கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்தமிழர் இறைமை

Page 1
606ւ 5, :
COOG)/GOTO
 
 

Sesio:
*ச்சிதானந்தன்

Page 2


Page 3

ஈழத்தமிழர் இறைமை
மேல்நீதிமன்றக் குழு (Trial at Bar) நீதிபதிகளின் முன் ஆற்றிய வழக்குரைவாதக் கருத்துகள்
舜 激 象 மு. திருச்செல்வம் அரசியின் வழக்குரைஞர் மாவட்ட நீதிபதி, சொலிசிற்றர் ஜெனரல்; உள்ளூராட்சி அமைச்சர், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைக் குழு உறுப்பினர்.
தமிழாக்கம் மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017 தொலைபேசி : 434 2926 தொலைநகல் 0091-44-4348082
Lsli sessa e-mail: Manimekalai Getn.net

Page 4
நூல் விவரம்
ஈழத்தமிழர் இறைமை
8
*
நூல் தலைப்பு
d
ஆக்கியோன் * முருகேசன் திருச்செல்வம்
அரசின் வழக்குரைஞர்
தமிழாக்கம் * மறவன் புலவு க.சச்சிதானந்தன்
பதிப்பு ஆண்டு * சூலை 1977 நவம்பர் 1977,
டிசம்பர் 1983 சூன் 2000,
பதிப்பு விவரம் * நான்காம் பதிப்பு
offee) up * காந்தளகம்.
834 அண்ணாசாலை சென்னை2
மொத்த பக்கங்கள் 8- 80
நூலின் விலை - ed.17.00
அச்சிட்டோர் * ஸ்கிரிப்ட் பிரிண்டர்ஸ்
 

தமிழ் ஈழத்தை அமைக்கக் கோரும் துண்டு அறிக்கைகளை வைத்திருந்ததாகவும் மக்களுக்கு வழங்கியதற்காகவும் பிறவுக்குமாகவும் 1976 மே 31ஆம் நாள், திரு. அ. அமிர்தலிங்கம், திரு. வ. ந. நவரத்தினம், திரு. கா. பொ. இரத்தினம், திரு. க. துரைரத்தினம் ஆகியோர் மீது, குற்றம் சாட்டப்பட்டது. மேல் நீதி மன்றக்குழு நீதிபதிகள் மூவரின் முன்னிலையில், வெளிநடுவர் இல்லாமல், வழக்கு விசாரிக்கப்பட்டது. 1976 செப்டம்பர் 10ஆம் நாள் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுமுறையில்(Trial at Bar) நீதிமன்றம் அமைக்கப்பட ஏதுவான நெருக்கடிநிலை விதிகள் செல்லுபடியற்றவை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அரசியலமைப்புச் செல்லுபடியானதா என்பதை இந்த நீதிமன்றம் தீர்க்க முடியாது என்றும், எந்த அரசியலமைப்பினால் மேல்நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த அரசியலமைப்புப் பற்றி நீதி வழங்க, அந்த மேல்நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும்நீதிபதிகள் கூறினார்கள்.
மேல்நீதிமன்றத் தீர்ப்பை மீளாயுமாறு சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தைக் கேட்டார். ஐந்து நீதியரசர்கள் அடங்கிய உயர்நீதிமன்றம் சட்டமா அதிபரின் மனுவை விசாரித்தது. மேல்நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தும், வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு முறையில் தொடர்ந்து விசாரிக்குமாறு பணித்தும் தீர்ப்பு வழங்கியது.
1976 டிசம்பர் 10ஆம் நாள் சட்டமா அதிபர் இந்நால்வர் மேலுள்ள குற்றச் சாட்டுக்களை மீளப் பெற்றுக் கொண்டார். இதனால் வழக்குத் தொடர்ந்தும் நடைபெறவில்லை. குற்றம் சாட்டப்பட்டநாள் தொடக்கம், குற்றச்சாட்டு மீளப் பெற்ற நாள் வரையும் உள்ள காலப்பகுதி, தமிழ் மக்களின் சட்ட வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் முக்கிய காலப் பகுதியாகும்.
இந்தக் குற்றச்சாட்டையொட்டிய வழக்கு, பாரதூரமான விளைவுகளைச் சட்டத் துறையிலும் அரசியலமைப்புத் துறையிலும் ஏற்படுத்தியது. அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்டபேச்சுரிமையை, நெருக்கடிநிலை விதிகள் மூலம் ஆட்சியாளர் தடை செய்ய முடியுமா? தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் ஒருவரோ, கட்சித் தலைவர் ஒருவரோ தேசிய அரசுப் பேரவைமுன் உள்ள தீர்மான முன்மொழிவு பற்றித் தனது தொகுதி மக்களுக்கு எடுத்துக் கூறுவது அவசரகால விதிகளின் கீழ்க் குற்றமாகுமா? எப்படியாயினும், துண்டு வெளியீடுகளை மக்களியைடே வழங்குவது, நாட்டுத் துரோகமாக அமையுமா?
இந்த அடிப்படைக் கேள்விகளை எடுத்து நோக்கு முன்பு இந்த நான்கு குற்றவாளிகளையும் விசாரிப்பதற்காக ஏற்படுத்தபப்பட்ட மேல்நீதிமன்றக்குழு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிப்பதற்குச் சட்ட வலுவுன்டா என்பதையும், அக்குழு செல்லுபடியானதா என்பதையும் முதலில் எடுத்து நோக்குவது என இந்த வழக்கில் முற்பட்டு வாதாடிய மூத்த சட்டத் தரணிகளான திரு. சா. ஜே.வே. செல்வ நாயகம்,திரு.ஜி.ஜி.பொன்னம்பலம், திரு.மு.திருச்செல்வம், திரு. வி. எசு. ஏ. புள்ளை நாயகம் ஆகியோர்கள் தீர்மானித்தனர்.

