கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்துசாதனம் 2011.04.14

Page 1
65.6 பரிபாலன சபை ഒഖങിug ஆரம்பம் விரோதி இடு ஆவணி மீ"26 ஆம் உ(1889)
புத்தகம் 122 கர வருடம் சித்திரைத் இதழ் 08
சிவபெருமான் அவருக்குப் பு அழியா உண்
விஷய
அரு
彎彎
N
、善
- ירי" היו זיל
¬¬¬ ¬, ܨܐ
இ 藝
 

Web www.hinduorgan.com e-mail editor GDhinduorgan.com
திங்கள் 1ஆம் நாள் “İlğ5, 6 filolooD) оршшш. 50.00
சைவ சமயத்திலே முழுமுதற் கடவுளாகக் கொள்ளப்படுபவள் என்பதும் பிள்ளையார், முருகன், வீரபத்திரர், வயிரவர் ஆகியோர் திரர்கள் என்பதும் சைவசமயிகள் எல்லோரும் அறிந்துபோற்றும் மைகள் புத்திரர் நால்வருள் முதலாவதாகக் குறிப்பிடப்பெற்ற ருக்கும் இறுதியாகக் குறிப்பிடப்பெற்ற வயிரவருக்குமிடையே சில ங்களில் நெருங்கிய ஒற்றுமை உண்டு. சிவலிங்கம் என்ற வருவத் திருமேனியிற் சிவபெருமான் சாந்நித்யமாவதைப்போல், *ந்தன- சாண - மஞ்சள் உருண்டைகளிற் பிள்ளையாரும் திரிசூலத்தில் வைரவரும் சாந்நித்யமாவர்; 'கோயில் இல்லா இடத்திலே குடியிருக்க மாட்டோம்." என்று அடம் பிடிக்காமல், நிழல் தரும் ஆல், அரசு, அத்தி, இத்தி, இலுப்பை, வேம்பு மா. புளி போன்றவற்றின் அடியிலுள்ள சின்னஞ்சிறு இடங்களைக்கூடத் தம் சிம்மாசன மாகவும் கற்றுப் புறங்களைச் சிங்காரச் சோலைக ளாகவும் பாவித்து, அந்த இடங்களிலிருந்து அருளாட்சி செய்வதற்கு என்றுமே சித்தமா யிருப்பவர்கள்
அவர்கள்.

Page 2
இந்துசாதனம் 4. C
இங்கு குறித்துள்ள மரங்களுள் அத்தியும் இத்தியும் பிள்ளையாரின்
தனியுரிமை என்றால், புளியமரத்தடி வைரவரின் ஏகபோகம் ஆகம ரீதியான பூசை, வழிபாடுகள் நடைபெறும் ஆலயங்களிலே முதற் பூசைக்கு உரியவர் பிள்ளையார் என்பதையும், இறுதிப் பூசையையும், ஆலயத்தின் காவற்பொறுப்பையும் ஏற்றுக்கொள்பவர் வைரவர் என்பதையும் இங்கு குறிப்பிடுவதும் பொருத்தமானதே.
வந்தாரை வாழவைக்கும் வவுனியாப் பெருநகரின் மத்தியில், சமீப காலமாக மிகக் கம்பீரமாகக் காட்சியளித்துக் கொண்டிருக் கும் அருள்மிகு ஆதி விநாயகர் கோவில் சம்பந்தமான சில வரலாற்றுத் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியபோது, "மூத்த" பிள்ளையாருக்கும் "இளைய' வைரவருக்குமிடையே நிலவும் இந்த ஒற்றுமைகள் மீண்டும் நினைவுக்கு வந்ததன.
ஆதி விநாயகர் கோவில் என்பதே கோவிலின் பெயராக இருந்தாலும், ஆதியில் அந்த இடத்தில் வைரவர் வழிபாடுதான் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதுமட்டுமல்ல, கோவில் அமைந்துள்ள இடத்தின் பெயரும், மூர்த்தி, தலவிருட்சம், தீர்த்தம் ஆகியவற்றின் இணைப்பாக இருக்குமோ எனச் சிந்திக்கவைக்கும் வயிரவப் புளியங்குளம்!
வவுனியாப் பெருநகரின் பிரதான பகுதிகளுள் ஒன்றாகத் திகழும் இந்த வயிரவப் புளியங்குளத்திலே புகையிரத நிலைய வீதியிற் காணப்பட்ட ஒரு குளக்கட்டிலே, ஒரு மரத்தின்கீழ் மூன்று வயிரவ சூலங்களையும், கருங்கல் ஒன்றையும் வைத்து மேற் கொள்ளப்பட்ட வழிபாடுதான், இந்த ஆலயத்துக்கு இடப்பட்ட பிள்ளையார் சுழி! ஆனால், அந்தச் சுழியை இட்டவர் யார் என்பது தெரியவில்லை; எப்போது அதை இட்டார் என்பதும் தெளிவாக
இல்லை.
ஆனால், வழிபாடு நடைபெற்ற அந்த இடம் தனக்கேயுரிய "தனித்துவமான தலந்தான்" என்பதை ஆண்டவன் அடியவர் களுக்குச் சிறிது சிறிதாக உணர்த்தத் தொடங்கிவிட்டான் என்பதற்கு, வாரத்துக்கு வாரம் அதிகரிக்கத் தொடங்கிய பக்தர்களின் எண்ணிக்கையே தக்க சான்றாகும். வைரவ சூலங்களுடன் சேர்த்து வழிபடப்பெற்ற கருங்கல், பிள்ளையாரைக் குறிப்பதாக இருந்திருக்குமோ என இந்தக் கட்டுரையாளருக்கு ஏற்பட்ட சந்தேகம் நியாயமானதுதான் என்பது, கருங்கல் வழிபாடு காலப்போக்கிற் கருங்கற்பிள்ளையார் வழிபாடாகப் பரிணமித்தமை காட்டுகின்றது. கருங்கல்லுடன் பிள்ளையாரின் திருவுருவம் ஒன்றும் "வைக்கப்பட்டு" வழிபாடு தொடர்ந்தது. மிக அண்மையிலுள்ள வைரவர் கோவிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்த சிவபூரீ கணேசக் குருக்கள், வெள்ளிக்கிழமைகளில், குளக்கட்டுப் பிள்ளையார் - வைரவருக்குரிய பொங்கல் பூசைகளையும்
சிறப்பாகச் செய்யத் தொடங்கினார்.
தெய்வத் திருவுருவங்களைப் "பனியால் நனைத்து வெயிலால் உலர்த்து" வதைத் தொடரக்கூடாது என்ற எண்ணம் அடியார்கள் பலரின் உள்ளத்திலே ஏக காலத்தில் எழுந்ததன் விளைவுதான் சமாதான நீதிவான் திரு. ஆ. சிவஞானம் அவர்களின் தலைமையில்

42O கர சித்திரை 01
உருவான ஆலய பரிபாலன சபை, சிறிய கோவில் ஒன்றைக் கட்டி, கருவறையிலே பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம்
செய்யவேண்டும் என அந்தச் சபையினர் எடுத்த தீர்மானம் மிக விரைவிலேயே நடைமுறைப்படுத்தப்பெற்று வெற்றியை ஈட்டியது. 1992ஆம் ஆண்டிலிருந்து அலங்கார உற்சவம், கணபதி ஹோமம், பெருங்கதை, கஜமுகாசுர சங்காரம், மஹாசிவராத்திரி விழா ஆகியவை, ஆண்டாண்டு தோறும் நடைபெறும் விசேட நிகழ்ச்சிகளாயின.
1997ஆம் ஆண்டில், உள்நாட்டுப்போர் காரணமாக வவுனி யாவிற் புதிதாகக் குடியேறியோரின் தொகை கணிசமாக உயர்ந்த வேளையில், திரு. தில்லைநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய பரிபாலன சபை கோவிற்றிருப்பணிகளை மேலும் முன்னெடுத்தது. புதிதாக உருவாக்கப்பெற்ற சித்திரத் தேரின் வெள்ளோட்டம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது; பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப் பெற்றதுடன், முன்னர் நடைபெற்ற அலங்கார உற்சவங்களின் இடத்தைப் பிரம்மோற்சவம் என்ற ஆண்டுப் பெருந்திருவிழாக்கள் நிறைத்தன. ஏற்கெனவே நடைபெறத் தொடங்கிய ஆண்டுச் சிறப்பு விழாக்களின் பட்டியலிற் சஷ்டி, கெளரி நோன்பு ஆகியவையும் சேர்க்கப்பெற்றன.
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாலஸ்தாபனம் மிகப் பெரிய அளவிலான திருப்பணிகள் பலவற்றின் ஆரம்பமாயமைந்தது. சூரியன், சந்திரன், தட்சணமூர்த்தி, துர்க்கை ஆகியோர் பிரதிஷ்டை செய்யப் பெற்றனர். விநாயகரை மூலவராகக் கொண்ட ஆலயத்திலே, அவருடைய தந்தையாரான சிவபெருமான், பரிவார மூர்த்தியாகப் பூசிக்கப்படலாமா என்பது சம்பந்தமான வாதப் பிரதிவாதங்களின் மத்தியில், சிவபெருமான், வைத்தீஸ்வரப் பெருமானாகவும், அம்பாள் வடிவாம்பிகையாகவும், நந்தி பலிபீடத்துடன் தனிக் கோயிலாகத் தோற்றும் வண்ணம் பிரதிஷ்டை
செய்யப் பெற்றனர்.
வவுனியாப் பெருநகருக்கு மேலதிகமான புனித பொலிவை அளிக்கும் வகையில் அமைந்த வானளாவிய வண்ணக் கோபுரம், அற்புதமான சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய அழகான வசந்த மண்டபம், கருவறைக் கணபதிக்குத் துவிதள விமானம், சிவன், அம்பாளுக்கும் ஏனைய மூர்த்திகட்கும் ஏகதளவிமானம், உள்வீதியின் மேற்புறம் முழுவதையும் மூடும் வில்வளைவுக் கூரை முதலியவும் அமைக்கப்பெற்றன.
தேவஸ்தானத்தின் பிரதம சிவாச்சாரியாராகப் பணியாற்றிய சிவபூரீ பால. சிற்சபேசக் குருக்கள் தலைமையில் அநுபவமும் ஆற்றலும் இறைபக்தியும் நிறைந்த சிவாச்சார்யர்கள் பலர் இணைந்து 2007ஆம் ஆண்டிலே நடத்திய மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சி பக்திப் பரவசத்தைக் கிளர்ந்தெழச் செய்த கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது. வவுனியா அரச அதிபர் துரைச்சாமி உட்பட வவுனியாவின் வர்த்தகப் பிரமுகர்கள், அரச ஊழியர்கள், மாணவர்கள், பழவடியார்கள், புத்தடியார்கள் என மிகப்
பெருந்தொகையானோர் கலந்துகொண்டமை ஆதி விநாயகப்
->

Page 3
இந்துசாதனம் 4.
பெருமானின் அருட் பிரவாகம், சிவாச்சார்யப் பெருமக்களின் கிரியைச் சிறப்பு, திருவாளர்கள் தி. தில்லைநாதன், க.சிதம்பரநாதன், ம.பத்மறஞ்சன் ஆகியோரை முறையே தலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும் கொண்ட பரிபாலன சபையின் நிர்வாக ஒழுங்கு, இறைபணிச் செம்மல் ந.ஆறுமுகம் அவர்களின் வழிகாட்டலிலுள்ள தொண்டர்களின் சோர்வற்ற சேவை, மங்கல வாத்தியக் கலைஞர்களின் பக்திபூர்வமான இசைப் பிரவாகம் போன்றவை ஏக காலத்திற்
சங்கமித்தமைக்குக் கிடைத்த கை கண்ட-கண்கண்ட பலன்!
வளம் நிறைந்த வன்னி மண்ணைத் தன் தமிழ் அருவியால் மேலும் செழிப்பாக்கும் திரு. த. சிவகுமாரன் அவர்களின் ஆசிரியப் பொறுப்பில் வெளியான கும்பாபிஷேக மலரில் இக்கோவிலின் புனிதப் பொலிவைப் பிரதிபலிக்கும் வண்ணப்படங்கள், வாகீசகலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன், பி. எஸ். குகனேஸ்வர
சர்மா, சிவத்தமிழ் செல்வர், செ. சத்தியமூர்த்தி, சமூகஜோதி கா.
எங்களுக்கு வந்த கடிதம்; நீர்
ஆசிரியர்,
"இந்துசாதனம்"
யாழ்ப்பாணம்.
gun,
15.03.2011 இந்துசாதனம் பத்திரிகையில் 'எங்களு
வாசித்தேன். அதில் பல அவசியமான கருத்துக்கள் இடம்பெற்றி
"ஒருகோடி, 75 இலட்சம் செலவிட்டுப் பத்துப்பேர் ஒண்பு செலவிட்டுகுடமுழுக்கும் செய்கிறவர்கள். என்ற பகுதி இடம்ெ இதுவரை காலமும் நம் சைவசமய ஆலயங்கள் ே ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இருந்தும் இப்படி ஒரு செல6 இருப்பதை அறிகிறேன். ஆனால் மூலஸ்தானம் எனப்படும் சுற்றுமதில் உட்பட உள்ள முழு இடமும் சேர்ந்தே முழுமையான போர்த்துக்கேயர் காலத்தில் ஆலயங்கள் அழிக் ஈடுபாடுகளுக்காக ஒரு கொட்டிலில் ஆரம்பித்து பின் சுண்டு வழிபட்டு, பின்படிப்படியாக ஆலயங்கள் வளர்ச்சிபெற்றிருக்கி
ஆலயங்களிலுள்ள கருவறைமேல் அமையும் தூபியுட சுற்றுக்கொட்டகைகளால் கருவறை விமானமும் தூபியும் து அவசியமானதாகின்றது.
கருவறைக்குமேல் அமையும் விமானம் தலை 6 கணிக்கப்படுகின்றது.
எண்சாணுடம்புக்கு சிரசே பிரதானம் என்ற கோட்பாட் உறுப்புக்களே காலோ தேவையற்றன எனல் ஆகாது அல்லவா
அக்காலச் சூழல், அரசர்களின் திருப்பணி என்ற வகையி செலவில் எப்படிச் செய்யலாம் என்பதை யோசித்துச் செயற் அடிப்படையில் தேவையில்லை என்று கருதலாகாது.
ஆறுமுக நாவலர் நாலாம் பாலபாடத்தில் தர்மம் என்ற ப தர்மம் செய்யவேண்டும் என்ற கருத்தை அழகாகவும் தெளிவா பலர் உணவு-உடை- பொழுதுபோக்கு என்ற விடயங்களில் மிகு கருதிச் செயற்படுவதால் மிகக் குறைந்த அளவிலேயே சிலந பங்கு - ஐந்தில் ஒருபங்கு - தர்மத்துக்கு எனவும் அத்தர்ம துறைகளில் திட்டமிட்டுச் செலவு செய்தால் மதிப்புக்குரிய மு நோக்கங்களும்நிறைவுறவாய்ப்பு உண்டாகும்.
ந6

)4.2O கர சித்திரை O
கணேசதாசன், கலாபூஷணம், பண்டிதர் சி. அப்புத்துரை, தஞ்சைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இரா. திருநாவுக்கரசு, சாமழரீ சேவாகீர்த்தி மோ. இராஜ்மோகன் சர்மா, செல்வி ஜானகி சங்கரப்பிள்ளை, செல்வி சி. சரோஜினிதேவி, அருகாஷினி கேசவநாதன், பிரம்மபூரீ க. நிரஞ்சன் சர்மா, கணேசலிங்கம் சுரேஷ்குமார், பேரறிஞர் முருக. வே. பரமநாதன், செஞ்சொற் செல்வன் நா. பிரபாகரசர்மா, கட்டிட வரைவல்லாளர் தம்பிஐயா ஆறுமுகம் ஆகியோரின் பயன்மிகு கட்டுரைகளும், ஆசிரியர் பெயரிடப்படாத "கும்பாபிஷேக முறைகளும் விளக்கமும்" , "விநாயகர்" ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.
சென்ற 2009ஆம் ஆண்டு தொடக்கம் சிவபூரீ ந. சிதம்பரேஸ்வரக் குருக்கள் பிரதம சிவாச்சார்யாராகப் பணி புரிந்துகொண்டிருக்கின்ற ஆதி விநாயகர் கோவிலை நேரிலே
தரிசித்தால், மீதிச் சிறப்புக்கள் மேலும் புலனாகுமே.
ମୁଞ
க்களும் வாசிக்கலாம்!
க்கு வந்த கடிதம் நீங்களும் வாசிக்கலாம்" என்ற பகுதியை பிருந்தபோதும்;
நிற்க முடியாத இராஜகோபுரங்களைக் கட்டி பல லட்சம் ரூபா பற்றிருந்தது. கவலையளிப்பதாயுள்ளது.
காபுரமில்லாதிருந்தன. அப்படி இருந்ததால் ஏதும் குறைவு வு வீணானது என்ற கருத்து இவரைப்போல வேறு பலருக்கும் ம் கருவறை முதல் கோபுரம் வரையுள்ள மண்டபங்கள், வீதி கோயில் என்ற கோட்பாடு உண்டு.
கப்பட்டபின் பொருள்வசதி அற்றநிலையில் தம் ஆர்வம், சணாம்பாலோ நல்ல கற்களாலோ ஒரு மண்டபத்தை அமைத்து ன்றன.
ன் கூடிய விமானமும், கோபுரமும் தூலலிங்கம் எனப்படும். ாரத்தே நின்று தரிசிக்க இயலாநிலை வரும்போது கோபுரம்
னும் அங்கமாகக் கணிக்கப்பட்டு; கோபுரம் பாதமாகக்
ற் கருவறை விமானம் தலைபோற் பிரதானமானபோதும் பிற
ல் அதிக செலவில் அமைந்த கட்டுமான அமைப்பைக் குறைந்த டுவதை அறிவுடைமை என்று பாராட்டலாம். ஆனால் செலவின்
ாடத்தில் மனிதன் தன்வாழ்க்கைச் செலவைச் சிக்கனப்படுத்தி கவும் வரைந்திருக்கிறார். இன்று வருமானம் குறைந்த நம்மவர் ந்த பொருள் வசதிபடைத்தவர் போன்றே வாழவேண்டும் எனக் கருமங்களைச் செய்கின்றனர். தம் வருமானத்தில் ஆறில் ஒரு ந்தையும் ஆலயம், சீவகாருண்யம், அறிவு விருத்தி முதலிய திய உபாத்தியாயர் விரும்பமும் நல்லெண்ணமுள்ள பலரின்
ாறி - அன்பன்

Page 4
இந்துசாதனம் 4C
சமயம் ஒரு வி
கலாநிதி மனோன்ம
LDனித வாழ்க்கையை வள்ளுவப் பெருந்தகை இரண்டாக வகுத்துள்ளார். இல்லறம், துறவறம் என்ற இரு அறங்கள் மனிதன் செய்யக்கூடிய நல்ல அறங்களாகும். துறவறம் தனிமனித வாழ்வை மேம்படுத்தும் முயற்சியாகும். இல்லறம் கூட்டுவாழ்க்கையின் சிறப்பான செயற்பாடாக உள்ளது. இல்லறத்தானின் வாழ்க்கை பலரை உள்ளடக்கியது. அதை வள்ளுவரே வரையறை செய்து கூறியுள்ளார். "தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஒம்பல் தலை"
(குறள்:43) தென்திசையிலே வாழும் முன்னோர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐவகைப்பட்டவரையும் ஓம்பி வாழும் வாழ்வியலையுடையவனே இல்லறத்தான் ஆவான். வள்ளுவர் வரையறையைக் கூட்டுக்குடும்பம் என்ற வாழ்வியலில் நாம் காணக்கூடியதாக இருந்தது. மறைந்தவர்களை நினைந்து செய்யும் செயற்பாடுகள் பிதிர்க்கடன்கள் எனச் சிறப்பாக
மேற்கொள்ளப்பட்டன. தெய்வக் கடமைகள் மனதை வழிப்படுத்தச்
தெய்வத்தின் முன்னிலையில், உற்றார், உறவினர் திருமணத்தில் இணைந்து, தென்புலத்தர், தெய்வம், வி வாழும் வாழ்வே இல்லறமாகும். இல்லறக் கடமைகை வைக்கப்படுவோர்கள்.
செய்யப்பட்டன. வழிபாட்டு நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நோக்கோடு செயற்படும் நிலை இருந்தது. விருந்தினர் என்ற நிலையில் வீட்டிற்கு வருவோர்க்கு உணவளித்துச் சிறப்புச் செய்யும் நடைமுறை இருந்தது. சுற்றத்தாராக அயலிலே வாழ்கின்ற அனைவரோடும் கூடி வாழும் வாழ்வியல், சிறப்பான கடமைகளை உள்ளடக்கியிருந்தது. இத்தனை செயற்பாடுகளையும் மனிதன் நிறைவேற்றுவதற்குத்தன்னையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.
'ஓம்பல்' என்பது எந்தவிதமான இடையூறும் இல்லாமல் தொடர்ந்து அவர்களது நலன்களைக் கவனிப்பதாகும். மனித வாழ்வு தனியான ஒரு செயற்பாடு அன்று. அது வீடு, ஊர், நாடு எனப் பரந்துபட்ட நிலையில் நடப்பதாகும். வழிபாட்டு நிலையில் ஒரு துறவி தன்னுடைய ஈடேற்றம் என்ற சுயநலத்தோடு செயற்படு வான். ஆனால், இல்லறத்தானின் வாழ்வியல், பரநலம் பார்க்கும் தன்மையானது. வள்ளுவர் தனது நூலில் முதலில் இல்லறம் பற்றியே கூறுகிறார். இல்லறத்திலிருந்து செய்யும் உயர்ந்த அறமாக இல்லறம் கருதப்பட்டது. 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை" என வள்ளுவர் தெளிவாக வரையறை செய்துள்ளார்.
மனிதனுடைய இல்லற வாழ்வின் மிக உயர்ந்த பேறு அவன்
தெய்வமாகப் மதிக்கப்படும் நிலையை அடைவதாகும்.
 

