கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசிய தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1991

Page 1


Page 2
வளர்பிறை பே தமிழரில் அறி உளத்தையும்,
வளத்தையும் ! விளக்கிடும் இய வீறுகொள் இ6 அளப்பிலா உள றமிழேநீ என்ற
○
 
 

S)
ால் வளர்ந்த நர் தங்கள், உலகில் ஆர்ந்த எழுத்துச் சொல்லால், ல்மு திர்ந்தும், சை யடைந்தும், பகை ஆடற் ரன் ஆவி!

Page 3


Page 4


Page 5
C5du ÖITabgu
Öीpl]]
இந்துசமய, தமிழ் கலாசார
அமைச்சரின் அ

தமிழ் Gilgit 1991
மலர்
அலுவல்கள் இராஜாங்க அலுவலகம்

Page 6
பதிப்பாசிரியர் :
 

ஏ. எம். நஹியா

Page 7


Page 8
இலங்கை ஜ President of
I am happy to note that the Office o & Cultural Affairs is organising the Tamil in Kandy. The 1991 festival is significan
ten years.
I am made to understand that best Ta
1981 and 1989 would be awarded prizes Authors will be honoured at this Festiva,
A Tamil Sahitya Day Festival of Tamil Writers. It is also appropriate to
communities are living in amity.
I wish the Tamil Sahitya Day Fes
01 March 1991
ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රිත සමාජවාදී ජන DEMOCRATIC SOC
 
 

னாதிபதி
Sri Lanka
f the Minister of State for Hindu Religious Sahitya Day Festival which will be held at since it is to be held after a lapse of
amil books and writings published between At the same time outstanding Tamil
this nature fulfils the aspirations of the hold this Festival in Kandy where all
tival every success.
Y 今 lo حمسلمحصب سے
PRESIDENT
035 இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசு ALISTREPUBLIC OF SRILANKA

Page 9
3 Go2S)) { இலங்கை : President O
இந்துசமய, பண்பாட்டு அலுவல்கள் இர72 மாநகரத்தில் தமது சாகித்திய தின விழாவின ஏற்பாடு செய்துள்ளமையையிட்டு நான் பேரு ஆண்டுகளுக்குப் பின்னர் 1997 இல் தமிழ் இ கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் மிகச்சிறப்பு வாய்ந்த விழாவாகும்.
இந்த விழாவின்போது 1987 முதல் 1989 நூல்களுக்குப் பரிசுகளை வழங்க ஏற்பாடு செ எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்க ஏற்! அறிவேன்.
தமிழ் சாகித்திய தினவிழாவானது தமிழ் இ அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விழாவாகு சேர்ந்த மக்கள் ஒற்றுமையாக வாழுகின்ற கe நடாத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளமை சா தமிழ் சாகித்திய தினவிழா பல வெற்றிகை
1997 மார்ச்சு 07 ஆந் திகதி
ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රිත සමාජවාදී ප් DEMOCRATICSO
 
 

ජනාධිපති
ஜனாதிபதி of Sri Lanka
ஜாங்க அமைச்சரின் அலுவலகம் கண்டி }ன விமரிசையாகக் கொண்டாடுவதற்கு வகை அடைகின்றேன். பத்து லக்கிய விழாவொன்றைக் ப்ளது. இது, தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு
வரையில் எழுதப்பட்ட மிகச் சிறந்த தமிழ் சய்யப்பட்டுள்ளதெனவும் தலைசிறந்த தமிழ் பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் நான்
இலக்கியப் படைப்பாளர்களது தம். அத்துடன், எல்லா இனங்களையும் ண்டி மாநகரத்தில் இவ்விழாவினை லப்பொருத்தமாகும்.
)ளக் காணவேண்டுமென வாழ்த்துகின்றேன்.
7 اطمحمسلمے مملوكي کیپ کے
0ை35 இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசு CIALISTREPUBLIC OF SRILANKA

Page 10
毅
羲 禦
毅
禦 x 雛
囊
毅 徽
禦
囊徽 x 徽
 


Page 11
ශ්‍රී ලංකා ද இலங்கையின் பி Prime Ministe
1997ம் ஆண்டு மார்ச் 29, 30, 31ந் திகதிகள் சாகித்திய விழாவுக்கு வாழ்த்துச் செய்தி ஒன் மகிழ்ச்சியடைகிறேன். இவ்விழா இந்துசமய, அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சிகள் ஆகியன இவ்விழாவி அமையவிருப்பதாக அறிகிறேன். எழுத்தாள ஈடுபட்டுள்ள பிறரும் இவ்விழாவினை மிக்க அ கடந்த 70 வருட காலத்தில் பிரசுரிக்கப்பட்ட தெரிந்திருப்பதாக அறிகிறேன். தமிழ் இலக்கி எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படவு எழுத்தாளர்களை கெளரவித்தல் அவர்களுக் ஊட்டும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு இ பிறருக்கும் இது தூண்டுதல் அளிப்பதாக அை தமிழும் அரச கரும மொழியாக ஏற்கப்பட்டு முக்கியத்துவமுடைய ஒன்றாக விளங்குகின்ற எழுத்தாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் கொள்கையாகும். இந்துசமய, கலாசார அலு கொள்கையை நிறைவேற்றும் வகையில் பயனு வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
இவ்விழாவில் கலந்து கொள்வதில் நான் மிக்: இவ்விழா சிறப்புற என் நல்வாழ்த்துக்களையு

{ග්‍රාමාතාස
பிரதம மந்திரி r of Sri Lanka
ரில் கண்டியில் நடைபெறும் தேசிய தமிழ் றை அனுப்புவதில் மிக்க
கலாசார இராஜாங்க அமைச்சரின் ாது. கருத்தரங்குகள், கலாசார நிகழ்ச்சிகள், ன் பிரதான அம்சங்களாக ர்களும், இலக்கிய முயற்சிகளில் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள்.
நூல்களிலே 23 நூல்களை பரிசுக்காகத் கியத்திற்கு அரும்பணியாற்றிய 4 ள்ளதாகவும் அறிகிறேன். இவ்விதம் கு மதிப்பை அளிப்பதோடு உற்சாகத்தையும் இலக்கிய ஆக்கங்களை வெளியிட்டு வரும் மையும்.
ள்ள இவ் வேளையில் இவ்விழா து. இலக்கிய முயற்சிகளில் ஈடுபடும் ஆகியோரை உற்சாகப்படுத்துதல் அரசின் லுவல்கள் இராஜாங்க அமைச்சு இக் னுள்ள முயற்சிகளை செயல்படுத்தி
க மகிழ்ச்சியடைகின்றேன்.
/ம் தெரிவிக்கின்றேன்.
டி.பி. விஜேயதுங்க பிரதமர்

Page 12


Page 13
இலங்கைப் பாராளுமன்ற சட
நாடளாவிய ரீதியில் தமிழ் சாகித்திய விழ, கொண்டாடப்படுகின்ற இந்த நல்ல வேை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்துசமய கலாசார இராஜாங்க அமைச்ச சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறது. இலங் நூல்களை தமிழ் நூற் கண்காட்சியில் வை செய்யப்பட்டிருக்கின்றன. அறிஞர்கள் கரு படிக்கிறார்கள். தமிழர் கலாசாரத்தைப் செய்யப்பட்டுள்ளன. இவையெல்லாம் தட இராஜாங்க அமைச்சர் பி. பி. தேவராஜ் & நன்றாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை ப
மூதறிஞர் நால்வர் இவ்விழாவில் கெளரவி ஒரு இந்துப் பெருமகனும், மட்டக்களப்ை பாணந்துறையைச் சேர்ந்த ஒரு முஸ்லிமுட இதற்கெனத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை பரிசும் இவ்வாறுதான் அமைகிறது. சாதி, தமிழுக்குச் சேவைசெய்த தமிழறிஞர் கெ விடயமாகும். இந்த நாட்டில் இப்படியொ இதனை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இந்த வைபவத்தை ஒட்டி வெளியிடப்படு! மத்தியிலும் தரமான ஆராய்ச்சிக் கட்டுை
சாகித்திய விழா இனிதே நடைபெற என

பாநாயகர் வாழ்த்துகிறார்
ா கண்டியில் வெகு விமரிசையாகக் ளயில் எனது வாழ்த்துக்களைத்
ரின் காரியாலயம் இந்த விழாவைச் கையில் வெளியிடப்பட்ட அதிகமான /ப்பதற்கு ஏற்பாடுகள் நத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகள் பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு மிழ் விவகாரத்துக்குப் பொறுப்பாகன அவர்களின் சிறந்த வழிநடத்துகையில் மகிழ்ச்சி தருகிறது.
க்கப்படுகிறார்கள். யாழ்ப்பாணத்தவரான பச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவத் தமிழறிஞரும் ம், மலையகத் தமிழ் அறிஞர் ஒருவரும் ) என்னைப் பெரிதும் கவர்ந்துள்ளது. நூற்
சமய, பிரதேச வேறுபாடுகளின்றி ளரவிக்கப்படுவது மிக நல்லதொரு "ரு நிலை இன்று மிகவும் அவசியமாகும்.
கின்ற சிறப்புமலர் பல கஷ்டங்களுக்கு ரகளுடன் வெளிவருவது மகிழ்ச்சிக் குரியது.
து இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
எம்.எச். முகம்மத்
சபாநாயகர்

Page 14


Page 15
சுற்றுலா,இராமிய கைத்ெ அமைச்சரின் செய்தி
'யாதும் ஊரே யாவரும் கேளீர்' உணர்த்துவித்த தமிழ் அன்னைக்கு விழா-தேசிய இலக்கிய விழா -இவ்வா மாநகரில் நடை பெறுகின்றது. இது
இதற்கு முன் சாகித்திய மண்டலப் வழங்கப்பட்டன. சிங்கள சாகித் ஆக்கங்களுக்கு பரிசில்கள் வழங்கப்ப பத்து ஆண்டுகள் நடைபெறவில்லை : சமய கலாசார இராஜாங்க அமை வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு கெளரவமும் அளிக்கும்தேசிய தமிழ் இவ்விழாவைக் கொண்டாட முன் 6 FLouL/ G56)/7F/7/T இராஜாங்க அ/ே
இருமொழி பேசும் இந்நாட்டிலே மட்டக்களப்பு, திருகோணமலை, நு செறிந்தும், நாடு முழுவதும் பரந்து
தமிழ் எழுத்துத் திறமை பை பிரதேசங்களில் இருப்பதால், இயற் இந்த சாகித்திய விழாவை பொருத்தமாகும்.
Ges/røv/7 356vLO/735 @935/7 63øTL/TL Z VLUG துடிக்கும் தம் ஆர்வத்திற்கு ஆதர நிற்கும் தமிழ் எழுத்தாளர்களு வேண்டுமென்பது என் விருப்பம்.
விழா சிறப்படைய

தாழில்துறை அபிவிருத்தி
என்ற மனித நேயப்பண்பை உலகிற்கு ஆரம் குட்டும் தமிழ் சாகித்திய "ண்டு வரலாற்றுப் புகழ் பெற்ற கண்டி இனிப்பான செய்தி. பரிசுகள் தமிழ் எழுத்தாளர் சிலருக்கு திய விழாக்களில் சிறந்த தமிழ் ட்டன. அந்த நிகழ்ச்சிகளும் கடந்த 7ன அறிகிறோம். தற்பொழுது இந்து ச்சு கடந்த பத்து ஆண்டுகளில் த பரிசில், விருது வழங்குவதுடன் இலக்கிய விழாவாக பரந்த அளவில் வந்திருக்கின்றது. அதற்காக இந்து மெச்சைப் பாராட்டுகின்றேன. தமிழ் பேசும் மக்கள் யாழ்ப்பாணம், /வரெலியா போன்ற பிரதேசங்களில் ம் வாழுகின்றார்கள். 9டத்தவர்கள் நாட்டின் பல்வேறு கை வளம் செறிந்த கண்டி மாநகரில் ஏற்பாடு செய்திருப்பது மிகப்
ம்ெ இவ்விழா, இலக்கியம் படைக்கத் rவையும், அரவணைப்பையும் தேடி க்கு உந்து சக்தியாக அமைய
ஆசி கூறுகின்றேன்.
செள. தொண்டமான்

Page 16
彩
盗 密
必 ,
缪懲
癥縱繆 燦癥 縱ろ繆 ~繆 癥 縱縱 密 必必 縱 繆 澎
密繆 密必欲 -密
 


Page 17
கலாசார அலுவல்கள் தகவ வாழ தது
சிறந்த கலைஞன், தான் வாழும் சமூகத்தின் ஈடிணையற்ற சக்தி படைத்தவனாவான். ம திறமைசாலியாகிய அவன் இனம், நாடு, குை இரசிகர்களின் மென்மையான குணங்களை அவனின் குக்கும ஆன்மா நன்றாக மீட்டப்ட் அசைவது போல, அநீதி, கொடுமை என்பவ ஒரு சமூகத்தை பண்படுத்துவதற்கு சமயம் 6 இலக்கியம், கலைகள் என்பவற்றின் பணியுட பண்டைய காலந் தொடக்கம் இந்நாட்டுக் கி தமிழ்ப் புலவர்களும், பண்டிதர்களும் அளித் புத்தபிரான் காலத்துச் செல்வாக்கில் எழுத சங்கப் பிக்குகள் தமிழ் மக்களுடன் மிக நெரு என்பதைத் தெரிவிக்கின்றன.
அதி உத்தம ஜனாதிபதி அவர்கள் எமது அணி அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அ.ை மேனாட்டவரின் ஆட்சியின் கீழ் எங்களது ந கலாசார வளர்ச்சி என்பவற்றுக்கு குந்தகம் ஒன்றைக் கண்டு, இலங்கை மக்கள் சமூக அ நியமனத்தை வழங்கியுள்ளார்.
இந்த உயரிய நோக்கத்தை நன்கு புரிந்துகெ/ செயற்படுத்தி வரும் எமது அன்புக்குரிய பி. காலத்துள் ஆற்றியுள்ள மகத்தான சேவை ! கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சி விழாவை வரலாறு படைத்த கண்டி மாநகரி எடுக்கப்பட்ட நடவடிக்கை அவற்றுள் ஒன்ற இலக்கியக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய் சிறந்த புலவர்கள் பலருக்குப் பரிசு வழங்கது இலக்கியத்திற்கு உரமும் வளமும் ஊட்டும் ( கைங்கரியமாகும்.
அதி உத்தம ஜனாதிபதி அவர்கள், இன ஒற் நட்பு என்பனவற்றில் காட்டும் அக்கறை டே வளர்த்தலிலும் கைகொள்ளும் பாரபட்சம4 இந்துசமய, கலாசார அலுவல்கள் இராஜா4 சகல வழிகளிலும் வெற்றிபெற வேண்டுமெ

ல்துறை அமைச்சரின்
எதிர்கால வழியைச் செப்பனிடும் னித இயல்பை வெளிக்காட்டும் 2ம் என்பவற்றைக் கடந்தவன். மலரச்செய்பவன். உணர்ச்சி நிறைந்த /ட்ட வீணையின் நரம்புகள் சிறு தாக்கத்தால் ற்றால் நுண்ணியதாகத் தாக்கமடைகிறது. 7வ்விதம் உதவுகின்றதோ அத்தகையதே 0ாகும்.
கலாசாரத்துக்கு வளமும் உரமுமூட்டுவதற்கு த ஆதரவு ஒப்பற்றதொன்றாகும். ப்பட்ட ஏடுகள், நூல்கள், எங்கள் புத்த மகா 5க்கமான தொடர்புகொண்டு பணியாற்றினர்
மைச்சுடன் இணைந்த, இந்துசமய, கலாசார மச்சர் ஒருவரை நியமனம் செய்தார். ாட்டு மக்களிடையே சாந்தி, சமாதானம், விளைத்த தடைகளை நீக்கி, புதுயுகம் 0 ஒழுக்கங்களைப் பேணும் பொருட்டே அந்த
7ண்டு அர்த்தமுள்ள வேலைத் திட்டங்களைச்
பி. தேவராஜ் அவர்கள் இக் குறுகிய பாராட்டுக்குரியதொன்றாகும். இந்துசமய, னால் ஒழுங்கு செய்யப்பெற்ற தமிழ் 'லே கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு ாகும். இவ்விழாவிலே நூற் கண்காட்சி, திருப்பதைப் போன்று எழுத்தாளர்கள், லும் அண்மைக் காலத்திலே தமிழ் பொருட்டு எடுக்கப்பட்ட சிறந்த
றுமை, அன்னியோன்னியமான நெருங்கிய ான்று கலாசாரத் தொடர்பை bற நடவடிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு ங்க அமைச்சின் வாயிலாகச் செய்யும் பணிகள் னப் பிரார்த்திக்கின்றேன்.
மும்மணிகளின் ஆசி கிட்டுவதாக
டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார

Page 18


Page 19
இந்துசமய தமிழ் கலாச அமைச்சரின் செய்தி
எழில் மிகு கண்டி மாநகரில் மார்ச் சாகித்திய விழா வரலாற்று முக் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் மண்டலப் பரிசுகள் சில அளிக்கப்பட் கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் எ விட்டது. தற்பொழுது நடைபெறவி விழா கடந்த பத்து ஆண்டுகளிலு பரிசளிக்கும், மூத்த எழுத்தாளர் விளங்கும். பரிசளிக்கும் நிகழ்ச்சியா தற்பொழுது இது இலக்கியப் திருவிழாவாகவும் பரிணமித்திருக்கி/ மலையகத்தின் தலைநகரத்தில் கே வருங்கால இலக்கிய எழுச்சிக்கும் அமைகின்றது.
தீந்தமிழின் தித்திக்கும் இலக் செழுமைக்கும் சான்றாக சங்க கால சிலப்பதிகாரம், மணிமேகலை போன் பன்னிருதிருமுறைகளும், ஆழ்வாரி தேம்பாவணி, உமறுப் புலவரின் சீற/ மனோண்மணியமும் , பாரதியின் ட பாவளமும் இன்னும் எண்ணற்ற விளங்குகின்றன.
பெருமைமிக்க இந்த பாரம்பரிய சரிவரப் புரிந்து கொள்வதற்கும் , பண்படையவும், இத்தகைய விழாக் இலக்கியப்படைப்பாளிகளை பரிந் மூலம் நாம் பெருமையடைகிே மடைவாள்.
இந்நாட்டில் தமிழிலக்கியத்தை 6 நிற்கும் என்பதற்கு இவ்விழா சாட்சி தமிழ் சாகித்திய விழாவையொட் தமிழிலக்கிய புத்தெழுச்சியாக-உந் முரசமாக அமையும்.
இம்மலர் சிறந்த முறையில் வெளி பாராட்டுக்கள்-வாழ்த்துக்கள்.
வளர்க தமிழ் இலக்கியப் பாரம்பரி

ார இராஜாங்க
இறுதியில் நடைபெறும் தேசிய தமிழ் கியத்துவம் வாய்ந்ததாகும். பத்து தமிழ் எழுத்தாளர்களுக்கு சாகித்திய டுள்ளன. இத்தகைய பரிசுகளும் கூட ழுத்தாளர்களுக்கு வழங்குவது நின்று ருக்கும் இந்த தேசிய தமிழ் சாகித்திய ம் வெளிவந்த சிறந்த நூல்களுக்கு களை கெளரவிக்கும் வைபவமாக க மாத்திரமே இருந்த நிலை மாறி r பெருவிழாவாகவும், தமிழ்த் 2து.
5ாலாகலமாக நடைபெறும் இவ்விழா வளர்ச்சிக்கும் கட்டியம் கூறுவதாக
கியவளத்திற்கும், தொன்மைக்கும் இலக்கியங்களும், கம்பர7மாயணம், ன்ற சுவை சொட்டும் காவியங்களும், ன் பாசுரங்களும், வீரமாமுனிவரின் 7ப் புராணமும், சுந்தரம்பிள்ளையின் ாஞ்சாலி சபதமும், பாரதிதாசனின்
நவீன இலக்கியப் படைப்புகளும்
பத்தை நினைகூருவதற்கும், அதை அதன் செழுமையில் பக்குவப்பட்டு கள் இன்றியமையாதவையாகும்.
தேத்து, உபசரித்து, கெளரவிப்பதன் றாம். தமிழன்னை புளகாங்கித
வளர்ப்பதற்கு அரசு உறுதுணையாக சி பகரும்.
டி வெளியிடப்படும் இச்சிறப்பு மலர்
துசக்தியாக-விழாவின் சின்னமாக -
ரிவர உதவிய அனைவருக்கும் எனது
பி.பி. தேவராஜ்

Page 20
மத்திய மாகாண ஆளுநர் வா
மத்திய மாகாணத்தின் தலைநகரில் 1991 ம7 நடைபெறுகின்ற சாகித்திய விழாவை ஒட்டி ட என்னுடைய ஆசியையும் இதயம் கனிந்த வாழ அமைச்சுக்குத் தெரிவிப்பதில் மிக்க சந்தோஷழு இந்த விழா 10 வருட இடைவெளிக்குப் பின்ன வருட காலத்துள் வெளிவந்த நூல்களில் சிறந் வழங்கப்படுகின்றன. இவ்விழாவினை நடாத்து நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டும். இதன்
நடைபெறும் என்று நம்புகின்றேன்.
இந்துசமய, கலாசார இராஜாங்க அமைச்சரின் வாழ்த்துகின்றேன்.

ழ்த்துகிறார்
ார்ச் 29, 30, 31 ஆந் திகதிகளில் மத்திய மாகாண ஆளுநர் என்றவகையில் pத்துக்களையும் இந்துசமய, கலாசார இராஜாங்க மும் பெருமையும் அடைகின்றேன்.
7ர் நடைபெறுகின்றது. 1987 - 1989 ஆம் தனவற்றுக்கு பரிசுகள்
ஏவதற்காக இராஜாங்க அமைச்சு * பின்னர் ஒவ்வொரு வருடமும் இவ்விழா
7 முயற்சியை நான் மனமார
பி. சி. இம்புலான

Page 21
மத்திய மாகாண முதலமைச்
வரலாற்றுச் சிறப்புமிக்க மலையகத் தலைநக சாகித்திய விழா நடைபெறுவதையிட்டு பொ
ஆதி காலந்தொட்டு தமிழ், சிங்கள உறவுகள் என்றென்றும் வலியும் பொலிவும் பெறும் வ சாகித்திய விழா தமிழ் கலை, இலக்கிய, பண் வளர்ச்சியையும் மறு மலர்ச்சியையும் ஏற்படு இந்து கலாசார இராஜாங்க அமைச்சரின் அ
விழ7 அனைத்துத் துறைகளிலும் சீரும் சிறப் சபையின் சார்பிலும் அப்பகுதி வாழ் மக்களி

சரின் ஆசிச்செய்தி
ராம் கண்டியில் முதல் முறையாக தமிழ் ரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.
நின்று நிலவி வந்துள்ளதைப் போலவே கையில் கண்டியில் நடைபெறுகின்ற ண்பாட்டுக் கலாசாரத்துறைகளில் புதியதோர் த்தும் என நம்புகிறேன். லுவலகம் ஏற்பாடு செய்துள்ள இச்சாகித்திய புமாக நடைபெற மத்திய மாகாண ன் சார்பிலும் உளமார வாழ்த்துகின்றேன்.
நன்றியுடன்,
டபிள்யூ. பீ. பீ. திஸாநாயக்க

Page 22
இந்துசமய தமிழ் கலாசா அலுவலகச் செயலாளரி
பத்தாண்டுகளுக்குப் பின்னர் கோலாகலமாக கண்டியில் நடை வெளிவரும் இம் மலருக்கு இவ் 6 மகிழ்ச்சியடைகின்றேன்.
ஒரு மொழியின் சிறப்பையும், வாழ்வின் செம்மைகளையும் அவ இலக்கியங்களே பிரதிபலித்துக் கா போற்றுவதும், பேணுவதும் அ வழிவகைகளைச் செய்வதும் கற்றறி
தமிழ் இலக்கியத்தின் 6/67, அரசுமட்டத்திலே எமது இந்துச4 இராஜாங்க அமைச்சு பொறுப்பேற் ஒன்பது ஆண்டுகளில் வெளிவந்த நு விழைந்தது.
அந்த எண்ணம் செயலாக பரிண மக்களும், எழுத்தாளர், அறிஞர் டெ நாம் பூரித்து நிற்கின்றோ கருத்தோவியங்களைத் தாங்கி வரும் பெருவிருந்தாக அமையும் என்பது 2 விழா சிறக்கவும், விழா மலர் ம6 வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு

ர இராஜாங்க அமைச்சரின் ன் வாழ்த்து
தமிழ்ச் சாகித்தியவிழா வெகு பெறவுள்ளது. அதை முன்னிட்டு பாழ்த்துச் செய்தியை வழங்குவதில்
அம்மொழியைப் பேசும் மக்களின் /வக் காலங்களில் வெளிவருகின்ற ட்டுகின்றன. அவற்றை பயில்வதும், வற்றின் வளர்ச்சிக்கு வேண்டிய ந்தோர் கடன்.
ர்ச்சிக்கு வேண்டிய பணிகளை மய, தமிழ் கலாசார அலுவல்கள் ற்று 1981 முதல் 1989 வரையான 7ல்களுக்குப் பரிசளித்து கெளரவிக்க
மித்த போது இலங்கை வாழ் தமிழ் பருமக்களும் அடைந்த மகிழ்வு கண்டு lb. அறிஞர் பெருமக்களின் ) இடம் மலர் இலக்கிய ஆர்வலர்க்கோர் உறுதி. ணம் பரப்பவும் எனது நெஞ்சார்ந்த நமகிழ்வடைகிறேன்.
த. வாமதேவன்

Page 23
இந்துசமய தமிழ் கலாச திணைக்களத்தின் பணி
சுமார் பத்து ஆண்டு இடைவெளிக் வினைக் கண்டி நகரில் 1991 மா பெருவிழாவாகக் கொண்டாடுகின்( எழுத்தாளர்களுக்கு பரிசுகள் இ தமிழியல்துறைக்கு அரும்பணியாற் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளன. கலைநிகழ்ச்சிகள் ஆகியனவும் இவ்வ
தமிழ் இலக்கியப் பிரியர்கள் ஒன் சிறப்புற வாழ்த்துகிறேன். ി கலைப்பெருக்கும் கவிப்பெருக்கும் ே பெறவும் இலக்கிய எழுச்சி ஒன் புரிவதாக!

ார அலுவல்கள் ரிப்பாளர் வாழ்த்துகிறார்
குப் பின்னர் தமிழ்ச் சாகித்திய விழா ார்ச் 29, 30, 31 ஆம் திகதிகளில் றோம். இருபத்தி மூன்று நூல்களின் இவ்விழாவில் வழங்கப்படவுள்ளன. றிய நான்கு அறிஞர்கள் விருதுகள் ர். நூற்கண்காட்சி, கருத்தரங்குகள் பிழாவினை அணி செய்கின்றன.
றுகூடும் இவ்விலக்கியப் பெருவிழா வள்ளத்தின் பெருக்கைப் போல் மவுவதாக! நாம் விழிபெற்று புத்துயிர் று உருவாகவும் இவ்விழா துணை
க. சண்முகலிங்கம்

Page 24
" அமிழ்தம்எங்கள்
அன்னை வா வையகத்தில் இை வாழ்வு கண் வானகத்தை நா வரவழைக்கு பொய்அகந்தை
போக்கவல்ல புண்ணியத்தை இ
எண்ணவை

தமிழ்மொழி ழ்க வாழ்கவே ணயிலாத rட தமிழ்மொழி னிலத்தில் ம் தமிழ்மொழி புன்மையாவும் ) தமிழ்மொழி இடைவிடாமல் க்கும் தமிழ்மொழி. "

Page 25
0.
ll.
12.
13.
4.
5.
I6
பொரு
நாவலர் தொடக்கிவைத்த சைவசமயக் பேராசிரியர் வ. ஆறுமுகம்
சித்திலெவ்வையின் உரைநடைச் சிறப்பு எஸ். எம். கமால்தீன்
பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தின் தோ, கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை
சீறாவும் திருமறையும் பேராசிரியர் ம. மு. உவைஸ்
யாழும் வீணையும் பேராசிரியர் பொ. பூலோகசிங்கம்
தமிழிசை பற்றிய சில குறிப்புகள் செ. கணேசலிங்கன்
மட்டக்களப்பும் மட்டக்களப்பின் பண்ை வி. சி. கந்தையா
பிராமி எழுத்துக்கள் ஒரு வரலாற்று ே ஆ. தேவராசன்
எமது சிறுகதைகளிலே புதிய அனுபவங் பேராசிரியர் சி. தில்லைநாதன்
இலகு தமிழில் விஞ்ஞான இலக்கியம் திக்குவல்லை கமால்
ஈழத்துத் தமிழ் உரைநடை இலக்கியத் வ. அ. இராசரத்தினம்
ஆனந்த குமாரசுவாமியின் இலங்கை வ கலாநிதி அம்பலவாணர் சிவராசா
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிக ரீ. பாக்கியநாயகம்
மட்டக்களப்பு நாட்டுக்கவி இலக்கியமுட புலவர்மணி அல்ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தீன்
தமிழ் சிங்கள இலக்கிய உறவு மயிலங்கூடல் த. கனகரத்தினம்
மலையகத் தொழிலாளர் பற்றிய சிறு கலாநிதி க. அருணாசலம்

ளடக்கம்
பக்கம்
கல்வி மறுமலர்ச்சி
1.
6
ற்றம்
17
24
28
டய கூத்து மரபுகளும்
32
நோக்கு
37
கள்
45
SO
தின் ஆரம்பம்
54
ாழ்வும் பணிகளும்
57
5nir Tri
61
ம் சங்கத் தமிழ் இலக்கியங்களும்
r 65
72
கதைகள் - ஓர் அறிமுகம்
77

Page 26
7.
8.
9.
20.
21.
22。
23.
罗《。
25,
26.
27.
28.
29。
30,
31.
ஈழத்துத் தமிழ் சிறு சஞ்சிகைகளின் மேமன் கவி
எஸ். பொ.வின் செந்தில்நாதன் சடங்கு நாவலின் பாத்திரப்பண்பு பற் கலாநிதி துரைமனோகரன்
இலங்கையில் தமிழ் நூல் வெளியீடு பிரச்சினைகளும் தீர்வுக்கான சில ஆே கலாநிதி எம். ஏ. நுஃமான்
இலக்கிய வளர்ச்சிக்கான சில குறிப்பு பிரேம்ஜி ஞானசுந்தரன்
இக்பாலும் பாரதியும் ஓர் ஒப்புநோக் கலாநிதி எம். ஏ. எம் சுக்ரி
தமிழ் மரபிற் கல்வி பற்றிய நோக்குக கலாநிதி சபா. ஜெயராசா
தமிழிலக்கிய மரபில் அரங்கேற்றம் - 8 கலாநிதி நா. சுப்பிரமணியன்
நாட்டார் வழக்காற்றில் கொத்தித் ெ இரா. வை. கனகரத்தினம்
மலையகக் கலை இலக்கியம் சி, அழகுப்பிள்ளை
தமிழ் பேராசான் க. கணபதிப்பிள்ளை ஈழத்து மண் வாசனை தழுவிய தமிழ்த் செ. குணரத்தினம்
ஈழத்து இலக்கியத்தில் இருபது வருட கந்தையா குணராசா (செங்கை ஆழியா
பண்பாட்டுக் கோலங்கள் அ. ஸ். அப்துஸ்ஸமது
மட்டக்களப்பின் கிராமியக் கலைகள் எஸ். எதிர்மன்னசிங்கம்
மலையகத்தில் சிறுகதை தெளிவத்தை ஜோசப்
மொழி பெயர்ப்புக் கலை - சில அனு கே. கணேஷ்

தோற்றமும் வளர்ச்சியும்
றிய ஒரு நோக்கு
லாசனைகளும்
கள்
கில அவதானிப்புகள்
தய்வம்
ா அவர்களின் வாழ்வும்,
தொண்டும்
கணக்குகள் ான்)
பவங்கள்
83.
88
91.
98.
105.
O
18
122
127
33
43
147
;150
153
65

Page 27
நாவலர் தெ சைவசமயக் கல்
அந்நியராட்சிக்குட்பட்டிருந்த இலங் கையில், பத்தொன்பதாம் நூற்றாண்டை, குறிப்பாக அதன் பின்னரைக் கூறினை, சுதேசிய சமய மறுமலர்ச்சிக் காலம் எனக் கொள்ளலாம். பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயருடைய ஆதிக்கத்துக்கு உட் பட்ட காலத்திலிருந்து இலங்கையின் புரா தன சமயங்களான பெளத்தமும் சைவமும் இஸ்லாமும் கிறித்தவத்தின் மதமாற்றுப் பிர சாரத்தாக்கத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் பின்னடைந்திருந்தன. போர்த்துக்கேயர், டச்சுக்காரர், ஆங்கிலேயர் என்ற ஒழுங்கில் இலங்கையில் அரசாதிக்கம் பெற்றிருந்த மேலைநாட்டார் அனைவரும் கிறித்தவத் தின் வளர்ச்சிக்கே ஆதரவை அளித்தனர். அதன் விளைவாகச் சொந்த நாட்டிலேயே பெளத்தம், சைவம், இரண்டும் நலியும் நிலை காணப்பட்டது. அவ்வகையான நீண்டகால அமுக்கம் ஏற்படுத்திய பல் வேறு பிரச்சினைகள் மக்கள் மத்தியிலே ஏற்படுத்திய விழிப்புணர்ச்சியின் விளைவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி யில் ஏற்பட்ட சுதேசிய மறுமலர்ச்சி.
அம் மறுமலர்ச்சியின் காரண கர்த்தாக் களாகவும், உந்துசக்திகளாகவும் அதன் பிரதிபிம்பங்களாகவும் விளங்கியவர்கள் பலர். பெளத்தத்திற்கு மீகெதுவத்த குணா னந்த தேரோ, ஹிக்கடுவ பூரீ சுமங்கல தேரோ, கேணல் ஒல்கொட், அநகாரிக தர்மபால போன்றோரும் இஸ்லாத்துக்கு அறிஞர் சித்திலெப்பையும் சைவத்துக்கு

ாடக்கிவைத்த ல்வி மறுமலர்ச்சி
ஆறுமுகம்
புரீலரீ ஆறுமுக நாவலரும் அதில் குறிப் பிடக்கூடியவராவர்.
இலங்கையில் ஏற்பட்ட சுதேசிய சமய மறுமலர்ச்சி பற்றிக் குறிப்பிடுகையில் அதன் ஆரம்ப குரல் தெற்கிலே ஒலித்தது என்று கூறப்படுவதுண்டு. இக்குறிப்பு பத்தொன் பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பூரீ சுமங்கல தேரோ, குணானந்த தேரே போன்ற பெளத்த சமயத் தலைவர்களுக் கும் கிறித்தவப் பாதிரிமாருக்குமிடையே இடம்பெற்ற சமயஞ் சார்ந்த வாதத் தொடர்களை அடிப்படையாகக் கொண் டெழுந்த ஒன்றாகும். தெற்கில் கிறித்த வத்துக்கு எதிரான முதற் குரல் என அத னைக் கொள்ள முடியும். அதேபோல, 1847ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் வண் ணார்பண்ணைச் சிவன் கோவில் சமயப் பிரசங்கமாக ஒ லி த் த ஆறுமுகநாவல ருடைய குரலே வடக்கில் ஒலித்த முதற் குரலெனலாம்.
யாழ்ப்பாணத்துச் சமூக வாழ்க்கை என்னும் வானில் நாவலர் என்னும் *சூரியன்" தோன்றிய காலம் (1822-1879) மிகவும் இக்கட்டான காலமாகும். கிறித் தவ மிஷனரிமாரின் பிரசாரப் பிடியினுள் சிக்குண்ட இளந்தலைமுறையினர் தமது சொந்த மதம், கலாசாரம் என்பவற்றை மறந்திருந்த காலம் அது. ஆங்கிலக் கல்வி, அரச உத்தியோகம், பட்டம், பதவி என்ற கவர்ச்சிகளுக்கு ஆளாகித் தமது பாரம்பரி யத்தையே மறந்து, துறந்து மக்கள் "இரு

Page 28
ளில்" தத்தளித்துக் கொண்டிருந்த காலம் PWE. அந்த நிலை புராதன சமய ஈடு பாடுடையோரிடத்து ஒரு வெதும்பலை ஏற்படுத்தியது. தமது பிள்ளைகள் அந்நிய மார்க்கத்தில் மோகங்கொண்டலைவதைப் பார்த்துப் புழுங்கிய சமூகத்தின் "விடி வெள்ளி"யாகத் தோன்றினார் நாவலர்.
சி. வை. தாமோதரம்பிள்ளையின்
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல் சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே
எல்லவரும் ஏத்துபுரா ணாகம்ங்க ளெங்கேப்ர
சங்கமெங்கே யாத்தனறி வெங்கே யறை:
என்ற பாடல் நாவலர் பிறப்பின் பொருத் தப்பாட்டை வெகு அழகாகப் பிரதிபலிக் கின்றது.
காலத்தின் தேவை அதற்குகந்த தலை வனைத் தோற்றுவிக்கின்றது என்பர். நாவ லர் பெருமானைப் பொறுத்தவரையில் இக் கருத்து முற்றிலும் உண்மை. அவர் தோன் றிய காலம் யாழ்ப்பாணத்துச் சைவசமயி களிடையே சமயப்பற்றையும் விழிப்புணர்ச் சியையும் வளர்க்கவேண்டிய காலமாயிருந் தது. அதற்குப் பொருத்தமானவராகவே நாவலர் தோன்றிச் செயற்பட்டார். அவ ரது இளம் பருவத்தில் கணிசமான பகுதி (பதினான்கு ஆண்டுகள்) யாழ்ப்பாணம் மெதடிஸ்த மத்திய பாடசாலையில் (இன் றைய மத்திய கல்லூரி) கிறித்தவர் மத்தி யில் கழிந்தது. 'உண்மையை நோக்கு மிடத்து பதினான்கு வருடக் கிறித்தவச் சூழலே நாவலரை நமக்குத் தந்தது. ஆபி ரிக்க தேசமே காந்தியை மகாத்மா ஆக் கியது. பதினான்கு வருடக் கிறித்தவச் சூழல் அமையாதிருந்தால் ஆறுமுக நாவலர் என்றொருவர் யாழ்ப்பாணத்தில் இல்லை" என்ற கூற்று? இங்கு கவனிக்கத்தக்கது. கிறித்தவர்களுடன் கொண்ட நெருக்கமான தொடர்பின் பயனாக நாவலர், அவர் களுடைய நோக்கம், நடைமுறை உத்திகள் யாவற்றையும் அறிந்துகொண்டார். அந்த அநுபவம் கிறித்தவ மிஷனரிமாருடைய பிர சாரத்தை முறியடித்து சைவசமய மறு மலர்ச்சிக்கு வித்திட உதவியது.

இலங்கையில் கிறித்தவத்தைப் பரப்பு வதில் மிஷனரிமார் கையாண்ட உத்திகளில் இரண்டு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. ஒன்று சிறுவர்க்குக் கல்வி வழங்குவது என்ற முறையில் அவர்களை மதம் மாற்றி, l୩ଇଁrଉst if பிள்ளைகளுக்கூடாகப் பெற் றாரையும் மதம் மாற்றுதல். இதில் ஆங் கிலக் கல்வி மிகவும் சக்திவாய்ந்த கவர்ச் சிப் பொருளாக அமைந்தது. ஆங்கிலக் கல்வியைக் கற்று அதற்கூடாக அரச உத்தி யோகத்தைப் பெறலாம் என்ற ஆசையின் நிமித்தம் கிறித்தவத்தைத் தழுவிய இலங் கையர் தொகை கணிசமானது. யாழ்ப் பாணத்தவருக்கும் இது பொருந்துவதாகும். கிறித்தவர்கள் கையாண்ட இரண்டாவது உத்தி மேடைப் பிரசங்க முறையாகும் தெய்வ ஆராதனைக் கூட்டங்களிலும், பொது வைபவங்களிலும் தமது கருத்துக் களை வலியுறுத்தியும் எதிர்க் கருத்துக் களை மறுத்தும் கிறித்தவ சமயப் பிர சாரத்தை பாதிரிமார் மேற்கொண்டனர். கிறித்தவரல்லாதோரிடையே "காணப்பட்ட குறைபாடுகளை' கோடிட்டுக் காட்டி அவற் றைத் தீர்ப்பதற்குத் தமது"மார்க்கத்தைப் பற்றும்படி மக்களைத் தூண்டினர். இதுவும் ஓரளவு வெற்றியளித்தது.
கிறித்தவர் மத்தியில் வாழ்ந்த அனு பவம் அவர்களுக்கு எதிராகச் செயற்படு வதற்கு நாவலருக்கு வழியைக் காட்டி வலிமையையும் ஊட்டியது. எந்தப் பிரசங்க முறை கிறித்தவத்துக்காகப் பயன்பட் டதோ, அதே பிரசங்க முறை நாவலரு டைய நாவில் சைவப் பிரசாரக் கருவியாக மாறியது. முக்கிய இடங்களில் சைவப் பள்ளிக்கூடங்களை நிறுவுவதும், சைவத் திற்காகப் பிரச்சாரத்தை மேற்கொள்வ தும் சைவத்தையும் தமிழ்க் கல்வியையும் வளர்ப்பதற்கேற்ற கருவிகளாகும் என்பது நாவலருடைய கருத்தாயிருந்தது. இவ் வழிகளில் கல்வி வாய்ப்புக்காகச் சைவச் சிறார்கள் கிறித்தவப் பள்ளிக்கூடங்களை நாடவேண்டிய தேவையை நீக்கலாம் என நம்பினார். இதற்காக ஆங்காங்கு சைவப் பள்ளிக்கூடங்களை நிறுவும் முயற்சியில் இறங்கினார்.

Page 29
சைவக் கல்வியின் விருத்திக்காக நாவல ரால் நிறுவப்பட்ட முதலாவது பள்ளிக் கூடம் 1848 இல் வண்ணார்பண்ணையில் அமைக்கப்பட்ட சைவப்பிரகாச வித்தியா சாலையாகும். அதனைத் தொடர்ந்து 1865 இல் தென்னிந்தியாவில் சிதம்பரத்தி லும், யாழ்ப்பாணத்தில் கோப்பாயிலும் மேலும் இரண்டு சைவத் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் அவரால் தோற்றுவிக்கப்பட்டன. நாவலருடைய முன்மாதிரியைப் பின்பற்றி, அவருடைய அபிமானிகளால், யாழ்ப்பா ணத்தின் ஏனைய பகுதிகளிலும் சைவப் பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவ் விதமாகப் பள்ளிக்கூடங்கள் தோன் றிய இடங்கள் கொழும்புத்துறை, கந்தர்மடம், பருத்தித்துறை. மா த க ல், உடுவில், வேலணை ஆகிய பகுதிகளாகும். 3 இப் பள்ளிகூடங்கள் நெடுங்காலமாக, அரச உதவியில்லாமல், கஷ்டநிலையில் இயங்க வேண்டியிருந்தது.
இவ்விதம் எழுந்த பள்ளிக்கூடங்கள் அனைத்தும் சைவசமய மரபில், தமிழ் மொழிக்கூடாக, கல்வியளித்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவற்றுக்கூடாகச் சைவ சமயத்தையும் தமிழ் மொ ழி யை யும் பேணிப் பாதுகாக்க நாவலர் சைவம், தமிழ் ஆகிய பாடங்களுக்குப் பயன்படக்கூடிய பாடநூல்களையும் எழுதி வெளியிட்டார். சைவ சமயம், சைவ வினாவிடை, பால பாடம், இலக்கணச் சுருக்கம் போன்ற நூல் கள் இவ்வரிசையிற் குறிப்பிடத்தக்கனவா கும். இவை ஒவ்வொன்றும் வகுப்புக்கும் வயதுக்கும் ஏற்பத் தரம் பிரித்து எழுதப் பட்டவை என்பது நினைவிற்கொள்ளத் தக்கது.
ஆங்காங்கு சைவத் தமிழ் ப் பள்ளிக் கூடங்களை ஆரம்பிப்பதன் மூலம் சைவப் பிள்ளைகளுக்கு அவர்களுடைய சமயச் சூழ லிற் கல்வியளிக்கக்கூடியதாயிருந்தாலும், அவர்கள் ஆங்கிலக் கல்வியைப் பெறுவ தற்குக் கிறித்துவ மிஷனரிமாருடைய பள் ளிக்கூடங்களுக்கே செல்லவேண்டியிருந்தது. அங்கே அவர்கள் கிறித்தவ முறைகளைப் பின்பற்றும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

அவ்விதமான துர்ப்பாக்கிய சம்பவங்கள் நாவலரை உள்ளங் குமுறச் செய்தன. எனவே, சைவ சமய மர பில் ஆங்கிலக் கல்வியைக் கற்பிப்பதற்காக ஒரு ஆங்கிலப் பாடசாலையை 1872 இல் வண்ணார் பண்ணையில் நாவலர் ஆரம்பித்தார். ஒரு ஐரோப்பியரைத் தலைமை ஆசிரியராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட -9Üurtlசாலை அதிக காலம் நிலைத்து நிற்க வில்லை. சைவச் சிறுவர்கள் கிறித்தவ ருடையதல்லாத ஒரு பள்ளிக் கூடத்தில் ஆங்கிலக் கல்வியைப் பெறக்கூடிய நிலை யைக்கண்ட கிறித்தவ மிஷனரிமாரின் கடும் எதிர்ப்பும், அவர்களுடைய செல்வாக்குக் குட்பட்ட அரசு நிதியுதவி வழங்கத் தவறிய மையும், பொதுமக்களுடைய ஆதரவு அரு தியமையும் அப்பாடசாலையை மூடிவிடும் நிலையை உருவாக்கின.7
சைவக் கல்வியை வளர்ப்பதற்கு நாவ லர் செய்தவற்றோடு அவர்செய்ய நினைத்த வற்றையும் நோக்குதல் வேண்டும். பள் ளிக்கூடங்களை அமைத்துச் சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதில் கருத்தைச் செலுத் திய நாவலர் அனாதைகளுடைய கல்வியி லும் அக்கறை கொண்டிருந்ததை அவ ருடைய பேச்சுக்களிலிருந்து அறியக்கூடிய தாயிருக்கிறது. அனா தை க ளா யிருந்த சைவச் சிறுவர் சிறுமியரை, பேணிப்பாது காப்பது என்ற "போர்வையில் கிறித்த வர்களாக மதம் மாற்றும் முயற்சியினை அக்காலக் கிறித்தவப் பாதி ரி மார் கள் கையாண்டுவந்தனர். அதனை உணர்ந்த நாவலர், அந்நிலையைத் தவிர்ப்பதற்கு, சைவச் சிறார்களுக்கென அனாதை இல்லங் களை அமைக்கத் திட்டம் தீட்டியிருந்தார். அத்தோடு சைவ சமய அறிவையும் உணர் வையும் வளர்ப்பதற்குச் சைவசமயப் பிர சாரகர்களை உருவாக்கிப் பயிற்சியளிக்கவும் திட்டமிட்டிருந்தார்.8 அக் கருத்துக்கள் கைகூடுமுன் அவர் மறைந்தமை சைவ உலகின் துர்ப்பாக்கியமேயாகும்.
கல்வி முயற்சியாக நாவலர் மேற் கொண்ட நடவடிக்கைகளைத் தொகுத்து நோக்கும்போது அவை இலங்கைக் கல்வி

Page 30
வரலாற்றிலேயே முன்னோடிகளாக இருந் தமை குறிப்பிடத்தக்கது. இலவசக் கல்வி, தாய்மொழிக்கல்வி, சமய போதனை என் பவை இன்று நமது கல்வி அனுட்டானத் தில் நடைமுறைக்கு வந்து விட் டா லும் நாவலருடைய செயற்பாட்டில் அன்றே இடம்பெற்றுவிட்டன.? அவர் மேற் கொண்ட பிரசங்கங்கள், வெளியிட்ட பிர சுரங்கள் எல்லாம் பொது மக்களிடையே சைவசமய உணர்வையும் அறிவையும் வளர்ப்பதில் வகித்த இடம் மறக்கத்தக்க தன்று. இன்றைய வளர்ந்தோர் கல்வி முறைசாராக் கல்வி முயற்சி க ளோ டு அவற்றை ஒப்பிட்டு நோக்குவது பொருத்த முடையதாகும்.
நாவலருடைய காலத்தில் சைவ மறு மலர்ச்சியில் முக்கிய தேவைகளாக இருந் தவை சைவ சமயிகளிடையே மதமாற்றத் தைத் தடுத்தல், வைதீக நெறியினைச் சைவர்களிடையே பாதுகாத்தல் என்ற இரண்டுமாகும். அவரால் வெளியிடப்பட்ட சைவசமய நூல்கள் சைவ சமய பாரம்பரி யத்தையும் இலட்சியங்களையும் பேணி வளர்ப்பதில் அன்றுமட்டுமல்லாமல் இன் றும் பயனளிக்கின்றன. இது ஒன்றே நாவல ருடைய பங்களிப்பின் பெ ரு மை யை க் காட்டப் போதுமானதாகும்.10 கிறித்த மதமாற்று முயற்சிகளுக்கெதிரான "பாது காப்பு அரண்"களாக அவர் தோற்றுவித்த பள்ளிக்கூடங்கள் அமைந்தன;
1879 இல் நாவலர் மறைந்தபொழுது அவருடைய பணி தொடர்வதற்கான உணர்வும் வலுவும் சைவ சமயத்தவர்களி டையே வளர்க்கப்பட்டுவிட்டன. அதன் பயனாக, நாவலர் தொடங்கிய பயணம் நிறுவனங்களாலும், தனிநபர்களாலும்
தொடரப்படுவதைக் காணலாம். நாவலரு

டைய மறைவுக்குப் பின் அவரது அபிமானி கள் சிலர் சேர்ந்து சைவப் பிரகாச சமாஜி யம்" என்ற ஒரு சங்கத்தையும் "உதய பானு' என்ற தமிழ்ப் புதினப் பத்திரிகையை யும் 16.08.1880 இல் தொடங்கினர்." எனி னும் இச் சங்கம் நெடுங்காலம் நிலைத்து நிற்கவில்லை. அதனிடத்தில் 1888 இல் "யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை" உரு வாகியது. அதுவும் நாவலருடைய அன்பர் கள், அபிமானிகள், மாணவர்கள், உறவி னர்கள் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட் டது. அதன் நோக்கம், செயற்பாடு எல்லா வற்றிலும் நாவலருடைய முயற்சிகளின் சாயலைக் காணலாம்.2
நாவலருடைய பாதையில் தொடர்ந்து சென்ற தனிநபர்களில் முக்கியமானவர் சேர் பொன்னம்பலம் இராமநாதன் ஆவர். நாவலருடைய காலத்திலேயே, நாவலரு டைய ஆசீர்வாதத்துடன், சட்ட நிரூபண சபைக்குத் தமிழரின் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர். "இந்துக்களின் தலை சிறந்த சீர்திருத்தவாதி” என்ற நாவலரு டைய பெருமையை அந்த அவையில் நிலை நாட்டியவர் அவர். சகல வழிகளிலும் 'நாவ லருடைய வாரிசு" என்று மதிக்கத் தக்கவர். அவருடைய முயற்சிகளிலும் சைவசமயக் கல்வி, கலாசாரம் ஆகியவற்றைப் பேணு வது பிரதான நோக்கமாக இருந்ததைக் காணலாம்.
அவ்விதம் செயற்பட்ட நிறுவனங்கள், தனிநபர்கள்ஆகியோருடைய உழைப்பு நாவ லர் தொடக்கிவைத்த பணியை நாடெங்கி லும், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், பரப் பியது. அது, சைவவித்தியாவிருத்திச் சங்கம் போன்ற அமைப்புகளினால், இருபதாம் நூற்றாண்டிலும் தொடரப்பட்டது. அத் தொடர்ச்சியின் விளைவே இன்றும் எமது நாட்டில் சைவத்தையும் சைவசமய மரபுக் கல்வியையும் மிளிரவைத்தது.
A m

Page 31
அடிக்குறி
இப் பிரசங்கம் 31, 12. 1847 இல் நடைபெற்றது. ஆதாரம்: Morning Star, January 13th, 1848
சி. கணபதிப்பிள்ளை, நாவலர் (யாழ்ப் பாணம்: யாழ்ப்பாணம் சைவ பரி Lumrav 67 GF6ODU 1968), Lu. 6.
பதினான்கு வருட கிறிஸ்தவச் சூழல் எனக் குறிப்பிடப்படுவது நாவலர் அவர்கள் யாழ்ப்பாணம் மத்தியக் கல் லூரியில் மாணவனாகவும், ஆசிரியரா கவும், தமிழ்ப்பண்டிதராகவும் கழித்த பதினான்கு வருடங்களாகும்,
James Cartman (Rev.) Hinduism in Ceylon, (Colombo: M. D. Gunasena, 1957), p. 55.
Report of the Hindu Board of Education for 1929. (Jaffna: The Hindu Board of Education, 1930) p. 2:
S. Rajaratnam, “ “Hindu Education in Jaffna', a paper read before the Hindu Students' Movement, Colo
** எளிய பதங்கள், எளிய
அறிந்து கொள்ளக் கூடி ஜனங்கள் விரும்பும் மெ காவியம் ஒன்று தற்கால தருவோன் நமது தாய் தருவோனாகின்றான்."

ப்புகள்
10.
I.
12.
நடை, எளிதில் ப சந்தம், பொது ட்டு இவற்றினையுடைய த்தில் செய்து மொழிக்குப் புதிய உயிர்
mbo. Appendix II of The Report of the Hindu Board of Education for 1929, op. cit p. 20.
Cartman, op.cit p. 55
Rajaratnam, op.cit pp. 20-21
Ibid
K. Lakshmanan, “Foresight in Education' Navalar Conference Souvenir (Colombo: Sri La Sri Arumuga Navalar Sabhai, 1969) pp. 51-54.
K. M. De Silva “The Religions of the Minorities' in K. M. De Silva (Ed.) Sri Lanka A Survey) (London
C. Hurst & Company, 1977, for Lake House Bookshop, Colombo) p. 389
V. Ragunatha Mudaliyar, A. Historical Note (Jaffna: Saiva Paripalana Sabhai, 1973), p. 2.
Cartman Op. cit p. 55.
- பாரதி

Page 32
O
Ôòỉ உரைறை
எஸ். எம்.
திமிழ் உரைநடை வளர்ச்சியில் ஈழத் தவரின் பங்களிப்பை மதிப்பீடு செய்ய முற் படும் எவரும் ஆறுமுகநாவலர் பெருமா னின் முன்னோடியான இலக்கிய முயற்சி யினைப் போற்றாமலிருக்க முடி யாது. அவர் வாழ்ந்த காலத்துச் சமய கலாசார நிலைகள் உரைநடைப் பெருக்கத்தைப் பெரிதும் வேண்டி நின்றன. மக்களிடையே பரவலாகத் தமது கருத்துக்களை எடுத்துக் கூறவேண்டிய நிர்ப்பந்தமிருந்ததனால் அவர் அதற்கேற்ற இலகுவான நடையினை ஆய்ந்து வழங்கினார். எனவேதான் 'உரை
நடையின் தந்தை" யென்றும், ' வ ச ன நடை கைவந்த வல்லாளர்" என்றும் அவர் விதந்துரைக்கப்பட்டார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சியினை விளக்கவந்த பேராசிரியர் வி. செல்வநாயகமவர் க ள் *தமிழில் உரைநடை இலக்கியம் பதினெட் டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆரம் பித்தபோதும், அது விரைவாக வளரத் தொடங்கிய காலம் பத்தொன்பதாம் நூற் றாண்டு என்றே கூறலாம். தமிழ் நாட்டில் ஆங்கிலக் கல்வி விருத்தியே அதற்குக் கார ணமாகும். ஆங்கிலங் கற்ற ஆசிரியர் பலர் ஆங்கில உரைநடை இலக்கியங்களைத் தழு வித் தமிழில் உரைநடை இலக்கியங்களை இயற்ற முற்பட்டனர். அதனால் நாவல் கள், கட்டுரைகள், கதைகள், ஆராய்ச்சி நூல்கள் இன்னோரன்ன பல உரைநடை நூல்கள் தமிழிலெழுந்தன. தாண்டவராய முதலியார், ஆறுமுகநாவலர். வேதநாயகம்

ଓxxsizšu
'I 2III டச்றே U
تحویلپمین
கமால்தீன்
பிள்ளை, வீராசாமிச் செட்டியார். ராஜ மையர், சரவணமுத்துப்பிள்ளை, சூரிய நாராயண சாஸ்திரியார் ஆகியோர் பத் தொன்பதாம் நூற்றாண்டு உரைநடை ஆசிரியர்களுட் சிறப்பினராகக் குறிப்பிடத் தக்கோர் என்று தமது தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பித்துக் குறிப்பிட்டுள்ள உரைநடையாசிரியர்களுள் அறிஞர் சித் தி லெவ்வை இடம்பெறாமலிருப்பது வியப்புக் குரியதன்று. ஏனெனில் பேராசிரியர் செல்வ நாயகம் போன்று தமிழ் இலக்கிய வர லாறு காண முற்பட்ட பலருக்கு முஸ்லிம் களின் தமிழ்ப்பணியாற்றிய தகவல்கள் போதியளவு கிடைக்கவில்லை. எனவே உரைநடையாசிரியர்களுள் ரோ சி ரியர் சிறப்பித்துக் கூறுபவர்களோடு சமநிலை யில் வைத்துப் பேசக்கூடிய சித்திலெவ்வை யின் பங்களிப்பை இங்கெடுத்து விளக்கு வது அவசியமாகின்றது.
சித்திலெவ்வை அவர்களின் இலக்கிய ஆக்கங்களை ஆய்வதற்கு முற்படும்போது நாம் ஆறுமுகநாவலர் அவர்களது உரை நடை ஆக்கங்கள் சமகாலத் தமிழறிஞரி டையே ஏற்படுத்திய தாக்கத்தினை எளி தில் உணரக்கூடியதாகவுள்ளது. சிறப்பாக சித்திலெவ்வை அவர்கள் பல வகைகளில் நாவலர் அவர்களது இலக்கியவழிநின்று பணிபுரிந்துள்ளது இங்கு குறிப்பிடத் தக்க தாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எமது நாட்டில் எழுந்த சமய கலாசார அரசியல் விழிப்புணர்ச்சியே நாவ லர் சித்திலெவ்வை போன்றோரின் உரை
6 -

Page 33
நடை ஆக்கங்களுக்கு உந்து சக்தியாக அமைந்ததெனலாம்.
பொதுவாக நோக்குமிடத்து தமிழ் உரைநடை வளர்ச்சி முஸ்லிம்களிடையே காலத்தால் பின்தங்கி எழுந்ததொன்றே யாகும். இதற்குக் காரணம் அறபு எழுத் துக்களில் ஆக்கப்பட்ட அறபுத் தமிழிலான சமய இலக்கியங்கள் மேலோங்கியிருந்ததே யாகும். மேலும் அறபு மொழிச் சொற்கள் பெருமளவில் இந்த அறபுத் தமிழ் ஆக்கங் களிலும், தமிழ் ஆக்கங்களிலும் விரவியிருந் ததனால் இவை தமிழ் இலக்கியப் பரப் பிற்குப் புறத்தே தனித்து நிற்கலாயின.
முஸ்லிம்களிடையே தமிழ் உரைநடைத் துறையிலான ஆரம்பகால முயற்சி "கஸ் ஸால் அன்பியா" என்னும் நபிமார்களின் சரிதையாயிருக்கக் கூடுமென்ற ஒரு கருத் தினை ஆர். பி. எம். கணியவர்கள் பின் வரு மாறு வெளியிட்டுள்ளார்கள்:
"முஸ்லிம்களிடையே சமயக் கருத்துக் களை எடுத்துச் சொல்ல அவர்களுக்குக் கடந்த சில நூற்றாண்டுகளாக அறபுத் தமிழ் பெரிதும் பயன்பட்டு வந்தது. எனவே தமிழ் வசன நடை பிற்காலத் தி லே யே தோன்றியது."
முதன் முதலில் வசனநடை நூல் எழுதி யிருப்பவர் பவளமாநகரைச் சேர்ந்த ஜான் சாகிபு லெப்பை ஆலிமும், அவர் ஊரின ரான முஹம்மது லெப்பை ஆலிமும் என் றும், நூற்றி ஓர் ஆண்டுகளுக்கு முன் (ஹிஜ்ரி 1281ல்:18) கஸ்ஸ9ல் அன்பியா என்ற வசன நூலை அவர்கள் எழுதினர் என்றும் சொல்லப்படுகிறது
இதனைத் தொடர்ந்து நயினா முஹம் மதுப் 1 ல வ ர், கண்ணகுமது ம கு துர ம் முஹம்மதுப் புலவர், குலாம் காதிறு நாவ லர் புலவர், முஹம்மது அலி லெப்பை ஆலிம் போன்றோரும் உரை நடை  ைய வளர்த்தனர். ஈழத்தில் அறிஞர் சித்தி லெவ்வையின் முஸ்லிம் நேசனுக்கு முன் னோடியாக 1873ம் ஆண்டில் "புதினா லங்காரி” என்னும் கல்லச்சிலான வாராந் தரத் தமிழ்ப் புதினப் பத்திரிகையொன்றை

சொற்பகாலத்திற்கு வா ப் பு மரிக்கார் நெய்ந்த மரிக்கார் என்பவர் ஆசிரியராயி ருந்து நடத்திவந்துள்ளனர். இப் பத்திரி கையில் முஸ்லிம்களிடையே வழங்கிவந்த பேச்சுத்தமிழ் வழியமைந்த வசன நடையே பெருமளவில் இடம்பெற்றிருந்தது. எனி னும் முஸ்லிம்களிடையே எழுந்த வசன நடைவளர்ச்சியைக் கணிக்குமிடத்து புதி னாலங்காரி வழங்கிய வசன நடையையும் நாம் கவனத்திற்கெடுத்துக்கொள்ள வேண் டியது அவசியமாகும்.
அறிஞர் சித்திலெவ்வை கண்டி மாநக ரில் செல்வாக்கு மிக்கதொரு குடும்பத்தில் 1838ம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற் பெயர் முஹம்மது காசிம் என்பதாகும், இவர் ஆங்கிலம் பயின்று ஒரு வழக்கறிஞ ராகத் தேறிய போதிலும் அத்துறையில் நாட்டமில்லாதவராக சமயத்துறையில் பெரும் ஆர்வம் காட்டி வந்தார். இஸ்லா மிய தத்துவார்த்தங்களால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டு, சமய சமூகப் பணிகளில் தமது ஆற்றலைச் செலுத்தலானார். ஆங்கில மொழியறிவோடு அறபு, தமிழ் ஆகிய மொழிகளிலும் இவர் தக்க பயிற்சியுடைய வராகத் திகழ்ந்தார். இப்பன் மொழியறிவு அவரது பிற்கால சமூக சீர்திருத்தப் பணிக ளுக்குப் பெரிதும் உதவுவதாகவிருந்தது.
நாவலர் பெருமான் சித்திலெவ்வையை விட பதினாறு ஆண்டுகளுக்கு மூத்தவர். மேலும் நாவலரது சமூகப் பணியும், இலக் கியப் பணியும் உச்சநிலை யடைந்திருந்த வேளையில் தான் சித்திலெவ்வை தமது பொது வாழ்க்கையினை ஆரம்பித்திருந் தார். எனவே அவரது முயற்சிகளின் பல அம்சங்களில் நாம் நாவலர் பணிகளின் சா 5 லைக் காணக் கூடியதாகவுள்ளது. சிறப்பாக உரைநடை வளர்ச்சியில் சித்திலெவ்வையின் பங்களிப்பு நாவலரது முன்னோடி முயற்சி களை யொ ட் டிய தாக வுள்ளதென்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி ஈழத்து வரலாற்றில் அனைத்து இனத்தவரிடையே யும் ஒரே தன்மைத்தான சமய, கலாசார எழுச்சியினையே பிரத்தியட்சமாகக் கண்
وقيس
س- 7

Page 34
சித்திலெவ்வை அவர்கள் நாவலர் அவர்களைப் பற்றித் தமது முஸ்லிம் நேசன் பத்திரிகையில் எழுதியுள்ள பின்வரும் குறிப்பு உரைநடைத் துறையில் நாவலர் ஏற்படுத்தியிருந்த தாக்கத்தைக் காட்டுவ தாகவுள்ளது.
**இற்றைக்குச் சில காலத்துக்கு முன் சரவணப் பெருமாளையர் நன்னூலுக்குக் காண்டிகையுரை செய்தார். அதனையே இப்பொழுது நன்னூலிலக்கண உரையாகப் படித்து வருகிறார்கள். அதிலுள்ள சூத்தி ரங்களும் உரைகளும் அதிகப் பிரயாசைப் பட்டு குருமூலமாகப் படித்தாலன்றி அவை களை நன்றாயறிந்து அவதானிக்கக் கூடா தனவைகளாக இருக்கின்றன. ஆனால் யாழ்ப்பாணத்திலே கீர்த்திபெற்றிருந்து இறந்துபோன பூரீலபூரீ ஆறுமுக நாவலர் இலக்கணச் சுருக்கம், இலக்கண வினா விடை யென்னுமிலக்கண நூல்களைச் செய் தார். அவைகள் இலேசாயிருத்தலாற் பெரும்பாலும் வாசித்தறியக்கூடிய நூல்க er: h.“
சித்திலெவ்வையவர்கள் முஸ்லிம் மக்க ளிடையே அக்காலத்தில் கல்வியின் முக்கியத் துவத்தையும் சமூகத்தில் வேரூன்றியிருந்த சமயத்துக்கு முரண்பட்ட பழக்க வழக்கங் களை யொழிப்பதன் அவசியத்தையும் பற் றிப் பரவலாக பிரசாரம் செய்யவேண்டிய வராக இருந்தார். எனவேதான் தமது கருத்துக்களைப் பரப்புவதற்கு ஏற்ற கருவி களாக “முஸ்லிம் நேசன்", "ஞானதீபம்" ஆகிய பத்திரிகைகளை அவர் நடத்தி வந் தார். இவ்வகையில் உரைநடை பற்றிய தெளிவான கருத்தினை அவர் கொண்டிருந் தாரென்பது பின்வரும் அவரது கூற்றிலி ருந்து தெளிவாகின்றது.
"இக் காலத்திலும் அதிகப் பிரயாசப் பட்டு இலக்கண இலக்கியங்களை வாசித் துத் தேர்ந்தவர்களும் அப்படியே பாடல்க ளைப் பாடுகின்றார்கள். அவைகளெல்லாம் வித்துவான்களுக்கு உபயோகமாயிருக்கும். ஆதலால் யாவருக்கும் விளங்கக்கூடிய வசன நடையாய்ப் புத்தகங்களைச் செய்வது மிக்க
ത്ത 8

குறைவாயிருக்கின்றது. பாஷையானது தம் முடைய கருத்திலே தோன்றிய பொருளை பிறருக்கு விளக்குதலாம்."
சித்திலெவ்வையின் எழுத்தாற்றல் பல் வேறு நோக்கங்களின் வழி செலுத்தப்பட் டது. சமூகப் புனருத்தாரணமே அவரது பிரதான நோக்கமாயிருந்ததனால் அவ் விலட்சியத்திற்கு வழிவகுக்கும் பல விடயங் களில் அவர் தமது கவனத்தைச் செலுத்தி னார். இதன் விளைவாக எழுந்த உரை நடை ஆக்கங்களுள் முக்கியமானவற்றை இங்கு கூறுவோம்.
சித்திலெல்வையின் "முஸ்லிம் நேசன்' பத்திரிகை 1883 ஆண்டு முதல் ஆறு ஆண் டுகள் வரை வெளிவந்தது. அடுத்து "ஞான தீபம்" 1892, 1893ஆம் ஆண்டுகளில் வெளி வந்தது. இவைதவிர அஸன்பேயுடைய சரித்திரம், அபூநவாசின் கதை, உமறு பாஷாவின் யுத்த சரித்திரம், அஸ்றாருல் ஆலம் என்பவை குறிப்பிடத்தக்கனவாகும். சித்திலெவ்வையவர்கள் பாடசாலைகளுக் காக பல நூல்களை எழுதியுள்ளார். ஆனால் இவைகளுள் ஒன்றேனும் எமக்கு இதுவரை கிட்டவில்லை. அவரெழுதிய நூல்களைப் பற்றி அவரே பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
*முதலில் நான் சிறுபிள்ளைகளின் உப யோகத்திற்காக முதலாவது புத்தகத்தை எழுதினேன். இந்த நூலில் எளிய சொற்க ளும் வாக்கியங்களும் உள்ளன. இந்த முறையை அனுசரித்தே இரண்டாவது, மூன் றாவது, நான்காவது, ஐந்தாவது பாட நூல்களையும் எழுதியுள்ளேன். இரண்டாவ தாக நான் ஓர் இலக்கண நூலை மூன்று பாகங்கள் கொண்டதாக எழுதியுள்ளேன். இவையெல்லாம் இலங்கை பாடசாலைக ளில் பயிற்றப்படுகின்றன." இவ்வாறாக சித்திலெவ்வை அவர்கள் படைத்த நூல் களும், நடத்திய பத்திரிகைகளும் முஸ்லிம் களிடையே கல்வி வளர்ச்சியை ஏற்படுத்து வதற்கும் அவர்களிடையே சமூக சீர்திருத் தத்தை ஏற்படுவதற்கும் பெரிதும் உத வின. மற்றும் சமயத்துறையிலான அறிவு வளர்ச்சிக்கு ஏதுவாக அவர் “ஞானதீபம்",

Page 35
"அஸ்றாருல் ஆலம்", "சுறு ரதுஸ்ஸலாத்து" போன்றவற்றையும் படைத்தார். இவ்விலக் கிய ஆக்கங்கள் யாவும் உரைநடையில் அமைந்தனவாகும். இவ்வாக்கங்களின் மூலம் நாம் சித்திலெவ்வை அவர்களின் உரைநடையின் தன்மையினைத் தெளிவா கக் காணமுடியும்.
சித்திலெவ்வையின் உரைநடை அவர் படைத்த நூல்களினதும், பத்திரிகைகளின தும் நோக்கினையொட்டி அதன் தன்மை யில் மாற்றங்கள் கொண்டதாகக் காணப் படுகிறது.
அவரது வசன நடையின் தன்மைகளை விரிவாக உதாரணங்களுடன் இங்கெடுத்து விளக்குவது அசாத்தியமாதலின் முக்கிய மான சில அம்சங்களை மட்டும் இங்கு குறிப்பிட்டு அமைகிறேன்.
சித்திலெவ்வை இஸ்லாம் சமய சம் பந்தமான விடயங்களைப்பற்றி எழுது மிடத்து அவரது உரைநடையில் அறபுச் சொற்கள் (மணிப்பிரவாளமாக உபயோ கிக்கப்படுவதைக் காணலாம். உதாரண மாக "அஸ்றாருல் ஆலம்" என்னும் ஞான விளக்க நூலில் இத்தகைய உரைநடையை அவர் கையாண்டுள்ளார். இந் நூ லில் காணும் பின்வரும் வசனத்தைக் கவனியுங் கள
"நபிநாயகமவர்களின் அருளாலும், இந்த மஹாத்துமாக்களுடைய பறக்கத் தாலும் அல்லாகுத்த ஆலாவின் மீது ஆசை கொண்ட எனது இகுவான்களுக்கு இந்த கித்தாபு நேர்வழியைக் காட்டுமோர் பந்த வெளியாயிருப்பதற்கு அல்லாகுத்த ஆலா விடம் இரந்து நிற்கின்றேன்."
இதைப்போலவே "ஞானதீபம்" சஞ்சி கையிலும் அறபுச் சொற் கலப்பு அவரது உரைநடையின் சிறப்பம்சமாகக் காணப்படு கிறது. பின்வரும் உரைநடை எளிதாக அமைந்துள்ளபோதிலும் முஸ்லிம் அல்லா தோர் புரிந்துகொள்வது கடினமாகும்.
**இமாம் கஸ்ஸாளி ற முக குல் லா சொல்லியிருக்கிறார்கள் பிள்ளைகளாகிறது

அல்லாகுத் ஆலா தாய் தகப்பனிடம் ஒப்பு வித்த அமானப் பொருளாயிருக்கும். பிள் ளைகளின் கல்பாகிறது தெளிவான உயர்த்தியான இரத்தினம் போலாயிருக் கும். பிள்ளைகளைச் சிறு பிராயமுதல் இல் மைப் பயிற்றி, நல்லொழுக்கத்திலும், சாலிஹான நடக்கையிலும் பழக்கி வந்தால் இவ்வுலகத்திலும், ஆகிறத்திலும் பாக்கிய வான்களாயிருப்பார்கள்."
இத்தன்மைத்தான உரைநடையினை வழங்கிய சித்திலெவ்வையவர்கள் முஸ்லிம் நேசன் பத்திரிகையிலும், தாமெழுதிய நாவல்களிலும் எல்லோராலும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தமது கருத்துக்களை எளிய தமிழ் நடையில் தந் துள்ளார். மேலும் முஸ்லிம் நேசன் பத்தி ரிகையில் சித்திலெவ்வை கையாண்டுள்ள உரைநடையில் தற்போது வழங்கிவரும் பத்திரிகைத் தமிழின் சாயல் தோற்றுகின் றது. இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்.
"இலங்கையிலிருந்து சில மாதங்க ளுக்கு முன் நானூற்று முப்பத்திரண்டுபேர் கப்பலேறிக் கூலிக்காரராகக் குயின்ஸ்லாந்து என்னுமூருக்குப் போய்ச் சீவனஞ் செய்ய வேண்டுமென்று நினைத்துச் சென்றிருப் பது யாவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகி லும் அத் தேசங்களின் விளப்பங்களும் அக் கூலிக்காரர் அங்கே போனதின் பின் நடந்த செய்தியும் அனேகருக்குத் தெரியாதபடியி னாலே அவைகளைச் சுருக்கமாகச் சொல் Gaumb.”
இப் பந்தியில் காணும் எளிமையான தமிழுக்கும் ஏற்கனவே நாம் எடுத்துக் காட் டிய அறபுக் கலவையுடன் கூடிய வசனங் களுக்குமிடையேயுள்ள வித்தியாசம் வியக் கத்தக்கதாகவுள்ளது.
இத்தகைய உரைநடை மாற்றம் சித்தி லெல்வையின் நாவல்களில் சிறப்பாகக் காணப்படுகின்றது. மேலும் சமகாலத் தமிழ் நாவலாசிரியர்களுடைய வசன நடை யின் தாக்கத்தையும் அவருடைய நாவல் களில் நாம் காணக்கூடியதாகவுள்ளது. அலன்பே சரித்திரத்தில் ஆசிரியர் கதா

Page 36
நாயகியான பாளினாவைப் பின்வருமாறு வருணிக்கும் வகை குறிப்பிடத்தக்கதாகும்.
"இவளழகு மிகவும் வியக்கத்தக்கதா யிருந்தது. அவன் முன்பு அனேக அழகான ஸ்திரிகளைப் பார்த்திருந்தாலும், இவ ளைப்போன்ற இயற்கையழகுவா ய்ந்த ஒரு பெண்ணையும் அதுவரையிலும் பார்த் ததில்லை. துலையில் நிறுத்துக் குகையில் உருக்கி அச்சில் வார்க்கப்பட்ட தங்கச் சிலையோ, அல்லது உறைந்த பணிக்கட்டி யைத் திரட்டி உருவாக்கப்பட்ட சித்திரப் பாவையோ என்று கண்டோர் அதிசயிக் கத்தக்க அவளுடைய மேனியையும், கிருபை யென்னும் சுடர்விட்டிலங்கி எதிர்த்துப் போர் செய்கின்ற இரண்டு கெண்டை மீன்களை யொத்த இணை விழிகளையும், முருக்கம்பூவையும் பவளத்தையும் பழிக்கத் தக்க இதழ்களையும், முல்லை மொக்கு களை அல்லது ஆணிமுத்துக்களை வரிசை யாகக் கோத்துக் கட்டினதைப் போன்ற தந்தப் பந்திகளையும் அன்னத் தி ன் கழுத்தோ அல்லது வலம்புரிச் சங்கோ என்று சொல்லத்தக்க நீண்ட கழுத்தை யும் கொண்டவள்.”
அஸன்பே சரித்திரத்தில் காணப்படு வது போன்ற உரைநடைப் போக்கே உமறு பாஷாவின் யுத்த சரித்திரத்திலும், வேக மும் வீரஉணர்ச்சியும் பொருந்தியதாக அமைந்திருப்பதைப் பின்வரும் பந்தியில் a5mroboravirio.
அப் பன்னிரு ஒளஸ்தியரிலும் முதன் மையாயுள்ளவன் தியடோரை நோக்கி, ‘'இப்போதுதானே நீ தோல்வியென ஒப் புக்கொண்டு எங்களுக்கு அடிமையாய் வர வேண்டும்" என்று சொன்னான். இதைக் கேட்ட தியடோர் மெத்தவுங் கோபங் கொண்டு கண்களிலிருந்து கோபாக்கினி வீச முன்னிற்கும் ஒளஸ்திரியனைப் பார்த்து "இச்சீவன் உங்களைப்போன்ற நிஷ்டுரத் துரோகிகளுக்குப் பெரிதன்றி எனக்குப் பெரிதன்று. இச்சீவன் உடலில் இருக்கு மட்டும் உங்களை எனது வாளுக்கு இரை கொடுப்பதே யன் றி ஒளஸ் தி ரியர் என்னும் பிசாசுகளுக்கு தா ன் ஒரு போதும் தோல்வி என்று ஒத் து க்

கொள்ளவும் மாட்டேன், அவர்களுக்கு அடிமையாய் வரவும் மாட்டேன், என்று பன்னிரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பார்த்து ஒரு சிங்கம் மிகுந்த உற்சாகத்தோடு கர்ச் சிப்பது போல் சொல்லித் தனக்கு முன்னிற் னிற்கும் ஒளஸ்திரியனது சிரங் கீழே விழு கிறதென வாளை வீச அதைக் கண்ட ஒளஸ்திரியன் தனது வாளை இவன் சிர சிற்கு நேரே வீச இருவருடைய வாட்களும் ஒன்றோடொன்று மோதிய சத்தம் ஆகா சத்தை அளாவிப் புரண்டது. உமறு பாஷாவின் யுத்த சரித்திரத்தில் சித்தி லெவ்வை கையாண்டுள்ள பல சொற்கள் சிறப்பாக ஈழத்து முஸ்லிம்களிடையே வழங் கும் சொற்களாயிருப்பது இங்கு கவனிக்கத் தக்கதாகும். பின்வரும் உதாரணங்கள் குறிப்பிடத்தக்கனவாகும் :
வலோற்காரம் (பலாத்காரம்), பிகில் (ஊது குழல்), அழற்சி (ஆத்திரம்).
துலாம்பரம் (தெளிவு), செந்தளிப்பு, (செழிப்பு), உத்தரங்கள் (மறுமொழிகள்). திருக்காட்டம் (அதிர்ச்சி), சத்துராதி (எதிரி), சக்கிருந்தார் (காரியதரிசி).
வீதிறு (கண்ணாடிப் பாத்திரம்), தவறணை (மதுக்கடை).
சித்திலெவ்வை உரைநடைத்துறைக்கு தாம் பணிபுரிந்ததோடு, ஏ. ரி. சம்சுத்தீன், எம். எல். உதுமான், ஐ. எல். எம். அப் துல் அஸிஸ் போன்ற வசனநடைவல்ல பத் திராதிபர் சிலரையும் எமக்கு அளித்துச் சென்றுள்ளார். மேலும் அவரது "அஸ்றா ருல் ஆலம்" ஏற்படுத்திய சர்ச்சை பல வசன நூல்களின் தோற்றத்திற்கு வழிவகுத்தது
தமிழ் இலக்கிய வரலாற்றில் உரை நடை வளர்ச்சியில் சித்திலெவ்வை தமது ஆக்கங்களின் மூலம் தமக்கென ஒரு சிறப் பிடத்தைத்தேடிக்கொண்டுள்ளார். ஆனால் இதுகாறும் அவரது உரைநடைப்பணி மறந்துபட்டிருந்தது. தமிழுலகு அஸன்பே சரித்திரம் ஈழத்தின் முதலாவது நாவல். என்பதை அறியாதிருந்ததுபோல் சித்தி லெவ்வையின் வசன நடை வளத்தையும் அறியாதிருக்கிறது. இக் குறை யினைப் போக்குவதற்கு அவரது ஆக்கங்களை மீண் டும் அச்சேற்றி வெளிக்கொணர வேண்டி யது அத்தியாவசியமாகும்.
வருங்காலத்தில் தமிழ் இலக்கிய வர லாறு காணுவோர் சித்திலெவ்வையின் உரைநடைத்துறையிலான பணியினை உல கறியச் செய்வரென்பது எமது நம்பிக்கை யாகும்.
سب سے 10

Page 37
கலாநிதி ஆ. (
பிள்ளைத் தமிழ், பிரபந்த வகைகளுள் ஒன்று. பாட்டியல் நூல்கள் பிரபந்தங் களின் இலக்கணங்களைக் கூறுகின்றன. பிர பந்தம் என்பது நன்கு கட்டப்பட்டது என்று பொருள்படும் வடமொழிச் சொல். பிரபந் தம் எ ன் ற வட சொல் லி ற் குப் ப தி லா க ச் சிற்றி லக் கி யம் என்ற தமிழ்ச் சொல் ப்பொழுது பர வலாகப்பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், பிரபந்தம் என்ற சொல் சிற்றிலக்கியத்தை மட்டுமல்லாமல், பேரிலக்கியமாகிய காவி யம் முதலியவற்றையும் உள்ளடக்குகிறது. தமிழ்ப் பிரபந்த வகைகளுட் சில, வட மொழியிலும் காணப்படுகின்றன. சில, திரா விட மொழிகளுள் மட்டும் காணப்படுகின் றன. வேறு சில, திராவிட மொழிகளுள் ளும் மலையாளத்தில் மட்டும் காணப்பட, இன்னும் சில, தமிழ் மொழியில் மட்டும் காணப்படுகின்றன. பிள்ளைத்தமிழ் இலக் கியவகை தமிழ் மொழியில் மட்டுமே காணப்படுகிறது.
பிரபந்த வகைகளுள் வேறு எதுவும் "தமிழ்" என்பதை பெயரில் ஒரு கூறாகக் கொண்டமையவில்லை. அகத்திணையே தமிழ் என்று கொள்ளும் நிலை ஒரு காலத் தில் இருந்திருக்கிறது. எழுத்துக்கும் சொல் லுக்கும் மட்டுமன்றிப் பொருளுக்கும் இலக் கணம் வகுத்த தனிச் சிறப்பு தொல்காப் பியருக்கு உண்டு. தொல்காப்பியம் பொரு
ബ= !,
 

வேலுப்பிள்ளை
ளதிசாரம் கிடையாமற் போய்விட்ட ஒரு காலத்திலே, களவியல் என்ற இறையனா ரகப் பொருளை மட்டும் கொண்டு தமிழர் திருப்தியடைந்திருந்தனர். பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, "தமிழ் நுதலியது களவு: களவு நுதலியது தமிழ்" என்ற தலைப்பிலே ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். தனித் தனிச் செய்யுள்களாகவும் தொடர்நிலைச் செய்யுள்களாகவும் அகத்திணை நூல்கள் எழுந்தபின்பு, கோவையும் அகத்திணை சார்ந்த வேறு பிரபந்த வகைகளும் தோன் றின. புறத்திணை சார்ந்த பிரபந்த வகை களும் திணைவிரவின பிரபந்த வகைகளும் தினைசாராப் பிரபந்த வகைகளும் பல தோற்றம் பெற்றன. நாயக்க மன்னர் ஆட் சிக் காலத்திலே இப் பிரபந்த வகைகள் பல் கிப் பெருகியிருந்தமையால், அக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றிலே பிரபந்த காலம் அல்லது சிற்றிலக்கிய காலம் என் றும் கூறப்படுகிறது. இருபதாம் நூற்றாண் டிலே, பிரபந்தவகைகளின் தோற்றம் அருகி விட்டது. ஆனால், பிள்ளைத் தமிழ் மட் டும் நிமிர்ந்து நிற்கின்றது. பாட்டியல்நூல் கள் கூறும் பிரபந்த வகைகளுள், பிள் ளைத் தமிழுக்குத் தமிழ் நாட்டிலும் இலங் கையிலும் நல்ல நிகழ்காலம் இருப்பதைப் பார்க்கும்போது, எதிர்காலமும் சிறப்பாக அமையுமென்று கூறக்கூடியதாயுள்ளது.
பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தின் தோற்றுவாய், தொல்காப்பியத்தில் உள்ள "குழவிமருங்கினும் கிழவதாகும்" என்ற புறத்
1 -

Page 38
திணைச்சூத்திரத்திற்குச்செல்கிறது. ஆனால் தொல்காப்பியருக்கு, பிள்ளைத்தமிழ் என்ற பெயர் உடன்பாடாக இருக்கமுடியாது. பிள்ளை என்ற இளமைப் பெயர் எங் கெங்கு வருமெனவும் மனிதரின் இளமைப் பெயர்குழவியும், மகவும், மட்டுமேயெனவும் மரபியலிலே தொல்காப்பியர் வரையறுத் துக் கூறியுள்ளார். குழவி என்பதிலிருந்தே குழந்தையென்ற பெயர் தோன்றியது. மானிடக் குழந்தையைப் பிள்ளையெனக் குறிக்கும் வழக்குப் பாண்டிய நாட்டிலேயே தோன்றியிருக்கவேண்டும். மதுரையிலிருந்த சமணமுனிவர்கள் பாடியதாகக் கூறப்படும் நாலடியாரிலேயே, குழந்தையைக் குறிப் பதற்குப் பிள்ளை என்ற சொல் முதலிலே கையாளப்பட்டுள்ளது. கி. பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய நாட்ட வரான பெரியாழ்வார் தம்முடைய திரு மொழியிலே, கண்ணனைப் பிள்ளை எனக் குறித்துள்ளார்.
பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தின் வடி வாக்கத்துக்கு முந்திய வளர்ச்சியிலே ஆழ் வார்கள் சிலர் முக்கியமான இடம்பெறு கின்றனர். சோழ நாட்டுத் திருமங்கை யாழ்வாரும் சேர நாட்டுக் குலசேகராழ் வாரும் கண்ணன் அவதாரத்தினதும் இராமாவதாரத்தினதும் குழந்தைப் பருவத் தில் நன்கு ஈடுபட்டுப் பாடியுள்ளனர். பிறவாயாக்கைப் பெரியோனாகிய சிவ பெருமானுடைய குழந்தைப் பருவத்தைக் கற்பனை செய்து பாடச் சைவசமய குர வர்களுக்கு இடம் இருக்கவில்லை. கண்ணன் அவதாரத்துக் குழந்தைப் பருவ லீலைகள் வடமொழிப் பாகவதபுராணத்திலே விரி வாகக் கூறப்பட்டுள்ளது. பாகவதபுராணக் கதைகளைத் தழுவியே, ஆழ்வார்கள் கண்ணனது குழந்தைப் பருவப் பாடல் களைப் பாடியுள்ளார்களெனப் பலர் கருது வர். ஆழ்வார்கள் பாசுரங்களின் செல் வாக்கு இன்று கிடைக்கும் வடமொழிப் பாகவதபுராணத்திலே காணப்படுவதாக வும், இப்பாகவதபுராணம் கி. பி. பத்தாம் நூற்றாண்டளவிலேயே இப்போதைய வடி வத்தைப் பெற்றிருக்கவேண்டுமெனவும் வேறு சிலர் அபிப்பிராயப்படுவர்.

மகளாக ஆண்டாள் எனும் ஆழ்வாரை வளர்த்தெடுத்த தந்தை பெரியாழ்வார்கண் ணனைக் கற்பனையில் வளர்த்தெடுத்தமை பற்றியபாசுரங்கள்பெரியாழ்வார்திருமொழி என்ற பெயரிலே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலிலே தொகுக்கப்பட்டுள் ளன. சுமார் 28தலைப்புகளிலே இவர் பாடிய வற்றுள் பெரும்பாலானவை கண்ணனைக் குழந்தையாகவும் சிறுவனாகவும் இளைஞ னாகவும் கண்டு பாடியனவாக உள்ளன. ஆண்டாளுடைய நாச்சியார் திருமொழியும் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தின் வடிவாக் கத்துக்கு ஒரளவு பயன்பட்டுள்ளது.
பிள்ளைத் தமிழில் ஆண்பாற் பிள் ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என்று இரண்டு வகைகள் உண்டு. இவை யொவ்வொன்றும் பொதுவாகப் பத்துப் பருவங்களாக அமையினும், முதல் 6TCup பருவங்களுமே இரண்டுவகைப் பிள்ளைத் தமிழ்களுக்கும் பொதுவானவை. இறுதி மூன்று பருவங்களும் ஒவ்வொருவகைப் பிள்ளைத் தமிழுக்கும் சிறப்பாக அமைகின் றன. சோழப் பெருமன்னர் காலத்திலே ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் பிள் ளைத் தமிழ் என்ற முதலாவது பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தை இரண்டாவது குலோத்துங்கன் (1133 - 1150) மேலே பாடினார். இது ஆண்பாற் பிள்ளைத் தமி ழாக அமைகிறது.
ஒட்டக்கூத்தர் குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழின் அமைப்பிலே, நான்கு ஆழ்வார் பிரபந்தங்களையும் எவ்வாறு பயன்படுத்தி உள்ளாரென நோக்க வேண் டும். பிள்ளைத் தமிழின் ஆறு பருவங்கள் முதல் ஏழில் ஆறு - பெரியாழ்வார் திரு மொழியிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டு காப்புப் பருவமாக உருமாறுகிறது. அவர் பாடிய செங்கீரைப் பருவம், தாலப் பரு வம், சப்பாணிப் பருவம் என்பன பிள்ளைத் தமிழிலே இரண்டாவது, மூன்றாவது, தான்காவது உறுப்புகளாகின்றன. அம்பு லிப் பருவம் ஏழாவது உறுப்பாகவும் தளர் நடைப்பருவம், வாரானைப் பருவம் என்ற
岑一

Page 39
பெயரில் ஆறாவது உறுப்பாகவும் அமை கின்றது. பெரிய திருமொழியில் பத்தாம் பத்திலே திருமங்கையாழ்வார் கண்ணனு டைய குழந்தைப் பருவத்தைப் பலவகையா கப் பாடியுள்ளாராயினும் சோழப் பெரு மன்னனைப் பாடிய கவிச் சக்கரவர்த்தி ஒட் டக்கூத்தர் அத்திருமொழியைச் சிறப்பாகப் பயன்படுத்தியதாகத் தெரியவரவில்லை. சப்பாணிப்பருவம் திருமங்கையாழ்வாரா லும் பாடப்பட்டுள்ளது என்பதே இவ்விடம் கவனிக்கத்தக்கது. குலசேகராழ்வாருடைய பெருமாள் திருமொழியிலே இராமபிரான் தாலாட்டப்படுவது தாலப்பருவம் பாடுவ தற்கு, ஒட்டக்கூத்தருக்கு உதவியிருக்கக் கூடும்.
பிள்ளைத்தமிழின் ஐந்தாவது உறுப் பாக இடம்பெறும் முத்தப் பருவம் தனிப் பருவமாக ஆழ்வார்களால் பாடப்பட வில்லை. பெரியாழ்வார் திருமொழியின் மூன்றாவது பத்திலே, கண்ணன் வரவு கண் டன்னை மகிழ்தல் என்ற தலைப்பிலே "என் குட்டனே முத்தம்தா" என்று காணப்படு கின்றது. ஆனால், ஒரு செய்யுளில் மட் டுமேஇவ்வாறு வருகிறது.முத்து முத்தமென வும் குறிப் பி டப் படுவதுண்டாதலால் மூத்தப்பருவத்திலே முத்தைப்பற்றிய செய் திகளும் இடம்பெறுவது மரபு. பிள்ளைத் தமிழில் இடம்பெறும் முத்தப்பருவம் ஒட் டக்கூத்தரின் தனித்துவப் பங்களிப்புப் போலத் தோன்றுகிறது.
ஆண்பாற் பிள்ளைத் தமிழின் இறுதி மூன்று உறுப்புகள், சிற்றில், சிறுபறை, சிறு தேர் என்பனவாம். வல்லிபுரமாயவன் பிள்ளைத் தமிழில் இந்த ஒழுங்கே பின்பற் நறப்படுகின்றது. ஆனால், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழில் சிறுபறை எட்டாவது உறுப்பாகவும், சிற்றில் ஒன்பதாவது உறுப் பாகவும் வந்துள்ளன. ஒட்டக்கூத்தர் சிற் றிற் பருவத்தைப் பாடுவதற்கு ‘நாச்சியார் திருமொழிக்குக் கடன்பட்டுள்ளார். நாச்சி பார் திருமொழியின் இரண்டாவது உறுப்பு *சிறுமியர் மாயனைத்தஞ்சிற்றில் சிதையே லெனல்" என்பது.

சிறுபறை, சிறுதேர் என்பன ஆழ்வார் பாசுரங்களில் இடம்பெறவில்லையாயினும் சிறுவர் விளையாட்டுகளாகச் சங்க இலக் கியத்திலேயே குறிப்பிடப்பட்டுக் காவியங்க ளிலும் கூறப்பட்டுள்ளன. சிறுபறை நற் றினை 58வது செய்யுளிலே முதலில் இடம் பெற்று, பெருங்கதை உஞ்சைக் காண்டம் 37வது செய்யுளிலும் கூறப்பட்டுள்ளது. சிறு தேர் ஐங்குறுநூறு 403 ஆவது செய்யுள், பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை என்பனவற்றிலே முதலில் இடம்பெற்று மணிமேகலை ஏழாவது காதையிலும் சீவக சிந்தாமணி நா ம க ள் இலம்பகத்திலும் கூறப்பட்டுள்ளது. ஒட்டக்கூத்தர் இவ் விரண்டு உறுப்புகளையும் மேற்குறிப்பிடப் பட்ட இலக்கியங்களிலிருந்து அமைத்துக் கொண்டிருக்கவேண்டும்.
சங்கமருவிய காலநூல்களுள் ஒன்று இக் கால அறிஞர்களாலே கொள்ளப்படும் கலித்தொகையிலே மூன்று செய்யுள்கள் ஐந்து பருவங்களை மேலோட்டமாகக் குறித்துச் செல்வதைக் காணலாம். கலித் தொகை 80ஆவது செய்யுளதாய் தளர்நடை
காணல் (வாரணைப் பருவம்). மழலை மொழி கேட்டல் (செங்கீரைப் பருவம்). அம்புலிகாட்டல் என்பனவற்றைக்கூற,
கலித்தொகை 51வது செய்யுள் சிற்றில் சிதைத்தலையும் கலித்தொகை 81ஆவது செய்யுள் சிறுதேர் உருட்டலையும் கூறி யுள்ளன. இவையாவும் மானிடக் குழந்தை களின் செயல்களே. அரசர் குலக் குழந்தை களும் இத்தகைய செயல்களிலேயே ஈடுபட் டிருக்கும்.
சிறந்த அரசருடைய செயலைத் திரு மாலின் செயலாகக் காணும் நிலை தமிழ் இலக்கியத்திலே நீண்டகாலமாக இருந்து வந்த மரபு. பாண்டிய மன்னனுடைய புக ழைத் திருமாலுடைய புகழுக்கு ஒப்பிட்டுப் புறநானூறு 57ஆவது செய்யுள் பாடியுள் ளது. செங்கோல் செலுத்தும் மன்னவன் மக்களுக்கு இறைவனாவான் என்று திருக் குறளில் 388 ஆவது குறள் கூறியுள்ளது. மன் னவனை மாயவனோடு ஒப்பிட்டுப்பாடும் புறத்திணைத்துறையைப் பூ வை நிலை
3 -

Page 40
யெனத் தொல்காப்பியம் புறத்திணையியல் கூறும். இவையாவும் ஆழ்வார்களுடைய பாசுரங்களுக்குப் பின்னணி யாகவும் குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழுக்கு முன்னோடிக் குறிப்புகளாகவும் காணப்படு கின்றன.
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத் தி லே மாயவன் குழந்தைப் பாடற்பேறுபெற, சோழப் பெருமன்னர் காலத்திலே, ஏறத் தாழ முன்னுாறு ஆண்டுகள் பின்பு, குலோத் துங்கன் அதே குழந்தைப் பாடற்பேறு பெறுகின்றான். சிறப்புடை மன்னரைத் திருமாலாகக் காணும் போக்கு ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்மாழ்வாரு ருடைய திருவாய்மொழியிலும் குறிப்பிடப் படுகிறது. முதலாம் இராசராசன் காலத் திலிருந்து சோழப் பெருமன்னர்கள் திரு மாலுக்கு ஒப்பிடப்படுவதை அவர்களு டைய மெய்க்கீர்த்திகளிலிருந்து கண் டு கொள்ளலாம். குலோத்துங்க சோழனு டைய தந்தை விக்கிரம சோழனை மாயோ னாக மிகவும் தெளிவாகவே விக்கிரம சோழன் உலாவின் இறுதியிலே ஒட்டக் கூத்தர் பாடியுள்ளார், "பூமன்னு பதுமம் பூத்தவேழுலகும்" என்று தொடங்கு ம் குலோத்துங்கனுடைய மெய்க் கீர்த் தி, "நெடுமால் இவனெனச் சுடர் முடிசூடி, இருநிலமகளை உரிமையிற் புணர்ந்து, திரு மகள் பனைமிலைச் செஞ்சாந்தணைந்து" என்று இவனைத் திருமாலாகவே காண்கின்
Dës.
முதற் பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தத்தை உருவாக்கிய ஒட்டக்கூத்தர் ஒவ்வொரு பரு வத்துக்கும் பதினொரு செய்யுள் பாட முயன்றுள்ளார். ஆழ்வார்களும் ஒவ்வொரு பருவத்துக்கும் பத்து அல்லது பதினொரு செய்யுள்களே பாடியுள்ளனர். பெரியாழ்வா ருடைய திருப்பல்லாண்டு பன்னிரண்டு செய்யுள்களாக நீண்டுவிடுகிறது. பெரி யாழ்வார் தாலப் பருவத்தையும் அம்புலிப் பருவத்தையும், திருமங்கையாழ்வார் சப் பாணிப்பருவத்தையும், ஆண்டாள் சிற் றில் சிதைத்தலையும் பப்பத்துப் பாடல் களாகப் பாடியிருக்க, இவர் யாவற்றை
-

யும் பதினொரு பாடல் என்ற வரைய றைக்கு உயர்த்தி உள்ளார். சிறுபறை, சிறு தேர் என்ற இரண்டு பருவங்களுக்கும், பாடல்கள் ப்லபாடி வழிகாட்டியோர் இவ ருக்கு இருந்திராமையாற்போலும், சிறு பறையில் ஏழு செய்யுட்களும், சிறுதேரில் எட்டுச் செய்யுட்களும் மட்டுமே இவர் பாடி யுள்ளார். பிள்ளைத்தமிழில் அம்புலிப்பரு வம் பாடுவதே சிரமமானதென்றும், புல வர் சாமபேத தான தண்டத்தைப் பாட உயர் கற்பனையாற்றல் தேவைப்படுமென் றும் கூறுவர். ஒட்டக்கூத்தர் அம்புலிப் பரு வத்தை மட்டுமே பன்னிரண்டு செய்யுட் களில் நீட்டிப் பாடியுள்ளார்.
பிள்ளைத் தமிழ், தலை வ னு  ைடய குழந்தைப்பருவத்தைப் பாடுவதே தவிர தலைவன் குழந்தையாயிருக்கும் காலத் திலே, அவனுடைய குழந்தை ப் பருவ ச் செயல்களைப் பார்த்துப் பாடுவது அல்ல. மூன்றாண்டுகளுக்கு முற்பட்ட குழந்தை களின் விளையாட்டுக்கள் கண்டு மகிழ்வதற் குரியனவேயன்றிப் பலப்பல பாடல்களா கப் பாடற்குரிய கருவை உட்கொண்டன அல்ல. வாலிபப் பருவங் கடந்தபின்னர், தலைவன் புகழுடன் இருக்குங் காலத்தி லேயே, அவனைப்பற்றிக் குழந்தையாகக் கற்பனைசெய்து பிள்ளைத்தமிழ் பா டும் மரபு ஏற்பட்டது. தலைவனுடைய வீரச் செயல், கொடைச் செயல் என்பன வற் றோடு, அவன்குல முன்னோர், புரா ண காலத்து அவன் முன்னோர் ஆகிய வர் களின் செயல்களையும் பல படி யா க ப் புகழ்ந்து, அவர்கள் மரபில் பிறந்தவன் இவன்" என்று கூறுவதும் ஒற்றுமை நயத் தால் அவர்கள் செயல்களையும் இவன் செயலாகக் கூறுவதையும் காணலாம். இவ் வாறான செய்திகளைப் பொதிந்தே ஒட் டக்கூத்தர் குலோத்துங்கசோழன் பிள்ளைத் தமிழ் யாத்துள்ளார். இதனால் பிள்ளைத் தமிழ் வரலாற்று இலக்கியமாகவும் பயன் படுகிறது.
சமயத்தையும் உலகிய  ைல யும் இணைத்து அமைதிகண்ட சோழப் பெருமன் னர்கால இலக்கியப் பண்பு குலோத்துங்க
അ

Page 41
சோழன் பிஷ்ளைத்தமிழிலே விளங் கித் தோன்றுகிறது. இந்தக் குலோத்துங்கன் அவைக்களத்திலேதான் சேக்கிழார் முதல மைச்சராக இருந்து பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். சிதம்பரத்துக்கான திருப் பணிகள் இவன் செய்த அளவுக்குப் பிற மன்னர் எவரும் செய்யவில்லை. ஒட்டக் கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி சிவபரத் துவத்தை நிலைநாட்டுவதை நோக்கமாகக் கொண்டது. அவர் பாடிய வரலாற்று இலக்கியமான பிள்ளைத்தமிழிலே, ஆழ் வார் பாசுரங்களிலே காணப்படும் திருமா லின் பரத்துவம் இல்லை. ஆனால் குலோத் துங்கனே திருமாலாக உருவம் செய்யப் பட்டு, திருமாலின் வீரச் செயல், அருட் செயல் முதலியன அவன்மேல் ஏற்றிப் பாடப்படுகின்றன. ஏறத்தாழ நான்கில் ஒரு பங்கு பாடல்களிலே, குலோத்துங்கன் பெரும்பாலும் கண் ண னாகவும், சிறு பான்மை இராமன், நரசிம்மன், வராக மூர்த்தி, திருவிக்கிரமன், திருமால் ஆகியோ ராகவும் வருணிக்கப்பட்டிருக்கிறான்.
குலோத்துங்கனே திருமாலாக உருவ கிக்கப்படுவதனாற்போலும் காப்புப் பரு வத்திலே திருமால் வணக்கம் கூறப்பட வில்லை. ஆனால் சத்தமாதர் வழிபாடு கூறும் எட்டாவது செய்யுளிலே, கண்ணன் செயல்கள் சில கூறப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் வழங்கும் கதையாகிய கண்ணன் நப்பின்னைக்காக ஏறு தழுவி யமை 23ம் பாடலிலும் 44ம் பாடலிலும் இடம்பெறுகிறது. தாலப்பருவத்திலே மூன்று பாடல்களிலும் சப்பாணிப் பருவத் தி ல் ஐந்து பாடல்களிலும் வாரானைப் பருவத் தில் மூன்று பாடல்களிலும் அம்புலிப் பரு வத்தில் மூன்று பாடல்களிலும் திருமால், கண்ணன், வராகமூர்த்தி ஆகியோரின் செயல்கள் குறிப்பிடப்படுகின்றன. 58, 80, 89ஆம் செய்யுள்களிலே இராமனும் 58ஆம் செப்யுளிலே நரசிம்மனும் 94ஆம் செய்யு னிலே திருவிக்கிரமனும் குலோத் துங்க னோடு ஒட்டிப் பாடப்படுகின் ற னர். எனவே ஆழ்வார்கள் கால வைணவச் செல் வாக்கிலிருந்து குலோத்துங்கசோழன் பிள்
ബ് 1

ளைத்தமிழ் முற்றாக விடுபடவில்லையென Görtb.
தமிழ்ப் பிரபந்தவகைகளுள் ஒரு வகை யினைப் பிள்ளைத் தமிழ் என்று சிறப்பித் தது முறையன்று என்று அறிஞர் சிலர் கருதியுள்ளனர். பாட்டியல் நூல்களுள் மிகப் பழையதான பன்னிரு பாட்டியல் பிள்ளைத் தமிழைப் பிள்ளைப் பாட்டு என்று குறிப்பிட, வெண்பாப் பாட்டியல் பிள்ளைக்கவி என்று பெயரிட்டுள்ளது.
பதினேழாம் நூற்றாண்டிலே பெருங்
கவிஞர் இருவர் பிள்ளைத் தமிழுக்குப் புத் துயிர் கொடுக்கின்றனர். தென்பாண்டி நாட்டவரான குமரகுருபரர் ஆண்பாற் பிள்ளைத்தமிழாக முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழையும் பெண் பா ற் பிள் ளைத் தமிழாக மீனாட்சியம் மை பிள் ளைத் த மிழை யும் பாடு கின்றார். பிள்ளைத்தமிழ் த மி  ைழ யும் பாட வேண்டுமென்று கருதியவர் போல, நூலா சிரியர் தமிழினிடத்தே தெய்வத்தன்மை யைக் கண்டதையும், பாராட்டும் தெய்வங் களை எல்லாம் தமிழ்த் தொடர்பும், தமி ழின்பால் வேட்கையுமுடையவர்களாகக் கூறுவதையும் காண்கிறோம். வீரசைவரா கிய சிவப்பிரகாச சுவாமிகள் தம்முடைய குருநாதராகிய சிவஞான பாலைய சுவாமி கள் மீது பிள்ளைத்தமிழ் பாடினார்,
இ வ ரி க ஞ  ைடய பிள்  ைளத் தமிழ்ப் பி ர ப ந் தங்களின் செல்வாக் காலே, நூற்றுக்கணக்கிலே ஒவ்வொரு நூற்றாண்டும் பிள்  ைளத் தமிழ் க ள் தோன்றிவருகின்றன. குமரகுருபரர் காட் டிய வழியிலே, அவர் பாடிய தெய்வங்க Tg உமையம்மையும் முருகனுமே பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களைப் பெருந் தொகையாகப் பெற்று வருகின்றனர். தெய்வத்தை, அது உறையும் தலத்தோடு நெருங்கிய தொடர்பு படுத்திப் பாடும் முறை தோன்றுகிறது. முருகனைச் சிறுவ னாகவும் இளைஞனாகவுமே போற்றிவரும் தமிழ்கூறும் நல்லுலகம் தமிழ்த் தெய்வமா கக் கருதப்படும் முருகனுக்குப் பிள்ளைத் தமிழ் பாடுவதிலே சளைக்காது போல்
5 -

Page 42
தோன்றுகிறது. பகழிக்கூத்தர் இயற்றிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ், இவற்றுள் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. உமையம்மைமேல் பாடப்பெற்ற பிள்ளைத் தமிழ்களுள்ளே, பன்னிரண்டு பருவங்களிலே பாடப்பட்டுள்ள தில்லைச் சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் சிறப் பாகப் போற்றப்படுகிறது. பிள்ளையார் என்ற சிறப்புப் பெயருக்கு உரியவரான விநாயகர்மேல் பிள்ளைத்தமிழ் அருமையா கவேபாடப்பட்டுள்ளது. மூத்தபிள்ளையார் பிள்ளைத்தமிழ் பெறவில்லை என்ற குறையை நீக்கக்கருதிய பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, தென்பாண்டி நாட்டவரான சிவஞான முனிவர் திருக் கைலை என்னும் பதியில் எழுந்தருளிய செங்கழுநீர் விநாயகர் மீது பருவத்திற்கு ஐவைந்து பாடல்களைக் கொண்டதாய்ப் பிள்ளைத்தமிழ் பாடினார். பத்தொன்ப தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம்பிள்ளை முருகன்மீது ஆண்பாற் பிள்ளைத்தமிழ் ஒன்றும் உமையம் ை மீது பெண்பாற் பிள்ளைத்தமிழ் Փ7(քմ» umriguj6íromrtř. -
தொடக்கத்திலே வைணவத் தொடர் புடையதாகக் காணப்பட்ட பிள்ளைத்தமி ழில், பின்பு வைணவத் தொடர்பு அருகிக் காணப்படுகிறது. வைணவத் தொடர்பான சிறந்த பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களாகத் தெரியவருபவை அனுமார் பிள்ளைத் தமிழ், ஆண்டாள் பிள்ளைத்தமிழ், வைகுந்தநாதன் பிள்ளைத்தமிழ் முதலிய வையேயாம். நாச்சியார் திருமொழித் தொடக்கத்திலே ஆண்டாள் காம நோன்பு
u
"பொருப்பிலே பிறந்து தென் திருப்பிலே யிருந்து வைகை நெருப்பிலே நின்று சுற்றோ மருப்பிலே பயின்ற பாவை

