கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2011.06

Page 1
culture
VOLUME : 02 ISSUE : 06 Regi
C
2 D e
a. E.
=3न्छे
CANADA.C. AUSTRALIA.A. SWISS.
 

ER RAMAN
er No. QD / 49 / News / 2011
ஒல்லாந்தர் காலத்து வரலாற்றுச் சின்னங்கள்
பூர்வதனுஷ்கோடி எனப் போற்றப்படும் வில்லூன்றி விநாயகர் கோயில்

Page 2
Since 1976
(ിഞ്
81-83, மெயின் வீதி, கொழும்பு-11 தொ E-mail: infoOganeshtext
 

sae
sae
恩氏 洞) 心对 双臼 幻队 弘; 纪念 即 欧座 sae§
●
| 8= 的 照习 @

Page 3

s || 0 || e , e| se q uo ¿ No se ɔ ɔ d., , , ,·· sausuele suo on. Bloemene sanaee, bulae).
» suellowes, oppoļu lieu, 10 ) zo z || || 76+ xe, og 100666 z 1 | p6 + el. YYYL LLLL LLLL L SLL S LSLLL LLL
saeidae
son (lae) suasa, ar
7,7). :-A 3 ( 1 ) , , ,│ │ ~ ~ !sae
•) // ≤
戀

Page 4
உள்ளடக்கம்
 
 
 

纖 c6O°. GODILI LILLD 3
லண்டன் தொல்பொருள் காட்சியகத்தில் உள்ள பார்வதியின் வெண்கலத்தினாலான உருவச்சிலை
O6
14
32
38
50
56
மறந்தவையும் மறைந்தவையும்
கதிர்காமம் தெய்வானை அம்மன் கோயிலிலுள்ள சாசனம்
இலங்கையில் புராதன சந்திர வட்டக்கல்
தெய்வங்களை மனித நிலைப்படுத்தி நோக்குதல்
ஒல்லாந்தர் கால வரலாற்றுச் சின்னங்கள்
கன்னடத்தின் பெருமை பேசும் யக்ஷகானா

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
T.P. +94. 115234.338 WWW. kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai editor(CDkalaikesari.Com
SUBEDITOR Bastiampillai Johnsan editorOkalaikesari.Com
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. K. Sivathamby Prof. S. Pathmanathan Prof. S. Sivalingaraja Prof. R. KumaraVadiVel Pathma SOmakanthan K. Thangeswary D. Manoharan Subashini Pathmanathan Thakshayiny Prabagar Subashini Udayarasa
PHOTOS S. M. Surendiran Sabita N. Uma P.
LAYOUT S. A. ESWaran
ICT S. T. Thayalan
ADVERTISING
A. Praveen marketing(G)virakesari. Ik
SUBSCRIPTIONS Arjun Jeger arjun (CDexpressnewspapers.net
PRODUCTION
L. A. D. Joseph
ISSN 2012 - 6824
மகான்
எமது கலைக்கே:
உங்கள் அபிமா6
18 ஆவது இதழ் மூ6 மக்கள், தட்டுத்த உயர்ந்த இலக்குடன் வாழ்வினாலும் வ ஞானிகளுந்தான்.
அத்தகைய மெஞ் பெருமானாவார். பு பரிநிர்வாணம் பெற் மேலும் ஒரு முக்கிய ஞானம் பெற்ற அமைந்ததினால் அனுஷ்டித்து, பெரு சிறப்பான விடயமா அத்துடன் சாந்தி
கல்வியையும் கலை ஆன்மீகத்தை வள குருதேவர் ரவீந்திர மிக சிறப்பாக அனு: ‘உலகம் என்பது கூர்ந்து அன்னாரின் சந்திப்போம்.
வணக்கம்.
நன்றி,
(6)6OTLL60T,
Cছিল-- c آلبومه عیسی issیت
 

ஆசிரியர் பக்கம்
கள் காட்டிய வழியில் நாமும் வாழ்வோம்
சரி வாசகர்களுக்கு வணக்கம் ன கலைக்கேசரியின் ஆனிமாத இதழ் மூலமாக அதாவது oமாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. டுமாறி திசைமாறிய பறவைகளாய் அலையாமல், ஓர் T வாழ, தமது அருமருந்தன்ன போதனைகளாலும், சீரிய ழிகாட்டிச் சென்றவர்கள் மெஞ்ஞானிகளும், தத்துவ
நஞானிகளில் ஒருவராய் போற்றப்படுபவர் கெளதம புத்தர் த்தர் பெருமான் இப்பூவுலகில் அவதரித்து, ஞானம் பெற்று ற புனித நாளான வைகாசி வெசாக் தினம், இவ்வருடம் பத்துவத்தைப் பெற்றதை நாமறிவோம். புத்தர் பெருமான் 2600ஆம் (சம்புத்தத்வ ஜெயந்தி) வருடமாகவும் இது பெளத்த மக்கள் பிரார்த்தனைகளுடன் விசேடமாக மானின் உயர் போதனைகளை நினைவு கூர்ந்தமை கும். நிகேதன் என்னும் இடத்தில் கல்விக்கூடத்தை அமைத்து Dகளையும் செழுமையுறச் செய்ததுடன், கலைகளினூடாக ர்த்து இளம் சமுதாயத்துக்கு அரியதோர் வழிகாட்டிய நாத் தாகூரின் 150 ஆவது பிறந்த வருடமும் தலைநகரில் ஷ்டிக்கப்பட்டதும் பாராட்டத்தக்கது.
உயர்ந்தோர் மாட்டு என்பதனை நாம் அடிக்கடி நினைவு
ா சீரிய வழியில் நாமும் நடப்பதே சிறப்பாகும். மீண்டும்
སྔོ་ Q4 ༄བ་} >8<یہ پ

Page 6
55ាញ585] 06 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு:
மறந்தவையும் 1
பாரம்பரிய விளையாட்டுக்கள் OO//)ழ்ப்பாண பிரதேசத்தில் வழங்கிய பாரம்பரிய விளையாட்டுகளைப் பதிவு செய்து இன்றைய தலை முறையினருக்குக் கொடுப்பது இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இக்கட்டுரை ஆசிரியர் சிறுவனாக இருக்கும் பொழுது விளையாடிய விளையாட்டுக்கள், பார்த்த விளையாட்டுக்கள் என்பவையே இங்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
சிறுவர்கள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள் பெண் பிள்ளைகள் எனப் பலரும் மகிழ்வுடன் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் பல இன்று மறைந்து விட்டன. உடலுறுதிக்கும், அறிவுத்திறனுக்கும் மகிழ்வுக்குமாகப் பயின்று வந்த பாரம்பரிய விளையாட்டுகள் பற்றி இன்றைய தலைமுறையினர் அறியமாட்டார்கள். அக்காலப் பாரம்பரிய விளையாட்டுகளை இன்று வீடுகளிலோ, வீதிகளிலோ விளையாட்டு வெளிகளிலோ காணமுடியாது. சமூக பொருளாதார, கல்வி, பண்பாட்டு மாற்றங்கள் காரணமாக இவ் விளையாட்டுக்கள் கைவிடப்பட்டு மறைந்து போயின எனக் கருதலாம்.
பாரம்பரிய விளையாட்டுகளில் பெரும்பாலானவற்றுக்கு ஏதோ ஒரு வகையிலே இயைவுபட்ட - பொருத்தமான
பாடல்கள் இடம் பெறுவது உண்டு. இத்தகைய பாடல்கள்
விளையாட்டுச் சார்ந்த நாட்டார் பாடல்கள் என்று
 

மறைந்தவையும்
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
அழைக்கின்றனர். பொதுவாக நாட்டார் பாடல்களுக்குரிய பண்புகளைக் கொண்ட விளையாட்டுச் சார்ந்த பாடல்களும் இடத்திற்கு இடம் கிராமத்துக்குக் கிராமம் மாறுபட்டும் வேறுபட்டும் அமைவதையும் அவதானிக்க முடிகின்றது. பாரம்பரிய விளையாட்டுகளுக்கெனச் சிறப்பாகச் சில சொற்றொடர்களும் குழுக்குறிகளும் பயன்படுத்தப்படுவதும் உண்டு. அத்துடன் இவ்விளையாட்டுக்கள் தொடர்பாகப் பழமொழிகளும் மரபுத் தொடர்களும் வழங்கி வந்துள்ளன. இவைபற்றிப் பின்னர் குறிப்பிடுவோம்.
யாழ்ப்பாணப் பாரம்பரிய விளையாட்டுகளைப் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்.
சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் இளைஞர்களுக்கான விளையாட்டுக்கள் வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுக்கள் பெண்பிள்ளைகளுக்கான விளையாட்டுக்கள் இந்த வகைப்பாடு முற்றுமுழுக்கச் சரியானதென்றோ, பொருத்தமானதென்றோ, முடிவானதென்றோ கூற முடியாது. சில விளையாட்டுக்களை 676ύου/7 மட்டத்தினரும் விளையாடுவதோடு, ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டும் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் என நாம் இங்கே
கருதுவது /2, 13 வயது வரையுள்ளவர்களே எனலாம். எனினும்
வயது வேறுபாட்டினையும் பாரம்பரிய விளையாட்டுகளிலே
சரியாகக் கணிப்பிடமுடியாது என்பதையும் மனங்கொள்ள

Page 7
வேண்டும்.
பொதுவாக யாழ்ப்பாணப் பிரதேசத்தில் go Grant கிராமங்களிலே, சிறுவர்கள் கீச்சு மாச்சுத் தம்பலம், கண்ணாமூச்சி நுள்ளுப்பிறாண்டி, வளையம் உருட்டுதல், கொழுத்தாடு பிடித்தல், மண்சோறு கறி காய்ச்சுதல், திருவிழா நடத்துதல், இராசா மந்திரி, கெந்தியடித்தல், மாபிள் (போளை) அடித்தல் முதலான விளையாட்டுக்களை விளையாடினர் எனக் குறிப்பிடலாம். இளைஞர்கள் பெரும்பாலும் கிட்டி அடித்தல், கிளித்தட்டு மறித்தல், (இதனை 'யாடு' விளையாடுதல் என்றும் கூறுவர்) அம்பெறிதல், போர்த்தேங்காய் அடித்தல், வண்டிற்சவாரி, கோழிச் சண்டை, (சேவற் சண்டை) முதலான விளையாட்டுக்களை விளையாடுவர்.
வயது வந்தவர்கள் நாயும் புலியும், தாயம், கடதாசி விளையாட்டு (Cards), முதலானவற்றை விளையாடுவர். இவற்றுள் பெரும்பாலான விளையாட்டுக்களை இளைஞர்களும் வயது வந்தவர்களும் விளையாடுவதுண்டு. உதாரணமாக, தாயம், வண்டிற்சவாரி, கோழிச்சண்டை, கடதாசி விளையாட்டு முதலியவற்றைக் குறிப்பிடலாம். பெண்பிள்ளைகள் கொக்கான் வெட்டுதல், மாங்கொட்டை போடுதல், கெந்தியடித்தல், கயிறடித்தல், கும்மியடித்தல், ஊஞ்சலாடுதல் முதலான
விளையாட்டுக்களை விளையாடுவர். யாழ்ப்பாணப் பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றை பேராசிரியர், க.கணபதிப்பிள்ளை தமது காதலியாற்றுப் படையிலே பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள் கீச்சுமாச்சுத் தம்பலம் என்னும் விளையாட்டினை விளையாடும் பொழுது
கீச்சு மாச்சுத் தம்பலம்
கீயா மாயாத் தம்பலம்
மாச்சு மாச்சுத் தம்பலம்
மாயா மாயாத் தம்பலம்
 

* 5 GOGO, CROSBAN O7
என்று பாடியே விளையாடுவர்.
கண்ணாமூச்சி விளையாட்டின்போது
கண்ணாரே கடையாரே, காக்கணம் பூச்சியாரே,
ஈயாரே எறும்பாரே
கோச்சி என்ன காச்சினாள்? என்ற வினாவை எழுப்பி நிறுத்த, விடையாக 'கூழ்” என்று மற்றச் சிறுவன் (சிறுமி) கூறுவார். திரும்பவும், கூழுக்குக் கறியென்ன? என்ற வினாவை கேட்பார். மற்றைய சிறுவன் புழு’ என்று பதில் கூறுவார். கண்ணைப் பொத்தியிருந்த கையை எடுத்துக் கொண்டு பெரும் புழுவாய்ப் பிடித்துக் கொண்டோடி வா என விடுவர். அவர் மற்றவர்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். இந்த விளையாட்டின் இன்னொரு வகையாக ஒரு சிறுவன் அல்லது சிறுமி மற்றவரின் கண்ணைக் கையாற் பொத்திக் கொண்டு சுற்றிச் சுற்றித் திரியும் பொழுது
இவடம் எவடம் ?
புங்கடி புளியடி
புங்கடி புளியடி
எங் கெடி போறாய்?
எனக் கூற்றும் மாற்றமுமாக கூறி விளையாடுவர். இவ்வாறே சிறுவர்கள் வட்டமாக இருந்து தமது கைகளை விரித்துத் தரையில் வைத்திருப்பர். ஒரு சிறுவன், அல்லது சிறுமி வட்டமாக இருக்கும் சிறுவர்களின் கையிலே நுள்ளி
நுள்ளுப் பிறாண்டி
கிள்ளுப் பிறாண்டி
கொக்கா தலையிலே என்ன பூ?
9
என்று கேட்பார். ஒருவன் முருக்கம் பூ' என்று
பதிலிறுப்பான். உடனே வினாவிய சிறுவன்
முருக்குத் தளைச்ச முன்னூறு மாம்பழம் பட்டையிக்கை வைச்ச பழஞ்சோ றெங்க

Page 8
ឆ្នាអែអ្វី 墓 08
என்று கேட்பான். அதற்கு மற்றவர் "பண்டி திண்டிட்டுது' என்று பதிலிறுப்பான். முதல் வினாவைக்கேட்டவர்
பண்டிக்கு மேலே படுவான் மிளைக்க செட்டியாபிள்ளை ஒரு கையை மடக்கென்றால் துடக்கு' என்று முடிப்பான். துடக்கு என்று கூறிக் கையிலே நுள்ளியதும் அவர் வெளியேற வேண்டும் (Out). இந்த விளையாட்டிலே நுள்ளுப் பிறாண்டி என்பதற்குப் பதிலாக நுள்ளுப்பினாட்டு, குறாப் பினாட்டு' என்று வழங்கும் வழக்காறும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய விளையாட்டுகளில் பல இன்று முற்றாகவே மறைந்து விட்டன, கொழுத்தாடு பிடித்தல் என்னும் விளையாட்டிலே ஒருவரின் பின்னால் ஒருவர் இடுப்பிலே பிடித்துக்கொண்டு இரண்டு அணியாக நின்று,
ஒரு அணி, கொழுத்தாடு பிடிப்பேன்! என்று கூறுவர். மற்ற அணி, கொள்ளியாவை சுடுவேன்! என்று கூறி விளையாடுவார்கள். இந்த விளையாட்டிற்கும் புகைவண்டி விளையாட்டிற்கும் ஒரேவழி தொடர்புண்டு எனக் கருதலாம்.
புகை வண்டி விளையாட்டில் 'சுக்குப் புக்கு, சுக்குப்புக்கு எனப் பலமுறை பாடி விளையாடும் இந்த விளையாட்டைப்பற்றி செந்நெறிப்பாங்கான பாடல் ஒன்று பாலர்களுக்குரிய பாடப் புத்தகத்தில் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது
 
 
 

சிறுவர்கள் கூடித் திருவிழா நடத்தி விளையாடும் மரபும் யாழ்ப்பாணப் பிரதேசத்திலே ஒரு காலத்தில் வழக்கில் இருந்தது. தாங்கள் பார்த்தவற்றை, கலந்து கொண்டவற்றை, இரசித்தவற்றைப் போலச் செய்து காட்டும் பண்பின் வெளிப்பாடாக இவ்விளையாட்டினைக் கருதலாம். கவிஞர் யாழ்ப்பாணன் சிறுவர்கள் திருவிழா நடத்தும் விளையாட்டுப் பற்றி அழகான பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அதன் ஒரு பகுதி பின்வறுமாறு
தம்பி நாங்கள் கோயில் கட்டி
சாமி ஒன்றை உள்ளே வைத்து
கும்பிட்டிங்கே பூசை செய்வோம்
கூடி ஆடிப் பாடிக் கொள்வோம்
ஒட்டை வாளி நல்ல மேளம்
ஒலைச் சுருளே நாகசுரம்
பாட்டு பாடி பஜனை செய்வோம்'
இவ்வாறு அந்தப்பாடல் நீண்டு செல்லும், சிறுவர்கள் தேர் இழுத்து விளையாடும் விளையாட்டினைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை தனது காதலியாற்றுப்படையிலே பின்வறுமாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
கா கா டுண் டுண் காகாடுண்டுண்
ஈதோ சாமி எழுந்து தேர்வாறார்
காகா டுண்டுண் காகா டுண்டுண்
அம்மா வழிவிடு ஆத்தை நீ விலகு
காகா டுண்டுண் காகா டுண்டுண்'
இவ்வாறு அக்கவிதை தொடர்ந்துச் செல்லும். இன்றைய காலச் சூழலில் சிறுவர்கள் இப்படி விளையாடுவதைக்
கிராமங்களிற் கூடக் காண்பது அரிது.
(தொடரும்.)

Page 9
(60ļouụpəI sɔpɔɔlɔWųųMsuojošiusudilojnypəədsçösuoiII-I •
 
 

GIT (LAB) SETI@OWOLnw Twaal ỤroofÐ 10909rıQĵuĵo}}|suepouɔļuurswow^^ : esis qəM»I'sốulpsoqoqosuuồsəles i Iseuu-a
80£ €29 €110 69 Z 91.1 111029.99£22 sooののQQQ& Q£Z89 Z#ZZZ0/Zɛ/92 ZZZZ0:3||qoWZO 1998 ZZZ0:2ļļqoW 109 CZ9 €110 869 199 CL10QLO 30£10/solo 180‘eueņeWremonsefinne», “euuəųņepese weN'80 oquo soɔ 989 199 €LLO Z Z 1 91.1 11106€89€62 !!0AL/9991862 110‘eueunquued'pae euerweųņesed 'L/ɛG韃ə|\se) 899 199 €/.../10 AL19 08? 111098/2692 110 | 9/9909692 110www esedeuueųC] exsue6euvoz lizqırmosomosgi sooooooo Insgïgîuriųıənuə^v e^oubApeųS ‘izg fıņđìomoso guysQ19?rı ' uongoooooou@loqÍoomựTuo asoo@ĝuon ' ' qisqfdřídio ormssājušā čiņosso' ajo omboIIIo fiqiđìuolo
pƏļļuuỊT (‘ēļd) s6uỊp|OH OIDIW
|-[]1 1 1 .20ųM AO|| 7,8 l e 00009L三白氨9图量景0m景湾昌有叠言屋屋雷"慧 uoŋɔung ÁlouaugųųM SJ0252ļņɔɔ|3,12||1031 e SuuĻIp00M •
饲 13dsM 6u(suas uso}} ?ļų6|| osny • |×uopuĮyųųM ļpas Mou puțųI'[0]] uoɔɔļpulIDɔŋpuolny • poɔŋM 6uuəəŋSuoŋɔung-|1\n|W}&SnoQD+XTO NIGZ-opný • | NDIYAMs6og ulyIonquļļM DGH ASH GQI + S8V •

Page 10

ம ஒளியின் தரிசனம் தர் புத்தராகி 2600 வருடங்கள்

Page 11
லக மக்கள் துன்பத்திலிருந்து விடுதலைபெற்று சிறும் சிறப்புடனும் வாழ வேண்டும் என்ற சித்தார்த்தனின் முயற்சி பலிதமாகி அதாவது புத்தர் மகா மெய்ஞ்ஞான ஒளியைப் பெற்று 2600 ஆண்டுகள் கடந்து விட்டன. புத்தர் வகுத்தளித்த வாழ்க்கை நெறிகள் பெளத்த நெறிகளாக மக்களால் போற்றப்படுகின்றன - பின்பற்றப்படுகின்றன.
பேதமை செய்கை, நுகர்வே, அருவுரு, வாயில், ஊளே, நுகர்வே, வேட்கை, பற்றே, தவமே, தோற்றம், வினைப்பயன், இற்றென வகுத்த இயல்பீராறும் பிறந்தோர் அறியின் பெரும்பேறு அறிகுவர் அறியார் ஆயின், ஆழ்நரகு அறிகுவர் என மணிமேகலையில் சித்தலைச்சாத்தனார் குறிப்பிடுவது துன்பத்திற்குக் காரணமான /2 சார்புகளையேயாகும். இப்பன்னிரண்டு காரணங்களும் ஒன்றுக்கொன்று சார்பாக அமைந்து உயிர்களின் துன்பத்திற்கு அடிப்படையாக அமைந்து மூப்பு, பிணி, மரணம் என்பவற்றை விளைவிக்கின்றன.
சித்தார்த்தன் பிறந்தது, மகாஞான ஒளியைப்பெற்றது, மகா பரிநிர்வாணம் அடைந்தது என புத்தரின் வாழ்க்கையின் சிறப்புகள் யாவும் வைகாசி மாதத்து பெளர்ணமி தினத்தில் தான் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
சித்தார்த்தரின் பிறப்பு
போதிசத்துவர் வெள்ளை யானை உருவில் இருந்தார். (துறவத்தைத் தழுவி புத்தர் நிலையை அடைய முயலும் ஒருவரை போதிசத்துவர் என அழைப்பது பெளத்தசமய மரபு.) அந்த யானை தன் துதிக்கையில் வெண்தாமரை மாலை ஒன்று வைத்திருந்தது. அது தன்னை அணுகி விலாப் பக்கத்து வழியாக வயிற்றினுள் புகுந்து மறைந்து கொண்டதாக மாயாதேவி கனவு கண்டாள். தான் கண்ட கனவை சுத்தோதனனுக்கு தெரிவித்தாள். விண்ணவர் மூலம் அரசியாருக்கு ஆண் மகவு ஒன்று பிறக்கப் போகிறது என்பதையும் அந்தக் குழந்தை அரசனாக இருக்க விரும்பின் உலகம் முழுவதையும் தன்வசப்படுத்தி ஆட்சி Glawogyda சக்கரவர்த்தியாகும் துறவியாக
விரும்பின் மேலான புத்த நிலையை அடையு சுத்தோதனன் அறிந்தான்.
போதிசத்துவர் தனது அன்னையின் கருப்பையில் புகுந்த
போது ஊமைகள் வாய் திறந்து பேசினர். முடவர்கள் நிமிர்ந்து நடந்தனர் என்று நிகழ்ந்த அற்புதங்களை சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் விரிவாகக் குறிப்பிடுகிறார். ஜ்
புத்தர் தோன்ற வேண்டிய காலம், இடம், தாய் தந்தை, குலம் இவை புத்தர் பிறப்பதற்கு ஏற்றபடி சரியாய் அமைந்திருக்கின்றது என்பதை அறிந்த விண்ணக ரிஷியான சுமேதரிவழி மாயாதேவியின் மகனாக அவதாரம் செய்ய எண்ணினார். ஏனெனில் சுமேதரிஷிக்கே புத்தராகும் பேறு தேவலோகத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. தேவலோகத்தின்
 
 
 
 
 
 
 

& கலைக்கேசரி
11
ஆறு நிலைகளில் ஒன்றான துஷிதலோகத்திலிருந்து பல இலட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தர் ஒருவர் தோன்றக்கூடும் என்பது பெளத்தத்தின் நம்பிக்கை.
கருவுற்றிருந்த மாயாதேவிக்குப் பேறுகாலம் நெருங்கி விட்டது. தனது பெற்றோரின் நாடான தேவதாகநகர் செல்லும் XX.X வழியில் லும்பினித் தோட்டத்தில் அரச மரத்தருகில் பிரசவ வேதனை எதுவுமின்றி மாயாதேவிக்கு சித்தார்த்தன் பிறந்தார். அன்று கி.மு 623 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பூரண பெளர்ணமி தினமாகும். சித்தார்த்தன் பிறந்த ஆண்டை சிலர் 563 எனவும் வெள்ளிக்கிழமை விசாக நட்சத்திரம் என்றும் கூறுவர். மற்றும் குழந்தை பிறப்பின் போது மேனியில் இரத்தம், சதை முதலிய அசுத்தம் படிந்திருப்பது போன்று அல்லாமல் இக்குழந்தையின் மேனி தங்கம் போல் தூய்மையாக இருந்தது என்றும் அக்குழந்தை பிறந்தவுடன் தேவர்கள் தங்கப் பாத்திரத்தில் ஏந்தினர் என்றும், குழந்தை எழுந்து நின்று முதலில் கிழக்குத் திசையை நோக்கியது என்றும், தேவர்கள் மகிழ்ச்சியடைந்து பூமாரி பொழிந்தனர் என்றும் இதிகாசங்கள் மூலம் அறிய முடிகின்றது.
குழந்தையாகப் பிறந்த சித்தார்த்தர் மற்ற மூன்று திசைகளையும் நோக்கினார். பின்னர் ஆகாயத்தையும் பூமியையும் பார்த்தார். மேலும் வட திசைப் பக்கமாக ஏழடிகள் நடந்தார். இதுவே எனது கடைசிப் பிறப்பு என அறிவித்தார். அவர் பிறந்தவேளையில் 32 அதிசயங்கள் நிகழ்ந்ததாக @ഴ0 ഗ്രൂൿട്രൂ.
சித்தார்த்தரின் தந்தை சுத்தோதனன், கபிலவஸ்துவை தலைநகராகக் கொண்டு மன்னனாகத் திகழ்ந்தான். இவர்கள் சாக்கிய குலத்தினர். இந்தக் குலத்தினரே கெளதம கோத்திரத்தினர் என்றழைக்கப்பட்டனர்.
கோலிய வம்சத்தில் அஞ்சனன் என்ற அரசனுக்கு தண்டபாணி சுப்பிர புத்தன் என்று இரு புதல்வர்களும் மாயா, பிரஜாபதி என்று இரு புதல்வியர்களும் இருந்தனர். சாக்கியக் குலத்தின் அரசன் கோலிய வம்சத்தின் இரு புதல்வியரையும் திருமணம் செய்து கொண்டான். இருவரில் மூத்தவர் 00ധ06ബി. இவர்தான் சித்தார்த்தனை ஈன்றெடுத்தவர். மற்றவர் வளர்ப்புத் தாய் குழந்தைப் பிறந்து ஏழாம் நாள் தாய் மாயாதேவி தனது தங்கையாகிய பிரஜாபதியிடம் குழந்தையை
கபிலவஸ்து அரண்மனையில் வளர்ந்த குழந்தை முதுமை, സ്റ്റേസ, பிணம், துறவி என்ற நான்கையும் காணமுடியாதவாறு வளர்க்கப்பட்டான். இதன் காரணம் இந்தக் குழந்தை ന്ത്രേ நான்கையும் காண நேரிட்டால் அதன் பயனால் துறவத்தை மேற்கொள்ளும் என்று கெளந்தஞ்ஞர் எனும் முனிவரின் எச்சரிக்கையின் பேரிலாகும். மன்னன், தன் மகன் சுகபோகத்தில் வாழும்பொருட்டு அரண்மனைக்குள்ளாகவே சீரும் சிறப்புடனும் வசிக்க ஏற்பாடு செய்தான். கோடை காலத்தைக் கழிக்க ஒரு அரண்மனையும் மாரி காலத்தைக்

Page 12
ថាញភ្ជាប់ 墓 12
கழிக்க வேறொரு அரண்மனையும் குளிர் காலத்தைக் கழிக்க இன்னொரு அரண்மனையும் கட்டினான். ஆடலும் பாடலும் எப் போதும் அரண்மனைக்குள் நிகழ்ந்தன. எங்கு பார்த்தாலும் இன்பம் பொங்கும் சுகமான சூழ்நிலைகளும் காட்சிகளும் காணப்பட்டன. வாள், வில் வித்தைகளில் தேர்ச்சிபெற்று சிறந்த வீரனாகத் திகழ்ந்த சித்தார்த்தன் 19 வயதை அடைந்தபோது, மன்னன் தனது சகோதரியின் மகன் யசோதையை திருமணம் செய்து வைத்தான்.
சித்தார்த்தரின் துறவு
அரண்மனைக்குள்ளேயே காலத்தைக் கழித்த சித்தார்த்தனிடம் வெளியுலகைக்காண வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. நகரைக்காணும் பொருட்டு தேரில் வெளிக் கிளம்பினார். முதுமை, நோய், பிணம், துறவி ஆகிய நான்கு காட்சிகளையும் கண்டு இவை பற்றி தேர்ப்பாகன் சந்தகனிடம் கேட்டறிந்து கொண்டார். (அர்ச்சுனனுக்கு தேர்ப்பாகனாக கிருஷ்ணன் செயலாற்றியது போல் சித்தார்த்தனுக்கு தேர்ப்பாகனாக சந்தகன் செயலாற்றி உள்ளான்.)
சித்தார்த்தன் தான் கண்ட காட்சிகளை மனதில் இருத்தி
பலவித நினைவுகள் பற்றிப்படர, வாழ்க்கையில் பிடிப்பற்று
 

அரண்மனையை அடைந்தார். தனக்குக் குழந்தை பிறந்திருப்பதை அறிந்தும் எல்லாப் பிணைப்புகளிலிருந்தும் தான் விடுபட்டாக வேண்டும் என முடிவெடுத்தார்.
முதுமை, நோய், பிணம், துறவி ஆகிய நான்கு காட்சிகளையும் கண்ட சித்தார்த்தனுக்கு தூக்கம் வரவில்லை. நள்ளிரவில் கந்திகம் என்ற வெள்ளைக் குதிரையில் சந்த கனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு, சூரிய உதயத்திற்கு முன் அநோமா நதிக்கரையை அடைந்தார். ஆடை ஆபரணங்களைக் கழற்றி சந்தகனிடம் கொடுத்து, கபிலவஸ்து சென்று அரசனுக்கு நான் துறவு பூண்ட விடயத்தைத் தெரிவித்து விடு' எனக் கூறினார். கந்திகம் என்ற குதிரை சித்தார்த்தனைப் பிரிய மனமின்றி அங்கேயே இறந்து விட்டது. தனக்கு புதல்வன் பிறந்து ஏழாம் நாள் சித்தார்த்தன் துறவு பூண்ட போது அவருக்கு வயது 29 ஆகும்.
விந்திய மலைக் காடுகளில் கொலமன், உத்தகன் போன்ற முனிவர்களைச் சந்தித்து ஆத்மா குறித்தும், ஆத்மாவிற்கும் அகந்தைக்கும் உள்ள தொடர்பு குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
அகந்தைக்கு பல தன்மைகள் உண்டு என்று அவர்கள் கூறிய
விளக்கத்தில் சித்தார்த்தருக்கு திருப்தி ஏற்படவில்லை. மக்களின்