4.2Ol கர சித்திரை 01
ாழ்வியல் -28
ணிை சண்முகதாஸ்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்"
வழிபடும் தெய்வ நிலையை மனிதனுக்கு இல்லறவாழ்வே தரும் இல்லற வாழ்கையின் சிறப்பை வள்ளுவர் கூறும்போது உலகு
தழுவிய நிலையிலே விளக்கியுள்ளார். நிலத்திலே நடக்கின்ற
س
இல்லற வாழ்வு வானத்தில் உறையும் தெய்வ நிலையை நல்கும்
நல்லறமாகும்.
பண்டைத் தமிழர் வாழ்வியலில் திருமணம் ஒரு நல்லறம் செய்யும் தொடக்கமாகக் கருதப்பட்டது. ஒரு ஆணும் பெண்ணும் மனமொத்து வாழ்வு நடத்துவதற்கான புனிதமான சடங்காகவே திருமண நடைமுறைகள் செயற்படுத்தப்பட்டன. அவை வழிபாட்டு நிலையில் மேற்கொள்ளப்பட்டன. தெய்வத்தின் முன்னிலையில் வாழ்க்கையைத் தொடங்கும் நடைமுறையாகத் திருமண
நடைமுறைகள் வரையறை செய்யப்பட்டிருந்தன. ஆனால்,
கள் வாழ்த்தி வழிகாட்ட ஓர் ஆணும் பெண்ணும் ருந்தினர், சுற்றத்தார் ஆகியோரையும் தம்மையும் பேணி ள முறைப்படி செய்வோர், இறுதியில் தெய்வ நிலையில்
தற்போது திருமண நடைமுறைகள் யாவும் ஒளிப்படத் தயாரிப்பு நிலையில் நடைபெறுகின்றன. ஒளிப்படம் எடுப்பவரே திருமண நடைமுறைகளைக் கவர்ச்சி நிலையில் ஆற்றுப்படுத்துகின்றார். அந்தக் கவர்ச்சியில் அனைவரும் ஈர்க்கப்படுகின்றனர். இம்முறை தவிர்க்கப்படவேண்டும். புனிதமாகச் சமய வழிபாட்டு நிலையில் திருமணச் சடங்குகள் நடைபெறவேண்டும். அவற்றை மாற்றி யமைக்காமல் நிறை குடங்களையும் விளக்குகளையும் மாற்றி வைக்காமல் ஒழுங்காக வைக்கவேண்டும். மணமக்கள் மனதில் நடிகர்கள் என்ற உணர்வே மேலோங்கி நிற்கிறது. அவர்கள் இருவரும் செய்யப்போகும் இல்லற தர்மத்தைத் தொடங்குவதற் கான நடைமுறைகளை முறைப்படி செய்யவேண்டும். உற்றாரும் விருந்தினரும் அதற்கு உதவியாக இருக்கவேண்டும். எல்லோரும் வாழ்த்தி நிற்க மணமக்கள் தொடங்கும் இல்லறமே நிலைத்து நிற்கும். எல்லோரும் ஒன்றிணைந்து, மனித வாழ்வியலின் ஒரு முக்கியமான பொறுப்பை ஏற்கும் மணமக்களை வழிநடத்த வேண்டும். எதிர்காலத் தலைமுறையினர் வாழ்வியல் நடை முறைகளைத் தெளிவாக விளங்கிக்கொள்ளும் வகையில் பெரியோர் செயற்பட வேண்டும். வையத்து வாழ்வாங்கு வாழும்
பண்பாட்டை நாம் அனைவரும் உலகறியச் செய்ய வேண்டும்.

Page 5
இந்துசாதனம் 4.(
ஒழுக்கமுடையோரே !
சிறந்த ஒழுக்க விழுமியங்களை வாழ்விற் கடைப் பிடிப்பவர்களை, உலகம் போற்றுகின்றது. உத்தமர்கள், உயர்ந்தவர்கள், சீலர்கள் என்றெல்லாம் அவர்கள் புகழ்பெற்றுப் பாராட்டப்படுகிறார்கள். "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று" என்று உலகத்திற்கு வரைவிலக்கணம் கண்டவர்கள் நமது முன்னோர்கள். அவர்களால் உயர்ந்தோர்களாகக் கொள்ளப் பட்டவர்கள் யாவர் என்பதை நோக்கின், நல்லொழுக்கம், நற்செய்கை, நன்னடத்தைகளினால் மேம்பட்டவர்ளே அவ்வாறு
கொள்ளப்பட்டார்கள் என்பது தெளிவாகப் புலப்படும்.
இன்று "உலகம் சுருங்கிவிட்டது" என்கிறார்கள். எத்துணை உண்மையான கூற்று இது. ஆம், இன்று உயர்ந்தோர்களின் எண்ணிக்கை குறைந்துதான் வருகிறது என்பதை மறுப்பதற் கில்லை. அதாவது, நல்லொழுக்கங்களை வாழ்விற் கடைப்
பிடிப்பவர்களின் தொகை சுருங்கிவருகின்றது.
தமக்கும் பிறருக்கும் நன்மைகளையே விளைவிக்கும் நல்லொழுக்கமுடையோராகக் கணிக்கப்படுகின்றனர் வருவதும், இவர்களுக்கு மாறான தீயொழுக்கமுடையோ இந்த நிலை மாறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்
பணியாளர்களுள் ஒருவரான கலாநிதிகுமாரசாமிசோ
"உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று" என்ற கூற்றின் அடிப்படையில் நோக்கும்போது, உலகம் சுருங்குகிறது என்பதற்கு உயர்ந்தோர்களின் தொகை குன்றி வருகின்றது என்று பொருள் கொள்வதில் தவறில்லை எனலாம். மக்களிடையே நல்லொழுக்கம்
குன்றி வருவதை இது சுட்டிக் காட்டுகின்றது.
உலகிற் சில தன்மைகள் சுருங்குவதால் நன்மைகள் உண்டு. இன்னும் சில தன்மைகள் பெருகுவதால் நன்மைகள் கிடைக்கும். ஒழுங்கீனங்கள் சுருங்க வேண்டும்; பாவங்கள் அழிய வேண்டும்; அறிவீனம் அகல வேண்டும். அப்போதுதான் உலகிற்கு நன்மை. அறிவு பெருக வேண்டும்; ஒழுங்கு முறைகள் பேணப்பட வேண்டும்; அறம் ஓங்க வேண்டும்; அன்பு தழைக்க வேண்டும். அவற்றின் பெருக்கத்திலும் விரிவிலும்தான் உலகம் உய்யமுடியும். பெருக வேண்டியவை சுருங்குவதாலும், சுருங்கவேண்டியவை பெருகுவ தாலும் உலகத்திற்குக் கெடுதல் ஏற்படுமேயன்றி, நன்மைகள் உண்டாக முடியாது. இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுதல் மிக அவசியமாகும். மனித குலம் அமைதியும், சாந்தியும், நிம்மதியும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு, இந்த உண்மையைத் தெளிந்து ஒழுகுதல் இன்றியமையாதது.
 

42O கர சித்திரை O
உயர்ந்தோர்
குமாரசாமி சோமசுந்தரம்
ஒழுக்கம் விழுப்பம் தரும்; உயர்வு தரும், உத்தமர்கள் ஆக்கும் என்ற உண்மை, பண்டுதொட்டு இன்றுவரை உரைக்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் தெரிந்த பாடந்தான். யாவரும் ஏற்றுக்கொண்டுமுள்ளனர். எனினும், தற்காலத்தில் ஒழுக்கம் பெரிதும் அசட்டை செய்யப்பட்டு வருவதைக் காணும்போது, கவலை கொள்ள வேண்டியுள்ளது. ஒழுக்கத்தை ஒம்பாமல், அசிரத்தைச் செய்யும் நிலை நீடிக்குமேயானால், உலகில் அழிவும், அனர்த்தங்களும் தவிர்க்க முடியாதனவாகிவிடும் என்பதையும் கூறித்தானாகவேண்டும்.
ஒழுக்கம் என்றால் பழைமையென்றும், சமய சம்பந்தப்பட்ட தென்றும்; முற்போக்கு அல்ல என்றும்; முன்னேற்றத்திற்குத் தடையானது என்றும் கொள்ளப்படுகின்ற காலமாகத் தற்காலம்
வந்துவிட்டது. இந்த நிலைமை வருத்தத்திற்குரியது.
ஒழுக்கப் பண்புகள், விழுமியங்கள் பல, மிகப் புராதன காலந்தொட்டு மக்களிடையே பேணப்பட்டு வருகின்றன. அதனால்
சிந்தனை, பேச்சு செயல் முதலியவற்றில் ஈடுபடுபவர்கள்,
, ஆனால் இத்தகையவர்களின் தொகை சுருங்கி ரின் தொகை பெருகி வருவதும் கவலையளிக்கின்றன. துகின்றார். தேசிய கல்வி நிறுவனத்தின் முன்னை நாட் மசுந்தரம்.
அவையாவும் இந்நவீன காலத்தில் பழமையாகிவிட்டன; மனித நாகரிக முன்னேற்றத்திற்கு அவை இடைஞ்சலாக உள்ளன என்று. கூறுவது பொருத்தமாக இல்லை. அவ்வாறே ஒழுக்க விழுமியங்கள், நன்னடத்தைப் பண்புகள் என்பன கடந்த காலங்களிற் சமயங்க ளோடு தொடர்புபடுத்தப்பட்டு வந்தமையால், சமயவாதிகள் அவற்றிற்கு உரிமை பாராட்டலாம்; சமயங்களுடன் சார்பற்றவர் களிடம் சமய விழுமியங்களை ஏன் திணிக்க வேண்டும் என்றும் வினா எழுப்பப்படுகின்றது. விழுமியங்கள், நடத்தைப் பண்புகள் என்பன முழு மனித குலத்திற்குமே உரிமையானவை; பொது வானவை. சமயஞ் சார்ந்தவர்களுக்குத்தான் தேவை; சமயம் சாராதவர்களுக்குத் தேவையில்லை என்றும், பாகுபடுத்த முடியாது. சமயங்கள், மனித விழுமியங்களை உணர்த்தும் ஊடகங்களாக ஒரு காலத்தில் இருந்தன; இருந்தும் வருகின்றன. மக்களிடையே செல்வாக்குப் பெற்றுள்ள ஊடகங்கள் மூலம், அவர்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்வது நெடுங்காலமாக இருந்து வருகின்ற நடைமுறையும், உத்தியுமாகும். அந்த வகையில், விழுமியங்களைப் பரப்புவதற்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சமயங்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எவ்வாறாயினும், ஒழுக்கப் பண்புகளும், விழுமியங்களும் மனிதகுல நன்மையின் பொருட்டு எல்லா

Page 6
இந்துசாதனம் 4.(
வற்றிலும் போற்றப்பட்டு, வாழ்க்கையில் ஒம்பப்பட வேண்டியன என்பதை மனிதர்கள் ஒவ்வொருவரும் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒருகால், ஒழுக்கம் என்று குறிப்பிட்டால், அது நல்லொழுக் கத்தையே குறிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் நல்லொழுக்கம் என்றும், தீயொழுக்கம் அல்லது கூடாவொழுக்கம் என்றும் பகுத்துப் பேசப்படலாயிற்று. தமக்கும் பிறருக்கும் நன்மையையே விளைவிக்கக் கூடிய சிந்தனைகள், பேச்சுக்கள், செய்கைகள் ஆகியவற்றில் ஈடுபாடு கொள்பவர்கள் நல்லொழுக்கமுள்ளவர்கள் என்றும்; சுயநலத்திற்காகப் பிறருக்குக் கேடு நினைத்திருப்பவர்கள்; கெட்ட விளைவுகளை ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசுபவர்கள்; பிறருக்குத் துன்பங்களையும் தொல்லைகளையும், அழிவுகளையும், அனர்த்தங்களையும் விளைவிப்பதற்கென்றே திட்டமிட்டுக்கொடும் செய்கைகளைப் புரிபவர்கள் தீயொழுக்கம் கொண்டவர்கள்
என்றும் கொள்ளப்படுகின்றனர்.
மனிதர்களுக்கு ஒரு மாபெரும் ஆற்றல் இயல்பாகவே உள்ளது. அதுதான் நல்லவற்றையும் தீயவற்றையும் பாகுபடுத்திப் பிரித்துணரும் திறன். இந்தத் திறனே, விலங்குகள் போன்ற தாழ்ந்த உயிர் இனங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்தி, ஒர் உயர் படைப்பாக அவன் கொள்ளப்படுவதற்கு ஏதுவாக அமைந்த அம்சம். இது மனிதர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. ஆயினும், பிரித்துணரும் திறன். தமக்கு உண்டு என்பதிற் பெருமிதம் அடைகின்ற மனிதர்கள், அந்தத் திறனைப் பயன்படுத்தி நல்லவற்றையும் தீயவற்றையும் பகுத்துணர்ந்து, நல்லவற்றை ஏற்று, வாழ்க்கையில் மேற்கொண்டு; தீயவற்றை விலக்கி, அவற்றை வாழ்க்கையிலும் புறக்கணித்து, வளமாகவும் வாழ்வாங்கும் வாழமுடியாமல் ஏனோ தவிக்கிறார்கள் என்பதுதான் புரிந்து கொள்ளப்பட முடியாத புதிராகவும் அதிசயமாகவும் உள்ளது. நல்ல பண்புகளையும், விழுமியங்களையும் இனங்கண்டுகொள்ள மனிதர்களுக்குத் தெரிகிறது. ஆனால், அந்த நல்ல ஒழுக்கங் களையும், நயமான மனித விழுமியங்களையும் தங்கள் வாழ்க்கை யில் கைக்கொள்வதற்குத் தைரியம் அற்றவர்களாக மனிதர்கள் வந்துவிட்டனர். இந்தத் தைரியம் அற்ற கோழைத்தனத்தால் மனிதர்கள் இன்று, மகிழ்ச்சியும், நிம்மதியுமற்ற அவல வாழ்வினை வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சரி, பிழை; நல்லது, கெட்டது என்பவற்றை அறிந்து கொள்ளும் தகுதியும் தகைமையும் மனிதர்களிடமுண்டு. ஆனால்,
_> J.*
உயிரானது பதியை அகத்தேயும் புறத்தேயும் நி இறைவன் குருவாக எழுந்தருளித் தன் நோக்களிலும் வ அருளுவன், அரசனின் மகன் அறியப்பருவத்தே வளர்கிறான். அந்நிலையில் அரசன் கண்டு அவ6ை இளவரசனரிக்குதல் போல, ஐம்பொறியாம் வேடரின் சூ உயிர் துயருறுகின்றது. இவ்வுயிரை ஆட்கொள்வதற்கா வேடரைச் சாரக் காரணமான மலத்தைக் கெடுத்துத் தன் (
-ழுநீ கு

42O கர சித்திரை 01
அவற்றால் என்ன பிரயோசனம்? அந்த உயர் தகுதியையும், சிறப்புத் தகைமையையும் தமது நல்வாழ்விற்கு ஆகவேனும், மனிதர்கள் பயன்படுத்தத் தவறி விடுகிறார்களே மனிதர்கள் மனிதர்களாக வாழ்வதற்குத் தமக்கு வழங்கப்பட்டுள்ள தகுதி, தகைமை, ஆற்றல் யாவற்றையும் உதாசீனஞ் செய்துவரும்வரை உலகில் அமைதி,
சாந்தி, சமாதானம் என்பவற்றைக் காண்பது முடியாத காரியமாகும்.
நல்லொழுக்கம் என்கிறார்களே, அப்படியென்றால் என்ன? என்று கேட்பவர்களும் உளர். ஒன்றைத் தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதுதான் முறை. சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தெரிந்துகொண்டு, தெரியாதவர்போற் பாசாங்கு செய்கிறார்கள். வேறு சிலர் தெரியாதவர்கள், ஆனால் தெரிந்தவர்போல் நடிக்கிறார்கள். இவர்கள் யாவரும் போலிகள்; ஆபத்தான பேர்வழிகள்.
நல்ல பழக்கவழக்கங்கள், ஆசாரங்கள், நல்ல மனிதப் பண்புகள், விழுமியங்கள் ஆகியவற்றை அறிந்து, அவற்றை அன்றாடம் வாழ்க்கையிற் கைக்கொண்டு ஒழுகுதல், நல்லொழுக் கம் ஆகும். கடின உழைப்பும் நல்லொழுக்கமுமே மனிதர்களை உயர்த்த வல்லன. அவ்வாறு பெறப்படுகின்ற உயர்வே, நிரந்தரமான உண்மை உயர்வாகும். அத்தகைய உயர்ந்தவர்களையே இந்த உலகம் வேண்டி நிற்கின்றது. "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று" என்று நம் மூதாதையர் சொல்லித்தந்த பாடம் பொருள் பொதிந்தது; நன்மை பயப்பது. அந்தப் பாடம் தினமும் நம்மால் நினைவுகூரப்பட வேண்டியது.
மனிதர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாகத் திகழும் போதுதான், தெய்வங்களுக்கு ஒப்பாகின்றனர். வேறு எந்நிலை யிலும், அவ்வாறு வந்துவிட முடியாது. அரசனாயினும், குடிமகன் ஆயினும் தம் வீட்டிலும் நாட்டிலும் அமைதியைக் காணும்போதே தலை சிறந்த, அளவற்ற மகிழ்ச்சியைப் பெறுகின்றனர். இத்தகைய அமைதியைக் காண்பதற்கு ஒரே வழி, அதுவும் நிகரற்ற வழி, சம்பந்தப்பட்ட யாவரும் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்வதுதான். அதைத்தவிர மகிழ்ச்சியையும், திருப்தியையும், நிம்மதியையும் அடைய மாற்றுவழி கிடையாது என்பதை உணர்வோமாக. நல்லவன் வாழ்வான்; தீயவர் வாழ்வு, வாழ்வாகக் கொள்ளப்படுவதில்லை. வாழ்வின் வெற்றிக்குக் காரணம் திறமையைக் காட்டிலும் , நல்லொழுக்கமேயாகும். இவற்றைக் கருத்திற்கொண்டு, நல்லொழுக்கப் பாதையில் நம் வாழ்வினை அமைத்துக் கொள்வோமாக.
னைத்து வழிபாடியற்றுதல் உண்டாயின், அதனை ஏற்று மக்களிலும், பரிசத்தாலும் மெய்யுணர்வை நல்கி உய்வித்து ஒருவர் வயப்பட்டு, அங்கேயே தானும் வேடுவனாக த்ெ தன் மகன் எனக்கூறி வேடரிடத்தினின்று பிரித்து >ச்சியில் அகப்பட்டுத் தன்னையும், பதியையும் அறியாத * இறைவன் குருவாக எழுந்தருளி வேடரினின்று பிரித்து, வண்ணமாக்கித் தன் திருவடிக்கீழ் வைத்து வாழ்விப்பன்.
ரகுருபரரில் முனைவர் வே. சீதாலட்சுமி, எம்.ஏ.எம்ஃபில், பிஎச்.டி.

