கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்நாதம் 9

Page 1


Page 2
செல்வி ராதிகா முருகையா, 2004ம் ஆண்டு கலைப்பிரிவு மாணவி, ரி ரி என் அறிவுச் செல்வம் 2002ம் ஆண்டுப் போட்டியில்
முதல் பரிசைப் பெற்றுள்ளார்.
ஒன்றுகூடல் நிகழ்வின்போது - பிரதம அதிதிகளாக வருகை தந்த பட்டயக் கணக்காளர் திரு. த சச்சிதானந்தன் அவர்களையும் அவரின் பாரியாரும் எங்கள் கல்லூரிப் பழைய மாணவியுமாகிய திருமதி பரமேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களையும், சங்கத் தலைவி பொருளாளர், செயலாளர் ஆகியோர் வரவேற்று அழைத்து வருகின்றார்கள்.
 
 

Rw.r.l.i.a.s.ffs
JSLJSSSkLkLSSSkYSkJSJSeeeSLekLSSSkeSeeeSeeeSekSTeSkeLeeSeLeeSeeeee eSeSeSeTekJSkTeLeeSeLeJSe kkSekeJSeLS
... 3
? 1 யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கக் கொழும் புக் களையரின் வெளியீடு
இதழ் 9 கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2003
பொருளடக்கம் 06 Ռf:: 2003:
2 நன்றி \|126 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
bjia){ தேவாரம் இரண்டாம் திருமுறை
3 தலைவரின் செய்தி
30 யா.இ.ம.க. ப.மா.ச. கொழும்பு ஒன்பதாம் ஆண்டு அறிக்கை
4 ஏழுவகைத் தாண்டவம்
8 அன்பே சிவம்
10 Peace
47 இளைய சமுதாயத்தினரே
வரவேற்புப் பாடல்
50
அன்பிற்குமுண்டோ அடைக் குநதாள
52
11 புதுப்புது அர்த்தங்கள்
54 ‘ரி.ரி.என். அறிவுச் செல்வம் 2002” போட்டி
18 வல்லாரை
55 திருக்கோணேஸ்வரர் கோயில்
19 சிரிப்பு
61 திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்-மூன்றாம் திருமுறை
20 The Old Lady ኀ
"("Զճւ 5ւցմ
21 சிவநெறி
69 JHLCOGA Sydney Australia
“நான் இங்கு வசிக்கிறேன். இவ்விடம் அழகாக இருக்கும்
66 Educare
Δό
999
“It ought to be beautiful, I live here”

Page 3
2
সুঞ্জ ।
ଝୁ $ର୍ଷ
త్ర நன்றி யொருவற்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா-நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத் ନିର୍ଣ୍ଣ କୁଁ தலையாலே தான்றருத லால். ଝୁ
நாம் படித்த கல்லூரியை நாம் என்றும் கோயிலாகக் கருதுகின்றோம். ே * கல்லூரியினுள் பிரவேசிக்கும்போது ஒரு புனித உணர்வே என்றும் ஏற் * * படுகின்றது. நாம் நன்றி மறவாமல் எம்மை இந்நிலைக்கு உயர்த்திலி * விட்ட கல்லூரிக்குச் சேவைசெய்வதில் ஆனந்தமடைகின்றோம். அத் * துடன் எங்கள் கல்லூரியில் கற்கும் இளைய சந்ததியினரும் உயர்* நிலைக்கு வரவேண்டும் என்பதே எமது அவாவாகும். இதை மனதிற் கொண்டே எமது சங்கம் சேவையாற்றி வருகின்றது. எங்கள் : ஐ சேவைக்கு நன்றி கூறுமுகமாக 2002% ஆண்டு கல்லூரிப் பரிசளிப்பு ஓ * விழாவிற்கு எங்கள் சங்க உறுப்பினர்களை கல்லூரி அதிபர் அழைத் * *துக் கெளரவித்தார். இப்படியே நன்றி ஒரு தொடர்கதையாகப் போய் ??
ఉంల768_ இருக்கும். இது வரவேற்கத்தக்க ஒரு அம்சமாகும்.
கல்லூரிப் பரிசளிப்பு விழாவிற்குச் சென்றோர். அதிபருடன் எடுத்த
ଖୁଁ
படத்தை முன் அட்டையில் காண்கின்றீர்கள். W
ఏరాథమి ராதிகா முருகையா ரி ரி என் அறிவுச் செல்வம் 2002 போட் டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார். இவர்களது திறமை வளர்க என: 臀 வாழ்த்துகின்றோம்.
Colombo 3 மலர் ஆசிரியை
61/2, Abdul Gaffoor Mawatha திருமதி சிவகாமி அம்பலவாணர்
ଓଁ 臀 ଖୁ
 
 
 

தலைவரின் - செய்தி
யாழ்நாதம் இதழ் வெளியிடப்படுவது ஒரு சாதனை என்று தான் கூறவேண்டும். யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கக் கொழும்புக் கிளையில் பல அங்கத் தவர்கள் இருப்பினும், பணிகளை முன்னெடுத்துச் செல் வதற்கு ஒத்துழைப்புத் தருபவர்கள் ஒரு சிலராகவே உள் ளனர். உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தாரின் எழுத் தாற்றலை வெளிக்கொணரத் தளம் அமைக்கவே யாழ் நாதத்தை வருடாந்த இதழாக வெளியிடுகிறோம். இந்த வாய்ப்பினைப் பயன்படுத்த சகல அங்கத்தவர்களும் முன் வரவேண்டும்.
எமது கல்லூரி அகவை அறுபது காணும் ஆண்டு இது வாகும். இதனை முன்னிட்டு எமது கல்லூரி மாணவிகளை கொழும்புக்கு வரவழைத்து ஒரு கலை நிகழ்ச்சியை நடத் தும் அவாவினைக் கொண்டிருக்கிறோம் - முன்னர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சியை சிறப்புற நடத்தி மகிழ்ந் தமையை நினைவு கூர்கிறோம். இம்முறையும் எமது முயற்சியில் ஒன்றிணைந்து நிகழ்ச்சி சிறப்புற நடந்தேற மற்ற உறுப்பினர்களின் உதவியை நாடி நிற்கிறோம். சங் கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சம பங்கு ஆற்றி பணிகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக் கையுடன், யாழ் நாதம் மலர் ஆசிரியையையும் - ஒத் துழைப்பு நல்குபவர்களையும், வாழ்த்தி விடைபெறுகிறேன்.
செல்வி. சற்சொரூபவதி நாதன்
தலைவர்
|

Page 4
அன்பே
சிவம்
வகைத் தாண்டவம்
இறைவனால் 108 தாண்டவங்கள் ஆடப்பட்டதாக பரத சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. தாண்டவம் ஆண்களால் ஆடப்படுவது. சிவபெருமானால் தண்டு முனிவருக்குத் தாண்டவம் கற்பிக்கப்பட்டதாகவும் பின் தண்டு முனிவர் இத் தாண்டவத்தை தமது சீடர்களுக்கு கற்றுக் கொடுத் ததாகவும் வரலாறு கூறுகின்றது. இத் தாண்டவமானது பார்க்க விறு விறுப்பானது; இதனை நிருத்த வகைக்கு ஒப்பிடலாம். சிக்கலான அடவுகளும், பாத பேதங்களும் இதில் நிறைந்துள்ளன. இது ஆண் களாலேயே ஆடப்படுவது இத் தாண்டவங்களுள் மிகவும் முக்கியமான ஏழு தாண்டவங்களைக் குறிப்பிடலாம். இவ் ஏழு தாண்டவங்களும் சிவபெருமானின் ஐந்தொழில்களைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
சிவபெருமானின் ஏழுவகைத் தாண்டவங்களும் வெவ்வேறு நோக்கங் களிற்காக தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றதாக சைவ நூல்களில் கூறப்படுகிறது. ஸ ரி க ம ப த நி எனும் ஏழு ஸ்வரங் களிலிருந்து தோன்றியதாகவும் கூறப்படுகிறது. தாண்டவம் பற்றி திருப்புத் தூர் புராணம் “ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக” இறைவன் தமிழ் நாட் டிலுள்ள ஆறு திருத்தலங்களிலே ஐந்தொழில்களைப் புரிகின்றான், என்று கூறுகிறது. சிவபெருமானின் தாண்டவ உருவம் தமிழ் நாட்டிலே தோன் றியது என்பதற்கு இது ஒர் தக்க சான்றாகும் என மயிலை பூரீனிவேங்கட சாமி எழுதியுள்ளார். இது வீர ரஸம் பொருந்தியது. ஆண்மையையும் அதன் கம்பீரத்தையும் சித்தரிப்பதாக அமைந்திருக்கின்றது.
முனி தாண்டவம்
திருநெல்வேலி தாமீர சபையிலே படைத்தல் தொழிலின் பொருட்டு முனி தாண்டவத்தை இறைவன் ஆடினார். இது காளி தாண்டவம் என்றும் கூறப் படும். இது பதஞ்சலி முனிவர் தமது நூலினால் தாளப்பிரமானத்தைக் காட்ட அதற்கிணங்க பதஞ்சலி வியாக்கிரக பாதர் பொருட்டு ஆனந்த தாண்டவமாய் சிதம்பரத்தில் ஆடப்படுகின்றது இதில் கையிலுள்ள துடியை இயக்கி ஒலியை உண்டாக்குவதும் முயலகன் மேல் மிதித்து திருவடிகளை மாறி மாறி ஊன்றி தாண்டவம் தொடங்குவதும் சிறப் பாகும். இதில் சத்தியம், லய நாட்டிய அபய முத்திரை மூலம் தன் முதல் செயலாகிய படைத்தலினை செய்கின்றார்.
 

சந்தியா தாண்டவம்
(சாரங்கதேவர் கூற்று)
இது தேவதைகளுக்கு வாத்தியங்களும், வாத்தியங்களுக்கு இசைந்த தொனிகளும் உண்டாக்கும் தேவதைகள் நிமித்தம் ஆடியது. இது ஜன் னியம் கீத நாட்டியம்.
மதுரை வெள்ளியம் பல ராஜிய சபையிலே சந்தியா தாண்டவத்தை தேவதைகளின் பொருட்டும் வாத்தியங்களின் பொருட்டும் இறைவன் ஆடினார். இறைவனின் ஐந்தொழில்களில் காத்தல் தொழிலினை இதனால் செய்கின்றார். இத்தாண்டவத்துக்கு சந்தியா தாண்டவம், ரக்ஷ தான் டவம், புஜங்கலலிதம் (இன்பக் காத்தல்), புஜங்கத்திராசம் (துன்பக் காத் தல்) எனும் பெயர்கள் உண்டு. ஆன்மாக்களின் நல்வினை, தீவினையின் பொருட்டே இக்காத்தல் தொழில் நடைபெறுகின்றது. ஆன்மாக்கள் செய் த புன்னியத்திற்கேற்பவும், நல்வினைக்கேற்பவும் இக்காத்தல் தொழில் நடைபெறுகின்றது.
கெளரி தாண்டவம்
ஆன்மாக்கள் செய்த பாவத்திற்கேற்ப அவர்களைத் தண்டித்து காத்தல் துன்பக் காத்தல் ஆகும். இதன் செயற்பாட்டைக் குறிப்பதே கெளரி தாண்டவமாகும். இது பாண்டி நாட்டு திருப்புத்தூர் சபையிலே கெளரியம் மையின் பொருட்டு ஆடியதால் தான் கெளரி தாண்டவம் எனப் படுகிறது. இத்தாண்டவம் புஜங்கத்திராசம் எனப்படும். புஜங்க என்பது ஆணவமாகிய பாம்பை ஏந்தி அதை மகிழ்ச்சியுற செய்வதும் அச்சுறுத்தி ஆடும் தாண்டவம் காத்தல் செயலில் இடம் பெறும்.
சம்ஹர தாண்டவம்
இறைவன் கையில் ஏந்திய தீச்சுடர் அழித்தல் தொழிலைக் குறிக்கின்றது. ஆன்மாக்களில் படிந்திருக்கின்ற பாசங்களை நீக்குகின்ற சம்ஹர வடிவமானது தீச்சுடர் எனும் தத்துவப் பொருளை அறியத் தருகிறது. இவ் வழித்தல் தொழிலுக்காக இருண்ட நள்ளிரவில் சம்ஹர தாண்டவத் தையும் இறைவன் அருளுகின்றான். இது யமனை வதைக்கும் பொருட்டு மார்க்கண்டேயர் நிமித்தம் ஆடியது.
இதில் சத்தியம், முகசாயை நாட்டியம், சிம்ம நாட்டியம் உயிர்கள் செய்த இருவினைக்குத் தக்கபடி உடம்பு, பொறி, புலன், இடம் துய்தல் முதலியவற்றை தேனு கரண, புவன போகங்களை) கொடுத்து அவ் வினைப் பயனை துய்த்துக் கழிக்கின்ற வரையில் நிலைபெறச் செய்து பிறகு அவ்வுடம்பு முதலியவற்றை இறைவன் அழித்து விடுகின்றான். இச் செயலினால் தான் இதனை சம்ஹர தாண்டவம் என்னும் தாண்டவங் களுள் முதன்மை வாய்ந்ததுமாகும். பெருமானுடைய ஊன்றிய திருவடியின் கீழ் முயலகன் உருவம் பாசத்துடன் இருக்கும் ஆன்மாக்களைக் குறிக்

Page 5
6 கின்றது. முயலகன் கையிலும் படம் கொண்ட பாம்பு இருக்கிறது. இப் பாம்பு ஆணவ மலத்தைக் குறிக்கின்றது. இது சுடலையில் இறைவன் நள் ளிரவில் ஆடியதாக கூறப்படுகிறது.
திரிபுர தாண்டவம்
இத் தாண்டவம் திருக்குற்றாலத்தில் உள்ள சித்திர சபையில் இடம் பெறுகின்றது. மறைத்தல் தொழிலைக் குறிக்கின்றது. இது பூமி முதல் ஆகாயம் வரை அனைத்தும் தன் வசமாக இருப்பதன் பொருட்டு திரிபுரத் து அசுரர் நிமித்தம் ஆடியது. திரிபுரமாகிய முப்புரம் என்பது ஆன்மாக் களைப் பற்றிக் கிடக்கின்ற மும்மலங்களையும் குறிக்கும், அவைகளைத் தான் தன் நடனத்தால் சம்ஹாரம் செய்கிறார். தூய்மையை மறைத்துக் கொண்டிருக்கும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் அரணமைத்த கோட்டை போல் எளிதில் அழிக்க முடியாத வலிமை பெற்றவையாதலின் அவை முப்புரம் எனக் கூறப்பட்டன.
ஊர்த்துவ தாண்டவம்
இது ஐந்தொழில்களில் அருளலைக் குறிக்கின்றது. இறைவனுடைய வீசியகரம் அருளலைக் குறிக்கின்றது. வீசியகரம் உயிர் பேரின்ப நிலையை அடைகின்ற செய்தியை குறிக்கிறது. இதற்காகப் திருவாலங்காட்டு ரத்ன சபையில் ஆடினார். இது தமது திருச்செவியினின்று குழையை (தோடு) நழுவ விட்டு தமது திருப்பாதத்தினால் எடுத்து முன்பு போலணியும் பொருட்டு ஆடியது.
இதில் ஜன்னியம், சித்திர நாட்டியம், காளி தாண்டவம் 5வது செயலாகிய அருளலைக் குறிக்கின்றது. காளியுடன் ஆடியதால் காளி தாண்டவம் என் றும், ஒரு காலை தலைவரையில் தூக்கி ஆடியதால் ஊர்த்துவ தாண்டவம் என்றும், வீடு பேற்றினைத் தருவதால் அனுக்கிரக தாண்டவம் என்றும் கூறப்படுகிறது. இவ் ஊர்த்துவ தாண்டவம் நிகழ்ந் தடும் போது கார்கோடன் எனும் பாம்பரசன், சனந்தர் எனும் கேசி முனிவரும் இத் தாண்டவத்தைக் கண்டு வீடு பேறு பெற்றார் எனப் புராணக் கதையுண்டு. தூக்கிய திருவடி குஞ்சித பாதம் எனப்படும் அணுக்கிரகமாகிய பேரின்பத் தைக் கொடுக்கின்றது.
ஆனந்த தாண்டவம்
ஐந் தொழில் களையும் ஒருங்கே குறிப்பது. இது ஆனந்த தாண் டவமாகும். இந்த செயலுக்கு பஞ்ச கிருத்தியம் என்கிறது. உயிருடன் கலந்துள்ள அழுக்கைப்(பாசத்தை) போக்கி இன்ப நிலையைத் தருகிறது. அண்ட சராசரங்களனைத்தையும் தனது தாண்டவங்களுள் ஆனந்த தாண் டவம் மூலம் தோற்றுவித்து காத்து, அழித்து, மறைத்து, அருளும் அருட்

7 பிரவாகமாக இறைவன் விளங்குகின்றார். நடராஜ உருவம் மெய்ஞானம், சமயம், விஞ்ஞானம், அழகியல் ஆகியப் பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகும்.
இறைவனின் ஐந்தொழில்களையும் ஒருங்கே சுட்டும் ஆனந்த தாண்டவம் சைவ உலகின் கோவிலாக விளங்கும் சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத் திலே கனகசபையிலே இடம்பெற்றது. சைவ சித்தாந்தத்தின் கலை வெளிப்பாடாகவே நடராஜ திருவுருவங்கள் வெளிப்படுகின்றன என தத் துவ நூல்கள் கூறுகின்றன. இது பற்றி சாரங்கதேவர் பின்வருமாறு கூறுகின்றார். அணுவின் நுண்பகுதியில் ஒன்று சதா ஆடிக் கொண்டிருக் கும் அதன் ஆட்டத்தில் மற்ற நுண்துகள் சம்பந்தப்பட்டிருப்பதால் அங்கு சதா அழித்தலும், புதிய புதிய உருவாக்குதலும் நடந்து கொண்டிருக்கின் றன. இதன் அடிப்படையில் தான் பிரபஞ்சமும் இயங்குகின்றது. இதே விஞ்ஞானக் கொள்கையினைத் தான் இந்திய நாட்டுத் தத்துவங்கள் கூறுகின்றன. சிவனின் ஆனந்த தாண்டவம் உணர்த்துகின்றது.
ஆக்கம் திருமதி சங்கீதா முரளிதரன் இறுதியாண்டு நுண்கலைப்பீட மாணவி யாழ் பல்கலைக் கழகம் ஆசிரியர் கொ/தெ சாந்த கிளேயர் கல்லூரி

Page 6
ଖୁଖିଖିଖିଖଣ୍ଡୁଖଞ୍ଜୁଶ୍ରୁଞ୍ଚି
酸 அரி d
அன்பு என்பது ஒவ்வொருவரிடமும் உள்ள இயற்கை ஊற்று வெளிவருவகற்காக காத்திருக்கும் ஒரு வித சக்தி. இறைவனிடம் அன்பு செலுத்துவதன் மூலம், ஒவ்வொரு மனிதனிடமும் உள்ள இறைசக்தியை அனுபவிப்பதற்கான அடுத்த படிக்கு செல் கிறோம். அன்பு இயற்கையாகவே இதயத்திலிருந்து ஊற்றெடுத்து ஒவ்வொரு கலங்களினூடாகச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிக்கு உதவிக்கரங்களுடன் செல்கிறது. இது ஒரு மனிதனின் உள்ளம், உடம்பு, ஆத்மாவின் ஒருங்கிணைந்த செயல்பாடாக அமைகிறது. அணுக்களை ஒன்றுக்கொன்று பிணைக்கும் பசையாக அன்பு என் னும் சக்தி அமைகிறது. அன்பு என்னும் சக்திதான் கோள்களை அவற்றின் ஒழுங்குப்பாதையில் வைத்திருக்கிறது.
s
அன்பே, மனிதனின் நான்காவது மேம்பாடு. அது ஆத்ம தத்துவத் திலிருந்து வெளிவருவது, அன்புதான் சத்தியத்தின் வெளிப்பாடு, அது தூய நிலையானது, பேரொளிமிக்கது, குணங்களைக் கடந்தது, உருவங்களைக் கடந்தது, புராதனமானது, என்றுமுள்ளது, அமரத் துவம் வாய்ந்தது, அமுதமானது. இவையே அன்பின் ஒன்பது குணங் களாகும். அன்பு யாரையும் வெறுப்பது இல்லை. அனைவரையும் ஒன்று சேர்க்கிறது. “ஏகாத்ம தர்சனம் ப்ரேமா” (ஒரே ஆத்மாவை தரிசிப்பதே பிரேமை). அஹிம்சை மற்ற நான்கு மேம்பாடுகளின் அடித்தள நீரோட்டம் போல விளங்குகின்றது. எனவே அன்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறுப்பை கைவிடுங்கள். ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள், பிறரின் நலத்துக்காக நீங்கள் சம் பாதித்த செல்வத்தை தியாகம் செய்யுங்கள் என பகவான் பாபா கூறினார்.
திருமூலரும் அன்பைப்பற்றி பின்வருமாறு கூறினார். “அன்பே கடவுள், அன்பே இறைவர், அன்பே உண்மை, அன்பே தெய்வம், அன்பே பரம்பொருள், அன்பே சத்தியம், அன்பே வாழ்வு, அன்பே உணர்வு, அன்பே உறவு, அன்பே உயிர்கள், அன்பே உலகம், அன்பே இயற்கை, அன்பே சர்வபிரபஞ்சம், அன்பே பஞ்சபூதங்கள், அன்பே தாய், அன்பே தந்தை, அன்பே குரு, அன்பே சிவம், அன் பே தமிழ், அன்பே சைவம்’ தமிழ் மூத்தமுனிவர் திருமூலர் பெருமான் எமக்கு தெரிவிக்கும் தெய்வீகச் செய்தியே மேற் கூறியனவாகும்.
 
