கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெய்வச் சேக்கிழார்: ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டு மலர் 2005

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
b
இந்து சமய அலு
 
 
 
 


Page 6
O O தெய்வச் ே 2005 செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது வெளியிடப்பெ
மலராசிரியர் : செல்வி மகே
வெளியீடு : இந்து சமய அலுவ
fana : ebLUIT 300/=
அச்சுப்பதிப்பு:யுனிஆர்ட்ஸ் (பிறைே

O O சேக்கிழார் 9, 10, 11ஆம் திகதிகளில் உலகச் சேக்கிழார் மாநாட்டின்போது ற்ற சிறப்பு மலர்
ஸ்வரி வேலாயுதம் L.L.B.
பல்கள் அமைச்சு- இலங்கை
வப்லிமிடெட்கொழும்பு13,இலங்கை

Page 7


Page 8


Page 9


Page 10
2 திருநீலகண்ட 3. guguGDSLTi 4. இவை LurğLITSECTif ಕ್ರೀನ್ಲ!
29 ஏயர்கோன் 30 திருமூ நாயனார் . தண்டியடிகள்
15. மூர்த்திநாயனார் 16 முருகநாயனார் 17. உருத்திரபசுபதி
GLTE
பருமிழலைக் 24. காரைக்கால்
23 G
குறும்பர் அம்மையார்
22. குலச்சிறையார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5. மெய்ப்பொருள் 8. விறன்மிண்ட 7. அமர்நீதி நாயனார் நாயனார் BITLLIGOTIT
STULIGOFIT 33. சோமாசிமாறர் 34. Titus 35. சிறப்புவிநாயனார்
testů 19. திருக்குறிப்புத் 20. சண்டேசுவரர் 21 திருநாவுக்கரசர்
தொண்டர்
26. திருநீலநக்கர் 27. நமிநந்தியடிகள் 28. திருஞானசம்பந்தர்

Page 11
29 ஏயர்கோன் 30. GepGU STILGOTT 31. 56iñor lq.LLjlq,56ir 32 epiä:
கலிகாமர்
36. சிறுத்தொண்டர் 37. கழற்றிற்றறிவார் 38. கனநாதர் 38 கூற்று
43. கலிக்கம்பர் 44. கலியநாயனார் 45. சத்திநாயனார் 46. ஐ
L5
50. SRITYSIGUITA 51 முனையடுவார் 52 சுழற்சிங்கர் 53 இடங்க
87. பூசலார் நாயனார் 58 மங்கையர்க்கரசியார் 58. நேச நாயனார் 80 கோச்செ
 
 
 
 
 

FörTLIGOTT 33. சோமாசிமாறர்
41 நரசிங்க 42. அதிபத்தர் முனையரையர்
படிகள் 47. கணம்புல்லர் 48. jirrifjBITLLIGOFIT fi 49. நெடுமாற நாயனார் கோன்
ங்கட் சோழர் 61 சடைய நாயனார் 82 இசைஞானியார் 83 திருநீலகண்டநாயனார்

Page 12

லுவல்கள் அமைச்சினால் நடத்தப்படும்
5 சேக்கிழார் திருமுறை மகாந
சக்கிழார் இவ்வுலகில் வந்திலரேல் எங்கே? நல்லதமிழ் வேதமெங்ே சிவபக்தி எங்கே சொல்?
: 09.09.2005 IDTG)6) 3.00IDGof ப்பிட்டி பழைய கதிரேசன் கோயிலிருந்து .00 IDGIoflöÖ5 €0,JTiDLIIDITöiD. ன் மண்டபம், பம்பலப்பிட்டி, கொழும்பு 4.
10.09.2005 & 1.09.2005 திகதிகளில் ண்டபம், வெள்ளவத்தை, கொழும்பு 6.
பிலிருந்து மாலை 5.00 மணிவரையும் 0 மணிமுதல் கலைநிகழ்ச்சிகள்
அலுவல்கள் அமைச்சு, இலங்கை,
■ 囊

Page 13
சீர்வளர் சீர் 86uúóp8578 é85885 y prgstribu sa 23வது குருமகா சன்னிதானம் 3. திருவாவடுதுறை ஆதீனம், நாகை மாவட்டம் தமிழ்நாடு
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான்தா கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க’
மதிவளர்சடைமுடி மன்று ளாரைமுன் துதிசெயும் நாயன்மார் தூய சொன்மலர்
» பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை ۔۔۔۔ விதிமுறை உலகினில் விளங்கிவெல்கவே:
சிவச்சின்னங்களும், அடியார் தொண்டு உண்மையினை, உலகுக்கு உணர்த்தியருளிய தழைத்திட, இதுபோன்ற மாநாடுகள் நன்கு உத
பெரியபுராணத்தின் உட்கருத்தினை ந மேன்மேலும் சிறந்து வளரவும், இலங்கை வாழ் ம நமது வழிபடு கடவுளாகிய அருள்மிகு ஞானப் வாழ்த்துகின்றோம்.
 
 
 

லகச் சேக்கிழார் மாநாடு செப்டம்பர் ந்து மகிழ்ச்சி அடைகிறோம்.
களுமே உறுதிப்பயன் அளிக்கவல்லன என்ற அரிய நாயன்மார் பெருமக்களின் நன்னெறி, எங்கும்
e
5)||D.
ன்முறையில் உலகுக்கு உணர்த்தும் இம்மாநாடு, க்களுக்கு நிரந்தர சாந்தி, சமாதானம் கிட்டிடவும் பெருங்கூத்தன் திருவடிமலர்களைச் சிந்தித்து
3 :

Page 14
கயிலைமாமுனிவர் திருவளர்திரு காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவா அதிபர், காசித்திருமடம்,
திருப்பனந்தாள்
ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாடு நடைபெறவிருப்பது அறியலாயிற்று மகிழ்ச்சி.
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்ை ஓங்கச் சென்றடையாத திருவுடையானை, என்று நினைந்து ஈர நெஞ்சினராய், யாதும் குறையிலராய் மிகுந்த அடியார்தம் அருள் வரலாற்றைப் பக்திச் சுவை புலவர் சேக்கிழார் பெருமை மேலும் பெருக இம்மாநா
பெரியபுராணம் அடியார்தம் வரலாறு கூறு இல்லறம், மனிதநேயம் ஆகியவை பற்றியும் விளக் திகழ்வதாகும். 2.
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஈவன, படமாட விளக்கியதோடு, சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு வரலாற்றைச் சேக்கிழார் மூலம் அறிந்து கொள்வோர் ஐயமில்லை.
தில்லை வாழ் அந்தணரே முதலாகச் சீர்படை தெள்ளு தமிழில் நெஞ்சை அள்ளும் சிறப்போடு பா மாநாடு, சிறப்புற நடந்தேறத் திருவருள் துணை நிற்
மாநாட்டு அமைப்பாளர், பங்கேற்றுப்பயன் டெ மேன்மேலும் பெருகத் திருவருள் புரியுமாறு செந்தி வாழ்த்துகிறோம்.
 
 
 
 

སྒྱུ་
செப்டம்பர் 9, 10, 11 ஆம் நாட்களில் கொழும்பில் 3
ல என நிலைநாட்டும் மேன்மை கொள் சைவத்துறை இன்பம் பெருகும் இயல்போடு ஒன்றி இருந்து பாரம் ஈசன் பணியலால் வேறொன்றறியாத வீரம் நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிவலவராம் தெய்வப் 5. துணைபுரியும் ---, -- 雛
ம் நூலாக விளங்குவதோடு சமுதாயம், அரசியல், 5கும் பல்துறை வாழ்க்கை வழிகாட்டு நூலாகவும்
க் கோயில் பரமற்கு ஆகும் என்பதை வாழ்ந்து காட்டி
சிவஞானமுடைய செம்மையராய்த் திகழும் அடியவர் -----------
பண்பாடும், ஒழுக்கமும் மிக்கவராய் வாழ்வர் என்பதில்
த்த எல்லையில் புகழ் அடியாரது அருள்வரலாற்றைத் டிய, தெய்வப்புலவர் சேக்கிழார் புகழ் பரப்பும் சீர்மிகு
LT55
றுவோர் அனைவர்க்கும் சிவஞானமும் தீர்க்காயுளும் ல்ெநகர் வாழ் கந்தவேள் திருவடிகளைச் சிந்தித்து

Page 15
முநீலழுநீ சோமசுந்தர தேசிக
ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிக இரண்டாவது குருமஹா சந்நிதானம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
ܝܵܐ 繆 ః
: இ
இன்பு சால் பெருந்தகையிருக்கு, ஐந்தாவது உலக சேக்கிழார் மாநாடு நடைபெறுவ
சைவ சமயத்தின் ஆணிவேராகத் திகழு சுவாமிகள் பெரிய புராணம் அறுபத்துமூன்று G வரலாற்றின் ஊடாக வாழும் வழிவகைகளை நமக்
ஊடாக மண்ணுலக வாழ்க்கையில் நிறைவாக வ
ஒவ்வொரு சைவத் தமிழ் மக்களும் கற்று என்று தொடங்கி உலகெலாம் என்று நிறைவு ெ
சித்திரை மாதம் திருவாதிரை தினத்தில் நாளிலே நிறைவு பெற்றது சிறப்புடையது.
శభ
அமைச்சராக இருந்து துறவற வாழ்க்ை வாழ்க்கை சைவ தமிழ் மக்களுக்கு உரிய திரு உணர்த்தும் வகையில் ஐந்தாவது உலக சேக்கி
பணிகளை இறைவன் ஆசீர்வதிப்பாராக
என்றும் வேண்
ܕܠ
 
 
 
 

ந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சினால்
1தையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.
ராணத்தை மக்கு தந்தவர் சேக்கிழார்
தள்ள தெளிவாக ஒவ்வொரு நாயன்மார்களின்
ணரவேண்டிய நூல் பெரியபுராணம் உலகெலாம்
பறும் புராணம் பெரிய புராணம் ஆகும்.
ஆரம்பித்த புராணம், சித்திரை மாதம் திருவாதிரை
莎 வாழ்ந்தவர் சேக்கிழார் சுவாமிகள். இவருடைய நெறியை உணர்த்துவதாக அமைந்தது. இதனை ார் மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி அமைச்சின்
xi

Page 16
திருவம்பலதேசிக ஞான
r , *
簿
ܐ ܐ .
வரும் செப்டம்பர் 09.10.11ஆம் திகதிக இருக்கும் ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட் இருக்கும் மலர் சேக்கிழாரின் பெரியபுராண இலக் கற்பனை அணிநலன்கள் *и: ஒன்பான்சுவைகள் நடி வரலாறு, இந்திய நாட்டுவளம், ஆகிய a. நுண்மான நுழை புலத்தை எடுத்துக் காட்டுவதா
ஏலவார் குழலி உடனாய திருவேகம்பத்தை நினைந்து
xii
 

f
டினையொட்டி வெளிவர கியத்திறம், அமைப்புமுறை, பங்கள், அறக்கருத்துக்கள் ற்றையும் தாங்கி அவரது க அமைய எல்லாம் வல்ல
ல் கொழும்பில் நடைபெற
து வேண்டி வாழ்த்துகிறோம்.

Page 17
வாழ்த்துரை
1JTGO(p45560, 1960) D அருள்மிகு பாலமுருகன் திருக்கோவில் வேலூர் இரத்தினகிரி, கீழ்மின்னல் தமிழ்நாடு
சிெம்பொருளாம் செஞ்சடையானை முழுமுத சமயம் தன் செந்நெறியை வழுத்தியும் வாழ்த்தியும் வருச் சிவன் சத்துச் சித்தாகிய இயல்புடையவன். மன ஒன்றாலேயே அறியப்படுபவன்; பரஞானத்தால் அ அறியப்படுவான்; ஆன்மாவோடு கலந்து உடனாயும் தத்துவங்களைப் பன்னிரு திருமுறைகளும் பதினான்கு “கோடாது கோடி கொடுத்தாலும் சைவநெறி நாடாதார் ஆ பொருளென்று தேர்ந்தே சிவ பூசை செய்வோராகவும் எந்நூப் பரிவுடனே' எண்ணுவோராகவும் இன்றளவும் g கண்ணுதற் கடவுளான சிவனை, மனம் மொழி செய்வோர், கற்றவராயினும் மற்றவராயினும் ஒரு சேர திருத்தொண்டர்களின் வரலாற்றைத் திறம்படப் பேசுவது திருத்தொண்டர்கள், தங்களின் மாசிலா மேனிய ஐந்து பூதங்கள் தம் நிலையில் கலங்கினாலும், தம் நி நிறைவாய் வணங்குதலேயன்றி வீடுபேற்றையும் விரும்ப அணியும் மாலை உருத்திராட்சமாகவும், உடுத் கடமையாகவும் கொண்டவர்கள்.
திருத்தொண்டர்களைப் பற்றிப் பக்திச் சுவை நன உலகெலாம் எனத் தொடங்கி 'உலகெலாம் வேண்டிய செம்பொருளைப் பரவுவது.
எந்நாட்டவர்க்கும் இறைவன் ஆன தென்னாடு இலங்கை வாழ் தமிழர்கள் இச் சிவ வழிபாட்டி ஒழுகி வருகின்றனர். சைவ நீதியில் உறுதிப்பாட்டோடு உ பக்குவமும் கொண்டு மணம் வீசுகின்றனர்.
யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலர் சைவப் பழம பரவச் செய்ததை மறப்பாருண்டோ?
இலங்கையில் சைவமணம் செழிக்கும் இடத்தி விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஐந்தாவது உலக சேக் அறிந்து மனம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது.
மாநாட்டில் சைவநீதிகளும், நெறிகளும், கொ வைக்கும் என்று முழுமையாக நம்பலாம்.
மாநாட்டின் நினைவாக, சைவநெறிக் காவலர்க3 கண்டு கேட்டு மகிழும் வாய்ப்பில்லாதாரிடம் சென்று சே மாநாடும், மாநாட்டு மலரும் மாதொருபாகர் மை
அருளாளனின் திருவருளால் எல்லா வகையிலும் சிறப்பு
 
 
 
 
 
 
 
 
 
 

ற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமயம் சைவம். சைவ கிறது. ாத்தாலும் மொழியாலும் அறியொணாதவன். பதிஞானம் றிய முடியாதவன். ஆன்மாவிற்கு வேறாய் நின்றும் ஒன்றிணைந்தும் அத்துவிதமாய் நிற்பான். இச்சிவத் சாத்திரங்களும் வழி வழி போற்றிக் காத்து வருகின்றன. )6O)6) 60L நண்ணிடாத" நன்னெறியாளராகவும், சிவமே 'ஓங்கு சிவ பஞ்சாட்சரத்தைப் பகர் அருளே நாவாக ருந்து வருவோர் சைவ நீதியாளர்கள்.
மெய்களால் எண்ணியும், வெளிப்படுத்தியும் தொண்டு த் திருத்தொண்டர்கள் எனப் போற்றப்படுகின்றனர். திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரிய புராணம். பில் பூசிய திருநீறு போலவே, உள்ளமும் மாசிலாதவர்கள். லை கலங்காது சிவனின் சேவடி சிந்தையில் நிறுத்தி ாதவர்கள். தும் ஆடை கந்தையாகவும், சிவத் தொண்டாற்றுவதே
சொட்டச் சொட்டப்பாடித் தந்தவர் சேக்கிழார் பெருமான். என நிறைவடையும் பெரிய புராணம், உலகெலாம் பரவ
டைய சிவனை எந்நாட்டவரும் போற்றுவது இயல்புதானே. ல் தலை சிறந்து விளங்குகின்றனர். இம்மியும் வழுவாது யர்ந்து இருக்கின்றனர். அதில் மனப்பக்குவமும் மொழிப்
ாகி சைவச்சாற்றைத் தமிழ் கூறும் நல்லுலகமெல்லாம்
ல், சைவமரபினர் நடத்தும் திருமுறை மாநாடு சிறந்து
கிழார் திருமுறை மாநாடு இலங்கையில் நடக்கவிருப்பது
“ள்கைகளும் சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிய
ܘ ܐ ரின் கருத்துக்களைத் தாங்கி வரும் மலர் அங்கு சென்று ர்ந்து மணம் பரப்பும் மலராக விளங்குமன்றோ? ந்தன் மால் மருகன் இக் குன்றுறை இளவழகன் எந்தை ற அமைய வாழ்த்துகின்றோம்.
xiii

Page 18
வாழ்த்துரை
சுவாமி ஆத்மகனானந்தா தலைவர், இராமகிருஷ்ண மிசன் இலங்கைக் கிளை.
இந்து சமய அலுவல்கள் அமைச்சு, எதிர் கொழும்பில் ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்ை வாழ்த்துகிறோம்.
சமயத் தத்துவங்களும், கொள்கைகளும் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கான ஆர்வம், அல் ஞானியால் தான் வழங்க முடியும். எரியும் தீபத் என்பதற்கிணங்க, இறைபக்தியில் மூழ்கித் திளைத் ஏற்றத்தை அளிக்கமுடியும், 'அன்பே சிவமாய் அம வரலாற்றுத் தொகுப்பே சேக்கிழார் வழங்கும் பெரி நிலைகளைப் படம்பிடித்துக் காட்டும் இந்நூல், ஒரு மேன்மைக்கு சைவம் எத்தகைய பங்களிப்பை வழங்க
மனித விழுமியங்கள் நலிவுற்று, அதன் கா வருகின்ற இக்காலப்பகுதியில், இந்நிலையை மாற்றி சேக்கிழார் மாநாடு அமையும் என்பது திண்ணம். இந்
அதிகாரிகளுக்கும் எங்கள் உளமார்ந்த பாராட்டைத்
சேக்கிழார் மாநாடு சிறப்புடன் நடந்ே
பிரார்த்திக்கிறோம்.
Xiv
 
 
 
 

வரும் செப்ரம்பர் மாதம் 9, 10, 11 ஆம் திகதிகளில் ட நடத்த உள்ளமை அறிந்து, மாநாடு வெற்றி பெற
எவ்வளவுதான் சிறப்பாக இருந்தாலும், அவற்றை லது உத்வேகம் தானே வந்துவிடாது. அதை ஒரு தினால்தான் இன்னொரு தீபத்தை ஏற்றமுடியும் த ஒருவரால்தான் மற்ற உள்ளத்திற்கு அத்தகைய ர்ந்த அத்தகைய சிறந்த ஞானியர் பரம்பரையின் ரியபுராணம் ஆகும். இறைபக்தியின் மிக உயர்ந்த சிறந்த ஆன்மிக பொக்கிஷம். மனித வாழ்க்கையின் முடியும் என்பதை இந்நூலிலிருந்து அறியலாம்.
ாரணத்தினால் சமுதாயச் சீர்கேடுகள் அதிகரித்து யமைப்பதற்கான ஒரு பயனுள்ள முயற்சியாக இந்த ந்து சமய அலுவல்கள் அமைச்சருக்கும், அமைச்சின்
தெரிவித்துக் கொள்கிறோம்.
தற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரியப்

Page 19
'துர்க்காதுரந்தரி, சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதிதங்கம்மா அப்பாக்குட்டி, J.P பரீதுர்க்காதேவி தேவஸ்தானம்,தெல்லிப்பழை
"தூக்கு சீர்த்திருத் தொண்டத்தொகை விரி வாக்கினால் சொல்ல வ ல பிரான் எங்கள்
பாக்கியப் பயனாய்ப் பதி குன்றை வாழ் 円 சேக்கிழான் அடி சென்னி இருத்துவாம்'
கொழும்பு மாநகரில் நடைபெற இருக்கும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். இளம் உள்ளங்களி
பெரியபுராணம் பற்றிய சுவையான சம்பவங்களையும்
நடராஜப் பெருமான் 'உலகெலாம் என்ற அடியை கொண்டு, திருத்தொண்டர் புராணம் என்ற நாமத்தே சிதம்பரத்தை அடுத்த குன்றத்தூரைப்பிறப்பிடமாகக் ெ அமைந்த ஆயிரங்கால் மண்டபத்திலேயே இருந்து இ প্ত பன்னிரண்டாம் நூற்றாண்டு தமிழகத்தின் ெ ஏற்பட்ட காலமும் இதுவாம். 'சீவகசிந்தாமணி, பெரி காவியங்களெல்லாம் இக்காலத்திலேயே தோன்றி சேக்கிழார் சுவாமிகள். பெரியபுராணத்துக்கு அவர் கெ "பொங்கிய இருளை ஏனைப் புறவிருள் போக்குகின் புராணம் என்பாம்” என்று பாடுகிறார். இந்நூல், சைவ தவறாமல் சொல் நயம், பொருள் நயம், கவிநயம் யா திகழ்கின்றது. "உணர்வினி வல்லோர் அணிெ பெரியபுராணத்துக்கு முற்றிலும் பொருந்துவதாகும்
இந்நூலை எமக்குத் தந்த சேக்கிழார் சுவா: நடைபெற ஒழுங்கு செய்திருக்கிறார்கள் கொழும்பு வ கனதி உடையவையாகவும், சைவ எழுச்சியை ஏற்படு எனவே வருகின்ற செப்ரெம்பர் மாதம் 9ந்10ந்iந்திக பங்குபற்றி சிறப்பிக்க வேண்டும் என்றுஅன்பாகவேன்
 
 
 
 
 
 

சேக்கிழார் மகாநாட்டை முன்னிட்ட நிகழ்ச்சிகளை லே சேக்கிழாரைப் பற்றிய அருட் செய்தியையும், இடம் பெறவைப்பது வரவேற்கத்தக்கது. தில்லை எடுத்துக் கொடுக்க, அதனையே தொடக்கமாகக் 5ாடு பாடி முடித்தவர் சேக்கிழார் சுவாமிகள். இவர் காண்டவர். தில்லையம்பலவனுடைய சந்நிதியிலேயே ந் நூலைப் பாடி முடித்தார்.
பாற்காலமாகும். தமிழிலக்கியத்திற் காவிய வளர்ச்சி யபுராணம், இராமாயணம், கந்தபுராணம்' ஆகிய ன. இவற்றில் பெரியபுராணத்தை இயற்றியவரே ாடுத்த பெயர் 'திருத்தொண்டர் புராணம்” என்பது. ற செங்கதிரவன் போல் நீக்கும் திருத்தொண்டர்
சமயத் தொடர்பான நூலாக, இலக்கண அமைதி
றச் செய்வன செய்யுள்' என்ற அமைப்பு
களை முதன்மையாக வைத்து, சகல நிகழ்ச்சி களும்
ாழ் சைவப் பெருமக்கள். நிகழ்ச்சிகள் அனைத்தும்
ধ্রু
வனவாகவும்அமைகின்ற குறிப்பிடத்தக்கது. களில் கொழும்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளி

Page 20
xvi
×প্তঃ
oooooooooooo
கே. என். டக்ளஸ் தேவானந்தா பா.உ மாண்புமிகு அமைச்சர், கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு அ இந்து சமய அலுவல்கள், கல்வி வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சு
66
Uெந்தமெலாம் போக்கும் பெரியபுரான வந்திலரேல் நாயன்மார் கீர்த்தி எங்கே? நல்ல தமிழ்
என்று பூவை கல்யாண சுந்தரனார் ப வரலாற்றையும் தேடிக்கண்டுபிடித்து அவற்றை தொகு புலவர் சேக்கிழார் அருளியுள்ளார்.
நாயன்மார்களின் வரலாறுகள் மூலம் ை எடுத்தியம்பி, சைவத்தின் பெருமைகளை உலகறியச்
தெய்வப் புலவர் திருவள்ளுவரை அடுத்து பெருமான், தமிழர் தம் வாழ்வியலையும், நெறி நின் காவியமாகப் படைத்துள்ளார்.
புராணம் என்ற பெயர் இருப்பினும், திருவ இலக்கியங்களைக் கொண்டு விளங்கும் இந்நூல் உ
காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியா கதைகளூடாக ஆண், பெண் சமத்துவத்தை வலியு அவர்களது மனைவிமார் பதிவிரதைகளாக வாழ்ந்த மெய்யுணர்வுகளையும் ஆங்காங்கே சுட்டிக் காட்டு எத்தகைய மதிப்பை வைத்திருந்தார் என்பதையும் அறி ஜீவனுக்கு ஆண், பெண், ஏழை பணக்காரன் போ நாயன்மார்களின் வரலாற்றிலிருந்து வெளிக்கொண
ஓரறிவிலிருந்து ஆறறிவுள்ள சகல ஜீவரா இறைவனையும், அவன் பெருமைகளையும் போற்றுச் சகோதரத்துவமும் வலியுறுத்தப்படுகின்றன. அறுப;
 

னம் தந்த எந்தைபிரான் சேக்கிழார் இவ்வுலகில் - வேதமெங்கே? தூய சிவ பக்தி எங்கே சொல்?-
ாடியுள்ளார். அறு துமூன்று நாயன்மார்களின் 5த்து “பெரிய புராணம்’ என்ற ஒப்பற்ற நூலை தெய்வப்
சவ சித்தாந்தக் கொள்கைகளை அழகு தமிழில் செய்த பெருந்தகை சேக்கிழார்.
என்று போற்றப்படும் சேக்கிழார்
ருட்காவியம் என்று கூறப்படும் அளவிற்கு காவிய
லகப் பொது நூலாகவும் போற்றப்படுகின்றது.
ர், இசைஞானியார் போன்ற பெண் அடியார்களின் றுத்துவதுடன், பல நாயன்மார்களதும் வாழ்க்கையில் தையும், அவ்வாழ்க்கையால் அவர்களுக்குள் ஏற்பட்ட வதன் மூலம் தெய்வச் சேக்கிழார் பெண்கள் மீது க்கிறது.அத்தோடு இச்சரிதங்கள் மூலமாக ன்ற வேறுபாடுகள் இல்லை என்பதையும் பல்வேறு ர்ந்துள்ளார்.
சிகளிலும், அணுவுக்குள் அணுவாக வீற்றிருக்கும் ன்ெற இந்நூலில் ஜீவகாரணியத்துடன், சமத்துவமும் த்து மூன்று நாயன்மார்களுள் பலர் அக்கால சமூக
8*
*ॐ
প্পঞ্ছ
প্ত

Page 21
:
. o s 9. 姆 ఖళ அடிப்படையில் புறக்கணிக்கப்பட்டவர்களாக கணி வைப்பவர்களாயின் அவர்கள் இறைவனுக்கு நாயன்மார்களையெல்லாம் இறைவன் தடுத்தாட்கொ
அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயர ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகி அவர் கண்டீர்யாம் வணங்கும் கடவுளாரே'
椰
ॐ ॐ:क्षं
தொழுநோய்பீடித்து உடம்பு அழுகுபவராக இருந்தாலு பசுமாட்டை உரித்து உண்கின்ற புலைத்தொழிலை கொண்ட சிவனுக்கு அன்பராகில் அவரே நாம் வண1
ॐॐ
சிவனடியார்கள் 'எந்நிலையில் நின்றாலும், எக்கோலப் இருப்பின் அவர்கள் எல்லோரும் சமமானவர்கள்’ இ ஒப்பற்ற நூலாக பெரியபுராணம் விளங்குகின்றது.
சிவனடியார்களின் உயர்ந்த வாழ்க்கை நெறிகளைத்த நாகரீகமற்ற வருணனைகளோ, வன்மையான சொர் பக்தி இலக்கியமாக வரலாற்றுக் குறிப்புக்களுடன்
৪× × ః क्ष्8 ်စဲနွှဲဒ္ဓိ
প্ৰাপ্ত
நெறிநின்று வாழ்ந்து இறைபக்தியின் பெருமைகள் எடுத்தியம்பும் இப்பெரிய புராணம் காலம், இடங்க
வழிகாட்டியாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
சேக்கிழார் பெருமானின் பெருமைகளை உலகறியதுடு கருத்துக்களை இலகு தமிழில் எல்லோரும் அறிந்து இலங்கைத் தீவில் சைவம் மீண்டும் மறுமலர்ச்சி அடை
உலக சேக்கிழார் மகாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு
நமது மதம் சம்பந்தமாக தெளிவான அறிவைப் பெறு மனிதநேயம், ஜிவகாருண்யத்தை மேலோங்கர் டு கொடுப்பதன் மூலம் ஒரு ஆரோக்கியமான சமூகத்தை
இவவாண்டு செப்ரெம்பர் மாதம் 9ம் 10ம்,1ம் திகதிகள் மூலம், அடிப்படைச் சைவசித்தாந்தத் தத்துவங்களை வாழ்த்துகின்றேன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கப்பட்ட போதும் அவர்கள் இறைவன் மீது பக்தி வேண்டப்பட்டவர்களே என்பதை விளக்கி இந் ண்ட வரலாறுகளை பல இடங்களில் காண்கின்றோம்.
救
1.
றும், இந்துக்களால் பூசித்து வழிபடப்படுகின்ற (ஆவை) ܀ செய்வாராயினும், அவர்கள் கங்கையைச் சபையில் ܒ ங்கும் கடவுளர் என்று கூறுகிறார் அப்பர்.
கொண்டாலும், மன்னிய சீர் சங்கரன் தாள் மறவாமல் றைவனுக்கு வேண்டியவர் என்பதைக் காட்டி நிற்கும்.
ன்னகத்தே கொண்ட ஒப்பற்ற இப்பெருங்காப்பியத்தில் களோ, விரசமோ, பிறமொழிக் 56), Gust இல்லாமல், லங்கும் இக்காவியம் எக்காலத்திற்கும் உரியது
ধ্ৰু
1ளயும், அதனால் கிடைக்கும் பேரின்ப வாழ்வையும் ளையெல்லாம் கடந்து என்றும் மனித குலத்திற்கு
श्री
டும் என்பதற்காகவும் சிவபூமியாகிய வண்டும் என்பதற்காகவும், இலங்கையில் ஐந்தாவது செய்துள்ளேன். -
யன்பெற வேண்
வதற்கும் காலத்திற்கு ஒவ்வாத வழிபாடுகளை நீக்கி ய்கின்ற வழிபாட்டு முறைகளுக்கு முக்கியத்துவம் த கட்டியெழுப்ப விழைகின்றேன்.
ல் கொழும்பில் இடம்பெற இருக்கும் இம்மகாநாட்டின் எல்லோரும் அறிந்து பயன்பெற வேண்டும் என்றும்
XVii

Page 22
ஆசியுரை
கருணாநிதி மகானந்தன் செயலாளர், கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு அ இந்து சமய அலுவல்கள் அமைச்சு மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சிக்கு உதவும் அமைச்சு
உலகெலாம் பரவி உலப்பிலா ஆனந்த சைவநெறி, நம் இலங்கைத் திரு நாட்டில் சர்வதேச காண்கின்றது. உலகெங்கும் பரந்துள்ள மனிதகுலம் எ வளர்ப்பதற்கும், மனிதனை மாமனிதனாக உயர்த்துவி
பயன் பிறர்க்குப் பயனுடையதாக வாழ்தலே என்ற தொ
L|্যা600Tth.
*சிந்திப்பரியன, செறிந்து சிந்திப்பவர்க்கு சான்றோர்களின் வாக்கிற்கிணங்க, அரியதாகிய அடிகளை அடையும் விதத்தை எளியதாக்கியவை அ 12ஆம் திருமுறையே சேக்கிழார் புராணம்,
சேக்கிழார் புராணம் உயர்ந்தது, ஒப்பற்றது. ஏற்றம் மிக்கது. இத்தகைய பெற்றி வாய்ந்த LTT600TLn 6 புராணம் பற்றிய புதிய பொருத்தமான சிந்தனைகளி
மணங்கமழும் மலராய் மலரவும், அதன் வழியாக 1606
மலர் சிலம்புகளை நினைந்து வாழ்த்துகின்றேன்.
xviii
 
 
 
 
 
 
 


Page 23
D&&6ÍvaWifi &6Vænusölb LL.B ஏற்பாட்டாளர், ஐந்தாவது உலகச்சேக்கிழார் மாநாடு மதியுரைஞர், இந்து சமய அலுவல்கள் அமைச்சு.
४ ॐ:ॐ.ॐ கொள் சைவநீதி உலகெலா இலங்கையில் முதன் முதலா சேக்கிழாருக்கு விழா : பெருவிழாவாக இடம்பெறுவதானது இறை அருள் கூடி நான்காவது சேக்கிழார் மாநாடு, கடந்த வரு இரத்தினகிரியில் மெளன ஞானி தவத்திருபாலமுருக மகாநாட்டில் இலங்கை அரசின் பிரதிநிதிகளாக நா பணிப்பாளர் திருமதி, சாந்தி நாவுக்கரசனும் மற்றும் இந் கலந்து கொள்ள இறையருள் கிட்டியிருந்தது. நிறைவு மகாநாடு இலங்கையில் நடக்க வேண்டும் என்ற தனது 6 கெளரவ கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அவர்கள் மனமுவந்து அக்கோரிக்கையை ஏற்றுக்கொ மனிதநேயத்தை முன்னிறுத்திய அவரது செயற் காலத்தில் நிகழ்கின்றன. சைவ சமயம் மீண்டும் புத்து இம் மாநாடு உதவும் என்று நம்புகின்றேன். பக்தி உன் பரவச்செய்யவும் எமது மதம் சம்பந்தமான தத்துவங்கன ః భ இவவிழாவிற்கு ஆசீர்வாதம் அருளிய எல்ல நன்றிகளைக் காணிக்கையாக்குகின்றேன். প্পল্প
இம் மாநாடு வெற்றி பெறவும், அதன் நோக்கம் எமக்கு உற்சாகந்தந்து உதவி செய்து வழிகாட்டுகின்ற 6 அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாக வழங்கும் எமது செயலாளர் திரு. கே. மகானந்தன் அவ எம்மோடு துணைநின்று, அயராது உழைக் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இந்து சமய கலாசார பிற்றும் இந்நூல் வெளியிடுவதில் அயராது ; திரு. சி. இரகுபரன், திரு. ம. சண்முகநாதன் செல்வி, ச நந்தினி, செல்வி பே. உஷாஜினி, மற்றும் : வினோராஜ் போன்றவர்களுக்கும் நன்றிகள் உரித்தா இறையன்பர்களுக்கும் விழாக்குழு சார்பாக மனமார் வெற்றிக்காக அயராது உழைக்கும் இந்திய அன்பர்கரு ஏனைய சேக்கிழார் மன்ற உறுப்பின கொள்கின்றேன். 8 8
இம்மாபெரும் இறைபணியில் ஈடுபட, இறைய பெரும் பாக்கியமாக எண்ணி மகிழ்கின்றேன்.': இன்பமே சூழ்ந்து எல்லோரும் வாழ சிவனருள்
 
 
 
 
 
 
 
 
 

ம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பதற்கமைய எடுக்கப்படுகிறது. அதுவும் ஐந்தாவது உலக மாநாடாக, வந்ததன் பயன் என்றுதான் கூற வேண்டும். டம் டிசெம்பர் மாதம் 18, 19ம் திகதிகளில் தமிழ்நாட்டில் னடிமை சுவாமியின் வழிகாட்டலுடன் இடம்பெற்றது. இம் றும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் து சமய உதவிப் பணிப்பாளர் திரு.எஸ். தெய்வநாயகமும் நாளில் தவத்திரு வடலூர் ஊரன் அடிகளார் ஐந்தாவ விருப்பத்தை தெரிவித்திருந்தார். அன்றே எமது அமை
தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அமைச்சர் គ្រឿr fi “ * « பாடுகளால் அரும்பெரும் கைங்கரியங்களெல்லாம் அவரது பிர் பெற்று எழுச்சி பெற்ற சமூகமாக நமது மக்கள் வாழ ணர்வை மேலோங்கச் செய்து, இறைபக்தியை மீண்டும்
德猩
"புரிந்து கொள்ளவும், இம்மகாநாடு நிச்சயம் உதவி
த்திருஞானிகளுக்கும், இதயபூர்வமான எமது
பகள் ஈடேறவும்வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் காட்டி Tமது அமைச்சர் கெளரவ கே.என்.டக்ளஸ் தேவானந்தா டும். எமது செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பையும் ர்களுக்கும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். கும் ஏனைய விழாக்குழு உறுப்பினர்களுக்கும் எனது திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன், த உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். தெய்வநாயகம், எமது அமைச்சின் கலாசார உத்தியோகத்தர்களான திரு. ப. விக்கினராஜன், செல்வி. க.தயாழினி, திரு. ச.
கட்டும். மேலும் கட்டுரைகள் அனுப்பி உதவிய எல்லா ந்த நன்றிகள் உரித்தாக்குகின்றேன். இம்மாநாட்டின் 8 ருக்கும், குறிப்பாக சென்னை பி. வி. சம்பந்தம் மற்றும் » ܀
ம் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்

Page 24
சாந்தி நாவுக்கரசன் Lefiuffff இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம்
உலகு அறியவிரித்து உரைத்த செல்வம் மலிகுன்றத்தூர்
சேக்கிழார் அடிபோற்றிட்
பெரிய புராணத் தோற்றத்திற்கு வித்திட் ܢܝܒܐ தன்மையை உலகு அறியும் வண்ணம் தமிழ் நாடு ܡܘܼ ܟܠ ܐ ܢ -தமிழகத்தில் முதலாவது உலகச் சேக்கிழார் திருமு முதல் மகாநாடு தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரி வேலூரிலும், மூன்றா 0 ஆம் ஆண் ஆம் ஆண்டுே ம் நடைபெற் சேக்கிழார் அடிப்பொடி'எனப் போற்றப்படும் இருந்து குன்றத்தூர் சேக்கிழார் மன்றத்தினை ஆரம் சேக்கிழார் மன்றங்கள் உருவாகக் காரணமாக அன் சேக்கிழார் மன்றங்கள், இதுவரை உலகச் சேக்கிழார் திருமுறை மாநாடுகளையும் நடத்தியுள்ளன. ஒ செயலாளர்களும் இயங்குகின்றனர்.
சேக்கிழார் மன்ற உறுப்பினரும், சென்6ை அவர்கள், முதல் மாநாட்டின் பொழுது இலங்கையிலு கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடு விவகாரத்துக்குப் பொறுப்பான அமைச்சர்களின் அ மாநாடுகளிலும் இலங்கையின் பிரதிநிதித்துவம் இட உலகச் சேக்கிழார் மாநாட்டின் பொழுது எடுக் இலங்கையில் நடத்துவது எனப் பொருந்திக் கொன நிறைவேறவில்லை.
கடந்த 2004 டிசம்பர் 18,19ம் திகதிகளில் தமிழ்நாடு, வேலூர் மாவட்டம், கீழ் மின்னல், இர வளாகத்தில் நடைபெற்றது. தமிழ் நாடு தெய்வச் C மன்றம் என்பன இணைந்து இம் மாநாட்டினை சிற
XX
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பித்து
ஆர
மைந்தார்.அவரின் வழிகாட்டலில் மாநாடுகளையும்,300 மாவட்டச் தெய்வச் சேக்கிழார் வ்வொரு மாவட்டத்திலும் தலைவரும், துணைச்
பிரபல தொழிலதிபருமான திரு. பி. வி. சம்பந்தம் புள்ள இந்து சமயத்துறை அமைச்சின் பிரதிநிதிகளும் த்ெதிருந்தார். அவரது அழைப்பிற்கிணங்க, இந்து அனுமதியின் பேரில், தமிழகத்தில் நடைபெற்ற நான்கு ம்பெற்றது. பாண்டிச்சேரியில் நடைபெற்ற மூன்றாவது கப்பட்ட தீர்மானத்தில், நான்காவது மாநாட்டினை ண்ட பொழுதும், நாட்டுச் சூழ்நிலை காரணமாக அது
8888
- நான்காவது உலகச் சேக்கிழார் திருமுறை மாநாடு த்தினகிரி அருள்மிகு பால முருகன் திருக்கோவில் சேக்கிழார் மன்றம் குன்றத்தூர் ஆற்காடு சேக்கிழார் ப்பாக நடத்தி வைத்தன. தவத்திரு பாலமுருகனடிமை

Page 25
சுவாமிகளின் நல்லாசியுடனும், அவரது அனுசரணைய அடிப்பொடி சிவத்திரு. மு. கிருட்டினன் ஐயா அவர்க அவர்கள் பொதுச் செயலாளராகவும் அமைந்து மாநாட் நான்காவது உலகச் சேக்கிழார் மாநாட்டின் நீ இந்து சமய அலுவல்கள் அமைச்சின் பிரதிநிதியாகக் வேலாயுதம் அவர்கள், ஐந்தாவது உலகச் சேக்கிழா முன்மொழிந்தார். இதனை சபையினரும், விழா ஏற்பா உடனடியாகவே இலங்கையின் மாண்புமிகு அமைச்ச மதியுரைஞர் அவர்கள் தொலைபேசி மூலம் தொடர் அமைச்சர் அவர்களும் எதுவித ஆட்சேபனையும் இல் வழங்கினர்.
நான்காவது உலகச் சேக்கிழார் மாநாட்டில் அடிகள், இரத்தினகிரி தவத்திரு. பாலமுருகனடிமை பாண்டிச்சேரி, வயி. நாராயணசாமி, சென்னை தொழி உலகச் சேக்கிழார் மாநாடு, இலங்கையில் நடைபெற மிகையாகாது. இவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்ற தெய்வச் சேக்கிழார் ஆசியும், இறையருளுட் நடத்தும் பேறு கிட்டியது என்றே கூறவேண்டும்.
தமிழ் நாட்டில், தெய்வச் சேக்கிழார் மன்றங் இலங்கையில் இந்து சமயத் துறைக்குப் பொறுப்பான விழாவாக நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக பெருநிகழ்வும் சிறப்பு மிக்க ஒரு நிகழ்வாகும் என்பதில் இம் மாநாட்டில் தமிழக அறிஞர்கள், மற்று சிறப்பிப்பதும் பெருமைக்குரிய விடயமே. அதே சமயம் ஆ வழங்க உள்ளனர்.
மெய்யன்புடன் வாழ்ந்த அடியார்களாகிய திரு பரவிய தெய்வச் சேக்கிழாருக்கு - அவர் அருளிய பெரி ஒரு நல்ல எழுச்சியினை ஏற்படுத்தும் நல் முயற்சி என ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டின் மாணவர்களிடையே போட்டிகள், சிறப்புமலர் வெளியீடு, வழங்கல் என்பன இடம்பெறுகின்றன.
ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டின் ெ எல்லா நலன்களும் பெற்றுவாழ இறையருள் துணைநி
வாழ்க வி
என்று மின்பம் பெ(
ஒன்று காதலித் து மன்று ளாரடி யா
நின்ற தெங்கு நில

டனும் இவ்விழா சிறப்பாக அமைந்தது. சேக்கிழார் ர் தலைவராகவும், திரு. ஆ. வி. தட்சிணாமூர்த்தி டுப் பணிகளை இனிதே நிறைவேற்றினர்.
|றைவு நாள் எடுக்கப்பட்ட தீர்மானத்தில், இலங்கை கலந்து கொண்ட மதியுரைஞர் செல்வி மகேஸ்வரி ர் மாநாட்டினை இலங்கையில் நடத்தலாம் என ட்டாளர்களும் ஏகமனதாக ஏற்று ஆமோதித்தனர். ர் கே. என். டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் பு கொண்டு அனுமதி கேட்ட பொழுது, கெளரவ ாறி மகிழ்ச்சியுடன் இலங்கையில் நடத்த அனுமதி
முன்னின்று சிவப்பணியாற்றிய தவத்திரு ஊரன் சுவாமிகள், செயலாளர் ஆ. வி. தட்சணாமூர்த்தி, லதிபர் திரு. பி. வி. சம்பந்தம் ஆகியோர் ஐந்தாவது காரணகர்த்தர்களாக ஊக்குவித்தவர்கள் என்பது மி உரியதாகும். ம் கிட்டியதனால் இம் மாநாட்டினை இலங்கையில்
களே நடத்தியுள்ளன. எனினும் இம் மாநாடுகளை அமைச்சின் அனுசரணையோடு அரச இம்மாநாடு
தெய்வச் சேக்கிழார் பெருமானுக்கு விழா எடுக்கும்
ஐயமில்லை.
ம் எமது நாட்டின் அறிஞர்கள், பங்கு கொண்டு ஆதீனங்களின் தலைவர்களும் பங்குகொண்டு ஆசி
தத்தொண்டர் தம் வரலாற்றை செம்மையாகப் பாடிப் யபுராணத்துக்கு - மாநாடு நடத்துவது சமூகத்தில் நாம் கருதுகின்றோம்.
சிறப்பு அம்சங்களாக ஊர்வலம், கருத்தரங்கு, கலைநிகழ்ச்சிகள், தெய்வீக நாடகங்கள், சிவதீட்சை
வற்றிக்காக முன்னின்று உழைக்கும் ஆண்வரும் ற்பதாக,
ாழ்க
நகு மியல்பினால் ாளமு மோங்கி வர் வான்புகழ் வியுலகெலாம்
ΧΧί

Page 26
xxii
ஐந்தாவது உலகச் சே
த6ை கெளரவ அமைச்சர் கே. 6
கமத்தொழில்சார்ந்த விற்பனை அபிவிரு அலுவல்கள் அமைச்சு மற்றும் கல்வி வாழ்க்
மாநாட்டு ஏ செல்வி மகேஸ்
செயற்குழு உ திரு.கே. மகா செல்வி மகே திருமதி. சாந்தி
ஆய்வரங்கு
செல்வி மகேஸ்வரிவேலாயுதம் திருமதிசாந்திநாவுக்கரசன் திருமதி வசந்தா வைத்தியநாதன் திரு. இ.நமசிவாயம் திரு.எஸ். சரவணமுத்து திரு. தமிழ்வேள் கந்தசாமி
பொது நிக
திரு.என். கோணேஸ்வரன் திரு. ரி.யோகநாதன் புலவர் திருநாவுக்கரசு சிவகுருனாதன் அடிகள் திரு.என். மன்மதராஜன் திரு. எஸ். கந்தசாமி திரு. ஜெகசோதி
வரவேற்
திரு. வி. விக்ரமராஜா செல்வி ச நந்தினி திருப. விக்னராஜன் திரு.மெ. பாபுஜி திருமதி கே. நிர்மலா
திரு.ச.வி

க்கிழார் மாநாட்டுக்குழு
uᏛᏂᏝff ான். டக்ளஸ் தேவானந்தா
த்தி கூட்டுறவு அபிவிருத்தி, இந்து சமய கைத் தொழிற்பயிற்சிக்கு உதவும் அமைச்சு
ற்பாட்டாளர் வரிவேலாயுதம்
உறுப்பினர்கள் னந்தன் ஸ்வரிவேலாயுதம்
நாவுக்கரசன்
மலர்க் குழு
பேராசிரியர் சி. பத்மநாதன் திரு. க. இரகுபரன் திரு.எஸ்.தெய்வநாயகம் திரு.எம்.சண்முகநாதன்
ழ்ச்சிக் குழு
திருமதி ஹேமா ஷண்முகசர்மா திரு.யோகராஜன்பிள்ளை செல்வியே. உஷாஜினி செல்வி சு. பவானி திரு. மகா கணபதிப்பிள்ளை திரு.சிவமகாலிங்கம்
திரு.எம். எஸ். ரீதயாளன்
ற்புக்குழு
திரு.இரத்தினசபாபதி
திரு. ஆகந்தசாமி
திரு.சோக்கல்லோ சண்முகம்
திரு.பேரின்பநாயகம்
செல்வி க.தயாழினி வினோராஜ்

Page 27
39H6O2) |NMU) P_65 ಕಿ.
5th INTERNATİONAL (II)
25 SEPTEMB
 

5ápTÍ DTIETE FEREMCEM SEIKKAR Hዘ9, 1ዐቢ & 11

Page 28
5th INTERNATIONAL CONFERENCE ON SEKKIZHAR SRILANKA 9-10&11 September 2005
Inaugural Ceremony -9.9.2005
4.00pm Procession Commences from Old Kathiresan Temple and
terminates at New Kathresan Hall Bambalapitiya, Colombo.
5.00pm ... Arrival of Chief Guests. Lighting of Traditional Lamp.
5.15pm Welcome address by Convenor, Miss, aheshwary Velautham Consultant, Ministry of Hindu Religious Affairs.
5.30pm . Address by Thavathiru Shanthalinga Adikalar
Peruf, Atheenam, India.
540pm : Address by Hon, Sripala Gamalath,
Deputy Minister of Agricultural Marketing Developement and Co-operative Developement.
5.50pm . Address by Mr. K. Mahanandan, Secretary to the Ministry.
Address by Her Excellency Mrs. Nirupama Rao High Commissioner of India in Srilanka.
Address by Chief Gust. Hon. Mahinda Rajapakse, Prime Minister of Sri Lanka.
Address by Chair Person Hon, KN, Douglas Devananda M.P. Minster of Agricultural Marketing Developement and Co-operative Developement & Hindu Affairs.
Release of Books
1. Conference Souvenir.
2. Ministry activities to ensure Revival of Hindu Religion.
3. Hindu Kalai Kalanchiyam. Volume 7.
4. Hindu Kalai Kalanchiyam-Wolume 1 (Reprint)
5, Hindusim for Hindus artij Non Hindus
by Prof. C., Sooriyakumaran
6.45pm : Honouring of Saiva Sanroar,
7.00pm Cultural Programme. "Shiva Tharisanam"
3. Dance by Students of Nattiya Kala Manthir Composed by KalaSoori Wasuki Jagatheswaran :
8.00pm Cultural Programme Drama by Arcot
Sri, Mahalakshmi Widiyalaya Students, India,
9:00pm : Wote of Thanks Mrs, Shanthi Navukkarasan
Director, Department of Hindu Religious and Cultural Affairs,
xxiv.
 

தொடக்க விழா 9,9,2OO 5
s
பிற்பகல் 3.00 மணிக்கு பழைய கதிரேசன் கோயிலில் ஒன்றுகூடல். பழைய கதிரேசன் கோயிலிருந்து ஊர்வலம் 4.00 மணிக்கு புதிய கதிரேசன் மண்டபத்தை அடைதல்,
மாலை 8.00 திருவிளக்கேற்றல்
மாலை 5.00 பண்ணிகை
மாலை 55 வரவேற்புரை:செல்வி மகேஸ்வரி வேலாயுதம் மதியுரைஞர்
இந்துசமய அலுவல்கள் அமைச்சு, விழா ஏற்பாட்டாளர்.
மாலை 5.30 ஆசியுரைதவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார்.
பேரூர் ஆதீனம், இந்தியா,
மாலை 540 சிறப்பு விருந்தினர் உரை:கெளரவருபாலகமலத் அவர்கள் 劇 கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு
அபிவிருத்தீ பிரதி அமைச்சர்
மாலை 5.50 சிறப்புரை திரு கமகானந்தன், அமைச்சின் செயலாளர்.
மாலை 6.00 சிறப்பு விருந்தினர் உரை:
மேன்மைதங்கிய திருமதி நிருபமா ராவ், இந்தியதுதுவர்.
மாலை 6.0 பிரதம விருந்தினர் உரை-மாண்புமிகுமஹிந்தராஜபக்ஷ பிரதமர், இலங்கை சோஷலிசக் குடியரசு
மாலை 620 தலைமையுரை கௌரவ கேஎன்.டக்ளஸ்தேவானந்தா 緣 கமத்தொழில் சார்ந்த விற்பனை அபிவிருத்தி
கூட்டுறவு அபிவிருத்தி இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
! !!; ଲେଣ୍ଡାୟୈ :
1. ஐந்தாவதுவது உலக சேக்கிழார் மாநாட்டு மலர். 2. இந்து சமயமறுமலர்ச்சியை நோக்கிய அமைச்சின் செயற்பாடுகள் 3.இந்து கலைக்களஞ்சிய ஏழாம் தொகுதி 4. இந்து கலைக்களஞ்சியம் முதலாம் தொகுதி(மறுப்பதிப்பு) 5. Hinduism for Hindus and Non Hindusby Prof. C. Sooryakumaran,
1 மாலை 6.45 சைவ சான்றோர் கெளரவிப்பு
மாலை 700 கலைநிகழ்ச்சிகள்:
நாட்டியகலா மந்தின் வழங்கும்"சிவதரிசனம்" நாட்டியநெறியாள்கைகலாஆரிவாகக் ஜெகதீஸ்வரன்,
இரவு 8.00 நாடகம்:
வட ஆர்க்காடு ரீமகாலட்சுமி வித்தியாலய மாணவர்கள், இந்தியா.
இரவு 900 நன்றியுரை:திருமதிசாந்திநாவுக்கரசன்,
பணிப்பாளர், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம்.

Page 29
O.9,2OO5
: u଼s.
ஆசியுரைதவத்திரு சந்தலிங்க இராமசாமி அடிகளார்.
பேரூர் ஆதீனம், கோயம்பத்தூர், இந்தியா,
தலைமையுரை பேராசிரியர் சி. பத்மநாதன்.
: 、、。ងៃក្តៅ,
"பெரியபுராணம் காட்டும் சிவபூசை நெறி தலைவர் தமிழ்துறை தூயநெஞ்சக்கல்லூர்-திருப்பத்தூர் இந்தியா
கலாநிதி குமாரசுவாமி சோமசுந்தரம் சைவ ຂຶ
வித்துவான். திருமதி வசந்தா வைத்தியநாதன்,
காலை 10.30
ജ് ബ { $ଽ :1.00 );
####}}, {{3 :
ଽ : 1,30}} :
jistgaxxott.3.C) :
ust 12.10 :
క్షభ 12.303 :
ஆதி திசிைதை
use 2.40 :
use 3.00 :
காரைக்காலம்மையாரும் அவரது பிரபந்தங்களும்"
மகாவித்துவான். வே. சிவசுப்பிரமணியம், 'சிவம் பெருக்கும் சிந்தையர் சென்னை, இந்தியா,
ஆசியுரை நீலாரீசுவாமிநாத தேசிய ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள், நல்லை திருஞானசம்பந்த ஆதீனம்
தலைமையுரை திரு கம்பவாருதிஜெயராஜ்,
திரு.செ.வே. சதாநந்தன், "பெரியபுராணச்சிறப்பு தலைவர், சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை,
கலாநிதி இரகுபரன் பெரியபுராண கட்டமைப்பு"
திரு தமிழருவித சிவகுமாரன், “தொகையடியார்கள்
முனைவர்.திரு அரங்க இராமலிங்கம்-திருவைந்தெழுத்தின் உண்மை"தலைவர் தமிழ்த்துறை சென்னை பல்கலைக்கழகம்
தலைமையுரை திருமதி சாந்திநாவுக்கரசன் பணிப்பாளர். இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம்,
திருமதி ஹேமா சண்முக சர்மா, | தனிமனிதர் ஆளுமை வளர்ச்சிக்கு நாயன்மார்களின் பங்களிப்பு ee SummuS sOeeOLmmLTktS llLemlMOOLO sOeTOe TssLyyLS 目
பேராசிரியர் திரு.த. கே. சம்பந்தன்,
மேன்மைகொள் சைவ நீதி செய்யாறு, இந்தியா,
திரு ஆவி தட்சணாமூர்த்தி-பெரியபுராணசமுதாய நீதி
திரு சிவமகாலிங்கம்-பெரியபுராணத்தில் மகளிர்
உதவி பணிப்பாளர், இந்து சமய அலுவல்கள் திணைக்களம்.
கலந்துரையாடல்
நிருத்தன நடனப்பள்ளி வழங்கும் ஆனந்தக்கூத்து
நெறியாள்கை திருமதி சிவாநந்தீ ஹரிதர்ஷன்,
நாடகம்:ஆர்க்காடு ரீமகாலட்சுமி வித்தியாலய மாணவர்கள்.
: நன்றியுரை எஸ். தெய்வநாயகம்
உதவி பணிப்பாளர். இந்துசமய அலுவல்கள் திணைக்களம்
 

ఫీ
19, 2005
: 、。
ஆசியுரை:சீலத்திரு சீர்வளர்திருவம்பல தேசிக ஞானபிரகாச
பரமாச்சாரிய சுவாமிகள், காஞ்சிபுரம் மெய்கண்டார் பீடம், தொண்டைமண்டல ஆதீன232வது குரு மகாசன்னிதானம்
தலைமையுரை செல்வி மகேஸ்வரி வேலாயுதம்,
பண்தை சு.செல்லத்துரை.
சேக்கிழார் நோக்கில் கோமாதா குலப்பெருமை
திரு முருகு இராமலிங்கம் பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் நெறி
శీణిః కిణి ఃఖజీణ్యఃఖః
ដ្យ {3} ;
ଽ #C{} ;
భీః 3 :
பெரியபுராணத்தில் பக்தி முன்னாள் பீடாதிபதி கலைத்துறை
ஆசியுரை தவத்திரு ஊரன் அடிகள், வேகாருண்ய குடில், வடலூர், இந்தியா
ឆ្លួោះ ត្បិតយ៉ា,
தமிழ்த்துறைத்தலைவர் சென்னை பல்கலைக்கழகம் இந்தியா
திரு.செ. கந்தசத்தியதாசன்-வேதம் நான்கினும் វិញ្ច្រាំឆ្នា நமச்சிவயவே
சைவப்புலவர் திரு எஸ் அனுசந்தன்-திருவாவடுதுறை
ஆதீனப் பேச்சாளர்,"பெரியபுராணம் காட்டும் பூசைமுறைகள்
கலாநிதிதிருமதி நோ.கிருஷ்ணவேணி
"சைவசித்தாந்தத்தில் சீவன்முத்திக்கொள்கை
&& && ମୁଣ୍ଡି, $&js& "சேக்கிழார் தொண்டர் சீபரவலும் நம்பியாண்டார் பெருமானும் உதவிபணிப்பாளர்
(சமயக்கல்வி) இந்துசமய அலுவல்கள் திணைக்களம்
#భిణః பேராசிரியர் திருச ,、。 *ー தமிழ்பல்கலைக்கழகம்,தஞ்சாவூர் இந்தியா,
கலாநிதிக கணேசலிங்கம்-ஈழத்துச் சைவப் பாரம்பரியம்
、、320 ;
MKS 3.40 ;
தீருதீ லலிதா நடராஜன் BADp.சேக்கிழார் மாண்பு
திருத்தொண்டர்மாமணிதிருவயிநாராயணசாமி
சைவப்புலவர் திரு.மு.திருஞானசம்பந்தர்
சேக்கிழார் உணர்த்தும் உண்மைகள்"
ఊణిః ,
நன்றியுரைதிரும் சண்முகநாதன்-தகவல் அலுவலகர்

Page 30
XXVi
மாநாட்டின் ே சிவபூமி என்றழைக்கப்படும் இலங்கை
nopoliešie estsešo.
மனிதநேயத்தை வளர்த்து - மானுடத்தை வாழ வைக்க சைவ நெறி
assaupnitsroussoupsou esos sus
பக்தியால் உரைப்பட வேண்டிய ஞான
உய்வதற்கு பக்தி நெறியை பரப்பி சித்த வாழ்க்கை நெறியாகக் கொண்டு ஒழுகு
suburb என்பது வாதப் பிரதிவாதங்களுக் கருப்பொருளாகக் கொள்ளாமல், அை கலையாக மாற்றி அனுபவித்து உணர
உள்ளும் புறமும் எங்கும் வியாபித்து நீ
பரம்பொருளை அறிந்து உணர்ந்து அ முறைகளையும், தத்துவங்களை முதன்
பஞ்சாட்சர மந்திரத்தின் மகிமையை உ6
BLé 6&y=tiggssib.
ஓரறிவிலிருந்து ஆறு அறிவுள்ள சகல
மன்னுயிர்களிடையே சமத்துவத்தையு. சைவ நீதியை நிலை நாட்டி சகோதரத்து
சிந்தை மகிழும் தேவாரத்திருமுறைகை cipepüug sesszab. elsajbgÖsőt Ljuszosz
உலகமெல்லாம் பரந்து வாழும் சைவி சைவ நெறியில் நின்று ஆத்ம சக்திய
திருச்சிற்ற
 
 

நாக்கங்கள்
ைேல் சைலத்தி
hetoso: Lյունւ5&.
லதல்.
பரம்பொருளை உணர்ந்து த்தை சிவமாக்கும் சைவத்தை தல்.
sasi ISIKSI த வாழும் முறையாக வாழ்க்கைக்
படும் ஒன்றாக மாற்றியமைத்தல்.
க்கமற நிறைந்திருக்கும்
oகமெல்லாம் உணர்ந்து
ஜீவ றாகிகளிலும், தெய்வீகத்தையும் ம் காணுகின்ற மேன்மை கொள் •
bstr i serGs:xnG Repu RErn R rణజాణ బ_ణకు తిభణ_ తో భhణాళ3.
giri &&xଣrt &&ri&&ୱିr விக்க மக்களாக வாழ வைத்தல்.
நம்பலம்

Page 31
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
பொரு
சேக்கிழாரின் பெரியபுராணம் - ஒருகலைப்பெட்டகம் முனைவர். தா. நீலகண்டபிள்ளை
சேக்கிழார் செந்நெறி
பேராசிரியர் ச. அகத்தியலிங்கம்
அஞ்செழுத்தெனும் அருமறை மந்திரத்தை சிந்தித்
செல்வி மகேஸ்வரி வேலாயுதம்
சேக்கிழாரின் செஞ்சொல்திறம்
பேராசிரியர். மு. ஜோதிமணி
சேக்கிழார் புலப்படுத்தும் வாழ்வியல் நெறிகள் முனைவர் இரா. சந்திரசேகரன்
சேக்கிழார் பெருமானின் சொல்லறம்
டி. எஸ். தியாகராசன்
சேக்கிழார் நாயனார் அருளிய திருத்தொண்டர் புரா
தமிழ்வேள் இ. க. கந்தசுவாமி
சேக்கிழார் கண்ட இறையாண்மை
திருப்புகழ்க் காவலர் சேது முருகபூபதி
சேக்கிழார் காட்டும் திருமணம்
முதுமுனைவர் ம.சா. அறிவுடைநம்பி
சேக்கிழாரும் சேயிழையாரும்
முனைவர் செ. திருஞானசம்பந்தம்
சேக்கிழார் பனுவலில் சிந்தைக்கினிய முதற் பாடல்
முனைவர் ச. சாம்பசிவனார்
உலகெலாம் .
இ. ஜெயராஜ் சேக்கிழாரின் தமிழும் தமிழ்ப் பண்பாடும்
முனைவர் எச். சித்திரபுத்திரன்
சேக்கிழார் போற்றும் மகளிர்
முனைவர் க. திலகவதி
சேக்கிழாரின் சைவசித்தாந்தம்
கு. ர. சரளா ,
சைவ மகிமைக்கு நித்திய வாழ்வளித்த தெய்வச் ே
வ. பேரின்பநாயகம்
தொண்டு - கருத்தும் கணிப்பும்
கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம்
பெரியபுராணம் காட்டும் மெய்யுணர்வு புதுவை. வயி. நாராயணசாமி
மாண்பமை பிரதமர்
பெரியபுராணம் பேராளி ஈரோடு தங்க விசு
பெரியபுராணங் கூறும் வாழ்வியல் நெறிகள் திருத்தொண்டர் மாமணி ஆ. வீ. தட்சிணாமூர்த்தி
பெரிய புராணத்தில் ஐந்தெழுத்து மந்திரம்
ஏ. எம் சுவாமிநாதன்
சேக்கிழாரும் பெரிய புராணமும்
தேவகுமாரிஹரன்

ளடக்கம்
O
ருப்போர்க்கு சிவகதிதானே
09
12
15
19
னம் தமிழகத்தின் ஒளிவிளக்கு
24
28
32
37
61
65
69
சக்கிழார்
72
73
76
வநாதன் 79
83
86
88

Page 32
24,
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
45.
பெரியபுராணத்தில் காணப்படும் இசை
திருமதி ஜெயந்தினி விக்னராஜன்
பெரியபுராணச் சிறப்பு
செ.வே. சதாநந்தன் தெய்வக் குழலோசை கேட்குதம்மா !
வித்துவான் வசந்தா வைத்தியநாதன் (ஜே
பெரியபுராணம் உலகிற்கு வழங்கும் செய்தி
டாக்டர் சி. பாலசுப்பிரமணியம் பெரியபுராணத்தில் காவியப்பண்பு இந்திராதேவி சதானந்தன் பெரியபுராணம் காட்டும் சிவன் அடியார் பெருமை
திருமதி சாந்திநாவுக்கரசன்
நம்பியாரூரன் நாம் தொழும் தன்மையான்
கலாபூஷணம், பண்டிதர் சி. அப்புத்துரை
சைவசமயம் காட்டும் சமுதாய உணர்வுகள்
செல்வி, ச நந்தினி
மெய்த் தவவேடமே மெய்ப்பொருள் என்று தொழு
திருமதி தி. சுந்தராம்பாள்
தர்ம சோதனை
திருமதி திலகவதி மகானந்தன் பி.ஏ.(சிறப்பு
திருமூல நாயனார் புராணத்தின் உட்கிடை
டாக்டர் அரங்க இராமலிங்கம்
சேக்கிழார் பாடும் அரனடியார் தனிப்பெருமை
கனகசபாபதி நாகேஸ்வரன், (எம். ஏ)
உமாபதி சிவம் போற்றும் நால்வர்
அந்தாதி அன்பர் மா. தன. அருணாசலம்
சங்கம வழிபாடு
சைவப்புலவர், செ. கந்தசத்தியதாசன்
பிள்ளைத்தமிழும் பெரியபுராணமும்
பேராசிரியர் முனைவர். புரிசை. ச. நடராசன்
சிவபெருமானின் திருநின்ற செம்மை
முனைவர் க. இளமதி சானகிராமன்
பெரிய புராணச் சிறப்பும் பயனும்
நி.நித்தியவதி
பெரியபுராணம் உணர்த்தும் வாழ்வியல் நெறிகள்
முருகு இராமலிங்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே! சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம்
நம்பியாண்டார் நம்பி அடிகள் பங்களிப்பில் சேக்கி
சைவப்புலவர் எம். எஸ். பூரீதயாளன்
சேக்கிழாரின் தெய்வப்புலமையில் ஞானசம்பந்தரின் கலாபூஷணம், சைவப் புலவர் சு. செல்லத்
பெரியபுராணம் வெளிப்படுத்தும் பக்தி ரசம்
கலாநிதி ஏ. என். கிருஷ்ணவேணி
சேக்கிழார் ஈந்த பெரிய புராணம்
பருத்தியூர் - பால - வயிரவநாதன்

ரி)
த வென்றவர்
1) தமிழ்
ழார் பெரியபுராணம்
நாமச் செழுமை துரை
91
100
103
111
16
119
122
125
128
132
137
143
148
15
153
156
160
163
167
169
75

Page 33
闵 منبع عمده بویران.
ရွီးဋ္ဌိဗ်ာနှီဒွိဋ္ဌိဂိုဂ္ဂိဒ္ဓိ
ரின் விபரியபுர
- முனைவர். தா. 虚 முதுநிலைத் தமிழ் விரிவுரை நாகர்கோவி
Uக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ என்று பாராட்டும்படியாக காப்பியம் இயற்றியவர் சேக்கிழார் பெருமான். பெரியபுராணத்துள் பக்திச் சுவையுடன் பல்வேறு செய்திக் கூறுகளும் இழையோடக் காணமுடிகின்றது. காப்பியத்துள் தமிழ்ப்பற்று, வரலாற்று உண்மைகள், இல்லறக் கருத்துக்கள், வாழ்வியல் கூறுகள், இலக்கிய நயம் எனக் காப்பியம் முழுமையும் ஒரு கலைப்பெட்டகமாகவே அமைந்து விளங்குகின்றது. அவரது நோக்கம் பக்தியை மேம்படுத்தல் என்றாலும், கூர்ந்து நோக்கினால் பிற கருத்துக்களும் அதனுள் காணமுடிகின்றது.
இன்தமிழ் உணர்வு
தமிழ் இலக்கியம் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு தன்மை பெற்று விளங்குவதை அதன் போக்குநோக்கு வகையால் உணரமுடிகின்றது. சேக்கிழார் காலத்து இலக்கியங்களில் வடசொற்கள் பெருகி இருந்த காலம். சேக்கிழார் தம் பெரிய புராணத்துள், வடசொற்களை நீக்கி நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி இருப்பது அவரது தமிழ்ப்பற்றுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். சேக்கிழார் தமிழும் சைவமும் தழைத்தோங்க வேண்டும் என்னும் பேரார்வம் உடையவராய்க் காணப்பட்டமை அறியமுடிகின்றது.
திருஞானசம்பந்தரின் அவதாரத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது தமிழ் செய்த தவத்தால் அவதரித்தார் என்கிறார்.
அண்டர்குலம் அதிசயிப்பு அந்தணர் ஆகுதிபெருக வண்தமிழ்செய்தவம் நிரம்ப மாதவத்தோர் செயல்வாய்ப்ப என்றுரைக்கின்றார்.
செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல’
என்னும் தொடரின் மூலம் இறைவனுக்குச் செய்யும் அபிசேகம், அர்ச்சனை, பூசை முதலியவற்றை வடமொழியில் செய்வதைக் காட்டிலும் தமிழில் செய்வதே சிறப்பு என்பதை உணர்த்து கின்றார். ஞானசம்பந்தரைச் ‘செந்தமிழ் ஞானசம்பந்தர்' என்றும் அவர் நிறை தமிழின் சொன்மாலை நிகழப்பாடினார் என்றும் கூறுகின்றார். ஞானசம்பந்தரின் பதிகங்களை இன்னிசை ஏழும் இசைந்தசெந்தமிழ் எனப் போற்றுகின்றார். சுந்தரமூர்த்திசுவாமிகள் பதிகத்துள் அவர் பிறந்த நாடு பற்றிக்
drdagri pagat pai 2005
 
 
 
 

O
ம்- ஒருகலைப்லபட்டகம்
soa56, L156ira D6T -
ாளர், தெ.தி. இந்துக்கல்லூரி, ல், தமிழ்நாடு.
கூறும்போது பாட்டியல் தமிழுரை பயின்ற எல்லையுள்' என்று குறிப்பிட்டுத் தொடங்குகின்றார். அவரது பதிகத்துள் நாட்டு வளம் கூறத் தொடங்கும்போதும் நற்றமிழ் வரைப்பின் ஓங்கு நாம் புகழ்த் திருநாடு எனத் தமிழ்உணர்வுடன் பாடுகின்றார். சுந்தரரை 'சொல்லார் தமிழ் இசை பாடிய தொண்டன், செஞ்சொற்றமிழ் நாவலர் கோன்’ என்கிறார். நாவுக்கரசரை ‘இன்றமிழ் ஈசர்’ எனவும் உரைக்கின்றார். இவை சேக்கிழாரின் உடல், உள்ளம், உயிர், உணர்வு எல்லாம் தமிழ் மயமாக இருந்தமையைக் காட்டுகின்றது.
வரலாற்று உணர்வு
சேக்கிழார் பெருமான் அனபாயச் சோழனின் தலைமை அமைச்சராக விளங்கியவர். அமைச்சியலில் மக்கள் வாழ் வையும் அரசியலையும் நன்கு உணர இயலும். சேக்கிழார் அதனைச் செம்மையுறச் செய்துள்ளார். நாட்டின் அரசியல், மக்கள் வாழ்வியல், பழக்க வழக்கங்கள், பண்பாடு போன்ற வற்றைத் தம் பாடல்கள் வாயிலாக உரைக்கின்றார். சேக்கிழார் பாடல்கள் வழி சேரமான் பெருமாள் என்ற சேரமன்னன்; கோச்செங்கட் சோழன், புகழ்ச்சோழன் என்றும் சோழமன்னர்கள்; நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசி என்ற பாண்டிய மன்னர்கள்; மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர், பெருமிழலைக்குறும்பர், இடங்கழி நாயனார் என்னும் குறுநில மன்னர்கள்; சிறுத் தொண்டர், மாணக்கஞ்சாறர், ஏயர்கோன் கலிக்காமர், கோட்புலியார் என்ற படைத்தலைவர்கள்; குலச்சிறையார் என்ற அமைச்சர் பற்றிய குறிப்புகளை அறியமுடிகின்றது. இவர்களின் ஆட்சி, நிதி, நிர்வாகம், குடிமக்கள் இயல்பு என பல நிலைகளை அறியமுடிகின்றது.
மனுநீதிச் சோழன் வரலாற்றுக் கல்வெட்டுச் செய்திகளை 38 பாடல்கள் வழி காட்டுகின்றார். தண்டியடிகளுக்கும், சமணர்களுக்கும், இடையே ஏற்பட்ட வாதங்களைச் சோழ மன்னன் தீர்த்து வைத்த செய்தியைப் பெரியபுராணத்துள் காணமுடிகின்றது.
நாட்டில் ஏற்பட்ட வறுமை, பஞ்சம், நீதிமன்ற நடவடிக் கைகள், ஆட்சி, காட்சி, ஆவணம் என்ற அடிப்படையில் நீதி வழங்கியமை, சைவர்கள் நடத்திய திருமணமுறைகள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். பேராசிரியர் அ. ச. ஞான
1

Page 34
சம்பந்தன் “பெரியபுராணம் அறுபத்து மூவர் வரலாற்றையே கூறும் என்றாலும் அவர்தம் சரிதம், தமிழகச் சமுதாய வரலாறு ஆகியவற்றுடன் தமிழ்நாட்டு வரலாறு என மூன்றையும் குறிப் பிட்ட அளவில் கலந்து படைக்கப்பட்டது”என்று குறிப்பிட்டுள் ளார். இது சேக்கிழார் பெருமானின் புலமைத் திறத்தைக் காட்டுகின்றது.
பெரியபுராணம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்தாலும் அதனுள் பெளராணிகத்தையும் காணலாம். வரலாற்றுக் குறிப்புகள் மிகுந்த வரலாற்று நூல் எனினும் மிகையில்லை.
இல்லறக் குறிப்புகள்
மனிதன் நல்ல குறிக்கோளுடன் வாழ வேண்டும். குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்பார் அப்பர்பெருமான். குறிக்கோளுடன் வாழ்பவனே மனிதன். குறிக்கோள் விசாலமானதாக அமைதல் வேண்டும். குறிக்கோளின் பெருமை குறிக்கோளில் இல்லை. அதனைச் செய்து முடிக்கும் மனதில்தான் உள்ளது. குறிக்கோளை அடைய உயிரையும் கொடுத்தல் வேண்டும். மக்கள் சேவையே மகேசன் சேவையாகும். இதனைத் திருமூலர்
நடமாடும் கோயில் நம்பர்க் கொன்றியின் படமாடும் கோயில் பரமற்கங்கு ஆமே”
எனக் குறிப்பிடுகின்றார்.
சேவை என்பது இல்லறத்திலும் உண்டு. இல்லறம்
என்பது பிறருக்காக வாழ்தலாகும். கற்புநெறி பிழையாது விட்டுக்கொடுத்து வாழ்வது, ஒருவர் கொள்கையோடு ஒருவர் ஒருங்கிணைந்து போவது, ஒருவர் தவறு செய்யும் போது மற்றொருவர் சுட்டிக்காட்டித் திருத்துதல், செய்வது யாது என அறியாமல் திணறும் போது ஆலோசனை கூறுதல் இவை யெல்லாம் இருபாலாரிடமும் இருக்க வேண்டிய இல்லற தர்மம் ஆகும்.
திருநீலகண்டர் வாழ்வில் ஏற்பட்ட சிக்கல் பிறர் அறியா வண்ணம் இருந்தது. திருவோடு வாயிலாகச் சிக்கலையும் தீர்த்து அவர்களின் கற்புநெறியும் காக்கப்பட்டது. தீண்டு வீராயின் திருநீலகண்டம் என்ற வாக்கினை இருவரும் காத்து நின்றனர். மாது சொன்ன சூளால் இளமை கெட்டு இறையருளால் மீண்டும் பெற்றனர்.
இயற்பகை நாயனாரிடம் வந்த அடியவர், உம்மிடம் யாம் இரக்க வந்தனம்' என்றார். அதற்கு நாயனார்
"பாதும் ஒன்றும் என் பக்கலுண்டாகில் அன்ன தெம்பிரான் அடியவர் உடமை ஐயமில்லை நீர் அருள்செய்யும்”
என்றார். வந்தவரோ நாயனாரின் மனைவியைக் கேட்க
2

---- “விதி மணக்குல மடந்தை இன்றுனை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்” என்கிறார். மனைவியாரும்,
“என்னுயிர்க்கொரு நாத நீர் உரைத்தது ஒன்றைச் செய்யும் அத்தனை அல்லால் உரிமை வேறுள தோஎனக்கு” என்று ஒப்புதல் தருகின்றார். கணவனின் கொள்கையில் ஒன்றும் மனைவி காட்டப்படுகின்றாள்.
இளையான்குடி மாறனார் தம் வீட்டில் உணவுப்பொருள் இல்லாத போதும், மனைவி அறிவுறுத்தலால் மழைக் காலத்தில் வயலில் விதைத்த நெல்லைப் பொறுக்கி எடுத்து வந்து கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து அடியாருக்கு விருந்து படைக்கின்றனர்.
தம் மகன் சீராளனை தாங்களே அறுத்து பிள்ளைக்கறி செய்து வழங்கிய சிறுத்தொண்டர், மாங்கனி ஒன்றினை கணவனுக்காக வரவழைத்த காரைக்கால் அம்மையார் என பெரியபுராண இல்லற நெறிகள் அமையும். சேக்கிழார், கணவன் சொல்லைக் கேட்டு நடக்கும் மனைவியால் இல்லற மாண்பு பெருகும் என்பதை அறிவிக்கின்றார்.
புகழ்புரிந்த இல்இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடுநடை' என்ற வள்ளுவர் குறளும் இதனை வலியுறுத்துகின்றது.
வாழ்வியல் நெறிகள்
சேக்கிழார் மனித வாழ்வியல் நெறிகளைச் சொல் வதற்காகவே பெரியபுராணத்தைப் படைத்துள்ளார். தம் காப்பியத்துள் வீடுபேற்றை அடையும் வழிவகைகளைக் கூறுகின்றார். இன்ப நுகர்வு மட்டுமே உடைய சமூகத்தை நன்னெறி சமூகமாக மாற்ற நினைக்கின்றார். பெரியபுராண அடியவர்கள் சைவசமயம் என்ற ஒருமைப்பாட்டால் இணைந் தவர்கள். செல்வம், தொழில், சாதி பழக்கங்களால் வேறுபட்ட வர்கள். ஆயின் மாதொரு பாகன்மேல் கொண்ட அன்பினால் ஒருங்கிணைந்தவர்கள். இவர்களில் ஆண் பாலாரும் பெண் பாலாரும் உளர். இல்லறத்தார், யோகியர், துறவியர், ஞானியர், திருமணம் செய்யாதார் எனப் பல திறத்தவர் உளர். ஆயின் இவர் தம் குடும்பத்தாரோடு இணைந்து இறைபணி புரிந் தனர். மன்னனுக்கு தனி நீதி கிடையாது, பெற்றோர் சொல் கேட்கும் நல்ல குழந்தைகள், உணவு நீர் வார்த்தல் சிவநெறி நிற்றல் என பல வாழ்வியல் நெறிகளை உணர்த்துகின்றார்.
லக்கிய கயம் இ நி
சேக்கிழாரின் காப்பியத்துள் பல்வேறு அணிநயங்கள், வியக்க வைக்கும் உவமை நயங்கள், சொல் நயங்கள், சொல்லாட்சித் திறங்கள் போன்றன சிறப்பாக அமைந்து
6erắágrif gaath gaof 2oo5

Page 35
விளங்குகின்றன. இலக்கியம் உண்மையும், அழகும் நிரம்பியது. உயர்ந்த சிந்தனைகளின் அனுபவப் பிழிவாக நவில்தொறும் நூல் நயம் போல் இலக்கியச் சொல் நயங்களை நூல்முழு வதும் சிறப்புடன் காட்டுகின்றார். எண்கள் நூலில் இடம் பெற்று அவை அமையும் சிறப்பினை ஒரு பாடல் உணர்த்துகின்றது.
“செம்மை வெண்ணிற்றொருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார் மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு வேதம்முறை பயின்றார் தம்மை ஐந்து புலனும் பின்செல்லும் தகையார் அறுதொழிலின் மெய்ம்மை ஒழுக்கம் ஏழுலகம் போற்றும் மறையோர் விளங்குவது”
என்ற சண்டேசுவர நாயனார் புராணப் பாடலில் ஒன்று முதல் ஏழு வரை எண்கள் முறைப்பட அமைந்துள்ள நயம் சிறப்பிற்குரியதாகும்.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் தொண்டை நாட்டின் திணை வளத்தைப் பல பாக்களில் பாடியுள்ளார்.
(6)
மானிடராய்ப் பிறந்த நாம் மனம், மொழி, மெய
மனத்தால் செய்யும் அறம் கடவுள் உணர்வும், ! ஆண்டவன் திருநாமம் ஒதிப் புகழ்பாடுதலும் கூறுதலும் ஆகும்.
உடலால் புரியும் அறம் பதியை மலர் கொ பிற உயிர்கட்கு நன்மை செய்தலுமாம்.
ܢ
6riáirgnif signtó Ipswif 2005

"தாவில் செம்மணி அருவி ஆறு இழிவன சாரல் பூவில் வண்டினம் புதுநறவு அருந்துவ புறவம் வாவிநீள்கயல் வரம்பிற உவகைப்பன மருதம் நீவிநித்திலம் பரத்தையர் உனக்குவ நெய்தல்”
என்ற பாடலில் மலைச்சாரலில் இருந்து மணிகளுடன் அருவிகள் இறங்குவன; வண்டினங்கள் பூவில் நறவு அருந்துவன; முல்லை வாவியில் உள்ள கயல்மீன்கள் கரை உடைந்திட தாவுவன; மருத முத்துக்கள் நெய்தல் நிலப் பெண்களால் கழுவி உலர்த்தப்படுவன என தினை வருணனையை அழகுற அமைத்துள்ளார். சைவ சமய கருத்துக்களோடு வாழ்வியல் முறைகளை பல்வேறு நயங்களுடன் அணிநயம், சொல்லாட்சி நயங்கள், உவமை நயங்கள், தமிழ் உணர்வுகளுடன் தன் காப்பியத்தை வடிவமைப்பு செய்துள்ளார்.
சமூக நீதி, அரசியல் நீதி, வாழ்வியல் நீதி என பல நெறிகளைச் சொல்லும்போது அன்றைய வரலாற்றுச் செய்திகள், அரசியல் செய்திகளையும் சொல்லி பெரிய புராணத்தைச் சேக்கிழார் பெருமான் ஒரு கலைப் பொக்கிஷமாகவே படைத்துள்ளார்.
O N
ADID
ப் ஆகிய மூன்றாலும் அறம்புரிய வேண்டும்.
நற் சிந்தனையும் ஆகும்.மொழியால் புரியும் அறம் ம், பிறருக்குத் துன்பம் பயலாத மொழிகளைக்
ண்டு பரவுதல், அடியார்க்குத்தொண்டு பூணுதல்,
الم

Page 36
சேக்கிழார்
- egrifu F. 9
சேக்கிழார் சிறந்த ஒரு சிவநேயச் செல்வர். சைவமும்
தமிழும் தழைக்கத் திருத் தொண்டர் புராணம் செய்தருளி தம்மை அமரராக்கிக் கொண்டவர். சிவநேயச் செல்வராகவும் சிறப்புமிக்க புலவர் பெருமானாகவும் வாழ்ந்தவர்.
அருள் மொழித் தேவர் என்றும் அநபாயச் சோழனால் உத்தம சோழப் பல்லவன் என்றும் தில்லைத் திருப்பதியில் “தொண்டர் சீர் பரவுவார்’ என்றும், எல்லாவற்றுக்கும் மேலாகப் “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” என்றும், மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையால் பாராட்டப் பெற்ற சேக்கிழார் பெருமான், தித்திக்கும் தீந்தமிழில் தெய்வ நெறியையும் சைவத் திருநெறியையும் கலந்து ஆக்கிய கடவுள் காப்பியம் தான் திருத்தொண்டர் புராணம் என்று கூறப்படும் பெரிய புராணம். பெரிய புராணம் என்றாலே பெருமையையுடைய புராணம், பேரளவிலான புராணம், பெரும் புகழ் புராணம் எனப்பல்வேறு பொருள்களைக் குறிக்கும் என்றாலும் பெருமைக்குரியபெருந் தொண்டர்களின் கதையைக் கூறும் பெரிய புராணம் எனப் பொருள் கொள்ளுவது பொருத்தமாகும். இதனையே சேக்கிழார்
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய் என்றும்
இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் தங்கு இருள் இரண்டில் மக்கள் சிந்தையுள் சார்ந்துநின்ற பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற செங்க திரவன் போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம் ” எனக் கூறுகிறார். சேக்கிழார் சிறந்த கவிஞர். 4000க்கும் அதிகமான அருட் கவிதைகளில் தன்னுடைய நூலைப் பாடியவர். சிறந்த கற்பனைத்திறம், செம்மையான கவிதை நுணுக்கம், சிறப்பான கதைப்போக்கு, உள்ளத்தைத் தொடும் உயர்ந்த எண்ணங்கள் எனச் சிறந்த கவிதைப் பாங்குகளைக் கருவிலே பெற்ற ஒரு கவிஞர். இந்நிலை மட்டுமல்லாமல் சிவநேசச் செல்வர். “சிந்தை செய்வது சிவன் கழல் அல்ல தொன்றில்லார்’ (அமர் நீதி நாயனார். 3) எனக் கூறுவதற் கேற்ப, சிவன் கழலையே தன்னுடைய சிந்தையில் வைத்து
4
 

செந்நெறி
கத்தியலிங்கம் -
வாழ்ந்தவர். அம்பலத்து ஆடு வானை “அன்பின் மிக்க தொண்டர் தம் சிந்தை நீங்கா துறையும் அந்நிலை அரனை” தன் தெய்வமாகக் கொண்டு வாழும் நிலையில் தான் ஏரூர்ந்த எழில் பிரான் பற்றிப் பாட விழைந்தார்.
சேக்கிழார் சிவநேசச் செல்வர் மட்டுமல்ல, வரலாற்று உணர்வைத் தம் உள்ளத்தில் வளமாகக் கொண்டவர். அநபாயனின் அமைச்சராக இருந்த நிலையில், சோணாடு நடுநாடு போன்ற நாடுகளில் எல்லாம் சென்று வரும் செல்வ நிலையையும் பெற்றிருந்தார். சென்ற இடமெல்லாம் சிவநேயச் செல்வர்களின் வாழ்வைக் கண்டறிந்தார், கற்றறிந்தார். கண்டவற்றையும், கற்றவற்றையும் கேட்டுத் தெளிந்து, ஆய்ந்து அறிந்து அவர்களின் உணர்வைத் தம் உள்ளத்தில் பதிவு செய்து கொண்டார். இந்நிலையில்தான் சாத்திரங்களும் தோத்திரங்களும் போதாது என்று எண்ணி, வரலாறு கலந்து வளமான ஒரு தோத்திர நூல் ஆக்க முனைந்தார். இதனால் தான் இவர் ஆக்கிய பெரிய புராணம் சரித்திர நூலாக வரலாற்று நூலாக சிலரால் கருதப்படுகின்றது. தோத்திரத்தில் சரித்திரம் என்ற நிலையை உடையது இது இதே நிலையினைச் சுந்தரரின் திருத்தொண்டர் தொகையினும், நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியிலும் காணலாம்.
தமிழில் உள்ள நூல்களின் வகைகளில் சிறந்த நூல்களைப் பட்டியலிடும் உமாபதி சிவாச்சாரியார்,
"வள்ளுவர்சீர் அன்பர்மொழிவாசகம் தொல்காப்பியமே தெள்ளுபரிமேலழகன் செய்தவுரை- ஒள்ளிய சீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந்தரம்” எனக் கூறிப் போந்தார்.
மேலும் இந்நூலின் பன்முகப் பார்வையை முன்னிட்டு இக்காப்பியப் பெருநூலை சீர்திருத்தச் செந்தமிழ்க் காப்பியம் (Revolutionary Epic) என்றும் நாடகக் காப்பியம் என்றும் (Dramatic Epic) fupg|Tuš5Tülub ST6ürgh (SocialEpic) சமய பெருங் காப்பியம் (Religious Epic) என்றும், தமிழகத்தின் பண்டைய வரலாற்றுக் கூற்றினைக் காட்டும் நிலையில் வரலாற்றுக் காப்பியம் (Historical Epic) என்றும், பல்வேறு வகையாக ஆராய்ச்சியாளர் ஆராய்ந்து கூறுவர். இதுபற்றிப் பேசும் போப் இதனை வியக்கத்தகு பெருங்காப்பியம் (Marvellous Epic) என்றும் வியந்து போற்றுவார்.
Gerdégaf 19argareb pedoff 2005

Page 37
Every Tamil Student Should read the truly Marvellous Epic.
என்பது அவர் கூற்று. இதைத் தான் உமாபதி சிவாசாரியார்”
'ஒள்ளிய சீர்த் தொண்டர் புராணம்' என்றார்.
அடியார்கள் ஆண்டவனுக்கு ஒப்பானவர் என்பது சைவ சமயாசாரியர்களிடம் காணப்படும் ஒரு பண்பு. அடியவர் களுக்குச் செய்யும் தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு என எண்ணினர். வைணவப் பாரம்பரியத்தில் திரு வுடை மன்னனைக் காணின் திருமாலைக் கண்டேன். எனப் படுவது உணரத்தக்கது. இதே கருத்தை வேறொரு நிலை யில் திருமூலர்,
நடமாடக் கோயில் நம்பர்க் கொன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆகுமே” என்று கூறுவார். சிவஞான போதமும் (12)
“செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
அம்மலங்கழிஇ அன்பரொடு மரிஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” எனக் கூறும்.
இந்நிலையில் தான் சேக்கிழார், ஆண்டவனின் அடியார் களின் வரலாற்றையே பாடு பொருளாகக் கொண்டு தம் புராணத்தை இயற்றினார். மக்களிடையே பிறந்து, மக்களிடையே வாழ்ந்து, மக்களுக்கு தொண்டாற்றி வாழ்ந்தவர்களின் மாபெரும் வரலாறு தான் “மாக்கதை’ என்னும் பெரியபுராணம்.
உலகில் வாழ்ந்த அடியரர்களை மையமாகக் கொண்டு ஒதுதற்கரியவனை அலகில் சோதியனை , அம்பலத்தாடு பவனைப் பாடி மகிழும் புராணம் தான் பெரியபுராணம். இதைத்தான் பெரியபுராணத்தின் பாயிரமாக, கடவுள் வாழ்த்தாக வரும்,
“உலகெலாம் உணர்ந்து ஒதுதற்கு அரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர்ச்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்” என்ற பாடல் காட்டுகின்றது.
உலகு என்ற சொல் தான் பெரியபுராணத்தின் முதல் சொல். இச்சொல் உலகமக்களைக் குறிப்பதாகக் கருதலாம். இதற்குச் “சிவஞானம் பெற்ற அறிஞர்கள்” என்றும் “உயிர்கள்” என்றும் பலவாறாகப் பொருள் கொள்ளப்படினும் ‘உலக மக்கள்’ எனப் பொருள் கொள்ளுதல் பொருந்தும்.
சிறந்த கவிதைகளைப் பற்றிப் பேசும் கிரேக்க நூல்கள் “அவை மக்களைப் பற்றிப் பேசவேண்டும்” என்பர். இந்நிலை யில் பெரிய புராணமும் உலகு வாழ் மக்களைப் பற்றியும் அவர்களின் அடியவர்களின் அநுபவம் , கொள்கை,
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

கோட்பாடுகள் பற்றியும் பேசுவது என்று கொள்ளலாம். சிவஞானச் செல்வங்களாக வாழ்ந்த திரு அடியார்களைப் பற்றிப் பேசுவது இது
வள்ளுவர் தம் குறளை,
"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு”
எனத் தொடங்குவது காணத்தக்கது. மேலும் வள்ளுவர் தம் கடவுள் வாழ்த்தை ஒவ்வொரு பாடலிலும் மக்களை முன்னிறுத்தியே கூறிச் செல்லுவதும் உணரத் தக்கது. இறை வனை “வாலறிவன்” என்றும், மலர்மிசை ஏகினான் என்றும் “வேண்டுதல் வேண்டாமை இலான்” என்றும் இன்னோரன்ன அவன் கல்யாண குணங்களைக் கூறவரும் வள்ளுவர்,
"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்’ என்றும்,
"மலர்மிசை ஏகினான் மானடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்” என்றும்,
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல ۔۔۔۔ என்றும் ஒவ்வொரு பாடலிலும் மக்களை இணைத்தே கூறுவது காணத்தக்கது.
இறைவனை 'வாலறிவன்’ என்று கூற வந்த வள்ளுவர் அதனை மக்களோடு இணைத்து “கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றார் தொழார் எனின்” என்றும் இறைவனை 'மலர்மிசை ஏகினான்’ எனக்கூற வந்தவர் அவனுட்ைய மாணடியில் மக்கள் சேரவேண்டும் என்றும் அவ் வாறு சேருபவர்கள் நிலமிசை நீடுவாழ்வார் என்றும் இவ்வாறு ஒவ்வொரு பாடலிலும் இறைவனையும் மக்களையும் இணைத்தே பேசுவது காணத்தக்கது.
இவ்வாறு இறைவனையும் அவனோடு அவன்தன் பக்தர் களையும் ஒருங்கு வைத்து எண்ணிய வள்ளுவரைப் பின் பற்றித்தான் ஒதற்கரியவன், அலகில் சோதியன் அம்பலத் தாடுவானை உலக அடியார்களுடன் இணைத்து காப்பியம் ஆக்கி மகிழ்ந்தார், வள்ளுவர் வழி வந்த சேக்கிழார்.
உலகமக்களைப் மையப்படுத்தி ஆக்கப்பட்டது பெரிய புராணம். இது சேக்கிழாரின் எண்ணம் மட்டுமல்ல அது. ஏறுார்ந்த செல்வனின் எண்ணமும் அதுதான் என்பதுபோலத் தான் 'உலகெலாம் என ஆலமர் செல்வன் அடியெடுத்துக் கொடுத்தான் என எண்ணுவதில் தவறு எதுவும் இல்லை.
பெரியபுராணத்துக்கு முதல் நூலாக விளங்கும் திருத்தொண்டர் தொகையும், திருவாரூர்ப் பெருமான் சுந்தரர்க்கு அடியெடுத்துக் கொடுத்த நிலையில் பிறந்தது அங்கும் திருவாரூர்ப் பெருமான்.

Page 38
“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத்துக் கொடுத்தது நினைவு கூரத்தக்கது. பன்னெடும் காலமாக அடியார்களின் சரித்திரம் பாடப்பட வேண்டும் என ஏறுார்ந்த செல்வன் எண்ணியிருந்தான் போலும் எனவே சிவனடியார்களைப் பாடுவதும் சிவனுக்கு உகந்த ஒன்று என்று எண்ணலாம். இந்நிலையில்தான் சுந்தரர்
“தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன்” எனத்தம் திருத்தொண்டத் தொகையைத் தொடங்கிப் பதினொரு பாடல்களில் முடித்தார் என எண்ணலாம். அதே நிலையைத்தான் சேக்கிழாரும் பெற்றார் எனக் கருதலாம். இறைவன் அடியார்களைப் பாடுவதும், பேசுவதும் இறை வனையே பாடுவதும் பேசுவதும் என்ற நிலையில்தான் பெரியபுராணம் தோன்றிற்று. திருவாரூரில் அடியெடுத்துக் கொடுத்தது திருத்தொண்டர் தொகை ஆயிற்று. தில்லையில் அடியெடுத்துக் கொடுத்தது பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் ஆயிற்று. இரண்டுநூல்களுமே அடியார்களைப் பற்றியவை. அவர்களின் அருள் வாழ்வைப் பற்றியவை. ஆலமர் செல்வனிடம் அவர்கள் கொண்டுள்ள பக்தியையும் பாசத்தையும் பற்றியவை
சைவசமயம் பற்றி எழுந்த புராணங்களில் பெரியபுராணம் திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் ஆகிய மூன்று புராணங்களும் முக்கியமான புராணங்கள். இவற்றுள் திருவிளையாடற் புராணம் இறைவன், திருவிளையாடல்களை மையமாக வைத்து ஆக்கப்பட்டது. கந்தபுராணம் கந்தனது தீரவீரச் செயல்களைப் பாடுபொருளாகக் கொண்டது. ஆனால் திருத்தொண்டர் புராணமோ திருத்தொண்டர்களின் அருள் வாழ்க்கையை மையமாகக் கொண்டது.
திருத்தொண்டர்புராணம் திருத்தொண்டர்களைத் தான் மையமாகக் கொண்டது என்பதை மிகத் தெளிவாகச் சேக்கிழார்.
“அளவு இலாத பெருமையர் ஆகிய
அளவு இலா அடி யார் புகழ் கூறுகேன் அளவு கூட உரைப்ப அரிது ஆயினும் அளவு இல் ஆசைதுரப்ப அறைகுவேன்”
என்பார்.இது மட்டுமல்லாமல் அடியார்களின் பெருமையைத் தடுத்தாட்கொண்ட புராணத்தில்,
“பெருமையால் நம்மை ஒப்பார்
பேனலால் நம்மைப் பெற்றார்
ஒருமையால் உலகை வெல்வார்
ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
அருமையாம்நிலையில் நின்றார்
அன்பினால் இன்பம் ஆர்வார்
இருமையும் கடந்துநின்றார்”
(இவரை நீஅடைவாய்)
எனக் கூறுவதும் காணத்தக்கது.

சிவநேயச் செல்வர்களிடம் எத்தனையோ சிறந்த பண்பு கள் உண்டு. செம்மாந்த அவர்கள் வாழ்வில், எத்தனையோ அற்புதங்கள் உண்டு, பக்தி உண்டு, பாசம் உண்டு, தொண்டு உண்டு, தூய உள்ளம் உண்டு. தன்னைக் கொடுப்பார்கள். தன் கண்ணைக் கொடுப்பார்கள். தன்மகனைக் கொடுப் பார்கள். தன்மனைவியையே கொடுப்பார்கள். ஏறுார்ந்த செல்வன் என்றால், இல்லை அவன்அடியார்கள் என்றால் எதையும் கொடுத்து ஏற்றம் மிகக் கொண்டு நிற்பார்கள்.
தன்னைக் கொடுத்தவர். தன்தலையைக் கொடுத்தவர். ஏனாதிநாயனார். தன் கண்ணைக் கொடுத்தவர் கண்ணப்ப நாயனார். தன் ஒரே மகனை அரிந்து கொடுத்தவர் சிறுத் தொண்ட நாயனார்.தன் மனைவியையே தாரை வார்த்து தனியே அழைத்துச் சென்றுவிட்டவர் இயற்பகை நாயனார். தன் தந்தையின் காலை வெட்டிச் சாய்த்தவர் சண்டேசுவரர் நாயனார். தன்னையும் தன்மனைவியையும் மக்களையும் என எல்லாவற்றையும் கொடுத்தவர் அமர்நீதி நாயனார் என அடுக்கிக் கொண்டே போகலாம். தியாகத் தழும்பில் பூத்துத் தியாக வேள்வியில் எதை எதையெல்லாம் வேள்விப் பொருளாக்கி நிலவுலாவிய நீர்மலி வேனியனிடம் சரணடைந்த வர்கள் இவர்கள்.
இவற்றை மட்டுமா செய்தார்கள் அவர்கள்?தமிழை வளர்த்தவர்கள். தமிழ்க் கவிதைகளால் ஆண்டவனை அர்ச்சித்தார்கள்.
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே எனத் தலை நிமிர்ந்து கூறினார்கள்.
பக்தி இலக்கியம் என்று பாரில் எங்கும் இல்லாத வகையில் ஒரு புதிய இலக்கிய வகையையே நம்தமிழ் உலகுக்குத் தந்தார்கள். கி.பி.ஆறாவது நூற்றாண்டு முதல் பன்னிரண்டாவது நூற்றாண்டு வரை வளர்ந்த தமிழ் அவர்கள் வளர்த்த தமிழ்தான்.இன்று தேவாரம் என்றும் திருவாசகம் என்றும் திருமுறைகள் என்றும் நாம் பெருமைப்படும் திவ்விய இலக்கியங்கள் எல்லாம் அவர்கள் தமிழுக்குத் தந்த பெருங்கொடைகள், பெரும் பங்களிப்புக்கள். அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும் அருள் மணிவாசகரும் தமிழுக்கு அளித்த பங்கு மிகமிகப் பெரிது.
இத்தகைய அடியார்கள் வாழ்வில் எத்தனையோ சிறப் புக்களைக் காணலாம். அன்பு, அருள், அடக்கம் கொண்டு தூய உள்ளம் போன்றவற்றை தம்முடைய வாழ்வின் இலட்சி யங்களாகக் கொண்டு வாழ்ந்தவர்கள்.
தொண்டை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்தவர்கள் இவ்வடியார்கள். நாவுக்கரசர்,
“என்கடன் பணிசெய்து கிடப்பதே” எனத் தெளிவாகக் கூறித் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். இதனை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார், “திருநாவுக்கரசு வளர் திருத்தொண்டின் நெறிவாழ’ எனத் தன் முதல் பாடலிலேயே கூறுவார். இவ்வாறு அவர்களின் தொண்டின் மகிமையை அடுக்கிக் கொண்டே
சேக்கிழார்வாதாடு மலர்2005

Page 39
போகலாம். எனினும் அவர்களிடம் காணப்பட்ட ஒரு சிறந்த பண்பு ஜாதியைக் கடந்து நிற்கும் பெரும் பண்பு ஜாதியைக் கடந்தவர்கள் சேக்கிழார் குறிப்பிடப்படும் சிவநேயச் செல்வர்கள், தேவார முதலிகளுக்கோ அல்லது நம்பியாண்டார் நம்பிக்கோ ஜாதி பேதம் கிடையாது. எச்சாதியைச் சார்ந்தவராயினும் அவர்கள் எல்லாம் ஈசன்அடியார்கள் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. அதனால் தான் அவர்கள் எந்த விதமான வேறு பாடும் இல்லாமல் எல்லோரையும் சமமாகப் பாவித்துத் தம் பாடல்களையும் பிறவற்றையும் உருவாக்கினார்கள்.
சுந்தரர் கணிகையர் குலத்தில் தோன்றிய பரவை யாரை மணந்தவர். கண்ட நிலையிலேயே“கற்பகத்தின் பூங் கொம்போ, காமன்தன் பெருவாழ்வோ, பொற்புடைய புண்ணி யத்தின் புண்ணியமோ” என்று எண்ணி மகிழ்ந்து மணந் தார். அது மட்டுமல்லாது ஆதி சைவராக விளங்கிய அவர் வேளார் குலத்தில் பிறந்த சங்கிலியாரையும் மணந்தவர்.
இது வரலாறு காட்டும் செய்திதான். எனினும் இதனைச் சொல்லும் விதமும், சொல்லிய விதத்தில் சேக்கிழார் காட்டும் வேகமும் விறுவிறுப்பும் சேக்கிழாரது எண்ணத்தை நன்கு புலப்படுத்தும். இத்தகைய நிலையைப் பல இடங்களில் காணமுடியும்.
ஒவ்வொரு அடியார்களையும் பற்றிக் கூறும்போது அவர்கள் பிறந்த சாதியைக் கூறுவது சேக்கிழார் வழக்கம். முதன் முதலில் பார்த்தபோது எனக்கு விந்தையாகத் தோன்றியது. சாதியைக் கூறி, அடியவர்களைக் குறிப்பிடுவது ஏன் என்ற எண்ணம் என் சிந்தையில் சில கேள்விகளை எழுப்பியது. அதன் பின்னர், நீண்ட சிந்தனைக்குப் பின்னர் தான் “எந்தச் சாதியைச் சார்ந்தவர்கள் ஆயினும், அவர்கள் அம்பலத்தாடுவானின் அருட்கடாட்சம் பொருந்தியவர்கள் என்ற உண்மையை வாசகர்களுக்குக் காட்டுவதற்காகத் தான் சேக்கிழார் இதனைக் கூறுகிறார் என்ற எண்ணம் என்னிடம் தோன்றியது”
“மாது ஒரு பாகனார்க்கு
வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்துள் தோன்றி
மேம்படு சடையனாருக்கு ஏதம் இல் கற்பின் வாழ்க்கை
மனை இசைஞானியார் பால் தீது அகன்று உலகம் உய்யத்
திரு அவதாரம் செய்தார்’(149) எனச் சுந்தரர் வேதியர் குலத்துள் தோன்றினார் என்றும் பரவையாரைக்
“கதிர்மணி பிறந்தது என்ன உருத்திர கணிகை யாராம் பதியிலார் குலத்துள்தோன்றி
பரவையார் என்னும் நாமம்’ எனக் கூறுவதும் காணத்தக்கது. இவ்வாறு கூறும் போது
6Fágaríf omfatto 19øof 2005

தான் வாசகர் உள்ளங்களில் இவர்கள் சாதி நிலை அற்று அதனைக் கடந்தவர்கள் என்ற எண்ணம் தோன்றுமாறு ஆக்கப்பட்டது சேக்கிழார் தம் புராணம் என்பது விளங்கிற்று. குயவர் குலத்தில் பிறந்த திருநீலகண்ட நாயனாரை முதல் பாட்டில் முதல் அடியிலேயே,
“வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்” என்று கூறி அடுத்த பாடலிலேயே,
“பொய்கடிந்து அறத்தின் வாழ்வார் புனல்சடை முடியார்க்கு அன்பர்” என்றெல்லாம் போற்றிப் புகழ்வது காணத்தக்கது.
பாணர் குலத்தில் பிறந்த திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரையும் இது போன்றே,
'திருநீல கண்ட யாழ்ப் பாணர் திறம் இனிச் செப்பல் உற்றேன்” என்று கூறிப் பின்னர் பல இடங்களிலும் பாணர் என்றும் மன்பெரும் பாணர் என்றும் 'அன்பினில் பாணர் என்றும் பரவிப்பாடுகிறார் சேக்கிழார்.
மேலும் இவர் திருஞானசம்பந்தருடன் செல்ல, அனு மதித்ததும், போகும் இடங்களுக்கெல்லாம் ஞானசம்பந்தர் கூட்டிக் கொண்டு சென்றதும், வரலாறு தெரிவிக்கும் செய்திகள். ஆனால் ஞான சம்பந்தர் இவரை ஒரு பாணரை அல்லது அறிஞரை “ஐயர்”என அழைப்பதற்கேற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி, அவரை உள்ளம் மலர அவரை அவ்வாறு அழைக்கவைப்பது சேக்கிழாரது கதைப் பாங்கு என்பதை நாம் மறக்கலாகாது.
திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஞானசம்பந்தரைச் சந்திக்க விழைகின்றார். சீர்காழி வருகின்றார். அவருடன்அவர் மனைவியாம் மதங்க சூளாமணி அம்மையாரும் வருகின்றார். இருவரையும் எதிர்கொண்டு அழைத்து அன்புடன் குலவி மகிழ்கின்றார். இதனைச் சேக்கிழார்,
பெரும்பானர் வரவறிந்து பிள்ளையார் எதிர்கொள்ளக் கரும்புஆர் செங்கமல மலர்த் துணைப்பாதம் தொழுது
எழுந்து விரும்பு ஆர்வத் தொடுமேத்தி மெய்ம்மொழிகளால்
துதித்து வரும்பான்மைதரு வாழ்வு வந்து எய்த மகிழ்சிறந்தார்.” (3035) எனத் தன்னை மறந்து கூறுவது காணத்தக்கது.
இது மட்டுமா? நீலகண்ட யாழ்ப்பாணரை “ஐயர் நீர்” என்றழைத்துப் பேசும் பல சூழ்நிலையையும் உருவாக்கி அவரை ஐயர் என அழைக்கச் செய்கின்றார். அவர்கள் சந்தித் தார்கள். சம்பந்தருடன் கோயில் பல சென்று அவர் தம் பாடல்களை யாழில் எற்றி நின்றார். பாணர் என்பதெல்லாம் வரலாற்றுச் செய்திகள். ஆனால் அவரை ஐயர் என்றும் நீர்
7

Page 40
என்றும் அழைக்கச் செய்தது சேக்கிழாரின் கவிதையாக் கத்தில் காணும் ஒரு நிகழ்ச்சி என்றே கருத வேண்டும்.
அளவு கடந்த மகிழ்ச்சியில் திளைக்கும் தெய்வப் பாணரை நோக்கி,
"அளவு இலாமகிழ்ச்சியினார்தமை நோக்கி ஐயர்நீர் உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே”
எனத் திருஞானசம்சந்தர் கூறுவது சேக்கிழாரின் ஜாதிபேத மற்ற பண்பையே காட்டும். பாணரைக்கண்ட மகிழ்ச்சி சம்பந் தருக்கும் அளவில்லாதது என்பதைக் காட்டும் நிலையில்,
“இள நிலா நகை முகிழ்ப்ப இயைந்துஅவரை உடன்
கொண்டு களம் நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும்
கவுணியார்”
என்று கூறி மகிழ்கிறார் சேக்கிழார். கவிஞன் கூற்றாகவே இதனைக் கூறுவது காணத்தக்கது.
பலர் எடுத்துக் காட்டியதைப் போன்று வேடராக உள்ள கண்ணப்பரை சிவகோசரியார் ‘ஐயரே” என்று போற்றுவதும், திருநாளைப் போவாரைச் சிதம்பரம் வாழ் அந்தணர்கள் ‘ஐயரே” என்று அழைத்து நிற்பதும் சேக்கிழாரின் கவிதை யாக்கத்தில் உண்டானவையே
சேக்கிழார் தன்னுடைய நூலில் ஐயர் என்ற சொல்லை 22 இடங்களில் பயன்படுத்தியுள்ளார். அதில் 15 இடங்கள் இறைவனைப் பற்றிக் கூறுவது. மீதியுள்ள 7 இடங்களும் கண்ணப்பர் (719752) திருநாளைப் போவார் என்னும் நந்தனார் (1075) திருநீலகண்ட யாழ்ப்பாணர் (2036,2082,2353, 2354) ஆகிய மூன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த அடியார்களைக் குறிப்பனவாகும்.
சம்பந்தரைத் தன்னுடைய ஊர் வந்து போக வேண்டு கிறார் யாழ்ப்பாணர். அவர் பிறந்த திருஎருக்கத்தம் புலியூரை அடைகின்றனர். பாணர் சம்பந்தரைப் பார்த்து சேக்கிழார் கூறுவது போன்று சாதாரணமாக,
நெருங்கு சோலை குழ் இப்பதி
அடியனேன் பதி. s எனக்கூற சம்பந்தரோ,
'ஐயர்நீர் அவதரித்திட
இப்பதிஅளவு இல் மாதவம் முன்பு செய்தவாறு’ (2082)
என யாழ்ப்பாணரை ஐயர் என்றும் நீர் என்றும் அழைக் கிறார். அவ்வாறு அழைக்கச் செய்கிறார் சேக்கிழார். ஞான சம்பந்தரை இவ்வாறு வைத்து அழைக்கச் செய்வது இத் தகைய அடியார்களிடையே எந்தவிதமான ஜாதி வேறுபாடும் இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே.
ஞானசம்பந்தருடன் யாழ்ப்பாணர் எங்கும் செல்லுகிறார். அவர் பாடலுக்கு யாழில் இசையமைத்துப் பாடுகிறார். இதனைக் கூறும் சேக்கிழார், பல இடங்களில் சம்பந்தரை
8

“வேதியர்” என்றும் “வேதநெறி வளர்ப்பவர்” என்றும் ஞான சம்பந்தரைக் கூறுவதும் அத்துடன் யாழ்ப்பாணரை “பெரும் பாணர்” “பெருமையுடைப் பெரும்பாணர்” என்றும் அவர் ஜாதி தெரியக் கூறுவதும் இவர்களிடையே எந்தவிதமான ஜாதிவேற்றுமை இல்லை என்பதைக் காட்டுவதற்காகவே எனக் கருதலாம். இங்கு யாழ்ப்பாணர் தம் யாழை வெறுத்து ஒதுக்கி எறியத் துணிந்த நிலையில், ஆளுடைப் பிள்ளையார் ‘ஐயரே” என மீண்டும் அழைப்பதும் இது கருதியே எனக் கருதலாம். இதனைக் கூறும் சேக்கிழார்,
"வீக்குநரம் புடையாழினால்
விளைந்தது இது என்று அங்கு அதனைப் போக்க ஒக்குதலும்
தடுத்தருளி ஐயரே உற்றஇசைஅளவனால் என ஆக்கியஇக் கருவியினைத்தாரும்’என வாங்கிக் கொண்டு அவனி செய்த பாக்கியத்தின் மெய்வடிவாம் பாலறா
வாயர் பணிந்து அருளுகின்றார்” (2353) எனக் கூறுதல் காணத்தக்கது.
இவ்வாறு ஒவ்வொரு இடத்திலும் இருவர் நிலையைக் கூறி இவ்விருவர் தம்மிடையே நிலவிவந்த அடியார்கள் ஒன்றே என்ற உணர்வை வாசகர்கள் உள்ளங்களில் பதிய வைக்கிறார்.
எல்லோரும் ஒர்குலம்’ என்ற உணர்வை அடியார்கள் அனைவருமே காணமுடிகின்றது. ஜாதி பேதமில்லாத ஒரு அடியவர் கூட்டத்தையே சேக்கிழார் காணுகின்றார்.
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்’
என்பது திருமூலரின் திருவாக்கு.
சேக்கிழார் பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடியவர் மட்டுமல்ல, சமுதாய ஏற்றத்தாழ்வுகளையும் சாடியவர் என்ற நிலையும் உள்ளவர். சமயம் வாய்க்கும் போதெல்லாம் ஜாதி உணர்வை எதிர்க்கும் நிலையில் சூழ்நிலைகளை அமைத்துத் தம்புராணத்தை உருவாக்கியவர் அவர். எனவே தான் முன்னர் கூறியது போன்று, பெரியபுராணத்தைப் புரட்சிக் காப்பியம் என்றும் சமுதாயக்காப்பியம் என்றும் பல்வேறு நிலைகளில் கூறுகின்றனர். இதை உள்ளத்தில் நிறுத்தியே போலும் "Truly Marvellous Epic' GTGOTs sigésirpirit (Eurri.
சேக்கிழாரிடம் எத்தனையோ செந்நெறிகள் உண்டு. சமயநெறி உண்டு,சைவ சமய நெறி உண்டு, தமிழ் நெறி உண்டு,தொண்டு நெறியும் தூய உள்ள நெறியும் உண்டு அவற்றுள் காணப்படும் ஒரு நெறி தான் ஜாதி கடந்த பொது நெறி. அது அவருடைய செந்நெறியும் ஆகும்!
6oráéignif Iongato, Iosof 2oo5

Page 41
அஞ்செழுத்தெனும்
சிந்தித்திருப்போர்
倭绫 ❖ችmmትኄ..
66
Uதி பசு பாசம் எனப் பகர் மூன்றில், பதியினைப் போல்
பசு, பாசம், அநாதி, பதியினைச் சென்று அணுகாப்பசு, பாசம், பதி அணுவில் பசு பாசம் நிலாவே” என்று திருமூலர் சைவ சித்தாந்தத் தத்துவத்தை சுருங்கச் சொல்லி விளங்க உரைக்கின்றார். அநாதியிலிருந்து எம்மைப் பிணைத் திருக்கும் பாசத்தை அழித்து நாம் பதியுடன் சேருவதற்கு அருமருந்தாய் இருப்பது இவ் அஞ்சு எழுத்தொன்றே தான்.
“அஞ்சு எழுத்தால் அஞ்சு பூதம் படைத்தனன் அஞ்சு எழுத்தால் பலயோனி படைத்தனன் அஞ்சு எழுத்தால் இவ் அகல் இடம் தாங்கினன் அஞ்சு எழுத்தால் அமர்ந்து நின்றானே’
திருமூலர் விண்ணின் மூலமாய், அதைக் கடந்த தூய வெறுவெளி யாய், நிலம், நீர், அக்கினிக்கு மூலமுமாய், சர்வ பிரபஞ்சங் களையும் தாங்கி நிற்பதுவாய், கோடிக்கணக்கான அணுக் களுக்கும் ஆதாரமாய் அமைந்திருக்கும் இம்மந்திரத்தை அறிந் துணர்தல் கடினம். எனினும், இப்பெருமந்திரத்தின் பெருமை தெரியாமலே, போற்றுவோர்க்குள் நிகழும் பெரும் மாற்றங் களை சாற்றுலதென்பது சற்றுக்கடினமே.
நாதன் நாமம் நமச்சிவாயத்தை நமது நாவினால் ஒதினாலும் சரி, உள்ளத்துடன் கலந்து உயிருடன் ஒன்றித்து ஒதிக்கொண்டேயிருப்பின் அவர் தம் எண்ண அதிர்வுகளை நுண் உணர்வால் கண்டு உணரும் பேறு பெற்ற மந்திரத்தை பெற்றவர்கள் நாம் அதனை, “நான்”, “எனது” என்னும் அகங்காரத்தை அழித்தொழிக்கும் ஆயுதமாக பாவிக்க வகை அறியாது இருக்கின்றோம். பழவினைகள் போயகலப் புதுவினைகள் சேராமல் பாதுகாத்தலுடன், சித்தத்தை சிவமாக்கி சிவகதியடையாமல், ஜம்புலன்களின் வழிப்போந்து அளவற்ற ஆசைகளால் சிக்குண்டு தவிக்கின்றோம்.
நாம் எதை நினைக்கின்றோமோ அதுவாகவே ஆகின்றோம் என்பது எம் இந்து மதக் கொள்கை. ஓயாமல் எதை நாம் சிந்திக்கின்றோமோ, எதை நோக்கி எமது நகர்வுகளை நகர்த்துகிறோமோ அதுவாகவே ஆகி விடு கின்றோம். எமது எண்ணம் எதைப் பற்றியதாக அமை கின்றதோ, அந்த எண்ணத்தை ஒட்டிய அதிர்வலைகள் எம்முள் எழுகின்றன. இறைவனைப்பற்றிய சிந்தனை எம்முள் எந்நேரமும் இருக்குமாயின், இறைநாமத்தில் இலயித்
6sráiágrif pavaro 19a0f2oo5
 
 
 

றைமந்திரத்தை க்கு சிவகதிதானே
வரி வேலாயுதம்
மய விவகார அமைச்சு
திருந்தால் இறையம்சம் எம்மில் எழுந்தருளுவதுடன், எம்முள்ளும் வெளியிலும் தெய்வீக அலை எழுப்பிப் பரவுகின்றது.
உள்ளொளியாய் வீற்றிருக்கும் அவ் உத்தமனை உணர்வதற்கும் கலப்பதற்கும் உற்ற துணையாய் இருப்பது இவ் அஞ்சு எழுத்து மந்திரமே.
66
உள்ளத்து ஒருவனை உள்உறு சோதியை உள்ளம் விட்டு ஒரடி நீங்கா ஒருவனை உள்ளமும்தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உரு அறியாதே"
என்று திருமூலர் பாடுகின்றார். பாசத்தினால் கட்டுண்டு நமக்குள் ஒன்றாயும், உடனாயும், வேறாயும் ஒன்றித்து உள் இருக்கும் அப் பெரும் சோதியை உணராது புலன் வழிச் சிந்தையை விட்டு பெரும் துன்பம் அடைகின்றோம்.
“இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின்முன் ஆகி நின்றானும் உணங்கி நின்றான் அமராபதி நாதனை”
வணங்குவதற்கு பெருந்துணையாய் இருப்பது நாதன் நாமம் நமச்சிவாயவே. “ஒண் சுடராகி எம் உள்ளத்து இருக்கின்ற கண் சுடரோன் உலகு ஏழும் கடந்த அந்த தண்சுடரை” உணர்ந்தறிய உயிர்த்துணையாய் இருப்பதும் இவ் அஞ்சு எழுத்தே.
எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காணர், இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ எது வருமோ அறிகிலேன் என்று ஏங்குகின்றார் தாயுமானவர்.
முற்பிறவிதனில் செய்த கர்ம வினைப்பயனாய் இப்பிறவி எடுத்துற்ற போதிலும், இனி எப்பிறப்பும் வராமல் இறை வனுடன் ஆட்படுத்த எமக்குள்ள இப்பிறப்பினை வழுவாது பயன்படுத்தி உய்யும் வகை செய்தல் வேண்டும்.
“செய்த வினைக்கு ஈடாக சேர்த்த பிறப்பினின்றும் தெய்வம் உயர் சென்மம் அதில் சேர்க்கும் இதுவும் நான் செய்த வினைக்கேற்பவே நிகழும்”
நாயன்மார்களது வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம், “சிவ சிவ என்றிடத் தீவினை மாளும், சிவ சிவ என்றிடத் தேவருமாவர், சிவ சிவ என்றிடத் சிவ கதி தானே” என்பதாகும்.

Page 42
எனினும், இவ் அஞ்சு எழுத்தின் மகிமையை அறியாது பலருள்ளர். பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணின்று அறுப்பது நமச்சிவாய எனும் திரு மந்திரம் ஒன்றேயாகும். என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டு பொன் போல் கனலில் பொரிய வறுப்பினும், அன்பினிற் குழை வரின்றி அவன் அருள் கொடான் என்பது அடியார்கள் வாழ்க்கை உணர்த்தும் உண்மை. எம்மை வருத்தினாலென்ன, ஏனைய உயிரை பலி கொடுத்தாலென்ன, எவ்வளவுதான் பூசை புனஸ்காரங்கள் செய்தாலென்ன, அஞ்செழுத்தென்ற அரும் மந்திரத்தால் மாத்திரமே கொடிய வல்வினைகள் வேர றுத்து அழிக்க முடியும். வினைப் பயனை அழிக்க வேறு எந்த மார்க்கமும் இல்லை. "நந்தி நாமம் நமச்சிவாய எனும் சந்தை யாற்றமிழ் ஞானசம்பந்தன் சொல், சிந்தையால் மகிழ்ந்தேத்த வல்லாரெல்லாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே”என்றும் “பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே” என்கின்ற பதிகங்களிலிருந்தும் பாசத்தை அறுப்பது நமச்சிவாயவே என்பது தெளிவாக உணர்த்தப்படுகின்றது.
எண்ணில்லாப் பிறப்புக்களில் கணக்கிலடங்காமல் செய்த கர்ம வினைகளை எல்லாம் இப்பிறப்பிலேயே ஒழிக்க வல்லது நாதன் நாமம் நமச்சிவாயவே. நாதன் நாமம் நமச் சிவாயத்தை நாளும் ஒதிக்கொண்டிருப்போர்க்கு பழ வினைகள் போயகல புது வினைகள் அணுகாத பெரும் பேற்றினையும் இது தரவல்லது.
நமச்சிவாய எனும் அரும் மந்திரத்தை நாளும் சொல்லி அதில் லயித்திருப்போமானால் இறைவனுடன் ஐக்கியமாகி இரண்டறக்கலந்த நிலையில் ஏது காரியம் நாம் செய்த போதும் பலன் எதுவும் எமைவந்தடையாதுகாக்கவல்லது இம்மந்திரம். நாம் பண்ணிய பாவத்தால் “உள்ளுறு சோதியை உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒரளுவனை, உள்ளும் தானும் உள்ளே இருக்கினும் உள்ளம் அவனை உரு அறியாது” மலங்களால் கட்டுண்டு கிடக்கின்றோம். பரப்பிரம்மத்தின் பிரதிபிம்பங்கள் நாம் என்பதை உணராது, ஐம்புலன்களின் வழிப்போந்து, ஆசைகளில் சிக்குண்டு, விலங்கிற்கும் கீழான வாழ்வதனை வாழ்கின்றோம்.
ஒயாமல் நாம் அவன் நாமத்தை உச்சரித்தால் உள்ளொளி யாய் வீற்றிருக்கும் அவன் தன்னை வெளிக்காட்டி, சித்த மலம் அறிவித்து, சிவமாக்கி எம்மையாழ்வார். நாதன் நாமம் நமச்சிவாயத்தை ஒதிக் கொண்டேயிருப்போமானால் நற்ற வனை நாம் மறந்தாலும், நமது நாக்கூட மறந்தாலும், நமது உணர்வுகளுடன் கலந்து உயிருடன் ஒன்றித்துவிட்ட அவன் நாமம் சதா நம் உள்ளத்தே ஒலிக்கும். உள்ளொளியாய் வீற்றி ருக்கும் அப்பரம்பொருளை உணரச் செய்து உய்விப்பதும் இவ் அஞ்சு எழுத்தேயாகும்.
இம்மைக்கும் மறுமைக்கும் எம்மைக்கும், இறைவனை அடைதற்கும், இவ்வுலக வாழ்க்கைக்கும் ஒப்பற்ற துணையாய் உடனிருப்பதும் இவ் அஞ்சு எழுத்து மந்திரமே. இதனை
10

G
மந்திர நான்மறை ஆகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மையாள்வன செந்தழலோம்பிய செம்மை வேதியர்க்(கு) அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்தாமே”
என்பதிலிருந்தும் வேறு பல பாடல்களிலிருந்தும் அறியமுடிகிறது.
மேலும் எம்மோடு ஊனாய், உடலாய், உயிராய், உணர் வாய், உறவாய் ஒன்றித்து, உள்ளும் புறமும் சூழவும் வியாபித்து நீக்கமற நிறைந்திருக்கும் எந்தை பெருமானை நாம் அறி யாமல் தடுக்கும் மாயையும் நீக்க வல்லது நாதன் நாமம் நமச் சிவாயவே ‘மாயையின் கர்ப்பத்துள் மல இருளில் கிடந்து நோய் உயிரைச் சுத்தி செய்வான் விட்டத்தையும் தேர்ந் தேனே' என்குமாப் போல் உள்ளொளியாய் வீற்றிருக்கும் அப்பெரு ஒளியை உணர்வதற்குஉறுதுணையாய் இருப்பதுவும் இவ் ஐந்தெழுத்தே.
அண்ட சராசரங்களைப் படைத்து, அதில் ஐம்பூதங் களையும் படைத்து, அவற்றிலான ஊனையும் படைத்து, ஊனுக்குள் உள்ளொளியாய் இருந்து இவையெல்லா வற்றிலும் ஊடறுத்து வியாபகமாக வீற்றிருக்கும் அப்பெரு மானை அறிய விடாது தடுக்கும் மாய இருளை நீக்குவதும் இம் மந்திரமே.
இடுக்கண் வருங்கால் நடுக்கத்தைக் கெடுப்பதும், தடுக்கி வீழ்வினும் சமாளித்து எழுவதற்கும், சவால்களைக் கண்டு சளைக்காத மனத்திற்கும், தைரியம் கொடுப்பதும் நமச்சிவாய எனும் திரு ஐந்தெழுத்தொன்றே.
கல்லில் கட்டி கடலில் பாய்ச்சினும், மலை போல் துன்பம் எதிரில் வரினும், மலையின் கீழ்ப்பட்டு அழுத்திய போதும், “நமச்சிவாய' த்தை ஒதுவோமானால், எல்லாத் துன்பமும் எமை விட்டு விலகும் இதனைத்தான்
இலங்கை மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலங்கொள் கால்விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கிவாய்மொழி செய்தவனுய்வகை நலங்கொள்நாமம் நமச்சிவாயவே”
என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும்
'தும்மலிருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மைநரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும் அம்மையினுந்துணை அஞ்செழுத்தாமே”
என்று திருஞான சம்பந்தர் அருளிப் போற்றினார்.
இவ் அஞ்சு எழுத்தை ஒதினால் அஞ்ச வேண்டிய தொன்றுமில்லை. அஞ்ச வருவதும் இல்லை. மலை போல்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 43
இடர்வரினும் பனி போல் விலகச் செய்து அக இருளையும் புற இருளையும் நீக்கியருளுவது அரும் மந்திரமாகிய இவ் அஞ்சு எழுத்தே.
மேலும் அப்பர் சுவாமிகள் சித்திரவதைப்பட்டு சிறைப்பட்ட போதிலும் உடனிருந்து கவசமாய் காத்ததுவும் இம் மந்திரமே. நாதன் நாமம் நமச்சிவாயத்தை உண்மை அறிந்த பின் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை என்பதை,
“ அஞ்சுக அஞ்சு எழுத்து உண்மை அறிந்த பின்
நெஞ்சகத்து உள்ளே நிறையும் பராபரம் வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை தஞ்சம் இதுவென்று சாற்றுகின்றேன்”
என்கிறார் திருமூலர்.
படைக் காலமாக அவன் நாமத்தை பற்றியிருப்போர்க்கு இடுக்கண் என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது. பின்வரும் அப்பரின் பாடல் அய்யனிடம் அடைக்கலமாய், ஐக்கியமாய், ஆகி விட்டால் துன்பம் ஏது? துயர் ஏது? என்பதை எமக்கு உணர்த்துகிறது.
"படைக்கலமாக உள்நாமத் (து) தெழுத்தைஞ்சும் என்
நாவிற் கொண்டேன் இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்காட்
செய்கின்றேன் துடைக்கினும் போகிதன் தொழுது வணங்கி
தூயநீறணிந்துன் துடைக்கினும் போகிதன் தொழுது வணங்கி
தூயநீறணிந்துன் அடைக்கலம் கண்டாய் அணிதில்லைச் சிற்றம்பலத்தானே’
என்று அனுபவித்து பாடுகின்றார்.
மேலும் கொல்லாரேயினும் குணம் பல நன்மைகள் இல்லாராயினும் இயம்புவராயிடின், எல்லாத் தீங்கையும் நீக்குவரென்பதால் நல்லார் நாமம் நமச்சிவாயவே என்னும் பதிகத்தால் பாவிகளுக்குள் பாவிக்கும் விமோசனம் கிடைக் கும் என்பது நாயன்மார்களின் வரலாறு உணர்த்தும் உண்மை.
பொய்யாயினலெல்லாம் போக்கவல்ல மெய்யானை கதியென்று, கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவாராயின் அவரை நன்னெறிக் குய்ப்பது நாதன் நாமம் நமச்சிவாயவே. வான்மீகி போன்றோரது வாழ்வு நமக்கு ஓர் எடுத்துக்காட்டு.
“மந்தரம்மனபாவங்கள் மேவிய
பந்தனையவர்தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால் நந்திநாமம் நமச்சிவாயவே”
என்றும்
Gragnifier to 1960f 2005
多

“நரகமேழ்புக நாடினராயினும்
உரை செய்வாயினராயினுருத்திரர் விரவியே புகுவித்திடு மென்பரால் வரதன்நாமம் நமச்சிவாயவே தத என்றும் திருஞான சம்பந்தர் பாடியருளி உள்ளார்.
காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார் தமை நன்நெறிக்குய்ப்பதும் நாதன் நாமம் நமச்சிவாயவே.
எத்துணை துயர் வந்த போதிலும், ஏற்றத்தாழ்வுகளில் இடர்பட்ட போதிலும், நற்றுணையாய் நிற்பதும் நமச்சிவாயவே. சளைக்காத மனம் தந்து, சவால்களை எதிர்கொண்டு, மலைக்காமல் தெளிவு பெற மருந்தாகி இருப்பதும் அஞ்சு எழுத்தெனும் அருமந்திரமே.
எதிர் மறை எண்ணங்கள் எம்மனதில் தோன்றாமல், நெறி நின்று மேன்மை பெற பெருமருந்தாய் இருப்பதுவும் பெருமானின் அஞ்சு எழுத்தே.
பழவினைகள் போயகல புதுவினைகள் சேராமல் பாதுகாத்தருளுவதும் பரம் பொருளின் அஞ்சு எழுத்தே.
பக்தி நெறி அறிவித்து, பழவினைகள் மாறும் வண்ணம் சித்தமலம் அறுவித்து சிவமாக்கி எமையாக்க உற்றதுணையாய் உள்ளதுவும் உத்தமரின் மந்திரமே
காலையிலும், மாலையிலும் கணப்பொழுதும் மறவாமல் கருத்துடனே ஒதினால், உணர்வுகளுடன் கலந்து ஒன்றித்து விட்ட பின் மறவாமை தான் ஏது?
இம்மைக்கும் மறுமைக்கும், ஏழேழு பிறப்பிற்கும் எக்காலத்திற்கும் உற்ற துணையாய் உடன் வருவது நற்றவனின் நமச்சிவாய எனும் பெரு மந்திரமே.
ஆகையால், எம்மையோ, ஏனைய உயிர்களையோ வருத்திப் பலியிடும் வழிபாடுகளை விடுத்து, இமைப்பொழுதும் எமைவிட்டு நீங்காமல் உடன் இருக்கும் இறைவனின் அருள் பெற்று முத்தி பெற ஒதுவோம் நமச்சிவாய எனும் அருந்திரத்தை
இன்பமே சூழ்ந்து எல்லோரும் வாழ இணைந்து போற்றுவோம் இறையருள் நாமத்தை
போற்றுவோம் மீண்டும் மீண்டும் பூமிதனில் அமைதி ஓங்க, மாற்று வேறு இல்லையென்று மகிழ்ந்தேத்துவோம் நமச்சிவாய எனும் நாதன் மந்திரத்தை.
"போற்றி ஓம் நமச்சிவாய புயங்கனே மயங்குகின்றேன் போற்றி ஓம் நமச்சிவாய புகலிடம் பிறிதொன்றில்லை போற்றிஓம்நமச்சிவாய புறமெனைப் போக்கல் கண்டாய் போற்றி ஓம் நமச்சிவாயசயசய போற்றி போற்றி”
3.
1.