Page 5
4
இந்த வழக்குவாதம் இருமுனைகளாய் அமைந்தது. சட்டத்துக்குப்புறம்பான, செல்லுபடியற்ற அரசியலமைப்பின் அடிப்படையில் மேல் நீதிமன்றக்குழு நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்பது முதலாவது முனை, செல்லுபடியாகாத நெருக்கடி நிலை விதிகளின் கீழ் மேல் நீதிமன்றக்குழு நீதிமன்றம் அமைக்கப்பட்டது என்பது இரண்டாவது முனை.
அரசியலமைப்பு செல்லுபடியற்றது என்பது தொடர்பான வாதங்களை வழக்குரைக்கும் முழுப்பொறுப்பையும் திரு. திருச்செல்வம் ஏற்றுக்கொண்டார். சட்ட நுண்ணறிவு, வழக்குரை வாதத்திறன், அரசியலமைப்புக் கொள்கையில் நுண்மா நுழைபுலம், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் புலமை என்பன கொண்ட ஒருவர்தான் இந்தப் பணியைச் செய்ய முடியும். இத்துறைகளில் அவர் புலமை பெற்றிருந்தார். இத்தகைமைகள் அவரின் தனிச் சிறப்பியல்புகளாக அமைந்தன.
தமது வாதங்கள் பற்றி ஆழ்ந்து படித்தார், ஈடுபட்டுப் பணிபுரிந்தார். போர்த்துக்கேயர் காலம், அதற்கு முந்திய காலம் பற்றிய தமிழ் ஈழ வரலாறுகள் பற்றிய அடிப்படை வரலாற்று நூல்களையும் அரசியலமைப்பு நூல்களையும் படித்தார். இக்காலப்பகுதியைக் கற்றறிந்த அறிஞர்களுடன் கலந்துரையாடினார். பதில் தலைமை நீதியரசர் குறிப்பிட்டது போல், திரு. திருச்செல்வம், தமது பணியை வழக்குரையாகக் கொள்ளாமல் தாம் சார்ந்த இயக்கப் பணியாகவே கருதினார்.
கடுமையாக உழைத்தார். அவரின் மருத்துவர்கள் இக்கடுமையான உழைப்பை விரும்பவில்லை. இக்கடுமையான உழைப்பின் விளைவுகளை மருத்துவர்கள் அவரிடம் குறிப்பிட்டுக் கூறினார்கள். எனினும் திரு. திருச்செல்வம், கடமையே கண்ணாயினார், கருமமே கண்ணாயினார். தமது தனிப்பட்ட நன்மை தீமைகளைவிடத்தாம் மேற்கொண்டபணியில் ஈடுபட்டு உழைத்தார். உயர்நீதிமன்றம், இவ்வழக்கின் தீர்ப்பை வழங்குமுன் அவர் நம்மை விட்டுப் பிரிந்தார். 1976 நவம்பர் 22ஆம் நாள் மாரடைப்பால் காலமானார்.
திரு. திருச்செலவம் அவர்கள் மேல் நீதிமன்றக்குழு நீதிமன்றத்தில் ஆற்றிய வழக்குரை வாதங்கள் எளிதான முறையில் இங்கு தரப்பட்டுள்ளன. இந்நூல் தமிழில் வெளியிடப்பட வேண்டும் எனத் தமிழ் மக்கள் பலர் அவரிடம் மீட்டும் மீட்டும் வேண்டுகோள் விடுத்தனர். திரு. திருச்செல்வம் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே இந்நூல் ஆக்கப்பட்டது. திரு. திருச்செல்வம் அவர்களின் வழக்குரை வாதக் கூற்றுக்களையும், அவர் நேரில் கூறிய ஏனைய கருத்துக்களையும் தெரிந்து தொகுத்துத் தமிழாக்கம் செய்வதில் திரு. க. சச்சிதானந்தன் அவர்கள் உதவியுள்ளார்கள். ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்னைகளை நன்றாக விளங்கிக் கொள்ள உதவவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்நூல் வெளியிடப்படுகின்றது.
தமிழ்பேசும் மக்களின் உயர்ந்த சிறந்த அரசியல்இலட்சியங்களுக்குரிய தகுந்த அரசியல் அடிப்படையையும் சட்ட அடிப்படையையும் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். அரசியலில் தெளிந்த கருத்துக்களான இவ்வழக்குரை வாதங்கள் தமிழரின் அறிவாற்றல் வளர்ச்சி வரலாற்றில் சிறப்பிடம் பெறுகின்றன.
48, றொசுமிட் பிளேசு கொழும்பு 7 நீலன் திருச்செல்வம் 1-7-77

தமிழர்க்குநம்பிக்கையாகநடந்தவர்
- சா. ஜே. வே. செல்வநாயகம்
"...நான் திரு. திருச்செல்வம் அவர்களைக் குழந்தைப் பிராயத்தில் இருந்து அறிவேன். 1919இல் எனது தந்தையாரைப் பார்க்க மலாயா சென்றேன். திரு. திருச்செல்வம் அவர்களின் தந்தையாரும் மலாயாவில் இருந்தார். எனது தந்தையாரும் திரு. திருச்செல்வம் அவர்களின் தந்தையாரும் நண்பர்கள்.
'..திரு. திருசெல்வம் அவர்களின் தந்தையாரைப் பார்க்கச் சென்ற பொழுது அவரது ஆண் மக்களுள் இருவரின் கல்வியின் எதிர்காலம் குறித்துக் கலந்துரையாடினோம். இரு ஆண் மக்களையும் தொடர்ந்து கல்வி கற்பதற்காக இலங்கைக்கு அனுப்ப விரும்பினார். திரு. திருச்செல்வமும், அவர் தம்பி திரு. இராஜேந்திராவும்இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். இங்குள்ளநல்ல பாடசாலைகளுள் ஒன்றான புனித தோமசு கல்லூரியில் கல்வி பயின்றனர்.
'..திரு. திருச்செல்வம் சட்டக் கல்லூரியில் பயின்று வழக்குரைஞரானார். அவர் சட்டத்துறையில் விருப்புள்ள மாணவனாக இருந்தார். நீதித்துறையில் கடமை புரிந்த பின், சட்டமா அதிபர் திணைக்களத்தில் முடிக்குரிய வழக்குரைஞரானார். சொலிசிட்டர் செனரலாகப் பதவி உயர்வு பெற்றார். அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின் சாதாரண வழக்கறிஞரானார். அண்மைக் காலத்தில் பல முக்கிய வழக்குகளில் தோன்றி வாதாடி வெற்றியீட்டியுள்ளார். அவற்றுள் ஒன்றுதான், மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்வந்த வழக்கு.
".திரு. திருச்செல்வம் சிறந்த சட்ட அறிஞர். அரசசேவையில் இருந்து ஓய்வு பெற்றபின் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டார். நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருப்பது அவரின் சிறப்பு இயல்பு. தமது நண்பர்கட்கும், தமது கட்சிக்கும் தமது மக்களுக்கும் நம்பிக்கையாக நடந்து கொண்டார். தமிழ் மக்களுக்கும் நம்பிக்கையாக நடந்து கொண்டார்.
'..திரு. திருச்செல்வம் இறந்தமையால் தமிழ்மக்கள் தங்களின் மிகப் பெரிய தலைவர் ஒருவரை இழந்தனர்."
(1976 நவம்பர் 26இல் தேசிய அரசுப் பேரவையில் திரு. செல்வநாயகம் ஆற்றிய இரங்கலுரையின் சில பகுதிகள்)

Page 6
Cupsurg)stay
1619 ஆனி5ஆம்நாள் தமிழ் ஈழ அரசன்சங்கிலி மன்னன், போரில் தோற்றதன் மூலம் போர்த்துக்கேயரிடம் தமிழ் ஈழ நாட்டினத்தின் இறைமையையும் ஆட்சி உரிமையையும் கையளித்தான்.
1972 மே 22ஆம் நாள், தமிழ் ஈழ நாட்டினத்தின் இறைமை, மூதறிஞர் செல்வநாயகம் தலைமையில் தமிழ் ஈழ மக்களிடம் வந்தடைந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து மீண்ட இறைமையைப் பயன்படுத்தும் ஆட்சி உரிமையை நடைமுறைப்படுத்தவே தமிழ் ஈழ அரசு அமைக்கபபட வேண்டும் எனத் தமிழ் ஈழ மக்கள் விழைகின்றனர்.
1975 பெப்ரவரி 6ஆம் நாள், இலங்கைப் பாராளுமன்றத்தில், தமிழ் ஈழ அரசு அமைப்பதற்கான தீர்மான முன்மொழிவு அறிவிக்கப்பட்டது.
1976 மே 14ஆம் நாள், தமிழ் ஈழ அரசு அமைக்கும் முயற்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணி முழுமையாக ஈடுபட வேண்டும் எனத் தீர்மானிக்கப்ட்டது. 1977இல் நடந்த தேர்தல் வாக்களிப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத் தமிழ் மக்கள் தமிழ் ஈழ அரசை நிறுவும் ஆணைய்ைத் தந்தனர்.
ஈழத் தமிழரின் இறைமையைப் பயன்படுத்தி ஆட்சி உரிமையை நிலை நாட்டுவதுதான் அறத்தின் பாற்பட்டது, சட்டத்தின் பாற்பட்டது, வரலாறறுத் தேவையானது, உலக அரசியல் நடைமுறைக்கு ஏற்றது என்பதைத் திரு. திருச்செல்வம் விரிவாகவும் விளக்கமாகவும் இங்கு கூறுகின்றார். திரு. திருச்செல்வம் கூறிய கருத்துக்களை நேரில் கேட்டு, அவரின் புலத்துறை முற்றிய சட்ட வாதத்தையும், வரலாற்று நோக்கையும், கற்றுத்துறை போகிய அரசியல் அறிவையும் ஒன்றாகக் குழைத்துத் தமிழில் தருகின்ற பேற்றைப் பெற்றேன்.
சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி எனச் சட்டமியற்றிய கொழும்பு அரசுக்கு எதிராக அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் தொடுத்த வழக்கில் திரு. மு. திருச்செல்வம் வழக்குரைஞர், சட்ட ஆலோசனைக்காகக் சென்னைக்கு அவர் வந்த பொழுது 1963இல் அவரது பயணத்தை ஒருங்கிணைத்து உதவினேன். அன்று தொட்டு அவரது இறுதிநாள் வரை அவருடன் தொடர்பாக இருந்தேன்.
1965இல் அவர் கொழும்பு அரசில் அமைச்சரானார். அப்பொழுது ஒரு மாத காலம் அவரின் தனிச்செயலாளராகப் பணிபுரிந்தேன். அவர் இறந்தபின் அவரது அஸ்தியைக் காசிக்கு எடுத்துச் சென்று, கங்கையில் கரைக்கும் பேறும் பெற்றேன்.
தமிழீழம் அமைப்பதன் மூலமே ஈழத்தமிழர் இலங்கையில் பாதுகாப்புடன் வாழமுடியும் என அவர் நம்பினார். இந்த வழக்கு வாதத்திலும் அக்கருத்தையே வலியுறுத்தியுள்ளார்
மறவன்புலவு e சாவகச்சேரி க. சச்சிதானந்தன் 3.72OOO