 
 

9
தமிழைத் “திருமந்திரம்” ஆகத்திருமூலர் பெருமான் எமக்குத் தந் துள்ளார். “தமிழ்"தான் கடவுள் எனும் செய்தியை மேலும் திருமூலர் எமக்கு அறிவிக்கின்றார். இறைச் செய்தியை வையத்துள்ளார்க்கு வகுத்துளார் - பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஏற்படுத் தியுள்ளார், மூலர் பெருமான். இலங்கையைச் சிவப் பூமி எனக் கூறும் மூலர், பூமியை ஓர் இறைமண்டபமாக சந்நிதானமாகக் கூறுகின்றார்.
அன்பே, அனைத்திற்கும் முதல், அன்பே அனைத்தினதும் முதல். அன்பிலிருந்தே அறம் வெளிப்படுகின்றது. அன்பிலிருந்தே கல்வி புறப்படுகின்றது. அன்பில் இருந்தே அருள் அணுக்கிரகம் மலர்கின் றது. அன்பிலிருந்தே வீரம் தொழிற்படுகின்றது. அன்பில் இருந்தே மெளனம், ஒளி, அதிர்வு, ஒலி, ஓசை, சத்தம், இசை. மொழி ஆகியன மலர்கின்றன.
ஈனம், இரக்கம், சாந்தம், பொறுமை அடக்கம், தயவு. தாட்சண்யம், கருணை, பக்தி, காதல், தெளிவு. நடுவு நிற்றல் ஆகியன “அன்பு நிறைவின்” வெளிப்பாட்டிற்குரிய அடையாளங்களேயாகும். எமது கல் வி அன்பு சார்ந்ததாகவே அமைதல் வேண்டும். எமது பழக்கவழக் கங்கள், ஒழுக்கம் ஆகியன அன்பு தழுவியதாகவே இருத்தல் வேண்டும். எமது தொழில். வாழ்வு, பேச்சு, மூச்சு. உணவு அனைத் தும் அன்பு நிறைந்ததாகவே இருத்தல் வேண்டும். எமது ஒவ் வொரு செயலும், எமது ஒவ்வொரு அசைவும் அன்பையே பிரதிபலித்தல் வேண்டும்.
எமது எல்லாவிதமான அகப்புறப் பரிமாற்றங்கள் அனைத்தும் அன் பாகவே இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் நாம் சாந் தமடைவோம். நாம் உண்மையான ஆனந்தமாவோம். எல்லா சீவராசிகளும் சாந்தமாகும். வீடு சாந்தமாகும். நாடு சாந்தமாகும், சரந்தமாகும் பஞ்சபூதங்கள் சாந்தமாகும். இயற்கை சாந் ألمانيا தமாகும, சாவமும சாநதமாகும.
“அன்பே சிவம் - அன்பே எல்லாம்”. இதுவே எமது தாரக மந்திரமாகும்.
S0S SLLLL SLLLLLS SSL S S0 S SSS SSSL S SS S0 SS LL S SSSS SSSSLS SSSS S L S L S L S SSL S S SLL S SSL0SSL S0LSS S0 S S L S SLSLS SLS S L S 0 S S0 S S SSLSS SLSS SLSS S 0LS S LL SL0 SS SSL SSLLS SLLLL S SLLL SLSL SSLS SSL S SSLS S LSL S L SL SLS SLSLS SL
திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம் உப தலைவி யாழ். இ. ம. க. ப. மா. சங்கம் : கொழும்புக்கிளை.
SLLL SS0L S SS0L SSLS S SLS S SSS SSLL SY S L0L S S0 SLS S S SS S SS S SL S L0 SL SS 0SS SLS SS0 SLSL SL S SLSL SS SLS SS0SL S SLL S LL SLSS SLSS SLSS SLSS SLL L SSLS SLS SLS S SL S L SL SL SLSS SLSS SLLLL S S LLLL SLLLL SLS SL SLS

Page 7
سسسسسسسسس 9ا
بمبیا ھمیM Peace
ܐܘܪ ܐܘܚܪ ܐܘܚܠ ܐܘܚܪ ܐܝܠ ܐܝܠ ܐܘܚܪ ܐܝܠ ܐܝܠ ܐ
I saw a little bird High up on a branch, I asked the bird - What do you want little one?
Peace’ she said, “Nothing but Peace’ Do you have it? - she asked.
I moved away
I saw a little baby With rosy cheeks and slurry eyes “What do you want my angel I asked of the cherubic one
Peace’ he said, “Nothing but peace “Do you have it? - he asked
I moved away, I met many people Young and old, strong and weak Rich and poor - I asked each one that very same question and got the very same answer.
Two white doves soaring above One said to the other
The time has come to Land on Lanka's Soil All are awaiting us”- Said the other“Men and women, Children and babies Birds and beasts All want Peace on earth Let’s descend”
Thilaka Wijeyaratnam

11
望一
L SS SZ SL L L L
யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் கொழும் புக் கிளையின் ஒன்றுகூடல் நிகழ்வு 2002-11-02ஆம் திகதி நடைபெற்ற போது திருமதி. திலகா விவேகானந்தன் விஜயரட்னம் எழுதிய “புதுப் புது அர்த்தங்கள்’ என்ற நாடகம் சரஸ்வதி மண்டபத்தில் மேடை யேறியது.
புதுப் புது அர்த்தங்கள்
கதாபாத்திரங்கள்:
நிருபர் - செல்வி ஞானலட்சுமி பாலசிங்கம் திருமதி காந்திமதி திருமதி சத்தியலஷ்மி சிவலிங்கம் திருமதி யோகராணி செல்வி ஒம்சக்தி இரத்தினசபாபதி திருமதி மனோரஞ்சிதம் செல்வி யாழினி தனபாலசிங்கம் Slobog5) 2 – LAT திருமதி திருநாவுக்கரசு திருமதி பரிமளம் கந்தப்பு திருமதி விமலா மணிவாசகன் ஆக்கம்- திருமதி திலகா விவேகானந்தன் விஜயரட்னம்
நெறியாள்கை- செல்வி சற்சொருபவதி நாதன்
米米米米水冰米米米米米米冰率米米冲米米冰米米冰米米米米
(மேடையில் மாதர் சங்க உறுப்பினர்கள் ஐந்து பெண்மணிகள் அமர்ந்திருத்தல்) நிருபர் - சபையோர்களே! இன்று இந்த மாதர் சங்க அங்கத்தவர் ஐவரையும் தமிழர் பண்பாடு, பாரம்பரியம் ஆகியவை பற்றி நேர்முகம் கண்டு கருத்துப் பரிமாற எண் ணியுள்ளோம். எங்கள் தமிழ் பணி பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் பழைமையானவையா? அன்றி தற்போதய நாகரிக வளர்ச்சிக் கேற்றனவா? இல்லையா? என்று இந்த நரீமணிகளைக் கேட்டு அறிவோம்.
இதோ இங்கு முதலாவதாக இருப்பவர் திருமதி காந்திமதி. இவர் ஒரு கம்பனியில் Managing Director (M.D.) 96i5 gobtusui follof Gujra, JT60ts, golf 90 கம்பனியில் கணக்காளர்- Accountant, மூன்றாவதாக வீற்றிருப்பவர் திருமதி மனோரஞ்சிதம் - ஒரு பொறியியலாளர் - Engineer, அருகில் இருப்பவர் திருமதி உமா. வைத்தியர், கடைசியாக இங்கு இருப்பவர் திருமதி பரிமளம் கந்தப்பு. இவர் ஒரு இல்லத்தரசி நரிமணிகளே! உங்களைச் சில கேள்விகள் கேட்க உள்ளோம். நான் ரெடி நீங்க ரெடியா?

Page 8
12
எல் - ஓ நாங்க ரெடி நிருபர் - நல்லம் நல்லம். முதற்கேள்வி. எங்கள் பாரம்பரியத்தின்படி, வீட்டிலோ அன்றி வேறு சடங்குகளிலோ, ஆண்கள் உணவு உட்கொண்ட பின்னே பெண்கள் உண் பதென்று ஒரு சம்பிரதாயம் உண்டு. அதைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன அம்மா M.D. 96) is Golf?
காந்திமதி - இந்த அர்த்தமற்ற பாரம்பரியத்தில் எனக்கு நம்பிக்கை யில்லை யார் யாருக் குப் பசிக்குதோ அவர்கள் முதல் சாப்பிடலாம். நிருபர் - ஓ அப்படியா? திருமதி யோகராணி அம்மா சொல்வதென்ன?
யோகராணி - Mrs. காந்திமதி சொன்னதை நான் முழுதும் முற்றாக ஏற்றுக்கொள்கின் றேன். இந்த ஆண்கள் சரியான சாப்பாட்டுராமன்கள். அவர்கள் வயிறு புடைக்கச் சாப்பிடும் வரை நாம் ஏன் பொறுத்திருக்க வேண்டும். நிருபர் - அது சரி அம்மா மனோரஞ்சிதம் அவர்களே நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? மனோ - என்ன சம்பிரதாயம், பண்பாடு, கலாச்சாரம். ஏன் அவர்களோடு கூட இருந்து நாங்களும் சாப்பிட்டால் என்ன? இப்ப இது தானே Fashion.
நிருபர் - ஒ கோ - பண்பாட்டுக்கு முன் Fashion ஒ? அதையும் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். இது கலியுகமல்லவா? அம்மணி உமா என்ன சொல்கின்றார். உமா - சிறுவர் முதல் முதியவர் வரை அமிலம், அல்ஸர் முதலிய நோய்களுக்கு என் னிடம் வருகின்றார்கள். அவர்கள் நேரத்துக்கு சாப்பிட வேண்டும். ஆதலால் இந்த பாரம்பரியங்களை நான் எதிர்க்கிறேன்.
நிருபர் - அதுவும் சரிதான் அடுத்ததாக எமது இல்லத்தரசி திருமதி பரிமளம் கந்தப்புவின் கருத்தென்னவோ?
பரிமளம் - நான் அச்சம்பிரதாயத்தைத்தான் பின் பற்றுவேன்.
நிருபர் - ஆகா, இவர்களல்லவோ! நல்ல பெண்மணி, மிக நல்ல பெண்மணி. இங் கேயுள்ள ஆண்களுக்கு போன உயிர் திரும்பியிருக்குமே? நீங்களேன் அம்மா இச்சம் பிரதாயத்தைப் பின் பற்றுகிறீர்கள் என்று அறியலாமா? பரிமளம் - ஓ! அறியலாமே. ஆண்கள் உண்ணும் போது எதற்கு உப்புப் புளி கூடக் குறைய என்று கருத்துப் பரிமாறுவார்கள் அல்லவா? அதன் பின் அதை நிவர்த்தி செய்து நான் அறுசுவையுடன் உண்ணுவேன்.
(சிரிப்பு)
நிருபர் - அடடா! இது இவ்வளவு நாளும் எமக்குத் தெரியாது போயிற்றே - புத் திசாலி அம்மா, புத்திசாலி. சொன்னாப்போல், இன்னொரு விஷயம் உணவைப் பற்றி ஞாபகத்துக்கு வருகிறது. முன்னே எல்லாம் கணவன் சாப்பிட்ட தட்டிலே தான் மனைவி சாப்பிடுவார் என்றொரு சம்பிரதாயம் இருந்தது. இப்பவும் அப்படியா? உங்கள் கருத்து M.D. அம்மா?
காந்தி - சுத்த nonsense. இச்சம்பிரதாயத்தை ஏற்படுத்தியோருக்கு ஆணாதிக்கம் அதிகம்.
நிருபர் - "ஆறுவது சினம்’ அம்மா. அடுத்து திருமதி யோகராணி அவர்களின் க(ஈத்

13
தென்ன? யோக - இது ஒரு அநாகரிகமான செயல். நிருபர் - அப்படியா! திருமதி மனோரஞ்சிதம் என்ன சொல்கிறார்களோ? மனோ - இது அநாகரிகம் மட்டுமல்ல, ஆரோக்கியமற்ற செயலுமாகும். நிருபர் - அதுவும் சரிதான் அம்மணி உமா அவர்களே! உங்கள் அபிப்பிராயம் என்ன? உமா - இது அநாகரிகம், ஆரோக்கியமற்றது மட்டும் அல்ல. பல நோய்கள் பரவுவதற்கும் வழிவகுத்ததாக இருக்கும். நிருபர் - எமது இல்லத்தரசி திருமதி பரிமளம் கந்தப்புவின் கருத்து என்னவோ? நீங் கள் இதை ஏற்றுக் கொள்கிறீர்களா? பரிமளம் - அதிலென்ன சந்தேகம்? நிருபர் - ஆ! இதோ ஒரு பெண்மணி - தமிழர் கலாச்சாரத்தைப் பேண என்றே பிறந்துள்ளார். பரிமளம் - நீங்க ஒண்ணு - தண்ணியில்லா ஊரிலே இது ஒரு செளகரியம். கழுவ ஒரு தட்டுத்தான் உண்டு.
(சிரிப்பு) நிருபர் - அட! இப்படியும் ஒரு விளக்கமா? நீரைப்பேண இது ஒரு நல்ல யுக்தி: அரசாங்கம் என்ன U.N. கூட இதைக் கவனிக்க வேண்டும். சரி பெருமக்களே! கணவனுக்குப் பின் பெண் மூன்றடி நடப்பவள். அதைப் பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். திருமதி காந்திமதி அம்மா சொல்வதென்ன? காந்தி - இது nonsense-male chauvinism. இதை நான் ஏற்றுக்கொள்ள மாட் டேன்.
நிருபர் - அப்போ உங்கள் அபிப்பிராயம் திருமதி யோகராணி அம்மா அவர்களே! யோக - ஏன் அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் வழக்குப் போடுவார்களோ?
(சிரிப்பு) நிருபர் - சரி சரி விட்டால் கோர்ட்டுக்கும் போய்விடுவார்களோ? இனி மனோரஞ்சிதம் அம்மா அவர்களின் அபிப்பிராயம் என்னவோ? மனோ - ஏன் நான் தான் வழக்கமாய் முன்னாலே போவேன். பின்னாலே அவர் வருவார். அவரின்ரை பெயரைப் போல. நிருபர் - இது ஒரு விநோதமான விளக்கம். திருமதி உமா அவர்களே! உங்கள் கருத்தென்ன? உமா - நான் எப்பொழுதும் காரில்தான் போவேன். அப்பொழுதுதான் நோயாளிகளின் தேவைகளை உடனுக்குடன் கவனிக்க முடியும். நிருபர் - இவர் கடமை தவறாதவர். அம்மா திருமதி பரிமளம் கந்தப்பு அவர்கள் சொல்வதென்னவோ?
பரிமளம் - நான் அவர் பின்னே தான் போவேன்.

Page 9
4 நிருபர் - அச்சா, இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண்ணா! நீங்களிதை நம்புகிறீர்கள் அல்லவா?
பரிமளம் - நம்பாமல் என்ன செய்வது? (எழுந்து நடந்து காட்டி) அவர் நீண்ட கால் களால் இப்படி இப்படி நடக்க நான் பின்னே மூன்றென்ன முப்பது அடியல்லோ நடக்க வேணும்.
(பலத்தசிரிப்பு)
நிருபர் - சரியாய்ப் போச்சு, அன்பர்களே! திருவள்ளுவர் தன் மனைவியை - “பின் தூங்கி முன்எழும் பேதை” என்றார். இவர்களும் அப் படியோ எனறு அறிவோம். அம்மணி M.D. அவர்களே! உங்கள் கருத்தென்ன? காந்தி - அப்பப்பா - யார் நித்திரை முழிக்கிறது. தூக்கம் வந்தால் யாரையும் பார்த் திருக்கமாட்டேன். சாப்பாட்டை மேசையில் எடுத்து வைத்துவிட்டுப் படுத்து விடுவேன். காலையில் அவர்தான் Bed-Coffee எடுத்து வருவார்.
(சிரிப்பு) நிருபர் - ஒ கோ - அப்படியாயின் அவர்தான் பின் தூங்கி முன்னெழும் பெரும் பேறுடையவரோ? சரி திருமதி யோகராணி அவர்களின் கருத்தென்னவோ? யோக - வேற வேலையில்லை. நிருபர் - அந்த ஒரு வாக்கியம் எல்லா விளக்கமும் தருகிறது. இனித் திருமதி மனோரஞ்சிதம் அவர்களின் எண்ணம் என்ன? 4 யோக - இவர்கள் இருவரும் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். நிருபர் - அப்படியா! நல்லது. அடுத்து அம்மணி உமா அவர்களே! உங்கள் கருத் தென்ன? உமா - நித்திரை முழிப்பது கண்ணுக்கு நல்லதல்ல, ஒரு பக்க தலையிடி வருவதற்கும் இது காரணமாக இருக்கும். நிருபர் - இவர் வைத்தியர் அல்லவா? எமது இல்லத்தரசி என்ன சொல்கிறாரென்று பார்ப்போம். நீங்கள் பின் தூங்கி முன்னெழுபவரா? பரிமளம் - நான் எப்பொழுதும் அப்படித்தான்! நிருபர் - இவர் கணவர் கொடுத்து வைத்தவர். இவர் ஒரு வாசுகி. பரிமளம் - ஏன் வாசுகியும் கணவன் தூங்கியவுடன் இரவு Sccond Show வுக்குப் போவாரா?
(சிரிப்பு) நிருபர் - விளங்குது விளங்குது. அப்போ முன்னெழுவது. பரிமளம் - ஏனில்லை - எல்லோரும் விழிக்க முதல் நான் எழும்பிவிடுவேன். நிருபர் - கேட்க உச்சிகுளிருது. கணவனுக்கு முன் எழும் பெண்மணி நல்ல கடமை யுணர்ச்சியுள்ள பெண்மணி. பரிமளம் - நீங்க என்ன சொல்கிறீர்களோ! எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் வீட் டில் ஒரே ஒரு குளியலறை தான் இருக்குது. லேட்டாய் எழும்பினால் எல்லாமே லேட்

தான்.
(SF6IvF6DŮL) (tittering)
நிருபர் - விளங்குது விளங்குது. நவீன காலத்துக்குரிய பழக்கம். அம்மணிகளே! உங்கள் கணவன் இரவில் லேட்டாய் வந்தால் ஏங்கே? ஏன்? எவரோடு? என்றெல்லாம், கேள்வி கேட்பீர்களா? அம்மா M.D. அவர்களே! காந்தி - துளைத்துத் துளைத்துக் கேள்வி கேட்டு அடுத்தநாள் அவர் சொன்னது உண்மையா என்று செக் பண்ணுவேன். நிருபர் - அம்மா யோகராணி அவர்கள் சொல்வதென்ன? யோக - அவர் சொன்னதுமட்டும் பொய்யாயிருந்தால் ?????? நிருபர் - வேண்டாம் வேண்டாம் அந்தப்பயங்கர விளக்கம். பொறியியலாளரின் பதில் என்னவோ!
மனோ - என்னை விட்டுவிட்டு யாரோடு சுத்தினீர் என்று கேட்டுக் கேட்டு உயத் திரவப்படுத்துவேன். அதற்குப் பயந்து அவர் லேட்டாய் வரார். «w
(சிரிப்பு)
நிருபர் - உமா அவர்கள் எப்படியோ? உமா - லேட்டாய் வருவது உடம்புக்கு நல்லதல்ல என்று பெரிய உபதேசமே செய்வேன். அதனால் அவர் வேளைக்கே வந்துவிடுவார். நிருபர் - சரி பரிமாளம் அம்மா என்ன செய்வீர்கள். பரிமளம் - நான் எதுவும் கேட்பதே இல்லை. நிருபர் - அதிசயமாயிருக்கே? ஏனென்றறியலாமா? பரிமளம் - ஏனோ? யாரய்யா பெண்டாட்டிக்கு உணர்மை சொல்பவன். கேட்டுப் பிரயோசனம் என்ன?
(பலத்தசிரிப்பு)
நிருபர் - அம்மணி, நீங்கள் மகா புத்திசாலி. அடுத்து பெண்ணானவள் குனிந்த தலை நிமிராமல் நடப்பது பற்றி? காந்தி - ஏனப்படி நடக்க வேணும். ‘நிமிர்ந்த நன்னடையும் நேரான பார்வையும்’ என் று பாரதியார் சொன்னது போல் நடப்பேன். நிருபர் - ஓ! பாரதி கண்ட புதுமைப்பெண்ணா? அடுத்து யோகராணி அம்மா? யோக - கழுத்து வாங்கினால் யார் பார்ப்பது? நிமிர்ந்து நடப்பது தான் நல்லது. . நிருபர் - சரி உங்கள் அபிப்பிராயம் திருமதி மனோரஞ்சிதம் அவர்களே? மனோ - அவர்களிருவரும் சொன்னதை நான் ஏற்கிறேன். நிருபர் - உமா அவர்களே! உங்கள் எண்ணம் என்ன?
நிமிர்ந்து நடந்தால் அக்கம்பக்கத்தில் நடப்பவையை அறியலாம்.
நிருபர் - அப்படியா! சரி எமது இல்லத்தரசி சொல்வதென்ன வென்று பார்ப்போம்.

Page 10
6 பரிமளம் - நான் குனிந்த தலை நிமிராமல் தான் நடப்பேன். நிருபர் - ஆகா! நிருபர் கண்ட புதுமைப் பெண் இவர். நீங்கள் தானம்மா தமிழர் கலாச்சாரம் பண்பாட்டை பேணும் நல்ல பெண்மணி. பரிமளம் - கலாச்சாரம் பண்பாடென்ன. ஆண்கள் கூட அப்படித்தான் நடப்பார்கள். நிருபர் - அதெப்படி? பரிமளம் - இந்த நடை பாதையிலே சிலாப் (Tiles) எல்லாம் கிளம்பியிருக்குது. நிமிர்ந்து நடந்தால் தடார் என்று குப்புற விழ வேண்டியதுதான். நிருபர் - அட அது என் புத்திக்கெட்டவில்லை. ஐயா கொழும்பு மேயர் ஐயா இது உங்கள் கவனத்திற்கு,
(பலத்தசிரிப்பு) இன்னுமொரு நவீனகால விடயத்திற்கு வருவோம். கல்யாணம் ஆகுமுன் காலைப்பிடி கல்யாணம் ஆனபின் கழுத்தைப்பிடி என்பார்கள். அதாவது கல்யாணம் முடிந்தவுடன் தலையணை மந்திரம் செய்து தந்திரமாக கணவனுடைய சுபாவத்தையே மாற்றி விடுவார்கள். நீங்களும் அப்படியா காந்திமதி அம்மா அவர்களே!
காந் - Of Course அவரைப் புது மனிதராய் மாற்றிவிட்டேன். தான் யாரென்பதையே மறக்கப் பண்ணிவிட்டேன்.
நிருபர் - ஓ - Brain - Washing ஒ? சரி அம்மா யோகராணி அவர்கள் சொல்வதென்ன? யோக - நானும் கொஞ்கம் கொஞ்சமாக அவரை மாற்றி விட்டேன். இப்ப அவர்
என்னைப் போலவே யோசிப்பார். நிருபர் - அப்போ திருமதி மனோரஞ்சிதம் என்ன சொல்கிறீர்கள்? மனோ - அவரை முற்றாக மாற்றிவிட்டேன். நான் காகம்? வெள்ளை என்றால் அவரும் ஆமா போடுவார். நிருபர் - ஓ போடுவாரோ! அடுத்து வைத்தியரின் கருத்து என்னவோ?
உமா - நானும் அவரை நன்றாக மாற்றிவிட்டேன் எனக்கு என்ன பிடிக்குமோ அதைத் தான் சொல்லுவார், செய்வார்.
நிருபர் - அப்போ முழுசரணாகதி சரி எமது இல்லத்தரசி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். பரிமளம் - நான் அவரை மாற்ற எத்தனிக்கவில்லை. எப்படி வந்தாரோ அப்படியே இன்றும்.
(sGus Guil) (tittering) நிருபர் - நீங்கள் ஏன்? அவரை மாற்ற எத்தனிக்கவில்லை. பரிமளம் - அவர் ஒரு அப்பாவி. அவர் சுபாவத்தை மாற்ற எத்தனித்தால் அது சகிக்க முடியாதபடி (Intolerable) ஆய்ப் போய்விடும்.
(சிரிப்பு)
நிருபர் - ஒ! உங்கள் பதில்கள் எல்லாம் வினோதமானவை. நல்ல மனோதத்துவம்

17 கொண்டது. கடைசியாக ஒரு விடயம். மாதச் சம்பளம் அவர் கொணர்ந்தவுடன் என்ன செய்வீர்கள்?
காந்தி - ஒரு சதம் விடாமல் எடுத்து விடுவேன். Overtime தான் அவருக்கு. நிருபர் - அப்படியா திருமதி யோகராணி அவர்களைக் கேட்போமா? யோக - நானும் விடேன். விட்டால் அம்மாக்கு, தங்கைக் கென்று போய்விடும்.
நிருபர் - அதற்கென்னம்மா தாய், சகோதரிக்குத்தானே கொடுப்பார். யோக - தெரியாதா - யாருமற்றதே தாரம் என்று, பிறகென்ன அம்மா, தம்பி, தங்கை. நிருபர் - ஓ கதை இப்படிப் போகிறதா? அப்போ எங்கள் எஞ்சினியர் அம்மா என்ன சொல்கிறார்கள்? மனோ - நானும் அப்படித்தான். ஓவர்டைம் வேணுமென்றால் அவர் எடுக்கட்டும். நிருபர் - நல்ல பரோபகாரம். அம்மணி உமா நீங்கள் எப்படி?
உமா - அவர் சம்பளம் முழுவதையும் என்னிடம் தந்துவிடுவார். தனது தேவைக்கு கேட்டு வாங்குவார். நிருபர் - நல்ல தாராள மனசு, அம்மணி பரிமளம் அம்மா சொல்வதென்ன? பரிமளம் - நான் அவர் சம்பளத்தைக் கேட்பது மில்லை வாங்குவது மில்லை. நிருபர் - ஏனோ? அவர் குடும்பத்தலைவன் என்பதாலோ? பரிமளம் - தலையுமில்லை, வாலுமில்லை, என்ரை டிச்சர்ஸ் (Teachers) பென்சனில் அரைக் கால்வாசிதான் அவர் சம்பளம். 300 ரூபா தந்து 500க்கு செலவு வைப்பார். அதிலும் பார்க்க அதை எடுக்காது விடுவது நல்லது.
(s 6us svůli) (tittering) நிருபர் - புத்திசாலி அம்மா. சரி அன்பர்களே! இதுவரை எமது கேள்விகளுக்கெல்லாம்
புதுப் புது அர்த்தம் கொடுத்த திருமதி பரிமளம் கந்தப்புவே சிறந்த பெண்மணி என்று கூறி அவரை வாழ்த்தி விடை பெறுகிறேன்.
நன்றி - வணக்கம்
(பலத்த கரகோஷம்)
o O o o o o O o o o o o o o o o o o o oso o o o o o o o o o o e o e o o o o o e o o
ஆண்டிற்கு ஒருமுறை மலரும் யாழ்நாதம் சஞ்சிகை
1995 யாழ் நாதம் இதழ் 1 2000 யாழ் நாதம் இதழ் 6 1996 யாழ் நாதம் இதழ் 2 2001 யாழ் நாதம் இதழ் 7 1997 யாழ் நாதம் இதழ் 3 |2002 யாழ் நாதம் இதழ் 8
1998 யாழ் நாதம் இதழ் 4 2003 யாழ் நாதம் இதழ் 9
1999 யாழ் நாதம் இதழ் 5