Page 13
துயரங்களைப் போக்க வழிகாண வேண்டும் என்று ஆறு ஆண்டுகள் காட்டில் கடும் தவம் செய்தார். உடல் மெலிந்து பலவீனமுற்றார். உடலை வருத்துவதால் உண்மையை அறிய முடியாது என்பதை அறிந்து கொண்டார். பின்னர் சேனாளி என்ற கிராமத்துக்குச் சென்றார். அங்கு அரச மரத்தடியில் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்தார். 49 நாட்கள் வரை அம் மரத்தின் கீழேயே தவமிருந்தார். அங்கு சுஜாதா என்ற பெண்மணி தினமும் கொடுத்த பாயாசத்தைத் தவிர வேறு உணவு எதுவும் உண்ணாமல் தவமிருந்தார்.
அன்று வைகாசி மாதத்து பெளர்ணமி தினம். காலையில் வழமைபோல் புத்தர் சுஜாதா கொடுத்த பாயாசத்தை வாங்கினார். சுஜாதாவையும் அவரது குழந்தையையும் வாழ்த்தி விட்டு அவர் கொடுத்த இன்னமுதை அருந்தினார். உடல் தளர்வு நீங்கிப் பொலிவுபெற்றார். அமைதிபெற்ற மனதில் உருவாகும் பேரொளி அவரைச் சுற்றிப் படர்ந்தது. அமுது உண்ட பின் அப்பொற் கிண்ணத்தைக் கொண்டு போய் நைரஞ்சனை ஆற்றில் மிதக்கவிட்டு 'என் உறுதி வெற்றி பெறுமாயின், நான் தத்துவப் போதம் பெறக் கடவேனாயின், இந்தக் கிண்ணம் ஆற்றின் எதிர்ப் புறமாய் மிதந்து செல்லட்டும்’ என்றவாறு சோதனை செய்தார். அப்படியே அப்பொற் கிண்ணம் ஆற்றின் எதிர்ப்புறம் மிதந்து சென்றது. உண்மையை உணராமல் இருக்கும் இடத்தை விட்டு எழுந்திருப்பதில்லை என்ற உறுதிப்பாட்டோடு தியானத்தில் அமர்ந்தார்.
சித்தார்த்தரின் தியானத்தைக் கலைக்க மாரன் (இங்கு மாரன் எனக் குறிக்கப்பெறுவது என்றுமே நிறைவடையாத ஆசைகளின் தொகுதி) பல வகையான முயற்சிகளை மேற் கொண்டான். அவையாவும் சித்தார்த்தரிடம் பயனற்றுப்
போயின.
அந்த இரவின் முதலாவது யாமத்தில் மாரயுத்தம் முடிந்தது. இரண்டாவது யாமத்தில் போதி சத்துவர் மகாபந்தி நிலையிலே தமது பழம் பிறப்புகளையெல்லாம் உணர்ந்தார். மூன்றாம் யாமம் முழுவதும் பொய் என்றுணரும் சர்வஜ்ளுத்துவம் பெற்றார். நான்காம் யாமத்தில் ஞானம் முதிர்ந்தது. துவாதச நிதான ரூபமாகிய ஏது’ நிகழ்ச்சி என்று சொல்லக்கூடிய பிறப்பு - இறப்புக்கு காரணமும் அதன் நிவாரணமும் மார்க்கமும் தெளி வாயிற்று; போதம் பிறந்தது; புன்மையிருள் நிங்கியது; சம் போதி ஞான ஒளி வீசியது; சித்தார்த்தர் புத்தரானார்.
துறவு பூண்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின் தனது 35 ஆவது வயதில் கி.மு. 543 ஆம் ஆண்டு வைகாசி மாதம், முழுமதி நன்னாளில் செய்வாக்கிழமையன்று புத்தர் மகா மெய்ஞ்ஞான உண்மை ஒளியைக் கண்டார்.
துக்கம், துக்கத்திலிருந்து விடுதலை, அதற்குரிய வழிகள் போன்ற அறநெறிகளை கெளண்டினியர், லப்பர், பாஷ்பர், மகா நாமர், அசுவஜித் ஆகிய ஐந்து முனிவர்களுக்கு புத்தர் பெருமான் முதன்முதலாகக் அறநெறியைப் போதித்தார். ‘புத்தம் சரணம் கச் சாமி, தர்மம் சரணம் கச்சாமி’ எனச் சொல்லி ஐந்து

& கலைக்கேசரி 13
முனிவர்களையும் புத்தபிக்குகளாக்கினார். 'புத்தம் சரணம் கச் சாமி’ என்பது பெளத்த நெறியினைப் பரப்பிய புத்தர் முதல் வணக்கத்துக்குரியவர் என்பதாகும். 'தர்மம் சரணம் கச்சாமி என்பது அவர் உரைத்த தர்மம் இரண்டாவது வணக்கத்துக்குரி யது என்பதாகவும் சங்கம் சரணம் கச்சாமி’ என்பது இதனைப் பின்பற்றும் பெளத்த சங்கத்தினர் மூன்றாவது வணக்கத்துக்குரி யவர்கள் என்றும் பொருள்படும்.
புத்தபெருமான் பேறு அடைதல் தனது மரணத்திற்கு பின் உடலை எவ்வாறு அடக்கம் செய்ய வேண்டும் என்பது பற்றி புத்தர் பின்வருமாறு கூறியிருந்தார். ‘என்னுடைய சடலத்தை புதிய கோடித்துணியால் முதலில் சுற்ற வேண்டும். பிறகு அதன் மீது பஞ்சை வைத்து, மீண்டும் கோடித் துணியால் சுற்ற வேண்டும். இப்படி மாறி மாறி பஞ்சாலும் கோடித் துணியாலும் 500 தடவைகள் சுற்ற வேண்டும். பின்னர் அச்சடலத்தை எண்ணெய் நிரம்பிய இரும்பு பாத்திரத்தினுள் வைத்து இரும்பு மூடியால் மூடி, வாசனைக் கட்டைகளின் மேல் அந்தப் பேழையை வைத்து சிதையில் தீமூட்ட வேண்டும். பிறகு சாம்பல், எலும்புகள் முதலியவற்றை எடுத்துப்போய் ஒரு நாற்சந்தியில் புதைத்து அதன் மீது சேதியம் எழுப்ப வேண்டும் எனப் புத்தர் குறிப்பிட்டார்.
குசி நகரத்து பாவா எனும் ஊரில் சுந்தன் எனும் நகைத் தொழிலாளி தனது இல்லத்தில் புத்தபெருமானுக்கும் சீடருக்கும் விருந்தளித்தான். விருந்து சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மாமிச வகைகள் படைக்கப்பட்டிருந்தன. புத்த பெருமான், சுந்தனிடம் காட்டுப் பன்றி இறைச்சிக் கறியை எனக்கு மட்டும் தா! மீதம் இருப்பதை மண்ணில் புதைத்து விடு' என்றார். சுந்தன் கொடுத்த உணவைச் சாப்பிட்ட பின்னர் புத்த பெருமானுக்கு தாங்க முடியாத வயிற்றுவலி உண்டானது. இருந்தபோதிலும் ஞானஒளியைப் பெறுவதற்கு முன் சுஜாதா கொடுத்த பாயாசம் சிறப்புமிக்கதாக திகழ்ந்தது போல் சுந்தன் வழங்கிய விருந்தும் சிறப்பு மிக்கது என புத்த பெருமான
б7600Т600f607/777.
இரு சால மரங்களுக்கு நடுவில் படுக்கை அமைத்து தலையை வடதிசையில் வைத்து, தியானத்தில் ஆழ்ந்தார். அன்று வைகாசி மாதம் முழுமதி நாள். புத்தர் பெருமான் அதிகாலையில் இடம், எண்ணம், உணர்வு, பேதாபேதம் முதலிய நிலைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கடந்து மகா பரிநிர்வாணம் எய்தினார். புத்தர் இறக்கும் போது அவருக்கு வயது 80.
புத்த பெருமான் கூறியபடியே அவருடைய உடலை அடக்கம் செய்து சேதியம் எழுப்பினர். பின்னர் பெருமானின் தாதுக்கள் /0 பேருக்கு பங்கு போட்டுக்கொள்ளப்பட்டது. பத்துபேரும் தத் தமது நகருக்கு போய் பூமியில் புதைத்துச் சேதியம் எழுப்பினர். இவ்வாறு பத்து சேதியர்கள் எழுப்பப்பட்டன. இலங்கையில்
கெளதம புத்தரின் தந்தம் சேதியம் ೧೫ಖಿಲಲಿಲLGಣ್ರ
- பஸ்ரியாம்பிள்ளை ஜோன்சன்

Page 14

கதிரிகாமம் தெய்வயானை அம்மன் கோயிலிலுள்ள
EFTERFGOTÍò
- கலாநிதி சி. பத்மநாதன் தகைசார் பேராசிரியர் வரலாற்றுத்துறை, (பேராதனைப் பல்கலைக்கழகம்) இ லங்கையிலேயே மிக புனிதமான தலங்களில் ஒன்றாகச் சைவர்கள் போற்றும் கதிர்காமத்திலே தெய்வயானை அம்மன் கோயிலிற் பிடமொன்றிலே வழிபாட்டுக்குரிய சின்னமாக வேலொன்று தாபனம் பண்ணப்பட்டுள்ளது. அது 75 வருடங்களுக்கு முன்பு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் பீடத்தின் ஒரு பக்கத்திலே வாசகம் எழுதிய செப்புத் தகடு ஒன்றைப் பதித்துள்ளனர். இங்குள்ள பலர் கதிர்காமத்திற்குப் போய் வழிபாடாற்றுகின்ற பொழுதிலும் வாசகம் எழுதிய அந்தச் செப்பேட்டை அவதானிக்கவில்லை. அதனால் அதைப் பற்றிய செய்திகளும் வெளியிடப்படவில்லை.
மார்ச் மாதம் இந்து சமய கலாசார திணைக்களம் ஒழுங்குபடுத்திய கட்டடக்கலை, சிற்பக்கலை பற்றிய பயிலரங்கை நடத்துவதற்குத் தமிழகத்திலிருந்து தொல்லியலாளரான கலாநிதி ச. இராஜகோபால், கலாநிதி கா. இராஜவேலன், திரு பூரீதரன் ஆகியோர் வந்தனர். அவர்கள் மார்ச் மாதம் 29 ஆம் திகதி கதிர்காமம் சென்ற பொழுது மேற்கு றித்த சாசனத்தைக் கண்டு, அதன் புகைப்படத்தை எடுத்தனர். அதன் ஒரு பிரதியை இராஜகோபால் எம்மிடம் தந்தார். அதனை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
கதிர்காமத்திற் கிடைத்துள்ள ஒரேயொரு தமிழ் சாசனம் என்ற வகையில் அது முக்கியத்துவம் பெறுகின்றது. காலத்தால் அதிக பழைமையற்றது. எனினும் அதற்குச் சில சிறப்புகள் உண்டு கொல்லம் ஆண்டு //2 ஆவது வருஷம் கார்த்திகை மாதம், கார்த்திகைத் தினத்திலே வேல் வழிபாட்டிற்கெனத் தாபனம் செய்யப்பட்டமை, மலையாளத் தமிழரின் ஆதரவுடன் அப்பணி நிறைவேற்றப்பட்டமை, அக்காலத்தில் க.கு. ராமானந்த சுவாமி தெய்வயானை அம்மன் கோயில் நிர்வாகத்தைப் பரிபாலனம் செய்தமை முதலிய விபரங்களை அச்சாசனத்தின் மூலமாக அறியமுடிகின்றது. இந்த விபரங்கள் வேறெங்கும்
கிடைக்காதவை. அவற்றைப்பதிவு செய்த வேறு ஆவணங்கள்
செப்புத்தகடு சாசனம்

Page 15
இருப்பதாகத் தெரியவில்லை. எனவே கதிர்காமத் தல வரலாறு பற்றிய ஒரு முக்கியமான அம்சம் இச்செப்பேட்டு வாசகத்தில் அடங்கியுள்ளமை குறிப்பிடற்குரியது.
கோயில்களுக்கு வழங்கும் நன்கொடைகள் அங்கு நடைபெறும் திருப்பணிகள் என்பன பற்றிய விபரங்களைக் கல்லிலோ செப்பேடுகளிலோ எழுதி வைப்பது வழமை. அந்த வழமை இலங்கையில் நிலவியது என்பதும் அது அண்மைக் காலம் வரை காணப்பட்டது என்பதும் இப்பொழுது தெளிவாகியுள்ளது. முன்னேஸ்வரம் தேவஸ்தானத்திலுள்ள அரும் பொருள்களும் திருமங்கலாய்க் கோயிலுக்குரிய மணி, கொழும்பு அருங்காட்சியகத்திலுள்ள வலம்புரிச் சங்கு, அங்குள்ள சாசனம், எழுதிய விளக்கு முதலியவற்றிலும் நன்கொடை பற்றிய வாசகங்கள் காணப்படுகின்றமை குறிப்பிற்குரியது. பிரயாசத்தின் பெறுபேறாகவும் சமூக விழிப்புணர்வின் பயனாகவும் இப்படியான பல அரும் பொருட்கள் பலவற்றை வருங்காலத்திற் பெற்றுக்
கொள்ளலாம்.
இலங்கையிலுள்ள திருத்தலங்களிலே கதிர்காமம் தனித்துவமானது. அது சைவர்களுக்கும் பெளத்தர்களுக்கும் பொதுவானது. சிங்களவரும் தமிழரும் வேடரும் அங்கே வழிபாடு செய்வது வழமை. இவர்களுள் ஒவ்வொரு சமூகத்தவரும் அவரவர் வழமைப்படி வழிபாடாற்றி வந்துள்ளனர். இலங்கையிலுள்ள முருகவழிபாட்டு தலங்களிற் கதிர்காமமே புராதனமானதும் முதன்மையானதுமென்று சைவர் கொள்வர். முற்காலங்களில் குறிப்பாகத் திருவிழாக் காலத்தில் அடியார்கள் பாதயாத்திரை செய்வது வழக்கம்.
இலங்கையிலுள்ள பெளத்த சமயத்திற் குமாரக் கடவுளுக்குச் சிறப்பிடமுண்டு, தேசத்துக் காவற் தெய்வங்கள் நால்வரை வழிபடுவது பெளத்தர்களின் நெடுங்கால வழமை. விஷ்ணு, பத்தினி நாத, கதிர்காம தெய்வம் ஆகியோர் காவற்றெயப்வங்கள். அவர்களில் குமாரக் கடவுளாகிய கதிர்காமக் கடவுள் முதன்மையானவர். குமாரக் கடவுளுக்குப் பல இடங்களிற் கோயில்களை அமைத்தனர். ஆயினும் கதிர்காம ஷேத்திரத்தைக் குமாரக் கடவுளுக்குரிய பிரதானமான, முதன்மையான தலமாகப் பெளத்தர் கொள்வர். பெளத்த சமய மரபில் இலங்கையிலுள்ள பதினாறு புனித ஷேத்திரங்களிற் கதிர்காமமும் ஒன்று.
கதிர்காமத்திலுள்ள கந்த சுவாமி கோயில் கதரகமதேவாலே'
என்று சொல்லப்படும். அங்கு கபுறாள என்னும் பூசாரிகள்
 

கொழுமபு 2510Աք* அந்த
sensee
நூலகம்
ஆராதனை செய்வதற்கு உரிமை பெற்றவர்கள். அங்கு 12
கபுறாளைகள் உள்ளனர். அவர்களின் உரிமை வம்சாவழியானது அவர்களின் கடமையிலிருந்து எவராலும் நீக்க முடியாது. சிங்களப் பண்பாட்டு மரபிலே கதிர்காமம் கோயில் "தேவாலே' என்ற வகைக்குரியது. அது கோயில் என்ற வைவ, வைணவ நிறுவனங்களிலிருந்தும் வேறுபட்டது. முற்காலங்களில் அரசர்கள் அதற்கு மானியங்களை வழங்கியுள்ளனர். கோயிலின் சுற்றாடலில் உள்ள ஊர்கள் தேவாலேக்குச் சொந்தமானவை. அங்குள்ள குடியானவர்கள் கோயிலுக்குப் பணிசெய்வதற்குப் பந்தமானவர்கள்.
கதிர்காமத்திலே பல கோயில்கள் உள்ளன. அவற்றிலே சில சைவர்களின் பரிபாலனத்தின் கீழ் அமைந்தவை. அவற்றிலொன்று தெய்வயானை அம்மன் கோயில். பால்குடிபாபா என்று சொல்லப்படும். கல்யாண கிரி சுவாமி பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் வந்து கதிர்காமத்திலே தங்கி விட்டார். கண்டியரின் கலவரத்தைப் பிரித்தானியர் அடக்கிய பொழுது கதிர்காமத்து வழிபாட்டுத் தலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அயலிலுள்ள கிராம வாசிகள் ஒடிவிட்டனர். யாத்திரை போவோரின் தொகையும் பெருமளவிற் குறைந்து விட்டது. அவ்வாறான சூழ் நிலையிலே மீண்டும் கதிர்காமம் சிறப்புப் பெறுவதற்குக் கல்யாணகிரி சுவாமியின் பணிகளே ஏதுவாயிருந்தன. கதிர்காம தேவாலயத்தைப் புனரமைத்ததோடு தெய்வயானை அம்மன் கோயில், வள்ளி அம்மன் கோயில் ஆகியவற்றையும் அவர் உருவாக்கினர் என்று சொல்லப்படும். அவர் உருவாக்கிப் பயன்படுத்திய கல்யாண மடம் என்னும் பிடம் அவரது பெயரால் விளங்கும் புனித சின்னமாகும். களிமண்ணால் அமைந்த அப்பிடம் கதிர்காம வரலாறு தொடர்பான ஒரு வரலாற்றுச் சின்னம்.
கல்யாணகிரி சுவாமியின் காலம் முதலாகச் சிருங்கேரி பிடத்தைச் சேர்ந்த தசநவமிப் பிரிவிலுள்ள வட இந்தியத் துறவிகளே தெய்வயானை அம்மன் கோயிலைப் பரிபாலனம் செய்கின்றனர். அவருக்குப் பின்பு கேஸ்புரி சுவாமி, சுராஜ்புரி சுவாமி ஆகியோர் அங்கு தங்கியிருந்தனர். இச்சாசனங் குறிப்பிடும் இராமானந்த சுவாமி குருசிட பரம்பரையில் வந்த வட இந்தியத் துறவியாதல் வேண்டும். சாசனம் எழுதப்பட்ட
காலத்திலே தெய்வயானை அம்மன் கோயில் அவரது பொறுப்பில் இருந்ததென்று கருத முடிகின்து.

Page 16
தெய்வானை அம்மன்
*
பால்கு என்று சொல்லப்படும் கல்யாணகிரி சுவாமிகள் சமாதி அடைந்த பீடம்
 

சாசனத்தின் வாசகம் உ சிவமயம்
வேலும் மயிலும் துணை /. க. கு. சிவாறாமானந்த சுவாமியின் பிறையாசையாலும்
மலையாளம் தமிழ் மக்கள் மகா புண்ணிய 2 ஜனங்களுடைய உதவியாலும் செய்ய்து வைத்த வேல் பீடம்
இந்த மழை தீப தெறின வேலி(ன்) 3. சருவ அபிஷேகம் பட்டு சாத்தி அர்ஷனை முதலாகியது
செய்து 4. இஸ்ட்ட சித்தி பெற்றுக் கொள்ள வேண்டியது. 5. கொல்லம் //12 ஆம் வருடம் கார்த்திகை மீகார்திகை தீபத்
துக்கு வைத்தது 27 - // - 1936
சாசனத்திலுள்ள விபரங்கள் இச்சாசனத்தில் மூன்று வசனங்கள் அமைந்தள்ளன. முதலாவது வசனம் வேலொன்றின் தாபனம் பற்றிய விபரங்களைக் குறிப்பிடுகின்றது. அது க. கு. ராமானந்த சுவாமியின் முயற்சியினாலே தாபனம் பண்ணப் பட்டது. சாசனம் எழுதப்பட்ட காலத்தில் ராமானந்தா சுவாமி என்னும் துறவி கதிர்காமத்துத் தெய்வயானை அம்மன் கோயிலின் பரிபாலனத்துக்குப் பொறுப்பாக இருந்தார் என்பதை அதிலுள்ள குறிப்பினால் அறிய முடிகின்றது.
வேலினைத் தாபனஞ் செய்வதற்கு மலையாளத் தமிழர் உதவி புரிந்தனர் என்று சொல்லப்படுகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மலையாளத்தவர் பலர் தொழில் வாய்ப்புகளைத் தேடி இலங்கைக்கு வந்தனர். அவர்கள் பல தரத்தினர். அவர்களிற் பலர் கல்லூரி ஆசிரியர்களாகவும் தொழில் வினைஞராகவும் பணி புரிந்தனர். சாசனம் குறிப்பிடுவோர் சாதாரணமான மக்களாவர். பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளிலே முன்னேஸ்வரம், கதிர் காமம் போன்ற புராதனமான தலங்களுக்கு யாத்திரை செல்வோரின் தொகை அதிகரித்தது. யாத்திரை போன சைவர்களிடையே கணிசமான தொகையினர் இந்திய வம்சாவழித் தமிழர் என்பது குறிப்பிடற்குரியது.
இரண்டாவது வசனம் பக்தர்களை வேலினை வழிபாடு செய்து அதனாற் கிடைக்கும் பலன்களைப் பெற்றுக் கொள்வது பற்றியது. எல்லாவிதமான அபிஷேகங்களையுஞ் செய்து வேலுக்குப் பட்டுச் சாத்துவது வழிபாட்டின் அம்சங்கள் என்று சொல்லப்படுகின்றது. அவ்வாறு வழிபடுவதன் மூலம் விரும்பியவற்றைக் கடவுளின் அருளாற் பெற்றுக் கொள்ளலாம் என்று நம்பினார்கள். சாசனத்தின் இறுதி வாசகமாகிய மூன்றாம் வசனம் வேல் தாபனம் பண்ணப்பட்ட காலம் பற்றிய விபரங்களைக் குறிப்பிடுகின்றது. அது கொல்லம் ஆண்டினையும் கிறிஸ்து வருஷத்தையுங் குறிப்பிடுகின்றது. கொல்லம் ஆண்டு என்பது மலையாள தேசத்தில் வழங்கிய ஒரு கால கணிப்பு முறை பற்றியது. கொல்லம் //2 ஆம் வருஷம் கார்த்திகை மாதம், கார்த்திகை தீப நாளன்று வேல் தாபனம்
பண்ணப்பட்டது.

Page 17
அது கிறிஸ்து வருஷம் 1936 ஆம் ஆண்டு // ஆம் மாதம் 27ஆம் திகதியாகும். கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்ஷத்திர நாள் முருக வழிபாட்டிற் சிறப்புடைய நாள், அது திருக்கார்த்திகை என்று சொல்லப்படும். விரதமிருந்து முருகனை வழிபடுவதற்குரிய நாள்.
சாசனத்தின் மொழிநடை
இச்சாசனம் பேச்சு வழக்கான தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. அளவில் அது சிறியதாயினும் மொழி வழக்கின் சில பிரதானமான பண்புகளை அதில் அவதானிக்க முடிகின்றது. இலங்கைத் தமிழரின் மொழி வழக்கில் இடம் பெறாத சில பண்புகள் அதில் காணப்படுகின்றன. அவற்றிலொன்று 'ர் கரத்திற்குப் பதிலாக 'ற' கரத்தை எழுதுவதாகும். தமிழ் மொழியில் றகர ரகர மயக்கம் ஒரு பொது அம்சமாகும். அது புராதனமானது நெடுங்கால வழமையானது என்பதற்குச் சாசனங்கள் சான்றாகும். ஆயினும் காலப்போக்கில் இலங்கைத் தமிழ் வழக்கில் றகர ரகர வேறுபாடு தெளிவு பெற்று விட்டது. தமிழகத்தின் பல பகுதிகளில் பேச்சு வழக்கில் ர என்பதை ற என்று உச்சரிப்பது வழமையாகி விட்டது. அதனை இன்றும் அவதானிக்க முடிகின்றது.
இச்சாசனத்தின் மூன்று இடங்களில் ர என்னும் எழுத்தை ற என்று எழுதியுள்ளனர். ராமானந்த சுவாமி என்னும் பெயரை 'றாமானந்த சுவாமி ' என்றும் பிரயாசை என்ற சொல்லை பிறயாசை என்றும் முதலாவது வசனத்தில் எழுதியுள்ளனர். இரண்டாவது வசனத்திலே சர்வ அபிஷேகம் என்பதை சருவ அபிஷேகம் என்று எழுதியுள்ளனர். விஜய நகர, நாயக்கர் காலத்துச் சாசனங்களிற் சில சமயங்களில் இவ்வாறு எழுதினார்கள். சொற்களின் நடுவில் வரும் மெய்யெழுத்தினைச் சில சமயங்களில் இரட்டிக்கும் தன்மை இச்சாசன வாசகத்திற் காணப்படுகின்றது 'செய்து என்ற சொல் இரண்டு இடங்களில் வருகின்றது. இரண்டாவது வசனத்தில் ஆராதனை முதலாகியது செய்து என்று அதனை வழமை போலச் சரியாக எழுதியுள்ளனர். முதலாவது வசனத்தில் செய்ய்து வைத்த வேல் பீடம் என்னுந் தொடரிலே ய கர மெய்யினை வழமைக்கு மாறாக இரட்டித்து எழுதியுள்ளனர். அதே வசனத்தில் இஷ்ட சித்தி என்பதை 'இஸ்ட்ட சித்தி என்று எழுதியுள்ளனர். இதிலே அவதானிப்பதற்குரிய இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று 'ஸ் என்னும் கிரந்த எழுத்து தவறுதலாக இடம்பெற்றுள்ளமை 'இஸ்ட்ட என்பது இஷ்ட என்ற சமஸ்கிருத மொழி மூலமான சொல்லின் திரிந்த வடிவமாகும். ஷ என்ற எழுத்தைப் பலரால் உச்சரிக்க முடிவதில்லை. எனவே அதற்குப் பதிலாக 'ஸ் என்ற மெல்லெழுத்தை எழுதுவது வழமையாகி விட்டது. கிருஷ்ணர் என்பதை இந்நாட்களிற் பலர் கிருஸ்ணர் என்று எழுதுகின்றனர். இங்கு இஷ்ட என்பதை இரு வகையிற் திரிபுபடத்தியுள்ளனர் இறுதி எழுத்தான ட கரத்தின் முன்பாக ட கர மெய்யினை
வலிந்து தவறுதலாகப் புகுத்தியுள்ளனர்.
* },

கல்யாணகிரி சுவாமிகளின் சமாதி

Page 18
BAGONGING, ERSTELA : 18 நினைவுத்திரை
இசைத்துறையில் மேதா 6.Influlëqjg ITITLD
ர்நாடக இசைச் சமுகத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் இசை மேதைமையைப் போற்றாத இசைவாணர்களே இல்லை எனலாம். கர்நாடக இசையில் மேதாவிலாசமாக இருந்தது மாத்திரமன்றி இத்தெய்வீக இசைக்காக இவர் ஆற்றிய மாபெரும் சேவையும் விதந்து போற்றத்தக்கது.
அரசர்களின் அரண்மனைகளிலும் அங்கு இடம்பெறும் கொண்டாட்டங்களிலும் பெரும் கனவான்கள், மிராசுதார்கள், ஜமீந்தார்களின் சபைகளிலும் மாத்திரம் இடம்பெற்ற இசை விருந்துகளைச் சாதாரண பொதுமக்களும் சுவைத்து ரசிக்கக் கூடிய வகையில் மக்கள் மத்தியில் உலாவர உதவிய சிறப்பும் இவருக்குரியது.
இசைவாசனையோ அனுபவமோ அற்ற சாதாரண மக்களிடம் ராகம், தாளம், பல்லவி என்று மாத்திரமே இருந்த இசைக் கச்சேரி நிகழ்வுகளை, அவர்கள் விரும்பி ரசிக்கக்கூடிய வகையில் கர்நாடக இசையில் பல பரிமாணங்களையெல்லாம் ஏற்படுத்தி வர்ணம், ஸ்ருதி, ஆலாபனை, ராகம், தாளம், பல்லவி, துக்கடா, திருப்புகழ் என ஒரு முறையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனைக் கச்சேரி பத்ததி என்பர். தனது குரலின் இயல்பை வைத்தே இம்முறைமையை ஏற்படுத்திய இம் மேதையின் வழிகாட்டலை ஒட்டியே எந்த வரிசையில், எதனை,
இ
 
 
 

விலாசத்துடன் விளங்கிய TgOIEB Eeu Isfi IöITsĩ
எவ்வளவு நேரம் பாட வேண்டுமென்றெல்லாம் ஏனைய இசைக் கலைஞர்கள் முதலே திட்டமிட்டுத் தமது கச்சேரிகளை ஒழுங்கு செய்வர். பின்னணி இசையாளரின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் லய வித்துவான்களுக்கு தனிஆவர்த்தனம்' செய்ய இடம் கொடுக்கும் முறையையும் அறிமுகம் செய்து வைத்த பெருமையும் அரியக்குடி அவர்களுக்கே உரியது.
அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் குரு பூச்சி ஐயங்கார் ஆவார். அரியக்குடியின் இளமைக் கால இன்னிசை இனிதாக மலர்ந்து, தேனாக திரளப் பல வித்துவான்கள், இசை நிபுணர்கள் உதவியுள்ளனர் என்பதும் சுவையான செய்திகளே.
பாலகனாக இருந்த நாட்தொட்டே இசையில் அபரிமிதமான ஆர்வம் கொண்டிருந்த இவர் தமது காந்தர்வக் குரல் வளத்துடன் பாடுவதும் இசைப்பதுவுமாகவே திகழ்ந்தார்.
இவருடைய இந்த அசாதாரண போக்கை அவதானித்த தந்தையார், பரம்பரையாகவே சோதிடத் துறையில் விற்பன்னராக விளங்கியமையால் மைந்தனின் ஜாதகத்தையும் மிக்க அவதானத்தோடு கணித்துப்பார்த்தார். என்ன அதிசயம்! ஜாதகம் பேசுவது போலவே அவன் இசையோடு ஒன்றிப்போய் இருந்தான். தனது நான்கு ஆண்களும் இரு பெண் குழந்தைகளுமான மக்கட்பேறுகளுள் ராமானுஜ ஐயங்கார்

