும்முய ரொருமத மும்மிலை; அனைத்துண் மையினுக் களவிலை யாதலால் உண்மை யனைத்தும் உடைய மதமிலை
உண்மை யொன்றும் உருமத மும்மிலை ; எம்மதம் எவ்வளவுண்மையொ டியையுமோ அம்மதம் அவ்வள வுயர்வின தாமால்; மெய்யர் இவர்,பொய் வேடத் தினர்இவர், என்னஐ யுறவின்றி அறியு மாறு உள்ளத் துள்ளதை உணரவல் லார்க்கலால் மற்றவர் உண்மை மதமறி வரிதால்;

மனிதனை மதத்தால் மதியா தொழுக்கால் மதித்தலே உண்மை மதிப்பா குங்காண், * கருமமே யல்லது பிறிதென் கண்ட* தென் றுரைசெய் கம்பன் உட்கருத் திதுவே, எனவும் வருபவற்றுற்ளே சால்பின்
துறைபல செவ்வியுறத் தரப்பட்டிருத் தல் காண்க.
வெள்ளக்கால்கிழாரது வாழ்க்கை யிலும் செய்யுளிலும் இயைந்து நின்ற சால்பின் பொலிவினை உற்று நோக் குங்கால்,
ஆற்றுத லென்பதொன் றலர்ந்தவர்க் குதவுதல் போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல் அன்பெனப் படுவது தன்கிளை செறஅமை அறிவெனப் படுவது பேதையார்சொன்னேன்றல் செறிவெனப் படுவது கூறியது மறஅமை நிறையெனப் படுவது மறைபிற ரறியாமை
பொறையெனப் படுவது போற்றரைப் பொறுத் (தல், எனும் கல்லந்துவஞர் கூற்று நினை விற்கு வருகிறது.
இம் முதுபெரும் புலவர் நம்ம னேரை நோக்கி, ருபெர்ட் பிரவுணிங் ( Robert Browning) GT GD) Lib s, ši 66v மகாகவியின் உரையே தம்முரையாக,
என்ணுெடு
யாண்டுபல வாக நீவிரும் வாழுமின் ; காண்டகு செம்மை ஈண்டுதற் குரிய : நாள் பல வாக நலம்பல பெறுகுவீர்; வாணுள், பின்னவைக் காக முன்னவை யியைந்தன; “அனைத்தும் ஒருபிழம் பதனுள் இளமை ஒருபாற் பயனை உணர்த்தும்; மற்றெருபால் அமைதியுங் காண்மின்; அச்சம் அகற்றுமின் நாதனை நம்புமின்,’ எனஅவன் நவின்ற போதம் உளநம் வாளுள் அனைத்தும் அவன்திருக்கரத்தில் அமைந்தன கண்டீர்,”
என அறிவுரை கூறி வாழ்த்துவார் போலும்.

Page 22
இலக்கணம் கற்பது, கற்பிப்பதென்ருல் ஏே காட்டில் விட்டதுபோலத் திகைக்கும் மாணவருலகுக்குப் பண்டிதமணி அவர்
*ப்பூ! இவ்வி
பண்டிதமணி சி.
* பூ என்ருல் பொருள் தெரி யுமா p -
* ஆம், ஒருவகைப்பூ, பூ விசேடம் எனினும் அமையும் ‘’.
** இரண்டாம் பொருள் மிகக் கடினம், இருக்கட்டும். பூ, என்ருல் எத்தனை பூ ? ’’
**இது என்ன கேள்வி ? பூ என்ருல்
* அப்படியா, சரி. பூ, என்ற சொல்லை, வசனத்திற் பிரயோகிக்கத் தெரியுமா ? '
** தெரியாமல் என்ன ? (i) பூ மலர்ந்தது. (i) ஐந்து பூ, (i) பூக் கொய்தாள்.' ... Y.
** இந்த மூன்று வசனங்களிலும் வந்த பூக்களுக்குத் தம்முள் பேத மென்னை ?"
། கேள்வி விளங்கவில்லை ’’
** நல்லது. பூ மலர்ந்தது என் பதில், பூ எத்தனை? ஒன்ரு ? பலவா?’
* ஒரு பூ, ஒன்று ’’ * சரி. ஐந்து பூ என்பதில், ..?’’
ஐந்து Լե, பல, ’’ * பூ என்ருல் ஒரு பூ' என்று நீ முன் விடையிறுத்தது ஞாபக மிருக்கிறதா ? ??
**ஆம். அதிலென்ன பிழை ?’’
‘* சரி, நீ கெட்டிக்காரன், பூக்
够 r 2 够 கொய்தாள்? ஒன்ரு ? பலவா ?

தா கண்ணைக்கட்டிக் இன்றைய ஆசிரிய,
கள் தரும் பதில் :
வளவுதான?”
கணபதிப்பிள்ளே
** ஏன் திகைக்கிருய் ? எத்தனை பூ ? சொல்லு, சொல்லு, பூ என்ருல் உனக்குப் பொருள் தெரியுந்தானே? ** பூ விசேடம் எனினும் அமையும் ' என்றும் பொருள் விரித் தாயே 1.
** முதலாம் வசனத்தில் பூ ஒன்ரு யிருக்கிறது. இரண்டாம் வசனத்தில் பல. மூன்ரும் வசனத்தில் பூ ஒன்ருே பலவோ தெளிவாக விளங்கவில்லை. ’’ ** உன்னுடைய வசனத்துக்கு உனக்கே பொருள் விளங்கவில்லை. சரி, அப்படி வா. பூக் கொய்தாள் ” என்ருல், அவள் ஒரு பூவுங் கொய் யலாம் ; ஒன்றுக்கு மேலே பல பூவுங் கொய்யலாம். பூ என்ற சொல் ஒன் றையுங் குறிக்கும் ; பலவற்றையுங் குறிக்கும். இரண்டுக்கும் பொதுவான Golg=fr6).’’
முதலாம் வசனத்தில் ஒன்றைக் குறித்தது.
இரண்டாம் வசனத்தில் பல வற்றைக் குறித்தது.
இந்த மூன்ரும் வசனத்தில் இரண்டுக்கும் பொதுவாக வந்தது. ’’ *அப்படியானல், என்னைப் ‘பூக் கொய்து வா’ என்ருல், நான் எத்தனை பூக்கொய்து வரவேண்டும் 2 ‘
** நீ என்னைக் கேள்வி கேட்கிருய் போலத் தெரிகிறது. நீதானே உன் னுடைய கேள்விக்குப் பதில் சொல்லு Lim til Gt_irri) ? ''

Page 23
** நான் எத்தனை பூவுங் கொய்து வருவேன். ஒன்றுமாகலாம் ; பலவு மாகலாம். ’’
“பலே கெட்டிக்காரன். உனக்குப் பூ என்ற சொல்லுக்குப் பொருள் விளங்கி விட்டது. ’’
** நீ நேற்றுத் திணை படித் திருக்கிருய் அல்லவா ? அதைப்பற்றி விபரிக்க எனக்கு நேரமில்லை. அது எத்தனை வகைப்படும் ? ’’
** அதுவா, இரண்டு வகைப் படும். உயர்திணை, அஃறிணை, உயர் திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பால், அஃ றிணையில் ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டு பால் ...'
** நில்லப்பா நில், கேள்விக்கு மேலே பதிலுரைத்துவிட்டாய். பூ என்ன திணை ? ’’
அஃறிணை is
a rast GST LITG)
ஒன்றன்பால்.பலவின் பால் . இரண்டு பாலுந்தான் ’’
**ஆம். இரண்டு பாலிலும் வர லாம். ஆணுல், இங்கே இர ண் டு பாலுந் தோன்றுகின்றனவா ? ’’
* பின்னை, எப்படிச் சொல்ல வேண்டும் ? ’’
** அஃறிணை இருபாலுக்கும் வரலாம். ஆகையால் இரண்டு பாலுக்கும் பொது. ’’
** அஃறிணையில் இ ன் ன பால் என்று பகுத்துச் சொல்ல முடியுமா ?”

భ முடியாது sy * ஆகவே, பூ என்ற சொல் பால்பகா அஃறிணைச் சொல். விளங்கு கிறதா ? ??
ஆம்.
** பூ, பெயரா வினையா ? ’’
is
“ “ (ou Jiř. ” ”
** ஆகவே, பூ என்ற சொல் பால் பகா அஃறிணை ச் சொல். தொடக்கத்தில் பூ என்றதற்குத்திணை பால் கேட்டால் எப்படிச் சொல்லி யிருப்பாய் ?
** அஃறிணை ஒன்றன்பாற்பெயர் என்று சொல்லியிருப்பேன்’’.
** ஒம், ஓம்.’’
* சரி. நீ இனி, ஆடு ' என்ருல் ஆட்டு விசேடம் ஒரு ஆடு '
என்பாயோ ? ??
* ஒரு காலும் இல்லை. ஆடு
என்ருல், ஒன்றுக்கும் பலவற்றுக்கும்
பொது. பால்பகாவஃறிணை என்று அதன் பொருளை விளக்குவேன் ’’
ஆம், ஆம், பூ, கொடி, செடி, மரம், தடி, ஆடு, மாடு, பூனை, நாய் இவற்றுக்கெல்லாம் இப்பொழுது தான் தெளிவான பொருள் விளங்கு கிறது. ’’
‘'நீ எடுத்துக்காட்டிய பூ முதலிய சொற்கள், பால்பகாவஃறிணைப் பெயர்கள் அல்லவா ? ’’
í s ஆம் O is 9
** இது உனக்கு எப்படித் தெரி սկւն ? ' '

Page 24
- 6
** அச் சொற்கள் ஒன்றன்பாற் பொருளுக்கும் பலவின்பாற் பொரு ளுக்கும் பொதுவாக வழங்குகின்றன. அதனலே அவைகள் பால்பகாவஃ றிணைப் பெயர்கள் என்றுதெரிகிறது.'
* பூ முதலிய சொற்களின் பொருள் வரையறை தெரியாமல் ; அச்சொற்கள் பால்பகாவஃறிணைப் பெயர்கள் என்று இலக்கணம் பேசத் தெரியுமா ? ’’
** தெரியவே தெரியாது. குறித்த சொற்களின் பொருள் வரையறையை உணர்ந்து இட்ட பெயர்தானே, * பால்பகா அஃறிணைப் பெயர் ' என்ற அந்தப் பெயர். ’’
** நீ பெரிய விவேகி. ஒவ்வொரு சொல்லுக்குமுரிய பொருள் வரை யறையைக் காட்டுங் குறியீடுதானே சொல்லிலக்கணத்தில் வருங் குறியீடு. நீ இந்த இரகசியத்தை அறிந்து
கொள்.'"
இலக்கணத்தைக் கண்டு பயப்பட வே போன்றது. அந்த நதிக்குக் கரைபோல அழகைத் தடைப்படுத்திச் சிறையிடுவது { வரும் வெள்ளத்தை ஒழுங்குபடுத்தி யா ஆன்ருேர் வகுத்தநெறி இன்னதென்று அ செளகரியங்களைச் செய்துகொடுக்கும் வழிக காரணம் இல்லாமல் உடைப்பதோ ஜலமே மனித முயற்சியை வீணுக்குவதோ கூடாது பெரிய காரியம் அல்ல. சில இடங்களில் ஆற்றின்.வெள்ள நிலை, காலத்தால் ஏற்ப எல்லாவற்றையும் நன்கு அறிந்த இஞ்சினீ யுடையவர்கள், கடப்பாரையும் கரண்டியும் செய்வதென்று வந்தால், கரையும் இரா காட்டாற்றைப்போன்ற நிலைக்குத் தான் ெ

S. A சரி, gFff). **
* இப்படித்தானப்பா, தொடர் கள் - வாக்கியங்கள் - இவற்றின் பொருள் வரையறையைக் காட்டு வன தொடரிலக்கணங்கள் வாக்கிய லக்கணங்கள். அவற்றின் இரகசி யத்தை மற்ருெரு சமயம் எடுத்துச் சொல்லுகிறேன்.”*
* ஒரு விஷயம் :
சொற்கள் - தொடர்கள் - வாக்கியங்கள் - இவற்றின் சமூகந்: தான் இலக்கியம், இலக்கியத்தின் பொருளை வரையறை செய்து படிப் பதற்குத்தான் இலக்கணம் படிக்கிற தென்று பெயர். '
* இலக்கணம் என்ருெரு பண்டம்
இலக்கியத் துக்குப் புறம்பாக இல்ல'
* இலக்கிய மின்றி இலக்கணம் இன்றே
எள்ளின் றயின் எண்ணெயும் இன்றே ’.
ண்டிய அவசியமேயில்லை. பாஷை ஜீவநதி இருப்பது இலக்கணம். இயற்கையான இலக்கணத்தின் செயல் அல்ல. இயற்கையாக வருக்கும் பயன்படுத்தும் கரையைப் போல ரிவித்துப் பின்னுல் வருபவர்களுக்குப் பல ாட்டி போன்றது அது. அந்தக் கரையைக் தெரியாமல் மலையைப்போல் உயர்த்தி 1. இலக்கணக் கரையை உடைத்தெறிவது உடைப்பது அவசியமாகவும் இருக்கலாம். ட்ட மாறுபாடு, கரையின் அமைப்பு ஆகிய பர்களே மராமத்து வேலைபார்க்கத் தகுதி உடையவர்களெல்லாம் கரையைச் செப்பஞ் து, ஆறும் இராது; அழகான ஆற்றைக் காண்டுவரும்படி நேரும்.
- கி. வா. ஜகந்நாதன்

Page 25
பாடசாலைகள்
பேராசிரியர் கலாநிதி (தமிழ்த்துறைத் தலைவர்,
உலகின் பெரும்பான்மையான நாடுகளிலே பாடசாலைகளில்நாடகம் இன்று முக்கிய இடம் பெறுகின்றது. அந் நாடுகளிற் கல்விக் கழகங்கள் பாடசாலைகளில் நாடகத் தயாரிப் பைச் சீராக்க முயல்கின்றன. கல்வி மான்கள் கல்விப் பாடத் திட்டத்தின் உள்ளுறுப்பாக நாடகத்  ைத க் கணித்து வருகின்றனர்.
ஆனல், ஈழத்திலே தேசிய மறு மலர்ச்சி ஏற்பட்டுப் பல்லாண்டு கழிந்தும் பாடசாலைகளில் நாடகம் கலையம்சம் நிறைந்த ஒரு துறையாக வளர்க்கப்படவில்லை. Lחו"L-gFחr%ה( களிற் பெற்ருேருக்கு ஈடுபாட்டை உண்டாக்கவும், நூல்நிலையம், விஞ் ஞான ஆய்வு கூடம் முதலியவற் றைக் கட்ட நிதி திரட்டுவதற்கும் மேடையில் ஏதோ ஒரு நிகழ்ச்சியை நடிப்பதே நாடகம் என்று இன்று பெரும்பாலும் இருந்து வருகின்றது. இதனுல், தரங் குறைந்த நாடகத்தை ஒப்படைப்பதில் அதிக நேரமும் முயற்சியும் வீணுகின்றன. இந் நாடகங்களைப் பார்ப்போர் தமது நேரமும் பணமும் வீணுகப் போய் விட்டனவே என்று வருந்துகின்றனர். நாடகங்கள் மாணவரின் அறிவு வளர்ச்சிக்குரிய சாதனங்கள் என்று கொள்ளப்படாமையே இந் நிலைக்குக் காரணமாகும்.
பாடசாலைகளில் நாடகத்தை ஒரு கலையாக வளர்ப்பது கடினமாக

ரில் நாடகம்
சு. வித்தியானந்தன் இலங்கைப் பல்கலைக் கழகம்)
இருக்கின்றது. சூழ்நிலை, நாடக வளர்ச்சிக்குச் சில பாடசாலைகளிற் சாதகமாகவும், சில பாடசாலைகளிற் பாதகமாகவும் அமைந்திருக்கின்றது. பெரிய கல்லூரிகளில் நடிக்கக்கூடிய வளர்ந்த மாணவர் பலர் இருக்கின் ருர்கள். பல்கலைக் கழகப் புகுமுக வகுப்பு, பொதுத் தராதர வகுப்பு முதலியவற்றில் முந்நூறுக்கு மேற் பட்ட மாணவர் இருப்பதனல் அத் தொகையிலிருந்து நாடகப் பயிற்சி அளிக்கக்கூடிய மாணவரைத் தெரிந் தெடுக்க இயலும். மேலும் அக் கல்லூரிகளில் நாடகத் தயாரிப்புக்குச் செலவிடப் பணமும் உண்டு. இவ் வாறு சூழ்நிலை சாதகமாயிருந்தும், அக் கல்லூரிகளில் நடிக்கும் ஆற்ற லும் தயாரிக்கும் ஆற்றலுமுள்ள ஆசிரியர்கள் இல்லாததனுல் மாண வரின் நாடக ஆர்வத்தை வளர்க்க முடியாமல் இருக்கின்றது. அக் கல்லூரிகள் சிலவற்றில் நாடக ஞான முள்ள ஆசிரியர் இருந்தாலும், தலைமை ஆசிரியர்கள் பராமுகமாக இருப்பதனலும், கலை வளர்ச்சியில் அக்கறை கொள்ளாமையினுலும், அக்கல்லூரிகளில் நாடகம் முன்னேற முடியாமல் இருக்கின்றது.
கிராமப் புறங்களிலுள்ள பாட சாலைகளிலும் நகரங்களிலுள்ள சிறு பாடசாலைகளிலும் நடிக்கத் தக்க ஆற்றலும் தயாரிக்கத்தக்க ஆற்றலு முள்ள ஆசிரியர்கள் இருந்தபோதும், தலைமையாசிரியர்கள் கலை வளர்ச்சி

Page 26
யில் ஆர்வம் கொண்டபோதும், வளர்ந்த மாணவர் தொகை குறை வாக இருப்பதனுல் நடிகர்களைத் தெரிந்தெடுப்பது பொறுப்பாக இருக் கின்றது; கலையாக்கத்திற்குச் செல விடப் பணம் இல்லாததனுற் சிறந்த நாடகங்களை மேடையிடுவது வில் லங்கமாக இருக்கின்றது. அத்துடன், பெண்கள் மேடையேறுவது இக் கல்லூரிகள் உள்ள பகுதிகளிற் பல ருக்குப் பிடியாது.
சில பிரதேசங்களிலே தமிழ் மாணவர் உயர் வகுப்புக் கல்வி பெறு வதற்குரிய தனிப்பட்ட மகாவித்தி யாலயங்கள் ஒன்றிரண்டே இருக் கின்றன. சில வட்டாரங்களில் (உதாரணமாகக் கண்டியில்) ஒரு தமிழ் மகாவித்தியாலயங்கூட இல்லை. அத்தகைய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளிற் கலை வளர்ச்சிக்குச் சாதகமான எத்தகைய சூழ்நிலையுங் கிடையாது. இதனல் அப் பாடசாலை களில் நாடகங்களை ஒரு கலையாக வளர்க்க முடியாமல் இருக்கின்றது.
மேலே கூறப்பட்ட காரணங்களி ணுலே நாடகம் பாடசாலைகளிற் சிறப்பிடம் பெறுவதில்லை. அதன் பயணுக, ஆழ்ந்த கற்பனை, வலுவான உடலமைப்பு, கலைரசனை முதலிய வற்றையுடைய மாணவரைப் படைப் பதற்குப் பதிலாக, நுண்கலைகளைப் பற்றிச் சிறிதேனும் அறிவில்லாதோ ரையே பாடசாலைகள் உருவாக்கு
கின்றன.
நாடகத்திற் பங்குபற்றும் மாண வன் Ꭵ . 1 Ꭷu)Ꭷ1ᎧᏡᏧ5 அனுபவத்தைப் பெற்றுச் சிறந்த மனிதனுகின்றன். எப்பொழுதும் அவன் சிறந்த பாகத்தை ஏற்று நடிக்காமலும், சிறந்த நாடகத்தைப் படிக்காமலும் இருக்கலாம். ஆனல், அவன் பெறும் பல்வகை அனுபவம் அவனது நோக் கினைப் பரந்ததாக ஆக்குகின்றது.

3 -
ஒரு பாத்திரத்தை விளங்கிப்படிக்கும் போது, அல்லது நடிக்கும்போது, மனிதப் பண்புகளைப் பரிசீலனை செய் யும் ஆற்றலை அவன் பெறுகின்ருன். நாடகத் தொடர்பினுல், வாழ்க்கை யில் தான் சந்திக்கும் மக்களை அவதானிக்கவும், இலக்கியத்தை நெருங்கிச் சுவைக்கவும் கற்றுக் கொள்கின்ருன். அத்துடன் மானிட ரின் கருத்துக்களையும் பிரச்சினைகளை யும் தெளிவாக விளங்கிக் கொள்வத ல்ை, மனித சமுதாயத்திடம் அனு தாபம் அவனுக்கு ஏற்படுகின்றது. விரைவாக மனனம் செய்யவும், சுலபமாக மனத்தை ஒருவழிப்படுத்த வும், இலகுவாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் அவனல் முடியும். நன்ருகப் பேசவும், சீராக ஒழுகவும், பிறருக்கு உதவவும், தன்னம்பிக்கை பெறவும், தனக்குரிய பலவீனங் களைச் சமாளிக்கவும் கற்றுக் கொள் கிருன். இவை தட்டிக் கழிக்கக்கூடிய சித்திகள் அல்ல.
நடிப்பு, மாணவரின் சுய இயல் புகளை வளர்க்கின்றது. அவ்வளவு பாக்கியசாலிகள் அல்லாதவருக்கு அது தனிப்பட்ட நன்மை தருகின் றது. பிற்போக்கான மாணவரும், கல்வியில் முன்னேற முடியாதவர் எனக் கணிக்கப்படும் மாணவரும், பள்ளி வாழ்க்கையில் நிரந்தர இடத் தைப் பெருத மாணவரும் நாடகத் திற் பங்குபற்றுவதனல் தம்மிலும் தமது ஆற்றலிலும் புதிய நம்பிக்கை பெறுகின்றனர்.
தன்மானத்துக்கு அடிப்படை யாக வேண்டப்படுவது ஏதேனும் ஒன்றனைச் செய்யும் ஆற்றல். அறிவு அடித்தளம் இல்லாத மாணவன் ஒருவனுடைய மனத்திலே நாடக ஆர்வம் ஏற்பட்டுவிட்டால், நிரம்பிய அறிவியல் வாழ்க்கையை விருத்தி செய்ய அவனுல் முடியும். தனக்குரிய பாகத்தை வாசிப்பதிலே தொடங்கி,

Page 27
சொற்களைப் பேசும் வகையிற் பயிற்சி பெற்று, மனதினை ஒருவழிப்படுத்தி, தன்னைப்பற்றியே எண்ணுவதைப் படிப்படியாகக் கைவிட்டு, நாடகக் குழுவிலே தனக்குரிய இடத்தை வகித்து, தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் தனது திறமைகளை வெளியிடவும் மற்றவர்களுடன் சேர்ந்து நடக்கவும் அவன் ஆற்றல் பெறுகின்றன்.
எல்லோருந் தமது திறமைக்கு ஏற்ப ஒத் து ைழ க்கு ங் கூட்டு முயற்சியே நாடகம். ஒரு பொது நோக்கிற்காக அவர்கள் ஒன்று சேர்ந்து விடுகின்றனர். தாம் எல் லோரும் ஈடுபட்டுள்ள முயற்சி கை கூடுவதைத் தாம் ஒவ்வொருவரும் பெறும் வெற்றியோ தோல்வியோ பாதிக்குமென்பதை அவர்கள் உணர் வார்கள். நாடக முயற்சி கூட்டு முயற்சியாகையால், பொறுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, யூகம், நற்பண்பு ஆகியவற்றை இயன் றளவிற்குப் பெற்றிருக்கவேண்டும் என்பதை நடிகர் உணர்வர். எனவே சகோதரத்துவம் பிறக்கின்றது. இதனுலே தனிப்பட்டவர்களும் சமு தாயமும் அதிக பயன் பெற முடி கின்றது. விளையாட்டிலும் பார்க்க நாடகத்திற் கூட்டுமனப்பான்மையை நாம் கூடுதலாகப் பெறுகின்ருேம்.
தொழில் செய்யும் பழக்கங்கள் சிலவற்றை நாடகம் மாணவரிடம் அழுத்தமாக ஏற்படுத்துகின்றது. நேரத்திற்கு எதையும் செய்யும் பழக்கத்தை நாடகப் பயிற்சி உண் டாக்குகின்றது. ஒரு நாடகத்தை அரங்கேற்றும்போது, முக்கியமற்ற பல வேலைகளையும் சுவையற்ற பல வேலைகளையுஞ் செய்ய வேண்டி நேரிடும். அப்படியிருந்தும் அவ்வேலை களை முழுமனதுடன் ஒப்பேற்றுவார் கள். கர்ரணம், முழு அனுபவம் அவர்களுக்கு மதிப்பைத் தருகின்றது.
2
s

-
இதனுல் அவர்கள் பல்வகை அனு பவங்களையும் பெற்று முழுத்தன்மை பெறுகின்ருர்கள்.
எனவே, பாடசாலைகளில் மாண வரிடம் கலை உணர்வையும் படைப் புக் கற்பனையையும் ஒன்றுபட்ட ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு நாடகம் பெரிதும் பயன்படுகின்றது. அழகை அனுபவிக்கவும் உள்ளத்தை விருத்தி செய்யவும் நாடகம் சிறந்த கருவி என்பதைப் பாடசாலைத் தலை வர்கள் உணரவேண்டும். நாடகத்தை அறிவுடன் சுவைக்கக் கூடிய பண்பை மாணவரிடம் வளர்க்கவேண்டும். இதற்கு நாடகங்களின் பிரிவுகள் பற்றியும் நாடகத்தின் இலக்கணங் கள் பற்றியும் அவர்களுக்குப் போதனை அளிக்கவேண்டும். அத் துடன் கல்ல முறையிலே காடகங்களை அரங்கேற்றப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அத்தகைய பயிற்சி அளிக் கக்கூடிய விசேட ஆசிரியர்களைக் கல்வி அமைச்சு நியமிக்கவேண்டும்.
தமிழ்த் தினவிழாப் போட்டிக ளில் இடம் பெற்ற நாடகங்களைப் பார்த்தபோது, மாணவரிடம் நாட கத்துறையிற் பேரார்வம் ஏற்பட்டு வருவதைக் காணக்கூடியதாக இருந் தது. அந்த ஆர்வத்தைப் பயன் படுத்தி காடகப் பயிற்சி அளிக்கக் கூடிய அறிவு பேற்ற ஆசிரியர்கள் பெரும்பாலான பாட சாலை களில் இல்லையென்ற உண்மையும் தெரிய வந்தது. இதனுற் பெரும்பாலான நாடகங்கள் தரமற்ற நாடகங்களா கக் காட்சியளித்தன. பாடசாலை களிலே தரமான நாடகங்கள் மேடை யிடப்பட்டால், நல்ல நாடகத்தைப் பற்றிய ஞானத்தை மாணவர் பெற் றிருந்தால், நாட்டிலும் நல்ல நாட கங்கள் தோன்றும் ; நல்ல நாடக எழுத்தாளர்கள் தோன்றுவார்கள் ; நாடகம் மாணவரின் வாழ்க்கைக்கு இன்றியமையாத கலைகளில் ஒன்று என்ற மதிப்பு ஏற்படும்.

Page 28
தமிழ் வளர்ச்சியில் இள்
அல்ஹாஜ் ஐ. எல். (முன்னுள் அதிபர், சா ஹி
மதத்தை அடிப்படையாகக் கொண்டு மொழிப்புலமை மட்டிடப் படுவது பொருந்துமா ? பலர் பலவா முன கருத்துக்களைக் கூறுவர். மொழி என்பது மக்கள் மனக்கருத்தை வெளிப்படுத்த உதவும் ஒரு சாதனம். மதம் என்பது மக்கள் மனம், மெய், மொழி முதலியவற்றைப் பண்படுத் 'தப் பெரிதும் உறுதுணை புரிவது. எனவே, மொழியும் மதமும் நெருங் கித் தொடர்புற்றுத் தொழிற் படுவனவாகும்.
உள்ளத்தில் உருவாகி அமையும் இறை உணர்ச்சி, இயல் உணர்ச்சி, அழகுணர்ச்சி ஆதியன ஊடுருவிப் பாயும் ஊற்றுக்களே இயல், இசை, நாடகம் என்னும் மொழி வளர்ச்சிக் குரிய வழிவகைகள். தமிழ்மொழியை நன்குணர்ந்து அனுபவித்த தமிழ் மூதாட்டி ஒளவையார்தானும் * சங்கத் தமிழ் மூன்றும் தா ’ என்று வேண்டினர். முத்தமிழை முறையே கற்றுணர்ந்த கம்பர் முதல் கவிஞர் பலர் தமிழ் வளர்ச்சியும், வரலாறும் தமிழ் பேசுவோர் தமிழில் இன்பம் காணும் துறைகளிற் தங்கியுள்ளன வெனத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே, மதமும் மொழியும் நெருங்கிய தொடர்புடையவை என்று கூருமலிருக்கமுடியாது. தமிழ் பேசும் மக்கள் தத்தம் மத அடிப் படையில் வேதநூல்களையும், புரா ணங்களையும், பாடல்களையும் அள வில்லாமல் இயற்றி வந்துள்ளனர்.

