கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் மணிவிழா மலர் 1984

Page 1
WUTij9. L595 BULUTFLUTT
- - - -
N
ܝ>
 
 
 
 

LITT 而 É吸町吕亚而凸而
匾I町而画而

Page 2


Page 3
யாழ். பல்கலைக்கழ
LUIäflLIss Br.
ID GOOf Gil
வெளி
“கலை இலக்கிய பத் 2-0.

கத் துணைவேந்தர்
வித்தியானந்தன்
T IDG)
7° tւ9 (8 திரிகை நண்பர்கள்”
5- 1984

Page 4


Page 5
தரிசனம்
எஸ். திருச்செல்வம் தொகுப்பாசிரியர் மணிவிழா மலர்
செயலாளர் "கலை இலக்கிய பத்திரிகை
நண்பர்கள்?
215-Ra9-பார்க் வீதி, கொழும்பு-5.
*ழம்வாழ் கல்வி நிலையமாக இதுவே, ஈழத்தி மாகவும் திகழ்கி
இப் பல்கலை பெருமையைப் ே அவர்கள். இவே கும் முதலாவது
இதனுல் டே
கல்வியின் க யானந்தன் அவ என்று பல்வேறு தசாப்தங்களாகத் வர். தமிழ் தொ தமிழர் வரலாற் தைப் பெற்றுள்ள
தமிழறிஞர்க கள் பலரின் பே ** மணிவிழா'வை மையை 'கலை நாம் பெரும் டே
பல்துறை அ கியதாக, மிகச் யிடவே விரும்பிே தைய 'காலநிலை வரத்து, தபால் தடைகளை ஏற்ப
பேராசிரியரின் கங்களுள் அடக்கி
| விடவும் முடியாது
மால் இயன்ற வ6 பெற்று மலரில்
பேராசிரியரில் வங்களில் மேலும் கோலும் என்ற தமிழ்த்தாயின் ட

தமிழ் மாணவர்களின் ஒரேயொரு உயர் த் திகழ்வது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். ன்ெ ஒரேயொரு தமிழ்ப் பல்கலைக்கழக ன்றது.
க்கழகத்தின் முதலாவது துணைவேந்தரான பெற்றவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ர, ஈழத்தில் துணைவேந்தர் பதவியை வகிக்
தமிழரும். ஒரேயொரு தமிழருமாவார்.
ராசிரியருக்கு இரட்டைப் பெருமையுண்டு.
காவலனுக விளங்கும் பேராசிரியர் வித்தி ர்கள் கலை, இலக்கியம், சமயம், நாடகம்
துறைகளின் வளர்ச்சியிலும் கடந்த நான்கு த் தன்னை நெருக்கிப் பிணைத்துக் கொண்ட ாண்டாலும், இனத் தொண்டாலும் உலகத் றில் தமக்கெனத் தனியான ஒரு இடத்
mriftirir.
ள் பலரின் நல்லாசானகவும், பேராசிரியர் ராசானகவும் துலங்கும் இப்பெருமகளுரின் வக் கொண்டாடும் வாய்ப்புக் கிடைத்த இலக்கிய பத்திரிகை நண்பர்கள்' ஆகிய பருகக் கருதுகின்ருேம்.
றிஞர்கள் பலரின் ஆக்கங்களை உள்ளடக் சிறப்பான ஒரு மணிவிழா மலரை வெளி னுேம். ஆனல் யாழ்ப்பாணத்தின் தற்போ 'யும். அதனல் ஏற்பட்டுள்ள போக்கு விநியோக சீர்குலைவுகளும் எமக்குப் பல டுத்தின.
ன் நாற்பதாண்டுகாலப் பணிகளைச் சில பக் விட முடியாது; சில பக்கங்களால் நிரப்பி து. இருப்பினும், குறுகியகாலத்தினுள், எம் ரை அறிஞர்கள் பலரது ஆக்கங்களையும் இடம்பெறச் செய்துள்ளோம்.
ன் வைரவிழா, நூற்ருண்டு விழா வைப
b பல மலர்கள் வெளிவர இம்மலர் அடி நம்பிக்கையுடன், மணி விழா மலரை
ாதங்களில் அர்ப்பணிக்கின்றேம்.

Page 6


Page 7
இலக்கிய
பண்டிதமணி சி. கனப
வாழ்த்
யாழ். பல்கலைக்கழக உப வேந்தர், ( யானந்தன் அவர்கள், பழைமையும் புதுடை
தமிழில் உள்ள பழைய இலக்கிய இலக்க
புதிது புதிதாகத் தோன்றும் நவீனங்க துணைவேந்தர் அவர்களின் வசனநடை வாய்ந்தவை. யாழ்ப்பாணத்துப் பாரம்பரிய
பூரீ ராமன் சக்கரவர்த்தியின் அரசிளங் சென்று காட்டில் வசிக்கும் முனிவர் ஆச்சிர
பூரீ கிருஷ்ணன் குசலரோடு காட்டில் ச அந்தக்காட்டுக் கல்விக்கு, நல்ல பாடத் விளக்குகின்றது 'கற்க கசடறக் கற்பவை
கல்விப் பரப்பைப் பாரதம் பார்க்கும்
உபவேந்தர் அவர்களின் கண் மரபுவழி ணுன கண்படைத்த ஒருவரை, உபவேந்தர டும்.
அவர்கள் அமைதியான முறையில் ய வருவது தமிழ்மக்கள் பெருமைப்படத்தக்கே
அவர்களுக்கு எடுக்கும் ம வருங்காலங்களில் அவர்க கால்கோள் விழாவாய்,
நல்லமுறையில் நடப்பதா பல்லாண்டு பல்லாண்டு வ வாழ்த்துரை வழங்குவோ
கலை இலக்கிய பத்திரிகை நண்பர்களுக்
காைசாலை வீதி, திருநெல்வேலி, பாழ்ப்பாணம். 22-4-1984

கலாநிதி,
திப்பிள்ளை அவர்களின்
துரை
பேராசிரியர், திரு. சுப்பிரமணியம் வித்தி மயும் இணைந்ததொரு நவீன சேதுபந்தனம்
ணங்களை, வரன் முறையிற் படித்தவர்கள். ளேயும் படிப்பதில் அவர்கள் தவறுவதில்லை.
தெளிவும், வசனநடைக்குரிய ஒசை நயமும்
வசனநடையைப் பேணுபவை.
குமரன். அவன் தம்பிமாரோடு நடந்து rமத்தில் மரநிழலிற் கல்வி பயின்றவன்,
5ல்வி பயின்றவன். திட்டம் அமைத்து, கல்வியின் நோக்கத்தை
என்கின்ற பொன்னன திருக்குறள்.
கண்வேறு. இக்காலத்து இரவற் கண்வேறு.
வந்த சொந்தக்கண். பாரதக்கண். கண் ாகப் பெறுதற்கு எத்துணைத்தவம் வேண்
ாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை நடத்தி தொன்று.
ணிவிழா, ளுக்கெடுக்கும் விழாக்களுக்கெல்லாம்
க என்று திருவருளை வேண்டுதல் செய்து 1ாழ்க வாழ்க என்று, DfTail
கு நன்றி.
இலக்கியகலாநிதி, பண்டிதமணி தி. கணபதிப்பின்னே

Page 8
தஞ்சாவூர் தமிழ்
துனைவேந்தர் டாக்டர் வ. அt
வாழ்த்துக்
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவ! நாடகங்கள் வழி இருபது ஆண்டுகளாக நடந்த இரண்டாவது உலகத் தமிழ் மாந1 பேறு எனக்குக் கிடைத்தது. சுருங்கிய ஆ கக் கருத்துக்களைக் கூறும் ஆற்றல் என்னை காது. ஆனல் சான்றுகள் இருக்கும். தற்க இயல்பு தமிழ்ப் பல்கலைக் கழகப் பேரவை னைக் கருத்துக்களில் இன்றும் காண இயலு
ஈழத் தமிழ் நாடக மறுமலர்ச்சிக்கு அ பாண - தமிழ்ப் பல்கலைக் கழகம் இரண் அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள், குறையாத மதிப்பு என்றென்றும் மனதில்
மணிவிழா மலருக்கு என் வாழ்த்துக்கள்
அரண்மனைக் கட்டடம்,
தஞ்சாவூர்.
9-3-84

p
ப் பல்கலைக்கழகத்
ப். கப்பிரமணியம் அவர்களின்
செய்தி
ர்கள் வெளியிட்டுள்ள ஆய்வுப்படைப்புக்கள்,
அறிந்திருந்தாலும் 1968-ல் ‘சென்னையில் ாட்டில்தான் முதல் முதலாக நேரிற்காணும் ல்ை பொருள் பொதிந்த சொற்களால் 鸟帝 க் கவர்ந்தது. அச்சொற்களில் சூடு இருக் முறையில் வாதம் அமைந்திருக்கும். இந்த 5 கூட்டங்களிலும் அவர்கள் கூறும் சிந்த
| fo ,
வர்கள் செய்துள்ள நற்பணிகள், யாழ்ப் டிற்கும் செயற்பாட்டுறவை நிலை நிறுத்த தனி மனித நிலையில் நெருங்கிய நட்பு,
மங்காது நிற்கும்.
ஆம், ஆய். சுப்பிரமணியம்

Page 9
ජේෆ්රෑrGLoථිෆෝර් (Jග්ර්‍ර්යයීත. (8 gaforfu, i er 6ňuo. 6.
வாழ்த்து
யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ே மணிவிழா நடைபெற இருப்பதைப் பற்றி
தாய் நாட்டின் தன்மைகள் பலவும் நாடான இலங்கையில் பண்டைய தமிழ்ப் படுவதற்குக் காரணமாகப் பேராசிரியர் ! ஆறுமுகநாவலர், பேரறிஞர் ஆனந்தக்கும லாம். இவ்வரிசையில் குறிப்பிடத்தக்க  ெ னும் ஒருவர் என்று கூறுவது மிகையாது.
பேராசிரியர் சு. வித்தியானந்தன் நல்ல பாத்மலர்களில் சூட்டிய மலர்கள் பல. ஆ குரிய ஒன்று என்பது யாவரும் அறிந்தது. நூல்கள் அத்துணையும் இந்நூலைக் குறிப்பு தமிழ் வரலாறும் பண்பாடும் சிறப்ப்ர்க எ கும் இந்நூல் அடிப்படைச் சான்ருதாரங்க நான் துணிந்து கூறுவேன்,
பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவ நோக்கிச் சென்றமையால் நாட்டுப்புறப் ஏற்படுத்தியுள்Tது. "மட்டக்களப்பு நாட்( எடுத்துக்காட்டாகும். நல்ல திறனய்வர் விளங்கும் இவர் இன்னும் பல தமிழ்ப்பணி என்பது நாடறியும்.
நாடுபோற்றும் நல்லறிஞராகத் திகழு றமைன்ய அவர் தம் துணைவேந்தர் இட் பொறுப்பேற்றபின்பு 鷺 பல்க இது. குறிப்புர்துத் தமிழ்ச் சிந்தனைகள் ஆ பிட்லாம். வாழிவிடில் துறைகள்ன் மேல்நி கப்பணித்தமீைதமிழ் மக்களின் நெஞ்சங்
நான் இலங்கை சென்றிருந்தபோது அ டனும் வரவேற்றுப் போற்றினர்கள். நல் வும், உயர் பண்பாளராகவும் காணப்படுகி காதவை. அவர்தம் மணிவிழா மிகச்சிறப் னெடும் ஆண்டுகள் வாழ்ந்து தமிழ்ப்பணி ராசப் பெருமான இறைஞ்சி வாழ்த்துகிே
அண்ணுமலப் பல்கலைக்கழகம், அண்ஞம்லே நகர், 344۔ 4 ۔ 4 مج۔
 

க் கழகத் துணைவேந்தர் சிட்டிபாபு அவர்களின்
ச் செய்தி
பராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின்
மட்டிலா மகிழ்ச்சி கொள்கிறேன்.
சிறப்பாகப் பெற்றுத் திகழ்கின்ற சேய் பண்புகள் இன்னும் மாருமல் போற்றப் சி. வை. தாமோதரம்பிள்ளை, தமிழ்வித்தக்ர் "ரசாமி போன்ற பெருமக்களைக் குறிப்பிட பருமக்களுள் பேராசிரியர்க். வித்தியானந்த
0 தமிழ் அறிஞர். அவர் தமிழன்னையின் வற்றுள் 'தமிழர் சால்பு' குறிப்பிடுவதற்
தமிழ்ப் பண்பாட்டினைப் பற்றி எழுந்த விடுகின்றமைய்ால் இவ்வுண்மை விளங்கும். ாழுதப்படவிருக்கின்ற எதிர்கால நூல்களுக் ளைக் கொண்டு திகழ்கின்றது என்பதன்ை
பர்களின் பார்வை நாட்டுப் புறப்பாடல்களை பாடல்களுக்கு நல்லதோர் எதிர்காலத்தை இப்புறப் பாடல்கள்’ இதற்கு நல்லதோர் ளர்ாகவும், நல்ல் ஆர்ர்ய்ச்சியாளர்ாகவும் Eகளைச் செய்வதற்குரிய தமிழ்ப்பேரறிஞர்
ம் இவர் நல்ல நிர்வாகியாகவும் திகழ்கின் ாறுப்பு எடுத்துக் காட்டுகின்றது."இவர் லைக்கழகம் 'ப்லி’ சிறப்புக்கிளை அடைந்துள் ங்கு மிகுதியும்'மலர்ந்ಸ್ಖಞ್ಞ குறிப் லிைப்பட்ட ஆய்வேடுகிளைத் தமிழில் வழ்ங் களில் நிலைபெற்ற செயலாகும்.
அவர் என்னை மிகவும் அன்புடனும் பண்பு ல தமிழறிஞராயும், வெல்லும் நிர்வாகியாக ன்ற இவர்தம் சிறப்புக்கள் எண்ணிலடங் புற நடைபெறவும், அவர் இன்னும் பன்
செய்யவும் எல்லாம் வல்ல ஞானமா நட றேன்.
சை. வே. சிட்டிபாபு

Page 10
வீரகேசரி திரு. இ. வே. டேவி
வாழ்த்து
தமிழனின் சிறப்பிற்கு மெருகூட்டும் மாகப் பல்கலைக்கழகம் கிடைத்தமை தமி வுக் கேந்திரத்திற்கு துணைவேந்தராகப் ே அதனையும் விடப் பெரும்பேருகவே அமை மெருகுபெற, இப்பல்கலைக்கழகமோ துணை மையை மேன்மையீட்டுகிறது.
கல்வியே தமிழரின் மிகப்பெரும் சொ றிந்த உண்மை இது. தமிழினம் கல்விச் வரலாற்றுப் புகழினை நிலைநிறுத்த மற்ெ டுத்தும் இயலாமல் போய்விடலாம். ஆகே பெருநலனைப் பேணும் நற்செயலன்ருே.
பேரறிஞர்களும் பெருமதிப்பு வைத்தி பெருமையடைய அவதரித்த தமிழ்த் தவ பார்வை, சாந்தம் வடியும் முகம், அமை தொனி இவை யாவும் துணைவேந்தர் பேர் ளான இயல்புகள். நிறைகுடம் ததும்பா உதாரணராகவே பேராசிரியர் விளங்குகிரு
பல்துறை வல்லுநர்களை உருவாக்கிச் கேந்திரத்தின் உன்னத, உயரிய பொறுப்பு சிரியர் வித்தியானந்தனின் மணிவிழா, ஈழ விழாவாகவே அமைகிறது. எனவே மணில் வேளையில், இப்பெருவிழாவினை எடுக்கும் அமைப்பின் மேலான சமுதாயப் பணியின்
வீரகேசரி கொழும்பு. 3-4-1984

ஆசிரியர் ட்ராஜ" அவர்களின்
ச் செய்தி
பாழ்ப்பாணத்திற்கு அதி உயர்கல்வி நிலைய ழருக்கு வாய்த்த ஒரு பேருகும். இந்த அறி பராசிரியர் சு. வித்தியானந்தன் கிஒடத்தமை கிறது. பல்கலைக்கழகத்தினுல் யாழ்ப்பாணம் வேந்தர் வித்தியானந்தன் அவர்களினல் மகி
த்து. காலமெல்லாம் அநுபவத்தினுல் கண்ட செல்வத்தைப் புறக்கணிப்பின் இனத்தின் றல்லாச் செல்வங்கள் ஒன்றிணைந்து கைகொ வே பேரறிஞரைக் கெளரவிப்பது சமூகத்தின்
ருக்கும் பேராசிரியர் வித்தியானந்தன் ஈழம் ப்புதல்வர்களில் ஒருவர். கருணை செறிந்த தியான, அடக்கமான ஆணுல் ஆழமான rாசிரியர் வித்தியானந்தனின் அணிகலன்க தென்ற நம் மூத்தோரின் முதுமொழிக்கு
.rחץ
Fமுதாயத்திற்களிக்கும் பல்கலைக்கழகமென்ற பினைத் தாங்கியிருக்கும் துணைவேந்தர் பேரா த்துத் தமிழ்ச்சமூகத்தின் ஒரு மணியான விழா நாயகரை மனதார வாழ்த்தும் அதே கலை, இலக்கிய, பத்திரிகை நண்பர்கள் னயும் போற்றுகின்ருேம் ,
இ. வே. டேவிட்ராஜா

Page 11
தினகரன் பிர திரு. இ. சிவகுரு வாழ்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ய்ானந்தன் அவர்களுக்கு யாழ்நகரிலே பு கின்றது. தமிழ் கூறும் நல்லுலகு முழுவது திண்ணம்.
பேராசிரியர் வித்தியானந்தனிடம் த இனத்தின் தலைமைத்துவம் ஏற்றிருப்பது விழா எடுக்கும் இம் முயற்சியே தமிழ் இ வத்தையும் அந்தஸ்தையும் அளிக்கின்றது லும் செயலினலும் வாழும் முறையினலுப் தையும் விளக்குபவர் இவர். தன்னிடம் யோரிடமும் தமிழ்ப் பற்றும் தமிழ் உண
ஈழத்தமிழர் வரலாற்றிலே பேராசிரிய கடந்த மூன்று தசாப்த வரலாற்றில் த இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் வளர் இனம் பாராட்டிப் போற்றுகின்றது. இதஞ் களில் இவர் குடிபுகுந்து வாசம் செய்கின்(
**வித்தி சொல் மிக்க மந்திரமில்லை.”* புத்கிTவிகள் மத்தியில் இவர் தாக்கம் ெ பேராசானின் ஆளுமை செல்வாக்கைச் ெ
தமிழினத்தின் சரிதையிலே இது முக்கி நிற்கின்றது. எப்பக்கம் திரும்புவது என் பெரியார் வித்தியர் போன்றவர்களின் வழி அவசியமாகி விட்டது.
மணி விழாக் காணும் பேராசான் šG என்று பிரார்த்திக்கின்ருேம்.
‘எம்மை நன்ருய் இறைவ தம்மை நன்ருய் தமிழ் செ
லேக்ஹவுஸ் 24-4-1984

தம ஆசிரியர் நாதன் அவர்களின்
த்துரை
துணைவேந்தர் தமிழ்ப்பேராசான் சு. வித்தி ணிவிழா என்னும் பெருவிழா எடுக்கப்படு மே இச்செய்தி கேட்டு மகிழ்வுறும் என்பது
மிழ் பயின்றவர்கள் பலர் இன்று தமிழ் இவரின் மாண்பினை எடுத்துக் கூறும். பெரு னம் இப்பெரியாருக்கு எத்துணை கெளர என்பதனை உணர்த்தத் தவருது. பேச்சின தமிழ்ப் பண்பின் உயர்வையும் தனித்துவத் பயின்ற மாணவரிடமும் உறவாடிய ஏனை rவும் ஏற்படுத்திய பெருமை இவருக்குண்டு.
1ர் உன்னத இடம் பெறுபவர். குறிப்பாகக் ன் முத்திரையைப் பொறித்தவர். இயல், ச்சி காண உதவியதனுல் இவரைத் தமிழ் ல்ை தமிழ்ப் பெருங்குடி மக்களின் உள்ளங் түГт.
என்று சொல்லக் கூடிய அளவுக்குத் தமிழ் சலுத்துகின்ருர். இவர்கள் சிந் த னை யி ல் Fலுத்துகின்றது.
கிய கால கட்டம். தமிழினமே சந் தி யில் ற கேள்வி முகங்கொள்கின்றது. ஆதலின் நடத்தல் இக்கால கட்டத்தில் மிக மிக
வாழ்ந்து தமிழ்ப் பணியாற்ற வேண்டும்
ன் படைத்தனன் ய்யுமாறே**
இ. சிவகுருநாதன்

Page 12
ஈழநாடு திரு. ந. சபாரத்த வாழ்
கற்றறிந்து அடங்கல்’ என்ற முதுடெ நான் காணும்போதும் அவருடைய பேச்ை
கல்வி, நல்லகுலம், நல்லகுணம், தன! எவ்வித செருக்குமின்றி எல்லோருடனும் சானின் நீண்டகால உயர்கல்விச் சேவைய வித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்மொழித்தொண்டில் அயராது உ கும் ஏற்பட்ட திடமான பாலம். ஆராய்ச் பேரறிஞர் வித்தியானந்தன் பற்றி நெடு வாய்ப்பு மிகப்பிந்தியே கிட்டியது.
சென்னையில் நடைபெற்ற அகில உல “ “ Tamil Studies av broad — A Symposiị1 என்ற நூல் வெளியானபோது, அதில் இ விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை என்னைப் சாதனைகள், இன்றைய விவகாரங்கள் மி சொல்லத் தகுதியுடைய ஒருவரால் தமிை லப்பட்டிருந்தது.
பேரறிஞர் ஹன்டி பேரின்பநாயகத்து போது, அவர் வெளியிட்ட கருத்துக்கள் காலத்தில் வளருமென்ற அவரின் நம்பிக்ை
தெய்வாதீனமாக கும்பிடப்போன பாணத்தில் மிகத் துணிவுடன் நடத்தப்ப கொந்தளிப்பான சூழ்நிலையில் தகவல் தரு னைத் தேடிவந்தார். வந்தார், கண்டார் அன்றுதொட்டு உருவான தொடர்பு இன் தினசரிக்கு, தமிழர்களின் ஒரேஒரு பல்கலை அளித்துவரும் பேருதவி, இவ்விரண்டு நீ வழிவகுத்து வருறகிது.
வெற்றி தோல்வி என்ற இரு கள்வன றல் பெற்ற பேராசிரியரின் மணிவிழா, அ நடைபெறுகின்றது. மெய்யறிவிற்கும், ஆ பேராசிரியரின் தொண்டு தொடர பல்லா துகின்ருேம்.
4|4|1984

ஆசிரியர் தினம் அவர்களின்
த்துரை
மாழியே பேராசிரியர் சு. வித்தியானந்தனை சைக் கேட்கும் போதும் நினைவுக்கு வருவது.
ம் போன்ற எல்லாச் செல்வங்களிருந்தும், பணிவுடன் நடந்து கொள்ளும் இப்பேரா பின் பயனை இன்று கல்வி உலகம் அனுப
உழைக்கும் அறிஞர் பழமைக்கும் "புதுமைக் ச்சியும் ஆர்வமான செயற்திறமும் கொண்ட டுங்காலம் கேள்விப்பட்டிருந்தும் சந்திக்கும்
கத்தமிழாராய்ச்சி மாநாட்டில் வெளிவந்த m. Edited by Xavier S. Thaninayagain, டம்பெற்ற பேராசிரியர் வித்தியானந்தனின்
பெரிதும் கவர்ந்தது. தமிழின் பண்டைய க விரிவாக சொல்லவேண்டிய முறையில், ழ விரும்பிப் படிக்கும் மக்களுக்குச் சொல்
|டன் இக் கட்டுரைபற்றிக் கலந்துரையாடிய பல. பேராசிரியரின் இத்தகைய பணி வருங் கை நிதர்சனமானதை நாம் கண்டுள்ளோம்.
தெய்வம் குறுக்கே வந்ததுபோல, யாழ்ப் ட்ட தமிழாராய்ச்சி மாநாடு பற்றி மிகக் குவதற்காக ஈழநாடு காரியாலயத்துக்கு என் h, வென்ருர் என்று சொல்லுமளவுக்கு, று இப்பத்திரிகைக்கு ஒரே ஒரு பிராந்தியத் }க்கழகத்தின் உபவேந்தர். வித்தியானந்தன் றுவனங்களுக்கும் நல்ல எதிர்காலத்துக்கு
ரச் சமநோக்குடன் சமாளிக்கும் பேராற் அவருடைய வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில் ப்வாற்றலுக்கும் உதவும் பெருமை படைத்த ண்டு வாழ்கவென, அவரை மனமார வாழ்த்
ந. சபாரத்தினம்.

Page 13
தினபதி, சிந்தாம
பிரதம திரு. எஸ். டி. சில
வாழ்:
அறுபது வயது எல்லோருக்கும் தான் தொடர்புடைய நண்பர்களும், உறவினர்க டாடுவதென்பது எல்லோருக்கும் கிடைக்க
இந்த அரும் பாக்கியம் பேராசிரியர் யிட்டு நான் மிகவும் பெருமகிழ்ச்சி அடை
பேராசிரியரின் மணிவிழாவை நண்பர் ஆசானுகக் கொண்டு வாழ்க்கையின் பல் நூறு மாணவர்களும் சேர்ந்து கொண்டா இரட்டிப்பு மடங்காகிறது.
பேராசிரியருக்கு இருக்குமொரு சிறப்பு தலைமுறைப் பேராசிரியர் என்பதாகும். இ யிருக்கிறேன்.
இந்தச் சிறப்போடு கூட மற்ருெரு ! இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட முதலாவ துணைவேந்தர் இவரே என்பதாகும். இப்பட சான காரியமல்ல. இதற்கு முதலாவதாக யும், மூன்ருவதாக அதிஷ்டமும் வேண்டும்
இந்த மூன்று பேறுகளையும் பெற்ற வித்தியானந்தன் மேலும் பல ஏற்றங்களை வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திக்கி
பேராசிரியரின் மணிவிழாவை நடத்த பேற்றிருக்கும் “கலை இலக்கிய பத்திரிை பாராட்டினுலும் தகும். நல்ல பணிகளைச் இனிய நண்பர்களைக் கொண்டது இந்த அ விட்டார்கள். அவர்களையும் பாராட்டுகிறே
.30-4-84

aரி பத்திரிகைகளின் ஆசிரியர் பநாயகம் அவர்களின்
த்துரை
ா வருகிறது. ஆனல், அதில் அவரோடு ளும், உற்றர்களும் ஒரு விழாவாகக் கொண் க்கூடிய பாக்கியமல்ல.
சு. வித்தியானந்தனுக்குக் கிடைத்திருப்பதை கின்றேன்.
களும் அன்பர்களும் மட்டுமன்றி, அவரை வேறு துறைகளில் உயர்ந்து நிற்கும் பல "டுகிறர்கள் என்னும் போது மகிழ்ச் சி
அவர் சுவாமி விபுலாநந்தரின் இரண்டாம் தை நான் கட்டுரையில் விளக்கமாகக் கூறி
சிறப்பும் அவரை வந்தடைந்திருக்கிறது. அது து தமிழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது டியான ஒரு முதன்மையைப் பெறுவது இலே தெய்வ அருளும், இரண்டாவதாக திறமை
முன்னணித் தமிழறிஞரான பேராசிரியர் ப்பெற்று, நாடுபோற்றும் வண்ணம் வாழ
ன்றேன்.
முன்னின்று சகல காரியங்களையும் பொறுப் க நண்பர்கள்’’ அ  ைம ப்பை எவ்வளவு செய்வதில் முன்னுேடிகளாகத் தி கழும் அமைப்பு என்பதை, இதிலும் நிலைநாட்டி
c
எஸ். டி சிவநாயகம்

Page 14
இலங்கை ஒலிபரப் தமிழ்ச்சே6ை
திரு. வி. ஏ. திருஞா வாழ்த்
நம் நாட்டுத் தமிழ் மக்களின் கலை, துறைகள் அனைத்திலும், தன் சிறப்புப் ப முறையில் அழுத்தமாகப் பதித்துவிட்ட, ! யானந்தன் அவர்கள். அவருடைய மணிவி தில் கொண்டாடப்படவேண்டிய ஒன்று.
பொன் வைக்கவேண்டிய இடத்தில் ! ரிகை நண்பர்கள் யாழ்ப்பாணத்தில் அவரு தரக்கூடிய பெரிய காரியம். இந்த வருட போகும் மணிவிழாக் கொண்டாட்டங்களு மனதார விழைகிறேன்.
கல்வித்துறை என்ருல், பிறக்கும்போே ஆரூடம் பார்த்ததுபோல் “வித்தியா-ஆன. ஆழமான பழைய குறிஞ்சி இலக்கியங்களை படித்து ரசிக்கவைப்பன அவர் நூல்கள். நாடகத்தின் இன்றைய வளர்ச்சிக்கு வித்தி துறையின் வனப்பு வர்ணங்களெல்லாம் அ கம் காட்டுகின்றன. பண்டைய செந்தமிழ் கிராமியக் கலைகளுக்கும் ஏற்படவும், நவீ நாட்டுக் கூத்துகளுக்குக் கிடைக்கவும் தன் < பையும் நேரத்தையும் வரைவிடாமல் வானெலி நிலைய ஆருவது கலையகத்தில் கூத்து ஒத்திகையிலும் ஒலிப்பதிவிலும் மாணவர்கள் இதில் நடித்தார்கள். பேரா தார். நாடகம் லயப்பிடிப்புடன் கவர்ச்சி( அது ஒரு புதுமை அனுபவம், பசுமை சொல்லலாம்.
பேராசிரியரின் பன்முகப்பட்ட ஆற் செய்வதற்கு மேலும் ஊன்றுகோலாக வி கோலாக அமைந்திடவேண்டும்!
தமிழ்ச்சேவைப் பணிப்பாளர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம். 24-4-1984

புக் கூட்டுத்தாபன பப் பணிப்பாளர் னசுந்தரம் அவர்களின்
துரை
இலக்கிய, கல்வி, சமய பண்பாட்டுத் ணிகளின் தனி முத்திரையை இந்தத் தலை மணியான மனிதர் பேராசிரியர் க. வித்தி ழா நாடளாவிய முறையில், பரந்த விதத்
பூ வைப்பதுபோல கலை, இலக்கிய, பத்தி நக்கு மணிவிழா எடுப்பது மிகுந்த மகிழ்ச்சி ம் முழுவதும் பல்வேறிடங்களிலும் தொடரப் க்கு இது அச்சாரமாக அமையவேண்டுமென
தே பெற்ருேருக்கு விஷயம் தெரிந்துவிட்டது. ந்தன்' என்று பெயர் வைத்துவிட்டார்களே! ாயும் முத்தமிழ்ச் சுவைகளையும் ஆனந்தமாகப் கலைத்துறை என்றதும், இலங்கைத் தமிழ் நியானந்தனே முப்புசக் கண்ணுடி. நாடகத் ந்த முப்புசக் கண்ணுடியின் மூலமே துலக் )க் கலைக்கு அளிக்கும் அந்தஸ்து, பாமர ன நாடக ரசனைக்குச் சமமான அபிமானம் ஆக்கத் திறமையை மட்டுமன்றி உடலுழைப் செலவிட்டவர். சில ஆண்டுகளுக்கு முன் "கன்னன் போர்’ மட்டக்களப்பு நாட்டுக் அவரைக் காண நேர்ந்தது. பல்கலைக்கழக சிரியர் சூத்திரதாரியாக நின்று நடத்திவைத் யாடு அமைந்தது கண்டு வியக்காதாரில்லை. நிறைந்த நினைவு. இன்னும் எவ்வளவோ
றல் நம் மக்களின் மனப்புலன் செழிக்கச் ாங்கும்வண்ணம் அவரின் மணிவிழா துர்ண்டு
வி. ஏ. திருஞானசுந்தரம்

Page 15
uTypti
பல்கலைக்கழகத்
பேராசிரியர் சு.
மணிவிழ
“கலை இலக்கிய பத்திரி.ை
Off-Set by SPARTAN.Nallur
 

பாணப்
துணைவேந்தர்
வித்தியானந்தன்
DIT LD6) fif
க நண்பர்கள்” வெளியீடு

Page 16


Page 17

வகுருநாதன்
வநேசச்செல்வன்

Page 18


Page 19
அறிமுகம்
இ. சிவகுருநாதன் (வழக்கறிஞர்) பு தலைவர், இலங்கை உழைக்கும் பத்தி காவலர், கலை இலக்கிய பத்திரிகை
தமிழ் மணம் கமழ்கின்ற தங்கத் திரு நகராம் யாழ்நகரிலே தமிழ்ப் பெரியார் ஒருவருக்கு விழா எடுக்கின்ருேம். ஆம்! எழுத்தறிவித்த இறைவனுகும் எங்கள் குரு தேவருக்கு மணிவிழா எடுக்கின்ருேம். யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணை வேந்தராக வீற்றிருந்து கல்விச் சாம் ராஜ்யத்திலே தமிழ் மக்களின் நல்லாசி களுடன் அரசோச்சுகின்ற தமிழ்ப் பேரா சிரியர் கலாநிதி. சுப்பிரமணியம் வித்தி யானந்தனின் அறுபதாண்டு விழாவினை நாம் குதூகலமாகக் கொண்டாடுகின்ருேம். மே. மாதம் 8-ம் திகதி இவருக்கு 60 வயது **இன்றுபோல் என்றும் இரு’’. அறிவும் ஆற்றலும் அன்பும் பண்பும் மிக்க அரு நிதியமாக தமிழர் மத்தியில் இவர் நீடு வாழட்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை.
அறுபது என்ருல் முதுமையின் ஆரம் பமா? இல்லை. இன்றைய விஞ்ஞான உல கிலே முதுமைப் பருவமடைய இன்னும் எத்தனையோ ஆண்டுகள் கழியவேண்டும். இளமை எழிலுடன், இளமைத் துடிப்புடன், இளமை உணர்வுடன் பிரகாசித்துக் கொண் டிருக்கும் பேராசான் நிச்சயம் பல்லாண்டு வாழ்வார்; வாழவும்வேண்டும். இவர் பணி யால் தமிழ் வளரவேண்டும் தமிழ் தழைத் தோங்கவேண்டும்.
முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கண்ட அதே பேராசானைத்தான் இன்றும் காண்கின்றேன். தலையில் ஒரளவு நரை. அவ்வளவுதான். முப்பது ஆண்டுகளுக்கு மேல் கழிந்து சென்ற சுவடே தெரிவதில்லை. பேராசிரியர் மீதுள்ள அன்பும் வாஞ்சையும் பக்தியும் எனது கண்பார்வையை மங்கச் செய்யலாம். குடு குடு கிழவனும் பேரப்

பிரதம ஆசிரியர், தினகரன். ரிகையாளர் சங்கம்.
நண்பர்கள்.
பிள்ளை கண்ட தன் புத்திரனேக் கண்டதும் அவனை குழந்தையாகவே பார்த்து குழந் தைப் பருவத்தில் காட்டிய அதே அன் பையே காட்டுவது இயற்கை. இந்த வகை யிலே பேராசிரியரை நான் பார்க்கவில்லை. அவர்மீது அன்புண்டு; பக்தியுண்டு; உயிரை யும் கொடுக்கும் திடசித்தமும் தியாக உணர்வும் அவரது அன்புக்குப் பாத்திர மான சில மாணவரிடம் உண்டு. ஏனென் ருல் நாம் இல்லாத போதும் எம்மை இவர் நலிய விடமாட்டார் என்ற நம்பிக்கை இவர்களிடம் உண்டு. என் கண்பார்வையும் மங்கலாம். நான் பிறந்தும் அரை நூற் ருண்டு கழிந்துவிட்டதல்லவா? ஆஞல் என் கண்ணுேட்டம் மாறவில்லை. கட்புலன் மாற வில்லை. பேராசிரியரை அன்று நான் கண்ட கோலத்தில்தான் காண்கின்றேன்.
அப்போது நானும் பேராசிரியர் சிவத் தம்பியும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி யில் அறிஞர் ஏ. எம். ஏ. அளிவிடம் படித்துக்கொண்டிருந்தோம். அறிஞர் அஸிஸ் ஊட்டிய மொழிப்பற்றின் காரண மாக நாம் இருவரும் தமிழ் அறிஞர்கள் பெரியார்களோடு தொடர்பு கொள்வதுண்டு. கல்கி கிருஷ்ணமூர்த்தி, ம. பொ, சிவஞான கிராமணியார், ரா.பி. சேதுப்பிள்ளை போன்ற தமிழ் அறிஞர்கனை ஸாஹிராவுக்கு அழைத்து வந்த காலம் அது.
அக்காலத்தில்தான் லண்டனில் கலா நிதிப்பட்டம் பெற்றபின் நாடு திரும்பி யிருந்தார் பேராசிரியர் வித்தியானந்தன். அப்போது தினகரனில் 'இன்பமுடன் வாழ் வோம் இந்த நாட்டிலே என்னும் எண்ணம்’ என்ற தலைப்பில் பிரயாணக் கட்டுரைகளை எழுதித் தமிழ் இலக்கியத்தில் புதிய உரு

Page 20
வம் ஒன்றினை எம்மவருக்கு அறிமுகப் படுத் திக் கொண்டிருந்தார். தனது மாணவர்களே பின்னர் தினகரனின் ஆசிரியர்களாகப் போகின்றர்கள் என்ற தூர திருஷ்டி இருந் ததனுல் தான் தினகரனில் எழுதினரோ?
அக் காலம் நேற்றைய தினம்போல் இருக்கின்றது. அதற்குள் எத்தனை ஆண்டு கள் எமக்குத் தெரியாமலேயே விரைந்து சென்று விட்டன? எத்தனை மாணவர்கள் இவரது அரவணைப்பில் வளர்ந்து பெரிய வர்களாகி மறைந்தும் விட்டார்கள். காலம் சுழல்கின்றது, சுழல்கின்றது, திடீர் திடீ ரென மாற்றங்கள், இன்றையது நாளை இல்லை. பேராசிரியரின் வாழ்க்கையிலும் இந்நியதி பிரதிபலிப்பதனை நாம் காண முடிகிறது. இரண்டு மூன்று பரம்பரைகளின் இணைப்புப் பாலம் இவர். தொடர்பு சாத னம் இவர். இளம் தலைமுறைகள் இவர் கைக்குள் சென்று வெளியேறியதனுல் இவற் றுக்கிடையே இவரே தொடர்பு அமைப்பாக இன்றும் இருக்கின்ருர். பண்டிதத் தமிழே சிறந்தது; எனையவை இழிசனர் வழக்கு என்பவர்களிலிருந்து புதுக்கவிதையே சிறந்த இலக்கிய வடிவம் என்பவர்கள் வரை இவரி னுரடாக அறிவுபெற்று வெளியேறியவர்க ளாவர். 'ஊருணி நீர் நிறைந்தற்றே உலக வாம் பேரறிவாளன் திரு'. என்று தமிழ் மறை கூறும். பேராசிரியரின் கல்விச் செல் வம் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது ஊருக்கும் உலகிற்குமே பயன்பட்டன. பின்னே இடம் பெற்றுள்ள கட்டுரைகளைப் படிக்கின்ற பொழுது பேராசிரியர் இலங் கைத் தமிழரல்லர், இவர் உலகத் தமிழர் என்பது தெளிவாகும். இவர் சாயல் படி, யாத உலகத் தமிழ் இயக்கம் எது உண்டு? இவரோடு தொடர்பில்லாத உலகத் தமிழ்த் தலைவர் எவர் இருக்கின்ருர்?
மணிவிழா ஏற்பாடு பற்றிய வரலாறே இவர் ஒரு பொதிகை மலை போன்றவர்; நற்குணங்கள் உரு எடுத்த பெருந்தகை; முன் மாதிரியாகக் கொள்ள வேண்டிய தமிழ் அறிஞர்; தமிழ் இனத் தலைவர் என்பதனை உண்ர்த்தும்.

2 -
எத்தனையோ தமிழர் பேராசிரியர்க ளாக பலதுறைகளிலும் இருந்திருக்கிருர்கள். தமிழ்த்துறைப் பேராசிரியர்களாகவும் இருந் திருக்கிருர்கள். அறுபது வயதையும் அடைந் திருக்கிருர்கள் இவர்களுடன். ஆணுல், எங்கள் பேராசிரியர் வித்தியானந்தனுக்கு ஏன் சிறப் பிடம் அளிக்கப்படுகிறது? மணிவிழா எடுக்க வேண்டுமென்று எதற்காக மாணவர்கள் துடிக்கின்ருர்கள்? இங்கேதான் பேராசிரியர் வித்தியரின் சிறப்புத் தெளிவாகின்றது.
மாணவர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் பேராசிரியர் வித்தியானந் தன். ஈழத் தமிழ் இலக்கியத் துறையில் புதுமை, தேசியம் யதார்த்தம் ஆகிய இயல் புகள் இடம்பெற்று இலக்கிய வரலாற்றிலே திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது என்ருல் இதன் மூல காரணகர்த்தா பேராசிரியர் சு. வி. எனலாம். புதுமை இலக்கியம் படைத்தபோது நம்மவர் சிருஷ்டிகளில் மண் வாசனை தேசியத்தன்மை இடம் பெறச் செய்த ஒரு சந்ததியை உருவாக்கியவர் இவரே. கைலாசபதி, சிவத்தம்பி, தில்லை நாதன், சண்முகதாஸ், உவைஸ், போன்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவரது சிந்தனை வழிப்பட்டே புதுமை நாடினர். பழமைக்குப் புது மெருகூட்டினர்.
விபுலானந்த அடிகள் பிரான்சிஸ் கிங்ஸ் பொரி, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோரின் வழிவழி வந்தவர் வித்தியானந் தன் இலக்கணத்தில் ஒரு விற்பன்னர். இதே போலப் பழந்தமிழ் இலக்கியத்திலும் பாண் டியத்தியமுடையவர். எனினும் பேராசிரியர் சு. வி. புதுமையையே விரும்புபவர். புதிய இயல்புகளை பண்டைய இலக்கிய ஆராய்ச்சி யில் காண விளைபவர். இதனுலேயே புதுமை இலக்கியம் படைத்தோருக்கு உறுதுணையாக இருந்தார். பண்டைய கலைப் பொக்கிஷங் களான கிராமியக் கூத்துக்களை மேடையேற் றிய போதும் புதுமெருகூட்டி அழகுபடித் தினர். பழைமையில் புதுமை காணும் திறன் இவரிடம் உண்டு. கர்ணன்போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை ஆகிய நாட்டுக்கூத்துக்களை பல்கலைக்கழக மாணவர் களைக் கொண்டு அரங்கேற்றிய பொழுது இவ்வுணர்வு தெளிவாகிற்று.

Page 21
பேராசிரியர் அசல் தமிழன். பண்புமிக்க வர். அரூங்குணங்கள் உருவெடுத்தாற் போன்றவர். தனக்கென வாழாப் பிறர்க் குரியாளர். பிறர் நலனே தன் நலன் என்று எண்ணுபவர். தியாக உணர்ச்சி உள்ளவர். தன் இன்பத்தைத் தியாகம் செய்து மாண வன் இன்புறச் செய்பவர். குழந்தை கையில் இருக்கும் எச்சிற் பண்டத்தை எத்தித்திரி யும் காக்கை பறித்துச் செல்வதுபோல தாமே மாணவனிடம் தட்டிப் பறிக்கும் ஆசிரியர் கள் சிலர் உலவிடும் இக் காலத்திலே, இத் துணைத் தியாக உள்ளம் கொண்டவர்களை தெய்வத்தின் இடத்தில் அல்லவா வைக்க வேண்டும்?
மாணவனக இருந்த பொழுது இவரின் ஆரிய குணங்களை நாம் புரிந்து கொள்வ தில்லை. நாம் நினைத்தபடி நடக்கவில்லை. யென்றல் பேராசிரியர் விரும்பாதவற்றை யும் நாம் செய்வதுண்டு. Gufyrrárflu 1Crfr வாயில் சுங்கான வைத்தபடி எம்மைப் பார்த்துச் சிரிப்பார், கோவிப்பதே இல்லை. சிக்கலுக்குள் அகப்பட்டபோதும் அவரிடம் தானே போகவேண்டும்? தமிழ் மாணவர் டியூடோறியல் எழுதாவிட்டால் வரலாற்றுப் போரசிரியர் கார்ள் குணவர்தன மான வரைப்பற்றி தமிழ் விரிவுரையாளரான இவரிடமே புகார் செய்வார். பேராசிரியர் சு. வி. 'இரண்டொன்ற்ை எழுதிக் கொடுங் களன்; எழுதிக் கொடுத்தால் உங்களுக்குத் தானே நல்லது' என்று புத்திமதி கூறி
நல்வழி காட்டுவார். நாம் கஷ் டத் தி ல்.
அகப்பட்டபோது எமக்குச் செய்ய வேண் டிய உதவியைச் செய்து நாம் நா னிக் குனிந்து நிற்கச் செய்து விடுவார்.
சார்ஜன்ட் மோர்லியைஜவலின் எறிந்து மாணவர் தாக்கிய போது பலரைக் கைது செய்ய பொலிஸார் முயன்ருர்கள். தனது தமிழ் நாடக ஒத்திகையில் இருந்ததாகக் கூறி பல தமிழ்மாணவர்களை பேராசிரியர் தப்ப வைத்தார். அப்போது தமிழ் மாணவர் பேர வையின் உபதலைவராக நான் இருந்தேன். நானும் இதனுல்பயனடைந்தேன்.
இது அ ல் ல வேர் பெருந்தன்மை. இவரல்லவோ கனவான். நெற் பயிரோடு களையும் வளர்வதுண்டு. நெற்பயிர் வளர்

-سسة . 3
வதற்காக விவசாயி இக்களையைப் பிடுங்கி எறிவதுமுண்டு பேராசிரியரோ வஞ்சகம் செய்வதில்லை. களை போன்ற மாணவனும் இவரால் பயன் பெற்ருர். பலனை எதிர் பார்த்து எதையும் செய்வதில்லை. கர்னனைப் போல அள்ளி அள்ளிக் கொடுத்து கை தேர்ந்தவர். கர்ணனின் இலட்சியப் போக் கில் கொண்ட பெரும் மதிப்பினுல் தான் கர்னன் போர் என்ற கிராமியக் கூத்தை மெருகூட்டி அரங்கேற்றினரோ என்றும் நாம் சிந்திப்பதுண்டு. பேராசிரியர் கொடுத் துக் கொண்டேயிருந்தார். வாங்கி விட்டு அவரைக் கைவிட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறர்கள். 'மேலது கீழதாய், கீழது மேலதாய் மாறிடும் தோற்றம் என்பதற் கமைய இன்று பேராசிரியர் இருக்கும் சூழ லும் மாறித்தான் தோன்றுகிறது. கிட்ட நின்று பயனடைந்தவர்கள் இன்று எங்கே? பயன் பெற்றுவிட்டுத் தூர நிற்கின்றர்கள். தூர நின்றவர்கள் பயன் பெருமலே கிட்ட நிற்கிருர்கள். உ  ைவ ஸ், சண்முகசுந்தரம் சிவத்தம்பி, வேலுப்பிள்ளை, தில்லைநாதன், சண்முகதாஸ், பூலோகசிங்கம் போன்ற ஒரு சிலரே பக்கபலமாக நிற்கின்ருர்கள். பிறர் எங்கே?
ஆனல் பேராசிரியரோ பெரும் மலையாக எல்லோருக்கும் பொது மலையாகத் தி க ழ் கின்ருர், கண் ண பி ரா ன் ஆவினத்திற்கும் புகலிடம் அளிக்க கையிலேந்திய கோவர்த் தனமலை போலக் கஷ்டம் வந்த காலே எல் லோரும் பாதுகாப்புடன் நிற்கக்கூடிய புக லிடமாக நிற்கின்றர் பேராசிரியர். என் கடன் பணிசெய்து கிடப்பதே என்பதல்லவா இவரது இலட் சி யம்? இலட்சியத்திற்காக வாழ்கின்ற இலட்சியபுருஷர் இவர், இதனுற் முன் வெற்றிவாகை சூடிக்கொண்டே செல் கின்ருர்.
மாணவர்களை தன் குழந்தைகள் போலக் கருதுபவர் போராசிரியர். மாணவரோடு நெருங்கிப்பழகுவதை விரும்பாத பழமை போற்றும் விரிவுரையாளர் சிலரும் இருக்கத் தான் செய்தனர். இவர்கள் எங்கே? யார் இவர்களை நினைக்கின்றர்கள்? உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர் நிலைகள்

Page 22
பெறுவதில்லை. காலம் இதனை நிரூபித் து விட்டது. பேராசான் வித்தியரின் முறை இன்று பாராட்டப்படுகின்றது. சொல்லிலும் செயலிலும் பண்பைக்காட்டுபவர். நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் சான்பர். அது போல நல்குடிப் பிற த் தா ர் பெருமை செயலில் தோன்றும் என்பதற்கு பேராசிரி யர் வித்தியரின் வாழ்க்கை சிறந்த எடுத் துக்காட்டு.
மாணவரைப் பொறுத்த வரையில் பாரபட்சம் காட்டுவதில்லை. வருங்காலத்திட் டங்கள் தீட்டுவதுமில்லை. என் வகுப்பில் பேராசிரியரின் தங்கையர் இருவர் பயின்ற னர். அண்ணன் தங்கையர் என்று பலர் அறியாத வகையில் அவர் நடந்து கொண் டார். எமக்கு வாலிபப் பருவம். பல தமிழ் மாணவர்களுக்கு முதன்முறையாகப் பெண் களோடு பேசிப்பழகும் சந்தர்ப்பம் அப் போது தான் கிடைத்திருந்தது. அதுவும் காதல் அரும்பும் குறிஞ்சி நிலத் தி லே சாதாரண மாணவியரைப் போலவே சகோ தரிகளையும் பேராசிரியர் நடத்தினுர். அவர் களை யார் என்று அறியாத சில மாணவர் கள் கைக்கிளை காதல் உணர்வால் வாடி, னர். அண்ணன் விரியுரையா6ாராக இருப் பது தெரிந்தால் அச்சவுணர்வல்லவா ஏற் படும்? தங்கையர் என்று அறிய வந்தபோது தினகத்தார்கள். பயத்தால் உ ணர் வே மறைந்து விட்டது. இவ் வ ச் சத் தி ஞலே வாழ்க்கைப் படகை மாற்றிக்கொண்டவர் சளும் இல்லாமலும் இல்லை. இவ்வாருகப் பேராசிரியரின் பெருமை யை எடுத்துச் சொல்லப் போனுல் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
மாணவர் உள்ளங்களில் இவர் குடி புதந்து இருப்பதனலே குருதேவராகவே மாணவர் இவரைக் கொள்கின்றனர். இவ குக்கு மணிவிழா என்ருல் தமக்கே விழா என்ற குதூகல உணர்வே ஏற்படுகின்றது. இவ்விழா வெற்றி காண்பதற்கு இவ்வுணர் வே காரணம். விழாவின் வெற்றிகண்டு நாம் மகிழ்வெய்துகின்ருேம். பெருமிதமடைகின் ருேம். வெற்றியில் பங்கும் கொள்கின்ருேம். நீடு வாழ்க! வெல்க என்று வாழ்த்துகின் ருேம்.
இங்கு மிகவும் நுணிப்பாகக் கவனிக்க வேண்டியதொன்றுண்டு. பேராசிரியர் கலா நிதி வித்தியானந்தன் அவர்கள் மக்க ள் போற்றும் பேராசிரியராக விளங்குகின்ருர், உலகத்திலே எத்தனையோ பேரரசிரியர்கள் இருக்கின்gர்கள். அவர்கள் அறிவுலகிலே மேதைகளாக விளங்குகின்ருர்களேயொழிய பொதுமக்கள் உலகில் மதிக்கப்படுகின்ருர்

4 -
களில்லை. பேராசிரியர் வித்தியானந்தன் கற். ருே?ர் உலகத்திலும் மற்ருேங்.உலகத்திலும் மதிப்புப் பெற்றிருப்பதுவே சிறப்பு. வித்தி யானந்தனை எவ்வித அறிமுகமுமின்றியே பொதுமக்கள் அறிந்து கொண்டிருக்கின்ற னர். காரணம், அவர் பொதுமக்கள் மித்தி யிற் பொதுமக்களுக்காகக் கலைத்தொண்டும் தமிழ்த்தொண்டும் செய்து வருகின் ருர் . தனது பணத்தையும் நேரத்தையும் உடல் நலத்தையும் பாராது சுற்றிச்சுழன்று தமிழ்ப் பணி செய்யும் வேருெருவரை நாம் காண இயலாது. அறிஞர் பாராட்டையும், மாண வர்கள் மதிப்டையும், அரசின்கணிப்பையும் பொதுமக்கள் செல்வாக்கினையும் இவரைப் போல வேருெருபேராசிரியரும் பெறவில்லை.
பேராசிரியரின் அறிவுத் துறைத்தகமை யை வகுத்துக் கூறும் தகுதி எமக்கில்லை. பேராசிரியர் எங்கே? நாம் எங்கே? கனப் பரிமாணம் செய்ய எம்மால் இயலுமா? என்ருலும் வருங்கால ஆய்வாளர் தேவைக் காகப்பதிவேடு ஒன்றினை உருவாக்கும்போது தெரிந்த அளவையாதல் எழுதி வைக்கத் தானே கேண்டும்? இந்த ஒரே நோக்கத் துடனேயே பேராசிரியரின் பல்வேறு அம் சங்களையும் இவரது மாணவர்களைக் கொண் டும் இவரை நன்கு அறிந்தவர்களைக் கொண் டும் இம்மணிவிழா மலரில் எழுதிவித்தோம் . தமிழ்ப் பேராசிரியராக, தமிழ் அறிஞணுக, ஆராய்ச்சியாளனுக, மனிதராக என்றெல் எர்ம் பல கோணங்களிலிருந்தும் பேராசிரி யரை நோக்கியிருக்கின்ருர்கள் கட்டுரையா சிரியர்கள். மாணவர்களாக விருந்தபோது பெற்ற சொந்த அனுபவங்கள் கட்டுரை களிலே இளையோடுவதினுல் இவை சிறப் படைகின்றன. மலர் பொலிவெய்துகிறது. சமகாலத் தமிழ் ஆராய் ச் சி யாளனுக்குச் சிறந்த ஏட்டுமூலமாக அமைகிறது. கட்டுரை எழுதியிருக்கின்ற ஒவ்வொருவரும் அவ்வத் துறைகளில் நிறைந்த அறிவு பெற்றவர்கள் இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆழ மானவை. ஆணித்தரமானவை.
மணிவிழா ஏற்பாடுகளைக் கவனித்து, கனகச்சிதமாக இதனைச் செய்து முடித் திருக்கும் ‘கலை இலக்கிய பத்திரிகை நண் பர்கள்’ செயலாளர் தம்பி எஸ். திருச்செல் வம் (எஸ்தி) தமிழ்கூறும் நல்லுலகின் பாராட்டுக்குரியவர்.
இம்மணிவிழா இனிது நடைபெறவும் மலர் அழகுற அமையவும் உதவிய அனை வருக்கும் உளம் நிறைந்த நன்றியைத் தெரி வித்துக் கொண்டு, பேராசிரியர் நீடு வாழ வேண்டும், தமிழன்னேக்கு மென்மேலும் பணிபுரிய வேண்டும் என்று பிரார்த்திக் கின்றேன்.

