கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி

Page 1
நவாலியூர் சு. ெ
 

சொக்கநாதன்

Page 2

மாத்தளை முத்து மாரியம் ம ன்
குறவஞ்சி
(மூலம் மட்டும்)
ஆக்கியோன் நவாலியூர் சு. சொக்கங்ாதன்
சங்கரா வெளியீட்டகம் 39 / 12, அல் விஸ் பிளேஸ் கொழும்பு - 13

Page 3
முதற் பதிப்பு 1964 இரண்டாம் பதிப்பு பங்குனி 1993
தயாரிப்பு எச். எச். விக்கிரமசிங்க,
39/12, அல்விஸ் பிளேஸ், கொழும்பு-13.
அச்சுப் பதிவு : காந்தளகம், 834, அண்ணாசாலை,
சென்னை-600 002.


Page 4

6.
முருகா
கவிஞர் நவாலியூர் சு. சொக்கநாதன் அவர்கள் பாடி மகிழ்ந்த 'மாத்தளை பூரீமுத்துமாரி அம்மன் குறவஞ்சி'யை மலையகத்தின் பத்திரிகையில் வரலாற்றுச் சாதனையாள ரான பதுளை கலை ஒளி மு. முத்தையா பிள்ளை அவர்களது நினைவாக நல்ல திருத்தொண்டு செய்யும் எனது உழுவல் அன்பர் எச். எச். விக்கிரமசிங்க அம்பாளின் மேலுள்ள பக்தியின் மேலீட்டால் மறுபிரசுரம் செய்வது ஒரு நல்ல பணியாகும்.
* சங்கரர்" வெளியீட்டகத்தின் முதல் பிரசுரமாக வெளிவரும் குறவஞ்சி மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் திரு. த. மாரிமுத்து செட்டியார் அவர் களிடம் ஆலய திருப்பணிக்காக ஒப்படைக்கப்பட இருப்பது குறித்து நான் உவகை அடைகின்றேன்.
இந்த நூலை வாங்கி ஒரு நல்ல அறப்பணிக்கு உதவுமாறு வேண்டுகின்றேன்.
வளர்க இத்தொண்டு !
வாழ்க ! வளம் சூழ்க !
கொழும்பு 22-2-1993. கிருபானந்தவாரி

Page 5
வெளியீட்டுரை
** உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா
உன்பாதம் சரண்புகுந்தேன் - எங்கள் முத்துமாரி'
என்று முத்துமாரியம்மையின் பெருமையைப் பாட்டில் இசைக்கிறார், மகாகவி பாரதியார்.
காசி என்றதும் விசாலாட்சியும், காஞ்சி என்றதும் காமாட்சியும், மதுரை என்றதும் மீனாட்சியும் நினைவில் எழுவதுபோல் மாத்தளை என்றதும் முத்துமாரியம்மைதான் நினைவில் வருகிறார். அருளாட்சி நடத்தும் அன்னையாக நர்த்தன சுந்தரியாக - சிறுமை கண்டு பொங்கும் தேவியாக - மகிஷாசுர மர்த்தனியாக - கொடுமையைக் கருவறுக்கும் காளியாக - பசிப்பிணி போக்கும் அன்னபூரணியாக - அரனுடன் கலந்த அர்த்தநாரியாகத் திருக்கோலம் காட்டும் அன்னை முத்துமாரியாக மாத்தளையிலே குடிகொண்டமை நாம் பெற்ற பேறு என்றே கூற வேண்டும்.
இந்த முத்துமாரியம்மையின் தெய்வீகக் கோலத்தில் சிந்தை இழந்துபோன கவிஞர் நவாலியூர் சு. சொக்கநாதன்,

(v)
'மலையக நாட்டைச் சேர்ந்த மாத்தளை மூதூர் வாழும் - முத்துமாரிக்குலமகள் தனக்கோர் இன்பக் குறவஞ்சி தமிழிற் பாட' முனைந்தமை ஈழத்து அகப்பொருள் இலக்கியத் துறைக்கு நல்லதொரு வரவைச் சேர்த்திருக்கிறது. கிட்டத் தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் முக்கவிஞர் வெளியீ டாக வெளிவந்த நவாலியூர் சு. சொக்கநாதன் எழுதிய 'மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி' என்ற இந்த நூலை மறுபதிப்புச் செய்வதில் நாம் பெருமகிழ்வடை கிறோம்.
** மாதிவளின் குலப்பிறப்பை மாலறியா ரெனவுரைப்பார் ஆதிமுதல் மாத்தளையே அவளுறையும் பதியென்பார்'
என்று முத்துமாரியம்மையின் தெய்வீகத் திருப்பதியின் மகத்துவத்தில் ஆழ்ந்து போன கவிஞர் - மேகம் மூடிய மாத்தளை பர்வதத்தின் சாரலில் குடிகொண்டு விட்ட மாரியம்மையின் ஆற்றல்களை மலைவாழும் குறத்திக் கூடாகவே விளக்க முனைந்தமை மலைவாழ்வோடு இயைந்து விட்ட கவிஞரின் இயல்பினைப் புலப்படுத்துகிறது. இந்த மலைமாதரசியை வாழ்த்த கவிஞர் குறவஞ்சியைத் தேர்ந் தெடுத்ததில் வியப்படைய எதுவுமில்லை.

Page 6
(vi)
பதியைச் சேரப் பற்றுக்கொண்ட ஒர் உயிரின் பேரின்ப அநுபவத்தைக் கூறும் தத்துவச் சாயல் கொண்டு 'மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி' அமைந்து விளங்குகிறது. ஞானக்குரவனைப் பவனியிற் கண்டு மையலுற்ற மங்கை பொருத்தி தன் விரகவேதனையை விரித்துரைப்பதற்கூடாகப் பேரின்பப் பொருளை விளக்குவது நமக்குப் பரிச்சயமான மரபுதான். 'மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி'யில் அகிலாண்ட ஈஸ்வரி முத்துமாரி தெருவழி பவனி வரும் போது இருமலச்செட்டி அன்னையின் அழகில் மனமழிந்து போகிறான். குறி சொல்லும் குறத்தி அவனுக்கு மெய்ப் பொருளை விளக்குகிறாள்.
* சீவனோடவள் சிவனதோடவள் சேர்ந்திருப்பதைக் காண்கிலார் சென்று மாத்தளைத் திருத்தலத்திலே சேர்ந்திருப்பதைக் காண்குவார் பாவமோடெவர் போய் வணங்கினும் பரிவு காட்டுவள் மாரியே பாவை போலுள முத்துமாரியைப் பார்ப்பதாலருள் படியுமே"
என்று கூறிச் செல்லும் குறத்தி முத்துமாரியம்மையை வாழ்த்தி,

(vii)
** அவளே ஆதி அவளே அகிலம்
அவளே அருட்கடல் அன்னையு மவளே '
என்று விளக்குகிறாள்.
பழந்தமிழ் இலக்கியத்திலும் பக்திச்சுவையிலும் ஆழ்ந்த புலமை கொண்ட கவிஞர் சொக்கநாதனின், 'மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி' மரபுசார் புலமையின் ஒரு வெளிப்பாடாகும்.
முத்துமாரியம்மை அருளின், அன்பின், இரக்கத்தின், கருணையின் ஒரு குறியீடு. வன்முறையும் கோரமும் தலை விரித்தாடும் இன்றைய சூழலில்-பொறாமையும் எரிச்சலும் பிறர் வாழப் பொறாத தன்மையும் சமூக வாழ்வில் நன்கு வேரூன்றிவிட்ட காலகட்டத்தில் அன்பையும் இரக்கத்தையும் யாசிப்பது ஒரு தார்மீகக் கடமை.
இந்த நன்னோக்கின் வெளிப்பாடாகவே மாத்தளை அன்னை முத்துமாரியம்மையின் புகழ் பரவும் இந்நூலை மலையகத்தின் பத்திரிகையியல் வரலாற்றில் ஒரு சாதனை யாளரான என்றும் எங்கள் நினைவில் வாழும் பதுளை கலைஒளி மு. முத்தையா பிள்ளை அவர்களின் நினைவாக நாம் வெளியிடுகிறோம்.

Page 7
(viii)
இந்நூல் வெளிவர எம்மை நெறிப்படுத்தி ஆலோசனை வழங்கிய கொட்டாஞ்சேனை பூரீ வரதராஜ விநாயகர் தேவஸ்தான அறங்காவலர்களான திரு. தெ. ஈஸ்வரன், திரு. பொ. பாலசுந்தரம், மறவன்புலவு திரு. க. சச்சி தானந்தன் அவர்கட்கும் என்றும் நன்றியுடையோம்.
அன்பும், அமைதியும் சாந்தியும் கொண்டு மலையகம் செழிப்பதாக !
ஓம் 1 சாந்தி !
சங்கரா வெளியீட்டகம், 39/12 அல்விஸ் பிளேஸ், கொழும்பு - 13. எச். எச். விக்கிரமசிங்க

மதிப்புரை
மலைநாட்டின் வடக்கு வாயில் எனப்படும் மாத் தளைத் திருவிடத்தில் அன்னை முத்துமாரி கோயில் கொண் டிருக்கிறாள். அவளின் அருள்வளத்திற்கு, மாத்தளையில் என்றும் நிலவும் அமைதி ஒன்றே சான்று பகரும். இவ் வன்னைக்கு எடுக்கப்படும் விழாக்கள் பல. அவற்றுள் மிகவும் பெயர் பெற்றது தேர்த்திருவிழா. இந்நாளில் வெள்ளக் கூட்டம் திரளும். அன்னை அழகில் மருளும் ; அமிழ்தாம் அருளிற் புரளும். இவ்வாற்றல் மிக்க தாயால் ஆட்கொள்ளப்பட்ட அடியார்கள் பலர். அவர்களுள் ஒருவர் கவிஞர் சொக்கநாதன். விளைவு: மாத்தளை முத்துமாரி அம்மன் குறவஞ்சி.
தான்பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற்றுவிட வேண்டும் என்று, இயல்பாக-உளமார நினைப்பவர்கள் கவிஞர்கள். கவிஞர் சொக்கநாதன் பெற்ற இன்பத்தையும், பட்ட அனுபவத்தையும் இக் குறவஞ்சி அள்ளித்தருகிறது. அவராக இந்நூலை ஒருமுறை எனக்குப் படித்துக் காட் டினார்; நானாக இரு முறைகள் படித்தேன். உண்மையி