Page 44
சேக்கிழாரின் வி
- & JyTf8fflu Jñ.
தலைவர், தமிழ்த்துறை,
பொள்ளாச்சி, கே
இலக்கியங்கள் அந்தந்தக்கால சமூகவரலாற்றை உள்வாங்கியிருக்கும். சங்க இலக்கியங்கள் வழியே அக்கால
வரலாற்றை அறிய முடிகிறது. உவமைகளாகவோ, பின்புலமாகவோ இல்லாமல், முழுக்க முழுக்க வரலாற்றுச் செய்திகளை ஒரு காப்பிய வடிவில் கொண்டு வருவது என்பது கவிஞனுக்கு மிகப் பெரிய சவால் ஆகும். ஆனால், சேக்கிழார் இதை மிகத் திறமையாக எதிர்கொண்டு, வரலாற்றுத்தன்மை கெடாமலும் அதேநேரம் கவித்துவம் குறையாமலும் திருத் தொண்டர் புராணத்தை ஆக்கித் தந்துள்ளார்.
சைவசமயத்தில் ஈடுபாடு கொண்ட அநபாய சோழனின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடியார்களின் வாழ்க்கையைக் காப்பியமாக்குகிறார் சேக்கிழார். காப்பியம் பாடும் கவியாற்றல் அவரிடம் இருப்பதை இனங்கண்டதாலேயே அவருக்கு இந்த வாய்ப்புக் கிட்டியது. அரச விருப்பம், அமைச்சர் என்ற தகுதி, அரச அமைப்பின் ஒத்துழைப்பு ஆகியவை அடியார் வரலாற்றைத் தொகுக்க சேக்கிழாருக்கு மிகவும் உதவியாக இருந்தன். திருத்தொண்டர் புராணம் வெறும் கதையல்ல. அடியார்களின் வாழ்க்கையைச் செவிவழியாக மட்டுமல்லாமல், பல்வேறு ஆவணங்களின் அடிப்படையிலும் தொகுத்துள்ளார் என்பதை நாம் அறிவோம்.
எந்த ஒரு படைப்பும் தன்னிச்சையாக உருவாவதில்லை. எழுத்தாளன் சமூகத்திற்கு உணர்த்த விரும்பும் கருத்து படைப்பு வழி வெளிப்படும். சேக்கிழார், நாயன்மார்களின் பெருமையை உலகிற்கு உணர்த்த வேண்டியே திருத்தொண்டர் புராணத்தைப் படைக்கிறார். காப்பியத் தகுதிக்காக சுந்தரரைத் தலைவராகக் கொண்டாலும் பிள்ளை பாதி புராணம் பாதி’ என்ற முதுமொழிக்கேற்ப சம்பந்தர் வாழ்க்கையைச் சரிபாதியாக அமைத்துள்ளார். அதனாலேயே சைவநெறி தழைத்தோங்க வைத்தவர்களில் முக்கியமானவரான சம்பந்த சுவாமிகளின் பிறப்பு நோக்கத்தைச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டியது சேக்கிழாரின் கடமையாகிறது. அவ்வகையில், சம்பந்தரது அவதாரத்தின் பயன்பாட்டைப் புலப்படுத்துவதற்குச் சேக்கிழார் பெருமான் கையாளும் செஞ்சொல் திறத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
12
 
 

சஞ்சொல்திறம்
p. 68T1D6 of - என். ஜி. எம். கல்லூரி, TGUNGAI LOTSAILLh.
புறச்சமய ஆதிக்கங்களிலிருந்து மக்களைச் சைவத்தின் பக்கம் திருப்பி மறுமலர்ச்சி ஏற்படுத்திய சைவ அடியார்களின் குணநலன்கள், பக்தியுள்ளம், இறையருளால் நிகழ்ந்த அற்புதங்கள், சமுதாயத்தில் அவர்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைக் காப்பியம் மூலம் பரவலாக்கிமக்களிடம் சைவ உணர்வை ஆழப்படுத்த வேண்டுமென்பதே சேக்கிழாரின் விருப்பமும், இலட்சியமும் என்பதை அறியமுடிகிறது.
“சிறந்த காப்பியப்புலவன், தான் எடுத்துக்கொண்ட கருத்தை விளக்கும் முறையில், தொட்ட இடங்கள் அனைத்திலும் அக்கருத்தை நினைவூட்டவும், வலியுறுத்தவும் வாய்ப்புகளை நாடிப்பயன்படுத்த வேண்டும் என்பது திறனாய்வாளர் கொள்கை” (அ.ச.ஞானசம்பந்தன், பெரியபுராணம் ஒர் ஆய்வு, ப.179). அவ்வாறே உயர்ந்த குறிக்கோளிற்காக அவதாரம் செய்த சம்பந்தர் பிறப்பெடுத்த சீர்காழியைக் காட்சிப்படுத்தும் போது கூட, காப்பிய நோக்கத்தை வெளிப்படுத்துவதை ஓர் உத்தியாகவே அமைத்துப் பாடியுள்ளார் ஆசிரியர்.
“உளங்கொண்மறை வேதியர்தாம்தூமத்திரவும் கிளர்ந்ததிருநீற்றொளியிற் கெழுமியநண்பகலும் தத
(திருத்தொண்டர்புராணம், பா.எண் - 1904)
என்னும் வரிகளில் வேதியர் செய்யும் ஒமப்புகை இரவாகவும், திருநீற்றொளி பகலாகவும் சீர்காழிப்பகுதியைக் காட்டுவதன் மூலம் வேதநெறியும், சைவநெறியும் நிலைநிற்கும் இடத்தில் அந்நெறிகளை மேலும் வளர்த்தெடுத்துப் பரப்பிய சம்பந்தர் அவதரித்ததைப் பொருத்தப்பாட்டுடன் அமைத்துக் காட்டுகிறார் சேக்கிழார். குழந்தையின் ஆளுமைப்பண்பை வளர்ப்பதில், சூழல் முதன்மைப்பங்கு வகிக்கிறது என்னும் இன்றைய அறிவியல் முடிவை, அன்றே சேக்கிழார் அறிந்திருந்தார் என்பதற்குச் சான்றாக இதனைக் கூறலாம். அத்துடன், கடமை தவறாத அந்தணர் குலத்தில் தோன்றிய சம்பந்தர், பின்னாளில் சைவத்தை வாழ்விக்கப் போகிறார் என்னும் நுண்ணிய கருத்தையும் இவ்வரிகளில் தெளிவாக உணர்த்துகிறார்.
பிள்ளையவர்கள் கருவாய்த்தரித்த செய்தியைச் சொல்லும் போது,
”................................................................................ காதலியார் மணிவயிற்றின்
உருத்தெரிய வரும்பெரும்பேறுலகுய்ய வுளதாக”
(6hové, LmáTázir - 1918)
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 45
என்பதில் ‘பெரும்பேறு என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்களை விவரிக்கலாம்.மக்களை உய்விக்க வந்ததால் பெரும்பேறு என்பார் சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் (மேலது, ப.30). குழந்தை என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் புதுவரவு. இறைவனிடம் வேண்டிப் பிறந்ததாலும், பின்னாளில் ஞானசூரியனாக விளங்கப் போவதாலும் இது சிவபாத இருதயர் செய்த பெரும் பேறெனக் கொள்ளலாம். வினையிலிருந்து ஈடேறுவதற்காக உலக உயிர்கள் செய்த பெரும் பேற்றினால் வந்த அவதரிப்பு எனவுமாகும். மேலும், சைவம் செய்த பெரும்பேறு என்றும் பல்வேறு நிலைகளில் பொருள் கொள்ளக் கூடிய வகையில் சேக்கிழார் அச்சொல்லைப் படைத்துள்ளார். இங்கும் படைப்பின் நோக்கமே முன்னிறுத்தப்படுகிறது.
1923 வது பாடலில், “நாளுடைய நிகழ்கால மெதிர்காலம் நவைநீங்க” என்று அவரது பிறப்புக்குரிய நோக்கங்களைப் பட்டியலிட்டுப்பாடுகிறார். இங்குநவை என்பதற்குக் குற்றம் என்ற பொருளில், சைவசமயத்துக்கு நேர்ந்த குற்றம் என்று உரை காணப்பட்டுள்ளது (மேலது, ப.37), பிற சமயங்களால் சைவசமயத்திற்கு நேர்ந்த இழப்பு என்று மட்டும் கொள்ளாமல், உலக உயிர்களின் பிறவித் துன்பமானது நிகழ்காலமாகவும், இனி வரும் காலத்து வினைகளால் சேரும் துன்பம் எதிர்காலமாகவும் கொண்டு, அனைத்தையும் போக்கும் வல்லமை சம்பந்த சுவாமிகளுக்கு உண்டு என்பதை, அவரது பிற்கால வாழ்க்கை மெய்ப்பிப்பதை முன்பே சுருக்கமாகவும் நயமாகவும் சொல்லிச் செல்கிறார்.
குழந்தை பசிக்காக அழுவதும், உணவு கிடைத்தவுடன் சமாதானம் அடைவதும் உலகத்து இயற்கை. அதுபோன்றே குழந்தையின் அழுகை கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும் துன்பப்படுத்தும். ஆனால், இங்கு சேக்கிழார் அமைத்துக் காட்டும் காட்சியோ வேறாக இருக்கிறது.
"எண்ணின் மறையொலிபெருக எவ்வுயிருங்குதூகலிப்ப புண்ணியக்கன்றனையவர்தம் பொருமியழுதருளினார்” (மேலது பா.எண் - 1960)
என்பதன் மூலம் சம்பந்தக் குழந்தையின் அழுகை, தனக்கான தேவைகளை வேண்டியல்லாமல் உலகத்து உயிர்களை இன்பத்தில் திளைக்கச் செய்யப்புகுவதால் 'அமுது அருளினார்’ என்கிறார். தமிழ் மறைகளின் ஒலி உலகம் முழுவதும் பரவுவதும் அழுகையின் நோக்கமாக இருந்தது. அதனாலேயே,
“அம்பிகை யளித்த ஞான மகிலமுமுய்ய வுண்ட
நம் பெருந்தகையார் .”
(மேலது பா.எண் - 2015)
எனவும் பேசுகிறார்.
இறைவன் உலக உயிர்களிடத்து அருள்புரிதலாலே தான் இவ்வுலக வினைகள் நடைபெறுகின்றன. அதுபோல்
dréágaí Iditortó Ipaí 2005

ஆன்றோர்களும் எளியர்பால் கருணை காட்டுகின்றனர். சம்பந்தரின் அழுகைக்குப் பின்பே அன்னை ஞானப் பாலூட்டுகின்றாள். ஆக, இவரின் அழுகை முக்கிய இடம் பெறுகிறது. காரணம், எந்தவொரு பொருளுமே அதை அடைபவருக்குத் தான் பயனாகும். ஆனால் பிள்ளையவர் களின் அழுகைப் பயன் உலகத்து உயிர்களுக்கு, சைவசமய ஏற்றத்திற்கு எனப் பரந்து விரிகிறது. எனவே தான் சேக்கிழார் பெருமான் அழுகையை ‘அருள்' என்றும், குழந்தையின் அழுகை எல்லா உயிர்களையும் குதூகலிக்க வைக்கிறது என்றும் கூறுகின்றார். இதையே 2315 வது UITL656),
நம் மலத்துயர்தீர்க்கவந்தருளிய ஞானச்
செம்மலார் . タタ
(மேலது பா.எண் 23:5)
என்று மீண்டும் பிறவிநோக்கத்தை நினைவூட்டிப்பாடுகிறார்.
பாலுண்ட கோலததோடிருந்த பிள்ளையைக் கண்டு பதைத்துப் போன சிவபாத இருதயர்,
"எச்சின்மயங்கிடவுனக்கீந்திட்டாரைக்காட்டென்று’கேட்க,
"அச்சிறிய பெருந்தகையாரானந்தக் கண்டுளிபெய் துச்சியின்மேலெடுத்தருளியொருதிருக்கை விரற்சுட்டிக்” (மேலது பா.எண் - 1971) காட்டுகிறார்.
வைதிக குலத்துத் தந்தைக்கோபாலைக் கொடுத்தவன் யார்? என்பது முக்கியம். பால் கொடுத்ததைத் தீங்கு என்கின்றனர் பிற உரையாளர்கள். பால் எத்தன்மைத்தோ? என்பதை விட, யார் கொடுத்ததோ? என்பதே பொருத்தமாய் இருக்கும். வைதிக குலத்திடையே இருந்த சாதியமைப்பு குறித்த மேல்நிலையாக்கச் சிந்தனை வரலாறு அறிந்த ஒன்று. ஆனால் சம்பந்தரின் பதிலில் தான் சேக்கிழார் தன் கவி நுட்பத்தைக் காட்டி நிற்கின்றார். சாதியப்படி நிலைகளைக் கடந்து, புது நெறி காட்டப் போகும் சம்பந்தர், உயிர்களில் மேல்கீழ் என்ற பிரிவினைகள் இல்லை; அவ்வாறு பிரிப்பது இறைவன் படைப்புக்கு எதிரானது; எல்லாவற்றிற்கும் மேலானவன் இறைவனே என உய்யும் வழியைச் சுட்டுவிரலால் பரம்பொருளை அடையாளம் காட்டுகிறார்.
“கவிஞன் என்போன் . பாடல்களில் எதுகை மோனைகளைப் படைப்போனாக மட்டும் திகழவில்லை; அவன் மனத்தின் அடிப் பகுதிவரை ஊடுருவி நோக்குகின்றான்; நோக்குவிக்கின்றான். சொல் அவனுக்கு மந்திர ஆற்றல் மிக்கதாகி விடுகின்றது. உள்ளுணர்வுத் தூண்டுதலால், அவன் படைக்கும் சொல்லோ கவித்திறத்திற்கும் நடைக்கும் அடிப்படையாய் அமைந்து விடுகின்றது” (மேற்கோள், புலவர். சொ. சிங்காரவேலன்,
13

Page 46
சேக்கிழாரும் நாட்டியலும், பெரியபுராணச் சொற் பொழிவுகள், பக். 4-5) என்ற பூரீ அரவிந்தரின் கூற்று சேக்கிழாருக்கும் பொருந்தி வருகிறது.
பிரமபுரத்து மறையோர்கள் பிள்ளையாரை எதிர்கொண்டு வணங்கிய செய்தியைக் கூறவரும்போது,
“வாரணங்கு முலையுமையாள் குழைந்த செம்பொன் வள்ளத்தி லமுதுண்ட வள்ளலாரை”
(திருத்தொண்டர்புராணம் பாஎண்-2156)
என்று பாடுகிறார். தன்னை நாடி வருவோருக்கும், நாடாதோருக்கும் வறுமை கண்டு இரங்கி உதவுபவனே வள்ளல். இங்கு முரண்பாடாக பெறுபவரையே வள்ளல் என்று குறிக்கிறார். எவ்வாறெனில், அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை உலகத்து உயிர்களின் பசிப்பிணி போக்கினாள் என்பது மணிமேகலை கூறும் செய்தி.
தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே’
(lpiö - 182)
என்ற சங்கப்பாடல் வழி தானடைந்த சிவஞானத்தை - பரம்பொருள் இன்பத்தை - உலகத்து உயிர்களுக்கெல்லாம் தேவாரப் பாடலாகவும், அற்புதச் செயல்களாகவும், உருமாற்றிக் காண்பித்து, ஈடேறச் செய்த சம்பந்தரை வள்ளல் என்ற வார்த்தையால் குறிப்பதே தகும். சேக்கிழாரின் கவிமனது பின்னாளில் நடந்தேறிவருபவற்றை யெல்லாம்
盛
60
பெண்களை ஆண்கள் புரிவதனால் பெண்மை புரியும். வன்மைக்கு மென்மை அடங்( மென்மையுடையவர்.தங்கம் மென்மையானது, பெட்டியால் மென்மையான தங்கத்தை வை தங்கம் தாழ்ந்ததென்று உலகம் கருதுகிறதா? உ

ஒரிரு சொற்களில் அமைத்துத் தந்து விடுகிறது. இவ்வாறு முரண்பாடான வார்த்தைகளைக் கொண்டு சம்பந்தரின் உயர்வைப் பாடுவதை ஒரு உத்தியாகவே சேக்கிழார் கையாண்டுள்ளார்.
சம்பந்தர் பெருமை வரையறுக்கப்பட்ட பக்கங்களில் அடங்காதவை. அது போலவே, தொடங்கிய சொல்லிலேயே முடிக்கும் புலமை பெற்ற சேக்கிழார் பெருமானின் கவியாற்றலையும் சொல்லில் அடக்க முடியாது. சோழர்களின் நல்லாட்சிக் காலத்து, இறைநெறியில் தொய்வுற்று, செல்வத்தில் திளைப்புற்றிருந்த மக்களின் மனமாற்றத்தை, சைவத்தின் பால் மடைமாற்றம் செய்தவர் சேக்கிழாரே என்றால் மிகையில்லை.
பயன்பட்ட நூல்கள் 1. திருத்தொண்டர் புராணம், 4- ஆம் பகுதி, கோவைத் தமிழ்ச் சங்க
வெளியீடு, கோவை - 1949. 2. திருத்தொண்டர் மாக்கதை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகப்பொன்விழா வெளியீடு,சென்னை-1970. 3. சோ. சிவபாதசுந்தரம்,சேக்கிழார் அடிச்சுவட்டில், வானதிபதிப்பகம்,
சென்னை. முதற்பதிப்பு-1978. 4. பெரியபுராணச் சொற்பொழிவுகள், திருநெல்வேலி தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-1970. 5. பேரா. அ. ச. ஞானசம்பந்தன், பெரியபுராணம் ஒர் ஆய்வு சேக்கிழார்
ஆராய்ச்சி மையம், சென்னை-1994 6. புறநானூறு, நியூ செஞ்சுரிபுக்ஹவுஸ் (பி) லிட், சென்னை முதற்பதிப்பு
- 2004.
GOD
) தாழ்ந்ததன்று. மென்மையை வன்மை காவல் கும். ஆடவர் வன்மையுடையவர்,மகளிர் இரும்புவன்மையானது. வன்மையான இரும்புப் வத்துக் காப்பாற்றுகிறார்கள். காவலிலிருக்கும் உயர்ந்தது உணர்க.
Gragnitiatival 2005

Page 47
சேக்கிழார்புலப்படுத்து
- முனைவர் இரா. தமிழ் விரிவுரையாளர், கே. எஸ். ஆ திருச்செங்கே
இந்தியத் துணைக் கண்டத்தில் இனம், மொழி, எண்ணங்கள், சமயங்கள், தத்துவங்கள்,7 சடங்குகள், பழக்கவழக்கங்கள் போன்ற பல நிலைகளில் வேற்றுமை இருந்தாலும், அதில் ஒற்றுமை உணர்வை இந்தியப் பண்பாட்டோடு இணைத்து இந்து சமயம் வெளிப்படுத்துவது சிறப்பாகும். மனித ஆன்மாக்கள் உலக பந்தத்திலிருந்து விடுபட்டு வீடுபேறு அடைய வழிகாட்டும் இறையுணர்வின் இன்றியமையாமையைக் கூறுவதும் சாதி, சமயம், காலம், இனம், பால் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து அனைவரின் தேவைகளையும் நிறைவு செய்வதும் இந்து சமயமாகும்.
இத்தகைய பெருமைமிக்க இந்து சமயத்தில் சைவமும் வைணவமும் அருட்பணியைச் செய்து வருகின்றன. சைவ வைணவ சமயங்களில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றி மனிதனை வளப்படுத்தி வந்துள்ளன. ஆளுமைக்கும் மதிப்பு கொடுத்து, ஆக்கபூர்வமான கருத்துக்களை மனித வாழ்வியலோடு ஒன்றிய நிலையில் போற்றி உலகப் பண்பாட்டில் சிகரமென உயர்ந்து நிற்பது இந்தியப் பண்பாடு என்ற நிலையினை உருவாக்கியுள்ளனர் நாயன்மார்கள். நாயன்மார்கள் படைத்த சமய இலக்கியங்கள் மக்களின் சமுதாய வாழ்வைப் பண்படுத்தின. நாயன்மார்களின் படைப்புகளான பன்னிரு திருமுறைகளில் இறுதியாக வைத்தெண்ணப்படுவதும், மற்ற திருமுறைகளையும், சமயாச்சாரிகளையும் அரவணைத்துச் செல்வதும் பெரிய புராணமாகும்.
சிவனடியார்களின் வரலாற்றினைக் கூறும் சேக்கிழார் பெரிய புராணத்தில், குறிக்கோளின் அடிப்படையில் சிறப்பான வாழ்வும், அவ் வாழ்வின் இன்றியமையாக் கோட்பாடுகளை பலன் கருதாது கடமையைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு, சகிப்புத்தன்மை, இன்னா செய்யாமை, வாய்மை ஆகியவற்றைப் பின்பற்றி வாழும் வழிகளைப் பெற்று மனித சமுதாயம் இப்புவியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடியார்களின் வாழ்க்கை வரலாற்றைப் படைத்துள்ளார். அடியார்களின் வரலாற்றின் மூலம் உலக சமுதாயத்திற்கே அறவழி வாழ்வைப் போற்றிட புத்துணர்வை ஊட்டியுள்ளார். இவர் படைத்த இம்மாகாவியம் கி.பி 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருப்பினும் திருக்குறளைப்போல் என்றைக்கும் எச்சமூகத்திற்கும் பொருந்தும் வகையில் மனித வாழ்வை வளப்படுத்துவதான கருத்துக்களைக் கொண்டது.
Gráfigth 1975fid லர் 2005
 
 
 

சந்திரசேகரன் - i. கலை மற்றும் அறிவியல் கல்லூரி டு, தமிழ்நாடு
பெரியபுராணம் கற்பனையாக எழுதப்பட்ட நூல் அன்று; இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் வரலாற்று நூல்; தமிழ் மொழியின் இசையும் மெய்யறிவும் கொண்டு விளங்கும் முழு முதல் நூல். அடியார் வழிபட்ட கடவுளையும், கடவுள் வழிபட்ட அடியார்களையுமே சேக்கிழார் பாடவில்லை. ஒழுக்கத்திலும், நோன்பிலும், செறிவிலும், அறிவிலும், ஆரா அன்பிலும், அருளிலும் சிறந்து விளங்கிப் பக்தியையும் கொண்டு ஒழுகியவர்களையே அவர் பாடினார். இவர் பாடிய பெரியபுராணத்தில் மனித சமுதாயத்திற்குக் கூறியுள்ள அறக்கருத்துக்களையே இக்கட்டுரை எடுத்து இயம்புகிறது.
தொண்டுள்ளம்
பூவுலகில் வாழும் மனிதன் ஆன்மீக வாழ்வில் ஈடுபட்டு பேரின்ப வாழ்வைப் பெறுவதற்கான நெறிமுறைகளைக் காட்டுவதும், முன்னோர்கள் போற்றி வந்த நெறிகளை வாழ்வில் கடைபிடிக்கத் தூண்டுவதும், சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணத் துணைபுரிவதும் என பலநிலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது பெரியபுராணம். உலகில் பிறந்த மனிதன் தன்னைப் பற்றியும், இவ்வுலகைப்பற்றியும் சிந்திக்கத் தொடங்கியபின், தான் பிறப்பெடுத்ததன் பயன் பிறர்க்குப் பயனுடையதாக வாழ்ந்து காட்டவேண்டும் என்று உணரத்தொடங்கினான். இத்தகைய தொண்டுள்ளம் கொண்ட மனிதர்களைப் பற்றியதே பெரியபுராணமாகும். சேக்கிழார் தொண்டர் என்ற தொகுதிப் பெயரை ஒருமையாகக் கொண்டு அதற்குரிய இலக்கண நெறியையும் வகுத்தார். இந்த இலக்கணப்படி வாழ்கின்றவர் யாவராயினும் அவர்கள் அடியார்கள் அல்லது தொண்டர்கள் என்று கூறப்பெறுவர். எனவே இக்காப்பியம் தனிப்பட்ட பலருடைய வாழ்க்கையைப் பேசுகின்றது என்று கூறுவதைக் காட்டிலும், இறைவனிடத்து அடிமைத்திறம் பூண்ட தொண்டரைப் பற்றிக் கூறுவதாகும் என்பதே பொருந்தும். தொண்டு என்ற பண்பே காப்பியத் தலைவனின் இடத்தை இங்கு பெறுகிறது.
சேக்கிழார் காப்பியம் பாடத் தேர்ந்தெடுத்த கருப் பொருளும் புதுமையானது. மக்களாகப் பிறந்தவர்கள் இறைவனை வழிபடுவது தலையாய கடமை என்பதையும், பிற உயிர்களுக்குத் தொண்டு செய்வது தம் கடமை என்பதையும் உணர வேண்டும். அதனை உணரத் தொடங்கினால் தன்னலம் தானே விலகிவிடும். இத்தகையவர்களே ஒரு
15

Page 48
நெறியில் நின்று மக்களை நல்வழியில் நடத்துபவராவர்.
இத்தகைய பெரியோர்களைத் தொண்டர்கள் எனப்
பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. இவர்கள் எந்த நேரத்திலும் தம் உள்ளம் முழுவதையும் இறைவனிடத்தே வைத்திருப்பர். அவர்கள் யாரிடமும் எதனையும் எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய தொண்டுள்ளம் கொண்ட பண்பாளர்களைப் பற்றிக் கூறும் பகுதிக்குத் “திருக்கூட்டச்சிறப்பு” எனத் தலைப்பினைக் கொடுத்தார். தனி ஒருவர் பெயரைச் சுட்டாமல் பொதுவாக இப்பகுதி அமைந்துள்ளது. உலகில் தொண்டுள்ளம் கொண்ட அனைவரையும் பாடுதல் இயலாது. எனவே ஒரு சிலரை மட்டும் சேக்கிழார் பாட எடுத்துக்கொண்டார். எனவே தொண்டு என்னும் பண்புதான் காப்பியத்தலைமை ஏற்பது. அத்தொண்டு என்னும் பண்பு நம்பியாரூரார், சம்பந்தர், திருநீலகண்டர், திருநாளைப்போவார் என்ற மனிதர்களின் உட்புகுந்து எப்படிப் பணி செய்கின்றது என்பதை அறிவிப்பனவே பெரியபுராண வரலாறுகளாகும். மேற்கூறிய அடியார்களின் வரலாறே இன்றைக்கும் மக்கள் தொண்டு செய்பவர்களுக்கு வேண்டப்பெற்றப் பண்புகளாகும்.
சமத்துவப்பண்பு
மனிதனிடம் காணப்படும் உடல், உள்ளம், உயிர் (ஆன்மா) என்ற மூன்று கூறுகளில் அழியக்கூடியது உடல், நிலையான உயிரின் பிரதிபலிப்பே உள்ளம். எனவே இந்தியப் பண்பாடானது உடல், உள்ளம் என்ற இரண்டும் சீர்பெற்ற நிலையில் உயிராகிய அகவளர்ச்சியைக் கொண்டு இயங்கும் ஆன்மீக நிலையை அடிப்படையாகக் கொண்டதாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் “பண்பாடு” என்ற சொல்லுக்கு விளக்கமாக சான்றாண்மையாகிய ஒழுக்கம் அல்லது உயர்ந்த வழிச்செல்லுதல் என்று தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள். மக்களிடையே காணப்படும் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபடவைப்பதே சமத்துவப் பண்பின் முதன்மை நோக்கமாகும். இவ்வகையான குறிக்கோளைக் கொண்டே பெரியபுராணம் அமைந்துள்ளதைக் காணலாம். சாதியால் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல நிலைகளில் சேக்கிழார் பெருமான் பல அடியார்களின் வரலாற்றைத் தந்துள்ளார். இவ்வடியார்களின் வரலாற்றைப் பயிலும் மக்கள், தங்களுக்குள் காணப்படும் சாதி வேற்றுமைகளை நீக்கி ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற நோக்கத்திலேயே படைத்துள்ளார். இதன் மூலம் சேக்கிழார் பண்பாட்டின் நிலைக்களனாக அமைந்திருக்கிறார் எனலாம்.
திருநீலநக்கர் என்பவர் முத்தீ வளர்க்கும் அந்தணர். சிவலிங்கத்தின் மேல் சிலந்தி விழுந்ததை அவர் மனைவி ஊதி வெருட்டினார். எச்சில்பட ஊதினார் என்பதற்காக மனைவியையே ஒதுக்கி வைக்கிற அளவுக்கு விதிவழியில் நம்பிக்கை உடையவராகத் திருநீலநக்கர் விளங்கினார். அவருடைய வீட்டிற்குத் திருஞானசம்பந்தர் சென்றார்.
16

சம்பந்தருடன் சென்ற தொண்டர்குழாம் முழுவதும் ஆண்மக்கள் கூட்டமாக இருந்தது. ஆனால் ஒரே ஒருவர் மட்டும் மனைவியுடன் வந்தார். அவர்தாம் பாணர். செல்லும் இடமெல்லாம் அவர்களுக்குத் தனி இடம் தரவேண்டிய பொறுப்பு சம்பந்தருடையதாக இருந்தது. அந்நிலையில் தான் சம்பந்தர் திருநீலநக்கரின் மனை புகுந்தார். திருநீலநக்கரின் ஊராகிய சாத்தமங்கையில் அவருடைய விருந்தினராக சம்பந்தரும், அவருடைய புடைசூழ் தொண்டர்குழாமும் விருந்துண்டனர். இரவு உணவு முடித்த பின்னர் சம்பந்தர் திருநீலநக்கரைத் தனியே அழைத்துப்பாணர் தங்க ஓர் இடம் தருக என வேண்டினார். அதற்குத் திருநீலநக்கர் தாம் அன்றாடம் முத்தீ வளர்க்கும் வேள்விச்சாலை பக்கத்தில் பாணரும் அவர் மனையாரும் தங்க இடம் தந்தார் என்று சேக்கிழார் பாடுகிறார்.
நின்றஅன்பரைநீலகண்டப்பெரும்பாணர்க்கு இன்றுதங்கவோர்இடங்கொடுத்துஅருளுவீர்என்ன நன்றும்இன்புற்றுநடுமனை வேதியன்பாங்கர்ச் சென்றுமற்றவர்க்குஇடங்கொடுத்தனர்திருமறையோர்”
"ஆங்கு வேதியின் அறதசெந்திவலஞ்சுழிவிற்று ஓங்கிமுன்னையில் ஒருபடித்தன்றியேஒளிரத் தாங்குநூலவர்மகிழ்வறச்சகோடயாழ்த்தலைவர் பாங்குபாணியார் உடன் அருளால்பள்ளிகொண்டார்”
தொடக்கத்திலிருந்து சம்பந்தருடன் உடன் இருக்கின்ற யாழ்ப்பாணரும், அவர் மனைவியாரும் சென்ற இடமெல்லாம் எங்கே தங்கினர் என்று கூறாத சேக்கிழார், கடுமையான வேள்வியை இயற்றும் திருநீலநக்கர் வீட்டில் இச்செய்தியை விரிவுபடுத்திக்கூறினார். அதற்குக் காரணம், விதி வழியால் இணைந்து நின்ற திருநீலநக்கரே பழைய தீண்டாமைக் கொள்கையை ஒதுக்கித்தள்ளி விட்ட பண்பை பிறர் உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை விளக்கிக் காட்டுவதற்கேயாகும்.
திருஞானசம்பந்தர், பாணரை உடன் வைத்துக்கொண்டு புரட்சி செய்தார் என்றால், சேக்கிழார் அப்பாணரை மனைவியாருடன் வேள்விச்சாலை பக்கத்தில் துயிலுமாறு செய்து சேக்கிழார் அப்புரட்சியைச் செய்தார். பெரியபுராணம் முழுவதும் காணப்பெறும் இரு தாழ்த்தப்பட்டவர்களை உயர்சாதி அந்தணர் விளிக்க வேண்டிய சூழலில் ‘ஐயரே' என்று விளித்து அழைத்ததாகச் சேக்கிழார் பாடியிருப்பது சமத்துவப் பண்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது. ஞானசம்பந்தர் யாழ்ப்பாணரை வரவேற்றபோது, அளவிலாமகிழ்ச்சியினார்தமைநோக்கிஜயர்நீர் உளமகிழஇங்கணைந்த உறுதிஅடைவோம் எனறும,
யாழ்ப்பாணர் தாம் பிறந்த ஊர் இது என்று திருஎருக்கத்தம் புலியூரில் கூறியபொழுது ஞானசம்பந்தர்,
ஐயர்நீர் அவதரித்திட இப்பதி அளவில்மாதவம் முன்பு செய்த வாறெனச் சிறப்புரை அருளி' என்றும்,
6Figal treat vand 2005

Page 49
யாழ்ப்பாணர் ஞானசம்பந்தர் பாடலை யாழில் அடக்கி வாசிக்க இயலாமல் அதனை உடைக்க ஓங்கியபோது, பிள்ளையார் அவரைத் தடுத்தருளி,
போக்க ஒக்குதலும்தடுத்தருளிஜயரே உற்றஇசைஅளவினால்நீர் ஆக்கியஇக்கருவியினைத்தாரும் என்றும் கூறி ஞானசம்பந்தர் யாழை வாங்கிக்கொண்டு,
'ஐயர் நீர் யாழிதனை முரிக்குமதென்? என்று கேட்டார் என்றும் சேக்கிழார் பாடினார். பிறப்பால் மறையவர், பிறப்பினால் தாழ்த்தப்பட்டவரை மறந்தும் வேறு பெயர் இட்டு அழைக்காமல் ‘ஐயரே என்று அழைப்பதாகச் சேக்கிழார் காட்டியுள்ள பண்பு போற்றத்தக்கது. இவ்வரலாறு, தேசிய ஒருமைப்பாட்டு உணர்வினையும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் உயர்ந்த பண்பினையும் மக்களுக்கு உணர்த்துவதாக உள்ளது.
உயிர்களிடத்தில் அன்பு
சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டர் புராணத்துள் மிகவும் சிறப்புடைய வரலாறு மனுநீதிச் சோழன் புராணமாகும். மனுநீதிச்சோழன் ஆட்சியில் நிகழ்ந்த நிகழ்வை வரலாறாக அளிக்கிறார். சோழ மன்னன் தவமிருந்து பெற்ற ஒரு மகனுக்கு தெய்வீகக் கலைகளை ஒதினான். ஒருநாள் அத்தகைய அருமை மகன் தேரில் ஏறி நகர்வலம் சென்றான். எதிர்பாரா வகையில் இளங்கன்று ஒன்று தேர்க்காலின் இடையில் புகுந்து இறந்து விட்டது. இக்கொடுமையைத் தந்தையார் காதில் விழுமுன் அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுது அறமே ஆகில் இயற்றுவன்’ என்று அவர்களை நாடிச் சென்றான். ஆனால் கன்றை இழந்த LlG,
மன்னுயிர்காக்கும்செங்கோல்மனுவின்பொற்கோவில்வாயில் பொன்னணிமணியைச்சென்றுகோட்டினால்புடைத்தது'
அரசகுமாரன் எது நடைபெறக்கூடாது என்று எண்ணினானோ அதனை அப்பசு தானே சென்று செய்துவிட்டது. அரசன் மணியோசை கேட்டு வெளியில் வந்தான். கண்ணீர் சோரப் பசு நிற்பதைக் கண்டான். என் இதற்கு உள்ளது என அமைச்சரை இகழ்ந்து நோக்கினான். ‘சூழ்வார் கண்ணாக மன்னன் மன்னவன் ஆள்கிறான்' எனவே அத்தகையோர் இருக்கவும் இத்தகைய நிலை வந்ததே என்றுவாயால் கூறாமல், இகழ்ச்சியாக அவர்களைப் பார்த்தான். வேறு வழியின்றி அமைச்சருள் அகவையால் முதிர்ந்தவர் நடந்த நிகழ்வை அரசரிடம் கூறினார். அமைச்சரின் கூற்றைக்கேட்ட அரசன் ‘செவ்விதன் செங்கோல் என்று தெருமரும் தெளிவும் தேறான்' என்றான்.
இது கண்ட அமைச்சர்,
"சிந்தைதளர்ந்துஅருளுவதுமற்றிதற்குத்தீர்வன்றால் கொந்தலர்தார்மைந்தனைமுன்கோவதை செய்தார்க்குமறை அந்தணர்கள்விதித்தமுறைவழிநிறுத்தல் அறம்என்றார்”
drafgrf Asturro Aval 2005

இவ்வாறு அமைச்சர்கள் கூறினார்கள். அரசகுமாரன் பிராயச்சித்தம் செய்ய நினைத்து புதுமையன்று என்பதையும், அன்றைய சமுதாயப் பண்பாட்டு நிலையையும் இக்கூற்றுகள் தெளிவுறுத்துகின்றன. ஆனால் அமைச்சர்களின் இந்த அறிவுரைக்கு மன்னன் கூறியவிடை ஒரு பண்பை மேம் படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.
'வழக்கென்றுநீர்மொழிந்தால்பற்றதுதான்வலிப்ட்டுக் குழக்கன்றைஇழந்தலறும் கோவுறுநோய்மருந்தாளே
இத்தகைய சூழலில் பிராயச்சித்தம் ஒன்றே முறைமை என அரசகுமாரன், அமைச்சர், அந்தணர் ஆகிய அனைவரும் ஏற்றுக்கொண்டனர். எனினும் ஒன்றை மறந்தனர். கழுவாய் என்பது அரச குமரனுக்குத்தானே தவிர பசுவுக்கு அன்றே! தமிழ் மன்னன் மனுநீதி, அமைச்சரிடம் கேட்கும் வினா இதுபற்றியதேயாகும். கழுவாய் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டதால் எந்த தவற்றையும் செய்துவிட்டு அதற்குக் கழுவாய் தேடிக்கொள்ளலாம் என்ற மனநிலை இருந்தபொழுது, அதற்கு அடி கொடுக்கவே இக்கதையைச் சேக்கிழார் கையாண்டார். கழுவாய்' என்ற ஒன்று கன்றை இழந்து வருந்தும் இத்தாய்ப் பசுவின் துயரைப் போக்க இயலுமா? இந்த வினாவுக்கு யாரும் விடை கூறவில்லை. அதன்பின்னர் மன்னன் தமிழரின் பண்பு மிளிரும் வகையில் பேசினான்.
"மாநிலங்காவலன் ஆவான்மன்னுயிர்காக்கும்காலைத் தான் அதனுக்கு இடையூறுதன்னால்தன்ரிசனத்தால் ஊனமிகுபகைதிறத்தால்கள்வரால்உயிர்கள்தம்மால் ஆனயம்ஐந்தும்தித்துஅறங்காப்பான்அல்லனோ”
"என்மகன்செய்பாதகததுக்குஇருந்தவங்கள் செயஇசைந்தே அன்னியனோர்உயிர்கொன்றால் அவனைக்கொல்வேனானால் தொன்மனுநூல்தொடைபனுவல்துடைப்புண்டதுஎனும்வார்த்தை மண்ணுலகில்றெமொழிந்தீர்மந்திரிகள் வழக்கென்றான்
இவ்வாறு கூறிய மன்னவனை மறுத்துப் பேசும் அமைச்சர்கள் தம் நிலையை மீண்டும் எடுத்துப் பேசுகின்றனர்.
நின்றறிெஉலகின்கன் இதுபோல்முன்நிகழ்ந்ததால் பொன்றுவித்தல்ம்மரபன்றுமறைமொழிந்தஅறம்புரிதல் தொன்றுபடுநெறிபன்றோ?தொல்நிலம்காவல
என்றனர். அமைச்சர்கள் இத்தகைய குற்றம் முன்னர் நிகழ்ந்துள்ளது போலவும், அதற்கு அறநூல் கழுவாய் வழியைக் கூறியுள்ளது போலவும் கூறுவதைக் கேட்டு மன்னன் சினந்தான். இவ்வண்ணம் பழுதுரைத்தீர்' என்று கூறித் தொடர்ந்து செவ்விய உண்மைத்திறம் ஓர் சிந்தை செயாது உரைக்கின்றீர்’ என்று சினந்தான். எந்தவுலகில் எந்தப்பசு இத்தகையதொரு இடையூறு அடைந்து மன்னன் கோவில் மணியை ஒலிக்கச் செய்தது என்று கேட்டான்.

Page 50
தனதுறுபேர்இடர்பானும்தாங்குவதே தருமம் என அனகன்அரும்பொருள்துணிந்தான் காம் அர்சினர் அகன்ார்
இவ்வாறு மன்னன் கூறித் தேர்க்காலில் மகனைக் கிடத்தி அவன்மேல் தேரைச் செலுத்தியதாகப் பெரியபுராணம் பேசுகிறது.
விலங்குகளைக் கொல்வதில் தவறில்லை என்று சமுதாயம் வளர்ந்துவிட்ட நிலையில், அரசகுமாரனும் அமைச்சர்களும் கழுவாய் செய்து பசுவதைப் பாவத்திலி ருந்து, விடுதலை பெறவிழைந்தனர். இவர்களுள் எவரும் பசுவைப் பற்றிக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. மறைநெறி கூறும் வழியில் செல்பவர்களுக்கும், பழைய அறநெறியில் செல்பவர்களுக்கும் இடையே நடந்த போராட்ட உணர்வை வெளிப்படுத்துவது இந்த வரலாறு. இதுதான் அறம் என்று கூறாமல், இது வழக்கம் என்று அமைச்சர்கள் கூறியது சிந்திக்கத்தக்கது.
புதிய வழக்கத்துக்கும், புதிய மரபுக்கும் அடிமையாகிவிட்ட தமிழர், பழந்தமிழரின் அறநெறிப்பண்பை மறந்துவிட்டனர். அப்பழைய அறநெறி யாதெனில் பிற உயிர்கள் படும் இன்னலைப் போக்க முயலுதலும், அது இயலாத நிலையில் அவ் இன்னலைத் தானும் ஏற்றுக்கொண்டு உழல்தலும் செய்வதே ஒருவன் அறிவு பெற்றதன் பயனாகும். பிறிதின் நோயைத் தன் நோய் போல் போற்றாதவன் மனிதப்பண்பு உடையவன் அல்லன். இத்தகைய அறநெறிப்பண்பைக் கடைப்பிடித்தவன் மனுநீதிச் சோழனாவான். இச்சோழனின் வரலாற்றைக் கூறவந்த சேக்கிழார், மனிதர்கள் உலகில் உள்ள அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும் என்ற பண்பையே வலியுறுத்துகின்றார்.
பொதுமைப் பண்பு
சேக்கிழார் காட்டிய நாடுகள், ஊர்கள், அவற்றில் வாழ்ந்த மாந்தர்கள், விலங்குகள், அவற்றில் விளைந்த பொருட்கள், அவற்றில் தழைத்து வளர்ந்த தாவரங்கள் முதலிய அனைத்தும் ஒழுங்குபெற அமைந்துள்ளன. எந்த ஒரு நாட்டை, அல்லது ஊரை, விளக்க வந்த போதும் அதற்குத் தகுந்த விளக்கங்களையே அளித்தார். அதில் கூறப்பெற்ற செய்திகள் உண்மை நெறிக்குப் புறம்போகாத நிலையில் அமைந்துள்ளன. எடுத்துக்கொண்ட பொருளுக்கேற்பப் பொருத்தி இயலுகின்ற சிறப்பும் உடையதாக ஒளிர்கின்றது. மனித வாழ்வைப் பற்றி ஆராய்வதுமானிடவிய்ல் எனப் பெறுகிறது. இவ்வியல்முறை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பக்திப் பாடல்களில் காணப்படுகின்றது. மானிடவியல் என்பது பொதுவாக சூழ்நிலைக்கும், மனிதனுக்குமுள்ள சிக்கலான உறவுகளை ஆராய்கிறது. இந்தச் சிந்தனை சேக்கிழாருக்கும் அன்றே அமைந்திருந்தது.
18

அடியவர்கள் தாம் பிறந்து பணிசெய்த தொண்டு நிலையில் பல்வேறு பகுதிகளில் தோன்றியிருந்தனர். அவர்களுள் சோழ நாட்டவராக இருவரும், பாண்டிய நாட்டவராக ஐவரும், தொண்டை நாட்டவராக எண்மரும், வட நாட்டவராக இருவரும் விளங்கினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தோன்றி அன்பின் உச்சியில் ஏறிநின்று ஒரே நோக்கில் உலகைக் கண்ட பொதுமைப்பண்பைக் காணலாம். நாட்டு வேறுபாடுகள், இவர்களிடையே இருந்த சிவ நெறியின் மாறாத அன்பைத் தடுக்கவில்லை. பல நிலைகளில் இறையடிகளுக்கு தொண்டு செய்து உணர்ந்த இவர்களை நாட்டு வேறுபாட்டால் வேறுபடுத்திக்காண இயலவில்லை.
முடியணிந்த மன்னர்களும், செங்கோல் பிரித்த செழுங்கரங்களும் கொண்ட நாயன்மார்கள் பலர் காணப்பட்டனர். ஏர்முனையில் நின்றோரும் மட்பாண்டம் செய்தோரும், ஆடு மாடு மேய்த்தோரும், துணிகளை வெளுத்தோரும், கடலில் வலை வீசியோரும், பறை கொட்டியோரும், மரம் ஏறியோரும், நாயன்மார்களாக விளங்கினர். இத்தகைய தொழில் வேறுபாடுகளால் இவர்களுடைய இணையற்ற இறையன்பு நிலை தாழ்ந்து விடவில்லை. தூய்மையான அன்பே நிலைத்திருப்பதைக் காண முடிகிறது. சேக்கிழார் பெருமான், அடியார்களின் பக்திநெறி எவ்வகையிலும் தடை ஏற்படாமல் பலநிலைகளில் விளக்கியுள்ளார்.
இவ்வாறு சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர்புராணம் மனித சமுதாயத்திற்குப் பயனளிக்கக்கூடிய வகையில் பல்வேறு நலக் கருத்துக்களைக் கூறியுள்ளது. இந்தியப் பண்பாட்டின் ஒற்றுமையைப் பேணி வளர்க்கத் துணைபுரிந்த காரணிகள் பலவற்றைக் கூறியுள்ளார். 'அன்பே சிவம்' என இந்து சமயம் கூறுகிறது. ‘அன்பு அன்பிற்காகவே என்பதே சேக்கிழாரின் சமயக் குறிக்கோள். தனிமனித மேம்பாடு, சமுதாய மேம்பாட்டினை ஏற்படுத்தும் என்பது அவரது கருத்தாகும். எனவேதான் மனிதர்கள் தொண்டுள்ளத் தோடும், சமத்துவப்பண்போடும், அனைத்து உயிர்களிடத்தும் அன்புள்ளத்தோடும், சாதி என்ற காழ்ப்புணர்ச்சி இல்லாமலும் வாழ வேண்டும் என வலியுறுத்துகிறார். இந்து சமயத்தை அழகிய மணம் பரப்பும் பூங்காவாக்கி, அங்கே சென்று தெய்வீக மனத்தை மக்கள் நுகர்ந்து பயன்பெறவே நாயன்மார்களின் வரலாற்றினை பக்தி நெறிவழியே போதித்துள்ளார்.
தரணை நூல்கள் 1.திருத்தொண்டர் புராணம்-சேக்கிழார் 2பெரியபுராணம்சொற்பொழிவுகள்-குன்றக்குடி அடிகளர் 3.பெரியபுராணம் ஓர் ஆராய்ச்சி-ஞானசம்பந்தன். அ. ச. 4. தமிழர் சமய வரலாறு-வேலுப்பிள்ளை. ஆ 5. பன்னிரு திருமுறை வரலாறு-வெள்ளைவாரணன்.க
-- Gardiffgaif Bergareb 19af 2005

Page 51
韃
சேக்கிழார்வபரும
2 19. எஸ். 虚 செயலாளர்-சேக்கிழார் ஆர
“நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த மறைமொழி தானே மந்திரம் என்ப" இது தொல்காப்பியம்.
இந்த நிறைமொழி மாந்தர் யார்? இதற்கு வள்ளுவப் பெருந்தகை பதில் சொல்லுவார்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழிகாட்டி விடும்”என்பதாக, ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் சோழப்பேரரசில் தலைமையமைச்சராகப் பணிபுரிந்த ஒருவரின் எழுத்துகள் இன்றளவும் மக்கள் மனதில் மந்திரமொழிகளாகப் பாராயணம் செய்யப்படுகின்றது எனில், காப்பிய ஆசிரியர் நிறைமொழி மாந்தராக விளங்கினார் என்பது வெள்ளிடை மலை. ஆளும் அதிகாரம் துறந்து வாழ்வின் இன்னபிற எழில் நலன் மறந்து ஒரு வரலாற்றுக் காப்பியம் புனைய என்ன அவசியம்?
இதுதான் தெய்வச்சேக்கிழாரின் அருஞ் சிறப்பு பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வளங்கள் செறிந்த நாட்டில் வாழ்ந்தாலும் குறிக்கோள் இன்றி வாழ்தலைக் கண்டார் சேக்கிழார். நாட்டு மன்னனும் சிருங் காரரசம் ததும்பும் காப்பியங்களில் மனம் கொண்டமையும் கண்டார். புகழும், வரலாற்றுச் செறிவும் கொண்ட பல அரசுகள், நாகரீகங்கள் மக்களின் மாறுபட்ட பண்பால் அழிந்ததை அறிந்தவர் நம் அமைச்சர்.
பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்து ஓங்கி வளர்ந்த நம் சமூகம், அது சார்ந்த நன்னெறிகள், குறிக்கோள் இல்லாமல் இன்றைக்குத் தாழ்ந்து வருதலை தடுக்கவும், கடந்த காலங்களில் அன்பையும், தொண்டையும் மட்டுமே பற்றி வாழ்ந்த பலரின் வரலாற்றுச் செய்திகளை ஒரு நூல் வடிவில் காப்பியம் புனைய விழைந்தார். இதன் பயனாகவே இன்றைக்கு நமக்கு உலகம் போற்றும் வரலாற்றுக் கருவூலமாக பெரிய புராணம் திகழ்கிறது.
இறைவனே முதல் அடி எடுத்துக் கொடுத்து சேக்கிழார் பின்னர் தொடர்ந்து எழுதினார் என்பது வரலாறு. வாழ்நாள் முழுமையும் கொள்கை சான்ற நெறியோடு, கொண்ட குறிக் கோளுக்காக உயிர்துறக்கவும் வல்ல 63 அடியார்களின் வாழ்க்கைத் திறத்தை விளக்குவதுதான் பெரிய புராணம்.
“உலகெலாம்” என்று தொடங்கி “நின்ற தெங்கு நிலவி உலகெலாம்” என்று முடித்தார்.
முதல்பாடலில் 63 எழுத்துகள் காணப் பெறுதலும், இக் காப்பியம் 63 அடியார்களின் வரலாற்றை விரித்ததிலும் ஏதோ
Giardiffganrif gogi gareb gosod 2005
 
 
 

ானின் சொல்லறம்
ujJT851JTSF6
ாய்ச்சி மையம், சென்னை - 4.
ஒரு பொருத்தம் இருப்பதை உணரலாம். இவர் முன் வாழ்ந்த நக்கீரரும், பின் வந்த கம்பரும் உலகம் என்ற சொல்லை முத லாகக் கொண்டுதான் காப்பியம் அமைத்தார்கள் என் பதும் நோக்கற்பாலது. இக்காப்பியத்தின் பல்வேறு மேன்மை கருதித்தான் உமாபதி சிவம் தமிழின் மேலான நூல்களில் பெரியபுராணமும் ஒன்று என்றார்.
66
வள்ளுவர்நூல் அன்பர்மொழிவாசகம் தொல்காப்பியமே தெள்ளுபரிமேலழகர் செய்தவரை ஒள்ளியசிர்த் தொண்டர் புராணம் தொகு சித்தி ஓராறும் தண்டமிழின் மேலாந்தரம்”
-உமாமதிசிவம் இவரது காவியச் சிறப்பைத் தமிழ்த் தென்றல் திரு. வி. க “காவியங்கள் பலதிறத்தன. அவைகளுள் சிலவற்றில் உலகைக் காணலாம். சிலவற்றில் உயிரைக் காணலாம். சிலவற்றில் கடவுளைக் காணலாம். மூன்றையும் ஒருங்கே காட்டும் காவி யங்கள் மிகச்சில. அச்சிலவற்றுள் பெரியபுராணமும் ஒன்று” என்றார்.
“உள்ளத்தில் உண்மையொளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்.” இது மகாகவி பாரதியின் வாக்கு. மக்கள் நலன் கருதி, தன்னலமறுப்போடு சேக்கிழார் பெருமான்காவி யம் புனைய முன்நிற்கிறார். எல்லாம் வல்ல இறைவனே முன் னின்று தொடங்கி வைக்கிறார். பின் என்ன? வாக்கில் ஒளி யுண்டாகிறது. அடியார்களின் வாழ்க்கையும் வரலாற்றில் தடம் பதிக்கப்படுகிறது.
சேக்கிழார் அருளிச் செய்த இந்த மாபெரும் சமய, சமூக காப்பியத்தில் வரும் பாத்திரங்கள் எல்லாம் ஒரு காலத்தில் இந்த மண்ணில் உண்மையாக வாழ்ந்தவர்கள்.
காப்பிய ஆசிரியர் முதலமைச்சராக வாழ்ந்திருந்த வாய்ப் பினால் நாடு இவரின் காலடியால் அளக்கப் பெற்றிருந்தது. எனவே அடியார்கள் வாழ்ந்த அவர்தம் இடங்கள், இன்ன பிற செய்திகளின் உண்மை வரலாற்று ஆவணப்பதிவுகளாயிற்று. இக்காவியத்தில் கவிகூற்று என, எதனையும் புறந்தள்ள இயலாது. அடியார்களின் வாழ்க்கைச் சித்திரங்களைத் தன் மனக்கண் நிறுத்தி, தன் மொழித்திறத்தால் உயரிய பண்புநலம் சேர்த்து மக்களுக்கு நூல் விருந்தளிக்கிறார்.
வள்ளுவப் பெருந்தகை சொல்லுவார், “சொல்லுக சொல்லின் பயனுடைய’என்று.
19

Page 52
இதன் வழி சேக்கிழார் பெருமான் பயன்விளையும் சொல்லை அடியார் பெருமக்கள் எப்படிப் புலப்படுத்தி உய்வு பெற்றார்கள் என்பதை ஒரிருடங்களில் பரக்கப் பேசுவார்.
ஐந்தெழுத்து பெருமை
சொல்லுக்கு ஒரு சக்தி உண்டு. தூய சொல்லுக்கு இன்னும் அதிகம். அதுவும் குற்றம் இல்லாத மனம் உடைய மெய் அடியார் சொல்லும் மந்திரச் சொல்லான “ஐந்தெழுத் துக்கு”உறுதிப்பொருள் உண்டுதானே உயிர் உண்டுதானே!
இப்படி இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை தனது செயற் கரிய செயல்கள் தொழில் படுவதற்கு முன்னால் உச்சரித்துப் புண்ணியம் பெற்றவர் யார் யார் என தன் வரலாற்றில் இவர் களைக் குறிப்பிடுகிறார்.
ஆனாய நாயனார்
சோழநாட்டில் தோன்றியவர். இடையர்கட்குத் தலைமை பூண்டு ஆநிரைகளைக் காத்து வந்தார். சிவபெருமானிடத்து மிக்க அன்பு பூண்டவர். காட்டில் பூத்துக்குலுங்கிய கொன்றை மரம் ஒன்று இவருக்கு இறைவனாகக் காட்சியளித்தது. அன்பின் உருக்கத்தால் தன்வேய்ங்குழலில் “ஐந்தெழுத்தை” இசையாக்கிச் சமர்ப்பணம் செய்தார்.
“எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்து அஞ்சும்” ஏழிசையாயின. புறஉயிர்கள் இசை கேட்டு அனைத்தும் அசைவற்று நின்றது. அகம் மகிழ்ந்த இறைவன்,
"எழும் குரல் நாதத்து
அஞ்செழுத்ததால்தமைப் பரவும்
இசைவிரும்பும் கூத்தனார்
எழுந்தருளி எதிர்நின்றார்”
திலகவதியார்
திருமணத்திற்கு முன்பே தன் மணாளனை இழந்தவர். தம்பி திருநாவுக்கரசரின் தமக்கையார், தாய், தந்தையரை இழந்த நிலையில் தம்பியும் புறச்சமயம் தழுவி அயல் ஊர் சென்றமையால் திருவதிகை மடம் புகுந்து சிவத்தொண்டு செய்து வரலானார். இறைவனின் திருவுளப்பாங்கின் வண்ணம் கொடிய சூலை நோய் கொண்டார் தம்பி மருள் நீக்கியார். எதனாலும் நோய் தீராத நிலையில் தமக்கையிடம் வந்து பணிந்த காலை திலகவதியார்,
நின்மலன் பேர் அருள் நினைந்து சென்று திருவீரட்டம் புகுவதற்குத் திருக்கயிலைக் குன்று உடையார் திருநீற்றை அஞ்சு எழுத்து ஒதிக் கொடுத்தார்” என்று ஐந்தெழுத்தின் பெருமையை சேக்கிழார் விவரிக்கிறார்.
திருநாவுக்கரசர்
தாய்ச் சமயம் திரும்பிய நாவுக்கரசரை இழந்த சமணர்கள் பல்லவ மன்னனிடம், “இவரின் தாய்ச் சமயம்
20

திரும்பலால்” நமக்கும், நம் சமயத்திற்கும் பெரும் இழுக்கு வரும் என்றனர். எனவே இவரைத் தண்டிப்பதுதான் சரி என்றனர். சமணகுரு மார்களின் எண்ணப்படியே, மன்னரின் ஆணைப்படி நீற்ற றையில் இட்டனர், நஞ்சு ஊட்டினர், கடக்களிற்றை விட்டனர், எதிலும் திருநாவுக்கரசர் இறந்துபடாமையால் இறுதியில் கல் லோடு இவரையும் பிணைத்து நடுக்கடலில் தள்ளினர். ஆயினும் ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி உயிர் மீண்டார்.
நாவுக்கரசர் தன் தூய வாயால்
“சொற்றுணை வேதியன் .
நற்றுணையாவது நமச்சிவாயவே”
என்று மொழிந்ததை நம் சேக்கிழார் பெருமான்,
“சொற்றுணை வேதியன் என்றும் தூமொழி நல்தமிழ் மாலையா நமச்சிவாய' என்று அற்றம் முன்காக்கும் அஞ்செழுத்தை, அன்பொடு பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்’ என்றார்.
திருஞானசம்பந்தர்
பெரியபுராணத்தில் “பிள்ளைபாதிபுராணம் பாதி” என்று வழங்கப்படும் அளவில் திருஞானசம்பந்தர் வரலாறு பேசப் படுகிறது. பலநூறு திருத்தலங்கள் சென்று இறைவனைப்பாடி துதிக்கிறார். பல ஆயிரம்பதிகங்களை மொழிகிறார். இவர்தம் வரலாற்றை பேசும் சேக்கிழார், இரு இடங்களில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஒதி செயல் பற்றினார் என்கிறார். ܚܝ
இறைவனால் உவந்து அளிக்கப்பட்ட முத்துச் சிவிகையில் அமரும் முன்பாக,
“சோதி முத்தின் சிவிகைகுழ் வந்துபார் மீது தாழ்ந்து வெண்ணிற்று ஒளி போற்றிநின்று ஆதியார் அருள் ஆதலில் அஞ்செழுத்து ஒதி ஏறினார் உயய உலகு எலாம
என்றருளினார்.
பின்னர் ஒருசமயம் பாண்டியநாடு போகத்துணிந்த காலை “பெருநாமச் சிவிகையின் மீது ஏறிப் பெற்றம் உயர்த்தவர் தாள் சென்னியின் மேல் பேணும் உள்ளத்து ஒரு நாமத்து அஞ்சு எழுத்தும் ஒதி வெண்ணிற்று ஒளி விளங்கும் திருமேனி தொழுதார்”. என்று திருஞானசம்பந்தர் அஞ்செழுத்து ஒதி உணர்ந்த இடங்களைப் படம் பிடிக்கிறார் சேக்கிழார்.
தண்டியடிகள்
ஆரூரில் பிறந்த அற்புத மெய்யடியார். பிறவியில் கண் பார்வையிழந்து இருந்தாலும் திருக்கோயிலுக்கு திருக்குளம் புதுக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். களத்தில் ஒரு கழிநட்டு மறுகரையில் ஒரு கழியில் கயிற்றால் இணைப்பார். பின் கையால் தடவிச் சென்றபடியே மண் வெட்டியால் மண்ணைக் கூடையில் சுமந்து கரையில் சேர்ப் பார். புறச்சமயத்தினர் இவரைக் கேலி செய்தனர். இவர்பால்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 53
பொறாமை கொண்டனர். பின்னர் இவருக்கும் சமணர்கட்கும் ஒரு போட்டி வந்தது.
இவர் தொழும் இறைவன் தண்டியடிகளுக்கு கண் பார்வை வழங்கினால், சமணசமயத்தவர் எல்லை தாண்டு வதாக உறுதி கூறினர் மன்னர் முன்பாக. தண்டியடிகள், “ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது”என்றே அஞ்சு எழுத்தை வாய்ந்த தொண்டர் எடுத்து ஒதி மணிநீர்வாவி மூழ்கி தூய மலர்க் கண் பெற்று எழுந்தார்.” என்று ஐந்தெழுத்தின் வலிமையைத் தண்டியடிகள் வாயிலாகப் பேச வைக்கிறார்.
புகழ்ச் சோழ நாயனார்
சோழநாட்டுமன்னன் சைவநெறிநின்று இறைவனின் பால் பெருங்காதல் உடையவனாக வாழ்ந்தான். பலநாடுகளை போரினால் வென்றவன்.
ஒருசமயம் அதிகன் என்ற பகையரசன் இவனது அரசு கட்டிலுக்கு அடிபணியாமல் படையரண் அமைத்து செருக் கொடு வாழ்கிறான். இதை அறிந்த புகழ்ச் சோழன் அவனை வென்றுவரவும், அவனது கோட்டையை பாழ் செய்யவும் படை அனுப்புகிறான். சென்ற படை அவனைவென்று அதிகனின் படைத்தலைவர்களின் தலைகளையும் கொய்து வந்து காட்டினர். இறந்து போன வீரர் ஒருவரின் தலைசடை யுடையதாக இருக்கக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவர் நம் இறைவனின் தொண்டர் என உணர்ந்தார்.
"சீர்தாங்கும் இவர் வேனிச் சிரம் தாங்கிவரக் கண்டும் LITIf giTiles gossidy,60TT பழிதாங்குவன்’என்று அரற்றினார்.
இனி நான் உயிர் தரிப்பதில் பயன் இல்லை. என்மகனுக்கு முடிசூட்டுங்கள், என்று அமைச்சர்கட்கு ஆணையிட்டார்.
அறுபட்ட அந்த சிரசினை கனகமணித்தட்டிலே ஏந்தி - மூட்டிய நெருப்பிலே ஐந்தெழுத்து மந்திரம் ஓதியபடியே தழலின் இடை புகுந்தார். இதனைச் சேக்கிழார் 'திருமுடித் தாங்கிக் குலவும் எரிவலம் கொள்வார் அண்டர் பிரான் திருநாமத்து அஞ்செழுத்தும் எடுத்து ஒதி மண்டுதழல் பிழம்பின் இடை மகிழ்ந்தருளி உள்புக்கார்”என்று விரித்தோதினார்.
கழற்றறிவார் நாயனார்
மலைநாட்டில் வாழ்ந்த சேர மன்னன், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு நெருங்கிய தோழராய் இருந்தவர்.
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

உவர்மண் நீரால் கரையப்பெற்ற நிலையில் இருந்த ஒரு சலவையாள ரையும் திருநீறு அணிந்த சிவனடியார் என எண்ணி வழிபட்டவர்.
மதுரை பாணபத்திரர் மூலமாக சிவபெருமானின் “திருமுகம்” கைவரப்பெற்று, மனம் மகிழ்ந்து அவருக்கு வேண்டும் பரிசுகளை அளித்தவர்.
இறைவனும் இவரது பூசைக்காலத்தின் முடிவில் தன் காற்சிலம்பொலியைக் கேட்கச் செய்து அருள் பாலித்தான்.
வன்தொண்டர் இவ்வுலக வாழ்வின் நோக்கம் முற்றும் பெற்ற நிலையில், இறைவனை நினைந்து உருகி பிறவிப் பெருங் கடலினின்றும் கரை ஏற்றுமாறு வேண்டினார். இறை வனும் மனம் கசிந்து இவரை அழைத்துவர தேவர்களை வெள்ளை யானை கொண்டு போகப் பணித்தார். சுந்தரரும் வெள்ளை யானை மீதேறி கயிலை செல்ல முற்பட்டதும், சேரமான் பெருமான் குதிரை மீது ஏறி யானையை விடவும் வேகமாகச் செல்ல குதிரையின் காதில் சிவமந்திரமான ஐந்தெழுத்தை ஒதினார்.
குதிரையும் வான்வழியில் வெள்ளையானையின் அருகில் சென்று வலஞ்செய்து முன்னே சென்றது.
விட்ட வெம்பரிச் செவியினில் புவிமுதல் வேந்தர் தாம் விதியாலே இட்ட மரம் சிவமந்திரம் ஒதலின் . மாதங்கத்தை முட்ட எய்திமுன் வலம்கொண்டு சென்றது மற்று அதன் முன் ஆக, இயந்திரமயமான நமது மனித வாழ்க்கையில் நாம் அறம் செய்திடப் பெரும்பொருள் சேர்த்திட வேண்டா, ஒதி உணர்தற் கென்று பல நூல்கள் கற்றிடவேண்டா, எங்கினும் சூட்சுமமாய் விளங்கி நிற்கின்ற பரம்பொருளைத் தேடி அலைய வேண்டா, செய்கின்ற பணிகளுக்கு முன்பாக, தூய மனதில் உறுதியான மனவலிமையோடு உணர்ந்து இந்த ஐந்தெழுத்து மந்திரத் தைத் தவறாது ஒதினால் எடுத்த பணி சிறக்கும், தொடர்ந்த தொல்லைகள் முடிவுறும். இதைத்தான் வள்ளுவர் “சொல்லுக சொல்லில் பயன் உள்ள” என்றார் போலும்.
இப்படி நல்ல மந்திரச் சொற்களை சொல்லியபடி வினை யாற்றிய பெரிய அடியார்கள் வாழ்க்கையை பரக்கப் பேசிய சேக்கிழார், பாமர மக்கள் அன்றாட வாழ்வில் எத்தகைய சந்தர்ப்பங்களிலும் அவலம் மிகுந்த, மங்கலம் அற்ற சொற் களைப் பயன்படுத்திட வேண்டாம் என்பதற்கு பல அடியார்கள் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களில் தனது இன் சொற்கள் மூலமாக நமக்கு சொற் சித்திரம் காட்டுகிறார்.
தவிர்க்க வேண்டிய சொற்கள்
இன்றைக்குக் கூட நமது பெரியவர்கள், நல்ல மகிழ்ச்சி யான நேரங்களில், திருமணவிழாக் கூடங்களில், பலமுக்கிய நல்ல அலுவல்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இவ்வகையான
2

Page 54
சொற்களைப் பயன்படுத்திட வேண்டா என்ற அளவுக்கு நம்மை பழக்கியிருக்கிறார்கள் என்றால் மிகை யில்லை. வன்மையாக நடந்த செய்தியைக் கூட பிறிதொரு இடத்தில் சொல்லத் துணியும் காலை, மென்மையாகக் கூறுதல் வேண்டும். இதனால் இவற்றின் தீவிரம் குறைந்தும், கொடுமை நிலை மாறியும் நன்மை பிறக்க வாய்ப்புண்டு. இதை அனுபவத்தில் உணரலாம். கொடுந்தொழிலைப் புரிந்த பாதகர்களின் செய்கையை பண்புடையோர் அப்படியே கூறிட மாட்டார்கள். உயர்ந்த பண்பு நலம் பரக்கவும், சிறக்கவும் உழைக்க வாழும் பெரியவர்கள் எப்போதும் மங்கலச் சொற் களையே புனைவர். பிறர் மனம் புண்படாவண்ணம், நயமாகவே உரைப்பர். படைக்கலங்களால் ஏற்படும் ரணங்களின் வடுவை விடச் சொற்களின் காயங்களால் நிகழும் வடுக்களே ஆறாக் குணம் உடையவை என்பதால்,
இதைக் கருதித்தான் இலக்கண ஆசிரியர்கள் கூட சொல்லும் முறையை இலக்கணமாக நிறுவியுள்ளார்கள்.
“இலக்கணமுடைய திலக்கணப் போலி மரூஉவென்றாகு மூவகையியல்பும் இடக்கரடக்கன் மங்கலங்குழு உக்குறி
எனுமுத்தகுதியோடாறாம் வழக்கியல்’
இந்த இலக்கண நூற்பாவின் பொருளுக்கு ஏற்பவே, சேக்கிழார் பெருமான் தாம் இயற்றிய இந்த மாபெரும் காப்பியத்தின்கண் வருகின்ற அடியார்களின் நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக்காட்டும் இடங்களில் பலவகையான உயர்ந்த நெறியுடன் கூடிய பண்பாட்டு முறையினை நிறுவியுள்ளார். இவ்வுயரிய பண்பாட்டு முறையினை நடந்த பல்வேறு நிகழ்ச்சி கட்கு தனது சொற் திறத்தாலும், இனிய வாக்காலும் ஒளி யேற்றுகிறார். இதனால் இதனை படிக்கும் மக்கள், அவரவர் தம் வாழ்க்கையில் இதன்காறும் ஒழுகி, உயர்வு நலம் அடைய வேண்டும் என்பவே இவரின் உள்ளக்கிடக்கையாகும். மக்கள் நலம் பேணும் உயர்நிலை அமைச்சுப் பணியில் தலைநின்றவர் அல்லவா நம் சேக்கிழார் பெருமான்!
Ů GLUAT ங்கு அவன் உதவான் இப்போது இங்கு
நாவுக்கரசர் அப்பூதியடிகள் இல்லத்தில் உணவருந்த முற்படும்போது, அவர்தம் மகனுக்கு விபூதி பூச அழைக்க வேண்டுகிறார். அம்மகனோ அரவு தீண்டி, விடம் தலைக் கேறிஉயிர்துறந்தநில்ையில் இருக்கிறான்.இந்த உண்மையைச் சொன்னால் நாம் வணங்கும் பெருமான் நாவுக்கரசர் உண்ணமாட்டார். ஆனாலும் மறைகள் ஒதும் வாயால் பொய் புகலாது அப்பூதியடிகள், அவன் இங்கு பயன்பட இயலாது என்ற பொருளில் “இப்போது இங்கவன் உதவான்’ என்றார் என்று சேக்கிழார் பண்பு நயம் புகல்வார். மேலும் அப்பூதி யடிகள் வாய்மை நலம் குறித்தும் "ஆதிநான் மறை நூல் வாய்மை அப்பூதியார்” என்று சாற்றுரைக்கிறார்.
22

6 é o O לל பைய வேசென்று பாண்டியற்காக
இப்போதும் தென்மாவட்டங்களில் “பைய’ என்ற வழக்குச் சொல் நடைமுறையில் இருப்பதை உணரலாம். பைய என்றால் மெதுவாக என்பது பொருள்.
காழிப்பிள்ளையார் மதுரையம்பதியில் தங்கியிருந்த மடத்திற்கு புறச் சமயத்தினர் தீ மூட்டினர். இத்தகைய புற சமயத்தார் பக்கம் சாய்ந்து இருந்த மன்னன் மனம் மாறவும், அவன்தன் மனையரசிமங்கையர்க்கரசியார் வேண்டியனண்ணம் வெற்றிபெறவும், அயல் வழக்கின் தன்மையில் இருந்து மக்கள் விடுபடவும் மனம் கொண்ட திருஞானசம்பந்தர் தான் கொண்ட பணிக்கு அதிக ஆற்றல் காட்டிடாமல், அளவு குறைந்த நிலை யில் அவர்கள் உணரப் பெறத்தகுந்த முறையில் மன்னனுக்கு வெப்பு நோய் பற்றிட அதுவும் வெம்மை அதிகம் பற்றினால் இறந்துபடுவான் என்ற கருத்தில் மென்மையாக “சைவர் வாழ்மடத் தமணர்கள் இட்டதீத்தழல் போய்ப் பையவே சென்று பாண்டியற்காக”என்றார்காழிப்பிள்ளையார் என்று சேக்கிழார் பகர்ந் தருளினார். இதற்கும் முன்பாக சமணர்கள் திருஞான சம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு தீயிட்டச் செயலைக்கூட “அம்தண் மாதவர் திருமடப்புறத்து அயல் இருள்போல் வந்து தம் தொழில் புரிந்தனர்” என்றார் தெய்வச் சேக்கிழார்.
இன்பத்துறையில் எளியர்
எல்லாம் வல்ல இறைவன் ஆடல்வல்லான் அடியான் திருநீலகண்ட நாயனார், இறைவனின் மெய் அடியார்கட்கு தனது தொழில் வன்மையால் உய்வு பாத்திரங்களை (திருவோடு களை) வழங்கித் தொண்டாற்றிய பெருந்தகை. இவரது மனம் இறையடியார்கட்கு தொண்டு புரிதலில் லயித்தது போலவே, வரைவின் மகளிர் மாட்டும் பெருவிருப்புக் கொண்டு ஒழுகலா னார். இது உணரப் பெற்ற இவர்தம் மனையாட்டி கடிந்து பெரு நோன்பு கொண்டார் என்ற வரலாற்றில், திருநீலகண்ட நாயனாரின் பெரும் பெண்ணாசை பற்றினை குறித்து இவரை காமுகர் என்றோ தீயஒழுக்கம் கொண்ட மனிதர் என்றோ கூறா மலும் அவரது புறவாழ்க்கையின் தூயதொண்டு பணிகருதியும்
இவரை இளமை மீதூர இன்பத் துறையினில் எளியர் ஆனார்”என்றார் நம்பெருமான்.
மாநதி நன்னிர்
யார் ஒருவர் வாயிலும் தோன்றும் உமிழ்நீர் எல்லாம் எச்சில் நீரே - வாயில் பட்ட அனைத்து பொருள்களும் எச்சிலே. மேலும் வேட்டையாடும் ஒருவரின் வாயால் தான் விரும்பி நேசித்த குடுமித் தேவர்க்கு ஆற்றுநீர் கொண்டு வருவதை எச்சில் என்ற சொல்லைப் பயன்படுத்த இல்லை. இறைவர்க்கு மஞ்சனநீர் தூய்மையுடையவையாதலின் கண்ணப்பரின் வாய்நீரினைச் சொல்ல வந்த சேக்கிழார்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 55
“மாநதி நன்னீர் தூய வாயினிற் கொண்டு’ எனவும், “வளைத்த பொற்செருப்பால் மாற்றி வாயின் மஞ்சன நீர் தன்னை விளைத்த அன்புமிழ்வார் போல விமலனார் முடி மேல் விட்டார்” என்று உயர்த்தி பண்புறப் பேசுகிறார்.
சிந்தையும், செயலும்
பகையரசன் முத்தநாதன், திருக்கோவலூர் மன்னன் மெய்பொருள் நாயனாரை போரில் வெல்ல இயலாத நிலையில் வஞ்சகமாகக் கொல்ல எண்ணுகிறான். பொய்த்தவ வேடம் புனைந்து மெய்பொருள் நாயனாரை குறுவாளால் குத்தி னான். இது ஒரு கொலைத் தாக்குதல். இன்றை நாளில் தினசரி பத்திரிகைகள் இச்செய்தியை எப்படிப்பகரும் என்பது நமக்குப்புரியும். ஆனால், தலைமையமைச்சராகப் பணிபுரிந்த பெருமான், மக்கள் மனநலம் அமைதி காணவும் கொடுஞ் செயலையும் கொடுமையான சொற்களால் புனையாமல் “தான்முன் நினைந்த அப்பரிசே செய்ய” என்று முத்த நாதனின் செயலைக் குறிக்கிறார்.
தன் கருத்தே முற்றுவித்தான்
மெய்யடியார் ஏனாதி நாத நாயனாரை போரில் வெல்ல இயலாத நிலையில், அதிசூரன் வஞ்சகமாக வினைபுரிந்து வெல்லுவதைக் குறிப்பிடும் சேக்கிழார், இருவர்க்கும் போர் நடக்கும்போது அதிசூரன் தன் நெற்றியில் நீறுபூசியிருத்தலை மறைத்தபடி இருவர்க்கும் திடீர் என்று வெளிக்காட்டிட ஏனாதிநாத நாயனார் இவர் சிவனடியார் என்று தெரிந்து அவனது நோக்கத்திற்கு உடன்பட்டவர் ஆனார். அதிசூரனும் அவரை வாளால் வெட்டி வீழ்த்தினான். இதைச் சேக்கிழார் “முன்னின்று பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான்” என்று சொல்லி கொலை என்ற சொல்லைத் தவிர்க்கிறார். மேலும், அவன் கொல்ல நினைக்கும் செயலுக்கு உடன்பட நடந்து கொண்ட ஏனாதிநாத நாயனாரும் எதுவும் அமங்கலமாகக் கூறிவிடாது, "இவர்தம் கொள்கைக்குறிவழி நிற்பேன்’என்று சொல்ல வைக்கும் இவரின் பண்புத் திறம் போற்றுவதற்குரியது.
மனம் புண்படா உயர் சொல்
ஆரூரில் பிறந்த தூய அடியார் தண்டியடிகள். இவர் தம் பார்வையை பிறவிலேயே இழந்தவர். ஆயினும் இறைவன் பால் கொண்ட அன்பு அளவிடற்கரியது. பொதுவாக நாம் பார்வை யில்லாதவரை குருடர் என்றே கூறி வழங்குவோம். ஆனால் சேக்கிழார் “கண்காணார்” என்றும், “அந்த மில்லா அறிவு டையார்”என்றுங் கூறித் மனம் புண்படும் இதர சொற்களை தவிர்க்கிறார்.
ஆனால் தண்டியடிகளை பழித்தும் இழித்தும் பேசுகின்ற சமணர் வாயால் சொல்ல வருகின்ற போதுமட்டும், "மந்த உணர்வும் விழிக் குருடும் கேளாச்
செவியும் மற்றுமக்கே இந்த உலகத்துள்ளன" என்றார்.
sorášágott omvatob gaof 2oo5

பொதுவாக சேக்கிழார் தன் காப்பியத்துள் வரும் அடியார் பெருமக்களை எல்லாம் பேசவரும்போது “அர்,”“ஆர்”என்ற மதிப்பு பன்மை விகுதி தந்தே குறிப்பிடுகிறார். மிகமுக்கியமாக இன்று நடைமுறையில் மரியாதையாக வழங்கிவரும் சொல்லான ஐயர் என்ற சொல்லை சேக்கிழார் இறைவனுக்கு வழங்கி அழைத்ததுபோலும் சமூகத்தில் உயர்நிலை பெறாதவர் என்ற நிலையில் உள்ளாரையும் ஐயர் என்றே விளித்துப் பெருமை காட்டினார். திருநாளைப் போவார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், வேடர் கண்ணப்பர், போன்ற அடியார்களை பல இடங்களில் ஐயர் என்றே அழைத்து மகிழ்ந்தார்.
ஆனால் பிறப்பிலே வேதியரான காழிப்பிள்ளையாரையோ, வேளாளர் குலத்தவரான திருநாவுக்கரசரையோ அல்லது வேறு யாரையுமோ அவர் ஐயர் என்று அழைக்க இல்லை என்பது நோக்கத்தக்கது.
“பிறர்க்கு நன்மையானவற்றை நாடி, இனிமை உடைய சொற்களைச் சொல்லின் பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்” என்று.
“அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை நாடி இனிய சொலின்” என்ற திருக்குறளுக்கு உரையாசிரியர் மு. வ. உரை சொல்லுவார். எல்லாம் அவன் செயலே என்றும், எப்போதும் அவன் நினைவே என்றும், என்றும் தம்பணி திருத்தொண்டே என்றும் வாழ்ந்த மெய் அடியார்களின் புகழ் அளவிடற்கரியது, என்பதை உணர்ந்தவர் சேக்கிழார். எனவே தான் அவர்கள் தம் இயல்பு நிலையை
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” என்று சிறப்பித்துக் காட்டுகிறார்.
நம்முடைய எல்லா எண்ணங்களுக்கும் ஓர் அளவு உண்டு. இதைப் போலவே நம்முடைய சொற்களுக்கும் ஒரு வலிமை உண்டு. இதனால் மனதால், வாக்கால் ஏற்படுகின்ற பணியால், வலிமை இயல்பாகவே வரும். ஆதலின் நல்ல வற்றைச் சிந்திக்க வேண்டும், நல்ல சொற்களைப் பேச வேண்டும். இதன்கண் நல்ல செயல்கள் ஆக்கம் பெறும், என் பதை வாழ்ந்து முடிந்த அடியார்களின் வாழ்வின் பல்வேறு நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து காட்டும் சேக்கிழார் பெருமான் நல்ல சொற்களால் பழுதறச் சொல்லி, நல்ல செயல்கள் பல்கி பெருக வேண்டும் என்ற தூய எண்ணத்தில், சைவநெறிக்கும் மானுடவர்க்கத்திற்கும் தன் காப்பியம் வழியாய்த் தொண்டு செய்து இருக்கிறார் எனில் மிகையல்ல. அவரைத் தொழுது மகிழ்வோம்.
"தூக்கு சீர்திருத் தொண்டர் தொகை விரி வாக்கினாற் சொல்ல வல்லபிரானெங்கள் பாக்கியப் பயனாய் பதிகுன்றைவாழ் சேக்கிழாரைச் சென்னி இருத்துவாம்”

Page 56
சேக்கிழார் திருத்தொண்டர் புராணம்
- தமிழ்வேள் இ.
தமிழக வரலாற்றில் சோழர்காலம் ஒரு பொற் காலம் ஆகும். தமிழகத்தின் எல்லை நாற்றிசையிலும் மிகவிரிந்து பரந்து, வரலாற்றில் இடம்பெறும் பேரரசுகளுள் ஒன்றாகச் சோழப் பேரரசு விளங்கியது. பல்வகைக் கலைகளும் வளர்ந்தன. சோழப் பேரரசர்கள் சைவர்கள், ஆதலின் சைவம் உயர்வை அடைந்தது. வடக்கே சமணம் முதலிய சமயங்களுக்கு எதிராக எழுச்சி பெற்ற வைதீக நெறிக்குச் சோழப் பேரரசர்கள் ஆதரவு கொடுத்தனர்.
ஐயமும் அச்சமும்
வடநாட்டிலிருந்து சமணம் பெளத்தம் போன்ற சமயங்கள் தென்னாட்டில் பரவுவதைத் தடுப்பதற்கு வைதீக நெறி வேண்டியதாக இருந்தது. எனினும் வடநாட்டு வைதீக நெறி பண்டைய தென்னாட்டுச் சிவநெறியை இல்லாமற் செய்துவிடுமோ என்னும் ஐயமும் அச்சமும் அக்காலத் தமிழகச் சான்றோரிடம் இருந்தன. இவ் இரு நெறிகளுக்கும் ஒருமைப்பாடு இருந்தாலும் வேறுபாடும் இருந்தது. வைதீக நெறிக் குருமாருக்குத் தென்னாட்டுக் குரவரிலும் கூடிய மதிப்பும் உயர்வும் இவ்வரசர்கள் கொடுத்தனர். வைதீக நெறியோடு புதிய சமூகக் கருத்துக்கள், வடமொழிச் சொற்கள் என்பனவும் தென்னாட்டில் பரவின. வடநாட்டு முறை உயர்ந்தவை; தென்னாட்டு முறைகள் தாழ்ந்தவை என்னும் நிலை உருவானது.
பெரும் பொறுப்பு
வடநாட்டுத் தொடர்புகளைத் தென்னாட்டுச் சான்றோர் வரவேற்றனராயினும் அவை எல்லை கடந்து ஆதிக்கம் பெறுவதை விரும்பினாரல்லர். அரசர்கள் வைதீக நெறியில் பெரும் பற்று உடையவர்களாக இருந்தமையால் இவைகளை அரசர்களுக்குக் கூறுவதற்குச் சான்றோர் அஞ்சினர். இந்நிலையில் தமிழகத்தவர்களின் எண்ணத்தை அரசர்களுக்கு உணர்த்தித் தமிழகத்திற்கும், தமிழகக் கொள்கைகளுக்கும், சான்றோருக்கும் முதன்மையும் உயர்வையும் நிலைநாட்டும் பெரும் பொறுப்பை மேற்கொண்டவரே சேக்கிழார் ஆவார். இவர் தூயதுறவு நெறி நின்றவர். பல்துறை அறிவும், ஆற்றலும் வாய்ந்தவர். பரந்த
24
 
 
 

ார் அ தமிழகத்தின் ஒளிவிளக்கு
5. கந்தசுவாமி -
பேரரசின் கடமைகளை நன்கு நிறைவேற்றவும், சிவசமய வளர்ச்சிக்கு உதவவும் வல்லவர் சேக்கிழாரே என அறிந்து அரசன் அவரை முதல் அமைச்சராக்கினான். சேக்கிழாரும் தம் நோக்கம் நிறைவேறுதற்கு வாய்ப்புக் கிடைத்ததென எண்ணி அதனை ஏற்றுக் கொண்டார்.
திருத்தொண்டர் புராணத்தின் நோக்கம்
அக்காலத்தில் புதிதாக எழுந்த சமணமதக் காப்பியமான சீவகசிந்தாமணியை அரசன் கற்று வந்தான். சைவரான அரசன் புறமத நூலைக் கற்பது தவறானது என முதலமைச்சரான சேக்கிழார் கூறினார்.
சைவச்சார்பான ஒரு காவியத்தை ஆக்கித்தரும்படி அரசன் கேட்ட அந்த வாய்ப்பைப் பயன்படுத்திச் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய திருத்தொண்டர் தொகையில் வரும் நாயன்மார் வரலாற்றைக் காவியமாக ஆக்கித் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார். சமண ஆதிக்கத்தைத் தடுத்து சைவத்தை வளர்க்கவே சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதினாரென்று கூறப்படுகிறது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் வட நாட்டுக் கொள்கை ஆதிக்கத்தை தடுத்துத் தமிழ்நாட்டுக்கு உயர்வு கொடுக்க வேண்டுமென்பதே திருத்தொண்டர் புராணக் கதையைச் சேக்கிழார் எழுதியதற்கு உள்ளீடான காரணமாகும். சமய, இலக்கியப் பற்றுடன், தமிழக உயர்வு, உணர்வையும் சேக்கிழார் அரசனிடத்திலும் நாட்டிலும் நிலை நாட்டினார். தமிழ்நாட்டுச் சிவநெறிச் சான்ற்ோர் வரலாறுகளை கருவூலமாகக் கொண்டு காவியம் அமைத்தது தமிழ்நாட்டின் உயர்வை நிலைநாட்டுவதற்கேயாம்.
ஒளிவிளக்கு
தென்னாடு பிறநாடுகளிலும் உயர்ந்ததென்பது சேக்கிழாரின் உறுதியான கருத்து. இதனைத் திருத்தொண்டர் புராணத்தில் திருமலைச் சிறப்பு கூறுமிடத்து பேசில் அத்திசை ஒவ்வாபிறதிசை என வடநாட்டு முனிவர்கள் தலைவரான உபமன்னியு முனிவர் வாயிலாகச் சேக்கிழார் எடுத்துக் காட்டியுள்ளார். சேக்கிழாரது காவியம் தமிழகத்தின் ஒளிவிளக்காகும்.
6tráéignif Ipagartó Ipaif 2005

Page 57
சங்ககாலத்தின் பின் ஆயிரம் ஆண்டுகள் தமிழகத்தின் வரலாறு, அரசியல் முறை, வாழ்க்கை முறை, சமயநெறி, கலைகள் என்பவற்றை அறிய உதவும் ஒரு களஞ்சியமாகத் திருத்தொண்டர் புராணம் உள்ளது. சிறப்பாகப் பல்லவர், சோழர் காலங்களில் தமிழ் நாடு அடைந்த மகோன்னத நிலையை இக்காவியம் எடுத்துக் காட்டுகின்றது.
தாம் ஆக்க எடுத்த கதையைக் காவிய மரபுக்கேற்ப அமைத்த முறை ஆகியவற்றை நோக்கும் போது சேக்கிழாருக்கு முன்னும் பின்னும் எப்புலவரும் செய்திராத ஒரு காவியத்தையும் பணியையும் சேக்கிழார் செய்துள்ளார். அவரது காவியத்தில் வரும் கற்பனைகள், கருத்துக்கள், உவமைகள் என்பன இக்காவியத்திற்கே தனிச் சிறப்பாக அமைந்தவை. அவை சுவை உணர்வோடு பயன் உணர்வும் தருவன. சமய உணர்வை ஊட்டுவதற்கும் சைவ உண்மைகளை உணர்த்துவதற்கும் உரியனவாக இவைகளைச் சேக்கிழார் அமைத்துள்ளார்.
வரதவர், பாணர், வேடர், புலையர் முதலிய குடியிற் பிறந்தோர்களையும், அந்தணர், அரசர், வேளாளர் முதலிய குடியிற் பிறந்தோர்களையும் ஒப்பவைத்துக் காவியஞ்செய்த பெருமை சேக்கிழாருக்கே உரியது. எவ்வகை வேறுபாடுமின்றி யாவரையும் ஒப்பவே போற்றிப் புகழ்ந்துள்ளார். சேக்கிழார், உயர் வேளாண்குடிப் பிறந்தவர். வைதீக நெறியில் குடிப் பிறப்பால் உயர்வு தாழ்வுகள் உண்டு. தென்னாட்டுச் சிவநெறியில் இவை இல்லை. அரனடிக்கு அன்பராகில், ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் அவர் கண்டீர்நாம் வணங்கும் கடவுளாரே'என்னும் அப்பர் வாக்கு இதற்குச் சான்று, இதுவே சேக்கிழார் கருத்து. தமிழகத்துப் பண்டைச் சிவநெறிக் கொள்கைகளை நிலைநாட்டவே சேக்கிழார் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். திருத்தொண்டர் புராணத்தை ஆக்கியதற்கு இதுவும் ஒரு சான்றாகும். இந்நூலுக்கு இதன் பெருமை நோக்கிப் பெரியபுராணம் என்னும் பெயரும் உண்டு.
சமயம், சமூகம், அரசியல் என்பன வெவ்வேறான வையல்ல. இவை மூன்றும் இணைந்து சென்றாற்றான் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பயன். வீட்டுநெறி பெற முயல்வோர் துறவறத்தான் மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. துறவிகள் கானகத்து வாழ வேண்டியதில்லை. மக்கள் மத்தியில் வாழலாம் எனத் திருத்தொண்டர் புராணம் அறிவுறுத்துகிறது.
தென்னாட்டுச் சிவநெறி
பண்டைய சங்க காலத் தமிழகத்தின் உண்மைகளைச் சேக்கிழார் ஏற்றுத் தாமும் வாழ்ந்து காட்டித் தமது காவியத்தாற் தமிழ் நாட்டிற்கும் அறிவுறுத்தினார். காவியத்திலே வரும் நாயன்மார்கள் தமிழ் நாட்டில்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தவர்கள். தம் சூழலுக்கேற்ப ஒரு தொழிலாகக் கொண்டவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயப் பணியைத் தமக்குச் சிறப்பான அறமாகவும் விரதமாகவும் கொண்டவர்கள். இவற்றுட் சில எமது அறிவுணர்வுக்கு அப்பாற்பட்டவை ஆகலாம். ஆனால், இவை அவர்கள் கொண்டிருந்த நிலையான உண்மை உயர்வை உணர்த்துகின்றன. இன்னொரு சிறப்பு இவர்கள் இவ்வறங்களை வாய்ப்பு உள்ள போது செய்து இல்லாத போது விட்டாரல்லர். நாளும் தவறாது வாழ் நாள் முழுவதும் தொடர்ந்து செய்தனர். செய்ய இயலாதபோது உயிர்விடத்துணிந்தனர். இந்த ஒரு நிலையே அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு. அந்நிலை எமது அறிவுக்கு ஒவ்வாததாகலாம். ஆனால் அது அவர்களுக்கு உயிரினும் மேலாக இருந்தது. இதுவே அவர்களுக்கு நாயன்மார் என்னும் உயர்வைத் தந்து கடவுட் தன்மையைக் கொடுத்தது. வையத்து வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்னும் உண்மையையும் நாயன்மார் வரலாற்றில் சேக்கிழார் உணர்த்தியுள்ளார்.
பல உண்மைகளை உணர்த்துவதாய்த் தமிழகத்திற்காக எழுந்த சிறப்புக்கள் பல அமைந்த பேரிலக்கியச் தமிழ்ச் செல்வத்தைச் சைவச் சார்பாக எழுந்ததென நோக்குவதோ, அன்றிக் கற்காமல் விடுவதோ, அறிவுடமை ஆகாது. நாட்டுப் பற்றும் அன்று தமிழகத்தின் வலிமையும் சிறப்பும் குன்றியதற்குக் காரணம், தமிழக உயர்வையும் பற்றையும் உயர்த்தும் திருத்தொண்டர் புராணம் போன்ற நூல்களைக் கற்காமல் விட்டதாகும். தமிழகம் மீண்டும் சிறப்பும் உயர்வும், வன்மையும் பெற வேண்டின் திருத்தொண்டர் புராணம் போன்ற நூல்களைச் சமய நூல்களாக நோக்காது தேசிய நூல்களாகப் போற்றிக் கற்க வேண்டும். சேக்கிழார் அறிவுறுத்தும் தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே. இக் காவியத்தின் கருத்துக்களும் நெறிகளும் தமிழகம் எங்கும் நிலைபெற வேண்டும்.
காவிய அமைப்பு
சுந்தரமூர்த்திநாயனார் அருளிய திருத்தொண்டர் தொகையையும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் தாம் ஆக்கும் நூலுக்கு ஆதாரமாகக் கொண்டார். சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் வரும் அறுபத்து மூன்று தனியடியார்களையும் ஒன்பது தொகையடியார்களையும் வைத்து நூலாக்க வேண்டி இருந்தது. தாம் ஆக்கும் நூல், அரசனது உள்ளத்தைக் கவர்ந்த சீவகசிந்தாமணியிலும் பார்க்க உயர்வுடையதாக இருக்க வேண்டும் என்பதைச் சேக்கிழார் உணர்ந்தார். தமது நூலைப் பெருங்காப்பியம் ஆக ஆக்குவதாயின் அதற்குத்
25

Page 58
தன்னேரில்லாத் தலைவன் இருத்தல், வாழ்த்து - வணக்கம் - வருபொருள் உரைத்தல், நாட்டு வருணனை, கற்பனைகள் இருத்தல், ஐந்திணை வளம் உரைத்தல், மணவினை - போர் நிகழ்வு என்பன இருத்தல் ஆகியவை அமைதல் வேண்டும் என அவர் அறிவார். ஆகவே அரசனிடம் விடைபெற்றுத் தில்லைத் திருத்தலம் அடைந்து கூத்தனைப் பெருமானை வணங்கி அத்தலத்தில் இருந்து'உலகெலாம் என இறைவன் உணர்த்திய தொடரைத் தொடக்கமாக வைத்து தமது காவியத்தை ஆக்கினார். தமிழகத் திருத்தொண்டர்களின் பெருமையை உலகறியத் திருத்தொண்டத் தொகை அருளிய சுந்தரமூர்த்தி நாயனாரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டார். இவரது வரலாறு காவியத்தின் தொடக்கத்தில் தடுத்தாட் கொண்ட புராணத்தில் தொடங்கி, இடையில் ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் கழற்றறிவார் புராணத்திலும் தொடர்புற்று, காவிய ஈற்றில் வெள்ளானைச் சருக்கத்தில் அவர் திருக்கைலையை அடைவதோடு நிறைவு பெறுகிறது.
சிவநெறி பரப்பிய சோழ நாட்டின் பெருமை திருநாட்டுச் சிறப்பிலும், அதன் தலைநகரான திருவாரூரின் பெருமை திரு நகரச்சிறப்பிலும் கூறுகிறார். ஐந்திணை வளம் திருக்குறிப்புத்தொண்டர் புராணத்தில் சிறப்பாக இடம் பெறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தில் மணவினையும், புகழ்ச் சோழநாயனார் புராணத்தில் போர் நிகழ்வும் இடம்பெறுகின்றன.
வருணனைகளும் உவமைகளும் காவியம் முழுவதிலும்
இடம்பெற்றுள்ளன. சேக்கிழார், பேரரசின் முதலமைச்சராக இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று, நாயன்மார் வாழ்ந்த இடங்களையும், தலங்களையும் நேரில் பார்த்தவர் ஆதலின், இவரது திருத்தொண்டர் புராணம் சிறந்து விளங்குகின்றது.
பாநலம் கருதியேனும் சைவமதத்தவர் பிறசமய நூல்களைக் கற்றல் ஆகாது என்பது சேக்கிழார் கருத்து ஆகும்.
இக்காவிய ஆக்கத்திற்கு அநபாய மன்னர் செய்த பெரும் பணியைப் பாராட்டி நூலில் பல இடங்களில் அவரது பெயரை இடம்பெறச் செய்துள்ளார்.'சேயவன் பேரம்பலம் செய்ய தூய பொன்னணி சோழன் நீருழிபார் ஆயசிர் அநபாயன் அரசபை என அவையடக்கத்திலும் வெண்குடை அநபாயன் செய்ய கோல் அபயன்’ எனத் திருமலைச் சிறப்பிலும் பாராட்டி உள்ளார்.
தமிழகத் திருத்தொண்டர்கள்
சேக்கிழார் நாயனார் சிவநெறிப்பற்றினார் ஆதல் போல் தமிழ்மொழிப்பற்றினரும் ஆவர். ஆதலினால் பல இடங்களில் இதனை வெளிப்படுத்தியுள்ளார். சுந்தரமூர்த்தி நாயனார்
26

திருவஞ்ஞைக் களத்தில் இருந்து திருக்கைலை சென்ற போது உபமன்யு முனிவர் எழுந்து வணங்கிப், பந்த மானிடப் பாற்படு தென்திசை இந்த வான்திசை எட்டினும் மேற்பட வந்த புண்ணியம் யாதென, முனிவர்கள் உபமன்யு முனிவரிடம் வினாவினர் எனத் திருமலைச் சருக்கத்தில் தெரிவித்துள்ளார். சேக்கிழார் நாயனார் திருஞானசம்பந்த பெருமான் திரு அவதாரம் செய்த போது திசை அனைத்தின் பெருமையெல்லாம் தென் திசை வென்று ஏற அசைவில் செழுந் தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறை வெல்ல எனக் கூறியுள்ளார். இவரது காவியத்தில் முதலில் கடவுள் வாழ்த்தும், பின்பு அவையடக்கமும், அதன் பின் நூற்பயனும் நூற்பேரும் இவற்றின் பின், திருமலைச் சிறப்பும் திருக்கூட்டத்தின் சிறப்பும் அமைந்துள்ளன. கடவுள் வாழ்த்தில் முதலில் கூத்தப் பெருமானை வணங்குகின்றார். பின்பு விநாயகரை வணங்குகின்றார். மாநடம் செய் சிவனார் பொற் தாழ் தொழஊன் அடைந்த பிறவி உறுதியைச் சாரும் எனக் கடவுள் வாழ்த்தில் இரண்டாம் செய்யுளில் தெரிவித்துள்ளார். திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்தில் கூடி இருந்த திருக்கூட்டத்தைத் தரிசித்த சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டர் புராணக் கடவுள் வாழ்த்தில் திருகூட்டச் சிறப்புக்களைத் தெரிவித்துப் புனித பேரவை உலகில் விளங்கி வெல்கவே எனக் கூறியுள்ளார்.
அளவிலாத பெருமையர் அடியார் புகழ் கூற அரிதாயினும் ஆசைப் பற்றி அறையலுற்றேன், எனவும் தண் கடல் ஊற்று உண் ஒரு சுனங்கனை ஒக்கும் தன் செயல் எனவும் கூறியுள்ளார். நூற் பயன் கூறும் இடத்தில் ‘உலகின் புற இருளைக் கதிரவன் நீக்குதல் போல் இந் நூல் மன இருளை நீக்கும் எனவும் இந்நூற் பெயர் 'திருத்தொண்டர் புராணம் எனவும் கூறியுள்ளார்.
திருமலைச் சருக்கத்தில், இறைவன் எழுந்தருளி உள்ள திருக்கைலையின் சிறப்பும், அம் மலைச் சாரலில் தவம் செய்யும் முனிவர்கள் யோகிகள் பூதகணங்கள் சிறப்பும், பரமன் அருளிய பாற்கடல் உண்டு வளர்ந்த உபமன்யு முனிவர் ஆயிரம் முனிவர்கள் சூழ இருந்த சிறப்பும் இவர் கூறியுள்ளார். திருக்கூட்டச் சிறப்பு என்னும் பகுதியில் திருவாரூர்த் தேவாசிரியர் மண்டபத்தில் இருந்த சிவனடியார்களின் பெருமையை ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார், வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’எனக் கூறியுள்ளார்.
சேக்கிழார் செய்யுள் நடை
சேக்கிழார் செய்யுள் நடை தனித் தன்மை உள்ளது. சைவத் துறவியாக இருந்த சோழப் பேரரசின் முதலமைச்சராக இருந்தவர் ஆதலின், அவரிடம் இருந்த சிவநெறி வீரம் மங்கல வினைகள் எங்கும் மணச் செய் கம்பலைகள் எங்கும்’ என வீறு நடை போடுவதைக் காணலாம்.
&wiágrif øgrøfteb gaof 2oo5

Page 59
போர் பற்றிக் கூறும் போது 'சூறை மாருதம் ஒத்தெதிர் ஏறுபாய் பரி வித்தகர் வேறுவேறு தலைப்பெய்து சீறி ஆவி செகுத்தனர்’ என்பது போல வீரநடையில் பாடல்கள் அமைந்துள்ளன. இவரது உவமைகளும் வருணனைகளும் சிவநெறி உணர்வை ஊட்டுவன. பத்தியின் பாலராகிப் பரமனுக்கு ஆளாம் அன்பர் தலையினால் வணங்கு மாபோல் முதிர் தலை வணங்கி விளைந்தன சாலி எல்லாம் என்பது அவற்றுள் ஒன்று.
காவிய அரங்கேற்றம்
இவர் நூல் எழுதும் போது அனைத்து ஆதரவும் அரசர் வழங்கினார். நூல் அரங்கேற்றம் சிதம்பரத்து ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திரைத் திங்கள் தொடங்கி அடுத்த சித்திரைத் திங்களில் நிறைவு பெற்றது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இதில் பங்கு பற்றினர். அரசர் இவர்களுக்கு அனைத்து வாய்ப்புக்களும் வழங்கினார். நிறைவு நாளில், இவரையும் இவரது நூலையும் யானையில் ஊர்வலமாகத் தானே சாமரை வீசி அழைத்து வந்து, இவருக்குப் பல விருதுகள் வழங்கிச் சிறப்பித்தான்.
திருத்தொண்டர்களின் பெருமை கூறும் இந்நூலுக்குப் புராணம் என்னும் தூய பெயரை இட்டு நாயன்மார் வரலாறுகள் கூறும் பகுதிகளுக்கும் புராணம் என்னும் பெயரை இட்டுள்ளார். புராணங்கள் அனைத்தும் திருக்கைலைச் சாரலில் இருந்து முனி சிரேட்டர்களால் கூறப்பெற்றவை. ஆதலினால் சேக்கிழார், திருத்தொண்டர் களின் வரலாற்றை திருக்கைலைமலைச் சாரலில் உபீமன்னிய மாமுனிவர் தம்முன் இருந்த முனிவர்களுக்குக் கூறியதாக, இந்நூல் தொடக்கத்தில் திருமலைச் சிறப்பு என்னும்
Gwidiégatif ysgrippareb 19:Dif 2005

பகுதியில் தெரிவித்து, இந்நூலின் பெருமையை அறிவுறுத்தியுள்ளார்.
சேக்கிழார் நாயனார் அநபாயன் எனச் சிறப்புப் பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தவர். கவியரசர் கம்பர் இவ்வரசனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர். சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் உள்ள கடவுள் வாழ்த்துத் தொடக்கமும் அவையடக்கமும் போலக் கம்பர் ஆக்கிய இராமாயண காவியக் கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் அமைந்துள்ளன.
நாற்பயன்
சேக்கிழார் நாயனார், சான்றோர் உடைத்து புகழ்பெற்ற தொண்டை நாட்டவர். சேக்கிழார் என்பது இவரது குடிப்பெயர். சேக்கிழார் நாயனார் இந்நூலை அருளியபின் சோழப் பேரரசின் முதலமைச்சர் தில்லைத் திருத்தலத்தவம் இருந்து வைகாசிப் பூசநாளில் சிவனடி அடைந்தார். இந்நூலுக்குப் பெரிய புராணம் என்னும் பெயரே பெரிதும் வழங்கப் பெறுகிறது. இந்நூலுக்கு மாக்கதை என்னும் பெயரும் உண்டு என்பதை இந்நூலில் உள்ள விநாயகர் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உணர்த்துகிறது.
இறைவன் பெருமை உணர்த்தும் முப்புராணங்களுள் இந்நூல் இறைவனின் நுதல்விழி என்பர். இந்நூல் ஞான நூலாகவும், வழிபாட்டு நூலாகவும், வாழ்வியல் நூலாகவும் விளங்குகின்றது. இத்தகைய பெருமைகள் உள்ள இந்நூலை ஒதியும், ஒதுவித்தும், கேட்டும், கேட்பித்தும், சைவத் தமிழ் உலகு பயன் பெறுக. பன்னிரண்டாம் திருமுறையாக அமையும் பெருமையையும் இந்நூல் பெற்றுள்ளது.
3.
27

Page 60
O
சேக்கிழார் கண்ட
* திருப்புகழ்க் காவலர்
தலைமை குற்றவி
பாண்டிச்ே
“அலைந்திடும் பிண்டம் அண்டம் அவை சமம் ஆதலாலே இலங்கை நேர் இடைபோம் மற்றை இலங்குயிங்கலையாம் நாடி நலங்கினர் இமய நேர்போம் நடுவுபோம் சுழுனைநாடி タタ
- கோவிற் புராணம்
‘மேரு நடுநாடி மிக்கிடைபிங்கலை கூரும் இவ்வானின் இலங்கை குறி உறும் சாரும் தில்லைவனம் தண்மாமலயத்துர டேறும் சுழுமுனை இவை சிவபூமியே’
- திருமூலர் திருமந்திரம் (2704)
“இடைகலை பிங்கலை இமவானோடு இலங்கை நடுநின்ற மேரு நடுவாம் சுழுமுனை கடவும்திலைவனம் கைகண்ட மூலம் படர் வொன்றியெண்ணும் பரமாம் பரமே”
- திருமூலர் திருமந்திரம்(271)
மேலே சொன்ன மூன்று பாடல்களும் சொல்ல நினைப்பது என்ன என்று கேட்டால், பிண்டத்தில் உள்ள இடைகலை, பிங்கலை நாடிகள் இந்த அண்டத்தில் உள்ள இலங்கையாகவும், இமயமாகவும் உள்ளன என்றும், இவைகள் நடுநாடியாகிய தில்லை என்ற சுழுமுனையை இரேசக, பூரக வாயுகளால் சூழப்படுவதால் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுகின்ற மேருவாகவும் மதிக்கப்படும். இந்நிலையில் தில்லை நடுநாடியாக மதிக்கப்படுவதால், ஆனந்த நடனவடிவாக அங்கு ஐந்தொழிலைச் செய்யும் பெருமானே, தன்னை அறிந்தவர் மனம் ஒன்றி விரும்பும் முதற் பொருள் ஆவார் என்று குறிப்பிடுகிறார். ஆக, திருமூலரின் யோக நூலான திருமந்திரத்தில் இடைகலைக்கு இலங்கை எனப் பெயரிடுகிறார். இந்த அண்டத்தில் இலங்கை எனப் பெயரிடப்பட்டது, ஒவ்வொருவர் உடம்பிலும் இடைகலை என்ற சந்திரகலையாக இடதுபக்கம் உள்ள சுவாசமாக உள்ளதாம். இங்கே கலை என்ற சொல்லுக்கு மூச்சு என்று பொருள். அதாவது கார்பன்டைஆக்ஸைடை வெளியே தள்ளி, பிராண வாயுவை உள்ளே இழுப்பதற்கு கலை
28
 
 

சேது முருகபூபதி - யல் நீதிபதி (ஓய்வு Fரி, இந்தியா
எனப்படும். இந்த அண்டத்தின் மூச்சில் இடைகலை என்ற சந்திரகலையை இலங்கை எனக் குறிப்பிடுகிறார். இப்படி
அண்டத்தில் உள்ளதை போலவே ஒவ்வொருவருடைய பிண்டத்திலும் உண்டு. பிண்டத்தில் உள்ள இடைகலையை இலங்கை எனக் குறிப்பிடுகிறார்.
மாணிக்கவாசகப் பெருமான் பாடிய திருவாசகத்தின் ஒரு பகுதியான திருவார்த்தையில்,
“வந்திமையோர்கள் வணங்கியேத்த மாக்கருணைக் கடலாயடியார் பந்தனை விண்டறநல்கு மெங்கள் பரமன் பெருந்துறையாகியந்நாள் உந்து திரைக்கடலை கடந்தன் றோங்கு மதில் இலங்கையதனில் பந்தனை மெல்விரலாட் கருளும் பரிசறிவாரெம்பிரானாவாரே தர
பாடிய இப்பாடலுக்கு, (தம் பதவி நிலைக்க வேணும் என்பதற்காக இந்த பூமிக்கு வந்து தேவர்கள் சிவபெருமானின்திருவடிகளில் வீழ்ந்து வணங்கித்துதிக்க, பெரிய கருணைக் கடலாகிய சிவபெருமான் உண்மை அடியார்களின் பாசபந்தங்கள் நீங்கிப் போக ஞானத்தை தருகின்ற எங்கள் பரமனாகியதிருப்பெருந்துறை முதல்வன், கரையில் வந்து மோதுகின்ற அலைகளையுடைய கடலைக் கடந்து, அன்று உயர்ந்த மதில்களை உடைய இலங்கை நகரில் பூப்பந்து வந்து பொருந்தப் பெறுகின்ற மெல்லிய விரல்களை உடையவளாகிய மண்டோதரி என்பாளுக்கு அருள் செய்த தன்மையை அறிபவர்களே எம்பிராவனர்) என்று மாணிக்கவாசகர் சுவாமிகள் இலங்கையை அடையாளம் காட்டுகிறார். ஆக, இலங்கை ஒரு சிவபூமி என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியாது. இப்படிச் சிவமணம் கமழும் இலங்கையில், தமிழின் மணம் பரப்பும் வகையில் நடைபெறும் ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாட்டில் இச்சிறுகட்டுரையை சமர்ப்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
“பெரியது கேட்கும் வரிவடிவேலாய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோநான்முகன் படைப்பு
o சேக்கிழார் மாநாட்கு மலர்2005

Page 61
நான்முகனோ, கரியமால் உந்தியில் பிறந்தோன் திருமாலோ பாற்கடலிற் துயின்றோன் பாற்கடலோ குறுமுனி கலசத்தில் அடக்கம் கலசமோ அரவினுக்கொரு தலைப்பாரம் அரவோ, உமையவள் சிறுவிரல் மோதிரம் உமையோ இறைவர்பாகத்தொடுக்கம்
இறைவனோ, தொண்டருள்ளத்தொடுக்கம்”என்றால், தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் எளிதோ என்று தமிழ்க் கிழவி ஒளவையார் வியந்து குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட தொண்டர்கள் தம்பெருமையை,
"சேக்கிழான்நமது தொண்டர்சீர்பரவ நாமகிழ்ந்துலக மென்றுநம் வாக்கினாலடியெடுத்துரைத்திட வரைந்துநூல் செய்துமுடித்தனன் காக்கும் வேல்வளவறியதைக்கடிந்து கேள்எனக்கனக வெளியிலே ஊக்கமானதிருவாக்கெழுந்தது
திருச்சிலம்பொலியுமுடனெழ’
என்று உமாபதி சிவாச்சாரியார் குறிப்பிடுகிறார். சேக்கிழார் தான் ஏன் இந்த திருத் தொண்டமாக்கதையை பாடுகிறார் என்பதை விநாயகர் வணக்கப் பாடலில் குறிப்பிடுகிறார்.தன் தாய்மொழியான தமிழ் விளங்க எழுதினாராம்.
“வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப் பான்மை தரு செய்ய தமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழிநால்வாய்
யானைமுகனைப்பரவியஞ்சலிசெய்கிற்பாம்”
என்கிறார். சேக்கிழார் இப்படி திருத்தொண்டர் மாக்கதையைப் பாடவில்லை என்றால் எவைகள் எல்லாமல் தெரியாமல் போய் இருக்குமாம்?
"தெய்வ வருட் சேக்கிழார்செந்தமிழ்நூல் யாத்திலரேல் உய்யுநெறிநீறஞ் செழுத்துண்மை சைவ மறை மூவர்தமிழ் மூலரம்மை வேந்திருவர் பாட்டமிழ்தம் யாவருணர்வாருய்ய இங்கு”
இவர்கள் பாடிய தமிழ் எல்லாம் தெரியாமல் போயிருக்குமாம், உயிர் உய்யும் நெறியான திருவைந்தெழுத்தின் அருமை அறியாமல் போயிருக்குமாம்.
சேக்கிழார் தாம் பாடிய திருத்தொண்டர் மாக்கதையை ஏன் பாடுகிறார் என்பதை விநாயகர் வணக்கப் பாடலில் தெரிவிக்கிறார். எப்படி
“எடுக்குமாக்கதை இன்றமிழ்ச் செய்யுளாய் நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத் தடக்கை ஐந்துடைத் தாழ் செவிநீண்முடிக் கடக்களிற்றைக் கருத்துள்இருத்துவாம்’
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

“எடுக்கும்” என்ற சொல்லுக்கு, உய்யும் வழியறியாது, இறப்புக்கு ஒப்புக் கொடுத்து வாழும், இந்த மனித இனத்தை உய்யும் வழியறிந்து மேன்மை அடைந்து, ஜீவன் சிவமெனச் சிறக்கும் வழியறிந்து வாழ்ந்த தொண்டர்களின் வாழ்க்கையை, நடைமுறை ஞானத்தோடு படித்து உய்வுக்குத் தகுதியுடைய மக்களாய் தன் இன மக்களை மேல் நிலைக்குக் கொண்டு வருவதற்காக எடுக்கும் இந்த ஞானத்தமிழால் தான் எடுத்து உயர்த்த முற்படுவதாகவும், அதற்கு விநாயகப் பெருமான் துணை செய்ய வேணும் என்றும் பாடுகிறார்.
ஒரு எழுத்தாளனின் எழுத்து காலத்தினால் கூடி அழிக்க முடியாமல், காலத்தையும் கடந்து எப்பொழுது நிற்கும் என்றால், எழுத்தை எழுதியவனின் குற்றமற்ற தன்மை அவன் எழுதிய எழுத்திற்கும் உண்மைக்கும் மாறுபடாத தன்மை, எதையும் எதிர்பார்க்காமல், சொல்ல வேண்டிய உண்மையை யாருக்கும் பயப்படாமல் சொல்லும் மன உறுதி போன்ற தன்மையோடு எழுதி இருந்தால் அந்த எழுத்துக்கள் காலத்தையும் வென்று இருப்பதோடு அல்லாமல், எந்த நோக்கத்திற்காக எழுதினானோ அது, இன்றல்ல, நாளையல்ல என்றாவது அவன் எழுதிய நோக்கம் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை!
எப்படிப்பட்ட இலக்கியமாக இருந்தாலும், இறையாண்மையைச் சொல்லாத இலக்கியம், உய்வுக்குத் துணை செய்யாது என்பதனால், அருண்மொழித்தேவர் என்ற சேக்கிழார், தன் மன்னன் அநபாயச் சோழன், சீவகசிந்தாமணியைப் புகழ்வதை விரும்பவில்லை. சமணகாவியங்கள், துணைக் காரணங்களையே வலியுறுத்தும். மேலும், பாவத்திற்கு துணையாய் அமைந்த துணைக் காரணங்களை மையமாக வைத்தே பேசும். நிமித்த காரணத்தைப் பற்றி பேசாது. காரணங்கள், அநாதி, ஆதி என்று இருந்தாலும் உலகாயுதத்திற்கு, முதல் -துணை - நிமித்தம் என்றும் பிரியும். பிறகு, காரணகாரியங்கள் அடிப்படையில் வினைவயப்பட்ட ஆன்மாவை பிறப்பு- இறப்பு என்ற நோய் பற்றும். இப்பொழுது பதி, பசு, பாசம் என வடிவெடுக்கும். உயிரினங்களின் உய்வுக்காக இறைவனால் உடனின்று உணர்த்திய எழுத்தை திருவைந்தெழுத்து என்பார்கள். இதுதான் “நமசிவாய' என்பதாகும்.
இதுதான் உயிர் உய்வுக்கு துணை செய்யக் கூடியது. கடவுட் கொள்கையையும், இறையாண்மையையும் பேசத் துணை செய்யாத சமண காவியத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டினார். இதைக் கேட்ட மன்னன் இதனிலும் சிறந்தது உண்டோ என வினவ, உயர் உய்வின் நோக்கம் ததும்பிய இறையாண்மைத்தத்துவத்தை விளக்கும் நமசிவாய தத்துவத்தின் சிறப்பு அதையே உயிர் நாடியாய்க் கொண்டுள்ள திருமுறைகளையும், அவைகளைப் பாடிய அடியார்களையும் இந்த திருவைந்தெழுத்தின் உயிர் நாடியாய் உள்ள தொண்டையும், தொண்டையே கொள்கையாய்
29

Page 62
வைத்து வாழ்ந்த அடியார்களை வைத்து அறியாமையினால், கீழே கிடக்கும் இந்த ஜீவன்களையும் மீட்சிக்குத் தகுதியுடைய பொருளாக மாற்றும் தன்மையையும் மையமாய் வைத்து பாடியதனால் தாம் பாடிய பெரியபுராணத்தை எடுக்கும் மாக்கதை என்றார்.
தொண்டு என்ன செய்யும்? இறைவனையே தன்னகப்படுத்தும் ஆற்றல் உண்மையான தொண்டுக்கு உண்டு. எதைத் தொண்டு என்கிறோம்? எந்த வித விளைவுகளுக்கும் பயப்படாமல், எதையும் எதிர்பார்க்காமல், எல்லாம் இறைமயம் என்ற உணர்வோடு செய்வதுவே தொண்டு. இதைத்தான் அப்பர் பெருமான்'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்றார். தொண்டு என்ன செய்யும்? பிறப்பு - இறப்பு என்ற நோய்கள் ஆன்மாவைப் பற்றி இருப்பதிலிருந்து மீளவும், உயிரைத் தொற்றியுள்ள வின்ை என்ற நோய் நீங்கவும் துணை செய்யும். வினை நீக்கம் பெற்ற உயிர் இறக்காது. இறக்காத உயிர் பிறக்காது. இதைத் தான் மரணமில்லாத பெருவாழ்வு என்கின்றோம். அதாவது பிறக்காத உயிர் சிவமெனச் சிறந்து விடும். அறுபத்திமூன்று நாயன்மார்களும் தொண்டே பெரிதெனச் செய்தார்கள். அவர்கள் இறைவனைத் தேடிச் செல்லவில்லை. பாடிச் சென்றார்கள். தேட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. தனக்குள்ளேயே கண்டு கொண்டார்கள். அவர்களை இறைவன் அடியவராய் வந்து ஆட்கொண்ட தன்மையைச் சொல்வதுதான், சேக்கிழார் பெருமான் திருத்தொண்டமாக்காதையில் நமக்குச் சொல்லும் தகவலாகும்.
நாயன்மார்கள் இறந்துவிடவில்லை; சிவமெனச் சிறந்துவிட்டார்கள். இவர்கள் பெற்ற அனுபவத்தை நாமும் பெறவேணும் என்பதுதான் இதுபோன்ற மாநாடுகள் நடத்துவதன் நோக்கமாகும். முதலில் இந்த அனுபவத்தை பெற வேணும் என்றால் தன்னை அறியும் அறிவை நாம் பெற வேணும் முதலில் நம்மை நாமே சிந்திக்க வேணும். ஒவ்வொரு ஆன்மாவின் கடமை என்ன? ஆன்மாவின் உரிமை என்ன? ஏன் பிறக்க வேணும்? பிறப்பிற்கு எது காரணம்? பிறந்த நாம் எப்படி வாழ்ந்தால், இறப்பு சித்திக்காது? எதனை இறப்பு என்கிறோம்? பிறந்த உயிர் எங்கே போகிறது? யாரைச் சென்றடைய வேணும்? யாரைச் சென்றடையக் கூடாது? உயிரைக் கைப்பற்ற யார் வரக்கூடாது? எப்படி வாழ்ந்தால் எமனுடைய பாசம் வரும்? எப்படி வாழ்ந்தால் இறைவனுக்குரிய பொருளாகும்? என்பதையெல்லாம் கேள்விகளாகக் கேட்டு, நம்மைப் பற்றியும், நாம் பேசும் கடவுட் கொள்கைப் பற்றியும், உள்ள அடிப்படை ஐயங்களை நீக்கிக் கொண்டால், நமக்கு ஒரு தெளிவு கிடைக்கும்.
இதற்குப் பெயர் உள்ளொளி எனப்படும். இந்த உள்ளொளியை பாச அறிவு என்கின்றோம். இந்த பாச ஞானத்தைத்தான், அமுதம் என்கிறோம். உயிருக்குத்
30

துணை செய்வதனால் அமுதம் எனப்படும். இந்த பாச அறிவு முதிர, நமக்கு ஒரு அறிவு பிறக்கும், அதற்குப்பெயர் உயிரறிவு எனப்படும். இந்த உயிர் அறிவு தோன்றும் போதே சில நேரங்களில், மின்னல் போல நம்மையும் கடந்து உள்ள ஒளி அறிவு என்ற இறையறிவு தோன்றும். இவையெல்லா வற்றிற்கும் மேலாக, நாம் கொண்டுள்ள விருப்பத்தில் ஒழுக்கமும் உண்மையும் வேண்டும். எண்ணும் எண்ணத்தில் இறையுணர்வு வேணும். இது நம் உயிரின் கருவியான மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளத் துணை செய்யும். இப்படி மனதில் மாசுபடியவில்லை என்றால் உள்ளத்தில் ஒருவித உணர்வு தோன்றும். அந்த உணர்வே தீர்த்தம் என்ற சிவஞானப் பொய்கையாகும். இந்த சிவஞானப் பொய்கையில் உயிரானது தன்னை மேவி உள்ள காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் போன்ற ஆறு தீய குணங்கள், மூன்று விதமான ஆசைகள், முப்பத்திரண்டு விதமான மாசுகள் இருந்து தன்னைக் கழுவி எடுத்துக் கொள்ளும். பிறகு மனதில் ஒருவிதக் கசிவு தோன்றும். இந்த மனக்கசி வைத்தான் சமஸ்கிருதத்தில் பக்தி என்கிறோம். இதையே அருணகிரியார் தாம் பாடிய திருப்புகழில்
பக்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப்புகழ் பாடி’
என்று குறிப்பிடுவார்.
இப்படி இறைஉணர்வு அடிப்படையில் தோன்றிய மனக்கசிவைப் பெற்றால், தான் வேறு தெய்வம் வேறு என்ற இரண்டற்ற நிலை உருவாகும். எல்லாம் இறைமயமாகத் தெரியும். எந்த இறைவனும், இறைவனுக்காகத் தற்கொலை செய்து கொள்ளச் சொல்லவில்லை. இறைவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன். இறைவனுக்காக நான் இறக்கிறேன் என்பது அறியாமையினால் செய்யும் காரியமாகும். இறைவனால் படைக்கப்பட்டதற்கு இறைவன் தான் முடிவு செய்ய வேண்டுமே அல்லாது, அதைப் போக்கிக் கொள்ளும் உரிமை ஆன்மாக்களுக்குக் கிடையாது. இறைவனுக்காக இறக்கிறேன் என்று பழியை இறைவன் மீது போடுவது சரி இல்லை. ஆகையால், திருமந்திரத்தில் சொல்லியுள்ளதைப் போல,
தன்னையறியத் தனக்கொரு கேடில்லை தன்னையறியாமல் தானே கெடுகிறான் தன்னையறியும் அறிவை அறிந்தபின் தன்னைஅர்ச்சிக்கத்தானிருந்தானே’
என்ற உண்மையை உணர்த்துவதுதான் திருத்தொண்டமாக்கதை என்பதை நினைவுகூர வேண்டும். இன்று நம்மிடையே உள்ள திருமுறைகள் போன்ற ஆன்ம இலக்கியங்கள் 100க்கு 90 சதமான மக்களுக்கு எழுத்தறிவு இல்லாத காலகட்டத்தில் எழுதப்பட்டவைகள். கேள்வி
Gridsgrif songte vanaf 2005

Page 63
ஞானத்தில் நம் இனம் இருந்த போது, எழுத்து ஞானத்தில் பின் தங்கி இருந்தது. எழுதப்படிக்க தெரியாத நிலை, பல நூறு ஆண்டுகளாய் ஏற்பட்ட சமயப் போர், மற்றும் அந்நியப் படையெடுப்புகளினாலும், தன் தாய்மொழியான தமிழை, தமிழனால் படிக்க முடியவில்லை. இதற்கு இடையில் சமஸ்கிருதத்தின் மற்றும் தெலுங்கின் ஆதிக்கம். பிறகு துருக்கியர் படையெடுப்பு; பின்பு, ஆங்கிலேயருக்கு நாம் அடிமைப்பட்டு அவர்கள் மொழியைப் பிழைப்பிற்காக படிக்கும் நிலை.
ஆக, சென்ற 50 ஆண்டுகளாகத்தான் தமிழன், தமிழால், தெய்வங்களைப் பாடியதை படிக்கும் எழுத்தறிவைப் பெற்று வருகிறான். இப்பொழுதும் தமிழுக்கு கம்பியூட்டர் மற்றும் உலகப் போட்டிகள் மிகுந்து வருகிறது. முதலில் தமிழைப் படிக்கும் ஆற்றல், தமிழ்ச் சமுதாயத்தில் வளரவேணும். தாய்ப் பால் குடிக்காத குழந்தை எப்படி ஆரோக்கியமாய் வளரமுடியாதோ, அதுபோல, தாய் மொழி அறிவில்லாத பிள்ளை அரைப்பிள்ளையாகி விடும் என்பதை மறந்து விடக்கூடாது. பிழைப்பிற்காக ஆயிரம் மொழி படிக்கலாம். உயிர் உய்வுக்காக தாய் மொழிதான் சிறந்தது. எப்படி, தாய்காட்ட தந்தையைப் புரிகிறோமோ, தாய்மொழிதான் இறையாண்மையைக் காட்டும் தகுதி உடையது என்பதை மறந்து விட வேண்டாம். தமிழனாகப் பிறந்த நாம் அனைவரும் மீண்டும் தமிழில் உள்ள ஆன்மீகத் தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும். அப்படி படிக்கும் போது 12 திருமுறைகளையும், மற்றும் உள்ள திருப்புகழ் திருவருட்பாவையும் படியுங்கள். படித்தால் திருமுறைகள்
i
0,6örIDIT Ińrfuqi
நித்திய வாழ்க்கையில் ரெயிலில் போகிறயே போகிற போதும், காரில் போகிற போதும் ஆ போதெல்லாம் உங்கள் வாழ்நாளில் எத்தை கொண்டே வந்தால் அத்தனைக்கத்தனை ம போதும் ஒரு தொகையாக வரும். உங்களுக்கு
Gráfiágrif waard volf 2oo5

நமக்குச் சொல்ல நினைத்தது என்ன என்றும், தமிழ்ச் சமுதாயத்தின் கடவுட் கொள்கை என்ன என்பதும், நம் சமுதாயம் மீளத்துணை செய்யும் என்பதை எப்படியெல்லாம் தாம் பாடிய திருத்தொண்டமாக்கதையில் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார் என்பதையும் நாம் உணர முடியும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டர் நம்பி பாடிய திருத்தொண்ட திருவந்தாதி போன்றவைகள் இருந்தாலும், இறைவனால் அடியெடுத்துப் பாடப்பட்டது சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டமாக்கதையாகும். அதனால் தான் அவரை தெய்வ அருட் சேக்கிழார் என்கிறோம்.
ஒவ்வொரு ஆன்மாவுக்கும் கடமை உண்டு. அவைகள் என்னவென்றால் இறைவனை அர்ச்சிப்பது, மனம் உருகுவது, அரற்றுவது. இந்தக் கடமைகளைச் செய்ய மனத்துக்கண் மாசிலனாக இருக்க வேண்டும். இப்படிச் செய்தால் இறைவனை அழைத்து தம்மை ஆட்கொள்ளச் சொல்லும் உரிமை ஆன்மாவுக்குப் பிறக்கும். இந்த உண்மையைச் சொல்வதுதான் சேக்கிழாரின் பெரியபுராணத்தின் இரகசியமாகும். பொதுவாக, பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியம் தெய்வங்களை மையமாக வைத்துப் பாடுவதுதான் வழக்கமான ஒன்றாகும். ஆனால் பத்து கம்பனுக்கு சமம் என்று பெயர் பெற்ற திரிசிரபுர மகா வித்வான் திரு. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், சேக்கிழார் என்ற தமிழனுக்கு பிள்ளைத் தமிழ் பாடி இருப்பதிலிருந்தே சேக்கிழார் பெருமானும் தெய்வ அருள் பெற்றவர் என்பது புலனாகிறது.
D GLITJI உதவும்
ாதும், பஸ்ஸில் போகிற போதும், சைக்கிளில் அல்லது எந்த வாகனத்தில் பிரயாணம் செய்யும் னக்கெத்தனை மகாமந்திரங்களைச் சொல்லிக் காமந்திரம் கடைசியாக உங்கள்ஆத்மா பிரியும் உதவும்.
لم
3.