Page 23
வாழ்க்கை
ஆ. சிவநேசச்செல்வன், எவலின் ரத்ன
பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஈழ த்துத் தமிழியல் வரலாற்றினின்றும் பிரித்து நோக்க முடியாதவொரு மனிதராக ஏறத் தாழ மூன்று தசாப்தங்களுக்கு மேலாக வாழ்ந்து பணியாற்றிவருபவர்.இன்று யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்துத் துணைவேந்தரா கவும் தமிழ் கறும் நல்லுலகத்தில் முதன்மை வாய்ந்த தமிழறிஞருள் ஒருவராகவும் மதிக் கப்பட்டு வருகின்றர். இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை வரலாற்றின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் கணிசமான பங் களிப்புச் செய்துள்ள பேராசிரியர் எமது நாட்டுக் கல்வி வரலாற்றிலே புதிய அத்தியா யத்தை தோற்றுவிக்கும் யாழ்ப்பாணப் பல் கலைக் கழகத்தை வழிநடத்தி வருகின்றர். எம் முன்னே விரிந்து செறிந்திருக்கும் தேசிய முரண்பாடுகளின் முன்னுல் நிலையான தமிழ்க் கல்விப் பாரம்பரியத்தைக் கட்டி வளர்க்கும் பாரிய பொறுப்பும் அவருக்கு உண்டு. ஈழத் துத் தமிழ் மக்களின் கல்வி வரலாற்றிலே கூர்நதிக்கோபுரமாக விளங்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பின்னணியின் ஊடாக, எம் மையறியாதே இழந்துவரும் கல்வி கலாசா ரப் பாரம் பரியங்களைக் கட்டி வளர்க்கும் மகத்தான பணியின் தேவையை இம் மணி விழா நிகழ்வோடு நினைவுகூருவதும் அவசிய மாகும். பேராசிரியரின் கடந்தகால வாழ்க் கைப் பதிவுகளும், செயலாண்மைத் திறன் களும் இத்தகையதொரு பணி யினை முன் னெடுத்துச் செல்லும் ஆற்றல் நிறைவை நினைவூட்டுவனவாக உள்ளன.
இலங்கையின் கலாசாரப் பாரம்பரியத் தோடு பின்னிப்பினைந்தது பேராசிரியரின் வாழ்க்கை. நாவலர் மரபின் செழுமையான ஊற்றுக் கண்களையும், சுவாமி விபுலானந் த ரது கவ்விமரபின் சுவடுகளையும், நிலை நிறுத்தும் வழிவழி மரபின் பிதா ம ராக விளங்குபவர் பேராசிரியர். சென்ற நூற்ரு ண்டிலே நீாவலர் பெருமான் உருவாக்கிய கல்விப் பாரம்பரியத்தின் விளைவாக கிராமங்
2

ώ βξουανώ.
கள் தோறும் வசதி படைத்தோர் கல்விச் சாலைகளை உருவாக்கிச் சைவமும் தமிழும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டனர். பேராசிரி யரின் பேரனர் சின்னத்தம்பி அவர் கள் உருவாக்கிய வீமன்காமம் தமிழ்பாடசாலை நாவலர் மரபோடு இணைந்ததொன்று. இத னைப் பேராசிரியரின் தந்தையார் திரு சுப்பிர மணியம் அவர்கள் கட்டிவளர்த்தார்கள். 1944 ம் ஆண்டு அகாலமரணமடைந்த தத் தையாரின் இலட்சியங்களை நிலை நிறுத்தும் பாடசாலை முகாமையாளராக விளங்கிய பேராசிரியரின் குடும்பச் சூழலே நாவலர் மர பின் உயிர்ப்பை உண்ர்ந்ததாகவும் உணர்த் துவதாகவும் அமைந்தது.
பேராசிரியரின் குடும் ப ம் சைவமும், தமிழும் சிறந்தகுடும்பம், சைவக் கல்வி மரபு செழிக்க வேண்டுமென்ற நோக்கிலேயே தமிழ்ப் பாடசாலையை மாவிட்டபுர ஆலயச் சூழலில் உருவாக்கினர். நாவலரின் இலட்சி யங்களை உணர்ந்தபேரஞரின் இலட்சியங்களை வளர்த்த தந்தையாரின் கனவை நிறைவேற். றும் வகையிலே பேராசிரியரும் இயங்கினர். இளமையிலேயே வாழ்வின் பொறுப்பை உணர்ந்து கொண்ட பேராசிரியர் குடும்பச் சூழலின் ஏற்ற இறக்கங்களுக்கு எல்லாம் ஈடு கொடுத்து வாழ்ந்தார். தமது மூத்தோணுன அம்பிகாபதியுடனும் அன்னை யாருடனும் இணைந்து தமது இளவல்களுடைய வாழ்வு வளம்பெற இடையருது உழைத்தார். கடமை யுணர்வோடு குடும்ப வாழ்வினது மேன்மைக் கும் உயர்வுக்கும் இவராற்றிய பணிகளே காலாக அமையலாயின. பேராசிரியரின் உயர் வுக்கெல்லாம் உறுதுணையாக விளங்கியவர் அவரது அருமை மனைவியார் கமலாதேவி. பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் திருவி. செல்வநாயகமும் முன்னின்றுநடாத்திய இவர் கள்துசீர்திருத்தத் திருமணம் தமிழ்த் திருமண மாகவே அமைந்தது. பேராசிரியரின் வாழ் வுக்கும் வளத்திற்கும் உயிராக இருந்த கமலா தேவி 1979 இல் மறைந்த பொழுது பேரா

Page 24
சிரியர் அடைந்த கலக்கம் சொல்லுந்தர மன்று. பேராசிரியரின் பன்முகப்பட்ட பணி களுக்கெல்லாம் வலதுகரமாக விளங் கி ய கமலாதேவி பணிகளை யாவரும் நன்கறிவர்.
பேராசிரியர் உருவாக்கிய கிராமிய மறு மலர்ச்சிக்கும், நாடகப் ப மணிக ஞ க்கும், ஆராய்ச்சி முயற்சிகளுக்கும் ஊன்றுகோ லாகவிளங்கியவர் கமலாதேவி. அவர் மறை வின் பின்னர் ஒருகணம் கலங்கிய பேராசி ரியர் இன்று வாழ்வின் ஓட்டங்களுக்கெல் லாம் அசையாது ஈடுகொடுத்து நிதானமாக பணியாற்ற முற்பட்டுள்ளார் . துன்பம் வந்துற்ற போதும் துளங்காத இதயம் வேண்டும் என்பதை வாழ்க்கைப் போராட் டத்தினுரடாகப் பேராசிரியர் உணர்ந்து கொண்டுள்ளார்.
பேராசிரியரின் பல்கலைக்கழக வாழ்க்கை சுவாமி விபுலாநந்தரின் கல்விப் பாரம்பரி யத்தைப் பின்னலரியாகக் கொண் டது. 1941 இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி யிலே சேர்ந்த காலம் முதலாக சுவாமியின் மாணவராக விளங்கிய பேராசிரியர் பின்னர் அவர் வழித்தோன்றிய பல்கலைக்கழகத் தமிழ்க்கல்வியையும் இலட்சியங்களையும் முன் னெடுத்துச் செல்லும் தமிழ்தூதராக விளங் கினர். இலங்கைப் பல்கலைக்கழகத்து முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய விபுலா நந்தர் கீழைத்தேயக் கல்வி ம. ர  ைப யும் மேலைத்தேயக் கல்விமரபையும் இணைக்கும் பாலமாக விளங்கினர். பல்கலைக்கழகத்திலே மாணவராகச் சேர்ந்த வித்தியானந்தன் இடைநிலைத் தேர்விற்காக ஆங்கிலம், இலத் தீன், வரலாறு, தமிழ் என்னும் பாடங் களைக் கற்றபோதும், பின்னர் தமிழைச் சிறப்புப் பாடமாகப் பயின்றபோதும் சுவா மிகளினது ஆளுமையின் செறிவைப் பெற்றுக் கொண்டார். இவரின் மற்றைய ஆசிரியர் களாகிய கலாநிதி கணபதிப்பிள்ளை, திரு. வி.செல்வநாயகம் ஆகியோர் விபுலாநந்தரது மரபில் ஊறிய வர்கள். இவர்கள் மூவரும் இர்ற்படுத்திய செல்வாக்கின் செழுமையைப் பேராசிரியர் வித்தியானந்தனின் ஆளுமை யினுடே தெளிவாகக் காணலாம். இலங் கைப் பல்கலைக்கழகத் தமிழ்க் கல்விமரபைத் தனித்துவமாக வளர்த்து வந்த மூவரின் நிழலிலே வளர்ந்து, இன்று இம்மரபின் கலங்கரைவிளக்கமாக விளங்கும் பேராசி

6 -
ரியர் வித்தியானந்தன், சுவா மிக ளின் கனவுக்கு நிறைவு கொடுக்கும் ஒருவராக அமைகிருர். பல்கலைக்கழகம் கொழும்பைத் தவிர்ந்து எங்கு அமைய வேண்டும் என்ற் கருத்து வேறுபாடு தோன்றியபோது சுவாமி விபுலாநந்தர் கல்வி வளஞ்சிறந்த யாழ்ப்பா ணத்திலே பல்கலைக்கழகம் உருவாகவேண்டும்
என்ற உணர்வுடன், "யாழ்ப்பாண நாடு கல்வித்துறையில் மேன்மேலும் விருத்திய டைய் வேண்டும் என்பதே எமது உள்ளக் கிடக்கை. ** எனக்கூறி யாழ்ப்பாணத் தைப் புறக்கணித்துக் கல்வி மணமில்லாத தும்பறையை நாடிச் செல்வது அ வலை நினைத்து உரலை இடிப்பது போலாகுமன்றே? எனக் கூறினர். சுருங்கக் கூறின், சுவாமி விபுலானந்தரின் இலக்கியங்களுக்கு உயிரூட் டுவ்து போல அவரது வழிவழிப் பாரம்பரி யத்தைப் பேணும் பேராசிரியர், யாழ்ப்பா ணத் தமிழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணை வேந்தராக அமைவதும் மனங்கொள் ளத்தக்கது.
பல்கலைக்கழக ஆசிரியராகவும், ஆராய்ச் சித் துறைத் தலைவராகவும், பேராசிரியராக வும் பணியாற்றிய காலத்திலே அறிவினிலே தெளிவும், நெஞ்சினிலே உறுதியும், அகத் திலே அன்பினுேர் வெள்ளமும் பொங்கும் பண்பாளராக விளங்கியூவர் பேராசிரியர். 1946 ஆம் ஆண்டிலே உதவி விரிவுரையாள ராக ப த வியே ற் ற வித்தியானந்தன் மனங்கவரும் சிறந்த விரிவுரையாளராக த ம்  ைம வளர்த்து க் கொண்டார். சிந்தனைத் தெளிவும் புதிய போக்கும் மாண வர் நெஞ்சங்களைக் கவர்ந்தன. கடினமான விடயங்களை எளிமையாக கூறுபவர்; இலக்க ன த்  ைத இனிமையாக போதித்தவர்; இலக்கணப் பிழையற்ற நல்லதமிழ் எழுதும் ஆர்வத்தை தூண் டு ப வர் பேராசிரியர் என்பது யாவரும் அறிந்ததொன்று. பேரா கிரியரின் விரிவுரை வகுப்புகளிலும் பார்க்க கட்டுரை வகுப்புகளில்பெற்ற செழுமையான கருத்துக்கள் - பல்கலைக்கழக வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியதை மாணவருலகம் நன்கு அறியும். மாணவ வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை நன்குணர்ந்த பேராசிரியர் மா ண வர் களை மனிதாபிமானத்துடன் நேசித்தார். தன்னை நாடிவரும் ஒவ்வொரு மாணவனதும் வாழ்க்கையை உணர்ந்து அவனது ஆளுமை வளர்ச்சியைத் தட்டிக்

Page 25
கொடுக்கும் மனிதனுக வாழ்ந்தமையே பேராசிரியரது வாழ்க்கையின் இலட்சியமாக அமையலாயிற்று.
வித்தியானந்தனின் ஆளுமை வளர்ச் சிக்கு மூலவிசையாக விளங்கியவர் பேராசிரி யர் க. கணபதிப்பிள்ளை. தமக்கு உற்ற நண்பனகவும், அந்தரங்கசெயலாளராகவும், அபிமானத் தந்தையாகவும் விளங் கி ய ஆசான ‘என்னை ஆளாக்கிய பெருமகன்" என நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார். பல்கலைக்கழக ஆசிரிய வாழ்க்கைக்கு அப்பால் நாடகத்துறையிலும் கிராமிய இலக்கிய மறுமலர்ச்சியிலும் அத்தியந்த உறவோடு ஈடுபடும். ஆர்வத்தை வித்தியானந்தனுக்கு ஏற்படுத்தியவர்: பேராசிரியர் கணபதிப் பிள்ளையவிர்கள். பல்கலைக்கழகத் தமிழ் மாண்வர்களின் வளர்ச்சியோடு நெருங்கிய உறவு கொண்ட பேராசிரியர் வித்தியானந் தன் தமிழ்ச்சங்கத்தின் மூலம் ஆற்றிய பணிகள் நிலையானவை. 1946 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டுவரை தமிழ்ச்சங்கம் இவரது அரவணைப்பிலேயே வளர்ந்தது. தமிழ் சங்கத்தினூடாக பேராசிரியர் SGIt திப்பிள்ளையின் நாடகங்களை மேடையேற்றிய வித்தியானந்தன், காலப்போக்கில் ஈழத்து நாடக வரலாற்றிலே புதிய பரிமாணங்களைத் தோற்றுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள லாயினர். தமிழ்ச்சங்கம் மேடையேற்றிய பதினுறு நாடகங்களுக்கும் உந்து சக்தியாக விளங்கியவர் பேராசிரியரேயாவர், சுருங்கக் கூறின் பேராசிரியரது நாடக வாழ்க்கை தமிழ்ச்சங்கம் பின்னணியிலே பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் சிந்தனைச் செறிவோடு உருவாகியது. جی۔
இலங்கைக் கலைக்கழக தமிழ் நாடகக்குழு வின் தலைவராக 1956 ஆம் ஆண்டிலே பேராசிரியர் கணபதிப்பிள்ளையைத் தொடர் ந்து பதவியேற்ற வித்தியானத்தன் இலங் கைத் தமிழ் நாடக் வரலாற்றிலும், கிராமி Aக் கூத்து மறுமலர்ச்சியிலும் ஏற்படுத்திய சாதனைகள் நாடக வரலாற்றிலேயே புதிய தொரு அத்தியாயத்தை உருவாக்கியது. ஏறத்தாழ 1956 ஆம் ஆண்டிலேயே பேராசிரி யர் எதிரிவீர சரத்சந்திராவும் "மனமே" என்ற சிங்கள நாடகத்தின் மூலம் கூத்துவடிவத்தை மரபுகெடாமல் மெருகு கொடுத்துக் காலத்

துக் கேற்ற வகையில் மேடையேற்றினுர், ஈழத்து நாடக உலகிலே ஏற்பட்ட மலர்ச் சியின் போக்கோடு பேராசிரியர் வித்தியா னந்தனின் வாழ்க்கையும் அமையலாயிற்று. வடமோடி, தென்மோடிக் கூத்து வடிவத் தையும், அண்ணுவி ம ர  ைப யும் நவீன மேடைக்கு ஏற்ற வகையிலே பல்கலைக்கழக மாணவரின் துணைகொண்டு, கர்ணன்போர், நொண்டிநாடகம், இராவணேசன், வாலிவதை ஆகிய நாடகங்களை முதலிலே பேராதனையி லும் பின்னர் இலங்கையின் பிரதான நகரங் களிலும் மேடையேற்றினர். இவை ஈழத்து நாடக வரலாற்றிலே புதியதொரு கால கட்டத்தை உருவாக்கியது.
நாடகக் கலைபற்றிப் பேராசிரியர் முன் நின்று நடத்திய ஆய்வுகளும் கருத்தரங்கு களும் கூத்தாடிகள் அண்ணுவிகள் என்ற நிலை க்கு அப்பால் நாடகக்கலைஞருக்கும் கிராமியக் கலை ஞ ரு க கும் புதியதொரு அந்தஸ்த்தை ஏற்படுத்தும் சம்பவங்கள்ாக அமையலாயின. 1956 ஆம் ஆண்டு த்ொடக் கம் 1969 ம் ஆண்டுவரையுள்ள பதினைந் தாண்டு காலப்பகுதியிலே இலங்கைத் தமிழ்க் கலை வரலாற்றிலே திருப்புமுனையை ஏற்படுத் தும் பணிகளை மேற்கொண்டார். தரமான நாடகப்பிரதிகள் இல்லாமையை நிறைவு செய்யும் வகையில் போட்டிகளை தேசிய மட்டத்தில் நடாத்திஞர். பாடசாலை
நா ட க் ப் போட்டிகளை முன்னின்று நடாத் தி ஞர் . கிராமியகலைஞர்களை கெளரவிக்கும் வகையிலே ம க் க ள்
கலைவிழாக்களை நடாத்தினர். கலைஞரின் பெருமையை மதிக்கும் வகையில் மன்னர், மட்டக்களப்பில் அண் ணு வி மார் மகா நாட்டை நடாத்தி பொன்னடை போர்த்திக் கெளரவித்தார். கூத்துப்பிரதிகளை அச்சு வாகனம் ஏற்றும் முயற்சியில் முன்னின்று உழைத்தார். அலங்காரரூபன் நாடகம் (1962) என்றிக் எம்பிரதோர் நாடகம் (1964) மூவிரா சாக்கள் நாடகம் (1966) ஞானசெளந்தரி (1967) ஆகிய நாடகங்கள் முறையான ஆய்வுமரபிற்கேற்பப் பதிப்பிக்கப் ப்ெற்றன. தேசிய கலைமலர்ச்சியினை உருவாக்கும் கலைப் பாலமாக விளங்கிய பேராசிரியரின் பன்முகப் பட்ட பணிகளும் பொதுவாழ்க்கையும் ஈழத் துத் தமிழ் மக்களது கலைவாழ்விலே புதிய யுகம் ஒன்றினையே தோற்றுவித்தது.

Page 26
இலங்கையிலே நெறிமுறையான தமிழா -ராய்ச்சி மரபினை வளர்ப்பதில் முன்னின்று உழைத்தவர் பேராசிரியர் வித்தியானந்தன். 1948 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை இலண்டன் பல்கலைக்கழக கீழைத்தேய மொழிக்கல்விப் பீடத்திலே பயின்று கலா நிதிப்பட்டத்திற்கான, பத்துப்பாட்டு வரலாறு, சமூக இயல் மொழியியல் நோக்கு" என்ற ஆராய் ச் சிக் கட்டுரையை பேராசிரியர் syab 9tri - DrrGioti (Alfred Master) atai Lu வரின் வழிகாட்டலின் கீழ் சமர்ப்பித்தார். சமுதாயவியல் ரீதியான ஆய்வு நோக்கினைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் பின்னணி யிலே உணர்ந்தவர் வித்தியானந்தன். ஈழத் திலே நெறிமுறையான தமிழாராய்ச்சி மாணவர்கள் தோன்ற வேண்டும் என்ற பேரவாவினல் முதுகலைமாணி, கலாநிதி பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்ளும் படி தமது மாணவருக்கு ஆர்வமூட்டியது மட்டுமன்றி தமது முழுநேரத்தையுமே அவர்களுடன் செலவு செய்தார். ஆராய்ச்சி மரபிலிருந்து இம்மியளவும் பிசகாது கால நேரம் பாராட்டாது மாணவர்களை வழிப் படுத்துவது அவரது வழக்கம். பேராசிரியரின் கலாநிதிப்பட்ட ஆய்வின் சுருங்கிய தமிழாக் கமே ‘தமிழர் சால்பு" என்ற புகழ்பூத்த நூலாகும். இந்நூல் தமிழியல் அறிஞர்கள் பலருடைய கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இஸ்லாமிய க லா சா ரத் தி ன் சிறப்பை உணர்த்தும் 'கலையும் பண்பும்" என்ற நூல் இவரது ஆய்வு நோக்கை வெளிக்கொணரும் பிறிதொரு நூல், இலக் கியத்தென்றல் தமிழியற் சிந்தனை ஆகியன இவரது கட்டுரைத் தொகுப்புகளாகும். இது தவிர அவ்வப்போது எழுதிய எண் விறந் தகட்டுரைகள் பேராசிரியரின் ஆராய்ச் சிப்பணியை இனங்காட்டுவனவாக உள்ளன.
இலங்கைத் தமிழரது கலாசார மரபினை வெளிக்கொணரும் ஆவலினுல் உந்தப்பட்ட பேராசிரியர் வழிகாட்டிய முதுமாணி

8 -
கலாநிதிப்பட்ட ஆய்வுகள் பல. ஈழத்து நாவலிலக்கிய வளர்ச்சி, ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி, ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி, ஈழத்தில் கண்ணகி வழிபாடு, ஈழத்துப் பத்திரிகை வளர்ச்சி, சோமசுந்த ரப்புலவர் இலக்கியம் தொடர்பான திற னய்வு, விபுலாநந்தர் இலக்கியம் தொடர் பான திறனய்வு, போன்றவை வகை மாதிரிக் கான சில உதாரணங்களாகும். சுருங்கக் கூறின் பேராசிரியர் தமது ஆராய்ச்சி வாழ்க்கையின் பண்பும் பயனுமாக ஈழத்துக் கலை இலக்கிய மரபையே மதிப்பீடு செய்ய முற்பட்டார் எனலாம்.
அனைத் துலக தமிழாராய்ச்சி மகா நாட்டை இலங்கையில் நடாத்திய போது எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கெல்லாம் ஈடு கொடுத்து வெற்றிகண்ட பேராசிரியரின் வைரமுடைய நெஞ்சும், உறுதியும், நினைத் ததைச் சோம்பவின்றிச் சாதிக்கும் பண்புமே யாவருடைய மனதிலும் தோன்றும் . தொடர்ந்து நடாத்திய பிரதேச மகாநாடு களும் ஈழத்து தமிழாய்வுமரபை நெறிப்ப டுத்திய சாதனைகளேயாகும்.
பேராசிரியரது வாழ்க்கையின் நுணுக்க , விபரங்களை யெல்லாம் இக்கட்டுரையிற் கூற முடியாது. ஆயினும் அவரது வாழ்க்கை யின் முனைப்பான பண்புகளைக் காணுவதன் மூலம் தமிழ்மக்களின் கல்வி கலாசார வளர்ச்சிக்காக உழைத்த ஒரு மனிதனையே காண்கின்ருேம். பேராசிரியர் துணைவேந்த ராக இருந்து வழிநடாத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்மக்களின் கலாசார கேந்திரமாக உயர இவரது வாழ்க்கை பயன்படவேண்டும். "உழைப்பின்வரா உறுதி கள் உளவோ" என்ற தொடருக்கு இலக்கி யமாக இவரது பணிகள் அமையவேண்டு என வாழ்த்துவோமாக!

Page 27
学
 

8லநாதன்
வலுப்பிள்ளை
வத்தம்பி
ண்முகதாஸ்
பூலோகசிங்கம்
இராசரத்தினம்

Page 28


Page 29
ஆசிரியனுக . . .
சி. தில்லைநாதன், பேராதனை பல்கலைக்
புரட்சிக்கவிஞர் பாரதிதா சனை ப் பார்த்து, "எதற்காக நீங்கள் கவிதைகளை எழுதுகிறீர்கள்? “ என்று ஒருவர் கேட்டா ராம். அதற்கு “அவற்றை எழுதாமல் எ ன் ஞ) ல் இருக்கமுடியவில்லையாகையால் எழுதுகிறேன். " என்று பாரதிதாசன் பதில் அளித்தாராம். அவ்வாறே, பேராசிரியர் வித்தியானந்தனும் ஒரு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிதான் கிடைத்தாலும் கற்பிக்காமல் இருக்கத் தம்மால் இயலாது என்ற ஒர் உணர்வினுக்கு ஆட்பட்டுத் தான் ஆசிரியப் பணியினை மேற்கொண்டி ருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு தொழிலாகவன்றி, மாணவர் கற்ப வற்றைக் கசடறக் கற்கவேண்டும் என்ப திலும் கருத்துக்களைத் தமிழிற் பிழை யின்றித் தெளிவாக வெளியிட வேண்டும் என்பதிலும் எதிர்காலத்தில் அவர்கள் நற்பேறுகளைப் பெறவேண்டும் என்பதிலும் தீராத வேட்கையோடு அப்பணியினை ஆற்று பவர் பேராசிரியர்.
நான்கு தசாப்தங்களுக்கு மு ன் தமிழோடு ஆங்கிலம், இலத்தீன், வரலாறு ஆகியவற்றையும் கற்றுச் சிறப்புப்பட்டம் பெற்ற ஒருவர் தமிழைத் தொடர்ந்து ஆயவும் ஆசிரியப்பணி புரியவும் சித்தங் கொண்டது அவரது ஈடுபாட்டைக் காட் டுவதாகும். அது எவ்வாருயினும், "தாரமும் குருவும் தலைவிதிப்பயன்” என்ற முதுமொழி யின்படி பார்க்குமிடத்து அவரைஆசிரியராகப் பெற்ற யாம் பாக்கியசாலிகளே என்பதில் ஐயமில்லை.
பேராசிரியராகவும் உபவேந்தராகவும் மேன்மைகள் பெற்ருலும், அவருடைய மாணவர்கள் கலாநிதி வித்தியானந்தனை "வித்தி" என்றே பிரியத்தோடும் உரிமை யோடும் குறிப்பிடுவர். அவர் எத்தகைய ஆசிரியர்? ஆசிரியத்தொழிலுக்கு வேண்டிய தெல்லாம் ஒரு மாணவனும் ஒரு கோலுமே என்று கருதுவாரும் உளர். கோலுக்குப் பதி லாகப் பரீட்சைமுடிவினைத் தீர்மானிக்கும்

கழகம.
அதிகாரத்தைக் கொள்வாரும் உளர். அத் தகையவர்களோடு மாறுபட்டவர் வித்தி. பரீட்சைக்குரிய பகுதிகளைக் கற்பிப்பதோடு அவர் காரியப முடிந்துவிடுவதில்லை. கடின மான பாடங்களிலும் கற்போரின் ஆர்வத் தைத் தூண்டிவிடுவதோடு மேலும் படிக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும் வளர்த்து விடுபவர் வித்தி 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்." என்ருன் பாரதி, கற்பிக்கும் பாடங்களில் -நன்நூலாயினும் திருக்கோவையாராயினும் தொல்காப்பிய சொல்லதிகாரமாயினும் தமிழர் பண்பாடாயினும் உண்மையாகவே ஈ டு பட் டு வித்தி விரிவுரையாற்றுங்கால் மாணவர் சுவை காண்பர். பவணந்தி முனிவர் கூற்றுக்கிணங்க,
"உரைக்கப் படும்பொருள் உள்ளத் @
தமைத்து விரையான் வெகுளான் விரும்பி
முகமலர்ந்து கொள்வேன் கொள்வகை யறிந்தவ
னுளங்கொளப்’
பயிற்றும் வல்லமை வாய்ந்த நல்லாசிரியர் வித்தி. மாணவருக்கு எந்தப்பகுதி அதிக பிர யத்தனமின்றி விளங்கும், எந்தப்பகுதி கடின மாக இருக்கும் என்பதையெல்லாம் ஊன்றி அவதானித்து, நிறுத்த வேண்டியவிடத்து நிறுத்தி, மீட்டுரைக்க வேண்டியவிடத்து மீட்டுரைத்து, எடுத்துக்காட்ட வேண்டிய விடத்து எடுத்துக்காட்டுக்களைத் தந்து நகைச்சுவையும் சிருங்காரரசமும் ஒரோ விடத்து இழையோட விரிவுரையாற்றுவார் வித்தி. கற்போரிடைச் சோர்வு கண்ட விடத்து அவர் விடும் பகடிகள் படிப்பவை மனதிற் பதியவும் உதவும். பண்டை இலக் கிய இலக்கணங்களிலுள்ள கடினமான பகுதிகளை இக்காலத்திற்கேற்ற வகையில் விளக்க வித்தி கையாளும் உத்திகள் அவரு டைய கலைபயில் தெளிவையும் கட்டுரை வன்மையினையும் மட்டுமன்றி உலகியலறி வயுைம் காட்டுவனவாம்.

Page 30
-
பாட்டெழுதுவதில் யான் கொஞ்சம் ஆர்வங்கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள் வித்தி விரிவுரை நடாத்திக்கொண்டிருக்கும் போது அவரைப்பற்றி வெண்பாக்கள் எழுதவேண்டுமென்று தோன்றிற்று. ஒரே இடத்தில் நின்று குறிப்புக்களை வாசிக்கும் பழக்கம் இல்லாது உலாவி உலாவிப் பாடம் நடத்தும் வித்தி சடுதியாகப் பின்னல் வந்துவிட்டதை வெண்பாவில் மூழ்கிவிட்ட யான் கவனிக்கவில்லை. வெண்பா எழுதிய கடதாசியை இழுத்துக்கொண்ட போது தான் திடுக்கிட்டுத் திரும்பினேன். அவர் ஒரு மாதிரிப் பார்த்துவிட்டு ஒன்றும் கூருமல், அந்தக் கடதாசியைச் சட்டைப் பைக்குள்ளே திணித்துக்கொண்டு நடந்த வாறு விரிவுரையைத் தொடர்ந்தார். வெண் பாவின் கதி என்னவாயிற்ருே?
“ வித்தியார் வந்து விரிவுரை
யாற்றுவதை எத்தாலும் கேட்டே இருக்கலாம்
- நித்திரை கிட்டவும் வராது’’
என்று தொடங்கியதாக ஞாபகம்.
மாணவரிடம் ஏதாவது தவறு கண்ட விடத்து அ த னை ப் பெரிதுபடுத்தியும் கிண்டல் பண்ணியும் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்த பல ஆசிரியர் மனைவர். மாணவர்களைக் கட்டுப்படுத்துவதும் பலேரிய வைப்பதும் பிரச்சினைதான். பல்கலைக்கழகத் தில் அது பாரிய பிரச்சினையாகவும் இருக் கலாம். மாணவர்கள் தம்மை மதிக்கின்ருர் களில்லை என்ற குறை சில ஆசிரியரை வாட்டுவதுமுண்டு. மாணவர்களை எவ்வாறு ப8ளியவைப்பது என்பதையும் அவர்களின் மதிப்பினை எவ்வாறு பெறுவது என்பதை யும் வித்தியிடம்தான் கேட்கவேண்டும்.
பல்கலைக் கழகத்துட் புகுவோரிடை வயது வித்தியாசம் காணப்படும். சிலர் தலைக்கணம் கொண்டவர்களாக இருப்பர். சிலர் தாழ்வுமனப்பான்மை பாற் சங்கடப்ப டுவர். எல்லோரையும் எப்படிச் சமாளிப்ப தென்பது வித்திக்குத்தெரியும். மட்டம் தட்ட வேண்டியவிடத்து நாகுக்காகவும் நயமாகவும் மட்டம்தட்டி, தூக்கிவிட வேண்டியவிடத் துத் துரக்கிவிட்டு, ஆளுல் எந்தச் சந்தர்ப் பத்திலும் உற்சாகத்தைக் குலைக்காது கற் பிக்கும் சிறப்பு அவரிடம் மாணவரால் விரும் பப்படுவது. தவறுகளை மனம் புண்படாத வாறு அவர் சுட்டும் நயத்தினையும் மாண வர் இரசிக்காமல் இல்லை. அவரிடம் பகடி

பண்ணுப்பட வேண்டுமென்று மாணவர் விரும்புவதுமுண்டு:
மாணவர் மத்தியில் வித்திக்கு மட்டும் இத்தகைய செல்வாக்கும் பி ர சித் தி யும் கிடைப்பது எதனல்? அந்த இரகசியத்தைக் கண்டறியும் பகீரதப் பிரயத்தனத்தில் வித் தியைப் போற் கோற் போட்டவர்கள் ரை கட்டியவர்கள், சுங்கான் பிடித்தவர்கள், சொண்டு தடவியவர்கள், நாடிதடவிய வர்கள், நடந்தவர்கள் 'யாரே வடிவினை முடி யக் கண்டார்?*
கம்பராமாயணத்தில் இராமனைப்பற்றி பேசுமிடத்து அவனது 'நிறையிஞேடு அறிவு நிற்க சீலம் ஆர்க்கு உண்டு?? என்று ஒரி டத்து வினவப்படுகிறது. சீலம் என்பது மிக உயர்ந்தோர் சிறியோரையோஇழிந்தோ ரையோ ஒப்பாக எண்களிப் பழகும் எளி மைப் பண்பாகும். எளிமைக்கு வித்தி ஏற்றதோர் எடுத்துக் காட்டாவார்.
தூசி படாத தேசிய உடையிலும் கோற்ருேடும் மேலங்கி (cloak) யோடும் சுங்கான் ஏந்திய வண்ணம் கெளரவமிக்கத் தோற்றத்தில் வித்தியைக் கண்டிருக் கிருேம். புகைவண்டி நிலையத்தில் நகரத் தொடங்கிவிட்ட வண்டியில் முண்டியடித் துக் கொண்டு ஏறுகின்ற மாணவர்களின் பெட்டி படுக்கைகளை ஒடியோடித் தூக்கி வைக்கும் அவர்தம் தொண்டினையும் கண்டி ருக்கிருேம்.
சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியோரின் செல்லப் பிள்ளேயாகத் தமிழாய்ந்த வித்தியின்
ஆராய்ச்சித் திறன் இந்நாட்டறிஞரால் மட்டுமன்றிக் தமிழ் நாட்டின் புகழ் பூத்த பேராசிரியர்களான கே. ஏ.
நீலகண்ட சாஸ்திரி, எஸ். வையாபுரிப் பிள்ளை, மு. வரதராசன், டி. வி. மகா லிங்கம், ஆர். சத்தியநாதையர் போன்றே ராலும் ஏ. எல். பெசாம், கமில் சுவெல பில், சி எச். பிலிப்ஸ் முதலான மே?லத் தேய அறிஞர்களினலும் விதந்து பாராட் டப்பட்டது. அமெரிக்காவிலும் இங்கிலாந் திலும் யப்பானிலும் யூகோஸ்லாவியா விலும் பாராட்டுக்களும் go Lu & IT propLD பெற்றதோடு சாகித்திய மண்டலப் பரி சில்களும் வென்றவர் வித்தி. அந்தச் சிறப்புக்களால் மாணவர் பெருமைப்பட் டனரேயன்றி வித்தி சிறிதேனும் தலைக் கனம் கொள்ளவில்லை.

Page 31
அந்த நாட்களிற் கண்டியிலிருந்து பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்துக்கு பஸ் கிடைப்பது கடினம். ஆணுல் வித்தி யின் கார் அடிக்கடி அகப்படும். பென் னம் பெரியதொரு செவர்லெற் கார், அவருக்கு அது எவ்வளவு வசதியாய் இருந்ததென்பதை அறியோம். ஆனல் எங்களுக்கு அது நல்ல வசதியாக அமைந்தது. வெகுதூரத்தில் வரும் பொழுதே அதனை இலகுவில் அடையா ளம் கண்டுகொள்ளலாம். எத்தனை பேர் வேண்டுமானுலும் எங்கள் கெட்டித்தனத் துக்கேற்பப் புகுந்து கொள்ளலாம். ஒரு நாள் நாங்கள் சிலர் கண்டியிலே திரைப் படம் பார்த்துவிட்டு அலுப்போடு பஸ் நிலையத்தை தோக்கி நடந்து கொண்டி ருந்தோம். திடீரென்று நண்பன் மு. தளைய சிங்கம், "கம்பஸ் பஸ் வருது மச்சான்? என்று சொல்லியவாறு பாய்ந்தோடிப் போய்க் கண்ணுக்கெட்டக் கூடியதாக நின்ஞன். வித்தியின் கார் நின்றது. எல்லோரும் ஏறிக்கொண்டோம். அவ்வாறு செல்லும் சில சந்தர்ப்பங்களில் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு நாங்கள் உபசரிக்கப்படுவதும் உண்டு. d5LDah) (T அக்கா காரில் இருந்தால் அந்த உட்சாரம் உறுதியாகும். கமலா அக்கா வித்திக்கு வெகுபொருத்தம். அவர்களில் யாருக்கு எங்கள் மீது கூடியபரிவு என்பது என்றும் புரியவில்லை. குற்றங்குறை கண்டவிடத்து யார் அதிகமாகக் சடிந்து கொள்வதென் பதும் விளங்கவில்லை.
ஆசிரியர் மாணவர் உறவைப்பற்றி யும் மாணவர் நலன்புரி சேவைபற்றியும இன்று விஸ்தாரமாகப் பேசப்படுகிறது. வித்தியைப் பொறுத்தவரை அவரை βρ(5 மாணவநலன்புரி தாபனமாகவே கொள்ளலாம். பிறரைத் தம்போல் மதித்து அவர்தம் இடரைக் .55%Tu-1 விழையும் மனப்பாங்கு இயல்பாகவே வித்திக்கு வாய்த்தது. ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்ட விடத்தோ, ஏதாவது ஆலோசனை கேட்டோ, பாடங்கேட்டோ. எழுதிய கட்டுரையைத் திருத்தித் தரக் கேட்டோ, வதிவிடம் தேடித் த ர க் கேட்டோ, கலேவிழாப் பந்தலுக்கு வெட் டிய வாழைகளை ஏற்றிவரக் கார் கேட் டோ, சஞ்சிகை அச்சேற்ற அச்சகம் தேடித்தரக் கேட்டோ, அதற்குப் பொறுப்பு நிற்கக் கேட்டோ, சுகவீன முற்ற மாணவரை மருத்துவ நிலையத் துக்குக் கூட்டிச் செல்லக் கேட்டோ, வித்தியிடம் தயங்காமற் போகலாம். அப்படியெல்லாம் கரைச்சல் கொடுக்காமல் விட்டால் அவர் ஒரு வேளை சினங் கொள்வாரோ என்ற சமுசயமும் எம்மிடை

3 -
இருந்தது. மனிதாபிமான உணர்வு மிகுதியால் அவர் சிலநேரங்களிலே தன் தகுதியையும் கவனிக்காது செயற்படுவதும் உண்டு. தீமை செய்தவர்களுக்கு வேண்டி யவிடத்து உதவுவதிற் சற்றுக் கூடிய
ஆர்வம் காட்டுவார். 'வந்து கேட்டால் செய்யக் கூடியதைச் செய்யாமல்விட ஏலுமே காணும்?' என்பது அவரது
கடா, மாணவரோடு என்றும் ஒரு நேச உறவு பூண்டிருந்த வித்தியின் இதயமும் இல்லமும் என்றும் அவரது மாணவருக் குத் திறந்தே இருக்கும். அவரிடம் பாடம்கேட்ட ஆயிரக்கணக்கான மாண வரும் பல்கலைக்கழகத்திற் பயின்ற காலத் திலோ அல்லது அதற்குப் பின்னரோ வித்தியிடம் ஏதேனும் உதவி பெருதோர் இருப்பரோ வென்பது சந்தேகம்.
தெரிந்த வித்தைகள் எல்லாவற்றை யும் பிறருக்குக் சற்றுக் கொடுத்துவிட்டாற் பிழைப்புக் கெட்டுப்போய் விடும் என அஞ்சுவாரும் பலர். திறந்த உள்ளத் தோடு அறிவைப் பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் அருமை. வித்தியோ கற்கவும் ஆயவும் ஏனையோரை நெருக்கிக்கொண்டே இருப்பார். தன்னிடமுள்ள புத்தகங்களை மட்டுமன்றிக் குறிப்புக்களையும் கேளா விடத்தும் தருவார். திருப்பித் தருமாறு வற்புறுத்துவாரேயன்றி, எந்தக் கிடைத் தற்கரிய நூலையும் பிறர் கண்படாது மறைத்துத் தனியுரிமை காக்கும் தன்மை வித்தியிடம் இல்லை.
தங்கள் கருத்துக்களோடு மாணவர் மாறுபடுமிடத்துப் பல ஆசிரியர் வெகுட்சி கொள்வர். விவாதிப்பது அவர்களுக்குப் பிடிக்காது. கருத்து வித்தியாசத்தை மதிக் கும் பெருந்தன்மையும், சமநிலையிலே தன்னேடு வாதிக்க மாணவருக்கு இடங் கொடுக்கும் தாராள மனப்பான்மையும், தன்னை மறுத்தேனும் தன் LD nr 600T suriř சிறப்பாக வாதிடுமிடத்துத் தன்னை மறந்து 'ஈன்ற பொழுதிற் பெரிதுவக் கும் தாய்மையும் வாய்ந்தவர் வித்தி, அப்படியெல்லாம் விளங்குவதற்குப் பரந்து விரிந்த மனப்பான்மை மட்டுமன்றி உறுதி யான அத்திவாரத்தில் அமைந்த தன்னம் பிக்கையும் வேண்டும்.
அன்புள்ள மாணவர்களுக்குத் தன் மேன்மையிற் பங்கும் இயன்ற உதவி களும் வாதிடும் உரிமையும் வழங்கம் பேராசிரியர் வித்தி விடாமற்ருெடர்ந்து ஆசிரியராகவே திகழ்கிருர்.
திருமாலுக்கு விஷ்ணுசித்தர் பல்லாண்டு
பாடிஞர். மணிவிழாக்காணும் வித்திக்கு யாமெல்லாம் பல்லாண்டு கூறுவோம்.

Page 32
அறிவு பரப்புவோஞக
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, பல்
பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தி யானந்தன் கடந்த ஏழு ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை வழி நடத்தி வருகிறர். தமிழ்ப்பேராசிரியர்கள் சிலர் இந்தியாவிலும் இலங்கையிலும் பல்கலைக்கழகத் துணை வேந்தர்களாக வளாகத் தலைவர்களாக நியமிக்கப்பட்ட துண்டு. ஆனல் இவ்வளவு நீண்ட காலம் ஒரு பல்கலைக்கழகத்தை வளர்த்து வழி நடத்திச் செல்லும் வாய்ப்பு பிறர் எவருக் கும் கிடைக்கவில்லை. கால்நூற்ருண்டு காலத்திற்கு மேல் விரிவுரையாளராகக் கடமையாற்றி, ஏழு ஆண்டுகள் தமிழ்ப் பேராசிரியராக இருந்து, துணைவேந்தராக உயர்ந்த பேராசிரியர் வித்தியானந்தன் தம்முடைய புதிய பதவிக்கு ஒரு கெளர வத்தைக் கொண்டுவந்தார் . துணைவேந்த ராக வளாகத் தலைவராக நியமனம் பெற்ற பின்பு, அப்பதவியைப் பயன் டு த் தி ப் பேராசிரியர் பதவியைத் தட்டிக் கொண் டவரல்லர் அவர்.
பேராசிரியர் வித் தி யா ன ந் த ன், பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலரைப்போல, பல்கலைக்கழகப் படிப்பிப்போடு, தம்முடைய பணி முடிந்து விட்டதாகக் கருதவில்லை. முழுநேர ஆராய்ச்சியாளராகவும் விளங்க வில்லை. பல்கலைக்கழகப் பணிகளைத் தமக் கேயுரிய தனித்தன்மையோடு நிகழ்த்திப் பெருமை கொண்ட இப்பே ராசிரியர், பல்கலைக் கழக்த்துக்கு வெளியேயுள்ள தமிழர் சமுதாயம் பற்றி மிகுந்த அக்கறை dist lug- வந்துள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுந்திய தமிழர் சால்புபற்றிச் சிறப்பாகச் சீமையில் ஆராய்ச்சி செய்து திரும்பிய பேராசிரியர் வித்தியானந்தன் இன்றைய தமிழர் பரிதாப நிலைகண்டு மிகமிக வருந்தினர். பேச்சுவன்மையும் எழுத்துவன்மையும் பெற்றிருந்த பேராசி ரியர் தமிழர் சமுதாயத்தை அறிவூட்டிச்சீர் திருத்த முனைந்தார்.
பேராசிரியர் இங்கிலாந்திலிருந்து திரும் பிய 1950 ஆம் ஆண்டிலேயே மேனுட்டுச்

4 & 8
கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
சமுதாய நிலையையும் இலங்கைச் சமுதாய நிலையையும் ஒப்பிட்டு, இலங்கையில் மேனுட்டிலுள்ள உயர்பண்புகள் என்று தோன்றுமோ என்று அங்கலாய்க்கிற நிலை யிலே சில கட்டுரைகளை எழுதித் தினகரன் பத்திரிகையில் வெளியிட்டார். புதுமை நோக்குள்ள பல்கலைக்கழகத் தமிழ்விரிவுரை யாளர் இவர் என்பதை இக்கட்டுரைகள் இலங்கைத் தமிழர்களுக்கு அறிமுகஞ் செய் திருந்திருக்கவேண்டும். -
இலங்கைப் பல்கலைக்கழகம் கொழும்பி லிருந்து பேராதனைக்கு இடம்மாறியது பேராசிரியர் வித்தியானந்தன் பணிகளுக்கு வாய்ப்புகளை அதிகரிக்க உதவியது. இலங் கையின் மத்தியில் அமைந்துள்ள பேரா தனையிலிருந்து தமிழர் பரந்துவாழும் பகுதி களுக்கெல்லாம் பேராசிரியர் வித்தியா னந்தன் ஒடியோடிப் பணியாற்றக்கூடிய நிலைமை ஏற்பட்டது. கிழக்குமாகாணத் தமிழ்மக்களோடு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொண்ட பேராசிரியர், மலையகத் தலைநகராம் கண்டிக்கு அருகிலே வாழ்ந்ததால் மலையகத் தமிழ்ப்பகுதி களோடும் தொடர்புகள் கொண்டிருத்தார். இலங்கைமுழுவதும் பரந்துவாழும் முஸ்லிம் களையும் அரவனைத்துச் செல்வதாக அவர் பணிகள் அமைந்தன.
இலங்கை விடுதலைபெற்ற பின்பு, இலங்கையில் தமிழர்நிலை எப்படி இருக்க வேண்டுமென்பது ஐம்பதுகளில் அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. விவசாய அபிவிருத்தியென்ற பெயரிலே பாரம்பரியத் தமிழர் பிரதேசங்களில் நடந்த வெளியார் குடியேற்றங்கள், மலையகத்தமிழர் குடியுரி மையும் வாக்குரிமையும் பறிப்பு என்பன ஏற்படுத்தாத தாக்கத்தைத் தமிழர் மத்தி யிலே மொழிப்பிரச்சினை ஏற்படுத்திற்று. தமிழுக்கு உத்தியோக மொழி அந்தஸ்து இல்லையென்ற நிலை, பெரும்பான்மைத் தீவிரவாதிகளின் முயற்சியால், உத்தியோக மொழிச்சட்டத்தில் தமிழுக்கு இடமே இல்லையென்ற நிலைக்குத் தாழ்ந்தது. இந்தச்

Page 33
சூழ்நிலையில், பேராசிரியர் வித்தியானந் தன் தமிழ்மொழி நாடுமுழுவதும் உரிமை பெற வேண்டுமென்ற கருத்தை மிகவும் ஆணித்தரமாக எடுத்துக் கூறிவந்தார். சங்ககால வீரயுகச்செய்யுள்களிலுள்ள மான உணர்ச்சித் தமிழிலே திளைத்திருந்த பேராசிரியர் தமிழர் உரிமைக்குக் குரல் கொடுத்துத் தமிழர் மானஉணர்ச்சியைத் தட்டி எழுப்பினுர். சுப்பிரமணியபாரதியும் பாரதிதாசனும் இந்தியத்தமிழரை விழித் தெழுந்து போராடுவதற்கு அறைகூவிய உணர்ச்சிக் கவிதைகள் பேராசிரியர் வித்தி யானந்தனின் பேச்சுகளிலும் எழுத்துக்களி லும் வீரநடை போடுவதைக் காணக்கூடி
யதாக இருக்கிறது.
ஆளப்படுவோரைப் பலவீனப்படுத்தி அடக்கியாள்வதற்குப் பிரித்தாழும் சூழ்ச்சி ஆள்வோராலே பொதுவாகக் கையாளப் படுவதுண்டு. இலங்கையிலே ‘தமிழ் பேசும் மக்கள்" என்ற தொடர்தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்க வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் தமிழர்கள் என்று கணிக்கப்பட இலங்கையிலே தமிழர்கள் வேறு, முஸ்லிம் கள் வேறு, இருசாராரையும் இணைத்துக் கூறவேண்டுமானுல், தமிழ்பேசும் மக்கள் என்ற நிலை காணப்படுகிறது.
இந்தப்பிரிவினைவாதத்தைத் தொடக்கி வளர்த்தவர்கள் இலங்கையில் ஆளும் கட்சிகளாக இருந்தவர்கள். முஸ்லிம்களும் தமிழர்களே, தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே என்ற கருத்தைப் பேராசிரியர் பல இடங்களிலே வற்புறுத்தியுள்ளார். முஸ்லிம்களும் எழுத் தாளர்களும் தமிழை வளர்த்துவந்தவாற் றை எடுத்துக்காட்டினுல் முஸ்லிம்மக்களும் தமிழுணர்ச்சி பெற்றுத் தமிழ்காக்கப் போராட முன்வருவர் என்று பேராசிரியர் நம்பினர். தம்முடைய முஸ்லிம் மாணவர் ஒருவரைக்கொண்டு இஸ்லாமியர் தமிழுக் காற்றிய பணிபற்றியும் முஸ்லிம் தமிழ்க் காப்பியங்களைப் பற்றியும் பட்டமேற்படிப்பு ஆராய்ச்சிகளை நிகழ்த்தி, மதுரைப்பல் கலைக் கழகத்துக்கு இஸ்லாமிய தமிழிலக்கியப் பேராசிரியராக அவர் போவதற்கு வழி
4
5