Page 8
2
லேயே நன்றாக இனிக்கிறது. போற்றும் சிறப்பியல்புகள் பல இடங்களிற் பொலிந்து விளங்குகின்றன.
இக்குறவஞ்சியில், அன்னை முத்துமாரி உலா வரு கிறாள். அவள் அழகில் செட்டி ஒருவன் மயங்குகிறான். அவனோ ஒரு பிரளயாகலன்.-ஆணவமும் கன்மமும் உடையவன். அத்தகையவனுக்கு அவள் கிடைப்பாளா என்ன ! அடையும்வழி அறியாத செட்டியைக் காதல் அணு அணுவாகக் கொல்கிறது. குறி கேட்கிறான் கடைசியில். குறவஞ்சி, சமய நெறிகளை எடுத்துக்கூறி, அவற்றைப் பின்பற்றி நடந்தால் தலைவியை அடையலாம் என்கிறாள். இதுதான் கதை. நோக்கம் : உறுதிப் பொருள்களின் உண்மையை விளக்கி மனிதனை உய்விக்க வேண்டும் என்பது. இது நமக்குப் புதியதன்று. என்றாலும் சிறந்த முன்னோர் மொழிகளைத் துறந்து துயர்ப்படும் மனித னுக்கு, அவற்றை அடிக்கடி நினைவூட்ட வேண்டியிருக் கிறதே என்று நினைக்கும்பொழுது கவிஞர் சொக்கநாதனின் நோக்கத்தை என்னால் போற்றாமலிருக்க முடியவில்லை.
நூலைப் படிக்கின்றபொழுது, திருக்குற்றாலக் குற வஞ்சி, மீனாட்சியம்மை குறம், கொடுமஞர்க் குறவஞ்சி,

3
சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம் முதலிய நூல்களும் நினைவுக்கு வராமலில்லை! இருப்பினும், அவற்றிலிருந்து மாத்தளை முத்துமாரி அம்மன் குறவஞ்சி பல துறைகளில் வேறுபடுவது கவனிக்கத்தக்கது. குறவஞ்சி நாடகத்திற் கூறப்படும் புள் வருதல், கண்ணிவைத்தல், பாங்கி தலை வனைப் பழித்தல், குறத்தியைக் குறவன் தேடியலைதல் என்பன இக்குறவஞ்சியில் இல்லை. இக்காலத்திற்கு ஏற்றன வாக இல்லை என்று எண்ணிப்போலும் ஆசிரியர் அவற்றை அகற்றிவிட்டார். நூல் இறுக்கமுற்றிருப்பதற்கும் அவையின் மைதான் காரணமாக இருக்கலாம். தலைவன் தலைவி யைப்பற்றி அறிந்தவர்களிடம் கடிதம் மூலம் விசாரித்தல், பிறநாட்டவர் உலாக் காணல் முதலியன கவிஞரின் கால 'முத்திரை' பதிக்கின்றன. பெண்களைக் கொண்டு போய்ச் "சனம் விலத்த* விட்டிருக்கின்றார்! எல்லோரும் விரும்பக்கூடிய புதுமை இது சமுதாயத்தின் போலித்தன்மை களையும் சில இடங்களிற் கவிஞர் புட்டுக் காட்டுகின்றார். பெண்கள் சனம் விலத்தல்" "இருமலச் செட்டியின் தாய் வருந்துதல்" ஆகிய பகுதிகளை இதற்குச் சான்றுகளாகக் கூறலாம்.

Page 9
4
பாடல்களிலே கவிஞரின் பழுத்த பழந்தமிழ் அறிவைக் காணக் கூடியதாக இருக்கிறது. விருத்தம், கண்ணி, அகவல், சிந்து, கும்மி, கலிப்பா, வெண்பா போன்ற பாக் களும் அவற்றின் இனங்களும் பல்வேறு நயச்சுவைகளுடன் திறமையாகக் கையாளப்பட்டிருக்கின்றன. ஆசிரியரின் விருத்தப் பாக்களிலும் அகவல்களிலும் பண்டைப்புலவர் பாணி கொலுவிருப்பதைக் காணலாம்.
தமிழ்ச்சுவை நிறைந்த கவிப்படைப்புகள் மருந்தாகி வரும் இக்காலத்தில், விறுவிறுப்பும், எளிமையும், இனிமை யும் கொண்ட இந்நூல், தமிழ் உலகிற்கு ஒரு சிறந்த விருந்து அருந்தி மகிழ்ந்து அறிஞர்கள் ஏற்றிப் போற்றுவர் என்பதில் ஐயமில்லை.
வி. கந்தவனம்
புனித தோமையார் கல்லூரி, மாத்தளை. 12-2-1964.

பதிப்புரை
தமிழ் இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சி, கால கட்டங்களை அனுசரித்தே வளர்ந்துள்ளதைக் காணு கின்றோம்.
நாயக்கர் காலப்பகுதியில் எழுந்த இலக்கிய வகையில் குறவஞ்சியும் ஒன்றாகும். இதை ஒட்டி ஈழத்திலும் சில குறவஞ்சிகள் முற்பட்ட கால கட்டங்களில் வெளி வந்துள்ளன. பழைய சுவட்டின் விளிம்புக்கு அப்பாற் பட்டும், அச்சுவட்டுக்குள் பட்டும் நடக்கும் எழுத்துப் பரிச்சயவாதிகளின் இலக்கியப் போக்கில் நவாலியூர்க் கவிஞர் சு. சொக்கநாதர் அவர்கள் எழுதியுள்ள இக் குறவஞ்சியும் ஒன்றாகும்.
புதிய இலக்கியப் போக்கிற்குப் போர்க்குரல் மட்டும் எழுப்பி விட்டு, தம்மை பண்பு, மரபுக் காப்பாளர் என எண்ணிக் கொள்வோர் மத்தியில், எந்தச் சலசலப்பும் காட்டாமல் பழமையைத் தழுவியும், புதுமைக்கு வழி சமைத்தும் விடுகின்ற மனப்பாங்கு இக் குறவஞ்சி ஆசிரியரிடம் காணப்படும் சிறப்புக்களாகும்.

Page 10
6
வாழ்வின் தாழ்ந்த பிராந்தியத்தில் வாழ்ந்த குறத்தி தன் ஆசா, பாசங்களையும், துன்பச் சாயலையும் கூறி உயர்ந்தவர்களைக் கிண்டல் செய்கின்ற விதத்தைக் குறவஞ்சி இலக்கண ஆசிரியர்கள் கைக்கொண்டனர். கொச்சையும், இலகு தமிழும் அவர்களுக்குக் கைவந்த நிலைகளாகும், இவர்களின் நூலில் உணர்ச்சிப் போக்கிலும் பார்க்க, அகத்துறைக்காரர்களாக, தத்துவச்சாயல், சமயக் கருத்துக்கள் மூலம் இவர்கள் சிறப்படைந்தனர். இந் நிலையே இக் குறவஞ்சியிலும் இழையோடி இருப்பதைக் காணுகின்றோம்.
இந் நூற்றாண்டில் எழுதப்படும் எந்த இலக்கியமும் இக்கால எல்லைக் கோட்டை ஏமாற்றிவிட முடியாது. இக் குறவஞ்சியும் இதற்கு விதிவிலக்கானதல்ல* நவாலியூர்க் கவிஞரின் மென்மையான உள்ளப் பாங்கில் ' மாத்தளை முத்துமாரி அம்மன் குறவஞ்சி ** எழுந்த சூழலை நம் மனத் திலும் எழுப்பி விடுகின்ற சிறப்புப் பெற்றது இந்நூல்.
இறைவனிடம் தன்னைச் சங்கமமாக்கிக்கொள்ளும் ஒரு உயர்ந்த நோக்கத்தை மறைமுகமாகக் கூறும் இந்நூல் பல பாவினங்களாலும் ஆக்கப்பட்டுச் செல்லுகின்றது. தெளிந்த நீரோட்ட அமைதி செழுமை கொண்ட பழந்

7
தமிழ்ச் சொல்லாட்சி ; உவமைச் சிறப்பு, ஒசைநயம் பரந்து கிடந்து குறவஞ்சியின் இலக்கியக் கம்பீரத்தைப் புலப்படுத்துகின்றது.
96, பிரபந்த வகையில் பள்ளும், குறவஞ்சியும் சிற்சில காலங்களில் ஈழநாட்டுக் கவிஞர்களைக் கவர்ந்து வந்திருக் கின்றன. இக் காலத்திலும் அத்துறைகள் அழிந்துபட வில்லை என்பதற்கு நவாலியூர்க் கவிஞரின் குறவஞ்சியும் அச்சு வாகனமேறாது இருக்கும் இலக்கியங்களும் சான்று பகரும்.
எமது இரண்டாவது வெளியீடான இக் குறவஞ்சிக் குத் தமிழ் கூறும் நல் உலகத்தின் அன்புக் கரங்கள் ஆதரவு தரட்டும்.
மாத்தளை. அன்பு,
* ஈழவாணன் "

Page 11
6.
காப்பு
மலையக நாட்டைச் சேர்ந்த மாத்தளை மூதூர்
(வாழும் தலையகப் பிறையி னார்தஞ் சக்தியாம் முத்து
[மாரிக் குலமகள் தனக்கோ ரின்பக் குறவஞ்சி தமிழிற்பாட மலைமகள் தனக்கு மூத்த மகன்கரி முகவன்
(காப்பே. 1
கலைமகள்
மூவிலைக் கதிர்வே லேந்தி முளரியம் மொட்டுந்
(தாங்கி மாவிலைத் தளிரே யாய வயங்கெழு மேனி யாளின் கோவிலைக் குலத்தை யூரைக் கொள்கையை
(யனைத்தும் பாட நாவிலே யுறைவா யம்மா நான்முகன் சுவையி
[னாளே. 2