Page 19
என்ற மகன் இசைத்துறையில் பெரும் சாதனைகளைப் புரிந்து ஒரு சங்கீத மேதையாகத் திகழ்வார் என்ற நம்பிக்கை மகிழ்வூட்டியது.
எனவே தேவகோட்டை தமிழ் பாடசாலையில் கல்வி பயின்று கொண்டிருந்த // வயதே நிரம்பிய தன் மகனை சங்கீதத்தில் மிகுந்த திறமை வாய்ந்த பநிமலையப்ப ஐயரிடம் குருகுலவாசம் செய்து இசை கற்பதற்காக அனுப்பி வைத்தார். சங்கீத சாகரத்தில் பல அடிப்படை அம்சங்களைப் பற்றிக் கொண்ட அரியக்குடி, கீர்த்தனைகள் கற்பனாசுரங்கள் என்பவற்றில் தனக்கென ஒரு பாணியில் பாடும் மனோவலிமையையும் ஆற்றலையும் நிரம்பவே பெற்றுக்கொண்டார். /6 வயதில் பூநீநரசிம்ம ஐயங்காரிடம் குருகுலவாச முறையில் இதைத் கல்வியைத் தொடர்ந்தார். பட்டைதீட்டப் பெற்ற வைரம்போல இளம் வயதிலே பஜனைகள், கோவில் திருவிழாக்கள், விசேட உற்சவங்கள், கொண்டாட்டங்கள் என்பவற்றிலெல்லாம் இசை மழை பொழிந்து எல்லோர் மனதையும் கவர்ந்தார்.
அரியக்குடியில் இல்லறம் துய்த்த பரீ திரு வேங்கடாச்சாரியார் செல்லம்மாள் தம்பதியின் புத்திரனாக /890ஆம் வருடம் மே மாதம் 19 ஆம் திகதி பிறந்த OOCOsg0)/g ஐயங்கார் தமது 18 ஆவது வயதிலே பரீபூச்சி ஐயங்காரிடமே பெற்ற மிக நீண்ட காலக் குருகுல கல்வியில் இசையின் திட்ப நுட்பங்கள் யாவற்றையும் நன்கு கற்றுக் கொண்டார். பூரண இசைவாழ்வு வாழவும் பழகிக்கொண்டார்.
ஒரு தடவை பரீபூச்சி ஐயங்காருக்கு ஒரு திருமண வீட்டில் இசைக் கச்சேரி நிகழ்ச்சி புதுக்கோட்டை தட்சிணாமூர்த்திப் பிள்ளை, திருக்கோடிக்காவல் கிருஷ்ணஐயர் போன்ற பெரும் பெரும் வித்துவான்களெல்லாம் பக்க வாத்தியம் வாசிக்கிறார்கள். எதிர்பாராத வகையில் குருவிற்கு அன்று அந்நிகழ்ச்சியைச் செய்ய முடியாதபடி உடம்புக்கு வருத்தம். என்ன செய்யலாமென யாவரும் யோசித்தனர். உங்கள் சிஷ்யன் இருக்கிறானே அவன் இன்று நிகழ்ச்சியை நடாத்தட்டுமே! என்றார் திருமண வீட்டுக்காரரான 6é qpau/Tä. குரு பூச்சி பரீனிவாசஐயங்காரும் சிஷ்யனைப் பாடப் பணித்தார். கச்சேரி அருமையாகக் களைகட்டியது. எவ்வித முன் ஆயத்தமோ, மேதைமை மிக்க பக்க வாத்தியக்காரருடனான எவ்வித பயிற்சியுமோ இன்றி நடைபெற்ற இசை நிகழ்ச்சி எல்லோர் மனதையும் அள்ளி அணைத்தது. அரியக்குடியும் தனது மேதைமையின் சில பக்கங்களை அச்சந்தர்ப்பத்தில் புரட்டிக்காட்டிவிட்டான். சங்கீத விற்பன்னர்கள் யாவருமே விதந்து பாராட்டினர். எல்லோரும் அரியக்குடியின் இசைத் திறனையே போற்றிப் புகழ்ந்தனர். குருவானவரும் அளப்பரிய மகிழ்வுடன் வருங்காலத்தில் நீயே எனது இடத்தை எடுத்துக் கொண்டு பாடு என ஆசீர்வதித்து அரவணைத்தார்.
குருவின் ஆசீர்வாதத்தினாலும் ஏனைய இசை மேதைகளின் வழிநடத்தலாலும் இயல்பாகவே தன்னிடம் மிளிர்ந்த இசை
 
 

நிபுணத்துவத்தாலும் ஏராளமாக இசை நுட்பமும் தெளிவும் சிவையும் மிக்கச்சேரிகளை இசைத்துப் பல திரைகளிலுரு நீச்சலடித்து முன்னேறிய அரியக்குடி 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் தொட்டே கர்நாடக இசைத்துறையில் எவ்வித பொது விதிகளோ வழிகாட்டல்களோ இன்றி ஸ்ருதி, ஆலாபனை, பல்லவி என்பவற்றைக் கொண்டே பல மணிநேரம் கச்சேரி நிகழ்த்தினார். இம்முறைமை இசையறிவற்ற பாமரரைப் போய்ச் சேருவது கடினமே என்பதை உணர்ந்த ராமானுஜர் இசையில் பல புதுமைகளைப் புகுத்தினார்.
அதாவது முதலில் வர்ணம், தொடர்ந்து ஸ்ருதி, ஆலாபனை, ராகம், தாளம், பல்லவி துக்கடா, திருப்புகழ் என ஒழுங்கு முறையை ஏற்படுத்திக் கொடுத்தார். இதனை கர்நாடக சங்கீதத்திற்கு ஏற்படுத்திக் கொடுத்த பின்னர் பொது மக்கள் உட்பட ரசிகர்கள் தொகை வகையாக இவ்விசையை ரசிக்கும் அடிமையாயினர். இசை விற்பன்னர்களும் தமது வித்துவத்தை இலகுவாகவும் எளிமையாகவும் வெளிப்படுத்த இவ்வொழுங்கு பெரும் உதவியாக அமைந்தது. இப்பத்ததி முறையை

Page 20
அரியக்குடி தனது குரல் வளத்தின் இயல்பை வைத்தே அமைத்துள்ளார் என இசைவாணர்கள் குறிப்பிடுவர்.
இத்தகைய அரிய சேவையை இசையுலகிற்களித்த மேதையை மாபெரும் கலைஞர்களான மதுரை மணிஜயர், ஜி.என்.பி മൃകണ്ഡേ, கச்சேரிச் சங்கீதத்திற்கு, அரியக்குடி ராமானுஜரையே பிதாமகர்' எனப் பாராட்டிப் புகழுவர். பல்லாண்டு காலம் பழைமை வாய்ந்த கர்நாடக இசையை இன்றைய நவீன அலங்காரத்திற்கேற்ப மோஸ்தர் சிறிதும் கெடாமல் எல்லோரது மனதிலும் பதியக் கூடிய வகையில் புதிய மெருகூட்டிய வல்லமை போற்றுதற்குரியது.
சாதாரண இசைக் கச்சேரிகளில் பொதுமக்களைக் கவரும் வகையில் மத்யம காலத்தில் பாடுவதன் அழகையும் முதலில் அனுபவித்துச் சபைக்குக் கொடுத்த பெருமையும் இவரையே சாரும். இப்படித்தன் இசைத் திறமையினால் பெரு வளர்ச்சியடைந்தமை மாத்திரமன்றித் நான் பெற்ற செல்வம் பெறுக இவ்வையகம்' என்பது போல் எல்லோரையும் இசைபாட மாத்திரம் தட்டியெழுப்பாமல் தெய்வீகமான இனிய இசையைச் சுவைப்பதற்கான வழிவகைகளையும் தேடிக் கண்டுபிடித்து இசையுலகிற்கு நல்கினார்.
இசையுலகிற்கு இவர் ஆற்றிவரும் தொண்டை அவதானித்தது மாத்திரமன்றி இயல்பாகவும் கற்ற திறமையினாலும் முன்னணி வகிக்கும் பாடகரான இவரது இசையில் மயங்காதவரே இல்லையெனலாம். இடையறாது இவரது கச்சேரிகள் இந்திய நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தினம் தினம் இடம் பெற்றுக் கொண்டேயிருந்தன. அதனால் இவரது புகழ் உலகெங்கும் பரவியது. இவரை ரசிக்காதவர்களே இல்லையெனும் அளவிற்கு இவரது இசைக்கச்சேரி எங்கும் பரப் UOOU/racy பரவலாகப் பேசப்பட்டது. அத்தகைய நிபுணத்துவமிக்க மாபெரும் கலைஞனுக்கு பக்க வாத்தியம் இசைப்போரே இவருக்கு வாசிப்பதைப் பெரும்பேறாகக் கருதிப் பின்னணி இசைக்கப் போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தனர். முறையாக காலப் பிரமாணம், கமக சுத்தம், மத்யம காலத்தில் பாடுதல், மென்மையானதும் அழுத்தமானதுமான இராக ஆலாபனை, புதுப்புது உருப்படிகளையெல்லாம் அரங்கேற்றுதல் என்ற இவரது கவர்ச்சிகரமான இசை நிகழ்ச்சிகளால் கவரப்பட்டோர் அனந்தம்/ சங்கீத கலாநிதி செம் மங்குடி பூரீநிவாசய்யரே இவரது இசையால் கட்டுண்டு இவரது இசை வல்லமைக்குத் தான் அடிமை எனக் கூறி மகிழ்வார்.
கச்சேரியின் போது ராகம், தாளம், பல்லவிக்கு உயிர் நாடியாக முக்கிய இடத்தை ஒதுக்கும் அரியக்குடி, கல்யாணி, சங்கராபரணம், தோடி, சாவேரி, பைரவி ஆகிய ராகங்களை தனக்குரிய பாணியில் விஸ்தாரமாக அமைத்துப் பாடும் போது இந்த ராகங்களெல்லாம் அவரது குரல் மிடறில் நின்று நடனமிடும். அத்தனையும் கொம்புத் தேனாக இனித்து ஒழுகும். ஆனால் தொய்வோ சோர்வோ தலைக்காட்டாது அத்தனையும்
விறுவிறுப்பாகவே அமைந்திருக்கும்.
 

பாடுபவன் திறமை மிக்க நிபுணனாயிருக்கலாம். சபையிலும் பல்லாயிரம் பேர் அமர்ந்திருக்கலாம். ஆனால் இப்பாடகரை ஏற்று ரசிக்கக் கூடியவகையில் அந்தச் சபை இருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் கூடச் சபையின் நாடியறிந்து சபையோரைக் கட்டிப்போடக் கூடியவகையாக ஸ்ருதி, ராகம், லயம் என்பவற்றை நன்கு ஒன்றிணைத்துத் தன் நிகழ்ச்சியைத் திறம்பட ஆக்கி சபையின் ஏகோபித்த பாராட்டுதலைப் பெற்ற நிகழ்ச்சிகள் ஒன்றல்ல இரண்டல்ல பல்லாயிரக் கணக்கானவை
பல்லாயிரக் கணக்கான சிஷ்யர்கள், தாசன்கள் இவருடைய போக்குகளைப் பின்பற்றி வாழ்ந்தாலும் அரியக்குடி பாணியை அதி அற்புதம் எனப் புகழ்ந்தாலும், இவருடன் பல காலம் கூடி மிருதங்கம் வாசித்த பாலக்காட்டு மணியே இவரது முதல் தர சிஷ்யன் போல சகல விஷயங்களையும் பிரதிபண்ணிப் பழகுவார். அத்தனை அன்பு இந்த மேதை மீது.
1949 ல் இவரது மணிவிழா தஞ்சாவூரில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. பரிசுகள், பண முடிப்புகள், பதக்கங்கள் என ஏராளமான அன்பளிப்புகள் வாழ்த்துக்கள் விருதுகள் வந்து குவிந்தன. ஏராளமாக விருதுகளும் இவரைத்தேடிவந்தன. 1962ல் இந்திய அரசின் பத்மபூஷண விருதும் சிருங்கேரி சங்காரச்சாரியாரின் சங்கீத சாஸ்திர அலங்கார விருதும் இவருக்குக் கிடைத்தன.
இசைத் துறையில் மாமேதையான மதான் 1967 ல் இயற்கை எய்தி மக்களைத் துயரக்கடலில் மூழ்கடித்துவிட்டார். இவர் மறைவால் இசையுலகே சோகத்தில் ஆழ்ந்ததுது
- பத்மா சோமகாந்தன்

Page 21
உங்கள் வசதிக்காக நாம் இன்னும் வரவிருக்கும் பற புதிய இருக்கைகள். 30,0 வகையிலான வீடியோ ஒடி
நாம் எமது பயணமுறையி
எம்மை தொடர்பு கொள்ள 1979 னை அழையுங்கள். அல்லது எமது
SS S S TM 00 MSZST 0 S ZS S T MSZ 00 q 00 T u S S S S T S
 
 
 

நீங் க ளே  ைங் க ள் 2. ல க ம்
1SriLankan Airlines
எமது சேவையினை அதிகரித்துள்ளோம். எமது புதிய எயார் பஸ் A320 வைகளுக்கான ஒரு முன்னோடி இடவசதியுடனான உள்ளகம். வசதியான }00 அடிகளுக்கு மேல் பறக்கும் போதும் களைப்புத் தெரியாமலிருக்கும் யோ நிகழ்ச்சிகள் உங்களை மகிழ்விக்கும்.
னை மாற்றியுள்ளோம் உங்கள் பயண அனுபவத்தினையும் மாற்றியுள்ளோம்
SSTTTM TTTTTTTT TTMSLLT TTTTTtmTTTT LLLLLLLLS LLLLLLLLS LLLLLL
த மான நிகழ்ச்சிகள் விரும்பிய வீடியோ ஒ டி யோ ਲੈ

Page 22


Page 23
CCV /ழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்த வண்ணார் பண்ணை பூரீ வில்லூன்றி வீரகத்தி விநாயகர் கோயிலானது ஏறத்தாழ நூற்றியெண்பது ஆண்டுகளுக்கு மேலான பழைமைச் சிறப்புகளுடனும், இதிகாசக் கதைகளுடனும் தொடர்புபட்டது. இவ்வாலயம் வரலாற்றுச் சிறப்புக்குரிய வழிபாட்டு மரபுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதுடன், கந்தபுராண கலாசாரத்தை உடைய யாழ்ப்பாணத்து மக்களுடன் பின்னிப் பிணைந்த ஆலயமாக இன்றும் திகழ்கின்றது. இந்துக்களின் வழிபாட்டு மரபிலே விநாயக வழிபாடே முதலில் நிகழ்த்தப்படுகின்ற அதேவேளை இவ்வாலயக் கிரியைகளிலும் விநாயக வழிபாடே முதன்மை பெறுகின்றது. மேலும் இலக்கியம் சார்ந்த புத்தாக்கங்கள் உருவாக்கப்படும்போதும், கலை சார்ந்த நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் போதும் 'விநாயகர் காப்பு மூலம் விநாயக வழிபாட்டின் முக்கியத்துவம் நன்கு உணர்த்தப்படுகிறது. பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை வழிபடுவதற்கு உரிய இடமாக கோயில் விளங்குகின்றது. 'சிவனுறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் திருமன்றோ’ என அப்பர் பெருமான் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து மகா சமுத்திரத்தின் எழில் முத்து எனப் போற்றப்படும் ஈழ மணித்திருநாட்டை திருமூலர் 'சிவபூமி’ 660) கூறியுள்ளமையால், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இந்து சமயம் இங்கு வேரூன்றி வளர்ந்து வந்தமை உறுதியாகின்றது. யாழ்ப்பாணத்தில் இந்துப் பண்பாட்டு அம்சங்கள் பலவற்றை தன்னகத்தே கொண்டு விளங்கும் பிரதேசமான வண்ணார்பண்ணை' பிரதேசத்துக்கு அப்பெயர் வழங்கியமைக்காக பல்வேறுபட்ட விளக்கங்கள் கூறப்படுகின்றன. சலவைத் தொழிலாளர்கள் அதிகமாக வாழ்ந்த காரணம்; அழகிய வயல்கள் நிறைந்த பகுதி, வண்ணவேலை செய்தவர்கள் வாழ்ந்த பகுதி என்பன அவற்றில் சிலவாகும்.
6/6007 6007//jugo760) 6007 மக்கள் கடவுளையும், பெரியோர்களையும், சமய நூல்களையும் மதித்துப் போற்றி வழிபட்டார்கள். இங்குள்ள வீதிகளாக கடையிற் சுவாமி கோயில் வீதி, ஐயனார் கோயில் வீதி, நாச்சிமார் கோயில் வீதி, விர மகாகாளியம்மன் கோயில் வீதி, வில்லூன்றிப் பிள்ளையார் கோயில் வீதி என்பன அப்பிரதேச மக்களின் உன்னத மனப்பாங்குக்குச் சான்றாகும். இப்பிரதேசத்தில் சிவன், அம்மன், விநாயகர், விஷ்ணு, முருகன் முதலான தெய்வங்களுக்கு பல கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளதுடன் கண்ணகி, ஐயனார், வைரவர், முனியப்பர், பெரியதம்பிரான், நாகதம்பிரான் போன்ற கிராமியத் தெய்வங்களுக்கும் பல கோயில்கள் உண்டு.
இப்பிரதேச மக்கள் விநாயகரை வணங்குவதன் மூலம் நில வளம், விளைச்சல் பெருக்கம், வாழ்க்கையில் செழிப்பு, அறிவுப் பேறு முதலிய பலன்கள் கிடைக்கும் என நம்பிய காரணத்தாலே விநாயகரை முதன்மைப்படுத்தி வழிபாடு இயற்றினர். இதன்

23
காரணத்தால் வண்ணார்பண்ணை 'பிள்ளையார் நகர்’ எனும் சிறப்புடன் போற்றத்தக்க வகையில் விளங்குகின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கோயில் நகரம் எனச் சிறப்பிக்கப்படும் வண்ணார்பண்ணைப் பிரதேசத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற ஆலயமாக வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயமானது யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்திலிருந்து 2 மைல் தொலைவிலும், பேருந்து நிலையத்திலிருந்து / மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. யாழ்ப்பாண வைத்தியசாலை வீதி வழியாகச் சென்று, காரைநகர் வீதிக்கு திரும்பியவுடன் 200 மீற்றர் தூரத்தில் வீதிக்கு வலது புறமாக அமைந்திருக்கும் கோயிலில் வீற்றிருந்து அடியவர்களுக்கு அருள் பாலிக்கிறார் வில்லூன்றி விநாயகர்.
யாழ்ப்பான மாவட்டத்தில் g> 676)7 வில்லூன்றிப் பிரதேசமானது ஏறத்தாழ 40 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. முன்பு ஒரே காணியாக இருந்த வில்லூன்றியில் கோயிலும், மிகுதி நிலப்பரப்பில் செழிக்கும் வயல் நிலங்களும் காணப்பட்டன. கோயிலில் இருந்து மேற்கு நோக்கிப் பார்க்கும் போது கடற்கரை மிகத் தெளிவாத் தெரியும். ஆனாலும் தொடர்ந்து வந்த காலப் பகுதிகளில், போக்குவரத்து, குடியமர்வு, நகரமயமாக்கம் போன்ற காரணிகளால் இக்காணி இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. வீதிக்கு இடது புறமாக /50 மீற்றர் தூரத்தில் வில்லூன்றி புனித தீர்த்தக் கேணியும், வலது பக்கமாக விநாயகர் ஆலயமும் அமைந்துள்ளன. இப் பிரதேசமானது இயற்கை அன்னையின் வரம் பெற்ற இடமாகக் காட்சி கொடுக்கிறது. அதிகளவான கன்னா மரங்கள், மருதோன்றி மரங்கள் என்பன செழித்துக் காணப்படுகின்றன. தீர்த்தக் கேணிக்கு அருகில் அந்தியேட்டிக் கிரியைகள் நடாத்தும் மடங்கள், இராமர் கோயில் என்பன இயற்கை சூழலில் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட கால் மைல் தூரத்தில் வில்லூன்றி மயானம் உள்ளது.
வில்லூன்றிக்கு வடக்கே நாவாந்துறை என்னும் இடமும் கிழக்கே கொட்டடி என்னும் பிரதேசமும் உள்ளன. பண்டைய காலத்தில் வர்த்தக இறங்கு துறையாக விளங்கிய இடமே நாவாந்துறை ஆகும். மேலும் கப்பல்களில் கொண்டுவரப்படும் சொரியலான நெல்லை இறக்கி, ‘அங்கே கொட்டடி, இங்கே கொட்டடி' எனக் கூறுவார்களாம். அதன் காரணத்தாலே அவ்விடத்திற்கு 'கொட்டடி' எனப் பெயர் வந்தது என்பது செவிவழிக் கதையாகும். வில்லூன்றிப் பிரதேசத்திற்கு தெற்கேயும், மேற்கேயும் கடல் சூழ்ந்து காணப்படுகின்றது. இவ் வாலயத்திற்குச் சொந்தமான 9 ஏக்கர் நிலப்பரப்பில் அரைவா சிப் பகுதி தென்னந் தோட்டங்களாகக் காணப்படுகின்றது. மிகுதி நிலம் பயிர்ச் செய்கைக்கு உதவாத உவர் நிலமாகக் காணப்டுகிறது.
இராமபிரான் தனுஷ்கோடி செல்வதற்கு முன்னர் இங்கு சிவ வழிபாடு இயற்றியதாகவும், பின்னர் அச்சிவாலயம்

Page 24

அந்நியராட்சியில் அழிக்கப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. மக்களுக்கு ஓரளவு சமய சுதந்திரம் கிடைத்த போது தொன்மை வாய்ந்த சிவாலயம் இருந்த இடத்தில் தெய்வத் திருவருள் கூடியதால் அரசர்’ என்னும் பெயர் தாங்கிய புண்ணிய சைவ சீடர் ஒருவர் தம் அயராத முயற்சியால் விநாயகர் ஆலயம் ஒன்றை அமைத்தார் என்றும் அறியமுடிகின்றது. இதன் காரணத்தாலே இவ்வாலயம் பூர்வ தனுஷ்கோடி வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலயம்' எனவும் சிறப்பாக அழைக்கப்படுகிறது.
வில்லூன்றிக் கேணிக்கு அருகில் இருந்த சிவன் கோயிலுக்கு அதன் நித்திய, நைமித்திய கிரியைகளுக்காக நிலங்கள் விடப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரமாக ஆனைக்கோட்டைப் பகுதியில் உள்ள சில தோட்டங்கள் தனுஷ்கோடி' தோட்டம் என்று அழைக்கப்படுவதில் இருந்து ஊகிக்கலாம். இக்காணிகள் தற்போது அரச காணிகளாக உள்ளன. இராமபிரான் வழிபட்ட சிவாலயம், விநாயகர் ஆலயமாக ஸ்தாபிக்கப்பட்ட காலத்தை வரையறுக்க முடியவில்லை. ஆனாலும் சில ஆய்வுகள் மூலம் /800 ஆம் ஆண்டிற்கும் 1820 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இவ்விநாயகர் ஆலயம் நிறுவப்பட்டது என்றும் முடிவுக்கு வரமுடியும். முன்னர் சிறு ஆலயமாக விளங்கிய விநாயகர் ஆலயத்திற்கு /00 வருடங்கள் பழைமை வாய்ந்த திருவூஞ்சல் பாடல்கள் உண்டு.
1882 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 24 ஆம் நாள் ஆலயம் புனருத்தாபனம் செய்யப்பட்டதுடன், ஒரு காலப் பூசைகள் சிறப்பாகவும் கிரமமாகவும் நடைபெறத் தொடங்கின. கோயிலில் காலத்துக்குக் காலம் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக மண்டபங்கள், மடப்பள்ளிகள், வசந்த மண்டபம், மணிக்கோபுரம் ஆகியவை அமைக்கப்பட்டதுடன் சித்திரை மாத பெளர்ணமி தினத்தை இறுதி நாளாகக் கொண்டு 10 நாட்கள் அலங்கார உற்சவமும் நடைபெறத் தொடங்கின. 1942 ஆம் ஆண்டு ஆலயத்தை பெறுப்பேற்றவர் ஆலய வளர்ச்சியில் மிகவும் துரிதமான செயற்பாடுகளை மேற்கொண்டார். இக்காலப் பகுதியில் ஆலயத்துக்கு கட்டுத்தேர் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் 1959 ஆம் ஆண்டு கொடித்தம்பம், யாக மண்டபம் என்பன அமைக்கப்பட்டு வைகாசித் திங்கள் /4ஆம் நாள் கொடியேறி முதன் முதலாக விநாயகப் பெருமான் தேரிலேறி அருள் பாலித்தார். அத்துடன் அவ்வாண்டு தொடக்கம் ஆறு காலப் பூசைகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
1957 ஆம் ஆண்டு வில்லூன்றி புனிதத் தீர்த்தத்தின் மேற்குக் கரையில் கிழக்குப் பக்கத்தை முகப்பாகக் கொண்டு ஒரு கோயில் அமைக்கப்பட்டது. விஜயதசமி தினத்தன்று பூநீராமர், இலக்குமணன், சீதாதேவி, அனுமார் ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் அக்கோயிலில் ஸ்தாபிக்கப்பட்டன. புண்ணிய தீர்த்தத்தில் மூழ்கி எழுபவர்களுக்கு திருமால் தரிசனமும் வேண்டும். இதன் காரணத்தாலே திருமால் அவதாரங்களில் ஒருவரான பூநீராம தரிசனம் வில்லூன்றி தீர்த்தத்தில் மூழ்கி எழுபவர்களுக்கு கிடைத்தது. காலங்கள் உருண்டோடியபோது

Page 25
இவ்வாலயம் வெள்ளத்தால் அழிந்து போயிற்று. தற்பொழுது கோயில் தர்மகர்த்தா சபையின் அயராத முயற்சியால் அவ்விடத்தில் பூரீராமனுக்கும், சிவனுக்கும் இரண்டு சிறு ஆலயங்கள் பொழிந்த கற்கள் கொண்டு அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ஆலயங்கள் கிழக்கு நோக்கியவாறு அமைக்கப்படுவது மரபு ஆகும். ஆனால் இவ்வாலயம் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கர்ப்பக்கிரகம் /4அடி 5 அங்குல நீளமும், /0அடி அகலமும் கொண்ட கருங்கல் கர்ப்பக்கிரகமாகத் தோன்றுகின்றது. கருவறையின் மேல் உள்ள விமானம் அடியில் இருந்து கலசம் வரை /7 அடி 10 அங்குல உயரத்தைக் கொண்டுள்ளது. மேலும் அர்த்த மண்டபம், மகா மண்டபம், அபிசேக மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம் இரண்டு சுற்றுப் பிரகாரங்கள் என்பன கோயிலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. அத்துடன் வாகனசாலை, மகோற்சவ இறுதி நாளில் விநாயகப்பெருமான் தீர்த்தம் ஆடும் தீர்த்தக்கேணி, புதிதாக அமைக்கப்பட்ட திருமுறைக் கோயில் என்பன ஒருங்கே இங்கு அமைக்கப்பட்டுள்ளன. கோயில் மடப்பள்ளிச் சுவரில் /921 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோபுரத்தின் இடது புறத்திலும், வலது புறத்திலும் காட்சி தரும் மணிக்கூட்டுக் கோபுரமானது 26 அடி உயரம் கொண்டது. ஆலயத் தெற்குத் காண்டாமணி /930 ஆம் ஆண்டும், வடக்குக் காண்டாமணி 1960 ஆம் ஆண்டும் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இக்கோயிலின் இராச கோபுரமானது 54 அடி உயரத்தைக் கொண்டு விளங்குகின்றது.
ஆலயத்தில் சிகர அமைப்பைக் கொண்டே அது கட்டப்பட்ட UITGØðfFGOD CU உறுதிப்படுத்தலாம். சிகரத்தின் உருவம் சதுரமாகவோ, நீள் சதுரமாகவோ இருந்தால் அது நாகரபாணி' என்றும், ஆறு கோணமாகவோ, எண் கோணமாகவோ இருந் தால் அது திராவிடபாணி' என்றும், வட்ட வடிவமாகவோ, நீள் வட்டமாகவோ இருந்தால் அது "வேசரபாணி' என்றும்
அழைக்கப்படும். எனவே வில்லூன்றி வீரகத்தி விநாயகர்
 

&ញញត្អែ
25
வேசரபாணி' முறையில் அமைக்கப்பட்ட" /قیم 607 g6l)/O67ے ஆலயமாகும். சிவாகம முறைப்படி அமைக்கப்பட்ட
இவ்வாலயமானது கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அபிசேக மண்டபம், ஸ்தம்ப மண்டபம், கோபுர வாசல், தரிசன மண்டபம் என்பவற்றைக் கொண்டு விளங்குகின்றது.
இந்து சமய மரபில் ஆலயமானது மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினையும் சிறப்பாகக் கொண்டு அமைவது விசேடமாகும். வில்லூன்றித் தீர்த்தமானது யாழ்ப்பாணத்தில் அமைந்த ஏனைய ஆலயங்களின் தீர்த்தங்களை விட மகத்துவம் பெற்றதாகக் கருதப்படுகின்றது. காரணம் என்னவெனில் இங்கு அமைந்த பெரும்பாலான ஆலயங்கள் மகோற்சவங்களுடன் தொடர்புபட்ட தீர்த்தக் கேணிகள் அமைய, இங்கு ஆலய கிரியைகள் மட்டுமல்லாமல் அபரக் கிரியையாகிய அந்யேட்டிக் கிரியையுடனும் தொடர்புபட்ட தீர்த்தக் கேணிகளாக முறையே ஆலய உள்வீதி மோட்ச தீர்த்தமும், கடற்கரைப் பிரதேசத்தில் கன்னா மரங்கள் செறிந்த அழகிய வில்லூன்றி புனிதத் தீர்த்தமும் முக்கியத்துவம் பெறுகின்றது.
இதிகாச கால பெருமை மிக்க வில்லூன்றித் தீர்த்தமானது ஈழ நாட்டில் வட பாகத்தில் அமைந்த கீரிமலைத் தீர்த்தம் போன்று பழைமை வாய்ந்த தீர்த்தம் என கர்ண பரம்பரைக் கதைகள் எடுத்துரைக்கின்றன. இராமபிரான் தமது படையின் தாக சாந்தியைத் தீர்க்கும் பொருட்டு தனது கோதண்டத்தை ஊன்றிய இடத்தில் நீர் பெருக்கெடுத்தது. அதுவே இப்புண்ணிய தீர்த்தம் எனவும் இதிகாச கால தீர்த்தம் எனவும் போற்றப்படுகின்றது. காலம் காலமாக மக்கள் தம்மைவிட்டுப் பிரிந்தவர்களின் ஆத்ம
சாந்திக்காக அந்தியேட்டிக் கிரியைகளை இங்கு செய்து
வருகின்றார்கள். இதன் காரணத்தால் தம் மூதாதையர்களின்

