கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிட்டுக்குருவி (கவிதைகள்)

Page 1


Page 2

சிட்டுக்குருவி
- கவிதைகள்
நவாலியூர் சு. சொக்கநாதன் வி. கந்தவனம் ஈழவாணன்
தி பார்க்கர் 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம் இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600 014.

Page 3
சிட்டுக்குருவி
நவாலியூர் சு. சொக்கநாதன் வி. கந்தவனம்
ஈழவாணன்
C) ஆசிரியர்
முதற்பதிப்பு : பக்கம் : 64 பிரதிகள் :1200
பதிப்பு :
தி பார்க்கர் 293, அகமது வணிக வளாகம், இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014.
விலை: 50.00
வடிவமைப்பு :
வே. கருணாநிதி
அச்சிட்டோர்:
தி பார்க்கர் 293, அகமது வாணிக வளாகம்,இரண்டாவது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை, சென்னை - 600 014. தொலைபேசி: 28215684, 28203983:

பதிப்புரை
இன்றைக்கு நான் ஆஸ்திரேலிய நாட்டில் குடியேறி வாழ்ந் தாலும் ‘மாத்தளைசோமு’ என்ற பெயரில் தான் தொடர்ந்து எழுதி வருகின்றேன். ‘மாத்தளை’ என்பது நான் பிறந்த ஊர். இவ்வாறு பிறந்த ஊரில் பெயரைத் தாங்கிய பெயரோடு எழுது வது என்பது சங்ககாலத்தில் இருந்து தொடர்ந்த ஒரு வழக்கம். எனவே விரும்பியே “மாத்தளைசோமு’ என்ற பெயரைத் தாங்கிக் கொண்டேன்; இதனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை; ஆனால் தமிழகம் வரும்போதெல்லாம் சிலர் மாத்தளை என்பது இலங்கைப்பெயர் என்ற நோக்கில் யோசிக்கிறார்கள். "எதற்கோ’ பயந்து சிலர் நான் கலந்துகொள்ளும் இலக்கிய கூட்டங்களில் எனது பெயரைப் போடுகிறபோது ‘மாத்தளையை எடுத்துவிட்டு ‘சோமு’ என்று மட்டும் போடுகிறார்கள் - என்னைக் கேட்காமலே! அதற்கு அவர்கள் சொல்கிற காரணம் அவர்களின் பார்வையில் சரியானது. ஆனால் எனக்கு அது ஏற்புடையதாக இருக்கவில்லை; அதற்காக நான் கோபப்படவில்லை. ஆனால் இந்த சமூகம், பாரதி மொழியில் சொன்னால் இந்தத் தமிழ்ச்சாதி, இப்படியெல்லாம் பலவீனமாக இருக்கிறதே என்று நான் கவலைப்படுகிறேன்.
மாத்தளை என்பது ஒர் ஊர். அழகிய தோட்ட நகரம். ஒரு பக்கம் தேயிலையும் இன்னொரு பக்கம் பால்கொட்டும் ரப்பர் மரமும் வாழும் பூமி, தேயிலைக்கு தேவை மழை, ரப்பருக்கு தேவையற்றது மழை. இந்த இருவேறு காலநிலையை எல்லை களாகக் கொண்ட ஊரே மாத்தளை. இதற்கு மேல் இவனைப் பிறப்பிக்க வைத்த ஊர். இந்த ஊரின் பெயரை நான் என் பெயரோடு வைத்திருப்பதால் சில இலக்கிய நண்பர்கள் ‘மாத்தளை’ என்ற நகருக்கு பெருமை, என்பார்கள். ஆனால்
“மாத்தளை’ என்ற பெயரை எனக்கு முன்பே பெருமையாக
5

Page 4
சிட்டுக்குருவி
அடையாளப்படுத்திய பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள் இருந்தார்கள் என்ற தகவலே அவர்களுக்குத் தெரியாது.
மலையகம் என்ற இயற்கை கட்டிய மாளிகையின் முதல் வாசல் மாத்தளை நகரம். ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழர்கள் முதலில் குடியேறிய இடம் இந்நகரே. பிறகு வெள்ளையரின் ஆட்சியின் போது யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட காலரா நோயின் அழிவில் இருந்து தப்பிக்க அதிகாரிகளுக்கு லஞ்சம்’ கொடுத்து ஓடிவந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் (சில குடும்பங்கள்) குடியேறிய பூமியும் இதுவே. இதன் பழைய பெயர் ‘பண்ணகாமம்’. நான் எழுதப்படிக்க தெரிந்து கொண்ட இடம்.
எனக்குள் இருந்த படைப்பாற்றலைத் தூண்டிய நிலம்.
முதன்முதலில் கவிதைகளே எழுதினேன். அப்போது எனக்கு அறிமுகமானவர் இந்த ‘சிட்டுக்குருவி தொகுப்பின் முதல் நாயகன். அவர் மாத்தளையில் இருந்தாலும் நவாலியூர் சு. சொக்கநாதன் என்று தான் எழுதுவார். நவாலியூர் என்ற ஊர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளது. ஈழத்தின் பெரும் புலவர்களில் ஒருவ ரான நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பிறந்தபதி
நவாலியூர் சொக்கநாதன் என்றே அழைக்கப்பட்ட அவரி டம் எழுதிய கவிதைகளைத் திருத்த அதுபற்றி கருத்து கேட்க அடிக்கடி போயிருக்கிறேன். அவரின் கவிப்புலமை - கருத்து ஆழம் என்பனவற்றில் நான் மயங்கினேன். நின்ற நிலையில் கவி பாடக்கூடிய வல்லமை கொண்டவர். அவரும் ஏனைய கவிஞர் கள் வி. கந்தவனம், ஈழவாணன் போன்றவர்களும் இணைந்து சிட்டுக்குருவியாய் மாத்தளையில் கவிதைகளோடு வலம் வந்தார்கள். கவியரங்கம் ஒன்றையே அறிமுகம் செய்தார்கள். அக்கவியரங்குகளில் ஒரு மாணவ பார்வையாளனாகக் கலந்து கொண்டேன். மேலும் கவியரங்குகளுக்குத் தலைமை தாங்கு பவர் பெரும்பாலும் நவாலியூர் சொக்கநாதன் அவர்களே அவரின் தலைமையில் கவியரங்குகளில் ‘சொற்குடு’ பறக்கும். கரவொலி எழும்பும். அவரின் வேட்டி நீண்ட சட்டை (ஜிப்பா) மேடையில்
6

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
கவிதையாகவே நிற்கும். அவர் மாத்தளையில் வாழ்ந்த காலத்தை மாத்தளை தமிழ் இலக்கியத்தின் ‘பொற்காலம்’ என அழைக்க லாம். புதுப்புது கவிதைகளை எழுதினார் அவர் மாத்தளை இலக்கிய வட்டத்தில் முக்கியவராக இருந்தார். ‘சிங்ககிரிச்செல்வன்’ என்ற கவிதை நாடகத்தை எழுதினர். அது மேடையேறி பலரை உலுக்கியது. ஈழத்து தமிழ் இதழ்களில் எல்லாம் கவிதைகள் எழுதினார். அவர் எழுதிய கவிதைகள் நூலாக வந்ததா எனத் தெரியவில்லை. ஆனால் அவர் எழுதிய கவிதைகள் அடங்கிய ஒரு நூலாக சிட்டுக்குருவி வந்தது. பிறகு மாத்தளை முத்து மாரியம்மனுக்கு அவர் பாடிய ‘மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி’ எனும் நூல் வந்தது. இவ்விரண்டே அவர் எழுதிய எழுத்துக்களை நூல் உருவில் பார்க்கக் கூடியதாக இன்றும் இருக்கிறது. அப்படியானால் ஏனைய கவிதைகள்?
அது ஒரு சோக வரலாறு. இலங்கையே ஏன் உலகத்தையே குலுக்கிய கலவரம் 1983ல் தமிழர்களுக்கு எதிராக நாடெங்கும் நடத்தப்பட்டது. அதில் பல்மதமும் நம்பிய மாத்தளையும் பலியாகியது. அந்த பலியில் கவிஞர் சொக்கநாதனின் வீடும் அடங்கும். வீடு எரிக்கப்பட்டது. வீட்டில் இருந்த தமிழுக்குப் பொன்னான அவரின் கவிதைகள் பொன்னிறமாய் எரிந்தன. எரிப்பதில் எவனுக்கோ களிப்பு எரிந்ததில் தமிழுக்கே இழப்பு.
எரிந்ததையும் முடிந்ததையும் மீட்க முடியுமா? வரலாறு இல்லை இங்கே கவிவரலாறு கண்ட கவிஞன் அதற்குப் பிறகும் எழுதவும் இல்லை! கலவரம் அவன் கவிவரத்தை நிறுத்தியது! சில காலத்திற்குப் பின்னால் அந்தக் கவியும் தனது வரலாற்றை முடித்தது. ஆனால் அவரின் புதல்வர்கள் (குறிப்பாக ஆஸ்தி ரேலியா - மெல்போர்ன் நகரில் இருக்கும் சொ. விஜயசாரதி அவர்கள்) முயன்று ‘சிட்டுக்குருவியை மீளப் புதுப்பித்து மீளவும் வரலாற்றில் பதிக்கிறார்கள். இச்சிட்டுக்குருவியில் இணைந்த இருகவிகள் நவாலியூர் சொக்கநாதன், ஈழவாணன் ஆகியோர் அமரத்துவம் அடைந்துவிட்டார்கள், மற்றவர் வி. கந்தவனம், கனடா நாட்டில் புலம்பெயர்ந்து தமிழ்கொடி நாட்டி வருகிறார். அவரும் இந்நூல் வெளிவர ஆனந்தமாய் வாழ்த்துகிறார்.