Page 64
- முதுமுனைவர் 10.சரி. தலைவர், அரிய கைெ தமிழ்ப்பல்கலைச்
'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' எனப் புகழப்படும் தொண்டை நாட்டில், குன்றத்தூரில் வேளாண் குடியில் தோன்றிய சேக்கிழார் அருளிய பெரியபுராணத்திற்குத் தனியானதொரு சிறப்புண்டு. இப்பெரியபுராணத்தில் பேசப்பெறும் சிவனடியார்கள் பல்வேறு
ஊரினர்; பல்வேறு காலத்தினர்; பல்வேறு மரபினர். அனைவரும் சிவபிரானையே முழுமுதற் பரம் பொருளாகக் கொண்டு ஒழுகியோராவர். இவ் அடியார் பெருமை கூறும் இந்நூலுக்குச் சேக்கிழார் இட்ட பெயர் 'திருத்தொண்டர் புராணம் ஆகும். ஆயின் இன்று பெரியபுராணம் என்பதே பெருவழக்காயுள்ளது.
பெரியபுராணத்தில் பேசப்பெறும் அடியார்கள் அனைவரும் செயற்கரிய செய்த பெரியவர்கள். எனவேதான் இது பெரியபுராணம் எனப் புகழப்படுவதாயிற்று. அதனால்தான், "செயற்கரிய செயல் செய்த பெரியோர் வரலாற்றைக் கூறுவதாலும், ஒதுவோருக்குப் பெருமை சேர்ப்பதாலும், சிவன் பெருமையை, அச்சிவபிரான் அடியார்க்கு எளியனாக எழுந்தருளிய அருமையில் எளிய பெருமையை எடுத்து விளக்குவதனாலும், முன்னும் பின்னும் இதனையொத்த பெருமையுடைய நூல் தோன்றாமையாலும் பெரியபுராணம் என்று பாராட்டப்பெறுகிறது” என்று மன்றந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் குறிப்பிடுவதும் எண்ணி மகிழத்தக்கது.
சேக்கிழார் அமைச்சராக இருந்தமையினால் தமிழகம் முழுவதும் களப்பணியாகச் சென்று பல்வேறு செய்திகளைச் சேகரித்துத் தம் காப்பியத்தில் அவற்றைப் பதிவு செய்துள்ளார். சேக்கிழார் பாட எடுத்துக் கொண்ட காப்பியக் கதை மாந்தர்கள் அடியார்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்லர். இவர்கள் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்றிப்பணி செய்தவர்கள். இக்காப்பியத்தில் இடம்பெறும் பல்வேறு வாழ்க்கை நெறிகளுள் திருமணமும் ஒன்று. இக்காப்பியத்தில் சேக்கிழார் அக்காலத்தில் இருந்த பல்வேறு திருமணச் சடங்கு முறைகளைப் பதிவு செய்துள்ளார். அவற்றைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கம்.
அக்காலத்தில் திருமணத்திற்கு முன்பு, மணமகனின் வீட்டைச் சார்ந்த முதியோர் சிலர், பெண்ணின் பெற்றோரை
Z
 
 

அறிவுடைநம்பி - யழுத்துச் சுவடித்துறை, கழகம்,தஞ்சாவூர்
நாடி மணம் பேச வருவர் (காரைக்காலம்மையார் புராணம் 16, மாணக்கஞ்சாற நாயனார் 16) அங்ங்ணம் மணம் பேச வருவோர், அறிவின் மிக்கோராயும் இருப்பர். பெண்ணின் குலம் மட்டுமின்றி, அவளின் குணத்தையும் விரும்பினர் (திருநாவுக்கரசு நாயனார் 23) இதையே சி.கே. சுப்பிரமணிய முதலியார். “மணம் செய்தற்கண் உளங்கொள்ள வேண்டிய இன்றியமையாத பொருள்கள் குலம் குடி, உரிமை என்ற இம்மூன்றுமாம் என்பது முந்தையோர் வழக்கு ” என்பார்.
திருஞான சம்பந்தருக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்ய நினைத்துச் சாதக முறைப்படிச் சடங்கு பார்த்ததாகச் சேக்கிழார் கூறுவதன் (திருஞானசம்பந்த நாயனார் 1043) மூலம் சாதகம் பார்த்தலும் உண்டு என்பதை அறிய முடிகிறது. மகட்பேசவரும் முதியோர் ஒத்த குடியும், மரபும் பார்த்தலோடு இவற்றிலும் மேலாய சிவனடித் திறமுடையையும் கருதினர் (மானக்கஞ்சாற நாயனார் 16).
இக்காலத்தில் மணமகனுக்குப் பணம் பெரிதும் தருதலாகிய வழக்கம் இருப்பது போல, அந்நாளில் பெண்ணுக்கு விலையாகப் பணம் கொடுத்தனர் என்னும் செய்தியை அறிய முடிகிறது (திருஞானசம்பந்த நாயனார் 480). இரு வீட்டாரும் பேசி முடித்த பின் , பெண்ணின் பெற்றோார், தம் மகளைக் கொடுக்க இசைவு தெரிவிப்பர் (திருநாவுக்கரசு நாயனார் 24).
இவை மணநிகழ்ச்சியின் இன்றியமையாத முதற் பகுதியாகும். இதிலிருந்தே மணவினையும் தொடங்குகிறது. இங்ங்ணம் இருதிறத்தாரும் இன்னானுக்கு இன்னவள் எனப்பேசி உறுதி செய்துவிட்டால், அதில் மாற்றம் எதுவும் நிகழக்கூடாது. எதிர்பாராதவிதமாகத் திருமணம் தடைப்பட்டால், பின் விளைவு யாது என்பது குறித்துச் சேக்கிழார் திலகவதியார் வரலாற்றில், “எந்தையும் எம் அனையுமவர்க் கெனைக்கொடுக்க விசைந்தார்கள் அந்தமுறை யால் அவர்க்கே உரியதுநான் ஆதலினால் இந்தவுயிர்அவருயிரோடிசைவிப்பன் எனத்துணிய’
(திருநாவுக்கரசு நாயனார்.32) முற்பட்டபோது, மருணிக்கியார், அவர்தம் அடியிணையில் விழுந்தார். எனவே, தம் தம்பிக்காக உயிர் தாங்கினார் திலகவதியார்.
&rắágrif gaaf gaof 2005

Page 65
எனவே, திருமணப் பேச்சு முடிவானபோதே, ஆன்றோரால் உறுதி செய்யப்பட்டவனையே மணமகனாக எண்ணி வாழும் பெற்றியும் மணமகளாக ஆகப்போகும் ஒருத்திபால் இருந்தது என்ற நிலையையும் காணமுடிகின்றது. இத்தகு நிலையை இக்காலத்தும் சில குடும்பப் பெண்கள் கடைப்பிடித்து ஒழுகி வருவதைக் காணமுடிகிறது.
பொதுவாகப் பண்டை நாளில் மணப்பருவம் ஆணுக்குப் பதினாறு வயதும், பெண்ணிற்குப் பன்னிரண்டு வயதுமாகக் கணக்கிடப்பட்டது என்பதை இறையனார் களவியல் உரை(சூத்.1) கூறுகிறது. பெரியபுராண காலத்தும் இது வழக்கில் இருந்ததாகக் கருதமுடிகிறது.
நம்பியாரூரர், சிறுதேர் உருட்டும் பருவமாகிய மூன்றாவது வயது முதல் மணப்பருவமாகிய பதினாறாவது வயது வரை அரசரது அரண்மனையில், காதற் பிள்ளையாய் வளர்ந்து வந்தார். (தடுத்தாட் கொண்ட புராணம் 6 ). திருஞான சம்பந்தர் புராணத்தில், 'திருவளர்ஞானத்தலைவர் திருமணஞ்செய்தருளுதற்குப் பருவமிது வென்றெண்ணி அறிவிக்கப்பாங்கணைந்தார்”
(திருஞானசம்பந்தர் 155) என்பதில் வரும் பருவம் என்பதற்குச் சிவக்கவிமணி, திருமணப் பருவம் இஃது ஆண்பாலார்க்குப்பதினாறாட்டைப் பருவத்தில் நிகழுமென்பது தமிழ் மரபு என்று விளக்கம் தருகின்றார்.
திருமணத்திற்கு உறுதி செய்யப்பட்டபின், மணநாள் குறித்து ஒலை எழுதுதல் மரபு. இதற்கு நாளோலை அல்லது திருநாளோலை என்று பெயர் (காரைக்காலம்மையார் 10). மணமாகும் ஆடவனின் வலது கையிலும், பெண்ணின் இடதுகையிலும் கயிறு கட்டுதல் மரபு. இக்கயிறு பொன்நாண் எனப்படும். கட்டிய நாளிலிருந்து மணநாள் வரை இதை அவிழ்ப்பது கிடையாது. மணமக்களை எந்தத் தீமையும் அணுகாதபடிக்கு காவல் செய்வதாகலின் இதற்குக் காப்பு என்று பெயர். வேறுபல காப்பு, வரையுறை கடவுட்காப்பு என்பர் சேக்கிழார் (தடுத்தாட் கொண்ட 12, திருஞானசம்பந்தர் 43, கண்ணப்பர் 18)
மணநாளன்றுமணமகனைக் குதிரை மீது அமரச் செய்து மணவீட்டுக்கு அழைத்து வருதல் உண்டு. மங்கல மகளிர் நிறைகுடம், விளக்கு, தூபம், மலர்மாலை, முளைப்பாண்டில், புனுகு, கஸ்தூரி முதலிய வாசனைப் பொருள்களை நன்கு உறைத்துக் கட்டிய கலவைச் சாந்து ஆகியவற்றை ஏந்தி மணமகனை வரவேற்பது மரபு (தடுத்தாட் கொண்ட புராணம்
19, திருஞானசம்பந்தர் 1227, 1228).
6erákásgrif waarb 1960ł 2oo5

திருமண நாளன்று நகரையும், திருவீதிகளையும், திருமனையையும் நிறைகுடம், விளக்கு முதலியவற்றால் அலங்கரிப்பர் (திருஞானசம்பந்தர் 170).
மணமகனின் கால்களைப் பால்கொண்டு நீர் வார்த்து விளக்குதல், மணமகளைப் பெற்ற அன்னையார் செய்தலும் உண்டு. திருமணத்தின் போது, கல்வியைக் கொடுத்தேன் என்று சொல்லி, நீர் வார்த்து, மணமகளை மணமகனது கையில் ஒப்படைத்தல் மரபு (திருஞானசம்பந்தர் 1232).
இந்நாளில் மங்கலநாண் பூட்டுதலுக்கு நல்ல நேரம் பார்ப்பது போல, அன்றும் இவ்வழக்கம் இருந்தது. இதனைச் சேக்கிழார் பழுதில் நற்பொழுது நண்ண என்பார் (திருஞானசம்பந்தர் 1236) ஆளுடைய பிள்ளையாரின் திருமண நிகழ்ச்சியை,
"பிள்ளையாரது திருவடி விளக்கப்பெற்றது; அவர் தூமலர்த் தவிசின்மேல் எழுந்தருளி யிருந்தார் அதில் தூபம் சுற்றிலும் மணம் பரப்பியது
மணியணிவிதானம், மேலே விளங்கிற்று; மடவார் வாழ்த்தொலிஎழுப்பினர் குழ இருந்த மறையோர் மறைமொழிகளால் ஏத்தினர் வெண்பொரியை வேள்வித்தீயிலிட்டு ஆகுதி செய்து உரிய மந்திரம் பாவனைகளுடன் இறைவனை ஏத்தும் சடங்கு நிகழ்ந்தது”
(திருஞானசம்பந்தர் 1231, 1322, 1237)
என்று சேக்கிழார் விளக்குகின்றார். மணமகளது கழுத்தில் மணமகன் மங்கலநாண் பூட்டுவதும் மரபாயிருந்து வந்துள்ளது. மணச்சடங்குகளில் இதுவே மிகமிக இன்றியமையாதது. மங்கல நூல் மட்டுமே அணிதலும், மங்கல நூலுடன் தாலியும் சேர்த்து அணிதலும் உண்டு எனக் கருதலாம் (குங்குலியக்கலய நாயனார் 9). அம்பொன் மணி நூல் (திருநாவுக்கரசர் 34). என்று சேக்கிழார் இதனைக் குறிப்பர். திருநாண் பூட்டிய மணமகன், தன் துணைவியின் கையைப் பிடித்தல் மரபு. இதனைப் பாணிக் கிரகணம் (பாணி - கை; கிரகணம் - பற்றுதல்) என்று கூறுவதுண்டு (மாணக்கஞ்சாற நாயனார்20). மணம் முடிந்தபின் தாம்பூலம் முதலியன வழங்குவர் (தடுத்தாட் கொண்ட புராணம் 20). இரு வீட்டு உறவினர்களும் ஒருங்குகூடிப்புறப்படுவர். அக்கூட்டம் முன்பைவிடப்பெருகிக் காணப்படும் (மானக்கஞ்சாற நாயனார் 36).
இவ்வாறு, தெய்வச் சேக்கிழாரின் பெரியபுராணத்தில் அக்காலச் சமுதாயத்தில் நிகழ்ந்த திருமண முறைகள், திருமணச் சடங்கு முறைகள் போன்றவற்றைப் பரக்கக் காணலாம்.
33

Page 66
சேக்கிழாரும்ே
- முனைவர் செ. திரு தலைவர், த கணபதி சீதையம்மாள் கலை இராஜகம்பீரம், ம
Ears 2 蠶
釜ーリー、リ
தமிழ்நாட்டின் இடைக்கால வரலாற்றில் சோழப் பேரரசு தொடர்ந்து தலைமை பெற்ற வளமான காலத்தில் தோன்றிய காப்பியங்கள் இரண்டு. அவற்றுள் ஒன்று பெரியபுராணம், மற்றொன்று கம்பராமாயணம். இவற்றை அடுத்துத் தோன்றிய பக்திக் காப்பியங்கள் பலவும் கடவுள் பக்தர்களுக்கு அருள் செய்யும் பெருமையைக் கூறின. பக்தர்களின் பெருமையைப் பேசவில்லை. ஆனால் பெரியபுராணம் ஒன்று மட்டுமே சைவ அடியார்களின் பக்திச் சுவையைத் தலைமைச் சுவையாகக் காட்டி காப்பிய நிலைக்கு உயர்ந்துள்ளது.
இப்பக்திக் காப்பியத்தில் பேசப்படும் தொண்டர்களுள் பெண்பாலாரும் உண்டு. அப்பெண்மணிகள் பலருள்ளும் சாலப் பெருஞ் செயல்களை ஆற்றிய மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார், திலகவதியார் ஆகிய மூவரைப் பற்றி மட்டும் ஆராய்வதே கட்டுரையின் நோக்கமாகும்.
மங்கையர்க்கரசியார்
“லங்கையர்க்குத்தனியரசினங்கள் தெய்வம்
வளவர்திருக்குலக் கொழுந்து வளைக்கைமாணி செங்கமலத்திருமடந்தை கன்னிநாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே இருந்தமிழ்நாடுற்றஇடர்நீக்கித் தங்கள் பொங்கொளி வெண்திருநீறு பரப்பினாரைப்
போற்றுவார் கழலெம்மால் போற்றலாமே” மங்கையர்க்குத்தனியரசிஎங்கள் தெய்வம்'எனச் சேக்கிழார் பெருமான் கூறியதில் தனியரசி' என்பதால் மங்கையருள் ஒப்புயர்வற்றவர் என்பதும், என் தெய்வம் என்று போற்றாது எங்கள் தெய்வம் என்று உளப்பாட்டுத் தன்மைப் பன்மையில் கூறினமையால், வருங்கால அடியவர் கூட்டத்தையும் உய்விக்கும் பேறு பெற்றவர் நமது அரசியார் என்பதும் தெளிவாகும்.
வளவர் குலக்கொழுந்து'என்று கூறாமல் திருக்குலக் கொழுந்து’ என்று போற்றினமையால் கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கும் அமைந்த அழகும், செல்வமென்னும் பொருளமை திருவும், வீடுபேறு என்னும்
34
 
 
 

ஞானசம்பந்தம் - மிழ்த்துறை, மற்றும் அறிவியல் கல்லூரி துரை, தமிழ்நாடு
பொருளமை திருவும் ஒருங்கே அமையப்பெற்றவர் அம்மையார் என்பது தெளிவாகும்.
வளக்கை மானி' என்று பெண் அணியில் சிறந்த வளையல் போற்றப்பெற்றமை சிறப்புடைத்தாகும். இதனையே திருஞானசம்பந்தப் பெருமானும் திருவாலவாய்த் தேவாரத்தில்,
"மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக்கை மடமானி” என்று போற்றினார். தன்னிலைமையில் தாழாமையும் தனக்கூழ் வினையால் தாழ்வு வந்த காலத்து உயிர்வாழாமையுமாகிய மானம் அம்மையாரிடம் பொதிந்து கிடந்தமை புலனாகும்.
திருஞானசம்பந்தர் பெருமான் வரலாற்றில் அரசியராக இருந்தாலும், அடக்கமுடைமை, பண்புநெறி, தாய்மை உணர்வு ஆகியவற்றுடன், கணவர் சமண மயக்கத்தில், சைவ சமயத்தினரைக் கண்டாலே-கண்டுமுட்டு எனவும், கேட்டாலே-கேட்டுமுட்டு-எனவும் இருந்த காலத்தும் பொறுமை மிக்கவராகவும் திகழ்கிறார். '
தான் பிறந்த குடியில் கடைப்பிடித்து வந்த சைவ வாழ்வுக்குத் தாழ்வு வராமல் காத்த பெருமாட்டி இவ்வம்மையார். தென்னர் குலப்பழி தீர்த்த’ என்று சேக்கிழார் பெருமான் போற்றக் காரணம், நல்லாரொருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்றாற் போல், கூன் பாண்டியன் ஒருவன் பழி தீர்த்தது மட்டும் அன்றி, தென்னர் குலத்திற்கே உரிமையாம் பழியையும் தீர்த்து வைத்தவர் என்பது தெளிவாம். மேலும், தமிழ்நாடுற்ற இடரை நீக்கித் திருநீற்றின் ஒளியைப் பரப்பியவர் என்பதையும், மந்திரமாவது நிறு’ என்று போற்றித் தீராத வல்வினை தீர்க்கும் மருந்தாக உதவியதையும் புலனாக்கும். இன்னும் சேக்கிழார் பெருமானே, தென்னாடு விளக்கும் சீர் விளக்கு'என்று போற்றினார். விளக்கு ஏற்றியவுடனே இருள் நீங்கி ஒளி பரவுவது போல, அம்மையாருடைய தோற்றம் தமிழகத்திலே புறச்சமய இருளை நீக்கிச் சைவ ஒளியைப் பரப்பினமை தெளிவாகும். இத்தகைய நல்லாளின் திருவடியைச் சிந்தை வைத்திறைஞ்சி, காரைக்காலம்மையார் திறத்தை நோக்குவோம்.
சேக்கிழார் மாநாடு மலர்2005

Page 67
காரைக்கால் புனிதவதியார்
இறைவனால் அம்மையே’என்று அழைக்கப்படும் பேறு பெற்றவர் இவர். இதனைச் சேக்கிழார் பெருமான்,
"வருமிவள் நம்மைப்பேணும் அம்மைகாண்” என்றார். நம்மையென்று உளப்பாட்டுத் தன்மைப்பன்மையில் கூறின்மையால், தன்னை மட்டுமன்றித் தன்னால் படைக்கப்பட்ட ஆன்மாக்களையும் பேணும் தாய்த்தகைமை பூண்டவரென்பது போதரும்.
இல்லறம், துறவறம் என்ற இரு நெறிகளிலும், ஒழுகுவார்க்குச் சிறந்த வழித்துணையாய் நின்றவர். தெய்வீகக் கற்பு வல்லவர். இறைவனுடைய திருவருட்பேறு பெற்றவர். ஆத்ம ஞானம் பெற்ற உயிர்களுடைய பாசத்தை நீக்க வல்ல திருவருள் பெற்றவர் என்பதெல்லாம் தெளிவுறும். இதற்கு அம்மையாருடைய பாடல்களே அகச்சான்று பகர்கின்றன.
'பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்-நிறந்திகழும் மைஞான்ற கண்டத்து வானோர் பெருமானே! எஞ்ஞான்று தீர்ப்பது இடர்?” இதனை வலியுறுத்தவே சேக்கிழார் பெருமானும்,
“வண்டல் பயில்வன வெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை அண்டர் பிரான் திருவார்த்தை அனைய வருவன பயின்று’ என்று வலியுறுத்தினார். இதனையே மாணிக்கவாசகப் பெருமானும்,
“பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம் பேசும்போது எப்போது இப்போதாரமளிக்கே நேசமும் வைத்தனையோ.” எனறார்.
துறவறத்தில் பெண்களால் ஈடுபடவும், பேறுபெறவும் இயலாதெனப் பிற சமயங்கள் வலியுறுத்திய காலத்தில், அந்நெறியிலும் பெண்கள் சிறப்புடன் செயல்பட்டு, ஏற்றம் பெற இயலுமென மெய்ப்பித்த பெருமைக்குரியவராய்ப் புனிதவதியார் திகழ்கின்றார். அம்மையார் தவமிக்குடையார் என்பதற்கு அவருடைய பாடல் அகச்சான்று பகர்கின்றது.
"யானே தவமுடையேன் என் நெஞ்சேநன்னெஞ்சம் யானே பிறப்புறுப்பான் எண்ணினேன்-யானேயக் கைமாவுரி போர்த்த கண்ணுதலான்தன்கருணை யம்மானுக் காளாயி னேன்.”
இதனையே சேக்கிழார் பெருமானும்,
“உற்பவித்து எழுந்து ஞானத்து ஒருமையில் உமைகோன் தன்னை அற்புதத் திருவந்தாதி அப்பொழுதருளிச் செய்தார்” என்று போற்றினார். மலையின் கண் ஊற்றுத் தோன்றுவது போல, அம்மையாரிடத்திலிருந்து சிவஞானம் உற்பவித் தெழுந்தது என்றார். ஞானம் இரு வகைப்படும். ஒன்று
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

தன்னுள்ளடங்கியது. மற்றொன்று தன்னை விழுங்கியது. சேக்கிழார் அம்மையாரிடத்து ஞானம் அடங்கியதாகவே குறிப்பிடுகிறார். எனவே செம்மையேயாய சிவஞானத்தைச் சுரக்கும் தாய் என்பது விளங்கும். அத்தகைய மெய்ஞ்ஞானம் தொடர்புடமையால் தான் அம்மையார் தம்முடைய பாடலிலும்,
"வானத்தான் என்பாரும் என்க மற்று உம்பர்கோன் தானத்தான் என்பாரும் தானென்க-ஞானத்தால் முன்நஞ்சத்தாலிருண்ட மொய்யொளிசேர்கண்டத்தான் என் நெஞ்சத்தான் என்பன் யான்’
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படருநெறி பணியாரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க் கன்பறாது என் நெஞ்சு அவர்க்கு”
என்று அகச்சான்று காட்டிப் போந்தார். ஆகையால் தான் சேக்கிழார் பெருமானும்,
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகிறார் பிறவாமை வேண்டும் மீண்டும்பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா! நீயாடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்.”
என அமைத்துப் பாடியுள்ளார். அம்மையாரின் வ்வேண்டுதலுக் ரங்கிய இறைவன் ள்வாக்கினை,
தலுககு றவன அரு
கூடுமாறு அருள் கொடுத்துக்
குலவு தென்திசையில் என்றும் நீடுவாழ் பழன மூதூர்
நிலவிய ஆலங்காட்டில் ஆடுமா நடமும்நீ கண்டு
ஆனந்தம் சேர்ந்து எப்போதும் பாடுவாய்நம்மை என்றான்,
பரவுவார்பற்றாய் நின்றான்.
என்னும் இப்பாடல் விளக்கும்.
இதன்படி திருவாலங்காட்டில் திருநடனம் கண்டுய்யும் அருள் பெற்ற அம்மையார், வேதங்களின் உட்பொருளாம் செம்பொருட் சிவனைக் கண்ணாரக் கண்டு களித்து வணங்கித் திருவருள் விடை தரத் திருவாலங்காட்டைத் தலையினால் நடந்து வந்து அடைந்தார். ஆலங்காடாம் அருமறைப் பதியில் அரனார் அண்டமுற நிமிர்ந்தாடும் அருள் கண்டு மகிழ்ச்சி மீதூரக், "கொங்கைதிரங்கிநரம்பெழுந்து’ என்று தொடங்கும் மூத்த திருப்பதிகமும், "எட்டி இலவம் ஈகை'எனத் தொடங்கும் திருவாலங்காட்டுத் திருப்பதிகமும் பாடி, ஜம்புலன்களாரக் கண்ட திருநடனப் பேரின்பத்தை, மனதாரப்பருகி வாழ்ந்து வரலானார். கங்கையைச் சடையில் ஏற்று, மண்ணுயிர்க்கு அரண் அளித்து அருளிய அப்பனின் திருவாக்கால் 'அம்மையே என்றழைக்கப் பெற்று, உலகுய்ய உவந்தாடும் எம் பிரானின் திருவடிக்கீழ் என்றும் தங்கி
35

Page 68
இருக்கப் பெற்றவராகிய காரைக்கால் அம்மையாரின் திருவடியை வணங்கிப் போற்றுவோமாக! இறுதியாக திலகவதியார் திறம் நோக்குவாம்.
திலகவதியார்
பெண்ணுலகத்திற்கே திலகம் போன்றவர். தெய்வீகக் கற்பு நிறைந்தவர். சைவசமயாசாரியர் நால்வருள் ஒருவராகிய திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத் திருமுறையை அருளிச் செய்வதற்கே காரணமாக நின்றவர். நிச்சயிக்கப்பட்ட கணவனுக்கு அர்ப்பணித்த உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும், ஆண்டவனால் படைக்கப்பட்ட அனைத்துயி ருக்குச் சேவை செய்ய வேண்டி, ஒருயிர் என்று உயிர்வாழ எண்ணினார். அனைவரையும் மனம், மொழி, மெய்களால் தவத்தொண்டு செய்து செந்நெறியில் செலுத்த, உலகம் உள்ளளவும் இறுமாந்திருக்கும் பெருவாழ்வை அடையச் செய்ய அம்மங்கையின் உள்ளம் விழைந்தது. இந்த எண்ணம் தான் களங்கமற்ற தூய்மையான பொதுநலப்பணி. தமது தம்பியார் சமண மதம் புகுந்த வழி, ஈசன் திருவடியை நினைந்து உருகி, தம்பியார் உய்ய வேண்டுமென
வரங்கிடந்தார். அதன் பயனாக, தம்பியார் சூலை நோயால்
துன்புற்று இறையருளால் தன்னிடம் வந்தடைந்தபோது திருநீறு கொடுத்து திருவைந்தெழுத்து ஒதியருளினார். இதனை,
திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வுவந்த தெனப்பெருந்தகையார்பணித்தேற்று”
என்பதால் அறியலாம். தம்பியாரை உளராக வைத்த பெருமை திலகவதியாருக்கே உரியதாகும். திலகவதியாரைச் சேக்கிழார் பெருமான்,
"தூண்டு தவ விளக்கு”
(5ubspirapéiadeif LIT.46)
எனச் சிறப்பித்துப் போற்றுகிறார்.
திலகவதியார் நல்ல சகோதரியாகவும், தாயாகவும், இருந்ததுடன் நல்ல சமயக்கொள்கை உடையவராகவும், தாமுணர்ந்த சமயக் கொள்கையைப் பிறரும் உணருமாறு
36
豹

எடுத்துக் கூறி நிலைநாட்டும் வல்லமை உடையவராகவும் திகழ்ந்தவர் என்பதைப் பெரிய புராணம் பறைசாற்றுகின்றது.
முடிவுரை
"மங்கையராய்ப் பிறப்பதற்கே - நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா
பங்கயக் கரங்கள் பார்த்தல்லவோ - பாரில்
அறங்கள் வளருமம்மா”
என்று பின்னாளில் பாடிய பாடலுக்கு முன்னோடிகளாக, சேக்கிழாரின் பெண்மணிகள் திகழ்ந்துள்ளனர். அப் பெண்மணிகளுள், இல்லற வாழ்வு சிறக்க சைவசமயச் சின்னமாகிய திருநீறு அணியாது, தன் சமய உணர்வுகளை மறைத்து, உள்ளன்போடு ஈசனைப் பணிந்து, மன்னனும் நாடும் உய்வுபெற, ஏற்றத்தைச் சிந்தித்துச் செயல்பட்டு வெற்றி பெற்றவராய், மங்கையர்க்கரசியார் மிளிர்கின்றார். இல்லற வாழ்வு இனி இல்லை என்ற நிலையில், தன் உரிமையை முழுமையாகப் பயன்படுத்தி, ஆடல் வல்லானின் அடியிற் கீழ் உறையும் பேறு பெற்றவராய்க் காரைக்கால் அம்மையார் சிறப்பிடம் பெறுகின்றார். கணவருக்காக வாழுதல் மரபாக இருந்த போதிலும், கணவரில்லாத நிலையில் உடன் பிறந்தவருக்காக வாழ முடிவெடுத்து, அவரை நல்வழிப்படுத்திய தவச்செல்வியாகத் திலகவதியார் திகழ்கின்றார். பக்தி நெறியில் வாழ்ந்த இப் பெண்மணிகள் வழி சேக்கிழார், இளமையும் யாக்கையும் நிலையற்றவை, இறை அருள் நிலையானது என்ற கோட்பாட்டையும், இறைவனோடு இரண்டறக் கலப்பதற்கு இறைப்பற்றும், கருணையும் தேவையே ஒழிய, சாதி, குலம் தேவையில்லை என்னும் கருத்தையும் புலப்படுத்துகின்றார்.
நாயன்மார்கள் அத்தனை பேரையும் பெற்றெடுத்தோரும் சேயிழையாரே, வாழ்க்கைத் துணைவியராக இருந்து, சைவம் தழைக்கவும், சைவ அறங்கள் செழிக்கவும் பாடுபட்டவரும் சேயிழையாரே இவர்கள் தம் வாழ்க்கை பெண்ணுலகத்திற்கு உறுதுணையாகும்.
6Féégrif smurfboeuf 2005

Page 69
AASSSA AASSTSSSTTASSSAS TS TTkS AASAAASkeSekA SAkSLS ekekAeA 烷
சேக்கிழார்பனுவ முதற்
- முனைவர் சி.
முன்னுரை
நம் தமிழக வரலாற்றில், தமிழ்நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், நாகரிகப் பண்பாடுகளையும் கருவாகக் கொண்டு, பிறமொழிச்சார்பின்றித் தமிழ்மொழியிலேயே முதல் நூலாகத் தோன்றிய காப்பியங்கள், சேர முனிவராகிய இளங்கோவடிகள் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமும், குன்றை முனிவராகிய சேக்கிழாரடிகள் இயற்றிய திருத்தொண்டர் புராணமும் ஆகிய இரண்டுமேயாகும் என்பது பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் கூற்று. (பெரியபுராணம், திருவாவடுதுறை ஆதீனப் பதிப்பு) பெரியபுராணம் என்னும் இச்செந்தமிழ்க் காப்பியத்தில் முதலாவதாக அமைந்த திருப்பாடலின் சிறப்புக்குறித்து ஒரு சிறிது ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கம்.
முதற் பாடல் :-
பெரியபுராணத்தில் அமைந்துள்ள முதற் பாடல்:-
"உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்”
“உயிர்கள் எல்லாவற்றாலும் உணர்தற்கும் ஒதுதற்கும் அரியவன். (அங்ங்ணம் அரியவனாயினும் தன்னை யாவரும் எளிதில் கண்டு தரிசித்து உய்யவேண்டும் என்னும் கருணையினால்) மூன்றாம் பிறைச்சந்திரன் உலாவுதற்கு இடமாய்க் கங்கைநீர் நிறைந்த சடையை உடையவனாயும், அளவில்லாத ஒளியுரு உடையவனாயும், திருத்தில்லையில் திருச்சிற்றம்பலத்தினிடத்தே ஆனந்தத் திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள இறைவனுடைய, எங்கும் நீக்கமின்றி மலர்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம்” என்பது இப் பாடற் பொருள். (சி.கே.சு.முதலியார் உரை)
சிந்தைக்கினிய பொருள் நயங்கள்:-
உலகெலாம்’ என எம்பெருமானே அடியெடுத்துக் கொடுத்தமையால், இதன்கண் ஈடில்லாப்பொருள் நயங்கள் இருத்தல் வேண்டும். அவற்றுள் ஒரு சில மட்டும் இவண்
Grégań sagato 198ł2005
 
 
 

லில் சிந்தைக்கினிய
பாடல்
FTibJagjays -
ழ்மாருதம், மதுரை.
சுட்டிக் காட்டப்படுகின்றன.
தமிழில் உலகு எனத் தொடங்குவது மங்கல மரபு. நக்கீரர், தம் திருமுருகாற்றுப்படையில் உலகம் உவப்பட்என்று தொடங்குகின்றார். சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகை கடவுள் வாழ்த்துப் பாடல், ஏம வைகல் எய்தின்றால் உலகே என உலகில் முடிவுபெறுகின்றது. கம்பரும் உலகம் யாவையும்’ என்றே தொடங்குகின்றார். உலகம்’என்பது ஈண்டு உலகத்து மனிதர்களைக் குறித்து நின்றது. எண்ணில்லாத உலகங்கள் உள்ளன என்பதைக் குறிக்கவே உலகெலாம் என இறைவன் அடியெடுத்துக் கொடுத்தான் போலும்.
உணர்ந்து ஒதற்கு’ என்று கூறியதிலும் ஒரு நுட்பம் உண்டு. ஓதி உணர்தல்'என்பது வேறு: உணர்ந்து ஒதுதல்’ என்பது வேறு. ஓதி உணர்தலைவிட, உணர்ந்து ஒதுதலே சிறப்பு சொல்லியபாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்’ எனவரும் மணிவாசகர் திருவாக்கை உன்னுதல் வேண்டும். இனி ஓதுதல்’என்பது வாய்விட்டுப் படித்தல்'என்று மட்டும் பொருள் கொள்ளலாகாது. காதலாகிக் கசிந்து கண்ணிர்மல்க ஒதுதலே ஈண்டுப் பொருள் கொள்ளவேண்டும். நினைந்து நினைந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து ஊற்றெழும் கண்ணிர் அதனால் நனைந்து நனைந்து ஒதுதல் வேண்டும்.
உணர்தற்கும் ஒதற்கும்அரியவன் எம்பெருமான்'எனவே அரியவன்' என்றார். எனினும் அரியவன்’ என்பதை ஒரு சொல்லாகக் கொண்டு பொருள் கொள்ளாமல், அரி+அவன்’ எனப் பிரித்தும் பொருள் கொள்ளலாம். அரி-திருமால், திருமாலை வழிபட்டாலும் அவ்வழிபாடு சிவபெருமானுக்குப் போய்ச்சேரும் என்றும் கருத இடமுண்டு.
இறைவனின் சடாமுடியில் உள்ளது மூன்றாம் பிறைச்சந்திரன். தன்பால் வருபவரைக் கருணையினால் ஆட்கொள்பவன் என்பதைக் குறிப்பிட வந்தது.
நீர்' என்பது இறைவனின் சடாமுடியில் அமைந்துள்ள கங்கையைக் குறித்தது. இங்கு கருணை வெள்ளத்தைக் குறிப்பதாகவும் கருதலாம்.
இறைவன் சோதிவடிவானவன் சோதியே சுடரே' என்பது மணிவாசகர் மணிமொழி. அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை’ என்பது வள்ளலார் திருவாக்கு. எனவே அலகில் சோதியன்’என்றார் சேக்கிழாரடிகள்.
37

Page 70
அம்பலத்து ஆடுகின்றவன்'என்றில்லாமல் அம்பலத்து ஆடுவான்’ என எதிர்காலத்தில் கூறியது, உலக முடிவு காலத்தில் அவன் ஒருவன் மட்டுமே சுடலைப் பொடி பூசியவனாக ஆடுபவன் என்றும் கொள்ளலாம்.
மலர் சிலம்படி’ என்று-வருவதும் உன்னத்தக்கது. சிலம்பு’ என்பது மகளிர் காலில் அணியும் அணியாகும். ஈண்டு இறைவனுக்குரியதாகச் சொல்லப்பட்டதால் இறைவன் உமைபாகன்'ஆகக் காட்சிதருபவன் என்பதைக் குறிப்பால் சுட்டியதாகும். சம்பந்தப் பெருமான், தோடுடைய செவியன்’ எனத் தம் முதல் திருப்பாட்டிலேயே கூறியது இவண் ஒப்புநோக்கத்தகும். தோடு’ என்பது மகளிர் அணியும் அணி. எனவே செவியள்’ எனப் பெண்பாலிற் கூறாது, செவியன்’என ஆண்பாலில் வைத்துக் கூறியது, இறைவன் உமைபாகன்’ என்பதைக் குறித்தற்கேயாம். வள்ளுவரும் ஆதி பகவன்’ என்றார். எனவே தெய்வச் சேக்கிழாரும் சிலம்படி’ என்றார். மலர்' என்பது பூக்களில் சிறந்த தாமரை மலரைக் குறிக்கும். எனினும் மனமாகிய தாமரை மலர்' எனினும் இழுக்கன்று. திருவள்ளுவரும்
மலர்மிசை ஏகினான்’என்றார்.
மலர் சிலம்படி என்பது இலக்கணத்தில் வினைத்தொகை'எனப்படும். அஃதாவது மலர்ந்த சிலம்படி, மலர்கின்ற சிலம்படி, மலரும் சிலம்படி என்று பொருள்படும். இறைவனது சிலம்படி முக்காலத்தும், எக்காலத்தும் ஒலி எழுப்புவது என்பதாம். சிவபெருமானின் திருவடிப்பேறு பெறுவதே உயிர்களின் நோக்கமாக இருத்தல் வேண்டும். அதனால்தான் அடி இவன் குறிக்கப்பட்டது. மெய்கண்டாரும் செம்மலர் நோன்தாள்'என்றே கூறினார்.
தெய்வச் சேக்கிழார் அருளிய இப் பெரிய புராணம் உலகெலாம்’ என்று தொடங்குவதோடன்றி, உலகெலாம்’ என்றே முடிகின்றது. உலகத்து உயிர்கள் எல்லாம் இன்புற வேண்டும் என்பதே நோக்கம்.
இனி, இம்முதல் திருப்பாடலில் வேறு சில நயங்களும் உள்ளன:-
புலன்கள் ஐந்து பொறிகள் ஐந்து. கண்ணாற் காண்டல்: காதாற்கேட்டல்: நாவால் உண்டல்: மூக்கால் மோந்து பார்த்தல் மெய்யால் தீண்டல் என்பன அவை. ஒரே நேரத்தில் ஏதேனும் ஒன்றையோ அன்றி இரண்டையோ நுகர்தல் கூடும். தேன்’என்பது நாவால் சுவைத்தற்குரியதேயன்றிச் செவியால் நுகர்தற்குரியதன்று. மலர்’ என்பது மூக்கால் மோந்து பார்த்தற்குரியது: ஒருகால் கண்ணினால் கண்டு மகிழ்தற்கும் உரியதாகலாம். இவ்வகையில் இரு இன்பம் கிட்டுகின்றது. ஆனால் ஒரே நேரத்தில் ஐம்புல இன்பமும் அனுபவித்தற்குரிய பொருள் உண்டு. அதுவே பெண்ணின்பம் என்கின்றார் திருவள்ளுவர்.
"கண்டுகேட்டுண்டுயிர்த்துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள”
(குறள் 10)
38 w

என்பது திருக்குறள். ஆனால் அருளுடையார்க்கு, இறைவனது திருவடி, இத்தகைய இன்பம் அளிப்பது என்கின்றார் திருநாவுக்கரசர். அவரைச் சமணர்கள் நீற்றறையில் இட்டபோது அவர்பாடிய பாட்டு இது:-
"மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கின வேனிலும் மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நிழலே’ என்பது அவர் அருளிய தேவாரம். இதன் கண் ஐம்புல இன்பமும் ஒரு சேரச் சுட்டப்பட்டமை அறியலாம்.
தெய்வச் சேக்கிழார் அருளிய இம் முதல் திருப்பாட்டில் இத்தகைய ஜம்புல இன்பமும் குறிக்கப்பட்டுள்ளன:- ஒதுதல், வாழ்த்தல் - வாய் நிலவு, சோதி - கண் மலர்மூக்கு சிலம்பு - செவி நீர், வணங்குதல் - மெய்.
வாயால் ஒதுதலும் வாழ்த்துதலும் நிகழும் கண்களால் நிலவையும் சோதியையும் காண்டல் கூடும் மூக்கால் - மலரின் நறுமணம் நுகர்தல் நிகழும் செவியால் சிலம்பொலி கேட்டல் நிகழும். நீர், மெய்க்கு இன்பம் தரும் மெய்யால் வணங்குதல் நிகழும். இங்ங்ணம் ஐம்புல இன்பம் ஒரு சேர நல்கும் கருணை உள்ளம் கொண்டவன் இறைவன் என்பதாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் என்னும் பஞ்சபூதங்களால் ஆயது இவ்வுலகம். இத் திருப்பாட்டில் இந்த நுட்பமும் அமைந்துள்ளமை அறியலாம்.
அம்பலம் - இப்பூமியாகிய நிலம்: நீர்-தண்ணிர் சோதி - நெருப்பு: காற்றில் அசையும் வேணி(சடாமுடி) - காற்று: அண்ட சராசரங்கள் எனப்படும் உலகம் - வான் (ஆகாசம்) இவ்வாறு பொருள்கொள்ளவும் இடமுண்டு.
சைவசித்தாந்தத்தில் பதி, பசு, பாசம் எனும் முப்பொருள்கள் விரிவாகப் பேசப்படும். சேக்கிழார் இத்திருப்பாட்டில் இவையும் இடம்பெற்றுள்ளன.
அம்பலத்து ஆடுவான் - பதி: உலகெலாம் - உலகத்து உயிர்கள். எனவே பசு பாசத்தால் (மலத்தால்) கட்டுண்ட உயிர்கள் இறைவனை அறிய்முடியா. ஆதலின் அரியவன் எனப்பட்டான். இவ்வகையில் பதி, பசு, பாசம் எனும் மூன்றும் சொல்லப்பட்டுள்ளன எனலாம்.
உலகு+எல்லாம் : உலகெல்லாம் என வரவேண்டும். ஈண்டு உலகெலாம் என வந்துள்ளது. இஃது இறைவன் திருவாக்கு. எல்லாம் என்பது எலாம் என வரலாம். இஃது இலக்கணத்தில் இடைக்குறை எனப்படும். இவ்வாறு இடைக்குறை அமையவந்ததன் உட்பொருள் யாதெனக் காண்டல் வேண்டும்.
“உயிர்கள் குறைபாடுடையன. ஆணவ மலத்தால் கட்டுண்டு கிடத்தல் என்பதே அக்குறை” என்பதை உணர்த்தவே, உலகெலாம்’ என இடைக்குறையாக அமைந்தது என்று கூறலும் பொருந்தும்.
இனி, சைவ சமயகுரவர் நால்வர் பாடிய முதற்பாடலோடு சேக்கிழாரின் முதற்பாடலை ஒப்பிட்டும் காணலாம்.
втiepi prijati, pa i 2005

Page 71
சம்பந்தர் பாடிய முதற்பாட்டு, “தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிகுடி”சேக்கிழார் பாட்டில், நிலவுலாவிய என்றுவருதல் காணலாம். அப்பரது முதற்பாடல், கூற்றா யினவாறு’ என்பது. அதில், ஏற்றா அடிக்கேன் இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்'என்று வந்துள்ளது. சேக்கிழார் பாட்டில், மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது அறியத்தகும். சுந்தரர் பாடிய முதற்பாட்டு பித்தா பிறைகுடி'என்பது. சேக்கிழார் பாட்டில், பிறையானது நிலாவாக இயம்பப்பட்டுள்ளது. மணிவாசகப் பெருமான் பாடிய முதற்பாடல் 'நமச்சிவாய வாழ்க’ என்று தொடங்குகின்றது. சேக்கிழார் வாழ்த்தி வணங்குவாம்' என்கின்றார்.
இவ்வகையிலும் சேக்கிழாரின் முதற்பாடலைப் படித்து இன்புறலாம்.
இனி, இத் திருப்பாட்டிற்கு அறிஞர் பலர், சிந்தைக்கினிய அரிய பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவற்றுட் சில வருமர்று:-
“உணர்தல், மனத்தின் தொழில் ஒதுதல், வாக்கின் தொழில். எனவே, பசுஞான, பாசஞானங்களின் விருத்திக்கு அப்பாற்பட்டவன் என்பதாம் நிலவுலாவியநீர்மலிவேணியன்’ - இஃது இறைவனது தடத்த இலக்கணம் குறித்தது. இஃது அவனது அருவுருவத் திருமேனி. அருவத் திருமேனியிலிருந்து உருவத்திருமேனி தாங்கிவருவது உயிர்களுக்கு அருள் புரியும்பொருட்டு என்பது சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார் கூற்று.
உன்னிடத்தில்
இவனை நம்பு அல்லது அவனை நம்ட்
முதலில் நீஉன்னிடத்திலேயே நம்பிக்கை6ை உனக்குள்ளேயே இருக்கின்றன. அதை உண
ardagnif Baratfo waof 2oo5

“சோதி - ஈண்டு ஞான ஒளி. இவ்வொளி, விளக்க விளங்கும் இல்லக விளக்காகிய சுடர் விளக்கும், பல்லக விளக்காகப் பலரும் காணும் ஞாயிறு முதலிய சுடர்விளக்கும், இந்திரிய அந்தக்கரண ஆன்மபோதகமாகிய ஆன்ம விளக்கும் அல்லதாய், இவை எல்லாவற்றையும் கடந்து, தற்பிரகாசமாயும், பரப்பிரகாசமாயும் நிற்றலான் அளவில் சோதியாய், எவற்றிற்கும் மேலாக நிற்றலாற் பரஞ்சோதியாய்த் தானே விளங்குதலாற் சுயஞ்சோதியாய் உள்ள பரஞானமான சிவஞானச் சோதி என்றறிக. உலகெலா முணர்ந்தோதற் கரியவன் என்பதனாற் சொரூப சிவ வியல்பும், அலகில் சோதியன்’ என்பதனால் தடத்த விலய சிவவியல்பும், அம்பலத்தாடுவான் என்பதனான் தடத்த அதிகார சிவவியல்பும், நிலவுலாவிய நீர்மலிவேணியன்’ என்பதனான் தடத்தபோக சிவவியல்பும் கூறப்பட்டமை அறிந்துகொள்க என்பது, கயப்பாக்கம் சதாசிவ செட்டியார் தரும் விளக்கம்.
முடிவுரை:-
சேக்கிழார் பனுவலாம் பெரிய புராணத்தில் வரும் முதற்பாடலை ஆழ்ந்து நோக்கினால், சிந்தைக்கினிய இன்னும் பல செய்திகளைக் காணலாம். ஈண்டுச் சிலவே சுட்டப்பட்டன. பெரிய புராணத்தைச் சொன்னால், நா மணக்கும் கேட்டால் செவி மணக்கும் நினைத்தால் மனம் மகிழும். வாழ்க சேக்கிழார் திருவடி
ம் நம்பிக்கைவை
என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், வ. அதுதான் முன்னேற வழி. எல்லா ஆற்றல்களும் ர்ந்து அந்த ஆற்றலை நீவெளிப்படுத்து
- சுவாமிவிவேகானந்தர்
39

Page 72
96)685
- 65. 6)
உலகெலாம் அதிசயித்தது அரசியலைத் துறந்து அருட்பணிக்காக ஒரு முதலை இப்படியும் ஒரு புதுமையா? உலகியலார் வியப்பெய்தினர். அருளாளர்கள் ஆனந்தக் கண்ணிர் பொழிந்தனர். திருத்தொண்டர்புராணத் தீந்தமிழைப் பெறப்போகும் ! உலகம் ஒருதரம் சிலிர்த்துக்கொண்டது.
அதோ!
பக்திநிறைந்த நெஞ்சோடும், உச்சி குவிந்த கையோடும், தில்லையதன் திசைநோக்கி, தன்னை மறந்து தளர்நடைபோடும் அவர்தாம் அருள் தவறு! தவறு! சிவனடியார் சீருரைத்து செழுந்தமிழை தெய்வநிலை சேக்கிழார் என்னும் செம்மல்.
இதோ!
தில்லையின் எல்லை.
கண்ணிரால் மெய்குளித்து, காண்பரிய சிவப்பொருளைக் காணும் ஏக்கம் உள்ள உவப்பெய்தி தனைமறந்து, மெய்சோரத் தில்லையதன் நிலம்சேர்ந்து, மேனியெலாம் அருள் நிரம்ப, உய்யுமோ தன்நோக்கம்? என உழலும் மனத்தோடு, தில்லை அம்பலவன் திருவடி காண விரைகிறது அவ சேக்கிழார்தம் சிந்தை மருள்விக்கும் அந்நோக்கந்தா அரசபதவியைத்துறந்து இவ்வமைச்சர், தில்லையதன் எல்லை சேர்ந்தது எதற்காக? அறிய விழைவார்க்காய் சற்றுப் பின்செல்வோம்.
& マ 愛
சோழ அரண்மனை. முதலமைச்சர் அருள்மொழித்தேவர் ஆசனத்தினில் அ அவரைச் சூழ்ந்து ஆன்றோர் பலர். அவ்வான்றோர்தம் அகச்சோர்வை முகம் காட்டுகிறது அத்தக்கார்தம் தாள்பணிந்து, அருள்மொழித்தேவர் ே செழுந்தமிழில் உளம்பதித்து, சிவப்பொருளே சிந்ை அறமே வாழ்வான ஐயன்மீர்! கண்ணுரைக்கும் கருத்ததனால், உங்கள் அகங்கொண்ட அவலம் உணர்ந்தேன். ஏதுக்காய் இவ்வருத்தம் என இயம்புக! பணிவோடு கூடிய உத்தரவு அமைச்சரிடம் இருந்து அமைச்சர் உரைகேட்ட ஆன்றோர், ஒருவரையொருவர் பார்க்க, அவர்தம் முகக்குறிப்பறிந்த மூத்த பெரியார் ஒருவர் எந்நாட்டார்க்கும் அருள்செய்யும் தென்னாடுடைச் சில
40
 
 

மச்சர் தில்லை செல்கிறார்.
மகிழ்ச்சியில்,
மொழித்தேவர்.
க்கு உயர்த்தப்போகும்,
மெலாம் நிரம்ப,
பர் பாதங்கள். ன் என்ன?
மர்ந்திருக்கிறார்.
பசத் தொடங்குகிறார். தயதாய், தேசத்தில் நேசங்கொண்டு,
பிறக்கிறது.
மெல்ல எழுகிறார்.
u6ᏡᎧ60Ꭲ,
drágrif wat pao 2oo5

Page 73
iனது மன் *இன்த் உரைக்கும் சிந்தாமணி நூலில் சிந்தைதனைப்பதித்து மயங்கின அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி வளவன் இன்பவழி நாடின் உலகமும் அவ்வழிதனை சிவனில் நேசம் சிதைந்தால் தேசம் சிதையும். தடுப்பது நும்கடன் செப்புவது எம்கடன். இயம்பி விடைகொண்டார் சான்றோர்.
켰 했
மன்னனின் மாண்ட பெரும்புகழை மங்காது காத்தல், தன் நீண்ட கடனென்று உணர்ந்த நேச நெடுநெஞ்சர் அருள்மொழித்தேவர், ஆன்றோர் உரைதன்னை அகத்திருத்தி, அவனி வேந்தன் அனபாயச் சோழன்தன் அவைசேர்
한 했
மன்னன் அவை. அகம்வாட அரசன் முன்நிற்கிறார் அமைச்சர் அருள்ெ வானமே இடிந்தாலும் வாடாத தன் அமைச்சரின் வா மன்னன் மனதில் மருட்சி என்ன குறை இயம்பிடுக! ஏந்தல் உத்தரவிடுகின்றா மன்னவனைப் பணிந்து தன் மனவாட்டம் உரைக்கின இன்பத்துறை உரைக்கும் ஏற்றமிலாச் சிறுநூலாம் சி மன்னர் மனம்பதிந்தீர்! மக்கள் வழிதொடர்ந்தார். கூத்தன் திருவடியைக் கொண்டாடி நும்குலத்தோர், ஏற்றமுறச்செய்த எழில் சைவ மரபெல்லாம், இக்கருத்தால் மாற்றமுறும். மருண்டுரைத்தார் ஆன்றோர்கள். ஆன்ற பேரரச! ஆன்றோர் தம் குறையகற்றி, மீண்டும், சைவநெறி துலங்க சகத்தை நெறிசெய்வீர்!’ தன்னுயிர்க்கு இறுதியெண்ணாது தலைமகன் வெ வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கு மாண்புமிகு மந்திரியார் மனக்கருத்தை உரைத்திட்ட
罗 罗 罗
செவி கைக்கச் சொற்பொறுக்கும் மன்னர் மன்னனி தவறுணர்ந்தான். மேற்சென்று இடித்து, தன்னை நெறிசெய்த மந்திரிடே தன்னகத்தில் ஒளி துலங்கி, தயைபொங்கப் பேசுகிற பிழையகற்றி என்னைப் பெரும்பாவம் தனில் விழாது நிலையுணர்த்தி நின்றாண்டீர். நேசத்தால் நெகிழ்கின்றேன். சிற்றின்ப நெறிகாட்டும் சிந்தாமணி விடுத்து, பேரின்ப நெறியுணர்த்தும் பெருங்காதை எதுவென்று, நீர் உரைத்து நெறி செய்வீர்!’ மன்னன் வேண்ட மந்திரியார் மனதில் மகிழ்ச்சி. கூடும் அன்பினால் கூத்தன் திருவடியைக் கும்பிட்டு விடும் வேண்டா விறலுடையார் தம்கதையை, ஓதி உணர்ந்தால் உய்திடலாம்.' வழியுரைத்தார் மந்திரியார்.
& ふ ふ
ardafgrif sowatø Agaof 2oo5

யே நாடும்.
ந்தார்.
மொழித்தேவர். ட்டம் கண்டு,
ன். றார் மந்திரியார். ந்தாமணியதனில்,
குண்டபோதும், தம், li.
7,
)ல் மதிப்புயர்ந்தது. ான்.
உயர்வடைந்த,
41

Page 74
ஒப்பில்லா அடியார்தம் உயர்கதையை உலகெல்லாம் ஓதி உணர்ந்து, உயர்வடையக் காவியமாய், நீரே சமைத்து நெறிசெய்ய வேண்டும்.' என்றுரைக்க, மனம்பதறி ஏற்றமிகு தொண்டர் கதை, நின்றுரைக்க வல்லனோ? இந்நீசன்’ என மருண்டு, நெஞ்சம் நடுநடுங்க, நீரருவி கண்சோர, கும்பிட்டு நின்றார் அக்குன்றத்து முனிவரவர். கும்பிட்டு நின்றவரைக் கும்பிட்டான் மன்னவனும், அன்பிற்சிறந்த ஐயனே உமையன்றி, மெய்த்தொண்டர் கதையுரைக்க மேதினியில் வல்லார் வினாவால் பதிலுரைத்து வேந்தன் தொடருகிறான். ஒப்பரிய தொண்டர் கதை, உளம் நிரம்ப, உயிர் உயர, செவி நானிட்ட, தப்பில்லாக் காவியமாய்த் தாமியற்றித் தரல்வேண்டும். என்றுரைத்தான் மன்னன். ஏற்றமுறப் பொருள் கொடுத்தான். நின்றவரின் தாள்தன்னில் நெடுங்கிடையாய்த் தான்வீழ் அன்றுமுதல் அமைச்சர் அலர் அவர், என்று அகத்துன குன்று பெயர்ந்தாற்போல் அக்கோமகனும் சென்றுவிட, மன்றாடும் சிவன்தாள்கள் மனம் கொண்டு, தில்லைதனில், நின்றாடும் சிவன்தாள்கள் நெறிசெய்தா அடியார்தம் கதைசொல்ல அறிவால் முடியாதென்னும், உண்மைதனையுணர்ந்து தன் உள்நோக்கம் நிறைவேற் தில்லைதனை நோக்கி அச்சிவனடியார் ஓடுகிறார்.
罗 罗 罗
சேக்கிழார் பெருமான் தில்லைதனைத் தேடிவந்த, நோக்கம் இதுதான். சித்தாந்த அட்டகத்தை செப்பிப் புகழ்கொண்ட உமாபதியார், முன்னாளில் ஒதிவைத்த, சேக்கிழார் புராணம் செப்பும் கதையிது. சேக்கிழார் என்னும் அச்சீரோங்கும் மந்திரியின், நோக்கம் நிறைவேறியதா? உண்மையறிய எம் உள்ளம் விளைகிறது. அதற்காக, - மீண்டும் தில்லையின் எல்லையுள், புகுவார் அவர்பின் புகுவோம்.
했
விராட் புருடனின் மத்தியஸ்தானம், அருவமாய் நிற்கும் ஆகாயபூதத்தின், குறியாய் நிற்கும் கோயில்,
சிதம்பரம். கும்பிட்ட கையோடு கோயில்வாசலில் சேக்கிழார் நிற். குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமின் பனித்த சடையும், பவளம்போல் மேனியில் பால்வெ6 இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் கண்டு, பனித்த கண்ணுடன் பரவசப்பட்டு நிற்கிறார் அவர். ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள, அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக, குணமொரு முன்றும் திருந்து சாத்துவிகமே ஆக, இந்துவாழ் சடையன் ஆடும் ஆனந்தத் தனிப்பெரும் வந்த பேரின்ப வெள்ளத்துள் முழ்கினார்.
42

u filii?”
ந்து, πή55),
ல் அன்றி,
ற,
கிறார். raffiti, ன்னிறும்,
கூத்தில்,
drdagri nai 2oo5

Page 75
தன்னைமறந்தார், தன்நாமம்கெட்டார். ஒன்றிய அந்நிலையில், மல மாசற்று உயிர் மாண்புறுகிறது. அவ்வநுபூதி நிலையில், சீவகரணங்கள் சிவகரணங்கள் ஆக, சிவனே சீவனுள் நின்று, தன் தொண்டர்தம் பெருமையைப் பாடத்தொடங்குகி
罗 罗 罗
அன்பினால் தனைப்பிணைத்த அடியார்தம் பெருங்க காவியமாய்ப்பாட அக்கடவுளே முன்வந்தார். தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே' தொண்டர்களின் துலங்கும் காதையை வண்டமிழில் நீல மிடற்றுடை நெற்றிக்கண்ணனவன் நீண்டநாள் நீ உலகெலாம் உவப்பெய்த, ‘உலகெலாம்’ என்று அவ்வொப்பற்ற சிவன்வாக்கு, வானோசையாய் எழுந்து வருகிறது.
சேக்கிழார், காலப்பெட்டகத்தைத் தன்கருத்தாலே தொட்டுவிட, நீள நடந்த, நிகரில்லாத் தொண்டர்கதை, மூலமெலாம் அவர்தம்மின் மூளையிலே பதிகிறது. காலங்கடந்த கதையெல்லாம் கருத்தாகி, ஒலையிலே காவியமாய் ஓங்கி வளர்கிறது. 'உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியன்." என, சேக்கிழார் எனும்பெயரில் சிவன்பாடத் தொடங்குகிற
한 했
அடியார் கதைஎன்னும் அருளமுதப் பெருங்கடலை, சேக்கிழார் வடிவில் அச்சிவனே பிரசவித்தார். பெரியபுராணம் எனும் பேரின்ப நெறிநூலாய், சிவன்கருணை பாய்ந்து சீவர்களைச் சேர்கிறது. உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியன் அவன், தன்னைத் தன்னடியார், தாள்பற்றி உயர்தற்கும், வாழ்த்தி வணங்குதற்கும், வழியொன்று திறக்கின்றா? வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறை விள நாதவடிவாகி அந்நாதனே நலம் கொண்டு, தெய்வப்புலவர் சேக்கிழார் நாக்கதனில், வல்ல தமிழை வாரியிறைக்கின்றான். திருத்தொண்டர் புராணமெனும் தேனாறு பாய்கிறது. கருத்தறிந்த புலவர்பலர் கடவுள் செயல் உணர்ந்து, திருத்தொண்டர் புராணமெனும் திருப்பெயராம் அதை சிவனருளால் வெளிவந்த தெய்வமாக்கதை அதற்கு, பெரியபுராணம் எனப் பெயரிட்டுத் தாம்மகிழ்ந்தார். தெய்வக்கருத்தைத் தன் சிந்தைதனில் பதித்திட்ட, சேக்கிழார்தமை வணங்கி, தெய்வப்புலவர் என, வாக்கினால் புகழ்சேர்த்து, வணங்கியது உலகமெல
罗 罗 罗
சிவன் தான் இச்சீவர்கதை செய்தான், உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை. சிவன் செய்த காவியத்தின் சீரெல்லாம் உணர்தற்கு உலகெலாம் உணர்ந்தோதற்கரியன்’ எனும், ஒப்பற்ற பாடலதால் ஒருசோற்றுப் பதம் காண்போம்.
Gragnif sowattøraf 2oo5

gTij.
D2560)u I,
வடிக்க, னைந்திருந்தானோ?
Tii.
43

Page 76
மிதமெலாம் தெளிவுக்காய் மேன்மையுறும் வசன, ஒவியமாய்த் திட்டி உரைக்கின்றேன்.
罗 罗 罗
இக்காவியத்தை சிவனே செய்தான் என்பதற்கு, தக்க இரு சான்றுகள் உள. அவற்றைக் காண்பாம்.
罗 罗 罗
சைவ மரபில், அடியார்கள் ஆண்டவனைப் பாடுகையில், பாதந்தொடங்கி தலைவரை வர்ணனைசெய்து, பாதாதி கேசமாய் பாடுவதே வழக்கம். உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியன் எனும், பெரிய புராண முதற்பாடலோ, இம்மரபை மீறிய பாடலாய் அமைந்துள்ளது. நிலவையும், கங்கையையும் தலையிற் குடியவன் எனத் மலர்ந்த திருவடியை வாழ்த்தி வணங்குவாம் எனப்பா தலையில் தொடங்கிப் பாதம்வரை பாடப்பட்டதால், இது கேசாதி பாதமான வருணனை. மரபையும், சைவநெறியையும் நன்குணர்ந்த சேக்கிழார், இங்ங்னம் மரபு மீறிப் பாடியிருப்பாரா? கேள்வி எழுகிறது. பதில் காணும் முன் மற்றொரு கேள்வியையும் தரிசிக்க
켰 3 ,
பெருங்காப்பிய மரபுரைக்கும் நம் இலக்கணநூல்கள், தன்நேர் இல்லாத் தலைவனை உடைத்தாய், அக்காவியங்கள் அமையவேண்டும் என வலியுறுத்துகில் பெரியபுராணத்தில் தன்னேர் இல்லாத் தலைவராய்த்தி கேள்விக்கு விடைகாண விளைகிறது நம்மனம். காவியத்தை ஊன்றிப்படிக்க ஓர் உண்மை புலனாகிறது தனக்கு உவமை இல்லாச் சிவனார் இக்காவியத்துள் அவருக்கு அத்தலைமைப் பாத்திரப் பதவி வழங்கப்பட ஒப்பற்ற சிவனை தம் உண்மை அன்பினால் ஓலமிட 6 பெரியபுராணப் பெருங்காப்பியத்தின், தன்னேர் இல்லாத் தலைவனாய்க் காட்டப்படுகின்றார். அதுமட்டுமன்று, கதாநாயகனின் பெருமையுணர்த்தவென, மறுதலைப்பண்புகளைக் கொண்டு படைக்கப்டும் வில்ல பெரியபுராணத்தில் சிவனின் பாத்திரம் அமைக்கப்படுகி காமுகராய், கபால சந்நியாசியாய், ஓடு கொடுத்து ஒழித்து விளையாடும் வஞ்சகத்துறவிய நம் நெஞ்சகத்து அமர்த்தப்படுகிறார் சிவன். மாற்றுச் சமயத்தார் மனத்தாலும் நினைக்க முடியாத சிவன் வில்லன், சீவன் கதாநாயகன். தொண்டர்தம் பெருமைசொல்ல அண்டர்நாயகர் அவமதி உண்மைச் சிவனடியார் ஒருவர் இங்ங்ணம் காவியம் ப மீண்டும் நம்மனத்துள் கேள்வி.
罗 罗 &

க்தொடங்கி, டல் முடிகிறது.
கின்றோம்.
ன்றன. கழ்பவர் யார்?
il. இருக்கவும்,
வில்லை. வைக்கும் சிவனடியாரே,
)ன் பாத்திரமாகவே, D35.
πιί,
புரட்சி.
திக்கப்படுகிறார். ாடுவாரா?
&ordafgrif wanaf 19a0f2oo5

Page 77
மரபை மீறியும், சிவனைத் தாழ்த்தியும், சிவனடியார் ஒருவர் காவியம் செய்வாரா? நிச்சயம் இல்லை.
அங்ங்னமாயின், சேக்கிழார் பாடிய பெரியபுராணத்தில் இவ்விருநிலை பதிலில் முன்சொன்ன உண்மை வலியுறுத்தப்படுகிற காவியத்தைப் பாடியவர், சேக்கிழார் அல்லர், சிவனே என்று உணர்கிறோம். தன்னைத்தான் பாடும் சிவனார், கேசாதி பாதமாய்ப் பாடின், அது தவறன்றே, தொண்டர்தம் பெருமையுரைக்க தன்னைத் தாழ்த்தி அடியாரை உயர்த்திய, இறைவன்தன் எளிவந்த பெருமையை ஏற்றமுற உை உவப்பெய்துகிறது நம் மனம்,
했, 했
அநுமானப் பிரமாணமாய் அமைந்த, மேற்சொன்ன இருகாரணங்கள் மட்டுமன்றி, இப்பெரியபுராணத்தை ஆக்கியவர் சிவனே என்பதற் ஆகமப் பிரமாணம் ஒன்றினையும் அறியலாம். புராணங்கள் பலவாய் விரிந்தன. புராண நாயகரின் பெயர்கொண்டே, புராணங்களுக்குப் பெயரிடப்படுதல் மரபு. சிவபுராணம், கந்தபுராணம், விநாயகபுராணம் என்பன இதற்காம் உதாரணங்கள்.
இம்மரபையொட்டியே, தொண்டர்புராணம் என இந்நூலுக்குப் பெயரிடப்பட்ட நூலாசிரியரால் இடப்பட்ட இப்பெயரை நிராகரித்து, சைவ உலகம் பெரியபுராணம் என, இந்நூலுக்கு மறுபெயர் இட்டு மகிழ்ந்தது. மரபோடு பொருந்திய,
நூலாசிரியர் இட்ட பெயரை, ஆன்றோர் நீக்கிய காரணம் யாது? சிந்தனை பிறக்கிறது.
மற்றைய புராணங்களெல்லாம், சீவர்கள் பாடிய சிவக்கதைகள். தொண்டர்புராணமோ,
சிவன் பாடிய சீவகதை. ஆதியும், அந்தமும் இல்லா அப்பெரிய ஆண்டவனே இப்புராணம் செய்தான் என்பதை உணர்த்தவே, பெரியபுராணம் எனப் பெரியோர் இந்நூலுக்குப் பெ ஆன்றோர்தம் வாக்கினால் விழைந்த இவ்வாகமப் பி இந்நூலைச் செய்தவன் சிவனே என்பதற்காம் சான்
3 3 3
உலகெலாம் என, சிவன் வாக்காகவே எழுந்த பெரியபுராணத்தின் முத நம் சைவசமயத் தத்துவக் கருத்துக்கள் அத்தனை உட்கொண்டு உயர்ந்து நிற்கிறது. அப்பாடல் காட்டும் எல்லையற்ற பொருட்குறிப்புக்கள் அப்பாடலின் தெய்வத்தன்மையை எடுத்துக்காட்டுகின் சைவத்தை முழுமையாய் விளங்க, அவ்வோர் பாடலே உரைகல்லாம்.
&rágaf sowat gaof 2oo5

பும் வந்ததெங்ங்னம்? 5.
ார்கிறோம்.
5Tլb,
Ꭰ60J ,
பரிட்டனர்போலும், ரமானமே, 3IIIb.
ற்பாடல், Dեւյսրի,
றன.
45

Page 78
-- -- ۔۔۔۔ ۔۔۔۔ Y it disari இனி, ஒவ்வொன்றாய் விளங்க முயல்வோம்.
했’ 했’ 하
வேதநெறியைப் பின்பற்றும் அனைத்து மதத்தார்க்கும், விநாயக வணக்கம் பொதுவானது. வினைகளை நீக்கும் நாயகனான விநாயகனை வணங் இந்துமதத்தார் எக்காரியத்தையும் தொடங்குவர். தனை வணக்கம் செய்யமறந்து, முப்புரம் எரிசெயப்புகுந்த
அச்சிவன் உறை ரதம், அச்சது பொடிசெய்தான் ஆனைமுகனென, புராணங்கள் கூறும். புலவோரும் பிள்ளையார் சுழியிட்டே, தம் ஆக்கங்கள் அனைத்தையும் செய்வர். தெய்வச் சேக்கிழாரோ விநாயகர் வணக்கத்தை, முதல் பாடலாய் அமைக்காமல் பின்னரே அமைக்கின் அங்ங்ணமாயின் மரபுமீறி விநாயகர் வணக்கத்தை அவ கேள்வி பிறக்கும்.
விடை காணப் புகுகின்றோம். ஓங்காரமே இவ்வுலகினது மூலமாம். ஓங்கார வடிவானவன் கணபதி. நாதம், விந்து இரண்டின் சேர்க்கையே ஓங்காரம் நாதத்தின் குறியீடு -
விந்துவின் குறியீடு ’0’ மேற்சொன்ன இரண்டு குறியீடுகளின் இணைப்பை, வரிவடிவாய்க் கொண்ட உகரம், நாதத்தினதும், விந்துவினதும் சேர்க்கையான, ஓங்காரத்தின் குறியீடாம்.
அதனாலேயே, பிள்ளையார் சுழியாய உ' வை இடுதல் நம் மரபு. காவியம் பாடத்தொடங்கும் சேக்கிழார், அக்காவியம் சிறக்க,
பிள்ளையார் சுழி இடுதற்காய், உகரத்தை முதலாய்க்கொண்ட, உலகமெனும் சொல்லை இட்டார்போலும், இது உணர, மரபு மீறா சேக்கிழார்தம் மாண்புணர்ந்து மகிழ்கிறோம்
켰 했
நம் தமிழ்மரபில் காவியங்கள் செய்யும் புலவர்கள், எடுத்த காரியம் இனிது முடிய, மங்கலச்சொல்லை முதலாய்க்கொண்டு, வழிபடு தெய்வ வணக்கம் கூறி, தம் காவியங்களை இயற்றுவர்.
வழிபடு தெய்வ வணக்கம் கூறி, மங்கலமொழி முதல்வகுத்து, எடுத்துக்கொண்ட இலக்கண, இலக்கியம், இடுக்கன் இன்றி இனிது முடியும் என்மனார் புலவர்' எனும் சூத்திரம் இவ்வுண்மையை வலியுறுத்தும். அம்மரபின்படி நம் தெய்வச் சேக்கிழாரும், உலகமெனும் மங்கலச் சொல்லை முதலாய்க்கொண்( கடவுள் வாழ்த்தியற்றி, தன் காவியத்தைத் தொடக்குகிறார்.
46

கியே,
றார். ர் பின் தள்ளினரோ,
நாம்.
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 79
உலகம் எனும் சொல்மங்கலச்சொற்களுள்தலையாயது அது நோக்கியே, நக்கீரப் பெருமான் உலகம் உவப்ப என திருமுருக கம்பர் பெருமான் உலகம் யாவையும் என இராமகா மரபுநோக்கி,
உலகம் எனும் சொல், பாடலின் முன்வந்த உண்மையறிந்து உவக்கிறோம்
했’ 했, 한
காணப்படும் இவ்வுலகைக் கொண்டே, அதன் கர்த்தாவாகிய காணப்படாத இறைவனை அறி இவ்வுலகோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற் உயிருக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பும் இதே ஆதலால், உலகு உடலென்றும், இறை உயிரென்றும் கருதப்ப உடலைக் கொண்டே உயிரை இனங்காண முடியும். அதுபோலவே, இவ்வுலகைக் கொண்டே இறையை இனங்காணல் கூ இவ்வுலகிற்கு இறைவனை உணர்த்த முற்படும் சேக் உலகை உணர்ந்தே இறையை உணரலாம் எனும், பேருண்மையை நமக்கு உணர்த்த, உலகமெனும் சொல்லை, தன்காவியத்தின் முதற்சொல்லாய் இட்டிருப்பார் என
했’ 3 했
காணப்படும் இவ்வுலகு முழுவதும் பஞ்சபூதங்களால் அப்பூதங்களின் கலப்பே வடிவங்களாய்த் தோன்றி, உலகை அறியும் வகை செய்கின்றன. இவ்வுண்மையை உணர்த்தவே, இப்பாடலில் பஞ்சபூதங்களும் எடுத்துக்காட்டப்படுகின் உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் எனும், இம்முதற்பாடலில் உலகு, நீர், சோதி ஆடுவான், அம் எனும் சொற்கள் பயிலப்படுகின்றன. இச்சொற்களை ஊன்றி நோக்கின், உலகு எனும் சொல் நிலத்தையும், நீர் எனும் சொல் நீரையும், சோதி எனும் சொல் நெருப்பையும், ஆடுதல் எனும் சொல் காற்றையும், அம்பலம் எனும் சொல் ஆகாயத்தையும் உணர்த்துத உலகம் எனத்தொடங்கிய கடவுள்வாழ்த்துள், பஞ்சபூதங்களையும் குறிக்கும் சொற்களை அமைத்து உலகைக் காணும் வகையினையும், அதன்மூலம் இறையைக் காணும் வகையினையும், சேக்கிழார் நமக்கு உணர்த்த முற்படுகிறார் போலும்.
한
இப்பஞ்ச பூதங்களுக்கும் முதலாய் இருப்பவை, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் தன்மாத்தி இத்தன்மாத்திரைகள், மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிக சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐம்புலன் ஆன்மாவுக்கு பஞ்சபூதங்களையும், பஞ்சபூதங்களின் முதலாய தன்மாத்திரைகளையும்,
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

ற்றுப்படையினையும், வியத்தையும் இயற்றினர் என்பர்.
5Tib.
தல் கூடும். பவன் இறைவன். u JITIђ.
}கிறது.
டும்.
கிழார்,
எண்ணத்தோன்றுகின்றது.
ஆனது.
றன.
பலம்,
லை அறியலாம்,
ரைகளாம்.
ளில், 1ளாயும் பொருந்தசிசெய்து,
47

Page 80
அதன்மூலம் ஆன்மாவை மெய்யுணரச் செய்கின்றன. அதுநோக்கியே, தெய்வப்புலவர் திருவள்ளுவரும் சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தின் வகைதெரிந்தான் கட்டே உலகு, என்றனர். இக்குறளுக்கான விரிவுரையில் பரிமேலழகர், மேற்சொன்ன விடயங்களைத் தெளிவுற விளக்குகிறா ஐம்புலன்களால், ஐம்பூதங்களுடு தன்மாத்திரைகள் ஐந்தையும் உணரு ஆன்மா இறையை உணர்கிறது. இவ்வுண்மையை உணர்த்தவே, ஜம்புலன்களையும், தன்மாத்திரைகளையும், இப்பாடல் மறைமுகமாய் தன்னுள் அடக்கி நிற்கிறது. இப்பாடலுள் பயிலப்படும், நீர் எனும் சொல் சுவையையும், சோதி எனும் சொல் ஒளியையும், உணர்ந்து எனும் சொல் ஊறையும், வாழ்த்தி எனும் சொல் ஓசையையும், மலர் எனும் சொல் நாற்றத்தையும் குறித்து, சுவை, ஒளி ஊறு, ஓசை, நாற்றம் எனும், ஜம்புலன்களையும், தன்மாத்திரைகளையும், ஒட்டுமொத்தமாய் உணர்த்தி நிற்கின்றன.
했 컸 했
தெய்வச் சேக்கிழார், சைவத் திருத்தொண்டர்களை மட்டும் பாடினார் அலர் உலகில் இறை எனும் பொருளை, அன்பினால் உணர்ந்துகொண்ட அனைவரையும், தன் காவியத்துள் அடக்குகிறார். அவர் தன்காவியத்தின் முதன்நூலாய்க்கொண்ட, திருத்தொண்டர் தொகையும், - இக்கருத்தை உடன்பட்டு நிற்கிறது.
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் அடியேன்” எனு இக்கருத்தை உறுதிசெய்கிறது. சுந்தரரின் இவ் அடியை விளக்கம் செய்யும் சேக்கிழ முவேந்தர் தமிழ் வழங்கும் நாட்டுக்கப்பால்
முதல்வனார் அடிச்சார்ந்த முறைமை யோரும் நா வேய்ந்த திருத்தொண்டர் தொகையில் கூறும்
நற்தொண்டர் காலத்து முன்னும், பின்னும் பூ வேய்ந்த நெடுஞ்சடைமேல் அடம்பு தும்பை
புதிய மதி நதி இதழி பொருந்த வைத்த சே ஏந்து வெல் கொடியார் அடிச்சார்ந்தாரும்
செப்பிய அப்பாலும் அடிச்சார்ந்தார் தாமே
என்று உரைக்கின்றார். தமிழ்நாட்டு எல்லைக்கப்பாலும், முதற்பொருளை உணர்ந்து வாழ்ந்த அடியார்களும், திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட சிவனடியார்க் முன்னும் பின்னும் வாழ்ந்த சிவனடியார்களுமே, அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்’ என, குறிப்பிடப்பட்டனர், என்கிறார் சேக்கிழார்.
இதனால், எந்நாட்டு, எவ்வினத்து, எம்மதத்து அடியார்களும், பெரியபுராணத்துள் உட்படுத்தப்படுகிறார்கள் எனும் உ நாம் உணர்ந்து கொள்கிறோம்.
48

க்கம் செய்
.
ம் திறத்தினை அடைந்தாலே,
ம் சுந்தரர் வாக்கு,
Tri,
600760LD60)u I,
Gråsgrif øgrøff golf 2oo5

Page 81
glgióJol
தொண்டர்புராணம் எனும் இக்காவியம், சைவர்க்கு மட்டுமன்றி, உலகம் முழுவதற்கும் உரிய உலகம் முழுவதற்கும் உரியது இக்காவியம் என உ உலகம் எனும் சொல்லைக் காவியத்தின் முதற்சொ? தெய்வப்புலவர் சேக்கிழார் தேர்ந்தனர் போலும்,
3 3
ஓங்காரமே இவ்வுலகின் தொடக்கம். பிரணவ வடிவம் ஓங்காரம் அவ்வோங்காரம் அ, உ, ம் எனும் மூன்று எழுத்தே வாய்திறக்க தோன்றும் அகரஒசை, உகரஒசையாய் நிலைத்து, மகர மெய்யோசையில் நிறைவுறுகிறது. இம்மூன்று எழுத்தோசைகளும் முத்தொழில்களையும் அகரம் - தோற்றம், உகரம் - நிலைத்தல், மகரமெய உலகம் நிலைக்கவும், தொண்டர்தம் பெருமை நிலைக்கவும், சைவம் நிலைக்கவும், காவியம் செய்யப்புகுந்த சேக்கிழார், நிலைத்தலைக் குறிக்கும் உகர ஓசையை, முதலாய்க்கொண்ட,
உலகமென்னும் சொல்லை, காவியத்தின் முதற்பாடலின் முதற்சொல்லாய் இட்டத எண்ணி எண்ணி வியக்கத்தக்கது.
했’ 했
உகரத்தை முதலெழுத்தாய்க்கொண்ட, உலகெலாம் எனும் தொடரை இட்டதால், விநாயக வணக்கத்தோடு, காவியத்தை, சேக்கிழார் தொடங்கினார் என அறிந்ே அதுமட்டுமன்றி, நாதம் விந்துவினுடைய சேர்க்கையாய் விளங்கும், உகரம் ஓங்காரமான பிரணவ வடிவம் என்றும் அறிந் உலகத்தொடக்கமான பிரணவத்தினையே, தன் காவிய முதலெழுத்தாய் சேக்கிழார் அமைத்தன தொண்டர் புராணத்தின் மற்றொரு சிறப்பு.
했 했
அகர ஓசையே எழுத்தெல்லாவற்றினதும் முதல் ஒை விகாரமின்றி இயல்பாய் வாயைத்திறப்பித்துப் பிறக்கு பல், நா, அண்ணம், உதடு முதலிய உறுப்புக்களின் வேறு வேறு எழுத்தோசைகளாய் மாறுகின்றது. இவ்வுண்மையை உணர்ந்துகொண்டால், எழுத்துக்கள் எல்லாவற்றுள்ளும் அகரஒசை கலந்திரு அதுநோக்கியே எழுத்தெல்லாம் அகர முதல என்றா உலகெலாம் எனும் தொடரில், உ’ முதல் எழுத்தாகவும், ம் நிறைவெழுத்தாகவும் அமைந்துள்ளது. அகர ஓசை எல்லா எழுத்துள்ளும் கலந்திருப்பதை எனவே, அ, உ, ம் எனும் மூன்று ஒசைகளின், கலப்பாய் ஒலிக்கும் ஓங்காரத்தை, உலகெலாம்’ எனும் தொடர்,
சேக்கிழார் மாநாட்டு மலர்2005 m

தாம். ணர்த்தவும், 6|Tul,
சைகளின் தொகுப்பாம்.
குறிப்பன.
- அழித்தலாம்.
தன் பொருத்தப்பாடு,
தாம்.
தோம்.
Fu JITLb. ம் அகரஒசை,
தொழிற்பாடுகளால்,
ப்பதை அறியலாம்.
வள்ளுவரும்.
அறிந்தோம்.
49

Page 82
இவ்வுண்மையால், ஓங்காரத்துள் இருந்து உலகம் பிறந்ததையும், உலகம் முழுவதுள்ளும் ஓங்காரம் கலந்திருப்பதையும் உணர்ந்துகொள்கிறோம். எனவே, வானோசையாய் சேக்கிழார் கேட்ட உலகெ பிரணவமே எனும் உண்மை தெரியவருகிறது. தன் பாடலின் முதலெழுத்தை ஓங்கார வடிவாய் அை தன் பாடலின் முதற்தொடரையும், ஓங்கார வடிவமாகவே அமைத்ததை அறிந்து, நம் அகம் மகிழ்கிறது.
했
உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியன் எனும், சேக்கிழாரின் முதற்பாடலில், முதலெழுத்தும், முதற்றொடரும், பிரணவரூபமே! எனக் கண்டோம்.
அதன்றி,
அப்பாடலை முழுமையாய் நோக்கினும், அப்பாடல் முழுவதும், பிரணவ வடிவமேயாய் இருப்பதைக் கண்டுகொள்ளல உலகெலாம் என உகரத்தில் ஆரம்பித்து, வணங்குவாம் என மகரமெய்யில் அப்பாடல் முடிகி அகரம், எல்லா எழுத்துள்ளும் கலந்த உண்மையை ஆகவே, உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் எனும் முழு அ, உ, ம் எனும் எழுத்துக்களின் கலப்பான, பிரணவத்தின் வடிவமே என அறியலாம். அ.தறிய உவக்கிறது நம் நெஞ்சம்.
한 했
முதலெழுத்து, முதற்தொடர், முதற்பாடல் என்பவற்றே தொண்டர்புராணக்காவிய முழுமையையும் உற்றுநோ: காவியம் முழுவதுமே பிரணவவடிவான பேருண்மை பெரியபுராண காவியம்,
'உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன், நிலவுலாவிய நீர்மலி வேணியன், அலகில் சோதியன் அம்பலத்தாடுவான், மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’
எனும் பாடலில் வரும் உகரத்துடன் தொடங்கி,
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால், ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட, மன்று உளார் அடியார் அவர் வான்புகழ், நின்றது, எங்கும் நிலவி, உலகெலாம்’
எனும் பாடலில் வரும் மகரமெய்யுடன் நிறைவுறுகிற உகரத்தில் தொடங்கி, அகரத்தை உட்படுத்தி, மகர காவிய அமைப்பை நோக்க தொண்டர்புராணக் காவி பிரணவவடிவமே என அறிந்து, எல்லையற்ற வியப்படைகிறது நம்நெஞ்சம்.
50

9.
லாம் எனும் தொடர்,
மத்த சேக்கிழார்,
Τιύ.
Bibl. முன் அறிந்தோம்.
ப்பாடலுமே,
ாடு அல்லாமல், க்க, புரியும்.
5]. மெய்யில் நிறைவுறும், եւIւb (ԼP(լք60ԼDԱյլb,
Gorééganrif Aspargareb 1980f 2005

Page 83
3 3 மேற்சொன்ன கருத்தோடு ஒன்றியும் திருமுறைகளின் பெருமையுணர்த்தியும் நிற்கும், இப்பாடல் கருத்துக்கு புறம்பான நுட்பம் ஒன்றினைய இவ்விடத்தில் காண்பது அவசியம். பன்னிரு திருமுறைகளில், முதலாம் திருமுறையாய் அமைக்கப்பட்டது சம்பந்த தோடுடைய செவியன்’ எனும் சம்பந்தரின் முதற்ப அம்முதற்திருமுறை தொடங்குகிறது. பன்னிரண்டாம் திருமுறையாய் அமைக்கப்பெற்றது, சேக்கிழாரின் பெரியபுராணம். நின்றது, எங்கும் நிலவி உலகெலாம், எனும் அடியோடு பெரியபுராணம் நிறைவுறுகிறது. தோ’ என்பது தகர வித்தையுடன் கூடிய ஓங்காரம். த் + ஓ = தோ' தோடுடைய எனும் சொல்லின் முதலெழுத்தில் கல ஓ’ எனும் எழுத்துடன் தொடங்கி, பெரியபுராணத்தின் நிறைவுத் தொடரான, உலகெலாம் எனும் சொல்லிலுள்ள 'ம்' எனும் எழு திருமுறைகள் நிறைவுறுகின்றன. எனவே, திருமுறைகள் முழுவதும் கூட, ஓங்கார பிரணவ வடிவே என, நாம் உணர்ந்துகொள் இவ்வுண்மை உணர சிலிர்க்கிறது நம் சிந்தை.
했’ 3
இவ்விடத்தில் பெரியபுராணத்தை உள்ளடக்கிய திரு மற்றொரு சிறப்பினையும் காணல் அவசியம். திருமுறையின் முதற்பாடலான, சம்பந்தப் பெருமானின் தோடுடைய செவியன் எனு சிவன் பெருமையையும்,
முடிவுப்பாடலான, சேக்கிழாரின் என்றும் இன்பம் பெருகும் எனும் பா தொண்டர் பெருமையையும்,
உரைத்து நிற்கின்றன. திருமுறைகள் எனும் தோத்திரங்கள் காட்டும் இந்நெ சைவ சித்தாந்த சாத்திரங்களும் அமைந்தன. சைவ சித்தாந்தத்தின் முதன்நூலான சிவஞானபோத தன் முதற்குத்திரத்தில், அவன், அவள், அது எனும் அவை முவினமையின், தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம். அந்தம், ஆதி என்மனார் புலவர்' என, பதிஉண்மையை உரைத்து, நிறைவான பன்னிரண்டாம் சூத்திரத்தில், செம்மலன் நோன்தால், சேரஒட்டா அம்மலம் கழிஇ அன்பரொடு மரீஇ மாலறு நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரனெனத் தொழுமே - என, அடியார் வழிபாட்டினை உரைத்து நிறைகிறது. இவ்வொற்றுமையால், தோத்திரங்களுக்கும், சாத்திரங்களுக்குமான, இணைப்பறிந்து இனிது மகிழ்கிறோம் நாம்.
3 3
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன், இவ்வடியில் வரும் உலகு எனும் சொல்லுக்கு,
Gwidiaf ganrif Bwlgareb paraf 2005 my

தேவாரம். ாடலுடன்,
ந்துள்ள,
த்துடன்,
ர்கிறோம்.
5முறைத்தொகுப்பின்,
1ம் பாடல்,
-6),
றியினைப் பின்பற்றியே,
iՓւb,
51

Page 84
உயிர்கள் மனிதர்கள் ஞானியர்கள் என மூன்று பொருள்களைக் கொள்ளலாம். உயிர்ப் பிறப்பு அனைத்தும் இறையின்பம் நோக்கியன ஆதலால், உலகு எனும் சொல்லுக்கு உயிர்கள் எனப் பொருளு உணர்தலும், ஒதலும் மானுடர்க்கே உரிய தனிச்செய உயிர் என்றது இங்கு மானுடத்தை எனவும் கொள்ள6 முற்றாய் உணர்தற்கும், ஒதற்கும் உரியார் ஞானியரா உலகம் என்றது ஞானியரை என்று உரைக்கினும் டெ உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் என்னும் இ6 இம்மூவர்தம் வழிபாட்டு நிலைகளையும், உணர்த்தி நீ புதுமையிலும் புதுமை,
켰 했’ 하
உலகிற்கு உயிர்கள் எனப்பொருள் கொள்ளின், அரியன் எனும் சொல்லை முன்னும் கூட்டி, உணர்தற்கும் அரியன், ஒதற்கும் அரியன் என, உரை உலகிற்கு மானுடம் எனப்பொருள் கொள்ளின், அவர் ஓதுதற்குரியர் எனினும், உணர்ந்து, ஓதுதல் அவர்க்கும் அருமையாம் எனப்டெ உணர்ந்து, ஒதற்கரியவன் என உரைசெய்தல் வேண் உலகிற்கு ஞானியர் எனப்பொருள் கொள்ளின், அந்த ஞானியர்தாமும், ஞானநிலையில் இறையோடு ஒன்றி, அப்பொருளை உணர வல்லாரேயாயினும், அந்நிலையில்,
தான் அதுவே ஆகிவிடுதலால்,
உரை இறந்துபோக, உணர்ந்தும் அந்நிலையை உரைக்கவல்லார் அல்லர் இக்கருத்தை உணர்த்த, விகாரத்தால் தொக்க உம்மையை வெளிப்படுத்தி, உணர்ந்தும், ஒதற்கரியவன் என உரைசெய்தல் வேை ஞானியரும் இறைவனோடு ஒன்றி அவனை உணர்வா உணரும் அந்நிலையில் அவனை ஒதவல்லார் அலரா வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால்தோறும் தேக்க மணிவாசகர் திருவாக்கால் அறியலாம். உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்’ என்னும் ஓ உயிர்களின் வகைகளையும், அவற்றின் வழிபடு நிலைகளையும் குறிப்பால் உணர்த் சேக்கிழார் புலமை கண்டு சிந்தை மகிழ்கிறது.
켰 컸
இனி, பாடலின் இரண்டாம் அடிக்குள் நுழைகிறோம். உலகெலாம் சைவமரபின் உட்சென்று உய்வடையே பெரியபுராணத்தைப் பாடுகிறார் சேக்கிழார். அனைவரும் சிவனைத்தொழுமின், எனச் சொல்லவந்த சேக்கிழார், அக்கருத்துக்கு மாறான கருத்தினை, தம் பாடலின் முதலடியில் பொருத்தி விடுகிறார்.
உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்’ எனும் மு உணரவும், ஒதவும் முடியாதவன் அச்சிவன் எனும் ெ அதனைப் படித்ததுமே, உணரவும், ஒதவும் முடியாத அவ்விறைவனை அடை நம்மால் ஆகாது என்று கற்பார் பின்வாங்க நினைப்ப
52

வையே.
ரைக்கின் அது பொருந்தும்.
ல்களாதலான்,
ITLb.
கலின், ாருத்தமே! வ் ஓரடி, ற்பது,
செய்தல் வேண்டும்.
ICI56iLL, டும்.
ஆகிவிடுவர்.
ண்டும்.
ரேயன்றி, ம் எனும் கருத்தை, டச் செய்தனன்’ எனும்,
ரடிக்குள்,
ந்திய,
தலடி, பாருளைத்தர,
தல்,
i.
ótriáfigitíf agat, Iparf 2005

Page 85
பாடலின் இரண்டாம் அடி, தோள்பற்றி இழுத்து நி உணரவும், ஒதவும் முடியாத நிலையில் அவ்விழை எல்லையற்ற தன் பெருங்கருணையினால், குற்றமுள்ள ஆன்மாக்களையும் தூய்மைசெய்து, தன் தலையில் தூக்கி அவன் வைத்திருப்பான், என்கிறது அவ்விரண்டாம் அடி. நிலவுலாவிய நீர்மலி வேனியன், ஆணவக்குற்றம் கொண்ட நிலவையும், கங்கையை தலையிற்குடியவன் எனப் பொருள்தரும் இவ்விரன ஆகா! இவன் நம்மையும் உய்விப்பான் எனும் தெ எம்மை ஈர்த்து நிற்கிறது.
& マ
நிலவும், கங்கையும் இறைவனின் திருமுடியை, தம் தெய்வத்தகுதியால் உணர்ந்து சார்ந்தன, நம்மால் அக்காரியம் முடியுமோ? என ஐயுறுவார்க் தெம்புதரும் வகையில் அடுத்த தொடரினை அடை இருள் மறைப்பது,
சோதி தெரிவது. சிறுசோதி சிலரால் உணரப்படும். பெரும்சோதி எல்லாராலும் உணரப்படும். அலகில் சோதியன் என, அடுத்து இறைவனைக்கு அவன் எல்லாராலும் உணரத்தக்கவன் என்னும் உ மறைமுகமாய்ச் சேக்கிழார் நமக்கு உணர்த்துகிற சோதியின் வேலை இருளகற்றுவது. மலயிருளை நீக்கவல்லான் இவன் எனும் மறைடெ சோதியன் எனும் சொல்லால் நாம் உணர்ந்து கெ
3 3 3
ஆன்மாவை அனாதிமுதல் பற்றிக்கொண்ட ஆணவி இறைவன் எங்ங்ணம் நீக்குகிறான்? ஆன்மாவுக்கு ஆணவத்தால் கன்மம் விளைகிறது. அக்கண்ம நீக்கத்திற்காக,
மாயையில் இருந்து, தனு, கரண, புவன, போகங்கள் ஆன்மாவிற்கு வ அத் தனு, கரண, புவன, போகங்களால் எய்தப்ப இன்ப, துன்ப அனுபவங்களில் முதிர்ச்சி எய்தி, ஆன்மா இருவினை ஒப்பு நிலைஎய்துகிறது. இருவினை ஒப்பு நிலை எய்திய ஆன்மாவை, குருவாக வந்து இறைவன் ஆட்கொண்டு, அதற்கு முத்தியளிக்கிறான். மேற்சொன்ன முக்தி நிலையை ஆன்மாக்கள் அை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அரு ஐந்தொழில்களை இறைவன் இயற்றுகிறான். இறைவனின் இவ் ஐந்தொழில்களையும் குறிப்பது அவனது ஆடல்தோற்றமாம்.
இவ்வுண்மையை,
தோற்றம் துடி அதனில் தோயும் திதி அமைப்பில் சாற்றி இடும் அங்கியிலே சங்காரம் -ஊற்றமாம் ஊன்று மலர்ப்பதத்தில் உற்ற திரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு. (துடி - உடுக்கு; திதி - காத்தல்; அங்கி - நெருப்பு; திரோதம்
6räägł sagato pał2005

றுத்துகிறது. ரவன் இருப்பினும்,
Iեւյլն, ர்டாம் அடி, ம்பு தந்து,
கு y மக்கிறார் சேக்கிழா
றிப்பதன் மூலம், உண்மையை, Ti.
ாருளையும், ாள்கிறோம்.
இருளை,
ழங்கப்படுகின்றன. டும்,
டெவதற்காய், ளல் எனும்
O 56)l,
- மறைப்பு: நான்ற - தொங்கிய)
53

Page 86
எனும், உண்மைவிளக்கக் கடவுள் வாழ்த்தால் உணர இறைவனின் ஆடல்தோற்றம் ஐந்தொழில்களைக் குறிப் அம்பலத்தாடுவான் எனும், பாடலின் அடுத்த தொடர், சோதி வடிவினனான இறைவன், ஐந்தொழில்களால் ஆன்மாவின் ஆணவ இருள் நீக்கு அழகுற வெளிப்படுத்துவது அறிந்து நாம் ஆனந்திக்கி
る マ ー
ஆன்மாக்களால் உணரமுடியாதவன் ஆயினும், சோதி வடிவினனாய்த் திகழும் அவ்விறைவன், தன் பேரருளால் இரங்கி வந்து, தன் ஐந்தொழில் ஆடல் நிகழ்ச்சியால், அவற்றின் ஆணவம் போக்கி, அவ் ஆன்மாக்களைத் தலைமேற்கொண்டு, முத்தி தந்து ஆட்கொள்வான் என்னும் உண்மையறிய நாமும் அவனை அடையவேண்டும் என்னும் விருப்புண் அவ்விறைவனை அடைதற்காம் வழி என்ன? கேள்வி பாடலின் அடுத்த அடி, நம்கைபற்றி பதில் தருகிறது. மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் எனும் இறுதி அடி, மலர்ந்த சிலம்பினைக்கொண்ட அவன் திருவடியை, மனம், வாக்கு, காயத்தால் ஒன்றி வழிபட, பெத்த நிலைநீங்கி முத்திநிலையடையும் அப்பேரின்ப நமக்கும் கிட்டும் என வழிகாட்டி நிற்கிறது. இவ்வொருபாடலே, திருப்பாடலாய், நம்மைத் தெய்வநிலைக்கு உயர்த்த வழிகாட்டுகிறது.
켰 했’ 했
இனி,
சித்தாந்த, தத்துவ அடிப்படையில், இப்பாடல் உட்கொண்ட, பொருள்நுட்பம் சிலகண்டு ம நம் சித்தாந்த தத்துவம், இறைநிலையை இருகூறாய்ப் பேசும். மனமும், வாக்கும் தொடமுடியாத இறைநிலை என்று சித்தமும் செல்லாச் சேட்சியன், நூல் உணர்வறியா நுண்ணியோன், என்றெல்லாம் இந்நிலையை மணிவாசகம் பேசும். கருத்தால் தொடமுடியாத அக்கடவுள் நிலையை, இறையின் சொரூப நிலை என, சித்தாந்த நூல்கள் உரைக்கும்.
했 했
சிந்தையாலும் தொடமுடியாத அந்நிலையில், இறைவனை சாதாரண ஆன்மாக்கள் எய்துதல் அரிதா ஆன்மாக்களின் மேற்கொண்ட பெரும் கருணையினால் இறைவன் தன்சொரூப நிலையினின்று இறங்கி, சக்திக்கலப்பால், அவை உணரத்தக்க தடத்த நிலையை எய்துகிறான். இத்தடத்த நிலையில் இறைவடிவம் மூன்றாய்ப் பேசப் வடிவமற்ற நிலையான அருவநிலை ஒன்று, வடிவத்தை வரையறை செய்யமுடியாத அருஉருவ
r

லாம். பது உணர,
ம் வகையினை, றோம்.
டாகிறது.
பிறக்க,
பேறு,
கிழ்வோம்.
ஒன்று உண்டு.
படும்.
திலை ஒன்று,
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 87
குறித்த வடிவ நிலைகொண்ட உருவநிலை ஒன்று வேறுபட்ட இந்த அருவ, அருஉருவ, உருவ வடிவ இறைவனின் தடத்த நிலை என்கிறோம். இத்தடத்த நிலைகளில் ஒன்றான உருவமற்ற அருவ இறைவனின் சொரூப நிலையாய்க் கருதி மயங்குவா உருவமற்ற வடிவு’ எனும் கூற்று நம் மனத்தால் விலி எனவே, மனத்தால் விளங்கமுடியாத சொரூபநிலையு இறைவனின் அருவவடிவும், வேறு வேறென்று உணர்தல் அவசியம். இறைவனின் இவ்வடிவ நிலைக் கூறுகளை, உலகெலாம் எனும் இப்பாடல் தெளிவுபட விளக்குக பாடலுட் சென்று, அவ்வரிய தத்துவ விளக்கத்தினை முதலில் காண்பா
3 玄 玄
உலகெலாம் எனும் இப்பாடலின் முதலடியில், இறைவன், உயிர்களால் ஓதி உணர்தற்கரியவன் எனும் கருத்து, வலியுறுத்தப்படுகிறது. ‘உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்' இந்த முதலடியின் மூலம்,
6) IlITébé95L D, LD60T(LDLD ébL-Ibġ5, ஓதி உணரமுடியா இறைவனின் சொரூபநிலை, தெளிவுபட நமக்கு உணர்த்தப்படுகிறது. இனி, பாடலின் மற்றைய மூன்றடிகளும், இறைவனின் தடத்த நிலையை விளக்குமாற்றை ஆரா
3 玄 ふ
தடத்த நிலையில், அருவம், அருஉருவம், உருவம் எனும் மூன்று வடிவ இறைவன் எய்துகிறான் என அறிந்தோம். இம்மூன்று நிலைகளில் உருவ நிலையே, உயிர்கள் தொடக்கூடிய முதல் நிலை. உருவநிலையில் இறையை வழிபட்டு உயர்வடைந்தா பின் அருஉருவநிலையில் இறைவனை உணர்கின்றன அருஉருவ வழிபாட்டின் முதிர்ச்சியில், அருவநிலையில் இறைவனைத் தரிசிக்கும் உயர்வு கி உருவநிலை வழிபாடே சரியை. அருஉருவநிலை வழிபாடே கிரியை. அருவநிலை வழிபாடே யோகம். இம்மூன்று வழிபாடுகளாலும் எய்தப்படும், அதுவே தானான நிலையே ஞானம்.
3 3 3
இஞ் ஞானநிலை எய்திய ஞானியர்க்கு மட்டுமே, இறையின் சொரூபநிலை அனுபவப்படும். இதே ஞானமார்க்கமாய்ப் பேசப்படும் வழிபாடு. சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும், இந்நான்கு வழிபாட்டு நிலைகளும், இறைநிலையை அடையும் நான்கு பாதைகள் அல்ல. நான்கு படிகளாம். ஒன்றில் நினறு, மற்றதில் ஏறி உயர்வடைதலே உண் படிகள் மூலம் ஒரு மேற்றளத்தை எய்தும் போது,
சேக்கிழார் மாநாட்டு மலர்2005 -

களையே,
லையினை,
உளர். ங்கப்படுகிறது )
s
றது.
"ய்வாம்.
நிலைகளை,
ட்டுகிறது.
மைநிலையாம்.
55

Page 88
கடைசிப்படியானது படியாகவும், எய்தும் தளமாகவும் அமைவதுபோல, ஞானமார்க்கம்,
வழிபாட்டு முறையாகவும், எய்தப்படும் பேறாகவும் அமைவதை, உணர்ந்துகொள்ளுதல் அவசியம்.
3 한 했
இறைவன் கொள்ளும் தடத்தநிலைக்குள் சரியை, கிரியை, யோகம் எனும் மூன்று வழிபாட்டு ( சொரூபநிலைக்குள் ஞானம் எனும் வழிபாட்டு முறைய ஒன்றுதல் அன்றி உணரவும், ஒதவும் முடியா ஞானநி உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் என்னும், இப்பாடலின் முதல் அடி குறிக்கின்றது.
3
உருவ, அருஉருவ, அருவ வழிபாட்டு நிலைகளானை தோற்றமுறையில் அருவம், அருஉருவம், உருவம் எ ஆன்மாக்களால் எய்தப்படும் முறையில், உருவம், அருஉருவம், அருவம் என்றே வகைப்படுத்த ஆன்மாக்களால் எய்தப்படும் இந்நிலைநோக்கி, உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன் என்னும் பா தொடர்ந்த மூவடிகளும், இறைவனின் உருவ, அருஉருவ, அருவ நிலைகளை பாடலுட்புகுந்து அவ்வுண்மை அறிவாம்.
한 했
நிலவுலாவிய நீர்மலி வேனியன் எனும் இரண்டாவது நிலவையும், கங்கையையும் தலையில் சூடிய இறை6 உருவ நிலையை உணர்த்துகிறது. மூன்றாம் அடியில் வரும், அலகிற் சோதியனர் என்னும் தொடர், வரையறை செய்யப்படாத வடிவுகொண்ட இறைவனின் அருஉருவ நிலையை எடுத்துக்காட்டுகிறது. அம்பலத்தாடுவான் எனும் தொடரில் வரும், அம்பல அருவபூத வடிவான சிதம்பரத்தினையும், ஆடுவான் என்னும் சொல், இறைவனின் அருவநிலைச் செயற்பாடான, பஞ்சக் கிருத்திய நடனத்தையும் குறித்து, இறைவனின் அருவநிலையை உணர்த்தி நிற்கிறது.
했
உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன் எனும் மு: இறைவனது சொரூப நிலையினையும், நிலவுலாவிய நிர்மலிவேனியன், அலகிற்சோதியன் அம்பலத்தாடுவான், எனும் இரண்டாம், மூன்றாம் அடிகளில், உருவ, அருஉருவ, அருவ வடிவங்கள் அமைந்த, இறைவனது தடத்த நிலையினையும், இப்பாடல் மறைமுகமாய் உணர்த்தி நிற்கும் உண்ை வியக்கிறோம்.
易 マ
56

முறைகளும், பும் அடங்குகின்றன. லையினையே,
Ꭰ6hl, ன வகைப்படுத்தப்படினும்,
தப்படும்.
டலில் வரும்,
உணர்த்தி நிற்கின்றன.
92 s வனது,
ம் என்னும் சொல்,
தலடியில்,
ம உணர்ந்து,
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 89
இறைவனின் உருவநிலையை வழிபட்டே, மேல்நிலைக்கு உயர்கின்றன. எனவே, உருவநிலை வழிபாடே ஆன்மாக்களின் முத இவ் உருவநிலையில், இறைவனை வழிபட முயலும் கீழிருந்து மேலிருக்கும் இறைவனை, மெல்லமெல்ல உயர்ந்து தொடமுயல்கின்றன. அங்ங்ணம், கீழிருக்கும் ஆன்மா, மேலிருக்கும் ஆண்டவனைத் தொடமுயல்கையில், அதனால் தொடக்கூடிய இறைவனின் முதல் அவயவ இறைவன் திருவடிகளேயாம். ஆதலால், ஆன்மாவின் மனத்திற்கு, இறைவனின் திருவடிகளே முதலில் ஆட்படுகின்றன. இறைவன் திருவடிகளை மனதால் தொட்ட ஆன்மா, எண்ணம் தந்த சிலிர்ப்பினால், இறைவனை வாயார வாழ்த்துகிறது. பின் மெய்யாரக் கையார வணங்கத் தொடங்குகிறது
3 マ マ
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றால், இறைவன் திருவடி பற்றி தொடங்கும் வணக்கமே, இறைவனை அடைவதற்கான பாதையாம். இப்பேருண்மையை பாடலின் இறுதி அடி வெளிப்படு மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம் எனும், இந்நான்காம் அடியில், மேற்சொன்ன பேருண்மைகள், பொருந்தியிருக்குமாற்றைக் கண்டு வியந்துநிற்கிறோட
3 3 3
வாழ்த்துதல் நாவின் செயல். வணங்குதல் மெய்யின் செயல். வாழ்த்துதலும், வணங்குதலும் சொல்லப்பட்டதால், எண்ணுதல் குறிப்பால் உணர்த்தபபட்டது நினைவின்றி,
பேச்சும், செயலும் இல்லையாம். ஆகவே, இறைவனை நினைந்து வாழ்த்தி வணங்க, அவன் திருவடி தொடும் பேறும், திருவடி தொடும் பேற்றினால், அருஉருவ, அருவ வழிபாட்டுநிலை எய்தும் பேறும், அவ்வழிபாடுகளால் சொரூபநிலை இறைவனோடு ஒ6 எய்தப்படும் என்னும் பேருண்மை, இம்முதற்பாடலில் பொதிந்து கிடந்து, நம்மை வியப்பெய்ய வைக்கிறது.
3 o 3
இப்பாடலில் வரும் மலர் சிலம்படி எனும் தொடர், பலபொருளை உள்ளடக்கி விரித்துணர மகிழ்வு தரு மலர்ந்த சிலம்பின்ைப் பூண்ட அடி என, இத்தொடருக்குப் பொதுவாகப் பொருளுரைக்கலாம். மலரடி, சிலம்படி எனப் பிரித்துப் பொருள் கொள்ள மலரடி என்ற சொல்லுக்கு, அடியார்தம் உள்ளக்கமலத்தை மலர்விக்கும் அடி 6 பொருள் கொண்டு மகிழலாம்.
dráifigif I'm glitto) 100'f 2005

ல் வழிபாடாம்.
ஆன்மாக்கள்,
த்தி நிற்கிறது.
ற்றும்பேறும்,
57

Page 90
மலரடி என்பது வினைத்தொகை முக்காலத்தையும் உள்ளடக்கி நிற்பது வினைத்தொை ஊறுகாய், சுடுகாடு என்பன, இவ்வினைத்தொகைக்காம் உதாரணங்கள். முன்பும் ஊறியகாய், இப்போதும் ஊறுகிற காய், இை சுட்டகாடு, சுடுகின்றகாடு, சுடப்போகும் காடு எனவும், இவ்விரு சொற்களையும் வினைத்தொகையால் விரிக்க இங்ங்னமே, மலரடி எனும் தொடரும், மலர்ந்த அடி, மலரும் அடி, மலரப்போகும் அடி என இறைவன் திருவடி அன்பர்தம் உள்ளத்தை எக்காலத் மலர்விக்கும் தன்மையை உணர்த்தி நிற்கிறது.
컸 3 했
இனி, மலரடி என்ற தொடரிற்கு, அன்பர்தம் உள்ளக்கமலத்தின்கண் பொருந்திய அடி பொருள் கொள்ளினும் பொருத்தமாம். மலர்மிசை ஏகினான்’ என்னும் குறளுக்கு, உரைசெய்யும் பரிமேலழகர்,
மலர் என்பதனை, அன்பான் நினைவாரது உள்ளக்கமலமாய் உரைப்பா அம்மேற்கோள் கொண்டுணர,
மலரடி எனும் தொடர், அன்பான் நினைவாரது உள்ளக்கமலத்தில் பொருந்தி பொருள்தந்து மகிழ்விக்கிறது. இங்கும், அத்தொடரை வினைத்தொகையாய்க் கொள் அன்பால் நினைவாரது உள்ளக்கமலத்தில், முன்பும் பொருந்திய அடி, இப்போதும் பொருந்தும் அடி, இனியும் பொருந்தப்போகும் அடி என அர்த்தம் பிறந்: எக்காலத்தும் ஆன்மாக்களை ஈடேற்றும், இறைவன் திருவடிப்பெருமையைத் தெளிவுற வெளிப்ட
3 컸
இனி, சிலம்படி எனும் தொடருக்காம் பொருள் காண விழை சிலம்பினைப் பூண்ட அடி என்றும், சிலம்போசையை எழுப்புகிற அடி என்றும், இத்தொடருக்குப் பொருள் கொள்ளலாம். அம்பலத்தாடும் இறைவனின், பாதத்தில் பொருந்திய சிலம்பு, இறைவன்தன் ஆட்டத்தினால் ஓசை எழுப்புகிறது. அம்பலம் என்பது சித்தாகாசம். அதிணின்று இறைவன் ஆடுகிறான். இறைவனின் ஆட்டம் ஐந்தொழிலைக் குறிப்பது. முப்பத்தாறு தத்துவங்களை வகைசெய்த சித்தாந்திக அவற்றின் முதல் ஐந்து தத்துவங்களை சிவ தத்துவ அடுத்த ஏழு தத்துவங்களை வித்யா தத்துவங்கள் எ மிகுதி இருபத்துநான்கு தத்துவங்களை ஆத்ம தத்து முதன்மையானதான சிவதத்துவங்கள் ஐந்தனுள்ளும், நாததத்துவமே முதற்தத்துவமாம். அந்நாதத்தினின்றே மற்றைய தத்துவங்கள் விரிகின்ற அத்தத்துவங்களைக் கொண்டே, மலவயப்பட்ட ஆன்மாக்களை இறைவன் தூய்மைப்ப தத்துவங்களுள் முதன்மையானதான நாததத்துவமே,
58

கயின் இலக்கணம்.
ரியும் ஊறும் காய் எனவும்,
5 (լքIջեւյւb.
விரிந்து, தும்,
ய அடி எனப்,
r677,
]கிறோம்.
ள்
ங்கள் என்றும்,
ன்றும், வங்கள் என்றும் வகுத்தனர்.
.
டுத்துகிறான்.
&ordafgrifiografo gaof 2oo5

Page 91
3. ர்தி ச் சிலம்ே ப் எழுகி அவ்வோசையே, உயிர்களை உய்விக்கும் முதற்தத் நாததத்துவத்தால் உயிர்களை உய்விக்கும், இறைவனின் பெருங்கருணையை, சிலம்படி என்னும் இத்தொடர் குறித்து நிற்கிறது.
했 했
ஆடும் சிவனின் திருவடிகளில் ஒன்று ஊன்றிநிற்பது. மற்றையது உயர்ந்து நிற்பது. ஊன்றப்படுவது அன்பர்தம் உள்ளக்கமலத்தின் கண் ஊன்றிய திருவடி மலரடி. ஊன்றிய பாதம் அசையாது. எனவே, சிலம்பொலி அதனின்றும் எழாது. ஆடியபாதம் அசையும். எனவே, சிலம்பொலி அதனின்று எழும்.
எனவே,
உயர்ந்த திருவடி சிலம்படியாம்.
இறைவனின்,
வலப்பாதம் ஊன்றியபாதம், இடப்பாதம் ஆடியபாதம்.
இறைருபத்தின்,
வலப்பாகம் சிவனது,
இடப்பாகம் சக்தியினது. தத்துவம் கடந்த பரம்பொருள், சக்திக்கலப்பினால் சுத்தமாயைக்குட்பட, சிவதத்துவங்கள் விரிகின்றன. சிவம் அசையாது நிற்க, சிவத்தின் சந்நிதி மாத்திரையான், சக்தி அனைத்து இயக்கங்களையும் நடத்துகிறாள், என்பது தத்துவம். இடப்பாகமான சக்தித்திருவடியில் சிலம்போசை எழு சக்திக்கலப்பால்தான் நாததத்துவம் விரிகிறது எனும் சேக்கிழார் நமக்கு உணர்த்துகிறார்.
켰 했
ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலால் உயிர்கை உயர்ந்த திருவடி தன் சிலம்போசையால் நாததத்து உயிர்களைத் தூய்மைசெய்து முத்தி கொடுத்தருள் சக்திக்கலப்பினாலேயே தடத்த வடிவங்கள் கொள்ள தடத்த வடிவங்களுக்கே வழிபாடு இயற்றப்படுகின்ற அதுநோக்கியே,
சக்திக்கலப்பான சிலம்படியினை, வாழ்த்தி வணங்க வலியுறுத்துகிறார் சேக்கிழார்.
켰 했
அங்ங்ணம் வணங்கி உயர்வடைய, சிவசொரூபம் நம் உள்ளக்கமலத்துள் பதியுமாம். வலக்காலின் ஊன்றுதலிலேயே இடக்கால் ஆடுகிற சிவனின் நிலைத்தலிலேயே சக்தியின் இயக்கமாம். மேற்சொன்ன உண்மைகளை, சிலம்படி எனும்தொடருள் அடக்கிய, சேக்கிழார்தம் செறிந்த அறிவு நம் சிந்தையைச் சில
켰 했
gregł1975rt 1960ł2005

துவமாம்.
ஆதலால்,
2வதால், ம் பேருண்மையையும்,
)ள மலர்விக்க, வம் விரித்து, கிறது. ாப்படுகின்றன. iii.
லிர்ப்பிக்கிறது.
59

Page 92
இம்முதற்பாடலில் த்தி மூன் பாடலைப் பதம் பிரித்து எண்ணினால் அவை எழுபத் முதற்சொன்ன அறுபத்திமூன்று எழுத்துக்களும் அறுப பின்வரும் எழுபத்திரண்டு எழுத்துக்கள் தொகையடிய அமைந்துள்ளதும் ஒரு புதுமை,
罗 罗 罗
இப்பாடலின் நிறைவு வரியில், வாழ்த்தி வணங்குவேன் என உரைக்காது, வணங்குவாம் என அனைவரையும் உட்படுத்தி உரை சேக்கிழாரின் கருணைத்திறம், நினைந்து நினைந்து உருகத்தக்கது. உலகியலில் மூழ்கி, அருளியலை மறந்த நம்போன்ே தன் பெருங்கருணையினால், சிவ அனுக்கிரகத்துக்கு ஆட்படுத்த, தெய்வச்சேக்கிழார்தம் சிந்தை விரும்புகிறது. என்னே அவரது கருணைத்திறம்!
했
தெய்வச்சேக்கிழார்தம் நெறிநின்று, ஒதற்கரிய அவ்விறையை, நிலாவுலாவிய நீர்மலி வேணிய வடிவொடு, அலகில் சோதியனாய்த் தரிசித்து, அம்பலத்தாடும் அவ்வாடல்வல்லானின், மலரடியை வாழ்த்தி, சிலம்படியை வணங்கி,
முத்திக்கு வித்திட, முயலட்டும் உலகெலாம்.
罗 罗 @
SeOSeOSD
60

திரண்டு அகும். த்துமூன்று அடியார்களையும், ார் ஒன்பது பேரினையும் சேர்த்ததாயும்,
க்கும்,
றாரையும்,
COBOROR SQOQOR)
6Fáfgaf forgtré foof 2005

Page 93
圆 颐、沼
"சேக்கிழாரின் தமிழு
- ധ്രുഞ്ഞുങ്ങrബ്. ബ്&്.
இணைப் பேராசிரியர் அகராதியியல் துறை,
சேக்கிழார் அருளிய பன்னிரண்டாந் திருமுறை பெரியபுராணமென்றும், திருத்தொண்டர் புராணமென்றும் அழைக்கப்பெறுகின்றது. சேக்கிழார் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களுள் கருத்து வேற்றுமைகள் உண்டு. பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்றும், நடு என்றும் கூறுவர். பெரியபுராணத்திற்கு முதல் நூல் சுந்தரமூர்த்தி அடிகள் அருளிய திருத்தொண்டர் தொகை; வழிநூல், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதி; விரிநூல் பெரியபுராணம் என்பர். பெரியபுராணம் சாத்திரத்தை வித்தாகக் கொண்டும், பக்தியை உயிராகக் கொண்டும், பிறவற்றை உடலுறுப்புகளாகக் கொண்ட காவியமாகத் திகழ்கின்றது.
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதி முதல் சேக்கிழாரின் பெரியபுராணம் தோற்றம் கொண்டகாலம் வரையில் ஆன 500 ஆண்டு காலத்தில், குறிப்பிட்டுச் சொல்லத்தக்க எந்த ஒர் இலக்கியமும் மனிதனை மையப் பொருளாகக் கொண்டு எழவில்லை என்பது நினைவு கூரத்தக்கது. ஐந்நூறு ஆண்டு கால இலக்கியத் தேக்கத்தை தகர்த்து, மனிதனை மையப்பொருளாகக் கொண்டு இறைமைக் கொள்கையோடு முரண்படாது, மனிதனை முன்னிறுத்தி மகத்தான திருப்புமுனை விளைத்த மானிட இலக்கியம் சேக்கிழாரின் பெரியபுராணம். மனிதர்களை ஒருங்கிணைப்பதற்குரிய பல்வேறு சமூக அமைப்புகள் உண்டு. உறவு, சாதி மொழி வழிப்பட்ட இனம், சமயம் என்பன அவை, இம்மனிதர்களை ஒருங்கிணைப்பதில் சேக்கிழாரின் அளவிலாப் புலமையையும், சமூக நல்லெண்ணத்தையும் பக்திக் கணிவையும் இப்புராணத்தில் காணமுடிகின்றது. இம்மை வாழ்வைக் கடந்து மறுமை வாழ்வின் ஈடேற்றத்தில் தமிழகத்தில் பக்திவெள்ளம் கரைபுரண்டு ஒடிய காலத்தில் “இம்மையில் வாழ்வாங்கு வாழ்தலே சமயம்”. அதுவே வீடுபேற்றின் வாயில் எனச் சமயநெறி நின்று மக்களை இம்மை வாழ்வில் நம்பிக்கையூட்டி நெறிப்படுத்த முயன்ற முதல் முயற்சிகளைப் பெரியபுராணத்தில் தரிசிக்க முடிகின்றது என்று விளக்குகின்றார். இரா. செல்வகணபதி (பெரியபுராணம் சமூகப்பார்வை. சிதம்பரம் மயில்வாகனன், ப.124). சேக்கிழார் பெரியபுராணத்தில் நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்துவதின்றித் தம்முடைய தமிழ் உணர்வையும் தமிழ்ப் பண்பாட்டையும்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005
 
 

bதமிழ்ப்பண்பாடும்
சித்திரபுத்திரன் - ற்றும் துறைத்தலைவர் மிழ்ப் பல்கலைக்கழகம் வூர்.
வெளிக்காட்டுகிறார். இக்கட்டுரை, சேக்கிழாரின் தமிழ் மொழிநடையையும், தமிழ்ப் பண்பாட்டில் விருந்தோம்பல் பண்பையும் கருப்பொருளாகக் கொண்டு அமைகின்றது.
சேக்கிழாரின் தமிழ்
சேக்கிழார் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதைப் பின்வரும் கூற்றால் அறிய முடியும்.
“தமிழில் வடசொற்கள் பெருகி வழங்கிய காலத்தில் வாழ்ந்த சேக்கிழார் பெருமான், பெரும்பாலும் வடசொற்களை நீக்கி, நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பது அவருடைய தமிழ்ப் பற்றுக்கு முதன்மையான எடுத்துக் காட்டாகும். பெரியபுராணம் போன்ற ஒரு சமயநூலில் வடசொற்கலப்பு எளிதில் ஏற்படுவது இயல்பேயாயினும், அக்கலப்பினைத் தவிர்த்ததன் மூலம் தமிழ் வழக்கே மேலோங்க வேண்டும் என்று சேக்கிழார் கருதியிருந்தார் என்பது புலப்படும். தமிழும் சைவமும் தழைத்தினிதோங்க வேண்டும் என்று பேரார்வமுடையவர் சேக்கிழார்’ (மு. சதாசிவம், சேக்கிழாரின் தமிழ்ப் பற்று, ப. 184). இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் பின்வரும் பாடல் அமைகின்றது.
'மிசையுலகும்பிறவுலகும் மேதினியேதனிவெல்ல
அசைவில் செழும்தமிழ்வழக்கே அயல்வழக்கின்துறைவெல்ல
இசைமுழுதும்மெய்யறிவும் இடங்கொள்ளும்நிலைபெறுக”
(1922)
இறைவனுக்குச் செய்யும் பூசை, அபிஷேகம், அர்ச்சனை போன்றன வடமொழியில் செய்வதைக் காட்டிலும், தமிழில் வழிபாடு செய்வதே சிறப்புடையது என்பது சேக்கிழாரின் சிந்தனையாக அமைகின்றது. 'அசைவில் செழும தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல' எனும் பாடல் அடியிலிருந்து சேக்கிழார் தமிழ்மீது வைத்திருந்த அசையாத பற்று புலப்படுகின்றது.
நம்பியாரூரரை மறையவராய்க் கோலங்கொண்டு வந்து தடுத்தாட்கொண்ட சிவபெருமான், அவரைத் தமிழில் பாடல்கள் பாடுமாறு பணித்தார் என்று சேக்கிழார் கூறுவது அவர் தம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துகின்றது.
61

Page 94
அற்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல்நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார்துரமறைபாடும் வாயார்
(216)
சேக்கிழார் தமிழ் எனும் சொல்லைப் பல்வேறு இடங்களில் கையாண்டுள்ளார். சான்றாகப் பின்வரும் பாடல் வரிகளைக் கொள்ளலாம்.
சொல்லார் தமிழ்இசை பாடிய தொண்டன் (222) இன்னிசை வண்டமிழ் மாலை (272) பொங்கு தமிழ்ப் பொதியமலைப் பிறந்து பூஞ் சந்தனத்தின் கொங்கணைந்து குளிர்ச்சாரல்
இடைவளர்ந்த கொழுந்தென்றல் (3424) செஞ்சொற்றமிழ்நாவலர் கோன் (3885) இன்றமிழ் ஈசர் (1402)
சொல்லாட்சித் திறன்
இலக்கியம் முழுவதும் தன்னாட்சி புரியும் ஆற்றல் சொற்களுக்கு உண்டு. சேக்கிழார் பெரியபுராணத்தைப் பக்திக் காப்பியமாகப் படைத்திருப்பினும் அதனுள் சிறந்த சொல்லாட்சிகளைப் பயன்படுத்தியுள்ளார்.
வண்ணம்' என்ற சொல்லைக் கண்ணப்ப நாயனார் புராணத்தில் ஐந்து இடங்களில் சேக்கிழார் பயன்படுத்தியுள்ளார். பின்வரும் பாடல் இதற்குச் சான்றாக அமைகின்றது.
வண்ணவெஞ்சிலையு மற்றப் படைகளுமலரக் கற்றுக் (69d) இவ்வண்ணந் திண்ணனார் நிரம்பு நாளி
லிருங்குறவர் பெருங்குறிச்சிக் கிறைவனாய மைவண்ண வரை நெடுந்தோ னாகன் றாணு
மலையெங்கும் வனமெங்கும் வரம்பில் காலங் கைவண்ணச் சிலை வேட்டை யாழத் தெவ்வர்
கணநிரைகள் பல கவர்ந்து கானங்காத்து மெய் வண்ணந்தளர் மூப்பின் பருவ மெய்தி
வில்லுழவின் பெருமுயற்சி மெலிவானானான்.
(692)
பரவை எனும் சொல்லைத் தடுத்தாட்கொண்ட புராணத்தில் ஏழு இடங்களில் சேக்கிழார் பயன்படுத்தியுள்ளார். பின்வரும் பாடல் இதற்குச் சான்றாக அமைகின்றது.
பேர் பரவை மெண்மையினில் பெரும் பரவை விரும்பல்குல் ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும் பரவை சீர் பரவை ஆயினாள் திருவுருவின் மென் சாயல் ஏர் பரவை இடைப்பட்ட என் ஆசை எழு பரவை மிசை எனும் சொல்லைக் கண்ணப்ப நாயனார் புராணத்தில் ஐந்து இடங்களில் காணமுடிகின்றது.
62

தலைமிசைச் சுமந்த பள்ளித் தாமத்தைத் தடங்காளத்தி மலைமிசைத் தம்பிரானார்முடிமிசை வணங்கிச் சாத்திச் சிலைமிசைப்பொலிந்த செங்கைத்திண்ணனார்சேர்த்தகல்லை யிலைமிசைப் படைத்த வூனின்றிருவமு தெதிரே வைத்து
(773)
எதுகை அமைப்பு
இலக்கியங்களில் எதுகை அமைப்பு புலவனின் திறமையை நிலைநாட்ட பயன்படுத்தப்பட்ட ஒன்றாகத் திகழ்கின்றது. இவ்வுத்தியை சேக்கிழார் பெரியபுராணம் முழுதும் பயன்படுத்தியுள்ளது, அவரின் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்துகின்றது.
மற்றவனுங் கொற்ற வடிவாட்படைத்தொழில்கள் கற்றவர்க டன்னிற் கடந்துளரில்லையெனும் பெற்றிமையான் மாநிலத்து மிக்க பெருமிதம் வந் கற்றுலகிற்றன்னையே சாலமதித்துள்ளான்.
வயலெலாம்விளைசெஞ்சாலிவரம்பெலாம் விளையின்முத்தம் அயலெலாம் வேள்விச்சாலையனையெலாங்கழுநீர்க் கற்றை புயலெலாங்கமுகின்காடப்புறமெலாமதன்சீர்போற்றல்
செயலெலாந் தொழில்களாறே செழுந்திருக்கடவூரென்றும்
அணிநயம்
சேக்கிழார் பாடல்களில் அணிநயம் மிகுந்து காணமுடிகின்றது. உருவகம், உவமை தொடங்கி, சொற்பொருள் பின்வருநிலையணி, இடைநிலை தீப்கம் எனப் பல்வேறுபட்ட அணிநயங்கள் இடம்பெற்றுள்ளன.
பெரியபுராணத்தில் சொற்பொருள் பின்வரும் நிலையணி அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சான்றாகப் பின்வரும் பாடல்களைக் காணலாம்.
வளவனார்விடாது பற்ற மாதவர் வருந்திநிற்ப
களமணி களத்துச் செய்ய கண்ணுதலருளால் வாக்குக்
(597)
பொன்னெடும் பொதுவிலாடனிடிய புனிதர் பொற்றாள் சென்னியிற் கொண்டு சென்னி திருவளர்கோயில் புக்கான்
(603)
வினைவடிவம் அடுக்கி வருதல்
எறிபத்தநாயனார் புராணத்தில் கொண்ட, கொண்டு எனும் சொல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் நிலையைக் காணமுடிகின்றது. சான்றாகப் பின்வரும் பாடல்கள் அமைகின்றன.
Gráfgaf zoagat gaof 2005

Page 95
வென்றிமால் யானை தன்னை மேல்கொண்ட பாகரோடுஞ்
(563) மேல்கொண்ட பாகர் கண்டு விசை கொண்ட களிறு சண்டக் கால்கொண்டு போவார் போலக் கடிது கொண்டகலகப் போக நூல்கொண்ட மார்பிற்றொண்டர் நோக்கினார் மால்கொண்ட களிற்றின் பின்புதண்டு கொண்ட டிக்கவந்தார் (564) தோள் கொண்டவல்லாண்மைச்சுற்றத் தொடுந்துணையாங் கோள் கொண்ட போர் மள்ளர் கூட்டத் தொடுஞ் சென்று வாள் கொண்டதாயம் வலியாரே கொள்வ.
(69) நெறிகொண்ட குஞ்சி சுருடுஞ்சிநிமிர்ந்து பொங்க முறிகொண்ட கண்ணிக்கிடை மெய்யொளிப்பீலி சேர்த்தி வெறிகொண்ட முல்லைப் பிணைமிது குறிஞ்சி வெட்சி செறிகொண்ட வண்டின் குலஞ்சீர் கொளப்பின்பு செய்து
(706)
முற்று எச்ச வடிவம்
பெரியபுராணத்தில் முற்ற எச்சத்தில் முடியும் செய்யுட்கள் பல இடம்பெற்றுள்ளன. சான்றாகப் பின்வரும் பாடல்களைக் காணலாம்.
அங்கணரடியார்தம்மைச் செய்தவில் வபராதத்துக் கிங்கிது.தன்னாற்போதார தென்னையுங் கொல்ல வேண்டு மங்கலமழுவாற் கொல்கை வழக்குமன்றிதுவா மென்று செங்கையாஒடைவாள்வாங்கிக் கொடுத்தனர்தீர்வு நேர்வார் (592)
தந்தவாள்வாங்கமாட்டார் தன்னைத்தானறுறக்குமென்று சிந்தையாலுணர்வுற்றஞ்சிவாங்கினார் தீங்கு தீர்ப்பார்
(593)
வினைமுற்று வடிவம்
வினைமுற்று வடிவங்கள் பெரியபுராணத்தில் பலவாறு இடம்பெற்றுள்ளன.
வாளொடுநீள்கை துடித்தனமார்பொடு வேல்கள் குளித்தன; தோளொடு வாளி நிலத்தன தேலொடு தோல்கடகைத்தன; தாளொடு வார்கழ லிற்றனர்தாரொடு குழ்சிரமற்றன; நாளொடு சீறிமலைப்பவர்நாடிய போர்செய் களத்தினில்
(625) குருதியின திகழ் பரந்தன; குறையுட லோடி யலைந்தன; பொருபடை யறுதுணி சிந்தினபுடைசெரிகுடருடல் பம்பினர் வெருவர வெருவை நெருங்கின வீசியறுதுடிகள் புரண்டன; இருபடைதனினுமெதிர்ந்தவரெதிரெதிரமர்செய்பறந்தலை
(626)
6trééignif Iompart 10of 2005

வினா வடிவம்
கேள்வி வடிவங்களைக் கொண்ட தொடர்களைப் பெரியபுராணத்தில் அதிகமாகக் காணலாம். தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்வது, இறைவனைக் கேள்வி கேட்பது எனும் இரு நிலைகளில் வினா வடிவம் அமைகின்றது.
நேர்நோக்கியன்னை நீநிரப்பு நீங்கி நன்றினிதினிருந்தனையோ? வென்று கூறு
மன்றுநீவைத்தபடி பெற்றுவாழ்வே னழைத்தபணியென்?னென்றாளனங்கு சார்ந்தாள்
(698) ஆவதென்?னிதனைக் கண்டிங்கணைதொறுமென்மேற்பாரம்
தேவரங்கிருப்பதெங்கே? போதென்றார்.
(746)
தமிழ் பண்பாடு
தொல்காப்பியம் தொட்டு இன்றுவரை விருந்தோம்பல், இல்லறம் பேணுதல், மகளிர் நலம் போன்றன சிறந்து விளங்குகின்றன. சேக்கிழார் நாயன்மார்களின் வழியாக அக்கால விருந்தோம்பல் பண்பை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். விருந்து குறித்துத் தொல்காப்பியம் பின்வருமாறு சுட்டியுள்ளது.
கற்பும்காமமும்நற்பால் ஒழுக்கமும் மெல்லியற்பொறையும் நிறையும் வல்லிதின் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவும் அன்ன கிழவோள்மாண்புகள்
(தொல் 1098)
சாவாமைக்குக் காரணமாகிய அமுதமே கிடைத்தாலும், விருந்தினரை நீக்கித் தாம் மட்டும் உண்ணும் பழக்கம் தமிழரிடம் இல்லை என்பதைப் பின்வரும் புறநானூற்றுப்பாடல் தெளிவுபடுத்துகின்றது.
உண்டாலம்மஇவ் உலகம் இந்திரர்அமிழ்தம்இயைவதாயினும்இனிதெனத் தமியர் உண்டலும் இலரே
(புறம் 183) இரவில் விருந்தினர் வந்தாலும், மனைவி கணவனுடன் மனமகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்து படைக்கும் நிகழ்ச்சியைப் பின்வரும் நற்றிணைப்பாடல் உணர்த்துகிறது.
அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும் முல்லைசான்ற கற்பின் மெல்லியல்
(742)
63

Page 96
திருவள்ளுவரும் விருந்தோம்பல் எனும் பண்பின் சிறப்பை உணர்ந்ததால் விருந்தோம்பல் எனும் அதிகாரத்தையே தனியாக வைத்துள்ளார். இவ்விருந்தோம்பல் பண்பினைச் சேக்கிழார் பெரியபுராணத்தில் விரிவாக அடியார்களின் வாழ்க்கை மூலமாக வெளிப்படுத்துகிறார். நாயன்மார்கள் தம் இல்லத்திற்கு வரும் அடியார்களைச் சிறப்பாக உபசரிக்கும் பண்பை விரிவாகப் பெரியபுராணத்தில் சித்தரித்துக் காட்டியுள்ளார் சேக்கிழார்.
பெரியபுராணம் காட்டும் சமுதாயத்தில் தம் மனைகள் தோறும் வரும் சிவனடியார்களுக்கு அமுது படைத்து விருந்தோம்பிய வரலாறே பெரியபுராணம் முழுவதும் காணப்படுகின்றது. சிவனடியார்களின் பசிப்பிணிப் போக்கிய வரலாறே பெரியபுராணம் என்பர் அ. ச. ஞானசம்பந்தம் (பெரியபுராணம் சமூகப் பார்வை, மயில்வாகனன், ப. 124)
விருந்து என்றாலே புதிது எனப் பொருள்படும். வீட்டிற்கு வரும் புதியவர்களை விருந்தினர் என்பது பழக்கம். பெரியபுராண சமுதாய காலத்தில் அறிமுகமற்ற புதியவர்களை வரவேற்று உபசரிக்கும் பண்பு அன்று மிகுதியும் இருந்தது. இதையே விருந்தோம்பல் என்றனர். விருந்தோம்பும் நிலையில், சிவன்டியார்களின் சாதி, குலம் பாராது அரன் பணியாற்றுவோர் என்ற ஒரே நிலைகருதி அனைவருக்கும் விருந்தோம்பல் செய்தலைப் பெரியபுராணத்தில் முழுமையாகச் செய்து வருகின்றனர். இதனைப் பின்வரும் திருஞானசம்பந்தர் கூற்றால் அறியமுடிகின்றது.
மண்ணினிற் பிறந்தார் பெறும்பயன் மதி சூடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்
விருந்தோம்பல் பண்பில் சிறந்து விளங்கியவர்களாகச் சிறுத்தொண்ட நாயனார், இளையான்குடி மாறநாயனார், கலயனார் மனைவி ஆகியோர் திகழ்வோர்.
சிறுத்தொண்ட நாயனார், மகனை அறுத்து அமுது படைத்தவர். இளையான்குடி மாறநாயனார், விதைத்ததைக் குற்றி உத்திரம் முதலியன கொண்டு சமைத்தவர்.
இளையான்குடி மாற நாயனார் தமது இல்லம் வரும் அடியவர் எவராயினும் அவர்களுக்குச் சோறிடுவதை ஒரு பெருந்தொண்டாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் என்பதனைச் சேக்கிழார் பாடல் வரிகள் மெய்ப்பிக்கும்.
64

நேர வந்தவர் யாவராயினும் நித்தமாகிய பத்தி முன் கூர வந்தெதிர்கொண்டு கைகள் குவித்துநின்று செவிப்புலத்து
(6) եւէ 442) உண்டி நாலு விதத்திலாறு சுவைத்திறத்தினில் ஒப்பிலா அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அழுது செய்ய அளித்துள்ளார்
(பெபு 443) தங்களிடம் எவ்விதப் பொருளும் இல்லாத நிலையிலும், சிவனடியாருக்கு விருந்து தர நினைத்து, தன் மனைவி ஆலோசனைப்படி பகலில் விதைத்த நெல்லை இரவில் வாரி எடுத்துவந்து தருகிறார் இளையான்குடி மாறநாயனார். நெல்லை அடுப்பிலிட்டுப் பக்குவப்படுத்தி எரிக்கவும் விறகு இல்லையே என்று மனைவி கூறக் கணவன் தன் வீட்டுக் கூரையை அறுத்துத் தருவதைச் சேக்கிழார் பின்வரும் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.
வந்தபின் மனைவியாரும் வாய்தலின்நின்று வாங்கிச் சிந்தையில் விரும்பிநீரில் சேற்றினை அலம்பிஊற்றி வெந்தழலை அடுப்பின் மூட்ட விறகில்லை என்ன மேலோர் அந்தமில் மனையில் நீடும் அலக்கினை அறுத்து வீழ்த்தார்
குங்குலியக் கலயநாயனார் புராணத்தில், கலயனார் மனைவி, தன் சுற்றமும் மக்களும் பசியினால் பெரிதும் துன்புறக் கண்டு, அதனை நீக்கத் தன் தாலியைக் கழற்றிக் கொடுத்து விற்றுவரத் தன் கணவனிடம் தருவதைச் சேக்கிழார் பின்வரும் பாடல்வரிகள் மூலம் வெளிப்படுத்துகிறார்.
யாதொன்றும்இல்லையாகிஇருபகல் உணவுமாறிப் பேதுறு மைந்த ரோடும் பெருகு சுற்றத்தை நோக்கித் காதல் செய் மனைவியார்தம் கணவனார்கலியனார் கைக் கோதில் மங்கலநூல்தாலிகொடுத்து நெற் கொள்ளும் என்றார் (839)
மேற்கண்டவாறு, சேக்கிழார் நாயன்மார்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துவதன் மூலம், தன்னுடைய தமிழ் உணர்வையும், தமிழ்ப் பண்பாட்டையும் வெளிக்கொணர்ந் துள்ளார் என்று கூறுவதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 97
சேக்கிழார் (ều
ത്രങ്ങങ്ങഖ് இலக்கியத்துறை,
சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம்,
தோத்திரப் பாடல்களின் இனிமையையும், சாத்திர நூல்களின் கருத்தினையும் கொண்டு, இறைப்பற்றில் முனைந்து வாழ்ந்து சிறந்த அடியார்கள் வரலாறு கூறும் வரலாற்றுக் காப்பியம் ஆக விளங்குகின்றது. மக்களிடையே சமய நம்பிக்கையைத் தோன்றச் செய்தல், வழிபாட்டு நெறிமுறைகளை எடுத்துரைத்தல், நெறிமுறைகளுக்கு அடிப்படையான தத்துவங்களைச் சுட்டுதல் என்ற மூன்று பெரும்பண்புகளைச் சமய இலக்கியங்கள் எடுத்துரைக் கின்றன. இப்பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்த அடியார்களுக்கு அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் எதிர்விளைவுகளையும் இறைவன் மீது கொண்ட மாறாத இன்ப அன்பு என்ற ஒன்றினாலேயே வென்று இறையருள் பெற்ற பெரியவர்களின் புராணம் என்னும் பொருளில் பெரியபுராணமாக சேக்கிழார் இயற்றினார். இறைவன் திருமுன் அரசு, இனம், சாதி, பொருளாதாரம் கடந்த சமுதாய ஒருமைப்பாட்டினை நிலைநாட்டியவர் சேக்கிழார். திருத்தொண்டர் புராணம், இரண்டு காண்டங்களையும், 13 சருக்கங்களையும், 4286 செய்யுட்களையும் கொண்டு 63 தனி அடியார்கள், 9 தொகை அடியார்கள் ஆகியோரின் வரலாற்றைப் பரக்கப் பேசுகின்றது. பக்தி நூல்கள் பலவும் இறைவன் அடியார்களுக்கு அருள் செய்த பெருமையைக் கூறுகின்றன. அடியார்களின் பெருமையைப் பேசவில்லை. ஆனால் பெரியபுராணம் மட்டுமே இறை அடியார்களின் பெருமையைப் பேசுகின்றது. உலகெங்கும் வாழும் தமிழர்க்கு மறையாக - வேதமாகப் பன்னிரு திருமுறைகளும் சாத்திரநூல்களும் விளங்குகின்றன. அதனாலேயே உமாபதி சிவாசாரியார் சேக்கிழார் நாயனார் புராணத்தில் (86),
திருத்தொண்டர் புராணம் எழுதிய முறையை
மறையோர் சிவமூலமந்திரத்தால் அருச்சனை செய்து இறைஞ்சி இருக்குமுதன் மறைநான்கினின்று முதலாக இதுவும் ஒரு தமிழ் வேதம்'ஐந்தாவதென்று கருத்திருத்தி".
என்று போற்றுகின்றார்.
dráégařsrgato Jaf 2005
 