யமைத்துக் கொடுத்தார். G3 Tr TGifu trřவிந்தியானந்தன் தம்முடைய இலக்கியத் தென்றல் என்ற நூலிலே இஸ்லாமியர் தமிழுக்காற்றிய பணிகளை விதந்து விரித் துரைத்தார்; பிறையன்பன் என்ற புனைபெய ரில் இஸ்லாமியரின் வரலாற்றுக் கலாச்சாரச் சிறப்புகளையெடுத்துக் காட்டும் கலையும் பண்பும் என்னும் நூல் எழுதிப் பரிசிலும் பெற்ருர், பல கூட்டங்களிலும் கட்டுரை களிலும் இஸ்லாமியரின் தமிழுக்கான பங் களிப்பைப் போற்றியுள்ளார்.
"தமிழர்கள் ஒன்று குறிப்பிடப்படு பவர்களுக்குள்ளும் எத்தனையோ வேறுபா டுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சமய அடிப்படையிலே, கிறிஸ்தவர்கள் என்றும் சைவர்கள் என்றும் பிரிவினை பேசப்படுவது உண்டு. தமிழும் சைவமும் ஒன்று என்றும் சைவப்பண்பாடே தமிழ்ப்பண்பாடு என் றும் கூறப்படுவதுண்டு. பேராசிரியர் வித்தியானந்தன் இப்போக்கைக் கண்டித் துள்ளார். தமிழ் மக்களிடையே பலவேறு சமயங்கள் அன்றும் இன்றும் இடம்பெற் றுள்ளனவெ ன் று ம், பிறசமயத்தார்கள் எல்லாக் காலங்களிலும் தமிழுக்குக் காத் திரமான தொண்டுகள் செய்துள்ளார்களெ னவும் பேச்சுகளிலும் பத்திரிகைக் கட்டுரை களிலும் பேராசிரியர் வற்புறுத்தி வந்துள் ளார். சமயப் பூசல்களுக்கு அப்பால் நின்று மேஞட்டாரும் கிறித்தவரும் தமிழ் மொழிக்காற்றிய பணிகளைப் பேராசிரியர் எடுத்துக்கூறிய இடங்கள் பல. இலக்கியத் தென்றல் என்ற அவருடைய நூலில் இடம்பெறும் *மேனுட்டார் தமிழுக் காற்றிய தொண்டு" என்ற அத்தியாயம் மாதிரிக்கு ஒன்ருகும்.
இலங்கை சிறிய நாடாக இருந்த போதிலும் போக்குவரத்து வசதிகள் குறைந்த நிலையிலே, யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, மலைநாடு என்று பிரதேசரீதியிலே பிரிந்து வாழும் தமிழர் களிடையே பிரிவினையை வளர்க்க முயன்ற வர்களையும் பேராசிரியர் கண்டித்து வந்துள்ளார். 1956 இல் தொடங்கிய தமிழ்ப்பல்கலைக்கழக இயக்கம் திருகோண மலையை மையமாகக் கொண்டு அத்திவா

Page 34
ரம் நாட்டி வளர்த்து வந்ததைக் கண்டு சகிக்காத அரசாங்கம் யாழ்ப்பாண மக் களை ஒருபுறமும் மட்டக்களப்பு மக்களே ஒருபுறமும் முஸ்லிம்களே ஒருபுறமும் தூண்டிவிட்டு இயக்கத்தைச் சிதைத்த
மைக்கு எதிராகக் கண்டனக் குரல் எழுப்பினர். தமிழர் சமுதாய ஒற்று மையை வலியுறுத்தி, அவர் பேச்சுகள் பல பத்திரிகைகளிலும் வெளி வந்துள்ளன. "தமிழர் வரலாற்றிலே
சமுதாய ஒற்றுமை’ என்ற தலைப்பிலே தினகரன் தமிழ் விழாவிலே அவர் நிகழ்த்திய பேச்சு இரண்டு தினகரன் இதழ்களிலே தொடர்ந்து வெளிவந்தது.
இன உணர்ச்சி மிக்கவராக விளங்கிய பேராசிரியரின் கருத்துகளுக்குச் சுதந்திரன் பத்திரிகை பல சந்தர்ப்பங்களிலே களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. 1954 இல் வெளிவந்த சுதந்திரன் இதழொன்றில் அவரவர் அபிப்பிராயம் என்ற பகுதியிலே பேராசிரியரைப்பற்றி அறிமுகப்படுத்தும் போது, 'கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களின் கட்டுரைகளை வாசிக்காத, வானுெலிப் பேச்சைக்கேட்காத தமிழ் மக்கள் இரார் என்றே சொல்லலாம்,' என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பின்பும் இவருடைய பணி முப்பதாண்டு களாகத் தொடர்ந்து வருகிறது. சுதந்திரன் பத்திரிகையின் மேற்படி இதழில், தமிழிலே பிறமொழிச் சொற்கலப்பு, கலைச்சொல்லாக் கம், பல்கலைக்கழகத்திலே தமிழ் மூலம் கல்வி, தமிழ் மக்களுக்குத் தனிப்பல்கலைக் கழகம், தமிழ் வளர்ச்சிக்கு ஆங்கில அறிவின் அவசியம் என்ற பல திறப்பட்ட பிரச்சினைகளில் தம்முடைய கருத்துகளைத் தெளிவாகக் கூறியுள்ளார். 1957 இல் வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையின் பத்தாவது ஆண்டுமலரில், பேராசிரியரின் 'தாயின் மேல் ஆணை’ என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. தமிழன் பெருமையும் தமிழன் மாண்பும் வரலாற்றுச் சான்றுக ளோடு இதிலே விளக்கப்பட்டு, தமிழ் மக்கள் மொழி, நாடு, கொடி, பண்பாடு, கலை பற்றிக் கவ்லைப்பட வேண்டுமென உணர்ச்சித் தமிழிலே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
தமிழாராய்ச்சி மகாநாடுகள் பேராசிரி யரின் தமிழ்ப்பணிகளுக்குப் புதிய களம்

6 -
அமைத்துக் கொடுத்தன. உலகத் தமிழா ராய்ச்சி மகாநாடுகள் அனைத்திலும் பங்கு பற்றிய இலங்கைத் தமிழர் என்ற பெருமை பேராசிரியருக்கே உரியது. அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் இலங் கைக்கிளையின் தலைவரான பேராசிரியர் யாழ்ப்பாணத்திலே, அன்றைய அரசின் பலத்த எதிர்ப்புக்கிடையே நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டினை நடத்தினர். தமிழாராய்ச்சி பல்வேறு துறைகளிலும் நடைபெறவும் இலங்கைத் தமிழர் வெளிநாட்டுத் தமிழறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களோடு தொடர் பு கொள்ளவும் இம்மகாநாடு வழிவகுத்தது. தமிழாராய்ச்சி மகாநாடு யாழ்ப்பாணப் பொதுமக்களிடையேயும் தமிழுணர்ச்சி கரை புரண்டோடச் செய்தமையைக் கண்ட பேரா சிரியர் இலங்கைத் தமிழ்மக்கள் பரந்து வாழும் பல்வேறு பிரதேசங்களிலும் இத் தகைய மகாநாடுகளைச் சிறிய அளவிலே பிரதேச அடிப்படையிலே நடாத்துவதற்கு அம் மன்றக் கிளைமூலம் முன்வந்தார். 1976 இல் மட்டக்களப்பிலும் 1983 இல் வன்னிப் பிரதேச மகாநாடு முல்லைத்தீவிலும் நடை பெறுவதற்குப் பேராசிரியரின் முயற்சியே முதற்காரணமாகும். மட்டக்களப்பு மக்கள், வன்னிப் பிரதேச மக்கள் தங்கள் தங்கள் கலை, இலக்கிய, வரலாற்றுப் பெருமைகளே அறிவதற்குப் பேராசிரியர் ஒழுங்கு செய்த இந்த மகாநாடுகள் உதவின.
மானஉணர்ச்சி தமிழருக்கு அவசிய மென வலியுறுத்திவந்த பேராசிரியர் புறநா னுாறு, சிலப்பதிகாரம் முதலிய பண்டைத் தமிழ் இலக்கியங்களிலிருந்து சான்றுகள் காட்டத் தவறுவதில்லை. தாமதித்துப் பகை வர் கொண்டு தண்ணிரை அருந்த மறுத்து, அந்நீரைக் கையில் வைத்துக்கொண்டே உயிர்நீத்த கணைக்காலிரும்பொறையின்மான உணர்ச்சி பேராசிரியர் பேச்சுகளில் இழை யோடும். தமிழ் மன்னரைப் பழித்துச் சொன்ன சொற்பொறுக்காத சேரன்செங் குட்டுவன் ஆரியமன்னரான கனகவிசயர் தலையிலே கண்ணகிக்குக் கல்சுமப்பித்த கதை ஆங்காங்கு அவர் பேச்சுகளிலே மிளிரும். மானம் ஒன்றே பெரிதென மதிக்குந் தமிழர் சலுகைகள் பெற்று வாழ ஒருபோதும் உடன்

Page 35
படார், போராடியே தீர்வர் என்ற கருத் துகளை வெளியிட்ட பேராசிரியர் ஒர் அறப் போர் விரும்பி யென்பதையும் இவ்விடத்தே குறிப்பிடவேண்டும். வள்ளுவர் வகுத்த வழி யில் காந்தி சென்று வெற்றிக்கொடி நாட் டியது நமக்கோர் எடுத்துக்காட்டு என்பது அன்றைய பத்திரிகைகளிலேயே வெளிவந்த அவர் கருத்துகளில் ஒன்று.
சமுதாய சீர்திருத்தவாதியாக விளங்கிய பேராசிரியர் திராவிட இயக்கம், சுயமரி யாதையியக்கம், தனித்தமிழியக்கம் என்பன வற்ருலும் கவரப்பட்டவர். அவர் வெளி யிடும் கருத்துகளில் இவ்வியக்கங்களின் செல் வாக்கினையும் ஆங்காங்கே காணலாம். பேரா சிரியர் முற்போக்கு இயக்கத்திலும் அனு தாபமுடையவர். பாமரமக்களிடமும் வசதி யற்றேரிடமும் சென்று அவர்களின் ஆக்கப் பணிகளுக்கு ஆதரவு நல்கும் இயல்பு இவ ருக்கு உண்டாதலால் இலங்கைத்தமிழர் எல் லாப் பிரிவினரிடையும் பலரின் அன்பு பேரா சிரியருக்கு உண்டு.
பேராசிரியர் பேராதனைப் பல்கலைக் கழ கத்திலே விரிவுரையாளராக இருந்த காலத் திலே, அவருடைய ஆசிரியர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். பேராசிரியர் வித்தியானந்தன் குருபக்தி மிகுந்தவர். தம்முடைய ஆசிரியர் களாகிய சுவாமி விபுலானந்தரையும் கண பதிப்பிள்ளையையும் மிகுந்த மதிப்புடனேயே எப்பொழுதும் குறிப்பிடுவார். கணபதிப் பிள்ளையும் இவர்மேல் அன்புமிக்கவராக இருந்ததினுல், இவர் அக்காலத்திலும் தமிழ்த் துறையில் சக்திமிக்கவராக விளங்கினர். உயர்கல்வி பயில்வதற்கும் ஆராய்ச்சியினை நடத்துவதற்கும் நூல்களை வெளியிடுவதற் கும் சற்றும் தயங்காது ஆதரவை நல்கும் இவர் இயல்பு, இலங்கையிலேயே ஒரே பல் கலைக்கழகத் தமிழ்த்துறையாக விளங்கிய பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை

-س- 7
யிலே பலர் உயர்சித்தி பெறவும், முது மாணி கலாநிதிப் பட்டங்களைப் பெறவும் பின்பு புகழோடு விளங்கவும் பேருதவியாக அமைந்தது.
பேராசிரியரின் வளர்ச்சி பற்றிய இரக சியம் அவர் தினகரன் 15-11-1964 இல் வெளியிட்ட ஒரு கருத்திலிருந்து புலனுகிறது. *எனது தாயாரின் பொறுமையும் அடக்க மும் அன்பும் சகோதரப்பிணைப்பும் என்னி டம் பொறுப்புணர்ச்சியையும் பிறர்நலனுக் காக உழைக்கும் பண்பையும் வளர்த்தன. வளர்ச்சி என்பது வயதைப் பொறுத்ததன்று: பண்பாலும் அறிவாலும் வளர்ந்து எவ்வளவு சகோதரரை அனைத்துக் கொள்கின்றேமோ, அதுவே வளர்ச்சியைக் கணிக்கும் கோலா கும்.’’ பேராசிரியரின் வளர்ச்சிக்கு, சுமார் இருபதாண்டுகளுக்கு மேலாக, அவருடைய வாழ்க்கைத் துணைவியாக இருந்து காலஞ் சென்றுவிட்ட திருமதி கமலாதேவி வித்தி யானந்தனும் எல்லாவகையிலும் உதவி வந்தார்.
தமிழர் சமுதாயம் முன்னேறுவதற்கான வழிவகைகள் பற்றிச் சிந்தித்து வந்தவரான பேராசிரியர் 1964 தினகரன் புத்தாண்டு மலரிலே தம்முடைய கருத்தைப் பின்வரு மாறு வெளியிட்டுள்ளார். 'உயரிய எண்ண மும் மானஉணர்ச்சியும், மன உறுதியும், பொருளாதார உயர்வும், பொறுப்புணர்ச்சி யும்,தளராதமுயற்சியும் பரந்தமனப்பான்மை யும் பெற்ருல்தான் தமிழர் சமுதாயம் முன் னேற வழியுண்டு.”* தமிழர் சமுதாய முன் னேற்றம்பற்றி அக்கறைமிக்க இவருக்கு யாழ்ப்பாணத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நீண்டகாலம் வழி நடத்தும் பொறுப்புக் கிடைத்தது பொருத்தமே. தமிழர் சமுதாய முன்னேற்றத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட இவரின் மணிவிழாவைத் தமிழர் சமுதாயம் கொண்டாடுவது, அதனது செய்ந்நன்றி மறவாத் தன்மைக்கு அறிகுறி யாகும்.

Page 36
ஆராய்ச்சியாளஞக . . .
பேராசிரியர் கா. சிவத்தம்பி, பல்கலை
*பல்கலைக்கழகப் புலமையாள ன்?
(University Intellectual) 6T6or 6656) iri (5 still பிடப்படும் பொழுது, அவரது "புலமை’ விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சி முறை  ைம யினடிப்படையில் தொழிற்படுவது என்பது கருத்தாகும். ஆராய்ச்சியாளர் என்போர் பல்கலைக்கழகங்களில் மாத்திரம் இரு க் க வேண்டுமென்பதில்லை. ஆனூல், பல்கலைக்கழ சுத்துப் புலமையாளர் என்பவர் ஒர் ஆராய்ச் சியாளராகவல்லாது பல்கலைக்கழகப் புல மையாளர் எனக் கொள்ளப்படமுடியாது.
எனவே பல்கலைக்கழகப் புலமை என் பது **ஆராய்ச்சி” (research) எனும் தளத் திலிருந்தே கிளம்புவதாகும். எனவே முத லாவதாக **ஆராய்ச்சி’ என்பது யாது என்பதை அறிதல் வேண்டும். 'ஆராய்ச்சி" என்பது research எனும் ஆங்கில பதத்தின் மாற்றீடு (transtrence) ஆகும். அதாவது ஆங்கிலத்தில் ‘ஹிசேச்’ (research) க்குரிய கருத்துக்கள் அத்தனையும் தமிழில் அதற்குச் சமஞக நிலைநிறுத்தப்பட்டுள்ள 'ஆராய்ச்சி’ எனும் சொல்லின் மீது "மாற்றிடப்படும்’ எனவே நால் இங்கு ‘ஆராய்ச்சி’ எனும் சொற் பொருள் பற்றி அறிய முனைவதிலும் untrtâtas, *A5)(3aré* (research) 6TGyula grâ கிலப்பதத்தின் பொருளையே நோக்குதல் வேண்டும். அவ்வாறு நோக்கிய பின், அப் பொருள் முழுவதும் "ஆராய்ச்சி*’ ஒனும் பதத்திற்குமுரியது எனக் கோடல் வேண்டும்.
ஆங்கிலப் பதமான **research" என் பதற்கு இங்கு இயைபாகும் கருத்துக்கள் **செயல்முனைப்படுத்தப்பட்ட தே ட ல்’ *நுண்ணிய பரிசோதனை அன்றேல் உசாவல்’ "ஒருபொருளை விஞ்ஞானபூர்வமாகப்படிப் பதன் மூலம் உண்மைகளை அறிந்து கொள்

கழகம், யாழ்ப்பாணம்.
வதற்கான முயற்சி” என்பனவாகும்.Research எனும் பதத்தில் வரும் " எனும் முன்னீடு செயல்முனைப்பினைக்குறிப்பதாகும். (a-b refine, revere 67 657 ugot.)
'ஆராய்ச்சி” அல்லது 'ஆய்வு' எனும் சொல்லினை rese:rch (றிசேச்) என்பதற் கான 'மாற்றீட்டுப் பதமாகக் கொள்ளின், ஆராய்ச்சி ஆய்வு * என்பது திட்டவட்ட மான ஒர் அறிமுறைவழிப்பட்ட, முனைப் பான புலமைத் தேடல் என்ற கருத் தி னை யுடைவது என்பது தெளிவாகும்.
மேற்கூறிய இந்தத் 'திட்டவட்டமான அறிமுறைவதிப்பட்ட, முனைப்பான புலமைத் தேடலின்' பயன்பாடு (அல்லது தொழிற் பாடு) பாது என்பது அடுத்து வரும் முக் கிய வினவாகும்.
அத்தகைய புலமைத்தேடல் அல்லது உசாவல் மூலம் அறிவு (Knowledge)
(i) தோற்றுவிக்கப்படுகின்றது.
(ii) ஒழுங்கமைக்கப்படுகின்றது.
ஒழுங்கமைப்டே ஒரு புதிய "ஆக்கம்* தான். ஏதோ ஒன்று தோற்றுவிக்கப்படும் பொழுது தான், உள்ளதைப் புதிய ஒழுங் கமைப்பிற் பார்க்கும் தன்மை ஏற்படுகின் றது. அத்துடன் ஒன்று ச ரி கிட் ட மாக ஒழுங்கமைக்கப்படும் பொழுதுதான், அதன் வழிகாகப் புதிதொன்று தோற்று விக்கப் படும்.
* "ஆராய்ச்சி' எனும் சொல்லுக்குப் பதிலாக "ஆய்வு" என்ற சொல்லு இப்பொழுது தமிழகத்திற் பெருவழக் காகியுள்ளது. முதலாவது “ஆராய்" என்னும் வினைய டியாகவும் இரண்டாவது "ஆய்” என்னும் வினையடியா கவும் வந்துள்ளன. பருே, எமனே இவையிரண்டையும் வெவ்வேறு வினையடிகளாகவே கொள்வர் (DED 306; 319) ஆயினும் இவையிரண்டும்ஒரு வினையடியாகவே தோன்றியிருக்கலாம்.
இக்கட்டுரையில் 'ஆராய்ச்சி’ எனும் சொல்லே. கையாளப்படுகின்றது.

Page 37
எனவே ஆராய்ச்சியாளர் ஒருவர் ஒரு துறையில் ஆராய்ச்சி செய்கின்ருரெனின் அவர் அத்துறையில் அறிவினைத் தோற்று விக்கின்ருர் அன்றேல் தோற்றுவிப்பதுடன் ஒழுங்குபடுத்துகின்றர் அன்றேல் ஒழுங்கு படுத்துகின்ருர் என்பதே கருத்தாகும்.
இந்தத் ** தோற்றுவிப்பு + ஒழுங்கு படுத்துகை” அன்றேல் தனியே தோற்று விப்பு அல்லது தனியே ஒழுங்குபடுத்துகை என்பது ஒரு நெறிமுறை (method) க் கேற் பவே செய்யப்படும். ஆராய்ச்சி நெறிமுறை பற்றித் தனியே (ஆராய்ச்சி நெறிமுறையி uái) - res3.arch with methodology) at 667 sets துறையுண்டு.
இந்த "ஆராய்ச்சி முறை’ 6 ன் பது அவ்வப்பாடத்தின் இயல்புக்கும், ஆராய்ச்சி யாளனின் உலக நோக்குக்கும் இயைபான தாகவிருக்கும், ஆராய்ச்சிமுசிற ப8 டத்தின் இயைபுக்கேற்ப வேறுபடுமே தவிர ஆராய்ச் சிமுறையின்றி ஆராய்ச்சி ந  ைட பெ ருது ஆய்வுப்பாடம் எதுவாயினும் சரி அதற்கு இவ்வுண்மை பொருத்தும். இதனுலே தான் உண்மையான பல்கலைக்கழக மட்டத்தில் பாடங்களுக்கிடையிலே ஏற் றத் தாழ் வு கற்பிக்கப்படுவதில்லை **
பல்கலைக்கழகப் புலமையாளனின் சிறப்பு அவன் தனது துறையின் அறிவுத் தோற்று விப்புக்கும் ஒழுங்கமைப்புக்கும் எந்த அளவு பங்களிப்புச் செய்துள்ளான் என்பதிலேே தங்கியுள்ளது. ***
I
இந்தப் பின்புலத்தில் வைத்து சு. வித்தி யானத்தன் எனும் 11ல்கலைக்கழசப் புலமை யாளரை நோக்குதலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சு. வித்தியானந்தனின் புலமைச் சிறப்
பின அறிவதற்கு முதலில், அவரது பிர
தான ஆராய்ச்சித் துறைகன்ச் சரிதிட்ட
மாக அறிந்து கொள்ளல் அவசியமாகும்.
5
s

Э —
வித்தியானந்தன் அவர்களின் புலமை கள் எழுத்துக்களை நோக்கும் பொழுது அவை இரண்டு பெரும் பிரிவுக்குள்ளே
வருவனவாகவுள்ளன.
1. தமிழர்களுடைய பண்பாட்டு வர லாற்றமிசங்கள் பற்றிய எழுத்துக் கள் .. 2. ஈழத்துத்தமிழர் பண்பாட்டு அமி
சங்கள் பற்றிய எழுத்துக்கள்.
இவை இரண்டுமே ' 'தமிழரின் பண்பாட் டைப் பற்றிய - புலமைச்சிந்தை' எனும் பொதுத்தலைப்பின் கீழ்வரும். -
ஆயினும் இவரது எழுத்துக்களையும், அவ்வெழுத்துக்களின் அடித்தளத்து முறை மைகள் புலமைத் தேடல்களையும் நோக்கும் பொழுது, இவரது முக்கிய ஆ ரா ய் ச் சிக் களங்கள் இரண்டாகும்.
முதலாவது சங்ககாலம் பற்றியது. இரண்டாவது ஈழத்துத் தமிழ் நாடகமரபு பற்றியது.
முதலாவது துறைக்கான இவரது மிகச் சிறப்பான ஆராய்ச்சி எழுத்து 'தமிழர் சால்பு - சங்க கலம்’ (1954) ஆகும்.
இரண்டாவதுக்கான இ!ைரது ஆராய்ச்சி எழுத்துக்கள் இரு நிலைப்பட்டனவாகவுள் ளன.முதலாவது, ஈழத் கின் மரபுவழிக்கூத்துக் களின் பதிப்புக்கள் சில ஆகும். அலங்கார ரூபன் நாடகர் (1962) எண்டிறீக்கு எம்பிர தேர் நாடகம் (1964 : மூஜிராசாக்கள் நாட கம் (1966) ஞானசவுந்தரி நஈடசம் (1967) ஆகிய பதிப்புக்களிற் கானப்படும். பதிப் அப்பதிப்புக்களும் ஒரு தீஃப்
திக சம்பளமும் தியோகங்களை
** ஆணுல் நமது சூழ்நிலை பெரிய சமூகஸ்திரப்பாடும் வழங்கக் கூடிய பாடங்கள் உயர்ந்த பாடங்களாகவும் மற்றையவை தாழ்ந்த பாடங்களாகவும் கருதப்படும் வழக்கம் மாணவர் முதல் ஆசிரியர்கள் வரை காணப் படுகிறது. -
*** பல்கலைக்கழகப் புலமையாளரின் பிரதான பணி பாடஞ் சொல்லிக்கொடுப்பதன்று.

Page 38
அடுத்த நிலைக்குரியனவாகக் கொள்ளப் படத்தக்கவை, நாட்டுக் கூத்து ம ர புகள் பற்றிய, முக்கியமாக மட்டக்களப்பு நாட் டுக் கூத்துமரபு பற்றிய ஆராய்ச்சிக் கட் டுரைகள் ஆகும். 1968-ம் வருடத்துத் தமி ழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப் பெற்ற su GQ60T ( A study of two types of Folkdrama Peculiar to the Tamils of Ceylon) மிக முக்கியமானதாகும். இந்த இருமட்ட எழுத்துக்களுக்கும் அடித்தளமாக அமைவது அவர் இத்துறையில் மேற்கொண் Igg555 467 -guilej (field Survey) egg Lib. இந்தக்கள ஆய்வு மிக முக்கியமான ஒன்ரு குல். இது வெறும் புலமை > முயற்சி பொன்றுக்கான தரவுத்தேடலாக அமையாது சமூக இயைபுகுன்றிய நிலையிற் கிடந்த ஒரு கலேவடிவத்தை, கல்வித்துறைக் கவனிப்பு மூலமாகவும்; பண் பா ட் டு த் துறையின் சிரத்தை மூலமாகவும் மீட்டும் வன்மை யான, சனரஞ்சகமான ஒரு கலைவடிவமாக அமைக்கும் முயற்சியாகவும் அமைந்தது.
இவை இரண்டினையும் சிறிது ஆழமாக நோக்குதலவசியமாகும்.
சங்க காலம் பற்றிய ஆய்வு கலாநிதிப் பட்டத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஆய் வாகும். 1949-50 இல், இ லண் டன் பல்கலைக்கழகத்துக் கீழைத்தேய, ஆபிரிக்க ஆய்வுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாகும். 'பத்துப் பாட்டு நூல்கள் பற்றிய வரலாற்று சமூக மொழி யி ய ல் ஆய்வு’ எனும் தலைப்பின் கீழ்ச்செய்யப் இவ்வாராய்ச்சியே பின்னர் 1954-இல் -ساسکالا தமிழர் சால்பு சங்க காலம் எனத் தமிழில் வெளியிடப் பெற்றது. சங்க காலம் பற்றி இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட் ஆய்வு களுள் - மிகமுக்கிய ஆய்வுகளில் இது ஒன்ரு கும.
இவ்வாராய்ச்சி தமிழில் வெளிக்கொண ரப்பட்ட பொழுது இது அத்துறைபற்றிவந்த ஆராய்ச்சிகளுள் மிகவேறுபட்டதாகவிருத் தது. அதுகாலவரை பண்டைய தமிழகம் பற்றி வந்த, தமிழ்மொழியிற் பிரசுரிக்கப் பட்ட ஆராய்ச்சிகள் மூலங்களை உள்ளவாறே

Ο --
ஏற்று, அவற்றை விமர்சனத்துக்கு ஆட் படுத்தாது எழுதப்பட்டவையாகும். மேலும் மூலங்கள் எவ்வித ஐயங்களையும் எழுப்பா தனவாகவும் அமைந்தன. இவையாவற்றுக் கும் மேலாக, சங்க இ லக் கி யங் களிற் காணப்படும் சமூக வரலாற்றுத் தகவல் களை வரன்முறையான முறையிலே தொகுத்துத்தரும் ஆராய்ச்சிகள் அக்காலத் திலிருக்கவில்லை.
இத்தகைய ஒரு திலையில், சான்றுகளை நன்கு ஆராய்ந்து, கிடைக்கும் சான்றுகளை வரலாற்று நெறிக்கியைய தொகுத் தும் தரும் ஆராய்ச்சி சங்க இலக்கிய ஆராய்ச்சி யின் ஒரு படி முன்னெடுத்துச் ச்ெல்வதா கவே அமைந்தது. 'தமிழர் சால்பு' அத் தகைய ஒக ஆராய்ச்சிப் படி நிலை பாகவே அமைந்தது. அது வெளிவந்த பொழுது, தமிழ்த்துறை அறிஞர்களிலும் பார்க்க வர லசற்றுத்துறை அறிஞர்களாலேயே பெரி தும் போற்றப்பட்டது. "தமிழர் சால்பு’’ கால ஒட்டத்தில், சங்க ஆராய்ச்சிகளுள் மிகமுக்கியமான ஒன் ரு க மேற்கிளம்பத் தொடங்கியது. 1960 களில் தமிழகத்தில் இது பெற்ற செல்வாக்குக் காரணமாக, அங்கு (1968) ஒரு பதிப்பு வெளிவந்தது.
கலாநிதிப் பட்டத்துச் சான ஆராய்ச்சி யின் பொழுது பெற்ற ஆராய்ச்சி அநுப பவம், பின்னர் வளர்ந்து வந்த தமிழ்ப் பண்பாட்டியல் ஈடுபாட்டிற்குப் பெரிதும் உதவிற்று. பல்கலைக்கழகத்தினுள் நடாத் தப்பெற்ற போதனை மட்டத்தில் இது இலக் கிய வரலாறு, பண்பாட்டு வரலாறு ஆகிய இருபாடங்களையும் உள்ளடக்கியது. இலக் சணப் போதனையின் பொழுது ம் கூட ஆராய்ச்சி வழியாற் பெற்ற ** தொகுப்புவகுப்பு’’ முனற இலக்கண விதிகளைச் சுல பமாக எடுத்துக் கூற உதவிற்று.
பின்னர் 1958 இலிருந்து ஈழ த் துத் தமிழர் நாட்டுக் கூத்து மரபினை ஆராய முற்பட்டபொழுது, இவ்வாராய்ச்சி அநு பவம், அந்த மரபின் செயற் பா டுகள் யாவற்றையும் தொகுத்துக் கூறு வ தற்கு உதவிற்று.

Page 39
III
பேராசிரியர் வித்தியானந்தன் அவர் களது ஆராய்ச்சி நெறி முறை யா ன து, ''Opfd, sit 5 airts th' (Positivism) 6T or மெய்யியலிற் குறிப்பிடப்பெறும் தத்துவ நோக்கின் வழிவருவதாகும். ‘புலப்பாடு டையனவாகவுள்ளவற்றை விவரணப்படுத் திக்கொள்ளலே அறிவு ஆகும்" என்பது இந்நோக்கின் எடுகோளாகும். ஒருபொருள் பற்றிய ஆராய்ச்சி என்பது அது பற்றியுள்ள தகவல்கள் யாவற்றையும் வரன்முறையாக விவரித்துப் பொறித்துக் கொள்ளுதல் என் பது இதன் வழியாக வரும் தொழிற்பாட்டு நெறியாகும். நேர்க்காட்சி வாதம் பிரித் தானிய சிந்தனையால் மிக நுண்ணிதாக வளர்ந்தெடுக்கப்பட்ட ஒர் அறிகை முறை யாகும். மூலத்தெளிவு, விவரத் தெளிவு அற்ற நிலையிலிருக்கும் ஓர் ஆராய்ச்சித் துறைக்கு நேர்க்காட்சி வாத ஆராய்ச்சி சிேறை ஆராய்ச்சியினே வரன்முறையான விஞ்ஞான நிலைப்படுத்த உதவும். சங்க காலம் பற்றித் தமிழில் 'தமிழர் சால்பு' வுக் மட்டக்களப்புக்கூத்து மரபுபற்றிப் ப தி ப் புரைகளும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் அவ் வத்துறை மூலங்களையும் அவற்றின் தரவு களையும் விஞ்ஞான நிலைப்பட வைத் து ஆராய உதவியுள்ளன.
இத்துறைகள் பற்றிய மே ல் வகு ம் ஆராய்ச்சிகள் இந்த ஆராய்ச்சிகளினைத் தள மாகக் கொண்டு அவற்றின் மீது கட்டி யெழுப்பப்பட வேண்டியனவேயாகும்.
சங்ககாலத்தினைப்பொறுத்தமட்டில் இவ ருக்குபின் பலர் நேர்க்காட்சிவாத நோக்கினைப் பின்பற்றிப் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற் கொண்டுள்ளனர். மு. வ ரத ர T ச ன், சுப. மாணிக்கம் போன் ருேர் முக்கியமான வர். ஆணுல் அவர்கள் இலண்டன் பல்கலைக்

கழகத்தில் வித்தியானந்தன் அவர் கன் நிறைவேற்றிய ஆராய்ச்சியின் பலாபலனே நன்கு பயன்படுத்தவில்லை. கோன்மார், தனிநாயகம், கைலாசபதி, சிவத்தம்பி ஆகி யோர் வித்தியானந்தன் அவர்களது சங்க இலக்கிய ஆராய்ச்சினைத் தத்தம் ஆராய்ச் சிக்கான கால்கோட் பொருட்களிலொன்ரு கக்கொண்டுள்ளார்.
சங்க ஆராய்ச்சியிலும் பார்க்க ஆராய்ச்சி முக்கியத்துவம் கொண்டது மட்டக்களப்பு நாட்டுக்கூத்து மரபுபற்றிய ஆராய்ச்சியா கும். இக்கூத்து மரபுக்ற்றிய எந்த ஆய்ராச் சியும் இவரது எழுத்துக்களைப் புறக்கணிக்க முடியாது. அக்கூத்து மரபு பற்றிப் 'புலப் பாடுடைய தரவுகள் யாவற்றினதும் விவ ரண நிலைப்பட்ட தொகுப்பையும், அக்கலை வடிவத்திற்கேற்ற வகையில் அவை வகுக்கப் பட்டுள்ளமையையும்' இவ்வெழுத்துக்களிற் கண்டு கொள்ளலாம்.
வித்தியானந்தன் எனும்/"ஆராய்ச்சியா ளனின் தமிழுக்கான பெரும்பங்களிப்பு இது வாகும் இந்த ஆராய்ச்சி மு  ைற எந்த அளவுக்கு இவருக்குள் ஊறிக்கிடக்கின்றது என்பதை இவரது உரைநடை நன்கு எடுத்துக்காட்டுகின்றது. வித்தியானந்தன் அவர்களின் உரை நடை விவரணம்பாச் சினதாய் அமைவதாகும். எடுத்துக்கொண்ட பொருளை விளக்கிச் செல்வதான ፴፩(Ù முறைமை அதனுள் உண்டு. அது, மேற்குறிப் பிட்ட ஆராய்ச்சி நோக்கின் வழியாக வரு வதாகும்.
விவரணத்தகவல்கள் நிறைவுறச் சொல் லப்பட்டதன் பின்னரே வியா க் கி யான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். வித்தி யானத்தனின் மாணவர் சிலர் வியாக்கியான ஆராச்சியாளராக முகிழ்த்துள்ளமைக்கான இரகசியம் இதுதான்.

Page 40
நாட்டார் கலே மீட்பா
βυσσάΡή ιανή Θ/. சண்முகதாஸ், பல்க
I. முன்னுரை
நாட்டார் கலை எங்களுடைய பண் பாட்டின் முதுசொம். ஈழத் தமிழருக்கெனத் தனித்துவமான ஒரு கலே உண்டென்ருல், அது எங்களுடைய நாட்டார் கலையை அடிப்படையாகக் கொண்டதாகவே அமை யும். ஈழத்தமிழர்களுக்கென ஒரு தனித்துவ மான நாட்டார்கலைப் பாரம்பரியம் இருந்து
வந்துள்ளது. எம்முடைய பண்பாட்டுப் பாரம்பரியங்களை நன்கு உணர்ந்து கொண்ட கலைஞன்தான் மக்களுக்காகக் கலைகள்
படைக்கமுடியும். மேலைத்தேயச் சித்தாந்தங் களுக்கு எம்முடைய பண்பாட்டிலும் இலக் கியங்களிலும் தரவுகள் சேடி அச்சித்தாந் தங்களை வலிந்து நியா கட்டடுத்த முலேடவர் அந்நியாயமான எழுத்துக்களையே எழுதுவர். எம்முடைய பாரம்பரிய அடிப்படையில் நன் முகக் காலூன்றி, நின்றுேமெனில் வந்து போகும் சிலவாழ்நாள் சித் காத்த மோகங் கள் எம்மை ஒருபோதும் அடித்துச் செல்ல மாட்டா. நாட்டார் கலை விடயத்திலும் இது உண்மை. எத்த கங்களைத் தயாரித்தவர்கள், என்று எங்களு டைய நாடகப் பாரம்பரிய அடிப்படையிலே காலூன்றி, நவீனத்தை நோக்க முயன் ருர் களோ, அன்று தொடக்கம் மக்கட் பண் புள்ள மக்கட்பணி செய்பும் நாடகங்களே வழங்கத் தொடங்கி ஒர்கள். எனவே ளம் முடைய பாரம்பரி: கலைகள் பற்றி நாம் அறிவதும், பேணிப் பாதுகாப்பதும் அலிசி யம். இத்தகைய ஒர் அத்தியாவசியமான சிறந்த பணியினே இந்த நாட்டிலே ஆற்றி யுள்ளார் போாசிரியர் சு. வித்தியானந்தன். நாட்டார் கலைகளினுடைய முக்கியத்துவத் தினை நன்குணர்ந்து, அவை மங்கிமறைந்து போகாமலும், மக்களால் அவை மறக்கப் பட்டுப் போகாமலும், அவற்றை மீட்டெ இந்த தமிழ்க் கலைஞன் பேராசிரியர் வித்தி
னையோ நவீன நாட
 
 
 
 

5(SO)5 . . .
1லைக்கழகம், யாழ்ப்பாணம்.
யானத்தன். இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பேராசிரியர் வித்தியா னந்தனுடைய நாட்டார்கலை மீட்புப்பணியை இரத்தினச் சுருக்கமாக, ܫ
நாடகத் துறைகள் கூத்து
நாட்டுள பாட்டுத் தாளம் ஏடகத் துறங்கி ஏங்கி
இறுதிமூச் செறியும் போது பாடுபட் டணத்துப் பேணிப்
பாயல்னிட் டெழுப்பிப் பாழ்நோய் வீடுசெய் திட்ட டாக்டர்
வித்தியானந்தன் வாழ்க.
என்னும் பாடல் ஒன்றிலே கூறிவிடுகின்ருர், பேராசிரியருடைய நாட்டார்கலை மீட்புப் பணி இரண்டு வகையாக அமைகின்றது. ஒன்று, நாட்டார் பாடல்கள் தொடர்பா னது, மற்றையது, நாட்டுக் கூத்துப் பற். றியது.
2. நாட்டார் பாடல்
இன்று ஈழத்துப் பல்கலைக் கழகங்க ளிலே நாட்டாரியல் வழக்குப் பற்றிப் பேசப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும் வகு கின்றன. இத்தகைய ஆய்வுகளுக்குப் பேரா சிரியர் வித்தியானந்தனுடைய நூல்களும் கட்டுரைகளும் பெருமளவு தரவுக்ளாகப் பயன்படுகின்றன. இவ்வாறு தரவுகளாகக் பயன்படுவனவற்றுள் நாட்டார் பாடல்கள் கணிசமான பங்கினைப் பெறுகின்றன. நாட் டார் பாடல்கள் தொடர்பாக மக்கள் கவி மணி வட்டுக்கோட்டை மு. இராமலிங்கம் போன்ருேர் ஈடுபட்டிருந்த போதிலும், ஈழத்தின் சில பகுதிகளைச் சேர்ந்த நாட் டார் பாடல்களைத் தொகுத்தும் வகைப்ப டுத்தியும், ஆராய்ச்சி முன்னுரைகளுடன் அவற்றை வெளியிட்டும் வைத்த பெருமை கலாநிதி வித்தியானந்தனையே சாகும். நாட்

Page 41
டார் பூாடல்களைப் படி த்த வர்கள் உதா சீனம்செய்த காலமும் ஒரு கட்டத்திலே நிலவியதை நாம் அறிவோம். ‘இயற்கை வாழ்வினின்று விலகி நிற்கும் தாகரிகத்தில் திளைத்து நிற்கும் பலருக்கு இப்பாடல்களின் அருமை தெரியாது. நாட்டுப் புறத் துப் பாமர மக்களுக்கும் நகர மக்களுக்கு ம் வாழ்க்கை முறையிலும் உள்ளப் பாங்கிலும் வேறுபாடு வளர்ந்துகொண்டே வருவதனல் பாமர மக்கள் பாடும் பாட்டைக் கேட்டு மகிழ்கிற மனநிலை படித்த மக்களைவிட்டு ஒரளவிற்கு நீங்கிவிட்டதென்று கூடக் கூற லாம். நாட்டுப் பாடல்களைப் பாடுவோரின் தொகையும் நாளுக்கு நாள் குறைந்துகொண் டே வருகின்றது. நாளடைவில் நாட்டுப் பாடல்கள் மறைந்துவிடக் கூடும்' (சு. வித் தியானந்தன், மட்டக்களப்பு நாட்டுப் பாட்ல்கள், முன்னுரை) இத்தகைய ஒருநிலை ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பிலே ஏற்படா வண் னம், பாமர மக்களின் உணர்ச்சிக் கவிவள முள்ள பாடல்கள் காலங்காலமாக நிலைத்து நிற்பதற்காக, தன்னுடைய நண்பர்கள் மாணவர்கள் ஆகியோரூடைய உதவியுடன் மட்டக்களப்பிலும் மன்னுரிலும் நிலவிவரும் நாட்டார் பாடல்களைச் சேகரித்து நூல்க ளாகப் பதிப்பித்தார்.
1957-ஆம் ஆண்டு தொடக்கம் கலாநிதி வித்தியானந்தன் இலங்கைக் கலைக்கழகத் தின் நாடகக் குழுவுக்குத் தலைவராக நிய மிக்கப்பட்டிருந்தார். இவருடைய காலத் திலே நாடகக்குழு செயற்பட்டது போல் எக்காலத்திலுமே செயற்பட்டதில்லை. பங் னுள்ள பணிகள் அக்காலத்திலே ஆற்றப் பட்டன. அத்தகைய பணிகளுள் ஒன்று நாட்டார் பாடல்களைத் தேடிச் சேகரித்துப் பதிப்பு நூல்களாக வெளியிட்டமையாகும் 1969-ல் மட்டக்களப்பு நாட்டார் பாடல் கள் நூலினையும், 1964-ல் மன்னுர் நாட் டார் பாடல்கள் நூலினையும் கலாநிதி வித்தியா னந்தன் கலைக்கழக ஆதரவில் வெளியிட் டார். 1976-ல் நீதியரசர் சிறீஸ்கந்தராசா வும் அவர் மனைவி கண்மணி அம்மையாரும் இறைவனடி சேர்ந்தபொழுது, அவர்களு ‘டைய நினைவாகக் கஞ்சன் அம்மானை பேரா சிரியர் வித்தியானந்தனலே பதிப்பிக்கப்பட்
6

--سّسس۔B
டது. இவ்வாறு வாய்ப்புக் கிடைக்கு ம் போதெல்லாம் எம் பண்பாட்டம்சங்களுள் ஒன்ருகிய நாட்டார் பாடல்களைப் பேணிப் பாதுகாப்பதிலே இவர் கண்ணுங்ககுத்து மாயிருந்தார். இவருடைய இத்தொண்டு பலராலும் மனமுவந்து பாராட்டப்பட்டது. 1969-ல் வெளியிடப்பட்ட தினகரன் நாடக விழா மலர் 'கலைத்தொண்டுக்கு ஒரு கலா நிதி" என்று தலையங்கமிட்டு, 'கலைக்கழ கத்தின் தமிழ் நாடகக் குழுத் தலைவரா யிருத்து இவர்ஆற்றியதொண்டு அளப்பரியது. கலேப்பொக்கிஷங்களாகத் திகழும் அண்ணு விமாரை மக்கள் கெளரவிக்கச் செய்து, இவர்களிடம் குவிந்திருத்த நாட்டுப் பாடல் களையும் கிராமிய நாடகங்களையும் ஏட்டில் வடித்துத் தந்த பெருமை இப்பெரியாரையே சாரும்’ என்று கலாநிதியின் பணியினைப் பாராட்டுகின்றது.
ஈழத்து நாட்டார் பாடல்களில் ஆய் வினை மேற்கொள்ளும் எவருமே இரண்டு பெயர்களை எப்பொழுதுமே மறக்க முடி யாது. ஒன்று பேராசிரியர் சு. வித்தியானந் தன்; மற் றை யது மக்கள் கவிமணி மு. இராமலிங்கம். கணிசமான அளவு கட் டுரைகளும், ஆய்வுக் கட்டுரைகளும் இவர் களுடைய பாடல்களைத் தர வு க ளாக ச் கொண்டு எழுதப்பட்டுள்ளன. உதாரணத் துக்கு இக்கட்டுரையாசிரியரின் பின்வரும் கட்டுரைகளைக் குறிப்பிடலாம். -
1. 'ஈழத்து நாட்டார் பாடல்கள்,” பூம்பொழில், தமிழ் இலக்கிய மன் றம் காப்புறுதிக் கூட்டுத்தாபனம், கொழும்ப, 1978, இக்கட்டுரை 1975 முதல் எட்டாத்தர மாணவர்க்குரிய தமிழ் நூலிற்பிரசுரமாகி வருகின்றது.
2.** இஸ்லாமிய நாட்டார் பாடல்கள் பண்பும் மொழியும்** இரண்டாவது அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் மகாநாட்டில் படிக்கப்பட்டகட்டுரை, கொழும்பு, 1979.
3. "ஈழத்து நாட்டார் பாடல்களின்
மொழியமைப்பு’ ஈழத்து நாட்டார் வழக்கியல், தமிழ்த்துறை வெளியீடு-2

Page 42
A
யாழ்ப்பாணப் ப ல் கலை க்கழகம், யாழ்ப்பாணம். 1980.
4. Patterns of Sri Lanka Tamil Folk-songs' Proceedings of the W-th International Conference Seminar of Tamil Studies, Madurai,
1981.
இவைபோன்று பலகட்டுரைகள் பலரா லும் எழுதப்பட்டுள்ளன. நாட்டார் பாடல் களைத் தொகுத்துப் பதிப்பிக்கும்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும். அவற்றுள் மிகமுக்கியமானது பாடபேதப் பிரச்சினையாகும். நட்டார் பாடல்கள் வாய் மொழிப் பாடல்களாகையால் அவற்றிலே பாடபேதங்கள் ஏற்படுவது இயல்பு. ஏனைய நூல்களைப் பதிப்பிக்கும்போது சரியான பாடத்தினை ஒரளவு கண்டுபிடித்துப் பதிப் பிப்பதுபோல நாட்டார் பாடல் களிலே செய்துவிடமுடியாது. இந்நிலையிலே கலாநிதி வித்தியானந்தன் பாட பே தங்க ளுள்ள பாடல்கள் எல்லாவற்றையுமே நூ லிலே கொடுத்து அப்பிரச்சினையை ஒரளவு தீர்த் துவைத்துள்ளாரெனலாம். உதாரணமாக மட்டக்களப்பு நாட்டார் பாடல்கள் நூலிலே "காதலன் கூற்று" என்ற பகுதியில் 8 வது
unr Lev,
தெருவால போகவொண்ணு தேன்போல மணக்கிறது கணியருந்த நான்வருவேன் - உன்ர காக்காமார் காவலுகா,
என்றமைகிறது. இதே பாடற்பொருள் 62 -வது பாடலிலே,
தெருவால போகவொண்ணு தேன்போல மணக்கிறது. உறவாட நான்வருவேன் - உன்ர
Syster øSTAT GörlorTri smresnu son G3Lro
என்றமைய, 150 வது பாடலிலே,
தெருவால போகவொண்ணு தேன்போல மணக்கிறது உறவாட நான்வாறேன் - உன்ர காக்காமார் காவலாமே.

4 -
என்றமைகிறது. இம்மூன்று பாடல்களி லும் எது சரியான பாடம் என்று எவருமே கூறிவிடமுடியாது. இதனை யெண் ணியே கலாநிதி வித்தியானந்தன் தன்னுடைய பதிப்பிலே மூன்று பாடல்களை யுமே கொடுத்துள்ளார். இந்த வகையிற் பதிப் பாசிரியர் பணியினையும் இவர் செவ்வனே ஆற்றியுள்ளார் எனலாம்.
8. நாட்டுக் கூத்து
ஈழத்துத் தமிழருடைய நாடகக் கலே யின் அடிப்படை நாட்டுக் கூத்தேயாகும். யாழ்ப்பாணத்து நாடக மரபின் ஓர் அங்க மாக, இன்றும் மரபுவழி நா ட க த் தி ன் செழுமையினையும் பெருமையினையும் மக்க ளுக்கு எடுத்துக்காட்டும் வகையிலே தமது அறுபதாவது வயதிலும் நாடகங்களிலே தோன்றிக் கம்பீரமாக நடித்து வருகிருர் நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்கள். அவருடைய 'மயானகாண்டம்’ நாடகத்தி னைப் பல நூறு தடவை பார்த்தவர்கள் சலிப்படையாமல் இன்னும் பார்க்க விரும் புகிருர்கள். அது மக்கள் கலை என்ற கார ணத்தால், எக்காலத்திலுமே மக்களிடையே ஆதரவு பெற்றதாகவுள்ளது. சொந்தமா யிருப்பதுதான் எமக்கு நீங்காத தொடர் புடையதாகவும், வற்ருது இன்பம் பயப்ப தாகவும் அமையும். அந்நியமாய் வருவன எம்முடைய உதிரத்தில் கலந்துவிடா. எத் தனையோ நவீன நாடகங்கள் நடைபெற்ரு லும், நாட்டுக்கூத்துக்களையும் அவற்றிலே தோன்றும் பாத்திரங்களையும் மக்கள் என் றுமே மறப்பதில்லை. இர விர வாக ஆடப் பட்டு வந்த நாட்டுக்கூத்துக்கள் எங்கள் பண்பாட்டின் அழகுணர்வுடைய egitbérlonr கும். நகரவாழ்வு தொடங்க இக்கலை அழிந்துபோகும் ஆபத்தினை எதிர்நோக்கியது. எனினும் மட்டக்களப்பு, மன்னுர், யாழ்ப் பாணம், வன்னிப்பகுதி ஆகிய இடங்களிலே சிற்சில ஊர்களில் தொடர்ந்தும் நாட்டுக் கூத்துக்கள் ஆடப்பட்டுவந்தன. கலைக்கழக, நாடகக்குழுத் தலைவராயிருந்த கலாநிதி வித்தியானந்தனுக்கு இப்பிரதேசங்களுக்குச் சென்று அங்கு ஆடப்பட்டு வந்த நாட்டுக் கூத்துக்களை நேரிலே பார்க்கும் வாய்ப்புக்

Page 43
---
கிட்டியது. பட்டை தீட்டாத இைரங்களா
கவே அவற்ை வர் தரிசித்தார். பட்டை
தீட்டிஞல் அவற்றின் மதிப்பும் தரமும்
உயர்ந்து விடும் என்பதை நன்குணர்ந்து
செயற்படத் தொடங்கினர். இவ் வாறு
தொடங்கியது கலாநிதி வித்தியானந்தனின்
நாட்டுக் கூத்துக்கலை மீட்புப்பணி. அழிந்து
போய்க்கொண்டிருக்கும் இக்கலை பேணப்
படவேண்டிய அவசியத்தினையும், கிராமத்
தாரிடமே இருந்த இக்கலை நகரத்தாரிடமும்
சென்று சேர வேண்டு மென்ற
உண்மையினேயும், புதிய உத்திகளுடன் அவை அறிமுகப்படுத்தப்பட வேண்டி ய
தேவையினையும் கலாநிதி உணர்ந்து செய
லாற்றிஞர். இவருடைய நாட்டுக்கூத்து மீட்புப் பணியினை நான்கு வகையாகப் பாகு
படுத்தி நோக்கலாம்.
3.1 நாட்டார் கூத்துக்களை நக
ரத்தார் அறியவைத்தமை
நாட்டுக்கூத்துக்களைப் பேணு வ தற்கு முதல்வழி, அவை கிராமங்களிடையே மாத் திரம் முடங்கிக் கிடக்காமல், நகரத்தாரும் அவற்றைக்கண்டு க ளிக்க வைப் பதால், அவற்றின் பரப்பின் தன்மை அகல்வதுடன் நெடுங்காலம் உயிருடன் இருக்கும் என் பதை உணர்ந்து செயற்படுவதே என்பதைக் கலாநிதி வித்தியானந்தன் உணர்ந்து கொண் டார். எனினும் அ ப் பொழுது கிராமங் களிலே ஆடப்பட்டு வந்த நாடகங்களிலே சிற்சில குறைபாடுகளும் தென் பட்டன. நாடகப்பண்பினை முதன்மையாகக் கொண்டு, ஆட்டல், பாடல், உடை, ஒலி, ஒளி, மேடை முதலியனவற்றைக் கலையுணர்வுடன் ஒன்று படுத்த வேண்டிய தேவை இருந்தது. நாட கத்தின் முழுமைபற்றிப் பார்வையாளர் களோ நடிகர்களோ எண் ணு வ தி ல் லை. ஆடலும் பாடலுமே நாடகம் என எண் ணினர். இதிற் கூட ஆடலும், பாடலும் சில வேளைகளில் இணையமுடியாமலும் போய் விடுகின்றன. மத்தள ஒலி நடிகர்களின் குர லைப் பலவேளைகளில் அமிழ்த்தி விடுகின்றது. இதனுல், சந்தர்ப்பத்துக்கேற்றபடிமத்தளத் தினேஉயர்த்தியும் தாழ்த்தியும் ஒலிக்க வேண் டியஅவசியம் இருந்தது.ஒப்பனையில் மாற்றங்

-سي- 5
கள் வேண்டப்பட்டன. நடிகர்களுடைய மேடையசைவுக்கேற்ற உடையலங்காரமும் கவனிக்கப்படவேண்டியதாயிகுந்தது. கூத்து நடைபெறும் நேரத்தினைச் சுருக்கு வதன் மூலம் வேகமான வாழ்வினை தடத்தும் நக ரத்தாருக்கு அறிமுகஞ் செய்வது இலகுவா யிருக்கும். இவற்றையெல்லாம் கலா நிதி வித்தியானந்தன் தன் கட்டுரைகள் மூலமா கச் சுட்டிக்காட்டினர். அண்ணுவிமார் களுக்கு நேரடியாகவும் எடுத்துக் கூறினர். ஆனுல் அண்ணுவிமார்களோ அவற்றிற்குச் செவிசாய்த்ததஈகத் தெரியவில்லை. எனவே, தானே அவர்களுக்கு வழிகாட்டியாக அமைய வேண்டுமென எண்ணி, மேற்படி குறைகளை நீக்கி, ஒரு கூத்தினைத் தாயாரித்துக்காட்ட முடிவுசெய்தார். கூத்து ஆடுபவர்கள் பாம ரரே என்ற பரவலான எண்ணத்தையும் மாற்றியமைக்க எண்ணிஞர். அதன் படி, பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டு கர்ணன் போர் என்னும் வடமோ டிக் கூத்தினைத் தயாரித்து அளித்தார். இத் நசீடகத்திலே ஆட்டம், பாடல், ஒப்பண் உடை, ஒலி, ஒளி, மத்தள அடி நடிப்பு ஆகிய விடயங்களெல்லாம் தன்கு கவனிக் கப்பட்டன. நாட்டுக்கூத்து ஒன்றினை எவ் வாறு தற்கால நிலைக்கேற்பத் தயாரிக்க வேண்டும் என்பதற்கு வகைமாதிரியாக மட் டக்களப்பு மின்ஞர், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலுள்ள அண்ணுவிமார்களுக்கு இக்கூத்து காண்பிக்கப்பட்டது. சிறுவயதி லிருந்தே கூத்து டன் தொடர்புற்றிருந்த திரு எஸ். மெளனகுருவும் வத்தாறுமூலை அண்ணுவியார் திரு. செல்லையாவும் கூத்துத் தயாரிக்கும் விடயத்தில் கலாநிதி வித்தியா னந்தனுக்கு நல்ல பக்கபலமாயிருந்தனர். தமிழ் மக்கள் வாழும் எல்லா நகரங்களிலும் இக்கூத்து மேடையேறியது. கர்ணன் போர் நாட்டில் ஏற்படுத்திய பரபரப்புச் சொற்ப மானதல்ல. நல்ல ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில் தொண்டி நாடகம் என்னும் தென்மோடிக் கூத்தினைத் தயாரித்து 1964ல் மேடையேற்றினர். இருவகைக் கூத்துக்களை யும் பார்த்தவர்களின் மகிழ்ச்சி கரைபுரண், டது. 1965ல் இராவனேசன் என்னும் வட மோடிக்கூத்து மேலும் பல புதிய நாடக உத்திகளுடன் மேடையேறியது. 1968ல்

Page 44
-
வாலிவதை என்னும் கூத்துத் தயாரித்து வழங்கப்பட்டது.இக்கூத்துக்கள் மட்டக்களப் புப் பாடசாலைகளிலே புதிய கூத்துக்கள் பலவற்றைத் தயாரிப்பதற்கு ஆசிரியர்களுக் கும் வழிகாட்டிகளாயின.
8.2. நாட்டுக்கூத்துப் பதிப்புகள்
தாட்டுக்கூத்துக்களை நவீன மே டை களுக்கும் நகரத்தாருக்கும் நல்ல முறையிலே அறிமுகஞ் செய்த கலாநிதி வித்தியானந்தன் அவற்றை எம் முதுசொம்மாகப் பேணு தற்கு இன்னெரு வழியினைக் கடைப்பிடித் தார். அவ்வழி, அரிய நாட்டுக்கூத்துப் பிர திகளை அண்ணுவிமாரிடமிருந்து பெற் று. அவற்றை ஆராய்ந்து கலைக்கழக தமிழ்ப் பிரதேச உள்ளூராட்சி மன்றங்கள் ஆகிய வற்றின் ஆதரவுடன் அச்சுவாகனமேற்றி யமையாகும். மட்டக்களப்பு நாட்டுக் கூத் தாகிய அலங்காரரூபன் நாடகம் 1962ல் ஏட் டுப் பிரதிகள் பல பரிசோதிக்கப்பட்டுப் பதிப் பி க்க ப் பட்டது. 1964ல் மன்னர் மாவட்ட உள்ளூராட்சி மன்ற ங்க ளின் ஆதரவுடன் மன்னர் கீதாம்பிள்ளை பாடிய எண்டிறீக்கு எம்பரதோர் நாடகம் அச்சிடப் பட்டது. மன்னர்ப்புலவர் பாடிய நூலொன்று முதன்முதல் அச்சுவாகின மேறியது அதுவே முதல் தடவையாகும். இம்மன்றங்களின் தொடர்ந்த ஆதரவிஞலே 1966ல் மூவிரா சாக்கள் நாடகம், 1967ல் ஞானசவுந்தரி நாட்கம் என்னும் இரு நூல்களும் அச்சேறின. கலாநிதி வித்தியானந்தன் தான் இப்பணி யிலே ஈடுபட்டதுபோலப் பிறரையும் ஈடு படத் தூண்டினர். பண்டிதர் வி. சீ. கத்தையா, கலாநிதி கா. சிவத்தம்பி போன் ருேர் இன்னும் பல நாட்டுக்கூத்துப் பிரதி களைப் பரிசோதித்துப் பதிப்பித்தனர். இவ் வாறு, பேராசிரியர் வித்தியானந்தன் நாட் டுக்கூத்துக்கல்யைப் பேணுதற்கு அக்கூத் துப் பிரதிகளைப் பேணவேண்டு மென்னும் வழியினைக் காட்டத் தமிழ்ப் பிரதேசத்தி லுள்ள அண்ணுவிமார்கள் தம்மிடமிருத்த நாட்டுக்கூத்துப் பிரதிகளைப் பேணிப்பாது காக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண் t__scriwti.