1. பிரித்தானியர் வழங்கிய அரசியலமைப்பு 8
விடுதலைக் குரல் - சோல்பரி ஆணைக்குழு-இலங்கைச் சுதந்திரச் சட்டம் - ஆட்சியுரிமை, இறைமை - அடிப்படை நிபந்தனைநகள் - சமூகங்கட்குப் பாதுகாப்பு - பியேர்சுப் பிரபுவின் தீர்ப்பு - குடியுரிமை பறிக்கப்பட்டது - தமிழரசுக் கட்சி - நிலங்கள் கற்பழிப்பு - சிங்களமே ஆட்சிமொழி - இனக்கலவரம் - கோடிசுவரன் வழக்கு
2. அரசியலமைப்பு யாத்தல் 22
அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகள் - இந்திய அரசியலமைப்பு யாக்க அவை - இந்தியாவில் தமிழர் இறைமை - ஒரு தலைப்பட்ச முயற்சி - ரொடீசியாவில் நடந்தமை - சூடானில் நடந்தமை - 1970இல் பொதுத் தேர்தல்-அரசியலமைப்பு யாக்க அவை அமைத்தல் - இலங்கை மக்கள்.
3. 1972இன் அரசியலமைப்பும் ஈழத்தமிழர்களும் 34 இணைந்து உருவாக்குவோம் - குடியரசு - ஒற்றையாட்சியா? கூட்டாட்சியா? - பெளத்தமும், மதச்சார்பின்யுைம் - வல்வைத் தீர்மானங்கள் - சிங்களமா? தமிழுமா? - அவையை விட்டு வெளியேறுதல் - புதிய அரசியலமைப்பு - இசைவு - எதிர்ப்பு - மண்வாசனை.
4. ஈழத்தமிழர் இறைமை 47
மன்னரிடம் இறைமை - மக்களிடம் இறைமை - நாட்டினங்கள், நாடுகள் - இலங்கையில் தாக்கம் - இலங்கைக் குடியரசு - தமிழ் ஈழம், தீர்மானம் - வட்டுக்கோட்டைத் தீர்மானம் - வழக்குரை
5. தமிழ்ஈழம்-அரசும் நாடும் 61
சங்கிலி மன்னன்-தமிழ் ஈழ அரசைக் கைப்பற்றுக-ஒல்லாந்தர்-குஞ்சலி வீரர்-உட்பகை-படைபுறப்பட்டது-ஒப்பந்தம்-வண்ணார்பண்ணைப் போர் - வரலாற்றில் தமிழ் ஈழம்-தமிழ் உலகின் பொற்காலம் - மாகனும் சந்திபானுவும்-ஆரியச் சக்கரவரத்திகள்-தமிழ் ஈழம், நாடு-போர்த்துக் கேயரின் தமிழ் ஈழம் - ஒல்லாந்தாரின் தமிழ் ஈழம் - பிரிட்டிசாரின் தமிழ் ஈழம்-அரசும் நாடும், தமிழ் ஈழம்,

Page 7
முதலாவது
பிரித்தானியர் வழங்கிய அரசியலமைப்பு
பேரரசுகள் நீடித்து நிலைப்பதில்லை. சாம்ராச்சியங்கள் சாகாத வரம் பெற்றவையல்ல. அடிமைத்தனமும் ஏகாதிபத்தியமும் எந்நாளும் தொடர்வதில்லை, விடுதலைக் குரல்களின் ஒலி வலுவடைய, ஒடுக்கப்பட்டவர்களின் ஆன்மா முனகலிட்ட காலம் போய் முழக்கமிட, ஒடுக்குபவர்களும் அடக்குபவர்களும் அநியாயமாக ஆட்சியுரிமையைப் பறித்தவர்களும் இருந்த இடம் தெரியாமல், வாழ்ந்த சுவடுகள் மறையுமுன்பே ஓடிவிடுவார்கள், ஒதுங்குவார்கள், ஒளிப்பார்கள். இது வரலாற்று நியதி.
உலகநாடுகள் பலவற்றின் ஆட்சியுரிமை, இறைமை அனைத்தும் பிரித்தானிய அரசிடம் ஒரு காலத்தில் இருந்தன. இக்காலம் பிரித்தானிய வரலாற்றின் ஒளிமிக்க பொற்காலம். அடிமைப்பட்டு ஆட்சியுரிமையைப் பறிகொடுத்துப் பிரித்தானியரால் ஆளப்பட்டநாடுகளின் வரலாற்றில் இக்காலம் இருண்டகாலம்.
பிரித்தானியரின் இறைமையும், ஆட்சியுரிமையும் பிரித்தானியப் பாராளுமன்றத்துடன் பிரித்தானிய மன்னரிடமும் இருந்தன. ஆனால் அடிமைப்பட்ட ஏனைய நாடுகளின் ஆட்சியுரிமையும் இறைமையும் பிரித்தானியப் பாராளுமன்றத்திலும், அதனூடாகப் பிரித்தானிய மன்னரிடமும் இருக்கவேண்டுமா?
விடுதலைக் குரல்
முதலாவது உலகப் போர் முடிவடைந்த நாட்களிலேயே, பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த நாடுகள் பலவற்றில் விடுதலைக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. பிரித்தானியர் துப்பாக்கி முனையில் அரசியல்அதிகாரத்தை ஏவிவிட்டு, உரிமைக் குரல்களை அடக்கினர். விடுதலை வேட்கையை ஒடுக்கினர்; தன்னாட்சி முயற்சியைத் தடுத்தனர்.
இரண்டாவது உலகப்போரின் பின்னர் உலக நாடுகளில் விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. காலனித்துவ நாடுகளில் விடுதலை உணர்ச்சி வீறுகொண்டு பாய்ந்தது; இவற்றுள் தலையானது இந்திய உபகண்டத்தில் எழுந்த விடுதலைப் போர். திரு. மோகனதாக கரம்சந்த் காந்தியின் தலைமையில் காங்கிரசுக்கட்சி இப்போரை நடத்தியது. கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று நடந்தது. இந்த அறப்போர் உலகத்தாரின் உள்ளத்தின் உட்குரலையும் மனச்சாட்சியையும் தட்டியெழுப்பியது.
பிரித்தானியர் வடுதலை வழங்கும் படலத்தைத் தொடங்கினர். தம்மிடம் குவிந்திருந்த ஆட்சிப் பொறுப்பை முதலில் பரவலாக்கினர். சிலநாடுகள் ஆட்சியுரிமை இல்லாது, ஆட்சிப் பொறுப்பை மட்டும் பெற்றன. சில நாடுகள் ஆட்சியுரிமையுடன் கூடிய ஆட்சிப் பொறுப்பைப் பெற்றதுடன் இறைமையையும் மீளப்பெற்றன.
1947இல் இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலை அடைந்தன. இந்தியாவின்