Page 11
8
Vallarai—6J6d6JOIT6ODU — Gotukola Centella Asiatica
“Gotukola' is highly effective when taken fresh. It has a direct action in lowering the blood pressure and is often referred to as a "Rejuvenation Medicine” - Restore youthful condition.
It revitalizes brain regeneration. It helps to sharpen our memory and increases intelligence. Therefore it is used for children who are suffering from Retardation.
Gotukola purifies and develops blood content and it is good for nervous disorders, also it acts as a fine medicine for cataract.
It is enriched in phosphorous, iron, calcium and other minerals and also has a high percentage of vitamin A & B.
Make the Gotukola as a porridge using the stem, leaves and roots - which also has medicinal value.
Method: Boil a handful of raw rice. Add garlic and onions (crushed). Cut the gotukola into small pieces, add a little coconut (scraped) into a blender and blend. Strain and add this mixture and salt to the porridge (Kanji). Cook for few minutes and drink. Can use normal milk also.
SSi S SS ei S S S i i SS S S S S S Siii SSiS i e SG SS
•"; -, ༣ }
Mrs. Thilaga Weerasingham, -: ܨܲܢ؟ * t్ళt HR గ్ళ గHRH -R R** " + " **

19 ჯo
“அடே! அப்பா’ சிரிப்பதற்கும் சொல்ல வேண்டுமா? பட் என்று சிரியுங்கள். சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே. வாய் விட்டுச் சிரித்தால், நோய் விட்டுப் போகும் என்பர் சிலர். பிறஜீவராசிகளால் செய்ய முடியாத சிரிப்பை மனிதர்களாகிய எம்மால் தான் செய்ய முடியும். மனதில் சந்தோசம் வந்தால் எம்மை அறியாமலே சிரிப்போம். சிலர் நகைச் சுவையாகப் பேசுவார்கள் அவர்களைப் பார்த்த உடனே நாம் சிரித்து விடுவோம். புன்நகை பெண்ணிற்குப் பொன்நகை போன்றது. சிலர் அடக்க முடியாமல் சிரிப்பார்கள், அவர்களைப் பார்த்த உடன் மற்றவர்களும் சிரிப்பார்கள். எமக்குத் துன்பம், இன்பம் மாறி மாறி வரும். துன்பத்திலும் நாம் சிரித் தால் துன்பம் மறைந்து விடும். நம் எதிரிகளைக் கண்டதும் சிரித் தால், எதிரியும் நண்பனாகி விடுவான். யாராகிலும் உங்கள் முகத் தைப் பார்த்த உடன் ஒரு சிறு புன்னகை செய்யுங்கள், முகத்தில் அழகு தெரியும். பழைய, மறைந்த நடிகர் N.S. கலிருஸ்ணன் சிரிப்பைப் பலவாறாகப் பாடி இருக்கிறார். அதில் அசட்டுச் சிரிப்பு, ஆணவச் சிரிப்பு இவை செயல் அற்றவை. நாம் ஆனந்தமாய் எப்பவும் சிரித்தல் வேண்டும். காலையில் கதிரவன் எம்மைப் பார்த்துச் சிரிப்பதால் வெளிச் சம் வருகிறது. பறவைகள் மிருகங்கள் ஆனந்தத்தில், பாடி, சந் தோசம் அடைகின்றன. மலர்கள் யாவும் சிரித்தபடியே மலர்கின்றன.
பழைய ஞாபகங்கள்
திருமதி. சறோஜினி றாவ் தலைமை ஆசிரியை ஆக இருந்த போது எங்களில் மூவர் எப்பவும் கடுமையாகச் சத்தம் இட்டுச் சிரிப்பது வழமை. ஒரு நாள் எங்கள் வகுப்பு ஆசிரியை எங்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அனுப்பி விட்டார். தலைமை ஆசிரியை “ஏன் வந்தீர்கள்?” என்று கேட்டார். நாம் உடனே சிரித்தபடி, “வகுப்பில் அதிகம் சிரிப்பதால் வந்தோம்” என்று சொன்னோம், எங்கள் தலைமை ஆசிரியை சிரித் தபடியே “இங்கு இருந்து நன்றாய்ச் சிரித்து விட்டு, வகுப்புக்குப் போங் கள்’ என உத்தரவு இட்டார். நாம் விட்டோமா, ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கும் வரை சிரித்து விட்டு, வகுப்பை அடைந்தோம்.
ஒரு முறை எங்கள் பாடசாலையில் சிரிப்புப் போட்டி நடைபெற்றது. அடே! யெங்கப்பா, சிரிக்கச் சொல்லவும் வேண்டுமா! சிரித்ததில் வயிற்றில் கொழுவி விட்டது. கண்ணிரும் வந்து விட்டது. நன்றாய்ச் சிரியுங்கள், அம்மாடி! என்றே சிரியுங்கள்.
திருமதி. சத்தியலெட்சுமி சிவலிங்கம், J-3 - 5 அன்ரசன் தொடர் மாடி, கொழும்பு - 5

Page 12
20
The Oy
I visited my ancestral home When last I went to Jaffna A lady of miracles Whom no shell dare strike, But time has taken Its toll on her This is the old lady Who holds within her heart, All the secrets we whispered To each other in our teens All round the Old Lady Stood many a mango tree Like sentinels keeping vigil Those are the branches On which we did circus tricks Copying acrobatics of Kamala circus The mangoes hanging from The lowest branches are no more Vandals have cut them away To sell and perhaps call it a day Heavy at heart, with misty eyes I turned my face away At the neglect. Forlorn, so barren Stood the trees – telling their tale of woe Sadly I bade good-bye — And boarded the coach to Colombo
イ
Mrs. Thilaka Wijeyaratnam 一丁下っ

2
அகில உலகங்களிலும் உள்ள எல்லாப் பொருள்களையும் மூன்று பிரிவில் அடக்கிவிடலாம். ஒன்று தானே அறிகின்ற பொருள்; மற்றொன்று அறிவித்தால் அறிகின்ற பொருள்; அறிவித்தாலும் அறியாத பொருள் மற்றொன்று. இவற்றை பதி, பசு, பாசம் என்று நம் சைவ சமய ஞான நூல்கள் கூறுகின்றன.
Llaf, தானே அறிகின்ற பொருள்.
LJöi; அறிவித்தால் அறிகின்ற பொருள் பாசம், அறிவித்தாலும் அறியமாட்டாத பொருள். இறைவனும் அநாதி, ஆன்மாக்களும் அநாதி; “பதியினைப் போல் LJöi UITaf th
அநாதி” என்கின்றார் திருமூலர். ஆனால் இறைவன் இன்ப வடிவினன்; ஆன்மாக்கள் ஆணவத்துடன் கூடித் துன்பத்தை நுகர்கின்றன. “சதாபாரதா துக்க பவான் தீனபந்தோ’ என்று சுப்ரமண்யபுஜங்கத்தில் சங்கரரும் கூறுகின்றார். ஆன்மாக்களின் துன்பத்தை நீக்குதற்குத் திருவுளங் கொண்ட இறைவன் அருள் திருமேனி தாங்கி, ஆன்மாக்களுக்கு உடம்பையும், கருவி கரணங்களையும் உலகங்களையும் படைத்துக் கொடுத்திருளினார். அவ்வாறு படைத்த எழுவகைப் பிறவிகளில் மனிதப் பிறப்பு உயர்ந்தது.
“அரிது அரிது மானிடராதல் அரிது’ - ஒளவையார்.
う
“எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிதரிதுகாண்” என்கின்றார் தாயுமானவர். எண்ணில்லாத உலகங்களில் எண்ணில்லாத உடம்புகளை எடுத்து எண்ணில்லாத காலமாகப் பிறந்து இறந்து மாறி மாறி வந்து இளைப்புற் றேன் என்கின்றார் மணிவாசகர். ஏழு கடற்கரைகளின் மணல்களை எண்ணி அளவிட்டு இத்துணையென்று அறுதியிட்டுக் கூறினும் கூறிவிடலாம், ஆனால் நாம் பிறந்த பிறப்பை எண்ணி அளவிட முடியாது என்கின்றார் அருணகிரிநாதர்.
“எழுகடல் மணலை அளவிடினதிகம்
எனதிடர் பிறவி அவதாரம்” - திருப்புகழ்

Page 13
22 ஒவ்வொரு பிறவியிலும் நாம்பருகிய தாய்ப்பால் அனைத்தும் ஒருங்கு கூட்டினால் பாற்கடல் சிறிதாகிவிடும் என்கின்றார் குருநமசிவாயர்
எடுத்த பிறப்பெல்லாம் எனக்குவந்த தாய்மார் கொடுத்தமுலைப் பாலனைத்துங் கூட்டின்- அடுத்து வரும் பன்னா கணைத்துயிலும் பாலாழி யுஞ்சிறிதாம் மன்னா சிதம்பரதேவா. -சிதம்பரவெண்பா இத்தகைய பிறவிகளில் மனிதப் பிறப்பு உயர்ந்தது என்றோம். மனிதன் என்ற சொல்லுக்கு நினைப்பவன் என்பது பொருள். மன் என்ற பகுதியடியாகப் பிறந்த சொல் மனிதன். நினைக்கின்ற கருவி மனம். அது இன்றியமையாத ஒன்று. மற்ற பிராணிகட்கு மனம் இல்லை. தமிழில் மனிதன். வடமொழியில் மநுஜா. ஆங்கிலத்தில் மேன். இச்சொற்கள் யாவும் மன் என்ற பெயர்ச் சொல்லிலிருந்து தோன்றியவை. மனம் என்ற கருவியில்லாமையால் விலங்குகளின் வாழ்வு ஒன்று போல் அமைந்திருக்கின்றது. மாடு அன்று உண்ட புல்லைத்தான் இன்றும் உண் ணுகின்றது. மனிதன் உணவைப் பல்வேறு வகையாகப் பக்குவஞ் செய்து உண்ணுகின்றான். குருவி அன்று கூடுகட்டியது போல்தான் இன்றும் கட்டுகின்றது. மனிதன் வீடுகட்டும் முறை கணத்துக்குக் கணம் பல்வேறு விதமாக முன் னேற்ற மடைந்திருக்கின்றது. உணவினாலே, உடையினாலே, நடையினாலே, பேச்சாலே, எழுத்தாலே, வாகனங்களினாலே மனிதன் முன்னேற்ற மடைகின்றான். இதனை இதனை இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்திக்கின் றான். இவ்வாறு சிந்திக்கின்ற மனிதன் சமய நெறியிலும் முன்னேற வேண்டும். நான் யார்? இந்த உடம்பு எப்படி வந்தது? உடம்பு தானே வந்ததா? ஒருவன் தந்து வந்ததா? தந்தவன் தன் பொருட்டுத் தந்தானா? உடம்பு எடுக்கும் முன் எப்படி நான் இருந்தேன்? எதற்காக உடம்பு தரப்பட்டது? எதன் பொருட்டு வந்தேன்? எங்கே போக வேண்டும்? நான் எங்கே போய் க் கொண்டிருக்கின்றேன்? என்பனவாறு சிந்தனைகள் சிந்திக்க வேண் டும். இந்தச் சிந்தனைகள் தாம் சிந்திக்கத்தக்கவை. இவைகளைச் சிந் திக்கின்றவன் உண்மையில் மனிதனாகின்றான். இந்தச் சிந்தனையில் லாதவர்களைச் சிந்தித்தும் பரமகுருநாதராகிய அருணகிரிநாதர் பாடுகின்
DIII.
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன் தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் ஒன்றும் வாழ்த்துகிலேன் மயில்வாகனனைச் சந்திக்கிலேன் பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் புந்திக்கிலேசமும் காயக்கிலேசமும் போக்குதற்கே. ஏனைய சிந்தனைகள் பிறவியைத் தரும். அச்சிந்தனைகள் அற ஐந் தெழுத்தைச் சிந்திக்க வேண்டும்.

23 பஞ்சாக்கரத்தில் பல பிரிவுகள் உண்டு “ஐம்பத்தொன்றி லெட்டாரில் மூன்றினில் ஐந்தில் தங்கும் அப்பாலை வான்பொருள்” என்பது திரு வகுப்பு. மூன்று என்பது திரியட்சரம். இதைப் பரமஞானிகள் ஒதுவார்கள். “சிவாய எனும் நாமம் ஒருகாலும் நினையாத திமிராகரனை வாவென் றழையாதே’ - திருப்புகழ்
ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில் ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர் ஐந்தறலாம் ஆவியீர் ஐந்துறலாம் ஆவியீர் ஐந்திடலாய் ஓரிண்டோ டாய்ந்து. ந - திரோதமலம் ம - ஆணவமலம் சி - சிவம் வ - திருவருள் (L - ජැඟීtunrI ஆன்மா எழுத்துய ஈரைந்து பத்து தமிழ் கணக்கில் பத்து - ய இந்த யகரத்தை அபரம் - பின், சிகரத்துக்கும் வகரத்துக்கும் பின் வைத்து சிவய என்று ஒதுவார்களானால்
“ஆவியிரைந்தை அகற்றலாம்”
ஈரைந்து-பத்து; பத்து என்ற சொல்லை ஆவி என்ற எழுத்துக்களுடன் சேர்க்க வேண்டும். ஆ என்ற எழுத்துடன் பத்து என்ற சொல்லைச் சேர்க்க - ஆபத்து வி என்ற எழுத்துடன் பத்து என்ற சொல்லைச் சேர்க்க - விபத்து. ஆபத்து - உடலுக்கு வருந்துயர்
விபத்து - உயிருக்க வருந்துயர் உடலுக்கு வருந்துயர்கள் பசி, பிணி முதலியன.
உயிருக்க வருந்துயர்கள் பிறப்பு, இறப்பு என்பன. இந்த ஆபத்து விபத்து என்ற இருவகைத் துயரங்களும் சிவாய என்று ஒதுவார்க்கு உண்டாக மாட்டா.
ஆவியீர் ஐந்து அறலாம்; <ಶ್ರೀರಲ್ಲGuh, கன்மம், மாயை, திரோதம், மாயேயம் என்ற பஞ்ச மலங்களும் <9{DյԼԸ.
ஆவியீர் ஐந்து உறலாம்; ஆவியீர்! விளி, உயிர் போன்றவர்களே! நிவர்த்திகலை, பிரதிஷ்டாகலை,
வித்யாகலை, சாந்திகலை, சாந்தியாதீதகலை என்ற பஞ்சகதாமயமும் உண்டாகும்.
ஆவியீர் ஐந்திடலாம் ஓரிரண்டோடாய்ந்து,
ce6 - 5600I6 JITU

Page 14
24 ஈரைந்தோடு ஒரிரண்டு ஆய்ந்து இடலாம். வெளியே அவமே கழிகின்ற பன்னிரு அங்குலம் பிரணவாயு அவ்வாறு கழியாது உள்ளே மீளும். இன்னும் ஒரு முறை அப்பாடலைச் சிந்திப்போம்.
ஆவியீ ரைந்தை அபரத்தே வைத்தோதில் ஆவியீ ரைந்தை அகற்றலாம் - ஆவியீர் ஐந்தறலாம் ஆவியீர் ஐந்துறலாம் ஆவியீர் ஐந்திடலாம் ஒரிண்டோ டாய்ந்து. என்ன அற்புதமான செய்யுள், எத்துணை ஆழமான செம்பொருள்கள்? ஆதலால் ஐந்தெழுத்தைச் சிந்திப்போமானால் துயர்கள் சிந்திப்போம். தனியிழையை எளிதில் அறுத்து விடலாம். இருபத்தையாயிரம் இழைகளைக் கூட்டி முறுக்கி விட்டால் அக்கயிற்றால் தேரை இழுத்துவிடலாம். அது போல் பல லட்சம் முறை மந்திர ஜெபம் கூடுமானால் இறைவனைத் தெரிசித்து விடலாம்.
96 கோடி ராமமந்திர ஜெபத்தால் தியாகராஜ சுவாமிகள் ழரீராமரை நேரில் தெரிசித்தார். அண்மையில் வாழ்ந்த உண்மைத்துறவியாகிய பாம்பனடிகள் 36 நாள் பாம்பன் வலசையில் மயானத்தில் குழிவெட்டிக் கொண்டு அக்குழியிலிருந்து இடையறாது சடாக்ர மந்திரத்தைச் செபித்து இளம் பூர்ணனை நேரில் கண்டு தெரிசிக்கப் பெற்றார். இடையறாது கடைந்தால் பாலிலிருந்து வெண்ணெய் வெளிப்படுவது போல் இடையறாது தியானஞ் செய்தால் எம்பெருமான் வெளிப்படுவான்.
விறகிற்றியினன் பாலில்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவுக் கோல்நட் டுணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே. -அப்பர் பெருமான்
உடம்பை உயிர் செலுத்துகின்றது; உயிரை இறைவன் செலுத்துகின்றான். காரை டிரைவர் செலுத்துகின்றான் டிரைவரை எஜமான் செலுத்துகின்றான் என்பது போல் உணர்க. உடம்புக்குள் உயிர்; உயிருக்குள் இறை, டயருக்குள் ட்யூப்; ட்யூப்புக்குள் காற்று. இறைவனுடைய உதவிகளை நாம் ஆழமாக எண்ணினால் உள்ளம் உருகும்; அன்பினால் என்பும் உருகும். முடிவில் உயிர் உருகும். உயிர் உருகினால் உயிரில் உள்ள சிவம் உயிருடன் ஒன்றிவிடும்.
அரக்கின் இடையில் தங்கம்; தங்கத்தின் இடையில் இரத்தினமணி. அரக்கு உருகினால் தங்கம் உருகும். தங்கம் உருகினால் மணி அதில் பதிந்துவிடும். அது போல் உள்ளம் உருகி, உயிர் உருகி, சிவத்துடன் ஒன்றுபட வேண்டும். நம் உள்ளமே உருகவில்லை யானால் உயிர் எவ்வாறு உருகும்? இறையுடன் எவ்வாறு ஒன்றுபட முடியும்?

25
ஆதலால் அன்பைப் பெருக்கி உள்ளத்தையும், உணர்வையும், உயிரையுமஉருக்கி இறையுடன் கலந்து இன்புறுவதுவே சைவ சித்தாந் தத்தின் முடிந்த முடிபாம்.
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துனர்வென் றருள்வாய்!
பொருபுங் கவரும் புவியும் பரவும்
குரு புங்கவஎண் குணபஞ் சரனே!
என்று அனுபூதி இதனை நமக்கு உணர்த்துகின்றது. உணவு தேடுகின்ற நாம் உணர்வுந் தேட வேண்டும். நித்த அறிந்த வேறுபாடுகளை உணர்வது தான் உணர்வுடைமைக்கு அழகாகும்.
நேற்றிருந்தார் இன்றில்லை. மகாபாரதத்தில் யட்சப் பிரச்சினை என்று ஒன்று உளது. அது மிக மிக அருமையானது. யட்சமூர்த்தி தருமரைப் பார்த்து வினாவுகின்றார். “தருமா! உலகிலே ஆச்சர்யமானது எது? w தருமர் “தினந்தோறும் இறக்கின்றவர்களைக் கண்டும் தனக்கு மரணம் இல்லை யென்று எண்ணுகின்றானே! அது தான் பெரிய ஆச்சர்யம்” என்றார்.
இறப்பெனும் மெய்ம்மையை இம்மை யாவர்க்கும் மறப்பெனும் அதனின்மேல் கேடு மற்றுண்டோ துறப்பெனும் தெப்பமே துணை செய்யாவிடில் பிறப்பெனும் பெருங்கடல் பிழைக்க லாகுமோ
என்று தயரதர் கூறுகின்றார். ஆதலால் மரணம் வருமுன் இறைவன் சரணத்தை வழிபட்டு நலம்பெற வேண்டும். இது காறும் கூறியவற்றால், முப்பொருள் உண்மையும், இறைவன் தந்த அரிய பிறப்பு மனிதப் பிறப்பு என்பதும் இப்பிறப்பினால் இனியொரு பிறப்பு எடுக்காத வகையில் நாம் இறைவனுடன் ஒன்றி சிவாத்துவிதம் பெறவேண்டும் என்பதும், அதற்குரிய நெறி அன்பினால் உருகுவது என்பதும், ஐந்தெழுத்தை ஓதி உய்ய வேண்டும். என்பதும் மரணம் நேரும் முன் சரணம் பெறவேண்டும் என்பதும் தெரியப்பெற்றோம்.
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் அருளியது.
திரு. T. அருள்நந்தி அவர்கள் வெளியிட்ட “வாரியாரின் அமுதமொழி” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.
தொகுப்பு - திருமதி திலகா வீரசிங்கம்.

Page 15
26
空一
dou pub
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம் இரண்டாம் திருமுறை
இறைவன்:- கேதீச்சரநாதர் இறைவி. கெளரி அம்பாள்
தலம்:- திருக்கேதீச்சரம் தீர்த்தம்:- பாலாவி
பண்:- நட்டராகம்ராகம் பன்துவராளி தாளம்:- ஆதி
திருச்சிற்றம்பலம்
விருது குன்றமா மேருவில்நாணர வாஅனல் எரிஅம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி யெந்நாளும் கருதுகின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலணி மாதோட்டம் கருத நின்றகே தீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.
பொழிப்பு:- வெற்றிக்கு அடையாளமாக, பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நானாகப்பூட்டி அனலி எரியை அம்பாகக் கொண்டு பொருது முப்புரங்களை எரித்த சிவபிரான் பற்றி நின்று உறையும் பதியாக அடியவர் எந்நாளும் கருதுகின்ற ஊர் ஆரவாரிக்கின்ற கடலால் குழப்பட்ட மனம் கமமும் பொழில்கள் அணி செய்யும் மாதோட்டத்தல் பலரும் கருத வழிபாடு செய்யா நின்ற திருக்கேதீச்சரமாகும். அதனைக் கைதொழின் கடுவினைகள் நம்மை அடையா.
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருதுகைத் தருநட்டம் ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டாநஞ் சுண்டிருள் கண்டத்தர் ஈட மாவது விருங்கடற் கரையினில் எழில்திகழ் மாதோட்டம் கேடி லாதகே தீச்சரந் தொழுதெழக் கெடுமிடர் வினைதானே.
2 பொழிப்பு:- வீணையை மீட்டிக் கொண்டு பாடுபவர் பற்பலவான புராண வரலாறுகளைக் கொண்டவர். எருது உகைத்து அரிய நடனங்களாகிய ஆடல்களைப் புரிபவர். அமரர் வேண்ட நஞ்சினை உண்டு இருண்ட கண்டத்தினை உடையவர். அவருக்குரிய இடம், கரிய கடற்கரையில் உள்ள அழகிய மாதோட்டம் என்னும் ஊரின் கண் விளங்கும் கேடில்லாத கேதிச்சரம் ஆகும். அதனைத் தொழ இடர்வினை கெடும்.
பெண்ணொர் பாகத்தர் பிறைதவழ் சடையினர் அறைகழல் சிலம்பார்க்கச் சுண்ண மாதரித் தாடுவர் பாடுவர் அகந்தொறும் இடுபிச்சைக் குண்ண லாவதோர் இச்சையி னுழல்பவர் உயர்தரு மாதோட்டத் தண்ணல் நண்ணுகே தீச்சரம் அடைபவர்க் கருவினை யடையாவே.
3