6 -
8. 3. அண்ணுவிமார்க9ளக் கெளரவித்தல்
கூத்துக்களைத் தயாரித்தும், கூத்துப் பிரதிகளை அச்சிட்டும் நாட்டார்கலை மீட் புப்பணியிலே ஈடுபட்ட கலாநிதி வித்தியா னந்தன், அக்கூத்துக்களுக்கு அச்சாணியாக விளங்கிய அண்ணுவிமார்களை மறந்துவிட வில்லை அவர்களைப் பேணுவதன் மூலம் நாட்டுக்கூத்துக் கலையைப் பேண லாம் என்னும் உண்மையினை இவர் நன்துணர்ந் திருந்தார். இதனல், அண்ணுவிமார்களை எப்படியெல்லாம் கெளரவிக்க முடியுமோ அப்படியெல்லாம் செய்வதற்கு ஏற்ற ஒழுங் குகளை மேற்கொண்டார். மன்னர், மட்டக் களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலே அண்ணுவிமார்களுக்கென ம க ரா நாடுகளை ஒழுங்கு செய்தார். அம்மகாநாடுகளிலே ஒவ்வொரு அண்ணுவிமாரும் அவர்களுடைய சிறப்பான பணிகளுடன் முறையாக அறி முகஞ்செய்து வைக்கப்பட்டனர். இதன் மூலம் ஓர் அண்ணுவியாருடைய நாடக முயற்சிகள் பற்றிப் பிறரும் அறியும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய மகாநாடுகளின் முக்கிய நோக்கம், மரபு வழிக் கூத்துக்களைப் பேணிக் காக்கும் அண் ணுவிமார்களுக்கு நவீன நாடக உத்திகளை அறிமுகஞ் செய்வதும், நாடக அனுபவங் களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதலு மேயாகும். ஆட்டம், பாடல், ஒப்பண் உடை, நடிப்பு ஆகியனவற்றிலே எத்தகைய கவனஞ் செலுத்துதல் வேண்டுமென்பது பற்றிக்கருத்தரங்குகள் ஒழுங்குசெய்யப்பட் டன. நவீன மாற்றங்களை விரும்பாத சில அண்ணுவிமார்களின் எதிர்க்கருத்துக்களும் இம்மகாநாடுகளிலே முன்வைக்கப்பட்டன. ஆணுல், அச்சில அண்ணுவிமார்களுக்கூட நல்ல மாற்றங்கள் பற்றி நயம்பட உரைத் தல் கேட்டும், அவற்றின் பயன் பாட்டை உணர்ந்தும், தம் கருத்துக்களை மாற்றியுங்" கொண்டனர். அம்மகாநாடுகளிலே இடம் பெற்ற ஒரு முக்கியமான நிகழ்ச்சி நாட்டுக் கூத்துப் பற்றிய செய்முறை விளக்கமாகும். சி. மெளனகுரு, அ. சண்முகதாஸ். பொ. பேரின் பராசா, செல்வி சுகுணு கந்தையா, க. தர்மலிங்கம் போன்ஜேருடைய உதவி

Page 45
-
யுடன் கலாநிதி வித்தியானந்தன் இச்செய் முறை விளக்கத்தினை அளித்தார்.
அண்ணுவிமாருக்குக் கொடுக்கப்படும் கெளரவம் நாட்டுக் கூத்துக்குக் கொடுக்கும் கெளரவமாகும். அண்ணு விமார் மகாநாடு களிலே அவர்கள் யாவரும் மலர் மா லை பூண்டு தெருவீதியிலே ஊர்வலமாக அழைத் துச் செல்லும் காட்சி கண்கொள்ளாக்காட்சி யாகும். பலர் தம் வாழ்விலே பெற்றிராத புதிய அனுபவத்தை அன்று பெற்றதாகக் கூறியுள்ளனர். 'நாங்களும் அண்ணுவிமார் என்று தலை நிமிர்ந்து செல்ல வைத்துவிட் டார் இந்தக் கலாநிதி' என்று பல அண் ணுவிமார் கூறியதை நான் காதாரக் கேட் டுள்ளேன். நடிகமணி வி. வி. வைரமுத்துவை இவர் மேடைமேடையாக அறிமுகப்படுத் தீயும் கெளரவித்தும் மகிழ்ந்தார். நடிக மணியினுடைய அரிச்சந்திர மயான காண்டம் இரண்டாயிரந் தடவைகளுக்குமேல் மேடை யேற்றப்பட்டு அசுரசாதனை புரிந்துள்ளது. நூருவது தடவை மேடையேற்றும்போது நடிகமணியைக் கெளரவித்து யாழ்ப்பாணம் நகர மண்டபத்திலே ஒரு விழாவினைக் கலா நிதி வித்யோனந்தன் ஒழுங்கு செய்தஈர். அவ்விழாவிலே நடிகமணிக்குப் பொற்கிழியும் வழங்கப்பட்டது. ஆயிரத் தாவது தடவை மயான காண்ட0 மே  ைடயே நி யதைப் பாராட்டி நடிகமணி கெளரவிக்கப்பட்டார். இதிலும் பேராசிரியர் வித்தியானந்தன் முக் கிய பங்கெடுத்துக்கொண்டார்.
8. 4. நாட்டுக்கூத்து ஆராய்ச்சி
நாட்டார் கலையை மீட்கும் முயற்சி யிலே இவர் கையாண்ட நான்காவது வழி நாட்டுக்கூத்துப் பற்றிய ஆய்வுகளை மேற் கொள்ளுதலாகும். ஒரு விடயம் பற்றி ஆய் வுகளை மேற்கொள்வதனலே, அவ்விடயம் ஒரு வகையிற் சாகாவரம் பெற்றுவிடுகின் றது. நாட்டுக்கூத்துப் பற்றி வித்தியானத் தன் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் அதனைப் பற்றிப் பலரும் அறியவும் விளங்கிக்கொள் ளவும் உதவின. நாட்டுக்கூத்துப் பிரதிகளைப் பரிசோதித்து நூல்களாகப் பதிப்பித்தபோது ஒவ்வொரு நூலுக்கும் நீண்ட முகவுரை எழுதியுள்ளார். நாட்டுக்கூத்துப் பற்றிய
7

مـسـ 7
பல ஆய்வுக் கருத்துக்கள் அவற்றி லே செறிந்துகிடக்கின்றன. இவ த்  ைற விடத் தனித் தனியாகவுங் கட்டுரைகள் எழு தி யுள்ளார். அத்தகைய கட்டுரைகளுள் ši யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளி யீட்டுக் கழகத்தினுல் வெளியிடப்பட்ட பேராசிரியர் வித்தியானந்தனின் கட்டுரைத் தொகுதியா கிய தமிழியற் சிந்தனை என்னும் நூலிலே 'ஈழத்தின் கிராமிய நாடகங்கள்’ என்ற தலைப்பிலே இடம்பெற்றதாகும். மன்னுரி லும் மட்டக்களப்பிலும் ஆடப்படும் கிரா மிய நாடகங்களின் பல நுணு க் க ம ர ன விவரங்கள் இக்கட்டுரையிலே தரப்பட்டுள் ளன. ஈழத்து நாட்டுக்கூத்துப் பற்றி விளக் கமாக எழுதப்பட்ட இக்கட்டுரைபோல் முன்னெப்பொழுதும் யாரும் எழுதவில்லை. 1959ல் கலே அரங்கம் 6" என்னும் சிறப்பு மலயிலே 'நாட்டுக்கூத்து' என்ருெரு கட் டுரையினை இவர் எழுதினர். 1964ல் Tamil Culture என்னும் ஆய்வு இதழிலே 'Tamil Folk i}rama in Ceyleno 67cigo) si sl'. டுரையினை எழுதிஞர், எம்முடைய கலைப் பொக்கிஷமாகிய நாட்டுக்கூத்தினைத் தமிழ் டேசுவோர் அல்லாதாரும் அறியவேண்டும் உணரவேண்டும் என்னும் பேராசியருடைய ஆவலே இக்கட்டுரை நிறைவேற்றியது. அதே g3ắT q. 6iv Trinids in word teatre GT &ăT GDIG Gng L'ull ? 5. ysaav * *Tamil Folk Drama-Basis for future Tamil Theatre'' 6T6igili 5t. டுரை இவருடைய பெயரிலே பிரசுரமாகியது.
நாட்டுக் கூத்துப் பற்றி இவரால் எழு தப்பட்ட கட்டுரைகளுள்ளே உலகப் புகழ் பெற்றது. இ வ ரா ல் 1968ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராச்சி மகாநாட்டுக் கருத் தரங்கிலே படிக்கப்பட்ட கட்டுரையாகும். இக்கட்டுரை அன்று மாகாநாட்டிற் கலந்து கொண்ட பல பேராளர்களுடைய பாராட் டுக்களைப் பெற்ற து. 1973ஆம் ஆண்டு Ceylon Today at sirgitt, g (G) rays, u'aib ''The Tamil Folk Drama”” GTsar Goợub s Gavar யினை எழுதி வெளியிட்டார்.
ஈழத்துத் தமிழர்களுடைய நவீன நாட கம், நடனம், நாட்டிய நாடகம் போன்ற னவற்றிலே பரிசோதனை முயற்சிகளை மேற்

Page 46
கொள்ளவிருப்பவர்களுக்கு மரபுவழி நாடக உத்திகள் என்றுமே வற்ருத ஊற்றுக்களா யமைவன. அவ்வற்ருத ஊற்றுக் கண்களைத் திறந்து வைத்தன பேராசிரியர் வித்தியா னந்தனுடைய நாட்டுக் கூத்துப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள். காலத்தின் தேவையை இனங்கண்டு, அதனை மக்களுக்கு அறிமுகஞ் செய்து, பேணி, அதற்குப் பட்டைதீட்டி, அதிலே ஆய்வுகளும் செய்த பெருமை என் றென்றும் பேராசிரியர் வித்தியானந்தனையே சாரும்.
4. முடிவுரை
கலாநிதி வித்தியானந்தனை ஒரு சாதா ரண விரிவுரையாளராகப் பல்கலைக் கழகத் துக்குள்ளே முடக்கிவிடாமல், நாடறிந்த
"இலங்கையில் நூல் வெளியிடுவதற்கு நாட்டில், எமது பதிப்பகத்தில், எமது மே மனத்திருப்தி உண்டு, பெருமையும் உண்டு என்று பெருமைப்பட எவ்வளவு ஆசைப் பதிப்பு என்று பெருமைப்படவும் இருக்கே இந்த மேற்கோள் இருப்பின் மிகவிரைவில் யிடும் காலம் உருவாகிவிடும். அதை நினை
-கொழும்பு சாஹிராக்கல்லூரியில் 196 தமிழ் எழுத்தாளர் மகாநாட்டின் புத்தகக் நிகழ்த்திய சொற்பொழிவின் ஒரு பகுதி.
'பொதுமக்கள் கலேயாகிய நாட்டுக் ச முன்னணியில் நிற்கின்றது. இக்கூத்தை ஆ துச் சுவைத்து ஆதரவு அளிப்பவரும் பொது -வளர்ந்து மக்களின் எண்ணக் கருத்துக்களை
யும் பிரதிபலிக்கின்றது."
- 1960 இல் மட்டக்களப்பில் நடைெ

8 -
அறிஞணுகவும், கலைஞனுகவும், பொதுமக் கள் விரும்பும் பேராசிரியனுகவும் ஆக்கியன இவர் நாட்டார் கலையை மீட்டெடுக்கும் பணியிலே மேற்கொண்ட முயற்சிகளாகும். நாட்டார் பாடல்களைத் தேடிப்பதிப்பித்து அவற்றுக்குச் சாகாவரம் கொடுத் துப் பெருமை தேடிக்கொண்டார். நாட்டுக்கூத் துக்களை தவீன முறையிலே தயாரித்து நகரத்தார்க்கு வழங்கியும், நாட்டுக் கூத்து நூல்களைப் பதிப்பித்தும், நாட்டுக் கூத்து அண்ணுவிமார்களைக் கெளரவித்தும், நாட் டுக்கூத்துப் பற்றிப் பல ஆய்வுகளை மேற் கொண்டும் அக்கலையினுடைய சிறப்பு க் களைப் பலரும் உணரச் செய்து, மங்கி மறைந்துகொண்டிருந்த அக்கலைக்குப் புத்து யிரும் புதுப்பொலிவும் வழங்கினர்.
}க் கூடிய செலவு ஏற்பட்டாலும், எமது ற்பார்வையில் நூல் வெளியிடுவதில் எமக்கு எமது மொழி, எமது நாடு, எமது நூல் படுகின்றேமோ, அவ்வளவு ஆசை எமது வண்டும். எல்லோருக்கும் இந்த ஆசை, எல்லா நூல்களையும் ஈழத்திலேயே வெளி க்க உள்ளம் பூரிக்கின்றது.'
2 ஏப்பிரலில் நடைபெற்ற அகில இலங்கைத் கண்காட்சியைத் திறந்து வைத்தபோது
கூத்துக்களைப் பேணி வளர்ப்பதில் மட்டுநகர் பெவர் பொதுமக்கள். இக்கூத்தைப் பார்த் மக்களே. எனவேதான் இதுமக்கள் கலையாக பும் உள்ளாத் துடிப்புக்களையும் பண்பாட்டை
பற்ற கிராமியக் கூத்து நிகழ்ச்சியிற் பேசியது.

Page 47
தமிழபிமானியாக . . .
கலாநிதி பொ. பூலோகசிங்கம், பல்க:
துணைவேந்தர், பேராசிரியர், கலாநிதி சு. வித்தியானந்தன் முதலாந்தர விரிவுரை யாளராக உயர்ச்சிபெற்றிருந்த காலத்திலே, இலங்கைப் பல்கலைக்கழகத்திலே, நாங்கள் 1957 ஆம் ஆண்டில் மாணவராகச் சேர்ந்த போது, 1956 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் பின்னிழலாகத் தொடர்ந்து கொண்டிருந் தன. அஞ்சல் என அபயக்கரம் காட்டுப வர்களை எதிர்பார்க்காவிட்டாலும் தமிழ் மாணவர் துணிவளிக்கக் கூடிய உள்ளங்களை ஆவலோடு தலைதூக்கி நோக்கத் தொடங் கிய கட்டம் அது. அப்பொழுது தமிழ் மாணவுரைக் கவர்ந்த விடயம் சு. வி. யின் திருமண வைபோகம். பிராமணியத்தினை ஒதுக்கிவிட்டுச் சு. வி. தமிழ்மணம் செய்த நிகழ்ச்சி அவரிடம் மதிப்பினை ஏற்படுத்துவ தாக அமைந்தது.
தமிழ்நாட்டின் தி. மு. க. வின் கருத் தோட்டங்கள் ஈழத்திலும் நாற்பதுகள் முத லாகப் படித்த தமிழர் மத்தியிலே பெருந் தாக்கத்தினை ஏற்படுத்தியதை யாரும் மறுக்க மாட்டார்கள். தமிழுணர்ச்சிக்கு ஈழநாட் டின் எழுத்தாளர் முக்கியத்துவம் கொடுப்ப தாகப் பிற்சாலத்திற் குறைகூற முற்பட்ட வர்களிற் பலர், அப்பண்ணையின் அருட்குணர் விலே வளர்ந்தவர்கள் என்பதுவும் மறுக் கொண்ணுதது. நாற்பதுகளிலே பல்கலைக் கழகம் புகுந்து விரிவுரையாளரான சு. வி. தமிழ்நாட்டிற் கொதித்தெழுந்த உணர்வு களின் தாக்கத்திற்குள்ளானது வியப்பிற். குரியதன்று.
எங்கள் மாணவர் கட்டத்திலே (19571961) சு. வி. யின் தமிழபிமானத்தினை இரு கோணங்களிலே நோக்கலாம். ஒன்று, விரி வுரையாளர் நிலையாகும். அந்நிலை பற்றிக் கூறும் தகுதியுள்ள அநேகருள் யானுமொரு வன். சு. வி. அவர்கள் எங்கள் விசேட பாட
நெறியின் பிற்கூறிலே வெளிநாட்டுக்குக்

லைக்கழகம், பேராதனை.
கலைத்தூது சென்றுவிட்டார். அத்தூது எழுப் பிய சிந்தனைகளை அவர் 'உலகெலாம் பர விய தமிழும் தமிழர் சால்பும்’ என்ற கட் டுரையிலே இளங்கதிரின் பதின்மூன்ருவது ஆண்டு மலரில் (1960-1961) எழுதியுள்ளார். தமிழயிமானிகள் வாசிக்கவேண்டிய கட் டுரையது.
சு. வி. முதலாண்டிலே எங்களுக்கு நன் னுடல் படிப்பித்த இலக்கண ஆசிரியர். காற்சட்டை, மேற்சட்டை, கறுப்பு அங்கி யுடன் மேனட்டுப் பாணியிலே நன்னுடல் படிப்பிக்க வருபவரை நோக்கி ஐயுற்றவர் களும் நன்னுரலை அவர் தெளிவாகவும் சுவை யாகவும் விளக்கியபோது சாதாரணமாக வெளிப்பூச்சுக்கு மயங்குவதின் ஆபத்தை உணர்ந்தார்கள். தமிழர் பழக்கவழக்கங் களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொண்டு சமூகத்தினை ஏமாற்ருது தமிழ் உள்ளத்துடன் செயற்பட வேண்டியதன் இன்றியமையா மையை அக்கட்டத்திலே சு. வி. உணர்த் தினர் எனலாம். தமக்குத் தெரிந்தனவற்றை எல்லாம் கூறி மாணவரை மலைக்க வைக்க வேண்டும் என்று சு. வி. ஆசைப்படவில்லை. மாணவர் பொதுவாக விரும்பாது ஒதுக்கு கின்ற இலக்கணத்தை எவ்வாறு தெளிவாக வும் சுவையாகவும் சொல்லிக்கொடுக்கலாம் என்பதிலேயே அக்கறை காட்டினர். இந் நோக்கத்தினைச் சிலர் பிழையாகவும் விளங் கிக்கொண்டிருந்தனர்.
1958 ஆம் ஆண்டிலே தமிழ் விசேடப் பாடநெறியை மேற்கொண்ட இருவருக்குச் சு. வி. எடுத்த பாடங்கள், தமிழர் நாகரிக மும் பண்பாடும், தொல்காப்பியம் சொல் லதிகாரம், திருக்கோவையார், இறையணுர கப்பொருளுரை என்பனவாம். இரு மாண வரிடையே மேடைப் பிரசங்கியாக அமை யாது, கலந்துரையாடற் பாணியிலே தம் பணியை அவர் செவ்வனே செய்தார். இக்

Page 48
=عه - r
காலகட்டத்தில் அவர் வேறு பணிகளிலும் ஈடுபட்டிருந்தபோதும் தம் விரிவுரையாளர் பணியினைப் புறக்கணிக்காது செய்தனர். இவ் வகுப்புகளிலே சு. வி. யின் தமிழ் உள் ளத்தை உணரக்கூடிய வாய்ப்புகள் பல கிட்டுவன. சிறப்பாக, தமிழர் நாகரிகமும் பண்பாடும் பற்றிய வகுப்பிலே தமிழர் சால் பினை அவர் ஆய்வுநெறியிலிருந்து தான் நோக்குகின்றனரோ என்று ஐயுறவேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. ஆயினும், பொதுவாக, ஆய்வுநெறியின் சிறப்பினை உணர்ந்த சு. வி. அவ்வழியிலே செல் வதையே நாம் காணலாம். இவ் விசேட வகுப்புகளிலே எங்கள் கருத்துகளையும் கேட் கும் மனுேபாவம் அவரிடம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சு. வி. இக் காலகட்டத்திலே வகுப் பறைக்கு வெளியே ஆற்றிய காரியங்கள் இரண்டாவது தமிழ்ச்சங்க வளர்ச்சியிலே பிரதான பங்கினை வகித்து, தமிழ் மாண வரிடையே தமிழ்ப்பற்றினையும் அபிமானத் தினையும் சமூக ஒற்றுமையினையும் வளர்க்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறிப் பிடத்தக்கவை. தமிழ்ச்சங்கம் இலச்சினை கொண்ட கொடியினைப் பேராதனையில் ஏற் றிய கட்டம் இது. இருபதுகளிலே முளை கொண்ட தமிழ்ச் சங்கம் ஐம்பதுகளிலே விருட்சமாக ஒங்கி வளர்ந்ததிலே சு. வி. யின் பங்கு அதிகம்.
ஈழநாட்டின் தமிழ் நாடக வளர்ச்சி யிலே சு. வி. பெரும் பங்கு வகிக்க இருந்த கட்டத்திற்கு முன்னுேடியாக இலங்கைக் கலைக்கழகத்தின் தமிழ் நாடகக் குழுவின் தலைவராக அவர் செயலாற்றிய கட்டமும் இதுவாகும்.
மாணவனுக இருந்த காலத்திற்குப் பின்பு, சு. வி. யுடன் நெருங்கிப் பழகும் காலம் எமக்கு எழுபதுகளிலேதான் மீண்டும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு மூலம் ஏற்பட்டது. ஆயினும் இவ்விடைவெளியிலே தான் சு. வி. ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சி யிலே தம் முத்திரையினை அழுத்தமாகப் பதித்துக் கொண்டதாகும். மனேன்மணிய

2O -
ஆசிரியர் சுந்தரம்பிள்ளை போன்று, முத்தமி ழின் மாண்பினை உணர்ந்த சு. வி. கிராமிய மக்களிடையே மட்டும் ஆதரவுபெற்றிருந்த கிராமிய கூத்துகளுக்குப் படித்தவர்கள் மத் தியிலே அந்தஸ்தினை ஏற்படுத்தி நாடக வளர்ச்சிக்குப் புத்துயிர் தந்தார். கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேசன், வாலிவதை என்பன, விடியவிடிய நடக்கும் கூத்தினைச் சுருக்கிக் காலத்திற்கு ஏற்ப, மரபு கெடாமல் நவீன மேடையில் ஏற்றப் பட்ட முயற்சிகள் மட்டுமல்ல; ஈழத்துத் தமிழ்க்கலைக்குப் புதியதொரு யுகத்தினை ஏற் படுத்திய முயற்சிகளுமாம். ஈழத்துத் தமி ழினம் தனக்குரிய பாரம்பரிய அமிசங்களை யுடையதென்பதை உணரவைத்த முயற்சி களுமாம். 1962 இலே கர்ணன் போருடன் தொடங்கிய அக் கூத்துகளின் மேடையேற் றம் சு. வி. க்குத் தமிழ் மக்களின் அபி மானத்தைப் போதியளவு சம்பாதித்துத் தந்தது. -
சு. வி. யின் வாழ்க்கையில் பிரதான கட்டமாகக் கருதத்தக்கது எழுபதுகளாகும். இக்கட்டம் சு. வி. யைத் தமிழ் மக்களின் பேரபிமானத்திற்குரியவராக உணர்த்துகின் றது. இக்கட்டம் நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை மையமாகக் கொண்டது.
கோலாலம்பூர், சென்னை ஆகிய இடங் களிலே நடைபெற்ற முதலிரு அனைத்துல கத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளிலும் ஈழத் துத் தமிழறிஞரும் தமிழபிமானிகளும் பெரு மளவிலே கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. ஆணுல் பாரீஸில் நடந்த மூன் ருவது மாநாட்டிலே ஒரிருவரே இலங்கைக் கிளையின் ஆசிகளுடன் கலந்துகொள்ள முடிந் தது. இம்மாநாட்டுக்கு முன்னும் பின்னும் ஈழத்துத்தமிழபிமானிகளிடையே மட்டுமன் றித் தமிழறிஞர் இடையேயும் ஈழத்துக் கிளையின் நிர்வாகத்தினர் பற்றியும் நிர்வா கத்தினர் பாரீஸி"க்குத் தேர்ந்தெடுத்த முறைபற்றியும் அதிருப்தி ஏற்பட்டது. இத னேடு கிளையின் நிர்வாகம் தமிழ் அபிமானி களை ஒதுக்கிவிட்டு, அரசியல் ஆசிகளை எதிர் பார்த்துச் செயற்படுகின்றது என்ற எண்ண மும் உண்டாகியது. இத்தகைய கருத்து

Page 49
س--
களாற் கிளையின் பொதுக்கூட்டம் கூட்டப் பட்டபோது உணர்ச்சிகள் கட்டவிழ்க்கப் பட்டமை எதிர்பார்க்க வேண்டியதே. இத ஞல் முன்னைய நிர்வாகக்குழுவினர் எதிர் பார்த்தவாறு அல்லாமல் தமிழ் அபிமானத் திண் மூச்சாகக் கொண்டவர்கள் ஆட்சிக் குழுவில் முக்கிய சக்தியாக இடம்பெற்றனர்.
புதிய குழு செயற்படத் தொடங்கிய காலம் முதல் அதனை எதிர்நோக்கிய பகை கள், வெளிப்பகை மட்டுமல்ல; உட்பகையும் தான். இதனை அன்று வெளியாகக் கூற யாரும் விரும்பவில்லை. ஆணுல் பத்து வரு டங்களின் பின் நோக்கும்போது, உண்மை யைக் கூருது விடுத்தல், சிலரைத் ‘தியாகி கள்’ ஆக்கி விடுமோ என்று ஐயுறவேண்டி யிருக்கிறது.
உட்பகைகளின் அட்டகாசம் ஆரம்பத் திலிருந்தே சமாளிக்க வேண்டியிருந்தது. புதிய குழுபொறுப்பேற்று மாநாட்டு ஒழுங்கு களை நிறைவேற்றும் வரை தனிநாய அடிகள் முக்கிய பங்கு எடுத்துக் கொள்ளாமைக்கு உட்பகை முக்கிய காரணமாகும் என்பதை விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள். வெளி நாட்டறிஞரைக் கூட அவர் க ஸ் விட்டு வைக்கவில்லை. பேராசிரியர் பிலியோகா வத்திருந்தபோது அவர் மூலமாக மாநாட் டைப் பின் தள்ளிப் போட்டுக் கு ஃல க் க முயற்சி எடுக்கப்பட்டது. மா நா ட்  ைட ய7 :ட்டாணத்தில்  ைவ க் க க் கூடாது கொழும்பில் வைக்க வேண்டும் என்றும், மாநாட்டைச் சனவரியில் வைக்காது பின் தள்ளிப்போடவேண்டும் என்றும் குழுவின ரிடையே குழறுபடிகளை உண்டு பண்ணி, ஒன்றினைந்த சக்தியைச் சிதறடிக்கும் முயற் சிகள் நடைபெற்றன. தலைவர் பதவி துறந் தார்; இரு செயலாளர் பதவி நீத்தார்; பொருளாளர் ஒருவர் ராஜினுமா செய்தார்; அமைப்புக்குழு உறுப்பினர் வெளியேறினர். முன்னைய நிர்வாகத்தின் கருத்துப்படி நடக் காததால் குழு தன் கூட்டங்களை வெவ்வேறு இடங்களில் நடாத்த வேண்டிய நிலை ஏற்
--gil.
நான்காவது மாநாட்டை யாழ்ப்பாணத் தில் நடாத்தவேண்டும் என்று மூர்க்கமாக வற்புறுத்தி நின்று, மாநாட்டைத் திட்ட மிட்டபடியே சனவரியில் நடத்த எண்ணிப் பாடுபட்ட கிளைக்குழுவின் சில உறுப்பினர் களுக்குத் தலைமை தாங்கிய சு. வி, கிளைத் தலைவராக 5-10-1973 இல் நியமிக்கப்பட்
8

-
டார். யாழ்ப்பாணத்திலே மாநாடு நடத்த வேண்டுமென்று அவர் கொண் டி ரு ந் த துணிவை அவர் மாநாட்டில் நிகழ்த்திய தலேமையுரையின் கீழ்க்கண்ட பகுதி எடுத் துக்காட்டுகின்றது. 'தமிழகத்திற்கு அடுத் தாற் போலத் தமிழாராய்ச்சி ம க எ நாடு நடத்துவதற்கேற்ற தகுதி, உரிமை யாழ்ப் பாணத்திற்கேயுரியது. யாழ்ப்பாணம் வீறு படைத் தமிழர் நிலம் அதற்குச் சொற்றி றமுண்டு, விற்றிறனும் உண்டு ஆதிமுதலே அந்நியர் அட்டூழியங்களே எதிர்த்து எதிர்த்து வந்திருக்கின்றது. யாழ்ப்பானத் தமிழர் மற்றவர்களுக்குச் சளைத்தவரல்லர்; எல்லாத் துறைகளிலும் அவர்கள் முந்தி நிற்கிருச்கள் என்று தமிழகத்து யோகி சுத்தானந்தர் அவர்களே கூறியிருக்கின்றர்கள். இம்மகா
நாடு தொடர்பாக டாக்டர் சாலை இளத் திரையன் அவர்கள் எமக்கு எழுதிய மட லிற் குறிப்பிடுகின்ருர், "தமிழ் நலன் தமிழ் உணர்ச்சி என்பவற்றில் தாய்த்தமிழகத்தை விட ஈழத்தமிழகத்தாரே ஆர்வம் மிகுந்த வர்கள்' என்பது என் கணிப்பு". இவ்வாறு தமிழகத்தாரே பெருமிதம் அடையும் வகை யில் தமிழ் ஆர்வமும் த மிழ் ப் பற்று ம் கொண்ட நாம், யாழ்ப்பானத்திலே தமி ழாராச்சி 18காநாடு நடத்துவது பொருத்த மானது, உரிமையானதும் கூட, உண்மைத் தமிழ் உணர்ச்சியுள்ள எவரும் ஈழத்துத் தமிழ் பேசுக் மக்களின் பாரம்பரியத்தை தமிழ்த்தொண்டை அறிந்த எவரும் இதனை வரவேற்பர்.
மாநாட்டு ஒழுங்குகளிலே ஆரம் பம் முதல் இறுதிவரை சு. வி. யுடன் ஈடுபட்டு வந்த தமிழ் விரிவுரையாளர் அன்று ஒரே ஒருவர் தான் என்று கூறுவது வெட்கப் படவேண்டிய கூற்று, தன் முதல் மானுக் கராகச் சு. வி. கருதியவர்கள் சிலர் அன்று பார்வுையFளர்களாகக் கூட மாநாட்டிலே கலந்து கொள்ளவில்லையென்பது இங்கு கவனிக்கத்தக்கதுமாம்.
உட்பகையில்ை மனஞ்சிதருது கைவிட் டவர்களால் மனமுடையாது நினற சு. வி. அன்றைய அரசியல் எதிர்ப்புக்களுக்கும் ஈடு கொடுக்க வேண்டியிருத்தது. சு. வி. அன்று ஜயக்கொடி நாட்டியதைத் தமிழ்ச் சமுகம் மறக்க வில்லை. அது கொண்ட எழுச்சி வாழ்க்கையில் மறக்கொண் ணுதது. அம் மாநாடு பற்றிச் சு. வி. விடுத்த நீண்ட அறிக் கையிற் சில வசனங்களுக்கு இங்கு விளக் கம் தரப்பட்டுள்ளது. அவ்வறிக்கையின் இறுதி வசனம் சு. வி. யின் தமிழபிமானத் தைத் தெளிவாக்கும்: "தமிழ்த் தொண்டு இறைத்தொண்டாகும்”

Page 50
சமூக உதவியாளஞக .
பேராசிரியர் எஸ். இராசரத்தினம், ப
“பேராசிரியர் வித்தியானந்தனுக் குப் பல நல்ல மாணவர்களும் கூடாத மாண வர்களும் இருந்துள்ளனர். ஆணுல், அவ ருக்கோ நன்றியில்லாத மாணவர் எவருமே இருந்ததில்லை?" எனப் பேராசிரியரின் அன் பர்களில் ஒருவர் ஒருதடவை கூறினர். பேராசிரியர் வித்தியாவிந்தன் 1944 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கைப் பல்கலைக் கழகங்களி?ே கற்பித்து வந்துள்ளார். பல பிரபலமான அறிஞர்கள் இவருடைய மாணவர்களாயிருந்துள்ளனர். தம்முடைய ஆசிரியர் என்ற முறையில் அவர்களுட் பலர், பேராசிரியர் வித்தியானந்தனின் மனிதப்பண்புகளையும் அறிவுத்திறனையும் சிறப்பித்துப் பேசுவார். ஆனல், இக்கட் டுரையாளரோ தமிழ் கற்கும் நல்ல வாய்ப் பினையோ பேராசிரியர் வித்தியானந்தனின் மாணவனுயிருக்கும் அதிர்ஷ்டத்தையோ பெரு தவர். இதனுல் பேராசிரியர் வித்தி யானந்தனின் பன்முகத் தோற்றங்களுள் அவருடைய பல்கலைக்கழக ஆசிரியப் பணி பற்றியும் மனிதப் பண்பு பற்றியும் இக் கட்டுரையாளர் புறநிலையிலே நின்று பேசக்கூடிய வாயப்பினைப் பெற்றுள்ளார்.
கல்வி நிரம்பிய குடும்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் வித்தியானந்தன் Ulfr L-FATčavši காலத்திலே, அக்காலச்
சூழ்நிலை காரணமாக, தமிழ் அல்லாத பாடங்களாலேயே கவரப் பட் டா ர் . எனினும், பல்கலைக்கழகத்தில் முதல் வருட மாணவனுயிருந்த காலத்திலே இவர் மறைந்த பேராசிரியர் கணபதிப் பிள்ளையின் செல்வாக்கினுக்குட்பட்டார். இப் பேரறிஞரே பேராசிரியர் வித்தியா னந்தன தமிழாய்வுப் பக்கம் திருப்பிய வராகும். அது தமிழினத்துக்கே பெரு நன்மையாயிற்று. இவர் தமிழறிஞராக அரும்பிவருங் காலத்தே இலங்கைப் பல்கலைக் ழகத்தின் முதல் தமிழ் ப் பேராசிரியர் சுவாமி விபுலானந்தர் இவ ரைப் பல்வேறு வழிகளிலே ஊக்கமளித் தார். பேராசிரியர் கணபதிப்பிள்ளையும்

KNM «K»
ல்கலைக்கழகக் கல்லூரி, மட்டக்களப்பு.
கவாமி விபுலானந்தரும் இவ்விளம் அறிஞ ரின் திறனிலே மிக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். அந்நம்பிக்கை வீண் போகாதவாறு பலநூறு அறிஞர்களை இந் நாட்டிலே இவர் உருவாக்கியுள்ளார் . தற்போது இந்நாட்டிலே இப்பேராசா னுக்கு ஏதோ வகையிலே கடமைப்படாத ஒரு தமிழ் அறிஞனும் இல்லை எனவே கூறலாம ܗܝ
இலங்கைப் பல்கலைக்கழக வளவு கொழும் பிலிருந்து பேராதனைக்கு மாறிய காலகட்டத்திலேயே பேராசிரியர் வித்தியா னந்தனுடன் நான் நெருங்கிய தொடர்பு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது இவர் ஜயதிலக்க மண்டபத்தின் முதல்துணைப் பாதுகாவலரானுர் நான் ஜேம்ஸ் பீரிஸ் மண்டபத்தின் முதல் து?னப் பாதுகாவல ராகக் கடமையாற்றினேன். ஏனைய துணைப் பாதுகாவலர்களும் நாங்களுமே பேராத னைப் பல்கலைக்கழகம் வரலாறு படைக்க எம் இளமைத் தோள்களைக் கொடுத்தோம். பேராசிரியர் வித்தியானந்தன் பேராதனை யின் மிகப்பெரிய மண்டபமாகிய, 565 மாணவர்களேக் கொண்ட விஜயவர்த்தணு மண்டபத்தின் பாதுகாவலராக 1980 ம் ஆண்டில் நியமிக்கப்பட்டார். இம் மாபெருங் கட்டடத்திலே வாழ்ந்த பல்வேறு மாண வர்களின் நலனையும் மண்டப நிர்வாகத்தி னேயும் அவர் கவனித்துவந்தார்.
பேராசிரியர் வித்தியானந்தனின் அறி வுத்திறன் பற்றிக் கூறுவதற்கு எனக்கு ஏற்ற தகைமைகள் இல்லை எனினும் பேராசிரியர் வித்தியானந்தன் வாழ்வின் இரு அம்சங்கள் பற்றி நான் முதற்றர அறி வுடனே பேச முடியும். ஒன்று, பேராதனைத் தமிழ்மாண்வர்தஞடைய பண்பாட்டு வாழ் வில் அவருக்கிருந்த ஈடுபாடு மற்றையது, தமிழ் மக்களின் நாடகத்துக்கும் நாடக மரபுகளுக்கும் அவர் ஆற்றிய பணியாகும். தமிழ்ச்சங்கத்தின் பெருந்தலைவராக இருந்த காலத்தில் பேராதனையிலே ஒரு இந்துக்

Page 51
“ سس
4
கோயில் இவருடைய மேற்பார்வையிலே கட்டி முடிக்கப்பட்டது. நாளுக்கு நாள் நடைபெறும் கட்டட வேலையினே மேற் பார்வை செய்ததாலும், இவருடைய சொந்தத் தொடர்பினலே பல நலன் விரும்பிகள் நிறையப் பணத்தொகை நல்கியதாலுமே இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டது. 1977 ஆகஸ்ட் மாதம் ஒரு நாள் இக்கோயில் உடைக்கப்பட்டது. இச்செய்தி தற்போதைய நீதியமைச்சர் திரு. நிஸங்க விஜயரத்னவுக்கு எட்டிய போது, இக்கோயிலுக்கு பாதுகாப்பளிக்க ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை என்னி டம் அனுப்பிவைத்தார். ஒரு பொலிஸ் உத்தியோகத்தருடன் கோயிலுக்குப் பாது காப்பளிக்கும் இக்கட்டான கட்டத்தில் நானிருந்தேன். இவ்வேளை, பேராசிரியர் வித்தியானந்துடன் தொடர்பு கொண் Gu-গ্রুঞ্জ , , உடனடியாக என்னுடைய வீட்டுக்கு வந்த இவர், கோயிலிலிருந்த விலைமதிப்புள்ள பொருட்களையும் விக்கிர கங்களையும் பாதுகாப்பான இடங்களிலே சேர்க்கும் முயற்சியிலே 2D - 60TLg Tas இறங்கினர். வன்செயலும் பதட்டமும் நிறைந்த அவ்வேளையிலே அவருடன் கூடச் செல்வதற்கு நான் விரும்பினேன். ஆனல், என்னைத் தன்னுடன் கூட்டிச் செல்வதற்கு மறுத்துவிட்டார். நான் இதனுல் சிறிது மனமுடைந்தேன். இதற் கிடையில் அதிகாலை நாலு மணிக்கிடையில் கோயிலிலுள்ள பொருட்களை பேராசிரியர் வித்தியானந்தன் அப்புறப்படுத்திவிட்டார். அப்பொழுது என்னை ஏன் உடன் கூட்டிச் செல்லவில்லை என இவரிடம் கேட்டேன். மிகச் சுருக்கமான மறுமொழி கூறினர், "இருவருள் ஒருவராவது உயிருடன் இருக்க வேண்டும. எனக்கு ஏதாவது நேர்ந் தாலும் நீர் உயிருடன் இருக்கவேண்டு மென எண்ணினேன்'. இதுதான் சமயத் தைப் பாதுகாக்கும் பொறுப்பினைத் தன் தலையிலே கொண்ட இப்பேரறிஞருடைய பெருந்தன்மையாகும். இவருடைய மற் றைய முக்கிய பணி மட்டக்களப்பு மன் 6)ச் போன்ற இடங்களிலே நாட்டுக்கூத்து நாட்டார் பாடல் ஆகியவற்றினைப் பேணி பாதுகாத்ததாகும். இப்பிரதேசத்து மாண

;3 -
வர்களுடைய ஒத்தாசை இவருக்குக் கிடைத்த காரணத்தாலே மரபுக்கலைகளை இவர் பேணிப் பாதுகாக்க முடிந்தது. மட்டக்களப்பு மன்னர் நாட்டார் மரபு களை அடிப்படையாகக் கொண்டு இவர் தயாரித்த நாடகங்கள் வடக்கிலும் விழிப்
புணர்வை ஏற்படுத்தின. வடக்கில், தாழ்ந்த சமூக த்தினராலேயே நாடக ம ர புக ள் பா து கா க் க ப் பட் டு
வந்தன. பேராசிரியர் வித்தியானந்தன் இச் சமூகத்தினரிடம்- ச்ென்று அவர்களி டையேயிருந்த பிரபலம் வாய்ந்த கலைஞர் களேத் தன் வீட்டுக்கு அழைத்து, அவர் கள் பெருந்தொகையான நாடகங்களைத் தயாரிக்க பேராதரவு வழங்கினர். புதிய கலைவடிவங்களே தேடிச் சென்ற இக் கலைஞனுக்கு சாதி, சமயம் என்னும் வேறுபாடு தெரிவதில்லை. மரபுவழிவந்த குடும்பத்திலே பிறந்த போதிலும் இவருக்கு இவ் வேறுபாடு என்றுமே தெரிந்ததில்லை. எவருமே இவருடைய வீட்டிலே வரவேற் கப்படுவர். இவருடைய மாணவியாக இருந்து மனைவியான மறைந்த கமலா தேவி இவருக்கு மிகப் பெரிய பலமா யிருந்தார். இளம் அறிஞர் கூட்டத்துக் குப் புது வழி அமைப்பதிலே இத்தம்பதி கள் உதவினர். இவரை எனக்கு நாற்பது வருடங்களாகத் தெரியும். அந்த நாற்பது வருடங்களையும் இவருடைய நண்பராக அல்லாமல் இவருடைய மாணவராகத் திரும்ப வாழவேண்டுமென ஆசைப்படுகி றேன். இவருடைய ஆசிரிய நிலையினை நான் உணரும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. சமூக விஞ்ஞானி என்ற முறையிலே, பேரர் சிரியர் இன்று நினைப்பவற்றைய்ே தமிழ்ச் சமூகம் நாளை நினைக்கப்போ கின்றது என்பதை நான் உணர்வேன். அவருடைய எழுத்தாக்கங்களை வேகமுடன்
படிக்கும் வாய்ப்புக் கிடைக்கவிலலை என்பதையிட்டு மிக்வும் வருந்துகிறேன். இவருடைய மாணவனுயிருக்கும் நல்ல
வாய்ப்புக் கிடைத்திருந்தால் நான் இன் னுஞ் சிறந்த சமூக விஞ்ஞானியாக ஆகியி ருக்கலாம். இவர் இன்னும் பல ஆண்டு சன் வாழ்வாராக.

Page 52
சமய ஆர்வலராக . . .
சொக்கன்
மண்ணில் வித்துகின்ற விதைகள் யாவும் முளைத்துச் செடிகளாகவும் மரங் களாகவும் வெளிவர முனைகின்றன. "ஆணுல் அவற்றின் முனைப்பு எல்லாக் காலத்திலும் சித்திபெறும் என்ருல் இப லாது. சூழ்லின் தாக்கங்கள் பல விதை களை முளையிலேயே அழித்து விடுவதால் அவை தரவேண்டிய பயன்கள் எமக்குக் கிட்டாது போய்விடுவதுண்டு. எனினும் எத்தகைய சூழலின் தாக்கங்களையும் எதிர்த்தும் தாங்கியும் தமது பூரண முனைப்போடு வெள்ப்பட்டுப் பெருமரங் களாய்ப் பலருக்கும் பயன்தருவன சில வேயாயினும், அவற்றின் மேன்மை புலவர் பாடும் புகழுக்குரியதே. இத்தகைய பேராலமரமாய் LD fir 680 (6) i fi பரம்பரை என்னும் விழுதுகள் விட்டுக் கம்பீரமாய் நிமிர்ந்து தமிழியல் சார்ந்த பலருக்கும் நிழல்தரும் பெரியாரே பேராசிரியர் சு. வித் தியானந்தன் அவர்கள்.
அவர் ஒரு காலத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுத்தறிவுச் கொள்கைகளாலே ஈர்க்கப்பட்டார் என் பது உண்மையே, 'ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து சிதையாத சீரிளமைத் தமிழணங்கிலே கழிபெருங்காதல் வசட் பட்ட நிலையில் ஆரியசமய மரபாசாரங் களில் அவர் விருப்பற்று இருந்தார் என் பதும் மறுக்க முடியாததே. துப்பாக்கி யைக் கண்டு அஞ்சாத தமிழன் தருப்டை யைக் கண்டு அஞ்சியது ஏன்?’ என்ற அறிஞர் சி. என். அண்ணுத்துரையின் விஞ பேராசிரியரின் சிந்தனையைத் தூண்டி வடவரின் சமய நெறிமீது சற்றே வெறுப்பினை உண்டாக்கவும் தவறவில்லை
பகுத்தறிவுக் கொள்கை ஒருபுறம் ருக்கப் பேராசிரியரின் ஆய்வு நோக்கு அவரை மேற்குறித்த முடிவிற்கு ஒரு காலத்தில் வரச்செய்திருக்கும் என்பது திண்ணம்.

"சங்க காலத்திலிருந்து தமிழ் மக்களு டைய பண்டைய சமய வாழ்க்கையின் இயல்பை அறியலாம். தென்ஞட்டில் நிலவிய சமய வாழ்க்கை பழங்காலத்தில் ஒரு தனிமையான பண்போடு இருந்த தாகத் தெரிகிறது. பிற்காலத்தில் ஆரியர் சமயக் கொள்கைகளும் வழிபாட்டு முறை களும் அவர் சமய வாழ்வில் புகத்தொடங் கின. எனினும் பல காலமாகத் தமிழர் சமயம் தமக்குரிய சிறப்பியல்புகளை உடை யதாகவே இருந்தது"
(தமிழர் சால்பு · வித்தியானந்தன் M.A., Ph.D.
முதற்பதிப்பு (1954) பக். 106.
இந்த அடிப்படைக்கருத்தின் விரிவுகள்
பலவற்றையும் அவரின் "தமிழர் சால்பு"
நூலிலே நாம் காணலாம். எனினும் காலப்போக்கில் வயது முதிர்ச்சியும் அத ஞல் ஏற்பட்ட ஆன்மீக நோக்கும் வைதிக
சமய நெறியான சைவநெறியிலே அவ
ரைப் பற்றுக் கொள்ளவைத்துச் சமய ஆர்வலராய் மாற்றின எனலாம்.
**அளவுகடந்த மன உறுதியும் கரை யற்ற அன்பும் தூய உள்ளமும் அறிவும் பெற்ற அப்பர், சம்பந்தர்,சுந்தரர், மாணிக்க வாசகர் போன்ற பெரியார்களே கோயில் கள் தோறும் சென்று கடவுளை வணங் கினரென்ருல், அத்தகுதிகள் இல்லாத மாணவருக்குக் கோயில் வழிபாடு இன்றி யமையாததென்பது கூருமலே விளங்கும். பேராதனையில் ஏனைய சமயத்தவர் தமக் குரிய கோயில்களைக் கட்டி எழுப்புகின் றனர். இந்து மதத்தினர் விழிப்படையாது வாளாதிருக்கின்றனர். இந்துசமயப் பெரி யார் மனம் வைத்தால் விரைவில் கோ லைக் கட்டலாம். இக்குறையைத் தீர்ப்ப தற்கு இந்துக்கள் யாவரும் முயல்வரென பல்கலைக்கழக மாணவரும் ஆசிரியரும்.