ஸ்லாமிய ஆசிரியர் (350
எம். மஷ்ஹபர் ரு கல்லூரி, கொழும்பு)
தேவாரம், தேம்பாவணி, சீருப் புராணம் முதலிய அரும்பெரும் சமய நூல்கள் பல செறிந்து செழிப்புற்று விளங்குவதனலே, ஏனைய மொழி களிலும் தமிழ் விசேடம் பெற்று வளர்ச்சி யடைந்துள்ளது. எனவே சைவம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய முப்பெரும் பண்பாட்டுத் துறைகளிலும் தமிழ் பேசும் மக்கள் தேனினும் இனிய தமிழைப் பெரிதும் போற்றிப் பேணிப் பாதுகாத்து வரு வதால் அது அதிகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ் வளர்ச்சியில் இஸ்லாம் பெற்ற பங்கு பெரிதும் போற்றிப் புகழக்கூடியது. வாழையடி வாழை யாகத் தமிழைத் தம் தாய் மொழி யாகப் பேசிவரும் முஸ்லிம் மக்கள் தென்இந்தியாவிலும் ஈழமணி நாட் டிலும் கோடிக்கணக்காக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுள் காலத் துக்குக் காலம் அரும் பெரும் புலவர்கள் தோன்றி இயற்றிய தமிழ் நூல்கள் அநந்தம். கடந்த சில நூற் முண்டுகளாக எண்ணிறந்த இஸ்லா மியர் வான்புகழ் பெற்ற புலவர்களாக விளங்கினர் என்பதை ** இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு ’’ என்னும் தலைப் பின்கீழ் இலக்கியத்தேன்றல் என்ற நூலில் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் விளக்கிக் கூறுகின்ருர், இலங்கைவாழ் இஸ்லாமியர் குறிப்பாய் தென்மேற் கிலும் மத்திய பகுதிகளிலும் சிங்கள அரசர் காலத்திலிருந்தே சிங்களச்

Page 29
-
சூழலில் சிங்களக் கிராமங்கள் மத்தி யில் தமிழைத் தங்கள் தாய்மொழி என மதித்துப் பேணி வளர்த்து வந்தனர். அவர்களிடையே தமிழ்ச் சூழலில் வடக்குக் கிழக்குப் பகுதி களிற் போலவே புகழொடு தோன் றிய தமிழ்ப் புலவர்கள் பலர்.
இனி, சிங்களம் அரசகரும மொழி யாக விளங்கும் இன்று சிங்களப் பகுதிகளிலுள்ள ஒரு சில முஸ்லீம்கள் தமிழை விடுத்துச் சிங்களத்தைத் திணிக்கும் முயற்சி தோல்வி கண்ட போதிலும் இஸ்லாமிய ஆசிரியர் விழிப் புணர்ச்சி யுடையோ ராய் இருந்து தமிழ்த் தொண்டு புரிதல் இன்றியமையாததாகும். சிங்களம் கட்டாயம் படிக்கத்தான் வேண்டும். ஆணுல் அதற்காகத் தாய்மொழியாம் தீந்தமிழை அடகு வைக்க வேண்டிய அவசியமில்லை. தமிழில் அமைந்த இஸ்லாமிய கலாசாரத் தொடர்பு களை மேன்மேலும் வளர்த்து வலுப் பெறச் செய்வதே இன்றைய இஸ்லா
மிய ஆசிரியர் செய்ய வேண்டிய
எல்லாத் துறைகளிலும் விரிந்த ஞ அப்படியொன்றும் ஒரு வரப்பிரசாதமல்ல புதியனவற்றைத் தேடித் திரிய வேண்டு ஜீர்ணிக்கவேண்டும்; ஆழமாக நேசிக்கவேண் சிரத்தை மிகுதியுடன் உழைக்கவேண்டும். உபயோகிக்கவேண்டும். வெறுங் கலைஞஞ தான். அதாவது சாமானிய பேர்வழிதா

1 -
அரும் பெரும் தமிழ்த் தொண் டாகும்.
எனவே, இன்று நடைபெற்று வரும் த மிழ் விழா நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய ஆசிரியர், தம் கலாசாலை மாணவர்களுடன் பெரிதும் பங்கு பங்குபற்றி ஒத்துழைப்பதன் மூலம் தமிழ்த்தொண்டு புரிவது பெரிதும் பாராட்டக்கூடியதொன் ருகும்.
* ஒன்று தெய்வம் ஒன்று மதம்
ஒன்று மக்கள் சாதியென நன்று பெற ஓதியவை காட்டு நடுவில் நான்மறையும் குன்று பெற தீவ மென. ...” என்று சதாவதானி செய்குத்தம்பி பாவலர் இஸ்லாத்தின் இணையற்ற கொள்கையான ஏக தெய்வ வழி பாட்டையும், சகோதரத்துவத்தின் சிகரத்தையும், ஈடற்ற பண்புகளையும் வியந்து பாராட்டியுள்ளார். அவ் வுயரிய குறிக்கோள்களைக் கருத்திற் கொண்டு இஸ்லாமிய ஆசிரியர் பணி புரிய எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிப்பானுக.
ானமில்லாமலே காலந்தள்ளுவதற்குக் கலை ஒருவனுக்கு அநுபவம் இருக்கவேண்டும்; b ; பரீட்சிக்கவேண்டும்; முதலில் நிறைய ாடும்; துன்பப்படவேண்டும். அதே சமயத்தில் வாள்வித்தையைக் கற்றபிறகுதான் வாளை ) கமட்டும் இருக்கிற கலைஞன் நபுஞ்சகன் *ன். அவனுக்குச் சித்த சுவாதீனம் இல்லை.
- ஜார்ஜ்ஸாண்ட்

Page 30
ஒரேஒரு
செந்தமிழ்மணி பெ
ஒருதினம் தருமதேவதை தன் னருட் பார்வையைப் பூவுலகத்திலே செலுத்தியது. பெரும்பாலான அறங்கள் பூமியிலே சிறப்பாக நிகழு வதை அது பார்த்த அளவில் நிறுத்தி விடாது எதிர்காலத்தையும் மிக உன்னிப்பாகப் பார்த்தது. காலத் திரையினுாடே அது கண்ட காட்சி யால் அதன் திருமுகத்திற் சஞ்சலத் தின் சாயலும் கண்ணில் நீரும் தோன்றின. பத்தி இருக்கவேண்டிய இடத்திலே புத்தி புகுந்து நின்று செய்யுங் கோர தாண்டவத்தைக் கண்டால் தருமம் இரங்கி ஏங்குவ தியல்பே. தருமதேவதை உடனே பூவுலகத்தை நோக்கி வரலாயிற்று. பூ வுல கில் எங்கு செல்கிறதோ? ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! அது வேறெங்குஞ் செல்லாது தமிழ்நாட் டையே நாடியடைந்தது.
வழிவழி நிலத்தைப் பண்படுத்தி நல்ல புலமாக்கி உலகுய்ய உணவு வகைகளை உவந்தளிக்கும் பண்பா டமைந்த வேளாண் வகுப்பினருக்கு நன்றியறிதலுடன் தொண்டு செய் யும் புலைச்சேரியுட் புகுந்தது என்பர் ஒருசாரார். இல்லை, இல்லை அந்தணர் வருணத்திலே பிறப்பெடுத்தது என் பர் ஒரு பிரிவினர். முழுவதும் பிழை ! அரசகருமம் பார்க்கும் வள்ளுவர் இல்லத்திலேதான் அவதரித்தது என் பர் ஆராய்ச்சி மிக்க ஒருபாலார். அது எங்கு பிறந்ததென வேண்டாத ஆராய்ச்சி செய்து குழப்பத்தைப் புகுத்த வேண்டாம். யார்றிவார் நல்லாள் பிறக்குங் குடி ' என ஒரு

கு குறள்
ா. கிருஷ்ணபிள்ளை
பெருமகனர் உலகுக்கு உபதேசித்து இச் சண்டையை நிறுத்து மாறு வேண்டுகிருர். தமிழ்த்தாய் புளகாங் கிதங் கொண்டு தலைநிமிரத் தருமம் திருத்தமான உருவெடுத்து வளர்ந்து பற்றற்ற பரம்பொருட் பற்றினைப் பற்றிக் கொண்டது. பரணருட் சிறப் பில் வளர்ந்த அப்பிள்ளை முரசக்குரல் எழுந்தாற்போலத் தன் திருவாய் மலர்ந்து ஏதோ கூறியருளியது. நன்கு கவனித்தபோது அது அருமைப் பாடல்களைச் சொரிவது தெரிந்தது. அதிசயம் யாதெனில் அது நீண்ட பாடல்களைப் பாடவேயில்லை. ஒன்றே முக்கால் அடிக்கு மேற்படாத குறும் பாக்களையே அது பாடியது.
எதிர்கால நிலையைத் தெள்ளி தாக அறிந்த வள்ளுவப் பிள்ளை வேறெங்ங்ணம் பாட்டிசைக்கும்? தலை தெறிக்கும் வேகச் சுழலுட்பட்டு ஆறுதலோ அமைதியோ இன்ன வெனத் தெரியாமல் உலையப்போகும் உலகிற்கு நீண்ட பாட்டாற் பய னில்லை. வேகமாகச் சுழலுங் காலத் திற்கு ஏற்ற சிறுச் சிறு மணிகளை அப்பிள்ளை உதிர்த்தது. அதன் வாயி லிருந்து தெறித்த முத்துக்கள் சின் னஞ் சிறியன ; ஆயின் பொருள் ஒளி மிகுதியும் பெற்ற பண்பின. நன் மணிகளை நானிலத்தவர் பேணு தல் இயல்பன்ருே ? மாசுபடியா நன் மனமுடைய புலவர் நாவிலும் அவ ரிடம் பாடங் கேட்கும் புலன் அழுக் குருத மாணவருளத்திலும் அவை சேமமாக இருந்தன, நல்லறிவுக் கண் கொண்டு பார்க்கும் பெரியோருக்

Page 31
கெல்லாம் அவை தமது புத் தொளியை வாரி வழங்கின. இவ் வாற்ருல் என்றுமழிவற்ற தன்மை யில் தீயும், செல்லும், காலமும் சிதைக்க முடியாத இடங்களில் அவை பதிந்து கொண்டன. அந்தப் பண் பட்ட மணிகளில் எத்தனையோ ஆண்டுகளுக்குப் பின்னே தோற்றப் போகின்ற விஞ்ஞான உலகினுக்கு நல்ல வழிகாட்டி, நற்புத்தி கூறும் மணியொன்று ஒளியை அள்ளிச் சொரிகிறது. இலக்கிய உலகிலே மனிதரை இலட்சியப் பாதையி லிருந்து வழுவாது நடத்த உதித்த உதய சூரியனே போல அது மிளிரு கிறது. தனக்குத் தானே நாசந் தேடும் அறிவியல் உலகத்துக்கு அது அமுதசாந்தி தருமியல்பில் அமைந் துளது. அதன் ஒசைக்குச் சிறிது செவிசாய்ப்போம் . அது கூறுகிற தாவது : “ மனிதா ! உன் மூளை உன்னை எங்கெல்லாங் கொண்டு சென்றுவிட்டது; உன் அறிவொளி யின் முன் விண் தனது இரகசியங்களை உதிர்க்கிறது. மண் தனது மந்திரங் aðar மரியாதையுடன் வெளிக் கொணருகிறது. ஆழ்கடல் அரிய செய்திகளைப் புலப்படுத்துகிறது. நீயோ அறிவுப் பிண்டமாகவே திகழு கிருய். உன் அறிவாட்சி செல்லாத இடமுமுளதோ ? சூரபன்மன் இரா வணன் முதலியோர் உன்னிடமே வந்து பாடங் கேட்டுப் பயிற்சி பெற வேண்டும். நீ நாளையும், கோளையும், காற்றையும், தீயையும் கட்டுப்படுத்தி விட்டாய். உன் ஆற்றல் மிகுதியால் புத்தம் புதிய சுவர்க்கத்தையுஞ் சூரிய சந்திரர்களையும் ஆக்க வல்லாய்." இதனைக் கேட்ட விஞ்ஞான மனித மன்னன் நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து

3 -
மேலும் மேலும் தன் புகழைக் கேட்க அவாவுகிருன். காதைத் தீட்டிக் கொண்டு கேட்கிருன். இப்போது தன் குரலிற் கடூரத்தன்மை தொனிக்க அது பேசுகிறது : “ ஏ மனிதா! உனது அறிவில் ஒரேயொரு குறைதான் குடி புகுந்துள்ளது. உன் நோக்கு முன்னுேக்கு என்றே நினைக் கிருய். ஆயின் பின்னுேக்கும் சேரா விடின் அது முழுநோக்காகுமா ? பிற் காலத்தை, பின்னிற்கும் மனித இனத்தை, உயிரினத்தைப் பார்க்கும் பூரண நோக்கு உனக்குக் கிட்டவே யில்லை. அறிவு நோக்குடன் அன்பு நோக்கும் கலந்ததே சிறந்த நோக்கு. இன்றேல் இந்த நோக்கிலும் குருட்டு நோக்குச் சிறந்ததாகும். அதன்கண் பிறருக்கு நாசம் விளைக்கும் தன்மை இல்லையன்றே. உன்னுேக்கு நோய் நோக்காகின்றதேயன்றி மருந்து நோக்காகின்றதில்லையே. அறிவின் பயன் அன்பும் அறமுமல்லவா ? எல்லா உயிரையும் உன்னுயிர்போல் எண்ணி எல்லோருக்கும் இன்பந்தரும் வகையில் உனது நோக்குச் செல்லா விடின் உன்னறிவு அறிவுலகிற்குப் புறம்பே அழிவுதரும் பாவஉலகிற்குப் போய்விடுமே. அழிவுலகை விரைந்து கொண்டு வருமே. உனது இன்பத்துக் காகப் பிற உயிர்களைப் பலி கொள் ளாதே.!’’ இப்படி நெடிது பேசிய குரல் சிறிது தணிந்து பின் கணி ரென்று பாட்டுருவெடுத்தது.
*அறிவினு னுகுவ துண்டோ பிறிதினுேய்
தந்நோய்போற் போற்றக் கடை” என முரசறைந்தது.
வள்ளுவப்பிள்ளை வாயிற் பிறந்த இவ்வாக்கு ஆக்கந்தரும் வாக்கு. முக் காலத்திற்கும் பொருந்தும் மெத்தச்

Page 32
- 1
சிறந்த வாக்கு. எந்தக் காலத்திலும் பார்க்க அறிவியலாளர் எனத் தம் மைக் கூறிக்கொள்வோர் பொல்லாக் குரலெழுப்பும் இக் காலத்துக் குச் சாலப்பொருந்தும் வாக்கு. இக் காலத்திற்கென்றே எழுந் தா ற் போன்ற நிறைவான வாக்கு. அணுக் குண்டு யுகத்திற்கியைந்த அருட் குண்டு, வாக்கு. வல்லரசுகள் அணுக் குண்டு, நீர்வளிக் குண்டுகளால் உ ல  ைகப் பயமுறுத்துகின்றன. மேலைத்தேயக் கீழைத்தேயப் பேரறி வாளரும் அன்பாளரும் திகைக்கின் றனர். குற்றமற்ற மற்றேர் கூக்குரல் ஆணவத்திமிர் பிடித்த அரசுகளின் காதில் விழுவதில்லை. மோசந்தரும் ஆசை காரணமாகப் பிறந்த - தம் மிடையே யெழுந்த-அவ நம்பிக்கை யால் அவை எவ்வித அட்டூழியங்கள் செய்யவுந் தயார் . ஒன்றையொன்று அச்சுறுத்தி அழிக்கத் தெண்டித்து ஈற்றிலே தாமுஞ் சேர்ந்து அழியும்உலகை மயான மாக்கும் - பகாசுர
இலக்கியத்தைப் படைப்பவன் மேை என்ற மேனுட்டுப் பழமொழி ஒன்று உண்டு உண்மையன்று. இலக்கியம் என்பது மனித களையும் சொல்லிலே வடித்து, நம்முடை இந்தக் கலை நமது உள்ளத்தைத் தொடுகின் பயனை, சொல்லில் விளக்குவதும்-அதாவ பிடுவதும் ஒரு கலைதான்.
அது மிக நுட்பமான கலை என்பது என் இலக்கிய மரபுகளைப் பற்றிய தெளிந்த இடையருமல் நெடுநாள் பழகிய பண்பு, தோய்ந்தும் தோயாமல் கரந்துநிற்கும் தொ எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னை ஒதுக்கில் பற்றிப் பேச்சு எழுகின்றதோ அதனேடு ஒ இலக்கிய நலனை ஆராய்கின்ற கலைஞனு இலக்கிய மேதைகளையும் கருவிலே திருவுடைய என்னவோ, இலக்கியத் திறனய்வாளனைப் ஆழ்ந்த கல்வியும் பரந்த கேள்வியும், சலி அவனுல் தன்னுடைய கலையில் ஒன்றும் சா

4 --
மரணத்திற்கு வழிவகுக்கின்றன. இக்கால விஞ்ஞான அலறலிடையே வள்ளுவனர் வாய்ப் பிறந்த மெய்ஞ் ஞானக்குரலைத் தம்கா தில் விழுத்தும் புண்ணியம் இவர்களுக்குக் கிட்டுமா ?
* உள்ளுவ தெல்லாம் உயர்வுள் ளல் ’ என்று புத்தி கூறி உயர்ந்த இலட்சியங்களைச் சிந்திக்குமாறு முர சறைந்த வள்ளுவரைப் பற்றிப் பண்டைநாட் புலவர் ஒருவர் சிந்தித் தார். அவர்தம் பாடல்களின் உந்நத உயரிய ஒப்புயர்வற்ற கருத்து மணி களைத் திருத்தமாக நினைத்தார். வள்ளுவனர் பாடல்களை அவரே பாடியதாக ஒப்புக் கொள்ளாது அறம்பாடிற்றே என அறைந்து தெய்வத் திருவள்ளுவரே அறம், அறமே வள்ளுவனர் எனக் குழைந் துரைத்தார். வள்ளுவர் குறளை மறு வற உணர்ந்தோர் அறம்பாடிற்று எனக் கூறிய அதனை அப்படியே ஒப் புக் கொள்வர்.
த ; அதைப்பற்றிப் பேசுகின்றவன் பேதை " . ஆனல் இது விளையாட்டுப் பேச்சே அன்றி, உள்ளத்தின் பல்வேறு நிலைகளையும் சலனங் ப அநுபவமாக மாற்றுகின்ற ஒரு கலை. ற பான்மையை, அதனுல் நாம் பெறுகின்ற து இலக்கியத்தைப்பற்றிப் பேசுவதும் மதிப்
f னவோ உண்மை. சிறந்த மொழி அறிவு, ஞானம், உந்நதமான இலக்கியங்களோடு புலவனுடைய சொற்களுக்கு இடையே னிப்பொருளைத் தொட்டுக் காட்டும் திறமை வைத்துவிட்டு, எந்த இலக்கியப் படைப்பைப் }ட்டி நிற்கின்ற அடக்கம்-இவை அனைத்தும் க்கு இன்றியமையாதவை. கவிஞர்களையும் ார் என்று பேசுவது மரபு. இது உண்மையோ பொறுத்தமட்டில், கருவிலே திருவோடு யாத உழைப்பும் அமையவில்லையென்றல் தித்துவிட முடியாது.
- பேராசிரியர் அ. சூரீநிவாசராகவன்

Page 33
திருக்கோணமலைய
திருக்கோணமலை, பண்டிதர்,
அகில இலங்கைத் தமிழ்த் தின விழாவை இவ்வாண்டு திருக்கோண மலையிற் கொண்டாடுவது சாலப் பொருத்தமுடையதே. திருக்கோண மலையில் தமிழ் வளர்த்த சான்றேர் களில் ஒருவராகிய திருவாளர் தி. த. சரவணமுத்துப்பிள்ளை அவர்களின் நூற்ருண்டு விழாவைக் கொண்டாட வேண்டிய காலமும் இதுவேயாத லால் தமிழ்வளர்த்த சான்றேர் களின் கவனத்திற்கு இச்செய்தியைச் சமர்ப்பிக்க விழைகின்றேன்.
மோகனுங்கி என்ற அரிய நாவ லைப் படைத்தவர், திரு.தி. த. சரவண முத்துப்பிள்ளை யவர்கள். ஈழத்தில் தோன்றிய முதல் நாவல் இது. இந்த நாவல் நாவலர்களுக்கும், தமிழ்க் காவலர்களுக்கும் பெருவிருந்தாகத் திகழ்கின்றது. கால, தேச, வர்த்த மானங்களுக்கேற்ப மொழிவளர்ச்சி யையும், வசனநடை மாற்றங்களை யும், திருக்கோணமலையின் வரலாற் றினையும் ஆராய விழைபவர்கள் *மோகனங்கியைப் பல்கலைக்கழகம் வரை எடுத்துச்சென்று ஆராய்ந் தார்கள் என்ருல் சரவணமுத்துப் பிள்ளையையும், திருக்கோணமலையின் தமிழ் வளர்ச்சியையும், நிதான மாகச் சிந்திக்கத்தான் வேண்டும். சிந் தனையாளர்களுக்குத் தமிழ்வளர்ச்சி யின் வரலாறுகள் பெறுதற்கரிய மாபெருங் கருவூலங்களாகும். 'மோக ணுங்கியைத் தந்த சரவணமுத்துப் பிள்ளையவர்கள் அத்தோடு நின் றிருக்கமாட்டார்.வேறும் சில படைப் புக்களை விட்டுச் சென்றிருப்பார் என எண்ணுவது ஆய்வாளர்களின்

பில் தமிழ்வளர்ச்சி சைவப்புலவர் இ. வடிவேல்
இயல்பாகும். இந்த ஆர்வம் வீண் போகவில்லை. மோகனங்கி"யைத் தந்தவர் ‘தத்தைவிடுதூது’ என்ற அரிய நூலையும், முத்துக்குமார சுவாமி இரட்டைமணிமாலை"யையும், * முத்துக்குமாரசுவாமி ஊஞ்சலையும், 'தமிழ்ப்பாஷை’ என்னும் வசன நூலை யும் ஆக்கித்தந்து தமிழை வளர்த் துத் திருக்கோணமலைக்கும், தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் பெருமை யைத் தேடித்தந்துள்ளார். அவர் பாடிய தனிப்பாடல்களும் சிலவுள. சிலவற்றை உதாரணமாகத் தருகின் றேன். பூ விற்கப் புகுந்த பூக்காரி பூவையரை முன்னிலைப்படுத்திக் கூறு வது போன்று கவிதைகள் அமைந் திருக்கின்றன:
மல்லிகை நற்கோங்கு
மருக்கொழுந்து சண்பகமும் முல்லைமல ருங்கொணர்ந்தேன்
மொய்குழலீர் கொள்ளிரோ மொய்குழலீ ராம்பல்
முளரி குவளைமலர் கொய்தவுடன் கொணர்ந்தேன்
கோல்வளையீர் கொள்ளிரோ.
மந்தாரை வெட்சி
வகுள மிருவாட்சி செந்தா மரைகொணர்ந்தேன்
தேமொழியீர் கொள்ளிரோ தேமொழியீ ராத்தி
யசோகுதிருக் கொன்றை காமருகா யாகொணர்ந்தேன்
கன்னியரே கொள்ளிரோ.
குங்குமம் புன்ன
தங்குமெழிற் சம்பங்
தையலிர் கொள்ளிரோ தையலிர் காந்த
ளனிச்சைநறுந் தாழைமலர் கொய்து கொணர்ந்தேன்
கொடியிடையீர் கொள்ளிரோ.

Page 34
-
எழுபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் 'சுதேசமித்திரன்’ என்ற திங்களிதழில் வெளிவந்த இவ்வரிய தனிப்பாடல் கள் அருந்தமிழாசான் திரு. மா. பீதாம்பரனர் அவர்களின் நாவி லிருந்து நடம்பயில்வதைக் கண் டேன்; கேட்டேன், இங்குத் தருகின் றேன். சிலப்பதிகாரம் சிந்தும் கவிதைகளோடும், முத்தமிழ்முனிவர் கவாமி விபுலாநந்த அடிகளார் அருளிய ** வெள்ளைநிற மல்லிகை யோ ‘’ என்ற கவிதைகளோடும் இக் கவிதைகளை ஒப்புநோக்கி உள்கு வோர் உவப்பர்.
திருக் கோண மலையின் தமிழ் வளர்ச்சியைச் சிந்திக்கும்போது சரவணமுத்துப்பிள்ளை அவர்களின் மூத்த சகோதரன் திருவாளர் தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் ஆற் றிய செந்தமிழ்ப் பணியைச் சிந்திக்கா தார் சிந்தையிலாதாரே. இற்றைக்கு நூறுஆண்டுகளுக்கு முன்பிறந்த கணக சுந்தரம்பிள்ளை யவர்கள் முத்துக் குமாரசுவாமி வெண்பா என்ற நூலை ஆக்கியதோடமையாது, கம்பராமா யணம்-பாலகாண்டத்திற்கு அரிய உரை செய்தும், சுன்னுகம் அ.குமார சுவாமிப்புலவருடன் சேர்ந்து “நம்பி அகப்பொருளுக்கு உரை எழுதியும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். விவேகசிந்தாமணி என்ற சஞ்சிகைக் குத் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி ஈழத்திலும், பாரதத்திலுமுள்ள பேரறிஞர்களின் சிந்தனையைக் கிளறி யவர் கனகசுந்தரம்பிள்ளையவர்கள். அன்னுராற்றிய அருந்தமிழ்த் தொண். டினைத் தாங்கித் திருக்கோணமலை பெருமை அடைந்தது.
தமிழ்நாட்டிலும், ஈழநாட்டி லும் சைவமும் தமிழும் இணைந்து

6 -
வளர்ந்து வந்திருப்பதற்குப் பல வர லாற்றுச் சான்றுகள் உண்டு. திருக் கோணமலை அதற்கு விதிவிலக்காய் இருக்கமுடியாது. எனவே பல நூற்ருண்டுகளுக்கு அப்பாற் சென்று ஆராயும்போது திருக்கோணமலையின் தமிழ் வளர்ச்சியை எண்ணியெண்ணி இறும்பூதெய்துவோ ருளர். சோழ பரம்பரையைச் சேர்ந்த குளக் கோட்டு மன்னன் காலத்திற்குப் பின் ganuGU560) i-u பரம்பரையொன்று திருக்கோணமலையிலிருந்து தமிழை வளர்த்து வந்துள்ளதாகக் கர்ண பரம்பரைச் செய்தியொன்று நிலவி வருகின்றது. அப்பரம்பரையைச் சேர்ந்த புலவர்கள் சைவ ஆதீன மொன்றை அமைத்து அதன்மூலம் தமிழை வளர்த்துவந்துள்ளார்கள். *திருக்கரைசைப் புராணம்’, ‘திருக் கோணமலை மும்மணிமாலை ’, ‘திருக். கோணமலையந்தாதி’, ‘ பகவத்கீதை யுரை " , " சிவஞானசித்தியாருரை ’ போன்ற அரும்பெரும் ஆக்கங்கள் திருக்கோணமலையில் தோன்றின. ஏறக்குறைய 200 வருடங்களுக்கு முன் தம்பலகாமத்தில் வாழ்ந்துவந்த வீரக்கோ முதலியார் என்பவர் 'வெரு கல் சித்திரவேலாயுதர் காதல் * என்ற நூலை எழுதியுள்ளார். அந் நூல் தமிழ்ப்பேரறிஞர் திரு. வே. அகிலேசபிள்ளை அவர்களாற் பதிப் பிக்கப்பட்டிருக்கின்றது.
திருவாளர் வே. அகிலேசபிள்ளை யவர்கள் சைவமும், தமிழும் தழைத் திணிதோங்கத் தன் வாழ்நாள் முழு வதையும் தியாகம் செய்த மாபெருந் தியாகி. திருக்கோணமலை மாவட் டத்திற் பல இடங்களுக்குச் சென்று ஆங்காங்குள்ள கோணேசர் கல்
வெட்டு என்னும் ஏட்டுப்பிரதிகளைச்

Page 35
- 1
சேகரித்துத் துருவி ஆராய்ந்து * திருக்கோளுசல வைபவம் ' என் னும் நூலை எழுதிக் கல்வெட்டுப் பாக்களுடன் அச்சிட்டு வெளியிட் டார். திருக்கோணமலை வரலாற்றை அறிய விரும்புவோருக்கு அந்நூல் வழிகாட்டியாகத் திகழ்கின்றது. அன்னர் இருபத்தொரு நூல்களை எழுதித் தமிழ்த்தாய்க்குத் தொண் டாற்றியுள்ளதை அறிந்து திருக் கோணமலை பெருமையடைகின்றது. 'நெஞ்சறிமாலை’, ‘விசாலாட்சி விருத் தம் * , * கோணநாயகர் பதிகம் , ‘அடைக்கல மாலை', 'சிறைவிடுபதிகம்’ முதலியன அவருடைய ஆக்கங்கள். * திருக்கரைசைப் புராணம்’, ‘நரேந் திரசிங்கன் பள்ளு’ முதலிய நூல் களைப் பதிப்பித்துள்ளார். தமிழ்ப் பேரறிஞர் அகிலேசபிள்ளை அவர்க ளால் 1889இல் எழுதப்பெற்ற‘கண்டி யரசன் நாடகம்' அச்சேருமற் கை யெழுத்துப் பிரதியாக இருந்து வரு கின்றது. தனிப்பாடல்கள் சிலவும் இவரால் ஆக்கப்பட்டிருக்கின்றன. இவ்வறிஞருடைய புலமைக்கு எடுத் துக்காட்டாக இரு பாடல்களைக் கீழே காண்போம்:
பாசியை ஒத்த குழலார்
முகத்திற் பளபளக்கும் நாசியைப் பார்த்துக் களிப்படைந்
தாயந்த நாட்டம்விட்டு வாசியை யேற்றி நாசியைப்
பார்த்து மகிழ்ந்திருந்தால் தேசிகன் வந்தருள் செய்வா
னிதுதிண்ணம் தேர்நெஞ்சமே.
. கெஞ்சறிமாலை
திருவார் கரிய குழலழகும்
தேங்குங் கருணை விழியழகும் செவ்வா யுறுபுன் சிரிப்பழகும்
திகழும் நான்கு புயத்தழகும்

மருவார் வெண் டரளமணி
மாலை யொளிருந் தனத்தழகும் வன்ன இடையிற் பட்டழகும்
வயங்குங் கமலப் பதத்தழகும் இருமா நிலத்தில் அனுதினமென்
இதயத் திருத்தித் துதிப்பதல்லால் இன்னும் உனைவிட் டொருதெய்வம்
இருக்கு மெனயான் நினைத்தறியேன் அருமா மறைசொல் கோணமலை
அதனில் விசுவ நாதரிடத் தமருங் குயிலே விசாலாட்சி
அம்மே எனநி ஆள்வாயே.
- விசாலாட்சி விருத்தம்
திருக்கோணமலையில் தமிழை வளர்த்தசான்றேர்களில் வித்துவான் சு. தம்பையா என்பவரைத் தமிழ் கூறும் நல்லுலகம் மறக்கமுடியாது. 'திருக்கோணமலை வெண்பா', 'குமார நாயகர் வெண்பா ‘, ‘ குமாரநாயகர் தோத்திரம் ’, * திருக்கோணேசர் அகவல் ' என்னும் நூல்களை ஆக்கித் தந்தவர் இப்பெரியார். அத்துட னமையாது சுன்னுகம் வரதபண்டிதர் இயற்றிய அமுதாகரம் ’ என்னும் விஷவைத்திய நூலை 1892ஆம் ஆண்டில் பதிப்பித்தார். "கஞ்சன் அம்மானை' என்ற நூலைத் தமது விருப் பப்படி திரு. க. வைத்திலிங்கப் புலவரைக் கொண்டு பதிப்பித்தார்.
வடமொழி நூலாகிய "தட்சண கைலாச மான்மியத்தை வித்துவான் தாமோதரம்பிள்ளை யவர்கள் மொழி பெயர்த்தும், 'திருக்கோணுசல புரா ணத்தை மாசிலாமணி முத்துக் குமாரு என்பவர் 1845ஆம் ஆண்டில் பழைய ஏட்டிலிருந்து பிரதிசெய்தும், *திருன்ஸ்வால் யுத்தக் கும்மி என்ற நூலை திரு. மு. வேலுப்பிள்ளை ஆசிரியர் எழுதியும், ‘நளச்சக்கர வர்த்தி நாடகத்தை திரு. தம்பையா

Page 36
- 1
உபாத்தியாயர் என்பவர் எழுதியும், திருக்கோணமலையிலிருந்து தமிழ்த் தொண்டாற்றினுர்கள்.
திருக்கோணமலையில் வாழ்ந்த தம்பாப்பிள்ளை என்பவரைப்பற்றிப் பாடிய “ தம்பாப்பிள்ளை வசந்தன் என்னும் நூலையும், அனுராதபுரத் திற்கும் திருக்கோணமலைக்குமுள்ள தொடர்பை விளக்கும் “ சிங்களப் பெண்கதை ‘ என்ற நூலையும், *கந்தசுவாமி கலிவெண்பா', 'திருக் கோணமலைப் பெருமாள் பதிகம்’ என்னும் பதிகங்களையும் எழுதியவர் யாரென்று புலப்படவில்லை. “வழி நடைச் சிந்து' என்னும் நூலை முஸ்லீம் புலவர் ஒருவர் பாடியதாக அறியக் கிடக்கின்றது. *கதிரமலைப் பதிகம்’, *கதிர்காம மாலை" என்பவற்றை வைத்தியர் திரு. சி. ஆறுமுகம் பிள்ளை அவர்கள் பாடினர்கள். அதனை அவருடைய மகன் திரு. ஆ. கந்தையா என்பவர் பதிப்பித்திருக் கின்ருர். 'திருக்கோணேஸ்வரம்’ என் னும் சிறந்ததோர் நூலை புலவர் வை. சோமாஸ்கந்தர், திரு. அ. பூரீஸ்கந்தராசா ஆகிய இருவரும் எழுதி வெளியிட்டுத் திருக்கோண மலையிலிருந்து தமிழை வளர்த்துள்ள
ώΟ Π .
அச்சேருத அரிய பல ஆக்கங்கள் திருக்கோணமலையில் இன்னும் இருக் கின்றன. வில்லூன்றிக் கந்தன் அக வல்’, ‘விசாலாட்சியம்மை அகவல் , அறிஞர் பீதாம்பரனர் இயற்றிய * பிள்ளைப்பாட்டு’, ஆசிரியர் க. கண பதிப்பிள்ளை அவர்கள் இயற்றிய *கோணேசர் பிள்ளைத்தமிழ்’ என்பன பதிப்பிக்கப்படாமல் இருக்கின்றன.