9
கட்டியக் காரன் வரவு
சீர்கொண்ட முத்து மாரி
தெருவழி வருவ ளென்றே ஊர்கொண்ட மாந்தற் கெல்லா
முள்ளவெச் சரிக்கை கூற வேர்கொண்ட தெய்வப் பற்றும்
வேதநூற் பொருளுங் கண்ட கார்கொண்ட நெறிய னான
கட்டியக் காரன் வந்தான்.
பவனி வருதலைக் கூறல்
வேல்கொண்ட விழிமாதர் விசர்கொண்ட
வேதியரை வேறும் பேரை
மால்கொண்ட விழிகாட்டி மனங்கொண்ட
படியடித்து வழிநேர் காட்ட
சேல்கொண்ட விழியோடு சிரங்கொண்ட
முடியிலங்கச் சிங்க வேற்றில்

Page 12
10
நூல்கொண்ட இடைநுடங்க நுதற்றிலக
முடன்வருவாள் பவனி காண்பீர்.
பெண்கள் சனம் விலத்தல் சட்டை போட்டுமே எட்டிப் பார்க்குற
சால்வை போட்டவோ ராடவா தள்ளி நில்லடா வெள்ளிப் பூணுடைச்
சவுக்கி னாலடி போடவா பெட்டை மானினக் குட்டி யாமிவள்
பேடி யென்றுநீ யெண்ணுறாய் பிஞ்சு மான்மறி பெரிய சிங்கத்திற்
பீடங் கொள்ளுமோ சொல்லடா.
ஈக்கள் வந்தவை வாய்க்குள் மொய்த்திட
இன்னும் மொய்த்திட நிற்குறாய்
எட்டி நில்லடா நட்ட மாதிரி இந்த மாதிரி நிற்குறாய்
மாக்க ளுய்ந்திட வந்த மங்கையை மதியி ழந்துமே பார்க்குறாய்

11
வலது கையினிற் சூல முள்ளதை
மதியி ழந்தவா பாரடா.
நெஞ்சில் வஞ்சகம் நீள வைத்துநீ
நெட்டு யிர்ப்புடன் நிற்குறாய் நினது வஞ்சகங் கண்டு கொண்டனம்
நீகொள் ஆசையைத் தள்ளடா மஞ்ஞை போலிவள் சாய லாமென
மயக்கங் கொள்கிற மூடனே மயிலி லோரரை மதிய முள்ளவர்
மன்னு மோவெனச் சொல்லடா.
வெள்ளைத் தாமரை மொட்டுப் போலவே
வீழு குஞ்சியுந் தாடியும்
வெளுத்த மீசையும் பழுத்த மூஞ்சியும்
விழுந்து கண்ணிமை மூடவே
கிள்ளைப் பேச்சுள பிள்ளை யோவெனக்
கேட்டு நிற்குற கிழவனே

Page 13
12
கிளியின் காலினிற் கிண்கி னிக்குரல்
கேட்கு மோவெனக் கேளடா.
பல்லைக் காட்டியே யன்பு காட்டுற
பார்வை காட்டியே நிற்குறாய் பக்கர் நிற்பவர் பகடி செய்வதைப் பார்க்க வில்லையோ மூடனே பல்லைக் காட்டிநீ பாதம் வீழினும்
பரிவு கண்டில னென்குறாய் பாவஞ் செய்வதை விட்டுப் பாரடா
பாவி நீயுமே தள்ளடா.
உலாக் காண ஆடவர் வருதல் மாத்தளைவாழ் மணிமுத்து மாரியம்மை
வழியிடையே வருகின்ற பவனி காண பூத்தளிர்போற் புத்தாடை போர்த்துடம்பிற்
பொன்னணிந்து புனுகும் பூசிக் கோத்தொளிருங் குலமணிகள் குலுங்குவடக்
கொடிப்பதக்கங் குலவ மார்பில்

13
நாத்திகரும் நால்வருணத் தாருடனே
நடைபயின்று நல்வழிக்கண் வந்துற்
[றாரே. 10
ஆடவர் சொல்லுதல்
அன்ன பூரணி யாகி லென்னிவள்
அமுத வல்லியென் றாகிலென் மின்னு காதணி சென்று கண்ணொடு
மிளிர வெம்பசி தீருதே வன்ன வோவிய மென்னு மோவியம்
வடிவ Rப்பவை யென்பிரேல் இன்னு மின்னவள் மின்னல் கண்டுநீர்
ஏங்கி நிற்குறீர் ஐயரே. 11
சங்க ரன்கரந் தாலி கட்டிய
சங்கு சக்கரன் தங்கையேல்
தங்க ரத்தினச் சாயல் தங்கிடு
தங்க வொண்கலன் காண்கிலோம்

Page 14
14
மங்க லத்திரள் முத்து மாலைகள்
மார்பி லொன்றிய தன்மையால்
மாரி முத்திவ ளென்று தேர்ந்திடல்
மதியி தென்றுநீ சொல்லடா, 12
வெள்ளைத் தாமரை மேலி ருப்பவள்
மின்னி டைக்கிவள் நிகரெனின் வேதப் புத்தகம் கையிற் காண்கிலம்
வீணை காண்கில மல்லவோ பிள்ளைப் பைங்கிளிப் பெற்றி யானவள்
பிடித்தி ருப்பது சூலமே பேத மில்லொளி பெற்று நிற்பவள்
பெயரிவள் முத்து மாரியே. 13
கண்ணன் மார்புள கமல மேறிய
காரி கைக்கிவள் காட்டெனின்
கான வெம்பரி யான வூர்தியில்
கமலக் கன்னிகை காண்பளோ
இன்னு மேன்பல வெத்த Eக்குறீர்

15
இஃது மாத்தளை யூரிடை இலங்கு வாலய மாரி முத்திவள்
என்ற நிந்துநீர் கொள்ளுமே. 14
உலா வருதல்
தொண்ட கப்பறை துடியொ டும்பல
தோற்ப றைகளும் முழங்கவே அண்ட மேழொடு ஐரோப் பாவெனும்
அந்தக் கண்டமும் நடுங்கவே முண்ட கத்துறை கின்ற மாதவன்
மூன்று கோடியாய் நடக்கவே கண்ட வெள்ளையர் காலின் சட்டைகள்
கழன்று வீழ்ந்திடல் காணுமே. 15
மானு மாய்ப்பல மயிலு மாய்ச்சில
மாத ரன்னமாய் நடக்கவே தேனு மாய்ப்பல குயிலு மாய்ச்சிலர்
கிளியு மாய்மொழி பயிலவே

Page 15
16
மீனு மாய்ப்பல வேலு மாய்ச்சில
விழிக ளானவை திகழவே
ஏனு நாந்தமிழ் மக்க ளாகிலம்
என்று மற்றவ ரிடையவே. 16
சங்கு சல்லரி தாள மென்பவை
சத்த மிட்டொலி செய்யவே தொங்கு சாமரை யெங்கு மேகொடி
தோர ணங்களுந் தொங்கவே பொங்கு மாமுலைத் தங்க மாதரின் பொற்சி லம்புக ளொலிக்கவே எங்க ளுரினி லில்லை யிப்படி
யென்று வாங்கிலர் சொல்லவே, 1 7
சந்தி ரப்பிறை தாழம் பூவளை
தலையி வன்நகை தரித்துமே
சிந்து வெழிலுடைப் பூரா னட்டியல்
செங்க முத்தினிற் சரடுமே

17
வெந்த பொன்சரப் பள்ளி சங்கிலி
வெள்ளை முத்தணி மார்பிலே சிந்தொ லிப்பரற் தண்டை பீலியுஞ்
சேர்ந்தொ லித்திடக் காலிலே.
மகர கற்கட ரேகை மத்திய
மான ரேகைவாழ் மாந்தரும் பகரு தென்வட துருவ முள்ளவர்
பாலை வனத்திடை யுள்ளரும் நிகரு பவனியின் நீர்மை கண்டவர்
நெட்டு யிர்ப்பவர் விட்டுடச் சிகர தோரண வீதி யுலவுவள்
செல்வ முத்தெணு மாரியே.
இருமலச் செட்டி வருகை
சுடர்விடு பவள மேனித்
தோள்களுந் திரள மார்பில்
18
19

Page 16
8
படரிரு பட்டி லாரம்
பவளமும் மணியுந் தோன்ற
இடர்ப்படு வோர்க்கு வீயு
மிருதயம் முகத்திற் காட்டி
இடமெலா மிவனே யாக
இருமலச் செட்டி வந்தான். 20
இதுவுமது
கண்டனன் பவனி வந்த
கன்னியைக் கண்ட செட்டி உண்டனன் அவளின் தேசை
உள்ளத்தா லுண்ட பின்னர் அண்டையிற் கணக்காய் வானை
அழைத்தவள் பேரூர் சுற்றங் கொண்டவர் குலமுங் கேட்டுக்
கூறெனச் சொல்வான் பின்னும். 21

19
வேறு
ஆயிரம் பெண்களங் காலவட் டங்குடை
ஆவன ஏந்துவதும்-இந்த மாயிரு ஞாலத்தில் மாதர்க ளாதிக்கம்
மாண்புறச் செய்வதுவும்-பூமி போயொரு வான்புகப் போகங்க ளோடவர்
புண்ணியஞ் செய்வதுவும்-அந்தத்
தூயவ ளாலது நேருது காணந்தத்
தோகையைப் போயறிவாய். 22
நீல வெளிவானில் நித்தில மத்தியில் நிலவென நிற்பதுவும்-அந்தக் காலத்தி லெளவைக்குக் காவல னிந்துள
கனியெனக் காண்பதுவும்-இந்த ஞாலத்துப் பெண்குலம் நேர்ந்து வரப்பெறல்
நேரிவ ளாவதற்காம்-அந்தக் கோலத்துக் காண்பவள் கோயிலைக் கண்டறி
கோதையின் பேரறிவாய். 23