Page 53
எதிர்பார்க்கின்றனர். ‘மூர்த்திதலந் தீர்த்த முறையாற் ருெடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே."
(Hindu Dharma 1954: Hindu Students Union, University of Ceylon") pg. 47
மேற்குறித்த கூற்று நாவலர் பெருமா னின் கருத்தை எதிரொலிப்பது போலத் தோற்றுகின்றது. நாவலரின் பரம்பரை யோடு உறவுமுறையும், சைவப்பாடசாலைத் தாபகரும் (வீமன்க்ாமம் இந்துமகாவித்தி யாலயம்), சைவப்புரவலருமான சட்டத் தரணி சுப்பிரமணியம் அவர்களின் புதல்வ ராகத் தோன்றும் நல்வினைப்பயனும் வாய்க்கப்பெற்ற ஒருவர் சமய ஆர்வலராய் விளங்குவதில் வியப்பில்லை.
பேராசிரியர் வித்தியானந்தன் அவர் களின் சமய ஆர்வமானது பல காலங் களில் பலவாறு வெளிப்பட்டுள்ளது. அவர் இறை பத்தி மிகுந்தவராய் மட்டு மன்றி இறையுணர்வைத் தமிழரிடையே பரப்பும் பணிகளிலும் ஈடுபட்டு உழைத் தமைக்கும் உழைத்து வருகின்றமைக்கும் பல சான்றுகள் உள்ளன. எந்த விடயத் தில் ஈடுபட்டாலும் முழுமனத்தோடு உழைப்பதும் உழைக்க மற்றையோரைத் தூண்டி ஊக்குவதும் அவரின் பண்பாத லால் அவரைத் தமது குழுக்களில் அமர்த்திக் கொள்வது பல சமய நிறுவ னங்களின் பேரார்வச் செயலாய் இருப்ப தையும் குறிப்பிடல் வேண்டும்.
மத்தியமாகாணச் சைவ மகாசபைக் குப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பேரா gliհայրի தலைவராய் விளங்கியுள்ளார். சைவ மகாசபையின் நிருவாகத்திலிருந்த கண்டி இந்து மகாவித்தியாலயத்தின் முன்னேற்றம் அவர் காலத்திலே துரிதம் அடைந்தது. விபுலாநந்த அடிகளார் தொடக்கிவைத்த இந்தச் சபையில் அவரின் மாணுக்கரான பேராசிரியர் வித்தி
9

25 -
யானந்தன் தலைவராய் அமர்ந்தமை வரலாற்று முக்கியத்துவம் பெற்றதோர் நிகழ்ச்சி. பேராதனைக் குறிஞ்சிக்குமரன் கோயிலின் பொறுப்பாண்மைக் குழுத்தலை வராயிருந்து பல்கலைக்கழக இந்துமாணவர் ரின் சமயப்பணிகளுக்குத் தூண்டுகோலாய் விளங்கிய பெருமையும் அவருக்கு உண்டு. தாம் பிறந்த ஊராகிய தெல்லிப்பழையிலே துர்க்கையம்பாள் ஆலயத்தோடு இணைந்து அதன் வளர்ச்சிக்கு உதவி வருகின்றர். சென்னைச் சைவசித்தாந்த சமாஜமும், தெல்லிப்பழை துர்க்கையம்பாள் ஆலயமும் இணைந்து நடத்திய சமாஜத்தின் பவள விழா மலரையும், அதே தேவஸ்தானம் வெளியிட்ட கும்பாபிஷேக மலரையும், தேர்மகோற்சவ மலரையும், நாவலரின் பெரியபுராண வசனத்தையும் வெளியிட்டு வைத்துத் தமது சமய ஆர்வத்தினை நன்கு வெளிப்படுத்தியவர் அவர்.
பேராதனைப் பல்கலைக்கழக இந்து இளைஞர் மன்றத்தினரின் "இந்து தருமம்’ சஞ்சிகை, உரும்பராய்க் கருணுகரப்பிள்ளை யார் கோயில் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக மலர், நாவலர்பெருமான் 150 ஆவது ஜயந்திவிழா மலர் முதலாகப் பலவற்றிற்கும் சமயவரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதன் மூலமும் பேரா சிரியர் சு. வித்தியானந்தன் அவர்களின் சமய ஆர்வம் நன்கு எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திலே சைவசித்தாந்த பீடம் நிறுவுவதற்கும், சைவசித்தாந்தக் கலைக்களஞ்சியம் வெளியி டுவதற்குமாய் அமைக்கப்பட்ட அறங்கா வற் குழுவின் தலைவராகவும் அவர் விளங் குகின்ருர். பலவேறு சமயநூல்களுக்கு அணிந்துரை வழங்கிச் சைவசமயத்தின் சிறப்புக்களை அவர் விளக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுருங்கச் சொல்வதாயின் பேராசிரியர் சு. வித்தியானந்தன் தமிழையும் சைவசம யத்தையும் தமது இரு கண்களாகக்

Page 54
கொண்டு அவற்றின் முன்னேற்றத்திற்காய்
உழைத்து வருவது கண்கூடு. மத்திய மாகாணச் Gö}éF5), LD dEfTé5F60}LI 1963 இல்
நடத்திய நடனவிழாவை ஒட்டித் தினகரன் (அக்டோபர் மீ 31) பத்திரிகைக்கு அவர் எழுதிய கட்டுரையிலே,
'தமிழரின் சமயப்பற்றும் கலையார் வமும் இக்கலை (பரதநாட்டியக்கலை) இன்று ஓங்கிவளர்வதற்குக் காலாயிருந்தன’’ என்று குறித்துள்ளார். ஈழத் தமிழரின் மொழி, சமயம், கலை ஆகியவற்றின்
வளர்ச்சிக்குப் பேராசிரியர் சமயப்பற்ருே
**இலக்கியப் படைப்பிலே நாலுபக்கமு வேடிக்கை பார்க்க வாடி' என்று வேடிக் கியம் குறிப்பிட்ட ஒரு குழுவின் சொத்த6 பங்கில்லை’ என்று அதனை இறுக அனைத் அதனைக் கடத்திச் செல்லும். இலக்கியம் மிைக்கு முற்றிலும் கட்டுப்பட்டுக் கிடவா
பழமையை இறுகப் பிடிப்போர் தமது அடாது வழக்குப் பேசலாம். பொய்ச் சா! என்றும் இருக்கப் போவதில்லை. காலகதிய தைப் பெறுவோர் அதனே நல்ல வழியிற் மல் உலகம் ஏற்றுக்கொள்ளும் கட்டுப்பாட் கேற்ப விருத்திசெய்தல் வேண்டும். அப்டெ கொள்ளலாம்.”*
- கலையும் பண்பும் என்ற சாகித்திய முகமாக 1862-ம் ஆண்டு டிசம்பரில் நடத்

26 -
டும், கலையார்வத்தோடும் பணியாற்றி வருவதாகிய நன்றியை நினைந்து அவரைப் போற்றுவோம். மணிவிழாக்காணும் இக் "கலைமகிழ்நன்' ஆயிரம் பிறைகாணும் அரும்பேறும் பெறல் வேண்டும் என்று ஆடல்வல்லானையும் மனமொழிமெய்களால் வணங்குவோம்.
ஆடல் புரிகின்ற அம்பலவ னின்கருணை நீடு பொழிந்திடுக நேசமுடன் - கூடும் பணிபுரிந்து வித்தியானந்தப்பேராசான் இணையின்றி வாழ்க இனிது.
ம் வேலியை எழுப்பி " இங்கே ஆடுது காளி' கை காட்டிய காலம் போய்விட்டது. இலக் லல. “எமது முதுசம்; அதில் மற்றவர்க்குப் துக்கொண்டு இருந்தாற் கால வெள்ளம் காலத்திற்கேற்ப அமையுமே யன்றிப் பழ
சொத்துப் பிறருக்குப் போகின்றதென ட்சி தேடலாம். ஆணுல் சொத்து அவரோடு பிற் பிறரிடம் சென்று சேர்ந்துவிடும். சொத் பயன்படுத்த வேண்டும். சிதைந்து போகா டுடன் பல புதிய துறைகளிற் காலத்திற் ாழுது சொத்தை மென்மேலும் வளர்த்துக்
மண்டல பரிசுபெற்ற நூலைப் பாராட்டு தவைபவத்தில் ஆற்றிய உரையிலிருந்து.

Page 55

த்/7
கம்மது உவைஸ்
பத்மநாதன்

Page 56


Page 57
கொழும்பில் . . .
பேராசிரியர் ம. முகம்மது உவைஸ்,
கோசலை என்பவள் தசரதச் சக்கர வர்த்தியின் முதல் மனைவி. இராமனின் தாயார். தசரதச் சக்கரவர்த்தியின் இரண் டாகிது மனைவி கைகேயி தன் கணவனிடம் இருந்து பெற்ற வரங்களை நிறைவேற்று முக மாக இராமன் பதினன்கு ஆண்டுகள் காடாள வேண்டும் என்றும் தன் மகன் பரதன் நாடாளவேண்டும் என்றும் தசரதச் சக்கரவர்த்தியை உத்தரவிட வழிவகுத்தாள். இராமனும் தந்தையின் உத்தரவைத் தலை மேற் கொண்டு சென்று விட்டான். இதனைக் கோசலை பின்னரே அறிந்தான். என்ன செய் வது என்று அறியாது திகைத்தாள். கோச லைக்கு வருத்தமும் மகிழ்ச்சியும் மாறி மாறி ஏற்பட்டன. தன் மகன் இராமன் காட்டுக் குச் செல்கின்றனே என வருத்தம்; தந்தை யின் சொல்லைக் காப்பாற்றக் காட்டுக்குச் செல்லும் இராமன் அவ்வாறு செல்வதன் பயணுக உலகிற்கே நன்மை பயக்கும் என் பதை ஆன்ருேர் மூலம் அறிந்து 1 னம் மகிழ்வு அடைத்தார் கோசலே. முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒலித்து எதிர்ஒலித்த கருத்துக்கள் இன்றும் என் உள்ளத்தில் பச்சையாகவே அமைந்துள்ளன. இன்றும் அவை கேட்கக் கூடியதாக ஒலித்துக் கொண் டிருக்கின்றன,
அப்பொழுது இலங்கையில் ஒரு பல் கலைக்கழகமே இருந்தது. இலண்டன் பல் கலைக் கழகத்தோடு இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியாக இருந்து முழுமையான பல் கலைக்கழகமாக மாறி, இரண்டு ஆண்டுகள் கழித்திருந்தன. இலங்கைப் பல்கலைக்கழகத் தித் சேரும் வாய்ப்பு எனக்கு 1946 ஆம் ஆண்டு ஆடி மாதம் கிடைத்தது. அதே ஆண்டிற் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப் பட்டிகுந்தார் ஒரு துணை விரிவுரையாளர். பட்டதாரி அங்கி அணிந்தே அவர் விரிவுரை களுக்கு வருவது வழக்கமாக இருந்தது. அவர் வேறு யாருமல்லர். இப்பொழுது யாழ்ப்
 

காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணை வேந்தராகத் திகழ்ந்துகொண்டிருக் கும் பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியம் வித்தியானந்தன் அவர்களேயாவார். கலை மாணி சிறப்புப்பட்டமும் முதுமாணிப் பட் டமும் பெற்றிருந்தார். அப்பொழுது அருள் மிகு விபுலானந்த அடிகள் அவர்களே தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த்துறை தலைவராகவும் கடமையாற்றிக் கொண் டிருந்தார்.
அன்று இன்று போலல்லாது பல்கலைக் கழகத்தில் இரண்டாண்டுகள் கடமை புரிந்த துணை விரிவுரையாளர் முழுச்சம்பளத்துடன் வெளிநாடு சென்று பட்டப்பின் படிப்புப் பெற அனுமதிக்கப்பட்டனர். அங்ங்னம் பட்டம் பெற்று நாடு திரும்பியதும் இரண் டாந்தர விரிவுரையாளராக அத்தகையோர் பதவி உயர்வு பெற்றனர். துணை விரிவுரை யாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்த சு. வித்தியானந்தன் அவர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெற்ருர், இலண்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் வாய்ப்பைப் பெற்றர். இலங்கையை விட்டு இங்கிலாந்து நோக்கிச் செல்லும் முன்னர் பல்கலைக்கழக மாணவரால் ஒரு பிரிவுபசாரக் கூட்டம் நடைபெறும். சு. வித்தியானத்தன் அவர்களை வாழ்த்தி வழி அனுப்பவே பிரிவுபசாரக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அத் தகைய பிரிவுபசாரக் கூட்டத்திலே மேற் போந்த கருத்துக்கள் வழங்கப்பட்டன. அன்று அவரின் பிரிவு எமக்கு வருத் தத்தை ஏற்படுத்திய போதிலும் வித்தியா னந்தன் அவர்கள் தமது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் முகமாகவே வெளிநாடு செல் வதால் அது எமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. இரு ஆண்டுகளைக் கொண்ட ஒரு குறுகிய கால எல்லையிலே அவருடன் குரு சிஷ்ய அடிப்படையிற் பழக முடிந்ததெனி

Page 58
னும், அவ்வுறவு வேரூன்றி விட்டது எனின் அது மிகையாகாது.
பொதுத் தேர்வுகளைப் பொறுத்தவரை யில் நான் சென்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் பிரச்சினைகள் எழுந்தன. சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சைக்குச் தோன்றியபொழுது தமிழுக்கும் சிங்களத்துக்கும் தோன்றியபடி யால் முதன் முதல் பிரச்சினை தோன்றியது இரண்டு மொழிகளுக்கும் தேர்வில் தோற் றிய போதிலும் தேர்வு நேர அட்டவணை யில் தமிழ் அல்லது சிங்களம் எனக் குறிப் பிடப்பட்டிருந்தது. தேர்வுத் திணைக்களத் தின் அனுமதியுடன் இரண்டு பாடங்களுக் கும் தொடர்ச்சியாக அங்கிர்ந்து விடைபகர்ந்து தேர்வில் சித்தி அடைந்தேன். பல்கலைக்கழ கப் புகுமுகத் தேர்விலும் தமிழையும் சிங் களத்தையும் இரண்டு பாடங்களாக எடுத்து நான் தோற்றியபோது பிரச்சினை ஏற்படாது நடைபெறப் பல்கலைக்கழகம் அன்று ஒழுங்கு செய்திகுந்தது. ஆணுல் இலங்கைப் பல்கலைக் கழகத்திற் சேர்ந்த பின்னர் அத்தகைய பிரச்சினை மீண்டும் தோன்றியது. பல்கலைக் கழக முதலாம் ஆண்டிற் பயிலும்பொழுது தமிழா சிங்களமச என்று தீர்மானிக்க வேண் டிய நிலைமை ஏற்பட்டது. தமிழையும் சிங் களத்தையும் பல்கலைகழகத்தில் நான் பயில விரும்பினேன். ஆணுல் பல்கலைக்கழக நேர அட்டவணை தமிழ் அல்லது சிங்களம் என அமைக்கப்பட்டிருந்தது. அத்தகைய சூழ் நிலையில் நான் ஒன்றில் தமிழை விடுதல் வேண்டும். அல்லது சிங்களத்தை விடுதல் வேண்டும். ஆனல் நான் இரண்டையும் Luu96) விரும்பினேன். இத்தச் சூழ் நிலையிலும் சு. வித்தியானந்தன் அவர்கள் எனக்குக் கைகொடுத்தார். பிரச்சினையைத் தீர்த்து வைத்தார். பேராசிரியராகப் பணி புரிந்த விபுலானந்த அடிகனார் எனக்கு வசதிகாக இருக்கத் தனிப்பட்ட ஒழுக்கு களைச் செய்து வைத்தார். எனது அபிலாஷை நிறைவேற்றிக் கொள்ளவும் அவ்வொழுங்கு முறை பயனுடையதாய் அமைந்தது. கலா நிதி க. கணபதிப்பிள்ளை அவர்களும் சிங் காத்துறைப் பேராசிரியர் ரத்னசூரிய அவர் களும் செய்த தொண்டும் மறக்குந்தரமன்று.

- 2 -
அந்த ஆண்டு பல்கலைக்கழகத்திலே டிப் புளோமா இன் தமிழ் சின்னும் பயிற்கி நெறி ஆரம்பிக்கப்பட்டது. அத்தகைய ஒரு பயிற்சி நெறி சிங்கள மொழியிலும் ஆரம் பிக்கப்பட்டது. இப்பயிற்சி நெறி க் கான நேர அட்டவணை பிற்பக லி லே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பல்கலைக்கழகத்திற் பொதுவாகப் பயிலுக் மாணவருக்கான நேர அட்டவணை காலையிலும் மாலையிலும் விரி வுரைகள் வழங்கக் கூடியதாக அமைந்திருந் தது. தானே பொது மாணவருக்கான முதச லாம் ஆண்டின் பயிற்சி நெறியில் தமிழும் சிங்களமும் பயில வேண்டியவனக இருந் தேன். முதலாம் ஆண்டு பொது மாணவ ருக்கான நேர அட்டவணையிலே தமிழும் சிங்களமும் மாற்றுப்பாடங்களாக இடம் பெற்றிருந்தன. இந்த ஏற்பாட்டின்படி தமிழையோ சிங்களத்தையோ விட்டு விட வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இரண் டையும் பயில நான் விரும்பினமையால் விரிவுரையாளர் வித்தியானந்தன் போன் ருேரின் அனுதாபம் எனக்குக் கிடைத்தது. தமிழ்த்துறைத் தலைவர் என்ற முறையில் பேராசிரியர் விபுலானத்த அடிகளாருடன் இது பற்றி ஆராயப்பட்டது. சு. வித்தியா னந்தன் அவர்களைப் போன்றே அடிகளாரும் எனக்கு எல்லா விதமான ஊக்கங்களையும் அளித்தார். கீழைத்தேய மொழிகளுக்கான போதன பீடத் தலைவருடன் கலந்தசலோ சித்து எனக்கென ஒரு ஒழுங்கு முறையை உருவாக்கித் தந்தார்: இப்புதிய ஏற்பாட் டின்படி பொதுவான பல்கலைக்கழக மாணவ ருக்கான நேர அட்டவணைக்கினம்கச் சிங் கள மொழியைப் பயில்வதோடு மாலையில் நடைபெறும் டிப்புளோமா இன் தமிழ் பயிற்சி நெறிக்குரிய நேர அட்டவணைக் கிணங்கத் தமிழ் மொழியைப்பயில்வதற்கும் , சானக்கு வாய்ப்பு ஏற்பட்டது. முதலாம் ஆண்டுக்கான பொது மாணவர்க்குரிய பல் கலைக்கழகத் தமிழ் பாடத்திட்டத்திலும் டிப்புனோமா இன் தமிழ்பயிற்சி நெறிக் கான முதலாம் ஆண்டு தமிழ்ப் பாடத் திட்டத்திலும் பாட நூல்கள் வேறுபடாது ஒரே விதமாக இருந்தமையால் இத் த ப் புதிய ஒழுங்குமுறையால் நான் பாதிக்கப் படவில்லை. இரு பயிற்சி நெறிகளிலும் பாட

Page 59
w
A.
நூல்கள் வேறுபடாதிருந்த போ தி லும் தேர்வு முறை வித்தியாசமாகவே இருந்தது. இரண்டு பயிற்சி நெறிகளிலும் விரிவுரைகள் வேறுபட்ட போதிலும் விரிவுரையாளர்கள் மாறி விடவில்லை. கலாநிதி க. செ. நடராஜா திருமதி தங்கராணி நடராஜா, திருவாளர் எப். எக்ஸ். சி. நடராஜா, திருவா ளர் விவியன் நமசிவாயம் போன்றேர் அந்த காலகட்டத்தில் மாலை நேரத்தில் நிகழ்ந்த டிப்புனோமா இன் தமிழ் பயிற்சி நெறியில் பயின்றேராவர். தொல்காப்பியம், தமிழர் பண்பாடு, சங்க நூல்கள், இலங்கை வரலாறு போன்ற பாடங்களில் அப்பொழுது சு. வித் தியானந்தன் அவர்கள் விரிவுரை நடத்தி குர்கள். அதன் பயஐக டிப்புளோமா இன் தமிழ் மாணவர்கள் பெரிதும் பயனடைந் தார்கள் என்று கூறலாம். தமிழ் மொழி யையும் சிங்கள மொழியையும் பல்கலைக்கழ கத்திற் பயின்ற ஒரே மாணவன் என்ற காரணத்தினல் சு. வித்தியானந்தன், திரு மதி ரத்னகுரிய போன்ற விரிவுரையாளர் கள் தத்தம் விரிவுரைகளின் போது எனக் குத் தேவையான அலாதியான விளக்கங் களைத் தந்து உதவி புரிந்தார்கள்.
தமிழ் நாட்டு அண்ணுமலைப் பல்கலைக் சழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்து விட்டு இலங்கைப் பல்கலைக்கழகத் திற் பேராசிரியராகக் க ட  ைம யாற்றும் பொழுது விபுலானந்த அடிகளார் ஒரு நாள் எனக்கும் பாடம் சொல்லித் தந்துகொண் டிருக்கும் பொழுது அவர் மு ன் பதாக இருந்த பெரியதொரு நூலைச் சுட்டிக்காட்டி அது யாரால் எழுதப்பட்டது எனத் தெரி யுமோ எனக் கேட்டார். அற்நுரலை நான் அதற்கு முன்னர் பாராத காரணத்தினற் பதில் கூறமுடியவில்லை. அப்பொழுது தான் அது வெளிவத்துள்ளது. அது தம்மால் எழு தப்பட்டது என அடக்கமாகக் கூறினர்கள் அடிகளார். அதுதான் அவருடைய தலை சிறந்த நூலாக அமைந்துள்ளது. பின்னர் அங்கே உள்ள சுவாமிவிபுலானந்தர் என்னும் பெயரைச்சுட்டிக் காட்டித் தனித் தமிழ் என்ற காரணத்தை வைத்துத் தம்முடைய பெய மின் ஒரு பகுதியான சுவாமி என்பது வட மொழிச் சொல்லாய் இருப்பதை அடிகள்
O

எனத்தமிழ்ப்படுத்தி உள்ளனர். ஆணுல் அத் தகையோர் விபுலானந்த என்னும் பெயரும் வடமொழிச் சொற்களாலானது என்பதை மறத்துவிடுகின்றனர். அதனைத் தமிழ்ப் படுத்த முற்படுவதில்லை என நகைச்சுவை ததும்பச் சுவாமி விபுலானந்த அவர்களே குறிப்பிட்டார்கள். தமிழ் மொழியிற் பாண் டித்தியமும் ஆர்வமும் ஈடுபாடும் பற்றும் கொண்ட சு. வித்தியானந்தன் அவர்கள் தமது பெயரைத் தமிழாக்கவோ தமது உரைநடையில் வடமொழிச் சொற்கள் வராமல் எழுதவோ முற்பட வில் லை, தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில் உபயோகித்தார்கள். வட மொழிச் சொற்கள் இன்றியமையாத சந். தர்ப்பங்களில் அவற்றைத் தயங்காது பிர யோகித்து எழுதினர்கள். அதன் பயணுகத் தனக்கென ஓர் உரைநடைப் பண்பினை ஏற் படுத்திக் கொண்டார்கள். அவரிடம் பயின்ற மாணவர்களுக்கும் அந்த உரை நடை மூன் மாதிரியாக அமைந்திருந்தது எனக் கூறுவது மிகவும் பொருத்தமுடைத்தேயாம். நான் முதலிற் த் தி ரி கை களு க்கு எழுதத் தொடங்கியகால கட்டத்தில் முப்பது வரு டங்களுக்கு முன்னர் (1952 இல்) அவரிடம் கொடுத்துத் திருத்திய பின்னரே பத்திரிகை களுக்கு அனுப்பி வந்தேன். அவருடைய பல்வேறு பணிகளுக்கு மத்தியில் தயங்காது தாமதிக்காது திருத்தங்கள் இருந்தால் திருத்தி என்னிடம் தருவார்.
பல்கலைக்கழக மாணவருடன் மாணவர் போன்று பழகிய சு. வித்தியானந்தன் அவர் கள் பட்டப் பின் படிப்புக்காக இங்கிலாத் துக்குச் சென்றது அவருடன் தொடர்பு கொண்டிருந்த மாணவருக்கு ஏற்பட்ட பேரிழப்பு எனக் கருதப்பட்டது. 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக முத லாம் ஆண்டுத் தேர்வுக்குப் பின்னரே அவ குடைய மேலைநாட்டுப் பயணம் ஆரம்ப மாகியது. முதலாம் ஆண்டுத் தேர்வின் பின் னர் வெளியாகும் பெறு பேறுகளைப் பொறுத்தே ஒரு மாணவன் சிறப்புக் கல் மாணிப் பட்டப் படிப்பைத் தொடர்வதா, பொதுவான கல்மானிப்பட்டப்படிப்பைப் பின்பற்றுவதா என்பது நிர்ணயிக்கப்படு கிறது. அத்தேர்விற் சிறப்புச் சித்தி எய்தி

Page 60
இருந்தால் மாத்திரமே அதே பாடத்திற் சிறப்புக் கலைமாணிப் பட்டப் பயிற்சி நெறியை மேற்கொள்ள அனுமதி வழங்கப் படுகின்றது. கலைப்பிரிவில் முதலாம் ஆண் டுத் தேர்வில் நான் தோற்றிய மூன்று பாடங்களிலும் - தமிழ், சிங்களம், பொரு ளியல் - சிறப்புச் சித்திக்குரிய தரத்தை எய்தி இருந்தமையால் மூன்று துறைகளையும் சார்ந்த பேராசிரியர்கள் மூன்று பாடங்களி லும் சிறப்புக் கலைமாணிப்பட்டப் பயிற்சி நெறியை மேற்கொள்ள எனக்கு அனுமதி வழங்குவதாகக் கூறினர். நானே தமிழிற் கலைமாணிப்பட்டப் பயிற்சி நெறியையே விரும்பினேன். அங்ங்னம் எனது விருப்பத் தைத் தமிழ் மொழியின்பால் செலுத்து வதற்கு என்னை நெறிப்படுத்தியவர்களுள் சு. வித்தியானந்தன் அவர்களும் ஒருவர். மற்றவர் பேராசிரியர் சுவாமிவிபுலானந்த அவர்கள். மூன்ருமவர் காலஞ்சென்ற அறி ஞர் எ. எம். அப்துல் அலிஸ் அவர்கள். அந்த ஆண்டில் தமிழிற் சிறப்புக் கலைமா ணிப் பட்டப்பயிற்சி தெறியை மேற்கொண் டவன் நான் ஒருவனே என்பதும் நான் உணராமலே என்னைத் தூண்டிய காரண மாயிருந்திருக்கலாம் என்று இப்பொழுது எனக்குத் தோன்றுகின்றது. முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பின்னர் உணரக்கூடியதாக இருக்கின்றது. 1948ஆம் ஆண்டில் தமிழிற் சிறப்புக் கலைமாணிப் பட்டத் தேர்வுக்கு எவருமே தோற்றவில்லை. 1949ஆம் ஆண்டில் நான் மாத்திரமே அத்தகைய பரீட்சைக்குத் தோற்றினேன். வெற்றியும் பெற்றேன். 1950 ஆம் ஆண்டிலும் ஒருவரும் தமிழிற் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெறவில்லை. 1951 ஆம் ஆண்டில் நான்கு பெண் மாண வியர் தமிழிற் சிறப்புக் கலைமாணிப்பட்டம் பெற்றனர். தற்பொழுது பேராதனைப் பல் கலைக்கழகத்தில் தமிழ்ப் பேரா சி ரியாக விளங்கும் கலாநிதி ஆ. சதாசிவம் அவர் களும் மற்ருெரு மாணவியும் 1952 ஆம் ஆண்டில் தமிழிற் சிறப்புக் கலைமாணிப் பட்டம் பெற்றேர் ஆவர். கொழும் பு. இலங்கைப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையா ளராக இருந்த பொழுது இவர்களிருவரும் எனது மாணவராக இருந்த பேற்றைப் பெற்றேன். அந்தக் காலகட்டத்திற் பருத்

4 -
தித்துறைப் பாராளுமன்ற உறுப்பினர் ரி. துரைரத்தினம், காலஞ்சென்ற கமலா நாக லிங்கம் (கலாநிதி வித்தியானந்தன் அவர் களின் துணைவியார்) ஆகியோர் பல்கலைக் கழகத்தில் எனது மாணவராக இருந்தனர் என்று நினைக்கும் பொழுது பெருமிதந்தான் ஏற்படுகின்றது. வேறு எவரும் தொடாத, தொட அஞ்சிய, தமிழ் மாணவர் கூடப் பயில முற்படாத சிறப்புக் கலைமாணித் தமிழ்ப் பயிற்சி நெறியைச்சிங்கள மொழி பெரும்பான்மையாக வழங்கும் பாணந் துறைப் பகுதியிலிருந்து வந்த நான் மேற். கொண்டமை பற்றி இப்பொழுது சிந்தித் துப்பார்க்கையில் தமிழ் மொழியே உருவாக இருந்த சு. வித்தியானந்தன் அவர்களின் ஈர்ப்புச் சக்தியே இத்துறையில் என்னை ஆற்றுப்படுத்தியது எனக் கூறின் அது மிகை யாகாது. 1948, 1949, 1950 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ஒரே ஒரு முஸ்லிம் மான வனே சிறப்புக் கலைமாணித் தமிழ்ப் பயிற்சி நெறியில் பயின்று சித்தி எய்தினுன் என் பதை நினைக்கும் பொழுது தமிழ் மாணவர் இத்துறையில் ஈடுபடாததேன் என்பது இன் னும் புதிராகவே தோன்றுகின்றது:
கலாநிதிப் பட்டத்துக்கான ஆராய்ச்சி யில் ஈடுபட இலண்டன் சென்ற சு. வித்தி யானந்தன் அவர்கள் அங்கிருந்து கொண்டு கடிதம் மூலம் தொடர்பு கொண்ட ஒரு சிலருள் நானும் ஒருவன். அவர் அங்கிருந்து எனக்கு எழுதிய ஒவ்வொரு கடிதமும் என்னை ஊக்கும் வகையில் அமைந்திருந்தது. ஆர்வம் ஊட்டும் பாணியில் எழுதப்பட்டிருந்தது. தமிழில் ஈடுபாடு கொள்ளத் தூண்டுவதா கத் தீட்டப்பட்டிருந்தது. தமிழ் இலக்கி யத்தில் ஆழ்ந்த அறிவின் இன்றியமையா மையை வலியுறுத்துவதாக வரையப்பட்டி ருந்தது. நான் கலைமாணித் தமிழ் சிறப்புத் தேர்வில் சித்தி அடையும் பொழுது வித்தி யானந்தன்"அவர்கள் வெளி நாட்டில்தான் இருந்தார்கள். நான் சித் தி யடைந்தமை பற்றி அவருக்கு எழுதியதும் என்னைப்பா ராட்டுவதுடன் நின்று விடாது முதுமாணிப் பட்டப் பயிற்சி நெறியை மேற்கொள்ளுமாறு ஆலோசனையும் வழங்கினர். எனது கலை மாணிப்பட்டப் பயிற்சி நெறியைப் பேரா சிரியர் சுவாமி விபுலானந்த் அவர்கள் தலை

Page 61
| سست
மையில் ஆரம்பித்தேன். ஆனல் அவர்கள் சில நாட்களில் மறைந்துவிட்டார். அவர் களின் மறைவுக்குப் பின்னர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ்த் துறைப் போராசிரியராகவும் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். வெளிநாட்டில் இருந்து கொண்டே முதுமாணிப் பட்டத்துக்கு முஸ். லிம்களின் தமிழ்த் தொண்டு பற்றி ஆராய்" வதன் அவசியத்தையும் வலியுறுத்திப் பல கடிதங்கள் எழுதி இருந்தார்.
பேராசிரியர் க. கண பதிப் பிள் ளை அவர்களின் மேற்பார்வையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஆய்வுக்கு வேண்டிய நூல்கள் அனைத்தையும் பே ரா சிரியரின் விதந் துரைப்பின் பேரில் நூலகர் நூல் நிலையத் துக்கு வாங்கினர். அவை எனது ஆய்வுக்குப் பெரிதும் பயன்பட்டது. நான் இங்கே ஆய்வு நடாத்திக் கொண்டிருக்கும் பொ (p 5 எனக்கு அவசியம் எனக் கருதப்பட்ட ஆலோசனைகளை அங்கிருந்துகொண்டு வழங் கினர் வித்தியானந்தன் அவர்கள். முஸ்லிம் கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு என்னும் தலைப்பில் ஒரு நூலைத் தயாரிப்பதில் ஈடு பட்டுக் கொண்டிருந்தேன். தேவையான குறிப்புக்களை வகைப்படுத்தினேன். ஆங்கி லத்தில் எழுத வேண்டி இருந்த நூலே ஒரு வாறு எழுதி முடித்தேன். இங்ங்ணம் எழு தப்பட்ட நூலை மேற்பார்வையாளர் பரி சோதித்துத் திருத்தங்களைச் செய்த பின் னரே பல்கலைக்கழகத்துக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். இலண்டன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியை முடித்துக் கலாநிதிப் பட்டம் பெற்று நாடு திரும்பினர் கலாநிதி சு. வித் தியானந்தன் அவர்கள். நான் தயாரித்த கட்டுரையைத் திருத்தும் வேலை கலாநிதி வித்தியானந்தன் வருகையின் பின் ன ரே ஆரம்பிக்கப்பட்டது. நான் தயாரித்த பிர தியைப் படித்துப் பயனுடைய கருத்துக் களைத்தெரிவித்தார் கலாநிதி வித்தியானந் தன் அவர்கள். அவர் தெரிவித்த கருத்துக் களுடன் நூல் பூரணமாக்கப்பட்டது. பல் கலைகழகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. முது மாணித்தேர்வுக்குரிய ஆலோசனைகளையும் கலா நிதிசு.வித்தியானந்தன் அவர்கள் வழங்கினர். தேர்வும் முடிந்தது. சித்தி அடைந்தேன்.

5 -
1951-ஆம் ஆண்டில் முதுமாணிப்பட்டம் பெற்றேன்.
கலைமாணித் தேர்வில் சித்து அடைந்த நாள் தொட்டுப் பல்கலைகழகத்திற் பகுதி நேர விரிவுரையாளராகக் கடமை யா ந் றினேன். அப்பொழுதுகூட அரிய ஆலோசனை களை வழங்கி என்னை உரிய முறையில் பணியாற்றச் செய்தார். 1952 இல் பல்கலைக் கழகம் பேராதனைக்கு இடமாற்றஞ் செய் யப்பட்டது. பின்னர் கலாநிதிப் பட்டம் பெறும் நோக்கத்தோடு பல்கலைக்கழகத்திற் பதிவு செய்தேன். முஸ்லிம் தமிழ் காப்பி யங்கள் பற்றி ஆராய இருந்தேன். பேரா சிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை எனது ஆராய்ச்சி மேற்பார்வையாளராக நியமிக் கப்பட்டார். எனது ஆய்வுப் பணி முழுமைத் துவம் பெறுவதற்கு முன்னர் கலாநிதி கி. கணபதிப்பிள்ளை அவர்கள் பேராசிரியர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ருர், கலாநிதி பட்டத்துக்கான எனது ஆய்வையும் இடை நிறுத்த வேண்டி ஏற்பட்டது. கலாநிதி க. கணபதிப்பிள்ளை ஓய்வுபெறுகிற சமயத் தில் நான் வித்தியோதயப் பல்கலைக்கழகத் திலே தமிழ்த் துறைத் தலைவராகப் பணி யாற்றிக் கொண்டிருந்தேன். வித்யோதயப் பல்கலைக் கழகத்தின் வெளிவாரித் தேர்வா ளராக பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்ட காலந்தொட்டே கலாநிதி க. கணபதிப் பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டார். பின் னர் எனது வேண்டு கோளுக்கிணங்க வித்யோதயப் பல்கலைக்கழகம் அதன் தமிழ்த் துறையின் பகுதி நேர விரிவுரையாளராகக் கலாநிதி க. கணபதிப்பிள்ளை அவர்களை நியமிக்கத் தீர்மானித்தது. அத் தீர்மா னத்தை நடைமுறைப்படுத்து முகமாக அவ ருக்கு நியமனக் கடிதத்தை தயார் செய்தது. எதிர்பார்த்தது நடக்கவில்லை. எதிர்பாரா தது நடந்து விட்டது. அந்நியமனத்தை ஏற்று அதன் பயனை அனுபவிக்க முடியா மற் போய்விட்டது. அவருடைய ஆவி பிரித் துவிட்டது. தமிழ் கூறும் நல்லுலகம் ஒரு பேரறிஞரை இழந்துவிட்டது. அப்பேரிழப் புக்காரணமாக எனது ஆய்வு மேலும் தாமத மாயது. அவருக்குப் பின் பேராசிரியாக வந்த வி. செல்வநாயகம் அவர்களும் காலஞ் சென்று விட்டார்கள்.

Page 62
-
பேராதனைப் பல்கலைக்கழகத்திற் பேரா சிரியர் பதவிக்காக ஒருவரை நி யமி க்க வேண்டி ஏற்பட்டது. பல ஆண்டு காலம் விரிவுரையாளராக இருந்து அரும்பணி புரிந்த கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் அப் பதவிக்கு விண்ணப்பித்தார்கள். நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அழைக்கப் பட்டனர். அவரிடம் கல்வி பயின்ற அவரு டைய மாணவர் ஒருவரும் நேர்முகத் தேர் வுக்கு வந்திருந்தமை அவரை மட்டுமல்லா மல் அச் செய்தியைக் கேள்விப்பட்ட அனை வரையும் அதிசயத்தில் ஆழ்த்தியது. ஒரு மாணவனுக இருந்தவர் தமது ஆசிரியருடன் போட்டிக்காக நிற்பதா என்ற கேள்வியை எல்லோரும் எழுப்பலாயினர். அப்போட்டி யில் ஆசிரியரே வெற்றி பெற்ருர், கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாக ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அந்த நியமனத்தோடு எனது கலாநிதிப் பட்டத் துக்கான ஆய்வுப் பணி புத்துயிர் பெற்றது. அவர் வழிகாட்ட நான் எமது ஆய்வு ப் பணியை முடித்துக் க லா நி தி ப் பட்டம் பெற்றேன். இந்தக் கலாநிதிப்பட்டம் என் னைக் கைதுரக்கி விட்டது. எனது வாழ்க்கை யின் இலட்சியத்தை அடைய வழிகோலியது. தமிழ் நாட்டில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ் லா மியத் தமிழ் இலக்கியத்துறைப் பேராசிரியராகப் பணிபுரி யும் பேற்றை இக்கலாநிதிப் பட்டம் எனக்கு அளித்தது. இஸ்லாமியத்தமிழ் இலக்கியத்தில் முதற் கலாநிதிப்பட்டம் பெற ஒருவருக்கு வழிகாட்டிய பெருமையை யும் கலாநிதி சு. வித்தியானந்தன் தமக்கு உரித்தாக்கிக் கொண்டார். தமிழ்த் துறை யிலே இலங்கை முஸ்லிம் ஒருவர் முதன் முதல் கலாநிதிப் பட்டம் பெறும் வாய்ப் பினை உருவாக்கிய பேற்றினையும் அடைந்து இலங்கை முஸ்லிம்களின் நன் மதிப்பையும் சொந்தமாக்கிக்கொண்டார்,
தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய ஆசிரி யர்கள் எவரும் செய்யாத ஒரு சாதனை யைப் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் ஈட்டி உள்ளார். எப்பொழுதும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இஸ்லாமி பத் தமிழ் இலக்கிய வரலாற்றினை மிகச் சுருக்கமாகவே ஒரு நூலின் அரைப்பக்கத் தில் அல்லது ஒரு பக்கத்தில் எழுதி முடித்

S
துவிடுவர். ஆனல் அந்த முறைக்கு விதிவிலக் காக அமைந்தவர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள். அவர் தாம் எழுதிய இலக்கியத் தென்றலில் இஸ்லாமிய
இலக்கிய வரலாற்றினை விரிவாய் எழுதி உள்ளார். தமது நூலிற் பல பக்கங்களைக் கொண்ட ஒர் அத்தியாயத்தையே ஒதுக்கி உள்ளார் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
சாகித்தியமண்டலப் பரிசு பெற்ற அவரு
டைய கலையும் பண்பும் என்னும் நூலில்
இரண்டு அத்தியாயங்களில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றினைச் சுருக்கமாக. விவரித்துள்ளார்.
இச் சந்தர்ப்பத்தில் அவருடைய கலை யும் பண்பும் என்னும் நூல் தோன்றிய சுவையான வரலாற்றினை அறிவது பொருத் தமாகும். பொதுவாகப் பல்கலைக்கழக ஆசி ரியர்களுக்குத் தமிழ் தெரியாது. ஆகவே அவர்களுடைய நூல்களைப் பாடநூல்களாக விதந்தோத முடியாது எனத்*தமிழ்ப்பேசும் மக்கள் கருதி வந்த காலம் அது. இக் கொள்கையைப் பொய்ப்பிக்க வேண்டு ம் என்பது எனது நீண்ட கால ஆசையாக இருந்தது. அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவனுக இருந்தேன். ஒரு சந்தர்ப் பம் கிடைத்தது. நாம் மேற்கொண்ட சில: நடவடிக்கைகளின் பயனக கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட் சைக்கான தமிழ் இலக்கிய பாடவிதானத் தில் மாற்றம் செய்யப்பட்டது. தமிழ் இலக் கியப் பாடம் அ. பாடத்திட்டம் ஆ. பாடத் திட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. பெரும்பாலும் இஸ்லாம் பற்றியதாக இஸ் லாத்துடன் தொடர்புடைய நூல்களாகத் தமிழ் இலக்கியம் ஆ. பாடத்திட்டத்துப் பாடநூல்கள் அமைய வேண்டும் என்பது கல்வி உயர் பீடக் கருத்தாக இருந்தது. அந்த ஆ. பாடத்திட்டத்துக்கான பாடநூல் களைத் தெரிவு செய்யும் பொறுப்பு என்னி டம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தேர்வு ஆணையாளராகத் திருவாளர் எஸ்.ஈ. பேரின்பநாயகம் அவர்கள் பணிபுரிந்து வந்: தார். அவருக்கு என் மீது பூரண நம்பிக்கை இருந்தது. தமிழ் இலக்கிய ஆ. பாடத்திட் டத்துக்கான பாட நூல்களை அங்கீகரிக்கும்.

Page 63
முன்னர் அப்பாட நூல்களின் பெயர்ப்பட் யலைத் தாம் பார்க்க வேண்டும் என்று அப் போதைய கல்வி அமைச்சர் அவர் க ள் விரும்பினர். பல்கலைக்கழக ஆசிரியர் ஒரு வரின் நூலைப் பாடநூலாக மாற்றும் எனது நீண்ட நாள் ஆசை கை கூடியது'இங் நுனம் ஒரு வாய்ப்பு வரும் அதனைப்பயன் படுத்தத் தயாராக இருங்கள்' என ஏற் கனவே பேராசிரியர் கலாநிதி சு. வித்தியா னந்தன் அவர்களிடம் கூறி இருந்தேன். பெரும்பாலும் மு ஸ் லிம் மாணவருக்கான தமிழ் இலக்கிய ஆ. பாடத் திட்டத்தில் முஸ்லிம் அல்லாத ஒருவரின் நூல் இடம் பெறுவதை உயர் மட்டம் விரும் பாது என்ற எனது குறுகிய எண்ணம் காரண மாகப் ‘பிறையன்பன்' என்ற புனைப்பெய ரில் இஸ்லாமிய முதுசொம் என்னும் இஸ் லாமிய அரும்பெருஞ் செல்வங்களைப் பற்றி எழுதும்படி பேராசிரியர் கலாநிதி சு, வித் தியானந்தன் அவர்களே வேண்டிக்கொண் டேன். அதற்குக் கலையும் பண்பும் எனப் பெயரிடப்பட்டது. நூல் உருப்பெருத நிலை யில் கலையும் பண்பும் தமிழ் இலக்கிய ஆ. பாடத்திட்டப் பாடநூல்களுள் ஒன்ருக அங் கீகரிக்கப்பட்டது. உயர்மட்ட அங்கீகாரம் கிடைத்தவுடன் கலையும் பண்பும் என்னும் நூலை எழுதத் தொடங்குமாறு பேராசிரி யர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர் களுக்கும் பச்சைக்கொடியைக் காட்டினேன். நூல் உருவாகியது. ஆனல் எழுத்தாளர் மத்தியிலே ஒரு பெருஞ் சலசலப்பு ஏற்பட் டது. பிறையன்பன் யார் என்பதை அறிந்து கொள்ள முடியாது ஊகிக்க முடியாது பல வாறு எண்ணத் தலைப்பட்டனர் அத்தகைய எழுத்தாளர்கள். ஒருவேளை உவைஸ் தான்

7 -
பிறையன்பன் என்ற பெயரில் இருப்பாரோ. அவரே தமது நூலைப் பாடநூலாக விதத் தோதி இருப்பாரோ. இன்னுேரன்ன ஐயப் பாடுகள் அத்தகையோரிடம் தோன்றலா யின. ஆனல் புத்தகம் நூலுருவம் ப்ெற்று
வெளியானதும் பலரும் அதிசயப்பட்டனர்.
"நீங்கள் ஏன் அந்த நூலை எழுதி இருக்கக் கூடாது' என்று பலர் என்னிடம் கேட்ட னர். அத்தகையோர் நான் எழுதிப் பாட நூலாக அமைந்திருந்தால் நான் செய்தது தவறெனச் சுட்டிக் காட்டியுமிருப்பர்:
பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானத் தன் அவர்கள் பொருத்தமாகவே தமது புனைப்பெயரைப் 'பிறையன்பன்' என் த் தெரிவு செய்துள்ளார். பெரும்பாலும் முஸ் லிம் மாணவருக்கான ஒரு பாடநூலை எழு துபவர் முஸ்லிம்களின் அன்பரர்கவே இருத் தல் வேண்டும். முஸ்லிம் களின் மாதக் கணிப்பும் பிறையின் தோற்றத்தை அடிப் படையாக வைத்தே கணிக்கப்படுவதாலே பிறையன்பன் என்பது முஸ்லிம் அன்பன் என அமையும். மறுபுறம் பார்க்கும்பொழுது சிவபெருமான் முடியில் பிறை அமைந்துள் ளதாக் கூறப்படுவதால் சிவபக்தர் அன்பன் பிறையன்பன் என்பது பொருத்த மாக அமைந்து விடுகிறது.
பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பணிகள் பல புரிந்து வளர்ந்தோங்க வேண் டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் கலாநிதி சு. வித்தி யானந்தன் அவர்களை வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் நல் லருள் பாலிப்பானக. w

Page 64
பேராதனையில் . . .
பேராசிரியர் சி. பத்மநாதன், பல்கலை
நிறைவுங் குறையுங் கொண்டது மனிதப்பண்பு. ஒருவர் புரிகின்ற நன்மை களை மறந்து, மறைத்து குறைகளைச் சுட்டிக் காட்டுவதும் மிகைப்படுத்துவதும் மனித இயல்பு, இது தமிழர்களாகிய எமக்குப் பொதுவானது. பேராசிரியர் வித்தியானந்தனின் வாழ்க்கை இதற்குப் புறநடையானது, அவர் அதிஷ்டம் மிக்க வர் என்றே சொல்லவேண்டும். அவர் செல்வத்தையும் சுகபோக வாழ்க்கையினை யும் பெற்றவரல்லர். அவருக்குக் கிடைத் துள்ள செல்வம் பிறருக்குக் கிடைக்காத வொன்ருகும். அவர் தன்னேடு பழகிய வர்களதும் மாணவர்களதும் நல்வாழ்த் துக்களையும் அபிமானத்தையும் பெற்ற
தகைமையாளர்.
பல்கலைக்கழக ஆசிரியர்களுட் சிலருக்கு மட்டுமே நல்ல போதனுசிரியர் என்ற நற்பெயர் கிடைக்கின்றது. அவர்களிலும் மிகச்சிலரே ஆராய்ச்சிப் புலமையுடையோ ராயுள்ளனர். அத்தகையோரிடையிலுஞ் செயற்றிறன் மிக்காரைக் காண்பது அரிது. அத்துடன் கருணையுள்ளம் மனிதாபிமானம் போன்ற மனிதப்பண்புகளைப் பெற்றவர் களைக் காண்பது அரிதினும் அரிதாகும். பல்கலைக்கழக வட்டங்களிலே மாணவரதும் பிறரதும் அபிமானத்தை இவரைப் போன்றளவில் வேறெவரும் பெற்றிருப் பதாகத் தெரியவில்லை.
விபுலானந்தனர் தமிழ்ப்பேராசிரியராக் விருந்த நாட்களில் கொழும்புப் பல்கலைக் கழகத்திலே பட்டதாரியாகப் படித்துப் பின் தமிழ் விரிவுரையாளராக அங்கு நியமனம் பெற்ற வித்தியானந்தன் அவர் கள் பின் சங்க இலக்கியங்களை ஆராய்ந்து தமிழர் பண்பாடு பற்றிய ஆய்வு நூலொன்றை எழுதி உரிய காலத்திலே லண்டன் பல்கலைக்கழகத்திலே கலாநிதிப் பட்டம் பெற்ருர்,
பல்கலைக்கழகம் 1952 இற் பேராதனை யிலே அமைக்கப்பட்ட பொழுது கலாநிதி

க்கழகம், பேராதனே.
வித்தியானந்தன் அங்கு சென்றிருந்தார். . அந்நாள்முதல் 25 ஆண்டுகளாக அங்கு பணியாற்றியுள்ளார். பேராதனையிலே சேவைபுரிந்த காலமே அவரது வாழ்க்கை யிலே பல சாதனைகளை ஈட்டிய சிறப்பு மிக்க காலமாகும். தமிழிலக்கணம், இலக் கியம் ஆகியவற்றில் மாணவர்கள் ஈடுபாடும் ஆர்வமுங் கொள்ளத்தக்க வகையிலே கற்பிக்க வல்ல சிறந்த போதனசிரியராக விளங்கினர். தமிழிலே இனிமையுந் தெளி வுங்கலந்த நடையிலே பேசவும் எழுதவும் வல்ல தகமை பெற்றிருந்தார். அதனுல் அவர் இளைஞராகவிருந்த காலத்திலேயே சமுதாயத்திலே செல்வாக்கையும் மதிப் பையுந் தேடிக்கொள்ள முடிந்தது. நாடெங்கிலும் நடைபெற்ற தமிழ்விழாக் கள், நாடக விழாக்கள், இலக்கிய விழாக்கள் போன்றவற்றிலே சிறப்புச் சொற்பொழிவாளராகவும் தலைவராகவும் அவர் பங்கு கொள்வது வழமையாகியது. தமிழ் இல்க்கியம், பண்பாடு போன்ற துறைகளின் சிறப்புகளைப் பொதுமக்களுக்கு உணர்த்துவதிலும் அவற்றில் ஆர்வத்தை ஏற்படுத்துவதிலும் அவர் ஆற்றியுள்ள பணி அளப்பரியதாகும்.
தமிழர் பண்பாடு, நாடகம், நாட் டார் இலக்கியம் என்ற துறைகளிலே ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல நூல்களை அவராலே வெளியிட்டுக்கொள்ள முடிந் தது. இலக்கியத் தென்றல், (1953), தமிழர் சால்பு (1954, 1971), கலையும் பண்பும் என்ற அவரின் நூல்கள் தமிழ்பேசும் மக் களுடைய வாழ்க்கை முறை, பண்பாடு, இலக்கிய மரபு என்பன பற்றிய சிறந்த நூல்களாகும். இவற்றுட் தமிழர் சால்பு சங்ககாலத் தமிழகம் பற்றி நவீன ஆராய்ச்சி நெறிகளுக்கமைய எழுதப்பட்ட விரிவான நூலாகும். சங்ககாலத் தமிழகம் பற்றி இதனையொத்த பிற ஆராய்ச்சி நூலெதுவும் இதுவரை தமிழிலே வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அலங்கார ரூபன் நாட கம் (1962), எந்திரிக்கு எம்பெரதோர் நாட

Page 65
- C
A.
கம் (1964) என்பவை ஆராய்ச்சிக் குறிப் புக்களோடு அவராலே, பதிப்பிக்கப்பட்ட நாடக நூல்களாகும். மட்டக்களப்பு நாட்டுப் பாடல்கள், (1962, மன்னுர் நாட்டுப்பாடல்கள் (1964) என்பன நாட்டார் இலக்கியம் பற்றி ஆர்வத்துடன் அவர் மேற்கொண்ட பெருமுயற்சிகளின் நற்பயணுகும்.
இலங்கைத் தமிழர்களின் தனித்து வத்தை நிலைநாட்டுவதிலே முன்னணியிலே நின்று பணியாற்றியவர்கள் க. கணபதிப் பிள்ளை, சு. வித்தியானந்தன் ஆகிய இரு வருமே. இவர்களே முதன் முதலாகப் பல்கலைக்கழக மட்டத்திலே p5mru L nri இலக்கியத்தின் மீது ஆராய்ச்சியாளரின் கவனத்தை ஏற்படுத்தினர்கள். நாட்டுக் கூத்து, நாட்டுப்பாடல் என்பவை இலக் கியச் சுவையும் வரலாற்றுச் சிறப்பும் பொருந்தியவை என்ற உணர்வை சமுதா யத்தின் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் மத்தியிலும் ஏற்படுத்திஞர்.
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் என்பதன் வரலாறு கலாநிதி வித் தியானந்தனின் வாழ்க்கை வரலாற்றில் ஒர் அத்தியாயம் என்றே கூறலாம். அவ ருடைய ஆதரவும் வழிநடத்தலும் வாய்க் கப் பெற்ற காரணத்தால் அது பல்கலைக் கழக மாணவ மன்றங்களிலே எவ்வகை யிலுஞ் தலைசிறந்து பிற மன்றங்களுக் கெல்லாம் முன்மாதிரியாக விளங்கியது. இவரால் வழிநடத்தப்பட்ட் பேராதனைப் பல்கலைக்கழகத்துத் தமிழ்ச்சங்கம் வருடந் தோறும் பட்டிமன்றம், கவிதைப்போட்டி, நாடகப்போட்டி போன்றவற்றை நடத்தி வந்தது. இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்ப்பட்டதாரி மாணவர் பலரின் ஆக்கத் திறனேயும் கலையார்வத்தையும் வளர்ப்பதற்கும் இளம் எழுத்தாளர் தலைமுறை ஒன்று உருவாகுவதற்கும் ஏது வாயிருந்தன. தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த வெளியீடான இளங்கதிரிலே இலக்கியம், மொழி, பண்ப்ாடு, வரலாறு முதலிய துறைகளைப் பற்றிய விரிவுரையாளர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மாணவர்களின் கவிதை, சிறுகதை போன்ற தரமான படைப்புக்களும் இடம்பெறுவது வழக்கம். கலாநிதி வித்தியானந்தன் தமிழ்ச்சங்கத் தின் பெரும் பொருளாளராகவும், பெருந் தலைவராகவும் பல்லாண்டுகளாகப் பொறுப் பேற்றிருந்தார். அச்சங்கத்தின் ஆக்கபூர்வ