நோற்பதாகப் பாடியுள்ளமையால், ஆண் டாள் பிள்ளைத்தமிழே காமநோன்பு பதி னொராம் பருவமாக இடம்பெறுகிறது. காப்புப் பருவமென்பதைத் தெய்வ வணக்க மெனக் கூறியும், பன்னிரு ஆழ்வார்களை காவற்கடவுளாகக் கூறியும், புதுமை காண் கிறது வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழ். வல்லிபுரமாயவன் பிள்ளைத்தமிழ் வைண வத் தொடர்புள்ள இந்த மர பிலே வருகிறது.
சிவஞானபாலைய சுவாமிகள் பிள் ளைத் தமிழ்மரபிலே, மனிதர்களைத் தலை வர்களாகக் கொண்ட பிள்ளைத் தமிழ் களும் பல தோன்றியுள்ளன. சத்திய ஞானப் பண்டாரம் பிள்ளைத்தமிழ் சைவ சமயஞானி ஒருவர்மேற் பாடப்பட்டது. சிவந்தெழுந்த பல்லவராயன் பிள்ளைத் தமிழ் சிற்றரசன் ஒருவன்மேற் பாடப்பட் டுள்ளது. கம்பன் பிள்ளைத்தமிழ், காந்தி பிள்ளைத்தமிழ், நாவலர் பிள்ளைத் தமிழ், பாரதி பிள்ளைத்தமிழ், காமராசர் பிள்ளைத்தமிழ், ஈழகேசரி பிள்ளைத்தமிழ் முதலியனவாகப் பிள்ளைத்தமிழ்கள் தோன் றிக் கொண்டே இருக்கின்றன.
பிள்ளைத்தமிழ்க் கவிதைகளில் செல் வாக்கு, இந்துசமயம், உலகியல் சார்ந்த பெரியோர் என்ற வட்டங்களைக் கடந்து பிற சமயத்தவர்களையும் கவரத் தொடங்கி விட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டி லிருந்து இஸ்லாமியரும் கிறித்தவரும் தத்தம் சமயத் தொடர்பான பெரியார் களைப் பற்றிப் பிள்ளைத்தமிழ்கள் பாடி வருகின்றனர்.
னன் புகழிலே கிடந்து சங்கத் யேட்டிலே தவழ்ந்த பேதை ர் நினைவிலே நடந்தோரென மருங்கிலே வளருகின்றாள்."
- பாரதம்

Page 43
சீறாவும் தி
பேராசிரியர் ம
Bபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நபிப்பட்டம் அருளப் பெற்று ஏழாண்டு கள் உருண்டோடின. எட்டாம் ஆண்டு நடந்துகொண்டிருக்கின்ற சமயம் அது. அந்தக் காலத்தில் உறோம நாட்டுப் பேரரசுக்கும் பாரசீகப் பேரரசுக்கும் போர் நிகழ்ந்து கொண்டிருந்தது. GLIri3a) பாரசீகர் வெற்றி பெற்றனர். Luntripur ஒகர் வெற்றிபெற்றுள்ளனர் என்னும் செய்தி மக்கமா நகரிலே பரவியது. இந் தச் செய்தி இஸ்லாத்தை எதிர்த்து வந்த மக்கா நகர் குறைகியருக்கு மகிழ்ச்சியை அளித்தது. முஸ்லிம் அல்லாதோர் இந் தச் செய்தியினால் உளம் பூரித்தனர். இஸ் லாத்தினால் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை யும் அதனாலே அந்த முஸ்லிம்களைப் பழிவாங்கும் சந்தர்ப்பம் பாரசீகர் உறோ மானியரைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றியால் தமக்குக் கிடைத்துள்ளது என்றும் முஸ்லிம் அல்லாத மக்கா நகர்க் குறைகியர் சிந்திக்கத் தலைப்பட்டனர். அந்தச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி இஸ்லாத்தை அழித்துவிடலாம் என்று அவர்கள் எண்ணலாயினர். அங்ங்னமே எல்லோரிடமும் சொல்லவும் முற்பட லாயினர். இந்தச் சூழ்நிலையை உமறுப் புலவர் தமது சீறாப்புராணத்தில் பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார் :
-ml li

ருமறையும்
. மு. உவைஸ்
இறுமிகட்கும் பாரிசுநாட் டவர்க்கும்
பகையாக இருந்த அவ் வாண்டு மறமுதிர்ந்து பாரிசவர் வெற்றி
r Go)5m Giorum tř எனும் வசன மக்க மீதில் உறையும்பெரும் குபிரவர்கேட் டுடற்பூரித்
திசுலாத்தி லுற்ற பேரைத் திறனடுத்த தெமர்க்கிழித்த சிதைவடுத்த் துமர்க்கெனவும் செப்பி னாரால்.
(ஒப்பெழுதித் தீர்த்த படலம்: 20)
இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் உறோமர் தம் தோல்வி தற்காலிகமானது என்றார்கள். உறுமியருடன் போரிடும் பொழுது உறோம நாட்டவரின் தாக்கு தலுக்கு ஈடு நிற்க முடியாது பாரிசு நாட்டு மக்கள் நிச்சயம் தோல்வியுறுவர் எனக் குறிப்பிட்டார்கள். ஆதலினால் மக்காக் குறைகியரின் இஸ்லாம் விரோதச் செயல் நடக்காது எனத் திட்டவட்ட மாகக் கூறினார்கள். பாரிசு நாடு தோல்வி யுறும் என நபிகள் நாயகம் முகம்மது (ஸல்) அவர்களின் கூற்று உண்மையானது. அது ஒரு போதும் பொய்க்காது என அண்ணல் அவர்களின் அருமைத் தோழர் அபூபக்கர் சித்திக் (றலி) அவர்கள் தம் மோடு இருந்தவர்களிடம் கூறினார் கள். இந்தக் கூற்றினைக் கேட்டுக் கொண்டிருந்தான் முஸ்லிம் விரோதியான இப்னுகலப் என்பவன். அவன் தோல்வி யின் சின்னமாக இருந்தான். அபூபக்கர்

Page 44
(றலி) அவர்களின் கூற்றுக்குச் சவால் விடுத்தான். தாம் சேர்ந்துள்ள குறைகிக் குலத்தவர்களின் சொல் பொய்க்குமே பானால் தான் அபூபக்கர் (றலி) அவர் களுக்கு நூறு ஒட்டகைகள் தருவதாகவும் முஸ்லிம் அல்லாத குறைகியரின் கூற்று மெய்க்குமேயானால் தனக்கு அபூபக்கர் (றலி) அவர்கள் நூறு ஒட்டகைகள் தரல் வேண்டும் என்றும் ஒட்டுப் பிடித்தான். ஒட்டமென உரைத்தான். இருவரும் சம் மதித்தனர். சில நாட்கள் பறந்தோடின. உறுமியரின் கடுமையான தாக்குதலுக்கு ஈடுபிடிக்க முடியாது பாரிசு நாட்டவர் தோற்றுப் போயினர் என்னும் செய்தி மக்கா நகரில் பரவியது. இந்தச் செய்தி யின் பெறுபேறாக இப்னு கலப் என்பவன் அபூபக்கர் (றலி) அவர்களுக்கு ஒட்டிய ஒட்டம் பலித்தமையால் நூறு ஒட்டகங் களைக் கொடுத்தான். உறோம நாட்ட வரின் தாக்குதலுக்குப் பயந்து பாரிசு நாட்டவர் தோற்றுவிடுவர் என்று பெரு மானார் (ஸல்) அவர்களின் கூற்றை உம றுப் புலவர் ஒரு செய்யுளில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் :
தருவைநிகர் முகம்மது நன்னபியுரைத்தார்
உறுமிகடஞ் சமர்க்காற் றாது வெருவியிரு நிலத்தோடிப் பாரிசற முறியுமென விரித்த வாய்மை ஒருபொழுதும் பழுதாகா தென்னஅபூ
பக்கரெடுத் துரைப்பக் கேட்டே இருமையினும் பலனறியான் இப்னுகலப்
எனுமவன்வந் தெதிர்ந்து சொல்வான்.
(ஒப்பெழுதித் தீர்த்த படலம்: 21)
உறுமியர் தோற்றுப்போயினர்; Lumrifiés நாட்டவர் வெற்றி பெற்றுள்ளனர்; இவை காரணமாக முஸ்லிம்களையும் தோல்வி அடையச் செய்யலாம் என மக்கா நகர் முஸ்லிம் அல்லாத குறைகியர் மனப்பால் குடித்துக்கொண்டிருந்த சமயம் வானவர் கோன் ஜீபுறீல் (அலை) மூலம் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் உண்மை யான நிலையை அறிவித்தான். அந்த இறை அறிவிப்பு அல்குர்ஆனின் முப்பதா வது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது.
-

அந்த முப்பதாவது அத்தியாயம் றூம் (பேரரசு) என தலையங்கத்தைக் கொண் டுள்ளது. அந்த அத்தியாயத்தின் முதல் ஆறு திருவசனங்களும் உறுமியர் தற் பொழுது தோல்வி அடைந்தாலும் அதி ஒக்கிரத்தில் வெற்றி பெறுவார்கள் என் றும் சில ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த உறுமியருக்கு வெற்றி ஏற்படும் என்றும் வெற்றி வாய்ப்பை அளிக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கே உண்டு என்றும் அல்லாஹ் அளிக்கும் வாக்குறுதி நிச்சயம் நிறை வேறும் என்றும் கூறிக்கொண்டிருக்கின் றன. முப்பதாவது அத்தியாயத்தில் முதல் ஆறு திருவாக்கியங்களின் தமிழ் மொழி பெயர்ப்பை பின்வருமாறு சுட்டலாம் :
1. அலிப்; லாம்; மீம்.
2. (நபியே) நூம் வாசிகள், சமீ பத்திலுள்ள பூமியில் (தற்சமயம்) தோல்வி அடைந்தனர்.
3. அவர்கள் (இன்று) தோல்வி அடைந்துவிட்டபோதிலும், அதி க்ேகிரத்தில் வெற்றி அடைவார் கள்.
4. (அதுவும்) சில வருடங்களுக் குள்ளாகவே. (வெற்றி, தோல்வி அளிக்கும்) அதிகாரம் அல்லாஹ் வுக்கே சொந்தமானது. (அவர்கள் வெற்றி அடையும்) அந்நாளில், விசுவாசிகள் அல்லாஹ்வின் உத வியைக் கண்டு மகிழ்ச்சி 9t. வார்கள்
5. அவன், தான் விரும்பியவர் களுக்கு உதவி புரிகிறான். அவன் (யாவரையும்) மிகைத்தேனும், கிருபை உடையோனுமாக இருக் கிறான்.
6. (இது) அல்லாஹ்வுடைய வாக் குறுதி; அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாறுவதில்லை. எனினும் மனிதருள் பெரும் பாலானோர் (இதனை) அறிய
மாட்டார்கள்.
(30: 1-6)

Page 45
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மேற் கூறிய கருத்துக்களைக் கொண்ட அல்குர் ஆன் திருவாக்கியங்கள் அருளப்பட்டன என்பதை அபூபக்கர் (றலி) அவர்கள் அறி வார்கள். இதனை அறியாத, அறியும் வாய்ப்பில்லாத இப்னு கலப் என்பவன் அபூபக்கர் (றலி) அவர்களுடன் நூறு ஒட்டகைக்கான ஒட்டுப்பிடித்தான். இத னையே உமறுப்புலவர் :
எங்கள்குலத் தவருரையே பழுதாகிப்
பாரிசவர் இரிந்தார் என்னில் உங்கடமக் கருள்வேனு றொட்டகையீ
தொட்டமென உரைப்ப நோக்கி எங்கணபி முன்னுரைத்த உரை தவறி
உறுமிகள் போர் இடைந்தார் என்னில் உங்கடமக் களித்தலஃ தென்னஅபூ
பக்கரெடுத் தோதினா ரன்றே.
(ஒப்பெழுதித் தீர்த்த படலம்: 22)
எனப் பாடி உள்ளார்.
இங்ங்ணம் அபூபக்கர் (றவி) அவர் களும் இப்னு கலப் என்பவனும் சம்மதித் தனர். ஒட்டம் ஒட்டினர். காலம் கழிந் தது. உறுமிகள் பாரசீகரை வென்று விட்டனர் என்னும் செய்தி பரவியது. தோல்வியை ஒப்புக்கொண்ட இபுனு கலப் என்பவன் அபூபக்கர் (றலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை அளித்தான். இந் தச் செய்தி பின்வரும் பாடலில் இடம் பெற்றுள்ளது:
இருவருஞ்சம் மதித்திகலி ஒட்டியவொட்
டகத்தினொடும் இருக்கும் நாளில் ஒருகவிகை நிலவவுறு மிகளடர்ந்து
பாரிசவர் உடைந்தார் என்னப் பெருகுமொழி அவரவர்கேட் டிபுனுகலப்
உடனுரைப்பப் பெரிதீன் ஈந்தான் அருவரைநேர் ஒட்டகநூ றடலிரியே றெனுமயூ பக்கர்க் கன்றே.
(ஒப்பெழுதித் தீர்த்த படலம்: 28)

தாம் வென்ற ஒட்டகங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில் ஒப் படைக்க அவர்கள் அவற்றை இரப்போர்க் கும் வறியோர்க்கும் தருமமாக (ஸதக்கா வாக) ஈந்துவிட்டார்கள். இதுவே பின் வரும் செய்யுளில் தரப்பட்டுள்ளது:
ஒட்டியொட்டம் பலித்வொட்டைத்
திரளொடும்வைத் துயருமயூ பக்க ரோங்கி மட்டவிழ்திண் புயக்குரிசின் முகம்மதுதம் முனம்விடுப்ப மகிழ்ந்து நோக்கிக் கட்டியபொன் மதிட்ககுபா நகரிடைவெங்
குபிரர் மனங் கருகி வாட இட்டமுடன் சதக்கா வென் றிரப்
போர்க்கும் வறிஞோர்க்கும் ஈந்திட் டாரால்.
(ஒப்பெழுதித் தீர்த்த படலம்: 34)
புகழேந்திப் புலவர் தமது நளவெண்பாவி லும் (223) ஒட்டக்கூத்தர் தமது விக்கிரம சோழனுலாவிலும் (217) பந்தயத்தைக் குறிக்க ஒட்டி என்னும் பதத்தைப் பயன் படுத்தி உள்ளமையைக் காணலாம்.
இஸ்லாத்தைப் போதிப்பதற்காக நபி கள் நாயகம் (ஸல்) அவர்கள் அண்மைப் பிரதேசமான தாயிப் என்னும் இடத்துக்குச் சென்றார்கள். அங்கிருந்தவர்கள் அவர் களை வரவேற்க மறுத்தனர். சொல் லொணா இடையூறுகளைச் செய்தனர். கல் லாலும் பொல்லாலும் உதிரம் வழியும் வரை அடித்தனர். அண்ணல் நபிகளார் அங்கிருந்து அப்பாற் சென்று தனிமையாக ஓர் இடத்தில் அமர்ந்தனர். பசியும் தாக மும் அவர்களை வருத்தின. தாயிப் வாசி கள் துன்புறுத்தியமையினால் இன்னலுக் குட்படுத்தப்பட்டனர். அங்ஙனம் இருக்கும் பொழுது றாபிஆ என்பவரின் புதல்வர் தம் முடைய ஏவலாளரை அழைத்து அண்ண லாருக்கு அவ்வேவலாளர் மூலம் பழங்களை ஒரு தட்டில் வைத்து அனுப்பினர். அவர்க ளும் அதனை ஏற்றுச் சுவைத்த பின்னர் அந்த ஏவலாளனின் பெயர் என்ன என்றும் எந்த நாட்டைச் சேர்ந்தவன் என்றும் அவர் கள் அவனிடம் வினாவினார்கள். அவனும் மகிழ்ந்து தான் ஒரு கிறிஸ்தவன் என்றும்

Page 46
நீனவா என்னும் ஊரைச் சார்ந்தவன் என் றும் தனது பெயர் அத்தாஸ் என்றும் தான் றாபீஆ வீட்டு வேலைக்காரன் என்றும் கூறினான். இதனையே உமறுப்புலவர் பின் வருமாறு ஒரு செய்யுளில் அமைத்துப் பாடி ang Girontorri:
நள்ளென உலகின் ஊழின் வருநசு
றானி மார்க்கத் துள்ளவன் நீன வாஎன் றோதிய
ஊரின் உள்ளேன் தெள்ளிய னிறபீ ஆதன் திருமனைக்
கிணகன் சேந்த வள்ளிலை வேலோய் அத்தா
சென்பவன் அடியேன் என்றான். (அத்தாசு ஈமான் கொண்ட படலம்: 6)
நீனவா என்று அத்தாசு கூறியதும் அவர்கள் யூனுஸ் நபி (அலை) அவர்களைப் பற்றி குறிப்பிட்டார்கள். இருவருக்கும் இடையில் உரையாடல் நடைபெற்றது. நீனெவா என்பது புகழ் பெற்ற பண்டைய நகரமாகும். அது பாவத்தின் இருப்பிட மாக மாறியது. அங்கு யூனுஸ் நபி (அலை) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்நகர் புத்துயிர் பெற்றது. இப்பொழுது அது மணற் குன்றாகக் காட்சி அளிக்கிறது. அவற் றுள் ஒன்று நபி யூனுஸின் சமாதி என அழைக்கப்படுகிறது. அது தைக்றிஸ் நதியின் வலது கரையிலே பக்தாதிலிருந்து 230 மைல் தூரத்தில் உள்ளது. யூனுஸ் நபி (அலை) அவர்களைப்பற்றி அல்குர்ஆன் 37 ஆம் அத் தியாயம் 139-148 திருவாக்கியங்கள் விவ ரிக்கின்றன.
மக்காக் குறை சியரின் தொல்லைகள் பொறுக்க முடியாது அல்லாஹ்வின் கட்ட ளையின் பேரில் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் அவர்கள்தம் தோழர் அபூபக்கர் (றலி) அவர்களும் மதீனமா நகர் செல்லும் வழியில் தெளர் குகையில் ஒளித்திருந்தார் கள். அப்பொழுது குறைகியர் குகை வாயி லுக்கே வந்துவிட்டனர். அவர்களின் முழங் கால்களைக் கண்ட அபூபக்கர் (றலி) அவர் கள் *யாறகுலுல்லாஹ், அல்லாஹ்வின் தூதரே, பகைவர் வந்து விட் டார் கள். இங்கே நாம் இருவர் தாம் இருக்கிறோம்"

என்றார்கள். "இல்லை, நாம் மூவர் இருக்கி றோம். அல்லாஹ்வும் எங்களோடு இருக்கி றான்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர் கள் விடை பகர்ந்தார்கள். அங்ங்ணம் கூறிய விடை அல்குர்ஆனின் 9ஆம் அத்தியாயத்தில் அமைந்துள்ள 40 திருவாக்கியத்தில் அமைந் துள்ளது. அந்தப் பகுதியைத் தமிழில் இவ் வாறு கூறலாம்:
(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கொன்றும் நஷ்டம் ஏற்பட்டு விடாது) ஏனென்றால் நிராகரிப்போர் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில், நிச்சயமாக அல்லாஹ் அவ ருக்கு உதவி செய்தே இருக்கிறான், (தெளர் என்னும்) மலைக் குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது விரோதிகள் வந்து சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னு டன் (குகையில்) இருந்த (தோழ ராகிய) அபூபக்கரை நோக்கி, நீர் கவ லைப்படாதீர்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று ஆறு தல் கூறியபோதும் அல்லாஹ் அவருக் குத் தன்னுடைய சாந்தியை அளித் தான். (9:40)
தோழர் அபூபக்கர் (றலி) அவர்களின் கூற்று உமறுப்புலவரின் சீறாப்புராணச் செய்யுள் ஒன்றில் பின்வருமாறு அமைந் துள்ளது:
இரவினில் இருளின் ஊர்விட்
டிவணிடை அடைந்தோம் மாற்றார் அருவரை இடத்துநீ தேடி
அடைந்தனர் முழந்தாள் மட்டும் தெரிவது நமக்கிங் கன்னோர்
திறத்தொடுங் கவிழ்ந்து நோக்கின் விரைவொடும் காண்பர் என்ன
வேதியர்க் கெடுத்துச் சொன்னார். (யாத்திரைப் படலம் : 110) குனிந்து பார்த்தாலும் அந்தக் குறைகியர் எம்மைக் காணமாட்டார். ஏனெனில் அல் லாஹ்வும் எம்முடன் இருக்கின்றான் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய உறுதி மொழி சீறாப்புராணம் மற்றொரு செய்யு ளில் பின்வருமாறு நயம்படக் கூறுகின்றது:
0 -

Page 47
இருவர்நா மிருப்பப் பூவின் இருந்த
பல்லுயிரும் காக்கும் ஒருவனம் இடத்தை நீங்கா
துடனுறைந் திருப்பக் காபிர் தெரிதரும் கண்ணிற் காணச் செயமற் றுண்டோ என்றார் அருவரை முழையில் புக்கி
அருக்கனொத் திருக்கும் வள்ளல். (யாத்திரைப் படலம் : 111)
மூன்று நாட்கள் தெளர் குகைக்குள் தங்கி இருந்த நபிகளாரும் அவர்தம் உயிர்த் தோழரும் சூரியன் மேற்றிசையில் புகுந்த பின்னர் இரண்டு ஒட்டகங்களில் ஏறிச் செல் லத் தலைப்பட்டனர். இராமுழுதும் பய ணஞ் செய்தனர். மறுநாட் காலை பொழுது புலர்ந்தது. தொடர்ந்து இருவரும் நடந்த னர். நண்பகல் ஆனதும் வெயில் தாங்க முடி யாது ஒர் இடத்தில் இறங்கினர். கூடாரம் போல் ஒன்றினை அமைத்தனர். நபிகளார் அங்கு துயில் கொண்டனர். அண்ணலார் உறங்குகையில் அபூபக்கர் (றலி) அவர்கள் சுற்றும்புறமும் பார்த்தார்கள். தூரத்திலே மயிர்ப்போர்வை தோளில் இட்டவனாய் இலைகுழை தறிக்கும் தறிகைஒரு கையிலும் பால் கறக்கும் மூங்கிற் குழல் மற்றொரு கையிலும் உடையவனாய் ஒருவன் ஆடு களை மேய்த்துக் கொண்டிருப்பதைக் கண் டார்கள். அந்த ஆடுகள் செறிந்த மயிரை யும் திருகிய கொம்பையும் பிளக்கப்பட்ட சிறிய கால்களையும் கொண்டனவாய்த் தோற்றம் அளித்தன. அபூபக்கர் (றலி) அவர்கள் கண்ட காட்சியை உமறுப் புலவர் பின்வருமாறு விவரிக்கிறார்.
செறிம யிர்த்திரு கியமருப் புடைச்சிறு கவைக்கால் குறும றித்திர ளொடுமயிர்
போர்வைதோட் கொண்டு வெறிக மழ்ந்திவ ணிருப்பவர்
எவரென வியந்து தறிகை கோல்கடை காலொடு
சார்ந்துநோக் கினனால், (சுறாக்கத் தொடர்ந்த படலம் 14)

ஆடுகள் பல இருந்தமையால் அபூபக்கர் (றலி) அவர்களுக்கு ஒர் ஐயம் ஏற்பட்டது" அந்த ஆடுகள் யாருடையதாய் இருக்க லாம்? அந்த ஆடுகள் பையனுடையதாயின் அவனிடம் பால் கொஞ்சம் கேட்டுக் குடிக் கலாம். அவை கூலிக்கு மேய்க்கப்படுவன வானால் அங்ங்ணம் அவனிடம் கேட்க முடி யாது. ஆகவே அந்த ஆடுகள் யாருடையவை என்பதை முதற்கண் அறியவிரும்பினார்கள் அபூபக்கர் (றலி)அவர்கள் அதுபற்றி அந்த இடைப் பையனையே அவர்கள் கேட்டுவிட் டார்கள். அந்த இடைப் பையன் சில ஆடு கள் தன்னுடையதென்றும் ஏனையவை கூலிக்கு மேய்க்கப்படும் ஆடுகள் என்றும் கூறிவிட்டான். அபூபக்கர் (றலி) அவர்களின் கேள்வியையும் இடைப் பையன் கூறிய விடையையும் உமறுப் புலவர் தமது சீறாப் புராணத்தில் பின்வருமாறு விளக்கி உள்ளார்.
அடைந்து நோக்கிய தொறுவனை
விளித்தபூ பக்கர் மிடைந்த விக்கொறி நின்னதோ
பிறரதோ விளம்பென் இடைந்தி லாமொழி கொடுத்தலும்
திரியும்என் உருக்க ளொடும்பு றச்சில கூலியு முளதென
உரைத்தான். (சுறாக்கத் தொடர்ந்த படலம் 15)
ஒருவனுக்குச் சொந்தமில்லாத ஆட் டைக் கறந்து அதன் பாலை அவனைக் கொண்டு பெறுவது ஏற்றதல்ல என்பதனா லேயே அபூபக்கர் (றலி) அவர்கள் முதற் கண் இடையனிடம் அவன் மேய்க்கும் ஆடு கள் அவனுடையதா அல்லது வேறொருவரு டையதா எனக் கேட்டார்கள். தன்னுடைய தும் கூலிக்கு மேய்ப்பனவும் உண்டு எனக் கூறியதில் திருப்தி அடைந்த அபூபக்கர் (றவி) அவர்கள் அந்த இடையனுக்குச் சொந்தமான ஆட்டிலிருந்து பால் கறந்து தரும்படி வேண்டினார்கள். கூலிக்கு மேய்க் கப்படும் ஆடுகளை விட்டு விட்டு அந்த இடைப் பையனுக்கே சொந்தமான ஆட்டி லிருந்து பால் கறக்கும்படி வற்புறுத்தப்பட் டது ஈண்டு நோக்கற்பாலது. இடையனுக்கே

Page 48
சொந்தமான ஆட்டிலிருந்து பால் கறந்து தங்களுக்குத் தரும்படி அவர்கள் கேட்டதும் அந்த இடைப்பையன் தனது ஆட்டிலிருந்து பால் கறக்கத் தலைப்பட்டான். அங்ங்ணம் பால் சறக்கப்படும் காட்சியை உமறுப்புல வர் ஒரு சொல்லோவியமாகத் தீட்டி உள் ளார். அந்தச் சொற்களைப் படிக்கும் போது அந்தச் சொற்கள் குறிக்கும் காட்சி மனக் கண்முன் தோன்றுவது போலிருக்கும். தமிழ் நாட்டிலே ஓர் இடையன் எங்ங்ணம் பால் Fறக்கின்றானோ அங்ங்ணமே ஆட்டிலிருந்து பால் கறக்கும் காட்சி வருணிக்கப்பட்டுள் ளது. பாலைக் கறந்து கொடுப்பதற்காக அந்த இடைப்பையன் தனக்குச் சொந்த மான ஆட்டைப் பிடித்துக்சொண்டு வந் தான். அதனை அணுகினான். அதன் பக்கத் தில் குந்தி இருந்தான். தனது கால்களைச் சேர்த்து கடைகால் என்னும் பால்கறக்கும் பாத்திரமான மூங்கிற் குழலை வைத்து நெருக்கிப் பாலைக் கறந்தான். நற்குணத் தின் உருவாய்த் திகழும் அபூபக்கர் (றலி) அவர்களிடம் கை அளித்தான். இந்தக் காட் சியைத்தான் உமறுப்புலவர் ஒரு சொல்லோ வியமாகத் தமது சீறாப்புராணத்தில் வடித் துத் தந்துள்ளார் பின்வருமாறு:
கூலி யின் கொறி விடுத்துநின்
கொறியினைக் குறுகி பாலி னைக்கறந் திவண்டரு
கெனப்பணிந் தோடிக் காலி னைத்தகைத் துறுங்கடை
காலினில் கறந்து சீல முற்றவரிடத்தினிற் *
கொடுத்தனன் திறலோன் (சுறாக்கத் தொடர்ந்த படலம் : 18)
ஆரம்ப இஸ்லாமிய வரலாற்றிலே முக் கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளுள் ஒன்று கிப்லா மாற்றப்பட்டமையாகும். கிப்லா என்னும் அறபுப் பதத்தின் நேரடிக் கருத்து எதிரே உள்ளது என்பதாகும். முஸ்லிம்க ளின் வழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்கித் தொழும் திசை கிப்லா எனப்படும். தொடக் கத்தில் முஸ்லிம்கள் ஜெருஸலம் பைத்துல் முகத்திஸாம் தூய்மையான தலத்தை எதிர் நோக்கித் தொழுதனர். முஸ்லிம் அல்லா
一 男

தோர் முஸ்லிம்கள் புதிய ஒரு மார்க்கத் தைப் பின்பற்றினாலும் அவர்கள் அவர்க ளுக்கு முன்னர் வாழ்ந்தோர் தொழுத திசையையே கிப்லாவாகக் கொண்டிருக்கின் றனர் என்று குறை கூறுபவர்கள் போல் கதைக்கத் தொடங்கினர். இதனாற் திருப்தி அடையாத முகம்மது நபி (ஸல்) அவர்கள் தொழும் திசையை - கிப்லாவை - மாற்ற விரும்பினார்கள், எனினும் அதற்கான இறை கட்டளையை எதிர்பார்த்தவர்க ளாக இருந்தார்கள். மக்காவிலிருந்து மதீ னாவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று ஓராண்டு கழிந்திருந்தது. அப் பொழுது சகுபான் மாதம், இஸ்லாமிய ஆண்டின் எட்டாம் மாதம் 15 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை. அண்ணல் நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் நண்பகல் தொழுகையாகிய ஞஹர் தொழுகையை நிறைவேற்றிக் கொண் டி ரு ந் தார்கள். இரண்டு றக்அத்துக்களை நிறைவேற்றி விட்டார் சள். சிலர் இதனை நண்பகல் தொழுகையாகிய ஞஹர் தொழுகை என் பர். மற்றும் சிலர் பிற்பகலின் நடுப்பகுதி யில் நிறைவேற்றப்படும் அஸர் தொழுகை என்பர். அச்சந்தர்ப்பத்தில் வானவர் கோன் ஜிபுரீல் (அலை) அவர்கள் முஸ்லிம்களுக் கான தொழும் திசையான கிட்லா ஜெரு ஸலத்திலிருந்து புனிதக ஃபத்துல்லாஹ்வுக்கு மாற்றப்பட்டுள்ளது என இறைவன் கட்ட ளையை அறிவித்தார்கள். அந்தக் கட்ட ளைக்கிணங்க எஞ்சியிருந்த பாதித் தொழு கையான இரண்டு றக் அத்துக்களையும் புதிய கிப்லாவை எதிர்நோக்கியவர்களாகத் தொழுது முடித்தார்கள். கிப்லா சம்பந்த மான விரிவான இறை கட்டளை அல்குர் ஆனின் இரண்டாம் அத்தியாயத்தில் 142 இலிருந்து 150 வரை உள்ள திருவசனங்கள் கொண்டுள்ளன. 150 திருவசனமே கிப்லா மாற்றத்தைப் பற்றிய சிறப்பான குறிப் பைக் கொண்டிருக்கின்றது. அந்த திருவச னத்தின் தமிழாக்கம் பின் வரு மாறு அமையும்:
அன்றி, (நபியே) நீர் எங்கிருந்து புறப் பட்டாலும் (தொழும்பொழுது) (மக் காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹறாமின்

Page 49
பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனுடைய உண்மை(யான கட்டளை)யாகும் (ஆகவே இதனைப் பற்றி வீண் தர்க்கம் செய்பவர்களே) நீங்கள் செய்ப வை களைப் பற்றி அல்லாஹ் பாரா முக மா யி ல் லை. அன்றி (நபியே) நீர் எங்கிருந்து புறப் பட்டாலும் (தொழும்போது) மஸ்ஜி துல் ஹறாமின் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக. (விசுவாசி களே) அவர்களுள் வரம்பு மீறியவர் களைத் தவிர மற்ற மனிதர்கள் உங் களுடன் (வீண்) விவாதம் செய்ய இடம் கிடைக்காதிருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கிருந்தபோதிலும், அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக, அன்றி, அவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். எனக்கே நீங்கள் பயப்படுங்கள். (கிப்லாவைப் பற்றிய இக்கட்டளையின் மூலம்) என் னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது பூரணமாக்கிவைப்பேன். (அதனால்) நீங்கள் நேரான வழியை அடையலாம். (2: 149, 150.)
கிப்லாவின் மாற்றம் எப்பொழுது ஏற் பட்டது என்பதையும் எங்கு ஏற்பட்டது என்பதையும் அந்த இறை கட்டளையினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் அத்னை அண்ணல் (ஸல்) அவர்களும் தோழர்களும் நிறைவேற்றினார்கள் என் பதையும் நான்கு செய்யுட்களில் உமறுப் புலவர் தமது சீறாப்புராணத்தில் சொல் நயம், பொருள்நயம், ஓசைநயம் மிகப் பின் வருமாறு அருமையாகப் பாடி உள்ளார்:
2.

மகிதலத் திணிலுயர் மக்க மாகிய நகர்விடுத் தணிமதி னாவைநண்
ணிச்சூழ் புகழொடும் தீனெறி புரந்து வைகுநாள் திகழ்சகு பானேன விளங்குந் திங்களில்
(கஃபத்துல்லாஹ்வை நோக்கித்
தொழுத படலம் 3)
மிக்கநற் றேதிமு வைந்தின் மேவியே தக்கசெவ் வாயினு லுஹறு நேரத்தில் ஹக்கனை யிரண்டுறக் ஆத்துத்
தான்தொழு
தொக்கலோ டிசைநபி உறையும்
ஒல்லையில் (கஃபத்துல்லாஹ் நோக்கித் தொழுத ul-6) b : 4)
இறைவன் ககுபத் துலாவென்றோதிய துறவுயர் பள்ளியை நோக்கித்
தான்தொழ முறையுரை வழங்கினன் என்ன மன்னபி முறையிதென்றாநந்தக் கடலில்
மூழ்கினார். (கஃபத்துல்லாஹ்வை நோக்கித்
தொழுத படலம்:6)
முன்னரி ரண்டிறக் ஆத்து முற்றிய பின்னரில் ககுபத் துலாவைப் பெட்புற உன்னினர் நோக்கினர் ஒதும் பாதியும் துன்னிய குழுவுடன் தொழுது
வைகினார். (கஃபத்துல்லாஹ்வை நோக்கித்
தொழுத படலம்: 7)
ஒரே தொழுகையை இரண்டு கிப்லாக்
களாக நின்று தொழுத பெருமை மதீனா வில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கே உண்டு. இப்பொழுது புனர் நிர்மாணஞ் செய்யப் பட்டு வரும் அந்தப் பள்ளிவாசல் மஸ்ஜித் கிப்லதைன், இரண்டு கிப்லாக்களைக் கொண்ட பள்ளிவாசல் என அழைக்கப் பட்டு வருகிறது.
wwé

Page 50
பேராசிரியர் பொ
“யாழின்பகுதி எனப் பண்வகைகளை யும் 'நரம்பின் மறை” என இசை நூலை யும் தொல்காப்பியர் கூறுவர். இக் கூற்று கள் மூலம் நரம்புக் கருவியாகிய யாழினை நிலைக்களமாகக்கொண்டு பண்களும் அவற் றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத் தப்பெற்றன என்பதை உணரமுடிகிறது.
பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் தொன்மையையும் எளிமையையும் சுட்டக் குறிப்பிடும் வில் யாழ், யாழெனும் இசைக் கருவி வளர்ச்சியின் ஆரம்பகட்டமாதல் தகும். அம்புகளின் செலவுக்கேற்ப நாணின் இறுக்சத்தைத் தெரிந்துகொள்வதற்காக, விர லால் நாணைத் தெறித்தபோது, அவற் றிலிருந்து எழுந்த இசையைக் கேட்டு, அதன் இசை நுட்பத்தை உணர்ந்தவர்கள் நாணின் நீளத்தைக் குறைத்தும் கூட்டியும் பல்வேறு இன்னிசை கருவிகளைத் தோற்று விக்கலாம் என்பதை உணர்ந்தபோது, பல விற்களை ஒன்றாகச் சேர்த்து வில் யாழ் எனும் நரம்புக் கருவியைத் தோற்றுவித் தனர்.
சுவாமி விபுலாநந்தர் யாழ் நூலின் யாழ் உறுப்பியற் பிரிவிற் கூறிய கருத்தை மறுத்து ஆ. அ. வரகுணபாண்டியன் "பாணர்கைவழியில் வில் யாழில் ஒரு நரம்பே ஏழிசைகளையும் தோற்றுவிக்க உதவும் என்று கூறல் பொருத்தமாகத்
-
 

கீனம் ODIGDØTUJUD
. பூலோகசிங்கம்
தெரியவில்லை (1950, பக். 150 - 167). அத்தகைய நிலைமை பரிணாம வளர்ச்சி யிற் பிற்பட்டதாதலே தகும்
பண்டைத் தொகைப் பாடல்சளிலே வில் யாழ் நீங்கலாகப் பேரியாழ், சீறியாழ் என்பன இடம்பெறுகின்றன. சிந்தாமணி ஆசிரியர் கூறும் பரவையாழை (பாடல்530) உரையாசிரியர் நச்சினார்க்கினியர் பேரி யாழ் என்பர். சிலப்பதிகார அரங்கேற்று காதை உரையிலே அடியார்க்கு நல்லார் 21 நரம்புகளையுடைய பேரியாழினைச் சுட்டுகிறார். ஆயிரம் நரம்புகளையுடைய நரம்புக்கருவி ஒன்று பிங்கலந்தையில் ஆதி யாழ் என்றும், பெருங்கதையிற் பேரியாழ் என்றும், சிலப்பதிகாரம் அடியார்க்கு நல் லார் உரைப்பாயிரத்திற் பெருங்கலம் (பி. பே. அருங்கலம்) என்றும் வழங்கப்பட்டுள் ளது. உரைப்பாயிரத்தில் அடியார்க்கு நல் லார் இப்பேரியாழ் இறந்துபட்டதாகக் கூறுவர். யாழ்நூல் ஆயிரம் நரம்புடைய பெருங்கலத்தின் கணக்கினைக் கண்டறிந்து, அதனை மீண்டும் அமைப்பதற்கு வேண் டிய குறிப்புகளைத் தந்துள்ளமை குறிப் பிடத்தக்கது. தொகைப் பாடல்கள் சுட் டிய பேரியாழ் பெருங்கலமாதல் பொருந் தாது. ஆயிரம் நரம்புடைய பேரியாழைப் பாணர்தாம் செல்வழி எங்கும் கொண்டு செல்வது செயற்கரிய காரியமாகும். கல் லாடம் கூறும் ஆயிரம் நரம்புடைய நாரதப்
4 -

Page 51
பேரியாழ் பெருங்கலத்தினும் வேறானது என்று கருதவேண்டியிருக்கிறது (பாடல்,85). சீறியாழும் சிலப்பதிகாரம் கூறும் செங் கோட்டியா மும் ஒன்றெனச் சிலர் கருது வர்; சுவாமி விபுலாநந்தர் வேறு வேறாகவே கருதினார். சுவாமிகளின் கருத்தினை க. வெள்ளைவாரணன் கலைக்களஞ்சியம் எட் டாம் தொகுதியிலே (பக். 582) தெளிவு படுத்தியுள்ளார்.
சிலப்பதிகாரம் செங்கோட்டி யாழை யும் சகோட யாழையும் குறிப்பிடுகின்றது. யாழ்நூலாசிரியர் அரங்கேற்றுகாதையில் மாதவி வாசித்த யாழ்க்கருவியின் அமைப் பினை விரிவாக விளக்கியுள்ளார். சகோட யாழ் அமைப்பினையும் அதனை இசைக்கும் முறையினையும் அவர் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளமை குறிப்பித் தக்கது.
மகரயாழை மணிமேகலையும் சிந்தா மணியும் பெருங்கதையும் அடியார்க்கு நல் லார் உரையும் கூறுகின்றன. சுவாமி விபு லாநந்தர் "* யாணர் கூட்டத் திய வனக் கைவினை, மாணப் புணர்ந்தோர் மசர வீணை" என்ற பெருங்கதைக் கூற்றின் அடிப்படையில் வரைந்த மகரயாழ் வடி வத்தினை மறுத்து, வரகுணபாண்டியன் வேறொரு வடிவம் "பாணர் கைவழியில் வரைந்துள்ளார். இரு வடிவங்களும் கற் பனையின் பாற்பட்டனவே. இவற்றை விட, வேறு யாழ்களும் தோன்றியிருக்கலாம்.
பல்லவர் காலத்துப் பக்திப்பாடல் களிலேயே வீணையைப் பற்றி முதன் முத லாக அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனாலே தமிழ் நாட்டிற் பல்லவர் காலத் துப் பக்தி இயக்கத்தோடு வீணை முக் கியத்துவம் பெறத் தொடங்கிற்று என்று கருத இடமேற்படுகின்றது.
'சங்கத் தொகை நூல்களில் யாழைத் தவிர வீணை என்பதொரு கருவி கூறப்பட வில்லை" என்பர். க. வெள்ளைவாரணன் (பேராசிரியர் ஆர். கே. விசுவநாதன் சஷ்டி பப்த பூர்த்தி விழா மலர், 1966, பக். 75). "தெய்வப் பிரமஞ் செய்குவோரும்'எனும் பரிபாடல் அடியிலே பரிமேலழகர் பிரம
-

வீணையைப் பொருளாகக் கூறியிருக் கிறார் (19:40). இப் பிரம வீணைதான் வீணை பற்றிய, எட்டுத் தொகை பத்துப் பாட்டின் ஒரே ஒரு குறிப்புப் போலும். வீணை திருக்குறளிலே இடம்பெறவில்லை என்று கா.ம. வேங்கடராமையா ஆராய்ந்து கூறியிருக்கிறார். (இலக்கியக் கேணி 1963, பக்.75) யாழினை 23இடங்களிற்குறிப்பிடும் இளங்கோ ஈரிடத்தில் மட்டுமே வீணை யைக் குறிப்பிடுகிறார். அதுவும் நாரதன் வீணையாகும்.
வீணையில் இடம்பெற்ற சில வசதி களே அதனுடைய முக்கியத்துவத்திற் குக் காலாக அமைந்தன. இசைக்கு அழ கும் வசீகரமும் அளிக்கும் கமகங்களையும் இசைநுட்பங்களையும் தெளிவுற வாசிப் பதற்கு வீணையிலுள்ள வசதி யாழில் இல்லை. நரம்புகளை நிறுத்திக் கமகங் களை உண்டாக்கும் அடுக்கிசையைக் கைக் கொள்ள, யாழ் மறையவேண்டியதாயிற்று: எல்லாப் பண்களையும் ஒரே சுருதியிற் பாடும் சம்பிரதாயம் ஏற்பட்டபோது பண்மாறும்போதெல்லாம் யாழிற் சில நரம்புகளை மீண்டும் சுருதி கூட்டவேண் டிய அவசியம் ஏற்பட்டது. வீணையில் மெட்டுகள் இருந்தபடியால் அதிலே இந்தச் சிரமங்கள் ஏற்படவில்லை. மேலும் சுருதி கூட்டுவதும் வீணையிற் சுலபமாக இருந் தது. இவற்றால் வீணைக்கு எதிரான போட்டியில் யாழ் தோல்வி கண்டது.
யாழின் தோல்வியோடு பண்டைத் தமிழ் இசையும் தன்னிலையை இழந்துவிட்டது. பண்டைய தமிழ் இலக்கியத்தை நுணுகி ஆராயின், அது தோன்றிய காலத்திற்கு முன்பு சிறந்தவொரு பாடகர் மரபு தமிழ் நாட்டில் நிலவியதும், அம் மரபு இவ்விலக் கியம் தோன்றிய காலத்துத் தன் உயர் நிலையினை இழந்துகொண்டிருந்ததும் தெளிவாகும். பாடகர் மரபினர் இழிவின ராகக் கருதப்பட்ட நிலையினை மூவேந் தர் காலத்துப் பாடல்கள் சில சுட்டத் தவறவில்லை என்பதும் மனங்கொளத்தக் கது. பாணர் மீன் பிடித்தலையும் வேளாண் மை செய்தலையும் சீவனத் தொழில்களாக

Page 52
மேற்கொள்வதையும், பொருநர் மீன் பிடித்தலையும் ஏர்க்களங்களில் இரத்தலை யும் நாடுவதையும் மூவேந்தர் காலம் காட்டத் தவறவில்லை.
சோழர் காலத்திலே திருட்பாடல்கள் தொகுக்கப்பட்டபோது 23 பழைய பண் களே காணப்பட்டமை தமிழ் இசை மர பின் அவலமான நிலையினை எடுத்துக் காட்டுகின்றது. தமிழ்நாட்டிலே தமிழிசை மறைந்து, கர்நாடக இசை மேடை ஏறி யது. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து தெலுங்கு மொழிச் சாகித்தியங்களே முக் கியத்துவம் பெற்றன.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களிலே தஞ்சாவூர் இராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் (1859 - 1919) இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஆயினும் அவர் யாழும் வீணையும் ஒன்றே என்ற கருத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தவர். செங்கோட்டி யாழ்தான் வீணை என்பது அவர் கருத்து. (கருனாமிர்தசாகரம், முதற் புத்தகம், 1917, பக். 580, 581). இதனாற் பழந்தமிழ் இசை ஆராய்ச்சியில் அவர் பங்களிப்புக் குறைவாகவே காணப் படுகின்றது. அவர் கருனாமிர்த சாகரத் தில் செய்த முக்கிய ஆய்வு, சுருதிகள் பற் றியதாகும். சுருதிகள் இருபத்திரண்டல்ல இருபத்து நான்கு என்பதை அவர் நிறுவ முற்பட்டுள்ளார்.
1929இலே சிதம்பரத்திலே அண்ணா மலை செட்டியார் இசைக் கல்லூரி நிறு வினார்; 1932இலே சிதம்பரம் இசைக் கல்லூரி அண்ணாமலைப் பல்கலைக்கழக்த் தோடு இணைக்கப்பட்டது. அண்ணா மலைப் பல்கலைக் கழக இசைப்பகுதி 1940வரை தமிழ் அல்லாத மொழிகளின் பாடல்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்தது. 1940 - 1941ஆம் ஆண்டுகளில் அண்ணாமலைச் செட்டியார் பழைய தமிழ் இசைப் பாடல்களைப் பிரபல்யப் படுத்தவும், புதிய தமிழ் இசைப் பாடல் களை ஊக்குவிக்கவும் 20,000 ரூபா வழங் கினார். 1941 ஆகஸ்டு 14 - 17 தேதி
= 2

களில் முதல் தமிழ் இசை மாநாடு அண்ணாமலையில் நடந்தது. 1943 மே மாதம் சென்னைத் தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றது. அங்கு 1943 திசெம்பர் 23முதல் 1944 ஜனவரி 4 வரை முதல் தமிழ் இசை(ச் சங்க) மாநாடு நடைபெற்றது. சென்னைத் தமிழ்ச் சங்கம் 1944 ஜனவரியில் இசைக் கல்லூரியை நிறுவியது. எனவே நாற்பது களிலே தமிழிசை இயக்கம் வேகம் பெற் றமை தெளிவாகின்றது.
தமிழிசை இயக்கம் வேகம் பெற்ற காலத்திலே தமிழிசை பற்றி நடந்த முக் கிய ஆராய்ச்சிகளின் பெறுபேறுதான் சுவாமி விபுலாநந்தரின் யாழ் நூல். சுவாமி கள் பண்டைய யாழும் பிற்காலத்து வீணையும் வெவ்வேறு இசைக் கருவிகள் என்பதைத் தெளிவாக உணர்ந்தவர்கள். இவ்வுணர்வு பழந்தமிழ் இசை மரபுக்கு இன்றியமையாதது. பழந்தமிழ்ப் பண் களின் தோற்றத்தினையும் வளர்ச்சியினை யும் அவை தோன்றிய முறையே உள்ள வாறு அறிய அப் பண்களைத் தோற்று வித்த நிலக்களமான யாழின் இயல்பினை அறிந்து, அதனை உருவாக்கி, அதன் வழி பண்டைத் தமிழர் இசை உருவங்களை உணரலாம் என்று சுவாமிகள் கருதினார்
s
பத்துப்பாட்டு, எட்டுத் தொகையாம் தொகுப்புகளிற் பழைய யாழ்க் கருவியின் உருவச் சாயலும், அதன் உறுப்புகளின் தோற்றமும் அமைப்பும் தொழிலும் பய னும் நன்கு விளக்கப்பெற்றுள்ளன. இக் குறிப்புகளையும் அமராவதி, கோலி, தாரா சுரம், திருஎருக்கத்தம்புலியூர் எனும் இடங் களிற் காணப்பட்ட யாழ்க் கருவிகளின் உருவ அமைப்பினையும் அடிப்படையாகக் கொண்டு சுவாமி விபுலாநந்தர் யாழும் வீணையும் வெவ்வேறு இசைக் கருவிகள் என்பதைத் தெளிவாக உணர்ந்தனர்.
யாழிலே ஒவ்வொரு சுரத்திற்கும் தனித்தனி நரம்புகள் கட்டப்பெற்றிருந் தன. அதாவது ஏழிசை அல்லது ஏழு சுரங் களை யாழில் எழுப்ப ஏழு தனி நரம்புகள் வேண்டும். கல்லாடம் ஒரே தந்தியுடைய
6 esse

Page 53
யாழ் எனக் கூறும் மருத்துவயாழ், யாழாக முடியாது. ஏனெனில் ஏழு சுரங்களையும் யாழில் ஒரே தந்தியில் எழுப்பமுடியாது.
வீணைக்கு ஒலியை எழுப்பும் தந்திகள் ஏழுள; செங்கோட்டி யாழிலும் ஏழு நரம்பு களுள. இதனாற் சிலர் செங்கோட்டி யாழினை வீணையென மயங்கியதுமுண்டு. ஆனால் வீணையின் அமைப்பு வேறு.
வீணைத் தண்டின் மீது நான்கு கம்பி களுள. இவை மெட்டுகளின் மீதுள்ளன. மெட்டுகள் வீணைத்தண்டின் மீது பொருத்தி யிருக்கும் சிறு உலோகத் துண்டுகளாம். வீணையின் இரண்டு ஸ்தாயிக்கும் 24 மெட்டுகளுள. இவ்வாறு நான்கு கம்பி களுக்கும் மொத்தம் 96 மெட்டுகளுள. வீணையிலே பக்கத்திலே தனியாக மூன்று கம்பிகளுள. இவை தாளக் கம்பிகள் எனப் படுவன. வீணையிலே ஒரே நரம்பிற் பல சுரங்களை வாசிக்க மெட்டுகள் உதவுகின் றன. யாழிலே மெட்டுகள் இல்லாமை குறிப்பிடத்தக்கது.
சுவாமி விபுலாநந்தர் பண்டைய யாழ்க் கருவியை உருவாக்கி, அதன் அடிப்படை யில் வழக்கொழிந்துபோன தமிழ் இசை யின் இலக்கணங்களை வகுத்துரைக்க முற் பட்டுள்ளார். ஏழிசை, சுருதிகள், சுருதி வீணை, ஐவகைக கிரமங்கள், பன்னிரு Ꮭ ᎯfᏤ ᎧᏡ ᎧᏄᎧ , 103 பண்கள் என்பன யாழ் நூலால் விளக்கம் பெற்றுப் பண்டைய தமிழ் இசையின் அறிவுக்கு டோ திய விருந் தாயின. தேவாரத் தமிழ்ப் பண்களையும் குடுமியாமலை இசைக் கல்வெட்டினையும் சதுர்தண்டி வீணையின் 72 மேளங்களின் இசை அமைப்பினையும் கூட யாழ் நூல் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளத்துள்ளது கவின் உருவெடுப்பது கவிதை தெள்ளத் தெளிந்த தெளிந்துரைப்பது கல்
- தே
അ 2'

இராகங்களிற் பெயர்மாறி ஒளித்திருக் கும் பழந் தமிழ்ப் பண்களை இனங்கண்டு வெளிப்படுத்தும் அருநோக்கினைச் சென் னைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் 1949 திசம்பர் 24ஆம் தேதி முதலாக நடை பெற்று வந்த பண்ணாராய்ச்சி மாநாடுகள் செய்து வந்தன. இதற்கு வழிகாட்டி வைத் தது யாழ் நூலாகும்.
பாணர் கைவழி எனப்படும் யாழ்நூல் என்ற பெயரிலே 1950இலே தமிழ் நாட் டிலே ஒரு நூல் வெளிவந்தது. அதன் ஆசிரி யர் ஆ. அ. வரகுணபாண்டியன். அவர் தஞ்சாவூர் இராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதரின் தவப்புதல்வர். யாழும் வீணை யும் ஒன்றென்ற தம் தந்தையின் கருத்து, சுவாமி விபுலாநந்தரின் யாழ்நூலால் ஏற் றுக் கொள்ளப்படாததால், தந்தையின் கருத்தை மீண்டும் நிலை நிறுத்த எழுந்தது புதிய யாழ்நூல். ஆயினும் அம் முயற்சி வெற்றியளித்திருப்பதாகக் கூறு வ தற் கில்லை.
சுவாமி விபுலாநந்தரின் யாழ்-வீணை பற்றிய கருத்துகளுக்குப் பின்பு செங்கோட்டி யாழினை வீணை எனும் கூற்று மாறத் தொடங்கியபோதும் யாழோடு வீணையை இணைத்துக் கூறும் முயற்சி மாறிவிட வில்லை. சங்கீத கலாநிதி க. பொன்னையா பிள்ளை செங்கோட்டி யாழினைப் போன் றது வீணை என்று "இசையியல்" நூலிலே கூறினார். பன்னிரு திருமுறை வரலாறு முதற் பகுதியிலே (1962) க. வெள்ளை வாரணன் வீணை செங்கோட்டியாழினை அடியொற்றி அமைந்தது என்றார். ஆனால் சுவாமி விபுலாநந்தர் வீணை வடநாட்டுக் கருவி என்று கருதினார் என்பது நோக் கத்தக்கது.
தை - இன்பம்
தமிழில் - உண்மை விதை,
சிக வினாயகம்பிள்ளை
7
sങ്ങ

Page 54
F69
@
செ. கணே
சமுதாயத்தின் பண்பாட்டு وDeshا வளர்ச்சியை அளவிடும் ஊடகங்களில் கலை, இலக்கியத்திற்கு முக்கிய பங்குண்டு. அவற்றில் இசை வடிவத்திற்கும் தனிச் சிறப்புண்டு.
மனிதன் நாவை அசைத்துக் குரல் கொடுக்கும் காலத்திலிருந்து இசை வளர்ச்சி யடைந்து வந்தது. செவியும் கூர்மை பெற்று வந்துள்ளது. ஒலியை ஒழுங்குசெய்வதன் மூலம் ஏற்படும் செவியின்பம் மனித உணர்வுகளைக் கவரும் சக்தியை ஆதி மணி தன் உணரத் தொடங்கினான். இவ் வித் தையை பல்வேறு கருவிகள் மூலமும் குரல் மூலமும் மனிதன் வளர்க்க முற்பட்டான். பின்னர் அவற்றைத் தரம்பிரித்து ஒழுங்கு படுத்துவதன் மூலம் பல்வேறு உணர்ச்சி களையும் மனித உள்ளத்தில் ஏற்படுத்தும் திறமையையும் பெற்றான். இசை ஒலி எழுப்பும் உணர்வுகள் மனித உடல்களை ஆட்டிப்படைக்கத்தக்க சிறப்பையும் மணி தன் அறிந்துகொண்டான்.
சடங்குகளின்போது இசை, கூத்து வடிவங்களை ஆதி குலக் குடியினர் இயல் பாகவே இசை எழுப்பி ஆடினர், பாடினர் என மானிடவியல் ஆய்வாளர் கூறுவர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இன்ப உணர்வு மட்டுமல்ல துன்ப உணர்வும் தரக்கூடிய அழகுணர்ச்சிக்குக் காரணம் தேடிக் கண்டு பிடிக்க முடியா நிலையில் அஃதோர் மாந்திரீக சக்தி என எண்ணிக்
 

ாசலிங்கன்
கொண்டனர். பின்னர் "தெய்வமென்ற தோர் சித்தமுண்டாகியதும் தெய்வீக சக்தி என முடிவுகட்டியது மட்டுமல்ல தெய்வத்திற்கே இசைமட்டுமல்ல அனைத் துக் கலைகளையும் அர்ப்பணிக்க மனிதர் தலைப்பட்டனர்.
இசைக் கருவிகளாக நரம்பு, தோல், குழல் ஆகியன ஆதிமக்களது வாழ்வோடு இணைந்தவை. வேட்டை, உணவு தேட லோடு ஒன்றியவை. அவற்றின் வளர்ச்சி யாகவே இன்றும் நாம் பல்வேறு இசைக் கருவிகளைக் காண்கிறோம்.
மனித இனத்தால் தமது அடிப்படைத் தேவைக்கு மேலாக உற்பத்தி செய்ய முடிந்து, அதனால் ஓய்வு வேளையும் கிட்டியது. அக் காலத்திலேயே நிலப் பிர புக்களும் மன்னர்களும் கலை வடிவங்களை சீரமைத்து வளர்க்கும் பணியில் ஈடுபட் டனர். இவை அனைத்தும் பெரும்பாலும் தெய்வத்திற்கே அர்ப்பணிக்கப்பட்டுமதவழி பாடு, விழாக்கள், சடங்குகளில் முதன்மை பெற்றன.
தமிழ் நாட்டில் கோவில்களை ஒட் டியே இசையும் இசைக் கருவிகளும் பிற கலைகளும் முதன்மை பெற்று பேணி வளர்க்கப்பட்டன என்பதை அனைவரும் அறிவர்.
தமிழ் மொழியை முத்தமிழ் என்று கூறுவது தமிழ் மரபு. இயல், இசை, நாட கம் என்பர். இம் மூன்றும் இணைந்த, "உரை இடையிட்ட பாட்டுடைச் செய்
8 -

Page 55
யுள்" எனக் கூறப்படும் "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமே” இதற்குச் சான்றாகும். 1400 ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழகத் தில் ஆடலும், பாடலும், இசையும் வளர்ச்சி யடைந்திருந்த பாங்கையும் இக் காவியமே எடுத்துக் காட்டும்.
ஆடல், பாடல், இசையே, தமிழே, பண்ணே, பாணி, தூக்கே, முடமே, தேசி கம் என்று இவை ஆகின்று உணர்ந்து. (அரங்கேற்று காதை 45 - 47)
யாழும், குழலும், சீரும், மிடறும் , தாழ்குரல் தண்ணுமை, ஆடலொடு
இவற்றின் இசைந்த பாடல் இசையுடன்படுத்து. (டிெ 26 - 28)
இவ்வாறு நூற்றுக்கணக்கான வரி களைச் சான்றாக சிலப்பதிகாரத்தில் கான өртцb.
தமிழிசை என்பது வெறும் ஓசை நய மென்றில்லாது இலக்கியத்துடன், பாடல் களுடன் இணைந்து அன்றே புதிய பரி மாணம் பெறத் தொடங்கியது.
இசை என்பதே பாடலுக்குரியதாகி விட்டது. வெறும் இசை, உணர்வுகளை மட்டுமே தொட வல்லது. இசைப் பாடல் கள் அத்துடன் சிந்தனையையும் தாக்க வல்லன.
சிலப்பதிகார காலத்தை அடுத்த பக்தி நெறிக்காலகட்டத்தில் தமிழிசையில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
கி. பி. 7 - 12ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த நாயன்மார்கள் தமிழிசையை தெய்வ வழிபாட்டுடன் இறுகப் பிணைத் தனர். பல்வேறு பண் இசைகளுடன் நாயன் மார்களின் தேவார, திருவாசகங்கள் கோவில்களிலும் விழாக்களிலும் ஒலிக்கத் தொடங்கின. (இம் மரபு இன்றும் பேணப் பட்டு வருவதைக் காணலாம்.)
நாயன்மார்களை அடுத்து சேக்கிழாரின் பெரியபுராணம் தமிழிசை மரபை மேலும்

விரிவாக்கியது. அடுத்துத் தோன்றிய அருண கிரிநாதர் தமிழிசையை மேலும் விரிவாக்கு வதாக பல்வேறுவகை சொற்பிரயோகங் களை அமைத்து பல்வகைப் பண்ணிசை யில் முருகன்மேல் (திருப்)புகழ் பாடினார்.
தெய்வத்தின் புகழ்பாடும் கீர்த்தனை கள் 16ஆம் நூற்றாண்டில் புதிய இசைவடி வாகத் தோன்றின. மேளகாரர் சமூகத் தைச் சார்ந்த முத்துத்தாண்டவர் கீர்த் தனைகளை பல்லவி, அநுபல்லவி, சரணம் என வகுத்து முதன் முதலில் பாடத் தொடங்கினார்.
18ஆம் நூற்றாண்டு தமிழிசை வர லாற்றில் மற்றோர் திருப்புமுனையாகும். கோபால கிஷ்ணபாரதியின் நந்தனார் சரித் திர கீர்த்தனை இசை நாட்டிய வடிவத்தில் தோன்றி புகழ்பெற்றது. அத்துடன் அருணா சலக் சவிராயரின் இராம சரித்திர நாடகம் வைஷ்ணவர்களை மட்டுமல்ல சைவசமயத்த வர்களையும் இசை வடிவில் ஆகர்சித்தது.
இக் காலகட்டத்திலேயே தென்னாட்டு இசையின் மும்மூர்த்திகள் என அழைக்கப் படும் தியாகையர் (1767 - 1847) சியாம சாஸ்திரி (1762 - 1827) முத்துச்சாமி தீட்சி தர் (1776 - 1835) இசைக்குப் புதிய பரி மாணம் தந்தனர். தியாகையர் தன் தாய் மொழியாகிய தெலுங்கிலும் சமஸ்கிருத பண்டிதரான சியாம சாஸ்திரி சமஸ்கிருதத் திலும் முத்துச்சாமி தீட்சிதர் தான் நன்கு கற்றிருந்த தமிழ், தெலுங்கிலும் இறைவன் கீர்த்தனைகளைப் பாடினர்
மூவரிலும் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டு இன்றும் புகழ் பரப்பி நிற்பவர் தியா கையரே. அன்னார் இராமகீர்த்தனமாக 211 ராகங்களில் நூற்றுக்கணக்கான பாடல் களைப் பாடினார். (பண்ணிசையே இடைக் காலத்தில் ராகம் என்று ஆகியது) தியா கையரின் தாய்மொழி தெலுங்கானபோதி லும் தமிழும் சைவசமயமும் சிவன் கோவில்களும் நாதஸ்வர இசையும் தேவார திருவாசகங்களும் ஒலித்த தமிழ் பகுதியில், தஞ்சாவூரை ஒட்டிய காவிரி பாயும் திரு வையாறு எனும் கிராமத்தை அண்டியே
سس 9

Page 56
வாழ்ந்தார். (முதுமைக் காலத்தில் மட்டும் திருப்பதிவரை சென்று வந்ததாகக் கூறு வர்.)
அன்னாரின் கீர்த்தனைகளில் பாடப் பட்ட தெலுங்கு மொழி, தமிழ் நாட்டுத் தெலுங்கு என தெலுங்குப் பண்டிதர்கள் இன்றும் கேலி செய்வர்.
தெலுங்கு இசை என எதையும் தியா கையர் கற்றதோ, கேட்டதோ கிடையாது. அருணாசலக் கவிராயரின் இராமநாடகக் கீர்த்தனையே அன்னார் வீட்டில் மட்டு மல்ல அப்பகுதி வைஷ்ணவர்களிடையே அக் கால கட்டத்தில் மிகவும் ஆதிக்கம் பெற் றிருந்ததில் வியப்பில்லை.
ஆகவே இத்தகைய சூழலில் தமிழகத் தில் ஆதிக்கம் பெற்று நிலவிய தமிழிசை மரபிலேயே தியாகையர் இராம கீர்த்தனங் களை தன் தாய் மொழியான தெலுங்கில் பாடியிருக்க முடியும் என்பதில் வியப்புற எதுவுமில்லை.
இச் சூழலில் க ர் நா - க த் தி ற் கும் தெலுங்கு இசைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? தமிழ், தெலுங்கு, கன்னடம், திராவிட மொழிக் குழு சார்ந்தவை என் பதை அனைவரும் அறிவர்.
கர்நாடகம்" என்ற சொல் தமிழில் *பழமை மாதிரி, பழமை நாகரிகம்" எனப் பொருள் படும் என மதுரைத் தமிழ் பேரக ராதி பகரும். இந்திய சுதந்திரத்தின் பின் 1952ல் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப் பட்டபோது மைசூர் ராச்சியமாக இருந்த நிலம் கர்நாடக மாநிலம் எனப் பெயர் பெற்றது. (தெலுங்கு பேசும் பகுதி ஆந்திரா வானது.) மைசூர் ராச்சியத்தின் வடபகுதி, மராட்டியை ஒட்டிய பகுதி மட்டும் கர் நாடகம் என அழைக்கப்பட்டு வந்தது. 12ம் நூற்றாண்டில் மராட்டியை (இன்றைய மகாராஸ்டம்) ஆண்டு இசையில் நாட்டம் கொண்ட சோமேஸ்வர பூலோக மல்லா (II) மன்னன் (116 - 1138) தன் நாட்டின் தென்பகுதியான கர்நாடகத்திலிருந்து வந்த இசைவல்லுனரின் புதிய இசையைக் கேட்டு மகிழ்ந்து "கர்நாடக சங்கீதம்" எனப் பெய
sm *

ரிட்டதே தென்னாட்டுத் தமிழிசைக்கு கர் நாடக சங்கீதம் எனப் பெயர் தொடர்ந்தது என வரலாற்றுப் பேராசிரியர் மு. அருணா சலம் கூறுவார்.
இசைக்கு மொழி அடிப்படையானது. மொழியைப் புரியாது தெலுங்குக் கீர்த்த னைகளை ஒப்புவிப்பதை பாரதி அன்றே கிண்டல் செய்தான்.
*முத்துச்சாமி தீட்சிதர், தியாகையர் கீர்த்தனங்களெல்லாம் சமஸ்கிருதம் அல் லது தெலுங்கு பாஷையிலேயே இருக்கின் றன. முக்காலே மும் மாகாணி வித்துவான் களுக்கு இந்தக் கீர்த்தனங்களின் அர்த்தம் தெரியாது. எழுத்துக்களையும் பதங்களை யும் கொலை செய்தும், விழுங்கியும் பாடுகி றார்கள். நானும் பிறந்தது முதல் இன்று வரை பார்த்துக்கொண்டே வருகிறேன். வித்துவான் "வாதாபி கணபதி” என்று ஆரம்பஞ்செய்கிறார். “ Urru) pë fupITor மெவரு, மரியாத காதுரா. ஐயையோ, ஐயையோ ஒரே கதை."
மொசாட் (1756 - 1791) தோன்றி மேல் நாட்டிசைக்குப் புதியபரிமாணம் தரும்வரை இசையென்பது சிறிய கலைவடிவங்களில் ஒன்று எனவே ஐரோப்பாவில் கருதப்பட்டு வந்தது எனப் பேராசிரியர் ஒருவர் ஆங்கில கலைக் களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கூற்றுடன் ஒப்பிடும்போது வரலாற்றில் 1500 வருடங்களுக்கு மேலாக உயர்ந்த கலை வடிவமாக தமிழிசைக்கு தரப்பட்ட மதிப்பும் பயிற்சியும் அளப்பரியது என்று கூறலாம். இன்றும் எம்மிடை ஆதிக்கம் பெற்றுள்ள ‘நெஞ்சையள்ளும் சிலப்பதிகா ரம்" இதற்குச் சான்று பகரும்.
மேல் நாட்டிசை கடந்த இருநூற்றாண் டுகளில் முதலாளித்துவ வளர்ச்சியுடன், இசைக்கருவிகள் மூலமும் குரல் மூலமும் மிகப் பரவலாகவும் ஆழமாகவும் வளர்ந் துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆயி னும் மேல்நாட்டு இசை வடிவம் இலக்கிய வடிவத்துடன், தெளிவாகப் பாடல்களுடன் ஒன்றி விடவில்லை என்றே கூறவேண்டும். உதாரணமாக, ஆங்கிலப் பாடல்களை
سے 0

Page 57
இசையுடன் பாடும் வேளைகளில் அதன் சொற் பிரயோகங்கள் தெளிவாக வெளி வராது, இசை மட்டுமே முதன்மை பெற் றுத் தொனிக்கிறது. நன்கு ஆங்கிலம் கற்ற வராலும் பாடப்படும் பாடல்களின் அர்த் தத்தை முதல்தடவையே முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லை. இசை, வார்த்தைப் பிரயோகங்களை ஒடுக்கிவிடுகி றது. எழுத்துப் பிரதியாக பாடல் கையில் இருக்கும்போது அல்லது எமது நினைவில் பாடல் பதிந்திருப்பின் மட்டுமே அர்த்தத் தைப் புரிந்து பாடலை முழுமையாகச் சுவைக்கமுடிகிறது. குரலொலி மற்றோர் இசைக் கருவிபோல அமைந்து விடுகிறது. மேலும் விரித்து விளக்கின் நாதஸ்வரம், வீணை, வயலினில் ஒரு பாடல் இசைக் கப் படும் போது இசையை நாம் ரசிக்கலாம். ஆனால் அப்பாடலை நாம் ஏற்கனவே அறிந்திருப்பின் மட்டுமே பாடலையும் புரிந்து முழுமையாகச் சுவைக்க முடியும். இதே போலவே மேல்நாட்டிசையிலும் பாடல் நன்கு தெரிந்த பின்னரே இலக்கியத் தோடு ஒன்றிய இசையை முழுமையாக சுவைக்க முடியும். இசையோடு கூடிய Littl-Gv சிந்தனையையும் அறிவையும் தொட்டு இசையின் முழுப் பயனையும் நாம் egy 60 l-u (Up!9-utb.
தமிழ்ப் பாடல்களிலும் பிற இந்திய மொழிகளிலும் இப்பிரச்சினை கிடையாது.
பல்லுயிரும் பல உலகும் பை எல்லையறு பரம்பொருள்மு: கன்னடமும் களிதெலுங்கும் உன் உதரத் துதித்தெழுந்தே ஆரியம்போல் உலக வழக்கு சீரிளமைத் திறம்வியந்து கெ

நீண்டகாலமாக, பலநூறு வருடங்களாக இசையும் இலக்கியமும் ஒன்றியதன் வளர்ச் சியையே தமிழிசை வளர்ச்சியில் இன்று நாம் காண்கிறோம். மேல் நாட்டிசையும் இத்தகைய வளர்ச்சியை காலப்போக்கில் பெற்றுக்கொள்ளும் என்பதில் சந்தேக மில்லை.
*பாடல்கள் இசையுடன் பாடுவதற் காகவே" என்பதில் பாரதி உறுதி கொண்டி ருந்தான். அதனாலேயே அவன் தன் பாடல் கள் அனைத்திற்கும் தானே இசையையும் அமைத்து எழுதினான். அவன் பாடல்கள் அனைத்தும் இன்றும் இசையோடு பாடப் பட்டு பொருளோடு இணைந்து சிறப்புப் பெறுவதைக் காண்கிறோம். அவன் பாடல் கள் தெலுங்கல்ல, தமிழ் தமிழிசையில்
பாடப்பெறுபவை.
அர்த்தமற்ற வெற்று இசையை பாரதி சாடினான். ‘சங்கீதத்தின் உயிரை நீக்கி விட்டு வெற்றுடலை, அதாவது பிணத்தைக் காட்டுகிறார்கள்" என தெலுங்கு கீர்த்தனை பாடும் தமிழரின் யதார்த்த நிலையை நேர் மையுடனும் துணிச்சலுடனும் சொன்னான். தெலுங்குக் கீர்த்தனைகளைப் பாடி இசை யின் உயிரைப் பிரிக்கும் தமிழ் வித்துவான் களைப் பற்றியே பாரதி குறிப்பிட்டான். இவர்கள் தியாகையர் வளர்த்த தமிழிசை யின் வரலாற்றையும் அறியாதவர்களே.
டத்தளித்துத் துடைக்கினும் ஓர் ன் இருந்தபடி இருப்பது போல் கவின்மலையா ளமும்துளுவும் ஒன்றுபல ஆயிடினும், அழிந்தொழிந்து சிதையா உன் *யல்மறந்து வாழ்த்துதுமே!
- மனோன்மணியம்
31 -

Page 58
Dட்டக்களப்புக் கூத்து மரபுகள் என்ற தலைப்பில் இங்கு எழுதப் புகுந்தாலும், கூத்துகள் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு என அமைந்தன அல்ல என்பதை முதலிற் குறிப் பிட விரும்புகிறேன். அவிநயத்தின் மூலம் மனக்கருத்தை வெளிப்படுத்துதல் உலக மக் கள் அனைவருக்கும் பொதுவானதாக இருத்தல் போலவே, கத்துகளிலே பாட்டு களின் பொருளுக்கேற்ப உணர்ச்சி புலப் பட அவிநயஞ் செய்தலும் மக்களுக்குப் பொதுவானதாக அமைந்துள்ளது. இத னாலேயே நமது இயற்றமிழும், இசைத் தமிழும் வழங்குதற்கேற்ற நிலம் "வடவேங் கடம் தென்குமரியாயிடைத் தமிழ் கூறு நல்லுலகம்" என எல்லை வகுக்கப்பட்டது போல, நாடகத் தமிழ் வழக்கிற்கு நம் முன்னோர் எல்லை கூறாது விட்டனர். செகசிற்பியார் எனும் மேல்நாட்டு நாடகப் பேராசிரியர் இயற்றிய ஆங்கில நாடகங் களும் கூட நம் தமிழ் நாடக இலக்கணங் களுக்கு அமைந்தனவாய் இயற்றப்பட் டிருந்ததற்குக் காரணம் இப் பொதுத் தன்மையேயாகும். இப் படி ப் பொது வானவையாயினும் தமிழர்தம் பண்பாட் டைப் பிரதிபலிப்பனவாய் அமைந்த நாட கங்கள் பல முன்னாளில் தமிழ்நாடெங் கும் நடந்தன என்றும் சாலகதியில் அவற் நின் அமைப்பு முறை கூட அறிய முடியாத
 

கந்தையா
வாறு அழிந்தொழிந்தன என்றும் தெரி கின்றது. தமிழ் நாட்டிலே சில கிராமங் களில் நாடகங்கள் நடிக்கப்படுகின்றன எனினும் சிறந்த கூத்து முறையில் அவை ஆடப்படுகின்றில. மலையாளக் கரையிலும் இலங்கையின் மட்டக்களப்புப் பகுதியிலும் நல்லமுறையிலமைந்த நாட்டுக் கூத்துக் களை ஆடும் பெருவழக்கம் இன்றும் அழி யாது நிகழ்ந்து வருதல் இங்கு கருதத் தக்க ஒன்றாகும்.
மட்டக்களப்பு நாட்டில் ஆடப்படும் கூத்துகளை நாம் நோக்கும்போது அவை வடமோடி, தென்மோடி என்ற இருபெரும் பிரிவினவாய் இருப்பதை அறிவோம். இவற்றைவிடச் சிறுபான்மையாக வழங்கும் சிவிலாசம்' என்னும் ஒருவகைக் கூத்தும் இங்குண்டு. விலாசங்கள் மேற்காட்டப் பட்டவற்றைச் சில பகுதிகளிற் சார்ந்து சில துறைகளிற் புதிய மாற்றங்களைக் கொண் டனவாய் இருக்கின்றன. பெரு வ ழ க் காக நடக்கும் நாடகங்களான வடமோடி, தென்மோடி என்ற இரண்டிற்கும் இடையே பெரிதும் வேறுபாடு காண்கின்றோம். இவற்றின் கதைப் போக்கு ஆடல்வகை, தாளக்கட்டு (தாள ஒழுங்கு), உடை அணி யும் முறை என்பன இம் மாற்றங்களிற் குறிப்பிடத்தக்கவைகளாம்;
2 -

Page 59
வடமோடி, தென்மோடி என்ற பிரிவு களின் பெயர்க் காரணங்கள் யாவை என வரையறுத்துக் கூற முடியாவிடினும் வட நாட்டிலிருந்து வந்து தமிழரிடைக் கலந்த தும், பண்டைத் தமிழகத்தில் "ஆரியக் கூத்து' வகையைச் சேர்ந்ததுமான கூத்து வடமோடி என்றும், தமிழுக்குச் சொந்த மாகத் தென்னாட்டில் நிலவிய கூத்து வகை யைச் சேர்ந்தது தென்மோடி என்றும் வழங்கப்படுகின்றன எனக் கொள்ளல் ஒரு வாறு பொருத்தமாகத் தெரிகின்றது.
கூத்துகளின் கதைப்போக்கை நோக்கு மிடத்து வடமோடி நாடகங்கள் பெரும் பாலும் போர் செய்து வெற்றி பெறுவதில் முடிவுறுவனவாய் இருக்க, தென்மோடி நாடகங்கள் காதற் சுவை பயந்து அக்காதல் கைகூடுவதில் முடிவனவாய் விளங்குகின்றன. இங்கே ஆடப்படும் வடமோடிக் கூத்துகளிற் சிறந்தனவாக உள்ள இராமநாடகம், வீர குமார நாடகம், தரும புத்திரநாடகம், பப்பிரவாக நாடகம், 18ஆம் போர், குருக் கேத்திரன் போர், சூரசம்மாரம், குசலவ நாடகம், பாண்டவர் வனவாசம் என்பவற் றிற் போர்க்கள முடிவையும், தென்மோடி யிற் சிறந்தனவாக உள்ள அநிருத்த நாட கம், பவளவல்லி நாடகம் , அலங்காரரூப நாடகம், வாளபிமன் நாடகம், நரேந்திர நாடகம் என்பவற்றில் காதல் வெற்றி பெறும் முடிவினையும் நாம் கருதிப் பார்த் தல் வேண்டும்.
இவ்வகையிலே பழந் தமிழர் தம் நாடக இலக்கணங்களையும் மேனாட்டாரதுநாடக அமைப்பு வகைகளையும் ஒத்து இக் கூத்து கள் அகத்திணையையும் புறத்திணையை யும் சார்ந்து விளங்குகின்றன. மேல்புல உலகிற் சிறந்த நாடகாசிரியர் எனப் போற் றப்படும் செகசிற்பியாருடைய (Shakespeare) நாடகங்களை துன்பியல் அல்லது அமங்கல முடிபின. (Tragedy) இன்பியல் அல்லது மங்கல முடியின (Comedy) என் றும் வகுத்துள்ளார்கள். "ரிறஜெடி" என் பது போர் சம்பந்தமான அல்லது மனத் துன்பமான முடிவினைப் பெறும் நாடகம். *சொமெடி காதலின் பத்தினை முடிவாக
- }

உடையது. மட்டக்களப்பு நாட்டுக் கூத்து களின் கதைப் போக்கினை நோக்கும்போது பெரும்பாலும் வடமோடி நாடகங்கள் (ரிறஜெடி) அமங்கலம் ஆகவும், தென் மோடி நாடகங்கள் (கொமெடி) மங்கலம் ஆகவும் மூடிதல் தெரிகின்றது. காதல் என்னும் அடிப்படையில் எழுந்த அன்பு வாழ்வு வாழ்ந்த தமிழரிடைத் தமது வெற் றியையும் வீர வெறியையும் புலப்படுத்திப் பெருமிதப்பட்டனர் ஆரியர். பெரும்பாலும் சிறப்புடையன எனத் தாம் கருதிய போர்க் கருத்துகள் போன்ற புறவாழ்வின் இலக்கு களைத் தமிழர் வடதிசை நடிப்புடன் சேர்த்து வடமோடி என்றனர் எனலாம். தமிழ்நாடு தென்னாடுதானே; ஆகவே காதல் கலந்த தமிழ்மோடி தென்மோடி எனப்பட்டது. மோடி என்ற சொல் இந் நாட்டிலே வகை, விதம், பகுப்பு என்ற கருத்துக்களிற் பேச்சிலும் வழங்குகின்றது.
இது நிற்க, அகம் புறம் என்று தமிழர் பகுத்துக் கண்ட கூத்தியல்புகளோடு, மட் டக்களப்பு நாட்டுக்கூத்துகளைத் தொடர்பு படுத்திக் காண்போம். உள்ளத்து நிகழும் அநுபவத்தைச் சுவை என்று சொல்லல் தமிழ் மரபு. இச் சுவை முகக் குறிப்பாலும் வெளி உறுப்புகளின் அவிநயச் செயலாலும் உடம்பிற் புறப்பட்டுத் தோன்றுதலால் மெய்ப்பாடு என்றும் சொல்லப்படும். வீரம், அச்சம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவ லம், நகை, கோபம், நடுநிலைமை என, இச்சுவை என்று சொல்லப்படுகின்ற அது பவம் அல்லது மெய்ப்பாடு ஒன்பது வகைப் படும். இவற்றுள்ளே மன மகிழ்வும் சிரிப் பும் அவற்றால் வரும் அதிசய நிலையும் என்ற மூன்றையும் தருவனவாயுள்ள உவகை, நகை, வியப்பு என்னும் சுவைகள் இன்பப் பகுதியைச் சார்ந்து அகத்திணை எனப் படுவன. மற்றைய ஐந்து சுவைகளும் பெரும் பான்மையாக வருவது புறத்திணை எனப் படும். இவ்வேறுபாடு கொண்டுவரும் அகத் திணைக் கூத்துகளையும் புறத்திணைக் கூத்துகளையுமே விபுலாநந்த அடிகளார் தமது 'மதங்க சூளாமணி"யுள் வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் முறையே குறிப்பிட்டார்கள். இதன்படி மட்டக்களப்பு
-

Page 60
நாட்டுக்கூத்து வகையை நாம் ஆராய்ந் தால் தென்மோடி நாடகங்களிலே இன்ப மும் நகையும், காதல் தடைப்படுதல், நிறைவேறுதல் என்பவற்றாலாம் வியப்பும் ஆகிய சுவைகளே பெரும்பாலும் பயின்று வரல் காண்போம். இத் தென்மோடியுள் போர் வீரம் என்பன வர நேர்ந்தால் அவை 4ம் காதல் காரணமாய் அந்த உவகைச் சுவையினையே மிகுப்பனவாய் அமைந் துள்ளன என்று அறிதல் வேண்டும்.
இச்சிறப்புகள் வாய்ந்து நடைபெறும் நாட்டுக் கூத்துகளை மட்டக்களப்புத் தமிழ *த்தின் கிராமந்தோறும் உள்ள மக்கள் தம் ஓய்வு காலங்களில் ஆடிப் பழகுவார் கள், கூத்துகளைப் பழக்கும் ஆசிரியர் *அண்ணாவியார்" என அழைக்கப்படுவர். கூத்தாடும் மேடையின் இடமாகக் கட்டப் படும் உயர்ந்த ஒலைக்கொட்டில் "இலங் கக்கூடம்" என்ற சொல்லாற் கிராமப் புறங் *ளிற் குறிக்கப்படுகின்றது. "அரங்கக்கூடம் என்னும் இனிய சொற்றொடரின் திரிபு இது என்பதை அறிந்து நாம் இன்புறல் வேண் ம்ே, கூத்தாடும் அரங்கு களரி ஆகும். அரங்கின்மேல் அமைந்த இந்த அரங்கக் கூடத்தில், நன்கு ஆடிப்பழகிய பின், நடி கர் முறைப்படி கோலம் பூண்டு பரந்த பொது இடம் ஒன்றிலே கூத்தை அரங்கேற் றம் செய்வார்கள், அரங்கேற்றத்துக்கான உயர்ந்த மண்மேடை பெரும்பாலும் ஊர்க் கோயில் வீதியில் அமைக்கப்படும். இதன் அமைப்பு மேடையில் இடம்பெறும் மேற் கட்டி, எண்ணெய் விளக்குகளை வைப்ப தற்கான தூண்கள் என்பனவும், சிலப்பதி கார உரையுட் காணப்படும் பழந்தமிழ் நாடக அரங்கின் இலக்கணங்களுடன் பொருந்திப் பழம்பெருமையை நினைவூட்டி அறிஞர்க்கு வியப்பை அளிக்கின்றன.
இக்கூத்துக்கள் தொடங்கு ம் போது *கட்டியகாரன்” முதலில் தோன்று த ல் பொதுவான வழக்கம். கூத்தின் தலைமைக் கதாநாயகனான பேரரசனுடைய சபைக் கட்டியகாரன் அவன் வந்து தன் வரவை யும் பின்னால் வரப்போகும் அரசனுடைய சிறப்பு முதலியவற்றையும் சொல்லி அமைதி யாயிருந்து பார்க்கும்படி சபையோரை

34
எச்சரிக்கை செய்து செல்வான். இது "கட் டியங் கூறுதல்" என வழங்கும். அப்பால் கதைப்போக்குப்படி கூத்துக்காரர் முறையே தோன்றி நடிப்பர். அரசன், அரசி, மந்திரி பிரதானிகள் என்போர் கூட்டம் கூட்ட மாக வந்து ஆடுதல் மரபு. இவர்களுடைய கூட்டம் "கொலு" என்று வழங்கப்படுகிறது. இராமர்கொலு, தருமர்கொலு என்ற தொடர்கள் இதற்குதாரணம் நடிகர்க ளுடைய முதற் தோற்றத்துக்கு "வரவு' என்று பெயர். அம்முதற் தோற்றத்தின் போது மட்டுமே வரவுப் பாட்டுக்களும் ஆட்டங்களும் இடம் பெறுகின்றன. அரங் கில் ஒரு கொலுவினருக்கோ, தனிப்பட்ட ஒரு கொலுவினருக்கோ வரவு நிகழும் போது மிகச் சிறந்த ஆட்டம் ஒன்று இட்ம் பெறும். தாள அறுதி பிசகாது மத்தளம் அடிப்பவருடைய திறமையினால் இந்த நேரத்தில் மேடை அதிர்ந்து விளங்கும். அமைதியாக இருந்து குழந்தைகள் கூட இந்த ஆடல் இன்பத்தைப் பருகும் சிறப்பு வரவு ஆட்டங்களுக்கு உண்டு. கூத்தைப் பழக்கிய அண்ணாவியார் பெரும்பாலும் *சல்லரி" என்ற தாளத்துடன் மத் தளம் அடிக்கும் அண்ணாவியாரின் பக்கலில் நிற் பார். பக்கப்பாட்டுப் பாடுவோரும், கூத்து ஏட்டுப் பிரதி பார்ப்பவரும் இவர்களுடன் மேடையில் இடம்பெறுவர். இவர்களைச் *சபையோர்” என்று கூறுதல் இந்நாட்டு வழக்காகும். வரவின்போது வேறு வேறான தாளங்கள் மத்தளத்தில் ஒலிக்கும். அத் தாளங்களை ஒலிவகையாக வாயாற் சொல் லும் சொல்வரிசைகளுக்குத் தாளங் கட்டு" என்று பேர். அரசன் கொலுவரவு, சேனாதி பதி வரவு, அரசகுமாரி வரவு. முனிவர் வரவு என்ற வேறு வேறான இயல்புடைய வர்களின் வரவுகளுக்கெல்லாம் வேறு வேறான ஆட்டங்களும் அவற்றுக்கேற்ற தாள ஒழுங்குகளும் உண்டு. ஒரு அரச னுடைய ஆட்டம் சேனாதிபதி யுடைய ஆட்டத்தைவிட இலகுவாயிருக்கும். பெண் கள் வரவு மென்மைத் தன்மையுடைய நுணுக்கமான அவிநயங்களைப் புலப்படுத் தும் தாளக் கட்டுகளையும் ஆட்டங்களை யும் கொண்டு நிகழும். அதிலும் அரச கன்னியர் வரவு சாதாரண பெண்களின்

Page 61
தனிப்பட்ட வரவை விடச் சீர்மை பெற்ற ஆட்டநுணுக்கமும் சிறப்பும் பொரு ந் தி விளங்கும். இந்த எல்லாவிதமான ஆட்ட நுட்பங்களும் வடமோடி, தென்மோடி இரண்டுக்கும் தனித்தனி வேறான வகை யில் இயங்கிச் செல்வன.
தென்மோடியில் வடமோடியினைப் பார்க்க அதிக நுணுக்கமும் கடினமுமான ஆட்டங்கள் உள. தென்மோடி வரவுக்குரிய ஆட்டங்களை முடித்துப் பாட்டுப் படிக்க வேண்டிய கட்டத்துக்கு வரும்போது கூத் துக்காரர் (இளைத்த உடம்புடையவரா யின்) பெரும்பாலும் களைப்படைந்து விடு வார்கள். வடமோடி ஆட்டம் இப்படி உடம்பை அதிகம் முறிக்காதது. இதனாற் போலும் வடமோடியில் வரவு ஆட்டத்தின் பின்னர் தம் வரவைக் குறிக்கும் பாட்டை நடிகர் தாமே (தருமர் வந்தாரே என்று தரு மராக வருபவரே) படிக்க, தென்மோடியில் அதனைச் சபையோர் என்றழைக்கப்படும் பக்கப் பாட்டுக்காரர் படிக்கும் ஏற்பாடு உண்டு சபையோர் அவ்வாறு படிக்கும் வர வுப் பாட்டுக்குரிய இலகுவான ஆட்டத்தின் போது தென்மோடிக் கூத்தர் ஒருவாறு தம் களைப்பினைப் போக்கிக்கொள்ள இது வசதி தருகின்றது. வரவுப் பாடல்கள் அரங் கில் தோன்றி நடிப்போரைப் பற்றிய புகழ்ச் சிப் பாடல்களாயிருப்பதால் தம்  ைமத் தாமே புகழ்ந்து கூறும் பண்பு தமிழர்க்கு உரியதன்று என்னும் கொள்கை அவர்தம் சொந்தக் கூத்தான தென்மோடியில் அப் பாடல்களைச் சபையோர் வாயிலாகப் பாடு தலின் மூலம் காட்டப்படுகின்றது என்றும் கொள்ளலாம்.
மட்டக்களப்பு நாட்டுக்கூத் துகளுக் குரிய ஆட்டங்களின் நுணுக்கங்களைப் பற் றிய பொதுக்குறிப்புகள் சிலவற்றை இது வரை கண் டோம். அ  ைவக  ைளத் தொடர்ந்து கூத்துக்களிலே விசேட இடம் பெறுவனவாய், நடிப்புக்கு உயிர்நாடியா யுள்ள தாளக்கட்டுகளை இனிக் கவனித்து மேற்செல்லல் பயன்தருமென்று கருதுகின் றேன்.
கூத்தர் மேடையிலே தோன்றி ஆடும் தாளங்களைச் சொற் கோப்பி னா ல்
is 3

தொடுத்து (கட்டி அல்லது சேர்த்து)க் காட் டுவது தாளக்கட்டு ஆகும். கீர்த்தனைகளி லிருக்கும் "பல்லவி போன்ற ஒரு உறுப்பு இத் தாளக்கட்டுகளிலும் முதலில் இருக்கின் றது. நடிகரின் வரவுத் தொடக்கத்திலே 8 முதல் 12 முறை வரை அண்ணாவியார் இம் முதற் பகுதியைத் திருப்பித் திருப்பி தாள அமைதியுடன் படிக்க அதற்குரிய அவிநயங் காட்டி அரங்கின் முகப்பிலேயே நின்று கூத் தர் ஆடுதல் மரபு. இந்த முதலாட்டத்தின் பின்னரே அவர்கள் களரியுள் இறங்குவர். வரவுக் கேற்றபடி தாளக்கட்டினை அண் ணாவியாரும் பக்கப் பாட் டு க் கா ரரும் தொடர்ந்து சொல்லுகையில் அவர் கூற்றை அவ்வாறே மத்தளமும் தன் மொ ழி யி ற் சொல்கின்றது. அப்போது உணர்ச்சியைக் கடந்த ஆட்டமானது. கூத்துக்காரரை மேற்கொண்டு பார்ப்போரனைவரையும் பரவசப்படுத்தி விடுகின்றது. மத்தளத்தின் இந்தச் சிறப்பு நிலையை மக்கள் "மத்தளம் நன்கு பேசுகின்றது" என்று சொல்லி அநுப வித்து மகிழ்கின்றார்கள்.
வடமோடி அரசர் கொலு வரும்போது ;
*" தகதிகதா தெய்யத் தெய்தெய்
தாத்தெய்யத்தோம் தகதிகதா "
என்று ஆட்டம் தொடங்குகின்றது. பல்லவி போன்ற இம் முதற் பகுதி. குறிக்கப்பட்ட கால அளவுக்கு மீட்டும் மீட்டும் சொல்லப் படும்போது கூத்தர் நின்ற நிலையிலும், பக்கங்களுக்குத் திரும்பியும் அவிநயஞ் செய்து ஆடி அந்த இடத்திலே வீசாணம் போடுதல், எட்டுப் போடுதல், இவ்விரண்டு பேராகத் தமக்குள் இடம்மாறி ஆடுதல் சுழல் ஆட்டங்களையும் முறைப்படி முடிப் பர். ஒருவர் பின்னொருவராகப் பாம்பு போல் வளைந்து ஆடிச்செல்வது வீசாணம், எட்டு என்ற இலக்கத்தைப் போன்று வளைந்து செல்லும் ஆட்டம் எட்டுப் போடு தலாகும். பின்னர்:-
*" தகதத் தகதத் தகதத் தகத
தந்தரி நாதரி தகுந்தரி குகுந்தரி தந்தரி நாதரி தகுந்தரி குகுந்தரி சணுத்தச் சணுத்தச் சணு
தகததிங்கிணத்தோம் சணுத்தச் சணுத்தச் சணு தகததிங்கிணதோம் தகததிங்
கிணதோம் "
என்று நடு அரங்கில் ஆடி :-
bj --

Page 62
" தாம் தாம்தக தந்தரிகிடதக தீந்தாரத் தில்லானா சுந்தரி தகனக சுந்தரி ததிமிர்த கிடதெய் தளங்கு தித் தக தகததிங்கின
தோம் தகததிங்கிணதோம் தகததிங்கின Garth' என்று முன்களரியிலும், பக்கங்களிலும் சென்று ஆடிப் பாட்டுத் தொடங்குவதற் காக வரவு ஆட்டத்தை முடித்துக்கொண்டு வருவர், இப்படி அது முடிவுறும்போது 'தகததிங்கிணதோம்" என்ற கடைசித் தாளம் இரண்டு மூன்று முறை மத்தளத் தில் இறுக்கி அடிக்கப்படும். இந்த அடிக் குத் "தாளம் தீர்தல்" என்று பெயர். தாளம் தீர்ந்ததும் கொலுவின் முதன்மைக் கூத்தர் தன் வரவைப் பற்றிய பாட்டுக்களைப் படிப்பர். பின்பு கதைப் போக்கிற்கேற்ப உரையாடல் முதலியவை தொடர்ந்து நடக்கும். தென்மோடி வரவுக்குரிய தாளக் கட்டு:-
"ததித்தளாதக ததெய்யதிமிதக
தாதிமிதத்தித்தெய்யே ததித்தளாதக ததெய்யதிமிதக
தாதிமிதத்தித்தெய்யே’ என்ற முதலை உடையது. அது பின்னர்
*" தச்சோந்திமி தொந்தரிகிட திமிதக தாதெய்யாதா தளங்கு ததிங்கின தொங்கதீந்தா தொங்க தீந்தக
தீந்தாந்தா தாதெய்யதா தளங்கு ததிங்கிண தாதத்தோ தீந்தத் தீந்தத்தாம் -
தளங்கு ததிங்கின தாதத்தோ தீந்தத் தீந்தத் தாம் தாதத்தோ தீந்தத் தோதக தாதீந்தத் தோதீந்தத் தோதக தச்சோந்திமி தளங்கு ததிங்கிண தொங்க தீந்தா தீந்தாந்தா " என்று தொடர்ந்து செல்கின்றது இவ்வள வுக்குமுரிய ஆட்டத்தைக் களரியின் நாலு வாட்டி (திசைமுகம்)களிலும் தனித்தனி ஆடும் ஆட்டமே சிற்சில மாறுபாடுகளுடன் மற்றையோர்க்கும் வருகின்றது, இத்தாளக் கட்டிற்கு முதலில் "கொலுத்தாளம்" என்ற ஒரு பாடற்பகுதி அரசகுமாரன், அரசகுமாரி என்போர் வரவுக்குச் சேர்க்கப்படுதலு முண்டு. அரச கன்னியர்க்கு மேற்காட்டிய வற்றுடன்:- ܫ

" தாதத்திமித்தத் தெய்யோ
தாதாந் தாந்தெய்யோ தாதத்திமித்தத் தெய்யோ
தாதாந் தாந்தெய்யோ தாதத் தாதத் தாதத் தெய்யத்
தெய்யத் தெய்ய ” என்ற ஆட்டத் தருக்களும் சேர்க்கப்படுகின் றன. தலையாரி (தலைமைக் காவலன்) ஒருத்தனின் வரவில் இவையாவும் துரிதம் பெற்ற வேறு தாளமாகின்றன.
*தாதாந் தெய் தெய்ய
தாதாந் தெய் தெய்ய" என்பது அவனுக்குரிய முதற் தாளமாகும்.
**தச்சோந்திமி தந்தரிகிட திமிதக
தாம் தெய்யதா தளங்கு ததிங்கிணை தாதொங்க தீந்தா தீந்தாந்தா தானன்ன தனன்னதான தானன்ன
தனன்ன தான தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தா தெய்யதா தளங்கு ததிங்கின."
என்ற குதிநடை நிறைந்த இப் பகுதி வீர ருடைய ஒரு வாட்டிக்குரிய ஆட்டமாகும். இவ்வாறு அடிதோறும் பேதமும் நுணுக்க மும் வாய்ந்த ஆட்டங்களுக்குரிய தாள வகையெல்லாம் இத்தாளக்கட்டுகளாய் மட் டக்களப்பு நாட்டு அண்ணாவிமாரின் வாயி லாகக் கேட்டறியக் கூடியனவாக மட்டுமே கிடைக்கின்றன. எழுதா இலக்கணமான இவைகள் புதிய நாகரிக மயக்கில் மறைந் தொழிந்து போகாவண்ணம் பாதுகாத்தல் எம்போன்றோர் கடனென்று கருதியே இவற்றின் நுணுக்கங்களை ஒரளவு விரித் துக் கூற முற்பட்டேன்.
இவ்வாறு பல இடங்களிலும் கலந்து இத்தாளக்கட்டுகள் மாறி மாறி அழிந்து போகாவண்ணம் நிலைத்திருக்கத் தக்க தாகவே எனது "மட்டக்களப்புத் தமிழகம்" என்னும் நூலில் நாட்டுக் கூத்துகள் என்ற அதிகாரத்தைச் சேர்த்துள்ளேன். மேலே தந்த நாட்டுக் கூத்துக்களின் சுருக்கம் விளங்க வேண்டியிருப்பின் அந்த அதிகாரத் தைப் படித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். O
ܗܚܗ j6

Page 63
ஆ. தே
இந்தியாவின் தெற்கு, கிழக்குப் பகுதி கள் தவிர்த்த ஏனைய பகுதிகளில் ஒருவித எழுத்தில் கல்வெட்டுகள் பரவலாகக் காணப் பட்டன. இவை எவ்வகையான எழுத்து என்பதோ, எவ்வெச் செய்திகளைக் கூறு கின்றன என்பதோ புரியாதிருந்தது. இவ் வெழுத்துக்களை இனங்காணும் முயற்சியில் பலர் ஈடுபட்டனராயினும் வெற்றி கிடைக்க வில்லை.
இந்த முயற்சியில் ஆங்கிலேயரான ஜேம்ஸ் பிறின்செப் ஈடுபட்டார். முதலில் அவருக்கு உதவி செய்தது வடமேற்கு இந்தியாவை ஆட்சி செய்த கிரேக்க அர சர்கள் விட்டுச் சென்ற இரு மொழி நாண யங்கள் ஆகும். அவற்றில் பெயர்கள் கிரேக்கத்திலும் பிராமியிலும் எழுதப்பட் டிருந்தன. கிரேக்க எழுத்துக்களின் துணை கொண்டு பிராமி எழுத்துக்களை பிறின் செட் அனுமானித்து, இனங்கண்டு கொண் டார். கிரேக்கத்தில் சந்திரகோப்ரஸ் என் றிருந்த பெயர் சந்திரகுப்தர் என்ற மெளரிய அரசர்தான் என்பதை அறிந்துகொண் டார். இந்த அறிவைக் கொண்டு அசோ கன் கல்வெட்டுகளைப் படிக்கத் தொடங் கினார். கரோஷ்தி எழுத்துகளைப் படித்த வரும் அவரே, என்பதும் இங்கு சொல்லற்
UnT Gvg.
சாஞ்சியில் உள்ள அசோகன் கல் வெட்டுகளைப் பார்த்த பிறின்செப் அந்
:
 

தக் குறுகிய கல்வெட்டுகள் எல்லாம் ஈற் றில் ஒரே வகையான இரண்டு எழுத்து களுடன் முடிவதைக் கண்டார். இவை ஏதாவது செய்தியைச் சொல்லும் கல் வெட்டுகளாக இருக்க முடியாது என்றும், பெரும்பாலும் ஈமச் செய்திகளைக் கூறு ests இருக்கவேண்டும் என்றும் உணர்ந்தார். பர்மாவில் இப்படியான கல் வெட்டுகள் இருப்பதை பிறின்செப் ஏற் கெனவே அறிந்திருந்தார். செளராஸ்திரr நாணயங்களைப் படித்தபொழுது கண் டறிந்த'ஸ்' என்ற எழுத்து இந்தக் கல் வெட்டுகளின் இறுதிச் சொல்லின் முன்னால் அடிக்கடி வருவதையும் அவதானித்தார். * 'இன்னாரின் தானம்" என்றிருக்கவேண் டும் என்று ஊகித்தார். "ஆ" என்ற உயி ரெழுத்தின் வரிவடிவ அமைப்பைக் கண்டு கொண்ட அவர் "தானம்" என்ற சொல் லைப் படித்து "த" "ன" என்ற எழுத்துக் களின் வரிவடிவத்தையும் அறிந்துகொண் டார். இவை இந்திய மொழிகளில் "த", "ன" வுக்கிருந்த வரிவடிவங்களைவிட வேறு பட்டிருந்தன. இதை இனம் காணாததால் முன்னைய முயற்சிகளில் தோல்வி கண் டார். இதன் பின்னர் சாஞ்சிக் கல்வெட்டு எழுத்துக்கள் அனைத்துக்குமான வரி வடி வங்களை இனம் கண்டார்.2 'ஒரு சிறிது நேரத்தில் தில்லி (தொப்புறா - Topra) கல்வெட்டுகளில் பிரயோகித்துப் பரிசோ தனை செய்து முழு எழுத்துகளையும் இனம் கண்டுகொண்டேன்' என்று பிறின் செப்

Page 64
அவர்கள் கூறியுள்ளார்?. பிறின்செப் அசோகனின் கிர்னார் கல்வெட்டுகளையும் படித்தார். பம்பாயில் இருந்த வண. கலா நிதி ஜே. வில்சனுக்காக கப்ரின் லோங் 1835இல் புடைவையில் படியெடுத்து வைத் திருந்த கிர்னார் படியைப்படித்தே இதனை வாசித்தார்.4 லலிதவிஸ்தர என்ற நூலில் காணப்படும் வரிவடிவங்களின் பெயர்களை அடிப்படையாகக்கொண்டு இதற்குப் பிராமி எனப்பெயரிட்டார். ஆயினும் இதுவழங்கிய காலத்தில் இதே பெயரைக் கொண்டிருந் ததா என்பதற்கு ஆதாரம் இல்லை. பல் வேறு பதவிகளில் இருந்த பிறின்செப், வங்காள ஆசியவியல் சங்கத்துடன் நெருங் கிய உறவு கொண்டிருந்தார். 1939ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு இங்கிலாந்து சென்றார்.
இந்தியா முழுவதும் தன் ஆட்சியைப் பரப்ப முயற்சி செய்த அசோகனின் அரண் மனையில் பிராகிருதம் ஆட்சிமொழியாக இருந்தது. மாகதத்தின் தலைநகரான பாடலிபுரத்திலிருந்து வெவ்வேறு இடங் களில் நிறுவப்பட விருந்த கல்வெட்டுகளின் வாசகங்கள் இந்தப் பிராகிருதத்திலேயே பொறிக்கப்பட்டு அனுப்பப்பட்டன. ஆயி னும் இவை அவ்வப் பிராந்தியங்களின் பிர தேச பிராகிருத திசை மொழிகளிலேயே சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்கப் பட்டு அந்த மொழியிலே உள்ளூரில் பொறிக் கப்பட்டன. ஹீணயான பெளத்தத்தின் மொழியாகப் பாளி இருந்தது. மஹாயான பெளத்தத்தின் மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. ஆயினும் தொடக்க காலப் பெளத்தம் இவ்விரு மொழிகளும் தோன்ற முன்பிருந்த கிழக்குப்பிராந்திய திசைமொழி யில் இருந்ததாக சில்வெயின்லேவி, ஹெயின்றிச் லியூடேர்ஸ் ஆகியோர் கூறி யுள்ளனர். அசோகனின் கிழக்குப் பிராந் தியக் கல்வெட்டுகள் இந்தத் திசை மொழி யிலேயே அமைந்துள்ளன. புத்தபிரானின் தாய்மொழியும் இதுவாகவே இருந்த தாகக் கருதப்படுகிறது."
கிரேக்க மன்னன் செலியூக்கோஸின்
தூதன் மெகாஸ்தனிஸ் இந்தியர்களுக்கு நூல்களோ, எழுத்துகளோ இருக்கவில்லை

என்று கூறினார். மெகாஸ்தனிஸ் வருமுன் இந்தியா வந்த நீயர்க்கஸ் புடைவையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களைக் கண்டிருந்தான். இவர்கள் தென்னிந்தியா வுக்கு வரவில்லை. தென்னிந்தியாவில் நூல் களும், பிராமி எழுத்துக்களும் இருந்தன. மெகாஸ்தனிஸ், நீயர்க்கஸ் காலத்தில் (கி. மு. 302) வட இந்தியாவின் நிலை அதுவாக இருந்திருக்கலாம். புத்த தர்ம போதனைசளைப் பரப்ப முயற்சி செய்த அசோகன் தெற்கில் இருந்த பிராமி எழுத்து களைக் கையாண்டிருக்கலாம். கையாள் கையில் எழுத்துக்களில் கலப்புகளும் மாற் றமும் ஏற்பட்டிருக்கலாம். எல்லிஸ், எட் வட் தோமஸ் போன்றவர்களின் வட இந் தியர்கள் தென்னிந்தியாவிலிருந்தே எழுதக் கற்றுக்கொண்டனர் என்ற கருத்து இந்தச் சந்தர்ப்பத்தினைப் பார்க்கும்போது சரி யாகத் தோன்றுகிறது." பாடலிபுரத்தின் செயலகத்தில் ஆரிய மொழிகள் அல்லாத மொழிகளைத் தவிர ஏனைய மொழிகளை அறிந்திருக்கவில்லை அல்லது ஆரிய மொழி கள் இலக்கிய, எழுத்து நிலைக்கு வளர்ந் திருக்கவில்லை. இதனால் அசோகன் கல் வெட்டுகள் திராவிட மொழிகளில் இடம் பெறவில்லை.6
வடஇந்தியாவில் அசோகன் கல்வெட்டு
கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் தான் தென்னிந்தியாவில் பிராமிக் கல்வெட்டு கள் கண்டுபிடிக்கப்பட்டன. அசோகன்
கல்வெட்டுகள் பெளத்த தர்மம் சா ர்ந்த செய்திகளையும் சேர்த்துக்கூறுவதுபோல் அல்லாது பெளத்தம் சாராத செய்திகளைக் கூறும் பிராமிக் கல்வெட்டுகள் தென்னிந்தி யாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 1906 ஆம் ஆண்டில் மருகால்தலையில் உள்ள பூவிழுதையார் மலையில் ஒரு குகையில் சில கல்வெட்டு கள் இருப்பதைத் துணைக் கலெக்டர் எல். ஏ. சம்மெயிட் கண்டுபிடித்ததாக டி. ரி. சட்விக் அரசுக்கு அறிவித்திருந்தார். இவற்றை வி. வெங்கையா அவர்களும், கே. வி. சுப்பிரமணிய ஐயர் அவர்களும் படியெடுத்தனர். அதே ஆண்டு மதுரையில் உள்ள ஆனைமலை, கழுகுமலை ஆகிய இடங்களிலும் அவைபோன்ற கல்வெட்டு
سس 8{

Page 65
கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை தான் முதலில் கிடைத்த பண்டைய கல்வெட்டு கள் என்று வெங்கையா நினைத் தா ர். ஆனால் 1903 ஆம் ஆண்டில் கீளவளவில் வெங்கோபராவ் இதுபோன்ற கல்வெட்டு ஒன்றைக் கண்டுபிடித்தார். 1907-1918ஆம் ஆண்டுகள் காலப்பகுதியில் எச். கிருஷ்ண sitesvg)ífi, கே. வி. சுப்பிரமணிய ஐயர், வி. வெங்கையா, கம்மெயிட், வில்பட், ராதா கிருஷ்ண ஐயர் ஆகியோர் மேலும் இத்தகைய கல்வெட்டுகளைக் கண்டுபிடித் தனர். இவை சென்னை சாசனவியல் அறிக்கைகளில் 1912, 1915, 1918 ஆண்டு களில் எச். கிருஷ்ண சாஸ்திரி அவர்களால் வெளியிடப்பட்டன. ஆயினும் அவரால் வாசிக்கமுடியவில்லை என்றும் வாசிக்கும் முயற்சி தொடரும் என்றும் 1918 ஆம் ஆண்டில் கூறினார். 1919 ஆம் ஆண்டில் பூனாவில் நடைபெற்ற முதலாவது கீழைத் தேசவியல் மாநாட்டில் இவற்றைப் படித்து "பிராகிருதச் சொற்கள் கலந்த தொடக் சுத் தமிழில்" கல்வெட்டுகள் இருப்பதாகச் சொன்னார். கே. வி. சுப்பிரமணிய ஐயர் இந்த மொழியை "பழைய தமிழ்” என்று கூறினார்.10 பட்டிப்புறோளுவிலும் தமிழ் கலந்த பிராமிக் கல்வெட்டுகள் கண்டுபிடிக் கப்பட்டன. இவற்றை ஆராய்ந்த பூலர் அதில் தமிழுக்கே உரிய ‘ழ’ வின் தொடக்க வரிவடிவம் இருப்பதாகக் கூறி இதைத் திராவிடி என்றழைத்தார்.12 நீண்ட இடை வெளிக்குப் பின்னர் கே. கே. பிள்ளை இதை 'தமிழும் பிராகிருதமும் கலந்த ஒரு கலப்பு மொழி" என்று கூறினார்.1 இதை ஆராய்ந்த கமில் சுவலபில் "தமி ழும் பிராகிருதமும் கலந்த கலப்பு மொழி" என்பதையே வலியுறுத்தினார்.14 இந்த எழுத்துகளை ஆராய்ந்த நாகசுவாமி தமிழி என்று அழைத்தார். லலித விஸ்தர என்ற நூலில் காணப்படும் எழுத்துகள் பட்டிய லில் இருந்தே இந்தப் பெயர் சூட்டினார். இங்கு காணப்படும் மொழியை 'தமிழ்" என்றே இனங்கண்டார். இதேபோல், இதனை ஆராய்ந்த ஐராவதம் மகாதேவன் இந்தக் கல்வெட்டுகளின் மொ ழி பை த் தமிழ் என்றும் எழுத்தைத் தமிழ பிராமி என்றும் அழைத்தார்.18 இந்த முடிவுகள் இன்று ஏற்கப்பட்டுள்ளன.

வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி அசோக பிராமி என்றே அழைக் கப்படுகிறது. அசோகன் கல்வெட்டுகள், கறோஷ்தியில் உள் ள மான்சேரா, ஷாபாஸ்கார்கி கல்வெட்டுகள் தவிர்ந்த, அனைத்தும் பிராமி எழுத்துக்களிலேயே பொறிக்கப் பட்டுள்ளன.17 அதேவேளை அசோகன் கல்வெட்டுகள் தவிர்ந்த கல் வெட்டுகள் எதுவும் பிராமியில் காணப்பட வில்லை. அதற்கு முந்திய கல்வெட்டுகள் கறோஷ்தி எழுத்தில் பொறிக்கப்பட்டுள் ளன. கறோஷ்தி எழுத்து பெரிதும் பாரசீக எழுத்துச் செல்வாக்குக்கு உட்பட்டதாயும் அராமி எழுத்தில் இருந்து தோன்றியதா யும் கருதப்படுகிறது. அசோக பிராமியி லும் ஒரளவு பாரசீகச் செல்வாக்கு இருப்ப தாகக் கருதப்படுகிறது.
தென்னிந்தியாவில் காணப்படும் பிராமி அசோகனால் புகுத்தப்பட்டதாகப் பரவ லாக நம்பப்பட்டது. சீனி வேங்கடசாமி தென் பிராமியில் தமிழுக்குரிய சில எழுத்து கள் காணப்படுவதை வலியுறுத்தும்போதும் பிராமி எழுத்து அசோகனால் புகுத்தப் பட்டது என்றும், அதற்கு முன்பு தமிழை எழுத இன்னொரு எழுத்து இருந்தது என் றும் கூறுகிறார்.18 பிராமி எழுத்து சிந்து நதி எழுத்திலிருந்து வந்தது என்ற கருத் தும் இருக்கிறது. ?எட்வட் தோமஸ், அலெழ சாந்தர் கன்னிங்ஹம், டோசன் போன்ற வர்கள் தென்பிராமியிலிருந்தே பிராமி தோன்றியது என்ற கருத்தைக் கொண் டிருந்தனர். லாங்டன், ஹன்ரர் போன்ற வர்கள் சிந்துநதி எழுத்திலிருந்து பிறந்ததே பிராமி என்று கூறினர்.20 இதற்கு ஆதார மாக யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையில் கிடைத்த இருமொழி முத்திரை சிந்துநதி எழுத்து, பி ரா மி எழுத் துக் களி ல் 'கோவேந்தன்" என்று பொறிக்கப்பட்ட முத்திரை அமைகின்றது. இந்த இருமொழி முத்திரை இந்த ஆய்வில் ஒரு மைல்கல் என்று நடன காசிநாதன் கருதுகிறார். இதுபற்றிய விபரங்களை இரகுபதி வெளி யிட்டுள்ளார்.21 ஆத லால் தென்னிந்திய பிராமி, குறிப்பாகத் தமிழ் நாட்டில் உள்ள பிராமி காலத்தால் முந்திய்து என்ற கருத்து
حسیس 9

Page 66
நடன காசிநாதன் அவர்களால் வலியுறுத் தப் படுகின்றது. சிறந்த சாசனவியலாளர் களான கே. ஜி. கிருஷ்ணன், கே. வி. ரமேஷ் ஆகியோர் இதை ஏற்றுள்ளனர்.?
இந்தியாவுக்கு வெளியே பிராமிக் கல் வெட்டுகள் சோவியத் ஒன்றியத்திலும் இலங்கையிலும் காணப்படுகின்றன. சோவி யத் ஒன்றியத்தில் உள்ள பிராமிக் கல் QQJu:G9as6it, Lu60) yp uu Gg fif LD6íb) (Old Termez) பகுதியில் உள்ள காரா G3g Giŝt_u (Kara - Tepe) யில் உள்ள மலைக் குகைகளில் பெளத்த அழிபாடுகளுடன் காணப்படுகின் றன. இவை பெளத்தம் சார்ந்த சிறிய கல் வெட்டுகள், இருபத்திநான்கு பிராமிக் கல் வெட்டுகள் மட்பாண்ட சிதைவுகள், குகை கள், சுவர்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகளின் மொழி பிராகிரு தம் என்றே கருதப்படுகிறது.*
இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் பெளத்தம் சார்ந்த சிறு கல்வெட்டுகள் டிராமி எழுத்து இந்தியாவிலிருந்து புகுத் தப்பட்டதாக பரவலாக ஏற்கப்பட்டுள்ளது. டிராமிக் கல்வெட்டுகளை முதலில் படி யெடுத்து வெளியிட்ட கோன்ட்ஸ்சிமிற் பெளத்தகாலத்துக்கு முன்புள்ள கல்வெட்டு கள் கிடைக்கவில்லையென்றும், தேவநம் பிய தீசன் காலத்துக்கு முன்பு இலங்கை யில் எழுத்துக்கலை இருக்கவில்லை என்றும் கூறுகிறார்.24 இதே கருத்தை எட்வட் முல்லரும் தெரிவித்தார்.25 இலங்கைப் பிரா மிக் கல்வெட்டுகள் அசோக Tritóepuu ஒத்தன வென்றும், அவை அசோக வடி வத்தை கி. பி. முதலாம் நூற்றாண்டில் பெற்றதாகவும் லக்ஷ்மன் பெரேரா கூறுகி றார். அதற்கு முன்பு பிராமி வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்கிறார்.28 ஹெற்றி ஆராச்சி இதனை அசோக grrr ó G3Lluntaðir றவை என்றே கூறுகிறார்.27 t_6807 עו விதானை இலங்கைப் பிராமியை மூன்று வகைப்படுத்துகிறார். பழையவை, கி. மு. முதல் நூ.ஆ. இன் பின் அரைப்பகுதியைச் சேர்ந்த வளர்ச்சி பெற்றவை, அசோக வடிவிலமைந்தவை என்று பிரிக்கிறார். ஆயினும் பிராமி எழுத்துக்கள் பெளத்த துறவிகளால் புகுத்தப்பட்டதாகக் கூறு

கிறார். அதற்கு முன்புவியாபாரிகள் புகுத்தி இருக்கலாம் என்பதும் அவர்கருத்து.28
ஆயினும், பிராமி எழுத்துக் கலை இலங்கையில் வளர்ச்சி பெற்ற வரலாற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தவர்கள் கருணரத்தின என்னும் அறிஞரும், பேரா சிரியர் பர்ணாந்து அவர்களும் ஆவார். தென்னிந்திய பிராமி வடிவமே இலங்கை யில் காணப்படுகின்றன எ ன் பதும், தமிழுக்கே உரிய ‘ழ’’வின் முதல் தோற்ற வடிவு இலங்கை யிலே யே காணப்படுகிறது என்பதும், தமிழுக்குரிய சில எழுத்துக்களில் வரிவடிவங்களும் இலங்கைப் பிராமியில் தென்னிந்திய 9Tmruń6opulu'r போலவே காணப்படுவதாகக் கூறுகிறார். கி. மு. முதலாம் நூற்றாண்டில் அசோக வடிவில் மாற்றமடையத் தொடங்கி கி. பி. முதலாம் நூற்றாண்டில் அசோ க வடி வத்தை அடைந்துவிட்டதாகக் கூறுகின் றார். கி. பி. முதலாம் நூற் றா ண் டி ல் மறைந்த சில வரிவடிவங்கள் மீண்டும் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோற்றுவதாகவும் கூறுகின்றார்.2? இதே கருத்துக்களை வலி யுறுத்தும் பேராசிரியர் பர்னாந்து, தென் னிந்திய பிரா மிக் கல்வெட்டுகளைப் பொறித்த அதே கல்லெழுத்தர்களே இலங் கைப் பிராமிக் கல்வெட்டுகளையும் பொறித் திருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும் கி. பி. ஏழாம் நூற்றாண்டில் பல்ல வர் செல்வாக்கினால் கி. பி. முதல் நூற் றாண்டில் மறைந்த வரிவடிவங்கள் மீண்டும் தோன்றுவதுடன் பல் ல வ கிரந்தத்தின் செல்வாக்கு சிங்கள எழுத்துக்களில் புகுந்து விட்டதாயும், இன்றைய சிங்கள எழுத்துக் களில் பல்லவ செல்வாக்கு காணப்படுவ தாகவும் கூறுகிறார். 30
இலங்கைப் பிராமியில் தமிழின் செல் வாக்கு இருப்பதை பேராசிரியர் ஹெற்றி ஆராச்சி ஒத்துக்கொண்டுள்ளார்.31 Lorrr மிக் கல்வெட்டுகள் இந்தியாவைப் போல் பிராகிருதத்தில் இருந்தாலும் அந்தப் பிரா கிருதத்தில் உள்ளூர் மொழியின் செல் வாக்கு இருப்பதாக வில்ஹெல்ம் கெயிகர் கூறுகிறார்.32 இலங்கைப் Logrmuốìu?do காணப்படும் தமிழ்ப் பெயர்கள் தமிழ்ச்
ضمس (

Page 67
சொற்களை தேவராசன் சுட்டிக்காட்டியுள் ளார்.33 பிராமிக் கல்வெட்டுகளில் உள்ள தமிழ்ச் செல்வாக்கை இன்னும் விரிவாக கனகரத்தினம் ஒரு சிறு நூலில் எடுத்துக் காட்டியுள்ளார் 34 இவற்றை இன்னும் விரி வாகவும் மொழியியல் அடிப்படையிலும் பேராசிரியர் வேலுப்பிள்ளை எ டு த் து க் காட்டியுள்ளார்.38 ஆயினும் இ ன் னு ம் இலங்கைப் பிராமிக் கல்வெட்டுகள் சரியான முறையில் விளக்கப்படவுமில்லை; பிராமிக் கல்வெட்டுகளின் மொழிபற்றி முழுமையாக ஆராயப்படவுமில்லை.
அனுராதபுரத்தின் உள்நகரில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியின் போது பெருங் கற் பண்பாட்டுப் படைகளுக்கிடையே காணப்பட்ட கரும் செம் மட்பாண்டச் சிதைவுகளில் காணப்பட்ட பிராமி எழுத் துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த பெருங்கற் பண்பாட்டு எச்சங்கள் சில விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போது காலக் சணிப்பில் கி. மு. 750 ஆம் ஆண்டுப் பகுதியைச் சார்ந்ததெனக் கண்ட னர்.38 இதற்கு முன்னைய ஆய்வுகளில் பெருங்கற் பண்பாடு கி. மு. 300க்கு முந்திய தான காலக்கணிப்புகள் கிடைக்கவில்லை. அதனால் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. ஆயினும் யாழ்ப்பாணம் கந்த ரோடையில் கி. மு. 1000 வரை செல்லும் பெருங்கற் பண்பாட்டுப் படைகள் கண்டு பிடிக்கப்பட்டன. அதேபோல தமிழ் நாட் டில் பெருங்கற் பண்பாட்டு மையங்களான நெல்லை கட்டபொம்மன் மாவட்டத்தி லுள்ள ஆதிச்ச நல்லூர் கி. மு. 800 ஆக வும் வட ஆ ந் கா டு அம் பேத் கார் மாவட்டத்திலுள்ள பையம் பள்ளி கி. மு. 1300 ஆகவும் காலக்கணிப்பு விஞ்ஞான ரீதியாகச் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பா ணம் கந்தரோடையை ஒத்ததாகக் கருதப் படும் அரிக்கமேடும் கி. மு. 200 முதல் ஆய் வில் காலக் கணிப்புச் செய்யப்பட்டது. ஆனால் கந்தரோடையை அகழ்ந்த பென் சில்வேனிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விமலாபெக்லி இரண்டாவது அகழ்வு ஆய்வு நடத்தினார். புதிய ஆய்வின்படி யான காலக்கணிப்பு கி. மு. 1000 ஆக தெளியப்பட்டுள்ளது. கந்தரோடையி
- 4

லும் அரிக்கமேட்டிலும் பெருங்க ற் பண் பாட்டுச் சான்றுகளும், வெளிநாட்டு வணிக சான்றுகளும் கிடைத்தன. கி. மு. 1000 ச் சார்ந்த பிராமி எழுத்துப் பொறித்த கரும் செம் மட்பாண்ட சிதைவுகளும் கிடைக்கப் பெற்றன. இதன் அடிப்படையில் தென் பிராமி - குறிப்பாகத் தமிழ்நாட்டு பிராமி எழுத்துமுறை கி. மு. 1000 காலப்பகுதியில் வழக்கில் இருந்திருக்கிறது என்பதும் அறி யப்படுகிறது. கந்தரோடையையும் அரிக்க மேட்டையும் ஒப்புநோக்கி ஒரு ஆய்வறிக் கையை விமலா பெக்லி தயாரித்துள்ளார்.37
இதே நேரத்தில் தம்புல்லைக்கு அண் மையில் உள்ள இக்பாங்கட்டுவ என்ற இடத் தில் கிடைத்த பெருங்கற் பண்பாட்டுச் ஒன் னங்களின் விஞ்ஞான காலக் கணிப்பீடு இன் னமும் கிடைக்கவில்லை. ஆயினும் தி. QUp • 300 க்கு முந்தியதாகக் கருதப்படவில்லை. தென்னிந்தியாவிலும், வட இலங்கையிலும் பெருங்கற் பண்பாடு, பிராமி எழுத்துக் காலம் கி. மு. 1000 என்பதில் ஐயமில்லை. ஆனைக்கோட்டைப் பெருங்கற் பண்பாடு - பிராமி எழுத்துக்காலம் விஞ்ஞானரீதியா கக் காலக் கணிப்பீடு செய்யப்பட்டிருப்பின் ஒ. மு. 1000 ஆக வந்திருக்கும் என ஊகிக்க லாம். இதற்கு சிந்துநதி எழுத்தும் காணப் பட்டதே காரணமாகும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள தொடர்பை புவியி யல் நூல்களிலும், உலகப் படங்களிலும் காணுகிறவாறு இந்தியாவுக்குக் கீழே செங் குத்தாகப் பார்த்து மதிப்பிடமுடியாது. அந்த செங்குத்தான நிலை பிழையானது. அண்மைக்கால (சற்றலைட்) செய்மதிப் படங்களின்படி இலங்கை இந்தியாவை வலப் புறம் மேல்நோக்கிச் சரிவாகவே காணப்படு கிறது. இதனால் தென்னிந்தியச் செல்வாக்கு அதிகமாகவே இருந்திருக்கும்; அது இயற் கையானதாகவும் இயல்பானதாகவும் இருந் திருக்கும். கிழக்கிலங்கையிலும் திசமகரா மப் பகுதியிலும் உள்ள பெருங்கற் பண் பாட்டு, பிராமி எழுத்துக் காலக் கணிப்பு அகழ்வுகள் மூலமும் விஞ்ஞானரீதியாகவும் கண்டறியப்பட முன்பு இறுதியாக எதை யும் சொல்லமுடியாது. வடமேல் மாகாணப் பகுதியான புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பொன்பரப்பி ஆதிச்ச நல்லூரை

Page 68
சித்துள்ளது கவனிக்கத்தக்கது. ஆதிச்ச நல் அலுரர் கி. மு. 800 எனக் கணிக்கப்பட்டுள் ளது. முடிவாகச் சொல்ல முடியாவிட்டா அலும் தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பெருங்கற் பண்பாடும், பிராமி எழுத்தும் வந்ததெனக் கொள்வதில் தவறு இருக்க முடியாது. அல்லது கடல் பிரித்த பின்பும் ству (35т தரைப்பாதை இருந்திருக்கலாம். இன்றிலிருந்து 7000 ஆண்டுகளுக்கு முன் தரைப்பாதை இருந்தது தொல்லியலால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லது தென் னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் நெருங்கிய கடல்வழிப் பயணம் இருந்திருக்கலாம். இன்றுவரை இது உண்மையாகவே இருக்கி Ք23
தென்னிந்தியாவில் இ. மு. 1000, வட இலங்கையில் கி. மு. 1000, அனுராதபுரத் தில் கி. மு. 750, உட்பகுதியான இக்பாங் கட்டுவையில் கி. மு. 300 என்ற காலக் கணிப்புகளைப் Hார்க்குமிடத்து இரண்டு
பிராமி சிங்களம்
*
- - C
-- db) IŲ ||ò SÐ
ᏓlᏗ C5 g @と ه . . . :
அடிக்குறிப்புகள் -
1. Chatterji, Suniti Kumar, Preface to Asoka's Edicts by A. C. Sen, The Institute of Indology, Calcutta - 4, р. іі.
2: Sen, A. C., Asoka’s Edicts, The Institute of Indology, Calcutta - 4, p. 6.

முடிவுகளுக்கு வரமுடியும். ஒன்று, இந்தப் பண்பாடும் எழுத்து முறையும் படிப்படியாக உள்நோக்கிச் சென்றன என்பதாகும். மற் றது. இலங்கையில் மக்கட் செறிவு கரை சார்ந்த இடங்களிலேயே முன்பு இருந் தது. பின்பு தேவை கருதி உள்நோக்கிச் சென்றிருக்க வேண்டும். அவ்வாறு சென்ற பொழுது இந்தப் பண்பாட்டையும் கொண்டுசென்றார்கள். வரலாற்றாசிரியர் வோமிங்ரன் இந்தக் கருத்தைத் தெரிவித் துள்ளார். எப்படிப் பார்த்தாலும் அனுராத புரத்தில் கி. மு. 750 இல் பிராமி எழுத்து முறை இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வட இலங்கையில் இவை கி.மு. 1000 இல் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்
இன்றைய சிங்கள எழுத்துகளும், தமிழ் எழுத்துகளும் பிராமியில் இருந்தே தோன் றின. சில உதாரணங்கள்:
தமிழ்
9HتD| c Cho dřó
o lo
NLU U ॐ| |¢> ८é> Fाः
- FOOTNOTES
3. Prinsep, James, Indian Palaeography. Journal of the Asiatic Society of Bengal, Vol. 7, 1838.
4. Hultzsch, E., Corpus Inscriptionum
Indicarum, Vol. I, p. x.
5. Sen, A. C., op. cit, р. 8.

Page 69
I 0.
.
12.
13.
l4.
15.
6,
Chatterji, Suniti Kumar, op. cit., p. X.
Subramaniam, V. I., The evolution of the Tamil script, Tamil Culture, Vol. III No: 1, Jan. 1953, p. 39-40.
Chatterji, Suniti Kumar, op. cit., pp. vi: vii.
Krishna Sastri, H. K., The Caverns and Brahmi Inscriptions of Southern India, Proceedings and Transactions of the First Oriental Conference, Poona, 1922, pp. 327-348.
Subrahma nia Aiyyar, K. V., Proceedings and Transactions of the 3rd Oriental Conference, Madras, 1925, pp. 275-300.
Epigraphia Indica, Vol. II, pp. 323-324.
Buhler, Johann George, Indische Paleographiex, (Translated by John Faithful Fleet).
Pillay, K. K., The Brahmi Inscriptions of South India and the Sangam Age, Tamil Culture, Wol V No: 2, 1956, p. 178.
Zvelebil, Kamil, The Brahmi Hybrid Tamil Inscriptions, Tamil Culture Wol. XII No: I, 1966, pp. 13-50.
Nagaswamy, R., Proceedings of the Second International ConferenceSeminar of Tamil Studies, Madras, 1968-Vol: II.
(a) Mahadevan, Iravatham, Proceedings of the Second Conference-Seminar of Tamil Studies, Madras, 1968, Vol: II.
(b) Corpus of Tamil Brahmi Ins
criptions, 1966.

17.
18.
19.
20.
2.
22.
23。
24。
25。
26.
Sen, A. C., op. cit., p. 4.
வேங்கடசாமி, சீனி, சங்க காலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1981.
Pillay, K.K., op. cit. p. 176 (cited by him.)
Langden, S. Mohenjo-Daro and Harappa, Ed. Sir John Marshall
pt. II, p. 423. Hunter, G. R., The Script of Mohenjo-Daro and other scripts and its connection
with other scripts, pp. pp. 17, 22, 49.
Ragupathy, P., Early settlements
in Jaffna, - An Archaeological Survey Madras, 1987.
Kasinathan, Natana, Tamil Brahmi Inscriptions, Seminar Paper on Brahmi Inscriptions, Thanjavur Tamil University, 1988. (Acceptance by K. G. Krishnan and K. W. Ramesh conveyed in a personal letter to writer.)
Vertogradova, V. V., Indian Inscriptions and Inscriptions in unknown lettering from Kara-Tepe in old Termez-Nauka Publishers, Moscow, 1983, pp. 34-48, 54-56.
Goldschmit, P. Archaeological Survey of Ceylon-1875, p. 3.
Muller, Edward, Ancient Inscriptions of Ceylon-1883, p. 24.
Perera, Lakshman, The Brahmi Inscriptions as a source for the study of early history of Ceylon, Ceylon Historical Journal, Vol I No. 1, 195, p. 86.

Page 70
Hettiarachchi, D. E., History of Ceylon, Vol: I Pt. 1, University of Ceylon, p. 38.
Paranavitane, S. Inscriptions of Ceylon, Vol. I, p. xxii.
Karunaratne, W. S Zeylanica, Wol: VII,
. , Epigraphia
Fernando, P. E., Palaeographical Development of the Brahmi Script in Ceylon, from 3rd century B. C. to 7th century A. D., University of Ceylon Review, Vol. 7 No: 4, 1949, pp. 282-301.
Development of the Sinhala Script from 8th century A. D. to 15th Century A. D. University of Ceylon Review, Vol. 8 No: 4, 1950, pp. 222-243.
Het tiarachchi, D. E., History of Ceylon, Vol: 1 Pt. 1, University of Ceylon, p.39.
"இலக்கணச் செங்கே
யாப்புச் சிம்மாசன எதுகைப் பல்லக்கு மோனைத் தேர்கள் தனிமொழிச் சேலை பண்டித பவனி இவை எதுவும்
இல்லாத - கருத்துக்கள் தம்மை தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை'
- கவிரு
44 ܚܘܝܚܗ

岛2,
33.
34.
35。
岛6,
37.
ால்
தர் மு. மேத்தா
Geiger, Wilhelm, Grammar of the Sinhala Language, pp. 1-3.
Theva Rajan, A. Articles in Times Week-Ender, Poson Supplements, 1966 & 1968.
Kan agaratnam, Rev. D. J., Cultural Pluralism in Sri Lanka., 1976.
Veluppillai, A., Tamil Influence in ancient Sri Lanka with special reference to early Brahmi inscriptions, Journal of Tamil Studies, Vol. 161979, Vol. 17-1980.
Deraniyagala, Siran, SUNDAY TIMES; 1812/90, 15|4|90; SUNDAY OBSERVER, 29.4|90; 2015/90; WEEKEND, 3/6/90.
Begley, Vimala, Comparative Study of Arikkamedu and Kantarodai (unpublished).

Page 71
பேராசிரியர்
Bல்லுணர்வுகளை வளர்ப்பனவும் மனித வாழ்க்கையைச் செம்மைப்படுத்த வல்ல சிந்தனைகளைத் தூண்டுவனவும் சிறந்த இலக்கியங்கள் என்று சிலாகித்துக் கூறப்படும். சிலர் தமது வெற்றி தோல்வி களை வெளியிடவும் அவசங்களையும் எக் களிப்புக்களையும் எடுத்துக் கூறவும் எழுத் தைக் கையாளுவதுண்டு. இன்னும் சிலர் தம் பெயர்களை அச்சிற் காணும் ஆவலில், பிரசித்திபெறும் வேட்கையில் எழுதுவ துண்டு. அத்தகையவர்கள் பத்திரிகை களுக்கு ஏற்ற வகையிலும் மனித பலவீனங் களைப் பற்றுக்கோடாகக்கொண்டும் எழுத் துலகில் உலாவருவதுண்டு.
ஆனால், மனித வாழ்வையும் அத னைப் பீடித்துள்ள பிரச்சினைகளையும் நேர்மையாக நோக்குபவர்களே சிறந்த எழுத்தாளர்கள் என்று மதிக்கப்படுவர். வாசகர்களை அறியாத உலகுக்கு அழைத் துச் சென்று வேடிக்கைகளும் விந்தைகளும் காட்டுவதைவிட, அறிந்த உலகினைச் செவ்வனே புரிந்துகொள்ளவும் முன்னுள்ள வாழ்வினை ஏற்றவகையில் அமைத்துக் கொள்ளவும் உதவுவது சாலச் சிறந்தது என்பது சொல்லாமலே போதரும். நடப் பியல் வாழ்வினை விசுவாசத்தோடு விசா ரிப்பதின் விளைவாக எழுவேைவ உயர்ந்த இலக்கியங்களாகும். கா ண் பவற்றின் எதார்த்தங்களைப் புரிந்துகொள்ள °一凸 வத்தக்கன அவையே. உண்மையை བ་479 மாக நாடி அறிய முயலாதனவும், வழக்க
 

応
L ÕIGILInfinõi
- - ح --- ------- محسس مستـمـ..من جدهم
சி. தில்லைநாதன்
மான அச்சுருக்களாகப் பழைய தடத்தில் அமைவனவும், தன் உண்மையான நிலை மைக்குப் புறம்பான போலிக் கோலத்தில் ஒரு வாசகன் தன்னைப் பாவனை செய் யத் தூண்டுவனவும் நல்ல இலக்கியங்களா தல் இயலாது. அன்றாட வாழ்வின் நெருக் கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் எழுத் தாளன் எனப்படுபவன். எவ்வழியிலாயினும் சரி, முகம் கொடுத்தாகவேண்டும்,
புனைகதை இலக்கியத்தைப் பொறுத்த வரை அது சமகாலச் சமுதாய வாழ்வானு பவங்களின் அடியாகப் பிறப்பது. இலங் கைத் தமிழ்ச் சிறுகதைகளை எடுத்துநோக் கினால், அவற்றுட் பெரும்பாலானவை உணர்வுக்கு விருந்தளிப்பனவாகவும், சிந் தனையைத் தூண்டுவனவாகவும், வாழ்வை யும் மனிதரையும் புரிந்துகொள்ள உதவு வனவாகவும், பல்வேறு பிரதேசங்களின் வாழ்க்கை முறைகளைப் புலப்படுத்துவன வாகவும் அமைந்திருப்பதை அவதானிக் கலாம்.
கடந்த அறுபது ஆண்டுகளாகப் பல் வேறு விடயங்கள் குறித்து இலங்கையிலே தமிழ்ச் சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. ஐம்பதுகளுக்குப் பின் சமுதாயச் சார்பு உரம்பெற்றுள்ளது. சுவாரஸ்ய காதல் கதைகளும் அதீத கற்பனைக் கதைகளும் இலங்கையில் எழுதப்படவில்லை எனக் கூற முடியாது. ஆயினும், எதார்த்த வாழ்வானு பவங்களை ஒட்டிய சிறுகதைகளுக்கு இந் நாட்டில் உயரிய இடம் அளிக்கப்பட்டது.
5 -

Page 72
சமுதாய பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்திய பிரச்சினைகள் சிறுகதை களிலே ஆழமாக நோக்கப்பட்டுள்ளன. சாதிப்பிரச்சினை, இனப்பிரச்சினை, தோட் டத் தொழிலாளர் வாழ்க்கைப் பிரச்சினை முதலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஏலவே ஏராளமான சிறுகதைகள் எழுதப் பட்டுள்ளன.
புதிய பிரச்சினைகளும் புதிய அனுப வங்களும் சமீபகாலத்தில் எமது எழுத் தாளரை ஊன் பதைக்க வைத்தவாற்றை நோக்குவது பொருத்தமானதாகும். தரை மார்க்கமாகவும், ஆகாயமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் நடைபெற்ற தாக்கு தல்களுக்கும் பீரங்கி வெடிகள் கண்ணிவெடி களுக்கும் ஆளாகி மனித வாழ்க்கை அல் லோலகல்லோலப்பட்டது.உயிர்கள், உடை மைகள், உயர் ஒழுக்கங்கள்'எக்கச்சக்கமாய்" இழக்கப்பட்டன. பல்லாயிரம் இளைஞர் கள் பணம் தேடியும் பாதுகாப்புத் தேடியும் உலகின் பல்வேறு திசைகளுக்கும் புலம் பெயர்ந்தனர். இந்தக் காலச் சூழல் எமது சிறுகதைகள் சிலவற்றிலே பிரதிபலிக்கப் படுமாற்றினை நோக்கலாம்.
க. பாலசுந்தரத்தின் (அந்நிய விருந் தாளி என்ற தொகுதியிலுள்ள) * ஸ்கூல் பிளஸ் மினிபஸ் ரைம் ரேபிள்கள்", அழிபாடு களுக்கும் அவலங்களுக்கும் மத்தியிலே சிக் குண்டு சித்தம் கலங்கித் தடுமாறிப்போன ஒருதாயின் சோகக் கதையினை வீதியி லுள்ள மலைவேம்பின் வாயிலாகக் கூறு கிறது. பிள்ளைகளை வெளியே அனுப்பி விட்ட பெற்றோர் தவிப்புக் கதையில் தத் ரூபமாகக் காட்டப்படுகிறது. "அதோ ஒரு மினி பஸ் யாழ்ப்பாணத்திலிருந்து எமனின் பீரங்கிப் பாசக் கயிற்றுக்கு உயிர்தப்பி ஓடி வருகிறது. அவள் இதயம் முடுக்கி விட்ட மெசின் துப்பாக்கி போலப் பட படக்கிறது." என்ற பகுதியில் கால அனு பவத்தோடொட்டி உவம உருவகங்கள் உரு வெடுப்பதையும் அவதானிக்கலாம். பேரப் பிள்ளைகளைப் பிடித்திழுத்துக்கொண்டு ஒடும் ஒரு பெரியவர் பின்வருமாறு கூறு கிறார்: "செத்தாலும் எல்லாரும் ஒன்றாய் வீட்டிலே சாவமாம். கொம்மா துடித்துச்

A6
சாகிறா. கெதியா ஓடி வாங்கோ,' எல் லாரும் ஒன்றாய்ச் சாகவேண்டும் எ ன் று தாங்கொணா அந்தர நிலையில் பேசப்படு வதைப் பல்வேறு எழுத்தா ள ர் கதை களிலே காணமுடிகிறது.
ஷெல் அடி, சுற்றிவளைப்பு, வீதித் தகர்ப்பு, இராணுவ நடமாட்டம், ஹெலிக் கொப்டர் அச்சுறுத்தல், அடையாள அட் டைக் கெடுபிடி, வீட்டுப் பிரச்சினைகள் முதலானவற்றின் மத்தியிலான அந்தர சீவி யக் குழப்பத்தைத் த. கலாமணியின் நாட் கள், கணங்கள். நமது வாழ்க்கைகள்" என்ற (உயிர்ப்புகள் என்ற தொகுதியி லுள்ள) கதை சித்திரிக்கிறது. வெளியே போனவருக்கு வீட்டிலிருந்த குழந்தையின் சுகவீனம் குறித்த கிலேசம், வீட்டிலிருப் பவருக்கு வெளியே போனவர் பற்றி ய அவதி. இச்சிறுகதையில் பங்கிறாற்றியஸ் என்ற பாத்திரம் நினைவில் நிற்கத்தக்க வகையிலே படைக்கப்பட்டுள்ளது. இக்கதை பிரதிபலிக்கும் இயலாமை நிலையும் அதில் மண்டிக்கிடக்கும் சோகமும் இக்காலத்துக் குரியதென்றே தோன்றுகிறது. எ ம் மை அலைக்கழிக்கும் சக்திகள் எமது கட்டுப் Hாட்டுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவை என்ற உணர்விற் பிறப்பது அந்தச் சோகம்.
தெணியானின் "உவப்பு' என்ற (உயிர்ப் புகள் என்ற தொகுதியிலுள்ள) கதை தெருக்களில் மனிதப் பிரேதங்கள் கவ னிப்பாரற்றுக் கிடக்கும் பரிதாபத்தைச் சித்திரிக்கிறது. மனித இறைச்சி விரும்பிய பெண்காகம், அதனை அகால வேளையில் எங்கே தேடலாம் என்ற வினா எழுப்ப, ஆண்காகம் பின்வருமாறு கூறுகிறது: "அடி விசரி. மனிஷ இறைச்சிக்கும் இஞ்சை இப்ப பஞ்சமா! எங்கே போனாலும் குவிஞ்சு கிடக்குது. நீ ஏன் வீணாகப் பசி கிடக்கிறாய். இரு இப்ப வந்திடுகிறன். எது வேணும். ஈரலோ, மூளையோ?” மனிதகுலம் என்றும் அருவருக்கத்தக்க ஒரு நிலை இக்கதையில் அழகாகக் காட்டப் படுகிறது.
பாதுகாப்பு வலையச் சட்டத்தினால் மீன்பிடித் தொழில் தடைசெய்யப்பட,

Page 73
அன்றாடம் உழைத்துண்ணும் ஏழைகளுக்கு ஏற்பட்ட துன்பத்தைக் காட்டுவது ச. முரு கானந்தனின் (மல்லிகை, ஆகஸ்ட், 1986) 'தரை மீன்கள்" என்ற கதை. கவிந்து கிடந்த மரணபயமும் மீனவர்கள் கொல்லப்படுவ தும் காட்டப்படுகின்றன. "இந்தப் பசியால் சாகிறதைவிட ஒரேயடியாகச் செத் துத் துலைக்கலாம்" என்று விரக்தியடைகின்ற னர் தொழிலாளர்.
க. தணிகாசலத்தின் (பிரம்படி என்ற தொகுதியிலுள்ள) "தெற்குநோக்கி" என்ற கதையும் கடலை நம்பி வாழும் மக்கள் தொழில் செய்து வாழ முடியாத நிலை மைக்குத் தள்ளப்பட்டமை சம்பந்தமானது. "அந்தப் போராட்டங்களுக்கான கோஷங் களை முன்வைத்த பலர் இந்தியாவுக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்று பாதுகாப் பாகவும் வசதியாகவும் வாழ்ந்தனர். சாதா ரண உழைப்பாளி மக்களே தமது வாழ்வும் சாவும் இந்த மண்ணில்தான் என்ற முடி வோடு இருந்தனர்." என்ற ஆசிரியர் கூற் றும், "இவ்வளவு சனங்களும் இஞ்சை இருக்க நாங்கள் மட்டும் தப்பினால் போதுமே. "என்ற கதாநாயகன் கூற் றும் ஆசிரியர் நிலைப்பாட்டைத் தெளிவு படுத்துகின்றன.
தொல்லைகள், கவலைகள்,சாவுகளுக்கு மத்தியிலே மனிதர் உறுதிகொண்டு நிற் பதை ச. முருகானந்தன், க. தணிகாசலம் ஆகியோரின் சிறுகதைகள் காட்டுகின்றன. அழிவின் அநர்த்தங்களிடையே பட்டுப்பட்டு உரமேறும் மானிடத்தின் உறுதியைச் சுதாராஜ் எழுதிய (ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள் என்ற தொகு தியிலுள்ள) "மீட்சி" என்ற கதையிலும், செங்கை ஆழியானின் (மல்லிகை, ஆகஸ்ட், 1986) "குளவிக் கூட்டைக் கலைக்காதீர்" என்ற சவியுற எழுதப்பட்டுள்ள உருவகக் கதையிலும் காணமுடிகிறது.
கைதேர்ந்த எழுத்தாளரான நந்தியின் "கேள்விகள் உருவாகின்றன" (மல்லிகை, ஆகஸ்ட், 1986) என்ற சிறுகதை கால நடப்புக்களை அவதானித்து உணர்ந்து சிந்திக்கும் அவரது ஆற்றலைக் காட்டுவ

தாக விளங்குகிறது. மாணவர் பிரச்சினை களுக்கான காரணங்கள் எவை என்பதை என்றும் எண்ணிப்பார்க்காமல் அடக்குவதில் இன்பங்கண்ட ஆசிரியர் சிவப்பிரகாசத்தின் முதல் மகன் ஒவசியர் மாமனாரைத் திருப் திப்படுத்த இங்கிலாந்து சென்று கிழடுகள் மருத்துவம் செய்து கோடீஸ்வரனாகி விடுகிறான். இரண்டாவது மகன் ஒமானில் "ரூம் போயாக’க் கைநிறையச் சம்பாதிக் கிறான். ஊரில் விடு காலிப் பெயரெடுத்த கடைசிப்பிள்ளை 1983 கலவரத்தின் வாய்ப் பாக ஜேர்மனி சென்று அகதிப்பணம் பெறுகிறான். இந்தப் பெருமைகளை அளக்க ஆட்தேடும் சிவப்பிரகாசத்தைப் பொறுத்த வரை ஊரிலுள்ள மற்றப் பொடிபொட் டையள் கெட்டுப் போனவர்கள்: இன்றைய இன்னல்களுக்கெல்லாம் காரணமானவர் கள். ஆனால், "இக்காலச் சந்ததியின் பொருத்தமானதோர் பிரதிநிதி" என அவர் எடைபோட்ட இளைஞன் அவர் அதிர்ந்து போகவும் அவர் மனதிலே கேள்விகள் எழ வும் காரணமாகின்றான். "சமூகத்தின் அவலக் கோலங்கள் சோகக்காட்சி தருகின் றன. அனாதைகள், அகதிகள், விதவை கள், வக்கற்றவர்கள், கையும் காலும் கண் ணும் - கற்பும் இழந்தவர்கள்! * 'ஏன், எதற்கு, எதனால், எப்போது என்ற கேள் விகள் உருவாகின்றன. புதிய தலைமுறைக் கும் அது முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக் குமான பொறுப்பினைப் பழைய தலை முறையினர் தட்டிக் கழித்திடப்போமோ" என்ற வினா வாசகர் எதிரே நிற்கிறது,
பல்வேறு காரணங்களாற் புலம்பெயர்ந் தோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அவர்களால் உள்ளூர் வாழ்வில் ஏற்படும் மாறுதல்களும் பல சிறுகதைகளுக்குப் பொருளாயமைந்துள்ளன. வெளிநாட்டுக் குப் பணிப்பெண்ணாகச் சென்ற ஒருத்தி யின் தனிமை உணர்வும் தவிப்பும் பகற் கனவும் சுதாராஜ்ஜின் "ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள்" என்ற கதை யிலே காட்டப்படுகின்றன. அரபு தேசத் திலே காணும் கூடிய ஆடம்பர வாழ்க்கை வசதிகளும் அவளை வெளிநாடு செல்லத் தூண்டிய வீட்டு நிர்ப்பந்தங்களும் அவ

Page 74
ளைக் குழப்பிக் கனவுகளை அதிகரிப்பதாக வும் தோன்றுகிறது. "எல்லோருக்கும் பணம் தானே வேண்டும்” என்று வீட்டாரை நினைந்து சலித்துக்கொள்கிறாள். சுதாராஜ் எழுதியுள்ள 'பாலைவனத்திலும் புல் முளைக்கும்" என்ற கதையில் இவ்விடத்து வாழ்க்கைப் பிரச்சினைகளின் அழுத்தங்க ளும், பிறஊரில் ஆதரவும் உபசரிப்பும் நிம் மதியும் அடிப்படை வசதிகளும் அற்றிருக் கும் நிலையிலும் பலவசதிகளுடன் இருப்ப தாகக் கதையளந்து கடிதம் எழுதும் போலித் தனமும் காட்டப்படுகின்றன. குடும்பத் தவரின் ஆசைகளும் தேவைகளும் பெருகு கின்றன. அவற்றை வளர்த்தவன் அகப் பட்டுத் தவிக்கிறான்.
மத்திய கிழக்குப் பணவரவினால் குடும் பங்களிலேற்படும் புதிய மனோபாவங் களைக் க. பாலசுந்தரம் எழுதிய 'உயர உயரும் அன்ரனாக்கள்" (அந்நிய விருந் தாளி) என்ற கதை சுட்டுகிறது. "பன மிருந்தால் படிப்பெதற்கு? பணத்தினால் வாங்கமுடியாதது ஏதுமில்லை’ என்னும் லட்சுமி இல்லாதாரை இழிவாக நோக்கு கிறாள். மகளைப் பெண்பார்க்க வந்த டாக்டரைப் பற்றிப் பேசுகையில், "எல் லாம் உந்தக் கண்டறியாத படிப்பைப் பற்றித்தான். விடுத்து விடுத்துப் படிப் யைப் பற்றித்தான் கேட்டவர். அவருக்குப் படிப்பைத் தவிர வேறொன்றும் தெரியாது போல" என்று கடிந்துகொள்கிறாள். கேடில் விழுச்செல்வம் என்று கல்வியைப் போற்றிய ஒரு சமுதாயத்திலே புதுப்பண வரவும் திறந்த பொருளாதாரமும் பொருள் நுகர் விழுமியங்களும் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஓரளவு தெரிகிறது.
பல இளைஞர்கள் மத்திய கிழக்குக்குச் சென்றமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் விண்டு காட்டு வ து க. தணிகாசலம் எழுதியுள்ள "மண்ணின் மைந்தர்கள்" (பிரம்படி). "மூத்த சகோதரி யின் திருமணத்துக்காக அவன் பெற்ற கடனும், வட்டிகளும் இளைய சகோதரி யின் எதிர்கால வாழ்வுக்கான தேவையும், உற்றார் உறவினர்களின் உந்துதலும் மத் திய கிழக்கை நோக்கி மூர்த்தியைத்தள்ளின.

தாயாரின் மரணச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அவன் அனுப்பும் பணத்தின் பெரும்பகுதியைத் தமக்கை தன் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற் குப் பாவிக்கிறாள். மனம் சாம்பிய தங்கை தன் எதிர்காலத்தைக் கருதி மத்தியகிழக் குப் பணிப் பெண்ணாகச் செல்ல எண்ணு கிறாள். நாடு திரும்பிய தம்பி மீண்டும் மத்தியகிழக்குக்குப் போகவேண்டுமென்று தமக்கை அங்கலாய்ப்பதாய்த் தெரிகிறது.
"பொருள் - மனித உறவுகளை. அற்பமாக்குவதையும், ‘சுயநலம் குறைந்த, அன்பும் தியாசமும் நிறைந்த வாழ்க்கை தனது குடும்பத்திலும் நாட்டிலும் அற்றுப் போவதையும், வளர்ந்துவரும் தேவைகள் தீர்க்கமுடியாத பெருஞ் கமைகளாகத் தன் னையும் தன்னைப்போன்ற இளைஞர்களை யும் அமுக்குவதையும் சுதந்திரமான, சுக வாழ்வு கிட்டாமல் ‘வெறும் போலித்தன மும் பகட்டுகளும் சீரழிவுகளும்” எஞ்சுவதை யும் மூர்த்தி உணர்கிறான். இயந்திர வாழ் வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு உயி ரோட்டமுள்ள ஒரு வாழ்வுக்கு அத்திபார மிடவேண்டும் என்ற ஆவல் உதிக்கிறது. "இந்தமண் திருந்தாமல். நாங்கள் மணி சரா வாழேலாது" என்று முடிவெடுத்துச் சொந்த மண்ணில் தங்க உறுதிபூணுகிறான், சுயநலத்தையும் ஆடம்பரத்தையும் ஒதுக்கிச் சுதந்திரமான உயிரோட்டமுள்ள வாழ் வைக் கட்டியெழுப்பும் உணர்வை வாசக ருக்கு ஊட்டும் கதாசிரியர் நிலைப்பாடு துலாம்பரமாக விளங்குகின்றது.
உயிராபத்து மிகுந்த சூழலில் வாழும் அவலத்தையும், புலப்பெயர்வின் பாதிப்புக் களையும், பிறநாடுகளில் அகதி அந்தஸ்துப் பெற்றுப் பிழைப்பதற்குச் சொந்த மக்க ளின் அவலங்கள் வியாபார முதலாக ஆக் கப்படும் கேவலத்தையும் காட்டுவது மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் (மல் லிகை, ஆகஸ்ட், 1986) "பேப்பர் பிரசவம்".
மூத்த மகள் டொக்டர் புருஷனுடன் அமெரிக்காவிலும் நடுவிலான் அவுஸ்திரேலி யாவிலும் கடைசிமகன் ஜெர்மனியிலும் ஆக, "நாளைக்கு நான் கண்ணை மூடினால்
48 -

Page 75
ஈழநாடு பேப்பரில் அமெரிக்காவும், அவுஸ் திரேலியாவும் ஜேர்மனியும் தான் இடம் பெறும். என்ரை பிள்ளையஸ் என்ரை பிரே தத்தைக் கூடப்பார்க்க வரமாட்டினம்" என்று நொடிந்துபோய்க் கிடக்கிறார் முத் துக்குமாரு.
தன் ஒரே சகோதரியை நல்லவன் ஒரு வனிடம் கைப்பிடித்துக் கொடுக்க வேண்டு மென்ற ஒரே இலட்சியத்துடன் ஹட்டனிலி ருந்து யாழ்ப்பாணம் வந்த நேர்மையான உழைப்பாளி குஞ்சன், ஷெல் அடிபட்டுச் செத்துக்கிடக்கிறான்.
'நீங்கள் படும் சஷ்டங்கள் இங்கு கூடிப் பேசும்போது கதைப்பம். இங்கே அகதிச் சலுகைகள் கிடைக்குது. நேரமெல்லாம் டீ. வி. பாக்கிறம். நீங்கள் பாக்காத புதுப் படமெல்லாம் ஒன்றுவிடாமல் பார்த்து முடிச்சுப் போட்டன்.
முக்கியமாகச் சொல்ல வேண்டியது இதுதான். நீங்கள் ஊரிலை அவங்களிட் டைப் படுகிற க ஷ் டங்களை யெல்லாம் இங்கே நிரூபிச்சுக் காட்டினால் இன்னும் விசேச சலுகையெல்லாம் தருவினம். சும்மா வாயாலை சொல்லிச் சரிப்பட்டு வராது. மேலதிசமான சொகுசான வசதிசளை நாங் சள் பெற வேண்டுமானால் அங்கை நடக் கிற அக்கிரமங்களையெல்லாம் பேப்பரில்
கத்தி இன்றி ரத்தம் இ யுத்தம் ஒன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்ை நம்பும் யாரும் சேருவீர்
காந்தி என்ற சாந்தி மூ தேர்ந்து காட்டும் செந்' மாந்தருக்குள் தீமை கு வாய்ந்த தெய்வ மார்க்
-நாமக்கல் க

வாற மாதிரி இங்கை காட்ட வேணும். தமிழ்ப் பேப்பரை விட இங்கிலீஸ் பேப்பரில் வாறதுகளை வெட்டி ஒட்டி அனுப்பினால் இங்க இவங்களை நம்பவைக்கலாம். இது முக்கியம்." - என ஜேர்மனியிலிருந்து எழு துகிறான் பாலா என்ற பிரகிருதி, எரிச்ச லுண்டாவது சிவகிரீடத்துக்கு மட்டுமல்ல!
முத்துக்குமாருவும் குஞ்சனும் பாலா வும் இன்றுநாம் அறியாத பாத்திரங்களல்ல. இக்கதையில் உணர்வுகள் மந்தித்துப்போன யாழ்ப்பாண வாழ்வு நிலையும் துல்லியமா கத் தெரிகிறது. டொமினிக் ஜீவா கலைச் செம்மையிலோ சிறுகதை ஒருமைப் பாட் டிலோ கவனம் செலுத்தாமல் இருக்கலாம். ஆனால், அவரது அவதானமும் அவதானித் ததை ஆரவாரமின்றிச் சுறுக்கென வெளி யிடும் திறனும் குறிப்பிடத்தக்கவை.
எமது எழுத்தாளர்களின் சிறுகதை
களைப் படிக்கும்போது, எ மது சில வாழ்க்கை விழுமியங்கள் பரிசீலனைக்குரி யனவாகவும் தோன்றுகின்றன. அவர்கள்
புதிய மாறுதல்களுக்கும்பிரச்சினைகளுக்கும் அனுபவங்களுக்கும் முகங்கொடுக்கும் வித மும், அவற்றை மேலும் ஆழமாகவும் துல் லியமாகவும் நோக்கும் ஆற்றல் அவர்களி டம் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படு வதும் உற்சாகமளிப்பனவாகும்:
மர்த்தி நெறி ன்ற கமே.
விஞர் இராமலிங்கம்பிள்ளை
سے 42!

Page 76
ශිෂුට්Gද්‍රව්‍ය ඊ DĺijblíÍ d
விஞ்ஞானம் மனித வாழ்வின் சகல துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது. விஞ் ஞானம் இன்றேல் மனித வாழ்வு இல்லை என்று சொன்னால் அது தவறல்ல. இத்த கைய விஞ்ஞானத்தின் விந்தைகள் பற்றி யும் அதுதரும் வாழ்க்கைப் பண்பு. மேம் பாடு தாக்கங்கள் பற்றியும் அவ்வப்போது தகவல் சாதனங்களினூடாக செய்திகள் வெளிவந்தவண்ணமுள்ளன.
விஞ்ஞான நுட்பங்கள் பற்றி அறி வியல் சார்ந்த மக்கள் பிரிவினர் மாத்திரம் அறிந்து வைத்திருப்பது முழுமைத்துவம் அல்ல! அதை அனுபவிக்கின்ற சகல பிரிவி னரும் அவரவர் மட்டத்திற்கேற்ப அறிந் திருப்பது அவசியமாகும். அப்போதுதான் விஞ்ஞானத்தின் பயன்பாடு பூரணத்துவம் பெற்று அதன் வளர்ச்சி உந்தப்படும்.
இதனால்தான் சாதாரண மக்களையும் மாணவர்களையும் மையமாகக் கொண்டு எண்ணற்ற பத்திரிகைகள். சஞ்சிகைகள். நூல்கள் உலகின் பல பாகங்களிலுமிருந்து வெளிவந்தவண்ணமுள்ளன. புதுப்புதுச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்படும்போதும் புதுப்புதுச் சாதனைகள் நிலைநாட்டப்படும் போதும் அதுபற்றிய நூல்கள் உடனுக் குடன் வெளிவருகின்றன.
இத்தகைய நூல்கள் தமிழில் தாராள மாக வெளிவருகின்றனவா என்பதே கேள்வி? நிச்சயம் இல்லைதான். அவ்வாறெ

ல கமால்
னில் தமிழ்பேசும் மக்கள் பரப்பையும் மாணவர் சமுதாயத்தையும் விஞ்ஞான விருத்தி எந்தளவு சென்றடைந்துள்ளது என்பதுபற்றி அதிகம் அலச வேண்டிய தில்லை.
இந்த இடத்தில் பிரபல விஞ்ஞானி யான ஐன்ஸ்டினின் கருத்தொன்றைப் பார்ப்பது நல்லது. "நுட்பமான விஞ்ஞான விஷயம் ஒன்றை சாதாரண மக்களுக்குப் புரியும்படியாக எழுதுவது கடினம் என்பதை அம்முயற்சியில் ஈடுபட்ட எவரும் அறிவர். விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முயற்சிகளை யும் முடிவுகளையும் சாதாரண மக்கள் பிரக் ஞையோடும், சாதுர்யமாகவும் அறிந்து அனுபவிக்க ஒரு வாய்ப்பளிக்க வேண்டியது மகத்தான கடமை. குறிப்பிட்ட துறைக ளில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் மாத்திரம் விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறிந்து உபயோகப்படுத்துவது போதாது. ஆராய்ச்சிகளால் அறிந்த விஷயங்களை தங்களுக்குள்ளேயே பரிமாறிக்கொண்டு மக்களிடம் பரப்பாவிட்டால் சாதாரண மக்களுடைய மெய்ஞான உணர்வு மங்கிவிடு வதுடன் ஆத்மீக வாழ்வும், பண்பாடும் குறைந்துவிடும்?" என்கிறார் அவர்.
ஒரு மொழியின் வளம் என்பதும் வளர்ச்சி என்பதும் அந்த மொழியிலே எத்துறை சார்ந்த நூல்களும் தாராளமாக எழுதப்படு வதும் பயிலப்படுவதுமாகும். உலகு தழுவி யுள்ள விஞ்ஞானத்திலேயே தமிழில் நூற்
50 -

Page 77
பஞ்சம் என்றால் அதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
பல்வேறு நாடுகளிலும் இன்று தமிழ் வியாபித்துள்ளது. அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் தமிழ் செய்யப்படுகிறது. இலக்கியம் சார்ந்த நூல்களிலே காணப் படும் குறைந்தபட்சப் பொதுத்தன்மை விஞ்ஞான எழுத்துக்களில் இடம்பெறுவதில் பல சங்கடங்கள் உண்டு.
கலைச் சொற்களை உருவாக்குவதி லும் பயன்படுத்துவதிலும் ஒரு பொது உடன்பாட்டுக்கு வரமுடியாதிருப்பதே முக் கிய பிரச்சினையாகும். அது உருவாக்கப் படும் பிரதேச, பகைப்புல, பண்பாட்டுக் கூறுகளும் கூட வேறுபடுகின்றன. ஏன் இந் தியாவிலிருந்து வெளிவரும் அறிவியல் நூல் களே எமக்குப் பல அசெளகரியங்களை ஏற் படுத்துவதை நாம் அனுபவத்தில் காண் கிறோம்.
எனவே எமது சாமான்ய மனிதர்களின் புரிந்துணர்வுக்கு ஏற்றவகையில் இலகு தமி ழில் தேசிய பண்பாட்டுக் கூறுகள் கொண்டி லங்கும் வண்ணம் விஞ்ஞான இலக்கியங் கள் பல்கிப் பெருகவேண்டியது அவசியமா கும். இன்றேல் நாம் அந்த வகையில் அனா தைகளாகிவிடுவோம்.
எமது சகோதர மொழியாகிய சிங்களத் தில் கூட நிறைய நூல்கள் வெளிவருகின் றன. வார, மாத பத்திரிகை, சஞ்சிகைகள் போதியளவு விஞ்ஞான ரீதியான விடய தானங்களை உள்ளடக்கி வெளிவருகின் றன. தனியே விஞ்ஞான வாரப் பத்திரிகை களும் வெளிவருகின்றன. தமிழிலே எமது நிலைப்பாடு பூச்சியத்தையே சுற்றிக்கொண் டிருக்கிறது.
இதனால் எமது மாணவர் சமுதாயமும் பெருமளவு பாதிக்கப்படுகின்றது என்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்"
மாணவர்கள் பாடசாலையிலே விஞ் ஞானத்தை ஒரு பாடமாகப் பயில்கின்ற னர் என்பது உண்மைதான். வரையறுக்கப் பட்ட ஒரு பாடப்புலத்திலே குறிப்பிட்ட

தொரு திட்டத்தின் கீழ் இந்தக் கற்கை நிகழ்கிறது. இதற்காக அரசு, கல்வி வெளி யீட்டுத் திணைக்களம் மூலமாக விஞ்ஞானப் பாட நூல்களை எழுதி வெளியிடுகின்றது இவற்றுக்கு மேலதிகமாக பரீட்சையை மாத்திரம் குவிமையமாகக்கொண்டு தனி யார்களால் குறுக்குவழி நூல்கள் நிறைய எழுதப்படுகின்றன. உயர்தர வகுப்புகளுக் கூட இன்று தமிழிலே விஞ்ஞான நூல்க ளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை.
படிப்பு. பரீட்சை என்ற வகையில் மாணவர் மத்தியில் அறிமுகமாகும் விஞ் ஞானம் பெரும்பாலும் பரீட்சையின் பின்பு இறக்கிவைக்கப்பட்ட சுமை போன்ற தாகும். பாடத்திட்டங்களை நேரடியாகச் சார்ந்து நிற்காத வாழ்க்கையோடு இயைந்த அன்றாட வாழ்வின் நடைமுறை விஞ்ஞா னம், ஆர்வத்தோடு படித்து இன்புறத்தக்க தாக இலகு நடையில் எழுதப்படுவதே தற் போது எதிர்பார்க்கப்படுவதாகும்.
எதிர்பார்க்கப்படும் இத்தகைய இலகு விஞ்ஞானம் எந்தளவுக்கு எமது தாயகத் தில் எழுதப்படுகின்றன? பிரசுரிக்கப்படுகின் றன என்பதை மதிப்பீடு செய்தல் எமது பலவீனத்தை இன்ம்காண உதவும்.
எமது தேசிய பத்திரிகைகளின் தின. வார இதழ்களில் அவ்வப்போது எழுதப் படும் கட்டுரைகளைத் தவிர்த்தால் குறிப் பிடத்தக்க எந்த முயற்சியும் மேற்கொள் ளப்படுவதில்லையென்றே கூறவேண்டும்.
கடந்த காலங்களில் ஒரு சில விஞ்ஞான சஞ்சிகைகள் தோன்றி, ஒரு சில இதழ்களைப் பிரசவித்து விட்டுவிட்டு தன் பயணத்தை முடித்துக்கொண்டுள்ளன. அம்பு, ஊற்று, செங்கதிர், அறிவொளி போன்றவை தோல் வியைத் தழுவியமைக்கு பல்வேறு காரணங் கள் இருக்கின்றன.
அரிய பெரிய விஷயங்களை எல்லோ ருக்கும் புரியக்கூடியதாக எழுதுவது என் பது எல்லோராலும் கைவரக்கூடியதல்ல, அதற்கு குறிப்பிட்ட விடயதானத்தில் நிறைந்த அறிவும் ஆக்க இலக்கியத் திற
مسسس-'-61

Page 78
னும் சரளமான தமிழ் நடையும் கைவரப் பெறவேண்டும். அப்போதுதான் அந்த எழுத்தின் பயன் வாசகர் மத்தியில் தன் செல்வாக்கைச் செலுத்த முடியும். ஒரு விஞ் ஞான எழுத்தின் வெற்றி தோல்வி இந்த இடத்தில் தான் தங்கியுள்ளது.
டாக்டர் க. இந்திரகுமார் "மண்ணி லிருந்து விண்ணுக்கு" என்ற நூலை எழுதி யுள்ளார். சோவியத் நாட்டின் விண்வெளிச் சாதனைகளை மிகவும் சரளமாக எவரும் படிக்கத்தக்க வகையில் எழுதியு ள் ளார். டாக்டர் அருள் ராமலிங்கம் அவர்களும் விண்வெளி விநோதங்களை நன்கு எழுதிப் பிரபலமான ஒருவர்தான்.
'விந்தைகள் செய்த விஞ்ஞானிகள்" என்ற புத்தகம். இர. சந்திரசேகரன் எழுதி யது. அண்மையில் அதன் இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகளை வழங் கிய பன்னிரண்டு விஞ்ஞானிகளைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு என்ற வகையிலன்றி சுவாரஸ்யமாக தொடர்ந்து படிக்கத் தூண் டும் வகையில் எழுதியுள்ளமை ஆசிரி யரின் வெற்றியாகும். இந் நூல் ஆறாம் ஆண்டு முதலான மாணவர்களுக்கான துணை நூலாக அமைகின்றமையும் இன் னொரு வெற்றியென்றே சொல்லவேண் டும்.
டாக்டர் எம். கே. முருகானந்தன் எழுதிய 'தாயாகப் போகும் உங்களுக்கு", "எய்ட்ஸ்" ஆகிய நூல்சளும் டாக்டர் நந்தியின் நூல் வரிசையும் வைத்திய விஞ் ஞானத்தை மிக அற்புதமாக சாதாரண வாசிப்புள்ளவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நல்ல பணியைச் செய்துள்ளன.
‘பூச்சிகள்" பற்றி எழுதும் அன்ரனி பெர்னாண்டோவும், "கம்பியூட்டர்" பற்றி எழுதும் சித்ரா அருள் ராமலிங்கமும் சிக்கலான (விஷயங்களைக் கூட மிகவும் ஆற்றொழுக்காக எழுதும் வல்லமை வாய்க் கப்பெற்றவர்களே.
இவ்வாறு பார்க்குமிடத்து எம்மிடையே இலகு விஞ்ஞான எழுத்தாக்க கர்த்தாக்கள்

52
இல்லை என்று சொல்லமுடியாது. அத் தகையவர்களுக்கும் அவ்வழியில் எழும் புது ஆர்வலர்களுக்கும் தகுந்த களம் இல் லாத குறையையே இயம்பவேண்டியுள்ளது.
சாதாரண வாசகர்களுக்கும் மாணவர் களுக்கும் விஞ்ஞான மனப்பாங்கையும் விஞ் ஞானபூர்வமாகச் சிந்திக்கும் தன்மையையும் வளர்க்கத் தகுந்த எழுத்தாக்கம் இல்லாத வேளையில், அவர்களோடு சிறுவர்களும் வந்து கைகோர்த்துக்கொள்வதையும் நாம் ம்றந்துவிட முடியாது.
விஞ்ஞானத்தின் வியாபகத்தன்மை காரணமாக தற்போது எமது பாடசாலை களில் நான்காம், ஐந்தாம் ஆண்டு மாண வர்களுக்கும் "ஆரம்ப விஞ்ஞானம்" என்ற பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதா வது ஐந்து முதல் பத்து வயதினரான சிறு வர்களுக்கும் விஞ்ஞானத் துணை நூல்கள் எழுதி வழங்கவேண்டிய நிலை உருவாகி யுள்ளது.
கூட்டு மொத்தமாகப் பார்க்குமிடத்து ஐந்து வயது முதலான மாணவர்களுக்கு துணை நூல்களாகவும், அதற்கு மேற் பட்டவர்களுக்கு இலகு வாசிப்பு நூல் களாகவும், வாழ்க்கையோடு ஒன்று சலந்து விட்ட விஞ்ஞானம். எமது சுதேசிய வாசனையோடு வழங்கப்படவேண்டியது இன்றியமையாததாகும். இவற்றுக்கு அனு சரணையாக விஞ்ஞான பத்திரிகை - சஞ் சிகைகளும் வெளிவரவேண்டும்.
அரச மட்டத்திலும் அரச உதவி அமைப் புக்கள் மூலமாகவும் இத்தகைய நூல்களை வெளியிட அரசியல் தொடர்புடையோரும் தமிழபிமானிகளும் செயற்படவேண்டும். தனியார்துறைப் பிரசுரகர்த்தாக்களும் இதில் கூடிய கவனம் செலுத்துவது நல்லது.
பரீட்சையை மாத்திரமே மையமாகக் கொண்டு குறுக்குவழி நூல்களை வெளியிட் டுப் பணம் பண்ணும் புத்தக வியாபாரி களும். இலகு விஞ்ஞான நூல்களை வெளியிட்டால் நிச்சயம் ஒரு புத்தகச் சந்

Page 79
தையை உருவாக்கி லாபமீட்டலாம் என் பதில் சந்தேகமில்லை.
இத்துறையில் எழுதுவோரை ஊக்கப் படுத்தவும் எழுத்தாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பரிசுத் திட்டங் சளை மேற் கொள்வதன் மூலமும் ஓர் உந்து சக்தியைக் கொடுக்கலாம். தமிழ் வளர்ச்சி மன்றங்கள் தமிழை வளர்ப்பதாசப் பீற்றிக்கொண்டு கவிதை, கதைப் போட்டிகளை மாத்திரம் நடாத்தி வருவதால் தமிழ் ஆரோக் கியமான வளர்ச்சி கண்டுவிடப்போவ தில்லை.
தமிழ்டேசும் மக்களும் தடுக்கமுடியாத விஞ்ஞான வளர்ச்சி என்னும் நீரோட்டத் திலே ஏனைய மொழி பேசும் மக்களோடு
*எழுத்தாளன் தனித்து இ
சமூகப்பிராணி. காலந்தோறும்
போராட்டங்களும் இயக்கங்களு
கொண்டிருக்கின்றன. இவற்றின்
கிறான். இவற்றுக்கு அவன் முச
பாடுகளையும் பிரச்சினைகளையு
திலும் அவற்றுக்கான தீர்வு முடிவி
யிலுமே அவனது இலக்கியப்ப
யிருக்கிறது."

கைகோர்த்துக்கொண்டு நீந்தத் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் ஓர் அறிவியல் பின்னடைவுக்கு தமிழ் பேசும் சமுதாயம் முகம் கொடுக்கவேண்டிவரும்.
தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சரி யான வாசல் திறக்குமானால் அங்கிருந்து விஞ்ஞான இலக்கியப் புத்தகப்பவனி ஆரம் பிக்கும் நாள் இலங்கைத் தமிழ்பேசும் மக் களின் கனவாக இருக்கமாட்டாது. அப் போது விஞ்ஞானக் கற்பனைக் கதைகளும் கூட கருக்கட்டுமென்பதில் சந்தேகமில்லை. விஞ்ஞானப் புலமையும் ஆக்க இலக்கியத் திறமையும் கொண்டோர் மத்தியிலிருந்து ஆர்தர் ஸ்ரீ கிளார்க்குகள் உருவாவதற்கும் அதிக காலதாமதம் ஏற்பட முடியாது.
ம்
ருந்து வாழும் ஒருவன் அல்லன்;
சமுதாயத்தில் முரண்பாடுகளும்,
இடைவிடாது நடைபெற்றுக் மத்தியிலே எழுத்தாளனும் வாழ் ங்கொடுக்கும் விதத்திலும், முரண் ம் அவன் புரிந்துகொள்ளும் விதத் களைத் தெரிந்துகொள்ளும் தகைமை
டைப்பின் வெற்றி தோல்வி தங்கி
- டாக்டர் க. கைலாசபதி

Page 80
திமிழ் மொழி இனிமையானது. தொன்மையுடையது. செம்மையானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இலக்கிய இலக்கணங்களை யுடையது. இவற்றிற்கெல்லாம் மேலாகப் பல நாட்டவரும், பல இனத்தவரும் பல சமயத்தவரும் தமது மொழி என்று உரிமை பாராட்டக் கூடிய மொழியாகவும் அது அமைந்துள்ளது. உலகின் முக்கிய சமயங் களான சைவம், வைஷ்ணவம், பெளத் தம், சமணம், இஸ்லாமியம், கிறிஸ்தவம் ஆகிய பல்வேறு சமய இலக்கியங்களைத் தமிழ் தன்னகத்தே கொண்டுள்ளது. பல் வேறு சமயத்தினர் தமிழ் மொழிக்கு இலக் கணமும் கண்டுள்ளனர்.
பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் செய்யுளாகவே ஒரு காலத்தில் இருந்தன. ஏன்? வசனத்தில் எழுதப்பட்டவைகளை இலக்கியம் என்று கருதாத ஒருகாலமும் இருந்தது.
தமிழிலே உரைநடை எப்போது தோன் றியது? என்பது இரசமான ஆராய்ச்சி யாகும். "பாட்டிடை வைத்த குறிப்பினா லும் பாவின் றெழுந்த கிளவியாலும் பொருளொடு புணராப் பொய் மொழி யானும்." என்ற தொல்காப்பியச் சூத் திரத்தை வைத்துக்கொண்டு, அவ்விலக் கணத்திற்கு அமைவான உரைநடை இலக் கியம் தொல்காப்பியர் காலத்திலேயே
- 5
 

இருந்திருக்கவேண்டும் என்று ஊகித்தாலும் அத்தகைய உரை நடை நூல்கள் நமக் குக் கிட்டவில்லை.
பின்னர் தோன்றிய சிலப்பதிகாரத் திலும் பாரத வெண்பாவிலும், உரை நடை சிறிது வழங்குகின்றது. இந்தக் காரணத்தால் சிலப்பதிகாரம் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங் கப்படுகின்றது. அந் நூலின் உரைபெறு கட்டுரையில்,
* அன்று தொட்டுப் பாண்டிய நாடு மழைவறங் கூர்ந்து வறுமையெய்தி வெப்பு நோயும் குருவும் தொடரக் கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழி யன் நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக் கொன்று களவேள்வி யால் விழவொடு சாந்தி செய்ய நாடு மலிய மழை பெய்து நோயும் துன் பமும் நீங்கியது."
என்ற உரை காணப்படுகின்றது.
பதினோராம் நூற்றாண்டிலும் அதற் குப் பின்னரும் தமிழ்ப் புலவர்கள், பழந் தமிழ் இலக்கிய நூல்களுக்கு உரை எழு தினார்கள். இவ்வுரைகளாற் தமிழ் உரை நடை வெகுவாக உருவாக்கப்பெற்றது. ஆனாலும் பழைய இலக்கியங்களுக்குக் கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப் புத் திரட்டல், அகலங் கூறல், என்ற

Page 81
நான்கு இயல்புகளையும் உரைகாரர் கூறி னார்களேயன்றி, பழைய இலக்கியங் களல்லாத மற்றைய விடயங்களைப் பற் நிய உரைநடை நூல்கள் தோன்றவே யில்லை. இந்த நிலையிற்தான் தமிழ் நாட்டில் புதிய அலை ஒன்று வீசத் தொடங்கியது.
16ஆம் நூற்றாண்டில் வாஸ்கோடி காமாவின் வருகையைத் தொடர்ந்து தமிழகத்திற்குப் போர்த்துக்கீசர் வந்தனர். அவர்களோடு கிறீஸ்தவக் குருமாரும் வந் தனர். தமது மதத்தைப் பரப்புவதற் காக வந்த கத்தோலிக்கக் குருமாருக்கு தமது செபங்களையும் பிரார்த்தனை களையும் தமிழிலே எழுதவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்பட்டது. மலையாளத்திலே கொல்லம் என்ற இடத்தில் அச்சியந்திர சாலையைத் தாபித்து, 16ஆம் நூற்றாண் டின் மத்தியில் அங்கிருந்து பத்துக்கற்பனை கள், பரமண்டல மந்திரம் போன்றவற் றைத் தமிழிற் பிரசுரித்தார்கள்.
இப்படியாக மத கிரந்தங்களைத் தமிழ் உரை நடையில் வெளியிட்ட குரு மார், தமிழை முறையாகக் கற்று தமிழ் உரை நடையில் நூல்களும் எழுதினர். டி நொபிலி என்ற பெயர் கொண்ட தத் துவ போதகர் என்ற இத்தாலியரான யேசுசபைக்குருவும், அவரைத் தொடர்ந்து பத்தாண்டுகளின் பின்னர், வீரமா முனி வர் என்று பெயரிட்டுக் கொண்ட கொன்ஸ் ரன் ரியூஸ் பெஸ்கி என்ற இத்தாலியக் குருவும் தமிழ் உரை நடை நூல்களை எழுதினார்கள்.
1727ல் வீரமாமுனிவர் வேதியர் ஒழுக் கம், அவிவேகபூரண குருகதை என்ற நகைச்சுவை நூல்கள்ை எழுதினார். உரை களாய் இல்லாத, தமிழ் உரை தடை நூல் கள் இவைகள் தாம் என்பது பல தமி ழறிஞர்களின் துணிபு.
தமிழ் நாட்டுக் கதை இது என்றால் ஈழத்தின் நிலை என்ன?
நிச்சயமாக நாமும் தமிழ் நாட்டிற் குச் சோடை போகவில்லை. ஆனால்

உரை நடை நூல்களை எழுதத் தமிழ் நாட்டிற்கு ஒரு வீரமாமுனிவர் இத்தாலி யிலிருந்து வரவேண்டியிருந்தது. அதைப் போலவே அதே காலப் பகுதியில், நமது ஈழநாட்டிலும் தமிழ் உரை நடையை ஆரம்பித்து வைக்க ஒரு கத்தோலிக்கக் குரு வந்தார். ஆனால் அவர் இத்தாலிய ரல்ல. அயல் நாடான இந்தியாவின் கொங்கணத்தைச் சார்ந்தவர்.
யாக்கோமே கொன்சால்வெஸ் என் னும் இயற்பெயர் கொண்ட, சாங்கோ பாங்க சுவாமியார் தமது 29ஆம் வயதில், 1705ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார்.
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யு ளான சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் நம் நாட்டு யாழ்ப் பாணத்தைச் சேர்ந்தவர் என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள். அந்த பகைப் புலத்தில் உரையல்லாத சாதாரண உரை நடையை ஈழத்தில் ஆரம்பித்து வைத்த வர் நிச்சயமாக சாங்கோபாங்க அடிகளார் என்ற கொன்சால்வெஸ் அடிகளார்தான். இலக்கியச் சரிதம் எழுதவந்த ஆசிரியர் கள் பலரும், சைமன் காசிச்செட்டி தொடக்கம் இன்றைய கலாநிதி பொன். பூலோகசிங்கம்வரை, அவரைக் குறிப்பிடா மல் இருப்பது துரதிஷ்டமே!
1705ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த கொன்சால்வெஸ் அடிகளார், 1742ஆம் ஆடி மாதம் 17ஆந் திகதி இறைவனடி சேரும் வரையிலும், கண்டி நாட்டிலும், ஒல்லாந்தர் ஆட்சியில் இருந்த ஈழத்துக் கரை நாடுகளிலும் தம் மதம் பரப்புவதற் காகக் கிராமம் கிராமமாகத் திரிந்தார். தமிழையும் சிங்களத்தையும் முறையாகக் கற்றார். தமிழிலும் சிங்களத்திலும் கிறிஸ்தி யாணி ஆலயம், தேவ அருள் வேத புரா ணம், சத்திய வேதாகம சங்ஷேபம், சுவி சேஷ விரித்துரை, வியாகுல பிரசங்கம், தர்ம உத்தியானம், ஞான உணர்ச்சி, சுகிர்த தர்ப்பணம், சுகிர்த குறள் என் னும் நூல்களை இயற்றினார். அவர் காலத்திலே கொழும்பிலே மட்டும் ஓர் அச்சகம் இருந்தது. ஆனாற் கொழும்பில்
55 -

Page 82
ஒல்லாந்தர் ஆளுகை நடத்தியமையினால் கொன்சால்வெஸ் அடிகளாரால் அங்கு வெளிப்படையாகச் சென்று தம் நூல் களை அச்சேற்ற முடியவில்லை. ஆகவே ஏடெழுதத் தெரிந்தவர்களை அமர்த்திக் கொண்டு தம்நூல்களிற் பல படிகள் எடுத் தார். பின்னால் அவரது நூல்கள் பல அச்சு வாகனம் ஏறின.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் முக்கிய திரு நாட்களிலும் பூசையில் சுவிசேஷம் வாசிக் கப்படுகின்றது. ஆனாலும் சுமார் இரு பது ஆண்டுகளுக்கு முன்னரும் குருவான வர் அவற்றை இலத்தீன் மொழியிலேதான் படிப்பார். அவர் இலத்தீன் மொழியிற் படிப்பதை, நாட்டு மக்கள் தம் மொழி யிலும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற் காக அவர் சுவிசேஷ விரித்துரை என்ற நூலை எழுதினார். கிறீஸ்துநாதர் உயிர்த் தெழுந்த திருநாளன்று வாசிக்கும் சுவி சேஷத்தை அவர் எழுதியிருக்கும் விதம் மிக மிக அலங்காரமானது. அவர் எழுது கிறார்:
*" கருமுகில்களால் மறைக்கப்பட்ட சூரி யக் கதிர் மறுபடியும் தலை விரித்து எழும்புகிறது போலவும், பூமியிலே விழுந்தநவதானியவித்து தழைவிரித்து எழும்புகிறது போலவும், எங்கள் கர்த்தரானயேசுக்கிறீஸ்து பாவம் என் கிற கருமேக மறைவிலும், கல்லறை என்கிற மண்ணிலுமிருந்து நவமாகச் சீவிய பிரதாபம் கொண்டெழுந்தரு ளின மகிமை இன்று கொண்டாடப் படுவது. அதைச் சுவிசேஷகர் எழுதி வைத்த பிரகாரமாவது.
அதைப்போலவே கிறிஸ்து நாதர் யூதக் கொலையாளிகளிடம் பிடிபட முன் னாற் தம் சீஷர்களின் கால்களைக் கழு வினார். பின்னர் அவர்களுடன் உண்டு பருகினார். அச் சம்பவம் நடைபெற்ற பெரிய வியாழன் தினத்தில் வாசிப்பதற்
45H5.
56 ܚ

"சதுரிகை தபசு காலத்தின் மகோற் சவ வியாழக்கிழமையில் வாசிக்கிற சுவிசேஷம் எனத் தலைப்பிட்டு,
பாஸ்காத் திருநாளைக்கு முன் தாம் திரும்பவும் தம்பிதாவினிடத்திற்குப் போகத் தமது நேரம் வந்திருக்கிற தென்று அறிந்து இவ்வுலகத்தை விட் டுப் போக முன் நமக்கு அருளிச் செய்த.
என்று எழுதினார்.
அவருடைய வியாகுல பிரசங்கம் என் னும் நூல் இன்றைக்கும் தமிழ் சிங்களக் கத்தோலிக்க மக்களாற் தபசு காலத்திற் பாராயணம் பண்ணப்படுகின்றது. யேசு நாதர் யூதப்படையினரால் பிடிக்கப்பட்டு அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பெற்று, சிலுவையில் அறையுண்டு மரித்து, அவர் சரீரம் அடக்கப்பட்டது ஈறாகவுள்ள கதையை 9 பகுதிகளாகப் பிரித்து, வர் னாலங்காரங்களுடன் சாங்கோபாங்கமா கச்சொல்கிறது. காலஞ்சென்ற இரசிகமணி கனகசெந்திநாதன் அந்நூலைப் படித்து விட்டு ஈழத்திலெழுந்த முதற் குறுநாவல், அழகான குறுநாவல் இதுதான் என்று என்னிடம் சொன்னார். அந்நூலிலிருந்து கிறீஸ்துநாதர் சிலுவை மரணமடைந் தமையைச் சொல்லும் பகுதியை மட்டும் தருகிறேன்.
* அச்சணத்திலே தானே எங்களாண்ட வருடைய இரு நேத்திரங்கள் ஏறச் சொருகித் திரச் சிாசு கவிழ்தலையாய் விழுந்து, சிகழிகை புளதித்துத் திரு முக மண்டிலம் வெளிறப்பட்டுச் சகல சவுந்தரியமுமொழித்துச் சர்வாங்கத் தினுதிரஞ்சுண்டி சமஸ்தருக்குஞ் சீவ எங்களாண்டவருடைய ש (86 rח60T பிராணனொடுங்கிச் செத்தவர்களைச் சீவிக்கப்பண்ணுகிற ஆண்டவர் மரித்
தாா.

Page 83
கலாநிதி அம்பலஸ்
1. அறிமுகம்
கீழைத் தேசக் கலைகளைக் குறிப்பாக இந்தியக் கலைகள், கலாசாரம் என்ப வற்றை உலகுக்கு அறிமுகம் செய்துவைத் தவரும் இந்து சமயம், பெளத்தம் பற்றிய ஆய்வுகள் செய்து அவற்றை மேற்கு உல குக்கு விளக்கியவரும் தலைசிறந்த மண் ணியலாளரும் ஆகிய ஆனந்த கே. குமார சுவாமி அவர்கள் 1877ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி கொழும்பில் பிறந்த வர். இலங்கையின் அப்போதைய முன்ன ணித் தேசியத் தலைவர்களுள் ஒருவரும் சட்ட நிரூபணசபை அங்கத்தவரும் புகழ் பூத்த ஒரு குடும்பத்தில் தோன்றியவரு மான சேர் முத்துக்குமா ரசுவாமிக்கும், அவ ரது பாரியாரான ஆங்கில மாது திருமதி குமாரசுவாமிக்கும் மைந்தனாகப் பிறந்த ஆனந்தக்குமாரசுவாமி தனது இளம் வயதி லேயே இங்கிலாந்துக்குச் சென்று அங்கு கல்வி பயின்றார். இளமைப்பருவத்திலேயே அவர் இயற்கை விஞ்ஞானத்தில், விசேட மாக மண், கற்பாறை என்பவற்றில் ஆர் வத்தினை வளர்த்து குறிப்பாக தாதுப் பொருட்கள் பற்றி மிகவும் நுணுக்கமாக கற்றுத் தேர்ந்தார். இதன் காரணமாக தனது 25ஆம் வயதிலேயே இலங்கைத் தாதுப் பொருள் மதிப்பீட்டின் பணிப்பாள ராகக் கடமை ஏற்றார். 1903ஆம் ஆண்டு தொடக்கம் 1907ஆம் ஆண்டுவரை இலங் யில் தங்கியிருந்தபோது அவர் தாதுப்
അ=
 

வாணர் சிவராசா
பொருட்களில் மாத்திரமல்லாது கீழைத் தேசக் கலைகள், மரபுகள், கலாசாரம் என் பவற்றிலும் இலங்கையின் கைத்திறக்கைத் தொழில்கள் என்பவற்றிலும், சமூக சீர் திருத்தத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
இலங்கையில் தங்கியிருந்தபோது அவர் மண்ணியல் பற்றிச் செய்த ஆய்வுகளைப் பின்னர் இலண்டன் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்து விஞ்ஞானத்துக்கான கலா நிதிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இலங்கை வாழ்க்கையே அவருக்கு கலை கள், கலாசாரம் பற்றிய ஈடுபாட்டினை யும் ஏற்படுத்தியது.
11 பதவியும் வாழ்வும்
இலண்டன் பல்கலைக் கழகத்தில் அவர் பெற்ற பயிற்சியும் கீழைத்தேசக் கலைகள், கலாசாரம் மீது அவருக்கிருந்த ஈடுபாடும் அவருக்கு 1916இல் அமெரிக்காவிலுள்ள பொஸ்டன் நகரில் அமைந்துள்ள உயர் கலைகளுக்கான நூதனசாலை யில் மிக் உயர்ந்த பதவியினைப் பெற்றுக்கொ டூத் தது.
இவரது வாழ்க்கை மிகவும், ஒழுங்கு படுத்தப்பட்டதாய் இருந்துவந்தது. காலை 5-30 மணி தொடக்கம் 9 மணிக்கு நூதன சாலைக்குப் போகும்வரை வீேட்டில் அவர் வாசித்ததோடு எழுதியும் வந்தார். நூதன சாலைக்குச் சென்றதன் பின்னர் 4.30மணி வரை தனது ஆய்வினைத் தொடர்வார்:
? --

Page 84
வீடு வந்து சிறிது நேரம் பூந்தோட்டத்தில் வேலைசெய்தபின்னர் தனது படிப்பறைக் குச் சென்றால் அங்கு 10 மணிவரை படிப் பதில் ஈடுபடுவார். இவ்வாறு கிரமமாக ஆய்வு செய்ததின் பயனாக அவர் நூற்றுக் கணக்கான கட்டுரைகளையும் நூல்களை 4ம் எழுதமுடிந்தது.
ஆய்வும் பிரசுரங்களும்
மனித அறிவின் மே ம் பாட்டுக்கு இவர் ஆற்றிய பங்களிப்பினை இரண்டா கப் பிரிக்கலாம். ஒன்று: கலைகளின் பல் வேறு பகுதிகளையும் பற்றிய ஆய்வுகள். இரண்டு: பிற்கால சமய சம்பந்தமான மெய்யியல் எழுத்துக்கள். 1908ஆம் ஆண் டில் இவர் பிரசுரித்த "மத்திய கால சிங் களக் கலைகள் "உ என்பதுடனேயே இவரது ஆராய்வுகள் ஆரம்பித்தன. தொடர்ந்து 1914ஆம் ஆண் டி ல் * " (o uu u Gl GT ஒவியங்கள் பற்றிய குறிப்புகள்", "இந்திய சிற்பம் பற்றிய நூறு உதாரணங்கள்”” என் பவற்றை வெளியிட்ட 1916இல் இவரது இன்னொரு ஆய்வான ராஜ் புத்திரர் களின் ஓவியம்’ எனும் நூல் வெளியானது. 1929இல் "இந்தியாவினதும் இந்தோனேசி யாவினதும் கலைகள் பற்றிய வரலாறு" என்ற இவரது ஆய்வு, நூலாகியது. 1934இல் "கலையில் இயற்கை மாறுபாடடைதல்" என்பதனையும், 1935இல் "பெளத்தச் சிலைகளின் மூலதத்துவங்கள்" என்பவற் றையும் வெளியிட்டார்.
இவை எல்லாவற்றைவும் விட 1909ல் இவர் எழுதிய தேசிய சிந்தனைகள் பற் றிய கட்டுரைகள் இன்று விசேட கவனத் தைப் பெற்றுள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் தேசிய அபிலாஷைகள் மீது குமார சுவாமி அனுதாபம் கொண் டிருந்தார் என்பதற்கு இக் கட்டுரைகள் சான்றாகும். ஆனால் 1915இல் இவர் எழுதி வெளியிட்ட சிவ நடனம் என்ற கட்டுரையே இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது. இது பின்னர் நூலாக வெளிவந்தது.
ー 5&

IV இலங்கை வாழ்வும் பணிகளும்
1903ஆம் ஆண்டு தொடக்கம் 1906ஆம் ஆண்டு வரையே இலங்சையில் குமார சுவாமி அவர்கள் வாழ்ந்தபோதும், அவர் இலங்கைக்கும் இலங்கையருக்கும் ஆற்றிய பணிகள் அளப்பரியன. 1903ஆம் ஆண்டு தனது 25வது வயதில் இலங்கை வந்த குமாரசுவாமி முதலில் ஒரு வருட கால மாகத் தனது சொந்தச் செலவிலேயே இலங்கையிலிருந்த தாதுப் பொருட்கள், மண், கற்பாறைகள் பற்றிய ஆய்வில் ஈடு பட்டார். இவரது விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் இங்கிலாந்திலும் இலங்கையி லும் பல அதிகாரிகளின் கவனத்தை ஈர்த் தமையால் தாதுப் பொருட்கள் திணைக் களம் ஒன்றினை இலங்கையில் உருவாக்கி னர். இத் திணைக்களத்தின் இயக்குனராக [bቫ9! வருடங்கள் கு மார சுவா மி கடமையாற்றினார். இவர் 1904இல் புதிய தாதுப் பொருள் ஒன்றினைக் கண்டு பிடித்து அதற்கு தொறியநைற் (thorianite) எனப் பெயரிட்டார். இவர் இப் பதவியை வகித்த காலத்தில் செறின்டிபைற் (Serendibite), G5&š66Avuib (Geiticilite), Lu'L-6ó யற் (Baddeleyite) என்ற வேறு புதிய தாதுப் பொருட்களும் கண்டு பிடிக்கப்பட் டன. இக் குறுகிய காலப் பகுதியில் மண் னியலிலும் தாதுப்பொருட்களிலும் ஏற் பட்ட கண்டு பிடிப்புகளின் பங்களிப்புப் போன்று அடுத்த 50 வருடங்கள் முழுவதி லும் நடந்த பங்களிப்பு ஈடுகொடுக்க முடியவில்லை.
வெளிக்கள ஆய்வுகள், விசாரணைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கிய சிறப்பு மிக்கஇலங்கைத்தாதுப் பொருட்கள் பற்றிய நிர்வாக அறிக்கைகளைத் தவிர குமார சுவாமி அவர்கள் பல்வேறு பிரபலமான சஞ்சிகைகளிலும் ஆய்வுக் கட்டுரைகளையும் கலந்துரையாடல்களையும் வெளியிட்டு வந்தார். இவற்றைவிட சிங்கள சுரங்கப் பதங்கள், இரத்தினக்கற்களின் பெயர்கள் என்பவற்றை உள்ளடக்கிய க  ைல ச்
1. Coomaraswamy A. K. “The new Mineral' Spolia Zeylanica, Vol II, P. 57.
-

Page 85
சொல் அகராதி, இலங்கை மண்ணியல் பற்றிய நூற்பட்டியல் (1907) என்பவற் றையும் வெளியிட்டார். குமாரசுவாமி கண்டுபிடித்த பொருளாதார ரீதியில் முக் கியத்துவம் வாய்ந்த இரத்தினக்கற்கள் பின்வருவன: மைக்கா (Mica), கிறபைற் (Graphite), (5 plai Gub (Corundum : Ruby and Sapphire), ep6ör siv3u nr 6ör (MoonStone), goti iš 57 g (Iron-ore), Grača Lu னவாம். 1906இல் அவர் வரைந்து வெளி யிட்ட பெரும் அளவிலான கண்டி மாவட்ட மண்ணியல் வரைபடமே இலங்கையில் முதன்முதல் வெளிவந்த மண்ணியல் வரை படமாகும்.
குமாரசுவாமி அவர்கள் இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் அவர் தனியே மண்ணியலிலும் தாதுப்பொருட்களிலும் மாத்திரம் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. அவர் இலங்கையரின் தேசிய நலனிலும் அக்கறை கொண்டிருந்ததோடு இலங்கை யில் கலைகள் கலாசாரம் கைத்திறக் கை வினைப் பொருட்கள், பற்றியும் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
1905ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ம் திகதி இலங்கைச் சமூக சீர்திருத்த சங்கம் ஒன்றினை நிறுவி அதன் தலைவராகவும் கடமையாற்றினார். இலங்கை தேசிய 6Ltify Goruh (Ceylon National Review) என்ற தொரு சஞ்சிகையையும் தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணி புரிந்தார். இச்சஞ்சிகையின் முதலாவது இதழ் இலங்கை சமூக சீர்திருத்தச் சங்கத்தின் விஞ்ஞாபனத்தைப் பிரசுரித்தது. இலங் கையரிடையே சமூக பழக்கவழக்கங்களில் சீர்திருத்தங்களை ஆரம்பித்து வைக்கவும் பொருத்தமற்ற ஐரோப்பிய பழக்கவழக் கங்களை, மரபுகளை பொருத்தமற்ற விதத் தில் பின்பற்றுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு அச் சங்கம் ஆரம் பிக்கப்பட்டுள்ளது என அது குறிப்பிட்டது. இச் சங்கத்தினூடாக அவர் தேசியக்கல்வி முறையில் சுதேசிய மொழிகளுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் எனவும் அத னுாடாக உள்ளூர் கலைகள், கைதிறக்கைத்

தொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் எனவும் வற்புறுத்தினார். "இலங்கை தேசிய விமரிசனம்’ என்ற சஞ்சிகையின் முதலாவது இதழ், குமாரசுவாமியின் "கண் டிய கலையின் அர்த்தமும் அது வீழ்ச்சிய டைந்தவாறும்" என்ற கட்டுரையையும் பிரசுரித்தது. இக் கட்டுரை இலங்கையின் மரபு ரீதியான கலைகள், அவற்றின் இயல் புகள், அவை எச் சூழ்நிலையில் எழுந்தன என்பவற்றை எடுத்துக் கூறியது. இவரது இன்னொரு கட்டுரையான 'கிழக்கினை ஆங்கில மயப்படுத்தல்” என்பது ஆங்கி லேயருக்கு மதியழித்த போதிலும் தேசிய கலைகளுக்கு அவர்கள் ஏற்படுத்திய அழிவு களை எடுத்துக் காட்டியது. 1908 இல் வெளிவந்த இவரது நூலான 'மத்திய காலச் சிங்களக் கலை” என்ற நூல் 18 ஆம் நூற்றாண்டில் நிலவிய சிங்களக் கலைகள் கைத்திறக் கைத்தொழில்கள் என்பவற்றின் நிலையை விமர்சித்ததோடு உள்ளூர்க் கலை யின் முழுப் பரிணாமத்தினையும் விளக்குவ தாய் அமைந்தது. இந்நூல் தேசிய உணர் வினை வளர்க்கும் விதத்தில் கலையினை யும் கலைஞர்களையும் கைத்திறத்தொழில் சள், தொழில் வினைஞர்களையும் வளர்க்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தியது. இந்நூலின் பின்னிணைப்பில் கும்பகாரர் அல்லது குயவர்கள் கின்னறயா அல்லது பாய் பின்னுபவர்கள் என்பவர்களையும் அவர்கள் அத்தகைய வேலைகளில் ஈடுப டும்போது பாடும் பாடல்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையில் வாழ்ந்தபோது குமார சுவாமி அவர்கள் இலங்கையில் கலைகள், கைவினைப் பொருட்களைச் சொந்தத்தில் சேகரித்தும் வந்ததோடு நகைகள், உடுதுணி கள், பானைவகைகள், செப்புப் பொருட் களையும் சேகரித்து வந்தார். மேலும், கொழும்பு நூதனசாலைக்குத் தேவையான பொருட்களையும் வாங்கினார். இலங்கை யில் செப்புப் பொருட்கள் என்ற அவரது கைநூல் கொழும்பு நூதனசாலை நூலாக வெளிவந்தது. 1906 இல் கலைகள், கை வினைப் பொருட்களுக்கான கண்காட்சிக் குத் தேவையான கைநூல் ஒன்றினைத்
س--س 9 5

Page 86
தயாரித்ததோடு அக் கண்காட்சிக்கு கை வினைஞர்களை நேரடியாக அழைத்து அவர்களின் தொழில் நுட்பங்களை வெளிக் காட்டச் செய்தார். இக் காலப்பகுதியி லேயே அவர் கலைகளைப் பற்றிய தனது ஆர்வத்தை அகலப்படுத்த ஆரம்பித்து இந்தியாவின் கலைகள், கலாசாரம் என்ப வற்றையும் தனது ஆய்வினுள் கொண்டு வந்தார். 1908 இல் கோப்பன்கேகனில் நடந்த 15 வது சர்வதேச கீழைத் தேச காங்கிரசில் வாதப் பிரதிவாதத்துக்குரிய விடயமான "இந்தியக் கலைகள் மீதான கிரேக்கச் செல்வாக்கு” என்ற ஆய்வுக் கட்டுரையையும் வாசித்தார்.இவ்வாறு இந் தியக் கலைகள் பற்றிய ஒரு விற்பன்ன ராக அவர் உருவாகிவந்த அதேவேளை யில் முழு மனித நாகரீகம் பற்றியும் அவர் கவனம் கொண்டுமிருந்தார்.
இலங்கையில் வாழ்ந்தபோது தேசியக் கல்வி பற்றி ஒரளவு ஆய்வுசெய்த குமார சுவாமி அவர்கள் அப்போது இலங்கையில் தேசிய பல்கலைக்கழகம் ஒன்று இல்லா மையால் இலங்கையின் மொழிகள், இலக் கியம், மரபுகள், வழக்காறுகள் என்ப வற்றை ஆங்கிலக் கல்வி பாராமுகப்படுத் துகின்றது எனக் கண்டித்தார். இந்தியா விலும் இலங்கையிலும் பல்வேறு மொழி கள் பேசுபவர்களிடையேயும் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிய குமாரசுவாமி அவர் கள் தேசிய கலாசாரத்தை தேசிய மொழி களில் கற்கவேண்டியதன் அவசியத்தையும் வற்புறுத்தினார்.
இலங்கையில் வாழ்ந்த போது குமார சுவாமி அவர்கள் இந்து, பெளத்த மதங்களி னால் பெரிதும் கவரப்பட்டார். கிறிஸ்தவ மதத்தினை விட இவ்விரு மதங்களும் முழுமையான மதங்கள் என அவர்கொண் டார். இதன் காரணமாக காலம் செல் லச் செல்ல இம் மதங்களின் புத்தி ஜீவ அம்சங்கள் பற்றி மிகவும் ஈடுபாடு கொள் ளத் தொடங்கினார்.

V - மூடிவுரை
ஆனந்த குமாரசுவாமி அவர்களின் இலங்கை வாழ்வினையும் பணிகளையும் மதிப்பீடு செய்யும்போது அவர் இலங்கை யின் மண், கற்பாறை, தாதுப் பொருட் கள் பற்றிய ஆராய்ச்சிக்கும் சிங்களக்கலை, கலாசாரம், கைத்திறப் பொருட்கள், செப் புப் பொருட்கள், கொழும்பு நூதனசாலை என்பவற்றுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது. அதே வேளையில், இலங்கை வாழ்வே அவருக்கு கீழைத்தேய கலைகள் பற்றிய ஆர்வத்தினை ஏற்படுத்துவதற்கு உதவி யுள்ளமை தெரிகின்றது. இந்து, பெளத்த மதங்கள் பற்றி ஏற்பட்ட ஆர்வத்திற்கும் அவருக்கு இலங்கை வாழ்வே உதவியுள் ளது. இலங்கையில் அவர் வாழ்ந்த காலத் தில் இந்தியாவில் அப்போது வாழ்ந்த ரமண மகரிஷி போன்ற மதகுரு அவருக் குக் கிட்டாது போயிருக்கலாம். ஆனால் அவரது இலங்கை வாழ்வு மதம், சிற்பம், கலை என்பவற்றின் மீது கொண்ட முறை சார்ந்தஈடுபாட்டினையும்வாழ்வுபற்றியமதத் தின் போதனைகளையும் உணரவைத்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மறு புறமாக மிகவும் குறுகிய காலப்பகுதியிலும் அவர்இலங்கையில் சாதித்தவைவியக்கத்தக் கவை. கலாநிதி ஜீ. பீ. மலலசேகர அவர் கள் குறிப்பிட்டதுபோல் அவர் இலங்கை யில் மூன்று வருடங்களே வாழ்ந்ததோடு பின்னர் இருமுறை குறுகியகால விஜயங் களை மேற்கொண்டவராக இருந்தபோதி லும் இலங்கையிலும் அதன் மக்கள் மீதும் ஆழமான பற்றுதல் கொண்டிருந்ததோடு இலங்கையைத் தனது தாய் நாடென்று சொல்வதில் பெருமிதம்கொண்டவர். அதே போன்று அவர் ஒரு இலங்கையரென்று சொல்வதில் மற்றைய இலங்கையர் பெரு மைப்படும்படி அவர் வாழ்வும் ஆய்வுகளும் அமைந்துள்ளன.

Page 87
O)
I
ரீ. பாக்கி
பOட்டுநகர் தந்த முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளார் அவர்கள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள தொண்டு அளப்பரியது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் மேம்பட்டு விளங்க அவர் மேற்கொண்ட நற்பணிகள் என்றென்றும் நன்றியுடன் நினைவுகூரத் தக்கவையாகும். தாம் பிறந்த பொன் னாட்டிற்கு சிறந்த பெயரையும் புகழை யும் பெற்றுத்தந்தது மாத்திரமன்றி, நாற் றிசையும் தமிழ் மணம் கமழ, வளர்ந்து வரும் சமுதாயம் தமிழ் மொழியின்பால் பற்றும் பாசமும் கொள்ள, 'தமிழ் என் றால் இனிமை" என்பதன் அர்த்தத்தை அனைவரும் அறிந்து அதைச் சுவைத்து இன்புற வழிவகுத்த செம்மல் வித்தகர் விபுலானந்த அடிகள் எனச் சொன்னால் அது மிகையாகாது. தமிழுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து அதை அரியாசனத்தில் அமர்த்திய பெரியார்கள் வரிசையில் முன் னணியில் திகழ்பவர் அடிகளார் ஆகும்.
நீரர மகளிர்
பெளர்ணமி இரவு: பூரணச்சந்திரனின் தண்ணொளிப் பொலிவு மட்டுநகர் வாவி நீரில் பிரதிபலிக்கிறது, அதோ ஒர் இன் னிசைநாதம் காற்றுடன் கலந்துவந்து காது களுக்கு இதமூட்டுகிறது. ஆம்! பாடும் மீன் என உலகப் பிரசித்தி பெற்றதும் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளால் 'நீரர

த்தகர்,
ibilTU
யநாயகம்
மகளிர்" என அவரது யாழ் நூலில் வர் ணிக்கப்பட்டு அழியா அமரத்துவம் பெற் றுள்ளதுமான அந்த அற்புத இசை ஆனந் தத்தை அள்ளிவீசுகிறது.
இளவேனிற் காலத்திலே, நிறை மதி நாளாகிய பூரணை நாளிலும் அதற்கு முன் னும் பின்னுமாகிய நாட்களிலும், வானம் களங்கமற்றிருக்கும் வேளையிலே, புளியந் தீவுக் கோட்டைக்கும் கல்லடிக்கும் இடை யில் சிறு தோணியினைச் செலுத்திச் சென்று வாவி நடுவில் அமைதி நிலையில் இருந்து உற்றுக் கேட்டால், நீரினுள் இருந்தெழு கின்ற அற்புதமான இன்னிசை ஒலியானது செவிவழி புகுந்து உள்ளத்தை உருக்கும், இதோ அதுபற்றி விபுலானந்த அடிகளார் தமது யாழ்நூலில் கூறுவதைச் சற்று ப் Lunrri tiu G3 unrub: —
மாசகன்ற மணிவிசும்பில்
வயங்கு நிறை மதியம் மலர்க்கிரண ஒளிபரப்ப
வளருமிள வேனில் வீசுதென்றலொடுங்கூடி
விளையாடல் கண்டு விண்ணகத்தார் மண்ணகத்தில்
விழைவு கொள்ளும் யாமம்.
அஞ்சிறைய புள்ளொலியும்
ஆன்கன்றின் கழுத்தில் அணிமணியின் இன்னொலியும்
அடங்கியபின் நகரார்

Page 88
பஞ்சியைந்த அணைசேரும்
இடையாமப் பொழுதில் பாணனொடும் தோணிமிசைப்
படர்ந்தானோர் புலவன்.
தேனிலவு மலர்ப்பொழிலிற்
சிறைவண்டு துயில செழுங்கரங்கத் தீம்புனலுள்
நந்தினங்கள் துயில மீன் அலவன் செலவின்றி
வெண்ணிலவிற் துயில விளங்குமட்டு நீர்நிலையுள்
எழுந்ததொரு நாதம்.
இத்தகைய அற்புத ஒலியானது வட அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா விலும் ஈழத்து மட்டக்களப்பிலும் அன்றி பிறிதெவ்விடத்தும் கேட்கப்பட்டிலதென அறிஞர்கள் கூறுவர். இலங்கைவரும் மேல் நாட்டார் இந்த இசையைச் செவிமடுப்ப தற்காக மட்டுநகர் வருவதுண்டு. தா ib பல்லாண்டுகாலமாக மேற்கொண்ட சீரிய ஆராய்ச்சியின் பயனாக இசைத்தமிழுக்கு ஈந்த யாழ்நூலில் இந்த அற்புத நாதம் பற்றி அடிகளார் தொடர்ந்து விளக்கு கின்றார்:-
fe என்றபொழுதில்
எழுவர் மடநல்லார் நீருள்ளிருந்தெழுந்து நின்றார்
அர மகளிர்; ஆதலினால் மூப்பறியார்
அந்தீங் குழலொலியும் ஒதிய யாழின் ஒலியும்
என மொழிவார்.
பைம்புனலின் மேற்படர்ந்த
பாசிநிகர் கூந்தலார் அம்பொன்னின் மேனி, அரையின் கீழ் மீன்வடிவம்,
செங்கமலம்போற் கரங்கள்,
திங்கள் மதிமுகத்தில்
பொங்கிய புன்முறுவல்
பூத்தார் புலமையார்.
அரையின்கீழ் மீன்வடிவம் கொண்ட ஏழு நீரர மகளிர் தம் பாடலே uitgb நூலுக்கு தோற்றுவாயாக அமைந்ததென
6 سے

விபுலானந்த அடிகளார் கூறியு ள்ள 7 ர். ஆயிரம் ஆண்டுகளாக மறைந்துகிடந்த கலைச்செல்வத்தை தமிழ் மக்கள் மீண்டும் பெறுதற்கு உதவி புரிகிறது அடிகளாரின் அற்புத ஆராய்ச்சி இசை நூலான யாழ் நூல். எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களை வகுத்து தென்னாட்டுக் கர்நாடக சங்கீ தத்தை முறைப்படுத்திய வேங் க ட ம கி கையாண்ட வீணைக்கருவியே யாழ் எனக் கூறுவர். ஆயிரம் நரம்பு யாழின் கணக் கினைக் கண்டறிந்து அவ் யாழினை மீண் டும் அமைப்பதற்கு வேண்டிய குறிப்புகளை ஐயந்திரிபற எடுத்துரைக்கின்றது அடிக ளாரின் யாழ் நூல். 1947ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐந்தாம் திகதி கரந்தைத் தமிழ்ச் சங்கம் பதிப்பித்த இந்நூல், அடிகளாரின் பதினான்கு ஆண்டுகால அரிய ஆராய்ச்சி யின் பயனேயாகும்.
தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் தமிழ்ப் பேராசிரியர் என்ற பதவியினை முதன்முத லாகப் பெற்ற பெருமை விபுலானந்த அடி களுக்கே உரியதாகும். மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் நடாத்தப்பட்ட தமிழ்ப் பண்டி தர் பரீட்சையில் தேறிய முதலாவது இலங் கையரும் இவரே. அவர் தமது ஆங்கில மொழிப் புலமையாலே தமிழைப் புதுமுறை யில் வளம்படுத்திய கணித மேதை முத் தமிழ் அறிந்த உத்தமப் புலவர் அறிவி யல் நூல்களில் மிக்க ஆராய்ச்சி பெற்ற வர்; வேதாந்தம், சித்தாந்தம் என்ற தத் துவ நூல்களைக் கற்றவர். பிரபுத்த பார தம், வேதாந்த கேசரி, இராமகிருஷ்ண விஜயம் ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியராக வும் கடமையாற்றி ஆஸ்திகத்தை வளர்த்த அறிஞர்.
நாடகத் தமிழ்
இயல், இசை, நாடகம் ஆகிய முத் தமிழோடு மொழிபெயர்ப்பு இலக்கியத்தை யும் வளர்த்த பெரியார் விபுலானந்த அடி களார். ஞான யோகம், கர்மயோகம்,விவே கானந்த ஞானதீபம், நம்மவர் நாட்டுஞான வாழ்க்கை, விவேகானந்தரது ஆங்கிலக் கட் டுரைகள், சொற்பொழிவுகள் ஆகியவை அவர் தமிழில் மொழிபெயர்த்த நூல்களா
2 -

Page 89
கும். அவரது 'மதங்கசூளாமணி" என்னும் நாடகத் தமிழ் நூற்படைப்பை 1926ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கம் வெளியிட்ட போது, தமிழிலே நாடகத் தமிழ் இலக்கண நூல் ஒன்று இல்லை என்ற குறை தீர்க்கப் படலாயிற்று.
ஆங்கிலக் கவிஞர் செகசிற்பியர் இயற்றி யுள்ள நாடகங்களில் அமைந்துள்ள இயல் பையும், வடமொழியிலுள்ள நாடகங்களின் அமைதியையும், சிலப்பதிகாரத்தில் அமைந் துள்ள பண்டைய நாடகத் தமிழ் இயல் பையும் நன்கு ஆராய்ந்து 'மதங்கசூளா மணி" என்னும் சிறந்ததோர் நாடகத் தமிழ் நூலை வெளியிட்டார் அடிகளார். இந் நூலின் உறுப்பியலில் நாடக உறுப்புகள் இவையென ஆராய்ந்துள்ளார் அவர். எடுத் துக்காட்டியலில் செகசிற்பியரது பன்னி ரண்டு நாடகங்களையும் விரிவாகக் குறிப் பிட்டு, சந்தியும் சுவையும் நோக்கி விளக்கி யுள்ளார் வித்தகர் விபுலானந்த அடிகள்.
"நானிலம் யா வு மோர் நா ட க மேடையே" என ஆரம்பித்து கவிஞர் செக சிற்பியர் வர்ணித்துள்ள மானிடப் பருவங் கள் ஏழினையும் அடிகளார் செய்யுள் வடி வில் புதுமெருகுடன் சுவைகுன்றாது கூறு வதைச் சற்றுப் பார்ப்போம்:-
அங்கணுல கனைத்தினையும் ஆடரங்க மெனலாகும் அவனிவாழும் மங்கையரை ஆடவரை நடம்புரியு
மக்களென மதித்தல் வேண்டும்; இங்கிவர்கள் பலகோல மெய்தி நின்ற நாடகத்தினியல்பு கூறில் பொங்குமங்க மேழாகிப் போக்குவர
விருக்கையொ டு பொருந்துமன்றே.
முதுமையுற வுடல்தளர்ந்து முகஞ்சுருங்கி உருக்குலைந்து மூப்பின் தோற்றம் இதுவெனக் கண்டுளம்மெலிய வினை
வழியிற் படிக்கக்கண்ணியைந்து நிற்பக் கதுமெனவே இருமல்வரக் காறளர்ந்து
தள்ளாடிக் கருத்து மாறிக் குதலை மொழிச்சிறுவருரை குலவுகின்ற கிழப்பருவங் கூறினாறே.