9 ஈழத்தமிழர் இறைமை
ஆட்சிப்பொறுப்பு இந்திய அரசுக்கு மாறியது. ஆட்சியுரிமையும் இறைமையும் அரசியலமைப்பு யாக்க அவைக்கு மாறியது.
1948இல் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பு மட்டும் பிரித்தானிய அரசிடம் இருந்து இலங்கைக்கு மாறியது. இக்காலப் பகுதிக்கு முன்னதும் பின்னதுமாகப் பிரித்தானியரிடம் அடிமைப்பட்டிருந்த நாடுகள் ஒவ்வொன்றாக விடுதலையடைந்தது கொண்டு வருகின்றன.
சோல்பரிஆணைக்குழு
இலங்கைத் தீவின் ஆட்சிப்பொறுப்பைப் பெருமளவு இலங்கை அரசிடமே ஒப்படைக்கவேண்டும் என்ற கருத்தைப் பிரித்தானியா 1933ஆம் ஆண்டளவில் ஏற்றுக்கொண்டது. ஆட்சிப் பொறுப்பு மாற்றத்தைக் கொண்டுவரும் வழிகளை ஆராயச் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் ஓர் ஆணைக்குழுவை இலங்கைக்கு அனுப்பியது. சோல்பரி ஆணைக்குழு 1944ஆம் ஆண்டில் இலங்கையைச் சுற்றிப் பார்த்தது. இலங்கைமக்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் கருத்துகளைக் கேட்டது.
திரு.டொன் இசுடீபன்சேனநாயக்கா தலைமையில் அரசாங்க சபையில் இருந்த அமைச்சர் குழு சோல்பரி ஆணைக்குழுவைப் புறக்கணித்தது. எனினும், சிங்கள மக்களின் கருத்துகளைச் சோல்பரி ஆணைக்குழு அறியாமலில்லை.
தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டுமெனக் கண்டிச் சிங்களவர் கேட்டுக் கொண்டனர். கூட்டாட்சி அரசு மூலமே தங்கள் உரிமைகளைக் காக்கலாம் எனக் கூறினர். கூட்டாட்சி அரசியலமைப்பு மூலம் இலங்கையின் ஆட்சி அமைய வேண்டும் என அன்றே கண்டிச் சிங்களவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1944 கார்த்திகைத் திங்கள் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசுக் கட்சி அமைக்கப்பட்டது. இதன் தலைவராகத் திரு. கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம் இருந்தார். சோல்பரி ஆணைக்குழு முன் திரு. பொன்னம்பலம் தலைமையில் தமிழர் கருத்துகளைத் தெரிவித்தனர்.
1944 நவம்பர் 27இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் திரு.ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையுரை ஆற்றினார். கூட்டம் கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெற்றது. அவர் ஆற்றிய உரையின் சில வரிகள் குறிப்பிடத்தக்கன.
ጳ (
a இலங்கைக்கு நாங்கள் அடிமைகளாக வரவில்லை. உரிமைகொண்ட் ஆட்சியாளர்களாக இருந்தோம். எமது நிலத்தில் நாம் உரிமை கொண்டாடிக் குடியேறினோம். இதை நினைவுபடுத்துகிறேன். தமிழர்கள்தான் இந்தத் தீவின் ஆதிக் குடிகள். இதை எமது சிங்கள நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை ஆட்சிசெய்த அரசை நாம் பெற்றிருந்தோம். இதனை இலங்கையின் வரலாற்றில் காணலாம். ஐரோப்பியக் கடலாடிகள் வரும்வரை நாம். (தமிழர்கள்) அந்நியரால் ஆட்சி செய்யப்படவில்லை. நம்மை நாமே ஆட்சி செய்தோம். ቇ ጅ
இலங்கையின் ஆட்சியுரிமை, இலங்கையில் வாழ்கின்ற இருபெரும் மொழி வழிச் சமூகங்களிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தலைவர்கள் கூறினார்கள். இலங்கை விடுதலை பெற்றால், தமிழர்கள் ஒத்த குடியுரிமை

Page 8
மு. திருச்செல்வம் 10
பெற்றவர்களாகவே சிங்களவர்களுடன் வாழ ஒப்புக் கொள்வார்கள் என்ற கருத்தைச் சோல்பரி ஆணைக்குழுவின் முன் ஐயம் திரிபு அற ஆணித்தரமாக எடுத்துரைத்தனர். திரு. பொன்னம்பலம் அவர்களின் இந்தக் கோரிக்கை "ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை' எனப் பிற்காலத்தில் புகழ்பெற்றது.
தமக்கென ஆட்சியைத் தனியாகப் பிரித்துத் தர வேண்டும் எனத் தமிழர்கள் சார்பில் தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை. தமிழர்கள் தனியான நாட்டினம் என்பதால், தமிழர் தம்மைத் தாமே ஆளக்கூடிய தனிநாட்டுக் கோரிக்கையைச் சோல்பரி ஆணைக் குழுவின் முன் வைக்கத் தமிழ்த் தலைவர்கள் தவறினார்கள். தமிழர்களின் பர்ரம்பரியங்களையும், வாழ்வு முறைகளையும் உள்ளடக்கிய தமிழரின் ஆட்சியை வலியுறுத்துவதற்குரியநல்லதொரு வாய்ப்பை நழுவவிட்டனர். கூட்டாட்சி அரசியலமைப்பைக் கூடத் தமிழ்த் தலைவர்கள் கேட்கவில்லை.
1945 அக்தோபர் 9ஆம் நாள் சோல்பரி ஆணைக் குழு இலங்கைக்கு ஒற்றையாட்சி அரசமைப்பை விதந்துரைத்து. வரலாற்றினூடாகத் தமிழர்கள் இலங்கைத் தீவில் தமக்கென, நாடு, ஆட்சி, இறைமை என்பவற்றைக் கொண்டிருந்தார்கள். இந்தத் தனியுரிமையை, இந்தச் சிறப்புத் தன்மையைத் தமிழர்களிடமிருந்து பறித்தன மேனாட்டு அரசுகள். தமிழரிடம் பறித்த அவற்றைத் தமிழரிடமே மீளளிக்காமல், தீவின் மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒற்றையாட்சி அரசிடம் மீளளிக்க முயற்சித்த சோல்பரி ஆணைக்குழுவின் விதப்புரைகள், இலங்கைத் தமிழருக்குப் பாதகமானவை. இலங்கைச் சுதந்திரச்சட்டம்
1947 சூன் 18ஆம் நாள் பிரித்தானியப் பாராளுமன்றத்தின் கீழவையின் கூட்டம் நடைபெற்றது. பிரித்தானிய அமைச்சர் அக்கூட்டத்தில், இலங்கை அரசுக்கு முழுமையான ஆட்சிப்பொறுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். அதே அறிவிப்பை அதே நாளில் இலங்கையில் அரசாங்க சபைக் கூட்டத்தில் இலங்கை ஆளுநர் வெளியிட்டார்.
1947 டிசம்பர் 10ஆம்நாள் இலங்கைச்சுதந்திரச்சட்டத்துக்கு அரசரின் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஏற்கனவே பிரித்தானியப் பாராளுமன்றம் இச்சட்டத்தை நிறைவேற்றியிருந்தது
இச்சட்டத்தில் ஐந்து பகுதிகள் உள்ளன. முதற்பகுதியில் உள்ள முதலிரண்டு விதிகள் கவனிக்கத்தக்கவை. அந்த விதிகளாவன
'I. (அ) குறிப்பிட்ட நாளன்றோ பின்ன்ரோ பிரித்தானிய இராச்சியத்தின் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களுள் இலங்கையின் வேண்டுதலுடனும் ஒப்புதலுடனும் நிறைவேற்றிய சட்டங்கள் தவிர ஏனையவை இலங்கையில், இலங்கைச் சட்டங்களுள் ஒன்றாக நீடிக்கவோ நீடித்ததாகக் கருதப்படவோ Lo/7/4/7.
(ஆ) குறிப்பிட்ட நாளின் பின்னர் பிரித்தானிய இராச்சியத்தின் மேன்மை தங்கிய அரசரின் அரசானது இலங்கைஅரசுக்கு எவ்விதப் பொறுப்பும் உடையதாக இருக்கமாட்டாது',
1947 டிசம்பர் 19ஆம் நாள், பக்கிங்காம் அரண்மனையில் அரச அவைக்