Page 7
இந்துசாதனம் 4.
வேதநெறி தழைத்தே மிகுசைவத் துறை விளங்
C
தமிழ்ப் பற்று
தமிழைக் காத்து வளர்த்த பெருமையுடையது நம் சைவம். பெருமானும் முருகக்கடவுளும் முதற் சங்கத்திலிருந்து தமிழாய்ந் தனர். சங்க இலக்கியங்கள் சிவனை ஒரு பெருங் கடவுளாக வருணிக்கின்றன. அதனால், சங்கப் புலவர்களில் மிகப் பலர் சைவர்கள் என அறிகிறோம். பெருந்தேவனார் மற்றும் நலந்துவனாரின் சிவ வணக்கப் பாடல்கள் சங்க நூல்கள் நான்கின் கடவுள் வாழ்த்துப் பாடல்களாக விளங்குகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் முதல் நூலாகிய நற்றிணையின் முதற் பாடலாகிய சிவ
வணக்கப்பாடல், சிவனை வேத முதல்வன் என்கின்றது.
பெளத்தர்கள் பெருக்கத்தாற் பாலிமொழி பரவ இருந்த சூழலில், தமிழ்மொழி மங்காமல் ஒளிரச்செய்த பெருமை திருமுறை ஆசிரியர்களுக்கு உண்டு. நான்மறை கற்றவன் காழியர் மன்னர்" ஞானசம்பந்தப் பெருமான், தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் எனக்
குறிப்பிட்டுக் கொண்டார்.
நம் சைவம், தோத்திர வழிபாட்டுக்குத் தமிழையும், கிரியை வழிபாட்டுக்கு வடமொழிைையயும் கொண்டதாகும். கிரியை வழிபாட்டை வடமொழியில் நிகழ்த்தும் மரபு, நம் தமிழ்ப் பற்றை எவ்விதத்திலும் குறைக்காது. வடமொழி, கிரியைகட்குக் கருவி மொழி. அது பேச்சு வழக்கிற்கு உரியதன்று.
இறைவன் அருளிய இரு மொழிகளில் நாம் தாய்த் தமிழின் பேரிற் பற்றும் வடமொழியின் பேரில் மரியாதையும் உடையவர்கள். பற்று, உள்ளுணர்ச்சியினால் ஏற்படும் இதயப் பதிவு. அதுவே மேலோங்குவதாகும். பண்பாட்டு அடிப்படையிலும் மரபு அடிப்படை யிலும் எழும் மரியாதை பற்றை ஒருபோதும் குறைப்பதில்லை.
அற்புதங்கள் மரபாவதில்லை
சமயாசாரியர்களின் திருவாக்குகள் இறைவன் உணர்த்த வெளிவந்தவை என முன்பும் எழுதினோம். இறைவன் அருளிய ஆகம மந்திரங்களால் இறைவனைப் பூசித்து, இறை வாக்குகளே யாகிய தேவாரப் பனுவல்களாலும் - திருமுறைப் பாக்களாலும் அப்பெருமானைத் துதிப்பதே சைவத்தின் பாரம்பரியப் பெருமை யாகும். இவற்றிலெல்லாம் குதர்க்க வாதங்களோ, குழு தர்க்க வாதங்களோ, வேண்டாத வாதங்களோ, விதண்டா வாதங்களோ
எழத் தேவையே இல்லை.
"கண்ணப்பர், நம் சமய மரபுப்படி பூசிக்கவில்லையே!" என்று கேட்கலாமா? சிவகோசரியார் ஆகம மந்திரங்களாற் பூசித்து இறை சான்னித்தியத்தை நிலை நிறுத்தியிருந்த அருவுருவத்

42O கர சித்திரை 01
TFal 5
(இந்துசாதனம் - 2011 பங்குனி இதழ் 21ஆம் பக்கத் தொடர்ச்சி) YSeeSeeS SSSSYSSYSSSYYSYYTeSZYeiS ieB eBZSeBe SeSeSe SeSeSYeKeSSzeeSMSMS E5uíl6ODGO LOGGIT QUp6ofl6), Iñir நீலழுநீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித்தம்பிரான் திருமேனியைத்தான் கண்ணப்பர் பூசித்தார். 'கண்ணப்பன் ஒப்பதோர் அன்பில்லை என்பது முடிந்த முடிபு ஆகமம் சமஸ்கிருத மொழியிலுள்ளது. எனக்குப் புரியவில்லை என்று முழக்கமிட்டடோ, அறிக்கைவிட்டோ, கூட்டம் கூட்டிப் பேசியோ அவர் பூசை முறையை மாற்றவில்லை. அடைக்கும் தாழ் இல்லாத அன்பு வெள்ளம் பெருக்கெடுத்த நிலையில் இப்பூசை நிகழ்ந்தது. அந்த ஆறு நாட்களுக்குப் பிறகு இன்றுவரை காளத்தியில் ஆகம பூசையே தொடர்கிறது; தொடரும்.
பூசையில் நைவேத்தியம் என்பது ஒர் அங்கம் நைவேத்தி யம் என்ற சொல்லுக்குக் காட்டுதல் என்பது பொருள். நம்பி யாண்டார் நம்பிகள், பொல்லாப் பிள்ளையாருக்கு உணவைக் காட்ட வில்லை; உண்ணச் செய்தார். கண்ணப்பர் செயல், அன்பின் பெருக்கம் என்றால், நம்பியாண்டார் நம்பிகள் செயல், பக்தி வைராக்கியம். இந்த அற்புதங்களை இனி ஒருபோதும் யாராலும் நிகழ்த்த முடியாது. அற்புதங்கள், மரபாக வேண்டுமானால் இறைவனைப் பூசிக்கும் அத்தனைபேரும் அவர்களையொத்த பேரன்பும், வைராக்கியமும் கொண்டு தனிப்பெரும் அருளாற்றல் பெறவேண்டுமே!
ஆகம பூசை வேண்டாம் என்பதற்கோ, மரபு மீறிப் பூசிக்கலாம்
என்பதற்கோ இவையெல்லாம் எப்படி ஆதாரமாக முடியும்?
இன்றைய நிலை
பக்தி மார்க்கம் தற்காலத்தில் வளர்ச்சி நிலையில் இருப்பது
மகிழ்ச்சியாக இருக்கிறது. நாத்திகவாதம் சற்றே தணிந்து
கொண்டு உள்ளது என்றுதான் கூறவேண்டும். சைவ, வைணவ
பேதமற்ற ஒரு பக்திச் சூழல் மேலோங்கி வருகிறது.
சைவ சமயத்தின் சில அடித்தளக் கோட்பாடுகள் மதிக்கப் படாமல் ஆங்காங்கே நிகழும் ஒருசில நிகழ்வுகள் விரும்பத்தகுவன அல்ல.
தெய்வத் திருமுறைப் பனுவல்களுக்குத் தாம்தாம் கருதிய பொருள்களை வலிந்து ஏற்றிக்கூறி மரபுகளைச் சிதைக்கும்போக்கு நம் சமயத்தின் வைதிகப் புனிதத்துவத்தைக் களங்கப்படுத்தி விடும். பரார்த்த வழிபாட்டுக்குரியதான திருக்கோயில்களில், அடியார்கள் எல்லாரும் சென்று தாமே பூசித்தார்கள் என்று கூறுவதும், அதற்குத் திருமுறைக்கு தொடர்களின் பொருள் மாற்றி மேற்கோள் சொல்வதும், திருமுறைத் தொடர்களை ஒதுதல் செய்வதைத் தவிர்த்து, அருச்சிக்கப் பயன்படுத்துவதும் ஆகம
விரோதச் செயல்களாகும்.
->

Page 8
இந்துசாதனம் 4. C
சிவாகமங்களுடன் மாறுபடும் விதிகளை ஆகமங்களாகக் கொண்டு சிவ வழிபாடு செய்த பாசுபதர், மாவிரதியர், கபாலிகர், வாமநெறியினர், வைரவ நெறியினர், ஐக்யவாத சைவர் என்ற ஆறுபிரிவினரை - அகப் பிரிவினரைச் சைவத்தின் உள்ளேயே புகுந்து குழப்பம் செய்தவர்கள் என்ற பொருளில் அகப் புறச் சமயிகள் என்று பெயரிட்டு, நம் சாத்திர நூல்கள் நிராகரணங்கள்மறுப்புரைகள் - எழுதியுள்ளன. பரம கருணையங் கடவுளாகிய நம்பெருமான் அந்த அகப்புறச் சமயங்கள் இருந்த இடம் தெரியாதபடி, ஒடுக்குதல் என்ற கிருத்தியம் செய்து சைவத்தைக் காத்துப் புரக்கிறார் என்பதை உற்றறிந்து அகப்புறச் சமய வேலைகளை இனியும் யாரும் மேற்கொள்ளல் ஆகாது என எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதாவது, ஆகம நெறிகளை மாற்றுதலாகாது. திருவாசகம் வீடுபேற்றையே கருதி ஒதப்பெறுவது என்னும் சைவக் கோட்பாட்டையும் சிதைக்கலாகாது.
பெண்களும் கோயிலிற் சென்று பூசிக்கலாம் என்ற ஒரு முழக்கம் திரும்பத் திரும்ப வருவதைக் கேட்கிறோம். பெண்கள் பக்தி வேட்கை மிக்கவர்களாகவும், எதை யார் சொன்னாலும் நம்புபவர்களாகவும் இருப்பதைக் கொண்டும்; பெண்கள் சேரும் பக்கம் வெற்றிப்பாதையாக அமைகிறது என்பதாலும், திருவள்ளுவர் கூறும் வாழ்க்கைத் துணை நலம் பற்றி எண்ணிப்பார்க்காமல்
இப்படியான உத்தியினைக் கையாள்கிறார்கள்.
மேல் மருவத்தூர்க் கூட்டம் கண்களை உறுத்துவதும் அதற்கொரு காரணம் எனலாம். அது சாக்தம் சார்ந்த வழிபாடு. அவர்களில் யாரும் ஆகமப் பிரதிஷ்டை செய்யப்பட்ட அம்பாள் கோயிலில் நுழைந்து பூசிக்க முற்படுவதில்லை. பிரம்ம குமாரிகள் பூசை உலகளாவிப் பரவி வருகிறது. அது திருக்கோயில் வழிபாட்டு முறைமையன்று. எந்தத் துவேஷமும் இல்லாதது. வேதாந்தச் சார்புடையது. கூட்டு வழிபாட்டுமுறை. பக்தி நெறி தழைத்துச் செழிக்க அவையெல்லாம் சரியே.
இன்றும், நம் சைவத்திற் பல பெண்கள் சிவதீட்சை பெற்றுச் சிவபூசைகளைச் சிரத்தையுடன் செய்கிறார்கள். ஆதீன கர்த்தர்கள் தீட்சை கொடுத்துப் பூசை எடுத்துக் கொடுக்கும் முறை அனுமதிக்கப்பட்டதே. வரவேற்கத்தக்கதும்கூட சிவதீட்சை பெற்றுப் பூசை செய்வது ஆன்மார்த்தம் கோயிற் பூசை ஆகமோக்த பரார்த்தம், சிவாச்சாரியர் மரபில் வந்தவராயினும் பெண்கள்
திருக்கோயிற் பூசைக்கு உரியரல்லர்.
தாடகை, என்பாள் யட்சஸ்திரீ அவள் மானிடப் பெண் அல்லள். அவர்கள் - வானிடத்தவரும் அவர்கள் முறைப்படி மண்மேல் வந்து அரனை அர்ச்சிப்பர் என்று சிவஞான சித்தியார் கூறுகிறது. இதனாற்றான் அர்த்தஜாமப் பூசைக்குப் பிறகு மூலஸ்தானத்தில், நடை அடைப்பது தொடர்ந்து வருகிறது. அர்த்த ஜாமத்துக்கு மேல் வானிடத்தவரும் சிவனார் கோயிலில் வழிபாடு நிகழ்த்துவர். அனுமதிக்கப்பட்ட வேளையிலே தேவலோக
மலர்களைக் கொண்டு வனையப்பட்ட மாலையை எம்

.2O கர சித்திரை 01
பெருமானுக்குத் தாடகை சூட்ட வந்தபோது அவள் ஆடை நெகிழ எம்பெருமான் சாய்ந்து அதனை ஏற்றுக்கொண்டது அப்பெரு மானின் தனிப்பெருங் கருணையைத் துல்லியமாக விளக்குகிறது. இதற்கு விபரீதப் பொருள் தருவது அடாது.
எறும்பு பூசித்த தலம் திருஎறும்பியூர் எனப் பெயர் பெற்றது. யானை பூசித்த தலம் திருஆனைக்கா எனப் பெற்றது. அவைபோலத் தாடகை பூசித்த தலம் தாடகை ஈச்சரம் எனப்
பெற்றது.
வரும் இவள் நம்மைப் பேணும் அம்மை என இறைவன் உமாதேவியாரிடம் காரைக்காலம்மையாரைத் தம் தாய் என அறிமுகம் செய்தார். மூத்த திருப்பதிகம் பாடிச் சைவத் தேவார அமைப்புக்குப் பிள்ளையார் சுழிபோட்ட அந்தப் பெருமாட்டி அறவா, நீ ஆடும்போது நான் மகிழ்ந்துபாடி உன் அடியின்கீழ் இருக்க வரம் பெற்றார்களேயன்றி, அருகிருந்து பூசிக்க வரங்கேட்கவில்லை.
'உமையம்மையே கம்பை நதியிற் பெருமானைப் பூசிக்க வில்லையா? என்பவர்கள், உமையைப் பால்பகுப்பில் அடக்குவது உபசாரம் என்பதையும், நம் மெய்ப் பொருளியற் படியாகச் சக்தியின் நிலையும், இடமும் இன்னது எனவும் முதலில் அறிதல் வேண்டும். பவன் பிரம்மசாரி பால்மொழி கன்னியாகும் என்ற சிவஞான சித்தியார் வாக்கை ஆழ்ந்து நோக்க வேண்டும். பெளராணிகமாகப் பார்த்தாலும், வாக்கே நோக்கிய மங்கையாகி பதிசொற்படி கடவா பரமேஸ்வரி, பெருமானின் உத்தரவுப்படியே இறை திருவிளையாடற் காக இது நிகழ்த்தினாள் என்பதையும் உணர்தல் தகும்.
தமிழகத்தைத் தவிர இந்தியாவில் வேறெம் மாநிலத்திலும் இறைவன் அருளிய வடமொழிப் பூசைகூடாது எனச் சொல்வதும், மாநில மொழியிற் பூசிக்க வேண்டும் என்பதும் இல்லை. பிற மொழி வெறுப்பு என்ற குறுக்குவழி விளம்பர உத்தியால் தமிழகம் இழந்த இழப்புகள் எண்ணிலடங்கா. எவரொருவருக்கும் தாய்மொழியாக இல்லாமல் இறை பணிகளுக்காகவே உள்ள வட மொழியின் பேரில் வெறுப்புக் காரணமாகத் தமிழ் தமிழ் என்பதை, உண்மையான தமிழ்ப் பற்று எனச் சொல்வதற்கு இல்லை. தனி வழிபாடுகளில், இல்ல வழிபாடுகளில், கூட்டு வழிபாடுகளில் திருமுறைகளைப் பண்ணோடு இசைத்து வழிபடுங்கள்.
வேள்விகள், கும்பாபிஷேகம், திருமணம் முதலிய சடங்குகள், பரார்த்த பூசையாகிய ஆகமப் பிரதிட்டைத் திருக்கோயிற் பூசைகள் ஆகியவற்றில் திருமுறைகளை இயற்றி மரபின் மாட்சிக்குக் களங்கம் செய்யாதீர்கள் என்பதே உண்மைச் சைவத் திருநெறியி னர்க்கு நாம் வைக்கும் கருத்துரையாகும். தமிழ்ப் பற்று என்பவர்கள்- தங்கள் பெயர் முகவரி, சந்ததிகளின் பெயர் முதலியவற்றை வடமொழியிலேயே வைத்துள்ளதை என்னவென்று
சொல்வது?

Page 9
இந்துசாதனம் 4.
தாய்மொழிக்கு வழிபாட்டை மாற்றுதல் என்ற கருதுகோள் முதன் முதலில் கன்னட தேசத்தில் தனியொரு சமயமாக ஆக்கி உருவாக்கப்பட்டது. இதனால், கோயில் வழிபாட்டையே தவிர்த்தனர். கழுத்தில் உள்ள லிங்கத்தைக் கழற்றி வைத்து அதற்கே பூசை செய்வர். அத்தேசத் திருக்கோயில்களிலேயே அம்முறைமை இன்றில்லை. புதிய முகவரி தேட முற்பட்டால் உள்ள முகவரியும் அழிந்துவிடும்.
பெரியபுராணம் முழுமையிலும் வரும் திருமணங்கள் வேத மந்திரத் திருமணங்களே. தேவாரத்திற் பெருஞ்சாந்தி வருகிறது. அது பூசனைகளில் நிகழ்ந்த குறைபாடுகளுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிராயச்சித்த விழா, குடமுழுக்குக் குறிப்பு. உளக்கோயில் அமைத்த உத்தமர் பூசலார் வரலாற்றில் வருகிறது. அவர் ஆகம வழிப்படியே கோயில் அமைத்துக் கொண்டாராதலின் குடமுழுக்கும் ஆகம விதிப்படியே எனல் கூறாமலேயே பெறப்படும். மாறானால், அது திருமுறை வழியுமன்று, நெறியுமன்று.
"நாதனுக்கு ஆலயம்செய் நலம் பெற நல் நாள் கொண்டே ஆதரித்து ஆகமத்தால் அடிநிலை பாரித்து
என்ற பெரியபுராணத் தொடரே சாலும், சண்டேசுர நாயனார் புராணத்தில் ஆகம முறைப்படி கோயில் அமைத்தது உணர்த்தப் பட்டுள்ளது.
முன்னமே பிள்ளையார்பால் அனுசிதம் முற்றச்செய்து, பின்னரும் அனல் புனல், துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற சமணர்கள், கொன்னுனைக் கழுவில், தாமே ஏறி மாண்டனர். அங்ங்னம் இறந்த சமணர்கள் நெருப்பிற் பொசுங்காத் திருமுறையை நீரிற் போகாத் திருமுறையை - வேள்வி என்ற பெயரில் நெருப்பிலும் , குடமுழுக்கு என்ற பெயரில் நீரிலும் இட்டுப் பெருமந்திரத்தை மந்திரமாகத் தரம் குறைக்கும் அகப்புறச் சமயிகளாக மீட்டுரு எடுத்து வந்தனரோ என்று மனம் கருதத் தலைப்பட்டாலும், நீறு பூசியவர்கள் பகைமையே செய்யினும் நமர் எனச் சொல்லும் நனிநாகரிகத்தைத் தெய்வச் சேக்கிழார் நாமுய்ய வழங்கியுள்ளமையால், எங்கும் இருந்து காணும் பரசிவத்தின்
S S TSeL LLO T TL TLL eeeL TSLLO S TeO TO MeOO eTO MeT T eOL TLO S TOeL TSOLO M MTO MSOLO S M OeOS S உள்நாடு இந்துசாதனம் தனிப்பிரதி : 50/-
ஆண்டுச் சந்தா : ரூபா 600/-
வெளிநாடு
Australia (AUS) - 35
Europe - 25
India (Indian Rs) - 500
Malaysia (RM) - 50
Canada (S) - 35
UK (£) - 15
Other (USS) - 25