Page 5
சிட்டுக்குருவி
மகன் தந்தைக்கு ஆற்றும் காரியமாக தந்தையின் நினை வாக அவர் எழுதி எஞ்சிய கவிதைகளை 40 ஆண்டுகள் கழித்து (1963 - 2003) அவரின் பிள்ளைகள் இந்தச் ‘சிட்டுக்குருவியை LÉGMT பதிப்பித்திருப்பது ஞாலப் பெரியதாகும். அவர்களுக்கு நவாலியூர் சொக்கநாதன் தந்தை என்றாலும் எங்களுக்கு கவிஞன் எனவே அக்கரையில் வாழ்ந்தாலும் புதல்வர்கள் அக்கறையோடு செய்திருக்கிற இக்காரியத்திற்காக அகமகிழ்ந்து கவிஞரின் பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் வாழ்த்தி பாராட்டுகின் றேன். இந்நூலை அழகாக அச்சேற்றிய நண்பர் ‘தி பார்க்கர்’ வே. கருணாநிதி அவர்களுக்கும் நன்றி கூறுகின்றேன். இந்நூலை கவிஞரின் நினைவு நூலாகப் போற்ற வேண்டியது தமிழ் உலகத்
Gr கடமையாகும். நன்றி வணக்கம்.
அன்புடன்
மாத்தளை சோமு

முதற் பதிப்பின் பதிப்புரை
ஈழத்துக் கவிதைகளின் எதிர்காலம் நல்லதொரு சூழலிலே உருவாகிக் கொண்டிருக்கின்றது. சென்ற ஆண்டில் வெளியாகி யுள்ள கவிதைகளில் பெரும்பாலும் இதற்குத் தரம்’ பிரித்துக் காட்டுவதாய் அமைந்துள்ளது என்று கூறலாம். கவிதா நெறி யின் போக்கிற்கும், கவித்துவப் பரிசீலனைக்கும் ஈடுகொடுக்கும் கவிஞர் கூட்டம் சிறப்படைய வேண்டும் என்பதே எமது ஆசை. ஈழத்துக் கவிஞர்களில் மூவரின் சில கவிதைகளைத் தொகுத்து “சிட்டுக்குருவி”யாய்ப் பறக்க விடுவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இதில் இடம்பெறும் மூன்று கவிஞர்களும் அவ்வப்போது ஈழத்துப் பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதி வருபவர்கள். நாடறிந்த கவிஞர்கள். கணக்கற்ற கவிதைகளை எழுதிக் கட்டுக், கட்டாக வீட்டில் குவித்து வைத்திருப்பவர்கள். ஈழத்துக் கவிஞர் களுக்குள்ளே தனிவழியே சென்று முன் மாதிரியாகத் திகழ்பவர் கள் என்பதை இவர்களது கவிதைகளைப் படிப்பவர்கள் அறிவர். பிறருடைய சாயல் படியாத, சுவட்டில் நடக்காத தனித்துவம்’ அவரவர் உணர்ச்சிக்கும், சிந்தனைக்கும் பெருமை கொடுத்து நிற்கின்றதென்பதனை இச் “சிட்டுக்குருவி” மூலம் அறிந்து கொள் ளலாம். இத் தொகுப்பின் சிறப் பிற்கு தங்கள் கவிதைகளைத் தந்துதவிய கவிஞர்களுக்கு எங்கள் நன்றி.
இந் நூலுக்கு அணிந்துரை தந்துதவிய, இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் க. கைலாசபதி B.A. (Hons) அவர்களுக்கும், முகப்பு எழுத்து அமைத்துத் தந்த மாத்தளை ஒவியர் அ.சு. ஜெ. நாதன் அவர்களுக்கும், இந்நூல் வெளிவரப் பெரிதும் உதவிய மாத்தளை அரசினர் முஸ்லீம் பாடசாலை ஆங்கில ஆசிரியர், ஜனாப் NMIM பவ்சர் அவர்களுக்கும், அழகாக
9.

Page 6
சிட்டுக்குருவி
விரைவில் அச்சிட்டு உதவிய ஆர்.ஜே.ஆர். அச்சக திரு ஜி. ராஜா அவர்களுக்கும் எமது நன்றி.
எங்களின் முதல் முயற்சியான இச் “சிட்டுக்குருவி” மூலம் வாசக இரசிகர்களோடு கொள்ளும் தொடர்புவரை கவிஞர் களின் பல தொகுப்புக்களை வெளியிட உங்கள் ஆதரவுக் கரங்களை அன்போடு வேண்டுகின்றோம்.
வணக்கம்
அன்புள்ள மாத்தளை மு.கீ. O1.01.1963 (பதிப்பாசிரியர்)

முதற்பதிப்பின் அணிந்துரை
இப்பொழுது ஈழத் தமிழிலக்கிய உலகிலே காணப்படும் மலர்ச்சியின் நல்ல்ம்சங்களின் ஒன்று கவிதைத் துறையிற் காணப் படும் வளர்ச்சியாகும். நமது காலத்துக்கு ஏற்ற இலக்கிய சாதனம் உரைநடையே என்பதில் ஐயமில்லை. ஆனால், வசன இலக் கியங்கள் மட்டும் வளரின் இலக்கியம் முழுமை இழந்துவிடும். உரையும் பாட்டும் ஒருங்கே, ஒன்றிற்கொன்று ஆதாரமாகப் பின்னிப் பிணைதல் வேண்டும். அப்பொழுதுதான் உரையின் தெளிவும் பாட்டின் மோகனமும் கலந்த உயரிலக்கியங்கள் தோன்ற முடியும்.
அண்மையில் ஈழக்கவிதைத் தொகை நூல்கள் சில வெளி வந்துள்ளன. சில கவிஞர் தமது செய்யுட்களைச் சேர்த்துத் தனி நூலாகவும் வெளியிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட கவிஞரின் இலக்கிய ஆர்வத்தினை மட்டுமின்றிப் பொதுவாக இலக்கிய இரசிகர் மத்தியில் இன்று கவிதை பெற்றுவரும் ஆதர்வையும் வெளிவரும் கவிதை நூல்கள் காட்டுகின்றன எனக் கொள்வதில் தவறிருக்காது. இது மகிழ்ச்சிக்குரிய நிலைமையாகும்.
கவிதை நூல்களுக்கும் ஒரளவு மதிப்பு இருக்கிறது என்னும் நம்பிக்கையினால் உந்தப்பட்டோ என்னவோ, “சிட்டுக்குருவி” என்னும் இச்சிறு நூலை மூன்று கவிஞர்கள் சேர்ந்து வெளியிட முன் வந்துள்ளனர். காற்றிலே சுதந்திரமாகப் பறந்து திரியும் பறவைகள் தொன்றுதொட்டுக் கவிஞர்தம் கற்பனையைக் கவர்ந்து வந்துள்ளன. கவிஞன் கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான் என் றெல்லாம் இலக்கிய இரசிகர் கூறிக் கொள்வது வழக்கமல்லவா? தமது கன்னிப் படைப்பான இக் கவிதை நூலுக்குச் “சிட்டுக் குருவி” எனப் பெயரிட்டிருப்பது இலட்சியமயமான கவி உள்ளத் தைக் காட்டுகின்றது என நாம் கருதலாம்.
இந்நூலிலே யுள்ள பாக்களை யாத்த மூவர் இதயங்களை யும் அவர்தம் மொழிமூலம் நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய
l

Page 7
சிட்டுக்குருவி
தாக இருக்கிறது. இளமைத் துடிப்பும், முதிர்ந்த அடக்கமும் அருகருகே காணப்படுகின்றன; கொதித்தெழும்பும் கோபமும், மெல்லெனச் சிரித்து சமாதானம் பெறும் அமைதியும் ஒரே நூலில் தோன்றுகின்றன, பழைய மரடைக் கடைப்பிடிக்கும் பற்றும், புதுமையை அனைத்துப் கொள்ளும் ஆவலும் முர னின்றிக் காட்சி தருகின்றன; மூன்று பேரும் மூன்று விதமான காட்சியை நமக்குக் காட்டுகின்றனர். வயதும், கல்வியும், வாழ்க்கை நிலையும் நிர்ணயித்துள்ள வேறுபாடுகள் இவை என்பதும் நமக்குப் புலனாகி விடுகின்றது.
எனினும், மூவருக்கும் பொதுவான ஒரு பண்பும் கவிதை களை ஊடுருவிக் கொண்டோடுகிறது. நேரடியாகவோ, மறை முகமாகவோ மூவரும் இலங்கையர் என்னும் உணர்வு தெளி வாகி விடுகிறது. சில கவிதைகள் மிகச் சிறப்பாக இருப்பதற்குக் காரணம் அவை இந்த நாட்டின் நறுமணத்தைப் பெற்றிருப்பதே. உதட்டிற்குள்ளே சிரித்து உள்ளத்தால் தனது கவிப் பொருளைச் சாந்தமுடன் தழுவிக் கொள்ளும் திரு. சொக்கநாதனும், சமூக நிலைகுலைவு கண்டு தாங்கொணாக்கோபம் காட்டும் திரு. கந்த வனமும், மனத்தை வளைத்துச் சரக்கூடம் போடும் உணர்வுகளை வார்த்தைக்குள் சிறைப்படுத்திவிடவேண்டும் என்று துடிக்கும் ஈழவாணனும் தத்தம் வகையில் ஈழத்தமிழ்க் கவிதைக்குப் பதம் காட்டுகின்றனர்.
சமூகத்திலே பரிமாறப்படும் பொழுதுதான் கலைகள் வளர்ச்சியடைகின்றன. சிறியளவில் நூலொன்றை வெளியிட்டுத் தமக்கும் வாசகருக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட பின்னர், சேர்ந்தோ, தனித்தனியாகவோ மேலும் பல கவிதை நூல்களை இவர்கள் வெளியிடுவர் என்று நம்புகின்றேன். அந்த நன்னாளையும் ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருப்பேன். வளர்ச்சி இயற்கை; மனிதன் தனித்தோ, கூட்டாகவோ விழிப் புணர்ச்சியுடன் வேகமாக முன்னேறத் துடிக்கும் பொழுது வளர்ச்சி இன்பமும் நிறைந்ததாகின்றது. அந்த இன்பத்தில் ஒரு துளிதான் இக்கவிதை நூல். இன்பமே வேண்டி நிற்கும் தமிழிலக் கிய உலகம் இதனை ஆதரிக்கும் என எண்ணுகிறேன். விஜயவர்த்தனா விடுதி, ᏧᏏ, 6ᏡᎯᏂᎧuᎥᎢ ᏧL 1Ꭿ பல்கலைக்கழகம், பேராதனை. 02.1162
2

இப்பதிப்பின் முன்னுரை
சிட்டுக்குருவி’ மறுபிரசுரம் காண விருப்பது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். ‘சிட்டுக்குருவி சிறிய கவிதைத் தொகுதிதான். அதுவும் மூன்று கவிஞர்களின் படைப்புகள் சில வற்றைக் கொண்டது என்னும் போது அளவு போதாது என்ப தனை ஒத்துக் கொள்ளவே வேண்டும். எனினும் அது எங்கள் முதற் கூட்டு முயற்சி என்பதனை வாசர்களுக்கு பணிவுடன் தெரி விக்க விரும்புகின்றேன்.
கூட்டு முயற்சி என்கின்ற பொழுது அதன் வரலாற்றின் சில கூறுகளையாவது இந்த வெளியீட்டிற் பதிவு செய்ய வேண்டும் என்னும் எண்ணமும் எழுகின்றது. ஏனெனில் முதற் பதிப்பில் அதுபற்றி அதிகம் பேசப்படவில்லை.
1959ஆம் ஆண்டில் கவிஞர் சு. சொக்கநாதன், கவிஞர் ஈழவாணன் ஆகியோரையும் எனது மாணவர் சிலரையும் அழைத்து மாத்தளை இலக்கிய வட்டம் என்ற பெயரில் எழுத்த ாளர் சங்கம் ஒன்றை உருவாக்கினேன். அடுத்த ஆண்டே மாத்தளை புனித தோமையார் கல்லூரியில் இலக்கிய வட்டம் பாரதி யாருக்கு விழா எடுத்தது. மாத்தளையில் மட்டுமன்றி மலைநாடு முழுவதுமே பெரிதும் பேசப்பட்ட ஒரு இலக்கிய விழாவாக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து எமக்கு அழைப்புகள் அதிகமாயின. மலைநாட்டில் பல கவியரங்கங்களிலே மூவரும் பங்குபற்றிக் கவிதை இரசனையை வளர்த்ததோடு பல சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களையும் விதைத்தோம்.
1962ல் ‘முக்கவிஞர் வெளியீடு என்னும் அமைப்பை மூவரும் இணைந்து உருவாக்கினோம். 1963இல் மூவரினதும் கவிதைகளிற் சிலவற்றைத் தொகுத்து ‘சிட்டுக் குருவி” என்ற
3