1922இல் இங்கு வாழ்ந்த பண்டிதர் மயில்வாகனனுர் (சுவாமி விபுலாநந்த அடிகள்) வில்லூன்றிக் கந்தன் நவமணிமாலை’ பாடியுள்ளார். அடிகளாரின் ஆசிரியர் திரு. வைத்தி விங்க தேசிகரவர்கள் *தட்சண கைலாச புராணத்தை யாராய்ந்து *கோணேசர் கல் வெட்டை யுஞ் சேர்த்துப் பதிப்பித்துத் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார்.
திருக்கோணமலையில் வாழ்ந்த புலமைமிக்க சிலரால் அவ்வக் காலத் தில் இயற்றிய கண்டன நூல்கள் மறைந்து கிடக்கின்றன. அவற்று ளொன்று "சைவ மகத்துவ கண்டன திக்கார நிக்ரக எதிரேற்று ’ என்ப தாகும். வில் லூன்றியில் வாழ்ந்த பிரம்மபூரீ இ. கு.பூரணுனந்தேஸ்வரக் குருக்கள் அவர்கள் "அகோரசிவாச் சாரியார் பத்ததி'யிலுள்ள அக்கினி காரியத்தைத் தமிழில் மொழி பெயர்த்து அதற்கோர் சிறப்புரை யும் எழுதியுள்ளார்.
இவைகளைவிட, சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங் கள் என்பனவற்றை எழுதிச் சில சான் ருேர்கள் தற்போது திருக்கோண மலையிலிருந்து தமிழை வளர்த்து வருகின்ருர்கள். இக் கட்டுரையை எழுதுவதற்கு ஆதாரபூர்வமான சான்றுகளைத் தந்த திரு. மா. பீதாம் பரணுர் அவர்களுக்கு நன்றிக்கடப் பாடுடையேன். இதுவரை கூறப்பட் டுள்ள சான்றுகள் திருக்கோணமலை யின் தமிழ்வளர்ச்சியினை ஒரளவு தெளிவுபடுத்து மென்பதில் ஐய L(ຄ).

Page 37
பாடசாலை நூலக
திரு. எஸ். எ
பின்னணி:
தேசிய நூலகமொன்றினை நிறுவு வதற்கும், பல்கலைக் கழகங்கள்,
கல்லூரிகள், பாடசாலைகள் ஆகிய வற்றிலுள்ள நூல்நிலையங்களினதும், பொது நூல் நிலையங்களினதும், விசேஷ நூல் நிலையங்களினதும் சேவைகளை ஒருமுகப்படுத்தி முன் னேற்றம் காண்பதற்குமாக, கடந்த ஆண்டில் இயற்றப்பட்ட தேசிய நூலக சேவைச் சபைச் சட்டம், (National Library Services Board Act No. 17 of 1970) gavil6)Ju9lair நூலக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் ஆவணமாகும்.
இச்சட்டத்தின் கீழ், அண்மையில் நிறுவப்பட்ட நூலகச் சபை (Library Board) 560Tg) pira) is 95. விருத்தித் திட்டத்திற்கு முதற்படி யாக, பாடசாலை நூலகங்களில் அபி விருத்திக்கான நடவடிக்கைகளில் கவனஞ்செலுத்தி வருகின்றது. நமது நாட்டில் இயங்கும் ஏனைய நூலகங் களுக்கெல்லாம் அத்தி வார மாக அமைவது, பாடசாலை நூலகங்களே யாகும். எனவே, எந்தவிதமான நூலக அபிவிருத்தித்திட்டத்திற்கும், முன்னேடியாகப் பாடசாலை நூலகங் களின் சீரமைப்பு ஏற்படவேண்டியது அவசியமாகும். இதனை உணர்ந்து எமது நூலகச் சபை, பாடசாலை நூலகங்களுக்குத் தமது திட்டத்தில் முதலிடம் அளித்துள்ளது வரவேற் கத்தக்கதாகும்.
இனி, இச்சட்டத்தில் எமது பாட சாலை நூலகங்களின் வருங்கால

மும் மொழியறிவும்
). கமாலுத்தீன்
வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந் துள்ள விதிகளை மட்டும் இங்கு கவனிப்போம். பாடசாலை நூலகங் களைப் பொறுத்தமட்டில் நூலகச் சபையின் அ தி கா ர ங் கள் பின் வருமாறு :
(அ) பாடசாலை நூலகங்களின் ஆக்கத்துக்கும், வளர்ச்சிக்கு மாக ஆலோசனைகளையும், உதவிகளையும் அளிப்பது.
(ஆ) அறிவேடுகளை வெளியிடுவதற் கும், கட்புல , செவிப்புல சாத னங்களை உற்பத்தி செய்வ தற்குமான ஆலோசனைகளை யும், உதவிகளையும் அளிப்பது,
(இ) நூலகக் கல்வித்துறையிலும், பயிற்சித் துறையிலும் உதவி அளிப்பது.
எமது நூலகச் சபையின் பணி மேற்கண்ட வகைகளில் விரிவடையும் போது, பாடசாலை நூலகங்கள் கிரம மாக வளர்ச்சியடைந்து, ஒவ்வொரு பாடசாலையும் தனது பயிற்சிச் சாத னங்களின் தொகுப்பிற்கு நடுநாயக மாகத் தரமான நூலகமொன்றைப் பெற்று விளங்குமென்று எதிர் பார்க்க முடியும். இத்தகைய நூல் நிலையம் அப் பாடசாலையிற் கற்றல், கற்பித்தல் ஆகிய நடவடிக்கைகள் அனைத்திற்கும் மூலாதாரமாகத் திகழும்.
இக்கட்டுரையிற் பொதுவாக, பாடசாலை நூலகத்தின் நோக்கங் களையும், சிறப்பாகப் பிள்ளைகளின் மொழியறிவை வளர்ப்பதில் நூலகத்

Page 38
صم -
தின் பணியையும், சுருக்கமாகக் கூறுவோம். நூலக நோக்கங்கள் :
பிள்ளைகளிடத்தே நூலார்வத் தைத் தூண்டுவதும், அவர்கள் தாமா கவே நூலகங்களிலிருந்து விஷயங்க ளைப் படித்தறிந்துகொள்ளும் ஆற் றலை வளர்ப்பதும் பாடசாலை நூல கத்தின் பிரதான நோக்கங்களாகும். இதன் மூலம் பிள்ளைகள் பெறும் சமூகப்பயிற்சி, அவர்கள் தங்களு டைய சூழலுக்கும், பாட நூல்க ளுக்கும், அப்பாற்பட்ட விஷயங்களை அறிந்துகொள்வதோடு, (ଗ ଉy ଜf நாட்டவரோடும் பொருத்தமுற வழிகோலுகிறது.
மேலும், பரவலாக நூல்களை வாசிக்கும் பிள்ளைகளே, கல்வித் துறையில் முன்னேற்றங் காண்கிருர் கள் என்ற உண்மையையும் இங்கு நாம் குறிப்பிட வேண்டும். இதனையே முதிர்ந்த நூலக அனுபவம் வாய்ந்த எல். எம். ஹெறட் (L. M. Harrod) பின்வருமாறு விளக்கிக் கூறுகிருர் :
** நூல்களைப் ப்ரவலாக வாசிக் கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண் டுள்ள பிள்ளைகள் வாசிப்பதில் இன்பம் காணப் பயின்றுகொள்ளாத பிள்ளை களே விடப் பல நன்மைகளைப் பெறுவ தோடு, மிகவும் எளிதாகப் பள்ளிப் பரீட்சைகளிலுந்தேர்ச்சியடைவதை, நூலகத்தை நன்கு பயன்படுத்திச் சரளமாக வாசிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ள பிள்ளைகளின் வாசிக்கும் பழக்கத்தையும், அவர்களுடைய சமூகப் பண்புகளையும், நீண்டகால மாக அவதானித்துப் பெற்ற அணு பவத்தின்மூலம் அறியக்கூடியதா யிருக்கிறது. இப்பிள்ளைகள் சாதாரண

مسس۔ 09
மாகத் தமது கல்விக்கும், அநுபவத் திற்கும் அப்பாற்பட்ட விஷயங்களை அறிந்துகொள்வதோடு, தம் சூழல் பற்றியும், வெளிநாடுகள் பற்றியும் தமது அநுபவத்தை விரிவாக்கிக் கொள்கிருர்கள். ’’
நூல்கள் தரும் மொழியறிவு:
நூல்களைப் பரவலாக வாசிப் பதன் மூலம் பிள்ளைகள் பெறும் பயன்களுள், மொழியறிவை நாம் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். இதனை யொட்டியே ஒரு நூலகத்திற் காக நூல்களைத் தெரிவுசெய்வதில் நூலாசிரியர்களின் மொழியாட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ஒரு நூலின் உள்ளுறையை நாம் கணிக்கும்போது, அது இலக்கியத் தன்மையுடையதா வென்பதே முதன்மையாகக் கவனிக்க வேண்டிய பண்பாகும். ஒரளவு இலக்கிய நயம் குன்றிய நூலாயிருந்தபோதும், குறைந்தபட்சம் அது நல்ல தமிழில் அமைந்த நூலாவென்பதைக் கவனித் தல் வேண்டும். இந்த மதிப்பீடு மிகவும் முக்கியமானதாகும். ஏனெ னில், ஒரு பிள்ளை, தான் வாசிக்கும் நூல்களிலிருந்துதான் தன்னுடைய மொழியின் வளத்தை அறிந்து கொள்ள முடியும். தனது எண்ணங் களை முழுமையாகவும், தெளிவாக வும், வெளியிடுவதற்கு ஏற்றமான சாதனம், தன் தாய்மொழிதான் என்பதை ஒரு பிள்ளை உணர்வது, அப்பிள்ளை பயிலும் நூல்களில் தான் தங்கியுள்ளது. இதன் வழி யாகவே ஒரு பிள்ளை தனது பேச்சுத் திறனையும், எழுத்துத் திறனையும் பெறுகின்றது.

Page 39
நல்ல தமிழில் எழுதுவது அல்லது பேசுவது என்று நாம் கூறும்போது, பொருட்செறிவற்ற அலங்காரத் தமிழ் நடையையோ அல்லது புரிந்து கொள்ள முடியாத பண்டிதத் தமி ழையோ இங்கு நாம் கருதவில்லை. மாருக, நாம் இங்கு கருதுவது தெளி வுள்ள, திட்ட நுட்பமான, எளிதில் விளங்கிக் கொள்ளக்கூடிய தன்மை
பொருந்திய மொழியினைத்தான்.
நூ ல் களிற் கையாளப்படும் மொழியின் தன்மையைப்பற்றி, லயனல் ஆர். மெக் கொல்வினின் (Lionel Mc. Colvin) l'air 6 ICD5th 5(15g, துக் குறிப்பிடத்தக்கதாகும் :
* ஒரு நூலில் உபயோகிக்கப் படும் மொழி, போதுமான அளவு நாளாந்த வழக்கிலுள்ள மொழியா யிருத்தல் வேண்டுமென்பதை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். மேலும், அம்மொழி பகட்டானதாகவும், செயற்கைத் தன்மை பொருந்திய தாகவும், இயல்பாகவன்றி வலிந்து கையாளப்படும் தன்மையுடையதாக வும் இருக்கக்கூடாதென்பதை நான் ஒப்புகிறேன். ஆனல் அதேவேளையில் Lj Goff பெரும்பாலும் கொச்சை மொழியையே பேசுகிருர்கள் என் பதை மறந்துவிடக்கூடாது. எனவே, மொழியாட்சியில் ஒருவித இடைநிலை தான் சுமுகமானது. தாய்மோழியைத் தவருண வகையில் எழுதுவதையும், பேசுவதையும், ஊக்குவிக்கும் நூல்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு நூலிற் காணும் கதாபாத் திரங்களின் உரையாடலை σT(Lρ தும்போது, கொச்சைமொழி பேசு வோராயின், அப்பேச்சை அதே பாணியில் எழுதுவது பொருந்தும் .

: 1 -
ஆனல், நூலின் போதுவான சொல் லோழுக்கு, சமூகத்திலுள்ள சாதாரண மாகப் படித்தவர்கள் ஏற்றுக்கோள்ளக் கூடிய மொழியிலேயே இருத்தல் வேண்டும்.' சிறுவர் இலக்கியம் :
இக்கருத்துக்களை இங்கே நாம் எடுத்தியம்பும்போது, எமது பாட சாலை நூலகங்களின் தேவைகளை நிறைவு படுத்தக்கூடிய வகையில், தமிழ் நூல்களின் வெளியீடு நிகழ்ந்து வருகின்றதோ என்ற கேள்வி எமது உளத்தே எழுகின்றது. சிறப்பாக, சிறுவர் இலக்கிய வளர்ச்சி எமது நாட்டிலும், தமிழகத்திலும் எந்த நிலையில் உள்ளது என்பதை நாம் இங்கு கவனித்தல் இன்றியமையாத தாகும்.
சிறுவர் இ லக் கி ய த்  ைத ப் பொறுத்தவரையில் இன்று எமது நிலை மிகவும் திருப்திகரமற்றதாகவே இருந்து வருவதை நாம் மறுக்க முடி யாது. இவ் வா று கூறும்போது, வளர்ந்தோருக்கான நூல்கள் சகல அறிவுத்துறைகளையும் அளாவித்திருப் திகரமான வகையில் வளர்ச்சியடைந் திருப்பதாக நாம் கூறுவதாகாது. அங்கும் மந்தநிலைதான் காணப்படு கின்றதெனினும், சிறப்பாகச் சிறுவர் இலக்கியத்துறைதான் மிகவும் பின் தங்கியிருக்கிறது என்பதை வலியுறுத் திக் கூறவேண்டியிருக்கிறது.
எனவே, எமது பாடசாலை நூல் நிலையங்கள் தமது பணியைச் சிறப் பாகச் செய்யவேண்டுமாயின், தமிழ் மொழியில் தரமான, சிறுவர் இலக் கிய வளர்ச்சி ஏற்படவேண்டும். இங்குதான் நாம் ஆரம்பத்தில் நூல கச் சபையின் பணிகளுள் ஒன்ருன

Page 40
- 2
அறிவேடுகளை வெளியிடும் முயற்சி
களின் அவசியத்தைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
எமது நூலகச் சபை சிறுவர் இலக்கிய வெளியீட்டுத் துறையில் ஆற்றவேண்டிய பணி பொறுப்பு மிக்கதாகும். பள்ளிப் பருவம்தான் பிள்ளைகளின் உளத் தைப் பண் படுத்துவதற்குச் சாலச் சிறந்தது என்பதை நாமறிவோம். எனவே, எமது மண்ணில் உருவாகும் இலக் கியப் படைப்புக்களை நாம் ஊக்கு விக்க முன்வரவேண்டும். குழந்தை இலக்கிய எழுத்தா ளர்களுக்குப் போதிய உற்சாகமளித்துத் தரமான நூல்கள் பெருகும் வகை செய்ய வேண்டும்.
தரம் குறைந்த ஏடுகள் :
இவ்வேளையில் தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் பற்றிய ஒரு முக்கியமான விஷயத்தை இங்கு நாம் குறிப்பிட வேண்டும். இன்று ஒரு சுமாரான அளவு தமிழ்ப் புதின ஏடுகளும், சஞ்சிகைகளும், நூல்களும் பள்ளிப் பருவத் தி னருக்காக இலக்கியச் சந்தையிற் பவனிவருவதை நாம் அறிவோம். இவற்றுள் பெரும்பா லானவை, தமிழகத்திலிருந்து இறக்கு மதியாகின்ற வையாகும். காம் மேலே பிள்ளைகளின் மொழியறிவு வளர்ச்சிக்கு உதவக்கூடிய தகைமை யுள்ள நூல்களைப்பற்றிக் கூறிய அளவு கோல் கொண்டு மதிப்பிடுவதாயின் எமது காட்டிற் படைக்கப்படும் ஏடுக ளாயினும் சரி, தமிழகத்தி லிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏடுகளாயி னும் சரி அவற்றுள் மிகுதியானவை பிள்ளைகளின் மோழி வளர்ச்சிக்கு ஊறு விளை விக்கக் கூடியனவிே யேன்று உறுதியாகக் கூறலாம்.

2 -
வர்த்தக நோக்குடன் புற்றீசல் கள்போல் இலக்கியச் சந்தையை மொய்த்து நிற்கும் நூல்களைத்தான் சிறுவர் முதல் பெரியோர் வரை விரும்பிப் படிக்கிருர்கள் என்றும், தரமான நூல்களை வெளியிட்டுப் பரப்புவது அசாத்தியமான காரியம் என்றும் பலர் அங்கலாய்ப்பதை நாம் அறிவோம். ஆனல் எமது பாடசாலை நூலகங்கள் கிரமமாக அமைக்கப் பட்டுத் தரமானநூல்களும், சஞ்சிகை களும் அவற்றின் மூலம் பிள்ளைக ளுடைய கைகளுக்கு எட்டுமாயின், நிச்சயமாக அவர்கள் மொழிவளமும் இலக்கிய நயமும் செறிந்த நூல் களேயே நாடுவார்கள். தரக்குறை வான நூல்கள் அவர்களுடைய கவ னத்தை ஈர்க்கமாட்டா.
சிறுவர்களின் நூலார்வத்திலுள்ள ஒரு சிறப்புத் தன்மையை நாம் இங்கு மறந்துவிடக்கூடாது. அவர்கள் எளி தாகத் தமது கைகளுக் கெட்டக் கூடிய எந்த நூ லை யு ம் படிக்க முற்படுவார்கள். எனவே, தரமான நூல்களை எளிதில் அவர்கள் பெறக் கூடிய முறையினை நூலகங்கள் மூலம் நாம் ஏற்படுத்த வேண்டும். இக் கடமையில் நாம் தவறுவோமாயின் பிள்ளைகள் விரும்பத்தகாத தரக் குறைவான நூல்களையும், ஏடு களையும் நாடு வர். இங்குதான் நூலகச்சபையின் உதவி பெருமளவில் வேண்டப்படுகிறது
நூலகப் பயிற்சி :
எமது பாடசாலை நூலகங்கள் சீராக இயங்கவேண்டுமாயின், நூலக அறிவு படைத்த ஆசிரிய நூலகர் களும், சாத்தியமான இடங்களில் பயிற்றப்பட்ட பிரத்தியேக நூலகர் களும் அத்தியாவசியமாகும்.

Page 41
இத் துறை யு ம் நூலகச் சபை யின் அதிகாரத்திற் குட்பட்டதே யாகும், சொற்ப காலத்திற்கு முன் பாடசாலை நூலகர்கள் பயிற்சித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டு, பல ஆசிரியர்கள் இத்துறையில் முதல்நிலைப் பயிற்சி பெற்ருர்கள். எனினும், இத்திட்டம் தொடர்ந்து செயற்படவில்லை, பாடசாலை நூலகங் களைப் புனருத்தாரணம் சேய்ய முற் பட்டுள்ள நூலகச்சபை உடனடியாக இப்பயிற்சித் திட்டத்தைத் தொடர்ந்து கடத்துவது எமது பாடசாலை நூலகங் களின் முன்னேற்றத்திற்கு இன்றியமை யாததாகும். பொது நூலகத் தொடர்பு :
இவ்வேளையில், பொது நூலகங் களுக்கும் பாடசாலை நூலகங்களுக்கு முள்ள தொடர்பினைப் பற்றிக் குறிப் பிட வேண்டியது அவசியமாகின் றது. பாடசாலைகள்தான் பொது நூலக வாசகர்களை உருவாக்குகின் றன. பாடசாலை நூலகங்களை விட மிகவும் விரிவான வகையில் அறிவேடு களையும், கட்புல செவிப்புல சாதனங் களையும் சேகரித்து உதவக்கூடியது பொது நூலகம். எனவே ஆசிரியர் கள் பொது நூலகங்களோடு நெருங் கிய தொடர்பு கொண்டு, தமது பிள்ளைகளையும் அதனேடு தொடர்பு
கொள்ளச் செய்தல் வேண்டும்.
பொது நூலகங்களிலுள்ள சிறுவர் பகுதிகளில் கதை சொல்லும் ஏற்
எதை வேண்டுமானுலும் இரவல் .ெ ஆளுல் நூல்களை மட்டும் இரவல் கொடு றுமே திரும்பி வந்ததில்லை. அதிகம் ஏ6 அத்தனையுமே நான் இரவல் பெற்றுச் சட்

23 -
பாடு மொழிப்பயிற்சிக்கு மிகவும் உதவக் கூடியதாகும். பிள்ளைகள் தமது மொழியைத் தெளிவாகவும் உச்சரிப்புப் பிழையின்றியும் நூலகர் பேசக் கேட்கும் வாய்ப்பு இங்கு கிட்டு கிறது. இதைப்போலவே இசை நிகழ்ச்சிகளும், கவிதை வாசித்தல் போன்றவைகளும் சிறு பருவத்தி லேயே மொழியறிவை ஊட்டுவன வாக அமைகின்றன.
பொது நூலகங்களில் பிள்ளைகள் எவ்வித கட்டுப்பாடுமின்றித் தாம் விரும்பும் நூல்களையும், சஞ்சிகை களையும் வாசிக்கக்கூடிய சுதந்திரம் இருப்பதனுல் அவர்களுடைய உள நிறைவும், அறிவு வளர்ச்சியும் ஒருங்கே நிகழ இங்கே சிறந்த வாய்ப்புக் கிட்டுகிறது.
ஒத்துழைப்பு அவசியம் :
இறுதியாகப் பாடசாலை நூலகத் தின் நோக்கங்கள் தக்கவாறு நிறை வேற வேண்டின், தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர், நூலகர் அல்லது நூலக ஆசிரியர் ஆகிய அனைவரது ஒத்துழைப்பும் அத்தியாவசியம் என்பதை நாம் வற்புறுத்திக் கூற வேண்டும். இத்தகைய சூழல்தான் பிள்ளைகளைச் சிறந்த வாசகர்களாக மாற்றி அவர்கள் தமது மொழியின் வளத்தை உணர்ந்து, அதன்மூலம் தமது அறிவின் எல்லைக் கோடுகளை விசாலித்துக் கொள்ள உதவும்.
来
காடுங்கள் ; தாராளமாகவே கொடுங்கள், க்காதீர். இரவல் கொடுத்த நூல்கள் என் ர், எனது நூல்நிலையத்திலுள்ள நூல்கள் > பாதித்தவைதான்.
- அனதோலி பிரான்ஸ்.

Page 42
பிரதம வகுப் ஈழத்துத் தமிழ்
இரசிகமணி கன:
அகில இலங்கைப் பாடசாலை களின் தமிழ்த்திறன் போட்டி சம்பந்த மான விழாவிலே வெளியிடப்படும் மலருக்கு மேற்படி விடயம்பற்றி ஒரு கட்டுரை எழுதப்பணித்த கடிதத்தை வாசித்தபோது பல பிரச்சினைகள் என் மனத்திலே எழுந்தன. அவற் றை வரிசைப்படுத்தினுல், (1) பிரதம வகுப்புக்களுக்கான தமிழ் இலக்கியம் எப்படி அமைய வேண்டும், (2) அவற்றில் ஈழத்துக் கவிதைகள் எவ்வளவு இடம்பெறவேண்டும், (3) இப்போது நாம் படிப்பிக்கும் *தமிழ் மலர்' வரிசை நூல்கள் அந்த நோக்கத்தை நிறைவேற்று கின்றனவா? (4) அந்த நூல்களைப் படிப்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஈழத்துக்கவிதை களைப் படிப்பிக்க நேரம் இருக் குமா? அப்படியான பாடல்கள் உண்டா?
(5) நேரம் இல்லையானல் அவற் றைப்பற்றி எழுதிப் Lutligif என்ன? என்ற விளுக்கள்தாம் அவை.
இந்த விஞக்களுக்கு விடைகள் மிகப் பெரியதாகவே இருக்கும். அந்த விடைகளும் பலதரப்பட்டனவாகவே அமையும். ஒன்றுபோல் ஒன்று இராது என்பதும் உண்மை. ஆணு லும் என் மனதில், என் அனுபவத் திற் பட்டதையே எழுதுகின்றேன்.