42O கர சித்திரை 01
திருவுள்ள எவ்வண்ணமோ அதுவே மெய்வண்ணம் என
அமைதியுறுகிறோம்.
கேட்டுக் கற்றவர்களின் செயல்கள்
வேதங்களை ஸ்ருதி என்று சொல்வார்கள். ஸ்ரு என்ற
வேர்ச்சொல்லிலிருந்துஸ்ருதி என்ற சொல் உருவானது.
அவ்வேர்ச் சொல்லுக்குக் காதால் கேட்பது என்பது பொருள். ஸ்ருதி என்ற சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் கேள்வி என்பதாகும். 'கேள்வி நூல் என்று வேதத்தையும், கேள்வி அந்தணர் என்று வேதியரையும் குறிக்கும் வழக்கம், பன்னெடுங்
காலமாகப் பயிலப்பட்டு வரும் இலக்கிய வழக்காகும்.
வேதம் ஒதுதல், வேத மந்திரங்களாற் சடங்குகள் செய்தல் ஆகியவற்றைத் தொழிலாகக் கொண்டவர்களைப் புரோகிதர்கள் என்பர். ஆகமங்களால் தேவ காரியங்களையும், சிவ வேள்வி களையும் செய்பவர்களைச் சிவாசாரியார் என்பர். இவர்களை ஆதி சைவர்கள் என்றும் கூறுவர். இவர்களைத் தேவ கன்மிகள் எனக் கல்வெட்டுக்கள் கூறும் புரோகிதம் என்பது தொழில். புரோகிதம் செய்யாமல் வேள்வி செய்தல், வேதம் ஒதுதல் ஆகியன
செய்யும் அந்தணர்களும் உளர்.
வேள்வி செய்ய உரிமையுள்ள இவர்களுள்ளும் திருமணமாகி மனைவியுள்ளவர்களே வேள்வி செய்ய அருகதையுள்ளவர்கள் என்பது யாவரும் அறிந்தது. துறவிகள், வேள்வி செய்விப்போராக திருமணம் போன்ற நற் சடங்குகளில் ஆசீர்வதிப்போராக எழுந்தருள்வார்களே தவிர, தாமே வேள்வி செய்தலுக்கும், திருமணம் போன்றவற்றிற் புரோகிதம் செய்வதற்கும் விதி இல்லை; உரிமை இல்லை. புராண, இதிகாசங்களில் ரிஷிகள் வேள்வி செய்ததாக வருகிறது. ரிஷிகள், பத்தினிகளை உடையவர்கள். அவர்களைத் துறவிகள் என்ற நிலையிற் கூறுவதில்லை.
வானப்பிரஸ்தர்கள் வேள்வி செய்வதுண்டு. மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்துப் பிற்பாடு தலைவனும் தலைவியுமாக மேற்கொள்ளும் அத்துறவுக்கு, வேள்வி முதலியன விதிக்கப்பட்ட கடமைகளேயாகும். இவர்கள் தத்தம் கடைத்தேற்றத்திற்காக வேள்விகள் செய்துகொள்வர். ‘தவம் செய்வார் தங்கருமஞ்
செய்வார். -லுவுருடு
MeS MS MS S M S MS MS S M M M MSM M SOOSM MT MTO S TST M MeS O S MSTTSM MTO S TT T SS S S S S eeO S LLL S S
@ @
- சந்தா விபரம் காசோலைகள்
Saiva Paripalana Sabai
ACCount No. 1090946
என்று எழுதப்பெறுதல் வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
கெளரவ முகாமையாளர் இந்துசாதனம் இல,66, கல்லூரி வீதி, யாழ்ப்பாணம்.
(ෆෆෆෆෆෆෆෆෆෙර්ර්‍වට

Page 10
இந்துசாதனம் 4. C
காவியுடையில் ஒரு க
இ ந்திய வரலாற்றிலே தமிழகத்தின் காஞ்சிக்குத் தனி இடம் உண்டு. பல்லவர் ஆட்சிக் காலத்தில் அவர்களின் ராஜதானியாக அது விளங்கியிருக்கிறது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தந்த தேன் தமிழ்ப்பாசுரங்களாலும் காஞ்சி சிறப்புற்றிருக்கிறது.
சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கண் ஒளி கொடுத்ததுட்பட அங்கு நடந்த அற்புதங்கள் ஏராளம். புண்ணிய பூமியாகிய காஞ்சி பாரதத்தின் ஏழு முக்தி ஸ்தலங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.
"கழுதையாய்ப் பிறந்தாலும் காஞ்சியிற் பிறக்க வேண்டும்" என்று சுவாரஸ்யமாகச் சொல்வார்கள். அவ்வளவிற்கு ஆன்மீகம், கலை, இலக்கியம், அரசியல் என்று கொடிகட்டிப் பறக்கும் ஊர் காஞ்சி. காஞ்சியிற் பட்டுக்கு மட்டுமல்ல, காவியுடைக்கும் காஞ்சிக்குக் காஞ்சிதான் நிகர்.
ஆம். காஞ்சியில் ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதர் அமைத்த "சர்வக்ஞபீடம்" அமைந்திருக்கின்றது. வீரத்தின் விளைநிலமாக, இமாலயச் சாதனையாளராக - துறவு நெருப்பாக விளங்கியவர் ஆதிசங்கரர், இளைஞரான அவர் பகவான் சிவபெருமானின் அவதாரம் என்னும் வண்ணம் செய்த சாதனைகள் பட்டியற்படுத்த இயலாதன.
இத்தகு குரு முதல்வரைக் கொண்டமைந்த பீடமாகிய காஞ்சி சங்கர மடம் இன்றும் அப்பாரம்பரியத்தைத் தக்கவைத்து வருகின்றது.
இம்மாதம் காஞ்சிக்கு அருகிலுள்ள ஓரிருக்கையில் அமைக்கப்பெற்ற பிரம்மாண்டமான மணிமண்டபக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெறுகின்றது. அந்த மண்டபக் கோயிலுக்கு உரியவர் நூற்றாண்டு கண்ட மகான் காஞ்சிப் பெரியவர்.
காஞ்சிப் பெரியவாள் என்று வணங்கப்பெறும் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கரராச்சார்ய ஸ்வாமிகளின் நினைவாகவே அந்தப் பிரம்மாண்டமான மணிமண்டபம் அமைக்கப்பெற்றிருக்கிறது.
வாழும் காலத்திற்கு அப்பால் இன்னும் அற்புதங்கள் செய்யும் அற்புதராக அறியப்படுபவர் பெரியவாள் ஸ்வாமிகள். நாளுக்கு நாள் அவரது பக்தர்களின் தொகை பெருகிக்கொண்டே செல்கிறது.
ஆதிசங்கர பகவத்பாதர் பாரதம் முழுவதும் பாத யாத்திரை செய்து நாற்றிசையிலும் நான்கு மடங்களை ஸ்தாபித்தார். இதன் பின்னர் காஞ்சிபுரம் எழுந்தருளினார். காமகோட்டத்திற் காமாட்சியம்பாள் திருமுன்றலில் பூரீ சக்கரம் ஸ்தாபித்தார்.
காஞ்சியை பூரீ சக்கர வடிவில் நிர்மாணித்தார். அதன்பின் தாம் அமைத்த பீடங்கள் அனைத்திற்கும் தலைமை ஸ்தானமாக
காஞ்சியிற் சர்வக்ஞபீடத்தை நிறுவினார். அங்கே தமது முதன்மை

42O கர சித்திரை 01
ருணைக்கடல்
நீர்வை, தி. மயூரகிரி சர்மா
சீடர்களுள் ஒருவரான சுரேஸ்வராச்சார்யாளை பீடாரோஹணம் செய்வித்தார் என்பது வரலாறு.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்கர பகவத்பாதர் ஸ்தாபித்த காஞ்சித் திருமடத்தில் இன்றுவரை 68 சங்கராச்சார் யார்கள் பீடத்தை அலங்கரித்திருக்கிறார்கள். ஆனால், இவர்களில் பலரின் திருநாமங்கள் மீள மீள வருவதால் (அதாவது அண்மையில் பீடாதிபதியாக விளங்கிய சந்திரசேகர மகாசுவாமிகளுக்கு முன்னர் பட்டத்தில் 1907 வரை விளங்கிய ஸ்வாமிகளுக்கும் சந்திரசேகர நாமமே வழங்கியிருக்கிறது). வரலாற்றாய்வாளர்கள் இவ்விடயத் தினைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
எப்பொழுதுமே நம்மவர்களுக்குக் காலக்கணிப்பிற் சிறிய தொரு சிக்கல் இருந்து வந்திருக்கிறது என்று கருதுவதற்கு இடமுண்டு. அந்த வகையிற் காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றுக் காலத்திலும் சில இடர்ப்பாடுகள் உண்டு என்று கருதுபவர்கள் உண்டு. ஆயினும் சங்கரரின் காலம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் என்றும் காஞ்சி மடம் குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். சிருங்கேரி சங்கர மடத்தைத் தவிர மற்றைய அனைத்துச் சங்கர மடங்களின் பதிவுகளிலும் இவ்வாறே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கரர் வாழ்ந்ததாகக் குறிப்பிடப் பட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.
காலச்சுழற்சியில். வெவ்வேறு வகையான காலக் கணிப்பில் (விக்கிரம ஆண்டு, கலியப்தம், ஆங்கில ஆண்டு, கொல்லம் என்று பல்வேறாக) உள்ள பிரச்சினைக்கு அப்பால் காஞ்சி சங்கர மடத்திற்குப் பெரியதொரு நீண்ட பாரம்பரியமும் வரலாறும். இருக்கிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது.
இதற்கு அண்மைக் காலத்தில் வாழ்ந்த பெரியவாள் ஸ்வாமிகளே ஒரு பெரிய சாட்சி. காஞ்சிப் பீடத்தை அலங்கரிக்கக் கூடிய ஸ்வாமிகளின் பட்டப்பெயர்களுக்குப் பின்னால் இந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் என்கிற பெயரும் முன்னே "ஜகத்குரு" என்ற பாரம்பரிய பட்டமும் வழங்கி வருவதும்கூட பெருமைக்குரியன வாகும்.
கத்தோலிக்கர்களுக்கு வத்திக்கான்போல, இந்துக்களுக்கு இருக்கும் தலைமையகம் எது என்று கேட்கிறபோது பலரும் உடனடியாகவும் வலுவாகவும் சொல்லிக்கொள்ளும் பிரதான நிலையங்களுள் நிச்சயமாக காஞ்சி மடமும் அமைந்துவிடுகிறதைப் பார்க்கிறோம்.
இலங்கையைச் சேர்ந்த பெருமக்களுக்கும் காஞ்சி மடத்திற்கும் பரந்த நல்லுறவு நிலவியிருக்கிறது. நாம் முன்னரே குறிப்பிடுகிற காஞ்சி மஹாஸ்வாமிகளுக்கு நமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத்துறையை நிறுவிய பேராசிரி யர், அமரர். கா. கைலாஸநாதக்குருக்கள் பஞ்சரத்ன ஸ்தோத்ரம்
சமர்ப்பித்திருக்கிறார். பாராட்டும் பெற்றிருக்கிறார்.
->

Page 11
இந்துசாதனம் 4.
இலங்கையிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் செல்கிற இந்துக்களிற் பெரும்பாலானவர்களும் காஞ்சி மடத்தில் எழுந்தருளியிருக்கிற ஸ்வாமிகளின் ஆசீர்வாதங்களைப் பெற்றுவரவும் தவறுவதில்லை.
காஞ்சி மடத்தின் தனித்துவங்களும் பற்பல, சைவம் - வைஷ்ணவம் என்கிற பேதம் எல்லாம் காஞ்சியின் திருமடத்திற் கிடையாது. நாம் முன்னரே தருமையாதீனம் பற்றிய கட்டுரையிற் காஞ்சி மடாதிபதிகளாக இருந்த மகாபெரியவாளின் செயற் பாடுபற்றிக் குறிப்பிட்டதை இங்கு மீள நினைவுபடுத்த விரும்புகி றோம்.
இப்புனித பீடத்தைத் தற்போது அலங்கரிக்கிற ஆச்சார்யார் ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள். விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மடத்தின் இளவலாகப் பணியாற்றி வருகிறார்.
காஞ்சிமடம் தற்போதும் மருத்துவம்-ஆன்மீகம்-இலக்கியம் என்று ஏராளமான பணிகளை ஆற்றிவருகிறது. திருமலை திருப்பதி வேங்கடவன் கோயிலிலிருந்து மதுரை மீனாட்சியம்மை கோயில்வரை இம்மடத்தின் திருப்பணிகள் நடைபெற்றிருக்கிறது.
20.05.1894இல் தமிழகத்தின் விழுப்புரத்திற் பிறந்த சுவாமிநாதன் 1907இல் தமது 13வது வயதிற் காஞ்சி மடத்தின் 68ஆவது பீடாதிபதியானார்.1994அமரரான இம்மகாசுவாமிகளின் பெருமையே பெருமை. அவர் துறவு வாழ்வு விநோதமானது. அவர் ஒருபோதும் தொலைபேசியை உபயோகித்ததேயில்லை. ஒருபோதும் இயந்திரங்களிலோ - வாகனங்களிலோ ஏறியதே இல்லை.
ஆரம்பகாலத்தில் பல்லக்கில் உலா வந்திருக்கிறார். ஆனால், அதுவும் தவறு என்று கருதி அதனையும் நிறுத்திவிட்டார். பின்னர் கால் நடையாகவே எங்கு சென்றாலும். ஆனாலும் அப்படிக் கால்நடையாகப் பாரதம் முழுமையும் உலா வந்திருக்கிறார்.
ஸ்வாமிகள் மடத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதும் அதற்குமுன் சில காலம் கும்பகோணத்தையே தலைமையகமாகக் கொண்டு இயங்கிய காஞ்சித் திருமடம் பின்னர் காஞ்சியிற் பரிணமிக்கலாயிற்று.
காஞ்சிமடம் சமஸ்கிருதத்தையே போற்றுவது என்று சிலர் கருதக்கூடும். அதற்கு எதிர்மாறாக ஸ்வாமிகள் தமிழ் பக்தி இலக்கியங்களில் அளவற்ற ஈடுபாடுடையவராக விளங்கினார். பிடியரிசித் திட்டம் என்கிற ஒரு திட்டத்தைத் தமது பக்தர்களின் இல்லங்களிற் செயற்படுத்தி ஏழைகளுக்கு உணவூட்டினார்.
வரதட்சணை வாங்கக்கூடாது என்று வலியுறுத்திய ஸ்வாமிகள், தமது வாழ்வில் காந்தி முதல் எத்தனையோ பெரியவர்களைச் சந்தித்தார். அவரை நாடி, தேடி ஜனாதிபதிகளே வரும்போதுகூட அவர் எந்த ஒரு பதட்டமும் இன்றி வழமைபோல எல்லோரையும் போலவே அவர்களுடன் பேசும் சுபாவமும் உடையவராக விளங்கினார்.
பிற மதத்தவர்கள் மதிப்பிலும், அவர்களின் நம்பிக்கைக்கு ஊறு ஏற்படுத்தாமல் இருப்பதிலும்கூட மகாஸ்வாமிகள் பங்கு பெரியது. வழமையாக வருகிறவர்கள் எல்லோருக்கும் பிரசாதம் கொடுக்கிற ஸ்வாமிகள் ஒருமுறை ஓரிடத்தில் தங்கியிருக்கிற

4.2O கர சித்திரை 01
போது ஒரு பஸ்ஸில் வந்த குழந்தைகளுக்கு வீதியிற் காத்திருந்து பழங்களை மட்டுமே கொடுத்தாராம். வழமைபோல விபூதி போன்ற சமயச் சின்னங்களைக் கொடுக்காததைப் பார்த்தவர்கள் வியப்புற்று விழித்தபோது பஸ்ஸில் வந்த பிள்ளைகள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று அவர்களின் நடை, உடையை வைத்து அறிந்ததாலேயே பழங்களை மட்டுமே கொடுத்தாக ஸ்வாமிகள் குறிப்பிட்டாராம்.
இப்படி ஆழ்ந்த அறிவு-கூர்மையான எண்ணம்- தெளிவான சிந்தனை என்று ஒரு சக்கரவர்த்தியாக விளங்கியவர் காஞ்சி
மகாஸ்வாமிகள்.
தொண்டிலே கனிந்த தேகம் - தாயதாம் துறவு வாழ்க்கை கண்டவர் போற்றும் தோற்றம் காஞ்சியின் கருணை வெள்ளம். பண்டைய பாரதத்துப் பண்பினைப் பாரோர் போற்ற மண்ணிலே உதித்த அந்த மகான்அடி போற்றி வாழ்வோம்.
என ஆஸ்திகப் பெருமக்கள் போற்றி வாழ்வதில் அதிசயம் எதுவும் இல்லை.
இத்தகு ஆச்சார்ய பரம்பரையின் வழியில் இன்னும் காஞ்சித் திருமடம் சிறப்புற இயங்கி வருகிறது. காஞ்சி நகரின் பிரதான தெய்வமாக விளங்கும் அன்னை காமாட்சியின் திருக்கோயில் அறங்காவலர்களாகவும் பூரீ மடத்து ஸ்வாமிகளே இருந்து வருகிறார்கள்.
பூரீ மடத்திலே எழுந்தருளியிருக்கிற சந்திரமௌலீஸ்வர ஸ்வாமிக்குப் பீடாதிபதிகளால் ஆராதனை செய்யப்பெறுவதும் குறிப்பிடத்தக்கதாகும். மடத்தின் ஸ்வாமிகள் எங்கு முகாமிட்டிருக் கிறார்களோ அதுவே அக்காலத்தில் ஒரு தெய்வீக நிலையமாக, ஆன்மீகக் கலைக் கூடமாகப் பரிணமிக்கக் காணலாம். காலத்தின் மாற்றங்கள் பல்வேறு விடயங்களில் நமது பண்பாட்டின் உச்ச நிலையங்களான துறவுப் பீடங்களைச் சிதைத்து வருகின்ற சூழலில் இவை தொடர்பில் நாம் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.
இலங்கையிலும் இனிய ஒரு நல வாழ்வு-இந்துசமய ஆன்மீக வாழ்வு மலர காஞ்சிப் பீடம் தொடர்ந்து பங்களிக்கும் என நம்புவோம்.
காஞ்சியிற் பிறந்த கந்த புராணத்தின் இருப்பிடமாக - இன்னும் அதன் முக்கிய வாழ்விடமாக இருப்பது இலங்கை, முக்கியமாக யாழ்ப்பாணம். இதனாலேயே யாழ்ப்பாணக் கலாசாரத்தைக் கந்தபுராண கலாசாரம் என்பர். அதே இலங்கையின் பல பாகங்களிலும் காஞ்சியின் தொடர்ச்சியாக அன்னை காமாட்சிக்குக் கோயில்கள் அமைந்திருக்கின்றன. காஞ்சிப் பெரியவர்களின் பக்தர்களும் நிறையவே இருக்கிறார்கள். காஞ்சி மகாஸ்வாமிகளின் ஜெயந்தியை விழாவாகக் கொண்டாடி மகிழ்பவர்களும் இருக்கிறார்கள்.
இவ்வாறாகக் காஞ்சியுடன் நெருக்கமும் பிணைப்பும் கொண்ட இலங்கைக்கும்; காஞ்சி சங்கர பீடத்திற்கும் இடையான உறவுகள் வலுப்பெற வேண்டும். அதனூடே நமது இந்துப்பண்பாடு செம்மையுற வேண்டும் என்பதே நமது இன்றைய பிரார்த்தனை யாகும்.
ஜெயஜெயசங்கர ஹர ஹர சங்கர