ص - 9
மான பணிகளெல்லாம் அவருடைய ஆதர விலும் கண்காணிப்பிலும் நிறைவுபெற்றன. சமுதாய நிகழ்ச்சிகளிலும் கலைநிகழ்ச்சி களிலும் அவரே மங்கலகாரனுக வருவது வழமை. அவர் துணைவியாருடன் வந்து மங்கல விளக்கேற்றி நிகழ்ச்சிகளைத் தொடக்கி வைக்குங் காட்சி சிறப்பு மிக்கதாயிருக்கும்.
நாடகத் துறையிலே அவர் ஈட்டிய சாதனை குறிப்பிடத்தக்கது. பேராதனைப் பல்கலைக்கழகத்திலே பல தமிழ் நாடகங் களை வெவ்வேறு காலகட்டங்களிலே மேடையேற்றியுள்ளார். தமிழ்ப் பட்டதாரி மாணவர்களை அத்துறையிலே பயிற்சிய ளித்து பலரதும் பாராட்டுக்களையும் பெறத் தக்க வகையிலே நடிக்குமாறு செய்துள் ளார். அவர் மேடையேற்றிய நாடகங்க ளிலே உடையார் மிடுக்கு, சுந்தரமங்கை, துரோ
கிகள் என்பன அதிக பாராட்டைப் பெற் றிருந்தன. மரபுவழி நாட்டுக் கூத்துக்களை நவீன முறைகளுக்கேற்ப மாற்றி மேடை யேற்றுவதிலே அவர் அதிகஆர்வமும் தகை மையும் பெற்றிருந்தார். கன்னன் போர் நொண்டி நாடகம், இராவணேசன், வாலி வதை என்பவற்றைப் பல்கலைக்கழகத்திலும் தமிழர் வாழுகின்ற நகரங்கள் சிலவற்றி லும் அரங்கேற்றியமை அவரின் சாதனை штеђtђ.
இத்தனை பணிகளைப் புரிந்த பொழு திலும் அவரின் பதவிஉயர்வுகள் படிப்படி யாகவே அவருக்குக் கிடைத்தன. உயர் மட்டத்தில் உள்ளவர்களின் அனுகூலத்தி ஞலன்றி தகைமை, சாதனை என்பவற்றின் மூலமாக இணைப்பேராசிரியர், பேராசிரியர் என்ற பதவிகள் இவருக்குக் கிடைத்தன என்பது கவனத்தற்குரியது. கலாநிதி. சு. வித்தியானந்தன் 1971 ஆம் ஆண்டிலே பேராதனைப் பல்கலைக்கழகத்திலே தமிழ்ப் பேராசிரியராகித் தமிழ்த்துறையின் தலை வரானர். ஆதிரை நாளிலே பிறந்தவரான பேராசிரியரைப் போட்டியிட்டு வென்ற வர்களில்லை. அவர் பேராசிரிய ரா கி ய பொழுது தினகரன் பத்திரிகை சிறப்பு மலரொன்றை வெளியிட்டிருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கதாகும்.
1970 ஆம் ஆண்டிற்குப் பின்பு கலைப் பீடத்திற்கு இங்கு சேர்த்துக் கொள்ளப்

Page 66
பட்ட மாணவரின் தொகை குறைந்தது. தமிழ் கற்கும் மாணவரின் தொகையும் குறைவது தவிர்க்க முடியாத வொன்ருகி யது. அத்தகைய சூழ்நிலையிலே பல்கலைக் கழகத்துக்கு வெளியே பெரும் பொறுப் புக்களை அவரால் மேற்கொள்ள் வேண்டி யிருந்தது. &
தமிழ்ப் பேராசிரியரான பின்பு அவர் புரிந்த சாதனைகளிலே. மகத்தானது நான் காவது அனைத்துலகத் தமிழா ராய் ச்சி மாநாடாகும். 'மூன்றுவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பாரீஸ் நகரிலே கூடியபொழுது (1970) நான் காவது மாநாட்ட்ை இலங்கையிலே யாழ்ப்பா ணத்தில் நடத்த வேண்டுமென்ற வேண்டு கோளை அவர் முன்வைத்திருந்தார், அவ் வேண்டுகோள் ஒப்புக்கொள்ளப்பட்டு ஒரு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப் பட்டிருந் தது. 1972 ஆம் ஆண்டு சனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் அம்மாநாடு நடைபெற் றிருக்க வேண்டும். அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மன்றத்தின் தாபகரும் சர்வதேச மாநாடுகளை நடத்துவதிலே வல்லவர், தகைழையாளர் என்று உலகப்புகழ் பெற்ற தனி நாயக அடி க ளார் சில பிர முகர் கூட்டங்களை யாழ்ப்பாணத்திலுங் கொழும்பிலுங் கூட்டியபின் நான்காவது மாநாடு இலங்கையிலே நடைபெருதென்று கைவிட்டிருந்த நிலை ஏற்பட்டிருந்தது. அந் நிலையிலே 1973 ம் ஆண்டின் பிற்கூற்றிலே அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக்கிளை பேராசிரியரிடம் தலைமைப் புதவியையும் மாநாட்டிற்கான பொறுப்புக் களையுஞ் சுமத்தியது. அவர் பொறுப்பேற் றதும் இலங்கைத்தமிழர் மத்தியிலே நான் காவது மாநாடு குறித்து நம்பிக்கை ஏற்பட்டது. தளராத மனமும், அஞ்சா மையும், இடையருத ஊக்கமும் அவரின் வெற்றிக்கு ஏது வா யிருந் தன. வல்லமை பொருந்திய அரசாங்கத்தின் எதிர்ப்பையும் பல தமிழ்ப் பிரமுகர் களின் சூழ்ச்சிகளையும் வென்று நான்கா வது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்திலே நடாத்தி முடித்தமை அவரின் ஈடிணையற்ற சாதனை

1 Ο --
யாகும். அது வேறெவராலும் ஈடேற்ற முடியாதவொன்று என்பது நாடறிந்த வொன்ருகும். மட்டக்களப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் தேகிய மாநாடுகள்ை அவர் நடாத்தியுள்ளமையும் குறிப்பிடத் தக்க சாதனைகளாகும்.
பேராசிரியர் பேராதனையிலே வாழ்ந்த காலத்தில் கண்டியிலுள்ள மத்தியமாகா ணச் சைவ மகா சபையினைப் புனரமைத் திருந்தார். அவரே அதன் தலைவராகவும் பல்லாண்டுகளாக விளங்கினர். நாவலர் குருபூசை, விபுலானந்தர் தினம், நாயன்மார் குருபூசை, நவராத்திரி போன்ற தினங்கள் இவர் தலைவராகவிருத்த காலத்திலே சிறப்பாக அங்கு கொண்டாடப் பெற்றன: சைவசமயம் பற்றிய அறிவினையும் ஆர்வத் தினையும் கண்டியில் வாழும் சைவர்களி டையே வளர்த்துக் கொள்வதற்கான நற்பணிகளை அச்சபை மேற்கொண்டிருந் தது. பேராதனைப் பல்கலைக்கழகத்து முருகன் கோயில் நிர்வாகத்திலே அக்கறை கொண்டிருந்த பேராசிரியர் கோயிலைப் பற்றிய பல பொறுப்புக்களை மேற்கொண் டிருந்தார். பொறுப்பாண்மைக் குழுவின் தலைவராக பல்லாண்டு தொண்டாற்றினுர்,
பேராசிரியரின் பேராதனை வாழ்க்கை பற்றிச் சிந்திக்குமிடத்து திருமதி கமலா தேவி வித்தியானந்தத்தின் தோற்றம் எம் மனதிலே தோன்றுகின்றது. பேராசிரியரின் சாதனைகளைப்பற்றி நினைத்துப் பெருமிதங் கொள்ளும் எமக்கு நிலையாமை பற்றிய
நினைவு வருகின்றது. FLO அற நூல்களின் பேராதனைகள் பற்றிய எண்ணங்கள் ஏற்படுகின்றன. பல்கலைக்
கழகத்துச் தமிழ்ச் சமுதாயத்திற்கு நாயக ஞகப் பேராசிரியர் விளங்கினர் என்ருல் அதற்குக் காரணமாய் இருந்தவர் திருமதி வித்தியானந்தன். அன்பர்களையும் நண்பர் களையும் மாணவர்களையுஞ் சுற்றத்தவராக் கிய சிறப்புடையவர் அவர். தனித்தும் பிறர் சேர்க்கையினைத் தவிர்த்தும் வாழ. விரும்பாது பிறரின் இன்ப துன்பங்களிலே பங்குகொண்டு வாழ்ந்தவர்கள் வித்தியா ன்ந்தன் தம்பதிகள். இவர்களின் அன்பும், மனிதாபிமானமும் மறத்தற்கரியனவாம்.

Page 67
யாழ்ப்பாணத்தில் . . . Guanofouri செ. சிவஞானசுந்தரம்,
ஒரு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் பணிகளை ஆய்ந்து அவரின் கீழ் கடமை யாற்றும் ஒருவர் கணக்கிடுவதும் மதிப்புக் கூறுவதும் தருமசங்கடமான பயிற்சியாகும். பலரின் பலவிதமான புலனுேக்குக்கு அந்த முயற்சி பலியாகலாம். எனினும் பேராசிரி யர் வித்தியானந்தன் அவர்களுடன் ஏறத் தாழ 30 வருடகால பழக்கம் தோழமை ஆகியவற்றின் பின்னணியில், எனது நோக் கில் பூரண நம்பிக்கை கொண்டு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.
பேராசிரியர் கப்பிரமணியம் வித்தியா னத்தன் (சு. வி.) யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர். 1979 ஆம் ஆண் டின் முதல் நாளில் பதவி ஏற்றவர். அதற்கு மூன் 33 வருடகால பல்கலைக்கழக ஆசிரிய அனுபவம் அவருக்கு இருந்தது - இலங்கை பல்கலைக்கழகத்தின் உப விரிவு  ைரயாளர் (1946 - 48) விரிவுரையாளர் (1950 - 56,) சிரேஷ்ட விரிவுரையாளர் (1956 - 67,) ரீடர் (1967-70) பேராசிரியர் (1970-77,) யாழ் வளாகத்தின் தலைவர் (1977-78) அது படிப் படியாக, பக்குவமாக, ஏற்பட்ட புலமையின் நிறைவாகும்.
இந்தப் பல்கலைக்கழகப் பெரு வாழ் விலே தமது நாட்டின் தமிழ் அரசியல் தலைவர்களும் கல்விமான்களும், பத்திரிகை ஆசிரியர்களும் எழுத்தாளரும் கலைஞரும் நிருவாக அதிகசரிகளும், சமுதாயத்தில் வேறு விதங்களில் மேன்மை அடைத்தவர் களும் அவரின் மாணவராக இருந்திருக்கி ரூர்கள். அந்த குரு-சிஷ்வ ஆசாரத்தை இன்னும் மதித்துப் பேணி வருகிருர்கள் பல்கலைக்கழக மானிய நிர்வாகத் திலும் வேறு பல்கலைக்கழக உயர் பதவிகளிலும் இருப்பவர்கள் நீண்ட காலமாக அவருடன் தொடர்புள்ளவர்கள். இனி, பொது வாழ்
12

(நந்தி) பல்கலைக்கழகம், 6AYLV/ ழ்ப்பாணம்.
விலே மக்கள் மத்தியில் அவர் கல்வித்துறை வித்தகராக, பேச்சாளனுக, எழுத்தாளனுக, சமூக ஊழியனுக, சமயத் தொண்டனுக, கலாச்சார நிர்வாகியாக, தமிழ் மொழியின் கட்சிசார்பற்ற அரசியல் வாதியாக, நமது தலைமுறையினது பெருமையின் ஓர் அங்க மாகக் கணிக்கப்படுகின்றர். இத்தகைய பல தரப்பட்ட அவரது ஆளுமையின் வலிமையை உணர்வதோடு, அவர் நிர்வாகம் செய்யும் காலத்தின் நிலையையும் நோக்கினல் தான் யாழ்ப்பாணத்தில் அவரது பல்கல்லக்கழகப் பணிகளை இனம் காண முடியும்.
"இரு தகரங்களின் கதை"யில் சார்ல்ஸ் டிக்கன்ஸ் விரிந்துரைத்த காலகட்டத்தின் மாறு வேருண பண்புகளில், தீமையும் துன் பமும் உள்ள விவரம் இன்றைய யாழ்ப்பா ணத்தின் கால நிலைக்குப் பொருந்தும் அது மிகமோசமான காலம் . அது முட்டாள் தனமான யுகம் . அது அவநம்பிக்கையின் சகாப்தம் அது இருளின் பருவம் ஏமாற் றத்தின் பணி மூட்டம். எங்கள் முன் ஒரே வெறுமை!
அவை 1977 - 1984 இணைந்த ஆண்டு கள்! அரசியலில் குழப்பம் தமிழ் மான வரிடையே அதிருப்தி, ஆசிரியரிடையே எதிர் காலம் குறித்து ஐயப்பாடு, பொருளாதார உதவியிற் போதாமையும் தாமதமும், அத் துடன் பொதுவாக யாழ்ப்பாண் உடலோடு சம்பந்தப்படுத்தப்படும் போட்டி ,பொருமை, புறங்கூறல் வகையான பிணிகள். இப்படி யான குறைபாடுகள் திறைந்த காலத்தில் தான் பேராசிரியர் சு. வி. யாழ். பல்கலைக் கழக நிர்வாகத்தை ஏற்று நடத்துகிருர், காலத்தின் உறுதியின்மையால் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தாக்குப்பிடித்து, பல் கலைக்கழகம் சீர்குலைந்து போகாமல் தனித் துவத்துடனும் நிறுவன கட்டுக்கோப்புட

Page 68
- 1
னும் காப்பாற்றி வருவது அவரது முதன் மையான பணியாகும். அந்தப் பணியை அவர் பதவிக்கேற்ற பொறுப்புடன் மட்டு மல்ல, மகாபாரதம் போற்றும் பொறுமை யுடனும் நிறைவேற்றி வருகிருர், பல்கலைக் கழக கவுன்சில், செனற் சபைகளில் அவர் மேல் குற்றமும் குறையும் சாட்டப்பட்ட வேளைகளிலும், அந்தப் பொறுமையானது மெளன மொழியில் கலகத்தை அடக்கிப் பல்கலேக்கழகப் பூமியை ஆண்டது. சமீபத் தில் ஒரு பேராசிரியரின் பிரிவுபசாரக் கூட் டத்தில் அவரே கூறிஞர் 'நான் துணைவேந் தராக வந்தபின் பேசுவதைச் சுருக்கி, மற்ற வர்கள் பேசுவதைக் கேட்கப் பழகிவிட் டேன்' என்று. இது அவரைப்பற்றி எல் லோரும் அறிந்து கொண்ட பேருண்மை, அத்துடன், நாடறிந்த மேடைப் பேச்சாள ஞகவும், நிர்வாகக் குழுக்களிலே நியாயத் திற்காக வாதாடிய பேச்சுப்போர் வீரஞக வும் அவர் ஒரு வாழ்நாளில் சாதித்ததிலும் பார்க்க, உபவேந்தராக இந்த ஐந்து சொச்ச வருடங்கள் அவருடைய திட்டமிடப்பட்டு இயக்கிய மெளனத்தால் செய்து முடித்தது அதிகம் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண் டும். அதற்குச் சான்று கலைப்பீடம், விஞ் ஞானபீடம், மருத்துவபீடம் என வளர்ந்து, இனி விவசாய பீடத்தையும் பொறியியல் பீடத்தையும் ஏற்கத் தயாராகும் இன்றைய யாழ். பல்கலைக்கழகமாகும்.
அன்றைய பரமேஸ்வரா கல்லூரி வளவு, இன்று யாழ். பல்கலைக்கழக வளாகமாகப் பொலிவுற்று நிறைகின்றது. படிப்படியான பெருக்கம்- கலைப்பீடத்தின் முதலாம் நிலை கட்டிடம், விஞ்ஞான பீடத்தின் இயற்கை விஞ்ஞானம், இரசாயனம், கனக்கிய ல் - புள்ளித்தொகுப்பியல் கட்டிடங்கள், நூல் நிலையம், மாணவ மாணவிகளுக்கு விடுதிகள் என்று இவற்றிற்குப் பலரின் பலவிதமான உதவிகளை சு. வி. சு வீ க ரித்துக் கொண்டு பல்கலைக்கழகத்தின் முழுமையான வளர்ச் சிக்குப் பணியாற்றுகிருர்,
கட்டிடங்கள் தாமாக கழகமாவதில்லை. அங்கே இயங்கும் மனித சிந்தனையும் அதன் சாதனையும்தான் கலைகளையும் இயல்களையும்

2 -
உருவாக்கியும் வளர்த்தும் ஆய்ந்தும் பரப் பியும் மனிதனின் மேம்பாட்டிற்குப் பங் களிக்கின்றன. இத்தகைய இயக்கம் யாழ் பல்கலைக்கழக அறிஞரால் இயங்குவதற்கு சு. வி. தம்மால் இயன்ற ஊக்கம் கொடுத்து உதவுகிருர். அதன் விளைவுகளை இந்தக் குறு கிய காலம் மதிப்பிட முடியாது; எதிர்காலம் அவற்றைத் திருப்தியுடனும் பெருமையுட னும் பதிவு செய்யும் எ ன் ற நம்பிக்கை உண்டு.
1978 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில் மருத்துவ பீடத் தி ன் தோற் றம் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம். அதைச் சுகமாக ஏற்கத்தக்க திலேயில் யாழ்ப்பாணம், இருக்கவில்லே. ஆணுல் கி. வியின் துணிவும் உறுதியும் , அவற்றிற்குப் பக்க பல மாக பேராசியர் ஹாவர், திரு. கே. சிவநாதன் ஆகியோரின் ஆற்றலும் உழைப்பும், கிடைத்த வாய்ப்பை நழுவ விடாது ஏற்று உயிரூட்டி உருவாக்கி வளர வைத்தன. அன்று அவர், கட்டிடம், கருவி, கோல் இல்லையென்று அந்த வாய்ப்பை ஏற்காது ஒத்திப்போட்டிருந்தால், இன்று எல்லாத் தமிழ் வைத்திய மாணவரின் கதியும் அக நிக் கோலம் போட்டிருக்கும் முதல் வந்த மாணவ மாணவிகள் இப்போது பட்டம் பெற்று தொழில் புரிகிருர்கள். பேராசிரியர் சு. வியுடன் எங்களிற் சிலர் மருத் துவ பீடத்தின் அத்திவாரக்கல் நாட்டு வைபவத் தில் பங்குகொண்ட நிகழ்ச்சி, இன்று, நேற் றைய சம்பவம்போல் கண்களின் இன்ப நீரில் நிழலாடுகின்றது.
அதே போல, நமது நாட்டின் பாரம் பரிய மருத்துவமான சித்த வைத்தியத்தின் கல்வி நிலையம், யாழ் பல்கலைக்கழகத்தின் ஒர் அங்கமாக அமைவதற்குக் காலம் வந் துள்ளது. காலத்தின் நிர்ப்பந்தத்தால், அது கொழும்பு பல்கலைக்கழகத்திலிருந்து யாழ்ப் பாணத்திற்கு மாறுவதற்கு வேண்டுகோள் வந்ததும், அதனை வரவேற்றுப் பலருடன் தொடர்புகொண்டு, குழு ஒன்றை நியமித் துப் பொருத்தமான முறையில் சித்த வைத். தியக் கல்வியை பல் கலை க் கழகத்துடன் இணைப்பதற்குப் பேராசிரியர் சு. வி ஆவன

Page 69
செய்து வருகிருர். தனது மொழிக்கும், கலை களுக்கும் பெரும் பணி செய்வதில் மகிழ்ச் சியடையும் பேராசிரியர், நமது சித்தவைத் தியக் கல்விக்கு இவ்வாறு பணி செய்யக் கிடைத்த வாய்ப்பில் பூரிப்பார் என்பதில் ஐயமில்லை.
பல்கலைக்கழகத்தின் மிக நெருங் கிய எதிர்காலத்தில் பல வளர்ச்சிகளுக்குத் திட் டம் உண்டு. கிளிநொச்சியில் விவசாய பீடமும், பொறியியல் பீடமும் விரைவில் அமைவதற்கு சு. வியின் செயலாண்மைத் திறம் சித்தி தரும்,
தமிழ் கூறும் பல்கலைக்கழகங்களில் சு. வியின் பதவியும் பணியும், நமது பல்கலைக் கழகத்திற்குப் பெருமையும் சிறப்பும் தருவ தாகும். அவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் செனற்சபை அங்கத்தவராகவும்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திரு வனந்தபுரம், சென்னை, மலேசியா பல்கலைக் கழகங்களின் பரீட்சைக் குழு அங்கத்தவரா கவும் இருக்கின்றர்.
ஆசிரியர், மாணவர், ஊழியர், பொது மக்கள் எல்லாருடைய ஒத்துழைப்பிலும் நம்பிக்கை வைத்துப் பல்கலைக்கழகத்தைப் பராமரிக்கும் அவருக்கு ஏற்பட்ட சோதனை களே அவர் சமாளித்த விதம் வியக்கத்தக்க தாகும். யாழ் பல்கலைக்கழகத்திற்கு ஆக்க மும் ஊக்கமும் அளித்த சேவையையாற்றிய பேராசிரிய பிரமுகர் மூவரை - பேராசிரி யர்கள் கனகசபாபதி, சோ. செல்வநாயகம், கைலாசபதி ஆகியோரை மிகக் குறுகிய காலத்தில், நாம் அகாலமாக இழந்தது ஒரு நிருவாகியை திடசித்தம் குலையவைக்கும் நிகழ்வாகும். அத்துடன் அவரது வாழ்விற் கும் உறுதுணையாக இருந்த அவர் மனைவி யும், மிகவும் பொறுபபான ஒரு காலகட் டத்தில் அமரத்துவம் அடைநதது அவரை மிகவும் பாதித்தது. எனினும இத்தகைய சொந்த பாதிப்புக்களையும், பல்கலைக்கழக தடயங்களையும் தாங்கி, கழக நிருவாகமும் கல்வித் தராதரமும் தளராது இயக்கியது அவரது அளப்பெரிய பணியாகும்.
மரணம் மட்டும் பல்கலைக்கழக முன் னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக் இருப்ப தில்லை. மேற்படிப்புக்கு வெளிநாடுகள்

1 GB --
போகும் இளம் விரிவுரையாளர்கள் பட்டம் பெற்றதும் தாய்நாட்டிற்குத் திரும்பாதது, பெரும் பதவியை ஏற்கும் பெரியவாகள் அந்தப் பதவியின் பெயருடன் பாதியில் பிற நாட்டிற்குப் புகுவது இப்படியான விரனது களும் வளரும் நாடுகளிலுள்ள பலகலைக் கழகங்களைப் பாதிக்கின்றன. இதற்கு யாழ்ப் பாணம் விதிவிலக்கலல. இவறறை சு. வி. சமாளித்தது மட்டுமல்ல, சவாலவிட்டு வெற் றியும் அடைந்திருக்கிருர், ஏற்கனவே குறிப் பிடப்பட்ட பிரிவுபசார விருநதில் புறப்படும் பேராசிரியரை வைத்து உரை நிகழததுகை யில் சு. வி. சொன்னுர்: ““சில மாதங் களுக்கு முன் பேராசிரியர் "இன்னுர்’ வெளி நாட்டுப் பயணம் ஒன்றின் போது முன் அறி வித்தல் இலலாது தனது ராஜனுமா கடி தததை அனுப்பினா. நான் அதை ஏற்றுக கொண்டேன. அதை அறிந்து மாணவர் பலர் வந்து மன்ருடினர். அவரை எப்படி யாகிலும் வரவழைக்கும்படி. ஆனல் நான திறமைமிக்க ஒரு புதிய பேராசிரியரை மூனறு மாதங்களில் நியமிததேன். இப்போது இன னும் ஒரு பேராசிரியர் திடீரெனப் போகி ரூர். நான் இவரையும் நிற்பாட்டவிலலை. வெகு விரைவில் அந்தப் பதவிக்கு ஒரு வரை நியமிப்பேன்.’’ விருத்தில் பங்குபற் றிய சிலரின் புகுவங்கள் கேளவிக்குறிகளாக வளைந்தன: "வித்தியா இப்படிப் பேசு கிருர்?’ ஆளுல் பேராசிரியா வித்தியானந் தன நன்கு தெரிந்தவர்கள் இடையே இந தக் கேளவிகளு نصب ناة الشاسا * அவரது மெளனம், பொறுமை, தன்னடக்கம, பன னிககும் சுபாவங்கி இவறமல. எநதக் காலத திலும கோழைத்தனத்தன சாபல இருந்த திலலே திடசித்தமான அவரது இதயததுன ஓசை சில வேளைகளில்தான பகரங்கமாகக கேட்கும். நான் ஆரமபதத்துல் கூறியதுபோல் அவரையும் அவா பதவியேற்ற கலததை யும் அறிந்தாலதான் அவரது பனகளே உணரமுடியும்.
யாழ்பல்கலைக்கழகம் இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்களின் தனிததுவமான கல்வி நிலையம். அதன முதல உபவேததராக தமி ழர் சால்பில திளைதத ஒருவர், தமிழி பேசும் சகோதரரின் கலையையும பனபையும மதிக கும் ஓர் அன்பன், தமிழ் இலககியத தென் றலில் மூழ்கிய தமிழ மனததோன வாய்த் தது தமிழ் மக்களுககுக் கிடைத்த வரப்பிர
FTub

Page 70


Page 71
стећо. g.
சி. மெள
சிற்பி
கல்வயல்
oreo
 

pජ්ර්”#555;rth
சிவநாயகம்
னகுரு
ன் செல்வன்
குமாரசாமி

Page 72


Page 73
பேராசிரியர் வித்தியான
多・ சண்முகசுந்தரம், அதிபர், மகாஜஞ
பரம்பரை என்ற சொல்லிற்கு இரண்டு விளக்கம் தரலாம். ஒன்று பிறந்துவளர்ந்த பரம்பரை. மற்றது மக்களை உருவாக்குகின்ற கல்விப்பரம்பரை. மனிதனைப் பரம்பரை உருவாக்குகின்றது. இது ஒரு சாராரின் கருத்து. மனிதனைச் சூழ்நிலை உருவாக்கு கின்றது. இது மற்ருெரு சாராரின் கருத்து. மூன்ருவது சாராரின் கருத்துப்படி, வேண் டிய போதெல்லாம், தனக்கு வேண்டிய வரைக் கடவுள் உருவாக்குகின்ருர், இந்த மூன்று சாராரின் கருத்தும் பேராசிரியர் வித்தியானந்தனைப் பொறுத்தவரையில் பொருந்தும்.
பேராசிரியர் வித்தியானந்தன் நல்ல பரம்பரையில் பிறந்தவர் நல்ல சூழ்நிலை யில் வளர்ந்தவர். இவரின் குடும்பம் முழு வதுமே மாவிட்டபுரம். முருகனின் தொண் டர். தமிழ்க் கல்வியை வளர்த்தவர். பேராசிரியர் வித்தியானந்தன் நல்ல கல் விப் பரம்பரையில் க்ற்றவர். ஈழத்துத் தமிழியல் பரம்பரை ஒன்றைச் சிறப்பா க்வும் , தமிழ் கூறும் நல்லுலகத்துப் பரம் பரை ஒன்றைப் பொதுவாகவும் பேணி வளர்த்தவர், வளர்த்துக் கொண்டே இருப்பவர்.
தமிழியல் தென்றலாம் பேராசிரியர் வித்தியானந்தன் எழுதிய முதலாவது நூலின் பெயர் 'இலக்கியத் தென்றல்'. இந்த நூல் 1953 இல் வெளிவந்தது. இந்த இலக்கியத் தென்றல் இன்று வரையும் மெல்லென வீசிக்கொண்டே இருக்கின்றது. தென்றல் தான் சுகம் பெறுகின்றதோ தெரியாது; ஆஞல் பல கோடி உயிர் களுக்கு இன்பம் அளிக்கின்றது. தென்றல் புயலாக மாறும்; பின்னர் புயல் தென்ற லாக மாறும். இது இயற்கையின் விதி. ஆணுல் தமிழியல் தென்றல் வித்தியானந் தன் ஒருபோதும் புயலாக மாறியதில்லை: புயலுக்குரிய சீற்றம் அவரிடம் இல்லை. அன்பு அடக்கம் பண்பு நிரம்பியவர். கட வுள் மீது செலுத்தும் அன்பு ஒரு புறம்: தன் மாணவர் மீது செலுத்தும் அன்பு
13

ாந்தன் பரம்பரை . . . ரக் கல்லூரி, தெல்லிப்பளை.
மற்றெருபுறம். இவற்றை எல்லாம் நன்கு விளங்க வேண்டுமானல் பேராசிரியர் வித் தியானந்தனின் குடும்ப பரம்பரையையும், அவரின் கல்விப் பரம் ப ைர  ைய யும், அவர் உருவாக்கிய மாணவர் பரம்பரை யையும் நோக்குதல் பொருத்தமான செயல்.
இன்றும் ஆண்டுதோறும் ஆடி அமாவா சை நாளன்று யாழ்ப்பாணத்துப் பல்க% க் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வித்தி யானந்தனைக் காணவேண்டுமானல் வீமன் காமம் மகா வித்தியாலயத்திலே தான் காணலாம். அங்கு ஆண்டுதோறும் சோறு வழங்கல் நடைபெறும். மாவை முருகன் அடியாருக்குச் சோறு வழங்கும் பணியைப் பேராசிரியர் வித்தியானந்தன் தானே நின்று நடாத்திவைப்பார். இது இவரின் பரம்பரைத் தொண்டு. இந்தப் பரம்பரை இறை அன்பை வளர்த்த பரம்பரை; கல்வியை - சிறப்பாகத் தமிழ்க் கல்வியை வளர்த்த பரம்பரை; முருகனுக்குத் தொண்டு செய்யும் பரம்பரை. மாவிட்ட புரம் முருகன் கோயிலுக்கு முன்பாக இன்றும் மூன்று அறக் கட்டளைகள் இருக்கின்றன. ஒன்று மாவிட்டபுரம் முருகன் கோயில் கிழக்கு வாயில் கோபுரம். மற்றது அதற்கு அருகில் அமைந்துள்ள 'உடையார் மடம்'. மூன்ரு வதாக அமைந்திருப்பது கலைக்கோயில் வீமன்காமம் மகா வித்தியாலயம். மாவை முருகன் கோயிலிலிருந்து ஒரு கல் தூரம் வடக்கே போல்ை மற்ருெரு கலைக்கோயில் இன்றைய நடேசுவராக்கல்லூரி அமைந் துள்ளது. கோபுரம் ஒன்று, மடம் ஒன்று, கலைக்கோயில் கல்லூரி இரண்டு ஆகிய வற்றை மக்களுக்கு அளித்த பரம்பரை யில் வந்தவர் பேராசிரியர் வித்தியானந் தன். கோபுரத்தை அமைத்தவர் பேராசி ரியரின் மூதாதையர், இக் குடும்பத்தை **உடையார் குடும்பம்" என்பர் பொது மக்கள். மடத்தைக் கட்டி எழுப்பியவரும் இக்குடும்பத்தினர். வீமன் காமம் மகா வித்தியாலயத்தைக் கட்டி எழுப்பியவர்

Page 74
சின்னத்தம்பி உடையார். பேராசிரியரின் தகப்பன் வழிப் பேரனுர், வீமன்காமம் மகா வித்தியாலயத்தின் முகாமையாளராக இருந்தவர் பேராசிரியர். நடேசுவராக் கல்லூரியைக் கட்டி எழுப்பியவர் குருநாத உடையார். இவரும் பேராசிரியரின் பரம்பரையைச் சேர்ந்தவர்.
இனிப் பேராசிரியர் வித்தியானந் தனின் குடும்ப பரம்பரையை நோக்க லாம். தகப்பனரின் பெயர் சுப்பிரமணி
ህ.JLb. சுப்பிரமணியத்தின் தகப்பஞர் சின்னத்தம்பி உடையார். நாவலருக்குப் பின்னர் சைவத்தையும் தமிழையும்
வளர்த்த பெரும் கும்பத்தைச் சேர்ந் தவர் இந்த உடையார். சின்னத்தம்பி உடையாரின் மகன் சட்டத்தரணி சுப்பிர மணியம். இளம் சுப்பிரமணியம் தமிழை நன்கு கற்றவர். உறுதி எழுதுவதற்கான தேர்விற்காகத் தமிழைக் கற்றவர். பின்னர் தமிழைக் கற்பதில் பேரின்பம் கண்டவர். நீதிமன்றம் செல்லாத நேரம் எல்லாம்
தேசிய உடையிலே காட்சியளிப்பTர். பேராசிரியர் வித்தியானந்தனின் தாயார் முத்தம்மா. இவர் பருத்தித்துறையைச்
சேர்ந்தவர். சமாதான நீதவானுக இருந் தவர். இவரின் தந்தையார். சுப்பிரட் ரிை பம். இவரும் சைவத்தையும் தமிழையும் பேணி வளர்த்த பெரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
சவச்சூழலில் கல்வி கற்க என்றபடியால் வீமன் காமம் 19காவித்தி: லத்தில் ஏடுதொடக் கப்பட்டது. பின்னர் தெல்லிப்பழை யூனி யன் கல்லூரியிலும், ய | ழ் ப் பா ன ம் பரியோவான் கல்லூரியிலும், யாழ்ப்புF ணம் இந்துக் கல்லூரியிலும் இளம் வித்தி யானந்தன் கல்விகற்ருர். பின்னர் இலங் கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப் பையும், இலண்டன் பல்கலைக் கழகத்தில் கலாநிதி ஆராய்ச்சிப் பணியையும் மேற் கொண்டார். பேராசிரியரின் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் அவர்பெற்ற பட்டப் படிப்பைப்பற்றிக் கவனித்தல் மிகவும் முக் கியம். இங்கு மூவரின் தமிழ்க் கல் வி த் தாக்கம் இளம் வித்தியானந்தனைக் கவர்ந் தது. இந்த மூவரின் தமிழ்ப்புலமை வித்தி யானந்தனின் எதிர்காலத்தைச் சீரா க் கியது. இவர்கள் மூவரும் பேராசிரியர்கள்.
 
 
 
 
 

2 -
அவர்களின் தமிழ்ப்பற்று, புலமை, ஆராய்ச்சித்திறன், என்பவை இ ள ம் 'வித்தி’யைக் கவர்ந்தன. பேராசிரியர் விபுலானந்தர் அடிகளார், பேராசிரியர் கலையருவி கணபதிப்பிள்ளை, பேராசிரியர் செல்வநாயகம் ஆகியோர் இந்த மூவர். இலண்டன் பல்கலைக்கழகத்தில் இவருக்கு வழிகாட்டியாக அமைந்தவர் பேராசிரியர் அல்பிரட் மாசிற்றர், பேராசிரியர் பிலிப்சு, பேராசிரியர் பருே. இதில் கலையருவி கண பதிப்பிள்ளையின் தாக்கமே பேராசிரியர் வித்தியின் வாழ்வில் பெரிய பங்கைப் பெறுகின்றது.
பேராசிரியர் வித்தியானந்தன், தான்
பல்கலைக்கழகத்தில் கண்டு காதலித்த செல்வி கமலாதேவி நாகலிங்கத்தைத்
திருமணம் புரிந்தார். இந்தக் குடும்பத்தி னரும் கலைப்பற்றும், சைவப்பற்றும் தமிழ்ப் பற்றும் நிரம்பியவர். பேராசிரியரின் கலை முயற்சிகள் யாவற்றிற்கும் கமலம் உறு துணையாக அமைந்தவர். இவரின் அகால மறைவு பேராசிரியரைப் பெரிதும் பாதித்து விட்டது.
இனிப் பேராசிரியர் வளர்ந்த கல்விப் பரம்பரையை நோக்கலாம். இலங்கைப் பல்கலைக்கழகம் கல்லூரியாக இருந்தது. இது இலண்டன் பல்கலைக்கழகததுடன் ஒரு காணத்தில் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்தில் தமிழ் கற்கும் மனைவ ரின் தொகை குறைவு. அவர்களின் தமிழ் அறிவும் அப்படித்தான். அவர்களுக்குத் தமிழ் நெடுங்கணக்கைத் தெரிய வைத்துத் தமிழ் கற்பித்தவர், அழக சுந்தர தேசி கர் எனப் போற்றப்பட்ட வண. கிஞ்சுபரி அடிகளார். அவருக்குப் பக்கபலமாக இருந் த:ர் Gju gr&iliu i கணபதிப்பிள்ளை. இலங்கைப் பல்கலைக்கழகம் தனித்
பல்கலைக்கழகமாக மாறியது; ாறியதும் இலங்கை சுதந்திரம் பெற்றதும் தாய் மொழிக் கல்வியின் தரம் உயர்ந் தது. இதற்கு உதவியவர் விபுலானந்த அடிகளும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை யும் பேராசிரியர் செல்வநாயகமும், தமிழி பல் ஆராய்ச்சிப் பரம்:ரையைப் பெரிதும் ஊக்குவித்தவர் பேராசிரியர் கணபதிப் பிள்ளே. தமிழியல் ஆராய்ச்சியைத் தூண்டு வித்தவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை. அப்போது தமிழியல் ஆராய்ச்சியை இலங்கை மாணவர் ஐரோப்பியப் பல்கலைக்

Page 75
ning
A
கழகத்தில் மேற்கொண்டனர். இவர்களுக் குப் பெரிதும் உதவியவர்கள் பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் பேராசிரியர் வித்தியா னந்தனும். இந்தப் போக்கை மாற்றிய மைத்து இலங்கையிலும் தமிழியல் ஆராய்ச் சியை 66 ற் கொள்ள வைத்த பெருமை யில் பெரும்பகுதி பேராசிரியர் வித்தியா னந்தனைச் சாரும். இன்று இலங்கையில் g2_6rGT பல்கலைக்கழகங்களிலும் ஏனைய உலகப் பல்கலைக்கழகங்களிலும் பணிபுரி யும் பலரும் பேராசிரியர் வித்தியானந் தனின் மாணவர். இது பெருமைக்குரிய அலுவல்.
பேராசிரியர் வித் தி யா ன ந் த ன் சைவத்தையும் தமிழையும் மிகவும் போற்றி வளர்த்த பெரும் குடும்பத்தைச் சேர்ந் தவர் என்பது முன்னர் சுட்டிக் காட்டப் பட்டது. இவரின் குடும்பத்தினரே இன்றும் மாவிட்டபுர முருகன் கோயில் 18ம் திரு விழா உபயகாரர். ஆனல் பேராசிரியர் வித் தியானந்தன் பரந்த உளப் போக்கு உடை யவர். இலங்கை, க இஸ்லாமியர் பற்றிய அகன்ற ஆழமான ஆராய்ச்சிப் பரபு பரை. யைப் பெரிதும் உருவாக்கியவர் பேராசிரியர். இஸ்லாமிய இயல் ஆராய்ச்சியாளர் இவர். இவர் எழுதிய 'கலையும் பண்பும்’ என்ற நூலுக்குச் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடப்படவேண் டிய அலுவல், அது மட்டன்று, ஈழத்துத் தமிழியல் வளர்ச்சிக்குக் குறிப்பாகவும், தமி ழியல் வளர்ச்சிக்குப் பொதுவாகவும் கிறித் தவர் ஆற்றிய தொண்டினைத் தானும் ஆராய்ந்தார். அத்துடன் பிறரையும் ஆராயும்படி தூண்டினர். இங் Eனம் இஸ்லாமியத் தமிழியல், கிறித்த வத் தமிழியல் தமிழ் சிங்களக் கலைத் தொடரியல் பற்றித் தானும் ஆராய்ந்தார். பிறரையும் ஆ 1ம்படி செய்தார். இவை பேராசிரியர் தோற்றுவித்த கல்விப் பரம் பரையின் அணிகலன்.
பேராசிரியர் வித்தியானந்தன் அழிய விடாது காப்பாற்றிய கலைப் பரம்பரை ஒன்று இன்று இளமையுடன் பொலிவுற்று மறுமலர்ச்சி பெற்றுள்ளது. அதுதான் தமிழ்நாடக அண்ணுவியார் ப்ரம்பரை.
 
 
 

-سسسسه B
ஈழத்து அண்ணுவியார் பரம்பரை தன் பெருமையை உணரவிடாது தடுத்து வைத் தனர். ஒருசாரார் ஐரோப்பியக் கலை மோகம் தலைதூக்கி ஆடிய காலம் அது. அந்தக் காலத்தில் கூத்துக்கலையைக் காப் பாற்றி அதற்குப் புத்துயிர் அளித்தவர் வித்தியானந்தன். இவர் தோற்றுவித்த மறு மலர்ச்சி வலிவும் வனப்பும் பொலிவும் பெற்றுள்ளது. இது மகிழ்ச்சிக்குரிய அலுவல.
பேராசிரியர் வித்தியானந்தன் போற்றி வளர்த்த ஆராய்ச்சிப் பரம்பரை மற்றென் றையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண் டும். அதுதான் அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனத்தை மலேசியாவில் தோற்றுவித்த பெருமை தமிழ் முனிவர் தனிநாயக அடிகளாரைச் சாரும். இந்தநிறுவனம் வேர்ஊன்றி வளரப் பெரிதும் உதவியவர் பேராசிரியர் வித்தி யானந்தன். இலங்கையில் யாழ்ப்பாணத் தில் இந்த நிறுவனத்தின் ஆய்வரங்கு மாநாடு நடைபெறத் தனிநாயக அடிகளா ருடன் நின்று அரும்பாடுபட்டவர் பேரா சிரியர் வித்தியானந்தன். அதுமட்டன்று, இந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இலங் கைக்கிளை செழித்து வளர உதவியவர், அதன் தலைவர் வித்தியானந்தன். ஏனைய நாடுகளிலும் பார்க்க இலங்கையே தன் கிளேயின் மூலம் தமிழியல் வளர்ச்சிக்கு வழிகாட்டி நிற்கின்றது. இலங்கையில் நடை பெற்ற வவுனியா, மட்டக்களப்பு, முல்லைத் தீவுத் தமிழியல் ஆராய்ச்சி மா நா டு க ள் இதற்குப் போதிய சான்ருக அமைந்துள் ளன. அடுத்தகிளை மாநாட்டை மலையகத் தில் நடத்தப் பேராசிரியர் திட்டமிட்டுள் ளார்.
சுருங்கச் சொன்னுல் பேராசிரியர் வித் தியானந்தனூர் நல்லதொரு பரம்பரையில் பிறந்தவர். நல்லதொரு பரம்பரையின் கல்வி வாரிசு. தனக்குப்பின் தமிழியலை வளர்க்கக் கூடிய நல்லதொரு வாரிசான பரம்பரையை உருவாக்கியவர். இந்தப் பரம் பரை தமிழியல் வளர்ச்சியைப் போற்றிப் பேணும் என்பதில் ஐயம் இல்லை.

Page 76
முப்பது ஆண்டுகளுக்கு
எஸ். டி. சிவநாயகம்
ப்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆயினும் திரு. சு. வித்தியானந் தன் என்னை முதன்முதலாக சந்தித்த தினம் இன்னும் பசுமையாக என் மனதில் நிற்கிறது. (அப்போது அவர் பேராசிரியர் ஆகவில்லை.)
இவ்வருடம், 1984 மே மாதம் 8 ஆம் திகதி பேராசிரியர் சு. வித்தியானந்தன் தமது 60 ஆண்டு நிறைவினை பூர்த்தி செய்கிருர் முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர், 30 வயதுடைய துடிப்பான ஒர் இளைஞராக இருந்தசமயத்தில் அந்த சந் திப்பு நிகழ்ந்தது, அநேகமாக 1953 ஆம் ஆண்டு அல்லது 1954 ஆம் ஆண்டாகத் தான் இருக்கவேண்டும்.
அந்தக் காலகட்டத்தில், "சுதந்திரன்’ இதழின் ஆசிரியராகவும், பத்திரிகையை வெளியிட்ட சிலோன் நியூஸ் பேப்பர்ஸ் லிமிட்டெட் ஸ்தாபனத்தின் அச்சக மனே ஜராகவும் நான் இரட்டைப்பதவி வகித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் பேராசிரியர் கே. கணபதிப் பிள்ளை "சுதந்திரன்" அச்சகத்துக்கு ந் தார். அவர் அப்போது இலங்கைப் பல் கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் 5 லைவராக விளங்கினர்,
தமிழ்ப் பல்கலைக்கழகத்திலே தமிழ் மன் றம் அமைத்து, மாணவர்களைக் கொண்டு தமிழ் நாடகங்கள் அரங்கேற்றுவதை ஒரு தமிழ்ப் பணியாக அவர் மேற்கொண்டு வந்தார். அப்படி அவர் அரங்கேற்றிய நாடகங்களில் ஒன்று ‘சங்கிலி நாடகமா கும். இந்நாடகம், யாழ்ப்பாணத்தை அர சாண்ட சங்கிலி என்ற தமிழ் மன்னனின் வீர வரலாற்றை எடுத்துக்கூறும் நாடக மாக விளங்கியது.
இந்த நாடகம் மேடையேற்றப்பட்ட போதெல்லாம் மிகுந்த பாராட்டைப்

5 முன் . . .
பெற்று வந்தது. அதனல், அந்நாட்கத் தைப் புத்தக வடிவில் வெளியிட பேராசி ரியர் கணபதிப்பிள்ளை விருப்பங் கொண் டார். அதனலேயே அவர் என்னைத் தேடி வந்தார்.
எத்தனையோ அச்சகங்கள் நாட்டில் இருக்க அவர் சுதந்திரன் அச்சகத்துக்கு என்னைத் தேடிக்கொண்டு வந்ததற்குக் காரணங் கள் இரண்டு இருந்தன.
ஒன்று, அப்போது சுதந்திரன் தமிழ் மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கு. அது ஏற்படுத்தி வந்த அமோகமான அரசியல் விழிப்பு.
மற்றதும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை
அவர்களுக்கு என்ணுேடு இருந்த பழக்கமும் நட்பும், அன்பும் என்றுசொல்லலாம்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை யாழ்ப் பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆனல், அவர்புகுந்த இடம் மட்டக்களப்பு. நான் கூட்டுறவுத் திணைக்களத்தில் வட்டா ரப் பரிசோதகராகப் பணியாற்றிய காலத் தி: , அப்போது விரிவுரையாளராக விளங் கிய டாக்டர் கணபதிப்பிள்ளை அடிக்கடி மட்டக்களப்புக்குத் தமது மனைவி வீட்டுக்கு வருவார். மனைவியாருடைய வீடு மட்டக் களப்பு வாவியின் கிழக்குக் கரையோர மாக "லேடி மனிங் ட்ரைவ்" என்ற அழ கான வீதியில் அமைந்திருந்தது.
மாலை வேளைகளில் டாக்டர் கணபதிப் பிள்ளை லேடி மனிங் ட்ரைவ் வீதியில் ஒரு *வாக்" போடுவார். அப்போதே எனக்கு கொஞ்சம் இலக்கியம், இலக்கணம், கவிதை, எழுத்து என்ற ‘பைத்தியம்’ பிடிக்க ஆரம்பித்திருந்ததால், நானே டாக்டர் கணபதிப்பிள்ளை அவர்களைத் தெரிந்து கொண்டு, அவரிடம் சென்று, பேசிப் பழகி நட்பை வளர்த்துக் கொண் டேன். அவர் “வாக்கிங்" போகும் போது கூடவே சென்று சங்கம், இலக்கியம், புல

Page 77
வர்கள், கவிஞர்கள் என்றெல்லாம் "அலட் டிக்" கொள்வது அவ்வப்போது நிகழும் சம்பவமாக இருந்தது.
இந்தப் பரிச்சயத்தையும் வைத்துக் கொண்டுதான் பேராசிரியர் கணபதிப் பிள்ளை அவர்கள் சுதந்திரன் அச்சகத்துக்கு உரிமையோடு வந்திருக்கவேண்டும்.
அன்று வரும்போதே அவர் தம்மோடு திரு. வித்தியானந்தனையும் அழைத்து வந் தார். சங்கிலி நாடகத்தை அச்சிடும் பணியை என்னிடம் ஒப்படைத்து, அந்நூலைச் சுதந் திரன் அச்சகத்தில் அச்சிட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.
அத்தோடு, 'அச்சுப்படிகளை (புரூவ்) நான் வந்து பார்த்துச் சரி சொல்வேன் அல்லது வித்தியானந்தன் வருவார்" என்று சொல்லிவிட்டுப்போனுர்.
அன்றுதான் முதன் முதலாக நானும் இன்றைய பேராசிரியர் வித்தியானந்தனும் அறிமுகமானுேம்.
அந்த நூல் அச்சாகும் கட்டங்களில் எல்லாம் திரு. வித்தியானந்தன் அடிக்கடி சுதந்திரனுக்கு வந்து நாடகங்களின் அச்சுப் பிரதிகளை சரிபார்ப்பதிலும், தமது குரு நாதரின் புத்தகங்கள் உருவாவதைப் பார்த்துப் பரவசமடைவதிலும் ஈடுபட் டார். எனக்கும் அவருக்கும் ஏற்பட்ட பழக்கமும் வளர்ச்சியுற்றது.
அதன் பின்னர் சுதந் தி ர ன் பத் தாவது ஆண்டு மலரில் 'தாயின் மேல் ஆண்ண' என்ற சிறப்புக் கட்டுரை யொன் றையும் இவர் எழுதினரி.
உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய ஓர் இளைஞர் இவர் என்ற எண்ணம் அப் போதே என்மனதில் ஏற்பட்டது. அத் தோடு திரு. வித்தியானந்தனிடம் எனக்கு ஒருவித அபிமானமும் உண்டாயிற்று. அபிமானம் ஏற்படுவதற்கு, ஓர் அபிமான காரணமும் இருந்தது.
இலங்கைப் பழ்கலைக் கழகம், இலங்
கைப் பல்கலைக்கழகக் கல்லூரியாக இயங்கிய
காலத்தில், ரெவரண்ட் கிங்ஸ்பெரி பாதிரி
14

5 -
யார் என்பவர் தமிழ்த் துறைக்குப் பொறு ப்பாளராக இருந்தார். ஏதோ, பெயரைப் பார்த்து வெள்ளைக்காரர் என்று எண்ணி விடக்கூடாது. அசல் யாழ்ப்பாணத்துக்காரர் தான் அவர். துறைதோயக் கற்றுத் தமிழ் நிறைவு பெற்ற பேரறிஞராக விளங்கியவர்
அவர்.
இலங்கைப் பல்கலைக் கழகக் கல்லூரி முழுமை பெற்ற பல்கலைக்கழகமாக ஆகிய போது, முதலாவது தமிழ்த் துறைப் பேரா சிரியராகப் பதவி ஏற்றவர் பூரீமத் விபுலா நந்த அடிகளாராவர். இலங்கையில் பதவி ஏற்பதற்கு முன்னர் அவர் அண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் தமித்துறைப் பேராசிரி யராக விளங்கினர்.
பழங்காலத்தில் குரு குலக் கல்விமுறை இருந்தபோது ஆஸ்ரமங்களில் முனிவர்களி டம் சீடர்கள் பயின்றபோது, பல மாணுக் கர்கள் வித்தைகளைக் கற்ருலும், குருவுக்கு தலைமாணுக்கன் என்று ஒருவர் விளங்கு வார். அவரே பின்னர் குரு ஸ்தானத்தை அடைவது மரபு.
இந்தப் பாரம்பரிய மரபின்படி சுவாமி விபுலாநந்தருக்கு அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் தலைமாணுக்கராக விளங்கியவர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை.
சுவாமி விபுலாநந்தருக்குப் பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பதவி ஏற்கும் வாய்ப்பு கணபதிப்பிள்ளை அவர்களுக்கே கிடைத்தது.
பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் தலை மாணுக்கர் என்ற உயர்ந்த ஸ்தானத்தை முப்பது வருடங்களுககு முன்பே ஸ்தாபித்துக் கொண்டவர் திரு. வித்தியானந்தன் என் பதை அன்றே நான் காணக் கூடியதாக இருந்தது.
சுவாமி விபுலாநந்தரிடம் எனக்கு உள்ள ஈடுபாடும், பக்தியும் எப்படிப் பட்டவை என்பது இங்கு சொல்லித் தெரியவேண்டிய ஒரு விஷயமல்ல.
எனவே தான்

Page 78
பேராசிரியர் விபுலாநந்தரின் தலைமா ஞக்கர் பேராசிரியர் கணபதிப்பிள்ளை
பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் தலை மாணுக்கர் திரு. வித்தியானந்தன் என்ற நிலை ஏற்பட்டபோது, திரு. வித்தியானந் தன்பால் எனக்கு ஒர் அபிமானம் ஏற்பட் டதில் அதிசயம் எதுவும் இல்லை அல்லவா? மேலும் வித்தியானந்தன் அவர்கள் விபுலா னந்தரிடம் நான்கு ஆண்டு கற்றவர். ஈராண்டு கலைமாணிப்பட்ட வகுப்பிலும், ஈராண்டு முதுகலை மாணிப்பட்ட வகுப்பி லும், விபுலானந்த அடிகளாராலேயே துணை விரிவுரையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட் டவர். வித்தியானந்தனிடம் விபுலாநந் தரின் கல்விச் சிறப்பின் பிரதிபலிப்பைக் காணலானேன்.
ஒருவரிடம் வெறுமனே உணர்ச்சி மய மான அபிமானம் ஏற்படுவதில் அர்த்தம் இல்லை. அபிமானம் ஏற்படுவதற்கு அவரி டம் 'சரக்கும்" இருக்கவேண்டும். அப்படி யான 'சரக்கு" திரு. வித்தியானந்தனிடம் அன்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.
இல்லாவிட்டால் ஒரு பல்கலைக்கழகத் தின் தமிழ்த் துறைத் தலைவராக விளங் கிய ஒருவர், இன்று முழுமையான இன் ஞெரு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் என்ற மகோந்நத நிலையை அடைந்திருக்க முடியுமா?
O O Ο
திரு. வித்தியானந்தன் மட்டும் விரும் பியிருந்தால் பல வருடங்களுக்கு முன்னரே அவர் ஒர் எம், பி ஆகக் கூட வந்திருக்க முடியும். சில உள்இரகசியங்கள் தெரிந்த மையினல் நான் இதை உறுதியாகக் கூறு கிறேன்.
தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலங் களில் வருடந்தவருமல் மாநாடுகள் நடத் தப்பட்டு வந்தன. தமிழரசுக் கட்சி மாநாடு கள் என்ருல், அது மூன்று தினங்களுக்கு குறையாமல் நடைபெறும். வெள்ளி மாலை யில் கட்சிக் கொடிஏற்றி ஆரம்பமாகும் மாநாடு சனி ஞாயிறு தொடர்ந்து நடை பெறும்.
அந்த மாநாட்டில் பல அரங்குகள் இடம்பெறும், அரசியல் அரங்குகள், வாலி

6 -
பர் அரங்கு, மாதர் அரங்கு, கலை கலாச் சார அரங்கு முதலியவை.
ஒரு சமயம் திருகோணமலையில் தழமிர சுக் கட்சி மாநாடு ஏற்பாடு செய்யப்பட் டது. இது 1956 ւն ஆ ண் டா க இருக்கலாம் என்று நம் பு கிறேன் . அந்த மாநாட்டின் கலை கலாச்சார அரங் கின் தலைவராக கலாநிதி. வித்தியானந்தன் விளங்கிஞர்.
தமிழைப் பற்றியும், தமிழ் மக்களின் பழம் பெரும் வரலாறு. பற்றியும், தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றியும் கலாநிதி வித்தியானந்தன் ஆற்றிய உணர்ச்சிமய மான உரை அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக இளைஞர்கள் அவரைச் சுற்றி வட்டமிட ஆரம்பித்தார்கள்.
இதைத் தொடர்ந்து திரு. வித்தியா னந்தனை தமிழ் அரசுக் கட்சிக்குள் கொண் டுவந்துவிடப் பெரும் முயற்சிகள் மேற்
கொள்ளப்பட்டன.
பல்கலைக் கழகத் தரத்தில் உள்ள ஒரு வர் தமிழரசுக் கட்சிக்குள் வந்தால் கட்சி யின் உத்வேகம் அதிகரிக்கும் என்று எண் ணப்பட்டது. தேர்தல்களில் வட க் கி ல் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பா ளர்கள் கிடைக்காமல் கட்சியில் பெரும் தட்டுப்பாடு நில்விய காலம் அது. எனவே தான், வித்தியானந்தன் போன்ற துடிப் பான, படித்த இளைஞர் கிடைத்தால் நன் ருயிருக்கும் என்று அவருக்குத் தூண்டில் போடப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் தான் திரு. வி என். நவரத்தின தாம் ஒரளவு உறவுகொண்டி ருந்த தமிழ் காங்கிரஸை விட்டு, தமிரசுக் கட்சியில் வந்துசேர்ந்து, சாவகச்சேரிக்கு நியமனம் பெற்ருர்.
ஆனல் எவ்வளவு விரும்பி அழைத்தும் கலாநிதி. வித்தியானந்தன் அரசியலில் பிர வேசிக்க அன்று விரும்பவில்லை. அப்படி அவர் முடிவு செய்திருந்தால் நிச்சயம் ஒர் எம்- பி. ஆகி, நாடாளுமன்றம் சென் றிருப்பார். இதில் சந்தேகம் இல்லை.