Page 26
bាញ់ 基 26
மனம் அமைதி பெறுவதாகவும், அவர்களுக்கு மோட்ச நிலை கிடைக்கும் எனவும் நம்புகிறார்கள். சைவசமய மக்களின் நம்பிக் கைகளுக்கும், சமய அனுட்டானங்களுக்கும் மிகவும் இன்றிய மையாத ஒன்றாக வில்லூன்றித் தீர்த்தம் காணப்படுகின்றது. மேலும் வில்லூன்றி, கீரிமலை ஆகிய தீர்த்தங்களின் மகத்துவம் ஒன்றாகக் காணப்படுவதுடன் விஞ்ஞானத்துக்குப் புலப்படாத மருத்துவ குணங்களும் இவ்விரு தீர்த்தங்களிலும் உண்டு.
அந்நியராட்சிக் காலத்தில் பொலிவிழந்த திருக்குளம் அமைக்கப்பட்ட காணியில் வண்ணார்பண்னை சிவன் கோயிலை அமைத்த வைத்திலிங்கச் செட்டியார், தாம் அமைத்த கோயிலுக்குரிய தீர்த்தமாக வில்லூன்றியைப் பயன்படுத்தினர். அத்தீர்த்தமே வில்லூன்றி விநாயகர் ஆலயத்திற்கு உரிய தீர்த்தமாகவும் கொள்ளப்பட்டது. அக்காலத்தில் மாசிமகம், ஆடி அமாவாசை போன்ற தினங்களில் வண்ணை வைத்தீஸ்வரன் இத்தீர்த்தக் கேணிக்கு எழுந்தருளுவது வழக்கமாகும். தற்காலத்தில் அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. /938 இல் சைவ விருத்திச் சங்கம் இத் தீர்த்தத்தைப் பொறுப்பேற்று தீர்த்தத்தையும் மடங்களையும் புனருத்தாபனம் செய்ததுடன், பெண்களுக்கான தீர்த்தக்கேணி ஒன்றையும் அமைத்தது. 1972 இல் கன்னாபுர குடியேற்றத் திட்டத்தால் கேணிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டது. இக் காலகட்டத்தில் வில்லூன்றித் தீர்த்தக் கேணியில் செயற்பாடு கள் பொலிவிழந்தன. எனவே இக்காலங்களில் அந்தியேட்டி, தருப்பணம் ஆகிய கிரியைகளை நிறைவேற்ற யாழ்ப்பாண மக்கள் கீரிமலை, திருவடிநிலை, இதர புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. 1988 ஆம் ஆண்டு அந்தியேட்டி மடங்கள் புனருத்தாபனம் செய்யப்பட்டன. ஆனா லும் சேறு அகற்றி துப்பரவு செய்யப்படாமையால் அடியார்கள் புனித நீராட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பொருட்டு 1992 ஆம் ஆண்டு 'வில்லூன்றி புனித தீர்த்த பரிபாலன சபை' அமைக்
冢
 
 

கப்பட்டது. இச்சபையால் பல லட்ச ரூபாய் செலவில் புனித தீர்த்தம் மிகக் குறுகிய காலத்திலே புனரமைக்கப்பட்டது. பல தசாப்த இடைவெளிக்கு பின்னர் வில்லூன்றித் தீர்த்தத்தில் 1993 ஆம் ஆண்டு சித்திரை மாதப் பூரணை தினத்தில் வில்லூன்றி விநா யகர் தீர்த்தம் ஆட எழுந்தருளியமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஆடி அமாவாசை தினத்திலும் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
மகோற்சவப் பெருவிழாவில் இரதோற்சவம் நடைபெற்ற மறுநாள் நடைபெறும் தீர்த்த உற்சவமானது, ஆலயத்தோடு அமைந்த மோட்சத் தீர்த்தத்தில் நடைபெறும். விநாயகர் தீர்த்தமாடிய பின்னர் அத்தீர்த்தத்தில் இருந்து ஒரு குடம் நீர் எடுத்து வில்லூன்றி தீர்த்தத்தில் ஊற்றப்படும். மெய்யடியார்கள் வில்லூன்றியில் நீராடி இறை அனுக்கிரகம் பெறும் வழக்கம் இன்றும் தொடர்கின்றது. வரலாற்றுப் புகழ் மிக்க வீரகத்தி விநாயகர் அதிகாலையில் தீர்த்தமாட ஆடி அமாவாசை, சித்திரா பெளர்ணமி தினங்களில் வில்லூன்றியில் எழுந்தருளுகிறார். தா யாரைப் பிரிந்தவர்கள் சித்திரா பெளர்ணமியிலும், தந்தையைப் பிரிந்தவர்கள் ஆடி அமாவாசையிலும் மோட்ச அர்ச்சனை செய்து மனச்சாந்தியும் மன அமைதியும் பெறுகின்றனர். இறந்த வர்கள் மோட்ச நிலையை அடையவும், தாம் நல்ல நிலையில் வாழ்வதற்காகவும் பிதிர் கடன் செலுத்தும் ஆலயமாக கீரிமலைக்கு அடுத்ததாக வில்லூன்றி விளங்குகிறது. இதிகாச காலப் பெருமைபெற்ற வில்லூன்றி புனித தீர்த்தம் ஈழ நாட்டில் உள்ள தலை சிறந்த புண்ணிய தீர்த்தங்களுள் ஒன்றாகத் திகழ்கி றது. பூரீ இராமபிரானதும், எண்ணற்ற சித்தர்கள், யோகிகள், ஞானிகளின் பாதக் கமலங்கள் பட்ட வில்லூன்றி பூர்வ தனுஷ் கோடி' எனப் போற்றப்படுகின்றது.
೪>
தொகுப்பு - உமா பிரகாஷ்

Page 27
தரமான சர்வதேச 置cm re ஜிக் குழுமம் தனிநபர் விற்பனை வர்த்தகத்
இலத்திரனியல்
భళ్ల భళ్ల ఖళ్ల
56LLib تنقیقت
எதிர்கால திட்டங்கள்: SLL 00000 LLmmLmLTT 000 TTOLTTTTmmttm Tmm mTT0 LyyykmemLmLLLtm emtm SYmLMLLTT SLS LmLmmS Lmmmmmm mtmmtmmmTmmy 00S kMmmmLmmlmS TmmT 00mMkmeyTT S TmTTL LeLeme eOTmm LL LmmLm L00k ymmmeTTT LmTTTse LmmmMTeTm mmeTS TTTmeS tmTTm m m LTtm mmSO OLLm SLq m mTmTTO mmL mmLmLmLm 00OmS TLS LLymmm SeSeTSALSL m 000 S BYL S Tttm0mmlTe TymL mmymMLy
இலத்திரனியல் உபகரணங்கள் யுனி வோக்கர்ஸ் (பிறை) லிமி துணி வகைகள் யுனி வோக்கர்னல் (பிறை) லிமி
356smrt. Imrtib : usin (36rriasi gro (isop) 65,5 - "Life
www.soft logic.ik
 

ன்னிகரற்ற வர்த்தக படையணி
an. வாப்களை era. புதிய திருப்புமுனையினை شہتوت) لکڑی
ONIDA || || coRneu i IGNIS
MI ANG ()
ཟླ
தல் $ଽନ୍ଧ
| SOftlO
3. ES M. f. - El 8 S N ESS

Page 28
鼩 28 சுற்றுலா
விஜயநஆறப்புேறசின் பெருநஆறம்
AV
 

ர்நாடக மாநிலத்தில், துங்கபத்ரா நதியின் தெற்கு 495م கரையில் அமைந்திருப்பது வுறம்ப்பி நகரம். ஒரு காலத்தில் விஜயநகரப் பேரரசின் பெருநகரமாக விளங்கியது வுறம்ப்பி, விஜயநகரம், 6)9é (U/TOGö7CU/T அடிகளைக் கெளரவப்படுத்தும் வகையில், அவ்வாறு அழைக்கப்பட்டது.
இங்கு காணப்படும் பழம் பெருமைமிக்கதும், சிறப்புவாய்ந்ததும், கட்டடக்கலை நுணுக்கம் கொண்டதுமான நினைவுச்சின்னங்கள் கி.பி /336 ஆம் ஆண்டில் இருந்து 1565 ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் இருந்து சதாசிவராய மன்னர் வரையான காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன. ஏராளமான அரச கட்டடங்கள், விஜயநகர பேரரசில் மிகப் பிரசித்திபெற்ற கிருஷ்ணதேவராயர் (கி.பி 1509 - 30) காலத்தில் கட்டப் பெற்றவையாகும். இக்காலகட்டத்தில், இந்துமதம், கலை, கட்டடக்கலை, ஆகியன பெரும் அளவில் எழுச்சி பெற்றுவிளங்கின.
அக்காலகட்டத்தில் இம்மாநகருக்கு விஜயம் செய்த அரேபியா, இத்தாலி, போர்த்துக்கல், ரஷ்யா, ஆகிய நாடுகளைச் சேர்ந்த சரித்திர ஆராய்ச்சியாளர்கள், இந்நகரம் குறித்து மிகவும் பாராட்டி எழுதியிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகிறது. சுமார் 26 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உடைய இந்நகரம் ஏழு அரண்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பழைய விஜய நகரத்தின் உட்புறத்தில் மாளிகைகளின் விஸ்தீரணமான எச்சங்களைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்து மற்றும் ஜெயின ஆலயங்கள் உட்பட பல்வேறு மதக்
கோயில்கள், மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளின் கட்டடங்கள், மன்னனின் கேட்போர் மண்டபம், விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளை இருந்து
s

Page 29
பார்ப்பதற்கான சிம்மாசன மேடை மற்றும் மன்னனின் செங்கோல் ஆகியன பிரமிப்பூட்டுவன.
மிகப்பெரும் அளவில் அமைந்துள்ள ஆலயங்கள், சித்திர வேலைப்பாடுகள் மிகத் தெளிவானதும் நுணுக்கமானதுமான சிற்ப வேலைப்பாடுகள், கம்பீரமான தூண்கள், மிக எடுப்பான நிகழ்ச்சி மண்டபங்கள், பாரதம் மற்றும் இராமாயண காப்பியங்களில் இருந்து எடுக்கப்பட்ட சிற்பவேலைப்பாடு சார்ந்த மற்றும் மரபுரீதியான விளக்கக் குறிப்புகள் ஆகியன இங்கு காணப்படும் ஆலயங்களின் சிறப்பம்சமாகும். இவற்றுள் விசாலமானது பம்பபதி ஆலயமாகும். தற்போது வணக்கத்துக்கு உரியதாக விளங்கும் இவ்வாலயம், மிக விஸ்தாரமான அளவில் திருத்தப்பட்டுள்ளது. அதன் கம்பீரமான வாயில் கோபுரம் கிருஷ்ணதேவராயரால் அமைக்கப்பட்டதாகும்.
விஜயநகர கட்டடக் கலைப் பாணிக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது வித்தல ஆலயமாகும். மற்றும் பிரமாண்டமான அளவுகளைக் கொண்ட அதேவேளை அழகு நிரம்பியதாகவும் விளங்கும் லசுஷ்மி, நரசிம்மர், கணேசர் ஆகியோரின் உருவச்சிலைகள் இங்கு கருத்தைக் கவர்வன.
விஜயநகர மன்னர்களைப் பொறுத்தவரை நரசிம்மர் மிகவும் விரும்பி ஆராதிக்கப்படும் ஒரு கடவுளாக விளங்குகிறார். இவரின் மிகப்பெரும் திருவுருவச் சிலைகளை நகரின் பல்வேறு இடங்களிலும் காணலாம்.
இறைவன் எங்கும் உள்ளான் என்று மனப்பூர்வமாக நம்பும் பக்தர்களை அவர் எப்போதும் காப்பாற்றுவார் என்பதை
நரசிம்மனின் கதை விளக்கும்.
தனி ஒரு பாதையில் செதுக்கப்பட்ட லசுஷ்மி -
நரசிம்மர் திருவுருவச்சிலை
 
 
 

க்கலைக்கேசரி 29
அங்கு காணப்படுகிறது. இது 1528 ஆம் ஆண்டு, கிருஷ்ணதேவராயர் ஆட்சிக் காலத்தில் செதுக்கப்பட்டதாக, அதில் உள்ள குறிப்புகள் தெரிவிக்கின்றன. நரசிம்மரின் மடியில் லசுஷ்மியின் சிறிய உருவச்சிலை காணப்படுகிறது. வுறம்ப்பியில் உள்ள நரசிம்மர் உருவச்சிலை 6.7 மீட்டர் உயரமுள்ளது. ஆனால் இந்த உருவச்சிலை கி.பி. 1565 ஆம் ஆண்டு முஸ்லிம் பஹ்மனி அரசர்களால் சிதைக்கப்பட்டதுடன் லசுஷ்மி சிலை அழிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. அடித்து சேதமாக்கப்பட்ட இச்சிலையைப் பார்க்கும்போது, முன்னர் எத்துணை பெரிய உருவமாக இருந்திருக்க வேண்டும் என்பதை ஊகிக்க வைக்கிறது.
சுருண்டு இருக்கும் ஆதிசேஷன் என்ற பாம்பின் மீது நரசிம்மன் உட்கார்ந்திருக்கிறார். அதன் ஏழு தலைகளும் ஒரு குடையாக அவரைக் காத்து நிற்கிறது. மகரதோரண அமைப்பில் முழுவதும் காணப்படுவதுடன், ஏழுதலைக் குடையின் மேல் யாளி முகம் ஒன்று காணப்படுகிறது. விஜயநகர ஆட்சிகாலத்தில் மிகவும் முக்கியம் பெற்ற ஒரு சிற்ப உருவம் யாளி ஆகும். இது சிங்க உருவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கற்பனை உருவமாகும்.
இதன் பக்கத்தில் 6 அடி உயரமான பதவிலிங்க சிவாலயம் காணப்படுகின்றது. இதில் இருந்து வுறம்ப்பியின் ஏனைய சிற்பக்கலை அற்புதங்களைக் காணச்செல்ல முடியும்.
கிருஷ்ணர் ஆலயம், பட்டாபிராமர் ஆலயம், வறஸர ராமச்சந்திரா ஆலயம், சந்திரசேகர் ஆலயம் ஆகியவற்றோடு ஜெயின மத ஆலயங்களும் அங்கு பார்வையாளர்களைப் பெரிதும் கவர்கின்றன. அங்கு கவர்ச்சிமிக்கதாகத் தோன்றும்
கிருஷ்ணர் ஆலயம் விஜயநகர ராயர்களால் கட்டப்பட்ட
அனைத்து ஆலயங்களிலும் காணப்படும் மாதிரி

Page 30
கலைக்கேசரி கி 30
வடிவமைப்புகளுக்கு ஓர் அரிய உதாரணமாக விளங்குகின்றது எனப் பார்த்தவர்கள் பரவசத்துடன் கூறுகின்றனர். இவ்வாலயத்தின் தூண்களில், அழகான தெய்வ உருவங்கள் கலைத்துவச் சிறப்போடு செதுக்கப்பட்டுள்ளன. அதேவேளை கோபுரம் செங்கற்களாலும், சுண்ணாம்புக் கற்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு சிறிது அப்பால் 4.6 மீட்டர் உயரமான கடலேகலு கணேசர் ஆலயம் உள்ளது. இச்சிலையும் அழிவுக்குள்ளாகிக் காணப்படுகிறது. அதேவேளை அண்மையில் உள்ள சசிவேகலு கணேசர் எதுவித சேதமும் இன்றிக் காணப்படுகின்றார்.
எல்லைச்சுவர் பகுதிக்குப் பின்னால், காணப்படும் மாதுங்கா மலையில், பல்வேறு செல்வந்தர்களாலும், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாலும் கட்டப்பட்ட சில ஆலயங்கள் காணப்படுகின்றன. இங்கிருந்து துங்கபத்ர நதிக்கரையில் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட விருபக்ச ஆலயத்தைப் பார்க்க முடியும். சிவபெருமானுக்கு, மற்றும் பம்பா தேவியார், புவனேஸ்வரி தேவியார் ஆகியோருக்கு இவ்வாலயம் அமைக்கப்பட்டது. நாடு, கஷ்ட நிலையில் இருந்த காலத்திலும் இங்கு மக்கள் தொடர்ந்து வழிபாடியற்றி வந்துள்ளார்கள். கட்டிடக்கலைப் பெருமைகளோடு விளங்கும் இவ்வாலயத்தில் உள்ள லட்சுமி என்னும் யானை இங்குவரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் அளிப்பதும் குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான ஆலயங்களின் இருபக்கங்களிலும், மாடிகளுடன் கூடிய மண்டபங்களுடன் பரந்த கடைத் ار
தொகுதிகளும் காணப்படுகின்றன.
 
 

அத்துடன் முஸ்லிம் மற்றும் இந்துப் பண்பாடுகளுடன் காணப்படும் தாமரை மாளிகையும் (Lotus mahal) யானை பாதுகாப்பு நிலையங்களும், பார்வையாளர்களை மகிழ்விக்கும் பான்மையினவாகும். யானைகளுக்கென விசேடமாகக் கட்டப்பட்ட பாதுகாப்பு நிலையங்கள் அக்காலத்தில் யானைகள் அங்கு பெற்றிருந்த முக்கியத்துவத்தைக் காட்டுவதாக உள்ளது. அத்துடன் மூலக்கோபுரங்கள், தனநாயக்கரின் திறைசேரி, மகாநவமி திப்பா (அரங்கம்) பல்வேறு வகையான குளங்கள், வாவிகள், மண்டபங்கள் வரிசையான தூண்கள் உள்ள மண்டபங்கள் ஆகியன இந்நகரின் முக்கிய கட்டடக்கலைச் 40060) u பறைசாற்றுபவையாக விளங்குகின்றன. மேற்குறிப்பிட்ட மகாநவமி மண்டபத்தில் தான் பெரும் செல்வாக்கோடு விளங்கிய மன்னர் கிருஷ்ணதேவ ராயர், ஒன்பது நாட்களும் வந்திருந்து, மகாநவமி விழாக்களையும் கொண்டாட்டங்களையும் கண்டுகளிப்பாராம்.
56 சங்கீதத் தூண்களைத் தன்னகத்தே கொண்ட வித்தல ஆலயமும், அவ்வாலய வீதியில் கம்பீரமாக நிற்கும் மகத்தான கல்லிலான ரதமும் வியப்பைத் தருபவையாகும். இத்தூண்களில் தட்டும்போது, அருமையான நாதங்கள் எழுந்து பரவசத்தை ஏற்படுத்தும். அத்தைகையதொரு சிருஷ்டித்திறனும், கற்பனைத்திறனும் தொழில்நுட்பத்திறனுமே இந்நினைவுச் சின்னங்கள் கொண்ட இவ்விடத்தை ஐ.நா 1986 இல் உலக
தொன்மைமிகு இடமாகப் பிரகடனம் செய்யத் தூண்டியது.
அனுமான் பிறந்ததாகக் கூறப்படும் ஆஞ்சநேயர் மலையும் இங்குதான் உள்ளது. சமீபத்தில்

Page 31
ஹம்ப்பியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள், ஏராளமான மாளிகைக் கட்டடங்கள், பல்வேறு அரங்குகளின் தலங்கள் ஆகியவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. இவற்றுள் ஏராளமான கல்லிலான உருவங்கள், அழகான சுடுமண் பொருட்கள், மாளிகைகளை அழகுபடுத்திய உருவங்கள் ஆகியனவும் அடங்கும். அத்துடன் அங்கு தங்கம் மற்றும் செப்பு நாணயங்கள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், மகாநவமி அரங்கிற்கு தென் - மேற்காக சதுரப்படி அமைந்த குளம், களிமண் பொருட்கள் கி.பி. 23 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெளத்த சிற்பங்கள் ஆகியனவும் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. క్ష
- gig,
தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹம்ப்பி நகரம், பெங்களுரில் இருந்து 353 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. கரடுமுரடான நிலப்பரப்பில் அமைந் துள்ள இந்த அழிவுற்ற நகரம், கடல் மட்டத்தில் இருந்து 467 மீட்டர் உயரத்தில் உள்ளது. ஏப்பலில் இருந்து ஜூன் வரையான காலம் இங்கு கோடை காலமாகும். அக்டோபரில் இருந்து பெப்ரவரி வரை மாரி காலமாகும். ஜூனில் இருந்து ஆகஸ்ட்
வரை மழைக்காலமாகவும் உள்ளது.
வுறம்ப்பியைச் சென்று U/77řGODGJ (CSPC அக்டோபரில் இருந்து மார்ச் வரையான காலம் உகந்ததாகும். வுறம்ப்பியின் பிரதான உல்லாசப்
பயணத்துறை இடங்களை இரு விசாலமான
 
 
 

& கலைக்கேசரி 31
பகுதிகளாகப் பிரிக்கலாம். வுறம்ப்பி பஸார் பகுதியும் கமலபுரத் தின் அருகில் அரச நிலையமுமாகும். வுறம்ப்பி பஸார் பகுதியில் /5 ஆம் நூற்றாண்டின் விருபக்ஷ ஆலயம் உள்ளது. அது நகரில் மிக பழைமையான சின்னங்களில் ஒன்றாகும்.
தரையிலிருந்து சுமார் 50 மீட்டர் உயரத்தில் கோவிலின் உச்சி உள்ளது. பிரதான சந்நிதியில் விருபக்ஷர் அமர்ந்திருக்கிறார். இவர் சிவபெருமானின் ஒரு மூர்த்தியாகும். விருபக்ச ஆலயத்திற்கு தெற்காகவுள்ள வுேறமகுத மலையில் பண்டைய அழிவுச் சின்னங்கள், குதூப்பின் ஆலயங்கள், நரசிம்மரின் ஒற்றைக்கற் சிற்பம் ஆகியன காணப்படகின்றன. வுேறமகுதா மலையில் நின்று ஹம்ப்பி பஸாரைத் தெளிவாக பார்க்க முடியும் . வுறம்ப்பி பஸாருக்கு 2 மைல் கிழக்காக /6ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக பமுைமை மிக்க சின்னமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட வித்தால் ஆலயத்தைப் பார்க்கமுடியும்.
ஹம்ப்பிக்கு எப்படிச் செல்வது ? வுறம்ப்பியில் ரயில்வே நிலையம் இல்லை. அருகான ரயில்வே நிலையம் வுெறாஸ் பெற்றிலவ் உள்ளது. இது ஹம்ப்பியில் இருந்து /3 கி.மீட்டர் தூரத்ததில் உள்ளது. வுெறாஸ்பெற்றிலிருந்து ஹம்ப்பிக்குச் செல்லலாம். அங்கிருந்து பஸ்ஸில் அல்லது ஆட்டோ, றிக்ஷோவில் வுெறாஸ்பெற்றுக்கு வரலாம். வுறம்பியின் பிரதான பஸ் நிலையம் ஹம்ப்பி பஸார் பகுதியில் உள்ளது. வுறம்ப்பியில் அதிக வுேறாட்டல்கள் இல்லை. ஆனால் லொட்ஜுகளும் விருந்தினர் விடுதிகளும் உள்ளன.இங்கு மலிவாக இட வசதிகள்
கிடைக்கும்.

Page 32
EB 32 புராதன சின்னம்
இலங்கையில் புராத
--
 
 
 
 

தன சந்திர வட்டக்கல்

Page 33
(6) ரும்பாலான பண்டைய புராதன அரைமதி வடிவான (UA கற்கள் இலங்கையின் தொன்மைமிக்க
இராஜதானிகளான அநுராதபுரம், பொலனறுவை மற்றும் அபயகிரி ஆகிய பகுதிகளில் மலிந்தும், செறிந்தும், நிறைந்தும் காணப்பட்டபோதும் பொதுப்படையில் சிங்கள பெளத்த மதப் பாரம்பாரியம் மிகுந்து காணப்படும் பகுதிகளில் பெருமளவு சித்திரம் செரிந்த சந்திரக்கற்களை நாம் பெரிதும்
காண முடிகின்றது.
இவ் அரைமதி வடிவிலான வாசற்படிகளுக்குக் கீழ் அமைந்துள்ள இச் சந்திரக்கல் அலங்கரிப்பு படிக்கல்லானது வெறும் அலங்காரச் சின்னமாக மட்டும் கருதப்படாதவிடத்தும் தத்துவார்த்த ரீதியில் குறிப்பாக மனித வாழ்க்கையின் பலதரப்பட்ட பரிமாணங்களை எமக்கு எடுத்தியம்பும் கலாச்சார மனித பண்பாட்டியல் மிக்க கலைக்கூறுகளாகத் திகழ்கின்றன.
பண்டைய காலத்தில் இவ் அரைமதி வடிவான சந்திரக் கற்களை அரண்மனை வாயிற்படிகளிலும் பெளத்த மதக் கோயில்கள், நீர்த்தேக்கங்கள், நீர் நிலைகள் என்பனவற்றின் வாயில்களிலும், மற்றும் கருத்தரங்கு மண்டபங்களின் வாயிற்படிகளிலும் இவை தவிர அரசர்கள் தம் அதிகாரத்திற்கு உட்பட்ட அதிகாரிகளைச் சந்திக்கும் மகாநாட்டு மண்டபப் படிக்கட்டு வாயில்களிலும் நாம் காண முடிகின்றது. அன்றுதொட்டு இன்றுவரை இப்பாரம்பரியமானது சிங்கள பெளத்தமதக் கலை கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றது. ஆரம்பத்தில் அநுராதபுரத்திலேயே இவ்வரைமதிச் சந்திரக் கற்கள் அதிமிகையாகக் காணப்பட்டன. ஆயினும் அவற்றில் ஆறு வகையான சந்திரக் கற்களே உயர்ந்தவையாகக் கருதப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
இவ்வுயரிய சித்திரக் கலையம்சம் செறிந்த சந்திரக் கற்களுக்கு நடுவே அழகிய தாமரை மலர் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தாமரை மலரைச்சுற்றி நான்கு வகைப் பூதங்கள, சித்திரிப்பு நிறைந்த விலங்கினங்கள் மற்றும் அன்னப்பறவை என்பன இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. அநுராதபுர மாவட்டத்தில் காணப்படும் அரைமதி வடிவான சந்திரக்கற்களும் பொலனறுவை மாவட்டத்தில் காணப்படும் அரைமதிச் சந்திரக்கற்களும், அடிப்படையில் மாற்றமுற்று காணப்படுகின்றன. காரனம் பொலனறுவையானது கணிசமான அளவு இந்து மத ஆதிக்கத்திற்கும் செல்வாக்கிற்கும் உட்பட்டிருந்த ஒர் புராதன இராஜதானியாகும்.
இவ்வகையில் இங்கு காணப்படும் சந்திரக் கற்களில் எருமை உருவமற்ற ஏனைய சந்திரக் கற்களில் காணப்படும் விலங்கினங்களைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. ஆயினும் அநுராதபுர பகுதியில் காணப்படும் சந்திரக் கற்களில் யானை, சிங்கம், குதிரை, எருமை ஆகிய அத்தனை விலங்கினங்களையும் ஒருங்கே காணமுடிகின்றது. இக்கற்களில் இடம்பெறும் யானையானது பிறப்பினை
 
 
 
 

எடுத்தியம்புவதாகவும் இதனை சமஸ்கிருதத்தில் கூடிஜாதி; எனக்குறிப்பிட்டு அழைக்கப்படுவதையும, வெறும் பிறப்பினை மட்டுமன்றி, பிறப்பு, இறப்புச் சக்கரத்தையும் வெளிப்படுத்துவதாகவும் இவ்யானை உருவம் விளங்குவதை நாம் காண முடிகின்றது. அவ்வாறே கூழஜாறா எனக்குறிப்பிட்டு அழைக்கப்படும் குதிரையானது வாழ்வில் 6أول للأ முதிர்வினையும் இறப்பினையும் குறிப்பிடுவதாக அமைகின்றது. இக்கல்லில் பொழியப்பட்டுள்ள சிங்கமானது கூடிவாதி என்றும் வாழ்வில் நோய் நொடிகளைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. அவ்வாறே எருமையானது கூடிமரண என்றும் வாழ்வில் எவ்வுயிர்க்கும் தவிர்க்க முடியாத இயற்கையின் நியதியினை எடுத்தியம்புவதாகவும் கருதப்படுகின்றது. மீண்டும் யானையினை இப்படிக்கல்லில் காண்பதன் மூலம், வாழ்வின், பிறப்பு இறப்பு சக்கரத்தை விளக்குவதாக அச் சந்திரக்கல் அமைகின்றது. அதனையே கூடிசம்சார எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது.
அவ்வாறே இதில் இடம் பெறும் அன்னப் பறவையானது ஆங்காங்கே சித்திரிக்கப்பட்டுள்ளதனைக் காணமுடிகின்றது. பாலையும் நீரையும் பிரித்தறியும் சுபாவம் மிக்க அன்னப் பறவை வடிவமானது இப்படிக் கல்லில் இடம் பெறுவதிலிருந்து வாழ்வில் நன்மையும் தீமையும் ஒருங்கே இடம் பெறுவதையும், மனிதன் இப்பாகுபாட்டை தன் பகுத்தறிவு, பகுத்தாய்வுத்திறன் மூலம் பிரித்து தன் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளல் வேண்டும் என்பதினை எடுத்தியம்புகின்றது.
மேலும் இக்கல்லானது மனித வாழ்க்கையில் ஆடம்பரத்தையும் அதேசமயம் கஷ்டத்தையும் ஒருங்கே பிரதிபலிப்பதாக அமைகின்றது என்பதினையும், இறுதியில் மனிதன் நடுநிலையினைக் கையாள்வதன் மூலம் முக்தி எனும் பேரானந்த நிலையை அடைய வாய்ப்பளிப்பதையும் இச்சித்திரக்கல் எடுத்தியம்புகின்றது.
இப்படிக்கல்லில் இடம்பெறும் தாமரை மலரானது பெளத்த மதத்தில் சிங்கள மக்களின் வழிபாட்டில் முக்கிய இடம் பிடித்துள்ள மலரைக் குறிப்பிடுவதாக அமைகின்றது. இன்றுவரை பெளத்த கோயில் வழிபாட்டிற்கு தாமரை மலரின் பயன்பாடு, சமன் கடவுள் கைகளில் தாமரை மலரைத் தாங்கி நிற்கும் தோற்றத்தையும் பெளத்த விகாரைத் தூண்களை அலங்கரிக்கும் சிற்பமாக இத்தாமரை மலர் இடம் பெறுவதையும் காண முடிகின்றது. இவ்வாறு பெளத்த மத வழிபாட்டில் தாமரை மலரின் பயன்பாட்டின் உன்னதத்தினை இச்சந்திரக் கற்கள் எடுத்துக்காட்டுகின்றன. அவ்வாறே, கல்லின் வடிவமைப்பை மேலும் மெருகூட்டும் வண்ணம் செடி, கொடி, இலை, தழை ஆகியவை நிறைந்து காணப்படுகின்றது. ஏனவே பண்டைய கால அரைமதிச் சந்திரக்கற் சிற்பமானது, வெறும் அலங்கரிப்பு நிறைந்தவையாக மட்டுமன்றி இன்றுவரை அதன் தனித்துவத்தைக் காட்டுவதாக அமைகிறது
- சுபாஷினி பத்மநாதன்

Page 34

இலண்டன் தொல்லபாருட்காட்சியகத்தில் தொன்மைமிகு இந்துக் கடவுளரின்
திருவுருவச் சிலைகள்
தியும் அந்தமுமில்லாத சமயம் என்ற பெருமைக்கும் சிறப்புக்கும் உரிய இந்து சமயமாகும். தோற்றுவாய் தெரியாத தொன்மையான சமயம் இந்துசமயம் என்பது ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இயற்கையை வழிபடும் வழிமுறை அதேபோன்று இத்தகைய இறை சக்தியாகக் கொண்டு போற்றும் நம்பிக்கை இந்து சமயத்துக்குரிய சிறப்பு. சூரிய வழிபாடு இதற்கொரு சான்று. உலகிலுள்ள அத்தனை இயற்கை உருவாக்கங்களுக்கும் இறையுரு கொடுத்து வழிபட்டு வந்த மரபின் வழிவந்ததே தெய்வத் திருவுருவ வழிபாடுகளாகும். அருவுருவாய் ரூபமாய் அடங்காததாகி அடங்கனுமாகி அதற்கப்புறத்துமாகி நின்று ஒருருவாய் உயிராய் உயிர்க்குயிராய் நின்றியங்கும் ஒப்பிலான் என்று இறைவனைப் பாடியுள்ளார் ஒரு சித்தர். எங்கும் எதிலும் இறைவனைக் காணும் பண்பு இதில் வெளிப்படுகின்றது.
உருவமாய்க் கண்ட இறைசக்தியைப் பல்வேறு திருவுருவ வடிவங்களில் ஆக்கிப்போற்றி வழிபட்டது நமது மரபாக அன்றும் இருந்தது, இன்றும் உள்ளது.
இந்த வழிபாடானது இந்து சமயத்தின் வழைமைக்கும், பண்டைய பரந்துபட்ட இருப்புக்கும் கட்டியம் கூறி நிற்கின்றது என்றால் அதுவே உண்மை. அந்த வகையிலே இந்துக்கள் பல நூற்றாண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் பரந்து வாழ்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தும், உறுதிப்படுத்தும் சான்றுகளைத் தன்னகத்தே கொண்டதாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான இலண்டன் மாநகரிலே அமைந்துள்ள பிரிட்டிஷ் மியூசியம் என்கின்ற இங்கிலாந்து தொல்பொருள் காட்சியகத்தில் காணமுடிகின்றது. இலண்டன் மாநகரின் மத்தியிலே மேற்படி சிறப்புமிக்க தொல்பொருள் காட்சியகம் அமைந்துள்ளது. இங்கிலாந்திற்குச் சுற்றுலா செல்லும் சகலரையும் கவரும் இடமாகவும், ஆய்வுக்குரிய இடமாகவும் இவ்வருங்காட்சியகம் விளங்குகின்றது. உலகின் பல நாடுகளிலிருந்து கொண்டு GJOUUci ( தொல்பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்தோனேசியா, மலேசியா, லாகோஸ், தாய்லாந்து, பர்மா, பிலிப்பைன்ஸ், கொரியா போன்ற தூர கிழக்கு நாடுகளிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த தெய்வங்களின் திருவுருவச் சிலைகளையும் காணமுடிகின்றது. கருங்கற் சிலைகள்
மட்டுமன்றி செப்புச் சிலைகளும் உள்ளன.