27 பொழிப்பு:- உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவர் பிறைதவழ் சடையினர். திருநீற்றை விரும்பிப்பூசி கழலும், சிலம்பும் ஆர்க்க ஆடுபவர் பாடுபவர் உண்ணும் இச்சை உடையவர் போல வீடுகள் தோறும் இடும் பிச்சைக்கு உழலிபவர் அவ்விறைவர் எழுந்தருளிய உயரிய மாதோட்டத்தில் விளங் கும் கேதீச்சரத்தை அடைபவரை இருவினைகள் அடையா.
பொடி கொள் மேனியர் புலியத ளரையினர் விரிதரு கரத்தேந்தும் வடிகொள் மூவிலை வேலினர் நூலினர் மறிகடல் மாதோட்டத் தடிக ளாதரித் திருந்தகே தீச்சரம் பரிந்தசிந் தையராகி முடிகள் சாய்த்தடி பேணவல் லார்தம்மேல் மொய்த்தெழும்
வினைபோமே.
4
பொழிப்பு:- திருநீறணிந்த திருமேனியர். புலித்தோலை உடுத்தவர். விரிந்த கையினில் ஏந்திய கூரிய முத்தலைச் குலத்தை உடையவர். முப்புரி நூல் அணிந்தவர். மறித்து வரும் அலைகளைக் கொண்ட கடல் குழ்ந்த் மாதோட்ட நகரில் எழுந்தருளி விளங்கும் அடிகள். அவர் விரும்பி எழுந்தருளிய கேதிச்சரத்தை அன்பு கொண்ட மனத்தராய் வணங்கும் அடியவர் மேல் பற்றித் திரண்டு வரும் வினைகள் நீங்கிப்போகும்.
நல்ல ராற்றவும் ஞானநன் குடையார் தம் மடைந்தவர்க் கருளிய வல்லர் பார்மிசை வான்பிறப்பு இறப்பிலர் மலிகடல் மாதோட்டத் தெல்லை யில்புக ழெந்தைகே தீச்சரம் இராப்பகல் நினைந்தேத்தி அல்லல் ஆசறுத்தரனடி யிணைதொழும் அன்பராம் அடியாரே.
5 பொழிப்பு:- மிகவும் நல்லவர் ஞானம் நன்கு உடையவர் தம்மை அடைந்தவர்கட்கு அருளிய வல்லவர் மண்ணுலகிலும், விண்ணுலகிலும் பிறத்தல், இறத் தல் இல்லாதவர் நீர் நிறைந்த கடலால் குழப்பட்ட மாதோட்டத்து எல் லையில்லாத புகழை உடைய எந்தையாகிய அவரது கேதீச் சரத்தை இரவும், பகலும் நினைந்து போற்றத் துன்பம், குற்றம் அற் றவர்களாய் அவ் அரனடியினை தொமும் அன்புடையவரே அடியவர் ஆவர்.
பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத்
தொருபாகம் மாழை யங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கை வாழை யம்பொழின் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக் கேழல் வெண்மருப் பணிந்தநீள் மார்பர்கே தீச்சம் பிரியாரே.
6
பொழிப்பு:- பெருமை பொருந்திய நீண்ட சடையின்கண் பெருந்திருவினளாகிய கங்கையை மறைத்து வைத்து, தம் தருமேனியின் ஒரு பாகமாகிய அழகிய கயல் போலும் கண்ணினள் ஆகிய உமையம்மை பால் கருணை காட்டும் இயல்பினராகிய இறைவர் வாழைத் தோட்டங்களில் பமுத்த

Page 16
28 பழங்களை உண்ண மந்திகள் களிப்புற்று மருவிய மாதோட்டத்தல், பன்றியன் வெண்மையான கொம்பரினை அனந்துள்ள அகன்ற மார்பினராய்க் குடி கொண்டு வாமும் இடமாகக் கொண்டு கேதீச்சரத்தில் பிரியாது உறைகின்றார்
பண்டு நால்வருக் கறமுரைத் தருளிப்பல் லுலகினில் உயிர் வாழ்க்கை கண்ட நாதனார் கடலிடங் கைதொழக் காதலித் துறைகோயில் வண்டு பண்செயு மாமலர்ப் பொழின்மஞ்ஞை நடமிடு மாதோட்டம் தொண்டர் நாடொறுந் துதிசெய அருள் செயகே தீச்சர மதுதானே.
7 பொழிப்பு:- முற்காலத்தில் சனகர், சனாதகர், சனந்தனர், சனற்குமாரர் என்னும் முனியுங்கவர்களுக்கு ஞான நுட்பத்தை உரைத்தருளிப் பல உலகங் களிலும் பிறந்துள்ள உயிர்களின் வாழ்க்கைக்குரிய ஊழை அமைத்தருளிய நாதனார். கடல் குழ்ந்த இவ்வுலகிலுள்ளோர் கண்டு கைதொமுமாறு விரும்பி உறையும் கோயில், வண்டுகள் பண்ணிசைக்கும், சிறந்த மலர்கள் நிறைந்த பொழிலிகளில் மயிலிகள் நடனமாடும் மாதோட்டத்தின் கண் தொண்டர்கள் நாள்தோறும் துதிக்க அருள்புரியும் கேதீச்சரமாகும்.
தென்னி லங்கையர் குலபதி மலைநஸிந் தெடுத்தவன் முடி
திண்தோள் தன்ன லங்கெட அடர்த்தவற் கருள்செய்த தலைவனார் கடல்வாயப் பொன்னி லங்கிய முத்துமா மணிகளும் பொருந்திய மாதோட்டத் துன்னி யன்பொடு அடியவ ரிறைஞ்சுகே தீச்சரத் துள்ளாரே.
8
பொழிப்பு:- தென்னிலங்கை மன்னனாகிய இராவணன் கயிலை மலையை நெருங்கி எடுத்த போது அவன் முடி, தோள் ஆகியன அழகிழக்குமாறு அடர்த்துப் பின் அவனது பாடல் கேட்டு அருள் செய்த தலைவனார் டொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரை அடைந்து அன்பர்கள் இறைஞ்சி வழிபடும் கேதீச்சரத்து உள்ளார்.
பூவு ளானுமப் பொருகடல் வண்ணனும் புவியிடந் தெழுந்தோடி மேவி நாடிநின் அடியிணை காண்கிலா வித்தக மென்னாகும் மாவும் பூகமுங் கதலியும் நெருங்குமா தோட்டநன் னகர்மன்னித் தேவி தன்னொடுந் திருந்துகே தீச்சரத் திருந்தஎம் பெருமானே.
9 பொழிப்பு:- ம7, கமுகு, வாழை ஆகியன செறிந்த மாதோட்ட நன்னகரில் நிலையாக, தேவியோடும் அழகிய கேதிச்சரத்து விளங்கும் எம் பெருமானே! தாமரை மலரில் உறையும் நான்முகனும், கடல் வண்ணனாகிய திருமாலும் நிலத்தை அகழ்ந்து சென்றும், வானில் பறந்து ஓடியும் உன் திருவடி இணைகளைக் காணாதவாறு உயர்ந்து நின்ற உன் திறமையாதோ? இது எதிர் நிரல் நிறை.

29
புத்த ராய்ச்சில புனைதுகி லுடையவர் புறனுரைச் சமணாதர் எத்த ராகிநின் றுண்பவ ரியம்பிய ஏழைமை கேளேன்மின் மத்த யானையை மறுகிட வுரிசெய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னுபா லாவியின் கரையிற்கே தீச்சரம் அடைமின்னே.
10 பொழிப்பு:- புனையப்பட்ட துகிலை உடையவராய்ப் புறம் பேசும் புத்தர்களாகிய அறிவிலாரும், ஏமாற்றும் இயல்பினராய் நின்றுண்ணும் மரபினர்களாகிய சமணரும், கூறும் அறியாமை உரைகளைக் கேளாதிர் மதம் பொருந்திய யானையை அஞ்சுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தவர் ஆகிய, மாதோட்டத்துள் பாலாவியின் கரைமேல் விளங்கும் கேதீச்சரத்து அத்தரை அடையுங்கள்.
மாடெ லாமண முரசெனக் கடலின் தொலிகவர் மாதோட்டத் தாட லேறுடை யண்ணல் கேதீச்சரத் தடிகளை யணிகாழி நாடு ளார்க்கிறை ஞானசம் பந்தன்சொல் நவின்றெழு பாமாலைப் பாட லாயின பாடுமின்ப த்தர்கள் பரகதி பெறலாமே.
பொழிப்பு:- அருகி லெல்லாம் மனமுரசு ஒலிப்பது போலக் கடல் ஒலி நிரம்பப் பெற்ற மாதோட்டத்தில், வலிய ஏற்றினை உடைய தலைவராகிய கேதீச்சரத்துப் பெருமானை அழகிய காழிநாட்டினர்க்குத் தலைவனாகிய ஞானசம்பந்தன் சொல் நவின்றதால் தோன்றிய இப்பாமாலையைப் பக்தர்களே! பாடி வழிபடுமின் பரகதி பெறலாம்.
திருச்சிற்றம்பலம்
மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் நல்குக உயிர்கட் கெல்லாம் நான்மறைச் சைவம் ஓங்கிப் புல்குக உயிர்கட் கெல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.
།།།།
திருவிளையாடற் புராணம்.
நன்றி: "பன்னிரு திருமுறைத் தொகுதி” தருமை ஆதீனம், ஆண்டு 10 சைவநெறி புத்தகம்.
சிவ நாமாவளி
சிவாய நம: ஒம் சிவாய நம, சிவாய நம: ஒம் நம: சிவாய சிவாய நம: ஓம் சிவாய நம: சிவாய நம: ஒம்: நம: சிவாய

Page 17
30
சங்கத்தின் எட்டாவது ஆண்டுப் பொதுக்கூட்டம் 2002ஆம் ஆண்டு பெப் பிரவரி மாதம் 9ஆம் திததி கொழும்பு 4, லொறன்ஸ் வீதி 75% இலக்கத் தில் இருக்கும் சரஸ்வதி மண்டபத்தில் செல்வி சற்சொரூபவதி நாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு 19 அங்கத்தவர்கள், சமூ கமளித்திருந்தனர்.
அமரர் திரு நாகரத்தனம் அவர்களின் ஆத்ம சாந்தக் காகவும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமான சமாதானம் வேண்டியும் வன் முறையில் இறந்தோருக்கு அஞ்சலியாகவும் 2 நிமிட நேரம் மெளனப் பிரார்த்தனை செய்தோம்.
நடப்பு ஆண்டின் புதிய நிர்வாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட் L6.
போஷகர்கள் - திருமதி லீலா நாகரத்தினம்
- திருமதி புஷ்பம் சுப்பிரமணியம் - திருமதி மகேஸ் பரமநாதன்
தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக்குழு
ഇങ്ങേ - செல்வி சற்சொரூபவதி நாதன்
உபதலைவர்கள் - திருமதி பரமேஸ்வரி சச்சிதானந்தன்
- திருமதி பொன்மலர் கந்தசாமி - திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம்
பொதுச்செயலாளர் - திருமதி சிவகாமி அம்பலவாணர்

உதவிச்செயலாளர்கள்
பொருளாளர்
உதவிப்பொருளாளர்
நிர்வாகக்குழுவினர்
31
- திருமதி விமலா மணிவாசகன் - திருமதி திலகவதி வீரசிங்கம்
- திருமதி அபிராமி கயிலாசபிள்ளை
- செல்வி சிவமலர் சுப்பிரமணியம்
திருமதி ருக்மணி அரசரத்தினம் செல்வி ஞானலகூழ்மி பாலசிங்கம் திருமதி தனவதி கனகரட்ணம் திருமதி ஞானேஸ்வரி ஞானசேகரம் திருமதி நந்தினி மோகன் திருமதி கமலா கனகசபை திருமதி தனபாக்கியம் நித்தியானந்தன் திருமதி மல்லிகாதேவி சரவணபவான் திருமதி இராஜகுமாரி கதிர்காமநாதன் திருமதி கோமளாம்பாள் செல்வரத்தினம் திருமதி சத்தியலகூஜ்மி சிவலிங்கம் திருமதி அங்கயற்கண்ணி சிவப்பிரகாஷ் திருமதி இந்திராணி சோமசுந்தரம் திருமதி தயாநிதி செல்வநாயகம் திருமதி கெளரி தேவசேனாதிபதி திருமதி தற்பராதேவி தில்லைநாதன் திருமதி சிந்தாமணி வன்னியசேகரம் திருமதி திலகா விஜயரத்தினம் 0 திருமதி புவனேஸ்வரி யோகலிங்கம் திருமதி கமலருளேஸ்வரி சர்வானந்தா திருமதி வத்சலா நாகலிங்கம் செல்வி மஞ்சுளா ஜிவலிங்கம் திருமதி சிவபாக்கியம் இராஜகோபாலபிள்ளை செல்வி சர்மிளா சொர்ணலிங்கம் செல்வி சங்கீதா விபுலஸ்காந்தா
கணக்குப் பரிசோதகர் - கணேசலிங்கம் அன்ட் கொம்பனி, சார்ட்டட் celeb56,603:L6öteb, 16-B, Schofield Place, 65TQ pin 3
இந்த வருடத்தில் பின்வரும் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன
1. கல்லூரி நூல் நிலையத்திற்கு நூல்களை அனுப்பினோம்
2. முனிஸ்வரம் சென்று வந்தோம்.

Page 18
32
3. கல்லூரிப் பரிசளிப்பு விழாவிற்குச் சென்றோம்
4. யாழ் நாதம் இதழ் 8 டைப் பிரசுரித்தோம்.
5. வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வை நடத்தினோம்.
6. மேலிருந்து படம் காட்டும் கருவி ஒன்றை ஆரம்பப்
பாடசாலைக்கு அனுப்பினோம்.
சங்கத்தின் நடப்பு ஆண்டில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்கள்
திகதி இடம் 6 g6)
16.03.2002 சரஸ்வதி மண்டபம் 75 லொறன்ஸ் வீதி கொழும்பு 4 19
20.04.2002 சரஸ்வதி மண்டபம் 75 லொறன்ஸ் வீதி கொழும்பு 4; 23
11.05.2002 சரஸ்வதி மண்டபம் 75 லொறன்ஸ் வீதி கொழும்பு 4 21
08.06.2002 சரஸ்வதி மண்டபம் 75 லொறன்ஸ் வீதி கொழும்பு 4 12
13.07.2002 இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு 4 10
17.08.2002 சரஸ்வதி மண்டபம் 75 லொறன்ஸ் வீதி கொழும்பு 4 17
14.09.2002 சரஸ்வதி மண்டபம் 75 லொறன்ஸ் வீதி கொழும்பு 4| 10
12.10.2002 சரஸ்வதி மண்டபம் 75 லொறன்ஸ் வீதி கொழும்பு 4 08
14.12.2002 சரஸ்வதி மண்டபம் 75 லொறன்ஸ் வீதி கொழும்பு 4 07
கல்லூரி நூல் நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்த நூல்களின் விபரப்பட் டியல் இவ்வறிக்கையின் முடிவில், இணைப்பு 1 (பூபாலசிங்கம் புத் தகசாலையில் கொள்வனவு செய்த நூல்கள்) இலும், இணைப்பு 2 (ஜெயா புத்தகசாலையில் கொள்வனவு செய்த நூல்கள்) இலும், குறிப்
பிடப்பட்டுள்ளன. மொத்தமாக ரூபா 52,385/75 இற்கு நூல்களைக் கொள் வனவு செய்தோம்.
மேற்குறிப்பிட்ட நூல்களுக்கு மேலாக ஆங்கிலக் கல்விக்கென ரூபா 11,433/60 இற்கு செல்வி பங்கர் சிபாரிசு செய்த நூல்களைக் கொள்வனவு செய்து கல்லூரிக்கு அனுப்பினோம். இந்நூல்களின் விபரங் கள் இணைப்பு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேன்மை தங்கிய பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தபோது எங்கள் கல்லூரிக்கு நான்கு பென்ரியம் IV

33 கனணிகளை அன்பளிப்புச் செய்தார் என அதிபர் அறிவித்திருந்ததாகச் செயலாளர் திருமதி சிவகாமி அம்பலவாணர் 2002-04-20மே திகதி நடந்த செயற்குழுக் கூட்டத்தில் தெரிவித்தார். கல்லூரிக்குக் கணனிகள் வழங் கியமை குறித்து எங்கள் சங்கம் 2002-03-17ஆம் திகதி மேன்மை தங்கிய ரணில் விக்கிரமசிங்காவிற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பியிருந் ததாகவும் செயலாளர் தெரிவித்தார்.
அன்றைய கூட்டத்தில் வ கீ பி பா ப மா ச எங்கள் கல்லாரி 2001ஆம் ஆண்டுச் சிறந்த மாணவியாகிய காயத்திரி சிற்சபேசனுக்கு அனுப்பும் பொன்விருதைத் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை எல்வோருக்கும் காண் பித்தார்.
மேலும் திருமதி கோமளாம்பாள் செல்வரத்தினம் எங்கள் கல்லூரிக்குச் சென்றிருந்தபோது, பழைய மாணவிகள் சங்கக் கொழும்புக் கிளை செய் யும் சேவைகளை தான் பாராட்டுவதாகவும் அச்சேவைகளைக் கல்லூரி என்றும் மறவாது எனவும் அதிபர் தெரிவித்திருந்ததாக இக் கூட்டத்தில் தெரிவித்தார். அத்துடன் மிகவும் கஷ்டகாலமாகிய 1996 இல் அதாவது எல்லோரும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டு மீண்டும் கல்லூரிக்கு வந் தபோது கல்லூரித் தளபாடங்கள் உபகரணங்கள் அநேகம் களவுபோய் இருந்த இக்கட்டான சமயத்தில் எங்கள் சங்கம் கல்லூரியின் அத்தியாவசியத் தேவைகள் அறிந்து அவற்றை நிறைவேற்றுமுகமாக பொருட்களை அன்பளிப்புச் செய்தமை மிகவும் போற்றற்குரியது எனவும் அதிபர் தெரிவித்திருந்தார்.
எங்கள் சங்கம் கல்லூரிக்குச் செய்யும் உதவிகளை நன்றிகூர்ந்து 2002ஆம் ஆண்டுக் கல்லூரிப் பரிசளிப்பு விழாவிற்கு எங்கள் சங்கத் தலைவி செல்வி சற்சொரூபவதி நாதனைப் பிரதம அதிதியாகக் கல்லூரி அதிபர் அழைத்துக் கெளரவித்தார். சங்கச் செயலாளர் திருமதி சிவகாமி அம் பலவாணரை சிறப்பு விருந்தினராக அழைத்து கல்லூரிச் சஞ்சிகையை வெளியிடுமாறு கேட்டுக் கெளரவித்தார். ஏனைய சங்க உறுப்பினர்களையும் சிறப்பு விருந் தினர்களாக அழைத்து வருகை தந்து தங் குமரிட வசதிகள் இல்லாதவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்
BITII.
கல்லூரிப் பரிசளிப்பு விழாவிற்கு பின்வரும் உறுப்பினர்கள் சமூகமளித்திருந்
560III.
செல்வி சற்சொரூபவதி நாதன்
திருமதி சிவகாமி அம்பலவாணர்
திருமதி விமலா மணிவாசகன்
திருமதி திலகவதி விஜயரத்தினம்
திருமதி ஞானேஸ்வரி ஞானசேகரம் திருமதி கோமளாம்பாள் செல்வரத்தினம் திருமதி தனபாக்கியம் நித்தியானந்தன்

Page 19
34
கல்லூரி விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கு ரூபா 11,880 இற்கு பின்வரும் 9 Ua J&OIrisoGI, Sigma Chemicals (Pvt.) Ltd., (S) 665 Sqbibgh Hemsons International (Pte) Ltd. (H) 665 Scribgh 6&ndiraj6O16, 6afting பரிசளிப்பு விழாவிற்குச் செல்லும் போது எங்கள் சங்க அடையாளப் பரிசாகக் கொண்டுசென்றோம். அவை பின்வருமாறு:
Stop watch 4,800 (S)
1.
2. Hydrometer, Wet & Dry Bulb, Mason’s 3,600 (H) 3. Thermometer Six's Maximum & Minimum 1,620 (H) 4. Box of weights 1,440 (H) 5. Slides, Microscopic 240 (H) 6. Cover Glass 180 (H)
எங்கள் கல்லூரிப் பழைய ஆசிரியை திருமதி லீலா நாகரத்தினம் தன் கணவர் நினைவாக பண்ணிசையில் சிறந்த மாணவிகளுக்கு பரிசளிக் குமாறு ரூபா 50,000/- த்தைக் கல்லூரிப் பரிசு நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்தார்.
கல்லூரிக்கு உதவுமாறு கனடா பழைய மாணவிகள் சங்கம் ரூபா 364,800/- றை எங்கள் சங்கத்திற்கு அனுப்பி இருந்தது. SiSeÓ(Ibsbg) eIbLIII 135,000/- éS Toshiba Photocopier Model 1560 ஒன்று வாங்கிக் கல்லூரிக்கு கனடாக் கிளையின் அன்பளிப்பாக அனுப்
G36OIIIth.
திருமதி கமலருளேஸ்வரி சர்வானந்தா தனது மகளின் பரதநாட்டிய உடைகளை கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்தார்.
நாங்கள் பரிசளிப்பு விழாவிற்குச் சென்றிருந்த சமயம் அதிபர் எங்களுக்கு கல்லூரியைச் சுற்றிக் காண்பித்தார். அத்துடன் அதிபரின் வேண் டுகோளுக்கு இணங்க விஞ்ஞான ஆசிரியைகள் விஞ்ஞான ஆய்வுகூடங் களுக்கு எங்களைக் கூட்டிச் சென்று அங்குள்ள உபகரணங்களைக் காட் டினார்கள். நாங்கள் படித்த காலத்தில் இருந்ததை விட விஞ்ஞான ஆய்வு கூடங்கள் முன்னேற்றம் அடைந்திருந்தன. விஞ்ஞான வகுப்புகளுக்கும் சென்று அங்குள்ள மாணவிகளுடன் கலந்துரையாடினோம்.
உயிரியல் ஆசிரியைகள் Formatin இல்லாமல் விலங்குகளையும் உடற்பாகங் களையும் பாதுகாத்து வைத்து மாணவிகளுக்குக் காண்பித்து கற்பிப்பது கஷ்டமாக இருக்கின்றது எனத் தெரிவித்த படியால் 2 லீட்டர் Formalin Sigma Chemicals (Pvt) Ltd. 66 63rdieu6O1a 6.5 tig) attoog.gif ceig5uff கொழும்பு வந்து திரும்பும் போது கொடுத்து விட்டோம்.