ஜூலியஸ் சீசர் என்ற நாடகத்தில், சீச ரின் மனைவியான கல்பூர்ணியா தன் கண வருக்கு நேரவிருக்கும் பெரும் துன்பத்திற்கு அறிகுறியாக கெட்ட கனவொன்று காணு கிறாள். மறுதினம் அதிகாலை சீசரிடம் அக்கனாபற்றிக் கூறி, அன்றையத் தினம் அரச சபைக்குச் செல்ல வேண் டா மெ ன அவனை வேண்டுகிறாள் அப்பெண். ஆனால் அஞ்சாநெஞ்சனும் சுத்த வீரனுமாகிய சீசர் மனைவியின் வேண்டுகோளுக்குச் செ வி சாய்க்க மறுத்துவிடுகிறான். இந்தப் பகுதி அடிகளாரது இனிய தமிழ் நாவினால் நல்ல தோர் கவிதையாக "மதங்கசூளாமணி"யில் அமைந்து விளங்குகின்றது:-
அஞ்சினர்க்குச் சதமரணம் அஞ்சாத
நெஞ்சத்து ஆடவனுக் கொருமரணம் அவனி
மிசைப் பிறந்தோர் துஞ்சுவரென் றறிந்திருந்தும்
சாதலுக்கு நடுங்குந் துன்மதி மூடரைக் கண்டாற் புன்னகை செய்பவன் யான்.
இன்னலும் யானும் பிறந்ததொரு
தினத்தி லறியாய் இளஞ்சிங்கக் குருளைகள் யாம், யான் மூத்தோன் எனது பின்வருவ தின்னலெனப் பகை மன்ன
ரறிவார் பேதுறல் பெண்ணனங்கே யான்
போய்வருதல் வேண்டும்
முத்தமிழ்த்துறையிலும் வித்தகராய் விளங்கிய விபுலானந்த அடிகளார் நாடகத் தின் புனிதத்துவம் பற்றி தமது நூலில் எடுத்துக் கூறியுள்ள பகுதி, தற்கால நாடக நடிகர்களுக்கும் நாடகத்துறையில் சம்பந் தப்பட்டவர்களுக்கும் நிச்சயம் பயன்தரும் பகுதியாகும். அடிகளார் பின்வருமாறு கூறுகிறார்:-
'உயிர்க்குறுதி பயக்கும் மருந்தினை உண்ண விரும்பாத ஒரு மகனுக்கு சர்க் கரையினுள் அம்மருந்தினைப் பொதிந்து வைத்து உதவுகிற அன்புடையாளன் போல உயிர்க்குறுதி பயக்கும் உண்மையினை நவ
53 -

Page 90
ரசங்களுட் செறிந்து வைத்து உதவும் நீர் மையது நாடகம். நாடகக் கவி தன் னையோர் வைத்தியனென அறிதல் வேண் டும். நோயாளியிடத்துப் பொருளினைப் பெறுதல் கருதிப்பொருந்தாப் பண்டத்தை மருந்தெனக் கொடுக்கும் வைத்திய னுளனாயின் அவனால் விளையும் கேட்டுக் கோர் அளவில்லை. காமக்கனலை epl (9 தற்கெண்ணிச் சிற்றின்பச் சரிதைகளை நாடகமாக்கியுதவும் நாடகக் கவிகளால் நாட்டுக்கு விளைகின்ற கேடு, மேற் குறித்த போலி வைத்தியனால் விளை கின்ற கேட்டினைப் பார்க்கிலும் பல்லாயி ரம் மடங்கு பெரியது.” என்று தமது நூலில் உவமை காட்டி நாடகத்தின் தூய்மைத்துவம்பற்றி விளக்குகின்றார் அடி களார்:
இறைபக்தி
அண்ட சராசரங்கள் அனைத்தும் ஆண்டவனின் அடியார்கள் கண்ணிலே இறைவன் திருவுருவங்களாகவே காட்சி தரும். நீலத்திரைக் கடலும், அதைத் தழுவுமாப்போல் அமைந்த நீண்ட வான் வெளிப் பரப்பும், மண்ணும், மலையும் அனைத்துமே அடியார்களுக்கு இறைவ னையே சதா நிவூைட்டிக் கொண்டிருக் இன்றன. விபுலானந்த அடிகளாரும் இறை வன் படைட்புக்கள் அனைத்திலும் இறை வனையே கண்டு இன்புற்றாரென்பதற்கு பின்வரும் பாடல்கள் சான்றாகும்;
மண்ணு நீ, விண்ணு நீ, மலையும் நீ, கடலு நீ எண்ணு நீ, எழுத்து நீ, இரவு நீ, பகலு நீ,
பண்ணு நீ, பரவு நீ, பாட்டு நீ,
தொடரு நீ. அண்ணல் நீ, அமலன் நீ, அருளு நீ பொருளு நீ.
விபுலானந்த அடிகளாரின் பொன் மொழிகள் இன்று அனைவரையும் தம் பால் இழுக்கும் காந்தத்தின் சக்திபோல் தமிழுலகம் எங்கும் வியாபித்துள்ளன. பரம்பொருள் பற்றியும் பகைவனைப் பற்

றியும் அவர் கூறுவதைச் சற்றுப் பாருங் கள்:
'காந்தத்தின் இழுக்கும் சக்தியை நாம் பொறிசனால் உணர முடியாது. நாம் ஒரு காந்தத் துண்டாக இருந்து இன்னொரு பெரிய காந்தத்தால் இழுக் கப்பட்டால் மாத்திரம், அந்த இழுக்கும் சக்தியை உணர நமக்கு விசேட ஞானம் வேண்டியிருக்கிறது. ஆனால் அப்படி ஒரு சக்தி இருப்பது உண்மையேதான். அப்படி நம்முடைய சிறிய அறிவுக்கு எட்டா விட் டாலும், பரம் பொருள் உண்டென்பதும் அதனைப் பூரண சரணாகதி அடைந்தால் மட்டுமே நாம் சேமமுறலாமென்பதும் உண்மையாகும்."
"ஒருவன் உன்மேல் பகை கொண்டா னென்றால், அவனுடன் அன்பு வைத்து அவனுக்கு உண்மையை எடுத்துக்காட்ட வேண்டும். அதிலும் அவன் குற்றத்தை வற்புறுத்தி அவன் மேற் பழி சுமத்தக் கூடாது. உன்னுடைய பொறுமையை யும் பெரிதாகக் காட்டிக் கொள்ள வேண் டாம். மனமார அவனுக்கு உதவிசெய்து அவ்வெண்ணத்தை மாற்று. அவன் பிழை செய்தானென்பது உனக்கு எப்படித் தெரி யும்? ஒரு சொல்லுக்குப் பல காரணங்கள் உண்டு. மற்றொருவன் செய்தது தவறு என்று நிச்சயிக்க எவ்வளவோ விஷயங் களை ஆராய வேண்டும்.'
முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடி களாரின் அரும்பணிகளைப் பாராட்டி 18. 11.1979 அன்று இலங்கை அரசு ஓர் நினை வுத் தபாற் தலையை வெளியிட்டு பெரு மையடைந்தது. அவரது நினைவாக நிறு வப்பட்டு இந்துசமய கலாசார அலுவல் கள் திணைக்களத்தின் தமிழ் கலாசார அலுவல்கள் பிரிவினால் நன்கு நிர்வகிக் சப்பட்டுவரும் மட்டுநகர் விபுலானந்த இசை நடனக் கல்லூரி அன்னாரது முத் தமிழ்ப் பணியை என்றென்றும் பறை சாற்றிக்கொண்டே இருச்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க விபுலானந்தர் நாமம் வளர்க அவர்தம் தமிழ்த் தொண்டு
64 -

Page 91
Az77. ീ
புலவர்மணி அல்ஹாஜ்
முகவுரை
ஈழ நாட்டின் கிழக்குப் பெரும்பாகத் துக்கு மட்டக்களப்பு என்று பெயர். இங்கு வாழ்பவருட் பெரும்பாலார் தமிழ் பேசும் முஸ்லிம்களாவர். இவர்களிடத்திற் தமிழ் வளம் நிறையவுண்டு. தங்கள் உள்ளக் சருத்துக்களைக் கவிதையாகச் சொல்வர். எழுத்து வாசனை அறியாத பெண்பாலா ருங்கூட இத்திறம் படைத்தவராயுள்ள னர். இவர்கள் சொல்லுங் கவிதைகளைக் ‘கவி’ என்றழைப்பர். கவிகள் பெரும் பாலும் அகப்பொருள் தழுவினவாகவே இருக்கும். உவமான உவமேயங்களை நிறையக் காணலாம். இவர்களின் ச விதை களிற் காணும் உள்ளுறைப் பொருள்கள் சங்ககாலப் புலவர்களின் கவிதைகளிற் காண்பன போன்றிருப்பதை அவதானிக் கலாம். அக்கவிகளை யார் பாடினார்? எப்பொழுது பாடினார்? என்று தெரியாது. எந்தச் சந்தர்ப்பத்திற் பாடப்பட்டிருக்கும் என்று மட்டும் கூறலாம். அக்கவிகள் பெரும்பாலும் பேச்சுத் தமிழிலேயே அமைந்துள்ளன. இலக்கண வரம்பிகந்தன வென அவை தள்ளிவிடக் கூடியனவன்று. பொருட் செறிவும் உவமான உவமேயங் களும் அவற்றின் மகத்துவத்தைத் தெரி விக்கின்றன. அவற்றைச் சங்கத் தமிழ் இலக்கியங்களோடு ஒப்புநோக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

இறb0இலி
r
용원)·
%Ž%
2றும்
மு. ஷரிபுத்தீன்
முதற் சந்திப்பு
சொந்த மாமனின் மகளாயினும் பருவ
மடைந்தபின் அவளை அவன் காணவில்லை. தற்செயலாக ஒரு நாள் அவளைச் சந்திக் கின்றான். வீட்டில் யாருமில்லாத சமயம்,
கவிதை பிறக்கிறது.
அன்புக் களஞ்சியமே அழகொழுகுஞ்
சித்திரமே
கற்புக் கணிகலமே உன்னைக் காண
வென்று காத்திருந்தேன்.
மோகப் பொருளே மெய்ப்பொருளே பெட்டகமே-உன் மேனி மினுமினுப்பும் இருதொடையின்
பளபளப்பும்.
கழுத்துப் பொழுபொழுப்பும் கனகதன மதமதப்பும்-என் கண்ணெதிரே மின்னுதடி.
முல்லைச் சிரிப்பும் முகத்தழகும்
கண்ணழகும் வல்லி இடையழகும் என் மனத்தை
விட்டுச் செல்வதெங்கே
காலிவிளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலங்கராம்பிற்கும் ஏற்றதுதான் உன் னெழில்வாப்

Page 92
கொண்டையழகும் கூர்விழுந்த மூக்
கழகும் நெற்றியழகும் என்நெஞ்சை விட்டு - மாறிடுமோ,
என்று அவள் அங்க அழகினைச் சிலா கித்துக் கூறுகின்றான். இக் கவிகள் தலை வன் தலைவியை முன்னிலையில் வைத்து அவளின் அங்சங்களை வர்ணிப்பதாக உள்ளன:
கபிலர் குறிஞ்சிக் கலியில் தலைவி கூற்றாக முதற் சந்திப்பின் போது தலை வன் கூறியவற்றைப் படம்பிடித்துக் காட் டுவதைக் காணுங்கள்:
நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து நுதலும் முகனும் தோளும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ ஐதேய்ந்தன்று பிறையுமன்று மைதீர்ந் தன்று மதியுமன்று வேய் அமன்றன்று மலையுமன்று பூ அமன்றன்று சுனையுமன்று மெல்ல இயலும் மயிலுமன்று சொல்லத்தளரும் கிளியுமன்று என ஆங்கு,
அனையன பலபாராட்டிப் பையென வலைவர் போலச் சோர்பதன் ஒற்றி புலையர் போலப் புன்கண்நோக்கித் தொழலுந் தொழுதான் தொடலும் தொட்டான் காழ்வரை நில்லாக் சடுங்களிறு
அன்னோன் தொழுஉம் தொடூஉம் அவன் தன்மை ஏழைத் தன்மையோ இல்லை தோழி
தலைவன் தனிமையாக வந்தான், என் னைப்பார்த்து நில் என்றான். நின்றேன். என் அருகே வந்தான். என் நெற்றி,முகம் தோள், கண், முதலிய உறுப்புக்களைஒவ் வொன்றாசப் பார்த்தான். தேய்ந்திருக்கி றதே பிறையோ . . . இல்லை நெற்றி தான் என்றான். முழுமதியோ...இல்லை முகம்தான் என்றான். இள மூங்கிலோ. அப்படியானால் மலை வேண்டுமே . இல்லை தோள்கள் தான் என்றான். நீல

மலரோ . . இல்லை கண்கள் தான் என் றான். மயிலோ. இல்லை மங்கைதான் என்றான். கிளியோ.இல்லை பெண் தான் என்றான். இன்னன பேசி வலையர்
கண்ணியில் மானைப் பிடிப்பது போல் என்னை மயக்கினான். கிட்ட வந்தான். தொட்டுப் பார்த்தான். மதங் கொண்ட யானை போல வெறி பிடித்து என்னைக் கட்டியணைத்தான். ஆனால் அவன் கீழ்த் தரமாக நடந்து கொண்டானில்லை, என் பதாம்.
தேமல் முலையும் தேனினிக்கும்
செவ்வுதடும் வாழைத் தொடையும் என்னை
வாட்டுதடி நித்திரையில்
என்பது தலைவன் தலைவியை வியந் துரைத்த கவியொன்று. அவனை நித்தி ரையில் வாட்டுவது தேமல் முலை ஒன்று. தேமல்-பசப்பு அது பருவ மங்கைக்கு இயல்பாக ஏற்படும் நிறமாற்றம். கணவ னுடன் கூடினவளுக்கு அது நீங்கும். அவள் கன்னியானதால் தேமல் படர்ந்திருக்கின் ይDŠ!•
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோற் கொன்கண் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
என்பது வள்ளுவர் கருத்து. விளக்கி னது மெலிவு பார்த்து நெருங்கி வரும் பசப்பு என்பது கருத்து. மேலும் தேனி னிக்கும் செவ்வுதடும் வாட்டுகிறது என் கிறான். முயங்குபவனுக்கு அவளின் உதடு தேன் போல் இனிக்குமாம். வள்ளுவர் சற்று அப்பாற் சென்று,
பாலொடு தேன்கலந் தற்றே
பனிமொழி வாளெயி றுாறிய நீர்.
என்கிறார். இம்மெல்லிய மொழியா ளது பல்லிடத்து ஊறிய நீர்பாலும் தேனும் கலந்த கலவை போன்று இன்னவையென் றறிய முடியாத இன்சுவையுடையதாம். இத்தலைவனின் அனுபவக் குறிப்புக்களை
6 ജ

Page 93
வள்ளுவர் வலியுறுத்து மாற்றை அவதா னிக்க வேண்டும்.
களவு
களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கி றாள் மகள் என்பதை யூகித்துக்கொண்ட தாய் மகளின் மேற் கொண்ட சந்தேகத் தைக் குறித்து,
வட்டமிட்டு வட்டமிட்டு வாசலுக்கு வந்தவற்கு திட்டமொன்று சொல்ல திறம்போதா தென் கிளிக்கு சாயக்கொண்டை கட்டுறதும்
சளிக்க எண்ணெய் பூசுறதும் ஏவி யேவி நடக்கிறதும் இந்த
இளந்தாரிக்கு வாழவென்றோ?
என்று தன்பாட்டிற் பாடுகிறாள். இத னைக் கேட்ட மகள் தனது களவொழுக் கம் தாய்க்குத் தெரிந்து விட்டது. மற்ற வர்களும் தெரிந்து கொள்ளாமலா இருப் பார்கள். தெரிந்து கொள்ளட்டும். தூற் றட்டும். நான் கொண்ட காதலை கை விடப் போவதில்லை, என வைராக்கியம் கொள்கிறாள்.
ஊரார் கெளவை எருவாக
அன்னை சொல்
நீராக நீளுமிந் நோய்.
இக்காம நோயாகிய பயிர் இவ்வூர் மகளிர் தூற்றுதல் எருவாக அது கேட்டு அன்னை வெகுண்டு சொல்லுகிற வெஞ் சொல் நீராக வளருகிறது என இந்தத் தலைவியின் வைராக்கியம் கண்டுதான் வள்ளுவர் இந்தக் கவிதையைக் கூறி 6Grm?
இரவுக் குறி
தலைவனின் ஏமாற்றம்
அட்டுவத்தின் கீழே அவரைக்
கொடியோரம்
கடப்பெடுத்து வைத்திருப்பேன்
கட்டாயம் வாங்கமச்சான்.
= 67

என்று குறியிடம் கூறினாள் தலைவி. அட்டுவம் என்பது நெல் சேமித்து வைக்கு மிடம். சனசஞ்சாரமற்ற இடம். களவுக் காதலருக்குச் சாதாரணவழி பொருந்தாது. மற்றவர்கள் அறியவொண்ணாத வேறு வழிதான் காணுவர். தலைவன் குறித்த நேரத்துக்குக் குறியிடத்துக்கு வந்து தனது வருகையைத் தெரியப்படுத்தினான். அன்று எதிர்பாராத வகையில் வீட்டுக்கு விருந்தி னர் வந்துவிட்டனர். வெகு நேரமாகியும் அவர்கள் தூக்கங் கொள்ளவில்லை. தலை வன் வந்திருக்கிறான் என்றறிந்த தலைவி அந்தப்பக்கமாக வந்து,
கோடியாலே வந்து கொக் காட்டே
கொள்ளாதே ஊடு நிறைஞ்ச சனம் உம்மாவும்
தானிருக்கா
என்று பாடிவிட்டுச் சென்றுவிட்டாள். தலைவனுக்கு ஏமாற்றம். திரும்பிப்போய் விட்டான். கோடி என்பது வீட்டின் பின் புறம். கொக்காட்டை - தொந்தரவு.
கலித்தொகைக் கவியொன்று இதே
சம்பவத்தை ஓரளவு ஒத்திருப்பதை அவ தானியுங்கள்.
...அணிமலை நல் நாட ஏறு இரங்கு இருள் இடை இரவினிற் பதம் பெறான் மாறினென் எனக்கூறி மனங்கொள்ளும் தான் என்ப கூடுதல் வேட்கையான் குறிபார்த்துக் குரல் நொச்சிப் பாடு ஒர்க்கும் செவியொடு
பைதலேன் போன் ஆக அருஞ்செலவு ஆர் இடை அருளிவந்து பெறாஅன் வருந்தினென் என பலவாய்
விடுஉம் தாள் என்ப நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு தன் மாட்டுப் பலகுடும் மனத்தோடு
பைதலேன் யான் ஆக கனை பெயல் நடுநாள் யான்
கண்பாற் குறிபெறாஅன்

Page 94
வருந்தினென் என பல வாய் விடூஉம்
தான்எனத் துணிநசை வேட்கையான் மிசைபாடும் புள்ளின்தன்
அளிநசைஇ ஆர்வுற்ற அன்பினேன்
யான்ஆக
என ஆங்கு
கலந்த நோய் கைம்மிக் கண்படா
என்வயின் புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே
வெல்குவை
இலங்குதாள் அருவியொடு
அணி கொண்ட நின் மலைச் சிலம்பு போற் கூறுவ கூறும் இலங்கு ஓர் எல்வளை இவளுடை
நோயே.
தலைவன், நள்ளிரவு ஊர் காவல், நாய் காவல், தாய்காவல் எல்லாம் தாண் டிக் குறியிடம் வந்துவிட்டான். தன் வர வைத் தலைவிக்குத் தெரிவிக்க முன் ஏற் பாட்டின் படி நொச்சி மலரைப் போடுகின் றான். காதலி வரவில்லை. ஏன்? சற்றுமுன் காற்றில் அசைந்து விழுந்த மலர் ஒலி கேட்டு வந்து பார்த்துவிட்டுப் போய்விட் டாள். அதனால் வரவில்லை. அவன் ஏமாந்து திரும்பிச் செல்கிறான்.
இவ்விரு தலைவர்களும் குறியிடஞ் சேர்ந்தும், காரணங்கள் வெவ்வேறாயிருப் பினும் தங்கள் அபிலாஷை நிறைவேறா மல் ஏமாந்து திரும்பிச் செல்கின்றனரென் பது ஒப்பு நோக்கற் பாலது.
தனது காதலனை, 'சுட்ட கட்டை போலக் கன்னங் கரேலென்று காணப்படும் ஒருவனையா காதலிக்கிறாய்" எனப் பழித் துக் கூறிய தோழியைச் சினந்த தலைவி,
கறுக்காப் பழம்போலக் கருங்காலிச்
சிமிழ் போல அலையடித்த மணல்போல என்ற
அழகுதுரை மேனி நிறம்
என்று கூறுகிறாள். கறுக் சாப் பழம்
இனிக் கறுக்க இடமில்லாத கறுப்பு. கருங் காலிச் சிமிழும் அதுபோன்ற கறுப்புத்தான்.
- 6

அலையடித்த மணலும் கறுப்பேதான். ஆனால் இவையெல்லாம் ஒருவித பிரகாசம் பொருந்திய கறுப்பு, அதுபோல என் காதல ரும் கறுப்பால் அழகரடி. அழகொழுகுங் கறுப்பு. நீ சொன்னது போலச் சுட்ட கட்டைபோன்ற கறுப்பல்ல.
இராமனின் பேரழகை வர்ணித்த கம்பர்,
வெய்யோ னொளி தன்மேனியின் விரி சோதியில் மறைய பொய்யோ வெனு மிடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மர கதமோ மறி கடலே
மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோ
ரழியா வழ குடையான்
என்று கூறுகின்றார். இராமனின் மேனி யின் விரிசோதியில் வெய்யோனின் ஒளி மறைகிறதாம். இராமனின் கரியமேனி விரி சோதியுடையதாம். மையோ, மரகதமோ, மழைமுகிலோ, மறிகடலோ என்பதற்கும் கறுக்காப்பழம், கருங்காலிச் சிமிழ், அலை யடித்த மணல் என்பதற்கும் ஒப்புமை இருப்பதை அவதானிக்கலாம்.
வரைவு கடாவுதல்
தோழி, வரைந்து கொள்ளத் தாமதஞ் செய்யும் தலைவனைச் சந்திக்கின்றாள்.
ஊரார் பழிப்பார் உங்கட உறவு
வெளிப்பட்டு தெண்டால் பூத்த மரம் காய்க்கு மென்று
புரியாதோ மன்னவர்க்கு என்று கேட்கிறாள்.
உங்கள் கள்ளத் தொடர்பால் அவள் கருப்பவதியாய் விடலாம் அப்பொழுது உங் கள் உறவு வெளிப்படும். ஊர் உன்னைத் தூற்றும். அதற்கு அவள் அஞ்சுகிறாள். ஆகையால் இன்னும் களவொழுக்கம் கூடாது. விரைந்து அவளை மணந்துகொள் என வற்புறுத்துகிறாள்.
கபிலர் தரும் குறிஞ்சிக்கலிக் கவிதை யொன்றைக் காண்க,

Page 95
தோழி, தலைவனை விளித்துத் 4‘தலைவி காதல் நோயால் வருந்துகின் றாள். ஆனால் அவளின் வருத்தத்தைப் பிறரறிந்தால் உன்னையல்லவா பழித்துப் பேசுவார்கள். அவ்வாறு பிறர் பழித்தலை அவளாற் பொறுக்க முடியாது. அதனை யெண்ணித் தனது துயரை வெளியே காட் டிக் கொள்ளாது தனக்குள்ளே அடக்கிக் கொள்கிறாள். ஆகவே இனியுங் காலங் கடத்தாதே விரைவில் மணம் முடிப்பாய்” என்று வற்புறுத்துவதாக அமைகிறது அந் தக் கவி.
அளை அரும் பண்பினாள் நின்
தீமை காத்தவள் அருந்துயர் ஆர் அஞர் நீர்க்கும் மருந்து ஆகிச் செல்கம்
பெரும நாம் விரைந்தே.
இரு தோழிகளும், விரைந்து மணந்து கொள்ளும்படி வற்புறுத்துகின்றனர். ஆனால் முன்னையவள் பூத்த மரம் காய்க்கு மென அச்சுறுத் தி மேற் செல்வதையும் அவதானிக்கலாம்.
பொருள்வயிற் பிரிவு
பொருள் வயிற் பிரியத் தலைப்படு கிறான் தலைவன். தலைவியிடம் விடை கேட்கின்றான். அவள்,
போகட்டோ என்று என்ர
பொற்கொடியார் கேட்கின்றார் போவென்று சொல்ல
பொருந்துதில்லை யென்மனசு.
என்கிறாள். இதனை வள்ளுவர் தனது மொழியில்,
செல்லாமை யுண்டே லெனக்குரை
மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்குரை.
என்று கூறுகின்றார்.
பிரியமாட்டேன் என்று கூறுவதானாற் கூறு. பிரிவேன், விரைந்து வருவேன் என் பதை நீ வரும்போது உயிரோடிருப்பார் களே அவர்களிடம் கூறு என்கிறார்.
ஒப்பு நோக்குங்கள்.

பிரிவுத் துயர்
பொருள்வயிற் பிரிந்தான் தலைவன், தலைவியை தனிமை வாட்டுகிறது. எந் நேரமும் அவன் நினைவே தான். நினைந்து நினைந்து தூக்கங் கொள்ளாமற் தவிக் கிறாள். தோழி அவளைத் தேற்றிப் பார்க் கிறாள்.
போன மச்சான் வந்திடுவார்
பொங்காதே என்று சொன்னார் கேட்கிறதா இந்தக் கிளிமொழியாள்
கண்னிரண்டும் இந்தவிதம் தூங்காமல்
எத்தனைநாள் முளிச்சிருப்பாப் வாறவரை ஆதரிக்க
வலமத்துப் போவாயேகா.
என்று சொல்லியும் அவள் ஆறுவதா யில்லை. கண்கள் சிவந்துவிட்டன. முகம் சோர்ந்து போயிற்று.
ஐந்தினை யறுபதுக் கவிதையொன்று காண்க.
பொன்னிணர் வேங்கைப் புனஞ்சூழ்
மலைநாடன் மின்னி னனைய வேலேந்தி யிரவினில் இன்னே வருங்கண்டாய் தோழியிடை யாமத்து என்னை இமைபொருமாறு.
தோழியே, நமது தலைவன் பொன் G u mr Gär so பூங்கொத்துக்களையுடைய வேங்கை மரங்கள் நிறைந்த மலைதாட்டை யுடையவன். அவன் மின்னின் அனைய வேலேந்தி இருட்டிலே இப்பொழுது வந்து கொண்டிருப்பான். இந்த நள்ளிரவிலே எனது கண் இமைகள் ஒன்றோடொன்று எப்படித்தான் பொருந்தும். அவனை நினைந்து என் கண்கள் உறங்க மறுக்கின் றன என்று தலைவி கூறுகின்றாள். முதற் கவிதையில் தோழி தலைவியின் தூக்கமின் மையையும் பிந்தியதில் தலைவி தனது தூக்கமின்மையையும் கூறுகின்றனர்.
வாராக்காற் துஞ்சா வரிற்துஞ்சா
ஆயிடை ஆர் அஞர் உற்றன கண்.
என்கிறார் வள்ளுவர்.

Page 96
நீயும் ஆறியிருக்க வேண்டும், a 6i கண்களும் துயில்கொள்ள வேண்டும் என்ற தோழிக்கு, அவர் வராதபோது அவர் வரவு பார்த்து என் கண்கள் துயில்கொள்ளா திருக்கின்றன. அவர் வந்தபோதும் அவர் பிரிவஞ்சித் துயில்கொள்ளா திருக்கின்றன. ஆதலால் இருவழியும் என் கண்கள் பொறுத் தற்கரிய துன்பத்தை அனுபவிக்கின்றன என்று கூறுகின்றாள்.
தலைவன் பிரிந்து சென்றபின் கழிந்த காலத்தைத் தலைவி சணித்துப் பார்க்கின் றாள்.
அஞ்சு திங்கள் அஞ்சுவெள்ளி
ஐயாறு முப்பதுநாள் மறுபிறையுங் கண்டுவிட்டேன் அவர்
மறுமொழியைக் காணவில்லை
முஸ்லிம் பெண்கள் கழிந்த காலத்தைக் கணக்கிடும் முறையொன்று இது ஒரு பிறைகண்டு மறுபிறை காண்பதற்கிடையில் ஒரு மாதம் என்று கணக்கிடுவார்கள். அவர்தான் வரவில்லை, கடிதம் (மறு மொழி) ஒன்றாவது வரவில்லையே என்று ஏங்குகிறாள். சங்க காலப் பெண்கள் விர லொற்றிக் சணிப்பார்கள் என்பதை, வாளற்றுப் புற்கென்ற கண்ணும்
அவர் சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்.
என்ற வள்ளுவர் கூற்றிலிருந்து தெரிந்து கொள்கின்றோம். அவர் நம்மைப் பிரிந்து போய் நாட்கள் சுவரின் கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுத லான் என் விரல்கள் தேய்ந்தன. அது வன்றி, அவர் வரும் வழிபார்த்து என் கண் களும் ஒளியிழந்து புல்லியவாயின. இவ் வாறாயும் அவர் வரவு உண்டாகவில்லை என்பதாம். கழிந்த நாட்களை எண்ணும் இரு தலைவியரின் ஒருமைப்பாடும் ஏக்க மும் இங்கு நோக்கத் தக்கன.
அவர் வருவேன் என்று சொல்லிச் சென்ற கார்காலம் வந்துவிட்டது. மழை யும் கூதலும் வந்தன. அவர்தான் வர வில்லை. தலைவிக்குக் கோபங் கோபமாய் வருகிறது:

இந்த மழைக்கும் ஈனே வாற
கூதலுக்கும் சொந்தப் புருஷனென்றால்
சுணங்குவாரோ முன்மாரியில்
என்று தோழியிடம் கூறுகிறாள். சொந் தப் புருஷனென்றால் என்பதில் அவளின் மனவேதனை எத்துணைத்து என்பது புல னாகின்றது.
தலைவனின் பிரிவால் தலைவி துன்பம் மிகவானாள். வானமும் இவளுக்கா க இரங்கி மழை தொடங்கிக் கார்காலத்தை அறிவித்தது. இதனைத் தலைவன் அறிந் தும் வராதிருக்கிறான் என்பதை,
சென்ற நம் காதலர் சேணிகந் தாரென் றெண்ணி ஒன்றிய நோயொடு இடும்பை பலகூர வென்றி முரசின் இரங்கி எழில் வானம் நின்றும் இரங்கும் இவட்கு.
என்ற கார்நாற்பது கவிதை குறிப்பிடுகின் றது. இங்கு அகநாநூற்றுக் கவிதையொன் றையும் நோக்குவோம்.
கடிதுவந்து இறுத்த கண்இல் வாடை நெடிது வந்தனை என நில்லாது ஏங்கிப் பல புலந்து உறையும் துணையில்
வாழ்க்கை நம்வலத்து அன்மைகூறி அவர்நிலை அறியுகம் ஆயின் நன்றுமன் தில்ல பணிவார் கண்ணேம் ஆகி இனி அது நமக்கே எவ்வம் ஆகின்று அனைத்தால் தோழிநம் தொல்வினைப் u au Gav.
என்பதில் இரக்கமற்ற வாடையும் விரை வில் வந்து நிலைபெற்றது. அது இங்கு நில்லாது பெயர்ந்து நம் தலைவரிடத்திலே சென்று, நீநெடுங்காலம் பிரிந்து வந்திருக் கின்றனை என்று சொல்லாதோ. என்று தொடர்ந்து தலைவி சொல்வதில் "கண் இல் வாடை என்பதையும் சொந்தப் புரு ஷனென்றால்" என அந்தத் தலைவி சொல் வதையும் ஒப்புநோக்குதல் வேண்டும்.
-

Page 97
கூரையிலே நின்று கூவுகின்ற
சேவலரே நான் தனியே இருக்கேனென்று
நாவெடுத்துச் சொல்லிடுங்கோ என்று தலைவி சேவலைத் தன் தலைவனி டம் தூதனுப்புகிறாள். இதனையும்.
தெளிகயம் மலர் மேலுறை தேவியின் ஒளியுஞ் சாயலு மொப்புமை யில்லவள் களிகொள் காமத்திற் கையற
வெய்தித் தன் கிளியைத் தூதுவிட் டாள்இளந்
தென்பவே. எனத் திருத்தக்கதேவர் கூறு வ தன் படி குணமாலை கிளியைச் சீவகனிடம் தூது விட்டதையும் ஒப்புநோக்குவோம்.
இரவிலே வீசும் இளங்காற்றும்
சந்திரனும் அரவாத வாள் போல அறக்கிறதே
என்மைைச எனத் தன் விரகதாபத்தைக் கூறும் தலைவி கூற்றையும், நெய்தற்கலியில் புலவர் நல்லந்துவனார்,
மாலைநீ உனங்கொண்டு அகன்றவர்
துணைதாராப் பொழுதின்கண் வெள்ளமான் நிறம்நோக்கிக் கணை
தொடுக்கும் கொடியான்போல் அல்லற்பட் டிருந்தாரை அயர்ப்பிய
வந்தாயோ
'உள்ளூர் மொழிகளில் பயிற்சி
போர்த்துக்கேயம் ஆகிய இரு மொழிக மொழியை எடுத்துக் கூறாது விடுதல் முன வளவு அவசியமோ அவ்வாறே வடபகுதிக நான் இங்கு குறிப்பிடுவது தமிழ் மொழிை போர்த்துக்கேய மொழியின் கலப்பை இதி உட்படப் புத்தளம் தொடங்கி மட்டக்கள் மக்களின் சொந்த மொழி இதுவேயாகும் தமிழ் மொழியையும் சம அந்தஸ்துடன் வ அவர்கள் ஏற்றுக்கொள்வீர்களென நம்புகி - தேசாதிபதி பிெ
அனுப்பிய அறி

களை மட்டும் குறிப்பிட்டு இன்னும் ஒரு மறயன்று. தென்பகுதிகளிலே சிங்களம் எவ் களில் இம் மொழிப்பயிற்சி தேவையாகும்.
ற் காணலாம். புத்தளமும் மட்டக்களப்பும் ாப்புவரை வடக்கேயுள்ள பகுதியில் வாழும்
குத்துள்ளமையைக் கனம்பொருந்திய பிரபு
றேன்."
க்கையொன்றிலிருந்து எடுக்கப்பட்டது.
எனக்கூறும் த  ைலவி கூற்றையும் ஒப்பு நோக்குவோம். அவள், "மாலையில் வீசும் இளங்காற்றும், சந்திரிகையும் அரவாத(தீட் டாத) வாள் அறுப்புப்போலத் துன்பஞ் செய்கின்றன" என்கிறாள். இவளோ, "மாலையே,எனக்குத் துணையாளுமில்லை. என் துணைவர் பிரிந்திருக்கிறார். இந் நேரத்தில் என்மீது பாண ம் தொடுக்க லாமா? துயரத்தில் ஆழ்த்தலாமா? வெள் ளத்தில் அகப்பட்டுக் கரையேறமுடியாமல் தத்தளிக்கும் மான்போல இருக்கின்றேனே. அந்த மான்மீது அம்புவிடும் வேடன்போல வருகின்றாயே" என்கிறாள்.
மாலை மலரும் இவ்விரகநோய் படுத் தும் துன்பத்தினை இரு தலைவிகள் வாயி லாகவும் கேட்கிறோம். எப்படி இந்த அழ கிய ஒருமைப்பாடு?
முடிவுரை
இவ்வாறு ஏடறியா இலக்கிய மா ன மட்டக்களப்பு நாட்டுக் கவிகள் சங்ககாலப் புலவர்களின் அகப்பொருட் கவிகளோடு துறைகள், கருத்துக்கள், உவமானங்கள் முதலிய அம்சங்களில் ஒருபடி ஒத்திருப்ப தையும், எழுத்துவாசனையறியாத அம் மக் களின் இயல்பான கவித்திறனையும் நினை யுங்கால் இலக்கிய ஆய்வாளருக்கு அவை
ஒரு சிறந்த விருந்தாக அமையும் என்று கூறலாம்.
பெறுவதுபற்றிப் பேசுமிடத்துச் சிங்களம்,
யயே. எல்லா மாகாணங்களிலும் வழங்கும்
. இந்நிலையில், சிங்கள மொழிக்கொப்ப
றளன்றிக் குடியேற்றநாட்டுக் காரியதரிசிக்கு
appa

Page 98
மயிலங்கூடல் - 凸
இலங்கைத் திருநாட்டின் கண்களெ னத் தமிழும் சிங்களமும் விளங்குகின்றன. இந்த இரு மொழிகளும் இன்று எமது நாட்டின் உத்தியோக மொழிகள். தமிழ் சிங்கள மக்களிடையே கலை கலாசாரத் தொடர்புகள் இருந்து வருவதை வரலாறு கூறும். அதுபோன்று தமிழ் சிங்களமொழி இலக்கியங்கள் என்பவற்றி டையே யும் நெருங்கிய தொடர்புகள் உள. இத் தொடர்புகள் நீண்டகாலமாக இருந்து வரு வதை இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின் நறன. இலக்கிய வரலாறுகளும் அவற்றை உறுதிப்படுத்துகின்றன. சிங்கள இலக்கியங் களிலே தமிழின் செல்வாக்கு செறிந்திருக் கிறதை நாம் காணலாம். இலக்கியப் பாடல் களிலே தமிழ்ச் சொற்கள் பல இடம்பெற் றிருக்கின்றன. சிங்கள வைத்தியத்துறையில் திப்பிலி, சாதிலிங்கம், சிந்தூரம், நீர்முள்ளி, கொத்தமல்லி போன்ற ஏராளமான தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்த இடங்களின் பெயர்கள், அவர் கள் வழிபட்ட கோவில்கள் என்பன பற் றிய செய்திகளை அறியவும் சிங்கள இலக் கியங்கள் துணைசெய்வனவாக விளங்கு கின்றன. திருக்குறள், umãsg5Lmo, மூதுரை, நீதிவெண்பா, நாலடியார், சிலப் பதிகாரம் போன்ற தமிழ் இலக்கியங்களின் கருத்துக்களைச் சில பிரதிபலிக்கின்றன. தமிழிலுள்ள மணிமேகலை (தேரவாத) புத்தசமயக் கருத்துக்களை முழுதாக விப
- 7
 

கனகரத்தினம்
ரிக்கின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி என்பனவும் அவற்றின் கதை களும் புத்தமதத்தைத் தழுவிய சிங்கள மக் கள் மத்தியில் பிரபல்யமாக விளங்குகின் றன. சிலப்பதிகாரக் காப்பியத் தலைவி கண்ணகி "பத்தினி தெய்யோ"வாகப் பரவி வழிபடப்படுகிறாள். அதுமட்டுமன்றி, பத் தினி தெய்யோ பற்றி சிங்களத்தில் எழுந்த நூல்களோ பல. அவை, பன்திஸ்கோள் முறை என அழைக்கப்படுகின்றன. இது பத்தினி வழிபாடு பற்றியுள்ள 35 நூல்க ளைச் சுட்டுவதே "பன்திஸ்கோள்முறை"
unt g5 lb.
இவ்வாறு இலக்கியங்க ளி  ைட யே காணும் உறவிற்குத் தமிழ் சிங்கள மொழி சளுக்கிடையில் இருந்து வந்த மொழித் தொடர்பும் ஒரு காரணம். (?c5 G): crtté). களுக்கும் "எலு"மொழியின் தொடர்பு இருந் தமையை மொழியாய்வாளர் விளக்குகின் றனர். இலங்கையின் ஆதிவாசிகள் நாக ரின் மொழியும் "எலு" ஆகும். சிங்க + எலு அல்லது சிங்க +ஈல என்பதே சிங்களவர் என்றும் தெ + எலு > தெமலு > தமிழர் என்றும் ஆகியிருக்கவேண் டு மென்ற ஆராய்வு இதற்குப் பொருத்தமாக இருக்கி றது. "மகததேசத்திலிருந்து புத்த மதத்தை இலங்கைக்குக் கொண்டுவந்த புத்த சமய பிரசாரக் குழுவினர் ஆரியக் கலப்புப் பிரா கிருத மொழியை அறிமுகஞ் செய்தனர், அவர்கள் இலங்கையில் வாழ்ந்துகொண்டி

Page 99
ருந்த நாகர்களின் "எலு" மொழியை சிங்க எலு அல்லது சிங்கள மொழியாக LonrÁbgó னர். இந்தக் கலப்பு மொழியாகிய சிங்கள மொழி வடஇந்திய திராவிட மொழியின தும் ஆரிய மொழிக் கலப்பாகிய பிராகிருத மொழியினதும் பொது அமிசங்களைக் கொண்டதாக விளங்குகிறது" எனச் சிங்கள அறிஞராகிய முதலியார் டபிள்யூ. எவ், குணவர்த்தன அவர்கள் குறிப்பிட்டுள்ள தும் ஈண்டு மனங்கொள்ளத்தக்கதாகும்.
பழைய சிங்கள அரிச்சவடி எலுஹோடிய" (ee இலக்கிக) என்றே அழைக்கப் பட்டது. பழைய தமிழ் அரிச்சுவடி, "சுவடி" என்று அழைக்கப்பட்டது. தமிழ் அரிச்சுவடி எழுத்துக்கள் மிகவும் பழைமையானவைசமஸ்கிருத அரிச்சுவடியிலும்பார்க்கப் பழை மையானவை. எலுமொழியின் திருத்தம் பெற்ற அரிச்சுவடியைச் சமஸ்கிருதம் கொண் டிருக்கும் வேளையில் தமிழ் மொழி தூய அல்லது குறைந்தளவு திருத்தம் பெற்ற ‘எலு அரிச்சுவடியைக் கொண்டு விளங்கு கிறது. ஆதி சிங்கள வடிவதிலைக்கு (கி. பி. 500 - கி. பி. 1100) பின்னரும் பாளி, சமஸ் கிருதம் என்பவற்றின் செல்வாக்கைப் பெற்ற சிங்கள மொழி தமிழ், மலையாளம் என்பவற்றின் செல்வாக்கையும் பெற்றது. இலக்கியங்களிற் காணப்படும் உறவிற்கும் இத்தகைய செல்வாக்கும் பிரதான இடத் தைப் பெறுகிறது.
சிங்கள தமிழ் மக்களிடையே சமய கலாசாரங்களின் அடிப்படையிலும ஒற்று மைகள் காணப்படுகின்றன. மாதந்தோறும் வரும் பூரணை தினம், வைகாசி விசாகம், வெசாக் தினம், வருடந்தோறும் வரும் புத்தாண்டு என்பனவெல்லாம் இந் து பெளத்த மதத்தவர்களின் புனித தினங்கள்; புண்ணிய தினங்கள்; அன்றியும் அவை சமய கலாசாரங்களையும் ஒற்றுமையையும் பிரதி பலிக்கின்றன. இவ்வித ஒற்றுமை தமிழ் சிங்கள இலக்கியங்களிலும் செறிந்து இலக் கிய உறவினைப் பிரதிபலிக்கின்றன. கம்ப ராமாயணத்தில் வரும் சிறந்தவொரு பாத் திரம் விபீடணன். இவன் இராவணனுக் குத் தம்பி. இராவணனோ சிறந்த சிவபக் தன். 'இராவணன் மேலது நீறு" எனத்

தேவாரத்தில் நாவாரத் துதிக்கப்படுபவன். அந்த இராவணனின் அவையில் நீதி உரைத் தவன் விபீடணன். அவன் சிறீராமனின் அன்பையும் பாராட்டையும் பெற்ற பண் பாளன். அவனுக்கு களனி போன்ற இடங் களில் அமைந்துள்ள புத்த கோவில்சளில் வழிபாடு நடைபெறுகிறது. இற்றை க்கு 500 ஆண்டுகளுக்கு முன் சிங்கள கோட் டைக்காலத்திலும் விபீடணவழிபாடு ந.ை பெற்றது. இதனை அக்காலத்தில் எழுந்த சிறந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டுகின் றன. இவ்வழிபாடு பற்றி சிறீ இராகுல தேர ரின் சிறந்த சிங்கள இலக்கியமாகிய "செல விஹனி சந்தேசம்' (பூவைவிடுதூது) விரி வாக எடுத்துக்கூறுகிறது. அக்காலத்தில் கோட்டையை இராசதானியாகக் கொண்டு அரசாண்ட அரசன் ஆறாவது பராக்கிரம பாகு, பராக்கிரமபாகுவின் மகள் உலகு டைய தேவிக்கும் அமைச்சனாக விளங்கிய மருமகன் நல்லூர்த் துணைவனுக்கும் (தமிழ்ப்பெருமகன்) குழந்தை வரம்வேண்டி *செலவிஹனி சந்தேசம்" பாடப்பட்டது. செலவிஹினி (பூவை) களனியிலுள்ள விபீ டண தெய்வத்திடம் வரம் வேண்டித் தூது விடுக்கப்பட்டதாகக் காவியம் பேசுகிறது, இந்துமதமும் புத்த தர்மமும் இணைந்து வாழ்ந்த வரலாற்றை எடுத்துக்காட்டுவ தோடு இராமாயணம், தமிழ்த் தூது காவி யங்கள் என்பவற்றோடு உள்ள உறவையும் இலக்கியங்கள் எடுத்துக்காட்டு கின்ற ன. மேலும் பண்பாட்டு உறவுகளையும் பாங் காக உணரவைக்கின்றன.
செலவிஹனி சந்தேசப் பாடல் ஒன்றில் புலவர் (சிறீ இராகுலதேரர்) அழகுள்ள மகேசுரன் கோவிலை எம் கண்முன் நிறுத் துகிறார். அங்கே, அகில் மணம் கமழ்கிறது. கற்பூரத்தின் வாசம் கமகமக்கிறது:வாசனை கள் கலந்த புகை மணம் வீசுகிறது; பக்தர் ஈசனைத் தொழுகின்றனர்:கொடிகள் நிரை நிரையாகத் தொங்குகின்றன; முரசு முழங் குகிறது; சங்கு சப்திக்கிறது; அவை முகிற் கூட்டம்போல முழங்குகின்றன; மணி கணிர் கணிர்" என ஒலிக்கிறது; அன்பு முகிழ்க்கி றது-அரும்புகிறது. பக்திப் பரவசம் பரவு கிறது. பண்ணமைந்த தமிழ்ப் பாடல்கள்
3 -

Page 100
ஒதப்படுகின்றன. இவ்வளவு சமயபக்தியும் பண்பாடும் நிறைந்த மகேசுரன் கோவிலில் நீ (தூதாகிய பூவையே) தங்கிச் செல்ல வேண்டாமா? நிச்சயம் தங்கிச் செல் என்று கூறுகிறார். அப்பாடலின் தமிழாக்கப் list L. 6i :
அகிற்புகை கருப்பூ ரத்தி னளாவிய
புகையி னோடு துகிற் கொடி நிரைகள் துரங்கத் துவன்றிடு முரசுஞ் சங்கும்
முகிற்குல மென்ன வேங்க முதிர்மணி
யிரட்ட வன்பு முகிழ்த்திடத் தமிழ்ப்பா வோது முக்கனன் கோயில் சேர்வாய், (பூவைவிடுதூது - பா. 24)
சிலப்பதிகாரம் மணிமேகலை என்னும் இரண்டு தமிழ்க் காப்பியங்களிலும் கூறப் படும் மணிமேகலா தெய்வம் பிரபலிய மான தெய்வம்; கடலில் கப்பலோட்டி வணிகஞ் செய்த கோவலனின் குலதெய்வ மாக இருந்தது. ஆகையினாற்றான் கோவ லன் தன் மகளுக்கும் அத் தெய்வத்தின் பெயரைச் சூட்டினான் என்று சிலப்பதி காரம் கூறும். காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திரவிழாவை ஓர் ஆண்டு இடை நிறுத் தியமையால் மணிமேகலா தெய்வம் கோபங் கொண்டு சபிக்க, அவ்வூர் வெள்ளத் தினால் அழிந்தது என்று மணிமேகலை கூறுகின்றது. சிங்கள மக்களின் கதை களிலும் மணிமேகலை, கண்ணகி, கோவ லன் பற்றிய செய்திகள் பேசப்படுகின்றன. அவர்களின் கதைகளில் கண்ணகி, பத்தினி என்றும் கோவலன் பாலங்கன் என்றும் பெயர் பெறுகிறார்கள். இவ்வாறு இலக் கியப் பாத்திரங்களும் தெய்வங்களுங் கூட தமிழ்-சிங்கள இலக்கிய உறவிற்குப் பால மாக விளங்குகின்றன.
சிங்கள இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் பெரிதும் வளமூட்டியுள்ளது. தமிழின் செல்வாக்கை எடுத்துக் காட்டும் சிங்கள இலக்கியங்கள் பல உள. சந்தேச காவி யங்கள் கவிசிலுமின காவிய சேகரம் குத்தில காவியம் போன்ற சிங்கள இலக்கியங்களை ஆராய்ந்தால் அவற்றிற்கும் தமிழ் இலக்

கியங்களுக்குமிடையில் பொருளிலோ, நடை யிலோ, அமைப்பிலோ, அலங்காரத்திலோ ஏதோவொரு வகைப் பொதுமையிருப் பதைக காணலாம.
இலக்கிய உறவிற்கு அவற்றைச் செய்த புலவர்களும் காரணகர்த்தாவாகின்றனர். தமிழ் அறிந்த சிங்களக் கவிஞர் 4ளின் சிங் கள இலக்கியங்கள் இருக்கின்றன. சிங் களத்தில் பாண்டித்தியம் பெற்ற தமிழ்ப் புலவர்கள் செய்த இலக்கியங்களும் இருக் கின்றன. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து, திரிபிடகம் என்று சொல்லப்படும் புத்த ஆகம நூல்களுக்குப் பாளி மொழியில் உரை செய்த புத்தகோச மகாதேரர் பிறப் பால் பிராமணர் ஆவர். புத்தமதத்தவர் களாற் பெரிதும் போற்றப்பட்ட புத்ததத்த மகா 3தரர் (கி. பி. 5ஆம் நூ. ஆ.) ஒரு சோழநாட்டுத் தமிழர். அவர் பாளி மொழி யில் இனிய கவிகள் பலவற்றை இயற்றிய வர். திரிபிடகத்தின் சூத்திரபிடகத்தின் சில பகுதிகளுக்கு உரையெழுதிய தரும பாலர் திருநெல்வேலி-தஞ்சை நகரைச் சேர்ந்தவர். இவர் பாளி மொழியையும் பெளத்த நூல்களையும் நன்கு கற்றறிந்த
6III”,
அடுத்து தமிழறிந்த சிங்களப்புலவர் கள் போன்று சிங்கள மன்னர்கள் சிலரும் தமிழைப் போற்றி வளர்த்தார்கள். அம் முறையில் அவர்களும் தமிழ் சிங்கள உற விற்குக் கார ண கர்த்தாக்களாவர். கோட் டைக் காலத்தில் தமிழறிந்த சிறந்த புல வராகிய சிறீ இராகுலதேரரை ஆதரித்த மன்னன், 6ஆவது பராக்கிரமபாகு ஆவர். இன்னொருவர் தம்பதெனியாக் காலத்தில் சாகித்திய சர்வக்ஞ பண்டிதராக விளங் கிய பண்டித பராக்கிரமபாகு ஆவர். சீதா வக்கை காலத்தில் முதலாவது இராச சிங்க மன்னனும் புவவர்களாகிய அழகிய வண்ண முகவெட்டியும் தர்மத் துவஜ பண் டிதரும் தமிழ் சிங்கள இலக்கிய உறவிற் குக் காரண கர்த்தாக்களாவர். தொட்ட கமுவை விஜயபாகு போன்ற பிரிவேனை களும் இத்தகைய தொண்டினைச் செய் தனவென்பதை நாம் மறந்து விடலாகாது.

Page 101
தமிழிலே திருக்குறள், நாலடியார், மூதுரை, நல்வழி, நீதிவெண்பா போன் றன நீதிநூல்களாக விளங்குகின்றன. சிங் களத்திலே உலோகோ பகாரய, சுபாஷித என்பனவும், பாளி மொழியில் தம்ம பதம், ஜாதகக் கதைகள் என்பனவும் நீதி நூல் களாகத் திகழ்கின்றன. தமிழிற் பாண் டித்தியம்பெற்ற அழகியவண்ண முகவெட்டி செய்த சுபாஷிதவில் ஒளவையாரின் மூதுரை, நல்வழி என்ற நீதிநூற் கருத்துக் கள் பல காணப்படுகின்றன. உதாரனத் திற்கு மூதுரையில் செய்ந்நன்றி பற்றி வரும் ஒரு பாடலை எடுத்துக்கொள் Galift i:-
'நன்றி யொருவருக்குச் செய்தக் கால்
அந்நன்றி என்று தரும் கொல் என வேண்டாநின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட
நீரைத்
தலையாலே தான் தருதலால்'
இதே பாடலின் பொருளை-அழகிய வண்ணமுக வெட்டி சுபாஷித என்ற நீதி நூலில் கூறுகிறார். தமிழில் உவமை எவ் வாறு கையாளப்பட்டிருக்கிறதோ அவ் வாறே அவரும் சிங்களத்திற் கையாள் கிறார். தென்னை தாளால் நீரை உண் கிறது; தலையில் சுமந்து (இளநீராக) எமக் குத் தருகிறது. இது ஒருவர் செய்த நன் றிக்குக் கிடைக்கும் பயன். இது தென்னை யின் செய்ந்நன்றியறிதல். தென்னையின் அடிப்பகுதிக்கு சாதாரண நீர் கொடுக்க தலையின் சுவையான (இள) நீரைக்கொடுத் தல் உவமானத்தில் காணும் சிறப்பு. இவற்றையெல்லாம் சுபாஷித கூறும் பாடல் பின்வருமாறு:-
‘සත් ගුණයුත් සතනට වැඩ කළොත්
සරු අත් පිට දියුණුවණැමැ පල දේය නිර
තුරු වත් කළ දිය නෙරළු තුරු මුලට පිය කරු දෙත් මුදුනින් පලරස රැගෙන අම tك3C
|7 سس

இரு பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்த் தால் இலக்கிய ஒற்றுமை - உறவு தெளி வ: கும். செய்ந்நன்றியறிதல் உள்ளவராக இருத்தல் வேண்டும். பலனை எதிர்பாரா மல் உதவி செய்தலே செய்ந்நன்றியறிதலாம். இந்தக் கருத்தை அருமையான உவமானத் தைத் (தெ ன் னை யி ன் செய்ந்நன்றி) கொண்டு இரு புலவர்களும் விளக்குகிறார் கள். tle) நூற்றாண்டுகளுக்கு முன் ஒளவையார் தமிழில் பாடிய நீதிநூற் கருத்தையே மிகவும் பிற் கா லத் தி ல் (16ஆம் நூற்றாண்டில்) வாழ்ந்த அழகிய வண்ண முகவெட்டி அனுவதித்துப் பாடி யிருக்கிறார். தான் தமிழ்க் கவிதையைப் படித்தே சுபாஷித என்ற நூலைச் செய்த தாகவும் ஒரு சுவியிற் கூறியிருக்கிறார். இத்தகைய இலக்கியங்கள் தமிழ், சிங்கள உறவ்ை மென்மேலும் உறுதிப்படுத்தி நிற் கின்றன வன்றோ! தமிழின் செல்வாக்கை யும் தெள்ளத்தெளிவாகக் காட்டிநிற்கின் றன,
தமிழிலே சிறந்த நூலாக விளங்குவது திருக்குறள். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டு களுக்குமுன் திருவள்ளுவரால் செய்யப் பட்ட பழைமையான நூல். எல்லாச் சம யங்களுக்கும் பொதுவான நூ லெ ன ப் போற்றப்படுவது; உலகளாவிய பண்புடன் நவீன காலத்துக்கும் பொருத்தமான கருத் துக்களைக் கொண்ட நூலெனப் பல ராலும் கொண்டாடப்படுவது; எண் பதுக்குமேற்பட்ட மொழிகளில் பெயர்க் கப்பட்டுப் பலராலும் பேணப்படும் சிறந்த இலக்கிய நூல். அதனைச் சிங்கள மொழி யிலும் மொழிபெயர்த்துள்ளனர். இதனை விடத் திருக்குறளின் கருத்துக்களை றணஸ் ஹல்ல தேரர் அவர்கள் "உலோகோபகா றய’ என்ற சிங்கள நூலில் பாடியிருக் கிறார். கண்டிக் காலத்தைச் சே ர் ந் த றணஸ்ஹல்ல தேரர் திருக்குறளைத் தமி ழிற் படித்தே உலோகோபகாறய என்ற நூலைச் செய்தமைக்குத் தக்க சான்றுகள் உள. உதாரணத்திற்கு உலோகோபகாறய வில் வரும் ஒரு குறளை மாத்திரம் எடுத் துக்கொள்வோம்.

Page 102
*ඇම රසයටම වැඩි - රසයකි සුරන් බුදිනේ ඊටත් වැඩි රසෙකී - තමා දරුවන් ‘හණ
සුබොජුන්” எல்லாச் சுவைகளிலும் இனியது
தேவர்கள் உண்ணும் தேவாமிர்தம் சிதனிலும் பார்க்க இனியது
5th குழந்தைகள் அளைந்த
台 4. நல்லுணவு என்பது இதன் பொருளாகும்.
இனி தமிழிற் பரிச்சயமான திருக் குறளை எடுத்துக்கொள்ளுவோம். 'அமிழ்தினும் ஆற்ற இனிதே
தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்"
புதல்வரைப் பெறுதல் குறள்-4
"சிறந்த திறனாய்வாளன் தான் அறிவு படைத்தவனாக இருத்தல் ே நுழைபுலம் மட்டும் இருந்தால் டே பற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல், யும் எளிதில் அறியும் இயல்பும், இ களை விடாது பற்றும் தன்மையு வற்றிலிருந்து பிரித்து எடுத்துவிடும் வேண்டும். இவை எல்லாவற்றிலும் வந்ததை அறிபவனாக இருத்தல் கருத்தை இலக்கியத்தில் ஏற்றும் கலைஞனைப் போன்று தன்னுடை வைத்துவிட்டு நூலில் கூறியவற்ை சிறந்த திறனாய்வாளனாவான்."
- பேராசிரியர் அ.

இந்தத் தமிழ்க் குறளின் கருத்தைச் சிங்கள உலோகோபகாறய ஆசிரியர் அப் படியே எடுத்தாண்டிருக்கிறார். இவ்வாறு பல குறட்பாக்களின் க ரு த் து க் க ள் (237 பாடல்கள் வரை கொ ண் டு ஸ் ள) உலோகோபகாறய நூ லி ல் இடம்பெற் றிருக்கின்றன.
பிற மொழி இலக்கியங்களைக் கற்பது போல் எல்லோரும் இரு மொழிகளிலுள்ள எமது நாட்டு இலக்கியங்களைக் கற்பதன் மூலம் இலக்கிய உறவை வளர்க்கலாம். அதன்வாயிலாக மக்களிடையே ஒற்றுமை யையும், சாந்தி, சமாதானத்தையும் நாட்ட முயல்வோமாக!
ன் மேற்கொண்ட துறையில் சிறந்த வண்டும். அவனுக்கு நுண்மாண் பாதாது. எவற்றையும் எளிதில் கூர்ந்து நோக்கி அரிய கருத்தை லக்கியம் மனதில் ஆக்கும் உணர்வு ம், பயனுடையவற்றை பயனில பேராற்றலும் அமைந்திருத்தல் ம் மேலாக அவன் இலக்கியம் கூற
வேண்டுமே தவிர தன்னுடைய
தவற்றை இழைத்தல் கூடாது" ய விருப்பு வெறுப்புகளைத் தள்ளி றை அனுபவிக்கக் கூடியவனே
1. ஞானசம்பந்தன் -

Page 103
.பிரமித்
புற்றிய சிற
බි බ්‍රිජ් ත්‍රිෂ්
ജ്ഞ
கலாநிதி
திமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கியம் என்னும் நிலைப்பா டு களி ல் வைத்து நோக்கும்போது மலையக இலக் கிய வளர்ச்சி மிகக்குறுகிய காலகட்டத் தினைக் கொண்டுள்ளபோதும் கடந்த மூன்று தசாப்த காலத்துள் மலையக இலக் கியத்தில் ஏற்பட்ட துரித வளர்ச்சியானது பொதுவாகத் தமிழ் இலக்கிய உலகுக்கும் சிறப்பாக ஈழத்து இலக்கிய உலகுக்கும் வளம் சேர்ப்பதாகவும் புதிய பரிமாணத்தை அளிப்பதாகவும் அமையலாயிற்று. இந்நிலை யிலே தமிழ் இலக்கியம் அல்லது ஈழத்து இலக்கியம் என்ற பொதுமைப்பாட்டினுள் வைத்து மலையக இலக்கியம் நோக்கப்படும் அதே வேளை தவிர்க்கமுடியாதவாறு மலை யகத் தொழிலாளர் பற்றிய இலக்கியத் தைத் தனித்துவமாகவும் நோக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை மலையக இலக்கியத்தின் இன்றைய துரித வளர்ச்சி நிலையும் அதன் தனித்துவப் பண்புகள் சிலவும் ஏற்படுத்தி யுள்ளன. மலையகத் தொழிலாளர் நிலை மைகள், மலையக இலக்கியம் முதலியன பற்றி "ஏனோ தானோ” என்றிருந்த அலட் சிய நிலை இன்று மிக வேகமாக மாறிவரு கின்றது.
' ' . . . . . சமூக உருவாக்கம் ஒருபுறமும் இனக்காலணித்துவத்தின் செயற்பாடு மறுபு றமுமாகத் தாம் ஒரு தனித்துவமான இனம் என்ற உணர்வைப் புலப்படுத்திவந்திருக்
- 7

db6) dibo
Gතර් -
க. அருணாசலம்
கிறது. இந்தச் சமூக உணர்வின், பிரக்ஞை யின் பிரதிபலிப்பாகவே ‘மலையகம்’ என்ற பதம் அண்மைக் காலங்களில் ஆதிக்கம் பெற்று வருகின்றது. மலையகம் என்பதில் தொனிக்கின்ற புவியியல் அர்த்தத்தை மாத் திரம் நோக்கும்போது அது பிராந்திய வாத மாகப்படலாம். ஆனால் மலையகம் என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் எல்லையை அன்றி. குறிப்பிட்ட உற்பத்தி முறையை (பெருந்தோட்டத்துறையை) சார்ந்து வாழ் கின்ற ஒகு சமூகத்தின் இருத்தலை, ஒரு தேசிய சிறுபான்மை இனத்தின் எழுச்சியைக் குறிக்கின்றது." (தீர்த்தக்கரை: ஜூன்ஆகஸ்ட், 1980. பக். 36) எனத் திரு. சாந்தி குமார் அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட் டுள்ளமை சிந்திக்கத்தக்கது.
பிரித்தானியரின் இலாபவேட்டைக் கிரையாகிப் பத்தொன்பதாம் நூற்றாண் டின் முற்பகுதியிற் "கூலிகள்’ என்னும் பெய ரில் இலட்சோபலட்சம் தொழிலாளர்கள் அடிமைகளாகத் தமிழ க த் தி லி ரு ந் து கொண்டு செல்லப்பட்டு உலகின் நாற்பதுக் கும் மேற்பட்ட நாடுகளிலும், தீவுகளிலும் குடியமர்த்தப்பட்டனர். இத் தொழிலாளர் களும் அவர்களது முன்னோர்களும் தமிழ கத்திலேயே ஆயிரக்கணக்கான ஆண்டுக ளாகச் சமூக, பொருளாதார ரீதியாக மிகப் பிற்படுத்தப்பட்டவூந்து சீர் கவும், கல்வி அறிவினைப் இப்றும் வாய்ப்பு
r=-

Page 104
மறுக்கப்பட்ட வர் க ளா க வும், அறி யாமையிலும் மூடநம்பிச்கைகளிலும் மூழ்கி யவர்களாகவும் விளங்கினர். தமிழகத்திலி ருந்து கொண்டுவரப்பட்டு மலையகத்திற் குடியமர்த்தப்பட்ட பின்னரும் ஏறத்தாழ இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை இந்நிலைமை நீடிக்கலாயிற்று. இதன் காரண மாகத் தொழிலாளர் மத்தியிலிருந்து இலக் கியகர்த்தாக்கள் பலர் தோன்றவோ,தொழி லாளர்களின் வாழ்க்கைப் போராட்டங் களைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் பல் கிப் பெருகவோ சந்தர்ப்பம் இல் லா து போய்விட்டது. எனினும் இரு வழிகளிலே இத் தொழிலாளர் வாழ்வையும் வரலாற் றையும் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் தொழிலாளர் வருகையை அடுத்துத் தோன் றலாயின. ஒரு புறம் வாய்மொழி இலக்கிய மும் மறுபுறம் மலையகத்திற்கு வெளியே மலையகத் தொழிலாளர் பற்றி எழுந்த இலக்கியங்களும் இவ்வகையிற் குறிப்பிடத் தக்கன.
கல்வி அறிவு அற்றவர்களாகவும் மிகக் கடின உடலுழைப்பையே பிரதானமாகக் கொண்டவர்களாகவும் வாழும் மக்கள் கூட் டத்தினரிடையே அவர்களது வாழ்வியலை யும், இன்பதுன்பங்கள், அபிலாசைகள் முத லியவற்றையும் பிரதிபலிப்பனவாக, முதலில் வாய்மொழி இலக்கியம் தோன்றுவது இயல் பாகும். உலகின் மிகப் பழைய இலக்கிய வகையும் மனித குலத்தின் மி கப் பெரும்பகுதி அறிந்துள்ள இலக்கிய வகை யும் வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களே. மலையகத் தொழிலாளர் வர லாற்றிலும் இப் பண்பினை மிகத் தெளி வாகக் காணமுடிகின்றது. ம  ைல ய க த் தொழிலாளர் மத்தியில் அதிகம் பயின்று வந்த-பயின்று வருகின்ற நாட்டார் பாடல் கள் இவ்வகையில் விதந்தோதத்தக்கவை.
வாய்மொழி இலக்கியத்தை அடுத்தே மலையகத் தொழிலாளர் பற்றிய கவிதை களும், சிறுகதைகளும், நாவல்களும் தா ட க ங் கள், உ  ைர ச் சித் தி ர ங் கள் முதலியனவும் பெருக லா யின. கல்வியறிவின்மை, மிகமிகப் பின்தங்கிய வாழ்க்கை நிலைமை, அறியாமை, விழிப்
all 7

புணர்ச்சியின்மை முதலியன காரணமாக இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை மலையகத் தொழிலாளர் மத்தியிலே இலக் கிய கர்த்தாக்கள் பலர் தோன்தமுடியா மற் போயினும் மலையகத்திற்கு வெளியே இலங் கையின் ஏனைய பாகங்களிலும் தமிழகத் திலும் வாழ்ந்தோர் சிலர் மனிதநேயத்தி னால் உந்தப்பட்டும் நேரடி அனுபவ மற் றும் காலம் காலமாகப் பலராலும் பல்வேறு வடிவிலும் வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர் களின் இரங்கத்தக்க நிலையையும், அவர் களது வாழ்க்கைப் போராட்டங்களையும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் பிரதி பலிக்கும் வகையில் பல சிறுகதைகளை எழு தினர். மலையகத் தொழிலாளர் பற்றிய சிறுகதைகளின் தோற்றம் இதுவேயென லாம்.
யுகப் பெருங் கவிஞனான பாரதி,தமிழ கத்திலிருந்து கடல்கடந்து உலகின் பல் வேறு பாகங்சளுக்கும் கொண்டுசெல்லப் பட்ட தொழிலாளர்களின் பல்வேறுபட்ட அவலங்களையும் அவர்களது இரங்கத்தக்க நிலையையும் நெஞ்சை உருக்கும் வகையில் கவிதைகளாக வடித்தான் கட்டுரைகளா கத் தீட்டினான். பிஜித் தீவுக் கரும்புத் தோட்டங்களிற் பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும், அநீதி களையும், அவர்களது மனக் குமுறல்களை պւt) வெளிப்படுத்தும் அவரது கவிதைகள் எவரது உள்ளத்தையும் உறுத்துவன. இதே போன்று தமிழ்ச் சிறுகதை மன்னன் எனப் புகழப்படும் புதுமைப்பித்தன் இலங்கைத் தீவுக் கோப்பி, தேயிலைத் தோட்டங் களிலே தொழிலாளர்கள் - குறிப்பாகப் பெண் தொழிலாளர்கள் அனுபவித்த இன் னல்களையும்,பட்ட அவலங்களையும் அவர் களுக்கு இழைக்கப்பட்ட மனிதாபிமானமே யற்ற கொடுமைகளையும் மிகச் சிறந்த முறையிலே "துன்பக்கேணி’ என்னும் நீண்ட சிறுகதையாக வடித்துள்ளார். இக் கதை யிலே புதுமைப்பித்தன் காட்டும் வாசவன் பட்டிக் கிராமமும், வாட்டர் பாலமும் ஆழ மாகச் சிந்திக்கத்தக்கவை. நாம் அறிந்த வரையில் மலையகத் தொழிலாளர் பற்றி முதன் முதல் வெளிவந்த சிறந்த சிறுகதை இதுவேயெனலாம்.
'8 -

Page 105
புதுமைப்பித்தனையடுத்து 'ஈழத்து மறுமலர்ச்சி” எழுத்தாளர் எனப் போற்றப் படுபவர்களும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்களுமான அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரெத்தினம், இ. நாகராஜன் முதலியோரும் காலத்தாற் சற்றுப் பிற்பட் டுச் செ. கணேசலிங்கன், டானியல் முதலி யோரும் மலையகத் தொழிலாளர் பிரச்சி னைகளைப் பிரதிபலிக்கும் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகள் பலவற்றை எழுதினர். இத்தகைய கதைகளுள் அ. செ. முருகானந் தத்தின் "காளிமுத்துவின் பிரஜா உரிமை", அ. ந. கந்தசாமியின் "காளிமுத்து இலங்கை வந்த கதை", "நாயிலுங்கடையவர்', வ. அ. இராசரெத்தினத்தின் "வீடு" முதலிய கதை கள் விதந்தோதத் தக்கவை. பொதுவாக இவ்வெழுத்தாளர்கள் மலையகத் தொழி லாளர்களுடன் அதிகம் பரிச்சயமற்றவர்க ளாகவும் நேரடி அனுபவமற்றவர்களாகவும் விளங்கிய போதும் மலையகத் தொழிலா ளர்களிடத்துக் கொண்டிருந்த நேய மிகுதி யினால் உந்தப்பட்டே இக் கதைகளை எழு தியுள்ளனர் எனலாம். இதன் காரணமாக இக் கதைகளில் தொழிலாளர் பற்றிய தூரப்பார்வையே காணப்படுகிறது. செ. கணேசலிங்கன் சிறுகதைகளை மட்டுமன்றி மலையகத் தொழிலாளர் குறித்துச் சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
மலையகத் தொழிலாளர் பற்றிய சிறு கதை வளர்ச்சியின் அடுத்த கட்டம், மலை யகத்தில் 'வந்தேறுகுடிகளாக" விளங்கிய வர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என லாம். தொழிலாளர் வ ரு கை  ையத் தொடர்ந்து இலங்கையின் வடக்கு, கிழக் குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உத்தியோ கம், வியாபாரம் முதலியன நிமித்தம் மலையகத்திலே தற்காலிகமாகவோ நிரந் தரமாகவோ குடியேறினர். இவ்வாறு குடியேறியவர்கள் சிலர் கற்றறிந்தவர்களா கவும் எழுத் தா ர் வமி க்கவர்களாகவும் மலையகத் தொழிலாளர் பால் நேயமும் பரிவும் மிக்கவர்களாகவும் தொழிலாளர்க ளின் வாழ்க்கைப் போராட்டங்களையும் பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் நேரிற்
مست.

கண்டறிந்து அனுபவித்து உணர்ந்தவர்க ளாகவும் விளங்கியமையால் தொழிலாளர் பற்றிய சிறு கதைகளையும் நாவல்களை யும் படைக்கலாயினர். இத்தகையோருள் நந்தி, தி. ஞானசேகரன், யோ: பென டிக்ற் பாலன், க. சதாசிவம் முதலியோர் விதந்து கூறத்தக்கவர்கள்.
மலையகத் தொழிலாளர் பற்றி இது வரை வெளிவந்த குறிப்பிடத்தகுந்த நாவல்களுள் ஞானசேகரனின் குருதிமலை, நந்தியின் மலைக்கொழுந்து ஆகியனவும் முக்கியம் பெறுகின்றன. மேலும் மலையகத் தொழிலாளர் பற்றி மறுமலர்ச்சிக்கால எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளிலும் பார்க்க மலையகத்தில் வந்தேறு குடிகளாக வாழ்ந்த நந்தி, பெனடிக்ற்பாலன், சதா சிவம் முதலியோரது சிறுகதைகளில் மலை யகத் தொழிலாளரின் வாழ்க்  ைக ப் போராட்டங்கள், பிரச்சினைகள், இன்ப துன்பங்கள் முதலியனபற்றிய நோக்கு ஆழ அகலமாகவும் யதார்த்தத்துடனும் அலசப் பட்டுள்ளதுடன் அவர்களது பேச்சு வழக் குப் பிரயோகம் உயிர்த்துடிப்புடன் இடம் பெற்றிருப்பதையும் ஓரளவாவது மண் ணின் மணம் கமழ்வதையும் அவதானிக்க லாம்.
மலையகத் தொழிலாளர் வரலாற் றைப் பொறுத்தவரை ஏறத்தாழ 1920கள் தொடக்கம் 1940களின் இறுதிவரையிலான காலகட்டத்தை நடேசையர் யுகம்" என லாம். மலையகத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை நடேசையர் ஒரு "யுக புரு ஷனாகவே விளங்குகின்றார். தஞ்சையிற் பிறந்து கணத்தையிற் சாம்பரான ஐயர் தம் வாழ்நாளிற் பெரும் பகுதியை மலை யக மக்களின் விடிவுக்காகத் தியாகம் செய் தவர். தமது உடல், பொருள், ஆவி, ஆற் றல் அத்தனையையும் அர்ப்பணித்த ஒரு பெருமகன். அவரது துணிச்சல் மிக்க செயற்பாடுகளும் தன்னலமற்ற தொண்டுக ளும் மலையக மக்கள் மத்தியிற் பெரும் விழிப்புணர்வும் எழுச்சியும் ஏற்படுவதற்குத் தூண்டுதலாக அமைந்தன. மலையக இலக் கியத் துறையிலும் அவரது முயற்சிகள் முன் னோடியாக விளங்குகின்றன. மறைப்புண்

Page 106
டும் மறைக்கப்பட்டுமிருந்த அவரது ஒப் பற்ற பணிகள் கடந்த சில ஆண்டுகளுள் வெளிச்சத்திற்கு வரலாயின. குறிப்பாக மலையகத்தின் தலையாய எழுத்தாளர் களுள் ஒருவரான ‘சாரல்நாடனின் தேச பக்தன் கோ. நடேசையர்" என்னும் விரி வான ஆய்வு நூல் வெளிவந்துள்ளமை இவ் வகையிற் போற்றத் தகுந்த முயற்சியென 6. b.
நடேசையரைத் தொடர்ந்து அவர் காட்டிய வழியிற் சென்று மலையக மக்களது விமோசனத்தின் பொருட் டு ப் பல் வேறு வழிகளிற் பல்வேறு வடிவிலும் அரு ந் தொண்டாற்றியவர் * சி. வி. எனச் செல்லமாகவும் அன்பாசுவும் அழைக்கப்படும் சி. வி, வேலுப்பிள்ளையா வார். நடேசையரைப் போன்றே சி. வி. வேலுப்பிள்ளையும் தொழிற்சங்க வாதியா கவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இலக்கியகர்த்தாவாகவும் பல்வேறு நிலைக ளில் நின்று தொழிலாளரின் விமோசனத் தின் பொருட்டு இறுதி மூச்சுவரை அயராது பாடுபட்டார். அவரது இலக்கிய ஆக்கங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகச் சிறுகதை கள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் என விரியும் இவற்றுள் அவரால் ஆங்கிலத் தில் முதலில் இயற்றப்பட்டுப் பின்னர் தமி ழாக்கம் செய்யப்பட்ட "தேயிலைத் தோட் டத்திலே’ என்னும் கவிதைத் தொகுதி சாகாவரம் பெற்றதாக விளங்குகின்றது. சி. வி. யின் அரும்பெரும் பணிகளைத் தொட்டுக்காட்டும் வகையிற் சாரல்நாட னின் "சி. வி. சில சிந்தனைகள்" என்னும் நூல் வெளிவந்துள்ளது.
மலையகத் தொழிலாளர்களின் விழிப் புணர்வுக்கும் எழுச்சிக்கும் முதலில் அடி கோலியவர்கள் கோ. நடேசையர், சி. வி. வேலுப்பிள்ளை ஆகியோரேயாவர். அவர் களைத் தொடர்ந்து இலங்கையிலும் உலக அரங்கிலும் மிக வேகமாக ஏற்பட்டு வந்த மாற்றங்கள் மலையகத் தொழிலாளரின் எழுச்சியை மென்மேலும் முன் எடுத்துச் செல்ல உதவலாயின.

ஏறத்தாழ 1940 களிலிருந்து இலங்கை பின் ஆட்சியாளர்கள் மலையகத் தொழி லாளர்களுக்கெதிராக மேற்கொண்ட முயற் சிகள் ஒவ்வொன்றும் மறைமுகமாக மலை யகத் தொழிலாளர்களின் எழுச்சிக்குத் தூண்டுதல் அளிப்பனவாகவே அமையலா யின. மேலும் 1940 களிலிருந்து மேற்கொள் ளப்பட்ட இலவசக்கல்விமுறையும் 1960களி லிருந்து மேற்கொள்ளப்பட்ட பல்கலைக் கழகம் வரையிலான தாய்மொழிக் கல்வி விருத்தியும் இதே கால கட்டங்களில் தமிழ கத்தில் நிலவிய சூழ்நிலையும் மலையகத் தில் அது ஏற்படுத்திய தாக்கமும் மலைய கத் தொழிலாளர் மத்தியில் ஒரளவாவது கல்வியறிவு பரவவும் ஏற்பட்டுக் கொண் டிருந்த விழிப்புணர்வை மென்மேலும் முன் எடுத்துச் செல்லவும் தூண்டுதலாக அமைய லாயின. மலையக இளந் தலைமுறையினர் மத்தியிற் கல்வியின் மீதான ஆர்வமும் முன் னர் என்றும் இல்லாத அளவிற்குப் பெருக லாயிற்று.
இதேகாலப் பகுதியில் உலக அரங்கில் ஏற்பட்டுக்கொண்டிருந்த பெ ரு மா ற் றங் களும் மலையகத் தொழிலாளர் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தலாயின. மூன்றாம் உலக நாடுகளில் அதுகாலவரை அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகளும் இனங் களும் சமூகங்களும் விடுதலை கோரி கிளர்ச்சிகளிலும் போராட்டங்களிலும் ஈடு பட்டமையும், விடுதலை பெற்றமையும் மலையகத் தொழிலாளரின் எழுச்சிக்குப் பெரும் தூண்டுதலாக அ மை ந் த ன. இவற்றை மென்மேலும் முன்னெடுத்துச் செல்லும்வகையில் இருபதாம் நூற்றாண் டின் நடுப்பகுதியிலிருந்து உலகெங்கணும் வேகமாகப் பரவத்தொடங்கிய பொது வுடைமைக் கருத்துக்களும் முற்போக்கு இயக்கச் சிந்தனைகளும் அமையலாயின.
மேற்கண்ட சூழ்நிலைகள் மலையகத் தொழிலாளர் மத்தியில் குறிப்பாக ஒரள வேனும் கற்றறிந்த இளந்தலைமுறை யினர் மத்தியில் பெரும் விழிப்புணர்வை யும் எழுச்சியையும் ஏற்படுத்தின. DeRs) யகத் தொழிலாளர் மத்தியில் விழிப்புணர் வும் எழுச்சியும் பெருகப்பெருக ஆட்சி

Page 107
யாளர்களின் கெடுபிடிகளும் அடக்கு முறைகளும் அதிகரித்தமையும் கவனிக்கத் தக்கது.
இத்தகையதொரு சூழ்நிலையிலேயே மலையக இலக்கியத்துறையிலும் பெரும் மலர்ச்சி ஏற்படலாயிற்று. குறிப் பாக 1960களிலிருந்து இத்தகைய போக்கினை மிகத்தெளிவாகக் காணமுடிகின்றது.
அதுகாலவரை நிலவிய நிலைமை களுக்கு மாறாக 1960களிலிருந்து மலை யகத் தொழிலாளர் மத்தியிலேயே பிறந்து வளர்ந்து, அவர்களது இன்ப துன்பங்களி லும் வாழ்க்கைப் போராட்டங்களிலும் ஊறித் திளைத்த இளைஞர்கள் பலர் எழுத்துலகிற் பிரவேசித்தனர். இவர்களது பிரவேசத்துடன் மலையகத் தொழிலாளர் பற்றிய சிறுகதை வரலாறும் புதுயுகத்துட் பிரவேசிக்கலாயிற்று.
மலையக இலக்கிய முன்னோடிகளாக நடேசையர், கே. கணேஷ், மாத்தளை அரு ணேசர், சி. வி. வேலுப்பிள்ளை முதலி யோர் விளங்கினரென்பது உண்மையே யாயினும் அவர்களிடத்துக் காணமுடியாத துடிப்பும் வேகமும் புதிய பார்வையும், வர்க்க உணர்வும் புதிய கருத்துவீச்சும் கொண்டவர்களாக 1960களிலிருந்து எழுத் துத்துறையிற் புகுந்தவர்கள் விளங்கலா யினர். இத்தகையவர்களுள் "மலையகச் சிறுகதைச் சிற்பி’ எனப் புகழப்படும் என். எஸ். எம். இராமையா, சாரல்நாடன், திருச்செந்தூரன், தெளிவத்தை ஜோசப் முதலியோர் விதந்து கூறத்தக்கவர்கள்.
இவர்களை அடுத்து இவர்களிலும் பார்க்க வேகமும், வீறும், கருத்தாழமும் தெளிந்த வர்க்கப்பார்வையும் கருத்துவீச் சும் கொண்ட இளைய தலைமுறையினர் மலையகச் சிறுகதையுலகிற் பிரவேசித்து சிறந்த சிறுகதைகள் பலவற்றை ஆக்கிஅளித் தனர். இத்தகையவர்களுள் மாத்தளை வடி வேலன்,மாத்தளை சோமு, மலரன்பன், பரி பூரணன்,மொழிவரதன், ஏ.வி. பி.கோமஸ், மரியதாஸ், பன்னீர்ச்செல்வன், த. ரஃபேல், ராம். சுப்பிரமணியம், மல்லிகை சி. குமார், எம். வாமதேவன், மு. சிவலிங்கம், சலமன் ராஜ், தங்கபிரகாஷ் முதலியோர் குறிப்
- 8.

பிடத்தக்கவர்கள். இவர்களுக்குச் சற்றுப் பிற்பட்டு எழுதத் தொடங்கியவர்களுள் ஏ. எஸ். சந்திரபோஸ், கேகாலை கைலை நாதன், இனியன், ஏ. செல்வராஜ், திரு நீல ன், புப்புரெஸ்ஸ் முனியாண்டி, இப்னு அஸ"மத், புசல்லாவை இஸ் மாலிகா, நயிமா ஏ. பவுர், பூரணி, சரஸ் வதி, மகேஸ்வரி முதலியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களுட் கணிசமானவர் கள் ஒரு சில கதைகளை எழுதியதுடன் தமது எழுத்துப் பணியினை நிறுத்திக் கொண்டமை துரதிர்ஷ்டமே.
மலையகத்தின் இன்றைய இளந்தலை முறையினர் தம்மைப் பிணித்துள்ள விலங்குகளையும் தமது தா ழ் வு ற் ற நிலைமைகளையும் அதற்கான காரணங் களையும் உணரத் தலைப்பட்டுள்ளனர். அநீதிகளையும் கொடுமைகளையும் எதிர்க் கும் துணிச்சலும் போர்க்குணமும் கொண் டவர்கள். எவ்வளவுதான் கொடூரமான அடக்குமுறைகளும் அழிப்பு நடவடிக்கை களும் தொடர்ந்துகொண்டிருந்தாலும் விழிப்புற்ற அவர்களை இனிமேல் அடி பணியவைக்க முடியாது என்பதனை அவர் களது ஆக்கங்களே வெளிப்படுத்துகின் றன. ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த இளைய தலைமுறையினருடன் ஒப்பிடுகை யில் மலையகத்தின் இளைய தலைமுறை யினரிடம் நிறைய எழுதவேண்டுமென்னும் ஆர்வமும் துடிப்பும் அதிகம் மேலோங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது.
உலக அரங்கில் ஆண்களுடன் சரிநிகர் சமானமாகப் பெண்களும் வேகமாக முன் னேறிக்கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் மலையகப் பெண் தொழி லாளர்கள் ஆண் தொழிலாளர்களிலும் பார்க்க அதிகம் கடின உழைப்பை மேற் கொள்ளவேண்டியவர்களாகவும் ஆண்களி லும் பார்க்க அதிக அளவில் வாழ்க்கைச் சுமையைச் சுமக்கவேண்டியவர்களாகவும், சொல்லொணாக் கொடுமைகளுக்கும் துய ரங்களுக்கும் ஆளாகவேண்டியவர்களாக வும் விளங்குகின்றனர். இவர்களின் இத் தகைய பரிதாப நிலைமைகளைப் புது மைப்பித்தன் முதல் கோகிலம் சுப்பையா, குறிஞ்சித் தென்னவன், மாத்தளை வடி வேலன், சு. முரளிதரன் முதலியோர் வரை

Page 108
பலரும் தமது ஆக்கங்களிலே விண்டு காட்டி யுள்ளமை சிந்திக்கத்தக்கது. கடந்த சில தசாப்தங்களில் மலையகத்தொழிலாளர்சமூ கத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் கல்வித் துறையிற் கணிசமான அளவு முன்னேறி வருகின்ற போதும் துரதிஷ்டவசமாக ஆக்க இலக்கிய துறையிற் போதிய அளவு ஆர்வம்
"'கலை இலக்கியங்கள் என் வாதம் இன்று காலாவதியாகிப் ! னவோ உண்மைதான். ஆனால் தான் என்ற இடத்தில் அவை எ கும் துணிச்சல் இன்னும் பெரும் ளுக்கு வரவில்லை. "பொழுதுபோ இடத்தை சரியான பதத்தைக்கெ முடியமாட்டேன் என்கிறது. துணி அதில் செருக துணிவற்றவர்களா. பேட்டுத்தன்மை - அல்லது நபு காலம்தான் நீடிக்கப்போகிறது எ வது இன்று கடினமான ஒன்றாகு மறுமலர்ச்சிக்காக . என்ற விதங் கொண்டு அந்த இடைவெளியை மேலாக, உண்மைக்கு விசுவாச ம நெஞ்சுக்கு வரமறுக்கிறது. ஆயினு ளேனும் அந்த இடைவெளியை 4 இவர்கள் நிரப்பித்தான் ஆகவேன வேகம் அவர்களை அப்படிச் செய
'நல்ல கருத்துக்களைப் பி கியமாகிவிடுவதில்லை. நல்ல கருத் பலிப்பதுதான் நல்ல இலக்கியமாகு சிகள் அழிவதில்லை. எனவே அ! லோவியமாக்கும் இலக்கியங்களும் வெறும் வியாபாரக் கருவியாக்க கருவிலேயே செத்துவிடுகிறது. விள செத்துவிடுகிறது.

செலுத்தாமை பெரும் விசனத்துக்குரியதே. கோகிலம் சுப்பையா. பூரணி, சரஸ்வதி, இஸ்மாலிகா, நயீமா, மகேஸ்வரி முதலிய விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசிலரே ‘அத்தி பூத்தாற்போல இடையிடையே முகங் காட் டுகின்றனர். இந்நிலைமை நீங்கிந் பெணக ளும் எழுத்துத்துறையிலே தீவிரமாகப் பங்கு கொள்ளுதல் அவசியமாகும்.
பன பொழுதுபோக்குக்காக என்ற பலகாலம் ஆகிவிட்டது என்பது என் அவை பொழுதுபோக்குக்காகத் தற்காக? என்பதை வைத்துப்பார்க் பான்மையான இலக்கியக்காரர்க க்குக்காக" என்ற பதம் இருந்த ாண்டு நிரப்புவதற்கு அவர்களால் வுடன் உரியதான அந்தப் பதத்தை கவே இருந்துவிட விரும்பும் இந்தப் ஞ்சகத்தன்மை இன்னும் எவ்வளவு ன்பதனைத் தீர்மானித்துச் சொல் ம். மக்களுக்காக - வாழ்வுக்காககளிலான சொற்றொடர்களைக் நிரப்பிவிடுதலைத் தவிர அதற்கும் ான ஒரு சொற்றொடர் அவர்கள் தும் இந்தத் தலைமுறை காலத்துள் சரியான சொற்பதத்தைக்கொண்டு ண்டும். ஏனெனில் உலகமாற்றத்தின் ப்யவே வைக்கும்.
--கே. டானியல்
ரதிபலிப்பதால் ஒன்று நல்ல இலக் தை நல்ல கலையழகோடு பிரதி ம். மனிதனின் மகோன்னத உணர்ச் 3த உணர்ச்சிகளைச் சிறந்த சொல் அழிவதில்லை, இலக்கியத்தை முனையும்போது, அந்த இலக்கியம் "ம்பரம் மட்டும் மிஞ்சுகிறது; கலை
-சு, வேலுப்பிள்ளை.
ܚܗ 82

Page 109
கடந்த பத்தாண்டு காலத்தில் ஈழத் தில் வெளிவந்த தமிழ் எழுத்தாளர்களின் நூல்களில் சிறந்தவைகளைத் தேர் ந் தெடுத்து பரிசளிக்கப்படும் இக்கால கட்டத் தில், ஈழத்து கலை, இலக்கிய வளர்ச்சிக்கு மிகுந்த பயனையும் பங்களிப்பினையும் ஆற்றிவரும் ஈழத்து தமிழ் சிறு சஞ்சிகை களைப்பற்றி சற்று சிந்திப்பது சாலப் பொருத்தமாக இருக்கும்.
ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளைப் பற்றி யும் அவற்றின் வளர்ச்சியினைப் பற்றியும் அறிவதற்கு முன்னதாக சிறுசஞ்சிகைகள் என்றால் என்னவென்றும், இந்த ஊடகத் தின் தன்மைகள், பயன்பாடுகள் எவை என் றும் அறிந்து கொள்ளும்பொழுதுதான் ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகைகளின் வளர்ச்சி யினை நாம் சரியாக அறிந்து கொண்டவர் களாக இருப்போம்.
சிறுசஞ்சிகைள் என்று நாம் குறிப்பிடும் பொழுது எதிர்நிலையாகவே பெரும் சஞ்சி கைகள் என்றொரு ஊடகம் இருப்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டியுள்ளது. இந்த பெரும் சஞ்சிகைகளிலிருந்து இச் சஞ் சிகைகளைப் பிரித்துக்காட்டும் பண்புகள் எவையெனத் தெரிந்துகொள்ளுமிடத்துத் தான் சிறுசஞ்சிகைகளின் தனித்துவம் நமக் குப் புலப்படும்,
இவ்விடத்தில் சிறு சஞ்சிகைகளின் தனித் துவப் பண்புகளை விளங்கிக்கொள்ள தமி
= 8.
 

ク
jI
@
ότθος ή
முகஆய்வாளர் வீ. அரசு அவர்கள் எண்பது களில் சிறு பத்திரிகைகள்" எனும் தனது கட் டுரை ஒன்றில் (*எண்பதில் தமிழ் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் 1982 வெளியீடு. பக், 111 - 127) சிறுசஞ்சிகைகளைப் பற் றிக் கூறும் கருத்துக்களை இங்கு நாம் நினைவுபடுத்திக்கொள்வது சிறப்பா க இருக்கும்.
அரசு அவர்கள் சிறுசஞ்சிகைகளைப்
பற்றிக் குறிப்பிடும் பொழுது பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்.
(1) குறைந்த படிகளே வெளிவரும் - இவை அச்சு, த ட் டச்சு கை யெழுத்து என்ற எந்த வடிவத்தி லும் வரும் தன்மையன.
(2) வணிக நோக்கம், விளம்பரப்பற்று ஆகியவை இன்றி நடத்தப்படுவன.
(3) குறிப்பிட்ட தத்துவம் அல்லது கோட்பாட்டினை அடிப் ப ைட யாகக் கொண்டு வெளிவருவன.
(4) வாசகர்களின் ரசிகத்தன்மையை வணிசம் செய்வதில்லை. மாறாகத் தனது கோட்பாட்டை முதன்மைப் படுத்தி, வாசகனைத் தெளிவு பெறச் செய்வதில் முன் நிற்பன.
(5) தொடர்ந்து இவை வருவதில்லை. நிற்பதும்-பின்னர் வருவதும் இவற் றின் இயல்பு. இதற்கு விதிவிலக்கா னவை மிகக்குறைவு.

Page 110
(6) அச்சு அமைப்பு, வடிவமைப்புகு பட விளக்கங்கள் அல்லது படக் கவர்ச்சி போன்றவற்றை முதன்மைப் படுத் தாது, மாறாக, தாம் கொண்டிருக் கும் கோட் பா ட் டிற்கு ஏற்ப அவற்றை பயன்படுத்தும் தன்மை
6t
அரசு அவர்களின் குறிப்புகள் சிறு சஞ் சிகைகளின் பண்பு நிலைகளை எமக்கு சிறப் பாக எடுத்துக் காட்டுபவையாக அமைந் துள்ளன.
இத்தகைய பண்பு நிலை களை க் கொண்ட தமிழ்ச் சஞ்சிகைகள் ஈழத்தில் தோன்ற எத்தகைய சமூகக் காரணிகள் பின்னணியாக அமைந்தன என்பதனை நோக்குவதற்கு முன்னதாக, தமிழகத்தில் சிறுசஞ்சிகைச் சூழல் ஒன்று தோன்ற ஏது வாக இருந்த சமூகக் காரணிகளை சுருக்க மாகவேனும் நோக்கும்பொழுதுதான், ஈழத் தில் தமிழில் சிறுசஞ்சிகைகள் தோன்ற பின் னணியாக இருந்தசமூகக் காரணிகளிலிருந்து தமிழகத்தில் சிறுசஞ்சிகைச் சூழல் தோன் றக் காரணமாயிருந்த காரணிகள் வேறு பட்டு நிற்பதனை நாம் உணரலாம்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அங்கு அன்று தோன்றிய பெருஞ்சஞ்சிகைகள் மூன்றாந்தர பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய படைப்புகளை மட்டுமே வெளியிட்டுக்கொண்டிருந்த காலகட்டத் தில், அத்தோடு சுதேசிய அரசியல் பிரச்சி னைகளுக்கு மட்டுமே அதிமுக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருந்த சூழ வி ல், மேலை நாட்டில் நடந்தேறிய பிரச்சினைக ளுடன் தொடர்பு கொண்டதன் பயனாக இலக்கியமே இலட்சியம் என்ற உணர்வு கொண்டவர்கள் அத்தகைய கலை, இலக் கிய முயற்சிகளை, தமிழில் பரிசோதனை முயற்சிகளாகச் செய்து கொண் டி ரு ந் தார்கள்.
அவர்களின் அப்பரிசோதனை முயற்சி களுக்கு அப்பெருஞ் சஞ்சிகைகள், பத்திரி கைகள் சரியான களங்களாக அமையாது போக - அதாவது சரியான களங்களாக

அமைய விரும்பாத பொழுது, இலக்கியமே இலட்சியம் என்ற எண்ணம் கொண்ட வர்கள் தமக்கென ஒரு வெளியீட்டுக்களம் தேவை என்று உணர்ந்தார்கள்: அந்த உணர்வின் உந்துதலின் ஊக்கத்தினால் 1930 அளவில் "மணிக்கொடி" என்ற இலக் கிய குழுவும் "மணிக்கொடி" என்ற சிறு சஞ் சிகையும் தோன்றியது.
ஈழத்தைப் பொறுத்தவரை ‘மணிக் கொடி"யின் தோற்றத்தின் தாக்கமாக 40 களில் 'மறுமலர்ச்சி" என்ற இலக்கிய குழு வும் அதற்கான "மறுமலர்ச்சி" என்ற சிறு சஞ்சிகையும் தோன்றியது. "மறுமலர்ச்சி" குழுவிலும் "மணிக்கொடி" குழுவில் இருந் தது போல் நவீன தமிழ் கலை இலக்கிய உணர்வு கொண்டவர்கள் இருந்தார்கள். அதனால் அவர்களால் வெளியிடப்பட்ட "மறுமலர்ச்சி சஞ்சிகையிலும் நவீன தமிழ் கலை இலக்கிய முயற்சிகள் இடம்பெற்றன.
ஈழத்தில் "மறுமலர்ச்சி' குழுவுடன் 40 களிலேயே நவீன தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளுக்கான தளமாக சிறுசஞ்சிகைச் சூழல் ஒன்று தோற்றம் பெற்றாலும் 30 களின் நடுப்பகுதியிலேயே பிரதேச ரீதியா கத் தோன்றிய செய்திப் பத்திரிகையான "ஈழகேசரி’ தனது இரண்டாவது காலகட் டத்திலிருந்து நவீன தமிழ் கலை, இலக்கிய முயற்சிகளை வெளியிடத் தொடங்கி விட்டது.
அதாவது வெறுமனே செய்திப் பத்திரி கையான "ஈழகேசரியே ஈழத்தமிழ் சிறுசஞ் சிகையின் முன்னோடியாகத் திகழும் "மறு மலர்ச்சி’யின் உருவாக்கத்திற்கு வாசல் விட் டது எனலாம். எப்படியென்றால், "ஈழ கேசரி"யில் அத்தகைய நவீன தமிழ் கலை, இலக்கிய முயற்சிகள் மூலம் அடையாளம் காணப்பெற்றவர்களே பிற்காலத்தில் மறு மலர்ச்சி குழு"வில் இடம் பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.
ஈழகேசரியின் இப்பணியே - இவ்வுரு வாக்கமே தமிழகத்தில் சிறு சஞ்சிகைகள் தோன்றக் காரணமாக இருந்த சமூகக்கார ணிகளிலிருந்து ஈழத்து தமிழ் சிறுசஞ்சிகை
84 -

Page 111
கள் தோன்றக் காரணமான காரணிகளை வேறுபடுத்திக் காட்டியது. அதாவது ஈழ கேசரியின் மூலமே ஈழத்தில் பிரதேச-தேசிய ரீதியாக தோன்றிய பெரும் பத்திரிகைகள் கனதியான ஆரோக்கியமான நவீன தமிழ் கலை இலக்கிய வளர்ச்சியில் பங்குபெறும் பண்பு தொடங்கப் பெற்றது.
இவ்விடத்தில் ஈழகேசரிக்கு பின் பிர தேச ரீதியாகத் தோன்றிய சுதந்திரனின் ஆரம்பகாலகட்டப் பணியும் குறிப்பிடத் தக்கது.
பிரதேச ரீதியாக தோன்றிய ஈழகேசரி, சுதந்திரன் ஆகியவை தொடக்கிவிட்ட இப் பண்பு 50களில் அமரர் கைலாசபதி அவர் கள் 'தினகரன்" எனும் தேசிய பத்திரி கைக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டதோடு தேசியப் பண்பாக பரிணாமம் பெற்று, இற்றைவரை அது இன்றைய எல்லா . பிர தேச - தேசிய பத்திரிகைகளும் கைக்கொள் ளும் ஒரு பண்பாகத் திகழ்கிறது.
பிரதேச - தேசிய பத்திரிகைகளின் இப் பண்பினைப் பின்னணியாகக் கொண்டு ஈழத்தில் தமிழில் தோன்றிய சிறுசஞ்சிகை களுக்கு பெரும்பிரச்சினை ஒன்று இருந்தது. அதாவது தமிழகத்தைப் போல் வியாபார, - பெரும் சஞ்சிகைகள் இங்கு தோன்றா விடினும் தமிழகத்துப் பெரும் வியாபார சஞ்சிகைகளுச்கு எதிராகப் போராடவேண் டிய நிலைமையே அப் பிரச்னையாகும்.
இப் போராட்டம் வெறுமனே தனித்த சிறு சஞ்சிகைகளினூடாக நிகழாது பல, சமூக, இலக்கிய, அரசியல் இயக்கங்களினுர டாக நடந்தேறியதன் மூலம் கணிசமான தொரு தாக்கத்தினை தமிழ் சமூகத்தின் வாசிப்பு, இரசனை மீதான ஒரு மாற்றத் தினை ஏற்படுத்தியது.இவ்வகையில் ஈழத்து தமிழ் சிறு சஞ்சிகைகளின் வளர்ச்சிக்கு இப் போராட்டம் மிகவும் உதவியது எனலாம்.
ஆனால், தென் னி ந் திய வியாபார பெரும் சஞ்சிகைகளின் தாக்கத்திற்கு உட் பட்டு, அச்சஞ்சிகைகளின் பெயர்களின் சாயல்களில் பெயரை வைத்துக்கொண்டு, அச் சஞ்சிகைகள் வெளியிட் ட மூன்
= 8

றாந்தர வகையான அம்சங்களை உள் ளடக்கிய படைப்புகளுடன் பல சஞ்சிகை கள் ஈழத்தில் தோன்ற த் தா ன் செய்தன. ஆனால், துரதிஷ்டவசமாக நிகழ்ந்தது என்னவென்றால் எந்தத் தென் னிந்திய வியாபார பெரும் சஞ்சிகைகளின் தாக்கத்திற்கு உட்பட்டு அவர்கள் அச் சஞ் சிகைகளை வெளியிட்டார்களோ, அதே சஞ்சிகைகளின் ஆதிக்கமே. ஈழத்தில் தோன் றிய அத்தகைய சஞ்சிகைகளை வெளியிட்ட வர்களுக்குப் பலத்த பொருளாதார நட் டத்தைக் கொடுத்து தோல்வியைத் தழு விக்கொள்ள ஏதுவாயிற்று,
ஆனால் இந்த நிகழ்ச்சிகளின் மத்தியி லும் ஈழத்தில் தமிழில் தோன்றிய சிறு சஞ்சிகைகளின் ஆயுளைப் பொறுத்தவரை குறுகியதாக இருப்பினும் சிறு சஞ்சிகை களின் பயன்பாட்டை சரியாக உள்வாங்கி வெளிவந்த ஒவ்வொரு சஞ்சிகையும் ஈழத்து நவீன தமிழ் கலை, இலக்கிய வளர்ச்சிக் கான சாதனைகளையும் பணிகளையும் செய்துள்ளன என்பது மறுதலிக்கமுடியாத உண்மையாகும்.
ஒருமுகமாக நோக்குமிடத்து பின் வரும் காரணிகள் ஈழத்தில் தமிழில் தோன் றிய சஞ்சிகைகளின் வளர்ச்சிக்கு உதவியுள் ᎧiᎢᎧᏈᎢ .
(அ) இலங்கைப் படைப்புகள் இலங்கை மக்களின் பிரச்சினை க  ைளத் தான் சொல்லவேண்டுமென்ற கோட்பாட்டை முன்  ைவத் து இலங்கை தமிழ்சிறுசஞ்சிகைச் சூழ லின் முன்னோடியாகத் திகழ்ந்த மறுமலர்ச்சிக் குழுவின் தோற்றம்.
(ஆ) தமிழகத்தில் நிலவியது போன்றுஉள்ளூர் வியாபார பத்திரிகைக ளின் சஞ்சிகைகளின் ஆதிக்கம் அற்ற நிலைமை.
(இ) பெரும் செய்திப் பத்திரிகைகள் ஆரோக்கியமான கன தி யா ன நிலையில் தமிழ் கலை இலக்கிய வளத்தை நவீன கட்டத்திற்கு அழைத்துச்செல்லக்கூடிய பண் புக்கு உதவியமை.