Page 12
இந்துசாதனம் 4. C
திருச்சிற்றம்பலம் வாழ்க அந்தணர் வானவரானினம் வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக ஆழ்க தீயதெல் லாமரனாமமே சூழ்க வையக முந்துயர் தீர்கவே. திருச்சிற்றம்பலம்
இந்து சாதனம் Hindu Organ
e-mail: editor Ghindu organ.com
கர வநில சித்திரை மீ" 1ஆம் 2 (r4.04.2011)
நில்லரசே Enn Ebib EblaDOTESfir
அதிகாரத் திமிருடன் தம்மை அடக்கி ஆண்ட தம் ஜனாதிபதிக்கு எதிராக எகிப்து நாட்டு மக்கள் திரண்டெழுந்து நடத்திய ஆர்ப்பாட்டங்கள் - அவற்றைச் சிதறடிப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள் - இறுதியில் அந்த நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் - தென்சூடான் நாட்டு மக்கள் ஒன்று திரண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளின் அரசியல் ofloooToយ6 =
சர்வாதிகாரி கடாபிக்கு எதிராக லிபிய நாட்டு மக்களிற் பெரும்பாலானோர் மேற்கொண்ட - வன்முறை கலந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் - அவற்றை ஆதரித்து - அவற்றுக்கு வலுவூட்டும் வகையில் மேற்குலக வல்லரசுகள் எடுத்த இராணுவநடவடிக்கைகள்
வரலாறு காணாத வகையில் ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பம் - அதனால் ஏற்பட்ட பேரழிவுகள் - உயிர் இழப்புக்கள் -
உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கிற் பல்வேறு நாடுகள் கலந்துகொண்டதுடுப்பாட்டப் போட்டிகள்
முதலியவை மக்களிடையே ஏற்படுத்திய உணர் வலைகள் - கருத்துப் பரிமாற்றங்கள் - எதிர்பார்ப்புக்கள் - ஏமாற்றங்கள் - அனுதாபங்கள் -
போன்றவற்றுக்கு உலகத்திலுள்ள பெரும்பாலான ஊடகங்கள் முதலிடமும், முக்கிய இடமும் அளித்துக் கொண்டிருக்க -
இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரப் படிகளில் - நிர்வாகக் கட்டமைப்பில் - அதி உச்ச நிலை தொடக்கம் அடிமட்ட நிலைவரை - அங்கிங்கெனாதபடி எங்கும் - பரந்தும் கரந்தும் திரியும் ஊழற் பிசாசு உடனடியாக இனங்காணப்பட்டு - நாட்டைவிட்டே ஓட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி
"அன்னா ஹஸாரே என்ற காந்தியத் தொண்டர் இந்தியத் தலைநகர் புது டில்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ԾOԼՈuրհ -
அதை முறியடிப்பதற்கு - அதற்கு உள்நோக்கம் இருப்ப தாகக்கூறி அதனைக் கொச்சைப்படுத்துவதற்கு -
 

4.2O கர சித்திரை 01
தம்மை அப்பழுக்கற்றவர்கள் - அஹிம்சாவாதிகள் எனச் சொல்லிக்கொண்ட சில அதிகாரிகளும், அரசியல் தலைவர் களும் அந்தரங்கமாக மேற்கொண்ட முயற்சிகள்
உண்ணாவிரதத்திற் காணப்பட்ட உள்ளார்ந்த தார்மீக வலிமையாலும் -
அதில் இணைந்துகொள்வதற்கும் - அதற்கு ஆதரவும், அனுசரணையும் அளிப்பதற்கும் முன்வந்த மக்களின் எண்ணிக்கை-கணத்துக்குக் கணம் அதிகரித்ததனாலும் -
பிசுபிசுத்துப் போனதால் -
ஊழற் பேர்வழிகள் எனச் சந்தேகிக்கப்படும் அத்தனை பேரும் - அவர்களின் பதவி, அந்தஸ்து முதலியவை கணக் கெடுக்கப்படாமல் - பூரண விசாரணைக்கு உட்படுத்தப்படல் (8oIGöTBh. —
விசாரணைக் குழுவில் இடம்பெறும் அரச அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரின் எண்ணிக்கைக்குச் சமமாக எல்லா வகையிலும் தகுதியான பொதுமக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் -
குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்குக் கடுந் தண்டனை விதிக்கப்பட்டு - அது நிறைவேற்றப்படவும் (8orGöTBTh
என்ற அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வ தாக எழுத்துமூலம் இந்திய அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்து - குறித்த காலத்திற்குள் அவற்றை நடைமுறைப்படுத்தவும் gin jäs6löSIT6öoTLGOLD 5IgGOOTLOIT5
உண்ணாவிரதம் முடிவுக்குக் கொண்டுவரப் பட்டமை L30 =
நல்லெண்ணம் - நாணயம் - சத்தியம் - சாத்வீகம்-நீதி - நியாயம் - தேசபக்தி - தெய்வ பக்தி - போன்ற உயர்ந்த விழுமியங்களின் வளர்ச்சியையும், வெற்றியையும் தம் இலட்சிய மூச்சாகக்கொண்ட உயர்ந்தோர் - சான்றோர் போன்ற ஒவ்வொருவரின் கருத்தையும், கவனத்தையும் ஒருங்கே ஈர்த்த மகத்தான நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் - வரலாற்றையே வளப்படுத்தும் நிகழ்ச்சிகளுமாகும்.
அரசியல் இலாபத்தையோ - சொந்தப் பேர் புகழையோ -
இவைபோன்ற வேறு "ஆசை"களையோ சிறிதும் கருத்திற் 6e6IToroIIIn60
6)č=ITibg5 p6ör6oLoš35ITč5 uLIr60JuLIh, 6TůLIg,úLILL6)Iň களையும் - தட்டிக் கொடுப்பதற்கோ, வெட்டிச் சரிப்பதற்கோ சிறிதும் தயங்காத அரசியல்வாதிகள் நிறைந்த இந்திய நாட்டில் - மக்களையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்ற மகத்தான நோக்கில் - தர்மத்தையும், நீதியையும் துணைக் கழைத்துக் கொண்டு களத்திற் குதித்த அன்னா ஹஸாரே அவர்களுக்கு -
முன்னர் குறிப்பிட்ட - அவரைப்போன்ற சிறந்த குண நலன்களுடைய சான்றோர் என்றென்றுமே பக்க பலமாக இருக்க வேண்டும் என்பதையும்
ஏற்றுக்கொண்ட நிபந்தனைகள் அனைத்தையும் உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கு அரசுக்கு இடைவிடாது அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும்
ஊழலற்ற - நீதி வழுவா நெறிமுறையில் நாட்டை ஆட்சி செய்கின்ற நல்லரசே, - ஆயுதத்தையும், அடக்கு முறை களையும் நம்பிச் செயற்படுகின்ற வல்லரசைவிட வலிமை மிக்கது- வளம் கொழிப்பது- வரவேற்புக்கு உரியது என்பதைஆட்சியாளர்களுக்கு அவர்கள் வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் - நாம் அவர்களுக்கு வலியுறுத்த விரும்புகின்றோம். خر

Page 13
இந்துசாதனம் 4.(
பக்தி மார்க்கமே பழ
ஆன்மா இறைவனுடைய திருவருளைப் பெறுவதற்கு இந்து சமயத் திருநூல்கள் பல்வேறு வழிகளைக் கூறியுள்ளன. கலியுகத்தில் இறைவனைப் பற்றிப்பிடிப்பதற்கு உகந்தது பக்தி மார்க்கம் ஒன்றே என்று நாரதமகரிஷி தனது பக்திச்சூத்திரத்திற் குறிப்பிட்டுள்ளார். அடியவர்கள் இறைவனைப் பற்றுவதற்கு பக்தியாகிய வலையை வீசவேண்டும் என்கிறார் மணிவாசகர். அடியவர்கள் வீசுகின்ற பக்தி வலையில் இருந்து அப்பனாகிய
இறைவன் தப்ப முடியாது என்று திருவாசகம் குறிப்பிடுகிறது.
அன்பின் முதிர்வு நிலைதான் பக்தி, காய்முற்றிக் கனியாக மாறுவதுபோல, அன்பு முற்றிப் பக்தியாகப் பரிமளிக்கிறது. "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" என்று தமிழ் மறையாகிய திருக்குறள் செப்புகிறது. தூய அன்பினால் யாரையும் நம் வசப்படுத்தலாம் என்பது உலகியல் அனுபவம். அதிகார பலத்தாலோ அல்லது ஆயுத பலத்தாலோ யாரையும் அடக்கமுடியாது. இவ்வாறான அடக்கு முறைகள் நீண்ட காலம் நிலைப்பதில்லை. அன்பினாற் கட்டுண்டு இருப்பவர்களின் பிணைப்பை எந்த ஒரு சத்தியாலும் அசைக்க முடியாது. கண்ணப்பனின் அன்பிற்கு காளத்தியப்பன் கட்டுண்ட வரலாற்றைப் பெரியபுராணம் எடுத்து விளக்குகிறது. பக்தி நெறியின் உயர்வுநிலைக்குச் சென்றுவிட்டால் அடியவன் பித்தனாகவே மாறி விடுவான்.
அன்பின் முதிர்ந்த நிலையே பக்தி ஆகும். இ அடைபவனுக்கு என்ன கொடுக்க வேண்டுL என்பவற்றை இறைவனே தீர்மானிப்பான். தேவையில்லை.
"பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும் ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்" என மணிவாசகப் பெருமானும் தான் அருளிய திருவெம்பாவைப் பாடலிற் பக்தன் பித்தனாக மாறும் உணர்வு நிலையைச் சித்தரித்துள்ளார். இறை பித்துப் பிடித்த பித்தனின் நா, எப்பொழுதும் இறை நாமத்தையே உச்சரிக்கும் . ஹரி, ஹரி என்று நாராயணனின் நாமத்தையே இடைவிடாது உச்சரித்தபொழுது என்னைப் பித்தன் என்று பேசுகின்றார்கள். இதற்காக என்னால் உம்மைக் கைவிட முடியுமா? என்று உரிமையுடன் மாயவனைப்பாடுவதைப் பின்வரும் திருமங்கை யாழ்வாரின் பாடலிற் காணலாம்.
அத்தா அரியே என்றுன்னை அழைக்கப் பித்தா என்று பிறர் பேசுகின்றார் என்னை முத்தே மணி மாணிக்கமே முளைக்கின்ற வித்தே உன்னை எங்ங்ணம் நான் விடுகேனே. பக்தி என்பது தான், இறைவன் என்ற இரண்டிலும் ஒருமை ஏற்பட்டதாக உணர்கின்ற உணர்வே ஆகும். பக்தியே உண்மைச்

42O கர சித்திரை 01
LDGroup önı"(BLİb
சிவத்தமிழ் வித்தகர்-சிவ. மகாலிங்கம்
சமயத்தின் உயிர்நாடியாகத் திகழ்கிறது. இறைவனைப் பற்றிக் கொள்ள வேண்டும் என்று மனிதமனம் முயல்கின்ற முயற்சியே பக்தியாகும். ஆன்மாவிற்கும் இறைவனுக்கும் உள்ள உறவு ஒன்றை மட்டும் ஆன்மா விரும்பி நிற்பதே பக்தி எனப்படும்.
தன்னை மறந்து தற்பேதமில்லாமல் ஒரு செயலைச் செய்தால் அது உள் நின்று தூண்டும் இறையருளாற் செய்யப் பெற்றதாகவும், இந்நிலையே உண்மையான பக்தனின் நிலை என்றும் பெரியபுராணம் சித்தரிக்கின்றது. "சித்தம் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும் அத்தன்"என அடியார்களின் செயல்கள் அனைத்தும் ஆண்டவனின் செயல்கள் என மணிவாசகரின் திருவாசகமும் கூறுகிறது.
அன்பு நெறியில் எது செய்தாலும் அது எம்பிரானுக்கு ஏற்றதாகும் என்பதைக் கண்ணப்பநாயனார் புராணத்தின் ஊடாகச் சேக்கிழார் விளக்குகிறார். "பொங்கிய ஒளியின் நீழல் பொருளில் அன்புருவம் ஆனார்" எனப் பெரிய புராணம் இதனைக் குறிப்பிடுகிறது.
ஆன்மா இறைவனை அடைவதற்குப் பகவத் கீதைகூறும்
வழிகளிற் பக்தியோகமும் ஒன்றாகும். நாரதர் பக்தியினை ஆழ்ந்த
இறைபற்று என்று கூறுகிறார். அன்பே கடவுள் என்ற உண்மைக்கு
இறைவன்மீது பூரண பக்தி செலுத்திச் சரணிகதி ம், அவனை எவ்வாறு வழிநடத்த வேண்டும்
பக்தன் இறைவனிடம் எதையும் கேட்கத்
ஏற்ப வாழ்க்கை நடாத்துதலே பக்தியோகம் என்பது யாக்ஞவல்லிய மகரிஷியின் கருத்தாகும். இறைவன் தம்மைக் கைவிடமாட்டான் என்று அடியவனிடம் ஏற்படும் அசைக்கமுடியாத நம்பிக்கைதான் பக்தி. அன்பின் மேலீட்டினாற்றோன்றும் உரிமைப் பாட்டினை உண்மையான பக்தனின் வாயில் இருந்துவரும் வார்த்தைகள் வெளிப்படுத்திவிடும்.
உண்மையான பக்தன் இறைவனிடம் எதையும் கேட்டுப் பெற வேண்டியதில்லை. தன்னைப் பூரண சரணாகதியாகப் பிரபக்தி நிலையில் நின்று வணங்கும் அடியவனுக்கு எதைக் கொடுத்தல் வேண்டும், அவனை எவ்வாறு வழி நடாத்துதல் வேண்டும் என்பதையெல்லாம் இறைவனே பார்த்துக்கொள்வார்.
"வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்தன் விருப்பன்றே." என்று தெய்வ வாசகமாகிய திருவாசகமும் இதனைக் கூறுகிறது.
1 T.
22ஆசி பகிதம் Uதுே

Page 14
இந்துசாதனம் 4.C
ஞானத்திற்கு ஏதுவாதல்
191. சிவபுண்ணியங்கள் ஞானத்திற்கு ஏதுவாதல் எவ்வாறு?
பேரறிவும், பேரின்பமும் தன்னியல்பாக உடைய பெரும் பொருளாகிய முதல்வனை உயிர்கள் தம் சிற்றறிவால் உணர முடியாது. உயிரின் அறிவு தூல அறிவு. ஆதலின் அஃது எந்த ஒன்றையும் முதலிலேயே முழுதுமாக அறிந்துகொள்ளமாட்டாது என்பதையும், படிமுறையிற் சிறிது சிறிதாகவே அறியும் என்பதையும், முதலிற் பொருள்களின் பருமை நிலையை அறிந்து அறிந்து பின் படிப்படியே நுண்ணிலையை அறியும் வண்மையைப் பெறும் என்பதையும், உயிர்களின் அறிவை இவ்வாறு வளர்ப்பதற்காகவே உலகம் என்னும் இக் கல்விச் சாலையில் அவற்றைச் சேர்த்துத் தனு கரணங்களாகிய கருவிகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான் என்பதையும் நீ அறிவாய்.
உய்யும் நெறியில் தலைப்படும் உயிரின் அறிவை வளர்ப்பன
சரியை முதலிய தவங்களாகிய வழிபாடுகளேயாகும்.
உயிரின் அறிவு பருமையாக உள்ள நிலையில் அவ்வுயிர் இறைவனை உருவ நிலையில் வைத்து வழிபடும். அவ்வழிபாட்டின் முதிர்ச்சியால் அதன் அறிவு சிறிது நுணுக்கம் அடையும். அதனால், இறைவன் உருவநிலையைக் கடந்தவன் என்ற உண்மையை உணர்ந்து, அவனை அருவுருவமாக - மந்திரவடிவில் - வைத்து வழிபடும் முறையை அடுத்து மேற்கொளும். அதன் பயனாக அதன்
AA AA சைவசித்தாந்த
(இந்துசாதனம் - பங்குனி மாதம் 2011- 11ஆம் பக்கத் தொடர்
N\/4 ධූල්
அறிவு மேலும் நுட்பமடைந்து இறைவனைப் புறத்தில் வைத்து வழிபடாமல் அகத்தில் அருவமாக வைத்து வழிபடும் பக்குவத்தைப் பெறும். இவ்வாறு அறிவு நுணுகி வளரவளர, இறைவன்மீது கொண்ட அன்பும் படிப்படியே பெருகிவரும்.
அறிவும் அன்பும் முதிர்ந்து கனிந்த இந்நிலையே, இறைவனைப் பற்றிய உண்மையறிவை, அதாவது ஞானத்தைப் பெறுதற்கு ஏற்ற பக்குவ நிலையாகும்.
முத்தியைப் பெறுவதற்கு ஞானமே வழியாகும். அந்த ஞானத்தைப் பெறுதற்கு மேற்கூறிய வழிபாடாகிய தவமே சிறந்த
வழியாகும்.
தவமாகிய சிவபுண்ணியமே ஞானத்தை உணர்வதற்குரிய பக்குவத்தை உயிரறிவில் ஏற்படுத்தி, அறிவையும் அன்பையும் முதிர்வித்து இம்முறையில் ஞானத்திற்கு ஏதுவாகிறது.
ஞானம் உண்டாகும் நிலை 192. உயிருக்கு ஞானம் உண்டாகக்கூடிய பக்குவநிலை எது?
மந்ததரம், மந்தம், தீவிரம் என்னும் சத்திநிபாத நிலைகளில் மேற்கொள்ளும் சரியை முதலிய வழிபாடுகளால் ஆணவமலம்

14.2O கர சித்திரை 01
மேலும் மேலும் தேய்ந்துவர, அதி தீவிரம் என்னும் சத்திநிபாதம் ஏற்பட்ட காலத்தில் உயிர் தன் அறிவில் இருந்த மயக்கம் நீங்கித்
தனது உண்மை நிலையை உணரும்.
இந்நாலாம் சத்திநிபாதம் வரும்போது உடம்பாகிய சிறையுட்
கிடக்க அஞ்சும் நிலைமை உண்டாகும்.
"வேற்று விகார விடக்கு உடம்பின் உட்கிடப்ப ஆற்றேன்"
எனவும்,
"வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்" எனவும் வரும் திருவாசக அனுபவ மொழிகளை எண்ணிப் பார்த்தால், அதி தீவிர சத்திநிபாதம் ஆகிய நிலை ஒருவாறு விளங்கும். அந்நிலைதான் ஞானம் உண்டாதற்குரிய நிலையாகும்.
193. ஞானம் என்பது யாது?
ஞானம் என்பதற்கு உண்மையறிவு என்பது பொருள். தமிழில் அது "மெய்யுணர்வு" எனப்படும்.
உலகத்தின் உண்மை நிலையையும், ஆன்மாவாகிய தனது உண்மை நிலையையும், தலைவனாகிய இறைவனது உண்மை நிலையையும் உள்ளவாறு உணர்தலே ஞானமாகும். சுருங்கக் கூறின், முப்பொருள்களைப் பற்றிய உண்மைகளைத் தெளிய
உணர்தலே ஞானமாம்.
CLOGOGOr6)Isr EB-EV6Orb தராசன்
முப்பொருள்களின் உண்மையை உணர்தலாவது:
"உலகம், தனு, கரண, புவன, போகங்கள் என்னும் நான்கு கூறுகளை உடையதாய் என்னோடு கூடியிருக்கிறது. இவை யெல்லாம் நிலையில்லாத சடப்பொருள்கள். ஆன்மாவாகிய நான் சித்துப் பொருள். இவற்றிற்கெல்லாம் வேறானவன்; மேலானவன். ஆயினும் இவ்வுண்மையை உணராமல், இவற்றின் வசப்பட்டு, இவையே நான் என்று மயங்கி, இவற்றிற்கு அடிமையாகிக் கிடக்கிறேன். இஃது என்பது உண்மையியல்பு அன்று.
சித்தாகிய நான் சித்தாகிய இறைவனைச் சார்ந்து நிற்பதற்கு உரியவன். அவன் அறிவிக்கவே எதனையும் அறிகின்றேன்; அவன் செய்விக்கவே எதனையும் செய்கிறேன். அவனின்றி நான் எது? அவனே எனது வாழ்வுக்கு முதல், துன்பத்தை விளைவிக்கும் இவ்வுலகச் சார்பினின்றும் விடுபட்டுப் பேரின்பப் பொருளாகிய அவனைத் தலைப்பட்டு என்றும் இன்புற்றிருத்தலே எனது இயற்கை.
இவ்வாறு உணர்ந்து தெளிதலே முப்பொருள் பற்றிய உண்மை
ானமாகும். ஞ ->