Page 8
சிட்டுக்குருவி
பெயரில் வெளியிட்டோம். வெளியீட்டுக்கு ஜனாப் N.M.M. பவ்சர் அவர்களும் ஜனாப் மு.கீ. அவர்களும் உதவியாக இருந் தார்கள். நிதிப் பிரச்சனை காரணமாகவே தொகுதியின் அளவு சிறிதாக்கப்பட்டது. ‘சிட்டுக்குருவியின் விற்பனையால் வரும் பணத்தைக் கொண்டு மேலும் நூல்களை வெளியிடுவதென்று தீர்மானிக்கப்பட்டது. எனினும் அத்திட்டம் வெற்றியளிக்க வில்லை.
கவிஞர் சொக்கநாதன் அவர்கள் பிறந்த பதி சோமசுந்தரப் ! :வரைப் பெற்றெடுத்த நவாலியூர், அவர் தமிழ் இலக்கிய அறிவுள்ளவர்; சிறந்த மரபுக் கவிஞர் இலக்கணச் சுத்தமாக எல்லாவகைப் பாக்களையும் ஆக்கும் வல்லமை படைத்தவர். சிட்டுக்குருவியில் இடம் பெற்றிருக்கும் அவரது கவிதை களைக் கொண்டு அவரது கவிதை புனையும் ஆற்றலை முழுமை யாக அறிந்துவிட முடியாது என்பதனை வாசகர் ஒப்புக் கொள்வர். கவிஞர் சொக்கநாதனை முழுமையாகத் தரிசிக்க விரும்புகின் றவர் அவரது ‘மாத்தளை முத்து மாரியம்மன் குறவஞ்சி’ என்னும் பிரபந்தத்தைப் படித்துப் பார்த்தல் நன்று.
கவிஞர் ஈழவாணன் கவின்மிகு திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தருமராஜா என்பது இவரது சொந்தப் பெயர். மாத்தளையில் அக்காலத்தில் உறவினருடன் தங்கியிருந்தார். ஈழவாணன் புதுமை விரும்பியாகவும் முற்போக்குச் சிந்தனையுள்ளவராகவும் விளங்கினார். தற்கால இலக்கியத்தில் நல்ல அறிவு பெற்றிருந்தார். துறவி’ என்ற புனை பெயரிற் பல இலக்கிய விமர்சனக் கட்டுரைகளையும் எழுதியிருக்கின்றார். மாத்தளையில் இருந்த காலத்தில் இவர் எழுதிய காவியம் ‘தமிழச்சி’ பின்னாளில் ‘அக்கினிப் பூக்கள்’ என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கின்றார். கொழும்பிலே சில காலம் ‘அக்னி’ என்ற சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்திருக்கின்றார்.
இருவருமே நல்ல பண்பாளர்கள். மாலை நேரங்களில் அடிக்கடி என்னைச் சந்திக்க வருவார்கள். தேநீர் அருந்தியவாறு தேனார் இலக்கிய உரையாடல்களில் ஈடுபடுவோம். சில சமயங்களில் விமர்சனங்கள் விவாதங்களாக மாறுவதும் உண்டு.
14

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
அவை நட்புணர்ச்சியில் எழும் இலக்கியச் சுவைகள். அவற்றில் இருந்த சுகத்துக்கு இணை எதுவும் கிடையாது. இதனாற்றான் போலும்,
உவப்பத் தலைக்கூடி உண்ணப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்.
என்றார் வள்ளுவர் பெருமான்,
மூவருமாக உலாச்சென்ற நாட்கள் பல கொக்கோத் தோட் டங்களுக்கு த்ளடாகச் செல்வோம். இறப்பர்த் தோட்டங்கள் வரை மலை ஏறுவோம். மாத்தளை ஓர் அழகான ஊர் காட்சி இன்பத்துக்குக் குறைவில்லாத குறிஞ்சி நிலம், மலைநாட்டுக்கு வருவாரை வரவேற்கும் வடக்கு வாயில். பெளத்தம் இந்து, இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயங்களின் சந்திப்பு. எல்லோருமே
ஒற்றுமையுடன் வாழும் உன்னதமான ஒரு சமரசப் பூங்கா.
இந்தப் பூங்காவின் வாசனையைப் புனித தோமையார் கல்லூரியிலும் நான் நன்கு அனுபவித்தேன். அங்குதான் முதன் முதலாக எனக்கு ஆசிரிய நியமனம் கிடைத்தது. பொறுப்புணர்வு கட்டுப்பாடு என்பவற்றை எனக்கு மிகவே புகட்டிய கல்லூரி அது. ஆங்கில மூலம் கல்வி கற்ற எனக்கு மேல் வகுப்புகளுக்குத் தமிழ் மூலம் புவியியல் கற்பிக்கும் பணி ஒரு சவாலாகவே அமைந் தது. அந்தச் சவாலின் சுமைகளைக் கவிஞர்கள் சொக்கநாதன்
ஈழவாணன் சந்திப்புகள் சுகமாக்கின.
அவர்கள் இருவரும் இன்று இல்லை. எனக்கு அவர்கள் இருவரும் இரு புத்தகங்கள். அவற்றை அவ்வப்போது புரட்டி இரை மீட்பதை என் மனம் துறக்கமாட்டேன் என்கிறது. அவர் களின் பெயர்களை அவர்களது ஆக்கங்கள் நிலைநிறுத்தும். இந்தச் ‘சிட்டுக் குருவி”யும் தொட்டுக் காட்டும்.
மிகவும் முக்கியமாக, நண்பர் சொக்கநாதனின் குடும்பத் தினருக்கு நன்றி கூறுதல் வேண்டும். அவரின் படைப்புக்களை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அவரது புதல்வர்கள் காட்டிவரும் ஆர்வம் போற்றுதற்குரியது. ஏற்கனவே தமது அன்புத் தந்தை யாரின் ‘மாத்தளை முத்துமாரியம்மன் குறவஞ்சி' என்னும் நூலை
5

Page 9
சிட்டுக்குருவி
அவர்கள் மறுபிரசுரம் செய்துள்ளனர். இப்பொழுது அவரது கவிதைகள் சில இடம்பெற்றுள்ள ‘சிட்டுக்குருவியையும் மீளப் பதிப்பிக்கின்றார்கள். இவை இரண்டுமே முக்கவிஞர் வெளியீடு” முன்னர் அச்சேற்றியவை என்பதில் எனக்கும் பங்குண்டு; பெருமையுண்டு.
தமிழீழத்தில் தற்கால இலக்கிய நூல்கள், அவற்றுள்ளும் குறிப்பாக, கவிதை நூல்கள் மறுபிரசுரம் காண்பது அரிது - மிக அரிது. கவிஞர் சொக்கநாதன் கொடுத்து வைத்தவர்.
வாழ்க அவரது தமிழ்! வளர்க அவரது குடும்பத்தின் இலக்கிய ஆர்வம்,
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். - திருக்குறள்
16.12.2001 வி. கந்தவனம்
gi/Diaog, (Toronto)
d5 6.O.I.
16

உள்ளே . . .
நவாலியூர் சு. சொக்கநாதன்
வாணி
பணி
பேய்க் கலியாணம் பனையடிச் சின்னத்தம்பி அடுக்களைக் கருணைகாட்டாய் கோழிச்சண்டை
வி. கந்தவனம்
1O.
11.
நாற்றம் சாதியாம் சாதி என்று வருமோ? ஒற்றுமை எங்கே? சாகிற வாழ்வு எதற்கு? கொல் இவரை எதிர்காலம் போர் நெஞ்சலை
பிரிவு கன்னி இரவு
ஈழவாணன்
1.
வாடி போதும்
ᏧᎦᏂᎧᏈᎠ Ꭷ1 நீயா? நானா? நிஷ்டை சிந்தனை மயக்கம் மோனம்
21
23
26
29
31
33
S4
36
37
39
4O
42
44
46
47
49
51
52
53
55
57
59
60
61
7

Page 10

வாணி
நவாலியூர் சு. சொக்கநாதன்
வேதமோ - ஆகமமோ மெய்கண்ட சாத்திரமே
விரிந்தபுரா ணங்களோ இதிகாசங்களோ போதமருள் திருமுறையோ பொய்யாத மொழியோ
பொருளுணர்ந்தறிந்துபோற்றிடத்திரு மந்திரமோ காதலித்துக் கற்கநான் காப்பிய நூலோ
கணிபத்துப் பாட்டோ பதினென்கீழ்க் கணக்கோ பூதலத்தே கேட்டிலேன் பொலிவெள்ளை யழகுநீ
புலையேற்குக் காட்டிப் பொலிந்த தென்னே !
நாமகளே நின்வெள்ளை நாகரிக மதனை
நானியம்ப நாவிற்சொல் லெழுகுதில்லை நீயேயாய் நாமகளே வந்தெனக்குப் பயிற்றிடுவை யன்றேல் பாவாக உனைவரையப் பதிவையோகொல் நாமகலே நின்னுருவை நாவலரோ வன்றி
நன்பாவல ருமறிந்திருப் பினின்றுநீ மாறியதேன் நாமகளே எத்தனை நற்கலைஞற் குநீயில்
நாட்டியங் காட்டியெனக் குங்காட்டியதென்னே !
நீற்றெடுத்த தங்கமதை நீற்றுநீற் றெடுக்க
நிறொமான்று வெண்மஞ்சர் நின்று தோற்ற வாற்றதனை உருவாக்க வருஞ்சிலையைப் பெண்ணாக்கின்
வருருபம் வாணியவள் ரூபமென வெண்ணுகனோ தோற்றுமிரு நெகிழ்புருவந் தொட்டெழுதக் கரும்பொன்னால்
சோட்டுவிழி விம்மிநின்று பாதிதோன்றும் ஏற்றயில் விழியினுக்கு வெண் சிவப்பால் மின்னல் வரி
ஏற்றியிட அரைத்துடிப் பேற்றிடும் கண்விழியும்