Page 112
(ஈ) 40 களின் இறுதியில் தொடங்கப் பெற்ற இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்து வைத்த சமூசப்பிரக்  ைளு மிக் க இலக்கிய உத்வேகம்.
(உ) தென்னிந்திய வியாபார சஞ்சிகை கள் பத்திரிகைகளின் ஆதிக்கத் திற்கு எதிரான போராட்டம் இயக்கவடிவம் பெற்றமை.
(ஊ) இவைகளுக்கு மேலாக, 1956க்குப் பின் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு யுகசந்தியாகவே கணிக்கப்படுகி றது. சமூக-அரசியல் காரணங் களால் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகத் தோன்றிய தேசிய இலக்கியக் கோட்பாட்டு இயக்
*L).
மேற்குறிப்பிட்ட காரணிகளால் ஊக் கம்பெற்று ஈழத்தில் தமிழில் தோன்றிய சிறு சஞ்சிகைகளின் போக்குகள், தமிழகத் தில் தோன்றிய சிறு சஞ்சிகைகளின் போக் குகளிலிருந்து வேறுபட்டு நிற்பதைக் காணும்பொழுதுதான், ஈழத்தில் தமிழில் தோன்றிய சிறு சஞ்சிகைகள் தனித்துவ மான வளர்ச்சி நிலையினை அடைந்துள்ள தைக் காணக்கூடியதாக இருக்கும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெரு வாரியான சிறுசஞ்சிகைகள் பல்வேறு கலைக் கொள்கைகளைக் கொண்ட குழுக்களாலும் பல்வேறு சிந்தனை வயப்பட்ட நண்பர்க ளாலும் வெளிவர, இலங்கையில் தமிழில் சிறுசஞ்சிகைகளோ பல்வேறு சமூக அரசி யல் தத்துவ சிந்தனைகள் கொண்ட குழுக் களாலும் அல்லது அத் தத்துவ சிந்தனை நெறிகொண்டு இயங்கும் நண்பர்களின் கூட்டினாலும்-தனிநபர்களாலும் வெளி யிடப்படுகின்றன.
அத்தோடு, பொதுவாக ஈழத்தில் தமி ழில் வெளிவரும் சஞ்சிகைகளில் இடம் பெறும் படைப்புகளில் சமூகப் பிரக்ஞை அதிக அளவில் இருக்க தமிழகத்தில் வெளி வரும் பெரும்பான்மையான சிறு சஞ்சிகை களில் கலையம்சத்தின் அடிப்படையில்

அமைந்த தனிமனித உணர்வுகளைச் சித் தரிக்கும் படைப்புகளே வெளிவருகின்றன.
இவ் வேறுபாடுசஞடன் இன்னொரு சிறப்பான விடயத்தைச் சொல்லவேண்டும். அதாவது, ஒரு கலை இலக்கியத் துறைக் கென வெளிவரும் சஞ்சிகைசளைப் பொறுத் தவரை கவிதைக்கென தமிழகத்தில் தோன் றிய கவிதை இதழ்கள் (70 களின் ஆரம் பத்தில் "வானம்பாடி' சஞ்சிகை தோன் றும்வரை) பழைய மரபு சார்ந்த கவிதை உருவத்தை உள்ளடக்கத்தைக் கொண்ட படைப்புகளை வெளியிட ஈழ த்  ைத ப் பொறுத்தவரை.-60களிலேயே தோன்றிய, கவிதைக்கென வெளிவந்த சிறு சஞ்சிகைகள் சமகால வாழ்வு நிலையினை யதார்த்த நெறியுடன் சித்தரிக்கும் கவிதைகளைவெளி யிட்டு வந்தன. அத்தோடு அவை கவிதை யில் "பேச்சோசைப் பண்பு" வளர்ச்சியினைப் புகுத்திய கவிதைப் படைப்புக்களை வெளி யிட்டன.
அடுத்து நாம் அறிந்தவரை, தமிழ கத்துச் சிறு சஞ்சிகைச் சூழலில், பெண் களுக்கென தனியான சிறு சஞ்சிகைகள் வெளிவந்ததாகவோ வெளிவருவதாகவோ தெரியவில்லை. ஆனால், அங்கு பெண்களுக் கென பெரும் சஞ்சிகைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவையோ அழகு, சமையல் குறிப்புகள் பேர்ன்ற அம்சங்களை வெளியிட்டு, பெண்ணடிமைத்தனத்தை வளர்த்துக்கொண்டிருக்க, ஈழத்தில் சமீப காலமாக பெண்களுக்கென்ற சில சிறுசஞ்சி கைகள் தோற்றம்பெற்று, அவை பெண் நிலைவாத கொள்கை அடிப்படையில் பெண்களைப்பற்றிய பல ஆக்கபூர்வமான ஆய்வுகளை வெளியிட்டு பெண்விடுதலை இயக்க வளர்ச்சிக்கு உதவும் கலை, இலக் கிய சாதனங்களாகத் திகழ்கின்றன.
இவ்வாறான பலவித வேறுபாடுகள் ஈழத்து தமிழ் சிறு சஞ்சிகைகளின் வளர்ச்சி யினையும் போக்கினையும் தனித்துவமாகக் காட்டிநிற்கின்றன.
மொத்தத்தில் ஈழத்தில் தமிழில் வெளி வந்த, வெளிவரும், சிறு சஞ்சிகைகள் பல

Page 113
தனித்துவப் பண்புகளைத் தம்பகத்தே கொண்டு, ஈழத்துத் தமிழ்க் கலை, இலக் கியவளர்ச்சியினை மட்டுமல்ல, முழுத்தமிழ்க் கலை, இலக்கிய வளர்ச்சிபினை நவீன கட் டத்திற்கு அழைத்துச் செல்லும் பணியினை காத்திரமாகச் செய்துள்ளன, செய்துவரு கின்றன. அமரர் கைலாசபதி அவர்கள்
பின்னி
இச்சிறு கட்டுரையில் ஈழத்தில் வெளி வந்த எல்லா தமிழ் சிறுசஞ்சிகைகளையும் குறிப்பிட முடியாத சூழ்நிலையில், ஒரு நூறு சிறுசஞ்சிகைகளின் பெயர்களை வாச
அக்னி தாக்கம் அஞ்சலி தாகம்
goJ 3fru sub@لاڑیو> அமிர்தகங்கை தாமரை அமுதம் தாரகை அரங்கம் தீர்த்தக்கரை அலை ஆது ஆக்கம் தேன்மொழி ஆய்வு தேனருவி ஆலயமணி தொண்டன் இதயம் நங்கை இந்து மதி நதி இளம்பிறை நவயுகம் உள்ளம் தவரோஜா எழில் நான் கண்மணி நோக்கு கதம்பம் ப்ரியநிலா கமலம் பல்லவி கல்கண்டு பாரதி
கலம் புத்தொளி கலசம் புதுசு கலகலப்பு புதுமை இலக்கியம்
5g)696. I பூகம்பம் கலைச்சுடர் பூங்குன்றம் கலைப்பூங்கா է եւսfr@frւb
பழையன கழிதலும் புதிய வழுவல கால வகையினாே
87

ஒருமுறை குறிப்பிட்டதுபோல, சிறுசஞ்சிகைகளின் வரலாறு எழுதப்படுமானால்,
ஈழத்து
வளர்ச்சியினை இன்னும் ஆழமாகவும் விரி
வாகவும் உணரக்கூடியதாக இருக்கும்."
ணைப்பு
கர்களின் கவனத்திற்கு தருகிறேன். இன்னும்
பல சிறுசஞ்சிகைகள் ஈழத்தில் வெளிவந்
தன்,
வெளிவருகின்றன என்பது இங்கு
நினைவிற் கொள்ளத்தக்கது.
கலைச்செல்வி பூமாலை as 67th பூரணி கவிஞன் பெண்ணின்குரல் கவி m பொன்மடல் கற்பகம் மணிக்குரல் காலரதம் மரகதம் கொந்தளிப்பு மல்லிகை கொழுந்து மலர் கோகிலம் மலைமுரசு கீற்று மறுமலர்ச்சி குமரன் மன்றம் குறிஞ்சி மாணிக்கம் குன்றின்குரல் மின்னல் சந்திப்பு மின்மினி ағиогі முஸ்லிம் லங்கா சாரல் யாத்திரை சிந்தனை ரோஜாப்பூ சிரித்திரன் வசந்தம் சிலம் பொலி வயல் செவ்வந்தி வகவம் சுந்தரி வானொலி மஞ்சரி தடாகம் விகடன் தமிழமுது வியூகம் தமிழ் அமுதம் விவேகி தமிழின்பம் வெள்ளி
ன புகுதலும் னே.
- பவணந்தியார்
'தமிழில் 'தக்கபடி" அப்பொழுது நாம் சிறுசஞ்சிகைகளின் தனித்து வ

Page 114
பத்திரம்பண்பு பற்றிய
கலாநிதி துரை
fழத்துத் தமிழ் நாவலிலக்கியம் கால ந் தோறும் பல பரிமாணங்களை  ெய ய் தி வளர்ச்சியடைந்துவந்துள்ளது. அதேவேளையில் ஈழத்து நாவல்களிற் பல் வேறு கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத் தப்பட்டுள்ளன. ஆற்றல்வாய்ந்த எழுத் தாளர்கள் தமது பாத்திரப்படைப்புமூல மாக வாசகர் மனத்திற் தமது ஆளுமை யைப் பதிவது மாத்திரமன்றித் தமதுபாத் திரங்களின் செல்வாக்கையும் பரப்பிவந் துள்ளனர். அந்தவகையில் ஈழத்து இலக்கி யத்துறையில் தமது எழுத்தாற்றலாலும், தனித்துவமிக்க ஆளுமையாலும் தனி யிடத்தைப்பெற்ற எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரையின் "சடங்கு' (1971) நாவலின் கதைத் தலைவராகிய செந்தில் நாதன் என்ற பாத்திரமும் குறிப்பிடத் தக்கதொன்றாகும். இப் பா த் தி ரத்தின் வார்ப்பு, எஸ். பொ.வின் படைப்பாற் றலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
"சடங்கு” நாவலின் கதைத் தலைவர் செந்தில்நாதன் யாழ்ப்பாணக் 6grח Lמ மொன்றைச் சார்ந்தவர்; கொழும்பிலே அரசாங்க எழுதுவினைஞராகக் கடமை யாற்றுபவர்; மத்தியதர வர்க்கத்தின் ஒரு பி ர தி நிதி யாக இனங்காணத்தக்கவர். கொழும்பிலே ஆசாபாசங்களுக்குக் கட்டுப் படாத ஒழுக்கசீலராக வாழ்ந்துகொண் டிருந்த அவருக்குக் கடன்தொகை கிடைத்
8

மனோகரன்
ததும் ஊருக்குப் பயணமாகிறார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் வீடுதிரும்பும் அவ ருக்கு, தமது மனைவி அன்னலட்சுமியின் நினைவு தோன்றுகிறது. ஆயினும், விடு முறையிலே நின்றிருந்த ஐந்து நாட்களிலும் அவர் எதிர்பார்த்தவாறு மனைவியின் உறவு கிடைக்கச் சந்தர்ப்பங்கள் அமைய வில்லை. மனதிலே விரக்தியுடன் மீண்டும் கொழும்புக்குத் திரும்புகின்றார். இந்நாவ லின் கதையம்சத்தைப் பொறுத்தவரை யில் குறிப்பிடத்தக்க அம்சம் கணவன்மனைவியின் தாம்பத்திய உறவினைக் கதையினுாடாகப் புலப்படுத்துவதேயாகும். எஸ். பொ.வின் "தீ" என்ற நாவலோடு ஒப்பிடுகையில், இந்நாவல் விரசமின்றி அமைந்த தரமான நா வ லெ ன் றே கொள்ளவேண்டும். "சடங்கு” நாவலின் முற்றுமுழுதா ன சிறப்பம்சம் செந்தில் நாதனின் பாத்திரப்படைப்பேயாகும்.
செந்தில்நாதன் யாழ்ப்பாணச் சமூ கத்தின் ஓர் அங்கத்தவராகவும், அதே வேளையிலே தனிமனித உணர்வு கொண் டவராகவும் படைக்கப்பட்டுள்ளார். அர சாங்க எழுதுவினைஞருக்குரிய LD 607 போக்குகள் அவரிடம் காணப்படுகின்றன. அரசகருமமொழிப் பரீட் சைகளிற் சித்தி யெய்தி, வேதன உயர்வுகளைப் பாதுகாத் தல், எழுதுவினைஞருக்கான இரண்டாம் வகுப்புப் பரீட்சையிலே தேற முயற்சித் தல், -953, GibT (Overtime) வேலை
3 -

Page 115
யினாலே அதிகம் சம்பாதித்தல் முதலான அவர்களின் பொதுத்தன்மைகள் அவரை யும் பாதித்திருந்தது. அரசாங்க எழுது வினைஞராகவிருந்த செந்தில்நாதனின் இயல்புகள் பின்வருமாறு எஸ். பொ. வினால் எடுத்தாளப்பட்டுள்ளன -
**இந்தக் குடும்பப் பொறுப்புகள், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற வைராக்கியத்தை அவரு டைய உள்ளத்திலே பாய்ச்சியது. முதல் நான்கு வருடங்களுக்கிடையிலேயே இரண் டும் அடுத்தடுத்துப் பெண்களாகப் பிறந்து விட்டதால், முழுமூச்சாக கிளாஸ் டு சோதினையை ஒரு கை பார்த்து விட வேண்டுமென்று கங்கணங் கட்டினார். அந்தச் சோதினைமீது மூன்று வருடங்க ளாகப் படையெடுத்து, அவருடைய கெட் டித்தனத்தாலும், செல்லப்பாக்கிய ஆச்சி செல்லச் சந்நிதியான், நல்லுரரான், கதிர் காமத்தான் ஆகிய பிரசித்தி பெற்ற தெய் வங்களுக்கு நேர்த்திக்கடன்கள் வைத்த பெறுபேற்றினாலும் சித்தியடைந்துவிட் டார். பலவிதமான குழப்பங்களும், அபிப் பிராய பேதங்களும் அரசியல்வாதிகள் மத் தியிலும் நிலவியபோதிலும், சிங்களத் தேர்ச்சிச் சோதனையையும் நிர்ச்சலனமாக எடுத்து இங்கிறிமென்டையுங் காப்பாற்றிக் கொண்டார். அவர் மேலிடத்திலிருந்து வரும் ஒவ்வொரு சுற்றறிக்கைக்கும் மிக மிகக் கீழ்ப்படிந்து உழைத்துவரும் அர சாங்க ஊழியராவர்"
செந்தில் நாதனைப் பொறுத்தவரை யில் அவர் தம்மையே விரும்பி, தம்மய மாகவே சிந்திக்கும் இயல்புகொண்ட தனி மனிதவாதியாவர். சமூகத்தின் ஓர் அங்க மாக அவர் இருந்தபோதிலும், அதனினின் றும் வேறுபட்ட தனி அங்கமாகவும் அவர் வாழப் பழகியிருந்தார். தனிமையையே விரும்பும் இயல்புடையவரான செந்தில் நாதன், சனநடமாட்டம் இல்லாத இடத் திலே இருந்துகொள்வதையே விரும்புபவர்.
நாவலில் எல்லை மீறாத ஒழுக்கவாதி யாக அவர் படைக்கப்பட்டுள்ளார். ஒரே யொரு சந்தர்ப்பத்திலே, மதுவருந்திய
അ: 8&

மயக்கத்தினாற் சில பெண்களுடன் நட னம் ஆடியிருந்தார். ஆனால், இதனைத் தமது மனைவி அறியக்கூடாதெனக் கவ லையும் கொண்டிருந்தார்.
எஸ். பொ, வின் "தீ" நாவலில் இடம் பெறும் கதைத்தலைவனினின்றும் செந்தில் நாதன் பாத்திரம் இவ்வசையிற் பெரிதும் வேறுபடுகின்றது. அந்நாவலில் இடம் பெறும் 'நான்' என்ற பாத்திரம், எத்த கைய ஒழுக்க நெறிகளுக்கும் கட்டுப்படாத தாகவும், உணர்ச்சி செலுத்தும் வழிகளி லேயே செல்வதாகவும் படைக்கப்பட்டுள் ளது. அதன் பாத்திரப்பண்பிற் புறவுலகப் பாதிப்புகளைக் காண்பதற்கில்லை. ஆசிரிய னாகக் குறிப்பிடப்பட்டுள்ளபோதிலும் அவனது மத்தியதர வர்க்க இயல்பு எது வும் பாத்திரப்டண்பின் உருவாக்கத்துக்குத் துணையாக அமைந்திருக்கவில்லை. இத னால், அப்பாத்திரம் முழுமை பெற்றதாக அமையவில்லை. ஆனால், செந்தில்நாத னின் பாத்திரப் பண்பைப் பொறுத்தவ ரையில், அவரது மத்தியதர வர்க்க குணவி யல்புகள் இயல்பாக அமைந்துள்ளன. இத்தகைய இயல்புகளினூடேயே ஆசிரியர் இப்பாத்திரத்தின் பாலுறவு தொடர்பான விடயங்களையும் இணைத்துள்ளார்.
குடும்பப் பொறுப்பின் நிமித்தமாகக் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் நோக்கினால், செந்தில்நாதனால் மூன்று மாதங்களாகச் சொந்த ஊருக்குத் திரும்ப முடியவில்லை. ஆயினும், அவரது உணர் வுகள் உடலுறவினை வேண்டிநின்றன. கடன் பணம் கிடைத்த சாக்கிலே, அவ ரது மனம் வீட்டுக்குச் செல்வதற்குச் சாத கமான வகைகளிற் சிந்தித்தது. பல எதிர் பார்ப்புக்களுடன் மனைவியைச் சந்திப்ப தற்குச் சென்றிருந்தார். ஆயினும், வீட் டிலே விடுமுறையிலே தங்கியிருந்த ஐந்து நாட்களிலும் பல்வேறு தடைகளினால் அவரது உடல்ரீதியான தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. நாவலாசிரியர் இது பற்றிக் குறிப்பிடும்போது, "இந்த ஐந்து நாட்களுக்கிடையில், பிராய்டின் மனவியற் கோட்பாடுகளைப் புனர் விசாரணை செய்
Waswa

Page 116
வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இருக் கின்றது" என்று கூறியுள்ளார். சிக்மன்ட் பிராய்டின் உளவியற் கோட்பாடுகளைப் பிரக்ஞை பூர்வமாகப் பரிசீலனை செய்ய முற்பட்ட ஈழத்துத் தமிழ்நாவல் என்ற வகையிலும் சடங்கு குறிப்பிடத்தக்கதா கும.
செந்தில்நாதன் விசுவாசமான அர சாங்க ஊழியராக இருந்தமை போன்றே, விசுவாசமான குடும்பத் தலைவராகவும், கணவராகவும், மருமகனாகவும் இருந்தார் உண்மையிலே, அவரது நிர்வாக விடயங் கள் மாமியாரான செல்லப்பாக்கிய ஆச்சி மூலமாகவே நடைபெற்றன. செந்தில் நாதனின் பாத்திரப் பண்பின் உருவாக்கத் திற் செல்லப்பாக்கிய ஆச்சி என்னும் பாத் திரம் உறுதுணையாக அமைந்துள்ளது. கதைத்தலைவர் தமது மனைவி அன்னலட் சுமியைப் பற்றி நினைப்பதைவிட, மாமி யாரான செல்லப்பாக்கிய ஆச்சியைப் பற் றியே அநேக சந்தர்ப்பங்களிலே நினைவு கொள்வார் என ஆசிரியர் கதையினுாடே கூறிச் செல்கிறார். அந்த அளவுக்குச் செந் தி ல் நா த னின் குடும் பத் தை இயக்கி வைக் கின்ற சூ த் தி ர தா ரியா க அ வள து பாத் தி ர ம் அமைந்துள் ளது. செந்தில்நாதனின் மனைவி அன்ன லட்சுமி, கதைத் தலைவர் பாத்திரத்தின் பாலியற் சிந்தனைகளது இலக்காகப் படைக் கப்பட்டுள்ளாள். "அவருடைய வாழ்க் கைப் பயணம் செல்லப்பாக்கிய ஆச்சி, அன் னலட்சுமி ஆகிய இரண்டு தண்டவாளங் களை ஆதாரமாகக் கொண்டு ஓடிக்கொண் டிருக்கின்றது" என்ற ஆசிரியரின் குறிப்பி னின்றும், கதைத் தலைவர் பாத்திரவார்ப் பிலே மற்றைய இரு பாத்திரங்களினதும் இன்றியமையாத பங்களிப்பினை உணர முடிகின்றது.
செந்தில்நாதன் என்ற பாத்திரத்தின் தனியான அம்சங்களும் நாவலிற் புலப்படுத் தப்பட்டுள்ளன. அவர் தம் குடும்பமும் தம் தொழிலும், தம் பிரச்சினைகளும் என்று ஒதுங்கி வாழ்பவர். எதனையும் பயன்கரு தியே ஆற்றுபவர். செலவைப் பொறுத்த வரையிலும், அவர் பயன் கருதும் சிக்கன வாதியாவர். இவையே அவரது வாழ்க்கை நெறியை நிர்ணயிக்கும் காரணிகளாக விளங் குகின்றன.

அவரிடத்துச் சில பொதுவான இயல்பு கள் உண்டு. சொந்தச் செலவிலே மது அருந் துவதை அவர் விரும்புவதில்லை. நிறைவாக உணவு உட்கொண்டால், இடையிடையே *சிகரெட்" புகைப்பார். பத்திரிகை பார்ப்ப தாயின், பணத்தைச் செலவழித்து வாங்க மாட்டார்; இலவசமாகவே பார்க்க விரும்பு வார். அவரது பயணப் பைக்குள் எப்போ துமே இரண்டு ஆங்கில நூல்கள் இருக்கும். அவற்றை ஒருபோதுமே அவர் முழுமை யாக வாசித்தது இல்லை.
உலகியல் விடயங்களிற் போதிய பரிச் சயமும், அனுபவமும் அவருக்கு இருக்க வில்லை. ஆயினும், தம்மை இயன்றவரை யிலே இனங்காட்டிக்கொள்ளாமலே, சமூக நெறிகளுக்கு ஒத்துப்போவதாகக் காட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தார், தனிமனிதர் பற்றிய சமூகத்தின் மதிப்பீடுகளினின்றும் தாம் தவறிவிடாமல் வாழ வே அவர் விரும்பியிருந்தார். ஆயினும், சில சந்தர்ப் பங்களில். குறிப்பிட்ட விடயங்கள் பற்றிய தமது அறியாமையை வெளிப்படுத்தவேண் டியவரானார். உதாரணமாக, இலக்கிய விடயங்களிலே ஈடுபாடு கொண்ட கனக லிங்கத்தோடு சர்ச்சையிலே ஈடுபட்டு, தமது இலக்கிய அறிவுச்சூனியத்தை அவர் வெளிப் படுத்தியமையைக் குறிப்பிடலாம். தமது மூளைக்கு அதிக வேலை கொடுக்காமலேயே பிரச்சினைகளைச் சமாளிக்க முயல்பவராக செந்தில்நாதன் காட்டப்பட்டுள்ளார்.
செந்தில்நாதன் சமுதாய ரீதியாக எவ் வகையிலும் முன்னோடியாக அமையத் தக்க பாத்திரமன்று. ஆயினும், எவ்வித செயற்கைப் பாங்குமின்றி, இ ய ல் பா ன செயற்பாங்குடனும், இயல்பூக்கங்களுட னும் அப் பாத்திரம் வார்க்கப்பட்டுள்ளது. நாவலாசிரியரால் அப் பாத்திரம் சுயமாக இயங்குவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட் டுள்ளது; சுவையாகவும் படைக்கப்பட்டுள் ளது. இவ்வகையில், ஈழத்து நாவல்களிலே இடம்பெற்றுள்ள சிறந்த சில கதைத் தலை வர் பாத்திரங்களிற் செந்தில்நாதன் பாத் திரமும் விதந்து குறிப்பிடத்தக்கதாக விளங் குகின்றது.
0 ത്ത

Page 117
இலங்கையிற்த பிரச்சின்ன
தீர்வுக்ஃசில் ஆ
கலாநிதி எம்.
( 1)
தமிழகத்திலே நூல் வெளியீடு ஒரு தொழில் துறையாக வளர்ச்சியடைந்துள் ளது. தனியார் மூலதனத்துடன் இயங்கும் பல பதிப்பகங்கள் அங்கு லாபகரமாகச் செயற்படுகின்றன. ஆண்டுதோறும் சுமார் ஆயிரம் தமிழ்நூல்களாவது அங்கு வெளி வருகின்றன. பல்லாயிரக் கணக்கான பிரதி கள் விற்பனையாகின்றன. தமிழகத்தின் சனத்தொகையுடனும் வங்காளம், கேரளம் போன்ற இந்தியாவின் வளர்ச்சியடைந்த பிற மாநிலங்களுடனும் ஒப்புநோக்குகை யில் தமிழகத்தின் நூல் வெளியீட்டுத் துறை மிகவும் பின்தங்கியது எனக் கூறலா மெனினும் கடந்த பத்தாண்டுகளில் தமிழ கத்தில் நூல் வெளியீட்டுத் துறையின் வளர்ச்சி கணிசமானது என்பதில் ஐய மில்லை.
தமிழகத்துக்கு வெளியே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் பெருமள வில் வாழும் இலங்கையில் சொந்த மூல தனத்தில் இயங்கும் தொழில் ரீதியான தமிழ்நூல் வெளியீட்டுநிறுவனம் ஒன்று கூட இல்லை என்பது நமது கவனத்துக்குரியது. இலங்கையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர், சுமார் 40 லட்சம் பேர் வாழ்கின்றனர். இலங்கைத் தமிழர், இந் தியத் தமிழர், முஸ்லிம்கள், என்ற முப் பிரிவினரும் இதில் அடங்குவர். தமிழகத்
അ 9,

ÕIDIDIÖ66.16fob
இரு
ஏ. நுஃமான்
திலே சுமார் 5 கோடி தமிழ் மக்கள் வாழ்ந்த போதிலும் 30% தினரே அங்கு எழுத்தறிவுடையவர். ஆனால் இலங்கை யில் எழுத்தறிவு வீதம் 80% க்கும் அதிக மானதாகும். சனத்தொகை அடிப்படை யில் தமிழகத்திலும் இலங்கையிலும் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 12 : 1 என்ற விகிதத்தில் இருந்தாலும் எழுத்தறிவின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 5 : என்ற விகிதத்திலேயே உள்ளது. இவ் வகையில் பார்த்தால் இலங்கையில் தமிழ் நூல் வெளியீட்டுத்துறை நன்கு வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் நிலைமை கவலைக்குரியது.
திட்டவட்டமான புள்ளி விபரங்கள் இல்லையாயினும் இலங்கையில் ஆண்டு தோறும் வெளிவரும் தமிழ் நூல்களின் சராசரி எண்ணிக்கை நூற்றுக்கு அதிக மில்லை. இவற்றுள்ளும் புனைகதை, கவி தைத்துறை சார்ந்த நூல்களே பெரும் பாலானவை. பிறதுறை சார்ந்த நூல்கள் அரிதாகவே வெளிவருகின்றன. பரீட்சைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வெளி வரும் பாடநூல்கள், துணைப்பாடநூல் கள், பயிற்சிப் புத்தகங்கள், வினாவிடை கள் என்பன இங்கு கருத்திற் கொள்ளப் படவில்லை.
தொழில் சார்பற்ற வெளியீட்டு நிறு
வனங்கள் பல இங்கு உள்ளன. எழுத் தாளர் கூட்டுறவுப் பதிப்பகம், யாழ்

Page 118
இலக்கிய வட்டம், வாசகர் சங்கம், கல் கின்னைத் தமிழ் மன்றம், முத்தமிழ் வெளி யீட்டுக் கழகம், இஸ்லாமிய நூல் வெளி யீட்டுப் பணியகம், தமிழியல், அலை வெளியீடு போன்றவை இவற்றுட் சில. இவற்றின் பெயரில் பல நூல்கள் வெளி வந்துள்ளன. ஆயினும் இவற்றுள் எதுவும் சொந்த மூலதனத்துடன் நூல் வெளி யீட்டை ஒரு தொழில் முயற்சியாக மேற் கொள்ளும் நிறுவனம் அல்ல. இலக்கிய ஆர்வமும் ஒத்த கருத்தும் உள்ள சில நண்பர்களின் கூட்டு முயற்சிகள் . இவை வெளியிடும் நூல்களுக்கான மூலதனம் பெரிதும் நூலாசிரியர்களுடையது; அல்லது நண்பர்களின் உதவியினால் பெறப்படுவது. இலங்கையில் வெளிவரும் மிகப் பெரும் பாலான தமிழ் நூல்கள், ஆசிரியர் களின் சொந்த முயற்சியினால் சொந்த மூலதனத்துடன் வெளியிடப்படுபவை. சுருக் கமாகக் கூறுவதானால் இலங்கையில்தமிழ் நூல் வெளியீடு தனிப்பட்ட எழுத்தாளர் களின் ஆர்வம், நிதிப்பலம் என்பவற்றி லேயே தங்கியுள்ளது. இவ்வாறு ஆசிரி யனே வெளியீட்டாளனாகவும் இருக்கும் நிலைமை வளர்ச்சியடைந்த நாடுகளில் மிகவும் அரிதாகும். இத்தகைய வெளி யீட்டாளர்கள் ஆசிரிய வெளியீட்டாளர் J56ir (Author Publishers) argor Lu Gauri.
( 2)
இலங்கையில் தமிழ் நூல் வெளியீடு வளர்ச்சியடையாதிருப்பதற்குரிய அடிப்
படைக் காரணம், அது பெரிதும் ஆசிரிய வெளியீட்டாளர் சளின் தனிப்பட்ட முயற்சி யில் தங்கியிருப்பதேயாகும். இலங்கையில் உள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். பெரும்பாலும் ஆசிரியர்கள் அல்லது எழுது வினைஞர்கள். இவர்களது வருமான மட் டம். அன்றாட வாழ்க்கைத் தேவை களையே பூர்த்தி செய்ய முடியாதது. இந் நிலையில் பெருந்தொகைப் பணத்தை முத லீடு செய்து தங்கள் புத்தகங்களை வெளி யிடுவதென்பது இவர்களில் பலருக்கு நினைத்துப் பார்க்க முடியாத பெருஞ் சுமையாகும். முப்பது ஆண்டுகளுக்கு
92 --س-

மேலாக எழுத்துத் துறையில் ஈடுபட்டு உழைத்த பிறகும் ஒரு புத்தகம் கூட வெளி யிட வகையற்ற பல எழுத்தாளர்கள் நம் மத்தியில் இருப்பது பலரும் அறிந்த உண்மை. சில எழுத்தாளர்களாலேயே கடன்பட்டோ அல்லது நண்பர்களின் உதவி யுடனோ நூல் வெளியிட முடிகிறது. இவர்சளும் தங்கள் முதலீட்டைத் திரும் பப் பெறுவதற்காக நூல் வெளியீட்டு விழாக்களில் பெரிதும் தங்கியிருக்கிறார் கள். இதனாலேயே நமது நூல் வெளி யீட்டு விழாக்கள் பெரும்பாலும் பணச் சடங்குகளாக நடைபெறுகின்றன. இலக் கியத் துறைக்குப் புறம்பான வர்த்தகர்கள், பிரமுகர்கள் போன்றவர்களை அழைத்து முதற் பிரதி, சிறப்புப் பிரதிகள் வாங்க வைப்பதன் மூலம் மூலதனத்தின் பெரும் பகுதியை மீளப் பெற்றுக்கொள்ள முயற் சிக்கப்படுகின்றது. எழுத்தாளர்களின் சுய கெளரவத்தைப் பாதிக்கக் கூடிய இந்த நடைமுறை கூட குடும்ப அல்லது சமூக செல்வாக்குள்ள சில எழுத்தாளர்களுக்கே சாத்தியமாகின்றது.
நமது எழுத்தாளர்கள் சிலர் தமது நூல்களை தமிழகத்தில் வெளியிடும் வாய்ப் புப் பெற்றுள்ளனர். 1960 களின் தொடக் கத்தில் இருந்து நமது நவீன எழுத்தாளர் சிலரின் படைப்புக்கள் இவ்வாறு வெளி வந்துள்ளன. இலக்கிய ரீதியில் முக்கியத் துவமும் பிரபலமும் உள்ள நமது சில எழுத்தாளர்களின் படைப்புகளை சில தமிழகப் பதிப்பகங்கள் தமது சொந்த மூல தனத்தில் வெளியிட்டுள்ளன. இத்தகைய வாய்ப்புப் பெற்றவர்கள் மிகச் சிலரே எனினும் அவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும். இவர்களுக்கு நூல்வெளி யீட்டுச் சுமை எதுவும் இல்லை. கை எழுத் துப் பிரதிகளை பதிப்பகங்களுக்குக் கொடுத்து விடுவதோடு இவர்கள் கடமை முடிவடைகிறது. வெளியீடு, விற்பனை ஆகியவற்றைப் பதிப்பகங்களே மேற்கொள் கின்றன. வ ரு மா ன த் தி ல் 10% முதல் 20% வரை எழுத்தாளர்கள் சன் மானமாகவும் (Royalty) வழங்குகின்றன. இத்தகைய வாய்ப்பற்ற ஆனால் சொந்த

Page 119
நிதிப்பலமுடைய சில எழுத்தாளர்கள் தம் சொந்தப் பணத்தைச் செலவிட்டு தமிழக அச்சகங்களில் தமது நூல்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளனர். இலங்கையில் வெளி யிடுவதைவிட இது அவர்களுக்குப் பல வகையில் லாபகரமானது. இவ்வாறு வெளி யிடப்படும் நூல்களின் அச்சகச் செலவு ஒப்பீட்டளவில் குறைவாகவும் பதிப்புத் தரம் கூடியதாகவும் இருப்பதோடு இப் புத்தகங்களுக்குத் தமிழகத்தில் விற்பனை வாய்ப்பும் பரவலான அறிமுகமும் கிடைக் கின்றது.
ஆயினும் தமிழகத்தில் வெளியிடப் படும் இலங்கை எழுத்தாளர்களின் நூல் கள் இலங்கை வாசகர்களுக்குப் பெருமள வில் கிடைப்பதில்லை. சில நூறு பிரதி களே இங்கு தருவிக்கப்படுகின்றன. கைலாச பதி, சிவத்தம்பி போன்ற சிரேஷ்ட எழுத் தாளர்களின் நூல்கள் கூட இதற்கு விலக் கல்ல. இவர்களின் நூல்கள் தமிழகத்தை விட இலங்கையில் குறைவாகவே அறியப் பட்டுள்ளன. தனது நூல் ஒன்று சொந்த நாட்டில் பரவலாகப்படிக்கப்படாதிருப்பது எந்த ஒரு எழுத்தாளனுக்கும் திருப்தி தரும் விஷயமல்ல. உள்நாட்டில் தமிழ் நூல் வெளியீட்டுத் துறை வளர்ச்சியடையாத வரை நமது எழுத்தாளர்களுக்கு விமோ சனமே இல்லை.
( 3 )
இலங்கையில் தமிழ்நூல் வெளியீட் டு த் து  ைற வளர்ச்சியடையாமைக்கான அடிப்படைக் காரணம் அது பெரிதும் ஆசி ரிய வெளியீட்டாளர்களில் தங்கியிருப்பதே எ ன் று குறிப்பிட்டேன். த மி ழ க த் தில் இருப்பதுபோல் தொழில்ரீதியான பதிப்பகங்கள் இ ங் கு வளர்ச்சியடை யாமையே இதன் அடிப்படையாகும். இவை இரண்டும் பரஸ்பரத் தொடர் புடையவை. பதிப்பகங்கள் வளர்ச்சியடை யாத நிலையில் நூல் வெளியீட்டுத்துறை ஆசிரிய வெளியீட்டாளர்களிலேயே பெரி தும் தங்கியிருக்க நேர்கின்றது. பதிப்பகங் கள் வளர்ச்சியடையும்போது நூல் வெளி
9 سے

யீட்டுத்துறையில் ஆசிரிய வெளியீட்டாள னின் பங்கு குறைகிறது.
இலங்கையில் தொழில்ரீதியான பதிப் பகங்கள் வளர்ச்சியடையாமைக்கும் தமிழ் நூல் வெளியீடு பெரிதும் ஆசிரிய வெளி யீட்டாளர்களிலேயே தங்கியிருப்பதற்கும் அடிப்படைக் காரணம் இங்கு நூல்வெளி யீடு பொருளாதார ரீதியில் ஒரு இலாபகர மான முயற்சியாக மாறவில்லை என்பதே யாகும். உற்பத்திச் செலவினங்களின் அதி கரிப்பும், விற்பனை வாய்ப்புக் குறைவும் நூல் வெளியீட்டை ஒரு இலாபகரமற்ற தொழிலாக முடக்கிவைத்துள்ளன.
தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பண வீக்கத்தின் காரணமாகக் கடந்த பதி ணைந்து இருபது ஆண்டுகளில் இலங்கை யில் நூல் வெளியீட்டுச்செலவு பலமடங்கு அதிகரித்திருக்கின்றது. ஒரு உதாரணத்தை மட்டும் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன். 1970இல் மகாகவியின் "கோடை"யை நாங் கள் முதல் பதிப்பாக வெளியிட்டபோது 88 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் ஆயி ரம் பிரதிகள் அச்சிடுவதற்கு எமக்கு சுமார் ரூ. 2000/- செலவாகியது. இவ்வகை யில் ஒரு பிரதியின் உற்பத்திச் செலவு ரூபா 2/-தான். ஆனால் கடந்த ஆண்டு இதே நூலை இரண்டாம் பதிப்பாக வெளி யிட்டபோது 1000 பிரதிகள் அச்சிடுவதற்கு சுமார் ரூபா 14000/- செலவாகியது. இவ் வகையில் ஒரு பிரதியின் உற்பத்திச் செலவு ரூபா 14/- ஆகின்றது. இருபது வருட இடைவெளியில் உற்பத்திச் செலவு ஏழுமடங்கு அதிகரித்திருப்பதை இது காட்டுகின்றது. இன்றைய நி லை யி ல் சாதாரண தரத்தில் 100 பக் க ங் க ள் கொண்ட ஒரு நூலில் 1000 பிரதிகள் அச் சிடுவதற்கு சுமார் ரூபா 20000 - செல வாகுமென்று மதிப்பிடலாம். இவ்வள்வு பெருந்தொகையை முதலீடுசெய்து நூல் வெளியிடும் நிலையில் எமது எழுத்தாளர் கள் இல்லை.
உற்பத்திச்செலவு அதி க ரித் துன் ள
அதேவேளையில் நமது நூல்களின் விற் பனை வாய்ப்பும் மிகக்குறைவாகவே உள்
3 -

Page 120
ளது, தமிழகத்திலே வெளிவரும் ஒள் வொரு நூலிலும் சுமார் 500 பிரதிகளை நூலகங்களுக்காக தமிழக அரசு வாங்கு கின்றது. வெளியீட்டாளர்கள் தங்கள் உற் பத்திச் செலவை முழுமையாக அல்லது அதன் பெரும்பகுதியை இந்த விற்பனை மூலம் பெற்றுக்கொள்கின்றனர். எஞ்சிய பிரதிகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளி லும் புத்தக விற்பனை நிலையங்கள் மூலம் தனிப்பட்ட வாசகர்களுக்குப் போய்ச் சேருகின்றன. இவற்றின் விற்பனையால் கிடைக்கும் வருமானம் இலாபமாகும். விற் பனைக் கழிவு, ஆசிரிய சன்மானம் என் பவை போக இலாபத்தில் சுமார் அரை வாசி அல்லது அதற்கு அதிகமான பங்கு வெளியீட்டாளர்களுக்குக் கிடைக்கின்றது. ஒரு புத்தகத்தின் அச்சிடப்பட்ட முழுப் பிரதிகளும் (பெரும்பாலும் 1000 பிரதி கள்) விற்றுத்தீர சுமார் இரண்டு ஆண்டு களுக்கு அதிகமானால்கூட பிரதிகளில் ஒரு கணிசமான தொகையை மொத்தமாக அரசு வாங்கிக்கொள்வதால் வெளியீட் டாளரின் மூலதனம் முடங்கிப்போவ தில்லை.
இலங்கையில் நிலைமை இதற்கு முற் றிலும் வேறுபட்டது. இங்கு புத்தகங் களில் ஒரு சணிசமான தொகையை அரசு வாங்கும் திட்டமெதுவும் நடைமுறையில் இல்லை. சமீபகாலங்களில் பதவியிலிருந்த சில தனிப்பட்ட அரசியல்வாதிகளின் கடாட்சத்தினாலும் எழுத்தாளர்கள் சிலரின் தனிப்பட்ட செல்வாக்கினாலும் சில நூறு பிரதிகள் அரசினால் வாங்கப்பட்ட போதிலும் இன்றுவரை இது ஒரு விதி முறைக்குட்பட்ட பொது நடைமுறையாக அமுலில் இல்லை. இந்நிலையில் இலங்கை யில் தமிழ் நூல் விற்பனை பெரிதும் தனிப்பட்ட வாசகர்களிலேயே தங்கியுள் ளது. எழுத்தாளர்களைப்போலவே நமது வாசகர்களிலும் பெரும்பாலோர் மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பொது வான விலைவாசி உயர்வினாலும் புத்த கங்களின் விலை உயர்வினாலும் இவர் களில் பெரும்பாலோர் வாங்கும் சக்தியை இ ழ ந் து வி ட் ட ன ர் போ ட் டி ப்

பரீட் சைக் கு ஆயத்தப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்ட நமது கல்வி முறையினால் பொதுவான வாசிப்புப் பழக் கமும் அருகிவிட்டது. இதனால் எழுத்தறிவு பெற்றோரின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப வாசகர் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லாது போயிற்று. இலங்கைச் சூழலில் நூலாசிரியரே புத்தகத்தின் விற்பனையாள ராகவுமிருப்பதால் நாடெங்கிலும் அவரால் தனது நூலை உரிய முறையில் விநியோ கிக்க முடியாத நிலையும் உள்ளது. இந் நிலையில் ஒரு புத்தகத்தில் ஆயிரம் பிரதி கள் விற்பனையாவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டியுள்ளது. விநியோக முறை சீரில்லாததால் விற்பனைப் பணம் ஆசிரியருக்கு ஒழுங்காக வந்து சேர்வதும் இல்லை. இக் காரணங்களால் புத்தகவெளி யீட்டில் முதலீடு செய்வது லாபகரமற்ற தாக இருப்பது மட்டுமன்றி போட்ட முத லீட்டை மீட்டு எடுப்பதுகூட இயலாத காரி யமாக உள்ளது. இத்தகைய லாபகரமற்ற ஒரு தொழிலில் முதலீடுசெய்வதற்கு யாரும் முன்வரமாட்டார் என்பது வெளிப்படை. இந்நிலையில் பதிப்பகங்கள் தோன்றி வளர வாய்ப்பில்லாது போகின்றது. தற்துணி வுள்ள சில எழுத்தாளர்களே நூல்வெளி யீட்டில் ஈடுபடுவது தவிர்க்கமுடியாததா கின்றது.
நமது ஆசிரிய வெளியீட்டாளன் பொரு ளாதார லாப நோக்கு அற்றவன். நூல் வெளியீட்டால் உளவியல் லாபம் மட்டுமே அவனுக்குக் கிடைக்கின்றது. தனது நூல் ஒன்று வெளிவருவதும், அதனைப் பிறர் படிப்பதும் தரும் மனநிறைவுக்காகவே அவன் தன் நிதிச் சிரமத்தைப் பாராது நூல் வெளியீட்டில் இறங்குகிறான். ஒரு பதிப்பாளனைப் பொறுத்தவரை உளவியல் லாபம் இரண்டாம் பட்சமானதேயாகும். பொருளாதார லாபம் இல்லாது அவனால் முதலீடு செய்ய முடியாது.
( 4 )
உற்பத்திச் செலவின அதிகரிப்பும் விற் பனைவாய்ப்புக் குறைவும் இலங்கையில் தமிழ் நூல் வெளியீட்டுத் துறையின்
94 -

Page 121
வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கின்றன என் பதைப் பார்த்தோம். இவற்றைக் களை வதற்கான சில வழிமுறைகள் பற்றியும் தாம் சிந்திக்கவேண்டும்.
உற்பத்திச் செலவின அதிகரிப்பு பொது வாக நமது சக்திக்கு அப்பாற்பட்ட பொரு ளாதார நிலைமைகளினால் ஏற்படுகின் AD5. அவ்வகையில் நூல்களின் விை யேற்றத்தைக் கட்டுப்படுத்துவது சிரமமா னது. ஆயினும் இரண்டு வழிகளில் நூல் விலையினை நாம் குறைக்கமுடியும். ஒன்று சலுகை விலையில் அச்சுத்தாள் வழங்க ஏற்பாடு செய்தல். மற்றது அச்சிடும் பிரதி களின் எண்ணிக்கையை அதிகரித்தல். இந் திய அரசு சில குறிப்பிட்ட வகையான நூல்களை வெளியிடுவதற்கு சலுகை விலை யில் தாள்வழங்கும் திட்டம் ஒன்றை நடை முறைப்படுத்துகின்றது. இவ்வாறு வெளி யிடப்பட்ட புத்தகங்களில் "மத்திய அரசு சலுகை விலையில் வழங்கிய தாளில் இந் நூல் அச்சிடப்பட்டுள்ளது" என்ற குறிப்பு இடம்பெற்றிருப்பதை நாம் காணலாம். இலங்கை அரசும் இத்தகைய ஒரு திட் டத்தை நடைமுறைப் படுத்த முடியும். சில குறிப்பிட்ட வகையான புத்தகங்க ளுக்கு (உதாரணமாக விற்பனை வாய்ப்பு மிகவும் குறைந்த அறிவுத்துறை சார்ந்த நூல்கள்) அல்லது கூட்டுறவு அடிப்படை யில் அமைந்த பதிப்பகங்களுக்கேனும் சலுகை விலையில் தாள் வழங்கும் திட் டத்தை அரசு அறிமுகப் படுத்தினால் சில வகைப்பட்ட நூல்களின் விலையேனும் குறைய வாய்ப்புண்டு,
ஒரு நூலின் பிரதிகளின் எண்ணிக் கையை அதிகரிப்பதனாலும் அந்நூலின் விலையைக் குறைக்கமுடியும்; உதாரண மாக 100 பக்கம் கொண்ட ஒரு நூலில் 1000 பிரதிகள் அச்சிட ரூ. 20000/- செல வாகும் என்றால் அதே நூலில் 2000 பிர திகள் அச்சிட மொத்தச் செலவு 1 1/2 மடங்கினாலேயே அதிகரிக்கும். அதாவது சுமார் ரூ. 30000/- செலவாகும். இவ்வ கையில் 1000 பிரதிகளுக்கு ரூ. 20/- அடக்க விலையானால் 2000 பிரதிகளுக்கு ரூ. 15/- அடக்க விலையாகின்றது. இவ்
- 9

வாறு அச்சிடும் மொத்தப் பிரதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது தனிப் பிரதிகளின் விலை குறைவதனால் அந்நூல் வாசகனின் வாங்கும் சக்தியை மீறாமல் பார்த்துக்கொள்ள முடியும். ஆனால் விற் பனை வாய்ப்பை அதிகரிக்காமல் அச்சிடும் பிரதிகளின் எண்ணிக்கையை ஒருபோதும் அதிகரிக்க முடியாது. நமது எழுத்தாளர்க ளில் பலர் 1000 பிரதிகள் அச்சிடுவதற்கே தயங்குகின்றனர். இந்நிலையில் இது உட னடியாகச் சாத்தியம் இல்லை,
(5)
நூல்களின் விற்பனையை அதிகரிப்ப தற்கு நாம் என்ன செய்யலாம்? ஒரு கணி சமான தொகைப் பிரதிகளை, அரசு நிறு வனங்கள் வெளியீட்டாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கச் செய்வதுதான் இது சம்பந்தமாக நாம் உடனடியாக மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை. தமிழ கத்தில் இந்த நடவடிக்கை பல ஆண்டுக ளாக நடைமுறையில் இருப்பதை நாம் அறிவோம். இலங்கையில் நூலக சேவை கள் சபைமூலம் அல்லது மாகாண அரசு கள் மூலம் இத்திட்டம் அமுல் செய்யப் படலாம். வட கிழக்கு மாகாண சபையில் இத்தகைய ஒரு திட்டம் இருந்ததாகத் தெரிகிறது. ஒருசில ஆசிரியர்களின் நூல் களில் 300 பிரதிகள் அளவு வாங்கப்பட்ட தாகவும் தெரிகின்றது. இது ஒரு முன்மா திரியான திட்டமே. ஆனால் நிரந்தரமான திட்டவட்டமான விதிமுறைக்குட்பட்ட ஒரு நடைமுறையாக இது மாற்றப்பட வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி இலங்கையின் ஏனைய மாகா ணங்களிலும் தமிழ்ப்பேசும் மக்கள் பெரு மளவில் வாழ்கின்றனர். அவ்வகையில் சகல மாகாண சபைகளும் இத்தகைய ஒரு திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும். வடகிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் தமிழ்ப்பேசுவோர் சிறு பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள பொது நூலகங்களில் எல்லாம் முழு அளவிலான தமிழ்ப்பிரிவு ஒன்று உருவாகு வதற்கு வழி செய்ய வேண்டும். இவ்

Page 122
கையில் ஆண்டு தோறும் அவ்வாண்டில் வெளிவந்த தமிழ் நூல்கள் ஒவ்வொன்றி லும் குறைந்தபட்சம் 500 பிரதிகளையா வது நூலகங்களுக்காகக் கொள்முதல் செய் யப்படும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுவது அவசியமாகும்.
ஆண்டுதோறும்பிரதேசரீதியிலும் தேசிய ரீதியிலும் புத்தகக் கண்காட்சிகளையும் புத் தகச் சந்தைகளையும் நடத்துவதன்மூலமும் நமது நூல்களின் விற்பனை வாய்ப்பை அதி சரிக்க முடியும். நம்நாட்டில் வாசிப்புப் பழக் கம் பெருகுவதற்கும் புத்தகக் கலாசாரம் ஒன்று உருவாகுவதற்கும் இது வழிவகுக்கும். இந்திய மாநிலங்களிலெல்லாம் இத்தகைய புத்தகச் சந்தைகள் ஆண்டுதோறும் விரிந்த அளவில் நடைபெறுகின்றன. புத்தகப் பிரியர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பா கும். புத்தகங்களை விலைகொடுத்து வாங்கும் உந்துதலையும் இத்தகைய நிகழ் வுகள் ஏற்படுத்துகின்றன. பல்கலைக் கழகங்களில் புத்தகக் கண்காட்சிகள் நடை பெறும் சமயங்களில் அநேக மாணவர்கள் புத்தகங்களை விலைகொடுத்து வாங்கிச் செல்வதை நான் பார்த்திருக்கிறேன். பாட சாலை மட்டத்திலும் புத்தகக் கண்காட் சிகளை ஒழுங்கு செய்வது மிகுந்த tuttg) 6-ti g5!.
உள்நாட்டில் மட்டுமன்றி தமிழ்ப் பேசு வோர் பெருந்தொகையில் வாழும் இந் தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளிலும் நமது நூல்களுக்கு ஓரளவு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்த முடிந்தால் இந்நாட்டில் தமிழ் நூல் வெளியீட்டுத்துறை பெரு வளர்ச்சியடையும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இதுவரை இத்துறையில் நாம் ஆக்கபூர்வமான முயற்சிகள் எதை
பும் மேற்கொள்ளவில்லை.
தமிழகத்தில் வெளிவரும் நூல்களுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒரு முக்கியமான சந்தையாக இருந்துவருகின்றது. ஆனால் தமிழகத்தில் வெளிவரும் ஒரு சில ஈழத்த வர்களின் நூல்களைத் தவிர இலங்கையில் வெளிவரும் தமிழ் நூல்கள் எவையும் விற் பனை ரீதியாக தமிழகத்துக்கு ஏற்றுமதி
aus 9

யாவதில்லை. தனிப்பட்ட சில நலன் விரும் பிகளின் முயற்சிகள் மூலம் ஈழத்து நூல் கள் சில தமிழகத்துக்குப் போய்ச் சேர் வதை நாம் இங்கு பொருட்படுத்தமுடி யாது. தமிழகத்துக்கும் இலங்கைக்கும்இடை யிலான இலக்கிய பரிவர்த்தனை ஒருவழிப் பாதையாகவே இருக்கின்றது என்ற குற் றச்சாட்டை நாம் தொடர்ந்து கூறிவந்தி ருக்கிறோம். ஆயினும் இதை நிவர்த்தி செய்வதற்கான ஆக்கபூர்வமான நடை முறைகள் எதையும் நாம் கடைப்பிடிக்க வில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ கத்திலே முன்னெப்போதையும்விட ஈழத்து நூல்களுக்கான வாசகர் கூட்டம் ஒன்று உரு வாகி இருக்கின்றது. ஈழத்து இலக்கியம் , அரசியல். சமூகவியல் போன்றவற்றை அறிய அங்குள்ள பலர் விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் நமது நூல்களை எளி தில் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. நமது நூல்கள் அங்கு பரவலாகக் கிடைப்பதில்லை.
இந்தியாவுக்கு இலங்கைத் தமிழ் நூல் களை ஏற்றுமதி செய்வதென்பது இரு நாடு களும் சம்பந்தப்பட்ட வர்த்தகப் பிரச் சனையாகும். இந்தியாவைப்பொறுத்தவரை ஆங்கிலம்தவிர்ந்த பிற இந்திய மொழிகளில் அச்சிடப்படும் பிறநாட்டு நூல்களை இறக்கு மதி செய்வதற்கு தடை இருப்பதாகத் தெரியவருகிறது. இதனால் இலங்கைத் தமிழ் நூல்களை இறக்குமதி செய்ய முடி யாதிருப்பதாக அங்குள்ள புத்தக விற்பனை யாளர் கூறுகின்றனர். இந்தியாவிலிருந்து நூல்களை இறக்குமதி செய்வதற்காக ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான அந்நியச் செலாவணியை நாம் செலவிடுகின் றோம். அ வ் வ கையில் இலங்கை யில் இருந்து நூல் களை இறக்குமதி செய்வதற்கு சில ஆயிரம் ரூபாய்களையாவது ஆண்டுதோறும் இந் தியா செலவிடவேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது நியாயமானதே. இப் பிரச்சனை அரசு மட்டத்தில் விவாதித்துத் தீர்வுகாணப் படவேண்டியது. இந்திய நூல்களை இறக்கு மதி செய்யும் இலங்கை நிறுவனங்களும் இவ்விசயத்தில் அக்கறை எடுக்கவேண்டும்.
=

Page 123
தமிழக அரசு தமிழகத்தில் வெளியா கும் நூல்களில் ஒரு கணிசமான தொகையை வாங்குவது பற்றி ஏற்கனவே குறிப்பிட் டேன். இத்திட்டத்தை இலங்சையில் வெளி வரும் தமிழ் நூல்களுக்கும் விஸ்தரித்துக் கொள்ளமுடிந்தால் நமக்கு மிகுந்த பயன் கிடைக்கும். ஆண்டு தோறும் வெளியா கும் இலங்கைத் தமிழ் நூல்களில் குறைந்த பட்சம் நூறுநூறு பிரதிகளையாவதுவா ங்கு மாறு நாம் தமிழக அரசைக் கேட்கலாம். இது நமக்கு அவர்கள் செய்யும் உதவி மட்டு மல்ல, நமது கலாசாரத்தையும் பிரச்சனை களையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ளச் செய்வதற்கான வழியுமாகும். இலங்கைக் கும் இந்தியாவுக்கும் இடையிலான கலா சாரப் பரிவர்த்தனைத் திட்டம் ஒன்று ஏற் கனவே நடைமுறையில் உள்ளது. புத்தகக் கொள்வனவை இத் திட்டத்தின் ஒரம்சமாக ஏற்றுக்கொள்ளச் செய்வது எளிது.
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுக ளும் இந்தியாவில் இருந்து பெருந்தொகை யான தமிழ் நூல்களை இறக்குமதி செய் கின்றன. அந்நாடுகளில் நமது நூல்களுக்கும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்த நாம் முயல வேண்டும். முயன்றால் நமது நூல்சளில் சில நூறு பிரதிகளையாவது இந்நாடுகளில் சந்தைப்படுத்த முடியும், சிங்கள மொழி
இருதயத்தின் ஈரிதழ் போல் ஒரு வயிற்றுப் பிள்ளைகள்போ பேராசை கொண்டோர் பிரி, ஆராயார் செய்வார் அழிவு.
- புலவ

நூல்கள் உள்நாட்டுச் சந்தை வாய்ப்பை மட்டுமே நம்பி இருக்கின்றன. ஆனால் தமிழ் நூல்களுக்குச் சாத்தியமான வெளி நாட்டு சத்தை வாய்ப்பு உண்டு. அதை քուծ இன்னும் சரியாகப் பயன்படுத்த முயல வில்லை. தனிப்பட்ட ஆர்வலர்களால் இத் துறையில் பயனுள்ள முயற்சிகள் எதுவும் செய்யமுடியாது. அரசின் அனுசரணையும் நூல் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்களின் அக்கறையும் இருந்தாலே இதில் நாம் பய னுடைய பெறுபேறுகளைக் காணமுடியும்.
நமது நூல்களுக்கு உள்நாட் டி லும் வெளிநாடுகளிலும் சந்தை வாய்ப்பை ஏற் படுத்தாத வரையில் தமிழ் நூல் வெளியீட் டுத் துறை இங்கு வளர்ச்சியடைவது சாத் தியமில்லை. முதல் 15-6hudš65)35u 1 1 35 př. நாட்டுச் சந்தை வாய்ப்பை நாம் ஏற்படுத்த வேண்டும், சந்தை வாய்ப்பு அற்ற ஒரு தொழில் லாபகரமற்றது. லாபகரமற்ற ஒரு தொழில் வளர்ச்சியடைய (Up. Tgs. ஆகவே இந்நாட்டில் தமிழ் நூல் வெளி யீட்டை லாபகரமான ஒரு தொழில்துறை யாக வளர்க்க இத் துறையில் ஈடுபட்டிருப் பவர்கள் முயலவேண்டும். இது தொடர் பான கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள் வதற்காக பதிப்பாளர்-நூலாசிரியர் கூட் g-uái 5 iš 3560 677 (guilds) உருவாக்குவது பய னளிக்கும்.
D
இத்துமுசி வீம்யாம் ால் உள்ளோம் - அரசியலில் த்து நமை வேறாக்கி,
ர்பணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை.

Page 124
பிரேம்ஜி ஞா
"ட்டாண்டுகளுக்கு மேலாக விடுபட் டுப்போன சாகித்தியப் பரிசுகள் ஒட்டு மொத்தமாக வழங்கப்படுவதை ஒட்டி, தேசிய ரீதியில் இலக்கியப் பெருவிழா வொன்று நடைபெறவிருக்கும் தறுவாயில் ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி முகம் கொடுக்கும் பிரச்சினைகளை, அவற்றின் வெவ்வேறு கோணங்களிலும் நிலைகளிலும் தரிசிப்பதும் இனங்காணுவதும், இவற்றிற் கான தீர்வு மார்க்கங்களைக் கண்டறிவதும் உசிதமானதாகும்.
இலக்கிய வளர்ச்சி அகநிலை, புற நிலை ஆகிய இரு கூறுகளைக் கொண்
-3.
முதலாவது: இலக்கியத்தின் உள் ளடக்கம், சமூகப்பயன்பாடு, மானுடப் பெறுமானங்கள் பற்றியது.
இரண்டாவது; இலக்கிய உற்ப விப்பு, பெருக்கம், வியாபகம் சம்பந்த மானது.
முன்னையது ஒவ்வொரு எழுத்தாளன தும்-படைப்பாளியினதும் சமூகப் பிரக்ஞை யால், உலகப்பார்வையால், இலக்கியப் பற் றுக்கோட்டால், அவன் வரித்துக்கொள்ளும் வாழ்க்கைச் சித்தாந்தத்தால் நிர்ணயிக்கப் படுவது. ஆகவே இது எழுத்தாளனின் மனச் சாட்சியோடு சம்பந்தப்பட்டது. இதை ஒவ்
- 93
 

னசுந்தரன்
வொரு படைப்பாளியும் சுதந்திரமாகவும் ஆத்மசுத்தியுடனும் தீர்மானிக்கவேண்டும். இதுபற்றி அவன் தனித்தோ கூட்டாகவோ எந்த ஒரு நிலைப்பாட்டையும் மேற்கொள் ளும் உரிமை பெற்றுள்ளான். இந்த அவனது பிறப்புரிமையில், புனிதமான மானுட உரி மையில் யாரும் எதேச்சாதிகாரமாகத் தலையிடக்கூடாது; ராஜ்ய-ஸ்தாபன தலை யீடுகள் இருக்கலாகாது.
எந்தக் கருத்து, எந்த இலட்சியம், எந்த இலக்கியச் சித்தாந்தம் உயர்ந்தது, சிறந் தது என்பதை அந்தக் கருத்துருவத்தின் உன்னததத்துவமே தீர்மானிக்கும். இதற் கான தீர்ப்பை காலமே வழங்கும்.
என்றாலும் இந்தத் துறையின் பல்வேறு கருத்துக்களுக்கிடையில் போராட்டம்கருத்துப் போராட்டம் நடைபெறுவது இயல்பு. இது வளர்ச்சியின் வரலாற்று ரீதி யான நியதியும் தர்க்கவியல் தேவையும்கூட. ஆனால், இந்தக் கருத்துப் போராட்டம் பண்பாட்டின் எல்லைக்குள், மனிதநேய வரம்புக்குள் நடைபெறவேண்டும். வெறும் கருத்துச் சண்டையாக இல்லாமல் நல்ல கருத்துக்கான, மேலும் உன்னத கருத்துக் கான ஆத்ம தேடலாக இருக்கவேண்டும். இது கூட்டான தேடலாக இருப்பது சிறப் புடையது. வரவேற்கத்தக்கது.
இரண்டாவது கூறோ எல்லாப் படைப் பாளிகளுக்கும், அனைத்து இலக்கிய ஆர்வ

Page 125
லர்களுக்கும் பொதுவானது. இங்கு கருத் துப்போருக்கு இடமில்லை. மாறாக கருத் தொருமைப்பாட்டுக்கான தேவை யே முனைப்புடன் நிற்கிறது. கூடுதல் இலக்கியங் சள் படைக்கப்படுவதற்கு, அதிகமதிகமான இலக்கிய சிருஷ்டிகள் நூலுருப் பெறுவதற்கு இலக்கியத்தின் வெளிப்பாட்டு ஊடகங் களை விரிவடையச் செய்வதற்குத் தேவை யான வழி மார்க்கங்களைக் கண்டறிவதும், இத்துறையில் ஸ்தூலமான - திட்டவட்ட மான நடவடிக்கைகளை விரைந்து மேற் கொள்வதும், இத்திசையில் மிகப் பரந்தள வில் ஒத்துழைப்பையும் பல்வேறு மட்ட - வடிவசெயற்பாடுகளையும் ஆற்றுப்படுத் துவதுமே முக்கியமானது.
இதற்கு இலக்கியத்தின் பெளதீக ரீதி யான வளர்ச்சியின் பாற்பட்ட பிரச்சினை களை இனம் காண்பதும், வரையறுப்பதும், முன்னுரிமைகளைச் சரியாக நிர்ணயிப்ப துமே பிரதானமானது.
இவை யாவை?
ஒன்று; நூல்வெளியீடு. இரண்டு: எழுத்தின் வெளியீட்டுச் சாதனங்களை விரிவுபடுத்தல்.
மூன்று: இலக்கிய விழிப்பை, ஆர் வத்தை வெகுஜனப்படுத்தல்.
நான்கு எழுத்தாற்றலை ے سس۔ggéز மையை வலுப்படுத்தல்.
ஐந்து இலக்கியப் பரிவர்த்தனை. ஆறு உந்துதலும் உற்சாகமும்.
நூல் வெளியீடு
இலக்கிய வளர்ச்சியில் மிகப் பிரதான மான-ஜீவாதாரமான மையக் கரு இதுவே. ஆனால் இது பல காரணிகளால் இன்று மிக மோசமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
1. கடதாசி விலை ஏற்றமும், அச்சி
டல் செலவு அதிகரிப்பும்,
2. அத்தியாவசியப் பண்டங்கள் உட் பட அனைத்துப் பொருட்களின தும் அதீத விலை ஏற்றத்தால் மக் களின் வாங்கும் சக்தி வெகுவாகச் சரிந்துள்ளமை.
| 9 مسیح -

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக் கப்பட்டதால் இலங்கையில்ஆரம்ப மாகி துரித வளர்ச்சியுற்று வந்த நிறுவன ரீதியான வெளியீட்டகங் கள் கடையை மூடிவிட நிர்ப்பந் திக்கப்பட்டமை.
தமிழ்நாட்டிலிருந்து வரும் வலு வான வர்த்தகப் போட்டிக்கு முசம் கொடுக்கமுடியாது ஈழத்து வெளி யீட்டு முயற்சிகள் முடங்கிவிட்
6 De
வெளியீட்டு முயற்சிகளை அந்தப் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க வும், ஜிவித்திருப்பதற்கான காப் பினை வழங்கவும், மாற்றுவழிகள் மேற்கொள்ளப்படாது உதாசீனப் படுத்தப்பட்டமை.
நூல் நிலைய அபிவிருத்திச் சபை, வங்கிக் கடன் வசதி, கல்விச்சேவை அமைச்சின் நூல் கொ ள் வன வு போன்ற ஏற்பாடுகள் தமிழ் நூல் களைப் பொறுத்துக் காட்டிவரும் உதாசீனமும் பாராமுகமும்,
இந்தப் பாதிப்புகளிலிருந்தும், முடங்க வைக்கும் காரணிகளிலிருந்தும் தமிழ் நூல் வெளியீட்டுத் துறையை மீட்டெடுத் து வளர்ச்சிப்பாதையில் முன்னெடுப்புச் செய்ய உள்ள மார்க்கங்கள் என்ன?
l.
மத்திய அரசாங்கம் பொது நூல கங்களுக்காகவும் சனசமூக நிலைய வாசகசாலைகளுக் கா கவு ம் தர மான நூல் சளில் தலா 500க்குக் குறையாத பிரதிகளை வாங்கும் திட்டத்தை உருவாக்கிச் செயற் படுத்துவது.
இதற்கு இந்து கலாசார ராஜாங்க அமைச்சு, உள்நாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுகளினதும் பிரதி நிதி க ளைக் கொண்ட மத்திய புத்தகக் கொள்வனவுச் சபையை அமைக்க லாம். அல்லது தமிழ் நூல்களுக்

Page 126
கான தனி புத்தக சபையை அல் லது நூலக அபிவிருத்திச் சபையை அமைத்து தமிழில் வெளியாகும் தரமான நூல்களைக் கொள்வனவு செய்வது.
எழுத்தாளர்கள் தாமாகவோ அல் லது தமது கூட்டுறவுப் பதிப்பகங் கள் மூலமோ அல்லது இலக்கிய அமைப்புகள் மூலமோ வெளியிடும் நூல்களுக்கு மேற் குறிப்பிட்ட வங் கிக் கடன் வசதிகளை ஏற்பாடு செய்து உதவுவது. தனியார்துறை பிரசுராலயங்களுக்கும் இந்த வசதி விஸ்தரிக்கப்படலாம்.
எழுத்துப் பிர தி க  ைள த குதி காண் குழுவொன்றின் மூலம் பரி சீலித்து அந்த நூல்கள் கொள் வனவு செய்யப்படும் என்ற உறுதி யினை வழங்குவதன் மூலம் வங் கிக் கடன் பெறுவதைத் துரிதப் படுத்தலாம்.
ராஜ்ய மட்டத்தில் புத்தக வட் டம் ஒன்றை அமைத்து, நூல் களை இதன் உறுப்பினர்களான இலக்கிய ஆர்வலர்கள், புரவலர் கள் பத்தியில் விற்பதற்கான ஏற் பாட்டைச் செய்தல்.
மாகாண சபைகள் ஈழத்துத் தமிழ் நூல்களில் கணிசமான $2C5 தொகைப் பிரதிசளை வாங்கும் முறையை அமுல்படுத்த ஒழுங்கு
கள் செய்வது,
தனியார் நூல் வினியோகஸ்தர் கள்,விற்பனையாளர்களின் ஆலோ சனைக் கூட்டங்களை நடத்தி ஈழத்துத் தமிழ் நூல்களின் வினி யோக - விற்பனை வலைப் பின் னலை உருவாக்க அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவது.
எழுத்தாளர் - இலக்கிய அமைப்
புக்கள் மூலம் பிரதேச ரீதியாக வாசகர் வட்டங்கள்ை D.CD5
- 90

வாக்கி விற்பனை ஏற்பாடுகளை விஸ்தரிப்பது.
இந்தியாவிலிருந்து இலங்கை, ஆண்டுக்கு பல இலட்சம் ரூபாய் கள் பெறுமதியுள்ள நூல்களை இறக்குமதி செய்தபோதிலும் இந் தியா இலங்கையிலிருந்து ஒருசில ரூபாய்கள் பெறுமதியுள்ள நூல் களைத்தானும் இறக்குமதி செய் வதில்லை. இறக்குமதித் தடைச் சட்டம் அங்கு தொடர்ந்தும் அமு லில் உள்ளது. இந்தச் சட்டத் தைத் தளர்த்தி, இலங்கையில் இருந்து தமிழ் நூல்களை இறக்கு மதி செய்விப்பதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்க வில்லை.
இந்த நிலையில் நூல்களைக் கொள்வனவு செய்து நூலகங் களுக்கு விநியோகிக்கும் தமிழகத் தில் நடப்பிலுள்ள திட்டத்தை இலங்கைத் தமிழ் நூல்களுக்கும் விஸ்தரிக்குமாறு இந்திய மத்திய அரசுக்கூடாக தமிழக அரசுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்யவேண் டும். இத்திட்டத்தின்கீழ் தமிழக அரசு ஒவ்வொரு தரமான நூலி லும் குறைந்தது 500 பிரதிகளை யாவது வாங்குமாறு வலியுறுத்த வேண்டும்.
ஈழத் தமிழர்கள் சர்வதேச வியா பிதம் பெற்றுள்ள நிலையில், இவர்கள் வாழும் நாடுகளுக் கெல்லாம் ஈழத்தில் வெளியாகும் தமிழ்நூல்களை அனுப்புவதற்கான சாத்தியப்பாடுகள் ஆராயப்பட்டு ஏற்றுமதிக்கான நிறுவன ஏற் ur G5) is 6ir மேற்கொள்ளப்பட
டும்.
வெளியிடப்படுவதற்காக எழுத் துப் பிரதிகளை வாங்கி இருப் பில் வைக்கும் எழுத்துப் பிரதி

Page 127
வங்கி ஒன்று அமிைக்கப்பட வேண்டும். தரம் கண்டு இந்தப் பிரதிகளுக்கு றோயலிட்டியின்முன் 6T LOTS ፵35 தொகையை எழுத்தாளர்களுக்கு வழங்கவேண் டும். இது நூல்களை எழுத எழுத்தாளர்களுக்கு ஒரு உட 6ாடித் தூண்டுதல் காரணியாக அமையும்,
10. குறைந்த கட்டணத்தில் நூல் களை அச்சிட்டு எழுத்தாளர் களுக்கும், வெளியீட்டு அமைப்புக் சளுக்கும் உதவ நவீன இயந்திர சாதனங்களைக் கொண்ட அச் சகமொன்றைக் கூட்டுறவு அல் லது கூட்டுத்தாபனமாக நிறுவு வது.
11. நூல் வெளியீட்டுக்கான கட தாசியை மான்ய விலையில்
பதிப்பகங்களுக்கு வழங்குவது.
12. தமிழகத்தில் சந்தைவாய்ப்புக் களை ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களுக்குப் பெற்றுத் தரும் நோக்குடன் தமிழ் நூல்களை இலங்கையிலும், தமிழகத்திலும் ஏககாலத்தில் வெளியிடும் ஏற் பாடுகளைச் செய்வது. கம்பியூட் டர்எழுத்தமைப்பு, ஒப்ஃசெட் அச் சிடல் முறைகளைப் பயன்படுத்து வதன்மூலம் இதைச் சுளுவாகச் செய்யலாம். ஈழத்துத் தமிழ் நூல் வெளியீட்டு அமைப்புக்கள் தமிழகத்தில் கிளை நிறுவனங் களை அமைப்பதன்மூலம் அல் லது தமிழகப் பதிப்பகங்களுடன் கூட்டு ஏற்பாடுகளைச் செய் வதன்மூலம் இதைச் சாதிக்கலாம்.
வெளியீட்டு
ஊடகங்கள்
நூல்களின் விற்பனையை உறுதிசெய் வதுடனும், வெளியீட்டு முயற்சிகள் மேற் கொள்ளப்படுவதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுப்பதுடனும் வெளியீட்டு
- 1 (

ஊடகங்களை உருவாக்கவும், வலுப்படுத் தவும் ஆவன செய்யப்படவேண்டும்.இதற்கு முதலில் வெளியீட்டுத் துறையை வெற்றி கரமானதொரு தொழிற்றுறையாக மாற்ற நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.
1. எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப் பகங்களை , இலக்கிய அமைட்புக் களின் பிரசுரக் களங்களை, தணி um fi வெளியீட்டு நிறுவனங் களைப் புதிதாக உருவாக்கவும் ஏற்கனவே உள்ளவற்றின் செயற் பாடுகளை முனைப்படையச் செய் யவும் முயல்வது.
2. வெளியீட்டு நிறுவனங்களுக்குக் கடன் வசதிகளையும் அலுவலக வசதிகளையும் செய்துகொடுப்
Ugl.
3. வெளியீட்டுத்துறையில் ஈடுபடும் அமைப்புக்களில் பணியாற்றுபவர் களுக்குப் புத்தக வெளியீட்டுடன் சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை தொழில்நுட்பங்களிலும் முகா மைத்துவ நுட்பங்களிலும் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தளிப்பது.
4. இலக்கிய வளர்ச்சியிலும் அறிவு வளர்ச்சியிலும் பாரிய பங்களிப் பைச் செய்யக்கூடிய பல்துறைஇலக் கிய சஞ்சிகைகளின் தோற்றத்திற் கும் ஏலவே உள்ளவற்றை வலுப் படுத்தவும் உதவுவது.
5. இலக்கியத்தின் வாளிப்பான வளர்ச் சியில் குறிப்பாச நாடக இலக்கிய வளர்ச்சியில் மாபெரும் பங்குப்பணி யைச் செய்யக் கூடிய வானொலி தொலைக்காட்சிச் சாதனங்களை இத்திசையில் காத்திரமான முறை யில் பயன்படுத்த நடவடிக்கை களை எடுப்பது.
இலக்கிய விழிப்பு, ஆர்வம்
இலக்கிய வளர்ச்சி இலக்கியத்தில் வெகுஜனங்கள் கொள்ளும் ஆர்வத்திலே
مسيس 1 (

Page 128
தான் பெரிதும் தங்கியுள்ளது. இங்கும் சமூக - ஆன்மீகப் பெறுமானங்களுடன் சந்தை நியதியும் வலுவாகச் செயற்படு கிறது. மக்கள் மத்தியில் இலக்கியப் படைப்புகளுக்கும் அறிவு சார்நூல்களுக்கும் இருக்கும் கிராக்கியைப் பொறுத்தே நூல்சஞ்சிகை வெளியீடும், இவற்றிற்காதார மான இலக்கிய எழுத்து முயற்சிகளில் வீச்சும் அமையும். ஆக, பெருவாரி மக் கள் மத்தியில் இலக்கிய - அறிவு ஆர்வத் தைத் தட்டி எழுப்புவது அவசியம். வேறு வார்த்தையில், இலக்கியமும் எழுத்தும் வெகு ஜனப் பரிமாணத்தைப் பெற வேண்டும்.
இதற்கு,
1. இலக்கிய விழாக்கள், இலக்கியச் சொற்பொழிவுகள் நாடு தழுவிய ரீதியில் நடத்தப்பட வேண்டும்.
2. பெருவாரி கலைஞர்கள் பங்குபற் றக் கூடிய இலக்கியக் கருத்தரங் குகள் ஒழுங்கு செய்யப்படுவது அவசியம்.
3. நாடு அடங்கிலும் வாசகர் வட்டங் களையும் இலக்கிய 'மன்றங்களை யும் அமைத்து மக்களை இலக்கியச் செயற்பாடுகளில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.
4. எழுத்தாளர் - வாசகர் அரங்கு களை நடத்தி படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் நெருங் கிய உறவையும் கருத்துப் பரிமாற லையும் நடத்த வேண்டும்.
5. இளம் தலைமுறையை இலக்கிய ஈடுபாடு கொள்ளச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக் கப்படுவது அவசியம். பாடசாலை கள் தோறும் இலக்கிய மன்றங் கள் அமைப்பது, பாட விதானத் தில் இலக்கிய ஆக்க முயற்சி களைச் சேர்ப்பது, மாவட்ட ரீதி யிலும் தேசிய ரீதியிலும் மாண வர்கள் மத்தியில் இலக்கியப் (சிறு கதை, கவிதை, கட்டுரை,நாடகம்,
a

திறனாய்வு) போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குவது இத்தியாதி நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட வேண்டும்.
6. இலக்கியப் படைப்புக்களுக்கும் நூல்களுக்கும், இலக்கிய விழா கருத்தரங்குகளுக்கும் வானொலி யும் தொலைக்காட்சியும் பத்திரி கைகளும் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது.
எழுத்தாற்றல், ஆளுமை
இலக்கிய ஆக்கங்கள், அறிவு நூல்கள் கூடுதலாக விற்பனையாக, வெளியீட்டு முயற்சிகள் வெற்றியீட்ட, இலக்கியத்தின் சமூகப்பயன்பாடு வலுப்பட, இவற்றின் காரணமாக இலக்கிய சிருஷ்டிகள் பல்கிப் பெருகி இலக்கியம் உன்னத வளர்ச்சியை ஈட்ட இலக்கியத்தின் தரம், அதன் ஆளுமை உயர்ந்தும் வியாபிதமடைந்தும் செல்வது அவசியம்.
இதற்கு,
1. இலக்கியத்தின் உள்ளடக்கத்திலும் உருவச் செம்மையிலும் கூடுதல் கவனம் குவிமையப்படுத்தப்படு வது அவசியம்.
2. எழுத்தாளர்கள் எழுத்தின் படைப் பாக்கத்தின் நுட்பங்களில் பெருந் தேர்ச்சி பெற்று பாண்டித்தியம் பெற வேண்டும்.
3. இதற்கு எழுத்தாளர் பயிற்சிப் பட்டறைகள் தடத்தப்படுவதும் படைப்பிலக்கிய நிலையங்கள் நிறு வப்படுவதும் பல்கலைக்கழக மட் டத்தில் ஆக்க இலக்கியப் பாட நெறிகள் அமைக்கப்படுவதும் அவ சியம்,
4. கிரமமான இலக்கியக் கருத்தரங் குகள், அனுபவப் பரிமாறல்கள் இடம்பெறுவது நல்லது.
0 -

Page 129
5. வாசகர் - எழுத்தாளர் சந்திப்பு கள் மூலம் மக்களின் இலக்கியத் தேவைகளை, ரசனை இயல்பு களை, வாழ்க்கை அனுபவங்களை எழுத்தாளர்கள் பெற்றுக் கொள் வது அவசியம்.
6. தமிழ் இலக்கியப் படைப்புகள் முழுமையுடனும்; உலக இலக் கியங்கள் அனைத்துடனும் எழுத் தாளர்கள் நல்ல பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொள்ள எழுத்தாளர் களுக்கான தனி நூலகம் இயங்கு வது அவசியம்.
7. எழுத்தாளர்களின் ஆக்கங்கள், உரைகள், பேட்டிகள், உட்பட பல்துறைத் தகவல்களையும் தரக் கூடிய ஆவண மையம் நிறுவப் படுவது நல்லது.
இலக்கியப் பரிவர்த்தனை.
இலக்கிய வளர்ச்சிக்கும், அதன் தர உயர்வுக்கும் இலக்கியப் பரிவர்த்தனை மிக மிக அவசியமானதாகும்.
இதற்கு:
1. தரமான உலக இலக்கியப் படைப்பு கள் தமிழில் மொழியாக்கம் செய் யப்படவேண்டும்.
2. தமிழ் இலக்கிய சிருஷ்டிகள் பிற மொழிகளுக்குப் பெயர்க்கப்பட வேண்டும்.
3. எழுத்தாளர்கள் பிற பிரதேசங் களுக்கும் நாடுகளுக்கும் இலக் கியச் சுற்றுலாக்களை மேற் கொள்வது;
4. பிற பிரதேச, பிறநாட்டு எழுத் தாளர்களை அழைத்து இலக்கிய கருத்துக்களையும் அனுபவங்களை யும் பரிமாறிக்கொள்வது.
5. தேசிய ரீதியில், பிறநாடுகளில், சர்வதேச ரீதியில் நடைபெறும்
ഖ് 10

இலக்கிய மாநாடுகள் - சந்திப்புக் களில் எழுத்தாளர்கள் பங்குபற்று வது.
6. அனைத்து நாடுகளிலுமுள்ள இலக் கிய அமைப்புகளுடன் தொடர்பு களைப் பேணுவதுடன் இலக்கியப் பரிவர்த்தனைகளை நடத்துவது.
பன்மைத்துவமும் பல் வடிவங்களும்
இலக்கியமோ எழுத்தோ ஒரே தன்மை கொண்டதாக இருக்க முடியாது. அது பன்முகத்தன்மை கொண்டதாக, பன்மைப் பண்புள்ளதாக இருக்கவேண்டும். இல்லை யேல் அது ஜீவனை இழந்து, கலை இயல்பு களை இழந்து, சுதந்திரமான வெளிப் பாட்டை இழந்து வாசகர்களுக்கு சலிப் பையும் வெறுப்பையுமே ஏற்படுத்தும். வளர்ச்சியை குன்றச் செய்யும். இந்த எதிர் மறை அம்சங்களைத் தவிர்த்து இலக் கியத்தின் பன்முக வளர்ச்சியைக்காண:
1. பல்வேறு இலக்கியக் கோட்பாடு களும் கருத்துருவங்களும் ஏக காலத்தில் இயங்கவேண்டும்.
2. நானாவித கருதுகோள்களைக் கொண்ட இலக்கிய அமைப்புகள் சுதந்திரமாகவும் ஆக்கபூர்வமாக வும் செயல்படவேண்டும்.
3. இலக்கிய உள்ளடக்கத்திலும் உரு வத்திலும் பல்வேறுபட்ட வடிவங் கள் தோற்றம் பெறவேண்டும்.
4. எழுத்துக்கலை இலக்கிய வெளிப் பாடாக மட்டுமிராது அறிவின், சிந்தனையின் வாழ்வின் எல்லாத் துறைகளையும் தழுவி, உள்ளடக்கி வளரவேண்டும்.
ஒரு மலர், அல்லது ஒரு வகை மலர் மட்டும் போதாது. பல்லாயிரம் மலர்கள் மானுடத்தை அலங்கரிக்கவேண்டும், அழ குக்கோலம் காட்டவேண்டும்.
3 a

Page 130
உற்சாகமும் உந்துதலும்
எழுத்தின், இலக்கியத்தின் செழிப் பான வளர்ச்சிக்கு எழுத்திற்கும் எழுத் தாளனுக்கும் உற்சாகமும் உந்துதலும் அளிக்கப்படுவது அவசியம்.
இதற்கு;
1. இலக்கியப் பரிசுத் திட்டத்தை உயர்த்தி, விரிவுபடுத்தி கிரமமாக செயற்படுத்தல் வேண்டும்.
2. ஆண்டுதோறும் மாவட்ட ரீதியில் இலக்கியப் போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவதுடன், போட் டிக்கு வரும் சிறந்த படைப்பு களை நூலுருவில் வெளியிடுதல்.
3. இலங்கைக்கு வெளியே வெளி யிடப்படும் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கான பரிசுத் திட்டம் ஒன்றை உருவாக்கு தல .
4. தமிழ்கூறும் நல்லுலகம் முழு வதிலும் வெளியாகும் இலக்கியப் படைப்புகளில் தலைசிறந்தவற் றிற்கு மகாகவி பாரதியின் பெய ரில் ஆண்டுதோறும் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றை தமிழக அர சுடன் கலந்தாலோசித்து உரு வாக்குவது.
5. எழுத்தாளர்களின் ւն 60ւ- ւ Վ களுக்கு பத்திரிகைகள், வானொலிதொலைக்காட்சி நிலையங்கள், வெளியீட்டு நிறுவனங்கள் தகுந்த
*" ஆரியமும் செந்தமிழும்
ஆ
S;
சீரியது என்றொன்றைச் ( வேதமுடைத்து; தமிழ் திரு ஒது குறட்பா உடைத்து. "
IO,

சன்மானம் அளிப்பதை உறுதிப் படுத்துதல்.
8. எழுத்தாளர்களின் வயோதிப காலத்திலும் நோய்வாய்ப்பட்ட காலத்திலும் பராமரிப்பதற்கான சமூக காப்புறுதி, ஆரோக்கிய காப் புறுதித் திட்டங்களைச் செயற் படுத்துவது.
7. எழுத்தாளர்களின் சமூக அந் தஸ்தை, கெளரவத்தை உயர்த்து eilg! .
ஏனையவை
இலக்கிய வளர்ச்சியைத் துரிதப்படுத்த வும் சரியான திசையில் ஆற்றுப்படுத்த வும்:
1. எழுத்தாளர் சங்கங்கள், இலக்கிய அமைப்புகளைக்கொண்ட இணைப் புக்குழு ஒன்றை அமைப்பது.
2. இலக்கியத்துறை முக்கியஸ்தர் களையும் நிறுவன பிரதிநிதிகளை யும் உள்ளடக்கிய ஆலோசனைச் சபை ஒன்றை நிறுவுவது, இலக் கிய வளர்ச்சியின் அடிச்சரடாக ஜீவ மூச்சாக இருப்பதற்கான இலக்கிய வளர்ச்சி நிதியம் ஒன்றை உருவாக்குவது.
திட்டமிட்ட, திறமையான விடா முனைப்பான செயற்பாடுகள் மூலம் ஈழத் துத் தமிழ் இலக்கிய வளர்ச்சியை முன் உந்தித்தள்ள, முனைப்படையச் செய்ய முடியும். ஈழத்து இலக்கியம் புதியதொரு வானத்தை எட்டுவதைச் சாத்தியமாக்க Փւգպւհ.
ராய்ந்து இதனின் இது செப்பரிதால் - ஆரியம் வள்ளுவர்
-வண்ணக்கன் சாத்தனார்

Page 131
கலாநிதி எம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந் தியத் துணைக்கண்டத்தில் ஆர்த்தெழுந்த அரசியல், சமூக, பண்பாட்டு மறுமலர்ச்சி யினை இலக்கியத்தில் பிரதிநிதித்துவப் படுத்திய முப்பெரும் மகா கவிகளாக பார தியும், இக்பாலும், தாகூரும் விளங்கு கின்றனர். கங்கை நதிப் பள்ளத்தாக்கில் தாகூர் தமது உள்ளத்தின் உணர்வுகளுக்கு உருக்கொடுக்கும் வகையில் “கீதாஞ்சலி" "ஸாதனா " போன்ற கவிதைச் சிருஷ்டி களை உருவாக்கிய அதே காலகட்டத்தில், விந்திய மலைச் சாரல்களுக்கு அப்பால் பாரதி இயற்கைபற்றியும், மனிதாபிமா னம் குறித்தும், தேசிய விடுதலைக்காகவும் கவிதை முழக்கம் செய்ய, தொலைவிலுள்ள பஞ்சாபில் அல்லாமா இக்பால் தமது தத் துவக் கருத்துக்களை கவிதை உருவில் வடித் 5rrri. இம் மூன்று மகாகவிகளும் மொழி, மதம், பண்பாடுகளில் வித்தி யாசப்பட்டவர்களாயினும் கீழைத்தேயப் பாரம்பரியத்தின் பிரதிநிதிகள் என்ற வகை யிலும், மனிதாபிமானத்தை நேசித்த கவி ஞர்கள் என்ற வகையிலும், மனிதனின் ஆளு மையில் மகத்தான நம்பிக்கை பூண்டவர்கள் என்ற வகையிலும், ஒரே நேர்கோட்டில் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். பேரா சிரியர் கைலாசபதியின் "இரு மகாகவிகள்" (சென்னை, 1962) என்ற நூல் பாரதியின
O
 

தும் தாகூரினதும் கவிதைகளில் காணப் படும் ஒருமைப்பாட்டை மிகச் சிறப்பாக ஆராய்கின்றது. இவ்வகையில் இக்பாலுக் கும் பாரதிக்குமிடையேயுள்ள கருத்துறவை யும், தொடர்பையும் ஒப்பிட்டு ஆராய் வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாரதியும், இக்பாலும் இரு வேறுபட்ட மத, கலாசாரப் பாரம்பரியங்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகின்றனர். இந்து மதப் பாரம்பரியம், தமிழ் இலக்கியத்தின் மரபு நெறி என்பன பாரதியின் ஆளுமையை உருவாக்க, இக்பாலோ இஸ்லாத்தின் ஆத் மீகப் பாரம்பரியத்தாலும், உர்து, பாரசீக இலக்கியப் பாரம்பரியத்தாலும் போஷிக்கப் பட்டவராக இருந்தார்.
இரு கவிஞர்களதும், ஆரம்பகால இலக் கிய முயற்சிகள் அவர்களது அழகுணர்வின் அனுபவத்தை வெளியிடும்வகையில் இயற்கை யின் பேரழகைச் சித்தரிக்கும் கவிதைகளா கவே அமைகின்றன. பாரதியின் "காலைப் பொழுது', 'அந்திப்பொழுது’, ‘ஒளியும் இரு ளும்', 'நிலாவும் வான்மீனும் ஆகிய கவிதை களை நாம் இந்த வகையில் குறிப்பிடலாம். எங்கும் பரந்திருந்த காரிருள், சூரியனின் ஒளிக்கதிர்கள் பரவ மறுகி மறையும் பேர ழகை பாரதி பின்வருமாறு பாடுகின்றார்.

Page 132
வானமெங்கும் பரிதியின் சோதி
மலைகள் மீதும் பரிதியின் சோதி தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும் காணகத்திலும், பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி காலைப் பொழுதைப் பாரதி அழகுணர்த்த அவரை மெய்மறந்து பின்வரும் வகை பீல்பாடவைக்கின்றது.
காலைப் பொழுதினிலே கண் விழித்து
மேனிலை மேல் மேலைச் சுடர்வானை நோக்கி
நின்றோம் விண்ணகத்தே கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில்
சுடர் விடுத்தான் பார்த்த வெளியெல்லாம் பகலொளி
யாய் மின்னிற்றே
இக்பாலின் ஆரம்பகாலக் கவிதைகள் இயற்கை அழகைத் தரிசித்து அதனடியாக அவர் பெற்ற அழகுணர்வின் வெளிப் பாடாவே அமைந்தன. இக்பால் அவரது இளமைக் காலத்தை இமாலயச் சாரலில் உள்ள ஸியால்கோட்டில் கழித்தார். இயற்கை அழகு நிறைந்த இந்த மனோரம் மியமான சூழ்நிலையிலேயே "இமாலயம் போன்ற அவரது கவிதைகள் பாடப் பட்டன.
எழுமின் விண்ணார்ந்த பெரு
மலைகளிலும் தாழ்ந்த பள்ளத்தாக்குகளிலும்
வசந்தத்தின் வெண்கரம் படிந்து விட்டது வானம்பாடிகள் வெறிபிடித்து
இன்னிசை எழுப்புகின்றன ஒடும் நீரருவிகளின் அருகே
ரோஜாவும் அல்லியும் மலர்ந்து மணம் வீசுகின்றது. வெளியே வந்து பார், வசந்தம்
வந்துவிட்டது. புத்துயிர் பிறந்துவிட்டது.
f67 இக் பால் இமாலயச் சார லில் வசந்தத்தின் வருகையை வரவேற் றுப் பாடுகின்றார். இந்த அழகு
ணர்வே இவ்விரு கவிஞர்களையும் ஆங்கி லேய இயற்கைக் கவிஞர்களான வேர்ட்ஸ்
as

வோத், கீட்ஸ், பைரன் ஆகியோர்களின் கவிதைகளில் ஈடுபாடுகொள்ளச் செய்தது.
பாரதியும் இக்பாலும் வாழ்ந்த காலப் பிரிவு இந்தியத் துணைக் கண்டம் மேற்கத் திய ஏகாதிபத்தியத்தின் அடிமைத் தளை வில் சிக்கியிருந்த அவலநிலை படைத்த காலப்பிரிவாக அமைந்தது. பாரதியும் இக் 47ஆம் இயற்கையழகில் கட்டுண்டு அழகனுபவத்தைக் கவிதையில் வடிக்கும் நிலையிலிருந்து வளர்ச்சியடைந்தனர். தங் *னது தாயகம் அடிமைத்தளையிலிகுந்து விடுதலை பெறல் வேண்டும் என்ற உணர்வு அவர்களிருவரையும் ஆட்கொண்டது. அவர்களது இதயக் குமுறல் தேசிய உணர் வினையும், நாட்டுப் பற்றினையும், சுதந் திர வேட்கையையும் பிரதிப விக் கும் உணர்ச்சி நிறைந்த தேசியப் பாடல்களாக வெளிப்பட்டது.
என்று தணியும் இந்தச் சுதந்திர
தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின்
மோகம்? என்றெமதன்னை கைவிலங்குகள்
போகும்? என்றெமதின்னல்கள் தீர்ந்து
பொய்யாகும்? என பாரதி தனது அன்னை பூமியின் அடி மைத் தளைகள் நீங்கும் பொன்னாளை நினைந்து ஏக்கப் பெருமூச்சு விடுகின்றார். இக்பாலின் "ஜாவாது நாமா" என்ற கவிதை நூல் அவர் பல்வேறு கிரகங்களைத் தரிசித்து அங்கு பல்வேறுபட்ட கவிஞர்கள், தத்துவஞானிகள், ஆட்சியாளர்களைச் சந் தித்து அவர்களுடன் உரையாடும் வகையில் அமைந்துள்ளது. சனிக்கிரகத்தில் இக்பா வின் முன்னிலையில் கையில் விலங்கிடப் பட்ட நிலையில் கண்ணிரும் கம்பலையு Drts gjögðuLurr Giúdair iš LDT (Sprit of India) தோன்றுகிறது. "இந்தியாவின் ஆத்மா'வை இக்பால் பின்வருமாறு வர்ணிக்கின்றார்.
வானம் பிளந்தது; அந்தோ திறந்த முகத்துடன் ஒரு சுவர்க்கத்துக் கன்னித் தேவதை தோன்றினாள். அவளது கண்ணிமைகளில் நித்தியம்
ஒளிவிட்டுப் பிரகாசித்தது.
سس- 06

Page 133
மேகத்தை விட மென்மையான ஆடைகளை அவள் அணிந்திருந்தாள் ரோஜா இதழ்கள் போன்று அதன் நூற்கள் இழையோடியிருந்தன இவ்வளவு அழகைப் பொதிந்திருந்த அவளது மென் கரங்கள் அந்தோ விலங்கிடப்பட்டிருந்தன. அவள் ஏக்கப் பெருமூச்சு விட்டாள் உதடுகள் எதனையோ முணங்க கண்கள் நீரைத் தாரையாகக் கொட்டின அப்போது எனது வழிகாட்டி ரூமி என்னைப் பார்த்துக் கூறினார், 'இதுதான் எண்ணற்ற உள்ளங்களில் வேதனையையும் துயரத்தையும் ஏற் படுத்தும் வகையில்புலம்பும் இந்தியாவின் ஆத்மா" அதனைத் தொடர்ந்து இந்தியாவின் இத யக் குமுறலைக் கேட்ட இக்பால் "இந்தி யாவின் இருள் சூழ்ந்த இரவு கழிந்து ஒளி நிறைந்த விடியற் காலைப் பொழுது எப்போது தோன்றும்?’ என வேதனைக் குரலை எழுப்புகின்றார்.
இக்பாலும், பாரதியும் இந்தியாவின் மைந்தர்கள். இந்திய நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட அவர்கள் இருவரும் தங்களது தாயகம் அடி மைத்த  ைள யி லிருந்து விடுதலை பெறல் வேண்டும் என்ற உணர்வோடு செயல்பட்டனர். அவர்கள் இருவரது கவிதைகளிலும் தேசிய உணர் வையும், சுதந்திர வேட்கையையும் நாம் காண முடிகின்றது.
ஆனால் அவர்கள், இருவரும் குறுகிய தேசியவாதத்தின் எல்லைகளைக் கடந்து மனித இனத்தையே நேசித்த மனிதாபி மானக் கவிஞர்களாக வளர்ச்சியடைந்தனர். மனித சமுதாயத்தின் மேம்பாடும், உயர்ச் சியும், கண்ணியமும், வெற்றியுமே அவர்க ளது உயர்ந்த இலட்சியமாக அமைந்தது.
சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்விடும் அறிவுடன்
படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்ககே? என்ற பாரதியின் மனிதாபிமானம், அனைத்து மனித இனத்தினரையும் தழு
sus 02

விய ஒரு சர்வதேசியக் கோட்பாடாக பின் வரும் கவிதையில் பிரதிபலிக்கின்றது.
நிகரென்று கொட்டு முரசே - இந்த
நீணிலம் வாழ்பவரெல்லாம் தகரென்று கொட்டு முரசே! -
பொய்ம்மைச் சாதி வகுப்பினை யெல்லாம் அன்பென்று கொட்டு முரசே . அதில் ஆக்கமுண் டாமென்று கொட்டு அன்பென்று கொட்டு முரசே - மக்கள்
அத்தனை பேரும் நிகராம் இடம் பெரிதுண்டு வையத்தில். இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்? அன்பென்று கொட்டு முரசேட அதில்
யார்க்கும் விடுதலை உண்டு வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு
வாழும் மனிதருக்கெலாம் பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும் ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில் ஒங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே! இந்த
நானில மாந்தருக்கெல்லாம்.
இக்பால் இஸ்லாத்தின் சர்வதேசியக் கோட்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண் டிருந்தார். தேசிய வாதத்தின் பெயரால் கீழைத்தேய நாடுகளைத் துண்டாடி மனித னத்தின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக் கும் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதத்திற் கெதிராக அவர் குரல் எழுப்பினார். இஸ் லாத்தின் இறைதூதரின் பகைவனாக விளங் கிய அபூஜஹீல் இறைவனின் சந்நிதியில் நபிகளாருக்கு எதிராக முறையிடும் வகை யில் அமைந்த இக்பாலின் பின்வரும் கவி தையடிகள் மனித இன ஒருமைப்பாடு பற் றிய அவரது கருத்தோட்டத்தைப் பிரதி பலிக்கின்றன.
? ị
""முஹம்மதின் கோட்பாடு தேசம், இனம் என்ற தடைச் சுவர்களை உடைத்தெறிந்துவிட்டது. உயர்ந்தோர்,தாழ்ந்தோர் அனைவரும் சமம் எனப் போதிக்கும் அவர் elug.6)LD595L-6ör éFAntonrás உணவருந்துகின்றார்.
ട

Page 134
அரபுகளின் குலப்பெருமையை
மதிக்காத அவர் கறுப்புநிற நிக்ரோக்களைத் தனது நண்பராகக் கொள்கின்றார்."
தனது "பாலேஜிப்ரீல்" என்னும் கவிதை யில் இக்பால் குறுகிய தேசியவாதத்தைப்
ன்வருமாறு கண்டிக்கின்றார்:
* "மேற்கத்திய ஏகாதிபத்தியவாதம்
கிழக்கின் மதிப்பீடுகளை உடைத்துச் சுக்கு நூறாக்கிவிட்டது. மேற்கத்திய பிரபுக்கள் தேசம், இனம், ஆகியவற்றைப் பூஜிக்கும் தேசிய வாதத்தைக் கற்றுக்கொடுத்தனர். மனிதனே! நீ கழுகுபோன்ற தீட்சண்ய பார்வை படைத்தவன் வான்வெளியே நீ பறக்கும் பரந்தகளம்
உனது இறக்கைகளை விரிப்பாயாக!
முழுப்பிரபஞ்சமும் இறைவனுக்கே உரியது,"
இவ்வாறு தேசம், இனம், வர்க்கம் என்ற குறுகிய எல்லைகளைத் தாண்டிய மனித இன ஒருமைப்பாட்டில் ஆழ்ந்த நம் பிக்கை கொண்டிருந்த பாரதியினதும், இக் பாலினதும் உலக நோக்கை இக் கவிதை யடிகள் மிகச் சிறப்பாக உணர்த்துகின்றன.
கீழைத்தேய உலக: மேற்குலகின் அறி வியல் தொழில் நுட் வளர்ச்சியின் பய னைப் பெற்று நவீ யுகத்தில் பிரவேசித் தல் வேண்டும் என்பதில் பாரதியும், இக்பா லும் மிக அக்கறையும் கரிசனையும் கொண் டிருந்தனர். ஆனால் புதுமை படைத்தல் வேண்டும் என்ற இந்த வேட்கையில் அவர் கள் கீழைத்தேய கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் புறக்கணிக்கவில்லை. கீழைத்தேயப் பண்பாட்டின் தார்மீக, ஆத் மீகப் பாரம்பரியங்களும், மேற்கத்திய பண் பாட்டின் உலோகாயத, அறிவியல் வளர்ச்சி யும் இணைந்த ஒரு புது உலகைக்காண இரு வரும் ஆசித்தனர். பேராசிரியர் கைலாசபதி இது தொடர்பாக பாரதியையும் தாகூரை யும் ஒப்பிட்டுக் கூறும் கருத்து, இக்பா லுக்கும் எல்லாவகையிலும் பொருத்தமான தாக உள்ளது.

"தாகூர் அறிவால் உலகை அளந்து காட்டினார். பாரதியார் உள்ளுணர்வால் அளக்கமுயன்றார். எனினும் இரு மகாகவி களுக்கும் ஒருபொதுவான நம்பிக்கை இருந் தது. உலகம், இந்தியாவிடம், கீழைத் தேயங்களிடம், கற்கவேண்டியன எவ்வ ளவோ உள்ளன என்று இருவரும் நம்பி னர். இந்தியாவின் புராதன மேம்பாட் டில் இருவரும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர்களாதலின் கீழைத்தேயங் கள் ஆத்மீக வழிவந்த நாகரிகத்தையுடை யன என்றும், மேலைத்தேயங்கள் உலோகா யத வழிப்பட்டன என்றும் நிலவிய கருத்தை இருவராலும் உதறித்தள்ள முடியவில்லை."
(கைலாசபதி,இரு மகாகவிகள் ,பக்.41)
இக்பாலும் இதே வழியில் சிந்தித்த கவிஞராவார். மேற்குலகு அறிவு, ஆராய்ச் சித் துறைகளில் முன்னேறி வியத்தகு வளர்ச்சியைக் கண்டுள்ளது. ஆனால், மணி தனின் ஒழுக்க, ஆத்மீகத் தேவைகளை அது முற்றிலும் புறக்கணித்துள்ளது. கீழைத் தேய உலகானது, இதற்கு முற்றி லும் மாறுபட்டு ஆத்மீக வாழ்விற்கு முக் கியத்துவமளித்து, வாழ்க்கையின் புறத் தேவைகளைப் புறக் கணித் து விட்ட து எனக் கூறும் இக்பால் மேற்கின், அறிவும், கிழக்கின் ஆத்மீகமும் இணைந்த புத்துலகு காண விழைகின்றார்.
மேற்கில் அறிவே வாழ்வின்
ஆதாரமாக அமைகின்றது கிழக்கிலோ அன்பே வாழ்வின்
அடிப்படையாக விளங்குகின்றது அன்பின்மூலம் அறிவானது சத்திய
மெய்ப்பொருளோடு உறவு பூண்டு வளர்ச்சியடைகின்றது அறிவானது அன்பின் பணிக்கு
உறுதியையும் சக்தியையும் வழங்குகின்றது விழித்தெழுங்கள்! அறிவையும்,
அன்பையும் இணைப்பதன் மூலம் ஒரு புது உலகிற்கான அத்திவாரமிடுங்கள்.
பாரதியும் இக்பாலும் இலக்கியத்தை ஒரு சமுதாய சக்தியாகக் கருதினர். கலை
سست 8 0

Page 135
யினதும், கவிதையினதும் பணி வெறுமனே அழகுணர்விற்குக் களம் அமைத்துக்கொடுப் பதும் அதன்வெளிப்பாட்டின் ஊடகமாக அமைவதுமே என்ற கலைக் கொள்கைக்கு முரணாகவே அவர்களிருவரினதும் கலைக் கோட்பாடு அமைந்தது. கலையும், இலக் கியமும் மனிதனின் ஆளுமைக்கு வலு ஆட்டி, சமூகவாழ்வை நெறிப்படுத்தும் சமுதாயச் சக்திகளாக விளங்குதல் வேண் டும் என்ற உணர்வே அவர்கள் இருவரி னதும் இலக்கியப் பணியின் அடிநாதமாக அமைந்தது. சமூகத்தின் ஓர் அங்கமாக வாழும் கலைஞனின் ஆளுமையின் உள் ளார்ந்த ஆற்றலின் பிரதிபலிப்பே கலை, இலக்கியச் சிருஷ்டிகளாகும். அந்த ஆளு மையின் ஆற்றலை உணர்ந்து கலைப்பொரு ளும், கவிதையும் உருவாகும்போதுதான் அது உயிர்த் துடிப்புள்ளதாக மட்டுமன்றி சமூகத்தை நெறிப்படுத்தும் ஆற்றலையும் பெறுகின்றது என்ற கொள்கையில் பாரதி யும், இக்பாலும் பூரண நம்பிக்கை கொண்டிருந்தனர். இக்பால் இதனைப் பின்வருமாறு விளக்குகின்றார்:-
பொருட்களின் யதார்த்த நிலையை உணராத கலை கலையன்று நித்தியவாழ்வு பெறுவதே அனைத்து
கலைகளினதும்
இறுதி இலட்சியமாகும்
** இன்னவைதாம் கவி எழுத ஏற்ற பொருள் என்று, பி. சொன்னவற்றை நீர் திருட சொல்லாதீர் ! சோலை, க மின்னல், முகில், தென்றலி மறவுங்கள் 1 மீந்திருக்கும் இன்னல், உழைப்பு - ஏழ்.ை என்பவற்றைப் பாடுங்கள் !
- C

மூஸாவின் அற்புத ஊன்றுகோலின்
சக்தியற்ற கலை
பயனற்ற கலையாகும் கலையின் இலட்சியம் மனிதனின்
ஆளுமையை கட்டியெழுப்புவதாகும் வாழ்வினை அழகுபடுத்தாத
அதற்கு இலட்சியம் ஒன்றினை
வழங்காத கலை கலையன்று கவிஞன் இனத்தின் ஆத்மா ஆவான் அவன் இனத்தின் இதயமாவான்
பாரதி பாடுகின்றான்,
பிரம்ம தேவன் நமக்கோர்
பணியிட்டான் யாங்ங்ணம்? மண்ணுலகத்து மானுடன்
தன்னைக் கட்டிய தளையெல்லாம் சிதறுக என்று வாழ்க தந்தை; வாழ்க மானுடா !
அறிவிலே ஒளியை அமைத்தேன்
வாழ்க! மந்திரங் கூறுவோம்;
உண்மையே தெய்வம் கவலையுற்றிருத்தலை விடு; களியே அமிழ்தம் பயன் வருஞ்
செய்கையே அறமாம் அச்சமே நரகம்; அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க! மகனே! பசுபதி: மயக்கந் தெளிந்து தவத் தொழில் செய்து
தரணியைக் காப்பாய்!
ம உயர்வு
மஹாகவி

Page 136
கலாநிதி சப
ஆய்வின் முறையியல்:
சிங்ககாலம், சங்கமருவிய காலம் என்ற காலப் பகுதிகளில் உருவாகிய இலக்கியங்களைச் சான்றாதாரங்களாகக் கொண்டு தமிழ் மரபிற் கல்வி பற்றிய நோக்குகள் எவ்வாறு அமைந் திருந்தன என்பதைக் கண்டறிவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் இலக்கு. உரை விளக்க முறை போன்று நயப்பு முறையில் இந்த ஆய்வு அமைக்கப்படவில்லை. பழந் தமிழ் மக்களின் சமூக பொருளாதார வாழ்க்கைப் பின்புலத்தில் கல்வி பற்றிய நோக்குகள் எவ்வாறு முகிழ்த்தன என்பதை வரலாற் றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் வியாக்கியானம் செய்வதே இங்கு முனைப் பாகக் கொள்ளப்படுகின்றது.
ஆய்வின் வரையறை:
இலக்கியச் சான்றாதாரங்களை மட் டும் கொண்ட ஆய்வுகள் வரையறைகள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடும். பழந் தமிழ் மக்களின் பண்பாட்டு வாழ்க்கையைக் கண்டறியும் இலக்கியம் தவிர்ந்த பிற சான்றாதாரங்கள் இன்னமும் தேடல் நிலை யிலேதான் காணப்படுகின்றன. அவற்றை முழுமையாகப் பெற்றுத் தொகுக்கும் பொழுதுதான் ஆய்வை மேலும் செப் பனிட முடியும்:
 

ா. ஜெயராசா
தமிழ் மக்களின் இலக்கிய வரலாறு வரன்முறையாக எழுதப்பட்டமை போன்று கல்விவரலாறு பண்டுதொட்டு இன்றுவரை இன்னமும் முழுமையாகனழுதப்படவில்லை. இதன் காரணமாக எழும் வரையறை களும் கருத்திற்கொள்ளப்படவேண்டியுள் 6T6.
ஆய்வு:
வாழ்க்கை இயல்புகளுடனும், வர லாற்று நிகழ்வுகளுடனும் கல்வி நீக்கமற நிறைந்து நிற்கின்றது. வாழ்க்கை நிகழு கின்ற சமூகக்களம் பன்முகத்தன்மை வாய்ந் ததும் ஒன்றிணைந்ததுமாக இயங்குகின்றது. இதன் காரணமாக கல்வி பற்றிய நோக்கு கள் பன்முகப்பட்டவையாகவும் ஒன்றி ணைந்தவையாகவும் காணப்படுகின்றன என்ற எடுகோளின் பின்புலத்தில் தமிழ் மர பிற் கல்வி பற்றிய நோக்கை அணுகு தல் பொருத்தமானது.
கல்வி பற்றிய சிந்தனைகள் அறிவை மேன்மைப்படுத்தி வந்துள்ளன. சமூகத்தின் உழைப்புப் பிரிவினை, "உடல் உழைப்பு" என்றும் "உள்ளத்தினாற் செய்யப்படும் உழைப்பு" என்றும் பிரிந்தன. உயர்நிலை மாந்தர் உள்ளத்தினாற் செய்யப்படும் உழைப்பின் மேன்மையை வற்புறுத்தலா யினர். இந்நிலையிற் கல்வியில் அறிவு பற் றிய நோக்கு விதந்து கூறப்படலாயிற்று. "அறிவே பலம்" என்றும் அறிவு மேம்பாடு
10 -

Page 137
வாழ்க்கை மேம்பாடாக முகிழ்த்தெழும் என்றும் வற்புறுத்தப்படலாயிற்று. அறி வால் மனித வளத்தின் ஆற்றல் உணரப் பட்டது. கற்கும் தொறும் மேலும் மேலும் அறியாமை உணரப்படுதல் "அறிதொறும் அறியாமை கண்டற்றால்" என்னும் குறட்பாவால் வெளிப்படுத்தப்படுகின்றது. "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உல களவு" என்பதும் கல்வி பற்றிய தமிழ் மரபு நிலைப்பட்ட நோக்காக அமைகின்றது.
அறிவு நோ க் கி ன் ஒரு பக்க வளர்ச்சியாக அமைவது "அறிவு அறிவுக் காக" என்பதாகும். இதனோடு தொடர் புடையதே பிற்காலத்தில் எழுந்த 'கலை கலைக்காக" என்ற வாதமாகும். இந்த வாதம் வாழ்க்கையை விட்டுப் புறம் நீங்கிய தாக அமைந்தது. கற்ற மாந்தரில் ஒரு பிரி வினர் பொருளுற்பத்தியில் நேரடியாக ஈடு பட இன்னொரு சாரார் உழைப்போரின் மீது சார்ந்து வாழ்வோராக இருந்தனர். உழைப்போரின் மீது சார்ந்து வாழ்ந்தோர் "கல்வி கல்விக்காக" என்ற கருத்தை வற் புறுத்திய வேளை பொருளுற்பத்தியில் ஈடு பட்டோர் கல்வியானது மனித மேம்பாட் டிற் பங்குபெறவேண்டிய நோக்கை வற்பு றுத்தலாயினர்.
மனிதனின் முழுமையான விருத்தியிற் கல்வி பங்குபற்றல் வேண்டுமென்ற "பிர யோக" நோக்கு "சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே"2 என்பதாலும் "அறி வுடையார் ஆவது அறிவார்; அறிவிலார் அஃது அறி கல்லாதவர்' என்பதாலும் தெளிவுபடுத்துகின்றன.
சூழல் மாற்றமுற்றவண்ணமுள்ளது. அந்த மாற்றங்களின் மத்தியில் இசைந்து வாழவேண்டிய தேவை எழுந்தது. இவற் றின் பின்புலத்தில் தமிழ் மரபில் கல்வி பற் றிய நோக்குகளுள் ஒன்றாக "நடத்தையை ஒழுங்கமைத்தல்" அமையலாயிற்று. இயல் பூக்க நடத்தையில் இருந்து சமூக நடத்தை களை, பண்பட்ட மனித நடத்தைகளை வளர்த்தெடுத்தல் பொருளாதார உற்பத்தி யில் நிகழ்ந்த மாற்றங்களுடனும் இயைபு பட்டு நின்றது. வேட்டையாடிய ஒரு சமூ
1 -سسس

கம் இயற்கையைப் பெருமளவில் மாற்றிய மைக்கமுயலாத பொருளாதார நடவடிக் கையைக் கொண்டிருந்தது; விலங்குகளைக் கொல்லுதலும், காடுகளிற் கணிகளையும் விதைகளையும் பெறுதலும், இயற்கையைப் பெருமளவிலே மாற்றியமைக்காத நடவடிக் கைகளாகவே அமைந்தன. ஆனால் விவ சாயசமூகத்தில் இயற்கையை மாற்றியமைக் கும் மனித நடவடிக்கைகள் தொழிற்படத் தொடங்கின. பற்றைகளை அழித்தல் நீரைத் தடுத்தல், களைகளைப் பிடுங்குதல், புதிதாகப் பயிரை உற்பத்தி செய்தல் முதலி யவை புராதனமான 'மாற்றியமைக்கும்" நடவடிக்கைகளாக அமைந்தன. இவற்றின் பின்புலத்தில் நடத்தை மாற்றங்களிற் கல்வி பங்குபற்றவேண்டுமென்ற நோக்கம் முன் னெடுக்கப்பட்டது.
கற்பவன் ஒருவனுடைய ஆற்ற லானது ஏனையோருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குகின்றது என்பது நடத்தையிற் கல்வி ஏற்படுத்தும் மாற்றத்தைத் தெளிவு படுத்திக் காட்டுகின்றது.
"உவப்பத் தலை கூடி உள்ளப்பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்" 4
என்பது கல்வியினால் FIL-L'Luluh மகிழ்ச்சி ததும்பிய நடத்தைக் கோலங் களைச் சுட்டிக்காட்டுகின்றது.
இவற்றிலிருந்து வளர்ச்சிபெறும் பிறி தொரு கருத்து கல்விக்குப் பயிற்சி அல் லது "வித்தை" என்று அளிக்கப்படும் விளக்கமாகும். இதுவும் உற்பத்தி உற வோடு தொடர்புகொண்டெழுந்த ஒரு நோக்காகும். உதாரணமாக கால்நடை களைப் பராமரிக்கப் பழகுதல் ஆரம்ப கால உற்பத்திமுறைகளிலே வெகுமதி மிக்கதாக விளங்கியது. "பண்பெனப்படு வது பாடறிந்து ஒழுகுதல்" என்றவாறு கல்விவாயிலாக மேற்கொள்ளப்பட வேண் டிய பயிற்சியும், பண்படுத்தலும் வற் புறுத்தப்படுகின்றன.
பண்படுத்தல் என்பது கல்வியின் நோக் காக விருத்தியுறும்பொழுது நெறிப்படுதல்
a

Page 138
என்ற பண்பு அதனோடு இணைந்து கொள்ளுகின்றது. சமூகம் எவற்றை விரும்புகின்றதோ அவற்றை நோக்கி மாணவரை நெறிப்படுத்துதல் கல்வியின் நோக்கமாக இருந்துவந்துள்ளது. நெறிப் படுத்தல் என்பதில் "வழிகாட்டல்", "கட் டுப்படுத்துதல்" என்ற பண்புகள் சிறப் பார்ந்த இடத்தைப் பெறுகின்றன. இவை நேரடியாகவோ மறைமுகமாகவோ மேற் கொள்ளப்படலாம்.
சங்க இலக்கியங்கள், சங்கமருவிய இலக்கியங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்க்கும்பொழுது "நெறிப்படுத்தல்" என் பது நேரடியாக மேற்கொள்ளப்பட்ட மைக்குச் சான்றுகள் உள்ளன. சிக்கலான தொழிற் பிரிவுகள் வளராத எளிமையான தொரு சமூகச் சூழலில், நேரடியான நெறிப்படுத்தலே பொதுவாக இடம்பெற முடியும். "இவற்றைச் செய்; அவற்றைத் தவிர்’ என்று கூறுதல் நேரடியான நெறிப் படுத்தலுக்கு உதாரணங்கள். சிக்கலற்ற ஒரு சமூக அமைப்பிலே உற்பத்தியாள னுக்கும் நுகர்வோனுக்கும் நேரடியான தொடர்புண்டு. பணிப்புரை வழங்கு வோனுக்கும் பெறுவோனுக்குமிடையே அங்கு முகத்துக்கு முகமான தொடர்பு இருக்கும்.
"உற்றுN உதவியும் உறுபொருள்
கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல்
நன்றே"6
அறிவுரை பகர்தலும், வழிகாட்டலும் நேரடியாக மேற்கொள்ளப்படுவதை மேற் கூறிய குறளிலே காணமுடியும்.
சமூக வளர்ச்சியானது அனுபவங்களை மீள் ஒழுங்குபடுத்துவதற்கும் மீள் வடி வமைத்தற்குமான தேவைகளை உருவாக் கியது. சமூகம் என்பது தொடர்ந்து மாற்ற மடையும் பாங்கினைக் கொண்டது. அந்த மாற்றங்களுக்கிடையே அனுபவங்களை மீள் ஒழுங்குபடுத்தலும், மீள் வடிவமைத்தலும் தொடர்ந்து வேண்டப்படும் நடவடிக்கை களாகவுள்ளன. சூழலுக்கேற்ப மாற்ற
ll

மடையும் பொருத்தப்பாடுகள் அல்லது இசைவாக்கங்கள் கல்வியால் வளர்த்தெடுக் கப்பட வேண்டியுள்ளன. அறிவை மீள் ஒழுங்குபடுத்தும் பொழுது பழைமையும், புதுமையும் சங்கமிக்கின்றன. பழைமையின் பெறுமதிமிக்க பண்புகள் பாதுகாக்கப்படு கின்றன. இந்நிலையிற் கல்வியானது மனித குலத்தின் நம்பிக்கைகளை உணரவைக்கும் கருவியாக மாறுகின்றது.
அனுபவமுடையோர், அனுபவம் குன்றி யோர் என்ற இருபகுப்பினரைக் கொண்ட முரண்பாடுகள் சமூகத்தின் முரண்பாடுக ளாக இருக்கும். அனுபவமுடையோரது திறன்களை அனுபவம் குன்றியோருக்குக் கடத்தும் ஒரு நடவடிக்கையாகக் கல்வி அமைதல், பழந்தமிழ்ப் பண்பாட்டில் உணரப்பெற்ற ஒரு கருத்தாக விளங்குகின் றது. "என்மனார் புலவர்” என்ற தொல் காப்பியத் தொடர், முன்னர் பெற்ற அனு பவங்களைப் பின்னர் தொடுக்கும் செயற் பாடாக அமைகின்றது. அறிவுக்கும் அறி யாமைக்குமுள்ள முரண் இயல்பே அறி வென்ற செயற்பாட்டை என்றும் இயக்கு கின்றது.
**கண்ணுடையர் என்பவர் கற்றோர்
முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்"
என்ற குறள், அறிவின் இயக்கத்துக்கு ஆதாரமான கற்றோர் கல்லாதார் என்ற சமூக முரணியல்பை வெளிப்படையாகவே சுட்டிக்காட்டுகின்றது.
கல்வி என்பது அறியாமையிலிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அமை கின்றது. அறிவென்பது முடிவிலியான பெருந்தொகுதி. வளர்ந்து செல்லும் அந் தப் பெரும் அறிவுத்தொகுதி முழுவதை யும் ஒருவரால் நுகர்ந்து கொள்ளல் முடி யாது. இதுவும் கல்விச் செயற்பாட்டை உருவாக்கும் முரண்பாடாக அமைகின்றது; இது நித்திய முரண்பாடாகவே இருக்கும். இதனாற் கல்வியென்பதும் முடிவில்லாத நித்திய செயற்பாடாகவே அறியும். "அறி தொறும் அறியாமை காண்டற்றால்”*
22----

Page 139
என்ற குறள் அடி அறிவுத் தொகுதியின் முடிவிலியாகிய இயல்பையும் அதனால் எழும் முரண் இயல்பையும் புலப்படுத்து கின்றது.
பழந்தமிழ் மக்கள் தொழில் நோக்கை யும் கல்வியின் முதன்மை நோக்குகளுள் ஒன்றாகக் கண்டனர். உணவும், உடை யும், வீடும் புராதனமக்களின் அடிப்படைத் தேவைகளாக அமைந்தன. எந்த ஒரு சமூக மும் கல்வியின் தொழில் நோக்கை மறுத விக்க முடியாதுள்ளது. இதனை விரிந்த கருத்திற் கூறுவதானால் ஒருவன் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதிலும், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் கல்வியின் பங்கை எவரும் நிராகரிக்க முடியாதுள்ளது. கல்வியைப் பொருளிட்டும் கருவியாக்கல் என்ற கருத்தில் ஏட்டுக் கல்வியும் அனுப வக்கல்வியும் எடுத்துக்கொள்ளப்படுகின் par. -26rmé) 956060r “Bread and butter aim" என்ற சுருங்கிய வரையறையுள்ளே கொண்டுவருதல் பொருத்தமற்றது. பொருளாதாரத் தேவைகள், அல்லது தொழில் வாயிலாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவைகள் உணவுடன் மட்டும் கட்டுப்பட்டு நிற்பதில்லை. சமூகவிருத்தி யானது பல்வேறுதேவைகளை உருவாக்கிய வண்ணம் இருக்கின்றது.
கல்வியின் தொழில் நோக்கு இரண்டு
நிலைகளில் அணுகத்தக்கது. ஒன்று தொழிலை மத்தியாகக் கொண்ட கல்வி. இது கைவினையை நடுநாயகமாகக்
கொண்ட கல்வி என்றும் கூறப்படும். மற் றையது ஆழக்கற்றல் வழியாகப் பெறப் படும் புலமையினூடாக உயர் தொழில் களை அமைத்துக்கொடுக்கும் கல்வி. உண் மையில் இவ்விருவகை அணுகுமுறைகளும் சமூக வர்க்கங்களுடன் சார்ந்தவை. சமூக அடுக்கமையின் உயர் நிலையில் இருந்தோர் கல்விக்கும் வாண்மை எனப்படும் உயர் தொழிலுக்கும் இடையே இணைப்பைக் கண்டனர். '

"இத்திறம் தத்தம் இயல்பினிற்
காட்டும் சமயக் கணக்கருந் தந்துறை போகிய அமயக் கணக்கரும்"
என்ற மணிமேகலை அடிகள் கல்வியினாற் பெறப்பட்ட உயர்தொழிற் பாங்கினைச் சுட்டிக்காட்டுகின்றது.
ஆழக்கற்றலும் அதன் வழி ஈட்டப் பெற்ற புலமையும் வியந்துபோற்றப்பட் L 6.
'செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த
மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமு மென்றிவை சென்றளந் தறிந்தோர்"10
என்ற புறப்பாடல், கல்விவாயிலாக எழுந்த தனிமனித நிலைப்பட்ட மேம்பாட்டைக் குறிப்பிடுகின்றது. தனிமனிதருக்குரிய சுய உணர்விலும், சுய வெளிப்பாட்டிலும் கல்வியின் பங்கு மேலோங்கும் என்ற எண் ணம் இயற்கையை மாற்றியமைக்கும் சிந்த னைகள் தொழில் நிலைகள் என்பவற் றுடன் தொடர்புபட்டிருந்தன. சங்க இலக்கியங்களிற் கூறப்பெற்ற தொழில் முறைகள் நிலத்தின் இயல்புகளுக்கேற்ற வாறு கட்டுப்பட்டிருந்தன. குறிஞ்சியில் வேட்டையாடற்றொழிலும், முல்லையிற் கால்நடை வளர்த்தலும், நெய்தலில் மீன் பிடித்தலும், மருதத்தில் உழவுத் தொழி லும் செயற்பட்டன. சங்கமருவிய கால நூல்களாகிய சிலப்பதிகாரம், மணிமேலை ஆகியவற்றில் lugoval) Let I வர்த்தகத் தொழில்முறைகள் வளர்ந்தமைக்குரிய சான்றுகளைக் காணலாம். நிலமானிய சமூக அமைப்பின் பின்புலத்தில் வளர்ச்சி யடையத் தொடங்கிய வர்த்தகமானது. கல்விபற்றிய தொழில்சார் நோக்கங்களி லும் தாக்கங்களை ஏற்படுத்தியது.
வணிகர் கணங்கள் தத்தமது நலன் களைப் பாதுகாப்பதற்குரிய тешип ишы களைக் கையாளலாயினர். இந்தத்
I -

Page 140
தொடர்பிற் கல்வி உபாயங்கள் முக்கியம் பெறலாயின. வெறும் இலட்சியப்பாங்கிற் பழந்தமிழ் மக்களது கல்வியை விளக்க முடியாது: பழந்தமிழ் மக்களின் கல்வி யானது வாழ்க்கை யதார்த்தங்களில் இருந்தே எழுந்தது. ஒவ்வொரு தொழில் களிலும் ஈடுபடுவோர் தத்தம் தொழில் நலன்களைப் பாதுகாத்தல் உயிர் வாழ்க் கைக்கு இன்றியமையாதது.
வணிக வளர்ச்சியில் சேவை" என்ற பண்பு பொருளிட்டும் தன்மை கொண்ட தாக விருத்திபெற்றது. தன்னிறைவு சார்ந்த கிராமங்களை விட்டுப் பெயர்ந்து செல்வதனால் கிடைக்கும் மகிழ்ச்சியானது கல்விப்பயனாற் கிடைக்கும் மகிழ்ச்சி யுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது.
"பற்பல நாடும் பழுதின்றிப்
Lun siisa Luu கற்றலின் காழ் இனியது இல்" 2 என்ற அடிகள் இதனைத் தெளிவுபடுத்து கின்றன.
புராதன வர்த்தக வளர்ச்சியானது பல்வேறு மக்களுடன் உறவாடுவதற்கும், பொருள் கொடுத்து மாறுவதற்கும் வாய்ப்பளிக்க கல்வி நிலைப்பட்ட சமூக நோக்கு வளர்ச்சியடைந்தது. இத்தொடர் பில் பாணர் என்போர் வகித்த பங்கும் பணிகளும் முக்கியமானவை. கல்வியை யும் பொழுதுபோக்கையும் இனைக்கும் சமூக நிறுவனங்களாகப் பாணர் அமைந் soori i.
கல்வி பற்றிய பழந்தமிழ் மக்களது நோக்கு சமூக வினைத்திறனை மேம்படுத் தும் நோக்காகப் படி மலர்ச்சி கொண் டது. சமூக வினைத்திறன் என்பதற்குத் தற்காலக் கல்வியியலாளர் விரிவான விளக்கங்களைத் தருவர். சமூகப்பிரக்ஞை, பொருளாதார வினைத்திறன், அறம் சார்ந்ததும், பண்பாடு சார்ந்ததுமான நற்கருத்துக்கள் முதலியவற்றைச் சமூக வினைத்திறன் தழுவிநிற்கும்.24 சமூக நோக்கும், சமூகச் செயற்பாடுகளை
enn

வினைத்திறன் படுத்தும் நோக்கும் சான் Gprríř எனப்படும் புலவர்களிடத்து மேலோங்கியிருந்தன,
தனிமனித நோக்கும் சமூகநோக்கும்
இணங்கிச் செல்கின்ற ஒரு சூழலில், தனி மனிதனுக்கும் சமூகத்துக்குமிடையே முரண் பாடுகள் தோன்றமுடியாது. இச்சந்தர்ப் பத்திலேதான் கல்வி என்பது ஒரு நல்ல மனிதனையும் ஒரு சிறந்த சமூகப் பிரசை யையும் ஏககாலத்தில் உண்டாக்குகின்றது என்று கூறுவர்.
"எவ்வது உறைவது உலகம்
உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு"
என்ற குறள் சமூக வினைத்திறனை ஏற் படுத்துவதில் தனிமனித நோக்குகளையும், சமூக நோக்குகளையும் ஒன்றிணைக்கின்
100g57 •
இதன் தொடர்ச்சியாகவே கல்வியின் முழு நிறைவான வாழ்க்கை நோக்கம் எழு கின்றது. முழுநிறைவான வாழ்க்கையிற் கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப் படும்.
“எம்மை உலகத்தும் யாம்காணோம்
கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து”48 என்பதிலிருந்து கல்வியின் இருபக்கத் தொடர்புகளை விளக்கமுடியும். முழுமை யான வாழ்க்கையானது முழுநிறைவான கல்வியை வற்புறுத்துகின்ற வேளை, முழு நிறைவான கல்வியானது முழுநிறைவான வாழ்க்கையை வலியுறுத்தும்.
இந்நிலையிற் கல்வி ஒழுங்கமைப்பாகிய கலைத்திட்டத்தை ஆராய்தல் வேண்டும். கலைத்திட்டமானது, எண், எழுத்து என்ற இரு துறைகளாகப் பகுக்கப்பட்டிருந்தது. எண் என்பதற்குப் பரந்த பொருள் தரப் படுகின்றது. கணிதம், அறிவியல், அளவீடு கள் என்ற அனைத்தும் "எண்" என்ற துறையில் அடங்கியிருந்தன. எழுத்து என் பது இலக்கணம், இலக்கியம், பிறகலைகள்
مسیس l14

Page 141
என்ற அனைத்தையும் உட்படுத்தியிருந்தது. வாழ்க்கை அனுபவங்களிலே தோன்றிய, தொழிற் பிரிவு, சிறக்குமியல்பு ஆகியவை கல்விதெறியிலும் செல்வாக்குச் செலுத்தின. மிகப் பெரும் கல்வித்தொகுதியானது எண், எழுத்து என்றவாறும், இயல், இசை, நாட கம் என்றவாறும் அகம், புறம் என்றவா றும், இம்மைநெறி, மறுமைநெறி என்ற வாறும், அறம், பொருள், இன்பம், வீடு என்றவாறும் பாகுபடுத்தப்பட்டன. தேவை கருதி இவ்வாறான பாகுபாடு ஏற்படுத்தப் பட்டாலும், பயில்துறைகளுக்கிடையே ஏற் றத் தாழ்வு கற்பிக்கப்படவில்லை என்ப தைப் பின்வரும் குறள் தெளிவுபடுத்து கின்றது.
*எண் என்ப ஏனை எழுத்தென்ப
இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு"17
ஒவ்வொரு துறையையும் ஆழ்ந்து கற்கும் தேவை சமூக வளர்ச்சியின் இன்றியமை யாத பண்பாயிற்று. சமூக வளர்ச்சியிற் தொழிற்பிரிவும், சிறக்குமியல்புகளும் வளர சிக்கலான நிலமைகள் ஏற்பட்டன. இந் நிலையில் ஒவ்வொரு துறைகளையும் ஆழ்ந்து கற்றோரின் சேவை சமூகத்துக்கு வேண்டியதாயிற்று.
**கணக்காயர் இல்லாத ஊரும்
பிணக்கறுக்கும் மூத்தோரை இல்லா அவைக்களனும்பாத்துண்ணும்
தன்மையியலாளர் அயலிருப்பும்
இம்மூன்றும்
நன்மை பயத்தல் இல'18
என்பதிற் கற்றோரின் சேவை விதந்து குறிப் பிடப்படுகின்றது. இங்கு கல்வியின் பிர யோக நிலை சமூக நோக்கிலே வற்புறுத் தப்படுவதைக் காணலாம். பிரயோக நிலை யானது கல்வியின் "பயன்வழிநிலை" என் றும் குறிப்பிடப்படும் கல்வி வழியான சமூ கச் சீராக்கம், கல்வியாற் பெறப்படத்தக்க பயனுடைமையை மேலோங்கச் செய் கின்றது.