புக்களுக்கான
க் கவிதைகள்
க. செந்தி நாதன்
பிரதம வகுப்புக்கள் என்று குறிக் கப்படுவன ஆரும், ஏழாம், எட்டாம் வகுப்புக்கள் என்று வரையறைசெய்து கொண்டு மேலே செல்வோம். முத லாம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்புவரை உள்ள ஆரம்ப வகுப்புக் களில் அபிநயப்பாடல் என்றும் இலக் கியம் என்றும் படிப்பிக்கும் பாடல் களின் நோக்கம் ஒருவகை. அதை விரிக்கிற் பெருகும். ஆரும் வகுப்பில் ஒரு மாணவன் புகுந்தவுடனே தமிழ் இலக்கியத்தின் சுவையை அறியக் கூடிய மனநிலையை அவன் பெற்றவ ணுகின்றன். அந்தச் சுவையை வளர்ப் பதோடு மாணவனின் அறிவைப் பெருக்குதற்கு வேண்டிய விஞ் ஞானம், சரித்திரம் என்னும் அறி வியற்றுறை விடயங்களையும் அறிய வேண்டியவனுகின்றன். " " இலக்கியக் கட்டுரைகளும் கவிதைகளும் கதை களும் நாடகங்களும் தமிழ் இலக்கியத் தைத் தேடும் ஆர்வத்தைப் பேருக்கல் வேண்டும். அன்றியும் இலக்கியப் பரப்பை அறிய ஆற்றுப்படுத்தலும் வேண்டும்.’’ என ஆரும் வகுப்புத் * தமிழ் மலரி'ல் ஆசிரியருக்கான குறிப் புக்களில் எழுதப்பட்டுள்ளது. இதை நாம் அப்படியே ஒப்புக்கொள்வோம்.
ஈழத்து மாணவர்கள் படிக்கும் இலக்கிய நூல்களில் ஈழத்துப் புலவர் பெருமக்களது கவிதைகளும் இடம் பெற்று எங்கள் கவிதைப் பரப்பை யும் மாணவர்கள் அறிந்துகொள்வது நல்லது. இதைத் "தமிழ் மலர் "

Page 43
«ixkagaw»
எழுதிய ஆசிரியர்களும் உணர்ந்து
ஒரளவு நிறைவேற்றியிருக்கிருர்கள்.
உதாரணமாக, ஆரும் வகுப்புத் "தமிழ்மலரி'ல்,
i. இலவுகாத்த கிளி
( சோமசுந்தரப் புலவர் )
i. நபிமொழி நாற்பது
( அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன் )
iii, 94pØ5
(புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை) iv. ஈசன் உவக்கும் இன்மலர் மூன்று
( சுவாமி லிபுலாநந்தர்) V. நாட்டுப்பாடல்கள்
( F, X, C. நடராசா கட்டுரை ) என்ற பாடல்களும்,
ஏழாம் வகுப்புத் "தமிழ்மலரி'ல், i. நதி கடலை அடைதல்
( சோமசுந்தரப் புலவர் ) i. யூலியஸ் சீசர்
( சுவாமி விபுலாநந்தர் ) i, சாணக்கிய நீதிவெண்பா
( குமாரசுவாமிப் புலவர் ) iv. பள்ளுப் பாடல்கள்
( சின்னத்தம் பிப் புலவர் ) v, கண்ணுவரும் சகுந்தலையும்
( சு. நடேசபிளளை-மகாலிங்கசிவம் ) என்ற பாடல்களும்.
எட்டாம் வகுப்புத் 'தமிழ்மலரி'ல், 1. வாழையும் புலவனும்
(சோமசுந்தரப் புலவர் )
( சோமசுந்தரப் புலவர் )
என்ற பாடல்களும் இடம்பெற்றுள் GITT
4.

25 -
கட்டுரைப் பகுதியில் ஈழத்துப் புலவர் பெருமக்களைப் பற்றிய கட்டு ரைகளும், பெருமக்களால் எழுதப் பட்ட கட்டுரைகளும் இடம்பெற் றிருக்கின்றன. எட்டாம் வகுப்புத் * தமிழ்மலரின் கட்டுரைப் பகுதியில் சற்றுத் தாராளமாகவே இடம் கொடுத்திருக்கிருர்கள்.
இருபத்தேழு அலகுள்ள ஆரும் ‘தமிழ்மலரி'ல் ஐந்து பாடங்களும் இருபத்தாறு அலகுள்ள ஏழாந்தமிழ் மலரி'ல் ஐந்து பாடங்களும் இருபத் தேழு அலகுள்ள எட்டாம் தமிழ் மலரி'ல் இரண்டு பாடங்களும் சில கட்டுரைகளும் ஈழத்துப் புலவர் பெருமக்களுக்காக ஒதுக்கிக் கொடுக் கப்பட்டுள்ளன. தமிழ்ப்பரப்பை அறிவுறுத்தும் நோக்கத்துக்கு இவை போதும். எனினும் எட்டுப் பாடங் களையாவது போட்டு (30 வீதம்) இன்னும் கொஞ்சம் ஈழத்துக் கவிஞர் களை - கவிதைகளை - அறிமுகம் செய்திருக்கலாம் எ ன் றே கருது கின்றேன். முக்கியமாக எட்டாவது *தமிழ்மலரி'ல் அப்படிச் செய்திருக்க லாம் என்றே எண்ணுகின்றேன்.
பலர் பேசிக்கொள்ளும் ஒரு விடயம் என் காதில் ஒலிக்கிறது, மேல்வகுப்புத் தமிழ்மலர் நூல்கள் கடினமானவையாகவே இருக்கின் றன என்பதுதான் அந்தப் புகார். என்னைப் பொறுத்தவரையில் பாடத் திட்டமும் ஒழுங்கும் நோக்கமும் சரி. கட்டுரைப் பகுதிகள் முக்கிய மாக ஏழாம்-எட்டாம் வகுப்பு நூல் களில் - சற்றுக் கடினமாகவே சேர்க் கப்பட்டுள்ளன. சில கவிதைப்பகுதி கள் ஒருபாட நேரத்தில் படிப்பித்து

Page 44
- 2
முடிக்க முடியாது சில ஆசிரியர்கள் எழுத்துப் பாடத்தை நிறுத்திவிட்டுப் பாடல்களைப் படிப்பிக்கிருர்கள். இந்த நிலையில் இன்னும் ஈழத்துப் புலவர் பாடல்களைச் சேர்க்க வேண்டியது அவசியந்தானு? என்ற வினு எழு கின்றது.
உண்மையாக ஈழத்து இலக் கியத்தில் நாட்டம் கொள்ளத் தூண்டுவது ஒரு நல்ல நோக்கமே. அதற்காகச் சில பாடங்களை நீக்கி விட்டு அவற்றைச் சேர்ப்பது நல்ல தென்றே நினைக்கிறேன். அதற் குப் புத்தகங்களை எழுதுவோர் மாத் திரம் சிந்தித்துப் பிரயோசனமில்லை. அவர்களிற் பலரை எனக்குத் தெரி யும். அவர்கள் இந்த நாட்டை நேசிப்பதிலும் இந்த நாட்டின் கவி ஞர்களை மதிப்பதிலும் மற்றையோ ரிலும் குறைந்தவர்களல்லர். அதற்கு அதிகாரபீடமும், ஆலோசனைக் குழு வும் அசைந்து கொடுக்க வேண்டும். அல்லாதுவிட்டால் வெறும் கூச்ச லாகவே இது முடியும்.
இன்னுெரு விடயத்தை யும் ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
சோமசுந்தரப் புலவர், விபுலா நந்தர், நடேசபிள்ளை, பெரியதம்பிப் பிள்ளை என்பவர்களோடு சம காலத் தில் வாழும் கவிஞர்களின் பாடல் களையும் சேர்க்கத் துணிவு பிறக்க வேண்டும். (கீழ்வகுப்பு நூல்களில் அப்படியான பாடல்கள் இருக்கின் றன.) ஆளைப் பார்க்காமல் உண்மை யான இலக்கியத் தரம் வாய்ந்த - இரசனைத் திறம் நிறைந்த - கவிதை களை அறிமுகஞ் செய்தல் வேண்டும். தேசிகவிநாயகம்பிள்ளை, நாமக்கல்

6 -
கவிஞர் பாடல்கள் ஈழத்து மாணவர் களுக்கு அறிமுகம் செய்யப்படுகின் றனவே. எமது சமகாலக் கவிஞர்கள் பாடல்கள் மாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டாலென்ன ?
அப்படியாகச் சேர்க்கக்கூடிய பாடல்கள் இருக்கின்றனவா ? என்ற கேள்வி எழுகிறது.
ஈழத்திலே சோமசுந்தரப் புலவ ருக்குப் பிறகு எழுபத்தைந்து கவி தைத் தொகுதிகள் வரை வெளிவந்து விட்டன. அவற்றைக் காய்தல், உவத்தல் இன்றி. மாணவர்களுக்குப் படிப்பிக்கக்கூடிய பாடல்கள் எவை? என்ற நோக்கில் ஆராய்ந்து பார்த் தால் இருபது நல்ல பாடல்களாவது தேறும் என ‘நினைக்கிறேன்.
* வெற்றிமணி ' என்ற சிறுவர் பத்திரிகையில் சென்ற இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து, ஈழத் துக் கவிஞர்களின் பாடல்களை அறி முகம் செய்து கட்டுரைகளை எழுதிப் பார்த்தேன். அவற்றை இரசித்து எழுதிய அன்பர்களின் கடிதங்களைக் கொண்டு நாம் படிப்பிக்கும் பாட சாலையில் ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவர்கள் அவற்றை இரசித்துப் படித்த மாதிரியைக் கொண்டும் அவை பாடப்புத்தகங்களில் இடம் பெறக்கூடியவை என்ற முடிபுக்கு வரலானேன்.
அவற்றில் ஒரு சிலவற்றைப் பட்டியல் உருவத்தில் கொடுக்கிறேன். முழுப்பாடல்களையும் கொடுத்தால் அதிக பக்கங்களை அவை அடக்கும் என்ற காரணத்தால்விட்டுவிட்டேன்.

Page 45
بع
4 ܒܩܝܗܒ
6) ஆசிரியர்
1. அகத்தியன், அல்வாயூர்
தொல்காப்பியனை மு. செல் 2. அந்தநாள் வாராதோ யாழ்ப்பாண 3. உலகத்தில் ஒரு வீரன் வேந்தனுர்
4. வீழ்ந்த முல்லை ஆறுமுகன் 5. யாழ்ப்பாடி கதை சச்சிதானந்த 6. நன்மை கண்டோமா முருகையன் 7. பரிதாபமான
பந்தாட்டம் சுந்தரம்பிள்ை 8. வையத்துயர்ந்தது
யாழ்ப்பாணம் மகாகவி 9. சின்னத்தவளே,
கள்ளித்தடியை சிற்சபேசன் ܖ 10. புத்தாண்டே வருக பஞ்சாட்சரம் 11 ஆளில்லை ஐயா,
ஆளில்லை க. இ. சரவன 12. கம்பன் வாழ்த்து வி. கந்தவன 13. கதிர்காமம் சென்ற
வண்டே இராமுப்பிள்: 14. பேய்க் கலியாணம் சொக்கநாதன் 15. ஆனைதனைப்
பூனை தின்றது நாட்டுப்பாட 16. ஆபிரகாம் லிங்கன் விடிவெள்ளி
முத்தை 17. நிழல் நாகராசன் 18. கரடியனர் வருகின்ருர் மு. நல்லதம்பி
19. மகாலிங்கசிவம் கதிரேசர்பிள்ை 20. யமனை நிந்தித்தல் கல்லடி
வேலுப்பிள்
எல்லாப் பாடல்களும் யாழ்ப் பாணக் குடாநாட்டைச் சார்ந்த
பாடல்களாயிருக்கிறதே என்று குறை நினைக்க வேண்டாம். பல பகுதி இரசி கர்களும் கவிஞர்களும் இப்படியே அட்டவணை போட்டு அனுப்பலாம். இவை மாத்திரமன்றி, சீட்டுக்கவி, சரமகவி. தூது, குறவஞ்சி, பிற தனிப்பாடல் இவற்றிலும் ஈழத்துப்

நூல் eft-túd
லையா வளர்பிறை தமிழ்வாழ்த்து ir கவிதைக்கன்னி முதுமை நினைவு
கவிதைப்
பூம்பொழில் நவரத்தினசாமி
*-w. Kapstw w wykw9-8 ** இரங்கல் ன் ஆனந்தத்தேன் பண்டைப் பெருமை
நெடும் பகல் சிந்தனைக் கவிதை
தேனற நகைச்சுவை கண்மணியாள் -
காதை பெருமிதம்
- மருதநில வர்ணனை
தண்டலை ஒசைநயம்
னமுத்து பொதுத் தொண்டு
th கீரிமலையினிலே! காவிய அறிமுகம்
T - ஓசை நயம்
சிட்டுக்குருவி நகைச்சுவை வசந்தன்
ல் கவித்திரட்டு சிலேடை
விடிவெள்ளி
;妲了 கவிதைகள் பெரியார் வரலாறு
www.mimax சிந்தனைக் கவிகள்
பணித்தாய்
நாடு நாட்டுப்பற்று
- கற்ருேர் கதை ஒரு சரமகவி
&T நூல் நகைச்சுவை
புலவர்களது கைவண்ணத்தை எடுத் துக் காட்டலாம். அது இன்னுெரு தனிக்கட்டுரையாக முடியும். அதனல் விட்டுவிடுகிறேன்.
நான் தொட்டுக்காட்டிய பாடல் கள்தான் சிறந்தவை என்பதல்ல. எத்தனையோ இருக்கலாம். என் சிந் தனையை ஏற்பவர்கள் ஏற்கலாம். இல்லை யென்ருல் விட்டுவிடலாம்.

Page 46
கவிதை
திருமதி கங்கே?
கவிதை கற்பித்தலைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் கவிதை பற் றிச் சிறிது சிந்திப்போம். மக்களிடத் துக் காணப்பெறும் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டுதான் கவிதை பிறக்கிறது எனலாம். கற்கண்டு என்பது ஒரு பொருள். அது எப்படி ஆக்கப்பட்டது என அறிய வேண்டுமானல், அறிவின் துணை கொண்டே ஆராய்ந்து காணவேண் டும். அதன் தன்மையை உணர வேண்டுமானல் வா யி லிட்டு ச் சுவைத்து அனுபவித்தே உணர வேண்டும். தாம் அனுபவித்ததை மற்றையோருக்கும் உணர்த் தி க் காட்ட விரும்பினல் அவர்கள் வாயி லுங் கற்கண்டுத்துண்டைப் போட்டுச் சுவைத்து அனுபவிக்கச் செய்வதே சரியான வழியாகும். கவிதையும் கற்கண்டு போன்றதே. கவிதையின் உண்மையான இயல்பை உணர வேண்டுமாயின், அறிவுக் கண் கொண்டு ஆராய்ந்து அனுபவித்தே காணுதல் வேணடும். நியூட்டன் என்னும் விஞ்ஞானி ஒருவர் கண்ட அறிவியல் உண்மையை விஞ்ஞானி யான மற்ருெருவரே அறிவின் துணை கொண்டு ஆராய முடியும். ஆனல், ஒரு கவிஞனது அனுபவ உணர்ச்சி யிற் தோன்றிய கவிதையை நாமும் அனுபவிக்கலாமேயன்றி ஆராய்தல் பொருத்தமானதல்ல.
கவிதைகளைப் படிக்கும்போது அதிலுள்ள சுவையானது நம்மைப்

கற்பித்தல்
கந்தையா
பற்றிக்கொள்கிறதைக் காணலாம். இன்பம், துன்பம், வீரம், பக்தி முதலிய எதுவாயிருந்தாலும் சரி கவிஞன் மேற்கூறிய உணர்ச்சிகளின் வசப்பட்டு விடுகின்ருன். அவன் தனது மனத்திற் தோன்றும் கற்பனை என் னும் சிறகை விரித்து, அவனுக்குரிய தனி வானத்திற் பறந்து கவிதையை வெளிக்கொணருகிருன் . இவனுக்கிய கவிதை, கற்பனைக் கண்ணுேட்டத் தோடு அவனது சில அனுபவங்களை வெளியிடுகிறது. கவிஞன் அனுபவித்த இவ்வனுபவங்களை இக் கவிதையி னுாடே நாமும் அனுபவித்தலைத் தவிர, வேறு பயன்களையே முதன்மை யாகக் கொண்டு கவிதையை ஆராய்ந்
தறிய முற்படுதல் தகாது.
* காக்கை குருவி எங்கள் ஜாதி " என்று பாரதியார் பாடியதாகக் குறிப்பிடும் சந்தர்ப்பத்தை நோக்கு வாம், பலநாள் உணவின்றிப் பட்டினி யால் வாடுகின்றனர் குழந்தைகள். பல நாட்களின் பின் கிடைத்த பச்சை யரிசியைப் பாரதி பக்கத்தில் வைத் துச் செ ல் கி ருர் அவர் மனைவி செல்லம்மாள். அரிதாகக் கிடைத்த இந்த அரிசியையும் அருகில் வந்து நின்று உண்கின்றன சிட்டுக்குருவிகள். இதனைக் கண்ட பாரதியார் இச் சிட்டுக்களைத் துரத்த வேண்டியதற் குப் பதிலாக, ஏதோ ஒருவகையிற் தன்வசமிழந்து தனது இரு கைகளா லும் அவ்வரிசியை எடுத்து இறைத்து விட்டு, உண்ணுநிற்கும் பறவைகளைப் பார்த்து.

Page 47
ሥጫ ------ Z
* காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று பாடி ஆடுகிருர், வந்த செல் லம்மாள் வாயிற் கைவைத்து நிற் கிருர். இந்தச் சந்தர்ப்பத்திற் பாரதி யாரது உணர்ச்சிப்பெருக்கு கவிதை யாக வெளிப்பட்டதே யன்றி வேறு காரணம் எதுவும் சொல்லலா மென்று தோன்றவில்லை. இக் கவிதையைப் படிப்பவர்களும் இன்பமடைவதைத் தவிர வேறு என்ன பயனை எதிர் பார்க்க முடியும் ?
* நினைவும் சொல்லும் உணர்ச்சி யைப் போர்த்து வெளிவரும் பொழுதே கவிதை எனப்படும் *.
* இசை யுடன் இசைப்பதே கவிதை."
* கற்பனையின் வெளிப்பாடே கவிதை " என்றெல்லாம் மேனுட்டுப் புலவர்கள் கூறுவதையும்,
" செவிநுகர் கனிகள் ', 'செஞ் சொற் கவியின்பம் ' எனக் கவிச் சக்கரவர்த்தி கம்ப்ர் கூறுவதையும் படிக்கின் ருேம்.
“எடுமெடு மெடுமென எடுத்ததோர்
இகலொலி கடலொலி இகக்கவே விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடு மெனுமொலி மிகைக்கவே ‘’
எனக் கலிங்கத்துப்பரணி போர்க்குப் புறப்படுமாற்றையும்,
* ஆழ நெடுந்திரை ஆறு
கடந்திவர் போவாரோ, வேழ நெடும்படை கண்டு
விலங்கிடும் வில்லாளோ "
என்னும், குகனுடைய வீராண்மை யையும்,

9 -
“உறங்கு கின்ற கும்ப கர்ண
உங்கள் மாய வாழ்வெலாம் இறங்கு கின்ற தின்று காண்
எழுந் திராய் எழுந் திராய்', எனக் கும்பகர்ணனை இருப்புலக் கையால் அடித்து எழுப்புமாற்றை யும், சயங்கொண்டாரும், கம்ப நாடாரும் நமக்கு இசைமூலம் காட்டு கின்றனர். பாடல்களை மெளனமாக வாசிப்பதால் ஒசையுணர்வு ஏற் Lll-Tigil.
போருக்குப் புறப்படும்போது படைகளின் விரைவும், ஆவேசமும் எவ்வாறிருந்தது என்பதை, முதலா வது பாடலை உரக்கப் படிக்கும்போது அவ்வோசை உணர்த்துகின்றது. நமக்கு அடுத்த பாடலே உரக்கப் படிக்கும்போது, அவ்வோசை கேட் பவர், படிப்பவர் உள்ளத்திலும் ஆண்மையை வீரத்தைப் பிறப்பிக் கின்றது என்பதை உணர முடிகின் றது. மூன்ருவது பாடல் இராவண னது கட்டளைக்கமைய அரக்க வீரர் கள் நெடுநித்திரை செய்யும் கும்ப கர்ணனை இருப்புலக் கைகளால் அடித்து எழுப்புவதொரு சந்தர்ப்பத் தினை, சித்திரமாக்கித் தருகின்றது.
* உறங்கு கின்ற கும்ப கர்ண
உங்கள் | மாய வாழ்வெ லாம் இறங்கு 1 கின்ற | தின்று I காணெ
ழுந் திராயெ முந் திராய்".
என உரியபடி உரக்கப் படிக்கும் போது, அவ்வோசை மூலம், இருப் புலக்கைகளால், மாறி மாறி இடிக்கு மொரு ஒலியை உணர்ந்து அநு பவிக்க இப்பாடல் உதவுகிறது இவ் வாறு கவிதைக ளனைத்தையும் உரத் துப் படித்தால்தான் கவிஞனது உணர்ச்சியை நாமும் பெற்று அநுப விக்க முடியும். ஆகவே, கவிஞர்கள்

Page 48
3 -سست.
கவிதைகளை ஏட்டில் எழுதித் தந்தா லும் பயன்படும் புலன் செவியே எனல் மிகையாகாது.
ஓசையின்பத்தாற் பெற்ற அநு பவத்தோடு, கவிதையை முற்றும் உணர்ந்துவிட்டோம் என்பதுமில்லை. கவிதையிலுள்ள சொற்கள் ஒசையால் ஒருவித உணர்வையும், பொருளால் இன்னுெருவித உணர்வையும் தரு கின்றன. சொற்கள் தாம் தனித்து நின்று மற்ருெருவித உணர்வைத் தருவதும் உண்டு. இவை ஓசை யின்பம், பொருளின்பம், சொல்லின் பம் எனப் பேசப்படுகின்றன. சொற் களைக் கேட்கும்போது அவை செவி வழிச் சென்று பொருளை உணர்த்தி அப்பொருளுக்குரிய உணர்ச்சியையும் தருகின்றன. இதனுல் கவிதைச் சொற்கள் மனம் முழுவதும் பரந்து பொறி ஐந்தினையும் உணர்வு கொள் ளச் செய்து கற்பனையைத் தூண்டும் வர்ணனைகளையும், சம்பவங்களையும் சித்திரப்படுத்திக் காட்டும் வல்லமை யுடையன வாகின்றன. இதன லன்றே,
“கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள” என்னும் வள்ளுவர் வாக்கை ஒண்கவி கண்ணே யுள எனல் சாலவும் பொருந் தும் என்கின்றனர் புலவோர். சீதை யின் அழகாற் பெறப்படும் இன்பத் தினை வியந்து கூறிய கவியரசரும்,
'பொன்னின் சோதி போதினின்
தாற்றம் பொலிவேபோல் தென்னுண் தேறற் தீஞ்சுவை
செஞ்சொற் கவியின்பம்" என்று கவிதையிற் பெறப்படும் இன் பத்துக்கு ஒப்பாகத் தமது ஆராமை

0 -
யால் அழகுபட எடுத்தோதினர். இதில்.
சேஞ்சொற் கவியின்பம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதை யும் நோக்குதல் வேண்டும்.
இவ்வாருண் செஞ்சொற் கவிதை கள் எந்த உணர்ச்சியைக் கொண்டு தோன்றியனவோ, அவற்றிற்கேற்ற ஓசையுடன் பாடப்பெற்ருல், இன்ன உணர்ச்சியைக் கொண்டது இப் பாடல் என்று நன்கு அறிந்துகொள்ள லாம். தமிழ்ப் புலவர்கள் இதிற் கை தேர்ந்தவர்களே. பா, பாடல், செய்யுள், கவிதை என்பன ஒரு பொருட் சொற்களே எனலாம். ‘பா’ என்னும் சொல்லிற்கு ப் பொருள் கூறவந்த பேராசிரியர் சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் உணர்தற்கேதுவாகிப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசையே பா" என்ருர், எல்லாவற்ருலும் கவிதை கற்பிக்கும் ஆசிரியர் இவற்றையெல்லாம் நன் கறிந்து, கவிதைக்குச் சொல்லோசை மிக்க வன்மை வாய்ந்தது என்பதை யும் தெரிந்திருக்கவேண்டும்.
இக்கால ஆசிரியர்கள் சிறந்த உளநூற் பயிற்சி பெற்றவர்கள், மனம் வெளிப்பட்டுத் தோ ன்று மிடத்து அறிவு, இச்சை, துணிவு என முத்திறப்படும் என்ற அகநூலார் முடிபை அறிந்தவர்கள், இம்மூன்றும் அறிதல், இச்சித்தல், துணிதல் என். னும் செயல்களாய், தெளிவு, இனிமை, உறுதி என்னும் குணங் களைச் சார்வன என்பதும், இவையே உண்மை, அழகு, நன்மையைத் தருவன என்பதும் ஒருங்கே அறிந்த வர்கள் ஆசிரியர்கள்.

Page 49
- 3
இவர்கள் கவிதையைக் கற்பிக்கப் புகுமுன் மேற்கூறிய் மூன்று உறுதிப் பொருள்களையும் மாணவர் உணர்ந்து அனுபவித்து அறியும்வண்ணம், எவ் வாறு நாம் கற்பித்தல் வேண்டும் என்பதை நன்கு ஆயத்தப்படுத்தியே வகுப்புக்குச் செல்ல வேண்டியவர்க ளாகிருர்கள். தாமும் கற்பிக்கத் தாம் எடுத்துக்கொண்ட கவிதையும் ஒன் முகக் கலந்து அதன் உயிர்த்தன்மை யைக் கண்டு அனுபவித்ததொரு நிலை இவருக்கு ஏற்படுதல் நன்று. தாம் உணர்வதையே மாணவர் க்கு உணர்த்தலா மாகையால் கவியைக் கற்பிக்கும் ஆசிரியர் அதனைப் பல முறை படித்து அதன் சுவையிலீடுபட் டிருத்தல் வேண்டும். இதனைக் கற் பிக்கும் ஆசிரியர் ஏனைய பாட ஆசிரி யர்களைப் போல் பாட அறிவு மாத் திரம் உடையவர்களாக இருத்தலும் கவிதையின் கதைத்தொடர்பு, பத வுரை, அணிகள் முதலியவற்றையே சிறந்ததெனக் கரு தி அவற்றைக் கற்பித்தலும் தகாது. பயிற்சி பெற்று வெளியேறிய ஆசிரியர்களானுலும், பரீட்சையிற் சித்தி யடைந்ததோ டமையாது நல்ல கவிதைகளை மேலும் மேலும் துய்த்தல் வேண்டும். இவ்வா ருகத் தொடர்ந்து கவிதை யின் பத்தை அனுபவித்துக் கொண்டிருக் கும்ஆசிரியர்களே இலக்கியம் படித்து வரும் மாணவர்களுக்கு நல்ல வழி காட்டிகளாக அமைவர்.
மாணவர்களது வயது, தகுதி, வகுப்பு, மனநிலை, சூழல், முன்னறிவு என்பவற்றைக் கருத்திற் கொண்டு, அவரவர்க்குப் பொருத்தமான நடை யும், கருத்தும், சுவையும் கொண்ட கவிதைகளைத் தெரிந்து கற்பித்தல் பொருத்தமானதே. தமிழ் மலர்க

1 -
ளனைத்தும் இவ்வாறு தொகுக்கப் பெற்றுள்ளனதானே ? என்று கூறும் ஆசிரியர்கள், அவ்வளவோ டமை யாது, மாணவர்களிடமுள்ள அழகி யல் உணர்ச்சியை விருத்தி செய்யும் பொருட்டு, அவர்களுக்குப் பொருத்த மான வேறு கவிதைகளையும் காட்டி, அனுபவிக்கச் செய்தல் தவருகாது.
தமிழ் மலர்களிலுள்ள பாடல் களைப்பற்றிய குறிப்புகள், சுவைத்தற் பகுதி, வழிகாட்டிகள் என்னுமிவற் றையே கட்டிப் பிடித்துக்கொண் டிராமலும், புத்தகங்கள் மாணவர் ஒவ்வொருவரிடமு மிருப்பதால், * படியுங்கள் ', ' பாடமாக்குங்கள் என்று ஏவாமலும் இருக்கவேண்டி யது இ க் கால ஆசிரியர்களுடைய கடமையாகின்றது. இவர்கள், தமிழ் மலர்களிலுள்ள கவிதைகளைப் பல முறை படித்துச் சுவைத்து, மிகுந்த ஈடுபாடுடையவர்களாகி, அவற்றில் தாம் தொகுத்து வைத்திருக்கும் அழகுக் களஞ்சியத்தைத் திறந்து காட்டி, மாணவர்கள் அநுபவித்து இன்பமுறச் செய்தல் வேண்டும்.
இதுவரை கூறப்பட்டவற்றி லிருந்து கவிதை கற்பிப்பதன் நோக் கம் : கவிதையின் அழகு, இனிமை முதலியவற்றை அனுபவித்தலேயா கும் என்பது பெறப்படுகின்றது. இத னைக் கைவரச் செய்வதற்கு இதுவே முறை என்று வரையறுத்துக் கூறுதல் பொருத்தமற்றதே. ஏனெனில், ஒவ் வொரு கவிதைப் பாடமும் அதன் இயல்பு, ஆசிரியரது மனுேபாவமும் ஈடுபாடும், மாணவரது நிலை என்ப வற்றிற் கேற்பவே அமைவுறும். ஆயி னும் பொதுவாக ச் சிலவற்றைக் கவனிப்போம்.