35 மேன்மை தங்கிய பிரதம மந்திரியின் அன்பளிப்பான கணனிகள் இரண்டின் சீராக வேலைசெய்யாத பாகங்களை மாற்றுவதற்கான காகித வேலைகளை செய்து கொடுத்தோம். அத்துடன் கல்லூரிக் கணனி அறைக்கு குளிருட்டி நிறுவுவதற்கு அதிபர் g" IT f†Lါဓလံ தேவையானவர்களுடன் கதைத்து ஒழுங்கு செய்தோம்.
நாங்கள் சென்ற ஆண்டு அன்பளிப்புச் செய்த Fax Machine ஒழுங்காக வேலை செய்யவில்லை என அதிபர் அறிவித்து இருந்தார். ஆகவே செயலாளர் திருமதி சிவகாமி அம்பலவானர் பரிசளிப்பு விழாவிற்குச் சென்று வரும்போது அந்த Fax Machineனைக் கொழும்பிற்குக் கொண் Gb6) Jibgol Si6ODbės (6)SËSITổT6J6OI6, GDS tiub Ceylon Business Appliance Sašo பழுது பார்த்து கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர், திரு கமலநாதன், மூலம் கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.
சங்க உறுப்பினர் ஒருவர் வருடந்தோறும் எங்கள் கல்லூரியின் கல்வியில் திறமைமிக்க ஏழை மாணவி ஒருவருக்கு வட்டிப் பணத்தில் இருந்து உதவும்படி ரூபா 25,000/- த்தை எங்கள் சங்கத்தில் வைப்பீடு செய்தார். வட்டிப் பணத்தில் 75% த்தை ஏழை மாணவிக்கும் மிகுதி 25% த்தை வைப்புப் பணத்துடன் சேர்க்கும்படியும் அவர் கூறியுள்ளார்.
எங்கள் கல்லூரி மாணவிகளும் ஆசிரியைகளுமாக 100 பேர் ஒரு கல்விச் சுற்றுலாவில் கலந்து கொனடு கொழும்பில் ஜூன் மாதம் 3*ம் திகதி இரவு தொடக்கம் ஜூன் மாதம் 6*ம் திகதி இரவு மட்டும் தங் கியிருந்தனர். செயலாளர் திருமதி சிவகாமி அம்பலவாணர், அவர்கள் தங்குவதற்கு ஜூன் மாதம் 3* திகதி இரவு விவேகானந்தா கல்லூரியிலும் 4* 5% திகதி இரவுகளுக்குக் கதிர்காமத் தொண்டர் சபையிலும் ஒழுங் குகள் செய்து கொடுத்தார். சில அங்கத்தவர்கள் ஒன்றுசேர்ந்து அவர்களுக்கு 5* திகதி இரவுப் போசனமும் ஒழுங்கு செய்து கொடுத் தோம். உணவு ஒழுங்கு செய்த இடத்திலிருந்து 4ஆம் திகதி இரவும் zeeTTYTLC Te eqYsLLCeT esT Y LLL LLS SYqeTTTLLLLLLL STTS SY LL0LTG OTTMMsT செய்வதற்குப் பின்வருவோர் உதவினர்.
திருமதி அபிராமி கயிலாசபிள்ளை திருமதி சிவகாமி அம்பலவானர். செல்வி சற்சொரூபவதி நாதன் திருமதி திலகவதி விஜயரட்ணம் திருமதி திலகவதி வீரசிங்கம் திருமதி பரமேஸ்வரி சச்சிதானந்தன். திருமதி ருக்மணி அரசரட்னம் திருமதி கமலருளேஸ்வரி சர்வானந்தா திருமதி மஞ்சுளா ஜீவலிங்கம்

Page 20
36
திருமதி ஜெகதா ஜெயகிருஷ்ணா திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம்
அவர்களின் கொழும்பு விஜயத்தின்போது கல்லூரிக்குத் தேவையான கணனி உபகரணங்களை அதிபர் கொள்வனவு செய்வதற்குக் கலாநிதி வி. அம்பலவாணரும் திருமதி சிவகாமி அம்பலவாணரும் தேர்ந்தெடுத்துக் கொடுத்தனர்.
திருமதி சிவகாமி அம்பலவாணர் ருபா 10,000/- த்தை அதிபரிடம் கையளித்தார். இதில் இருந்து வரும் வட்டிப் பணத்தில் இருந்து ஒவ் வொரு வருடமும் க.பொ.த. சாதாரணம் வகுப்பில் சைவசமயத்தில் சிறந்த மாணவிக்கு தனது தாயாரின் தாயாகிய திருமதி காரைக்காலம்மை சங்கரப்பிள்ளை நினைவாக பரிசளிக்குமாறு அதிபரைக் கேட்டுக்கொண்டார்
சங்க உறுப்பினர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு நாள் முனீஸ்வரமும் திரெளபதி அம்மன் கோயிலும் சென்று வந்தோம். முனீஸ் வரப் பிரயாணம் ஜூன் மாதம் 29ஆம் திகதி அதில் கலந்துகொண்டவர்கள் எல்வோருக்கும் மிகவும் திருப்திகரமாக நிறைவேறியது. இப்பிரயாணத் திற்கு திருமதி ஞானேஸ்வரி ஞானசேகரம் பேருந்தையும், திரு - திருமதி அரசரட்ணம் மதியபோசனத்தையும், திரு - திருமதி ராஜகோபாலபிள்ளை புகைப்படங்களையும் ஒழுங்கு செய்து உதவினார்கள். இப்பிரயாணத்தைப் பற்றிய செல்வி சர்மிளா சொர்ணலிங்கத்தின் கட்டுரை யாழ் நாதம் இதழ் 8 இல் வெளிவந்துள்ளது. வியாழமாற்றத்திற்கு முதல் நாள் மேற்கொண்ட இப்பிரயாணத்தில் பழைய மாணவிகளுடன் அவர்களின் குடும்பத்தவர்களும் நண்பர்களும் கலந்து சிறப்பித்தனர்.
எங்கள் கல்லூரிப் பழைய ஆசிரியை திருமதி நளாயினி சிவலிங்கம் 2002.07.07 அன்று சிவபதமடைந்தார் என செல்வி ஓம் சக்தி இரத் தினசபாபதி 2002.07.13 அன்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில்
தெரிவித்தார். அதைத் தொடர்ந்து திருமதி நளாயினி சிவலிங்கத்தின் ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிட மெளனப் பிரார்த்தனை செய்தோம்.
யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை 1978ஆம் ஆண்டுடன் பாலர் வகுப் புத் தொடக்கம் 5ஆம் ஆண்டு வரையிலுமான வகுப்புகளைக் கொண்டு தனியாகப் பிரிந்து (கல்லூரியின் அருகே) இயங்கி வருகின்றது.
யாழ் இந்து மகளிர் கல்லூரிப் பரிசளிப்பு விழாவிற்குச் சென்றிருந்தபோது
யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலைக்கும் சென்று அப்பாடசாலை அதிபருடன் பாடசாலையைச் சுற்றிப் பார்த்தோம்.
திருமதி நந்தினி மோகன் சுப்பிரமணியம் ஆரம்பக் கல்லூரியில் கல்வி பயிலும் சிறுமிகள் தங்கள் கையாலேயே இயக்கக்கூடிய ஒரு பாவித்த

37 efeOGITUITL(b Slide Projector, sejabi IIIfágo Jefáõéõçou efeu Slides ஆகியவற்றை நன்கொடையாகத் தந்தார்.
திருமதி விமலா மணிவாசகன் பின்வரும் நூல்கள் கசற்றுகள் ஆகியவற் றை ஆரம்பப் பாடசாலைக்கு நன்கொடையாகக் கொடுத்தார்:
The Best of Disney London
2 My Little Pony London 3 Key Words with Ladybird Sunny Days Ladybird
4 Oliver Twist Charles Dickens
5 | Ummagga Jatakaya Sriya Ratnakara 6 English for Daily Use 1 Yoosuf Mustapha
7 Little Red Riding Hood (Book & Tape) Ladybird 8 Read it Yourself Level 2 (Book & Tape) Ladybird 9 Book +Tape First Steps Time Ladybird 10 Book + Tape Topsy + Tim Busy Builders Ladybird
G3LobenôLi"L- Slide Projector, Slides, prebec espéu JoubeOD 5obLogo விமலா மணிவாசகன் 2002-06-08ஆம் திகதி யாழ் சென்றபோது ஆரம்பப் பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
ஆரம்பப் பாடசாலை அதிபரினதும் ஆரம்பப் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினதும் வேண்டுகோளுக்கு இணங்க மேலிருந்து படம் காட்டும் acLai (Overhead Projector, Model: CINON HT/R 201, Rs. 15,066/-) 66. 6ODun g56OU {Projection Screen 70' x 70', Model: Cinon (Tripod), Rs.7,020/-} 66.60(Duth Ceylon Business Appliances Ltd., 112, Reid Avenue, Colombo 4 SQ6d Sobibg ibu JFT 22,086/- SbSð 2002-09-04-*o 3555 கொள்வனவு செய்து அனுப்பினோம். இவை கிடைத்ததாக யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை பழைய மாணவர் சங்கப் பொருளாளர். செல் வி தே. கிமாலினி 2002-12-15ஆம் திகதிக் கடிதத்தில் நன்றி தெரிவித்து அறிவித்திருந்தார்.
2002-11-16ஆம் திகதி உதயன் பத்திரிகையின் 2ஆம் பக்கத்தில் எங்கள் கல் லூரி மாணவி செல்வி ராதிகா முருகையா முதலாம் பரிசை ரி ரி என் அறிவுச் செல்வம் 2002 போட்டியில் வென்ற செய்தி வெளியிடப்பட்டிருந் தது. இந்த விளம்பரத்தை வெட்டி எடுத்து அதிபர் அனுப்பியிருந்தார்.

Page 21
38
ராதிகாவின் படத்தையும் போட்டி விபரங்களையும் இணையத்தளத்தில் போட்டோம். இவ்விபரங்கள் இச் சஞ்சிகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்நாதம் இதழ் 8, நூறு பிரதிகள் செய்ததாக திருமதி சிவகாமி அம் பலவாணர் தெரிவித்தார். இதற்கு Risograph இற்கு ரூபா 4,800/- உம் யூனி ஆட்ஸ் நிறுவனத்திற்கு ரூபா 7,000/- உம் செலவானது.
இந்த வருட ஒன்றுகூடல் நிகழ்வு 2002-11-02ஆம் திகதி சனிக்கிழமை கலை நிகழ்வுடனும் இராப் போசனவிருந்துடனும் சரஸ்வதி மண்டபம், 75, லொறன்ஸ் வீதி, கொழும்பு 4 இல் நடைபெற்றது. இந்த நிகழ்வில் யாழ்நாதம் இதழ் 8 டை வெளியிட்டோம்.
இந்த நிகழ்ச்சிகளில் பட்டயக் கணக்காளர் திரு த சச்சிதானந்தன் அவர்களும், அவரின் பாரியாரும் எமது கல்லூரியின் பழைய மாணவியுமாகிய திருமதி பரமேஸ்வரி சச்சிதானந்தன் அவர்களும், பிரதம அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தார்கள். ஒன்று கூடல் நிகழ்வு திருமதி சத்தியலஷ்மி சிவலிங்கத்தின் தேவாரத்துடன் ஆரம்பமாகியது. தலைவி செல்வி சற் சொரூபவதி நாதன் எல்லோரையும் வரவேற்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து பிரதம அதிதி உரையாற்றினார். பின் செல்வி அர்ச் சனா சிவானந்தராஜாவின் நடனமும் செல்வி ஆரணி மருதயினாரின் மெல்லிசைப் பாட்டும் இடம்பெற்றன. தொடர்ந்து திருமதி திலகா விஜயரத்தினத்தின் தயாரிப்பான புதுப்புது அர்த்தங்கள் நகைச்சுவை நாடகம் இடம்பெற் றது. இந்நாடகத்தைச் செல்வி சற்சொரூபவதி நாதன் நெறியாள்கை செய்தார். செல்வி ஞானலஷ்மி பாலசிங்கம் பிரதான பாத்திரத்தில் நடித் தார். அவருடன் இணைந்து செல்வி யாழினி தனபாலசிங்கம், செல்வி ஒம் சக்தி இரத்தினசபாபதி, திருமதி விமலா மணிவாசகன், திருமதி சத்தியல ஷ்மி சிவலிங்கம், திருமதி தனலஷ்மி திருநாவுக்கரசு ஆகியோரும் நடித் தனர். இந்த நாடகம் இவ்விதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
யாழ்நாதம் இதழ் 8 இன் முதல் பிரதியை நூல் ஆசிரியை திருமதி சிவகாமி அம்பலவானர் பிரதம அதிதியான திரு த. சச்சிதானந்தன் அவர்களுக்குக் கையளித்தார். அடுத்து வருகை தந்திருந்த விருந் தாளிகளும் நூலின் பிரதிகளை நூல் ஆசிரியையிடமிருந்து பெற்றுக் கொண் டனர். அதைத் தொடர்ந்து உதவிச் செயலாளர்களில் ஒருவரான திருமதி திலகவதி வீரசிங்கம் நூலின் பிரதிகளை எல்லோருக்கும் விநியோகித்தார். அன்றைய நிகழ்வின்போது ரூபா 5,680/- எமக்கு அன்பளிப்பாகக் கிடைத்
l.
செயலாளரின் நன்றியுரையுடனும் இராப் போசன விருந்துடனும் ஒன்றுகூடல் நிகழ்வு இனிது நிறைவேறியது. இராப்போசனத்தைப் பொருளாளர் திருமதி கயிலாசபிள்ளை ஒழுங்கு செய்து உதவினார்.

39
திருமதி திலகவதி வீரசிங்கம் தனது மகள் பாவித்த கனணியைப் பரிசீலித்து ஆரம்பப் பாடசாலைக்கு அனுப்புமாறு திருமதி சிவகாமி அம் பலவாணரையும் திருமதி விமலா மணிவாசகனையும் கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி சிவகாமி அம்பலவாணர் கணனிக்கு ரூபா 6,500/- இற்கு புது வர்ணம் தீட்டி தேவையான பாகங் at6OGI (AMD 133 MHz Mother board & Processor, 2.1 GB H.D.D., Ram Upgrade) பொருத்தி ஆரம்பப் பாடசாலைக்கு அனுப்பினார்.
கல்லூரி அதிபர் Asia Foundation கல்லூரிகளுக்கு நூல்கள் அன்பளிப்புச் செய்வதாகவும் அந்நூல்களைப் பெற்றுக் கல்லூரிக்கு அனுப்புமாறும் கேட்டிருந்தார். திருமதி சிவகாமி அம்பலவாணரும் திருமதி விமலா Ln600fairiefatigoth The Asia Foundation, 3/1 A, Rajakeeya Mawatha, Colombo 7 இற்கு 2002-12-03லிம் திகதி சென்று 347 நூல்களைப் பெற்றுக் கொண்டனர். Asia Foundation இற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதம் 2002-12-09ஆம் திகதி அனுப்பினோம்.
கலாநிதி வி. அம்பலவாணர் 2002-12-26ஆம் திகதி யாழ் சென்றபோது Asia Foundation அன்பளிப்புச் செய்த நூல்களையும் எங்கள் சங்கம் ஆரம் பப் பாடசரலைக்கு அன்பளிப்புச் செய்த கணனியையும் கொண்டு சென்று அதிபரிடம் கையளித்தார். இவற்றைக் கொண்டுசெல்வதற்கான செலவை திருமதி அபிராமி கயிலாசபிள்ளையும் திருமதி சிவகாமி அம்பலவாணரும் ஏற்றுக்கொண்டனர்.
எங்கள் சங்கம் வடகீழ் பிராந்திய பாடசாலைகளின் பழைய மானவர் சம் மேளனத்தில் (வ.கீ.பி.பா.ப.மா.சம்) ஒரு அங்கத்துவ பாடசாலையாக இ ருக்கின்றது. எங்கள் சங்கத்தை இந்த ஆண்டு (2002) பின்வருவோர் பிரதிநிதித்துவப் படுத்தினர்.
செல்வி சற்சொரூபவதி நாதன் திருமதி சிவகாமி அம்பலவாணர் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை திருமதி பரமேஸ்வரி பாலசிங்கம் திருமதி பொன்மலர் கந்தசாமி
அத்துடன் செல்வி சற் சொரூபவதி நாதன் சம்மேளனத்தின் உபதலைவர்களுள் ஒருவராகவும் திருமதி அபிராமி கயிலாசபிள்ளை சம் மேளனத்தின் பொருளாளராகவும் கடமையாற்றினார்கள்.
வ.கீ.பி.பா.ப.மா.சம். அங்கத்துவப் பாடசாலைகளின் சிறந்த மாணவன்/ மாணவிக்கு வழங்கும் பொன்விருதுக்கு எங்கள் கல்லூரியின் 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த மாணவியாக செல்வி ஜெயப்பிரபா ஜெகதீஸ்வரன்

Page 22
40 தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதை அறிவித்தோம்.
எங்கள் சங்கக் கூட்டங்களையும் ஏனைய நிகழ்வுகளையும் நடத் துவதறகு இலவசமாக சரஸ்வதி மணடபததைத தநதுதவும இந்து வித் தியா விருத்திச் சபைக்கு நாம் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் சங்கக் கணக்குகளை இலவசமாக பரிசோதனை (Audit) செய்து தந்த திரு சச்சிதானந்தனுக்கும் இதை ஒழுங்கு செய்த திருமதி பரமேஸ் வரி சச்சிதானந்தனுக்கும் மீண்டும் ஒருமுறை எமது நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறோம்.
சங்க அலுவல்களில் எனக்கு உறுதுணையாக இருந்த எங்கள் சங்கத் தலைவி செல்வி சற்சொரூபவதி நாதனுக்கும் பொருளாளர் திருமதி அபிராமி கயிலாசபிள்ளைக்கும் நிர்வாகக் குழு அங்கத்தவர்களுக்கும் நான் நன்றிகூறக் கடமைப் பட்டுள்ளேன்.
எங்கள் சங்கம் அமைத்த இணையத்தளம் மூலம் நாம் வெளிநாடுகளிலுள்ள பழைய மாணவிகளுடனும், பழைய மாணவிகள் சங்கங்களுடனும் தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதனால் உலகளாவிய ரீதியில் எல்லோரும் ஒன்றுசேர்ந்து கல்லூரிக்குப் பாரிய உதவிகளும் வழங் கக்கூடியதாக உள்ளது. b
இவ்வருடம் சில புதிய இளம் அங்கத்தவர்கள் எமது சங்கத்தில் சேர்ந் துள்ளமை எமக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகின்றது. இவர்களின் ஊக் கமும், திறமையும் பழைய அங்கத்தவர்களின் செயற்திறனுடன் இணைந்து எங்கள் சங்கத்தின் வளர்ச்சிக்கும் கல்லூரியின் வளர்ச்சிக்கும் மிகவும் உதவியாக அமைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
திருமதி சிவகாமி அம்பலவாணர் கெளரவ செயலாளர்
08.02.2003
மரண அறிவித்தல்
எங்கள் கல்லூரி பழைய ஆசிரியை திருமதி ஞானேஸ்வரி சொக் கலிங்கத்தின் அன்புக் கணவர் சட்டத்தரணி திரு அப்பாப்பிள்ளை சொக்கலிங்கம் அவர்கள் 2003ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை இலண்டனில் காலமானார் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவிக்கின்றோம்.

41
「ー
இணைப்பு 1 - கல்லூரி நூல்நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்த நூல்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருந்து கொள்வனவு செய்த நூல்கள்
க.பொ.த. (சாதாரணம்) வினாத்தாள் சைவசமயம்
அன்ரன் பதிப்பகம்
சைவ வினா விடை ஆறுமுகநாவலரவர்கள் ఐufa புராணம் வசனம் ஆறுமுகநாவலரவர்கள் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 1) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 2) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 3) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 4) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 5) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 6) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 7) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 8) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 9) புலவர் அ. மாணிக்கம் கந்தபுராணம் (மூலமும் உரையும்) (பகுதி - 10) புலவர் அ. மாணிக்கம்
Karnatic Music Book I
Prof. P. Sambamurthy
Karnatic Music Book II
Prof. P. Sambamurthy
Karnatic Music Book III
Prof. P. Sambamurthy
தென்னக இசையியல்
பி. டி செல்லத்துரை
பரத கலை (கோட்பாடு)
பத்மா சுப்பிரமணியம்
தென்னாசிய சாஸ்திரீய நடனங்கள்
பேராசிரியர் வி. சிவசாமி
புதுமைப்பித்தன் கதைகள்
ஆ. இரா. வேங்கடாசலபதி
வீடற்றவன்
ஸி. வி. வேலுப்பிள்ளை
மகாத்மா காந்தியின் சுயசரிதை சத்தியசோதனை
ரா. வெங்கடராஜூலு
இரட்சணிய வரலாறு
எஸ். ஏ. ஐ. மத்தியு
இராமாயணம் (சக்கரவர்த்தித் திருமகன்)
ராஜாஜி
மகாபாரதம் (வியாசர் விருந்து)
ராஜாஜி
இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
துரை மனோகரன்
செய்யுள் தொகுப்பு க.பொ.த. (உ.த.)
எஸ். எஸ். ஆனந்தன்

Page 23
42
இணைப்பு 1 - கல்லூரி நூல்நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்த நூல்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருந்து கொள்வனவு செய்த நூல்கள்
A/L தமிழ் பரீட்சை வழிகாட்டி
எஸ் எஸ் ஆனந்தன்
விவசாயம் பகுதி 1
செ அருள்மொழி
விவசாயம் செய்முறை வழிகாட்டி
செ அருள்மொழி
இந்திய தத்துவ ஞானம்
கி லஷ்மணன்
சைவத் திருக் கோவிற் கிரியை நெறி
கா கைலாசநாதக் குருக்கள்
Business Accounting I 8th Edition
F. Wood & A. Sangster
Business Accounting II 8th Edition
F. Wood & A. Sangster
Financial Accounting Solutions Manual 2nd Ed.
A R Jennings
பொருளியல் நூல் 1
V. பரமேஸ்வரன்
பொருளியல் நூல்
V. பரமேஸ்வரன்
2
பொருளியல் நூல் 3 V. பரமேஸ்வரன் பொருளியல் நூல் 4 V. பரமேஸ்வரன் ---
பொருளியல் நூல் 5 V. பரமேஸ்வரன்
பொருளியல் நூல் 6 V. பரமேஸ்வரன்
பொருளியல் பயிற்சி நூல் 1 V. பரமேஸ்வரன்
பொருளியல் பயிற்சி நூல் 2 V. பரமேஸ்வரன்
பொருளியல் படிப்பு வழிகாட்டி 11 A. சண்முகலிங்கம்
நவ பொருளியலாளன் மலர் 4
நவ பொருளியலாளன் மலர் 4
Macmillan Dictionary of Modern Economics
David W. Pearce
Organic Chemistry Volume 2
I L Finar
கைத்தொழில் இரசாயனவியல்
க. முருகானந்தன்
பொது இரசாயனம்
எஸ். தில்லைநாதன்
அடிப்படை இரசாயனம்
எஸ். தில்லைநாதன்
பெளதிக இரசாயனம்
எஸ். தில்லைநாதன்
GCE (A/L) 60.556). Erga Syafii U6OIn
எஸ். தில்லைநாதன்
தமிழ் மூலம் Word 2000
S. A. Ganeswaran

43
இணைப்பு 1 - கல்லூரி நூல்நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்த நூல்கள்
பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருந்து கொள்வனவு செய்த நூல்கள்
g5L6 epath MS Excel XP
S. A. Ganeswaran
Special Edition Using Microsoft Access 2000
Roger Jennings
An introduction to Computer Studies
Noel Kalicharan
Internet: The Complete Reference, Millennium Ed.
Margaret Levine Young.
Java 2 from Scratch
Steven Haines
Visual Basic
காம்கேர் கே.புவனேஸ்வரி
வளரும் தொழில் நுட்பம்
ଶtଗtb ଓSuprtଅFrfuë]
Minute Guide to Visual Basic 6
Lowel Mawer
Learn C++ in 3 weeks
S. K. Kunaseelan
ஏன்? எதற்கு? எப்படி?
சுஜாதா
வாவ் 2000
(ဗိ6, Jဓါōဓō
A Communicative Grammer of English 2nd Edition
G. Leech & J. Svartvik
Qxford Advanced Learner's Dictionary
English Pronouncing Dictionary
Daniel Jones
Intermediate Comprehension Passages
Donn Byrne
வெப்பப் பெளதீகவியல்
வர்ணம்
இலகு மாணவர் பொதிகம் அலகு 5 புலங்கள்
அ. கருணாகரன்
இலகு மாணவர் பொதிகம் அலகு 6 ஓட்டமின்னியல்
அ. கருணாகரன
சடப்பொருளும் கதிர்ப்பும்
அ. கருனாகரன
சடப்பொருளின் இயல்புகள்
அ. கருனாகரன
இலகு இலத்திரனியல்
அ. கருனாகரன
Advanced Level Physics 7th Edition
Nelkon & Parker
Advanced Physics Fifth Edition
Tom Dunkon
A/L பொருளியல் பரீட்சை வழிகாட்டி 2001
யு. சண்முகலிங்கம்
Biological Science 3rd Edition
D. J. Taylor, Green, Stout
--
For GCE A/L. 2... LoifiLGo gåui' (b
Kuggatharan...
Bio Diversity G.C.E. A/L
R. Narendran

Page 24
44
இணைப்பு 1 - கல்லூரி நூல்நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்த நூல்கள் பூபாலசிங்கம் புத்தகசாலையில் இருந்து கொள்வனவு செய்த நூல்கள் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி ஒன்று தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி இரண்டு தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி மூன்று தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி நான்கு தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி ஐந்து தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி ஆறு தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி ஏழு தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி எட்டு தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி ஒன்பது தமிழ் வளர்ச்சி கழகம் குழந்தைகள் தலைக் கழஞ்சியம் தொகுதி பத்து தமிழ் வளர்ச்சி கழகம்
மனிதனும் சூழலும் பிரயோக உயிரியல் பகுதி 4 (B)
மை. பி. செல்லவேல்
Philips Modern School Atlas
பள்ளி மாணவர்களுக்கான நிலவரை இலங்கை
க. சச்சிதானந்தன்
மேலதிகமாக திருமதி சிவகாமி அம்பலவாணர் அனுப்பிய புத்தகங்கள்
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பல்லாண்டு
இரா. மயில்வாகனம்
சைவக்கிரியை விளக்கம்
சு. சிவபாதசுந்தரனார்
Australian National Chemistry Quiz Year 2001
R. A. Chen. I
யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை அதன் 25வது ஆண்டு நிறைவை 2004ஆம் ஆண்டு கொண்டாடவுள்ளது.
அத்துடன் திறமைமிக்க மாணவர்களுக்கு பரிசிலி வழங்குவதற்காக பரிசில் நிதியம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது.
25வது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்திற்கும் பரிசிலி வழங் குவதற்கும் பழைய மாணவர்களிடம் இருந்தும் நலன் வரும் பிகளிடம் இருந்தும் பணஉதவியை எதிர்பார்க்கின்றது.