11 ஈழத் தமிழர் இறைமை
கூட்டம் நடைபெற்றது. மேன்மை தங்கிய ஆறாம் ஜோர்ஜ் மன்னர் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இக்கூட்டம் இலங்கைச் சுதந்திரம் பற்றிய அரசவைக் கட்டளையை வழங்கியது.1946 மே 15ஆம்நாள் வழங்கிய இலங்கை அரசியலமைப்புப் பற்றிய அரசவைக் கட்டளையில் சில திருத்தங்களை இக்கட்டளை கொண்டிருந்தது.
1948 பெப்ரவரி 4ஆம் நாள், இலங்கை அரசிடம் பிரித்தானிய அரசு இலங்கைக்கான முழுமையான ஆட்சிப் பொறுப்பை வழங்கியது. பொதுநலவுரிமை நாடுகளுள் ஒன்றாகத், தன்னாட்சிச் சமுதாயமாக இலங்கை இடம்பெற்றது.
பிரித்தானியப் பாராளுமன்றம் கூடலாம், சட்டம் இயற்றலாம். ஆனால் அச்சட்டங்கள் இலங்கையில் செல்லுபடியாகா, ஆயினும், இலங்கை வேண்டிக் கொண்டால், ஒப்புதல் கொடுத்தால் இலங்கைக்காகச் சட்டமியற்றும் பணியைப் பிரித்தானியப் பாராளுமன்றம் மேற்கொள்ளமுடியும். இலங்கையின் நலனுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் நல்லாட்சிக்காகவும் பிரித்தானியப் பாராளுமன்றம் இப்பணியைச் செய்யலாம்.
பிரித்தானிய அரசரே இலங்கையின் அரசர். பிரித்தானிய முடியின் பெயரிலேயே இலங்கை அரசு நடக்கும்; பாராளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து ஆளுநர் முதல்வரால் ஆற்றப்படும் உரைகூட அரியணை உரையே.
பிரித்தானிய அரசரின் பிரதிநிதியாக இலங்கையில் ஆளுநர் முதல்வர் இருப்பார். பிரித்தானிய அரசரே ஆளுநர் முதல்வரை நியமிப்பார், நீக்குவார்; எனினும் இலங்கைப் பிரதமரின் ஆலோசனைக்கமைய இந்நியமனமும் நீக்கமும் நடைபெறும். இலங்கையின் முதலாவது ஆளுநர் முதல்வராகச் சோல்பரிப் பிரபுவை இலங்கைப் பிரதமரின் ஆலோசனையைப் பெற்றுப் பிரித்தானிய அரசர் நியமித்தார்.
முழுமையான ஆட்சிப் பொறுப்பை இலங்கை அரசிடம் வழங்கிய பின்னரும், இலங்கை நீதித்துறைக்கும் பிரித்தானிய நீதித்துறைக்கும் தொடர்பு இருந்தது. இலங்கையில் உள்ள அனைத்து மட்ட நீதிமன்றங்களிலும் - நீதிமன்றம் தொட்டு உயர் நீதிமன்றம்வரை - படிப்படியாக நீதிகோரும் ஒருவர், இவற்றின் நீதி வழங்கல் முறையால் திருப்தியடையாவிடின் பிரித்தானியாவில் உள்ள மேன்மைதங்கிய அரசரின் அரசவைக்குமுறையீடு செய்யலாம். அரசவையின் தீர்ப்பை முடிந்த முடியாக, அறுதியான தீர்ப்பாக, இலங்கையரசு ஏற்றுக்கொண்டது.
ஆட்சியுரிமை, இறைமை
1948 பெப்ரவரி 4ஆம் நாள் பிரித்தானிய யூனியன் ஜாக் கொடியை இலங்கையில் இறக்கினர். சம்பிரதாய பூர்வமாக இலங்கையின் சிங்கக்கொடியை ஏற்றினர். இலங்கை முழுமையான விடுதலை பெற்றுவிட்டதாகப் பலர் நம்பினார்கள். இலங்கை ஆட்சியுரிமையை இலங்கையின் அரசிடம் வழங்கிவிட்டதாகக் கூறினார்கள். உண்மையான நிலை என்ன? இலங்கைக்கு முழுமையான விடுதலையை வழங்கவில்லை. இலங்கைக்கு முழுமையான ஆட்சிப் பொறுப்பைத்தான் வழங்கினர். இலங்கையின் ஆட்சியுரிமையும் இறைமையும் பிரித்தானியப் பாராளு மன்றத்தினூடாகப் பிரித்தானிய மன்னரிடம் தொடர்ந்து இருந்தது.
இலங்கை அரசின் வேண்டுதலின்பேரிலும், ஒப்பதலின் பேரிலும் இலங்கையின் நலன், நல்வாழ்வு, நல்லாட்சி என்பவற்றிற்காகப் பிரித்தானியப் பாராளுமன்றம் இலங்கைக்கான சட்டங்களை இயற்றலாம் என்ற விதியை முன்பு பார்த்தோம்.