Page 50
- 3
முகம்படுத்தல் இதில், ஆசிரியர் வரலாறு கூறுதல்; அரும்பதங்களை முதலில் விளக்குதல்; கடின சொற் ருெடர்களைப் பிரித்துப் புணர்த்திக் காட்டுதல்; கவிதை குறிக்கும் கதையை முதலிற் கூறுதல்; கவிதை யில் வரும் நல்ல விஷயங்களைப் பற் றிக் கூறுதல்; கவிதைக்கு வேண்டிய சூழலை ஏற்படுத்தல்; முன்னறிவைத் தொடர்பு படுத்தல் போன்ற பல வகைகளில் கவிதையை ஆசிரியர்கள் முகம்படுத்துவதைக் காண்கின்ருேம். இவற்றில் கவிதையைச் சுவைப்ப தற்கு, நூலாசிரியர் வரலாறு உதவி செய்யாவிடில் ஆரம்பத்தில் ஆசிரியர் வரலாறு அவசியமில்லாத தாகின் றது. முழுப்பொருளிலிருந்து பகுதிக் குப் போதலும், அறிந்ததிலிருந்து அறியாததற்குப் போதலும் என்னும் கற்றல் விதிகளை அறிந்த ஆசிரியர்கள் அரும்பதவிளக்கம்; பிரித்துப் புணர்த் தல் ஆகிய சுவைக் குறைவான செயல்களில் ஆரம்பத்திலேயே ஈடு படுதல் மாணவர்களுக்குக் களைப்பை யும், வெறுப்பையும் ஊட்டுவதாக இருக்கலாம். அது குறிக்கும் கதைத் தொடர்பை மா ன வர் அறிதல் அதனை விளக்குவதற்கு வழிகோலுவ தாயும் இருந்தால் மாத்திரமே கவிதை குறிக்கும் கதையைக் கூறுதல் பொருந்தும். கவிதையிலுள்ள நல்ல விஷயங்களை, அழகியல்புகளைப்பற்றி முன்னறிவித்தல் கொ டு த் து க் கவிதைக்கு வேண்டிய இயற்கை, செயற்கைச் சூ ழ லை ஏற்படுத்தல், நிகழ்ச்சியை இடையருது தொடர வழி வகுக்கிறபோது இதனையும் தகுந்த அளவிற் கையாளலாம். எதற் கும் கற்பிப்பதற்காக எடுத்துக் கொண்ட கவிதை, முன்னர் கூறிய

2 -
படி எந்த உணர்ச்சியைப் பெரிதாகக் கொண்டு தோன் றியதோ அவ் வுணர்ச் சிக் கேற்ற ஒசையிலே ஆசிரியர் பாடிக்காட்டுவதே, மாணவ ரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு உணர்வை எழுப்பும் முறையாக அமைகிறது. இவ்வாறு பலமுறை பாடப்பெறுதல் நன்று. இந்த ஒசைச் சக்தியானது, மாணவர் உள்ளத்தில் உணர்ச்சியையும் அழகை அனுபவிக் கும் அவாவையும் ஏற்படச்செய்து, பொருளை அறிய ஊக்குவிக்கிறது. இதனைத் தம் விளக்கத்தினுல் நிறைவு செய்யும் கருவியாக ஆசிரியர் இருக்கிருர்,
மாணவர் அடைந்துள்ள ஓசை யின் பத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதையிலமைந்த உயர்நிலைக் கருத் தைத் தெளிவுபடுத்த லவசியம். இக் கவிதை தோன்றுவதற் கேதுவா யிருந்த கவிஞனின் அனுபவம், கதை, காட்சி, உணர்ச்சி, என்பவற்றை மாணவர்அறியநல்லதுாண்டுகோலாக ஆசிரியர் இருத்தல் வேண்டும். நறு மணம் வீசும் மலரொன்றைக் காண் பவன் அதன் மணம், நிறம், அழகு, அமைப்பு இவற்றில் ஈடுபட்டு நிற் கிருன், இதழ், இதழாகப் பிரித்து அழகில் ஈடுபடுதல் இயற்கைக்கு முர ணுனதாகும்; மலரும் சிதைந்து விடுகிறது; அழகும் மறைந்து விடு கிறது. இது போன்றதே கவிதையும். இதனை முழுப்பொருளாகவே வைத்து அனுபவிக்கவேண்டும். பதவுரை, இலக்கண விடயங்கள், உவமை முதலிய அணிகள் என்பவற்றைக் கேட்டு, அடி அடியாக, தொடர் தொடராக, சொல் சொல்லாகப் பிரித்தல் கவிதை படிப்பதைச் சுவை யற்றதாக்கிவிடுவதோடு கவிஞனின்

Page 51
உணர்ச்சியை அறியவும் உதவமாட் டாது. ஆகவே கவிதையை முழுப் பொருளாகவே கண்டு முழுவதையும் படித்து, உயர்நிலைக் கருத்தைஅறிந்து அழகுணர்ந்து, வேண்டியவிடத்து விளங்காத அருஞ் சொற்களின் பொருளைத் தெரிந்து கொள்வதற்குச் சுவை கெடாதவாறு கலந்துரை யாடல், வினவுதல் மூலம் ஆசிரியர் வழி நடத்தலாம்.
பொருளுணர்தலோடு மாணவர் கவிதையின் அழகையும் கண்டு நல்ல உணர்ச்சியும், மன வெழுச்சியும் அடையுமாறு பயிற்றல் வேண்டும். கவிதையின் சிறப்பியல் புகளை ஆராய்ந்து நயக்க மாணவரை வழி நடத்துதல் சிறந்தது. இதன் சார் பாகப் பரந்துபட்ட ஓசை நயம், சந்தவின்பம், பொருள் நயம், தொடைநயம், சொல்நயம் என்னும் இவையெல்லாம் மாணவரின் தகுதிக் கேற்ப ஆராய்வின்பாற்படும். ஒரு சொல் தனிப்பட்ட முறையில் ஒரு கருத்தையும், ஏனைய சொற்களோடு கலந்து முழுவதும் சேரும்போது வேருெரு கருத்தையும் தருகிறது. உதாரணமாக ஊர், கேளிர் என்ற சொற்களைக் கவனிப்போம். ஊர் பலர் சேர்ந்து வாழுமிடம் - நாட் டின் ஒரு பகுதி ; கேளிர் - சுற்றத் தார்-இனத்தவர் என்பது கருத்து என விளங்குகிறது. ஆனல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று ஒரு கவிதையாகச் சொற்கள் கூட்டமான தும், முன்னர்க் காட்டிய தனிக் கருத்து மாறி, எந்த ஊரும் நம்மூரே, எவ்வெவரும் நம் சுற்றத்தவரே என்ற உலகசகோதரத்தன்மையை எல்லாரது நினைவுக்கும் கொணரு வதைக் காண்கிருேம். இதனல்,
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் கவிதைத் தொடர் ஒரு தனி
5

33 -
மதிப்பைப் பெற்றுள்ளது என்ற பொருட்சிறப்பினை மாணவரறிதல் உண்மையையும், நன்மையையும் தருகின்றது.
கந்தன் விளையாடல்களில் வள்ளி யைக் காணச்சென்ற வேலன், வேடர் களைக் கண்டு வேங்கை மரமானுன் என்பது இக்கதை.
* சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள் சிறு வள்ளியைக்-கண்டு சொக்கி மரமென நின்றன
தென் மலைக் காட்டிலே " இப்பாடலில் 'சொக்கி மர மென நின்றன’’ என்ற தொடரால் பாரதியார் மேற்படி கதைக்கு எவ் வாறு உயிர் கொடுத்துள்ளார் என்ற பொருட்சிறப்பை அறியும்போது, மாணவர் எவ்வாறு சொக்கி நிற்பர் என்பதனைச் சொல்லவேண்டியதே u96)ટ%).
இவ்வாருன சுவை உணர்ச்சியை மாணவர் பெற்றுவிட்டால், அவர்க ளிடம் ஆக்க உணர்வும் உண்டாகும். இதனுல் வேறு கவிதைகளிலும் அவைகளைக் கண்டு அநுபவித்தல், இது வெளிப்படுமாறு கட்டுரை எழு தல், கவிதைப் பொருளை ஓவியங்க ளாகவோ, உருவங்களாகவோ அமைத்தல், தாம் கற்ற கவிதைகளைப் பின்பறறித் தாமும் செய்யுள் ஆக்கு தல் ஆகிய ஆக்கவெளிப்பாடு மாணவ னிடம் ஏற்படுவதைக் காணும் ஆசிரியர், இவற்றை மேலும் தூண்டு பவராதல் வேண்டும். இதனல் மாணவரது சுவையுணர்வும் மேம் படும். தாம் அனுபவித்து உணர்வு கண்ட இனிய கவிகளைத் திரட்டவும், தாமாகவே கவிதையுலகிற் சஞ்சரிக்க கவும் தொடங்குவர். இத்தகைய தொரு நிலைக்கும் இன்பத்தை மாணவ ரடைய, கவிதை கற்பிக்கும்ஒவ்வொரு ஆசிரியரும் முயல்வார்களாக,

Page 52
தற்காலத் தமி கலாநிதி க.
இலக்கியப் பிரிவுகளைப் பற்றிய கணக்கெடுப்பும் மதிப்பீடும் பலரா லும் மேற்கொள்ளப்படுகிற விமர் சன முயற்சியாக இந்நாட்களில் அமைந்துள்ளன. இத்தகைய முயற்சி களுள், தமிழ்நாடகங்கள் பற்றிய பொது மதிப்பாய்வுகள் பலவற்றை நோக்கும்பொழுது இரு போக்குகள் திரும்பத் திரும்பத் தென்படுகின் றன: ஒரு சாரார் தரத்தைப் பற் றிய கவனம் எதுவுமின்றி அபேத மாக, மேடையேற்றப்படும் யாவற் றையும் நாடகத் தமிழின் அல்லது நாடகக் கலையின் செழுமைக்குச் சான்ருகக் கொண்டு விவரணப் பட் டியல் தயாரித்துவிடுகின்றனர். மற் ருெரு சாரார் தமிழ் நாடகம் படு மோசமான நிலையில் வீழ்ந்துகிடக் கிறது என்று இரங்குவதோடு, புது மைக்கும் புதுமையான மேனுட்டு நாடகங்களைப் பற்றி வானளாவப் புகழ்ந்து ஒரு வகையான ஆத்ம திருப்தி அடைகின்றனர். இவ்விரு வெளிப்பாடுகளினலும் அத்துணைப் பயனில்லை என்பது வெளிப்படை.
பொதுப்படையாகக் கூறுமிடத் துத் தமிழ் நாடகங்கள் பெருமைப் படத்தக்க அளவுக்கு வளர்ச்சி யடையவில்லை என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். உதாரணமாகக் கவிதை, சிறுகதை என்பன வளர்ந் திருக்கும் அளவுக்கு நாடகம் விருத்தி யடையவில்லை என்பது அப்பட்ட மான உண்மை. ஆனல் எமது நாடகக்கலை வளர்ச்சி குன்றியிருப்

jo நாடகங்கள்
கைலாசபதி
பதற்குரிய ஏதுக்களைப் பற்றி ஏக மனதான அபிப்பிராயம் இருப்பதா கக் கூறவியலாது. சினிமாவின் பொல்லாத செல்வாக்கிலிருந்து இரசிகர்களின் ஆதரவின்மை ஈருக எத்தனையோ காரணங்கள் எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வாறு கூறப்படும் காரணங்களிற் பெரும் பாலானவற்றில் நேர்மைத் தகவு இல்லாமலில்லை. ஆயினும் இவை நாடகத்துக்குத் தொடர்புடைய புறக்காரணிகள். ஒரு பொருளின் இயக்கத்துக்குப் புறக்காரணங்களி னும் அகக்காரணங்களே அடிப்படை யானவை. ஆகவே, எமது நாடகக் கலையில் உள்ளார்ந்த பலவீனங்களா யுள்ளவற்றை இனங் கண்டுகொள் வது இன்றியமையாததாகின்றது.
இக்கட்டுரையிலே, எமது நாட கக் கலை வளர்ச்சிக்குத் தடையாக வுள்ள அம்சங்களில் ஒன்றை ச் சுருக்கமாய்க் கூற விரும்புகிறேன். அன்றைய ந ற் ற மிழ் க் கூத்தின் பெருமையை இன்றைய நாடகத் துக்குப் பக் க ப ல மா கப் பலர் கூறிக்கொள்கின்றனராயினும், இக் காலத்தில் கா ட கம் என்றதும், மேனுட்டார் வழிவந்த " டிராமா ? எனப்படும் வகையையே கருது கின்ருேம். எமது வாழ் க்  ைகயி லும், கலை இலக்கியத்திலும், பண் பாட்டிலும் வெவ்வேறளவில் ஏற் பட்ட அந்நியத் தாக்கத்தின் விளைவு இது என்பதில் ஐயமில்லை. புது நாகரிகமயமாக்கம் அல்லது மேலை

Page 53
நாட்டு நாகரிகமயமாக்கம் என்று இதனை வரலாற்ருசிரியரும் சமூக வியலாரும் வழங்குவர். ஆங்கில நாடகங்களைக் கற்று இன்புற்று, அவற்றைப் போன்று தமிழிலும் இயற்றவேண்டும் என்னும் வேணவா வினல் மனேன்மணியம் என்ற நாட கத்தை எழுதிய சுந்தரம்பிள்ளை கால முதல் இப்போக்கு இடைவிடாது இயங்கி வந்திருக்கிறது. ஆங்கில நாடகங்களைப் படித்த அருட்டுணர் வினல் எழுதப்பெற்றவை மாத்திர மன்றி, மொழிபெயர்ப்பு, தழுவல் என்பனவும் இப்போக்கின் விளைவு களே. அணுச்சக்தி உலையிலிருந்து ஆட்டா மா மில் வரை பொறியியல் நுணுக்கங்களைக் கீழைத் தேயங் களுக்கு வழங்கும் தகுதி வாய்ந்தன வாய்க் கருதப்படும் நவீன கைத் தொழில் நாடுகளிலிருந்து க்லை நுணுக்கங்களும் வந்து புகுவதில் வியப்பெதுவுமில்லை.
மேனுட்டு நாடகம் என்பதன் பொருள் என்ன ? பொதுப்படை யாய்க் கூறுவதானுல், வாழ்க்கையிற் காண்பதுபோன்ற நட்ை, உடை, பாவனை, பேச்சு முதலியவற்றைக் கொண்ட நிகழ்ச்சிகளின் அடிப்படை யில் ஒரு கதையை நடிப்பதாகும். இதனையே இயற்கை நவிற்சி நாடகம் என மேனுட்டார் வழங்குவர். இத் தகைய நாடகங்களிற் பாத்திரங்க ளின் ஒப்பனை மட்டுமன்றி, மேடை யமைப்பு, ஒலி, ஒளியமைப்பு ஆகி யனவும் நவீன நாகரிக மயமாக்கப் பட்டுள்ளன. இதனுலேயே தக்க நியாயத்துடன் சிலர் எடுத்துக்காட் டுவது போல, எமது நாடகத்துக்கும் திரைப்படத்துக்கும் சாராம்சத்தில் வேறுபாடற்றுப் போகிறது.

-سس 5{
இத்தகைய நாடக வகையே ஏற்புடை மாதிரியாயும் உயர்வுநய முடையதாயும் கொள்ளப்பட்டு வரு வதால் நாளடைவில் எமது நாடகம் கட்டிறுக்கமான வரையறையைப் பெறுவதாயிற்று. அதாவது, நாடகம் என்ற சொல்லின் பொருள்வரம்பு சுருங்குவதாயிற்று. நவீனத்துவத் தின் பெயரில் அணிமணியாடைத் தொகுதிகளும், வியப்பையுண்டாக் குவதையே நோக்கமாகக் கொண்ட வெற்றலங்காரங்களும் முதன்மை பெற்றன. நாடகத்தின் உயிரான நிகழ்ச்சிப் புணர்ப்போ, முரணுே, ஆன்ம அனுபவமோ சிறப்பிழந்தன. ஏல விற்பனையின்போது ஒருவனை மிஞ்சி மற்ருெருவன்விலையைக் குறிப் பது போன்று, ஒரு தயாரிப்பாளரை விஞ்சி மற்ருெருவர், “தத்ரூபமான’’ காட்சிகளை மேடையிற் காட்டும் நிலை தோன்றியுள்ளது. இவை யாவற்றின் விளைவாலும், நாடகச் சுவைஞர்கள் அதாவது இரசிகர்கள் கேவலம் வெறும் பார்வையாள ராகவே அமர்ந்து காட்சிகளைக் கண்டு விட்டுப் போகின்றனர்.
இத்தகைய ஒரு அவலநிலைக்கு எதிர்விளைவாகவே சமீபகாலங்களில் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய மேலைப்புலங்களில் சம்பிரதாயமான *டிராமா' வகையை நிராகரித்து விட்டு, மக்களோடு நேரடியான தொடர்பு கொள்ளக்கூடிய வெவ் வேறு நாடக முறைகளைக் கலைஞர் கள் நாடுகின்றனர்.
டிராமா ’ என்ற வகை ஒரு வாய்பாடாக அமைந்துவிட்டதாக அவர்கள் கருதுகின்றனர். ஈழத்திலே

Page 54
- 3
சிறப்பாகச் சிங்களக் கலைஞரும் ஒர ளவு தமிழ்க் கலைஞரும் அண்மைக் காலத்தில், கூத்து வடிவத்தை விரும்பி ஆட முற்படுவதற்கும் இதுவே காரணமாகும். நொண்டி நாடகத்திலிருந்து பள்ளு நாடகம் வரை, வில்லுப் பாட்டிலிருந்து
கதாகாலட்சேபம் வரை மக்கள் மத்தியில் வழங்கி வந்துள்ள கலை வடிவங்களும், கர கம் முதல்
காவடிவரை ஈருன சடங்கு - வழி பாட்டு முறைகளும் எமது நாடக மரபுக்கு உரியனவே. ° டிராமா ? முறை வந்தபின் இவை தீண்டத் தகாதனவாய்ப் புறக்கணிக்கப் பட் டன. இதனல் எமது மக்களின் அனு பவ மரபின் பெரும்பகுதி பயனற்றுப் போனது.
இவற்றைப் பேணுவதோ அப் படியே இயங்கவைப்பதோ நாடகத் துக்கு உதவும் என்று நான் கூறவில்லை. ஆனல், இவை நாடகம் என்ற வரம் புக்கு அப்பால் நிறுத்தப்பட்டமை யால் உருவத்திலும் உள்ளடக்கத்தி லும் காலத்திற்கேற்ற மாற்றம் பெறும் வாய்ப்பை இழந்தன என் பதே மனங்கொள்ள வேண்டிய தாகும்.
டிராமா ’ என்றதுமே, ஒரு குறிப்பிட்ட வகையான நாடகப் பிரதி, வசதிகள் பல வாய்க்கப்பெற்ற மண்டபம், ஒலி, ஒளிக் கருவிகள், மேடையமைப்புத் தளபாடங்கள் முதலிய ன இன்றியமையாதவை என நாம் எண்ணுமளவுக்கு, நாடகம் பற்றிய விளக்கம் எமக்கிருக்கிறது. சாதாரணமாக ஒரு நாடகம் அரங் கேற்றுவதற்குப் பணம் பெருமளவு தேவைப்படுகிறது. இதனுலேயே வங்காளம், யப்பான், இந்தோ னிஷியா முதலிய நாடுகளில் மரத் தின் கீழும், தெருச் சந்தியிலும் நின்று நடிகர்கள் தாமே உடன் எடுத்துச் செல்லக்கூடிய சிறிய அள

س- 6
வினதான தளபாடங்களுடன் நாட கம் ஆடும் குழுக்கள் தோன்றின. இதனுல் நாடகக் குழுக்கள் பல்கிப் பெருகின; மொத்தத்தில் நாடகக் கலையும் புதுத் துடிப்புடன் செழிப் படைந்தது.
சமீபகாலமாக ஈழத்திலே மேடை யேற்றப்படும் கவிதை நாடகங்கள் ° டிராமா வகையின் அதீத செல் வாக்கை எதிர்த்துத் தோன்றியவை என்று விளக்கங் கூறக்கூடுமாயினும், அக் கவிதை நாடகங்களைக் கவிதை நடையிலமைந்த டிராமா ’க்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. கருது கோள் முறையில் ஒர் உதாரணம் பார்ப்போம். சாதிப் பிரச்சினையை மையமாகக் கொண்டு * டிராமா " வும் எழுதலாம்; கவிதை நாடகமும் எழுதலாம் ; பள்ளு என்ற பழைய நா ட க வடிவத்  ைத யும் தேவையான உருவ உள்ளடக்க மாற்றங்களுடன் ஆடலாம். ஆட லும் பாடலும் விரவி வரும் பள்ளு, புதியதொரு நாடக அனுபவத்தை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு பல உதாரணங்களைக்
gST - 6) fitt.
தொகுத்துக் கூறுவதானல், டிராமா " என்ற நாடக வகையின் மட்டுமீறிய செல்வாக்கினல் எமது நாடகக் கலை அமுக்கப்பட்டுள்ளது என்றும், நவீனத்துவத்தின் பெயரில் மேனுட்டினரே கைவிட்ட நாடக வடிவத்தை எமது நாடகாசிரியர் களிற் பெரும்பாலானேர் இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றனர் என் றும், குறுகிய வரம்புகளையும் விதி களையும் துணிந்து மீறிப் புதிய புதிய பரிசீலனைகளைச் செய்தாலன்றி உண்மையான வளர்ச்சியைக் காண வியலாது என்றும், பிறநாடுகள் சில வற்றில் சமீபகாலத்தில் தோன்றி யுள்ள ஆக்கங்கள் தூண்டுகோலாய் அமையலாம் என்றும் சொல்லலாம்.

Page 55
அற புத்
5
ஏ. எம்.
எனது “இலங்கையில் இஸ்லாம்’ என்னும் நூலின் 20ஆம் அதிகாரத் தில் அறபுத் தமிழின் ஒர் அம்சத் தினை - இலங்கை முஸ்லிம்களையும் தென் இந்திய முஸ்லிம் களை யும் இணைக்கும் பாலமாக அறபுத் தமிழ் விளங்குகிறதென்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறேன். இதேயளவு முக்கியத்துவமுள்ள வேறு அம்சங் களும் உள்ளன. இஸ்லாத்துக்கும் தமிழுக்கும் உண்டான இணைப்பு, இவ் வறபுத் தமிழ் இணைப்பின் மூலமாக இந்த முஸ்லிம்களின் அறபுப் பூர்வீகத் தொடர்பு அற்றுப் போகாதிருந் தமை, முஸ்லிம் உலகத்துடன், குறிப் பாக, அறபு (அல்லது பாரசீக)க் குடாக்கரை யோரங்களில் அமைந்த நாடுகளுடன் இருந்த வரலாற்று, பண்பாட்டுத் தொடர்புகள் ஆதியன மேற் குறித்த பிற அம்சங்களில் ஒரு சிலவாகும்.
அதே அதிகாரத்தில் (இலங்கை யில் இஸ்லாம் 20ஆம் அதிகாரத்தில்) மற்றுமோர் அம்சம் பற்றியும் எழுதி யிருக்கிறேன். தமிழ் அகராதிகளிலும் தமிழ் இலக்கியம் பற்றிய நூல்களி லும் இந்த அறபுத் தமிழ் புறக் கணிக்கப் பட்டமைக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறை பற்றியும் இஸ்லாத் தின் மாபெரும் சாதனைகள் பற்றியும் தமிழ் மொழியில் போதுமானளவு நூல்கள் எழுதப்படாமைக்கும் கார ணம் வேண்டுமென்பதே அது.
இங்கிலிஸை சிறப்புப் பாடமாகக் கற்காத பட்டதாரி சோஸரின் நூல்

தமிழ்
. அவலிஸ்
களையும் வில்லியம் லாங்டன் என்பா ரின் நூல்களையும் கலாநிதிப் பட்டம் பெற முனையும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு மட்டுமே பிரயோசனமுள்ள பழைய நூல்களெனக் கருதுவதைப்போல நம்மிற் சிலர் அறபுத் தமிழைக் கருது கிருர்கள். இந்தக் கருத்து விசனிக்கத் தக்கது; ஆபத்தானது. ஏனென்றல், இலங்கை முஸ்லிம்களாகிய நாம் அறபுத் தமிழை விவேகமாக, ஆய்ந் தோய்ந்து பார்த்துப் புனருத்தார ணம் செய்யாவிட்டால், ஆக்க இலக் கியத் துறையில் பயனுள்ள, தனித் தன்மை வாய்ந்த நூல் எதையும் தோற்றுவித்தல் முடியாததாகிவிடும். அத்தகைய சூழலில் நம்மிடையே உண்மைக் கவிஞர்கள் தோன்ருர் ; கல்லடுக்கும் கொத்தனர் போல வெறுஞ் சொல்லடுக்கும் சோதாக் கவிஞர்களே தோன்றுவர். முஸ்லிம் பெயர்கள் பூண்டிருப்பினும் இஸ் லாமிய வாழ்க்கை முறையையோ கலாசாரத்தையோ பிரதிபலிக்காத இலக் கி யங் க ளே நம் மத் தி யிற் பிறக்கும்.
** இலங்கையில் இஸ்லாம் ‘’ என்ற எனது புத்தகத்தின் நூன்முகத் தில், (1) ஒலிக் குறிப்பு ஒருமைப் பாடு, (2) அறபுத் தமிழ் அகராதி, (3) அறபுத்தமிழ் இலக்கியக்கோவை ஆதியன எமது அத்தியாவசிய தேவைகள் என்று விவரித்திருக் கிறேன். இவற்றேடு வேறு சிலவற் றையுஞ் சேர்த்து எனது கருத்தை மேலும் விரிவுபடுத்து முன்னர் ஒரு

Page 56
38 --س--
விடயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது கருத்துக்களில் பிழையேதும் இருக்கலாம்; இத் துறை யில் அதிக ஈடுபாடுள்ளவர்கள் அவற் றைக் கண்டுபிடித்து எனக்குத் தெரி வித்தார்களானல் நான் மகிழ்ச்சி யுடன் அவற்றை ஏற்றுக் கொள் வேன். அறபுத் தமிழ் சம்பந்தமாக கணிசமானளவு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிற போதிலும் அறபுத்தமிழின் வரலாறு, மொழி யியல் அம்சங்கள் ஆதியன கவனிக்கப் படாதிருக்கின்றன.
அறபுத் தமிழின் தோற்றம் வளர்ச்சி, வீழ்ச்சி தளர்ச்சி ஆகிய அம்சங்கள் பற்றி அற்ப சொற்ப தகவல்களே இன்று எமக்குக் கிடைக் கின்றன. அறபுத் தமிழை ஸ்திரமான முறையில் மீண்டும் அரியாசனத் திருத்த வேண்டுமானுல், அதன் பிறப்பு வளர்ப்பையோ இக் காலத் திலும் இதற்கு முந்திய தசாப்தங் களிலும் அது நலிந்து மெலிந்தமைக் கான ஏதுக்களையோ புறக்கணிக்க லாகாது. ஒரு வகையில், இலக்கியச் சிறப்பம்சங்களை ஆராய்வதிலும் இவ்
வம்சங்கள் முக்கியமானவை.
வரலாற்று ரீதியாகவும், சமு தாய ரீதியாகவும் பார்க்குமிடத்து முதன் முதலில் தோன்றிய அறபுத் தமிழ்க் கையெழுத்துப் பிரதி எது, அதன் வாசகம் என்ன என்றெல் லாம் அறுதியிட்டுச் சொல்வது சாத்தியமன்று. அந்த மூலப் பிரதி ஒரு காலத்தில் நம்மை ஆண் . ஐரோப்பிய வல்லரசுகளின் தலைப் பட்டண மொன்றிலே யமைந்த தொல் நூற்சாலையில் தேடுவாரற்றும் படிப்பாரற்றும் இருக்கக்கூடும். ஏனெ

3 -
னில், அறபுமொழி வல்லுநர் கையில் அது கிடைத்தால் எழுத்துக்களை அவர் வாசிப்பார் ; ஆனல் சாராம் சம் தமிழ் என்பதால் அதன் கருத்தை விளங்கிக் கொள்ளார். திராவிட மொழி வல்லுநருக்கும் இதே இடர்ப்பாடு நேரும். பார்ப் தற்கு அறபாகவும் படிப்பதற்குத் தமிழாகவும் இருக்கும் அப்பிரதி இந்த இரு வல்லுநர்களையும் மலைக்கச் செய்துவிடும். எனினும் அறபுத் தமிழ் மூலமாக உலகின் மாபெரும் தொல் இனங்களில் இரண்டாகிய செமிற்றிக் இனமும் திராவிட இன மும் சங்கமமானமை வரலாற்று முக்கியத்துவமற்றதன்று. இம் முக்கி யத்துவத்தை அறபு, தமிழ் ஆகிய இருமொழிப் பயிற்சியுந் தேர்ச்சியு முள்ள இலங்கை முஸ்லிம் எவரே னும் ஆராய்ந்து வெளியிடுவாரென எதிர்பார்ப்போமாக. இந்தச் சந் தர்ப்பத்தில் நுகேகொடையிலுள்ள எமது தொல்நூற்சாலையில் நான் கண்ட அறபுத் தமிழ் வாரப்பத்திரி கைப் பிரதிகள் பற்றிச் சொல்வது பொருத்தம். கஷ்ஃபுல்ருன் அன் கல்பில்ஜான் என்பது அப் பத்திரி கையின் பெயர். 1889ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வாரப் பத் திரிகை சித்திரக் கையெழுத்தில் அழகாக எழுதப்பட்டு கல்லச்சு மூலம் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அறபுச் சித்திரக் கையெழுத்துக் கலைக்கு நம் நாட்டில் மதிப்பு அருகி வரும் இக் காலத்து நிலைபரத்தோடு ஒப்பிடுகை யில் மேற்படி கையெழுத்து மணி மணியாக இலங்குகிறது.
8ஆம் நூற்ருண்டு முதல் 19ஆம் நூற்ருண்டு வரையான காலப் பகுதி யில் வழக்கிலிருந்த அறபுத் தமிழ்ச்

Page 57
=م
சுவடிகளை உலகெங்குமுள்ள தொல்
பொருட்சாலைகளில் தேடி, முறைப் படி வகைப்படுத்தி, காலக்கிரமமான
சரித்திர பின்னணியில் நோக்கினல்
அறபுத் தமிழின் தோற்றம் பற்றி
முழுமையாக அறிந்துகொள்ளலாம்.
ஆனல் இத்தகைய ஒரு பணி எத்
துணைச் சிரமமானதென்பது சொல்
லாமலே விளங்கும்.
அறபுத் தமிழ் ஆராய்ச்சியாளர் கள் இன்னென்றையும் கவனித்தல் வேண்டும். இலங்கைக்கும் இந்தியா வுக்கும் மட்டுமே பிரத்தியேகமான தொன்ருக இந்த மொழிப் பரிணும வளர்ச்சியைக் கருதுதலாகாது. மத் திய காலத்தில் இஸ்லாமும் இஸ்லா மிய நாகரிகமும் உலகமெல்லாம் கிளைத்துப் படர்ந்த போது, அறபு மொழியும் கூடவே பரவலாயிற்று. இந்த வகையில் அறபுத் தமிழுக்கும் ஸ்வாஷிலி மொழிக்கும் நெருங் கிய ஒற்றுமைகளைக் காணலாம். கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த கறுப்பின மக்கள் இஸ்லாத்தைத் தழுவியதன் பயனகத் தோன்றிய ஸ்வாஹிலி மொழி இன்று டன்ஸா னியா நாட்டின் உத்தியோக மொழி யாக விளங்குகிறது. அறபு லிபியில் எழுதப்பட்ட இம் மொழி பிரிட்டி ஷாரின் ஆட்சிக் கால முதல் ரோமன் லிபியில் எழுதப்படுகிறது. துபாஷி, வங்காளம், சிந்தி, மலாய் மஹல்ல தீவுமொழி ஆகியவற்றுக்கும் அறபுத் தமிழுக்கும் பொதுவான சிறப்பு அம்சங்கள் பல. மலாய் மொழி ரோமன் லிபியிலும் எழுதப்படுகி றது. அறபு லிபியிலும் எழுதப்படு கிறது. ரோமன் லிபி மலாய் இன் றைய மலேசியாவின் உத்தியோக மொழியாக விளங்குகிறது. ஆயி.