Page 17
20
முன்னொரு காலத்து மூவுல கத்திலும் மூவருங் கண்டறியா-ஒரு மின்னொடு கூடிய மெல்லிடை யாளிவள்
மேனியைக் கண்டவுடன்-அன்று என்னொடு கூடிய ஐம்பொறி வாயில்கள் இடிந்தவை வீழ்ந்ததினால்-இவள் தன்னொடு வென்னையுந் தாங்குவ
(ளோவெனச் சட்டெனக் கேட்டறிவாய். 24
கணக்காயன் தோழிமாரை வினவுதல்
இதுகேட்ட சீட னோடி
என்னுடை யெசமா னுங்கள்
மதுவேட்ட வண்டு பாடும்
மலர்க்கொன்றைக் கண்ணி யாளின்
பதிகோட்டம் பவுசு சுற்றம்
பாவையின் பெயரு மாய

21
அதுகேட்டு வாவென் றானால்
அம்மையீ ரறையு மென்றான். ど5
கணக்காயனைத் தோழிமார் இகழல்
இந்த மூடனை வந்து பாரடி
என்ன கேட்குறா னென்றுபார் வந்த மூடனின் வாயைப் பாரடி
வாய்நிறைந்துள பல்லைப்பார் வெந்த சொண்டினில் வெடிப்பு பாரடி வேக வைத்துள தடிப்புபார் பொந்து போலுள மூக்கைப் பாரடி
பூந்து தொங்கிடு மயிரைப்பார். 26
பந்து போலுள விழியைப் பாரடி
பந்து வீழ்ந்துள குழியைப்பார்
நொந்து வீழ்ந்துள காதைப் பாரடி
நோய்பி டித்துள தொளையைப்பார்

Page 18
22
விந்து தோன்றிடு தொந்தி பாரடி
வீழ்ந்து தொங்கிடு மார்புபார்
வந்து நிற்குற பேயைப் பாரடி
வாழ வந்துள நாயைப்பார். 27
வேறு
காலொடு கையுங் கட்டிக்
கதறிட அடியும் போட்டுத் தோலொடு தசையும் போக்கித்
தொங்கிடப் போட்டா லுன்னை மாலொடு வந்த தங்கை
வைகுவ ளென்றே யஞ்சிக் காலொடு போக விட்டோம்
கயவனே யோடா யென்றார். 28
கணக்காயன் செட்டிக்குரைத்தல்
கனவிலுங் கிட்டா தாளைக்
கருத்தினிற் கொண்ட வையா

23
நினைவிலும் நடுக்கங் கொள்வாய்
நிகழ்ந்ததை யுனக்குச் சொன்னால்
வனவிலங் கடைத்த பட்டி
வாயிலைத் திறக்க விட்டோய்
உனைவிலங் கிடுவா ரையோ
உலாவரும் வட்டி வேண்டா. 29
செட்டி கூறல் (வேறு)
மாதோட்டங் கோணமலை
மன்னு முன்னேச் சுரங்கதிரை பாவேட்ட திருநல்லூர்
பகர்செல்வச் சன்னிதியும் பரக்கக் காவேட்ட மாவிட்ட
கவின்புரமுங் கந்தவனக் கடவை யார்வேட்ட மங்கையரை
யானறிவேன் யானறியே னிவளே. 30

Page 19
24
கணக்காயன் கூறல்
வாய்மூடிக் கண்மூடிக் கொண்டி ருந்தும்
வயிறுதிக் கொண்டிருக்கும் வணிக னான பேயாடிப் பித்தனா மொருமலச் செட்டி
(யென்பான் பேசுவா னிவள்பெயரென் றறிகு வாயே, 31
ஒருமலச் செட்டிக்கு இருமலச் செட்டி திருமுக மனுப்புதல்
ஆதிகுலப் பழக்கவழக்க மத்தனைக்கு மாணிவே ரான வாசான் அருளம்பலச் செட்டியாய் அவனிவந்த
அருங்கொடை வள்ள லாற்கு அரியநற் புதல்வனா மிருமலச் செட்டி
ஆசைவைத் தெழுது நிருபம் நீதிநூல் தத்துவ நெறிநூ லாகம நிகர்த்தநூ லுணர்ந்த சீலர்

25
நிகழ்கால வருங்கால நிகழ்ச்சி கட்கு
நெறிகாட்டு சுத்த ஞானி நிகரற்ற வொருமலச் செட்டி நேய
நேசம்வைத் தினிது காண்க
சாதிகுலப் பிறப்பறி யாதவோர் வாலை
சந்திர காந்தி போல்வள் தனதிடம் விட்டுத் தாதிமா ரோடுஞ் சாதியோர் பதினெட் டோடும் தனிச்சிங்க முதுகிற் சார்ந்தெமது வீதி
தனியுலாப் போந்த படியால் வீதிவழி யாங்காங் கதுகண்ட வாடவர்
விசர்கொண் டனரென் றறிவையேல் வேதநூ லுணர்ந்த மேதாவி யானநீ விரைவிலோர் திருமுகந் தனிலே விளங்கவைத் திடுவை யிவள்தன் மையென
வேண்டிநா னிரக்கின் றேனே. 32

Page 20
26
ஒருமலச் செட்டியின் பதில் நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா
தரவு
திருமுத்து மாரியெனுந் திருநாமந் தரித்தவளை ஒருமுத்து வாகியொரு உலகனைத்தும்
(படைத்தவளை பெருமுத்து மாலைவடம் பிணைத்துலகைக்
(காப்பவளை அருமுத்து வானவளின் அழகியல்பைக்
(கேட்டனையே. 33
தாழிசை
செங்கமலத் திருவாகில் திரிவாளோ சிங்கேற்றில் வெண்கமலத் திருவாகில் விளங்கிடுமோ வெஞ்சூலம் பைங்கமலப் பதமுடைய பார்வதியு மிவளாகில் அங்கவளின் அரைப்பாதி ஆணுருவாய்க்
(கண்டனையோ. 34

27
மாதிவளின் குலப்பிறப்பை மாலறியா
(ரெனவுரைப்பார் ஆதிமுதல் மாத்தளையே அவளுறையும்
(பதியென்பார் நீதிநெறி நிலவுலகம் நினைப்பவரின் மனமிருப்பாள் சோதிவடி வானவளின் துணையருளே
(மேலுலகாம். 35
பொன்நிதியும் புகழ்நிதியும் பொருள்நிதியு
(மொரு நிதியாய் நின்நிதியில் நிகழ்வதனால் நிலைகுலைந்த
{வைசியகேள் அந்நிதிகள் அழிவதுகாண் அருள்நிதியே அழிவதிலை எந்நிதியும் மீடிலவே இன்னவளின் அன்பிருந்தால் ஆதலினால், 36 (சுரிதகம்)
மான்மழு வேந்திய வண்ணலுக் கல்லது காண்கில ளாகியும் கட்புல னுக்கவள்

Page 21
28
காட்டிடு மவ்வுரு கல்லொடு பித்தளை காட்டிடும் பெண்ணுரு கைவலான் கற்பனை ஆகையின் அஃது நின்சொப்பனம் தொகையைக் காணரீ துறவியோ சொல்மதி. 37
கவிக் கூற்று
நேரிசை யொத்தா ழிசைக்கலி நீட்டிய தாழிசை தந்தது தனிப்பே ரின்பம் பாழிசைச் சுரிதகம் பழுதாக் கியதால் தோளிசை கெட்டுச் சோர்ந்தனன் செட்டியே. 38
இருமலச் செட்டி வருந்துதல்
செத்தது முகத்தின் தேசு
செத்தது ஒளியும் நோக்கில்
செத்தது உடம்பின் கட்டு
செத்தது நரம்பின் வீறு
செத்தது விரக்கம் வீரஞ்
செத்தது திருவின் நட்டம்

29
செத்தனன் செட்டி யென்றாற்
சீவனங் கிருந்த தம்மா. 39
உற்றநோ யறியார் யாரும்
உள்ளநோ யறிந்த செட்டி மற்றவர்க் குரையான் தான்தன்
மனத்தொடு கிளத்த லன்றி சுற்றமும் பகையாய்க் காண்பன்
சொல்லுவா கடத்தி னந்தம் கற்றவ ரவரை யெல்லாங்
கைவிரித் தேங்க வைத்தான். 40
அடிக்கடி முத்து மாரி
அன்னையின் பெயரைச் சொல்லி
துடித்திடச் சொல்வர் நோயின்
துன்புறுத் துதலா லன்றோ
பிடித்திடு கின்றா னந்தப்
பெரியளின் கருணை யென்று

Page 22
30
நொடித்தவ ரிவனைப் போற்ற
நோயதி கரித்த தன்றே. 41
இருமலச் செட்டியின் தாய் வருந்துதல்
மாதோட்டக் கடற்கரையில் வந்தடைந்த நித்திலமே நாவேட்ட பண்டமெலாம் நான்சமைத்துக் கொண்டுவர நீவேண்டா மெனமறுத்து நீளுறக்கங் கொள்வாயேல் தீவேட்ட கொள்ளியைப்போல் தீப்பிடிக்கு தென்வயிறே. 42
ஆசைத் திருமகனே ஆண்குலத்தின் சித்திரமே வேசைப் பெண்ணொருத்தி விழிசிமிட்டி யுனைவேட்டால் பூசைப் பொருளெடுத்துப்

31
போறேண்டி யென்றுசொலி தூசைத் துடைப்பதுபோல் துடைக்காது வந்தனையோ, 43
நோன்புக் கயிறுகட்டி நூல்முடித்துக் காவல்கட்டி காண்பார் கண்விழிக்கும் கண்ணிமையில் மைதடவி ஆண்பாற் குலத்துடனே அண்டியுனைப் போகவிட்டும் ஏன்காண் இதுவருவான் என்மகனே சொல்லுமடா. 44
கத்திரிக்கோல் வெட்டிமைக்குள் கடைசிவந்த கண்ணுருட்டி முத்திருக்கு மொட்டிருக்கு முலைநிறையப் பந்திருக்கு வைத்திருக்கும் பொட்டழகில் மருந்திருக்கு தென்றுசொலிச்