Page 9
மு. திருச்செல்வம் 12
பிரித்தானியப் பாராளுமன்றத்திடம் இலங்கைக்கான சட்டமியற்றும் அதிகாரம் எஞ்சி நின்றது; தொக்கிநின்றது.
இலங்கை அரசு தனது நன்மைகளைப் பேணுவதற்காகவும் பெருக்குவதற்காகவும் இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தது. 1948இன் பின்னரும் இலங்கைக்காகச் சட்டமியற்றும் ஏற்பாடுகள் இலங்கைப் பாராளுமன்றத்திடம் மாத்திரமன்றிப் பிரித்தானியப் பாரளுமன்றத்திடமும் இருந்தன. இது முக்கியமாகக் கவனித்து நோக்கவேண்டிய ஒன்றாகும்.
அடிப்படை நிபந்தனைகள்
பிரித்தானியர் இலங்கை அரசிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தபொழுது, இரு சாராரும் ஏற்றுக்கொண்ட விதிகள்தான் அரசியலமைப்பு விதிகள். இலங்கையில் இப்படித்தான் ஆட்சி அமையும் என்பதை அங்கே தெளிவாக எழுதியிருந்தனர். இந்த விதிகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டது; பிரித்தானிய அரசும் ஏற்றுக்கொண்டது. இதைக் கூறும் ஒப்பந்தத்தை 1947 நவம்பர் 11 ஆம் நாள் இலங்கை அரசியல் தலைவர்களும் பிரித்தானிய அரசும் கையெழுத்திட்டனர். இலங்கையின் சார்பில் திரு. டி.எசு. சேனநாயக்கா கையெழுத்திட்டார்.
இலங்கை அரசியலமைப்பு விதிகளைக் காலத்துக்குக் காலம் மாற்ற வேண்டிய தேவைகள் ஏற்படலாம் என்பதை இருசாராரும் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டனர். அப்படித் தேவை ஏற்படும் பொழுது அரசியலமைப்பு விதிகளை மாற்றுவதற்குரிய வழிவகைகள் இருந்தன. அரசியலமைப்பின் 29ஆம் பகுதியில் 4ஆம் விதி இதற்கான ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது.
இலங்கையில் நல்லாட்சி நடக்க வேண்டும். நாடு அமைதியாக இருக்க வேண்டும். நாட்டில் ஒழுங்கும் கட்டுப்பாடும் தேவை. இவற்றைச் செய்வதென்றால் சட்டங்கள் தேவை. இத்தகைய சட்டங்களை இயற்றும் அதிகாரத்தை அரசியலமைப்பின் மூலம் பாராளுமன்றத்திடம் வழங்கியிருந்தனர் அசரியலமைப்பின் 29ஆம் பகுதியின் 1ஆம் விதி இந்த ஏற்பாட்டக்ை கொண்டிருந்தது. அரசியலமைப்பில் கூறப்பட்ட இத்தகைய விதிகளை, ஆட்சிப்பொறுப்பை வழங்குவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்றே கூறலாம். இலங்கை அரசும் பிரித்தானிய அரசும் ஏற்றுக்கொண்ட அடிப்படைநிபந்தனைகள் இவை. சமூகங்கட்குப் பாதுகாப்பு
தமிழ்ச் சமூகம், சிங்களச் சமூகம், ஆங்கிலச் சமூகம், மலாய்ச் சமூகம் என்பன மொழிவழி எழுந்த சமூகங்கள்.
இவை ஒவ்வொன்றும் தனித்தனியானவை. எளிதாக அடையாளம் காணக்கூடியவை. இவற்றிற்கிடையே வேறுபாடுகள் அதிகம். சமயக் கொள்கைகள் மாறுபட்டன. மொழி வேறுபட்டிருந்தது. வாழ்வு முறைகள் வகுத்தறியக் கூடியன. பண்பாட்டு நெறிகளும் பழக்க வழக்கங்களும் பிரித்தறியக்கூடியன.
இச்சமூகங்கள் ஒன்றுக்கொன்று உயர்ந்தனவோ தாழ்ந்தனவோ அல்ல. எல்லாச் சமூகங்களைச் சேர்ந்தவர்கட்கும் நாட்டின் எல்லா உரிமைகளும் உண்டு. சமமான வாய்ப்புகள் உண்டு. சட்டத்தின் முன்பு இவற்றிற்கிடையே ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது; பாகுபாடுகள் எழக்கூடாது.

13 ஈழத்தமிழர் இறைமை
இலங்கையில் இயற்றப்படும் சட்டங்கள் ஒரு சமூகத்துக்குச் சாதகமாகவும் மற்றச் சமூகத்துக்கோ மற்றச் சமூகங்கட்கோ பாதகமாகவும் இருக்கக்கூடாது. சமூகங்கட்கிடையே ஏற்றத்தாழ்வுகளை இலங்கையில் இயற்றப்படும் சட்டங்கள் வலிந்து புகுத்தக்கூடாது.
சட்டங்கள் மூலம் எந்த சமூகத்துக்கும் வழங்கப்படும் சிறப்புரிமைகளும், சலுகைகளும் எல்லாச் சமூகத்தவர்க்கும் வழங்கப்படவேண்டும். சட்டத்தின் மூலம் வழங்கப்படும் முன்னுரிமைகளால் எந்த ஒரு சமூகமும், மற்றச் சமூகங்களை விட மேலான, கூடிய உரிமைகளைப் பெற்றுவிடக்கூடாது.
பாகுபாட்டுச் சட்டங்களைப் பாராளுமன்றம் இயற்றக்கூடாது என 1948இன் அரசியலமைப்பு விதிகள் தெளிவாகக் கூறுகின்றன. அப்படியான பாகுபாட்டுச் சட்டங்களைப் பாராளுமன்றம் இயற்றினால் கூட அவை செல்லுபடியாகாத சட்டங்களே என்பதையும் அரசியலமைப்பு விதிகள் வலிந்து உரைத்துள்ளன.
சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாக்கும் விதிகள்தான் இவ்வாறு அரசியலமைப்பில் வலிந்து உரைக்கப்பட்ட விதிகள். அரசியலமைப்பின் 29ஆம் பகுதியின்2ஆம் 3ஆம் விதிகள் இத்தகைய பாதுகாப்பை வழங்கின. இந்த29ஆம் பகுதி, பிற்காலத்தில் மிகுந்த புகழ்பெற்றது. பிரித்தானியரிடம் இருந்து முழுமையான ஆட்சிப் பொறுப்பைப் பெற்ற நிலைமாறி, நாடு ஆட்சியுரிமையும் இறைமையும் தள்னகத்தே கொண்ட விடுதலை பெற்ற குடியரசு நாடாக வேண்டும்; இந்த மாற்றம் விரைந்து ஏற்படவேண்டும் என்ற எண்ணத்திற்குப் பிற்காலத்தில் கால்கோள் அமைத்த பெருமையும் இந்த 29ஆம் பகுதிக்கே உண்டு.
இந்த 29ஆம் பகுதியில் உள்ள விதிகள் பின்வருமாறு:
'29() இத்தீவின் அமைதிக்கும் ஒழுங்குக்கும் நல்லாட்சிக்குமாகப் பாராளுமன்றமானது, இந்தக் கட்டளைகளின் ஏற்பாடுகளுக்கமையச் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
(2) இந்தச்சட்டங்கள் எதுவும் (அ) எந்த மதத்தைக் கடைப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தவும் தடைசெய்யவும் கூடாது;
(ஆ) ஏனைய சமூகங்களையோ மதங்களையோ சார்ந்தவர்களை உட்படுத்தாத கட்டுப்பாடுகளையும் குறைபாடுகளையும் ஏதாவது ஒரு சமூகத்தையோ மதத்தையோ சார்ந்தவர்களை உட்படுத்தக்கூடாது;
(இ) ஏனைய சமூகங்கட்கோ, மதங்கட்கோ வழங்காத முன்னுரிமை களையும் சிறப்புக்களையும் ஏதும் ஒரு சமூகத்திற்கோ மதத்திற்கோ வழங்கக் கூடாது
(ஈ) எந்த மத நிறுவனத்தின் அமைப்பு விதிகளையும் அந்த நிறுவனத்தின் ஆட்சிஅதிகாரத்தின்ஒப்புதலின்றிமாற்றக்கூடாது; எனவே, எப்படியிருப்பினும், சட்டத்தின்மூலம் இணைத்தமைத்த மத நிறுவனமாயின் அந்நிறுவனத்தின்ஆட்சி அதிகாரத்தின் வேண்டுதலின் பேரில் அன்றி எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது;
(3) இந்தப் பகுதியின் 2ஆம் விதியின் ஏற்பாடுகட்கு முரண்பாடுடைய