مستنت
"உலகத்தோ டொட்ட ஒழுகல்
பலகற்றும் கல்லார் அறிவிலாதார்"19
என்ற அடிகள் கல்வியினாற் பெறத் தக்க சமூக சீராக்கத்தை விளக்குகின்றன. சமூ கத்தோடு இணைந்த நலன் மேம்படுத்தப் பட வேண்டியதாகையால் 'வாணாள் முழு தும்" கற்றல் அல்லது 'சாந்துணையும் கற்றல்" என்ற நோக்கம் முன்வைக்கப் பட்டது
கல்வியறிவின்றி வினைத்திறன் வாய்ந்த தொழிற்பாடு இல்லை. அவ்வாறே வினைத் திறன் வாய்ந்த தொழிற்பாடு இன்றிக் கல்வியறிவில்லை. அவை ஒன்றுக்கொன்று அனுசரணையானவை. வாழ்க்கை என்பது முன்னேற்றகரமான நிலைமைகளை நோக் கிய தொடர்ச்சியான மாற்றங்களைக் கொண்டிருக்கும். வரலாற்றில் குறிப்பிட்ட காலகட்டத்தின் சூழலானது மனிதரின் படைப்பாக்கப் பண்புடன் இணைந்த புதிய கண்டுபிடிப்புக்களை உருவாக்கும். புதிய கண்டுபிடிப்பானது வாழ்க்கைப் பண்பை முன்னரிலும் முன்னேற்றகரமாக முன் னெடுத்துச் செல்லும். இவ்வாறான தொடர் செயல்முறையானது வாழ்க்கை முழுவதும் கல்வி என்ற பண்பை மேலும் பொருண்மை கொண்டதாக ஆக்கும்.
கல்வியும், வாழ்க்கை முன்னேற்றமும் தொடர்ந்து இயங்கியவண்ணமிருக்கும் பொழுது கல்வியில் ஆன்மீக நோக்கு முகிழ்த்தெழும். வாழ்க்கை கடந்த இலட் சியங்கள் எழுவதற்கு வாழ்க்கையே கட் டளைக் கல்லாக அமையும். இந்நிலையிற் கல்வியில் ஆன்மீக நோக்கானது கற்பனை கலந்த இன்பத்தைக் கொடுக்கும். இந் நிலையில் ஆன்மீக நோக்கும் உலகியல் நோக்கும் முரண்பட்டவையென்று கொள்ள முடியாது. ஆன்மீக நோக்கும் உலகியல் நோக்கும் ஒன்றிணைக்கப்படும் கல்வியே முழுமையடைந்த கல்வியாக அமையும். ஆன்மீக நோக்கு என்ற உயர் இலக்கை ஒரு 'கட்டுப்படுத்தும் உசாத்துணை"யாக வைத்து உலகியலை ஒழுங்குபடுத்தும் உபா யங்கள் பழந்தமிழர் கல்வி மரபிலே காணப் பெற்றன. ܗܝ

Page 142
*" வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
வானுறையும் தெய்வத்துள்
வைக்கப்படும்"20
என்ற குறட்பா மேற்கூறிய கல்வி நோக் கைத் தெளிவுபடுத்துகின்றது. ஆன்மீக நோக்கு என்ற உன்னதம் உலக வாழ்க்கை யைக் கட்டுப்படுத்துவதற்கு உபாயமாக்கப் படுவதைக் கண்டு தெளியலாம்.
சமூகம் என்பது பல்வேறு தொடர்பு களினால் ஆக்கப்படுகின்றது. சமூகக் குழுக் களும், புலவர்களும், முரண்பாடுகளின் மத் தியிலே தம்மை ஒழுங்கமைத்துச் செயற் பட முனைகின்றனர். இந் நிலையிற் கல் விக்குரிய கருத்து வழங்குதலும் நோக்கங் களை வழங்குதலும், ஒவ்வொரு சமூகக் குழுவுக்குமுரிய குறித்தவரலாற்றுக்கால கட் டத்தின் தேவை வெளிப்பாடாக அமை கின்றது. சமூகக் குழுக்கள் தமது ஆற்றல் களை மீள் உற்பத்தி செய்வதற்குரிய சாதனமாகப் பயன்படுத்தியமையை பழந் தமிழர் கல்வி நோக்குகள் வெளிப்படுத்து கின்றன.
மொழியாலும் பிற பொருளாதார வளங்களினாலும் உற்பத்தி நிலைப்பட்ட நிலைமாற்றங்களைஏற்படுத்துவதற்குகல்வி பயன்பட்டது. இந்நிலையில் உலகு பற் நிய நோக்கும் கருத்தும் தொடர்ந்து மாற்றமடைந்த வண்ணம் இருக்கும். உழைப்பும் தொழிற்பாடுகளும் புற உலகை மாற்றும் பொழுது, அந்தப் புதிய தூண்டி கள் அகத்திலே புதிய புதிய துலங்கல் களை ஏற்படுத்தும். இந்நிலையிற் பழந் தமிழ் மக்கள் கல்விக்கு பல்வேறு சந்தர்ப் பங்களிற் பல் வேறு விளக்கங்களைக் கொடுக்க முடிந்தது.
கல்வி என்பது நுகர்ச்சி செய்யப்படும் ஒரு பொருளன்று. ஆக்குதல், மீளாக்குதல் என்ற செயற்பணிகளைத் தூண்ட வல்ல தாக அது அமைதல் வேண்டும். விலங்கு கள் சூழ்நிலைக்குப்பொருந்தி வாழ்கின்றன. ஆனால் மனிதரின் நடவடிக்கை சூழலை இலக்குகளுடனும் நோக்கங்களுடனும் மாற்

றியமைக்க முயல்கின்றன. மனிதர் தமது செயற்பாடுகளைப் புறநிலைப் படுத்திப் பார்த்தல் விலங்குகளிலிருந்து மனிதரைப் பிரித்தறியும் செயற்பாடாகும். புறப் பாடல்களில் இவ் வகையான 'புறநிலைப் படுத்தல்" நோக்குகளுக்குச் சான்றுகளைக் காண முடியும்.
"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலை இய பலர்புகழ் சிறப்பின் புலவர் tliTL-ITI வரைக என்நிலவரை"2
அனுபவங்களை திறனாய்வு செய்தல் கல் வியின் நோக்காக அமைகின்றது. சமூகம் ஒரு மாற்றத்தை உருவாக்கும் வேளை தனி மனிதனும் அந்தமாற்றத்திலே பங் கெடுக்கின்றான். உற்பத்தியிலே தனி மணி தனுக்குரிய அனுகூலங்கள் கிடைக்காத விடத்து, தனிமனித அனுபவங்கள் முரண் பாடுகளின் துலங்கலாக அமையத் தொடங் கும். அந்நிலையிலே தன்னைத்தான் திற னாய்வு செய்து மேம்படுத்தும் நோக்கங் கள் கல்வியிலே விருத்தியடையும்.
"யாம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும்
அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருள் இனக் கடப்பின் ஒலி
தாராயே"22
என்ற அடிகள் சுய திறனாய்வினூடாக மேலோங்கும் தனிமனித விழுமியங்களைக் காட்டுகின்றன.
அறிதலுக்காகச் செயலூக்கம் கொள் தல் என்பது கல்வியில் முக்கியத்துவம் பெறுவதொன்றாகும். அறிதலுக்கான செய லூக்கம் என்பது சமூக மாற்றங்களுக்கான தடைமுறைகளிலே பங்கு கொள்ளும் ஆக் கத் திறனுடையது.
சங்க காலம், சங்கமருவிய காலம் என்ற காலப்பகுதிகளோடு ஒப்பிடத்தக்க
-

Page 143
மேலைப் புலக் கல்விச் சிந்தனைகளை நோக்குதலும் பொருத்தமானது. கல்வி யின் சமூகப் பங்களிப்புக்கான நோக்கங் களையும், ஓர் இலட்சிய மனிதன் இலட் சிய அரசு என்பவற்றை ஆக்குவதிற் கல்வி பங்கு கொள்ள வேண்டும் எனவும் பிளேட்டோ (கி. மு. 427 - 347) வற்புறுத் தினார்.23 கிரேக்கத்தின் சமூக பொருளா தார முரணியல்புகளில் இருந்து கிளர்ந் தெழும் கருத்துக்களாக அவை அமைந் தன. நல்லோர்கள் ஆட்சி பீடம் ஏறி ஓர் அரசு உருவாக வேண்டும் என்ற கற் பனை ஆவல் அங்கே காணப்பட்டது.
சங்க மருவிய காலக் கல்விக் கருத்துக் களுக்கும் புனித அகஸ்தினுடைய கல்விச் சிந்தனைகளுக்குமிடையே ஒப்புமை காண முடியும். இறையருளால் தெய்வீக ஒளி
அடிக்கு
1. திருக்குறள் - 1110
صممي ينزع 3. Lapth - 312
3. திருக்குறள் - 427
4. மேலது - 392
5. கலித்தொகை - 133
6. புறம் - 183
7. திருக்குறள் - 339
8. மேலது. -- 1110
9. மணிமேகலை - 1 12 - 14
10. புறம் - 30
I 1. Jaya Kothai Piilai, Educational System of the Ancient Tamils Kazhagam, 1972, P. 55
12. இனியவை நாற்பது - 2
13. R. Venkatraman “Education of the Sangam Tamils". Heritage
-

பெறுதலும் உண்மைகளைக் கண்டறித லும் கல்வியின் நோக்கங்களாக புனித அகஸ்தீனால் (கி. பி. 354 - 430) வற்புறுத் தப்பட்டுள்ளன. சங்கமருவிய காலத்துக் கல்வி நோக்கங்களில் ஆன்மீக நோக்கு மெய்ப்பொருள் காணல் முதலியன இழை யோடி நிற்பதைக் காணமுடியும்.
எத்தகைய சமூக அமைப்பிலும், வர லாற்றுப் பின்புலத்திலும், சமூக பொரு ளாதாரக் கட்டமைப்பின் மேலமைந்த வடிவமாகக் கல்வி விளங்குவதுடன் சமூக அடுக்கமைப்பின் இரு முனைகளிலும் உள்ளோரது நோக்கங்கள் கல்வியுடன் இணைந்து ஏக காலத்திற் கிளர்ந்தெழும் பண்பைக் காண முடியும். சமூக விசை களாற் கல்வி பற்றிய உள்ளுணர்வு வடி வம் பெறுகின்றது.
றிப்புகள்
of the Tamils, Education and Vocation, IITS, Madras 1986, P. 21
14. V. R. Taneja, Educational
Thought and Practice, Sterling Publishers, New Delhi, 1980, P. 38
15. திருக்குறள் - 426
16. நாலடி - 132
17. திருக்குறள் - 392
18. திரிகடுகம் - 10
19. திருக்குறள் - 140
20. திருக்குறள் - 50
21. புறம் - 72
22 பரிபாடல் - 5
23. Paul Nash and Others,
The Educated Man, John Wiley and Sons, INC, New York, PP I-27

Page 144
கலாநிதி நா.
ைேல இலக்கியச் செயற்பாடுகளில் முக்கியமான இருநிலைகள் உள. ஒன்று ஆக்க நிலை மற்றது வெளியீட்டு நிலை: முதலாவதிலே ஆக்குவோனின் - படைப் பாளியின் - ஆளுமை தொழிற்படுகிறது. இரண்டாவதிலே அவ்வாக்கத்தோடு சமு தாயம் நேரடியாகத் தொடர்பு பூண்டு பயன் கொள்கிறது. இவ்வாறு பயன் கொள்ளும் நிலையிலான தொடர்பிலே சமுதாயத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களாக அரங்கு, அவை (சபை) கழகம், களம், சங்கம், மன்றம் முதலான பெயர்பூண்ட நிறுவனங்கள் அமைகின்றன. அறிஞர், கலைஞர், சுவைஞர், திறனாய் வாளர் ஆகிய பலவகையினரும் ஒருங்கி ணைந்த சூழலாக இது அமையும். இத்தகு நிறுவனத்தில் ஒருவர் தமது கலை இலக் கிய ஆக்கத்தினை முதலில் வெளிப்படுத்தி அங்கீகாரத்தை எதிர்நோக்கும் நிலையே அரங்கேற்றம் என்ற தொடரால் வழங்கப் படுகிறது. இவ்வாறு பெறும் அங்கீகாரமே அப்படைப்புக்கான சமுதாய அங்கீகாரம் என்பது தமிழ் (இந்திய) மரபில் எழுதப் படாத விதியாக நிலவி வந்துள்ளது; நிலவி வருகின்றது. இன்று பொதுவாக இசை, நடனம் சார்ந்த முதல் மேடை நிகழ்வு களை மட்டுமே அரங்கேற்றம் என்ற சொல் பெருவழக்காகச் சுட்டிப் பயில்கிறது. பண் டைக் காலத்திலே - கலை இலக்கியம் சார்ந்த பல்துறைகளுக்குமான முதல்
- 1

,)LI U F'EL للة bரில் அவதானிப்புகள்
சுப்பிரமணியன்
மேடை நிகழ்வின் பொதுச் சுட்டாக இச் சொல் பயின்றுளது. இவ்வாறான அரங் கேற்ற மரபு தமிழிலக்கியப் பரப்பிலே பயின்று வந்துள்ள முறைமை இங்கு சுருக்க மாக நோக்கப்படுகிறது.
தமிழில் இன்று எமக்குக் கிடைக்கும் நூல்களில் தொன்மை வாய்ந்தனவாகிய எட்டுத் தொகை, பத்துப்பாட்டு என்ப வற்றைச் சங்க நூல்கள் என்பது பொது வழக்கு. இத் தொடரில் அமையும் சங்கம் என்பது அக்காலப்பகுதியில் இ லக் கிய வெளியீட்டுக் களங்களாகத் திகழ்ந்த "அறி ஞர்-புலவர் அவையைச் சுட்டிப் பயின்றது என்பது தெளிவு. பண்டைநாளில் (கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்ப ட் ட காலப் பகுதியில்) மூவேந்தர்களும் குறுநில மன்னர்களும் "அறிஞர் - புலவர்" அவை களை நிறுவி இலக்கிய ஆக்கங்களின் வெளியீட்டுக்குத் துணை நின்றனர். ஆக் கங்களை நயந்து பரிசில் வழங்கினர். அந் நாட்களில் மதுரை மாநகரில் தி க ழ் ந் த தமிழ்ச் சங்கம் தொடர்பாகவும் அங்கு பொற்றாமரை வாவியில் இருந்த "சங்கப் பலகை" என்ற தகுதிகாண் பீடம்" தொடர்பாகவும் வழங்கிவரும் கதைகள் பல உள. மேற்படி கதைகளின் வரலாற் றுண்மை ஐயத்துக்கிடமானதாயினும் அக் காலப் பகுதியில் இலக்கியத்தைத் தகுதி கண்டு ஏற்கும் முறைமை தொடர்பாக நிலவியிருக்கக்கூடிய சிந்தனைச் சூழலை
18 -

Page 145
அவை உண்ர்த்தி நிற்பன என்பதை மறுப் பதற்கில்லை.
சங்ககாலத்தின் பின்னர் எழுந்த ஆக் கங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை என்பன அவற்றின் ஆசிரியர்களான இளங் கோவடிகளாலும் சாத்தனாராலும் ஒரு வரையொருவர் முன்னிலைப்படுத்தி எடுத் துரைக்கப்பட்டன எனப்படுகின்றன.
உரையிடை யிட்ட பாட்டுடைச்
செய்யுள் உரைசால் அடிகள் அருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன் எனச் சிலப்பதிகாரத்திலும்,
இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப வளங்கெழு கூடல் வாணிகன் சாத்தன் மாவண் டமிழ்த்திற மணிமே கலைத்
துற வாறைம் பாட்டினு ளறியவைத்
தனனே
என மணிமேகலையிலும் இச் செய்தி கூறப் பட்டுள்ளது. மேற்படி கூற் றுக் க ளின் வரலாற்றுண்மையும் ஆய்வுக் குரியதே. எனினும் புலமைத் தகுதியுடைய ஒருவரை முன்னிறுத்தி அவர் உளங்கொள்ளத்தக்க வகையில் ஒருவர் தம் ஆக்கத்தை வெளிப் படுத்தி அங்கீகாரம் எதிர்பார்த்திருந்த ஒரு சிந்தனைப் போக்கை இவை உணர்த் துவன என்பதுதெளிவு. ஏறத்தாழ சம காலத்திலே இறையனார் களவியலுக்கு நக் கீரர், கபிலர் முதலியோர் செய்த உரை களை உருத்திரசன்மன் என்ற ஊமைப் பிள்ளையை முன்னிறுத்தி எடுத்துரைத்துத் தகுதி கண்டதாக வழங்கும் செய்தியும் இத் தொடர்பிலே சிந் த னை க்குரியது. உருத்திரசன்மன் தன் கண்களில் நீர்வார புளகாங்கிதம் கொண்டிருந்த நிலையே தகுதிக்கான அங்கீகாரமாகக் கொள்ளப் பட்டதெனவும் அறிகிறோம். இதனை மனப்பதிவியல் முறையிலான திறனாய்வு அங்கீகாரம் என்பர்.
சிலப்பதிகாரத்திலே மாதவி தன் ஆடல் திறனை அரசவையில் வெளிப்படுத்திய முதல் நிகழ்வு "அரங்கேற்றுகாதை" என்ற
- 11

தலைப்பில் எ டு த் துரைக்கப்பட்டமை அரங்கேற்றம் என்ற சொற்பயிற்சியின் ஆரம்பநிலைச் சான்றாகக் கருதத் தக்கது. ரங்கம் என்ற வடசொல் அரங்கம், அரங்கு என்பனவாகத் தமிழிற் பயிலத் தொடங்கி யது எனலாம்.
கி. பி. ஆறாம் நூற்றாண்டையடுத்து தமிழிலக்கியம் சமய உள்ளடக்கத்தைப் பெறத் தொடங்கிய சூழலில் சமய நிறுவ னங்களான ஆலயங்களும் அவற்றின் சூழ லும் அரங்கேற்ற மன்றுகள் ஆயின. பக் திப் பாவலர்களான நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவனையும் அடியார்க ளையும் பொதுமக்களையும் முன்னிலைப் படுத்தித் தம் புலமையையும் உணர்வுக ளையும் வெளிப்படுத்தினர். அடுத்துவந்த சோழப் பெருமன்னர் காலத்திலும் ஆல யங்களின் சூழல் இலக்கிய அரங்கேற்றத் திற்கான முக்கிய களமாகத் திகழ்ந்தது, சேக்கிழாரின் பெரிய புராணம் தில்லைத் திருத்தலத்திலே பலநாட்களாகப் பாடி அரங்கேற்றப்பட்டது. அரச அவைகளும் அக் காலப் பகுதியில் அரங்கேற்ற மண் டபங்களாகத் திகழ்ந்தன.
பின்வந்த காலப்பகுதிகளில் ஆலயச் சூழல், ஆதீனங்கள், சிற்றரசர்களது சமஸ் தானங்கள், வள்ளல்களது இல்லங்கள் முதலியவற்றிலேநால்கள் அரங்கேற்றப்பட் டன. சிற்றரசு சம ஸ் தா ன மொன்றின் - எட்டயபுர சமஸ்தானத்தின் - புலவர் குழாத்தில் அரங்கேற்றம் பெற்று இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்தவனாகவே நவயுகக் கவிஞன் மகாகவி சுப்பிரமணிய பாரதி நமக்கு அறிமுகமாகிறான்.
மேற்படி பல்வகைக் களங்களிலும் அரங்கேற்றம் நிகழ்ந்த வேளைகளில் நூலாக்குவோன் பல்வேறுபிரச்சினைகளை எ தி ர் நோ க் க வேண்டியிருந்தது. மரபாக வழங்கிவரும் கதைகள் சில இவற்றை உணர்த்துவன.
கம்பர் தாம் பாடிய இராமாயணத்தை (இராமாவதாரத்தை) அரங்கேற்ற முற் பட்டபோது பூரீ ரங்கத்திலிருந்து வைஷ்
--سم : 9؟

Page 146
ணவர்கள் முதலிய பலரைத் திருப்தி செய்யவேண்டியிருந்தது என அறி கி றோம். அக் காவியத்தில் இடம்பெறும் "துமி" என்ற சொல்லுக்கு வழக்கிய லுண்மை காட்டவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு இருந்தமையையும் ஒரு கதை சுட்டுகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தை அரங்கேற்றும் முயற்சி யில் முதலாவதான காப்புச் செய்யுளின் முதற்றொடரான "திகடசக்கர" என்பதற் குப் புணர்ச்சி விதி காட்டவேண்டிய பிரச் சினைக்குள்ளானார் என ஒரு கதை வழங் குகிறது. இத்தகு சந்தர்ப்பங்களில் இவர்க ளுக்குத் தெய்வங்கள் அருள் செய்து துணை நின்றன என்பதும் இக் கதைக ளால் உணர்த்தப்பட்டுள்ளன.
அரங்கேற்ற முயற்சிக்குக் களமாக அமையும் அரங்கின் இயல்பு, அங்கு நூலா சிரியன் பேணிக் கொள்ள வேண் டிய பண்புகள் என்பன தொடர்பாகத் தமிழர் மத்தியிற் சில மரபுகள் நிலவி வந்துள் ளன. இவற்றைப் பாட்டியல் நூல்கள் அறியத்தருகின்றன.
அரங்கு அல்லது அவை எனப்படுவது பண்பாளர், அறநெறி நிற்போர், நுண் ணறிவுடையோர், கலை வல்லார் ஆகி யோரின் சங்கமம் ஆக அமைவதே சிறப் பாகும். இதனை வெண்பாப்பாட்டியல், (கி. பி. 12 ஆம் நூற்றாண்டு)
புகழும் தரும நெறி நின்றோர்
பொய் காமம் இகழும் சினம் செற்றம் இல்லோர் -
நிகழ்கலைகள் எல்லாம் உணர்ந்தோர் இருந்த
இடமன்றோ நல்லாய் அவைக்கு நலம்.
நலனடக்கம் செம்மை நடுவுநிலை
ஞானம் குலனென்றிவையுடையோர் கோதில்புலனில்லோர் சென்று மொழிந்தனவுங் கேட்போர்
செறிந்த இடம் அன்றோ நிறைந்த அவை.
Y (வெ. பா. பொது:9:10)

என்னும் வெண்பாக்களால் உணர்த்தும் இதற்கு மறுதலையான நிலையினர் குழு மும் இடம் குறையவை எனப்படும்.
நல்லவையிலே தனது ஆக்கத்தை அரங்கேற்றும் ஆசிரியன் பெருந்திசைகளை அன்றிக் கோணங்களை நோக்கி அமரலா காது. கோபத்தை வெளிப்படுத்தலாகாது" விலக்கப்பட்ட வழுச் சொற்களை வழங்கக் கூடாது. முன்னைய நூல்களின் ஆணை களை மீறலாகாது; பொய் பேசலாகாது. இவ்வாறு நடந்துகொள்ளத் தவறினால் அந்த அரங்கேற்றம் தோல்வியிலேயே முடி யும். இதனை நவநீதப் பாட்டியல், (கி.பி. 13ம் நூற்றாண்டு.)
கோணத்திருப்பினும் கோபம்
பெருக்கினும் குற்றமென்று நாணத் தருமவை நாயிற் பயிலினும்
நாடி நன்னூல் ஆணைப் படியன்றி யல்லவை
சொல்லினும் ஆங்கிருந்தோன் காணப்பொய் கூறினும் தோல்வியென் றோதுவர் கற்றவரே. (15. Lurr. 95) என்ற பாடலால் உணர்த்தும்.
இவ்வாறு தோல்வியுறாமல் நல்லவை யின் அங்கீகாரத்தைப் பெற்ற ஆக்கம் உரிய வகையிற் கெளரவிக்கப்பட்டமை பற்றியும், அதன் ஆசிரியனுக்குச் சன்மா னங்கள் வழங்கப்பட்டமை தொடர்பாக வும் நவநீதப்பாட்டியல், பிரபந்தமரபியல் (கி. பி. 16ம் நூற்றாண்டு) என்பன பல செய்திகளைத் தருகின்றன. அரங்கேறிய நூல்கட்கு மன்னர்கள், வள்ளல்கள் வழங் கிய வரிசைகள், பரிசுகள் என்பன தொடர் பான கதைகள் பலவுள. ஈண்டு அவை விரிக்கிற் பெருகும்.
அரங்கேற்றப்படும் நிலையிலான ஒரு கவிதையைப் பெண்ணாக உருவகிக்கும் கற்பனை ஒன்று பிரபந்தமரபியலில் உளது. அரங்கில் உள்ளோர் அப்பெண் உறவு நிலை சார்ந்தோர் எனப்படுகின் றனர்.
ܚܗ- 20 1

Page 147
"தந்தை புலவன்; தாயவள்
தரித்திரம் அக்கவிப் பொருளை அணியாய்
விரித்து வசனிக்கக் கேட்போர் மாதவர்
ஆகும்: சந்தப் பொருளைச் சபையினர்
உளங்கொளச் சதிரிற் படிப்போன் தமைய னாகும்; பொலிந்த குழுவிற் புகழ்ந்து
கொள்வோர் உறவின் முறையென் றோத லாகும்; இன்பமுற்றதனை எழிலுடன்
கேட்டுப் பரிசு கொடுப்போன் பர்த்தா
ஆமே (լ ԳՄ - 33)
இதன் பொருள் வெளிப்படை. இதிற் கவிதைப் பெண்ணின் தாய் தரித்திரம் எனக் கூறப்பட்டமையானது தமிழ்க் கவி ஞர்கள் ஒருகாலப் பகுதியினரின் பொரு ளியல் தாழ்நிலையை உணர்த்தி நிற்
பதாகக் கொள்ளப்படவேண்டும். பரிசு கொடுப்போன் பர்த்தா (கணவன்) எனச் சுட்டப்பட்டுள்ளமை புரவலர் பெற்
றிருந்த தனிப் பெருநிலையை உணர்த்து வது.
இவ்வாறாகத் தமிழிலக்கிய மரபின் பண்டு நிலவிவந்துள்ள அரங்கேற்ற முறைமையின் ஒரு தற்கால மாற்று வடிவ மாகவே நூல் வெளியீடு என்ற நிகழ்ச்சி அமைகிறது. ஆக்கங்கள் ஏட்டில் எழுதப் பட்ட காலப்பகுதியில் அரங்கிலே நூல் முழுமையாகப் படிக்கப்பட்டு அங்கீகாரம் பெறவேண்டிய நிலை இருந்தது. அச்சு
அறமெனப் படுவது L மறவாது இதுகேள் ம உண்டியும் உடையும் கண்டதில்லை.
12 سس۔

வசதி ஏற்பட்டுவிட்ட இந்நாளில் நூல் தொடர்பான சில அறிமுகக் குறிப்புக் களையும் ஆய்வுக் குறிப்புக்களையும் முன் வைப்பதோடு வெளியீடு நின்றவுபெற்று விடுகிறது.
பண்டைய காலத்தில் அரங்கிற்குக் கூறப்பட்ட இலக்கணம், நூலாசிரியன் பேணிக்கொள்ளப்பட வேண்டியனவாகக் கூறப்பட்டுள்ள முறைமைகள் இன்றைய காலப்பகுதிக்கும் பெரிதும் பொருத்த முடையனவாகவே கொள்ளற்பாலன. பண்டு இலக்கியத்தைச் சுவைத்து ஏற் றுப் பரிசில் வழங்கிய புரவலர்களான பர்த்தாக்களின் நிலையில் இன்றைய முதற்பிரதி, சிறப்புப் பிரதிகள் பெறு
வோர் அமைகின்றனர் எனலாம்.
நூல் அரங்கேற்றம் நூல் வெளியீடா கப் பரிணாமம் பெற்றுவிட்ட இன்றைய நிலையிலும், வேறுசில துறைகளில் அரங் கேற்ற முறைமை அச் சொல்லுடன் பயில்வதை அவதானிக்கலாம். கவியரங்கு, கருத்தரங்கு, உரையரங்கு, விவாத அரங்கு என்பனவாக வழங்கப்படுவனவற்றை இவ் வகையில் சுட்டலாம். விவாத அரங் கைப் பட்டிமன்றம் என்றும் வழங்குவர். இச் சொற்றொடர் பண்டைய வழக் கிலும் உளது. வழக்காடு மன்றம் என்ற ஒரு செயல்முறையும் இன்று பயில் கிறது.
இத்தகு அரங்கு, மன்றுகளில் முத வில் பங்குகொள்பவர்களுக்கு அப்பங்கு பற்றல் நிகழ்ச்சியானது "அரங்கேற்றம்’ ஆகவே கொள்ளப்படற்குரியதாகும்.
ாதெனக் கேட்பின் ன்னுயிர்க்கு எல்லாம் உறையுளும் அல்லது
каний மஜிக்கலை.
ཚ་ ༈ །

Page 148
ஒவ்வொரு நாட்டிலும் வாழ்கின்ற மக்களுடைய எண்ணப் பாங்கிற்கேற்ப அவர்களின் ஆன்மீக நோக்கு வேறுபட் டுக் காணப்படுகின்றது. அங்கு வாழ்கின்ற மக்களுடைய நாளாந்த வாழ்வும் வளமும் மதத்தோடு பின்னிப் பிணைந்தவையாக அமைந்திருக்கின்றன. பிறப்புத் தொடக் கம் இறப்பு வரையும் அவர்கள் தெய்வ நம்பிக்கையின் பேரில் பல்வேறு சடங்குக ளையும் கிரியைகளையும் செய்வதன் மூலம் திருப்தி அடைகின்றார்கள். கடவுள் மீது கொண்டுள்ள பக்தியும் அச்சமும், முன் னோர் வழக்கத்தை மீறாமல் நடந்து கொண்டால் வாழ்க்கை வசதியுடையதாய், கவலை அற்றதாய் அமையும் என்ற நம் பிக்கையும் சேர்ந்து தாம் விரும்பிய தெய் வங்களை வழிபாடியற்ற மக்கள் தலைப் பட்டனர். அவற்றின் அடிப்படையாக அமைந்தனவே கிராமிய தெய்வங்களாகும்.
தமிழகத்தில் சங்ககாலத்தில் மாயோன், முருகன், இந்திரன், வருணன், கொற் நவை ஆகிய தெய்வங்கள் பெரும் தெய் வங்களாக விளங்கின. இக்காலத்தில் சிவ வழிபாடு முக்கியம் பெறவில்லை. பத்துப் பாட்டில் நான்கு இடங்களில் சிவனைப் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. எட் டுத் தொகையில் சிவனின் இயல்புகள்
= 12
 

2ழத்துற்றில்
கனகரத்தினம்
ஆங்காங்கே வருகின்றன. இ. டி. ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண் டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தொடங்கிய சமய மறுமலர்ச்சியின் பய னாகவே சிவன், திருமால் ஆகிய தெய் வங்கள் முதன்மையான தெய்வங்களாகப் போற்றப்பெற்றனர். இன்று சைவர்களின் மத்தியில் சிவன், திருமால், முருகன், பிள்ளையார் ஆகிய தெய்வங்களும் அம்மன் என்ற பெயரில் சில பெண் தெய்வங்களும் பெருந் தெய்வங்களாகக் கருதப்பட்டு வழிபாடியற்றப்படுகின்றன.
பல்லவர் காலப்பகுதியில் நாயன்மார் கள் ஒவ்வொருவரும் சிவனைப் பாட்டு டைத் தலைவனாகக் கொண்டு பாதும் ஊரே யாவரும் கேளிர், "எல்லோரும் ஒருகுலம்’, எல்லோருக்கும் ஒருவனே தெய்வம் அவனே சிவன், அவன் எந்நாட் டவர்க்கும் இறைவன்" என்னும் அடிப்படை யில் இறைவனைப் போற்றித் துதித்தனர். நாயன்மார்கள் சமகாலத்தில் மக்களிடத் திலே வழக்காற்றில் இருந்த ஏனைய தெய் வங்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத் ததாகத் தெரியவில்லை. இவர்களுக்குப் பின்வந்த மெய்யடியார்கள் விநாயகர், முருகன், அபிராமி, சரஸ்வதி முதலான தெய்வங்களைப் பாட்டுடைத் தலைவன்

Page 149
தலைவியாகக் கொண்டு பாடித் துதித் தனர். இவற்றின் விளைவாக நாயன்மார் களால் பேணப்பட்டுவந்த ஒருமைத் தன்மை விடுபட்டு, சைவநெறி பன்முகப்படுத்தப் பட்டது. பல தெய்வங்களை வழிபாடு செய்யவேண்டிய நிலை மக்களுக்கு உரு வாகிற்று. இதனால் இறையியல் கோட் பாட்பாட்டின் உண்மையினை நன்கு புரிந்து கொள்ள முடியாத பாமர மக்கள் தம் முன்னோரால் வழிபாடியற்றப் பெற்ற தெய்வங்களைப் பேணி வழிபாடியற்றி வரலாயினர்.
ஈழத்துச் சைவ மக்களிடத்தில் பண்டு தொட்டு இரு வகையான வழிபாட்டு முறைகள் இருந்து வருகின்றன. ஒன்று, ஆகம வழிபாட்டு முறை, இரண்டு, நாட் டார் வழக்காற்றில் அமைந்த தெய்வங்கள் அல்லது கிராமியத் தெய்வங்கள். முன்னை யது சிற்ப சாத்திரம், ஆகமம் ஆகிய விதி முறைக்கமைந்த ஆலயங்களில் பார்ப்பனர் அல்லது சைவ குருமார்களைக் கொண்டு வழிபாடு இயற்றுவித்தல். பின்னையது பொதுமக்கள் விரும்பியவாறு, ஒரு ஒழுங் கில் வழிபாடு இயற்றுதல். ஆயினும், இதற் குப் புறநடையாக ஆகம விதிகளுக்குட் பட்ட பார்ப்பனர்கள் அவ்வொழுங்கினைத் தவிர்த்து இவ்வகையில் அமைந்த ஆலயங் களில் சடங்குகள் ஆற்றி வருகின்றனர்.
பெரும் தெய்வம், சிறு தெய்வம் என் னும் பாகுபாடு, சிற்பசாத்திர, ஆகம விதிப் பட்டதாக அமைந்த பொழுதும், அது மக் களின் தெய்வீக நம்பிக்கைகளைப் பொறுத்து அமைவதில்லை. ஒரு இனக்குழு மக்களின் பொருளாதார வளமும் பிறிதோர் இனக் குழுவின் அபிலாஷைகளின் பிரதிபலிப்பும் இத்தகைய பாகுபாட்டிற்குக் காரணமென லாம். பிறிதோர் வகையாகக் கூறின், வணிகப் பெருமக்களின் பொருள் முதலும் பார்ப்பனரின் கற்பனா வாதமும் ஒன்றி ணைந்ததன் மூலம் ஏற்பட்ட விளைவே இப்பாகுபாடாகும்.
அம்மன் ஆகிய தெய்வங்களும் அவற்றின் மூர்த்தங்களும் எவ்விடத்தில் எந்த விதி
- 1,

முறையில், யாரால் பூசை செய்யப்படுதல் என்பன போன்ற வினாக்களுக்கு எத்தை விடைகள் அமைந்த போதும், ଓଁ ଶୟ୍ଯ பெருந் தெய்வங்களாகவே எங்கும் கணிக் கப்பெறுகின்றன. ஏனைய தெய்வங்கள் யாவும் சிறுதெய்வங்களாகவே நோக்கப்படு கின்றன.
ஈழநாட்டின் வடபகுதியில் வல்லிக்கண் ணன், பெரியதம்பிரான், ஐயனார், முதலி மார், அண்ணமார், வைரவர், வீரபத்தி ரர், நாகதம்பிரான், முனியப்பர், S5Drt யர், அநுமான், முனி, dirt air, Loft Lair, சுடலை மாடன், காட்டேறி, கறுப்பன், பதினெட்டாம் கறுப்பன், சங்கிலிக் கறுப் பன், வீரமான், முதலான ஆண்தெய்வங் களும், கொத்தி, மாரியம்மன், கன்னிமார், நாச்சிமார், காளி, காமாட்சி, சீதையம் மன், கண்ணகி, திரெளபதை, பிடாரி, நீலி, எல்லம்மன், வதனமார் முதலிய பெண் தெய்வங்களும் பொதுமக்களால் வழிபா டியற்றப் பெற்று வரப்படுகின்றன. இத் தெய்வங்களை வழிபடுமிடத்து அத்தெய் வங்களின் குணபேதம், அவற்றால் பெறக் கூடிய பயன் என்பவற்றுக் கேற்ப வழிபாடு இயற்றுவர். இத் தெய்வங்களை ஆய்வினர் சிறு தெய்வங்கள் என்று அழைப்பர்.
ஈழநாட்டில் இவ்வழிபாட்டு (p68)spurr னது ஒரு சமுதாயத்தின் சாதி அமைப்புக் கேற்ப அமைந்து காணப்படுகின்றது. அவ் வாறு ஒவ்வோர் சாதி மரபினரும் தத் தமது மரபுக்குரிய தெய்வங்களை வழிபடு தற்குக் காரணமாகக் கர்ணபரம்பரைக் கதைகள் கூறப்படுகின்றன. அதில் கொத் தித் தெய்வத்தின் கதை வருமாறு:
முன்னொரு காலத்திலே பலவகைச் சத்திகளைப் பெற்றிருந்த இராட்சத னொருவன் சிறுசிறு தெய்வங்களை வருத்தி அழிப்பதில் பெரு மகிழ்ச்சி கொண்டிருந் தான். அவனால் சில தெய்வங்கள் அழி வுற்றன. வேறுசில ஆங்காங்கு மறைந்து ஒதுங்கின. சில மக்களிடஞ் சென்று அடைக் கலம் பெற்றன. அவ்வாறு அடைக்கலம் தந்த சமூகங்கள் அத்தெய்வங்களை தத்தம் தெய்வங்களாகக் கொண்டொழுகலாயினர்.

Page 150
"கொத்தி’ என்னும் தெய்வம் பிள்ளை பெறும் வீட்டில் புகுந்து ஒளித்தமையி னால் அது மருத்துவிச்சியினது தெய்வமாகக் கருதப்பட்டது.
கொற்றித் தெய்வம்
கொத்தி என்பதை கொற்றி என்றும் குறிப்பிடுவர். இஃதொரு பெண்தெய்வம் : கொத்தியைத் தெய்வ உணர்வுடன் வணங் கும் அதேசமயம், அவள் கொடூரமான, பயங்கர உணர்வுகளைத் தருபவளாகவும் கருதப்படுகின்றாள். "கொத்தி" என்று வெறுமனே சொல்லின் அதனை முழுமை யாகப் புரிந்து கொள்வது கஷ்டம். யாழ்ப் பாணப் பிரதேச மக்கள் கொத்தியைப் பேயென உருவகித்து அத்தெய்வத்தை கொத்திப்பேய் என்றே அழைப்பர். இத் தெய்வத்தின் உறைவிடமாக சிறப்பாக ஆலமரம் கருதப்படுகின்றது. "கொத்தியால் என்ற சொல் மரபு இங்கு நினைவு கூரத் தக்கதாகும். பொதுவாக பால்தரும் மரங் கள் இவளின் உறைவிடமாகக் கருதப்படு கின்றன. வெற்றிலையும் சுருட்டும் இவ ளுக்குப் பிரீதியுடைய பொருட்கள். கொற் றித் தெய்வத்தின் சமூக உறவு, மகப்பேறு அடைந்த தாய்க்கும் மகப்பேற்றை நடத்து விக்கும் மருத்துவிச்சிக்கும் இடையே அமை வதாகும். அத்தெய்வத்துக்கான சடங்குகள் மகப்பேற்று இல்லத்திலேயே நடைபெறும்.
ஒரு பெண்ணின் மகப்பேற்றுக் காலம் வந்தவுடன் மருத்துவிச்சியே மகப்பேற்றுத் தாயின் பராமரிப்பாளராகவும் மருத்துவ ராகவும் அமர்த்தப்பட்டாள். மகப்பேறு முடிந்ததும் ஆண்பிள்ளை பிறந்தால் அவ் வீட்டின் கூரையைத் தட்டியும், பெண் பிள்ளை பிறந்தால் அம்மியில் தட்டியும் மருத்துவிச்சி எக்குழந்தை பிறந்துள்ள தென்பதை வீட்டாருக்கும் பிறருக்கும் தெரிவிப்பாள்.
பன்னீர்க் குடமுடைந்து பாலன் பிறந் திடவே
நன்னீர்மை கொண்டு நயந்துநயந்
தெல்லோரும்
-

பெண்பிள்ளை யல்லவிது பேருலகில்
எங்களுக்கு ஆண்பிள்ளை யென்றே யகமகிழ்ந்து
கூரை தட்டி வாயார வாழ்த்தி வரிசையுடன்
கோலெறிந்து
என்னும் நாட்டார் பாடல் வரிகள் மேற் கூறியவற்றைப் புலப்படுத்திநிற்கும்.
மருக்கைச் சடங்கு
மகப்பேற்றின் ஐந்தாம் நாள், மருத்து விச்சி மருக்கைச் சடங்கு அல்லது பரி யெரித்தல் என்னுஞ் சடங்கினை நடத்து வாள். அன்று சோறு சமைத்துப் பல வகையான கறிவகைகளுமாக்கி அந்திப் பொழுது மருத்துவிச்சியைக் கொண்டு பிர வச அறையில் படைப்பர். இப்படைப்பில் இதுவரை நாளும் பிரசவ மாது சாப்பிட்ட உணவில் எடுத்து வைக்கப்பட்ட பொருட் களுடன் சுருட்டும் வெற்றிலையும் வைத்து பிரசவமாது படுத்த பாயிற் படைப்பர். இதனைக் கொத்திக்குப் படைத்தல் என்பர். பின்னர் தாயையும் பிள்ளையையும் வீட் டின் தலைவாசலுக்குக் கொண்டுவந்து அவர்கள் இருவரையும் புதுப் பாயினால் அல்லது சேலையினால் மூடி மறைப்பர். மருத்துவிச்சி தென்னம்பாளையிலான சூள் ஒன்றினை கையில் எடுத்து மூடி வைக்கப் பட்டிருக்கும் தாயையும் பிள்ளையையும் முதலில் சூளுடன் சுற்றிவிட்டுப் பின்னர் பிரவச அறைக்கும் ஒளியூட்டிய பின்,
ஒடாதே கொத்தி, ஒளியாதே கொத்தி
பாங்காதே கொத்தி பதுங்காதே
கொத்தி
கொத்தி புறப்படு கொத்தி புறப்படு.
என்ற பாடலைப் பாடி ஆடிக்கொண்டு மனித நடமாட்டம் குறைந்த இடத்திற்கோ
இதற்காக ஒதுக்கப்பட்ட பால் மரம் உடைய இடத்திற்கோ அப்பொருட்களைக் கொண்டு செல்வாள். ஆலமரத்திலே
கொத்தி உறைபவளாகக் கருதுவதனால் பெரிதும் ஆலமரம் உள்ள இடத்தையே நாடிச் செல்வாள். கொண்டு சென்ற பொருட்களைக் கழித்துச் சூளினை நூர்த்து விட்டு வீடு திரும்புவாள். குளில் எவ்வித நெருப்புமின்றி நூர்த்தல் அதன் சிறப்பு

Page 151
விதிகளுளொன்றாம். இல்லையேல் கொத்தி சூளின் ஒளியுடன் கொத்தி வீட்டிற்கு வந்து தாயையும் சேயையும் நோய்க்குட்படுத்தி விடுவாள் என்ற பீதி மக்களிடம் இருந்து வந்தது. இச் சடங்கினை பரியெரித்தல் அல்லது மருக்கை என்பர்.
பரியெரித்தல் சடங்கினை முடித்துக் கொண்ட மருத்துவிச்சி திரும்பி வீட்டுக்கு வந்து கூரையினைத் தட்டித் * 'தாயும் பிள்ளையும் சுகமா? " என்று மூன்று முறை கேட்பாள். தாயும் பிள்ளையும் சுகம், சுகம்) சுகம், என்று வீட்டோர் கூறிய பிற்பாடு மருத்துவிச்சி நாலா பக்கமும் மூன்று முறை துப்பிவிட்டு மறைப்பினை நீக்கி வைப் பாள். பிற்பாடு தாய், சேய், குடும்பத் தார் சிறப்புடன் வாழவும் நாடு செழிக்க வும் வாழ்த்துவாள். வாழ்த்து முடிந்ததும் அவளுக்குத் தக்க தானம் அளித்து அவளது வீட்டுக்கு அனுப்பி வைப்பர். மருத்து விச்சியின் வாழ்த்தின் ஒரு பகுதி பின் வரு மாறு அமையும்.
காசுப் பொதியோடும் வந்தீரோ தங்கம் காசு மலைநாடுங் கண்டீரோ தங்கம் கோச்சி வாழ கொப்பர் வாழ பேத்தி வாழ பேரன் வாழ பூட்டி வாழ பூட்டன் வாழ கொம்மான் வாழ மாமி வாழ குஞ்சியாச்சி வாழ குஞ்சியப்பு வாழ பெரியாச்சி வாழ பெரியப்பு வாழ ஊர் வாழ தேசம் வாழ குருவுக்கும் சிவனுக்கும் நல்ல பிள்ளையாய் இரு அயலும் புடையும் வாழ வேண்டும் அன்னமும் சுற்றமும் வாழ வேண்டும் ஆச்சியும் அப்பாவும் வாழ வேண்டும் அம்மானும் மாமியும் வாழ வேண்டும்.
மருத்துவிச்சி பாடிச் செல்லும் பாடல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பிரதேச வழ மைக் கேற்ப மாற்றமடைந்து காணப்படு கின்றது. இப்பாடலை தீவுப் பகுதியில் ஒரு விதமாகவும் குடாநாட்டில் இன்னோர் வித
m

மாகவும் பாடுவர். தீவுப் பகுதியில் குறிப் பாக நெடுந்தீவில் இப்பாடல் பின்வருமாறு அமையும்.
ஓடாதே கொத்தி ஒளியாதே கொத்தி பாங்காதே கொத்தி பதுங்காதே
கொத்தி கொத்தி புறப்படு கொத்தி புறப்படு வீட்டைக் காரதே கொத்தி பாயைக் காரதே கொத்தி படுக்கையைக் காரதே கொத்தி விளக்கைக் காரதே கொத்தி தலைமாட்டைக் காரதே கொத்தி கால்மாட்டைக் காரதே கொத்தி அம்மியைக் காரதே கொத்தி அடுப்படியைக் காரதே கொத்தி சோத்துப் பானையைக் காரதே
கொத்தி காயச் சட்டியைக் காரதே கொத்தி மஞ்சளைக் காரதே கொத்தி உள்ளியைக் காரதே கொத்தி இஞ்சியைக் காரதே கொத்தி எண்ணெயைக் காரதே கொத்தி பிள்ளையைக் காரதே கொத்தி கொத்தி புறப்படு கொத்தி புறப்படு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இப் பாடல் "செத்தைக்கை நின்றேன் என்று சொல்லாதே கொத்தியாத்தை", *ւյ5
தைக்கை நின்றேன் என்று சொல்லாதே கொத்தியாத்தை" என்றவாறு அமைந்து செல்வதை அவதானிக்கலாம்.
கொத்திக்குப் படைத்தல், கொத் தியை வழிபடல் முதலான சொற்பிரயோ கங்கள் கொத்தித் தெய்வத்தின் சிறப்புத் தன்மையையும் அத் தெய்வத்தின் மீது கொண்ட பக்தியையும் வெளிப்படுத்தி நிற் கும். கரவெட்டிக்கு வடக்கே கொத்தி யார் கோயிலும், நெடுந்விேன் மேற்கே யுள்ள குருக்கள் மடத்திலிருந்து க்ால் மைல் தூரத்தில் வடமேற்குத் திசையில் கொத்தியார் கோ யிலும் அமைந் துள்ளன. இவை கொத்தித் தெய்வம் ஆலமர் தெய்வம் என்ற நிலையினின்று விடுபட்டு ஆலயத்தில் உறைபவளாகக் கருதி வழிபடும் நிலையை அடைந்துள்ளமையைக்
صــسد 25

Page 152
காட்டி நிற்கும். கொற்றியின் வடிவத்தை இம்மக்கள் புரிந்துகொள்ளாவிட்டாலும் அவளைச் சூல வடிவின் மூலம் வழிபடுவதில் அமைதி காண்கின்றனர். நெடுந்தீவு மக்கள் இத் தெய்வத்தின் மேல் நேர்த்தி செய்வ தும் பொங்கல் நடத்துவதும் வழமையான நிகழ்ச்சிகளாகும்.
கொற்றித் தெய்வத்தையும், கொற்ற வையையும் ஒப்பிட்டு நோக்கும் பொழுது கொத்தி - கொற்றி என்பது கொற்றவை போலும். கொற்றித் தெய்வமே கொற் றவை என்பர். இது கொல் என்ற வினை யடியிற் பிறந்த பெயர். கொற்றவை, துர்க்கை, காளி, கொற்றி, காடுகாள், சூர், சூரி இவைகளெல்லாம் ஒரு பொருட் பன் மொழிகள். மேலும், பழையோள், வேலன் தாய், தொல்குடி குமரி என்ற பெயர்களும் கொற்றித் தெய்வத்தைக் குறிப்பனவே.
கொற்றவை கி, பி. முதலாம் நூற் றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை பெரும் தெய்வமாகவே போற்றி வழிபடப் பட்டாள். அவள் ஒரு தாய், அவள் மகன் முருகன், அவள் நஞ்சுண்டும் சாகாமல் இருப்பவள். காட்டிடை வாழ்பவள், பேய்க் கண்களை உடையவள் என்ற உணர் வோடு போற்றப்பட்டாள். இக் கொற்றித் தெய்வம் பின்னர் "கொத்தித் தெய்வமாக மருவி, இவ்வுணர்வுகளோடேயே 20ம் நூற் றாண்டின் முதற்காற் பகுதி வரை போற் றப்பட்டு வந்தாள் என்பதை மேற்காட்டிய
சிறு நண்டு மண படம் ஒன்று கீறு சிலவேளை இை கடல் கொண்டு
எறிகின்ற கடல்
மனிதர்கள் அஞ் எதுவந்த தெனி அதை வென்று (
- 12

பண்புகளோடு நோக்கினால் நன்கு புல னாகும்.
முடிவாக ஈழநாட்டிலே அந்நியராட்சி யும், கிறிஸ்துமத செல்வாக்கும், கல்வியில் உயர்வும், நவீன சுகாதார வசதிகளும், போக்குவரத்து வசதிகளும் ஏற்படுவதற்கு முன்பாக நாட்டார் வழக்காற்றில் சிறு தெய் வங்கள் போற்றுதற்குரிய தெய்வங்களாக விளங்கின. அவற்றுள் கொத்தித் தெய்வம் வழிபாட்டிற்குரிய பிரதான தெய்வமாகக் கருதப்பட்டாள். அவளே பிறப்பையும் இறப்பையும் நிர்ணயிக்கும் தெய்வமாகக் கருதப்பட்டமையினால் அவள் முக்கியத் துவம் பெற்று விளங்கினாள். மகப்பேற்றில் இறப்பு அதிகரிக்கும் பொழுதும், அவதியு றும் பொழுதும் அவளை கொற்றிப் பேய் என்றனர். அவளின் ஆற்றலை உணர்ந் தோர் அவளை துர்க்கையென்றும் கொற்ற வை யென்றுங் கருதி வழிபட்டனர். அச்சம், பயம் ஆகியவற்றால் அவளின் கருணையை வேண்டி நின்றனர். இதனாலே கொத்தி (கொற்றி) வணக்கத்துக்கும் போற்றுதற் கும் உரிய தெய்வமாக மக்களால் கருதப் பட்டாள். வழிபடும் தெய்வத்தின் தன் மையை விட, வழிபடுவோர் அதன்பாற் கொண்டுள்ள மனப்பாங்கும் பக்தியுமே போற்றுதற்குரியது. ஈழநாட்டில் ஏதோ ஒரு திக்கில் இன்னும் இந்நாட்டார் வழி பாடுபோற்றப்பட்டு வருவதை எம்மால்அவ தானிக்கமுடிகின்றது.
ல் மீது
த வந்து
போகும்
என்று FTi
ன் என்ன செல்வார்.
- மஹாகவி

Page 153
சி. அழகு
இலங்கையில் முதலாளித்துவத்தின், பிரிட்டிஷ் குடியேற்ற வாதத்தின் முதல் வெளிப்பாடு பெருந்தோட்ட பயிர் ச் செய்கையாகவே இருந்தது. நமது நாட்டில் அந்நிய முதலாளித்துவம் நிலை கொள்ளத் தொடங்கியமையை அப்பொருளாதார அமைப்பே முதன் முதலாக முரசறைந்தது. முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும் தமது வளர்ச்சியின் போது தேச வரம்புகளைக் கடந்து, செல்வம் சேர்ப்பதற்கிணங்க இலங் கைக்கு வந்த அந்நிய குடியேற்ற வாதிகள், பெருந் தோட்டச் சொந்தக்காரர்கள், தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர் களை இங்கு கொணர்ந்தனர். தொழில் முறை ஒப்பந்தப் பிணைப்புச் செய்து கொண்டு இங்கு வந்த தென்னிந்தியத் தொழிலாளர்கள் ஏறத்தாழக் கொத்தடி மைகளாகவே புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். புலம் பெயர்தலுடன் அவர்கள் வாழ்க்கை ஆரம்ப மா யிற்று இன்றுவரை அவர்கள் பல்வேறு பிரச்சனை களை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவை யனைத்தையும் உயிர்த்துடிப்புடன் புலப் படுத்தும் உருக்கமான சொல்லோவியங்க ளாய் அவர்களின் நாட்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.
சென்ற நூற்றாண்டின் முதற்காலிலே
*கண்டிச் சீமைக்கு ஆள் காட்டியபோது பிறந்த பாடல்கள் முதல் இலங்கைக்கு
 

வந்த தொழிலாளர்கள் தலை முறைகளாக இங்கே வாழ்ந்து இங்கேயே இறந்தவர்களை எண்ணி இரங்கும் ஒப்பாரிப் பாடல்கள் வரை வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களை யும் பிரதிபலிக்கும் பாடல்கள், காதலிலி ருந்து கடவுள் வழிபாடு வரை பல்துறைக ளைச் சார்ந்த பாடல்கள் தாம் மலையக நாட்டுப் பாடல்கள்" என அமரர் பேராசிரி யர் க. கைலாசபதி எழுதியுள்ளார்.
வாய்மொழி இலக்கியமான நாட்டார் பாடல்களில் பொதுப் பண்பு பற்றி உலகப் புகழ்பெற்ற ருஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி ஒரிடத்திற் கூறியுள்ளார். இவ் வாறு கிராமியப் பாடல்களை இயற்றி யோர் மிகக் கடினமான வாழ்க்கை நடத்தி னர். அவர்கள் வருந்திச் செய்த வெறுப் பூட்டுகிற மட்டுமீறிய உழைப்புக்குக்கூட அர்த்தம் எதுவும் இல்லாத வகையில், மேலி ருந்தோரால் ஈவிரக்கமற்ற முறையிற் சுரண்டப்பட்டனர். தனிப்பட்ட வாழ்க்கை யிலும் அவர்கள் எத்தகைய உரிமையோ பாதுகாப்போஅற்றவராய் அல்லலுற்றனர்" அவ்வாறிருந்தும் அம் மக்கள் உருவாக்கிய கிராமியப் பாடல்களில் சோர்வு வாதமோ துன்ப இயற்கை கோட்பாடோ எள்ளள வும் தலை காட்டுவதில்லை. அது மட்டு மன்று. ஒட்டு மொத்தமாக நோக்கும் பொழுது அம்மக்களிடையே தமது நித்தி யத்துவத்தைப் பற்றிய உணர்வும் இறுதி
27 -

Page 154
தியில் தமது எதிர்ச் சக்திகள் வெல்லப்படும் என்ற மன உறுதியும் ஆழமாகப் பதிந்திருக்
கக் காணலாம்.
மக்களுக்காக மக்கள் பாடும் பாடல் களே நாட்டுப் புறப் பாடல்கள். உழைக்கும் தொழிற்குல மக்கள் தங்கள் வாழ்க்கை என்னும் புத்தசத்திலிருந்து தாங்கள் உயிர் வாழ உழைத்த மலை மேடுகளில் அனுப வித்த இன்பம், துன்பம், ஏக்சம், ஏமாற் றம் என்ற அனுபவங்களின் வெளிப்பாடு களே அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்து பாடல் களாகக் கிளம்பின. ஒரு சில பாடல்கள் இதயம் வெடித்த குமுறல்களாகவும் எழுந் துள்ளன.
இப்பாடல் மிக எளிமையானவை. வட் டார வாய் மொழித் தமிழாலே பாடப் பெற்றவை. கள்ளங் கபடம் இல்லாத வெள்ளை உள்ளங்களின் உணர்ச்சிகளாகப் பிறந்த இவைகள், உள்ளத்தை ஈர்க்கும் இனிமையும் இசையொலியும் நிறைந்தவை. எவரும் எளிதில் பாடக்கூடிய எளிய பதங் கள், எளிய மெட்டுக்கள், அதுமட்டுமல்ல மலையசத் தொழிற் குலத்தின் சரி தத்தை அதன் வாழ்வை, முடிவைச் சித்த ரிக்கின்றன. "ஓசை தரும் இன்பம் உவமை யிலா இன்பம் அன்றோ" என்று உள்ளம் உருகித் திளைத்த பாரதியார் கிராமியப் பாடல்களிலே தமது மனதைப் பறி கொடுத்துள்ளார். அதனைப் போற்றிப் பாடுகிறார் இவ்வாறு:
"பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா’
என்று கானம் எழுப்பும் கவிதைகள் மட்டு மல்ல அவை. கற்பனைச் சிறகடித்துக் ககனத்தில் பறக்கும் காவியப் பறவைகள். தாலாட்டுப் பாடலில் நீலாம்பரியும், மாரி யம்மன் பாடலில் புன்னாகவராளியும், கேதார கெளளையும் இவ்வாறாக இசை யோடு இணைந்த இப் பாடல்களை இசை கலந்து பாடும் பொழுது அதைச் செவி மடுக்கும் எமது இதயம் கனிவு பெற்று இலக் கியச் சோலையின் தென்றலில் இனிய உலா வுக்குக் கிளம்பிவிடும்.

மலையக நாட்டுப் பாடல்களிலே மன தைக் கவரவல்ல உணர்ச்சிமிக்க பாடல்கள் ஒப்பாரியும் தாலாட்டும். மங்சையர் குலத் திற்கே சொந்தமான இவ்விரண்டு வகைப் பாடலில், ஒன்று மனித வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடப்படுவது- தாலாட்டு; மற்றது, வாழ்க்கையின் முடிவில் பாடப்படு வது - ஒப்பாரி. ஒன்று ஒரு தாய் பத்து மாதம் சுமந்து பெற்ற பாலகனைத் தொட் டி லிட்டு தன் நெஞ்சில் எழும் இன்பத்தை தாலாட்டாகப் பாடி மகிழ்கிறாள். மற் றொன்று தாய், தந்தை, கணவன், பிள்ளை மற்றும் உற்றார், உறவினர் எவ ரேனும் இறந்து விட்டால் தன் உள்ளத்தில் எழுகின்ற துன்ப உணர்வை ஒப்பாரியாக உணர்த்துவாள்.
தாயின் அன்பையும் சேயை சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங் கும் பாட்டு உருவந்தான் தாலாட்டு.
பிள்ளை பிறப்பது எல்லோருடைய வீட்டிலும் இயற்கை. பணக்காரர் வீட்டி லும் பிள்ளை பிறக்கிறது. பெற்ற தாய் தன் பிள்ளையைத் தொட்டிலிட்டுத் தாலாட்டுகிறாள். ஏழை வீட்டிலும் பிள்ளை பிறக்கிறது. இங்கேயும் இந்தத் தாய் தன் பிள்ளையைத் தொட்டிலிட்டுத் தாலாட்டு கிறாள். எனவே ஏழை பணக்காரர் என்ற எல்லைக்கு அப்பாற்பட்டதே இந்தத் தாலாட்டு.
காட்டாற்று வெள்ளம் போல கரைக டந்து பாயும் ஒரு தாயின் மன எழுச்சி யைக் கண்டு கேட்டு அனுபவித்த ஆழ் வார்கள், பாலகிருஷ்ணனை தொட்டிலிட் டுத் தாலாட்டுவது போல் பல தாலாட்டுப் பாடல்களைப் படைத்துள்ளார்கள். அவர் களை அடியொற்றிப் பிற்காலக் கவிஞர்க ளும் இப் பாடல் வகைக்கு மெருகேற்றி பிள்ளைத் தமிழாக யாப்பிலக்கணக் கட் டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றி யுள்ளார்கள். இப்பாடல்களுக்கு இசை வல்லுனர்கள் 'நீலாம்பரி" என்ற இன்ப மூட்டும் இராகத்தையும் வகுத்துள்ளார்கள். தெய்வத் தாலாட்டிற்கும் தீந்தமிழ் இசைக் கும் விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே என்றால் மிகையாகாது.
28 -

Page 155
தாலாட்டுப் பாடலைக் கேட்ட கர வைப் பசு கூட தன்னை மறந்து மடி சுரக்கும் என்பார்கள். நாம் மட்டுமென்ன. செவிக்கிணிய தாலாட்டுப் பாடல் தேன் போல நம் காதுகளில் பாயும் பொழுது நம்மையறியாமலே கற்பனைத் தேரேறி எண்ணம் செல்ல கண்களும் அயர்ந்து விடாதா? சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையும் தாலாட்டும் தாயும் நம் கண்முன்னே காட்சியளிக்கி றார்கள்.
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே கண்ணுறங்கு
பெற்ற செல்வத்தை தொட்டிலிட்டுத் தாலாட்டுகிறாள். தாலாட்டுப் பாடலிலே
டித்துப் பறக்கிறது. அப்போது அவளுக்குத் தன் இளமைக்கால நினைவுகள் நெஞ்சத் திரையில் நிழலாடுகின்றன.
சொந்த நிலத்தில் பாடுபட்டுச் சீராக வாழ்ந்த தமிழ்நாட்டு விவசாயக் குடும்பத் தில் பிறந்து வளர்ந்து இல்லறத்தில் புகுந்த அவளுக்குத் தலைப்பிள்ளை பிறந்ததும் தமிழ் நாட்டுக் கிராமத்திலே பஞ்சம் தலை தூக்கியது.
"திரைகடல் கடந்தும் திரவியம் தேடு" என்ற பழமொழிக்கு ஏற்றபடி பாமர மக்கள் கடல் கடந்து பல நாடுகளுக்கு உழைத்துப் பிழைக்கச் சென்றார்கள்.
மாரின் காதினிக்கும் பேச்சைக் கேட்டு, இலங்கையின் மலைநாட்டுத் தேயிலைத் தோட்டத்தில் குடியேறியது. அழைத்து வந்தவர்கள், சொன்ன ஆசை வார்த்தை கள் காற்றோடு கலந்துவிட்டன. தோட்ட தொழிலாளர்களாக வந்து அவர்கள் பட்ட துன்பம் சொல்லில் அடங்காது.
உழைத்துக் களைத்துப் போய் உட் கார்ந்து இருக்கிறாள் தாய். அவ் வேளை,
- 1

அவள் பெற்ற அந்தப் பச்சிளம் பாலகன் கதறிக்கொண்டு தொல்லை கொடுக்கிறான்: தான் சுமந்து பெற்ற பிள்ளையல்லவா? செல்லமாகக் கடிந்து கொண்டு தன் மன வேதனையைத் தாலாட்டாக வெளிப் படுத்துகிறாள்.
" சீரான அயோத்தி சீமை விட்டுக் காடு வந்தோம்.
காடு மலைகளிலே கரடிபுலி ஆளி சிங்கம்,
கூடியே வாழுமிந்த கொடு வனத்தே
நித்திரையோ, அச்சமில்லை என்று சொல்லி
அரசாண்டு வாழ்ந்திருந்தோம்
நச்சரவு போல் வந்த நச்சிரையா கண்ணுறங்கு.
1889ஆம் ஆண்டில் 13ஆம் இலக்க இந்திய தோட்டத் தொழிலாளர் சட்டம் இயற்றப் படுவதற்கு முன் தோட்டங்களில் குடி யேறித் தொழில் செய்த தொழிலாளர் களின் வாழ்க்கை நிலை எப்படி இருந்தது என்பதைக் காட்டும் கண்ணாடி போல அந்தத் தாய் பத்து மாதம் சுமந்து பெற்ற பாலகனை தொட்டிலிட்டுத் தாலாட் டும் போது, தான் பிறந்த மண்ணை நினைக்கிறாள். இன்று காட்டு மலைப் பிரதேசத்திலே கொடு விலங்குகள் வாழும் வனத்திலே வாழ்வற்ற தன் வாழ்வின் வகையை வாய்விட்டு நெஞ்சு குமுறப் பாடு வதைக் கேட்ட பாலகன் கண்ணை மூடு வான். ஆனால் அந்த சோக வரலாற்றை செவிமடுத்த அறிவுடையார் நெஞ்சம் எப்படி இருக்கும்?
1824லிலே அழைத்துவரப்பட்ட அப் பாவித் தொழிலாளர்களின் குடியிருப்பு மானாப்புல் வேய்ந்த குடிசை மேடு பள்ள மான மண் தரை. இந்தக் குடியிருப்பிலே வாழும் தாய் தன் பிள்ளையைத் தாலாட் டும் போது சொல்கிறாள்.
29 -

Page 156
“ 2JfTGurr -Agn-Grrr
ஆரிவரோ ஆராரோ என் வயிறுதேடி
ஏன் பிறந்தாய் மகனே! முத்துச் சிரிப்பழகா
முல்லைப்பூ பல்லழகா, வெத்துக் குடிசையிலே
விளையாட வந்தாயோ? தரையெல்லாம்
மேடுபள்ளம் - நீ தவழ்ந்தால் உறுத்தாதோ? தொட்டால் பிசுக் கொட்டும் துணி மூட்டை தையலிட்டு தொட்டில் கட்டித் தாலாட்ட தூக்கம் வருமோடா?
முல்லைப் பல்வரிசை காட்டி முத்துச் சிரிப்பு உதிர்க்கும் என் செல்வ மகனே வெற்றுக் குடிசையிலே வாழும் என் வயிற் றிலே ஏன் வந்து பிறந்தாய்? இந்தக் குடிசை யிலே உனக்குத் தூக்கமும் வருமோ? என்று தன் உள்ளத்தின் துன்ப உணர்ச்சிகளை தாலாட்டாய்ச் சொல்கிறாள்.
1927ஆம் ஆண்டு சம்பள நிர்ணய சட்டம் அமுல் செய்யப்படு முன்பு அவர் களின் தினக்கூலி எவ்வளவு என்றே தெரியா மல் இராப்பகலாய் உழைத்து அதையும் கங்காணியிடம் பட்ட கடனுக்கு கொடுத்து விட்டு நித்திய தரித்திரர்களாகவே வாழ்க்கை நடாத்தினார்கள்.
தோட்டங்களில் நோய் பரவாவண்ணம் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்கு நோய்கள் தடுப்புச் சட்டம் 1912ஆம் ஆண்டில் இயற் றப்பட்டது. லயக் குடிசைகளில் வசித்த தொழிலாளர்களுக்கு சுத்தமான தண்ணிர் வழங்கவும் வசிப்பிடங்களை சுத்தமாகவும் சுகாதார வசதிகளுடனும் செய்துதர இச் சட்டம் உள்ளடக்கியது. என்றாலும் சட் டத்தை மதித்து செயல்பட துரைமார் எவரும் அன்று இருக்கவில்லை.
அன்று ஓய்வின்றி உழைத்த பெண்கள் சிலர் தங்கள் வேலைத்தளங்களிலேயே

பிள்ளை பெற்று தூக்கி வந்தோருமுண்டு. 1939ஆம் ஆண்டு பிரசவகாலச் சட்டம் இயற்றப்படு முன்பு, பெண்கள் பிள்ளைப் பேறு நாள் வரையில் உழைத்துள்ளார்கள்.
பிள்ளைக் காம்பராக்கள் இல்லாத அந்தக் காலத்திலே பெண்கள் தாம் பெற்ற பிள்ளைகளை தாம் வேலை செய் யும் இடங்களிலேயே தொட்டில் கட்டித் தூங்க வைத்து விட்டுத் தொழில் செய் துள்ளார்கள். புன்னை மரத்திலே கட்டிய தொட்டிலைச் சுற்றிலும் தாழைப் புதருக் குள்ளே விஷ நாகங்கள் கூட இருக்குமாம். இதை சொல்கிறாள் பாருங்கள்:-
தாழை இருபுறமாம் -
தாழை தழையிறதும் ஆயிரமாம் புன்னை இருபுறமாம் -
புன்னை பூக்கிறதும் ஆயிரமாம் அதிலே அடைகிடக்கும்
art A. அஞ்சுதலை செந்நாகம் சீறி வரும் நாகம் -கண்ணே
சிவக்குமையா
கண்ணுறங்கு
பெற்றெடுத்த பாலகனை இட்டுச் செல்லும் இடம் பாம்புக் கூட்டப் புதர். அடிமை யாய் ஆக்கப்பட்ட அந்த அன்னை, கங் காணி கோபத்திற்கும், கணக்கப்பிள்ளை மிரட்டலுக்கும். பயந்து அங்கே தன் குழந் தையை உறங்க வைத்துவிட்டு உச்சி மலை யேறி கொழுந் தெடுக்கிறாள். அவ்வாறு பெற்று வளர்க்கும் பிள்ளைகளுக்கு பெயர் குட்டும் உரிமை கூட அவளுக்கில்லை. அப்படி என்றால், அந்தப் பிள்ளைக்கு பெயர் சூட்டுவது யார்?
உன்னைப் பெற்றெடுத்தேன் நானும் - உனக்கு
பெயர் வைத்தார்
பெரியதுரை
ஆம்! அன்று அவள் பிள்ளையைப் பெற்று விட்டாலுங் கூட பிள்ளைக்கு
30 -

Page 157
ஏதோ ஒரு பெயரை எழுதி விடுபவர் தோட்டத்துரைதான். என்ன பெயர் எழுது வாரோ? எவருக்குத் தெரியும்?
பெற்ற தாய் ஒரு பெயரிட்டு அழைப் பாள். அந்தப் பெயரைச் சொல்லி ஏனைய தோட்ட மக் கள் அழைப்பதில்லை. வேறொரு பெயர். இப்படியே அன்று பிறந்தவர்களுக்கு பெயர் சூட்டும் சுதந் திரம் கூட இல்லாதிருந்தபடியால் ஒருவ ருக்கு எத்தனையோ பெயர்கள். இதனா லன்றோ 160 ஆண்டு காலம் இந்த நாட் டிலே தொழிலாளர் சரித்திரம் படைத்தும் குடியுரிமையற்ற சமுதாயமாகி விட்டனர்.
"செந்தமிழ் நாடெனும்
போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே"
என்று சிந்தை களிகூர செந்தமிழ்ப் பண் ணிசைத்த பாரதியார், தமிழ் நாட்டின் சிறப்புக்களை சிந்துக்களாக வடித்துத் தந் துள்ளதிலே,
"தேசம் பலவும் புகழ் - வீசி
566) ஞானம் படைத்தொழில்
வாணிபமும் - மிக நன்று வளர்ந்த தமிழ் நாடு"
என்று கூறியுள்ளார்.
மொழிக்கு இலக்கணம் வகுத்த மூத்த குடியினரான தமிழர் தம் கலை ஞானத்தி லும் தழைத்தோங்கி வளர்ந்து, உலகப் புகழ் எய்தியுள்ளனர். ஆகவே அழகியல் கலைகள், தமிழர்தம் ஊணோடு, உயி ரோடு, உடலோடு ஒன்றாகக் கலந்தவை என்றால் மிகையாகாது.
எனவே தான், மலையகத்திலே குடி யேறிய தமிழ் மக்கள் அவர்களின் பாரம் பரிய பண்பாட்டுக் கலைகளை மலையகத் திலே வளர்த்தனர்.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் அடிமை
கள் போல் இருந்த போதிலும், அவர்க ளின் பண்பாட்டுக்கலைகளை வளர்ப்பதி
l

அலும் ஆர்வமுடையோராகத் தான் இருந்து வந்துள்ளனர். இந் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு அவர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு இனவாத தாக்கங்களினால் இன்னல்பட்ட இவர் கள் இருப்பதா? போவதா? என்று நினைக்கவும் நேரமின் றி இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் கலை வளர்ச்சியில் கரிசனை செலுத்த வில்லை.
அதற்கு காலம் சாதகமாக அமைய வும் இல்லை. எனவேதான் மலையகத்தில் அன்றிருந்த பாரம்பரியக் கலைகள் பல அரசியற் சூறாவளியால் அள்ளுண்டு
போயின. அன்றிருந்த அழகியற் கலை
3.
களிலே ஒன்றுதான் ஒயிலாட்டம் என்பதும்.
இந்த ஒயிலாட்டம் முன்பு தென்னிந்தி யாவில் மதுரை, இராமநாதபுரம், தஞ்சா வூர், திருநெல்வேலி மாவட்டங்களில் ஆடப் பட்டு வந்துள்ளது. இந்தப் பகுதிகளிலிருந்து இலங்கையில் குடியேறியோர் தான் இந்த ஆட்டக் கலையை பயிற்றுவித்து இருக்கின் றனர்.
தமிழகத்திலே கோயில் திருவிழாக் காலங்களிலே இதை வழிபாட்டு நடன மாக ஆடி வந்துள்ளனர். பின்னர் இவ் வாட்டத்தின் மூலம் புராணக் கதைகளை யும் பாடி வந்திருக்கின்றனர். இதை அடி யொட்டியே மலையகத்திலும் ஒயிலாட்டம் இடம் பெற்றிருக்கின்றது.
ஒயிலாட்டத்தில் காவடி வைப்பும். கைவீச்சும், அங்க அசைவும். நாட்டிய நிகழ்வாக மட்டுமல்ல, போர் முறை போலும் தோற்றமுற்றிருந்தன. வீரவிளை யாட்டான சிலம்பாட்டத்தின் காலடி வைப்பு முறைக்கும், ஒயிலாட்டத்திற்கும் நிறைய பொதுத் தன்மைகள் உள.
இத்தகைய சிறப்பு மிக்க அழகியல் ஆட்டத்தை இன்று காணமுடியவில்லையே! என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ் கிறது. இப்போது இதைக் கற்றுக்கொடுக்க கூடியவர்கள் இருக்கிறார்களோ? என்பதும் சந்தேகமாகத் தான் இருக்கிறது.

Page 158
அன்று மலையகத்தில் ஒயிலாட்டம்
எப்படி ஆடப்பட்டு வந்த என்பதை ஆராய்வோம். ܗܝ
தோட்டத்திற்கொரு tortifluttpaăr
கோயில் உண்டு. இக் கோயிலுக்கு முன் னாலே திடலும் உண்டு. ஒயிலாட்டப் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள், நிலாக் காலங்களில் இந்த அம்மன் கோவில் திட லில் கூடுவார்கள். பத்துப்பதினைந்து வாலி பர்கள் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு. கால்களில் சதங்கைகள் அணிந்து, கை லேஞ்சியைக் சையிற் பிடித்து வரிசையாக நிற்பார்கள்.
அவ்வேளை அவர்களைப் பயிற்றுவிப் பவர் கையில் தாளத்தோடு பாடுவதற்கு தயாராக நிற்பார். ஆட்டத்திற்கேற்றபடி தப்படி ஒசை எழுப்புவோரும் தயாராக நிற்பார்கள்,
உபாத்தியாயர் பாட்டின் அடியெடுத்து தாளத்தைத் தட்ட, தப்படி ஓசை கிளம்ப, ஆட்டக்காரர்களின் காற் சதங்கை ஒலியும் எழுப்பும். உபாத்தியாயரின் பாட்டைத் தொடர்ந்து ஆட்டக்காரர்கள் அப்பாட்டை கோரஸ்ாகப் பாடி, காலில் கிண்கிணிச் சதங்கைகள் நாதமிட கையிற் பிடித்துள்ள கைலேஞ்சி வீசி, சந்தப் பாடலுக்கு ஏற்ற படி வளைந்தும், குனிந்தும், நிமிர்ந்தும் ஒன்றுபோல் ஒயிலாட்டம் ஆடுவார்கள். பாட்டின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க கால்களின் இயக்கமும் அதிகரித்து இமைக் கும் நேரத்தில் ஒன்று போல் திரும்பியும், ஆடியும் வ ரு வ து காண்போரைக் கவர்ந்து பரவசப்படுத்தும்.
பகலெல்லாம் தேயிலைத் தோட்டத் திலே கவ்வாத்து வெட்டி காழ்ப்பேறிய கரங்கள், முள்ளுக்குத்தி முறுக்கேறிய கால் கள். இளமையான இந்த கால்களும், கரங் களும், ஒயிலாட்டத்தின்போது பாடப்படும் பாடல்களுக்கு 'ஒயில் கும்மி" என்று சொல்லுவார்கள். இந்தப் பாடல்களிலே பல வரலாற்று புராணக் கதைகளைச் சொல்வதோடல்லாமல் ஒயிலாட்டத்தை ஆடவேண்டிய ஒழுங்குபற்றியும் சொல்லப் படுகிறது.
ஆளோட ஆளு உரசாமல்
நீங்க ஆளுக்கு ஒருமுழம் தள்ளி
நில்லும் காலோடு காலு உரசாமல்
உங்க

காலடிக் கச்சம் சுழறாமல் மேலோடு மேலு உரசாமல்
உங்க வேருவைத் தண்ணி
சிதற மல் உல்லாசமாகவே
சல்லாபமாகவே
உச்சிதமாய்க் கச்சம்
கையிலெடு கையில் எடுத்ததை தும்பு
விட்டு வலது கால்தனில் பூட்டுங்கள்
எல்லோரும்" என்று பாடப்படுகிறது:
ஒயில் கும்மிகள் செவிவழிப் பாடலாக வளர்ந்ததாகும். படிப்பறிவு இல்லாத பாமர நாட்டுப் பாடலாசிரியர் வழங்கிய செல்வம் இது. இது போல் பல புராணக் கதைகளைச் சொல்லும் ஒயிற் கும்மி பாடல்கள் ஏராளம்.
பரம்பரை பரம்பரையாக பாடப்பட் டும், ஆடப்பட்டும் வந்து தமிழ் மக்களின் உணர்வோடு ஒன்றிக் கலந்த இக்கலை ஆட் டத்தின்போது உணர்ச்சிப் பிரவாகம் கரைபுரண்டோடுவது கண்கூடு,
உழைத்துத் திரண்ட தோள்களும் கால்களும் உடைய இளம் வயதினர் ஒன் றிணைந்து ஆடப்படும் சமூக நடனம் இது வாகும்.
நன்கு பயிற்சி பெற்ற பின்பு இவர்கள் அலங்கார ஆடைகள் அணிந்து கோயில் திருவிழா, தீபாவளி, பொங்கல் தினங் களில் ஆடுவதுண்டு.
இத்தகைய சிறப்புமிக்க ஒயிலாட் டத்தை இன்று மலையகத்திலே காண் பதற்கு இல்லை. இதைக் கற்றுக் கொடுப் பவர்களும் இல்லை.
கதையும் பாட்டும் நாடகமும் -
தமிழ்க் கலைகள் மூன்றும் உடைமையடா சிதையும் வாழ்க்கை கலையின்றேல் - இதை சிந்தனை செய்வது கடமையடா எதையும் ஈர்க்கும் சக்தியடா-எங்கள்
இயலும் இசையும் கூத்துமடா பதையும் நெஞ்சம் பைந்தமிழன் -
உயர் பாங்குக் கலைகள் எங்கேயடா?
32 -

Page 159
ரழுத்த மண்வாசை
செ. குண
அண்மைக் காலத்தில் இலங்கையில் வாழ்ந்த தலைசிறந்த அறிஞர்களில் பேரா சிரியர் க. கணபதிப்பிள்ளையும் ஒருவரா வர். இலங்கைத் திருநாட்டின் தவப்புதல்வ ராகிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலா நந்த அடிகளுக்கு அடுத்ததாக வியத்தகு மேதையாக விளங்கிய பேராசான் கணப திப்பிள்ளை, அடிகளாரின் நன் மாணவர் என் பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் இரண் டாவது தமிழ்ப் பேராசிரியராகவும், கலைப் பீடாதிபதியாகவும் இருந்தவர் பேராசிரியர் கந்தசாமி கணபதிப்பிள்ளை. தந்தையார் பருத்தித்துறையைச் சேர்ந்த தும்பளையில் ஆயுள்வேத வைத்தியராக இருந்தார். 1903ஆம் ஆண்டிலே தோன்றிய கணபதிப் பிள்ளை தம் தந்தையாரின் மேற்பார்வை யில் தமிழ் கற்றார். பின்னர் இவர் தும் பளை நான்மறையோன் மகாதேவையர் முத்துக்குமாரசாமி ஐயரிடம் வடமொழி யையும், தமிழையும் பழைய மரபுவழி கற் றார். அதன்பின்னர் பருத்தித்துறை ஹாட் லிக் கல்லூரியிலே சேர்ந்து வடமொழி, பாளி ஆகியற்றைக் கற்று இலண்டன் பல் கலைக்கழக கலைமாணிச் சிறப்புத் தேர் வில் முதலாம் வகுப்பிலே தேறினார்.
புகழ்பெற்ற தமிழறிஞர் சி. வை. தாமோதரம்பிள்ளையின் மகனும் பல்க
- I
 

bனபூதிப்பிள்ளை ாழ்வும் స్టస్లో
&YSADoS ஆ
ரத்தினம்
லைக்கழக விரிவுரையாளருமான கிங்ஸ்பரி தேசிகரின் பணிப்புப்படி பேராசிரியர் கண பதிப்பிள்ளையவர்கள் 1930ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே தமிழ் வித்துவான் வகுப்பில் மாணவனாகச் சேர்ந்தார். அங்கு அவர் தமிழ் பயிலும் காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங் களை "என் இன்பமான நாட்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையில் 1956-57ஆம் வருடத்து இலங்கைப் பல்கலைக் கழக வெளி யீடான "இளங்கதிர்' சஞ்சிகையில் எழுதி யிருக்கிறார்கள், அதனில் குறிப்பிட்ட (5 பகுதி பின்வருமாறு:-
“விபுலானந்த அடிகளோடு அக் காலத்திலே திறமை வாய்ந்த செந் தமிழ்க் கலைச் செல்வர் மாணவருக்குக் கல்வியூட்டிவந்தனர். அப் பெரியார்க ளுள் இப்பொழுது சென்னைப் பல்க லைக் கழகத்துத் தமிழ்ப் பேராசிரிய ராகக் கடமையாற்றிவரும் திருவாளர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்களும் ஒரு வர். திருவாவடுதுறை வித்துவான் பொன்னோதுவார் மூர்த்திகள், இராம நாதபுரம் சர்க்கரை இராமசாமிப் புல வர், திருச்சி இறையொளி சிவப்பிர காசம்பிள்ளை, சோழவந்தான் கிண்ணி மடம் கந்தசாமியார், மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் மாணாக்கரான பல ராமையர் முதலிய பெருமக்கள் அந்

Page 160
நாட்களில் பல்கலைக் கழகத் தமிழ்க் களரியை அலங்கரித்துவந்தனர்” என அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து அந்நாளைய நிலையினைப் பேராசிரியர் எடுத்துரைத்தார்கள்.
**நான் கல்விபயிலும்போது எனக் குப் பல்கலைக் கழகத்தில் நண்பர் பலர் இருந்தனர். அவர்களோடு நான் கழித்த நாட்கள் மிக இன்பமானவை. அந் நாட்களைப்போல் இன்பமான நாட் கள் என் வாழ்நாளில் இனி வருமோ?" என்று பேராசிரியர் அவர்கள் தமது அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட் களை எண்ணி எண்ணி இறும்பூதெய்து
e
அத்தோடு பேராசிரியர் இன்னுமொரு அரிய செய்தியினை மேற் கூறிய கட்டுரை யில் வெளியிட்டுள்ளார்கள். அச் செய்தி பின்வருமாறு -
நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்குச் சென்ற முதல் ஆண்டி லேயே அங்கு நடந்த ஒரு சிறப்பான நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகின்றது, இதுகாறும் பாரதியார் பாடிய பாடல் கள் யாவும், புலவர்களால் இலக்கண வழு நிறைந்தவை என்றும், பழைய யாப்பு அமைதிக்கு அமையாதவை என் றும் ஒதுக்கப்பட்டு வந்தன. ஆனால் விபுலானந்த அடிகள் போன்ற அறிஞர் கள் பாரதியாரின் பாடல்களின் உண் மைத் தன்மைகளை அறிந்திருந்தனர். அதனால் விபுலானந்த அடி களின் தலைமையில் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் பாரதியார் சங்கம் என்னும் பெயருடன் ஒரு கழகம் நிறு வப்பட்டது. இதன் முதற் கூட்டம் நிகழ்ந்தது சங்கீதக் கல்லூரியில். விபு லானந்த அடிகள் பாரதியாரைப்பற்றி ஓர் அரிய சொற்பொழிவு ஆற்றி கூட் டத்துக்கு தலைமை தாங்கினார். அடி கள் விரிவுரை ஆற்றும்போது தமது கோட்பாட்டுக்கு மேற்கோளாகப் பார தியாரின் பாடல்களைப் பாடுவித்தார் கள். அவற்றைப் பாடியவர்கள் பல்
- 134

கலைக் கழகத்தில் ஆங்கில மொழி விரி வுரையாளர் மயிலேறு என்பாரும் விசுவ நாதன் என்பாரும் ஆவர். அன்று தொடக்கம் பாரதியார் சங்கம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஓங்கி வளர்ந்து வந்தது. அதனோடு பாரதியாரின் புகழும் தமிழ்நாடெங் கிலும் பரவியது!"
இந்த அனுபவமே பேராசிரியர் கண பதிப்பிள்ளையை பல முற்போக்கான காரி யங்களைத் தமது தலைமையைக் கொண்ட இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை யில் செய்யத் தூண்டியது எனலாம்.
பின்னர், இலண்டன் பல்கலைக் கழகம் புகுந்து மொழியியல் விற்பன்னர் இரால்பு இரேணர் என்பார் வழிகாட்ட ஆராய்ச்சி செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார். 1936ஆம் ஆண்டிலே ஈழம் திரும்பிய கலா நிதி கணபதிப்பிள்ளை இலங்கைப் பல்க லைக் கழகக் கல்லூரியிலே சேர்ந்து விரி வுரையாளராய்ப் பணிபுரிந்தார். ஈற்றில் பேராசிரியராய்ப் பணிபுரிந்தார், 1963இல் இப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். 1965ஆம் ஆண்டிலே மறைந்தார்.
பேராசிரியர் க. கணபதிப் பிள்  ைள தலைசிறந்த ஆராய்ச்சியாளர். பட்டதாரி மாணவருக்குத் தமிழைத் திறம்படச் சொல் லிக்கொடுத்தார். ஆராய்ச்சி மாணவருக்கு ஒப்பில்லாத வழிகாட்டியாகவும் இவர் திகழ்ந்தார். தமிழ் ஆர்வத்தை அப்போ தைய மாணவரிடம் பரப்பினார். அதுமட் டன்று. இவர் சிறந்த நாடகாசிரியர். செந் தமிழ்ச் செய்யுள் பலவற்றையும் அவ்வப் போது யாத்தார். ஆராய்ச்சிக் கட்டுரை கள் பலவற்றையும் எழுதினார். மேலைத் தேயத்துப் புனைகதைகளை தமிழில் வடித் துக்கொடுத்தார். சிறந்த வானொலிப் பேச் சாளராகவும் இவர் திகழ்ந்தார். சாசன வியல் ஆராய்ச்சியில் இவருக்குப் பெரும் புலமையிருந்தது. ஈழத்து மக்கள் கலை மறுமலர்ச்சியின் ஈடுஇணையற்ற முன் னோடியாக இவர் திகழ்ந்தார். ஆகவே தான் இவரின் நல்லாசிரியர் ரா. பி. சேதுப் பிள்ளை இவரைக் கலையருவி கணபதிப்
سـ !