Page 11
சிட்டுக்குருவி
20
முற்றாய்ப்ப முத்தகொவ்வை மூட்ட கற்றி யதனூடே
முல்லை யரும்பு இருசீரா யடுக்கச் சற்றேனும் மேல்கீழாய்ச் சரிக்காமல் சீரிருக்கத்
தெற்றென்று அரைகுறையாய்த் தோன்றிடுமேற் புன்சிரிப்பும் கற்றேனுங் கேட்டேனுங் கண்டேனு மறிந்திலனாற்
கலைமகளே நின்வயிர மனிமுக்கி னிணைப்பும் பெற்றே நான் நின்புருவ மென்மேல் மத்திதனில்
பொறித்த செங்கருமைச் சரிவட்டப் பொட்டழகும்
கருமுகிலிற் சிற்றலை காணச் சுருட்டுங்
கருங்குழல் பிதுக்கியெழு கனியரைவட் டநெற்றியும் இருகாதி லிணங்க இறங்கியிடு சோணையதில்
இலங்குநின்றோ லிக்குவயி ரமீர்குநீள் வெண்றோடும் திருச்சிரத்தில் பனித்ததிரு மெளலியொளி திக்கெலாந் திகழெரளி மாற்றித்தின கரனொளி மாற்றுமேல் திருமுகத்தி னொளிமாற்றத் திகைத்தொளிரு மாபோற்
திருமுடி யிலங்குவெண் பரல்திருத்தி யமைத்துநின்றே.
சாரதையே நின்மார்பில் சாரிமு வரிசையொடு தண்முத்து மாலை தனியொளி வீசிநிற்க
பாரதியே நின்கருணைப் பார்வை பரிசளிக்கப்
பணிபுன்முறு வலொடு பலமடிப் பிணைத்துச்
சீர்வதியு வெண்டுகில் சிறக்கச் சாத்தியதில்
சிறுவெண்மணி யர்ந்திடச் சிவந்தகரை பொருந்துமேல்
காரிகையே நின்றோளிற் கஞ்சுகங் கலையொக்கக்.
காண்டரிய வெண்முளரிக் கரமிரண்டும் யாழேந்தும்
பங்கயக் கரமொன்றேந் திடுபல்கலைப் புத்தகம்
பரிவோடெமக் களிக்கு மாபோற் பனிமொழி மங்கையின் மறுகரத்தில் மாதவற்கோ செபமாலை
மன்னிநின்றா ளன்றியு மச்சுந்தரப் பாதமதில் தங்கியிரை சிலம்பினொளி கைவளையை வெல்லா
தாங்கியிடு யாழதனைச் சற்றே மீட்பின் நங்கையிவள் நாவிலெழு நல்லோசை நனியாழை
நாணச் செய்து நகையேற நிற்குமென்கோ !
O. O. O.

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
பணி
கிடுகிடென்று குடுகுடென்று கூதலேறுதே
குளிரவுள்ளும் புறமுகமாக என்னிலேறுதே படபடென்று நடுங்கப் பல்லுங்கிட்டுதே
பதறவிரலு மிதழினோடு படபடக்குதே கடகடென்று காலின்று காற்றொடேறுதே
கதறவாயைக் கட்டிப்போட்ட தன்மையாகுதே உடலுங்குடலும் உதறவென்றன் ஊனும் விறைக்குதே
உலகும்வெள்ளை ஆடை போத்துப் பணியிதென்குதே!
மாடுவாடு கன்றுகுட்டி மயிரைச்சிலிர்க்குதே
மடித்துவாலை மறைத்துக் கொண்டு மன்னிற்தவிக்குதே பாடியாடும் பறவையொன்றும் பாடக்காணொமே
பல்லிதானுங் கூரைநின்று சொல்லக்கானொமே காடுமேடு மலைக்ளொன்றுங் கண்ணிற்கானொமே
களகளென்று இலையிநின்று தண்ணிவீழுதே வீடுமூடு வெளியில்நின்று வெள்ளைவீசுதே
விரியுவெள்ளைத் திரையிதனைப் பணியிதென்கிறார் !
பூமிகோபங் கொண்டுநின்று மூச்செழுப்புதோ
புல்லுவாட வேண்டுமென்று அல்லல்கொள்ளுதோ சாமிநெல்லுக் கொள்ளுவெள்ளு சாபம்போடுதோ தம்மைவெட்ட எம்முழவர் சார்வரென்றதோ ஆதிசேடன் பாரமேற அழுதுகாட்டுதோ
அமரராற்று பூசனையின் தூபமிதுவதோ பூமிதோறும் புகையெழுந்த சேதியென்னவோ
பூமிதேவி வியர்வைகொள்ள நடந்ததென்னவோ?
l

Page 12
சிட்டுக்குருவி
22
நெடியதுார வழி நடப்போர் என்ன செய்குவார்
நீரிலோடந் தனிலிருப்போர் என்ன செய்குவார் கொடியகானில் உரியசீவர் என்னசெய்குவார்
கோட்டுமலையிற் குடியிருப்போர் என்ன செய்குவார் மிடியில்வாழும் குடிகளெல்லாம் என்ன செய்குவார்
மேயத்தரைக்குச் சென்றமாக்கள் என்ன செய்குவார் மடியச்சூழும் போர்வையில்லார் என்ன செய்குவார்
வாமனனே அவர்களுக்கு வழியிடுவானே;
கோழிமெல்லக் கூவுகிது கொஞ்சம்பொறுமையா
கோயில்மணி கேட்குகிது கொஞ்சம் பொறுமையா நாளிலொன்று பிறக்குகிது கொஞ்சம்பொறுமையா
நல்ல காலம் பிறக்குகிது கொஞ்சம்பொறுமையா கீழ்த்திசையும் வெழுக்குகிது கொஞ்சம் பொறுமையா
கிழக்குவானம் பழுக்குகிது கொஞ்சம் பொறுமையா வாழிவாழி வாழியென்று வழுத்திக்கூப்புங்கள்
வாறார் வெய்யோன் பணியகற்ற வாழ்த்திக் கொள்ளுங்கள்;
O O. O.

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
பேய்க் கலியாணம்
நீரோடி நெல்விளைக்கும் நீழ்வழிக்கை யாற்றில் நெய்யூற்றிப் பிணமெரிக்குஞ் சுடுகாடு ரண்டு ஏரோடு வயலருகி லிருமருங்கு மாக
இருந்தாகு மீமமட மொருங்காக வாங்கு.
வைகாசி அத்தமது வந்தவொரு நாளில் வளர்குளிகன் படுபசுஷ் அட்டமியுங் கூட மெய்யான நடுச்சாம வேளையது வரவே
விறற்பேய்கள் செய்யுமொரு கல்யாணம் பாரீர்;
பலபாடைத் துயில்கொண்டு பந்தருமே போட்டு பன்றிமல நீர்கொண்டு பலமாக மெழுகி களமேகிக் கையென்பு காலென்பு கோத்துக்
கட்டியதைப் பந்தரிலே தோறணமாய் விட்டார்.
சவப்பெட்டி பலவடுக்கிச் சாத்தியொரு பக்கர் சார்ந்திடவே தென்திசையில் மணவறையுஞ் செய்தார் அவப்பிட்டிக் கொத்தியெனும் அக்காளே பெண்ணாம்
அவதம்பி எறிமாடன் மாப்பிள்ளையு மாவான்.
பாழ்கிணறு பலவெடுத்துப் பாத்திரங்க ளாக பலகாரஞ் சமையலுடன் செய்தவிதம் பாரும் சீழ்வடியு பினமெல்லாஞ் சிற்றுண்டி செய்தார் சிறுபிள்ளைப் பினத்தாலே சிலேப்பியடை செய்தார்.
புழுவெடுத்த பிணமெல்லாம் பெயர்த்தெடுத்துத் தட்டி புழுக்குவிய லாக்கியதைக் குல்லத்திற் றெள்ளி கழுகோடு நரியிற்குங் கஞ்சியினை யிட்டு
கட்டரிசிப் புழுச்சோறு காய்ச்சினரே நன்றாய்.
23

Page 13
சிட்டுக்குருவி
24
அன்றிறந்த பிணமெல்லாம் ஆங்காங்கு தேடி அரிவாளிற தலைதள்ளிக் கால்தள்ளிப் பின்னர் பொன்றியுள கரியுரித்துக் கொழுப்பெடுத்துப் பெய்து
பொலியுதிரக் குழம்பொன்றும் பேடியரே செய்தார்.
எல்லாமு மாயுத்தமி னித்தடையு மில்லை எங்கடா மாப்பிள்ளையென் றெழுந்ததுவே யொன்று பொல்லாத மாப்பிள்ளையும் பொலிவுடனே வாறார்
பொறுமையா ஒர்நிமிட மென்றதுவே யொன்று.
கானநரி கூவையது கடிமுரச மெழுப்ப கரையோரப் பாவாடை கவினாறு விரிப்ப மானகரி மணிக்கூட்டு மாடம்போ லோங்கி
வந்தவெறி மாடனெனும் மாப்பிள்ளையைப் பாரீர்;
இருபனையின் சிரமேலே ஏற்றியகற் பாறை எழுந்திடுமே யதன்மேலு மின்னுமொரு பாறை இருகையும் வளர்ந்தேங்கி னேய்ப்புடைய தாகும்
இவர்மேனி எழுந்துள்ள இயல்பதனைப் பாரும்;
முன்வாயிற் பல்நிரையில் மூன்றுபல் லில்லை முக்கோணச் சொண்டாதி மூலத்தில் வாயில் தன்வாயி விருகடயும் தாங்கிடுமே ரண்டு
சதங்கையனி வேளப்பல் விதங்காணு பற்கள்;
நீறாகச் சவச்சாம்பர் நெற்றியிலே பூசி நெருப்பாலே யுளபொட்டில் நெய்வீழ்ந்து வோட கூறான விருகண்ணிற் கூளமது வெரிய
கோவணத்தோ டுக்காந்தார் குருக்கட்கு முன்னால்,
வாளெயிறீ மாமூளி மதுவிச்சி கூடி வடங்கொண்டு தடமிட்டு வளர்கண்ட மதனில் வானதிர இவள்குளற வழிதோறுமிழுத்து
மாப்பிள்ளைக்கு முன்னாக வளத்தினரே பெண்ணை !

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
நாமூன்று வடிகொண்ட நாகத்தைத் தேடி நன்மண்டை யோடொன்று நற்றாலி யாக வால்கொண்டு நாகத்தின் வாய்க்குள்ளே சொருகி
வளர்நாக தாலியதைக் கட்டினரே வாழ;
ஒமங்கள் பூசனைகள் ஒன்றுமே யில்லை ஒருகோழி ஓசையது கேட்டதி னாலே சாமங்கொள் வேளையது சாகுதே யென்று
சரசரப்பாய் எல்லாமும் முடித்தனரே சால.
O O O
25

Page 14
சிட்டுக்குருவி
26
பனையடிச் சின்னத்தம்பி
கருங்கலாற் பொளிந்த மேனி
கருமுகில் வண்ண மேய்ப்ப நெருங்கிய முடிகள் தோளில்
நெஞ்சினில் முதுகிற் காலில்
ஒருங்கவே கோரைப் புல்லாய்
ஒருமித்து வளர்ந்த காளை
திருந்திய நவாலித் தோன்றல்
திருப்பெயர் சின்னத் தம்பி.
கருங்குழல் முடித்த சென்னி
காதினில் இணைத்த மின்னி நெருங்கிய புருவ நெற்றி h
நீறினால் மறையப் பெற்று
ஒருங்கவே வாய்ச்சி ஆப்பு
ஒண்கோ டரியுந் தோளில் பொருந்தவே நாள்கள் தோறும்
போகுவன் பனைகள வெட்ட.
காற்றது அடித்தா லென்னக்
கதிரவன் பொய்த்தா லென்ன
மாற்றது கொள்ளா நெஞ்சன்
மகிழ்வொடு வேலைக் கேகும்
தோற்றது நாள்கள் தோறுஞ்
சுடரொளி வெய்யோன் நாளும்
தோற்றுதல் காலை மாலை
சோதியின் எழிலே ஊற்கு.