Page 10
மு. திருச்செல்வம் 4.
எந்தச் சட்டமும் முரண்பாடு அடைகின்ற அளவு எல்லைவரை செல்லுபடியாகாது;
(4) இந்தப் பகுதியின் அதிகாரவரம்புக்கு உட்பட்ட பாராளுமன்றத்தின் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துங்கால் பாராளுமன்றமானது இந்தக் கட்டளையின் ஏற்பாடுகள் எதையுமோ, அல்லது இந்தத் தீவுக்காக இடப்படும் மேன்மை தங்கிய அரசரின் அரசவைக் கட்டளைகள் வேறு எதையுமோ திருத்தலாம் அல்லது நீக்கலாம்;
அவ்வாறு செய்யும்பொழுது, இந்தக் கட்டளையின் எந்த ஏற்பாடுகளையும் திருத்தும் அல்லது நீக்கும் எந்தச் சட்டமூலமும், சனப்பிரதிநிதகள் சபையின் முழு எண்ணிக்கையான உறுப்பினர்களுள் (சமூகமளிக்காதவர்கள் உட்பட) மூன்றில் இரண்டு பகுதிக்குக் குறையாதவர்களின் சார்பான வாக்குகளைச் சனப்பிரதிநிதிகள் சபைக் கூட்டத்திலே பெற்றது, எனச் சபை முதல்வரால் கையெழுத்திட்ட சான்றிதழால் முன்னுரைக்கப்பட்டிருப்பின் அரச ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கலாம்.
இந்த விதிக்கமையச் சபை முதல்வரால் வழங்கப்படும் ஒவ்வொரு சான்றிதழும் எல்லாத் தேவைகளை யொட்டியும் முடிவானதாயும் எந்த நீதிமன்றத்துக்கு முன்பும் முறையிட முடியாததாயும் அமையும். '
1948இல் இலங்கை அரசு முழுமையான ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து 1964ஆம் ஆண்டுவரை உள்ள காலப்பகுதியில், 29ஆம் பகுதி பற்றிச் சில அரசியல் தலைவர்கள் கொண்டிருந்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்து 1964இல் தெளிந்தது.
அரசியலமைப்பின் 29ஆம் பகுதியின் 4ஆம் விதி, அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரத்தைப் பாராளுமன்றத்திடம் வழங்கியிருந்தது. வழங்கியதோடு அல்லாமல், பாரளுமன்றம் திருத்தங்களையோ, மாற்றங்களையோ, நீக்கங்களையோ எந்த முறைப்படி கொண்டுவரலாம், கொண்டு வந்த பின் எவ்வாறு அரச ஒப்புதலுக்குச் சமர்ப்பிக்கலாம் என்பதையும் விதித்தது.
சனப் பிரதிநிதகள் சபையின் மொத்த உறுப்பினர்களுள், மூன்றிலிரண்டு எண்ணிக்கையானவர்கட்கு அதிகமாகச் சபைக்கு வந்திருந்து, அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்குச் சார்பாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு வாக்களித்தார்கள் எனச் சபை முதல்வர் சான்றிதழ் வழங்க வேண்டும். சான்றிதழை முன்னுரையாகக் கொண்ட அத்திருத்தச் சட்டமூலத்தை அரச ஒப்புதலுக்கு வேண்டும். அரச ஒப்புதலுடன் அத்திருத்தச் சட்டமூலம் ــــالانا لا تالgي அரசியலமைப்புத் திருத்தமாகின்றது.
அரசியலமைப்பில் கூறப்பட்ட இந்த ஏற்பாட்டைப் பயன்படுத்தி, அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும், எந்த விதியையும், எந்த உபவிதியையும் மாற்றலாம் என 1948இல் இருந்து 1964ஆம் ஆண்டு வரை கருதப்பட்டது. இலங்கை அரசு இவ்வாறு கருதியது. இலங்கையின் அரசியல் தலைவர்கள் இவ்வாறு கருதினார்கள்

15 ஈழத் தமிழர் இறைமை
பியேர்சுப் பிரபுவின் தீர்ப்பு
1964ஆம் ஆண்டில் இந்தக் கருத்துத் தலைகீழாகியது புகழ் பெற்ற வழக்கு ஒன்றில் பிரித்தானிய அரசவை அளித்த தீர்ப்பில், குறிப்பிட்ட சில வரிகள் இந்தக் கருத்தை மாற்றின.
திரு. ரணசிங்கா என்பவருக்கு எதிராக இலங்கை இலஞ்ச ஆணையாளர் வழக்குத் தொடுத்திருந்தார். இலஞ்ச விசாரணைக்குழு இந்த வழக்கை முதலில் விசாரித்தது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்து விசாரிக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இலங்கை அரசு பிரித்தானிய அரசவைக்கு முறையீடு செய்தது. 1964ஆம் ஆண்டு அரசவை இந்த வழக்கின் வாதப்பிரதிவாதங்களைக் கேட்டது. அரசவை சார்பில் பியேர்சுப் பிரபு இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினார்.
பியேர்சுப் பிரபு வழங்கிய தீர்ப்பின் சிறுபகுதியை இங்கு தமிழில் தருகிறேன். நாம் எடுத்து நோக்கும் பொருளுக்குப் பொருத்தமான வரிகளை மட்டும் தருகிறேன்.
8 A.
- - - - - - இலங்கைப் பாராளுமன்றத்தில் வாக்களித்தல் பற்றியும், இலங்கைப் பாராளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகார வரம்புகள் பற்றியும் இலங்கை அரசியலமைப்பின் 18ஆம், 29ஆம் பகுதிகள் விவரிக்கின்றன.
29(1) இத்தீவின் அமைதிக்கும் ஒழுங்குக்கும் நல்லாட்சிக்குமாகப் பாராளுமன்றமானது இந்தக் கட்டளையின் ஏற்பாடுகளுக்கமையச் சட்டங்களை இயற்றும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
(2) இந்த சட்டங்கள் எதுவும்
(ஆ) எந்த மதத்தைக் கடைப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தவும் தடைசெய்யவும் கூடாது;
இதைத் தொடர்ந்து (ஆ) (இ) (ஈ) ஆகிய துணை விதிகள் உள. மத இன விடயங்களைப் பற்றிய இவ்விதிகள் ஆணித்தரமான வலிமை பெற்றவை. இவ்விடயங்களைச் சட்டமியற்றுவதற்குரிய விடயங்களாகக் கொள்ளக்கூடாது. இலங்கைக்குடிமக்களிடையே உள்ள உரிமைகளின் புனிதமான சமன்பாட்டின் இலக்கணமாக இவ்விதிகள் அமைந்துள்ளன. இந்தஅடிப்படைநிபந்தனைகட்கு அமையத்தான் இலங்கை மக்கள் இந்த அரசியலமைப்பினை ஏற்றுக் கொண்டனர். எனவே, அரசியலமைப்பில் உள்ள இந்த விதிகள் எவ்விதமாயும் மாற்றமுடியாத விதிகளாகும். * 声
29ஆம் பகுதியின் 3ஆம் 4ஆம் விதிகளைப் பற்றியும் இத்தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. விரிவஞ்சி அவற்றை இங்கு குறிப்பிடவில்லை.
அரசவையின் தீர்ப்புகளை முடிந்த முடிபாக, அறுதியான தீர்ப்பாக, இலங்கை அரசு ஏற்றுக் கொண்டது என ஏற்கனவே தெரிந்து கொண்டோம் இலஞ்ச ஆணையாளர் - ரணசிங்கா வழக்கின் தீர்ப்பு வெளிவந்ததும், இலங்கையில் உள்ள சிங்கள அரசியலாளர் திகிலடைந்தனர்.
இலங்கைப் பாராளுமன்றத்திடம் இறைமை இருந்ததாகத் தவறாகக் கருதியவர்கள், விழித்துக் கொண்டார்கள். இலங்கை அரசிடம் ஆட்சிப் பொறுப்பு