9 -
னும், இன்றுகூட, அறபு லிபி மலாய் மொழியில் அங்கு பத்திரிகைகள் வெளிவருகின்றன. இம் மொழி வெகு ஜன வழக்கில் ஜாவி என அழைக்கப்படுகிறது. மேற் சொன்ன எல்லா மொழிகளிலுமுள்ள தேசிய இலக்கியங்களை ஒப்புநோக்கிப் பார்த் தால், அக்காலத்தில் இஸ்லாமிய கலாசாரமும் நாகரிகமும் எத்துணைச் செல்வாக்குடன் திகழ்ந்தனவென்ப தைக் காணலாம்.
அறபுத் தமிழ் ஒரு மொழியா ? கிளை மொழியா ? ஓர் இ லக் கி ய நடையா? இது பற்றி அறிவியல் முறையிலோ மொழியியல் அடிப் படையிலோ ஆராய்ந்து முடிவு செய் யப்பட்டதாகத் தெரியவில்லை. இது விஷயத்திலும் என் கருத்துத் தவரு யிருக்கலாம். தவறென்று எவரே னும் சுட்டிக் காட்டினல் நன்றி யுடையவனுயிருப்பேன். தமிழ் இலக் கணம் தவிரத் தனக்கென வேருக இலக்கணம் இல்லாமையால் அதனை ஒரு தனி மொழியென்று கொள்வது சாத்தியமன்று. ஆனல் மறுபுறத்தில் பார்த்தால், பிரிட்டிஷ் இங்கிலீஸுக் கும் அமெரிக்க இங்கிலீஸுக்கும் உள்ளதிலும் அதிக வேறுபாடு தமி ழுக்கும் அறபுத் தமிழுக்கும் உண்டு. எனவே, கிளை மொழி என்னும் ஸ்தா னத்தை நாம் அதற்குத் தங்கு தடையின்றி அளிக்கலாம். இதனைப் பேசிய மக்கள் குழுவினர் மலையாள மொழி உருவான காலத்தில் வாழ்ந் தவர்களைப் போல இடவாரியாகப் பிரிந்திருக்கவில்லை ; மத வாரியாக இணைந்திருந்தவர். மலையாளம் கால கதியில் ஒரு தனிமொழியாகப் பரிண மித்தது ; அரபுத் தமிழ் அத்தகைய தனி மொழி அந்தஸ்தை அடைய

Page 58
4 حس۔۔۔۔
வில்லை. அறபுத் தமிழ் நடை மணிப் பிரவாள நடையைப்போன்று இலக் கிய நடை என்பதில் ஐயமில்லை. மணிப்பிரவாளம் சமஸ்கிருத ஒலிக ளைத் தமிழில் புகுத்தியதும் அல்லா மல் தமிழுக்கு ஒரு சில அட்சரங்களை யும் - கிரந்த எழுத்துக்களையும் - கொடுத்துதவியது போலவே அறபுத் தமிழும் அறபு ஓசைகளாலும் இலக் கிய நடையாலும் தமிழுக்குச் செழிப் புத் தேடிக்கொடுத்தது.
19ஆம் நூற்ருண்டில் நூல்களை அச்சிடும் நடைமுறை பிரபலமடைந் ததும் அதுகால வரை லிபியில் எழு தப்பட்டு வந்த அறபுத்தமிழ் தமிழ் லிபிக்கு மாறியதெனலாம். அறபுத் தமிழ் - இஸ்லாமிய தமிழ் - இலக் கியம் பற்றி அண்மையில் வெளிவந் திருக்கும் நூல்களெல்லாம் 19ஆம் நூற்ருண்டிலிருந்தே பெரும்பாலும் தமது ஆராய்ச்சியைத் தொடங்கு வதற்கு இதுவே காரணம்போலும்,
இந்தச் சந்தர்ப்பத்தில் இன் னென்றும் நினை வு கூரத்தக்கது. 15 - 18ஆம் நூற்ருண்டுவரையான காலப்பிரிவில் இலங்கை முஸ்லிம்கள் போர்த்துக்கேயராலும் ஒல்லாந்த ராலும் அடக்கி ஒடுக்கப்பட்டு வந்தார்கள். இதேகாலப் பிரிவில் இந்தியா முகலாய ஆட்சிக்குட்பட் டிருந்தது. தென் இந்தியாவின் சில பகுதிகள் நவாபுகளின் ஆட்சிக்குட் பட்டிருந்தன. தென் இந் தி ய முஸ்லிம்களின் வ ர ல |ா ற் றிலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றி லும் காணப்படும் இந்த வித்தியா சத்தின் விளைவாக இவ்விரு பகுதி களில் வழங்கிய அறபுத் தமிழிலும் சிற்சில மாறுபாடுகள் உண்டாயின.

0 -
இந்திய முஸ்லிம்கள் மத்தியில் பெரு மளவான பார்ஸி, உறுது, ஹிந்துஸ் தானிச் சொற்கள் வந்து சேர்ந்த தைப் போல இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வந்து சேரவில்லை.
அச்சு வாகனமேறிய புத்தகங்கள் கையடக்கமா யிருந்தமையால் மக் கள் அவற்றுக்கு அமோக வரவேற் பளித்தார்கள். அறபு லிபியில் எழுதப்பெற்ற அறபுத் தமிழ், தமிழ் லிபிக்கு மாறியமைக்கு அச்சு வாக னத்தின் வரு  ைக யு ம் முக்கிய காரணமாயிருக்கலாம். ஆணுல் இந்த மாற்றம் எப்பொழுது சம்பவித்த தென்பது ஆராய்ச்சிக்குரிய மற் ருெரு அம்சம். இது விஷயத்தில் தப் ஸிர் களையும் - திருக்குர்ஆன் வியாக்கியானங்களையும் - பிற நூல் களையும் வேறு வேருக ஆராய்தல் அவசியம். ஏனென்ருல் தப்ஸிர்கள் அறபு லிபியில் தவிர பிற லிபியில் எழுதப்படலாகாதென்ற எதிர்ப்பு நெடுங்காலம் இருந்துவந்தது. எனது பாட்டனர் வைத்திருந்த தப்ஸிர் இச்சமயத்தில் நினைவுக்கு வருகி றது. தினமும் காலை வேளையில் அவர் கையில் அந்நூல் இருக்கும். ஹிஜ்ரி 1296 இல் (இப்பொழுது நாம் வாழ்வது ஹிஜ்ரி 1386 இல் ) இந்த தப்ளிர் வெளி யா யிற் று. இதே தப்ளிர் பிரதி கொழும்பு ஸாஹிரு கல்லூரியில் இன்றும் வைத்துப் பேணப்பட்டு வருகிறது. இதன் ஆசிரியர் ஹப்பு முஹம்மது ஆலிம், காயல்பட்டினம். இதன் பெயர் புதுஹத்துற்ற ஹமானிய்யாபீ தஃப்ஸ்பீரி கலாமில் றப்பானியா என்பது. இந் நூலில் திருக்குர்ஆன் வாசகங்கள் அறபு மொழியில் பெரிய எழுத்தில் அ ச் சிட ப் பட் டி ரு க் கி ன் ற ன.

Page 59
-
ஒவ்வொரு வரியின் அடியிலும் அந் தந்த வரியின் தர்ஜ"மா - மொழி பெயர்ப்பு - அறபுத் தமிழிற் காணப் படுகிறது. ஒவ்வொரு பக்கத்தின் விளிம்பிலும் விரிவான வியாக்கியா னங்கள். பக்கத்தின் மூன்றில் ஒரு பகுதி இவ் வியாக்கியானங்களால் நிரம்பியிருக்கிறது.
1920இலும் அடுத்து வந்த ஆண்டுகளிலும்கூட இந்த தப்ளிர் கள் தமிழ் லிபியில் எழுதப்படலா காது என்று வாதாடி வந்தார்கள். அறபு மொழிக்கும் லிபிக்கும் அளிக் கப்பட்ட கெளரவ த் துக்கு இது வொன்றே தக்க சான்ருகும். திருக் குர்ஆன் பிரகடனஞ்செய்யப்பட்டது அறபு மொழியிலேயே என்பதனல் குர்ஆன் வாசகம் அறபிலேயே எழு தப்படல் வேண்டுமென்பது சரியே. இதிலிருந்து பெறப்படும் மற்றுமோர் உண்மை, நமது தந்தையர் சந்ததி யிலும் பார்க்கப் பாட்டனர் சந்ததி ஒருவகையில் மேம்பட்டு விளங்கிற்று என்பதாகும். எவ்வாறெனில், நமது பாட் டனர் சந்ததியினர், திருக் குர்ஆனை தப் ஸிர்களின் உதவியால் அர்த்தம் அறிந்து ஒதினர்கள். ஆனல் அவர்களுக்குப் பின் வந்த சந்ததியினரோ இங்கிலிஷ் மோக வயப்பட்டு அறபுத் தமிழை மறந் தார்கள். இவர் க ள் காலத்தில் இங்கிலீஷில் முஸ்லிம்கள் இயற்றிய தப்ளிர்கள் இருக்கவில்லை. முஸ்லிம் கள் அல்லாதோர் இயற்றிய தப்ளியீர் களே புழக்கத்திலிருந்தன். இவற்றை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனல் அவர்கள் தப்ஸிர்களைப் படித்துப் பயன்பெறும் வாய்ப்பை இழந்தார்கள்.
6

1 -
அச்சு வாகனத்தின் அனுகூலங் கருதி அறபுத் தமிழ், தமிழ் லிபியில் எழுதப்பட வாரம்பித்ததும், தமிழில் இல்லாத அறபு ஒலிகள் தமிழிற் காணப்படாது போயின. அறபுத் தமிழ் அறபில் எழுதப்பட்டு வந்த காலத்தில் தமிழுக்குச் சிறப்பான ட, ண, ப, ழ போன்ற எழுத்துக் களின் ஒலியைக் குறிப்பதற்கு விசேஷ அறபு எழுத்துக்கள் உண்ாடக்கப்பட் டன. அறபு என்னுஞ் சொல்லே அரபு எனத் திரிந்தமைக்கும் அறபுத் தமிழ் அறபிலிருந்து தமிழ் லிபிக்கு மாறியமை ஒரு காரணமென லாம். ரகர, றகரத்துக்குள்ள ஒலிப்பேதத் தின் நுணுக்கத்தை அறியாமலிருந் ததும் காரணமாயிருக்கலாம். இந் நாட்களிற் கூட சில சஞ்சிகைகளில் அக்கறை, அக்கரை என எழுதப்படு தலை ஒரு சான்ருகக் கொள்ளலாம்.
அறபில் உள்ள சிறப்பு ஒலிகளைக் காட்டும் விசேஷ எழுத்துக்கள் தமி ழில் உருவாக்கப்படல் அவசியமல் லவா? தமிழில் சிறப்பு எழுத்துக்க ளான ங், ஞ, ட , ள. ற போன்றவற் றைக் கொண்ட சொற்களே ரோமன் -இங்கிலீஷ் - லிபியில் எழுதுவதற்கு ஒலிக்குறிப்புக்களுக்குப் பதில் விசேஷ எழுத்துக்களை உருவாக்குதல்வேண்டு மென்னும் கருத்து அண்மையில் தெரிவிக்கப்பட்டது. அறபுத் தமிழ் விஷயத்திலும் இந்த யோசனையைப் பின்பற்றலாம். மணிப்பிரவாளம் தமிழுக்கு அளித்த ஷ, ஸ, ஜ போன்ற எழுத்துக்களும் இது விஷ யத்திற் பயனளிக்லவல்லன.
அறபுத் தமிழ் வீழ்ச்சியடைந்த மைக்கான காரணத்தை நாம் ஊகித் தறிந்து கொள்ளலாம். எனினும், அறி

Page 60
வியல் அடிப்படையில் எவரும் இதனை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை. அச்சு வாகனத்தின் வருகை ஒரு காரணம்; மேற்சொன்ன சிறப்பு எழுத்துக்கள் தமிழில் உருவாகாமை மற்ருெரு காரணம்; தப்ஸிர்களையும் மெளலுத் களையும் அறபு லிபியிலேயே எழுதுதல் வேண்டுமென்று வாதாடி வந்தமை இன்னுமொரு காரணம் : அக்கால மக்கள் உலகியல் கல்விச் செல்வத் திற் காட்டிவந்த அசிரத்தையால் அறபுத் தமிழ் நூல்களை அச்சேற் றும் முயற்சி போதியளவு மேற் கொள்ளப்படாமை பிறிதொரு காரணம் , இங்கிலிஷ் மொழியின் ஆதிக்கம் இன்னுமொரு காரணம். இன்று போதனமொழி என்னும் அந்தஸ்தை இங்கிலிஷ் இழந்து வரு கிறது. அறபுத் தமிழ் மீண்டும் தழைத் தோங்குவதற்கு இது கல்ல சமயம். ஆனல் நாம் இத்துறையில் ஸ்தா பன ரீதியாக எதுவித முயற்சியும் எடுக்காதிருக்கிருேம். இந்த வகையில் அரசாங்க முஸ்லிம் கலாசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் பொறுப்பு பெரியது என்பது சொல் லாமலே பெறப்படும். அதுபோலவே முஸ்லிம் தமிழ் எழுத்தாளர்களுக் கும் பெரும் பொறுப்பு உண்டு. ஏனென்ருல், அறபுத் தமிழ் மரபைப் பேணுத முஸ்லிம் எழுத்தாளர்கள் தனித்தன்மை வாய்ந்த இலக்கியங் களைச் சிருஷ்டித்தல் சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை.
எனது இக் கட்டுரையை முடிக்கு முன்னர் இலங்கையில் இஸ்லாம் ? என்னும் நூலில் நான் கூறியுள்ள மூன்று யோசனைகளை இங்கு விரித் துக் கூற வி ைழ கிறேன். இந்த யோசனை கள் முற்ற முடிந்த

42 -
முடிபுகள் என்ருே இங்கு தந்துள்ள ஒழுங்குப் பிரகாரமே பின்பற்றப் படல் வேண்டுமென்ருே கொள்ள லாகாது:
1. ஒலிக்குறிப்பு ஒருமைப்பாடுஇது விஷயத்தில் விசேஷ அடையா ளங்களுக்குப் பதில் விசேஷ எழுத்துக் களை உருவாக்கலாம்.
2. அறபுத் தமிழ் அகராதி - இதற்கு அறபுத் தமிழ் நூல்களிற் காணப்படும் அரும்பத உரைகளை ஆதாரமாகக் கொள்ளலாம்.
3. அறபுத் தமிழ் இலக்கியக் கோவை - புராணம், நாயகம், கலம்பகம், முனுஜாத்து, அந்தாதி, திருப்புகழ், ஞானப்பாட்டு ஆகிய வற்றின் சிறந்த பகுதிகளை மட்டுமல் லாமல், நாடகம், சிந்து, தாலாட்டு, கும்மி, படைப் போர் ஆகியவற்றின் பகுதிகளுடன் புராண வசனம், மார்க்க ஒழுக்கம், கிஸ்ஸா முதலிய வசன நூல்களின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இது அமைதல் வேண்டும்.
4. ஜி. சீ. ஈ. வகுப்புக்களுக்கு மட்டுமல்லாமல் கீழ் வகுப்புக்களுக் கும் உகந்த, வாசினைப் புத்தகங்கள் வெளியிடப்படல் வேண்டும். இவை முஸ்லிம் மாணவர்களை நல்வழிப் படுத்தக் கூடிய இஸ்லாமிய வர லாற்றுச் சம்பவங்கள், கதைகள், இஸ்லாமிய கலாசாரத்தைப் பிரதி பலிக்கும் நிகழ்ச்சிகள் ஆகியனவற் றைச் சித்திரிப்பனவாக இருத்தல் வேண்டும்.
5. மொழிபெயர்ப்புக் கலை - அரசாங்க முஸ்லிம் ஆசிரியர் பாட சாலைகளில் இதற்குச் சிறப்பிடம்
அளிக்கப்படல் வேண்டும்.

Page 61
- 4
6. அறபுத் தமிழில் சிறுவர் இலக்கிய நூல்கள் - வருங்கால சந் ததியினருக்கு நாம் அளிக்கக் கூடியது
இதன் அருமை பெருமைகளை அவர் கள் அறிந்து கொள்வதற்குச் சிறு வயதிலிருந்தே பயிற்சி யளித்தல் அவசியம். இதற்கேற்ற சிறுவர் இலக்கியங்கள் இஸ்லாமியக் கண் ணுேட்டத்தில், அறபுத் தமிழில் வெளிவரல் அவசியம். இந் நூல்கள் இங்கிலிஷ் மொழியில் ஏற்பட்டுள்ள நூல் அமைப்பு, அச்செழுத்து வடி வம் முதலான முன்னேற்றங்களை அனுசரித்தனவாக உருவாக்கப்படல் இன்றியமையாததாகும்.
7. இலட்சிய பூர்வமான திற னய்வு - அறபுத் தமிழின் புனருத் தாரணத்துக்கு அத்தியாவசியமான அம்சங்கள் பற்றி மிகுந்த சிரத்தை யுடன் ஆராய்தல் அவசியம். பழைய அறபுத் தமிழ் நூல்களின் பதவுரை களிலும் பொழிப்புரைகளிலும் மட் டுமே காலத்தை விரயமாக்காது அந் நூல்களின் வரலாற்று ரீதியான அம் சங்கள், இலக்கியத் தராதரம், சாராம்சம், ஒப்பியல் ஆய்வு ஆகிய வற்றிலும் இஸ்லாமியக் கண்ணுேட் டத்திற் கவனஞ் செலுத்துதல் வேண்டும்.
முஸ்லிம் புலவர்களால் எழுதப்பட்ட ட புகுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இந் வாழ்ந்ததினலேயே இத்தகைய இந்துமத ஏற்பட்டது. சில சந்தர்ப்பங்களில் இஸ்ல சமயக் கருத்துக்கள் இந்நூல்களில் இடம்

3 -
இவ்வேழு திட்டங்களையும் நிறை வேற்றுதற்கென ஒரு சஞ்சிகை ஆரம் பிக்கப்பட்டால் நன்ரு யிருக்கும். தனி ஒருவராலோ, ஒரு சிலராலோ இவ்வளவையும் சாதித்துவிட முடி யாது. கூட்டு முயற்சி தேவை. திட்ட வட்டமான அடிப்படையில் நிறை வேற்றப்பட வேண்டிய இப் பிரச்சினை கள் தென் இந்திய முஸ்லிம்களுக்கும் பொதுவானவை என்பதால் அவர் களையும் நாம் கலந்தாலோசிக்கலாம். இவ்விதம் செய்வதணுல் மொழி பெயர்ப்பு, மொழியுருவம் ஆகிய வற்றில் ஒருமைப்பாடு காண்பதுடன் அறபுத் தமிழின் அந்தஸ்து உயர் வதற்கும் வழி பிறக்கும். சுதந்திரத் தைக் காப்பதற்கு, ஜனநாயகத்தைப் பேணுதற்கு இடையருத கண்கா னிப்பு அவசியமென்பார்கள். அது போலவே, கலாசாரத் தனித்துவத் தைப் பேணிக் கட்டிக் காப்பதற்கும் அயராத திட்டவட்டமான பிரயா சைகள் இன்றியமையாதனவாகும். இப் பிரயாசைகளில் ஆர்வமுண் டாக்குவதற்கு இன்றைய விழா உதவிபுரிய வேண்டுமென்று எல்லாம் வல்ல அல்லாஹ"த் ஆலாவிடம் இறைஞ்சுவோமாக. ஆமீன்.
浆
ல தமிழ்நூல்களில் இந்துசமயக் கருத்துக்கள் துக்களுக்குரிய சூழலில் முஸ்லிம் புலவர்கள் ஆதிக்கம் இஸ்லாமிய தமிழ்நூல்களில் ாமிய கொள்கைகளுக்கு முரணுன இந்து பெற்றுள்ளன.
- ம. முகம்மது உவைஸ்

Page 62
கிறிஸ்துவத் தமிழ்
வ. அ. இர
தமிழ் மொழி இனிமையானது; தொன்மையுடையது; செம்மையா னது; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இலக்கிய இலக் கணங்களை யுடைய மொழி. இவற் றிற்கிெல்லாம் மேலாகப் பல நாட் டவரும், பல இனத்தவரும், பல சமயத்தினரும் தமது மொழி என்று உரிமை பாரட்டக்கூடிய மொழியாக வும் அது அமைந்துள்ளது. உலகின் முக்கிய சமயங்களான சைவம், வைஷ்ணவம், பெளத்தம், சமணம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் ஆகிய பல்வேறு சமய இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. பல்வேறு சமயத்தினர் தமிழ் மொ ழிக்கு இலக்கணமுல் கண்டுள்ளனர்.
இப்படியாகப் ல்வேறு சமயக் கருத்துக்களைக் கொண்ட இலக்கியப் பரப்பிலே வெவ்வேறுசமயங்களுக்குத் தனித்தனியான சிறப்பியல்புகள் உளவாயிருக்கலாம். இந்த நிலையிற் கிறிஸ்துவத் தமிழ் இலக்கிய மரபை யிட்டுச் சிறிது ஆராய்வாம்.
கிறிஸ்து நாதரின் பன்னிரு சீடர் களில் ஒருவரான புனித தோமை யார் தமிழ் மண்ணிற்கு வந்து தமது மதத்தைப் பரப்பியதாக அறிகின் ருேம். போர்த்துக்கீசரின் வருகைக்கு முன்னரே தென் இந்தியாவில் சிரியக் கிறிஸ்துவர்கள் இருந்திருக்கிருர்கள்" ஆனல் 15ஆம் நூற்ருண்டின் பிற் பகுதியில் வஸ்கோடகாமாவின் கள் ளிக்கோட்டை வருகைக்குப்பின்னர், தென்னிந்தியக் கரைகளையும் ஈழநாட் டின் கரைப்பகுதிகளையும் அடிப்படுத்

ழ் இலக்கிய மரபு
ாசரத்தினம்
திய போர்த்துக்கீசர் காலந்தொட் டுத்தான் "கிறிஸ்துவத் தமிழ் இலக் கியம் வளர்ந்ததாக நம்மால் அறிய முடிகிறது.
தமது மதத்தைப் பரப்புவதற் காகப் போர்த்துக்கல், ஸ்பானிய நாடு களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்த கத்தோலிக்கக் குருமார், மக்க ளோடு பழகுவதற்காகத் தமிழைக் கற்க வேண்டியிருந்தது. கத்தோ லிக்க மத கிரந்தங்களையும், செபங் களையும் தமிழிலே மொழிபெயர்க்க வேண்டியிருந்தது.
15ஆம் நூற்றண்டில் ஐரோப்பா விலே அச்சு இயந்திரம் கண்டுபிடிக் பட்டதாயினும், அதன் உபயோகம் இந்தியாவிலோ, ஈழத்திலோ அப் போது வரவில்லை. எனவே, போர்த் துக்கேயக் குருக்கள் நூல் அச்சிடும் வேலையை ஐரோப்பாவிலேயே செய்ய வேண்டியிருந்தது. 1554ஆம் ஆண் டிலே, போர்த்துக்கீச மன்னன் 3ஆம் யோண் என்பானின் ஆணைப்படி லிஸ்பன் நகரிலே ஐரோப்பிய நெடுங் கணக்கில் ஒரு தமிழ்க் கிறிஸ்துவ வினவிடை அச்சிடப்பட்டது. முஸ் லிம் தமிழ் அறிஞர்கள், தம் நூல் களை அறபு மொழியில் எழுதியது போல.
ஆணுல் 1557இல் யேசு சபையைச் சேர்ந்த கொன்சால்வெஸ் சுவாமி யார் மலையாளத்திலே கொல்லம் என்ற இடத்தில் ஓர் அச்சியந்திர சாலையைத் தாபித்து தமிழ் எழுத் துக்களை வார்ப்பித்தார். அடுத்த ஆண்டிலே, அவ் வச்சியந்திரசாலையி

Page 63
مستحساس
லிருந்து ஜேசு சபையைச் சார்ந்த G 6/D cir5)é6o (Henriques) 96TuÉ) யாரால் எழுதப்பட்ட Doctrina Christam என்ற போர்த்துக்கீசப் பெயர்கொண்ட தமிழ்நூல் ஒன்று வெளியாயிற்று. இந்தியாவிலேயே முதன் முதலில் அச்சில் வெளியான நூலே இதுதான் ! அந்நூலிற் பத்துக் கற்பனைகள், பரமண்டல மந்திரம் என்பன அடங்கியிருந்தன.
மெய்யெழுத்துக்களின் மேற் புள்ளியிடப்படாமலும், ஏ கா ர ஒகார உயிர்மெய் எழுத்துக்களுக்கு ஒற்றைக் கொம்பை உபயோகித்தும், ரகரத்திற்குக் கால் இல்லாமலும் எழுதப்பட்ட அந்நாளைய நெடுங் கணக்கில் (பின்னுல் இம்மாற்றங்களை வீரமாமுனிவர் செய்து தந்தார்) அந்நூலில் இடம் பெறும் பத்துக் கற்பனைகள் இப்படித்தான் இருக் கின்றன:
தமபிாான மாாகததின காபிளை களாவது பதது முதலாவதெல லாததிலும பாாகக தமயிாானை கேசிததிருபபது. இாண்டாவது தமயிாான திரு காமததை கைகோணடு வீணே சததியஞ சேயயாமலிருபபது.
அதன்பின்னல் கோவையிலிருந்த ஜேசுசபைக் குருக்கள் பல நூல்களை வெளியிட்டனர். இவர்கள் 1586இல் Golau Gafflus L. Flos Sanctorum GT6ör னும் நூலின் புகைப்படப் பிரதியை யாழ்ப்பாணம் பொது நூல்நிலையத் திற் காணலாம்.
போர்த்துக்கீசருக்குப் பின்னல் ஒல்லாந்தர், டேனிஷ்காரர், பிரான் சியர், இத்தாலியர், ஆங்கிலேயர் முதலான பல்வேறு ஐரோப்பியக் குரவர்கள் தமிழ் நாட்டிற்கு வந்த

5 -
னர். கிறிஸ்துவத்தின் பல பிரிவு களையுஞ் சார்ந்த இவர்கள் தத்தம் மதத்தைப் போதிக்கும் முகமாகத் தமிழைக் கற்றனர். நாட்டிலே கிறிஸ் துவத் தமிழர் தொகையும் பெரு கிற்று. காலகதியில் வெறுமனே செபங்களும் மதகிரந்தங்களும் மட்டு மல்ல, தமிழின் இலக்கிய மரபை யொட்டிய கிறிஸ்துவ நூல்களும் எழுந்தன.
இப்படியாக ஆற்றுப்படை, அந் தாதி, பிள்ளைத் தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி, அம்மானை, ஏசல், சிந்து, கீர்த்தனை, திருப்புகழ், கும்மி, தாலாட்டு என்ற பிரபந்தங்களும், தேம்பாவணி போன்ற காப்பியங் களும், தமிழ்க் கிறிஸ்துவரால் எழுதப் Lul "L-GBT
தம் சமயஞ்சாந்த தத்துவங்களை எழுத வந்த கிறிஸ்துவத் தமிழர்கள், மதத்தாற் கிறிஸ்துவர்களாக இருப் பினும் இலக்கிய மரபிற் தாம் தமி ழர்கள் என்ற பிரக்ஞை தப்பா திருந்தார்கள். யாப்பு முறையிலே, தமிழ் இலக்கியத்திலே எந்த யாப்பு முறைகள்கையாளப்பட்டுள்ளனவோ அந்த யாப்புமுறைகள் அனைத்தையும் கிறிஸ்துவப் புலவர்கள் கையாண் டார்கள். பலவகையான யாப்பு முறைகள் பிரபந்த நூல்களிலே கையாளப்பட்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். அந்த யாப்புமுறை கள் எல்லாமே திருக்காவலூர்க் கலம்பகம்’, ‘பெத்லேகம் குறவஞ்சி" ஆகிய பிரபந்தங்களில் அமைந்திருப் பதை நாம் காணலாம்.
திருக்காவலூரில் கோயில் கொண்டதேவமாதாவின்மேல் அன்பு கொண்ட வீரமாமுனிவர் தம்