45
இணைப்பு 2 - கல்லூரி நூல்நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்த நூல்கள்
ஜெயா புத்தகசாலையில் இருந்து கொள்வனவு செய்த நூல்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
உமா பதிப்பகம்
i
திருப்புகழ் விரிவுரை
கிருபானந்த வாரியார்
பாலர்களுக்கான புராணச் சிறுகதைகள்
c9. ởIT. gỗQbỡnưỉ
அபினயதர்ப்பணம் உ. வே. சாமிநாதையர் அகல்விளக்கு - டாக்டர் மு வரதராஜன் செந்தாமரை டாக்டர் மு வரதராஜன் நாட்டுப்பற்று --- டாக்டர் மு வரதராஜன்
குறுந்தொகை விருந்து
டாக்டர் மு வரதராஜன்
இலக்கிய மரபு
டாக்டர் மு வரதராஜன்
புகழேந்திப் புலவரின் நளவெண்பா
புலியூர்க் கேசிகன்
தமிழ் பரீட்சை வழிகாட்டி (2-2)
எஸ். எஸ். ஆனந்தன்
5 Papers A'Level abus 1,2
Astan Publications
Applied Mathematics 1
L. Bostock & S. Chandler
Applied Mathematics 2
L. Bostock & S. Chandler
Pure Mathematics 1
L. Bostock & S. Chandler
Pure MathematicS 2
L. Bostock & S. Chandler
Mathematics Mechanics and Probability
L. Bostock & S. Chandler
Business Accounting
F. Woods & A. Sangster
Business Accounting 2
F. Woods & A. Sangster
அறிவியல் தகவல் களஞ்சியம்
ஓரியன்ட் லாங்மன்
சூழவியல்
கலாநிதி கு. குனராசா
A University Grammar of English
R. Quirk & S. Greenbaum
Advanced English Grammar
Martin Hewings
Essential English Grammar
Raymond Murphy
உயிர்ப் பல்வகைமை ஓர் அறிமுகம்
மனோ சபாரத்தினம்
பாரதிதாசன் கவிதைகள்
பாவேந்தர் பாரதிதாசன்
SLSSSSS S SSL0LLLL SSLSSASSS
புவிவெளியுருவவியல்
சிதத்திற். குனராசா

Page 25
46
இணைப்பு 3 - கல்லூரி நூல்நிலையத்திற்கு அன்பளிப்புச் செய்த நூல்கள்
ஆங்கிலக் கல்விக்கென அனுப்பிய நூல்கள்
New Headway Eng. Course - Elementary Student’s Book Liz & John Soars
New Headway Eng. Course - Elementary Work Book Liz & John Soars
New Headway Eng. Course - Pre-Intermedi. Student’s Book || Liz & John Soars
New Headway Eng. Course - Pre-Intermediate Work Book || Liz & John Soars
New Headway Eng. Course - Intermediate Student's Book Liz & John Soars
New Headway Eng. Course - Intermediate Work Book Liz & John Soars
New Headway Eng. Course - Upper-Interm. Student’s Book || Liz & John Soars
New Headway Eng. Course - Upper-Intermedia. Work Book || Liz & John Soars
Cassette for Elementary
Cassette for Pre-Intermediate
Cassette for Intermediate
Cassette for Upper-Intermediate
அமரர் திரு. மயில்வாகனம் நாகரத்தினம் J.P.U.M.
இவர் எமது கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் ஆசிரியையும், எமது சங்கத்தின் போஷகருமான திருமதி லீலா நாகரத்தினத்தின் கணவராவார்.
கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அமரர் திரு. மயில்வாகனம் நாகரத்தினம் அவர்கள் மலர்வு- 01-01-1920 உதிர்வு- 22-01-2002
இவர் சிறந்த ஒரு சட்டத்தரணியாவார். அத்துடன் பண்ணிசை மன்றம், திவ் விய ஜீவன சங்கம் முதலியவற்றில் தலைவராகவும், விவேகானந்தசபைக் குழுத் தலைவராகவும் இருந்து அயராது உழைத்து சிவயோக சுவாமிகளின் குரு பூஜைகளில் மாதாந்தம் பங்கு பற்றி “எப்பவோ முடிந்த காரியம் ஒரு பொல்லாப் பும் இல்லை’ என்று சுவாமி கூறுவார் என்று சொல்லி மனநிறைவு அடைவார்.
சஞ்சிகைகளுக்குச் சமயக் கட்டுரைகள் பிரசுரிக்க கொடுத்து தஞ்சாவூரில் 1997ம் ஆண்டில்நடைபெற்ற 7ம் உலக சைவ மாகாநாட்டில் முதல் மூன்று திருமுறைகள் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வாசித்து மனநிறைவு கண்டார். ஆன்மீகத்துறையில் அவருக்கு இருந்த ஈடுபாட்டை இதன்முலம் அறியமுடிகிறது. அவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்
றோம்.
ZMykkuS TrTEZLLLiiLLiLLLiLLL MTTZZiTSiLSSMSMiiMiYYTAALSLSSSMLiiiLLLLLiiLLLiiiM iSLSSLSLSSLSMiMMZLLLLeLkkSSYSSS SS S
 

SS T L SL SLS S L SLS SS L LSLc SSL SL SL SLS S S SS c LMLMT TLS i SS S L S
O କାଁଭାଁ
. . . . . . . . . . . . . . . . . . .
:
உங்களுக்கு சில வார்த்தைகள், இல்லாத ஒர் ஊருக்கு யாரும் சொல் லாத வழியில் தூக்கக் கலக்கத்தில் நீங்கள் இந்த நூற்றாண்டின் முடிவில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். நாளையின் நம்பிக்கைச் சுடர் என்று என்னால் துணிந்து உங்களைப் பாராட்ட முடியாமல் இருக்கிறது. ஏனென் றால் நீங்கள் தட்டுத்தடுமாறித் தத்தளிப்பதை அல்லவா நான் பார்க் கிறேன். உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையே உறவு சுமூகமில்லை. உங்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே உறவு சரியாயில்லை. ஏன் உங். களுக்கும் சமூகத்திற்கும் இடையே ஒட்டிய உறவு இல்லை.
கல்வி உங்களுக்குக் கசப்பாக இருக்கிறது. எங்கே போகிறோம் என்று தெரியாமல் அலைகள் மீது எழும் குமிழிகள் போல் குறிக்கோள் இல் லாமல் போய்க் கொண்டிருக்கிறீர்கள். இவ்வாறு நீங்கள் தட்டுத் தடுமாறுவதற்கு யார் பொறுப்பு என்று உங்களைக்கேட்டால் இந்தக் கேடுகெட்ட சமூகம் தான் என்று பட்டென்று பதில் சொல்கிறீர்கள். ஆனால் நான் சொல்கிறேன் நீங்கள் சமூகத்திலிருந்து பிரிந்து விலகிச் செல்கிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு கேடு விளைகிறது என்று.
கல்வி மூலம் சமூகமயமாக்கல் பற்றி அருமையான ஆய்வுரை நிகழ்த்தப் பட்டது. உண்மையில் தற்போதுள்ள கல்விமுறை தன்னம்பிக்கை ஊட்டாத கல்விமுறைதான். உங்களை வெறும் மரங்களாகவும், யந்திரங்களாகவும் மாற்றும் கல்விமுறைதான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அந்தக் கல் விமுறையை மனித வாழ்க்கைக்கு தயாராக உங்களை பார்த்து அனுப்பும் முறையாக மாற்றி அமைப்பதற்காக நீங்கள் கல்வி கற்று அறிவில் உயரத் தான் வேண்டும். பரீட்சை ஒரு குதிரை. அதனை அடக்கி உங்களுக்குப் பொதி சுமக்கும் கழுதையாக மாற்ற முற்படுங்கள். பரீட்சையை நீங்கள் ஜெயிப்பதற்காக கல்வி கற்க வேண்டும்.
கலை மூலம் சமூகமயமாக்கல் பற்றியும் பேசப்பட்டது. பொழுது போக் குவதற்குக் கலை என்று எண்ணும் காலமிது. நீங்கள் வெறுமனே போக் குவதற்காக பொழுது அல்ல; ஆக்குவதற்கே பொழுது, போக்குவதற்கு <@ခေါလံဓလ.
பொழுது போக்கு என்பதற்குப் பதிலாக பொழுது ஆக்கு என்று மாற் றுவதும் உங்கள் கையில் தான் இருக்கிறது. கலையின் நோக்

Page 26
48 கம் இன்று இருப்பது போன்று காசு அல்ல. கலை கலாசாரம் என்பதெல் லாம் எமது ரசனைதான். இன்று புலன்களின் பசிக்கு இரை போடுவதுதான் உங்கள் ரசனையாக இருக்கிறது. அரை நிர்வாணப் படங்களும், குடலைப் புரட்டும் இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்களும் பாடல்களும், கண் களை கவர்ந்து பின் உறுத்தும் படங்களும், பாலுணர்ச்சியை மட்டுமே போதிக்கும் நூல்களும், கலை என்ற போர்வையில் இளைஞர்களாகிய உங் களின் திறமைகளைப் பிழிந்து சக்கையாக உங்களை மாற்றிக் கொண் டிருக்கின்றன. இந்த விரச விபத்தில் சிக்காமல் உங்களைக் காப்பற்றிக் கொள்ளுங்கள்.
பெற்றோர்க்கும் உங்களுக்கும் இடையில் ஏன் பிளவு என்று கேட்டால் Generation Gap தலைமுறை இடைவெளி என்ற பெரிய வார்த்தையைப் போட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறீர்கள். இந்த இடைவெளி நிரப்பப் படாமல் இருப்பதற்கு பெற்றோருக்கு 50 சதவீத பங்கு; ஒப்புக்கொள் கிறேன். பிள்ளைகளுக்குப் பறக்கக் கற்றுத் தருவதாகச் சொல்லி அவர்களின் இறக்கைகளையே இன்றைய பெற்றோர் வெட்டி விடுகிறார்கள். பாதங்களுக்கு வலிமை தருவது பெற்றோர் கடமை ஆகும். அந்த வலிமையான பாதங்களுடன் நேரான வழியில் நடக்கும் பொறுப்பு இளைய தலைமுறையினரது அல்லவா?
இளமை அருவி போன்றது - அருவியிலிருந்தே மின்சாரம் பிறக்கும். உங் களது சக்தியில் வீரம் உண்டு. சிறுமை கண்டு பொங்க வேண்டும். சமூகத் திலுள்ள சிறுமைகளைக் கண்டு நீங்கள் பொங்கலாம். தற்பாதுகாப்புக்காக மட்டுமல்ல; சமூகம் என்ற முழு அமைப்பின் பாதுகாப்புக்காகவும், சமூகம் என்னும் விருட்சத்தில் ஒரு பகுதிதான் நீங்கள். வேர் பழுதானால் தளிர் செளக்கியமாக இருக்க முடியாது. மற்றவர்களுக்கு நேரும் பாதிப்பில் உங் களுக்கும் பங்கு உண்டு. தேசத்தில் பத்தும் தீ தனது சட்டையில் பத்தும் வரை எவனும் சப்தமிடுவதில்லை என்ற கவிதை வரிகளை எண்ணிப் பாருங்கள.
இளைய தலைமுறையினரே, உங்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள், ஆம் இவற் றுக்கு பல எதிர்ப்புகள். இந்த எதிர்ப்புகளை உங்கள் வேள்வியை அணைக் கும் மழையாக அல்லது நெய்யாக கருதுங்கள். இன்றைய சமூகத்தில் உழைப்புக்கு மதிப்பில்லை; ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உழைத்துச் சம்பாதிப்பவனுக்கு இன்னமும் மதிப்பு உண்டு.
சமூகத்தில் உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு மனிதரையும் ஒரு புத் தகமாக எண்ணி வாசியுங்கள். சிம்பதி, எம்பதி, அனுதாபம் வேண்டாம். மற் றவனின் கஷ்டத்தை உணரும் எம்பதி வேண்டும். அயலானை எம்மைப் போல் நேசி என்ற யேசுநாதரின் வாக்கு - அயலான் என்பதற்கு சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள். பக்கத்து வீட்டில் வசிப்பவன் என்ற குறுகிய அர்த்தம் இதற்கு இல்லை. நற்பண்புகளால் உங்களை நெருங் கிவிட்டவன்தான் உங்கள் அயலான் - அவனை நேசிக்கப் பழகிக் கொள்

49 ளுங்கள் முதலில்.
சமூகம் கெட்டுவிட்டது, அதனுடன் சேர்ந்து வாழ முடியாது, இப்படி நீங் கள் அங்கலாய்ப்பது காதில் கேட்கிறது. சுமூகம் கெட்டுவிட்டதா அல் оф நல்லதாகத்தான் இருக்கின்றதா? இராமகிருஷ்ணபரமஹம்சரிடம் ஒரு பக்தன் இதேமாதிரி இந்த உலகம் கெட்டுவிட்டதா அல்லது நல் லதாக இருக்கிறதா? என்று கேட்டபொழுது அவர் சொன்ன கதை சமூ கம். கெட்டுவிட்டதா? நல்லதாக இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பொருத்தமானது.
பூனைக்கும் பல் இருக்கிறது. அது நல்லதா கெட்டதா என்று பரமஹம்சர் அவனைப் பார்த்து பதில் கேள்வி ஒன்று கேட்டார். பதிலும் சொன்னார். எவரிடம் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறதோ அதனைப் பொறுத்தது பதில் என்று. புரியவில்லை?. உங்களுக்கு விளக்கமாகச் சொல்கிறேன். பூனைக்குட்டிகளிடம் போய் உன் அம்மாப் பூனைக்கு பல் இருப்பது நல் லதா கெட்டதா என்று கேட்டால் என்ன பதில் வரும். என்னைக் கவ்வித் தூக்கிப் பத்திரமாக வைக்க என் அம்மாவின் பல்தான் உதவுகிறது. அது நல்லது என்று பதில் வரும்.
இதே கேள்வியை ஒரு எலியிடம் கேட்டால் பல்லா அது எமன் என் றுதானே பதில் வரும். இது போன்றதுதான் நீங்கள் சமூகத்தைப் பார்த்து கெட்டதா நல்லதா என்று கேள்வி கேட்பதும். நல்லது என்று சொல் பவர்களும் இருக்கிறார்கள. கெட்டது என்று சொல்பவர்களும் இருக் கிறார்கள். நல்லதை மாத்திரம் பார்த்தால் சமூகம் உங்களுக்கு நல் லதாகத்தான் இருக்கும். நீங்களோ கெட்டதை மாத்திரம் பார்த்து சமூ கம் கெட்டுவிட்டது என்கிறீர்கள்.
சமூகத்தில் பல பொத்தல்கள் ஏற்பட்டுள்ளன. பல சீர்கேடுகள் கானப் படுகின்றன. ஆனால் அவற்றை மாற்றியமைத்து காலந்தோறும் கருத்துக் களைப் புதுப்பிக்க நீங்கள் முன்வர வேண்டும். காட்டு வழியில் முற்காலத் தில் ஒரு ஒற்றையடிப் பாதை உருவாகி இருக்கும் அது காலம் காலம் காலமாக அப்படியே இருக்க வேண்டும் என்பதல்ல. காலப்போக்கில் விரிவான நல்ல வீதியை அவ்விடத்தில் அமைக்கலாம். ஒரு செடியில் தோன்றும் மலர்கள் இலைகள் சில நாட் கழிந்ததும் வாடி உதிர்கின்றன. அழுகிப்போகின்றன. அழுகிப்போனவற்றை அகற்றவேண்டும். மண்ணுக்குள் மூடி மக்கிப்போகச் செய்து உரமாக்க வேண்டும். செடியில் புதிய தளிர்கள் தோன்ற வேண்டும். அதுவே செடியின் வளர்ச்சிக்கு அடையாளம். அதைச் செய்யாமல் செடியையே கமூகத்தையே வெறுத்து ஒதுக்க முடியுமா?
செல்வி சற்சொரூபவதி நாதன்

Page 27
O AyAALAkAAAuAkuSALASAAASAAASAAAykAAkAkAeekukeAA Au A ASASAAAA A
تشبه تلاقيات التحليلانديه تهت
s
ஸ்ற்ம்
வருக மாத ரசிகளே மகிழ்வோடு வருகவே மலர்தூவி வரவேற்றோம் மகிழ்வுடனே வருகவே பெருமைபெற எமக்குதவும் பெரியோரே வருகவே போற்றுகிறோம் உம்பணியை புகழ் பூத்துவாழ்கவே
அருங்குணமும் ஆற்றலும் சேர் அரிவயரே வருக அரிய தொண்டு ஆற்றுகிறீர் அன்போடு வருக பழைய எங்கள் மாணவர் தம் சங்கமதைநாளும் தலைசிறந்த வகையினிலே நீர்வளர்க்க கண்டோம்.
கலையுணர்வும் கல்வியுமே கண்ணாகக் கொண்டு கற்ற பெருவிஞ்ஞான பட்டதாரியாய் விளங்கும் ஒலிபரப்பு கலைதனிலே உலகத்தை வென்ற உத்தமியே சற்சொரூபி உவந்தோம் நீர் வருகவே.
அம்பலவாணருக்கு அருகிருக்கும் அம்மை அரியதிரு சிவகாமி என்னும் அந்த நங்கை செம்மைசேர் விஞ்ஞானம் சிறப்புறவே கற்று சிறப்பான பெரும் பதவி தாங்கும் இந்த அம்மை
எம்நூலை ஏற்று வெளியிடவே வந்தார் எமக்கினிய அறிவுரைகள் இயம்பிடவே வந்தார் நம்தமிழர் பண்பதனை நாம் மறக்க மாட்டோம் நாயகியே நாவினிக்க நல்லுரையை நல்கும்
அன்னை எங்கள் கல்லூரி அதிபதியே வருக ஆதரித்து எமை அனைக்கும் உயர் அதிகாரிகளே வருக இன்பமுற கல்வி நல்கும் இனிய அதிபர்களே வருக பண்புறவே கல்விகற்ற பழைய மாணவரே வருக
i
 

5
7. படிக்கின்ற மாணவர் தம் பெற்றோரே வருக
பாடசாலை உயர்வை விரும்பும் நலன் விரும்பிகளே வருக அன்பான ஆசிரியர்கள் அனைவருமே வருக அகமகிழ்ந்து வரவேற்றோம் ஆசிநல்க வாரும்.
(2002.09.10 நடந்த பரிசளிப்பு விழாவில் யாழ் இந்து மகளிர் கல் லூரி மாணவிகள் பாடிய வரவேற்புப் பாடல். இன்னிசையுடன் பாடிய இப்பாடல் செவிக்கு இனிய விருந்தாக அமைந்தது.)
கல்லூரிக்கு யா.இ.ம.க. ப.மா.ச கொழும்புக் கிளையின் அன்பளிப்பு
ஆண்டு அன்பளிப்பு
1996 kg.Ls spl"Life, Lib5th (Tamil Typewriter)
* 3 Jf6 6)Fiuuqin Lubagh (Roneo Machine)
1997 k estijaše) fl'Léfe, urbaSgth (English Typewriter)
* கல்லூரி நூல்நிலையத்திற்குப் புத்தகங்கள்
1998 |*நடுத்தோட்ட இராஜவரோதயப் பிள்ளையார் கோயில் கும்
பாபிஷேகத்திற்கு பண அன்பளிப்பு
* 8. .6th. 35600I6of (IBM Computer)
* Sueció(b 6.656)Lugbéa8á gong56OIrlatá(2 Nos. Amplifier sets)
1999 |* கொழும்பில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின்
IBL601 bathérafasg estua (Sponsorship for Dance Recital of JHLC Students)
2000 |* மேலிருந்து படம்காட்டும் கருவியும் திரையும் (Overhead
Projector & Screen)
2001 | * ċibebeg Irfaiseb www.jhlc.lk 6i6imp 6)6 f' żb6Tth. (Web Page)
* ஆங்கில இலத்திரனியல் தட்டச்சு யந்திரம் (English Electronic TypeWriter) - திருமதி மகேஸ் பரமநாதனுடையது
*UIIdse urbassyth (Fax Machine)
2002 |* கல்லூரி நூல் நிலையத்திற்குப் புத்தகங்கள் * ஆங்கில அறிவை வளர்ப்பதற்கு புத்தகங்கள் * விஞ்ஞான ஆய்வுகூடங்களுக்கு உபகரணங்கள்

Page 28
靈翌函 鱷
யாழ்ப்பாணம் போகப்போறோம் நல்லூர்க் கந்தனைத் தரிசிக்கப்போறோம். இந்து மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழாவிற்குச் செல்லப்போகிறோம் என்று நாட்கணக்காக மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது. ஒருவாறாக செப்ரம்பர் 2ந் திகதி விடிய நாமும் பயணங்கட்டினோம் யாழ்நகர் நோக்கி.
யாழ் இந்து மகளிர் கல்லூரி அதிபர் எமக்கு அக்கல்லூரியின் முன்னாள் ஆசிரியை திருமதி ஞானசக்தி கணேசநாதன் வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந் தார்.
சற்சொரூபவதி நாதனையே பிரதம அதிதியாக அழைத்திருந்தனர். அப்பிரபலத் தோடு நானும் ஞானேஸ்வரி ஞானசேகரமும் யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கக் கொழும்புக்கிளையிலிருந்து சென்றோம். நாம் மூவருமே மேற்கூறிய வீட்டில் தங்கியிருந்தோம். மற்றையோர் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றனர். நாம் தங்கியிருந்த அந்த ஆறுநாட்களும் எம் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாயின. திருமதி ஞானசக்தியும், அவர் கணவர் திருவாளர் கணேசநாதனும், ஞானசக்தியின் தந்தை தாய் திரு தணிகாசலம் தம் பதிகளும் இளைய புதல்வி ஆனந்தசக்தியும் ஏன் அவர்கள் பேத்தி விசாலினி உட்பட யாவரும் எம்மேல் பொழிந்த அன்பு மழையில் ஊறி திளைத்து திக்குத் திணறிப் போனோம் என்றால் மிகையாகாது. அவர்களது உயர்ந்த பண்பும் உன் னத நோக்கும் எந்த இடையூறுகள் வந்த விடத்தும் மாறாத யாழ் மண்ணின் மேன்மைக்கும் பாரம்பரிய குண இயல்புக்கும் ஒரு எடுத்துக் காட்டாக விருந் தன. யுத்தத்தால் எவ்வளவோ இன்னல்களைச் சந்தித்தனர் எனினும் திரு தணிகாசலம் J.P.U.M. தம் குடும்பப் பண்பை எதுவிதத்திலும் மாறாது பேணியுள்ளார். என்பதை தெளிவாய் நாம் அறிந்தோம். உபசரிப்பு விருந்தோம்பல் என்ற வள்ளுவர் சொல் வாக்கைக் கடைப்பிடித்தனர், அக்குடும்பத்தினர் யாவரும்.
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் - விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு.
என்பதற்கேற்ப இவர்கள் நடைமுறைகள் இருந்ததையிட்டு நாம் பெரும் மகிழ்ச் சியடைந்தோம். பெரியவர்கள் தான் இவ்வாறென்றால் அந்தச் சின்னஞ் சிறு விசாலி ஒரு மடங்கு மேல். எமக்கு என்ன விருப்பம் என்று மிக நுண் ணியமாய் ஆராய்ந்து கண்டுபிடித்து அதை எமக்குப் பெற்றுத்தரப் பெற்
 
 
 
 