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
காலையிற் செல்லும்போது
கடவுளர் பாட்டே வாயில் மாலையில் மீளும் போது
மின்னிடும் கூத்துப் பாட்டும் வேலையிற் சின்னா னேகும்
விடத்தினை அறியார் யாரும் காலையில் மாலையன்றிக்
காண்கிலர் வேறு வேளை.
அந்தியில் உதையந் தன்னில்
அறிந்திட நேரந் தன்னை வந்திலன் சின்னத்தம்பி
போந்திலன் வழியா லின்னும் முந்தினம் பிந்தினம்யாம்
முடிசடை யோனைக் காண என்றதாற் கணித்துக் கொள்வர்
இயம்பட வூரா ராங்கு.
மடத்தினில் மதகு தன்னில்
மணிக்கடை வாயிற் தன்னில் படர்ந்துள மரவேர் தன்னில்
பாதையிற் படர்ந்தோர் கல்லில் கடத்துவர் இருந்து நேரங்
காண்டிடி லின்னான் தன்னை விடத்தினை நெஞ்சில் வைத்து
வேறதாய் உரைகள் செய்வார்.
அந்தியிற் திரும்பும் போது
அணிந்துள சால்வை தன்னில் பொதிந்துள முடிப்பு நான்கு
பொலிவுறத் தொங்கக் கையில்
27

Page 15
சிட்டுக்குருவி
28
சந்தையிற் பெற்ற மீனும்
தாங்கியே குடலை ஒன்றில்
தொந்தியிலுள்ள கள்ளால்
தோன்றிடும் கூத்துப் பாட்டும்.
முடிச்சினில் முனைந்த பண்டம் மொழிகுவன் கேழ மம்மா படியிரன் டரிசி யொன்று
பலதிறக் கறிக்கா யிரண்டு மிடியில மனையாட் கேற்ற
வெற்றிலை பாக்கு மூன்று துடிநடைப் பாலற் கேற்ற
சுவைப் பொருள் நான்க தாமே;
அன்றைய பிழைப்பின் கூலிக்
கரும்பொருள் பண்டம் வாங்கி எஞ்சிய பணங்க ளெல்லாம்
இவர்மடிக் கிலுங்கிக் காட்ட வஞ்சமில் வீட்டு வாயில்
வந்ததும் மனைவி மக்கள் நெஞ்செழச் சிரிப்பு மின்பும்
நீழ்கரச் சரங்க ளெய்வார்.
நாடொறு மிஃதே யின்னான்
நல்கிடுல் யோக மாற்கம் நாடொறு மிஃதே செய்ய
நல்கிறன் அருளுந் தேவன் நாடொறு மிஃதே யாக
நற்றிரு மகளு மன்னான் வீடொறும் நிறைந்து நின்று
மிளிர்நட மாடு கின்றாள்.
O O O

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
அடுக்களைக் கருணை காட்டாய்
வார்கொண்டு தனந்திருத்தி வதனந் திருத்தி
வடிவென்று செங்களியுங் கருங்களியுஞ் சேரவெள்ளை மாதடவி மயங்கி நின்ற மாதே கேழ்தி சீர்கொண்ட பன்னாடை செம்பொற் பூணுஞ்
செருப்போடு தோற்பையுஞ் சுமக்கக் கையில் செஞ்சாந்தும் நீதடவத் தடைநான் செய்யேன் ஊர்கொண்ட இளமாத ருடநீ சேர்ந்து
ஊருள்ள கடைவீதி யுவரி யோரம் ஊர்நதுதச் சுற்றிடினு முளநான் நோகேன் கார்கொண்ட தாழ்கொண்டைக் கனிவாய்க் கண்ணே
கடைக்கண்ணா லடுக்களையைக் கவனித் தோர்கால்
கருணையினைக் காட்டுவையேற் கணவனேற்கே !
எழில்மோட்டார் வளையத்தை யிறுகப் பற்றி
என்னையுநீ இடைப்பாகத்திருத்தி வைத்து இடசாரி வலசாரி யூர்ந்த போதும் வழிமாட்டு நின்பின்னே வருத்தந் தோன்ற
வாய்மூடி வழிநடக்கு மென்னைப் பார்த்து வழிப்போக்க ருள்நகைத்து வைதபோதும் களிப்பாட்டுக் கதைப்படங்கள் காணச் சென்றால்
கணவநா னருகிருக்கக் கருதா வண்ணம் கண்ணுறுட்டிக் காளையரைக் கவர்ந்த போதும் விளிப்போடு இவைகண்டும் வெகுளி கொள்ளேன்
வீட்டினிலே வேளையாள் வேகவைத் தமுதை
விருப்போடு வழங்குவையேற் கணவனேற்கே !
29

Page 16
சிட்டுக்குருவி
பஞ்சணையின் மேலெழுந்து படுக்கச் சென்றால்
பக்சத்தே நீபடுத்துத் துயிலா வண்ணம் பண்டைநா ளுனைக்கண்டு மயங்கி னோர்தம் செஞ்சொலினைத் திரவியத்தைத் தேகக் கட்டைத்
திறமையினைச் செப்பிடநீ மேலும் மேலும் செத்தார்போற் கிடப்பனலாற் சிந்தை நோகேன் வஞ்சமிலா மக்களினை மடவார் பெற்றால்
மடியுமவர் கட்டழகு வதனச் செய்மை மதியுமென நீவகுத்த மடமை ஞானம் நெஞ்சார நீயுணர்த்த மறுத்தொன் றுரையேன்
நித்திரைவிட் டெழுந்தவுடன் நேரே நின்று நிண்மூஞ்சி காட்டாது நெகிழு வாயேல்!
O O O
30

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
கோழிச் சண்டை
பூசிவந்து கண்சிவந்து பொறியெழுந்த பார்வையும் பூமலர்ந்த தாடிரண்டி மாடியோடி வீசவும் தூசெழுந்து சிறகிருந்த தூயமேனி பூசவும் துருதுரென்று கழுத்திருந்த தோகைவிறு கொள்ளவும் தேசமைந்த வாலுயர்ந்து சேர்ந்தெழுந்து ஆடவும் சேர்ந்துநின்ற பேடுவிட்டுத் தரண்டெழுந்து வெதிற்கிறார் ஆசையென்ற பாசமன்று அடுத்தவீட்டுச் சேவலை ஆட்டிவைத்துப் பேட்டினன்பிற் போட்டிகொள்ள வந்ததால்!
அடுத்தவீட்டுச் சேவலோட்ட மெடுத்திடாது வஞ்சிறை அடித்துத்தானு மச்சமின்றி அடிபிடிக்கு வாயுத்தம் விடுத்ததுது வார்த்தையொன்றும் வேண்டாமிந்தப் போருக்கு வீரர்வந்து தானெதிர்த்து வீரம்பேசி நிற்பதால் நெடுத்தகண்ட மெடுத்தமேனி நீட்டிரண்டு பேருமே நெருநெரென்று சிறகினின்று அரவெழுந்து முரசெழ மடுத்தமுள்ளு வெடுத்தபாதம் மளமளென்று மண்ணினை வறுகித்தள்ளித் தள்ளித்தள்ளி வளையம்போட்டுச் சுற்றுறார்!
படபடென்று சிறகடித்துப் பாய்ந்துமே லெழுந்திவர் பாதவிட்டி நீட்டிக்காட்டி பூட்டியூட்டித் திட்டுறார் கடகடென்று கன்னமண்டை கண்சிதறக் காதொடும் கழுததுமொத்திச் சிரசுகிள்ளிக் காதுகீறிச் சொண்டினால் இடதுவலது காலுயர்த்தி எட்டியெட்டிக் குட்டுறார் ஈட்டிமுள்ளுவோட்டிக் கண்ணில் இரத்தங்காட்டிப் பொருகிறார் மிடறுநின்று சிதறுகின்ற யுதிரமெங்கும் பரந்திட மேனியீர மேறிநின்று மெலிந்து நின்று பொருகிறார்!
3.

Page 17
சிட்டுக்குருவி
32
சொட்டுவிட்டு ரத்தமோடச் சொருசொரென்று கண்களால் சோர்வடைந்து மின்னுமந்த ஆண்மைவிட்டுப் போகலை குட்டுப்பட்டு வெட்டுப்பட்டுக் கொக்கரித்துக் காட்டுகிறார் கோபதாமIமின்றி வந்த அண்டைவீட்டுச் சேவலும் விட்டுப்போட்டுப் பொட்டெடுத்த வேலியூடு வோடுறார் வேகமோடு கொத்தக்கொத்த எங்கள்விரச் சேவகன் கட்டுப்பாட்டி லுள்ளபெண்ணைக் கவரவந்த மூடமே
காட்டிவிட்ட தின்றுவந்த காதலற்குப் பாடமே !
O O. O.

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
நாற்றம்
வி. கந்தவனம்
சாதி சமயம் இருக்குது - அதில் பேதம் மிகுந்து பெருக்குது! பாதி அறிவு மயக்கது - துயர் மோதும் விளைவு பயக்குது!
பேச்சில் இமயம் புரளுது - பெரும் பூச்சில் உலகம் மருளுது! தீச்செய் மறைவிற் திரளுது - நடை வீச்சில் அனைத்தும் வெருளுது!
ஏட்டில் அதிகம் கிடக்குது - இவர் பாட்டிற் புதிது நடக்குது! நாட்டின் நடப்புப் படுக்குது - தலை மோட்டுத் தனமிங் கெடுக்குது!
முக்கித்தவித்து முயல்கிறார் - பத விக்குத் துடித்துத் துயல்கிறார்! விக்கத் துணிந்து விரைகிறார் - பல பக்கம் பணிந்து கரைகிறார் !
நாற்றம் எடுக்கையில் இப்படி - நமர் போற்றப் படுவதும் எப்படி? சேற்றைக் களைந்தெடுப் பார்களோ - செயல் ஆற்றிச் சிறப்படை வார்களோ?
O O. O.
33

Page 18
சிட்டுக்குருவி
34
சாதியாம் சாதி
சாதியாம் சாதி இந்தச்
சஞ்சலப் பேயி னோடு மோதிநான் மோட்டு முள்ளு
மொக்குகள் தட்டிக் கொட்டிக் காதிலே சென்று நல்ல
கருத்துரை கட்டுக் கட்டாய் ஒதினேன் ஒட்டைக் காது
ஒருபயன் கூட இல்லை!
என்னவோ ஏதுக் கென்று
இருக்கிறார் இருந்து கொண்டு மின்னினில் மனிதர் நாளும்
விழிக்கிறார் என்னும் உண்மை உன்னியில் வுலகின் போக்கை
உணர்கிறார் இல்லை யாரும் சொன்னதைக் கூட விட்டுத்
தொல்லையேன் எழுப்பு கின்றார்?
முட்டையில் மயிர் பிடுங்கும்
முடரின் செய்கை யாலே கெட்டஇக் கட்டம் பார்த்தும்
கேவலம் ஒன்றும் பண்பை விட்டனர் விட்டு வேறாய்
வீணர்போற் பிரிந்து நின்று பட்டனர் படித்த கூட்டம்
பாழ் நமர் வாழ்வு நாளை !