 

மாற்றும் மகளிர்
க. திலகவதி, மிழ்ப்பல்கலைக்கழகம் நசாவூர்
பெண் நாயன்மார்கள்:
அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் பெரியபுராணத்தில் 28 மகளிர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. நாயன்மார்களின் மனைவியாக 21பேரும் தாயார் என்ற முறையில் நான்கு பேரும், மகள் என்ற முறையில் இரண்டு பேரும், உடன்பிறந்த சகோதரி என்ற முறையில் ஒருவருமாக மொத்தம் 28 மகளிர்பற்றிய செய்திகள் தெரியவருகின்றன. இவர்களில் மூன்று பெண்கள் மட்டுமே நாயன்மார்களாக வழிபடும் அருட்பேற்றையும், தனிப் புராணமாகப் பாடப்பெறும் பெருமையையும் கொண்டனர். மங்கையர்க் கரசியார்(64), இசைஞானியார்(71) ஆகியோர் ஆவர். திலகவதியாரின் வரலாறு திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில்(21) விரிவாகக் கூறப்படுகின்றது. ஏனைய மகளிர் மனையறத்தில் வழுவாது ஒழுகிய செய்தி, நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றின் ஊடே சொல்லப்படுகின்றது. இப்பெண்டிர் அனைவரும் கணவன், தந்தை, சகோதரன், மகன் ஆகியோரின் புகழுக்கும், இறைத்தொண்டிற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும், சமய வளர்ச்சிக்கும் ஆடவர்க்கு ஒப்பாகவும் அவர்களுக்குப் பின் இருந்தும் செயல் ஆற்றியவர்கள். இவ்வரலாற்றில் பெரும்பாலான பெண்டிர்களின் இயற்பெயர் சுட்டப்பட வில்லை. ஆயினும், சமயத் தொண்டாற்றிய அவர்களும் போற்றுதலுக்கும் வணங்குதலுக்கும் உரியவராவர். சமயம், சமுதாயம் இவற்றிற்குத் தீங்கு ஏற்பட்டபொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீங்கைக்களைந்ததை மங்கையர்க் கரசியார், காரைக்கால் அம்மையார், திலகவதியார் ஆகியோரின் செயல்களில் இருந்து அறிய முடிகின்றது. பக்தித்துறையில் முத்திப்பேறு பெண்களுக்குக் கிடையாது என்று மறுக்கப்பட்ட காலக்கட்டத்தில், இறைவனே அவர்களுக்குக் காட்சி தந்து, முத்திப்பேறு அருளியதோடு யாவரும் காணும்படி செய்த பெருமையைச் சேக்கிழார் காட்டுகின்றார். பெண்மையைத் தெய்வநிலைக்கு உயர்த்தியமைக்கு இம்மகளிரின் வாழ்வு சான்றாகிறது.
காரைக்கால் அம்மையார்:
பெண்கள் இல்லற வாழ்விலும், துறவற வாழ்விலும் ஈடுபடலாம் என்ற கருத்தாக்கத்தை ஏற்படுத்தியவர் காரைக்கால்அம்மையார். 63 நாயன்மார்களில் பெண்ணாக
65

Page 98
இருந்து, பாடல் இயற்றி, வரலாற்றில் அழியாப் புகழ்பெற்றவர் இவர் ஒருவரே. அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என நான்கு நூல்களை இறைவனைப் போற்றிப் பாடியுள்ளார். இவரது இயற்பெயர் புனிதவதி. காரைக்கால் ஊர்ப்பெயர்: இறைவனை வணங்கியபின் ‘பேயார்’ என்ற காரணப்பெயரும், திருக்கயிலை பெருமானால் 'அம்மையார்’ என்று அழைக்கப்பெற்ற சிறப்புப் பெயரும் இவர்க்கு அமைந்தன. ஊர்ப்பெயரும், சிறப்புப்பெயரும் சேர்ந்து காரைக்கால் அம்மையார் என இவர் வழங்கப்பெற்றார். இவரது பேய் வடிவம், பேராசையால் விரும்பியவற்றை நுகரப்பெறாமல் அலைந்து திரியும் அழுக்குடம்புடன் கூடிய இழிந்த பேய் வடிவமன்று. சிவபெருமானைச் சூழ்ந்து நின்று பரவிப் போற்றும் பதினெண் கணங்களுள் ஒன்றாகிய மேன்மையுடைய பேய்வடிவம் என்பதை, வானமும் மண்ணும் எல்லாம் வணங்கு பேய்வடிவம் எனப் பெரியபுராணத்தில் சேக்கிழார் போற்றுவதால் அறியலாம். சம்பந்தர், அப்பர், காரைக்கால் அம்மையார் மூவரும் இயல் இசைத் தமிழில் வல்லவர்கள் என்பதை,” கவுணியர், நாவுக்கரசர், பேயார் இம்மூவர் கற்கும் இயல்இசை வல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர் என வரும் சேக்கிழார் புராணத்தால்(46) அறியலாம். காரைக்கால் அம்மையார் தாம் பாடிய பாடல்களின் இறுதியில் தம்மை “காரைக்கால் பேய்” என்றே குறித்துள்ளார்.
அம்மையார் தனதத்தன் என்னும் வணிகக்குலத் தலைவனுக்கு மகளாகப் பிறந்த பிள்ள்ைப் பருவத்திலேயே சிவனிடத்துப்பக்தி கொண்ட பாங்கை,
'பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்’ என்றும்
7 எம்மனார்க்கு "அன்பறாது என்நெஞ்சு அவர்க்கு' என்றும் "அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம்' என்றும் “ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே
துணிந்தொழிந்தேன் ஒன்றேனன் உள்ளத்தின் உள்ளடைத்தேன்.
என்றும் அவரே தம் கூற்றால் புலப்படுத்துகின்றார்.
வளர் இளம் பருவத்திலும் கூடப் பிறபெண்களைப்போல் அல்லாது சிவன், சிவனடியாரிடத்து கொண்ட அன்பைச் சேக்கிழார்(5),
“வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம்
புனைந்தசடை அண்டர்பிரான் திருவார்த்தை அனைய வருவன
Լեւնենյոյ தொண்டர் வரின் தொழுது'
66

என்று போற்றுகின்றார். திருமணப் பருவம் வந்ததும், பரமதத்தனுக்கு மனைவியாகிறார். சிந்தையைச் சிவன்பால் வைத்தாரெனினும் கணவனுக்கு உற்ற துணையாக இல்லறக் கடமைகளை ஆற்றினார் என்பதை, “ஆங்கு அவன்தன் இல்வாழ்க்கை அருந்துணையாய் அமர்கின்ற பூங்குழலார்” (14) என்று சேக்கிழார் குறிப்பிடுவர்.
அம்மையார் வாழ்வில் ஈசன் மாங்கனி நாடகத்தை அரங்கேற்றி ஆட்கொள்கிறான். தன் கணவன் கொடுத்த னுப்பிய மாங்கனிகளுள் ஒன்றைச் சிவனடியார்க்குத் திரு வமுதாகப் படைக்கிறார். கணவன் மற்றொரு கனியைக் கேட்கும் போது இறையருளால் பெற்றுத் தருகிறார். மனைவி யைத் தெய்வப்பெண் என்று கருதி, அஞ்சிவிலகிவாழ்கிறான். பின்னர் பாண்டி நாடு சென்று வணிகம் புரிந்து, மறுமணம் செய்து பெண்மகவு பெற்று “புனிதவதி” என்ற பெயரைச் சூட்டி மனைவி, குழந்தையுடன் வந்து அம்மையாரின் காலில் விழுந்து பணிகிறான். கொண்டவனால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அம்மையார் தன்னையும், தனது அன்பையும் கடவுளுக்கே அர்ப்பணித்துவிடுகிறார். ஊனுடம்பு நீக்கிப் பேயுருவம் கொண்ட அம்மையார், சிவன் உறையும் கைலாயத் திற்குக் கால்களால் சேர அஞ்சித் தலையால் நடந்து செல்கிறார். இறைவன் அம்மையப்பராய் விளங்கும் கயிலைக் காட்சியைக் கண்டு உவக்கிறார். இதனைச் சேக்கிழார், (58)
"அம்மையே என்னும் செம்மை, ஒரு மொழி உலக
மெல்லாம் உய்யவே அருளிச் செய்தார்”என்றும் அம்மையார் அதற்கு மறுமொழியாக, “அருள் செய
அப்பாவென்று'இறைஞ்சிப்பின் வேண்டுகிறார். இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்
வேண்டுகிறார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல்
உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான்
Lög/ LIT2 அறவாநி ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க
என்றார்" (60)
என்று வேண்டி திருவாலங்காட்டில் இறைவனின் திருவடிக் கீழ் இருக்கும் வரத்தையும் பேற்றையும் பெற்றார்.
“கொண்டானிந்த சிறந்த தெய்வமில்லை” என்று கற்பிக்கப்பட்ட தமிழ்ப்பெண்களிடையே, கணவனால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், முகம் தொலைந்து மூலையில் முடங்கிவிடாமல், தான் விரும்பிய ஆன்மீகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட முதல் புதுமைப்பெண் இவர் என்றால் மிகையாகாது.
மங்கையர்க்கரசியார்:
திருஞானசம்பந்தரால் புகழப்பெற்ற பேறு பெற்றவர்
பாண்டிமாதேவியாகிய மங்கையர்க்கரசியார். தன் கணவன்
மாறவர்மன் அரிகேசரி (பாண்டி நாட்டு மக்களும்) சைவ
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 99
சமயத்தை விடுத்து, சமணசமயத்தை தழுவி, மனதாலும், உடலாலும் கூன் உடையவனாக இருந்தான். இந்நிலையில் பாண்டிமாதேவி, தான் சைவத்தை விட்டு நீங்காமல் தன் நாட்டையும், தன் கணவனையும் அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் திருஞானசம்பந்தப்பெருமானை வரவழைத்து சைவத்துக்கு மாற்றுகிறார். அரசியின் விருப்பப்படி திருஞானசம்பந்தர் சமணர்களை வென்று திருநீற்றின் மகத்துவத்தை உலகோர்க்குக் காட்டினார்.
உலகமக்களுக்குக் கோளறு பதிகத்தின்’ மூலம் (வேயுறு தோளிபங்கன்) நாளும் கோளும் நல்லவர்க்குத் தீயன இல்லை என்பதும். சிவாயநம என்பார்க்கு அபாயமில்லை' என்ற சிவநாமத்தின் பெருமையும் உணர்த்தப்பட்டது. மங்கையர்க்கரசியால் பாண்டி நாட்டில் சமணம் ஒழிந்து சைவம் தழைத்தோங்கியது. இதனைச் சேக்கிழார் (1).
“மங்கையர்க்குத்தனியரசிஎங்கள் தெய்வம் வளவர் திருக் குலக்கொழுந்து
வளைக்கைமானி செங்கமலத்திருமடந்தை கன்னிநாடாள்
தென்னாகுலப் பழிதீர்த்த தெய்வப்பாவை எங்கள் பிரான் சண்பையர்கோன் அருளினாலே
இருந்தமிழ்நாடுற்ற இடர்நீக்கி, "என்றும் "மாசில் புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
வழிதுணையாய் நெடுங்காலம் மன்னி'
என்றும் போற்றுகிறார். இதன்மூலம் கணவன் தவறான வழியில் சென்றவிடத்து மனம் துவண்டுவிடாமல், மதியூக மந்திரியாய் திகழ்ந்து, மன்னனையும், மக்களையும் நாட்டின் பெருமையையும் காப்பாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
திலகவதியார்:
பெண்குலத்திற்கே பெருமை சேர்த்தவர் திலக வதியார். திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் வேளாளர் மரபில் புகழனார்க்கும். மாதினியார்க்கும் மகளாகப்பிறந்தார். உரியபருவம் வர கலிப்பகையார் என்ற படைத்தளபதிக்கு Ln600Th பேசித் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கலிப்பகையார் போரில் மரணம் அடைந்த செய்தி கேட்டுத் தானும் உயிர்விடத்துணிந்தார். பெற்றோரை இழந்து, தம்மையும் இழந்தால் தம்பி வருந்துவான் எனத் 'தம்பியார் உளராக வேண்டுமென”நினைத்து, “அம்பொன்மணிநூல் தாங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி”தூய சிவநன்னெறியே பின்பற்றி வாழ்ந்து வந்தார். தம்பியாராகிய மருள்நீக்கியாரோ சைவத்தை விட்டு வில்கிச் சமணத்தைத் தழுவிப்பல நூல்களைக் கற்றுத்தேர்ந்து, தருமசேனர்’ என்ற பட்டத் தையும் பெற்றார். இதனைக் கண்டு மனம் வருந்திய திலகவதி யார் இறைவனிடம் மனம் உருகி வேண்டினார். இறைவன் தருமசேனருக்குத் தீராத சூலைநோய் எனும் வயிற்று வலியை உண்டாக்கினார். சமணர்களால் குணப்படுத்த முடியாத
சேக்கிழார் மாநாடு மலர்2005

நிலையில், தமக்கையிடம் ஓடிவந்தார். திலகவதியாரும் தம்பியின் நோய் தீர்க்கத் திருநீற்றை அஞ்செழுத்து ஒதிக் கொடுத்து, நோய் தீர்த்து, அவரைச் சைவசமயத்திற்கே கொண்டு வந்தார். திலகவதியார் நாள்தோறும் விடியற் காலையில் திருவதிகை வீரட்டானத்தில் அலகிட்டு, மெழுக் கிட்டு, மலர் பறித்துப் பணி செய்ததே, அவரது தம்பி நாவுக் கரசரும் திருக்கோவில் தோறும் உழவாரப் பணி செய்ததற்கு அடிப்படையாய் அமைந்தது எனலாம். திலகவதியார் இல்லை யென்றால் திருநாவுக்கரசர் என்ற ஒருவரை நாம் அறிந்தி ருக்க முடியாது. தேவார பாடல்களும் கிடைத்திலது. அத்தகைய மிகப்பெரிய தொண்டை திலகவதியார் சைவசமயத்திற்குச் செய்துள்ளார்.
'திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப்
பெருவாழ்வு வந்ததெனப் பெருந்தகையார்
பணிந்துஏற்ற”(67)
என்று சேக்கிழார் போற்றுவார். மேலும் நாவுக்கரசர் என்ற பெயர் வந்த காரணத்தைச்,
"செந்தமிழின் சொல்வளப் பதிகத்தொடை பாடிய
பான்மை யினால் நாவுக்கரசு என்று உலகேழினும் நின்
நன்நாமம் நயப்புற மன்னுகளன்று, யாவர்க்கும் வியப்புற
மஞ்சுறைவான், இடையே ஒரு வாய்மை எழுந்ததுவே"(74) என்று
குறிப்பிடுகிறார்.
திருநீலகண்டரின் மனைவி:
திருநீலகண்டர் கணிகையர் இல்லத்துக்குச் சென்று வந்ததால் அவர் மனைவி சினந்து, “தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்” என்றார். அதனால் திருநீல கண்டர் தம் மனைவி மட்டுமன்றிப் பிற பெண்களையும் தொடாமல் வாழ்ந்தார். இருவரும் ஓர் இல்லத்தில் அயலறி யாது விலகி வாழ்ந்தாலும், மனைவி செய்ய வேண்டிய கடமை களையெல்லாம் செய்துவந்த தன்மையைச் சேக்கிழார். (8)
"கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு
ஆனவெல்லாம் பொற்புறு மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய இற்புறம் பொழியாது அங்கண்இருவரும் வேறு வைகி அற்புறுபுணர்ச்சிஇன்மை அயலறியாமை வாழ்ந்தார்” என்று குறிப்பிடுவர். இறுதியில் இறைவன் இவர்களுக்குப் பிச்சை ஒட்டைக் கொடுத்து அருள்செய்து, இளமையுடன் விளங்கச் செய்தார். இன்றைய காலச் சூழலில் மனம் பொருந் தாத கணவனும் மனைவியும் மணவிலக்குப்பெற்றுவாழ்வதை விடுத்து, குழந்தைகளின் நலம் கருதி,திருநீலகண்டர் தம்பதி யினரின் வாழ்வை மேற்கொள்வது சிறந்த பயனைத்தரும்.
67

Page 100
கமலவதியார்:
கமலவதியார் தம்மகனுக்காக உயிரையே துறக்கிறார். இவரின் வயிற்றில் இருக்கும் குழந்தை. இன்னும் ஒரு நாழிகை கழித்துப்பிறக்குமேல், “இக்குழந்தை புவனம் மூன்றும் ஆளும் என்று சோதிடர் கூறிய சொல்லைக் கேட்டு அத்தாய் தம்மை தலைகீழாகக் கட்டித் தொங்கவிடச்செய்து. உரிய நாழிகையில் மகனைப் பெற்று, மங்காத புகழ் பெற்று விண்ணுலகை அடைந்தாள். அம்மகனே கோச்செங்கட் சோழன் ஆவான். இவனே பிற்காலத்தில் பல சிவாலயங்கள் கட்டினான். இதன் மூலம் பிள்ளையின் சிறப்புக்காக மகளிர் தம் துன்பத்தைத் தாங்கிக் கொண்டு தியாக வாழ்வு வாழவேண்டும் என்பதைக் கமலவதியின் வரலாறு காட்டுகின்றது.
வறுமையிலும் இரவில் வந்த அடியார்க்கு அமுது
படைத்த இளையான்குடிமாறநாயனார் மனைவி, மகன்
இறந்த துன்பத்தை மறைத்து உணவுபடைத்த அப்பூதி அடிகளாரின் மனைவி, மனைவியை அடியார்க்குக் கொடுத்த இயற்பகையார் மனைவி, தாலியைக் கழற்றிக் கொடுத்த குங்குலிய கலிய நாயனாரின் மனைவி, பிள்ளைக்கறி செய்து கொடுத்த சிறுத்தொண்டர் மனைவி, திருவிளக்கு ஏற்றவும்,
豹
போய் விடாது என்பதை மறக்கக் கூடாது.
ܢܠ
விதியின்
இரண்டு பேர்கள் ஒரு ஒட்டப்பந்தயத்தில்
கொள்வோம். அதில் ஒருவர் வெற்றி பெறுகிறr
ஆற்றலோடும் ஓடினார் என்று அறிகிறோம். அடிப்படையாகக் கொண்டு மற்றவர் ஒடவே இ
அதுபோல் விதியின் ஆற்றலை விட நீ விட்டால் நாம் விதியை வென்று விட்டதாகக்

திருத்தொண்டு செய்யவும் மனைவியை விற்க முற்பட்ட கலியநாயனார் மனைவி, இறைவனுக்குச் சூட இருந்த மலரை முகர்ந்தமைக்காகச் செருத்துணைநாயனாரால் மூக்கு அரிபட்டும், மலரை எடுத்த கையைத் துண்டிப்பதே தகுதியானது என்று கூறிக் கணவரால் கை துண்டிக்கப்பட்ட கழற்சிங்கரின் மனைவி, போன்ற மகளிர் எல்லாம் கணவர் மேல் மிகுந்த பற்று உள்ளவர்கள், மேலும் அவர்கள் தம்கணவரின் இறைத்தொண்டிற்கு உதவியும் செய்துள்ளனர் என்பதை அறியமுடிகின்றது.
நாயன்மார் வரலாற்றில் இடம்பெற்ற அப்பெண்டிர் களின் இயற்பெயர் சுட்டப்படவில்லை. செயற்கரிய செயல்கள் பல செய்த அப்பெண்கள், வரலாற்றில் அழியாப் புகழ்பெற்று விட்டனர். நாயன்மார்களின் வெற்றியில் இப்பெண் அடியார்களுக்கும் பங்கு இருக்கின்றது. சைவசமய வளர்ச்சியில், சமயத்தை மீட்டெடுத்த முயற்சியில், பக்தி இலக்கியங்களின் தோற்றத்திற்கு இவர்கள் பெரும் பங்கு ஆற்றியுள்ளனர் என்பதை எவராலும் மறுக்கஇயலாது; மறக்கமுடியாது.
சேக்கிழாரும் இவர்களைத் தம்புராணத்தில் போற்றிப் பெண்மைக்கு மதிப்பளித்துள்ளார்.
3.
ஆற்றல் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் ார் எனில், மற்றவரைவிட அதிக உறுதியோடும். ஆனால் ஒருவர் வெற்றி பெற்றார் என்பதை இல்லை என்று சொல்வது பொருந்துமோ?
நம் முயற்சிகளின் ஆற்றல் அதிகமாக இருந்து கருதுகிறோம்.இதனால் விதி என்பது இல்லாமல்
الم
drá4graif staigato pair 2005

Page 101
சேக்கிழாரின்
- கு. ர. அகராதியில் துறை, தமிழ்ப்
- எச். சித்தி இணைப்பேராசிரியர், அகராதியியல் து
இலக்கியங்கள் அந்தந்தக்கால சமூகவரலாற்றை உள்வாங்கியிருக்கும். சங்க இலக்கியங்கள் வழியே அக்கால வரலாற்றை அறிய முடிகிறது. உவமைகளாகவோ, பின்புலமாகவோ இல்லாமல், முழுக்க முழுக்க வரலாற்றுச் செய்திகளை ஒரு காப்பிய வடிவில் கொண்டு வருவது என்பது கவிஞனுக்கு மிகப் பெரிய சவால் ஆகும். ஆனால், சேக்கிழார் இதை மிகத் திறமையாக எதிர்கொண்டு, வரலாற்றுத்தன்மை கெடாமலும் அதேநேரம் கவித்துவம் குறையாமலும் திருத் தொண்டர் புராணத்தை ஆக்கித் தந்துள்ளார்.
சைவசமயத்தில் ஈடுபாடு கொண்ட அநபாய சோழனின் வேண்டுகோளுக்கிணங்கவே, அடியார்களின் வாழ்க்கையைக் காப்பியமாக்குகிறார் சேக்கிழார். காப்பியம் பாடும் கவியாற்றல் அவரிடம் இருப்பதை இனங்கண்டதாலேயே அவருக்கு இந்த வாய்ப்புக் கிட்டியது. அரச விருப்பம், அமைச்சர் என்ற தகுதி, அரச அமைப்பின் ஒத்துழைப்பு ஆகியவை அடியார் வரலாற்றைத் தொகுக்க சேக்கிழாருக்கு மிகவும் உதவியாக இருந்தன. திருத்தொண்டர் புராணம் வெறும் கதையல்ல. அடியார்களின் வாழ்க்கையைச் செவிவழியாக மட்டுமல்லாமல், பல்வேறு ஆவணங்களின் அடிப்படையிலும் தொகுத்துள்ளார் என்பதை நாம் அறிவோம். எந்த ஒரு படைப்பும் தன்னிச்சையாக உருவாவதில்லை. எழுத்தாளன் சமூகத்திற்கு உணர்த்த விரும்பும் கருத்து படைப்பு வழி வெளிப்படும். சேக்கிழார், நாயன்மார்களின் பெருமையை உலகிற்கு உணர்த்த வேண்டியே திருத்தொண்டர் புராணத்தைப் படைக்கிறார். காப்பியத் தகுதிக்காக சுந்தரரைத் தலைவராகக் கொண்டாலும் பிள்ளை பாதி புராணம் பாதி’ என்ற முதுமொழிக்கேற்ப சம்பந்தர் வாழ்க்கையைச் சரிபாதியாக அமைத்துள்ளார். அதனாலேயே சைவநெறி தழைத்தோங்க வைத்தவர்களில் முக்கியமானவரான சம்பந்த சுவாமிகளின் பிறப்பு நோக்கத்தைச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டியது சேக்கிழாரின் கடமையாகிறது. அவ்வகையில், சம்பந்தரது அவதாரத்தின் பயன்பாட்டைப் புலப்படுத்துவதற்குச் சேக்கிழார் பெருமான் கையாளும் செஞ்சொல் திறத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
புறச்சமய ஆதிக்கங்களிலிருந்துமக்களைச் சைவத்தின் பக்கம் திருப்பி மறுமலர்ச்சி ஏற்படுத்திய சைவ அடியார்களின்
&ordafgrifwraith gaof 2oo5
 
 
 

சரளா -
பல்கலைக்கழகம்,தஞ்சாவூர், ரபுத்திரன் - றை, தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்,
குணநலன்கள், பக்தியுள்ளம், இறையருளால் நிகழ்ந்த அற்புதங்கள், சமுதாயத்தில் அவர்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றைக் காப்பியம் மூலம் பரவலாக்கிமக்களிடம் சைவ உணர்வை ஆழப்படுத்த வேண்டுமென்பதே சேக்கிழாரின் விருப்பமும், இலட்சியமும் என்பதை அறியமுடிகிறது.
“சிறந்த காப்பியப்புலவன், தான் எடுத்துக்கொண்ட கருத்தை விளக்கும் முறையில், தொட்ட இடங்கள் அனைத்திலும் அக்கருத்தை நினைவூட்டவும், வலியுறுத்தவும் வாய்ப்புகளை நாடிப்பயன்படுத்த வேண்டும் என்பது திறனாய்வாளர் கொள்கை” (அ.ச.ஞானசம்பந்தன், பெரியபுராணம் ஒர் ஆய்வு, ப.179). அவ்வாறே உயர்ந்த குறிக்கோளிற்காக அவதாரம் செய்த சம்பந்தர் பிறப்பெடுத்த சீர்காழியைக் காட்சிப்படுத்தும் போது கூட, காப்பிய நோக்கத்தை வெளிப்படுத்துவதை ஓர் உத்தியாகவே அமைத்துப் பாடியுள்ளார் ஆசிரியர்.
“உளங்கொண்மறை வேதியர்தாமோதுர மத்திரவும் கிளர்ந்ததிருநீற்றொளியிற் கெழுமியநண்பகலும்”
(திருத்தொண்டர்புராணம், பா.எண் - 1904)
என்னும் வரிகளில் வேதியர் செய்யும் ஒமப்புகை இரவாகவும், திருநீற்றொளிபகலாகவும் சீர்காழிப்பகுதியைக் காட்டுவதன் மூலம் வேதநெறியும், சைவநெறியும் நிலைநிற்கும் இடத்தில் அந்நெறிகளை மேலும் வளர்த்தெடுத்துப் பரப்பிய சம்பந்தர் அவதரித்ததைப் பொருத்தப்பாட்டுடன் அமைத்துக் காட்டுகிறார் சேக்கிழார். குழந்தையின் ஆளுமைப்பண்பை வளர்ப்பதில், சூழல் முதன்மைப்பங்கு வகிக்கிறது என்னும் இன்றைய அறிவியல் முடிவை, அன்றே சேக்கிழார் அறிந்திருந்தார் என்பதற்குச் சான்றாக இதனைக் கூறலாம். அத்துடன், கடமை தவறாத அந்தணர் குலத்தில் தோன்றிய சம்பந்தர், பின்னாளில் சைவத்தை வாழ்விக்கப் போகிறார் என்னும் நுண்ணிய கருத்தையும் இவ்வரிகளில் தெளிவாக உணர்த்துகிறார்.
பிள்ளையவர்களின் கருத்தரித்த செய்தியைச் சொல்லும் போது,
"r ar. r. காதலியார் மணிவயிற்றின் உருத்தெரியவரும்பெரும்பேறுலகுய்ய வுளதாக”
(மேலது. பா.எண் - 198)
69

Page 102
என்பதில் ‘பெரும்பேறு என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்களை விவரிக்கலாம். மக்களை உய்விக்க வந்ததால் பெரும்பேறு என்பார் சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் (மேலது, ப.30). குழந்தை என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சி தரும் புதுவரவு. இறைவனிடம் வேண்டிப் பிறந்ததாலும், பின்னாளில் ஞானசூரியனாக விளங்கப் போவதாலும் இது சிவபாத இருதயர் செய்த பெரும் பேறெனக் கொள்ளலாம். வினையிலிருந்து ஈடேறுவதற்காக உலக உயிர்கள் செய்த பெரும் பேற்றினால் வந்த அவதரிப்பு எனவுமாகும். மேலும், சைவம் செய்த பெரும்பேறு என்றும் பல்வேறு நிலைகளில் பொருள் கொள்ளக் கூடிய வகையில் சேக்கிழார் அச்சொல்லைப் படைத்துள்ளார். இங்கும் படைப்பின் நோக்கமே முன்னிறுத்தப்படுகிறது.
1923 வது பாடலில், “நாளுடைய நிகழ்கால மெதிர்காலம் நவைநீங்க” என்று அவரது பிறப்புக்குரிய நோக்கங்களைப் பட்டியலிட்டுப்பாடுகிறார். இங்குநவை என்பதற்குக் குற்றம் என்ற பொருளில், சைவசமயத்துக்கு நேர்ந்த குற்றம் என்று உரை காணப்பட்டுள்ளது (மேலது, ப.37), பிற சமயங்களால் சைவசமயத்திற்கு நேர்ந்த இழப்பு என்று மட்டும் கொள்ளாமல், உலக உயிர்களின் பிறவித் துன்பமானது நிகழ்காலமாகவும், இனி வரும் காலத்து வினைகளால் சேரும் துன்பம் எதிர்காலமாகவும் கொண்டு, அனைத்தையும் போக்கும் வல்லமை சம்பந்த சுவாமிகளுக்கு உண்டு என்பதை, அவரது பிற்கால வாழ்க்கை மெய்ப்பிப்பதை முன்பே சுருக்கமாகவும் நயமாகவும் சொல்லிச் செல்கிறார்.
குழந்தை பசிக்காக அழுவதும், உணவு கிடைத்தவுடன் சமாதானம் அடைவதும் உலகத்து இயற்கை. அதுபோன்றே குழந்தையின் அழுகை கேட்பவர்களையும் பார்ப்பவர்களையும் துன்பப்படுத்தும். ஆனால், இங்கு சேக்கிழார் அமைத்துக் காட்டும் காட்சியோ வேறாக இருக்கிறது.
"எண்ணின் மறையொலிபெருக எவ்வுயிருங்குதூகலிப்ப புண்ணியக்கன்றனையவர்தம் பொருமியழுதருளினார்” (மேலது பா.எண் - 1960)
என்பதன் மூலம் சம்பந்தக் குழந்தையின் அழுகை, தனக்கான தேவைகளை வேண்டியல்லாமல் உலகத்து உயிர்களை இன்பத்தில் திளைக்கச் செய்யப்புகுவதால் 'அமுது அருளினார்’ என்கிறார். தமிழ் மறைகளின் ஒலி உலகம் முழுவதும் பரவுவதும் அழுகையின் நோக்கமாக இருந்தது. அதனாலேயே,
“அம்பிகை யளித்த ஞான மகிலமுமுய்ய வுண்ட
நம் பெருந்தகையார் .”
(மேலது பா.எண் - 2015)
எனவும் பேசுகிறார்.
இறைவன் உலக உயிர்களிடத்து அருள்புரிதலாலே தான் இவ்வுலக வினைகள் நடைபெறுகின்றன. அதுபோல்
70

ஆன்றோர்களும் எளியர்பால் கருணை காட்டுகின்றனர். சம்பந்தரின் அழுகைக்குப் பின்பே அன்னை ஞானப் பாலூட்டுகின்றாள். ஆக, இவரின் அழுகை முக்கிய இடம் பெறுகிறது. காரணம், எந்தவொரு பொருளுமே அதை அடைபவருக்குத் தான் பயனாகும். ஆனால் பிள்ளையவர் களின் அழுகைப் பயன் உலகத்து உயிர்களுக்கு, சைவசமய ஏற்றத்திற்கு எனப் பரந்து விரிகிறது. எனவே தான் சேக்கிழார் பெருமான் அழுகையை ‘அருள்’ என்றும், குழந்தையின் அழுகை எல்லா உயிர்களையும் குதூகலிக்க வைக்கிறது என்றும் கூறுகின்றார். இதையே 2315 வது untL656),
நம்ம லத்துயர்தீர்க்கவந்தருளிய ஞானச்
செம்மலார் . yy
(nagu LITTadir235)
என்று மீண்டும்பிறவிநோக்கத்தை நினைவூட்டிப்பாடுகிறார்.
பாலுண்ட கோலத்தோடிருந்த பிள்ளையைக் கண்டு பதைத்துப் போன சிவபாத இருதயர்,
“எச்சின்மயங்கிடவுனக்கிதிட்டாரைக்காட்டென்று’கேட்க,
"அச்சிறிய பெருந்தகையாரானந்தக் கண்டுளிபெய் துச்சியின்மேலெடுத்தருளிமொருதிருக்கை விரற்சுட்டிக்” (மேலது பா.எண் - 1971) காட்டுகிறார்.
வைதிக குலத்துத் தந்தைக்கோ பாலைக் கொடுத்தவன் யார்? என்பது முக்கியம். பால் கொடுத்ததைத் தீங்கு என்கின்றனர் பிற உரையாளர்கள். பால் எத்தன்மைத்தோ? என்பதை விட, யார் கொடுத்ததோ? என்பதே பொருத்தமாய் இருக்கும். வைதிக குலத்திடையே இருந்த சாதியமைப்பு குறித்த மேல்நிலையாக்கச் சிந்தனை வரலாறு அறிந்த ஒன்று. ஆனால் சம்பந்தரின் பதிலில் தான் சேக்கிழார் தன் கவி நுட்பத்தைக் காட்டி நிற்கின்றார். சாதியப்படி நிலைகளைக் கடந்து, புது நெறி காட்டப் போகும் சம்பந்தர், உயிர்களில் மேல்கீழ் என்ற பிரிவினைகள் இல்லை; அவ்வாறு பிரிப்பது இறைவன் படைப்புக்கு எதிரானது; எல்லாவற்றிற்கும் மேலானவன் இறைவனே என உய்யும் வழியைச் சுட்டுவிரலால் பரம்பொருளை அடையாளம் காட்டுகிறார்.
“கவிஞன் என்போன் . பாடல்களில் எதுகை மோனைகளைப் படைப்போனாக மட்டும் திகழவில்லை; அவன் மனத்தின் அடிப் பகுதிவரை ஊடுருவி நோக்குகின்றான்; நோக்குவிக்கின்றான். சொல் அவனுக்கு மந்திர ஆற்றல் மிக்கதாகி விடுகின்றது. உள்ளுணர்வுத் தூண்டுதலால், அவன் படைக்கும் சொல்லோ கவித்திறத்திற்கும் நடைக்கும் அடிப்படையாய் அமைந்து விடுகின்றது” (மேற்கோள், புலவர். சொ. சிங்காரவேலன்,
6Fắágrif gaatto gaof 2005

Page 103
சேக்கிழாரும் நாட்டியலும், பெரியபுராணச் சொற் பொழிவுகள், பக். 4-5) என்ற பூரீ அரவிந்தரின் கூற்று சேக்கிழாருக்கும் பொருந்தி வருகிறது.
பிரமபுரத்து மறையோர்கள் பிள்ளையாரை எதிர்கொண்டு வணங்கிய செய்தியைக் கூறவரும்போது,
*வாரணங்கு முலையுமையாள் குழைந்த செம்பொன் வள்ளத்தி லமுதுண்ட வள்ளலாரை”
(திருத்தொண்டர்புராணம் பா:எண்-2156)
என்று பாடுகிறார். தன்னை நாடி வருவோருக்கும், நாடாதோருக்கும் வறுமை கண்டு இரங்கி உதவுபவனே வள்ளல். இங்கு முரண்பாடாக பெறுபவரையே வள்ளல் என்று குறிக்கிறார். எவ்வாறெனில், அமுத சுரபியைப் பெற்ற மணிமேகலை உலகத்து உயிர்களின் பசிப்பிணி போக்கினாள் என்பது மணிமேகலை கூறும் செய்தி.
தமக்கு என முயலா நோன்தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே’
(புறம் - 182)
என்ற சங்கப்பாடல் வழி தானடைந்த சிவஞானத்தை - பரம்பொருள் இன்பத்தை - உலகத்து உயிர்களுக்கெல்லாம் தேவாரப் பாடலாகவும், அற்புதச் செயல்களாகவும், உருமாற்றிக் காண்பித்து, ஈடேறச் செய்த சம்பந்தரை வள்ளல் என்ற வார்த்தையால் குறிப்பதே தகும். சேக்கிழாரின் கவிமனது பின்னாளில் நடந்தேறிவருபவற்றை யெல்லாம்
Ia5(pi
உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சிய இகழும்போதும் கவலையும் அடையாதே.இ. அதனால் உன் மனம் அமைதியாக இருக்கும்.
சேக்கிழார் மாநாட்டுமலர்2005

ஒரிரு சொற்களில் அமைத்துத் தந்து விடுகிறது. இவ்வாறு முரண்பாடான வார்த்தைகளைக் கொண்டு சம்பந்தரின் உயர்வைப் பாடுவதை ஒரு உத்தியாகவே சேக்கிழார் கையாண்டுள்ளார்.
சம்பந்தர் பெருமை வரையறுக்கப்பட்ட பக்கங்களில் அடங்காதவை. அது போலவே, தொடங்கிய சொல்லிலேயே முடிக்கும் புலமை பெற்ற சேக்கிழார் பெருமானின் கவியாற்றலையும் சொல்லில் அடக்க முடியாது. சோழர்களின் நல்லாட்சிக் காலத்து, இறைநெறியில் தொய்வுற்று, செல்வத்தில் திளைப்புற்றிருந்த மக்களின் மனமாற்றத்தை, சைவத்தின் பால் மடைமாற்றம் செய்தவர் சேக்கிழாரே என்றால் மிகையில்லை.
பயன்பட்ட நால்கள்
1. திருத்தொண்டர் புராணம், 4- ஆம் பகுதி, கோவைத் தமிழ்ச் சங்க
வெளியீடு,கோவை-1949.
2. திருத்தொண்டர் மாக்கதை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பொன்விழா வெளியீடு,சென்னை -
1970.
3. சோ. சிவபாதசுந்தரம்,சேக்கிழார் அடிச்சுவட்டில், வானதிபதிப்பகம்,
சென்னை. முதற்பதிப்பு-1978.
4. பெரியபுராணச் சொற்பொழிவுகள், திருநெல்வேலி தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை -1970.
5. பேரா. அ. ச. ஞானசம்பந்தன், பெரியபுராணம் ஒர் ஆய்வு சேக்கிழார்
ஆராய்ச்சி மையம்,சென்னை-1994.
6. புறநானூறு, நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.முதற்பதிப்பு
ー2004。
இகழும்
டையாதே. அதேபோல்உன்னை கழ்ச்சியையும், புகழையும் சமமாகக் கருது.
7

Page 104
மகிமைக்கு si
O O,
தெய்வச் ே
- Q. &1Jflað
தலைவர், அகில இலங்
ဒွဲဘုံကဲ့ဒွိမွီဒ္ဓိထံ
சைவம், உயிருக்குயிராய் உள்ள சிவனை அறிந்து 'சிவனருளையே ஆதரித்து அவனருளாலே அவன் தாள் வணங்கி வாழ்வதே உண்மை வாழ்வென்றும், வாழ்க்கைத் தொடர்ச்சி நீங்கியதும் சிவனடியடைந்து பேரின்ப வெள்ளத்துள் திளைத்து, மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்திருத்தலே வாழ்க்கைப்பயன் என்றுங் கொள்ளும் பண்பாடான உயர்நோக்குள்ளது. சிவபூமியாக விளங்கு கின்ற தமிழ் நிலப்பரப்பு முழுவதிலும் இச் சைவ இயல்பிற் பயன்பெற்ற தொண்டர்கள் ஆகிய சிவனடியார்கள் காலத்துக்குக் காலம் இடத்துக்கிடம் வாழ்ந்து சிறந்துள் ளார்கள். அவ்வப்போது ஆங்காங்கு பல அற்புதச் செயல்களும் நிகழ்ந்துள்ளன. மன்றுளே திருக்கூத்தாடி, அடியவர் மனைகள் தோறும் சென்று அவர் நிலை காட்டிய இடங்கள் பல.
சிவனடியார்களின் அருமை பெருமைகளை உலகுக்கறிய வைக்கும் திருவருட்கைங்கரியம் ஒரு காலத்தில் திருவாரூர் என்ற சிவதலத்தில் நடைபெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஒரு நாள் அங்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்றபோது, அத்தலத்தில் நிறைந்திருந்த திருத்தொண்டர் கூட்டத்தைக் கண்டு வியந்து, இவர்களுக்கு நான் அடியவன்ாகும் நாள் எந்நாளோ என்று எண்ணி மனவ ருத்தங் கொண்டார். அச்சுந்தரர் மூலமாகவே அத்தொண்டர் மகிமையை உலகறிய வைக்குமாறு திருவாரூர்த்தியாகராஜப் பெருமான் திருவுளம் கொண்டு “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கு மடியேன்” என அடி எடுத்துக்கொடுத்து அவர்கள் மகிமையை தேவாரத் திருப்பதிகம் ஆகப் பாட வைத்தார். அத்திருப்பதிகம் அடியார் பெயரும் அவர்கள் பற்றிய சிலகுறிப்புக்களும் கொண்டு திருத்தொண்டத் தொகை என்ற திருப்பெயரில் வழங்கி வரலாயிற்று. பின் சில நூற்றாண்டுகளில், திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் உபாசகரான நம்பியாண்டார் நம்பி ஒவ்வொருவரதும் வாழ்க்கைக் குறிப்புக்கள் சிலசில அமையுமாறு திருத்தொண்டர் திருவந்தாதி ஆக்கி அருளினார்.
பின் சில நூற்றாண்டுகளில் சோழநாட்டு இராஜாவாய் விளங்கிய இரண்டாம் குலோத்துங்கன் ஆகிய அனபாய சோழமகாராஜாவுக்கு முதன் மந்திரியாயிருந்த செந்தமிழ்ப் பெரும்புலவரும், சிறந்த சைவஞானியும், பெரும்பத்தி மானுமாகிய சேக்கிழார் பெருமான், திருத்தொண்டத்
72
 
 
 

ாபநாயகம் -
கைத் திருமுறை மன்றம்
தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி என்பவற்றின் சைவ ஞானச் சிறப்புகளை விரித்து விளக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அக்காலம் காவிய இரசனை விரும்பிப் போற்றப்பட்ட காலம், சீவகசிந்தாமணி ஆகிய இலெளகீகக் காவியத்தின் இரசனையில் சோழனது வித்துவசபையும் ஈடுபாடு கொண்டிருந்தது. சமண காவியமான சீவகசிந்தாமணியைப் போற்றிப் படித்துக் காலத்தைப் போக்கிய சோழனுக்கும் ஏனையோர்க்கும் சிவகதையாகச் சேக்கிழார் பெருமான் இலக்கிய இரசனையோடு கேட்போரெல்லாம் மகிழும்படியாக திருத்தொண்டர் வரலாறுகளை எடுத்துக் கூறினார். பரவசமுற்ற சோழமன்னன், அதனைக் காப்பிய வடிவில் ஆக்குமாறு சேக்கிழாரைப் பணித்தான். அப்பணி மேற் கொண்ட சேக்கிழார், சிதம்பர தலத்திற் போயிருந்து நடராஜப் பெருமான் “உலகெலாம்” என அடியெடுத்துக் கொடுக்கப் பெற்று திருத்தொண்டத்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய நுல்களை அடிப்படையாகக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற நூலை பக்திச் சுவையும், தமிழினிமையும், காவியநலமும் மிக்கதாகப் படைத் தருளினார்.
இப்புராணம் குறித்த திருத்தொண்டர் வரலாறுகளை விரித்துக் கூறுதல் மூலம், சைவத் திருமுறைகளில் தேவாரங்கள் தொன்றிய பதிக வரலாற்றையும், அவற்றின் பொருள் விளக்கங்களையும், சிவபெருமானின் திருவருட் பெருக்கால் அவ்வப்போது நாட்டில் விளைந்த அற்புதங்களையும், அதனாற் சமூகத்தில் விளைந்த மலர்ச்சியையும் விளக்கும் அருள் நூலாய் விளங்குகின்றது. இதனைப்பார்த்தறிந்துணர்ந்த பெரியார் இது சேக்கிழார்க் கன்றித் தேவர்க்குமரிதெனப் பாராட்டுகின்றனர்.
சைவமெய்யுண்மைகளின் ஆழ நீளங்களை எடுத்துக் காட்டும் கலங்கரை விளக்காய்ப் பெரியபுராணம் காட்சி யளிக்கிறது. தேவாரம் அருளிய சமயாசாரியர்களான மூவர் முதலிகளின் பக்தி அனுபவங்களைச் செழிப்பாக அள்ளி வீசுதல் மூலம் படிப்போர், கேட்போர் அனைவரையும் சிவபக்தர்களாக்கும் சக்தி பெரியபுராணத்திற் பொதிந்திருத் தலைக் கற்றாரும் கேட்டாருமறிவர். சைவக்கோயில்கள் பெரியபுராண படனத்தினாலே தெய்வீகக்களை ததும்பி வருதல் கண்கூடு. பெரியபுராண படனம் ஆலயங்களில் நடைபெற உதவுபவர் உளரேல் அவர் பாராட்டுக்குரியவராவர்.
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 105
eeeYYeeeeeeeYYYYeeYJeSeSeeSeSeeyKeKeeuyyye eee
劉リ
தொண்டு - கருத்து
- கலாநிதி குமாரசாமி சேர்
சேக்கிழார் நாயனார் செய்தருளிய திருத்தொண்டர்
பெரியபுராணம், அறுபத்து மூன்று நாயன்மார்களின் தொண்டுத் திறத்தை உலகத்தவர்க்கு விளக்குவதாய் அமைந்துள்ளமை அந்நூலின் சிறப்பாகும். அதன் பேறாக, “தொண்டர் சீர் பரவுவார்’ என்னுஞ் சிறப்புப் பெயரும் சேக்கிழாருக்கு உரித்தாயிற்று. பெரியபுராணத்தின் பிழிந்த சாரம் ‘தொண்டு என்னும் விழுமியம். தொண்டுக்கும் அதனைப்புரிகின்ற தொண்டர்க்கும் இலக்கியமாகவும் இலக்கணமாகவும் விளங்கும் அருமையும் பெருமையும் பெற்ற நூலாகவும் பெரியபுராணம் திகழ்கின்றது. தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்டல்லாண்டு என்ற வரிசையில் திருத்தொண்டர் பெரியபுராணம், சிவாலய நித்திய நைமித்தியங்களுக்கும் சிவபூசைக்கும் சைவக் கிரியைகளுக்கும் நியமமந்திரங்களாய் அமையப்பெற்றுள்ளமை, தொண்டுக்குச் சைவம் வழங்கியுள்ள இன்றியமையாப் பெருஞ்சிறப்பை எடுத்து உணர்த்துவதாய் உள்ளது. தொண்டு சமயஞ் சார்ந்ததுடன் சமூகஞ் சார்ந்ததும் என்னும் நிலைப்பாடு சைவத்துக்குப் பெருமை சேர்ப்பதாயுள்ளமை குறிப்பிடத்தக்கது. சைவம் ஒரு சமயம்; அத்துடன் அது ஒரு வாழ்க்கைநெறி என்பதை எடுத்துக் காட்டுவதாகவும், சைவத்திற்குச் சமூக நோக்கு உண்டு என்பதை உறுதிப் படுத்துவதாகவும் சைவம் தொண்டு என்னும் திறத்திற்கு வழங்கியுள்ள உயர்வான நிலை உணர்த்துகிறது.
சைவத்தின் சமூகநோக்கின் மூலாதாரம் தொண்டு ஆகும். தொண்டு இறைவனை விசாரித்து, ஒப்புதல் பெற்று, நான் செய்கிறேன்’ என்னும் உணர்வை நீக்கி, கைம்மாறு கருதாது, இறைவனின் திருவருளே தம்மைக் கொண்டு அதனைச் செய்விக்கின்றது என்ற இறை சிந்தனையோடு செய்யப்படுகின்ற பணியாகும்.
“என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அப்பர் வாக்கும், “பணிபுரி பலனை எதிர்பாராதே’ என்ற கீதை வாக்கும் “தொண்டு” என்னும் விழுமியத்தை விளக்குவதாக உள்ளன.
“தொண்டு” என்பது பற்றில்லாத வினை எனலாம். பலனை எதிர்பாராதும், கைம்மாறு கருதாதும் செய்யப்படும் பணிகள், செயல்கள், காரியங்கள் யாவும் பற்றில்லாத வினைகள்.
&rksgationstrø19æ2005
 
 
 

சைவம் கொண்டுள்ள சமூக நோக்குக்கும் சாதாரண
நிலையில் நாம் கருத்திற் கொண்டுள்ள சமூக நோக்குக்கும் வேறுபாடு உண்டு.
சமூக சேவைகள், சமூகத் தொண்டுகள் என்பன பற்றில்லாத வினைகளாக ஆற்றப்படவேண்டுமென்பது சைவ நெறியின் நிலைப்பாடு. அதாவது தர்ம வழியில் அவை ஆற்றப் படவேண்டும். “புன்னெறியதனிற் செல்லும் போக்கினை” விலக்கியும் “மேலாம் நன்னெறி”யில் சென்றும் ஆற்றப்படும் கருமங்கள் அறவழிப்பட்டனவாகின்றன.
“மனத்துக்கண் மாசிலனாதல்’ அறம், என்கிறார் வள்ளுவப்பெருந்தகை. மனம், மொழி,செயல் தூய்மையுடன் செய்யப்படுவன அறத்தின் பாற்பட்டன. அச்செயல்களினால் பிறருக்குத் துன்பங்கள், தொல்லைகள் ஏற்படப்போவதில்லை. மனத்தை மாசுபடுத்துபவை பற்றுக்கள். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் என்பன பற்றுக்களின் விளைச்சல்கள். இவற்றினால் அமைதிக்குப் பங்கமேற் படுகின்றது. பற்றுக்கள் வழிப்பட்டு ஆற்றப்படும் செயல்கள் சமூகத்திற்குத் தீங்கு விளைவிப்பன. எனவே, அவை தீவினைகள் ஆகி விடுகின்றன.
சமூக சேவைகள், சமூகப் பணிகள் யாவும் அவற்றை ஆற்றுவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளைப் பொறுத்து நல்வினைகளும் ஆகலாம்;தீவினைகளும் ஆகலாம். பற்றுக்களின் வழி ஆற்றப்படுபவைகள் தீவினைகள், அறத்தின் வழி ஆற்றப்படுபவைகள் நல்வினைகள்.
நல்வினை, தீவினைகள் பிறவிக்குக் காரணமாகின்றன. இன்பதுன்பங்களுக்கு ஏதுவாகின்றன.
அறத்தை விலக்கிப்பற்றுவழிப்படுதல் மூலம் செய்யப்படும் சேவை, உண்மைச் சமூகசேவையாகாது.
சைவநெறியில் இதற்கு ஒப்புதல் இல்லை. தற்பற்றோடு கூடிய சமூக நோக்குக்குச் சைவத்தில் இடமில்லை. பற்றுக்கள் அறவழியில் வழிப்படுத்தப்படும்போது தற் பற்றுக்கள் அடங்கிவிடுகின்றன. நன்னெறியில் ஒழுகல் கைகூடுகின்றது. சமூகசேவை என்னும் போர்வையில் ஊழல்கள், சுரண்டல்கள்,துர்ப்பிரயோகங்கள், அபகரிப்புக்கள் என்பன நிகழாமல் தடுப்பதற்குச் சைவம் காட்டும் நெறிமுறை இதுவாகும். இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு, சைவத்திற்குச் சமூகநோக்கு இல்லை என்று சிலர் குரல் எழுப்புகிறார்கள். அது தவறாகும்,
73

Page 106
நீதி வழுவா நெறிமுறையில் இட்டார் பெரியோர்
இடாதோர்இழிகுலத்தோர்”
என்னும் அன்னை வாக்கு, சைவத்தின் நிலைப்பாட்டினை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
மனம், வாக்குக் காயத்தினால் எவ்வுயிர்க்கும் தீமை செய்யாமை நீதியாகும். நீதி இறைவனின் திருவருட் குறிப்பு. இறைவனை விசாரித்துக் கருமமாற்றுதல் என்பது நீதியை விசாரித்துக் கருமமாற்றுதல் ஆகும். நீதியே சிவம். “பங்கயத் தயனும் மாலும் அறியாத நீதியே” என்று இறைவனை விளித்துப் போற்றுகிறார் மணிவாசகப் பெருமான்.
நீதியைப் போற்றிச் செய்யப்படுவது தொண்டு. தொண் டர்கள், நீதியை விற்று, நிதியை ஒருகாலும் சம்பாதிக்க மாட்டார்கள். மாறாக, அவர்களிடம் நிதி கிடைக்கப்பெறின், நீதி வழுவா நெறிமுறையில் அந்நிதியை இடுவார்கள். திரு வீழிமிழலையில் பஞ்சத்தினால் பசிப்பிணியுற்ற மக்களின் துயர்துடைக்க, இறைவனை வேண்டி நிதி பெற்று, நீதிசெய்த வர்கள் திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும். அவ் வரலாற்றைப் பெரிய புராணம் உரைக்கின்றது.
“நிதியை நீட்டி நீதி செய்பவர்கள், சீவன் குறுகிச் சிவன் ஆவார்கள். நீதியோடு சம்பந்தஞ் செய்கிறவர்கள், சிவத் தோடு சம்பந்தஞ் செய்கிறார்கள். அவர்களே சைவர்கள், நீதிக்குச் சைவம் என்பது மற்றொரு பெயர்.”
(பண்டிதமணிசி கணபதிப்பிள்ளை) - "சைவநற் சிந்தனைகள்’- பெரியபுராணத்திலே சொல்லப்படுகின்ற நாயன்மார்கள் அனைவரும் திருத்தொண்டர்கள். தொண்டுக்கு வரை விலக்கணம் தந்தவர்கள்; நடந்து காட்டியவர்கள்.
“அரன்றன்பாதம் மறந்து செய் அறங்களெல்லாம் வீண் செயல்" என்றுணரப்பெற்ற திருத்தொண்டர்கள், அவர்கள். தொண்டு என்பது இறைவழிபாடு ஆகும். இறைவன் எங்கும் உள்ளவன். எல்லா உயிர்களிலும் உள்ளவன். உயிர்களின் நலன்பொருட்டுச் செய்யப்படும் சேவை இறை வனுக்குச் செய்யப்படும் சேவையாகும். இதனாலேயே ‘மக்கள் சேவை மகேசன் சேவை” என்கிறது சைவம். சைவத்தின் சமூகநோக்கு ஆன்மிக அடிப்படையிலானது; நீதி தழுவியது; அறம் சார்ந்தது; உலகியலும் ஆன்மிகமும் இணைய வேண்டுமென்பதில் சிரத்தையுடையது.
புண்ணியங்கள் - நல்வினைகள்; பாவங்கள் - தீவினைகள். புண்ணியங்கள் செய்யத்தக்கவை; பாவங்கள் விலக்க வேண்டியவை, புண்ணியத்தில் விருப்பும், பாவத்தில் வெறுப்புங் கொண்டு ஆற்றப்படும் பணி, தொண்டு ஆகின்றது. மனிதர்கள் தாம் ஆற்றும் செயல்களையெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்து, அவற்றை நல்வினைகள் ஆக்கும் போது அவர்கள் தொண்டுமனத்தவர் ஆகின்றனர். மிண்டுமனத்தவர், தொண்டுமனத்தவர் ஆகப்பரிணாமம் பெறவேண்டும். தற்பற்றுக்களை விலக்கும் போது, மிண்டு
74

மனம், தொண்டு மனம் ஆகின்றது. மிண்டு மனம் ஆணவ வயப்பட்டது.
தொண்டுமனம் சிவவயப்பட்டது. பெரியபுராணம் ஏத்தும் நாயன்மார்கள், சிவவயப்பட்டவர்கள்; அதனால் தொண்டு மனத்தவர் ஆயினர். திருத்தொண்டர் பெருமை சொல்லவும் பெரிதே என்கிறார் ஒளவைப் பிராட்டியார்.
மனந்தூய்மை பெற்றுத் தொண்டர் ஆனவர், மெய்ம் மைக்கும் பொய்ம்மைக்கும் வேறுபாடு காணக் கூடியவர்கள். மெய்ப்பொருள் எதுவெனத் தெளிந்து விட்டவர்கள், அப் பொருளோடு ஒன்றித்து விடுவது இயல்பு. அதன்பின்னர் அந்த மெய்ப் பொருளைப் பிரிந்து வாழ இயலாதவர்கள் ஆகிவிடுகின்றனர்.
தொண்டர்கள் அத்தகையவர்கள். எந்தக் கருமத்தையோ, செயலையோ ஆற்றும்போது இறைவனை விசாரித்து, ஒப்புதல் பெற்றே செய்வர். தொண்டுகள் நற்செயல்களாக அமைவ தற்குக் காரணமாக விளங்குவது இந்த விசாரணையேயாகும். நல்வினைகளும் தீவினைகளைப் போன்றே பிறவிக்குக் காரணமாகின்றன. தொண்டு சற்றுவித்தியாசமானது. பெரிய புராணம் போற்றும் திருத்தொண்டர்கள், தமது பிறவியின் நோக்கத்தை அடையப் பெற்றவர்கள். திருத்தொண்டுகள் புரிந்து முத்தியடைந்தவர்கள். *
“இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்’-பிறவியின் பயன் என்ன என்பதை நாவலரின் இக்கூற்று தெளிவு படுத்துகிறது.
இறைவன் உயிர்க்குயிராயுள்ளான். இறைவன் அநாதியிலேயே உயிரோடு அத்துவிதப்பட்டிருக்கின்றான் என்பது சைவசித்தாந்தக் கொள்கை. ஆனால் சாதாரண நிலையில், உயிர் இறைவனோடு அத்துவிதப்பட மறுக்கிறது. காரணம், அறியாமையாகிய ஆணவமலத்துடன் அத்து விதப்பட்டிருத்தலேயாகும். அந் நிலையில் உயிர் ஆற்றும் நல்வினை, தீவினைகள் யாவும் பிறவிக்கு வித்தாகின்றன.
தொண்டு ஆனது இறைவனோடு உயிர் அத்து விதப்பட்ட நிலையில், அறிவு பெற்று, இறைவனை விசாரித்து, எல்லாம் அவன் செயல்' என்று உணரப் பெற்றுத் தன்னலம் மறுத்து, மனம், மொழி, மெய்த்துாய்மையுடன், கைம்மாறு கருதாது, நிட்காமியமாகச் செய்யப்படுவதால், ஏனைய வினைகள், பற்றில்லா வினைகளாக அமைவதாலும், கடவுள் கருத்தறிந்து செய்யப்படுவதாலும், நல்வினை, தீவினைகளைப் போலப் பிறவிக்கு வித்தாகாமல் முத்திக்கு வித்தாகின்றன.
தொண்டு பற்றிய சிலகுறிப்புக்கள்
பெரியவற்றுள் எல்லாம் பெரியது தொண்டு என்பது ஆன்றோர் கண்ட முடிவு. பிறருக்கு நன்மை பயப்பது, எள்ளளவேனும் தீமை விளைவிக்காதது தொண்டு.
தூய்மை, உண்மை, நீதி, அன்பு, அருள், தியாகம்,
6riégaí sagat, Ipaf 2005

Page 107
அஹிம்சை, கரிசனை, பகிர்தல், ஒம்புதல், தர்மம் போன்ற மனித விழுமியங்களுடன் தொடர்புபடுவது தொண்டு.
நான்’ எனும் அகந்தையும், 'எனது என்னும் மமதையும் அற்றநிலையில் செய்யப்படுவது தொண்டு. மனிதனின் செருக்கு, கர்வம், வரட்டுக் கெளரவம், விளம்பரநாட்டம் என்பன அவன் மேற்கொள்ளும் தொண்டினால் அவனிடமிருந்து விலகிவிடுகின்றன.
பணிவு, இன்சொல் ஆகிய இரண்டு பண்புகளும் தொண்டுக்கு அணிகலன்களாகும்.
இனம், மதம், சாதி, குலம், கோத்திரம், பிரதேசம், பதவி, அந்தஸ்து, பால், பணம், பண்டம் போன்றவற்றின் அடிப் படையில் வேறுபாடுகள் பாராது, சமத்துவம், சகோதரத்துவம், மனிதாபிமானம், மனிதத்துவம் என்பனவற்றைப் பேணி ஆற்றப்படுவது, தொண்டு.
"நாமார்க்குங் குடியல்லோம்” என அப்பரடிகள் காட்டிய பாதையில், நீதி வழுவா நெறியில் நின்று, 'உலகம் ஒன்று எனும் ஆன்மிக ஒருமைப்பாட்டினை அநுசரித்து, சுதந்திர உணர்வோடு, அச்சம் தவிர்த்து, மானுடம் போற்றி, இறைவன் செயலாகச் செய்யப்படுவது தொண்டு;
தொண்டில் ஆன்மிகம் செறிய வேண்டும். தொண்டன் இறைவனுடன் அத்துவிதப்பட்டவன். அதனால் எச்செய லையும் தன் செயலாகக் கொள்ளாதவன்; இறை செயலாகக் கொள்பவன். தொண்டு வினைகளைச் செய்யும் போது, இறைவன் திருவருளே தன்னைக் கருவியாகக் கொண்டு அவற்றைச் செய்விக்கின்றது என்னும் ஆன்மிக உணர்வு மேலோங்கி நிற்கும்.
தொண்டன் அறத்தை விலை கூறி விற்கும் அறவிலை வணிகன்' அல்லன்.இம்மையிற் செய்யும் தொண்டு மறுமையில் நன்மை பயக்கும் என்று கருதிச் செய்யப்படுமாயின். அல்லது பேர், புகழ், கீர்த்தி, பட்டம், விளம்பரம், மதிப்பு, மரியாதை என்ப வற்றை எதிர்பார்த்துச் செய்யப்படுமாயின், அது தொண்டு ஆகாது. உலகியல் நோக்குடன் மாத்திரம் செய்யப்படுவது தொண்டு அன்று.
இறைபணி நிற்றல்
எல்லா உயிர்களுக்கும் பாகுபாடின்றித் தொண்டு புரிதல், சைவத்தில் இறைபணியாகவே கொள்ளப்படுகின்றது. அவை அறப்பணிகள், தானதர்மங்கள், பசு புண்ணியங்கள் எனச் சமய அடிப்படையில் கூறப்படுகின்றன. சமூக ரீதியில் அவை சமூகப் பணிகளாகவும் அமைகின்றன. சமயப்பணிகள் சமூக நன்மையின் பொருட்டே செய்யப்படுகின்றன. சமயம் வேறு, சமூகம் வேறு எனச் சைவம் பிரித்துப் பார்ப்பதில்லை.
“இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க’ என்பது ஆலய வழிபாடு; ஆராதனைகள் நித்திய நைமித்தியக் கிரியைகள், பிரார்த்தனைகள் என்பவற்றை முட்டின்றி நடத்துவதற்கான
Gridsgrif longarboof 2005

தாரகமந்திரம் சமய நோக்கில் சமூக நோக்கும் உள்ளடங்கி யிருத்தலை இங்கு காண்கின்றோம்.
சேக்கிழார் பெரியபுராணம் செப்பும் தனியடியார்கள் அறுபத்து மூவரும், தொகையடியார்கள் ஒன்பதின்மரும் இறைபணிநிற்றலைச் சிரமேற்கொண்டவர்கள். அவர்கள் இல்லறத்திலும் இருந்துள்ளனர்; துறவறத்திலும் இருந்துள்ளனர். தொண்டு, இருதிறத்தாரும் செய்யக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
சைவம், தொண்டுகளை ஊக்குவிக்கிறது. காஞ்சிப் பதியிலிருந்து முப்பத்திரண்டு அறங்களை உமாதேவியார் வளர்த்தமை பற்றிப் புராணம் கூறுகிறது. ஒரு சில எடுத்துக் காட்டாகக் கீழே தரப்பட்டுள்ளன.
ஏழைகளுக்கும், ஆதரவற்றோர்க்கும் உணவளித்தல் (அறவைச்சோறு) உடை கொடுத்தல் (அறவைத்தூரியம்) ஆதரவற்றோர்கள் தங்கி வாழ்வதற்கு உறுயுள் அமைத்துக்கொடுத்தல் (ஆதுலர்சாலை) அநாதரவாக இறந்தவர்களின் பிணங்களைத் தகனஞ் செய்தல் (அறவைப்பிணஞ் சுடுதல்) ஐயம் இடுதல் கல்விகற்கும் ஏழைச்சிறார்க்கு உணவு,உடை வழங்குதல் ஆதரவற்ற கன்னிப்பெண்ணைத்தக்கவன் ஒருவனுக்கு மணம் முடித்துவைத்தல் சோலைகளை அமைத்தல் ; மரநடுகை சிறைச்சாலையில் தண்டனை அனுபவிப்பவர்களுக்கு உணவளித்தல் பொது மக்களின் பயன்பாட்டுக்காக கிணறு, குளம் முதலிய நீர்நிலைகளை அமைத்தல் தண்ணிர்ப்பந்தல் அமைத்தல் ஏழைகளுக்கு மருந்து கொடுத்து நோய் தீர்த்தல் * ஏற்கனவே உள்ள ஆதுலர்சாலை, மடம், சோலை,
நீர்நிலைகள் என்பவற்றைப் பேணிப் பராமரித்தல் ஆதரவற்ற, தாய் தந்தையரை இழந்த குழந்தைகளை எடுத்து, ஆதரித்து வளர்த்தல் - (மகவளர்த்தல்) சத்திரம், சாவடி, மடம் அமைத்தலும் பராமரித்தலும் கொல்லப்பட இருக்கும் ஆடு, மாடு முதலிய விலங்கினங்களைப் பணங்கொடுத்து வாங்கி உயிர்மீட்டல். இவ்வறச் செயல்கள் சமய, சமூகத் தொண்டுகளாகும்.
பல்வேறு சமய, சமூகத் தொண்டுகளைச் செய்த அடியார் களின் வரலாறுகளைப் பெரியபுராணம் மேன்மைப்படுத்தி யிருக்கிறது. திருத்தொண்டர் பெரியபுராணம் காட்டும் வழியில் இன்றைய தொண்டு நிறுவனங்களும், தொண்டர் அணியினரும் தொண்டுகள் புரிய வேண்டுமெனச் சைவ உலகம் வேண்டிநிற்கிறது.
75

Page 108
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே!’ என்று சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த திருமூலர் கூறுவார். மனிதனைக் கடவுள் படைத்ததன் நோக்கமே அவனைத் தெரிந்து, அறிந்து தமிழில் புகழ்ந்து, இலக்கியச் சுவையோடு போற்ற வேண்டும் என்பதுதான். பண்டைக்காலத் தமிழர்கள் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டனர். காலம் செல்லச் செல்ல தமிழ் மொழியையும், இறைமையையும் ஒன்றாகவே கருதி பல இலக்கியங்களை தெய்வீக உணர்வோடு பலரும் இயற்றினர். அறிதல் - உணர்தல் - செய்தல் ஆகிய இம்மூன்றும் சேர்ந்ததுதான் மனம் என்றும், அறிதல் இயற்றமிழிலும், உணர்தல் இசைத்தமிழிலும், செய்தல் நாடகத் தமிழிலும் அடங்கும் என்றும், எனவே முத்தமிழ் இயல்பாகவே மனச்செம்மைக்கு வழிவகுக்கும் என்றும் தமிழர்கள் வாழ்வில் கொண்டு வாழ்ந்து வந்தனர்.
எந்தப் பொருளை யார் சொல்லக் கேட்டாலும் அந்தப் பொருளின் உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதனை,
“எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதுஅறிவு”என்று திருவள்ளுவர் கூறுவார். உண்மையான அறிவையே திருவள்ளுவர் மெய்ப்பொருள் என்கின்றார். இந்த மெய்ப்பொருளைப்பற்றி அறிந்து கொள்வதற்கு நல்ல உணர்வு வேண்டும். அந்த உணர்வு மெய்யுணர்வாக இருக்க வேண்டும்.
சமயங்கள் இந்த மெய்யுணர்வை உருவாக்க முயல்கின்றன. உடம்பை விட்டுப் பிரிந்து செல்லும் உயிருக்குப்பிற்காலத்தில் வேறு வாழ்க்கை உண்டா? அப்படி என்றால் அவ்வாழ்க்கை ஒன்றா - பலவா? மனித உடம்பிலா- வேறு உடம்பிலா? பிற்கால வாழ்க்கைக்கு முடிவு உண்டா? முடிவு இருப்பின் அது யாது? அதனை அடையும் வழிமுறை யாது? என்பன போன்ற பற்பல வினாக்களுக்கு விடை கூறிவிளக்கம் அளிப்பவையே சமயங்கள்.
சமய இலக்கியங்கள் மெய்யுணர்வை வளர்த்துக் கொள்ள வழிவகுக்கின்றன. சமய இலக்கியங்கள் வேறெந்த மொழியிலும் இல்லாத அளவுக்குத் தமிழிலே மிகுதியாக உண்டு. புத்தத்திற்கு மணிமேகலை, சமணத்திற்குச் சீவகசிந்தாமணி, வைணவத்திற்குக் கம்பராமாயணம் போன்று சைவத்திற்குப் பெரியபுராணம் அமைந்துள்ளது.
76
 

டும் வமய்யுணர்வு
ТЈтuЈвотgrпшб) —
உலகியல் பற்றுக்களை ஒழித்து, இறைவன் பாலுள்ள பற்றினைக் கொண்டு பேறு பெறவேண்டும் என்னும் பொது நீதியை - அறத்தை- கொள்கையை, நிலைநாட்டுவதே சமயங்களின் குறிக்கோள் ஆகும். மெய்யுணர்வாளர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை,
“பெருமையால் நம்மை ஒப்பார் பேனலால் எம்மைப் பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனமேல் ஒன்றும் இல்லார், அருமையால் நிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்துநின்றார் இவரை நீ அடைவாய்”
என்று இறைவனே சுந்தரருக்குத் தெரிவித்தார் எனச் சேக்கிழார் பெரியபுராணத்தில் தெரிவிக்கின்றார்.
சேக்கிழார் சைவ மெய்யுணர்வாளர்களின் சிறப்பினை, அவர் கொண்ட நீதியை, வாழ்க்கைநெறியைத் திருக் கூட்டச்சிறப்பினில் பட்டியலிடுகின்றார்.
வறுமை, செல்வம் என்னும் இரண்டிலிருந்தும் விடுபட்ட மனநிறைவு உடையவர்கள்; மண் ஒடு, செம்பொன் இரண்டையும் ஒன்றாக மதிப்பவர்கள்; பெருகும் அன்பினால் இறைவனைக் கும்பிடுவது தவிர வீடுபேற்றையும் விரும்பாத மனவுறுதிபடைத்தவர்கள்.
அவர்களுடைய அணிகலன் உருத்திராக்கம்; ஆடை கந்தைத்துணி; இறைவன் பணியே கடமையாகக் கொண்டவர்; உயிர்களிடத்துப் பேரன்பினர்; அவர்களுடைய வீரத்தை என்னால் விளம்ப முடியுமா? என்னும் கருத்தமைந்த,
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார், கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’
ஆரம் கண்டிகை ஆடையும் கந்தையே, பாரம் ஈசன்பணி அலது ஒன்றிலார், ஈர அன்பினர் யாதும் குறைவிலார் வீரம் என்னால் விளம்பும்தகையதோ! s
சேக்கிழார் மாதாட்டுமலர்2005

Page 109
என்ற பாக்களைப் பாடி விளக்குகின்றார் சேக்கிழார் . மெய்யுணர்வாளர்கள் யான், எனது என்னும் பற்றறுத்தவர்கள்; மன அடக்கம் உள்ளவர்கள்; பொறிவாயில் ஐந்தவித்தவர்கள். தொண்டு செய்து பழுத்த பழமாகிய ஒரு மெய்யுணர்ந்த அடியவரின் தோற்றம் எத்தகையது என்பதை,
"தூய வெண்ணிறுதுதைந்தபொன்மேனியும்தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வதுபோல்அன்புநீர்பொழிகண்ணும்பதிகச்செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே!”
என அப்பர் பெருமானைக் காட்டி விவரித்து விளக்குகிறது பெரியபுராணம்.
மெய்யுணர்வாளரின் செயல்கள் இயற்கையை மீறியவையாக இருப்பது உண்டு.
"வாளல்மகவரித்துஉஊட்டவல்லேன்அல்லன்மாது சொன்ன குளால் இளமை துறக்க வல்லேன் அல்லன், நாள் ஆறில் கண்இடந்து அப்ப வல்லேன் அல்லேன் ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே!”
என்று பட்டினத்தடிகள், பிள்ளைக்கறி படைத்த சிறுத்தொண்டரையும், இன்ப விழைவினால் மனைவியை நெருங்காது சத்தியம் காத்த திருநீலகண்டரையும், இறைவனின் இரத்தம் வடியும் கண்ணுக்காகத் தமது கண்ணைப் பெயர்த்து அப்பிய கண்ணப்பரையும் நினைத்து ஏங்குகிறார்.
இவ்வாறு பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பட்டினத்தடிகளே இம்மூன்று சிவத்தொண்டர்களைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளமையால் இம்மூவரின் மெய்யுணர்வு எவ்வாறு பெரியபுராணத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதைச் சிறிது காணலாம்.
அரண்மனைப் பதவியிலிருந்த பரஞ்சோதியார் சிவனடியவர்களுக்குத் தொண்டாற்றும் பணியினைச் சிரமேற்கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தார். திருவெண்காட்டு நங்கை என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு நாள்தோறும் சிவனடியார்களை அன்பு கொண்டு அழைத்து விருந்துண்ணச் செய்வார். இவரது மெய்யன்பை வெளி உலகத்திற்குக் காட்ட சிவபெருமான் ஒருநாள் பைரவ வேடம் கொண்டு அவரது இல்லத்திற்கு வந்து, அமுது உட்கொள்ள விரும்புகிறார். அப்பொழுது பரஞ்சோதியார் பைரவரிடம் அவர் உண்ண விரும்பும் உணவு பற்றி வினவவும், ஒரு குடிக்கு ஒரே சிறுவனாகி, ஐந்து வயதை உடைய, அவயப் பழுதற்ற பிள்ளையை தாய் பிடிக்க, தகப்பன் அரிந்து சமைத்தால் அமுது செய்வதற்கு உடன்படுவேன் என்று பைரவர் வேடத்தில் வந்திருக்கும் இறைவன் கூறவும், அந்த அடியவர் விருப்பப்படி தன்னுடைய பிள்ளையையே சிவனடியார் அறியாமல் அரிந்து அமுது படைக்கிறார். இதை
dréagraif singrito Apaif 2005

உணர்ந்த இறைவன், சிறுத்தொண்டரை மேலும் சோதிக்க அவரையும் அவரது குழந்தையையும், தன்னுடன், உணவுண்ண அழைக்கிறார். செய்வதறியாத சிறுத் தொண்டரும் அவரது மனைவியும் குழந்தையை அழைப்பதுபோல அழைக்க, அக்குழந்தையும் உயிரோடு திரும்பி வருகிறது.
சென்ற உயிர் திரும்பி வருவதன் காரணம் சிறுத்தொண்டரின் மெய்யுணர்வே என இவ்வரலாறு மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.
சிதம்பரத்திலே பிறந்து வாழ்ந்த திருநீலகண்டர், சிவபெருமானிடம் மிகவும் பக்தியுடையவராய்ச் சிவனடியார்களுக்குத் தனது தொண்டாகப் பிச்சை ஒடுகளை வழங்கி வந்தார். அவரது மனைவியாரும் கற்பு நெறி தவறாமல் கணவனுக்கு ஒத்த நங்கையராய்க் கணவரின் தொண்டிற்கு முழு அளவில் ஒத்துழைத்து வந்தார். இருந்தும் இளமை வேகத்தில் நீலகண்டர் ஒருநாள் பரத்தை ஒருத்தி வீடு சென்று இல்லம் திரும்பினார்.
கணவரின் தவற்றை உணர்ந்துகொண்ட மனைவி'இனி எம்மைத் தீண்டாதீர்,நீங்கள் வணங்கும் நீலகண்டத்தின் மீது ஆணை' எனக் கூறவும் எம்மை என்று மனைவி பன்மையில் கூறியதால் பெண் இனத்தையே என் கரத்தால் மட்டுமல்ல, மனத்தாலும் தீண்டேன். இஃது ஆணை என்று மனைவியிடம் நீலகண்டர் கூறினார். அன்றிலிருந்து வெளி உலகத்திற்கு இவர்கள் கணவன்- மனைவியிடம் வாழ்ந்து வந்தாலும் தாம்பத்திய உறவுகொள்ளாமல்,முதிய வயதுவரை வாழ்ந்து காட்டினர். கட்டழகுக் காளையாகத் திருநீலகண்டரும், மிக அழகிய மங்கையாக அம்மையாரும் இருந்து பல்லாண்டுகள் வாழ்ந்து வந்தாலும் கற்பு நெறி தவறாமல், கணவனுக்கு எந்தவித இழுக்கும் நேராமல் காத்துவந்த அம்மையாரைச் சேக்கிழார் பெருமான்
"கற்புறு மனைவியாரும் கணவனைக்கானவெல்லாம் பொற்புறுமெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்தே இற்புறம் பொழியாதங்கண் இருவரும் வேறு வைகி அற்புறு புணர்ச்சியின்மை அயலறியாமை வாழ்ந்தார்"
எனக் கூறுகின்றார். நீலகண்டத்தின் மீது ஆணை எனக்கூறிய மனைவியின் சொற்கள் கேட்டு, இறைவன் பால் கொண்டிருந்த மெய்யுணர்வின் காரணத்தால் மனைவி யையும் தீண்டாமல் வாழ்ந்து வந்த திருநீலகண்டரின் பெருமைதனையும், அயலார்க்குத் தெரியாமல் கணவரின் மானம் காத்து வாழ்க்கை முழுவதும் கற்பு நெறியுடன் வாழ்ந்துவந்த அவரது மனைவியாரின் உன்னதமான தன்மையினையும் நாம் இவ்வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
அடுத்து, கடவுளுக்குத் தன் கண்களை அளிக்க முன்வந்த கண்ணப்ப நாயனாரின் மெய்யுணர்வு எந்த
77

Page 110
அளவிற்கு மேன்மை பெற்றது என்பதனைச் சிறிது ஆராய்வோம். பொத்தப்பி நாடு என்றழைக்கப்பட்ட இடத்தில் வேடர் குலத்தலைவனாக விளங்கியவன் நாகன் என்பவன். எது நல்லது, எது தவறு என்று உணரத் தெரியாதவன். குற்றத்தையே குணமாக கொண்டவன். இவனது மனைவியின் பெயர் தத்தை. இவன் முற்பிறவியில் தவம் செய்ததால் கண்ணப்பனை தவப்புதல்வனாகப் பெற்றான். வில்வித்தையில் நிகரற்றவனாக வாழ்ந்த நாகனைப்பற்றி சேக்கிழார் பெருமான்
பெற்றியாள் தவமுன் செய்தானாயினும் பிறப்பின் சால்பால் குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலைநின்றுள்ளன் விற்றொழில் விறலின்மிக்கான்வெஞ்சினமடங்கல் போல்வான் மற்றவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்
என்று வர்ணிக்கின்றார்.
திண்ணன் என்று பெயரிடப்பெற்று வளர்ந்த கண்ணப்பனுக்கு பதினாறு வயது நிரம்பியபொழுது, வேடர்கள் எல்லாம் கூடி நாகனிடம், ‘அரசே! உமக்கு வயதாகிவிட்டது. காட்டில் மிருகங்கள் தொல்லை அதிகமாகிவிட்டது. ஆதலால் இளவரசனான திண்ணப்பர் தலைமைப் பொறுப்பேற்று, கன்னி வேட்டைக்கு அனுப்பப்பட வேண்டும், என்று வேண்டினர். அவ்வாறே பெற்றோரும் சம்மதித்து அனுப்பிவைத்தனர். தொல்லை கொடுத்த மிருகங்களை அழித்து திருக்காளத்தி மலையை அடைந்ததும், புதிய ஒரு மெய்யுணர்வைத் திண்ணப்பர் உணர்ந்தார். காளத்தி நாதரின் திருமுன் நின்றபோது மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார் மகிழ்ந்தார். ஒடித் திருக்காளத்தி நாதனைத் தழுவினார்; உச்சி மோந்தார். சாதாரண மக்களுக்குச் சிலையாகத் தெரிந்த காளத்தியார் திண்ணப்பருக்கு உயிருள்ள பொருளாகக் காட்சி தந்தார். இந்த மெய்யுணர்வை,
"மகமார்திருக்காளத்திமலை ஏழு தொழுந்தாயுள்ள ஏகநாயகரைக் கண்டார் எழுந்த பேரூஉவகை அன்பின் வேகமானது மேற்செல்ல மிக்கதோர் விளரவினோடும் வேகமாய் ஒடிச் சென்றார்தழுவினார் உச்சிமோர்ந்தார்
நின்றார்” எனக் கூறுகின்றார்.
78

சிவபெருமானைக் கண்ட திண்ணப்பன், இறைவனுக்கு என்ன செய்யலாம் என்று எண்ணினான். சிவாச்சாரியார் அன்று காலை செய்திருந்த அபிஷேகத்தைத் துடைத்து, தன் வாயில் கொணர்ந்த நீரை இறைவர் தலையில் ஊற்றி அபிடேகம் செய்து, தன் தலையில் வைத்திருந்த தளிர்களைப் பெருமான் தலையில் சூட்டித் தான் கொணர்ந்திருந்த இறைச்சியைப் பெருமானுக்கு நிவேதனம் செய்து உண்பித்து உள்ளம்பூரித்தார். இவ்வாறு தொடர்ந்து ஐந்து நாட்கள் பூசை செய்தார். தினமும் காலை வேளையில் பூசை செய்த சிவாச்சாரியார், திண்ணப்பர் நாள்தோறும் செய்து வந்த பூசையின் மூலம் ஒவ்வொரு நாளும், அங்கு இறைந்து கிடந்த எலும்புத்துண்டுகளையெல்லாம் பார்த்துக் கலங்கினார். ஐந்தாவது நாள் இரவு சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய இறைவன் யாரை நீர் தீண்டத்தகாதவன், மூடன் என்று நினைக்கிறீரோ, அவன் பெருமையை நாளை நீர் மறைந்து நின்று காண்பீர்' என்று கூறிச் சென்றார்.
மறுநாள் சிவாச்சாரியர் வழக்கம்போல் இறைவனுக்குப் பூசை செய்து மறைந்திருந்தார். திண்ணப்பர் வழக்கம்போல் நண்பகல் உடும்பின் இறைச்சியோடு இறைவனை நோக்கி வரவும் இறைவனின் முக்கண்களிலும் குருதிப் பெருகி ஓடுவதைக் கண்டு பதைபதைத்தார். மனம் சுழன்று வாய்ப்புனல் சிந்த, இறைச்சியோடு அம்பு சிதற, நிலத்தில் விழுந்து புரண்டு தீங்கு செய்தவரைத் தேடிக் காணாது, மருந்து இட்டும் உதிரம் நிற்காமல் போகத் தன் ஒரு கண்ணை அம்பினால் பெயர்த்து, இறைவனின் வலது கண்ணில் அதைப் பொருத்த குருதிப்பெருக்கு நின்றது. அதனால் மகிழ்ந்து மற்றக் கண்ணையும் பிடுங்கி இறைவனுக்கு வைக்க எண்ணி, அதை அடையாளம் காண தன்கால் ஒன்றினை இறைவனின் மற்றக் கண்மேல் வைத்து தனது மற்றக் கண்ணினையும் பெயர்க்க முற்பட்டான். இறைவன் உடனே தோன்றி நில்! கண்ணப்பா' என்று மும்முறை கூறி, கண்ணப்பன் கையைத் தடுத்து நிறுத்த, விண்ணவர் யாவரும் மலர் மாரி பொழிந்தனர். வேடர்குலத் திண்ணப்பர், கண்ணப்பர் ஆனார். இறைவன்பால் இவ்வாறு எழும் கனிந்த மனத்தின் பக்தியே மெய்யுணர்வாக மிளிர்கின்றது என்பதனைப் பெரியபுராணம் கண்ணப்பர் வாயிலாக நமக்கு உணர்த்துகின்றது.
சேக்கிழார் மாநாடு மலர்2005

Page 111
இலங்கையில் 5வது உலகச் சேக்கிழார் திருமுறை
மாநாடு நடைபெறுவதையும் அதன் வழி மலர் மலர்ந்து திருமுறைகள்-சேக்கிழாரின்-புகழ்மணம் பரப்ப இருப்பதனை அறிந்து பெரிதும் மகிழ்கின்றேன். இப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு உழைக்கும் அத்துணை பெருமக்களுக்கும், ஏற்று நடத்துகின்ற இலங்கை அரசினையும் நெஞ்சாரப் பாராட்டி, வாயார வாழ்த்தி வணங்கி, மகிழ்கின்றேன். சேக்கிழாரின் கொள்கைப்படி உலகெலாம் பெருமை பரவ வேண்டும் என்பதற்குச் செயல் வடிவம் தருவது போற்றக்குரியது அல்லவா?
தெய்வச் சேக்கிழார் காலத் தமிழகம் அதற்கு முன்பும் பின்பும் இல்லாத வகையில் மலேசியா, சிங்கப்பூர், கனடா இலங்கை, தெலுங்கான நீங்கிய ஆந்திரப் பகுதி, திருவனந்தபுரம் நீங்கலாக உள்ள கேரளம், மைசூர் நீங்கிய கர்நாடகா என விரிந்து பரந்து இருந்தது. அப்பொழுது நாட்டின் தலைமை அமைச்சராக (பிரதமராக) விளங்கினர் தெய்வச் சேக்கிழார். குறிக்கோள் இல்லாது அழிந்து போன பழைய நாகரீகங்களைப் போல், நம் தமிழ் நாகரீகம் பண்பாடு கலை கலாசாரம் அழிந்து விடக்கூடாது என எண்ணித்தான், குறிக்கோள் கொண்ட வாழ்வினைக் கொண்டு வாழ்ந்த 60 அடியார்களின் வரலாற்றை எடுத்துக் கூறி, குறிக்கோளைக் கொண்ட தமிழ்ச் சமுதாயம் உருவாகவே திருத்தொண்டர் வரலாற்றினை உருவாக்கினார். தமிழ் மொழியின் வளமையை முழுமையாகப் பயன்படுத்தி, தமிழர்களின் நாடி நரம்புகளில் எல்லாம் பக்தி, தொண்டு, தியாகம், தூய்மை ஆகிய உயர் பண்புகளைப் பாய்ச்சி ஒரு புதிய சமுதாயம் படைக்க முயன்ற அருளாளர்தான் தெய்வச் சேக்கிழார்.
உலகமொழிகளில் தமிழ்
உலகில் உள்ள மொழிகள் 276; அவற்றில் வரிவடிவம் உள்ளவை 1063. இவ்வாறு தோன்றி வளரும் மொழிகளைக் கட்டிக் காத்து வளர்த்தவர்கள் புலவர் பெரு மக்களாவர். அப்புலவர் பெருமக்கள் இரு திறத்தினர். ஒரு வகையினர் அறிவுப் புலவர்கள். பிறிதொரு வகையினர் அருட்புலவர்கள். அறிவுப் புலவர்களின் தீஞ்சுவைக்கவிகள் மண்ணுலக வாழ்வினை வாழ நன்கு வழி காட்டுவன. உலகியல் இன்பங்களைத் துய்க்க வழி காட்டுபவையாகும்.
6trééignif Iomort' Ivaf 2005
 

ம பிரதமர்
ஆனால், அருட்புலவர்களின் பாடல்களோ மனித குலத்தின் இம்மை வாழ்வுக்கு வழிகாட்டுவதோடு அமையாது, மறுமை வாழ்வுக்கும், உயர்நிலை எய்தி மீண்டும் பிறவா நெறி பெறவும் உறுதுணை புரிவதாகும்.
உலக மொழிகளில் தலைசிறந்து விளங்கும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு மொழியுண்டு. அவை,
1. தமிழ் - பக்தி 2. ஆங்கிலம்-வணிகம் 3. லத்தீன்-சட்டம் 4. ஜெர்மன்-தத்துவம் 5. பிரெஞ்சு-தூது 6. இத்தாலி-காதல் நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ் மொழியானது, பக்தி உணர்விற்கும் அன்பின் பெருக்கிற்கும் வழிகாட்டுவதாகும். இச்செந்தமிழ் மொழியைக் கட்டிக் காத்தோர் எண்ணிலாத புலவர் பெருமக்களாவர். சங்க காலம் தொடங்கி, கபாடபுரத்தில் தோன்றிய முதல் சங்கப் புலவர்களும், இன்றுள்ள மதுரையில் தோன்றிய சங்கச் சான்றோர் இடையாக, இன்று வரை வாழும் எண்ணிலாத சான்றோர்களும் தமிழ் வளர்த்துத் தமிழ் மக்களை உலகின் முன்னே தலை நிமிரச் செய்தனர்.
விரிந்து பரந்த தமிழகம்
தெய்வச்சேக்கிழார் தொண்டை நாட்டிலே (இந்நாளில் உள்ள செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்கள்) குன்றத்தூர் என்ற நகரிலே திருஅவதாரம் செய்தார். இளமையிலே இறையருளால் எண்ணிலாத குண நலன்களும், கல்வி அறிவும் இறையுணர்வும் மிக்கவராய் விளங்கினார். அவரது காலமான 12 ஆம் நூற்றாண்டு, நம் தாய் மொழியான தமிழ் மொழி, உலகளாவிய பெருநிலப் பரப்பினைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது. சுருங்கச் சொன்னால், இவர் காலத்திலே தான் விரிந்து பரந்த தமிழ்நாடு தமிழர் வசம் இருந்தது எனலாம். கடல் கடந்து சென்று நம் தமிழ்க் கொடியை ஏற்றித் தமிழ்நாட்டின் எல்லையை விரிவுபடுத்திய காலம். அத்தகைய விரிந்து பரந்த தமிழகத்தினை அப்போது அநபாயன் என்ற குலோத்துங்கச் சோழன் அரசோச்சினார். அப்பெருமன்னன் சேக்கிழாரின் கல்வி நலம், கேள்வி நலம்,
79

Page 112
தெய்வ பக்தி, நுண்ணறிவு ஆகியவற்றை அறிந்து அவரை அழைத்துத் தன் நாட்டின் தலைமை அமைச்சராக்கினார். அன்றைய முடியாட்சியில் தகுதி, திறமை உள்ளவர்களை அழைத்து அமைச்சராக்கினார். தலைமை அமைச்சர் ஆக்கி அவருக்கு உத்தம சோழப் பல்லவர் என்று பட்டமும் ஈந்தார். சோழ நாட்டின் அமைச்சுப் பொறுப்பேற்ற சேக்கிழார், கண்ணை இமை காப்பது போல மன்னனையும் மக்களையும் காத்து வந்தார்.
புரட்சித் தீபம்
தெய்வச்சேக்கிழார் திருத்தொண்டர் வரலாறு என்ற மாபெரும் காவியத்தைப் பாடியருளினார் என்பது யாவரும் அறிந்ததே. அக்காப்பியம் தமிழ்ச் சமுதாயத்தைப் பிடித்திருந்த தீமைகளை - கொடுமைகளைத் தடுத்துநிறுத்தி, அன்புப் பாதையிலே நடமாட வைத்த புரட்சிக் காப்பியமாகும். ஆண்டான் - அடிமை, பணக்காரன் - ஏழை, படித்தவர் - படிக்காதவன், நாடாளும் மன்னன் - குடிமக்கள், ஆண் - பெண், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி, பட்டாளத்துச் சிப்பாய் - படைத் தளபதி, அந்தணர் - தீண்டத்தகாதவர், சிறு குழந்தை - வயது முதிர்ந்த பெரியவர் என்ற எல்லா வேறுபாடுகளையும் அடித்து நொறுக்கி, அடியவர்கள் யாரானாலும் அனைவரும் சமமே என்ற புத்தம் புதிய காப்பியமாக, அதுவரை தமிழகத்தில் நம் சமய நெறியில் இருந்த குறைகளை எல்லாம் நிவர்த்திசெய்த புரட்சிக் காப்பியமாக, இத் திருத்தொண்டர் வரலாற்றினைப் பாடியருளினார்.
இக் காவியத்தில் வேறுபாடுகளே கிடையாது. இது மனித நேயத்தை - சத்தியத்தை, தொண்டினை - உள்ளத் தூய்மையினை உயிர் மூச்சாகக் கொண்டது. அதுவரை இச்சமயத்தில் விளங்கிய மாசுகளையும் குறைகளையும் களைந்தவர். இத்தகைய புரட்சிக் காப்பியம் பாடிய பெருமகன் மிகச் சிறந்த புரட்சியாளராய்த்தான் இருக்க முடியும். தோழர் லெனின் ஒரு முறை சொன்னார். எவன் ஒருவர் புரட்சிக் கருத்துக்களை, புரட்சிகரமான எழுத்துக்களை வெளியிடுகிறானோ அவனே முதலில் மிகச்சிறந்த புரட்சியாளனாக விளங்க வேண்டும். அப்போதுதான் அவன் புரட்சிகரமான சிந்தனைகளைச் சிந்தித்து வெளியிட முடியும் என்றார்.
நம் தெய்வச்சேக்கிழார் தம் காலத்தின் மகத்தான புரட்சிகரமானவற்றை உலக மக்களுக்குச் சொன்னார் என்றால் அவரும் புரட்சியாளராகத் தானே விளங்க முடியும். அவர் செய்தது சமயப் புரட்சி.
ஆண்டவணை வரவழைத்தல்
பண்டை நாளில் நம் சமய நற்சான்றோர்கள் பல்வேறு திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டனர்.
80 iiiiiiiiiiiiiiiiiiiiii

அத் திருக்கோயில்களில் தங்கள் உள்ளம் பறிகொடுத்த சிவாலயத்தில் தம் கடைசி வாழ்நாட்களில் அங்கேயே தங்கி இறைவனுக்குத் தொண்டு செய்து இறைவன் திருவடி பெற்றனர். காசி, தில்லை, திருவண்ணாமலை போன்ற தலங்களுக்குச் சென்று அங்கேயே தங்கி வழிபாடு செய்ய இயலாத அன்பர்கள் மனவேதனையுடன் வாழ்ந்து மறைந்தனர். ஆனால் நம் சேக்கிழார் அவர்கட்கெல்லாம் வழிகாட்டினார். ஆம் அவர் சிந்தை கவர்ந்த திருக்கோயில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேசுவரம் என்ற திருக்கோயிலாகும். அங்கு பல திருப்பணிகளைச் செய்தார். நாகேசப் பெருமானுக்குப் பல நிபந்தனைகள் அளித்தார். சோழ நாட்டுத் திருநாகேசுவரத்தில் சேக்கிழார் உருவமும், அவர் தம் தாயார், தம்பியாரின் திரு உருவமும் உள்ளதனை இன்றும் நாம் காண்கின்றோம். சேக்கிழார் பெருமானே நாகேசப் பெருமான் திருவருளால் அவதரித்தவர். இதனை,
மாநகம் அருச்சித்தமலர்க்கமலத்தாள் வணங்கி நானாளும் பரவுவார்பிணிதீர்க்கும் நலம் போற்றி என வரும் பெருமான் திருவாக்கால் அறியலாம்.
திருநாகேசுவரம் தான் ஆன்மார்த்த தலமாயிற்று. ஆனால் வாழ்நாள் முழுக்கச் சோழநாடே கதி என்று இருக்க முடியுமா? ஆண்டவனை அன்போடு அழைத்தால் அவன் எவ்விடத்தும் எப்போதும் வருவான் என உறுதிபட நம்பினார். அதன் விளைவாகத் தம் தொண்டை நாட்டுப்பிறந்த ஊரான குன்றத்தூரில், சோழநாட்டுத் திருநாகேசுரம் போலவே நாகேசப்பெருமான் எனப் பெயரிட்டு வழிபாட்டுத்தலமதனை உருவாக்கினார். ஆம், ஆண்டவனை நோக்கி நாம் செல்வதை விட, நாம் விரும்பி அழைத்தால் பெருமான் அங்கே எழுந்தருளி அருள் புரிவான் என்ற புதிய தத்துவத்தைக் கொள்கையைச் சொல்வதோடு நில்லாமல் அவரே வழி காட்டினார். அதன் விளைவு, காசி கேதாரம் போன்ற தொலை தூரக் கோவில் செல்ல முடியாத அன்பர்கள் தங்களூர்த் திருக்கோவிலிலேயே காசி விசுவநாதரையும், விசாலாட்சி திருக்கோயில்களையும் அமைத்து வழிபட்டு மகிழ்ந்தனர். இதற்கு முன்னோடியாக விளங்கியவர் சேக்கிழார் தான். இது, சமய உலகில் இவர் செய்த மகத்தான புரட்சியாகும். புரட்சிகரமான மாபெரும் காவியம் அமைக்கப் புகுந்த பெருமான், தம்மளவில் மகத்தான சமயத் திருக்கோயில் அமைப்பில் வாழ்வியல் புரட்சிக்காரராகவும் விளங்கினார்.
இனித் தெய்வச்சேக்கிழார் எப்படி எல்லா நலங்களும் பெற்று விளங்கினார், தம் காவியத்தில் எல்லாப் பொருளும் உள்ளவாறு உருவாக்கினார் என்பதையும், அத்திருக் காப்பியத்தில் என்ன என்ன புதுமைகள், புதிர்கள் செய்தார் என்பதனையும் காண்போம்.
சமய உலகில் தலைவர்களுக்கே தலைமையிடம் என்பது தவிர்க்க இயலாததாகியது. தமிழ் இலக்கியத்தில்
dréagarf Jørømth pamf2oo5

Page 113
இளங்கோவின் சிலப்பதிகாரம் தவிர எஞ்சிய நூல்களெல்லாம் ஒன்று ஆண்டவனைத் தலைவராகக் கொண்டிருக்கும். அல்லது, நாடாளு மன்னவனைத் தலைவனாக அமைத்துக்காவியம் வெளியே வரும். அந்த நிலையை2ஆம் நூற்றாண்டில் இளங்கோ அடிகள் அடியோடு மாற்றியமைத்துச் சாதாரண வணிகர்குலக் கொடியான கண்ணகியைக் காப்பியத் தலைவியாக்கினார். அதற்குப்பின் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இப்பாணியில் தெய்வச் சேக்கிழார் பாடியருளினார்கள். தெய்வச்சேக்கிழார் பாடியருளிய திருத்தொண்டர் புராணம் இரு காண்டங்கள், 13 சருக்கங்களைக் கொண்டது. சமய உலகில் தோன்றிய காவியங்கள் யாவும், இறைவனையே காப்பியத் தலைவனாகக் கொண்டவை ஆகும். கந்த புராணம், கந்தவேளைத் தலைவனாகக் கொண்டது. திருவிளையாடல் புராணம் சொக்கலிங்கப் பெருமானைக் காவியத் தலைவனாகக் கொண்டது. மற்றைய சிவபுராணங்கள் சிவனைத் தலைவனாகக் கொண்டவை. இராமாயணம், கடவுள் அவதாரமான இராமனைக் காவியத் தலைவனாகக் கொண்டது. சமய உலக இலக்கியங்கள் இப்படி அமைந்தமை அன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாததாகும்.
ஆனால், தெய்வச்சேக்கிழார் அந்த மரபினை மாற்றியமைத்து ஆண்டவனுடைய காப்பியத் தலைமையை மாற்றி ஓர் தொண்டனைத் காவியத் தலைமகனாக ஆக்கிப் புதுமை செய்தார். ஆம், நம்பியாரூரார் என்ற தொண்டரைக் காவியத் தலைவனாக்கிப் புத்தம் புதிய மரபினை உருவாக்கினார். ஆண்டவனையே தலைவனாக்கி மகிழ்ந்த பக்தர் கூட்டத்தில், ஓர் தொண்டரையே காவியத் தலைவனாக்கித் தம் நூலுக்குத் திருத்தொண்டர் புராணம் என்று பெயரிட்டார். திருத்தொண்டர் புராணம் என்றால் சுந்தரர் வரலாறு என்றே பொருள்படும். அதனால் தான் திருவிளையாடல் புராண ஆசிரியர் “தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும்” என்று பாடி மகிழ்ந்தார். தொண்டராகிய சுந்தரர், நாதனாகிய சிவனைத் தூதாக விடுத்தார் எனப்பாடி மகிழ்ந்தார்.
சமத்துவ முரசு
இத் திருத்தொண்டர் புராணம் என்ற காவிய மாளிகையில் எண்ணிலாத புதுமைகளைக் காணலாம். எல்லாச் செய்திகளையும் காணலாம். பண்டை நாளில் நம் சமயம் சாதி வழி நிற்பது, ஆண்டான் அடிமை என்ற பொருளியல் பாகுபாடு கொண்டு நிற்பது. ஆனால், நம் சேக்கிழார் பெருமான், அவ்வாறு எவ்வகையிலும் நம் திருத்தொண்டர்களைச் சமய நெறியாளர் பிரிக்க கூடாது. அனைவரும் சமம் என்பதனை இக் காவியத்தில் வலியுறுத்தினார். அவர் பாடிய காவியத்தில் நாடாளும் மன்னவனானாலும், நாட்டுக் குடிமகனானாலும், படித்தவரா னாலும், படிக்காத பாமரரானாலும், சிறு குழந்தையானாலும், வயது முதிர்ந்த பெரியவரானாலும், அந்தணரானாலும்,
Gráfgai 19nöató 19of 2005

அடிமைச் சேவகம் புரியும் தீண்டத் தகாதவரானாலும், அர்ச்சகர் ஆனாலும், ஆதி திராவிடரானாலும், நாட்டுத் தலைவரானாலும், காட்டுவழி வேடுவரானாலும், ஈசனடியைத் தொழும் தொண்டர்கள் அனைவரும் சமம், ஒரே தரம், ஒரே நிறை என்று தம் காவியத்தில் ஒர் சமரச, சமத்துவ முரசு கொட்டுவதைக் காணலாம். நாடு, மொழி, வழிபாடு, வாழ்வியல் முறை அனைத்தையும் தம் காவியத்தால் இணைத்த பாங்கினைப் பார்க்கின்றோம். அடியார் என்றால் எப்படி இருக்க வேண்டுமென நீ கூறாதே என்று கூறியவர் சேக்கிழார். அர்த்த சாஸ்த்திரம் என்ற நூலை எழுதிய சாணக்கியர், வள்ளுவர் காலத்தவர். ஆனால் வள்ளுவம் இன்றும் நிலைத்து நிற்கிறது. ஆனால் சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரம் அஸ்தமித்து விட்டது. சாணக்கியன் அரசர், அமைச்சர் பற்றியெல்லாம் கூறினார். அத்தோடு நில்லாமல் யார் அரசர், யார் அமைச்சர், அவர் எந்த ஊர் என்ன சாதி என்றெல்லாம் கூறினார். அது நடவாத போது, அந்நூல் சிறப்பிழந்து விட்டது. ஆனால் வள்ளுவரோ யார் அரசர், அமைச்சர், மனைவி மக்கள் என்றெல்லாம் கூறாமல் அவர்களுக்கு உரிய பண்புகளையே கூறினார். பாத்திரங்களை காலத்தின் கரத்தில் விட்டார்.
ஆனால், அவரவர்க்குரிய பண்புகள் என்றும் அழியா. அதுபோல் நம் தெய்வச் சேக்கிழார் அடியவரின் பண்பு நலன்களையே கூறினார். அவர் இப்படித்தான் இருக்க வேண்டும், இன்ன சாதி என்று கூறவில்லை. திருத்தொண்டர் என்போர் எட்டு முழு வேட்டியை அந்தணர்கள் போல் கட்ட வேண்டுமென்றோ, இத்தனை இடங்களில் திருநீறு இட வேண்டுமென்றோ, குடுமி வைக்க வேண்டும் என்றோ, பூனூல் போட வேண்டுமென்றோ கூறவில்லை என்பதனை நாம் காணவேண்டும். ஆண்டவனின் மெய்த்தொண்டர்களை,
ஆரம்பண்டிகை ஆடையும்கந்தையே பாரம் ஈசன் பணி அலாதொன்றிலார் என்று பாடி, அவர்களை அடையாளம் காட்டினார். ஆனால் எல்லோரும் அப்படித்தான் இருக்க வேண்டுமெனக் கருதாதே; நிர்ப்பந்திக்காதே, அவர்கள்,
“வேண்டமாறு விருப்புறு வேடத்தர் ஆனால் தாண்டவம்புரி தம்பிரானுக்கு அன்பராக இருப்பர்” என்று அடையாளம் காட்டினார்.
திருநீறு வைக்காமலேயே ஓர் சிவனடியார் ஓர் திருத்தொண்டராக இருக்கலாம் என்று காட்டுகின்ற அற்புதத்தைக் காண்கின்றோம். கண்ணப்பர், திருநாளைப் போவார் போன்ற - அன்பே வடிவான அதிபத்தர் போன்ற - அடியவர்கள் திரு இட்டார்கள் என்று நம்மால் அறிய முடியவில்லை. இன்னும் சொல்லப் போனால், இவ்வடியார்கள் திருநீறு, உருத்திராட்சத்தினைப் பார்த்தே இருப்பார்களா என்பதே சந்தேகம். இதைவிட மிகச் சிறப்பான ஒன்றையும் இக்காவியத்தில் சேக்கிழார் காட்டுவதைக் காண்போம்.
8

Page 114
சாக்கியர் என்ற அடியார் ஒருவர் காஞ்சியம்பதியிலே வாழ்ந்தார். தத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு சைவத்தின் சிறப்பினை உணர்ந்தவர். ஆனால் தன் புத்தமத வேடத்தோடே இருந்தார். ஓர் நாள் ஒர் திருக்கோயில் திறந்தவெளி சென்றார். அவர் உள்ளத்தில் படபடப்பு, உணர்ச்சி வேகம் உந்தித் தள்ள அருகிலிருந்த ஒர் கல்லை எடுத்தார். பெருமானின் திருமேனியை நோக்கி இட்டார். எவ்வளவு பெரிய - ஒப்புக் கொள்ள முடியாத - செயல். சிவலிங்கத் திருமேனி என்பது சிவநெறியாளர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வழிபட்டு வந்த ஓர் அடையாளம், ஒர் வழிபாட்டுச் சின்னம். அதனைப் புறத்தோற்றத்தால் புத்த மதத்தவரான சாக்கியர் கல்லாலே அடித்தார். சைவ சமயத்தின் அடையாளச் சின்னத்தைக் கல்லால் அடித்தவரை
多
விடுகிறான்.
ܢܠ
82
உயிரும்இ
தந்தத்தின் மேல் இரத்தினக்கல் இருக்கிறது. அ அழுத்திட பதிந்து கொள்ளும், அதுபோல் நமது இரத்தின மணி விளங்குகிறது.உயிர் உருகியவு

மெய்த் தொண்டராக்கி, அவரை அடியவராகக் கொண்டு புராணம் பாடிய அற்புதத்தைக் காண்கின்றோம். இதனைக் கூற வந்த சேக்கிழார், “செயலைப் பார்க்காதே; உள்ளத்தைப் பார். சாக்கியர் வெறுப்பாலே கல்லால் அடிக்கவில்லை. என்ன செய்வது என்று புரியாத ஒர் உந்துதலாலே செய்தார். எனவே அன்பர்களின் அடையாளம் பாராதே, செயல் பாராதே சிந்தையைப் பார்”என்கின்றார்.
எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்
மன்னிய சீர் சங்கரன்தாள் மறவாமை பொருள் இதுவே அடிப்படை என்பதைச் சேக்கிழார் காவியத்தில் காண்கின்றோம்.
வாழ்க அடியவர் புகழ்! வளர்க சேக்கிழார் செந்நெறி!
N
1றைவனும
ந்தத் தந்தம் உருகினால் மணிதந்தத்தில் நன்கு உயிராகிய தந்தத்தின் மீது இறைவனாகிய டன் இறைவன் அந்த உயிரில் ஏன்பட்டு
الصر
GFigri paparë pof 2005

Page 115
1- 8056)5Tairli LDTIDaf ජී% சேக்கிழார் மன்றம்,
影
தெய்வச் சேக்கிழாரால் படைக்கப்பட்ட ஒப்பற்ற கரு வூலம் பெரியபுராணம். இறைவனே அடி எடுத்துக் கொடுத்து தோன்றாத் துணையாக இருந்து, உள்ளிருந்து உணர்த்த சேக்கிழாரால் பாடப்பட்ட நூல். சிவபெருமானையும், அவரைப் பூசிக்கும் முறைகளையும், அதனால் ஏற்படும் பலன்களையும், தொண்டின் சிறப்பையும் அடியார்களின் பெருமைகளையும் விரித்துக் கூறும் ஞானப் பெட்டகம் அது. அதுமட்டுமல்லாமல் மனித சமுதாயம் நல்வாழ்வு வாழ, வாழ்வியல் நெறிகள் பல வற்றை வலியுறுத்திக் கூறுவது அதன் சிறப்பு. மண்ணில் நல்லவண்ணம் வாழ நமக்கு நாயன்மார்கள் வழிகாட்டுகின் றனர். இன்றைய விஞ்ஞான உலகம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சமுதாயக் கருத்துக்கள் திருமுறைகளில், குறிப்பாக பெரிய புராணத்தில் மலிந்து இருக்கின்றன.
நிறைய பணம், நல்ல உடை, இருப்பிடம் இவற்றை மட்டும் வைத்து வாழும் வாழ்வு நல்வாழ்வு என்று கூறமுடியாது. பிறர் புகழ வாழும் வாழ்வுதான் நல்வாழ்வு. இதைத் திருவள்ளுவப் பெருமான்,
"தோன்றின் புகழொடு தோன்றுக’என்றார். புகழோடும் பக்தியோடும் வாழ்ந்து வழிகாட்டியவர்கள் நாயன்மார்கள்.
பெரியபுராணம் கூறும் நல்வாழ்விற்கான வழிமுறைகள்:- (கீழே அடைப்பில் குறிக்கப்பட்டுள்ள எண்கள் பெரியபுராண செய்யுள் எண்) (சி. கே. எஸ் உரைநூல்) 1. மக்கள் அன்புடனும், ஒழுக்கமுடனும், பணிவுடனும் பக்தியுடனும் வாழவேண்டும். மனித வாழ்வு நிலையானதல்ல என்ற உணர்வும் வேண்டும். (இவை எல்லா நாயன்மார்கள் வாழ்விலும் காணக்கூடிய நீதிகள்) 2. செம்மை இல்லறமே நல்லறமாகும் (361). தன் கொள்கைக்குத் தகுந்தவாறு உதவக்கூடிய மணமகளைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் (3671) 3. இல்லறத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் இடுக்கண் களைப் பிறர் அறியா வண்ணம் வாழ வேண்டும். (367) 4. பசித்தோர்க்கும், சிவஅடியார்களுக்கும் உபசரித்து உணவிடல் வேண்டும். (442,443, 1734) மற்றும் நம்மிடம்
deráliágriff Barateb gaof 2005
 
 

வீ. தட்சிணாமூர்த்தி, - வேலூர் தமிழ்நாடு
10.
11.
12.
13.
14.
15.
16.
அளவுக்கு அதிகமாக இருந்தால் அதை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். (3182) அளவோடு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (நாயன்மார், ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக் கொள்ளவில்லை) மழலைக்கல்வியை எல்லோருக்கும் மூன்று வயதில் ஊட்ட வேண்டும் (1285-1719-3681) எல்லோரும் தொழில் செய்ய வேண்டும். (நாயன்மார் பெரும்பாலோர் தொழில் செய்தவர்கள்) நீதி அறிந்த அறிஞர்கள் அடங்கிய சபை வேண்டும். நீதி விசாரணை முறைப்படி நடக்க வேண்டும். தாமதமின்றி நீதி வழங்கப்பட வேண்டும். நீதிக்கு அரசனும் கட்டுப்பட வேண்டும். (127, 128 - 197- 202209) ஒல்லும் வகையால், அறவினையும் தொண்டும் செய்திடல் வேண்டும் (நாயன்மார்கள் அனைவரும் தொண்டில் சிறந்து இருந்தனர்) உயிர்கள் நேயம் வேண்டும். (121, 1223,1228) ஆள்பவர்களின் கடமைகள் (121) சாதிகுலம் இல்லை என்ற உணர்வு வேண்டும். (பெரியபுராணத்தில் சாதிகுலம் பரிர்த்து செய்த திருமணங்கள் முறிந்து விட்டன 325 - 1857 - 3419) சோதிடம், நேரம், காலம் ஒரை இவைகளைப் பார்ப்பது தவறான நம்பிக்கை. (நேரம் காலம் பார்த்து செய்த திருமணங்கள் முறிந்துவிட்டன 159, 160, 1726, 3067) விதிமணம், காதல் மணம் இரண்டும் ஏற்கக்கூடியவையே (பெரியபுராணத்தில் இரண்டும் நடந்துள்ளன). தமிழே சால்பாய செம்மொழி (216,970,972,1095,3865) தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும். (216)
இவை மட்டுமன்றி இன்னும் பல்வேறு நடை முறைகளைப் பெரியபுராணம் நமக்குக் கற்றுத் தருகிறது
அடியார்களை முறைப்படி வரவேற்று அர்ச்சித்தல்,
நீறுபெறுதல், நீறுகொடுத்தல், வேளையோடு சாப்பிடுதல், பிள்ளைகளுக்குப் பேர்வைத்தல், மனைவியிடம் எதையும் ஆலோசித்தல்,
83

Page 116
அன்பு பூசை, ஆகம பூசை செய்தல் வாழை இலை போடும் முறை முதலிய அனைத்தையும் கூறுகிறது.
சேக்கிழார் பெருமான் இளங்காதலர்க்கு நணுக்கமாகக் கூறும் அறிவுரை :-
இதை விளக்கம் அறிந்து கொள்ள கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதிய காதல் காட்சியை ஒப்பிட்டுப் பார்ப்போமாக.
வேள்வி முடிந்த பின் விசுவாமித்திரர் இராம இலட் சுமணரை மிதிலைக்கு அழைத்து வருகிறார். அரண்மனை வீதி வழியாக வரும் போது மேல்மாடியில் இருந்த சீதை இராமனைப் பார்க்கிறாள். இராமனின் அழகையும் வலிய தோள்களையும் கண்டு இராமன் மீது காதல் கொள்கிறாள். அதேபோல் சீதையின் பேரழகு கண்ட இராமனும் சீதையின் மீது காதல் கொள்கிறான்.
இதைக் கம்பர்,
“ எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழ
கண்ணொடு கண்இனை கவ்வி ஒன்றைஒன்று உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”
என்று எழுதி, மேலும் அவர்களின் ஆழமான காதலை,
46
ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால் வரிசிலை அண்ணலும் வாள்கண்நங்கையும் இருவரும் மாறிபுக்கு இதயம் எய்தினர்.”
என்றும்,
“ஒருங்கிய இரண்டு உடற்குஉயிர் ஒன்று ஆயினர்’ என்றும் விளக்குகிறார்.
இராமன் சென்றபின், சீதை இராமனை நினைந்தும் அதேபோல் இராமன் சீதையை நினைந்தும் காமநோயால் பல வாறு அவதிப்படுவதை கம்பர் விரிவாகப் பல பாடல்களில் விளக்குகிறார். இந்தக் காதல் காட்சியைப் படிக்கப் படிக்க மன மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மை. ஆனால் இந்தக் காதல் காட்சியால் சமுதாய மக்களுக்கு அல்லது இளைஞர் சமுதாயத்துக்கு எந்த வழிகாட்டுதலும் இல்லை, என்பதும் உண்மை.
பெரியபுராணத்தில் தெய்வச் சேக்கிழார் எழுதிய காதல் காட்சியைக் காண்போம் :-
திருவாரூரிலேபதியிலார்குலத்தில் பிறந்த பரவையார் என்ற பெயருடைய பெண்மணி இருந்தார். பேரழகும் ஒழுக்கமும் பெண்மையும் உடையவர். வழக்கம்போல் புற்றிடங் கொண்ட பெருமானை வணங்க திருக்கோயிலுக்குத் தோழிகள் சூழ சென்றார். அதே நேரத்தில், அந்தப் பூங்கோயிலில் உள்ள இறைவனை வணங்கிவிட்டு தன் அடியார்களுடன் நம்பி ஆரூரர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்படி வரும்போது, வழியில் பரவை நாச்சியாரை ஆரூரர் கண்டார். நாச்சியாரின் பேரழகைக் கண்டு மயங்கி விட்டார்.
84

உள்ளத்தில் காதல் பொங்கியது. அவளை வியந்து பலவாறு எண்ணலானார்;-
"கற்பகத்தின் பூங்கொம்போ காமன்தன் பெருவாழ்வோ பொற்புடைய புண்ணியத்தின் புண்ணியமோ புயல்சுமந்து விற்குவளை பவளமலர் மதிபூத்த விரைக் கொடியோ
அற்புதமோ சிவனருளோ அறியேன் என்றதிசயித்தார்.”
இதே போல பரவை அம்மையரும் ஆரூரரைக் கண்டாள். பேரொளி வீசிப் பிரகாசிக்கும் நம்பியின் முகம் கண்டு நாணினாள். அவள் மனதில் அடக்க முடியாத அளவு ஆர்வம் எழுந்தது; பெண்மை தாழ்ந்தது; காதல் அரும்பியது. காதல் மோகத்தால் அவள்,
44
ன்னே வந்தெதிர் தோன்றும் முருகனோ பெருகொளியால் தன்நேரில் மாரனோ தார்மார்பின் விஞ்சையனோ
மின்நேர்செஞ்சடை அண்ணல் மெய்யருள் பெற்றுடையவனோ என்னே! என் மனந்திரிந்த இவன்யாரோ என நினைந்தார். ”
இவ்வாறு காதல் களிக்கும் மனத்துடன் பரவையார் சிவப்பரம் பொருளை வணங்க, பூங்கோயிலின் உள் சென்றார். பரவையாரின் நினைவால் வருந்திய வன்தொண்டர், தன் அருகிருந்த தோழர்களிடம்,
"என் மனங்கொண்ட மயிலியலின் இன் தொண்டைச்செங்கனிவாய் இளங்கொடிதான்யார்? என்று கேட்டார். அதற்கு அருகிருந்தார், அவர்தான் நங்கை பரவையார், தேவர்களாலும் அடைய முடியாத திறம் கொண்டவர் என்றனர். இதைக் கேட்டதும் நம்பிக்கு காதல் மேலிட, அவளை வேண்டி இறைவனிடம் முறையிட மீண்டும் கோயிலின் உள்ளே சென்றார். அதற்குள் பரவையார் ஈசனைப் பூசித்துவிட்டு வேறு வழியாக வெளியே சென்று விட்டார். நம்பி ஆரூரர் அவளைத் தேடுவாராயினார். பின் காதல் நோயால் மிக வருந்தினார்.
பரவையாரும் தன் மாளிகைக்குச் சென்று, யாரிடமும் பேச மனமின்றி, மணிநிலா முற்றத்து மாடத்தில் மலர் மஞ்சத்தில் கிடந்தாள். பின் அங்கிருந்த சேடிகளைப் பார்த்து,
"நாம் ஈசனை வணங்க ஆலயத்தினுள் சென்றபோதுநம் எதிரில் வந்த அந்த அழகன் யார்?”
என்று கேட்டாள். அதற்கு ஒரு தோழி "இவ்வுலகில் அந்தணராய் இருவர் தேட ஒருவர் தாம் எதிர்நின்றாண்ட சைவமுதல் திருத்தொண்டர் தம்பிரான் தோழனார்நம்பி என்றாள்' இப்படி அவள் தம்பிரானின் தோழர் என்று கூறியதைக் கேட்ட வுடன் பரவையார் காதல் மேலிட, குதூகலித்து பரவசம் பொங்க “எம்பிரான் தமரேயோ’
என்றாள். நம்பி மீது கொண்ட காதல் அளவின்றி வளர்ந்தது.
பின்பு ஆரூரர் புற்றிடங் கொண்ட பெருமானைத் தொழுது வேண்டிக் கேட்டு, அவர் அருளால் பரவையாரை மணம் செய்து கொண்டார்.
dráéignif pribut Iosof 2005

Page 117
தெய்வச் சேக்கிழார் பெருமான் எழுதிய இந்தக் காதல் காட்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் நெறிமுறை என்னவெனில்,
பருவமுற்ற போது ஆணும் பெண்ணும் காதல் கொள்வது இயற்கை. அப்படி காதல் கொண்டவுடன் காம மயக்கத்தில் ஆழ்ந்து வருந்திக் கொண்டிருப்பது சரியில்லை. முதலில், ஒருவரை ஒருவர் விசாரித்து, நன்கு அறிந்து கொள்ள வேண்டும். ஆரூரரும் பரவையாரும் எப்படி விசாரித்து அறிந்து கொண்டார்களோ, அப்படி அறிந்து, தமக்கு ஏற்றவர் தான் என்று முடிவு செய்து கொண்டு, காதலை பெருக்கிக் கொள்ள வேண்டும். பின் பெரியோர்கள் ஆதரவில் கடிமணம் புரிதல் வேண்டும்.
இந்த ஒப்பற்ற நெறியை, செம்மைக் காதலுக்கான வழியை தெய்வச் சேக்கிழார் உலக சமுதாயத்திற்குப் பெரியபுராண காதல் காட்சி மூலம் உணர்த்துகிறார்.
இல்லற ஒழுக்கத்தில் தெய்வச்சேக்கிழார் கூறும் முக்கிய அறிவுரை :-
இல்லறம் நடத்தும்போது, கணவன் மனைவிக்குள், ஊடல்கள், சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கமே, அப்படி ஏற்படுமேயானால், அவற்றை மற்றவர்கள் அறியா வண்ணம் மறைத்து வாழவேண்டும். அவ்வாறு வாழ்வதே நன்மை பயக்கும். இந்த நீதியை தெய்வச் சேக்கிழார் கூறுகிறார். இதை விளக்கமாகப் புரிந்துகொள்ள முதலில் சிலப்பதிகாரத்திலிருந்து ஒரு காட்சியைப் பார்ப்போம்.
மதுரையில் ஒரு ஆடல் அரங்கம். அரங்கத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனும் அவன் மனைவி கோப்பெருந்தேவியும் அமர்ந்துள்ளனர். அங்கே ஒரு நடன மாது மிகச் சிறப்பாக ஆடிக்கொண்டுள்ளாள். ஆடற் கலை இலக்கணம் அறிந்த அரசன், மங்கையின் ஒய்யார நடனத்தை ஆனந்தமாகக் கண்டு களித்துக் கொண்டிருந்தான். இதை தவறாகப் புரிந்து கொண்ட அரசி ஆடல் மங்கைமேல் அரசன் காதல் மோகங் கொண்டதாக எண்ணிப்புழுங்கினாள். மனநோயை மறைத்து, தனக்குத் தலைநோய் என்று கூறி அரங்கத்தை விட்டு வேகமாகச் சென்றுவிட்டாள். மனைவி ஊடல் கொண்டு சென்றுவிட்டாள் என்பதை சற்றைக்கெல்லாம் புரிந்து கொண்ட மன்னன், காமம் மேலிட, மனைவியின் ஊடலைத் தீர்க்கமந்திர சுற்றத்தையும் விட்டு அந்தப்புரம் நோக்கி வேகமாகச் சென்றான். அந்தப்புர வாயில் அருகில் செல்லும் போது, பொற் கொல்லன் வீழ்ந்து, தாழ்ந்து வணங்கி
"அரசியின் கால்சிலம்பை அபகரித்துக் கொண்ட கள்வன் என் வீட்டில் இருக்கிறான்”
என்று கூறினான். காமம் தலைக்கேறச் சென்று கொண்டிருந்த நெடுஞ் செழியன், எதையும் ஆராயாமல், காவலர்களை அழைத்து,எனது அரசியின் காற்சிலம்பு பொற் கொல்லன் கூறிய திருடன் கையில் இருந்தால், அவனைக் கொன்று, அச்சிலம்பை இங்கு கொணர்க’ எனக் கட்டளையிட்டான்.
அறிவிலும் வீரத்திலும் நேர்மையிலும் சிறந்த அரசன், மனைவியின் ஊடலால் மதியிழந்து, தவறான ஆணையை யிட்டான். அதனால் மதுரையே எரிந்துபோயிற்று.
drićipri oprti, paf 2005

பெரியபுராணத்தில் இதே பேன்று ஊடல் காட்சி வருகிறது. அதைக் காண்போம் :-
தில்லையில் திருநீலகண்டர் என்ற குயவர் ஒருவர் இருந்தார். அவர் நீலகண்டத்துக் கூத்த பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அதனால் சதா,
'திருநீலகண்டம் திருநீலகண்டம்’
என்று உச்சரித்துக் கொண்டே இருப்பார். அவர் திருமணமானவர். அவர்தன் இளமையின் காரணமாக, தாசி வீட்டுக்குப் போய் வந்தார். கற்பிற் சிறந்த அவர் மனைவி, இதை அறிந்து கொண்டார். அவருக்கு இது அவமானமாக இருந்தது. ஆயினும் இதைப் பற்றிக் கணவனிடம் ஒன்றும் கேட்கவில்லை. கணவனுக்குச் செய்ய வேண்டிய எல்லாப் பணிகளையும் செவ்வனே செய்து வந்தார். புணர்தலை மட்டும் தவிர்த்து வந்தார்.
மனைவியின் ஊடலை, திருநீலகண்டர் ஒருவாறு அறிந்து கொண்டார். ஊடலைத் தீர்க்க எண்ணினார். ஒரு நாள் இரவு, ஆசை மொழிகள் பேசி, மனைவியை அணைக்க முயலும்போது மனைவியார் ஒதுங்கி நின்று, கணவன் தன்னைத் தீண்டக்கூடாது என்று ஆணையிட்டார்.
“மூண்ட அப்புலவிதீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண் தயங்கு இளமென்சாயல் பொற்கொடி அணையார் தம்மை வேண்டுவஇரந்துகூறி மெய்யுற அனையும் போதில் தீண்டு வீராயின் எம்மை திருநீலகண்டம் என்றார்.”
அவர் வணங்கும் திருநீலகண்டத்து மீது ஆணையிட அதைக் கேட்ட திருநீலகண்டர், இனி மங்கையரையே தொடுவதில்லை என உறுதி பூண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட இந்த நிலையை அயலார் அறியாவண்ணம் காத்து வயதாகும் வரை வாழ்ந்தனர்.
'இற்புறம்பு ஒழியாதங்கண் இருவரும் வேறு வைகி அற்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்.”
ஏற்பட்ட ஊடலும், அதனால் செய்து கொண்ட சத்தியத் தையும் காப்பாற்றி, இதனை ஊர் அறியாவண்ணம் வாழ்ந்த தால் இவர்கள் வாழ்க்கையில் அற்புதம் நடந்தது. பெருமானின் பேரருள் கிடைத்தது. அடக்கமின்றி அரங்கத்திலேயே ஊடிய தால், அங்கே பேரழிவு ஏற்பட்டது.
எனவே இல்லறத்தில் இணைந்தவர்கள், தங்களுக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகளைத் தூற்றித்திரியாமல், பிறர் அறியாவண்ணம் அடக்கமுடன் வாழ்ந்தால், நிச்சயம் வாழ்வில் ஆனந்தம் பெருகும். இதையே பெரியபுராணம் நமக்கு எடுத்துக் கூறுகிறது.
பெரியபுராணம் கூறும் வாழ்வியல் நெறிகள் உலக சமுதாயத்திற்கு அவசியம் வேண்டும். அதன்படி ஒழுகினால் பேரின்பப் பெருவாழ்வு நிச்சயம்!
85

Page 118
சைவ சித்தாந்தத்தில் பஞ்சாட்சரம் என்று சொல்லப் படும் ஐந்தெழுத்து மந்திரத்துக்கு மிக முக்கிய இடம் உண்டு. ஒவ்வொரு ஆன்மாவின் குறிக்கோளாக இருக்க வேண்டிய சிவபெருமானின் திருவடிகளை அடைய, இம்மந்திரத்தை தினந்தோறும் ஓதி வழிபடுவது அவசியம் என்று சைவ சித்தாந்ததோத்திரங்களும் சாத்திரங்களும் வலியுறுத்து கின்றன. மேலும் இம்மந்திரத்தின் பெருமையை உலகுக்கு அறிவிக்க பஞ்சாட்சரத் திருப்பதிகம் போன்ற தனிநூல்களும் தோன்றியுள்ளன. இக்கட்டுரையின் நோக்கம் 12-ம் திருமுறை என்று போற்றப்படும் திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணம்) இம்மந்திரம் குறிக்கப்படும் சில இடங்களைச் சுட்டிக் காட்டுவதாகும்.
தெய்வச் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் 63 சிவனடியார்களின் பெருமையையும் அவர்கள் ஆற்றிய தொண்டின் அருமையையும் விளக்கும் ஒரு உன்னத இலக்கியமாகும். ஆனால், அதனை சேக்கிழார் இயற்றிய விதம் காரணமாக சிவபக்தி, சைவ சித்தாந்தக் கருத்துக்கள் ஆகியவை அதன் அடி நாதமாக அமைந்துள்ளது போற்றத் தக்கது. அவருடைய நோக்கில், தொண்டின் மூலமாகவும் கொள்கைப்பிடிப்பின் மூலமாகவும் சிவகதி அடையலாம் என்ற கருத்துக்கள் மேற்கொள்ளப்பட்டு, கதைப்போக்கும் காவியப் போக்கும் இந்த அடிப்படையிலேயே கையாளப்பட்டுள்ளன. இருப்பினும், பல இடங்களில் ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமை நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தப்படுகின்றது.
பெரியபுராணத்தின் முதற்காண்டத்தில் திருநாட்டுச் சிறப்பு விளக்கப்படுகிறது. அப்போது அந்த நாட்டு மக்கள் திருவைந்தெழுத்தை முறையாக ஒதுவார்கள் என்றும் அதனால் அவர்களைப் பிடிக்க பிறவிப்பிணிதான் அஞ்சும் என்றும் கூறப்படுகிறது. “ஒதிய எழுத்தாம் அஞ்சும் உறுபிணி வரத்தாம் அஞ்சும்” (84)
திருக்காட்சி சிறப்புப் பகுதியில் சிவனடியார்களின் பெருமை பேசும்போது, அவர்கள் நிரந்த நீற்று ஒளியும், புரந்த அஞ்செழுத்தும் ஓசையும் உடையவர்கள் என்றும் வர்ணிக்கப் படுகின்றனர். (138) எனவே உயிர்களை பிறவித்துன்பம் உட்பட எல்லாத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றுவது திருவைந்தெழுத்து என்ற இம்மந்திரம் என்பது வலியுறுத்தப் படுகின்றது. (புரந்த : காப்பாற்ற)
86
 
 