53 றோரையும் பேரன் பேத்தியையும் சிறிய தாயாரையும் ஊக்குவிப்பா. நாம் கொழும் பிற்குப் புறப்பட முன்நாளிரவு தனது ஒன்று விட்ட தமையனை நச்சரித்து நச் சரித்து நெல்லிமரம் மேல் ஏற்றி மரத்திலுள்ள நெல்லிக்காய் அத்தனையையும் எமக்கு பிடுங்குவித்துத் தந்த அந்த அன்பை அன்புள்ளத்தை எம்மால் மறக்க முடியுமா?
அது மட்டுமல்ல எங்கு செல்ல வேண்டுமென்றறிந்து எமக்கு வாகன வசதியும் செய்வித்துத் தந்தனர்.
நாள்போனது தெரியாது நாம் அங்கு ஒரு குறையின்றி இருந்தோம்.
நிற்க, இந்து மகளிர் கல்லூரியின் பரிசளிப்பு விழா பற்றி சில வார்த்தைகள் சொல்ல வேண்டும். மிக நன்றாக ஒழுங்கு படுத்தப்பட்டு நல்ல முறையில் விமரிசையாக விழாவை நடாத்தினார்கள. மேலும் விருந்துபசாரத்தில் நாம் சளைத்தவர்கள் இல்லை என்று கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் மாணவிகள் நிரூபித்திருந்தனர். மிக நேர்த்தியான முறையில் மதிய போசன விருந்து அமைந் தது. உணவும் உபசாரமும் எம்மை பிரமிக்க வைத்தது. கூடவே எமது பாடசாலை எந்தளவுக்கு வளர்ந்து முன்னேறிவிட்டது என்பதைக் கண்கூடாகப் பார்க்கும்போது சற்று இறுமாப்பாகவும் இருந்தது.
அதிபர் ஆசிரியர்கள் மாணவிகள் யாவரும் எம்மை அன்புடன் உபசரித்தனர். அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாள்?. என்ற வள்ளுவர் வாக்கை நிளைவு கூர வைத்தனர். அதிபர் திருமதி ஜெயராஜா அவர்கள் எமக்களித்த அன்பான வரவேற்பையும் மறக்கமுடியாது.
11ம் திகதி விடிய நாம் யாழ்மண்ணிலிருந்து நமது சொந்த உறவினரைப் பிரிய வேண்டி இருக்கிறதே என்ற ஆதங்கத்துடன் வாகனத்திலேறினோம்.
கொழும்பு வந்து சேரும் வரை நானும் ஞானேசும் யாழ்நகரில் எமது இன்ப அனுபவங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தோம்.
எப்போ அம்மண்ணில் நாம் திரும்பவும் சென்று குடியேறுவோமோ என்னும் ஏக் கம் எம் சக பயணிகள் மனத்திலும் வேரூன்றியுள்ளதென்பதையும் அறிந்தோம்.
எல்லா விடயங்களும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். நல்ல விடயங்கள் வெகு சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடுகின்றன என்று ஒரு ஆங்கிலக் கவிஞர் கூற்று என் காதில் ஒலிக்க கொழும்பு மண்ணில் கால் பதித்தேன்.
黎舞黎器黎黎黎舞舞舞舞黎黎碧碧碧碧碧碧影
திருமதி திலகா விஜயரத்தினம்
碧碧霖 碧碧碧黎黎黎舞舞舞舞舞舞黎黎黎黎影

Page 29
‘ரி.ரி.என். அறிவுச் செல்வம் 2002” போட்டி
யாழ். இந்து மகளிர் மாணவிக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபா
தமிழ்த்தொலைக்காட்சி இணையம் (ரி.ரி.என்.)க்காக சுவிற்சர்லாந்து ‘சிகரம்’ நிறுவன ஆதரவில் 'டிஜிற்றல் மீடியா’ இணைய நிறுவனம் யாழ்ப்பானத்தில் நடத்திய ‘அறிவுச் செல்வம் - 2002” போட்டியில் யாழ் இந்து மகளிர் கல்லூரி மாணவி ராதிகா முருகையா முதலாம் பரிசான ரூபா ஒரு லட்சத்தை வென்றார்.
யாழ். பாடசாலைகளைச் சேர்ந்த ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்  ைசக கு 2 O O 4 ஆம் ஆன டு தோற் ற வுள் ள மாணவர்களிடையே நடத்திய இப்போட்டியின் இறுதிச் சுற்று 2002 நவம்பர் 15 யாழ் வீரசிங்கம் மண்டபத் தில் இடம்பெற்றது. இப்போட்டியில் 208 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர். இதிலேயே யாழ் இந்து மகளிர் மாணவி முதல் பரிசைத் தட்டிச்சென்றார்.
பரிசுகளை வென்ற மாணவ, மாண வரிகளின் பெயரில் இலங்கை வர்த்தக வங்கியின் யாழ். கிளையில் சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அவர்களது பரிசுத்தொகைகள் அவரவர்களின் கணக்குகளில் வைப் பிலிடப்படும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித் Si6OIII.
(நன்றி! 16.11.2002 உதயன் பத்திரிகை பக்கம் 2)
செல்வி ராதிகா முருகையாவின் படம் முன் உள் அட்டையில் காணப்படுகின்றது
 

55
அமைவிடம்
இலங்கையின் வடகிழக்குக் கரையில் உள்ள சிறிய மலையிலே இத்தலம் உள்ளது. திருக்கோணநாதர் வீற்றிருக்கும் மலை ஆதலின் இந்நகர் திரு + கோணமலை = திருக்கோணமலை என்று சிறப்புப் பெயரால் அழைக் கப்படுகின்றது. இத் தலத்துக்கு தருக் கோணேஸ் வரம் , கோணேஸ்வரம், திருக்கோணமாமலை, திருக்கோணாசலம் எனப் பல பெயர்களும் உள்ளது. முக்கோன வடிவம் உள்ளமையால் திரிகோணமலை" எனவும் அழைக்கும் வழக்கமும் உள்ளது.
பண்டைய வரலாறு
ஒரு கற்ப காலத்தில் இமாசல கைலாசத்தின் மூன்று சிகரங்கள் தஷிண பூமியில் வீசப்பட்டன. அவற்றுள் ஒன்று திருக்கோணமலை, அது இலங் கையில் வீழ்ந்தது. மற்றவை திருக்காளத்தியும், திருச்சிராப்பள்ளியும் ஆகும். இவை மூன்றும் தஷிண கைலாசங்கள் எனவும் வழங்கப்படுகின் றன. (செவ்வந்தி புராணம்) இது புராண வரலாறு ஆகும்.
இராவனேஸ்வரன் கல்யாணியைத் (கழனி) தலைநகராகக் கொண்டு ஆட் சிபுரிந்து வந்தான் <ෂඛJහූlth, <ෙබjō; தாயும் தினசரி திருக் கோணேஸ்வரத்துக்குச் சென்று சிவபூசை செய்வது வழக்கமாகும்.
ஒரு நாள் சுகவீனம் காரணமாக இராவணனின் தாய் கோணேஸ்வரம் போக முடியாமல் வருந்தினாள். அவளின் துன்பத்தைக் கண்டு தாங்க முடியாத இராவணன் “கோணேஸ்வரத்துக்கு நீ போக முடியாவிட்டால் நீ இருக்குமிடத்துக்கு கோணேஸ்வரத்தைக் கொண்டு வருகிறேன்”; என்று கூறிச் சென்றான். கோணேஸ்வரத்தில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானின் கோயிலை மலையோடு பெயர்த்தெடுக்க அருகில் உள்ள மலையை இரண்டாக அவன் வெட்டினான். அப்போது சிவபெருமான் தனது பெருவிரலால் அவனை அமுக்கினார். பின் அவன் இசைக்கு இரங் கித் தனது பெருவிரலை எடுத்ததார். அந்த இடமே இராவணன் வெட்டு என்று இன்றும் அழைக்கப்படுகிறது என்பர்.
கி.மு 3544ல் ஒரு கடல் கோள் ஏற்பட்டு அதில் கோணேசர் ஆலயம் உட்பட இலங்கையின் பெரும் பகுதி கடலுக்குள் மறைந்து விட்டதாக

Page 30
56 சொல் வார்கள். இதன் பின் கி.மு. 13OOம் ஆண்டளவில் கோணேசர் ஆலயத்தை குளக்கோட்டன் என்னும் மன்னன் திருப்பணி செய்து கட் டுவித்தான். என்பது சரித்திர ஆராய்ச்ச்யாளரின் கூற்றாகும்.
சிறப்புடன் விளங்கிய பழைய கோயில்களும் தீர்த்தமும்
புனித தலமான திருக்கோணேஸ்வரம் தரைப்பகுதியோடு தொடர்புபட்டுக் கடலினுள் நீண்டு கிடக்கும் மலைப்பகுதியாகும். இந்த நிலப் பகுதியில் இந்த ஆலயத்திற்கு பணி செய்வதற்குரிய வேலையாட்கள் குடி அமர்த்தப்பட்டார்கள்.
இந்தத் தரைப் பகுதியிலிருந்து முன்னேறி கோணேசர் மலையின் அடிவாரத்தை நெருங்கும் போது மலையின் வடக்கேயும், தெற்கேயும் தோன்றும் உயர்ந்த பாறைகள் படிப்படியாக உயர்ந்து செல்வதைக் காணலாம். இந்தப் பாறைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பு விரிந்த சமதரையாகக் காட்சியளிக்கின்றது. இந்தச் சமதரையின் தென்திசையில் பிடியன்ன நடையாளாகிய மாதுமையம்பாளின் பிரம்மாண்டமான, வானுயர எழுந்த கோபுரத்தைக் கொண்ட கோவில் கட்டப்பட்டிருந்தது. மாதுமையம்பாளின் கோவில் கழக்கு நோக்கிய வாயிலையுடையதா யிருந்தது. கற்பக்கிரகத்தில் அம்பாளுடைய சிலா விக்கிரகமும், ஏனைய பரிவார மூர்த்ததிகளின் ஆலயங்களும் ஆகம சாஸ் தர முறைப் படி அமைந்ததிருந்தன. ஆலய அமைப்பு விததிகளுக்கு ஏற்ற வகையில் மணிமதில்களும், மண்டபங்களும், மடங்களும் இங்குதான் வசதியாக அமைந்திருந்தன.
கோணமாமலையில் மாதுமையம்பாளின் ஆலயம் அமைந்திருந்த இடம் விரிந்து பரந்து பெரிய சமநிலமாயிருந்தமையினால் இந்த ஆலயத்தை சுற்றியே தேரோடும் வீதரியும் அமைந்தருந்தது. கோணேசப் பெருமானுடைய இரதோற்சவம் இங்கு இருந்துதான் தொடங்கும். மலையின் உச்சியிலிருந்து, ஆலயத்திலிருந்து எழுந்தருளி வந்த கோணேசப் பெருமான் மாதுமையம்பாளுடைய ஆலயத்தைச் சுற்றி வந்து இரதத்தில் ஆரோகணம் செய்து மலையடிவாரத்தைத் தாண்டி குடியிருப்புப் பகுதியை வலமாகச் சுற்றி கோணேஸ்வரத்தை அடைவார்.
இக் கோவரிலின் வடகீழக் கே பாவநாச த் தீர்த்தக் கேணி அமைந்திருந்தது. இது கடல் மட்டத்துக்குக் கீழ் ஆழமுடையதாய் எக்காலத்திலும் வற்றாது நீர் நிறைந்து இருந்தமையினால் மக்கள் நீராடுவதற்கு இதனைப் பயன்படுத்தினார்கள். இதன் காரணமாக ஆலயத் தேவைகளுக்கு தனியாகப் பாவநாசக் கிணறு அமைக்கப்பட்டிருந்தது. பாவநாச தீர்த்தக் கேணிக்கு வடக்குப் பக்கமாக தீர்த்த மண்டபம் அமைந்திருந்தது. சுவாமி தீர்த்தமாடிய பின் இந்த மண்டபத்தில்தான் எழுந்தருளியிருப்பார்.
மாதுமையம்பாளின் ஆலயத்துக்கும் பாவநாசத் தீர்த்தம் இருக்கும் இடத் திற்கும் மத்தியில் மலையில் ஒரு நெடும்பாதை ஏறிச்செல்கிறது.

57
அப்பாதை வழியே ஏறிச் செல்லும் போது மலையில் மற்றுமொரு சமதரை அமைந் தருப்பதைக் காணலாம் , குளக் கோட் டு மன்னன் கோணேஸ் வரத் தில் தருப் பணிகள் செய்தபோது எழுப்பப்பட்ட று நாராயண மூர்த்தியின் கற்கோயில் இந்த இடத்தில் தான் இருந் தது. இந்த ஆலயம் கிழக்கு நோக்கிய பிரம்மாண்டமாய் உயர்ந்த கோபுரத்தை உடையதாயிருந்தது. கருவறையில் ழரீ மகாலெட்சுமி சமேத நாராயண மூர்த்தியின் சிலா விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆலயமிருந்த இடத்திலிருந்து வடக்குப் பக்கமாக கோணேச மலையின் சாரலில் ஓர் பாதை செல்கின்றது. உச்சி மலையிலிருந்த கோணேசப் பெருமானின் பேராலயத்துக்குச் செல்ல இந்த பாதைதான் உபயோகிக்கப்பட்டு வந்தது. மலையின் இயற்கை அமைவுக்கேற்ப வீதிகள் தாழ்ந்தும் உயர்ந்தும் சென்றதால் வேண்டிய இடங்களில் கருங் கற் படிகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பாதை இராவணன் வெட்டை அடையும் போது இராவணன் வெட்டியதாலேற்பட்ட குறுகிய ஆழமான பள்ளத்தை கடந்து செல்ல நேர்ந்தது. குளக்கோட்டு மன்னன் அந்த ஆழமான பள்ளத்தையும் நிரப்பும் திருப்பணியையும் செய்தான்.
இந்த இராவணன் வெட்டைக் கடந்து மலையுச்சியை அடையும் போது அங்கு ஒரு சமதரையைக் காணலாம். இந்த இடத்தில்தான் மாதுமையம் பாள் சமேத கோணேசப் பெருமானுக்கு ஒப்புயர்வற்ற பெருங்கோயில் கட் டப்பட்டிருந்தது.
இத்தகைய பெருமைமிக்க கோணேசப் பெருமான் ழரீ மாதுமையம்பாள் சகிதம் காட்சி அளித்து. அடியவர் பிணி தீர்த்தமையினால் பெருமை பெற் றது. 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தநாயனாரும், திருமூல நாயனாரும், அருணகிரிநாத சுவாமிகளும் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.
திருகோணமலையை கைப்பற்றி திருக்கோணேசர் ஆலயத்தை கி.பி 1627ம் ஆண்டு போர்த்துக்கேயத் தளபதி இடித்துத் தரைமட்டமாக்கினான். அக் கற்களைக் கொண்டே பிறெட்றிக் கோட்டையை அமைத்தான். அங்கு இருந்த பெரும் செல்வங்களை கொள்ளை அடித்தான் என்று சரித்திரம் கூறுகிறது, V
தாயினும் நல்ல தலைவர் உறையும் கோணமாமலை

Page 31
58 புதிய கோயிலும் குழலும்
வடக்கேயும் தெற்கேயும் கடல் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தச் சமதரை இப்பொழுது முள்ள வெளிச் சமதரை ஆகும். இது கடை வீதிகளுட்பட்ட மக்கள் குடியிருப்பாக விளங்கும் மூன்று மைல் சுற் றளவுள்ள திருகோணமலையுடன் தொடர்புபட்டுள்ளது.
இந்த சமதரையில் இருந்து முன்னேறிச் சென்றால் போர்த்துக்கீசர் கட்டிய முக்கோண வடிவான பிறெட்றிக் கோட்டையை காணலாம். அந்தக் கோட்டை வாயிலை கடந்து உள்ளே சென்றால் அங்கு ஒரு சம தரையை காணலாம் . அந்த சம தரையரிலி தான் பாவநாச தீர்த் தம் இருந்தது அதை ஆட் சரியாளர்கள் மூடிவரிட் டார்கள் . அற்புதமான இந்த தீாத்தம் சிறு பகுதியாக தீாத்தக் கிணற்றின் மூலம் அடியார்களுக்கு தந்தருளினார். இதே இதன் சிறப்பு.
மாதுமையம்பாளின் ஆலயம் இருந்த இடத்தில் தற்போது கச்சேரியும், ஏனைய அரசாங்கப் பணிமனைகளும் இருக்கின்றன. இங்கு ஒரு நெடும் பாதை ஏறிச் செல் கலிறது அப் பாதை இப் போதும் தார் போட்டு செப்பன் இடப்பட்டு மலை உச்சிவரை செல்கின்றது.
அப்பாதை வழியே செல்லும் போது மலையின் மற்றொரு சமதரை உள் ளது. இந்த சமதரையரில் தான் ழரீ நாராயண மூர்த் தயரின் கற்கோவில் இருந்தது. ஆனால் இப்பொழுது காவல் துறையினரின் குடியிருப்பும், கிளிங் கொட்டேச்சும், இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் விமான எதிர்ப்புப் பீரங்ககி பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் தெற்குப் பக்கத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் நிலத்தை அகழ்ந்து பிரமாண்டமான நீர்த் தொட்டியொன்றை நிலத்தின் அடியில் அமைத்தார்கள்.
இந்த நீர்த் தொட்டியை அமைப்பதற்காக நிலத்தை அகழும் போது சுமார் ஐந்தடி உயரமான நாராயண மூர்த்த, மகாலெட் சுமரி என்பவர்களின் சிலா விக்கிரகங்கள் கிடைக்கப் பெற்றன. கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர். இந்த சிதைந்த தருவுருவங்களை சிற்பாசாரியரைக் கொண்டு சீராகப் பொருத்திப் புதிய கோணேசர் கோயிலில் பரிவார மூர்த்திகளாக வைப்பித்தார்கள்.
இந்த சமதரையில் தான் இலங்கை அரசாங்கத் தரைப்படை வீரர்களின் வழிபாட்டுக்கென கி.பி 1979ம் ஆண்டில் ஒரு விகாரையைக் கட்டிப் பின்னர் புத்தர் சிலையையும் நிறுவினார்கள். இப் பாதை வழியே முன்னேறி சென்றால் உச்ச மலையிலிருக்கும் கோணேசப் பெருமானின் ஆலயத்துக்கு செல்லலாம். இதுவும் சமதரையாகும்.
1803ம் ஆண்டு முதற் தான் கோயில் இருந்ததாகக் கருதப்படும். கோணேசர் மலையரில் இந்துக் கள் வழக்கம் போல் வழிபாடு நடத்துவதற்கு அனுமதிக் கப்பட்டனர். 1939ம் ஆண்டில் சைவப் பெரியார்கள் கூடி ஆலோசித்து திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை பழைய

59 பெருமையுடன் புனருத்தாரணஞ் செய்ய எண்ணினர்.
சில தொழிலாளர் கிணறு வெட்டும் போது சில விக்கிரகங்களை கண் டெடுத்தனர். அவற்றில் சோமாஸ்கந்த மூர்த்தமுள்ள சிவபிரான், பார்வதி, சந்திரசேகரர் ஆகியோர் அடங்குவர்.
1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட விக்கிரகங்களை நாடெங்கும் தரிசனத்துக் காக எடுத்துச் செல்லப்பட்ட போது சுமார் 35OOO ரூபா காணிக் கையாகக் கிடைத்தன. 1952ம் ஆண்டு மாசி மாதம் 23ம் திகதி பழைய ஆலயம் இருந்த இடத்தில் ஒரு சிறு ஆலயம் அமைக்கப்பட்டு விக்கிரகங் கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
புராதன முர்த்திகள் விநாயகர், சந்திரசேகரர், அம்பாள், சோமஸ்கந்தர், மாதுமை அம்பாள்
பழைய ஆலயம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே புதிய ஆலயம் அமைக்க நினைத்தார்கள். கோணேசர் அருளால் புராதன ஆலயத்தின் படம் ஒன்று கிடைக்கப் பெற்றது. புனருத்தாரணக் குழுவினர் ஆலயத்தை முந்தியிருந் தபடி அழகாகக் கட்டியெழுப்பினர். முதலாவது கும்பாபிஷேகம் 1965ம் ஆண்டு விமரிசையாக நடைபெற்றது.
இங்கு மூலஸ்தானத்தில் காசியில் இருந்து வரவழைக்கப்பட்ட லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுள்ளது. புதைபொருட் செல்வங்களாயிருந்த அற் புதமான எழிலார்ந்த முந்திய விக்கிரகங்கள் தற்போதைய கோயிலில் பரிவார மூர்த்திகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கடலுக்கு அடியிலே கடலாற் கொள்ளப்பட்ட தருக் கோணநாதர் கோயிலின் இடிபாடுகள், தூண்கள், தளம் முதலியன இருப்பதாக ஆராய்ச்சியாளர் கோணேசர் மலையடிவாரக் கடலின் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொண்டு கூறியுள்ளார்கள். தற்பொழுது நித்திய பூசைகளின் போது கடலுக்கு அடியில் உள்ள கோணநாதப் பெருமானுக்கு மலையுச் சியில் இருந்து பூசை நடைபெறுவதை நாம் காணலாம்.
இந்த ஆய்வாளர்கள் கடலிலிருந்து ஒரு லிங்கத்தை வெளிக் கொணர்ந்தார்கள், ஊனப்பட்ட அந்த லிங்கம் கோணேஸ்வரத்
o
தில் இப்பொழுதும் இருக்கின்றது. இந்தக் கோயிலுக்குரிய

Page 32
60
மடம் கோணேசர் கோயிலுக் குச் செல்லும் பாதையருகலேயே அமைந்திருக்கின்றது.
மாதுமை அம்பாள் இராஜ கோபுரம்
பூசைகளும் விழாக்களும்
தற்போது இத்தலத்தில் தினமும் ஆறுகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்தரத்தன்று கொடியேறிப் பதினெட் டு தினங்களுக்கு நடைபெறும். பாபநாசத் தீர்த்தத்துடன் மகோற்சவம் முடிவுறுகின்றது. மகா சிவராத்திரி விழாவை அடுத்துக் கோணநாதப் பெருமான் மாதுமை அம்பாளோடு திருகோணமலை நகரைப் பவனி வருவார். அவ்வேளையில் அங்கு இடம்பெறும் விசேட பூசை வழிபாடுகளை ஏற்று தமது ஆலயத்தை வந்தடைவார். சிவராத்திரி, மாசிமகம், ஆனி உத்தரம், மார்கழித் திருவாதிரை என்பன விசேட உற்சவ தினங்கள். இதன் தலவிருட் சமாக இருப்பது கல்லால் (பாறைகள் இடையில் வளர்ந்திருக்கும் ஆலமரம்) ஆகும்.
இரண்டாவது கும்பாபிஷேகம் 1981ம் ஆண்டு நிகழ்ந்தது. 1990ம் ஆண்டு வழிபாட்டுக்கு தடை செய்யப்பட்ட இந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 1993ம் ஆண்டு மூன்றாவது கும்பாபிஷேகம் நிகழ்ந்தது.
தொகுப்பு - விமலா மணிவாசகன்
சிவபெருமானின் வீரட்டானங்கள்
1. திருக்கண்டியூர் - பிரமன் தலை கொய்தமை 2. திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தமை 3. திருவதிகை - திரிபுரத்தை எரித்தமை 4. திருப்பறியலூர் - தக்கன் சிரங்கொய்தமை 5. திருவிற்குடி - சலந்தராசுரனைச் சங்கரித்தமை 6. திருவழுவூர் - யானையை உரித்தமை 7. திருக்குறுக்கை - காமனை எரித்தமை 8. திருக்கடவூர் - யமனை உதைத்தமை
நன்றி- திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர் 1993 ஆண்டு
 

6
9d
அன்பே சிவம்
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம்
தலம்:- திருக்கோணமலை தீர்த்தம்:- பாவநாசம்
இறைவன்:- கோணேச்சுவரர் இறைவி- மாதுமையாள்
பண்- புறநீர்மை மூன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நிரைகழ லரவம் சிலம்பொலி யலம்பு நிமலர் நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடலோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.
பொழிப்பு:- தம்முடைய தருவடி2களில் முறையே வீரக்கழலரின் ஒலரியும், சலம்பின் ஒலியும் கலந்து ஒலிக்குமாறு கட்டப் பெற்ற இயல்பாகவே பாசமில் லாதவரும், தருவெண்ணறு சண்ணத்த தருமேனியுடையவரும், மலையரசன் தருமகளாகிய உமையம்மையாரைத் தமது இடப்பாகத்திலி பொருந்தப் பெற்றவரும் இடபக் கொடியை உயர்த்தரியவருமாக"ய சிவபெருமான் கரையின் கண்ணே ஒதுக்கப்பட்ட சந்தன மரங்கள், கரிய அகற் கட்டைகள், அளவற்ற இரத்தனங்கள், முத்துக்கள் ஆகியவற்றை வாரி அள்ளிக் கொழிக்கின்ற ஒலரி பொருந்திய கடற்றிரைகள் பொருந்திய தருக்கோணமலை என்னும் தருத்தலத்தில் கோயில் கொண்டருளியுள்ளார்
கடி தென வந்த கரிதனை யுரித்து அவ்வுரி மேனி மேற்போர்ப்பர் பிடியன நடையாள் பெய்வளை மடந்தை பிறைநுத லவளொடு
முடனாய்க் கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து கொள்ளமுன் நித்திலஞ்
சுமந்து குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங் கோணமா
மலையமர்ந்தாரே.
2
பொழிப்பு:-
விரைந்து வந்த கயாசுரன் என்னும் யானை வடிவத்தையுடைய அசுரனைக் கொன்று அவன் தோலையுரித்துத் தமது பேரொளி பொருந்த7ய திருமேனியிற் போர்த்துக் கொண்டவராகிய சிவபெருமான். பெண் யானை போன்ற நடையையுடைய வரும் வளையல்கள் அணிந்தவரும், பிறை போன் ற அழகிய நெற்றியையுடையவருமான உமாதேவியாரோடு கேட்டோர் கொடிது என்று கூறும்படியாகப் பயங்கரமான இரைச்சல் பொருந்திய கடலானது முத்துக்களை எவரும் எளிதில் வாரிக் கொள்ளும்படியாகச் சுமந்து வந்து குடிகள் நெருங்கி வாழுகின்ற ஊரைச்சூழ்ந்து பெருக்கோடு தோன்றும் திருக்கோணமலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