Page 161
பிள்ளை என அழைத்துப் பெருமை கொள் வார் என்று சொல்வார்கள். வற்றாது அருவி போல இவரது கலைப் புலமை பாய்ந்து கொண்டிருந்தது.
பல்கலைக்கழகத்தில் இவர் தொடர்ச்சி யாக 29 ஆண்டு நற்பணி புரிந்துவந்தார். ஆகவே இவரின் பல்கலைக் கழகத் தமிழ்த் தொண்டு பற்றி முதலில் ஆராய்வதே பொருத்தம்.
அந்தக் காலத்து தமிழ் மாணவருக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சற்றுச் சிரம மானது. பிரித்தானியப் பேரரசு தன் ஆட் சியை இலங்கையில் நடத்திய காலம் அது. எங்கும் ஆங்கிலம். நடை,உடை, பாவனை, பேச்சு எல்லாமே ஆங்கில மயம். அப்படி யான நிலையில் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார். அந்தக் காலத்துத் தமி ழர் நிலையைப் பேராசிரியரே தனக்குரிய பாணியில் சுவையான தமிழில் சொல்வார். "பலாப்பழம் உண்பதற்கு மேசைக்கத்தி, கரண்டி, முள்ளுத் தேடியலைந்த மாந்தர் வாழ்ந்த காலம் அது." தமிழைப் போதித்த துடன் மட்டும் நில்லாமல் இலங்கைப் பல் கலைக் கழகத்துத் தமிழ்ச்சங்கம் மூலம் தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப்பண்பாட்டில் நாட்டத்தையும் ஏற்படுத்தினார். இலங் கைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்ச்சங்க டாகிய "இளங்கதிர்" உருவாக இவர் முன்னின்று உழைத்தார். தமிழ் நாடகங் களை எழுதிப் பட்டதாரி மாணவர்களைக் கொண்டு நடிக்கவைத்தார். இப்படி இவர் பல்கலைக்கழக மட்டத்தில் பணிபுரிந்தார்.
பேராசிரியர் கணபதிப்பிள்ளை எப் பொழுதும் எளிமையான தேசிய உடை அணிந்து வருவார். இவ்வுடை அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. அது மாத்திரமன்றி அவரது எண்ணப் போக்கி னைத் துல்லியமாக எடுத்துக்காட்டுவதாக வும் அமைந்திருந்தது. தூய வெள்ளை உடையுடன் மடித்த மடிப்புக் குலையா மல் அமைந்த சால்வை தரித்து அவர் காட்சி தருவது கண்களுக்கு விருந்தாக அமையும். தோற்றத்தில் மாத்திரமன்றி எண்ணத்திலும் முழுக்க முழுக்க ஒரு தமிழ
- 13

னாகவே அவர் தன்னைக் கண்டதோடு, சாதாரண பேச்சு வழக்கிலேயே மற்றவர் களுடன் பேசுவதையும் வழக்காகக் கொண் டிருந்தார்.
பேராசிரியரிடம் தமிழைச் சிறப்புப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக் கற்ற மாண வர்கள் பலர் இலங்கையில் உள்ள பல்க லைக் கழகங்களிலே தமிழ்ப் பேராசிரியர் களாகவும், த மிழ் வித்துவான்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். மறைந்த பேரா சிரியர்களான கலாநிதி சு. வித்தியானந்தன், கலாநிதி ஆ. சதாசிவம், கலாநிதி க. தனஞ்செயராசசிங்கம், கலாநிதி கைலாசபதி ஆகியவர்களுடன் இப்பொழுது பணியாற்றும் பேராசிரியர்கள் கலாநிதி கா. சிவத்தம்பி, கலாநிதி ஆ. வேலுப் பிள்ளை, சி. தில்லைநாதன், கலாநிதி பொ. பூலோகசிங்கம். கலாநிதி அ. சண் முகதாஸ் ஆகியோர், குறிப்பிடத்தக்கவர் களாவர்.
இலங்கைப் பல்கலைக்கழகத்திலே தமிழை ஒரு சிறப்புப் பாடமாகத் தேர்ந் தெடுத்துக் கற்ற முதல் முஸ்லிம் மாணவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கியத்துறைத் தலைவரா கக் கடமையாற்றிய பேராசிரியர் அல் ஹாஜ் எம். எம். உவைஸ் அவர்களாவர்.
இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி முழுமையான பல்கலைக்கழகமாக 1942இல் மாறியது. இதன் முதலாவது தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகள். எமது நாட்டின் தேவைக்கு, தமிழ்ப் பண்பாட் டிற்கு ஏற்றவகையில் தமிழ்க் கல்வி நெறி களை மாற்றியமைக்க விபுலானந்தருக்கு உறுதுணையாகக் கணபதிப்பிள்ளை நின்று உழைத்தார். பல்கலைக்கழகப் பட்டப் படிப்பிற்குரிய ஆராய்ச்சிகளில் குறிப்பாக ஈழம் பற்றிய ஆராய்ச்சிகளில் மாணவர் ஈடுபட வேண்டும் என்பதை வற்புறுத்தி அதனை நடைமுறைக்குக் கொண்டு வந்த பெருமை பேராசிரியர் கணபதிப்பிள்ளை யையே சாரும். இன்று ஈழத்துப் பல் கலைக்கழகங்களில் தமிழ்த்துறைகளிலி
5 -

Page 162
ருந்து தமிழ்த் தொண்டு புரிகின்ற பேரா சிரியர்கள் யாவரும் கணபதிப்பிள்ளை அவர்களின் மாணவர்களே. இறுதிவரை தம்மைத் தமிழ் மாணாக்கனாகவே கருதி வந்த பேராசிரியர் கணபதிப்பிள்ளை தாமும் கற்றார். மற்றையோரையும் கற் கும்படி தூண்டினார், வழி நடத்தினார். தாமும் நடந்து காட்டினார். மேற்பார்வை செய்தார். தம்மறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே இவரின் குறிக்கோள். தமிழ்ச் சாசனவியல் ஈழத் தில் நன்கு வளர உழைத்தவர் பேராசிரியர்.
ஆராய்ச்சியாளர் நடுவே இவர் பெரும் பொலிவுடன் திகழ்ந்தார். அதே நேரத் தில் தமிழ் கூறும் நல்லுலகத்துப் பொது மக்களை இவர் ஒரு போதும் மறந்த தில்லை. மக்கள் இல்லாமல் மொழி இல்லை, பண்பாடு இல்லை என்பது இவ ரின் கோட்பாடு, ஆகவே இவர் புதிய துறைகளில் ஈடுபட்டு, தளர்ச்சியுற்றிருந்த தமிழ் அன்னைக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் உழைத்தார். தம் நல்லாசிரியர் களான கிங்சுபரி அடிகளார் (அழக சுந்தர தேசிகர்) விபுலானந்த அடிகளார் ஆகி யவரைப் பின்பற்றிஆக்சு இலக்கிய முயற்சி யிலும் பேராசிரியர் ஈடுபட்டார். யாழ்ப் பாணத்துப் பருத்தித்துறைக்கே சிறப்பான பேச்சுத் தமிழில் இவர் எட்டு நாடகங் களை எழுதி அரங்கேற்றினார். இவற்றுள் ஆறு நானாடகம், இருநாடகம் என்ற பெயரில் அச்சில் வந்தன. யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி மன்னன் சங்கிலியை நாடக நாயகனாக வைத்து எழுதப்பட்ட நாடகம் சங்கிலி. இதன் நீண்ட முன்னுரை ஆராய்ச்சி மாணவருக்கு அரிய விருந்து. ஈழத்துத் தமிழ் மக்களின் மத்தியில் இந்த நாடகம் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்ப டுத்தியது. இரத்தினாவளி என்னும் வட மொழி நாடக நூலை மாணிக்கமாலை என்ற பெயரில் மிகவும் நல்ல செந்தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நூல் இங்கி லாந்து பல்கலைக்கழகத் தேர்விற்குப் பாட நூலாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக் கது. பேச்சுத் தமிழில் நாடகத்தை எழு திப் புது வழியை ஏற்படுத்திய பேராசிரியர்
- 1

க. கணபதிப்பிள்ளை இத்துறையில் முன் னோடியாய் இருந்தார் என்ற பாராட்டைப் பெற்றார்.
புதிய துறையில் எல்லாம் தமிழ் வளர வேண்டும் என்பதும் பேராசிரியரின் இலட் சிய வெறி. ஆங்கிலேயரின் சிறந்த படைப் புகளை யாராவது அவ்வப்போது மொழி பெயர்த்து வெளியிட்டால் அந்த முயற் சியை அவர் பாராட்டுவார். ஆங்கில மொழியில் உள்ள உயர்ந்த இலக்கிய நூல் களைப் போல ஐரோப்பிய மொழிகளில் உள்ள சிறந்த படைப்புகளை எல்லாம் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என் பதை வற்புறுத்துவார் பேராசிரியர். இத னாலேதான் செருமானிய மொழியில் தியோடர் சுதோம் என்பவர் எழுதிய இம்வென்வே என்ற நூலைப் பூஞ்சோலை என்ற பெயரிலே தழுவி எழுதி வெளியிட்
l-Tri.
தபூ என்பவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய இரட்டையர் என்ற நூலை வாழ்க் கையின் வினோதங்கள் என்ற பெயரில் எழுதி அச்சேற்றினார். இத்துறையில் மேலும் உழைக்க வேண்டும் என்பது இவ ரின் பேரவா. இந்த முயற்சி கைகூட வில்லை. இவரின் தமிழாக்கங்கள் சில கையெழுத்துப் பிரதிகளாகவே முற்றுப் பெறாத நிலையில் இருக்கின்றன.
குழந்தை இலக்கியத்தில் பேராசிரியர் கணபதிப்பிள்ளைக்குப் பெரும் ஈடுபாடு இருந்தது. பாரதியாரின் பாப்பாப் பாடல் களுக்கு இவர் அருமையான விளக்கம் கொடுப்பார். இலங்கை வானொலியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை அவ்வப் போது தயாரித்து ஒலிபரப்பி வந்தார். பஞ்ச தந்திரக் கதைகளைக் குழந்தைக ளுக்கு ஏற்ற வகையில் எழுதி ஒலிபரப்பி வந்தார். இந்த எண்ணம் பேராசிரியரின் உள்ளத்தில் எப்போதும் கொழுந்து விட்டு எரிந்தது. ஐரோப்பாவைச் சேர்ந்த **குழந்தைப் பிள்ளைக் கதையாளர்" செய்த முயற்சி யாவற்றையும் பேராசிரியர்
பாராட்டுவார்.
36 -

Page 163
அந்தேசன் என்பவர் எழுதிய மோகனச் சிறுமி நூலைத் தமிழ் மரபுக்கு ஏற்றவாறு நீரர மங்கையர் என்ற பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கிறுவர்களுக்கான கதைகளை வெளியிட முயற்சி செய்தார். இது கை கூடவில்லை. இதுவும் கையெழுத்துப் பிரதி யாகவே இருக்கின்றது.
பண்ணிசை, நாட்டார் பாடல், கூத்து என்பவற்றிலும் பேராசிரியர் கணபதிப் பிள்ளைக்குப் பெரிதும் ஈடுபாடிருந்தது. இவர் பெரிதும் விரும்பிக் கற்கின்ற நூல் களில் ஒன்று சிலப்பதிகாரம். சிலப்பதிகார வரிப்பாடலில் பெரிதும் உள்ளத்தைப் பறி கொடுத்தவர் பேராசிரியர். இந்தப் பாடல் களைப் பின்பற்றி எழுதிய பாடலில் ஒன்று:
கருவிழிகள் தனைநோக்கிக்
காதலினாற் கட்டுண்டு சிறுமிநின தழகினிற் சிக்கினேன்
காணென்றாய் சிறுமியென தழகதனிற்
சிக்கிநின்றாயாமாகில் கருவிழிகள் தாம்வாடிக் கவினழிந்து
போங்காலும் திருவினையா யென்றழைத்துச்
சேர்ந்தெனை நீ அணைப்பாயோ!
அண்ணாவிமார், கூத்துப்புலவர் ஆகி Gun ri எல்லோரையும் Gourrr6urř பாராட்டுவார். நாட்டார் பாடல்கள் **இழிசனர் வழக்கு" என எள்ளி நகை பாடியவர் வாழ்ந்த காலம் அது. நாட்டார் இலக்கியம், மக்கள் கலை, கூத்து என்பன வற்றில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் கணபதிப்பிள்ளை.
ஈழத்திற்கே சொந்தமான கண்ணகி
வழக்குரையை 1953 ஆம் ஆண்டிலே வார இதழ் ஒன்றில் தொடர்ச்சியாக வெளியிட் டார். ஆனால், அத்தொடர் நிறைவு பெற வில்லை. மக்கள் கலைகளில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியவர் பேராசிரியர் கணபதிப் பிள்ளை. இவரின் ஆர்வத்தினால் தூண்டப் பெற்ற இவரது தலைமாணாக்கர் சு. வித்தி

யானந்தன் இந்த நாட்டு மக்கள் கலைக்கு ஆற்றிய தொண்டு நாடறிந்த ஒன்று.
தனித் தமிழ் இயக்கம் ஈழத்தில் பரவ வேண்டும் என்பதற்காகப் பெரிதும் உழைத் தவர் பேராசிரியர். இதனால் இவருக்குப் பலத்த எதிர்ப்பும் இருந்தது. கணபதிப் பிள்ளை என்ற பெயரை மாற்றி 'ஈழத்துக் குழுஉ இறையனார்”என்றபெயரில்கட்டுரை, செய்யுள் பலவற்றையும் எழுதினார். நாடக பாத்திரங்கள் என்பதை 'நாடகத்துள் வரும் ஆடவர் அரிவையர்'என எழுதுவார். மேலைநாட்டுச் சொற்கள் யாவும் செந் தமிழ் வடிவம் பெறவேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பானவர். இதனைக் கடைப் பிடிக்க அவர் பெரிதும் முயற்சி செய்து வந்தார்.
"தமிழ்ப் புலவன் ஒருவன் வாழும் போதே அவனைப் பாராட்ட வேண்டும். இறந்த பின்னர் அவர்தம் புகழ்பாடுவதால் பலன் எதுவும் இல்லை" என்பது பேராசிரி யரின் தளராத நம்பிக்கை. இதற்காக இவர் பெரிதும் உழைத்தார். பல எடுத்துக்காட் டுக்களைத் தரலாம். ஆனால் அவற்றுள் சிலவற்றை மட்டுமே இங்கே குறிப்பிட் (Լpւգயும். திருவாசகத்துக்கு உரை கண்டு கொண் டிருந்த வெண்ணெய்க் கண்ணனார் நவநீத கிருட்டின பாரதியாரைப் பாராட்டும் விழா விலே இவர் கலந்துகொண்டார். ஐயரை வாயார வாழ்த்தினார் பண்டிதமணி. இலக் கிய கலாநிதி சி. கணபதிப்பிள்ளை எழுதிய இலக்கியவழி என்ற நூலை இலங்கைப் பல் கலைக் கழகப் புகுமுக வகுப்பிற்குப் பாட நூலாக்கிய பெருமை பெரிதும் பேராசிரிய ரையே சாரும். அதுமட்டுமன்றிச் சக்கர வர்த்தி இராசகோபாலாச்சாரியார் எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் என்னும் நூலைப் பல்கலைக் கழகப் பாடநூலாகச் சேர்த்து அந்தப் பேரறிஞரை அவர் வாழும்போதே பாராட்டினார் பேராசிரியர்,
ஈழத்துத் தமிழில் ஆராய்ச்சி மேலும் வளர வேண்டும் என்பதில் பெரிதும் ஈடுபாடு டையவர் பேராசிரியர். தாமும் ஆராய்ந்து எழுதினார். மற்றவரையும் ஆராய்ந்து எழு தும்படி தூண்டினார். கிட்டத்தட்ட 40
If a

Page 164
ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பல்வேறு இதழ்களுக்கு அவ்வப்போது எழுதினார். இவற்றுள் வையாபாடல் வசனம் ஒன்று. ஈழத்துத் தமிழர் வாழ்வை ஆராய இந்த வெளியீடு பெரும் உதவியாய் இருந்தது: பன்மொழிப் புலவரான இவருக்கு ஆங் கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், சிங்களம், பாளி, வடமொழி, தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகிய மொழிகள் நன்கு தெரியும்.
அதனுடன் வேத, ஆகம கால வட மொழியில் இவர் விற்பன்னர். இந்தப் பெரும் புலமை காரணமாய் மொழியியலை, சாசனஇயலை நன்கு கற்றுத் தேறினார். மாணவருக்கும் திறம்படக்கற்பித்தார்.கலா நிதிப்பட்ட ஆராய்ச்சிக்கு இவர் லண்டன் பல்கலைக் கழகத்திற்குச் சமர்ப்பித்த கட் டுரை ஆழ்ந்த புலமை வாய்ந்தது. இதனை முன்னோடியாகக் கொண்டு பின்வந்தவர் கள் ஆராய்ந்தனர். இது தட்டச்சுப் பிரதி யாகவே இன்றும் இருக்கிறது. அச்சிலே வர வில்லை. இந்த அரிய ஆராய்ச்சி மற்றவர்க ளுக்கு வழிகாட்டியாய் அமைந்தது.
பா இயற்றுவதில் இவர் கை தேர்ந்த வர். காலத்துக்குக்காலம் அரிய பாடல் களை யாத்தார். இவர் எழுதியவற்றுள் அச்சில் வந்தவை காதலி ஆற்றுப்படை, தூவுதும் மலரே என்டன. இக்கால வாழ்க் கையைச் செந்தமிழ் மரபையொட்டிப் படம் பிடித்துக்காட்டுவது காதலி ஆற்றுப் படை. தூவுதும் மலரே என்னும் தொகுப்பு நூலில் முக்கியமானவை கதைப்பாடல்கள். அவை, "சீதனக் காதை", "விந்தை முதி யோன்", "தீவெட்டிக்கள்ளர்" போன்றன. இன்னும் பல பாடல்கள் ஈழத்துத் தேசிய இதழ்களில் வெளிவந்து எல்லோர் பாராட் டையும் பெற்றவை.
காதலி ஆற்றுப்படைக்காட்சிகள் இருப தாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணச் சூழ லைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந் துள்ளன. காதலன் பதியைக் காதலிக்கு ஆற்றுப்படுத்துவதாக அமைந்த இவ்வாற் றுப்படைக் கவிதை யாழ்ப்பாணத்தின் கோலங்களையும், சிறப்பாக வடமராட்சி
ത്ത

யில் உள்ள பருத்தித்துறைப் பகுதி மக்கள் வாழ்வையும் வளமுறத் தத்ரூபமாகக் காட் டுவதாக அமைந்துள்ளது. உண்மையில் காதலி ஆற்றுப்படை ஒரு தேசிய இலக்கி யத்துக்கு இருக்க வேண்டிய சிறப்புக்கள் பலவற்றினையும் கொண்டதாக அமைந் துள்ளது. பிற்காலத்தில் இன்னொரு நூற் றாண்டுக்குப் பிறகு இந்நூலினைப் படிப் போர் பெரும் ஆராய்ச்சிகளை மேற்கொள் ளத்தக்க செய்திகளெல்லாம் இந் நூலில் உள. தான் கேட்ட பேசிய, அநுபவித்த, பேச்சு மொழியிலே, தான் வாழ்ந்த, விளை யாடிய பிறந்தமண் சூழலிலே கண்ட தனது இளமைக் காட்சிகளையெல்லாம் இக் காத லியாற்றுப்படையில் பேராசிரியர் விபரிக்கி நறார். உதாரணமாகச் சாதாரண மக்களின் வாயினில் பயிலும் தமிழ்நடை பேராசிரியர் கவிதையில் பரிமளித்து நிற்கின்றது.
"காகா டுண்டுண் காகா டுண்டுண் ஈதோ சாமி யெழுந்து தேர்வாறார் காகா டுண்டுண் காகா டுண்டுண் அம்மா வழிவிடு ஆத்தை நீ விலகு”
என்ற அடிகளிற் சாமி, ஆத்தை முத லிய சொற்கள் பாமர மக்களின் அன்றாட உபயோகத்தில் இருக்கும் பேச்சு மொழிகள் பேசும் சில சொற்களை இங்கு மேற்கோள் காட்டலாம். ஆத்துப்பறந்து, வீட்டுக் கோடி, பிளா, மாயக்கிட்டிணன், அண் ணாவி,வெள்ளாப்போடு, அவதி, சோடினை கூத்து. அனாப்பி முதலிய சொற்கள் ஈழத்திற்கென்றே குறிப்பாக வடபகுதிக் கென்றே அமைந்த சொற்கள். இவற்றைப் போல் எத்தனையோ கிராமியப் பேச்சுச் சொற்கள் செய்யுட்களிற் பரவிக் கிடக்கின் ይወ6ቯr •
நெஞ்சைக் கவர்ந்த காதலனின் பதிக் குச் செல்லும் பாதையைக் காதலிக்கு ஆற் றுப்படுத்துகிறார் ஆசிரியர். ஆனால், காத லன் பதிபற்றிய காட்சிகளைக் கவிதை வடி வில் காண்கையில் நெஞ்சிற் புதுவித இன்ப உணர்வு கிளர்ந்தெழுகின்றது. இன்றும் பருத்தித்துறையில் கண்ணார அதே காட்சி களைக் கண்டு மகிழலாம். பன்னம் இழைக் கும் வஞ்சிகளின் கரங்கள், கடற்காற்றில்
38 -

Page 165
இன்ப ஒலி எழுப்பும் பட்டங்கள் - வியர் வைத் துளிகள் கருமை மேனியில் ஒழுகிக் குறுக்குக் கட்டுவரை பளிச்சென்று முத்துக் கள் போல் ஒளிரச் செய்யும் தொழிலாள வர்க்க மகளிர் - இப்படியாக எத்தனையோ காட்சிகள் நம் நிஜவாழ்வில் கண்டவை; ஆனால் அவை நெஞ்சைத் தொட்டதில்லை; கவிதை இதயம் இருந்தாலே இவை இவ் வுணர்வுகளை எழுப்புவன. பேராசிரியரு டைய கவிதைகளைப் படிக்கும்போது அதே காட்சிகள் மனக் கண்ணில் நிழலாடுகின் றன. அப்படியே நெஞ்சைத் தொடுகின்றன வாக அமைகின்றன.
'காடு தோறும் தேடுபு சென்று காய்ந்த விறகு தேர்ந் தெடுத்து
வரு பெருங் கட்ட நகையிளம்
பெண்டிர். கந்தை யுடையினர் குறுக்குக் கட்டினர் சிந்திடு வேர்வையர் அசைந்த நடையினர் வறுமையிற் செம்மை அமைந்த வாழ்வினர்
ஒன்று சேர்ந்து சிந்துகள் பாடிச் சந்தை நோக்கிச் சென்றிடு காலை."
என்ற அடிகள் அந்தக் குறுக்குக் கட்டி னரைக் கண்சளில் கொண்டு வந்து உண்மை யிலே நிறுத்தி மகிழ்ச்சியைத் தருகின்றன. இப்படியாகப் பேராசிரியர் சித்தரிக்கும் ஒவ் வொருகாட்சியும் முழு யதார்த்தமாகச் சித் தரிக்கப்பட்டிருப்பதுதான் நெஞ்சத்தை ஈர்க்கிறது. புள காங் கி தம  ைட ய ச் செய்கிறது.
காதலன் பதி அழகைச் சொல்லத் தொடங்கும் பேராசிரியர் கற்பனைப் புழுகு களைச் சொல்லவில்லை. உண்மையைச் சொல்கிறார். மாலை வேளையிலே, காற் றின் உதவியிலே, கலம் செலுத்தும் மீனவர், இரவு கழித்து தமது வலையகப்படுத்திய பல்வகை மீன்களை விலை கூறி விற்கிறார் கள். இன்னொரு பக்கம் பார்த்தால் மெல் லின மாதர்கள் புற்றரைகளிலே, புல்லை
-

உழவாரங்களிலே செதுக்கி கடகங்களிற்  ெப ா தி ந் து பிற் பகல் சந்தை யில் விற்கும் காட்சிகள், மலை யை ப் போன்ற பலம் வாய்ந்த திரைகள், கொந்த ளித்து எழும் அலைகடல், அந்த அலை கடலைக் கிழித்துச் சென்று மரக் கலங்களிலே பசியை ஒட்டும் பசிய நெல், கொள்ளு, கடலை, போன்றதானிய வகை கள் மூட்டையாகத் துறையிலே வந்து இறங்குகின்றன. காந்திக் கதர்கள், காசு மீரங்கள், சாயத் துகில்கள், கூறை நாட ளித்த கோலப்புடவைகள் இப்படி எத்த னையோ வண்ணச் சேலைகள். அத்தனை யும் நிறைத்து கண்ணினை இழுக்கும் கடை கள். இத்தனை காட்சிகளையும் சண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றார். சிலப்பதிகாரத்திலே காவிரிப்பூம் பட்டினத் தைக் காட்டும் இளங்கோ அடிகளை நினை வுறுத்துவனவாகப் பேராசிரியர் சித்தரிக் கும் காட்சிகள் அமைகின்றன.
அருமையான தீன் பண்டங்களை விற் கும் கடைகள் கூட இருக்கின்றன. இடித்து வைத்த மாவிலே பதங்கருதிக் கள்ளுவிட்டுச் சுட்ட நல்ல புளித்த அப்பம் இருக்கிறது. சாமை மாவிலே, பனங்காய்க் களி சேர்த்து வனை பந்துகள் போலச் சுட்டெடுத்த பனங் காய்ப் பணியாரங்கள், முறுக்குகள், வாய்ப் பன்கள் எனப் பலகாரப் பணியார வகைக் கடைகள்,
பருத்தித்துறை மக்களின் கைவண்ணம் பிரதிபலிக்கும் பெட்டி, பாய், குட்டான், கொட்டைப் பெட்டி, கிலுக்குப் பெட்டி ஆகிய கைத்தொழில் பொருட்கள் பரப்பப் பட்டுள்ள பன்னக் கடைகள் இப்படியாகப் பலரகப்பட்ட கடைகளின் காட்சிகள்.
யாழ்ப்பாணப் பிரதேசத்திலே எல்லோர் கண்களிலும் படுவது அழகிய பனைகள் அவற்றின் பழம் என்றால் யாழ்ப்பாணத்து மக்களுக்கு உயிர். காடியிலே தோய்த்து பனங்கொட்டையைக் கார்ந்திக் கார்ந்தி உண்பார்கள். இன்றைய காலப்போக்கில் நாகரிக நடப்புக்காக பனம்பழங்கள் சீந்து வாரற்றுக் காட்சியளிக்கத் தொடங்கிவிட்
39 as

Page 166
டன. ஆனால் ஒரு காலத்தில், பேராசிரியர் சித்தரிப்பது போலவே.
'காடியிற் றோய்ந்த காழ்பனங்
காட்டையைத் தாயர் தங்கையிற் றாவினர் வாங்கி வண்டியுஞ் சொக்கும் பனங்களி புரள வண்டினம் தேனை யுண்டல் போலக் களியினை மாந்திக் காழ்மனைக்
கையில்."
உண்டு மகிழ்ந்த காட்சி ஞாபகத்துக்கு வருகின்றது. பனம் பழத்தின் சுவையிற் சொக்கிப்போய், வண்டினம் தேனை உண் டது போன்ற மன மயக்கத்தில் பனம்பழத் தும்புகள் வெண்மையாக மாறும் வரையும் பற்கள் போராடிய இன்ப உணர்வு கள் கிளைத்தெழுகின்றன.
பேராசிரியருடைய "காதலி ஆற்றுப் படையில் வரும் சித்திரங்கள்,நாம் வாழ்ந்து அனுபவித்தவற்றை யெல்லாம் சித்தரிப்ப தாற் கவிதை அனுபவிப்பில் இருந்து விலகி, நிஜவாழ்க்கையை அனுபவிக்கும் ஓர்உணர்வு தோன்றுகிறது. சின்னஞ்சிறு வயதில் நாங் களே பாடசாலைக்குச் செல்லாமல் தாய் மாருடன் முரண்டு பிடிப்போம். ஏன் முரண்டு பிடித்து அழுது அரற்றும் இளஞ் சிறார்களை நாங்கள் கண்ணாற் காணத் தான் செய்கின்றோம். பாடசாலைக் குச் சென்றால் ஆசிரியருடைய பிரம்புக்கு உட லில் வேலை இருக்கும் என்றபயத்தின் அடிப் படையில் பாடசாலைக்குச் செல்கின்றோம் என வீட்டிலே ஏமாற்றிவிட்டு புளிய மரங் களையும், நாவல் மரங்களையும் பாடசா லையாக மாற்றிக்கொள்பவர் க  ைள யும் காணத்தான் செய்கின்றோம். இவர்களெல் லாம் நம் நிஜவாழ்வுப் பாத் தி ரங்க ள். யதார்த்த உலகிற்கு அப்பாற்படாமல் இன் றும் நாளையும் நடமாடிக்கொண்டிருக்கும் பாத்திரங்கள்.
'ஏட்டைக் கட்டி இறுப்பிலொழித்துப் புளிய மரத்திற் றுாங்கிளங் காய்க்குக் கல்லுப் பற்றி யிலக்காய் யெறிந்தும் தாவிக் கொம்பரிற் றருபழம் பறித்துங் கிந்தியடித்தும் வளைய முருட்டியும் தட்டுப் பாய்ந்துங் கிட்டியடித்தும்

மாவின் கொட்டை மகிழ்வோடு
போட்டும்
பல்வகை யாட்டம் பாங்குடனாடும்
பள்ளிப் பொடியள்."
நமக்குப் புதியவர்களல்லர்.
"அப்பா அம்மா' என்று திக்கித் திண றிச் சொல்லும் மழலை மறந்து மண்ணில் சோறு கறி காய்ச்சி விளையாடும் பருவம் இளஞ்சிறார்கள் மத்தியில் வருகின்றது "அப்பா அம்மா’’ என்ற மழலைச் சொல் 'நான் அப்பா-நீ அம்மா' என்ற பக்குவ மடையாத, ஆனாற் பக்குவமடைந்தது போன்று கதைக்கப்படும் சொல்லாக மாறிக் களிமண் பாவையைப் பெற்றெடுத்துப் பேணும் நெஞ்சிலே இன்ப மயக்கத்தை உண்டுபண்ணும் இல்லறக் காட்சிகளை நாம் எத்தனையோ நா ட் கள் 5 ødor GWr fr ரக் கண்டு இருக்கின்றோம். "சோச்சோ. பாப்பா நீ அழாதே" என்று குழந்தையை பொம்மைக்குத் தாயாக நின்று சொல்லும் அக் காட்சி பேராசிரியர் நெஞ்சை நன்கு தொட்டிருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.
'பின்னே வருவதை முன்னே
− யுணர்வபோல் வண்டலின் மணவினை மகிழ்வோ
டாற்றியுஞ் சிறார்.தம்மை யீன்று சீரொடு
வளர்ப்பபோற் களிமட் பாவை யழகுறச் செய்து பூவினைச் சூட்டித் துகிலினை யுடுத்திச் சீராட்டி யோராட்டுஞ் சிறுமிகள்."
என்றைக்குமே நம்மிடம் இருக்கத்தான் போகிறார்கள். பின்னே செய்யப்போவதை முன்கூட்டியே உணர்வது போல் மண் விளை யாட்டிலே ஈடுபடத்தான் போகிறார்கள்.
யாழ்ப்பாணத்திலே மக்கள் வாழ்க் கையிற் கண்டு தெளியக்கூடிய ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பேராசிரியர் கூர்ந்து அவ தானித்து நோக்கியிருப்பது " காதலி ஆற் றுப்படைச் சித்திரங்களில் இருந்து பெறப் படும் உண்மை. இன்னும் ஒரு நூற்றாண் டினுள் யாழ்ப்பாண மக்கள் வாழ்வு முறை கள், நடத்தைகள் முற்றாக மாறிவிட்டா
140 -

Page 167
லுங் கூட இன்றைய வாழ்க்கையை மதிப் பீடு செய்யும் ஒரு உரைகல்லாக என்றைக் குமே "காதலி.ஆற்றுப்படை விளங்கும் என் பதில் ஐயம் இல்லை. மக்கள் வாழ்க்கையை முழுப் பிரதிபலிப்பாகக் கொண்டு, யாழ்ப் பாண மண் வளத்தின் பூரணத்துவமான நிறையழகை உணர்த்தி நிற்கும் ஒரு இலக் கியம் "காதலி ஆற்றுப்படை' போன்று தோன்றியிருக்கவில்லை என்பது பலரின் கருத்து.
பருத்தித்துறையிலே நெல்லண்டையென் றால் அதற்கென்றொரு தனிமகிமை, தனித் துவம். அக்காலத்தில் யாழ்ப்பாணக் குடா நாட்டிலே வாழ்ந்துகொண்டிருந்த கூத் தாண்டிகள் எல்லோருக்குமே இந் நெல்லண் டையின் சிறப்பைப் பற்றி நன்கு தெரியும் யார்தான் மறந்தாலும் ஈழத்து நாட்டுக் கூத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள் எவருமே நெல்லண்டையை மறந்துவிடப் போவதில்லை. இங்கு நாடகத் தமிழ் வளர்ந் தது. நாடகத் தமிழ் வளர்த்த பெருமை இதற்கிருந்தது. நெல்லண்டையில் எப்பொ ழுதும் ஒரே கலகலப்பு. யாழ்ப்பாணத்து மக்கள் நாடக ரசிகர்கள். எனவே அவர்கள் நாடகம் பார்க்கப் போவதே தனியழகு தான்.
'கூத்துப் பார்க்கக் கூர்நிலா
வேளையிற் சேர்த்துப் பலரைச் சிந்துகள் பாடிக் கையில் தாளங் கணக்குறத் தட்டி ஆர்ப்பொடு தெருவில் ஆடவர்
பெண்டிர் நெல்லண்டை நோக்கி நல்ல சோடனை செய்யும் பெரிய தம்பியின் புதல்வன் நாடகத் தமிழை நன்கண
முணர்ந்தோன் ஆடலும் பாடலும் அமைவரு மாசான் அண்ணாவி தம்பையன் அருமையாய்ப் பழக்கிய விலாசம் பார்க்க வெற்றிலை யருந்தி விரைந்து நடப்போர்.”
அன்றெல்லாம் நிறைய இருந்தார்கள்.
இன்றும் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் "சேர்த்துப் பலரைச் சிந்துகள் பாடிக் கை
, 1 است.

யில் தாளங் கணக்குறத் தட்டி ஆர்ப்பொடு தெருவில் ஆடவர் பெண்டிர்" நாட்டுக் கூத்துகளுக்குச் சென்று வந்ததைப் பேராசி ரியர் காட்டும் விதம் அழகியதொன்றாகும்.
நாடகத் தமிழ் வளர்ந்தது. இயல் வளர்ந்தது. இசை வளர்ந்தது. இயல் இசை நாடகம் மூன்றையும் பேணிவளர்த்த வர்கள் நமது மக்கள். கல்வியறிவுமேலோங்கி வளர்ந்தது நமது நாட்டில், உயர்ந்த இலக் கண இலக்கிய வல்லுனர்கள் எங்கள் ஈழத் திலேயே வாழ்ந்தார்கள். அவர்களாற் கல்வியறிவு மேலோங்கி வளர்ச்சியுற்றது. அந்த அறிவுச் செம்மல்களின் அறிவோசை களை மக்கள் கேட்டுக்கொண்டே இருந் தனர். “ gëri griTdi) புலவன் சிவ சம்பு', 'ஆகம பண்டிதன் அருமறைக்குரு மணி முத்துக்குமாரசுவாமி', 'கோதிலிலக் கணக் கோவிந்த னென்னுங் குமார சுவா மிப் புலவன்', இப்படியாக எத்தனையோ அறிஞர்கள் தமிழ் வளர்த்துக் கொண்டு தான் இருந்தார்கள்.
**வைகறை யாமம் வளம் பெறு
L 16T956) aw&& கைவல் பாணர் கற்றுக் கொடுக்க இசையொடு கீத மியம்பு கிறார்கள்."
எழும்பிக் கொண்டிருக்கும் பல்வகைப் பட்ட இசைக் கருவிகளின் நாதம் காதில் வந்து பாய்கிறது. இத்தகைய நிறைவு பெற்ற, அறிவு ஒளி துலங்கிய இடந்தான் காதலன் பதி என்கிறார் - பேராசிரியர்.
காதலன் ஊராக வர்ணிக்கப்படும் பிறந்தகத்தின் மாண்பைக் காதலிக்குக் கூறிவிட்டு, வரும் பாதையையும் அந்தப் பாதையை ஊடறுக்கும் கிராமங்களையும் சித்தரித்துக் காட்டுகின்றார். காதலி ஆற் றுப்படையைப் படிக்கும் ஒருவன் யாழ்ப் பாணத்தையே புரட்டிப் பார்க்கிறான். "காதலி ஆற்றுப்படை, யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சுற்றிப் பார்க்க விரும்பும்
ஒருவனுக்கு யாழ்ப்பாணத்து மக்கள் வாழ்க்
கையைக் கண்டறிய விரும்பும் ஒருவனுக்கு ஒரு சுற்றுலாக் கைநூல் என அமையத் தக்கது. ஒருவன் யாழ்ப்பாணத்தைப் பார்க்

Page 168
காமலே யாழ்ப்பாணத்தைப் பற்றி நிறை யத் தெரிந்து கொள்ள இந் நூல் உதவ வல்லது.
காதலி ஆற்றுப்படையை ஒரு தேசிய இலக்கியமாகக் கொண்டாடத்தக்க வகை யில் பேராசிரியர் அதனை யாத்துள்ளார். வாழும் - வாழப்போகும் தேசிய நெடி நிறைந்த இந்த நூல் எமது ஈழத்து அண் மைக் கால விழிப்புணர்வுக்கு HL} யெடுத்துக் கொடுக்கும் ஆதாரமாக விளங்கு வது தனிப் பெருஞ் சிறப்பு.
பேராசிரியரது நாடகங்களிலும் யாழ்ப் பாணப் பேச்சுத் தமிழிலேயே, அதுவும் வடமராட்சியில் அவர் வாழ்ந்த இளமைக் காலத்தில் பேசப்பட்ட பேச்சிலேயே அமைந் திருத்தல் எல்லோரும் நன்கறிந்த ஒன்று. இந்த நாடகங்களும், பேராசிரியரை மண் ணின் மைந்தனாகவும், யாழ்ப்பாணத்தை அதுவும் சிறப்பாகத் தான் பிறந்த மண் ணான பருத்தித்துறைப் பிரதேசத்தை காதலித்த சிந்தையினராகவும் என்றும் பறைசாற்றிய வண்ணமே இருக்கும் என் பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை.
இவ்வாறு,தமது ஆசிரியரான முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் வழி நின்று இயல், இசை, நாடகம் ஆகிய வற்றை வளர்க்க முயற்சி செய்ததோடல் லாமல், தமது ஆக்கங்களில் தான் பிறந்து வளர்ந்து ஆளான மண்ணின் வாசனையை சாசுவதமாகத் தனது நாடகங்களிலும், கவிதைகளிலும் விட்டுச் சென்ற பேரா சிரியரின் பணி மகத்தானதொன்று.
இவரிடம் சிறப்பாக அமைந்த குண விசேடம் தன்னலமற்ற தன்மையே என லாம். பிறர் போற்றுவதையும், தூற்று வதையும் ஒப்பமதித்து வாழ்ந்த இப் பெரு மகன் தாம் தயாரித்து நடாத்திய நாட கங்களின் முடிவில் அருட்பெரும் வள்ள லாரின்,
ബങ്ങ
14

' கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்
பருளும் களிப்பே காணார்க்கும் கண்டவர்க்கும்
கண்ணான கண்ணே'' என்று தொடங்கி,
' எல்லார்க்கும் பொதுவில் நடம்
இடுகின்ற சிவமே என்னரசே யான் புகலும் இசையும்
கேட்டருளே."
என்று முடியும் பாடலை மாணவர்களைக் கொண்டு பாடுவிப்பார். இப் பெரியார் 1965ஆம் ஆண்டில் மறைந்தாலும், அவரது மாணவப் பரம்பரையினருள் என்றும் சிரஞ் சீவியாய் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்பது திண்ணம்.
" காதலி யாற்றுப் படையென ஒருநூல்
கற்றவர் காமுறக் கவினோடு ஒதிடும் கீர்த்தி யாழ்க்குடா நாட்டின் ஒண்மைசால் ஊர்நலம் ஒளிர்ந்தே மேதகு அழகு விஞ்சிட யாத்தான் மிகுதமிழ் ஆய்ந்த பேராசான் தீதகல் நெஞ்சச்செவ்வியோன் இனியன்
திகழ்கணபதிப் பிள்ளை
சீர்பெரிதே - தமிழ்த் துறைவன்.
இக் கட்டுரைக்கு உதவிய நூல்கள்:-
1. கலையருவி கணபதிப்பிள்ளை -
த. சண்முகசுந்தரம் அவர்களின் கட்டுரை தமிழியற் கட்டுரைகள் - வெளியீடு-சுப்பிரமணியம் புத்தக சாலை, யாழ்ப்பாணம்.
2. காதலி ஆற்றுப்படைக் காட்சி"அனு” எழுதிய கட்டுரை.
3. பேராதனைப் பல்கலைக்கழக
வெளியீடு -
இளங்கதிர் 1956-1957ம் ஆண்டு

Page 169
OEDக்க தி 4
கந்தையா குணராசா
*ஈழம் இலக்கிய வளர்ச்சியில் தமி ழகத்தினைவிட இருபது வருஷங் கள் பின்தங்கியுள்ளது" - பகீரதன், 1960.
இக்காலத்திற் கல்வியறிவில்லாத புரட்சி எழுத்தாளர் தாந்தாம் விரும்பியபடி சான்றோர் வழக் கைத் தகர்த்தெறிந்துவிட்டுப் புதிய வழிகளில் எழுதத் துணிந்துவிட் டனர். அத்துணிவே பேதமை யால் எழுந்த துணிவாகும்." - சோ. இளமுருகனார், 1962.
*" இன்றைய சிறுகதைப் படைப்பில் இழிசினர் வழக்கே அதிகரித்துவிட் டது. பேச்சுத் தமிழுக்கு இட மளிக்கும் பொதுவுடைமைவாதி கள் தமிழைக் கொலை செய் கிறார்கள்' - ஆ. சதாசிவம், 1963.
** மக்களின் அன்றாடப் பிரச்சினை களை எழுதக்கூடியவர்கள் தாம் முற்போக்கு எழுத்தாளர்கள். உல கில் சிறந்த எழுத்தாளர்களாகக் கருதப்படுபவர்கள் எல்லோரும் அதிகமாகப் பொதுவுடைமைவாதி களே. '' - டொமினிக் ஜீவா, 1963.
a 43

3Oද්විග්‍රෑණට: 2Wiga)67
(செங்கை ஆழியான்)
கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதை விடப் பிழையானது கலை கட்சிக் காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதியிருந்தது. பின்னதில் அந்த வழி கொஞ்சமுமில்லை," - மு. தளையசிங்கம், 1963,
ஈழத்துச் சிறுகதைகளுக்கு அடிக் குறிப்புத் தேவை.' - கி. வா. ஜகந்நாதன், 1966,
மனிதனின் ஆத்மார்த்த, சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை பற்றிய சகல அம்சங்களையும் மனித முதன்மை என்ற கட்டுக் கோப்புக்குள் வைத்து விளக்குவ தாக இருத்தல்வேண்டும். அத் தகையதொரு நோக்கினைத் தரும் முதன்மையான வாதம் மார்க்சீய
வாதமேயாகும்." - கா. சிவத் தம்பி, 1978,
LDITridigë uj: சித்தாந்தங்களைத்
தமது படைப்புகளில் கொண்டுவரு பவர்கள் அதற்குமப்பால், காலதேச வர்த்தமானங்களுக்கு ஏற்பச் சிந் திப்பதில்லை. முடிந்த முடிவாக அதையே கொண்டுள்ளனர். மார்க்

Page 170
A
சீயச் சித்தாந்தங்களைக் கெளரவிப் பவர்கள், அதற்குமப்பால் மனித குல மேன்மைக்காகத் தத்துவங் களைத் தேடல் செய்து ஆக்க விலக்கியம் படைக்கிறார்கள்." -- செங்கைஆழியான், 1980.
கட்சி என்று வரும்போது பல அறிவுத்துறைகள் அடைபட்டுத் தான் போகின்றன. மரபு, தேசிய இலக்கியம், மண் வாசனை, இழி சினர் வழக்கு போன்ற சொற் றொடர்களின் பின்னே இலக்கிய குருஷேத்திரங்கள் தோன்ற கட்சி மாயை உதவியது." - செம்பியன் செல்வன், 1984.
ஈழத்திலக்கியங்களுக்கு அகராதி வேண்டும். இலங்கை இலக்கியத்தை இங்கு எல்லோரும் பரவலாகப் புரிந்துகொள்ள இலங்கைப் பேச்சு வழக்கிலுள்ள சில சொற்கள் இடையூறாக இருக்கின்றன. சிறு அகராதி தயாரித்து வெளியிட லாம். ' - கி. ராஜநாராயணன், 1984.
அது தமிழ் இலக்கியமேயில்லை. மொழி தமிழ் என்பதற்காக இதோடு கலக்கத் தேவையில்லை. வெறும் ஈழ இலக்கியம் என்றே கூறிவிடலாம். ஈழ இலக்கியம் அங்கீ காரம் பெற ஒரு இருபது வரு டம் போகவேண்டும்." - விக்கிர மாதித்தன், 1984,
தமிழ்நாட்டில் உள்ள அளவிற்கு ஈழத்தில் இலக்கியமில்லை. ஈழத்து இலக்கியம் கடந்த இருபது வரு டங்களாக அரசியல் தன்மை பெற் றுத் திரிந்துவிட்டது. இலக்கியம் இலக்கியமாக இருக்கவேண்டும், இலக்கியத்தில் அரசியலைத் தேடு வதும், அரசியலில் இலக்கியத்தைத் தேடுவதும் அபத்தமானது. பெரிய புரட்டு இது. இலக்கியம் என்ற போர்வையில் அரசியல் கோஷங்
- Id

களையும், கட்சித் துண்டுப்பிர சுரங்களையும் கதை மாதிரியும், கவிதைமாதிரியும் எழுதிப் பம்மாத் துப்பண்ணி ஏ மா ற் று வ  ைத த் தவிர்க்கவேண்டும். ஈழம் இந்த வியாதிக்கு உடனடியாக நல்ல கஷாயம் சாப்பிடவேண்டும் ,'' - வண்ண நிலவன், 1984.
1960ஆம் ஆண்டு பகீரதன் கூறிய காலக்கெடு 1980இல் முடிவடைந்து போயிற்று. 1984இல் விக்கிரமாதித்தன் என்ற புதுக் கவிதைக்காரர் ஈழத்து இலக் கியம் அங்கீகாரம் பெற இருபது வருடம் போகவேண்டும் என்றதால் இன்னொரு இருபது வருடக் காலக்கெடு நீடிக்கப்பட்டு விட்டது. ஆக ஈழத்திலக்கியத்தின் வளர்ச்சி நிலையை 2004ஆம் ஆண்டுதான் மதிப் பீடு செய்யவேண்டுமோ? வண்ணநிலவன் சொல்வதுபோல இப்போதே கஷாயம் குடித்தால்தான் ஆரோக்கியமான சுகப் பிரசவம் ஆகுமோ?
ஈழத்தின் நவீன இலக்கியகர்த்தாக் களின் ஆக்கவிலக்கியங்கள் முக்கியமாக இரு தெளிவான கோட்பாடுகளை அடி நாதமாகக் கொண்டவை. ஒருசாரார் மார்க்சீயத் தத்துவங்களையும், அரசியற் சித்தாந்தங்களையும் பெய்து, சோஷ லிஸ்ட் யதார்த்த இலக்கியம் படைக்க விரும்புகிறவர்கள். பேராசிரியர் கா. சிவத்தம்பி சொல்வதுபோல **வர்க்க பேதமற்ற ஒப்பில்லாச் சமுதாயத்தைச் சிருஷ்டிக்க மனிதப் பெருங்குடி மக்கள் நடத்தும் போராட்டத்தையும் அதில் தோன்றும் புதிய சமுதாய அமைப் பையும் பிரதிபலிக்கும் சோஷலிஸ்ட் யதார்த்த இலக்கியம் படைக்க முயல் பவர்கள்,' "
மறுசாரார் ஓர் பேரறிஞனின் தத்து வங்களுள் தம்மைச் சிறைப்படுத்தாது, புதிய தத்துவங்களைத் தேடியும், ஆக்கி யும் தாம் வாழும் சமூகத்தின் மேன் மைக்காக அவற்றைத் தம் எழுத்துக்
-

Page 171
களில் புகுத்தியும் இலக்கியம் படைப்
பவர்கள்.
முன்னவர்கள்பற்றிப் பின்னவர்களின் கருத்து: **இவர்கள் ஆக்கவிலக்கிய கர்த்தாக்களல்லர். புதிய தத்துவங்களை யும், கோட்பாடுகளையும் ஒரு படைப் பாளியாக நின்று தாமாக உருவாக்கத் திறனற்றவர்கள். மார்க்ஸ், ஏஞ்சல்ஸ், மாசேதுங் முதலானோரின் தத்துவங் களுக்கு வடிகால்களாக அவற்றினை மீள மீளத் தமது படைப்புக்களில் எடுத் தாள்பவர்கள். உலகப் பொதுவான தத்து வங்கள் எல்லா நாடுகளுக்கும் ஒரேமுறை யில் அமையுமென நம்புகிறவர்கள். இவர் களிடையே சுய சிந்தனையாளர்கள் தோன்றவில்லை. *
பின்னவர்கள்பற்றி முன்னவர்களின் கருத்து:- "இவர்கள் ஆக்கவிலக்கிய கர்த்தாக்களல்லர். இவர்களுக்குத் தெளி வான இலக்கியக் கோட்பாடு இல்லை. மரபிலக்கியம் படைப்பவர்கள். இலக் கியத்தை ஒரு நுகர்விற்கான வியாபாரப் பண்டமாக்குபவர்கள். மக்களது பலவீன உணர்ச்சிகளுக்குத் தீனிபோடுபவர்கள்; பிற்போக்குவாதிகள். '
இவ்விரு கோட்பாட்டு வேறுபாடு களும் ஈழத்து இலக்கியவாதிகளிடையே 1960/1964 காலகட்டத்தில் பெரும் இடை வெளியை ஏற்படுத்தியிருந்தன. ஒருவர் மேல் ஒருவர் மேடைகளிலும் பத்திரிகை களிலும் வசைமாரி பொழிந்தனர். பரம வைரிகளாக நடந்துகொண்டனர். 1962/ 1963இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யில் பேராசிரியர் ஆ. சதாசிவம் தலைமை யில் நிகழ்ந்த சாகித்திய மண்டல விழா வில் இவ்விதிகள் உச்சமடைந்தன. அந்த விழாவை முற்போக்கு எழுத்தாளர்அணி, கைக்குண்டு, கூழ் முட்டை, தூசண வார்த்தைகள், அடி, உதை என்பன வற்றை வீசி வழங்கிக் குழப்பியடித்தது. இதுதான் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நிகழ்ந்த முதலாவது ரெளடித்தனமாகும். பேராசிரியர் கா. சிவத்தம்பி சொல்வது போல "இழிசினர் வழக்கு என்னும்
ബ !

வாதம், நவீன இலக்கிய ஆக்க எழுத் தாளர்களுள் பலரின் சமூகப் பின்னணி யைத் தாக்குவதாகவும் அமைந்தபடியால் இவ்வாதத்திற்கு இலக்கிய வரலாற்றடிப் படையில் இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கம் பலத்த எதிர்ப்பினைத் தெரிவித்தது” எனலாம்.
இவ்வாறான சூழ்நிலையில் பிறந்த இலக்கியங்கள் ஏதோ ஒருவகையில் ஒவ் வொரு அணியினரால் விமர்சிக்கப்பட் டன. ஆக்கபூர்வமான நலன்களைக் கூறு வதிலும், அவற்றில் அவதூறான குறை களைத் தேடுவதிலும் இரு அணியினரும் ஓயாது ஈடுபட்டனர். தென்னிந்தியாவில் நமது விமர்சகர்களால் அறிமுகப்படுத் தப்பட்ட ஈழத்து இலக்கியங்களாக முன் னவர்களின் ஆக்கங்களே அமைந்தன. சிற்றிலக்கிய ஏடுகளில் வெளிவந்த சிறு கதைகள், கவிதைகள் என்பனவும் பதிப் பகங்கள் வெளியிட்ட நூல்களும் இவர் களது எழுத்துக்களாக அறிமுகமாயின. எனவே, ஈழத்து ஆக்கங்களாக அங்கு அறிமுகமானவற்றின் அடியொட்டி, தர மொட்டி தென்னிந்திய இலக்கியவாதி களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் இருபது வருட இடைவெளியைச் சுட்டு வனவாக அமைந்தன. அரசியல் கோஷங் களையும், கட்சித் துண்டுப்பிரசுரங்களை யும் கதைமாதிரியும், கவிதைமாதிரியும் எழுதிப் பம்மாத்துப் பண்ணுவதாகக் குரல் கிளம்பியது.
ஈழத்து இலக்கியத்துக்குத் தென்னிந் திய இலக்கியவாதிகளின் அங்கீகாரம் தேவையென்றும், ஈழத்து ஆக்கவிலக்கியங் களைத் தென்னிந்திய ஆக்கங்களோடு ஒப் பிட்டு மதிப்பிடுவதும் சரியான இலக்கியச் செல்நெறியாகாது. எனினும், எமது பலத் தையும், பலவீனத்தையும் மற்றவர் சுட் டும்போது மெளனம் சாதிப்பதும் நமது இலக்கியம் நோபல் பரிசுக்குரிய அந் தஸ்தை அடைந்துவருகின்றதென்று பீற் றிக்கொள்வதும் ஆரோக்கியமான இலக் கியச் சிந்தனையாகாது.
நமது பலமென்ன?

Page 172
புனை கதைத்துறையில் ஈழத்து இலக் கியம் ஆழமாகக் கால்களைப் பதித்துள்ள தென்பதை மறுப்பதற்கில்லை. சில் gisr மான படைப்புக்கள் எம்மிடமுள்ளன. ஈழத்து எழுத்தாளருக்கு இருக்கின்ற சாற்ப வாய்ப்புக்களையும், வசதிகளை யும் பயன்படுத்தி அவர்க்ள் தமிழிலக்கி யத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய் துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. பட்டியல் போடுவது என் நோக்கமன்று. எனினும் பணத்தாலும், வாசகர் பலத் தாலும் ஒரளவு இலக்கியத் தரத்தாலும் உயர்ந்து நிற்கின்ற 'ஆனந்த விகடன்" நடாத்திய நாவல் போட்டியில் ஈழத்தின் அருள் சுப்பிரமணியத்தின் "அக்கரைகள் பச்சையில்லை" என்ற நாவல் இருபத்தையா யிரம் ரூபாவை முதற்பரிசாகப் பெறத் தகுதியானதென்ப்து’ குறைத்து மதிப்பிடு வதற்குரியதன்று. 1989ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் சிறந்த சிறுகதைத் தொகுதியாக GରଣF. யோகநாதனின் தொகுதி தெரிவாகிப் பரிசில்பெற்றிருப் தும் நமது இலக்கிய வறுமையைக்குறிக் கின்ற நிகழ்வன்று.
எனினும் இன்று நமது இலக்கியம் வளர்ச்சிப்படிகளில் ஏறிவந்து ஒரு தேக்க நிலையில் ஸ்தம்பித்துவிட்டதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்கமுடியாது. அதற் குப் பல காரணங்கள் இருக்கின்றன:-
1. எழுத்தாளன் சமூகப் பார்வை யாளன்; சமூகப் பங்கேற்பவன்; சமூ கத்தை வழிநடாத்துபவன். எனவே இன் றைய சமகாலப் பிரச்சினைகளை எவ்வாறு எழுத்தில் வடிப்பது என்ற மலைப்பும் பயமும் அது குறித்து ஆழ்ந்த தெளிவின் மையும் தேக்க நிலையை உருவாக்கியுள் ளது. சமகாலப் பிரச்சினைகளை எழுத்துல கில் ஸ்திரமாகக் காலூன்றியவர்கள் தமது ஆக்கங்களில் முழுமையாகக் கொண்டு வரவில்லை. புதிய இளந்தலை முறையால் ஆக்கப்படுகின்ற சம காலப் பிரச்சினைகள் சுட்டுகின்ற ஆக்கங்கள் வெறும் விபரணங்களாகவும், சம்பவ விளக் கங்களாவும் இருக்கின்றன.
2. புத்திலக்கியம் படைக்கின்ற அவாக் கொண்டவர்களுக்குச் சரியான பாதையைக் காட்டக்கூடியவர்கள் இல் லைப்போலப்படுகின்றது. பத்திரிகை ஆசிரியர்கள் வரும் ஆக்கங்களைப் படித் துத் திருத்தி வெளியிட்டு இலக்கிய வாதி களை இனங்கண்டு ஊக்குவிப்பவர்களாக இன்றில்லை. ஒரு ராஜ அரியரத்தினம்,
- 14

ஒரு பேராசிரியர் கைலாசபதி, ஒரு சிற்பி சரவணபவன் போன்ற பத்திரிகை ஆசிரி யர்களின் மனப்பாங்கு இன்றைய பத்தி ரிகை ஆசிரியர்களிடம் இல்லை. பிரபல் யங்களை வெளியிடுவதன் மூலம் பத்திரி கைகளை நிரப்பிக் கொள்கின்றனர். அல் லது வருவனவற்றை அப்படியே வெளியி டுவதன் மூலம் பக்கங்களை நிரப்பிக் கொள்கின்றனர்.
3. எழுத்தாளனுக்கு வழங்கும் ஊக் குவிப்பு போதுமானதாக இல்லை. பத் தாண்டுகளாக இலங்கை சாகித்திய மண் டலம் ஆக்கவிலக்கியத்துக்கான பரிசில் களை வழங்கவில்லை. சிங்கள ஆக்க இலக்கிய கர்த்தாக்கள் பணப்பரிசில்களை யும் விருதுகளையும்பெறதமிழ்எழுத்தாளர் கள் கவனிக்கப்படாது இருந்தனர். அக் குறைபாட்டினை யாழ். இலக்கிய வட்டத் தின் ஒரு அங்கமான இலங்கை இலக்கி யப் பேரவை ஒரளவு தீர்த்து வைத்தது. தகவம் இலக்கிய அமைப்பு தீர்த்து வைத் தது. இன்று அக்குறை நிவர்த்திக்கப்படு கிறது. இலங்கையில் வெளிவரும் பத்தி ரிகைகளில் கொழும்புப் பத்திரிகைகள் வழங்குகின்ற சன்மானங்கள் இருதசாப்தங் களுக்கு முற்பட்ட அளவினதாகும். யாழ்ப் பாணப் பத்திரிகைகள் இன்றும் இலக்கிய கர்த் தாக்களிடம் விடயத்தைத் தான மாகவே கேட்டு வாங்குகின்றன.
4. இளம் எழுத்தாளர் பலருக்கு ஆழ்ந்த பகைப்புல அறிவில்லை. சமூக, அறிவியல், பொருளாதார நூல்களில் பரிச் சயமில்லை. அத்தகையோரால் ஆக்கப் பட்டு வெளிவந்திருக்கும் நூல்களைச் சிலர் அளவிற்கு மீறிப் புகழ்ந்து தள்ளி, அந்த இலக்கிய கர்த்தாவைப் பிஞ்சிலேயே கருக வைத்து விடுகின்றனர். சிலர் மிக வசை பாடி, அந்த இளம் எழுத்தாளனை முளையிலேயே சாகடித்து விடுகின்றனர். இளம் எழுத்தாளரது எழுத்துக்கள் அச் சில் வெளிவந்தபோது, விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப் பக்குவமும் அவர் களுக்கு வந்துவிட வேண்டும். அவ்வா றில்லை.
இவ்வாறான இலக்கியத் தடைக ளுக்கு மத்தியில் ஈழத்தில் புத்திலக்கியம் பிறக்கும் என்பதும், உலக இலக்கியங்க ளுக்கு ஈடாக மாறும் என்பதும் இலகு வில் அடையக்கூடிய குறிக்கோளன்று. இந் நிலையில் இருபது வருடக் கணக்கு கள் ஒவ்வோராண்டும் எவரெவராலோ கூறப்பட்டால் அதற்காக நாம் எதைச் செய்யமுடியும்?
ஆக்கவிலக்கியம் படைப்பதைவிட! )

Page 173
Lண்பாடு நாட்டுக்கு நாடு, சமூகத் திற்குச் சமூகம் வேறுபடுபவை. அவற்றுள் எது சிறந்தது எது சிறப்பற்றது என்று கூற முடியாது. மரபுகள், பழக்க வழக் கங்கள், சூழல் உந்தல்கள் என்பன பண் பாடுகளை உருவாக்குகின்றன.
தமிழர் வாழ்வில் காதலும் வீரமும் வாழ்வியற் கூறுகளாக விளங்கின. அவை அகம், புறம் என இலக்கணம் வகுக்கப்பட் டன. ஐவகை நிலத்திற்கும் இவை ஐந்து வெவ்வேறு ஒழுக்கங்களாக வகுக்கப்பட்
டன. காதலுக்குரிய ஒழுக்கங்கள் புணர் தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் எனப்பட்டன. இவைகுறிஞ்சி, பாலை,
முல்லை, நெய்தல், மருதம் எனும் நிலங் களுக்கு உரியனவாயின.
மனித இயக்கத்திற்கு ‘காதல்" அடிப் படை உணர்வாய் நிற்கின்றது. இயல் பூக்கங்களில் ஒன்றான இதனை, மகலுக்கம் என்று உளநூலார் கூறுவர். ஆதலால் தமிழர் வாழ்பியலை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்களில் இது பெரிதும் சிறப்பித்துக் கூறப்பட்டது. ஐவகைத்தி ணைகளிலும் வரும் புறப் பாடல்களை விட அகப்பாடல்கள் இன்றும் சுவையும் பயனும் விளைவிப்பதாக இருக்கின்றன. இதனை அகப் பொருள் விளக்கம் எனும் நூல் அழகுறக் கூறுகிறது. ஒரு தலை மகன் மனைவியோடு பிரியாமல் இருக்கும் காலம் எதுவென வகுத்துக் கூறுகிறது
 

"
SMilli
ப்துஸ்ஸமது
垒
அகப் பொருள். பிரியப் பெறாத அக்கா லமாவது :
பூத்த காலை புனையிழை மனைவியை நீராடிய பின் ஈராறு நாளும் கருவயிற்றுாறும் காலமாதலில் பிரியப் பெறாஅன் பரத்தையிற்
பிரிவோன்
என்பது சூத்திரம், தலைமகன், மனைவி மாதாந்தப் பூப்பெய்தி prnrganu பின், பன்னிரு நாளும் அவள் வயிற்றிலே கருவுண்டாகும் காலமாதலால் அந்நாட்க ளில் அவன் மனைவியை விட்டும் டிரி பெறாதவனாக இருக்க வேண்டும். இக்கா லத்தில் அவன் பரத்தையிற் சேரலை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படிக் கூறுகிறது அகத்துறை இலக்கணம்.
எனவே ஒரு பெண்ணைக் காதலிப்ப தற்கும் அவளை மனைவியாகப் பெறுவ தற்கும் ஒரு ஆணுக்குச் சுயாதீனமான வரைவிலக்கணங்கள் உள்ளன. பரத்தை யர் சேர்தலும் கூட மருத நிலத்தின் ஓர் ஒழுக்கமாகக் கொள்ளப்படுகிறது.
கம்பராமாயணத்தில் இலக்குவணன், கெளசிக முனிவர் முதலியவர்களோடு மிதிலைக்குச்செல்கிறான் இராமன். மிதிலை அரசன் செய்யும் வேள்வியைப் பார்ப்பதும் சீதையை மனைவியாகக் கொள்வதற்கு ஜனகன் வைத்த "வில்முறித்தல்" நிகழ்வில் தன் வீரத்தைக் காட்டி சீதையை அடை வதும் இராமன் நோக்கங்களாகும். இவ்

Page 174
வாறு நோக்குடன் இராமன் வரும் செய் தியை சீதை எவ்வாறோ அறிந்திருக்க வேண்டும். சீதை அவன் வரவுக்காக மிதிலை மாநகர் மாளிகையின் மாடியிலே காத்து நிற்கிறாள். இராமனும் வருகிறான். கீழே நின்ற அவனுடைய கண்கள் மேலே நோக்குகின்றன. மேலே நின்ற அவளுடைய கண்கள் கீழே நோக்குகின்றன. இதனைக் கம்பன் வெகு பவ்வியமாகக் கூறுகிறான்.
எண்ணரும் நலத்தினாள்
இணையன் நின்றுN கண்ணொடு கண்ணிணை
கவ்வி ஒன்றையொன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
என்பது பாட்டு. இரண்டு பேரும் ஒரு வரையொருவர் சந்திக்கின்றனர். அதனை "கண்ணொடு கண் இணை கவ்வி" என் கிறான் கம்பன். இது உணர்வு நிலை. அதற்கடுத்து "உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட என்று எல்லை இகந்து புணர்ச்சி நிலைக்கு ஆகின்றனர் இருவரும். பெண்ணுக்கு பயிர்ப்பு என்று ஒரு குணம் உண்டு. பிற ஆடவரிடத்தே வேற்றுணர் வோடு விலகிக் கொள்ளுதல் என்பது இதன் பொருள். அந்தக் குணம் சீதை இடத்தே நிறைந்து காணப்படுகிறது என்பதை கம் பன் காட்டத் தவறவில்லை. பாட்டின் தொடக்கமே "எண்ணரும் நலத்தினாள்? என்று வருகிறது. எண்ணுதலுக்கும் முடி யாத சிறப்புக்களை உடையவள் என்று அவளுக்கு கற்பின் அரண் ஒன்றை அமைத்து விடுகிறான் கம்பன், அடுத்து முதலில் பார்த்தவர் யார்? அதனை "அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்" என்று அந்த முதற் பார்வையால் $(Tח" மனே முந்திக் கொள்வதாகக் ofia páprir, பின்னர்தான் சீதை அவனைநோக்குகிறாள். சரி, சீதை அவனிடத்தே நோக்கிய அம்சம் எது? கம்பன் கூறுகிறான்.

நோக்கிய நோக்கெனும்
நுதி கொள் வேல் இணை
ஆக்கிய மதுகையான்
தோளில் ஆழ்ந்தன.
அவன் வீரன். அவனுடைய அகன்ற தோள் யாரைத்தான் கவராது? வேல் அனைய அவளுடைய விழிகள் இரண்டும் வலிமை மிக்க அவனுடைய தோளிலேயே பதிகின் றன. அது என்ன சாமானியமான தோளா? அந்த அற்புதமான தோளில் அவள் கண் கள் பதிந்ததில் வியப்பென்ன? அவனது வீரம் நிறைந்த தோளின் வலிமைச் சிறப் பால் கவரப்படாதவர் யார்தான்? 'சீதை யின்" கண்கள், அவன் கண்களைக் கவ் வினாலும் அவனுடைய வீரமே அவளை முதலில் கவர்ந்தது. இதன் மூலம் சீதை யின் கற்பு நெறிக்கு எவ்வித பங்கமும் வராது காக்கிறான் கம்பன்.
இந்தக் காதல் திருமாலும் இலட்சுமி யும் கொண்ட காதல். ஆமாம்! தெய்வீகக் காதல்! இதில் நாம் பேச என்ன இருக் கிறது? எனினும் அவர்கள் அந்தப் பார்வை யில் என்ன பேசிக்கொண்டார்கள் என்று அறிவதில் நமக்கு ஒரு அவா தோன்று கிறது. அதற்கு வள்ளுவன் இப்படி விடை தருகிறான்.
கண்ணொடு கண்ணினை
நோக்கொக்கின் வாய்ச் சொல் என்ன பயனு மில.
ஆதலால் பேச வேண்டியதில்லை. அப் பார்வையின் பொருளே பேசுவதற்கு எது வும் இல்லை. "வாய்ச் சொல் என்ன பயனுமில்லை" என்று கூறுகிறது.
இவ்விதமான ஒரு பார்வை இஸ்லாமிய காப்பியமான சீறாவிலும் வருகிறது. அது பெருமானார், கதீஜா நாயகியை "பெண் பார்த்த பார்வை'யாகும். அது வித்தியாச மான ஒரு பார்வை இதோ! அக் காட் சியையும் நோக்குவோம்.
கதீஜா நாயகி, மக்கா நாட்டில் பெரும்
செல்வம் படைத்தவர். அவருடைய பிடவை வியாபாரத்தின் முகவராக நபி (ஸல்) அவர்
48 -

Page 175
கள் பணியாற்றி வந்தார்கள். ஆனால் பெரு மானாரோ கதீஜாவைக் கண்டதில்லை. அவரின் பணியாள் மைசறா மூலமே எல் லாத் தொடர்புகளும் நிகழ்ந்து வந்தன. மைசறா பெருமானாரின் நற்குணங்களை யும் நேர்மைச் சிறப்பினையும் அடிக்கடி கதீ ஜாவிடம் கூறுவார். இதனால் கதீஜாவுக்கு பெருமானாரிடம் பெருவிருப்பு ஏற்பட்டது. இதன் விளைவு கதீஜா பெருமானாரை விவாகம் செய்துகொள்ள விரும்பினார்.
பெண்ணைப் பார்க்காமல் விவாகத் திற்கு எப்படி ஒப்புக் கொள்வது? எனவே பெருமானார் பெண்பார்க்கும் ஒழுங்கு ஆயிற்று. கதீஜா ஒரு தவிசில் வீற்றிருந் தார். பெருமானார் அவர் முன் வந்தார். அவருடைய பேரழகு வெள்ளத்தில் கதீஜா ஷ்டைய கூர்விழி என்னும் கயல்கள் நீந்தித் திளைத்தன என்கிறார் உமறுப் புலவர்.
பேரொளி பரப்பீப் பொங்கி பெருகிய அழகு வெள்ளச் சார்பினில் கதீஜா வென்னும் தையல் தம் கரிய வாட்கள் கூருடைய கயல்களோடிக் குதித்தன குளித்துத் தேக்கி வாரிச வதனம் சேர்ந்து மறுக்க முற்றிருந்தவன்றே.
இப்பாடலில் பெருமானாருடைய அழ கினை பேரொளி பரப்பிப் பொங்கி பெரு கிய அழகு வெள்ளம்" என்று கூறுவதில் வியப்பொன்றுமில்லை. அந்த வெள்ளத் தில் கதீஜாவின் ‘கூருடைய கயல்கள் ஒடிக் குதித்தன" என்பது அற்புதமான ஒரு உருவ கமாகும். இந்நிலையில் காதலில் முந்திக் கொள்ளவேண்டிய ஆணாகிய பெருமானா ருடைய நிலை என்ன என்பது நோக்கத் தக் கது. இதோ பாடல்:
காக்குதற் குதித்த வள்ளல் காரிகை வடிவைக் கண்ணால் நோக்கியும் நோக்காதும் போல் நொடியினி லெழுந்தம் மாதின் மாக்கடலனைய கண்ணும் மனமும் பின் தொடர்ந்து செல்லக் கோக்குல வீதி நீங்கிக் கொழுமனையிடத்தில் சார்ந்தார்.
- 4

இங்கே "உலகம் முழுவதும் அருள் பாலிக்க வந்த வள்ளல்" என்று பெருமா னார் குறிப்பிடப்படுகிறார். அத்தகைய சிறப்புமிக்க சீலர் அந்தப் பெண்ணின் பேர ழகை ‘கண்ணால் நோக்கியும் நோக்காதும் போல், நொடியினில் எழுந்து சென்றார்" என்று கூறுகிறார் உமறு. விவாக நோக்க மாக ஒரு பெண்ணைப் பார்ப்பது மார்க் கத்தில் ஆகுமானதே. ஆனால் ஒரு பெண்ணை ஏறிட்டுப் பார்ப்பதும், காம உணர்வோடு நோக்குவதும் இஸ்லாத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது. இது பின்வரும் குர் ஆன் வசனத்தின் மூலம் வலியுறுத்தப்படுகி றது. (நபியே) விசுவாசிகளான ஆண்கள் தங்கள் பார்வைகளை கீழ்நோக்கியே வைத் துத் தங்கள் கற்பைப் பாதுகாத்துக்கொள் ளும்படி நீர் கூறும் (நூர் 24: 30)
தலால் உமறுப்புலவர் இந்த இஸ்லா மிய தர்மநெறி மீறப்படாதவகையில் பெரு மானார் கதீஜாவைப் பார்த்தவாறு எத் தகையது என்று எடுத்துக் கூறுகிறார். ஒரு பெண்ணை அதிகம் உற்றுப் பார்ப்பது பெருமானாரின் அந்தஸ்துக்கு ஏற்புடைத் துமல்ல என்பதை புலவர் அழகுற கூறு கிறார்.
இராமன் சீதையை நோக்கியவாறும், சீதை இராமனை நோக்கியவாறும் சங்க கால தமிழர் சால்பு கூறும் காதல் மரபுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தவை:
பெருமானார், கதீஜாவைப் பார்த்த பார்வை இஸ்லாமிய ஒழுக்கநெறியின் பால் அமைந்த பார்வை:
கதீஜாவின் பார்வையோ ‘மாக்கடல் அனைய கண்ணும் மனமும்" பெருமானா ரைப் பின்தொடர்ந்து செல்பவை. இப் பார்வையில் ஒரு பெண்ணின் ஆற்றாமை யையும், பெருமானாரின் ஆளுடைமையை யும் நாம் காணலாம்.
இரண்டும் இரு வேறு பண்பாட்டுக் கோலங்களின் விளைவாக எழுந்த இரு வேறு பார்வைகள்.
கம்பன் அக் கோலங்களுக்கு தங்க முலாம் பூசினான். உமறு அப் பார்வையை மணி விளக்காக்கி ஒளிரச் செய்தான். O
9 -

Page 176
So நாட்டின் பண்பாடு சிறப்புற்று விளங்குவதற்கு காரணமாக அமைவது அந்நாட்டு மக்களுடைய கலை, கலாசார பரிணாம வளர்ச்சியாகும். அந்த வகையில் மட்டக்களப்பு மாநில மக்களுடைய கிரா மியக் கலைகள் பல அம் மக்களின் சிறந்த கலை ஆர்வத்தையும் வாழ்க்கைச் சிறப் பினையும் பொருளாதார வளத்தையும் எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. சிறந்த கிராமியக் கலைகளின் உறைவிடமாகவும் வளர்விடமாகவும் இம் மாநிலம் விளங்கு கின்றது.
கூத்து
இக் கிராமியக் கலைகளுள் நாட் டுக் கூத்து, வ ச ந் த ன் கூ த் து, கொம்பு முறிப்பு விளையாட்டு, கும்மி, கோலாட்டம், குரவை, கரகம், காவடி என்பவை குறிப்பிடத்தக்கவை. பாரம்பரிய கலைகளுள் இங்கு ஆடப்பட்டு வரும் நாட்டுக்கூத்தே பிரதான இடம் பெறுகிறது. கூத்து இருவகையினதாக இங்கு ஆடப்படுகிறது. வடமோடி, தென் மோடி என்பவையே அவையாகும். பெரும் பாலான கிராமங்கள் விவசாயம் செய் பவையாக இருப்பதால் மக்களுக்கு போதிய ஒய்வு இக் கலைகளை வளர்ப்பதற்கு கிடைக்கின்றது. வடமோடி, தென்மோடி ஆகிய இருவகை கூத்துக்களும் எல்லாக் கிராமங்களிலும் பழக்கப்பட்டு அரங்கேற்
-
 

O O тUбdг.
it.
28)6O2Dáis
மன்னசிங்கம்
50
றப்படும். இவ்விரண்டு வகைக் கூத்துக் களுக்கும் இடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. முக்கியமாக ஆட்டம், பாட்டு, தாளம், உடை, ஒப்பனை ஆகிய வற்றிலேயே இவை இடம்பெறுகிறது. வட மோடிக் கூத்தில் அரசர்கள் கொலு வரும் போது அடிக்கப்படும் தாளம்,
*" தகதிக தா தெய்யத் தெய் தெய்
தாத்தெய்யத் தோம் தகதிக தா"
என்று தொடங்கி தக ததிங்கிண தோம் என்று கடைசித்தாளம் இரண்டு அல்லது மூன்று முறை இறுக்கி அடிக்கப்பட்டவுடன் முடிவடையும். இவ்விதம் ஒவ்வொரு பாத் திரத்திற்கும் ஏற்ப தாளங்களும் மாறி அமையும். தென்மோடிக் கூத்தில் இத் தாளக்கட்டு,
"ததித்தாளா தக ததெய்யதிமிதக
தாதிமிகத் தெய்யே ததித்தாளா தக ததெய்யதிமிதக
தாதிமிதத் தெய்யே'
என்று தொடங்கி இம் முற்பகுதி சுமார் 8 தொடக்கம் 12 முறை திரும்பத் திரும்ப படிக்கப்படும் போது வரவுக்கூத்தர் களரி முகப்பில் நின்றவாறே ஆடுவது நியதி யாகும். பெண் பாத்திரங்களுக்கு ஒரு வகையான தாளமும், கட்டியங்காரன், முனிவர், வீரன் என்போருக்கு வேறு வேறான தாளங்களும் அமையும்,

Page 177
வடமோடிக் கூத்தில் இக் கொலுத் தாளம் வைக்கும்போதுவீசாணம் போடுதல், ஒருவர் பின் ஒருவராக பாம்புபோல் வளைந்து ஆடும் ஆட்டம், எட்டடித்தாளம் (8 என்ற இலக்கத்தைப் போல வளைந்து ஆடுதல்)நாலடித்தாளம், வீரஆட்டம்,வீரம் தொனிக்கும் குதி நடை கொண்டு கால் களைத் தனித்தனி முன்னும் பின்னும் நீட்டி துரிதமாய் நான்கு விதமாக மிதித்து துள்ளி ஆடுவதே நாலடி வீர ஆட்டமாகும். இத்தோடு சில கடினமும் நுணுக்கமுமான ஆட்டங்களும் இடம் பெறும். தென்மோடிக் கூத்தில் இவ் ஆட்டங்கள் மிகவும் உடலைக் களைப்படையச் செய்யக் கூடியவை எனவே தான் அவர்கள் அணியும் உடை இலகு வானதாக இருக்கின்றது. வடமோடிக் கூத் தில் நடிகர்கள் அணியும் உடையை கரப்பு உடுப்பு என்று கூறுவர். இது மிகவும் பார மானது. கணோதா, சரிகை மணிகள் முத லியவை பதிக்கப்பட்டு பார்ப்பதற்கு அழ காகவும் கவர்ச்சியாகவும் இருக்கும், தலை யில் அணியும் முடியை கெருடம் என்பர். இது கிரிடம் என்றும் சொல்லப்படும். வடமோடிக் கூத்து நடிகர்கள் வலப்புற மாக சுற்றி ஆடுவார். தென்மோடியில் இடப்புறமாக ஆடுவார். வடமோடியில் வரவுப் பாடலை நடிகர்கள் தாங்களே பாடிக்கொண்டு களரியில் வருவார். தென் மோடியில் அவ்வாறு இல்லை. வடமோடிக் கூத்தில் விருத்தங்களை அதிகம் நீட்டி இசைக்காது படிப்பர். காலமேற்றுதல் தென்மோடிக் கூத்தில் இல்லை. இக் கூத் துக்களை பழக்குபவரே அண்ணாவியார் என்று அழைக்கப்படுவார். மத்தளம், சல் லரி என்பன கூத்திற்கு இசை வழங்கு வதில் முக்கிய இடம் பெறும்.
வசந்தன் கூத்து
அடுத்து வசந்தன் கூத்தை நோக்கு மிடத்து இது கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புள்ள ஒரு கலையாகக் காணப்படு கிறது. வசந்தன் என்ற சொல்லுக்கு நிறைந்த இன்பம் என்னும் பொருள் குறிக் கப்படுகிறது. கண்ணகியம்மன் சடங்குகள் வருடம்தோறும் வைகாசி மாதத்தில் ஆரம்ப மாகி பெளர்ணமி தினத்தன்று நடை

பெறும் அம்மன் குளிர்த்தியுடன் நிறைவு பெறும். இவ்வாறான உற்சவ காலங்களில் கோயில் முன்றில் தோறும் வசந்தன் கூத்து பழங்காலங்களில் நடைபெற்று வந்திருக்க வேண்டும். வசந்தன் கூத்தில் பன்னிருவர் வட்டமாக நின்று கோல் கொண்டு தாள அமைதி பிசகாது பாடலுக்கேற்றவாறு ஆடுதலே வசந்தன் ஆடல் எனப்படும். மத் தளம், சல்லரி ஆகிய வாத்தியங்கள் இசைக் கேற்றவாறு அடிக்கப்படும். வெவ்வேறான சந்தம் கொண்ட பாடல்கள் ஒவ்வொரு பெயருடன் படிக்கப்படுகின்றன. ஆடல் களின் செயலால் அப்பாடல்கள் பெயர் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக வேளாண் மை வெட்டு வசந்தன். அனுமார் வசந்தன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். அதிக மாக வசந்தன் பாடல்கள் வேளாண்மை செய்கை பற்றிய விளக்கங்களை சித்தரிப் பவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு உப்பட்டிகட்டுவசந்தன், அறுவடை வசந்தன் போன்றன.குறிப்பிடத்தக்கன. வசந்தன்கவி களைப் பற்றி சுவாமி விபுலானந்தர் குறிப் பிடும் பொழுது சங்க காலத்து ஒழுக்கங் களும் ஆடலும் பாடலும் ஈழ நாட்டிலே இன்றும் நிலவுகின்றன எனக் கூறியுள்ளார். வசந்தன் கூத்துகளில் இடம்பெறுகின்ற தருக்கள், பாட்டுக்கள், உடையணியும் முறை, காலில் சதங்கை அணிதல் போன்ற வற்றை பார்க்குமிடத்து தென்மோடி நாட் டுக்கூத்து வகையினைச் சார்ந்திருப்பதை கண்டுகொள்ள முடிகிறது.
பெரும்பாலான வசந்தன் பாடல் களை பாடிய புலவர்கள் காரைதீவிலும் தம் பிலுவிலிலும் வாழ்ந்தவர்களாகக் காணப் படுகின்றனர். உதாரணமாக சின்னப்புலவர் சின்னாவி அண்ணாவியார், வசந்தராச பிள்ளை என்ற பெயர்கள் இவ்வூர்களில் பரவலாக காரைதீவு, தம்பிலுவில், மண் டூர், வந்தாறுமூலை, முனைக்காடு, களு தாவளை போன்ற கிராமங்களில் வசந் தன் ஏடுகள் பல இன்னமும் முடங்கிக் கிடக்கின்றன. எமக்குக் கிடைக்கின்ற வசந்தன் கவிகள் யாவும் 1940 களில் பிரம்ம பூரீ தி. சதாசிவ ஐயர் அவர்களால் தொகுக்கப்பட்டு வசந்தன் கவித்திரட்டு
سے 51]

Page 178
என்னும் நூலாக வெளியிடப்பட்டது: 1925 ம் ஆண்டு இலங்கை வந்திருந்த பிரிட்டிஷ் மகாதேசாதிபதி வில்லியம் மனிங்ஸ் என்பவர் இந்த வசந்தன் கவி களின் சிறப்பையும் இனிமையையும் நேரில் கண்டு ஆங்கில நாட்டுக்குப் பல கட்டுரை கள் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார் என் பதை அறிய முடிகின்றது.
கொம்பு முறி
இனி கொம்பு முறிப்பு விளையாட் டைப்பற்றி சிறிது நோக்குவோம். இக் கலையம்சமும் கண்ணகி வழிபாட்டுடன் தொடர்புள்ளது. கொம்பு விளையாட்டு எவ்வாறு வந்தது என்பதற்கு நீதி தவறிய கோவலனை கொலை செய்வித்த பாண் டிய மன்னனைப் பழி வாங்கியும் மதுரை மாநாகரினை எரியூட்டியும் சினம் தணி யாத கற்புக்கரசி கண்ணகியின் கோபத் தைத் தணித்து அவளைக் குளிர்விப்பதற் காக இடையர் குல இளைஞரும் யுவதிய ரும் சேர்ந்து ஒரு காதல் கலந்த விளை யாட்டாக இக் கொம்பு விளையாட் டினை செய்தனர் எனக் கூறப்படுகின்றது. அதன் தொடர்பாக நடைபெறுவதே மட் டக்களப்பு பகுதிகளில் இடம் பெறும் கொம்பு விளையாட்டு. கொம்பு விளை யாட்டு ஒரு கிராமத்தில் தொடங்குவ தற்கு முன்னர் இரு பிரிவுகளாக அக் கிராமத்து மக்கள் பிரிவர். இதனை வட சேரி, தென்சேரி என்று அழைப்பர். வட சேரி கோவலனுடைய கட்சி என்றும் தென் சேரியை கண்ணகியுடைய கட்சி என்றும் குறிப்பிடுவர். அம்மை, சின்ன முத்து, வைசூரி போன்ற கொடிய நோயி னின்றும் நீங்கி, மழை வளமும் செல்வ மும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இக் கலைப் பாடலை மக்கள் கண்ணகி வழிபாட்டுடன் சேர்த்துக் கொள்கின்ற னர். கொம்பு வழிபாட்டின் சிறப்பம்சங்க ளாக போர்த்தேங்காய் உடைத்தல்,கொம்பு முறித்தல், கொம்பு தட்டெடுத்தல், தேர்க் கல்யாணம், குளிர்த்தி பாடுதல் என்பன இடம்பெறும். இவற்றினை விரிவாக ஆராய் வது இக்கட்டுரையை நீட்டிவிடும் என அஞ்சி முக்கிய சில குறிப்புக்களை மாத்

திரம் இங்கு தொட்டுக்கூற விரும்பு கின்றேன். இரண்டாகப் பிரிந்த மக்கள் நன்கு அமைக்கப்பட்ட இரு சேரிக்கொம்பு களையும் அணைத்துக்கட்டி GosTicio கொழுவிய அரிப்பினைப் பிணைத்து அதில் பெரிய வடமொன்றை மாட்டுவர். அவ் வடத்தினைப் பிடித்துப் பலர் இழுக்கும் போது இரு சேரியிலுமுள்ள திறமையான வர் சிலர் தத்தம் கொம்புகளில் பல்வாய் (கொம்பின் தலைப்பகுதி) குச்சி (கொம் பின் வளைந்த இடத்து நடு ஆணி) முதுகு மரம் (கொம்பின் தலைப்பகுதி) பில்லி (கொம்பின் இருபுறமும் அணையக் கட்டிய தடிகள்) என்னும் உறுப்புக்களை யெல்லாம் முறைப்படி பிடித்துக்கொள் வர். அரிப்பிற் பிணைத்த பெருவடத் தினை இரு சேரிப் பொதுமக்களும் இழுப் பர். அப் பலருடைய இழுவைப் பொறுப் பினால் இரண்டிலொரு கொம்பு முறி யும். உடனே வென்ற பகுதியார் வாரத் தின் பெயரைச் சொல்லி அதற்கு வெற்றி என்று கூவி ஆடிப் பாடி மகிழ்வர். அச்சத் தர்ப்பத்தில் இடம்பெறும் பாடல்கள் மிக வும் சுவையானவை.
"வட சேரியான் கொம்பு எங்கே
எங்கே மணமுள்ள தாழையின் மேலே
மேலே தென் சேரியான் கொம்பு எங்கே
எங்கே
செம்பரப்பற்றைக்கு கீழே கீழே."
"வட சேரியான் கொம்பு எங்கே
எங்கே வண்ணாற்றை சாடிக்கு உள்ளே
உள்ளே தென் சேரியான் கொம்பு எங்கே
எங்கே
சித்திரத் தேருக்கு மேலே மேலே"
இவ்விதம் அழகிய பாடல்கள் இடம் பெறும்.
கும்மி, கோலாட்டம், கரகம், காவடி, குரவை ஆகிய ஒவ்வொன்றினைப்பற்றி யும் தனித்தனியே மிக விரிவாக ஆராய்வது மட்டக்களப்பு கிராமியக் கலைகளை நன்கு அறிந்துகொள்ள உதவும், O
سسه £6

Page 179
மலையகத்தி
தெளிவத்ை
திமிழில் சிறுகதை என்றதும் எப்படி முதலில் ஒரு சில பெயர்கள் மனதில் தோன்றுகின்றனவோ!
ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை என்றதும் எப்படி முதலில் ஒரு சில பெயர் க ள் மனதில் தோன்றுகின்றனவோ!
அதே போல் மலையகத்தில் சிறுகதை என்றதும் மனதில் தோன்றும் முதல் பெயர்கள் செந்தூரன்; என்.எஸ். எம். ராமையா: தெளிவத்தை ஜோசப் சாரல் நாடன் மலரன்பன் போன்றவையே.
இவர்கள் அனைவருமே அறுபதுகளில் எழுத்துத் துறையில் பிரவேசித்தவர்கள் என் பதனையும் மலையகச் சிறுகதை இலக்கி யத்துடன் இணைத்துப் பார்க்கையில்
தென்னிந்தியாவில் சிறுகதை வளர்ச்சி பற்றிப் பேச வருபவர்கள், "1930 ஆம் வருஷத்துக்குப்பின் உப்புச் சத்தியாக்கிர கத்தின் இலக்கிய அலையாகத் தோன்றிய புதுவேகம் சிறுகதை இலக்கியத்திலும் தோன்றியது. சில நல்ல சிறுகதை எழுத் தாளர்கள் தோன்றினார்கள்" என்பதை ஒரு மரபாகக் கூறுவது போலவே
மலையக இலக்கியத்தில் 1960க்குப் பின் ஒரு திடீர்க் குமுறலாகக் கிளம்பிய புதுவேகம் சில சிறந்த சிறுகதை எழுத் தாளர்களை தோற்றுவித்தது என்று கூறு வது சாலப் பொருத்தமாகும்.
1956ஆம் ஆண்டுக்குப்பின் தேசிய மொழிகள் உயர் கல்விக்குரிய போதனா
waxaw

3ல் சிறுகதை
த ஜோசப்
மொழிகளாக்கப்பட்ட பெரு மாற்றத்தின் பின் சிங்கள கலை இலக்கியத் துறைகளில் ஏற்பட்ட ஒரு மறு மலர்ச்சி வடக்கு கிழக்கு மாகாணத் தமிழர்களுக்கிடையே யும் தொற்றி வளர்ந்த போது மலைய யகத்தைப் பற்றி மலையக இலக்கி 1ம் பற்றி யாருமே ஒரு வார்த்தை கூடப் பேச வில்லையே என்னும் ஆதங்கம் - காலங் காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர் கள் தானா? என்ற ஆத்திரம் படித்த மலையக இளைஞர்கள் மத்தியில் LATGAI லாக ஏற்பட்டிருந்தது. இவர்கள் மலைய கத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும்; ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டவர்கள் கூட இல்லை என்றாலும் மேற்கூறிய ஆதங்க மும் ஆத்திரமும் நான்கு வருட கர்ப்ப வாசத்தின் பின், ஒரே விதமான நாடித் துடிப்புடன் காலத்தின் குரலாக 60 ஆம் ஆண்டளவில் பீறிட்டுக் கிளம்பியது.
இதன் முதற் குரலாக திருச்செந்தூர னின் உரிமை எங்கேயைக் கூறலாம், இலங்கைக்கென கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இச்சிறுகதை மலையகத்தின் எரியும் பிரச்சினையான குடியுரிமைப் பிரச்சினையை மையமாகக் கொண்ட படைப்பாகும். ஒரு மலைய கத்துச் சிறுகதைக்கு தமிழ் நாட்டின் பிர பலப் பத்திரிகையான கல்கி பரிசளித்து கெளரவித்தமை அப்போது தான் எழுத் துலகில் ஈடுபடத் தொடங்கிய மலையக எழுத்தாளர்களுக்கு ஒரு முனைப்பான உந்து சக்தியாக அமைந்தது.
மலையக சிறுகதை இலக்கியம் ஒரு உத்வேகத்துடன் 1960க்குப்பின் எழுந்தா
سسسس 63

Page 180
லும் அதற்கான ஒரு தளம் அதற்கு முன் பிருந்தே சிறுகச் சிறுக போடப்பட்டே வந் துள்ளது என்பதனையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆனாலும் 60 க்குப் பின் எழுந்த இப்புதுவேகம் அந்தப்பழைய தளத்தின் மேல் தான் எழுந்தது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
*பரந்த அடிப்படையில் நாம் இதை நோக்கினால் தமிழ் நாட்டிலிருந்து எப் போது மக்கள் இங்கு குடியேறினார் களோ அன்று தொட்டே தமிழ்க்கலை கலாச்சாரம்; இலக்கியம் ஆகியன இங்கு வளரத் தொடங்கின என்கின்றார் அமரர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள். (புதுமை இலக்கியம்-கட்டுரை-மாவலி மார்ச் 74.)
1930க்கு முன் மலைநாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் பண வசதி படைத்த ஒரு தனிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பட்ட ணங்களுக்குச் சென்று அரசாங்கப் பாட சாலைகளில் உயர் கல்வி பெறும் வசதி படைத்த இவர்களுக்கு தமிழ் நாட்டுப் பத் திரிகைகள் வாசிக்கக் கிடைத்தன. ஆங்கி லமும் தமிழும் இவர்கள் கற்றிருந்த படி யால் தமிழ்நாட்டு ஆங்கில இதழ் க ள் எழுத்தாள இயக்கங்கள் ஆகியவற்றின் தொடர்பால் ஈர்க்கப்பட்டு எழு த த் தொடங்கினார்கள். இப்படியானதொரு உந்துதலால் எழுதத் தொடங்கியவர்களில் அமரர் சி.வி. வேலுப்பிள்ளை, திரு. கே. கணேஷ் ஆகியோரை முதலில் சொல்ல
லாம்.
பத்மாஜினி என்னும் கவிதை நாட கத்தை சி.வி.யும் முல்க்ராஜ் ஆனந்தின் "அன்டச்சபல்ஸ்'சை தீண்டாதான் என்று தமிழில் கே. கணேஷ"ம் வெளியிட்டனர். கவி சிதம்பரநாத பாவலர் இதே கால கட் டத்தில் புத்த பெருமானின் வாழ்க்கைச் சரித்திரத்தை கவிதையாக வெளியிட் и — птпї.
கே. கணேஷ், நாவல் கவிதை ஆகிய
மொழி பெயர்ப்புகளுடன் சிறுகதைகளை யும் மொழி பெயர்த்தார். பிரேம்சந்தின்
1 ܗܘܡܗ

சிறுகதைகளை உ தி ரியா க மொழி பெயர்த்து வெளியிட்டதுடன் கே. ஏ. அப் பாசின் பத்துச் சிறுகதைகளை மொழி பெயர்த்து "குங்குமப்பூ" என்னும் தொகு தியாக வெளியிட்டார், கே. ஏ. அப்பாசை தமிழில் கூடுதலாக அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சார்கிறது. &#ୟ୍ଯ இலக்கியத்தின் தந்தையெனக் கருதப்படும் லூசுன் சிறுகதைகளையும் "லூசுன் கதை கள்" என்று மொழி பெயர்த்து வெளியிட் டுள்ளார். மொழி பெயர்ப்புக்கள் தவிர்த்து சுயமாகவும் சில சிறுகதைகளை எழுதி னார்.
சத்தியபோதி மரம் (வீரகேசரி), பால் காரப் பழனி (வீரகேசரி), சட்டமும் சந் தர்ப்பமும் (வீரகேசரி), ஆசாநாசம் (மணிக் கொடி), ஆகஸ்ட் தியாகி ஆறுமுகம் (தேசா பிமானி) ஆகிய சிறுகதைகளையும் கே. கணேஷ் எழுதினார். ஆகஸ்ட் தியாகி ஆறு முகம் நல்லதொரு சிறுகதை என்று பேரா சிரியர் கா. சிவத்தம்பி ஏதோ ஒரு சந்தர்ப் பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இடதுசாரிக் கொள்கை உடையவரான திரு. கணேஷ் 1936ல் இளைஞர் காங் இரஸ் என்னும் அமைப்பை தமிழ்நாட்டில் உருவாக்கினார். 1945ல் தி. க. சி. அப் பாஸ் போன்ற முற்போக்கு எழுத்தாளர் களுடன் இணைந்து முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தை அமைத்தார். 19466) கே. ராமநாதனுடன் சேர்ந்து "பாரதி” என்னும் சஞ்சிகையை நடத்தி னார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக முன்னின்று உழைத்துள்ளார்.
'இந்தியாவில் தோன்றிய முற் போக்கு எழுத்தாளர் சங்கம் போன்று இராமநாதனும், கணேஷ"ம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினை தோற்றுவித்தனர்" (ஈழத்தில் தமிழ் இலக்கியம்-டாக்டர் கா. சிவத்தம்பிபக்கம் 40)
இலக்கியம், எழுத்தாளர்கள், எழுத் தாளர் அமைப்புக்கள் சஞ்சிகைகள் என்று
சகல வழிகளிலும் இலக்கியத்துடன் தன்
54 -

Page 181
னைப் பிணைத்துக்கொண்ட கே. கணேஷ் அவர்கள் மலையக இலக்கியம் பொறுத்த வரையில் அன்னியப்பட்டே இருந்துவிட் டார் என்பது மனவருத்தத்துடன் மனம் கொள்ளத்தக்கது.
சி. வி.யின் ஆரம்பகாலக் கவிதைகள் தாகூர் பாணியிலேயே அமைந்திருந்தன. "தாகூரின் றோ மாண்டிச வயப்பாட்டிலி ருந்து சி. வி. விடுபட்டுப் புதுமைக் கவிஞ ராக மிளிரத் தொடங்கியுள்ளார் என்று பம்பாயில் இருந்து வரும் பாரத் ஜோதியில் 'ஜக் மோகன்" என்பார் எழுதினார்' (சி.வி. சில சிந்தனைகள்-சாரல் நாடன் பக். 12) என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அட்டன் பெரிய தொப்பித் தோட்டத் தில் பிறந்து தோட்டப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி பெற்று அட்டன் ஹைலன்ஸ் சில் எஸ். எஸ். சி, தேறி பல்கலைக் கழ கம் சென்றதுடன் கல்வியை முடித்துக் கொண்டவர் பொ. கிருஷ்ணசாமி அவர் கள். "இல்லஸ்ட்றேட்டஸ் வீக்லி ஆப் இன்டியா', பிரி இன்டியா மை இன்டியா, சண்டே டைம்ஸ் ஆகிய ஏடுகளுக்கு ஆங் கிலத்தில் எழுதத் தொடங்கியவர். சி. வி. யின் ஆங்கிலப் படைப்புக்கள் சிலதை தமி ழில் மொழிபெயர்த்தார். 1956ஆம் ஆண் டின் இனக்கலவரத்தைப் பின்னணியாகக் கொண்டு 'மன்னிப்பா, உனக்கா?’ என் னும் கதையைத் தினகரனில் எழுதினார். சி. வி. வெளியிட்ட ‘கதை’ என்னும் சஞ்சி கையில் "கண்ணிர்" என்னும் சிறுகதை வெளிவந்தது.
பண்டாரவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட த. ரஃபேல் இதே காலகட்டத் தில் சிறுகதைகள் எழுதினார். மக்களின் மன உணர்ச்சிப் போராட்டங்களையே இவ ருடைய கதைகள் பெரும்பாலும் பிரதி பலித்தன. தினகரன் இவருடைய சிறுகதை களைப் பிரசுரித்தது. சி. வி.யின் கதையில் இவருடைய "திறமை' என்னும் சிறுகதை வெளிவந்தது. குமுதத்திலும் சில கதைகள் வந்ததாக நினைவு.

தன்னுடைய ஈழத்து இலக்கியவளர்ச்சி என்னும் நூலில் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்கள் என்ற வரிசையில் ரஃபே லையும் தடித்த எழுத்தில் காட்டியுள்ளார் திரு. கனகசெந்திநாதன். (பக்கம் 88)
டி. எம். பீர்முகம்மது இரண்டு நாவல் களையும் (சதியில் சிக்கிய சலீமா-கங் காணி மகள்) “சிறுகதைகள் 6" என்று ஆறு சிறுகதைகள் கொண்டதொரு தொகுதியை யும் வெளியிட்டார். மலையகத்தில் 60க்குப் பின் வந்த ஏடுகளில் மலையக விழிப் புணர்ச்சிக்காக நிறைய கட்டுரைகளும்; ஒரு சில ஏடுகளுக்கு ஆசிரியராகவும் இருந் திருக்கின்றார். தி.மு. க. பாணியில் மேடை களில் பேசி இளைஞர்களைக் கவர்ந்தவர்.
மலையக இலக்கியத்தில் சிறுகதையின் தோற்றம், வளர்ச்சி பற்றி சற்று பின்னோக் கிப் பார்க்கையில்,
** எமது முன்னோடிகள் சிறுகதையின் உருவத்திலும் உரைநடையிலுமே அதிக கவனம் செலுத்தினர். தென்னிந்திய சஞ்சி கைகளிலும் இவர்கள் ஈடுபாட்டுடன் எழுதி யமையால் ஈழம் என்ற இட வரையறைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கதைகளை எழுதினர். இவர்களைப் பொறுத்தவரை யில் இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்கும் நேரடியான தொடர்பு இருக்கவில்லை" என்று பேராசிரியர் கைலாசபதி ஈழத்தின் சிறுகதை முன்னோடிகளான வைத்திலிங் கம், சம்பந்தன், இலங்கையர்கோன், சிவ பாதசுந்தரம் ஆகியோர் பற்றிக் கூறியதை இங்கேயும் நாம் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். (ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி-அம்பலத்தான்- க லா சா ர ப் பேரவை இலக்கிய விழா மலர் 1972)
ஈழம் என்ற சொல்லுக்குப் பதிலாக மலையகம் என்று போட்டுக்கொண்டோ மானால் மிஞ்சுவது சி. வி. மட்டுமே.
அமரர் சி. வி. சிறுகதைகள் எழுத வில்லை. ஆனால் மலையகத்தின் இலக் கிய விழிப்புணர்ச்சிக்கு இவருடைய பங் களிப்பு மகத்தானது. புறக்கணிக்கப்பட்ட தும், ஒடுக்கப்பட்டதுமான மலையக சமூ

Page 182
கத்தின் அவலநிலையை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் பணியினை சி. வி.யின் ஆங்கிலப் படைப்புக்கள் அருமையாகச் செய்தன.
"முள் முடியைக் கழற்றி வைத்துவிட்டு வெளியே வந்தேன்’ என்று சுந்தர ராமசாமி குறிப்பிட்டுள்ளதுபோல்,
"1950 களின் முற்பகுதிகளில் சாம் ராஜ்ய நாடுகளில் முதன்மை இடம் வகிக் கும் ஒவியரும் கவிஞருமான திரு. ஜோர்ஜ் கீட் அவர்களை சந்தித்த பின்பே இலக்கிய வாதியானேன். மலைநாட்டு மண்வளத் துக்கு எனது கவனம் திரும்பியது" என்று சி. வி. கூறியுள்ளார்.
1931ல் பத்மாஜினி 1948ல் வழிப்போக் கன் என்னும் இரண்டு நூல்களை ஆங் கிலத்தில் வெளியிட்டிருந்தாலும் அவருக்கு ஏகோபித்த புகழையும் ஒரு இலக்கிய அந் தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது 1954ல் வெளிவந்த "இன் சிலோன்ஸ் டீ கார் டன்ஸ்’ என்னும் ஆங்கிலக் கவிதை நூலே ஆகும்.
"இந்த மக்களைப்பற்றி எ மு த த் தொடங்கிய பிறகே நான் பெருமைப்படுத் தப்பட்டேன்' என்று பிற்காலத்தில் சி.வி. அடிக்கடி கூறுவதுண்டு.
இதே காலகட்டத்தில்தான் 'கதை' என்னும் சஞ்சிகையையும் நடத்த சி. வி. முன்வந்தார். "பென்ஸி பீல்ட் தலங்கம என்னும் முகவரியில் இருந்து ‘கதை’ ஒரே ஒரு இதழ் மட்டுமே வெளிவந்தது. சக்தி பாலையாவின் வண்ண ஒவியத்துடன் 40 சத விலையில் வந்த 'கதை"யின் தலையங்கத் தில் சி. வி. இப்படிக் குறிப்பிட்டுள்ளார். 'கதையை சுவையுடன் சொல்வது மட்டும் கதையின் நோக்கம் அல்ல. நாட்டிலே கோர நர்த்தனம் புரியும் வறுமையையும் துன்பத்தையும் எடுத்துக்காட்ட "கதை" முயலும். நாட்டின் பல்வேறு பாகங்களில் வசிக்கும் தமிழர்களைப் பிணைக்கும் சக்தி யாகவும் ‘கதை’ வளரவேண்டும் என்பது நமது அவா. இலங்கை எழுத்தாளர்களின் இன்பப் படைப்புக்களை தமிழ் மக்களுக்கு

"கதை சமர்ப்பிக்கும். தொழிலாள வர்க்கத் திடையே தோன்றியுள்ள இளம் எழுத் தாளர்களை ஊக்குவித்து அவர்கள் புதிய, இலக்கியம் படைக்க, கதை அரங்கேற்ற மேடையமைக்கும்.* -இதிலிருந்து சி. வி. யின் இலக்கிய நோக்கம் புலனாகிறது.
இந்த இதழில் சக்தி பாலையா, வி. எஸ். நாதன் ஆகியோரின் கவிதைகள் டி. ராம நாதன், த. ரஃபேல், நந்தி, சொக்கன். எச். எம். பி. , பொ. கிருஷ்ணசாமி ஆகியோ ரின் சிறுகதைகள் ஆகியவை இடம்பெற் றுள்ளன.
(தானும் ஒரு சிறுகதை எழுதியிருப்ப தாக சி. வி. என்னிடம் ஒருமுறை கூறி னார். "டெயிலி நியூசில் வெளிவந்ததாக அவர் கூறியதாக நினைவிருக்கிறது. அதை எனக்குத் தருவதாகக் கூறினார் என்றா இலும் அது நடக்கவில்லை. அவருடைய சிறு
கதையை நான் பார்க்கவில்லை,
சிறுகதை பற்றிய இக் கட்டுரையில் சிறு கதை எழுதாத சி. வி. பற்றி இவ்வளவு கூறவேண்டியதற்கான பின்னணி மலையக இலக்கியத்தின் புது வேகத்துக்கு அவர் காட்டிய பாதை, ஆற்றிய பங்களிப்பு. அப் படிப் பார்க்கும்போது இன்னொருவரை யும் இங்கு நாம் மறந்துவிடுவதற்கில்லை.
1920-1947 காலப்பகுதிகளில் இலங் யில் வாழ்ந்து மலையக மக்களின் விழிப் புணர்வுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் பாடு பட்ட திரு. கோ. நடேசய்யரே அந்த இன் னொருவர். 1929 லேயே "தேச பக்தன்” என்ற ஏட்டை-இலங்கையின் முதல் தின சரியை-நடத்தி 1947க்கு முன்பதாகவே 13க்கும் மேற்பட்ட அறிவு நூல்களை வெளி யிட்டு பெருமை கொண்டவர் நடேசய்யர்
"அவரின் கடைசி நூ ல் "அ ழ கி ய இலங்கை இந்தியாவில் அச்சிடப்பட்ட அரிதான தகவல்களை உள்ளடக்கிய அற் புதமான நூல். இந்திய வம்சாவளியினரை மையமாக வைத்து இலங்கை சரித்திரத்தை கூறும் நூல் இது. அய்யரின் எழுத்தாற் றல் எத்தனை என்பதனை இந்நூல்கள்
حسسه 6 l5

Page 183
வெளிப்படுத்துகின்றன."(தேசபக்தன் கோ. நடேசய்யர்-சாரல் நாடன் பக்கம் 145)
இவைகள் 60க்கு முந்தைய நிகழ்வுகள்! 60க்குப் பிந்திய புது உத்வேகத்துக்குப் பக்க பலமாக நின்றவைகள். இவைகளைத் தொடர்ந்து 1960ஆம் ஆண்டளவில் ஒரு நீண்ட துயிலின்பின் விழித்தெழுவது போல் எழுந்த மலையக இலக்கியத்தின் புத்து யிர்ப்புக்கு உருவம் கொடுத்தவைகளாகப் பின்வருவனவற்றைக் கொள்ளலாம்:
1. மலை நாட்டு நல்வாழ்வு வாலிபர்
சங்கத்தின் தோற்றம்.
2. இலங்கை முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் "மண் வாச னைக் கோஷம்."
3. வீரகேசரியின் தோட்ட மஞ்சரி.
4. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தின் உதயமும் அது நடாத்திய சிறுகதைப் போட்டிகளும்.
5. மலையக சஞ்சிகைகளின் தோற்
றம்.
மலைநாட்டில் உள்ள படித்த வாலி பர்கள் ஒன்றிணைந்து மலைநாட்டு நல் வாழ்வு வாலிபர் சங்கம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினர். கண்டியில் அமைந்த தலைமைக் குழுவின் தலைவராக திரு. இரா. சிவலிங்கமும்; செயலாளராக திரு. வி. வேலாயுதமும் பொறுப்பேற்ற னர். திரு. இரா. சிவலிங்கம் சொல்லின் செல்வர் - இளைஞர் தளபதி என்று பெருமையுடன் அழைக்கப்பட்டவர். மலை யகத்தின் கல்விமான்கள் ஒன்றிணைந்து சங்கம் அமைத்து படித்த வாலிபர்களை அரவணைத்துக்கொண்டு கல்வி மகாநாடு, கலைவிழா என்று ஏற்பாடு செய்து தங் களது கருத்துச் செறிவான சொற்பொழிவு கள் மூலம் அவர்களை வசப்படுத்தி எழுத்து-கலை-இலக்கியம் என்று தூண்டி விட்டார்கள். எழுதுவதற்கு ஏட்டையும் காட்டினார்கள். சங்கத்தின் உத்தியோக பூர்வ ஏடாக மலைமுரசு வெளிவந்தது.

கைக்கடக்கமான, சுலபமான இலக்கிய வடிவமாக இவர்களுக்கு சிறுகதை அமைந் திது.
இதே காலகட்டத்தில்தான் செந்தூர னின் உரிமை எங்கே சிறுகதைக்குப் பரிசு கிடைத்தது. அப்போதைய நிலையில் அது ஒரு பெரிய விஷயம். திரு. இரா. சிவ லிங்கமும் திருச்செந்தூரனும் இரட்டையர் கள் போல் சேர்ந்தே இருப்பார்கள். முன்ன வர் அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியின் அதிபர். மற்றவர் ஆசிரியர். படித்த மற்ற இளைஞர்கள் எழுத்துப் பணியில் தீவிரமாக ஈடுபட செந்தூரனுக்குக் கிடைத்த பரிசும், சிவலிங்கம் செந்தூரனுடனான பழக்கமும் ஒரு உந்து சக்தியாக அமைந்தது.
1956க்குப் பின் செயல் வேகத்துடன் கருமமாற்றத் தொடங்கிய இலங்கை முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய இலக்கிய கோஷமாக இருந்தது, 'ஈழத் தின் மண் வாசனையைப் பிரதிபலிப்பதாக ஈழத்துத் தமிழ் இலக்கியம் இருக்கவேண் டும்" என்பதாகும். இவ்விலக்கிய இயக்கம் வலுவடைந்து வரும்போது பேராசிரியர் கைலாசபதி தினகரன் ஆசிரியரானார். மண்வாசனை என்ற இலக்கிய கோஷத் துக்கு உதாரணமான சிறுகதைகள் தின கரனில் வெளியாகின. மலையக மண் வாசனையுடனான சிறுகதை ஒன்று தின கரனுக்கு அப்போது அத்தியாவசியமாக இருந்தது. ஆசிரியராக வீற்றிருந்த கலா நிதி கைலாசபதி அவர்கள் என். எஸ். எம். ராமையா வை அழைத்திருந்தார்.
ஒரு தசாப்த காலமாக தன்னுடைய ஆக்க இலக்கிய ஆற்றலை வானொலிக்கு நாடகங்கள் எழுதுவதில் செலவு செய்து கொண்டிருந்த ராமையாவுக்கு பேராசிரி யரின் கோரிக்கை வினோதமாக இருந்தது.
"மலைநாட்டைப் பிரதிபலிக்கும், மலை நாட்டு பேச்சு வழக்குடனான மலைநாட் டுப் பாத்திரங்களைக் கொண்ட ஒரு கதையா! சரி சரி என்று தலையை ஆட்டி விட்டுப் போனவர் பிறகுதான் யோசித் தார். நண்பர் கனகரத்தினத்துடன் கலந்
سسه 57

Page 184
தாலோசித்தார். மறந்துவிட வேண்டும் என்று விட்டு விட்டு ஓடிவந்த மண்ணைஅதன் மணத்தை மனதில் நினைவுபடுத் திப் பார்க்கின்றார்.
என். எஸ். எம். ராமையா என்ற பெயரே மறந்துபோய் ஒரு கூடைக் கொழுந்து ராமையா என்று பெயர் பெறச் செய்த அவருடைய முதல் சிறுகதை “ஒரு கூடைக் கொழுந்து 1961ஜ"னில் தின கரனில் பிரசுரமானது. இந்தச் சிறுகதை பிரசுரமானதும் ஈழத்து ரசிகமணியும் கலாவிமர்சகருமான திரு. கனகசெந்தி நாதன் கதையைப் பாராட்டி நேரடியாக ராமையாவுக்கும் வீரகேசரிக்கும் எழுதி யிருந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங் கத்தின் ஏடான புதுமை இலக்கியம் "சமீப காலத்தைய இலக்கிய வளர்ச்சியின் தவிர்க்க முடியாததும் வரவேற்கத்தக்கதுமான ஒரு விளைவே மலைநாட்டுப் பிராந்திய இலக் கிய வளர்ச்சிக்கு அடி எடுத்துக் கொடுத் திருக்கிறது. அந்த வகையில் ஒரு கூடைக் கொழுந்து குறிப்பிடத்தக்கதொருபடைப்பு" என்று எழுதியது.
மலையகச் சிறுகதை உலகில் பரபரப் штć5ф தோன்றிய செந்தூரனைத் தொடர்ந்து பாராட்டுதல்களுடன் தோன் நியவர் மலையகச் சிறுகதையின் முன் னோடி என்று பெயர் பெற்ற என். எஸ். எம். ராமையா.
வீரகேசரி ஆரம்பகால முதலே மல்ை யக மக்களின் பிரச்சினைகளை அக்கறை யுடன் கவனித்து வந்த ஒரு பத்திரிகை. 1930ல் ஆரம்பமான வீரகேசரியின் முதல் ஆசிரியர் பெரி. சுப்பிரமணியன் செட்டியார், அவரைத் தொடர்ந்து ஆசிரியர் பதவியில் அமர்ந்தவர் எச். நெல்லையா. தொடர் கதைகள் மூலம் வாசகர்களைக் கவர்ந்த திரு. நெல்லையா நடேசய்யரின் தேசபக் தனில் உதவி ஆசிரியராக இருந்தவர். ஆகவே வீரகேசரிக்கு மலையக மக்கள் பக் கம் ஒரு மென்மை இருந்ததில் வியப் பில்லை.