Page 35
அட்டைப்பட விளக்கம் : தென்னிந்தியாவில் அகழ்ந்து எடுக்கப்பட்ட கிறிஸ்துவுக்குப் பின் 16ஆம் நூற்றாண்டின் மத்தியைச் சேர்ந்த பார்வதி சிலை இது.
வெண்கலத்தினாலான இந்தச் சிலை அபூர்வமானதாகக் கருதப்படுகின்றது. இச்சிலை பார்வதியை உருவகித்து நடனம் ஆடும் நங்கையாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. கால்கள், இடுப்பு, கழுத்து போன்ற அங்கங்களில் இவ்வித நடன முத்திரைகள் அழகிய கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. (லண்டன் தொல்பொருட்
காட்சியகத்தின் விளக்கம்)
இவை போன்று வட அமெரிக்கா,
மத்திய அமெரிக்கா கரிபியன் நாடுகள், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆபிரிக்க கண்டத்தின் மொரிஷியஸ், தென்னாபிரிக்கா, கென்யா, கொங்கோ, தன்சானியா, மடகாஸ்கர், உகண்டா உள்ளிட்ட நாடுகளிலும் இந்து சமயம் ஆதி முதல் நிலைபெற்றி ருந்தது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. மத்திய ஆசியா வின் ஆப்கானிஸ்தான் நாட்டிலும் இந்துசமயம் பண்டைய நா ளில் ஆழவேரூன்றி இருந்துள்ளது. சிந்துவெளி உலகின் பழைமையான நாகரீகமாக கொள்ளப்படுகின்றது.
இன்றைய பாகிஸ்தானின் பெரும்பகுதி பண்டைய சிந்துவெளிப் பகுதியாகக் கொள்ளப்படுகின்றது. பாகிஸ்தான் நாட்டிலும் பங்ளாதேஷ் நாட்டிலும் புராதன இந்து ஆலயங்கள் இன்றும் உள்ளன. கம்போடியா, தாய்லாந்து எல்லையிலுள்ள பழைமைவாய்ந்த சிவாலயம் உலகின் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி நாடுகளில் இருந்தும் பெறப்பட்ட இந்து திருவுருவ சிலைகளிலும் தொல்பொருட் காட்சியகத்தில் காணக்கூடியதாக உள்ளது.
வட இந்திய சிற்பக்கலையை உலகிற்கு எடுத்துக்காட்டும் திருவுருவங்கள் உள்ளமை போன்றே தென்னிந்திய, தமிழக கலைச் சிறப்புகளை வெளிப்படுத்தும் சிலைகளும் நிறையவேயுள்ளன. சோழர், பல்லவர், பாண்டியர், நாயக்கர் எனக் காலவரையறையுடன் கூடிய சிறப்புமிக்க திருவுருவங்கள் வரலாற்று ரீதியாக இந்துக்களதும் தமிழர்களதும் பல்வேறு சிறப்புகளின் வெளிப்பாடாக உலகின்
கவனத்தைக் கவரும் வண்ணம் உள்ளது என்பதை ஏற்றுக்
கொள்ள வேண்டும்.
 
 
 
 
 

ஆங்கிலேயர் உலக நாடுகள் பலவற்றிலிருந்து கலைப் பொக்கிஷங்களைக் கவர்ந்து தமது நாட்டிற்குக் கொண்டு சென்று விட்டார்கள் என்று ஒரு புறம் குறை கூறப்பட்டாலும் கூட, உலகின் முக்கிய நகரமான இலண்டன் மாநகரிலே
இந்துக்களின் உலகளாவிய பண்டைய இருப்பு, பெருமை,
பண்பாடு, கலைத்திறன் உட்பட பல சிறப்புக்கள் வரலாற்று ரீதியாக ஒருங்கமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது
என்பது மன நிறைவைத் தருகின்றது. ა.
பித்தா பிறை சூடி' என்று தொடங்கும் தேவாரம் தமிழ் மொழியில் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் உள்ளமை குறிப்பிட்டுக் கூறப்படவேண்டிய ஒன்றாகும்.
இங்கிலாந்து தொல்பொருள் காட்சியகத்தில் பல்வேறு பழைமையும், சிறப்பும், கலையம்சங்களும் பொருந்திய இந்துத் தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இந்துக் கடவுள்களின் திருவுருவச் சிலைகளைத் தமது நாட்டிற்குக் கொண்டு சென்று காட்சிப் பொருட்களாக வைத்துள்ளனர்.
கண்னைக் கவரும் வண்னம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இத்திருவுருவங்கள் தொல்பொருட் காட்சிச்சாலையைப் பார்வையிட வரும் பல்வேறு நாடுகளின் உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் நிலைமையைக் காணக்கூடியதாகவுள்ளது. தொல்பொருள் காட்சிச்சாலையில் வழிபாட்டிற்குரிய திருவுருவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்ற மனத்தாக்கம் ஒருபுறம் ஏற்பட்டாலும் கூட உலகின் மிக முக்கிய நகரமொன்றில் இந்து சமயத்தின் தொன்மை, கலைச்சிறப்பு, மேன்மை, வரலாறு, இருப்பு

Page 36
ឆ្នាញ់ 塞 36
என்பவற்றை தெளிவாக பல்வேறு தரப்பினரும் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருப்பது மகிழ்ச்சிக்குரியது.
பல்வேறு நாடுகளிலிருந்து ஆங்கிலேயரால் எடுத்துவரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ள UG00760) (U பெருமைகளை வெளிப்படுத்தும் ஆதாரங்களாகக்
கொள்ளப்படும் தொல்பொருட்களில் உலகின் இந்து சமயத்தின் சிறப்புக்கும், பழைமைக்கும் கட்டியம் கூறி நிற்பவையாக, ஆதாரங்களாக தொல்பொருட்களாகக் கணிக்கப்படும் இந்துக் கடவுளரின் திருவுருவச் சிலைகள் கொள்ளப்படுகின்றன. இந்துசமய தெய்வங்களைச் சித்திரிக்கும் ஜப்பானிய பழைமை வாய்ந்த ஓவியமொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றை மறைக்க, அழிக்க பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இக்காலகட்டத்தில் இந்துக்களின் கலைப் பொக்கிஷங்களாக இங்கிலாந்து தொல்பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்துக் கடவுளரின் பலநூறு சிலைகள் அவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவனவாயுள்ளன என்று கூறலாம்.
இந்தோனேசியாவின் ஜாவாவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் பிள்ளையார் வழிபாடு நிலவியதை உறுதிப்படுத்தும்
 

பிள்ளையார் திருவுருவங்களும் அதேபோல் கம்போடிய நாட்டில் சிவவழிபாடு நிலவியதற்கு கட்டியம் கூறிநிற்கும். சிவனின் திருவுருவங்களும் அந்நாடுகளில் அதாவது தூரகிழக்கு நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்துசமயம் நிலைபெற்றுப் பரவியிருந்ததென்பதைத் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்துகின்றது என்பது வெளிப்படையாகும்.
பிள்ளையார், முருகன், சிவன், அம்மன், பிரமா, விஷ்ணு, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர் உட்பட பல்வேறுபட்ட கலையம்சங்களை வெளிப்படுத்துவனவாயுள்ளன.
வடஇந்திய, தென்னிந்தியக் கலை நுணுக்கங்களைப் பிரதிபலிக்கும், வெளிப்படுத்தும் கண்ணையும், கருத்தையும் கவரும் வண்ணம் பண்டைய திறமைமிக்க சிற்பிகளால் துல்லியமாக வடிவமைக்கப்பட்டவையாகவும் தமிழகத்தை ஆண்ட சோழர், பல்லவர், பாண்டியர், நாயக்கர் ஆகியோரது காலங்களில் உருவமைக்கப்பட்டவையாகவும் கருங்கற் சிலைகள் விளங்குகின்றன. அதேபோல் வெங்கலத்திலாலான நடராசப் பெருமானின் திருவுருவங்களும் இலண்டன் மாநகரில் நடராஜ தத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்தும் வண்ணம்
இடம் பெற்றுள்ளன. ஒரு இனத்தின் பண்டைய இருப்பு, சிறப்பு, மேன்மை, வளம், வாழ்வு என்பவற்றை அறிந்துகொள்ள பல

Page 37
冪
வழிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அவற்றிலே
பொருட்கள், கல் வெட்டுக்கள் என்பன முக்கியத்துவம் வாய்ந்தவை அதனாலேயே தொல்பொருள் ஆய்வுக்கும், தொல்பொருள் காப்புக்கும் உலக அளவில் முக்கித்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. தொல்லியல் ஆய்வு ஒரு கலையாகவே கொள்ளப்படுகிறது.
தொல்பொருள்களைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவம், சிந்தனை நம் மத்தியிலே அருகிவிட்டது என்றே கொள்ள வேண்டியுள்ளது. தொல்பொருளியல் வரலாற்றுடன் தொடர்புடையது. வரலாற்றை உறுதிப்படுத்தும் சான்றுகளாக தொல்பொருட்கள் விளங்குகின்றன. ஒரு இனத்தின் வரலாற்றை மூடிமறைக்க தொல்பொருட் சான்றுகளை அப்புறப்படுத்துவது நடைமுறையிலுள்ள வழக்கமாயமைந்து விட்டது.
இவ்வாறான நிலைமையில் உலகின் பல்வேறு மொழிகள் பேசும், பல்வேறு சமயங்களைப் பின்பற்றும் பல்வேறு தரப்பட்ட மக்கள் சென்று பார்வையிடும் இலண்டன் தொல்பொருள் காட்சியகத்தில் தொன்மைமிக்க இந்து தெய்வத் திருவுருவங்கள் தனியிடத்தில் காலம், அவை இருந்த இடம் போன்ற விபரங்களுடனும் அவை எத்தெய்வத்துடையது என்ற
விளக்கத்துடனும் வைக்கப்பட்டிருப்பது மகிழ்வுக்குரியது. அது
 
 

தமிழ் a.
Stosuästään ܐܸܢ
37
மட்டுமல்ல உலகலாவிய ரீதியில் இந்து சமயத்தின் பண்டைய
இருப்பை, சிறப்பை, வளத்தை, மேன்மையை வெளிப்படுத்துவடன் இந்து சமயத்தைப் பின்பற்றிய, பின்பற்றும் மக்களது கலாசாரம், பண்பாடு என்பவற்றையும் உலகறியச் செய்கின்றது.
தொல்பொருட் காட்சியகங்களில் உள்ள தொன்மை மிக்க வரலாற்றுச் சான்றுகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். பாதுகாக்கப்பட வேண்டும். வெளிப்படுத்தப்பட வேண்டும். இதன்மூலம் குறிப்பிட்ட இனத்தின், மொழியினரின், சமயத்தினரின் பெருமை மேலோங்கும். கெளரவம் கூடும் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அதனால் சமயம், மொழி சார்ந்த வரலாறுகளும் தொல்பொருட் சான்றுகளும் ஆவணப்படுத்தப்பட்டு சகலரது கவனத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும்.
Y o
- த. மனோகரன்
(20// மே மாத இதழில் இங்கிலாந்து வேல்ஸ், ஸ்கந்த வேல் திருத்தலம்' என்ற கட்டுரையை எழுதியவர் த.மனோகரன்.
அவரது பெயர் குறிப்பிடப்படாமைக்கு வருந்துகிறோம் - ஆ~ர்)

Page 38
យ៉ាម៉ាឃី 度 38 uniGior Goofleiðir un JLI
குெய்வங்களை மனிகுறி
மிழில் அனைத்து இந்திய இலக்கியப் பின் புலத்தில் ހަމަ பார்க்கின்றபோது, அதில் மிக சிறப்பான அம்சம் ஒன்று பக்தி இலக்கியம் என்று சொல்லலாம். தேவாரம், திருவாசகம், பாசுரங்கள் ஆகியவற்றைவிட பகவத்கீதை காலத்துக்கு முந்தியது எனக் கொள்ளப்படினும், அதில் தமிழ் நாட்டில் காணப்பட்ட பக்தி உணர்வு மேலோங்கி நிற்பதாகச் சொல்லமுடியாது.
நமது பக்தி மரபில் அடிப்படை அம்சம் என்னவெனில், நாம் தெய்வங்களை மனித நிலைப்படுத்தி, மனித நிலையினில் நமது சாதாரண உறவினர்களுடன் எத்தகைய உறவு நிலையைக்
கொண்டிருக்கிறோமோ அத்தகைய உறவு நிலையை நாம்
தெய்வங்களோடு வைத்துக் கொள்வது என்பதாகும். இதனை பக்தி மேம்பட்ட ஒர் நிலையில் மேற்கொள்ளுகிறோம். சாஸ்திரிய முறையில் இந்த உறவு முறைகள் ஆண்டான் அடிமை பாவம்,
 

லைப்படுத்தி நோக்குகுல்
கார்த்திகேசு சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர்
நாயகன் - நாயகி பாவம், மித்ர பாவம் என்ற வகையில் தெய்
வங்களோடு உள்ள உறவைச் சுட்டுவர்.
சுந்தரமூர்த்திநாயனார் தெய்வத்தை நண்பனாகக் கொண்டார். திருநாவுக்கரசர் தன்னை தெய்வத்தின் அடிமையாகவே கருதினார். திருஞானசம்பந்தர் தன்னை
தெய்வத்தின் குழந்தையாகப் பாடியிருக்கிறார்.
இவை இலக்கியத்தில் உயர்ந்த நிலையில் கூறப்பட்டாலும், இன்று நமது தமிழ் மக்கள் வாழ்வில், நாம் தெய்வங்களுடனான ஓர் உணர்ச்சிமிகு உறவு நிலையை வைத்துக் கொள்ளுகிறோம் என்பதாகும். அந்த வகையில் நேர்த்திக் கடன் வைப்பது என்பது நம்பிக்கையின் ஒரு வெளிப்பாடாகும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், செய்த பிறகு தருவேன் என்பதான அந்த உற வுநிலை கிராமங்களில் காணப்படுவதைக் கூறலாம். எனக்கு தெரிந்த உதாரணங்களைத் தளமாகக் கொண்டு இதற்கு விளக்கம் தருகிறேன்.
கரவெட்டி, தச்சன் தோப்புப்பிள்ளையார் கோவில், அக் கோவிலைச் சுற்றி உள்ள பல்வேறு சாதி மக்கள் குழுமத்தினருக்கான உரிமைக் கோவில் எனலாம். இக் கோவிலைப் பற்றிப் பேசும் போது மிகச் சாதாரண முறையில் தச்சன் தோட்டத்துக் கிழவன்' என்று கூறுவர். பிள்ளையாரை இங்கு கிழவன் என்பர். அம்மனைப் பற்றிப் பேசும்போது இன்று கூட அம்மாளாச்சி ஆச்சி என்று சொல்வது வழக்கம். இந்த ஆச்சி என்ற சொல், தாயையும் குறிக்கும், பாட்டியையும் குறிக்கும். அம்பாளைத் தாயாகவும் பாட்டியாகவும் பார்க்கும் மனோபாவம் நம்மிடம் உள்ளது. முருகனைப் பொறுத்தவரை இந்த உறவில் இன்னொரு அம்சம் முக்கியத்துவப் படுத்தப்படுகிறது. பருத்தித்துறை எம்.பியாகவிருந்த காலஞ் சென்ற துரைரத்தினம் என்னோடு உரையாடிய போது, தான் சந்நிதிப் பொடியனைப் போய்ப் பார்த்திட்டு வந்ததாகக் கூறி னார். 'சந்நிதிப் பொடியன்' என்று குறிப்பிட்டது சந்நிதி முருகனையாகும்.
தொண்டைமானாறு செல்வச் சந்நிதி உறவு முறையைப் பார்க்கின்றபோது, முருகனோடு ஒர் அத்தியந்த உறவுமுறை 義 பேணப்படுவதைக் காணலாம். கோவிலுக்கு வெள்ளிக் கிழமைகளிலோ அல்லது திருவிழாக் காலங்களிலோ தான் போகவில்லை என்பது முருகனுக்குத் தெரிந்துவிடும் என நினைப்போர் பலர் உள்ளனர். தான் கோயிலுக்குச் செல்வதையும் கும்பிடுவதையும் நாம் அவனுக்கு எவ்வெவற்றை வைத்துக் கும்பி டுகிறோம் என்பதனையும் முருகன் மிகுந்த கண்காணிப் புடன் கவனிக்கிறான் என்பது

Page 39
எங்களது நம்பிக்கையாக உள்ளது.
இதன் காரணமாக 'நான் போன வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகவில்லை. இந்த வெள்ளிக்கிழமை கட்டாயம் போக வேணும்' என்று சொல்வார்கள். நமது வருகையை முருகன் எதிர்பார்ப்பது போன்ற ஒரு நம்பிக்கை இதில் தொனிக்கிறது. இவையாவற்றுக்கும் மேலாக, தங்களுக்கு கஷ்ட, நஷ்டங்கள் ஏற்படும்போது, அவற்றை தவிர்க்காது அல்லது குறைக்காது நம்மை தெய்வம் இன்று கஷ்டப்படுத்துகின்றது என்ற அபிப்பிராயமும் எம்மிடம் உள்ளது. அவ்விதம் தெய்வம் செய்வது பிழை என்பது பாமரத்தனமான சிந்தனையாகும்.
நாங்கள் வளர்த்தாத்தை' என அழைத்து வந்த என் அம் மாவின் தாயார் பார்வதிப்பிள்ளை, தனது கணவரை 31 ஆம் வயதில் இழந்தபின் மிகவும் சிரமப்பட்டு, என் அம்மாவையும் என் அம்மானையும் வளர்த்தெடுத்தார். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது, அவ ஒரு நாளும் கோவிலுக்குச் செல்வதில்லை. 'ஏன் வளர்த்தாத்தை நீங்கள் கோவிலுக்குப் போவதில்லை? என்று கேட்டேன் அவன் குருடன். அவன் என்னை இப்படிக் கஷ்டப்படுத்துகிறான். அதற்காக நான் கோவிலுக்குப் போவதில்லை' என்று கூறுவார். அவர் சொல்லும் முறையில் தான் தெய்வத்துடன் அவருக்குள்ள அந்நியோன்யம் தெரிகிறது. இதனை வன்பக்தி என்று தமிழ்ப் பாரம்பரியத்தில் கூறுவர். (வன்றோண்டர் நாயனார்) இப்படிச் சொல்லுகிற எங் களை வளர்த்தாத்தை நாங்கள் கிரமம் தவறாது சமயக் கடமை களைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவார்.
இவ்விதம் ஒவ்வொரு இல்லத்திலும் தெய்வங்களுடனான உறவு உண்டு. இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு மேற்பட்ட குடும்பங்களை வசிப்பிடமாக உள்ள வீடுகளில் பெரும்பாலும் ஒரு மரத்தின் அடியில் (அது சற்று அசாதாணமான மரமாகவும் இருக்கும்.) வைரவர் அல்லது காளியாத்தை குடியிருப்பதாக நம்புகிறோம். பெரிய வளவுடன் கூடிய இல்லங்களில் காணப்படும் புற்றுக்கு பால்வைத்து, மலர் வைத்து வணங்கும் நம்பிக்கையையும் காண்கின்றோம். இது நாகவழிபாட்டின் அடிப்படையில் வளர்ந்ததாகும்.
எங்கள் வீட்டு நாவல் மரத்தில் அப்படி ஒரு காளி வழிபாடு உண்டு. எனது வளர்த்தாத்தையின் நம்பிக்கையின் படி, இரவில் எங்கள் வீட்டு முற்றத்தில் அல்லது சாலையில் உள்ள பொருட்கள் களவு போகாமல் இருப்பதற்குக் காரணம், காளி ஆத்தை இரவில் காவல் புரிகிறா என்ற நம்பிக்கை ஆகும். கடந்த 30 வருட யுத்த அனுபவத்தின்பின், இந்த அமைப்பு முறைகள் சிதைந்து போயுள்ளன என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆயினும் மதம் அல்லது சமயம் என்பதன் அத்தியாவசியம் பற்றி கார்ல் மாக்ஸ் கூறியதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
'மதம் என்பது ஆத்மா இல்லாத உலகத்தின் ஆத்மா, இதயத்தை இழந்த உலகத்தின் இதயம். இக்கூற்றினை எவ்வாறு

塞 ក្តាញអ៊ែឌែ 39
விளங்கிக் கொள்கிறோம்? சிலர் இதனைச் சந்தேகிக்கக் கூடும். இதனை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் ?
இங்குதான் மதத்தின் பிரதான அம்சம் தொழிற்படுகிறது. ஆங்கிலத்தில் faith எனக் குறிப்பிடுகின்றோம். faith என்பது நம்பிக்கை என்பதிலும் பார்க்க விசுவாசம் என்று கூற வேண்டும். ஏனெனில் நம்பிக்கையை hope எனக் குறிப்பிடலாம். கிறிஸ்தவ ஆகமத்தில் உள்ள 'நான் தேவனை விசுவாசிக்கிறேன்’ என்பது பொருத்தமான பயன்பாடு ஆகும். அங்கே விசுவாசம் இருக்க வேண்டும்.
இன்னொரு வகையில் சொன்னால், பிள்ளையார் இருக்கிறார், முருகன் இருக்கிறார், காளி இருக்கிறார் என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையின் வெளிப்பாடாகவே நாம் பல கரணங்களைச் (சடங்குகளை) செய்கிறோம். நம்மை நாம் வருத்தினால், அவன் நமக்கு, நம்மைப் பார்த்து அனுதாபப்பட்டு வேண்டுவதைத் தருவான் என்ற நம்பிக்கை

Page 40
bងាញ់ 40
உள்ளது. அதாவது விரதம், அங்க பிரதட்சனை, காவடி, பொங்கல் வைத்தல், பாற்செம்பு எடுத்தல், அடியழித்து வணங்குதல் ஆகியவை இந்நம்பிக்கையில் மேற்கொள்ளப்பட்டவையே.
அடியழிப்பு வணக்க முறை, கருப்பைக்கு பயிற்சியைக் கொடுப்பதால், அப்பயில்வின் பின் குழந்தை பெறுவதுமுண்டு. ஆனால், விசுவாசம் காரணமாக நாம், அது தெய்வம் தருகிறது எனக் கருதுகிறோம். மேலும் எம்மிடையே உள்ள தெய்வ வழிபாட்டு முறைபற்றிக் குறிப்பிடுகையில், இரண்டு முக்கிய விடயப் பொருட்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
ஒன்று குலதெய்வம் மற்றயது இஷ்ட தெய்வம். குலதெய்வம் என்பது எங்கள் குடும்பம் முழுவதற்கும் அதாவது extended family என்னும் விரிநிலைக் குடும்பம் முழுவதிற்கும் பொதுவான வழிபாட்டு மரபாக இருக்க, கிராமத்துக் கோவில்களில் இன்னும் திருவிழாக்கள் இந்த நடை முறைக்கு ஏற்ப செய்யப்பட்டு வருகிறது என்பதை மறந்து விடக்கூடாது.
இஷ்ட தெய்வம் என்பது நமது விருப்பத்திற்குரிய தெய்வம், நாம் விரும்பி வழிபடும் தெய்வமாகும். இந்த விருப்பம் எப்படி வந்தது என்றால் நமது வாழ்க்கை அனுபவங்கள் என அவர்கள்
சொல்லுவார்கள். வழமையான எடுத்துரைப்பு கனாவில் வந்து
சொன்னது பற்றிக் குறிப்பிடுவது. கனாவில் சொன்னது பற்றிய
 

பின்புலத்தில் இதை நோக்கும்போது, எமது ஆழ் மனத்தின் (deep - Sub Conscious mind) (5606076/66ft 67Gi/G/0606) Gusch வெளிப்படுகிறது என்பது புலனாகும்.
நிறைவாக இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட வேண்டும். கோவிலுக்குச் சென்று கும்பிடுவதற்கு மேலாக, செவ்வாய், வெள்ளி விளக்கு வைப்பதற்கு மேலாக, நாம் பொங்கல் செய்து தெய்வத்துக்குப் படைக்கிறோம். பஞ்சாங்கத்தில் பார்த்தால் எந்தெந்தக் கோவில்களில் பொங்கல் நடைபெறும் என்ற தரவு தரப்பட்டுள்ளது.
இவை யாவற்றிற்கும் மேலாக, குளிர்த்தி என்னும் வழிபாட்டு முறை உள்ளது. இது பெரும்பாலும் கிராமங்களில் ஆகமங்கள் சாராத கோவில்களிலேயே காணப்படுகிறது. குறிப்பிட்ட தெய்வத்தின் கோபம் காரணமாக வெப்ப உணர்வு அதிகம் கொண்டிருப்பதாகவும், அத் தெய்வத்தின் மனதைக் குளிரச் செய்ய பாலாலும் தேனாலும் அபிஷேகம் பண்ணுதல் வேண்டும் எனவும் குளிர்த்தி அபிஷேகம் செய்யப்படுகிறது.
அதிக வெப்பம் காரணமாக தொற்று நோய்கள், சின்ன முத்து, பொக்கிளிப்பான் போன்றவை ஏற்படுகின்றன என்ற நம் பிக்கை நம்மிடம் உண்டு. குறிப்பாக நோயின் உக்கிர நாட்கள்