Page 79
தமிழ் மக்களுடைய இன்றைய அரசியல் நிலையைப் பார்க்கும்போது அவர் அன்று செய்த முடிவு மிகவும் புத்திசாலித் தன மானது என்றுதான் தோன்றுகிறது.
ஓர் எம்.பி. பதவி எம்மாத்திரம்? ஒரு பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பதவி எத்தகையது?
பின்னதன் உயர்வு மகத்தானது அல் லவா? அப்படியான ஓர் உயர்வை இன்று பெற்று விட்டார் பேராசிரியர் வித்தியா
-னந்தன்
O O O பேராசிரியர் வித்தியானந்தனின் உயர் *வுக்குக் காரணம் அவரிடம் நிறைந்திருக்
கும் அறிவு மட்டும் அல்ல.
அவரிடம் நிறைந்திருக்கும் பண்பும், பணிவும், அடக்கமும், ஆற்றலும், எடுத்த காரியத்தைத் தொடுத்து முடிக்கும் திற மையும் காரணங்களாகும்.
எப்படியான ஒரு நெருக்கடியான சூழ் நிலையிலும் மலையைப் போல நிலை குலையாத ஒரு திண்மை அவரிடம் காணப்படும் என்று அவரிடம் நெருங்கிப் பழகிய மாண வர் பலர் என்னிடம் கூறியிருக்கிருர்கள். அப்படி இல்லையென்ருல், கொதிக்கும் இரத் தத்தைக் கொண்ட இன்றைய பல்கலைக் கழக மாணவர் சமுதாயத்தில் காணப்படும் கொந்தளிப்புகளுக்கு முகம் கொடுத்து எப்படித்தான் சமாளித்து நிற்க முடியும்?
பேராசிரியர் வித்தியா ன ந் தனி டம் எனக்கு மதிப்பு ஏற்படுவதற்கு அவரிடம் காணப்படும் கலை உள்ளமும் ஒரு காலாக இருந்தது.
பேராசிரியர் விபுலாநந்தர் நாடகக் கலைக்கான இலக்கணமான 'மதங்க சூளா மணி" என்ற நூலினை எழுதினர். இது ஒரு புதிய முயற்சியாகும்.
அவர் மாணுக்கர் பேராசிரியர் கணப திப்பிள்ளை யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் பல நாடகங்களை எழுதி மேடையேற்றி,

7 -
நாடக வளர்ச்சியில் ஒரு திருப்பத்தை எற் படுத்தினர். இதுவும் ஒரு புதிய முயற்சி
யாகும்.
அவர் மாணக்கர் வித்தியானந்தன் மறைந்து போகவிருந்த நாட்டுக் கூத்துக் கலையை வட்டக் களரியிலிருந்து மேல் மட் டக்களரிக்கு கொண்டு வந்தார். இதுவும் ஒரு புதிய சாதனையாகும்.
மட்டக்களப்பின் கிராமப்புறங்களிலே குற்றுயிரும் குறை உயிருமாக அரங்கேறிக் கொண்டிருந்த நாட்டுக்கூத்தை, பேராசிரி யர் வித்தியானந்தன் கொழும்பு பல்கலைக் கழக மண்டபத்திலும், ருேயல் கல்லூரி மண்டபத்திலும், யாழ்ப்பாணத்திலும், மட் டக்களப்பிலும், வவுனியாவிலும், மன்னுரி லும் அரங்கேற வைத்து, அதாவது மேல் மட்டக் களரிக்குக் கொண்டு வந்து, நாகரி கொடுமுடியில் இருந்த கறுவாக் காட்டுத் தமிழரையும், கனடிச் சிங்கள சகோதரர்க ளையும் கூட, நாட்டுக் கூத்தின் கலைத்து வத்தைக் கண்டு களிக்க வைத்தார். ரஸிக்க வைத்தார்!
தேத்தாத் தீவின் சலங்கை நாதமும், வந் தாறுமுலையின் மத்தள ஒலியும் கொழும்பு மாநகரைக் களைகட்டும்படி செய்தன,
இதிலும் எனக்கொரு அபிமானம் உண்டு. பல்கலைக்கழகத்தில் புகுந்த இளவல் களை நாட்டுக் கூத்தை ரஸிக்கும் படியாக வும், பயிலும்படியாகவும் அந்தக் கலேயின் நுணுக்கங்களை எல்லாம் அள்ளி வீசிய மேதை திரு. செல்லையா அண்ணுவியார் ஆவார்.
மட்டக்களப்பு கிராமம் ஒன்றிலே எனக்கு ஒரு வீடு இருக்கிறது. பரந்த தென் னந்தோட்டத்தின் மத்தியில் அந்த வீடு அமைத்திருந்திருக்கிறது. அந்தத் தோட்டத் தின் தென்கிழக்கு மூலையின் வேலி ஒரத்தில் தான் செல்லையா அண்ணுவியாரின் வீடு இருக்கிறது. விடுமுறைக்கு அங்கு செல்லும் போதெல்லாம் செல்லையா அண்ணுவியாரின் தாளக்கட்டு அமைந்த மத்தள நாதத்தின் லாகிரியில் நான் அடிக்கடி மயங்கியதுண்டு.

Page 80
அதே மற்தளத்தைப் பேராசிரியர் வித்தியானந்தன் கொழும்பிலும், கண்டியி லும், யாழ்ப்பாணத்திலும், மங்டக்களப் பிலும், வவனியாவிலும், மன்ஞரிலும் முழங் கச் செய்தார் என்ருல் எனக்குக் கொஞ்சம் பெருமை பீறிடாதா என்ன?
இந்த வகையில், அதாவது, நாட்டுக் கூத்துக்கு ஏற்றம் காண்பதில் பேராசிரியர் வித்தியானந்தன் ஆற்றிய பணி, வேறு யாரும் இதுவரை ஆற்றுத பெரும் பணியா கும். அதனல் அவருடைய கல் உள்ளத்தை நான் பெரிதும் மதிக்கிறேன்.
சமீபத்தில் பேராசிரியர் வித்தியானந்த னும் நானும் ஒரு விழாவில் கொழும்பில் சந்தித்தோம். அந்த சமயம் நான் கூறியது இதுதான்:-
**இசையையும் நடனத்தையும் இை கொடுத்தனர் தமிழ்மக்கள். நடனம் இ எல்லாத் தெய்வங்களும் பல்வகைக் கூத்துச் இசை உருவாகக் கண்டனர் அடியார்கள். மக்களின் அழியாச் செல்வங்கள். கலைக கணிக்கப்படுகின்றது. ஒரு நாட்டு மக்களின் ( கொண்டு மதிப்பிடலாம். மக்களுக்குத் தெ உரத்திற்கு மெருகு ஏறுகிறது. தொழில் ெ தருகின்றது. தொழில் ஊக்கத்தை அளிக்கி
- கலைஞர் பாராட்டுவிழாவில்

-س- B
"நாட்டுக் கூத்தைப் பாதுகாப்பதற்கு அப்போது உங்களுக்கு மேடைதான் உதவி யது. இப்போது டெலிவிஷன் வந்துவிட்டது. அதை நீங்கள் பயன்படுத்தி நாட்டுக் கூத்துக் கலேயை நிரந்தரமாகப் பதிவு செய்து ரூபவாஹினி மூலம் பரப்ப வேண்டும்" - என்பதுதான்.
இப்படி நான் கூறியதை பேராசிரியர் வித்தியானந்தன் பகிரங்கமாகவே ஏற்றுக் Gé5rrarian errriro.
அறுபது ஆண்டைப் பூர்த்தி செய்யும் பேராசிரியர் - எனது இந்த வேண்டுகோளை இந்த ஆண்டிலேயே நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடு அவரை வாழ்த்தி இக் கட்டுரையை முடிக்கிறேன்.
றவளுேடு சேர்த்து அவற்றிற்குப் சிங்ருமை றைவனேடு இணைத்துப் பேசப்படுகின்றது. களை ஆடியதாக நூல்கள் கூறும். இறைவனை இத்தகைய சிறப்பு வாய்ந்த கலைகள் பொது ர் சிறந்த நாடு, பண்பாடுள்ள நாடாகக் பெருமையை அவர்கள் கலைச் செல்வங்களைக் ாழிலால் உரம் ஏறுகின்றது; கலையால் அந்த ல்வத்தைத் தருகின்றது; கலே இன்பத்தைத் ன்றது; கலை அமைதியை அளிக்கின்றது. அளவெட்டியில் 1963-ம் ஆண்டு ஜனவரியிற். பேசியதிலிருந்து,

Page 81
99 س----
ஈழத்துத் தமிழ் நாடக பேராசிரியரின் பங்களிட்
f? . மெளனகுரு, பல்கலைக்கழகம், யாழی
பேராசிரியரின் பணி பன்முகப்பட் டது. இலக்கியம், ஆராய்ச்சி, சமயம், சமூகம், நாடகம் என அது விரியும், இவற் றுள் ஈழத்து நாடகத்துறை அவரால் பெருமை பெற்றது. அவருக்கு பெருமை யும் தந்தது. பேராசிரியரின் வாழ்க்கை யின் பெரும்பாலான பகுதி நாடகத் துறையுடன் சம்பந்தப்பட்டிருந்தது என் பது இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்குத் தெரியாத ஒரு சங்கதி. 1946 ம் ஆண்டு தொடக்கம் 25 வருடகாலங்கள் ஈழத்து தழிழ் நாடக உலகின் மையமாக அவர் இருந்தார் என்பது உண்மை. வெறும் புகழ்ச்சியன்று.
இளம் வயதில் நாடகத்தில் ஈடுபாடு மிக்கவராயிருந்த பேராசிரியரின் ஆர்வம், இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் களாயிருந்த விபுலானந்த அடிகள், பிரான்சிஸ் கிங்ஸ்பெரி, க. கணபதிப்பிள்ளை ஆகியோரால் மேலும் வளர்க்கப்பட்டது. இம்மூவருமே நாடக ஈடுபாடுடையவர்கள் என்பதும் பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஈழத்தமிழ் நாடக உலகின் இயற்ற பண்பு நாடகம் தோன்ற திருப்பு முனையாக நின்றவர் என்பதும் மனங்கொள்ளத் தக்கது.
பேராசிரியர் வித்தியானந்தனின் நாட கமுயற்சி அவரது ஆசானன பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களை இயக்கு வதுடன் ஆரம்பமானது. பேராசிரியர் வித்தியானந்தன் தான் விரிவுரையாளராக இருந்தகாலத்தில் 1948 இல் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் பொருளோ பொருள் என்ற நாடகத்தின் தயாரிப்பாளராக அமைந்து பல்கலைக்கழக மாணுக்கரையும் நாடகத்தில் ஈடுபடுத்திஞர். இராஜா இரா ணிகதைகளும், கற்பனைக் கதைகளும், செந் தமிழ்ப் பேச்சும் உலவிவந்த ஈழத்துத் தமிழ் நாடக மேடையில் யாழ்ப்பாணத்துச் சாதாரண மனிதர்களையும், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளையும் பேச்சுமொழி யையும் உல்வவிட்டவர் பேராசிரியர் கன
15

உலகுக்குப் L
}ப்பாணம்.
பதிப்பிள்ளை. அவரது நாடகங்களை இயக் கிய காரணத்தால் ஈழத்தமிழ் நாடக உலகில் ஒரு புதுவழி பிறக்க திருப்பு முனை யாக அமைந்தார் பேராசிரியர் வித்தியா னந்தன். அத்தேர்டு பல்கலைக்கழக மாணுக் கரைக் கொண்டு நடப்பித்தமையினுல் படித்தோர் மத்தியில் நாடகத்திற்கு ஒர் உயர்ந்த இடத்தையும் பெற்றுத் தந்தார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் பொரு
ளோபொருள் (1948) முருகன் திருகுதாளம் (1950) சங்கிலி (1951) உடையார் மிடுக்கு (1953) தவருண எண்ணம் (1954) சுந்தரம் எங்கே (1955) துரோகிகள் (1956) ஆகிய நாடகங்களை மேடையிட்டு மாணுக்கரை இயக்கியும், அந் நாடகங்களை மாணுக்க ரோடு சென்று கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மேடை யிட்டும் நாடகப் பணியைத் தொடங்கினர் பேராசிரியர் வித்தியானந்தனவர்கள்.
மறைந்த பேராசிரியர் கைலாசபதி, பேரா சிரியர் சிவத்தம்பி, இன்றைய தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன், தமிழர் கூட்டணித் தலைவர் அ. அமிர்தலிங்கம் போன்ற இன்றைய பிரபலஸ்தர்களிற் பலர் பல் கலைக்கழக மாணவப் பருவத்தில் பேராசி ரியரின் நாடகங்களில் நடித்தவர்களாவர்.
1952 இல் இலங்கை அரசின் கீழியங் கிய கலைக்கழகத்தின் தமிழ் நாடகக் குழுவின் தலைவராக இவர் நியமிக்கப் பட்ட பின்னர் இவரது நாடகப்பணி மேலும் செழுமையுற்றது. சிங்களமக்கள் தமது தேசியக் கலைகளை வளர்த்து, தமக் கென ஒரு தனித்துவம் மிக்க கலாசா ரத்தினை உருவாக்க முயற்சித்த இக்கால கட்டத்தில் தமிழர் மத்தியிலிருந்த தேசி யக் கலைகளையும் வளர்த்து ஒரு தனித்து வம் மிக்க ஈழத்தமிழர் கலாசாரத்தைத் தோற்றுவிக்கக் கலைக்கழகம் மூலம் முயற் சித்தவர் பேராசிரியர் வித்தியானந்தன வர்கள். சிறப்பாக ஈழத்தமிழரின் பாரம் பரிய நாடகமான நாட்டுக்கூத்தினை வளர்ப் பதில் - அவர் தீவிர பணியாற்றினர். அதனுல் ஈழத்தமிழருக்கு “ அவர்களின்

Page 82
பண்பாட்டு வேர்களை உணர்த்திய பெரு மையையும் தேடிக்கொண்டார்.
1952 இல் இருந்து அவரது நாடகப் பணிகளைப் பின்வருமாறு வகுக்கலாம்.
l.
0.
ll.
l2.
13.
நவீன நாடகங்களை இயக்கி மேடையிட்டமை.
கிராமிய நாடகங்கள் வளர ஊக் கமளித்தமை.
தாளக்கட்டுக்களை ஒலிப்பதிவு செய்து பேணியதுடன் பிற நாட் டாருக்கு அறிமுகம் செய்தமை. நாட்டுக்கூத்து நூல்களைப் பதிப் பித்தமை
கிராமியக் கூத்துக்களை நகரத்தா ருக்கு அறிமுகம் செய்தமை
கிராமியக் கலைஞர்களைத் தேசிய மட்டத்தில் அறிமுகம் செய்தமை
ஈழத்தில் வழக்கிலிருந்த நவீன நாட கம் வளர உதவியமை
நாடகப் போட்டிகளை மன்றங்கள் பாடசாலைகள் மட்டத்தில் நடத்தி இறுதியில் விழாவில் மேடையிட்
6)
நாடக எழுத்துப்போட்டி நடத்தி பரிசு பெற்ற நூல்களை அச்சிட்
GOD
நாடகக் கருத்தரங்குகள் நடத்தி
g))
அண்ணுவிமார் மாநாடுகள் நடத் தியமை
கூத்துக்கள் பற்றி ஆராய்ச்சிக்
கட்டுரைகளை எழுதியமை
நாட்டுக்கூத்துகளைப் பல்கலைக்கழக மாணுக்கரைக் கொண்டு பழக்கி, அரங்கேற்றி அதனை ஈழம் வாழ் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் பரப்பியமை
தனி ஒரு மனிதனுக இருந்து 1952ம் ஆண்டு தொடக்கம் இத்தனை பணிகளையும் நாடகத்துறைக்கு இவர் ஆற்றினர் என்

O -
பதை நினைக்க எமக்கு மலைப்பு ஏற்படு கின்றது. தனது அன்பாலும் திறந்த இத யத்தாலும், எப்போதும் உதவும் பண் பாலும் அவர் பெற்றுக்கொண்ட நெருக்க மான மாணுக்கரும், நண்பர்களும் இப் பணிக்கு அவருக்கு உற்றதுணையாக அமைந் தார்கள். அவரை மையமாகக் கொண்டு இக்காலகட்டத்தில் ஒரு நாடகக் குடும்பமே ஈழம் முழுவதும் உருவாகியது எனலாம்.
கலைக்கழகத் தமிழ் நாடகக் குழு உறுப்பினர் என்ற வகையில் ஈழத்துத் தமிழ் நாடகக்காரர்களுடனும், சாதா ரணமக்களுடனும் s9||6||ri தொடர்பு கொண்ட அதே வேளையில் பல்கலைக்கழக விரிவுரையாளர், பேராசிரியர் என்ற வகையில் பல்கலைக்கழக மாணுக்கருடனும் தொடர்பு கொண்டு ஈழத்து நாடக உலகில் ஈடுபாடு`கொண்ட் படித்தவ யும், பாமரனையும் இணைக்கும் இணைச் சங்கிலியாகப் பேராசிரியர் விளங்கினர்.
மேற்குறிப்பிட்ட அவரது நாடகப் பணிகளுள் ஈழத்துத் தமிழருக்குரிய நாடக மரபான கூத்துமரபினைக் கண்டு பிடித் ததும், அதனைப் பேணியதும், அதனைப் பிரபல்யப் படுத்தியதும், பல்கலைக்கழக மாணுக்கரைக் கொண்டு அதனைச் செம் மைப்படுத்தி நகரத் தமிழருக்கும், ஏனைய இனத்தவர்க்கும் அறிமுகப் படுத்தியது மான அவரது பணி ஈழத்து நாடக வரலாற்றில் மிக முக்கியமான பணியா கும். ஓர் இனத்தின் தனித்துவம் அதனு டைய கலைகளிலும் தெரிய வேண்டும். எனவே ஈழத்துத் தமிழ் இனத்திற்கு ஒரு தனித்துவம் பொருந்திய நாடக மரபு தேவை என்பதை அன்றே தீர்க்க தரிசனத்துடன் யோசித்து பேராசிரியர் செயற்பட்டாரோ என்று எ ன் ண த் தோன்றுகிறது.
ஈழத்தில் தமிழர் வாழ் பகுதிகளி லெல்லாம் கூத்துமரபுகள் இருந்தாலும் அது உயிர்த்துடிப்போடு வாழும் இடம் மட்டக்களப்பு எனக் கண்டு, தமது கூத்துப் பணியினை அங்கு தான் அவர் தொடங்கினர். அழியும் நிலையில் அங்கு காணப்பட்ட மேளக்கூத்துத் தொடக்கம் செழிப்பு நிலையில் இருந்த நாட்டுக்கூத்து வரை மட்டக்களப்புப் பிரதேசத்தில் ஆடப் !ட்டசிறப்பான கூத்துக்களை மேலும் மேடை

Page 83
- 1
யிடக் கலைக்கழகம், பிரதேச கலாமன்றங்கள் வாயிலாக ஊக்கமளித்ததுடன் அவற்றை . நாடக விழாக்களில் கொழும்பில் மேடை யிட்டு தமிழ் மக்களுக்கும், சிங்களமக்க ளுக்கும் வெளிதாடுகளிலிருந்து அங்கு கூடிய பிறமொழி பேசுபவர்கட்கும் அறிமு கப் படுத்தினர். மட்டக்களப்புக் கூத்துக் களை அறிமுகப்படுத்தியது போல யாழ்ப் பாணத்து அண்ணுவிமரபு நாடகங்கள், முல்லைத்தீவுக் கோவலன் கூத்து, சிலாபக் கூத்து, மன்னர்க்கூத்து, மலையகக் காமன் கூத்து என்பனவும் இவரால் வெளியுலகுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
மட்டக்களப்புக் கூத்துக்களின் தாளக்கட் டுகள் பிரதானமானவை; அண்ணுவிமாரின் வாய்மொழியாகப் பேணப்படுபவை வாய் மொழியாகவே அடுத்த தலைமுறையினர்க்கு கையளிக்கப்படுபவை. இத்தாளக்கட்டுக்களை ஒலிப்பதிவு செய்து பேணியதுடன் அமை யாது இங்கிலாந்து, அமெரிக்கா, வேல்ஸ் முதலாம் நாடுகளின் நாடகத்துறை ஆர் வலர்களுக்கும் வழங்கி நம் கூத்தின் பெரு மையைப் பிறருக்கும் அன்று அறிவித்தார் பேராசிரியர்.
ஏட்டு வடிவில் இருந்த மட்டக்களப்பு நாட்டுக்கூத்தான அலங்கார ரூபன் நாட கம் (1962) மன்ஞர்க்கூத்துக்களான என்றிக் எம்பிரதோர் நாடகம் (1964) மூவிராசாக் கள் நாடகம் (1966) ஞானசவுந்தரி நாடகம் (1967) என்பனவற்றை பிழை நீக்கி அச் சிட்ட்ார். இதைத்தொடர்ந்து ஈழத்தில் ஏட்டுவடிவிலிருந்த நாட்டுக்கூத்து நூல் களை அச்சிடும் முயற்சியிற் பலரீடுபட்ட னர். இவர்கட்கெல்லாம் பேராசிரியர் வழி காட்டியானுர்,
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலையரசு சொர்ணலிங்கம், நடிகமணி. வி. வி. வைர முத்து, கிருஸ்ணுழிவார், மட்டக்களப்பைச் சேர்ந்த வந்தாறுமூலை 5. Gaf6) aunt அண்ணுவியார் கழுதாவளை சி. தங்கராசா அனணுவியார் முல்லைத்தீவைச் சேர்ந்த வே. சுப்பிரமணியம் அண்ணுவியார் மன் ஞர் நானுட்டானைச் சேர்ந்த பெஞ்சமின் செல்வம் போன்ற கலைஞர்கள் தேசிய மட்டத்தில் இவரால் அறிமுகப்படுத்தப் பட்ட கலைஞர்கள் ஆவர்.

தமிழ் நாடக நூல்களை எழுதுவோ ருக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன் 1958, 1959, 1960 ம் ஆண்டுகளில் A5írl-és எழுத்தப் போட்டியினைக் கலைக்கழகம் நடத்தியது. அதில் வெற்றி பெற்ருேருக் கும் பரிசு வழங்கப்பட்டதுடன் அந்நூல் கள் அச்சிடவும் பட்டன. இதனை முன் னின்று நடத்தியவர் பேராசிரியரே" சொக்கன், எஸ். பொ. செம்பியன் செல் வன், த. சண்முகசுந்தரம், 5 GGBg Fu பிள்ளை, முத்துசிவஞானம், முல்லைமணி, தேவன், ஏ. ரி. பொன்னுத்துரை, திமிலைத் துமிலன் போன்ற நாடக எழுத்தாளர் பலர் இப்போட்டியிற் கலந்து கொண்ட னர். பரிசும் பெற்றனர். பேராசிரியர் ஏற்படுத்திய நாடக விழா நாடகங்களில் நா. சுந்தரலிங்கம், அ. தாசீசியஸ், சி. மெளனகுரு, மெளசால் அமீர், மாத்த ளைக் கார்த்திகேசு, கே. ஏ. ஜவாஹர், கலைச்செல்வன், லத்தீப், ம. சண்முகலிங் கம், அ. இரகுநாதன், பிரான்சிஸ் ஜெனம் போன்ற நாடக உலகின் பிரபலஸ்தர்கள் பலர் நடிகர்களாக, இயக்குனர்களாகப் பங்கு கொண்டனர். இவ்வகையில் ஒரு காலகட்டத்தில் பேராசிரியரை மையமாகக் கொண்டே நாடக உலகு இயங்கியது எனலாம்.
1964, 1966, 1969, 1970 ஆம் ஆண்டு களில் மன்னுரிலும் மட்டக்களப்பிலும் தொடர்ச்சியாக பிரதேச கலா மன்றங் களின் ஆதரவில் அண்ணுவிமார் மாநாடு கள் நடாத்தப்பட்டன. இதனை இயக்கிய வர் பேராசிரியர் வித்தியானந்தனேயா வார். பிரதேசக் கச்சேரிகளைச் சேர்ந்த நிர்வாகஸ்தர்களின் உதவியுடன் அவ்வப் பகுதி அண்ணுவிமார்களில் சிறந்தோரைத் தெரிந்தெடுத்து அவர்களை ஊர்வலமாக அ  ைழ த் து வந்து, அரச அதிகாரிகளைக் கொண்டு வரவேற்கப்பண்ணி அண்ணுவி மாருக்குப் பொன்னுடை போர்ததிக் கெளரவித்தார் பேராசிரியர், இம்மாதாடு கள் அண்ணுவிமாரின் கெளரவத்தை மக் கள் மத்தியில் உயர்த்தியதுடன் அண்ணு விமாரை மேலும் நாடகத்துறையில் ஈடு பாடு கொள்ளவும் செய்தன. இச்செயல் களுக்கு அன்று பேராசிரியருக்கு உறுதுணை யாக நின்றவர் இப்பகுதிகளில் அரசாங்க அதிபராக அன்று இருந்த தேவநேசன் நேசையா ஆவர் என்பது குநிப்பிடத்தக்கது.

Page 84
- 1
இலங்கை கலாசாரப் பேரவையின் நாடகக்குழுத் தலைவராக இருந்தபோது 1968, 1971, 1972 ஆம் ஆண்டுகளில் முறையே மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், ஹட்டன் ஆகியஇடங்களில் நாடகனழுத்து நாடகத்தயாரிப்பு, - மேடைஒழுங்கு, ஒப் பனை, தழுவலாக்கம், பார்வையாளர் பிரச்சனை, பயில்முறை (அமெச்சூர்) நாடக மன்றங்களின் பிரச்சனை என்பன சம்பந்த மாக பேராசிரியர் நடத்திய நாடகக் கருத் தரங்குகள் மிக முக்கியம் வாய்ந்தவை. காத்திரமான நாடகங்களை மேடையேற்று வதில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த நாடக நெறியாளர், எழுத்தாளர், நடிகர் கள் பலர் இக் கருத்தரங்குகளிற் பங்கு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் காத்திரமான தமிழ் நாடகம் வளரவும் இக் கருத்தரங்குகள் உதவின.
பல்கலைக்கழகத்திலே Gt Ignisiurfait நாடகப்பணி தனித்துவம் மிக் க தாக அமைந்தது. பேராசிரியர் கணபதிப்பிள்ளை யின் நாடகங்களை ஆரம்பத்தில் இயக்கி பல்கலைக்கழகத்தில் மேடையிட்ட கலாநிதி அவர்கள் பின்னுளில் ஈழத்துத் தமிழரின் நாடகமரபான கூத்துமரபினை வளர்ப்பதி லேயே அதிக ஆர்வமும் அக்கறையும் Glstróðrt-m'fi“. 1959, 60 saflso tot' Lék களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளி லிருந்து கூத்துக்களைத் தருவித்து அவற் றைப் பல்கலைக்கழகத்தில் மேடையிட்டார், 1962 இல் பல்கலைக்கழக மாணுக்கரைக் கொண்டே கூத்துக்களைத் தயாரித்து ஈழத் தமிழருக்கு அறிமுகம் செய்தார். 19621969 வரை கர்ணன்போர், நொண்டி நாட கம், இராவணேசன், வாலிவதை என்பன அவரால் தயாரிக்கப்பட்ட கூத்துக்களாகும். கூத்துமரபின் ஆடல்பாடல் பிசகாது. கூத்திற் பாவிக்கப்படும் அதே வாத்தியங் களைக் கையாண்டு மரபு பிறழாது கூத்தைச் செம்மைப்படுத்தினர். இந்நான்கு கூத்துக் களும் அவருடைய பெரும் சிருஷ்டிகளாகும்.

2ー
விடியவிடிய ஆடப்பட்ட கூத்துக்களை ஒன் றரை மணித்தியாலத்திற்குள் அமைத்த மையும், நடிப்புப்பண்பினைக் கூத்துட் புகு
த்தியமையும், ராக, தாளங்களை ஒர் ஒழுங் கிற்குள் கொணர்ந்தமையும், நவீன ஒலி,
ஒளி மேடை அமைப்புக்களைக் கூத்திற் பாவித்தமையும் அவர் கூத்திற் புகுத்திய திருத்தங்களாகும். முதன் முதலிற் பல்
கலைக்கழக மாணுக்கரைக் கூத்தில் ஈடுபடுத்
தியதுடன் பெண் பாத்திரத்திற்குப் பெண்
களையே ஆடவும் வைத்தார். இதனுற்
கூத்து புதுமெருகு பெற்றது. பேராசிரியர்
சண்முகதாஸ், சி. மெளனகுரு, க. பேரின்ப
ராசா,ஆ. சிவனேசச்செல்வன், ஹம்ஸ்வல்லி, சுகுணு போன்ருேரும் இன்று மிக உயர்
பதவிகளில் இருக்கும் பலரும் இக் கூத்து
களில் பங்கு கொண்டனர். கர்ணன்போர் நாடகத்தின் உதவியாளர்களாக பேராசி
thլլյրՒ கைலாசபதியும், பேராசிரியர்
சிவத்தம்பியும் அமைய உடையமைப்பாள
ராக பேராசிரியர் நா. பாலகிருஷணன் கடமையாற்றினர். மிகப் பெரும் நாடகக் குடும்பமொன்றைப் பேராசிரியர் கொண்டி
ருந்தார் என்பதற்கு இவை சான்று.
இந் நாடகங்கள் பேராதனை, கண்டி,
கட்டுகஸ்தொட்டை, மன்னர், வவுனியா,
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு
முதலாம் பிரதேசங்களிலெல்லாம் மேடை
யிடப்பட்டன, பேராசிரியருடன் நாடகம்
பழகுவது ஒரு தனி அனுபவம். அது
தனியாக எழுதப்பட வேண்டியது.
இன்று ஈழத்துத் தமிழருக்கென ஒரு தேசிய நாடக மரபு வேண்டுமெனப் பேசும் பலருக்கு அன்று அடி எடுத்துத் தந்தவர் பேராசிரியரே. தற்போது உயர் பதவி காரணமாகவும், வேலைப்பளு கார ணமாகவும் நாடகத் துறையினின்று அவர் ஒதுங்க நேர்ந்தாலும் இன்றும் தன்வேலைகளை ஒதுக்கி நாடகம் பார்க்க முன்னணியில் நிற்பதும், நாடகம் ஆடு வோரை ஊக்குவிப்பதும் அவர் நெஞ்சி னுள் கனலும் நாடக ஆர்வத்திற்கு உதாரணங்களாம்.

Page 85
இலக்கியப் பணியிற் ே
சிற்பி
லங்கைப் பல்கலேக்கழகத்தின் மூதலா வது தமிழ்ச் சிறப்புக் கலைமாணியாகி - முத லாவது தமிழ் முதுமாணியாகி - உதவி விரி வுரையாளராகி - இலண்டன் பல்கலைக் கழ கத்தின் கலாநிதிப் பட்டத்தைப் பெற்ற பின்னர் இலங்கைப் பல்கலைக் கழக விரி வுரையாளராகி - தமிழாராய்ச்சித் துறைத் தலைவராகி - தமிழ்ப் பேராசிரியராகி - யாழ் பல்கலைக் கழக வளாகத் தலைவராகி - யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தர் ஆகிய கலாநிதிசு. வித்தியானந் தன், பல்கலைக் கழகக் கடமைகளுக்கு அப் பால் நாடகத்துறைக்கு மட்டுமே உரியவர் என்ற குறுகிய கருத்தினை மாற்றி இலக்கிய உலகிற்கும் உரியவர் என்பதைக் காட்டுவதே இக்கட்டுரையின் தோக்கமாகும்.
தமிழின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவருள் யாழ்ப்பானத்து நல்லூர் ஆறுமுக நாவலர் ஒருவர். "எப்பொருள் எச்சொலின் எவ்வாறுயர்த்தோர் செப்பினர்’ என்பதை அறிந்து, "இதனை இதனுல் இச்சொல் விளக் கும் என்பதை ஆய்ந்து அதனை அச் சொற்கண் விட்ட ஆறுமுகநாவலர், 'அன்ன நடை பிடியினடை அழகுநடை அல்லஇவன அகற்றி அந்தாட் பன்னுமுது புலவரிடஞ் செய்யுணடை பயின்ற தமிழ்ப் பாவை யாட்கு வன்னநடை வழங்கு தடை வசன நடை பயிற்றி" வசனநடை கைவந்த வல்லாளர் ஆளுர்,
'நிறைந்த கல்வி அறிவுடைய வித்து வான்களும் குறைந்த கல்வியறிவுடைய பிறரும் ஆகிய யாவரும் எக்காலத்தும் எளி தில் வாசித்து உணரும் பொருட்டும் கல்வி அறிவில்லாத ஆடவர்களும் பெண்களும் பிறரைக்கொண்டு வாசிப்பித்து உணரும் பொருட்டும் பெரும்பான்மையும் இயற் சொற்களும் சிறுபான்மையும் அவசியமாகிய வடசொற்களும் பிரயோகிக்கப்படும் கத்திய
16

பராசிரியர் 4 d.
ரூபமாகச் செய்து, வாசிப்பவர்களுக்கு எளி திலே பொருள் விளங்கும்படி பெரும்பான்மை யும் சந்திவிகாரங்கள் இன்றி அச்சிற் பதிப் பித்தேன்' எனப் பெரியபுராண முன்னுரை யில் நாவலர் குறிப்பிட்டது, உயர்ந்த கருத் துக்கள் சாதாரண மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதில் அவர் எத்துணை நாட்ட முற்றிருந்தார் என்பதையும் அதற்கு எளிமை யான வசனங்களே உரிய கருவி என்பதை உணர்ந்திருந்தார் என்பதையும் காட்டு கின்றது.
மறுமலர்ச்சிக் கவிஞரான Lurf pur 5?, **எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துகொள்ளக்கூடிய சந்தம், பொது மக்கள் விரும்பும் மெட்டு, இவற்றினையுடைய காவியம் ஒன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய உயிர் தருவோணுகின்றன்’ எனப் பிற்காலத் திலே குறிப்பிட்டது, நாவலரின் கூற்றுடன் ஒப்புநோக்குதற்குரியது.
செய்யுள் நடையிலே சிறிய வட்டத்துட் சுற்றிய தமிழ் இலக்கியம் இன்று நாவல், சிறுகதை, கட்டுரை போன்ற புதிய கோலம் களிலே பொலிந்து விளங்குவதற்கு வசன நடை இலக்கியச் சிந்தனையின் வாகனமான தும். ஒரு காரணம் எனலாம்.
நாவலரின் மருகரும் மாணவருமான பொன்னம்பலப் பிள்ளையிடம் பயின்ற வித் துவ சிரோமணி கணேசையரிடம் இலக்கணம் சுற்ற கலாநிதி கணபதிப்பிள்ளை அவர்களின தும், நாவலரை முன்மாதிரியாகக் கொண்டு அவருடைய வாழ்வை அடியொற்றித் துறவு பூண்டு கிழக்கிலங்கையின் ஆறுமுகநாவலர் எனப் புகழ்பெற்ற சுவாமி விபுலானந்தர் அவர்களினதும் மனம்கவர் மாணவரான பேராசிரியர் சு. வித்தியானத்தன் நவின இலக்கிய வடிவங்களுள் ஒன்ருன கட்டுரை இலக்கியத்திற்கு வலிவும் பொலிவும் சேர்த்து

Page 86
- 1
வரும் சிலருட் குறிக்கத்தக்க ஒருவராகத் திகழ்கின்றர்.
'தமிழ் கற்றவர்களிடம், முன்னையோர் சொன்ன அத்தனையையும் பொன்னேபோற் போற்றி இறுமாப்படையும் கண்மூடித்தன மான ஒரு போக்கினைத்தான் காண முடியுமே தவிர நடுநிலை நின்று ஆராய்ந்து உண்மையை உணரவேண்டும் என்ற ஆர்வத்தைக் காண்ப தரிது’ எனப் பல்லாண்டு காலம் கூறப்பட்டு வந்த குறையினைத் தகர்த்த முதலாவது இலங்கையரான பேராசிரியர் வித்தியானந் தன் 'பத்துப்பாட்டு" என்ற பழந்தமிழ் இலக்கியத்தை மையமாகக் கொண்டு சங்க காலத் தமிழ் மக்களின் அரசியல், மொழி, இலக்கியம், நுண்கலை, வாணிபம் முதலிய வற்றை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து எழுதிய கட்டுரை அவருக்குக் கலாநிதிப் பட்டத்தை ஈட்டிக்கொடுத்தது. இந்த ஆய் வின் அடிப்படையில் அவர் எழுதிய 'தமிழர் சால்பு’ என்னும் நூல் மைசூர்ப் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் ரி. வி. மகாலிங்கம், அண்ணுமலைப் பல்கலைக் கழக வரலாற்றுப் பேராசிரியர் ஆர், சத்தியநாதை யர் முதலிய அறிஞர்களின் பாராட்டைப் பெற்றது. கால அடிப்படையிலே தமிழ் இலக்கியங்களை வகைப்படுத்தி மதிப்பிடும் "இலக்கியத் தென்றல்’ தமிழின் சிறப்பை யும் பரப்பையும் ஆதாரபூர்வமாக எடுத்தி யம்புகின்றது. இஸ்லாமியத் தமிழர்களின் கலாசாரத்தையும் தமிழ்த் தொண்டினையும் விளக்கும் 'கலையும் பண்பும்’ என்ற நூல் இலங்கைச் சாகித்திய மண்டலத்தின் பரி சைப் பேராசிரியருக்குப் பெற்றுக் கொடுத் தது. பேராசிரியரின் பன்முகப்பட்ட ஆற் றலை ஒரே பார்வையில் தரிசிப்பதற்குத் *"தமிழியற் சிந்தனைகள்’ வழி செய்கின்றது.
இந்நூல்களும், இளங்கதிர், இளந்தென் றல், இந்து தர்மம், இந்து இன்ஞன், கலைப் பூங்கா, முதலியவற்றிலும் ப்ல்வேறு கல் லூசிச் சஞ்சிகைகளிலும் சிறப்பு மலர்க்ளி லும் பேராசிரியர் எழுதிய கட்டுரைகளும் தமிழிலக்கியங்களில் அவருக்குள்ள பயிற்சிக் கும் ஈடுபாட்டிற்கும் வரலாற்றுணர்விற்கும்

4 -
ஆராய்ச்சி மனப்பாங்கிற்கும் சான் ரு கி அலரை ஆற்றல் வாய்ந்த கட்டுரைக் கலை ஞராகக் காட்டுகின்றன.
தெளிவான சிந்தனை, அதைத் தெற் றெனத் தெரிய வைக்கும் எளிமையான் சொற்கள், அவை இசைவாகச் சேர்ந்து வரும் இலகுவான வசன நடை, ஆதாரபூர் வமான செய்திகள், தர்க்கரீதியான முடிவு கள்- ஆகியவற்றை அவருடைய ஒவ்வொரு கட்டுரையிலும் காணலாம். ی
"பண்தேய்த்த மொழியினர் கொண் டேத்தும் கோவலன்" என்ற கட்டுரையை வகைமாதிரியானதாகக் கொள்ளலாம்.
*கோவலனைப் பற்றிக் கூறும்போது அவனது சால்பு பற்றி ஏதும் குறிப்பிடாது அழகையும் புகழையுமே இளங்கோவடிகள் போற்றிக் கூறுகின்ருர், வேறு நூல்களில் வரும் கதைத் தலைவரிலும் கோளலன் வேறு பட்டவன் என்பதையும் அவனது செயல் களே அவனுக்கு அழிவைத் தேடப்போகின் றன என்பதையும் முன்னுேடியாகக் கூறு வதுபோல, மடவார் கோவலனைப் பாராட் டினர் என்ற கூற்றிற் பெறவைக்கின்றர். "பண்தேய்த்த மொழியினர் காத லா ற் கொண்டேத்துங் கிழமையோன் *’ என்பதே அவனைப் பற்றிய அறிமுகம். எனவே மண் தேய்த்த புகழும், மதிமுக மடவார் கா8க் குறிப்பினை உட்கொண்டு புகழும் உரிமையும் ஒழிய, சிறந்த த லைவனு க்கு ரிய அறிவு, பொறுமை, ஒர்ப்பு. கடைப்பிடி முதலிய பண்புகள் அவனிடம் இல்லை என்பதைத் தொடக்கத்திலேயே அறிந்து கொள்ளும்படி செய்கின்ருர்’ எனக் கோவலன் என்ற பாத்திரத்தை இளங்கோவடிகள் அறிமுகஞ் செய்யும் பாங்கினைத் தெளிவாக்குகின்றர் பேராசிரியர்.
மாதவியிடமிருந்து திரும் பிய போது கோவலன், தர்ன் பல ஆண்டுகளாகக் கண் .ணகியைக் கைவிட்டிருந்ததையும் அதனல் அவளுக்குக் கொடுமைகள் ஏற்பட்டதையும் எண்ணியிருக்க வேண்டும். இனியாகுதல் அவள் பிரிவ்ென்பதை அறியாது தன்னுடன் இருத்தில் வேண்டுமென விகும் பியிருக்க

Page 87
-
வேண்டும். இந்த மனத்திருப்பமே அவளை யும் "மதுரைக்கு உடனழைத்துச் செல்லத் தூண்டியது .
கண்ணகியின் குணத்திலும் ஒரு திருப் பத்தைக் காணலாம். திருமணம் முடிந்து இல்லறம் நடத்தத் தொடங்கிய காலத்தில் அனுபவக் குறைவினுல், செல்லமாக வளர்ந்த வளர்ப்பினல், உறுதியான உள்ளப் பாங் கினைப் பெருதிருந்த காரணத்தால் கோவ *லனின் காதலை நெகிழவிடாது வளர்க்கும் முறையை அறிந்திராமல் வாழ்ந்தாள். பின், உலகியல் அனுபவம் வளர வளர, தான் கோவலனின் உள்ளத்தினை ஆட்கொள்னத் தவறியதை உணர்ந்திருக்க வேண்டும். இத ஞல், தான் எவ்வளவு கவலைகளுக்கும் துன் பங்களுக்கும் உட்பட்டிருந்த போதும், தன் கணவன் சிதைவுற்ற உள்ளத்தோடு தன்னை நாடிவந்தபோது அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவன் மனமாற்றத்தை நிலைக் கச் செய்ய வேண்டுமென அவள் விரும்பி சூள் என்ன இடையூறு நேரினும் இனித் தன்னைவிட்டுப் பிரியச் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என் எண்ணினுள். மாற்று மொழி கூருது, வேறு எண்ண்ம் எதுவும் இல்லாது போவதற்கு ஒருவித ஒழுங்கும் செய்யாது கணவனேடு சென்ருள்.
f
குறைபாட்டுடன் விளங்குவது மக்கள் இயல்பு. சிலப்பதிகாரத்தின் முக்கிய கதா பாத்திரங்கள கிய கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோரும் இதற்கு விதிவிலக்கு அல்லர். ஆணுல், கண்ணகியும் மாதவியும் குறைகளை உணர்ந்து அவற்றை நீக்கித் தம்மை உயர்த்திக் கொண்டமையால் உயர் வடைகின்றனர். குறைகளை எண்ணி உணர்ந் ததோடு நின்துவிட்டமையால், தடுமாறும் உள்ளம் கொண்ட கோவலன் கண்ணகி போலவோ மாதவி போலவோ உயர் வு அடைய முடியவில்லை .
சிலப்பதிகார வரிகளிடையே இயங்கும் இளங்கோவடிகளின் இதயத்தையும் மனித மனங்களின் இயற்கையான உணர்வோட் டங்களையும் தன்கு உணர்ந்த ஒருவராற்ருன் இவ்வாறு தீர்க்க ரீதியாகவும் இலக்கிய நயத்துடனும் எழுதியிருக்க முடியும். கோவ

| 5ー
லன் என்ற பாத்திரத்தின் குறை நிறைகளை அலசுவதுடன் மட்டும் பேராசிரியரின் இக் கட்டுரை நின்றுவிடவில்லை. சிலப்பதிகாரக் காவியம் பற்றிச் சிறிதளவு தெரிந்துவைத் திருப்போரை, மூலநூலைத் தேடிப் படிக்கத் தூண்டுவதில் வெற்றியும் பெறுகின்றது.
வடவேங்கடம் முதற் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்’ எனத் தமிழ் நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிட்டார் பனம்பாரனர் எனும் பழம் புலவர், தென் குமரிக்கு இப்பால் இந்துமாகடலில் இலங் கும் இலங்கைத் தீவிலே வரலாற்றுக்கு முற் பட்ட காலம் முதல் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை ஆய்வாளர் பலர் நிறுவியுள்ளனர். " நாமமது தமிழரெனக் கொண்டிங்கு' வாழ்த்திடாமல், "" தேமது ரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை" செய்தவர்களின் பணிகளைச் சைமன்காசிச் செட்டி, வித்துவசிரோமணி, கணேசையர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, இரசிகமணி கனக செத்திநாதன் க. சி. குலரத்தினம் முதலியோர் விபரமாக எடுத்துக் காட்டி யுள்ளனர்.
ஈழநாட்டுப் பெரியார் தமிழ் மொழிக் காற்றிய தொண்டு (இளங்கதிர்) ஈழமும் தமிழ் இலக்கணமும் (கலைப்பூங்கா) தமிழ கத்தை ஈழ நாட்டவருக்குக் கடமைப்படுத் திய பேருபகாரி நாவலர் (ஆறுமுக நாவலர் நினைவுமலர்) போன்ற கட்டுரைகள் எழுதிய பேராசிரியர் வித்தியானந்தனும் இவ்வரிசை யில் ஒருவராகின்றர். திறஞய்வின் அடிப் படையில் ஈழத்து இலக்கிய ஆக்கங்களின் உயர்வினை உறுதிப்படுத்திய கலாநிதி கைலாசபதி, கலாநிதி சிவத்தம்பி ஆகியோர் பேராசிரியரின் மாணவர்களே,
பரம்பரைச் சைவரான பேராசிரியர் தன் சமயத்தில் ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையு முடையவர். அவருடைய பக்தியுணர்வையும் சமயநூற் புலமையையும் கோயில் கள் (இந்து தர்மம் 1954-55) சிவஞானபோத நெறித் திருமரபு (இ. த. 1961-62) சிவராத் திரி (இ. த. சிவராத்திரி சிறப்பு மலர்) முத லிய கட்டுரைகளிலே காணலாம். ஆனல் அவருடைய சைவத் தமிழுள்ளம் பரந்த

Page 88
-
உள்ளம்; பிற மதத்தினரையும் மதிக்கும் உள்ளம். அதனுற்ருன், பிற மதத்தினர் தமிழிலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றிய தொண் டுகளைச் சரியாகவும் விரிவாகவும் மதிப்பிட வும் பாராட்டவும் அவரால் முடிகின்றது.
* உலகிலுள்ள வேறெந்த மொழிக்கு மில்லாத தனிப்பெருஞ் சிறப்புத் தமிழ் மொழிக்குண்டு. எல்லாச் சமயத் த வரும் தமிழைப்பேணி வளர்த்திருக்கின்றனர். ஒல் காப் புகழ் படைத் த தொல்காப்பியம், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம், காப்பிய இலக்கணம் முழுமையாக அமைந்த சீவக சிந்தாமணி போன்றவை சமணர் தமிழில் இயற்றிய நூல்கள். புத்த சமயப் பிரசார நூலாக விளங்கும் மணிமேகலே, ஐம்பெரும் காப்பிய வரிசையிலே இரண் டா வி தாக வைத்துப் பேசப்படும் குண்டலகேசி, சோழர் காலத்தின் இலக்கண நூலாகிய வீரசோழி பம் போன்றவை பெளத்தர்கள் தமிழுக்குத் தந்த நூல்கள். நாயன் மார் அருளிய தேவார திருவாசகம், பக்திச் சுவை நனி சொட்டப் பாடப்பட்ட பெரியபுராணம், கந்தர் புகழ்பாடும் கந்தபுராணம் முதலியவை சைவத்தமிழ் இலக்கியங்கள். ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் காப்பிய மேதை கம்பர் பாடிய இராமா யணம் வில்லிபுத்தூரரின் பாரதம் என்பன வைணவ இலக்கியங்கள் கற்ருேர் போற்றும் தேம்பாவணி, கலம்பக இலக்கணம் அமைய எழுந்த திருக்காவலூர்க் கலம்பகம் போன் றவை கிறித்தவர் அளித்த செல்வங்கள். இவர்கள் போலவே எண்ணிறந்த இல்லா மியப் புலவர்கள் மிகச் சிறந்த நூல்கள் பலவற்றைத் தமிழிலே படைத்திருக்கின்ற னர்" எனக் கூறும் பேராசிரியர் இல்லாமி யரும் தமிழிற் புதிய பிரபந்த வகைகளும், இஸ்லாமியரும் தமிழும், இஸ் லா மியர் தமிழ்த் தொண்டு முதலிய கட்டுரைகளில் இஸ்லாமியப் புலவர்களின் தமிழ்ப் பணி கன்யும், கிறித்தவரும் ஈழத்திலே தமிழ் வளர்ச்சியும் அமெரிக்க மிஷனும் தமிழர் கல்வியும், கிறிஸ்தவ மிஷனரிமாரின் தமிழ்த் தொண்டு முதலிய கட்டுரைகளில் கிறித்த வர்களின் தமிழ்ப் பணியையும் விரிவான ஆராய்ந்து பாராட்டியுள்ளார்.