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
ஒன்றுநாம் ஒன்று என்னும்
உணர்விலே உலக மக்கள் சென்றுநற் செய்கை நாளும்
செய்துமேல் ஓங்கு கின்றார் தின்றுபேய்ச் சாதி நம்மைத்
தீர்ப்பதைத் தெரிந்தி டாது நன்றுநம் மக்கள் கொள்ளும்
நாசமாய்ப் போகும் பாதை !
O O O

Page 19
சிட்டுக்குருவி
36.
என்று வருமோ?
தடக்கி விழுந்து தாறு மாறாய் மடக்கி அறிவை மாய வாழ்விற் கிடக்கும் யாவும் கிளறக் கிழிசல்
நடக்கும் போது நகைக்கும் உலகம் !
பகட்டு யாவும் பாடு பட்டம் முகட்டி லேற முனைகி றார்கள் புகட்டி ன்ாலும் புரிய மாட்டார் பகட்டு மின்னும் இருட்டில் மட்டும்!
இன்ன வாழ்க்கை இன்ன போக்கு என்னு மெல்லை இன்னு மில்லை முன்னை மக்கள் சொன்ன தென்ன
என்ன போங்கள் எதற்கு நீங்கள்?
போன போக்கிற் புழுதி கவ்வும் ஈனவாழ்வு எதற்கு வேண்டும்? வானமேற்றும் வள்ளு வன்தன்
மான வாழ்க்கை ஆன வாழ்க்கை.
அடித்து விழுந்து ஆஊ என்று இடித்து விழுத்தி இறக்கி றதையும் கெடுத்துப் பின்னர் நடித்து நிற்பர். அடுத்த தென்ன படித்த தென்ன?
ஒன்றை யேனும் நின்று நினையார் இன்று வருமோ என்று வருமோ நன்று வருமோ நம்ம வர்க்கு
ஒன்றி வருமோ உணரு மாற்றல்?
O O O

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
ஒற்றுமை எங்கே?
பிடியுங்கள் சண்டை உடையுங்கள் மண்டை
பித்தரைப் பேயரைப் போலே கடியுங்கள் கையை அடியுங்கள் மண்ணை
கட்டமும் துடித்திடும் வேளை ஒடியுங்கள் உள்ள ஒற்றுமை தன்னை ஒவென நம்மவர் வீழ்வார் குடியினி என்ன குன்றிடும் நாளை
கூத்திவர் ஆடுவதாலே !
உள்ளவர் நால்வர் உயர்வுடன் ஒன்றி உற்றநம் உரிமைகள்தன் இங்கே கொள்ளுவர் ஆற்றல் கொண்டவர் நாமும்
கொற்றநற் கொடியினிற் கூடி துள்ளுவ மென்றே துயரினைப் பெற்ற
துணிவுடன் துடைத்திடத் தலையில் கொள்ளியை வைத்தே அள்ளிஎம் கண்ணில்
கொட்டுதல் மண்ணினைக் கொடுமை !
போற்றிடும் எங்கள் பொன்தமிழ் மானம்
போகுது போகுது புகழும் காற்றினில் அந்தோ காப்பவர் சற்றுங்
காரண மின்றியேக காட்டும் வேற்றுமை இங்கே வேண்டுவ தார்க்கு வேசியர் போற்பல நோக்கு சாற்றுக சான்று தாரணி மீதில்
தழைத்தவர் யார்தனி நின்று?
37

Page 20
சிட்டுக்குருவி
ஒற்றுமை எங்கே ஒற்றுமை எங்கே
ஒற்றுமை விட்டவர் கெட்டார் கற்றது மென்ன கற்றது மென்ன
கண்டதைக் கொண்டிட வாமோ அற்றது நோக்கம் அற்றது ஆக்கம்
ஆளொரு பாதைய தாலே விற்றிட வேண்டாம் விற்றிட வேண்டாம்
வீண்பழி சீ! விசர்ப் போக்கு !
O O O
38

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
சாகிற வாழ்வு எதற்கு?
ஆடுவர் கூத்துநன்கு அறம்புற மாகநின்று கூடுவர் கூட்டிலாத கூட்டமுங் குறைவுமில்லை நாடுவர் நன்றலாத நாசமாய்ப் போகுஞ்செய்கை
பீடுடை வாழ்விதாயின் காடுறை மிருகம் வாழ்க!
அந்தமில் இறைவன் நல்ல சிந்தனை சிறுமைவெல்லத் தந்தனன் சிலரிதென்ன இந்தநற் காலம் வந்தும் எந்தனின் முயற்குக் கால்கள் மூன்றென முந்தும் தன்மை சிந்தனை சிறிதும் இல்லை சீ! இவர் அறிவுகுப்பை !
முன்னவர் கொண்ட நல்ல முயற்சியில் ஓங்கிநிற்கும் தென்னையில் வாழ்வர் வீனிற் தெருவினிற் காலம்போக்கி
பின்னவர்க் காகனன்று பீடுடை ஆக்கவேலை
என்னிவர் எடுக்கிறார்கள் இருப்பதைக் கெடுக்கிறார்கள் !
நோகிற தொழிற்குநேரம் நொடிப்பொழு தேனுமில்லை ஆகிற வேலைக்கான அக்கறை அணுவுமில்லை போகிற போக்கிலிங்கு பொருளெது வேனுமில்லை சாகிற வாழ்வெதற்குச் சாக்கடை நாயதற்கு!
O O O
39

Page 21
சிட்டுக்குருவி
40
கொல் இவரை !
படித்தவர்கள் நம்மவர்கள் பலபொருளைக் கரைத்துமிகக் குடித்தவர்கள் ஆகையினால் குருடரிவர் மயக்கவெறி பிடித்தவர்க்ள் பீத்தலுகள் பிதற்றுகிறார் பித்தரைப்போல் இடித்துரைகள் எடுத்துரைப்பின் ஏளனமாய் எத்துகிறார்!
நடிப்பவர்கள் நல்லவர்கள் நஞ்சறியார் சாய்ந்துகுடை பிடிப்பவர்கள் போடுகிறார் பீடுநடை காசுபணம் அடிப்பவர்கள் வல்லுநர்கள் ஆற்றலிலே ஆன்றநிலை எடுப்பவரை மதிப்பவர்கள்
இங்கிலையே ஏனிறைவா 9
சொல்லளவில் நாயினமும் சோற்றளவில் மாட்டினமும் கல்லுகளும் முள்ளுகளும் காற்சதக்கீழ்த் தூசிகளும் வெல்லுவதேன் நல்லவரை வேண்டுமென்றே கொல்லுவதேன்? வில்லெடுத்தே வீழ்த்திவரை விரைவில் அறம் வீற்றிருக்க !

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
பந்தெனவே சுற்றிடுவார் பக்கமெலாம் கெந்திடுவார் மந்திகளாய் மந்தைகளாய் மட்டிகளாய் மானமிலாக் கந்தல்களாய் காற்றினிலே கற்றதையும் விட்டிடுவார் முந்திவரின் மூன்றுசதம் முத்தமிழும் விற்றிடுவார் !
ஓடிவரும் ஆற்றுவிசைக் குட்படுமோர் கஞ்சலென வாடுவதேன் நம்மவர்கள் மாப்பிழையோ கைப்பிழையோ கூடிவரும் மோகவலை கூட்டிடமுன் கும்பலிலே கூடுவதேன் காந்தமெனக்
குப்பைகள்மேல் ! கேவலமே!
ஒன்றெனவே வாழ்வதிலும் ஒன்றெனவே தாழ்வதிலும் நின்றிடுமிந்நேர்மையிலே நீங்கியவர் நம்மவர்போல் அன்றுமுதல் இன்றுவரை யாங்கனுமே யாருமிலை ஒன்றுளது செய்இறைவா ஒர்நொடியிற் கொல்இவரை !
O O O
4.

Page 22
சிட்டுக்குருவி
42
எதிர்காலம்
எதிர்காலம் இருள் என்று சொல்வேன் - அதை எண்ணாத போக்கிங்கு கொல்வீர்! மதிகொண்டு வருங்காலம் வாழ - உயிர் மானத்தில் கைவைக்கும் FᏐ6ᏑJᎯ சதிகாரர் சதிராடி வீசும் - வலை சட்டென்று கண்டான சாத்தீ முதல் வைத்து முன்னேறப் பாதை - வலு மூச்சோடு வகுத்தாக வேண்டும் !
இதுகண்டு அதுகண்டு சும்மாய் - அட எனக்கென்ன உனக்கென்ன வென்றே உதவாது உயிரற்று வாழ்வார் - தமை உம்மாணை நாய்கூட உதைக்கும் ! விதிஎன்றும் வினைஎன்றும் வீணே - வெறும் விளைவற்ற விளையாட்டுச் சோம்பற் கதைநல்ல முயற்சிக்குக் காலன் - வருங்
காலக்கண் கருமங்கள் செய்வீர்!
பதிஎன்னப் படும்கோழிப் பேடு - தரும் பயனான முட்டைக்குப் பின்னால் சதைதின்னச் சரிபார்த்தல் போலே - எமைச்
சார்ந்துள்ள சண்டாளச் சூழற் கதைஉண்மை இப்போது காணார் - பினர் கழுத்திற்கை வைக்கின்ற கட்டம் பதிலாக விழித்தென்ன செய்வார் - இவர்
பாழ்பட்டுப் பரிநாச மாவார் !

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
நோயுற்று நோக்கற்று வாடி - மிக நொந்தெங்கள் உயிருக்கு மேலாம் தாயிங்கு தரைசாயும் வேளை - பல தாச்சிம றிப்பாரோ மக்கள் வாய்தன்னில் வரும்யாவும் பேசிச் - சுய வாழ்க்கை நவிலனிழை வாரோ? ஒய் ! உங்கள் மண்டைக்குள் என்னென் - வெறும்
உமுத்தித்த களிமண்ணின் சீழோ? ܚ
O. O. O.
43

Page 23
சிட்டுக்குருவி
44
போர் !
போர்போர் உல கீரே - கொடும் போ ரேன் விழைகின்றீர்? தீராப் பகை ஏனோ - குணம் தின்னும் படை ஏனோ? பார்பார் இதைப் பாரும் - இதன் பான்மை அழித் திட்டால் யார்யார் இதில் வாழ்வார் - புவி
ஆள்வீர் அறி யீரோ?
முன்னாள் இரு போர்கள் - வலு மூடர் தொடுத் திட்டார் இன்னா நிலை! மக்கள் ஈசல் எனக் கொன்றார்! பொன்னார் செயல் யாவும் - வெறும் புழுதிக் குழு திட்டார்! சின்னா பின மெல்லாம் - அட
என்னே மறந் தீரா?
தொடுத்தார் பெரும் போர்கள் - அவை பிடித்தார் பல நாளாய்! வெடித்தார் அவர் இடித்தார் - அடித் துடைத்தார் உள யாவும்! கொடுத்தார் பெரும் இன்னல் - துடி துடித்தார் புவி மக்கள் ! கெடுத்தோர் முடிவாக - எதை
எடுத்தார் இயம் புங்கள்!