Page 23
32
சித்திரமா மென்மகனைச்
சிறுக்கியவள் பார்த்தாளோ.
கொப்பூழ் மறைக்காமற் கூர்முலையைக் கட்டாமல் அப்பிப் பிடித்தபிடி அப்பிடியிற் பட்டணிந்து சிப்பிப் பெருவாயைச் சிவப்பணிந்து சித்திரித்துத் தப்பிப் பிழைக்காமற்
சஞ்சலத்தில் வீழ்த்தினளோ.
ஆட்டி யொருபார்வை ஆண்கூட்ட மாயிருந்தால் தீட்டி யொருபார்வை தெரிந்தவர்க ளங்கிருந்தால் பூட்டித் திறப்பெடுக்கும் பொல்லாத பார்வையினால் மாட்டிப் பிடித்தாளோ மன்னவனே சொல்லுமடா .
45
46
47

33
கைதவறி நீதொட்டால் கத்தியலோ காட்டிடுவாள் மெய்தவறி நீதொட்டால் விழிபிதுங்கப் பார்த்திடுவாள் தையலென நீநினைத்தால் தனமசைத்துக் காட்டிடுவாள் பொய்யவளின் போக்கெனவே புண்ணியனே யறியாயோ. 48
உன்னழகைப் பார்க்கவிலை உனக்கருகி லங்கிருந்த இன்னுமொரு கிழப்பயலை இரக்கமுடன் பார்ப்பதுபோல் தன்னழகைக் குலுக்கியவள் தானளப்பா ஞன்னழகை என்மகனே அறிந்திலையோ இங்கிருக்கும் பெண்ணினத்தை, 49

Page 24
34
தலையிற் சுருளாட்டி தாழ்கொண்டைக் குழலாட்டி
வளையிற் கயலாட்டி வாயகலா நகையாட்டி
முலையிற் குலையாட்டி முன்வயிற்றிற் சிமிழாட்டி இலையின் பழுப்பாட்டி இழுத்துன்னைப் பிடித்தாளோ, 50
கைபிடித்த மருத்துவர்கள் கைவிரிக்க வைத்தவளை நெய்பிடித்த பழந்துணிபோல் நின்னுடலைத் தோய்த்தவளைத் தைபிடித்த பனிக்கூதல் தந்தவளை யென்மகனே கைபிடிக்க எண்ணுவையேல்
காட்டவளை என்றனுக்கே, 51

35
கவிக்கூற்று
மருத்துவற்குந் தெரியாத மாவருத்த மிதுவாகில் அருத்திமுலை கொடுத்துதவி அணைத்தவனை
(வளர்த்தெடுத்துக்
குருத்துமுத லன்னவனின் குணமறிந்த வத்தாய்க்கு வருத்தமிது தெரிந்திலையேல் மனிதகுல
(மிலையாமே. 52
குறிசொல்லுங் குறத்தி வருதல்
சந்தநடை கொள்ளுமிரு பாதப் போதில்
தண்டையொடு பாதசரந் தளைபட் டார்க்க அந்தநடைக் கிணங்கவிரு புருவக் கண்கள்
அடிபட்டுக் குறுமுறுவற் சிமிட்டி மோனை உந்தநடை கொள்ளவரு இடையங் கில்லா
துள்ளதனஞ் சேர்ந்திசைக்கத் தமிழி லாங்கு வந்தநடை போலவொரு வார்த்தை கொண்டு
வன்னகுற வஞ்சிமகள் வருகின் றாளே. 53

Page 25
36
இதுவுமது
சடைமுடி தரித்த விடையமர் கடவுள் நடமிகு காலையிற் சடையமர் கங்கையாய் விடையினிற் பவனி வெளிவரு காலையில் தொடையினி லமர்ந்த சுடர்விடு முமையாய் கடமையி லிறங்கிக் கடானற் றுகையில் உடலின் பாதியில் உறைசக் தியுமாய் விண்ணையும் மண்ணையும் விரிநீர் காற்றையும் தன்னையும் தீயையுந் தாங்கி நிற்பளாய்ச் சுகஞ்செய் பவளாய் சொர்க்கத் துணையாய்ப் பவஞ்செய் பவற்கும் பரிவளிப் பவளாய்ச் சங்கரி சரஸ்வதி தயாபரி சாம்பவி மங்கள ஈஸ்வரி மகேஸ்வரி தேவியும் காளி அம்பிகை கண்ணகி பகவதி மாரி மோகினி மன்னுரா ஜேஸ்வரி என்னுமிப் பலபெய ரிவட்குள தாயினும் மன்னு மாத்தளை வாழ்முத்து மாரியாய் மன்னுயிர்க் கெல்லாம் மறைந்தருள் செய்பவள்

37
நாமமே நாவில் நவில்குற வஞ்சியின் காமமே யூட்டுங் கனத்த தனங்கள் வெள்ளைக் கச்சையுள் துள்ளி மிதப்ப அள்ளிய தாவணி அவளிடை தேட சிமிட்டுங் கண்களிற் செவ்வரி படரக் குமுட்சிரிப் புதட்டிற் குடிபுகுந் திருக்கப் புருவச் சிறகுடைப் பொட்டெனும் புள்ளு மருவி யாடவர் மனக்கூ டடையக் குன்றி மணியிற் கோத்த மாலிகை நின்று மார்பில் நேர்த்தியைச் செய்யக் குடுகுடு நடையிற் படுபுல் சிரிக்க உடுக்குங் கூடையு மிடுக்கிய கையள் முகக்குறி நகக்குறி மொழிக்குறி கைக்குறி அகக்குறி விழிக்குறி ஆனவக் குறிகளும் வாலிபர் தமக்கு வலக்கை பார்த்து வாலையர் தமக்கு இடக்கை பார்த்து மாத்திரைக் கோலால் மந்திரக் கட்டால் சாத்திரங் கண்ட சஞ்சலந் தீர்த்து

Page 26
38
இலங்கை சுற்றி இங்கு வருபவள் பொலங்கழல் முத்து மாரியின் அடிமை. அழகார் மாத்தளை அழகர் மலையெனும் புகழார் மலையில் பொருந்திய பழங்குடிக் குறவர் குடிக்குலக் கொழுந்தாய் நடந்து அறவோர் வாழும் அவ்வழி வந்தனள், 54
இதுவுமது
இருமலச் செட்டிக் குற்ற
இடரினை அறிவாள் போல திருமணச் செய்தி யோடு
திருமகள் வந்த தைப்போல்த் அருமலர்க் கொடிகள் பூத்த
அன்னவன் வீட்டு வாயில் ஒருமலர்க் கொடியாய் நின்று
மலைவளங் கூற லுற்றாள். 55

39
குறத்தி மலைவளங் கூறல்
வானமுகில் வந்துமடி மீதிருக்கும் போது
மாமலையைக் கண்டுமுகில் அஞ்சிமழை வீழ்த்த கானவெழிற் சோலைமரக் கண்ணிருந்து தண்ணிர்
காட்டுநில மீதுவிழக் கானிலுள மான்கள் மானமுள சூரியனை வெட்டவெளி தேடி
மழைவேண்டா மென்றிரக்கு மெங்கள்வள நாடு ஞானமுள வாடவர்வாழ் நல்லிலங்கை நாட்டின்
நடுவிலுள தானமலை நாடெங்கள் நாடே. 56
மலைநாட்டில் மாண்புடனே மன்னுபல வூரில்
மாத்தளையென் றோதுபதி எங்கள்பதி யையா சிலைநாட்டி மாரியம்மை திருப்பணிகள் செய்ய
திருவுறையும் பெண்களுக்குக் கருவுறையு மையா அலையாட்டிக் கொண்டுநதி அழகுடனே பாய
அதிலாடும் பெண்களெழி லரம்பையெழிலையா குலையாட்டிக் கறிமிளகுக் கொழுந்தெழுந்து
(படரும்

Page 27
40
கோடுயர்ந்த அழகுமலை யெங்கள்மலை
(யையா. 57
மலையடியில் வந்தவயல் அந்தவயற் செல்வம்
வண்ணமுத்து மாரியவள் நெல்புடைக்குங்
[குல்லம் குலையுடனே செவ்விளநீர் மலைவுடனே வீழும் கோலமுலை மாரியவட் கானமுலை காண கலையுடனே மான்மறிகள் கண்சிமிட்டுங் காட்சி
கன்னிமுத்து மாரியினைக் கண்டுபயில் தேர்ச்சி அலையுடனே அருவிவிழுந் தோடுவழி தோறும்
அன்னைமுத்து மாரியவள் ஆடுவதைப்
(பாரும். 58
சாமிதினை கேழ்வரகு சங்குவெளை நெல்லு
தனிப்பாலில் சமைத்ததனைத் தேனுடனே (தருவோம் பூமிவிளை வள்ளிமர வள்ளியெனு மூலம்
பூப்போல நாமவித்துப் புசித்திடவே தருவோம்

41
மாமியுடன் அண்ணிமுத்து மாரியெங்கள் தாய்கள் மைத்துனரும் மச்சினிகள் வந்தவுடன் பிறப்பே
நாமிருக்கும் அழகுமலை நல்லமலை ஐயா
நல்லமுத்து மாரியவள் உலவுமலை ஐயா. 59
ஆங்கிலரென் றெங்கிருந்தோ வந்தவொரு சாதி
அந்தமலை அழகுகெடத் தேயிலையை நட்டார் பாங்குநிறை மலைவளமும் பழுதுபட லாச்சு
பண்டிருந்த பார்வதியும் பறந்தோடிப் போச்சு ஆங்குவொரு மாரியம்மை அவளிருப்ப தாலே
அந்தமலை மீதுமழை வந்திறங்கு தையா நாங்களுறை அழகுமலை நல்லமலை யையா
நாகரிகங் கொள்வதிலை எவர்வரினு மையா. 60
இருமலச் செட்டி நாட்டுவளம் வினவுதல் மணம்பூத்த மலர்க்கொடிபோல் வாயி லண்டை
மதிபூத்த தனிமலராய் மலர்ந்து நின்று குணம்பூத்த குரலெழுப்பிக் குயிலை வென்ற குறிஞ்சிநிலக் குலக்கொடியே மூலி கையே