Page 41
முடிந்ததும், நோயுற்றவரை அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று கோவில் கிணற்றில் அல்லது கேணியில் நீராட்டி கும்பிடும் வழக்கம் இன்றும் உள்ளது. அதிகம் உணரப்படாதுள்ள, ஆழ்ந்து யோசிக்கப்படாதுள்ள அம்மனின் பெயர் ஒன்றினை இங்கு நினைவு கூருதல் வேண்டும்.
அம்மனை மாரியம்மன், முத்துமாரியம்மன் என்று அழைக்கும் மரபு இங்கு உண்டு. இங்கு மாரி எனப்படுவது , நீர் தாரை தாரையாக விழுவதையே குறிக்கும். மாரிகாலம் என்ற சொற்பயன்பாட்டையும் நோக்கலாம். நாம் எம்மைச் சுற்றியும் தெய்வங்களைக் காண்கிறோம். அதனால் தெய்வங்களும் எங்களைக் கண்காணித்து வருவதாக நம்புகிறோம்.
இந்தப் பக்தி உணர்வை புரிந்து கொள்வதற்கு தேவாரம், திரு வாசகம், பாசுரங்கள் ஆகியவை இலக்கிய நிலை உதாரணங்களே. வாழ்நிலை உதாரணங்களாக நாங்களே இருக்கிறோம். எங்களுடைய தெய்வ விசுவாசத்திற்கான மிகப் பெரிய எடுத்துக் காட்டாக அமைவன எமது பெயர்களே ஆகும். முருகன் , பிள்ளையார் , அம்மன் , சிவன் , ஆகியோருடைய பெயர்களை எமது பிள்ளைகளுக்கு சூட்டுகிறோம்.
தெய்வங்களை நாம் சென்று வழிபாடியற்றுவதை நோக்கும் போது, ஊரிலுள்ள ஒரு பெரியாருக்கு செய்யும் உபசாரமாக இருப்பதை நாம் காணலாம். குறிப்பாகச் சில நாட்களில் அவர் வீதி வழியாகச் சென்று எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு செல் கிறார் என்ற நம்பிக்கை எம்மிடம் உள்ளது. பண்டைய நாட்களில் வீரர்கள் தேரில் ஒடியது போல, இவரும் தேரில் வருவார். ஆனால் இத்தேர் இப்போது மிகப் பெரியதாகி விட்டது. இவ்விடத்தில் வாகனங்களில் தெய்வங்களை வைத்து கொண்டு வரும் வழக்கத்தையும் நோக்கலாம். தெய்வம் குதிரையில் வருவதாகவும், யானையில் வருவதாகவும் கற்பனை பண்ணி அதற்கான வாகனத்தைத் தயாரித்துள்ளோம். இன்று யானை மேல் எங்கள் தெய்வம் வருகிறார் என்று நம்புவோர் இன்றும் உண்டு.
திருவிழாக் காலத்தில் சுவாமி, வெளிவீதி வலம் வரும்போது அச்செப்புத் திருமேனியில் வெய்யில் ஒளி பட்டுத் தெறிக்க சுவாமி முழிப்பாக இருக்கிறார் என்று கூறுவர். இதில் சண்டைகள் கூட வருவதுண்டு. எங்கள் திருவிழாவில் தான் சுவாமி முழிப்பாக இருக்கிறார் என்று கூறுவர். உண்மையில் எங்களுக்கு எங்களது தெய்வங்கள் தூரமானவையல்ல. அவை எங்கள் உறவினர்கள், போஷகர்கள் என்றே நம்புகிறோம். மத நம்பிக்கை மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. அதுதான் வாழ்க்கைச் சவால்களை ஏற்று, வெற்றியோ, தோல்வியோ கண்டு தொடர்ந்தும் வாழ்க்கையை நடத்துவதற்கு உதவுகிறது என்று எனது வளர்த்தாத்தை சொல்லுவதை மேற்கோள் காட்டி நிறைவு செய்கிறேன்.
நம்ம குருதான் நம்மை வருத்துவது
கொல்லவல்லக் கொல்லவல்ல
கொடும்பாவம் தானகல
தொகுப்பு - லசுஷ்மி

盡。 ក្រុងព្រះញង៉ាអើ
41
Send the World's Best
Home Appliances
to your loved ones in
Sri Lanka
ஐ تنقیقت چھینن"
"w.sincersl.c
Sinphy visit sin e te weste of Sri arka 5 No. 1 retailler of home appliances. Choose any number of items among over 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We deliver then to your loved ones in any part of Sri Lanka. Guaranteed
- INGER SISIL : Prestige Earl Weus.2.2 HITACHI Panasonic Wந்ே

Page 42
கலைக்கேசரி 塞 42 வரலாற்றுப் பாரம்பரியம்
 

“காவியாகாயகி விகாரமாதேவி
ழும்பு நகர மண்டபத்துக்கு முன்னால் இருக்கும் கொ பூங்கா, முன்பு விக்டோறியா பார்க்' என அழைக்கப்பட்டது. பின்னர் நம்மவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதனை விகாரமாதேவி பூங்கா' என மாற்றினர். விக்டோறியா மகாராணிக்குச் சமமானவர் விகாரமாதேவி என்ற எண்ணத்தில் அப்படிச் செய்திருக்கலாம்.
ஆனால் விகாரமாதேவி, இந்த நாட்டின் எழுச்சிக்கும் சிங்கள மன்னர்களின் ஆட்சிக்கும் அளப்பரிய சேவை செய்துள்ளார் என்பது மகாவம்சக் குறிப்புகளால் தெரிய வருகின்றது.
தமிழ் மன்னனான எல்லாளனின் பிடியிலிருந்து சிங்கள ஆட்சியை விடுவிப்பதற்கும், சிங்கள ஆட்சியை இலங்கையில் நிலைபெறச் செய்வதற்கும், அவர் ஒரு சராசரிப் பெண்ணை விட அதிகமாகவே பாடுபட்டிருக்கிறார். தனது மூத்த மகனான காமினியை இதே நோக்குடன் வளர்த்தெடுப்பதற்கும், போர்க் களத்திற்கு அவனுடன் சென்று அவனுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கும் விகாரமாதேவி அர்ப்பணிப்புடன்

Page 43
செயற்பட்டிருக்கிறார். எந்த ஒரு நாட்டின் வரலாற்றிலும், மகாராணி ஒருவர் போர்க்களத்துக்குச் சென்றதாக ஆதாரங்கள் இல்லை. ஆனால் விகாரமாதேவி அப்படிச் சென்றிருக்கிறார். அது மட்டுமல்ல, போரில் ஈடுபட்ட தன் மகனுக்கு நுட்பமான ஆலோசனைகளை வழங்கி அவனை வெற்றி பெறச் செய்திருக்கிறார். இந்த விபரங்கள் மற்றும் இடங்கள் வரலாற்று நூலான மகா வம்சத்தில் விபரமாகப் பதிவாகியுள்ளன.
1. எல்லாளன் துட்டகாமினி
இலங்கை வரலாற்றிலே எல்லாளன் - துட்டகாமினி மன்னர்களிடையிலான அரசியல் போராட்ட நிகழ்வானது அக்கால வரலாற்றிலும் பண்பாட்டிலும் முக்கிய அம்சமாக (சம்பவமாக) நிலைத்து விட்டது. கி.மு. 161 க்கும் கி.மு. 15க்கும் இடைப்பட்ட அக்காலப்பகுதியிலே அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்ட ராஜரட்டையில் 676)6)/67
மன்னனுடைய ஆட்சியும் தெற்கே ரோகண இராச்சியத்தில் துட்டகாமினியின் ஆட்சியும் முக்கியமான வரலாறாகும். எல்லாளன் - துட்டகாமினி (துட்டகைமுனு) யுத்தத்தில் மூலம் துட்டகாமினி ஒரு காவிய நாயகனாகக் காட்டப்பட்டுள்ளான். துட்டகாமினி காவிய புருஷனாகக் காட்டப்படும் அதேசமயம் அவனது தாயான விகாரமாதேவியும் ஓர் அற்பது
90ணனாகவும், காவிய நாயகியாகவும் காட்டப்பட்டுள்ளதை
 
 
 

ឆ្នា
43
மகாவம்சம் மூலம் நாம் அறிய முடிகின்றது. நாட்டைப் பாரிய அழிவிலிருந்து காப்பாற்றிய பெண்ணாகவும், நாட்டை அன்னியரிடமிருந்து மீட்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு தேசியத் தாயாகவும் சிங்கள வரலாற்றிலே விகாரமாதேவி
இடம்பெறுகிறார்.1
இலங்கை வரலாற்றிலே காவிய புருஷனாகக் காணப்படும் துட்டகாமினி மூலம் அவனது தாயான விகாரமாதேவி புகழ் பெறுகிறார். ஓர் அற்புதமான முறையில் விகாரமாதேவி ரோகண இளவரசன் காக்கவண்ணதிசனை மணந்தார் எனவும், அ04:தமான சூழ்நிலையில் துட்டகாமினி இளவரசன் அவளுக்கு மகனாகப் பிறந்தான் எனவும் மகாவம்சம் வர்ணிக்கிறது. துட்ட காமினியின் வம்சநோக்கு கூறுமிடத்து தேவநம்பிய திரனின் வம்சம் காட்டப்படுகிறது. தேவநம்பியதிசனின் ராணியின் துரு ச்சியினால் நஞ்சூட்டப்பட்ட மாங்கனியை உண்ட தீசனின் மகன் மரணமடைய தம்பியாகிய மகாநாகன் ரோகணைக்கு ஓடி வந்தான் எனவும், அவனால் ஸ்தாபிக்கப்பட்டதே மகாகம எனப்ப டும் மகமையாகும் எனக் கூறப்படுகிறது. மகாகமவைத் (தற்போ தை0 திசமகரகம) தலைநகராகக் கொண்ட ரோகனை இரத்தி யத்தின் அரசனாக மகாநாகனின் மகன் யட்டாளதிசவும், அவ னைத் தொடர்ந்து யட்டாளதிசவின் மகன் கோதாபயனும் ஆதி செய்தனர். பின்னர் கோதாபயனின் மகன் காக்கவண்ணதிசன்
ஆட்சிபீடமேறினான்.

Page 44
44
2. விகாரமாதேவி , துட்டகாமினி பரம்பரைச் சிறப்பு
தேவநம்பியதீசனின் தம்பியான மகாநாகனின் வழிவந்த காக்கவண்ணதீசனுக்கும் களனிதிசவின் C045617/60) விகாரமாதேவிக்கும் பிறந்த புத்திரர்களே துட்டகாமினியும் சத்தாதீசனுமாவர். துட்டகாமினியின் பரம்பரைச் சிறப்பு இவ்விதம் காட்டப்பட்டுள்ளது. காக்கவண்ணதிசன் ரோகணை இராச்சியத்தை விரிவுபடுத்தும் அதே நேரம் அன்னிய நாட்டவரை துரத்த வேண்டும் என்பதற்கு அத்திவாரமாகவும் அமைந்தவன். எனினும் பின்னர் இவனது புகழ் மறைக்கப்பட்டு மகன் காமினியின் புகழ் மேலோங்கியது. துட்டகாமினியின் வரலாற்றை மகாவம்ச ஆசிரியர் தேவநம்பியதீசனின் பரம்பரை மூலம் காட்டியுள்ளார். காமினி ஷத்திரிய வம்சத்தவன் என்ற கீர்த்தி ரோகணத்து விகாரைகளில் பேணப்பட்டுள்ளது? ரோகண இராச்சியத்திற்கும் அனுராதபுர இராச்சியத்திற்கும் இவ் விதம் உறவு பேணப்பட்ட நிலையிலே கல்யாணி (களனி) அரசுக்கும் ரோகணத்திற்கும் முதல்முதலாக அரச வம்ச தொடர்பு காட்டப்பட்டுள்ளது. இது காக்கவண்ணதிசவுக்கும் விகாரமாதேவிக்கும் ஏற்பட்ட திருமண உறவாகும். களனி அரச வம்சம் நாக வம்சத் தொடர்புடையது. வடக்கே நாகதீபம், மேற்கே கல்யாணி அரசும், கிழக்குக் கரையோரம் முழுவதுமே அக்காலத்தில் நாக வம்ச சிற்றரசுகளும் காணப்பட்டன.
களனிதிச கதிர்காம ஷத்திரியர்களுடன் உறவுடையவனாகும்.
3. விகாரமாதேவின் சிறப்பு
விகாரமாதேவி துட்டகாமியை மகனாக அடையுமுன்னேயே சிறப்புடையவளாகக் காட்டப்பட்டுள்ளாள். அவள் களனி இளவரசியாக இருக்கும்போது பாரிய பிரச்சினை ஒன்று ஏற்பட்டதாம். விகாரமாதேவியின் தந்தையாகிய களனிதிச தனது மனைவி மீதும் மல்லியதெர என்ற பெளத்த துறவி மீதும் கொண்ட சந்தேகத்தால் துறவியை கொதிக்கும் எண்ணைக்குள் இறக்கினான். பின்னர் கடலில் எறிந்தான். உண்மையில் இது களனிதிசவின் இளைய சகோரதன் இளவரசன் உத்திக என்பவன் செய்த சூழ்ச்சியாலேதான் இவ்விதம் நிகழ்ந்தது. அதனால் கடல் தேவதை கோபம் கொண்டு பொங்கி எழுந்து பயங்கர கடற்கோள் ஏற்படும் நிலை உருவாகியது. யாராவது கடல் தேவதைக்கு பலியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அப் போது அரசனின் மகளாகிய தேவியை (விகாரமாதேவி) ஒர் அழகிய தங்கப் பேழையில் வைத்து கடலில் விட்டனர். அதன் மூலம் கடற்கோள் தடுக்கப்பட்டது. தேவி விகாரை அருகில் கரை தட்டினாள். கரை தட்டிய இடம் ரோகணை இராச்சியத்தின் கிரிந்த இடம் ஆகும். அதைக்கண்ட தூதர்கள் கிரிந்த இளவரசனுக்கு அறிவித்தனர். கிரிந்த இளவரசன் என்பது ரோகனை இராச்சிய இளவரசன் காக்கவண்ணதிசவாகும். இவனை சிங்கள கர்ணபரம்பரைக் கதைகள் கிரிந்த இளவரசன் என்றே கூறுகின்றன. இவ்விடத்துக்கு விரைந்து வந்த
இளவரசன் தேவியைக் கண்டான். விகாரை அருகில்
 
 

கரைதட்டியமையால் விகாரமாதேவி என அழைத்தனர். சமுத்திரத்திற்குள் போய் மீண்டு வந்தமையால் சமுத்திரதேவி எனவும் அழைத்தனர். காக்க வண்ணதீச தேவியை அழைத்துப்போய் திருமணம் செய்து கொண்டான். ஆகவே துட்டகாமினி காவிய நாயகனாக காட்டப்படுவதற்கு முன்னரே விகாரமாதேவி காவிய நாயகியாகக் காட்டப்பட்டுள்ளாள்.
விகாரமாதேவி காக்கவண்ணதிசவை திருமணம் செய்ததைக் கூட மகாவம்ச ஆசிரியர் மிகைப்படுத்தியே கூறியுள்ளார். ஒரு அற்புதமான சூழ் நிலையில் காக்கைவண்ணதிசவை மணந்தாள் எனக் கூறியுள்ளார். கடலுக்குள் சென்ற தேவி எதுவித பாதிப்புமின்றி மீண்டு வந்ததும், காக்கவண்ணதிச கண்டதும், திருமணம் செய்ததும் ஓர் அற்புதமான சூழ்நிலையே எனப்படுகிறது. விகாரமாதேவி மூன்று கட்டங்களில் முக்கியம் பெறுகிறாள். /. நாட்டை பேரழிவில் இருந்து காப்பாற்ற பாரிய கடற் கோளையும் பொருட்படுத்தாமல் உயிரைத் தியாகம் செய்ய கடலுக்குள் சென்ற போது, 2. காமினியை அபூர்வமான விதத்தில் பெற்றெடுத்து அபூர்வ
மான முறையில் வளர்த்து அபூர்வ சக்தியை ஊட்டும்போது, 3. அன்னியரை விரட்டவேண்டும் என்பதில் எல்லா விதத்திலும் மகனுக்கு துணை நின்றதோடு போர்க் களத்திலும் உடனிருந்தபோது,
4. விகாரமாதேவியின் தாய்மையும்
காமினியின் பிறப்பும் துட்டகாமினி சத்தாதீசன் இருவருமே விகாரமாதேவியின் புதல்வர்கள் என்பது வரலாற்று உண்மை ஆகும். துட்டகாமினியை விகாரமாதேவி புதல்வனாய் பெற்றதே அற்புதமானது எனப்படுகிறது. விகாரமாதேவி பயணம் ஒன்று செய்து வரும்போது சமனோரா என்ற புகழ்பெற்ற பெளத்த பிக்கு மரணிக்கும் தறுவாயில் இருந்தார் எனவும் அவரை தனது வயிற்றில் அவதரிக்கும்படியும் விகாரமாதேவி வேண்டினாள். அவருக்கு ஆபரணம், பூக்கள், உடைகள், எல்லாம் அர்ப்பணித்து மேலும் வணங்கினாள். முதலில் மறுப்பு தெரிவித்த துறவி பின்பு உடன்பட்டார். காக்கவண்ணதிசவுக்கு செய்தி அனுப்பப்பட்டது. அரசன் வந்து சேரும்போது துறவி இறந்து, விகாரமாதேவி கர்ப்பமுற்றாள். துறவிக்கு உரிய கிரியைகள் இருவராலும் செய்யப்பட்டன. தேவி கருவுற்றவுடன் நல்ல சகுனங்கள் தென்பட்டன. ஆத்மிக சக்திகள் நிரம்பின. இரு புதல்வர்கள் பிறந்தார்கள். துட்டகாமினி பிறக்கும்போது ஏழு கப்பல் நிறைய ஆபரணங்கள் வந்து சேர்ந்தன. கொம்பன் யானை குட்டி ஒன்றை ஈன்றது. அதனைக் கந்துல என்ற மீனவன் கண்டு கூறியமையால் அக்குட்டி யானைக்கு மீனவன் பெயரையே கந்துல GT60) வைத்தனர். இதுவே பிற்காலத்தில் துட்டகாமினியின் பட்டத்து யானையாகும். சில வருடங்களில் காக்கவண்ணதீசன் இறந்து போனான். ஏற்கனவே தீக

Page 45
வாவியை சத்தாதீசன் ஆட்சி செய்ததோடு நெற் களஞ்சியமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். விகாரமாதேவியும் சத்தாதீசனுடனே இருந்து வந்தாள். தந்தை இறந்த செய்தி அறிந்த காமினி மகா மத்திற்கு (திசமவுறாராம) விரைந்து வந்து தம்பியுடன் போரிட ஆயத்தமானான். பட்டத்து யானை கந்துலவையும் தாயையும் தரும்படி தூது அனுப்பினான். சத்தாதீசன் இதற்கு இணங்காததால் போர் நடந்தது. போரிலே சத்தாதீசன் தோற்கடிக்கப்பட்டான். காமினி பட்டத்து யானையையும் தாய் விகாரமாதேவியையும் தன் வச
மாக்கிக் கொண்டான்.4
5. காமினியும் விகாரமாதேவியும்
காமினி எதிரியை அழிப்பதற்கான வழிமுறைகளைத் தீட்டலானான். தாய் விகாரமாதேவியும் மகனுக்கு உறுதுணையாக இருந்து அன்னியரை துரத்துவதற்கான வேலைகளில் ஈடுபட்டாள். பாதுகாப்பு கொள்கையுடன் மட்டும் செயற்பட்டவன் காக்கவண்ணதீசன். பாதுகாப்பு மட்டும்
போதாது எதிரியை தோற்கடிக்க வேண்டும் என்று
செயற்பட்டவன் காமினி அவனுக்கு ஆலோசனை வழங்கி கூடவே இருந்து படை நடத்தி உறுதுணையாக இருந்தவள் தாய் விகாரமாதேவி கண்டவர் ஆசை கொள்ளும் அழகுடைய விகா
 

\ ព្រោ
45
ரமாதேவியின் சூழ்ச்சியினால் எல்லாளனுடைய முக்கிய தளபதியான தம்பான் தோல்வியுற்றான் எனவும் கூறப்படுகிறது. தென்பகுதியில் கதிர்காம, போவித்துகல போன்ற கல்வெட்டுகளில் கூறப்படும் அபிசெவர' இவள் என பரணவி தானா கருதுகின்றார்.9 காமினி எல்லாளனுடன் போரிட ஆயத்த மானான். சத்தாதீசன் தீகவாவிக்கு சென்று வாழலானான். அதிகார ஆசைக்காக தான் போரிடவில்லை. பெளத்தத்தின் மாட் சிமைக்காகவே போரிடுகின்றேன் என வீரர்களுக்கு போருக்கான காரணத்தை விளக்கிய காமினி எல்லாளனுடன் போரிடப் படை நடத்தினான். தாய் விகாரமாதேவியும் கூடவே சென்றாள். கூடவே இருந்து உற்சாகமும் ஆலோசனையும் வழங்கினாள். இதனால் விகாரமாதேவி எந்த தாயும் செய்யாத Go/606)60) (U செய்து சிங்கள இனத்தின் காவிய நாயகியாகிறாள்.
வடக்கே படை நடத்திய காமினி மகாவலிகங்கைக் கரை, மகியங்கனை, அம்பதிர்த்தம், கச்சதீர்த்தம், கொட்டநகரம், நந்திக் கிராமம் என பல இடங்களில் தமிழர்களுடன் யுத்தம் செய்தான். நான்கு மாதங்கள் யுத்தம் தொடர்ந்தது. விகாரமா தேவியும் கூடவே இருந்தாள். நான்கு மாதங்கள் நீடித்த போருக்குப் பின் தித்தம்பன் என்ற தமிழ்த் தளபதியை சூழ்ச்சியால் காமினி வென்றான் எனப்படுகிறது. விஜிதபுரம்,
கொழுமபு:தமிழ் .

Page 46
度 46
 

சிரியகம, மகிளநகரம் போன்ற இடங்களில் பலத்த எதிர்ப்பு தமிழர்களால் ஏற்பட்டது. ஒரு வருடத்திற்கு மேலாக நீடித்த யுத்தத்திலே காசபரிவதத்திலே எல்லாளனுடைய படைத் தளபதி தீகஜந்து கொலையுண்டு போக, தோல்வி ஏற்பட்டது.
6. எல்லாளன் - காமினி யுத்தமும் விகாரமாதேவியும்
இறுதியில் எல்லாளன் - காமினி தனிச்சமர் ஏற்பட்டது. எல்லாளன் போரில் மடிய, காமினி வெற்றி பெற்றான். கொலையுண்ட எல்லாளன் உடலை நல்ல முறையில் அடக்கம் செய்து உரிய மரியாதைகள் செய்வித்தான் என மகாவம்சம் கூறுகிறது. எல்லாளன் கல்லறை எனப்பட்ட இடத்தில் மரியாதை பல காலம் தொடர்ந்தது எனவும் அறிய முடிகிறது. இவற்றுக்கெல்லாம் உறுதுணையாக தாய் விகாரமாதேவி இருந்தாள். எல்லாளனின் தளபதியை சூழ்ச்சியால் தோற்கடித்தது, தாய் விகாரமாதேவியின் உதவியுடனே என்பது வரலாற்று ஆசிரியர்கள் கூற்றாகும். நாட்டை மீட்கும் பணியில் உடனின்று உதவியது தாய் விகாரமாதேவி என்பதே மகாவம்ச வரலாறு. எந்த ஒரு வரலாற்றிலும் தாய்மார் யுத்த களம் போய் உதவியது கிடையாது. ஆனால் விகாரமாதேவி இத்தகைய சாதனையைச் செய்துள்ளாள். ஆகவே சிங்கள வரலாற்றிலே துட்டகாமினியின் புகழ் காவியத் தலைவனாக உயரும் அதே வேளை விகாரமாதேவி நாட்டை மீட்க புதல்வனை பெற்றெடுத்து, புதல்வனுடன் உடனின்று வெற்றி பெறச் செய்யும் காவிய நாயகியுமாக விகாரமாதேவி விளங்குகிறாள். விகாரமாதேவியின் மற்றொரு புதுமையான சிந்தனையானது தமிழ் போர்த் தளபதி ஒருவனை வாளாள் வெட்டி அந்த வாளில் வரும் ரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்ற விருப்பம் ஆகும். இது ஒரு விபரீதமான சிந்தனை. எந்தளவுக்கு அன்னியர்களை குறிப்பாக தமிழர்களை துரத்த வேண்டும் என்ற சிந்தனை தாயிலிருந்து ஊற்றெடுத்து மக்களுக்கு குறிப்பாக காமினிக்கு ஊறி உரமாக அமைந்தது என்பதை வரலாற்றில் காணமுடிகிறது. ஆகவே எந்த ஒரு தாயும் செய்யாத அர்ப்பணிப்புகளை மகனுக்கு விகாரமாதேவி
செய்துள்ளார்.
- க. தங்கேஸ்வரி. பி. ஏ (தொல்லியல் - சிறப்பு)
அடிக்குறிப்பு 1. Mahavamsa – translated - Wilhelm Gaiger 1950 2. Mahavamsa – translated - Wilhelm Gaiger 1960. PP — 147 —
Notes 5,6,7,8,9. 3. (a). Mahavamsa - PP 146 - chapter - XXII Note 10 - 22
(b) போதிவம்ச (C). தூபவம்ச 4. Mahavamsa - translated Wilhelm Gaiger 1950 PP — 5. Inscriptions of Ceylon by Dr. paranawithana PP

Page 47
தெற்காசியாவில்
96 Mbps வேகத்தையும் தாண்டு
(LD956óTOLpg56)T,
HSFA MIMO இனை
என்ற இலக்கை எட்
| 6.5 i Sir Gori தற்போது * 。 @、●cmGa cm வழங்குனரான Gрпі66 இலங்கையில் 4G LTE மொ வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது. 霞
 
 
 
 
 

தன்முறையாக யற்படுத்துகின்ற
ந்தியமை
செயற்படுத்தியமை
புரோட்பான்ட் வாடிக்கையாளர்கள் QUI60) D
| Sri Lanka Teleğütörü
We care. Ana ys.

Page 48
អ៊ែងហ្វិកាចំរ៉ៃរឺ 度 48 horrifrith
鑿
156,601D 1 JuJagjib
நவமணிகள்
நவமணிகளின் சாதி
வமணிகளான மாணிக்கம், முத்து, வைரம், மரகதம், நீலம்,
கோமேதகம், புட்பராகம், வைடூரியம், பவளம் ஆகிய
கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சாதியைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. அவ்வகையில் வைரமும் முத்தும் அந்தணர் சாதியாகவும், பவளமும் மணிகளும் அரசர் சாதியாகவும், புட்பராகம், வைடூரியமும் கோமேதகமும் வணிகர் சாதியாகவும், நிலமும் மரகதமும் வேளாளர் சாதியாகவும் கொள்ளப்படுகிறது.
 
 

நவமணிகள் முக்குணங்கள் ஒவ்வொரு மணிகளும் ஒவ்வொரு குணங்களைக் கொண்டுள்ளது. இருந்தாலும், ஒன்பது மணிகளும் சாத்துவிக, இராட்சத, தாமத ஆகிய முக்குணங்களுக்குள் அடங்குகின்றன. அந்தவகையில் முத்தும் பச்சையும் சாத்வீவிக குணம் உடையன. பளிங்கு மணியும் சாத்துவிக குணமுடையது. பவளமும், மாணிக்கமும், கோமேதகமும், புருடராகமும், வைடூரியமும், வைரமும் இராட்சத குணம் உடையன. நீலம்
தாமத குணம் உடையது.
மணிகளை மதிப்பிடும் நாட்கள்
நவமணிகளை அவற்றுக்கு உகந்த நாட்களில் மதிப்பிட வேண்டும். அவ்வாறு மதிப்பிடும்போது சிறந்த பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அந்தவகையில் மாணிக்கக் கற்களையும் கோமேதகத்தையும் ஞாயிற்றுக்கிழமையன்று மதிப்பிட வேண்டும் என கற்றோர் கூறுவர். அதேபோல முத்து மற்றும் வைடூரியக் கற்களுக்கு உகந்த நாளாகத் திங்கட்கிழமை திகழ்வதால் அத்தினங்களில் அவற்றை மதிப்பிடுவது சிறந்த பலனைக் கொடுக்கும். பவளத்தைச் செவ்வாய்க் கிழமையன்றும், மரகதத்தை புதன்கிழமையன்றும், வைரத்தை வெள்ளிக்கிழமையன்றும் ஆராய்ந்து மதிப்பிட்டுப் பார்த்தால் மிக நன்றாம். இவற்றை உள்ளும் புறமும் தூய்மையாய் அற நெறியில் செல்பவரே ஆராய்ந்து கூறுவதற்கு உரியவர் ஆவார்.
நவ மணிகளை வழிபடும் முறை
செந்தாமரை மலர், சிறு சண்பக மலர், செவ்வல்லி மலர், செங்காந்தள் மலர், செங்கழுநீர் மலர், வெள்ளை மந்தார மலர் ஆகிய மலர்களை நம் முடியிற் சூடிக்கொண்டு, ஓர் இடத்தை தூய்மை செய்து, ஆதனத்தை இட்டு, அதன் மேல் வெண்மையா ன ஆடை ஒன்றை விரித்து மாணிக்கத்தை நடுவிலும் முத்து முதலிய மணிகள் எட்டினையும் கிழக்கு முதல் எட்டுத் திசைகளிலும் முறையே வலது பக்கமாகச் சூரிய மண்டலம் போல் சூழ வைத்து மாணிக்கம் முதலாய ஒன்பது மணிகளின் மேலும் ஒன்பது கிரகங்களைத் தாபித்து முற்கூறிய செந்தாமரை மலர் முதலிய ஒன்பது மலர்களையும் சாத்தி விதிமுறை தவறாமல் வழிபடவேண்டும்.
நவ மணிகளில் மாணிக்கம் சூரியனுக்கும், முத்து சந்திரனுக்கும், பவளம் செவ்வாய்க்கும் மரகதம் புதனுக்கும், புருடராகம் வியாழனுக்கும், வைரம் சுக்கிரனுக்கும், நீலம்
சனிக்கும், கோமேதகம் இராகுவுக்கும், வைடுரியம் கேதுவுக்கும் மகிழ்ச்சி தருவன என்று சுக்கிர நீதி நூல் எடுத்துரைக்கிறது.