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
பொல்லாச் செயல் உலகம் - உமைப்
போற்றும் விடும் போரை ! கல்லா உம துள்ளம் - புவி காப்பார்க் கது நன்றோ? நல்லார் செயல் ஈதோ ? - படு நாசச் செயல் கண்டீர்! நல்லாய் இருப்பீரே - நலம் நாளும் விழை வீரே!
தேடிப் புவிச் செல்வம் - அவை தேக்கிப் பல நாளாய்க் கோடிப் பணம் விட்டே - எமைக் கொல்லும் படை செய்வீர்! வாடப் பசி யாலே இவண் வாழப் பிறந் தோர்கள் ! கூடிப் பிறந் திரே - நலம் கூடும் வழி கொள்வீர்!
எண்ணத் தவறாலே - படை ஏங்கிப் பயத் தாலே பன்னிக் குவிக்கின்றீர் - தனிப் பாட்டில் பகை யதுவே ! விண்ணைக் கடக் கின்றீர் - சரி மண்ணைக் குடிப் பானேன்? கண்ணைப் பிளக் கின்றீர் - மிகக்
கவனம் சிறி தெண்ணும் !
O O. O.
45

Page 24
சிட்டுக்குருவி
46
நெஞ்சலை
கன்னி ஒருத்திஎன் கண்ணைப் பறித்தனள்
கண்டதும் செவ்விதழ் கவ்விக் குனிந்தனள்
அன்னமுந் தோற்றிட ஆடி அசைந்தவள்
ஆவலைத் தந்தொரு சோலையிற் சென்றனஸ்.
அங்கவள் பக்கலில் அன்புடன் சென்றிட
அன்புரை பேசினள் இன்புரை பெற்றகம் மங்கிய மாலையில் மாறத் துயர் விடை
மற்றவர் சென்றபின் பெற்றவள் சென்றனன்.
கன்ன லமுதினைக் கற்கண்டு பாகினைக்
கண்ட பசியர் களித்தது போலனன் உன்னத உள்ளம் உவந்திட வேமனம்
உண்மையி லேகாதல் ஊஞ்சலிற் சென்றது.
பாடும் கடல்தனில் ஆடி எழுந்திடும்
பஞ்சலை போலனன் நெஞ்சலை மிஞ்சிட வீடும் வெறுத்திட விண்மதி யைமனம்
விட்டுவிடாதுடன் ஒட்டிய தொன்றென.
அன்றவள் என்னகம் அன்புடன் வந்தனள்
அன்னையும் அப்பரும் அண்ணனும் இங்கிலை என்றதும் நன்றென என்னுணர் வின்றியென்
இன்னமு தத்தமிழ் இன்புடன் வந்தது.
மாங்கனி தேன்மொழி மங்கையர் பைங்கிளி மானெழில் மீன்விழி மாதுள மேயென ஆங்குமே தூங்கையில் அன்புடன் பேசிட
அண்ணன் எழுப்பினன் ஆறு மணியென.
O O O

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
பிரிவு
கலைகள் களிப் போடு உறை
மலர்கள் மகிழ்வோடு விலையில் மணம் வீசி இதழ் பொலியும் பொழு தங்கே
நிலையில் முகிற் கூட்டம் பல
மலைகள் எனக் கூடி
உலகுக் கொளி காட்டும் கதிர்
அலைகள் தடுத் தனவே!
வாகை தமக் கென்று மயில்
மேகம் உடன்கண்டு
தோகை விரித் தாடி இடை நோகக் களிப் பெய்த
போகும் புயல் ஒன்று மிகும் வேக்கப் பெருக் காலே
மாகம் வெளித் தோன்றக் கரு
மேகம் பெயர்ந்ததுவே!
தேடி அவள் ஒடி எனை நாடி அட நாணி ஆடி உடன் அங்கே இடம் பாடி வரும் வேளை
காடை அவள் தந்தை ஒரு
பேடி விரும் பாதார்
வாடி எனச் சென்றாள அவர்
கூடப் பயத் தாலே !
47

Page 25
சிட்டுக்குருவி
48
வானம் உயர் கிளையில் ஒரு கானக் குயில் கண்டு நாணம் கொளச் சோடி வரக் காணும் களி வேளை வேணும் என விட்டான் கொடும் பாணம் ஒரு வேடன் தேனாம் ஒரு சோடிப் பிரி
வேனோ அவன் செய்தான்?
O O. O.

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
கன்னி இரவு
குலவும் நிலவில் குவியும் நினைவில் மலரும் மகிழ்வும் மருளும் பலவும் நிலவும் குலப்பெண் சிலையின் தலைவன்
கலகக் காமன் செலவில் வந்தான்.
பார்த்தாள் பார்த்தான் அடடா பாவை வேர்த்தாள் கோர்த்தாள் மலர்கை மான்கண் போர்த்தாள் ஆர்த்தாள் அத்தான் என்றாள் ஈர்த்தாள் பூர்த்தாள் என்னென் என்றான்.
வளமின் தளிராள் மயங்கித் தயங்கி நெளியும் கொடிபோல் நின்றும் நடந்தும் கிளியாய்ப் பறந்தாள் ஒளிசேர் அறையுள் அளியாய் மலர்பின் அவனும் விரைந்தான்.
வேலைச் சேலை வெல்லும் விழியாள் பாலைக் காந்தட் சோலை தாங்கி மாலைப் பந்தல் மணப்பொற் கட்டில்
ஆலைத் தலைவன் அருகில் வந்தாள்!
காளை வடிவிற் கண்டாள் சிவனை தாளிற் தோளிற் தலையில் உள்ளம் மாளும் மங்கை வேளின் மீளா
அளும் பார்வைக் காட்பட்டாளே!
சாட்டாய் கடைக்கண் கோட்டாற் பூவை கேட்டாள் மாட்டேன் என்றா சொல்வான் பாட்டாற் காட்டா நின்றாள் திறமை
கூட்டாய் மீட்டான் மிகநல் வீணை.
49

Page 26
சிட்டுக்குருவி
50
விழியும் விளையும் வீச்சில் மின்னல் பொழியும் வெட்டும் பட்டுக் கன்னச் சுழியும் வழியும் தேன்மென் இதழும் குழலும் வளைவும் நெளிவும் கொல்லும்.
நுதலிற் பதியும் மதியும் நினைவு எதையும் எளிதிற் கெதியிற் சிதைத்துச் சுதியிற் சுளையாய் ஈர்க்கும் முக்கும்
மதியை மயக்க மறந்தான் உலகம் !
விட்டாள் இசையை விசையே நுணர்வீற் பட்டாள் பசியால் பணித்தேன் இதழை நட்டாள் எங்கும் நன்றாய் இறுக மொட்டேர் முலையால் உழுதாள் மார்பை !
கொண்டான் கோலிக் கொடியை முடிவைக் கண்டார் கன்னிக் காதற் செயலால் ஒண்டாம் இருவர் உயிரும் உடலும்
வெண்டார் அந்தப் பொழுதில் வையம் !
O O. O.

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
6) lq
ஈழவாணன் சன்னல் திறந்து முகம்
காட்டு - உன் மின்னல் விழிக்கணையைப்
பூட்டு!
வாட்டும் எனதுள்ள பூட்டைக் கழட்டியர்ந்தக் கூட்டில் குமையவமு தூட்டும் கலசமுடன் நீட்டுச் சடைசுழட்டி நெற்றிக் குழலசையப் பூட்டும் இடா இதனைக் காட்டி நெறிதணிக்க
மீண்டும் ஒருமுறைநீ
வாடி - உனை வேண்டும் எனதகத்தை
நாடி !
தாதை எனப் புலம்பும் பாதச் சிலம்பினொலி வாதை புரியஇளம் சூதைப் புரிந்து மையல் போதை கொடுக்குமிளங் கோதை எனதுஉளப் பாதை நடந்துகலைப் பேதை மடக்குயிலே
மீண்டும் ஒருமுறைநீ
பாடு - உனை
வேண்டும் அகத்திலெழுந்
தாடு !
5

Page 27
சிட்டுக்குருவி
52
போதும் !
பாதி வழியும் நடக்கத் தெரியாத பாவை எனையும் பகைக்கத் துணியாதே! சேதி எதுவும் கொடுக்கத் தெரியாதோ சேற்றுக் கமலச் சிவப்பு உதட்டாலே ! கோதி இன்பம் கொடுக்கத் தெரியாதோ
கோதை உள்ளக் கோபம் கிளறாதே
போதும் என்னைப் பொசுக்கத் துணியாதே பேடி உள்ளம் பொறுக்கத் துணியாது! ஏதும் உனக்கு இடரைக் கொடுத்தேனா ஏனோ என்னை இழுத்துக் கெடுக்கின்றாய்! மாது கொஞ்சம் மனதைக் கொடுப்பாயா?
மாந்தி அழகை மானே குடிப்பேனே!
வீட்டிற் கொஞ்ச விருந்து தருவாயா? வேண்டும் இதனை வீணே தடுக்காதே! சீட்டி அடித்தே சேதி தருவேனே! சிட்டாய்ப் பறந்தே ஓடிவருவாயா? ஈட்டி விழியால் என்னை எதிர்க்காதே
ஈது எனக்குப் பொறுக்க முடியாது!
O O. O.