மலையகத்தில் புதிதாக எழுந்துள்ள இலக்கிய அலைக்கு ஒரு உந்துதல் அளிக்கும் நோக்கில் தோட்ட மஞ்சரி என்று ஒரு பக் கத்தை ஒதுக்கிக் கொடுத்தது வீரகேசரி. தோட்ட மஞ்சரிக்குப் பொறுப்பாக இருந்த மலையகத்தைச் சேர்ந்த திரு. கார்மேகம், அந்தப் பகுதியைச் சிறப்பாகப் பயன்படுத் தினார். திருவாளர்கள்: கார்மேகம், பெரி. கந்தசாமி, பொஸ்கோஸ் கருப்  ைப யா, இரா. சிவலிங்கம் ஆகியோர் ஒன்று கூடி மலைநாட்டு எழுத்தாளர்களுக்கென்று ஒரு சிறுகதைப் போட்டியை தோட்ட மஞ்சரி மூலமாக நடத்த ஒழுங்கு செய்தனர். அறி வித்தல் எல்லாம் கொடுத்த பிறகே ஒரு பத் துக் கதையாவது வருமா என்ற அச்சம் எழுந்ததாம். நியாயமான அச்சம்தான்! நாலைந்து பேர் கூடியே தீர்மானித்திருந் தாலும் சிறுகதைப்போட்டி தோல்வியில் முடிந்தால் பாதிக்கப்படப்போகிறவர் கார் மேகம்தான்! ஆகவே வாரம் தவறாமல் சிறுகதைப் போட்டி பற்றிய செய்திகளை வெளியிட்டு எழுதும் ஆர்வம் கொண்டி ருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டார்.
"மலையகச் சிறுகதையா என்று மலைத்துவிடாதீர்கள். இதோ இந்தக்கதை யைப் படித்துப் பாருங்கள்’’ என்று செந் தூரனின் "நடுக் கடலில்" என்ற சிறுகதை யைப் போட்டுக் காட்டினார். மொத்தத் தில் ஒரு சிறுகதைப் பட்டறையே நடத்தி னார் என்று சொன்னால் மிகையாகாது. முடிவு திகதி நெருங்கும்போது, "எக்கார ணத்தைக் கொண்டும் முடிவு திகதி நீடிக்கப் படமாட்டாது என்று அவசரப்படுத்தினார்.
160 கதைகள் வந்திருந்தனவாம்.
மலையக இலக்கியத்துக்குப் பொது வாகவும், மலையகச் சிறுகதை இலக்கியத் துக்குக் குறிப்பாகவும் கார்மேகம் ஆற்றி யுள்ள பணி மகத்தானது; போற்றுதற்குரி Այցil.
சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளி வந்தன. தெளிவத்தை ஜோ சப் பின் 'பாட்டி சொன்ன கதை" முதல் பரிசு பெற்றது.
5 8 -

Page 185
சாரல் நாடனின் "காலவோட்டம்" இரண்டாவது பரிசு பெற்றது.
தங்க-பிரகாஷின் "காயம்" மூன்றா வது பரிசு பெற்றது. இந்த மூன்றாவது பரி சுக்குப் பிறகு தங்க-பிரகாஷ் ஒன்றும் எழுத வில்லை. இந்த "காயம் சிறுகதையுமே கூட *"பேய்பிடித்த பெண்கள் பேயோட்டும் பூசாரிகளால் அடிபட்டுக் காயப்படுதலை யும், இது ஒரு பெண்ணுக்கேற்படும் காயம் அல்ல, இந்த சமூகத்துக்கே ஏற்பட்டுள்ள காயம்’ என்பதைக் கூறுகிறது.
இவைகள் பொதுவாக எந்தப் பிராந் தியத்திலும் வாழும் தமிழ் மக்களுக்கும் பொருந்துவதாக இருந்ததால் தனியே மலைநாட்டுக் கதையாக வெற்றிபெற வில்லை.
இந்த முதல் சிறுகதைப் போட்டிக்குப் பிறகு செந்தூரன், ரா  ைம ய ர வைத் தொடர்ந்து தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் ஆகியோரும் மலையகச் சிறுகதை உலகில் அங்கீகரிக்கப்பட்டனர்.
செந்தூரன், சிறுகதைகளை விடவும் மலையகக் கலைகளில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். மலையகத்தின் புதிய இலக்கிய விழிப்புக்கு அளப்பரிய சேவை களாற்றிய செந்தூரன் நாடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்.
மலையகம் என்னும் சமூக உணர்வுட னும் கலைத்துவத்துடனும் எழுதுகிறவர் சாரல் நாடன். சிறுகதைப் போட்டில் பரிசு பெற்றதைத் தொடர்ந்து தினக ர னில் "பிரேத ஊர்வலம்”, “எவளோ ஒருத்தி" போன்ற சில நல்ல கதைகளை எழுதினார். சிறுகதைத் துறையை விடவும், நாட்டார் இலக்கியம், இலக்கியக் கட்டு  ைர க ள், கவிதை, ஆய்வு போன்ற துறைகளில் சிறந்து நிற்பவர்; சி. வி. சில சிந்தனைகள், தேச பக்தன் கோ. நடேசையர் ஆகிய இரண்டு நூல்களும் ஆய்வுத் துறையில் இவருடைய அசாத்திய திறமைக்கான எடுத்துக்காட்டுக் கள். அதிலும் குறிப்பாக நடேசய்யர் பற் றிய நூல். மலையகம் ஆய்வுத் துறையி லும் தனது பங்கை அளித்தே வருகிறது
m

என்பதை நிரூபித்துவருபவர் சாரல்நாடன். 1988க்கான சாகித்திய விருது இந்த நூலுக் குக் கிடைத்திருப்பது முற்றிலும் சரியா னதே.
1963ல் மலையக எழுத்தா ள ர் கள் தங்களுக்கென ஒரு தனியான அமைப்பு இல்லாத குறையைப் போக்கிக்கொண்ட னர். மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்செந்தூரனைத் தலைவராகவும், கார் மேகத்தைச் செயலாளராகவும் கொண்டு உருவாயிற்று. தோட்ட மஞ்சரியின் ஆசிரி யரே எழுத்தாளர் மன்றத்தின் செயலாள ராகவும் இருந்தமை ஒரு சாதகமாக அமைந் தது. 1962ல் நடந்தேறிய முதல் சிறுகதைப் போட்டியைத் தொடர்ந்து 1965, 1967, 1970ஆம் ஆண்டுகளில் மலைநாட்டு எழுத் தாளர் மன்றம் மேலும் மூன்று சிறுகதைப் போட்டிகளை தோட்ட மஞ்சரி மூலமாக நடத்தியது.
இந்த நான்கு போட்டிகள் மூலமாக வும் தெளிவத்தை ஜோசப், சாரல் நாட னைத் தொடர்ந்து எம். வாமதேவன், சி. பன்னீர்ச் செல்வன், பரிபூரணன், ஏ.சொல மன்ராஜ், மலரன்பன். மாத்தளை வடிவே லன், மு. சிவலிங்கம், மல்லிகை சிவகுமார், வனராஜன், அசோமட் நூரளை சண்முக நாதன், ஆர். எஸ். மணி. ராம சுப்பிரமணி யம் ஆகியோர் அறிமுகமாகினர். இப் போட்டிகள் மூலமாக முப்பது எழுத்தாளர் கள் போல் அறிமுகம் பெற்றார்கள் என்றா லும் அதன்பிறகும் தொடர்ந்து ஒன்றிரண் டாவது சிறுகதைகள் எழுதியுள்ளவர்களை மட்டுமே இப்பட்டியலில் சேர்த்துள்ளேன். இப்போட்டிகள் மூலமாக அறிமுகமாகா மல் சஞ்சிகைகள், பத்திரிகைகள், கல்லூரி இதழ்கள் ஆகியவைகள் மூலமாக சிறு கதைத் துறையில் பிரவேசித்தவர்கள் என்று பின்வருவோரையும் சேர்த்துக்கொள் ள லாம். மு. நித்தியானந்தன், ந. அ. தியாக ராசன், ஆப்தீன், ஏ. வி. பி. கோமஸ், பி. மரியதாஸ், ஏ. எஸ். வடிவேல், பூரணி, நயீமா பவுர், மல்லிகைக் காதலன், மாத் தளை சோமு, பன்னீரன், கேகாலை கைலை நாதன், ஆனந்த ராகவன், மொழிவரதன் போன்றோர்,
'59 1

Page 186
இவர்களும் தங்கள் படைப்புக்கள் மூலம் தங்களை இனம் காட்டிக் கொண்ட வர்கள்.
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் இந்த நான்கு சிறுகதைப் போட்டிகளிலும் முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற 12 சிறு கதைகளில் பதினொன்றைத் தொகுத்து "கதைக்கனிகள்" என்ற பெயரில் தனது முதல் நூலாக வெளியிட்டது.
மலையகச் சிறுகதைகளை ஒன்றாகச் சேர்த்துப் படிக்க உதவிய முதல் நூல் இதுவே.
ஈழத்து இலக்கிய உலகில் மலையக எழுத்தாளர்களின் பிரவேசம் ஒரு ஆரோக் கியமான அம்சமாகக் கருதப்பட்டது.
1964க்குப் பின் "ஈழத்து இலக்கிய வளர்ச்சி - சிறுகதை வளர்ச்சி - என்று எழுதப்பட்ட நூல்கள் கட்டுரைகள் ஆகிய வற்றிலும் பேசப்பட்ட இலக்கியக் கூட்ட உரைகளிலும் மலைநாட்டு எழுத்தாளர் களின் பெயர்களும் இடம்பெறுவது இன்றி யமையாததாகிவிட்டது.
மற்றப் பி ரா ந் தி ய தமிழ்ச் சிறு கதைகளுக்கு, சிறுகதை எ முத் தா ளர் களுக்கு நமது விமர்சகர்கள் அளித்த அதீத முக்கியத்துவமும்; வரவேற்பும் (அந்த அள வுக்கு இல்லாவிட்டாலும் கூட ஒரு கால் பங்கு அரைக்கால் பங்கு கூட) மலையக எழுத்தாளர்களுக்கோ படைப்புகளுக்கோ கொடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையே என்றாலும் கட்டுரைகளில் தாங்கள் போடும் பட்டியல்களில் இவர் களுடைய பெயர்களையும் போட்டுக் கொள்ள வேண்டியது தவிர்க்கமுடியாத தாகிவிட்டது.
**கே. கணேஷ் மலையகத் தமிழரே. சி. வி. வேலுப்பிள்ளையின் இலக்கிய முயற்சிகள் மலையகத் தமிழ் இலக் கியத்தின் முக்கிய நிர்ணய சக்திசளுள் ஒன்றாக அமைந்தது. சிதம்பரநாத பாவ லர் என்: எஸ். எம். ராமையா, தெளி வத்தை ஜோசப் ஆகியோர் மலையக
a

வாழ்க்கை முறைகளை ஈழத்துத் தேசிய தமிழ் இலக்கியத்தில் இடம்பெறச் செய் தனர்" (ஈழத்தில் தமிழ் இலக்கியம் - டாக்டர் கா. சிவத்தம்பி -)
"கதைக் கனிகள் என்ற தொகுதி மலையகச் சிறுகதைகளுக்குப் பதமாக அமைந்துள்ளது. (கலாசாரப் பேரவை தமிழ் இலக்கிய விழா மலர் - ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி - அம்பலத் தான் கட்டுரை).
படைப்பாளிகளை விடவும் விமர்சகர் களே பாராட்டும் பிரபல்யமும் பெற்று வந்த இலங்கையின் இலக்கியச் சூழலில் விமர்சகர்களால் அங்கீகரிக்கப்படாது விடப் பட்டிருந்த மலையக இலக்கியக் கர்த்தாக் களும் அவர்தம் படைப்புகளும் உரிய கணிப்பையும் கவனிப்பையும் பெறாமல் இருந்தது ஆச்சரியமல்ல. ஈழத்து இலக் கியம் பற்றி அறிந்துகொள்ள தமிழகத்து இலக்கியவாதிகள் பெருமளவு தங்கியிருந் தது இவ் விமர்சகர்களிலேயே. ஆகவே இவர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பற்றி அவர்கள் அறிந்திருந்ததெல்லாம் இங்கொன்று அங்கொன்றாக வெகு சொற் Lu Gu D !
இதற்கு உதாரணமாக டாக்டர் இரா. தண்டாயுதத்தின் "தற்காலத் தமிழ் இலக் கியம்" நூலில் உள்ள ஒரு கட்டுரையைக் கூறலாம்.
1971ல் வெளிவந்த "கதைக் கணிகள்? பற்றி 1973ல் வெளிவந்த இந்த நூலில் ஒரு அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இந்திய சாகித்திய விருது பெற்ற இந் நூல் தமிழ்ப் புத்தகாலயத்தின் வெளியீடாகும்.
** மலையகம்; மலைநாடு; தோட்டப் புறம் ஆகிய சொற்கள் மலேசியாவையும் அங்கு மண்டிக்கிடக்கும் ரப்பர் தோட்டங் களையும் மட்டும் குறிப்பிடுபவன அல்ல. இலங்கையில் மலிந்துள்ள தேயிலைத் தோட்டங்களையும் கூட மலையகம் மலை நாடு; தோட்டப்புறம் என்றே குறிப்பிடு கின்றனர்." என்று ஆரம்பிக்கிறது கட்டுரை.
60 -

Page 187
60 களில் ஒரு புது உத்வேகத்துடன் ஆரம்பித்து ஆரோக்கியத்துடன் வளர்ந்து சகல மட்டங்களிலும் பேசப்பட்ட மலை நாட்டுச் சிறுகதை இலக்கியம் பற்றி பத் தாண்டுகளுக்குப் பிறகு 1973ல் இலக்கிய ஆய்வு செய்யும் ஒரு பேராசிரியரே இப் படி ஆச்சரியப்பட்டால் அது எதைக் காட்டு கிறது?
துயரம் தோய்ந்த பலவிதமான சூழ் நிலைகளால் அலைக்கழிக்கப்பட்டு இந்த நாட்டில் மலையகத் தமிழர்கள் நிலையாக வாழத் தொடங்கியது போல் பலவித இன் னல்கள்; இடையூறுகள் அசட்டைகள்; புறக் கணிப்புக்கள் மத்தியிலும் மலையக இலக் கியம் நிலையாக வாழத் தொடங்கியிருக் கிறது.
“60-70 ஆண்டுகளுக்கிடையில் இலங் கைத் தமிழ்ச் சிறுகதையின் சில போக்கு களையும்; ஒரு புதிய தொகுதியினர் தமிழ் சிறுகதைத் துறைக்குள் வந்திருப்பதையும்; அவர்களது வருகை தமிழ் எழுத்துத் துறைக்கு நல்லதொரு நம்பிக்கையைத் தரு கிறது என்றும் இக் கதைக்கனிகள் பற்றிக் கூறும் ஆசிரியர் நான்காண்டுகள் நடந்த இச் சிறுகதைப் போட்டியில் தொடர்ந்து இரண்டாண்டுகள் முதற்பிரிவு பெற்றுள்ள தெளிவத்தை ஜோசப்பின் "பாட்டி சொன்ன கதையும் "பழம் விழுந்ததுவும் இத்தொகுதியையே அணிசெய்யும் சிறந்த கதைகளாக விளங்குகின்றன’’ என்றும் கூறுகின்றார். (தற்காலத் தமிழ் இலக்கி யம் பக்: 144) பேசப்படாத ஒரு "இலக்கி யம் பற்றி தமிழ் நாட்டில் வெளியான தன்னுடைய நூலில் ஒரு அத்தியாயமே எழுதிக் கெளரவித்தமைக்கு நன்றி கூறி இக்கட்டுரையை தோட்ட மஞ்சரி மறு பிர சுரம் செய்தது.
மலையகத்திலிருந்து பெ ரு கி வரும் இலக்கியப் படைப்புகளுக்கு வீரகேசரி, சித்தாமணி, தினகரன் ஆகியவற்றின் களம் போதவில்லை. மாதம் ஒன்று அல்லது காலாண்டுக்கு ஒன்று என்று வரும் சஞ்சிகை களும் போதுமான களம் கொடுக்கத் தடு மாறின. இந்த நிலையில் மலையகத்தி
keswe.

6】
விருந்தே சஞ்சிகைகள் தோன்ற ஆரம்பித் தன.
சிறுகதையின் வள ர் ச் சி என்பது சஞ்சிகைகளின் வளர்ச்சியுடன் ஒன்றி ணைந்தே வருவது என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியே வந்துள்ளது,
க. ப. சிவத்தை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த "மலை முரசு’ புதுவேகத்துட னும் புத்துணர்ச்சியுடனும் எழுத வந்த மலையக எழுத்தாளர்களுக்கு ஒரு பயிற்சிக் களமாக விளங்கியது- துணை யா கவும் தூண்டுகோலாகவும் இருந்தது. மலை முரசு நடத்திய சிறுகதைப் போட்டியில் தெளிவத்தை ஜோசப்பின் 'நாமிருக்கும் நாடே" சிறுகதை முதல் பரிசைப் பெற்றது. தமிழ் நாட்டில் மணிக்கொடி செய்ததை ஈழத்தில் மறுமலர்ச்சி செய்ததை மலைய கத்தில் மலை முரசு செய்தது என்று சாரல் நாடன் கூறியுள்ளது மிகைக்கூற்று அல்ல.
தரவலை பஜார் டிக்கோயாவிலிருந்து இரா. பாலாவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘மலைப் பொறியும் மலை யக எழுத்தாளர்களுக்கு ஒரு சக்தியாகத் திகழ்ந்தது.
இரா. சிவலிங்கம்; செந்தூரன் தெளி வத்தை ஜோசப்; தமிழ் பித்தன், கொட்ட கலை ஆனந்தி; நயீமா பவுர், ந. அ. தியாகராஜன் ஆகியோர் மலைப்பொறி யில் எழுதினர். கம்பளையிலிருந்து தமிழ்ப் பித்தன் வெளியிட்ட ஈழமணி- இரட் டைப்பாதை நடேசன் கண்டியிலிருந்து வெளியிட்ட "சFரல் பதுளையில் இருந்து வந்த தமிழமுதம்: அல்லி பூங்குன்றம்: பண்டாரவளையில் இருந்து வந்த கலைக் குயில் போன்றவைகளும் மலையக எழுத் துக்குக் களம் அமைத்துக் கொடுத்தன.
கண்டியிலிருந்து மலைநாட்டு எழுத் தாளர் மன்றத்தின் தலைவராக இருந்த ரா. மு. நாகலிங்கம் அவர்கள் வெளியிட்ட *செய்தி மலைநாட்டு எழுத்தாளர்களு டன் மற்றவர்களும் எழுதிய - மற்றவர்

Page 188
களையும் எழுதத்தூண்டிய ஏடாக மிளிர்ந் தது. மு. தளையசிங்கத்தின் ‘ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, செய்தியில் வெளி யான தொடர் கட்டுரையே. செய்தி" நடத்திய சிறுகதைப் போட்டியில் மலரன் பனின் "சடங்கு முதற் பரிசு பெற்றது.
மலையகப் பட்டதாரிகளில் ஒருவரான செல்வராஜா அவர்கள் நடத்திய அஞ்சலி சாந்திகுமார் அவர்கள் நடத்திய தீர்த்தக் கரை; இ.தொ.கா. வெளியிட்ட செளமி யம் ஆகியவைகளும் மலையக எழுத்துக் களுக்கு உந்துதல் தந்தன.
வீரகேசரியைத் தொடர்ந்து தினகரன் சிந்தாமணி ஆகியவையும் மலைநாட்டு எழுத்துக்கென பக்கம் ஒதுக்கிக் கொடுத் தன
1967 ஒக்டோபரில் தினபதியின் தின மொரு சிறுகதைத் திட்டம் ஆரம்பமா யிற்று. மலரன்பனின் "பார்வதி மாத் தளை வடிவேலனின் "கண்கள்" பூரணி யின் "பிள்ளை மடுவத்திலே ஆகிய சிறு கதைகள் சிறப்பாகப் பேசப்பட்டன. இக் கதைகள் முறையே என்.எஸ்.எம்.ராமையா திருச்செந்தூரன் தெளிவத்தை ஜோசப் ஆகியோரால் சிபார்சு செய்யப்பட்டவை யாகும்
* மலையக எழுத்தாளர்களின் கதைக ளிலே புதிய வீறும் தமது மக்களின் அவ லங்களுக்கு இலக்கிய வடிவம் கொடுக்க வேண்டும் என்ற துடிப்பும் மண்வாசனை யும் மண்டிக் கிடப்பதைக் காணலாம். மலைநாட்டின் வாழ்க்கையையும் அவர்க ளுடைய நடைமுறை பேச்சு வழக்கையும் கலா முழுமையுடன் த ன் ன கத் தே கொண்ட கதை என்.எஸ்.எம். ராமையா வின் ஒரு கூடைக் கொழுந்து. அது அவ ருடைய முதல் கதை. மலரன்பனின் முதற் கதையான "பார்வதியும் அதன் தரத்தை எட்டுகிறது" (கதை வளம் 1968 ஜனவரி-1968 பிப்ரவரி),
வாசகர்களுக்கு இது கால வரையும் கிடைக்காத ஒரு புது விதமான வாசிப்பு
അ: {

அனுபவத்தையும் வித் தி யாச மா ன வாழ்க்கை முறைகளைக் காட்டும் கதைக் கருக்களையும் கொண்ட மலைநாட்டுச் சிறுகதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு பிற பிராந்திய எழுத்தாளர்களையும் மலை யகச் சிறுகதைகள் எழுதத் தூண்டின. குறைந்த பட்சம் ஒரு வருடமாவது ஏதா வதொரு தோட்டத்தில் ஆசிரியர் தொழி லாவது பார்த்த அனுபவத்தால் மலைய கக் கதைகள் எழுத முன் வந்தோரே அதி கம் மலையகத்தின் மண் தங்க ளில் ஊறிப்போகும் வரை இம்மக்களுடன் வாழ்ந்த ஒரு சிலரினதைத் தவிர ஏனை யோரின் படைப்புக்கள் வெறும் கதைக ளாகவே இருந்து விட்டன. (1959 இல் தாமரையில் வெளிவந்த வ. அ. வின் அன்னை உட்பட)
"எவ்வளவு தான் மனிதத்தன்மையு டன் அணுகினாலும் பிரச்சினையால் நேரடியாகப் பாதிக்கப்படாதவர்களை விடவும் பாதிக்கப்பட்டவர்கள் எழுதும் போது அத்த எழுத்தில் ஒரு வீச்சும் வேக மும், அழுத்தமும் இருக்கத்தான் செய் கிறது." (தற்காலத் தமிழ் இலக்கியம்இரா. தண்டாயுதம் பக்கம் 145)
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் அட்டன் இலக்கிய வட்டம் 1968ல் இரண்டு சிறுகதைகளை தனித்தனி நூலாக வெளி யிட்டது. இலக்கிய வட்டத் தலைவர் ந. அ. தியாகராசன் 20-5-68ல் வெளியிட்ட ராம சுப்பிரமணியத்தின் ‘தவம்’ சிறுகதை நூலின் சிறு முன்னுரையில் இது எங்களது முதல் முயற்சி, வாசக அன்பர்கள் விரும்பி வரவேற்பார்கள் என்று நம்புகிறோம் என்று எழுதுகிறார். விலை 25 சதம். மு. சிவலிங் கத்தின் 'மதுர கீதம் சிறுகதையும் இதே போல் 30-6-68ல் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி மாதம் ஒரு சிறுகதையை நூலாக வெளியிட அட்டன் இலக்கிய வட்டம் திட் டம் போட்டிருக்கலாம். ஆனால் நடை முறையில் அது சாத்தியப்படவில்லை. மலை யக எழுத்தாளர்களுக்குச் சிறுகதைமேல் உள்ள ஆர்வத்தினையே இது காட்டுகிறது.
-سسه 62

Page 189
1967ல் மலைநாட்டு எழுத்தாளர் மன் றம் வெளியிட்ட பொங்கல் விழா குறிஞ்சி மலரில் என். எஸ். எம். ராமையா, தெளி வத்தை ஜோசப், சாரல் நாடன் ஆகியோர் மூன்று அத்தியாயங்களைக் கொண்ட ஒரு குறு நாவலை எழுதியிருந்தனர். ஒன்றுக் கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் இணைந்து ஒரு படைப்பைத் தருவதென்பது தமது இலக்கிய உலகில் ஏற்கனவே உண்டுதான் என்றாலும் இது ஒரு வித்தி யா சமா ன படைப்பு. ஒவ்வொரு அத்தியாயமும் தன் னளவில் ஒரு சிறுகதையாகவும் இணைந் தால் குறுநாவலாகவும் பரிணமிக்கும் வண் ணம் இப் படைப்பு சிருஷ்டிக்கப்பட்டிருந் ጳቛቇ]•
ராமையாவின் முதல் அத்தியாயம் *சிரஞ்சீவி சரவணையூர் மணிசேகரன் நடத் திய "தமிழமுது விலும், தெளிவத் தை ஜோசப்பின் இரண்டாவது அத்தியாயம் "பிராயச்சித்தம் மல்லிகையிலும் தனித்தனி சிறுகதைகளாகப் பிற கு வெளியிடப்பட்
6.
1967 செப்டம்பரில் கண்டியில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் சிறுகதை மன் னன் புதுமைப்பித்தனுக்கு விழாவெடுத்தது. சொல்லின் செல்வர் இரா.சிவலிங்கம் சொற் பொழிவாற்றினார். தமிழகத்தி லி ரு ந் து பாரதியின் பேத்தியும் கு. அழகிரிசாமியும் வந்திருந்தனர்.
"தமிழ் நாடே புதுமைப்பித் த  ைன மறந்துவரும் நிலையில் இலங்  ைக யின் எங்கோ ஒரு மூலையில் இந்த மலையகத் தில் இருக்கும் நீங்கள் அந்தச் சிறுகதை மேதைக்கு விழாவெடுத்துக் கெளரவிக்கின் நீர்கள். இது என்னை மெய்சிலிர்க்கச் செய் கிறது. சிறுகதை இலக்கியத்தின் மேல் உங் களுக்கிருக்கும் ஆர் வம் தழைக்கட்டும்” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசி னா ர் அழகிரிசாமி. அன்றைய தினம் வீரகேசரி, சிந்தாமணி, தினகரன் ஆகிய மூன்று பத் திரிகைகளும் புதுமைப்பித்தனின் சிறுகதை களைப் பிரசுரித்து அச் சிறுகதை மன்னனை யும், அவருக்கு விழாவெடுத்த மலைநாட்டு
- 16

எழுத்தாளர்களையும் கெளர வித் தன. "செய்தி"புதுமைப்பித்தன் மலர் வெளியிட்டி ருந்தது.
மலையக சிறுகதைகள் செழிப்புடன் வளர்ந்தாலும் பத்திரிகைகளில் உதிரியாக வந்ததுடன் சரி. தொகுதியாக வரவில்லை என்ற குறை சகல மட்டத்திலும் எழுப்பப் பட்டது. பதுளை திரு. மு. நித்தியானந்த னின் பெரு முயற்சியால் "வைகறை" என் னும் வெளியீடு மூலமாக 1979ல் தெளி வத்தை ஜோசப்பின் "நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. 1979க் கான சாகித்தியப் பரிசையும் பெற்றது:
1980ஆம் ஆண்டு இதே வைகறை வெளி யீடு என். எஸ். எம் ராமையாவின் ●@ கூடைக் கொழுந்தை" வெளியிட் டது. 1980ஆம் ஆண்டுக்கான சாகித்திய பரிசை இந்நூல் பெற்றது.
1980 ஜனவரியில் மாத்தளை எழுத் தாளர் ஒன்றியம் மாத்தளை சோமு, மல ரன்பன், மாத்தளை வடிவேலன் ஆகிய மூவ ருடைய சிறுகதைகளையும் சேர்த்து ஒரு தொகுதியாக "தோட்டக்காட்டினிலே’ என் னும் பெயரில் வெளியிட்டது.
மலைநாட்டு எழுத்தாளர் ம ன் றம் நடத்திய 5ஆவது சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை மலரன்பனின் *கோடிச் சேலை. மாத்தளை சிவஞானம் சுஜாதா பிரசுரம் மூலம் 1989ல் கோடிச் சேலை என்னும் பெயரில் மலரன்பனின் சிறுகதைத் தொகுதியை வெளியிட்டார். 1989க்கான சாகித்திய பரிசை இந்தநூல் பெற்றது"
1988ல் மலையக வெளியீட்டகம்மூலம் அந்தனிஜீவா, மொழிவரதனின் "மேகமலை ராகங்கள்" என்னும் தொகுதியை வெளி யிட்டார்.
1971ல் கதைக் கனிகளுக்குப் பிறகு 1979ல் நாமிருக்கும் நாடேயும் 1980ல் ஒரு கூடைக் கொழுந்தும் நூலுருப் பெற்றன. அதன்பிறகு 1988ல் மேகமலை ராகங்களும் 1989ல் கோடிச் சேலையும் நூலுருப் பெற்
-

Page 190
றுள்ளன. நாட்டின் அமைதி இன்மையும் மலையகம் உட்பட சகல பிராந்தியத்தி லும் தமிழ் மக்களுக்கு நேர்ந்த பாரிய இழப்புக்களும் அதனால் அவர்களுக்கேற் பட்ட உடல் மனோநிலை பாதிப்புக்களும், சகலதையும் இழந்து அல்லது  ைக வி ட் டு இங்கென்றும் அங்கென்றும் இந்தியாவுக் கென்றும் ஒடிஅலைக்கழிந்தநிலையில் அவர் களது இலக்கிய இயக்கம் ஸ்தம் பித் துப் போய்விட்டது.
இந்த ஸ்தம்பிதத்திலிருந்து இப்போது மறுபடியும் மலையக இலக்கியம் இயங்கத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றே. இந்தப் புது இயக்கத்துக்கு மலையக கலை இலக்கியப் பேரவையின் தோ ற் ற மும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் தெம் பூட்டி வருகின்றன.
குறிஞ்சிப் பரல்கள் என்னும் ஒரு பகு தியை மீண்டும் வீரகேசரி ஆரம்பித்துள் ளது. அதன் மூலமாக மலைநாட்டு எழுத் தாளர் மன்றம் தனது ஆறாவது சிறு கதைப் போட்டியை நடத்தியது. 1986ல் நடந்த இப்போட்டியில், மல ர ன் பன்: கே. கோவிந்தராஜ்: மல்லிகை. சி. குமார்; மாத் தளை சோமு ஆகியோரின் சிறுகதைகள் தலா 500 ரூபா பரிசு பெற்றன. இப் பரி சுக் கதைகள் நான்கும் மலையகக் கலை இலக்கியப் பேரவையின் "கொழுந்து சஞ் சிகையில் தொடந்து வெளியிடப்பட்டன.
'பிரதேச வாழ்க்கையைப் பொரு ளாய்க் கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புக்களில் பெருந்தோட்டப் பயிர் செய்கைக்குக் களமாக உள்ள மலை நாட்டை மையமாகக் கொண்டு எழுதப் பட்டிருப்பனவற்றிற்குத் தனியிடமுண்டு.

சிறுகதை, நாவல்; நாடகம்; கவிதை என்ற இலக்கியப் பிரிவுகளில் சிறுகதையே மலைப் பிரதேசம் பற்றிய படைப்புக்களில் முத லிடம் பெற்றுள்ளது எனலாம். (கே. கைலாசபதி - தோட்டக்காட்டினிலே முன் னுரை 1980.)
இவைகள் எல்லாம் மலையக சிறுகதை இலக்கியம் தனக்கே உரித்தான தனித்து வத்துடன் வளர்ந்து ஈழத்து சிறுகதை இலக்கியத்துக்கு செழுமையும் வலுவும் சேர்த்துள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ளும் அதே வேளையில் 60க்குப் பின் தோன்றிய உத்வேகமும்-புதுப்புது எழுத்தாளர்களின் தாக்கமான வரவும்அவர்களின் வரவு ஏற்படுத்திய செழுமை யான வளமும் பிறகு பிறகு குறைந்து எண்பதுக்குப் பின் வெறுமையாகி விட்ட தையும் வருத்தத்துடன் கூறிவைக்க விரும்பு கின்றேன்.
என். எஸ். எம். ராமையா; தெளி வத்தை ஜோசப், செந்தூரன்; சாரல் நாடன் மலரன்பன் மாத்தளை வடிவே லன்; மல்லிகை சி. குமார் என்பதற்குப் பிறகு யாரைச் சொல்லலாம் (மாத்தளை சோமு; பரிபூரணன்; பன்னீர்ச்செல்வன்; நூரளை சண்முகநாதன் ஆகியோர் நம் மிடையே இல்லாததால் விட்டுவிட்டேன்)
யாரைச் சொல்லலாம் என்று நானே யோசிக்கும்போது மொத்தமாக ஈழத்துச் சிறுகதை என்றோ அல்லது தமிழ்ச் சிறு கதை என்றோ பார்க்கும்போது என்ன வாகும்!
ஏன் நாணில்லையா என்று யாராவது கேட்க வேண்டும்- அதற்கான படைப்புக் கள் வரவேண்டும் எனபதே எனது அவா.

Page 191
மொழிபெயர்
இ சில அனு
கே. கே
தேயிலை ஏற்றுமதி வணிகர்கள் தேயிலைத் தூளைத் தரம்பிரித்து தேர்ந் தெடுக்கச் சுவைஞர்களை Tea Tasters அமர்த்தியிருப்பார்கள். இவர்கள் தொழில், விற்பனைக்கு வரும் தேயிலைகளின் சுவை யறிந்து தகுந்தபடி தரப்படுத்துவதாகும்.
மொழி பெயர்ப்பாளனும் சுவை பார்த் துத் தான் படித்தவரைப் பதம் பார்த்து "யான் பெற்ற இன்பம் இவ் வையகமும் பெறுக" என எண்ணித் தான் தரமானது எனக் கருதுவனவற்றைத் தன் மொழியில் ஆக்கித்தர முயல்கின்றான்.
ஆக்கல் இலக்கிய ஆக்கியோனை விட மொழிபெயர்ப்பாளன் பணி பல வகையில் சிக்கலான தொண்டாகும். சிறுகதை, நடப் புச் சித்திரம், நவீனம் ஆகிய துறைகளில் உலகப் புகழ் பெற்றவரும் நோபல் பரிசுக் காக பரிந்துரை செய்யப்பட்டவரும் மக் சயயா விருது பெற்றவருமான ஆங்கிலத் தில் எழுதும தமிழ் எழுத்தாளர் ஆர். கே. நாராயண் நாம் நாற்பது ஆண்டுகட்கு முன் நேரிற் கண்டு அளவளாவியபொழுது தமிழகத்துச் சிறுகதை எழுத்தாளர் குறித்து தெரிவித்த சிறு குறிப்பு நெஞ்சிலே பதிந் துள்ளது.
"வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு எச்சி தெறிக்க “ஏன் சார், என்னுடைய ". * தலைப் புள்ள சிறு கதையைப் படித்தீர்களா? ". . . . . . . . . * அந்த பாத்திரப் படைப்பு எப்படி? அது தனி அமைப்பு சார்! தமிழுக்கே புது முயற்சி. என்றெல் லாம் தன் படைப்பு குறித்தே சுய புராணம் படிப்பார்களேயன்றி, மற் றையவர்கள் குறித்து அறியாமையோ, அறிந்து கொள்ள மறுத்த நிலையோ

|ப்புக்கலை
பவங்கள் 9
ணேஷ்
தான் நிலவுகிறது. சிறுகதை எழுதுவது என்பது அப்படியொன்றும் பெரிய முயற்சியல்ல. ஆழ்ந்து அமர்ந்து முயன் றால் அரை மணி நேரத்தில் ஆகக் கூடியது."
மொழி பெயர்ப்புப் பணியோ இங் நனம் கால நேரத்திற்குள் அமையக்கூடிய தன்று. மொழிபெயர்ப்பாளன், மொழி பெயர்க்கும் - மொழிபெயர்க்கப்படும் இரு மொழிகளிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தவிரவும் நாட்டு, மொழி மரபுகள் வரலாறு, சமூக அமைப்பு இயல் அனைத்திலும் ஒரளவேனும் அறிமுகமான வராக இருத்தல் வேண்டும். இவற்றைப் பெற பல நூற்களில் பயிற்சியும் பல மக் களிடையே பெற்ற பயிற்சி அனுபவமும் பெற்றிருக்கவேண்டும்.
ஆங்கில வல்லரசு நம்மவர்கட்கு இழைத்த குறைபாடுகள் பல இருக்க நமக்கு விட்டுச் சென்ற நன்மைகள் சில. வாணிப இயல் நிர்வாக அமைப்பு, நடுநிலைமை, கடமை உணர்வு, இப்படிச் சில. தவிரவும் ஷேக்ஸ்பியரையும் அவரது மொழியையும் தமக்கு அளித்துதவினார்கள். உலகமெல் லாம் பரவிய அவர்களது மொழியின் மூல மாக வெளிவந்த அறிவியல், நுண்கலை, இலக்கியம் போன்ற பல்துறை நூற்களும் பன்மொழிகளில் ஆக்கப்பட்டு பல நாட் டினர் பயனடைந்தனர். பல நாட்டவர் களின் சீரிய படைப்புகள் பலருக்கு அறி முகமாகும் வாய்ப்பினை நல்கியது. இவ் வாங்கில மொழியின் துணையினாலேயே நம் நாடுகளிலும் பத்தொன்பதாம் இரு பதாம் நூற்றாண்டுகளில் “பிற நாட்டு நல் லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில்" வரத் தலைப்பட்டன. சில சமயங்களில் மேலை நாட்டு உடை மாறி உள் நாட்டு
5 =

Page 192
வேட்டி சட்டை அணிந்து வந்ததுமுண்டு. புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எட்கார் வால சையும் அகதா கிரிஸ்டியையும் உருமாற் றினர். ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் துரைசாமி ஆனார். மாப்பசானின் "அட் டிகை" சிறுகதை தமிழகத்து அக்கிரகாரத் திற்குள் புகுந்தது. ஜெரோம் கே ஜெரோம், ஓ ஹென்றி பாத்திரங்கள் உருமாறின. எனினும் பி.எஸ். ராமையா சிட்டி நடத் திய மணிக்கொடி தோன்றியதும் இப்பம் மாத்துக்கள் மாறி பல வெளிநாட்டுப் படைப்புகள் தமிழாக்கம் பெறுவதில் மதிப்பைப் பெற்றன. மொழி பெயர்ப் புக்கும் ஒரு அந்தஸ்து தோன்றியது. கலா ரசிகன் சொ. விருத்தாச்சலமான *ւ!&l மைப்பித்தன்" போன்றவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களையும் புரசு பால கிருஷ்ணன், தி.ஜ.ர., அ.கி. ஜெயராமன், கு. அழகிரிசாமி, தா.நா. குமாரசுவாமி, ப. ராமசாமி போன்றோர் முன்னணி யில் நின்றனர். சிதம்பர ரகுநாதன் ரஷ்ய இலக்கியங்களையும் கவிதை களையும் உயர்ந்த முறையில் தமிழ்ப்படுத்தினார்.
இலங்கையில் சிறிதுகாலம் வீரகேசரி யில் ஆசிரிய பீடத்தில் இருந்த எச். தல் லையா சிறிதுகாலம் இல்லாதிருந்த இடைக் காலத்தில் ஆசிரியராகப் பணி புரிந்த வ.ரா அவர்கள், இலங்கை Times of Ceylon (டைம்ஸ் ஒஃப் சிலோன்) பண் டித நேருவின் தன் வரலாற்றினை வெளி யிட பதிப்புரிமை பெற்றிருந்தது. எனவே வீரகேசரி அவர்களின் மூலம் உரிமை பெற்று நாளேட்டில் நாளும் தொடர்ச்சி யாக வெளிவரும் வண்ணம் சிறப்பாக மொழி பெயர்த்து வெளியிட்டார்.
இதே போல பன்மொழி வழங்கும் இந் திய நாட்டிலும் தெலுங்கு, மலையாளம், இந்தி, வங்காளம், கன்னடம் போன்ற மொழிகளில் தோன்றிய படைப்புகளும் தமிழில் தோன்றவும் இறவாத las(p டைய தமிழ் நூல்கள் அவ்வம் மொழிக ளில் தோன்றவும் ஆங்கில மொழி கருவி யாகவிருந்தது. திருக்குறள், திருவாசகம் போன்ற தமிழ் உயர் இலக்கியங்களின் பெருமையும் ஜி.யு.போப் மொழிபெயர்த்து வெளிநாட்டவர் புகழ்ந்த பின்னரே தமி
- 1

ழர்களின் கண்ணும் திறக்கத் தொடங் கின. அயர்லாந்துக் கவிஞரான W. B. Yeats ஈட்ஸ் தாகூரை ஆங்கிலத்தில்மொழி பெயர்த்து நொபெல் பரிசுக்கு முன் மொழிந்து பெற்றுத் தந்த பின்னரே வங் காளிகளும் அவரை ஆ கூ எனப் புகழத் தொடங்கினர்.
இத்தாலியரான மறைந்த தந்தை பெஸ்கியான வீரமாமுனிவர் தமிழ்ப்பணி யாலும் வின்ஸ்லோ போன்ற மே  ைல நாட்டு சமய குரவர்களின் தாக்கத்தாலும் தமிழில் வசன நடை வந்துற்றது. ஆறு முக நாவலர், வடலூர் இராமலிங்க வள்ள லார், வேதநாயசம் பிள்ளை, உ. வே.சாமி நாத ஐயர், மறைமலை அடிகள், திரு. வி. கல்யாண சுந்தர முதலியார் (திரு.வி. க.) தமிழிலே உரைநடையினை உரம் பெறச் செய்தனர். ஆங்கிலப் படிப்பின் காரணமாக ஷேக்ஸ்பியர், மில்டன், வாட்ஸ்வர்த், ஷெல்லி, பைரன் போன்ற புலவர்களின் ஆக்கங்களும் நவீனத்துறை யில் முன்னின்ற சார்ல்ஸ் டிக்கன்ஸ், வோல் டர் ஸ்கொட், பிரெஞ்சு எழுத்தாளர்கள்
அலெக்சாண்டர் டூமாஸ், விக் த ர் ஹ்யூகோ, ருஷ்ய மேதை லியோதோல்ஸ் தோய், அன்டன் செகோவ், தொ ஸ் தொவ்ஸ்கி போன்றோரின் படைப்புக்க
ளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் தமிழில் நவீனம் எ ன் ற புனைகதைத் துறையை உருவாக்க உதவின.
இங்ங்ணமாக ஆங்கிலத்தின் சாயலில் வளர்ந்த தமிழ் உரை தடையில் மொழி பெயர்க்கும் பொழுது இருநாட்டு மரபுக ளறியாமையால் தமிழாக்கங்களில் சில வேடிக்கைகள் நிகழ்வதுண்டு. twin the table போன்றவற்றை மேசையைத்திருப்பு என்பதாகவும் வந்ததுண்டு,
இடையே ஒரு மிளகாய்ப் புராணம், அறுசுவையில் ஒன்றான காரச்சுவைக்காக நம் மூதாதையர்கள் மிளகாயையே பயன் படுத்தினர். நாட்டில் விளைந்த பயிர் அது. தவிரவும் யவனம், மிசிரம் எனப் பிறநாட்டு வணிகர்கள் கொள் முதல் செய் தனர். இவை மலபார் என வழங்கிய மளையாளமான தற்பொழுதைய இந்திய கேரள நாட்டின் துறைமுகமான கொச்சி யில் ஏற்றுமதி இறக்குமதிகள் நடந்தன.
66 -

Page 193
சோனகர்கட்குப் போட்டியாகக் கடல் வாணிபத்தில் போர்த்துக்கீசியர் தென்ன மெரிக்க நாடாம் லத்தீன் அமெரிக்கா என வழங்கப்படும் கண்டத்தின் பகுதியை ஆட்சி செய்த பொழுது அப்பகுதிப் பொருள்கட்குப் பண்டமாற்றுப் பெற்றுச் சென்றனர். அங்ங்ணம் தென்னமெரிக்க நாடான சிலி Chile யிலிருந்து கொச்சி யில் இறங்கியதால் கொச்சிக்காய் ஆகி யது. ஆங்கிலத்தில Chili மேலைநாடுக ளில் Pepper பெப்பர் எனப் பொதுப் பெயர் பெற்றது மிளகு அந்நாடுகளில் இறக்குமதியானதும் கருப்பு நிறத்தினதா up it 6T g60& Black Pepper 67 60r 6, th Lu j 68) & LA Gir 5 rr ii Green Pepper எ ன வும் பழுத்தவை Red Pepper எனவும் வழங்கி வந்தனர். நம் ம வர் இவற்றை மிளகு+காய் - மிளகாய் ஆக்கி யது போல தோல் நீக்கப்பட்ட மிளகு White Pepper GT6ar agaTrisugi. goal
ளகு மிளகாய்களின் வரலாற்றுக்கூறுகள்.
இவ்வாறிருக்க அண்மையில் ଘରuଶfi வந்த மொழி பெயர்ப்பில் Red Pepper என்பதை சிகப்பு மிளகு என்று தமிழாக்கி விட்டார்கள். மிளகாய் என்று குறிப்பிட்டு வாசகர்களின் எண்ணத்தில் குழப்பத்தை தோற்றுவிக்காதிருந்திருக்கலாம்.
மேல்நாட்டவர்க்கு விளக்க மா கத் தலைப்பாகையை வர்ணித்த முல்க்ராஜ் ஆனந்த் தமது தீண்டாதான் நூலில் பல அடி நீளமிக்க துணியை இத்தனை புரி மடித்துச் சுற்றிச் சொருக வேண்டும் என விரிவாக எழுதியிருந்தார். நம்மவர்க்கு இதனை மொழிபெயர் க் கும் பொழு து தலைப்பாகை அணிந்திருந்தான் என்றால் போதுமானதல்லவா?
இவ்விதமான சந்தர்ப்பங்களில் மொழி பெயர்ப்பாளன் தன் யுக்தியைப் பயன்
படுத்தவேண்டும்.
இதேபோன்று சமூக இயல் வரலாறு போன்றவற்றில் மொழிபெயர் ப்ப ா ள ண் உணர்ந்திருக்கவேண்டியநிலைக்கு ஒரு எடுத் துக்காட்டு. சீன நாட்டில் ஆடவர்கள் நம் மவர்கள் கொண்டை வளர்த்தது போல் சடை போட்டிருந்தனர், கொண்டை கர் நாடகமாக கருதப்பட்டதுபோல் புதுமைக் கருத்துக்கள் தோன்றிய காலத்தில் சடை வளர்த்தவர்கள் பழைமை வாதிகளாகக் கருதப்பட்டனர். 1911ல் தோன்றிய புரட் சிக்கு முற்பட்ட காலங்களில் சடை வளர்ப்
- 1

பவர்கள் பிற்போக்குவாதிகளாகக் கருதப் பட்டனர்; முடியாட்சியை ஆதரிப்பவர்களா கக் கருதப்பட்டனர். சடையை அகற்றிய வர்கள் குடியாட்சியைப் போற்றுபவர்க ளாக இருந்தனர். இத்தகைய சின்னமான சடை ஆங்கிலத்தில் Pig Tail என்று வழங் கப்பட்டது. இதை பன்றிவால் என மொழி பெயர்த்தனர் சிலர். உண்மையில் இம்முடி மாற்றத் தத்துவத்தை உணர்ந்து மொழி பெயர்ப்பாளன் தன் வாசகர்கட்கு உணர்த் தும் தன்மை பெற வரலாறு அறித்திருத் தல் வேண்டும்.
மேல்நாட்டு மரபுச் சொற்களை மரபு வழியறியாது நேரடியாக மொழிபெயர்க் கும்பொழுது வேடிக்கையாக அமைந்துவிட லாம். அர்த்தத்கை அனர்த்தமாக்கிவிடுவ துமுண்டு. "Go to Hel!”என்பதைத் தமிழ்ப் படுத்திய ஒருவர் "நரகத்திற்குப் போ!' என்று தமிழ் ப் படுத் தி யி ரு ந் தா ர். "தொலைந்து போ!", "நாசமாகப் போக!" என்பன போன்று மொழிபெயர்த்திருந்தால் தம் மரபை ஒட்டியதாக இருந்திருக்கும். தவிரவும், ஆங்கிலத்தில் Uncle, Cousin என்பன தாய்வழி தந்தைவழி உறவினர் களை வேறு வேறு உணர்த்துபவை அல்ல. இந்தியப் பண்பாட்டை உணர்த்தும் நெடுங் கதை மொழிபெயர்ப்பில் தன் உடன்பிறந்த வரின் மகனை அதாவது சிற்றப்பன் தன் அண்ணன் மகனை அழைத்துச் செல்லும் பொழுது சில தாயைக் குறிக்கும் வகைச் சொற்களை உதிர்க்கிறான். அவனை Uncle என்றே மூலத்தில் குறிப்பிட்டதால் மாமன் என்றே மொழிபெயர்ப்பாளர் குறிப்பிடு கிறார். உண்மையில் மாமன் அவ்வாறு கூறான், அவ்விடத்தில் ஒரு சிற்றப்பனோ பெரியப்பனோதான் கூறமுடியும். இத்த கைய நம் மரபுகளையும் நோக்கி வெறும் நேரடியாகச் செய்யாது இடம் பொருள் ஏவல் அறிந்து கையாளவேண்டி வரும்.
இங்ங்ணம் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து உருமாறி உடை மாறி உணர்வுகளை ஒரு மைப்பட உணர்த்தி மூல ஆசிரியரின் கருத்தை கற்புநிலை மாறாது காப்பாற்ற வேண்டிய கடமை உணர்வு ள் ள வ னா க மொழிபெயர்ப்பாளன் இருக்கவேண்டும். இத்தகைய மாற்றப்போக்கில் நாடு, பண் பாடு இவற்றிற்கு ஏற்ப உணர்த்தவேண் டிய நிலை தோன்றும். வால்மீகியின் "சக் கரவர்த்தித் திருமகன்" காவியத்தின் மிதி லைக் காட்சி கம்பனின் கைவண்ணத்தால் தமிழகத்து அகத்துறை மரபின் வழி இன் பச் சுவையை ஊட்டுகிறது.

Page 194
பாரசீகக் கவிஞரான உமர்கயா மின் ருபாயத்துகள் ஆங்கிலேயப் புலவனான எட்வர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டின் ஆங்கி ல மொழிபெயர்ப்பால் உலகத்துக்கு அறிமுக மாகின.
A book of verse underneath the bough A Jug of wine, a loaf of bread and thou Beside me singing in the wilderness O wilderness were paradise enow.
என்ற வரிகள் ஆங்கில மாணவர்கள் இன்ப உணர்வுடன் உச்சரித்தவை. பாரசீக மொழி யில் வல்லுனரான ஏ. ஜே. அர்பெரி (A. . Arberry) என்ற அறிஞர் இவ்வரிகள் குறித்த மொழியாக்கம் மூல ஆசிரியரின் கற்பு நெறி யினை வழுவிவிட்டதாகக் குறைகூறியுள் ளார். அவர் தந்துள்ள உரைநடைக் கவிதை மொழிபெயர்ப்பு இது:-
If there be available a loaf of the
heart of wheat
And a two pint flagon of wine
and the thigh of lamb, With a little sweetheart seated in a
desolation That is a pleasure which is not the attainment of any sultan.
கோதுமை அளித்திடு ரொட்டி ஒன்றுடன் கூடிடும் இரண்டு மிடா மதுவுடனே ஆட்டுக் குட்டியதன் தொடையும் அமைதியுறு இடத்தில் அழகிய நங்கை
அமர்ந்திருக்க சுல்தானும் பெறாத சுகமன்றோ அது!
என்றவகையில் அமைந்தது மூலம். எனினும் மொழி பெயர்த்த கவிஞர் ஃபிட் ஸ் ஜெரால்ட் தமது ஆங்கில ஆக்கத்தில் புத்த கத்தையும், மரநிழலையும், பாடலையும் வருவித்துக்கொண்டாரெ ன் றும், காட் டினை வைகுந்தத்திற்கு நிகராக்கினார் என வும் குறிப்பிட்டதுடன், மொழிபெயர்ப் பாளர் பாரசீகதாட்டுப் பழக்கத்தை ஆட் டுக்குட்டியின்தொடையை ரசிப்பதை குறிப் பாக எடுத்துக்காட்டும் பகுதியை சேர்க் காது விட்டார் எனவும், அமை தி யற் ற ஆடம்பர சுல்தானின் வாழ்க்கைக்கு அமைதி மிகுந்த காதலர் ஒதுப்பிடம் என்ற கவிதை
ன் அடிப்படைக் கருத்துணர்வை எடுத் துக்காட்டவில்லை என்பதாகவும் குறிப்பிடு கின்றார்.
- It

மொழிபெயர்ப்பு குறித்த குறைகள் பல கூறினாலும் எ ப் படி யோ ஃபிட்ஸ் ஜெரால்ட் மொழிபெயர்ப்பின் காரணமா கவே உமர் கயாம் பாடல்கள் உலகப் புகழ் பெற்றன. இவ்வாங்கில ஆக்கத்தினின்று இவ்வரிகளைத் தமிழாக்கிய நம் இரு புல வர்களதைப் படியுங்கள் :-
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு கையிற் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு தெய்வ கீதம் பலவுண்டு
தெரிந்து பாட நீயுமுண்டு வையந் தருமிவ் வனமன்றி
வாழும் சொர்க்கம் வேறுண்டோ?
எனக் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை கையில் கம்பன் கவிதை நூலைத் தமிழ் மரபுப்படி கொடுத்துள்ளார்.
பாலபாரதி சு. து. சுப்பிரமணிய யோகி шптпї,
மாதவிப் பூங்கொடி நிழலில்
மணிக கவிதை நூலொன்றும்,
தீதறு செந்தேன் மதுவும்
தீங்கனியும் - பக்கத்தில்
காதலி நீ பாட்டிசைத்துக்
கணிவோடு கூடுவையேல்
ஏதும் இனிக் கவலையில்லை. இதுவன்றோ பரமபதம்,
வாசகர்களின் கவிதை அனுபவ சுகமே
இவற்றில் எவை தகுந்தவை என முடிவு தருபவை
இவ்விதமாக ஆங்கிலத்தினின்று தமி ழாக்கப்படும் சொற்கள்-நேரடி மொழி பெயர்ப்புக்கள் தமிழ் மரபில் ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டியதுபோல் ஆய்விடுவதுமுண்டு. பழந்தமிழ்ச் சங்ககால முதல் வழிவழியாக வழங்கும் அருவி என்ற அழகிய சொல்லிருக்க Water falls என்ப தன் நேர் மொழி பெயர்ப்பான நீர் வீழ்ச்சி என்ற நீண்ட சொல்லும் தமிழில் இடம் பிடித்துக்கொண்டதை நோக்குக
மொத்தத்தில் இக்கூடுவிட்டு கூடுபாயும் பணியில் யாருக்காக இலக்கியம் ஆக்கப்படு கின்றதோ அவர்களுக்கு மூல ஆசிரியரின் உட்கருத்தை மொழி பெயர்ப்பாளன் அனை வரும் புரிந்துகொள்ளும் நடையில் சுவை பட உணர்த்துவதே பெருங் கடமையாகும்.
سس 58

Page 195
சாகித்திய வி கெளரவ விருது பெறுப
பண்டிதர் மு. கந்தையா
இவர் யாழ்ப்பாணம் ஏழாலையைச் ஆகிய மும்மொழிகளிலும் சிறந்த பாண்டித் றுத் தெளிந்தவர். பல செய்யுள் நூல்களு பட்டுள்ளன. ஆசிரியராகவும் இவர் பணியா தமிழ் இலக்கியம், சைவசித்தாந்த வகுப்புக செய்துள்ளார்.
இலங்கை அரசினர் நடாத்திய ஆசிரி உதவியுள்ளார்.
மாவை பிள்ளைத்தமிழ், நாவலர் பி கிரியைகள், சித்தாந்தச் செழும்புதையல், திருக்கேதீஸ்வர மான்மியம் (புராதன கா டுள்ளார்,
தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலய டெல்லி சற்குரு பதிப்பகம் வெளியிட்டுள்ளது புலப்படுத்தும் 'சிவஞானசித்தித் திறவுகோல்
எவ். எக்ஸ். வி. நடராசா
யாழ். காரைநகரில் 21-01-1911ஆம் டக்களப்பு புனித அகுத்தீனார் ஆசிரியர் பய 1934இல் சுவாமி விபுலானந்தரைக் குரு 1936ஆம் ஆண்டு மட் / அகுத்தீனார் ஆசிரி ரானார். 1946இல் மட்டக்களப்பு அரசடி யாளராகவும், பின்னர், அட்டாளைச்சேனை யாளராகவும் பணிபுரிந்தார். 1950இல் "வித் ஆண்டுவரை மீண்டும் அட்டாளைச்சேனை ராகவும் 1952 தொடக்கம் 1968ஆம் ஆண்டு ஆராய்ச்சி உத்தியோகத்தராகவும், 1968 ெ மொழிபெயர்ப்பு அத்தியட்சகராகவும் கடை
இவர் எழுதிய முன்னூற்றுக்கு மேற் சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும், ம தமிழ்", கரந்தை தமிழ்ச் சங்கத்து வெளி யீடான "மலைமகள்", "வித்தியாசமாசாரப் வந்துள்ளன.
சொந்தப் பெயரிலும் கூத்தப்பிரான், களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ள மதுரையிலும் நடைபெற்ற அனைத்துலக

ழா 1991 வர்கள் - ஓர் அறிமுகம்
சேர்ந்தவர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் தியம் பெற்றவர். சைவசித்தாந்தத்தைக் கற் ம், ஆய்வு நூல்களும் இவரால் வெளியிடப் ாற்றியிருக்கிறார். தமது ஓய்வு நேரங்களில் ளை நடத்தி தமிழ்ப் பணியும் சமயப்பணியும்
பர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் பெரிதும்
ள்ளைத் தமிழ், சித்தாந்த விளக்கிற் சைவக் அரியவும் பெரியவும் (இரண்டு பாகங்கள்), “லம்) ஆகிய நூல்களை இவர் வெளியிட்
வரலாறு பற்றி இவர் எழுதிய ஆங்கில நூலை 1. அன்னாரது தத்துவ ஆராய்ச்சித் திறனைப் * நூலும் வெளிவரவுள்ளது.
ஆண்டு பிறந்தவர். 1983ஆம் ஆண்டு மட் பிற்சிக் கலாசாலையிற் சித்தியடைந்த இவர், வாகக் கொண்டு பால பண்டிதம் கற்றார். பர் பயிற்சிக்கலாசாலையில் விரிவுரையாள ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரை ா ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில் விரிவுரை துவான்’ பட்டம் பெற்றார். 1950 -1952ஆம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாள வெரை அரசகரும மொழித் திணைக்களத்தில் தாடக்கம் 1971 வரை இதே திணைக்களத்தில் மயாற்றி 1971இல் ஓய்வு பெற்றார்.
பட்ட கட்டுரைகள் தினகரன், வீரகேசரி, துரை தமிழ்ச் சங்கத்து வெளியீடான "செந் பீடான "தமிழ்ப் பொழில்", மலேசிய வெளி பத்திரிகை" முதலான சஞ்சிகைகளிலும் வெளி
புவியூரான், பிரமா முதலிய புனைப் பெயர் ன. 1966இல் கோலாலம்பூரிலும், 1981இல் தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளிலும் 1976இல்

Page 196
மட்டக்களப்பில் நடைபெற்ற மகாநாட்டிலு முன்னூற்றுக்கு மேற்பட்ட சொற்பொழிவுகள் இப்போது நூலுருவில் வெளிவர ஏற்பாடு இவரால் எழுதப்பட்டுள்ளன. இவர் எழுதி அச்சிலிருக்கிறது. கத்தோலிக்க எழுத்தாள பெற்றபொழுது அதில் கலந்து கொண்டா நூல் சாகித்தியப் பரிசுபெற்றது. 1988இல் பட்டது. மட்டக்களப்புக் கலாசாரப் பேர6 டம் அளித்துக் கெளரவித்தது. பிரதேச அ பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டது.
எண்ணெய்ச் சிந்து (1953), ஈழமும் (1955), மட்டக்களப்பு மான்மியம் (1962), ஈழத்து தமிழ் நூல் வரலாறு (1970), கா6 கள் வளமும் வாழ்க்கையும் (தொகுப்பு 19 வாகும்.
கே. கணேஷ்
கரந்தகொல தோட்டம் தலாத்து கண்டி அம்பிட்டிய என்னும் இடத்தில் பிற திலும் பின்னர் இலங்கையிலும் பெற்றார்.
சென்னையில் தனது நண்பர்களுடன் அமைப்பை ஆரம்பித்து, 'லோகசக்தி" என் 1945இல் பல முற்போக்கு எழுத்தாளர்களை கத்தை தமிழகத்தில் 'ஆரம்பித்தார். சுவா டின் விக்கிரமசிங்காவை உப தலைவராகவு கத்தை ஆரம்பித்து, கலாநிதி சரச்சந்திராவே வாழ் தமிழ், சிங்கள எழுத்தாளரை ஒன்றிை
கே. கணேஷ் அவர்கள் சிறந்த ( பெட்டோஃபியின் கவிதைகள் இவரால் த சிறுகதைகள் என்ற தொகுதியும் இவரின் டெ மாகும். இவற்றைவிட பிரபல சீன எழுத்தா தமிழ் மக்களுக்குத் தந்தவர். உக்ரேனிய மான "கத்தரினா'வை தமிழில் தந்திருக்கிறா பிறநாட்டுக் கவிதைகளைத் தமிழ்ப்படுத்தியு கவிஞரின் கவிதைகளை மொழி பெயர்த்து பின்னர் சுதந்திரனிலும் கடமையாற்றியுள் ெ யின் ஆசிரியரும் இவர்தான்
கணேஷ் அவர்கள் சிறந்த சிறுகதை தியாகி ஆறுமுகம்" எனும் சிறுகதை பலரின் கத்தைப் பலமான சக்தியாக மாற்றுவதிலு எழுத்தாளரின் பிரதிநிதியாக ரஷ்யா, பல்ே சென்றுள்ளார். உலகக் கவிதை விழாவில் ஹிட்டோவின் விருதையும் பெற்றவர். க

ம் ஆய்வுக் கட்டுரைகள் படித்தார். இவர் ளை நிகழ்த்தியிருக்கிறார். இவைகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கின்றன. இருபது நூல்கள் ய 'தொன்னூல் விளக்கம் - எழுத் கதிகாரம்" ர் மகாநாடு 1953இல் கோயம்புத்தூரில் நடை ர். இவரது "மட்டக்களப்பு மான்மியம்’
இவருக்கு சாகித்திய மண்டல விருது வழங்கப் வை 1986இல் இவருக்கு "மகாவித்துவான்’ பட் பிவிருத்தி அமைச்சினால் வித்துவசிரோமணி’
தமிழும் (1957), மொழி பெயர்ப்பு மரபு ஈழத்து நாடோடிப் பாடல்கள் (1967) ரைநகர் மான்மியம் (1971) மட்டக்களப்பு மக் 30), என்பன இவர் எழுதிய நூல்களுட் சில
ஓயாவைச் சேர்ந்த இவர், 02-03-1920இல் ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை தமிழகத்
இணைந்து இளைஞர் காங்கிரஸ் என்னும் ாற பத்திரிகையை 1936இல் வெளியிட்டார். ஒன்றிணைத்து முற்போக்கு எழுத்தாளர் சங் ாமி விபுலானந்தரைத் தலைவராகவும் மாட் ம் கொண்டு அகில இலங்கை எழுத்தாளர் சங் பாடு இணைக்காரியதரிசியாகவிருந்து இலங்கை ணத்துப் பலப்படுத்தியவராகவும் இருக்கிறார்.
மொழிபெயர்ப்பாளர். ஹங்கேரிய கவிஞர் மிழ்ப்படுத்தப்பட்டிருக்கின்றன. வியட்நாமி மாழி பெயர்ப்புத் திறனுக்குச் சிறந்த உதாரண “ளர் லூசுனின் கதைகளின் மொழி பெயர்ப்பை மகாராணி தாராஷ் செவ்சென்கோவின் காவிய ர். இவற்றைவிட உதிரியாக பெருந்தொகை ள்ளார். வி. குப்பிரியானோ என்ற சோவியத் ந் தந்திருக்கிறார். சிலகாலம் வீரகேசரியிலும் ாார். "பாரதி” என்ற முற்போக்கு சஞ்சிகை
ஆசிரியரும் கூட இவர் எழுதிய "ஆகஸ்ட் பாராட்டைப் பெற்றது. தொழிலாள வர்க் ம் பெரும்பாடுபட்டார். இலங்கைத் தமிழ் கரியா போன்ற நாடுகளுக்கெல்லாம் இவர் பங்குபற்றி யப்பானிய சக்கரவர்த்தி ஹிரோ 0ாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோ

Page 197
சனைச் சபையிலும், சாகித்திய மண்டலத் தமிழ் கலாசாரப் பேரவையின் நிறைவேற் ஏசியாற்றிக் சொசைட்டியின் ஆயுட்கால உ
பேராசிரியர் ம. மு. உவைஸ்
பாணந்துறை (கொறக்கானை)யில் 1 ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டி புக் கற்கை நெறியை மேற்கொண்டு 2ஆம் பட்டத்திற்கு சிங்களத்தையும் துணைப்பாட கியத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு" என் பெற்றவர். பேராதனைப் பல்கலைக்கழக கொடுத்தது.
கொழும்பு பல்கலைக்கழகத்தில், 1948இ கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் சேர்ந்து கல்வித் திணைக்களத்தில் மொழி பெயர்ப்ப கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் கலைக்கழக இஸ்லாமிய தமிழிலக்கியத்துறை நிதி பி. எம். அஜ்மல் கானின் துணையுடன் எழுதி வருகிறார். பல தொகுதிகள் ஏற்கள்
சென்னை உமறுப்புலவர் பேரவை முஸ்லிம் கலைஞர் சங்கம் "இலக்கியச் சித் ருக்கு வழங்கின.
தனது சொந்தத்திலும், தொகுப்பா இவர் வெளியிட்டிருக்கிறார். இஸ்லாமியத் குடியார், நீதியும் நியாயமும், இஸ்லாமும் நூல்களை எழுதியிருக்கிறார். மாட்டின் விக் மப் பிறழ்வு’ என்ற தலைப்பில் மொழி பெ

திலும் உறுப்பினராக இருந்ததுடன், உலகத் ]றுக் கவுன்சில் உறுப்பினராகவும் றோயல் றுப்பினராகவும் இவர் விளங்குகிறார்.
3-01-1922இல் பிறந்தவர். தமிழ், சிங்களம், டத்தியம் பெற்றவர். தமிழ் மொழியில் சிறப் வகுப்பில் சித்தி பெற்ற பட்டதாரி. தனது மாகக் கற்றுத் தேறியவர். "தமிழ் இலக் ற தலைப்பில் ஆய்வு செய்து எம். ஏ. பட்டம் ம் 1975இல் இவருக்கு கலாநிதிப் பட்டம்
இல், பகுதிநேர விரிவுரையாளராகவும், பின்னர் 1957வரை ஆசிரியராகவும் பணி செய்தவர். ாளராகவும், பின்னர் வித்தியோதய பல்கலைக் பணியாற்றியவர். மதுரை காமராஜர் பல் ப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், கலா இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை னவே வெளிவந்துள்ளன.
‘தமிழ்க் காவலர்" பட்டத்தையும், மதுரை தர் என்ற கெளரவப் பட்டத்தையும் இவ
கவும், மொழி பெயர்ப்பாகவும் 46 நூல்களை
தென்றல், நம்பிக்கை, ஞானவள்ளல் குணங் இன்பத் தமிழும், மக்காப் பயணம் போன்ற கிரமசிங்காவின் "கம்பெரலிய" நாவலை "கிரா பர்த்திருக்கிறார்.

Page 198
பரிசு பெறும் நூ
கொடுத்தல்
பிரசவங்கள்
மூட்டத்தினுள்ளே
தண்ணிர்
சாகுந்தல காவியம்
பொன்னாடை
தப்பி வந்த தாடிஆடு
காட்டில் ஒருவாரம்
இந்நூலாசி யிடப்பட்ட
பாணம்). கி கான சிறந்
இந்நூலின்
1986இல் ெ (தெல்லிப்ப 1986ஆம் ஆ கிடைக்கிறது
புலோலியூர் og Gg5 Sfio
1983ல் எழு டத்துக்கான
பிரபல நா: யிருக்கிறார் வெல்லை ெ 1987ஆம் ஆ வழங்கப்படு
இந்நூலின்
மே 1987இல் 5rror l987,
கிறது.
இந்நூலின்
ஷெரீப்) 19 கத்துறையி: சைப் பெறு
இந்நூலின் ஆ யாழ்ப்பான விரிவுரையா நூல் நாட யீடு. சிறுவ கான சிறந்த
இந்நூலாசி 1988gai G (தெல்லிப்ப வருடத்துக்க

ல்கள் 1981 - 1988
ரியர் சுதாராஜ். 10-6-1983ஆம் திகதி வெளி இந்நூல், ஒரு சிரித்திரன் பிரசுரம் (யாழ்ப் சிறுகதைத் துறையில் 1983ஆம் வருடத்துக் த நூற் பரிசைப் பெறுகிறது.
ஆசிரியர் கோகிலா மகேந்திரன். ஏப்ரல் வளியிடப்பட்ட இந்நூல். ‘சிவன் கல்விநிலைய" ளை) வெளியீடு. சிறுகதைத் துறை யில் ஆண்டுக்கான சிறந்த நூற் பரிசு இந்நூலுக்குக்
.
க. சதாசிவம் என்பவர் இந்நூலின் ஆசிரியர். வெளியீடாக வெளிவந்த இந்நூல், ஜுலை 2தப்பட்டது. நாவல் துறையில் 1983ஆம் வரு
சிறந்த நூற் பரிசைப் பெறுகின்றது.
வலாசிரியர் கே. டானியல் இந்நூலை எழுதி 2-8-1987இல் வெளிவந்த இந்நூல், “வாரா வெளியீடு" (பருத்தித்துறை). நாவல் துறையில் ஆண்டிற்கான சிறந்த நூற்பரிசு இந்நூலுக்கு கிறது.
ஆசிரியர் க. திருஞானசம்பந்தன் (சம்பந்தன்). ல் வெளியிடப்பட்ட இந்நூல், கவிதைத்துறைக் ஆம் வருட சிறந்த நூற்பரிசினைப் பெறு
ஆசிரியர் ஜுனைதா ஷெரீப், (கே. எம். எம். 88 மேயில் வெளியிடப்பட்ட இந்நூல் நாட ல் 1988ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற்பரி
கிறது.
ஆசிரியர் கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் 'ப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத்துறை 'ளர். 1987 மார்ச்சில் வெளியிடப்பட்ட இந் க அரங்கக் கல்லூரி (யாழ்ப்பாணம்) வெளி ர் இலக்கியத் துறையில் 1987ஆம் வருடத்துக் | நூற் பரிசு இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
ரியர் அநு. வை. நாகராஜன். 23 நவம்பர் வெளிவந்த இந்நூல் "வைரமான் வெளியீடு" ளை). சிறுவர் இலக்கியத்துறையில் 1988ஆம் ாேன சிறந்த நூற்பரிசை இந்நூல் பெறுகிறது.

Page 199
9. தேசபக்தன் கோ.நடேசையர் இந்நூலின்
10.
11.
丑2,
3.
4.
வெளியீட்ட டது. 1988ஆ வாழ்க்கை 6
உள்ளதும் நல்லதும் : இந்நூலாசிரி
புலவர்மணி (மட்டக்கள வாழ்க்கை வ கான சிறந்த 14ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டிறுதி வரை ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சி இந்நூலாசிரி 1982ତୁର୍ଗା) ଦ୍ୱାରଗ சங்க வெளி 1982ஆம் வரு வழங்கப்படுகி பாரதியின் மொழிச் சிந்தனைகள்-ஒரு மொழி யியல் நோக்கு இந்நூலின் ஆ
1984 மேயில் கழக கலைட் லும் துறை பரிசு இந்நூ கீழைத்தேய கல்வியியற் சிந்தனைகள் : இந்நூலாசிரி வருடம் வெ திற்கான "ச சிறந் இலங்கையிற் தொல்லிய ADļ55 லாய்வுகளும் திராவிடக் S. கலாசாரமும் இந்நூலாசிரி Ꮧ988 ᎧᎧᎧu ᏪᎦᎥ DIT6fl-Giug சிறந்த நூற்
பரிசு பெறும்
கோடிச் சேலை நூலாசிரியர் பெலல்லவை --- 25p சிறுகதைத் சிறந்த நூல் கதைகள்
நம்பிக்கை : நூலாசிரியர் யாழ்ப்பாண 9fluri. 01-. வெளியீடு" ( வருடத்துக்க

ஆசிரியர் சாரல்நாடன். கண்டி, மலையக கத்தினால் ஜான் 1987இல் வெளியிடப்பட் ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற்பரிசை வரலாறு' துறையில் இந்நூல் பெறுகிறது.
யர் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை. பெரியதம்பிப்பிள்ளை நினைவுப் பணிமன்றம் ப்பு) 1982இல் இந்நூலை வெளியிட்டுள்ளது. ரலாறு என்ற துறையில் 1982ஆம் ஆண்டுக் நூற்பரிசு இந்நூலுக்கு வழங்கப்படுகிறது.
யர் கலாநிதி க. செ நடராசா அவர்கள். பளியிடப்பட்ட இந்நூல், கொழும்பு தமிழ்ச் யீடு. "இலக்கிய வரலாறு" துறைக் கா ன ಕ್ಷಣಕಹTಣ சிறந்த நூற் பரிசு இந்நூலுக்கு ADI
ஆசிரியர் கலாநிதி எம்.ஏ. நுஃமான் அவர்கள் வெளிவந்த இந்நூல், யாழ்ப்பாணப்பல்கலைக் பீட வெளியீடு. "சமூகவியலும் மானிடவிய க்கான 1984ஆம் ஆண்டுக்கான சிறந்த நூற் லுக்கு வழங்கப்படுகிறது.
யர் என். கே. தர்மலிங்கம், 01-10-1987ஆம் ளியிடப்பட்ட இந்நூல், 1987ஆம் வருடத் சமூகவியலும் மானிடவியலும் துறைக்கான
பரிசைப் பெறுகிறது. -
யர் திருமதி தனபாக்கியம் குணபாலசிங்கம். ாசியில் வெளிவந்த இந்நூல், "சமூகவியலும் லும் துறைக்கான 1988ஆம் வருடத்துக்குரிய பரிசைப் பெறுகிறது,
நூல்கள் 1989
"மலரன்பன்" வடக்கு மாத்தளை கவுடு ச் சேர்ந்தவர். 05-10-1989இல் வெளியிடப் ால், 'சுஜாதா பிரசுரமாக வெளிவந்தது. துறையில் இந்நூல் 1989ஆம் ஆண்டுக்கான பரிசைப் பெறுகிறது. ஆசிரியரின் 12 சிறு ந்நூலில் அடங்கியிருக்கின்றன. V
பேராசிரியர் சிவஞானசுந்தரம் (நந்தி); 'ப் பல்கலைக் கழக மருத்துவத்துறைப் பேரா 12-1989இல் வெளிவந்த இந்நூல் ஒரு "வரதர் யாழ்ப்பாணம்). நாவல் துறையில் 1989ஆம் 5ான சிறந்த நூற்பரிசை இந்நூல் பெறுகிறது:

Page 200
மஹாகவியின்
புதியதொரு வீடு
குழந்தைப் பாடல்கள்
விமரிசன மெய்யியல்
சமஸ்கிருத இலக்கியச் சிந்தனைகள்
. இலங்கை அரசியல் பொருளாதார அபி விருத்தி 1948-56 வர்த்தக இனத்துவ நிலைப்பாடுகள்
தாயாகப்போகும் உங்களுக்கு
9 கிரித்திரன் சித்திரக்கொத்து:
நூலாசிரியர் 1989இல் ெ யீடு (கல்மு துக்குரிய சி
நூலாசிரியர் அதிகாரி. 1! பூரீசுப்பிரமணி சிறுவர் இல ஆண்டுக்கான
இந்நூலாசி இவர் யாழ்ப் நிலை விரிவு இது ஒரு ' திறனாய்வு
கான சிறந்த
பேராசிரியர் இவர் யாழ்ப் தலைவர். ஜ "இலக்கிய வ சிறந்த நூற்
இந்நூலின்ஆ யாழ்ப்பாண நிலை விரிவு தலைவரும் யாழ்ப்பான கும். "சமூ 1989ஆம் வ பெறுகிறது:
இந்நூலாசிரி கள். இது ஜனவரி 198 வருட அறிவு கிறது.
திரு. சி. சி ஆவணி மா நூல், ஒரு
"ஏனைய துை ஆண்டுக்கான

உருத்திரமூர்த்தி (மஹாகவி). செப்ரெம்பர் வளியிடப்பட்ட இந்நூல், ஒரு "வாச வெளி னை). நாடகத்துறைக்கான 1989ஆம் வருடத் றந்த நூற் பரிசை இந்நூல் பெறுகிறது.
த. துரைசிங்கம் அவர்கள். இவர் ஒரு கல்வி 989 வைகாசியில் வெளியிடப்பட்ட இந்நூல் னிய புத்தகசாலை (யாழ்ப்பாணம்) வெளியீடு. க்கியம் என்ற வகுதியினுள் இந்நூல் 1989ஆம் எ சிறந்த நூற் பரிசைப் பெறுகிறது.
ரியர் கலாநிதி சோ.கிருஷ்ணராஜா அவர்கள் பாணப் பல்கலைக்கழக மெய்யியல்துறை முது ரையாளர். 1989இல் இந்நூல் வெளிவந்தது. நான் வெளியீடு (யாழ்ப்பாணம்). இலக்கியத் என்ற துறையில் இந்நூல் 1989ஆம் ஆண்டுக் த நூற் பரிசைப் பெறுகிறது.
வி. சிவசாமி அவர்கள் இந்நூலின் ஆசிரியர். பாணப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறைத் "சலை 1989இல் வெளியிடப்பட்ட இந்நூல், ரலாறு' துறைக்கான 1989ஆம் ஆண்டுக்குரிய ) பரிசைப் பெறுகிறது.
சிரியர் கலாநிதி வி.நித்தியானந்தன்அவர்கள் ப் பல்கலைக்கழக பொருளியல் துறை முது ரையாளரான இவர், பொருளியல் துறையின் கூட. 1989இல் வெளியிடப்பட்ட இந் நூல், ப் பல்கலைக் கழகக் கலைப்பீட வெளியீடா கவியலும் மானிடவியலும் துறைக்காக ருடத்துக்குரிய சிறந்த நூற் பரிசை இந்நூல்
யர் டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர் ஒரு யதார்த்தா" (பருத்தித்துறை) வெளியீடு. 9இல் வெளியிடப்பட்ட இந்நூல், 1989ஆம் பியல் துறைக்கான சிறந்த நூற் பரிசைப் பெறு
வஞானசுந்தரம் (சுந்தர்) இதன் ஆசிரியர். தம் 1989ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந் சிரித்திரன் வெளியீடு (யாழ்ப்பாணம்). றைகள்" என்ற வகுதியுள், இந்நூல் 1989ஆம் ா சிறந்த நூற் பரிசைப் பெறுகிறது.

Page 201
(With f3e
6! Odel
RSSSSSSRSS
n

OLOeLeqLeqLqOqLeLqYLeLeLeqLeLLeLLLLLLeeLqeeeeeLeeeLeeLqLLqLq
st MVusheta
O72.
09;sher

Page 202
MVith the Bes
teyl0I Leat! Lim
Manufacturers
C
Leather footwear
“THE REAL THING
Head Office : 141, Church
Mattakkuliya,
Colombo 15.
Phone : 522776 8ן 7ן
Telex: 2220 CLPC

f Compliments
f
er Products ited
and Distributors f and Leather Goods
IN REAL LEATHER
Road,
CE

Page 203
LYLLLLLLLLLLLLeLLLLLLeLLLLLLLLLOLLLLL
d9nsurance (teans Pedice Of Mind
All forms of art Coupled with a good education Help to produce persons With healthy minds Humane, Kind and Selfless.
添 器 添 藏
添 器
And to produce Works of art Creative and inspiring An artist must have Peace of Mind.
Insurance is a mechanism That creates
Peace of Mind And the satisfaction That your loved ones are cared fo: In your disability or untimely dea And ensures financial stability In loss or damage To one's property Due to Fire, Accident, Burglary o Or in the event of creation of lia
Particulars from:-
Publicity Manager,
Insurance Corporation of “Rakshana Mandiraya” 21, Vauxhall Street,
添
Colombo-02.
器 器
畿
影 添 器
器
器
器
魏
器 翻
ീ. മ2e ല2 പ്ര ഗ

爆
th
r Theft bility.
添
器
器
藏
影
添 添 添 添
Sri Lanka,
添
添
ർ ല്ല ീ -മർ

Page 204
Palm
Nutritious
Ingredients. Odiyal MeCl ဂြိုး”ဦးဖn Gran for the Soya, Milk & Sug: Family
Nett Wt. 500g.
Product of Palmyrah
Developm Sri Lanka
இன்றே விஜய
sy உணவு
பணம் கைப்பணி
மற் பிரதேச உற்ப
மலிவாக கிை
கற்ப
244, கா
கொழு கிளைகள்:

pOSha
B'ack Method: Mix Palmposha'
, Rice, With the Sufficent
T. Quantity of Hot Milk or
Water to the Required Consistency. If Necessary Add Sugar to Taste.
ent Board
ம் செய்யுங்கள் ப் பொருட்கள் ப் பொருட்கள்
gh
த்திப் பொருட்களும்
டக்கும் இடம்
கம்
லி வீதி,
ம்பு-4.
யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை.

Page 205
qOOeMTkqTLeSuLLLLOLOLTeLeLeLMLqOOuOMOLOekOLOkkOLLeMTkMuMTsqOLeeL
For Better
&
Trouble Fr Conta
Acland I Services
Principal Aç
National Insurar
Agent Insurance Corpora
24, Stapl P. O. E Color
Cable : "Acland" Colom Telephone : 28921, 28260,
లైసెనిటెనాలిటిటిషాటెనాబెటిసిటిజెనెటినాటి
 

eeeLeeLeLekeYeeeeeeeeeLeeeLLLLLLeeeeeeeeeeekeYS
Insurance
ee Claims act
SUOCe Limited
jent for the
hCe COrpOration
tion of Sri Lonka
es Street, οΧ 11.40, nbo-2.
bo
& 26538
隧
for the
eLeeLeeeeeeeLeLeLeeLeeeLeLeLeeeeeeeeeLLeeeL

Page 206
e
Ceeeeeeeeeeeeeeee-eeeeeeeeeeeeeee
அகல்விரிவான
தொகுதி
கருத்திட்டக் கடன்கள் ஏற்றுமதி நோக்குடைய கருத்திட்டக் கடன்கள் சிறிய, நடுத்தர அளவினதான தொழில் துறைக் கடன்கள் குத்தகை நிதியுதவி சாதன நிதியுதவி
.1هـ .l@} இலங்கை அபிவிருத்தி .5 . يعد هج
73/5, காலி வீதி
தொலைபேசி,
(11 ெ
கிளை:
இல, 5, தேவா விதி, கண்டி. தொலைபேசி: 250 7 7 தனியார் துறைக்கான அபிவிரு
0000s00LLLLLL0L000LeLeeLseL000L00L00L00s00000s0L

LL0Ls0s0eL0L00sLLL00L0eLeLeeLSs0sL0L0L000LLLL0LL SLLL0JLLLLLLLL
திலிருந்து ஒரு பணித்துறைத் இணைப்பு
தொழிற்படு மூலதன கடன்கள் பங்கு முதலீட்டு நிதியுதவி உத்தரவாத பொறுப்பேற்றல் தொழில் நுட்பத்துறை சார்ந்த
துணைமை
முதலீட்டு வங்கித் தொழில்.
நி. கூ. நிதிக் கூட்டுத்தாபனம் ëse... ëshillto, , கொழும்பு- 3. ,44 03 66 தாடர்)
த்தி வங்கி
GLLLLAL 0TLLALALATLALAALLLLLAALLLLLALLALAL ALALAL ALALALAL LEL LS LAL AAA

Page 207
00Osss000ssrrOLOLsO0OOOLsL
People' Savings
For St
This exciting Schen kind in Sri Lanka is c
encourage the Savings Children.
Children will purch very colourful "SAVING for Rs. 5/- each to be Pass Book.
O Special Gift Scheme
Collecting Stamps.
O Special Incentives F.
School Authorities shou
nearest People's Bank Bran Ch Manager.
People
Caring for Sri I

හඟුදාස්‍යභිඥාගූදාංශභක්‍ෂාංශූ
s Bank
Scheme udents
ne, the very first of its levised primarily to
Habit among School
hase specially printed,
S STAMPS'
pasted in a special
s for Children
or Schools Participating.
ld contact the
's Bank anka’s Children.
LLL00rO
岛呜
3.

Page 208
LLLLLLLL0LLLL0LLLLL0LLLL0LLLLLLL0LLL0LLL0LLLLLLLJL0LLL0LL0LL0LLLLLLLLse0L0LLL
எங்கள் தாய் நாட்டின் ஆன் கலாசார அபிவிருத்திக்கும் பங்களிப்பு விலைமதிப்பற்றத
இலங்கை வங்கி ஒழுங்கான் வங்கியியல் சேவைகள் மூல உரிமைகளைப் பாதுகாப்பதற்
LLLLLLJ0LJLL0LL0LLJLLLJLLLLLJLLLLJJLLLLLLL0LLLLLLL0L0LLLLLJJLLL0L
 

Iපටළුතෙටපළුපටළුපටළු' එළුපටළුපතළුපටළුපටපටනපටනt
iாமீக வளர்ச்சிக்கும் கலைஞனின்
ாகும்.
திறமையான ம் கலைஞர்களின் கு உதவியளிக்கின்றது.
|கை வங்கி
ந்திக்கு முன்னோடி
2రింeaరిణరిeదిరిeరిeరిeరిeరిరితిరిeeరిరిereరిలee

Page 209
8
3. 8 3. 호)
3. E. E.
s
OsO LGLLLGGOOLOLOOOLLLLGGLLLLL
sists
Zീർ ട്ടീഷ്
ОЂе Kandy -fots
HOTEL SUISSE
A Hotel with a history, overlookin lush foliage, the 100 roomed Hotel and captivates the visitor with its what Eden would have been like. ' Hotel in Kandy. Brooding over the shaded walks, it recreates the chari
HOTEL Sangaraja l Phone: 08
QUEEN'S HOTEL
The oldest Hotel in the Hill Capit: throughout the last 145 years, Que synonymous. The atmosphere in tl traditional, yet everything is organi comfort and convenience. Make Q your shopping for Kandyan arts a modern engineering marvels-or just lake evening falls.
QUEEN'S Kandy, Sri Phone: 08
 
 
 

Zീർം ്രം
la Co. (1938) /imited
g the Kandy lake and surrounded by
Suisse provides all modern comforts beautiful setting giving an idea as to Today it is the most sought after : Kandy Lake with its tree lined m of an older world. Savour it!
SUISSE Mawatha, Kandy, Sri Lanka.
22672, 22637. Fax: 08-32083
al. To the thousands of its visitors en's and Kandy have been almost is 100 roomed Hotel is charmingly sed with a modern efficiency for your een's the base for your pilgrimage, nd crafts, your tours to sites of
absosb the mystique aura of the
HOTEL Lanka "2121, 32079
දෘශ්‍රශගුගූගූගූගූගූගූගඟශගුගූහ්ඨි

Page 210
ELLL000LLLLLL0L00LLLLLLL0LLL0LLLL0L0LLLLLLLLL000LL
With Best
fr
TAJ SA
COLOMBO, 25, Galle Face
COLO
Sri
Telephone: 546622 Telex : 21729. TAJLAN CE
LLLLLL00LLLL00LLLLLLLL0LLLLLL0LLLLY0LLLLL0LLL0LLL0LL0LL0LL0L00LL

LLLLLLLLLLLLLLLLLLLLLLLL000LLLLLLLLMMLMMLLLLLLLLLLLLLLLLLL
Compliments
ΟΆ
MUDRA
SRI LANKA
Centre Road, MBO 3,
anka.
Cable. PALACE Telefax : 546348
8
G6969696909909996969ee0699C996 696999ee99Oe

Page 211
33333333333333333333333333333333
C)9;ll (0.
SF,
POrCelain trea
Manuf2C
Garden Ceramicsw
No. 19, DA
COLOM
|&&&&&&&&&&&&&&&&&&&#ଞ&&&!
 

impliments
*6)
tions (Pvt) Ltd.
turers of
rare and Porcelain
M STREET,
[BO - 12.
T. P. No. 545081 431871
sO0OOO0OOOLLOO00LrO0OOrLrOOO0OLOO0Oes S

Page 212
JSsst
Sri Lanka’s One of Asia's most ef Container
Ceylon Shippi
Head Office- Sri Lanka P. O BOK 78 6, Sir Baron Jayatileke Mawatha, Colombo-l, Sri Lanka. Telephone: 28772128773/2694 (General Nos.) Telex: 21165 A/B CEYSHIP CE
(PBX SERVICE) 21205 A/B CEYSHIP CE 21664 A/B CEYSHIP CE Cable: CEYLONSHIP, COLOMBO Telex Fax: 447547, 449486
- Fast, Safe And Sure
OMill, 0.
SF
Ceylon Min Corpo
Produc
ME RUT ZIR(
167, Sri Vipulasena Mawatha,
P. O. Box 22 Colombo-10.

thɛ4 Stom
Flag Carrier icient shipping lines and
Operators
ng Corporation
Regional Office: Europe Ceylon Shipping Corporation Clareville House 27, Panton Street, LONDON SWY 4 EL, U. K.
Tele: 071-839-7555
Telex: 886591. 296220 A/B
CESHIP G
Cable: CESHIPCORP LONDON
SW 1
Tele fax: 07-930-2630
With The National Line -
mpliments
911,
heral Sands ration
ers of
NTE 'ILE CON
Telephone: 6946312 Telex: 21 174 SAINDSCO

Page 213
(Wtէ/: Բsչէ Complin
llniversal &
85, George R. De Colombo-13.

2&nts
nterpri S2S 4Dal. Lldl,
Silva Mawatha,

Page 214
Open and Fair Trading is the
We
Department of Commerce Department of Commodity Department of imports and Department of the Registrar Department of internal Trade Registry of Patents and Tra State Trading (General) Cork State Trading (Tractor). Corp The Co-operative Wholesale Fair Trading Commission Sri Lanka Export Levelopme Sri Lanka Consolidated. Expo Sri Lanka Export Credit inst Ceylon Manufacturers and N Sathosa Computers Services Sathosa Printers Ltd Sathosa Motors Ltd Lanka Canneries Ltd
Consumer Satisfaction is our happin
Ministry of Trad Color
மலையகத் தலைநகராம் கண் முறையாக நடைபெறும் சாகி பெற எமது இதயங்கனிந்த தெரிவித்துக் கொள்வதுடன் ! ஒழுங்கு செய்த இந்து சமய, எமது பாராட்டுக்கள் உரித்தா
மத்திய மாகாண இந்து 348, பேராதனை விதி,
கண்டி தொலைபேசி: 08 - 2 29 4 0.

Surest Guarantee of Consumer Lfare
Purchase Exports Control of Companies
de Marks
doration
oration
Establish ment
!nt Bpard . rt and Trading Co. (Pvt) Ltd. urance Corporation Merchants Ltd
Ltd
βΣ5.
e and Commerce nbo-02
ாடி மாநகரில் முதல் }த்திய விழா வெற்றி நல் வாழ்த்துக்களை இத்தகு ஏற்பாட்டினை
கலாசார அமைச்சுக்கும் குக
மாமன்றம்

Page 215
Answer
Answer
Answer
Answer
Question :
Question :
Question :
Question :
sLeLLeLeeL0000LL00eLeLeL0L0LL0L000L0L0L0L0LLLL0LLLssLs0L0LLLeL
SOME CARS A SEEING 3 ST
If your Engine needs 93
the petrol that shot
What does 3 Star petr 3 Star will give better Manufacturer has stip gasoline. When you ch Re-tuned to obtain op
What does Octane 90 If your engine is a hi gasoline having an C 2 Star petrol your eng would have re-tarded eliminate the pinking.
Will I get better perf By changing to 3 St pinking and resultant acceleration and thereb
Is 3 Star Petro useful Yes - provided the veh with an Octane numbe before filling fuel.
3 STÅR
CEYLON PETROLE
ee0LLL0L0LLeL0L0LL0L00e0L0L0LLL0L0sLLJLLLL00LLLLL0LLLLL

එළුපථළුණ්ථළුළුළුඑළුඑළු' එළුළුඑළුළුතළුඑළුළු రిదిరితిరిee
\RE AL READY TARS x- x- x
Octane petrol by design, ld be used is Star.
ol do to my Car ?
performance in engines where the ou lated the use of a High octane Lange to 3 Star - Engines have to be timum performance.
mean gh performance engine requiring a )ctane number more than 9 with gine may be pinking or the mechanies the engine more than required te
ormance with 3 Star 2 ar and Re-tuning you will reduce 2ngine damage. You will get faster y better performance.
in reconditioned Cars ? icle is designed for using a gasoline :r of over 91. Then Re-tune engine
PETROL UM CORPORATION
L0L0L0L000s0L0Ls0LLsLL0es0eL00L0L000L00L00L0LLLLLLLJJLL

Page 216
qeeeeeLLeeeLeLLYeLeLeeLLLLLLLLM
With
Best
Compli
ESWARAN
S E A S
COLON
eeeeeeeeeYieeYeeeeeeeeeeeeY
 

Wገ06†0j§
BROTHERS
T R E E T
BO
LLeLeeLLLBeLLLeLLLLLLLLueeLeLLLLLLeeLeLLLLLLeeLLeLeeLHLLLL

Page 217
WHEN TRAVELLIN(
Sta
Ceylon Tou
Rest
for Comfortable Room
NUWARA
BANDARA
ANURADI
FOR FURTHER
TRAVEL INFOR
CEYLON TOU 78, STEUA
COLOM
證
翻
Other Accommoc
添 添
刻

yr
G TO KATARAGAMA
y at
rist Board's
House
ls & Vegetarian Meals
lation Available at
ELIYA
AWELA
HAPURA
INFORMATION:
MATION CENTRE
JRST BOARD RT BOARD, MBO 3
LLeLeeLeeLeLeLeeeeeeeeeeeeeeeeLeeeeeeeLSS

Page 218
LLLLLLLL0L0LLMLLLLLLLL0LLLLLLL000L0LLLLLLL0LLL0LL0LL0LL00LLL
O
With Best
fገ‛ 8
8
O
8
8
8
G
8
8
8
8
ị Weyangoda Te: O)
c
SHOW ROOMS :
323, GALLE ROAD,
O
i 105, KOTUGODELLA
eeeళeeeణeeeరిeae6eeeతిeeeeeeeeeeee

Deeeeeeee800Oeeeeeeeeeeeeeee Ceeeee
Compliments
07
xtile Mills Ltd.
COLOMBO 4.
VEEDIYA, KANDY.
00e0e00000000JLLL s00s0LL0L000L S 0L0YLL

Page 219
With Best
fru
UDAYA JEWELL
GUARANTEED S
53, 55,
COLOM
T'Phone: 2 Residence

Compliments
O
ERS (PVT.) LTD.
OVEREIGN GOLD
Sea Street, MBO 11.
5745, 54.1339
: 522219

Page 220
...the best seafoo
. . . where the cuisine
Indiari Oce
| IrÀřÑECÉNíÎNÉRAL
 

daddressintown
complements the rich :an harvest,
ை

Page 221
Odil 0amp
33333333333333333333
 
 

Y0YYYYJJJYYYYYYYKKKKY00YJYsYJ0sYYYYKKYKYKssssLsLJssssssss0sessesssL00JssssK KsssJessssssYY
HOTEL COLOMBO
Ε
Õle liments

Page 222
The Be
For Conferenc
2/unas S.
ELKADUW
Already 6 Semin
For Reservations:
Please Contact: No. 45, St. Michael Colombo-3 Telephone: 27725 or
SRI LANKA STATE TRADING WE OF Household Appliances, Sports Goods, . Agricultural Implements and Tools - O Metals, Construction Materials and El Helmets and Tyres & Tubes - Canvas Films - Multi purpose Wood working Generators, Compressors and Power T employment Projects at reduced prices
Visit our Head Office Nawam Mawatha, Colombo-2. 432, Sri Sangaraja Maw Panchikawatta.
Help Save Valuable Electrical For the Same amount of high ou
1/3 of the power an
CEYLON ELEC
- Commerci

st Venue
2 and Seminars
all' لے}otاع
A (KANDY)
lars held in 1990
's Road,
- 08/76402 or 08/76403
G (GENERAL) CORPORATION FER YOU Toys and Artist Materials ffice Supplies and Equipment-Chemicals ectrical Items - Motor Spare Part sa
Cloth, Manila Ropes and Sun Control Machines and Water Pumps 'ools - Machinery and Tools for Self
Showrooms at
Super Market Mt. Lavinia
ratha, Swashakthi Medura,
100A, Park Street, Colombo-2.
| Energy by going Fluorescent tput Fluorescent Lamp requires only ordinary bulb requires
TRICITY BOARD
al Division -

Page 223
LLeeLeeLeeeeeLekeeLeekeeLeeLeeeLeeLeekLkeeeeeeeekeeekL
விழா சிறக்க ர
'தரம் அதுவே எமது
தலைநகரில் தரமான த
விஜயம்
பூணி மைதிலி
இல, 153, செட்டியா தொலைபேசி; 4
Sri Maidh
153, Sea Str
(Approved By State Ge. Every Item Possesses (

நல் வாழ்த்துக்கள்
நிரந்தரம்"
தாரக மந்திரம்
நங்க நகைகளைப் பெற செய்வீர்
ஜனவல்லர்ஸ்
rர் தெரு, கொழும்பு-11. 494001434488/434490
ili Jewelers
eet, Colombo-11.
m Corporation of Sri Lanka.) SMJ 22 ct) Regd. Trade Mark

Page 224
JUST OUT.
READ
Güiraya
English Novel b. Punyokante
Printed & Published by
State P. Corpora
Transworks House, Colombo-l.

2
y Wijenaike
*inting ation

Page 225
தேசிய சே
உங்கள் வங்கியே தேசிய சேமிப்பு வங்கி. இவ்வங்கியில் சேமிப்புகளை இடும் நீங்களே வங்கியின் பங்குதாரர்கள். இப் பங்குதாரர்களுக்கு தனது வருமானத்தின் 90 சத வீதத்திற்கும் மே ற் பட்ட தொகையை வட்டியாக வங்கி வழங்கு கின்றது. இவ்வங்கி உங்களுக்கு வழங்கும் சேமிப்பு, கடன் வசதிகளும், மற்றும் விசேட சலுகைகளும் வருமாறு:- சேமிப்பு சாதனங்கள்: * ஐந்து ரூபாவுக்குக் (ரூ.51-) குறையாத சிறு சிறு தொகைகளை வசதி ஏற் படும் போதெல்லாம் வைப்புச்செய்து ஆண்டொன்றுக்கு 16.2 சதவீதத் தில் வட்டியைப் பெற்று, தேவைக்கு அவ்வப்போது எளிதாக எடுத்துப் பயன்படுத்துவதற்கு சாதாரண சேமிப் புக் கணக்கு. * நூறு ரூபாவுக்குக் (ரூ. 100/-)குறை யாத தொகையை ஆண்டொன்றுக்கு 17 சத வீத வட்டியில் ஒராண் டு காலத்திற்கு வைப்புச் செய்து முதிர் வில் கணிசமான தொகை பெறுவதற்கு நிலையான வைப்புக் கணக்கு. * ஐயாயிரம் ரூபாவிற்குக் (ரூ. 5,000/-) குறையாத தொகையை ஆண்டொன் றுக்கு 1632 சத வீத வட் டி யில் ஓராண்டு காலத்திற்கு வைப்புச்செய்து மாதாந்தம் வட்டியைப் பெறுவதற்கு மாதாந்த வட்டிக் கொடுப்பனவு நிலை யான வைப்புக் கணக்கு. * மாதம் ஐம்பது ரூபாவை (ரூ. 50/-
அல்லது அதன் மடங்குத் தொகை ஒன்றை (அதாவது es. 1001-, b. l50/, e, eg. 2001- Aở Lu nr 687 sp தொகை) தொடர்ச்சியாக வைப்புச் செய்து ஒராண்டு நிலையான வைப் புக் கணக்கிற்குக் காலத்திற்குக்காலம் ஏற்புடைத்தான வீதத்தில் திரளும் வட்டியுடன் 10 ஆண்டு முடி வில் பெரும் தொகை ஒன்றைப் பெறுவ தற்கு அறக்கொடை கணக்கு, * மாதம் ஐம்பது ரூபாவை (ரூ.50/-) அல்லது அதன் மடங்குத் தொகை ஒன்றைத் தொடர்ச்சியாக மாதாந் தம் குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு வைப்புச் செய்து அக்கால முடிவை

மிப்பு வங்கி
அடுத்து மாதாமாதம் ஆயுட்காலம் வரை, மாதாந்தம் வைப்பிலிட்ட தொ  ைக க் குச் சமமான ●@ தொகையை ஓய்வூதியமாகப் பெறுவ
தற்கு ஓய்வூதியக் கணக்கு,
பத்து ரூபா (ரூ.10/-) விலைகொண்ட அதிட்டச் சீட்டொன்றைக் கொள் வனை செய்து, இரு மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் அதிட்டச் சீட்டிழுப் பில் பங்கு கொண்டு, ரூபா 65,000/- வரையிலான பரிசுகளை வெல்வதற் குப் பரிசூதியச் சேமிப்பு முறிகள்.
கடன் திட்டங்கள்
女
率
案
事
வைப்பாளர்கள் தமது நிலையான வைப்பைப் பிணையாக  ைவத் து நியாயமான வட்டியில் அ வ ச ர த் தேவைகளுக்கு கடன்களை இவ்வங்கி யிலிருந்து எடுக்கலாம். ஒரு கூறு கொண்ட வீடொன்றைக் கட்டுவதற்கு அல்லது கொள்வனை செய்வதற்கு ரூ.75,000/- வரையிலும் இரு கூறுகள் கொண்ட வீடுகளைக் கட்டுவதற்கு அல்லது கொள்வனை செய்வதற்கு ரூபா 1,50,000/- வரை யிலும் கடன்கள் வங்கியினால் வழங் கப்படுகின்றது. சட சலுகைகளும் வசதிகளும்
பணமெடுத்தல்கள் மீது முத்திரை வரி இல்லை. சம்பாதிக்கப்படும் வட்டி மீது வரிச் சலுகை வைப்புக்களை மீளவிரிப்பதற்கான அர சாங்க உத்தரவாதம். பயன் பெறுநரை நியமித்து மரண சாதன வழக்கைத் தவிர்த்தல், 75 கிளைகள், 3840 அஞ்சல்,உபஅஞ் சல் அலுவலகங்கள் ஊடாக தீவு
எங்கணுமான சேவை,
மேற்கொண்ட தகவல்களுக்கு:-
பிரசித்தப்படுத்தல் முகாமையாளர், தேசிய சேமிப்பு வங்கி
சேமிப்பகம்
கொழும்பு-3 தொலைபேசி 573516 அல்லது 573008-15.

Page 226
The Sufi Doctrine ln Tai
Dr. A. M. Moha
(Formerly of the C This book outlines the mysti Al-Ghazali, Jili, lbn Arabi, Sufi Saints on God, Man ar from Arabic, Persian & Tam examines their relevance to 1 Religion and other major rel
According to Professor Ninia of California, Santa Barbara Lancaster, this book is 'a fi1 history of Islamic and world and illuminating addition to reflection'. Available at: 285 (Second f) Rs. 100/- 4 per copy. Compli to Libraries and genuine rese
தேசிய தமிழ் வரலாற்றுப் பெருமை வாழ்த்து
பேலிய(
சைவ முன்ே

mil Literature (ln English ) By
umed Sahabdeen
'eylon Civil Service) cal doctrines of Rumi and other ld the Universe (Selected il Literature) and he Philosophy of igions. n Smart of the University
and University of e contribution to the spiritual history. scholarly knowledge and
oor) Galle Road, Colombo 3. mentary copies
archers.
இலக்கிய விழா
காணவும் பேணவும்
கிறோம்.
கொடை
னறறச SF86)

Page 227
Ancient Culture
Hotel Serya r Po&fragjyra
Resthe -- Pografia
Festhose “ - Darntida
festas - Sâ
Wlayside Stopovers
Resoouse - Arritepuussa
Resouse -- PSS
ReShotse — *axFFafa
Bay finns -- Yeganna
thinya Surf Hot
Special disco
Airport corner - open 24 hrs to a experienced Chauffeurs. Enjoy ffe chartin, f.
ray
63 Janad.ຽtha M Telephone 23501-20239 Telex:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Water Falls & Rivers Festose - Kuga
SfS6 -- Fa
Wide
acts
ෆි - ජිණ්ඤ
iris for groups ssist with transfers focity of ters Keaceful atmosphere and raaswelly byw partes
භුගස්තිෂ්ක්‍යා.
vyřaf Corto . 21193 "HOTELco" Fax. 42273.

Page 228
WITH THE C
FR
IN THESERVICE
Head 27, Vauxhall St.
A K P
A Great Source to Crops and Pros
CEYLON FERTILIZ 294, Gal
COLOM
Phone :
 

OMPL/MENTS
DM
sasan
OF THE NATION
Office 'eet, Colombo 2.
O H A R A
of Nourishment perity to Farmers
ER CORPORATION e Road,
BO 3.
574100

Page 229
HIND Fಣ್ಣ ಇಜ್ಡ
By Shri C. Sl
Message by : Hon. P. P. DEVA
State Minister for Hindu Religious &
Foreword by: SHRI MATHOOR (The Bhavan', U.K
Published by: The Department of Religious & Cultura
Available at : K. V. G. de Silv,
Bambalapitiya.
Price : Rs. 100/-
இந்துக் கலை பகுதி - 1
பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் துக்களில் "அ" தொடங்கி "ஈ" வரை உள் 670 விடயங்கள் பற்றி எழுதப்பெற்றுள்ள நூல், சஞ்சிகை, விழா, விரதம், பொருள் அமைகின்றன. தமிழ் நாடும், ஈழமும் ெ மாக விளங்கியுள்ளபோதும் அவற்றுக்கு அ களஞ்சியம், உயர் வகுப்பு மாணவர்களுக் மேற்கொள்வோர்க்கும் மிகவும் பயன்படக்
கிடைக்குமிடம் :
இந்துசமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 9வது மாடி, றக்ஷண மந்திரய, 21, வக்ஷோல் வீதி, கொழும்பு - 02.
அச்சு : குமரன் அச்சகம், 20 1,

USM
Do NoN - HINDUS ld Metaphysics
Iriyakumaran RAJ,
Cultural Affairs
KRISHNAMURTI
..)
Hindu til Affairs, Sri Lanka (1990)
a & Sons,
க்களஞ்சியம் L (9-FF)
அவர்கள் இதன் ஆசிரியர். உயிர் எழுத் ள சொற்கள் இதில் இடம் பெறுகின்றன. து. தெய்வம், பெரியோர், நாடு, தவம், ா என்பன பற்றிய விடயங்களாக அவை பரும்பான்மையான விடயங்களுக்குக் கள ப்பாலும் நோக்கப்பட்டுள்ள இந்துக்கலைக் கும், இந்து சமயத்துறையில் ஆய்வுகளை கூடிய கருவூலம்.
இலங்கை விலை ரூபா 250/-
டாம் வீதி, கொழும்பு - 12.

Page 230
நன்றி கூறுகிே
ஆசிச் செய்திகள் தந்து மன மேதகு ஜனாதிபதி, மாண் ஆளுநர், கெளரவ அமைச் அதிகாரிகளுக்கும்,
ஆய்வுக் கட்டுரைகள் எழுதி அறிவு மணம் பரப்பக் கா கர்த்தாக்களாக அமைந்த
அறிஞர் பெருமக்களுக்கும்,
இம் மலர் இவ்வாறு சிறப் பலவகையிலும் எம்மை வ எமது இராஜாங்க அமைச் பி. பி. தேவராஜ் அவர்களு
பயன் மிகு பல்லாலோசை எம்மை நெறிப்படுத்திய இ செயலாளர் திரு.த. வாமே திணைக்களப் பணிப்பாளர் இராஜாங்க அமைச்சரின் அ திருமதி கீதா நித்தியானந் பேராசிரியர் பொ. பூலோ அவர்களுக்கும்,
இம் முயற்சியில் எமக்குப் பிரதிப் பணிப்பாளர் திருப உதவிப் பணிப்பாளர்களான குமார் வடிவேல், வீ. விக்
விளம்பரம் தந்து இம்மலர் உதவிய அரச நிறுவனங்கள் தொழில் அதிபர்களுக்கும், எம். சுகுணேஸ்வரனுக்கும்
அழகுற அச்சிட்டு உதவிய அச்சக உரிமையாளருக்கும் அச்சிட்டுதவிய றன்கோ அ
அச்சுப் பிழை பார்த்து உ
ம. சண்முகநாதன், எஸ். ஆகியோருக்கும்,
மலர் முகப்பை அழகுற திரு. ரெஜி கந்தப்பாவுக்குட வரைந்து தந்த கலைவாதி
இந்துசமய தமிழ் கலாசா அமைச்சின் சார்பில் மிக்க
பதிப்பாசிரியர்

றாம் :
பன்ர மகிமைப்படுத்திய
புமிகு பிரதமர், சர்கள், உயர்
தி மலர்
ரரை
Tg5 is ழி நடாத்திய சர் மாண்புமிகு நக்கும்,
னகள் கூறி ராஜாங்க அமைச்சுச் தவன், இந்துசமய கலாசாரத்
க. சண்முகலிங்கம், அந்தரங்கச் செயலாளர் தன் ஆகியோருக்கும், கசிங்கம்
பக்கதுணையாகவிருந்த தி சாந்தி நாவுக்கரசன்,
கிரமராஜா ஆகியோருக்கும்,
வெளிவர
சேகரித்துதவிய
குமரன் , மலரின் அட்டையை ச்சகத்தாருக்கும்,
தவிய திருவாளர்கள் தெய்வநாயகம்
மைத்துத் தந்த ம், கட்டுரைத் தலைப்புகளை
கலீலுக்கும்,
ா இராஜாங்க
நன்றிகள்.

Page 231
frc
(
MASCONIS
175, SRI SUMAN A
COLON
Telephone - 25561-2-3
 

Compliments
TISSA MAWATHA, IBO-12.
Telefax - 449537
5 LIMITE
D

Page 232

「그이그디디디
|- _|-| _ |-·| |--· .-| |-|- |-| | –|- | |-| | || | - - -| |-
----
| |- | |-| |-|-