Page 15
இந்துசாதனம் 4.O
ஞானத்தை யார் தருவது? 194. இத்தகைய ஞானம் எவ்வாறு வாய்க்கும்? அதனை நூல்களாற் பெற முடியமா? அல்லது உலக ஆசிரியர் ஒருவர் வழியாகப் பெறக் கூடுமா? உண்மை ஞானத்தை இவ்விரண்டின் வழியாகவும் பெற
(Upy.LUIT5).
உலக அறிவை நூல்களின் வழியாகப் பெறலாம். உண்மை ஞானம் என்பது உலகியலை விட்டு நீங்கிப் பெறவேண்டிய ஞானம்.
இந்த ஞானத்தை உலக நூல்கள் எவ்வாறு தர இயலும்?
நூல்கள் என்பவை சொற்களின் கூட்டம் சொற்களெல்லாம் மாயையின் காரியங்கள். மாயை என்பது பாசங்களுள் ஒன்று. ஆதலால், சொற்கள் மூலமாக வரும் ஞானம் பாச ஞானமேயாகும். அப்பாசஞானம் நிலையற்றது; நீங்கக்கூடியது. அத்தகைய நிலையற்ற பாச ஞானத்தால் நிலையற்ற பொருள்களை அறிய முடியுமேயன்றி நிலைத்த மெய்ப்பொருளை அறிய இயலாது.
மேலும் நூல்கள், அவை ஞான நூல்களேயாயினும், உறுதியான அறிவுத் தெளிவைத் தர மாட்டா, பல தலைப்பட்ட ஜயவுணர்வு களையே தருவனவாகும். கடல்நீரை ஒருவர் நேரே பருகினால் அது தாகத்தைத் தீர்க்குமா? அதுபோல, ஞான நூல்களை நேரே பயின்றால் அது ஐயங்களைப் பல வகையில் எழுப்புமேயன்றி அவ்
ஐயங்களைத் தீர்க்காது.
"பக்குவம் வந்த காலத்தில் ஒருவர் ஞானநூலைப் பயின்றால் அப்பொழுதும் ஞானநூல் அவர்க்கு ஞானத்தைத் தராதோ?"- என்று நீ கேட்கலாம். அப்பொழுதும் தராது என்பதுதான் அதற்கான பதில்.
பையனைப் பள்ளியிற் சேர்ப்பதற்கும், படிப்புச் சொல்லித் தருவதற்கும் ஏற்ற பருவம் வந்துவிட்டது என்றாலும், படிப்பறிவைப் பையன் தானாகப் பெற்றுவிடமுடியுமா?-அதுபோலப் பக்குவம் வந்தாலும் ஒருவர் தாமாக ஞானத்தைப் பெற்றுவிடமுடியாது.
உலக ஆசிரியருள் ஒருவர் மூலமாக ஞானத்தைப் பெறலாமோ? எனில், அவர் அதனைத் தருதற்கு உரியர் அல்லர். ஏனென்றால், ஞானத்தைப் பக்குவம் வாராதபோது உணர்த்துவதும் குற்றம், பக்குவம் வந்தவுடன் உணர்த்தாதிருப்பதும் குற்றம் என்று சொல்லப்படும்.
பக்குவம் வாராதபோது ஒருவர்க்கு ஞானத்தை உணர்த்துவது வீண். அதனால் யாதொரு பயனும் விளையாது. தகுதி பெறாத ஒருவர்க்கு ஞானத்தைத் தருவது, வயது நிரம்பாத சிறு குழந்தையின் கையிற் பொற்கிண்ணத்தை அளிப்பதுபோன்றது. குழந்தை அதன் அருமை தெரியாமல் வீசி எறிந்துவிடும். அது போலப் பக்குவம் இல்லாதவரும் தாம் கேட்ட ஞானப் பொருளை ஒரு செவியால் வாங்கி மறு செவியால் விட்டுவிடுவர்.
இனிப் பக்குவம் வந்தவர்க்கு ஞானத்தை உணர்த்தாதுவிடின், பாசத்தினின்றும் விடுபட அவர்க்கு விருப்பம் இருந்தும் விடுபடமாட்டாராய் அவர் மீண்டும் பந்தத்துட்படுவதற்கு ஏதுவாகும்.

42O கர சித்திரை 01
பக்குவம் என்பது ஆன்மாவின் அறிவில் நிகழ்வது. அது புறத்தே புலப்படுவதன்று. ஒருவர்க்குப் பக்குவம் வந்துள்ளது என்பதையும், இன்னும் வரவில்லை. என்பதையும் அறிய வல்லார் யார்? உலக ஆசிரியன்மார் அதனை அறியும் வல்லமை உடையவரல்லர். ஆதலால் அவர் பக்குவம் வருதற்கு முன்னேயே ஞானத்தை உணர்த்தப் புகும் குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அதுபோல, ஞானம் வந்த பின்னும் அதனைத் தராது வாளா இருந்து அக்குற்றத்திற்கு ஆளாகக்கூடும். அதுபற்றியே உலக ஆசிரியன் மார் ஞானத்தைத் தருதற்கு உரியரல்லர் என்று சித்தாந்தம் வலியுறுத்துகிறது.
ஞானாசிரியர்
195. ஞானத்தை வேறு எவ்வகையிற் பெறுவது?
உயிரில் நிகழும் பக்குவத்தை உயிர்க்குயிராய் உள்ள இறைவன் ஒருவனே அறிய வல்லவன், அவனே அப்பக்குவத்தைப் பார்த்தருளி, ஞானாசிரியனாக எழுந்தருளி வந்து ஞானத்தை நல்குவான் என்று சித்தாந்தம் உறுதிபடக் கூறும்.
ஞானாசிரிய வடிவம்
196.geopoloចំ @pTCOTT៩ិuGOTT5 OTop.offio៦ ចាញថាIToបំTo
உயிர்க்குயிராய் உள் நின்று உணர்த்தி வந்த இறைவனே அதி தீவிர சத்திநிபாதம் வரப் பெற்றவர்க்கு ஞானத்தை அளித்தற்கு ஆசான் மூர்த்தியாக அவரைப் போன்ற மானிட வடிவிலேயே
வருவான்.
இவ்வாறு சொல்வது கொண்டு, நமக்கு இருப்பது போன்ற மாயையின் காரியமாகிய சரீரத்தை அவனும் கொள்வான் என்று
கருதிவிடலாகாது.
இவ்வுலகில் இறைவனுக்கு ஆட்பட்டு, மலம் நீங்கிய தூய ஆன்மாக்களாய் சிலர் இருப்பர். சீவன் முத்தர் என்று அவர்களைக் குறிப்பிடுவர். அப்படிப்பட்ட சுத்தர் ஒருவரின் உடல், உயிர் அனைத்திலும் இறைவன் அவையேயாய் ஆவேசித்து நின்று - அவரே தானாக நின்று ஞானத்தை உணர்த்துவான்.
அந்நிலையில் அச்சுத்தான்மாவே ஞானகுரு ஆவார்.
ஞான குருவின் நிலைக்குப் பேய் பிடியுண்டவரது நிலையை ஒப்பாகச் சொல்லலாம். பேயினால் பயிற்றப்பட்டவரது நினைவும், சொல்லும், செயலும் ஆகிய எல்லாம் பேயின் நினைவும் சொல்லும் செயலுமாய் ஆகி விடுகின்றன. அதுபோல ஞானகுருவின் நினைவும், சொல்லும் செயலும் ஆகிய யாவும் இறைவனது நினைவு
சொல், செயல்களேயாதல் காணலாம்.
இவ்வாறு சிவமாய் நின்று ஞானாசிரியர் மாணாக்கனுக்கு ஞானத்தை உணர்த்தும்போது, சூரியனது ஒளிபட்ட அளவிற் சூரிய காந்தக் கல்லில் நெருப்புத் தோற்றுவதுபோல அவரது உபதேசத்தைக் கேட்ட அளவில் அம்மாணாக்கரது அறிவில் ஞானம் தோன்றும்.
இந்த ஞானத்தைத் தந்தவர் யார்? நாம் மனிதராக நினைக்கின்ற அவரா? அல்லது இறைவனா?

Page 16
இந்துசாதனம் 4. O.
பழுக்கக் காய்ச்சிய இரும்பு வைக்கோலை எரித்து விடுகிறது. எரித்த செயலைச் செய்தது எது? இரும்பா? நெருப்பா?
இரும்பு நெருப்பைச் சார்ந்து நெருப்பாகவே ஆகி நின்று எரித்தலாகிய செயலைச் செய்தது. எனவே எரித்தலாகிய செயல் நெருப்பிற்கே உரியது என்பது சொல்லாமலே விளங்கும். அதுபோல மானிட குருவைப் பொருத்தி அக்குருவாகவே நின்று ஞானத்தை உணர்த்தியவன் இறைவனேயாவான் என்பதே சித்தாந்தக்
கொள்கையாகும்.
இதுவே இறைவன் நம்மவர்போல மானிட வடிவில் நின்று அருள்
புரியும் வகையாகும்.
மானிட குருவாய் வரக் காரணம் 197, இறைவன் தனது இயற்கை வடிவில் வந்து ஞானத்தை உணர்த்தினால் என்ன? மானிட குருவினிடமாக நின்று உணர்த்த வேண்டுவது எதற்கு? இறைவனது இயற்கை வடிவம் என்பது நிலவுலகில் தோன்றி அடியவர்க்குக் காட்சி கொடுத்து விரைவில் மறையக் கூடியது. அது நெடிது நில்லாது.
சகலராகிய மாணாக்கர்களின் நிலை என்னவென்றால், உபதேசப் பொருளை அவர்க்கு ஒருமுறை உணர்த்தினாற்போதாது. உணர்த்திய அப்பொருளை அவரோடு உடனிருந்து பல காலும் சிந்திக்குமாறு செய்வித்தல் வேண்டும். அவர்க்கு எழக்கூடிய ஐயப்பாடுகளையெல்லாம் அவ்வப்போது நூல்களின் வாயிலாக
நீக்கித் தெளிவு பெறுமாறு செய்தல் வேண்டும்.
இவ்வாறு மாணாக்கரைக் கேட்பித்தும், சிந்திப்பித்தும், தெளிவித்தும், பின் அவரை நிட்டை கூடச்செய்தும் அவரை ஞான நெறியில் நிற்பித்தல் வேண்டும்.
இவற்றின் பொருட்டு ஞானாசிரியர் மாணாக்கரோடு பல காலம் உடனிருத்தல் இன்றியமையாதது. அது கருதியே இறைவன் தன் உண்மை வடிவில் வராமல், மானிடகுரு ஒருவரிடத்தில் அவரே தானாக நின்று பக்குவ மாணாக்கருக்கு ஞானத்தை உணர்த்தி அவரை ஆட்கொள்வான் என்று சித்தாந்தம் கூறும்.
தீக்கை - விளக்கம்
198. தீக்கை என்பது என்ன?
இறைவன் உயிர்க்குயிராய் உள் நின்று உயிர்களைப்
பக்குவப்படுத்தி வருகின்றான். - -
తో-3 -> ஏழைகளுக்கு உதவுங்கள் - அறிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அப்பேறு கிடைக்க ஆவன செய்ய வேண்டும். பிறருக்கு உதவ ( வேண்டும். எவதுை இதயம் ஏழைகளுக்காக இரங்குகி பட்டினி எங்கு நிலவுகிறதோ அங்கு சென்று சேவை ெ உள்ளத்திலே இறைவன் தங்குவார். எனவே ஏழைகளுக்கு - இராமகிருஷ்ண மிஷனின் மட்டு ம

42O கர சித்திரை 01
கன்மங்களை நுகரும்படி செய்து அந்நுகர்ச்சியால் மல பரிபாகமும், சத்திநிபாதமும் ஆகிய அரிய பக்குவ நிலைகள் உயிருக்கு வருங்காலத்தில், இறைவனே ஆசான் மூர்த்தியாய் அவ்வுயிரின் புறக் கண்ணிற்குப் புலனாகி நின்று, அதன் பாசங்களைப் போக்கி ஞானத்தை அருளுவான்.
அங்ங்ணம் பாசத்தை நீக்கி ஞானத்தைத் தரும் செய்கையே சிவாகமங்களில் தீக்கை எனக் குறிக்கப்படுகின்றது.
மலம் தானே நீங்காமை 199, ஆணவ மலத்தின் சத்தி தேய்ந்து வரும் நிலையே மலபரிபாகம் என்றால், மல வலி குன்றிய அந்நிலையில் அது தானே நீங்கி விடாதா? ஆசான் மூர்த்தியின் செய்கையால் அது நீங்கும் என்று கூறுவது ஏன்? கண்ணிற் படர்ந்துள்ள படலம் பழுத்துவிட்டால் அது நீங்கக்கூடிய நிலையை அடைந்துவிட்டது என்கின்றோம். அவ்வாறு நீங்கும் நிலையை அடைந்தாலும் படலம் தானே நீங்கி விடுகிறதா? இல்லையே. மருத்துவரின் செய்கையினால் அன்றோ அது நீங்குகிறது. அதுபோல, மலபரிபாகம் ஏற்பட்டால் ஆணவ மலம் நீங்கும் நிலையைப் பெறுமேயன்றித் தானே நீங்கிவிடாது. அஃது ஆசாரியனின் செய்கையினாலேயே நீங்குவதாகும்.
ஞானத்தைத் தாமாகப் பெற முடியாது 200. மலபரிபாகமும் சத்தி நிபாதமும் வரப்பெற்றோர் தம் அறிவிலுள்ள மல மறைப்பு நீங்கப்பெற்றவர்; ஆதலால் அவர் தாமே ஞானத்தை உணர்ந்துகொள்ள மாட்டாரா? ஆசான் மூர்த்தி வந்துதான் ஞானத்தைத் தரவேண் (ԹԼՈIr?
இயற்கையிலே பார்வையில்லாத ஒருவன் பின்னால் அறுவை சிகிச்சை முறையினாற் கண்பெற்றான் என்று வைத்துக் கொள்வோம். அந்நிலையில் அவன் பொருட்களைக் காணும் ஆற்றலைப் பெற்றானாயினும், இஃது இன்னபொருள், இதன் பெயர் இது இதன் தன்மை இது என்பவற்றையெல்லாம் தானே உணர்ந்துகொள்ளமாட்டான். அவற்றை அறிந்த ஒருவன் தனக்கு
உணர்த்தவே அவன் உணர்ந்துகொள்வான்.
அதுபோல, மல பரிபாகமும் சத்திநிபாதமும் ஏற்பட்டுத் தம் அறிவிலுள்ள மறைப்பு நீங்கினாலும், அவர் பொருட்களின் இயல்பைத் தாமே உணர்ந்துகொள்ள மாட்டார். பொருட்களின் இயல்பை உள்ளவாறு உணர்தலாகிய ஞானத்தை ஆசான் மூர்த்தி உணர்த்தவே உணர்வர். அவ்வாறு உணர்த்தும் முறையே தீக்கை எனப்படுகிறது. ථූණි -ஹவுருடு
று பெற்ற மனிதப் பிறவியில், ஏனையோருக்குப் பயன் வேண்டும் என்ற சிந்தனை எம் ஒவ்வொருவருக்கும் வர றதோ அவனே மகாத்மா, ஏழ்மை எங்கு இருக்கிறதோ சய்யுங்கள் கடவுள் உங்களோடு இருப்பார். ஏழைகளின் ഈ ക്രഖീകരി,
ாநில முதல்வர் பூரீமத் சுவாமி ஞானமயானந்தாஜி
A.

Page 17
இந்துசாதனம் 4.
சதாபிஷேகம் கண்ட க
| lரம்பரைச் சைவக் குடும்பத்தில் தம்பியப்பா கண்ணம்மா தம்பதிக்கு மகனாக 1930ஆம் ஆண்டிலே ஊற்காவற் றுறையைச் சேர்ந்த சுருவில் எனும் சிற்றுாரிற் பிறந்தவர்; ஏழு வயதிலேயே சைவசமய தீட்சை வழங்கப்பெற்றவர், சைவ உணவைத் தவிர வேறு வகையான உணவெதனையும் உண்ணாதவர்; நேர்மையான வழியிற்
பணத்தை ஈட்டி அதன் பெரும்பகுதியைத் தர்மச்
 
 

4.2O கர சித்திரை 01
O உபைத தலைவா
செயல்களுக்காகச் செலவிடுபவர்; யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் "நொதேண் இன்டஸ்றிஸ்" என்ற பெயரில் ரயர் நிரப்பும் தொழிற்சாலையை ஆரம்பித்து, இங்குள்ள தமிழ் இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்தவர்; ஆலயங்களின் அமைப்பு, அங்கு நடைபெறும் நித்திய, நைமித்திகக் கிரியைகள் சம்பந்தமாக ஆகமங் களிலும், ஏனைய நூல்களிலும் கூறப்பட்டுள்ளவற்றிற் , T600T அறிவுடையவர்; அவற்றிற்கிணங்கவே ஆலயங்கள் அமைக் கப்படல் வேண்டும். கிரியைகள் செய்யப்படல் வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வருபவர் - நல்லூர் ஆறுமுகநாவலர் தர்மகர்த்தா சபையின் உறுப்பினர் - 1990 ஆம் ஆண்டில் மனைவி இராசலட்சுமி அவர்களுடன் இணைந்து திருஞானசம்பந்த சைவ ஆச்சிரமத்தில் விசேட தீட்சை பெற்றுக்கொண்டவர், பாடல் பெற்ற சிவத்தலங் களுக்கு அடிக்கடி யாத்திரை மெற்கொண்டு சுவாமி தரிசனம் செய்வதைத் தவப்பேறாகக் கருதுபவர்; இலங்கையில் நடைபெற்ற தமிழராய்ச்சி மகாநாட்டின் வெற்றிக்காக உழைத்தவர்; பெயரளவில் மட்டும் சைவராக வாழாமல், சைவ சமய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் நடைமுறைச் சைவராக வாழ்ந்து வருவதனால் தென்னிந்தியா திருவாவடுதுறை ஆதீனத்தால் "சிவநெறிப் புரவலர்" என்ற கெளரவப்பட்டம் வழங்கப்பெற்றவர்; சிதம்பரத்தில் ஈழத்தவர்களுக்குச் சொந்தமான புண்ணிய நாச்சியார் தருமச் சொத்துக்களைப் பிறர் கவராமற் பாதுகாத்து புண்ணிய நாச்சியாரின் பெயரில் மூன்று மாடிகள் கொண்ட
"இறை பயணிகள் இல்லத்தை" நவீன வசதிகளுடன்
17

Page 18
இந்துசாதனம் ALC
அமைத்து, சிதம்பர தரிசனத்துக்காகச் செல்லும் நம் நாட்டவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்தவர். நாற்பது ஆண்டுகளாக நமது யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் தமிழ், சைவப் பணிகள் எல்லாவற்றிலும் தன்னை இணைத்துக்கொண்டு சபையின் பொருளாளராகவும் செயலாளராகவும் பணி யாற்றிக் கடந்த ஆறு ஆண்டுகளாகத் தலைவராக மிகச் சிறப்
புடனும், பொறுப்புணர்ச்சியுடனும் கடமையாற்றி வருபவர்;
 
 

4.2O கர சித்திரை 01
திருவாவடுதுறை ஆதீனத்தால் "சித்தாந்தச் சைவச் சுடர் நிலையம்" என்ற கெளரவ விருது வழங்கப் பெறுமளவுக்கு நன்கு திட்டமிட்டுச் சபையின் செயற்பாடுகளை முன் னெடுத்து வருபவர்; இந்த நாட்டில் இந்த விருது வழங்கப்பட வேண்டிய சைவசமய நிறுவனங்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பெற்ற
பெருமைக்குரியவர்.
ஆகிய சிறப்புக்களெல்லாம் ஒன்று திரண்டு பொருந்தி நிற்கும் ஒரேயொரு சைவப் பெரியாராகத் திகழும் உயர்திரு. தம்பியப்பா சண்முகலிங்கம் அவர்களின் சதாபிஷேக விழா, பாடல்பெற்ற திருத்தலமாகிய திருக்கடவூர் அருள்மிகு அமிர்த கடேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2011.02.19ஆம் திகதி சாஸ்திரோக்தமாகவும், பக்திபூர்வமாகவும் நடைபெற்ற தென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம். சமயக் கிரியைகளிலும், பாராட்டு நிகழ்ச்சியிலும் அவருடைய உறவினர்களும் நண்பர்களும் கலந்துகொண்டனர்.
இலட்சியவாதியாகவும், செயல்வீரனாவும் திகழும் திரு. சண்முகலிங்கம் அவர்களும் அருமைத் துணைவியார் இராசலட்சுமி அவர்களும், மேலும் பல்லாண்டுகாலம் சிறப்புடன் வாழ்ந்து; தம் சமய, சமூகப் பணிகளை
முன்னெடுக்க எல்லாம் வல்ல கூத்தப்பெருமானைப்
பிரார்த்திக்கின்றோம்.
- ஆசிரியர் "இந்து சாதனம்"