Page 64
- 4
அன்பை வெளியிடத்திருக்காவலூர்க் கலம்பகம்’ என்ற நூலை எழுதுகிருர், தேவாரம், நாலாயிரப் பிரபந்தம் போன்ற பக்திப் பாசுரங்களிற் திளைத்த வீரமாமுனிவருக்கு "நான் ஏன் அங்குமிங்கும் அலைந்து திரியும் மனிதனுகப் பிறந்தேன்; இத் திரு வேங்கடமலையில் மீனுகப் பிறந்திருக்க லாமே; அப்படியானல் நாடோறும் பக்தர்களைக் காணும் பேற்ருேடு பக வானைத் தரிசிக்கும் பாக்கியமும் கிட்டியிருக்குமே" என்ற ஆழ்வார் பாசுரம் ஞாபகம் வருகிறது. முனி வரும் அந்த மரபு தப்பாமற் பாடு கின்ருர்:
* தாள்அணிந்த மதிமுதலாந் தமியனுமக்
கமலத்தாள் தாங்கி லேனுே கோள்அணிந்த குழல்அணிதார் குடைவண்டாய்
புகழ்பாடி மதுஉண் னேணுே வாள்அணிந்த வினைப்படைவெல் வரிச்சிங்கம்
ஈன்றஒரு மானுய் வந்தாள் கேளனிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப்
பசும்புல்லாக் கிடவேன் நானுே.”
என்று.
அதே கலம்பகத்தில் தமிழ் மரபு தப்பாது வரும் அம்மானைப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.
* போதலரும் தண்சினைக்காப்
பூங்காவல் ஊரரசி ஆதவனத் தூசாய்
அணிந்தனள்காண் அம்மானை ஆதவனைத் தூசாய்
அணிந்தனள்என் ருமாயின் மாதரசாள் மேனிநலம்
வாடாதோ அம்மானை மாத(அ)ருள்நீர் மூழ்கிரவி
வாய்குளிரும் அம்மானை' இப்படியாகக் கருத்துச் செறி விலும் யாப்பிலும் தமிழனுகவே நின்று பாடும் வீரமாமுனிவர்,

6 -
* கடலைக் கடைய அமுதமொடு கடுவும் பிறந்ததெனப் படலைக் கதையாய் அறிந்ததலால். " எனக் கடலில் அமுதம் பிறந்த புராணக்கதையைச் சம்த்காரமாக மறுக்கும்போதும், மேகந் திரண்டு மழை பொழியுங் காட்சியைப் பாடும் போதும் கிறிஸ்துவராகிருர்.
மேகந் திரண்டு கடல்நீர் குடித் துக் கருமுகிலாகி மழை பொழியும் காட்சியை அதிவீரராம பாண்டியன்:
* கருவி மாமழை கலைமகள் உருவென விளங்கி இரு விசும்பிடைப் பரந்துசென்
றினமணி கொழிக்கும் பரவை வெண்டிரை மேய்ந்துயர் பனிவரை யுயிர்த்த உருவ ஒடரித் தடங்களுள்
உருக்கொடு மீண்ட." என்று பாடுகிருர் தனது நைட தத்தில். '
அதிவீரராமபாண்டியன் வெண் ணிற மேகத்திற்குச் சரஸ்வதியின் நிறத்தையும் கருமே கத்திற்கு உமாதேவியின் நிறத்தையும் உவமை கூறுகிருர்,
அதேகாட்சியைக் கம்பர் தமது இராமாயணத்திற் பாடுகிருர்,
* நீற ணரிந்த கடவுள் நிறத்தவான்
ஆற ணரிந்தசென் ருர்கலி மேய்ந்தகில் சேற னிந்த முலைத்திரு மங்கைதன் வீறணிந்தவன் மேனியில் மீண்டவே.” கம்பர், நீறணிந்த சிவபெருமா னைப்போல மேகங்கள் வெண்ணிற முடன் சென்று, கடல் நீரைப் பருகி, இலக்குமி கேள்வணுகிய திருமாலின் கருநிறங் கொண்டிருப்பன என்கிறர்.
காவிய மரபு தப்பாமல் நாட் டுப் படலத்தில் மழைவளங் கூறுவ தைப் பாடவந்த வீரமாமுனிவருக்கு, அவர் கிறிஸ்துவர் ஆனதினுல் சரஸ் வதியையும், உமாதேவியாரையும்,

Page 65
- 4
சிவபெருமானையும், திருமாலையும் உவமைகூற முடியாதல்லவா? ஆளுை லும் ஏதோ உவமை கூறிப் பாடத் தான் வேண்டும். காவிய மரபும், கவிமரபும் தப்பவுங் கூடாது. அவர் Lптцg-(G2) ff :
* புள்ளு லாம்விசும்பிடை தொறும்
பொருபடை பரவ வெள்ளு லாம்மழை வெண்முடி
யுருக்கொடு விளங்கி தெள்ளு லாம்திரை திளைப்ப
உண்டுயர்ந் தெழுந்து வள்ளு லாம்கரு மதகரி
இனமெனத் தோன்ற.” என்று கடல் நாடிச் சென்ற வெண் மேகக் கூட்டம் வெண்கொடிகள் போன்றிருந்தனவாம். நீருண்டுவந்த கருமுகிற் கூட்டம் கருநிற யானைகள் போலு மிருந்தனவாம். இதிலே ம்ேகங்கள் கடல்நீர் பருகும் ஐதி கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, உவமையைத் தம் மத விரோதமில் லாதவாறு பாடியது மூலம் "கிறிஸ் துவத் தமிழ் இலக்கிய மரபை " வேரூன்றச் செய்தார்.
இப்படியான மரபு தொடர்ந்து வருகையில் அந்நியநாட்டுப் பெயர் கள், அந்நிய நாட்டுக் கருத்துக்கள் என்பனவற்றைத் தமிழ் மரபு தப்பா மல் இலக்கியமாக்கவேண்டிய இடர்ப் பாடுகள் கிறிஸ்துவத் தமிழ்ப் புல வர்களுக்கு ஏற்பட்டன. அதன் பொருட்டு அவர்கள் ஒரோ வேளை புதிய பிரபந்தங்களைக்கூடப் புனைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கவிகளுக்குப் புதிய உருவம் கொடுக்க வேண்டிய கட்டாயமும் உண்டானது. தொண்ணுாற்றறு வகையான பிரபந்தங்களுள்ளே " படைப் போர்’ என்ற பிரபந்த வகை இல்லை. ஆனல் முஸ்லிம் புலவர்கள், இஸ்லாமிய வரலாற்றிலே நடைபெற்ற போர்

7 -
களைப் பாட "படைப் போர் ’ என்ற புதிய பிரபந்தத்தைச் சிருட்டித்தார் கள். அதேபோலக் கிறிஸ்துவப் புல வர்கள் " வாசகப்பா " (" வாசாப்பு" எனக் கிராமங்களில் மருவி வழங்கப் படுகிறது) எ ன் ற பிரபந்தத்தைச் சிருட்டித்தார்கள்.
என் கிராமத்திலே அந்தோனி யார் கோயில் ஒன்று இருக்கிறது. அந்தப் புனிதர் மேற் பக்திகொண்ட எவனுே ஒரு புலவன், அவரது சரி தத்தை விஞவிடை ரூபமாக அமை யும் முறையிற் புதுவகைப் பிரபந்த மான வாசகப்பாவாற் பாடினன். அதைப் பார்ப்போம் :
(1) மாமணியும் பொன்னும்முத்தும்
வைத்தழுத்துந் தேரிலேறி மாநகரவீதி வாறதா ரிவரையா? (2) கோமணித் தகவுபெறு
கொட்டியா புரநகரின் கோயில்வாழுஞ் சந்தந்தோணி
5T 6ofia songust! இப்படியான வாசகப் பாக்கள் மன்னர், யாழ்ப்பாணம் ஆதியாம் இடங்களில் ஏராளமாக இருக்கின் நறன.
* ஞானப்பள்ளு’ என்ற பிரபந் தத்திலே வரும் பாத்திரங்கள் தம் இயற்பெயரால் அழைக்கப்படாமல், ! செருசலைப்பள்ளி, ருேமைப்பள்ளி என அழைக்கப்படுகின்றன. இப் படியாகக் கிறிஸ்துவ இலக்கியக் கதாபாத்திரங்களுக்குக் கிறிஸ் து பெருமானின் பெயரையோ அல்லது, அவரோடு தொடர்புள்ள ஊர்களு டன் தொடர்பு பட்ட பெயரையோ சூட்டுவது மரபாயிற்று. இதன் காரணமாகக் கிறிஸ்துவ இலக்கியங் களை மற்றையோர் பயில்கையிற் சற் றுச் சிரம மா க இருக்கின்றது. தமிழில் அறபுச் சொற்கள் கலந்த

Page 66
4 ۔سیسی۔
முஸ்லிம் புலவர்களின் இலக்கியம் போல இது பலருக்குத் தோன்று கின்றது.
ஆணுல் மதத்தின் தேவைகளை அனுசரித்து எழுதவேண்டி ஏற்படு கையில் இப்படியான இக்கட்டுக்கள் ஏற்பட்டே தீரும். ஆனல், அதனல் தமிழ் மொழிக்கு ஆக்கமே ஒழிய அழி வில்லை ! புதிய புதிய கருத்துக்களும் புதிய புதிய செய்யுள் உருவங்களும் அதனல் உண்டாகின்றன.
தேவமாதாவின்மேற் பாடப்பட்ட
Ave Maris Stella GT6örp Gvögsör பாடலைத் தமிழிலே மொழிபெயர்க்க வேண்டி யிருந்தது. அதைச் செய்யும் போது மொழிபெயர்த்தவர்கள் தமிழ்க்கவி மரபைப் பார்க்கவில்லை. மேஞட்டு இசையிற் பாடவேண்டி யிருந்த அப்பாடலை, அதே இசையிற் தமிழிலும் பாடக்கூடியதாக மொழி பெயர்க்க வேண்டியிருந்தது; மொழி பெயர்த்தார்கள்.
யாத்ரிகட்குப் பாதை
காட்டும் தாரகையே
என்றுங் கன்னித்தாயே
எம் தஞ்சமே வாழ்க என்ற அந்த மொழிபெயர்ப்பிற் தமிழ்க் கவிதை மரபு இல்லாதிருக்க லாம். ஆனல் தமிழ்க் கவிக்குக் கிடைத்த இப்புதிய உருவம் எதிர் காலத்தில் "மரபாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இப்படி யாக மேனுட்டுக் கவிதை மரபில் அமைந்த இலத்தீன் கவிதைகளை, அதே மரபில் - அது தமிழுக்குப் புதிய உருவம் - ஏராளமாக மொழி பெயர்த்திருக்கிருர் சுவாமி ஞானப் பிரகாசர்.
இப்படியாகக் கிறிஸ்துவத் தமிழ் இலக்கியம் தனக்கெனச் சில சிறப் பியல்புகளைக்கொண்டிருந்தாலும் வீர மாமுனிவர் தொடக்கி வைத்த தமிழ் மரபு, கிறிஸ்துவத் தமிழ் இலக்கியத்

8 -
தின் சிறப்பியல்புகளையும் மழுங்கடித் துக்கொண்டு, கிருஷ்ணபிள்ளை அவர் களின் "இரட்சணிய யாத்ரீகம்” என்ற காப்பியத்திலே மீண்டும் காம்பீர்யத் தோடு மிளிர்வதைக் காண்கிருேம். வைஷ்ணவராக இருந்து கிறிஸ்தவ ராக மாறிய இவரது பாடல்களில் ஆழ்வார்களின் பக்திச்சுவை சொட்டு வதைக் காணலாம். காப்பிய மரபும், கவிமரபும் தப்பாத இவரது காப் luth Pilgrim's Progress 6T657 D GLD ஞட்டுக் கதையைத் தழுவி எழுதப் பட்டதாகும். மூலநூலிற் காணப் படாத சிலவற்றைக் கூட்டியும், வேறுபாடுகள் செய்தும், வால்மீகி யைக் கம்பன் கையாண்டது போல, இப்புலவரும் தம் காப்பியத்தை ஆக்கினர்!
வீரமாமுனிவர்தொட்டு கிருஷ்ண பிள்ளை வரையும் எழுந்த பல்வேறு கிறிஸ்துவ இயக்கியங்களையும் படிக் கையில் கிறிஸ்துவ இலக்கியத்தின் சிறப்பியல்புகள், தமிழ்மரபு என்ற ஆற்றேட்டத்தில் அடித்துச் செல்லப் பட்டிருப்பதைக் காணலாம். கிறிஸ் துவத் தமிழர்கள் தாங்கள் தமிழரே என்ற பிரக்ஞை தப்பாமல், தமிழ் மரபே தம் மரபாகக் கொண்டு இலக் கியங்களை ஆக்கியிருக்கிருர்கள் !
இந்தக் கட்டுரையிலே கிறிஸ்துவத் தமிழ் இலக்கிய மரபைக் கவிதையில் மட்டுமே கண்டோம். உரைநடை இலக்கியத்தைப்பற்றி எழுத இச் சிறிய கட்டுரையில் இடம் இல்லை. GPL -LunTé6,
* என்னைநன் ருக இறைவன் படைத்தனன்
தன்னைநன்றகத் தமிழ்செயு மாறே.
என்ற திருமூலர் வாக்குத்தான் கிறிஸ்துவத் தமிழ் இலக்கியத்தின்
மரபு. கிறிஸ்துவத் தமிழர்களது
மரபும் அஃதேதான். எனவே, கிறிஸ்
துவ இலக்கியம் என்ருல் தமிழ் படித்
தவர்கள் மலைக்கத் தேவையில்லை.

Page 67
மலையகத் த இரா. சி
நமது நாட்டின் கல்வியில் தமிழ் மொழி முக்கிய இடம் வகிக்கிறது. நாட்டில் வாழும் மக்களுள் தமிழர் களும் இஸ்லாமியரும் தமிழ் மொழி யிலேயே முழுக் கல்வியறிவையும் பெறுகிருர்கள். மிகச்சில தமிழ், இஸ் லாமிய மாணவர்களே சிங்கள மொழி மூலம் கல்வியறிவு பெறுகிருர்கள். இன்று ஏறக்குறைய 3585 பாடசாலை களில் தமிழ்மொழி மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. பத்துலட்சம் மாணவர்கள் தமிழிற் கல்வி கற்கின் முர்கள். இவர்களுள் இரண்டு லட்சத் திற்குட்பட்டவர்கள் மலைநாட்டில் கல்வி கற்கின்றர்கள். மலைநாட்டில் ஏறக்குறைய ஆயிரத்திற்குமேற்பட்ட பாடசாலைகளில் தமிழ்மொழி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இவை களைத் தவிரத் தனியார் கல்விக்கூடங் களும் தமிழ் மொழிமூலம் கல்வி போதிக்கின்றன. பல்கலைக் கழகங்கள், சட்டக்கல்லூரி, தொழில்நுணுக்கக் கல்லூரிகள் ஆகியனவற்றிலும் தமிழ் மொழிமூலம் கல்வியூட்டப்படுகிறது. தமிழ்மொழி மூலமே முழுக்கல்வியை யும் பெற்றவர்கள், நிர்வாகப் பரீட் சைகள் எழுதி, நிர்வாகத்திலும், வெளிநாட்டுச் சேவையிலும் உயர்ந்த பதவிகள் ஏற்கின்ற நிலை நிலவுவதை யும் நாம் கண்கூடாகக் காண்கிருேம். உலகத்து நாடுகளிலேயே அஞ்சல் தலைகளில் தமிழ் பொறிக்கப்பட்டிருப் பது நமது நாட்டிலே மட்டுந்தான். ஆகவே, நமது நாட்டில் தமிழ் மொழிக்கு ஒரு முக்கிய இடம் இருக் கின்றது எனக் கூறுவது மிகையாகாது.
7

மிழ்த் திறன்
வலிங்கம்
இந் நிலையைப் பாதுகாத்து வளர்த்தல் குறிப்பாகத் தமிழ்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களிடத்தும், அதனைப் பயிலும் மாணவர்களிடத் தும் தங்கியுள்ளது. ஆண்டுதோறும் தமிழின் வளர்ச்சிக்காக மேற்கொள் ளப்படும் முயற்சிகளில் தமிழ்த்தினப் போட்டிகளும் ஒன் ரு கும். இப் போட்டிகளின்மூலம் மொழித்திறன் எங்கு குன்றுகிறது, எங்கு வளருகிறது என அறியக்கூடியதாக இருக்கின்றது. இலங்கையில் தமிழ் என்றவுடன் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய இரு பகுதிகளில் மட்டும் வழங்கப் படும் மொழியெனப் பலர் கருதுகின் ருர்கள். ஆயினும் மலைநாட்டு மக்களை யும், இஸ்லாமியரையும் கருத்திற் கொள்ளின் இலங்கை முழுவதுமே வழங்கப்படும் மொழி தமிழ் மொழி யாகும். வளர்ந்து வரும் உலகில், வளர்ந்து வரும் சமுதாயத்தின் முன் னேற்றத்திற்கு மொ ழி அறிவும், மொழித்திறனும் மிக அவசியமாகும். அறிவை ஈட்டுங் கருவியாகவும், ஆற் றலை வெளிப்படுத்துங் கருவியாகவும், சமுதாய உணர்வை வளர்க்கும் தூண்டுகோலாகவும் மொழி அமை கிறது. புதிதாக வளர்ந்துவருஞ் சமு தாயங்களிடையே மொழி ஆற்றல் விரைவில் துளிர்த்து வளருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. சீனு, கியூபா, மலேசியா, நைஜீரியா, கென்யா ஆகிய நாடுகளின் சமுதாய முன்னேற்றத்திற்கு அடிப்படையாக, மொழி அபிவிருத்தி அமைந்தது. இக் கூற்று நமது நாட்டுக்கும் பொருந்

Page 68
தும். அண்மைக் காலத்தில் விழிப் புணர்ச்சி பெற்று முன்னேறிவரும், இஸ்லாமிய, மலையக சமூகத்தவ ரிடையே தமிழ் மொழித் திறன் வளர்ந்துவருவதை நாம் காணக் கூடியதாக உள்ளது.
தமிழ்மொழி அறிவில் மலையக மாணவர்கள் நல்ல ஆற்றல் காட்டி வருகிறர்கள். பிழையற எழுதுதல், பிழையறப் பேசுதல் ஆகிய இரு துறைகளிலும், மலையக மாணவர் களின் முன்னேற்றம் குறிப்பிடத் தக்கது. மலையகத்தில் தமிழ் கற்பதற் கான இடர்ப்பாடுகள் அதிகமிருப்பி
பாபநாச மலையில் மேலிருந்து பெருகி வருகிற வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி, யிடுகிறது அணைக்கட்டு. அப்படி வெளிவரு கித்துக் கொண்டு திமிறி விம்மிப் பாய்கிறது வெளிப்படுகிறது. அதே சமயம், மானம சேரும் நீரை அணைகடந்துவிடாமல் அனை இருப்பினும் அதன் கட்டுக்கிடையான நீரி காணப்படுமா? கிடையாது. ஏன்? இரண்டு ஒன்றில் வரம்பை மீறிக்கொண்டு நீர் வரம்பையே தொடுவதற்குச் சக்தியற்று அ இதைப்போலவே இலக்கணக் கட்டுக்கோப்பு அந்தக் கட்டுக்கோப்புக்குளிருந்து கொண்டு றனவோ அந்த அளவுக்கு அவ்வார்த்தை கின்றன, கவிதை ஆகின்றன. இலக்கண தவிர, வேறு ஒன்றுமே அறியாது அப்பாவி வேகம் பெறுவதில்லை; வலுப்பெறுவதில்லை

0 -
னுங் கூட மலையக மாணவர்கள் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள் ளனர். சாகித்திய மண்டலப் பரிசில் கள், அனைத்திலங்கைக் கட்டுரைப் போட்டிப் பரிசில்கள் பெற்ருேரின் பட்டியலில் இப்பொழுது மலையக மாணவர்களின் பெயர்களும் இஸ்லா மிய மாணவர்களின் பெயர்களும் தவருது இடம்பெறுகின்றன. நல்ல தமிழாசிரியர்கள், கடமையுணர்ச்சி மிக்க வர் கள் பெருகப் பெருக மொழித்திறன் எல்லாப்பகுதிகளிலும் சம நிலை எய்தி, நாட்டின் வளர்ச்சிக் குப் பயன் நல்கும் என நாம் எதிர் பார்க்கலாம்.
வரும் வெள்ளம் வேகத்தோடு வருகிறது. குறுகிய கால்வாய்களின் மூலம் நீரை வெளி ம் நீர் தனது சக்தியையெல்லாம் பிரயோ து. அதன் அசுரசக்தி ராட்சஸ் வேகத்தில் ாரிக்குளம் ஒன்றும் தன்னிடத்தே வந்து னத்துச் சுற்றித்தான் வைத்திருக்கிறது. ல் பாபநாசமலை நீரின் ராட்சஸ் வேகம் ம் நீருக்கு வகுத்த வரம்புகள்தாம். எனினும் வெளிவரத் திமிறுகிறது; மற்ருென்றில் ஆழக்குழியில் நீர் தேங்கிக் கிடக்கிறது. க்குள் வரும் வார்த்தைகள் எந்த அளவுக்கு
அதிகப்படியான சக்தியை வெளியிடுகின் கள் வேகம் பெறுகின்றன; வலுப்பெறு க் கட்டுக்கோப்புக்குள் சிக்கிய பாவத்தைத் யாக அடங்கிக் கிடக்கும் வார்த்தைகள்
கவிதை ஆவதில்லை.
- சிதம்பர ரகுநாதன்

Page 69
மலையகக்
ஏ. பி. வி. கோமஸ் (*ஜெயம்
‘மலையகக் கவி வளம் என்னும் தலைப்பில் ஒரு விமரிசனக் கண்ணுேட் டக் கட்டுரை எழுதப் புகுவது மிக வுஞ் சிரமமான காரியம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். காரணம், மலையகத்தில் வளமான, கவிதைகள் பிறக்கவில்லை
என்பதல்ல - நிச்சயமாக அல்ல! ஏனெனில் - வளமான மலையகத்தில் அன்றும் இன்றும் - வளமாகவே
கவிதைப் பூக்கள் மலர்ந்துகொண்டே யிருக்கின்றன. சூழ்நிலையும் சுற்ருட லும் கவிதை வளம் பெருகக் களம் அமைத்துக் கொடுக்கின்றன. என்ரு லும், அந்தப் பூத்த நன்மலர்களை மணம் பரப்பி ஏனையவர் உள்ளங் களிலே ஏற்ற இடத்தைப் பெறச் செய்யும் வாய்ப்பும் வசதியுமே மிகக் குறைவாக, ஏன்! மிகமிகக் குறைவா கக் காணப்படுகின்றன. காரணம், சொல்லித் தெரிய வேண்டிய ஒன்று அல்ல. வாழ்க்கைச் சுழலில் அகப் பட்டுத் தத்தளிக்கும் வளமான கவிஞ னின் ‘அன்ருட வாழ்க்கை" - "அப் படியாகத்தான் இருந்து வருகின் றது! என் செய்வது? எனவே! நாம் எந்தவொரு படைப்பும் அதுநூலுருப் பெருதவரையில், அதன் வளர்ச்சி யைக் கணிப்பதிலோ அல்லது விமர் சித்து விளக்கம் கொடுப்பதிலோ பென்னம் பெரிய சிரமம் உண்டு என் பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண் டும். ஆம் வெளிவரும் தின - வாரமாத ஏடுகளில் அச்சேற்றப்படும் எத்தனையோ ‘கவிதைகள்’-எழுதிய கவிஞன் "கறுப்பில் காணும் திருப்தி யுடன் மறைந்து போகின்றனர்; போ

கவிவளம்
), பி. ஏ. டிப், இன் எட்.
யிருக்கின்றன. எனவே, விமர்சனம் வேண்டி நிற்போர் மனம் நிம்மதி யடைய, வழிகள் வகுத்துக் கொள் வது கவிஞர்களின் கடமைமட்டுமல்ல - தமிழ் வளர்க்கும் சான்றேரினதும் சேவையும் கடமையுமாகும்! நிற்க!
கிடைத்திருக்கும் சில கவிதை களைக் கொண்டு இக்கட்டுரைக்குக் கரு அமைத்துக் களம் காணலாம் என்றெண்ணுகின்ருேம்.
மலையகக் கவிஞர்களின் எண் ணிக்கை என்ன என்று கேட்டால் - மற்றவர்கள் மூக்கில் கைவைத்துப் பிரமிக்கும் அளவுக்கு - எண்ணிக் கொண்டே போகும் தொகையான நற்க்விஞர்கள் மலையகத்தில் வாழ்ந் தார்கள். ஏன்! வாழ்கிறர்கள் என்றே கூறலாம். பழம் பெரும் சீ. வி. வேலுப்பிள்ளை - பெரியசாமி-எஸ். எஸ். நாதன்-சக்தீ முதல், புதிய பூக்களாம் தென்னவன்- குமரன்தர்மூ வரை ஏராளமானேர் இருக் கிருர்கள். ஆம்! இரா. சிவலிங்கம் அவர்கள் குறிஞ்சிப் பூவின் தோர ணத்திற் கூறுவது போல "பெருமூச் சில், கண்ணிரில் தங்கள் காவியத் தைப் படைத்து வந்த நம் மலைநாட்டு மக்களிடையே-இன்று கண்ணீரை, கலக்கத்தை - கவியாக்கும் காளையர் கள் பலர் தோன்றியுள்ளனர்.”* உண்மை. ஆனல் - ஒன்று கண்ணி ரையும் கலக்கத்தையும் மட்டுமல்ல, பன்னிரையும் பழக்கத்தையும் கூடக் கவியாக்கிக் கவின் காண்கிருர்கள். ஏனெனில், எந்தவொரு உண்மைக் கவிஞனுக்கும் ஏற்படும் எண்ணச்

Page 70
- 5
சுதந்திரத் தாகம் எம் மலையகக் கவி ஞர்களுக்கும் ஏற்பட்டுத்தான் உள் ளது. ஏன்! கனியைப் பாடிய அவர் கள் மினியையும் பாடியுள்ளனர். தொழிலாளர் அணியைப் பாடிய அவர்கள் எழிலான நம் பணிகள் பற்றியும் பாடியுள்ளனர். எனவே, மலையகக் கவிஞனின் மனமும் - வேறு எந்தவொரு கவிஞனின் மனம் போலப் பரந்து - விரிந்து - சிறந்து தான் காணப்படுகிறது. எனவேதான் ஒருமலையகக் கவிஞன் பாடுகிருன் -
“அஞ்சாத தமிழரை நஞ்சான நெஞ்சொடு ஆட்டிப் படைத்தவன் யாராடா-இங்கு
துஞ்சாதத் தமிழர்கள் நெஞ்சாலொன் ருகிடத்
தோள்வலி கூட்டுவோம் கூறடா!’
“மும்மொழி மக்களும் எம்மொழி மக்களும்
மொத்தமாய் ஒற்றுமை காண்கிறர்-இங்கு எம்மொழித்தமிழருள் எம்மையே கெடுத்திடும்
இழிஞரும் ஒருசிலர் வாழ்கிறர் 1’
"தூவான"த்தில் குமரன்! ஏன் கவிஞனின் குமுறும் இதயம் ஓசை நயத்தோடு இங்கு ரீங்கார முழக்கம் செய்யவில்லையா மூத்த மொழியின் மக்கள் என்று முழக்க மிட்டுத் தி ரி யும் நம் தமிழர்க ளிடையேயே சாதியால் - தேசப் பிரிவினையால், பணத்தால் - பரந்த நிலத்தால் வேற்றுமைகள் பல காட் டிப் பிரிக்கும் * இழிஞரை கவிஞர் சாடும்போது - தமிழர் நெஞ்சா லொன்ருக வேண்டும் என்று வேண்டு வது சிந்திக்கற்பாலது. ஈழத்தின் "மும்மொழியினரும் இணைந்து வாழ வழிகள் வகுக்கும்போது, நமக்குள் ளேயே நானவிதப் பிரிவினைகள் வைத்துக்கொண்டு நைந்து வாழ்வது நன்கு சாடப்படுகிறது. ஏன்!அரசியல் வாதிகளுக்கு அறிவு நிறைந்த ஒரு பாடமாக இக் கவிதை தொனிக்க

2 -
வில்லையா? கவிஞரின், திறந்த மனப் பான்மை நன்கு நிறைந்து காணப் படுகின்றது !
அடுத்து - இன்னுமோர் நல்லு தாரணம். மலையகத்தின் கவி வளத் துக்கு ஓர் எடுத்துக்காட்டு. இன்னு மொரு கவிஞர் எழுதுகின்ருர் -
*மண்ணுக்கு உயிரூட்டித் தம்மிரத்த
மணிவியர்வை யதணுலே செந்நிறத்தை மண்ணுக்குத் தந்தவர்கள் தேயிலையின்
வாழ்வுயிராம் ஆணிவேர் போன்றவர்கள் கண்ணிரில் மிதக்கின்றர் உரிமையற்றுக்
கனல்வாட்டும் தேக்கொழுந்தாய்; வாழ்க்கை எண்ணுத துயர்ப்பளுவால் உருளையிடை (யதில் ரப்பரைப்போல் வாடிநிதம் நலிகின்றரே!
- குறிஞ்சிப் பூ"வில்- ஈழக்குமார்
ஆம் ! தேயிலை - ரப்பர் தோட் டங்களின் மண் எவ்வாறு செந்நிற மானது என்று கேட்டால் கவிஞர் கூறுகிருர் அழகான காரணம் ! * தம்மிரத்த மணிவியர்வை சிந்தி யதே என்று காரணம் சிந்துத் தமிழ் ஒலிக்கக் கூறுகின்ருர் ! மேலும், அவர் ஏழைத் தொழிலாளி எப்படிப் பட்டவன் என்று கூறுவதும் நயம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது. தேயிலைக்கு ஆணிவேர் போல - இலங்கையின் பொருளாதார வளர்ச் சிக்கு மூலவேராய் விளங்குகிருன் என்கிருர் ! தேயிலையின் இலையைக் கிள்ளுகிருேம் , இங்கு இவன் தலை யைக் கிள்ளுகிருேம் ! என்னே பரி தாபம். அவன் - அனலில் வாட்டப் படும் தேக்கொழுந்து போல, உருளை யிடை அகப்பட்ட ரப்பரைப்போல அல்லலுறுகின்ருன், வேதனைப்படு கின்றன் ! உழைக்கும் அவனுக்கு உரிமையில்லை என்பதை எவ்வளவு உவமை நயங்களோடு விளக்குகிறர் கவிஞர்! சிந்திக்கவேண்டியதொன்று!