Page 28
42
தினம்பூத்த மலர்வாயால் மாரி யம்மைத்
திருப்பூத்த மலைவளத்துத் திறனு ரைத்தாய்
இனம்பூத்த நினதுகுலத் தினத்த வர்வாழ்
எழில்பூத்த நாட்டுவள மியம்பு வாயே. 61
குறத்தி நாட்டுவளங் கூறல்
மலையி லாடிவரு மருவி நீரினொடு
மயில்க ளாடிவரு வடிவில் அலைக ளாடவதில் மலர்க ளாடவொரு
வழகு வாடு பலசுனையில் தலைக ளாடவிரு தனமு மாடுகுற
மகளி ராடு புனற்செறிவில் கலைக ளோடுபல கவிதை பாடுபவர்
கனவி லாடு மலைநாடே. 62 தமிழ ரோடுவுள சரிதை யோடுவிது தரணி மீது பலயுகமாய் உமிழ நாலுதிசை உவரி நீரலைகள்
உறையு மீழ வளநாட்டில்

43
அமிழ்த மானபல அறிவு ளோர்களுறை அருமை யான வொருவூராம்
கமழு மாலையணி கனக மாரியவள்
கலைக ளாடு மலைநாடே. 63
உணவி லாதவொரு வுயிரி லாததிரு
உறைவதான மலைநாடு பணமி லாததிரு பயமி லாதமனம்
பணிவ தான குணமுடையார் குணமி லாதவொரு குடியி லாதபதி குறைவி லாத பதியிதுவே தினையி லாடுகிளி தினமுமாரியவுள்
திறனைப் பாடு மலைநாடே. 64 மகளி ரோடுநிறை மனித ரோடுகொடை
மலிவ தான தெமதுரரில் சகல பேருமொரு தனிய தானகுடி
தரணி மீது விதுபெருமை அகழி யோடுமதில் அரண தோடுமிளை
அரச சேனை யெனுமிவைகள்

Page 29
44,
பகடி யாகுமவை பகழி போலவிழி
பயிலு மாரி முனமாமே. 65
குறத்தி தல மகிமை கூறல்
நாமுறையும் மலைவளமும் நகருறையும் பதிவளமும் நவிலக் கேட்டீர் பூவுறையும் பொய்கைகளும் பொழிலுறையும்
வீதிகளும் பொலியுந் தலத்திற் போயுறையும் புனிதவதி பொன்னுறையும்
போகமருள் முத்து மாரி தானுறையுங் காரணமுந் தலமகிமை
யென்பவையுஞ் சாற்றக் கேளே. 66
இதுவுமது
வெள்ளி யம்பலக் கிரியி லேயொரு வேங்கை யின்னுரி போர்த்தவன்

45
வீர மேந்திய விடது தோளினை விளித்தொ ருதினஞ் சொல்லுவான் அள்ளி மும்மலக் கட்டி னாலுயிர் அவல மெய்திடல் காண்குவை ஆத லாமென தடியி லவ்வுயிர் அமர நீயருள் செய்வையோ, 67
என்றி யம்பிடக் கேட்ட தும்மவர் இடது தோளெனு மடமகள் ஈன்ற தாயினும் மேல தாயொரு இன்ப தானதோ ரன்புடன் நன்றி யம்பினி ரென்றி யம்பியும் நாற்றி சையுடன் கோள்களும் நாமி ருக்கிற உலக மென்பதும் பூத மென்பதும் செய்துமே. 68 ஆண வக்கறள் கழுவி யேநிதம் அகில மென்பதோர் தொட்டிலை ஆட்டு கின்றனள் ஆடு கின்றது

Page 30
46
ஆடு கின்றது உயிரெலாம் தானு மவ்வுயி ரோடு நின்றவள் சகல போகமு மூட்டியே சார வைக்குறள் சங்க ரன்பதம்
தங்க முத்தெனு மாரியே. 69
சீவ னோடவள் சிவன தோடவள் சேர்ந்தி ருப்பதைக் காண்கிலார் சென்று மாத்தளைத் திருத்த லத்திலே சேர்ந்தி ருப்பதைக் காண்குவார் பாவ மோடெவர் போய்வ ணங்கினும் பரிவு காட்டுவள் மாரியே பாவை போலுள முத்து மாரியைப் பார்ப்ப தாலருள் படியுமே. 70
வேறு நாலு பக்கமும் மாம லைகளும் நடுவி லற்புத மான கோவிலும் நகர தோரண வீதி யெத்தனை

47
நாற்பு றங்களுங் கோவி லெத்தனை பால்க றக்கிற மாடு மெத்தனை பாம ரர்களுட் பக்த ரெத்தனை பகரு மாத்தளை நகரி லேயுள பாவை முத்தெனும் மாரிக் காகவே. 7
கூல வாணிகர் வீதி யெத்தனை கோல மானதோர் சாலை யெத்தனை கூடி யாடவர் ஆடு காட்சியில் கோல மங்கையர் பாடு காட்சியில் சால வானுயர் தேவ ரானவர் தங்கி நின்றவர் பார்ப்ப தானதோர் தலம தாமிது முத்து மாரியின் தரணி மீதுள தலம தாமிதே. 72
கொடியு யர்த்திய கோபு ரத்திலே கோழிச் சேவல்கள் கூவு கின்றதே கோடு யர்ந்துள மாம ரத்திலே குயிலி னோதைகள் குலவு கின்றதே

Page 31
48
படியு யர்த்திய மனைக ளெங்கணும் பாடு பைங்கிளி பயிலு கின்றதே பாவை மங்கையர் சாயல் கண்டுமே பதுங்கு கின்றது மயிலி னங்களே. 73
சிகர தோரண வாயில் கண்டதும் சேணு யர்ந்துள கோயில் கண்டதும் சென்றி றைஞ்சுவர் கோலங் கண்டதும் சீத நன்மலர்ச் சோலை கண்டதும் நகர தோரண நடுவி லேயுறை நாமி றைஞ்சிடு முத்து மாரியின் நலம தானதோர் தலம தானதை நாடு வார்வினை நலியு மையரே. 74
வேறு இரவி மேற்றிசை யுதிக்கி லென்கடல் இருண்ட நீர்த்தரை கொதிக்கிலென் பரவி வான்மதி சிவறி லென்முகில் பதறி வீழ்ந்தது பதைக்கிலென்.

49
வரவி லேமழை பொய்க்கி லென்பயிர் வயலி லேயவை கருகிலென் அரவி லார்சடை அண்ண லார்மனை ஆன மாரியின் பொருட்டதால் 75
இருமலச் செட்டி குறத்தியிடம் குறிகேட்டல்
வடநாடும் இலங்கைவள நன்நாடும்
வடவேங் கடநாடும் குடநாடுங் குணக்குறையும் பலநாடும்
கொடிவிட்டுக் கொழுந்துபோல நடமாடிப் படர்கின்ற குறக்கொடியின்
நறுமலரே யுனதுகுறி
திடமாடுங் குறியெனவே செப்புதற்குத்
தெரிவிநின் சான்றுகளே. 76
குறத்தி சான்றுகள் காட்டிடல்
அரக்க ரானவரை யெல்லா மன்றுபோர்க்
கழைத்திட்ட ராவ ணேச்சுரர்

Page 32
50
அரக்க ரானவரை யன்றிவ் வூர்நாக
ரானவரை யழைத்த துண்டோ
பரக்கவாழ் நாகறம் பண்பறிந் தேயவன்
பகராது மாண்டனன் போரில்
பகருமோர் நாகறம் பரம்பரைச் சின்னமாம்
பார்த்திடுவீ ரென்நாக தாலியே. 77
செருவென்ற சேரசெங் குட்டுவ னந்நாளிற்
சிலம்பெடுத்த கண்ணகிக்குச் சிலையெடுத்து திருவிழா வெடுத்துச் செங்கோன் மன்னற்குத்
திருமுக மெடுத்த போழ்து வருகின்ற காலத்தை வழுவாது கயவாகு மன்னர்க் கெடுத்துரைத்த படியால் மன்னனெம் மூதாதையற் களித்த சிங்க
மாக்கொலிசின் சின்னமென் கையிலையே. 78
பரராச சேகர யாழ்ப்பாண மன்னற்குப்
பார்த்தவர் கையை யொருநாள் பறிபோகமுனந் தமிழ்மர புபறி போகுமுன்

51
பாடிவைத் திடுவையென் றியம்பப் பரராச சேகரன் பண்டுநம் முன்னோர்க்குப்
பரிந்தளித்த கொடிப்ப தக்கமதில் பதித்த சின்னமாயொரு நந்திச் சிலையென்
பதக்கத்துப் பதிந்த தையே. 79
குறத்தி குறிசொல்ல நல்ல சமயமெனல் அல்லியும் மலரும் முல்லை
அலரியுஞ் சொரியப் பூத்து எல்லையில் மலரா லெங்கு
மிலங்குமாத் தளையில் வாழும் மெல்லியள் உலவும் நேரம்
வீட்டுமாக் கூரை மீது பல்லியும் பலப லென்னப்
பார்க்கநின் கையை நீட்டே. 80
குறத்தி குறிசொல்லல் அங்குசப் பாசா ஆனையின் முகவா சங்கு சக்கரா தனிவேல் முருகா

Page 33
52
திங்களைச் சடையிற் சேர்த்தவா வைரவா மங்கள வீர பத்திரா மன்மதா சங்கரி சிவாத்திரி தயாகரி ஈஸ்வரி மங்கள ரூபிணி மகேஸ்வரி அம்பிகே காளி சாமுண்டி கண்ணகி துர்க்கையே தாளிற் பூசனை தந்தனன் தந்தனன் வந்துநீ ரனைவரும் வந்தென் மனத்தே சுந்தர மைந்தனின் சிந்தையை யறிவீர் ! சொல்லுவீர் சொல்லுவீர் சோதிடம் சொல்லுவீர் சொல்லுவீர் சொல்லுவீர் சூட்சியொன்றுள்ளதோ வந்தகோட் பகையோ வஞ்சகர் மருத்தோ கந்தவேட் கைவேல் கடுஞ்சினங் கொள்ளுதோ கலவையோ மருந்தோ காளியோ பேயோ நிலவிய நோயோ சூனியம் பில்லியோ பொருளோ பண்டமோ பொற்குவி வாஞ்சையோ அருளோ காயமோ ஐம்பொறிக் குறளியோ கன்னியர் கடைக்கணோ கள்வரின் கலக்கமோ
மன்னிய பெருங்குடி வைசியற் குற்றது