Page 49
நவமணிகளின் உயர்வு சிறந்த மாணிக்கக் கற்களை அணிவோர் கல்வி, பசு, கன்னி அறுசுவை உணவு முதலான தானங்களையும், அசுவமேத யாகம் செய்த பலனையும் அடைவர். உலகம் முழுவதும் ஒரு குடை நிழலின் கீழ் ஆள்வர். நிறைந்த செல்வத்தோடும் சிறந்த வெற்றியோடும் வாழ்வர். விண்மீன் போன்ற தோற்றமும் உருட்சியும், காற்றேறு, மணலேறு, கல்லேறு, நீர்நிலை என்ற குற்றங்கள் இல்லாமையும் கையில் எடுத்தால் திண்மையும், பார்வைக்கு இனிமையளித்தலும், பளிங்கு போன்று தெளிந்திருத்தலும் ஆகிய 6 குணங்கள் பொருந்திய சிறந்த முத்துக்களை அணிந்தால் வறுமை நீங்கும் செல்வம் பெருகும் வாழ்நாள் ஒங்கும்.
சிறந்த வைரத்தினை குறுநில மன்னன் அணியினும் குறைவற்ற செல்வம் பெற்று, மிக்க பகைவரை வென்று, தனது செங்கோல் உலக முழுவதும் செல்ல ஆட்சி புரிவான். வறுமையும், நோயும், விலங்குகளும் அவனைச் சார்ந்து வருத்தாவாம். சிறந்த, குற்றங்களற்ற, குணம் பொருந்திய, மரகதத்ததை அணிபவர், நால்வகைச் சேனைகளோடு வாழ்நாளும் பெருக வாழ்வர்.
மாநிலத்தை அணிபவர்கள் எந்நாளும் நலன்கள் எய்தி வாழ்ந்திருப்பர். நல்ல பிரகாசமான, குற்றம் இல்லாத, அழுத்தமான, பளபளப்பான, பசு மாட்டின் சிறுநீர் நிறத்தை ஒத்த கோமேதகக் கற்களை மிகப் பொருத்தமானவர்கள் அணிந்தால் அதி சிறந்த பலன்களை அடையலாம். சிலப்பதிகாரம் கூறும் சூரியனின் ஒளியும் தேன்துளியின் நிறமும் போன்றும் விளங்கும் வைடூரியம் வலம், இடம், மேல், கீழ் என்ற நான்கு இடங்களிலும் ஒளி வீசும். இவை முறையே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வருக்கும் உரியனவாகும். அறிவுடையோர் இம்மணியினை நாள் தோறும் பூசித்து அணியக்
கடவர்.
சிறந்த புட்பராகத்தை அணிபவர் பகைவர்களை வென்று வெற்றிமாலை சூட வல்லவராவர். வைடூரியக் கல்லை அணிவதால் நாக தோஷம் நீங்கும், வற்றாத செல்வம், ஞானம், கல்வி அறிவு என்பன கிடைக்கும். புகழும் அதிர்ஷ்டமும் தானாகக் கிடைக்கும். பவளம் பெரும்பாலும் பெண்களே தரித்தற்கு உரியது. இதனை அணியும் பெண்களுக்கு மகப்பேறு முதலான பயன்கள் யாவும் உண்டாகும். சிவந்த நிறமும், உருட்சியும் கொண்ட நல்ல தரமான பவளக் கற்களை அணிவதால் அதிர்ஷ்டமும், சகல செல்வங்களும் கிடைப்பதுடன்,
மன அமைதியான வாழ்வும் கிடைக்கும்.
கருத்து : வசந்தா வைத்தியநாதன் தொகுப்பு: பிரியங்கா
 

& கலைக்கேசரி
To place your
аayertisететt
IM
KALAKESAR
GGOOGDéi Göë
YLS SLLLL0LLLS SLLS S SS OLGLLS SLLLL SSqqSSLLLLLSLLLLLL
Contact uS On
+94 11 5322733/734/737
ΟΥ marketing@virakesarilk

Page 50
g|R565Éfido , 0 i jjfjjjfjfgjgji,
டந்த 15ம், 16ம் நூற்றாண்டுகளில் இந்து சமுத்திர வர்த்தகத்தின் பெரும்பகுதி போர்த்துக்கேயரது ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. இவர்களை அடுத்து இந்து சமுத்திரப் பிரதேச வர்த்தக நடவடிக்கைகளில் தலையிட்ட
இனத்தவர் ஒல்லாந்தர் ஆவார். தமது அண்டை நாடாகிய போர்த்துக்கல் பெற்ற வர்த்தக இலாபத்தையும், கீழைத்தேய வர்த்தகம் மூலம் போர்த்துக்கல் அடைந்த செல்வச் செழிப்பையும் கண்ணுற்று, தாமும் அதை அடைவதற்கு
 
 
 
 

லாற்றுச் சின்னங்கள்
蘇
ஒல்லாந்தர் முயன்றனர். இவர்களும் கூட தமக்கு வேண்டிய வர்த்தகப் பண்டங்களை லிஸ்பனிலேயே பெறமுடிந்தது. ஆயினும் /6ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பல மாற்றங்களின் GSFGOD GMTGJosé95 (LUGU) வகையிலும் முன்னேற்றமடைந்த ஒல்லாந்தர் கீழைத் தேசங்களுக்கு வருவதற்குப் பல வழிகளிலும் முயன்றனர். மேலும் போர்த்துக்கேயரது கத்தோலிக்க மதத்திற்கு எதிராக தமது புரட்டஸ்தாந்து சமயத்தைப் பரப்புவதும் இவர்களுடைய ஆவலுக்கு தூண்டுதலாக அமைந்தது. /6386) போர்த்துக்கேயருக்கு எதிராக படையெடுத்த ஒல்லாந்தர் மட்டக்களப்பு, திருகோணமலை, கொழும்பு, மன்னார் என்று ஒவ்வொன்றாகத் தம் வசப்படுத்தினர். இறுதியில் /658ம் ஆண்டு யாழ்ப்பாணத்தையும் இவர்கள் கைப்பற்றியதோடு இலங்கையில் ஒல்லாந்தர் ஆதிக்கம் வேரூன்றியது. ஏறத்தாழ 150 ஆண்டுகள் ஒ ல் ல |ா ந் த ர து

Page 51
பண்பாட்டுக் கூறுகள் இங்கு செல்வாக்குச் செலுத்தியதுடன் இற்றைவரை அதன் எச்சங்கள் வரலாற்றுச் சின்னங்களாக காட்சியளிக்கின்றன.
/658 ஆம் ஆண்டு மன்னாரையும் யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவதற்காக அட்மிரல் றைக்கிளோப்வான் வறின்ஸ் என்ற ஒல்லாந்தத் தளபதி /500 வீரர்களுடனும் 19 மரக்கலங்களுடனும் நார்டென் என்ற கடற்படைக் கலம் முன் செல்லப்புறப்பட்டான். மன்னார் கோட்டையை கைப்பற்றியதும் தனது படை வீரர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து ஒன்றைக் கடல் மார்க்கமாகவும் மற்றையதை தரை மார்க்கமாக பூநகரியூடாகவும் வழி நடாத்தி வந்தான். கடல் மார்க்கமாக வந்த படை ஊர்காவற்றுறைக் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணக் கோட்டை ஒல்லாந்தப் படை வீரர்களால் முற்றுகையிடப்பட்டது. போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணக் கோட்டைக்குள் நுழைந்து தஞ்சமடைந்தனர். ஒல்லாந்த படையினரின் யாழ்ப்பாணக் கோட்டை முற்றுகை /07 நாட்கள் தொடர்ந்தது. கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்த போர்த்துக்கேயரைப் பட்டினியால் பான் கூன்ஸ் பணிய வைத்தான். போர்த்துக்கேயர் 3000 பேருடன் சரணடைந்து கோட்டையைக் கையளித்தனர்.
ய (ா ழி ப் ப ா ண க்
கோ ட்  ைட (பில்
 
 

តែក្លាញ់
51
போர்த்துக்கேயரின் கொடி இறக்கப்பட்டு ஒல்லாந்தரின் கொடி ஏற்றப்பட்டது.
ஒல்லாந்தர் போர்த்துக்கேயரின் சதுர வடிவான யாழ்ப்பாணக் கோட்டையை ஒல்லாந்த கட்டடக்கலை மரபில் ஐங்கோண வடிவில் தொழினுட்பத் திறன் வாய்ந்ததாக அமைத்தனர். இக்கோட்டை யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தரின் முக்கிய மையமாக விளங்கியதுடன் பிற்பட்ட காலங்களிலும் கூட முக்கியம் பெற்றதுடன் இற்றைவரை அதன் எச்சங்களையும் காணமுடிகின்றது.
போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை 32 கோவில் பற்றுக்களாகப் பிரித்திருந்தனர். அவ்வாறே ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தரும் யாழ்ப்பாணத்தை 32 கோவில் பற்றுக்களாகப் பிரித்து, ஆலயங்களைத் திருத்தியும் புதிய ஆலயங்களைக் கட்டியும் ஒவ்வொரு ஆலயத்திற்கும் தமது மத குருமாரை அல்லது சட்டம்பியார் என்பவர்களை நியமித்து ஞாயிற்றுக்கிழமைகளில் ஆராதனைகளை நடாத்திக் கிறிஸ்தவ மத போதனைகளைக் கூறி தமது ஆட்சியை மேற் கொண்டிருந்தனர். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் உள்ள 32 கோவிற்பற்றுக்களிலும் போர்த்துக்கேயர் கட்டிய கோயில்களை ஒல்லாந்த கட்டடக் கலை மரபில் அமைத்தார்கள். அத்துடன் புதியனவாகவும் பலவற்றை அமைத்து, தமது புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவதற்கு யாழ்ப்பாணமே மிகவும் உகந்த இடம் எனக் கண்ட டச்சுக்காரர் பல்தேயு பாதிரியாரை நியமித்து புரட்டஸ்தாந்து மத பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில்
கத்தோலிக்க ஆலயங்களும், பாடசாலைகளும் பெருமளவில்

Page 52
bចាញ់ 52
காணப்பட்டதனால் அந்த அமைப்புக்களை அப்படியே
புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர்களுக்கு மாற்றுவது இலகுவான
காரியமாக இருந்தது.
புரட்டஸ்தாந்து மதத்தை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும்
என்ற உறுதியான கொள்கையுடனிருந்த ஒல்லாந்தர், சைவ மத நடவடிக்கைகளுக்கு இறுக்கமான கட்டுப்பாட்டை விதிக்காமைக்கு காரணம் சுதேச மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க விரும்பாததேயாகும்.
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் எல்லாப் பகுதிகளிலும் புரட்டஸ்தாந்து மதம் ஆழமாக ஊடுருவியிருந்தது. இவ்வகையில் சங்கானைப் பிரதேசத்திலும் ஒல்லாந்தரின் புரட்டஸ்தாந்து மதம் செல்வாக்குப் பெற்றிருந்தது. இதனை ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட புரட்டஸ்தாந்து தேவாலயத்தின் எச்சங்கள் இன்று வரை அழியாத வரலாற்றுச் சின்னமாக சங்கானைப் பிரதேசத்தில் காணப்படுகின்றது. சங்கானையில் ஒல்லாந்தர் மேற்கொண்ட புரட்டஸ்தாந்து மதப்பிரசாரத்தாலும், அம்மத ஊடுருவலாலும் தேவாலயம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை ஒல்லாந்த மத குறிப்பின்படி நோக்கினால் சங்கானையில் ஓர் ஆலயமும் செங்கல்லால் கட்டப்பட்ட மதில் சூழ்ந்த ஒரு வீடும் இருந்தன. அதில் அம்புறேசியா என்னும் போதகர் வசித்துப் படிப்பித்து வந்தார். மக்கள் கிறிஸ்தவ செய்திகளைக் கேட்பதில் விருப்பமுள்ளவர்களாக இருந்தனர். அதனை அங்கே பிரசங்கம் கேட்க வருபவர்களுக்கு அந்த ஆலயம் போதாமல் இருந்தது என அறியமுடிகின்றது. இதிலிருந்து சங்கானைப் பிரதேசத்தில் புரட்டஸ்தாந்து மதம் பெற்ற செல்வாக்கினை அறியமுடிகின்றது.
ஒல்லாந்தரால் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட மாற்றங்களுள்
கட்டடக் கலையும் முக்கியமானது. இவர்கள் கட்டடக்
 
 

கலையில் குறிப்பாக கோட்டைகளை கட்டும் கலையில்
விற்பன்னராக மிளிரக் காரணம் அவர்களுடைய தாய் நாடாகிய ஒல்லாந்தின் பெரும் பகுதி நிலம் சதுப்பு நிலமாகவும், கடலாகவும் இருந்தமை, அவற்றை மீட்டு பாரிய கட்டடங்களை அமைப்பதில் அவர்கள் பெற்றுக்கொண்ட தேர்ச்சியே ஆகும். சங்கானையில் இன்று காணப்படும் ஒல்லாந்தர் கால தேவாலயம் போர்த்துக்கேயரினால் முன்பு அமைக்கப்பட்டிருந்த போதிலும் ஒல்லாந்தர் தமது ஆட்சியில் இதனை மீளமைத்துக் கொண்டனர். இத்தேவாலயம் /657களில் ஒல்லாந்த மத குருவான பல்தேயிஸ் பாதிரியாரின் நேரடிக் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது. இத்தேவாலயம் முருகைக் கற்களினால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான தேவாலயம் ஆகும். குறிப்பாக உள் மண்டப கூரைப் பகுதி முருகைக் கற்களினால் கட்டப்பட்டிருக்கின்றது. இத்தேவாலயம் பாடசாலையாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது எனவும் அறியமுடிகின்றது.
இலங்கையில் ஏனைய பகுதிகளில் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட தேவாலயங்களுள் சங்கானையில் அமைக்கப்பட்ட தேவாலயமே இன்றும் ஓரளவிற்கு முழுமையான தோற்றம் கொண்டதாக காணப்படுகின்றது. இத்தேவாலயமானது 350 இற்கு மேற்பட்ட வருடங்களைக் கடந்த நிலையில் ஒல்லாந்தரின் ஆட்சியின் விளைவினை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சின்னமாகக் காணப்படுகின்றது. அண்ணளவாக ஐந்து பரப்புக் காணியில் அமைந்துள்ள இத்தேவாலயம் 4/95 சென்டிமீற்றர் நீளமும் //90 சென்டிமீற்றர் அகலமும் கொண்டு காணப்படுகின்றது.
இந்த தேவாலயத்தின் முன் மண்டபம் மேல் கூரைகள் அற்ற நிலையிலும் உள் மண்டபமானது முருகைக் கற்களினாலான கூரையைக் கொண்டிருக்கின்றது. இத்தேவாலயத்தில்

Page 53
பதினொரு ஜன்னல் பகுதிகள் காணப்படுகின்றன. இதில் 9 ஜன்னல்கள் வெளி மண்டபத்திலும் 2 ஜன்னல்கள் உள் மண்டபப் பகுதியிலும் காணப்படுகின்ற போதிலும் கதவோ ஜன்னலோ இன்று காணப்படவில்லை. தேவாலயத்தின் வளைவுப் பகுதி ஒரளவு இன்று அத்தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. இத் தேவாலயம் கட்டப்பட்ட சுவரினைப் பார்க்கும் போது 30 cm நீளமும் 20 cm அகலமும் கொண்டதாக முருகைக் கற்களினால்
இடையிடையே மட்பாண்ட துண்டுகள் வைக்கப்பட்டு
- -
கட்டப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. முருகைக் கற்களின் இடை மீதான பூச்சு /0cm தடிப்பில் பூசப்பட்டிருந்தது.
இத் தேவாலயத்தின் பின் பகுதியில் வலது வெளிப்புறத்திலே உள் மண்டபத்தை தொடர்ந்த வகையில் ஏறத்தாழ 10 அடி நீள அகலம் கொண்டதான ஒரு அறை கட்டப்பட்டிருக்கலாம். இன்று அதன் அத்திவாரங்களே காணப்படுகின்றன. உள் மண்டபத்தின் இடது புற யன்னல்களின் கீழ்ப் பகுதி சிதைவடைந்து காணப்படுகின்றது. உள் மண்டபமானது அதன் கூரை முருகைக் கற்களினால் முழுமையாக கட்டப்பட்டுள்ளது. இன்று வரை இக்கூரையின் மேலிருந்து உள் மண்டபத்திற்குள் மழை நீர் உட்புகாதவாறு காணப்படுகின்றது. இவ்ஆலயத்தின் வலது புறமாக மத குருவின் வீடு இருந்த இடத்தில் இன்று செங் கற்களினாலான அத்திவார தடயங்கள் காணப்படுகின்றன. தேவாலய சுவர் ஆங்காங்கே வெடித்து உடைந்த
நிலையிலேயே காணப்படுகின்றது. இந்த சங்கானை
 
 

3 GGOGOő (BGF) 53
ஒல்லாந்தர் கால தேவாலயம் உரிய முறையில் பராமரிக்கப்படாமல் சிதைவடைந்து கொண்டிருக்கின்றது.
இலங்கையின் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் மூன்று முக்கிய நிர்வாக மையங்களுள் ஒன்றாக மொமாண்டறி விளங்கி இருந்தது. ஒல்லாந்தரின் வரலாற்றுச் சின்னங்களை உடுவில், சுண்டிக்குளி அச்சுவேலி, உடுப்பிட்டி, யாழ்ப்பாணக் கோட்டை போன்ற இடங்களிலுள்ள தேவாலயங்கள் மூலம் அறிய முடிகின்றது. இவை எல்லாவற்றிலும் மிகப் பெரிய முக்கியமாக குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரலாற்றுச் சின்னமாக சங்கானை தேவாலயமே அமைந்துள்ளமை குறிப்பிடத்கக்க விடயமாகும். இத்தேவாலயத்தை சிலர் ஒல்லாந்தர் கால கோட்டை எனவும் குறிப்பிட்டுள்ளனர். போர்த்துக்கேயர் இங்கே குதிரைகளைக் கட்டி வளர்த்ததாகவும் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை ஒல்லாந்தரின் கட்டடக்கலைக் கூறுகளை ஒரளவுக்கேனும் அழிவடையாது கொண்டிருக்கும் ஒரு தேவாலயமாக சங்கானைத் தேவாலயத்தினைக் காணமுடிகின்றது. இந்த வரலாற்றுச் சின்னத்தை அழியாது பாதுகாப்பது எல்லோரதும்
கடமையாகும.
ܝ݇ܬܼܵܐ
திருமதி சுபாஜினி உதயராசா சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியற்றுறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ܢ
نقلة
്
蠶

Page 54
囊
}
ផ្ទៃផ្សៃយ៉ាំរ៉ៃរឺ
54
 

‘பிடிலும் டான்சும் - நோர்வேஜிய மரபுகளினூடாக ஒரு பயணம் என்னும் கலைநிகழ்ச்சியை கொழும்பு நோர்வேஜிய தூதரகம் மற்றும்
சேவா லங்கா மன்றம் ஆகியன இணைந்து கொழும்பு இந்திய கலாசார நிலையத்தில் நடத்தின. அந்நிகழ்ச்சியில் சிலகாட்சிகளைக் காணலாம்.

Page 55
மயில் தோகை ே
AMALA KING COCONUT -- STRONG & LONG HAR -- SOFT S SILKY HAIR
All Shampoos Available in 200m, 100m & 7.5mm (sach
ஜ்
క్ట్ర
ReeBonn Products are available at all - Super Markets - Fancy Shops - Cosmetic Shops - Pharmacies - General Groceries
எங்களது ஏனைய கேசப்பராமரிப்பு உற்பத்திகள் Shompoo Conditioner Block Henno
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்:
 
 
 
 
 
 

ான்ற கூந்தலுக்கு.
ALOE VERA TEATREE OIL DRY & DAMAGED HAR -- ANTI DANDRUFF HAIR
ALOE VERA |
Praveena
೫gger###&#
உங்கள் கேசத்திற்கு இயற்கையான பராமரிப்பு
1534,4422 Naturally COS me fi CS

Page 56
கலைக்கேசரி கி 56 நடனக் கலை
 

கன்னடத்தின் பெருமை பேசும்
() 2L66p.6SRGOPSR
C ) ன்னிந்தியாவின் கேரள மாநிலத்திற்கும் 乡 மவுறாராஷ்டிரத்திற்கும் இடைப்பட்டதாக கர்நாடகம் உள்ளது. இசைவடிவிலமைந்த
நிகழ்த்து கலையான யக்ஷகானா 鼬 கன்னடத்தின் கரைப் பிரதேத்திலும் மேலைப் பகுதியிலும் நீண்டகால வரலாற்றுப் புகழ் மிக்க நாட்டார் அரங்காக மிளிர்வதைக் காணலாம். அத்தோடு வட கன்னடா, தென் கன்னடா, உடுப்பி, வழிமோகா மாவட்டங்களிலும் கேரளத்தின் கசரக்கோடு
隠 Nாவட்டிலும் இதன் வளர்ச்சி விரிவு பட்டு
உள்ளது. ஆந்திராவிலும் இதன்பெருமை ஒரு நீண்டகால
வரலாற்றுக்கு உரியதாகப் பேசப்பட்டதாகும். கேரளத்துக் |கசரக்கோடு, கன்னடம் மற்றும் துளு மொழியினைப் பேசும் மக்கள் பரவலாக வாழும் மாவட்டமாகும். கடந்த சில ஆண்டுகளாக தலைநகர் பங்களுரிலும் இது சிறப்பிடம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதனைத் தேவலோக யக்ஷகர்களின் இசை எனச் சிறப்பித்துக் கூறுவர். சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு உட்பட்டதாக யக்ஷகானா எனும் 霞 பெயரை இக்கலைவடிவம் பெறுவதாக அமையினும் பக்தி இயக்கக் காலத்தே இந்நாடக வடிவம் கேளிக்கை, தஷவதாரா, ஆட்டா (ஆட்டம்), பயலாட்டா போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டதாக இன்றைய ஆய்வுகள் புலப்படுத்துவதைப் பார்க்கலாம்.
கனராவின் வடக்குத் தெற்கை உள்ளடக்கிய கர்நாடகாவின் கரைப் பிரதேசங்களின் வனப்பையும் பச்சைபோர்த்திய வயல் நிலங்களையும் பழமரத் தோட்டங்களையும் அருவிகள் கடலில் கலக்கும் அழகினையும் பறைவைகளின் ரிங்கார ஒலியினையும் கொண்டிலங்கும் நிலவளத்தின் சிறப்பினை யக்ஷகானாவின் இசை மிகமிகச் சிறப்பாக வெளிப்படுத்தும். தலை நிமிர்ந்து நடப்பதுவும் உச்ச ஸ்தாயில் பாடுவதும் கம்பீரமாய்ப் பேசுவதும்
தைரியமிக்கதாக ஆடுவதும் அம்மக்களது பாரம்பரியம் மிக்க
தன்மையாக யக்ஷகானா வெளிப்படுத்தும். பொதுவாக

Page 57
கொழும்பு gró
நோக்குமிடத்து யக்ஷகானா வீரம், கோபம், .!!" என்பவற்றைக் கொண்டமைந்த தாண்டவ ஆட்டமுறையைக் கொண்ட ஒரு கலைவடிவமென்றே கொள்ளத்தக்கதாகின்றது. இலக்கிய நயம்மிக்க பாடல்களைக் கொண்ட யக்ஷகானா கோவில் வீதிகளிலும் ஊர் வெளிகளிலும் கடற்கரைகளிலும் அறுவடை முடிவுற்ற காலங்களில் வயல் நிலங்களிலும் பொதுவாக ஆடப்பட்டு வந்துள்ளது.
யக்ஷகானா சுமாராக இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகி விடிய விடிய நடைபெறும். இதற்கான மேடை பதினாறு அடி சற்சதுரத்தில் தரையில் அமைக்கப்படும். நான்கு மூலைகளிலும் நான்கு கம்பங்கள் நட்டு அதில் வாழை மரம் கட்டப்பட்டிருக்கும். இடுப்புயரத்திலான இரண்டு வெண்கல விளக்குகள் மேடையில் ஏற்றப்பட்டிருக்கும். பார்வையாளர்கள் மேடையின் முன் மூன்று பக்கமும் அமர்ந்திருப்பர்.
யக்ஷகானா நாடகக் குழுவினர் மேளா என்ற பெயரினைப்
பெறுகின்றனர். இவர்கள் மும்மேளா
மற்றும் வறிம்மேளா எனப் பாகுபடுத்தப்படுகின்றனர். நிகழ்த்துகை கலைஞர்கள் மும்மேளா என அழைக்கப்பட் பிற்பாட்டு மற்றும் வாத்தியக் கலைஞர்கள் வறிம்மேளா என அழைக்கப்படுவர். யக்ஷகானாவின் வெற்றியானது மிக முக்கியமாக அதன் பாகவதரிலேயே (இயக்குனர்) தங்கியுள்ளது. நிகழ்த்துகையின் போது பாடுவதும் கலைஞர்களின் அபிநயங்கள் தொடர்பாகப் பார்வையாளர்களுக்கு விபரிப்பதுவும் நிகழ்வுகளைத் தொடர்புபடுத்தி முன்னெடுப்பதுவும் பாகவதரின் முக்கிய பணியாக அமையும், பாகவதரின் கையில் ஒரு சிறிய சல்லாரியிருக்கும். அவற்றுடன் மத்தளம், குழல், சண்டி எனும் பெரிய மேளம் ஆகிய இசைக் கருவிகளை வாசிப்போர் கூடவே இருப்பர். பாடல்கள் கதைக்கேற்வாறு அமைக்கப்பட்டிருக்கும். யக்ஷகானாவின் இசையானது சாஸ்திரிய இசையுடனும் கிராமிய இசையுடனும் தொடர்புபட்டதாகவே அமையும்.
பொதுவாக யக்ஷகானாவின் அனேக ராகங்கள் கர்நாட சங்கீதத்திலோ அன்றேல் இந்துஸ்தானியிலோ இ பெறுவதில்லை. முன்னர் நூற்றி ஐம்பது வரையான ராகங்கள் யக்ஷகானாவில் இருந்ததெனவும் தற்போது இதில் முப்பதுக்கும் மேல் அருகிவிட்டதாகவும் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன.
வடக்குத் தித்து, தென்கு தித்து
தெருக் கூத்து தமிழகத்தில் வடக்கத்தி தெக்கத்தி
என்றும் கதத்களி கேரளத்தில் வடக்கன் சித்தா தெக்கன்
சித்தா என்றும் கூத்து ஈழத்தில் வடமோடி தென்மோடி என்றும் வடக்கு தெற்குப் பாணிகளைக் கொண்டிருப்பதைப் போன்றே யக்ஷகானாவிலும் வடக்குத் தித்து மற்றும் தென்கு தித்து (தெற்குத் தித்து) என இரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ម៉ាឡៃ
57

Page 58
கலைக்கேசரி கி 58
பிரிவுகளை அவதானிக்கலாம். தற்போது மேலும் ஒரு பிரிவாக வடக்கு தித்துவிலிருந்து வட கன்னடத்துக்கென உத்தர கன்னட தித்து என ஒரு பாணி உருவாகியிருப்பதுவும் அறியப்படுகின்றது. இதில் தென்கு தித்து கேரளத்தின் கசரக்கோடு தொடக்கம் கன்னடத்தின் உடுப்பி மற்றும் சம்பாஜி, புத்தூர், பெத்தங்காடி, கர்க்கலா வரை பரவலாக ஆடப்படுவதையும் வடக்குத் தித்து உடுப்பியின் வடபாலிருந்து வடகன்னடாவின் தென்பகுதிவரை ஆடப்படுவதையும் அவதானிக்கலாம்.
கி.பி //ம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி 16ம் நூற்றாண்டு 60Ꮧ6Ꮱ)/0 மிகச் சிறப்பான 1860)GUGO)(U யக்ஷகானா எட்டியிருந்ததாகவே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனனர். ஐரோப்பியர் ஆட்சியில் ஏனைய இந்தியக் கலைகளைப் போல் யக்ஷகானாவும் பாரிய பின்னடைவை எட்டியது. பின்னர் கன்னட நாட்டின் மரபுவழிப்பட்ட கலை வடிவமாக இதனை மீண்டும் முன்னிறுத்தியவர் பூரீமாதவாச்சாரியா ஆவார். இதனைப் பிரபல்ய நிலைப் படுத்தி நாடறியச்செய்த பெருமை
பூநீநரகரி தீர்த்தாவைச் சாரும், தசாவதார ஆட்டம் என்ற பெயரில் தொடக்கத்தே உடுப்பியிலும் பின்னர் இதனை ஏனைய
 

பகுதிகளுக்கும் அவர் கொண்டுசென்றார். இதன் ஆட்ட முறைகள், இசை மற்றும் ஆடை அணிகள், ஒப்பனை, அரங்கமைப்பு போன்றவை கன்னடத்தின் பிற இடங்களிலும் அண்டைய மாநிலங்களான கேரளா, தமிழகம், ஆந்திரா மற்றும் மகா ராஷ்டிரத்திலும் தென்படும் பல கலை வடிவங்களோடு இசைவுபடுவதையும் அவர் கண்டறிந்தார். வித்துவான் கோவிந்தாச்சாரியா போன்றவர்கள் யக்ஷகானா குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அரங்கக் கலைஞராகவும் சிறந்த எழுத்தாளராகவும் கருதப்பட்ட பி.வி.காந், பரதநாட்டியம் போன்ற பல நிகழ்த்து கலைகள் யக்ஷகானாவின் வடிவங்களை உள் வாங்கியிருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். யக்ஷகானாவும் அஸாமின் ஆங்கியா ஆட்டமும் வங்காளத்தின் யாத்ராவும் பீகாரின் செள நடனமும் ஒரிசாவின் பிரகலாதா நாடகமும் ஆந்திராவின் வீதி நாடகம் மற்றும் சிந்துவும் தமிழ் நாட்டின் தெருக்கூத்து மற்றும் பாகவத மேளாவும் கேரளத்தின் கதக்களியும் ஒத்த தன்மை கொண்ட அரங்கப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் பொதுவாகக் கருதும் நிலையில் ராகம், தாளம் போன்ற சில விசேட தன்மைகளில் யக்ஷகானா சற்று வேறுபட்டு நிற்பதைச் சிலர் சுட்டிக்காட்டவும் செய்கின்றனர்.
யக்ஷகானாவிற்கான கதையமைப்பு இராமாயணம், மகாபாரதம் மற்றும் இந்து மதம் சார்ந்த புராணங்களைக் கொண்டனவாக அமையும். பொதுவாகக் கடவுளர், புராண நாயகர்கள், துஷ்ட தேவதைகள், பேய்கள் போன்ற கதாபாத்திரங்களே மேடையில் தென்படும். திருமணம், இராச தந்திர நடவடிக்கைகள் என்பவற்றை மையப் படுத்தியதாகவே சண்டைக் காட்சிகள் அமையும். கிரிஜா கல்யாணம் தொடக்கத்தே சிவனுக்கும் தக்ஷனுக்கும் ஏற்படும் பயங்கரச் சண்டையுடன் ஆரம்பிப்பதைப் போன்றே சுபத்திரா
கல்யாணத்திலும் அர்ச்சுனனுக்கும் சுபத்திரையின் சகோதரன்
றும் மைத்துனர்மாருக்கும் ஏற்படும் சண்டையில்
γΕ)
கும். இதில் பொதுவாக இசையும் உரையும் தைரியத்தை வெளிப்படுத்தும் தன்மை மிக்கவை.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி ஒலைச்
சுவடியிலிருந்து /564ல் ஆடப்பட்ட விராட பர்வம் எனும்
ாடகமே முதல் நாடகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. னை மகா பாரதத்திலிருந்து விஷ்வரம்வல்லி என்பவர் எழுதியுள்ளார். பர்கூர் கவிஞர் தேவிதாஸ் அனேக யக்ஷகானா நாடகங்களை எழுதியவர் என்ற பெருமைக்குரியவராகின்றார். இன்று இவற்றில் பல நாடகங்கள் அச்சுருவில் உள்ளன. இதில் கிருஷ்ண அர்ச்சுன கலகம், அபிமன்யு கலகம், சைதவன் வதை போன்றவை மிகப் புகழ்பெற்ற நாடகங்களாகும். பெயர் குறிப்பிடாத ஒரு கவிஞர் எட்டு நாடகங்களை எழுதியிருப்பதாகத் தெரிகின்றது. ராம பட்டா என்பவர் எழுதிய
சுபத்திரா கல்யாணம், லவ குசன் கலகம் ஆகியவையும் மிகப்
புகழ்பெற்ற நாடகங்களாகும். யக்ஷகானா தொடங்குவதற்கு