ாமிநாதன் -
சமண சமயத்தில் இருந்து மருள் நீக்கியார் சைவ சயத்தைத் தழுவும் தருணம், பெரியபுராணத்தில் மிக அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அப்போது தமக்கை திலகவதியாரிடம் தீக்கை பெறுவதற்காகக் காலில் விழுந்த தம்பியை அவர் தூக்கி நிறுத்தி,
66
Orr PTP IT நின் மலன் மேர் அருள் நினைந்து சென்று திரு வீரட்டம் புகுவதற்குத் திருக்கயிலைக் குன்றுடையார் திருநீற்றை அஞ்செழுத்தோதிக் கொடுத்தார்’ (133)
என்று பெரிய புராணம் விவரிக்கின்றது. மலங்களைப் போக்கும் சிவபெருமான் பேரருளால், ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற மருள் நீக்கியார், திருநாவுக்கரசராக மலர்ந்தார். தனக்குப் பெருவாழ்வு கிடைத்ததென்று மகிழ்ந்து பணிந்தார். அதனால்தான் பின்னர் அவருக்கு எந்தத் துன்பம் நேரிட்டாலும் இம்மந்திரத்தையே ஓதி சிவனருள் பெற்று அத்துன் பத்தில் இருந்து மீண்டார். நாவுக்கரசர் கடலிலிருந்து மீண்டும் வரும் போது பாடிய “சொற்றுணை வேதியன்”என்று தொடங்கும் பதிகம் புகழ்பெற்றது. இச்சம்பவத்தை விவரிக்கும் சேக்கிழார் அந்தச் சொற்றொடைரையே முன் வைத்துப் பாடும்போது அப்பர் பாடிய நமச்சிவாய மந்திரத்தை "அற்றமுன் காக்கும்’ (உடனிருந்து காக்கும்) என்று குறிக்கின்றார்.
"சொற்றுணை வேதியன் என்னுந் தூய்மொழி நற்றமிழ் மாலையாநமச்சிவாய என்று அற்றமுன் காக்கும் அஞ்செழுத்தை அன்போடு பற்றிய உணர்வினால் பதிகம் பாடினார்'7139)
மேலும் இதைத் தொடர்ந்து, “அமரர் வாழ்த்துதற்கரிய அஞ்செழுத்து”(394)"அருள் நயந்தஞ்செழுத்து”(1395)என்று மீண்டும் மீண்டும் இதன் உண்மையையும் மாறாத தன்மை யினையும் சேக்கிழார் பெருமான் வலியுறுத்துகின்றார்.
தன் வாழ்நாளில் இறுதியில் கைலைக் காட்சியைக் காண முனைந்த திருநாவுக்கரசுப் பெருந்தகை, முனிவர் வடிவில் வந்த சிவபெருமான் வாக்கின்படி குளத்தில் மூழ்குகின்றார். அதனை “அஞ்செழுத்து ஒதி மூழ்கினார்” என்கிறார் சேக்கிழார் பெருமான். (1635), இதனால் இறைவன் திருவடி அடைய இறுதிவரை ஐந்தெழுத்துமந்திரம் ஒதுவது அவசியம் என்று புலனாகின்றதல்லவா?
&wáágrif øgrøff gaof 2005

Page 119
இதைப் போலவே, திருஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றிலும் இம்மந்திரப் பெருமையை பல இடங்களில் பெரிய புராணம் விளக்குகிறது. இந்த ஞானக் குழந்தை திருக்கோலக்காவில் “மடையில் வாளை”என்ற பதிகம் பாடி கைத்தாளம் போட்டு சிவனை வழிபடுகின்றார். அப்போது இறைவன் அவருக்கு ஐந்தெழுத்து பொறித்த பொற்றாளம் கொடுத்து அருளியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார். (2001). அதன் பின்னர் திருநெல்வாயில் அரத்துறையில் இறைவன் கொடுத்த முத்துச் சிவிகையில் திருஞான சம்பந்தர் “அஞ்செழுத்து ஓதி ஏறினார் உய்ய உலகெலாம்” என்றும் குறிப்பிடுகின்றார் (2114). உலகம் உய்வதற்கு அவதாரம் எடுத்த ஆளுடைய பிள்ளை, ஐந்தெழுத்தை எல்லா நேரங்களிலும் ஒதியது அதன் சிறப்பை நமக்குக் காட்டு கிறதன்றோ? இன்னொரு தருணத்தில், பல கற்றுணர்ந்த வேதியர்கள் தங்கள் ஐயங்களை பிள்ளைப் பெருமானுக்குத் தெரியப்படுத்தி விளக்கம் கோரினர். அவர்களுக்குத் தேவையான விளக்கமளித்த சம்பந்தர், “பழைய முதன்மை பெற்ற எல்லா மந்திரங்களும் தோன்றுவதற்குக் காரணம் சிவபெருமானின் திரு ஐந்தெழுத்தேயாம்” என்று வரும் திருப்பஞ்சாட்சரத் திருப்பதிகத்தை அருளிச்செய்தார். (2146) பின்னர் மதுரையம்பதியில் பெருமாள் தங்கியிருந்த திருமடத்திற்குச் சில சமணர் தீ வைத்தனர். ஆனால் ஐந் தெழுத்து ஒதிய அவரையும், அடியார்களையும் தீ பாதிக்க வில்லை (2596). இறுதியாக, திருஞான சம்பந்தர் திருமணக் கோலத்தில் மற்ற அடியாரோடு பேரொளியில் புகும்போதும் 'நமச்சிவாய" என்ற ஐந்தெழுத்துச் சொல்லே எல்லோருக்கும் ஏற்ற மெய்ம்மையான ஞான நெறி எனச் சொல்லி அருள் பாலித்ததாக சேக்கிழார் பெருமான் உரைக்கின்றார். (3146) மற்ற அடியார்களில், பெருமிழலைக் குறும்ப நாயனார் என்பவர் சுந்தரரின் திருநாமங்களைச் சொல்லி அதன் மூலம் எல்லாவிதமான சித்திகளும் கைவரப்பெற்றவர். அதன் பின் மூள்கின்ற அன்பு மேன்மேலும் பெருகியதால் முழுமுதற் பொருளான சிவபெருமானின் திருவைந்தெழுத்தே சுற்றமும் பொருளும் உணர்வுமாகும் என்று அறிந்தார், என்று சேக்கிழார் நயம்படக் கூறுகின்றார். (171)
அமர்நீதி நாயனார் புராணத்தில் காணப்படும் மற்றொரு செய்தியும் குறிப்பிடத்தகுந்ததே. நாயனார் அவர்கள்
f
6ritéignif prgartó piamh 2005

கோவணத்தின் எடைக்கு எடைகொடுப்பதற்காக ஏராளமான பொன்னையும் பொருளையும் வைத்த போது தராசில் எடை சமப்படவில்லை. பின்னர் தம்மையே கொடுப்பதாகக் கூறி நமசிவாய மந்திரத்தை ஒதி ஏறியதும் தராசு சமநிலைப்பட்டது.
"...r. இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத் தோதினார் ஏறினார் தட்டில்’ (544)
இறுதியாக, புகழ்ச் சோழ நாயனார் புராணத்தில், அவர் தன் திருமகனுக்கு முடிசூட்டி விட்டு, திருவைந்தெழுத்தினை மகிழ்ச்சியோடு ஒதிக்கொண்டு தீயினுள் புகுந்தார் என்று சொல்லப்படுகிறது.
அண்டர் பிரான் திருநாமத்து அஞ்செழுத்தும் எடுத்தோதி மண்டுதழற் பிழம்பினிடை மகிழ்ந்தருளி உள்புகார் (3980)
என்று சேக்கிழார் சுவாமிகள் இந்நிகழ்ச்சியைப் பதிவு செய்கின்றார்.
பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமையை அநேகமாக எல்லாச் சைவநூல்களும் போற்றுகின்றன. சிவன் அந்த ஐந்தெழுத்தில் இருக்கிறார் என்பது சைவர்களின் நம்பிக்கை. இம்மந்திரமே சிவனின் வடிவம் என்று சிவ வாக்கியர் கூறுகின்றார்:
நவ்விரண்டும் காதலாய்நவின்ற மவ்வு வயிறதாய் சிவ்விரண்டும் தோளதாய் சிறந்த வவ்வுவாயதாய் யவ்விரண்டும் கண்ணதாய் அமைந்துநின்ற நேர்மையில் செவ்வையொத்துநின்றதே சிவாய வைந்தெழுத்துமே”
தூல, சூட்சும பஞ்சாட்சரங்களின் மறை பொருளைப் பற்றியும், அவற்றின் அடிப்படையில் உள்ள தத்துவங்களைப் பற்றியும், அவற்றை ஒதும் முறை, ஒதும் பயன் பற்றியும் பலநூல்கள் விரித்துரைக்கின்றன. எனினும், தெய்வச் சேக் கிழார், எப்படி பல புகழ்பெற்ற சிவனடியார்கள் இம்மந்திரத்தை ஓதி தம் வாழ்வுத் துன்பங்களில் இருந்து மீண்டு சிவகதி அடைந்தார்கள் என்று எடுத்தியம்பும் போது நமக்கு உள்ள நம்பிக்கை மேலும் பெருகுகின்றது.
87

Page 120
சேக்கிழாரும் விட - தேவகுமா
ஆராய்ச்சி அலுவலர், இந்துசமய கல
சைவத் திருமுறைகளுள் பன்னிரண்டாவது திரு முறையாக வைத்து எண்ணப்படுவது சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் ஆகும். எல்லாப் புராணங்களையும் விட மேலானது என்பதை உணர்த்துவதாக இப்பெரிய புராணம் என்னும் சொற்றொடர் அமைகின்றது. சீவக சிந்தாமணி, மணிமேகலை போன்ற காப்பியங்களுக்குப்பிற்பாடு எழுந்த காப்பியமாகவும் இதனைக் கூறுவர். சைவ சமய வரலாறு மற்றும், வளர்ச்சியில் பெரிய புராணம் பதித்த அடிச்சுவடுகளும், ஆற்றிய தொண்டுகளும் மிகச் சிறப்பானவை.
இறைவன், கோயில், திருவிழா, தத்துவம் என இவையாவும் மனித ஈடேற்றத்திற்கும் மனித குல வாழ்விற்கும் உதவுவனவாக அமைவன. இவற்றிற்கு அளவற்ற முதன்மை தரப்படும் போது, மனிதனுக்கு சமயம் என்ற நிலை மாறி, சமயத்திற்காக மனிதன் என்ற நிலை உருவாகும். கி. பி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து, சேக்கிழாரின் பெரிய புராணம் தோற்றம் கொண்ட காலம் வரையான காலப் பகுதியில் எந்த ஒரு இலக்கியமும் மனிதனை மையப் பொருளாகக் கொண்டு எழவில்லை. இவ்விலக்கியத் தேக்கத்தைத் தகர்த்து மனிதனை மையப் பொருளாகக் கொண்டு, இறை கொள்கை யோடு முரண்படாது, மனிதனை முன்னிறுத்தி மகத்தான திருப்பு முனையை விளைவித்த மானிட இலக்கியமாக பெரிய புராணம் மிளிர்கின்றது.
சிந்தாமணியின் மேல் கொண்ட சோழமன்னனின் விருப்பத்தை மாற்ற எழுந்த காப்பியம் பெரிய புராணம் என்பது திருத்தொண்டர் புராணம் கூறும் செய்தி திருத்தொண்டத் தொகை வழிநின்று, திருத்தொண்டர் திருவந்தாதி காட்டிய சிற்றொளியோடு, தம் உள்ளொளியால் உழைப்பால், அறுபத்து மூன்று நாயன்மார் வரலாறுகளை வரலாற்றுத் தெளிவோடு சேக்கிழார் பெரியபுராணமாக வடித்து அருளினார். “பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ” எனச் சேக்கிழாரைப் பாராட்டுவர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை. சேக் கிழாரின் பெரியபுராணம் சைவ சமயத்திற்கு வழங்கிய அருங்கொடைகள் பல. இறைவனையும் மனிதனையும் இணைத்துப் பின்னப் பெற்ற சைவ சமயப் புராண இலக்கி யங்கள் இரண்டு. ஒன்று பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற்புராணம்; மற்றொன்று, சேக்கிழாரின் பெரியபுராணம், இரண்டு
88
 
 

புராணங்களிலும் ஆண்டவனும் அடியவர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆயினும் இரண்டிற்கு மிடையே பெரிய வேறுபாடு உண்டு. திருவிளையாடற் புராணம் உயிர்களின் எய்ப்பும், இயலாமையும் கருதிப் பேரருளாளனாகிய சிவப்பரம் பொருள் விண்பழித்து, மண்புகுந்து, தாமே உயிர்களை வலிய ஆட்கொண்ட கருணையின் - பெருமையை விரிப்பது. ஆயினும் பெரியபுராணமோ, மண்ணின் மைந்தர்களாகிய தமிழகத்து அடியவர்கள், தங்கள் செயற்கருஞ் செயல்களால் இறைவனை மண்ணு வளர நோக்கி ஈர்த்த அருமைப்பாடு மிக்கது; அடியவர் உறுதிப் பாட்டை வியப்பது.
பெரியபுராண அடியார்களின் வரலாறுகளை நோக்கும் பொழுது ஓர் உண்மை புலனாகும். நிலவுலகில் இறைநெறி வழுவாது வாழ்வாங்கு வாழ்ந்து, தெய்வச் சீரடியார் இயற்றிய தொண்டில் மகிழ்ந்த இறைவன், அவர்தம் அன்பை நுகர்ந்து அருளவும், அவரை விளக்கம் காணவும், அவர்தம் பெருமையை உலகறியச் செய்யவுமே மண்ணுக்கு வருகின்றான். அடியவர் எவரையும் இறைவன் சோதித்து அறிய முயன்றதாக செய்திகள் இல்லை. பக்தி நெறி, உயர் பேர் ஒழுக்கம், சமூக நல்லுணர்வு, உயர்ந்த பண்பாடு மிக்க அடியவர்களை உலகவர் அறிதல் வேண்டுமென்பதும், அவர்களை உலகுக்கு அறிவிக்க வேண்டுமென்பதுமே சிவபெருமானின் திரு வுள்ளமாக இருந்ததென்பதனைப் பெரிய புராணம் நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
பனகவனுக்கு உயிர்ப்பிச்சை அளிக்கும் பண்பாட்டைச் சேக்கிழார் மெய்ப்பொருள் நாயனார் வரலாற்றில் கூறுகின்றார். சிவபிரான் மெய்த்தவவேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்ற அடியவர்கட்கு காட்சி நல்கித் தம் திருவடிகளில் இணைத்துக் கொண்டார் என்பதே, சேக்கிழார் காட்டும் வரலாற்றுச் செய்தி. மெய்பொருள் வரலாற்றிலே நேரே இறைவன் பங்கு ஏதுமின்றி, பகைவனுக்கு அருளும் பண் பாடும் காத்த ஒருவனுக்கு இறையருள் உண்பதே வரலாறு காட்டும் உண்மை. இதனோடு இணைத்து சேக்கிழார் கூறும் பிறிதோர் உண்மையும் உண்டு. ஏனாதி நாயனார், இளையான் குடிமாற நாயனார் போன்றவர்களின் வரலாறுகளில் எல்லாம் மனிதப் பண்பாட்டின் வெற்றிக்கு இறைவன் ஆசி வழங்க எழுந்தருளி வருவதாகக் காட்டப்பட்டுள்ளது. பெரிய புராணம், இவ்வகையில் அடியவர்களுக்கு முதன்மையையும், பெருமையையும் வழங்குதல் நினைந்து போற்றத்தக்கது.
drágorito en 2005

Page 121
திருமந்திரத்தில் திருமூலர் “அன்புடையார் எல்லோரும் சிவப்பரம் பொருளே’ எனப்போற்றினர். அன்பின் மிக்க அடி யவரை எல்லாம் சிவமாகவே கருதும் கருத்து திருமந்திரத்தில் நன்கு அரும்பியது. சேக்கிழாரின் பெரியபுராணம், திரு மூலரின் வழி நின்று, நடமாடும் கோயில் நம்பர்களாகிய அன்பே வடிவாய அடியவர்களை உலகிற்கு ஒளியூட்டிக் காட்டுகின்றது. அன்பு என்பது ஆண்டவன் பால் வைப்பது மட்டுமின்றி, உலகத்து உயிர்கள் மேலெல்லாம் செலுத்தப்பட வேண்டும் என்ற தெளிவும், தொண்டு என்பது இறைவனுக்கு செய்வதுமட்டுமின்றி, தன்னை ஒத்த மனிதனுக்குச் செய் வதே அரியதொண்டு என்ற உறுதியும், சேக்கிழார் புராணத்தில் எங்கும் முரண்படாது ஒலிப்பது கவனிக்கத் தக்கது. சமய வாழ்வில் வழிபாடு ஒருசிறு கூறு. சைவ சமயச் சார்ந்த அன்பர்கள், இறைவனுக்கு ஒப்ப மனிதர்களை அடியவர்களாகப் போற்ற வேண்டும். அவர் தம் தேவைகளை இயன்றவாறு நிறைவிக்க வேண்டும். உயிர் இரக்கம் பேணவேண்டும், பண்பாடு காக்க வேண்டும். என்ற ஒப்பற்ற சமயம் சார்ந்த வாழ்வின் எல்லைகளை பெரிய புராணம் அப்பூதியடிகளின் வரலாறின் மூலம் வரையறுத்துக் காட்டுகின்றது. சைவத்தின் கூறுபாடுகளாகச் சேக்கிழார், வழிபாடு, உயிர் இரக்கம், மனித நேயம், பண்பாடு என்ற நான்கு அரிய கருத்துக்களை நூல்முழுவதும் விவரித்துப் பேசுகின்றார்.
தேவார மூவர் வரலாற்றை, ஏராளமான சம்பவங் களோடும், அற்புதங்களோடும் விரிவாக விளக்கிச் செல்லும் பெரியபுராணம், ஏனைய அடியவர் வாழ்வையும் முரண்பாடு இல்லாது அழகுணர்ச்சியோடு விவரிக்கின்றது. கண்ணப்பர் வரலாற்றில் அன்பின் ஆழ அகலங்களைப் பெரியபுராணம் விவரிக்கின்றது. சிறுத்தொண்டர் வரலாற்றில் வாழ்வில் தமக்கு தாமே வரையறுத்துக் கொண்ட நியதிகளைக் காப் பாற்ற, ஒருமனிதன் எத்தகு சாதனைகளையும் நிகழ்த்த இயலும் என்பது ஒளியூட்டப் பெற்றுள்ளது. சமயம் சார்ந்த பெண்மையைக் காரைக்கால் அம்மையார் வழி எடுத்து ரைக்கிறது. விருந்தோம்பற்பண்பாட்டை இளையான் குடிமாற நாயனார் வரலாறு பேசுகின்றது. இத்தகு வரலாறுகளை வடித்து வழங்கிப் பெரிய புராணம் சமய வாழ்வில் விழிப்புணர் வினைத் தோற்றியது.
பிறர் குறிப்பினை அவர் கூறாமலே உணர்ந்து வழங்கி, இறைநெறி நின்று, மனிதப் பண்புகளுக்கு ஒளியூட்டி வாழ்வாங்கு வாழ்ந்த சைவச் சீரடியார்கள், தெய்வமாகப் போற்றி வணங்கத்தக்கவர்கள், வழிபடத்தக்கவர்கள். இவர் களுக்கும், திருமேனி வடித்துச் சிவாலயங்களுள் எழுந்தருள் வித்து வணங்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மன்னர்கள் உள்ளங்களில் ஊற்றெடுக்க உதவிய பெருமை பெரிய புராணத்திற்கு உரியது. அறுபத்து மூன்று சீரடியார்களும், சிவாலயங்களில் எழுந்தருள்விக்கப் பெற்று, இறைவனோடு ஒப்ப நித்திய, நைமித்திக பூசைகள் பெற்றுச் சிறந்தமை சேக்கிழாரின் பெரியபுராணம் தமிழ் மண்ணில் விரிந்த
ærksforsøens søn 2005

பின்னரே என்பது நினைவு கூர்ந்து மகிழத்தக்கது. குறிக்கத்தக்க சில சாதியார், சிவாலயங்களில் நுழையத்தடை நிலவியிருந்த காலத்தில், அத்தகு குலங்களில் பிறந்த அடியவர்கள் திருக் கோயில்களுக்குள்ளே தெய்வத் திருமேனியோடு ஒப்ப வழிபடப் பெற்றமை, பெரியபுராணம் விளைத்த வெற்றியே எனின் மிகையன்று.
சமயமும், சமயச் சடங்குகளும் ஏதேனும் ஒருவகையில் மனித ஈடேற்றத்திற்குப் பயன்படல் வேண்டும் என்பது சேக்கிழாரின் திருவுள்ளம். சடங்குகள், மனித அன்பின் உயர்ச்சிக்கும் ஈடேற்றத்திற்கும் தடை பயக்குமானால் அதைத் தகர்த்தெறிவதில் தவறேதும் இருக்க இயலாது. பெரியபுராண வரலாறுகளில் பல, நேரடியாக அல்லது பண்பாடு கருதி மறைமுகமாக சடங்குகளைத் தகர்த் தெறிந்து, அன்பின் முன்னே அவை அர்த்தமற்றவை என நிறுவுதல் பொருட்டு, “வாயிலிட்டுச் சுவைத்த பன்றியின் ஊன் எனக்கு சிறந்த படையல் என்று ஏற்ற இறைவன், அன்பு மிகக் கொண்ட பெண் ஒருத்தி எச்சில் பட என்மேனி ஊதிய இடமே எனக்குக் குளிர்கின்றது என்று பேசிய சிவப்பரம் பொருளைக்காட்டி ஆண்டவன் திருவுள்ளத்தை விளக்கிச் சடங்கு எண்ணங்களுக்கு முடிவுகாட்டும் சான்றாண்மையை இங்கு காணலாம்.
சமயம் வேறு, வாழ்வு வேறு என்ற நிலை தோன்றி விடாது, சமயங்கலந்த வாழ்வைத் துல்லியமாக வடித்துக் காட்டிச் சடங்குச் சமயமாக மாறிவிட இருந்த சைவத்தை வாழ்க்கைச் சமயமாக்கி வழங்கிய பெருமை சேக்கிழாரின் பெரிய புராணத்திற்கு உரியது.
பெரியபுராணம் சிவலிங்கத்தைப் பூசித்தும், சிவனருட் செல்வர்களாகிய ஞானாசிரியர்களைப் போற்றியும், சிவனடி யார்களுக்குத் தொண்டு செய்தும் இறையடி எய்த இயலும் என, முத்திற வழிபாட்டை மிக விரிவாக எடுத்துரைக்கின்றது. பெரிய புராணச் சிவனடியார்களில் சிவலிங்கத் திருமேனியை வழிபட்டு வீடுபேறு எய்தியோர் முப்பத்திருவர். குருவருளால் முத்தி பெற்றோர் பன்னிருவர். சிவனடியார் வழிபாட்டால் இறையடி எய்தியோர் பத்தொன்பதின்மர். பெரிய புராணத்தின் தோற்றத்திற்குப்பின்னரே சிவலிங்க வழிபாடு மற்றும் குருவழிபாடு முதலிய இரண்டிற்கும் இணையாக சிவனடி யார்களாகிய மனிதர்களைப் போற்றி அவர் விருப்பங்களை நிறைவேற்றிச் செய்யப்படும் சங்கம வழிபாடுக்குப் பெருஞ் சிறப்பைத் தந்த பெருமை பெரிய புராணத்திற்கேயுண்டு.
சிவபிரானை தலைவனாகக் கொண்ட சைவநெறியாளர் ஆயினும், சிவநெறி உடன்படும் சமுதாயக் கட்டுக்கோப்புக் களையும் கடந்து, மனிதாபிமானத்தில் தலை நின்ற இவர்கள் தொண்டு, சிவனடியார்களுக்கு மட்டுமின்றி மனித குலத் திற்கே விரிந்து நின்றது. பண்பாடு சிறந்த இவர் தம் மனித நேயத்தில், சிவவேடம் தரித்த பகைவனும் சிவனடியாரே, மனைவியைத் தருகஎன்று கேட்கும்தூர்த்த வடிவினனிடமும் இவர்களால் அன்பு செய்ய இயன்றது. தாம் உண்ணாது, பட்டினி கிடப்பினும், தம் இல்லம் நாடி வந்தாரை உண்பித்த
89

Page 122
சமய வழிப்பட்ட அடிய்வர் வழிபாடு, பெரிய புராணத்தில் சமயம் கடந்த மனிதாபிமானமாக மனித குலநேயமாக மலரும் அருமைப்பாடு எண்ணி மகிழத்தக்கது. மனிதருக்கு மனிதர் செய்யும் தொண்டு, இறையடி சேர்ப்பிக்கும் என்ற உயர் கோட்பாடு, சைவம் வழங்கிய மிகப் பெரும் அருட் கொடை என்றே கருதிப் போற்றத்தக்கது.
பெரிய புராணத்தில் சேக்கிழார், சமூக பண்பாட்டையும் சமூக நல்லெண்ணத்தையும் சிவனடியார்களின் வரலாறு மூலம் எடுத்து விளக்குகின்றார். உடன் போக்கில் அன்னை யையும் அத்தனையும் நீத்துக் காதலனுடன் திருமகள் வந்து தங்கிய இளமகள் ஒருத்தி, விடியலில் தன் காதலன் பிண மாகக் கிடப்பது கண்டு அரற்றுகிறாள். அவள் அழுகையைக் கூற வந்த சேக்கிழார் “வாளரவு தீண்டவும் தான் தீண்ட கில்லாள்” என ஒளியூட்டுகிறார். எங்கிருந்தோ இரவில் வந்த வாளரவுக்குக் கூட காதலன் மேனியைத் தீண்டும் உரிமை இருந்தது. ஆயினும் ஊரறிய சமூகம் இசைந்தமண வினை நிகழாமையில், இறந்து கிடக்கும்போதுகூட இவன் மேனியைத் தீண்டி அழும் உரிமை எனக்கு இல்லையே என்ற காதலியின் குமுறலில், பெண்மையின் அளவற்ற பண்பாடு ஒளி வீசு கின்றது. இவ்வாறு, பண்பாட்டின் பதிவுகளைத் தம் பெரிய புராணத்தில் விவரிக்கும் சேக்கிழார், சாதியும் சாதியில் வந்த ஏற்றத் தாழ்வுகளும் நிலவியதை விவரிக்கின்றார். சிவனைத் தலைவனாக ஏற்றும் தில்லை அம்பலவன் திருக்கோயிலுக்குள் புகமுடியாத நந்தனை அங்கே காண முடிகின்றது. அந்தணர் திரு நீலநக்கர் இல்லத்துள் பறையர் குலத்து வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு இடம் ஒதுக்குவதில் முறையான விருப்பம் இருந்திருக்கவில்லை என்று அறியமுடிகின்றது. சாத்திரம் பல பேசும் சழக்கர்கள் பலரும் கோத்திரமும், குலமும் கொண்டு சாதனை நிகழ்த்த விரும்பிய விருப்பம் அப்பர் அடிகளாலே கண்டிக்கப் படுகின்றது.
சாதிகளால் மட்டுமன்றி வருணாசிரம தருமங்களும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் தமிழ்ச் சமுதாயத்தை
90

ஆட்டிப் படைத்தமை நன்கு அறிய வருகின்றன. எனினும் இம்மையில் வாழ்வாங்கு வாழ்தலே சமயம் அதுவே வீடு பேற்றின் வாயில் என சமய நெறி நின்று மக்களை இம்மை வாழ்வில் நம்பிக்கையூட்டி நெறிப்படுத்த முயன்ற முயற்சி களைப் பெரியபுராணத்தில் காணலாம்.
பெரிய புராண நூலாசிரியராகிய சேக்கிழார், பெரிய புராணம் படைக்கும் நோக்கில் பல்வேறு திருமுறைப் பதிகங்களுக்கு உரை விளக்கம் தரும்பாங்கு அவரைச் சிறந்த உரையாசிரியராகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சம்பந்தரின் “வாழ்க அந்தணர்”என்ற தொடக்கமுடைய “திருப்பாசுரம்” என வழங்கப் பெறும் இப்பதிகம் முழுமைக்கும் சேக்கிழார் திருஞானசம்பந்தர் புராணத்தில் இருபத்து நான்கு பாடல் களில் உரை கூறுகின்றார். அரிய அப்பதிகப் பாடல்கள் எவ்வாறு பகுத்து ஆராயப்பட வேண்டுவன என்ற உண்மை நன்கு விளக்கம் பெறுகின்றது.
சேக்கிழார் ஞானாசாரியராய் நின்று சைவ சமயத் தத்து வங்களை விளக்கும் பாங்கு அவரைத் தத்துவ ஆசிரியராக உயர்த்துகின்றது. திருமூலர், காரைக்காலம்மையார் புராணங்களில் காணக்கிடக்கும் தத்துவக் கூறுகளும் மூவர் வரலாற்றில் விரித்துரைக்கப்படும் தத்துவ விளக்கங்களும் சமய நோக்கில் பெரிதும் போற்றிக் கொள்ளத்தக்கன. சரியை, கிரியை, யோகம், ஞானம், சைவ சித்தாந்தக் கருத்துக்கள் திருநீற்றின் சிறப்பு ஆகியவை பெரிய புராணத்தில் சேக்கிழா ரால் அழகுற எடுத்தியம்பப்பட்டுள்ளன. புராணம் என்ற குறி யீட்டெண் தமிழில் வழங்கும் பல நூல்களுள் வரலாறாகப் போற்றத்தக்க ஒரே நூல் பெரிய புராணம் ஆகும். இது மானிட இலக்கியமாக அமைந்துள்ளதால் வரலாற்று உணர்வுக்கு முன்னிடம் தந்துள்ளது. சைவம் எழுச்சி பெற்றமை, செல்வாக்கு, சமயப் போராட்டங்கள், மூவேந்தர் திறம், மக்கள் உணர்வுகள், திருக்கோயிலமைப்புகள், சைவ இலக்கியங்கள், நாட்டியம், சைவத்தின் எழுச்சியோடு ஒட்டிய சமூக வளர்ச்சியின் நிலை, சைவப் பண்பாடு, சைவ அடியார் வரலாற்றுக் கூறுகள் எனப் பெரிய புராணம் வழங்கும் சைவ வரலாறுகள் ஒளிபூத்துத் திகழ்கின்றன.
áráégt vigarð Þof 2005

Page 123
- திருமதி. ஜெயந் முதுகலை இசை, த தஞ்
பக்திக் காலத்தில் பலவகையான நூல்கள் இறை தொடர்பாக எழுந்துள்ளன. அவற்றுள் சில புராணங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. அவ்வாறு அழைக்கப்படும் நூல்களில் மூன்று முக்கியமானவை அவை பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் என்பனவாகும். அவற்றுள் சைவ நாயன்மார்களைப் பற்றியும், மதுரையில் சிவபெருமான் ஆற்றிய திருவிளையாடல்கள் பற்றியும், முருகனின் அருளாற்றல் மிக்க செயல்கள் பற்றியும் முறையே விளக்கப்பட்டுள்ளன. பெரியபுராணம், திருவிளையாடல்புராணம் ஆகிய இரு புராண நூல்களும் இசைச்செய்திகளை மிகுதியாகக் கொண்டு விளங்குகின்றன. பெரியபுராணத்தின் காலம் காப்பிய காலத்தை ஒட்டியதாக இருப்பதினால் பல இசைச்செய்திகள் காப்பியங்களுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றன.
பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், கந்தபுராணம் ஆகிய மூன்று புராணங்களும் இறையருள் நாடும் அடியார்கள் பற்றியும், இறைவனின் அருளாற்றல் பற்றியும், விரிவாகக்கூறுவதனால் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு உடையனவாகக் காணப்படுகின்றன. இவற்றில் உள்ள இசைச்செய்திகள் கால உணர்வை விட இசை உணர்வு மிக்கதாகக் காணப்படுகின்றன பக்திக் காலத்தில் உள்ள இசை மக்களை பற்றுணர்வில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகின்றது. இக்காலத்திலேயே இசை நன்கு வளர்ந்துள்ளது. இந்நிலையை நன்கு உணர, அவர்கள் உருவாக்கித் தந்துள்ள இலக்கியங்களில் சான்றுகள் பலவிதமாகக் காணப்படுகின்றன. பெரிய புராணம் பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த நூலாக கொள்ளப்படுகின்றது. இந்நூலின் ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் ஆவார். இவர் இயற்றிய பெரிய புராணம் இரண்டு காண்டங்களையும் பதின்மூன்று சருக்கங்களையும் நாலாயிரத்து இருநூற்றி எண்பத்தாறு செய்யுட்களையும் கொண்டு அமைந்துள்ளது. இவற்றுடன் 63தனி அடியார்கள் 9 தொகை அடியார்களின் வரலாற்றையும் இந்நூல் குறிப்பிடுகின்றது.
இசைக்குறிப்புக்கள் :-
இசை பற்றிய அரிய செய்திகளை பெரியபுராணம் தன்னகத்தே கொண்டுள்ளது. “இசை விளங்கிட
éirí4gnif signte saf 2005
 
 

னி விக்னராஜன் - ழ் பல்கலைக்கழகம் ாவூர்
இயல்பினில் பாடி நின்றேத்தி,” என்று சேக்கிழார் கூறுகின்றார். பாடல்களில் இசைவிளங்குகின்றது. திருஞானசம்பந்தப் பெருமான் பாடல்கள் அனைத்தும் பண்ணிசை உடையவை என்பதை மேற்கூறப்பட்ட தேவாரப் பாடலடியில் மூலம் அறியலாம். அவை இசை விளங்கப் பாடப் பெற்றவையாக கூறப்படுகின்றன. இதிலிருந்து இசை என்பது பண்ணிசையைக் குறிப்பதாகும் என்பது தெளிவாகின்றது. குழலின் வாயிலாக இசை எழுப்பப்படுவதை ஆனாய நாயனார் புராணம் வாயிலாக அறிய முடிகின்றது. இறைவனை நினைத்து இசையமுதை நாயனார் குழல் வழியாக வெளிப்படுத்துகின்றார்.
"அன்பூதிஇசைப் பொங்கும் அமுத இசைக் குழலொலியால் வன்பூதப் படையாழி எழுத்தைந்தும் வழுத்தித்தாம் முன்பூதிவருமளவின்முறைமையே எவ்வுயிரும் என்பூடு கரைந்துருக்கும் இன்னிசை வேய்ங் கருவிகளில்” (ஆனாயபுராபாட22)
என்ற பாடலின் மூலம் ஆனாயரின் குழலின் இசை பொங்கி பாய்கின்றது என்று கூறப்படுகின்றது. அது அமுத இசை, ஐந்தெழுத்தை நினைத்துப் பாடும் இசை, அதைக் கேட்டு அனைத்துயிர்களின் உள்ளமும் உருகியது, அத்தகைய ஆற்றல்மிக்க இசையாக அது விளங்குகின்றது. புல்லாங்குழலில் இருந்து வெளிவரும் இன்னிசை இத்தகைய ஆற்றலுடன் வெளியிடப்படுகின்றது என்பதையும், இசையின் தன்மையினையும் இப்பாடலின் மூலம் அறிய முடிகின்றது.
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் இசைத் தன்மை பெரிய புராணத்தில் மிகச் சிறப்பாக விளக்கப்படுகின்றது,
தானநிலைக்கோல்வடித்துப்படி முறைமைத்தகுதியினால் ஆனவிசை ஆராய்வுற் றங்கணர் தம் பாணியினை மான முறைப் பாடினியர் உடன் பாடி வாசிக்க ஞான போனகர் மகிழ்ந்தார் நான் மறையோர் அதிசயித்தார்”
(திருஞான, புரா.135)
என்ற பாடலின் மூலம் சிவபெருமானைச் சிறப்பித்து திருநீலகண்ட யாழ்ப்பாணர் பாடினியுடன் பாடல்களைப் பாடி யாழ் இசைக்கிறார். இசைத் தானங்களை முறையறிந்து ஆய்வு நெறிப்படி இசைக்கின்றார். சம்பந்தரும் பிறரும் வியக்குமாறு
91

Page 124
அவருடைய இசைத்திறன் அமைந்துள்ளது. தானம் என்பது பண்ணின் ஸ்வரஸ்தானம் என்று கூறப்படுகின்றது. விதிமுறை தவறாது இசை ஒழுகுகின்றது என்றும், இசை ஆய்வு மிக்கவர் என்றும் கூறப்படுகின்றது. பண்ணிசைப் பாடல்களைப் பாடும் சம்பந்தரே வியந்து அதனை கேட்கின்றார். இதிலிருந்து அக்காலத் தமிழரின் இசைத்தன்மையும், அறிவும் செவ்வனே விளங்குவதோடு தமிழிசை விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டது என்பதும், பண்கள் இனிமையாக அமைக்கப் பெற்றுள்ளன என்பதும் இதன் கண் அறிய முடிகின்றது.
திருநீலகண்ட யாழ்ப்பாணரின் இசையாற்றல் பின்வரும் பாடலின் மூலம் சேக்கிழாரால் விளக்கப்படுகின்றது.
இன்னிசை பாடியவெல்லாம் யாழ்ப் பெரும் பாணனார்தாமும் மன்னும் இசை வடிவான மதங்க குளாமணியாரும் பன்னிய ஏழிசை பற்றிய LITL6ö Lßls/äissst L/Tig பொன்னின்திருத்தாளம் பெற்றார் புகலியிற் போற்றிஇருந்தார்”
(ġSCUST60T, LirJIT; u JIT.278)
என்ற பாடலின் மூலம் பாணர் இனிமையாக இசை பாடுகின்றார். அவரோடு இசையின் வடிவமான மதங்க சூளாமணியாரும் இணைந்து ஏழிசைகளும் பொருந்த இனிது பாடுகின்றார். பதிகங்களைப் பாடும் சம்பந்தர் இறைவனிடம் பொன்னாலான தாளத்தைப் பெறுகின்றார் என்றும் கூறப்படுகின்றது. ஏழு இசைகளும் இனிதுபொருந்த மதங்க சூளாமணியார் பாணரின் இசைக்குப் பொருந்த இணைந்து பாடுகின்றார். ஏழிசைகளின் தன்மைகளை நன்கு அறிந்து பாடும் திறன் இதன்மூலம் வெளிப்படுகின்றது. தமிழரின் இசையறிவு மிகச் சிறப்பாக இருந்துள்ளதை அறியமுடிகின்றது. இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழருக்கு இருந்த இசையறிவைக் காட்டுகின்றது. ஏழிசை பற்றிய அறிவு, சங்க காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு இருந்துள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.
தமிழர் இசையறிவுடன் சுருதி உணர்வும் மிக்கவர்கள் என்பதையும் சேக்கிழார் தமது பாடலின் வழியாகத் தெளிவு படுத்துகின்றார்.
சொற்றமிழ்மாவையினிசைகள் சுருதியாழ்முறை தொடுத்த அன்றை நாள் பேலொன்றும் அகலாறன்புடனமர்ந்தார்”
(திருஞான, புரா, பா,141-3-4)
தமிழ்ச்சொல்லால் அமைந்த பாடல்கள், அவற்றை இசையால் நனைத்துப் பாடுவதற்கு யாழை நன்கு சுருதி கூட்டி, சுருதி அமைப்பு எளிதன்று என்றும், அதற்கு நுட்பமான இசை
92

உணர்வு மிக மிகத்தேவை என்றும், அதை நன்கு தமிழர் உணர்ந்துள்ளனர் என்றும் மேற் கூறப்பட்ட பாடல் தக்க சான்றாதாரமாக கொள்ளப்படுகின்றது.
திரு நீல கண்ட யாழ்ப்பாணரும், மதங்க சூளாமணி யாரும் இசைப்பாட்டை நன்கு பாட அறிந்தவர்கள் என்பதை பெரியபுராணம் மிகச் சிறப்பாக விளக்கி உள்ளது
'திரு நீலகண்டத்துப் பெரும் பாணர் தெள்ளமுதின் வரு நீர்மை இசைப்பாட்டு மதங்க சூளாமணியார்”
(திருஞான, புரா, பா,131.12)
அமுதச் சுவை உடைய இசைப் பாட்டை இசைத்துப்பாடும் தமிழரின் அரிய திறமை இப்பாடலில் விளக்கப்பட்டுள்ள தாகக் கருதப்படுகின்றது.
திருஞானசம்பந்தரின் இசைத் திறனும் சேக்கிழாரால் விளக்கப்படுகின்றது.
"ஏழிசையும் தழைத்தோங்க விண்ணிசைவன் தமிழ்ப்பதிகம் எய்தப்பாடித் தாழு மணிக் குழையார்முன்தக்க திருக் கடைக் காப்பு சாத்திநின்றார்”
(திருஞான, LUT, LAT,104,2-3)
ஏழிசைகளும் சிறக்கப் பாடும் திறமை மிக்கவர், தமிழ்ப் பதிகங்களைப் பாடுபவர், இறைவனே மகிழுமாறுபாடுகிறார் என்று மேற்கூறப்பட்ட பாடலடியின் மூலம் சுட்டப்படுகின்றது. திருநாவுக்கரசர் புராணத்தில் இசைப்பாடல் பாடும் திறனைக் குறித்து ஒரு பாடல் உள்ளது. திருநாவுக்கரசரை சோதிக்கும் கருத்துடன் அரம்பையர் வந்து பாடுகின்றனர். பாடல் இசை நயம் மிக்கது என்று சேக்கிழார் விளக்குவதை பின்வரும் பாடல் மூலம் கூறப்படுகின்றது.
“வாகை மின்னுக் கொடிகள் வந்திழிந்தாலென வந்து தானநிறை சுருதிகளில் தருமலங்காரத்தன்மை கானவமுதம்பரக்குங் கனிவாயிலொளிபரப்பப் பானனெடுங் கண்கள் வெளிபரப்பிசை பாடுவார் sy
(திருநாவு புரா, பா,419)
என்ற பாடலில் தானம் என்பது ஸ்வரஸ்தானம், சுருதி இசைக்கு அடிப்படையான ஒலி. பாடல் goofso)LDLUT56th, சுவையாகவும் இருப்பதை அலங்காரத்தன்மை உடைய கானம் என்றும், அரம்பையர் பாடல் தான, நிறை, சுருதி அமைப்பு உடையது என்பதையும் சேக்கிழார் தனது புராணத்தில் கூறி உள்ளார். பாடலைக் குறிக்க கானம் என்ற சொல் பன்னிரண்டாம் நூற்றாண்டில் தான் தமிழ் நாட்டிற்கு வந்ததை இதன் கண் அறியலாம்.
இறைவன் ஒலியின் வடிவமாக உள்ளான் என்பதை பெரியபுராணம் பின்வருமாறு கூறுகின்றது.
&eráliágrif satt gaof 2005

Page 125
நதங்கொள் வடிவாய்நின்ற நதி பொதி சடையார்”
என்ற பாடலடியின் மூலம் ஒலியிலிருந்து தோன்றியது இசை ஆகையினால் இசையின் உருவாக இறைவனைக் கருதலாம் அவர் சாம கண்டர் என்று சிறப்பிக்கப்படுகின்றார். சாமம் என்பது சாமகீதம் என்று சுட்டப்படுகின்றது. கீதம் என்பது இசைப்பாடல். இசைப்பாடல் கேட்டு அருள்புரியும் இறையியல்பைச் சேக்கிழார் "வல்லரக்கன் எடுத்து முறித்திசை பாட’என்ற அடியின் மூலம் குறிப்பிடுகின்றார். எளிய நிலையில் உயிர்களைத் தன்பால் இசைவிப்பதும், உயர்ந்த நிலையில் உயிர்க்குயிராய் இறைவனைத் தன் பால் இசைவிப்பதும் இசையின் ஆற்றலாகும். இதனை ஆனாய நாயனாரின் குழலிசையைக் கேட்டு இன்ப மயக்குற்ற உயிரினங்களைக் கொண்டும், இசை கேட்டு இன்னருள் பாலித்த இறைவனின் கருணையைக் கொண்டும் நன்கு அறியலாம்.
பண்ணைப் பற்றிய குறிப்புக்கள்:-
பண்ணைப்பற்றிய சில மிக முக்கியமான குறிப்புக்களைப் பெரியபுராணம் தருகின்றது. பண்களை எவ்வாறு இசைக்க வேண்டும் என்பதை ஆனாயநாயனார் குழல் இசைப்பதைக்
கொண்டு அறிய முடிகின்றது. இதனை பெரிய புராணம் பின்வருமாறு கூறுகின்றது.
"முத்திரையே முதலனைத்து முறைந் தானஞ் சோதித்து வைத்த துளை ஆராய்ச்சிவக்கரனை வழி போக்கி ஒத்த நிலை உணர்ந்ததன் பின் ஒன்று முதல் படிமுறையாம் அத்தகைமை ஆரோசை அமரோசைகளினமைத்தார்’
(பெரிய புரா, ஆனாய; பா.24)
எல்லா ஸ்வரஸ் தானங்களையும் நன்கு அறிந்து முறையாக அவை சரியான படி ஒலி காட்டுகின்றனவா என்பதைப் பரிசீலித்துக் கொள்ள வேண்டும். பின் குழலை ஊதி, காற்று ஒழுங்காக வெளியேறி ஒலி சரியாகக் கேட்கின்றதா என்பதை நன்கு உணர வேண்டும். அனைத்தும் நன்றாக அமைந்திருப்பதை ஐயமற அறிந்த பின்னரே பண்ணிசைக்கத் தொடங்க வேண்டும். பின் ஒவ்வொன்றாகச் ஸ்வரங்களை இசைந்துப் படிப்படியாக அருந்தமும் மெலிவும் காட்டி பண்ணை இசைக்க வேண்டும். ஆரோசை (ஆரோகணம்) அமரோசை (அவரோகணம்) தெளிவாக விளங்க பண்ணிசை நயமாகத் தெரிய இசைக்க வேண்டும். இத்தகைய நிலையில் பண் இசைக்க வேண்டும் என்று முறை வகுத்த தமிழர், பண்களை இசைத்துப் பாடுவதில் எவ்வளவுதிறமை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதையும் காட்டுகின்றது.
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

திரு நீல கண்ட யாழ்ப்பாண நாயனார் புராணத்தில் சேக்கிழார் பண்ணமைப்பைப் பற்றிய குறிப்பை மிகச் சிறப்பாக விளக்குகின்றார்.
"ஆலவாயமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்துநின்று
(திருநீலகண்ட யாழ்ப்பா,2)
என்ற பாடலின் மூலம் திரு நீல கண்ட யாழ்ப்பாணர் யாழில் ஏழிசைகளையும் மீட்டி பண்ணை வகுத்து இசை நயம் தோன்றுமாறு மிகச் சிறப்பாக இசைப்பதை எடுத்துக் காட்டுகின்றது.
பெரிய புராணத்தில் இந்தளம், குறிஞ்சி, மருதம், காஞ்சி, பஞ்சுரம் முதலிய பல பண்களைப் பற்றிய குறிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இவை சங்க காலம் முதல் இன்றுவரை வழி வழியாகத் தமிழ் மக்களால் பாடப்பட்டு வருவனவாகும்.
இசைக் கருவிகள் பற்றிய குறிப்புக்கள்:-
பெரிய புராணம் குழலைப் பற்றி மிக விரிவாக ஆனாய நாயனார் புராணத்தில் குறிப்பிட்டுள்ளது. அது கோவலர் இசைப்பது, வேய்ங்குழலாக அமைந்து இசை நூல் விதிப்படி துளையிடப்பட்டது. அதி நுட்பமான இசை எழுப்ப உதவுவது அதில் எவ்வாறு இசையை எழுப்புவது என்பதை சேக்கிழார் மிக விரிவாகவும், தெளிவாகவும் விளக்கிக் கூறி உள்ளார். ஆனாய நாயனார் தனித் தமிழ் மத்திரமாகிய திருவைந்தெழுத்தைப் புல்லாங்குழலில் வைத்துப் பாடித் திருத் தொண்டு புரிகின்றார் என்பதை பின்வரும் பாடல் அடியின் மூலம் குறிப்பிடுகின்றார்.
“மேவு துளைக் கருவிக்குழல் வாசனை மேல் கொண்டார்”
என்றும், குழலில் எப்படி எதனை இசைத்தார் என்பதையும், சேக்கிழார்
"எடுத்த குழல் கருவியினில் எம்பிரான் எழுத்தஞ்சும்
தொடுத்த முறை ஏழிசையின் சுருதி பெற வாசிந்து’
பாடலின் மூலம் என்ற சைவ மந்திரமாகிய நமசிவாய என்பதை எண்ணி இசை விதிமுறை வழுவாமல் இசையமுது அளித்துக் காட்டுகின்றார் என்பதை மிக விரிவாக எடுத்துக் கூறி உள்ளார்.
"ஏழு விரல் இடையிட்ட இன்னிசை வங்கியம்
எடுத்துத்
தாழுமலர் வரிவண்டு . என்ற பாடலில் வங்கியம் என்பது இன்றைய நாதஸ்வரம் என்பது கருத்து. ஏழு ஸ்வரங்களை இசைக்க, ஏழு துளைகளை உடையது என்பதை இப்பாடல் மூலம் கூறப்படுகின்றது.
93

Page 126
யாழிசையுடன் மிடற்றிசை ஒன்ற வேண்டும் என்பதை திருநீலகண்டத்துப் பெரும்பாணர் மதங்க சூளா மணியுடன் யாழிசைத்துப் பாடுவதை சேக்கிழார் “யாழிலெழும் ஓசையுடன் இருவர் மிடற்றிசையொற்றி” என்ற பாடலடியின் மூலம் மிக விரிவாகத் தெளிவுபடுத்துகின்றார்.
யாழின் வகைகளையும் சேக்கிழார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"ஏதமில் விபஞ்சிவீணை யாழொலி ஒரு பாலேத்தும் நாத மங்கலங்கள் கித நயப்பொலி ஒரு பாலாக”
என்ற பாடலின் மூலம் விபஞ்சி, வீணை, யாழ் ஆகிய மூன்றும் தனித்தனிக் கருவிகள் என்பதைக் குறிப்பிடு கின்றார்.
பெரியபுராணம் பண்ணிசைக் கருவிகளாக யாழ், வீணை, கின்னரம், விபஞ்சி, குழல், வயிர், கொம்பு, சங்கு, தாரை தாளம் ஆகியவற்றை குறிப்பிடுகின்றது. இறைவன் தாரை, சின்னம், தாளம் ஆகியவற்றையும் பொற்றாளத்தையும் திருஞானசம்பந்தருக்கு இசைப் பரிசாக வழங்கியதை இங்கு நினைவுகூரத்தக்க ஒரு சான்றாகும்.
தாள விசைக் கருவிகளான முரசு, துந்துபி, முழவு, தண்ணுமை, படகம், ஆகுளி (சிறுகண்பறை), பேரிகை, பம்பை, துடி, திமிலை, தட்டி, தொண்டகம் (குறிஞ்சிப்பறை), போன்ற கருவிகள் பெரியபுராணத்தில் இடம் பெற்றுள்ளன. யாழிசைக்கும் முறை சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, பெருங்கதை ஆகிய காப்பியங்களில் கூறப்பட்டது போன்று பெரிய புராணத்திலும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
கல்லும் கடவுள்
சுருக்கெழுத்தும் , ரேகையும் படித்தவனுக்குத்த தெரியும், அதுபோல் கோயிலிலிருக்கும் வி
தெரியும் மற்றவனுக்குக் கல்லாகத் தெரியும்
94
 

முடிவுரை:-
பன்னிரண்டாம் நூற்றாண்டில் தமிழர் இசை அறிவில் மிக்கவர்களாக இருந்தமை பெரியபுராணத்தின் வாயிலாக நன்கு அறிந்தோம். அவர்களுடைய விதிமுறைகள், ஏழிசை பற்றிய நுட்பங்கள், இசைத்தாளங்கள் பற்றிய அறிவு, சுருதியை அறியும் உணர்வுத்தன்மை ஆகியவை தமிழர்களின் இசையறிவின் சிறப்பையும், உயர்வையும் மிக சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றன. தமிழிசை சங்க காலத்தில் இருந்தே வளர்ந்து வரும் நிலையை பெரிய புராண பாடல்களின் வாயிலாக நன்கு அறிய முடிகின்றது. இசை மனிதனுக்கு இன்பத்தைக் கொடுப்பது. ஆகையினால் இசை மனிதனின் துன்பமாகிய நோயைப் போக்கும் இனிய மருந்தாகின்றது. இதனால் இசையின் தன்மைகளை சிறப்பாக பெரிய புராணம் பல இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளது.
புராணநூல்கள் இறைபற்றுடன் இணைந்து இசையின் பெருமை, இசையெழுப்பும் முறை, இசைக்கருவிகள் ஆகியவற்றை நன்கு விளக்கி உள்ளன. இறைவனை நினைந்து உருகும் நிலையில் இசை அவர்களுக்கு நன்கு உதவி உள்ளது. இறை உணர்வில் ஈடுபட்ட அடியவர்களுக்கு இசை உணர்வில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பெரிய புராணம் நன்கு விளக்கிக் காட்டி உள்ளது.
பெரிய புராணம் மட்டுமே இறை அடியார்களின் பெருமையைப் பேசுகின்றது. இது மட்டுமல்லாது இறை பற்றுடன் இசைப் பற்றையும் விவரித்துக் கூறுகின்றது. ஆகவே இசையாய்வுக்குப் பெரிய புராணம் நன்கு உதவும் நூலாக விளங்குகின்றது எனலாம்.
விக்கிரகமும்
ான் தெரியும். மற்றவனுக்குள் கோடாகத் தான் க்கிரகம் பக்தியுடையவனுக்குத் தெய்வமாகத்
dorắágarí ionat paot 2005

Page 127
608Ꭽ.Ꮼ5Ꭷ! .. l சித்தாந் தலைவர்- சைவசித்தாந்:
தெய்வச் சேக்கிழார் அருளிய திருத்தொண்டர்
புராணம் எனும் சிறப்புப் பெயர் கொண்ட பெரியபுராணம் பல்வேறு வகையில் தனித்தன்மை வாய்ந்ததாய் உள்ளது.
இது சிவஞானப் பொருள் வளமும், தவஞான தனித் தமிழ்ப் பெருவளமும், சிவசாதன மணமும் கமழும் பேற்றைப் பெற்று பக்திச் சுவையுடன் திருவருட் காவியமெனத் திகழும் பன்னிரெண்டாம் திருமுறையாகும்.
முதல் ஏழு திருமுறையாசிரியர் தம் செம்மொழியும், பொருளும் கொண்டு சேக்கிழார் தம் அருள்நூலை இயற்றி யுள்ளார்.
இறைவனால் எடுத்தருளப்பெற்ற “உலகெலாம்” என்னும் மெய்மொழியினை “உலகெலாம்” என முதற் கண்ணும், “சோதி முத்தின் சிவிகை சூழ்வந்து. அஞ்செழுத் தோதி ஏறினார் உலகம் உய்ய” என இடைக்கண்ணும் என்றும் இன்பம் பெருகும். உலகெலாம் என இறுதிக் கண்ணும் வைத்துப் போற்றியிருக்கிறார். உலகெலாம்: உலகு+ எல்+ ஆம் எல்: எல்லாம்; ஆம்= விளக்கம் பெறும்; பெரிய புராணத்தைப் படித்தால் எல்லோரும் விளக்கம் பெறுவர். உலகம் திருவருள் விளக்கம் பெறும்.
திருவருளே முன்னின்றும், உள்நின்றும் உணர்த்தப்பட்டு எழுந்த அருட்கவிகள் கொண்ட நூல் பெரியபுராணம். சிவமாகிய திருவைப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் சத்திய சரிதநூல், பக்திச்சுவை பெருநூல், வாழ்வியல் பெருநூல், இறைவனுக்கு அன்பு செலுத்தும் நிலைமையைத் தந்து அவனது அருளைப் பெறும்படியாகச் செய்விக்கும் தன்மையுடைய நூல், நம் ஆன்மாவை நிலையாய பேரின்பத்துள் திளைக்கச் செய்யும் நூல், இன்ப அன்பினை இடையறாது விளைவிக்கும் இன்தமிழ் மறைநூல், ஒழுக்க முறைகளைத் தெரிவித்து ஆன்ம ஞானத்தைக் கூட்ட வல்லதாய் அமைந்துள்ள நூல், பன்னிரு சைவத்திரு முறைகளில் ஒன்றான திருத்தொண்டர் புராணம் பக்தி இலக்கியமாகப் போற்றப்பட்டாலும் அது ஒரு வாழ்வு இலக்கியமாகவும் திகழ்கிறது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, தமிழர் நாகரீகம் ஆகியவற்றை நிலைநிறுத்தும் நூல்.
கயிலாயத்தின் உச்சியிலுள்ள இறைவனைப் பாடாமல் திருவாரூர் திருவீதியில் நடந்த அண்டர் நாயகனையும்,
சேக்கிழார் மாநாடு மலரி 2005
 
 

ஐந்தொழிற் கூத்தியற்றும் அம்பலவாணரையும் பாடினார். அரண்மனை வசித்தோரைப் பாடவில்லை. அவர்களில் அரனடிக்கு ஆளானவரையே பாடினார். இன்ப துன்பங் களைப் பொருட்படுத்தாது, வாழ்க்கைக் குறிக்கோளை அடைய இலட்சியப் பயணம் செய்த தவச்சீலர்களைத்தாம் சேக்கிழார் வாழ்த்துகின்றார்.
பெரியபுராணத்தில் மகளிர்;
சேக்கிழார் படைத்துக்காட்டும் மங்கையர் திலகங்கள் “பெண்ணிற் பெருந்தக்க யாவுள' என்ற வினாவுக்கு விளக்கம் கூறவந்த பாத்திரங்களாவர். ஆடவர் தடம் புரண்டாலும் மங்கையர் தடம் புரளாது நெறியில் நின்று ஒழுகி வாய்மை வரலாற்றை வளம்படுத்தியிருக்கிறார்கள்.
ஆன்மீகத்துறையில் ஈடுபட பெண்களுக்கு உரிமை யில்லை என்ற அக்கால நிலையை மாற்றுகிறார் சேக்கிழார். அடுப்பூதும் மங்கை ஆண்டவனைப்பாடி அவன் அருளில் கலந்த செய்தியைக் கூறுகின்றார்.
காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து கயிலாயஞ் சென்றபோது, இறைவன் “அம்மையே’ என்று அவரை அழைத்ததாகக் கூறும் சேக்கிழார் பெண்குலத் தையே பெருமைப்படுத்துகிறார்.
இயற்பகை நாயனார் மனைவியை மெய்த்தவர் (இறைவன்) கேட்டவாறே கொடுத்தனன் என்று கூறியபோது, அம்மையார் கலங்கி மனந்தெளிந்து பின் “நீர் உரைத்தது ஒன்றை நான் செயும் அத்தனையல்லால் உரிமை வேறுளதோ எனக்கு” என்று கூறி வணங்கினாள் என்றும், அவளைத் “திருவினும் பெரியாள்” என்றும் குறிப்பிட்டு, இலக்கு மியைவிடப் பெரியவள் என்று அவள் கற்புத்திறத்தைச் சேக்கிழார் விளங்குகிறார்.
மானுடம் வென்றது:
ஏனைய சமயநெறிகள்போல உயிர்கள் இறைவனைத் தேடிக் கண்டுபிடித்து, சில பயிற்சிகளை மேற்கொண்டு அடையவேண்டும் என்று வகுத்துக்காட்டாமல், இறைவனே தன்னுடைய மனைவி, மக்கள், ஊர்தி ஆகியவற்றுடன் உயிர்களை நாடிவந்து அவர்களையே தம் வாழ்விடமாகக் கொண்டு தங்கியிருக்குமாறு அருளியது சைவநெறி.
95

Page 128
பெரியபுராணத்தின் தொடக்கத்தே இறைவன் ஒலைதாங்கிய அந்தணனாக வந்து திருநாவலூராரை அடிமை எனக்கூறி வாதிட்டார். அவரே திருவாரூர்த் தேவாசிரிய மண்டபத்துப் பேரவையில் அடியவர்களுக்கு அடியேன் என ஆவணச் சீட்டு எழுதிக் கொடுத்து ஆட்படுவதைக் காணலாம். அடிமை ஆக்க வந்த ஆண்டவன் அடிமை ஆனார் என்பதே வரலாறு. அடியவர் பெருமையை ஒத்துக்கொண்டு அவர்தம் அடியவராகத் தம்மை எழுதிக்கொடுத்த வரி “தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” அடிமை கொள்ள வந்தவன் அடிமையாக ஆகிறார் என்பதே திருத்தொண்டர் புராணத்தின் முன்னுரையும், முடிவுரையுமாக அமைந் துள்ளது.
பெயர்க்காரணம்:
பல்லாயிரம் செய்யுட்களைக் கொண்ட மகாபாரதம், இராமாயணம், கந்தபுராணம் ஆகியவை பெரியபுராணங்கள் என்று கூறப்படுவதில்லை. ஆனால் சுமார் நாலாயிரம் செய்யுட்கொண்ட திருத்தொண்டர் புராணம் என்ற நூல், பெரியபுராணம் எனச் சிறப்புப் பெயர் பெறுவதற்குக் காரணம் “செயற்கரிய செய்வார் பெரியர்” என்கின்ற திருத்தொண் டர்களின் அறிய செயல்கள் மாக்கதையாக கூறுவதலாகும். “பேதமில்லதொர் கற்பு’ வாய்க்கப் பெற்றவராதலின் பெரியோர் எனப்பட்டனர். வலியக் கொடுப்பது உயர்ந்தது. கொடுக்கிறபோது வேண்டாம் என்று சொல்வது அதனினும் உயர்ந்தது. சிவன் முத்தி உலகம் தருகிறேன்’ என்றார். நாயன்மார்கள் வேண்டாம் என்றனர்.
"கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினிற் கும்பிட லேயன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.” பெரியபுராணம் வேண்டாமையிலே பெரியவர்களாகத் திகழும் அடியார்களின் வாழ்வியல் நெறிகளை விளக்குவதாகும். வீடுபேறு பெற்ற நிலையிலும் இறையன்பிலேயே திளைத்து நிற்பது மரபு. அந்த இறை அன்பு இங்கேயே கிடைக்கப் பெறுவதால், வீடு பேற்றினைவிட இறையன்பே உயர்ந்ததாகும் என்று கருதியவர்கள் நாயன்மார்கள். இதனை விளக்கும் திருநாவுக்கரசர் புராணப்பாடல்,
செம்பொன்னும் நவமணியும், சேன்விளங்க
-gէthi@56067եւյլն உம்பர்பிரான் திருமுன்றில் உருள்பருக்கை
யுடனொக்க எம்பெருமான் வாகீசர் உழவாரத்தினிலேந்தி வம்பர்மென்பூங்கமலை வாவியினுட் புகவெறிந்தார்” பொதுவாக புராணங்கள் கற்பனை கலந்தே பாடப்பட்டுள்ளன. ஆனால் சேக்கிழார் தமது புராணத்தை
96 V− m

வரலாற்று அடிப்படையில் செம்மொழிப் புராணமாக அமைத்துள்ளார். புராணங்களுள் கயிலையில் தொடங்கி கயிலையில் முடியும் புராணம் இது ஆகும். தலைமை அமைச்சுப் பதவியை நீத்துத் தம்மை இறைமைப் பணியில் ஈடுபடுத்திக்கொண்ட மாணிக்கவாசகரால் திருவாசகமும், சேக்கிழாரால் திருத்தொண்டர் புராணமும் தோற்றுவிக் கப்பட்டன என்பது நினைவுக்குரியதாகும்.
“சேக்கிழார் பெருமானின் உள்ள ஊற்றிடைத் தேங்கிய அன்புநீர் அருவியாய் வழிந்து, ஆறாய்ப் பெருகி, பெரியபுராணம் எனும் அன்புக் கடலாயிற்று” என்கிறார் திரு.வி.க.
சிவனடியார்:
பல்வேறு குலப் பிரிவினரையும் “சிவனடியார்” என்ற அடிப்படையில் ஒருங்கிணைத்துக் கூறுகிறது பெரியபுராணம். மனிதநேயம் பரப்பி, தன் உடைமையினை ஈந்து மகிழ்ந்து, இறுதியில் இறைவனால் அருள்பாலிக்கப்பட்டு அவருலகு எய்த அந்தமில் இன்பம் பெற்ற திருத்தொண்டர் அறுபத்தி மூவரின் பெருவரலாறுகளை விரித்து விளக்குவது பெரியபுராணம்.
இறையடியார், தம் இறைத்தொண்டிற்கு எத்தகைய இடையூறுவரினும் அன்பு அகலாது நின்று, இறைப்பணியைத் தொடர்பவராயின் இறையருள் நிச்சயம் என்ற உண்மையைச் சேக்கிழார் “மூர்த்தி நாயனார்” வரலாறு மூலம் உணர்த்து கிறார்.
தூய அன்பினால் இறைவனைக் காண முடியும் என்ற உண்மையை கண்ணப்ப நாயனார் வரலாறு மூலம் சேக்கிழார் அறிவிக்கின்றார்.
"சார்வருந்தவங்கள் செய்து முனிவரும் அமரர்தாமும் கார்வரை அடவி சேர்ந்தும் காணுதற்கரியார் தம்மை ஆர்வமுன் பெருக அன்பினில் கண்டுகொண்டார்”
அரசன் கடமைகள்:
தன்னால், தன் பரிசனத்தால், ஊனமிகு பகைத்திறத்தால், கள்வரால், உயிர்கள் தம்மாலான பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் என்று அரசன் கடமைகளை இயம்புகிறார். இல்லறத்தின் சிறப்பு:
இல்லறத்தின் சிறப்பு, “வையகம் போற்றும் செய்கை மனை அறம்புரிந்து வாழ்வோர்” என்று திருநீலகண்டர் வரலாற்றில் விளக்குகிறார்.
“ஓங்கிய அன்புறு காதல் ஒழிவின்றி மிகப் பெருகப் பாங்கில் வரும் மனை அறத்தின் பண்புவழாமையில் பயில்வார் காரைக்கால் அம்மையார்” என்று போற்றுகின்றார்.
“நின்றாலும், இருந்தாலும், கிடந்தாலும், நடந்தாலும், மென்றாலும், துயின்றாலும், விழித்தாலும், இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பதம் ஒரு காலமும் மறவாமை குன்றாத
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 129
s O 99 உணர்வுடையார் கொண்டராம் குணமிக்கார்' எனப் பாராட்டுகின்றார்.
வேடுகுலத்தோர்:
éé
ஆவுரித்துத் தின்றுழலும், புலையரையும்” கொல், குத்து, வெட்டு என்று பேசும் வேடரையும், பிறரையும் உயிர்த் துடிப்புள்ள பாத்திரங்களாக கண்ணப்ப நாயனார் வரலாற்றில் விளக்கியுள்ளார்.
அடியார் பெருமை:
அடியார் பெருமையைச் சுந்தரர் வரலாற்றில்
இறைவனே உணர்த்தியதாகச் சேக்கிழார் கீழ்வரும் பாடல் மூலம் அறிவிப்பது போற்றற்குரியதாகும்.
“பெருமையால் தம்மை ஒப்பார் பேணலால் எம்மைப்
பெற்றார் ஒருமையால் உலகை வெல்வார் ஊனம்மேல் ஒன்றும் இல்லார் அருமையாநிலையில் நின்றார் அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்துநின்றார் இவரை நீஅடைவாய்
என்று
இறைவனின் இயல்புகள்:
இறைவனின் பொது இயல்பையும், சிறப்பு இயல்பையும் கீழ்வரும் இரண்டு பாடல்களில் எடுத்துரைக்கின்றார்.
ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவுமாகிச் சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளு
ԼՈTélմ பேதியா வேகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணுமாகிப் போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி
போற்றி
கற்பனை கடந்த சோதிகருணையே உருவம் ஆகி அற்புதக் கோலநீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பரவியோமம்ஆகும்திருச்சிற்றம்பலத்துள்நின்று பொற்புடன் நடம் செய்கின்ற பூங்கழல் போற்றி
போற்றி
ஐம்பூதங்களாய் இருப்பவன் இறைவன் என்கிறார் சேக்கிழார்.
"வானாகி நிலனாகி அனலுமாகி மாறாதமாய்
இருசுடராய் நீருமாகி ஊறாகி உயிராகி உணர்வுமாகி உலகங்கள் அனைத்துமாகி உலகுக்கப்பால்
ஆணாத வழ வாகி’ ஆறுமுக நாவலர்:
யாழ்ப்பாணம் தவத்திரு. ஆறுமுக நாவலர் அவர்கள் பெரிய புராணத்தின் மீது கொண்டிருந்த பக்தி அளவிடற்
већеpri paprti, paf 2005

கரியது. தம் மாணாக்கர்களுக்கு முதன் முதலில் கற்பித்துக் கொடுத்த நூல் பெரியபுராணம். ஆதலால்தான் இந்த நூலை உரைநடை வடிவாக நாவலர் அமைத்தார். உலகம் உய்யவும், சைவம் நின்றோங்கவும், சைவ சமயிகளுக்குப் பக்தியை விளைத்தலாகிய பயனைக் கொடுக்குமென்று இப்புராணத்தை உரைநடையில் இயற்றியதாக நாவலர வர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவருடைய மூத்த சகோதரர் “பெரியபுராணத்தில் உள்ள கதைகளெல்லாம் கட்டுக்கதைகள்” என்றார். இதனை நாவலர் கேட்டவுடன், கோபாவேசங்கொண்டு தம் தமையனாரை வெட்டுவதற்காகப் போனபோது பிறரால் தடுக்கப்பட்டார். அதுமுதற் கொண்டு அவர்தம் தமையனாரோடு பேசுவதை நிறுத்திவிட்டார்.
சைவசித்தாந்தக் கருத்துக்கள்:
சேக்கிழார் சுவாமிகள் சைவசித்தாந்தச் சாத்திரங்கள் தோன்றுவதற்கு முன்னரே வாழ்ந்துவந்தவராயினும், பதிபசு- பாசம், மும்மலம், சரியை- கிரியை- யோகம், ஞானம், இருவினையொப்பு- மலபரிபாகம், சத்திநிபாதம், திருவைந் தெழுத்து என்பன போன்ற பல சைவசித்தாந்தக் குறியீட்டுச் சொற்களையும் அவற்றோடு தொடர்புடைய பலவகைக் கருத்துக்களையும் ஆங்காங்கே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
உலகெலாம் எனத்தொடங்கும் திருவிருத்தத்தில் அமைந்துள்ள 63 எழுத்துக்கள் 63 நாயன்மார்களை உணர்த்துகின்றன. இப்பாடலில் நான்கு சீர்களில் நான்கு வரிகளாக அமைந்திருப்பது மந்த தரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்னும் நான்குவகைச் சத்தி நிபாத நிலைகளையும், சரியை, கிரியை, யோகம், ஞானம், என்னும் நான்குவகை நெறிகளையும் உணர்த்துகின்றன. சிவஞானபோதம் 12ம் சூத்திரத்தின் விளக்கமாக பெரியபுராணம் அமைந்துள்ளது. மேற்கண்ட விருத்தத்தில் சிவ இயல்புகள் உணர்த்தப்பட்டுள்ளன.
உலகெலாம் உணர்ந்தோதற்கு அரியவன்- சொரூப சிவ இயல்பு- அருஉருவ நிலை
அலகில் சோதியன்- தடத்த இலய சிவ இயல்புஅருவரு நிலை
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்- தடத்த போக சிவ இயல்பு- உருவநிலை
அம்பலத்து ஆடுவான்-தடத்த அதிகார சிவ இயல்புஇவைகளுக்கு அப்பாற்பட்ட நிலை- சிதாகாசத்தில் ஆடுங்கோலம்.
கனகசபையில் (சிதம்பரத்தில்) வலக்கால் ஊன்றி இடைக்கால் உயர்ந்திருக்கும். வெள்ளியம்பலத்தில் (மதுரையில்) இடக்காலை ஊன்றி வலக்கால் உயர்ந்திருக்கும். இரண்டு காலால் நடைபெறும் கூத்து லாஸ்யம்' என்பர். ஒற்றைக்காலால் நடைபெறும் கூத்து ஊர்த்துவ தாண்டவம் (அற்புதக்கூத்து) எனப்படும்.
97

Page 130
ஆன்மாக்களுக்குச் சாந்தி தருவதால் சாந்தி கூத்து என்பர். இறைவன் செய்யும் கூத்து ஆகாசத்தின் நடுவில் நடைபெறும். திருவைந்தெழுத்து:
மக்கள் பிறவிப்பிணியைப் போக்க வேண்டுமாயின் திருவைந்தெழுத்தை முறையாகப் பயின்று ஒதி வரவேண்டும் என்ற சைவ சித்தாந்தக் கருத்தைத் திரு நாட்டுச் சிறப்புப் பகுதியில் கூறியுள்ளார். சிவனடியார்கள் “நிரந்த நீற்று ஒளியும்” “புரந்த அஞ்செழுத்தும்” உடையவர்கள் என்று குறிப்பிடுகிறார். உயிர்களைப் பிறவி நோயிலிருந்து காத்துவரும் மந்திரம் திருவைந்தெழுத்தாகும். புரத்தல்காத்தல்.
இருவினைக் கயிற்றால் மலக்கல்லில் கட்டுண்டு பிறவிக்கடலில் அமுங்கிக்கொண்டிருக்கும் உயிர், அந்நிலையிலே திருவைந்தெழுத்து ஒதியுணர்ந்து, இருவினைக்கயிறற்று, மலத்தின் நீங்கி பிறவிக் கடலின் கரையேறலாம் என்பர்.
இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக் கடலில் வீழ்மாக்கள் ஏறிட அருளுமெய் அஞ்செழுத்து’
என்று திருநாவுக்கரசர் புராணத்தில் உணர்த்துகின்றார். இறைபணி நிற்றல்;
திண்ணன் காளத்திமலையின்மேல் செல்லும் தன்மையை
"நாணனும் அன்பும் முன்பு நளிர்வகையேறத்தாமும் பேணுதத்துவங்களென்றும் பெருகு சோபானம் ஏறி ஆணையாம் சிவத்தைச்சார அணைபவர் போல ஐயர் நீணிலை மலையையேறி நேர்படச் செல்லும் போதில்’
என்று தெரிவிக்கும் சேக்கிழார், உலகுயிர்களைத் தாங்கி உடம்பொடு காக்கும் தத்துவங்களைத் தெரிந்து தம்மையும், பதியையும் உணர்ந்து கொண்ட அறிவினால் உயிர்கள் அத்தத்துவங்களின் நீங்கி இறைவனைச் சாருதல் வேண்டும் என்னும் மெய்கண்ட நூல் உண்மையை, இங்கு திண்ணனார் அன்பு முன்னதாக மேலேறிச் செல்ல, தத்துவப் படிகளைக் கடந்து, ஆணையாம் சிவத்தைச் சார வருகின்றார் என்னும் இயல்பான வாழ்வியலின் இலக்கியங் காட்டுகின்றார்.
இறைவன் கண்ணப்ப நாயனாரைப் பற்றிச் சிவகோசரியாருக்கு உணர்த்துவதாகச் சேக்கிழார் கூறுவது "அவனே தானே ஆகிய அந்நெறி ஏகனாகி இறைபணி நிற்றல்” என்று சிவஞான போதம் பத்தாம் சூத்திரத்தில் கூறப்பட்டுள்ள நிலையைக் குறிக்கும்.
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம்நமை அறியும் அறிவு என்றும் அவனுடைய செயல் எல்லாம்நமக்கு இனியவாம் என்றும்
அவனுடையநிலைஇவ்வாறு அறிநீஎன்றுஅருள்செய்தார்
98

திருநீறு மகிமை:
தம் திருவடிகளில் விழுந்து வணங்கிய மருள்நீக்கி யாருக்குத் திலகவதியார் திருநீற்றைக் அளித்ததால் பெருவாழ்வு வந்தது என்ற செய்தியைச் சேக்கிழார் குறிப்பிடும்போது, சைவசித்தாந்தத்தில் போற்றப்படும் திருநீறு, அஞ்செழுத்து மகிமை, இறைவனின் இயல்பு ஆகியவற்றை உணர்த்துகிறார்.
நின்மலன் பேரருள் நினைந்து-திருநீற்றை அஞ்செழுத்து ஒதிக் கொடுத்தார்
திருவானன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்தது எனப் பெருந்தகையார்
-- பணிந்தேற்று அங்கு உருவார அணிந்து
திருவேடத்தின் சிறப்பு:
திருவதிகை வீதியினுள் நுழைந்த திருநாவுக்கரசரின் தோற்றம் சேக்கிழார் விளக்குவது, சிவஞானபோதம் 12 ஆம் சூத்திரம் கூறும் திருவேடத்தின் இயல்பாக இருந்தது.
"தூயவெண்ணிறுதுதைந்த பொன்மேனியும்,
தாழ்வடமும், நாயகன் சேவடி தைவரும் சிந்தையும் நைந்து உருகிப் பாய்வதுபோல் அன்புநீர் பொழிகண்ணும் பதிகச்
செஞ்சொல் மேய செவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே”
வினைக்கொள்கை:
சைவசித்தாந்தத்தின் வினைக்கொள்கையைச் சேக்கிழார் சாக்கிய நாயனார் புராணத்தில் கூறியுள்ளார்.
“செய்வினையும் செய்வானும், அதன்பயனும்
கொடுப்பானும் மெய்வகையால் நான்கு ஆகும் விதித்த பொருள்
எனக் கொண்டே இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கு இல்லை என உய்வகையால் பொருள் சிவன் என்று அருளாலே
உணர்ந்தறிந்தார்” வினைகளை அனுபவித்தே தீரவேண்டும். கழிக்க ஒண்ணாதது என்னும் சமயவாதங்களை மறுத்து,
"வினைதீர்தல் எளிதாமே!திவினை வந்தெம்மை தீண்டப பெறா’ என்கின்றார் திருஞானசம்பந்தர் அன்புறு சிந்தையர் அடியவர் திருத்தொண்டர் தம் திருத்தொண்டினால் இருவினை நீங்கப்பெறுந் திறத்தை
“தேசுடைய மலர்க்கமலச் சேவடியார்
திருத்தொண்டர்
sorášágaríf ografob9a0f2oo5

Page 131
தூசுடைய துகள்மாசு கழிப்பார்போல் தொல்வினை
ஆசுடைய மலமூன்றும் அனைவரும் பெரும்பிறவி
மாசுதனை விடக்கழித்து வருநாளில் அங்கொருநாள்'
என்று விளங்கக்காட்டுகின்றார் சேக்கிழார்.
மேலும் திருஞான சம்பந்தரால் ஆட்கொள்ளப்பட்ட பாண்டிய மன்னனின் வல்வினை நீங்கியதைச் சேக்கிழார் எடுத்துரைக்கின்றார்.
"தென்னவன் மாறன்தானும் சிரபுரத்தலைவன்
தீண்டி பொன்நவில் கொன்றையார்தம் திருநீறுபூசப்
பெற்று முன்னைவல் வினையும் நீங்க முதல்வனை அறியும்
தன்மை துன்னினான் வினைகள் ஒத்துத்துலை என
நிற்றலாலே’
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக் குறளின் தெளிவைப் பெரியபுராணத்தில் காண்கிறோம். இறையன்புடன் கூடிய திருத்தொண்டே சிறந்தது என்பதை விளக்குவதால் தொண்டு எனும் பண்புதான் இக்காப்பி யத்தின் தலைமையைப் பெறுகிறது.
சிவனடியார்களுக்கு அன்பு செலுத்தினால் சிவனுக்கு அன்பு செய்வதாய்க் கருதப்படும் என்ற உண்மையை பெரியபுராணம் விளக்குகிறது. இவ்விளக்கத்தை அப்பூதி அடிகள் வரலாற்றில் காணலாம். திருநாவுக்கரசு சுவாமிகளைப் பார்க்காமலே அவர்மீது அன்பு மீதுTர தாம் செய்யும் பணிகள் அனைத்தையும் திருநாவுக்கரசர் பெயரிலேயே அப்பூதி அழகன் அமைத்தார். தன் பிள்ளைக்கும் திருநாவுக்கரசு என்ற பெயரே சூட்டினார். தன் பிள்ளை பாம்பு கடித்து திடீரென இறந்தான் என்ற வருத்தத்தைப் புறக்கணித்து, அவனுடைய உடலை வீட்டில் மறைத்துவிட்டு, அன்று தன் இல்லத்திற்கு எழுந்தருளியுள்ள சிவனடியாரான திருநாவுக்கரசருக்கு அமுது படைப்பதே திருத்தொண்டு என்று கருதினார். திருநாவுக்கரசர் தாம் உணவு உட்கொள்வதற்கு முன்பாக அப்பூதி அழகனை வினவி அவருடைய பிள்ளையை அழைக்குமாறு கூறியபோதும் அப்பூதி அழகன் தன் பிள்ளை இறந்த செய்தியைச் சொன்னால் திருநாவுக்கரசருக்கு அன்னம் பாலிக்கும் வாய்ப்பு இழக்கப்படுமோ எனக்கருதி,தன்பிள்ளை இப்போது உதவான் என்று கூறினார். திருநாவுக்கரசு என்ற பக்த பஞ்சாட்சரத்தை ஒதியே அப்பூதி அழகன் வீடுபெற்றார் என்பது வரலாறு. சிவனடியார்களை மையமாக வைத்து
எழுதப்பட்ட நூல் பெரியபுராணம்.
áráágaf Bavaro 190f2005

சேக்கிழார் அருளிய புராணத்தை நாம் படிக்கும் போது, அவர்கூறும் இடங்களை நேரில்கண்டு, அங்கு வாழும் மக்களோடு அளவளாவிப் பழகிய பின்பு தாம் பாடவந்த அடியவர்களின் நிலைமையை ஒருவாறு உய்த்து உணர்ந்து அகக்கண்ணாற் கண்டு தம் தெய்வப் புலமைத்திறத்தால் நமக்கும் விளங்கும்படி அருளியுள்ளார் என்பது, தெளிவுறுகின்றது என்றாலும், அம்பலக்கூத்தன் திருவருளில் அத்துவித நிலையில் நின்று அருள்மயமான ஞானக் கண்ணாலே எல்லா உண்மைகளையும் அவனே காட்டக்கண்டு அறிந்தவாறு அருளினார் என்பது பொருந்தும்.
இப்புராணத்தின் நோக்கம் என்ன என்று சேக்கிழாரே கூறுகிறார்.
“உலகம் உய்யவும் சைவம்நின்றோங்கவும் அலகில் சீர்நம்பி ஆரூரர் பாடிய நிலவு தொண்டர்தம் கூட்டம்நிறைந்துறை குலவு தண்புனல்நாட்டணி கூறுவோம்”
திருத்தொண்டர் புராணத்தினால் பெறப்படும் Lulu 65:
பாயிரத்தின் இறுதிப்பாடலில் திருத்தொண்டர் புராணத்தால் அடையும் பயன் குறிக்கப்பட்டுள்ளது.
இங்கிதனாமங்கூறினிவ்வுலகத்து முன்னாள் தங்கிருளிரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்துநின்ற
பொங்கியவிருளையேனைப் புறவிருள் போக்குகின்ற செங்கதிரவன்போனிக்கும் திருத்தொண்டர்
புராண மென்பாம்” புற இருளைப் போக்கி, உலகத்தைப் புலப்பட செய்யும் கதிரவன் செயலை உவமையாகக் காட்டி, இத்திருத் தொண்டர் புராணத்தின் பயன் மக்களின் அக இருளைப் போக்குவதாகும்.
"கருங்கடலை கைந்நீத்துக் கொளது எளிது கடற்கரை மணலை எண்ணி அளவிடலாம் கடல்மேல் வரும் அலைகளை எண்ணலாம் வானத்தாரகையை அளவிடலாம் திருத்தொண்டர் புராணத்தை அளவிடல் நம் சேக்கிழார்க்கு எளிது அது தேவர்க்கும் அரிதே'
என்ற உமாபதி சிவாசாரியார் மொழியினால் திருத்தொண்டர்களது பெருமைகளையெல்லாம் அளவிட்டுக் கூறுவது முடியாது என அறிகின்றோம்.
99

Page 132
தெய்வக் குழலோ
-வித்துவான் வசந்தா ை
மிேழ்தினும் இனிய செந்தமிழ், இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழையும் ஈன்று புரக்கும் பெருஞ்சிறப்பினைக் கொண்டது. தமிழ்த்தாய் என்று பிறந்தவள் என்றுணராத இயல்பினைக் கொண்டவள்; என்றும் மாறா இளமைத் தோற்றத்தினைக் கொண்டவள். முத்தமிழுக்கும் இலக்கணம் வகுக்கும் அகத்தியம், தலைச்சங்கத்து இறுதியில் எழுந்த நூலென்றால் அதற்கும் முன்பதாகத் தோன்றி வளம் சிறந்த இலக்கியங்களின் பெருமையை எங்ங்ணம் உரைப்பது.
எண்ணெண் கலைகளும் எழுந்து சிறந்தது தமிழ்நாடு. இசை, கூத்து, ஒவியம் என்பன ஓங்கி ஒளிர்ந்ததும் தமிழகத்தில் தான். இசையின் சிறப்பை விளக்கும் பெரு நாரை, பெருங் குருகு, நாரதர் செய்த பஞ்ச பாரதீயம், சாரங்க தேவர் இயற்றிய சங்கீத ரத்னாகரம், சிகண்டியின் இசைநுணுக்கம் போன்ற அரிய நூல்கள் தமிழரின் இசையறிவை இமயத்திற்கு உயர்த்தியது. தமிழர்கள் தாம் வகுத்த ஐவகை நிலங்களுக்கும்,பண்களைக் கண்டு, இசைக் கருவிகளை அமைத்து, அவ்வந்நிலங்களுக்கும் ஒழுக்கங்களை வகுத்து, நாகரிகத்தின் கொடுமுடியைத் தொட்டனர். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரம் முத்தமிழின் “சரக்கரை” யாகும். பழுதற்ற முத்தமிழின் பாடல் இது சிலம்பிற்கு அடியார்க்கு நல்லார் தந்த பாராட்டாகும். சங்க நூல்களில் பரிபாடல் இசைப் பாட்டினாலானது. சங்க காலத்தில் வாழ்ந்த கண்ணகனார், கேசவனார், நல்லச்சுதனார், நாகனார் போன்ற பெருமக்கள் இசைத்தமிழ் வளர்ச்சிக்கு உதவினார்கள்.
இனி இசையை இலக்கியச் சிறப்பிற்கு மட்டுமல்லாது இறைச்சிறப்பிற்கும் பயன் கொண்ட பெருமை சைவ நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் சாருகின்றது. அவர்களது காலம் பக்தி யுகமாகத் திகழ்ந்தது.
“பண்னொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்’என்று ஆளுடைய பிள்ளையும்,
“பாட வேண்டும் நான் போற்றி நின்னையே பாடி நைந்து நைந்துருகி நெக்குநெக் காட வேண்டும் நான் போற்றி” என்று ஆளுடை அடிகளும், 罗罗
"பண்ணின் இசையாகிநின்றாய் போற்றி என ஆளுடை அரசும்,
"ஏழிசையாய் இசைப் பயனாய்’என்று
100
 
 

சை கேட்குதம்மா! வத்தியநாதன் (ஐே.பி)
ஆளுடை நம்பியும் இசையின் ஊடாக இறைவனை அடையும் முறைமையினைப் பலப்பல இடங்களிலும் பாங்காக உணர்த்தியிருக்கின்றனர்.
பண்டைத் தமிழர் இசைக் கருவிகளுள் குழலும் ஒன்று. இது இயற்கை படைத்த இசைக்கருவி. காடுகளில் நீண்டு வளர்ந்த மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளைகளின் வழியே கோடைக்காற்று உள்புகுந்து வெளிவருதலால் எழும் இன்னோசை,
"ஆடமை குயின்ற அவிர்துளை மருங்கில் கோடை யவ்வளி குழலிசையாக’
என அகநானூற்றின் கூற்றினால் அறியலாம். இவ்வாறு எழும் இசையடிப்படையாகக் குழல் தோன்றிற்று. பசுக்களை மேய்த்து வரும் ஆயன் மூங்கிலை வெட்டி, தீக்கடைக் கோலாலே புகை பிறக்கும்படி கையாலே தீயைக் கடைந்து, மூங்கிலில் துளையிட்டு ஆக்கின குழலில் பாலைப்பண்ணை இசைத்தான் என்று பெரும்பாணாற்றுப்படை தெரிவிக் கின்றது. மூங்கிற் குழலைக் கோவலரே பயின்று வந்ததை,
"குழல் தொடங்கினரே கோவலர்” “கல்லாக் கோவல ரூதும் வல்வாய்ச் சிறுகுழல்’ என நற்றினை, அகநானூற்று வரிகளால் அறியலாம்.
மூங்கிற் குழலுக்குப் ‘புல்லாங்குழல்” என்றும் பெயர். மூங்கில் புல்லினத்தைச் சார்ந்தது. இது சந்தனம், வெண்கலம், செங்காலி, கருங்காலி முதலியவற்றாலும் செய்யப்பட்டது என்பது சிலப்பதிகாரக் குறிப்பு மூங்கிற்குழல் தூம்பு, வங்கியம் என்னும் பெயர்களாலும் வழங்கப்பட்டு வந்தது. பண்டைக் காலத்தில் கூத்தர் தம் ஆடற்றுரைக்கு வேண்டிய இசைக் கருவிகளுள் ஒன்றாகத் தூம்பினையும் கொண்டிருந்தார்கள் என்பது பதிற்றுப்பத்து, மலைபடுகடாம் என்னும் நூல்களால் தெரியவருகின்றது.
"குறுநெடுந் தூம்பொடு முழவுப்புணர்ந்திசைப்ப. கோடிய ரிறந்த”
என்ற அகநானூற்று வரிகள் கூத்தர் குறுந்துாம்பு, நெடுந் தூம்பு என இரண்டு வகையான தூம்பினைக்
கையாண்டார்கள் என்று தெரிவிக்கின்றன. குறுந்தும்பு
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 133
“சிறு வங்கியம்” என்றும், பெருந் தூம்பு “பெரு வங்கியம்” என்றும் வழங்கப்பட்டன. பெருவங்கியம் களிற்றின் கைபோலும் வடிவுடையது என்பது.
"கண்விடுதூம்பிற் களிற்றுயிர் தொடுமின்’ கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது கைபோலும் வடிவமைந்த பெரு வங்கியத்தை இசையுங்கள்” என்ற புறநானூற்று உரையாலும் தெளிவாகின்றது.
ஏழு துளைகளைக் கொண்ட வங்கியமும், ஐந்து துளைகளைக் கொண்ட வங்கியமும், வழக்கத்தில் இருந்தன என்பது,
"ஏழ்புழை ஐம்புழை யாழிசை கேழ்த்தன்ன’ பரிபாடற் கூற்றால் அறியமுடிகின்றது.
"கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழி” "ஆம்பலந்தீங்குழல் கேளாமோ தோழி” “முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி”
என்று சிலம்பும் குழலின் பெருமை பேசுகின்றது.
மற்றைய இசைக் கருவிகளை விட, குழலின் தனிச்சிறப்பு எக்காலத்தும் சுரம் வேறுபடாமல் ஒலிப்பதாகும். யாழின் நரம்புகள் குளிர்ச்சியினால் தாக்குப்பட்டால் சுருதி வேறுபடும். தோற்கருவிகள் விசிவார்களின் தளர்ச்சியால் வேறுபடலாம். ஆனால் எக்காலத்தும் மாறுபடாது ஒலிப்பது குழல் மட்டுமேயாகும்.
'தண்மையிற்றிரிந்த வின்குரற்றிந்தொடை கொம்மை வருமுலை வெம்மையிற்றடைஇக் கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்ப"
என நெடுநல்வாடை குறிப்பிடுகின்றது. இங்ங்ணம் ஒசை வேறுபட்ட இடத்து குழல் ஒசையின் துணையால் யாழ் நரம்பிற்கு இசை கூட்டினார்கள்.
“நரம்பின் தீங்குரல் நிறுக்குங் குழல் போல் (கலித்தொகை)
பண்டை இசைக் கருவிகளில் குழலே முதலிடம் வகித்தது.
"குழலகவ யாழ்முரல- (பட்டினப்பாலை) "குழலினும் யாழினும் - (சிலம்பு) “குழலினிது யாழினிது (திருக்குறள்)
குழலின் துணைகொண்டே யாழ் முதலிய கருவிகள் ஒலித்தன.
"குழல் வழிநின்றது யாழே யாழ்வழித் தண்ணுமை நின்றதுதகவே தண்ணுமை பின்வழிநின்றது முழவே” என்ற சிலம்பின் ஒலியின் குழலின் சிறப்பு உயர்ந்து நிற்கின்றது.
சோழ நாட்டின் மேல்மழநாடு ஈன்றெடுத்த முத்து திருமங்கலம். பெயருக்கேற்பவே மங்கலம் நிறைந்தது. இப்
6«Féaßgarif 19rujarrob 196Df 2005

பதியில் புனல் வெள்ளத்தோடு இசைவெள்ளமும் இருகரை பெருகும். புனல் வெள்ளத்துள் உயிர்கள் மூழ்கும். இசை வெள்ளத்துள் உயிர்கள் ஒடுங்கும். இந்த அற்புதத்தைச் செய்வது ஆனாயரின் குழல் ஒலி. சிவபெருமான் திருவடிக்கே பதிந்த நெஞ்சம் கொண்டவர் ஆனாயர். மண்வளமும், மனவளமும் கொண்ட ஆயர் குலத்தோன்றல் ஆனாயர். மனந்தூய்மை, செய்வினைத் தூய்மை இரண்டுமே மிக்கவர். அனலாடும் அழகனுக்கு அபிஷேகப் பொருள்களைத் தரும் ஆக்குலத்தை மேய்க்கும் அரும்பணியில் தலைநின்றார். ஆனாயர் குழலிலிருந்து அன்பூறி எழும் அமுத இசை என்பு ஊடுருக சரம், அசரம் அனைத்தையும் பிணைத்தது. தேனினும் இனிய அந்தத் தீந்தமிழ் கானகம் முழுவதையும் நிறைத்தது. விலங்குகளையும் அது விட்டு வைக்கவில்லை.
அறுகம் புல்லை அசை போடும் ஆனினங்கள் அசைபோடுவதையும் மறந்து ஆனாயரைச் சூழ்ந்தன. பாலின் நுரை வாயில் வடிய தாய்ப் பசுவிடம் பாலருந்திக் கொண்டிருந்த இளங்கன்றுகளும் தாய்மடியைச் சுவைக்க மறந்தன. காளைகளும், கலைமான்களும் கூட அருகுவந்து அணைந்தன.
"ஆன்நிரைகள் அறுகருந்திஅசைவிடாதணைந்தயரப் பால்நுரைவாய்த்தாய்முலையில் பற்றும்இளங்கன்றினமும் தான் உணவு மறந்தொழியத்தடமருப்பின் விடைக்குலமும் மான்முதலாய் கான்விலங்கும்மயிர்முகிழ்த்துவந்தணைய’
இரையிலே நாட்டமுடைய விலங்குகளைக் கூட ஆனாயர் குழலோசை உணர்வு மறந்த யோகியர்களாக்கி விட்டது.
கார் காலம் . மயில்களுக்கு மகிழ்வளிக்கும் காலம். விரிந்து பரந்த தோகையை உயர்த்தி, நீலநிறக் கழுத்தை வளைத்து, சலங்கை கட்டி சதிராடும் மகளிர் போலக் காலை மாற்றி மாற்றி அமைத்து ஆடி மகிழ்ந்து கொண்டிருந்தன. எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது ஆனாயரின் ஐந்தெழுத்துக் கானம். உடனே ஆடுதலை விட்டு கூட்டம் கூட்டமாக ஆனாயரை மொய்த்து விட்டன. மயில்கள் மட்டுமா?. விண்ணிலே விரைந்து கொண்டிருந்த பறவைக் கூட்டங்கள் கூட காந்தத்தினால் கவர்ந்திழுக்கப்பட்டது போல மண்ணிற்கு விரைந்தன. மற்றும் குழலூதி அதிலேயே இலயித்திருந்த மற்றைய கோவலர்களையும் கூட ஆனாயுர் குழல் ஓசை சுண்டி இழுத்தது.
"ஆடும்மயில் இனங்களும்அங்கசைவயர்ந்துமருங்கணுக்
ஊடுசெவிஇசைநிறைந்த உள்ளமொடுபுள்ளினமும்
மாடுபடிந்துணர்வொழியமருங்கு தொழில் புரிந்தொழுகும்
கூடியவண்கோவலரும் குறைவினையில்துறைநின்றார்” இந்த இடத்திலே பெரியாழ்வாரின் பொன் போன்ற வரிகள் வந்து வந்து நம் நெஞ்சையலைக்கின்றது. கண்ணன்
10

Page 134
குழலூதும் சிறப்பை தமக்கேயுரிய தாய்மைப் பண்பு கொப்புளிக்கக் கூறுவார்.
சிறுவிரல்கள் தடவிப்பரிமாறச் செங்கண்கோடச்
செய்யவாய் கொப்பளிக்க குறிவெயர்ப்புருவம் கோடலிப்பக் கோவிந்தன்
குழல்கொடுதின போது பறவையின் கணங்கள் கூடுதுறந்து வந்து
குழ்ந்து படுகாடு கிடப்ப கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே”
கண்ணனின் குழல் ஓசையைக் கேட்ட பறவைகள், தங்கள் கூடுகளுக்குச் செல்ல மறந்ததாம். பசுக் கூட்டங்கள் அப்படியே வந்து கால்பரப்பி அமர்ந்து, செவியை அடிக்கடி அசைக்கும் தமது தன்மையை மறந்து அப்படியே எழுது சித்திரங்களாகி விட்டன என்று மாயவனின் மந்திரக் குழலினிமையைப் புகழ்வார்.
ஆனால் ஆனாயர் குழலோசை கோவிந்தனின் வேய்ங்குழல் ஒலியையும் விஞ்சி நிற்பதைச் சேக்கிழார் பெருமான், பகை மறந்து உறவாடும் விலங்குகளின் மேல்வைத்து மிக அற்புதமாகத் தனது பெரியபுராணக் காப்பியத்துள் பொன்போலப் பொதிந்து வைக்கும் வித்தகத் தன்மை சேவையர் காவலருக்கே உரிய கைவந்த கலையாகும்.
இயற்கைப் படைப்பிலேயே பகை உணர்வு கொண்டது பாம்பும் மயிலும், பாம்பு கண்ணிற் பட்டாற் போதும், உடனே அதனைக் குத்தி அதன் படத்தைக் கிழிக்கும் மயில். இதனாலேயே இதனைப் ‘பணிப்பகை” என்று அழைப்பார்கள். இதனை மணிவாசகர் திருக்கோவையாரில்,
“கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை
குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங் கிழித்து”
என்று குறிப்பிடுவார். அத்தனை பகைமை கொண்டவை மயிலும், பாம்பும். அதேபோல சிங்கமும் - யானையும் - யானையின் கனவில் சிங்கம் வந்தாற்கூட யானை இறந்து விடுமாம். சிம்மசொப்பனம்' என்ற தொடர் உருவாகியதும் இதனாற் போலும்.
புலியும் மானும் கூட பகை கொண்ட விலங்குகள் தான். படைப்பிலேயே பகைமை கொண்ட இந்த விலங்குகள்,
{
102

ஆனாய நாயனாரின் இசை செவியையும் இதயத்தையும் நிறைக்கத் தம் வசமிழந்தன. இசை அலையலையாக எழ எழ அந்த வெள்ளத்திலே பாம்பு மயிலின் மீது மருண்டு விழுகின்றது. யானையும் சிங்கமும் அருகருகிலே நிற்கின்றன. கறித்த புல் கடை வாய் வழி சோர மானும், புலியும் மருங்கணைகின்றன.
நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றாநயத்தலினால் மலிவாய்வெள்ளெயிற்றரவம் மயில்மிதுமருண்டு விழும் சலியாதநிலையரியும் தடங்களியும் உடன்சாரும் புலிவாயின் மருங்கனையும் புல்வாயபுல்வாயும் y
இசை பகையையும் இசைவித்து விடுகின்றது. கல்மனங்களையும் கரைத்து விடுகின்றது. இறுதியில் இறைவனுடன் இரண்டறக் கலக்க வைக்கின்றது.
பெரியபுராணத்தில், அனைத்து நாயன்மார்களையும் இறைவன் ஆட்கொண்டான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தொண்டு நிலையில் சிறக்கின்றனர். ஆனாயர் செய்த தொண்டு இசைத் தொண்டு. பிறர் மகிழ வேண்டுமென்றோ, பாராட்ட வேண்டுமென்றோ அவர் இசைக்கவில்லை. தன் உயிரையே குழலாக்கி, அதில் ஐந்தெழுத்தைக் கலந்து இறைவனுக்குப் படைக்கின்றார். இசை வழியே யோகசாதனை செய்தார். ஆனாயர் பெருக்கிய இசைவெள்ளம் முதலில் பசுவை வசமாக்கியது. பின்பு அலையெழுந்து எழுந்து அப் பசுபதியையே வசமாக்கி விட்டது. பொய்யன்புக் கெட்டாமல் பொன்மன்றில் நடஞ்செய்யும் ஐயனை அணைந்தது.
"மெய்யன்பர்மனத்தன்பின்விளைந்த இசைக்குழலோசை வையந்தன்னையும்நிறைத்துவானந்தன்வயமாக்கிப் பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவில் நடம்புரியும் ஐயன்றன்திருச்செவியின் அருகணையப் பெருகியதால்”
மழலையின் குரலொலி குழலொலி யாழொலியை விட இனியதல்லவா. மகவாம் ஆனாயர் குழலோசை ஜயனை நிலவுலகத்திற்கு இழுத்து வருகின்றது. “அருட்கருணை தானாய திருவுள்ளமுடைய தவ வல்லியுடன் கானாதி காரணர், இசை விரும்பும் கூத்தனார், ஆனாயரை நோக்கி “இந்த நிலையிலே நம்பால் அணைவாய்” என்று திருவருள் பாலிக்க, திருவருள் மயமானார் ஆனாயர்.
இசைக்கு வசமாகா உயிர்க்கூட்டங்கள் உளவோ?
Griagrf irst Epo 2005

Page 135
விபரியபுராணம் உலகி
— LлšLй зЯ. 1Јта பேராசிரியர்-தலைவர், தமிழ்மொழி
T3'خلوی خلیج خلج
ஒப்பி னோடுயர்வு இகந்தவன் உவந்தினிதருள அப்புராதனன் தோழனாம் அருள்மொழிக் கவிஞன் செப்பு மேன்மையின் ஒன்பதிற்(று) எழுவர் செம்மலர்த்தாள் வைப்பின்நாவினும் மனத்தினுஞ் சிரத்தினும் மணப்பம் என்று மொழிகின்றது திருவானைக்காப்புராணம்
உலகில் நிலவும் பல்வகைச் சமயங்களில் இறைவன்பால் நல்லாற்றுப் படுத்தும் சீர்மையும் தொன்மையும் உடையது சைவசமயம். இச்சைவ சமயத்திற்கு அடிப்படையான நூல்கள் சைவத்திருமுறைகள்.
பெரியபுராணம்
பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்பாடும் தெய்வமாக் கவியாம் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் பல்வகை யானும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.
என்று தேவாரம் பாடிய மூவர் உள்ளிட்ட அறுபத்து மூன்று அடியார்களுடைய வரலாற்றினைக் கூறுவதாகப் பெரிய புராணம் விளங்குகின்றது.
பெரியபுராணம் பாடிய வரலாறு உமாபதி சிவாசாரியர் பெருமானால் நமக்கு அருளப்பெற்றதாகும். இந்நூல் தொடர் நிலைச் செய்யுளாய், ஒரு பழஞ்சரிதத்தைச் சொல்லுவதாய், பெரிய உள்ளீடாகிய கற்பனையை எடுத்துக் காட்டுவதாயுள்ள ஒரு பெருங்காவியமேயாகும். குரு வழிபாடு, இலிங்க வழிபாடு, சங்கம (அடியார்) வழிபாடு ஆகிய மூன்று வழிபாடுகளிற் சிறந்து நின்று, இறைவன் திருவடி நீழல் எய்திய திருத் தொண்டர்களின் வரலாற்றைக் கூறுகின்றது. இதனைப் பெரியார் புராணம் என்று குறிப்பது சிந்தனைக்கு விருந் தாகும். சைவசமய உண்மைகளையும் உயர்வையும் புலப் படுத்தும் பெருமையுடையது இந்நூல். ஆகவே இதற்கு ஆசிரியர் இட்டபெயர் திருத்தொண்டர் புராணம் என்பதாகும். பண் சுமந்த விருத்தப்பாடலிலே அமைந்துள்ளது இப்படைப்பு.
சேக்கிழார் மாநாட்டு மலர்2005
 
 
 
 
 
 
 
 

ற்கு வழங்கும் செய்தி
5riġ15pJipatofu Jib
த்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
பெரியபுராணம் பெருங்காவியம்
இந்நூலை ஒரு பெருங்காப்பியம் என்று ஏற்றுக் கொள்ளும்போது, சுந்தரரைத் தன்னிகரில்லாத் தலைவ ராகக் கொண்டுமலை, கடல், நாடு, வளநகர், பருவம் முதலிய பல்வேறு வருணனைகளுக்கும் நிலைக்களமாய் விளங்கு வதைக் காணலாம். மேலும் இஃது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பேறுகளையும் உணர்த்தி உயர்ந்து விளங்குகின்றது.
காப்பியங்கள் பலவகையானவை. சிலவற்றில் உலகைக் காணலாம்; சிலவற்றில் கடவுளைக் காணலாம். ஆனால் மூன்றையும் ஒருங்கே காட்டும் காப்பியங்கள் மிகமிகச் சில. அவற்றுள் பெரிய புராணம் மூன்றையும் ஒருங்கே காட்டுவதில் தலை சிறந்தது எனலாம்.
காவிய வளர்நிலை
சுந்தரர் இயற்றிய திருத்தொண்டத்தொகையாய் அரும்பி, நம்பியாண்டார் நம்பிகள் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதியாய் மலர்ந்து, பின்னர்ச் சேக்கிழாரால் திருத் தொண்டர் புராணமாகக் கனிந்து பழுத்த காவியமே பெரியபுராணம்.
நவல் பொருள்
சேக்கிழார் பெருமானால் அருளிச் செய்யப்பெற்ற இந்நூலில் கூறப்பெற்ற நாயன்மார்கள் வரலாறுகள் உண்மை யாகவே நடைபெற்றவை. அந்நாயன்மார்கள் எல்லோரும், இறைவன் அருள்வழி, நின்று பேரின்பப் பெருவாழ்வைப் பெற்ற பெரியோார்கள் என்பது உண்மை. சேக்கிழார் தமக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த சிவனடியார்களின் அன்பு நெறியின் பெற்றியை எண்ணுந்தோறும், ஆற்றலுள்ள உணர்ச்சிகள் அவர் உள்ளத்திலே பொங்கின.
மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாமென்பர். அதாவது சாமுசித்தர், வைநயிகர், பிராகிருதர் என்பதாம். இம்மூன்று வகையினருள் நாயன்மார்கள் சாமுசித்தர் இனத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் முற்செய்த நல்வினைப் பயனாய்ப் பிறந்து இறைவனைப் பக்திபண்ணும் தொண்டர் ஆவர். ஆதலால் இவர்கள் செயற்கரிய செயல்களைச்
103

Page 136
செய்யும் திறன் கொண்டவரெனலாம். ஏனையோர்களால் இவர்கள் செய்கின்ற செயல்களைச் செய்ய முடியா தென்பதை,
வாளால் மகவரிந்துரட்டவல்லேனல்லன் மாதுசொன்ன குளால் இளமை துறக்கவல்லேனல்லன் தொண்டு செய்து நாளாறிற்கண்ணிடந்தப்பவல்லேனல்லன்நானினிச்சென்று ஆளாவதெப்படியோதிருக்காளத்தியப்பருக்கே,
என்று பட்டினத்தடிகளார் கூற்றினால் உணரலாம்.
இறைவனைப் பாடுவதால் பிறவித்துன்பம் நீங்கும்; பொய்ம்மையாளராகிய மனிதரைப் பாடாது, மெய்ம்மையாள னாகிய இறைவனைப் பாடுதல். மிகச் சிறந்த செயலாகும். இவ்வாறுபாடும்போது, இறைவன் அருளால் வாழ்க்கையின் குறிக்கோள் அனைத்தும் கைகூடுமென்று நன்குணர்ந்த வர்கள் நம்முன்னோர்கள்.
என்னாவது எத்தனை நாளைக்குப் போதும் புலவீர்காள்! மன்னா மணிசரைப் பாடிப்படைக்கும் பெரும்பொருள் மின்னார் மணிமுடி விண்ணவர்தாதையைப் பாடினால் தன்கை வேகொண்டு சன்மம்செய்யாமையும் கொள்ளுமே
என்பது நம்மாழ்வார் பாடல். இக்கருத்தினை நன்கு உணர்ந்தவர் சேக்கிழார். இவர் இறைவனைப் பாட முற்படுகின்றார்.
இறைவனைப் பாடுதல் இரண்டுவகை, ஒன்று உலகியல் வட்டத்திலிருந்து பாடுதல்; இறைவட்டத்திலிருந்து பாடுதல். இறைவட்டத்தில் இருந்து பாடும்போதே ஞானப்பாடல், மெய்யுணர்வுப்பாடல் ஆகிறது என்பர். சேக்கிழார் பெருமான் ஒரு மெய்யுணர்க் கவிஞர். இவர் ஞானப்பேறு பெற்றவர். ஆகவே இவரது இறையனுபவ வளர்ச்சி, செயற்கரிய செய்த அடியவர்களை உள்ளிட்டு, அவர்கள் உணர்ந்த இறையனுபவ அடிப்படையில் அமைந்தது. அடியார்கள் கண்ட ஞானத்தின் பேரொளியினைத் தாமும் அனுபவித்துப் பக்திப் பனுவலாக இந்நூலினை யாத்துள்ளார் இவர். m
நாயன்மார்கள் செய்யும் செயல்களெல்லாம் பக்தி மார்க்கத்தில் நின்று செய்யப்பெற்றவை. பன்னிரண்டாந்திரு முறையாகிய இத்திருத்தொண்டர் புராணம் சைவ அடியார் களின் பக்தித் திறத்தினைச் சைவ நன்மக்களிடையே நன்கு பரவும்படி செய்கின்றது. இவ்வாறு செய்வது, சிவநெறிசெழித் தோங்குமாறு செய்யும் சிற்ந்த செயலாகும். இவ்விழுமிய செயலினைச் செய்துள்ளவர் சேக்கிழார் பெருமான் ஆவார். இவர் உலகிற்கு எடுத்துக்காட்டும் அடியார்களின் செயற் கரிய செயற்றிறன்களைப் பின்னர் விரிவாகக் காண்போம்.
சேக்கிழார்
இவர், “தீயவென்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத் தூயமாந்தர் வார தொண்டை”நாட்டில் தோன்றியவர், சைவத் தொண்டையே தம் வாழ்நாள் பணியாக மேற் கொண்டவர்.
104

பெரிய புராணம் அம்பலவாணர் அடியெடுத்துக் கொடுத்தும் உண்ணின்றுணர்த்தியும் காட்டியருள அத்திரு வருளொடு இரண்டறக் கலந்து நின்று ஞானக்கண்ணாலே கண்டறிந்தபடி தாமற்ற நிலையில் சேக்கிழார் பாடினார். இது முழுதும் இறைவன் ஆசிரியர் வாக்கின் மூலம் வெளிப்படுத்திய அருள்வாக்காகிய சைவமறையேயாம். இது தனித்தமிழ் நூலாக அமையப்பாடியுள்ளார் சேக்கிழார்.
என்றும் மாமுன் வன்றொண்டர் செய்கையை அன்று சொன்ன படியால்
என்று ஆசிரியர் அருளியது நூல் வந்த வழியினை உணர்த்து வதேயாகும். மேலும் யானறிந்தபடி பகர்ந்தேன்’ என்றும், 'அறிந்தபடி துதிசெய்தேன்’ என்று பொருள் கொள்ளுதல் அமைவுடைத்தென்பர் சிவக்கவிமணி அவர்கள்.
நூலின் தொடக்கமும் பயனும்
உலகெலாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
என்னும் தொடக்கமே, இந்நூலின் பாடுபொருளாயமையும் இறைவனை வழுத்தி அறிமுகம் செய்வதனை நோக்கலாம்.
இந்நூற் பயனைக் காணும் முயற்சியே பெரியபுராணம் உலகிற்கு வழங்கும் செய்தியைக் காட்டுவதாய் அமையு மெனலாம். இதன் பயன்களாகக் குறிக்கத்தக்கன:
அ. மக்களின் சிந்தையிருள் போக்குதல் ஆ. ஞானவொளி தருதல் இ. இகத்தும் பரத்தும் இன்பமளித்தல் ஈ. பேரின்ப முத்திக்கு உதவுதல் நாலும் தெரிந்த சேக்கிழார் பெருமான் இந்நான்கு பயன் களையும், பாவும் ஊடுமாகத் தொண்டர்களின் வரலாற்று வழிப் பரவவிடுகின்றார் எனலாம். இது பேரின்ப வீடுபெற வழிகாட்டுவதுமன்றி, இதுவே உயிர்கள் அடையப் படுபொரு ளாகிய கூறுபாடுமாகும் என்று அறியலாம். இவைதவிர, கலை ஞானங்களை அறிந்து ஒழுகும் உலகியல் நல்வாழ்வுக்கும் இது பெருந்துணையாகும்.
தொகையாநாவலூ ராளி
தொடுத்த திருத்தொண்ட ப்பெருமை வகையால் விளங்க உயர்நம்பி
யாண்டார் வகுப்ப மற்றதனைத் தகையா அன்பின் விரித்துலகோர்
தம்மை அடிமைத் திறப்பாட்டின் உகையாநின்ற சேக்கிழான்
என்னும் திருவானைக்காப்புராண அடிகளும் இக்கருத் தினை வலியுறுத்துகின்றன.
6riégnif signt samh 2005

Page 137
திருக்கயிலை மலைச் சிறப்பில் தொடங்குகின்றது காவியம். அம்மலையின் அழகையும் பெருமையையும் கூறும் பொழுதே ஆங்கொரு வண்ணவோவியத்தைப் படைத்து மகிழ்விக்கின்றார் ஆசிரியர். இவர் காட்டும் சொல்லோவியம் யாவும் நூலோடு பொருந்தித் துணைநின்று நூற்பொருளின் உயிர்ப்பண்பு சிதையாவண்ணம் பொலிவுபெற்று விளங்கு வதைக் காணலாம். இதன்கண் புலவர் பெருமான் இயற்கை யோடு இயைந்துநின்று இயற்கையைப் படம் பிடித்துக் காட்டும் எழிலாற்றல் தனிச் சிறப்புடையதாகும். தனியடியார், தொகையடியார் அனைவர் வரலாறுகளையும் தனித்தனியே தனித்தனிக் காப்பியமாகக் கொள்ளும் அளவில் முழுமை மணங்கமழ இவர் இயற்றியிருக்கும் மாண்பு மற்றைப் புலவர் கட்கில்லாத தனிநலம் என்று கூறலாம்.
சைவ சமயச் சான்றோர்களைப் பற்றி அறிய இந்நூல் மிகச்சிறந்த முறையில் பயன்தருகின்றது. தமிழ்நாட்டுத் திருத்தலங்கள், மக்கள் வாழ்க்கைமுறை, ஆட்சிமுறை ஆகிய செய்திகள் இந்நூற்கண் மிக வழங்கு செய்திகளாகக் கூறப்பட்டுள்ளன.
இந்நூலினைத் தேசியக் காப்பியம் என்று போற்றுவர் சான்றோர். வரலாற்றாசிரியர் இதனைத் தமிழ்நாட்டு வரலாற்று நூல் எனப் பாராட்டிப் பேசுவர். பெரியபுராணத்தில் காணப்படும் போர்கள், பஞ்சங்கள், ஊராட்சிமுறை, நாணயமுறை, சமுதாய வாழ்க்கை, சமயநிலை முதலியன பல்லவர்கால உண்மை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் ஆராய்ச்சி முடிவாகும்.
தேவாரம் பாடிய மூவர் பாக்களில் நாயன்மார் சிலருடைய சிவப் பணிகள் சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளனவே தவிர, அவர்தம் நாடு, ஊர், மரபு முதலியன தெளிவாக உணருமாறு இல்லை. ஆகவே சேக்கிழார் நாயன்மார் வரலாறுகளைக் கூறவரும்போது, தமக்கு முற்பட எழுந்த மூலங்களை நன்கு ஆராய்ந்தார். ஆராய்ந்த பின்னர் சில கருத்துகளைத் தள்ளி விட்டு, சிலவற்றைக் கொண்டார். முன்னோர் தந்த குறிப்பு களை ஆராய்ந்து கொள்ளத்தக்கவற்றைக் கொண்டு, தள்ளத் தக்கவற்றைத் தள்ளிப்புராணம் பாடியமையால் சேக்கிழாரின் படைப்பில் வரலாற்றுண்மைகள் மிகுந்தும், சுவை கூடியும் காணப்படுகின்றது.
மேலும், சேக்கிழார் சோழப் பெருநாட்டில் அப்பெருநாடு முழுவதும் சுற்றிப் பார்த்திருக்கிறார் என்று ஆராய்ச்சியாளர் அறுதியிட்டுக் கூறுவர். பல இடங்களை இவர் நேரே சென்று கண்டறிந்தவராகவே இவர் கூறியுள்ள நாட்டுச் சிறப்பு முதலியன இன்றளவும் ஒத்திருத்தல் கவனிக்கத் தக்கது. இதேபோன்று நாயன்மார் பதிகள் சில குழப்பத்திற்கு இட மின்றிச் சேக்கிழார் குறித்துள்ளமை நோக்கத்தக்கதாகும். பெரிய புராணத்துட் கூறப்படும், வரலாற்றுச் சிறப்புடைய நாயன்மாரைப் பற்றிய குறிப்புகளை இவர் அரும்பாடுபட்டுத் தொகுத்துக் கூறியிருக்கின்றார்.
6trá4graf loingt to pair 2005

பெரியபுராணம் காட்டும் அறச்செயல்கள்
செயற்பால தோரு மறனே ஒருவற் குயற்பால தோரும் பழி
என்றார் வள்ளுவப் பெருமானார். அறம் என்பது நல்வினை. அறஞ்செய்தல் என்பது நல்வினையை ஆற்றுதல்; மாந்தர் யாவரும் நல்வினையைச் செய்ய விரும்புதல் வேண்டும் என்பது அவ்வையாரின் கட்டளையாகும். ஆகவே அவர், “அறஞ்செயவிரும்பு’ என்று அருளினார். தமிழ் நூல்களில் இக்கருத்து பலநிலைகளில் வற்புறுத்தப்பட்டன. சமுதாயச் சூழலில் எழுந்த நூல்களில் சமயச்சார்புடன் அமைந்த நூல்களில் இது மிகவாக எடுத்துப் பேசப்படுகிறது.
பெரியபுராணம் வரலாறு, இலக்கியம், இலக்கணம், சமய சாத்திரங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு செய்யப் பட்ட பெருங்காவியம். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ்நாட்டுக் காவியங்கட்குப் பல நூற்றாண்டுகட்குப் பிறகு தமிழ்நாட்டு மக்களைப் பற்றி எழுந்த காவியம் பெரியபுராணம் என்பர் அறிஞர் பலர், பொருட்செல்வம் பெற்ற அடியார்கள் நல்ல வழிகளில் அப்பொருளை ஈட்டியவர்கள், ஈட்டிய பொருளை அவர்கள் அறத்தை வளர்க்கவே பயன்படுத்தினர்.
மனிதன் தனக்கென வரையறுத்துக்கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே - முழுநிலை வடிவமே - அறம் என்று கூறுவர். பிறவி தோறும் மனிதனைப் பற்றிக் கொண்டு வரும் தீவினையின் பயனாகிய அறியாமையை அறுத் தெறிவதே அறம்' என்று ஆன்மீக வண்ணம் குழைத்த மற்றொரு விளக்கமும் இதற்குத் தரப்படுவதுண்டு என்பர். பண்டைத்தமிழ் மக்களும், பிற்காலத்து வாழ்ந்தோரும் தனிமனிதனையும் சமுதாயத்தையும் போற்றி வளர்க்கும் ஒழுக்க நெறியாக அறத்தைக் கருதினர் என்பதனைத் தமிழ் இலக்கிய நூல்கள் உணர்த்தி நிற்கின்றன.
'அறம்' என்னும் சொல்லிற்குத் தமிழில் எட்டு வகையான பொருள்கள் வழங்கி வருகின்றன. இவற்றுள் புண்ணியம் என்ற பொருளில் பெரும்பாலும் சமய நூல்களில் வழங்கு வதைக் காணலாம். எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும் நன்மை பயக்கத்தக்க செயல்களையே அறமென்று சான்றோர் கருதுகின்றனர். அத்தகைய நற்செயலைச் செய்வதனால் ஒருவனுக்குப் புகழ் உண்டாகிறது. மறுமைக்கு ஒரு பயனும் விளைகின்றது. அப்பயனைப் புண்ணியம்' என்று கூறுவர். ஆகவே சமயத்துறையில் அறத்தின் பயன் புண்ணியம் என்று கூறுவது மரபாகும்.
பெரியபுராணத்தில் வரும் நாயன்மார்கள் அறத்தைத் தம் வாழ்க்கை நெறியாகவே கருதிப் போற்றினர். காலத்தையும் இடத்தையும் கடந்த நிலையில் ஒல்லும் வகையான் எல்லாம் பிறருக்கு உள்ளத்தாலும், உரையாலும், செயலாலும் நன்மை செய்வதையே அறத்தின் பொதுநிலை எனக் கொண்டு இவர் கள் ஒழுகினர்.கொடைஎன்னும் பொருளில் நன்மை செய்வது என்னும் நாட்டத்தில் செய்கின்ற அறங்கள் முப்பத்திரண்டு வகையாகக் கூறப்பெறும். இம்முப்பத்திரண்டு வகை அறங்
105

Page 138
களுள் ஏறத்தாழ இருபது நிலைகளில் நாயன்மார்களின் அறச் செயல்களாகப் பெரியபுராணம் எடுத்து வழங்குகின்றது. இக்கட்டுரையின் உயிர்நிலைப் பண்பாக இதையே கொள்ளலாகும்.
திருக்கோயில் தொண்டு செய்த பெருமக்கள் அறுவரைப் பெரிய புராணம் இனங்காட்டுகின்றது. மூர்த்திநாயனார் தம் கையையே சந்தனக் கல்மீது தேய்த்தார். கைதேய்த்து, சந்தனக் காப்பினை இறைவனுக்கிடுவதில் இவருக்கிருந்த பற்றினைப் பார்க்க மெய்சிலிர்க்கும் அளவுக்கு இவர் தொண்டு அமைகின்றது.
நாளும் பெருங்காதல்நயப்புறும் வேட்கை யாலே கேளும் துணையும் முதற்கேடில் பதங்க ளெல்லாம் ஆளும் பெருமான் அடித்தாமரை அல்லதில்லார் மூளும் பெருகன் பெனும்மூர்த்தியார் மூர்த்தியார்தாம்
என்று இவரைப் பெரியபுராணம் அறிமுகப்படுத்துகின்றது.
விளக்கெரிப்பு நடத்திய இரு நாயன்மார்களைக் காணு கின்றோம். திருவிளக்கு எரிப்பதற்கு, கணம்புல்ல நாயனார் கணம்புல்லை அறுத்து விற்று எண்ணெய் வாங்கி விளக்கு எரித்தனர். இந்த முறை குறையாமல் தான் தனித்துயர் உழந்தும் செயலாற்றிவந்தாலும் மென்புல்லும் விளக்கெரிக்கப் போதாத ஒருநாளில் மெய்யான அன்பு பிரிவாராகி இவர் அடுத்த விளக்கினை ஏற்றுதற்குத் தம் திருமுடியை என்புருக மடுத்தெரித்தார்.
நமிநந்தி அடிகள் நாயனாருக்கு விளக்கெரிக்க எண்ணெய் இல்லை. சமணர் சிலர் விளக்கெரிப்பிராகில் நீரைமுகந் தெரித்தல் செய்யும் என்று நகையாடி உரைத்தனர். இறையருளால் இவரும் அவ்வாறே செய்ததனை,
சோதி விளக்கொன்றேற்றுதலும்
சுடர்விட் டெழுந்த (து) அதுநோக்கி ஆதி முதல்வர் அரனெறியார்
கோயில் அடைய விளக்கேற்றி ஏதம் நினைந்த அருகந்தர்
எதிரே முதிரும் களிப்பினுடன் நாதர் அருளால் திருவிளக்கு நீரால் எரித்தார் நாடறிய என்று கூறுகின்றது பெரியபுராணம்.
இவ்வாறு பூசைகள் நடத்தினவர், பூமாலை கட்டியவர், தோலும் வாரும், நரம்பும், கோரேசனையும் கொடுத்து வந்தவர் ஆகியோரைச் சிறப்பித்துப் பாடுகின்றது இந்நூல்.
யாழிசைத்துப் பாடி மதுரைக் கோயிலினுள் சிவனார் கட்டளைப்படி அழைந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர், குழல் ஊதி முக்தி பெற்றவர் ஆனாயநாயனார். பஞ்சாட் சரத்தைக் குழலில் இசைத்தவர் இவர். இவ்வாறு பாடிப் பதம் பெற்றவர்களின் செயல்கள் விளக்கம் பெறுகின்றன.
கோயில் கட்டுதல் என்பது ஒரு மாபெரும் திருப்பணியாம். உள்ளத்தைப் பெருங்கோயிலாகக் கொண்டு மனத்தால்
106

கோயில் கட்டியவர் பூசலார் நாயனார்; மனக்கோயிலில் வழிபட்டவர் வாயிலார் நாயனார்.
படமாடுங் கோயில் பகவற்கொன்றியின் நடமாடுங் கோயில் நம்பற்கங் காகா நடமாடும் கோயில் நம்பர்க் கொன்றியில் படமாடும் கோயில் பகவற்கஃதாமே
என்றார் திருமூலர். இவ்வகையில் அடியார்க்குத் தொண்டு செய்தவர் பதின்மர் நாயன்மார்களது வரலாற்றினைப் பெரியபுராணம் வழங்குகின்றது.
ஆறணிந்த சடைமுடியார்க் காதிரைநாடொறுமென்றும் வேறுநிறைவழிபாடு விளங்கியபூசனைமேவி நீறணியும் தொண்டர் அனைந்தார்க்கெல்லாம்
நிகழ்பசும்பொன் நூறுகுறையாமல்அளித்து இன்னமுது நுகர்விப்பார் நரசிங்கமுனையரையரை இவ்வாறு பாடிப் பரவுகின்றார் சேக்கிழார்.
அப்பூதியடிகள் ஆளுடையவரசினைக் காணுமுன்னம் அவர் மாட்டன்புடையராய், அளவைகள் நிறைகோன் மக்க ளாவொடு மேதி மற்றும் உளவெலாம் அரசின் பெயர் சாற்றி, மடங்கள் தண்ணிர்ப் பந்தர்கள் யாவும் அரசின் பெயரில் வழங்குவித்து வாழ்க்கையில் அவ்வரசு திங்களூர் போந்து அடிகள் மனையின் தலைவாயிலின்று சிறிதுபோது சொல் லாடித் தாமே அவரென்றறிவித்த அளவில் அன்புக்குறிகள் யாவும் தோன்ற வணங்கி முன்னின்று கூத்தாடிச் சூழவோடிப் பாடிய காட்சியினைக் கண்முன் நிறுத்துகின்றார் சேக்கிழார். இதன்கண் பன்னெடுநாளாய்ப் பாராமலே பத்தி செய்து வந்த அரசினைத் தாமே நேரில் பார்த்தவுடன், முகமன் வழங்கி இருக்கையளித்துபசரித்தன் முறையாக, அவரை வாயிலின் நிற்கவிட்டு இது முன்செய்து இதுபின் என்றறியாது மனையகம் புக்கு மனைவி மக்கள் முதலிய சுற்றத்தார்க்கு அந்நற்செய்தி கூறி அவர்களுடன் மீள வந்தனரென அடிகள் பரி விருந்த படியை நன்கு விளக்குதல் காண்க என்பர் ஆராய்ச்சியாளர்.
சேக்கிழார் காலத்தில் சோழப்பெருநாட்டில் பல மடங்கள் இருந்தன என்பதைக் காணுகின்றோம். 1. அப்பர் அமைத்த திருமடம் என்று திருப்பூந்துருத்தியில்
அழிவுற்ற நிலையில் இன்றும் ஒன்றிருக்கின்றது. 2. திருவதிகையில் 'திலகவதியார் மடம் கோவிலுக்கு
எதிரில் இடிந்து பாழடைந்து கிடக்கிறது. 3. 'அமர்நீதியார் மடம் திருநல்லூரில் பாழ்பட்ட நிலையில்
இருக்கின்றது. அப்பரடிகள் திருப்பூந்துருத்தி மடத்தில் தங்கியிருந்த பொழுதுதான் பல திருப்பதிகங்கள் பாடினார் என்று சேக் கிழார் கூறுகின்றார். சோழர் காலக் கல்வெட்டுக்களில், ஆண்டார்’ என்பவர் மலர்பறித்தவர், அலகிடுபவர், மெழுக் கிடுபவர், திருவீதி தூய்மை செய்பவர் என்போரைக் குறிப்பிடு கின்றமை நோக்கலாம்.
6Fédégartf19ruqrtob 196Df 2005

Page 139
மண்டினி ருலாத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
என்றுமணிமேகலை கூறும். அறவுரையினைக் கடைப்பிடித்துக் காட்டுதற்கு நாயன்மார் காலத்து மடங்கள் உறுதுணை புரிந்தமையைப் பெரிய புராணம் எடுத்துரைக்கின்றது.
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை யாகிய குறள் நெறியினைச் சீரியமுறையில் இந்நூல் தெளிவாக்குகின்றது.
திருமடங்கள் சமைப்பது போன்றே திருக்கோயில் எழுப்பு தலையும் அக்கால மக்கள் நல்லறச் செயலாகக் கொண்டனர். பெரியபுராணம் கோவில் கட்டிய அடியார்களாக இருவரைக் காட்டுகின்றது. சோச் செங்கட்சோழர் பல கோவில்களைக் கட்டியவர்; சிதம்பரம் கோவிலைக் கட்டியவர்; தீட்சிதரை வரவழைத்து மாளிகை கட்டித் தந்தவர்.
திருவார்ந்த செம்பொன்னின் அம்பலத்தே நடஞ்செய்யும் பெருமானை அடிவணங்கிப் பேரன்புதலைசிறப்ப உருகாநின்றுளங்களிப்பத்தொழுதேத்தி உரையுநாள் வருவாய்மை மறையவர்க்குமாளிகைகள் பலசமைத்தார் என்னும் இந்நூல் அடிகள்; இவ்வடியார் மறைவர்க்கு இருக்க இடமளித்துஅறச்செயலை விளக்கி நிற்கின்றன. கோவில் கட்டுதலைப் பேரறமாகக் கருதியவர் அப்பெருங்கடமையை முடித்ததன் பின்னர் அறத்துள் அறமாக இதைச் செய்தது பாராட்டுதற்குரியவொன்றாம்.
காரிநாயனார் என்பவர் மூவேந்தரிடமும் சென்று பொருள் பெற்றுக் கோயில் கட்டியவர் என்பது தெரிகிறது.
செயற்கரிய செய்தவர்
அறுபத்து மூன்று நாயன்மார்களும் செயற்கரிய செயல்களைச் செய்யும் பெரியராகக் காணப்படினும், வியப்புக்குரிய நிலையில்,'இப்படியும் செய்யக்கூடுமா?’ என்று சாதாரண மனங்கள் சிந்திக்கும் நிலையில், பக்தியில் சான்ற பெரியோர்களே எண்ணிப் பாராட்டும் வகையில், செயற்கரிய செயல்களைச் செய்த நாயன்மார்கள் பதினொருவரைப் பெரிய புராணம் காட்டுகின்றது.
இச்செயல்களைச் செய்த இவர்கள் முப்பத்திரண்டு வகை அறங்களுள் சிலவற்றைச் செய்த பெருமக்களாகத் திகழ்வதை நோக்கலாம். இவ்வாறு செய்தற்கு அன்பே அடிப்படையாக அமைகின்றது என்பதனை, அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமை அறியும் அறிவென்றும் அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம் என்றும் அவனுடைய நிலைஇவ்வாறறிநீயென்றருள் செய்வார்
என்னும் திருவாக்கு மெய்ப்பிக்கின்றது.
கண்நோய்க்கு மூலிகைகள் பிழியும் மரபினைக் காட்டும் சேக்கிழார் பின்னர்'ஊணுக்கு ஊணிடுதல்முறையினையும் விழுமிய அன்பின் திறத்தால் செயற்படுவதனைச் சிறக்கக்
6ráiáŝgnifo priparto 19aolo 2005

காட்டுகின்றார். “இறைவற்குக் கண்ணினின்றும் வழியும் குருதிநீர் நிற்பதற்கு என்னுடைய கண்ணை அம்பினாற் பெயர்த்து எடுத்து, அவரது கண்ணிற்கு மருந்தாய் அப்பி னால் அது தீரும் என்று களிப்பு நிறைந்த மனத்தோடு இறைவன் முன் நின்று, தங்கண்ணைப் பெயர்த்து இறைவன் வலக்கண்ணில் அப்பினார் கண்ணப்பர். இது சிறந்த செயலேயாகும். ஆயின் இறைவனது இடக்கண்ணினின்றும் குருதி வழியும்போது, ஒரு கண்ணையிழந்த இவர், சிவ பிரானது ஊனமுற்ற கண்ணின்பால் அடையாளத்திற்காகத் தம் செருப்புக்காலை ஊன்றிப் பகழிகொண்டு தம் இடக்கண் ணையும் பெயர்க்கத்தொடங்கினாரே, இது மிகச் சிறந்த யாராலும் செய்ய இயலாத செயற்கரிய செயலாகும். எனவேதான் கண்ணப்பரது அன்பு ஏனையோர் அன்பை விட மிகச் சிறந்ததெனக் கருதி மணிவாசகர்,
கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
என்று கூறுகின்றார். “எட்டாத பேரின்பம் என்னை விழுங்கியிருக்கின்றதே" என்று பட்டினத்தடிகள் அருளியவாறு மக்களுக்கு எளிதிலே கிட்டுவதல்லாத அழிவில் பேரின்பத்திற்கு ஆட்பட்ட சிறுத் தொண்டரும் செயற்கரிய செய்த செம்மலேயாவார்.
குங்குலியக்கலய நாயனார் தாலி விற்றுக் குங்குலியம் வாங்கியவர். சுண்ணம், கண்ணாடி, காதோலை, கண்மருந்து தலைக்கெண்ணெய் இவையெல்லாம் இல்லாதார்க்கு அளித்தல் ஈகையாம் அறமாகும். இதைச் செய்தவர் குங்குலியக் கலய நாயனார்.
திருநீலநக்க நாயனார், லிங்கத்தின் மீது விழுந்த சிலந்தியை அப்புறப்படுத்திய மனைவியைக் குற்றம் செய் தனள் என்று அவளைத் துறந்தார். இதேபோன்று “மாது சொன்ன சூளால் இளமை”துறந்த நீலகண்டர், சிவபிரானது திருப்பெயருக்குக் கட்டுப்பட்டு இளமைக்காலத்திலே இன்பத்தைத் துறந்து வாழ்ந்தவர்.அகத்துறவு மக்களிடத்தே காண்பது அரிதினும் அரிதாயிருக்க, நீலகண்டர் சிறிதுங் குறைபாடில்லாத தம் பேரிளமைக் காலத்தில் இறைவனிடத்து வைத்த பேரன்பால், உலக இன்பத்தை நீத்து வாழ்ந்தமை புதுமையினும் புதுமையாகும்.
ஆகவேதான் அரனருள் பெற்ற அறுபத்துமூன்று நாயன் மார்களுள் சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் ஆகிய இம்மூவரையுமே முற்றத்துறந்த பட்டினத்தடிகள் சிறந்தெடுத்துக் கூறியருளினர். இவர்கள் தங்களிடத்துத் தங்களைப் பற்றிய எல்லாப் பொருள்களிடத்தும் வைத்த பற்றை அறவே விட்டு இறைவனிடத்துப் பேரன்பு வைத்த பெருமையினர். இம்மூவருடைய அருஞ்செயல்களுக்கு மேற்பட்டவை எவையுமேயில்லையென்பாருமுளர்.
திருவோட்டுச் சண்டை மூலம், மனைவியையும் திருநீல கண்ட நாயனாரையும் சிவனார் கூட்டுவித்தார் என்று காட்டுகின்றது பெரிய புராணம்.
107