Page 19
இந்துசாதனம் 14C
விக்னேஸ்வர சஹஸ்ரநாமத்திலுள்ள 'ஓம் புஷ்கரஸ்த ஸ்வர்ண கடீபூர்ண ரத்னாபிவர்ஷகாய நம என்னும் ஒரு நீண்ட சொற்றொடர் பிரமிப்பை ஏற்படுத்துகின்றது. தங்கக் குடம் நிறைந்த இரத்தினங்களால் நன்கு அபிஷேகம் செய்யப்படுபவர் என்ற கருத்தை இது தருகின்றது. இதனையடுத்து வருகின்ற நாமங்கள் சில அளவொத்தனவாக - இரட்டைச் சொற்றொடர்கள் இரண்டிரண்டாக இணைந்து வரும் அழகு ஒசைநயம் மிக்கதாக இருக்கும் சிறப்பு அவதானிக்கத்தக்கது. பாரதீ சுந்தரீ நாதாயநம - வாணி க ம லா நா தனுக்கு வணக்கம். (அதாவது கல்வி,
செல்வம் இரண்டுக்கும் அதிபதி
என்பது பொருள்). மஹாலசுஷ்மீ ப்ரியதம - மஹாலட்சுமிக்கு மிகவும் பிடித்தவர். சித்திலசஷ்மீ மனோஹர - சித்திலட்சுமியின் மனங் கவர்ந்
தவர். (எல்லாச் சித்திகளையும் தரவல்லவர்)
அர்ச்சனை மந்திரங்களிற் காணப்படும்
அற்புதக் கருத்துக்களும், ஆனந்த இரசனையும்
வித்யாபூஷணம், பிரம்மழுநீ ப. சிவானந்தசர்மா B.A. (Hons) (BaSITIČILIITưI f6) IIñ)
NMA
ரமாரமேச பூர்வாங்க - இலக்குமி, விஷ்ணுவுக்கு முன்பாக
உள்ளவர்.
தகூழினோமாமஹேஸ்வர - உமா மஹேஸ்வரருக்கு வலப்புற
முள்ளவர். மஹி வராஹ வாமாங்க - லசுஷ்மீ வராஹ மூர்த்திகளின்
இடப்புறமாக உள்ளவர். ரதிகந்தர்ப்பபஸ்சிம - ரதி மன்மதர்களுக்கு மேற்காக
உள்ளவர். ஆமோதமோத ஜனன - மகிழ்ச்சியில் தோன்றியவராயும்
மகிழ்ச்சியைத் தோற்றுவிப்பவ
ராகவும் உள்ளவர்.
இவ்வாறு சில நாமங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு மிக நீண்ட
நாமத்தைக் காண்கின்றோம்.
ஐராவதாதி சர்வாசா வாரணாவரணப்ப்ரிய- ஐராவதம் முதலிய எல்லா யானைகளாலும். சூழப்பட்
டிருப்பதை விரும்புபவர்.
358ஆவது நாமத்திலிருந்து 674 ஆவது நாமம் வரையில் 'அ' முதல் 'க்ஷ வரை அகர வரிசையில் நாமங்கள் வரிசைப்படுத்தப்
பட்டிருப்பதைக் காண்கின்றோம்.
 
 
 
 
 

42O கர சித்திரை 01
அதற்குப்பின் சில நாமங்களின் சொல்லழகைப்பார்ப்போம்.
தர்ம ப்ரத தர்மத்தைக் கொடுப்பவர் (அறம்) அர்த்த செல்வத்தைக் கொடுப்பவர் (பொருள்) காமத - இன்பத்தைக் கொடுப்பவர் (இன்பம்) சௌபாக்ய வர்த்தன - சகல செல்வங்களையும் வளரச் செய்பவர். வித்யா ப்ரதாயின் - கல்வியறிவைக் கொடுப்பவர். புக்தி முக்திப் ப்ரத-போக மோட்சங்களைக் கொடுப்பவர். ஸர்வ வஸ்யகர - எல்லாரையும் வசப்படுத்துபவர். புத்ர பெளத்ரத - சந்தான விருத்தியைத் தருபவர். மேதாத அறிவைக் கொடுப்பவர்
கீர்த்தித புகழைக் கொடுப்பவர்.
இங்கு மனித வாழ்விற்கு வேண்டிய லெளகிகத் தேவைகள் பலவற்றையும் அவர் தந்து நம்மை மகிழ்விப்பவர் எனக் கூறுவதன்மூலம் அவற்றை நமக்கும் தரவேண்டும் எனப் பிரார்த்திப்பதாகக் கொள்ளலாம். அதே நேரம் கொடுப்பவர் என்ற ஒரே பொருளிற்குப் பல சொற்களை இங்கு மாறி மாறிப் பயன்படுத் தியிருக்கும் சிறப்பு கவனிக்கத்தக்கது.
இதன்பிறகு காலங்களாக நின்று நம்மைக் காத்து நிற்பவரும், காலம் கடந்து நிற்கும் பரம்பொருளாய் விளங்குபவரும் கணேசரே என்ற கருத்திற் கால அளவைகளை வரிசைப்படுத்தி அவையெல்லாம் நீரே எனப் போற்றுவதைக் காணலாம். இதே தன்மையினை நம் சிவபிரானின் சஹஸ்ர நாமத்திலும், ருத்ர நாமாவளியிலும் ஒப்பிட்டுக் காணமுடியும்.
லவாய நம - மிகச் சிறு பொழுதாக விளங்குபவருக்கு
வணக்கம்.
த்ருட்யை - கணப்பொழுதாக உள்ளவருக்கு
கலா - கலை என்னும் சிறு பொழுது
காஷ்டை- காஷ்டை என்னும் சிறு பொழுது
நிமேஷ - நிமிஷ காலம்
கடிகா - மணி
முஹுர்த்த - ஒன்றரை மணிநேரம்
ப்ரஹர - ஒரு யாம(மூன்றுமணிநேரம்)
திவச - பகல்
ராத்ரி - இரவு
Leo - பட்சம் (பதினைந்துநாள்)
LOT8F - மாதம்
அயன : அயனமாக (ஆறுமாத)
வர்ஷ )ييرheع" - ஆண்டு
պՑ - யுகம்
கல்ப பல யுகங்கள் சேர்ந்த அளவாகிய கல்பமாக
இருப்பவர்.
Lng)son Glou - காலங்கள் யாவும் நிறைவுபெறுகின்ற
ஒடுக்கமாக இருப்பவர். (լն)յ6Tեւյլք)
இவ்வாறே இராசி, லக்னம், ஹோரை, யோகம். கரணம், நட்சத்திரம் வாரம் என்னும் பஞ்சாங்க உறுப்புக்களாகவும், எல்லாக்
கிரகங்களாகவும், தாவர சங்கமங்களாகவும் பிரம விஷ்ணு ->
| Y.

Page 20
இந்துசாதனம் 4. O
ருத்ரர்களாகவும் அவரே விளங்குகிறார் என்பது சொல்லப்படு கின்றது.
ப்ரம்மனே நம, விஷண்வே நம, ருத்ராய நம, சதாசிவாய நம என்றிவ்வாறு வரிசைக் கிரமங்களையும் கடைப்பிடிக்கக் காணலாம். தேவர்கள், பிதிர்கள், ராட்சசர்கள், கின்னரர், சித்தர், சாத்யர், வித்யாதரர், பூதர், மனுஷர், விலங்குகள், பறவைகள், சமுத்திரங்கள், மலைகள் என்றிப்படி எல்லாமாக இருப்பவர் என்று தனித்தனி
நாமம் சொல்லித் துதிக்கப்படுகின்றது.
அதன்பின் தத்துவ நூல்களாகவும், அவற்றின் உட்பொருள்க ளாகவும் விளங்குபவர் விநாயகரே என அப்பெயர்களால் அவரைத்
துதிக்கும் நிலையைக் காண்கின்றோம்.
யோகாய நம, புராணேப்யோ நம, ஸ்ருத்யைநம (சுருதி - வேதம்) ஸ்ம்ருத்யை நம (ஸ்மிருதி-தர்மசாஸ்திரம்) வேதாங் கேப்யோ நம, மீமாம்சாய நம, ந்யாய விஸ்தராய நம, ஆயுர்வேதாய
நம, தனுர்வேதாய நம, காந்தர்வாயநம.
சப்தகோடி மஹா மந்திரங்கள் எனப் புகழப்படுபவை உயர்ந்த
சக்தியுள்ள மந்திர ஒலிகள். சப்தம் என்றால் ஏழு கோடி என்றால் அந்தம் அல்லது முடிபு. எனவே இச்சொற்பதம் மந்திரங்களின் முடிபாக அமைந்து தேவர்களை மகிழ்வித்து சக்தியைத் தரும் ஒலி வடிவங்களைக் குறிக்கும். இவ்வாறு சப்தகோடி மஹாமந்திரங்கள் என வழங்கப்படுபவை நமஹ, சுவாஹா, சுவதா, வவுட், வெளஷட், ஹம், பட் என்பனவாகும். இம் மந்திர ஒலிகள் அனைத்துமாக விளங்குபவர் விநாயகப்பெருமானே என்ற குறிப்பிற் பின்வரும் நாமங்கள் அமைகின்றன.
ஹ"ம்ரூப பட்ரூபாயநம
ஸ்வதாமயாயநம
ஸ்வாஹாரூபாயநம
வஷண்மயாய நம
எண்ணுற்றிருபத்துநான்காவது நாமம், 'ஏகாய நம என வருகிறது. ஒன்றானவன் என்பது பொருள். ஒன்றேயான பரம்பொருள் எனப் போற்றுகின்ற இந்நாமத்திலிருந்து இறுதிவரை எண்களின் வளர்ச்சிப்படியாக நாமங்கள் அமைவதைக் காணலாம். ஒன்றோடு தொடர்பாகச் சில நாமங்கள். அதன்பின் இரண்டுடன் தொடர்பாக. இவ்வாறு வளர்ந்து நூறு, ஆயிரம், இலட்சம் என வளர்ந்து, அனந்தம் என்ற எண்ணிக்கையுடன் தொடர்பாக விநாயகரின் இந்த சஹஸ்ர நாமம் நிறைவு பெறுகிறது. உதாரணத்திற்குச் சில நாமங்களைப் பார்ப்போம். (இங்கு வரிசைக் கிரமமாக எல்லா நாமங்களும் தரப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது).
ஏகாட்சர - ஒரெழுத்துமந்திரத்தாற் குறிக்கப்படுபவன்
(ஓங்காரம்)
ஏகவீர - ஒரு தனிப்பெரும் வீரன்.
த்விரூப - இரு வடிவமுடையவன்
த்விரத - இருதந்தமுடையவன் (ஒற்றைத் தந்தன் -
ஏகதந்தன் - என்ற பெயர் தந்தத்தை
2

L.2O கர சித்திரை 01
முறித்தமையால் ஏற்பட்டது. இயல்பாக யானைமுகத்துக்குரிய இரு தந்தங்களைக் கருத்திற்கொண்டு இந்த நாமமும் அமை கிறது)
த்வைமாதுர - இரு தாய்களை உடையவன் (உமை, கங்கை)
த்விவதன - இருமுக முடைய வர் (முப்பத் திரண்டு
வடிவங்களில் இதுவும் ஒன்று)
த்வந்தாதீத - இருமைகளைக் கடந்தவர்.
இது தத்துவார்த்தம் நிறைந்த அற்புதமான நாமம். இன்பம் - துன்பம், நன்மை - தீமை, உயர்வு - தாழ்வு, விருப்பு - வெறுப்பு
பிறப்பு- இறப்பு என்ற இவைகளை இருமைகள் எனப்படும். மானுட
நிலைக்குரிய இந்த இருமைகள் யாவும் கடந்தவர் என்ற நிலையில்
தெய்வீக நிலையிலுள்ளோர், துறவிகள் முதலியோர்க்கு இந்நாமம்
வழங்கப்படுவதுண்டு.
த்ரிவர்க்கபலதாய - அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும்
தருபவர்
(நாற்பொருள்களில் வீடு என்னும் நான்காவது முத்தி
நிலையானது. வாழ்வு மூன்றையும் மட்டும் சம்ஸ்கிருத நூல்மரபு) த்ரிகுணாத்மன்
த்ரிலோசன -
சதுர்பாஹு -
சதுர்தந்த - சதுர்விதொபாயகர -
சதுர்த்தி திதி சம்பவ - சதுர்த்தீ பூஜனப் ப்ரிய
பஞ்சாத்மன் -
பஞ்சாஸ்ய -
பஞ்க்ருத்ய க்ருத் -
ஷட்கோண பீட - ஷண்முகப்ராத்ரு - ஷட்வைரிவர்க்க
வித்வம்சின் -
ஸப்தாங்க ராஜ்ய சுகத
ஸப்த மாத்ரு நிஷேவித ஸப்தஸ்வராஸ்ரய
நிலையைக் கடந்தது. அதனால் முதல் சேர்த்து திரிவர்க்கம் எனச் சுட்டுவது
சத்வ. ராஜஸ, தாமஸ் எனும் முக்குணங் களின் வடிவாகவுமுள்ளவர்.
முக்கண்ணர்,
நான்கு தோள்களுடையவர். நான்கு தந்தமுடையவர். சதுர்வித, உபாய - கர நான்குவித உபாயங்களான சாம, தான, பேத, தண்டங்களின்மூலம் ஆன்மாக்களை உய்விப்பவர். சதுர்த்தித் திதியில் தோன்றியவர் சதுர்த்தி விரத பூஜையில் விருப்ப முடையவர்
பஞ்சபூதங்களாயிருப்பவர் ஐந்துமுகமுடையவர் (பஞ்சமுக விநாயகர்) ஐந்தொழிலை ஆற்றுபவர் (பரமசிவனின் வேறல்லாதவர்) அறுகோண பீடத்தில் அமர்ந்தவர். ஆறுமுகன் சோதரர்
அறுபகைவர்களை அழிப்பவர் (காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாற்சர்யங்கள்) - ஏழு அங்கங்களையும் சிறப்பாக உடைய இராச்சியத்தை ஆளும் அருளைத் தருபவர். - சப்தமாதர்களால் போற்றப்படுபவர். - ஏழு ஸ்வரங்களால் துதிக்கப்படுபவர்
一>

Page 21
இந்துசாதனம் 4.(
அஷ்டைஸ்வர்ய ப்ரதாயக்- அட்ட ஐஸ்வர்யங்களையும் தருபவர் அஷ்டபைரவ சேவித - அட்ட பைரவர்களால் போற்றப்படுபவர் அஷ்டவசு வந்த்ய - அட்ட வசுக்களால் வணங்கப்படுபவர் அஷ்டத்ரவ்ய ஹவிப்ரிய- அட்ட திரவியங்களால் ஹோமம்
செய்வதில் விருப்பமுடையவர்.
நவதுர்க்கா நிஷேவித - நவதுர்க்கைகளால் ஆராதிக்கப்
படுபவர். நவநாக வீயூஷண - நவ நாகங்களை அணிகலனாகக்
கொண்டவர்.
நவரத்ன விசித்தராங்க - நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட
அழகிய அங்கங்களை உடையவர். தசபுஜ - பத் துப் புயங்களை உடையவர்.
(பஞ்சமுக விநாயகர்) தசதிக்பதி வந்தித - பத்துத் திக்பாலகர்களால் வணங்கப்
படுபவர். كبير தசப்ரான - நமது உடலை இயக்குகின்ற பத்துப்
பிராணன்களாக உள்ளவர்.
இறைவன் இப்படிப்பட்டவன் என்று வரையறுத்துக் கூற முடியாது. ("இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன், இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே" (திருமுறை)
"பெருமைக்கும் சிறுமைக்கும் பேரருட்கும் பேற்றின் அருமைக்கும் ஒப்பின்மையான்"
என்று சாஸ்திர நூலாகிய திருவருட்பயன் கூறுகிறது.
"முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே"
"ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க!" (சிவபுராணம்)
"இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே"
(சிவபுராணம்)
"முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்" (திருப்பள்ளி யெழுச்சி) என்று தோத்திர நூலாகிய திருமுறைகள் கூறுகின்றன. இத்தகைய முறையில், இப்படியானவன் என்று கூறிவிட்டு; உடனேயே அப்படியானவன் என எதிரான கருத்தையும் கூறுகின்ற சிறப்பையும் காணலாம். நேரெதிரான கருத்தைத் தரும் சொற்பொருளை அடுத்துவரும் இரு நாமங்களில் ஒப்பிட்டுப் பார்த்து வியப்படையும் வாய்ப்பு இங்கு உண்டு.
ஸ்தாவராயநம - அசையாப்பொருளுக்கு வணக்கம்.
ஜங்கமாயநம - அசையும் பொருளுக்கு வணக்கம்.
அணவே நம - நுண் பொருளாயிருப்ப வருக்கு
வணக்கம்
மஹதே நம - பெருவடிவுடையவருக்கு வணக்கம்.
வ்யக்தாய நம - தெளிவான தோற்றத்தை உடைய
வருக்கு வணக்கம்.
அவ்யக்தாயநம - தெளிவான தோற்றமில்லாதவருக்கு
வணக்கம். (மறைபொருளாயுள்ளவர்)

D42O கர சித்திரை 01
சில நாமங்கள் முன்பு பார்த்த சில நாமங்களைப்போல் மிக
நீண்டவையாக அமைந்துள்ளன. உதாரணமாக:
"அஷ்டஷஷ்டி மஹாதீர்த்தக்ஷேத்ர பைரவ பாவனாயநம:"
எண்பத்தாறு மஹா தீர்த்தங்களிலுள்ள பைரவர்களால் வணங்கப்பெறுவர்.
"பணாமண்டல சாஹஸ்ரபணிராஜக்ருதாஸ்னாயநம:"
ஆயிரம் தலைகளையுடைய நாகபாம்பினாற் செய்யப்பெற்ற ஆசனத்தையுடையவர். (பாம்பு அவருக்கு ஆசனமாக அமைந் துள்ளது. மஹாவிஷ்ணுவைப்போல)
"சதுராசீதிலசஷாணாம் ஜீவானாம் தேஹசம்ஸ்திதாயநம:"
எண்பத்துநாலு லட்சம் யோனி பேதங்களையுடைய அத்தனை
ஜீவராசிகளின் உடல்களிலும் நிலைகொண்டிருப்பவர்.
இந்த நாமமம் ஆயிரமாவது நாமமாக அமைகிறது. ஆனால் இத்தோடு இந்த நாமாவளி முடிவுறாமல் மேலும் சில நாமங்கள் தொடர்ந்து,
"அனந்த ஆனந்த செளக்யதாய நம:" என்ற நாமத்துடன் நிறைவு பெறுகிறது. அனந்தம் என்பது அந்தம் என்ற சொல்லின் எதிர்ப்பதம். அந்தம் முடிபு. அனந்தம் முடிபற்றது. எனவே முடிவில்லாத அளவற்ற ஆனந்த சுகங்களை அருளுபவர் என்ற அருமையான நாமத்துடன் இந்த விநாயக சஹஸ்ர நாமம் முடிவுபெறுகின்றது.
விக்னேஸ்வர த்ரிசதி நாமார்ச்சனை என்ற நாமாவளி இருக்கிறது. முந்நூறு நாமங்களால் அமைந்தது. அதிகமாக எல்லாத் தேவதைகளுக்கும் இவ்வாறு ஆயிரம் நாமங்கள், நூற்றெட்டு நாமங்கள் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் த்ரிசதி நாமா எனவும் ஒன்றை நமக்கு அருளியுள்ளனர்
முன்னோர்கள்.
"ஒம் ஒங்கார கணபதயே நம:" என ஆரம்பிக்கிறது. இந்த நாமாவளி. கணபதயே என வரும் சொற்றொடரை நன்கு அவதானிக்க வேண்டும். நாமாவளிகளிற் பெயர்ச்சொல் அதன் நான்காம் வேற்றுமையில் கணபதிக்கு வணக்கம் என்றவாறு வரவேண்டும். அகரத்தில் முடியும் சொற்கள் (விநாயக, சுப்ரம்ம ய போன்றவை) நான்காம் வேற்றுமையில் ஆய என (விநாயக சுப்ரமண்யாய என்பதுபோல) வரும். ஆனால் இகரத்தில் முடியும் சொற்கள் (கணபதி, குணநிதி போன்றவை) அயே என (கணபதயே, குணநிதயே) மாற்றம் பெறும். அநேகர் இந்த இலக்கண விளக்கம் இன்மையால் அர்ச்சனை நாமங்களை இப்போது தமிழில் எழுதிப் படிக்கின்றார்கள். இப்படியானவர்களால் இசைத்தட்டுக்களிலும்
நாமங்கள் சொல்லப்படுகின்றன. அதனாற்றான் இந்த நிலைமை.
'ஓம்' என்ற பிரணவத்தைக் குறிக்கும் ஓங்கார என்ற சொல்லோடு ஆரம்பிக்கும் நாமங்கள் சிலவற்றைத் தொடர்ந்து பூரீம், ஹ்ரீம், க்லீம், க்லெளம், கம் ஆகிய பீஜாட்சரங்களுடன்
->
r) 1