Page 71
-
இன்னும் ஒரு தேயிலைத் தோட் டத்துத் தாயின் ஏக்கத்தை-தவிப்பை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்ருர் இன்னுெரு கவிஞர். கொழுந்து கிள்ளு வதற்குப் புறப்பட்ட ஒரு தாய் தன் பிள்ளையை, (குழந்தை மடுவத்தில்) இட்டுவிட்டுச் செல்கின்ருள் ! வேலை யின் பொருட்டுப் பிரிகின்ருள். குழந்தை அழுகிறது. என் செய்வது. பாடுபடத்தானே வேண்டும் ! அப் படிச் சென்ற அத்தாய் வேலையிற் கவனம் செலுத்துகிருள். ஆனல். கவிஞரே அழகாக நயம்பட உரைக் கின்ருர் . நீங்களே கேளுங்கள்,
* செடியில் ஒளிரும் பணிமுத்தம்
செல்வனின் கண்ணிர்த் திரைகாட்டும் ! வடிவுச் சிலையைத் தனித்துவிட்டு
வந்ததை எண்ணி மனம்நோவாள்! செழித்து வளர்ந்த இளந்தண்டில்
சின்னவள் செங்கை விரல்காண்பர்ள் ! தளிர்கள் காற்றில் அசைந்தாடும்
தனையனை மனதில் நினைத்தணைப்பாள் ! குருத்து இலையின் நிழற்கோட்டில்
குழந்தையின் புருவ எழில்காண்பாள் விரிந்த இலையின் பளபளப்பில்
விஞ்சும் அழகுக் கண்காண்பாள் !
- குறிஞ்சிப்பூவில் பூண்டுலோயா தர்மு
ஆமாம் ! பணிமுத்தத்தில் கண்
ணிரும், இளந்தண்டில் செங்கை விர
சாமானிய பேர்வழிகள் அல்லது பை ளர்களில் காண்கிற இரண்டு தினுசுகள்.
1880-90ல் காமாதுரமான இலக்கிய டேவ் - மோர்ஸ் காயும் மட்டுமே அதை அந்தத் தொழிலைச் செய்து வருபவர்களுடை அசிங்கமானது.

3 -
லும், தளிரில் தனையனையும்; இலையின் நிழற்கோட்டில் புரு வ எழிலையும், விரிந்த இலையில் விஞ்சும் அழகுக் கண்ணையும் காட்டி நம்மை "விம்மும்’ தாயின்முன் கொண்டு நிறுத்துகிருர் கவிஞர் ! என்னே வளம் !
எனவே! இம்மூன்று உதாரணங்க ளால் மலையகக் கவிஞர்களின் வளத் துக்குக் கோடி காட்டியிருக்கிருேம் என்றே எண்ணுகிருேம். ஆம் மலைய கத்தில் மண்வளமும் சொன்னயமும்; கருத்துச் செறிவும் கற்பனை விரிவும் கொண்ட கவிதை கள் ஏராளம் ஏராளம் உள. அவைகளை ஆழ்ந்து படித்து, அழகு விமர்சனம் எழுதிட * அறிஞர் பெருமக்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள் கிருேம்
* ஊணையும், உடலையும்
ஊட்டிஇம் மண்ணை
உயிர்த்தவர்க் கிங்கே
உளங்கனிந் தன்பு
பூணுவா ரில்லை (அவர்)
புதைமேட்டிலோர் கானகப்
பூவைப் பறித்தும்
போடுவார் இல்லையே!”
-சி. வி. வேலுப்பின்ளை
த்தியக்காரர்கள் - இது தற்கால எழுத்தா
- மாக்விம் கார்க்கி
ம் குறைவு. செராபிம் நெஜினுடியும், லெபி எழுதி வந்தனர். ஆனல், அவர்களின் பாணி ய பாணியைப் போலவே வெறுக்கத்தக்கது;
-- மாக்விம் கார்க்இ

Page 72
சிறுவரின் உள வளர்ச்சிய
கலாகேசரி ஆ (வடமாநில சித்தி
அழகுக் கலைகள் ஐந்து. அவற் றுள் சித்திரக்கலையும் ஒன்று. அது சிறுவர்களின் உள வளர்ச்சியின் பெறு பேருக அமைகின்றது. முருகியல் உணர்ச்சியை வளர்ப்பது மூலம் அவர்களின் சில சிக்கல்களைச் சீர் செய்து வாழ்வை வளமாக்குகின்றது. சித்திரக்கலை, ஆன்மீக வாதக் கல்விக் கொள்கையின் தனிமனித வளர்ச்சிக் கின்றியமையாத தனித்துவ ஆளுமை யைச் சிருர்களிடம் ஏற்படுத்தி, அவர்களைச் சம நிலை நிறைந்த பூரண மனிதர்களாக உருவாக்குகின் றது. இதனுல் உலோகாயதர்களின் வாழ்க்கைக் கொள்கையாகிய சமூக வளர்ச் சிக் குந் தூண்டுகோலாக மிளிர்கின்றது. ܖ
இத்தகைய விசேடங்களையுடைய சித்திரக் கலையை நமது மாணவச் சிறுவர்களும், குழந்தைகளும் பயில் வதில் இயற்கையாகவே நல்ல ஆர்வ முடையவர்களாகத் திகழ்வதைக் காணலாம். சிறு குழந்தைகளின் கண்களில் ஒரு வண்ணக்கட்டி தென் பட்டுவிட்டால் அவர்கள் அடையும் மகிழ்வுக்கு அளவே இல்லை. அவற் றைக்கொண்டு பளிங்கு போன்ற
ர்களிற் தாறுமாருக அவர்கள் கிறுக்குவதைப் பார்க்கின்ருேம்.
கிறுக்கி விளையாடுதல் :
ஆரம்பத்தில் எந்தவிதமான நோக்குமின்றிக் கையில் அகப்பட்ட உபகரணத்தைக் கொண்டு தாறு மாருகக் கிறுக்கி விளையாடும் நிலை

பும் சித்திரக் கல்வியும் . . . . .
தம்பித்துரை r வித்தியாதிகாரி)
யைப்பற்றி உளநூல் வல்லுநர்கள் நன்ருக ஆராய்ந்துள்ளனர்; இன்றும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த
நிலைக்குப் பின்னரே பிள்ளையினுடைய கையசைவில் அபிவிருத்தி ஏற்படும் என்பது அவர்களின் முடிபு. இந்த
நிலை அநேகமாக மூன்று வயது தொடக்கம் ஐந்து வயது வரையுள்ள சிறுவர்களிடங் காணப்படும். எனவே
பாலர் கீழ்ப்பிரிவில் இத்தகைய மாணவர்களைச் சிலநேரம் நாம் காண முடியும். இவர்களுக்குப் பல நிறங் களில் வண்ணக் கட்டிகளையும்,
விசாலமான வண்ணத் தாள்களையும் அளித்து ஊக்குவித்தல் நன்று.
கோடுகள்மூலம் உருவம் தீட்டுதல்:
உபகரணங்களைக் கையாளுதலில் ஒருவித பயிற்சியும், ஒழுங்கும், தன் னம்பிக்கையும் ஏற்பட்டதும் மனித உருவங்களைத் தீட்டுவதிற் சிறு பிள்ளைகள் நாட்டஞ் செலுத்துவர். இந்நிலையிலுள்ள பிள்ளை களின் உணர்ச்சி துடித்துக்கொண்டே யிருக் கும். தங்களது விருப்பு வெறுப்புக் களைச் சித்திரங்கள் மூலம் காட்டவும் முயலுவர். இது எனக்குக் கிள்ளிய மாமி " , " அது எனக்கு அடித்த வாத்தியார்’, ‘இது நல்ல மாமா " , எனத் தங்கள் படங்களுக்குத் தாங் களே விளக்கங்களும் கொடுப்பார் கள். இந்நிலையிலேதான், மனித உருவை வரையும்பொழுது தலையைக் குறிப்பதற்கு ஒரு வட்டத்தையும் கண்களுக்கு இரண்டு குற்றுக்களையும்

Page 73
இட்டு, இரு தனிக்கோடுகளைக் கால்க ளாகவும் காட்டுவார்கள். அபூர்வ மாகச் சிலரது படங்களில் உடலைக் குறிக்கும் வட்டம் வரையப்பட்டிருக் கும். அதேபோலச் சில சிறுவர்கள் கைகளைக் குறிப்பிடும் கோடுகளையும் கீறுவார்கள் கைகளையோ அல்லது உடலையோ வரையுமுன்பு கால்களைக் கீறிக்காட்டும் இயல்பு சிறுவர்களின் சித்திர வளர்ச்சியிற் சாதாரண வழக்கமாக இருக்கின்றது. வினவிடை மூலம் நாம் உற்சாகம் ஊட்ட லாம்.
கற்பனை நிறைந்த குறியீடு:
இந் நிலையிலுள்ள மாணவர்கள் வரையும் மனித உருவங்கள் ஒரளவு சரிவர அமையப்பெறினும், பெரும் பான்மையானவை குறியீட்டுத் தன்மையுடையனவாகவே அமைகின் றன. அங்கங்கள் ஒருவித மேலெ ழுந்த வாரியான பாணியில் வரையப் படினும், அவை யொவ்வொன்றும், அவர்களது சொந்தக் கருத்துக் கேற்ற அ ைமவுகளை யுடையன வாகவே இருக்கும். இந்தக் கால கட்டத்திலேதான் சிறுவர்கள் தங்க ளுக்கு விருப்பமான சித்திரத்தைத் திரும்பத்திரும்ப வரைவதும், அதைத் திருத்துவதும், அதற்கு மெருகு கொடுப்பதும் ஆகிய முயற்சிகளிற் பெரிதும் ஈடுப்டுவர். இவர்களது சித்திரங்கள் மூலம் பிறரது கருத்தைக் கவரவும் முனைவர்.
கண்ட பொருள்களை வரையும் முதல் முயற்சி:
இந்நிலையிலுள்ள சித்திரங்கள் அவர்களது சொந்த உருவமைவுகளுக் கேற்றவாறு அமையப்பெறினும் அவைகள் மிகவும் விளக்கமாகவும்,

--
அலங்காரச் சிறப்புள்ளன வாகவுங் காணப்படும். ஆணுல் முற்குறுக்கம், தூரநோக்கு ஆகிய பிரமாணங்கள் புறக் கணிக்கப்பட்டே இருக்கும். உடைகள், ஆபரணங்கள் ஆகியன வற்றை அலங்கரிப்பதிலுள்ள கலை நுணுக்கங்களில் அதிக கவனம் காண் பிக்கப்படும். இத்தகைய சித்திரங்கள் இரு பரிமாணமுறையில், அலங்காரச் சிறப்புடன் தனித்துவப் பாணியிற் தீட்டப்பெற்ற கீழைத்தேய ஓவியங் களை ஞாபகத்திற்குக் கொ ன் டு வரவே செய்கின்றன.
கண்டதைக் கூறும் சித்திரங்கள் :
இவ்வளர்ச்சி நிலையை அடைந் துள்ள சிறுவர்கள் தங்களது ஞாப கத்திலும் கற்பனையிலுமிருந்து சித்தி ரங்களை வரையும் நிலையைத் தாண்டி நேரடியாகவே இயற்கையிலிருந்து தீட்ட முயற்சிப்பர். இரு பரிமாணங் கொண்ட புனையா ஒவியங்களுடன், முப்பரிமாணமுள்ள உருவங்களையுந் தீட்டுவர். ஒளிநிழல் காட்டல், தூர நோக்கு முறை (Perspective) ஆகிய வற்றிலும் ஒ ர ள வு கருத்தைச் செலுத்துவர். நிலக்காட்சி ஒவியங் களைத் தீட்டுவதில் பேரார்வங் காட் டுவர்.
பூரிப்பு நிலையும் தோல்வி நிலையும் :
இந்நிலையை அடைந்துள்ள சிறு வர்கள் த ரா ம் கண்ணுற் கண் ட பொருள்களை மிகவும் பிரயாசைப் பட்டு வரைவார்கள். இதில் அவர் களுக்குத் திரு ப்தி ஏற்படுவதில்லை. அதனுல் இந்த நிலையிலுள்ள சிறுவர் களின் சித்திர ஆக்க ம் துரிதமாக நடப்பதில்லை. தன் சொந்த முயற்சி யைத் தானே மதிப்பிடும் உளநிலை

Page 74
- 5
யைப் பிள்ளை பெற்றிருப்பதால் ஏக்கம், வெறுப்பு, ஆத்திரம் ஆகிய உணர்ச்சிகளைத் தோல்வி கண்ட பொழுதும் பூரிப்பை வெற்றிகண்ட பொழுதும் பிள்ளையின் முகத்திற் காணலாம். சமுதாயத்திற் பாரம் பரியமாக வழங்குகின்ற சித்திரங்கள், சேலைக் கரைகள்போன்ற அலங்கா ரச் சித்திரங்கள் ஆகியனவற்றை வரைவதிற் பெரும் மகிழ்ச்சி காண் பர். ஆனல் முன்போல மனித வடி வத்தைக் கீறுவதில் இவர்களது புலன் செல்வதில்லை. நம் நாட்டில் ஆரும், ஏழாம் வகுப்பு மாணவர்க ளிடம் இந்நிலை காணப்படுகின்றது.
கலையுணர்ச்சிப் பெருக்கு நில :
இந்த நிலையிற் சித்திரங்கள் மூலம் கதைகளையும் சம்பவங்களையும் தெரி விக்கப் பிள்ளைகளின் நெஞ்சந் துடிக் கும். இவர்களது சித்திரங்களில் ஆண், பெண் ஆகிய இருபாலாருக் கும் இடையிலுள்ள உடலமைப்பு வேற்றுமைகள் தெளிவாகத் தெரி யும்; பெண்பிள்ளைகள் கண்ணைக் கவ ரும் நிறங்களையும், அழகு ததும்பும் அமைப்புக்களையும், ரேகைமூலம் வடிவை உணர்த்துவதையும் பெரி தும் விரும்புவார்கள். ஆண்பிள்ளை கள் யந்திரம் இயங்குவதுபோன்று கற்பனையின்றி வரைந்து தள்ளுவார் கள். ஆணுல் அவர்களது உணர்ச்சி குன்றி யிருக்கும் என்பது இதன் கருத்தன்று. இந்த இளமைப் பரா யத்திற்கு முன்னுள்ள வளர்ச்சிநிலைக் குப் பெரும்பான்மையான பிள்ளைகள் வருவதில்லை. ஏனெனில் முன்னே கூறிய தோல்வியுணர்ச்சி அவர்களது புலன் வளர்ச்சியை வெதுப்பி விடு கின்றது.

6 -
இவ்வளர்ச்சி நிலைகள் யாவும் சூழலுக்குத் தக்கதாக இடத்திற் கிடம் சிறிது மாறுபாடு அடைகின் றன. இந்த அறிவியலை அடிப்படை யாகக்கொண்டு மாணவர்கள் பயிலப் பயிலத் தித்திக்கும் விதத்தில் பல் வேறு கட்டங்களுக்கு மேற்பப் புதிய முறைகளைக் கையாண்டு சித்திரக் கலையை ஆக்கரூபத்திற் கற்க உதவு தல் நமது கடமையாகும்.
உண்மையான சித்திரம் படிப் பித்து வளர்க்கக்கூடிய தொன்றன்று. யாப்பிலக்கண விதிகளைப் படிப்பித்து விடுவதால் ஒரு குழந்தையைக் கவிஞ னக ஆக்க முடிவதில்லை. அதுபோல ஒவியப் பிரமாணங்களை ஆரம்ப நிலையிலே புகுத்துவதினுலோ அல்லது இலைகளையும் பொருள்களையும் கரும் பலகையிற் கீறிவிட்டுப் பார்த்து வரையும்படி தண்டிப்பதனுலோ யாரையும் சைத்திரிகளுக ஆக்கிவிட முடியாது. குழந்தைகள் எதையும் பார்த்துச் செய்யக்கூடியவர்கள்தாம். அதற்காக இலையையோ பூவையோ உள்ளதை உள்ளபடி வரையும்வண் ணம் தொடக்கத்திலே நிர்ப்பந்தித் தால் அவர்களது ஆக்கத்துடிப்பு துண்டிக்கப்பட்டுவிடும். அத்துடன் சித்திரம் பயில்வதில் அவர்களுக்கு ஒருவிதமான வெறுப்பும் ஏற்பட லாகும். ஆகையினுல் அவர்களின் மனவெழுச்சியை வெளியிடுவதில் சுதந்திரத்தையும் உற்சாகத்தையும் ஊட்டுங் கருத்து வெளிப்பாட்டுக் கற்பனைச் சித்திரம், ஆக்க அலங்கா ரம் ஆகிய ஆக்க வேலைகளிற் பயிற்சி அளித்தல் அவசியம்.

Page 75
குழந்தைப்
கடந்த தலைமுறையில் நம் குழந் யார், தேசிகவிநாயகம்பிள்ளை ஆகிே குதித்தார்கள். நமது ஆசிரியரிடை இருப்பதன் காரணமாகவோ என்ன பத்திரிகைகளிலும் கவிதை நூல்களி மாணவருக்கு அறிமுகஞ் செய்து வைக் சிக்குக் குந்தகமாகவும் அமையலாம். களிலும் சமீப காலத்தில் வெளிவ பொருத்தமானதென நாம் கருதும் துத் தருகின்ருேம் , மாணவருக்குப் நம்பிக்கையோடு, இப்பணியில் எமக் செந்திநாதனுக்கு எம் நன்றி.
பாட்டி எங்
வித்துவான்
அன்பு நிறைந்த பாட்டி - என்னை
அணைத்துத் தூக்கும் பாட்டி இன்பமான கதைகள் எல்லாம்
எனக்குச் சொல்லும் பாட்டி,
வாழைப் பழமும் இனிப்பும் எனக்கு
வாங்கித் தந்த பாட்டி தோளிற் கிடத்தி முதுகைத் தடவித் துரங்க வைக்கும் பாட்டி. பள்ளிக் கூடப் பாடம் வீட்டிற் படிக்கச் சொல்லும் பாட்டி துள்ளிக் குதித்து மண்ணில் வீழ்ந்தால் துடைத்துத் கழுவும் பாட்டி.
8

பாடல்கள்
தைகள் சோமசுந்தரப்புலவர், பாரதி யாரது கவிதைகளைப் பாடித் துள்ளிக் யே வாசிக்கும் பழக்கம் குறைவாக எவோ? இலக்கிய சஞ்சிகைகளிலும் லும் வெளியாகும் புதிய பாடல்கள் க்கப்படுவதில்லை. இது இலக்கிய வளர்ச் சஞ்சிகைகளிலும் கவிதைத் தொகுப்பு ந்த கவிதைகளிற் குழந்தைகளுக்குப் எட்டுப் பாடல்களை இங்கே தொகுத் பயனுடையதாக விருக்கும் என்ற கு உதவிபுரிந்த இரசிகமணி கனக,
தொகுப்பாசிரியர்கள்
கள் பாட்டி
க. வேந்தனுர்
கோவி லுக்குச் செல்லும் போது
கூட்டிச் செல்லும் பாட்டி
கும்பிடு நீ தம்பி என்று
குனிந்து சொல்லும் பாட்டி,
அப்பா அம்மா அடிக்க வந்தால்
அலறித் தடுக்கும் பாட்டி
தப்பாய் நானும் தவறு செய்தால்
தானே புலம்பும் பாட்டி.
ஒளவைப் பாட்டி பாடித் தந்த
ஆத்தி சூடிப் பாட்டைச்
செவ்வை யாகப் பாடச் சொல்லிச்
சிந்தை மகிழும் பாட்டி.

Page 76
காய்கள் கட்
பண்டிதர் க.
கந்தன் செய்த தோட்டத்தில்
காய் கனிகள் அதிகமாம்
வந்து ஆடு மாடுகள்
வளர்ந்த வற்றைக் கடிக்குமாம்
காய்கள் ஒன்று கூடியே
காக்க வெருளி கட்டின
வாய்கள் திறந்து பேசின
வழி வகுத்துக் கொண்டன
சாம்பல் நீற்றுப் பூசினி
தலைக்கு வருவேன் என்றது
பாம்பு போன்ற புடலங்காய்
பக்கக் கைகள் என்றது.
பானை போன்ற பூசினி
பருத்த வயிறு என்றது
ஆனை மிள காய்களும்
அழகு மூக்காய் ஆகின.
LCTG 61551 UT. மனிதன் மீ காடு காடு தான் நாலு காலி
* கூடித் தெ
பவலீல் 3
சின்னச் சின்ன நீர்த்துளி
சேர்ந்தொன் ருகக் கூடியே
வண்ணக் கடலு மானதே
வளமார் நதியும் ஆனதே.
நிமிஷ மென்னும் போதிலே
நேரஞ் சொற்ப மாயினும்
நிமிஷ மெல்லாங் கூடியே
நீண்ட காலம் பண்ணுதாம்.

டிய வெருளி
சச்சிதானந்தன்
வெண்டிக் காய்கள் தாங்கள்தாம் விரல்கள் என்று தொங்கின
நொண்டிக் கால்கள் ஆயின
நுனி வளர்ந்த கரும்புகள்
கனிந்த நிறத் தக்காளி
கன்னம் என்று நின்றது,
நனந்த பயிற்றங் காய்களும் நீலு மயி ராயின.
முறுக்கு மீசை இல்லைஎன்று
முணு முணுத்துக் கொள்ளவே
நறுக்கி வைத்த அறுகம்புல்
நானி ருப்பேன் என்றது.
கண்ணில்லாத வெருளி என்று
காய்கள் கவலை கொண்டன,
அண்ணன் நாவற் பழவனுர்
அதற்கு வந்து குந்தினர்.
ர்த்தது சை கணடது ண்டியே ற் பாய்ந்தது.
ாழில் செய்’
காரியப்பர்
சின்னச் சின்ன அட்சரம்
சேர்ந்த அன்பு வார்த்தைகள்
இன்ப மூட்ட வில்லையோ
இதயம் என்னும் ஏட்டிலே.
தனியே சிறிசு கூடினுல்
தானே சக்தி கூடுமாம்
மனிதா வாவா கூடியே
மண்ணே விண்ணுய்ச் செய்குவாய்,

Page 77
பலூன்
* அ
ஊதுதம்பி பலூன்
உன்மனம் போ
பாதிவழி ஊதிப் ப பந்தினைப் பே
ஐந்துசத மிதில் ஒ6 ஆசையைப் டே முந்திவந்தே ஒன்ை முற்றும் இப்டே
பத்துச் சதத்துக்கு
பஞ்சவன ன எத்தனை வேண்டுே
எண்ணிப் பண
காற்றை அளவுடன் கட்டுப் படுத்தி ஈற்றிற் படா ரென
என்னைக் குறை
*Fassassos
நல்ல உப
‘ஆடலி
வீட்டில் எமக்குக் கதைகள் கூறி
விளங்க வைத்தாள் பாட்டி
கூட்டி யெம்மை நல்ல பாட்டுக் கூறி வந்தாள் பாட்டி
பள்ளிக் கூடஞ் சென்ற போது
பண்பு கொண்ட ஒருவர்
துள்ளிக் குதித்துக் கையைக் காட்டிச்
சொல்லித் தந்தார் பாட்டு.
நல்ல கதைகள் படங்க ளோடு
நமக்குச் சொல்லித் தந்தார்

காரன்
* 58המ.
ஊதுதம்பி - இதை ாலவே ஊதுதம்பி
ார்க்கையிலே - இது ாலவே ஆகுந்தம்பி,
ன்றுதம்பி - உந்தன் பாலமேல் ஏறுந்தம்பி ற வாங்குதம்பி - இவை பாவிலை போகுந்தம்பி.
மூன்றுதம்பி - நல்ல ங்களில் வாங்குதம்பி. மா சொல்லுதம்பி - இதோ ம்தந்து வாங்குதம்பி.
ஊதுதம்பி - அதைக் நீ ஊதாவிடின் ன்று போகுந்தம்பி-பின்னே சொல்லல் தீதுதம்பி.
ாத்தியாயர்
றை
நல்ல வாத்தி யார்எமக்கு
நாளுந் தந்தை போல்வர்
எழுதத் தெரியா எமக்கு நன்ருய் எழுத்துச் சொல்லித் தந்தார்
அழுதால் எம்மை அழைத் தணத்தே
அன்பு காட்டி நிற்பார்.
சின்னத் தம்பி நீயும் வாடா
செல்வம் நீயும் வாடி
என்றும் மகிழ்ச்சி யாயிருக்க
எங்கள் பள்ளி செல்வோம்.

Page 78


Page 79
ge 6.) J. வ. இளைய
காலையிலே சூரியனைக்
காணுவோங் கிழக்கிலே - நாம்
காணுவோங் கிழக்கிலே கண்டதிசை நாம் வணங்கி
நின்றுகொள்வோம் பார்த்துமே-நாம் நின்றுகொள்வோம் பார்த்துமே.
பாலகர்நாம் கைகளையும்
பக்கமாக நீட்டுவோம் - நாம்
பக்கமாக நீட்டுவோம் பார்த்திடாத முதுகின் பக்கம்
மேற்கெனவே சாற்றுவோம் - நாம்
மேற்கெனவே சாற்றுவோம்.
வடக்குக் கிழக்கு வரிசையாகச் ே வரிசையாகச் வந்தனங்கள் நா
பின்திரும்பிச்
பின்திரும்பி
காரணம்
ઉFiા :
கடல்நீர் நீல நிறமான
காரண மெதுவோ கூறம்மா தொடுவான் சேலை தோய்வதணுல்
தோன்றிய தோஅந் நிறமம்மா.
துணிகள் துவைக்கும் தொழிலாளி
துவைத்த துணியை வெளுப்பாக்க
அணிகொள் நீலம் கரைத்ததனுல்
அந்நீ ரங்கன மாகியதோ.
தாய் :
வானின் நிழ வண்ண நீல தேனின் சு6ை
தெண்ணி ரு

க ள்
பதம்பி
உணவு உண்ணும் வலதுகையை
உல்லாசமாய் ஆட்டுவோம் - நாம்
உல்லாசமாய் ஆட்டுவோம் உண்மையாக அத்திசையைத்
தெற்கெனவே சாற்றுவோம் - நாம்
தெற்கெனவே சாற்றுவோம்.
ஆட்டாமல் நீட்டியுள்ள
கையெதென்று பார்த்துமே - நாம்
கையெதென்று பார்த்துமே. பாட்டுடனே பாட்டாகப்
பாடுவோம் வடக்கிதே . நாம்
பாடுவோம் வடக்கிதே.
த் தெற்கு மேற்கு சொல்லுவோம் - நாம்
சொல்லுவோம் ாமளித்துப்
செல்லுவோம் - நாம் ச் செல்லுவோம்.
எதுவோ ?
pகன் -
ஊற்றுப் பேனே யாலுழுவோர்
ஒரா யிரம்பேர் ஒன்றப்த்தம்
ஊற்றுப் பேனே கழுவியதால்
ஒர்காற் கடல்மை ஆகியதோ.
கமலக் கண்ணன் கடலினிலே
கண்ணைத் துயிலுவன் என்பாயே
நிமலன் நீலத் திருமேனி
நித்தமந் நீரில் ஊறியதோ.
லே கடல்நீரை மாக்குமலால் வயே தெள்ளமுதே நக்கும் நிறமுண்டோ?

Page 80
J. G5. EGOIF
190, என். சீ. ருேட்
விநியோகஸ்தர்கள் :
* எவர்சில்வர் ப
S
* துவக்கு
* வெடிமருந்து
* தோட்டாக்கள்
* ரலி சைக்கிள்
* மீன்பிடிச் சாத

| ii | si |
, திருக்கோணமலை
ாத்திரங்கள்
-பாகங்கள்
னங்கள் ஆதியன.

Page 81
Wira ve besأ
fye
*irban) :
TRINCC

Complimeniş
)ᎨᏤY
Stbustries
)NAL EE

Page 82
LLLLLSLLSLLSqSLLLLLLLASSSLSLSLLLJJLLYLeSLSL e LLLLSSeGAAAMeLLLLLLLSLLLYeiSieieSiLsMiSSLSqSMLeqqqSqS
With the best
fro
i
Rajkumar C
12O, ORR'S
TRINcc
Telephone : 31
SLLLLLSSLSLLLYeLeLeeLYYYeeeMeSeYeTTTTYYLSLLLLSYLS LS LLSASSeLSeL
திருமகள் அழுத்

b* es6 o
崛
Compliments
ՈՂ
i
i
orporation
HILL ROAD,
)MAEE
Telegrams : " Enterprise
ug: 3950
தகம், சுன்னுகம்

Page 83
Always insis
INSIS
Ваибnetta
FOR. SAFETY, ECON
For further particulars visit
Quickplow:
56, ANURA DHAPU
TRINCC
Telephone : 2 25

t on the best
T ON
v 942cootema,
OMY AND RELIANCE
s (RD) Ltd.
RA KANDY ROAD,
DMALE

Page 84
ÚGaith the besi
O
Lanka Gla
TARD INCO
,"i്
| | Phone: 43 5
േപ്പൂ. சுன் கைம், திருமகள் அழுத்தகத்தில் குரும்பசிட்டி, திரு
ہے جو مجھ பட்டு, அகில இலங்கைத் தமிழ்த் தின திருக்கோணம இராசரத்தினம் அவர்களால் வெளியிடப்பட்டது.
 

rSMSMS SMS SMSASAS
I (Compliments
f
ss IF actory MAL匡匡
Colombo Office
N. H. M. Abdul Cader Rdad
° Phone : 25937, 22020
历° முத்தையா சபாரத்தினம் அவர்களால் அச்சிடப் லே விழாக் குழுவினருக்காக, மூதூர், திரு. வ. அ.
163-97