Page 140
சுடச்சுட ஒளிரும் பொன்
புடத்திலே இடஇடப்பொன்னானது மாசு நீங்கும். தீயிலே சுடச்சுடச் சங்கானது தன் வெண்மைத்தன்மை குறையாமல் நிற்கின்றது. இவை போலத் துன்பம் வரவர மனிதன் உயர் வடைய வேண்டும். நாயன்மார்களுள் என்மரைச் சிவபெரு மான் மிகவும் வாட்டுகின்றார். ஆயின் அவர்கள் அச்சோதனை களுள் பட்டுத் தெளிந்து பளிங்கென ஒளி வீசுகின்றனர்.
திருநீலகண்டரைக் கண்டோம்; இயற்பகை நாயனார் மனைவியை அடியவருடன் அனுப்பியமை ஆராய்ச்சி யுலகுக்கு ஒர் அசைபோடும் பொருளாகும். விருந்தோம்பும் பண்பிலே உயர்ந்து நிற்பவர் இளையான்குடி மாறனார். ஒரு சிறு பொருளும் கவிதைக்குப் பாடுபொருளாவது போல, அமர்நீதி நாயனாருக்குக் கோவணச் சண்டை - தராசில் அவரையும் மனைவி, மக்கள் ஆகியோரையும் ஏற்றுவித்தது. அடியார் தந்த ஆடையை மழையால் மாலையில் உணர்த்திக் கொணரக் கூடாமையின் உயிரை மாய்க்க முயன்றவர் திருக்குறிப்புத் தொண்டர். துணி துவைத்துக் கொடுக்கும் செயலாம் அறச்செயலை இவர் ஆற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதல்மீன் சிவனுக்கென விடுபவர் அதிபத்தநாயனார். மீனே கிடைக்காமல் ஒரு பொன் மீனே முதலில் கிடைக்க, அதையும் சிவனுக்கு விடும் பொன் மனம் பெற்றவரைப் பெரியபுராணம் பாராட்டுகின்றது. ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்கும் இவ்வுள்ளப் பாங்கு சிறந்த முறையில் கூறப்படு கின்றது. ஏயர்கோன் கலிக்காம நாயனார் இறைவன் பால் தூதுவிட்ட சுந்தரரையே மனம் நொந்து வெறுத்து, அவரைப் பார்க்கவும் கூடாமல் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றவர். இவர்களது வரலாறுகள், வாழ்க்கைப் போக்குகள், குறிக் கோள்கள், ஒழுகும் நெறிமுறைகள் எத்தகையதாயினும் எத் துணை வேறுபட்டதாயினும், உலக மக்களிடமிருந்து மாறு பட்டதாயினும், இவை யாவற்றுக்கும் அடிப்படைக் காரணம் இவர்கள் இறைவன்மாட்டும், இறையடியவர்மாட்டும் வைத்தி ருந்த அன்பின் பெருக்கமே என்பதைத் தான் பெரியபுராணம் நற்செய்தியாக - வரலாறுகளினூடே பரவி நிற்கும் பாவிகப் பண்பாக வழங்குகின்றது. இறையுணர்வு, இறைபத்தி, அடியவர்கள்பால் உளதாகும் அன்பு, பரிவு, பாசம், பரிந்துரை எல்லாமாகச் சேர்த்து ஏற்றமிகு செய்திகளாக எடுத்துக் காட்டப்படுகின்றன. தேனாருந்த தண்பூங் கொன்றைச் செஞ்சடை
யவர்பொற்றாளில் ஆனாத காதலன்ப ரெறிபத்தரடிகள் குழ
என்று சேக்கிழார் பெருமான் கூறுவதனை நோக்குக. எனவே இறைவன் மாட்டு வைத்த நீங்காத பத்தியே இவர்களை நிலைபெறச் செய்கின்ற தென்பதுணரலாம்.
வழிபாட்டுத் திறன்
இலிங்க வழிபாட்டு நிலையில் முப்பத்து மூவரையும், குருவழிபாட்டு முறையில் பன்னிருவரையும், அடியவர் வழி
108

பாட்டு நெறியில் இருபதின்மரையும் பெரிய புராணம் எடுத்து நவில்கின்றது. சேக்கிழார் கூறும் இவர்களது வரலாற்றுச் செய்திகளினின்று இவ்வாறு இனம் பிரித்துக் காணுகின்றோம். இவர்களுடைய நெறிகள் வேறுபடினும், இறுதியில் சென்று சேரும் முடிவிடம் ஒன்றாகவே- இறையருள் தேடுதலாக அமைகின்றது. அவரவர் ஏற்புடைத்திறனுக்கேற்ப ஒழுகும் சிறப்பு சிந்தனையில் பதிக்க வேண்டிய கருத்துகளாகும்.
அரசியல் செய்திகள்
பெரியபுராணத்துள் முடியுடை மன்னர்களாகிய பேரரசர் களும், சிற்றரசர்களுமாகப் பதினொருவரைக் காணுகின் றோம். சேர, சோழ, பாண்டிய மரபினர்களும், வேளிர் குலத்த வரும், வேறுபல மரபினரும் இவர்களுக்குள் அமைவர். ஆகவே அரசு ஆளும் வழிமுறையானது தந்தையினிடத்திருந்து மைந்தனுக்கு வருவது தமிழ்நாட்டு மரபென்பதும், மருமக் கட்டாயம் என்ற தாய்வழி முறைமை சேரநாட்டு மரபென்பதும் மூர்த்திநாயனார் புராணம், கழறிற்றறிவார் புராணம் ஆகிய வற்றுள் நன்கு விளக்கப்படுகின்றன. சேக்கிழார் பெருமான் அமைச்சராய்ப் பணியாற்றியவர். எனவே அரசாட்சி முறை களும், அரசு அங்கங்கள், அமைச்சு, கடமைகளும் நன்கு விளக்கம் பெறுகின்றமையை ஆராய்ச்சி வழிக் காணலாகும். எல்லாவற்றும் மேலாகக் குடிகளின் தீங்குக்கு அரசாட்சியே பொறுப்பென்பதும், எல்லா உயிர்களையும் காத்தல் அரசர் கடமை என்பதும் சிறந்த செய்திகளாக வழங்கப்படுகின்றன.
ஆரங்கண்டிகை ஆடையும் கந்தையே பாரம் ஈசன் பணியல தொன்றிலார் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்னால் விளம்புந்தகையதோ
என்னும் சேக்கிழார் பெருமானின் கூற்று அடியார்கள் பெரும் வீரர்களாய்த் திகழ்ந்தனர் என்பதனைத் தெரிவிக்கின்றது.
தமிழர் நீதிமுறை மனுநீதிச் சோழர் வரலாற்றினும், தடுத் தாட்கொண்ட புராணத்திலும் சிறப்பாக அமைந்துள்ளமையை திரு சி. கே. சுப்பிரமணிய முதலியார் மிகவுந்தோய்ந்து ஆராய்ந்து விளக்குவதனைக் கொண்டு தெளியலாம்.
சாதியொழிப்பு
பெரியபுராணம் வழங்கும் சிறந்த சீரிய செய்தியாக இதைக் கூறலாம். என்னவெனில், மணிமேகலை, ஆழ்வார் பாடல்களுக்குப் பின்னர் இந்நூலிலேயே இத்தகைய ஒரு புரட்சியைக் காணுகின்றோம். வேளாளர் பதின்மூவரையும் ஆதி சைவர் நால்வரையும், அந்தணர் பன்னிருவரையும், இந் நூலில் பார்க்கின்றோம். இன்னும் வணிகர் ஐவரும், இடையர் இருவரும், நுளையர் (யாதவர்), சான்றார், வேடர், செக்கார் மாமாத்திரர், ஏகாலியர், புலையர், குயவர், பாணர், சாலியர் ஆகியவகுப்பைச் சார்ந்தவராக ஒவ்வொருவரும் முறையே காணப்படுகின்றனர். இவர்களைத் தவிர எறிபத்தர், கணம்
சேக்கிழார் மாநாட்கு மலர்2005

Page 141
புல்லர், காரியார் குலச்சிறையார், தண்டியடிகள், பெருமிழலைக் குறும்பர் என்போரின் மரபு தெரியவில்லை. அறுபத்துமூவருள் அறுவரைத் தவிர, ஏனையோரின் குலமும், மரபும் நன்கு ணரும் வகையில் அவர்களது வரலாறுகள் பெரிய புராணத் தில் படைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இப்பகுப்புகள் இவர்கள் ஆற்றிய தொழிலடிப்படையில் அமைந்ததென்பது தெளி வாகும். சமுதாயத்தில் திருமணம், தேர்தல் என்ற இருநிலை களில் சாதியடிப்படை பெரும்பாலும் நோக்கப்படுகின்ற நிலை யுண்டு. ஆயின், பெரியபுராணத்தில் குலமணஞ் செய்கின்ற ஒத்தமரபுடனே அன்றியும், மேற்குலத்தார் கீழ்க்குலத்தாரிடம் பெண்கொண்டுமணஞ்செய்து கொள்ளும் வழக்கத்தினைக் காணலாம். அக்காலத்துச் சமூக வாழ்க்கை இவ்வழக்கத்தை ஏற்று நடந்ததென்பதனை ஆராய்ச்சியாளர் நுண்ணிதின் உணர்கின்றனர். இவ்வகை மணங்கள் சமூக ஒழுக்கம் பற்றிக் குலமணஞ் செய்யு முறையும், அன்புநெறி பற்றிப் பிறிதொரு நிலையும் நடந்திருத்தல் கண்கூடு.
ஈண்டுச் சாதியொழிப்பு என்று கூறவந்த காரணம் காணின், பற்பல சாதியர்க்குள்ளும் உடன் உணவு கொள்ளும் அன்புநெறிக் கிடையூறாகச் சாதிப்பகுப்பு குறுக்கிட்டதே யில்லை என்பதறியலாம். 'சாதிப்பிரிவினையும் உடனுண் ணலும் என்னும் தலைப்பில் சிவக்கவிமணி காட்டுஞ் சான்றுகள் நயஞ்சான்றவை. அன்புடைத் திருக் கூட்டமாகிய அடியார்களிடையே தீண்டாமை என்பதில்லாதிருந்த நிலை நோக்கத்தக்கது. இன்னார், இன்ன குலத்தார் என்ற பாகு பாடில்லாமல் எல்லாரும் ஒருங்கிணைந்து திருவிழா எடுத் ததும், இறைவழிபாடாற்றியதும் பாராட்டத்தக்கவையாகும்.
பெண்ணின் பெருமை
இல்வாழ்க்கையில் பெண்களுக்குப் பெரிய உரிமையும் உயர்வுமிருந்ததைக் காணலாம். இளையான்குடிமாற நாய னாரது இல்லத்தரசியைப் பெரியபுராணம் இனிது காட்டுகின் றது. பெண்பாலராகப் பிறந்துய்ந்த இசைஞானியார், காரைக் காலம்மையார், மங்கையர்க்கரசியார் ஆகிய மூன்று தொண் டர்களைப் போற்றுகின்றது பெரிய புராணம். இன்னும் நாயன்மார் பலரையும் சைவ உலகிற்கு ஈன்று புறந்தந்த பெண் ணின் பெருந்தகையோரையும் அமைத்துப் போற்றுகின்றது இந்நூல் எனலாம்.
திலகவதியாரின் பரிவும், மங்கையர்க்கரசியாரின் கொள்கைவிள்ளா முரணும், காரைக்காலம்மையாரின் மெய்ம் மையிற்றெளிவும், திருநாவலூரரை ஈன்றெடுத்த இசைஞானி யாரின் புண்ணியப்பேறும், வாழ்க்கைத் துணையாய் அமைந்த மங்கையர் சிலரின் மாண்பும் சேக்கிழார் புனையும் பெண்மைத் திறனை நன்கு தெளிவிக்கின்றன. புலவர்கள் சிலரைப் போலச் சேக்கிழார் பெரிய புராணத்தில் வரும் பெண் மக்களது உடலுறுப்புகளை வருணிப்பதில் வெற்றுக் கவனஞ் செலுத்தாது, அவர்களது அகஉணர்வுகளை, பெண்மையின் பண்புகளை நன்கு வெளிக் கொணர்ந்து காட்டுகின்றார்.
சேக்கிழார் மாநாட்டுமலf2005

மங்கையர்க்குத்தனியரசிஎங்கள் தெய்வம்
வளவர்திருக்குலக்கொழுந்து வளைக்கை மானி செங்கமலத்திருமடந்தை கன்னிநாடான்
தென்னாகுலப் பழிதீர்த்த தெய்வப் பாவை எங்கள்பிரான் சண்பையர்கோன் அருளினாலே இருந்தமிழ்நாடுற்றஇடர்நீக்கித் தங்கள் பொங்கொளிவெண்திருநீறு பரப்பினாரைப் போற்றுவார் கழல்எம்மால் போற்றலாமே திருநீற்று மரபு சோழ நாட்டில் வழிவழியாக வந்தது. அச்சோழ நாட்டில் பிறந்த மங்கையர்க்கரசியால் சோனாட்டவர் பிரானாம் சம்பந்தரால் தென்னவன் நாட்டிலும், வெண் ணிற்றின் பொங்கொளியைப் பரப்பினார். அதனால் சோழனது முதல் அமைச்சராகிய சேக்கிழார் 'மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்” என்று போற்றுகின்றார். தமது அருஞ் செயலால் சைவ நெறிக்குக் காவல்பூண்டு தெய்வமானார் மங்கையர்க்கரசியார். தென்னாட்டவரும், மற்று எந்நாட்டவரும் ஆன சைவரெல்லாரும் “எங்கள் தெய்வம்” என உரிமையோடு வழிபடத்தக்கவராவர் இக்கற்பரசியார் என்பது தெளிவாகும். கணவன் வழி நிற்றல் கற்பின் திறம் என்பதனைப் பெரிய புராணப் பெண்டிர் உணர்ந்தொழுகினர். இயற்பகை நாயனார் மனைவி உள்பட இவ்வெண்ணத்தில் திளைத்தவரே எனக் கூறின் வேறு சான்று வேண்டா. இயற்பகை நாயனார் தம் மனைவியாரை நோக்கி, “உனை இம் மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்” என்றபோது, அம்மனைவியார் பெண்மைக்கே இயல்பான முறையில் முதலில் சிறிது கலங்கினார்; பின்னர் கற்பின் திறம் நினைந்து தெளிந்து, “இன்று நீர் எனக்கருள் செய்தது இதுவாகில், என்னுயிர்க்கு ஒரு நாதர் நீர் உரைத்தது ஒன்றை நான் செய்யுமத்தனை யல்லால் உரிமை வேறுளதோ ?” என்று சொல்லி வணங்கினார்.
விருந்தினரையும் அடியாரையும் ஒம்புகின்றமை மனைவி யரைச் சார்ந்திருந்தது. அல்லிலாயினும் விருந்துவரின் உவக்கும்பண்பினை இளையான்குடிமாறர் மனைவி வாயிலாக உணர்த்துகின்றது பெரிய புராணம். மனையறத்தின் வேராக அவ்வம்மையார் விளங்குவதை நோக்கலாம்.
கொலைத்தொழிலும் பேரறம்
பெரியபுராணத்துள் இதற்கேற்ற சான்றுகள் பலவற்றைக் காட்டலாம். ஆயின் ஒன்று சொல்லி முடிக்கின் சாலு மெனலாம். 'அன்பென்றால் ஆனைக்கொலையோ?” என்று கேட்கத் தூண்டுகின்றது எறிபத்தர் நாயனார் வரலாறு. ஒரு பூக்குடலையை வலித்திழுத்த யானையோடு, அதனைச் செலுத்த வந்த ஐந்து மாவெட்டிகளையும் கொல்வதோ சிவத்தொண்டு?’ என்று வினவத் துடிக்கின்றது உள்ளம். 'அன்பே சிவம் என்ற பெரும் பேச்சு இதனை அடக்குகின்றது.
பெரியபுராணத்தின் பல வரலாறுகளுக்குச் “சூசனம்” எழுதிய ஆறுமுக நாவலரும் எறிபத்தரது கொலைத் தொழிலைப் பேரறம் என்றே கூறுகின்றார்.
109

Page 142
“தேசிகர்க்குத் தீங்கு செய்யும் தீயவரை வெல்; அவது நாசமுறுத் சேர்வாய் நலம்"
“அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்; அல்லார் சிந்தவுஞ்செய்; நீ செறியாய் தீங்கு”
என்ற இரு பாக்களைச் சித்தாந்த நூலிலிருந்து எடுத்துக்காட்டி அதனை நிலை நாட்டுகின்றார்.
தொழுந்தகை அன்பின் மிக்கீர்!
தொண்டினை மண்மேல் காட்டச் செழுந்திரு மலரை இன்று
சினக்கரி சிந்தத் திங்கட் கொழுந்தனி வேனிக் கூத்தர்
அருளினால் கூழற்று என்று நூலாசிரியரே நுவல்கின்றார்.
புராணமும பூத ஒரு கடிகாரம் கெட்டுப் போனால் அதைப் ட பார்ப்பான்.நுண்ணிய சக்கரங்களைப் பார்க்கு சக்கரங்களை விரித்துக் காட்டுவது பூதக்கண் இன்றியமையாதது போல வேதத்திலே உ புலப்படுத்துவது புராணம் ஆகும்.
இறைவு
மனிதப் பிறவிக்கு இறைவழிபாடு இன்றியை மற்றொரு மாவட்டத்திற்கும் அரசாங்கத்தா விலங்குகட்கும்,மனிதனுக்கும் இடையில் இட்
110 --

அழியாப்பெருவாழ்வாம் அன்புவாழ்க்கையில் இறப்பில்லை; பிறப்பில்லை. திருவருள் கூட்டுவிக்குந் திரு விளையாடலின் இடையே திகழ்ந்து விளங்கும் இன்ப அன்பின் எழிலார் வடிவத்தையே சேக்கிழார் பெருமான் ஓவியமாகி எழுதிக் காட்டி, அதனோடியைந்து இன்னிசையாகப் பாடுகின்றார் என்பார் பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்.
இதுகாறும் பெரியபுராணம் உலகிற்கு வழங்கும் செய்திகள் சிலவற்றை அங்குமிங்கும் கோடிட்டுக் காட்டியவாற்றான், திருத்தொண்டர் புராணம் என்னும் இப்பெருங்காவியம் சிறந்த இலக்கிய ஊற்றாகவும், அன்புக் கடலாகவும், பல்கலைக்கும் உறைவிடமாகவும் நாம் கண்டு உணர்ந்து மகிழத்தக்கது என்பதுணரலாம்.
க்கண்ணாடியும்
பழுது பார்ப்பவன் பூதக் கண்ணாடி கொண்டு 5ம் ஆற்றல் நம் கண்களுக்கு இல்லை.நுண்ணிய ணாடி பழுதுபார்ப்பவனுக்குப்பூதக்கண்ணாடி ள்ள புண்ணிய தர்மங்களை நமக்கு விரித்து
வழிபாடு
மயாதது என்று உணர்க. ஒரு மாவட்டத்திற்கும் ர் ஒரு எல்லைக் கல்அமைத்திருப்பது போல் ட எல்லைக் கல்லே இறைவழிபாடு ஆகும்.
6.Fiágrif gattivaof 2005

Page 143
இந்திராதேவ
முன்னாள் விரிவுரைய
Uெரியபுராணம் என்றழைக்கப்படும் திருத் தொண்டர் புராணத்தினை குன்றத்தூரில் பிறந்த சேக்கிழார் சுவாமிகள் இயற்றினார். இவர் அநபாயன் என்று அழைக் கப்பட்ட சோழமன்னனிடம் தலைமை அமைச்சராக இருந்தவர். இவர் கி.பி. 13- 150 என்ற காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரது நூலான பெரியபுராணம் புராணம் என அழைக்கப் படினும் பெருங்காப்பியம் என்றோ, காவியம் என்றோ கூறப்படும் அளவிற்கு காவியப் பண்புடை நூலாகவே விளங்குகின்றது.
1. காவியம் என்றால் என்ன:
பெரிய புராணத்தில் உள்ள காவியப் பண்பினை நிறுவுவதற்கு காவியம் என்றால் என்ன என்பதன் தெளிவு இன்றியமையாததாகின்றது. தமிழ் இலக்கிய வரலாற்றில் காவிய இயல் பற்றி எடுத்த முதன் நூல் தொல்காப்பியம்.
இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்த மொழியானழநிமிர்ந் தொழுகினுஞ் தோலென மொழிவர் தொன்மொழிப் புலவர் என்கிறது தொல்காப்பியம். இதற்குரை எழுதிய பேராசிரியர் மெல்’ எனும் தொடரால் அறம், பொருள், இன்பம் வீடெனும் விழுப்பொருள் பயப்பச்செய்வன என விளக்குகிறார். கவியால் எழுதப்பட்டது காவியம். வடமொழியில் காவிய இயல் நூல்கள் பல எழுந்துள்ளன. எனினும் காவியத்திற்கு முழுமையான இலக்கணத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் கூறி நிற்கும் நூல் 8ம் நூற்றாண்டில் எழுந்த தண்டியின் தண்டியலங்காரமே. இந்நூல் காவியம் பற்றிக் கூறுகையில்,
பெருங்காப்பிய நிலை பேசுங்காலை வாழ்த்து வணக்கம் வருபொருளிவற்றினொன் றேற் புடைத்தாகி முன்வரவியன்று நாற்பொருள் பயக்கு நடை நெறித்தாகித் தன்னிகரில்லாத் தலைவனை உடைத்தாய் மலைகட னாடு வளநகர்பருவம் இருசுடர்த் தோற்றமென்றினையன புனைந்து நன்மனம் புணர்தல் பொன்முடி கவித்தல் பூம்பொழினுகர்தல் புனல்விளையாடல் தேம்பிழிமதுக்களிகிறுவரைப் பெறுதல்
Gardagh Piration 2005
 
 

ல் காவியப்பண்பு
சதானந்தன்
ாளர், நுண்கலைத்துறை
என்று கூறிச் செல்கின்றது. இவ்வாறு கூறிய ஆசிரியர் தண்டி,
"கூறிய உறுப்பிற் சில குறைந்தியலினும் வேறுபாடின்றென விளம்பினர் புலவர் என்றும் அறமுத னான்கினுங் குறைபாடுடையது காப்பிய மென்று கருதப்படுமே”
எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் எழுந்ததின் பின் எழுதப்பட்ட பெரும்பாலான இலக்கியங்களில் காவிய இயலின் தாக்கத்தினைப் பெரிதும் காணமுடிகின்றது.
2. புராணம் என்றால் என்ன:
காவியம் எனக் குறிப்பிடப்படும் பெரிய புராணம் புராணம் எனக் குறிப்பிடப்படுவதால் புராணம் என்றால் என்ன என்பதும் இங்கு ஆய்வுக்குரியதாகின்றது. புராணம் என்ற சொல்லுக்கு “மிகப்பழமையான வரலாறு”என்பது பொருள். எது மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரைக்கும் மக்களிடத்தில் பரவிவாழ்ந்துவருகிறதோ அதனையே புராணம் என்கின்றனர். புராணம் என்பது உலகத்தோற்றம், ஒடுக்கம், மனுவந்தரம், முனிமரபு, அரசமரபு ஆகிய ஐந்து இலக்கணங் களையும் கொண்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. பழைய காலத்துப் புராணங்கள் இந்த ஐந்து இலக்கணங் களையும் கொண்டவை. குறிப்பிட்ட எந்தச் சமயத்தையும் சாரா தவை. ஆனால்சான்றோர் வரலாற்றிகாகக் கூறுதல் என்ற மரபு எழுந்தபின்பு எழுந்த புராணங்களே பெரியபுராணம், வாதவூ ரடிகள் புராணம், பட்டினத்தடிகள் புராணம் முதலியன. இவை இந்துமதம் சார்ந்த புராணங்களே. பெரியபுராணத்தில் புராண இலக்கணங்கள் காணப்படினும் அங்கு காவியப்பண்பே மிக்கி ருக்கின்ற தெனலாம் இலக்கண நூலான திவாகரத்தில்,
காவிய வியற்கை விரிக்குங் காலை ஆரியம் தமிழால் நேரிதினடக்கி உலகின் தோற்றமும் ஊழியின் இறுதியும் அலகு கால் தொண்ணுரற்றறுவர தியற்கையும் வேதநாலின் வேதிய ரொழுக்கமும் ஆதிக் காலத்தரசரதியற்கையும் அவ்வவர்நாட்டால் அறியுமாற்றலும் ஆடியும் பாடியும் அறிவரக் கிளத்தல்
11

Page 144
என இங்கு புராணத்தின் இலக்கணம் கூறப்பட்டாலும், காவிய இயற்கை என்றே ஆரம்பிக்கப்படுவதாகக் காணலாம். பெருங்காப்பியத்திற்கும், காப்பியத்திற்கும் புராணத்திற்கு முரிய வேறுபாடு வெண்பாப்பட்டியலில்,
கருது சில குன்றினுமக் காப்பியமா மென்பா பெரிதறமே யாதி பிழைத்து- வருவதுதான் காப்பியமாகும் குலவரவு காரிகை யாப்பிற் புராணமே யாம்.
எனக் கூறப்படுகின்றது. கவிஞனாகிய சேக்கிழாரால் எழுதப் பட்ட இந்நூல் புராண இலக்கிய இலக்கணங்களைச் சிறிது கொண்டதாயினும் காவியமாகவே படைக்கப்பட்டுள்ளது.
3. பெரியபுராணம் காவியம் என்பதற்கு இலக்கிய கர்த்தாக்கள் தரும் சான்று:
காவியம் பற்றிக் கூறியவையாபுரிப்பிள்ளையவர்கள்
"சிந்தாமணியாஞ் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தாமணிமேகலை புனைந்தான்-நந்தா வளையாபதிதருவான் வாசவனுக்கிந்தான் திளையாத குண்டலகேசிக்கு.
என வரும் திருத்தணிகையுலாப் பகுதியால் ஐம் பெருங் காப் பியம் எவை என அறியலாம். இவையன்றி சூளாமணி, உத யணன் பெருங்கதை, தகடூர்யாத்திரை, பெரியபுராணம். என்ற காவியங்களும் இங்கு குறிப்பிடப்படுகின்றன” என்கிறார்.
"தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரிய புராணம் பலராலும் ஒரு பக்திக் காவியம் என்றே பொதுவாக எண்ணப்படுகின்றது. அஃது மிகப் பெரிய வீரகாவியமுமாகும்”என்கிறார் திரு.நா.ரா முருகவேள் அவர்கள். பெரிய புராணத்திற்கு முகவுரை எழுதியோர் பலர் இதனைப் பெருங்காப்பியமாகவே குறிப்பிடுகின்றனர். பெரிய புராண வசனம் எழுதிய ஆறுமுக நாவலர் (முல்லைப்பதிப்பு) “அநபாய சோழ மகாராஜா திருத்தொண்டர்களுடைய அடிமைத் திறத்தையும் அவர்களுக்கு அருளிய பரமசிவனது திருவருட்டிறத்தையும் நினைந்து உருகி அருண்மொழித்தேவரை நோக்கி, இந்தச் சரித்திரத்தை யாவருக்கும் தெளிவாய் விளங்கும் பொருட்டு இலக்கண விதிப்படி அமைந்த பெருங்காப்பியமாக விரித்துச் செய்து தாரும் என்றார்” எனக் குறிப்பிடுகின்றார். பெரிய புராண ஆராய்ச்சி’ எனும் நூலின் முன்னுரையில், “நம் தமிழக வரலாற்றில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும், நாகரிகப் பண்பாடுகளையும், கருவாகக் கொண்டு பிற மொழிச் சார்பின்றித் தமிழ் மொழியிலேயே முதன் முதலாகத் தோன்றிய காப்பியங்கள் சேரமுனிவராகிய இளங்கோவடிகள் இயற்றிய முத்தமிழ்க் காப்பியமும், சேக்கிழாரடிகள் இயற்றிய திருத்தொண்டர் புராணமும் ஆகிய இரண்டுமேயாகும்’எனக்

குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக பெரியபுராணம் பற்றிச் சிந்தித்த பல அறிஞர் இதனைக் காவியம், பெருங்காப்பியம் என்றே குறிப்பிட்டுச் சென்றுள்ளனர்.
பெரிய புராணத்தில் காவியப் பண்பு:
1. கடவுள் வாழ்த்து:- தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரிய புராணத்திற்கு முன்பே கடவுள் வாழ்த்துப் பாடும் வழக்கம் இருந்ததனைக் காணலாம். தொல்காப்பியர் காலத்தி லிருந்தே கடவுள் வாழ்த்துப்பாடும் மரபு இருந்து வருகின்றது. பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள் தோன்றிய காலப் பகுதியில் தான் நூன்முகத்துக் கடவுள் வாழ்த்துக் கூறும் மரபு காணப்பட்டது. நூலுக்கு வெளியே கூறும் வாழ்த்து, அவையடக்கம் ஆகிய பிற்கால மரபுகள், பெருங்காப்பியமான சிலம்பில் காணப்படவில்லை. எனினும் காப்பியத்தின் முதற்காதையான மங்கல வாழ்த்துப் பாடலில் முதற்பகுதி இறைவணக்கமாகவும், இறைநிலைக்குயரும் காவியத் தலைவி வாழ்த்தாகவும், அரச வாழ்த்தாகவும் அமைகின்றது. இங்கு தனியனாகக் கூறப்படவில்லை பெரிய புராணத்தில்.
“உலகெலாம் உணர்ந் தோதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேனியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான் மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்”
எனக் கடவுளி வாழ்த்து பாடப்படுகின்றது. பின் விநாய கருக்கும் நீத்தாருக்கும் வாழ்த்துக் கூறப்படுகின்றது.
காவிய இலக்கணத்தில் கூறப்படாத சில மரபுவழி வந்த காவிய முறைகளையும் இவர் கையாண்டிருக்கிறார். கம்பன், சிந்தாமணி இரண்டிலும் அவையடக்கம் என்ற தலைப்பில் பாடப்பட்டுள்ளது. அவையடக்கம் கூறும் மரபு எப்பொழுது தோன்றிற்று எனக் கூறமுடியாது. ஏனைய காப்பிய ஆசிரியர்கள் கூறாத ஒன்றைச் சேக்கிழார் கூறுகின்றார். கம்பனும் தன் நூலில் கூறியுள்ளார்.
அளவிலாத பெருமையராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவு கூட உரைப்பரிதாயினும்
அளவிலாசை துரப்ப அறைகு வேன் என்கிறார்.
காப்பியத்தின் அமைப்பிற்பகுப்புமுறை முக்கியமான தொன்றாகும். காப்பியக் கதை, தொடக்கம் முதல் முடிவுரை ஒரு பகுதியாக அமையாது பல பகுதிகளின் தொகுதியாகவே அமைதல் வேண்டும். காவியமானது சருக்கம், இலம்பகம், பரிச்சேதம் எனப் பகுக்கப்பட்டிருத்தல் வேண்டும். சேக்கிழார் மூல நூலாகிய திருத்தொண்டத் தொகையின் பதினொரு பாடல்களில் வரும் சுவையான சொற்களை அப்படியே எடுத்து
Gráfiágriff vaatto al 2005

Page 145
தம் நூலில் சருக்கங்களின் பெயர்களாக இட்டுள்ளார். இவர் தனது நூலின் 4286 பாடல்களையும், இரண்டு காண்டங் களாக வகுத்து அவற்றை பதின்மூன்று சருக்கங்களாகப் பகுத்துள்ளார். இந்நூல் திருமலைச் சருக்கம் முதல் திரு நின்ற சருக்கம் முடிய முதற் காண்டமாகவும், வம்பரு வரி வண்டுச் சருக்கம் முதல் வெள்ளைச் சருக்கம் முடிய இரண்டாம் காண்டமாகவும் அமைந்துள்ளது.
காப்பிய அமைப்பின் நன்றி கூறும் மரபினையும் சேக்கிழார் கையாள்கின்றார்.
“தேசம் நிறைந்த உள்ளத்தால்
நீலம் நிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார் பெருமையினை
எல்லா உயிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத்
தொகைமுன் பணித்த திருவாளன் வாசமலர் மென் கழல்வனங்க வந்த
பிறப்பை வணங்குவாம்”
என நன்றி உணர்வோடு பாடுகின்றார்.
காப்பியத் தலைவன், அதாவது பெருங் காப்பியத்திற்கு ஒரு முக்கிய தலைவன் தன்னிகரில்லாத தலைவன் இருக்க வேண்டும் என்பதாலும், இந்நூலில் அவ்வாறான தலைவன் இல்லாமல் பலர் வரலாறு கூறப்படுவதாலும், இது பெருங் காப்பியமாகாது என்பர். ஆனால் இந்நூலில் சுந்தரர் பாட்டுடைத் தலைவனாகவே படைக்கப்படுகின்றான்.
தம்பிரானைத்தன் உள்ளம்தழிஇயவன் நம்பியாரூரன் நாம் தொழும்தன்மையன்’
எனக் காப்பியத் தலைவன் பெருமையைக் கூறத் தொடங்கு கிறார் ஆசிரியர். பாட்டுடைத் தலைவனான சுந்தரர் பிறந்த ஊர் திருநாவலுர். ஆனால் பரவையாருடன் வாழ்ந்த ஊர் திருவாரூர் அதனால் திருவாரூர் சிறப்பினையே பாடத் தொடங்குகிறார் சேக்கிழார்.தடுத்தாட்கொண்ட புராணத்தில் சுந்தரர் வரலாறு கூறப்படுகின்றது. சுந்தரரது வரலாற்றுடன் தொடர்புடையதாக நாயனார் பலரதும் வரலாற்றுக்கதை இணைக்கப்படுகின்றது. ஏயர் கோன் கலிக்காம நாயனார் புராணத்திலும், கடைசியில் சடையனார் இசைஞானியார் என அவரது பெற்றோரைப் பற்றியும் கூறி இறுதியாக வெள்ளையாச் சருக்கத்தில் அவர் வரலாற்றை கைலாயம் சென்றவரையில் காட்டி முடிக்கிறார். நம்பியாரூரரைக் காப்பியத் தலைவராகக் கொண்டது மட்டுமன்றி காப்பிய உறுப்புக்கள் அனைத்தையும் அவரது வரலாற்றுடன் இணைத்தே பாடியுள்ளார்.
காவிய நாயகியாக பரவையார் படைக்கப்படுகின்றார். L6) பெண்பாத்திரங்கள்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

கதாபாத்திரங்களாகப் படைக்கப்பட்ட போதும் சுந்தரர் என்ற கதாநாயகனின் மனைவி பரவையாரே காப்பியத்தின் தலைவி எனப்படுகின்றார்.
வன் தொண்டர் பால் வைத்த மனக்காதல் அளவின்றி வளர்ந்து பொங்க நிறைநின்ற நாண முதலாம் குணங்களுடன் நீங்க உயிர் ஒன்றும் தாங்கி மின்தயங்கு நுண்ணிடையான் வெவ்வுயிர்த்து மெல்லணைமேல் வீழ்ந்த போது எனப் பரவையாரின் பண்பினை எடுத்துக் கூறுகின்றார்.
காவிய அக அமைப்பிற்காவியத் தொடக்கம் முக்கி யத்துவம் பெறுகின்றது. காவியத்தொடக்கம் என்பது இரு வகையில் அணுகத்தக்கது. காவியத்தை ஒரு முழு உருவாகக் கொண்டு, அதன் தொடக்கத்தையும் காவியக் கதையை முழு நிலையாகக் கொண்டு அதன் ஆரம்பத்தையும் கருதுவதாக அமையும். காவியத்தை ஒரு மொத்த முழு உருவாகக் கொண்டு அதன் அக நிலையினை நோக்குமிடத்துக் காவிய அமைப்பில் வர்ணனை மிக முக்கியத்துவம் பெறுகின்றது
கதாநாயகனுடன் இணைந்து ஆசிரியர் திருமலைச் சிறப்பை வர்ணிக்கின்றார்.
பூதம் யாவையின் உள்ளவர் போதென
வேதமூலம் வெளிப்படும் மேதினிக்
காதல் மங்கை இதயக் கமலமாம்
மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால் எனவும்,
நிலவும் எண்ணில் தலங்களும்நீடொளி இலகு தண்தளிர் ஆக முந்ததோர் உலகும் என்னும் ஒளிமனை வல்லிமேல் மலரும் வெண்மலர் போல் வதம் மால் வரை எனப் பாடல்களில் ஆசிரியர் வர்ணித்துச் செல்கிறார்.
ஒரு காப்பியத்தின் உயிர் நாடியான கற்பனை வரலாற்றுக் காப்பியங்களில் இடம் பெறுவது குறைவு. ஆனால் வரலாற்றுக் காப்பியம் படைத்த சேக்கிழார், தன் கற்ப னைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளமையினை வர்ண னைகள் மூலம் அறிய முடிகின்றது.
மாவிரைத் தெழுந்தார்ப்பவரைதரு பூவிரித்த புதுமதுப் பொங்கிட வாவியிற் பொலிநாடுவளம்தங்க காவிரிப்புனல் கால் பரந் தோங்குமால்
கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்னக்
13

Page 146
சுரும் பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம் அரும்பல்ல முலையென்ன அமுதல்ல மொழியென்ன வரும்பல்லாயிரம் கடைசி மடந்தையர்கள் வயலெல்லாம் எனப் பாடல்களில் வர்ணித்துச் செல்கிறார்.
நகரை வர்ணிக்கும் போது,
தேமலங்கல் அணி மாமன் மார்பின் செம்மல் அம் கயங்கள் செங்கமலத்தண் பூமலங்க எதிர்பாய்வன மாடே புள்ள லம்புதிரை வெள்வளை விவித தமங்குகள்தடம்பனை ஆகும் தண்ம ருங்குதொடுவார்கள்தம் மும்மை மாமங்கள் அறவீடருன்தில்லை மல்லல் அம்பதியின் எல்லை வணங்கி
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது மன்னும் மாமல ரானவழிபட்டது வன்னியாறு மதிபொதி செஞ்சடைச் சென்னியார்திரு வாரூர்த்திருநகர் செங்கண் மாதர் தெருவில் தெளித்தசெங் குங்குமத்தின் குழம்பை அவர்குழல் பொங்கு கோதையிற் பூந்துகள் வீழ்ந்துடன் அங்கண் மேவி அளறு புலர்த்து மால் என சுந்தரரது நகரைப் பலவாறு வர்ணிக்கிறார்.
பெருங்காப்பியத்துக்கு இன்றியமையாதது ரஸமு மாகும் ரஸங்கள் கலை' எனவும், ‘மெய்ப்பாடு' எனவும் பொருள்படும், தொல்காப்பியர்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உலகை என்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப”
என்கிறார். இவற்றுக்கு அப்பால் 'சாந்தம் என்ற மெய்ப்பாட் டையும் சேர்த்து ஒன்பது சுவை நவரசம் எனக் குறிப்பிடுவர். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர், நகைச் சுவைக்குக் காரணமான பொருள்கள் இகழ்ச்சியும் இளமையும் அறிவின்மையும் மடமும் என்பன என்றார், நம்பியாரூரர் திருமணப் பந்தலில் கிழவன் ஒருவன் வந்து,
ஆவது இது கேண்மின் மறையோர் என் அடியான் இந்
நாவல்நகர் ஊரன் இது நான் மொழிவது” என்று கூற, இதனைக் கேட்ட சுந்தரர் கோபமடைந்து,
14

என்றான் இறையோன் அது கேட்டவர் எம் மருங்கும் நின்றார் இருந்தார் இவன் என் நினைத்தான் கொல்
என்று சென்றார் வெகுண்டார் சிரித்தார்திரு நாவலூரன் நன்றாம் மறையோன் மொழி என்று எதிர்நோக்கி
நக்கான் ான அவர் நகைத்தமையைக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.
அழுகைச் சுவை இளிவு, இழவு, அசைவு, வறுமை போன்ற காரணங்களால் பிறக்கும் என்கிறது தொல்காப்பிய உரைநூல். பெரியபுராணத்தில் சிவகாமியாண்டார் மலர் பறித்துக் கொண்டுவந்த வேளையில் சோழ மன்னனின் பட்டத்து யானை அப்பூக்களை நிலத்தில் வீழ்த்திக் காலால் மிதித்தது.
களியானையின் ஈர் உரியாய் சிவதா எளியார் வலியாம் இறைவாசிவதா
"நெடியோன் அறியா நெடியார் அறியும் படியால் அடிமைப் பணி செய்து ஒழுகும்
அடியார்களில் யான் ஆரா அணைவாய முடியா முதலாய் எனவே மொழி”
தன் கடமையைச் செய்ய முடியாமல் போய்விட்டதே எனப் புலம்புவது அழுகைச் சுவையின் குறித்து நிற்கின்றது.
இளிவரல் என்பது தன் நிலையில் இருந்து இறங்குதல். மூப்பு, பிணி, வருத்தம் மென்மை என்பனவற்றைக் குறித்து எழுவது- செல்வச் செழிப்புடன் வாழ்ந்த சுந்தரர் ஒருவரையும் மதியாது வாழ்ந்தவர். தன் கண்களை இழந்தபின்,
"இழுக்கு நீக்கிட வேண்டும்” என்று இரந்தே எய்து வெந்துயர்க் கையற வினுக்கும் பழிக்கும் வெள்கிநல் இசைகொடு பரவிப் பணிந்து சாலவும் பலபல நினைவார்
என முப்பது பாடல்களில் இளிவரல் சுவை மேலோங்கப் பாடுகின்றார்.
மருட்கைச் சுவை இதனை அற்புதழ் எனவும் குறிப்பர். புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் இவற்றின்று இச்சுவை தோன்றும் வியப்பைத் தரக் கூடிய எத்தனையோ நிகழ்ச்சிகள் பெரிய புராணத்துள் இருப்பினும் இறைவனின் திருவிளை யாடல்கள் என எண்ணும் போது வியப்பின்றிப் போகின்றன. சுந்தரரை ஆட்கொள்ள வந்த இறைவனிடம் உமது இருப் பிடத்தைக் காட்டும் என வினவ,
பொருவரும் வழக்கால் வென்ற புண்ணியமுனிவர் என்னை
சேக்கிழார் மாநாட்டு மலர் 2005

Page 147
"ஒருவரும் அறியீராகில் போதும் என்று உரைத்துச்
குழ்ந்த
பெருமறையவர் குழாமும் நம்பியும் பின்பு செல்லத்
திருவருட்டுறையே புக்கார்கண்டிவர்திகைத்துநின்றார்”
திருவிளையாடல் காட்டி மறைந்தார் எனப் இப்பாடல் மூலம் குறிப்பிட்டுச் சொல்வது வியப்புச் சுவையைக் குறிக்கின்றது. அடுத்தது அச்சச் சுவை. அச்சச் சுவைக்கு காரண மானது வருந்துந் தெய்வமும் விலங்கும் கள்வரும் இறைவரு மாகும். புகழ்ச் சோழர் என்ற தொண்டருக்கும் அச்சம் தோன்றுகிறது- சிவனடியார்களை சிவன் எனவே கருதிப் போற்றி வழிபடும் அவரிடம் போரில் வென்ற தலைகளைக் கொண்டு வருபவர்கள் பல தலைகளையும் காட்டினார்கள். அதற்குள் சிவனடியார்கள் தலையும் இருந்ததாம்.
“கண்டபொழுதே நடுங்கி மனம் கலங்கிக் கைதொழுது கொண்டபெரும் பயத்துடனும் குறித்தெதிர் சென்று
அது கொணர்ந்த
திண்டிறலோன் கைத்தலையில் கடைதெரியப் பார்த்தருளி புண்டரிகத் திருக்கண்ணீர் பொழிந்திழிய”
என அச்சச்சுவையில் பாடுகிறார் சேக்கிழார்
வீரம்
பெருமிதம்- கல்வி, தறுகண், இசை, கொடை என்பன காரணமாக இச்சுவை பிறக்கும் என்பர் இலக்கண நூலார். புகழ்ச் சோழர் பட்டத்து யானை சிவகாமியாண்டார் மலர்கள் சிந்திவிட்டது என்பதற்காகத் தாம் ஒருவர் என்பதையும் யானையும் பாகர்களும் பலர் என்பதையும், கருதாமல் முன்னேறிச் செல்கிறார் எறிபத்தர்.
கண்டவர் இது முன்பு அண்ணல் உரித்த அக்களிறே
போலும் அண்டரும் மண்ணுளோரும் தடுக்கினும் அடர்த்துச்
சிந்தத் துண்டித்துக் கொல்வேன்.
என்று கூறிக்கொண்டே யானையின் துதிக்கையை வெட்டி வீழ்த்தினார் எறிபத்தர் “இங்கு வீரச் சுவைகூறப்படுகின்றது. அடுத்து வெகுளிச்சுவை. இதனை ரெளத்திரம்” எனக் கூறுவர்.
சேக்கிறார்ாதாது மலர்2005

உறுப்பறை குழகோள் அலை கொலை என்ற வெறுப்பின் வந்த வெகுளிநான்கே
எறிபத்தர் மன்னனுடைய யானை, பாகர் என்பவர்கள் மேல் காட்டியது வெகுளி எனப்படும்.
சென்னி இத்துங்க வேழம் சிவகாமியாண்டார் கொய்து
பன்னாகா பரணர்ச் சாத்தக் கொடுவரும் பள்ளித்தாமம்
தன்னைமுன் பறித்துச் சிந்தத் தரைப்படத் துணித்து
வீழ்த்தேன்
எனக்கூறுவது வெகுளிச் சுவையை எடுத்துக் காட்டுகிறது.
இறுதியாக தொல்காப்பியனார் குறிப்பது உவகைச் சுவையாகும். இதனை சிருங்காரம் என்பர். மனதிற்கு மகிழ்ச்சியைத் தருவது. சுந்தரரை நினைக்கும் பரவையாரின் மனநிலையை,
முன்னே வந்து எதிர் தோன்றும்
முருகனோ பெருகொளியால் தன்னேர் இல் LomTrGeoTimt
தார் மார்பின் விஞ்சையனோ மின்னேர் செஞ்சடை அண்ணல்
மெய்யருள் பெற்றுடையவனோ என்னே என் மனந்திரிந்த இவன் யாரோ
எனச் சேக்கிழார் பாடுவதில் சிருங்காரரசம் மிக்கிருக்கின்றது.
நடுவுநிலைமை-சாந்தம் என்ற ஒன்பதாவது சுவை யையும் சேக்கிழார் பெரியபுராணத்தில் காணமுடிகின்றது. பக்திரசமும் இங்கு மிக்கிருக்கின்றது.
எனவே, சேக்கிழார் வகுத்த காப்பியம் அதற்கு முன்னர் தோன்றிய காப்பியங்கள் போல் அல்லாமல் தனித்து வமுடையதாய் விளங்குகின்றது. ஏனைய காப்பியப் புலவர்கள் போல ஒரே ஒரு காப்பியத் தலைவனையும், அவன் வாழ்ந்த நாட்டையும், அவன் வசித்த ஊரையும்பாடமுடியாத நிலையிலும், தன் கவித்திறத்தால் மிக அழகான காவியமாக இந்நூலைப் படைத்துள்ளனர். சேக்கிழாரின் தனிச் சிறப்பு என்னவெனில் இத்தகைய சமய அடிப்படையில் வாழ்ந்தவர்களின் வரலாறு களை வைத்துக்கொண்டு ஓரளவு வளர்ச்சியடைந்து முழு வடிவம் பெற்றுவிட்ட காப்பியத்தின் கூறுகளை அடக்கி, இந்த வரலாறுகளை ஏற்றுக்கொள்ளும் முறையில் அதனைப் படைத்ததாகும். எனவே சேக்கிழார் பெரிய புராணம் காவியப் பண்புடைப் பெருங்காப்பியமேயாகும்.
15

Page 148
திருமதி சாந் பணி இந்துசமய கலாசார அ
Dக்கட் பிறவியின் மாண்பிற்கு வழி காட்டுவது பெரியபுராணம் என்னும் திருத்தொண்டர் புராணம். அது ஒர் இலக்கியப் பெருங்கடல்.
பெரியபுராணம் என வழங்கப்பெறும் இந்நூலுக்கு சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணம் என்றே பெயரிட்டார். சேக்கிழார், பெரியபுராணம் பாடுவதற்கு ஆதாரமாக அமைந்த மூலநூல் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பெற்ற திருத்தொண்டர்த்தொகை என்பதாகும். இதனை ஒட்டி இவருக்கு அடுத்து வந்த நம்பியாண்டார் நம்பிகள் திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலினைச் சிறிது விளக்கமாக எழுதினார். இவ்விரண்டினையும் சேக்கிழார் தம் புராணத்திற்கு அடிப்படை ஆதாரமாக வைத்துக்கொண்டார். பெரியபுராணம் என்னும் பெருமாளிகையை விரிவுபடுத்துவதற்குத் தொடர்புடைய வேறு ஆதாரங் களையும் சேக்கிழார் தேடிக்கொண்டார். சிறப்புடைய தேவார முதலிகள் மூவரின் தேவாரப் பாடல்கள், திருமூலர், திருமந்திரம், காரைக்கால் அம்மையாரின், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, கழறிற்றறிவார் நாயனாரின், பொன்வண்ணத் தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கயிலாய ஞானவுலா, ஐயடிகள் காடவர் கோன் பாடிய ஷேத்திரத் திரு வெண்பா ஆகியன சேக் கிழாருக்குத் துணை புரிந்த நூல்களாம். இக்கருத்தையே பாராட்டிப் பேசுவார், சேக்கிழார் புராணம் பாடிய உமாபதி சிவாச்சாரியார். இப்புராணம் முழுவதும் அருள் வாக்காகிய வேதம் என்பது முக்காலும் சத்திய சமயமாகும் என்றார் சி. கே. சுப்பிரமணிய முதலியார் சேக்கிழார் தாம் பிரித்துக்கொண்ட ஒவ்வொரு பிரிவிற்கும் (சருக்கத்திற்கும்), திருத்தொண்டர் தொகையின் ஒவ்வொரு பாடலின் தொடக்கத்தினையே பெயராகக் கொண்டார். பாடலின் தொடக்கம் சருக்கத்தின் பெயர்
1. தில்லைவாழ் அந்தணர்தம் -“தில்லைவாழ் அந்தணர்
29 சருககம 2. இலை மலிந்த வேல்நம்பி - “இலை மலிந்த சருக்கம்” 3. மும்மையால் உலகாண்ட - “மும்மையால்
உலகாண்சருக்கம்”
4. திருநின்ற செம்மையே - “திருநின்ற சருக்கம்”
16
 
 

சிவன் அடியார் விபருமை
நாவுக்கரசன்
LumTGIT
லுவல்கள் திணைக்களம்
5. வம்பறாவளி வண்டு “வம்பறாவளிவண்டுச்
சருககம 6. வார்கொண்ட வனமுலையாள் - “வார்கொண்ட
வனமுலையாள
7. பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் -“பொய்யடிமை
இல்லாத புலவர் சருக்கம்”
8. கறைக்கண்டன் கழலடியே - “கறைக்கண்டன்
சருக்கம்”
9. கடல் சூழ்ந்த உலகெலாம் - “கடல் சூழ்ந்த
சருக்கம்”
10. பத்தராய்ப் பணிவார்கள் - “பத்தராய்ப்
e 99 பணிவார்கள் சருக்கம்
11. மன்னியசீர் மறைநாவன்-“மன்னியசீர்ச் சருக்கம்”
இத்தகைய அமைப்புமுறையினையே சேக்கிழார் கொண்டார். தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து வடக்கே துங்க பத்திரை ஒட்டி உள்ள காம்பிலி வரை உள்ள நிலப்பரப்பில் பிறந்து வாழ்ந்துறைந்த அறுபத்து மூன்று நாயனார் தம் அருஞ்செயல்கள் குறித்த வாழ்க்கை வரலாறு இப்புராணத் துடன் பேசப்படுகின்றது. பெயர்கள் இல்லாத ஒன்பது தொகையடியார் தம் திருத்தொண்டும் இயம்பப்படுகின்றது. இவர் தம்மால் இந்நாடு பெருமையடைகின்றது.
இப்புராணம், அறுபத்துமூவர் வாழ்க்கையைக் கூறுவ தோடன்றி அவர் தம் காலத்து விளங்கிய தென்னாட்டு வர லாற்றினையும் ஒருசேரக் கூறுகின்றது. அரசியல் வரலாறுகள், மதங்கள், மதப்போராட்டங்கள் அவற்றின் நிலைகள் ஆகியவை சீராக விளங்குகின்றது. மேலும் அக்காலத்துச் சமுதாய நிலை யிணைப்படம் பிடித்துக் காட்டுகின்றது. தமிழர் தம் வரலாற்று ஏடு எனவும் இப்பெரிய புராணத்தினைக் கொள்ளலாம்.
இன்னும் இதனுள் இசைக்கலை, ஆடற்கலை, பாடற் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டடக்கலை, உடற்நூற் கலை,மருத்துவக்கலை, போர்க்கலை,இலக்கியக் கலை ஆகிய இவையும் இவை போன்றனவும் ஆங்காங்கே நவிலப் பட்டுள்ளன. இவற்றோடு சரியை, கிரியை, யோகம், ஞானம், வினைமலம் பிறப்பு, வீடு முதலான சைவசித்தாந்த கருத்துக் களும் இதனுள் கூறப்பெற்றுள்ளன. புவியியல் பற்றிய
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 149
கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.
“பக்திச் சுவை நனி கொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” எனச் சேக்கிழாரை மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாராட்டும் அளவிற்கு புராணத்துள் யாண்டும் பக்தி பரவியிருப்பதைக் காணலாம். இப்பக்தியே நூலுள் தலையாய இடத்தைப் பெறுகின்றது. பக்தியின் வழி புராணத்துள் வந்துள்ள மக்களின் பண்பாட்டை ஆசிரியர் எடுத்துக்கூறும் திறம் வியந்து பாராட்டற்குரியது. இப்பண் பாடும், பக்தியும் புராணத்தில் இல்லையெனின் புராணமே நிறைவு பெறாது. தனிமனிதப் பண்பாடு, கூட்டுறவு வாழ்க் கையில் பண்பாடு, இல்லறப்பண்பாடு, மகளிர் பண்பாடு, அரசர் பண்பாடு, சொல்லும் முறையால் பண்பாடு, சமயப் பண்பாடு எனப் பிரித்துப் பார்க்கலாம்.
“அளவிலாத பெருமையராகிய” அடியார் எனச் சேக்கிழார் சுவாமிகள் கூறுவதிலிருந்து அவர்களிடத்தில் மிகப் பெருமைகள் இருந்தன என்பது விளங்குகின்றது. பின்னும் அவர் திருக்கூட்டச் சிறப்பில்,
"மாசிலாத மணிதிகழ் மேனிமேல் பூசுநீறு போல் உள்ளும் புனிதர்கள் தேசினால் எத்திசையும் விளக்கினார் பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்”
எனவும் கூறுகின்றார்.
இதிலிருந்து அவர்களது உள்ளம்பரிசுத்தமுடையது எனவும், அவர்கள் தங்கள் ஒளியால் எத்திசையும் விளக்கினர் எனவும், அவர்கள் பெருமை அளவிட முடியாதது எனவும் விளங்குகின்றது. இவர்கள் எதுவரினும் இறைவன் அடியை மறவாது அவனுக்கு பணிபுரிந்து வாழ்பவர் எனவும், குற்றமற்ற குணத்தினர் எனவும் கூறுகின்றார். மேலும்,
“கேடும் ஆக்கமும் கெட்டதிருவினார்
ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினிற்கும்பிடலேயன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்” எனக் கூறுகின்றார்.
மிகுதியும், குறைவுமின்றி ஒரே நிலையில் இருத்தலும், பிச்சை எடுப்பினும், செல்வப் பெருக்கிலும் மனம் மாறாது ஒன்று போலவே இருந்து பணிபுரிவர். இருவினை ஒப்பு வந்தா லன்றி இந்நிலை மற்றவர்க்கு ஏற்படாது. இறைவனோடு அன்னிய மின்றிக் கூடுவதற்கு காரணமாகிய அன்போடு அவனை வழிபடும் பிறப்பேயன்றி, முத்தியையும் விரும்பாதவர் ஆவர்.
“ஈர அன்பினர் யாதுங் குறைவிலார்” வீசும் என்னால் விளம்புந்தகையதே' எனச் சேக்கிழாரே கூறுவாரெனின், அடியார் பெருமையை
6orafgaf Bømlaf ganf 2oo5

யாவரே அளவிட வல்லார்? அதனாலேயே ஒளவையாரும் “தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே'எனக் கூறினார்.
நமது சமயாசாரியார்கள் தமக்கு முன்னிருந்த நாயன்மார்களைக் குருவாகப் போற்றி வழிபட்டார்கள். திருஞானசம்பந்தர் திருக்காளத்திமலைக்குச் சென்றபோது, கண்ணப்பநாயனாரின் திருவுருவத்தைக் கண்டு, கும்பிட்ட பயனைக் காண்பார் போல் வேடர் பெருமானை வீழ்ந்து வணங்கினார். திருவாலங்காட்டை அடைந்தபோது, காரைக் காலம்மையார் தலையால் நடந்த பதி என்பதை யறிந்து மிதிக்க அஞ்சினார்.
அப்பர் சுவாமிகள் உழவாரத் தொண்டு செய்த தலமாகிய திருவதிகையை மிதிக்க அஞ்சி, சுந்தரர் புறத்தே சித்தவடமடத்தில் தங்கி எம்பெருமானுடைய திருவடி தீட்சையும் பெற்றார். மணிவாசகப் பெருமான் கண்ணப்ப நாயனாரின் அன்பினைப் போற்றிப் பாடினார்.
"கண்ணப்பனொப்பதோர்.அன்பின்மை கண்டபின் என்னப்பனென்னொப்பில் என்னையுமாட்
கொண்டருளி வண்ணப்பணித்தென்னை வாவென்ற வான்
asagapaoTai சுண்ணப் பொன்னிற்றற்கே சென்றுரதாய்
கோத்தும்பி”
அப்பூதியடிகள், மெய்பொருள் நாயனார் வரலாறு களும் சிவன் அடியாரைப் போற்றி வாழ்ந்த சிறப்பினையே உணர்த்தி நிற்கின்றன.
இறைவன் அடியவர்களுக்கு மிக எளியவனாகக் காட்சி கொடுப்பான் என்பதனையும் சேக்கிழார் இப்பெரியபுராண காவியத்தைச் செய்வதற்கு முழுமுதலே துணைநின்றான் என்பதனையும் காண்கிறோம்.
“உலகெலாம்” என்ற முதலடி கூத்தப்பெருமான் அருளிய வாக்காகும். அதிலே பிரணவம் கலந்து ஒலிக்கிறது. அதனை மந்திர வாக்காகக் கொண்டு பெரியபுராணத்தைச் சிறந்த காவியமாக எழுதி முடித்தார் சேக்கிழார். நூலின் தொடக்கத்திலே “உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்” என்று தொடங்கியவர் நூலின் முடிவிலே “மன்றுளா ரடியாரவர் வான் புகழ் நின்ற தெங்கும் நிலவியுலகெலாம்” என்று முடிக்கின்றார்.
அடுத்து, மெய்யடியார்கள் வரலாற்றில் நாம் காணும் முக்கியமான மற்றொரு பண்பு எதுவென்றால், எவ்வுயிரையும் தன்னுயிர் போல் எண்ணி இரங்கச் செய்வது. அகத்தேயும் புறத்தேயும் தூய்மை பேணுவது இத்தன்மையில் வாழ்ந்த வர்கள் நமது மெய்யடியார்கள். அவர் பெருமித மடைந்து “மண்ணுலகிற் பிறந்து நம்மை வாழ்த்தும் வழியடியார் பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டேன்”
117

Page 150
என்று பாடினார். மனிதனை உயர்த்தும் வழி அவனுடைய செயலிலே தங்கியுள்ளது. வள்ளுவரும் அழகாகத் திருக் குறளிலே “பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கருமமே கட்டளைக்கல்” என்று மொழிந்தார். பரஞ்சோதி முனிவரும் அர்ச்சனைப் பயனை விளக்குகின்றபோது “குடந்தை தீரும் பச்சிலையும் மிடுவார்க்கு இமயர்க் குஞ்சரமும் படங் கொள்பாயும் பூவணையும் தருபவன் மதுரைப் பரமன்” எனப் பாடியருளினார்.
இதயக் கோவிலில் இறைவனை இருத்தினாலன்றி மானுடப்பிறவியின் மகத்துவத்தை உணர முடியாது. திருவடி சேர்தல் என்பது கூட இதுதான். அஃதாவது திருவடிக்கீழ் இருப்பதை ஆன்மா அறிவது தான் திருவடி சேர்தல் ஆகும். திருவங்கமாலையில் அப்பர் சுவாமிகள் தேவனை என்னுள்ளே தேடிக்கண்டு கொண்டேன் என்று பாடியுள்ளார். இதனாற்றான் உடம்பின் பெருமையையும் ஞானிகள் தாமுணர்ந்து எமக்கும் வைத்தார்கள்.
"உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே.”
தாயுமான சுவாமிகள் “அன்பர் பணிசெய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால், இன்பநிலைதானே வந்தெய்தும் பராபரமே” என்று பாடினார்.
மனிதப்பிறவியின் மகத்துவத்தில் நல்லாரினக் கத்தின் பங்கு அதிகம் அடங்கியுள்ளது. மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனைத் திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டதும் இதுவே. “அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்” என்று தில்லையம்பலவனை இரந்து கேட்டார். பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்பதனை வள்ளுவரே ஒரு அதிகாரத்தால் விளக்குகிறார். நாம் உயர்வடைய வேண்டுமானால் பெரியோர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி அவர்

நூல்களைக் கருத்துடன் கற்று அதன் வழிச் செல்ல வேண்டும். “நாலு பேர் சொன்னபடி நட” என்ற பழமொழியும் இக்கருத்திலேயே எழுந்ததாகும். மக்களிடையே இலட்சியப் பிரசாரம் செய்தவர்கள் சமயாசாரியார்கள். இதற்காக ஊர் ஊராகச் சென்றனர்; தாம் வாழ்ந்து காட்டினர். உழவாரத்தையும், தாளத்தையும் கருவியாகக் கொண்டனர். அதனால் தான் சரித்திர வரலாற்றிலே சிறந்தவொரு சமய நாகரீகத்தை நிலை நாட்டினர். மதத்தை உதாசீனம் செய்யும் நாகரீகம் நிலைக்காது. எமது சரித்திரம் இந்த உண்மையைக் காட்டுகிறது. அவர்கள் காலத்தினால் செய்த நன்றி ஞாலத்தின் மாணப் பெரியதாகும்.
“சைவமாம் சமயஞ்சாரும் ஊழ்பெறலரிது”என்றார் அருணந்தி சிவம். ஆனால் அந்த நல்ல ஊழும் வாழ்வின் மூலமே சிறப்படைய முடியும். பிறவியென்பது கடல், உடம்பென்பது தோணி. உயிர் மீகாமன். கடலைக் கடப்பதற்குத் தோணியும் நல்லபடி அமையவேண்டும். மீகாமனும் அறிவுடையவனாய் விளங்க வேண்டும். மீகாமனின்றித் தோணியினாற் பயனில்லை. அதே நேரத்தில் உடம்பாகிய தோணிக்கும் நல்ல பலம் இருக்கத்தான் வேண்டும். இதனாற்றான் உடம்பையும் போற்றி வாழ்ந்தார்கள். இந்த வாழ்விலே மேம்பட்டுத் தம்மையுணர்ந்து தலைவனை உணர்ந்து அவன் தாளிற் தலைப்பட்டனர். அதனால் பிறவியாகிய கடலை நீந்திக் கரையேறினர். எனவே, வையத்தில் வாழ்வாங்கு அமைந்த தெய்வநெறியில் தலைப்பட்டால், மானுடப் பிறவியும் மாண்புடையதாகப் போற்றப்படுமன்றோ!
"குனித்த புருவமுங்கொவ்வைச் செவ்
வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல்
மேனியிற் பால் வெண்ணிறும் இனித்தமுடைய எடுத்த பொற்
பாதமுங் காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவ
தேயிந்த மாநிலத்தே"
&rkefynsforløsen 2005

Page 151
Uெரியபுராணம் எனும் திருத்தொண்டர் புராணத்துத் திருமலைச் சிறப்பு என்னும் ஆரம்ப பகுதியிலுள்ளதொரு பாடலில் நம்பியாரூரன் நாம் தொழும் தன்மையான் என்று
யாம் இங்கே கண்டுள்ள தலைப்பிற்கான பிரயோகங் காணப்படுகிறது.
கைலையில் எழுந்தருளியிருந்து இறைவன் ஆன்மாக் களுக்கு அருள் புரிகின்றான். அதனால் அது திருமலை எனப்பட்டது. மலை என்பது எல்லா மலைகளையுங் குறியீடு செய்யக்கூடியதொரு பொதுப் பெயர் ஆயினும் கைலையை மட்டுங்குறிப்பிடக்கூடிய சிறப்பும் அதற்குண்டு. உதாரணமாக 'மா' என்பது விலங்குகள் எல்லாவற்றையுங் குறிப்பிடக்கூடியதொரு பொதுப்பெயர். ஆயினும் சிறப்பாகக் குதிரையை மட்டும் குறிப்பிடப் பயன்படுவது. மா என்பது மரங்களுக்குப் பொதுப் பெயர். சிறப்பாக மாமரத்தையுங் குறிக்கும். இந்த வகையில் மலை அடங்குமாவென்றால் அதுதானில்லை. கோயில் என்பது பல கோயில்களுக்கும் பொதுவான பெயர். ஆனால் அது சிறப்பாகத் தில்லையைக் குறிக்கும். இறைவன் எழுந்தருளி இருந்து அருள் பாலிக்கும் தலைமை பற்றி வந்த பெயர் அது. அஃதே போன்று இறைவன் எழுந்தருளியிருக்கும் தலைமை பற்றி மலை என்ற பெயர் வேறு எந்தவித சிறப்புச் சொற்களும் வேண்டாது கைலையைக் குறித்தது. இறைமையை உணர்த்துமுகத்தால் திரு என்னுஞ் சிறப்புச் சொல்லும் பெற்று திருமலை என்றாயது. ஆன்மாக்கள் போக போக்கியங்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இறைவன் உமையம்மையுடன் எழுந்தருளி இருந்து அருள் பாலிக்கும் இடம் அது என்பதாலேதான் கைலை சிறப்புப் பெற்றது.
பொன்னின் வெண்திருநீறு புனைந்தெனப் பன்னும் நீள்பனி மால்வரைப் பாலது
தன்னை யார்க்கும் அறிவாரியானென்றும் மன்னிவாழ்கயிலைத்திரு மாமலை,
என்கின்றது பெரியபுராணம். இமயம் உயர்ந்தது. அதன் நீள அகல உயரம் பார்ப்போரை மயங்க வைப்பது. அத்திருமலை இடத்ததாகிய கைலையிற்றான் இறைவன் எழுந்தருளி யிருந்து அருள் பாலிக்கின்றான் என்றால், அந்த இறைவன் பற்றிய சிந்தனையை எம்மனத்துள் அடக்குவது முடியாதது
சேக்கிழார் மாதாகுமலர்2005
 

என்பது குறிப்பான் உணர்த்தப்படுகின்றது என உணர் வோமாக. இமயத்தின் வியாபகமே எம்மனத்துள் அடக்கங்
காண முடியாதது என்று காட்டுவது இறை வியாபக உணர்வு அதனினுங் கடிது என்று எம்மை உணரவைப்பதற்காம். அந்த இமயத்துடனாகிய கைலையை ஞாயிற்றொளிதாக்கும்போது அது பொற் கோட்டி மையம் ஆகின்றதென்று புறநானூறு என்னுஞ் சங்க நூல் குறிப்பிடுகின்றது.
அந்தி அந்தனர் அருங்கட னரிறுக்கும் முத்தீவிளக்கிற்றுஞ்சம் பொற் கோட் டிமயமும் பொதியமும் போன்றே
என்னும் புறநானூறு இரண்டாவது செய்யுளின் இறுதியடிகள் குறிப்பிடுவது கவனிப்பிற்குரியதாகவேண்டும்.
என்னனையமுனிவரரும் இமையவரும் இடையூறொன்றுடைய ரானாற் பன்னகமும்நகுவெள்ளிப்பனிவரையும்
SSSLLSSLLSSLLSSLLSSLLSSLLSSLLSSLLSSLLSSLLSஅல்லாது புகலுண்டோ இகல்கடந்த புலவு வேலோய்
என்று கம்பராமாயணமும் இந்த வெள்ளிப் பனிவரை பற்றிப் பேசுகின்றது. பெரிய புராணம் திருமாமலை என்று குறியீடு செய்வதும் கவனிப்பிற்குரியதாகவேண்டும்.
அண்ணல் வீற்றிருக்கப் பெற்றது ஆதலின்
நண்ணும் மூன்று உலகும் நான் மறைகளும் எண்ணில் மாதவஞ் செய்ய வந்தெய்திய புண்ணி யந்திரண்டுள்ளது போல்வது
இந்த மலைக்காகிய பெருமைக்குக் காரணம் அண்ணல் வீற்றிருந்து அருளியமைதான் என்பது சேக்கிழார் தரும் நல்ல சிந்தனை.
இத்தகு பெருமைக்குரிய இமயத்தின் சாரலிலேதான் முனிசிரேஷ்டராகிய உபமன்னிய முனிவர் இறை சிந்தனை யுடனாகி ஏனை முனிவர்களுடன் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்.சேக்கிழார் அவரை உன்னருஞ்சீர்உபமன்னியமுனி என்று குறிப்பிடுவார். அவர் கருத்து உண்மையானதுதான்
--- o

Page 152
என்ற உணர்வு எம் எல்லோர் உள்ளத்தும் படவேண்டும். பாலுக்காகப் பாற்கடலையே இறைவனிடம் பெற்றுக் கொண்டவர் சாதாரணமான ஒருவராக இருக்க முடியுமா? ஆகவே அவர் சிந்திப்பதற்கும் அரியவர்தானே! பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கட லிந்தபிரான் என்று தொடங்கும் பல்லாண்டினை மனதார வாயாரச் சொல்லி நாளுந்துதிக்கின்றோம். அந்தத் திருபாடலில் பாலை வேண்டி அழுதவர் வேறு யாருமல்லர், உபமன்னிய முனிவரேதான். அவருக்காகப் பாற்கடலை ஈந்தவர் இறைவன்.
மற்றொரு சிறப்பான செய்தியையும் இங்கு காண்போம். துவாரகையை இடமாகக் கொண்ட கண்ணபிரான் சிவபூசை செய்கின்றார். யமுனை நதிக் கரையிலேதான் சிவபூசை நடை பெற்றது. முடிவில் பூசைத்தேவைக்காக உபயோகித்த நிருமாலியப் பொருள்களை யமுனா நதியிலே இடுகின் றார்கள். அந்த நதிக்கரையின் மற்றோர் இடத்திலிருந்து உபமன்னிய முனிவர் சிவபூசைக்கு ஆயத்தமாகின்றார். சிவபூசை முடிவில் கண்ணபிரான் ஆற்றிலிட்ட பூக்கள் நீருடனாகி வருவதைக் கண்ட முனிவர் அவற்றை எடுத்துச் சிவபூசையைத் தொடங்குகின்றார். உடனே முனிவரின் உதவியாளர்கள் இந்தப் பூக்கள் சிவபூசைக்காகக் கண்ணபிரானால் உபயோகிக்கப்பட்ட நிருமாலியங்கள் என்றனர். அப்பொழுது முனிவர் சிவதீட்சை பெற்ற ஒருவன் சிவபூசை செய்து கழித்த பொருள்கள்தான் நிருமாலிய தோஷமுடையவை. கண்ணன் சிவதீட்சை பெறாதவன். எனவே அவன் உபயோகித்துக் கழித்த பொருள்கள் நிருமாலிய தோஷமுடையவை ஆக முடியாது; எனவே இவை நிருமாலியங்கள் ஆகா என்று விளக்கித் தமது பூசையைத் தொடர்ந்தார். இந்தச் செய்தி கண்ணபிரானுக்கு எட்டியது. சிவதீட்சை பெறாத காரணத்தால் தான் செய்த சிவபூசையும் பயனற்றுப் போயிருக்குமே என்று வேதனைப்பட்டான். உபமன்னிய முனிவரைத் தேடியடைந்து அவரிடமே சிவதீட்சை பெற்றுக் கொண்டான். தீட்சை வகைகளுள் ஒன்றாகிய திருவடி தீட்சையையும் அவரிடமே பெற்றுக் கொண்டான். அதனால் துவரைக்கு இறையாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தவன் என்று உபமன்னிய முனிவர் பேசப்படுகின்றார்.
இவ்வகை உயர்வுகளுக்கெல்லாம் காரணராய உபமன்னிய முனிவர் சிவனையல்லாது வேறு எவரையும் சிந்தியாதவர். எந்த வேளையும் சிவ சிந்தையுடனே இருப்பவர். சிவனையன்றி வேறு யாரையும் வணங்காதவர். அவ்வண்ணமாய முனிவர் ஒருநாள் மற்றை முனிவர் களுடனாகி இருந்த வேளை, தென் திசைக்கண் ஒரு பேரொளி தோன்றியது. ஆயிரஞ் சூரியர்கள் ஒன்று கூடினும் அவ்வொளிக்கு ஈடாக முடியாது. அவ்வளவிற்கு அவ்வொளி
20

பிரகாசமாகவிருந்தது. வர வரப் பிரகாசம் அதிகரித்தமை கண்டு எல்லோரும் அதிசயித்தனர். முனி சிரேட்டரைப் பணிந்து வினவுகின்றார்கள். ஒரு கணம் சிந்தித்தார் உபமன்னிய முனிவர். அவர் வதனமும் ஒளிமயமாகின்றது.
அந்தி வான்மதி குடிய அண்ணல்தாள் சிந்தியாவுனர்ந்தம்முனி தென்திசை வந்த நாவலர் கோன்புகழ் வன்தொண்டன் எந்தை யாரருளாலனை வானென
தென்திசை விளங்க - திருத்தொண்டத் தொகையைத் தர - நாவலூரில் தோன்றிய நாவலூர் நம்பி, எம்பிரான் அருளால் மீண்டும் கைலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார் என்று சொல்லி இரண்டு கைகளையும் உச்சிமேற் குவித்து தென்திசை நோக்கி வணங்கிக் கொண்டு செல்வாராயினர். சூழலில் இருந்த மாதவர் யோகியர் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஐயர் தலையிற் குவித்த கையினராய் தென்திசை நோக்கிச் செல்லத் தாமும் அவர் பின்னே தலைமீது வைத்து அஞ்சலித்த கையினராய்ச் சென்றனர். தம் மனத்துத் தோன்றிய ஐயத்தை ஐயரிடம் சொல்லவும் அவர்கள் தவறவில்லை. "சுவாமி சிவனை யல்லது வேறுயாரையும் வனங்காதநீங்கள்,இன்று யாரையோ வணங்கிக் கொண்டு தென்திசை நோக்கிச் சென்றீர்கள் அந்த அளவிற்கு உயர்ந்து நின்றவர் யாரென நாம் அறியலாமா” என்று எல்லோரும் வினவினர்.
நம்பியாரூரன் நாம் தொழுந் தன்மையான் என்று ஐயரிடமிருந்து பதில் கிடைக்கின்றது. தெய்வப்புலமைச் சேக்கிழார் வாயிலாக அந்தச் செய்திகளை அறிவோம்.
சம்பு வின்னழத் தாமரைப் போதலால் எம்பிரானிறைஞ் சாயிஃ தென்னெனாத் தம்பிரானைத் தன்னுள்ளந்தழிஇயவன் நம்பியாரூரன்நாம்தொழுந்தன்மையான்
என்று அவர் வாயிற் செய்தி தவழுகின்றது. எங்கள் தலைவரே, எப்பொழுதுஞ் சுகத்தைச் செய்பவராகிய சிவனின் இனிமையைச் செய்வனவாகிய தாமரை மலர் போன்ற பாதங்களையல்லாது வேறு எதையும் - எவரையும் - வனங்காத நீங்கள் இன்று வணங்குகிறீர்களே! இஃதென்ன? என்று வினவ, இப்போ இங்கு வருகின்றவன் சிவனைத்தன் உள்ளம்முழுமையாலும்தழுவிக் கொண்டவன் நம்பியாரூரன்ரநாம் தொழுந் தகுதி உடையவன். என்பது உபமன்னிய முனிவரது அடக்கமான விளக்கம்.
இறைவனிடம் பாற்கடலைப் பெற்றவரும், துவரைக்கிறை யாகிய மாதவன் முடிமேல் அடி வைத்தவருமாகிய உபமன்னிய
ത്ത drágaf øgrøafgrawf 2005

Page 153
முனிவர், சிவனையல்லது வேறு எவரையும் வணங்கும் இயல்பில்லாதவர். அந்த அளவிற்கு உயர்ந்து நின்றவராகிய முனிவரே வணங்குதற்குரியவர் நம்பியாரூரர் என்கிறாரே! அவரிடமுள்ள சிறப்புத்தான் என்னவாகலாம் என்றறிய விழைந்த தபோதனர் முனி சிரேஷ்டரின் தரவிற்காக ஏங்கி எதிர்ந்து நின்றனர். உபமன்னிய முனிவர் கருத்தைத் திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டு உதவுகிறார்கள்.
தொழுதும் வணங்கியும் மாலயன் தேடருஞ் சோதிசென்றாங் கெழுதும் தமிழ்ப்பழ ஆவணங் காட்டி எனக்குன்குடி முழுது மழமைவந்தாட்செயெனப்பெற்ற வன்முரறே னொழுகு மலரினற்றாரெம் பிரானம்பிமாரூரனே.
தொழுதும் வணங்கியும் திருமாலும் பிரமனும் தேடினார்கள். இறுதியில் அரிய சோதி வடிவினனாகி இறைவன் அவர் களிடை நின்றான். அங்கேயும் உருவைக் கண்டுகொள்ள வாய்ப்பில்லை. அடி முடியைத் தேடினார்கள், தேடிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் இருளால் சூழப்பட்டி ருந்தனர். அதனால் இறைவன் சோதி வடிவினனாகி இடை நின்றான். இவர்கள் இங்கே தேடிக் கொண்டிருக்க இறைவன் கிழப்பிராமண வடிவுடன் புத்தூர் கடங்கவி சிவாசாரியார் மகளாரின் திருமண மண்டபத்தையடைந்து மணமகனாக வந்திருந்த நம்பியாரூரரைத் தம்முடன் வருமாறு அழைக்கின்றார். உங்கள் குடும்பத்தினர் எங்கள் பரம்பரை அடிமைகள்; எம்முடன் வரவேண்டும் என்று உறுதியுங் காட்டுகின்றார். அதுவுந் தமிழ்ப் பழ ஆவணங் காட்டி உன்குடி முழுதும் அடிமை என்றெழுதப்பட்ட ஆவணம். உண்மையாக அது புதிய ஆவணந்தான். ஆனால் தமிழ்ப்பழ ஆவணமென்கின்றாரே ! ஒருகால் தமிழ்க் கனிவுடனாகிய உறுதியாகலாமோ? ஆணவ இருள் அகலாத நிலையில்
dvdAgrif longrrowans 2005

திருமால் பிரமன் இறைவன் திருவுருவைக் கண்டிலர். நம்பியாரூரரைத் தேடி வந்த இறைவன் முன்னே நிற்கின்றான். அவ்வண்ணமாய நம்பி வணங்கப்பட வேண்டியவன்தானே!
இன்னுமொரு செய்தி. அடிமுடி காணும் விடயத்தில் அரி அயன் இருவரும் பெருந்துன்பப்பட்டார்களே ! பேசாமல் திருவாரூர் வந்து பரவை வாயிற்படியாக இருந்திருந்தால் இலகுவாகக் கண்டிருக்கலாமே என்று அங்கலாய்க்கிறார் காளமேகப் புலவர்.
ஆனா ரிலையே அயனுந் திருமாலுங் கானார் அடிமுடி காண்பதற்கே - மேனாள் இரவுதிரு வாரூரில் எந்தைபிரான் சென்ற பரவைதிரு வாயிற் பழ.
எந்தைபிரான் நம்பியாரூரரின் தோழர். தோழன் துன்பத்தைத் தவிர்ப்பதற்காக இரவோடிரவாகப் பரவையார் வீட்டிற்குத் தூதுபோனவர் அவர். இந்த அரிஅயன் இருவரும் பரவையார் வீட்டுக் கதவு நிலையின் மேற்படியாக ஒருவரும் கீழ்ப்படியாக மற்றொருவரும் இருந்திருந்தால் இலகுவாக முடியையும் அடியையுங்கண்டிருக்கலாமல்லவா? என்கின்றார். உண்மை தான்; இந்தக் கதவு நிலை பழைய காலத்தியது. அதற்குத் தான் மேலுங் கீழும் படியுண்டு. அயனுந் திருமாலும் பரவை திருவாயிற்படி ஆனாளிலையேநாம்ஏன்வருத்தப்படவேண்டும். இங்கே யாம் அறிந்துகொள்ளவேண்டியது எந்தைபிரான் திருநாவலூரற்காக - அவர் தோழமைக்காக - எத்தனை சந்தர்ப்பங்களில் எளிவந்து கருமங்களை நடைமுறைப் படுத்தியிருக்கிறார் என்பதுதான். ஆகவே அவர் வணக்கத் திற்குரியவர்தான் என்று உபமன்னிய முனிவர் சொல்வதில் என்ன தவறு காணப்போகின்றீர்கள்?
12

Page 154
சைவசமயம் காட்டும்
ஆக்கம்:- செல்
ஆய்வாளர், சை6
சென்னைப்ப
முன்னுரை:-
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டமைந்த சமயம் 'சைவம். சைவம் கூறும் தத்துவமாக சித்தாந்தம் அமைந்துள்ளது. சைவ சித்தாந்தத்தை பன்னிரு திருமுறைகள், பதினான்கு சாத்திரங்களின் அடிப்படையில் உணரலாம். எனவே இவற்றின் மூலமாக சைவசமயம் கூறும் “சமுதாய உணர்வுகள்” எவை என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
சமுதாய உணர்வு;-
முழுமை அல்லது பொது நோக்கில் கூறப்படும் “சமூகத்தை” (Society) ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் அடிப்படையில் மொழியால் வகுத்துக் கூறுவது “இனம்” அல்லது “சமுதாயம்” (Community) எனப்பெறும்.
சமுதாய உணர்வு, சமுதாய அறிவு என்பன சமுதாய நோக்கம் கொண்டிருப்பினும், குறிக்கோள் நிலையில் தம்முள் மாறுபாடு உடையன.
தான் வாழும் சமுதாயத்தில் நிகழும் நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு இன்ன இன்ன செயல் முறைகள் நடை பெற்றிருக்கிறது என்பதைப் பற்றிக் கூறுவது “சமுதாய அறிவு” சமுதாயத்தில் வாழும் மக்களிடம் சமுதாயம் என்ற உயிரோட்டம் காணப்பெறும் நிலையிலும் சேர்ந்து வாழும் அடிப்படையிலும் குறிக்கோள் நிலைச் சமுதாயத்தை வரையறுத்து அதற்கான வழிவகைகளைக் கொண்டு விளக்குவது “சமுதாய உணர்வு'
ஒத்த இருப்பு:-
சமுதாய உணர்வின் அடிப்படையானது ஒத்த இருப்பு ஆகும். நான் ஓர் இருப்புடைய பொருள் என்று எண்ணும் அதே நேரத்தில் என்னுடைய இருப்பைப் போலவே இருப்புடைய பொருள்கள் பலவும் இங்கே உண்டு என்பதை ஏற்று; என்னுடைய தனிச் செயல் என்னுடைய இருப்பின் மூலமாகத் தொடர்பு இருப்புக் கொண்டுள்ள ஏனைப் பொருள்களையும் சென்று தாக்கும் எனக்கொள்ளும் கொள்கையின் அடிப்படையில் தான் ‘சமுதாயம் மலர்வதை உணரலாம்.
122
 
 
 

சமுதாய உணர்வுகள்
bவி. ச. நந்தினி
வசித்தாந்தத் துறை ல்கழைக்கழகம்
சங்கப்புலவர் பிசிராந்தையார் தாம் நரையில்லாமல் வாழ்வதற்குக் காரணம் “ஆன்றவிந் தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் வாழும் உலகில் இருப்பதே” என்கின்றார். சான்றோர்கள் தனித்தனி இருப்பு உடையவர்களே. ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை உடையவர்களாக இருப்பது அவரவர்களது தனித்தனி முயற்சியும், வெற்றியுமாகும். ஆனால் அவர்களின் முயற்சியும் வெற்றியும் அவர்களின் இருப்பைத் தாக்கி பின்னர், அந்தத் தாக்கம் அவர்களின் இருப்பினோடு இணைப்பு இருப்புக் கொண்டிருக்கிற ஏனைப் பொருள்களின் இருப்பையும் தாக்குகின்றது. இந்த இணைப்பு இருப்புத் தத்துவமே சமுதாயத்தின் உயிரோட்டம்.
மற்றுமொரு எடுத்துக் காட்டாக, சேரமான்பெருமாள் நாயனாரின் வரலாறு அமைகிறது. சேரமான் பெருமாள் ஆட்சிப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற கட்டாயத்தன்மை தோன்றியபோது, ஆட்சிப் பொறுப்பு என்பது தன்னுடைய இருப்புடன் தொடர்புடைய இருப்புக் கொண்ட எல்லா உயிர்களையும் இணைப்பது. இங்கு ஒரறிவு முதல் ஐந்தறிவு உள்ள உயிரினங்களும் பிறவும் உண்டு எனக் கண்டது சமுதாய உணர்வு. எனவே, தான் ஒரறிவு உயிர்களும் பேசுவதைத் தெரிந்து அவைகளுக்கும் வேண்டுவன அளித்து வாழமுடியும்-வாழவேண்டும், என இறைவனை அருளும்படி வேண்டுகின்றார்.
சைவ சமயமும் சமுதாய உணர்வுகளும்.
சைவசமயத்தின் சமுதாய உணர்வுகளை பன்னிரு திருமுறைகள் வாயிலாக நாம் அறியலாம். உணர்வின் வெளிப்பாடாக செயல்வடிவம் பெறுவது தொண்டாகும். அதில் ஈதல், மொழி இன உணர்வு, விழிப்புணர்வு, சமதர்மம், ஊழ்வினை என்பன சைவசமயத் தொண்டுகளில் சில.
1. ஈதல் :
சமுதாயத்தில் நின்று சமுதாய உணர்வை தோற்றுவிப்பது, வளர்ப்பது என்பவைகளோடு பாடல் அருளுவதும் ஒரு வகைச் சமுதாயத் தொண்டாகக் கொள்ளப்பட்டாலும், கைத்தொண்டு செய்தல் வேண்டும்
Gardiffynfasargareb Isaf 2005

Page 155
என்ற கொள்கையை முதன் முதலாகக் கூறியவர் காரைக்காலம்மையாரே. அவர் தமது அற்புதத் திருவந் தாதியில்,
எளியது இதுஅன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலிர் ஆ1ஆ!
(பாடல் 46)
என்று கூறுகிறார். அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒன்று கொடுத்துத் தன்னைப்பழக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்துகின்றார்.
இவரைப் பின்பற்றி ஈதலை உலகச் சமுதாயக் கொள்கையாக திருஞானசம்பந்தர் உருவாக்குகின்றார். பிறருக்குக் கொடுத்தேயாக வேண்டும் என்ற அம்மையாரின் கொள்கையை சம்பந்தர் சிவம் வாழும் இடம் எனக்கொண்டு கொடுக்க வேண்டும் என்கின்றார்.
"மண்ணில் பிறந்தார் பெறும்பயன்மதிகுடும் அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர்நல்விழாப் பொலிவு கண்டு
ஆர்தல் உண்மை ஆம்எனில் உலகாமுன் வருக என
உரைப்பார்” (பெரியபுராணம்- 2990).
இக்கருத்தை திருமூலர் கூறும்போது கோயிலில் சென்று உணவைப் படைப்பதில் என்ன பயன்? நடமாடும் கோயில் நம்பரை உண்ண வைக்க வேண்டும் என்று கூறுகின்றார்.
"படமாடக் கோயில் பகவற் கொன்றியின் நடமாடக் கோயில் நம்பற்கங் காகா நடமாடக் கோயில் நம்பற் கொன்றியின் படமாடக் கோயிற் பகவற்க தாமே.”
(திருமந்திரம் 1830) என்றார். மேலும் இதனை எளிமைப்படுத்தி,
"யாவர்க்குமாம்இறைவற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசுவுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம் பிறர்க்கின்னுரை தானே’
(திருமந்திரம் 251) என்றார். மேலும் இதனை,
“பற்றது வாய்நின்ற பற்றினைப்பார்மிசை அற்றம் உரையான் அறநெறிக் கல்லது உற்றுங்களால் ஒன்றும் ஈந்தது வேதுணை மற்றண்ணல் வைத்த வழிகொள்ளுமாறே”
(திருமந்திரம் 258) என்று கூறுகின்றார்.
ardagnført af 2oo5

2. மொழி இன உணர்வு:
திருஞானசம்பந்தர் தம்மை மொழி உணர்வால், சமுதாய உணர்வால் உலகவர்களோடு ஈடுபடுத்திக் கொண்டார். தன்னை எல்லா இடங்களிலும் “தமிழ் ஞானசம்பந்தன்” என்று கூறிக் கொண்டு நாடு முழுவதும் சுற்றி வந்தார். இதனை சுந்தரர்,
“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம் பந்தனுக்கு” என்ற திருப்பாட்டின் மூலம் அறியலாம்.
3. விழிப்புணர்வு:
சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இணைந்து தொண்டாற்றினார்கள்.
தெருப்பெருக்குதல், திருக்குளம் சீர்மைப் படுத்தல் முதலிய சமுதாயத் தொண்டுகளை திருநாவுக்கரசர் செய்தார்.
'நாம் ஆர்க்கும் குடியல்லோம்” என்றும்
நடலை யில்லோம்” என்றும்
'அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை” என்றும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை உண்டாக்கினார்.
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்” என்றும் முழங்கினார்.
உயர்ந்த வாழ்வைப் பெறவேண்டிய இந்த மனிதச் சமுதாயம் குறிக்கோள் இலாது கெடுகிறது என்பதைப் பின்வருமாறு அப்பரடிகள் தன்மேல் வைத்துப் பாடுகின்றார்.
"பாலனாய்க் கழிந்த நாளும்
பனிமலர்க் கோதை மார்தம் மேலனாய்க் கழிந்த நாளு
மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளுங்
குறிக்கோளி லாதுகெட்டேன்’
(UITL6- 657)
பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சேக்கிழார் சமுதாயத் தொண்டர்களாக அறுபத்துமூன்று நாயன்மார் களையும் கூறுகிறார். அவர்கள்,
“வீடும் வேண்டா பிறயின் விளங்கினார்” என்று தன்னலம் பேணாது உழைக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறி, மக்கள் மத்தியில் சமுதாய உணர்வை. எற்படுத்தி னார்கள் என்றார்.
123

Page 156
4. சமதர்மம்:
எல்லோரும் வாழ வேண்டும், இன்பமாக வாழ வேண்டும், பொருள் பெற்றிருப்பது பிறருக்குக் கொடுத்து வாழ்வதற்கே என்ற கருத்தை அப்பரடிகளின்,
இரப்பவர்க்கு ஈயவைத்தார்
ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர்தங்கட்கு எல்லாம்
கடுநரகங்கள் வைத்தார்”
(பாடல்- 383) என்ற பாடல் மூலம் உணரலாம்.
ஆரவாரச் செயல்களாலும், போலிச் செய்ல்களாலும் சமுதாயத்திற்கு எத்தகைய பயனும் இல்லை என்பதைப் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளார் அப்பரடிகள்.
"கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென் கொங்கு தண்குமரித்துறை ஆடிலென் ஓங்குமா கடல் ஒதநீர் ஆடிலென் எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே’
(பாடல்- 2067) என்றும், “சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்”
(பாடல்- 1674) என்றும் முழங்கினார்.
5. ஊழ்வினை:
சமுதாயத்தில் என்றும் மக்களை வாட்டுவனவாக அல்லது துன்புறுத்துவனவாக மடிமை, ஊழ்வினை ஆகிய இரண்டும் காணப்படுகின்றன.
“மழமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்திவிடும்.”
(திருக்குறள்- 608) என்கிறார் வள்ளுவர்.
24

மடிமையை நீக்குவதற்கு முயற்சி செய்ய வலியுறுத்தும் போது தடையாக இருப்பது ஊழ்வினை. மடிமையையும் ஊழ்வினையையும் வெல்லும் வழியாக பக்குடுக்கை நன்கணியார்,
"இன்னாதென்னஇவ்வுலகம்
இனிய காண்க இயல்புணர்ந்தோரே yy என்று கூறுகின்றார்.
இன்ப துன்ப சூழ்நிலையை உடையது தான் இவ்வுலகம். அதுவும் ஊழ்வினை வயத்ததே என்று ஒரு வகை சமுதாய மடிமைக் கருத்து நிலவிவந்த காலத்தில் இவ்வுலக வாழ்க்கையை விரும்பி எற்றுக்கொண்டு, இன்ப துன்ப நிலையை ஏற்றும் எதிர்த்தும் நின்று வாழ முடியும் என்ற கருத்தை இவ்வுலகில் நிலை நிறுத்தி விளக்கியவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசிக்குச் சென்ற போது ஒரு வீட்டில் அழுகையும் எதிர் வீட்டில் சிரிப்பும் நிலவியதைக் கண்டு, அதன் காரணத்தைக் கேட்டறிந்தார். இது இயற்கை என்று எண்ணிவிடாமல்,
“காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு
காலனையே’
என்று பாடி முதலை உமிழ்ந்த பிள்ளையை அவன் பெற்றோரிடம் சேர்த்து அவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார். இதன் மூலம் அவிநாசியில் ஊழ்வினையை மாற்றிக் காட்டி, வாழ்ந்து திருத்திய சமுதாயப் பெருமையை நாம் சுந்தரர் வரலாற்றின் வாயிலாக உணர முடிகின்றது.
முடிவுரை:
மேலே கூறப்பட்ட செய்திகளின் மூலம் சமுதாய உணர்வு வேறு சமுதாய அறிவு வேறு என்பதும்; சமுதாய உணர்வின் அடிப்படையிலேயே பன்னிரு திருமுறைகள் அமைந்துள்ளன என்பது அறியப்பெற்றது. மேலும், சம்பந்தர் முதல் சேக்கிழார் ஈறாக உள்ள அனைவரும் சமுதாய உணர்வுகளை எடுத்துக் கூறி மக்களுக்குத் தொண்டாற்றி யமையும் சுருக்கமாக விளக்கப் பெற்றது.
dragnføringat swaaf 2oo5

Page 157
தொழுது (
-திருமதிதி. சுந்தராம் தமிழ்த்துறைத் தலைவர் (பணிநிறைவு வே.வ.ெ
முன்னுரை:
Dக்களுள் உயர்ந்தாரைப் பற்றியும் உலகியல் சூழல் பற்றியுமே சுழன்று சுழன்று காப்பியங்கள் தோன்றி நிற்க, ஆரம் கண்டிகை, ஆடையும் கந்தையே, பாரம் ஈசன் பணியலது ஒன்றிலை என்று கருதிய அடியார்களின் வரலாறுகளை மையமாகக் கொண்டு காப்பியம் படைத்த பெருமை சேக்கிழாருக்கு உரியது.
பெரிய புராணத்தை ஒட்டுமொத்தமாக வைத்து நோக்கும் போது, சேக்கிழார் இரண்டு அரிய பேருண்மைகளைத் தம் படைப்பின் வாயிலாக எடுத்து மொழிந்துள்ளார் என்பது தெரியவருகிறது. ஒன்று, மனிதப் பிறவியின் ப்யன், இறைவனை உள்ளம் உருகி வழிபடுதல், மற்றொன்று, அவன் அடியார்களுக்குத் தொண்டு செய்தல், ஒவ்வொரு வரலாறும் வெவ்வேறு கோணங்களில், இறைவன் ஒருவன் உளன் என்பதை உணர்ந்து அவன் தாள்களில் சரண்புகுந்து அடியார் பணியை அரன்பணியாகவே செய்தல் என்னும் உணர்வை, பக்தியினால் முதிர்ந்த ஞானத்தை உள்ளுறுத்திக் காட்டுகிறது என்பதும் சுட்டத்தக்கது.
நீறு, கண்டிகை, வேணி (சடைமுடி) புனைந்த திருவேடத்தாரை அரன் எனவே தொழும் நெறியைக் கொள்கையாக - குறிக்கோளாகக் கொண்டொழுகி இறையருள் பெற்ற அடியார்களின் வரலாறுகளும் பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ளன. வஞ்சமனத்துடன் போலிச் சிவவேடம் பூண்டு வந்தவரையும் சிவன்’ என மதித்துத் தம் உயிரை இழந்து சிவபதம் பெற்ற சிவனருட்செல்வர்கள் அரசர் குல மெய்ப்பொருள் நாயனாரும், பெருவீரராகிய ஏனாதிநாத நாயனாரும் ஆவர். இவ்விருவருள் சிவனடியார் வேடமே “மெய்ப்பொருள்”- “சிவபிரான்” என்று கொண்டொழுகிய மெய்ப்பொருள் நாயனாரின் கொள்கைப்பிடிப்பும் தியாகமும் பற்றிய சேக்கிழாரின் சிந்தனைகள் சிலவற்றை மட்டும் தெளிவுறுத்துவது இக்கட்டுரையின் நோக்கம்.
பொய்த்தவ வேடம்:
மெய்ப்பொருள் மன்னரிடம் பன்முறை போரிட்டுத் தோற்று அவமானப்பட்டுச் சென்ற முத்தநாதன், போர் புரிந்து
drksgionetropa 2005
 
 

வென்றவர்
ாள் - எம்.ஏ, எம்ஃபில், பிஎச்டி
ன்னியப்பெருமாள் மகளிர் கல்லூரி, விருதுநகர். 畿 ခြွင္ကိုစ့်
வெல்லும் திறமை இல்லாது வருந்தினான். அடியார் திருவேடத்து மெய்ப்பொருள் நாயனார் ஒப்பற்ற அன்பு கொண்டொழுகும் சீலத்தை அறிந்து, நீறும் வேணியும் புனைந்து, வஞ்சனையால் வெல்லும் கருத்துடன் தவவேடம் மேற்கொண்டான். வாளை ஆடையில் மறைத்து, புத்தகம் போல் கட்டிக் கையில் ஏந்திக் கொண்டு, மையினை உள்ளே பொதிந்து வைத்து வெளியே ஒளி செய்யும் விளக்கே என்று சொல்லும்படி,மனத்திலே வஞ்சனையை வைத்துத் தவவேடம் போல் பொய் வேடம் பூண்டு வந்தான் என்னும் செய்தியை,
"மெய்யெலா நிறுபூசிவேணிகள் முடித்துக்கட்டிக் கையினிற் படைக ரந்த புத்தகக் கவளியேந்தி மைபொதிவிளக்கே யென்னமனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய்தவ வேடங்கொண்டுபுகுந்தனன்முத்தநாதன்”
(Ghmin. LUILLIII. Z0 என்று புனைவு செய்து காட்டுகிறார் சேக்கிழார்.
மேற்காணும் பாடலை உற்று நோக்கும் போது,
1. நீறு, வேணி, புத்தகம் இவை சிவசாதனங்கள். அன்புடையாரை ஆட்படுத்தும் இயல்புடைய அடையாளங்கள். முத்த நாதன் நீறும், வேனியும் முன்னர் உடையனாயிருந்திருந்தால் அவை சைவ அடையாளமாதலின் நாயனார் அவ் வேடத்தையுடை யவனை வழிபட்டிருப்பாரேயன்றிப் பகைப்பட்டுப் போர் செய்திரார். 2. அவன் முன்னர் நீறு பூசியவன் அல்லன், ஆதலின் தரிக்கத்தக்க இடம் இது, தகாத இடம் இது என்று அறியாதவனாய் மெய்யெலாம் நீறு பூசிக் கொண்டான். 3. தனது குடுமியினைச் சடைகள் போல் திரித்து அவற்றைத் தொகுத்து சடைமுடியாக்கித் தலைமேல் முடிபோலக் கூப்பி நிற்கும்படி கட்டிக் கொண்டான். 4. தான் நினைத்த வஞ்சனைச் செய்கையைச் செய்தற்குக் கருவியாகிய படையை (வாளை) மறைத்து, அதனையே ஒரு புத்தகம் போல கவளிகையில் கட்டி ஏந்தி வந்தான். இதுவும் ஒரு சைவ அடையாளம் என்று வஞ்சித்தற்கும்,
125

Page 158
படையை மறைப்பதற்கும் ஆக, இருவகையும் கருதிப் படை கரந்த கவளியாக்கினான்.
5. மையாகிய நீல நிறத்தைத் தனக்குள் வைத்தும், அதனைச் சுற்றி விளக்கத்தினைச் செய்து ஒளிரும் விளக்குப்போல, மனத்தினுள்ளே கறுப்பாகிய வஞ்ச எண்ணம் பொதிந்து வைத்துக் கொண்டு, விளக்கம் செய்யும் நீறு முதலிய தவ வேடத்தைப் புறத்தே விளங்க வைத்தான் என்னும் மெய்ம்மைகள் உள்ளுறுத்திக் காட்டப்பட்டிருப்பதாக அமையும் உரை விளக்கம் மனங்கொள்ளத்தக்கது(சிவக்கவிமணி உரை முதற் பகுதி பக் 585-586).
முத்த நாதன் வென்ற வகை:
பொய்த்தவ வேடங்கொண்ட வன்னெஞ்சன் முத்தநாதன் நாயனார் தலைநகர் திருக்கோவலூரை அடைந்தான். அரண்மனையில் தடைகள் பலவற்றைக் கடந்து திருவணுக்கண் வாயிலை அடைந்த போது, அங்கு நின்ற நாயனாரின் மெய்க் காப்பாளன் தத்தன், முத்தநாதனை நோக்கி, ‘அடிகேள், மன்னர் துயில் கொள்கின்றார், அவர் தங்களை வரவேற்கவும், தாங்கள் அவருக்கு அருள் புரியவும், இது ஏற்ற சமயமன்று. ஆதலின் சமயம் நோக்கித் தேவரீர் அருள் புரிய வேண்டும்” என்று கூறித் தடுத்தான்.
தத்தன் கூறியது கேட்ட முத்தநாதன், “யான் உங்கள் அரசனுக்கு உறுதி கூற வந்துள்ளேன், நீ இங்கேயே நின்று விடு”என்று அவனையும் தாண்டி உள்ளே புகுந்தான்.அவனது வருகையைக் கண்ட தேவி, மன்னரை எழுப்ப, மன்னனும், 'அண்டர் நாயகனார் தொண்டராம் என எண்ணிக் குவித்த கரங்களுடன் வணங்கி வரவேற்றார். “மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தாற் போல இங்கு எழுந்தருளப் பெற்றதன் காரணம் யாதோ? அருள் செய்ய வேண்டும்.” என்று மன்னர் கேட்டார். முத்தநாதன் “உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூலும்-எங்கும் இல்லாததுமாகிய நூலை உனக்கு எடுத்துக் கூற வந்துள்ளேன்” என்றான். அதுகேட்ட நாயனார், “எனக்கு இதனை விடப்பேறுஉண்டோ? பிரான் அருளிச் செய்த அந்த ஆகமத்தை அருள் செய்ய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். முத்தநாதனோ, “உனது மனைவி இவ்விடத்தை விட்டு நீங்க, நீயும் நானும் வேறோரிடத்தே தனித்திருக்க வேண்டும்” என்றான்.
"பேறெனத் கிதன்மேலுண்டோபிரானருள் செய்த விந்த மாறிலாகமத்தை வாசித்தருள் செய்யவேண்டுமென்ன நாறுபூங் கோதை மாதுதவிரவேநானும் நீயும் வேறிடத்திருக்க வேண்டும் என்றவன் விளம்பவேந்தன்”
(Ohaiui Jim Lum. 13)
126

மெய்ப்பொருள் நாயனார், அங்கு நின்ற தேவியாரை நோக்கி “அந்தப்புரத்திற்குச் செல்லுதி” என்று பணித்தார். தேவியார் தொழுது அகன்றார். பின்னர், முத்தநாதனைத் தவிசின் மேல் இருத்தித் தாம் தரையில் அமர்ந்து கொண்டு, “இனி அருள் செய்யும்” என்றார். நாயனார் முத்தநாதனை வணங்கிய போது, புத்தகக் கட்டை அவிழ்ப்பான் போலப் பாவனை செய்து, மறைத்து வைத்திருந்த படைக்கருவியை எடுத்து, வணங்கி நின்ற நாயனாரை தான் நினைத்த செயலை நிறைவேற்றினான். அவ்வளவில் நாயனார், “மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்” எனத் தொழுது தன் கொள்கையால் அவனை வென்றார்.
நாயனார் அடைந்த வெற்றி:
அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்து (பா.2), அன்பர் வேடமே சிந்தை செய்தும் (பா.2), அவ்வேடத்தார்க்குக் குறைவறக் கொடுத்துவந்தும் (பா4), ஒழுகிய தமது கொள்கை நிலையினின்றும் தாழாது தம் உயிர்க்கு இறுதி வந்த சமயத்திலும் திண்மையுடையராய் நின்று வெற்றியடைந்தார். பகைவன் முத்தநாதனோ தனது நிலையினை விட்டு நாயனாரது கொள்கையினுட்பட்டுத் திருவேடம் தாங்கி வந்தமையினாலே தோல்வியே பெற்றான்.
வெளிப்படையாகப் பார்த்தால் முத்தநாதன் நாயனாரைக் கொன்று வென்றதாகத் தோன்றும். ஊன்றி நோக்கினால் பகைவன் தன்னைக் கொல்ல வாளெடுத்த போதும் “வேடமே மெய்ப்பொருள்” என்று எண்ணி சொல்லித் தொழுதபடியால் வென்றவர் நாயனாரே ஆவர். இக்கணிப்பிற்கு, “வந்தவன் முனிவன் வேடம் தாங்கியிருப்பினும், அவனுடைய முகத்தைக் கொண்டே இவன் தீயவன் என்பதை உள்வாயில் காவலனான தத்தன் என்பவன் கண்டு கொண்டான்” என்கிறார் கவிஞர். வாயிற் காவலன் கூடத் தீயவன் என்று அறிந்து கொள்ளக் கூடிய ஒருவனை, மெய்ப்பொருள் மன்னன் அறிந்து கொள்ளவில்லை என்று கூறுவது சரியன்று. வந்தவன் யார் என்று அறிந்திருந்தும், மெய்ப்பொருள் நாயனார் வந்தவனைப் பற்றிக் கவலைப்படாமல் அவனுடைய வேடத்துக்கு மதிப்புக் கொடுத்தார். அந்த வேடத்தை உடையவன் விரும்பியமையின் தன் உயிரையும் தியாகம் செய்கிறார் என்றுதான் கொள்ள வேண்டும். இல்லாவிடில் துறவி வேடத்துடன் வந்தவனைக் கொல்ல முன் வந்த தத்தனை,
நிறைத்த செங்குருதி சோர வீழ்கின்றார்நீண்ட கையால் தறைப்படும் அளவில் 'தத்தாநமர்"எனத்தடுத்து வீழ்ந்தார்” (மெய்ப் புரா.ப16)
என்று சேக்கிழார் பாடுவது பொருளற்றதாகி விடும்
déwáágrif Agrarø giaof 2oo5

Page 159
(பெரியபுராணம் ஓர் ஆய்வு ப340 அ.ச.ஞானசம்பந்தன்) என்னும் அறிஞர் கருத்தும் வலுவூட்டுவதாக உள்ளது.
முடிவுரை:
மேலே விவரிக்கப்பட்ட செய்திகளிலிருந்து, தெரியவரும் உண்மைகள்:
1.
“வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்” என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் போற்றுகிறார். படைகொடு போரிலே வென்றார், வேடங்கொண்டு வஞ்சனையினும் வென்றார். முன்னையதில் அடர்த்து வென்றார். பின்னையதில் தொழுது வென்றார். நாயனார் பெற்ற வெற்றி, கொள்கை தந்த வெற்றி, “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்றுவிடல்” என்னும் திருக்குறள்,
“மாலற நேய மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” என்னும் சிவஞான போத சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் இலக்கியமானவர் மெய்ப்பொருள் நாயனார். சிவத்தொண்டர்களுக்கு சிவவேடம் என்பது உடம்பின் மேல் அணியப்பட்டுள்ள வேடமன்று.
(6)
கடவுளிடம் பக்தி செலுத்து வயதும், உருவழு முக்கியம் அல்ல. நல்ல ஆசாரம் நற்குணம் செலுத்துவதில்லை. அவர் அன்பு ஒன்றையே
&rådiggørenes føaf 2005

அவ்வேடம் சிவபெருமானாகவே மதிக்கப்படுகிறது. அவ்வேடத்தின் எதிரே அதற்குத் தாழ்வு வராமல் தம் உயிரைத் திரணமாக மதித்து வழங்கினார் மெய்ப்பொருள் நாயனார். இங்ங்ணம் வழங்கியவரை மிகப் பெரிய தியாகம் செய்தவரை வீரர் என்று கூறுவதில் தடை இல்லை. தாம் கொண்ட கொள்கைக்காகத் தம் உயிரையே வழங்கிட முந்தும் ஆன்மீக வீரர்களின் செயற்கரிய செயல்களை உள்ளுறுத்தி “ஈர அன்பினர், யாதும் குறைவிலர், வீரம் என்னால் விளம்பும் தகைய தோ” என்று வியந்து பாடுகிறார்; போற்றுகிறார் சேக்கிழார். திருநீறும், கண்டிகையும், வேணியும், புனைந்த திருவேடத்தையே மெய்ப்பொருளாக - சத்தாகிய நித்தியப் பொருளாக - அரனாக இப்பெருந்த கையார் கொண்டபடியால் மெய்ப்பொருள் நாயனார் எனப்படுகிறார். இந்தக் கருத்துக்கள் மெய்ப்பொருள் நாயனாரின் வரலாறு, 'அன்பர் வேடம் அரன்’ எனச் சிந்தித்து அன்பர் வேடத்தின் வழிபாட்டினையே தமக்குத் தமது உயிரினும் சிறந்ததாகக் கொண்ட வரலாறு என்று கொள்வதற்குரிய அழுத்தமான மெய்ம்மைகளாகக் கருதப்படுகின்றன.
ன்பு
மும் குறுக்கிடாது. கல்வி, செல்வம், ஜாதி, பலம் இவற்றிலும் பகவான் அவ்வளவாகக் கவனம் எதிர்பார்க்கிறார்.
127

Page 160
‘இன்ப அன்பினை இடையறாது விளைவிக்கும் இனிய தமிழ் நூலாகிய பெரியுராணம் பெரியோர் வரலாற்றைக்
கூறுவது; ஓதுவோர்க்குப் பேசுதற்கரிய பெருமையைச் சேர்ப்பது; பிறவாயாக்கைப் பெரியோன் பெருமையை விளக்குவது; முன்னும் பின்னும் இதனையொத்த பெருநூல் தோன்றாமையால் “பெரிய புராணம்” எனப் பாராட்டப் பெற்றது. ஆனால் சேக்கிழார் இப்புராணத்திற்குப் “பெரிய புராணம்’ என்ற பெயர் சூட்டவில்லை. அவர் திருத்தொண்டர் சீர் பரவும் இந்தச் சிறந்த காப்பியத்தைத் தொடங்கும் பொழுது “எடுக்கும் மாக்கதை” என்றே தொடங்கினார்.
இந்நூல், வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் வரலாற்று நூல். அடியார் வழிபட்ட கடவுளையும், கடவுள் போற்றிய அடியார்களையும் சேக்கிழார் இந்நூலில் பாடியுள்ளார். தனியாக உதிர்ந்திருந்த வரலாறுகளை ஒன்று சேர்த்துத் தொண்டர் என்ற தொகுதிப் பெயரை ஒருமையாகக் கொண்டு அந்த இலக்கண நெறிப்படி வாழ்கின்றவர்களைப் பற்றிக் காப்பியம் அமைத்தார். இது உலகம், உயிர், கடவுள் என்ற மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம். இந்தப் பேருலகிற்குக் காரணன் ஒருவன். தனக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்று சிந்தித்து அவனடிகளை நினைத்து வணங்க வேண்டும். தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் தான் எவ்வாறு பழக வேண்டும். பிறப்பு எடுத்ததன் பயன் பிறர்க்கும் பயன் உடையதாக வாழ்தல் வேண்டும் என்ற தொண்டுள்ளம் கொண்டவர்களைப் பற்றியதே பெரியபுராணம். இங்கு தொண்டு என்ற பண்பே காப்பியத் தலைவன் இடத்தைப் பெறுகின்றது.
இவ்வாறு, தொண்டு என்ற பண்பைக் கொண்ட பெரியபுராணத்துள் மிகச் சிறப்புடைய வரலாறு, மனு நீதிச் சோழனுடையது. சுந்தரரின் திருத்தொண்டத்தொகையை முதல் நூலாய்க் கொண்டு வழி நூல் சமைத்த சேக்கிழார், அம்முதல் நூலில் இல்லாத மனுநீதிச் சோழன் கதையை திருநகரச் சிறப்பினுள் புகுத்துகின்றார். அதற்குக் காரணம், அறம், பக்தியின் முதல் நிலை என்னும் பேருண்மையை இந்தக் கதை மூலம் வலியுறுத்தவே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர் பண்பாட்டில் அறமே பக்தியின் முதல் நிலை
28
 

சாதனை
என்ற கருத்து பதிவாக்கப்பட்ட ஒன்று. அதனாலன்றோ ஒளவையார் ஆத்திசூடியில் “அறஞ்செய்ய விரும்பவேண்டும்” என்பதே முதல் உபதேசம்.
சமுதாயத்தில் தனிமனிதன் ஒருவன் தனித்து வாழ முடியாது. மற்ற உயிர்களோடு பழகி வாழ வேண்டி இருக்கிறது. மற்ற உயிர்களுக்கு ஊறு செய்யக் கூடாது. அவர்களுக்கு நன்மைகள் ஏற்படப் பழகல் வேண்டும். தனக்கு ஏற்படுகின்ற நன்மைகளைத் துறந்து, பிறர் நன்மையடையும் வண்ணம் வாழ்தலே மிகச் சிறந்த வாழ்க்கை. இது தனிமனிதப் பண்பாடு இதைத்தான் புறநானூறு
“உண்டா லம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியருண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவதஞ்சிப் புகழெனின் உயிருங் கொடுக்குவர்
பிறர்க்கென முயலுநர் உண்மையானே’
இவ்வாறு கூட்டு வாழ்க்கையிற் பண்பாடு, இல்லறப்பண்பாடு, சமயப் பண்பாடு, அரசர் பண்பாடு இவையாவும் சேக்கிழார் புராணத்தில் காணப்படுகின்றன. அறமே பக்தியின் முதன் நிலை என்பதை வள்ளுவரும் தெளிவாக வலியுறுத்துகிறார்.
"ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு”
இக்குறளுக்கு விளக்கஞ் செய்யும் பரிமேலழகர், நீத்தார் பெருமை என்பதனை, ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தார் எனவிரித்து, ஒழுக்கங்களை வழுவாது ஒழுக அறம் வளரும்; அறம் வளர பாவம் தேயும், பாவம் தேய அறியாமை நீங்கும். நித்த அநித்தங்களின் வேறுபாட்டு உணர்வும், இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும், பிறவித்துன்பங்களும் தோன்றும். அவை தோன்ற, வீட்டின் கண் ஆசை உண்டாகும், அஃது உண்டாக பிறவிக்குக் காரணமாகிய பயனில் முயற்சிகள் எல்லாம் நீங்கி, வீட்டிற்குக் காரணமாகிய யோகமுயற்சி உண்டாகும். அஃது உண்டாக, மெய்யுணர்வு பிறந்து புறப்பற்றாகி “எனது” என்பதும், அகப்பற்றாகிய “நான்” என்பதும் விடும். அவ்விரண்டும்
&erálágaríf ografobivaof 2oo5

Page 161
நீங்க வீடு எய்தப்படும். இதுவே, ஒழுக்கத்தின் கண் நின்று நீத்தல் என்பதாகிய அறத்தை முதலாகக் கொண்டு வீடடை அடையும் வழி. இக்குறட்கருத்தையே மனுநீதிச் சோழன் கதை மூலம் வலியுறுத்த விழைகின்றார் சேக்கிழார்.
அறம் என்றால் என்ன? கடைப்பிடிப்பவரின் ஆன்ம தகுதிக்கு ஏற்ப அறத்தைப் பலவாறு விளக்கஞ் செய்யலாம். நீதி, அறம், தருமம் என்ற பல சொற்களுக்கு அறம் என்பது ஒரு பொருள். ஆராய்ந்து பார்ப்போமானால், ஒவ்வொன்றிற்கும் சிறப்பான வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. நீதி என்பது உலகியலைக் கருத்தில் கொண்டு அனைவருக்கும் பொதுவாக வகுக்கப்பட்ட சட்டம். அறம் என்ற சொல் சந்தர்ப்பத்திற்கேற்ப நீதி, தர்மம் என இரண்டினையும் குறிக்கப் பயன்படும். நீதி, தர்மத்துள் அடங்கும். தர்மம் நீதியுள் அடங்காது. தர்மத்தை முதலறம் என்று கூறுவர். நீதியைச் சார்பறம் எனக் கூறுவர். தர்மம் இறையின்பத்தை விளைவிக்கும். இந்த உண்மையை, மிகவும் அழகாக மனுநீதி கண்ட சோழனின் கதையைக் கொண்டு விளக்குகிறார் சேக்கிழார். ஒரு நாட்டை ஆளும் மன்னன் எங்ங்ணம் ஆள வேண்டும் என்பதை,
"மாநிலங்காவலனாவான் மன்னுயிர் காக்குங்காலைத்
தானதனக் கிடையூறு தன்னால், தன் பரிசனத்தால், ஊனமிகு பகைத்திறத்தால், கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம்ஐந்துந்தீர்த்து அறங்காப்பான்அல்லனோ?”
தன்னால் தன் பரிசனத்தால், பகையால், கள்வரால், உயிர்தம்மால் இவ்வைந்தின் மூலம் மக்களுக்குத் தொல்லைகள் உண்டாகா வண்ணம் அறநெறிப்படி பாதுகாக்க வேண்டும். இதை நன்கு உணர்ந்த மனுநீதிச் சோழன்,
“மண்ணில் வாழ்தகு மன்னுயிர்கட்கெல்லாம் கண்ணும் ஆவியும் ஆம் பெருங்காவலனாக விளங்கினான்.”
புறநானுாற்றுப் புலவர்,
“நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ இதை ஒட்டியே சேக்கிழாரும் மன்னனை உயிர் என்றார். வழிவழி வந்த இக் கொள்கையைக் கம்பன் மாற்றி,
“வயிரவான்பூணணி மடங்கன் மொய்ம்பினான் உயிரெலாந்தன்னுயிரொப்ப ஓம்பலால் செயிரிலா உலகினிற் சென்று நின்று வாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்புமாயினான்’
(பாலர் அரசியல் படலம் 10) இங்கு மன்னனாகிய தசரதன் “ உடம்பு’ என்றும், மக்கள்தாம்“உயிர்”என்றும் கூறினான். இந்த மனுவேந்தன் மனிதர்க்கன்றி எல்லா உயிர்க்கும் காவலனாகவும், கற்பகத் தருவாகவும், தன் நாட்டு மக்களின் ஆன்ம போதத்திற்கு
6Fášágaf partif pawolf 2oo5

கண்ணொளியாக நின்று, நல்லவற்றைக் காட்டியும் உயிரொளியாய் நின்று நல்லவற்றை உணர்த்தியும், அறிவூட்டி ஏற்றம் செய்தான். தனக்கென்று ஒரு பயனை எண்ணிச் செய்யாது, உலகின் நன்மைக்காக விண்ணுலகம் மகிழ் வெய்திட வேள்விகள் பல செய்தான். அவற்றால் நாடு செழிப்புற்றது.
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தன் பெயராக்கிக் கொண்ட இம்மன்னன் அறநெறி வழுவாமல், மறங்கடிந்து அரசியல் நடத்தினான். ஆகவே அறத்தின் இரு கூறுகளான விதித்தனவற்றைச் செய்ததோடு விலக்கியனவற்றைச் செய்யாமலும் அரசோச்சினான். உலகம் முழுவதையும் தன் ஆணையின் கீழ் வைத்திருந்தான். போர் வலிமையினால் அன்று “செற்றம் நீக்கிய செம்மையின்’ என்று சேக்கிழார் குறிப்பிடுகின்றார். அனைத்து உயிர்களிலும் அன்பு செலுத்தும் இம் மன்னன், அன்பினாலே தான் இவ்வுலகைத் தன் ஆணைக்குக் கீழ் கொண்டு வந்தான். அத்துடன் இவன் தன்னிடத்திலும் தன் ஆணைக்குட்பட்ட யாவரிடத்திலும் கோபமாகிய குணத்தை நீக்கி அரசோச்சினான் என்பதையும் சேக்கிழார் உணர்த்துகின்றார்.
இறைவனுடைய பூசனைக்கு சிவாகமங்கள் விதித்தபடி அறக்கட்டளை உண்டாக்கி, சிவ பக்தியுடன் வாழ்ந்த அம்மன்னவனுக்கு சிங்கக் குருளையன்ன மகன் பிறந்தான். இம்மைந்தன் இம்மைப்பயன் தரும் உலகியல் கல்வியையும், மறுமைப்பயனாகிய ஆன்ம ஈடேற்றம் தரும் சிவம் முயன்று அடையும் தெய்வக் கலையையும் கற்று பண்பு மிக்கவனாக விளங்கினான். வளர் இளம் பரிதி போன்று வளர்ந்த இவ்விளவரசன், மேகங்கள் படியும்படி உயர்ந்த மாடங்களையுடைய அரச வீதியில் ஏனைய அரசிளங் குமரர்கள் சூழ தேரின் மேல் ஏறி, திருவாரூர் நகரத்து மாடவீதியில் உலாவரச் சென்றான். பரசு வந்தியர், சூதர், மாகதர் விரை நறுங்குழலார் சூழ மிக்க சத்தத்தை உண்டாக்கும் முரசு, சங்கு ஆர்ப்பரிக்க அவ்விளவரசன் உலாப் போந்தார்’ என்கிறார் சேக்கிழார். இந்த, பின்னணியை மிகவும் அழகாக முன் கூட்டியே சேக்கிழார் உட்கருத்தோடு தான் உரைக்கின்றார். ஆண்மையும் கம்பீரமும் மிக்க இவ்விளங்குமரன், இவ்வளவு பேரும் சூழச் சென்றதால் வேகமாகச் செல்லவில்லை என்பதையும், பெருஞ்சத்தம் உண்டாக்கும் வாத்தியங்களுடன் மாடவீதியாகிய அரசவீதியில் சென்றதால் பசுக்கன்று இவனுடைய தேர் அருகில் வர நியாயமில்லை என்பதையும், குறிப்பாக முன் கூட்டியே தெரிவிக்கின்றார்.
உண்மையாக என்ன நடந்தது? ஒப்பற்ற பெருமையினை உடைய அறக்கடவுள்,கருணையின்றி, அரசனின் அசைவில்லாத உள்ளத்தின் உண்மைத் தன்மையை, சோதிப்பதற்கு வந்தாற் போல,
29

Page 162
அவ்விளவரசனைச் சூழ்ந்து வந்தோர் தன்னுடைய வரவினைக் காணாதவாறு, நல்ல அழகும் தோற்றமும் கொண்ட அண்மையில் பிறந்த இளம் பசுக்கன்று ஒன்று அவ்வீதியினிடையே துள்ளிக் கொண்டு வந்தது. இம்மனு நீதி கண்ட சோழனின் அசையாத தர்மசிந்தையை தர்ம தேவதை சோதிக்க நினைக்கிறது. இவ்வரசன் செய்த தர்மம் ” ஒப்பற்ற சிவ தர்மம் (நிஷ்காமிய தருமம்). சிவதர்மத்திற்கான தெய்வமாகிய சிவனே இம்மன்னனைச் சோதிக்க வந்தார் என்கிறார் சேக்கிழார். அனைத்து உயிர்களையும் மறங்கடிந்து அறவழியில் நிறுத்துதல் அறக் கடவுளின் செயல். இயல்பாக கருணையோடு கூடிய தர்ம தேவதை இவ்விடத்தில் இயல்புமாறிச் செயல்படுகின்றது.
அந்த இளம் பசுக்கன்று, ஒர் அபாயம் நேரத்தக்க வகையில் செம்பொன்னால் செய்யப்பட்ட தேரின் காலின் இடையே கட்டுப்பாடற்ற வேகத்துடன் சென்று வீழ்ந்து, அத்தேர்க்கால் அதன் மேல் ஊர விண்ணுலகம் அடைந்தது. அதனைக் கண்டு மிகுந்த வேதனை அடைந்த அதன் தாய்ப்பசு, வெம்பி, அலறி, சோர்ந்து, உடம்பு நடுநடுங்கிக் கீழே வீழ்ந்தது. தாம் உண்டாக்கிய வேகத்தைத் தாமே கட்டுப்படுத்த முடியாமல் புனிற்றிளங்கன்றுகள் தடுமாறுவதை நாம் கண்டிருக்கின்றோம். தேர்க் காலின் இடை கன்று வீழ்ந்ததற்குக்காரணம், தேரின் கட்டுப்பாடற்ற வேகம் அல்ல, கன்றின் கட்டுப்பாடற்ற வேகமே என விளக்க “விசையினால் செல்லப்பட்டே” என்ற தொடரைச் சேக்கிழார் கையாள்கிறார். இளவரசனைப் பழி பாவங்களில் நின்று நீக்குவதற்கு,
"அம்புனிற்(று)ஆவின் கன்று, ஓர் அபாயத்தின் ஊடு போகி தேர்க்கால் மீது விசையினால் செல்லப்பட்டு’
எனப் 6 சொற்றொடர்களைச் சேக்கிழார் கையாண்டிருக்கிறார். செம்பொனின் தேர், தவறிச் செல்லவும் வாய்ப்பில்லை என்பதையும் உணர்த்துகிறார். அரசிளங்குமரன் பெருந்துயர் உற்று வருந்தி, அறிவு திகைத்து “நான் என் செய்கேன்?’ என்று சொல்லிக் கொண்டே தேரில் இருந்து கீழே வீழ்ந்தான். இக் கொடுமை தந்தையார் காதில் விழுமுன், “அந்தணர் விதித்த ஆற்றல் ஆற்றுவது அறமே ஆகில் இயற்றுவன்” என்று அவர்களை நாடிச் சென்றான்.
ஆனால் கன்றை இழந்த பசு, “மன்னுயிர்காக்கும் செங்கோல் மனுவின்
பொற்கோவில் வாயில் பொன்னணிமணியைச் சென்று கோட்டினால்
புடைத்தது" அரசன் மணியோசை கேட்டு வெளியில் வந்தான். கண்ணிர் சோரப் பசு நிற்பதைக் கண்டான்.” என் இதற்கு உற்றது ?”
130

என அமைச்சரை இகழ்ந்து நோக்கினான்.
"சூழ்வார் கண்ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்” இத்தகைய அமைச்சர்கள் இருக்கவும், இந்தநிலை வந்து விட்டதே என்று வாயால் ஒன்றும் கூறாமல் இகழ்ச்சியாக அவர்களைப் பார்த்தான். வேறு வழியின்றி அமைச்சருள் முதிர்ந்தவர் நடந்த நிகழ்வினை அரசனிடம் கூறினார்.
வளவறின்புதல்வன் ஆங்கோர் மணிநெடும்தேர்மேலேறி அளவில் தேர்த்தானை குழ அரசுலாம் தெருவில் போங்கால் இளைய ஆன்கன்று தேர்க்காலிடைப் புகுந்து இறந்ததாகத் தளர்வுறும் இத்தாய் வந்து
விளைத்தது இத்தன்மை என்றான்”
இக்கூற்றைக் கேட்ட அரசன், "செவ்விதென் செங்கோல் என்று தெருமரும் தெளிவும் தேருன். இது கண்ட அமைச்சர் “கொந்தலர்த்தார் மைந்தனை முன் கோவதை செய்தார்க்கு மறை அந்தணர்கள் விதித்த முறை வழிநிறுத்துதல் அறம்” என்றார்.
இவ்வாறு அமைச்சர்கள் கூற, மன்னன் கூறிய விடை அவனது பண்பை மேம்படுத்திக் காட்டுவதாக அமைந்துள்ளது.
"வழக்கொன்று நீர் மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக் குழக்கன்றை இழந்தலறும் கோவுறு நோய் மருந்தாமோ?
இதற்கும் மேலாக அவ்வரசன் தன் பண்பு மிளிரும் வகையில் "தொன் மனுநூல் தொடை மனுவால் துடைப்புண்டது எனும் வார்த்தை மண் உலகில் பெற மொழிந்தீர்மந்திரிகள் வழக்கு” என்றார்.
அந்தப் பசு உற்ற பேரிடரைத் தானும் தாங்குவதே தருமம் எனக்கூறி, தேர்க்காலில் மகனைக் கிடத்தி, அவன்மேல் தேரைச் செலுத்தினான். இவ்வாறு அறவழியில் முறை செய்தான் அவ்வரசன்.
சேக்கிழார் அமைச்சராக இருந்தவர். மன்னனின் மகன் மீது கருணை காட்டி அவனை இப்பழியில் நின்றும் மீட்பதற்காக வாதிடும் இவ்வரசனின் அமைச்சர்கள் இடத்தில் இருந்து வாதாடினார் ஒருபுறம். மறுபுறம், அறம் என வந்த போது மகனைக் கொல்ல முடிவு செய்த மன்னனின் கூற்றுக்களை ஆணித்தரமாக எடுத்துச் சொல்லி அமைச்சர் என்ற முறையில் நின்றும் மாறி, ஒரு அரசனின் நிலையில் உரையாடினார். இக்கருத்துத் தொடர்பாக அறிஞர் மு. அருணாசலம் “இங்கு அரசருடைய பண்பு அமைச்சர் கூறும் அரசியல் தருமத்தைக் கடந்து, இன்னும் மேலான ஒரு தெய்வ தருமத்தைக் கடைப்பிடிக்கிறது”என்கிறார்.
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 163
"ஒரு மைந்தன் தன் குலத்துக்குள்ளான்
என்பதும் உணரான் தருமம்தன் வழிச் செல்கை கடனென்று
தன்மைந்தன் மருமம் தன் தேராழி உற ஊர்ந்தான் மனுவேந்தன் அருமந்த அரசாட்சி அரிதோ?மற்றெளிதோ? தான்”
அரசாட்சி என்பது சாதாரணமான விஷயம் அன்று; மிகவும் அரிய ஒரு செயல் அருமருந்து. நோய்ப் பயம் தீர்த்து, மேலும் வராமற் தடுப்பது போல, அரசனும் பயத்தைத் தீர்த்து அறம் பிறழாமற் காக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத தவறு ஒன்று நிகழ்ந்து விடுமாயின், அதற்குப் பிராயச் சித்தம் யாது என்பது பற்றிச் சிந்திப்பதும், தேடுவதும், செய்வதும் நீதி என்று ஏற்றுக் கொள்வது உலகியல் நடைமுறை. இது முதலறம் அன்று.
{
இறைவன் உன் உ6
இறைவன் உன் உள்ளத்தில் எழுந்தருள :ே இருக்க வேண்டும். குப்பை நிறைந்த இடத்தில் போல் கோபம், காமம், வஞ்சனை, சூது, கொ6 உள்ளத்தில் இறைவன் இருக்கமாட்டான்.
6iréágat I'mbrtó 190f 2005

சார்பறம் இது. இச்சார்பறம் உலகியலில் மனிதர்கள் செம்மையுற வாழ உதவும். இதனால் இது இம்மை இன்பத்துக்கு உதவும். முதலறமோ உயிரைச் செம்மைப்படுத்தி மறுமைப்பேறுக்கு வழிவகுத்து முத்தி பெற உதவும். மனுநீதிச் சோழன் சார்பறத்தோடு முதலறத்தையும் கடைப்பிடித்தான். அதனாலேதான்,
"கடை மருங்கில் இளம் பிறையும் தணிவிழிக்கும் திருநுதலும் இடம் மருங்கில் உமையாளும் எம்மருங்கும்பூதகணம் புடைநெருங்கும் பெருமையும் முன்கண்டு அரசன் போற்றிசைப்ப விடைமருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்'
ஸ்ளத்தில் எழுந்தருள
வண்டுமேயானால் உன் உள்ளம் தூய்மையாக ) நீ இருக்க அருவருப்புக் கொள்வாயன்றோ. அது லை, புலை, பொய் முதலிய அசுத்தங்கள் நிறைந்த
- கிருபானந்தவாரியார்