6 -
பழந்தமிழ் இலக்கியங்களை மட்டுமல்லச மற் புதிய இலக்கியங்களையும் பேராசிரியர் வாசிக்கின்ருர்; சுவைக்கின்ருர்; ஆராய்கின் முர்; மதிப்பிடுகின்ருர்,
'கவிதை - சிறப்பாக ஒ  ைச  ையப் பொறுத்தவ்ரை ஈழத்துக் கவிஞர் களது படைப்புக்கள் முன்னணியில் உள்ள ன. கவிதை நாடகம் ஈழத்திற் சிறப்புற்றுத்திகழ் கின்றது. சிறுகதைகள் அளவில் குறைவாக இருப்பினும் தரச்சிறப்பில் உயர்ந்துள்ளன. சமுதாயப் பார்வையுடன் எழுதப்பட்டு வரு, கின்றன. இலக்கியத்தரம் பற்றிய ஒரு விழிப் புணர்ச்சி இங்கு காணப்படுகின்றது. இங்கு வெளியிடப்படும் இலக்கியப் பத்திரிகைகள் வியாபார நோக்கின்றி ஆர்வம் காரணமாக வெளியிடப்படுவதால் தரமுயர்த்து காணப் படுகின்றன-ஈழத்தின் இக்கால இலக்கியம் பற்றிய பேராசிரியரின் கருத்துக்கள் இவை. (தமிழமுது)
"சிறந்த ஒர் இலக்கிய கர்த்தா, தன் காலத்தின் தேவைகளையும் பிரச்சினைகளையும் அறிந்துகொண்டு அக்காலத்துக்குப் பயன் படுவதும் எதிர்கால வாழ்வை உறுதிப்படுத் துவதுமாகிய இலக்கியங்களே ஆக்குவான். பழைய நிகழ்ச்சிகளுக்கோ வரலாறுகளுக்கோ கலைவடிவம் தரும்போதும் தன் காலத்துக்கு ஏற்ற வகையிலும் பயனுறும் வகையிலுமே அதைச் செய்வான் ?? (சங்கிலியம் அணிந் துரை) என்ற உறுதியான கருத்துடைய பேராசிரியர், இக்கருத்தை விளக்கும் வகை யில் எழுதிய கட்டுரைகளுள் பார்தி சபதம் (இளங்கதிர் 1957-58.) இருபதாம் நூற்ருண் டுப் புலவர்களும் சமுதாயமும் (பாரதிமலர் 1949) கவிதையே தன் ஆவியாக வாழ்ந்த மஹாகவி (மஹ்ாக வி நினைவு மலர்) ஆகியவை சிறந்து விளங்குகின்றன.
உலக இலக்கியங்களின் தரத்திற்குச் சமமாக நவீன தமிழ் இலக்கியம் உயர்ந்து, விரைவில் விஞ்சவேண்டும் என்ற பெரு விருப்புடையவர் பேராசிரியர். இவ்விருப்பின் அடிப்படையில் எழுந்தவையே ஈழத்து எழுத் தாளர் பலரின் சிறுகதை, நாவல், நாடக, கவிதை நூல்களுக்கு அவர் வழங்கிய

Page 89
- 1
அணித்துரைகளாகும். திறந்த மனத்துடன் குணங்களைப் பாராட்டி பரிவுணர்வுடன் குறைகளையும் தொட்டுக் காட்டி வளர்ச்சிக்கு வழிகாட்டும் பேராசிரியர் தரமான இலக் கியத் திறனுய்வாளராகத் திகழ்வதையும் இவ்வுரைகள் காட்டுகின்றன.
இன்று பல்கலைக்கழகங்களிலும் பல்கலைக் கழகக் கல்லூரிகளிலும் இயங்கும் தமிழ்ச் சங் கங்களுக் கெல்லாம் தாயாக விளங்கும் இலங் கைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் முக்கிய இயக்குனராகவும் வழிகாட்டியாகவும் நீண்டகாம் பணிபரிந் தவர் பேராசிரியர். தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளின் மூலம் பல்கலைக் கழக மாணவர்கள் பலர் இலக்கியப் பணி களில் ஈடுபடத் தொடங்கினர். தமிழ் ச் சங்க வெளியீடான "இளங்கதிர்’ பல்கலைக் கழக மாணவர்களின் எழுத்தாற்றலை எடுத் துக் காட்டும் ஏடாக இன்றும் விளங்குகின் றது. ஈழத்து நவீன இலக்கியச் செழுமைக் குப் பங்களிப்புச் செய்த, செய்கின்ற எழுத் தானருட் பலர் பேராசிரியரிடம் தமிழ் கற்று அவருடைய இலக்கிய ஆளுமையினுற் கவரப்பட்டவர்களாகவோ தமிழ்ச் சங்கப் பணிகளால் ஏற்பட்ட தொடர் பி னு ல் பேராசிரியரால் வழிநடத்தப்பட்டவர்களா கவோ இருப்பதைக் காண்கின்ருேம். பேரா சிரியரின் முதன் மாணவரான திரு. த சண் முகசுந்தரம் (அதிபர், மஹாஜனுக் கல்லூரி)
"ஈழத்து முஸ்லிம்களின் வீட்டுமொழி தமிழே. வெள்ளிக்கிழதைகளில் நடைபெறும் பட்ட குதுப்பாப் பிரசங்கம் அரபியிலும், பள்ளிவாசல்களில் வழங்கும் புனித மொழி றது இஸ்லாமியரின் தாய்மொழி வளத்ை விளம்பும் சான்றுகளாக என்றென்றும் விள களாகத் திகழும் நாடோடிப் பாடல்கள், 8 களிலும் வயல்வெளிகளிலும் உலாவுகின்ற தமிழ் என்பதை எமக்குத் தெளிவாகக் கா
- s6orçado 1963-ih -garir orrfá நாவலின் வெளியீட்டுரையின் ஒருபகுதி.
17

7 -
கலே இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றி வரும் தொண்டு நாடறிந்தது.
மறைந்த கலாநிதி க. கைலாசபதி, மு. தளையசிங்கம், செ. கதிர்காமநாதன் கலா. பரமேஸ்வரன் ஆகியோரும் வித்து வான் எப். எக்ஸ். சி. நடராசா, நாவற் குழியூர் நடராசன், சொக்கன், கலாநிதி ம. மு. உவைஸ், கலாநிதி கா. சிவத்தம்பி, இ. சிவகுருநாதன் (தினகரன்) கே. சிவப் பிரகாசம், ஆ. சிவநேசச் செ ல் வன் (வீரசேசரி) சி. தில்லைநாதன், திமிலைத்துமி லன், ராஜபாரதி, செங்கை ஆழி யான், செம்பியன் செல்வன், குந்தவை, கலாநிதி ஆ. சண்முகதாஸ், மனேன்மணி சண்முக தாஸ், முத்து சிவஞானம் மெளனகுரு, எம். ஏ. நுஃமான் முதலியோரும் என இப் பட்டியல் வளர்ந்துகொண்டே போகின்றது.
தமிழ் கூறும் நல்லுலகிலே தனித்துவ முடைய ஒர் இலக்கியச் சிந்தனையாளராகவும் தனக்கென ஒரு தமிழ் நடையை உடைய வராகவும் திகழும் பண்டிதமணி சி. கண பதிப்பிள்ளை அவர்களுக்குப் பல்கலைக்கழகத் தின் கெளரவ இலக்கியக் கலாநிதிப் பட் டத்தை வழங்கியமை, பேராசிரியர் ஆற்றி வரும் இலக்கியப் பணிகளின் கொடுமுடி
எனலாம்.
பேராசிரியரின் இ லக் கி யப் பணிகள் மேலும் பல்கிப் பெருக எல்லாம் வல்ல இறைவன் அருள்க.
தமிழ்மொழியே. அவர்களின் தாய்மொழி b ஜ"ம் ஆத் தொழுகையுடன் தொடர்பு தமிழிலுமே நடைபெறுகின்றது. முஸ்லிம் நளில் நன்முகத் தமிழ்மொழி விளங்குகின் தயும் ஈடுபாட்டையும் உலகறிய எடுத்து "ங்குவன இவர்கள் தாவிலே பல்லாண்டு ஈழத்தில் இஸ்லாமியர் வாழும் மூலைமுடுக்கு இப்பாடல்கன் இஸ்லாமியரின் உயிர்நாடி ட்டுகின்றன.”*
மாதம் நடைபெற்ற ஏமாற்றம்" என்ற

Page 90
வித்தியானந்தன் என்ற
செம்பியன் செல்வன்
*மானுடம் வென்றதம்மா! “ என்ற இலக்கிய வரி இருபதாம் நூற்ருண்டின் சிந் தணு வளர்ச்சியிலும், உலகளாவிய பல்துறை அறிவியல் ஆய்வுகளிலும் தனது ஆளுமையை நன்கு வேரிட்டிருக்கின்றது. அறிவியல் வளர்ச்சி என்பதோ, தொழிற்றுறை முன் னேற்ற மென்பதோ அனைத்தும் மானி ட மேம்பாட்டின் அடிச்சரடாக அமையும் மனி தகுல நேசிப்பின் விளைவே என்பதும், இவை இரண்டின் பிணைப்பாகவே அ க லுலக க் கொள்கை என்ற மானிட தத்துவம் பரி ணமித்ததும் தற் செயலானதல்ல; நியதி யின் வைராக்கியத்தில் பிறந்த நேசிப்புக் கொள்கை. இதனுற்றன் மானுடம் என்பது தனிமனிதப் பண்பு நிலையாக மட்டுமன்றி, உலக உயிர் அனைத் தும் ஒன்று கூட்டி இயங்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பரந்த தத்துவம். ஆகவே, மணி தனின் செயற்பாடுகள், தன்னளவில் தனி மனித உணர்வு கொண்டியங்குவதாக தோற் றம் கொண்டிருந்தாலும் அதன் சமூக த் தொடர்புகளிலும், அவற்றின் விருத்திகளி லும், முன்னுேக்கியமையும் விளைவுகளிலுமே தான் அவன் ‘மனிதத்துவம் ஆராயப்படு கிறது; எடைப்போடப்படுகிறது. காலத்திற்கு காலம், அறிஞர்களாலும், தத்துவஞானி களாலும் மானுடம் அதிகமாகப்பேசப்பட்டு வந்திருப்பதன் காரணமும் இதுவே யாகும். ஜேர்மனிய தத்துவ ஞானியான பிரடரிக் வில்ஹெம் நீட்சேஷ் தனது பிரசித்தி பெற்ற ஜராதுஷ்டிரனை மிகாமனிதனுக - அதிமானி டனுக - பிரகடனம் செய்ய வேண்டிவந் தமைக்குக் காரணம் மனித நேயத்தையும் மனிதகுல வளர்ச்சியையும் ஒன்றிணைத்துப் பார்த்ததினுற்ருன்: (நீட்கூேடியின் தத்துவம் ஹிட்லரைத் தவருன வழியிலிட்டுச் சென் றமை விபத்தே.)
ஆகவே ஒரு மனிதன் எவ்வளவு உயர்ந் தாலும், அவன் ஒருமனிதனுக - மனிதத்து

மனிதன் . . .
வம் கொண்டவஞக விளங்குகிருன என்ப தனக் கொண்டே அவனுக்குச் சமூக ப் பெறுமானம் வழங்கப்படுகிறது. சமூக விழு மியங்கட்கு அப்பால் அவன் காணப்பட்டால் அவன் ‘மக்கட்பதடி'
ஒரு "மனிதனின்’ மனிதம்" செயற்பட்ட சம்பவங்களைக் கொண்டே அவரின் சிறப்பு களை ஆய்வதுதான் ஒரளவு நடைமுறைச் சாத்திய மாயினும் அவரின் எல்லாப்பண்பு களையும் அணுகுதலும் சாத் தி யமற்றதே. பொ ன்  ைவ க்கு மிடத்தில் பூ வைக்கும் முயற்சிதான்.
கலாநிதி சு. வித்தியானந்தனை முதன் முதலாக எப்போது, எப்படி அறிந்தேன்?
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யில் க. பொ. த. உயர்தர இறுதியாண்டு மாண வணுக, பல்கலைக் கழக புகுமுகத்தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த - 1959-ம் ஆண்டு கார்த்திகை மாதம். இன்றைய பாடசாலை மாணவர்களைப்போல் பல்கலைக்கழகப் பேரா சிரியர்களையும், விரிவு ரை யாளர்களையும் நேரில் சந்திக்கவோ, தனியார் கல்வி நிறு வனங்களில் அவர்களிடமே கல்லூரிப் பாடன் களைக் கேட்கவுமோ இயலாத காலங்கள். பல்கலைக்கழகப் - பேராசிரியர்கள் அவர்கள் எழுதிய நூல்கள் எல்லாமே எங்களுக்குப் பொக்கிஷமாக இருந்த காலம். எங்களுக்குத் தமிழாசானுகக் கல்லூரியில் விளங்கியவர் பண்டிதர் செல்லத்துரை பீ. ஏ. அவர்கள். ஒரு நாள் அவசரம அவசரமாக எங்களை அழைத்துக் கூறுகிருர்,
*கலாநிதி சு. வித்தியானந்தன் அவர் கள் சமீபத்தில் "இலக்கியத் தென்றல்’ என் ருெரு கட்டுரைத் தொகுப்பு வெளியிட்டி ருக்கின்ருர். நீங்கள் கட்டாயம் எல்லோரும் வாங்கிப்படியுங்கள். அதில் உங்கள் சோத னைக்கு வரக் கூடிய - இஸ்லாமியர் இலக்கி

Page 91
*யத்துக்கு, ஆற்றிய தொண்டு, கிறித்தவர் இலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு, இரு பதாம் நூற்ருண்டுக் கவிதை' போன்ற கட்டுரைகள் உள்ளன.
(அக்காலங்களில் பல்கலைக்கழக விரிவுரை யாளர்களின் சமீபகாலக் கட்டுரைகளை சஞ் சிகைகளிலும் நூல்களிலும் தேடிப்பிடித் தும் படிப்பது மாணவர்களின் பழக் கம். இளத்தென்றல், இளங்கதிர் சஞ்சிகைகள் எங்கள் கையில் படாத பாடுபடும். மாணவர் எதிர்பார்ப்பது போல அக்கட்டுரைகளில் ஒருசிலவாவது பரீட்சைக்கு வந்து எம்மைக் கடைந்தேற்றும்.)
"இலக்கியத் தென்றல்" எங்களுக்குப் பெரிதும் உதவியது. அதில் இருந்த இருப தாம் நூற்ருண்டுக் கவிதையில் பாரதி பற்றி கலாநிதி அவர்கள் குறிப்பிட்டிருந்தமை எங்கட்கு புதுமையாகவும், சுவாரஸ்யமாக வுமிருந்தன. “மக்கள்', 'மானுடம்" "மக்கள் கவி’, ‘மக்கள்.இலக்கியம்" "மக்கள் மொழி". போன்ற சொற்கள் எங்களுக்கு கல்விக்கு மேல் கருத்தில் பதிந்தன. கலாநிதி அவர் முகம் அறியாமலே எங்கள் மரியாதைக்குரிய வரானுர்,
கலைத்துறைக்கு அவ்வாண்டு, இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு எங்கள் கல் லூரியிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள் அறுவர். அவர்களில் இன்று குறிப்பிடத்தக் கவர்களாக, செங்கை ஆழியான், அங்கை யன் என்னும் வை. அ. கைலாசநாதன் செம்பியன் செல்வன் ஆகியோரைக் குறிப் பிடலாம். ஆனல் மூவரும் பல்கலைக்கழகம் சென்று படிக்க போதிய பொருளாதார வசதியற்றவர்கள். அதேவேளையில் இலவச உபகாரச் சம்பளம் பெறுவதற்கு வேண்டிய சில விதிமுறைகள் எங்களுக்குப் பாதகமா யிருந்தன. எப்படியோ பல் கலை க் கழகம் போகு முன்னரே செங்கை ஆழியான் முழு உபகாரச்சம்பளம் பெற்று விட்டார். நான் சென்ற சில நாட்களின் பின் அரை உப காரச் சம்பளம் பெற்றுவிட்டேன். ஆனல்
அங்கையனே? ஒரே அழுகையும்புலம்பலும் தான். பல்கலைக்கழகத்தை விட்டுப் போய்

9 -
விடப்போவதாக கூறுவார். புதியவர்கள் நாங். கன் எங்கள் பிரச்சண்யைத் தீர்க்கக்கூடியவர் அப்போது பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த நிக்கலஸ் அட்டிகல. அவர்கள் மிகவும் கண்டிப்பானவர். அவரை எவரும் எளிதில் நெருங்கிவிட முடியாது. அப்போது இறுதி வகுடப் பட்டப்படிப்பை முடித்துக் கொண் டிருந்த திரு. பொ. பூலோகசங்கம் அவர் கள் மூலம் அக்கையன், கலாநிதி சு. வித்தி யானந்தன் அவர்களை அணுகி தம் பிரச் சனையை எடுத்துரைத்தாா. வாயில் சுங்கா னுடன் கேட்டுக் கொண்டிருந்த கலாநிதி உடனடியாக அப்பிரச்சனையைத தீர் த து வைப்பதாக வாககளிததார். ஒருவார முடி விறகுள் அங்கையன் முழு உபகாரச் சம் பளம் பெற்று, பல்க்லேக்கழக மாணவராகி, தமிழிலும கழப்புப்படடம பெற்று சிறந்த படைபபாளியாகவும மாறிஞர் எ ன மு ஸ் அதற்கு முழுக்காரணம் க லா நிதி யின் "மனிதம் தான.
1961-ம் ஆண்டின் நடுப்பகுதி. விடு முறைக் காலம்; எனது இல்லம் \பேராதன யில் இருந்ததால், எனது பெரும் பொழுது பல்கலைககழக நூலகத்தலும், وارنة هلك طلالها تقدم யிலும் கழதது கொண்டிருநதது. ஒரு திான் வழியில் எனனக் கணட கலாநித அவர் கள் தனது காரில் ஏறறிக்கொணடு செல் ஆலும் போது கூறுகிருர்.
'தினகரன் ஆசிரியர் க. கைல்ாசபதியை
எங்கள தமிழ்ததுறைக்கு கொணடுவர முனே
கிறேன். அதற்கான ஆயததங்களில் ஒடித் திரிகிறேன்."
* ஏன் தினகரன் வேலையை விடுகிருர் "
"அவர் விடாட்டி.சிலசமயம் நிர்வாக மே விடச்சொல்லும் போல கிடக்கு. அர சியல் கொள்கை காரணம்: அது தா ன் எங்கள் துறைக்கு எடுத்தால் - தமிழதுறைக் கும் ஒரு நல்ல ஆள் கிடைககும என் மாணவனுக்கும் உதவி செய்த தாகவும் இருக்கும். - நான் அவரை வியப்புடன் பார்க்கிறேன். தன் முன்னுள் மாணவனின் வருங்காலம் பற்றி அக்கறையுடன் சித்தித்து அதற்கான வழிவகைகள் மேற் கொண்ட

Page 92
- 2
குரு வின் பண்பில் கலந்து கிடந்தது மா னிட நேயமல்லவா?
அறுபதுகளின் ஆரம்பத்தில் இலக்கியத் தில் எழுத்த கலைக்கொள்கைப் பிரிவினைகள் பல்கலைக் கழகத்தில் பயங்கரமாக எதிரொ வித்தது. விரிவுரையாளர்களிலும் பிரிவினை; அவர்களின் அன்புக்குரிய மாணவர்களும் இதனல் குழு’ தியிைல் செயற் படத் தொடங்கினர்.
அப்போது தமிழ்ப்பாடத்தை விசேடத் துரையாக எடுத்துப் படித்துவந்த க. தவ சோதி அவர்கள் எப்படியோ கலாநிதி அவர்களின் மறு மகாமில் இருந்தார். இதஞல் ஏற்படக்கூடிய பிரச்சனைகளின் காரணமாக தவசோதியின் பேச்சுக்களும், செயல்களும் கலாநிதிக்குப் பெரும் மனத் துன்பத்தை விளைத்து வந்ததை நாம் எல் லாரும் அறிவோம். ஆனல், ஒருமுறை தவ சோதி அவர்கள் வேறு யாரையோ பழி வாங்க வேண்டு மென்பதற்காக செய்த செய்கை பட்டதாரி மாணவ உலகையே ஸ்தம்பிக்கச் செய்தது. "நிச்சயம் நவசோ திக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற் றம்தான்! எங்களால் எதுவுமே செய்யமுடி யாது? என்று தான் கலங்கியிருந்தோம். என்ன நினைத்தாரோ நவசோதி, நேராக கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்கள் முன் னிலையில் போய் வாய் பேசாது நின்ருர்,
இப்படியான நேரத்தில் தான் எங்களை ஞாபகம் வருகிறது. மற்ற நேரங்களில் . . சரி. சரி . நீ கவலைப்படாமல் போ. இனி மேலாவது குழப்படிசெய்யாமல் போய்ப்படி"
இன்று திரு. க. நவசோதி ஒரு எம். ஏ. தமிழ்ப்பட்டதாரி: உயர்தர உத்தியோகத் தர்; குடும்பத்தலைவர்.
அன்று மன்னிப்பு வழங்கும் மானிடப் வண்பு ஓர் உயர்தர தமிழாய்வாளனை தமி ழுலகுக்கு அளித்தது.
கலாநிதி அவர்கள் எவர் சொல்வதை
யும் இலகுவில் நம்பிவிடுவார். இள கிங் இதயம் கொண்டவர். இதனுல் இவர் பல

سس- O
வேளைகளில் தம் மாணவர் பலரையே சந். தேகித்தாலும், உண்மையை உணர்ந்ததும் அதற்குப் பிராயச்சித்தமாக ஏதும் செய்து மனச்சாத்தி யடைபவர்.
ஒருமுறை இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியர் பொறுப்பிலிகுந்த அமரர் செ. கதிர்காமநாதனுடன், கதிரில் இடம் பெற இருந்த ஒரு கட்டுரை விடயமாக பேராசி பருக்கும் அமரருக்கு மிடையில் பலத் த போராட்டமே நிகழ்ந்தது. கட்டுரை பனே பெயரில் எழுதப்பட்டிருந்தாலும், அதிலிடம் பெற இருத்த கசப்பான விடயங்களை முன்பே அறிந்திருந்த இன்னுெரு விரிவுரையாளர், அக்கட்டுரையை பற்றி போராசிரியரிடம் எதுவோ கூறி, அச்சாகிக் கொண்டிருந்த அக்கட்டுரையை வெளிவராமல் பார்த்துக் கொண்டார். ஆணுல் துரதிஷ்டவசமாக அக் கட்டுரையை எழுதியிருந்தவர் ஆசிரியரான அமரர் செ. கதிர்காமநாதனே. அக்கட்டுரை விடயத்திக்கும் பேராசிரியருக்கும் எந்தவித தொடர்புமில்லை. ஆனலும் ஏன் அவர் அப் படிச் செய்வான்? - என்று அமரர் செ. கதிர் காமநாதனுக்கு தார்மீகக் கோபம். அதனுல் அக்கட்டுரையை எப்படியோ மீண்டும் அச் சில் பதிப்பித்து விட்டார். அன்றிலிருந்து பேராசிரியருக்கு செ. கதிர்காமநாதன் மேல் சற்றுமனத்தாபம் தான். ஆளுல், கதிர்காம நாதன் பட்டம் பெற்ற பின் வாழ்க்கைச் சுமைகளாலும், வேலையில்லாத் திண்டாட் டத்தாலும் சில ஆண்டுகள் அல்லலுற்ற, பின் கடைசியில் பேராசிரியரை சென் றடைந்து மன்னிப்புக் கோரி தின்ருர், அதன் விளைவு -
எழுத்தாளர், அமரர் செ. கதிர்காம நாதன், இலங்கைத் தேசிய தினசரிக ளிலொன்ருகிய "வீரகேசரி ஆசிரியர் குழு வில் பதவி பெற்ருர், பிறகு நான் கதிர்காம நாதனை சந்திக்கும் போதெல்லாம் பேராசி ரியரின் மன்னிப்பு மனப்பான்மையையும், உதவிசெய்யும் பண்பினையும், அதே வேளை யில் அவரின் இளகிய மனத்தை எத்தனையோ புல்லுருவிகள் களங்கப்படுத்தி அவரைப் பிரச்சனைக்குரியவராகவும் ஆக்கிவிடுகின்ற னர் என்று கூறிப் பெருமூச்சுவிடுவார்.

Page 93
=ع ہے مسست۔
இதேபோன்று தவருண எண்ணம் கொண்டு இக் கட்டுரையாசிரியனுக்கும், பேராசிரியருக்கு மிடையே மெல்லிய ‘இலக் கிய ஊடல் காரணமாக 'மெளன கலகம்" நிகழ்ந்து கொண்டிருந்தவேளை. 'குழுப் போராட்டமும் காரணம்தான். இலக்கியம் என்று சொல்லி இலக்கியம் அல்லாத காரணங்களுக்காகவே பெரும் பொழுதைக் கழித்துச் சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம். இதற்கெல்லாம் காரணம் இன் ணுெரு தமிழ் விரிவுரையாளரே. அவர் தனக்குப் பிடிக்காதவர்கள்மேல் பேராசிரி ரியர் போன்றவர்களிடம் தவருன தகவல்களை வழங்கி, பேராசிரியரை இக்கட் டுக்குள் மாட்டிவிடுவார். (இது என்பார் வையில்; பேராசிரியர் என்ன நினைக்கிருரோ நான் அறியேன்) இதனுல் வழியில் சந்தித் தாலும் பாதைமாறிச் சென்றுவிடுவது, பார்க்காததுபோல் நழுவுவது, என்பது என் வழக்கமாயிற்று.
அப்போது நான் "விஜயவர்த்தன விடுதி மாணவன். விடுதி வார்டன் ப்ேரா சிரியர். புதுமாணவர்களின் வருகையும் வழக்கம் போன்ற "ராகிங்" முயற் சிகளுமாக கோலாகலிக்கும் வேளை, "ராகிங்’ செய்பவர்களுக்குத் தண்டனையாக உபகார நிதி தடைசெய்யப்படும்’ விரிவுரைகளிலி ருந்து ஒரு தவணை ‘சஸ்பென்ட்' செய்யப் படும் என்று சுற்றறிக்கை உலாவருகிறது பல்கலைக்கழகதுணைவேந்தரிடமிருந்து ஆணுல்
இள இரத்தம் கொண்ட நாங்கள் புறக்க ணித்து இன்பம் காண்கிருேம். ராகிங்’ குழுவில் முக்கிய சீனியர் நான். இரவு ஏழு மணியிருக்கும். எனது விடுதியறையில் என் னுடன், தமிழை விசேடமாகப் பயிலும் அங்கையனும் இருக்கிருர், புதிய மாணவர் இருபதுக்கும் மேல் பலவித கோலங்களில் ஆடைகளுடனும், அரைகுறை ஆடைகளு டனும். இன்று மனம் கூசும் சித்திரவதை கள்தான். ஆனலும் அன்று வேண்டியிருந் ததே. சென்ற ஆண்டில் நாம் அனுபவித்த துன்பத்தை இவர்களுக்கு வழங்கி ஒரு பாரம்பரியத்தை வளர்க்க வேண்டாமா?
திடீர்ென அறைக்கதவுதட்டப்படுகிறது. நான் போய்க் கதவைத் திறக்கிறேன்.
18

2 -
வெளியே பேராசிரியர் நிற்கிருர். அவர் பார்வை புதியவர்கள் மேலும், அங்கை யன் மேலும் செல்கிறது. என்னைப் பார்க் காத பாவனை.
"சீனியர் ரூமில உங்களுக்கு என்ன வேலை? புதியவர்களை நோக்கிச் சீறுகிருர்.
'. இல்லை சீனியர்கள் அறிமுகம் செய்து கொள்வதற்காக நாங்களே வந் தோம்! நாம் ஏற்கனவே சொல்லிக் கொடுத்த பாடம். கிளிப்பிள்ளைகள். நிச்ச யம் பட்டத்தோடுதான் வெளியேறுவார்
&G叛了。
"என்ன செய்கிருய்? இதா உன்ர அறை அங்கையனிடம் கேட்கிருர். அவர் பதில் சொல்லாமல் தலை குனியவும், பளி ரென ஒருஅறை விழுகிறது கன்னத்தில்.புதிய வர்களுக்கும் கைக்குக் கிடைத்தவர்களுக் கும் அறைதான்.
எல்லோரும் ஒடி மறைகிருர்கள்.
ஏற்கனவே முகலோபனம் சரியில்லை. இப் போது கையும் களவுமாகப் பிடிபட்டு , உபகாரச் சம்பளம் போகப்போகிறது . ஆறுமாதம் பல்கலைக்கழகத்துக்கு வெளியே . வீட்டில் ஏச்சு நண்பர்களின் இரக்கம் . எதிர்க்குழாமின் உற்சாகம். எல்லாம் மனக்கண்ணில் சித்திரம் தீட்டுகின்றன.
டின்னருக்கு மணி அடிக்கிறது.
பேராசிரியர் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு டைனிங் ஹோலே நோக் கிப் போக, நானும் அறையைப் பூட்டிக் கொண்டு டைனிங் ஹோலுக்குப் போகி றேன்.
சாப்பாடு இறங்கவில்லை. "ஹெட்டே பிளில் பேராசிரியர், சாப்பிட்டதாக பாவ னைசெய்துவிட்டு, டைனிங் ஹோலுக்கு முன்னுல் உள்ள விசிட்டர்ஸ் ஹோலுக்குப் போகிறேன்.

Page 94
பேராசிரியர் என்னை நோக்கி வருகிருஜர், நான் அதிர்ந்து எழுகிறேன். என் பலவீனம் அவருக்குப்புரிந்திருக்க வேண்டும். அவரே பேசுகிருர்,
* ஃபிறெசேர்சை ஆரம்பத்திலேயே அடக்கி வைத்தாத்தான் நல்லது. இல்லா விட்டால் கஷ்டம், உங்கட ராகிங் காணுது.”* என்று சிரித்துக் கூறிவிட்டு எனது பதிலை யும் எதிர்பாராமல் செல்கிருர்.
என் கலக்கம் பறந்தோட, அவர் செல் லும் பாதையைப் பார்த்துக்கொண்டிருக்க பேராசிரியரின் புதிய பரிமாணம் தென்படு வதுபோல .
என்னை நோக்கி வந்த நண்பனிடம் நான் விபரம் கூற அவர் பதில்
*அதுதான் மச்சான் வித்தி!"
வேலையில்லாப் பட்டதாரியாக "கசெட்” டும் "அப்பிளிக்கேசனுமாக அலைந்த நாட் கள். நான் புவியியல்பட்டதாரி ஆனல் ஒரு விண்ணப்பத்துக்கு தமிழறிவு பற்றிய சான்றி தழ்தேவையாக இருந்தது. -
நண்பன் ஒருவன்சொன்னன் வித்தி யிட்ட கேள் தருவார்’ ஆணுல் பேராதனை போய் பெற்றுவரவோ இன்டர்வியூகுச் செல்லவோ முடியாத வேறுபல வேலைகளும் நெருக்கடியும் - பணமின்மையும்.
"அப்ப ஒரு கடிதம் கேட்டுப்பார்!’- உறுதியாகச் சொன்னன்.
"கரக்டர் சேட்டிபிக்கட் அனுப்பு எண்டு எப்படி எழுதுவது. அதுவும் மரியா

22 -
தையில்லை. அதோட அவ்வளவு உரிமையா கக் கேட்கும் நட்புமல்ல: நானும் தமிழ்த் துறை மாணவனுமில்லை' என்று தயங்க, நண்பன் தூண்டலால், கடிதம் போடு வதில் என்ன நஷ்டம் வந்துவிடப் போகி றது என்று எழுதி அனுப்பினேன்.
என்ன ஆச்சரியம், கடிதம் போட்ட மூன்ருவது நாளே - நான் கூருமலே என் சுயவிபரக் கொத்துக்களுடன் கூடிய அற்பு தமான நீண்டதொரு சான்றிதழ் என்னை
வந்தடைந்தது,
பேராசிரியர் மலையாக உயர்ந்தார்.
மனிதனையும் அவனது பிரச்சனைகளை யும், அவனது சூழ்நிலைக் கைதித் தன்மைக ளையும் நன்கு புரிந்துகொண்டு விட்டால் உலகில் எல்லாரும் நல்லவரே. நண்பர்களே.
பேராசிரியரின் இத்தகைய நற்செயல் கள் எனக்கு உளவியல் கல்விமூலம் பெறும் அறிவினைவிட அனுபவ அறிவாகி என் மாணவரிடம் எனக்கு நல்ல பெயரை வாங் கித் தருகிறது.
எனது அன்பின் காணிக்கையாக, பேராசிரியர் முன்னர் "ரீடராகப் பதவி உயர்ந்தபோது, திருகோணமலை இலக்கியக் கல்வட்டத்தின் சார்பாக, அதன் தலைவன் என்ற முறையில் அவரை அங்கு வரவ ழைத்து நகரே மெச்சும் வண்ணம் பெரு விழா எடுத்தும் ஏனைய உயர் பாடசாலைக ளுக்கு அழைத்துச் சென்று கெளரவித்தும்அவரது மனிதாபிமானத்தைப் பாராட்டி, என் மனிதத்தினனையும் காட்டிக்கொண் டேன்.

Page 95
தூண்டு சுடர் . . .
கல்வயல் வே. குமாரசாமி
சுந்தரச் செந்தமிழ் சொக்க வைக்கும்
மந்திரம்போற் பகி வம்புகளால் மயக் சொந்தம் அவன் தூய்மை நிறை தி எந்த வகைகேட்ட அனைத்தையுமே ெ
நுண்மைகளை ஆரா பலதோய்ந்து திற உண்மையுறை சிந் ஆராய்ச்சி வற்ரு கண்ணிரண்டாய்
கவிஞர்ந்த கீர்த்தி எண்ணரிய புகழா பெருமை கொண்ே
அண்ணுவிமார் அ அழகுமிளிர் நாட்( கண்ணுர மக்களெ களிகூர்ந்து சுவை பண்ணுத காரியத் முன்நின்று பார்த் விண்ணுர்ந்த பழ கற்றுணர்ந்த விற
நாடகத்தை நை கிராமிய நாட்டுக் தேடரிய செல்வங் நீங்களிதை என்று பாடறிய வைத்த பழமையிலும் பு நாடறிந்த பேரன் மிகமலிய வாழ்த்

பெற்ற சு. வித்தியானந்தன்
டி விடும் மா ஆசான் ந வல்லோன் திறமையெலாம் உலகிற்குத் றந்த நெஞ்சன் ாலும் இதயமுதல் காடுக்கும் அன்பன்
ாய்ந்து நுணுக்க நெறி மை கூர்ந்த தனக்கோர் தூண்டுசுடர் ஊற்றுக் கலைஞானம் கொண்டொளிரும்
மிக்கோன் ளன் எம் வித்தியானந்தன் டோம்.
ணைப்பில் கண்துயின்ற நிக் கூத்தைக் லாம் கண்டுமனம் க்க யாரும் தைத் துணிந்து வந்து து வைத்தோன் தமிழை முழுதநிந்து ல்சேர் வேந்தன்
கமழுஞ் செந்தமிழை
கூத்தை கள் தெரிந்திடுக
மேன்மைப் வன் பேராசிரியன் 1மை காணும் பர் நலம்பலவும்
கின்ருேம்

Page 96
இளையதலைமுறையினர்க்கும் குலத்தோர்க்கும் கல்கள் விண்யும் பல்கலைக்கழக வி Dorpió al Muri 65 "Fuorr6) அளப்பரிய நிலாவரைபோல் துணைவேந்தராய் விளங்கும் தளம்பாத தனித்தலைவன் என்றும் தழைத்து வாழி
"இன்றைய சூழ் நிலையில், முன்பு போ விவசாயம் மூலம் மானத்துடன் வாழ வழ எம்மை விற்று எம்முடைய பொருளாதார ஈற்றில் அழிவையே தகும். அரசியல் வேட மாறும் அரசாங்கங்களின் விருப்பு வெறுப் நேரம் கடை தீக்கிரையாகும் என்று எப்ெ என்றும் மன அமைதியுடனும் செல்வப் ெ தமிழரின் பொருளாதார நிலையைச் செவ்வி தங்கியுள்ளது. ஒவ்வொரு தமிழ் மகனும் காக்க உடுப்பதற்கு உடையும் பெறுமளவி போமாயின், அதுவே வேண்டற்பாலது."
- 1963 தினகரன் பொங்கல் மல்ருக்

24 -
இனிய தமிழ்க்
ற்க
$தாக
அனைவர்க்கும்
வித்தியானந்தன்
“லக் காணி பூமியைத் திருத்திப் பண்படுத்தி வெகுத்தல் வேண்டும். மாற்ருன் அருள்நாடி த்தை உயர்த்த முயலும் போலி முயற்சி ட்டையிற் சிக்குண்டு நாழுக்கு நாள் தோல் புகளிலே தங்கி, எந்நேரம் அடிவிழும் என் பாழுதும் ஏங்கிக்கொண்டிராது, தமிழினம் பெருக்குடனும் வாழத் திட்டம் வேண்டும். னே அமைப்பதிலேயே தமிழரின் வருங்காலம் பசி ஆற, உண்பதற்கு உணவும், மானங் ற்கு ஒரு பொருளாதாரத் திட்டம் வகுப்
ர எழுதிய கட்டுரையிலிருந்து.

Page 97
“வித்தி' - ஈழத்தமிழரி
*எஸ்தி”
யாழ். பல்கலைக் கழக த் தி ன் துணை வேந்தர் பதவியைக் கடந்த ஐந்தாண்டுக ளாக அலங்கரித்து வருபவர் பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தன்.
இப் பெரியாரின் அறுபதாவது பிறந்த நாள் விழா மே மாதம் எட்டாம் திகதி யாகும்.
பேராசிரியரின் மணி விழாவை பெரு விழாவாகக் கொண்டாட யாழ்ப்பாணம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
இவ்வாரம் ஆரம்பமாகும் மணி விழாக் கொண்டாட்டங்கள் அடுத்த ஒரு வருட காலத்துக்கும் தொடர்ச்சியாக நடைபெறு வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமது பணியினை ஆரம்பித்து, பேராதனைப் பல்கலைக் கழக தமிழ்த் துறைத் தலைவராக சேவை புரிந்து, தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகத் துலங்குபவர் பேராசிரியர்.
லங்கையில் துணைவேத்தர் பதவியை வகிக்கும் ஒரே ஒரு தமிழர் இவர்தான். இப்பதவியை வகிக்கும் முதலாவது தமிழ ரும் இவர்தான்.
தமிழ்ப் பணிக்கென்றே தமிழக முதல் வர்ால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தஞ்சா வூர்ப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப் பினராகவும் பணிபுரியும் பேறுபெற்றவர் எங்கள் பேராசிரியர்.
ஐந்து நாடுகளில் நடைபெற்ற ஐந்து அனைத்துலக தமிழாராய்ச்சி மாநாடுகளிலும் கலந்து கொண்ட ஒரேயோர் இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியரே.
தமிழர் தலைநகராம் யாழ்நகரில், தமிழ் மனம் கமழ நான்காவது தமிழாராய்ச்சி

மாநாட்டை நடத்திப் பெருமை பெற்றவர் Gl ng frgahuli.
இன்றைய பல பே ரா சி சியர்களுக்கு இவர் பேராசான்.
இன்றைய பல பத்திரிகை ஆசிரியர் களுக்கு இவர் பேராசான்.
இன்றைய பல ப ல் துறை அறிஞர் களுக்கு இவர் பேராசான்.
இவரது பணிகளைப் பல் வகைகளாகப் பகுத்துப் பிரிக்கலாம், பிரித்து ஆராயலாம், ஆராய்த்து கட்டுரைகள் எழுதலாம். கல்விப் பணி, சமூகப்பணி, சமயப்பணி, கலைப்பணி கலாசாரப்பணி. இலக்கியப்பணி, ஆய்வுப் பணி, தமிழ்ப்பணி, இனப்பணி என்று இப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். ஆணுல் அவர் பணிகளைக் குறுக்கிவிட முடி யாது
விபுலானந்தர் பரம்பரையில் உதித்து, பேராசிரியர் கணபதிப்பிள்ளை பரம்பரையில் வளர்ந்து, தமக்கென ஒரு பரம்பரையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.
மாணவர் முதல் சக பேராசிரியர்கள் வரை அனைவராலும் "வித்தி’ என்று அழைக் கப்படுபவர் பேராசிரியர் வித்தியானத்தன்.
பல நூற்றுக்கணக்கானவர்களின் நல் வாழ்வுக்கு வித்திட்டவராகையால் இவர் "வித்தி" ஆகியிருக்கலாம்.
இவ்வாறு பல பெருமைகளுக்கும், புக ழாரங்களுக்கும் நாயகனுகத் திகழும் பேரா சிரியர் வித்தியானந்தனுக்கு மணி விழா என்னும்போது ஒரு புறத்தே மகிழ்வடை யும் வேளை, மறுபுறத்தே அவருக்கு அறுபது வயதாகி விட்டதே என்று கவலையடையா
மலிருக்கவும் முடியவில்லை.

Page 98
தோற்றத்தில் இளைஞராகவும், நிர்வா கத்தில் 'அறுபதை எட்டிப் பிடித்துவிட்ட வராகவும் விளங்கும் “வித்தி’யின் மணிவிழாக் கொண்டாட்டங்கள் இவ்வாரம் ஆரம்பமா கின்றன.
மூதலாவது விழா - அறுபதாண்டுக்குக் கட்டியம் கூறும் விழா-இம்மாதம் 12ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் காலை ஒன்பது மணிமுதல் பெருவிழாவாக மணிவிழா நடைபெற ஒழுங்காகியுள்ளது.
பல்கலைக்கழக பிரமுகர்கள், கல்விமான் கள், இலக்கிய வாதிகள், அரச அதிகாரி கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாராட் டுரை வழங்கவுள்ளனர்.
விழாவின் சிறப்பம் சமாக மணி விழா மலர் வெளியீடும், வித்தியானந்தம் என்ற நூல் வெளியீடும் இடம்பெறும். பேராசிரியர் பற்றி இருபத்தைந்துக்கும் அதிகமான பல்துறைப் பிரமுகர்ளால் எழுதப்பட்ட கட்டு  ைர சுளும், பெரி யார்களின் செய்திகள், வாழ்த்துரைகளும் மணிவிழா மலரில் இடம்பெறுகின்றன.
பேராசிரியரால் இதுவரை எழுதப்பட்ட ஐநூறுக்கும் அதிகமான கட்டுரைகளிலிருத்து தெரிந்தெடுக்கப்பட்ட சிறந்த பத்துக் கட் டுரைகளைக் கொண்ட தொகுப்பு நூலாக 'வித்தியானந்தம் உருவாகியுள்ளது.
பல வெற்றி விழாக்களைக் கட்ந்த இரண் டாண்டுகளில் நடத்திப்பெருமைபெற்ற கலை இலக்கிய பத்திரிகை நண்பர்கள் அமைப்பே பேராசிரியரின் மணி விழாவையும் தடத்து கின்றது.
இதனைத் தொடர்ந்து, பேராசிரியர் வித்தியானந்தன் பிறந்து வளர்ந்த அவரது சொந்த ஊரில் அடுத்த விழா நடைபெற வுள்ளது.
(மறுபிரசுரம் - தினகரன் 6uעיחr

6 -
அவரது மூதாதையரால் ஸ்தாபிக்கப் பட்ட வீமன்காமம் மகா வித்தியாலயத் தில் இவ்விழாவை நடத்த ஊர் மக்கள் ஒழுங்குகளைச் செய்து வருகின்றனர்.
இவ்விழாவிலும் பேராசிரியர் பற்றிய சிறு நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பேராசிரியரின் நன் மாணுக்கர்களில் ஒரு வரான அதிபர் த. சண்முகசுந்தரம் எழுதி புள்ள 'கலை மகிழ்நன்' (இது பேராசிரிய ரின் புனைப்பெயர்களில் ஒன்று) என்ற நூல் இவ்விழாவில் வெளியிடப்படும். - - - -
பேராசிரியரின் நாடகப் பணிகளை விளக் கிக் கூறும் நூலொன்றைக் கலைப்பேரரசு ஏ. ரி. பொன்னுத்துரை இப்போது எழுதி வருகின்றர்.
'அரங்கு கண்ட துணைவேந்தர்’ என்பது இந்நூலின் பெயராகும். இதன் வெளியீட்டு விழா குரும்பசிட்டியில் தடைபெறும்.
இதுமட்டுமன்றி, கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் வெளியீடாகப் பேராசிரியரின் வாழ்க்கை வரலாற்றைப் பெரு நூலாக வெளியிட மு ன் வந்து ஸ்ளார் எஸ். எம். ஹனிபா அவர்கள்.
இஸ்லாமியத் துறைக்கு பேராசிரியர் ஆற்றிய பணிகளை ம ன தி ற் கொண்டு ஹனிபா அவர்கள் இம் முயற்சியை எடுத் துள்ளார்.
பேராசிரியர் அ. சண்முகதாஸ் இந் förrådbu எழுதியுள்ளார்.
உலகத் தமிழர் அனைவருக்கும் சொந் தமாக விளங்கும் பேராசிரியரின் மணிவிழா, உலகில் தமிழர் வாழும் இடமெங்கும் நடை பெற் வேண்டும்.
ஈழத்தமிழர்களின் புத்தியாக விளங்கும் *வித்தி", மேலும் பலவெற்றி விழாக்களைக் காண வாழ்த்துவோம்! ஞ்சரி "அறுவடை' 6-5-84)

Page 99
வளத்தாள் வா!
பேராசிரியர் சு. வித்திய
'கலை இலக்கிய பத்திரிை
 

ழ்க்கைத் துணை
ானந்தன் மணிவிழாமலர்
நண்பர்கள்” வெளியீடு

Page 100


Page 101
நன்றி மறவேல்!
* பேராசிரியர் வித்தியானந்தனுக்கு மணி
இது ஒரு சாதாரண செய்தியல்ல; தே அலங்கரிக்கின்ற செய்தி இது.
அவரின் நண்பர்கள், அன்பர்கள் ஒருவ விழா' பற்றியே பேசுகின்றனர்.
இதற்குக் காரணம் என்ன?
பேராசியர் ஒரு தனிமனிதனல்ல; அவர் ரியர் இப்போது தமிழினத்தின் சொத்த காரணம்.
பேராசிரியரின் மணிவிழாவை நாம் ஒ வாகக் கொண்டாடுகின்ருேம். இதனை எங் எண்ணிச் செயற்படுகின்ருேம்.
விழாவின் வெற்றிக்கு என்னென்ன வேண்
கட்டுரைகள் வந்து குவிந்தன; வாழ்த்து யான பணம் தேடி வந்தது; ஒத்தாசை வந்தனர். ܡ
யாரைக்குறிப்பிடுவது: யாரைக் குறிப்பிடா மண்டப ஒழுங்கிலிருந்து, மணிவிழா இ டத்திலும் எம்முடன் நின்று உதவியவர்கள்
திருவாளர்கள் த. சண்முகலிங்கம், க. யம் (சட்டத்தரணி), ஆர். இராசலிங்கம், ஆகியோர் குறிப்பிட்டுச் சொல்லப்படவேண்
பல்வேறு அச்சக வேலைகளில் துணை புரி சாலை, யாழ். ஞானம்ஸ் ஸ்ரூடியோ, தெல் ஆகியவற்றின் நிர்வாகிகள்.
மணிவிழாவுக்குத் தேவையான நிதியை வ
எஸ். கே. மனுேகரபூபன் திரு. வி. எஸ். துரைரா, திரு. மு. பொ. வீரவாகு

Gypro”
சிய நாளிதழ்களின் முதற் பக்கத்  ைத.
வரையொருவர் சந்திக்கும் போது 'மணி
ஒரு குடும்பத்தின் சொத்தல்ல; பேராசி ாக விளங்குகின்ருர். அதுவே இதற்கு க்
வ்வொருவரும் எங்கள் வீட்டு மணவிழா கள் இல்லத்தின் ஒரு மங்கள விழாவாகவே
டும்?
ச் செய்திகள் பறந்து வந்தன; தேவை
உதவிக்கு நண்பர்கள் தாமாகவே முன்
"மல் விடுவது?
றுதி நிகழ்ச்சி வரைக்கும், ஒவ்வொரு கட் ir il u Gabri
கனகராஜா, ஜே. பி, இ. பாலசுப்பிரமணி ஆர். அம்பலவாணர், எஸ். டி. தியாகராஜா ண்டிய வழிகளில் உதவியவர்கள்.
ந்தவர்கள் யாழ். பூபாலசிங்கம் புத்தக லிப்பளை பலநோக்கக் கூட்டுறவுச் சங்கம்
ரையாது வழங்கிய வள்ளல்கள்:
தம்பதிகள்
ஜா
5

Page 102
திரு. கே. ஜெயபாலசிங்க திரு. எம். கிரிதரன் ஜே. திரு. வி. சிவலோகநாதன் திரு. எஸ். சோதிநாதன்
திரு. மு. பத்மநாதன் ( திரு. ஏ. விக்டர் இமானு திரு. வேலணை என். வீர திரு. வி. ஆர். வடிவேற்கி திரு. எஸ். கணபதிப்பிள் திரு. எஸ். சுப்பிரமணியட் திரு. ரி. எஸ். மகேந்திர6 திரு. ஆர். ஜே. குணரத்தி
மலருக்குக் கட்டுரைகளை வழங்கிய பேரறிஞர்
வாழ்த்துச் செய்திகளை வழங்கிய பெரியார்ச
விழாவின் வெற்றிக்கு உறுதுணையாய் நின், தினகரன், ஈழநாடு, ஈழமுரசு, பத்திரிகைகள்
இலங்கை வாைெலி கமிம்ச்சேவைப் பணி
லை தமழசச்
'வித்தியானந்தம்’ தொகுப்பு நூலைத் ஈழமுரசு அறிவூட்டக நிர்வாக அதிபர் திரு
விழா ஏற்பாடுகளில் எம்முடன் இணைந் திரு. கே. டானியல்,
நிமிடத்துக்கு நிமிடம் எமக்கு ஆலோசனை படுத்திய எமது காவலர் திரு. இ. சிவகுரு
மலரைக் குறுகிய காலத்துள் அழகுற அ யர்கள், நிர்வாகிகள் ஆகியோர்,
என்றும் எங்களின் நனறிக்கு உட்பட்டவ
*கலை இலக்கிய பத்திரிகை நண்பர்க்

b
பி. (விமாகி) " (ஆர்த்தி)
(சீமாட்டிர் றிக்கோ) வல். (விக்டர் அன் சன்ஸ்) சிங்கம் (பிறவுண்சன்) 5ரசன் ள (சயன்ஸ் அகடமி) ம் (மணியம்ஸ்) ன் (பெனின்சுலா குறுரப்) தினம் (சீமா சில்க்) ஆகியோர்
கள், கல்விமான்கள், பத்திரிகை ஆசிரியர்கள்
கள்,
று உதவி வழங்கிய தினபதி, வீரகேசரி, வின் பிரதம ஆசிரியர்கள்,
ப்பாளர்,
தம்பங்காக அச்சேற்றி வெளியிடும் த. காவலூர் ம. அமிர்தலிங்கம்,
ந்து செயற்பட்ட எழுத்தாள நண்பர்
கள் வழங்கி, எம்மைச் சரியாக நெறிப் நாதன்,
ச்சேற்றித் தந்த அபிராமி அச்சக ஊழி
iartei l
(T

Page 103


Page 104
ူ၏ \ ് " . * ༢ ༣་
ܐܕܬܐ 16 ܗ ܕ ܢ . ܗܘ܂ 4 ܬܐ s * * اقبال بھی بھی مم
-
u" ،rم
அச்சுப்பதிவு: அபிராமி அச்சகம், 17B
 

19 ܘܠܐ ܗܘܝܢ
ہ*کھیے
ஜூசம்மா மொஸ்க் லேன், யாழ்ப்பாணம்,
_-- —