Page 33
62
பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம் படர்சடை முடியிடை வைத்தார் கணித்திளந் துவர்வாய்க் காரிகை பாக மாகமுன் கலந்தவர் மதின்மேல் தனித்தபே ருருவ விழித்தழ னாகந் தாங்கிய மேருவெஞ் சிலையாக் குனித்ததேரர் வில்லார் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந்
தாரே.
3
பொழிப்பு:- குளிர்ச்சி பொருந்திய இளம் பிறையையும் பசிய தலையையுடைய பாம்பினையும் பரந்த சடாமுடியிலே தரித்தருளியவரும், பவளத்தைப் போன்ற அதரங்களை யுடையவராகரிய உமாதேவியாரைத் தமது இடப்பாகத்திலே வைத்தவரும், மிகநீண்ட உருவத்தையுடையதும் நெருப்புக் காலுகின்ற கண்களையுடையதுமான வாசுகி என்னும் பெரிய பாம்பை நாணாகப் பூட்டி மகா மேருமலையை வில்லாக வளைத்துத் திரிபுரத்தார் நகரங்களாகிய முப்புரங்களை எரித்தருளியவராகிய சிவபெருமான். இரைச்சலை செய்கின்றதாகிய கடல் குழ்ந்துள்ள திருக்கோணமலை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப்
பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றுஞ் செழுங்கடற் றரளஞ் செம்பொனு மிப்பியுஞ்
சுமந்து கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங் கோணமா மலைமர்ந் தாரே.
4 பொழிப்பு:- இளமை வாய்ந்த கங்கையானது உலகத்தை அழிப்பது போலும் பெருக்கெடுத்து வந்தபோது அதனை ஒரு சிறு திவலையாக்கி ஒரு சடையின் ஒரு உரோமத்தின் நுனியில் அதனைப் பழிப்பது போல் வைத்து, அழகுத் தெய்வமாகிய மன்மதனைச் சாம்பராகும் வண்ணம் தமது நெற்றிக் கண்ணாற் பார்த்து, அவனுடைய தேவியாகிய இரதரியென்பாள் இரந்து வேண்டிய போது அவளுக்கு முன்னர் மாத்திரம் உருவாக எழுப்பியருளிய நிமலரும், சிவந்த தாமரை மலர் போன்ற திருப்பாதங்களை யுடையவருமாகிய சிவபெருமான் எதிரே உரப்புதலைச் செய்து மிகுந்த இரைச்சலைச் செய்கின்ற கடலிலுள்ள முத்துக்களையும், சிறந்த பொன்னையும், சிப்பியையும் அக்கடற்றிரைகள் அள்ளிச் சுமந்து கொண்டு வந்து கரையிலே ஒதுக்குகின்ற திருக்கோணமலை என்னுந் திருத்தலத்திலே கோயில் கொண்டருளியுள்ளார்.
தாயினும் நல்ல தலைவரென் றடியார் தம்மடி போற்றிசைப் பார்கள் வாயினும் மனத்தும் மருவிநின் றகலா மாண்பினர் காண்பல வேடர் நோயிலும் பிணியுந் தொழிலர்பா னிக்கி நுழைதரு நூலினர் ஞாலம் கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த கோணமா மலையமர்ந்
தாரே.
பொழிப்பு:-

63
தாயைக்காட்டிலும் மிக்க அன்புள்ள தலைவரென்று கருதி மெய் யடியார்களாய் உள்ளவர்கள் இறைவனுடைய திருவடிகளைத் தோத் திரஞ் செய்வார்கள். அவர்களுக்கு நோய்கள் உறுத்தாது உடல் ஊழாய்க் கழியும், வாக்கினால் வாழ்த்தியும், மனதினால் தியானித்தும் வழுவாது போற்றிசெய்யும் ஞானிகள் தரிசித்துக் கொள்வதற்கான திருவடிகளைக் கொண்டருளுபவரும்,அறிவு புகட்டும் மறைகளை அருளுபவருமாகிய சிவபெருமான், தீவும் அதனுட் கோயிலும் அதன் பாவநாசச் சுனையுமாக எல்லாவற்றையும் கடல் குழ்ந்துள்ள திருக்கோணமலை என்னுந் திருத்தலத்திலே கோயில் கொண்டருளியுள்ளார்.
பரிந்துநன் மனத்தால் வழிபடு மாணி தன்னுயிர் மேல்வருங் கூற்றைத் திரிந்திடா வண்ண முதைத்தவற் கருளுஞ் செம்மையார் நம்மையா
(6560)LujTÍ விரிந்துயர் மெளவல் மாதவி புன்னை வேங்கைவண் செருந்திசெண்
பகத்தின் குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ் கோணமா மலையமர்ந்
தாரே.
6
பொழிப்பு:- அன்போடு பரிசுத்தமான மனத்தினனாய்த் தம்மைப் பக்தியோடு பூசித்து வழிபட்ட பிரமசாரியாகிய மார்க்கண்டேயருடைய உயிரைக் கொண்டு செல்ல வந்த காலனை, வரம்பு கடவாமல் தம் திருவடியால் உதைத்துத் தள்ளி அந்த மார்க்கண்டேயருக்கு நீடியகால ஆயுளும் அருளும் பாலித்த சிறப்போடு கூடியவரும், எம்மையெல்லாம் ஆண்டருள் புரிபவருமாகிய சிவபெருமான், பரந்து உயர்ந்து விளங்கும் காட்டு மல்லிகை, குருக்கத்தி புன்னை, வேங்கை, செருந்தி, செண்பகம், குருந்து, முல்லை என்பன கொடிவிட்டு வளரும் சோலை குழ்ந்த திருக்கோணமலையென்னுந் திருத்தலத்திலே கோயில் கொண்டுள்ளார்.
ஏழாவது தேவாரம் மறைந்து விட்டது.
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு கொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும்
வாழ்வுங் கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர் கோணமா மலையமர்ந்
தாரே.
8
பொழிப்பு:- திருக்கைலாய மலையைப் பெயர்த்து எடுக்க முயன்றவனாகிய இ ராவணனுடைய கர்வத்தைத் தமது திருவடிப் பெருவிரலால் ஊன்றிக் கெடுத்தவர். அவ்விராவணன் பின்னர் துதித்துப்பாட அன்பு கொண்டு மந் திரவாள் அதிகாரம் முதலிய பேறுகளைக் கொடுத்தருளியவர். பிறப்பு இ றப்பு என்பன இல்லாதவர், தம்மை மருமகன்தானே என்று எண்ணிப் புறக்கணித்துத் தக்கனார் செய்த பெரிய வேள்வியைத் தடுத்தவர், பின் னர் தம்மிடத்தே இயல்பாகவுள்ள பெருங்கருணையினாலே தக்கனாருக்கு

Page 34
64
வாழ்வையும் பெருமையையுங் கொடுத்தருளியவர், மெய்யடியார்களால் விருப்பத் தோடு பாற்றப்படும் பெரும் L/45(1p(up 60 Lll 1621/f, திருக்கோணமலையெனுந் திருப்பதியிலே எழுந்தருளியுள்ளார்.
அருவரா தொருகை வெண்டலை யேந்தி யகந்தொறும் பலியுடன் புக்க பெருவரா யுறையு நீர்மையர் சீர்மைப் பெருங்கடல் வண்ணனும் பிரமன் இருவருமறியா வண்ணமொள் ளெரியா யுயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்குங் குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக் கோணமா மலையமர்ந்
தாரே.
9
பொழிப்பு:- - அருவருத்தல் இல்லாமல் ஒரு திருக்கரத்திலே வெண்ணிறமான கபாலத்தை ஏந்தி வீடுகள் தொறும் பிச்சையேற்கும் பொருட்டு எழுந்தருளுகின்ற பெருந்தன்மையுடையவர். சிறப்பினையுடைய பெரிய கடல்போலும் நீல நிறத்தினையுடைய திருமாலும் பிரமதேவருமாய் இருமுர்த்திகளும் அடிமுடி அறிய முடியாதவண்ணம் சோதி சொருபராக வளர்ந்தவர். திருவடியைக் காணவியலாது மீண்டும் வந்து போற்றுதலைச் செய்த திருமாலுக்குக் குருவாக அருள் செய்தவர். அத்திருநெடுமால் வணங்கும் வண்ணம் சப்திக்கின்ற கழலணிந்த திருவடியுடையவர் திருக்கோணமலை என்னுந் திருத்தலத்திலே எழுந்தருளியுள்ளார்.
நின்றுணுஞ் சமணு மிருந்துணுந் தேரும் நெறியலா தனபுறங் கூற வென்றுநஞ் சுண்ணும் பரிசினர் ஒருபான் மெல்லிய லொடுமுட னாகித் துன்றுமொண் பெளவ மெளவலுஞ் சூழ்ந்து தாழ்ந்துறு திரைபல மோதிக் குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங் கோணமா மலையமர்ந் தாரே.
10 பொழிப்பு:- நின்றுகொண்டே உணவுகொள்ளும் சமணரும், இருந்துகொண்டு நன்றாக உணர்கன்றவர்களாகரிய தேரர் என்னும் பெளத்த மதப்பிரிவனரும், பொருத்தமில்லாத வகையில் வாதஞ்செய்ய அவர்களை உண்மை கூறி வென்றவரும், அக்கொடியவர்களிட்ட நஞ்சனையுண்டும் உயிர் பிரியாதவராகிய மெய்யடியார்கள் ஒரு பக்கத்தே நிற்கவும், ஒரு பக்கத்தே நல்ல சாயலையுடைய உமாதேவியாரைப் பொருந்தியவரான சிவபெருமான், காட்டுமல்லரிகைச் செடிகளைச் சூழ்ந்து கடற்றிரைகள் தாழ்ந்தும் உயர்ந்தும் மோதி உயர்ந்த கடற்கரைச் சோலைகளிலும் மலையிடங் களிலும் வாசனை வீசுகின்ற திருக்கோணமலை என்னும் திருத்தலத் திலே எழுந்தருளியுள்ளார்.
குற்றமி லாதவர் குரைகடல் சூழ்ந்த கோணமா மலையமர்ந் தாரைக் கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான் கருத்துடை ஞானசம் பந்தன் உற்றசெந் தமிழார் மாலையீ ரைந்தும் உரைப்பவர் கேட்பவ ருயர்ந்தோர் சுற்றமு மாக்கித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப்
பொலிந்தே.
1
பொழிப்பு:- எவ்வித குற்றமும் இல்லாதவராகிய ஒலிக்கின்ற கடலாற் குழப்பட்ட

65
திருக்கோணமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைக் கல்வியறிவோடு கேளிர் வரியறிவிலும் மேம்பட்டுச் ச"காழியரில் வாழ் பவராக?ய அறிவாளிகளுக்குத் தலைவரும் திருவருளால் சிவஞானமுணர்ந்து அதிலே பதிந்தவராகிய திருஞானசம்பந்தர், இனிய செந்தமிழால் செய்த பத்துத் திருப்பாடல்களைக் கொண்ட பாமாலையை உரைப்பவர்களும் உரைப்பக் கேட்பவர்களும் ஞானத்தாற் சிறந்துயர்ந்தவர்களை தமக்குச் சுற்றத்தவராகக் கொண்டு தாம் முன்னர் ஈட்டிய வினையாகிய சஞ்சிதத் தொகுதி தீண்டப்பெறாதவராய் வானுலகத்திடை மேலான பதவியில் வாழ்வார்கள்.
திருச்சிற்றம்பலம்
திருநாவுக்கரசர் பாடிய திருநெய்த்தான பதிகத்தில்
திருக்கோணச்சரம்
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலையார் கயிலாயன் நீயே என்றும் அக்காரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும் புக்காய ஏழுலகும் நீயே என்றும் புள்ளிருக்கு வேளூராய் நீயே என்றும் தெக்கார மாகோணத் தானே என்றும் நின்ற நெய்த் தானா என்
நெஞ்சுளாயே.
தஷிண கைலாச புராணம்
வாழி தென்கயிலையம் பொருப்பும் வையமும் வாழிய வன்பர் தங்கணமும் வானமும் வாழியஞ் செழுத்தொரு வளமும் நீதியும் வாழிய தொண்டர் சீர் வாழி வாழியே.
米米米米本来来水冰冰水冲冰米本本米冰冰冰冰冰率率来求冰水***来米球求***水来本来率率来水水冰冰米来率来水水米米米米率来率来米水水来水水本水水水冰水冲
நன்றி- “திருக்கோணேசர் ஆலய கும்பாபிஷேக மலர்” 1993
sisäisis

Page 35
66
EDUCARE
The word education is derived from the terminology "Educare. It is the manifestation of the perfection already in man. The very essence of education is the concentration of the mind. All knowledge, Secular or spiritual is in the human mind. In many cases it is not discovered, but remains covered and when the covering is being slowly taken off we say we are learning.
The word educare means to bring out that which is within us. Educare is gradual unfolding of our inner consciousness, in other words, it is the process of bringing out inner knowledge and values.
We all know about the five human values, Sathyam, Dharmam, Shanthi, Premai and Ahimsai are hidden within us. We cannot acquire them from outside. They have to be elicited from within. But we have forgotten our innate human values. We are unable to manifest them. We have to bring them out to action. True education cannot be seen by eyes, cannot be heard by ears and cannot be felt by mind. The source of all knowledge and experiences are really within us. All we need to do is to go within and tap this inner knowledge and experience it. This is what is meant by Educare.
Now let us see how Educare could be practiced? There are steps. For this we have to understand that our body is composed of these five elements viz. Space, Air, Fire, Water and Earth. These five elements are associated with five types of sensations - Sound, Touch, Sight, Taste and Smell cognized by the Ear, the Skin, the Eyes, the Tongue and the Nose. Since these are saturated with divinity, we have to use them reverentially with humility and gratefulness. Also, we have to use them intelligently to promote the welfare of ourselves and the society. Excess of anything is harmful. Drinking more water than needed is a torture. Inhaling more air is Suffocating. Fire beyond a certain limit is a holocaust. Even sound beyond a certain limit is a calamity. So we have to provide the body with the

67
right type of food, water, air and exercise. If we have a Transistor Radio and if we do not know how to operate, it is a pity. Similarly, we have got a wonderful machine "SELF. We must discover the art of operating this human machine.
First, we have to educate ourselves about right breath, right awareness, rhythm rate, depth, better train ourselves young on how to regulate our breath. So, children have to be trained. Activities such as devotional singing and prayers are useful in promoting awareness and rhythmic breathing. Man inhales and exhales air 21,600 times in 24 hours and while inhaling the sound “So is produced and while exhaling the sound “Ham is produced. Together they make up “So' - Ham' meaning 'He' is I. God is to be recognized in the process of inhaling and exhaling. Among the senses of perception the eyes are gifted with immense power. They have 4 million light rays in them. When we misuse them by viewing unsacred visions. As the result sensual pleasures of which the body become weaker day by day and we may lose our vision one day. Then we need to control our tongue. There are 300,000 taste buds in the tongue. We become slaves to taste and we will start consuming unwanted things that are harmful for our health. We must be careful not to utter unholy words. So we must keep our eyes and tongues under check. Then come the ears. Never listen to anything that is evil. Ancient Sages go to the forest to spend their life in solitude. Silent sitting is a process of tuning in.
True spiritual practice lies in controlling one’s senses. The mind should be trained to turn away from the sensory perceptions and tuning within to focus on the self. The Kingdom of Heaven is within. Therefore we should direct the mind to focus within on the real self or God. This process is called concentration. This will finally give way to meditation. During this process we have to overcome two obstacles, dullness and distraction. The path of selfless action helps us to tackle dullness and the path of devotion is the best remedy for distraction of the mind. Every action must come from the heart, and there must be a co-ordination of heart, head and

Page 36
68 hand. Next, Interior of the mind is the ego (Ahangara).
We have to remember that ego is the fabricated I'. We have to engage in selfless service activities. Regarding them as a training ground to eliminate our egoism. Now we have made our journey inward. Then we listen to our intelligence. Next we practice listening to our consciousness. Be calm and still. Listen to the Voice of God. Deep sincere prayer will accelerate this process. The prayers are, 21 times Omkar and suprapatham, Astostram and Saithree. Everything must be practiced early morning between 4.00 a.m. and 6.00 a.m. We will now move to be on the Bliss Sheath (Ananda). It is not different from Love. Love becomes the guiding principle of our life.
Love and joy spontaneously radiate from our being. Now we start to develop equal vision of seeing God in everything. God is Love and Love is God. There is no difference between Sun and its ray or sea and its waves. Likewise there is no difference between God and Love because God is the source of Love.
God is Love. Love is God. This Educare is a gradual unfolding of our inner consciousness. It is the evolution of man to God.
Mrs. Parameshwary Balasingham
Vice President, --- Jaffna Hindu Ladies' College (Old Girls' Association - Colombo Branch)
யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் கொழும் புக் களை, யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசரலைக்கு மேலிருந்து படம் காட்டும் கருவி (Overhead Projector) 96ör6Op c96örU6ft"JUIT35 6 grfiléu gy.
 
 
 
 
 

69
JHLC OGA Sydney Australia
2002 - 2003 Activities of Jaffna Hindu Ladies College Old Girls Association, Sydney Branch.
(a) Fund Raising:
Old girls of JHLC OGA, Sydney Branch had organised a successful fund raising cultural show “Malarum Maalai" on 07 September 2002. Dances, music and dramas were part of Malarum Maalai. The old girls, their families, friends and well wishers totalling over nine hundred attended the show. Net collection from the show was over nine thousand dollars.
From the funds collected at the Cultural show we have established a Prize Fund in Sri Lanka to the value of Five Hundred Thousands Sri Lankan Rupees to award prizes to eight best academic students from JHLC each year.
We feel proud that this Prize Fund will award eight best academic students from JHLC each year for an indefinite period. (We are also glad that our members were able to donate a total sum of SRs. 665,000 to the school during the past two years.)
Highlights of the prize scheme are:
1. The Prize Fund is named as “Jaffna Hindu Ladies College Old Girls
Association Sydney Branch Prize Fund'.
2. President, Secretary and the Treasurer of the Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch are the Trustees of the prize fund.
3. The purpose of this fund is to encourage the Students of Jaffna Hindu Ladies College, Jaffna to perform to their best at their studies by awarding monetary prizes to the best achievers. The achievement of

Page 37
70
the students shall be measured from their academic results at the General Certificate of Education (Advanced Level) or equivalent examination conducted by the Sri Lankan Government Examination Department or an equivalent authority.
Sri Lankan Rupees Five Hundred Thousands (SRs 500,000) has been deposited into a fixed Deposit Account on 17 March 2003 at the National Savings Bank, Jaffna Branch. Provisions had been made to add more money to this Prize Fund later by creating additional fixed deposit accounts using the same Trust Deed.
No one is authorised to withdraw any amount from this Prize Fund.
However, all are encouraged to add additional funds to this Prize Fund.
Every year the National Savings Bank, Jaffna shall credit Eighty percent (80%) of the interest accrued by the fund into the "Jaffna Hindu Ladies College Prize Board’ account. To minimise the impact of the inflation on the Prize Fund capital, Twenty percent (20%) of the interest shall be returned to the prize fund capital.
All communication with the Trustees shall be made to the following address: Trustees of Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch Prize Fund, c/o Principal, Jaffna Hindu Ladies College, Arasady Road, Jaffna.
Each year the interest credited from the Prize Fund into the Prize Board account shall be equally divided between the (four) Bio Science, Physical Science, Commerce and Arts academic departments of the College and awarded as prizes to two students from each academic department who have obtained the highest marks at the General Certificate of Education (advanced Level) or equivalent examination. In each academic department the student who obtained the highest marks shall receive sixty percent of the prize money (called the First prize) and the student who obtained the second highest marks shall receive forty percent of the prize money (called Second prize). If two or more students obtain the same marks the prize money shall be divided equally between them.

71
9. Members of Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch have great respect and admiration for the services rendered by the former Principal Late Miss Pathmavathy Ramanathan. In appreciation of her services to the college the Trustees wish to name the Four First prizes as:
=> “Former Principal Miss Pathmavathy Ramanathan (include the year of prize) Memorial Prize for the Best Bio Science Student awarded by Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch'.
=> “Former Principal Miss Pathmavathy Ramanathan (include the year of prize) Memorial Prize for the Best Physical Science Student awarded by Jaffna Hindu Ladies College Old Girls Associa- - tion Sydney Branch'.
-> "Former Principal Miss Pathmavathy Ramanathan (include the year of prize) Memorial Prize for the Best Commerce Student awarded by Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch'.
-> "Former Principal Miss Pathmavathy Ramanathan (include the year of prize) Memorial Prize for the Best Arts Student awarded by Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch’.
10. The Four Second Prizes shall be named as:
=> (include the year of prize) Second Best Bio Science Student Prize awarded by Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch”.
-> (include the year of prize) Second best Physical Science Student Prize awarded by Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch”
-> (include the year of prize) Second Best Commerce Student Prize awarded by Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch'.

Page 38
72
=> (include the year of prize) Second Best Arts Student Prize awarded by Jaffna Hindu Ladies College Old Girls Association Sydney Branch”.
11. To commence the awarding of the academic prizes on the 60" Anniversary of our college in September 2003, we have already deposited Sri Lankan Rupees Forty Thousands (SRs 40,000) into the JHLC Prize Board Account. This amount is in addition to the SRs 500,000 already deposited into the fixed deposit account.
(b) Full Day Picnic
JHLC OGA Sydney Branch organised a full day picnic to socialise and build relationship among the old girls. Over thirty members and their families attended the picnic at the picturesque beach front called “The Entrance', which an hour drive from Sydney.
(c) Annual General Meeting and Dinner
The annual general meeting, election of the office bears and the dinner will be held on 6 April 2003 at Hpmebush.
SSSS SSS S SSS SSS S S S S S S S S តែវិញ្ញា ឆ្នាំ Mrs. Kalayarasee Chinniah ਹੋ President JHLCOGA Sydney Australia 01.03.2003
Li 1 . . . . . . . . . . . . . My )りー
S ι/ ،گال a roax (a
அவர்கள் நன்கொடை:ாக :தது
யாழ் இந்து மகளிர் கல்லூரி ப
ச்சங்கம் கல்லூரியின் 2002 ஆம் ஆண்டுப் பரிசளிப்பு விழாவின்
பாது ரூபா 135,000/- பெறுமதி வாய்ந்த Toshiba Photocopie
odel 1560 Machine'னைக் கல்லூரிக்கு அன்பளிப்பாக கொழும்புச் ங்கத்தினூடாக வழங்கியது.
 
 

கல்லூரிப் பரிசளிப்பு விழாவின்போது - அதிபர் திருமதி சரஸ்வதி ஜெயராஜ் அவர்கள் பிரதம அதிதி செல்வி சற்சொரூபவதி நாதனையும், சிறப்பு அதிதி திருமதி சிவகாமி அம்பலவாணரையும், வட-கீழ் பிராந்திய பாடசாலைகளின் பழைய மாணவர் சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி வி. அம்பலவாணரையும் பரிசளிப்பு மண்டபத்திற்கு அழைத்துச் செல்கின்றார்.
கல்லூரிப் பரிசளிப்பு விழாவின்போது - அதிதிகளுக்கு மாணவி ஒருவர் மலர் செண்டு கொடுத்து வரவேற்கின்றார்.

Page 39
கல்லூரிப் பரிசளிப்பு விழாவின்போது - 1 மாணவிகளுடனும் வருகை தந்திருர்
s
முன்னேச்சர பிரயான
முன்னைநாதர்
PRINTED BY UNIE ARTS (PY
 
 

மா. ச கொழும்புக் கிளையின் அங்கத்தவர்கள், தோருடனும் சபையில் வீற்றிருக்கும் காட்சி
னத்தின்போது - கலந்து கொண்டோர் கோயில் முன்னால் எடுத்த படம்
VT) LTD. COLOMBO - 13, T.P. 3301.95