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
dGO)6)
காலம் நொடிதடி காண்பவை யெவையும் காசில் லாமலே பெறும்படி உளதா? கோலம் மதியடி கூர்ந்தவை அறிவின் கோட்டுக் கிழிப்பெனக் குடிக நினைவர் சீலம் மதியதில் செல்பவர் உளராம்
சிட்டும் பறக்குது சிறப்பது அலவே!
விலங்கும் வளருது அவைபுரி வேட்டை விட்டவர் மனிதர் எனும்படி உளதா? கலங்கும் மானுடக் கூட்.மோர் சாதி கானக உயிரின் கடைவழி உணர்வாய் ! பழகும் விலங்கும் பசிப்பிணி எழவே
பாய்ந்தே சிறிசைப் புசிப்பவை உளது.
கொலைபுரி சிறுமை சரியல அவைகள் குழியதில் புதையென குமுறுத லலவே! தலைவனைக் கண்ட தமர்புரி மாந்தர் தடமது புரண்டே சரியவை அலவே ! கொலையது நமக்குக் கொடியது எனவே
குழறுவர் இதுபொய் குறைமதி அலவோ?
நெறியிது விலங்கு நிகர்த்தவை எனவே நினைவழி அறைவர் நெகிழ்த்தவர் உளரா? குறியிது மாந்தர்க் கொளும்வழி எனவே குறைமதி அறவே குறிபல உளது சரிஇவை எனவே பறைபவர் உளர்இதை
சமர்புரிபவரே தரிப்பவர் சிலரே !
53

Page 28
சிட்டுக்குருவி
கழியிது நொடிபல எமக்கிவை எதற்கடி கருகிடு இளமையைக் கழித்திடல் சரியல பழியிது எனமக்கெனப் பகருவள் தாயெனப் படுத்துறங் கிடுவதால்பலனெது கிடைப்பது வெளிக்கிடு எமக்கென விரித்துள சுவையது வெளியினிற் கிடக்குது விரைவினிற் புறப்படு.
O O. O.
54

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
நீயா? நானா?
நானென்றோ நீயானேன்
யார்கண்ணும் கொத்தாத நடைபாதைக் கப்பாலும்
நாம்கண்ட தென்ன? ஊனெல்லாம் குழைத்தென்னுள்
உணர்வலையில் உந்தும் உமிழ்நீருக் குள்ளேயேன்
ஊழிக்கூத் தாட்டம்?
வினைசமைத்த சூத்திரமா
விஞ்சைவழி? இல்லை வீசிவிட்ட நினைவலைகள்
இருதுருவ வெளிக்குத் துணைபோமா? நூல்ஏணி
தொத்திரவரப் போமா? துருவங்கள் ஆனோமேன் தூதினிமேல் கேடா?
நான்நடக்க, நிகழ்நடக்கும்
நாடகத்தின் நடுவே நாட்டியத்தின் உன்நிழலா
நர்த்தனத்தின் சாயல்? வான்புகையை நூல்திரித்தா வாழ்விழந்த நெஞ்சின் வடுஅழிக்கப் பிணையலிடப்
பார்க்கின்றாய்? போ, போ,
55

Page 29
சிட்டுக்குருவி
அண்டத்துப் கப்பாலும்
அடி, நுனியுமில்லை, அருவமாய் ஆனபொருள்
அதுநீயா? நானா? விண்டெழுந்த வேதனையின்
வேகமதும் நீயா விசையாக எனைச் சுற்றும்
விதியென்ன வினையா?
தொடக்கத்தை முடிக்காமல்
செய்தவளும் நீயா? தொடராத கதையாக்கிப்
போட்டவனும் நானா? அடக்கத்தில் முடிவெழுதிப் போட்டவளும் நீயா? அடியேளன் உயிர்தீயில்
பொசுக்கியவள் நீ. நீ.
O O
O

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
நிஷ்டை
விண்ணாழித் திரையின்கீழ்
விரித்திட்ட மணற்பரப்பு விசையற்ற துயரத்தில்
வீரியத்தைக் காட்டவென பன்நாளும் எஞ்சிட்
போதெல்லாம் பூக்காமல் பூமுடியைப் புல்நுனியைப்
போகத்தால் கொஞ்சிட்டாய்.
மீன்சுழித்த கடற்பரப்பு
வெண்குருத்து மணல்மோத வேயசைய மானுடத்து
வெளியசைய அணுஅசைத்தே ஊன்குழையச் சுரமெடுத்து
ஓங்காரம் மூழ்கவென ஒருநிலையைச் சிருஷ்டித்தே ஒசைக்கு வித்திட்டாய்.
பலகற்றும் உளம்விரியா
பண்பற்ற மானுடத்து பாதைகூவட் டோரமெலாம்
பாயிருட்டுக் கோரமதே உலகத்துச் சிறுமைதுய
ரோன்றிட்ட சகதியிலே ஊன்குழைத்த கிளர்ச்சிக்கு
உன்னைப் போற்றி விட்டவனார்
57

Page 30
சிட்டுக்குருவி
58
புத்தகமும் அறிவொளியின்
போகத்தி னாற்சுரக்கும் போயொழிக்கும் பிண்டங்கள் புழுதிவழிச் சுவடழிக்கும் வித்துவத்தைக் காட்டாமல்
விஞ்சைநிலா பால்சுரக்கா வெட்டவெளி வெம்பரப்பில்
விதிக்குயிரை யாகின்றார்.
கால்சுரக்க அணுப்பிளந்து
கடையூழிச் சீற்றத்தின் கடவுள்நிக ரென்றோதிக்
கர்வத்துக் கிரையிட்டோம் ஆள்சுரக்க நடுநடுங்கி
அவரிவரும் தடமறியா தணுப்பரப்பி னோரத்தில்
அண்டவெளிக் கேகிட்டார்.
நரையழித்த அறப்பீடம்
நற்றிசைக்கு ஏகாமல் நனவோட்டக் குமிழிகளை
நாரெடுத்துக் கோர்வைவிழ சிறையிட்டுப் பேயிருட்டின்
சீற்றத்தில் உயிரணுக்கச் சிக்கறுத்துப் பாயாமல்
சேற்றிலுழன் றழிகின்றார்.
சிமிழ்முடிச் சிந்தனையைச்
சிலையாக்கிச் செயலற்று செய்யுகிற பெருநிஷ்டை
செகப்பிரம்மைக் கோதுடைத்து குமிழியிடும் மானிடத்துக்
கோட்டத்தில் கொலுவிருக்க குடிபெயர்ந்து மெளனவழிக்
கொலுவகற்றிக் குடிபுகுவாய்,
O O O

நவாலியூர் சு. சொக்கநாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
சிந்தனை
காற்றிலேகடும் குஞ்வெம் கனல் காமம் ஊற்றிய நெய்யிலே சுடர் கூற்றிலைவெளிக் கோடிலை விழி குருட்டிடும்பெரும் பொய் இருட்டிலை நேற்றுஇன்றுபின் நாளை என் றிடும் நேரஊர்தியை நிறைத்திடும் படி சாற்ற ஆளிலை சார்ந்த அவ்விடம்
சான்ற என்றுளச் சாகாச் சிந்தனை !
கிள்ளிவிட்ட என் கிறுக்கிலே உணர்க் கிட்டசுள்ளிகள் நின்றெறிந் தன தள்ளிவிட்டது தணலெரிந்த பின் தக்கிடும்பிடிச் சாம்பல் போன்றஇவ் உலகிடைஅதில் ஊர்ந்து சென்றிடும் ஒர்பெரும்கன வூர்த்திக் குள்ளிவர் கலகமிட்டும் மானுடத்தவர்
காதைநெஞ்சிடைக் கனலை மூட்டின !
ஒமகுண்டமாய் நின்றெரிந்தது ஒமிதை இவன் உரைத்தலென்கடன் காமமொன்றினால் கருகிடும்மிவர் காலம்முற்றிலும் காரணம்இல வாய்மை உண்டு தாம் வாழ்ந்துசென்றிடும் வாசல்கண்டிடார் வாதமுண்டுபல் தாய்மை பேசுவார் தனக்கெனச் சுயத்
தன்மைபெற்றிடா ஊமைச் சிந்தனை !
O O O
59

Page 31
சிட்டுக்குருவி
60
Du 155b
சூனியத்தை மோதியதைச் சுட்டெரித்துப் போடவென சுருக்கவிழ்ந்த என்றுள்ள சுரப்பினிலே ஊறியதோ
மானிட உன் வழிப்பயணம் மண்ணடியில் உன்வாழ்வு
மானியத்தைக் கூறஅடி மனத்திலெழும் ஆட்டங்கள்
சூரியனின் ஒளிஉறுஞ்சித்தொட்டிலென ஆடுமந்த
தொலையுள்ள மதிவட்டப் பாழ்வெளியின்
பகட்டொளியை
வாரியெடுத் தாடுவராம் வானிதையர்தம் துயிலெனவே
வட்டுலகு மானிட உன் வாழ்வுமிது போல்மயக்கம் !
விழிமுடிப் பிறப்பெடுத்து வீழ்ந்துவிட்ட இவ்வட்ட
வழிப்பயண முடிவினிலும் வாடிக்கை யாகவேகண் ஒளியற்று முடியேதான் ஒடுகிறாய் உன்பயணச்
சுவடழுத்தும் பாதையது சூனியமா காலவெளி கழியுதுபல் நொடிபலவும் கடைவிரிப்பா மானுடத்தோர்
காசுவிட்டு வாங்குவதார் கடையில் முதலாளியில்லை அழிந்துவிடும் வாங்கிவிட்டால் உன் வாழ்வுக் கணக்கடியை
அவரிவரும் பார்த்துவிட்டார் அடியில்விடை பெருமயக்கே!
முன்னறியோம் இவ்விடத்தை முடிச்சறுந்து வீழ்ந்தவுடன்
முன்னிற்கும் பலமுகத்தை முழுதநியோம் நாள்கழிய அன்னையெனத் தந்தையென அவரிவரும் உறவுஎன
அண்டுகிறார் பாசமதாம் அடுத்தவரின் சிந்தனைகள் தன்னிலரசோச்சுகிறோம் தள்ளாடிப் போதNய
தன்பயன முடிவெழுதி தனிவழியே ஒடுகிறோம் மண்ணடியில் நமது உடல் மற்றெங்கோ ஆவியது
கடைசியிலே பாசமன்பு கண்டவர்கள் யாருமிலை !
O O. O.

நவாலியூர் சு. சொக்கதாதன் - வி. கந்தவனம் - ஈழவாணன்
மோனம்
நீசத் தனம்புரி நெஞ்சத் திவலையின் பாசச் சுரப்பினில்
பாதச் சுவடெது?
- வேறு -
சுழிப்பு உணர்வுச் சூச்சு மத்தெழும் வலிப்புச் சுழிக்கும்
வாசக் கதவில.
- வேறு -
கால முற் றழிக்கும்
கனல் பொரி குஞ்சுகள் காற் சுரப் பினில் கசிந்து போன பின் ஆழ நின்றச்சுவட்
டாரடா கண்ட னன்
ஆகுதிப் பொருளாய் அவிந்து போனதே !
O O O
6

Page 32


Page 33
அமரர் கவிஞர் நவாலியூர் சு. சொக்கந
சில கவிதைகள் நிகச் சிறப்பாக இரு இந்த நாட்டின் நறுமணத்தைப் பெற்றி சிரித்து உள்ளத்தால் தனது கவிப் 6) Lurra கொள்ளும் திரு நவாலியூர் சு. சொக்கந
“கவிஞர் சொக்கநாதன் அவர்கள் புலவரைப் பெற்றெடுத்த நவாலியூர் அறிவுள்ளவர்; சிறந்த மரபுக் கவிஞ எல்லா வகைப் பாக்களையும் ஆக்கு சிட்டுக்குருவியில் இடம் பெற்றிருக் கொண்டு அவரது கவிதை புனைய அறிந்துவிட முடியாது என்பதனை வாச சொக்கநாதனை முழுமையாகத் தரி அவரது மாத்தளை முத்துமாரியம் பிரபந்தத்தைப் படித்துப் பார்த்தல் நன்
- ക്ലബ്,
 

கந்தவனம்- søre a