Page 22
இந்துசாதனம் 4.O.
ஆரம்பிக்கும் நாமங்கள் வருகின்றன. (பீஜம் என்பது விதை. அட்சரம் எழுத்து, மரம் முளைப்பதற்குரிய சக்தியைத் தன்னுள் வைத்திருக்கின்ற விதைபோல சக்திச் செறிவினைச் சேகரித்துத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் மந்திர எழுத்துக்கள் பீஜாட்சரங்கள் எனப்படும்). இந்நாமங்களிற் சில உருவகங்களாக அமைந்தவை. உதாரணத் திற்கு:
ஹ்ரீங்கார சிம்ஹாயநம- ஹ்ரீங்காரமாகிய சிங்கத்திற்கு
வணக்கம். இன்னும் சில சாதாரணமான நாமங்களைப் பார்ப்போம்.
ஹ்ரீங்கார பீடாயநம - ஹ்ரீங்கார மென் னும் பீடத்தை
உடையவர்.
க்லீங்கார நாதாய - க்லிங்காரம் எனும் தலைவர்.
கானவித்யா ப்ரத - கானவித்தையயை (சங்கீதத்தை) அருளுபவர்
கண்டாநாத ப்ரிய - மணியோசையை விரும்புபவர்
கஜமுக - யானை முகத்தவர்
கஜஹஸ்த - யானைக் கை யை உடையவர் (துதிக்கை)
கஜரூப - யானைவடிவுடையவர்
கஜாரூட - யானையில் வீற்றிருப்பவர்
UTT - மேலானவர்
13ஆம் பக்கத் தொடர்.
அன்பின் மேலீட்டினால் ஏற்பட்ட உரிமை வாசகங்கள் பலவற்றை அருளாளர்களின் பாடல்களில் இருந்து அறியமுடிகிறது.
"ஆளாயிருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவாரூரில் வாழ்ந்து போதீரே"
என்ற சுந்தரமூர்த்திசுவாமிகளின் வாக்கும்.
"நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே"
என்ற மணிவாசகரின் பாடல் வரிகளும் இந்த உண்மையினை வெளிப்படுத்திக் காட்டுகின்றன.
பக்தியிலே நடிப்பு இருத்தல் கூடாது. இறைவனிடம் அடியவன் வைத்திருக்கின்ற அன்பு இடையறாப் பேரன்பாக இறவாத இன்ப அன்பாக, ஆவியோடாக்கை கசிந்துருகி வழிபடும் அன்பாக இருத்தல் வேண்டும்.
பஞ்சமா பாதங்கள் ஐந்தையும் துணிந்து செய்துவிட்டுப் பக்தனின் வேடம் பூண்டு, பெரிய புராணத்திலே வரும் முத்தநாதன் போல நடிக்கின்ற வேடதாரிகள் பலரை நாம் சமூகத்திலே காண்கின்றோம். பாமர மக்களின் அறியாமையைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் வேடதாரிகளும், போலிச் சாமியார்களும், சமய வியாபாரிகளும் நிறைந்து காணப்படும் இப்பிரபஞ்சத்திற்றான்
ട്ട്ല
ܓܠ`ܓ ;چہ قتلف
 

2O கர சித்திரை 01
பரமாத்மா - பரமாத்மாவாக விளங்குபவர் யசஸ்வின் - புகழுடையவர்
யஜ்ஞபல ப்ரத - யாகங்களின் பலனைத் தருபவர் வரத - வரங்களைக் கொடுப்பவர் வந்தனப்ரிய - வணங்குவதை விரும்புவர்
gಆಹ್ಲ? - திறமையானவர்
ஸர்வதுஃகக்ன - எல்லாத்துக்கங்களையும் அழிப்பவர் ஸர்வரோகஹ்ருத் - எல்லா நோய்களையும் அழிப்பவர் நஷ்டத்ரவ்யப்ரதாயக - இழந்த பொருளை மீட்டுத் தருபவர் நாட்ய ப்ரிய - நாட்டியத்தில் விருப்பமுள்ளவர்.
இவ்வாறு விநாயகப் பெருமானின் அர்ச்சனைகளுக்குப் பயன்படுகின்ற நாமாவளிகள் பலவற்றை அந்த நாமங்களின் பொருள்களையும், அவை அமைக்கப்பட்ட அழகையும், சொல்லழகையும், அணிச்சிறப்பு முதலியவற்றையும் பார்த்துச் சுவைத்தோம். இங்கு நாம் பார்த்தவை விநாயகரின் அனந்த - எண்ணற்ற நாமங்களில் மிகச் சிலவே என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும். இவற்றை வாசித்து அறிந்ததனால் இன்னும் இவைபற்றிப் படிக்கவேண்டும் எனும் ஆவல் உள்ளவர்கள் விநாயகப் பெருமானின் அர்ச்சனைகளை முழுமையாகத் தேடிப் பெற்று அதில் திழைக்கலாம்.
நாம் இனி முருகப் பெருமானின் நாமங்களைப் போற்றி மகிழ்வோமா?
-லுவுரும்
உண்மையான பக்தனும் வாழுகின்றான். உண்மையான பக்தர் களின் தொகை ஆலயத்தின் உள்ளே அதிகரித்துக் காணப்பட்டால் அந்த ஆலயம் தெய்வ சாந்நித்தியத்துடன் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும். அயோக்கியர்களின் கூடாரமாக ஆலயங்கள் மாறினால், நாட்டிலே அராஜகம்தான் தலை விரித்தாடும். தர்மமும் நீதியும் நிலைகுலைந்துவிடும். இந்த உண்மையை ஆடவல்லா னாகிய நடராஜப்பெருமான் உணர்த்த உணர்ந்துகொண்ட சேந்தனார் தான் அருளிய திருப்பல்லாண்டில்,
"மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்த வம்மின்"
என்று உண்மை அடியார்களைக் கூவி அழைப்பதைக் காண முடிகிறது.
உலகிற் பிறந்த ஒவ்வொரு மனிதரும் உடல்நோய், உளநோய், உயிர்நோய் ஆகிய மூவகை நோய்களாற் பீடிக்கப்படுகிறார்கள். மூவகை நோயும் நீங்குவதற்கு இறையருள் அவசியமாகும். பிரபக்தி நிலையில் நின்று இறைவனை வழிபட்டால் இப்பிணிகளில் இருந்து நீங்கலாம். சிறப்பாக உயிர்நோயாகிய பிறவிநோய் நீங்குவதற்கும் பேரானந்த, நிலையாகிய வீடுபேற்றினைப் பெறுவதற்கும் பிரபக்தி மார்க்கமே வழி காட்டும்.
ܗܝ ܐ

Page 23
இந்துசாதனம் 4.O.
462.
463.
464.
465.
466.
467.
468.
469.
47O.
47.
472.
473.
நாவலர் சரிதமோது கவிஞர் திரு. இரான
(இந்துசாதனம் - 2011 பங்குனி 14
பரமேதிகாசமாகு சிவரகசியத்தில் முன்னே திருவாயிலுரைத்த வாறு திருவவதாரஞ் செய்தே மருவாத நெறியை மாற்றி மறைந்ாமம் வளர்த்து முத்தித் திருசேர முனிவர் பின்னர் லிருடிகட் கருளிச் செய்தார்.
சருவஞ்சராகு சிவனார் திருவாக்கி னாலும் வழியில் வருமுய மன்யு முனிவர் வார்திருவாக்கினாலும் இருடிகள் வாக்கி னாலும் இணையுசந்தான சாரியர் திருநிறை வாக்கினாலும் சிவனளிநாயன் மார்கள்.
வருபசு கரணம் நீங்கி வளசிவ கரணம் பெற்றார் தருமிவையைத்தும் மாறாப்பதியுடை வாக்கே யென்றும் திருவருட் பாவே யிறைக்குத் திகட்டாத பிரீதியென்றும் இருசிவ ரகசியத்துள் கிரந்தத்தாலறியுமென்றார்.
திண்டிறல் முத்தி காணச் செய்நான்கு பாதத் தாரும் எண்ணிடிசையேற்று பூசை இயற்றிடும் கால மெல்லாம் மண்டனிலிவைகளோத லோதினரடியை யேற்றல் பண்டைய காலந்தொட்டே பாரினில் வழக்க மென்றார்.
குரவரினுள்ளே சமயா சாரியர் நால்வ ரோடு விரவுசந்தான சாரியராகுமஷ் வெழுவர் தாளை அரவணி பெருமானோடு ஞானத்திற் கிரியை யாகப் பரவிடுஞான பூசை பண்ணிட விதியுண் டென்றார்.
சேக்கிளார் கோவிலுக்குக் காணி உரியவரடியெடுத்தே உலகெலா மென்ன அஃதை வரிமுதலிறுதி வைத்தே வடிதரங்கேற்றங் கோவில் பெரியவர் முன்பு செய்தேர் பெரியபு ராண மீதும் அரியசேக் கிளாரின்மேலும் அளவறு பக்தி கொண்டார்.
தொண்டனுக் கடிமை பூண்ட தொண்டனா ரருளினாலே தொண்டர்தம் புகழையோது தொண்டனாம் சேக்கி எாார்மேல் கொண்டபிமானத்தாலே கோயிலுக் கருகே கோவில் கண்டிட வேண்டுமென்றுங் கருத்தினைச் சிந்தை கொண்டார்.
சிந்தையினினைந்தவாறே சிதம்பரத்தமைகுளத்தே வந்தமை வடக்கு ஞானப் பிரகாசர் தெருவி லாங்கே பந்தமுளிலக்கமான பதினாறிலமைநிலத்தை நந்தமர் கோவிலுக்காய் நாவலர் விலையாய்க் கொண்டார்.
வேதசி வாகமங்களோடிதி காச புராணம் நீதியோ திடுநன் னுரல்கள் நவன்றவை வசன மாக்கி மாதவ ஒளவை யார்நல் வழியொடுவாக்குண்டாமும் சாதசி வப்(பி)ரகாசர்நன்னெறியுரைஞ் சேர்த்தே
சற்குணர் தமது சைவப் பிரகாச வித்(தி)யா சாலை கற்பவர் தேவை தன்னைக் கருத்தினில் வைத்தவர்க்காய் பற்றொடு மூன்றாம் பால பாடத்தை யெழுதியாங்கே அற்றவர்க் குதவுமாறே யச்சிட்டு வெளியிட்டார்கள்.
தொழுதெழு கந்த சுவாமி காதைசொல் வசன மன்பர்க் கெழுவுள துயர்கணிக்க இறைவிளையாடலையும் அழுதழு தடியடைந்த அடியரின் சூசனங்கள் அழுதழுதெழுதியச்சில் அவைவடிப் பித்திருந்தார்.
பெரியபுராணந்தன்னில் பெருவிருப்புடைய ராகி கரிசனையோடப் புராண சூசனமெழுதுங் காலை விரவுமன் போடுநாளும் விழித்திருந்துணவுண்ணாதே பரவியென் புருக நிறைப் பெருந்தவர் சிந்தை யானார்.

4.2O விகீர்தி பங்குனி O1
ம் நற்றமிழ் மாலை
சயா குகதாசன்
ஆம்
474.
475.
476.
477.
478.
479.
480.
481.
482.
483.
484.
485.
பக்கத்தின் தொடர்ச்சி.)
அருந்துய ரகற்ற வந்த அடியர்மேற் காதலாகி இருந்தவர் ஒய்வுறக்க மின்றியங்கியற்ற லாலே வருந்துயராற்ச ரீரம் வலுவிழந் துற்ற நோயால் பெருந்துயரடைந்து பன்னாள் படுக்கையில் ஒய்வின் பின்னர்,
பொங்கொளிர் ராமநாதபுரத்துறை தேவர் வேண்ட அங்கவர் மகிழச் சேதுபுராணத்தை யவரெடுத்தே பங்கமிலாயிரத்த எண்ாைற்றியறுபத்தாறு தங்கமார் கன்னிமாதம் தொகுத்ததை வெளியிட்டார்கள்.
அறமுணர் சிவஞானப்பேர்ஆவடுதுறை வாழ் ஞானி திறமிகு இலக்கணச்சூறாவளி விளக்கத் தோடு சிறந்ததொல் காப்பியத்துச சூத்திர விருத்திரண்டும் அறமனர் ராமநாதர் அருளிலக் கணநற் கொத்தும்
பாட்டுடைத் தலைவனாகப் பதிமுருகனையெடுத்தே ஏட்டினிற் பிரதியாக இருந்தகந்தப்புராணப் பாட்டொடு பலநன் நரலும் பழுதறப் பரிசோதித்தே நாட்டினிற் குதவுமாறுநாவலர் வெளியிட்டார்கள்.
மன்னுமார் கழிநல் மாதம் மகிழ்திரு வாதிரைநாள் அன்றுவச் சிதம்பரத்தா ருத்திரா தரிசனத்தை மன்றினிற் கண்டு தாபி வித்தியா சாலை சென்றே நன்றிகழ் பிரசங்கங்கள் நாட்டிப்பின் சென்னை சேர்ந்தார்.
சென்னையிலிருந்து சைவப் பிரசங்கமியற்றிக் கொண்டும் நன்னய நூல்கள் தேர்ந்த நன்குறப் பரிசோ தித்தும் அன்னவை வசன மாக்கி அச்சிடுவித்தே யிந்த மன்னுலகறிவு பேண மகிழ்வொடு ஈடுபட்டார்.
இங்கிவை யாற்ற யாழில் இழைசைவ வித்(தி)யா சாலை அங்குள பணிகளாற்று மருந்தில்லைநாதர் தெய்வ சங்கம மான பின்னர் சகத்திவர் பணிகளாற்ற இங்குள வைத்(தி)ய லிங்கப் பிள்ளையை நியமித்தார்கள்.
தொண்டைநாட்டு பரிபாலன சபைத் தலைமை (1867) சென்னைநன் நகரிற் பெத்தநாயக்கன் பேட்டை தன்னில் மன்னிடு சுப்(பி)ரமண்ய முதலியார் தெருவில் வாழும் அன்பரெம் ஐயாச்சாமியில்லம்நாவலரினோடு நன்பெருமறிஞரெல்லாம் நாடிவந்துரைசெயுங்கால்,
சென்னையுள் எாடியர் மாரில் சிலர்தொண்டைநாடு தோறும் சென்றுநற் பாடல் பெற்ற சிவஸ்தல மவைபு தரக்கி நன்குறவமைக்க வென்றே நாடியா யிரத்தெண் ாைற்றி மன்புகழுறுபத்தேழு மார்கழியமைசபைக்கே
பன்திருத்தொண்டைநாட்டுப் பதிபுண்(ணி)யம் பரிபா லிக்கும் மன்பெருஞ் சபையிதென்றே மகிழ்வொடு பெயருஞ் சூட்டி நன்குறு தலைவராக நாவலரவரைத் தேர்ந்தே இன்புறு பணிகளாற்ற விசைந்திட வேண்டுமென்றார்.
1867 G&L uafuu uspraF35b கண்ணியத் தலைவராகிக் கண்டவக் குறைகள் தீர எண்ணறு மறிஞர் மாந்தர் இருந்துள சபையை நோக்கி விண்ணவர் கோவிலெல்லாம் விதிப்படியாற்ற நேரும் புண்ணியம் பற்றி நாவர் புகன்றவை யெடுத்துச் சொல்வோம்.
குறிமுறை பணியத் தெய்வம் கொண்டருள்முறையிதென்றும் பிறகுல வான்மா வெல்லாம் தொழுமுறை யிதுதானென்றும் அறிதலு மறிந்த வாறே அநட்டித்து வாழ்ந்த வெல்லாம் நெறியுளெச் சமயத் தாரின் நிலத்துள கடன தாமே.

Page 24
இந்துசாதனம் 14
WHAT is .
Prof. A. Sanmugadas,
The answer to the question what is Hinduism?" is given in hundreds of articles and books. In this article Only the Salient features are given just for young students. Christianity has been named after Jesus Christ. Islam was founded by Prophet Mohamed. Hinduism is formed of diverse Traditions and has no single founder. Hinduism is often referred to as Santana Dhanua ("the eternal law"). It is the predominant and indigenous religious tradition of South Asia. Demographically, it is the world's third largest religion, after Christianity and Islam, with more than a billion followers, of whom approximately 1 billion live in India. Other significant populations are found in Nepal, Bangladesh and the Indonesian island of Bali
(3.3 million).
The term Hinduism was introduced into the English language in the 19" Century to denote the religious, philosophical, and cultural traditions native to India. The origin of this term is related to the river Sindhu in the northwestern part of the Indian Subcontinent, which was later called the indus River. The term 'Hindu was popularized by the Arabs and the Persians. It referred either to the and beyond River indus or the people of that land. Thus the religion of the land of Indus (earlier Sindu)
Came to be known aS "Hindui Sm".
The concept of God in Hinduism is complex and depends upon each particular tradition and
philosophy. It is generally associated with a
Edited & Published by Mr.S.Shivasaravanabavan on behalf Printed at Harikanan Printers, No.424, K.K.S. Road, Jaffna. 14.04.2011

Lao கர சித்திரை 01
INDUSM2
Ph.D. (Edinburgh)
multiplicity of Gods, and does not advocate the Worship of one particular deity. Saint Manikkava Cakar in his Civapuranam refers to God as a single form and also as manifesting in many
forms (ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க)
Hinduism grants absolute and complete freedom of belief and worship. Hinduism conceives the whole world as a single family and therefore it accepts all forms of beliefs. The main divisions of Hinduism today are Saivism, Vaishnavism, Smartism and Shaktism. Hinduism also recognizes
numerous divine beings.
Subordinate to the Supreme Being or regards them as lower manifestations of it. Lord Siva is considered to be the Supreme Being in Saivaism and Lord Narayana in Vaishnavaism. Other notable characteristics include a belief in reincarnation and karma, as well as in personal duty, or dharma. It is also characterized by the belief in the law of cause and effect, following the path of righteousness, and the for liberation
of births and 萎。
deaths.
ܐܨ
from the cycle
Bible and hol Cuoran Ormll the basic Scriptures ror Christianty anai Islam respectively. But the Hinduism, we cannot just single out a Scripture. The basic scriptures of Hinduism, are the Vedas, Brahmanas, Upanishads, and the most popular Hindu texts Such as the Bhagavad Gita, and the epics of Ramayana and Mahabharata.
the Saiva Paripatana Sabai, No. 450, K.K.S. Road, Jaffna & (1 Day of Sith thiraiththingal). Phone: 0212227678,0213202191