53
திட்டியோ தோஷமோ கட்டிய முடிச்சோ கெட்டியாய்ச் சொல்லுவீர் கேட்குது காளை முத்து மாரிநீ முன்நின் றுரைப்பாய் இத்தனை யுள்ளும் எதுவெனச் சொல்வாய் என்றனுக் குரைப்பை யெந்தாய் கன்றினுக் கிரங்குங் கருணையி னாளே. 81
வேறு
கைக்குறி பார்க்கி லையா
காட்டுது சங்க ரேகை அக்குறிக் கிணங்க மெய்யாய்
அருந்ததி சந்த்ர மேட்டில் இக்குறி காட்டுங் கையர்
இருநிதிச் செல்வ ரன்றோ எக்குறி யானா லென்ன
இன்னலைப் பார்க்கின் றேனே. 82
வெற்றிலை பாக்குச் சூடம்
வேல்முடித் தேங்கா யொன்று

Page 34
54
நெற்பொரி கதலி புட்பம்
நீர்நிறை செம்பு மொன்று
வற்றிய பாலின் தோயல்
வழங்குதெட் சணையுங் கொண்டு
தெற்றென வருவா யையா
சிந்தையிற் குதிக்கின் றாளே. 83
பறப்பன வொன்று சொல்வாய்
பத்துக்கு ளொன்று சொல்வாய் சிறப்புள மலரி லொன்று
தெய்வத்தி லொன்று சொல்வாய் பிறப்பது வெனது வாயிற்
பேருண்மை யென்று கொள்ளே அறப்பெருந் தேவி யான
அம்முத்து மாரி யாணை. 84
சட்டென வொன்று சொல்வேன்
சரிபிழை பார்ப்பா யப்பா கிட்டவாய் வருதற் கஞ்சிக்

55
கிழக்குறை கதவின் பின்னால் நிட்டையி லிருந்த வாறு
நிகழ்வன வறிவார் போல கட்டிய கையோ டுன்தாய்
கதையினைக் கேட்கின் றாளே. 85
செட்டியின் தாய் சினந்து கூறல் என்னநீ சொன்னாய் பெண்ணே
என்மகன் றனக்கு உற்ற இன்னலைப் பார்ப்ப தல்லால்
என்னைநீ பார்த்த பின்னர் வன்னமாய் வடைகள் சுட்டு
வைத்துளா ளம்மா ளென்று சொன்னவோர் பார்ப்பா னொப்பச்
சோதிடஞ் சொல்கின் றாயே. 86
குறத்தி கூறல் பிரமணன் றெழுதி விட்ட
பேருண்மை பிழைத்த போதும்

Page 35
56
கரமது காட்டு முண்மை
காட்டியே தீரு மம்மா
வரமது பெற்ற நாவால்
வழுத்துமிவ் வார்த்தை யெல்லாம்
தருவது முத்து மாரித்
தாயெனத் தெரிந்து கொள்ளே. 87
உன்மனந் திருப்தி யாக
உனக்குமோர் குறிசொல் பாங்கில் நின்மணம் நிகழு முன்னால்
நீநினைந் திருந்த பேர்கள் இன்மணம் முடித்த பின்னும்
இருதயத் திருக்கு பேரின் தன்மைககள் யாவு மிப்போ
சாற்றுவேன் சரிபார்ப் பாயோ. 88
இருமலச் செட்டி கூறல்
இடர்ப்படு கின்ற போதும்
இன்னலிற் சிக்கும் போதும்

57
கெடவரு புத்தி யல்லாற்
கெழுமிய செயல்தா னுண்டோ
உடனிரு மாதர் சேர்ந்தால்
உண்மையும் பொய்க்கு மென்பர்
படபடத் திடுதல் வேண்டா
பகருவா யென்கை பார்த்தே. 89
குறி சொல்லல்
ஆறி அருகிருந்து அறிகுறியைக் கேளுமையா கூறிக் குலுக்குகிறாள் குலமுத்து மாரியவள் நவராத்தி ரியொருநாள் நடுராத்திரி யதனில் தவறாய் நினைக்காதே சார்ந்தகதை
(சொல்லுகிறேன் கொடிதூக்கிச் சவுக்கெடுத்துக் குலமகளிர்
(சனம்விலத்த அடிதூக்கி வையாமல் அரியேற்குன் மேலொருத்தி கொங்கைக் குமுறலினைச் செங்கரத்தாற்
(பொத்துகையில்

Page 36
58
அங்கை அழகதனை ஆண்கமனே நீபார்த்தாய் வாயிற் குறுமுறுவல் வண்டிருந்த கண்பொருமல் ஆயும் அழகாமதில் அலையடிக்கக் கண்டனையே முருக்கம்பூச் செவ்விதட்குள் முல்லை யரும்பிருக்க எருக்கலம்பூ வேணியரும் இதற்கலவோ
(விரும்புகிறார் பாதக் கமலமலர் பால்நிலவிற் கூம்பாது ஒதும் அவளிடையும் ஒருநூலில் தொங்குதடா கார்த்திகைப்பூக் கைவிரற்குக் கணையாழி
(யேன்மகனே நாக்குளிர நானுரைப்பேன் நல்லவளின்
(பேருரைப்பேன் ஒமத்தீக் குள்ளிருந்த ஒர்புகையிற் பட்டாடை காமத்தீ யேன்வளர்ப்பாள் காளையரை
(யேன்வதைப்பாள் முத்து வடமாலை முழந்தாளில் முட்டுவதால் பித்துப் பிடித்தலவோ பெண்குலமுங் கத்துகுது மேனி மினுக்குதற்கு மேநாட்டில் தயிலமிலை

59
பூணின் பொலிவெடுக்கப் பூவுலகிற் கொல்லரிலை ஆண்சிங்க மதையடக்கி அதன்முதுகில் வீற்றிருக்க வான்தங்கு தேவருக்கும் வல்லமையு முண்டாமோ முப்புரங்கள் முன்னழித்த மூவிலைவேல் கையிருக்க தப்புவது முண்டோகொல் தாரணியில் வாளரக்கர் ஆடவரிற் சிறந்தவனே ஆண்குலத்தின் சித்திரமே நாடறிவேன் ஊரறிவேன் நங்கைபெயர்
(நானறிவேன் இவள்கொடுக்கு மோர்வருத்தம் இவ்வுலகில் தீராது அவள்தடுத்தா லல்லாது அழியாது அவ்வருத்தம் உள்ளி கமழுமையா உள்ளங்கைக் கிவளெடுத்தால் அள்ளி அவளளக்கும் அருளளக்குஞ் சித்திரத்தைக் காட்டும் வரதகரம் கண்டபடி அளந்தாலும் தேட்டம் அவள்தோட்டம் சீர்குலையா
(தெக்காலும் செட்டிப் பெருமகனே தீராநோ யல்லவிது முட்டில் அவள்பாதம் மூலியடா உந்நோய்க்கு குறியிற் பிழையிருந்தால் குறுக்கில் தடுத்தென்னைப் புரியக் கேளுமையா புகலிடுவேன் மேன்மேலும், 90

Page 37
60
இருமலச் செட்டி வினவுதல்
வாகடத்தின் நூலறியா மாவருத்த முள்ளதென நீயெடுத்துச் சொல்லுகிறாய் நேரிழையே
(நோயெடுத்த என்னுடலும் என்நெஞ்சும் இந்தவித மாளுமெனின் என்னபெய ராகு மிதற்கு. 91
செட்டியின் தாய் கூறல் பெயரினா லாவதென்ன பேய்பிடித்தா ரைப்போல் அயர்வினால் மாழ்கின்றா யன்றோ-செயவல்ல நாட்டில் உளசிகிச்சை நன்மருந்துங் கேட்டறிவாய் ஊட்ட உனக்கஃதி லொன்று. 92
குறத்தி கூறல் கனவிலும் நனவிற் றானும்
கண்ணிமை மடித்த போதும் நினைவிலு மடிநாக் குள்ளும்
நித்திரை கொள்ளும் போதும்

61
தினையள வேனும் பிறர்க்குத்
தெரியாது தேகத் துள்ளும்
முனையுமோர் வருத்தந் தன்னை
மொழிகுவர் காத லென்றே. 93
வேறு
சிங்க முதுகினி லேறிக் கொண்டு வந்த
தேவியைக் கண்டுநீ மையல் கொண்டாய்
(-அவள் எங்கு மிருப்பவ ளென்றறிந் தாயிலை
ஏதவ ரூர்பெய ரென்றறியாய்-நல்ல தொங்கு வடமுத்து மாலையணி சேலை
தோளிட கொங்கையுங் கண்டு கொண்டாய்
(-அவை தங்கு மெழிலுக்கு வேரெழி லாயுள
சங்கரி யின்பெயர் மாரி முத்தே. 94

Page 38
62
வான முகிலொடு வாதம் புரிகிற
மாமலை சூழ்பதி மாத்த ளைக்கண்
கானக் குயில்பயில் காவெழி லோடுறை கனக மணிப்பரற் கோவி லுக்குள்
ஞானமணிக் கண்ணுக் கான வுருவுடன்
நாளு முறைபவள் மாரி முத்து-அவள்
மோன நிலையிற்கண் மூடி யிருந்திடில்
மூவுல கங்களு மில்லை யாமே. 95
சேல்விழிக் கண்ணினள் சென்ற பிறப்பினைச்
செப்பிட நாத்தடு மாறு தையா பால்வழிந் தோடிடப் பால்கொடுத் தாளந்தப்
பார்ப்பனச் சம்பந்தப் பிள்ளை யிற்கும் மால்வழி யால்முறை வந்தவிதம் பார்க்கில்
மங்கை யிவளவர் தங்கையுமாம் நூல்வழி யால்மறை சொல்வழி யாலிவள்
நூதன மாய்ச்சிவன் பாதி யாமே. 96