Page 59
முன்னதாக ஒப்பனை அறையில் நடிகர்கள் அனைவரும் பிள்ளையாரை வழிபடுவர். ஒப்பனை முடிவுற்றதும் மீண்டும் பிள்ளையாருக்குரிய மந்திரங்களைச் சொல்லி கண்களை மூடியபடி தியானிப்பர். அதன்பின்னர் அரங்கை நோக்கிச் செல்வர். அரங்கிலும் பாகவதரால் பிள்ளையார் துதி பாடப்படும். அதன்போது இருவர் சிறிய திரையொன்றைப் பிடித்தவாறு நிற்பர். இதன் பின்புறத்தில் பிள்ளையார் இருப்பதாக அங்கு
கருதப்படுகின்றது. கடவுள் வணக்கம் முடிவுற்றதும் ஹனும
நாயக எனப்படும் விதூஷகன் மேடையில் தோன்றுவார். A. அவரது பாத்திரப்படைப்பை பொறுத்தவரை அவரே அங்கு 穩 அறிவிப்பாளராகவும் தூதுவராகவும் வேலையாளாகவும் செயற்படுவார். நாடகத்தின் பாத்திரங்கள் ஒவ்வொருவரிடமும் கேள்விகள் கேட்டு அவர்களை யாரெனச் சபைக்கு
வெளிக்காட்டுவார்.
அதன்பின்னர் நிகழ்வின் தொடக்கமாக பாகவதருடன் அவரது உரையாடல் இடம்பெறும். அது நடைபெறவுள்ள நாடகம் சார்ந்ததாய் அமையும். உரையாடல் முடிவுற்றதும் சண்முகக் கடவுளுக்கு வணக்கப் பாட்டு பாடப்படும். அதன்பின்னர் பலராமனதும் கிருஷ்ணரதும் வேடமணிந்த இரு சிறுவர்கள் மேடையில் தோன்றி ஆடுவர். உச்ச நிலையில் மிக வேகமாகச் சுழன்றும் துள்ளியும் குதித்தும் இவர்கள் ஆடும் நிலையில் பார்வையாளர்கள் மெய்மறந்து கரகோசம் செய்து இவர்களை உற்சாகப்படுத்துவர். இதற்கான சிறந்த பயிற்சியை அச்சிறுவர்கள் பெற்றிருப்பர். பின்னர் பாகவதர் பாடத் தொடங்குவார். அதன்போது வாத்திய இசை முழங்க கிருஷ்ணரின் மனைவியரான சத்தியபாமா, ருக்மணி வேடமிட்ட இரு சிறுவர்கள் மேடையில் தோன்றி ஆடுவர். பின்னர் பாகவதர் கிருஷ்ணரைத் துதித்துப் பாடுவார். அதன் பின்னர் அரண்மனைக் காட்சியுடன் நாடகம் தொடரும்.
யக்ஷகானத்தில் ஆண் நிலை வாதமே முன்னுரிமை பெறுவதால் தொடக்க நிலையில் ஆணுடன் பெண் மேடையில் தோன்றுவதில்லை. மகா பாரதத்தில் முதல் வருகையில் துரோபதை இடம் பெறுவதில்லை. அதேபோல்
இராமாயணத்தின் முதல் வருகையில் சீதை இடம் பெறுவதில்லை. நாடகம் சூரிய உதயத்துடன் பாகவதர் அந்திமா எனும் மங்களம் பாட நிறைவுறும். அதன் பின்னர் நடிகர்கள் அரங்கிலிருக்கம் விளக்கைத் தூக்கியவாறு ஒருவர் பின் ஒருவராய் ஒப்பனை இடம் நோக்கி வரிசையாய்ச் செல்வர். அங்கு அனைவரும் பிள்ளையாருக்கு மங்களம் பாடி
வணங்குவர்.
யக்ஷகானாவிற்கான ஒப்பனைக் கூடம் யுக்ஷகானாவிற்கான ஒப்பனைக் கூடம் அரங்கிலிருந்து சுமார் ஐம்பது யார் தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கும். அதனுள்ளே நீளமான மூங்கில்தடி கட்டப்பட்டு அதில் முடிகள், பட்டிகள், சலங்கைகள், கில்ட் நகைகள் மற்றும் தேவையான
ஆடைகள் தொங்கவிடப்படும். சில வேளைகளில் ஒருவரே பல
 
 
 
 
 
 
 
 


Page 60
嗣廖
ក្តញ 60
 

வேடங்களில் நடிக்கவேண்டியிருப்பதால் ஒப்பனைக் கூடம் எப்போதும் சந்தடி மிக்கதாகவேயிருக்கும். தரையில் அமர்ந்தவாறே ஒப்பனை செய்யப்படும். வடக்குத் தித்து மற்றும் தென்கு தித்து இரண்டிலும் ஒப்பனையும் சற்று வேறுபடும். தென்கு தித்தின் ஒப்பனை கதக்களியின் சாயலை ஒத்ததாகத் தென்படும். முடிகள் மற்றும் அணிகலன்கள் யாவும் மிக்க பாரம் கொண்டனவாயும் பெரியனவாயும் அமையும்.
யக்ஷகானாவில் ஒரு பிரிவாக பாவைக் கூத்தும் தென்படுகின்றது. இது 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தே பெரும் சிறப்பைப் பெற்றிருந்ததாக ஆய்வுகளில் தெரிய வருகின்றது. சிறுவர்க்கான யக்ஷகானாவும் இன்று தனியாக அடையாளப்படுத்தப்படுவதைக் காணமுடியும்.
யக்ஷகானா பாவை ஆட்டம் சிறுவர் யக்ஷகானா
இன்று பல யக்ஷகானா மேளாக்களை (குழுக்கள்) வட கனரா உட்பட கர்னாடகாவின் பல்வேறு இடங்களிலும் அவதானிக்கமுடியும். இம் மேளாக்கள் பொதுவாகத் தங்களது ஊர்ப் பெயராலோ அன்றேல் கோவிலின் பெயராலோ அழைக்கப்படுகின்றன. இருபது வரையான கலைஞர்கள் ஒரு மேளாவில் இடம் பெறுகின்றனர். இத்தகைய இருநூற்றி முப்பது (230) வரையான குழுக்கள் கர்னாடகாவில் இயங்குவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் தொழில் முறையில் முப்பது வரையான குழுக்கள் செயல்படுவதாக அறியப்படுகின்றது. பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அங்கே ஆண்டு தோறும் சராசரியாகப் பன்னிரெண்டாயிரம் (/2000) யக்ஷகானா நிகழ்வுகள் இடம் பெறுவதாக புள்ளி விபரங்கள்
வெளிப்படுத்துகின்றன.
கர்னாடகத்தின் தனித்துவம் மிக்க கூத்துக் கலையான யக்ஷ கானா தெலுங்கிலும் புகழ்பெற்றதாகும். அண்மைக்காலமாக இதில் ஆர்வம் AN குன்றியிருப்பினும் கி.பி. 13ம் நூற்றாண்டு முதல் கொண்டு யக்ஷகானா பற்றிய தகவல்களை தெலுங்கானா ഖ0ണ്ഡ0g/ பதிவுசெய்திருப்பதை அறியலாம். அக்காலத்தே பாலக்குறுக்கி சோமநாதர் என்ற புலவர் பண்டித ராதையா சரித்திரம் என்ற பெயரில் ஒரு யக்ஷகானாவை எழுதி நடாத்தியுள்ளார்.
/5ம் நூற்றண்டின் பிற்பகுதியில் புரோலுகந்தி சென்ன செளரி எழுதிய சபரி சரித்திரம் தெலுங்கானாவில் மிக்க புகழ்பெற்ற யக்ஷகானாவாக அறியப்படுகின்றது. தஞ்சை மராத்திய மன்னர்களும் யக்ஷகானத்தில் ஆர்வம் காட்டியிருக்கின்றனர். சாஜி மன்னன் இருபதுக்கும் அதிகமான நாடகங்களை எழுதியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தஞ்சை துலுஜாராஜி சிவாஜி போன்ற மன்னர்களும் இதில் மிக்க * ஆர்வம் காட்டியவர்களாகக் கொள்ளப்படுகின்றனர்.
கர்நாடகாவில் யக்ஷகானாவுக்கான பயிற்சிப் படசாலைகள்

Page 61
மிகக் குறைவாகவேயுள்ளன. பொதுவாக ஆலயங்களைச் சார்ந்ததாகவே இதற்கான பயிற்சிகள் இடம்பெறுகின்றன. எனினும் உடுப்பியிலுள்ள கோவிந்தபாய் ஆய்வு நிறுவகத்திலுள்ள யக்ஷகான கலாகேந்திரா இவ்வாடற் 6606060) (U 9606700 தலைமுறையினருக்கு போதிப்பதைப்
பார்க்கலாம்.
யக்ஷகானாவின் பெருவளர்ச்சிக்கு பல புகழ்பெற்ற பாகவதர்கள் தங்கள் பங்களிப்பினை நல்கியிருக்கின்றனர். தென்கு தித்துவில் பாலிப்ப நாராயண பாகவதர், தாமோதர மன்டேச்சா, நல்லூர் மாரியப்ப அச்சர், சிறிணிவாச பாகவதர், ரகுராம பாகவதர், தென்காவயல் திருமலேஷ்வர சாஸ்திரி சிறிமதி லீலாவதி வைபாதித்தியா எனப் பலர் இதில் புகழ்பெற்றவர்களாகின்றனர். லிலாவதி ஒரே சிறந்த பெண் பாடகராகப் போற்றப்படுகின்றார். வடக்கு தித்துவில் அய்ரா கோபாலகிருஷ்ண பாகவதர், கடத்தோக கிருஷ்ண பாகவதர், கலிங்க நவுடா, நெப்பூரு நாராயண கெக்டே, வித்வான் கணபதி பாகவதர், ராகவேந்திர ஆச்சாரி, கோஸ்தோட்டா மஞ்சுநாத பாகவதர் எனப் பலர் இடம்பெறுகின்றனர். மஞ்சுநாத பாகவதர் சிறந்த கவிஞருமாவார்.
இன்று யக்ஷகானா நிகழ்த்து கலையானது கன்னடத்தின் பெருமையினை இந்திய மண்ணில் மாத்திரமல்லாது கடல் கடந்த நாடுகளிலும் நிலை நிறுத்தவே செய்கின்றது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் யக்ஷகான கலாபிரிந்தா,
 
 

ថាហ្វ្រញង៉ាឌ័ 61
யக்ஷரங்கா என்ற பெயரிலும் கனடாவின் ஒன்ராறியோவில் யக்ஷமித்ரா என்ற பெயரிலும் நிகழ்ச்சிகளை நடாத்திவருவது அதன் புகழினை மென்மேலும் முன்னெடுப்பதாகவே அமையும்,
- தாக்ஷாயினி பிரபாகர் நடனத்துறை விரிவுரையாளர், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம். சான்றாவணங்கள்: 01. பெ.திருஞான சம்பந்தன் - இந்திய எழிற்கலை 02. வே.ராகவன் - நாட்டியக் கலை 03. பேரசிரியர் வி.சிவசாமி - தென்னாசிய சாஸ்திரிய நடனங்கள் 04. டாக்டர் பத்மா சுப்பிரமணியம் - பரதக்கலைக் கோட்பாடு 05. கோ.தாக்ஷாயினி - இந்திய மரபுவழி ஆடற் கலைகள் 06.Dr. Shivarama Karantha - Yakshagana Bayalaata, (Harsha
Publications, 1963, Puttur, South Canara.) 07. Nemichandra Jain - Indian Theatre 08. Martha Bush Ashton, - Yakshagana, (Abhinaya Publications, India; 1st edition (15 June 2003) ISBN 817017-047-8, ISBN 978-81-7017-047-1) 09. Neelavara Lakshminarayan Rao, Gorpadi Vittala Patil, - Yakshagana Swabodhini, (Published by Yakshagana Kendra, MGA college Udupi, India, 1st edition ) 10. Prof. Sridhara Uppara. -Yakshagana and Nataka (Diganta publications) "The changing face of Yakshagana". Online Webpage of The Hindu (Chennai, India) http://www.hindu.com/2009/06/17/stories/ 2009061757640300.htm
கொழுமபு தமிழ்ச சங்க
நிலகம்

Page 62
அனுமன் இலங்கையை எரித்த போது
எரியுண்டு சிவந்து போன
கடற்கரை மணல்
 
 
 

அனுமனால் எரியூட்டப்பட்ட இராவணனின் ஆயுதக் களஞ்சியமும் அரண்மனையும்
ராமாயணத்தில் இலங்கை எனும் இந்தத் தொடர் இ இராமாயண இதிகாசத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக நம்பப்படும் சம்பவங்களை அடியொற்றியதாக தொடர்கின்றது. இராமன், சீதா, இராவணன், அனுமன் என்ற 9)/7/7(0/7u_/6007 நாயக பாத்திரங்கள் தெய்வங்களாக மதிக்கப்படுகின்றார்கள். இராமாயணத்துடன் தொடர்புடைய பகுதிகளாக இலங்கையில் 50 க்கும் மேற்பட்ட பகுதிகள் அடையாளம் காணப்பட்டாலும் அவை இதுவரையில் தொல்பொருள் ஆராய்ச்சி வல்லுனர்களினால் உறுதிப்படுத்தப்படவில்லை. ஐயங்களின் அடிப்படையிலும் மத நம்பிக்கையின் அடிப்படையிலும் தான் பாமர மக்கள் மத்தியிலும்
படித்தோர் மத்தியிலும் இலங்கையுடன் தொடர்புடைய இராமாயண சம்பவ இடங்கள் இன்றும் பக்திபூர்வமான யாத்திரைக்குரிய இடங்களாக மதிக்கப்படுகின்றன.
சில இடங்கள் புனிதமாக பேணப்படுகின்றன; சில இடங்க பராமரிப்பின்றி கைவிடப்பட்டுக் காடாகிப் போயுள்ளன. இன்னும் சில இன்றுவரை அதன் பெறுமதிகள், சிறப்புகள் உணரப்படாமல் வெளியில் தெரியவராமல் உள்ளன.
இலங்கையின் தென்பகுதியில் கடற்கரையோரமாக செல்லும் வீதி ஏ2. நெய்தல், மருதம், முல்லை என மூவகை நிலங்களும் ஒன்றாய்கண்ணுக்குத் தெரிய, அங்காங்ே குறிஞ்சியும் கைகோத்திருக்கும் நிலத்தோற்றம்.
அண்மைக் காலமாக பிரமிக்கத் தக்க வளர்ச்சி கண்டுவரு
பிரதேசமாக தெற்குப் பிரதேசம் திகழ்கின்றது. கடந்த
காலங்களில் வளமற்ற மண் என ஒதுக்கி வைக்கப்படடிருந்த நிலங்கள் யாவும் இப்போது பச்சைப்பசேல் என செல்வம் கொழிக்கும் நிலங்களாகக் காட்சிதருகின்றன.
மாத்தளை - கதிர்காமம் வீதியில் பயணிக்கும் போது அம்பலாந் தோட்டையில் நோனாகம சந்தியில் வலது பக்கமா செல்லும் தாரிடப்பட்ட சிறிய வீதியின் இருமருங்கும் பூவர மரங்கள் காணப்படுகின்றன. இந்த வீதியினூடாக சுமார் நான்கு கிலோமீற்றர் தூர பயணத்தின் பின்னர் தார் வீதி முடிவடைந்து மண் கிரவல் வீதி மூன்றாகப் பிரிகின்றது. இடப்புறமாகப் பிரியும் வீதி கடற்கரையில் சென்று முடிவடைகின்றது.
நெடிதுயர்ந்து வளர்ந்துநிற்கும் தென்னை மரங்களும் கீழே விழுந்து கிடக்கும் காவோலைகளுமாக சாதாரணமா
இலங்கைக் கடற்கரையை இந்த இடம் முதலில் ஞாபகப்படுத்தியது. ஆங்கங்கே பத்திற்கும் மேற்பட்ட சிறிய மீன்பிடிப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில
வருடக் கணக்காக கடலில் இறக்கப்படாமல் கைவிடப்பட்ட

Page 63
நிலையில் காணப்பட்டன. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மனித சஞ்சாரம் எதுவும் அற்றிருந்த அப்பிரதேசத்தில் மீன்பிடி வள்ளங்களின் நடுவே வலையை துப்பரவு செய்து கொண்டிருந்தாள் பெண் ஒருத்தி
கடற்கரை மணலில் ஒவியம் வரைந்து கொண்டே உடலைப் பிசுபிசுக்க வைக்கும் உப்புக் காற்றுக்கு மத்தியில் இங்கு என்னதான் விசேடம் காணப்படுகிறது என மனம் தேடியது. இங்குள்ள கடற்கரை மணல் செந்நிறமாக காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
இந்து சமுத்திர பேரலைகள் சீறிவந்து தரையைத் தொடும் இப்பகுதியின் கடற்கரை மணல் செந்தணல் சிவப்பு நிறத்தில் ஏன் காணப்படுகின்றது? இடது பக்கமாக 300 மீற்றர் தூரத்தில் காணப்பட்ட சிறிய குன்று வரையும், வலது பக்கமாக 500 மீற்றர் தூரம் வரையும் கடற்கரை மண் செந்தணல் நிறத்தில் காணப்பட்டது. சிவப்பு நிற மண் ஒன்றரை அங்குலத்திற்கும் றைவான தடிப்பத்திலேயே இருந்தது. கீழே இலங்கைக்
டற்கரைகளில் காணப்படும் சாதாரண வெண்மண்
ாணப்பட்டது. சமுத்திர அலை வீச்சுடன் கரையில் மோதி
றம் சற்றும் குறையவே இல்லை.
இராமாயணத்தில் சுந்தரகாண்டத்தில் இலங்கையை
匿 ரியூட்டும் படலத்தில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
உரையின் முந்து உலகு உண்ணும் எரிஅதால், வரை நிவந்தன பல் மணி மாளிகை
நிரையும் நீள் நெடுஞ் சோலையும் நிற்குமோ? தரையும் வெந்தது, பொன் எனும் தன்மையால்.
அனுமனின் வாலில் தீமூட்டப்பட, அந்தத் 罗 மூலமாக
லங்கையை எரித்தாக இராமாயணம் இயம்புகின்றது. சங்கொட என்ற இந்த கடற்கரைப் பகுதியில்தான் அனுமனின்
ாலில் தீமூட்டப்பட்டதாகவும் தியின் வெப்பத்தினால் சந்தணலான மண் இன்றும் அப்படியே காணப்படுகின்றது என்ற நம்பிக்கை இன்றும் பரவலாக இந்தியாவிலும்
ங்கையிலும் நிலவுகின்றது. இதேபோல், முன்னர் குறிப்பிட்ட தார் வீதி முடிந்து
ண்ணை வாரி அடித்துச் சென்ற பின்னும் செந்தணல் மண்ணின்
 
 
 
 
 
 
 
 

ல் சாதாரண
ழத்தி டுகிறது
ல ஆ
圈
Ë 酶娜 원형·3 Ệ €. ? 仁 历
ஒனறு முதல ஒனறரை
魯
-

Page 64
இந்த இடம் சற்று மேடான நிலப்பகுதியாக காணப்படுவதால் இந்து சமுத்திரத்தைக் காணக்கூடியதாக இருந்தது. சமுத்திரம்; அதனையடுத்து சிறிய பற்றைக் காடுகள், அதனையடுத்தே இந்த பரந்த செம்வெளி
இப்படி மரங்கள், செடிகள் முளைக்காமல் இருப்பதற்கான காரணமும் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இராம இதிகாச சம்பவங்களுடன் தொடர்புபடுத்தியே பார்க்கப்படுகின்றது. இராவணனின் அரண்மனை இருந்ததாகவும் ஆயுத களஞ்சியம் இருந்தாகவும் அனுமனின் வாலில் மூட்டப்பட்ட தீ இராவணனின் அரண்மனையையும் ஆயுதக் களஞ்சியத்தையும் இல்லாது அழித்ததாகவும் கம்பராமாயணத்தில் சுந்தரகாண்டம் இலங்கை
எரியூட்டப்பட்ட படலத்தில் பாடப்பட்டுள்ளது.
வில்லும், வேலும், வெங் குந்தமும் முதலிய விறகாய் 貫 எல்லுடைச் சுடர் எனப் புகர் எஃகு எலாம் உருகி,
தொல்லை நல் நிலை தொடர்ந்த, பேர் உணர்வு
அன்ன தொழிலால்
சில்லி உண்டையின் திரண்டன படைக்கலத்
திரள்கள்.
நீரை வற்றிடப் பருகி, மா நெடு நிலம் தடவி, தாருவைச் சுட்டு, மலைகளைத் தழல்செய்து, தனி மா மேருவைப் பற்றி எரிகின்ற கால வெங் கனல்போல், ஊரை முற்றுவித்து, இராவணன் மனை புக்கது
- உயர் தீ
இராவணன் கோட்டையும் ஆயுதக் களஞ்சியமும் இருந்தாக நம்பப்படும் இடம்
 
 
 
 
 
 

இருந்த போதிலும் இந்த செந்தணல் மண் குறித்த விஞ்ஞான ரீதியான விளக்கத்தை இலங்கை விஞ்ஞான சங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ள முடிந்தது. அவர்கள் கூறுகின்றார்கள், உசங்கொடவில் குறிப்பிட்ட மேட்டு நில வெளியில் மண் சிவந்தும் எந்தவித செடிகளும் மரங்களும் முளைக்காமல் இருப்பதற்கான காரணம் மேட்டுவெளியில் காணப்படும் கூழாங்கற்கள் கொண்ட பாறை அமைப்பாகும். இந்த நிலப்பகுதி இதிகாச காலப்பகுதியில் ஏதோஒரு காரணத்தினால் மிக உச்ச நிலையில் வெப்பமடைந்திருக்க வேண்டும். ஒருவேளை வானிலிருந்து எரிகல் கூட விழுந்திருக்கலாம். ஆனால் அப்படி எரிகல் விழுந்திருந்தால் பள்ளங்கள் தோன்றியிருக்கும். ஆனால் இப்பகுதியில் அவ்வாறான எரிகற்கள் விழுந்ததற்கான பள்ளங்கள் எதுவும்
காணப்படவில்லை. இங்கு காணப்படும் மண்ணில் காரியம் மற்றும் காந்த துணிக்கைகள் கொண்ட தாதுப் பொருட்கள் கலந்துள்ளன. இதனால் தான் இப் பிரதேசத்தின் தரைத்தோற்றம் செந்நிற வெளியாகக் காணப்படுகிறது. ' என்றனர்.
இப்பகுதி இராணுவ ரீதியிலும் முக்கியத்துவம் பெற்ற இடமாகத் திகழ்கின்றது. இராமாயண இதிகாச பாடலின்படி
இராவணனுடைய ஆயுதக் களஞ்சியம் இங்கு காணப்பட்டதாக
அறிகின்றோம். அதேபோல் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஆபிரிக்கப் படையணிகள் இங்கு முகாமிட்டு, மிகப்பெரிய ஆயுத
களஞ்சியத்தை அமைத்திருந்ததாகவும் பின்னர் அவர்கள் இந்த ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டு சென்று விட்டதாகவும் “ தற்போது கூட சிலவேளைகளில் நிலத்தை அகழும் போது சில
ஆயுதங்கள் மீட்கப்படுவதாகவும் ஊரவர்கள் தெரிவித்தார்கள்.
உள்ளுர் உற்பத்திகளுடன் வியாபாரிகள் யாத்திரிகர்கள் மற்றும் உல்லாசப் பயணிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

Page 65
கதிர்காமத்தில் மாணிக்க கங்கையில் நீராடிய பின்னர் உடலும் உள்ளமும் இலகுவாகி ஒருவித புத்துணர்வினைப் பெறுவது போல் இந்த மண்ணில் வெறும் காலுடன் நடக்கும் போது ஒருவித புத்துணர்ச்சியையும் சுறுசுறுப்பையும் உணரமுடிகின்றது. உசங்கொட மற்றும் அருகில் உள்ள கிராமவாசிகள் தலையிடி, காய்ச்சல் போன்ற சிறிய வியாதிகள் ஏற்படும் வேளைகளில் இந்த இடத்திற்கு வந்து சற்று ஆறஅமர உட்கார்ந்திருந்து விட்டுச் செல்லும்போது தமது வியாதி இருந்த இடம் தெரியாமல் குணமாகி விடுவதாகவும் கூறுகின்றனர்.
பொதுவாக உசன்கொட எனும் இப்பகுதி மனதைக் கொள்ளைக் கொள்ளும் இயற்கை காட்சிகள் நிறைந்ததாகவும் இலங்கையில் வேறெந்த இடத்திலும் காணமுடியாத தரைத்தோற்றத்தைக் கொண்டும் யாத்திரீகர்கள் மற்றும்
உல்லாசப் பயணிகள் ஆகியோரைக் கவரும் இடமாகவும்
காணப்படுகின்றது. இங்குள்ள தேநீர் கடைகளில் தேநீரைவிட உள்ளுர் மூலிகைக் குடிநீர் வகைகளும் விளாம்பழ பானமும் விற்பனை செய்கின்றார்கள். இன்னும் காயவைத்து
பொதிசெய்யப்பட்ட மூலிகைகளும் விற்பனை செய்கின்றார்கள். இவையாவும் உடலாரோக்கியம் பேணும் அருமந்து மூலிகைகள் ஆகும்.
衰 - மிருணாளினி
Please complete the form given below, along with your Cheque/N (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No185, Tel:+94-11-5322700/5738046 Fax:+94-11-5517773
For more details, please contact: Overseas Subscriptions Arjur Local Subscriptions S. Sal
Online Payment: www.kalaikesari.com/Subscri
ORDER FORM : Title
First Name த் KAA KESAR ö町50ö岛ā last Name
Institution Manager Subscriptions gApartment Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, 소 Street / Ro Sri Lanka. இon /City) Tel : +94-11-5322783 / +94-11-5738046 Count Fax :--94-11-5517773 гу E-mail: subscription(a)kalaikesari.com Amo Unit En
- - Cheque should be drawin in favour of Mode of p
Express Newspapers (Ceylon) (Pvt) Limited
Online Pay
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

WERED TOYOUR HIOME
Money Order written in favour of 'Express Newspapers Grandpass Road, Colombo 14, Sri Lanka.
-on arjun(a)expressnewspapers.net/Mobile:+94777 SIGndrasegar – +94 77 5359106 / +94 - 11 - 5322783
ption
: Mr. Mrs. / Miss Dr. Prof.
SLSSLSSLSSLSLSSLSSLSS SLSSLSSLSLSSLS0S0SS0S S S LS0 S00LS00LS SS SS00 00000LS0000LS000S000 0S0L00 0L LLSLLS SLLS SLS SLS SLS S S S S S S S
/Other Nos :
SS LS S LSLS LL LSS0SLL 0LLS00LLSLSLLSSLSLLLLS LSLLL 0 0SSS0 S 0SS SS00 0000SLLLLLS S LLLS0 S LS0 C LSLSLS LS0C CCC C SLLS CSLS LS S SLS SLS S S S S S S S S
Od
'Stoufe
S0S0S00L0LS0LLLS0LLLL0LLLLSLS0S0LLLLSS S LLSLLS S LS 0S SSLSS S LSLS SLLS C LLLL0S SLLL0LLSS0SS00 S S000000S0SSLSLSS SLSS SLSSLSS S S S S S S S S
S0LLLL S L SSLS0 000S 0 C LL0C0SCSLS S0 0SC CSCCCCS SSS S0S S0CLLL0SCL00LSS0S000LSSLSLL0 LSL 0SLYLLLSS LLLL SS LSSLS S S S S S S S
closed : .................................................................(12/* BE = ayment : Cheque / Money Order
"ment : www.kalaikesari.com/Subscription

Page 66
*வெண்கல
இணையத்தளத்தி
அனைத்து சிறு விளம்பரங்
s
Voir Mann
WWW.yar
6page தகவல்களுக்
 
 
 
 
 

விருது வென்ற யாழ் மண்
ற்கு சிறு விளம்பரதாரர்களை அன்புடன் வரவேற்கிறோம்
களும் முற்றிலும் இலவசம்
Connect with jofind
lmann.Ik

Page 67
(hogioso (1998-/So oo@sooo sous)
:-/OOOoo@ @@sőī1909ftā, Zi
(Rosiwoo (nuo 8-79, og soo ŋƆŋos)
:-/OOOZ, QO QQ1611,09%, JĀI 또wg별w활떨hm털ma lig법원통편 sūĝisĒølg hollsmaņols @Ų@mssing ĢĪhņus, -ilms@-/ooooooool's
 

0LL LLLL LLLLLLSLLLLL00 LLLL K LLLL 00 LLL LLLLLLGaeae:
uuoooexuello! I'm www squiosorniowoco@ ₪g
ç6; 06ç ZILO :q9oqiaocoons@e) ~| || 8 – 96ç ɛçç ZILO ogong)aocooluose) LLZ Zçç z.IIo :hr}đìooło 61109-ı-ās
Z87 G/9 € //O }}XəL/I|BO
§ silnáisi] spulsos,a ?quesīs. Kollod əJIT əund smo
IuoneAnoeold'A.
励
(soos woo (1998-//log(@@@goo ŋƆŋos)
:-/OOOgo@@@jóīIQO9f@ ZJ

Page 68
வைத்தியசாலை
Ֆոցքthւ4 05
(Ceylon) (F
ան ண்பிடி
sae
வேண்டிய முகவரி
52O 999
ւհւ Օ
நைன் வெல்ஸ் கெயார்
Printed and publ
սն (8ց
தா h NineWellsCare.com
hed by EXpress NeWSpapers
காள்ள
4
கிரிமண்டல மாவத்தை
W.
is
தொ
55/1
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை
பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
FT55uld gogg,006 Tub (Sub Fertility) அக்கருக்கட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும் தொடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களினுடாக எல்லா வயதுடைய பெண்மணிகளையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
vt) Ltd, at No. 185, Grandpass road,Colombo -14, Sri Lanka.