Page 164
リ
திருமூலநாயனார்
- டாக்டர் அரங் தமிழ்ப் பேராசிரியர், தொ
l
சென்னைப்ட
தெய்வச் சேக்கிழார் தாம் எழுதிய திருத்தொண்டர் புராணத்தில் திருமூல நாயனார் வரலாற்றை 28 பாடல்களில் பாடியருளியுள்ளார். இன்றளவும் திருமூலரின் வரலாறு பல வினாக்களை எழுப்புவதாக அமைந்துள்ளது. அவ்வருளாளரின் வரலாற்றில் பொதிந்துள்ள உண்மைப் பொருளைக் காண்பதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வரலாறு
சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையின் காவலராக விளங்கும் நந்தியம்பெருமானின் திருவருள் உபதேசத்தைப் பெற்ற சிவயோகி ஒருவர் இருந்தார். இவர் அணிமா முதலான எட்டுவகைச் சித்திகளும் கைவரப் பெற்றவர். தமிழ்வல்ல அகத்திய முனிவரிடம் நட்புமிக உடையவராயிருந்ததனால் சிலநாள் தங்கி இருப்பதற்காகப் பொதிகைமலை சேர்தற்பொருட்டுத் தமிழ்நாட்டிற்கு வருகிறார். கயிலை மலையில் இருந்து புறப்பட்ட இவர் 1. கேதாரம், 2. பசுபதி நேபாளம், 3. காசி (வாரணாசி), 4. திருப்பருப்பதம் (பூரீசைலம்), 5. திருக்காளத்தி, 6. திருவாலங்காடு, 7. காஞ்சிபுரம், 8. திருவதிகை வீரட்டானம் (கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கருகில் உள்ளது.) 9. பெரும்பற்றப் புலியூர் என்றும் தில்லை என்றும் வழங்கப்படும் சிதம்பரம், 10. திருவாவடுதுறை ஆகிய தலங்களில் தங்கி வழிபாடு செய்தார்.
திருவாவடுதுறைக்கு அருகிலுள்ள அந்தணர்கள் மிகுதியாக உள்ள சாத்தனூரில், பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த மூலன் எனும் இடையன், வினைப்பயனால் இறந்துபட, அவனுடலைச் சுற்றிப்பசுக்கள் கதறிக் கொண்டு நிற்கின்றன. இதனைக் கண்டு இரக்கப்பட்ட சிவயோகி மூலன் உடம்பில் தம் உயிர்ப்பைப் பாய்ச்சினார். உயிர்த்தெழுந்த மூலன் திருமூலராக நிலைபெறுகிறார். மூலன் தம் மனைவிக்கும் சுற்றத்தாருக்கும் உண்மையை உணர்த்திவிட்டு திருவாவடுதுறை செல்கிறார்.
முற்றுணர்வு கூடிய இந்த மெய்ஞ்ஞானம் தமக்குக் கிடைத்ததை ஆராய்ந்தார். சிவபிரானின் அருளாலே தோன்றிய சிவாகமங்களின் பொருளை மண் உலகில் தம் திருவாக்கினால் தமிழில் எழுதுவதற்காகத் திருவருளே
132
 
 
 
 
 
 
 
 

5 இராமலிங்கம் - லைதூரக் கல்வி நிறுவனம்,
ல்கலைக்கழகம்,
இச்செயலை செய்தது என உணர்கிறார். இதனை,
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே
எனத் திருமூலரே திருமந்திரத்தில் கூறியிருப்பதை உணர்வுடையார் உணர்க.
திருவாவடுதுறை கோயிலின் மேற்குப் பக்கத்தில் அமைந்திருந்த உயர்ந்த அரசமரத்தின் கீழ் சிவராச யோகத்தில் அமர்ந்து தம்முடைய உள்ளக் கமலத்தில் உறைந்தொளிரும் பொருளோடு உணர்ந்து ஒன்றினார். தாமரைப் பூவைப் போல மலர்ந்து, அறிவு மணம் வீசும் இதய கமலத்தில் உறைந்திருக்கும் மெய்ப்பொருளோடு இணைந்து, உலகம் உய்வதற்காகச் சரியை-கிரியை-யோகம்-ஞானம் ஆகிய நான்கு நெறிகளையும் விரித்து ஆண்டொன்றுக்கு ஒன்றாய் பாடி முடித்தார். 'ஒன்று அவன் தானே' என முதல் பாட்டை எடுத்துப் பாடினார். இந்த வகையில் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்து மூவாயிரம் பாடல்களை மண்மீது பாடி அருளினார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளையும் விரிவாகப் பேசிய திருமூல நாயனாரின் திருவடிகளை வணங்கி, திருமூல நாயனார் புராணத்தை நிறைவு செய்கிறார் சேக்கிழார் - இனி இவ்வரலாற்றுக்குள்ளே பொதிந்துள்ள உண்மைப் பொருளைக் காண்போம்.
உட்கிடை (உண்மைப் பொருள்)
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லும் ஞானச் செல்வர்களே சிவபுரம் சென்று சேர முடியும் என்கிறார் மாணிக்கவாசகர். இதற்கேற்ப, தெய்வச் சேக்கிழார் அருளி உள்ள திருமூல நாயனார் புராணத்தில் இருந்து பின்வரும் உண்மைகளை உய்த்துணரலாம்.
1. ஞானம் என்பது குருபிரானின் அருளால் வழி வழியாக வழங்கப் பெறுவது. திடீரென்று நடைபெறும் அதிசயக் காட்சிகளினாலோ அற்புதங்களினாலோ தம்முடைய முயற்சிகளினாலோ அடையக் கூடியதன்று. எல்லாம் வல்ல சித்தராகிய சிவபெருமான் தொடங்கி முருகப் பெருமான், நந்தியம் பெருமான், அகத்தியர் என
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 165
வாழையடி வாழையாக ஞானம் குருபரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிவபெருமானி டமிருந்து சகல ஞானங்களையும் பெற்றவர் நந்தியம் பெருமான். அவரிடமிருந்து திருவருளுபதேசம் பெற்றவர் சிவயோகி. சிவயோகியிடமிருந்து பெற்றவர் மூலர். குருவே சிவம் எனக் கூறினன், நந்தி’ எனத் திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுவதால், மெய்ப்பொருளை மெய்யாகவே காட்டிக் கொடுத்த குருக் கொண்டல்கள் எல்லாம் சிவமே. அச்சிவத்தின் திருவடி பற்றி வரும் நந்தியம் மரபே. ஒவ்வொருவரிடம் இருக்கும் அறிவாகிய ஜோதித்தீயைப் பற்றித் தொடர்ந்து கொள்ளும் ஞானமரபு என உணர்தல் வேண்டும். ‘தொட்டுக் காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது என்பதற்கு இணங்க சிவயோகி தொட்டுக்காட்ட மூலனாக இருந்தவர் திருமூலராக உயர்ந்தார்.
2. அறிவாகிய பொருளைத் தெரிந்து கொள்வது, உணர்ந்து கொள்வது, கண்டு கொள்வது, கேட்டுக் கொள்வது மட்டும் போதாது. பொருளைத் தெரிந்து கொண்டவர்கள் மெய்ப்பொருளைத் தெரிந்தவர்களோடு அடிக்கடிச் சந்தித்து, சந்தித்து மெய்ப்பொருளைச் செம்பொருளோடு ஒன்றச் செய்யும் சிவபோகத்திலும் சிவயோகத்திலும் திளைத்தல் வேண்டும். அந்த வகையில் கயிலை மலையிலிருந்து வந்த சிவயோகி, அணிமா முதலான அரிய எட்டு வகைச் சித்திகளையும் கைவரப் பெற்ற நிலையில், நந்திதேவரின் நேரடிச் சீடராக இருந்தும் தன்னை ஒத்த ஞானிகளிடம் தொடர்பு கொள்ள வேண்டும் என்னும் நோக்கோடு திருக்கயிலா யத்திலிருந்து புறப்பட்டு வருகிறார். கெளதம புத்தர் சங்கம் என்று அமைத்ததும், மணிவாசகர் ‘அடியேன் உன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் என்று சொன்னதும், திருவாரூர் தேவாசிரிய மண்டபத்தில் உள்ள அடியாரோடு சுந்தரரை இறைவன் கூட்டுவித்ததும், மெய்கண்டார் 'அன்பரொடு மரீஇ' என்று சொன்னதும், ஒளவையார் ‘தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ” என்று சொன்னதும், அபிராமி பட்டர் தொண்டரொடு கூட்டு கண்டாய் என்று சொன்னதும், அருட்பிரகாச வள்ளலார் 'ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும்' என்று சொன்னதும், இந்நுட்பம் பற்றியே ஆகும். அருளாளர்கள் அனைவரும் தொண்டர் குழாத்தோடு மடங்களில் தங்கி அறிவாகாரப் பொருளை உணர்ந்து உணர்ந்து அதனோடு ஒன்றிணைவார்கள். இந்த நுட்பத்தை உணர்வுடையார் உணர்வர்.
சேக்கிழார் மாநாட்டு மர்ை 2005

மேற்சுட்டிய மெய்ம்மையின் அடிப்படையில் சிவயோகியார் தென் பொதிகையில் உள்ள அகத்தியனாரைச் சந்திக்க விழைந்து - விரைந்து புறப்பட்டு வருகிறார். 1. கேதாரம், 2. பசுபதி நேபாளம், 3. காசி, 4. திருப்பருப்பதம், 5. திருக்காளத்தி, 6. திருவாலங்காடு, 7. காஞ்சிபுரம், 8. திருவதிகை வீரட்டானம், 9. சிதம்பரம், 10. திருவாவடுதுறை ஆகிய இடங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார் என்பது உலகியலாகக் கொள்ளப்படுகிற பொருள். ஆனால் உண்மையில் நடந்தது, மேற்சுட்டிய பத்து இடங்களிலும் வாழ்ந்து வந்த ஞானாசிரியர்களோடும், அவர்தம் சீடர்களோடும், ஞானப் பரிமாற்றம் செவிச் செல்வமாக நிகழ்ந்தது என்பதே உண்மை. கொண்டும் கொடுத்தும் பேரின்பச் சிவபோகம் நிகழ்ந்து - சிவயோகம் கூடியது - சிவஞானம் மலர்ந்து மணம் வீசியது அங்கே.
3. தில்லை' எனப்படும் சிதம்பரத்தில் மட்டும் சிவயோகியார் உருகி, உருகி நிற்கிறார். பேரின்பப் பெரும்பொருள் அந்த இடத்தில்தான் ஆனந்தத் தாண்டவம் ஆடுகிறது. உலகமும், உலக உயிர்களும் உய்யும்படியாகத் தன்னுடைய ஞானமாகிய தூக்கிய திருவடியை உடைய சிவபெருமான் முன், சிவயோகியார் மிக்க அன்போடும் மிக்கெழும் மகிழ்ச்சியோடும் நின்று உருகி வழிபட்டார். மெய்யுணர்வு மிக்குச் சிவபோக நிலையில் திளைத்துச் சிவானந்த அருட்கூத்தை முழுதும் கண்டு பதி ஞானத்தில் ஒன்றினார். உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து ஆராக் காதலுடன் தில்லையில் வழிபட்டார். இதனை,
எவ் உலகும் உய்ய எடுத்து அருளிய சேவடியாரைச் செவ்விய அன்பு உறவனங்கிச் சிந்தைகளிவரத்திளைத்து வவ்விய மெய் உணர்வின்கண் வரும் ஆனந்தக் கூத்தை அவ்இயல்பில்கும்பிட்டு அங்கு ஆராமை அமர்ந்திருந்தார்.
(திருமூலநாயனார்புராணம்பா,7)
எனத் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவதிலிருந்து மேற்சுட்டிய உண்மையை உணரலாம். நந்தியம் பெருமானுக்கு உபதேசம் செய்தருளிய பெரிய மெய்ஞ்ஞானக் கூத்தர் திருச்சிற்றம்பலத்தில் ஞானக்கூத்து ஆடிக்கொண்டே இருப்பதால், சிவயோகியார் தன்னை மறந்து தன் நாமம் கெட்டு நின்றார் என்பதே உண்மை.
4. அந்தணர்கள் நிறைந்த சாத்தனூரில் விட்ட குறை தொட்ட குறை காரணமாகத் தம்முடைய முற்பிறப்பின் வாசனை அறியாது பசுக்களை மேய்க்கும் இடையனாக மூலன் என்கிற பெயரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரை அறியாமை என்கிற விடம் இப்பிறப்பில் மிகுதியாகத் தீண்டியிருந்ததால், இப்பிறப்பினில் அவர்
33

Page 166
34
மனிதராக இருந்தாலும், மரம் போலும் கல் போலும் வாழ்ந்து வந்தார். நல்வினை விளையும் காலம் ஆதலின், கயிலையிலிருந்து வந்த சிவயோகி அந்த இடம் அடைகிறார். முன்வினைப் பயனை இறையருள் கூட்டுவிக்க சிவயோகி தன் முழு ஆற்றலையும் நயனம், ஸ்பரிசம், திருவடி ஆகிய மூன்றின் வழி ஒரு சேர ஒரே நிமிடத்தில் வழங்கி மூலனைத் திருமூலராக உயிர்த்தெழ வைக்கிறார். கயிலையில் இருந்து வந்த சிவயோகிக்கு வந்த பணி முடிந்தது. நேராகத் தம் சொந்த பணியைப் பார்க்கவும், அகத்தியரைக் காணவும் பொதிகை மலை நோக்கினார். சிவபோகமும், அதனால் சிவயோகமும், அதன் விளைவால் சிவஞானமும் முழுமையாகப் பெற்று எழுந்த மூலன் திருமூலராகிறார்.
அந்தணர்கள் நிறைந்த சாத்தனூரில் இருந்து திருமூலர் திருவாவடுதுறைக்குச் செல்கிறார். அங்கு திருவாவடு துறை கோயிலின் மேற்குப் பக்கத்தில் இருந்த மிக உயர்ந்த அரச மரத்தின் கீழ்(புத்தரை போல)ச் சிவராச யோகத்தில் அமர்ந்து தன் உடம்பிற்குள்ளே உள்ள இருதய கமலத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அரிய பொருளான மெய்ப்பொருளோடு இரண்டறக் கலந்து ஒன்றி உருகுகிறார். ஊற்றெழும் கண்ணிர் அதனால் உடம்பு நனைகிறார். அந்த ஒன்றிய யோகத்தில் அவர் உரைத்த ஞானத்தை அவரின் சீடர்கள் எழுதி வைத்தனர். பசுக்கள் என்பது பக்குவம் பெற்ற சீவான்மாக்களைக் (சீடர்கள்) குறிக்கும். பின்னால் பெருகி வரும் சீடர் கூட்டத்தைக் கட்டிக் காக்கும் நல்ல மேய்ப்பராகத் திருமூலர் விளங்கப் போகிறார் என்பதைக் குறியீடாகச் சேக்கிழார் முன்னரே குறிப்பிடுகிறார். பூ அலரும் இதயத்துப் பொருளோடும் உணர்ந்திருந்தார் (பா. 25) எனத் தெய்வச் சேக்கிழாரும் உரைப்பதை உணர்வுடையார் உணர்ந்து தெளிக.
பிறவித் தொடர்பை நச்சுத் தொடர்பு (விஷத் தொடர்பு) எனக் கூறுகிறார் தெய்வச் சேக்கிழார். இந்தப் பிறவி வேரை அறுப்பதற்காகச் சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கையும் ஆண்டுக்கு ஒன்றாக இறையருளால் வழங்கினார். இதனை,
ஊன் உடம்பில் பிறவிவிடம்
தீர்ந்து உலகத்தோர் உய்ய ஞானம் முதல் நான்கும் அலர்
நல் திரு மந்திர மாலை பான்மை முறை ஓராண்டுக்கு
ஒன்று ஆகப் பரம்பொருள் ஆம் ஏன எயிறு அணிந்தாரை
ஒன்று அவன்தான்’என எடுத்து
(திருமூலநாயனார்புராணம்பா.26

என்னும் பாடல் வழி மேற்சுட்டிய உண்மைகளைப் பெற வைக்கிறார். இப்பாடலில் நான்கு உண்மைகள் பொதிந்துள்ளன.
அ. பிறவிப் பிணியாகிய பிறவித் தொடரை நச்சுத் தொடர் எனக் குறிப்பிடுகிறார். இதனால்தான் இந்த விஷத் தொடர்புள்ள மூலனை அந்த விஷத் தொடர்பை அறுத்துப் பிறவா யாக்கைப் பெரியோனாக, கயிலையில் இருந்து வந்த சிவயோகி மாற்றினார். இரசவாதம் எனும் கூடுவிட்டுக் கூடு பாய்தல்" நிகழ்ந்த பின்னர் மூலன் திருமூலர் ஆகிறார். ஆ. உலகில் தோன்றிய எல்லாச் சமயங்களும் தங்களுடைய ஞானம் முழுமையையும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு பிரிவுகளுக்குள் அடக்கிவிடும். இஸ்லாம் இதனை ஷரீகத், தரீக்கத், ஹரீக்கத் மஃறீபத் எனக் கூறும். திருமூலர்பிரான் அருளிய திருமந்திர மாலையில் உள்ள மூவாயிரம் பாடல்களும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளுக்குள் அடங்கிவிடும். இ. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற இந்த நான்கையும் ஆண்டுக்கு ஒன்றாகப் பாடினார் என்று தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவதால், நான்காண்டுகளில் திருமந்திர மாலை முழுமையும் பாடி முடித்து விட்டார் எனலாம். எனவே, முதலாமாண்டு சரியை, இரண்டாமாண்டு கிரியை, மூன்றாமாண்டு யோகம், நான்காமாண்டு ஞானம் என்று நான்கு ஆண்டுகளில் திருமந்திர மாலை என்ற நூலின் மூவாயிரம் பாடல்களையும் திருமூலர் பாடி முடித்து விட்டார் என்றே தெய்வச் சேக்கிழாரின் திருப்பாடல் உணர்த்துகிறது. ஓராண்டிற்கு ஒரு பாடல் என மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மூவாயிரம் பாடல்களைப் பாடினார் எனக் கூறுதல் பொருந்தாமை என்பதை அறிவுடையோர் அறிவர். ஈ. ஒன்று அவன் தான்’ என்ற பாடல் திருமந்திரத்தின் முதல் பாடல் என்றும் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.
7. உயிர்களுக்கு நன்மையளிக்கக் கூடிய ஞானம், யோகம், கிரியை, சரியை என்ற நான்கையும் திருமூலர்பிரான் வழங்கினார் என மீண்டும் ஒரு முறை நிறைவாகச் (இறுதிப் பாடல் எண்28) சொல்லுகிறார்.
8. மூவாயிரம் ஆண்டுகள் திருமூலர்பிரான் இம்மண்மேல் வாழ்ந்திருந்தார் என்கிறார் தெய்வச் சேக்கிழார் இதன்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 167
பொருள் திருமூலரின் பாடல்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலும் இம்மண்ணுலகில் நிலைத்து வாழும் என்பதே. இப்படிப் பொருள் கொள்வதே அறிவுடைமை. பொருள் உணர்ந்தவர்களுக்குப் பொருளின் பொருள் தெரியும்.
இறுதியாக ஒரு சொல்
கயிலையிலிருந்து வந்த சிவயோகியாரின் பெயரை ஓரிடத்திலேனும் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடவில்லை. பசுக்களை மேய்த்த மூலரின் உடம்பில் சிவ யோகியார் தன் உயிராற்றலைச் செலுத்திய பிறகு மூலனே திருமூலராக மாறுகிறார். மூலனாக இருந்து திருமூலராக ஆனவர்தான் திருமந்திர மாலையை அருளியவர். கயிலையில் இருந்து வந்த சிவயோகி அல்லர். திருமந்திரத்தை அருளியவர் திருவாவடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூரில் பிறந்தவர். சிவயோகியார் அருளால் ஞானம் பெற்றவர். 1. தெய்வச் சேக்கிழார் சொல்லாத ஒரு செய்தி, திருமூலர் பிரான் எங்கே அடக்கமாகி (ஜீவ சமாதி) இருக்கிறார் என்பது. சைவ மரபில் வரும் சான்றோர்கள் திருமூலர் திருவாவடுதுறை கோயிலுக்குள்ளே அடக்கமாகி இருக்கிறார் எனக் கருதி, அங்குள்ள அவரது திருக்கோயிலில் வழிபாடு செய்து வருகின்றனர். 2. சித்தர் மரபில் வருகிறவர்களும், மெய்ப் பொருளைக் காண்பதற்கு முயல்பவர்களும், திருமூலர் பிரான் தில்லை என்று வழங்குகிற சிதம்பரத்தில் நடராசர் சந்நிதி இருக்கிற உள் பிரகாரத்தில் ஆதி மூல நாதர் என்று வழங்குகிற லிங்கத் திருமேனிக்குக் கீழே அடக்கமாகி இருக்கிறார் என உணர்ந்துரைக்கிறார்கள். இன்றும் நிறைமதி நாளில் (பெளர்ணமி) சித்தர் நெறியில் வாழ்கின்றவர்களும், மெய்ஞ்ஞானத் தேட்டம் உள்ளவர்களும், சிதம்பரத்தில் உள்ள ஆதி மூல நாதர் சந்நிதியில் தியானம் செய்வதைக் காணலாம். 3. அவரவர் விதிவழி அடைய நின்றனரே என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கேற்ப, அவரவர்க்குரிய இடத்திற்குச் சென்று திருமூல நாயனாரின் திருவருளைப் பெற்று உய்தி பெறுக! உணர்வு பெறுக! உயிர்ப்பு எய்துக!
அடிக்குறிப்பு
1. தன் உடம்பைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, உயிரைப் பாய்ச்சினார் எனத் தெய்வச் சேக்கிழார் கூறுவது ஞானோபதேசம் செய்யும்போது தன் உடலையும் உயிரையும் பாதுகாப்பாக (வேறு வினைகள் வந்து
தாக்கிவிடாமல்) வைத்துக் கொண்டுதான் வழங்குவார்கள். இந்த ஞானச் செயலே உலகியலாகக் கூறப்பட்டுள்ளது.
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

2.
3.1.
3.2.
5.1.
5.2.
5.3.
5.4.
அறிவாகிய திருவடியினைக் கண்டு கொள்ள பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் எழுதிய திருவடி என்ற நூலினைக் கண்டு தெளிக.
இருபுறமும் சேனைகள் போருக்குத் தயாராக நிற்கும் நிலையில், மரண பயத்தில் மனம் வெறுமையாக இருந்த நிலையில், அர்ச்சுனனுக்கு ஒரே நிமிட நேரத்தில் மெய்ப்பொருளை நேர்முகத்தில் கண்ணாரக் காட்டியவர் கண்ணபிரான். பகவத் கீதையைக் குழலோசை வழி அருளிய கண்ணபிரானின் திருவாய் அமிழ்தத்தைச் செவியாரச் சுவைத்துக் காண்டிபனாக நிலைபெற்றான்
அருச்சுனன். மூலனுக்குச் சிவயோகியும் அருச்சுனனுக்குக் கண்ணபிரானும் ஒரே நிமிடத்தில் மெய்ப்பொருளை உணர்த்திக் காட்டினர்.
உணர்வுடையார் உண்மையை உணர்வர். நல்ல மேய்ப்போனாக ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த காளிதாசனுக்கு ஒரு நொடியில் உஜ்ஜயினியில் உள்ள உச்சி மாகாளிதேவி மெய்ப்பொருளைக் காட்டி நாவுக்கரசாக கவியரசாக மாற்றியதை உணர்வுடையார் உணர்வர். இரசவாதம், கூடுவிட்டுக் கூடு பாய்தல் இரண்டும் ஒன்றே. இதன் உண்மை விளக்கத்தைப் பேராசிரியர் அரங்க. இராமலிங்கம் அவர்கள் எழுதிய சித்தர் வழி என்ற நூலில் கண்டு தெளிக. மூலன் மடவரை தந்திரம் ஒன்பது சார்வு மூவாயிரம் - LT: 101.
மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் - பா. 99 முத்தி முடிவிது மூவாயிரத்திலே - பா. 100 மூலன் உரை செய்த மூவாயிரந் தமிழ் - பா. 3046
இக்கட்டுரை வழி அறியலாகும் செய்திகள்: சுருக்க வடிவில்
1.
திருக்கயிலையிலிருந்து பொதிகை வரும் சிவயோகியின் நோக்கம் தமிழ் முனியைச் சந்தித்துத் தெய்வத்தமிழின் நலனை நுகர்ந்து இன்புறுவதற்காகவே. வரும் வழியில் பத்துத் தலங்களைத் தரிசித்து - அங்கிருக்கும் ஞானியரோடு - ஞானப் பரிமாற்றம் செய்து கொண்டார். மெய்ஞ்ஞானம் மெய்க்குருபிரானின் கருணையினால், தயவால் அடையக்கூடியது. அடியார்களை அடிக்கடி சந்தித்து சந்தித்துச் செவிச்செல்வம் பெறவேண்டும். தில்லையெனும் திருச்சிற்றம்பலத்தில் எல்லாம்வல்ல ஞானசித்தர் ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருப்பதால், அனைத்து அருளாளரும் அங்கு அடைக்கலமாயினர்.
135

Page 168
10。
1.
136
சிவயோகி ஒரே நொடியில் மூலனுக்குச் சிவதீட்சை அளித்துவிட்டுப் பொதிகை ஏகினார். இடையனாகிய மூலன் திருமூலராக உயிர்த்தெழுந்தார். தமிழ்நாட்டில் உள்ள சாத்தனூரில் பிறந்த மூலனாகிய திருமூலரே திருமந்திர மாலை பாடியவர். கயிலையிலிருந்து வருகை புரிந்த சிவயோகி அல்லர். அவர் பாடியது மூவாயிரம் பாடல்கள் மட்டுமே. ஏனையவை இடைச்செருகல். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிகளை மூவாயிரம் பாடல்களில் பாடியுள்ளார். மூவாயிரம் பாடல்களையும் நான்கு ஆண்டுகளில் நான்கு நெறிகளில் ஒன்பது தந்திரங்களில் பாடி
ܢܠ
மறக்காதிருக்
எனக்கு முதுமைத்தன்மை உண்டு என் மதம் கொண்டு மாந்தர் மனமொழி மெய்களால் இந்த நினைவினால் அழியும் அல்லது குறைய6 எனக்கு நோய்த்தன்மை உண்டு என்று ஆரோக்கிய மதம் கொண்டு தீச் செயல் புரிகி அழியும் அல்லது குறையவாவது செய்யும்.
எனக்குச் சாகும் தன்மை உண்டு என்று வாழ்வுநிலையானது என்று மதம் கொண்டு தீக் நினைவினால் அழியும் அல்லது குறையவாவது
மனிதன் தனது உள்ளத்தை தெய்வ அதுவே யாகம். அந்த யாகத்தை நடத்துவோருச் புகழ் ஆகிய மேன்மைகளைக் கொடுக்கும்.

முடித்துவிட்டார். மூவாயிரம் ஆண்டுகள் இருந்து ஆண்டுக்கு ஒன்றாகப் பாடவில்லை. 12. மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது நீண்ட நாள்
வாழ்ந்தார் என்பதற்காகச் சொல்லப்பெற்றது.
13. பசுக்களை மேய்த்தார் என்பது பக்குவம் பெற்ற சீவன்களை
- சீடர்களைக் கட்டிக் காத்தார் என்பதற்குக் குறியீடு. 14. ஒன்று அவன் தான்’ என்பது திருமந்திர மாலையின்
முதல் பாடல். 15. திருமந்திர மாலை' என்பதே அவர் பாடிய நூலின் பெயர்.
திருமந்திரம் எனப் பின்னாளில் சுருங்கிவிட்டது.
16. திருமூலரின் அடக்கம் (ஒடுக்கம்) தில்லையம்பதியாகிய
சிதம்பரம்.
5 வேண்டியவை
று அடிக்கடி எண்ண வேண்டும். ஏனெனில், எந்த b தீச்செயல்கள் புரிகின்றனரோ அந்தச் செருக்கு வாவது செய்யும்.
) அடிக்கடி எண்ண வேண்டும். ஏனெனில், எந்த ன்றனரோ அந்தச் செருக்கு இந்த நினைவினால்
று அடிக்கடி எண்ண வேண்டும். ஏனெனில், எந்த F செயல் செய்கின்றனரோ அந்தச் செருக்கு இந்த
செய்யும்.
த்துக்குப் பலியாகக் கொடுத்துவிட வேண்டும் குதெய்வம் வலிமை,விடுதலை, செல்வம், ஆயுள்,
الم
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 169
羲
சேக்கிழார் பாடும் அர
- கனகசபாபதி நா சிரேஷ்ட விரிவுரைய சபரகமுவ பல்கலைக்க
பண் : அந்தாளிக் குறிஞ்சி "அன்புறு சிந்தையராகி அடியவர் நன்புறுநல்லூர்ப் பெருமணம் மேவிநின்று இன்புறும் எந்தை இணையடி ஏத்துவார் துன்புறுவாரல்லர் தொண்டு செய்வாரே தத
- சம்பந்தர் தேவாரம்
உலகிலேயே “உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்” எனத் தொடங்கும் இலக்கியம் திருத்தொண்டர் புராணம் எனப்படும் பெரியபுராணமாகும். புராணங்களனைத்தும் புனைவுகளெனச் சிலர் மொழிவர். ஆயினும், புராணக் கதைகளும் புனைவுகளுமே சோழப் பெருமன்னர் காலத்து இலக்கிய மேன்மைக்குச் சான்றாதாரங்களாகின்றன. மிக விசாலமானதோர் இலக்கியப் பாரம்பரியம் நிலவிய சோழப் பெருமன்னராட்சியிலே சேக்கிழாரால் பெரிதும் இலாவக மாகவும், தத்துவமாகவும், நடைமுறை வாழ்வியல் நிகழ்வு களாகவும் புனைந்தியற்றப் பெற்றது பெரியபுராணம். அரனடியார்’ என்பது இங்கு சிவனடியாரையே குறிக்கும். சிவன் உறையும் இடமே சிவனடியார்.
சிவனடியாரைத் தொண்டர்கள் என்றும், சிவதொண்டர் எனவும், அன்புறுசிந்தையரெனவும், ஈரநெஞ்சினர் எனவும், கூடும் அன்பினிற் கும்பிடுவோர் எனவும் குறிப்பிடுவது திருமுறை வழக்காறு, அரனிடத்து அன்பு செய்தலென்பது ஊழ்வினையினாலே கிடைப்பது. “ஊழ் பெறலரிது’ என்று சைவசித்தாந்த தத்துவம் விரிவுபட விபரிக்கும். சிவனருளைப் பெறவும், சிவனது அணுக்கிரகத்தைப் பெறவும், துடியாய்த் துடித்தவர்களே பெரியபுராணத்துத் தொண்டர்கள் அரனடியாராதலென்பது தகைமைகளிலெல்லாம் பெருந் தகைமையுடையது. எப்பொழுதுமே பரம்பொருளாகிய சிவனது நினைப்புடனும், சிவபுண்ணியத்தின் செயல் வேகத்துடனும் திளைக்கும் அன்பர்களையே பெரியபுராணம் அரனடியார்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது.
திருமுறைகளின் கொடுமுடி பெரியபுராணம். காவிய நாயகன் சுந்தரமூர்த்தி நாயனார்; சம்பந்தர் புராணம் மிக விரிவாகவே எடுத்தாளப்பட்டுள்ளது. முதனூல், வழிநூல், சார்புநூல் எனும் முறைமையில் எழுந்தது பெரியபுராணம், திருத்தொண்டாத் தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி,
சேக்கிழார் மாநாட்டு முறf2005
 
 

O னடியார் தனிப்பெருமை
8கஸ்வரன், (எம்.ஏ)
ாளர், மொழித்துறை, ழகம், பெலிகுல்லோயா,
திருத்தொண்டர் புராணம் எனும் முறைமையினால் இயல்வது பெரியபுராணம். சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகை சமய அடியார்களின் சைவத்திலே உறைப்பான பக்திபூண்ட மெய்யடியார்களின் பெயர்களை நிரற்படுத்தி அவர்கட் கெல்லாம் ‘அடியேன்’ ‘அடியேன்” என்று பாடும் பண்புடன் அமைவது. தில்லைவாழந்தணர்தம் அடியார்க்குமடியேன் என்று வருவது. ஆனால் பெரியபுராணம் ஒர் அடியார் பற்றி விரிவாக விளக்கிப் பாடுவது.
இலக்கிய நோக்கு, சமுதாயநோக்கு, சமயநோக்கு, வாழ்வியல்நோக்கு, தொண்டுநோக்கு, அனுபவநோக்கு என்று பல்வேறு ஆய்வுக்கோணங்களிலும் பெரியபுராணத்தின் பொருளடக்கத்தினை ஆய்வு செய்து பல்வேறு கருத்துக் களையும் முன்வைக்க முடியும். எனினும் எல்லா நோக்கு நிலைகளையும் விட மானுடநோக்கு நிலையில் குறிப்பாகத் தெய்விக அமானுஷ்ய நோக்கில் “அன்பு நெஞ்சங் கொண்ட இயல்பினர் அரனடியார்” என்னும் முடிந்த முடிபே பெரிய புராணத்து அடியார்களுக்கு முற்றிலும் பொருந்துவதாகும்.
இலக்கிய நோக்கில பெரியபுராணம் ஒரு வகையிலே காப்பியமென்று சுட்டலாம். காவிய நாயகன் சுந்தரர். கதை கூறும் மரபில் பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு நிறைவு, (முத்தி) என்று மரபு பெரியபுராணத்திலுண்டு. இலக்கிய ஆய்வாளர்கள் “பெரியபுராணத்தைப் பேரின்பக்காப்பியம்’ என்று ஒப்பீடு செய்து நிறுவுவர். சீவகசிந்தாமணி பாடிய திருத்தக்க தேவர் அந்த நூலைச் சிற்றின்பக் காவியம் என்று கருதும்படி “இலம்பகம்” என அமைத்துச் சீவகனின் காதல் வாழ்வைச் சித்தரிக்க குன்றத்தூர்ச் சேக்கிழார்- தெய்வமாக்கவி - "காதல் வாழ்வு” எனும் சிற்றின்ப உலகியல் வாழ்வையும் பாடி, அதிணின்றும் மேலான அருளியல் அனுபவ வாழ்வைச் சுந்தரரது வாழ்வியற் செல்நெறியாகப்பாடி வெற்றி பெற்று நிலைக்கிறார். ஆயின், பெரிய புராணமானது சிற்றின்பத் தையும் பேரின்பத்தையும் பாடிய செஞ்சொற் காப்பியம் எனலாம். இன்னும் சற்றுக் கூர்மைபட நோக்கின், சுந்தரரது வாழ்விலே பெண்பாலார் இருவர் (அநிந்திதை, கமலினி) காதலிகளாகப் படைக்கப்பட்டுள்ளனர். காதல் நெறியின்அன்பு நெறியின் - ஆழமான மெய்ப்பாடுகளைச் சேக்கிழார் பெருமான் விண்டு காட்டுகின்றார்.
பெரியபுராணம் தேசிய இலக்கியமாகும். பல்வேறு பண்பினர், பல்வேறு குலத்தினர், பல்வேறு தொழிலினர், பல்
137

Page 170
வேறு வகையினர் எனினும், அரனிடத்து அன்பு பூண்டவர்கள். மானுட மேன்மை சமுதாயத்தின் அனைத்து மக்களிடத்தும் வேண்டற்பாலது என்னும் பெருநெறியுடன் பாடியுள்ள காப்பியம் பெரியபுராணம். பெரியபுராணம் தேசிய இலக்கியம் என்று ஆய்வு செய்து நிறுவியுள்ளார் பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன். மிக ஆழமான நுண்ணாய்வாளரான பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் பெரியபுராண அடியார் களது “அடிச்சுவடு” களை மிக நேர்த்தியாகவும் வெகு சிறப்பாகவும் மிக விசாலமாகவும் எழுதியுள்ளார். ‘சிவக் கவிமணி'C.K.சுப்பிரமணிய முதலியார் பெரிய புராணத்துக்கு மிக அருமையான விளக்கம் எழுதியுள்ளார்.
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெருமான் பெரியபுராண சூசனம் என்று எழுதியவை உலகப் பாராட்டுப் பெறுவது. கண்ணப்பநாயனார் புராணத்துக்கு நாவலர்பெருமானால் எழுதப்பட்ட சூசனம்’ பேரறிஞர்களாலும் சைவசமய ஈடுபாட்டாளர்களாலும் சிலாகித்துப் பேசப்படுவது.
இச்சிறிய கட்டுரையிலே அரிய விளக்கங்களும் கதை களும் பாடல்களும் எடுத்துக் காட்டுகளாக இடம் பெறுதற்கு இயலாது. எனினும் பெரியபுராணம் என்றால் இது தான் என்று எவருமே இலகுவிலே அறிந்து தெளிவு பெறுவதற்கு இக்கட்டுரையில் விடயங்கள் உள்ளன என்பதனை மட்டும் அழுத்தியுரைத்தல் அவசியம்.
பல்லவராட்சியில் நிலவிய பக்திமரபின் தொகுப்பே பெரியபுராணம் என்று கூறுவோருமுளர். திருமுறைகளின் தொகுப்பிலே பெரியபுராணமும் பன்னிரண்டாம் திருமுறையென விளங்குவதாலும், திருமுறையாளரான மூவர் முதலிகளாலும் எடுத்தோதப்பட்டவர்களென அரனடியார்களமைவதாலும், முன்னைய பழைமையையும், சிவனடியார் பெருமையையும் விளக்கும் திருமுறையாகவே பெரியபுராணம் முகிழ்க்கிறது.
“சமயநோக்கு” என்பது 'சைவவாழ்வு ஆகும். சிவன டியையே எப்போதும் சிந்தித்து வாழும் அரனடியார்கள் ஆண் களாயும் பெண்களாயும் இருந்துள்ளனர். குடும்பத்தவராயும் வாழ்ந்துள்ளனர் என்பது சைவ நோக்கிலே மிக முக்கியமான பண்பாகும். அவ்வாறாயின் பெரியபுராணம் பெண்ணை நிரா கரிக்கவுமில்லை, பெண்ணோடு கூடிய இன்ப வாழ்வை வெறுக்கவுமில்லை.
காரைக்கால் அம்மையாரின் வரலாற்றைக் கூறும் இப்பெரியபுராணம் சிவனை - அரனை எப்போதும் வணங்கி அருச்சித்து - ஆனந்திக்கும்பான்மையையே மிக நுட்பமாகக் கூறும். அம்மையாரது உணர்வுநலன் ஒரு பாடலிலே மேலோங்கி நிற்கின்றது. அரனடியாரின் இலட்சியம், குறிக் கோள், வேண்டுதல், விருப்பம், நோக்கு, பயன் அனைத் தையும் இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது. சிவனது இன்பம் விட்டு நீத்தற்கரியது; எப்பொழுதும் சுவைப்பது; பேரின்பந் தருவது; மானுடப்பிறவியிலேயே பெரிதும் அனுபவித்தற் குரியது. பிறப்புண்டேல் அப்பிறப்பிலும் சிவனை மறவாத
138

தன்மை வேண்டும். உன்னை மகிழ்ந்து பாட வேண்டும். உன்னடியின் கீழ் இருக்க வேண்டும் என்றெல்லாம் வேண்டுகின்றார்.
தமிழ் பரப்பும் ஞானசம்பந்தரும், தொண்டின் சிகரம் அப்பரும், அன்பின் வள்ளன்மைமிக்க கண்ணப்பரும், மனைவி யையே தானம் கொடுத்த இயற்பகையும், பிள்ளையையே கறி சமைத்த சிறுத்தொண்டரும், கைலைசென்ற காரைக் காலம்மையும் மெய்த் தவவேடங்கொண்டவரே சிவன்’ என எண்ணிவாழ்ந்த மெய்ப்பொருள் நாயனாரும், தீண்டுவீராகில் திருநீலகண்டம் ஆணை’ என வாழ்ந்த கற்புடைமகளிரும், பிறமதத்தினின்றும் அப்பரைக்காத்த தமக்கையாராகிய திலகவதியாரும் வரும் பெரியபுராணத்தில் காரைக் காலம்மையார் பின்வருமாறு வேண்டிப்பாடுகின்றார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும்பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவாநி ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்'
என்னும் பெரியபுராணம் என்றென்றும் தித்தித்துத் திகட்டாத பேரின்பம் தருவது.
அரனடியார், பற்றுறுதியும் சிவனை விட்டு நீங்காத குணமேன்மையும், அழுதரற்றும் பண்பும் பரோபகார சீலமும், பாடிப்பரவும் குணமும் உடையவர்கள். கண்டமாத்திரத்திலே குழைவும், கனிவும், காதலும் கொள்பவர்கள். உள்ளத்தில் கள்ளங் கபடமற்றவர்கள்.
இப்பண்பாடுகள் இன்று மனித இனத்தவர்களாலே கை விடப்பட்டுவரும் நிலைமையில் மீண்டும் புத்தூக்கம் பெறுவதற்குரிய நிகழ்வாக இக்கட்டுரை அமைகிறது. ஐந்தாவது உலகச் சேக்கிழார் மாநாடு இடம்பெறுகிறது. சேக்கிழார் மாநாடு தரும் நற்செய்திகள் பல. 1. எவ்வகைப்பட்ட ஆய்வுக்கும் சமயஞ் சார்ந்த வாழ்வியல் விளக்கமே, சைவநெறி சார்ந்த வாழ்க்கை முறைமையும் தத்துவமுமே, பெரிதும் உண்மையானது யதார்த்த மானவை என்ற கருத்து முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆய்வறிவு அணுகுமுறையின் நேர்த்தி, நுட்பம், உண்மை, ஏற்புடைமை ஆகியனவற்றுக்குச் சேக்கிழார் பெரு மானின் உத்திமுறைமை, வழிகாட்டுதல் அவசியம் என்பதனை மீள வலியுறுத்தும் முறைமை உண்டு. 2. “திருமுறைச் செஞ்சொற் கவியின்பம்” வேறு எந்த இசையினாலும் பெறுவதற்கரிதாவது. எண்ணி இறும்பூ தெய்தத்தக்கது, பண்ணிசையால் அரனையே அசைத்து வாழ்ந்த அடியார்களது திருவருட்பெருமையைப் பரப்பு வன சைவத்திருமுறைகள்; பெரிய புராணச் செய்யுட்கள். 3. அரனது இருப்பையே அசைத்தும், ஆட்டியும் தமது வைராக்கிய சிவபக்தியை வாழ்க்கையில் நிறுவியமையை
சேக்கிழார் மாநாட்டு மலர் 2005

Page 171
உலகினர்க்கு எடுத்துரைப்பது பெரியபுராணம். இது அரிய செய்தி. 4. நிலைகுலையும் - சீரழியும்- குடும்ப அமைப்பு என்னும் சைவ வாழ்வு முறைமையை எடுத்துரைத்தும், கதைகள் மூலம் விபரித்தும் உலகமக்களிடத்து இல்லறமேன்மை யினை அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தும் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்படுவது வரவேற்புக்குரியது; சைவத்தில் தற்கொலை இல்லை. 5. எந்தப் பெரிய தாக்குதல்களினாலும் அழியாத பெருமையுடையது சைவமதம். “சைவத்தின் மேற் சமயம் வேறில்லை” என்பது உணர்ச்சி வாக்கியமல்ல. அனுபவ வாக்கு; உண்மை. “எம்மதமும் சம்மதம்” எனும் கருத்துக்கு முற்றிலும் முரணானது சைவம். காலத்தால் அழியாதது. கற்பனைக்கும் எட்டாதது. பிறமதத்தவர் களினாலே கடைப்பிடிக்க முடியாதது. விதிமுறைகளையும் விளக்க முறைகளையும் கொண்டது. விஞ்ஞான பூர்வமானது. பிறர் பார்த்தும், கேட்டும் அறிந்தும் பொறாமை கொண்டு முற்றிலும் அழிக்க வேண்டும். "அழிக்கப்பட வேண்டும்”- என்னும் தீவிரவாதத்தைத் தோற்றுவிப்பது. இவற்றினாலேயே வரலாறு காணாத வகையில் சைவத்திற்கு, அதன் பண்பாட்டுக்கு,
DGOT (66)
மகனே உனக்கு மன அமைதி வேண்டுமா உன்னிடத்தில் உள்ள குறைகளைக் கிளறிப் ப ஆக்கக் கற்றுக் கொள்.
gráégt மாநாட்டு மலர்2005

அதனைப் பின்பற்றும் மக்களுக்கு எந்நேரமும் கடும் சோதனைகள் என்பதனை இனியும் அறியாதார் சுத்த மூடர்களே. சைவத்தில் தீவிரவாதமும் உண்டு. அது “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” என்று தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரத்தால் உணரப் படுவது. விறன்மிண்டரும், “வாழ்ந்து போதீரே” என்று பாடிய சைவநாயன்மாரும் கூடச் சைவத்திலேதான் உள் ளனர் என்பது அதன் வீர வரலாற்றுக்குச் சான்று. சேக் கிழார் “வீடும் வேண்டா விறல்” என்று அரனடியாரின் வைராக்கியத்தைக் குறிப்பிடுகின்றார். 6. இந்து மதத்தை - சைவத்தை - எதிர்க்கும் அவைதிக மதங்கள் நிலை பேறுடையனவல்ல. ஆதலினாலேதத்துவ மேன்மை, வாழ்வியல் மேன்மை, வழிபாட்டு மேன்மை, பக்தி மேன்மை, தொண்டு மேன்மை, திருமுறை மேன்மை, சித்ததாந்த மேன்மை, கடவுள் மேன்மை, திருவருள் மேன்மை, சங்கம வழிபாட்டு மேன்மை அனைத்தும் கொண்ட எம் சமயம் என்றும் நிலை பேறு கொள்ளும் என்பதே முடிந்த முடிபு. சமூகவிழிப்புணர்ச்சிக்கும், சமய விழிப்புணர்ச்சிக்கும், சைவத்தின் நிலைபேற்றை உறுதிப் படுத்துவதற்கும் இச்சேக்கிழார் ம்ாநாடு உதவுவதாக, அரனடியார் தனிப்பெருமை உணர்த்தப்படுவதாக.
மதி பெற
னால் உலகத்தவர் மீது குறை கூறாதே. மற்றும் ார். உலகம் முழுவதையும் உன்னுடையதாக
- சாரதா தேவிஅம்மையார்
139

Page 172
- அந்தாதி அன்பர் மா. த புதுச்சேரி, !
சைவம் தழைக்க வந்த சமயகுரவர் நால்வர் என்பது உலகோர் அறிந்த உண்மை அவர்கள்-திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் எனப்படுவர். சமணத்தை வீழ்த்திச் சைவத்தை நிலைநாட்டிய பெருஞ்சிறப்பு திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரைச் சாரும் அடியவர் சிறப்பை உலகோர் உணருமாறு செய்த பெருமை சுந்தரரைச் சேரும் இறைவன் அருவமாகவும், உருவமாகவும், அருவுருவமாகவும் உள்ளான் என்ற பேருண்மையைப் புலப்படுத்தியவர் மாணிக்கவாசகரே யாவார்!
உலகில் பெரியவர்களிடம் (ஆசி) வாழ்த்துப்பெற, அவர்களின் கால்களைத் தொட்டு வணங்குவது மரபு. அப்பாதங்களுக்குப் பூசை புரிவதும் உண்டு; அத்திருவடிகளைப் போற்றிப் பாடுவதும் உண்டு; அத்தாள்களுக்கு அணிகலன் பூட்டி அழகுபார்த்து வழிபடுவதும் உண்டு. ஈங்கு, ஆசிரியர் உமாபதிசிவம் அவர்கள்,
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி வாழிதிருநாவலூர்வன் தொண்டன் பதம் போற்றி ஊழிமலிதிருவாதவூரர் திருத்தாள் போற்றி"
என நால்வரின் பாதங்களைக் கழல் என்றும், அடி என்றும், பதம் என்றும், தாள் என்றும் சிறப்பித்துப் போற்றுவதைச் சற்றே ஆய்வோமாக!
1. பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்
கோன் கழல் போற்றி:
காழிப்பதியிலே தோன்றிய ஞானசம்பந்தப் பெருமான், மூன்றாம் அகவையிலேயே அப்பன் ஆணையிட அம்மை தந்த திருமுலைப்பால் என்னும் அமிர்தம் உண்டவர்; ஊர் ஊராக நடந்தும், தோளில் ஏறியும், சென்று சிவத்தலங்களைக் கண்டு போற்றிப் பாடியவர். வெய்யிலின் கொடுமை பொறாத இறைவன் சம்பந்தருக்கு முத்துப்பந்தர் இடச் செய்தவர்; சிவிகை தந்தவர்; பிள்ளை நடந்துவரும் அழகைக் கண்டு சுவைத்தவர் இறைவனாகிய பட்டிசுரத்தான்!
ஒருமுறை, பாண்டிய நாட்டில் சமணம் பரவிச் சைவம் அழியும் நிலைகண்ட அடியார்களோடு பாண்டியன் தேவியாகிய மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறை யாரும் மனம் நொந்து வாடுவதை அறிந்த சம்பந்தர்,
140
 
 

O O O O மாறறும நாலவா
ன. அருணாசலம் - இந்தியா.
鑒叢蠶簽
திருமறைக்காட்டினின்று பாண்டிய நாடு புறப்பட எத்தனிக்கும் வேளையில், நாவுக்கரசர் பெருமானும் மற்றையோரும் சமணர்களின் வஞ்சகச் செயல்பற்றி எடுத்துரைத்தனர்; இவ்வேளை கோள்களின் நிலை சரியில்லையாதலால் பாண்டிய நாடு செல்ல வேண்டாம் என்று தடுத்தனர்.
சமணர்களின் வஞ்சகச் செயலுக்கோ, கோள்களின் தன்மைக்கோ, அல்லது பெரியவர்கள் தடுக்கும் தன்மைக்கோ சம்பந்தர் சிறிதும் அஞ்சவில்லை! “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் . ”என்று தொடங்கும் கோளறு பதிகம் பாடிப் பாண்டிய நாட்டிற்குப் புறப்பட்டார்.
பாண்டியன் நாட்டில் சம்பந்தர் தங்கியிருந்த திருமடத்திற்குச் சமணர்கள் இட்ட தீயானது பரவி, மன்னனுக்கு வெப்பு நோயைத் தோற்றுவித்தது; சமணர்களால் அந்நோய் தீர்க்கப்படாமையால், இறுதியில் சம்பந்தர் பெருமான், "மந்திரம் ஆவது நிறு; வானவர் மேலது நீறு. ’ என்ற பதிகம் பாடி, நீறுபூசிப் பாண்டியனின் நோயைப் போக்கினார்; அது மட்டுமன்றி, அந்நாள்வரை வளைந்திருந்த மன்னனின் கூனையும் நிமிர்த்தினார்; அது முதல், கூன் பாண்டியன்’ என்ற பெயர் மாறி நின்றசீர் நெடுமாறன் என மன்னன்’வழங்கப்பட்டான்.
சமணர்களின் வஞ்சகச் செயலை முறியடிக்கவும், அதனை ஊரார் அறியுமாறு செய்யவும் அவர்களுடன் அனல்வாதம், புனல்வாதம் நடத்தினார்; அனல் வாதத்தில் சமணர்களின் ஏடுகள் எரிந்து சாம்பலாயின; சம்பந்தர் ஏடுகள் பசுமையாகவே காணப்பட்டன. புனல்வாதத்தில் சமணரின் ஏடுகள் வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன; சம்பந்தரின் ஏடுகள் ஆற்றின் போக்கை எதிர்த்துச் சென்று ‘திருவேடகம்' என்ற இடத்தில் கரையடைந்தன. இதேபோலத் திருத்தெளிச்சேரியில் வாதுக்கழைத்த புத்தர்களைச் சம்பந்தர் வென்றார். இங்ங்ணம் அஞ்சாது செயலாற்றி அருமறையின் பெருமைகளைக் காத்தவர் சம்பந்தர்.
சிறுபிள்ளைகள் நடந்துவரும் அழகைக் கண்டும் ஓடிவரும் அழகைக் கண்டும் அவர்களின் கால்களில் கழல் என்னும் அணி அணிவித்து மகிழ்வது பெரியோர் இயல்பு. அங்ங்ணம், வீரமிக்க, சைவம் தழைக்கவந்த ஞானசம்பந்தப் பெருமானின் கால்களுக்குச் சந்தான குரவருள் ஒருவராகிய உமாபதிசிவம் அவர்கள் கழல் அணிவித்துப் போற்றுகின்றார்!
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 173
2. ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான்
அடிபோற்றி:
திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் பிறந்த மருள்நீக்கியார், இளமையிலேயே சமணம் சார்ந்து, தேர்ந்து, தருமசேனர் என்னும் பட்டம் பெற்று, சமணத் தலைவர்களில் ஒருவராய்ப் பெரும்புகழோடு விளங்கியவர். இவர் தம் தமக்கையாராகிய திலகவதியம்மையின் வேண்டுதலுக்கு இரங்கிய இறைவன், மருள்நீக்கியாரின் முன்வினைப்பயன் வெளிப்பட, அவர்க்குச் சூலைநோய் தந்தருளி ஆட்கொண்டான். சூலைநோய் நீக்கச் சமணர்கள் செய்த அத்துணை முயற்சிகளும் வீணாயின. நோயின் கடுமை மிகவே தருமசேனர் தம் தமக்கையாரிடம் செல்ல நேர்ந்தது. தம் தம்பி திரும்பி வந்ததே இறைவன் அருள் எனக் கருதிய திலகவதியார், “திருவாளன் திருநீற்றைத் திலகவதியார் ஐந்தெழுத்து ஒதி எடுத்துக் கொடுக்கப் பெரு வாழ்வு வந்ததென.” எண்ணிய மருள்நீக்கியார், அதனை வாங்கிப் பூசிக் கொண்டார். திருவீரட்டானேசுரர் திருமுன் நிறுத்தப்பட்டார்; திருவருள் கூடிவர, உள்ளத்தில் பொங்கிய பேரன்பால் இறைவனை நோக்கிக் “கூற்றாயினவாறு விலக்ககிலீர் . ” என்னும் திருப்பதிகம் பாடத் தொடங்கினார்.
உள்ளம் கசிந்து பாடிய மருள்நீக்கியாரின் சூலைநோய் நீங்கியது; அவ்வமயமே "நாவுக்கரசு என்னும் பெயர்பெற்று நிலை பெறுக..” என்னும் அசரீரியும் தோன்றிற்று. அன்று முதல் மருள்நீக்கியார் 'திருநாவுக்கரசு’ ஆனார்.
இது நாள் வரை, இறைவர்க்குத் தொண்டு செய்யாது காலங்கழித்த தவற்றைப் போக்க, ஊர்தோறும் உள்ள திருக்கோவில்களுக்குள் அடியார் நடந்து செல்லும் பாதையில் உள்ள கல், முள், புல், பூண்டுகளைச் செதுக்கிச் சீர்ப்படுத்தும் தொண்டினை மேற்கொண்டார். அதற்கான உழவாரப்படை' எனும் கருவியினைத் தாங்கும் பேறுபெற்றார். சமணம் நீங்கிச் சைவம் சார்ந்து, உழவாரப் பணிபுரியும் மருள்நீக்கியாரின் செயலைப் பெறாத சமணர்கள், அவ்வமயம் நாட்டையாண்ட பல்லவமன்னனிடம் பலவாறு பொய்யுரைகள் புகன்று, மன்னனை நாவுக்கரசர்பால் சினங்கொள்ளச் செய்தனர். பல்லவ மன்னனும் நாவுக்கரசரை அழைத்துவர ஏவலர்களுடன் தம் அமைச்சர்களை அனுப்புவித்தான். அவர்கள் பலவாறு அச்சமூட்டி நாவரசரைப் பணியவைக்க முயன்றனர். நாவரசரோ, "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்.” என்னும் திருப்பதிகம் பாடி அரசன்முன் செல்ல மறுத்துவிட்டார். சமணர்களின் ஆலோசனைப்படிப் பல்லவன், திருநாவுக்கரசரை நீற்றறையில் பூட்டுவித்தான். 'மாசில் வீணையும். 'என்னும் பதிகம் பாடி நீற்றறையிலிருந்து வெளிவந்தார்;
பின்னர், நாவுக்கரசருக்கு நஞ்சு ஊட்டப்பட்டது; நஞ்சு தன் செயலற்ற நிலையாக இயல்பானது; அதன்பின்,
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

யானையை விட்டு இடறச் செய்யுமாறு பணிக்கப்பட்டது; அதுபோழ்து, ‘சுண்ணவெண் சந்தனச் சாந்தும். タタ என்னும் பதிகம் பாடினார். “அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்சவருவதும் இல்லை.” எனப் பாடித் தன் நிலையைத் தெளிவுபடுத்தினார். யானை நாவரசரை வலம் வந்து வணங்கிச் சென்றது. இறுதியாக, இதுவரை யாரும் செய்யத்துணியாத கொடுஞ்செயலாக, நாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் போட்டனர்; அப்போது “சொற்றுணை வேதியன்."என்னும் பதிகம் பாடக் கல்லே தெப்பமாக மிதந்துவரக் கரையடைந்தார்.
நாவுக்கரசர், பொற்றுணைத்திருந்தடி பொருந்தக் கைதொழுதவர். அவர் பல தலங்களுக்கும் சென்றார். திருச்சத்திமுற்றத்தில், ‘பூவார் அடிச்சுவடு என்மேற் பொருத்திவை. ”என வேண்டிப் பாடினார்; நல்லூரில் நாவரசரின் சென்னிமிசை தம்பாதமலர் சூட்டினான் இறைவன். இறுதியில் திருக்காளத்தி அடைந்தவர், வட யாத்திரை செல்ல, மெல்ல நடந்தும், உருண்டும், தவழ்ந்தும் சென்றார். இறைவனிடம், “புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே” என இறைஞ்சினார்.
இவ்வாறாக, அடுத்தவரின் அடி நோகலாகாது எனக் கல்லும் முள்ளும் புல்லும் பூண்டும் நீக்கித் தொண்டு புரிந்த அப்பர் பெருமான், தாம் சென்ற இடங்களுக்கெல்லாம் தம் அடி தேய நடந்தே சென்று இறைவனை வழிபட்டார். ஆகையினால் தான் அடிபோற்றி வணங்குகிறார் உமாபதி சிவம் அவர்கள்.
3. வாழிதிரு நாவலூர் வன்தொண்டன் பதம்
போற்றி
மண்ணுலக வாழ்வின் தன்மைகளை மண்ணுலகோரே சிறப்பாகத் தெரிந்து, புரிந்து வாழவும், எந்நிலையிலும் இறைசிந்தை துறவாத சிறப்புண்டாயின் அவர்க்கு விண்ணுலக வாழ்வின் பெருமையாகிய உயர்பதவி (பதம்) கிட்டும் என்பதை உணர்த்தவே; தம் அடியார்களில் ஒருவராகிய ஆலாலசுந்தரரைப் பூமிக்கு அனுப்பிப் போக இன்பம் துய்க்கச் செய்து, அனுப்பிய தாமே ஒரு நிலையில் தூதனாகவும் பதமாக நடித்து, வாழ்வின் பயனை விளக்கிய பொருளே சுந்தரர் வரலாறு ஆகும்.
வாதுக்கழைத்து வம்புப்பல பேசிய இறைவன், வன்சொற்கள் பேசிய சுந்தரனைத் தம் திருவாயால் 'வன்தொண்டன்’ என விளித்து, உலக மாயைகளை உணர்த்தி நற்பதம் நல்கியவர்.
பித்தம் தெளியாத சுந்தானுக்குப் பித்தம் தெளிய வைத்து, அவன் வாயாலேயே "பித்தா பிறைகுடி பெருமானே.”என்ற திருப்பதிகம் பாட வைத்தவர்; தன்னை இன்னார் என அறியாதே வீண் காலம் போக்கும் சுந்தரரின்
141

Page 174
தலைமேல் தம் திருவடியைச் சூட்டிப்பதமாக்கித் தம்மானை அறியாத சாதியார் உளரோ. ”என்ற திருப்பதிகம் பாட வைத்துப் பெருமைப்படுத்தியவர்; அடியார்கள் இன்ன தன்மையர் என்றும், அவர்களே பூமியில் முதலில் வணங்கத் தக்கவர் என்றும் அடையாளம் காட்டுவித்து, அடியார் பெருமையை விளக்கித் “தம்பிரான் தோழன்’ ஆக்கிக் கொண்டவர். அதனால் தானே தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன். ”எனத் தொடங்கும் பதிகத்தில் அறுபத்து நாயன்மாரையும் அடிபணிந்து உயர்பதம் பெறுகின்றார் சுந்தரர்.
சத்தியம் தவறியவர் எவராயினும், நிச்சயம் தண்டனை உண்டென்ற நியதியைச் சுந்தரர் வாழ்விலேயே உணர்த்தியவர். ஒரு முறை திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைப் பிரிந்து திருவாரூர் புறப்பட்ட சுந்தரரின் கண்களை மறைத்து, திருவெண்பாக்கத்தில் இடக் கண்ணையும், காஞ்சியில் வலக்கண்ணையும் அளித்து, “மீளா அடிமை . ” என்னும் திருப்பதிகம் பாட வைத்து, உலக வாழ்க்கை முறைகளையும், சத்திய நெறியையும் உணரச் செய்தவர்.
இவ்வாறு, இறைவனால் அளிக்கப்பட்ட உயர்பதவிகள், மண்ணுலகில் யாவர்க்கும் கிடைக்கப் பெறும் என்ற பேருண்மையை அகிலம் உணருமாறு உணர்த்த ஆளாக்கிக் கொண்ட ஆலாலசுந்தரராகிய நம்பியாரூரர் பிறந்த திருத்தலமாகிய திருநாவலூரைச் சிறப்பித்துப் பதம் போற்றி வணங்குவதன் பொருள் பதமானதே!
4. ஊழிமலி திருவாதவூரர்திருத் தாள் போற்றி
திருவாதவூரர் என்னும் மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில், அரிமர்த்தன பாண்டியன் அவையில் முதலமைச் சராக நியமிக்கப்பட்டவர்; நாட்டின் பெருமையையும், காவலையும், மன்னனின் சீர்மையையும் போற்றிக் காப்பாற்ற வேண்டிய முதலமைச்சர், மன்னனின் கட்டளையை மறந்து, ஒரு குருந்த மர நிழலில் அமர்ந்து, சீடர்களுக்கு நல்லுபதேசம் செய்துகொண்டிருந்த குருவின் தாள்களை அடைக் கலமாக ஏற்றுக் கொண்டவர்.
நாட்டின் படைபலத்தின் பொருட்டுக் குதிரை வாங்குவதற்குத் தாம் கொணர்ந்த பொருள்களையெல்லாம் குருவினுடைய இரு பொற்றாள்களில் கொட்டி, இறைவர்க்குத் திருப்பெருந்துறையில் கோவில் எழுப்பியவர்.
நயனதிக்கை, ஞானதீக்கை, பரிச தீக்கை என்ற மூவகைத் தீக்கைகளும் அளித்துத் திருவாதவூரரைத் தம் சீடராக்கிக் கொண்டதோடன்றி, தம் தாள்களையே பின்பற்றச் செய்த இறைவன், அடியார்கள் உணரும் பொருட்டுத் தம் சிறப்புக்களை வெளிப்படுத்தியவன்.
142

பாமரர்க்கும், படித்தவர்கட்கும், புரிந்து கொள்ளும் பக்குவம் அற்றவர்கட்கும் அவரவர் கருத்திற்கிசைய உருவமாகவும், அருவமாகவும், அருவுருவமாகவும் தோன்றும் தன்மைகளை அமைக்கச் செய்தவன். ஆம்! திருப்பெருந்துறை திருக்கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கி நின்றால் அவனின் உருவ, அருவ, அருவுருவத் தன்மைகளை மிக எளிமையாக உணரலாம்! மண்ணுலகில் மன்னன் பெரியவனாயினும், விண்ணுலக வாழ்வுபெற இப்பொன் னுலகம் பயனற்றது என்பதையும், தேடிய செல்வங்கள் யாவும் தாளடியில் போடுதற்கே உரித்து என்பதையும் உணரச் செய்தவன்.
திருவாதவூரரின் கோரிக்கையை ஏற்று, உலகுக்கு அடியவர்களை அடையாளம் காட்ட, பாண்டிய நாட்டிற்குக் குதிரைகளை அனுப்பி வைத்தும், அவற்றை நரியாக்கியும், முன்னிருந்த குதிரைகளை நாசப்படுத்தியும் திருவிளை யாடல்கள் ஆடிப் பொருள், போகம், களிப்பு யாவும் ஒரு கட்டத்தில் மறையும் என்பதை வெளிப்படுத்தத் திருவாதவூரரைப் பயன்படுத்திக் கொண்டான் இறைவன். மன்னனும் மற்றையோரும் தாமே தெளிவாக உணரும் பொருட்டு வைகையைப் பெருக்கெடுக்கச் செய்தான்; கூலிக்கு ஆளாய் வந்தான்; தன் மீது பட்ட அடியும், வலியும், தழும்பும் உலக உயிர்கள் மீதெல்லாம் படச் செய்தான்; ஒரு கூடை மண் கொட்டி உடைப்பை அடைத்து வியப்புற வைத்தான். வைகைச் சுடுமணலில் தகிக்கச் செய்து வாட்டிய தண்டனைக்கு மன்னிக்குமாறு வேண்டித் திருவாதவூரரின் தாள்களில் விழச் செய்தான். விந்தை மிகு விளையாட்டுக்கள் பல புரிந்து பாண்டிய நாடும் மன்னனும் மக்களும் பெருவாழ்வு வாழச் செய்தவன் கருணை வள்ளல்
தில்லையில் புத்தரை நிலைநாட்டும் பொருட்டு வந்த ஈழமன்னனைத் திருத்தியதோடன்றி, பேசியவர்களை ஊமையாக்கியும், ஊமைப் பெண்னைப் பேச வைத்தும், சைவ சமயத்தை ஈழ நாட்டில் மேலோங்கச் செய்தும் வியத்தகு செயல்களல்லவோ தன் அநாதி முறைமையை அழகுறப் பாட வைத்தும், பாடிய பாட்டுக்களை(அவரே) “மாணிக்கவாசகன் சொல்ல அழகிய திருச்சிற்றம்பலம் உடையான் எழுதியது” என்ற அடிக்குறிப்புடன் தில்லை நடராசர் சந்நிதியில் கிடைக்கச் செய்ததும், இறைவனின் பெருங்கருணைத் திறம் ஆகும்! சிவபுராணம் முதலாக அச்சோப் பதிகம் ஈறாக நமக்கெல்லாம் வழங்கிய திருவாசகம் மிகப்பெரும் புதையல்
தில்லைவாழ் அந்தணர்களும், மற்றையோரும் அவ்வேட்டிலுள்ள மடல்களுக்குப் பொருள் கேட்க, மாணிக்கவாசகர், “தில்லைக் கூத்தனே பொருள்” எனச் சுட்டிக் காட்டி, அவனின் திருத்தாள்களைச் சேர்ந்ததைப் போற்றியே, உமாபதி சிவம் அவர்கள் தாள்போற்றி என வணங்குகின்றார் என்பதை உணர்வோமாக!
சேக்கிழார் மாநாட்குழலர்2005

Page 175
சங்கம
- சைவப்புலவர், செ. 8
சேவைக்கால ஆசிரிய ஆலோ
簽
羲
濠羲
Dனிட உயிரின் மாண்பினை அறியாத இன்றைய கால கட்டத்தில் மனிதரின் மேன்மையை வெளிக்கொணரும் முக மாக சேக்கிழார் விழா உலக மாநாடாக நடைபெறும் இந்நேரத் தில் “தொண்டர்கள் குலம் தொழுகுலம்’ என சாதி இரண்டு ஒன்று தொண்டர் மற்றையது தொண்டர் அல்லாதவர்கள் என சிவனடியார்களது சிறப்பை வெளி உலகிற்கு எடுத்துப் பாடியவர் சேக்கிழார் நுண்மான் நுழை புலத்தைக் கொண்ட சேக்கிழார் அநபாயச்சோழனுடைய ஆதரவோடு தான் வாழ்ந்த காலத்தில் சைவசமயத்தின் மேம்பாட்டிற்காக சைவ சமய பக்தர்களின் நலனைச் சிறப்பித்து நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என நினைக்காது எல்லோரும் வாழவேண்டும் என்ற சிந்தனையில், வாழ்கசீர் அடியாரெல்லாம் என சிவனடியார் களை வாழ்த்திப் போற்றியமையால் உயர்ந்த பேறுபெற்றார். அந்த வகையில் சிவனடியார்களாகிய சங்கமர் யாவர் இவர் களது பெருமை என்ன என்பதைச் சுருக்கமாக நோக்குவோம். உலகிலுள்ள சமயங்களிலே பழமையானதும் மற்றையச் சமயங்களுக்கு மூலமாகவும் விளங்குவது சைவசமயம். சைவ சமயமானது உயர்ந்த குறிக்கோள்களைக் கொண்டது. வெறு மனே இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி சிந்தியாது மறுமை பற்றி யும் சிந்தித்துள்ளது. ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாக ஆன்ம ஈடேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மா தன்னைப் பீடித்துள்ள வினைகளினின்றும் விடுபட பல்வேறு வழிகளையும் கூறியுள்ளது. இந்து சமயத்தின் முதல் நூலாக விளங்குகின்ற வேத ஆகமங்களில் பல வழிபாட்டு முறை களை எடுத்துக் கூறியிருக்கக் காண்கிறோம். அந்த வகையில் சிவாக மங்கள் முத்திக்குரிய சாதனங்களாக சைவ நாற் பாதங்கள், குரு, லிங்க, சங்கம வழிபாடு, திருநீறு, உருத்தி ராக்கம், பஞ்சாட்சர ஜெபம் என்பவற்றைக் கூறியுள்ளது. இங்கு சங்கம வழிபாடு பற்றி நோக்குவோம்.
சங்கமம் என்றால் சிவனடியார் கூட்டம் என்று பொருள். சிவனது அணுக்கத் தொண்டர்களே சிவனடியார்கள்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.”
என்ற குறளிற்கேற்ப எமது சமயம் மனிதனும் தெய்வத் திடம் செல்லலாம் என்ற கோட்பாடுடையது. இவ்வகையில் சிவவேடத்தையும் அவர்களது தூய அன்பையும் சிவனடியார் களையும் சிவமாகவே வழிபடலாம் என மெய்கண்ட சாஸ்திர
சேக்கிழார் மாநாட்டு மலர்2005
 
 
 

ந்தசத்தியதாசன் -
சகர்,வலிகாமம், கல்விவலயம்
క్ష్
நூல்களில் நடுநாயகமாகத் திகழும் சிவஞானபோதத்தின் 12வது சூத்திரம் குறிப்பிடுகின்றது.
செம்மலர் நோன்றாள் சேரலொட்டா அம்மலம் கழிஇ அன்பரொடு மரிஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே.
இக்கருத்து கடவுண் மாமுனிவர் திருவாதவூரடிகள் புராணத்தில் திருப் பெருந்துறைச் சருக்கத்தில் குறிப்பிடு கின்றார். நிர்வாணதீட்சிதர், விசேடதீட்சிதர், சமயதீட்சிதர் என முத்திறமான சிவபக்தர்கள் காணப்படுகின்றார்கள்.
சிவபெருமான் ஆலயங்களில் இருப்பது போன்றே சிவனடியாருடைய உள்ளத்திலும் இருப்பார். இக்கருத்தையே இந்துக்களின் மூல இலக்கியமான வேத உபநிடத மகா வாக்கியங்கள் எடுத்துக் கூறுகிறது. 'தத்துவமஸி அகம் பிரமாஸ்மி”என்பவை பற்று நீங்கிய அடியாரையும் தெய்வத் தையும் ஒன்றெனவே குறிப்பிடுகின்றது. இவற்றை சிவாக மங்களின் யோக, ஞான, பாதக்கருத்துக்களும் குறிப்பிடு கின்றன. இதனாலேயே ஒருவரை வணங்கும் போது வணங்கப்படுபவர் இவ்வணக்கம் என்னை அல்ல எனக்குள்ளே இருக்கும் இறைவனுக்கென்று நினைக்க வேண்டும் என்ப தாகும் இதையே பின்வரும் குறட்பாவும் காட்டுகிறது.
"உன்னை ஒருவர் வணங்கில் உனதுள்ளுறையும் நின் மலனுக் கென்றே நினை.”
இதற்கும் மேலே ஒருபடி உயர்ந்து ஒளவைப் பிராட்டியார் 'சிவன் தொண்டருக்குள் ஒடுக்கம் ஆதலால் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' எனக் குறிப்பிடுகின்றார் என்பதும் இங்கு சிந்திக்கத்தக்கது.
இச் சிவனடியார்களை நோக்கும் போது புறத்திலே காவி வஸ்திரத்தையும், சிவசின்னங்களாகிய திருநீற்றையும், உருத்திராக்கத்தையும் உடம்பிலே தரித்திருப்பர். சிவனது உண்மையை நினைத்தாலும், கேட்டாலும், கண்டாலும் தம் வசம் சிவனை இருத்தி, ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும், ஆடலும், பாடலும் உடையவராய் விளங்குபவர்கள். இவ் அடியார்கள் சிவனிடம் செலுத்தும் அன்பு முத்திறத்தது. சிவனது திரு வருளைப் பெற்றஇடத்து மாத்திரம் பரவசப்படுதல் கடையாய
43

Page 176
அன்பாகும். சிவனது திருவருளை கண்டமாத்தி ரத்தில் பரவசப்பட்டு நிற்றல் இடைத்தரமான அன்பாகும். சிவனை நினைத்தளவிலும் சிவன் புகழை கேட்டளவிலும் பரவசப்பட்டு நிற்றல் முதல்தரமான அன்பு நிலை ஆகும்.
இவ்வகையிலே சிவனடியார்கள் அகத்திலே சிவபெருமான் திருவடிப்பேற்றைவிட வேறு எவ்வித பற்றும் இல்லாதவர்கள். ஐம் பூதங்களும் தத்தம் நிலையில் நின்றுமாறின காலத்திலும் உமா தேவியாரை இடப்பாகத்தில் கொண்ட சிவபெருமானது தாமரை மலர் போன்ற திருவடியை மறவாதவர்கள். என்றும் ஓம்நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை ஒதிக்கொண்டு வைராக்கிய நெறியில் நிற்பர். எனவே சிவனடியார்கள் குற்ற மற்ற குணங்களினால் பெரியமலையை ஒத்தவர்கள் ஆவர் என அருண்மொழித்தேவர் தமது திருத்தொண்டர் புராணத்தின் திருக்கூட்டச் சிறப்பிலே குறிப்பிடுகிறார்.
பூதம் ஐந்தும்நிலையிற் கலங்கினும் மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார் ஒது காதல் உறைப்பின் நெறிநின்றார் கோதிலாத குணப்பெருங் குன்றனார்.
மேலும் இச்சிவனடியார்கள் புறத்தூய்மை போன்று அகமும் தூய்மையானவர்கள். திருநீறு எவ்வாறு வெண்ணிறமானதோ தன்னை அணிகின்றவர்களைக் காப்பற்றி உயர் நிலைக்கு இட்டுச் செல்லுமோ அதே போல் சிவனடியார்களது உள்ளமும் தூய்மையாகக் காணப்படும். அவர்களிடத்திலிருந்து தெய்வீக ஒளிவீசும் இவர்களுடைய பெருமை வாயினால் பேச முடியாது.
மாசிலாத மணிதிகழ் மேனிமேல் பூசு நிறுபோல் உள்ளும் புனிதர்கள் தேசினாலெத் திசையும் விளங்கினார் பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார் - பெரியபுராணம்
இவர்கள் தமது உள்ளத்தில் கேட்டையோ ஆக்கத் தையோ பற்றி சிந்திக்கமாட்டார்கள். வயது முதிர்ந்து துறவற நிலையிலே பிச்சையேற்கின்ற பாத்திரமாகிய ஒட்டையும் இடாம்பிகமான திருமண வாழ்விலே உடம்பெல்லாம் அலங் கரிக்கப் பயன்படுகின்ற விலை உயர்ந்த பொன்னையும் ஒன்றாகவே நோக்கும் சிந்தனை உடையவர்கள்; சிவனடியார் களுடன் ஒன்றாகக் கூடி வழிபாடு ஆற்றுகின்ற இன்பம் ஒன்றே தவிர தாம் அனுபவிக்கும் பேரின்பமாகிய முத்தி வீட்டையே விரும்பாதவர்கள். இவர்களுடைய வீரத்தை எம்மால் சொல்ல முடியுமோ என்கிறார் சேக்கிழார்.
“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக் குவார் கூடும் அன்பினில் கும்பிடலே யன்றி வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.”
- பெரியபுராணம்

இவ்வாறு சங்கமரின் தோற்றப்பொலிவை நோக்கும் போதும், நிற்கும் பொழுதும், இருக்கும் பொழுதும், கிடக்கும் பொழுதும், நடக்கும் பொழுதும், உண்ணும் பொழுதும், உறங்கும் பொழுதும், விழிக்கும் பொழுதும், இமைக்கும் பொழுதும் சிதம்பரத்தில் நின்றாடும் நடராஜரின் மலர்ப்பாதம் மறக்காதவர்கள்.
'நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்றாத உணர்வுடையார்தொண்டராம் குணமிக்கார்”
- பெரியபுராணம்.
மேலும் உறவும் பகையும் இல்லாதவர்; திருவருளின்பம் ஒன்றே நிலையானதெனக் கொள்பவர் சீலத்தாலும் நோன்பி னாலும் செறிவிலும் அறிவிலும் அன்பிலும் அருளிலும் சிறந்து விளங்கியவர். மாதேவர்க்கு ஏகாந்தராய் ஒழுகுபவர் இதனால் பழுதிலாத்துறவறம் பண்புடனும் பக்தியுடனும் பூண்டவர். சிவத்தினைப் பிரியாச்சிந்தையார் ஆண்டில் இளைஞராய் இருப்பினும் ஞானத்தால் முதிர்ந்து இருப்பார்.
இவர்களுடைய வேடம் சிவவேடம், சிந்தனை சிவசிந்தனை எனவே சிவபெருமான் இவர்களை விட்டுப் பிரிந்திருப்பாரா? இருக்கமாட்டார். சில வேளைகளில் சிவபெருமான் அடியார் ஒருவர் போன்று சிவவேடம் தாங்கி அவர்களுடன் செல்லு வதுமுண்டு. ஒருமுறை சித்தவடமடத்திலே சுந்தரமூர்த்தி நாயனாருடன் அடியராக வந்த சிவபெருமானும் படுத்து உறங்கி ஜாமத்திலே சுந்தரருக்கு திருவடி தீட்சையும் கொடுத் தாரல்லவா? எனவே தான் சிவனடியார்களை நாம் சிவ னெனவே வழிபட வேண்டும் என்கிறது சைவசமயம்
ஈசருக்கே அன்பானார் யாவரையுந் தாம் கண்டால் கூசிமிகக் குதுகுதுத்துக் கொண்டாடி மனமகிழ்வுற்று ஆசையினால் ஆவின்யின் கன்றணைந்தாற்போலணைந்து பேசுவன பணிந்தமொழி இனியனவே பேசுவார்.
பெரியபுராணம். இறைவனுக்கு அன்பு செலுத்துபவர் எவரையும் நாம் கண்டால் கூசி (அஞ்சி) மிகவும் உள்ளத்தில் விருப்பம் கொண்டு, மகிழ்ந்து, ஆசையால் தாய்ப்பசுவின் பின்பு கன்று சேர்வதைப்போற் சேர்ந்து அவர்களிடம் எல்லாம் இனிய சொல்லாகவே பேசவேண்டும் என்பதைச் சேக்கிழார் பாடல் மூலம் குறிப்பிடுவர்.
சமயம் என்பதற்கு விளக்கம் கொடுக்கும் போது பாதை, நெறி, வழி, மார்க்கம் எனக் கூறினாலும் சமயம் “மனித வாழ்வு, ஆத்மாவுக்கு ஒளி, பாதைக்குத் ŠULho 6T6örg D.M.P. மகாதேவன் இந்துசமய தத்துவத்திற் குறிப்பிடுகின்றார். சைவ சமயத்தவர்கள் மேனிலையடைவதற்குரிய ஒரு மார்க்கமாகச் சிவனடியார் வழிபாடு காணப்படுகின்றது. இதையே முன்னோர்கள் சங்கம வழிபாடு எனக்கடைப்பிடித்து வருகின்றார்கள். எனவே சிவசின்னங்களைத்தரித்த சிவனடி
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 177
யார்களிடத்திலேயாம் சிவனைக் காணலாம் அல்லவா? மேலும் இராசாவினிடத்தே பயபக்தியுடையோர் இராசகுமாரன் உலாவப் போகும் போது அரசனுக்குச் செய்யும் உபசாரங் களைச் சிவனடியார்க்கும் செய்யலாமல்லவா? இதனாலேயே திருானசம்பந்தமூர்த்தி நாயனார் வந்த சிவிகையை வயதிலே முதிர்ந்த திருநாவுக்கரசர் தாங்கி வந்துள்ளார்.
பல்லவர்காலப் பக்திஇயக்கத்தை எடுத்து நோக்கும்போது சிவனடியாரைச் சிவம் எனவே வழிபட்டிருக்கின்றனர். அக் காலத்தில் இருந்த வர்ணப்பாகுபாட்டைத் தகர்த்தெறிந்து எக்குலத்தவர் ஆயினும் சிவசின்னங்களை அணிந்து சிவ வேடம் தாங்கியவராயும் கங்கையைத்தலையில் தரித்த சிவனுக்கே அன்புடையவராக இருந்தால் அவரைச் சிவன் என்று வழிபடலாம் எனும் கருத்து நிலவியதைக் காண்கின் றோம். அப்பர் சுவாமிகள் தனது திருத்தாண்டகத்தில்
சங்கநிதிபதுமநிதியிரண்டும்தந்து
தரணியொடு வாணாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போமல்லோம் மாதேவாக்கு ஏகாந்தர் அல்லராகில் அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய் ஆவுரித்துத்தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர்கண்டீர்நாம்வணங்கும் கடவுளாரே.
இதற்கமையவே சேரமான் பெருமான் நாயனார் முடிசூடிய அரசராக இருந்த போதிலும் ஒருநாள் சிவாலய தரிசனம் முடிந்து யானை மீதேறி வீதி வலம் வந்த வேளையில் வண் ணான் ஒருவன் தோளிலே உவர்மண்பொதி சுமந்து கொண்டு வந்தான். வரும் வழியில் மழை பெய்ததனால் அவனுடைய உடம்பில் உப்பு ஊறிக்காய்ந்து வெண்ணிறமாகக் காட்சி யளித்தது. அதனைத் திருநீற்றுப் பூச்சு என்று நினைத்து அரசர் யானையிலிருந்து இறங்கி அவனது அடியை வணங் கினார். அப்போது அவன் வருந்த அரசர் தான் "அடிச்சேரன் தேவரீர்திருநீற்றின் வேடத்தை நினைப் பித்தீர்வருந்தாதே போம்” என்று கூறி அனுப்பினார் எனும் சம்பவம் சிவனடி யாரின் பெருமையை உணர்த்தி நிற்கிறது.
மேலும் அப்பர்சிவவேடத்தைக் கண்ட மாத்திரத்தே அவரி டத்திலே அன்பு கொள்ளுங்கள், அவர்கள் அடி பேணுங்கள். இவர் தேவரோ என எண்ணாது சிவன் என்றே நினைத்து வழி பாடு செய்தீர்களானால் சிவனடியாரின் நெஞ்சிற் சிவனை காணலாம் என்கிறார்.
எவரேனும் தாமாக விலாடத்திட்ட
திருநீறுஞ் சாதனமும் கண்டாலுள்கி உவராதே அவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத்திறம் நினைந்தங்குவந்து நோக்கி இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே
கன்றாப்பூர்நடுதரியைக் காணலாமே.
6régisaurtował 2005

இவ்வாறு கூறுவதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை, உடம்பு கோயில், மனம் லிங்கம் உடம்புக்குள்ளேயே சிவனை நிறுத்தி வழிபடலாம். என்ற இந்து மதக்கொள்கையும் சித்திக்கத்தக்கதே இதையே திருநாவுக்கரசர்
காயமே கோயிலாகக் கடினமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணிலிங்கமாக நேயமே நெய்யும் பாலாய் நிறைய நீர் அமையவாட்டி பூசனை ஈசனார்க்குப் போற்ற விக்காட்டினோமே.
என்றும் திருமுலா திருமந்திரத்தில் உள்ளம் பெருங் கோயில் ஊனுடம் பாலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே,
என்றும் குறிப்பிடுகின்றார்.
சங்கம வழிபாட்டில் மிக உயர்ந்த நிலையடைந்தவர் விறன்மிண்டநாயனார் இவர் பல தலங்களுக்கும் சென்றுவழி பாடு ஆற்றும் வேளை முதலில் சிவனடியார்களுக்கு எதிரே சென்று வழிபட்ட பின்னரே சிவபெருமானை வழிபடுபவர். ஒரு முறை திருவாரூர்க் கோயிலின் முற்புறத்தே தேவாசிரிய மண்டபத்திற் கூடியிருந்த சிவனடியார்களை வணங்காது சுந்தரமூர்த்திசுவாமிகள் சிவனை வணங்க உள்ளே சென்றார் அதனைக் கண்டு மனம் பொறுக்காத விறன்மிண்டர் "சுந்தரரும் அவரை தொண்டராகக் கொண்ட சிவபெருமானும் நமக்குப்புறம்பானவர்கள்’என்று கூறச்சினத்தார்.
கோயிலினுள் தியாகேஸ்வரரைச் சுந்தரரால் காண முடிய வில்லை பின் தியாகேசப் பெருமான் சுந்தரர் முன் தோன்றிச் சிவனடியார்களின் பெருமையை எடுத்துக்கூறி “அடியாரைப் பாடுக” எனத் 'தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்"என அடியெடுத்தும் கொடுத்தார். மணப்பந்தலிலே கிழப்பிராமணராக வந்து சிவனைப் பார்த்து “ஒரு அந்தண ருக்கு இன்னொரு அந்தணர் அடிமையோ’எனக் கேட்ட வாயால் இரண்டாவது அடியாகத் திருநீலகண்டராகிய குயவ னுக்கும் தான் அடிமை என்று கூறியுள்ளார். என்றால் சிவனடி யாரின் மகிமை சொல்லாமலே புரியுமல்லவா? தொடர்ந்தும் 60 நாயன்மார்களை பெயர்சுட்டி அவர்களுக்குத் தான் அடிமை என்றது மட்டும் அன்றி ஒன்பது தொகை அடியார்களுக்கும் அடிமை என்றும் பாடியுள்ளார் என்றால் சங்கமரின் சிறப்பு எவ்வளவு பெரிது என்பது தெளிவாகின்றது. தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க்கும் அடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் மடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கடியேன்
விரிபொழில்குழகுன்றையார்விறன்மிண்டற்கடியேன் அல்லிமென் முல்லையந்தாரமர்நீதிக் கடியேன்
ஆரூரனாருளிலம் மானுக் காளே.
145

Page 178
பல்லவர் காலத்தில் தொண்டர் குலம் தொழுகுலம் என மதித்து வேளாளராகிய நாவுக்கரசரும், பிராமணராகிய சம்பந்தரும் பாணராகிய திருநீலகண்டரும் இணைந்து பக்தி இயக்கத்தை வளர்த்துச் சென்றமையும் குலச்சிறையார், மங்கையர்க்கரசியார் போன்றோர் சிவனடியாரைப் பேணி யமையும் இதனால் பாண்டிநாட்டிற் சைவ ஒளி நன்கு பிரகாசித் தமையும் சிவனடியாரின் பெருமையன்றோ? எனவே தான் திருஞானசம்பந்தர் குலச்சிறையாரின் சங்கம வழிபாட்டைப் பெரிதுபடுத்தி "கணங்களாய் வரினும் தமியராய் வரினும் குணங்கொடு பணியும் குலச்சிறை .”எனவும் “பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணிசெய்து நாள்தொறும் பரவ” என மங்கையர்க்கரசியாரையும் போற்றியுள்ளார்.
சிவனடியார்களிடம் பக்தி இல்லாதவர் சிவபெருமானிடமும் பக்தியில்லாதவர்கள் இவர்கள் எவ்வுயிர்க்கும் அன்பில்லாத வர்கள் என்பதைச் சைவ சித்தாந்த தத்துவ நூலாகிய சிவ ஞான சித்தியாரில் அருணந்தி சிவாசாரியார் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
ஈசனுக் கன்பில்லார் அடியவர்க் கன்பில்லார்
எவ்வுயிர்க்கும் அன்பில்லார் தமக்கும் அன்பில்லார் பேசுவதென அறிவில்லாப்பினங்களை நாம் இணங்கில் பிறப்பினிலும் இறப்பினிலும் பிணங்கிடுவர் விடுநீ ஆசையோடும் அரனடியார் அடியாரை அடைந்திட்டு
அவர்கருமம் உன்கருமமாகச் செய்து கூசிமொழிந்து அருள்ஞானக் குறியில் நின்று
கும்பிட்டுத் துண்டனிட்டுக் கூத்தாழத் திரியே.
எனவே தான் மணிவாசகப் பெருமான் பழைய அடியார்களுடன் கூடவும் அவர்களின் நடுவுள் இருக்கவும் ஆசைப்பட்டமையை அறிய முடிகின்றது.
39
"பழவடியார் கூட்டங்கான ஆசைப்பட்டேன்.
“அடியார் நடுவள் இருக்கும் அருளைப்புரியாய் பொன்னம்
பலத்தெம் முடியா முதலே.” “நெருங்கும் அடியார்களும்நீயும்நின்றுநிலாவிவிளையாடும் மருங்கே சார்ந்துவர எங்கள் வாழ்வே வாவென்றருளயே.”
"தெருளார் கூட்டங் காட்டாயேல் செத்தே போனாற்
சிரியாரோ” நின்வெறிமலர்த்தாள் தொழுது செல்வானத் தொழும் பரிற் கூட்டிடு.”
என்ற திருவாசக அடிகள் சிவனடியார்களோடு கூடியும் அவர்களோடு உறவு வைத்தும் அவர்களுக்குத் தொண்டு செய்தும் வாழ்தல் சிவனுக்குத்தொண்டு செய்வதற்குச் சமன் என்பதாகிறது. இதற்கமையவே மாணிக்க வாசகப் பெரு மானை அடியார் கூட்டத்துடன் இணைத்துக் கொண்டார் சிவபெருமான் என்பதை 'இணங்கத்தன் சீரடியார்கூட்டமும் வைத்தெம்பெருமான்’ என்றும் "சீரடியார் பொன்னடிக்கே குறி செய்து கொண்டென்னை ஆண்ட பிரான்”என்றும்
146

"உன்னடி யார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்."என்றும் திருவாசகத்திற்பாடியுள்ளார். மேலும் சிவனடியாரின் திருவடித் தொண்டு கிடைத்தற்கரிய பெரும் பேறு இதற்குக் கூடச் சிவனது திருவருள் வேண்டும். எனவே தான் “கோது மாட்டிக் குரைகழல் காட்டிக் குறிக்கொள் கென்று நின் தொண்டரிற் கூட்டாய்”என்றும்பாடுகின்றார். இவ்வாறு சிவனடியார்களின் சேவையானது சிவனுக்குச் செய்யும் சேவையாகிறது. மக்கள்பணி மகேசன்பணி என்பதும் சிவனடியார்களின் பெருமையை நமக்குக் காட்டி நிற்கிற தல்லவா? திருமூலர் தனது திருமந்திரத்திலே ஒருபாடலில் சிவனடியார்களை நடமாடுகின்ற கோயில் என்று கூறிப் பெரிய கட்டங்களைக் கொண்டமைந்த கோயிலில் இருக்கும் சிவனுக்குச் செய்கின்ற சேவைகள் வழங்குகின்ற நைவேத்தி யங்கள் நடமாடுகின்ற கோயிலாக விளங்குகின்ற சிவனடி யாருக்குச் சென்றுசேராது. ஆனால் நடமாடும் கோயிலாகிய சிவனடியார்க்குச் செய்யும் நைவேத்தியம், உபசாரங்கள் போன்றன படமாடுங் கோயிலிலுள்ள சிவனுக்கே சென்றடை கின்றன என்கின்றார்.
படமாடக் கோயிற் பகவற் கொன்றியில் நடமாடக் கோயில் நம்பார்கங் காகா நடமாடக் கோயில் நம்பாக் கொன்றியில் படமாடக் கோயிற் பகவற்க தாமே திருமந்திரம் (1821)
இதனாலேயே சாக்தசமயத்தில் சக்தியின் ஒரு வடிவமாக அன்னபூரணி இருப்பதைக் காண்கின்றோம். சிவனடி யார்க்குத் திருவமுது செய்யும் கோலத்தில் வலது கையில் தங்கக்கரண்டியும் இடதுகையில் வைரம் பதித்த குடத்துடன் காட்சி அளிக்கின்றாள்.
இவற்றைக் கருத்திற் கொண்டே பெரியபுராண அடியார்கள் இருக்கின்றார்கள் இதையே சேக்கிழார் பின்வருமாறு பாடியுள்ளார்.
"மண்ணிற் பிறந்தார் பெறும் பயன்மதிகுடும்
அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்.
த
இக்கருத்திற்கேற்ப அப்பூதி அடிகள் தன் மகன் அரவம் தீண்டி இறந்த வேளையிலும் திருநாவுக்கரசு நாயனார்க்கு உணவு கொடுக்க முற்பட்டதும், இளையான்குடிமாற நாயனார் நள்ளிரவில் விடுவந்த சிவனடியார்க்கு வீட்டில் தானியங்கள் ஏதுமில்லாத நேரத்தில் வயலுக்குச் சென்று விதைத்த நெல்லை வாரி எடுத்து வந்து, வீட்டுக் கூரையைப் பிடுங்கி எரித்துச் சமைத்துத் திருஅமுது செய்விக்கப் புகுந்தமையும், மானக்கஞ்சாறர் பஞ்சவடி செய்யத் தலைமையிர் கேட்டபோதுமகளுக்குத்திருமணம் நடைபெற இருக்கின்றதே என்பதையும் பொருட்படுத்தாது சிவனடியார்க்கு உதவி செய்ய வேண்டும் என்று மகளின் தலைமயிரை அரிந்து கொடுத்தமையும்; ஒவ்வொரு நாளும் சிவனடியார் ஒருவருக் காவது உணவுகொடுத்துவிட்டுத்தான் யான் உண்ணுவேன்
6eråafgrif grøfteb gaof 2005

Page 179
என்று விரதம்பூண்டு இறுதியாாகச் சிவனடியார்க்கே தனது அருமை மகனை அரிந்து கறி சமைத்த சிறுத்தொண்டரதும் தன்னிடமுள்ள உடைமை அனைத்தும் சிவனடியார்க்கே என்று கூறியது மட்டுமின்றித் தனது மனைவியைக்கூடச் சிவனடி யார்க்குக் கொடுத்த இயற்பகை நாயனாரினதும் வாழ்க் கையை நோக்கும் போது சங்கம வழிபாட்டின் சிறப்புப் பற்றி அறிய முடிகிறது.
இந்துக்களுடைய வாழ்வில் விரதம் முக்கியமான ஒரு வழிபாடாகும். இங்கும் கூட சிவனடியார்களை அழைத்துத் திருவமுதுசெய்யப்படுகிறது மட்டுமன்றித்திருமணம் போன்ற மங்களக் கிரியைகளிலும் அந்தியேஷ்டி போன்ற அபரக்கிரியை களிலும் சிவனடியார்களை அழைத்துத்திருவமுதுசெய்விப்ப தோடு அவர்களின் வாழ்வுக்கு வேண்டிய பொருள்களை வழங்குவதும் சங்கம வழிபாட்டையே காட்டி நிற்கிறது.
மேலும் ஆலயங்களே சைவர்களின் வழிபாட்டுத்தலமாக உள்ளன. இங்கு மகேஸ்வரனுக்குப் பணிவிடை செய்கின் றார்கள். இது பதித்தொண்டு எனப்படும். ஆனால் சிவனடியார் களுக்கும் தொண்டு செய்கின்றார்கள். தாக சாந்தி நிலை யங்கள் அமைத்துத் தாகம் தீர்ப்பதும் மடங்கள் அமைத்து அன்னதானம் கொடுப்பதும் (செல்வச்சந்நிதிக் கந்தன் அன்னதானக் கந்தன்) மரங்கள் வளர்த்து நிழல்கொடுப்பதும் எனப் பல அமையும். இவை எல்லாம் மகேஸ்வரன் பணி என்று கூறப்படுகின்றது. இதற்கு மறுதலையாகச் சிவனுக்குச் செய்யும் துரோகம் பதித்துரோகம் சிவத்துரோகம் என்றும் பசுக்களுக்கு செய்யும் துரோகம்பசுத்துரோகம்/பசுத்தீவினை என்றும் சைவசித்தாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. இதனடிப் படையை நோக்கும் போது சிவனடியார்க்குப் பணிவிடை செய்தாற் புண்ணியம் கைகூடுவது போலத் துரோகம் செய்வது தீவினை என்பதும் சிவனடியாரின் பெருமையைக் காட்டி நிற்கிறது. இக்கருத்தைக் திருமூலரும் தனது திருமந்திரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.
சேக்கிழார் மாதாது மலர்2005

பத்தினிபக்தர்கள் தத்துவ ஞான்ரிகள்
சித்தங்கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே திருமந்திரம் (515)
தாயுமான சுவாமிகள் தான் மேனிலை அடைய வேண்டும் என்பதற்கும் பேரின்பத்தை அனுபவிப்பதற்கும் சிவனிடம் வரம் கேட்கும் போது சிவனடியார்க்குப் பணி செய்யக்கூடிய நிலையை தனக்குத்தந்தால் போதும் இன்பம் கிடைக்கும் எனப் பராபரக் கண்ணியிற் குறிப்பிடுகின்றார்.
“அன்பர் பணிசெய்ய என்னை ஆளாக்கிவிட்டுவிட்டால்
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே.”
இவ்வாறு சிவனடியார்களின் பெருமையையும் அவர் களை வழிபட்டு மேனிலை அடைந்த நாயன்மார்களையும் பெரியபுராணம் மிகச் சிறப்பாகப் போற்றியிருப்பதையும் மேலே கண்டோம். 63 நாயன்மார்களில்19 நாயன்மார்கள் ஏதோ ஒரு வழியில் சிவனடியார்க்கே சேவை செய்து சங்கம வழிபாட்டால் முத்தியடைந்திருக்கின்றார்கள் அவர்கள் பெயர் விபரம் பின்வருமாறு.
திருக்குறிப்புத்தொண்டர் இடங்கழியார் விறன்மிண்டர் நின்றசீர் நெடுமாறன் அமர்நீதியார் புகழ்ச்சோழர் கலிக்கம்ப நாயனார் ஏனாதி சத்திநாயனார் இளையான்குடிமாறர் மூர்க்கர் முனையடுவார் நரசிங்கமுனையர் இயற்பகையார் சிறுத்தொண்டர் காரைக்காலம்மையார் மெய்ப்பொருள் மாணக்கஞ்சாறர் திருநீலகண்டர்
147

Page 180
- பேராசிரியர் முனைவர். 1
திருஇருதயக் கல்லு
முன்னுரை
தலபுராணங்கள் 22, சரித்திரம் 3, மான்மியம் 1, பிற காப்பியங்கள் 2, பதிகம் 4, பதிற்றுப்பத்து அந்தாதி 6, திரிபு அந்தாதி 4, யமக அந்தாதி 3, வெண்பா அந்தாதி 1, மாலை 7, பிள்ளைத்தமிழ் 10, கலம்பகம் 2, கோவை 3, உலா 1, தூது 2. குறவஞ்சி, சிலேடைவெண்பா 1, பிறவகை 1, என 80 நூல்களை, பதினெட்டு வகைகளில் பாடிய பெரும்புலவர் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள். இவர் நூல்களை இயற்றும் அருமையை பூரீஇராமசுவாமி ஐயா அவர்கள் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுப் பெருமிதம் உறுகின்றார்.
"ண்ணைவைத்தியெனைவைத்தியெனப்பதங்களிடைநின்றிரந்து வேண்ட
இனிவைப்பம்இனிவைப்பாம்பொறுத்திடுமின்பொறுத்திடுமின்என்றுகூறி
நினைவுற்ற வொரு கடிகைக்களவில் கவித் தொடைதொடுத்து
புனைவுற்ற மீனாட்சிசுந்தரவள்ளலைப் போல்வார்புவியில் யாரே இவ்வண்ணம் இப்பெருமகனார் இயற்றியுள்ள பிரபந்தங் களுள் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இக்கட்டுரையின் கருப்பொருள் ஆகிறது.
அமைப்பு:
சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 10 பருவங்களைக் கொண்டது. காப்புப்பருவம் தவிர ஏனைய பருவங்கள் பத்துப் பாடல்களைக் கொண்டது. காப்புப்பருவம் 11 பாடல்களைக் கொண்டது. வேறு பிள்ளைத்தமிழ் நூல்களில் காணமுடியாத பாயிரம் என்ற பகுதி இந்நூலில் இரண்டு பாடல்களைக் கொண்டு இலங்குகின்றது. தொடங்கிய செயல் தடையின்றி நிறைவுற விநாயகப் பெருமானைப் போற்றி வணங்குகின்றார். ஒங்கு கைலாய ஞானபரம்பரை திருவாவடுதுறை ஆதீனமுதல்வர்களைப் போற்றி குருவணக்கம் கூறுகின்றார். மேலும், உமாபதிசிவம் சேக்கிழார் மீது ஒருபுராணமே பாடியிருக்க, தாம் ஒரு பிள்ளைத்தமிழ் அவர் மீது பாடுவது அறிஞர்கள் எள்ளி நகையாடுவதற்கேயாகும் என்று அவையடக்கம் பாடுகின்றார் மொத்தமாக 103 பாடல்களை இப்பிள்ளைத்தமிழ் கொண்டிருக்கின்றது.
148
 
 

புரிசை. ச. நடராசன் - லூரி, திருப்பத்தூர்.
புதியநோக்கு:
பிள்ளைத் தமிழில் காப்புப்பருவம் முதலில் இடம் பெறும். அப்பருவத்தில் இறைவன், இறைவி ஆகியோரைப் பரவி குழந்தையைக் காத்து அருளுமாறு வேண்டுவது கவிமரபாகும். ஆனால், பிள்ளையவர்கள் சுந்தரர் பாடிய திருத்தொண்டர் தொகையில் உள்ள ஒவ்வொரு பாடலையும் அடிப்படையாக வைத்து அப்பாடலில் குறிக்கப்பெற்ற அடியார்களை, சேக்கிழார் என்ற குழந்தையைக் காக்கும் தெய்வங்களாகக் கொண்டு வேண்டுதல் செய்கின்றார். திருவாவடுதுறை பூரீஅம்பலவாண தேசிகர் மீது பிள்ளையவர்கள் பாடிய பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்திலும், அகச்சந்தானம், புறச்சந்தானம் முதலியன சைவ சித்தாந்த குரவர் பெருமக்களை, தேசிகக்குழந்தையைக் காக்குமாறு வேண்டியுள்ளார். ஆகவே பிள்ளைத்தமிழ் நூல்கள் பலவற்றைப் பாடிய சிறப்பு நோக்கியும், பிள்ளைத்தமிழில் புதுமுறை காப்புப்பருவம் பாடிய பெருமையைக் கருதியும் பெருமக்கள் இவரை “பிள்ளைத்தமிழ் மீனாட்சி சுந்தரம்பிள்ளை”என்று அழைத்தனர்.
புதிய விளக்கம்:
பெரிய புராணப் பெருங்காப்பியப் பெருங்களஞ்சியத்துள் நுழைந்து ஞான ஒளிவிடும் நவமணிகளையெல்லாம் எடுத்துக் கொணர்ந்து, பிள்ளைத்தமிழ் என்ற நவரத்தின மாலையாக்கி நற்றமிழ் அன்னைக்குச் சூட்டி மகிழ்ந்துள்ளார். பிள்ளையவர்கள் பெரிய புராணத்தில் மலிந்து கிடக்கும் நுண்கலைச்செல்வங்களை எடுத்து விளக்கமுறச் சொல்லும் வித்தகர் இவர். எடுத்துக்காட்டாக, பெரியபுராணத்தின் முதற் செய்யுளின் ஈற்றடியில் வரும் "மலர்சிலம்படி” என்பதற்குச் சிலர், மலர் போன்ற திருவடி என்று உவமைத்தொகையாகப் பொருள் கொள்ளக்கூடும் என்று கருதி, இப்பாவலர் பெருமான் “உலகெல்லாம்மலர்ந்த சிலம்படி, மலரும் சிலம்படி, மலர்கின்ற சிலம்படி” என்று வினைத்தொகையாகப் பொருள் கொள்ள வேண்டும் என்பதனை,
6tráléignif singinfo paif 2oo5

Page 181
A4
rap toஉலகெலாம் என்னும்மறை ஆதியாகக் கொண்டவர்உயிர்க்கருளும்
இயல்பனைத்தும்தெரித்து நாமேவும் அம்முதலோ டொன்றவினை உருபுதொகை
நான்கன் அடி ஆதிசெய்து நால்சீரில் நால்நெறி விளக்கி ஒளிர் சேக்கிழார்”
(Lմանյլն ) என்று பாடுகின்றார். இறைவனை அடைவதற்கு உரிய வழிகள் நான்கு என சித்தாந்தம் கூறும் மகனமைநெறி, தொண்டு நெறி, தோழமை நெறி, ஞானநெறி ஆகியவை அவை. இந்த நால்வகை நெறிகளையே 'உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன்"என்னும் அடியில் வரும் நான்கு சீர்களில் சேக்கிழார் குறிப்பிடுகிறார் என்று இப்பாவலர் விளக்குகின்றார்.
திருத்தொண்டர் தொகையில் சுந்தரரால் சிறப்பிக்கப்பெற்ற தனி அடியார்கள் அறுபதின்மர், அவர்களோடு நம்பியாரூரரையும் அவர் தம் தந்தையாகிய சடையனாரையும், தாய் ஆகிய இசை ஞானியாரையும் சேர்த்து அறுபான் மும்மை தனி அடியார் வரலாற்றையும், தொகை அடியார் ஒன்பதின்மர் புராணத்தையும் சேர்த்து சேக்கிழார் திருத்தொண்டர் புராணம் பாடியிருக்கின்றார். தொகை நூலில் இருந்து விரிநூல் விரிந்த தன்மையை ஆசிரியர் இவ்வாறு குறிப்பிட்டு உரைப்பது பொருத்தமானது ஆகும்.
"மிக்க தொகையா ரொன்பதின்மர் மேய தனியாரறுபதின்மர்
மேலுமூவர் சரித்திரமாங் கருப்பஞ் சாறு மொழிமதுரக்
கனிவாய’
(முத்தப்பருவம்-1) என்று பாடுகிறார்.
இலக்கணம் கேட்போர் பயன்
திருத்தொண்டர் புராணத்திற்கு இலக்கணம், தொல்காப்பியம். இந்நூலினைக் கேட்கத்தக்கவர், சமய தீக்கை முதலியவைகளைப் பெற்று ஐந்தெழுத்து ஒதி, சமய அடையாளங்களாகிய திருநீறு, உருத்திராக்கம் முதலியன அணிந்து, மலப்பரிபாகம் பெற்று சத்தினிபாத நிலையுற்ற உத்தமர்கள் ஆவர். பலபிறவியெடுத்து துன்பம் அடைவது நீங்கி, இன்பம் அடைவதே நூலைக்கேட்பதனால் விளையும் பயன் என்று அறுதியிட்டு உரைக்கின்றார் பாவலர். புராணம் பாடிய குன்றத்தூர் கோமானும், நூலைக்கேட்கத்தகுந்தவர் யார் எனக் கூறும்போது “மெய்ப்பொருட்கு உரியார் கொள்வர்
drdégrf s'agréé vol 2005

மேன்மையால்” என்றார். பெருங்காப்பியத்தின் பயன் இதுவெனச் சேக்கிழார் கூறும்போது மக்களின் மனத்து இருளைப் போக்கும் மாண்புடையது என்றார்.
இறைவன் அருளியதிறம்:
தில்லையில் நடம்புரியும் எல்லையில் அழகன், சேக்கிழாருக்கு “உலகெலாம்” என அடியெடுத்துக் கொடுத்த சிறப்பினை மகாவித்துவான் பலமுறை பாராட்டி உரைக்கின்றார். அடியார்களுடைய அருமையும், பெருமையும் உணர்ந்தவன் அம்பலத்து ஆடும் ஐயன் அவன். பெருமைமிகு சிவனடியார்களின் வரலாற்றை விரித்துரைக்கவல்ல புலவர் யார் என ஆராய்ந்து பார்த்தான். சேக்கிழாருக்கே அத்திறம் உள்ளது என அவன் கண்டறிந்தான். எனவேதான், அடியார் வரலாற்றை அவர் பாட முயன்றபோது “உலகெலாம்” எனத் திருவாக்கு அருளினான். மேலும் அச்சிவனடியார்கள் நிகழ்த்திய சிவநேயச் செயல்களை ஞானக்கண் கொண்டு காணுமாறு அருளினான். இவ்வாறு இறைவனால் தேர்ந்தெடுக்கப் பெற்று, அருட்கண்ணால் கடந்தகால வரலாறுகளைக் காணுமாறு செய்யப்பெற்று, நூலைத் தொடங்கிப் பாட முதற்சொல்லை எடுத்துக் கொடுத்து, யாருக்கும் சிவபெருமான் உதவியதில்லை. இப்பெருஞ்சிறப்பினை இவ்வுலகில் பெற்றவர் சேக்கிழாரைத் தவிர வேறுயாரும் இல்லை என்று மகிழ்ச்சி பொங்க ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
"அவர் வரலாறு விரித்துரை செய்பவர்
ஆரென உட்கருதிக் கடியார் மற்றவர்.அன்பத்தனையும்
கண்காண படிசெய்து காமரு முதலும் எடுத்தருளினர்இக்
கடல் சூழ் புனிஇடைஇப் படியார் பெற்றார்”
(தாலப்பருவம் 7)
வழிகாட்டி:
ஒரு நாட்டைப்பற்றிப் பாட முற்படும் புலவன் முதலில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து நிலங்களையும் முதற் பொருள், கருப்பொருள், உரிப்பொருள் இவற்றோடு பொருந்த விளக்கி, மக்கள் வாழ்க்கையின் பயனாக விளங்கும் அந்தந்த நிலத்திற்கு உரிய தெய்வங்கள் உறையும் கோயிலைப் பற்றியும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று கற்பித்தவர் சேக்கிழார் (சப்பாணி 8).
149

Page 182
இச்செய்திக்கு அடிப்படையாக அமைந்தது ଜଗuffiu புராணத்தில் வரும் திருக்குறிப்புத் தொண்டர் நாயனார் வரலாறு ஆகும். அப்புராணத்தில் ஐந்திணைகளுக்கு உரிய கோயில்களைக் குறிப்பிடும் இடத்து குறிஞ்சி நிலத்திற்குத் திருக்கழுக்குன்றமும், முல்லை நிலத்திற்குத் தக்கோலமும், மருத நிலத்திற்கு மாறபேறும், நெய்தல் நிலத்திற்குத் திருமயிலாபுரியும், திருவான்மியூரும் சேக்கிழாரால் எடுத்துரைக்கப் பெறுகின்றன.
பல்துறை அறிஞர்:
கல்வெட்டுக்கள், திருமுறைப்பாடல்கள் முதலியன அடியார் வரலாறுகளைத் தெரிவிப்பதற்கு உறுதுணையாக இருந்தாலும், சேக்கிழார் திருத்தொண்டர் தொகையைத் தான் அடிப்படையாகக் கொண்டு நாயன்மார் வரலாற்றை விரித்துரைத்தார். எனவே இவரை “விரிநூல் செய்த நன்னூல் ஆசிரியர்” என்கிறார் பாவலர். திருஞானசம்பந்தர் பாடிய “வாழ்க அந்தணர்” என்று தொடங்கும் பதிகம் பன்னிரெண்டு பாடல்களைக் கொண்டது. இப்பாடல்களுக்கு விளக்கமாகச் சேக்கிழார் 23 பாடல்கள் பாடியுள்ளார். இவ்வாறு திருமுறைப் பாசுரங்கட்குப் பொருள் விளக்கம் தருகின்ற காரணத்தால் இவர் ஓர் “உரையாசிரியர்” ஆகின்றார். வேற்றுச்சமய நெறிகளில் புகாமல் தடுக்க மக்களுக்குச் சைவநெறிமாண்பை எடுத்துரைத்ததால் இவர் “போதக ஆசிரியர்” ஆகின்றார். முப்பொருள் உண்மை முதலான செய்திகளைச் சொல்லி உயிர்கட்கு ஞானவழி காட்டுகின்ற காரணத்தால் சேக்கிழாரை “ஞானாசிரியர்” என்று உரைக்கலாம் என்று பாராட்டுகின்றார் பாவலர் (சப்பாணி 9). மேலும், இவரை “அத்தி தரும்கவி”, “புத்தி தரும்கவி”, “சித்தி தரும்கவி”, “சுத்தி தரும்கவி”, “பத்தி தரும்கவி”, “முத்தி தரும்கவி”சிறுபறை7) எனக்குறிப்பிட்டு நிறைவு அடைகின்றார் ஆசிரியர். “பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப்பாடியகவி வலவ'(தால்8)“நம்பரமகுரு சுவாமி”(சப்பாணி5)“சகலஅபூகமபண்டிதர்'(தால் ) என்று
1SO

எல்லாம் வாயாரப்பாடி மகிழ்கின்றார் பிள்ளைத்தமிழ் ஆசிரியர்.
பெரிய புராணக்கவிகளின் சுவை:
ஆவின்பால், தேன், சர்க்கரை, மா, பலா, வாழைக்கனிகள், முந்திரிப்பழம் இவைகளை ஒன்றாகச் சேர்த்து பாற்கடலில் தோன்றிய அமிழ்தத்தில் கலந்து, குழலிசை வீணையிசை ஆகியவற்றைப் புகச்செய்து, எப்போதும் சிவமணம் கமழத் திகழ்பவையே பெரிய புராணத்தீங்கவிகள் (சிறுபறை6) என்கின்றார்.
மூவர் முதலிகளாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக் கரசர், சுந்தரர் ஆகியோர் சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணக்கவிகளைக் கேட்டு உளம் மகிழ்ந்து, தலையசைத்து, கையசைத்துப் போற்றுகின்றனர் என்று நூலாசிரியர் நுவலுகின்றார். முதல் இருவர் இம்மண்ணில் இருந்தகாலம் கி.பி 7 ஆம் நூற்றாண்டு; திருநாவலூர்க்கோன் காலம் கி.பி 9 ஆம் நூற்றாண்டு; சேக்கிழார் 12 ஆம் நூற்றாண்டினர். அப்படியானால் பின்னர் தோன்றிய சேக்கிழாரின் கவிச்சுவையைக் கேட்டு முன்னர் தோன்றிய மூவரும் பாராட்டி உரைப்பது எங்ங்ணம்? என்ற வினா எழுதல் இயல்பு. ஆனால் மூவர் பெருமக்களும் சேக்கிழார் கவிதையை எங்கிருந்து கேட்டார்கள் என்று வினா எழுப்பினால் நல்ல விடை கிடைக்கும்.
குன்றத்தூர் செல்வர், தில்லை பொன்னம்பலத்தில் பல்லோர் தொழநடமிடும் பெருமான் திரு முன்பு நின்று பாடுகின்றார். அச்சந்நிதியில் நுண்ணுடல் தாங்கிய நிலையில் மூவர் முதலிகள் எப்போதும் இருப்பர் அன்றோ? காரைக்கால் அம்மையாரும் இறவாத இன்பஅன்பு வேண்டிய போது "அறவா? நீஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார் அல்லவா! எனவேதான், தில்லைச் சிற்றம்பலத்தில் சேக்கிழார் பாடியபோது, தேவாரம்பாடிய மூவரும் இருந்து கேட்டு மகிழ்ந்தனர் என்று மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் கூறுகின்றார்கள் எனலாம்.
6ørdagatografo Bodolf 2oo5

Page 183
SA
சிவலிபருமானின்
- முனைவர் 5, இள இனைப் ார் தமிழிய
சுப்பிரமணிய பாரதி
L
睦、
குருஞானசம்பந்தர்
"அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்
அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்
எவரெவர்க் குதவினர் எவரெவர்க் குதவிலர்
தவறவர்நினைப்பதுதமைஉணர்வதுவே" என்றுபாடுவர்
மனிதப்பிறவி அவரவரது வினைப்பயனால் வருவது. அவரவரது செயற்பாடுகள் அனுபவங்களைத் தோற்றுவிக்கின்றன. அந்த அனுபவங்களே அவர்களை அடையாளப்படுத்துகின்றன. இந்த அடையாளப்படுத்தும் செயலைச் செய்பவர் சிவபிரானாகவே உள்ளார் என்பதைப் பெரியபுராணம் மிகச்சிறப்பாக எடுத்துரைக்கின்றது. எந்தக் குலமாயினும், எந்தச் சமயமாயினும், எந்தத் தொழிலாயினும், தன்னிடத்து அன்பு கொண்டவர்கள் இருப்பரேல், அவர்கள் செய்யும் செயற்பாடுகளின் வழியே சென்று, அவர்களை முழுமையாகச் சோதித்து, அந்தச் சோதனையில் வெற்றி பெறும் அடியவர்களை இச் சமுதாயத்தில் அடையாளப்படுத்தி அவரவரது செயற்பாடுகளுக்குத்தக்க அளவில் வீடுபேற்றை அருள்பவராகச் சிவபிரான் செயற்பட்டிருப்பது ஆராய்ந்து மகிழ்தற்குரியதாகும்.
மனுநீதிச்சோழன்
எத்துணையோ மன்னர்கள் இப்புவியில் வாழ்ந்திருக்க இறை அன்பனாய், முறை செய்து மக்களைக் காப்பாற்றிய மனுநீதிச்சோழனின் புகழ் மட்டிலும் காலங்கள் கடந்தும் நிற்பதற்குக் காரணம் அவனது “முறை”, தன்பாச உணர்வையும் விஞ்சியதாக இருந்ததே. இத்தன்மை உடையான் இவன் என்று உலகுக்குக் காட்டவே இறைநடத்திய நாடகமே பசுக்கன்று இறக்க, பசு ஆராய்ச்சி மணியடித்தது. தன் ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாது பிற உயிரினங்களும் துன்பப்படக் கூடாது என்று நினைப்பவன்; தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் வேறுபாடில்லாது தண்டனை வழங்குபவன்; நீதிமான் என்று போற்றப் பெற்றவன்; இந்த நீதிமுறை தான் பெற்ற மகனாக இருந்தாலும் இருக்க வேண்டும்; அவனே உயர்ந்த அரசன். இச்செயற்பாடு மனுநீதியிடம் உள்ளதா? இருக்குமெனில்
Giordágaríf ografob9a0f2oo5 nama
 
 
 
 

மதி சானகிராமன் - பேராசிரியர் ற் புலம், புதுவைப்பல்கலைக்கழகம்.
அவனை எதிர்கால மக்களும் உணர்ந்து போற்றச் செய்து காலங்களால் அழியாது அவன் புகழைக் காக்கச் செய்யவேண்டும் என்ற திருநின்ற செம்மையைக் கொண்டு செயல்பட்டார் சிவபிரான். மனுநீதி சிவபிரானிடம் அன்பு பூண்டதைச் சேக்கிழார்,
“பொங்கு மாமறைப் புற்றிடங் கொண்டவர் எங்கு மாகியிருந்தவர் பூசனைக் கங்கள் வேண்டு நிபந்தமா ராய்ந்துளான் துங்க வாகமஞ் சொன்ன முறைமையால்
(Ghulfly. 16) என்பர்.
இவனது அரசாட்சி முறையை, “மாநிலங் காவலனாவான் மன்னுயிர் காக்குங்காலை தானதனுக் கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயமைந்துந் தீர்த்தறங்காப்பானல்லனோ 99
(பெரிபு:36) என்று அரசாட்சிமுறைக்கான இலக்கணத்தோடு ஒப்பிட்டுக் கூறுவர். இவன் தன்னால், தன்பரிசினத்தால் - என்னும் இரண்டிற்குக் காட்டாய் விளங்குபவன் மனுநீதி.
தன்தேர்க்காலில் வீழ்ந்திறந்த பசுக் கன்றுக்காக உடன் வருந்திய இளவரசன், இதற்குப் பரிகாரத்தையும் தானே செய்ய விரும்பி அதற்குரியவர்களிடத்துக் கேட்கிறான். பசுவோ உடனடியாகச் சென்று ஆராய்ச்சி மணியை அடித்து விடுகின்றது. அரசன் வினவுகின்றான். அமைச்சர்கள் பரிகாரம் குறித்துக் கூறுகின்றார்கள். இக்காலத்தில் மன்னனாக இருந்தால் இதற்குச் செவிசாய்த்திருக்க மாட்டான். அத்துணை அமைச்சர்கள் பல்வேறு காரணங்களைக் கூறியும் ஏற்காது, எக்காலத்து எந்தப்பசு இது போன்று ஆராய்ச்சி மணியடித்தது என்று கேட்டு தன் மகனையும் தேர்க்காலில் இட்டுக் கொல்லச் சொல்கிறான். சென்றவர்கள் தாங்களே மாள, இவனே தேர்க்காலில் தம்மகனை இட்டுக் கொல்கிறான். இதுதான் - இந்த நீதிமுறைதான் சிவபிரானால் போற்றப் பெறுகின்றது. இறந்தவர்களை எழுப்பி அருள்பாலிக்கின்றார்.
இவ்வாறாகவே, படைத்தளபதியாகவிருந்த சிறுத் தொண்டநாயனாரின் செயற்பாடுகளில் எதிரிகளை மட்டுமே
151

Page 184
கொல்லும் திறமுடையவரா? அன்றித் தம்மகனையும் கொல்லும் திறமுடையவரா? என்று ஆராயவே பிள்ளைக் கறிகேட்ட சிவபிரான், தம் குலத்துக்கொரு மகனைத் தம் கையாலேயே அறுத்து உணவு படைக்கின்றார். இச்சீர்மை மற்றொருவரிடத்துக் காணல் அரிது; எனவேதான் இப்பண்புடைய சிறுத்தொண்டநாயனாரின் புகழை வெளிக் கொணருகின்றார் சிவபிரான். t
அரசருக்கு வாள்பயிற்றும் தொழில் செய்து ஈட்டும் ஊதியத்தைச் சிவனடியாருக்கு ஆக்கி வந்த ஏனாதி நாயனாரை வஞ்சனையால் கொல்லக்கருதிமேனி முழுவதும் வெண்ணிறு இட்டு, திருநீறிட்டார்க்கு எவ்விடத்தும் இவர் தீங்கு செய்யமாட்டார் என்பதை உணர்ந்துதன் எண்ணத்தை
அறிவை (
அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழி மு. மனத்தை ஒருமுகப்படுத்துவதாகும். கல்வியி
முகப்படுத்துவதுதான். சாதாரண மனிதனிலிரு அனைவரும் தங்களுடைய அறிவு வளர்ச்சிக்கு அ
152
 

நிறைவேற்றுகின்றான் பொற்றொடிபாகனார், அடியாரின் அன்பு உள்ளத்தைக் கண்டு பகைவனின் கைவாளினால் பாசமறுத்து என்றும் பிரியாது தம்முள் இருக்கும் அன்புநிலையினை அருளிச் செய்கின்றார்.
நமிநந்தியடிகள் விளக்கேற்ற நெய்யின்மையால் நீர் முகந்து கொண்டுவந்து சிவன் திருநாமத்தை நெஞ்சில் நினைந்து விளக்கேற்ற விளக்கு சுடர்விட்டு எரிகின்றது.
எவரெவர் எத்தொழிலால் சிறந்து விளங்கினார்களோ அத்தொழில்களினாலேயே அவர்களை மேன்மையடையச் செய்து அவர்தம் புகழை இவ்வுலகுக்குக் காட்டித் தம் கருணையால் இணைத்த சிவபிரானின் செம்மை அவரவர் வழிப்படும் திருநின்ற செம்மையன்றே!
வளர்த்திட
றை தான் இருக்கிறது அது தான் நம்முடைய ன் அடிப்படைக் குறிக்கோளே மனத்தை ஒரு ந்து எல்லாச் சக்திகளையும் பெற்ற யோகி வரை அந்த முறையைத்தான் பின்பற்றியாக வேண்டும்.
- சுவாமிவிவேகானந்தர்
الص
ardagnført af 2oo5

Page 185
லிபரியபுராணச்
一项。琐
ஆராய்ச்சி அலுவலர், இந்து சமய
அருள் மொழித்தேவர் என்ற சேக்கிழார், மந்திரிப்பதவி பெற்றிருந்த வாய்ப்பில், சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று கோயில் வரலாறு, அடியார் வரலாறு எல்லாவற்றையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். ஆகையால் சிவனடியார் வரலாற்றை பக்தி ரசம் பிறக்கத்தக்கதாக விளக்க முடிந்தது. சேக்கிழார் காலத்தில், சைவ சமயத்தவர் சிலர் சைவநூல்களின் மெய்மை உணராது, புறச்சமயத்தவர் ஆக்கிய சீவக சிந்தாமணி போன்ற நூல்களை மெய்யென நம்பி அக்காவியச் சுவைகளில் ஈடுபட்டு மகிழ்ந்தனர். சோழ மன்னனும் சிந்தாமணிக் கதையை மெய்யெனப் பாராட்டிக் கேட்பானாயினான். அதனால் மனம் நொந்த மந்திரி சேக்கிழார், அரசனை நோக்கி “வேந்தர் பெருமானே! நீவிர் சைவ சமயத்தவராய் இருந்தும், சிவனடியார்களின் மெய்மை வரலாறுகளைக் கேளாது, சிவப்பரம் பொருளை நிந்திக்கும் சமணர்களின் இக் காப்பியத்தை சுவைத்து மகிழ்தல் முற்ையாகாது” என அறிவுறுத்தினார்.
மன்னனது வேண்டுகோளுக்கிணங்க சேக்கிழார் இறைவனால் “தில்லை வாழ்ந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என அடியெடுத்துக் கொடுத்தருளி நம்பியாரூரரால் (சுந்தரர்) பாடப்பெற்ற திருத் தொண்டர் தொகையினையும், இத் திருப்பதிகத்திற்கு வகை நூலாக திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் அருளைப் பெற்ற நம்பியாண்டார்நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் ஓதி அதற்குப் பொருள் கூறினார். சிவனடியார்களின் வரலாறுகளைக் கேட்டு உளமுருகிய வேந்தன், திருத் தொண்டர்களின் மெய்மை வரலாறுகளை நாட்டுமக்கள் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளும்படி செந்தமிழ் காப்பியமாகப் பாட வேண்டும் என்ற பணிப்பை ஏற்றுக் கொண்டு, மன்னனிடம் பொருளுதவி பெற்று சிதம்பரம் வந்துதன் கைங்காரியம் இனிதே இடம்பெற இறையருளை நாடி நின்றார். அவ் வேளையில் 'உலகெலாம் என்று இறைவன் அடியெடுத்துக் கொடுக்க, சிதம்பரத்தில் பொற்றாமரை வாவிக்குப் பக்கத்திலுள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து அற்புதமான இந்தப் பெரிய புராணத்தைப் பாடி முடித்தார்.
நாயன்மார் வரலாறுகளுக்குரிய மூலங்களை எல்லாம் இலக்கியம், கர்ண பரம்பரைக் கதை, கல்வெட்டு இவற்றைக் கொண்டு தொகுத்த சேக்கிழார், தம் தமிழ் புலமைத்
sordágaf øgrøath gaof 2005
 
 

O O O UUqLD UlugD
தியவதி -
கலாசார அலுவல்கள் திணைக்களம்
திறத்தினாலே பெருங்காப்பியமாகச் செய்து அதற்குத் திருத் தொண்டர் புராணம் எனப் பெயரிட்டார் என்று தெரிகிறது. திருத்தொண்டர் புராணத்தைப் பாடத் தொடங்கிய சேக்கிழார் அடிகளார், அக் காப்பியத்திற்கு மூலமாகிய திருத்தொண்டர் தொகையை அருளிச் செய்த நம்பியாரூரரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு, அதில் போற்றப் பெறும் தொண்டர்களின் வரலாறுகளை நிரல்பட அமைத்து, சேரமான் பெருமாள் நாயனாருடன் திருக்கைலாயம் சென்ற செய்தியுடன் இக் காப்பியத்தை நிறைவு செய்துள்ளார். இன் நூல் திருமலைச் சருக்கம் முதல் வெள்ளானைச் சருக்கமீறாகப் பதின்மூன்று சருக்கங்களை உட்ையது.
பெருங் காப்பிய நிலைக்கு ஒத்து விளங்கும் பெரியபுராணத்தைச் செய்த ஆசிரியர் சேக்கிழார், பழந் தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற பழைய இலக்கியங்களைப் பழுதறப் படித்த பெரும் புலவர் என்பதை அவரது காப்பியம் தெளிவாகச் செப்புகிறது.
தமிழ் இலக்கியங்களில் ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள் பலவும் சமண, பெளத்த, சமயக் காப்பியங்களாகும். சிலப்பதிகாரம் சமயப் பொது நூல் எனினும் சிறப்பு வகையில் அதனை இந்து சமயக் காப்பியமென்றே கொள்வர். மணிமேகலை, சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்பன அவைதீகசமயநூல்கள். கம்பராமாயணம், பாரதம், பாகவதம், நைடதம், அரிச்சந்திரபுராணம் முதலியவை இந்து சமயச் சார்புடையவை. ஆயினும் இக் காவியங்கள் அனைத்தும் வட நாட்டில் நிகழ்ந்தவை; வடமொழிச் சார்புடையவை. அவற்றிற் கூறப்பெறும் ஊர்கள், நகர்கள், கதைக்குரியவர்கள் யாவரும் வட நாட்டவரே. இந்து மக்கள் என்ற வகையில் அக் காப்பியங்களை எல்லாம் வட நாட்டவர்களை விடத் தமிழர்களே இன்றளவும் போற்றிக் கொண்டாடுகின்றனர். தமிழ் இனத்தின், மொழியின் நூல்களின் சிறப்பிற்குப் பெருங் காரணமாய், எடுத்துக் காட்டாய் விளங்குவது திருக்குறள் மட்டுமே. ஆயினும் அஃது உலகப் பொதுநூல் ஆதலின் தமிழ், தமிழினம் என்னும் சிறப்பு நிலை பற்றி யாதும் கூறுவதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. இந்நிலையில் திருத் தொண்டர் புராணமான இக் காப்பியம் ஒன்றே தமிழ் நாகரிகம், பண்பாடு, கலை, மரபு மொழி, சமயம், அரசியல்,
153

Page 186
சமூகவியல், தமிழ்மொழியும், சமயமும் வளம் பெறத் தொண்டாற்றிய அருட் செல்வர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், திருநீறு, திருவைந்தெழுத்து, திருக்கோயில் வழிபாட்டின் இன்றியமையாமை குரு, லிங்க, சங்கம வழிபாட்டின் சிறப்பு ஆகியவற்றை விரித்து விளக்குகின்றது. புறச் சமயங்களான பெளத்த, சமண சமய நடைமுறைகளும் கூறப்படுகின்றது. இப் பெருங் காப்பியத்துட் கூறப்படும் நாடுகள், நகர்கள், ஊர்கள், அரசர், அந்தணர், வணிகர், வேளாளர், கோயில்கள், விழாக்கள், நால்வகை அறங்கள், பழக்க வழக்கங்கள், வரலாறுகள் யாவும் தமிழ் மக்களுக்கே உரிய தனிச் சிறப்பாகும். இதனால் தமிழ் இனத்தின் பெருமையை, மதிப்பை உலகிற்கு உணர்த்தி நிற்பதோடு தமிழ் மக்களுக்கு இனப்பற்றையும், மொழிப்பற்றையும் ஊட்டி நிற்கின்றது.
தமிழ் நாட்டிலே சமண, பெளத்த மத வளர்ச்சியினால் நலிவுற்றிருந்த சைவ சமயத்திற்குப் புத்துணர்வும், புதுப்பொலிவும் கொடுத்து வீறு நடை போடச் செய்தவர்கள் நாயன்மார்கள். இவர்களைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர் தொகையில் பெயர்களை மட்டும் கூறி அவர்கட்குத் தம்மை அடியேன் என்று கூறியுள்ளார். 21 நாயன்மார்கட்கு அவர் தம் வரலாற்றைக் குறிக்கும் சிறிய குறிப்பும் ஒரு சிலருக்கு சற்று விரிவாகவும் கூறி உள்ளார். இவையும் இரண்டு மூன்று வரிகளிலேயே கூறப்பட்டுள்ளது. திருத்தொண்டர் தொகைக்கு வழிநூல் செய்த நம்பியாண்டார் நம்பிகள், நாயன்மார்கள் பலருக்கு அவர்தம் வரலாற்றை ஒவ்வொரு பாடலிலும் சிலருக்கு இரண்டு பாடல்களிலுமே சிறப்பித்து உள்ளார். சேக்கிழார் பெருமான் பெரும்பாலும் 20, 30, 50, 300, 900, 1256 செய்யுட்களில் நாயன்மார்களின் வரலாறுகளை விரித்துரைத்துள்ளார். இஃது சைவ உலகிற்கு பெரியபுராணத்தினூடாகச் சேக்கிழார் செய்த மிகச் சிறப்பான கைங்கரியமாகும்.
இவ்விடத்தில் ஒரு கேள்வி எழுகின்றது? சேக்கிழார் கூறுமாறு ஒவ்வொரு சொல்லும் தொடரும் வரலாற்றில் அப்படியே நடந்தனவா என்பது? நாயன்மார் வரலாற்றில் காணப்படும் சொற்கள், தொடர்கள், உரையாடல்கள், செயல்கள் என்பன அப்படியே நடந்தன எனக் கொள்ள வேண்டுமென்பதில்லை. காவிய நயத்திற்காக பல உரையாடல்கள், நிகழ்ச்சிகளைச் சேர்த்திருக்கலாம். மையப் பகுதிகள் சேக்கிழாருக்கு முன்பே நம்பியாண்டார் நம்பியால் கூறப்பெற்றவையாகும். நாயன்மார்கள், இறைவன் திருவருள் ஒன்றையே கொண்டு திருத் தொண்டாற்றியவர்கள் ஆதலின், அவர்களின் அருஞ் செயல்களின் இறுதியில் கிடைப்பது இறையருள் என்னும் பெரும் பயனே இதைத்தான் சேக்கிழார் பெருமான் காட்ட விழைகிறார். ஆகவே காப்பிய நயத்திற்காக, சுவைக்காகக் கூறப்பட்ட விடயங்கள் சிலவற்றைக் கருத்திலெடுக்காது அதன் கருப்பொருளின்
54