63
இருமலச் செட்டி சினந்து கூறல் கண்ணினாற் கண்ட பெண்ணைக்
கடவுளோ டிணைத்துச் சொன்னாய் பெண்ணினாற் கொண்ட நோயாற்
பேயென நினைத்தாய் போலும் உன்னிந னுனது கூற்றை
உண்மையென் றுணர்ந்து நாளும் எண்ணிநா னிறப்ப தல்லால்
இவளைநா னடைவ துண்டோ. 97
தாய் கூறல் தெருவிலே வந்த பெண்ணைத்
தெய்வமென் றியம்பல் செய்தாய் உருவிலே பெண்மை தாங்கி
உலாவுதல் கடவுட் குண்டோ இருமலச் செட்டி சினந்து கூறல்,

Page 39
64
கருவிலே பிறந்தார்க் கன்றிக் கடவுளர்க் கேது காதல்
தெருளிலார் போல நீயுஞ்
செப்புதல் செய்கின் றாயே. 98
குறத்தி சொல்லுதல் அடையுமோர் வழியுஞ் சொல்வேன்
அதற்குள வடுக்குஞ் சொல்வேன் இடையுமோர் நெஞ்சு நோய்க்கும்
இருப்பதோர் மருந்துஞ் சொல்வேன் தடையுமோ ரடையா வண்ணம்
தடுக்குமோர் வகையுஞ் சொல்வேன் பெடையுமோர் தெய்வ மெனினும்
பிறந்தவர் அடைவ துண்டே. 99
வேறு வானுற வளர்ந்த மாமலை யடுக்கஞ் சேணுயர் மதிலரண் செவ்விதிற் புனைந்து

65
நாற்றிசை காக்க நடுவண் திகழும் மாத்தளைப் பதியெனும் மாநகர் மத்தியில் இரவி யெழுந்த இன்பத் துயர்ந்து பரவி யொளிரும் பாங்குடைப் பொன்முடிச் சிகர கோபுரத் திருத்தல மதனில் மகரப் புகுவாய் மன்னிய நுதலிடைத் திலகந் திகழச் சென்னியிற் றிகழும் வலம்புரி றாக்கொடி மணிசடை நாகம் தாழம் பூவொடு சந்திரப் பிறையணி ஏழே முலகமும் இவையொளி கொடுக்க காதணி கடுக்கன் கறணைப் பூவணி தோடுடன் வாளி சூழ்மயிர் மாட்டியும் மூக்கு மின்னியிற் புலாக்குந் தொங்க கீச்சு மணியொடு அட்டியல் சரடு பட்டெனு மணியும் பாங்குடைப் பூரா னட்டியல் கரிமணி கட்டிய கழுத்தும் கங்கணங் கொலுசு சம்பு நாதமும் சிங்க முகப்புரிச் செம்பொற் காப்புடன்

Page 40
66
வளையற் குலங்களும் வரிசையிற் றுலங்க விளைமுத் தாரமும் வெண்மணிப் பதக்கமும் சங்கிலி சரப்பளி சார்பஞ் சாயுதம் பொங்கு மார்பிடைப் பொலிந்தொலி கொடுக்க அரைமுடி சதங்கை ஒட்டி யாணமும் நிரைமணி மேகலை அரையினிற் றிகழ மயிலடி கொலுசு பீலியுந் தண்டையும் திருவடி யதனிற் சிலம்பொடு வார்க்க செம்பட் டாடையிற் சிறுமணி யிலங்க செங்கட் சேல்விழி திருவருள் சுரக்க மூவிலை வேலொடு முளரியம் மொட்டும் தாவில் வரதமும் அபயமுந் தாங்கி புன்னகை பூத்த மின்னெழிற் பாங்கில் மங்கை யொருத்தி சிங்கா தனத்தில் தேவ மங்கையர் ஏவலில் நிற்ப பூவொடு நறுவிரை பொன்மணி யடைப்பை சாமரை கவரி சந்தனம் புனுகு தாவில் கனிவகை சவ்வாது குங்குமம்

67
ஆலைச் சருக்கரை அரிசிப் பொங்கலும் நீலப் பட்டணி நிறையின ரேந்த வீர முரசமும் மணியுஞ் சங்கமும் வீணையும் யாழும் வேய்ங்குழல் சல்லரி ஆனையும் நடுங்க அவையொலி பரப்ப தண்ணளி சுரக்குஞ் சங்கரன் பாதியின் அன்பினுக் காளாய் அமர்வதற் காசை இங்குநீ கொள்ளின் இயம்புவ கேள்மதி: புவியில்; அறஞ்செய விருப்பமும் ஆறிய சினமும் நிரம்பிய நெஞ்சில் உரம்பெறல் கண்டபின் வள்ளுவன் வகுத்த மார்க்கமுந் தெரிந்து உள்ளும் புறமும் ஒருவழிப் படுத்திச் செந்தமிழ் வலையிற் சிவனைச் சிக்கிய அந்தமில் அறிவுடைச் சிந்தையர் காட்டும் அவ்வழிச் சேறல் அஃதே நல்வழி சைவமுங் கூறுந் தனிவழி யதுவாம். அதுவே, அன்பைப் பெறுதற் கன்புடைத் தவர்கள்

Page 41
68
இன்பந் துய்த்திட இயற்றிடு மார்க்கம் சரியை கிரியை யோகஞ் ஞானமென் றுரிய நான்கே உளவழி யாயினும் இருநீ ருலகம் இக்கா லதனில் பெருகிய மாற்றம் பெற்றதன் பயனாய்ச் சைவப் படிகளிற் சார்ந்திடத் தடைகள் உய்யும் வகைக்கவை ஊறுபல் செய்தலின் ஈழ நாட்டிடை இலங்குதொல் பதியாம் யாழ்ப்பா ணப்பதி யருளிய செம்மல் அறுமுக நாவலன் அரும்பெறற் சைவன் சிறுகச் செய்து பெருகக் கொடுத்த சைவ வினாவிடைச் சமய வொழுக்க மெய்நூன் வழிசெலல் மிகவுஞ் சாலது அன்றியும், சமய வொழுக்கஞ் சார்ந்துநீ நிற்கையில் உமையே உன்னையும் உலகையும் ஆட்டி இன்பமுந் துன்பமும் இவளே கொடுத்து அன்பென் பதினால் அதுசெய் வதுவென

69
அன்னவள் கருத்தை அறிந்திட முயன்று அன்னவட் கிணங்க ஆடுவை யாயின் மாரி முத்தெனும் நேரிழை யாளை நேரிற் காண்டலும் நினக்கது வெளிதே இன்னும், மணிநெடு மாட மாத்தளைப் பதியுறை தனிநெடு திருத்தலஞ் சார்குவை யாயின் ஏழு மண்டபம் எடுத்த கோவிலைச் சூழ விருக்குஞ் சுனைகளில் மூழ்கி இரவியைச் சேவல் இணைச்சிற கடித்துப் பரவி அழைக்குமப் பாங்குடை நேரத்து வானுறக் கட்டிய மாமணி யோதையும் சேணுற வொலிக்குஞ் சங்க நாதமும் தொண்டகப் பறையுந் தொங்கு மணிகளும் அண்ட மேழையு மழைத்திட வொலிக்கக் சுப்பிய கையொடு கோபுர வாயிலை மாப்பெருந் தவத்தினர் மாமறை யோதுனர் நோக்கரு மங்கையர் நுண்மா ணறிவினர்

Page 42
70
வாலை வயோதிபர் மலையகக் குறவர் ஆன அவரொடும் அதனையுங் கடந்து வானுற வளர்ந்த வில்வ மாமரம் வாயிலி லதனடி வளர்ந்துவேர் விடுதலின் மும்முறை யதனை மூர்த்தியாய் வணங்கிச் செம்மையில் நெஞ்சஞ் சீர்பெற் றானதும் அத்தாணி மண்டபம் அருகுவை யாங்கு அட்டாங்க மாக அன்பொடு இறைஞ்சி மும்முறை வீதியை முறைமையிற் சுற்றி மங்கலப் பொருளொடு வந்தவர் நிற்கும் நிருத்த மண்டபம் நிற்பவர் தன்னொடும் கருத்தினில் வாயினிற் கழறிநீ யவள்பெயர் கர்ப்பக் கிரகங் கரந்துறை தேவியைக் காண்வரை நின்று கைகூப் புவையேல் மால்வரை யதிர மறைபயில் வேதியர் வேத ஒளியொடு விளக்கேந் துகையில் ஆதி மூல மடைத்துள கதவம் கருமுகில் விலகிக் கதிரோன் காட்டும்

71
அருமையில் திறந்ததும் அரியணை மீது கொலுவீற் றிருக்குங் குலமுத்து மாரியின் பொலிவினைக் கண்டு புளகங் கொள்ளுவை அவளே ஆதி அவளே அகிலம் அவளே அருட்கடல் அன்னையு மவளே
ஆதலின், நின்குறை வேண்டுதல் நீதவிர்த் திடுவை உன்குறை அறிகுவள் உளமறி வாளவள் எங்கும் நிறையின் பத்தொடும் பொங்கு பூரணப் பொன்முத்து மாரியே. I 00
கவிக் கூற்று
கற்றோர் கருத்திற் கடையே னியற்றிய வற்றாத் தமிட்குற வஞ்சியிது-முற்றும் பிழையென் றறியினும் பேதைக் கிவள்பா லுளவன்பா லாயதிவ் வூற்று. 1 01

Page 43

நன்றி:
தேசபந்து, திரு. வி.ரி.வி. தெய்வநாயகம் பிள்ளை, கொழும்பு.
திரு. க. சச்சிதானந்தன், காந்தளகம், சென்னை,
யாழ்ப்பாணம்.
திரு. த. மாரிமுத்துச் செட்டியார், மாத்தளை.
திரு. இரா. சிவலிங்கம், கோயமுத்தூர்.
திரு. இ. சிவகுருநாதன், பிரதம ஆசிரியர், தினகரன், கொழும்பு. திரு. பொ. பாலசுந்தரம், கொழும்பு.
திரு. பொ. இராஜகோபால், ஆசிரியர்,
வீரகேசரி வார வெளியீடு, கொழும்பு.

Page 44


Page 45
|-
|-
*