ஆழ அகலங்களை அறிந்து கொள்ள முற்படுவதே எமது கடமையாகும். w
சேக்கிழார் பெரிய புராணத்தின் மிகப் பெரிய சிறப்பும், பயனும் இறைபக்தி பற்றி அவர் காட்டும் முறைமையாகும். திருநாவுக்கரசரைப் பற்றிய பாடல் ஒன்றிலே,
"தூய வெண்ணிறுதுகைந்த பொன்மேனியும்தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரு சிந்தையும் நைந்துருகிப் பாய்வது போல் அன்புநீர்பொழிகண்ணும்பதிகச் செஞ்சொல் மேயசெவ்வாயும் உடையார் புகுந்தனர் வீதியுள்ளே”
பாடலின் முதல் அடி வருபவரின் புறத் தோற்றத்தைக் காட்டுகின்றது. விபூதியும், உருத்திராக்கமும் அவ்வுடலை அணிசெய்கின்றன. இது குறிப்பிட்ட சமயச் சின்னமாதலால் இதனை விடுத்துப் பாடலைப் பார்ப்போம். நைந்து உருகிப் பாய்வது போலக் கண்ணிர் ஊற்றெடுத்து வருகின்றது. இந்தக் கண்ணிர் அன்பின் வெளிப்பாடு.
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும்”
என்ற குறட் பாவை இச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வது பொருத்தமானது. பாடலின் இரண்டாம் அடியின் முதற்பகுதி “நாயகன் சேவடி தைவரு சிந்தை” என்பதால் அகமனமாகிய சித்தம் இறைவனிடம் தங்கிவிட்டது. மனம், வாக்கு, காயம் என்ற மூன்றும் எந்தவிதத் தூண்டுதலும் இன்றி, இறை அன்பில் பூரணமாகத் திளைத்திருத்தலே பக்தி என்று எடுத்துக் கூறுகிறார்.
சேக்கிழார் காலத்தில் சாதி பற்றிய உணர்வும், வெறியும் மிகுதியாக இருந்தன. அவற்றைப் போக்கவும், மனித குலம் (அடியார் குலம்) ஒன்றுதான் உண்டு. ஒழுக்கமும் உண்மைப் பக்தியுமே சிறந்தவை என்பதைக் காட்டி நிற்கிறார் இப் பெருமகனார். சேக்கிழார் பெருமான் சாதி பற்றித் தெரிவிக்கின்றாரே எனில், கீழ்ச் சாதி என்று கருதப்படும் குலத்தைச் சார்ந்தாரிலும் நாயன்மார் உளர். ஆதலின் சாதியில் எவர்க்கும் பெருமை, உரிமை இல்லை என்று உணர்த்தும் பொருட்டே அப்படிக் கூறினார் என்று கூறுவதே பொருத்தமுடையது. அந்தணர்கள் பெரிய புராணத்தில் போற்றப்படுகிறார்கள் எனில், சாதிக்காக அல்ல அக்காலத்தில் அவர்கள் மேற்கொண்டு ஒழுகிய - நடத்திய நற்செயல்களுக்காகவே என்பதை அவரருளிய தில்லை வாழ்ந்தணர் புராணத்தால் அறியலாம்.
வருமுறை எரிமூன்று ஒம்பு மன்னுயிர்அருளால் மல்கத்
தருமமே பொருளாக் கொண்டுதத்துவ நெறியிற் செல்லும்
அருமறைநான்கினொடு ஆறங்கமும்பயின்றுவல்லார்
திருநடம் புரிவார்க்காளாம் திருவினாற் சிறந்த சீரார் இப் பாடல் சேக்கிழாரின் மனநிலையைப் புடம் போட்டுக் காட்டுகிறது.
dráliágrif garto pao 2oo5

Page 187
சேக்கிழார் தன் பெரிய புராணத்தின் மூலம்
உலகோர்க்கு எடுத்துக் கூறும் சிறப்பான செய்தி, அடியாரை அரனாகக் கருதி வழிபட வேண்டும் என்பதாகும். அடியவர்களின் திருவேடம் சிவவேடத்தை எதிர் ஒலிப்பது. எனவே அடியவர் வேடத்தில் சிவசொரூபத்தைக் கண்டு வழிபடுவதையே அடியார் வழிபாடாகக் கூறுவர். தன்னலத்தை அறவே விட்டு, அடியார் தொண்டினால் மட்டுமே இறைவன் அருளைப் பெறுதல் கூடும் என்கிறார் தெய்வச் சேக்கிழார். சேக்கிழார் கூறும் நாயன்மார்களின் வரலாறுகளை உற்று நோக்கும் பொழுது, அடியார் வழிபாட்டினை நாம் பின்வருமாறு பாகுபடுத்தலாம்.
அடியார் வேடத்தை வழிபட்டவர்கள் அடியவர்கட்கு அமுது அளித்தவர்கள் அடியவர்கட்கு வேண்டும் பொருளாகக் கொடுத்தவர்கள் அடியார் வழிபாட்டிற்கு இடையூறு செய்தவர்களைத் தண்டித்தவர்கள்
தீயானது தன்னைச் சேர்ந்த இரும்பைத் தன்னுள் அடக்கித் தன் வண்ணமாக்குவது போலச் சிவோகம் பாவனையால், தன்னை உணர்ந்த அடியார்களை இறைவன் தன் வியாபகத்துள் அடக்கிக் கொள்கிறான். இவ்வகையால் அடியார்கள் சிவனேயாதலின் அவர்களை வழிபட வேண்டும்
விரும்பத்த
நாட்டின் பெயரால், இனத்தின் பெயர
உயிர்களைக் குறிப்பாக மனிதஉயிர்களை வேறு விரோதமான செயலாகும்.
6räáŝgnifo sanparto Asamo 2005
 

என்ற பேருண்மையை உலகோர் உணரவேண்டும் என்பதற்காகவே சேக்கிழார் பெருமான் தன் காப்பியத்திற்குத் தொண்டர் புராணம் என்று பெயர் தந்துள்ளமை அறியத்தக்கது.
"சங்கரன்தாள் தமது சிரங் கொள்திருத்தொண்டர் புராணத்தை யளவிட நம் சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கும் அரிதே'
என்கிறார் உமாபதி சிவாச்சாரிய சுவாமிகள். திருத் தொண்டர்கள் அளவிடற்கரிய பெருமையுடையவர்கள். அவர்களது பெருமைகளை எல்லாம் விரித்துணர்த்த வல்லவர் சேக்கிழார் சுவாமிகளேயாவார் என்பதே இதன் பொருள்.
இப் பெருங் காப்பியம் மன்பதை உய்ய, பல பயன் தரு வழிகளைக் காட்டி நிற்பதால்தான் சென்னை, பூவை, கலியாண சுந்தர யதீந்தரர் என்ற மாபெரும் சைவப் புலவர்,
“பெந்தமெலாம் போக்கும் பெரியபுராணந்தந்த எந்தை பிரான் சேக்கிழார் இவ்வுலகில் வந்திலரேல் நாயன்மார் கீர்த்தி எங்கே நல்ல தமிழ் வேதமெங்கே தூய சிவபக்தி எங்கே சொல்”
என்ற திருவெண் பாவைப்பாடியருளினார்.
காத செயல்
ால், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், 2றுபடுத்திப் பிரித்துப் பேசுவது இறைவனுக்கு நேர்
-ராமலிங்கவள்ளலார்
155

Page 188
பெரியபுராணம் உண
ர்த்
முருகு இ துணைத் தலைவர்- கை மயிலாப்பூ
தமிழ் இலக்கியப் படைப்பில் பத்தி இலக்கியங்கள் சமயத்தின் நிறைவான தன்மையைப் பெற்றுள்ளன. இவ்விலக்கியங்கள் சமுதாயத்தில் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இத்தன்மை பெற்ற இலக்கியங்கள் இன்றளவும் பத்திப் பேழைகளாகத் திகழ்கின்றன.
பெரியபுராணம், நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி அறிவிக்கும் ஒரு பெரு நூலாகும். இந்நூலில் வாழ்வியல் நெறிகள் பல இடங்களில் உயிர்பெற்று நிற்பதை நம்மால் சிறப்பாக அறியமுடிகிறது.
“வாழ்வியல் நெறி” என்பது இவ்வுலகில் மனிதன் பிறந்தகாலம் முதல் இறக்கும் காலம் வரை அவன் செய்யும் செயல்களும், கடைப்பிடித்த கொள்கைகளும் வாழ்வியல் நெறிகளாகி உருக்கொள்கின்றன.
இப்பூலோகத்தில் “மனிதன் அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்நான்கினைக் குறிக்கோளாகக் கொண்டு வாழத் தலைப்படுதலே சிறந்த வாழ்வியல் நெறி” என்று அறிஞர் அ. ச. ஞானசம்பந்தம் தம்முடைய ஆய்வில் குறிப்பிடுகிறார்.
“பெரியபுராணம்’ என்ற பெயர் கேட்ட மாத்திரத்தில் இது அளவிலும், உருவிலும், அருளிலும் மிகப்பெரிய புராணம் என்பதை யாரும் மறுக்கஇயலாது. சேக்கிழார் பெருமான் பல நாயன்மார்களின் வாழ்க்கையோடு இணைந்த மெய்ப் பொருள்களையும், அவற்றை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தையும் நயம்பட உரைக்கிறார்.
முதல் அமைச்சராக இருந்த சேக்கிழார் பெருமான், பரந்த ஆழ்ந்த நுண்மாண் நுழைபுலம் உடைய பெருந்தகை, வரலாற்று உணர்வு உடையவர், தலந்தோறும் சென்று, கல்வெட்டுகள், ஆவணங்கள், அரசர் பற்றியும், குடிமக்கள் பற்றியும் படம்பிடித்துக் காட்டியுள்ளார். ஒவ்வொரு அடியார் பிறந்த ஊருக்கும் சென்று, அங்கு வழங்கும் செவிச் செய்திகளைக் கேட்டு ஆய்ந்து, அவர்கள் வரலாற்றை அருளியுள்ளார்.
சேக்கிழார் தாமே திருத்தலங்களுக்குச் சென்று கண்டு வியந்து பாடினார் என்பதனை “யாமறிந்தபடி பகர்ந்தன்” “அறிந்தபடி துதி செய்தேன்” என்ற அவரது கூற்றே மெய்ப்பிக்கும்.
156
 
 
 

JT1D65b. வசித்தாந்தப் பெருமன்றம், ர், சென்னை
அன்பு நெறி
சிவனடியார் வேடத்தை மெய்ப்பொருள் என்று போற்றி வாழ்ந்தவர் சேதி நாட்டு மன்னர் மெய்ப்பொருள் நாயனார். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பாங்கு பெரியபுராணத்தில் வரும் இந்த மெய்ப்பொருள் நாயனார் வாழ்வில் இடம்பெறக் காண்கிறோம். இந்த சேதிநாட்டு மன்னனின் மீது காழ்ப்புக்கொண்ட முத்தநாதன் போரிட்டுத் தோல்வியுறுகிறான். அம்மன்னரை வெல்வதற்குத் தவக்கோலமே ஏற்றதெனக் கருதி, தவக்கோலத்தில் மன்னனைப் படுக்கையறையில் சந்திக்கிறான். “உங்கள் நாயனார் முன்னம் உரைத்த ஆகமநூல் ஒன்று மண்மேல் இல்லாததொன்று கொடுவந்தேன் என்று இயம்ப' என்று மெய்ப்பொருள் நாயனாரை தனிமைப்படுத்தித் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறான். இதனை சேக்கிழார் தொழுதகையுள் ஒடுங்கிய படைக்கருவியான் தான் நினைத்த அப்பரிசே செய்கின்றான்’ என்பார். உடலெங்கும் குருதி பீறிட உயிர் ஊசலாடித் தவிக்கும் மெய்ப்பொருளார், அவனைக் கொல்வான் விரைந்த தத்தனைத் தடுத்து சிவனடியார் கோலத்து உள்ள அவர் “தத்தா நமர்” எனத் தடுத்தார். மேலும் முத்தநாதனை அழைத்துக் கொண்டு ஊர் எல்லை தாண்டி சேர்ப்பிக்கப் பணிக்கிறார். கொடிய வஞ்சகனுக்கும் அருளுகின்ற கருணை நெஞ்சம் கைவரப் பெற,
"அன்பும் சிவமும், இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது யாருமறிகிலார் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே”
என்று திருமந்திரம் காட்டும் “அன்பே சிவம்” என்னும் வாழ் வியல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும். இதனையே “மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்” என்ற திருவள்ளுவருடைய கருத்தும் இங்கே நோக்கத்தக்கதாகும். இதனைப் பின்பற்றுவோமாயின் பகைமை ஒழியும், நட்பு செழிக்கும், நாடும் வீடும் நலம் பெறும்.
இறைவன் அன்பு நெறியால் வழிபடும் யாவரையும் விரைந்து உவந்து ஆட்கொள்கின்றான். சாக்கிய நாயனார்
Berdaganfograf gaof 2005

Page 189
கல்லையே மலராகக்கருதி எறிந்தார். அதனைச் சிவபெருமான் மலர் வழிபாடாகவே மனங்கொண்டு அவரை ஆட்கொண்டான்.
நான்மறை, ஆறு அங்கம் கற்ற கேள்வியராகிய சிவகோசரியாராகிய அந்தணர் காளத்தி மலையிலுள்ள குடுமித் தேவரை வேதநெறிவழுவாமல் தொழுது, அர்ச்சித்து வருகின்றார். எனினும் அவருக்குக் கிட்டாத அரும்பெரும் பேறு, ஆறே நாள்கள் வழிபட்டவராகிய வேடகுலத்து உதித்த திண்ணனார் எனும் கண்ணப்ப நாயனாருக்குக் கிட்டிய தென்றால் என்ன காரணம்? யாதொரு பிரதிபலனும் எதிர்நோக்காத மாசற்ற அன்பல்லவோ அவரிடம் நிறைந்திருந்தது. விதிப்படியான மார்க்கத்தைவிடப் பத்தி மார்க்கத்தையே பெருமான் விழைகின்றானே, ஏன்? அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையாக உள்ளவன் எனும் வடலூர் வள்ளாலார் வாக்கு மாபெரும் மெய்யாகும்.
6)
மனிதனுடைய பொறி புலன்களோடு கூடிய இன்ப வாழ்விற்கென்றே இறைவன் எண்ணற்ற இயற்கை வளங்களை வகுத்துத் தந்துள்ளான். அதுபோல் செல்வர் மாட்டுள்ள செல்வத்தின் பயன் ஈதலே. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதலே தலை சிறந்தது. இல்லையென்று இரந்து வருவோர்க்குத் தம் செல்வத்தை இட்டு ஈகைப் பயனைஅருளை எய்தல் வேண்டும். சூதாடிப் பொருளைச் சேர்த்து அறம் செய்து வழிபட்ட மூர்க்க நாயனாரையும், நாவுக்கரசர் பெயர்வைத்துத் தம் செல்வத்தைக் கொண்டு அறம் செய்து செலவிட்ட அப்பூதியடிகளாரையும், வறுமை நிலையிலும் வயலில் விதைத்த நெல்லினை அள்ளிவந்து அடியவர்க்கு உணவிட்ட இளையான்குடி மாற நாயனாரையும், அடியார்க்குத் தொண்டு செய்தலையே தன் தொண்டாகக் கொண்ட நாயன்மாரையும் பெரிய புராணத்தில் காண்கிறோம்.
“ஈயென இரத்தல் இழிந்தன்று, ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று”என்ற தமிழ்ப்பண்பே மனிதநேயம். கேட்டது எதுவாயினும் அதைக் கொடுத்தே சிறப்பது ஈகையின் தலையாய தன்மை. மகனையே கறியாக்கித் தரக் கேட்டபோதும், அடியவர்க்காகத் தாயும் தந்தையும் மகனையே கறியாக்கிய சிறுத்தொண்டரைக் காணும்போது ஈகைப் பண்புக்கு விளக்கம் கிடைக்கிறது. தன் தேவைகளும் ஆசைகளும் நிறைவேறும் போது, நிறைவேற்றப்படும் போதுதான் மனிதன் மனிதனை நேசிக்கிறான். இதற்கு மாறான உளவியல் அடிப்படையிலேயே பெரிய புராணம் அமைந்துள்ளது.
விருந்தோம்பல்:
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. (குறள் 81) என்ற இல்லறத்தின் சிறப்பே விருந்தோம்பலை அடிப்படையாகக் கொண்டதாக வள்ளுவர் எடுத்தியம்புகிறார். இத்தகு சிறப்பை
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

இளையான்குடி மாற நாயனார் இல்லற மாண்பாகக் காணலாம். தம் வீட்டிலே உணவுப் பொருள்களே இல்லாத நிலையிலும், ஏன் அடுப்பு மூட்ட விறகுகூட இல்லாத நிலையிலும், தம் வீட்டுக் கூரையில் உள்ள சாத்துகளை விறகாக்கி, வயலிலே விதைத்த நெல்லைப் பொறுக்கி எடுத்து வந்து உணவு சமைக்கச் செய்வதும், கறிக்குப் புறக்கடையின் புன்செய் பயிர்களைத் தடவித் தடவி பறித்து வந்து ஏற்பாடு செய்வதும் இறைபணி வாயிலாக வெளிப்படும் ‘விருந்தோம்பல்” பண்பாகக் காணப்படுகிறது. இதனை,
"காலினால்தட விச்சென்று கைகளால் சாலிவெண்முளை நீர்வழிச் சார்ந்தன *கோலி வாரி இடா நிறையக்கொண்டு
மேல்எடுத்துச் சுமந்தொல்லை மீண்டனர்” உள்ளிட்ட பெரியபுராணப் (இளையான்குடி மாற நாயனார் புராணம். பா.எண் 18-23) பாடல்களால் அறியலாம்.
உள்ளநிறை அன்போடு அடியாரை உபசரிக்கும் சிறுத்தொண்டர் பயிரவரிடம் நீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும் எனப் பணிவுடன் கேட்க, அவரும் நாம் உண்ணப்படும் பசுவும் நாப்பசுவாம். உண்பது ஐந்து பிராயத்துள் உறுப்பில் மறுவின்றேல். ஓர் குடிக்கு நல்ல சிறுவன் ஒரு மகனைத்தாதை அரியத் தாய் பிடிக்கும் பொழுதில் தம்மில் மனம் உவந்தே- ஏதமின்றி அமைந்த கறியாம் இட்டுண்பது (பெ.பு.பா.3714-3715) என மொழிகின்றார். சிறுத்தொண்டரும் பயிரவரின் விருப்பப்படி தன் குடிக்கு ஒரு மகனாய்த் திகழ்ந்த சீராளனையே சமைத்துப் படைக்கின்றார். இந்நிகழ்ச்சி நம்மை உளம் நடுங்க வைத்தாலும், மயிலுக்குப் போர்வை அளித்த மன்னன் பேகனின் கொடைத்தன்மை போன்று, இது ஆழ்ந்த பத்தியின் விளைவாகும். பத்தியின் விளைவால் ஏற்பட்ட இத்தம்பதியரின் உள்ளமும் உணர்வும் இறையோடு ஒன்றுபட்டதாலும், தன்முனைப்பு வேரோடு களையப் பட்டதாலும் இச்செயல் சாத்தியப்பட்டது. உள்ளம் ஒன்றுபட்ட அவர்களது இல்லறவாழ்வில் போராட்டமில்லை. எனவே பற்றற்ற உள்ளத்தோடு, பயன்நோக்காது கடமையாற்றும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை இவ்விரு நாயன்மாரது சரிதம் இனிதே இயம்புகிறது. மேலும் காமம், குரோதம், லோபம், மதமாச்சர்யம், மோகம் முதலான மனமாசுக்கள் அகல, மனிதரிடையே மனிதநேயம் மலர, ஆன்ம பலம் தழைக்கப் பெரியபுராணச் சான்றோர்கள் காட்டும் நெறிகளுள் ஒன்று விருந்தோம்பல் ஆகும்.
பெற்றோர் வழி நடப்பது:
மாணக்கஞ்சாறரின் மகள் தன் திருமண நாளன்று வந்த அடியவரை வணங்குகிறார். அந்தமணப் பெண்ணின் மலர்க் கூந்தலைக் கண்டு அடியவர் தம் “பஞ்சவடி’க்கு வேண்டும் என்று கேட்க, நாயனார் சற்றும் தயங்காது
157

Page 190
மகளின் கூந்தலை அரிந்து மாவிரதியரிடம் நீட்டுகின்றார். தந்தையின் செயலுக்கு உடன்பட்டு நின்ற மணமகளின் மாண்பு “தந்தை எவ்வழி, அவ்வழி மக்கள்”நிற்றல் வேண்டும் என்ற நெறியை உணர்த்துகின்றது.
இறைவனுக்குக் குங்கிலியத் தூபமிடும் பணியில் இன்பம் காணும் குங்கிலியக்கலயனாரின் குடும்பம் வறுமையால் வாடுகின்றது. குடும்பத்தினரின் பசியைப் போக்க அவரது துணைவியார் “கலயனார் கைக்கோதில் மங்கல நூல் தாலி கொடுத்து நெற் கொள்ளுமாறு” கூறுகிறார். கலயனார் குடும்பத்தினரின் பசியைச் சிந்திக்காது தாலிக்குக் குங்கிலியம் பெற்று ஆலயத்தில் தங்கிவிடுகிறார். மனைவியோ, மக்களோ, கலயனாரின் செயலினை எதிர்க்காது, தொண்டினைப் பழிக்காது துணை நிற்றலால், அவரால் தாலிக்கு குங்கிலியம் வாங்க முடிந்தது. எனவே “என் கடன் இறைபணி செய்து கிடப்பதே” என்று கணவனார் தம் தொண்டில் உறைத்து நிற்க, மனைவி மக்கள் ஒத்துழைப்பே துணைநின்றது. தாய் தந்தையர் செயல் அனைத்தும் சரியானவை, நல்லவை என்ற நம்பிக்கையோடும் அன்போடும், முழு மனத்துடன் எற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை இளமையிலேயே குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற உளவியலையும் இவர்களது சரித்திரம் பகர்கின்றது.
அன்புறு புணர்ச்சியின்மை அயலறியாமை வாழ்தல்:
திருநீலகண்ட நாயனாரின் பரத்தமைப் பண்பால் மனம் புண்பட்ட அம்மையார், “எம்மைத் தீண்டாதீர், நீர் வணங்கும் திரு நீல கண்டத்தின்மீது ஆணை’ எனத் தமக்கும் சேர்த்து தண்டனை வழங்கிக் கொள்கிறார். மனைவியின் ஆணையைக் கேட்டு அதிர்ந்த நாயனார், அன்று முதல் எப்பெண்ணையும் மனத்தாலும் தீண்டேன் என்று உறுதி பூண்டு வாழ்கிறார். இருவரும் ஒரே கூரையின் கீழ் அடியவர் தொண்டு செய்து இளமை கடந்து முதுமையுற்ற போதும் அன்புறு புணர்ச்சியின்மை அயலார் அறியாமல் வாழ்ந்தனர்.
“கற்புறு மனைவியாரும் கணவனார்க் கான எல்லாம்
பொற்புற மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இன்புறம் பொழியாது அங்கண் இருவரும் வேறு 606/67
அன்புறு புணர்ச்சியின்மை அயலறியாமை
வாழ்ந்தனர்”
(திருநீலகண்டர் புராணம் -8) என்று பெரிய புராணம் இயம்புகின்றது. திருநீலகண்டரின் மனைவி தன் கணவனுக்குத் தவற்றினை உணர்த்தித் திருத்திய செயலிலும், கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்து செய்த செயலிலும், தங்களிடையே “அன்புறு
158

புணர்ச்சியின்மை”யைப் பிறர் அறியாமல் வாழ்ந்த செயலே, பண்பாடே செயற்கரிய செயலாகும். எனவே இல்லறப் பிணக்குகள் வாசலைத் தாண்டித் தெருவிற்கு வராமல் காத்துக் கொள்வது தம்பதியர் கடமை என்னும் வாழ்வியல் உண்மையைத் திருநீலகண்டர் சரிதம் காட்டுகிறது.
கற்பு:
கற்பினைக் கனலாகக் காணும் தமிழர் மரபிற்கேற்ப, சேக்கிழார் காட்டும் கற்புடை மகளிர் சிலர் மரணத்திலும் கணவனுடன் பங்குகொள்ள விரும்புகின்றனர். புகழனாரின் மரணத்திற்குப் பின் மாதினியாரும் உயிர் தரிக்க விரும்பாது விண்ணுலகம் அடைகின்றனர். திலகவதியார் தம்மைக் கலிப்பகையாருக்குத் திருமணம் செய்து கொடுக்கப் பெற்றோர் இசைந்தமையால், மணம் நிகழும் முன்னரே போரில் அவர் இறந்தாலும், இவ்வுயிரை அவர் உயிரோடு இசைவிப்பன்’ என உயிர்விடத் துணிகின்றார். தம்பி திருநாவுக்கரசர் தடுக்கவே, ‘அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனத்தவம்’ புரிந்து வாழ்கின்றார். சமூக விதிகளையும் மரபுகளையும் பின்பற்றும் போதும், மாறாக நடந்து கொள்ளும் போதும், நாம் பிறரைப் பாதிக்காதவாறும் சமூகத்தை அலட்சியப்படுத்தாமலும் முடிவெடுக்க வேண்டும் என்பதற்கு இப் பெண்மணிகளே வழிகாட்டி. இத்தகைய உள்ளத்துறவு வாழ்வின் பல இன்னல்களைக் கடப்பதற்கும் “சிவபதம்” அடைவதற்கும் எளிய நெறியாக அமைகின்றது.
கணவன் வழிநிற்கும் இயற்பகை நாயனாரின் மனைவி, “இன்று உனை இம்மெய்த்தவர்க்கு நான் கொடுத்தனன்” என்று உயிரில் சடப்பொருளை வழங்குவதுபோன்று அடியவரிடம் அளிக்கின்றார். கணவனின் விருப்பத்திற்கு இணங்கிப்பிறன்பால் செல்லுதல் தன் கற்பினுக்கும் இழுக்கு; அடியார்க்கும் பிறன் மனை நயத்தல் என்னும் பெரும்பழி ஏற்படுமே என உளம் நடுங்குகின்றார். அழியும் உடலுக்கு ஏற்படும் இழிவினைப் பொருட்படுத்தாது, மாசுபடா ஆன்மத் தூய்மையே பெரிதெனக் கருதி, அடியவர் பின் செல்லத் துணிகின்றது அவரது ஆன்ம உள்ளம். ஆன்மீகத்தில் நிலைத்து நிற்போர், உலகியல் சிந்தனைகளை முற்றிலும் மறந்து, “எல்லாம் அவன் செயல்” என்று தம்மை முழுமையாக இறைவனிடத்து ஒப்படைத்தல் வேண்டும்.
மனக்கட்டுப்பாடு:
தாமனின் மகள் மாமனோடு உடன்போக்கு மேற் கொள்கின்றாள். திருமருகலில் உள்ள மடத்தில் தனித்தனியே தூங்குகின்றனர். அவளை அரவம் தீண்ட, அவர் உயிர் பிரிகின்றது. இந்நிலையில் அக்கன்னிப்பெண் தன் மாமனைத் தீண்டாமலே அழுகின்றாள். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. எனவே கணவனாகப் போகின்ற வனின் மேனியைத் தீண்டுதலும் தகாது என்னும் மரபுவழி
சேக்கிழார் மாநாடு மலர்2005

Page 191
நிற்கும் அவளின் மனக்கட்டுப்பாடு இன்றும் ஒவ்வொரு பெண்ணிற்கும் வேண்டற்பாலதாகும். இம் மனக்கட்டுப் பாட்டுடன் நடப்பின் சமூகம் மேன்மையடையும். தீண்டாமை:
நால்வருண பேதம்- தீண்டாமைக் கொடுமைஇன்றும் நம்மிடையே நிலவி வருகின்றது. நம்மிடையே வாழ்ந்த மகாத்மாகாந்தி முதலியவர்களின் பெருமுயற்சிக்குப் பிறகுதான் தீண்டாமை என்பது பாவம், பெருங்குற்றம், மனிதத்தன்மையற்ற செயல் என்பதான சிந்தனை நம்மிடத்திலே வளர்ந்திருக்கின்றது. ஏழாம் நூற்றாண்டில், நம் ஞானசம்பந்தப் பெருமான் சாதி, மத, பேதம் கடந்த, பெருந்தன்மைச் செயல் புரிந்த பாங்கு பெரிதும் பாராட்டுக்குரியதாகும்.
ஞானசம்பந்தப் பெருமான்,திருச்சாத்தமங்கை என்ற ஊரில் வாழும் அந்தணராகிய திருநீலநக்கரின் இல்லத்திற்கு வருகின்றார். அவருடன் பாணர் வகுப்பைச் சேர்ந்த யாழிசைக்கும் திரு நீலகண்ட யாழ்ப்பாணரும் வருகை புரிகின்றார். இருவரையும் ஒருங்கே உபசரித்து உணவு படைக்குமாறு ஞானசம்பந்தர் விரும்ப திருநீலநக்கரும் அகமகிழ்ந்து, விருந்தோம்பல் செய்கின்றார். அந்தணரும் பாணருமாய் மற்றொரு அந்தணர் வீட்டில் ஒருங்கமர்ந்து சமபந்தி உண்ணும் புரட்சியைக் காண்கிறோம். மற்றும் அந்தணர் அப்பூதியடிகள், வேளாண் குலத் தோன்றல் அப்பரடிகளைத் தெய்வமாகவே போற்றி வழிபடுகிறார். சேக்கிழார் மானிடப்பிறப்பில் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற உண்மையை உணர்த்துகின்றார். மக்களிடையே சாதி வேறுபாடுகிடையாது, அனைவரும் சமம் என்ற மனப்பான்மை வளர வளர சகோதரத்துவம் மேலிடும். இதனால் மக்கட்குலம் மனித நேயத்துடன் தழைக்கும் என்று சமூகத்திற்கு வாழ்வியல் நெறிகாட்டுகின்றார். கலப்பு திருமணம்:
பெரியபுராணக் கதாநாயகரான - கதைத் தலைவ ரான சுந்தரர், அந்தணர் குலத்தைச் சார்ந்தவர். இவர் திருவாரூரில் வாழ்ந்து வந்த பரவையார் என்ற கணிகையர் குலப்பெண்ணையும், திருவொற்றியூரில் வேளாளர்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

குடித்தோன்றல் சங்கிலி என்ற பெண்ணையும் மனந்து கொள்வதாகச் சித்தரிக்கப்படுகிறார். இறைவன், இரண்டு பெண்மணிகளுக்கும் இடையே தூது செல்கின்றார். இதனால் கலப்பு மணம் ஏற்புடையதே என்ற சிந்தனை படிப்பவர் மனதில் ஏற்படுகின்றது. சாதியற்ற சமுதாயம் உருவாகக் கலப்புத் திருமணங்களே தீர்வு என்னும் கொள்கையைப் பெரியபுராணம் உணர்த்துகின்றது.
நெறி பிறழாமை:
பல்லவர் குல மன்னர் கழற்சிங்கர் தம் துணைவியாருடன் திருவாரூர்ப் பெருமானை வழிபடச் செல்கின்றார். இறைவனுக்குள்ள மலரை அரசியார் சிவக்குற்றம் என்பதை அறியாதவராய் மோந்து பார்க்கின்றார். இதனைக் கண்ட செருத்துணை நாயனார் யார் என்று பாராது அரசியார் மூக்கை அரிந்து விடுகின்றார். அவளின் அழுகுரலுக்குக் காரணம் கேட்டறிந்த பல்லவ மன்னர், அக்கணமே இறைவனுக்குரிய மலரைத் தீண்டிய கையை துணித்தல் வேண்டும் என்று, அரசியாரின் வளையொடும் அவர் கையைத் துண்டித்து விடுகின்றார். அரசியார் என்று செருத்துணைநாயனாரும், மனைவி என்று கழற்சிங்கரும் தயங்காது, யார் செய்தாலும் குற்றம் குற்றமே என்று தண்டனை வழங்கி நேர்மையுடன் நடந்து கொண்டனர். தவறிழைத்தவர் எவரேயாயினும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற சமூக நீதியை, உயர் நெறியை இவ் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.
பெரியபுராணம் அருளிய காலகட்டத்தில் வாழ்ந்த மக்களின் சமுதாயம், வாழ்வியல் குறித்த எண்ணற்ற சிந்தனைகளை இந்த பெரியபுராணம் நம்முன் வைத்துச்செல்கின்றது. அந்த நூற்றாண்டில் இருந்த சமயச் சூழலை மையப்படுத்தி அருளப்பட்டுள்ளது.
இன்றைய வாழ்வில் நமக்குப் பிரச்சனைக்குரியதாக நிலையற்ற தன்மையுடையதாக இருக்கும் சூழலில், பெரியபுராணம் காட்டும் வாழ்வியல் கருத்து நெறிகளைப் பின்பற்றினால் நாம் காணும் பல சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது திண்ணம்.
159

Page 192
:ஜ் 鬣慧新
தொண்டர்தம் பெருமை
- சிவத்தமிழ் வித்தகர் 8
உதவிப் பணிப்பாளர், இந்து சமய
சேக்கிழார் சுவாமிகள் அருளிய திருத்தொண்டர் புராணம் செந்தமிழ்ச் சைவக் காப்பியங்களில் தலைசிறந்த நூலாகும். அன்பும் பணிவும் பக்தியும் தொண்டும் தியாகமும் வீரமும் நிறைந்த சிவனடியார்களின் வரலாற்றைக் கூறும் நூல் ஆகையால், இதனை மாக்கதை எனவும் அழைப்பர். பெரிய புராணம் ஒரு வரலாற்று நூல். வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர்களின் சரித நூல்; பக்திச் சுவை நலம் பாலிக்கும் பெருநூல்; இன்ப அன்பினை இடையறாது விளைவிக்கும் இன் தமிழ் மறை நூல் எனப் பலவகையாகப் பாராட்டப் படுகின்ற நூலாகும். பெரியபுராணத்தை அருளிய சேக்கிழார் பெருமான் கல்வியில் வல்லவராக இருந்தது போலவே சிவநெறியில் சிந்தை கலந்த ஈடுபாடு;ம கொண்டிருந்தார். அருள் படைத்த மனத்தை உடையவராக விளங்கினார். பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் கவியரசராக விளங்கி னார். சீலத்திலும் நோன்பிலும் செறிவிலும் ஆரா அன்பிலும், அறிவிலும் அருளிலும் சிறந்து விளங்கிப் பக்திமையும் கொண்டு ஒழுகியவர்களையே சேக்கிழார் பாடினார்.
பெரிய புராணம் காட்டும் அரசியல்:
பெரியபுராண அடியார்களில் பல அரசர்களும் வருகி றார்கள். சேரமான்பெருமாள் நாயனார், ஐயடிகள் காடவர் கோன், நின்றசீர் நெடுமாறர் போன்ற அரசர்களின் ஆட்சிச் சிறப்புக்கள் பெரியபுராணத்தில் சித்தரிக்கப்படுகின்றன. பெரிய புராணம் அரசியல் நூலாக விளங்குவதோடு அரசனின் நெறிமுறை பற்றியும் பேசுகின்றது. தன்னுடைய ஒரேயொரு பிள்ளையிலும் பார்க்க, தர்மம் தவறாத அரசன் என்ற பெயர் தனக்கு இருந்தால் போதும் என நினைத்த மனுநீதி கண்ட சோழனின் ஆட்சிச் சிறப்பு பெரிய புராணத்தில் விளக்கப்படு கின்றது. நாட்டு மக்களைத் தனது உயிர் போலக் காப்பவனே மன்னன் என்பதையும்,தன்னாலும் தனது படைகளாலும்பகைவர் களாலும் கள்வராலும் வேறு உயிர்களாலும் மக்களுக்குத் தீமை எதுவும் ஏற்படாமல் காப்பவனே அரசன் என்பதையும் பின்வரும் பெரியபுராணப் பாடல் தெளிவாக்குகின்றது.
"மாநிலங் காவலனாவான் மன்னுயிர் காக்குங்காலை தானதனுக்கிடையூறு தன்னால் தன் பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால் ஆணபயம் ஐந்துந் தீர்த்தறங்காப்பான் அல்லனோ”
160
 
 
 

) சொல்லவும் விபரிதே'
வ, மகாலிங்கம் -
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
பெரியபுராணம் காட்டும் பக்தி :
பக்தி என்பது தான், இறைவன் என்ற இரண்டிலும் ஓர் ஒருமை ஏற்பட்டதாக உணர்கின்ற உணர்வே ஆகும். உண்மைச் சமயத்தின் உயிர் நாடியாகத் திகழ்வது பக்தியே ஆகும். இறைவனைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்றுமணம் முயல்கின்ற முயற்சியே பக்தி ஆகும். ஆன்மாவுக்கும் இறை வனுக்கும் உள்ள உறவு ஒன்றை மட்டும் ஆன்மா விரும்பி நிற் பதே பக்தி எனப்படும். சாக்கிய நாயனார் பெளத்த மதத்தின ராக இருந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டார். நாள் தோறும் சிவலிங்கத்திற்கு கல்லெறிந்து வழிபட்டார். எந்த வேடம் கொண்டாலும் எந்நிலையில் நின்றாலும் சங்கரன் தாள் மறவாமை ஒன்றையே சாக்கியர் இலட்சியமாகக் கொண்டி ருந்தார் என்பதைப் பின்வரும் பெரியபுராணப் பாடல் சித்தரிக்கிறது.
'எந்நிலையில் நின்றாலும், எக்கோலம் கொண்டாலும் மன்னிய சீர்ச்சங்கரன்தாள் மறவாமை பொருள் என்றே துன்னிய வேடந்தன்னைத் துறவாதே தூய சிவம் தன்னை மிகும் அன்பினால் மறவாமை தலைநிற்பார்”
தன்னை மறந்து தற்போதம் இல்லாமல் ஒரு செயலைச் செய்தால் அது உள்நின்று தூண்டும் இறையருளால் செய்யப் பெற்றதாகவும் இந்நிலையே உண்மையான பக்தனின் நிலை என்றும் பெரியபுராணம் சித்தரிக்கிறது.
"சித்தம் சிவமாக்கிச் செய்தனவேதவமாக்கும் அத்தன்” என அடியார்களின் செயல்கள் அனைத்தும் ஆண்டவனின் செயல்கள் என மணிவாசகரின் திருவாசகமும் கூறுகிறது.
அன்புநெறியில் எது செய்தாலும், அது எம்பிரானுக்கு ஏற்றதாகும் என்பதைக் கண்ணப்ப நாயனார் புராணத்தி னுாடாகச் சேக்கிழார் விளக்குகிறார். குடுமித்தேவரைக் கண்ட மாத்திரத்தில், கண்ணப்பர் அன்புருவமாக மாறினார் என்பதை “பொங்கிய ஒளியின் நிழல் பொருவில் அன்புருவம் ஆனார்” எனப் பெரியபுராண வரிகள் விளக்குகின்றன. கண்ணப்பனுடைய தூய்மையான அன்பின் சிறப்பை சிவகோசரியாருக்கு இறைவன் உணர்த்துவதை பின்வரும் பெரியபுராணப் பாடல் தெளிவாக்குகின்றது.
“அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல்அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
dridgri pripro, pa i 2005

Page 193
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும் அவனுடைய நிலை இவ்வாறு அறிநீ என்றருள் செய்தார்”
கண்ணப்பருடைய பக்தி வைராக்கியத்தின் சிறப்பை முற்றும் துறந்த துறவியாகிய பட்டினத்தடிகள் "நாள் ஆறில் கண்ணிடந்து அப்பவல்லேன் அல்லேன் என்று குறிப்பி டுகின்றார். மணிவாசகப் பெருமானும் கண்ணப்பனைப் போன்ற அன்பு தன்னிடம் இல்லை என்பதைத் திருக் கோத்தும்பிப் பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்ஒப்பில் என்னையும் ஆட்கொண்டருளி வண்ணப் பணித்து என்னை வா என்ற வான் கருணைச் சுண்ணப் பொன் நீற்றற்கே சென்றுரதாய் கோத்தும்பி”
பெரியபுராணம் காட்டும் தொண்டு நெறி :
பெரிய புராண அடியார்களில் பலர் சிவத்தொண்டும் பசுத்தொண்டும் செய்து வாழ்ந்தார்கள். “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்ற வாக்கையே ஆதாரமாகக் கொண்டு, வாக்காலும், வாழ்வாலும் அப்பர் பெருமான் ஒருமித்து வாழ்ந்தார். திருநாவுக்கரசரரின் திருத்தொண்டு நெறியின் சிறப்பை பின்வரும் பெரியபுராணப் பாடல் தெளிவாக விளக்குகின்றது.
"திருநாவுக்கரசு வளர்திருத்தொண்டின் நெறி வாழ
வருஞானத்தவமுனிவர் வாகீசர் வாய்மை திகழ் பெருநாமச்சீர் பரவலுறுகின்றேன் பேருலகில் ஒருநாவுக்குரை செய்ய ஒண்ணாமை உணராதேன்’
நாவுக்கரசர் பெருமான், கையில் உழவாரம் ஏந்தி, புல் பூண்டுகளைச் செதுக்கி ஆலயங்களில் சிவப்பணி செய்து வந்தார். சிவக்கோலத்தோடு கண்களில் இருந்து அருவிநீர் சொரிய, மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் இறைபணியே செய்யும் அப்பர் பெருமானின் கோலத்தையும் சீலத்தையும் பின்வரும் பெரிய புராணப் பாடல் அழகாகச் சித்தரிக்கிறது.
"மார்பாரப் பொழி கண்ணிர் மழைவாருந்திருவடிவம்
மதுரவாக்கில் சேர்வாகும் திருவாயில் தீந்தமிழின் மாலைகளும்
செம்பொற்றாளே சார்வானதிருமணமும் உழவாரத் தனிப்படையும் தாமும்
ஆகிப் பார் வாழத் திருவிதிப் பணிசெய்து பணிந்தேத்திப் பரவிச்
* タタ Grain if
இளையான் குடிமாறர், அப்பூதியடிகள், இடங்கழியார், அமர்நீதிநாயனார், மானக்கஞ்சாரர் முதலிய முப்பது நாயன் மார்கள் தாம் செய்யும் சிவப்பணிகளோடு அடியார்களின்
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

பசிப்பிணி போக்கும் அன்னதானப் பணியையும் சிறப்புடன் செய்து வந்தார்கள். இளையான் குடிமாற நாயனார் இந்தச் சோறிடும் பணியை மிகவும் சிறப்புடன் செய்து வந்தார். வறுமை வந்துற்ற போதும் இளையான் குடிமாற நாயனார் மனச் சோர்வடையாது அடியார்களுக்கு அமுது அளித்தார். இரவு நேரத்தில் பசியால் வாடி வந்த சிவனடியாருக்கு வயலில் விதைத்த விதை நெல்லை எடுத்து வந்து அமுதாக்கிக் கொடுத்தார். மனையறம் காத்த மங்கையாக இவருடைய மனைவியும் இவரது பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். அன்பர் பணி செய்த இந்தத் தம்பதிகளுக்கு இறைவன் அருள் செய்த வரலாற்றை பின்வரும் பெரிய புராணப் பாடல் விளக்குகின்றது.
"அன்பனே! அன்பர் பூசை அளித்த நீஅணங்கினோடும் என்பெரும் உலகம் ஏந்திஇருநிதிக் கிழவன்தானே முன்பெரு நிதியம் ஏந்தி மொழிவழி ஏவல் கேட்ப இன்பமார்ந்திருக்க என்றே அருள் செய்தான் எவர்க்கும்
மிக்கான்’
பெரியபுராணம் காட்டும் வீரம் :
பெரியபுராண அடியார்களின் உள்ளத்திலே ஈரம் இருந்தது போல, நெஞ்சிலே வீரமும் இருந்தது. உருத்திராட் சத்தை அணிகலனாகவும், கந்தை ஆடையை உடுதுணி யாகவும் கொண்ட சிவனடியார்களின் சிந்தை முழுவதும் ஈசன் பணியிலேயே நிலைத்திருந்தது. வாழ்வில் எந்தவிதக் குறைவுமில்லாமல் வாழும் சிவனடியார்களின் வீரம் அளவிட முடியாதது என்பதைப் பெரியபுராணத்தில் திருக்கூட்டச் சிறப்பிலே சேக்கிழார் தெளிவாக விளக்குகிறார்.
A4
ஆரங்கண்டிகை ஆடையுங் கந்தையே பாரம் ஈசன் பணி அலதொன்றிலர் ஈர அன்பினர் யாதுங் குறைவிலார் வீரம் என்றால் விளம்புந்தகையதோ’
உலக நாடுகளில் “அரசனது ஆணை தெய்வத்தின் ஆணை’என்ற கொள்கை நிலவிய பொழுது அப்பரடிகள் அரசனது ஆணையைத் துச்சம் என மதித்து, "நாமார்க்குங் குடியல்லோம்நமனையஞ்சோம்”என வீர முழக்கம் செய்தார். முடியாட்சிக் கொள்கைக்கு எதிராக வீரக்குரல் கொடுத்தார். நம்பியாரூரர் இறைவனைப் பரவையாரிடம் தூதாக அனுப்பி யதைப் பொறுக்காத ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுந்தரர் மீது வெறுப்புக் கொண்டார். எல்லையற்ற துயரத்துடன் இருந்த ஏயர்கோனுக்கு சூலை நோய் ஏற்பட்டது. கலிக்காம ருடைய கனவிலே தோன்றிய இறைவன், “உன்னை வருத்தும் சூலை வன்தொண்டன் தீர்க்கில்அன்றி முந்துற ஒழியாது’ என்று கூறினார். பரம்பரை அடிமையாகிய தனக்குற்ற நோயை இறைவன் தானே அருள் செய்து தீர்க் காமல் தன்னால் ஆட்கொள்ளப்பெற்ற புதிய அடிமையைக் கொண்டா தீர்க்கப் போகிறார் என்று கோபமுற்ற கலிக்காமர்,
161

Page 194
தனது கொள்கையை இறைவனுக்காகக்கூட விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத சான்றாண்மை வீரத்தின் உயர்வு நிலையை "மற்றவன் தீர்க்கில் தீராது ஒழிந்தெனை வருத்தல் நன்றாய்"எனப் பெரியபுராணம் சித்தரிக்கிறது.
அன்பர்கட்கு அடாதன அடுத்த போது, அந்த அடாத செயலை விலக்குவதற்காக எடுத்த கருவியே எறிபத்த நாயனார் கையில் எடுத்த பரசு ஆகிய ஆயுதமாகும். 'அஞ்சுவது யாதொன்றுமில்லை அஞ்ச வருவதுமில்லை” என்பதே சிவனடியார் கொள்கையாகும். புகழ்ச் சோழ அரசனுடைய பட்டத்து யானை மதம் கொண்ட காரணத்தால் வயது முதிர்ந்தவராகிய சிவகாமி ஆண்டாரின் பூக்கூடை யைப் பறித்துச் சிதைத்தது. எறிபத்தர் தனது ஆயுதத்தினால் பட்டத்து யானையைக் கொலை செய்தார். நல்லவர்களைக் காக்க எடுக்கும் கருவி பழிப்புக்குரியதல்ல என்பதை எறிபத்தர் வரலாற்றினூடாகச் சேக்கிழார் உணர்த்துகிறார்.
“மழைவளர் உலகில் எங்கும் மன்னிய சைவம் ஓங்க
அழலவிர் சடையான் அன்பர்க்கடாதன அடுத்த போது
முழையரிஎன்னத் தோன்றிமுரண்கெட எறிந்துதிர்க்கும்
பழமறை பரசுந் தூய பரசு முன் எடுக்கப் பெற்றார்” பெரியபுராணம் காட்டும் சைவ சித்தாந்தக் கருத்துக்கள் :
பதி, பசு, பாசம், இருவினை, மும்மலம், பெத்தநிலை, முத்தி நிலை, சரியை, கிரியை, யோகம், ஞானம், இருவினை ஒப்பு மலபரிபாகம், தீட்சை, திருவைந்தெழுத்துஆகிய சைவ சித்தாந்தக் கருத்துக்கள் அனைத்தும் பெரியபுராணத்தில் காணப்படுகின்றன. அடியவர்களுக்கு அன்னமிடும் பணியை ஆற்றி வந்த இளையான் குடிமாற நாயனார், வறுமை வந்துற்ற போதும் தாம் செய்து வந்த திருத்தொண்டிலிருந்து வழுவவில்லை. இரவு நேரம் பசித்து வந்த சிவனடியார் ஒருவருக்கு உணவு கொடுப்பதற்காக வயலிலே விதைத்த விதை நெல் எடுத்து வந்து அமுதாக்கினார். சிறு பயிராகப் பசளிக் கீரையை இருட்டிலே தடவிப் பிடுங்கி கறிய முதாக்கினார். பசளிக் கீரையை பறித்த வரலாற்றைக் கூற வந்த சேக்கிழார் பெருமான் அவர் தமது பாச வினைகளை வேரோடு களைந்தார் என்பதை,
"குழிநிரம்பாத புன்செய்குறும்பயிர்தடவிப்பாசப்
பழிமுதல் பறிப்பார் போல பறித்தவை கறிக்கு நல்க” எனக் குறிப்பிடுகிறார்.
சிவனை மறவாச் சிந்தையாளர்களாக வாழ்ந்த சிவனடியார்களின் மாண்புகளைப் பெரியபுராணத்தின் திருக்
M
2
162

கூட்டச் சிறப்புப்பகுதி தெளிவாக விளக்குகின்றது. குற்றமற்ற உடம்பிலே பூசப்படுகின்ற திருநீறு சிவப்பொலிவைத் தருவது போல சிவனடியார்கள் அகமும் புறமும் தூய்மையானவர்கள் என்பதை,
"மாசிலாத மணிதிகழ் மேனிமேல்
பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள்” எனப் பெரிய புராணம் போற்றுகின்றது.
சிவஞானபோதத்தில் வரும் எட்டாம், ஒன்பதாம், பத்தாம், பதினோராம் சூத்திரங்கள் முறையே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் என்னும் நால்வகை ஞான நெறிகளை உணர்த்துகின்றன. ஞானப்பால் உண்ட சம்பந்தருக்குக் கிடைத்த நால்வகை ஞானத்தின் சிறப்பையும் சேக்கிழாரின் பின்வரும் பெரியபுராணப்பாடல் விளக்குகிறது.
“சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் உவமையிலா கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்”
நாவுக்கரசரைக் கல்லோடு கட்டிக் கடலில் போட்ட பொழுது நகராதி பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்தின் துணை யோடு அவர் கரை சேர்ந்தார். கல்லே தெப்பமாக மிதந்து கரையில் சேர்த்தது என்பதைப் பின்வரும் பெரிய புராணப் பாடல் உணர்த்துகிறது.
"இருவினைப் பாசமும் மலக்கல் ஆர்த்தலின் வருபவக்கடலில் வீழ்மாக்கள் ஏறிட அருளும் மெய் அஞ்செழுத்து அரசை இக்கடல் ஒரு கல் மேல் ஏற்றிடல் உரைக்க வேண்டுமோ”
ஆன்மாக்களுக்கு அவை செய்த வினைகளைப் பொருத்தி வைப்பவன் இறைவனே என்பதையும், வினை களையும், செய்தவனையும், அதன் பயனையும், அவற்றைச் சேர்த்து வைப்பவனையும் ஆகிய நான்கினையும் விளக்கும் சிறப்பு சைவநெறி ஒன்றிற்கே உண்டு என்பதையும் சாக்கிய நாயனார் புராணத்தினூடாகச் சேக்கிழார் விளக்குகிறார்.
"செய்வினையும் செய்வானும் அதன் பயனும் கொடுப்பானும் மெய் வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக்
W− கொண்டே இவ்வியல்பு சைவ நெறி அல்லவற்றுக்கில்லை என உய்வகையான் பொருள் சிவன் என்றருளாலே’
Gráfgrf Prgro sol2005

Page 195
క్లేవ్లోవక్షేప
சேக்கிழார்
சைவப்புலவர் எம் உதவிப்பணிப்பாளர், இந்துசமய
t 홍義家
“தெளிவரும் பெருமைத்திருத்தொண்டர்தம் பெருவரும் சீர் புகன்று” செந்தமிழ் வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற சேக்கிழார் பெருமான் அருளிய தெய்வீகத் திருநூல் பெரியபுராணம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்ட அந்த அருட்கவிவலவர், அறுபத்துமூன்று நாயன்மார்களினதும், தொகையடியார்கள் ஒன்பதின்மருடையதுமான திவ்விய வரலாறுகளை விரிவாக எடுத்துரைக்கப் பெருங் காரணமாயிருந்த இருவர் முறையே சுந்தரமூர்த்தி சுவாமிகளும், நம்பியெம்பெருமானாகிய நம்பியாண்டார் பெருமானும் என்பதை அனைவருமறிவர்.
திருத்தொண்டர் புராணமென்றும், மாக்கதை என்றும் நூலாசிரியரான சேக்கிழார் சுவாமிகளே வைத்த பெயரினை விஞ்சி “பெரியபுராணம்” என்றே போற்றப்பெறும் அரிய காவியம் இந்நூலாகும்.
“தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்றெடுத்து நம் சமயகுரவர், வன்றொண்டர் சுந்தரமூர்த்தி நாயனார் பாடியருளிய பாடல்கள்கொண்ட திருப்பதிகம், “திருத்தொண்டத்தொகை” பெரியபுராணத்தின் முதல் நூல். அதாவது சுந்தரர் பிரான் எடுத்துக்கொடுத்த தொண்டர் நாம வரிசையில் நின்று அறுபது தொண்டர்களை அறிந்து கொண்டவர் சேக்கிழார் பெருமான். சுந்தரருக்குப் பின்னர் பல தசாப்தங்களில் பின் வாழ்ந்து பத்து நூல்களைச் சைவ உலகத்துக்குத் தந்தருளியவருமான நம்பியாண்டார் நம்பியடிகள் “திருத்தொண்டர் திருவந்தாதி” என்னும் நூலை அருளியவர். கல்வியறிவேயில்லாத ஒருவராய் சாதாரண பிராமணகுடிப்பிறந்த ஒரு பூசகராயிருந்த நம்பியாண்டார், பொள்ளாப்பிள்ளையாரின் அருள்பெற்று கல்வியும், புலமையும், கவி வலமையும் பெற்று அரனருள் கூறப்பாடியருளியது திருத்தொண்டர் திருவந்தாதியாம் திவ்விய நூல். சுந்தரர் திருப்பதியத்தையடியொற்றி சற்று விரிவாகத் தொண்டர்களின் வரலாற்றையும், பெருமைகளையும் உரைத்தவர் இந் நம்பியாண்டார் நம்பியடிகள். எனவே, இந்நம்பியெம்பெருமானைத் தம் நூலுக்குப் பரோபகாரியாய் சேக்கிழார் பெருமான் வந்தித்திருக்கிறார்.
சுந்தரமூர்த்தி நாயனாரின் வழியிலே தான் திருத்தொண்டர் வரலாற்றைச் செப்பத்தொடங்குகிறேன்
6tráifignif protto Iosof 2005
 
 
 
 

. எஸ். முநீதயாளன்
கலாசார அலுவல்கள் திணைக்களம்
என்றெடுத்தவர், பாயிரத்திலே நம்பியாண்டார் நம்பியின் பாரிய பங்களிப்பை மிகத்துல்லியமாகப் பாடல் செய்து போகும் நேர்த்தியைப் பெரியபுராணத்திலே கண்டு மகிழ்கிறோம்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பரோபகாரியாந்தன்மையை பாடமுற்பட்ட சேக்கிழார் சுவாமிகள், அவரையே தம் காப்பியத்தின் ஊடுபாவாகக் காட்டுவதோடு, அவரை அடிக்கடியும், அவசியமாகவும் பல இடங்களில் பாராட்டுகிறார். தமிழுலகக் காப்பிய வளர்ச்சி வரலாற்றிலே ஒருமைல் கல்லென வருணிக்கப்படும் இத் திருத்தொண்டர் புராணத்தில் காப்பிய நாயகனுடைய ஊர் சிறப்பிக்கப்படும் போது சோழ நாட்டையும், திருவாரூரையும் போற்றிப் பாடுகிறார். சுந்தரரின் திவ்விய வரலாற்றினைத் தம் நூலில் முதல் இடை கடைகளிலெல்லாம் சேர்த்துக்கொள்கிறார்.
சேக்கிழாருக்கு முன்னர் படலம் என்று உபயோகிக்கப்பட்ட நூற்பகுதிகள், பெரியபுராண காப்பிய வடிவில் சருக்கங்களாகின. இச்சருக்கங்களில் 14 இடங்களிலும் சுந்தரர் துதிகள் பாடப்பட்டுள்ளன. இது சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் சோழப்பேரரசுக்கும் சேக்கிழார் கொடுத்த பெரிய கெளரவம்.
இஃதிவ்வாறிருக்க, நம்பியாண்டார் நம்பியடிகள் சுந்தரப்பெருமான் ஓரிரு அடிகளால் கூறியதைச் சற்றுவிரிவாக எடுத்துரைத்த வகையாலும், திருமுறைகளையே தேடித்தந்து தகவல்களை உபகரித்த வகையாலும் பங்களித்த நம்பியாண்டார் நம்பிக்கு சேக்கிழார் பெருமான் அத்துணை முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை.
பெரியபுராணத்தில், தமிழ்வேதங்களாம் திருமுறைகளை உலகுக்குக் காட்டி, தொகுத்தளித்த தமிழ் வியாசராம் நம்பியாண்டார் நம்பி பற்றிய செய்திகளேதும் தெரியவில்லை. பின்வரும் பாடல் ஒன்று மாத்திரம் நம்பியாண்டார் நம்பிபற்றி சேக்கிழார் படைத்த திருத்தொண்டர் புராணத்தில் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப்பின்னணியில் நம்பியாண்டார் நம்பியடிகள் பேரில் சைவ உலகம் அறிந்தின்புறக் கூடிய சிலவிடயங்களைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கமுமாகிறது.
“திருமுறைகண்ட புராணமும்” திருநாரையூர்ப்
163

Page 196
புராணமுமாகிய நூல்களிரண்டுமே நம்பியாண்டார் நம்பியடிகள் பற்றிய பணிகளையும், தகவல்களையும் தரக்கூடிய முக்கிய நூல்களாக இருக்கின்றன. இதைவிட நம்பியெம்பெருமானே பாடியருளியவையும், பதினோராம் திருமுறைவரிசையில் வைத்துப் போற்றப்படுபவையுமான 10 நூல்களும் நமக்கு அகச்சான்றாதாரங்களைத் தருவனவாக அமைகின்றன. சோழப்பேரரசின் தன்னேரில்லாப் பெருமன்னன் சிவபாதசேகரன் எனப்பட்ட அநபாயன் - இராஜராஜ சோழன் வேண்ட திருமுறைகளைத் தேடித் தொகுத்த நம்பியாண்டார் நம்பியின் பணியை விதந்தேத்தும், உலகம் நம்பியாண்டார் இல்லாவிட்டால் இன்று சைவ வரலாறு கூட இத்துணை விரிவாகத் தெரியப்பட்டிருக்காது என்றறியும் இந்த வகையில் சைவ வரலாற்றின் சிற்பியாக, நூற்தொகுப்பின் முன்னோடியாகத் திகழ்ந்தது மட்டுமல்ல. ஒரு தெய்வீகத் திருத்தொண்டராக, பக்திமானாக, கவிவலமிக்க தெய்வீகப் புலவனாகவும் நம்பி இனங்காணப்படுகிறார்.
பெரியபுராணம்
சைவத்தின் விரிவுரை என்று சான்றோர்களாலேத்தப் படும் சேக்கிழார் சுவாமிகளின் திருத்தொண்டர் புராணம், தமிழுலக்குக் கிடைத்த முதற் சைவக் காப்பியமாகும். சைவ சமய வரலாற்றில் அதன் தெய்வீகத்துவம் குறித்து பன்னிரண்டாம் திருமுறையாகும் பெருமைக்குரியது. எல்லாம் வல்ல சிவபெருமானின் முழுமுதற்றன்மையை எடுத்தோதிப் பக்தி மரபுக்கு வழிகாட்டியாயமைந்த திருநூல் சேக்கிழார் தம் பனுவல்.
பொள்ளாப்பிள்ளையார் கடாட்சம்பெற்று கல்வியோடு, ஞானமும் கைகூட நம்பியெம்பெருமான் ஆராய்ந்தும், அறிந்தும் திருமுறைகளில் தேடியும் சேகரித்துத் தந்த விடயங்கள், சேக்கிழாரில் பெரிய செறிவினை ஏற்படுத் தியிருக்கிறது என்பது மறுக்க முடியாதது. தம்பத்து நூல்கள் தோறும் நம்பி கையாண்ட சொற்பதங்கள், புலமைச் சிறப்பு கற்பனையாட்சியென்பனவும் கூடச் சேக்கிழாரைப் பாதித்திருக்கின்றது. நம்பியாண்டார் தாம் அறிந்திருந்த பல தகவல்களைக் கூட தம் கோயிற்றிருப்பண்ணியர் விருத்தம் முதலிய மற்ற நூல்களில் தெரிவிப்பதும் கூட அவரின் கண்களுக்கு தெரிந்திருக்கும். சைவசமய வளர்ச்சியும், பக்தி மரபும் வேறுதிசைப்பட்டிருக்குமோ என்று நினைக்குமளவுக்கு தமிழ் வியாசராம் நம்பியடிகள் பணி மிக முக்கியமானது. திருத்தொண்டர் புராணத்தின் தோற்றத்துக்கே அடி நாதமானது தமிழ் நாட்டில் சோழப் பேரரசின் தோற்றமும் வளர்ச்சியும் அந்நாட்டின் பல்வேறு துறைகளைப் பொறுத்து ஒரு திருப்பு முனையாக அமைந்தது போல, இந் நம்பியாண்டார் நம்பியடிகளின் தொகுப்புப் பணியும் பிற்காலத்தில் நூற்றொகுப்பு முயற்சி, நூலக
164

வளர்ச்சிகளுக்கு ஒரு திருப்புமுனையே எனச் சான்றோர் LD5 SG16 ri (SircarD.C.-Indian Epigraphical glossary.; Saraswathy-Bhandarika-Librarian)856i G6 (6.556flso அரசியல், சமயம், சமுதாயம்-மா. இராசமாணிக்கனார்) சில இடங்களில் நம்பியின் தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டும் இன்னும் சில விடப்பட்டும் இருந்திருக்கின்றன. இவற்றைத் தம் ஒரு பாடலில் மாத்திரமே சொல்லிய சேக்கிழார் பெருமான், தம்முடைய வரையறையிலிருந்து மாறுபடவிரும் பவில்லை என்றும் கூறுவது நோக்கற் பாலது. இந்த இடத்திலே தான் பெரியபுராணத்தில் இடம் பெறும் 63 நாயன்மார் பற்றிய விடயத்தில் சமயகுரவரொருவர் இடம் பெறாது விடப்பட்ட செய்தியைச் சிந்திக்கிறோம். இன்றுவரை பலராலும் பேசப்படுகின்ற ஒரு ஆசங்கை காலவேறுபாடு என்ற ஒரு காரணத்தால் தெளிவு பெறாமவிருக்கின்றது.
வரலாற்று ஆய்வாளனாக, தொகுப்பாசிரியராக நம்பியாண்டார் நம்பியைத் தரிசிக்கும் நாம் ‘மணிவாசகரை” அவர் நன்றாக அறிந்திருந்ததாகப் பார்க்கிறோம். ஆயின் பின் வந்த சேக்கிழார் பெருமான் மணிவாசகரை அத்தறுதியாகப் பேச மறந்தாரா?
நம்பியின் கோவிற்பண்ணியர் விருத்தம்
“வருவாசகத்தினில் முற்றுணர்ந் தோன்வண்தில்லை மன்னைத் திருவாதவூர்ச்சிவபாத்தியன் செய்திருச்சிற்றம்பலப் பொருளார்தருதிருக் கோவைகண் டேயுமற்றப்பொருளைத் தெருளாத வுள்ளத்தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே 岁外
(கோதிப விருத்தம் ருஅ-58)
இங்கே குறிப்பிடப்படும் சிவபாத்தியன் என்ற சொல் கவனிக்கத் தக்கது. மேற்கோளாக நம்பியாண்டார் நம்பி குறிப்பிடும் சிவபாத்தியன் என்ற பெயர்ப் பொருத்தத்தைச் சுட்டி அது மாணிக்கரே எனக்காட்டி ஒப்புக்கொள்கிறார் மகோபாத்தியாய உ. வே.சாமி நாத ஐயர் பாத்தியன் என்ற சொல்லானது மணிமேகலையில் மந்திரம் கொடுத்த காதையில் “ பகையறு பாத்தியன் பாதம் பணிந்தாங்கு” என்னும் அடியையும், மேலும் சுட்டிக்காட்டும். ஐயர் பாத்தியன் என்பது பாதத்துக்கு அன்பன் என்றே அவர் உரை செய்திருப்பது பொருத்தி நோக்கத்தக்கது. அவ்வுபாத்தியாயரே நம்பியாண்டார் கூறிய இப்பாடலையும் மேற்கோள்காட்டியுள்ளமை இங்கு குறிப்பிடற்பாலது. பாடலை முழுமையாக நோக்கின் உண்மை புலனாகும்.
மணிவாசகர் பெருமானைத் திருத்தொண்டருள் ஒருவராக சேர்த்துக்கொள்ளாமை பற்றி பல அறிஞர்களும் பல விதமான ஆசங்கைகளை எழுப்பிப் பலவிதமான
சேக்கிழார் மாநாடு மலர்2005

Page 197
கருத்துக்களையும் கூறுவர். அவ்விடயம் இவ்விடத்தில் விரிக்கிற் பெருகும்
மணிவாசகசுவாமிகள்
சைவவமய குரவர்களுள் ஒருவராகிய மணிவாசக சுவாமிகளின் காலம் யாது என்பதை ஆராய்ந்தெழுதியுள்ள பேரறிஞர்கள் பலர். அ.ச.ஞானசம்பந்தம், மா இராச மாணிக்கனார், க.வெள்ளை வாரணனார், சுப்பிரமணியப் பிள்ளை, மறைமலையடிகள், வி.க. அ. பழனிச்சாமி, அ.வேலுப்பிள்ளை, போன்றோர் அவர்களுள் முக்கியமான வர்கள். கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரென்பது ஒருசாராரின் கருத்து எட்டாம், ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டினர் என்பதும் மற்றவரின் பொதுவான கருத்து என்றும் நாம் அறிய வேண்டியவை இவ்வாறு தமிழிலக்கிய வரலாற்றில் மாணிக்கவாசகளின் காலநிர்ணய மயக்கத்தைப் போல வேறுஒன்றுமில்லை. இவ்வாறு திருவாதவூர்ப் பாத்தியனாம் அடிகளாரின் பேரினாலும் வேறுசில காரணங் களினாலும் இவர்கள் கூறும் பல திறப்பட்ட முடிவுகள் உண்மை நிலைப்பாட்டை அறுதியிட்டுச் சொல்லப் போதுமானதாக இல்லை என்பதே என் கருத்து அவைநிற்க,
இவ்வாறு நம்பியாண்டார் நம்பியடிகளின் தகவல்களை அடியொற்றித் திருத்தொண்டர் புராணத்தை விரித்துரைத்ததாகப் பேசும் புராண ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள், நம்பியூடாகவேனும் மேற்படி செய்தியைப் பெற்ற போதிலும் ஏதாவது ஒரிடத்திலாவது சிவபாத்தியனான, திருத்தொண்டர் மணிவாசகரைச் சுட்டாது விட்டாரென்பது நினைக்க முடியாததே. தம்மைப் போலவே ஒரு பேரரசனாயிருந்த அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராயிருந்து பரமசிவனாலேயே “வா என்று வான்கருணை காட்டி” ஆட்கொள்ளப்பட்ட சிவமாந்தன்மை பெற்ற திருத்தொண்டரை சேக்கிழார் பெருமான், எந்த ஒரு இடத்திலாவது சுட்டாது விட்டுள்ளார். தென்பாண்டி நாட்டுப் பெருமை, பெரியபுராணத்தில் பேசப்படுதலை அக்காலப் பேரரசின் நிர்ப்பந்தம் விரும்பவில்லையோ என்று அ.ச.ஞா போன்றோர் ஐயுறுவர். சட்டகத்தில் இடம் பெறாததைச் சொல்ல ஒருப்படாத சேக்கிழார்; பொய்யடிமையில்லாத புலவர் வரிசையிலும் மணிவாசகரைச் சுட்டவில்லையே என்று தீர்மானித்தும் விட்டதை சைவ உலகமும் அறியுமல்லவா?
"அந்த மெய்ப்பதிகத்து அடியார்களை நந்தம்நாதனாம் நம்பியாண்டார்நம்பி புந்தி அரப்பு கன்ற வகையினால் வந்த பேறு வழாமல் இயம்புவாம்”
பெரிய புராணமாம் திருத்தொண்டர் புராணம் பாடியருளிய நம் சேக்கிழார் சுவாமிகள் இவ்வாறு பாயிரம் செய்து, தாம் திருத்தொண்டர் சீர் பரவ வழிகாட்டிய நம்பியாண்டார் நம்பியின் பெருமையைப் பேசுவார். திருமுறைகளும் திருத்தொண்டர் தொகையும், நம்பியாண்டார் நம்பி அடிகளஞளிய திருத்தொண்டர் திருவந்தாதியும்
daráifignif Ipagat; Ivaif 2005

இல்லையென்றால், சேக்கிழார் இத்துணை விரிவாக அடியார் பெருமையைப் பாடியிருக்க முடியாது என்ற அளவுக்கு நம்பியின் திருவந்தாதியின் முக்கியம் புலனாகிறது.
இதற்கு முதலாக திருமுறைகள் நம் நம்பியாண்டார் நம்பி கண்டெடுத்துத் தொகுத்து அளித்திருக்காவிட்டால் பெரிய புராணம் என்கின்ற தெய்வீகக் காப்பியம்கூட எமக்கு கிடைத்திருக்க நியாயமில்லை எனலாம்.
திருத்தொண்டர்த் தொகை என்ற சுந்தரமூர்த்தி நாயனார் திருப்பதிகமே சேக்கிழார் பெருமானுக்கு தொண்டர்சீர் பரவிப் புராணம் செய்யத்தூண்டியது. ஏழாம் திருமுறை ஆசிரியர் சுந்தரர் இத் தொண்டர்த்தொகை என்ற பதிகத்தைப் பாடி ஏறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் கழித்தே நம்பியாண்டார் நம்பி திருவந்தாதியைப் பாடியுள்ளார் என்று அறுபத்துமூன்று நாயன்மார்களையும் ஒன்பது தொகையடியார்களையும் பாடிய மரபு பற்றி வெள்ளை வாரணார் குறிப்பிடுகின்றார். நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியைப் பாடியதன் மூலம் சுந்தரமூர்த்தி நாயனாரின் சுருங்கிய ஒவ்வோர் அடிக்கும் ஒரளவு விளக்கம் தந்தார் என்ற நன்றி பாராட்டும் பெரிய புராணச் சேக்கிழார் பெருமான் நம்பியாண்டார் நம்பி அடிகள் வாயிலாகக் கிடைத்த பல செய்திகளைச் சேர்த்தும் சில தகவல்களைத் தவிர்த்தும் இருப்பது பெரியபுராணப் பனுவல் தரிசிக்க வேண்டியதாகவுள்ளது.
“நம்பியாண்டார் நம்பி, புந்திராய் புகன்ற வகையினால் வந்தவாறு வழாமல் இயம்புவாம்” என்று கூறும் பெருமான், நம்பியடிகள் செப்பியவற்றை மாத்திரமின்றி அறிந்து சொல்லிய பல விடயங்களையும் தம் நூலில் சேர்க்காமலும் விட்டுள்ளார். நம்பியாண்டார் நம்பியடிகளின் அருமை பெருமைகளை நாம் அறிந்துக்கொள்ள எமக்குக் கிடைக்கும் நல் ஆதார நூல்களில் திருமுறைகண்ட புராணம் முக்கியமானது. சந்தான குரவர்களில் ஒருவரும் சித்தாந்த அட்டக ஆசிரியரும் சைவஞானியுமான உமாபதி சிவாச்சாரியார் பாடிய திருமுறைகண்ட புராணம் பற்றிய தெளிவின்மை உட்பட பல காரணங்கள் சேக்கிழார் சுவாமிக்கு சங்கடம் ஏற்படுத்தியுள்ளது என்பது இங்கு நோக்கத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக பல்வேறு அறிஞர்களும் பலவாறாக சிந்தித்திருப்பதை நாம் அறிய முடியினும் இவைகள் அனைத்தையும் சரியான காரணமென்று ஏற்றுக்கொள்ளத் தமிழுலகம் தயாராக இல்லை.
வரலாற்றாசிரியர்கள் வைக்கும் முன், பின்னான கருத்தேற்றங்களைக் கொண்டும் தெளிவுகாணல் அரியதாயிருக்கிறது. சோழப் பெருமான் இராஜ இராஜ சோழன் காலத்தில் அவன் விருப்பப்படி திருமுறைகளைத் தேடித்தொகுத்துத் தரும் பணியில் ஈடுபட்ட நம்பியாண்டார் நம்பியின் பெருமையைப் பேசும் திருமுறைகண்ட புராண ஆசிரியர் பற்றிய ஐயம் இவற்றில் முக்கியமானதாகும்.
தமக்கு வழிகாட்டியாகவிருக்கும் நம்பியாண்டரின் திருத்தொண்டர் தொகையும், அதனை ஓரளவு விரித்து ஒதிய
1.65

Page 198
நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந் தாதியையும் பழுதறக் கற்ற இக்கவிஞர் இவையிரண்டுக்கும் அப்பால், நாயன்மார்கள் பிறந்த ஊர்தோறும் சென்று, வரலாற்று உண்மைகளையும் செவிவழிச் செய்திகளையும் சேகரித்து அவற்றை நம்பியின் திருவந்தாதியுடன் ஒப்பிட்டு நீண்ட ஆய்வுநடத்தியுள்ளார்என்றுகூறும் சான்றோர் திருவிக, சுந்தரரின் திருத்தொகையானது இறையருள் உந்துதலினால் பாடப்பெற்றதாகலின், அதனைச் சேக்கிழார் அப்படியே ஏற்றுக்கொண்டார் என்றும் நம்பியாண்டார் நம்பியின், திருத்தொண்டர் அந்தாதியை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நம்பியாண்டார் நம்பியடிகளே சைவத்திருமுறைகளை வகுத்தார் என்று திருமுறைகண்ட புராணம் கூறுவதையும் சேக்கிழார் ஏற்றதாகத் தெரியவில்லை என்பது கூறும் திரு.க.வி. சேக்கிழார் திருமுறைகண்ட புராணம் கூறும் செய்திகளைக் கூறாதுவிட்டது குறித்தும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
சேக்கிழார் பெருமான் நிறைந்த அறிஞராக, புலமை நலமிக்க கவிஞராக, அருளாளனாக, ஆய்வாளனாக மட்டுமல்ல ஒரு வரலாற்றாசிரியராகவும் காணப்படுவது மகிழத்தக்கது. சமய அறிவினை சைவ ஞானத்தைத் தம் கல்வியினால், தேடலினால் பெற்ற அவர் சங்க இலக்கியங்களில் ஊறியவர். தமிழிலக்கண நூல்களிலும் வடமொழி நூல்களிலும் அவர் பரிச்சயமுள்ளவராக இருந்த காரணத்தால், தம் காப்பியத்தை நிறைவான ஒரு இலக்கியமாகத் தமிழுலகுக்குத் தந்தவராகிறார். மேலே கண்டதுபோல நம் சுவாமிகள் தமக்கு முதல், வழி நூல்களாக இருந்த திருத்தொண்டர்தொகை, திருத்தொண்டர் திருவந்தாதி ஆகிய இரு நூல்களை மிக நுட்பமாகவும் பழுதறவும் கற்றவரென்பதும் மறுக்க முடியாத உண்மை. இவையனைத்துக்கும் மேலாக ஒரு முதலமைச்சராக இருந்த காரணத்தால் அவருக்கு அரசியல் ஆதரவும், ஆளணியும் உதவிகளும் நிரம்பவே இருந்தன. திருவருள் வழிகாட்டியிருந்தது. எல்லாம் வல்ல மன்றாடும் அரன் தில்லைப்பெருமானின் பெருங்கருணைத் துணையும் இருந்தது. எம் பெருமானே “உலகெலாம்” என்று அடியெடுத்துக்கொடுத்த பக்தி வரலாறும் இந்நூலுக்கு உண்டு.
ஒரு வரையறை :-
தொண்டர் சீர் பரவும் சைவ முதற் காப்பியத்தைப் படைக்கவந்த தெய்வ புலமைச் சேக்கிழார் பெருமான், சுந்தரர்
சுவாமிகளுக்கு நன்றி கூறி ஆரம்பிக்கிறார்.
இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் அடியார்களை அந்தமில் புகழ் ஆலாலசுந்தரர்
166

சுந்தரத் தொண்டத்தொகைத் தமிழ் வந்து பாடிய வண்ணம் உரை செய்வாம்” என்கிறார். காவிய மரபை அடியொற்றி நம் சேக்கிழார் பெருமான் தொண்டுத் தலைமைக்கு முன்னிடம் கொடுத்திருக்கிறார். சோழ நாட்டுத் திருவாரூரைப் புகழ்ந்து பாடல் செய்கிறார். நன்றியும் சொல்கிறார். இதுவே திருக்கூட்டச் சிறப்பு 11ஆம் பாடலில் வந்த செய்தி. திருத்தொண்டத் தொகையின்படி - அங்கு கூறப்பட்ட நாயன்மார்கள் வரிசை தப்பாமல் தொண்டர்சீர் பரவுகிறேன் என்று வரன்முறையை தெளிவாகக் கூறுகின்ற சேக்கிழாரை நாம் தரிசிக்கின்றோம். சேக்கிழார் பெருமான் பாடிய இப்பாடல் தான் பின்னர் எழுகின்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு தருகின்ற ஒரு இடமாக ஆய்வாளர்களாலும் பிறராலும் பேசப்படுகிறது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதியிலும் நம்பியாண்டர் பெருமான் துதியிலும் பெரியபுராண ஆசிரியர் சேக்கிழார் பெருந்தகை எடுத்தாண்ட வார்த்தைகளும் மிக உறுதியானவை. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டர்களாக 62பேரை போற்றிய முறைமையை “இந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான் அடியார்களை” என்ற அடிகளால் எடுத்துக்காட்டும் சேக்கிழார், நம்பியாண்டார் நம்பிக்கு துதி செய்கையில் அந்த மெய்ப்பதிகத்து அடியார்களை ‘நந்தம் நாதன் புந்தி அறப் புகன்ற வகையினால்” என்று குறிப்பிடும் சுந்தரர் முறைமையால் வகுத்த பாதையில் நின்று மாற விரும்பாத அவரின் கொள்கையையும் சுந்தரர் திருப்பதிகத்தை தழுவி அதே தொண்டர்களையே நம்பி அடிகளார் விரித்துப் பேசுவதாக காட்டுகின்ற இடமும் கவனிக்கத்தக்கது.
சுந்தரரை தம் பெரிய புராணத்தில் முதல் இடை கடையிலும் ஒவ்வோரு சருக்கங்களிலும் பாராட்டி அடிக்கடியும் அவசியமாகவும் நன்றி சொல்லும் இடங்கள் காணத்தக்கது.
"நேசம்நிறைந்த உள்ளத்தால் நீலம்நிறைந்த மணிகண்டத்து ஈசன் அடியார்பெருமையினை எல்லாம் உயிரும் தொழ எடுத்து தேசம் உய்யத் தொண்டத்தொகை முன்பணித்ததிருவாளன் வாசமலர் மென்கழல் வணங்க வந்த பிறப்பை வணங்குவாம்’
என்று சேக்கிழார் பெருமான் சுந்தரரை “திருவாளன்” என் பெயரால் போற்றுகின்ற இடம் மிக அற்புதமானது. இப்பாடல் 4ஆம் சருக்கமான மும்மையால் உலகாண்ட சருக்கத்தின் நிறைவுப் பாடலாக அற்புதமாக அமைகின்றது. சேக்கிழாருக்கு முன்னர் தமிழ்க் காப்பியம் செய்தவர்கள் படலம் என்ற சொல்லையே கையாள இவரோ தம் பகுதிகளுக்கு சருக்கம் என்ற பெயரை தந்திருப்பதும் இங்கு நோக்கத்தக்கது.
6 rá éignif Ibnytto Ipart 2005

Page 199
ஞானசம்பந்தரின்
- கலாபூஷணம், சைவப் புலி
சேக்கிழார் சுவாமிகளின் இயற்பெயர் அருள்மொழித் தேவர். தன் தெய்வப் புலமையால் அருள்மொழியில் திருத்தொண்டர் புராணம் பாடித் தன் இயற்பெயரைக் காரணப் பெயராக்கிய பெருமைக்குரியவர் இவர். அப் பெருமையில் தான்பிறந்த சேக்கிழார் குலப் பெயரையே தன் பெயராகப் பெற்ற சிறப்பும் இவருக்குண்டு.
திருத் தொண்டர் புராணத்தில் சேக்கிழாரால் பாடப்பட்ட அறுபத்துமூன்று தனியடியார்களில் மூன்று வயதில் ஞானம் பெற்று பதினெட்டு வயதில் முத்திப் பேறடைந்தவர் ஞான சம்பந்தப் பெருமான். மிகக் குறைந்த வயதில் ஞானமும் முத்தியும் பெற்ற ஞானசம்பந்தரை ஞானத்தின் திருவுரு வாகவே கண்டு எமக்குக் காட்டுகின்றார் சேக்கிழார் சுவாமிகள்.
திருஞான சம்பந்தர் புராணத்திலே சேக்கிழார்வாக்கின் விறல் மன்னராய ஞான சம்பந்தரைத் தன் வாக்கின் விறலால் அருள்மொழியில்-தெய்வத்தமிழில் குறிக்கும் பெயர்கள் நாமாவளி மந்திரங்களாகவே அமைகின்ற செழுமையை இங்கு நயக்கலாம்.
எண்ணரிய சிவஞானத்தின்னமுதம் குழைத்தருளி உண்ணடிசில் என உமையம்மை ஊட்ட உண்டதனால் சிவஞானசம்பந்தரானார். ஞானப்பால் உண்டவாயின் மகிமையைப்
- பாலறாவாயர், பால் நாறும் மணிவாயர், பால் நாறும் பொன்மணி வாயினர், பாலறாமதுரமொழிப் பவள 6JITustif:- எனும் நாமங்களில் பாடிப்பரவுதல் படிக்கப் பரவசமூட்டுகிறது. ஞானப்பாலுண்டு சிவஞானம் பெற்ற காரணத்தால் - ஞானபோனகர், ஞானம் உண்டார், ஞானத்தமு துண்டார், ஒப்பருஞானமுண்டார், ஞான ஆரமு துண்டார், அளவில் ஞானத்தமுதுண்டார், திருவள்ளத் தமுதுண்டசம்பந்தர், ஞானத்தமுதுண்ட செந்தமிழ் ஞானசம்பந்தர், செம்பொன் வள்ளத்தில் அமுதுண்ட வள்ளலார், ஞானத்தமுது செய்தருளிய குருளையர் என்றும். ஞானித்தின் திருவுரு, ஞானவித்தகர், ஞானப் பிள்ளையார், தெய்வஞானக்கன்று, ஒதாது ஞானமெலா முணர்ந்தார், குறைவிலா நிறை ஞானக் கொண்டலார்,
grád graif sigato, Ilsaot 2oo5
 
 

ய்வப்புலமையில் நாமச் செழுமை
கோதிலா ஞானசம்பந்தர்,ஞானச் செம்மலார், பெருஞான சம்பந்தர், கலைஞானத்து ஆழியகடல் அதனிடை அமுது, வளர்ஞானப் பொறையாளிமுகில். எனத்தனது ஞானவாக்கில் பாடிப்பணிதல் உள்ளத்தை நெக்கு நெக்குருக வைக்கிறது.
சம்பந்தப் பெருமான் பிறந்ததால் கவுணியர் குலம் பெற்ற பெருமையைக் கவுணியர் குல நாமமாகப் பாடி மகிழ்கிறார்.
- கவுணியனார், கவுணிப்பிள்ளையார், கவுணித்தலைவர், கவுணியக்கன்று, கவுணியர் கோன், கவுணியர்கற்பகம், கவுணியர்தனம், கவுணியர் தோன்றல், கவுணியகுலதீபர், கவுணியர் குலத்திலொரு காதலன். எனவும்,
சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டதால் - ஆளுடையபிள்ளையார், சிவம்பெருக்கும்பிள்ளையார், சிவபுரத்துப் பிள்ளையார், சிவபுரத்தாண்டகை, சிவபுரச் செம்மலார், சைவசிகாமணியார். எனவும் பாடுதல் காணலாம். ஞானத்தமிழ் பாடியதனால்,
- தமிழ் விரகர், முத்தமிழ்விரகர், அருந்தமிழாகரர், வண்டமிழ் நாயகர், வண்டமிழின் மொழிவிரகர், மும்மை நிலைத் தமிழ்விரகர், சந்தத்தமிழ் விரகர். எனவும், வேதப்பொருளைப்பாடியதால்,
- வேதவாயர், வேதகீதர், மறைவளர்திரு, சுருதியின் ஒளி, நான் மறையின் தனித்துணை, வேதநெறிவளர்ப்பவர், மதுரமொழி மறைத்தலைவர், மறைவாழ வந்தருளும் குருளையார், மறைச்சிறு போதகம், வையமெலாம் உய்யவரு மறைச்சிறுவர், இருக்குமொழிப்பிள்ளையார், வேதந்தமிழால் விரித்தார், திருமறையும் தீந்தமிழும் சிறக்கவரு நாயகர். எனவும் போற்றுதல் உள்ளத்தை உவகையுறவைக்கிறது. பிறந்த ஊராகிய சீர்காழிப்பதியைப் புண்ணியப்பேறடைய வைத்த பெருமையில் அப்பதியின் பன்னிரு பெயர்களில் காழிப் பெயரால்,
- காழியின் கோன், காழிவேந்தர், காழிநன்னாடர், காழியின் தவம், காழியர் தம்சீராட்டு, அருட்காழிப்
67

Page 200
பிள்ளையார், கடற்காழி அண்ணலார், கடற்காழிக் கவுணியர் தம் தலைவர், கவுணியர் வாழ வந்தருளிய மறைவேந்தர். எனவும், புகலிப் பெயரால்,
- புகலியர்தலைவர், புகலிக்காவலர், புகலிமன்னர், புகலிவேந்தர், புகலிப்பிரான், புகலிக்கவுணியர், புகலிப் பிள்ளையார், புகலிப்புண்ணியனார், புகலியர் புகல், பெரும்புகலிப்பிள்ளையார், போதஞானப் புகலிப் புனிதர், வண்புகலி வேதியனார், புகலிவந்த பூசுரர் சிங்கம், சீதவள வயற்புகலித்
- திருஞான சம்பந்தர், எனவும், சண்பைப் பெயரால்,
சண்பைநாதர், சண்பைக் காவலர், சண்பை ஆளியார், சண்பைத் தலைவர், சண்பை வள்ளலார், சண்பை யந்தணர், சண்பையாளுமன்னர், சண்பையாண்ட கையார், சண்பைவளந்தருநாடர், சண்பைநகர் வேந்தர், சண்பைத் திருமறையோர் தலைவர், ஆசில் சீர்ச்சண்பை ஆண்டகையார். எனவும், சிரபுரப் பெயரால்
- சிரபுரத்தவர், திருவளர் சிரபுரச் செல்வர் எனவும், வெங்குரு எனும் பெயரால்,
- வெங்குருவேந்தர், தொல்லை வெங்குரு வேந்தர். எனவும், தோணிபுரப் பெயரால்,
- தோணிபுரத் தோன்றலார், தோணிபுரத்தந்தணனார். எனவும் தன் சொற்பெருக்கால் ஞானசம்பந்தரின் புகழ்
i
வாழ்க்கையி
சரியான லட்சியமற்ற வாழ்க்கை து வாழ்க்கை தாவர வாழ்க்கைக்குச் சமமானது.

பெருக்கும் புலமை வணங்கத்தக்கதே.
மேலும்,
பொதுவும் சிறப்புமான நாமங்களாக,
- தவமுதல்வர் சம்பந்தர், தவம் தழைப்ப வந்தருளிய
பிள்ளையார், சிறிய பெருந்தகையார், இசைவளர் ஞானசம்பந்தர், கானத்தின் எழுபிறப்பு, வாக்கின் பெருவிறல் மன்னர், வானவர் நாயகர் மகனார், மண்ணெலாம் உய்யவந்தவர், நீற்றுநெறி மறையவனார். மண்ணில்வளர்மதிக்கொழுந்து, பொருபொன்னித்துறை பெறுமணி, புண்ணியமுதல், கண்ணிறை கதிர், பண்ணியல் கதி, கலை வளர்மதி
எனவும்,
உவமைநயச் சிறப்புடன்,
- செய்தவத்தின் அங்குரம்போல் வளர்ந்தருளி - போல
புண்ணியக் கன்றனையவர் - அனைய மறைச்சிறு போதகமன்னார் - அன்ன பூசுரர் தம் சிங்கம் அணையார் - அனைய புண்ணியக் கொழுந்தனையார் - அனைய சேமவுயர் பரிதியில் திகழ்பிரான் - இல்
அருங்கலைச் சிறுமழ இளங்களிறன்னார் - அன்ன
சண்பையந்தணர்க்கெலாம் அருமறைப்பொருள்போல் - போல
எனவும், இலக்கியச் செழுமையும் சுவையும் பொலியப் பாடுகின்றார். புராணம் முழுவதும் இப்பெயர்கள் விரவிக் கிடப்பதைப் படித்துச் சுவைக்கலாம்.
சேக்கிழார் சுவாமிகள் தன்தெய்வப் புலமையால், சிவத் தமிழ் அருள் மொழியில், திருஞானசம்பந்தரின் பாதமலர் தலைக் கொண்டு, அவர் நாம அர்ச்சனைபாடும் திருத் தொண்டை நாம் வியந்து, பணிந்து போற்றி வணங்குவாம்.
ன் குறிக்கோள்
டுப்பில்லாத படகைப் போன்றது. லட்சியமற்ற
- சுவாமி சிவானந்தர -
6ršégrifugato tvo 2005

Page 201
... 3 ફ&
*
லிபரியபுராணம்
கலாநிதிஏ. என் சிரேஷ்ட வி
நுண்கள்
யாழ். பல்
Uக்தி என்பது இறைவனிடம் செலுத்தப்படும் அன்பு ஆகும். அன்பின் வழியாக இறைவனை அடையலாம் என்பது இந்து மதக் கொள்கை. பகவத் கீதை இறைவனை அடைவதற்குரிய வழிகளாக மூவகை யோகங்களைக் கூறுகிறது. அவை கர்மயோகம், பக்தியோகம், ஞான யோகம் என்பன. வேத இலக்கியங்கள், சூத்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தென்னாட்டு பக்தி இலக்கியங்கள் யாவும் பக்தியின் இயல்பினையும் அதன் சிறப்பினையும் அது ஆன்மீக சாதனையாக அமையுமாற்றினையும் விளக்கிக் கூறுகின்றன. இறைவனை அடையும் அன்பு வழியாக பக்தி, காப்பியங்களிலும், கலைவடிவங்களிலும் வெளிப்படுத்தப்படும் ரசமாகவும் அமைகின்றது. ரசம் என்பது தமிழில் சுவை என்று பொருள்படும். கலை அனுபவத்தின் மூலமாகப் பெறப்படுவது சுவை ஆகும். தென்னாட்டு பக்தி இலக்கியங்கள் என்று கூறும் பொழுது சைவ நாயன்மார்களினாலும், வைஷ்ணவ ஆழ்வார்களினாலும் பாடப்பட்ட பாடல்களையே நாம் கருத்திற் கொள்கின்றோம். கி.பி. 5ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 12ம் நூற்றாண்டு வரையும் பக்தி நெறி வளர்ந்து வந்ததுடன் அதன் வெளிப்பாடாக பக்தி இலக்கியங்கள் தோற்றம் பெற்றமையையும் அவதானிக்கலாம். தென்னாட்டு பக்தி நெறி, இராமானுஜரது காலத்தில் வடநாட்டிற்குப் பரவி அங்கும் பக்தி இலக்கியங்களின் தோற்றத்திற்கும் கலைகளின் செழுமைக்கும் காரணமாக அமைந்தது.பக்தியும் அதன் தாக்கமுமே சிற்பங்களில் கலைத்துவ வெளிப்பாடாக அமைந்துள்ளது.
பக்தி என்பது ஓர் அனுபவ நிலை ஆகும். இறைவனிடம் செலுத்தப்படும் அன்பின் அடியாக இவ்வனுபவம் கிட்டுகிறது. இறைவனிடம் செலுத்தப்படும் அன்பானது பல்வேறு உறவுநிலைகளினூடாகப் பெறப்படும் தொடர்பின் வழியாக ஏற்படும் ஓர் அனுபவ நிலை. இது தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று, அன்பு என்று விளக்கப்பட்டுள்ளது (). பக்தி எனும் சொல் பஜ் என்ற வேர்ச் சொல்லின் அடியாகத் தோற்றம் பெற்றதுடன் அது பக்தியுடன் பூசை செய்தல் என்றும் பொருள்படுகிறது. 'பஜ்' என்ற வினைஅடி பகிர்தல், பங்குகொள்ளல் என்ற அர்த்தத்தையும் தருகிறது. இதனால் பக்தி என்பது ஒரு வழி அன்பு அல்ல. அது அன்பு கொள்வோருக்கும் அன்பு கொள்ளப்படும் பொருளுக்கும் இடையேயுள்ள உறவைக் குறித்து நிற்கிறது.
சேக்கிழார் மாதாட்டு மலர்2005
 
 

r. 8ഗ്രഖങ്ങréഖങ്ങി பிரிவுரையாளர்
லைத் துறை கலைக்கழகம்
锣
எனவே பக்தி என்பது உறவு நிலைகளினடியாகப் பெறப்படுகின்ற ஒரு தொடர்பு நிலை அனுபவம் ஆகும். சாதாரண உலகியல் உறவுகள் தெய்வீக உறவுகளாகப் பரிணமிக்கும் நிலையில் பக்தி என்ற பெயரைப் பெறுகின்றன. வடமொழி இலக்கியங்களில் இறைவனை வழிபடும் ஓர் நெறியாகிய பக்தி ரசமாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் அதனை கருப் பொருளாகக் கொண்ட இலக்கியங்களும் கலைகளும் தோற்றம் பெற்றுள்ளன. வடமொழி இலக்கிய மரபில் பக்தி பற்றி சிறப்பித்துக் கூறும் நூல்கள் பல உள்ளன. நாரத பக்தி சூத்திரம், சாண்டில்ய பக்தி சூத்திரம் என்பன அவற்றுள் முக்கியத்துவம் பெறுவன. பகவத்கீதை பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்த நூலாகும். ஆதிசங்கரர் தமது செளந்தர்யலகரி, பஜகோவிந்தம் போன்ற நூல்களில் பக்தியின் மேன்மையை விவரிக்கிறார்.பக்தியே கர்மத்துக்கும் ஞானத்துக்கும் அடிப்படையாக அமைந்தது. ஆகமங்கள் கூறும் கோயில் வழிபாட்டிற்கும் கிரியைகளுக்கும் அடிப்படையாக அமைந்தது பக்தி ஆகும். இராமானுஜரது விசிஷ்டாத்துவைதம் பக்திமார்க்கத்தை மோட்சத்துக்குரிய சிறந்த வழியாக கொண்டமைந்தது. இவற்றுடன் பக்தி மீமாம்சை, பக்தி ரசாமிர்தசிந்து, பக்தி ரசாயணம் போன்ற நூல்களும் பக்தி பற்றி பேசுவன. இதிகாசங்கள், புராணங்கள் யாவும் பக்திக்கு முக்கியத்துவம் கொடுத்த நூல்கள் ஆகும்.
தென்னாட்டு பக்தி இலக்கியங்களாகக் கொள்ளப் படுபவை சைவ நாயன்மார்களினாற் பாடப்பட்ட பாடல்களும் வைஷ்ணவ ஆழ்வார்களினாற் பாடப்பட்ட பாடல்களும் ஆகும். நாயன்மார்களினாற் பாடப்பட்ட பாடல்கள் திருமுறைகளாகவும் ஆழ்வார்களினாற் பாடப்பட்ட பாடல்கள் திவ்விய பிரபந்தங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. நாயன்மார் என்போர் இறைவனிடம் நம்பிக்கை கொண்டு தம்மை அர்ப்பணித்தவர்கள் எனவும், ஆழ்வார்கள் இறைவனது அன்பில் ஆழ்ந்து ஈடுபட்டவர்கள் எனவும் பொருள்படும். சமய குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் பாடிய தேவாரங்கள் முதல் ஏழு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. எட்டாம் திருமுறையாக மாணிக்கவாசகரது திருவாசகமும், திருக்கோவையாரும் இடம் பெறுகின்றன. ஒன்பதாந் திருமுறையாக திருவிசைப்பா, திருப்பல்லாண்டு போன்ற நூல்கள் இடம் பெறுகின்றன. திருமூலரது திருமந்திரம் பத்தாந் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
169

Page 202
காரைக்கால் அம்மையார், பட்டினத்தடிகள், நம்பியாண்டார் நம்பி போன்ற பதினொருவர் பாடிய நூல்கள் பதினொராந் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பதினொரு திருமுறைகளும் நம்பியாண்டார் நம்பினாற் தொகுக்கப் பட்டதாக அறிகிறோம். பன்னிரண்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் சேக்கிழாரினால் இயற்றப்பட்ட பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாகச் சேர்க்கப்பட்டது. அருண்மொழித் தேவர் என்னும் பிள்ளைத் திருநாமம் கொண்ட சேக்கிழார் அநபாயச் சோழனது அரசவையில் உத்தம சோழ பல்லவன் என்ற நாமத்துடன் அமைச்சராகப் பதவி வகித்தவர். இவர் திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தை இயற்றினார். இப்பெரிய புராணத்தில் பதின்மூன்று சருக்கங்கள் உள்ளன. இவற்றில் அடங்கிய பாடல்களின் தொகை 4286 ஆகும். இந்நூலில் தனியடியார்கள் அறுபத்து மூவரதும் தொகை அடியார்கள் ஒன்பதின்மரதும் வரலாறு தனித்தனியாக வகுத்தும் விரித்தும் கூறப்பட்டுள்ளது. சேக்கிழாருக்கு 'உலகெலாம் என இறைவன் அடி எடுத்துக் கொடுக்க அவர் பெரிய புராணத்தைத் தொடங்கி நிறைவுசெய்யும்போதுஅடியாரவர் வான்புகழ் நின்றதெங்கும் நிலவி உலகெலாம்' என்று உலகெலாம் அவனே, அவனே உலகெலாம் என சைவசித்தாந்த முடிவைத் தெளிவாகச் சொல்கிறார். திருத்தொண்டர்கள் ஆகிய நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் திருத்தொண்டர் புராணம் பெரிய புராணம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. ‘தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே' என்பதற்கேற்ப அவர் தம் வரலாற்றைப் பாடிய சேக்கிழாருக்கு “தொண்டர் சீர் பரவுவார்” என்ற சிறப்புப் பெயரும் சோழ மன்னனால் வழங்கப்பட்டதாக அறிகிறோம். பெரிய புராணம் இறைவனிடம் பக்தி செலுத்திய பக்தி நெறி ஒன்றையே தம் வாழ்வு நெறியாகக் கடைப்பிடித்த நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதால் அது பக்திச் சுவை மிக்க காவியமாகக் கொள்ளப்படுகிறது. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் சேக்கிழாரைப் “பக்திச் சுவை நனி சொட்டப் பாடிய கவிவலவ” என்று சிறப்பித்துக் கூறியுள்ளார். பெரிய புராணத்தில் பெரும் காப்பிய நாயகனாகப் போற்றப்படுபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆவார். இந்நூலுக்கு முதன் நூலாக சுந்தரமூர்த்தி சுவாமிகளால் அருளப்பட்ட திருத்தொண்டர் தொகையும் வழிநூலாக நம்பியாண்டார் நம்பியினால் அருளப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதியும் அமைகின்றன. பெரிய புராணம் பக்தி ரசத்தை வெளிப்படுத்தும் பெரும் காப்பியமாக விளங்குவதுடன் சைவ சமயத்தையும் சைவ சித்தாந்த தத்துவத்தையும் வெளிப்படுத்தும் நூலாகவும் விளங்குகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பக்தி இயக்கம் பல்லவர் காலப்பகுதி முழுவதிலும் தொடர்ந்து இடம் பெற்றதுடன் அதன் முழுமையான தாக்கத்தைச் சோழர் காலப்பகுதியிற் காண முடிகிறது. இக்காலப்பகுதியில்
170

தோற்றம் பெற்ற சைவ சித்தாந்த சாஸ்திரங்களின் தோற்றத்திற்கும் பக்தி இயக்கத்தின் தாக்கமே காரணம் எனலாம். சைவ சித்தாந்த தத்துவக் கருத்துக்களை விளக்கும் சாஸ்திர நூல்கள் ஆன்மாக்களின் உண்மைத் தன்மை அவற்றின் இயல்புகள் இலக்கணங்கள் அவற்றின் இலட்சியமாகிய மோட்சம் அதனை அடைவதற்குரிய வழிகளான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சைவநாற்பதங்கள், மோட்ச நிலையில் ஆன்மாவுக்கும் இறைவனுக்குமிடையேயுள்ள தொடர்பு ஆகியவை பற்றி விளக்குகின்றன. பக்தி நெறியின் அடிப்படையிலேயே சைவநாற்பாதங்கள் இடம் பெறுகின்றன. இந் நால்வகை மார்க்கங்களையும் பின்பற்றியவர்களாக சைவ நாயன்மார்கள் விளங்குகின்றனர். சரியை நெறி மூலம் இறைவனை எஜமானாகவும் தம்மை அடிமையாகவும் கொண்டு முத்திய டைந்தவராகத் திருநாவுக்கரசர் காணப்படுகிறார். இந்நெறி தாச மார்க்கம் எனவும் இதனால் அடையப்படும் முத்தி சாலோகம் எனவும் அழைக்கப்படும். இறைவனைப் பரமபதத் தந்தையாகவும் தன்னை சற்புத்திரனாகவும் கருதி கிரியை நெறி நின்று சாமீப முத்தி அடைந்தமைக்கு உதாரணமாக ஞானசம்பந்தரைக் கூறலாம். இந்நெறி சற்புத்திர மார்க்கம் என்று அழைக்கப்படும். இறைவனுடன் தோழமை உறவு கொண்டு பக்தி செலுத்திய சுந்தரர் நெறி சகமார்க்கம் எனவும் அதன் மூலம் கிட்டப்படும் முத்தி சாரூபம் எனவும் அழைக்கப்படுகிறது. இறைவனைத் தலைவனாகவும் தம்மைத் தலைவியாகவும் கொண்டு அகத்துறைப் பாடல்களைப் பாடிய மாணிக்கவாசகரது நெறி ஞான நெறி அல்லது சன்மார்க்கம் என்று அழைக்கப்படும். இந்நெறி மூலம் கிட்டும் சாயுச்சிய முக்தியே உயர்ந்த முக்தியாக கூறப்படுகிறது. முதல் மூன்று மார்க்கங்களினாலும் அடையப்படும் முத்தி பதமுத்தி எனவும் ஞானமார்க்கத்தினால் அடையப்படும் முத்தி பரமுத்தி எனவும் அழைக்கப்படுகிறது. அறுபத்து மூன்று நாயன் மார்களில் ஏனையோரும் இச் சைவ நெறிகள் நான்கினுள் ஒன்றினைத் தமக்கு சிறப்புடைய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர்கள். இத்தகைய பக்தர்களின் மெய்மை மெய் வரலாறுகளை நாட்டு மக்கள் அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் சேக்கிழார் செந்தமிழ்க் காப்பியமாக உருவாக்கித் தந்துள்ளார்.
அழகியல் அனுபவமாக ரசம்
ரசானுபவத்தை வெளிப்படுத்தும் காப்பியங்கள் தம் கருப்பொருளாக மனிதனது பல்வேறு வகையான பாவங்களை (உணர்ச்சிகளை) கொண்டமைந்தவை. இந்திய அழகியல் நூலாகிய நாட்டிய சாஸ்திரம் நாட்டிய ரசங்கள் பற்றியும் அவற்றிற்கு அடிப்படையாக அமைந்த பாவங்கள் பற்றியும் முறையே 6ஆம் 7ஆம் அத்தியாயங்களிற் கூறுகின்றது. பரதர் எட்டு வகையான ஸ்தாயிபாவங்களையும் அவற்றோடு தொடர்புடைய ரசங்களையும் (2) கூறுகிறார். அவை பின்வருமாறு
சேக்கிழார் மாநாட்டு மலர்2005

Page 203
1. ரதி - சிருங்காரம்
2. ஹாஸம் - ஹாஸ்யம் 3. சோகம் - கருணை 4. குரோதம் - ரெளத்ரம் 5. உற்சாகம் - 6 Jh 6. பயம் - பயானகம் 7. ஜுகுப்சை - பீபத்சம் 8. விஸ்மயம் - அற்புதம்
தமிழ்க் கவிதையியல் நூலான தொல்காப்பியமும் பொருளதிகாரம் மெய்பாட்டியலில் நகை அழுகை இழிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை ஆகிய எட்டு மெய்ப்பாடுகள் பற்றிக் கூறுகின்றது (3). ரசம் என்பது சுவைத்தல் அனுபவித்தல் என்று பொருள்படுகிறது. கலைப்படைப்புகளைப் பார்த்தும் கேட்டும் அனுபவிப்பதன் மூலமாக பெறப்படும் அனுபவமே ரசானுபவம் எனப்படும். மெய்ப்பாடு என்பது கலைப்படைப்புக்களில் இலக்கியங்களில் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகளின் மூலம் உள்ளத் துணர்ச்சிகளில் எற்படும் மாற்றங்களும் அதனூடாக உடலில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது விகாரங்கள் ஆகும். நாட்டிய சாஸ்திரமும் தொல்காப்பியமும் 8 வகையான உணர்ச்சிகள் பற்றிப்பேசினாலும் 9ஆவது ரசம் அல்லது சுவையாக சாந்தம் அல்லது நடுவுநிலைமை பற்றிய கருத்துக்களையும் ஆங்காங்கே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பக்தி என்பது 10ஆவது ரசமாகப் பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாதாரண உலகியலற் காதல் பக்தி இலக்கியங்களில் தெய்வீகக் காதலாகக் கூறப்படுகிறது. உலக வாழ்க்கையில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலுள்ள உறவு, எஜமானுக்கும் அடிமைக்கும் இடையிலுள்ள உறவு, காதலன் காதலிக்கு இடையிலுள்ள உறவு யாவும் இறைவனிடம் செலுத்தப்படும் நிலையில் அது 'பக்தி' எனப்படுகின்றது. பரதர் முதலிற் கூறிய பாவமாகிய 'ரதி இறைவனிடம் செலுத்தப்படும் நிலையில் பகவத்ரதி என்று அழைக்கப்படும். இதே போன்று தமிழர் மரபில் அகத்துறைப் பாடல்கள் அத்தகைய உறவை வெளிப்படுத்துகின்றன. அகத்துறைப் பாடல்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட அன்பெனும் உணர்ச்சியே பல்லவர் கால பக்தி இலக்கியங்களில் இறைவனிடம் செலுத்தப்படும் அன்பு அல்லது பக்தியாகப் பரிணமித்தது எனக் கூறலாம். செய்யுள் செய்வார் மெய்ப்பாடு தோன்றச் செய்தல் வேண்டும் என்பது தொல்காப்பியர் கூறும் விதி. “யாதாயினும் ஒன்றைக் கூறியபடி அதனை ஆராய்ந்து உரைத்தல் இன்றி அச்செய்யுளிற் கூறப்பட்ட பொருள் தானே வெளிப்பட்டுத் தோன்றினாற் போல கண்ணிர் அரும்பல், மெய்சிலிர்த்தல் போன்ற மெய்ப்பாடுகள் வெளிப்படச் செய்வது மெய்ப்பாடு” என்றார் நச்சினார்க்கினியார்.
உய்த்துணர்வின்றித்தலைவருபொருளான் மெய்ப்பட முடிப்பது மெய்பாடாகும். (4) இவ்வாறு தமிழ் இலக்கிய மரபிலும் உணர்ச்சிகள் பற்றியும், சுவை பற்றியும் பேசப்பட்டுள்ளது. ரசானுபவம்
சேக்கிழfமாநாடு மலர்2005

என்பது இலக்கியங்களை வாசிப்பதன் மூலமும் கலை வடிவங்களை பார்த்தும் கேட்டும் அனுபவிப்பதன் மூலமும் பெறப்படும் உயர்ந்த அழகியல் அனுபவம் ஆகும். வடமொழி மரபில் காவியம் என்பது தமிழிற் காப்பியம் என்று வழங்கப்படுகிறது. விஸ்வநாதர் தமது சாகித்தியதர்ப் பணத்தில் ‘வாக்கியம், ரசாத்மகம், காவியம்’ என்று கூறியுள்ளார். ரசத்தை ஆத்மாவாகக் கொண்டதே காவியம் என்பது இதன் பொருள். இந்த வகையில் தமிழ்க் காப்பியங்களை நோக்கும் போது பெரிய புராணம் பக்திச் சுவையை வெளிப்படுத்தும் பெருங்காப்பியம் என்பது புலனாகும்.
ஒரு காவியத்தில் சுவையை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு காரணிகள் அச்சுவையுடன் தொடர்புடையனவாக உள்ளன. அவற்றை விடய காரணிகள் விடயி காரணிகள் என இரு வகைப்படுத்தலாம். நாட்டிய சாஸ்திரம்
விபாவானுபாவ வியபிசாரி சம்யோகாத்
ரஸ்நிஷ்பதி (5) என்ற சூத்திரத்தில் ரசத் தோற்றத்திற்குரிய காரணிகளாக விபாவம். அனுபாவம், வியபிசாரி பாவம் போன்றவற்றை விடய காரணிகளாகக் கூறுகிறது. மனிதனுக்கு அடிப்படையாக அமைந்த உணர்ச்சிகளை (ஸ்தாயி பாவங்கள்) விடயீ காரணிகளாக கூறுகிறது. விபாவம் என்பது ஆலம்பன விபாவம், உத்தீபன விபாவம் என இரு வகைப்படும். காவியத்தில் கதாபாத்திரங்களை ஆலம்பன விபாவம் குறித்து நிற்கிறது. ஏனைய இயற்கைக் கூறுகளான நிலம், பொழுது, தென்றல், கடல், ஆறு போன்ற சூழல் வர்ணனைகள் யாவும் உத்தீபன விபாவமாகக் கூறப்படுகிறது. மேற்குறிப்பிட்ட காரணிகளினடியாகத் தோன்றும் காரியங்களை அனுபாவம் என்பர். உடலில் தோன்றும் சகலவிதமான உணர்ச்சி வெளிப்பாடுகளும் அனுபாவங்கள் சாத்வீக பாவங்கள் என்றழைக்கப்படும். இவை பின்வருமாறு
1. நிலை குற்றி நிற்றல்
2. வியர்த்தல்
3. மெய்சிலிர்த்தல்
4. குரல் மாற்றம்
5. நடுங்குதல்
6. நிறமாற்றம்
7. கண்ணிர் உகுத்தல்
8. மயங்குதல்
சத்துவம் என்பது சாற்றுங் காலை மெய்மயிர் சிலிர்த்தல் கண்ணிர்வார்த்தல் நடுக்கங்கடுத்தல் வியர்வை தேற்றம் கொடுங்குரற் சிதைவொடு நிரல்பட வந்த பத்தென மொழிய சத்துவந்தானே.
வியபிசாரி பாவங்கள் கதாபாத்திரங்களிடத்தே இடையிடையே தோன்றி பிரதான உணர்ச்சியை வளர்த்துச்
செல்லும் உணர்ச்சிகளாகும். இவ்வாறு ஒரு காவியத்தில்
171

Page 204
பல்வேறு காரணிகளின் சேர்க்கையினால் பார்வையாளர்கள் அல்லது கோட்போரிடத்து ரசானுவம் தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் பக்தி எனும் பிரதான உணர்ச்சியை பாடுபொருளாகக் கொண்ட காப்பியங்களில் எவ்வாறு ரசானுபவம் தோன்றுகின்றது என்பதை ஆராய்தல் வேண்டும்.
பெரிய புராணத்தில் பக்தி ரசானுபவம்
சேக்கிழாரது பெரிய புராணம் 63 நாயன்மார்களது சமய வாழ்க்கையைச் சித்திரிப்பதாக உள்ளது. இவர்கள் யாவரும் திருத்தொண்டர்களாகவும் இறைபக்தர்களாகவும் இவ்வுலகில் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். சாதாரண காப்பியங்கள் போலன்றி சமய காப்பியங்களில் வரும் கதாநாயகர்கள் பக்தர்களாகவோ சித்தர்களாகவோ முத்தியை குறிக்கோளாகக் கொண்ட ஒருவராகவோ தான் இருக்க முடியும். இவர்களால் மட்டும்தான் பக்தி எனும் ரசத்தை வெளிப்படுத்த முடியும். இந்த வகையில் சேக்கிழார் பக்தர்களின் வரலாற்றின் மூலம் பக்தி அனுபவத்தை வெளிப்படுத்த முற்படுகிறார். ஏனைய காப்பிய ஆசிரியர்கள் போலன்றி உண்மை வரலாற்று நாயகர்களை காப்பிய நாயகர்களாக்கும் சேக்கிழாரின் ஆக்கத்திறன் இங்கு சிந்தனைக்குரியது. காரணம் தாம் நினைத்தவாறு கதாபாத்திரங்களை உருவாக்க முடியாது. இதனால் காப்பிய பாத்திரங்களிடத்தே இடம் பெற்ற உரையாடல்களின் மூலமாகவே தமது கற்பனை வளத்தையும் அழகியல் உணர்வையும் வெளிப்படுத்த முடியும். இந்த வகையில் கதாபாத்திரங்களிடத்தே இடம் பெற்ற உரையாடல்கள் பக்தி உணர்வையும் அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்து வனவாக உள்ளன. சமயப் பண்பாட்டின் உறைவிடமாக இருந்த திலகவதியாருக்கும் மருண்நீக்கியாருக்கும் இடையே இடம் பெற்ற உரையாடல், சிறுத்தொண்டர் பைரவர் உரையாடல், சிறுத்தொண்டருக்கும் மனையறத்தின் வேராக விளங்கும் அவர் மனைவியாருக்கும் நடந்த சம்பாஷணை, புனிதவதியாருக்கும் அவர் கணவனுக்கும் இடையில் இடம் பெற்ற உரையாடல் கண்ணப்ப நாயனாருக்கும் இறைவனுக்கும் இடையே நடந்த உரையாடல், சுந்தரரை சிவன் தடுத்தாட்கொண்ட நிலையில் சிவனுக்கும் சுந்தரருக்கும் இடையில் நடந்த உரையாடல் என காப்பியத் தலைவர்களின் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் உரையாடல்கள் பெரிய புராணத்தில் பக்தி அனுபவத்தை வெளிப்படுத்துவனவாக உள்ளன. இறையடியார்கள் அனைவரும் ஒத்த இயல்பினராயினும் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ப உள்ளத்துணர்ச்சிகளை வெளிப்படுத்திய சேக்கிழாரின் பக்தி உணர்வு, கற்பனை வளம் காப்பியத்திற்கு மெருகூட்டுகிறது. காப்பிய பாத்திரங்களைத் தாம் விரும்பியவாறு படைக்கும் சுதந்திரம் சேக்கிழாருக்கு இல்லையாயினும் அவர் தம் எண்ண ஓட்டங்களை செயல்களை தம் அழகுணர்ச்சிக்கு ஏற்ற வகையில் ஒர்
172

கலைப்படைப்பாக வடித்துள்ளார். சைவ மரபில் பேசப்படும் ஆன்மாக்களின் உயர் இலட்சியமாகிய முத்தி நெறி என்பது மீண்டும் பிறிவிக்குட்படாத வகையில் இறைவனுடன் இரண்டறக் கலத்தலாகிய சுத்தாத்துவைத முத்தி நிலை ஆகும். இதனை அடைவதற்கு பக்தி நெறி நின்ற நாயன்மார்கள் அனைவரும் சீவன் முக்தர்களாகவே வாழ்ந்துள்ளனர். சீவன் முக்தர் என்போர் இவ்வுலகில் வாழ்ந்தாலும் உலகப் பற்றுக்களிலிருந்தும் விடுபட்டவர்கள். இவர்கள் உடலோடு கூடியிருந்தாலும் உடலிலும் பற்றற்றவர்கள், ஒட்டையும் பொன்னையும் ஒப்ப நோக்கிய நாவுக்கரசரின் இயல்பு இங்கு குறிப்பிடத்தக்கது. சிவனடியார்களையும் சிவன் கோயில்களையும் சிவனாகக் கண்டு வணங்கும் சீவன் முக்தர்கள் பக்திச் சுவையை வெளிப்படுத்தும் காப்பியமான பெரிய புராணத்தின் நாயகர்கள் என்பதனைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
சீவன் முக்தர்களாகிய நாயன்மார்கள் இறைவனை வழிபட்ட வழிபாட்டின் மூலமும் அதற்கு அடிப்படையாக அமைந்த பக்தியின் மூலமும் சேக்கிழார் பக்திச் சுவையை வெளிப்படுத்துகிறார். புலனடக்கம், மன ஒருமைப்பாட்டின் மூலம் அவர்கள் நீண்ட நேரம் இறை பக்தியில் ஈடுபட்டிருந்தமையை, இறைவனை நடனமாடும் நிலையில் தம் மனக்கண்முன் நிறுத்தி இன்புற்றமையை சேக்கிழார் பல இடங்களிலும் வர்ணிக்கிறார். சேக்கிழாரைப் பொறுத்தமட்டில் “கூடும் அன்பினில் கும்பிடல்”பக்தி என்று கூறப்பட்டுள்ளது. சுந்தரமூர்த்தி நாயனார் கும்பிட்டதை வர்ணிக்கும் சேக்கிழார் பாடல் இங்கு குறிப்பிடத்தக்கது.
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையேயாகக் குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்வீகமே ஆக இந்துவாழ்சடையான் ஆடும் ஆனந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள்திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார். (6)
சேக்கிழாரது காப்பியத்தில் பக்தி உணர்வு உந்த இறைவனுடன் தோழமை உறவு கொண்ட சுந்தரர் பக்திச் சுவையில் திளைக்க முற்படும் போது நிகழும் செயல்முறைகளை வரிசைக்கிரமமாகக் கூறுகிறார். ஐம்பொறிகளின் வழியே தனித்தனியாகப் பெறும் அறிவு இப்போது கண்ஒன்றின் வழியே பெறப்பட்டதாகக் கூறுகிறார். அந்தக் கரணங்கள் நான்கும் சிந்தையுள் அடங்க, முக்குணங்களும் சத்துவத்தில் அடங்கி விட்டன. இத்தகைய ஒரு நிலையிலேயே இறைவனது கூத்தில் லயித்து இன்பத்தில் திளைத்தார் என அறிய முடிகிறது. பக்தி அனுபவத்தை உணர்ந்த சேக்கிழார் இவ்வாறு சுந்தரரது அனுபவத்தை
Gardisgrf 1975 to 1960, 2005

Page 205
விவரிக்கிறார். வயதில் முதிர்ந்தவராகிய அப்பர் சுவாமிகள் திருஞான சம்பந்தரைக் காண்பதற்கு சீகாழிக்கு வருகின்ற காட்சியை வர்ணிக்கும் சேக்கிழார் பாடலில் பக்தரின் அகப்புறக் கோலங்கள் நன்கு காட்டப்படுகிறது.
(திருஞான சம்பந்தர் புராணம் 270)
சிந்தை இடையறா அன்பும் திருமேனிதனில் அசைவும் கந்தை மிகையாம் கருத்தும் கைஉழவாரப்படையும் வந்திழி கண்ணிர்மழையும் வடிவிற் பொலிதிருநீறும் அந்தமிலாத் திருவேடத்து அரசும் எதிர்வந்தனைய (7)
மிகப் பெரும் பக்தரது உள்ளத்துணர்வினையும் புறத்தோற்றத்தையும் நம் அகக் கண்முன் காட்டும் சேக்கிழாரும் உயர்ந்த பக்தரே.
காப்பிய கதாபாத்திரங்களின் குணஇயல்பும் மோட்சத்தைப் பெறுவதற்குரிய தகுதிப்பாடும் பெரியபுராணப் பாடல்களில் நன்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அவற்றைப் படிப்போரது உள்ளத்தில் பக்தி ரசம் தோன்றும் வகையில் கதாபாத்திரங்களிடத்தே தோன்றும் அகப் புறக் கோலங்கள் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன. கண்களை மூடி இறைவனை நினைத்தல், கண்ணிர் சொரிதல், மெய்சிலிர்த்தல், மயிர்கூச்செறிதல், கைகளை தலைமேல் குவித்து வழிபடல் போன்ற பக்தி உணர்வின் வெளிப்பாடான இயல்பான செயற்பாடுகள் காட்டப்பட்டுள்ளன. மேலும் பக்தி உணர்வைத் தூண்டும் ஆலம்பன விபாவமாக அமைவது அடியார்கள் வழிபடும் இஷ்டதெய்வங்களே. உத்தீபன விபாவமாகக் கடவுளர்களது கல்யாணக் குணங்கள், ஸ்தல யாத்திரைகள் புனித இடங்களைத் தரிசித்தல், புனித தீர்த்தங்கள், பூஜைக்கு வேண்டிய மலர்கள், தூப தீபங்கள் உள்ளத்தை ஒருமைப்படுத்தும் செயற்பாடுகள் போன்றன அமைகின்றன.
பக்திப் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கண்ணப்பர் திருத்தொண்டு அமைகிறது. வேடனாக இருந்த திண்ணனார் தாம் முன்னர் செய்த தவத்தின் பயனாக இறைபக்தி செலுத்தும் இயல்பினராகக் காளத்தி மலைக்கு செல்லும் காட்சியினை சேக்கிழார் வர்ணிக்கும் இடம் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்பு செய்தவத்தின் ஈட்டம்முடிவிலாஇன்பமான அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி மன்வெருங்காதல் கூரவள்ளலார் மலையை நோக்கி
Tಳ್ಳು நெக்குருகிஉள்ளத்து எழு பெரும் வேட்கையோடும் (8)
என்று கூறுவதைக் குறிப்பிடலாம்.
மேலும் திருக்காளத்திமலையிலே இறைவனைக் கண்டு அணைத்துக் கொண்டு நீங்கா நின்ற நிலையினை “வங்கினைப்பற்றிப்போகா வல்லுடும்பு என்ன நீங்கான்’(9) என்று கூறுகிறார்.
காரைக்காலம்மையார் புராணத்தில் மீண்டும்
dráégnfsavaro saf 2ðas

இவ்வுலகில் பிறவி எடுக்காத வகையில் முத்தியைப் பெற விரும்பும் அம்மையாரின் எதிர்பார்ப்பினைப் பின்வரும் பாடலின் மூலம் சேக்கிழார் விபரிக்கிறார்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகிறார் பிறவாமை வேண்டும்மீண்டும்பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்இன்னும் வேண்டும்நான்மகிழ்ந்து பாடி அறவாநிஆடும்போதுன்அடியின்கீழ் இருக்க வென்றார்.(10)
இறை இன்பத்துள் திளைக்கும் நாவுக்கரசரது பக்தி உணர்வை வெளிப்படுத்தும்போது சேக்கிழார் “நீற்றறையில் இருந்த போதும் அதன் வெம்மை நாவுக்கரசரை எதுவும் செய்யவில்லை என்பதை” திருநாவுக்கரசர் புராணத்தில் சுட்டிக் காட்டுகிறார்.
"ஆனந்த வெள்ளத்தின் இடைமூழ்கிஅம்பலவர் தேனுந்து மலர் பாதத்து அமுதுண்டு தெளிவெய்தி ஊனந்தான் இலராகி உவந்திருந்தார்"(1)
சிவத்தொண்டர்கள் அனைவரும் புற உலகை மறந்துதம் பக்திப் பெருவுணர்வு உந்த இறைவனது அற்புதங்களைக் கேட்பதிலும் அவர் புகழைப் பாடுவதிலும் திருவருட் செயல்களை நினைப்பதிலும் இறைவன் திருப்பாதத்திற்கு சேவை செய்வதிலும் திருநாமங்களை உச்சரிப்பதிலும் வணங்குவதிலும் அடியவர் போன்று தொண்டு செய்வதிலும் நட்புறவைப் பாராட்டுவதிலும் ஆத்மாவை இறைவனிடம் அர்ப்பணிப்பதிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். அவர்கள் நினைத்த நேரத்தில் ஆடியும் பாடியும் அவன் நினைவில் லயித்து ஈடுபட்டவர்கள் என்பதை திருஞானசம்பந்த சுவாமிகள் புராணத்தில் எடுத்துக் காட்டுகிறார்.
“சூடினார் கரகமலங்கள் சொரிந்திழி கண்ணீர்
ஆடினார்’(2) என்ற அடிகள் இதனை உணர்த்துகிறது.
மேலும் “மன்னுகோயிலை வலங்கொண்டு திருமுன்பு வந்து சென்னியிற் சரங்குவித்து வீழ்ந்தன்போடு திளைப்பார்” எனவும் கூறுகிறார்.
பக்தி உணர்வுமிக்க திருத்தொண்டர்களின் செயற்பாடுகள் உலகத்தவர்க்கு பித்தர் போன்றோ, உன்மத்தர் போன்றோ தோன்றலாம். உண்மையில் அவர்கள் சிந்தையில் இறை எண்ணம் தவிர வேறேதும் இல்லையாகையால் தாம் மனதில் கொண்டதையே மீண்டும் மீண்டும் வெறி பிடித்தவர் போற் செய்து நிற்கும் தன்மையர் ஆக விளங்கினர். இத்தகைய நிலையில் உள்ளோர் கர்மங்களிலிருந்து விடுபடும் நிலையில் முத்தி இன்பத்தைப் பெறுவர். இவ்வாறு இறைவனை அடையும் ஆன்மாவின் படிநிலைகளை நாவுக்கரசர் பாடலிற் காணலாம். சீவாத்மா
T73

Page 206
பரமாத்மாவிடம் ஆட்படும் நிலையினை நாவுக்கரசர் பின்வரும் பாடலில் எடுத்துரைக்கிறார்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்மை மறந்தாள்தன்நாமம் கெட்டாள் தலைப்பட்டாள்.நங்கை தலைவன்தாளே (13)
இவ்வாறு படிப்படியாக பக்தியின் மூலம் ஆன்மாவானது தலைவனாகிய இறைவனுடன் சேர்ந்து விடுகிறது. இத்தகைய அத்துவைத முத்தி நிலையினை உமாபதி சிவாச்சாரியார் அவர்கள்
தாடலை போற் கூடியவைதானிகழா வேற்றின்பக் கூடலைநீரகம் எனக் கொள் (14)
எனக் கூறுகிறார்.
சைவசித்தாந்த தத்துவத்தைப்பொறுத்தமட்டில் பதி, பசு, பாசம் எனும் முப்பொருட்களும் அநாதியான உள்பொருட்களே. இவற்றுள் பதியாகிய இறைவன் சத், சித், ஆனந்தம் எனும் இயல்புகளை உடையவன். பாசத்தினின்றும் நீங்கிய ஆன்மாக்கள் பதியுடன் இணைதலே வீடு பேறு எனப்படும். இந்நிலையில் இறைவனது ஆனந்த இயல்பை ஆன்மா அனுபவிக்கின்றது. இவ்வாறு ஆன்மாக்களின் ஆனந்தானுபவ நிலைக்குக் காரணமாக இருப்பது பக்தியே. பக்தி ரசம் என்பது இறைவனுடன் ஆனந்த அனுபவ நிலையை பெறுதல் ஆகும்.
முடிவரை
சைவத் திருமுறைகளில் 12ம் திருமுறையாக அமையும் பெரிய புராணம் மிகச் சிறந்த காப்பியமாகவும் உள்ளது. அதன் பக்திச் சுவை வாசகரையும், கேட்போரையும், இறைவனடியார்களையும் பக்தி அனுபவத்தில் திளைக்க வைக்கும் தன்மை உடையது. உணர்ச்சியை மையமாகக் கொண்ட காவியங்களில் கதாபாத்திரங்களினால் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சிகள் வாசகரை அல்லது பார்வையாளர்களை சென்றடைந்து அவர்களது உள்ளத்தில்
f
174

உறைநிலையில் உள்ள உணர்ச்சிகளைத் தூண்டி அவர்களும் அத்தகைய அனுபவத்தைப் பெறுவதற்கு உதவுகிறது. பக்தி அனுபவமானது அத்தகைய காவியங்களில் மக்கள் ஈடுபாடு கொண்டு அவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் மக்கள் சமய அறிவு பெறவும் புலனடக்கம் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடவும் வழிவகுக்கிறது. உள்ளத்து உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி மன ஒருமைப்பாட்டுடனும் தூய்மையுடனும் சமய அனுட்டானங்கள் வழிபாடு கிரியைகளில் ஈடுபடவும் சமயத் தொண்டுகள் புரியவும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. இத்தகைய செயற்பாடுகள் யாவும் இறுதியில் ஆன்மீக ஈடேற்றத்தைப் பெறுவதற்குரிய சாதனங்களாக அமையும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு வீடுபேற்றினை அடைந்த திருத்தொண்டர்களின் வரலாற்றை பக்திச் சுவை மிக்க காப்பியமாக வடித்து மக்களுக்கு அளித்த சேக்கிழாரின் சமயப் பணி என்றும் நினைவுகூரத்தக்கது.
அடிக்குறிப்புக்கள்
1. தமிழ் அகராதி, பகுதி 1, சென்னை, 1926 2. நாட்டிய சாஸ்திரம், 6-15, 17 3. தொல்காப்பியம், பொருளதிகாரம், மெய்பாட்டியல்
சூத்திரம் - 3 மேற்படி, செய்யுளியல், சூத்திரம் 196 நாட்டிய சாஸ்திரம் 6-33 பெரியபுராணம் தடுத்தாட் கொண்ட புராணம், 106 மேற்படி, திருஞானசம்பந்தர் புராணம் - 270 மேற்படி, கண்ணப்பநாயனார் புராணம் - 14 மேற்படி, 16 10. மேற்படி காரைக்காலம்மையார் புராணம் 1. மேற்படி திருநாவுக்கரசர் புராணம் 101 12. மேற்படி 227 13. திருமுறை 6-25-7 14. திருவருட்பயம் 8-4
உசாத்தனை நரல்கள் 1. Dorairangaswami, M.A., : The Religion and philosophy of Tevaram, Book ill, University of Madras, Madras, 1959 2. Hiriyanna, M., : Art Experience, Kavyalaya Publishers,
Mysore, 1954. 3. Nilakanta Sastri, K.A., The Culture and History of the
Tamils, First Edition; Calcutta 1933. 4. Ramachandran, T.P., The Indian Philosophy of Beauty, Partill, Dr. S. Rathakrishnan Institute for Advanced Study in Philosophy, University of Madras, Madras, 1979.
árásignfsavaro Bof 2005

Page 207
శ్లేటిళ్ల 懿羲事
ார் எந்த
- பருத்தியூர் - பால -
Grigai snare pai 2o5
செழுமைத் தமிழும் ெ
தொழுதேத்தும், சிவன
கூர்மை பெற்றுய்ய, அட பேர் உலகு உய்ய சேக்
அடியார் தம் பெருமை
முடியாத காட்சி காட்டி கொடிதான மருள் துை வடிவான மெய்பொருள்
பொடிபடும் இத்தேகம் அடியார் கால் தூசிபட் விடையவன் ஈசன் விரு சடையவன், தாள் சரன்
முழு முதல் முதல்வன், தொழுதழுத அடியார் தெளிந்த படிகமதில், ஆ களிகூர் உவகை, பெரு
சேக்கிழார் ஈந்த நாயன வாக்கினால் சொல்லி, போக்கும் கருவியாய், ! யாவர்க்கும், அருள் கா
 
 
 

சம்மை சேர் அருள் பொழிய ார் சைவம் தழைத்தோங்க விழ்தாம், பெரியபுராணம் தனை கிழார் ஈந்தார் காண்!
சொல்லல் அறத்தின் பெரும்பேறாம் , மெய்ஞ்ஞானம் ஊட்டி, உய்யும் வழிநோக்க டத்து, அருள்பதிய, பொருள்தெரிய fவன் என்றே சொல்லும் புராணம் இது
பொய், மெய்ஞ்ஞானம் மெய் டால், கடிதென வினைபோம் நம்பும் பக்தர், வாழ்வே மேல் ன் எனில், அணுவும் ஆட்சி செய்யும் அறி!
சிவனார் சிந்தையால், - மேலாம் வாழ்வியல் பாடினால், பிணியகலும், ஆன்ம ஒளிபாயும், துலங்கும் ஞான விழிப்பே நிஜம்!
ாார் அரும் சரிதம், பெரும்புராணம் மனதின் நினைந்திட்டால் - வினை தெளிந்திடல் திண்ணம், நல்வண்ணம் "ட்டும், மாமருந்து இதனையே துதி!
75

Page 208


Page 209


Page 210


Page 211
GUGGEGUTÓ EGOU நிலவுலாவிய நீர் அலகில் சோதியன்
மலர்சிலம்படி வா
என்றும் இன்பம் ஒன்று காதலித் து DGörg STITUlq, LLUIT
நின்ற தெங்கும் நி
(0:S EGNI3) 3:0 EY UNEA:
 

ந்தோதற் கரியவன் லிவேணியன்
அம்பலத் தடுவான்
Tigarrió
பருகும் இயல்பினால் ள்ளமும் ஓங்கிட i amវើបុព្វេ
SE E GJEJTË
S (PVT) LTD COLOMBO 3, TEL2330.95