Page 11
மு. திருச்செல்வம் 16
மட்டும்தான் ஒப்படைக்கப்பட்டதைத் தெரிந்து கொண்டார்கள், இலஞ்ச ஆணையாளர் - ரணசிங்கா வழக்கில் வழங்கப்ட்ட தீர்ப்பில் இந்த வரிகளைக் குறிப்பிட்டுள்ளனவே அன்றி, இந்த வரிகளைத்தான் தீர்ப்பாக அங்கு கூறவில்லை. இதனால் அரசவையின் இந்தக் கூற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை எனச் சிலர் கருதினார்கள், மத இன விடயங்களைப் பற்றிய எதையும் இலஞ்ச ஆணையாளர் - ரணசிங்கா வழக்கில் வாதிக்கவில்லை. இன மத விடயங்கள் தொடர்பாக நீதியைக் கோரவில்லை, 29ஆம் பகுதிபற்றிக்கூறிய பியேர்சுப் பிரபு, அதில் உள்ள விதிகட்கு விளக்கம் தருகையில், 29(2) (அ) (ஆ) (இ) (ஈ) உபவிதிகளைப் பற்றிக் கூறினார். இந்த விதிகள் மாற்ற முடியாத - திருத்த முடியாத அரசியலமைப்பு விதிகள் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
1946இலும் 1947இலும் அரசவைக் கட்டளைகளாக வெளிவந்த அரசியலமைப்பு விதிகளிலும், மாற்றங்களிலும் பொதிந்திருந்த பொருளை 1964இல் பியேர்சுப் பிரபு விளக்கினார். எனவே, இந்த விதிகளை மரபுரிமைகளின்பட்டயமாகச் சிலர் கருதினர். இவ்விதிகள் சிறுபான்மைச் சமூகங்களுக்குரிய பாதுகாப்பு ன்ன ஆணித்தரமாகக் கூறினர்.
1964ஆம் ஆண்டின் காலப்பகுதியில் சிறுபான்மை இனங்கள் மனித உரிமைகளை இழந்திருந்தன. மரபுரிமைகளை இழந்திருந்தன. எல்லாச் சமூகங்களும் இலங்கையில் சரிநிகர் சமானமாக, சமமான வாய்ப்பு உடையவையாக வாழ்ந்தமை அருகிக் கொண்டு வந்த காலம். சிங்கள பெளத்த ஏகாதிபத்தியம் தலைவிரித்தாட முயன்று கொண்டிருந்த காலம்.
சிங்கள மொழியை ஆட்சியில் அமர்த்தினோம்; பெளத்த மதத்துக்குமுதலிடம் கொடுப்போம்' என்று உரக்கப்பேசித் தமிழர்களின் உள்ளம் உளையப் பேசித், தமிழர்களின் நலிவில் ஆட்சி காணவிழைந்த சிங்கள அரசியல் கட்சிகட்குஇந்தத் தீர்ப்பு நஞ்சம்பாகக் காதில் விழுந்தது. அரசவை கசப்பான வார்த்தைகளைப் பேசுகிறதே என இவர்கள் அங்கலாய்த்தார்கள்.
இனங்களின் உரிமைகள், மதங்களின் உரிமைகள், மனித உரிமைகள், மரபுரிமைகள் ஆகியவற்றை அரசியலமைப்புப் பாதுகாக்கிறது. ஆணித்தரமான விதிகளால் பாதுகாக்கிறது. அவ்விதிகளைத் தூக்கி ஏறிய வேண்டுமாயின், அரசியலமைப்பையே தூக்கி ஏறியவேண்டும். இந்தக் கருத்துகள் சிங்களத் தலைவர்களின் கருத்துக்களாகப் பரிணமிக்கத் தொடங்கின. மாற்றவொண்ணா விதிகளைக் கொண்டஅரசியலமைப்பு தேற்றவொண்ணாத்துயரைச் சிங்கள பெளத்த தீவிரவாதிகட்குக் கொடுத்தது. குடியுரிமையைப் பறித்தனர்
1948 பெப்ரவரியில் முழுமையான ஆட்சிப்பொறுப்பு இலங்கைக்குக் கிடைத்தது.
1948 டிசம்பரில் இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது முதற் பாணத்தைச் சிங்களவர்ஏவினர். இந்தப்பாணம் தமிழர்களுள் மூன்றின் ஒரு பங்கினரின் குடியுரிமை, வாக்குரிமை என்னும் உயிரனைய உரிமைகளை இழக்கச் செய்தது. 1948 டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் (குடியுரிமைச்)சட்டம் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களுள் மூன்றில் ஒரு பங்கினரை

17 ஈழத்தமிழர் இறைமை
நாடற்றவர்களாக்கியது. தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஒரே 'குற்றத்திற்காக" இவர்கள் வாக்குரிமை இழந்தனர்; நாட்டுரிமை இழந்தனர்; குடியுரிமை இழந்தனர்; ஆட்சியுரிமை அரசுரிமை அனைத்தையும் இழந்தனர். இந்து சமுத்திரத்தில் இவர்களைத் தூக்கி எறியாமல் விட்டது இலங்கை அரசு செய்த பெரிய 'புண்ணியம்’
தமிழரசுக் கட்சி
திரு.சாமுவேல் ஜேம்சு வேலுப்பிள்ளை செல்வநாயகம் அப்பொழுது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றிருந்தார். இந்திய பாகிஸ்தானிய குடியிருப்பாளர் (குடியுரிமைச்) சட்டத்தை வாக்கெடுப்புக்கு விட்டபொழுது, எனது தலைவர் மூதறிஞர் செல்வநாயகம் இந்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து விலகினார். இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை ஒற்றையாட்சியின் கீழ்ப் படிப்படியாகப் பறித்துத் தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கி அடிமைகளாக்கச் சிங்களத்தலைவர்கள் திட்டம் தீட்டி வருவதைத் தீர்க்கதரிசனத்துடன் எடுத்துரைத்தார்.
1949ஆம் ஆண்டில் தமிழரசுக்கட்சி தொடங்கப்பட்டது. 1949 டிசம்பர் 18ஆம் நாள் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டில் மூதறிஞர் செல்வநாயகம் தலைமை உரை ஆற்றினார். இந்தக் கூட்டம் கொழும்பு அரசாங்க எழுதுவினைஞர் சேவைச் சங்கத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. அவர் உரையில் குறிப்பிடத்தக்க சில வரிகளைத் தருகிறேன்.
'.9ஆம் 10ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் வடக்கில் உள்ள தமிழரின் நிலப்பகுதிகளில் தமிழர்ஆட்சி தொடங்கியது. தெற்கேயுள்ள சிங்கள நிலப்பகுதிகள் தனியாக ஆட்சி செய்யப்பட்டன. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட அரசுகள் தென்னிலங்கையில் இருந்தன.
'காலம் மாறினாலும் சிங்கள அரசும் தமிழ் அரசும் தனித்தனியாக நெடுங்காலம் தொடர்ந்தன. ஐரோப்பியர்கள் வந்து முதலில் தமிழ் அரசைக் குலைத்தார்கள். பின்னர் சிங்கள அரசைக் குலைத்தார்கள்
". . . . . . ..பல நூற்றாண்டுகளாக இருந்த இரு நாடுகளைப் பிரித்தானியர் இணைத்தினர். ஆட்சித் தேவைக்காக மட்டும் இணைத்தனர். இந்த இரு நாடுகளதம் இயற்கையாக ஒன்றிணையவில்லை.
நிலங்கள் கற்பழிப்பு
மூதறிஞர் செல்வநாயகத்தின் வாக்குப் பொய்யாகவில்லை. தமிழரின் வாழ்விடங்களிலும், நிலப்பகுதிகளிலும் சிங்கள மக்களை வலிந்து குடியேற்றியது
இலங்கை அரசு. வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் இந்தக் குடியேற்றங்கள் நடைபெற்றன
சிங்களவர்களின் கைகளில் ஆட்சிப் பொறுப்பு இருந்தது. குடியேற்றத்துக்கு எதிராக அரசியலமைப்பில் தமிழர்கட்குப் பாதுகாப்பை வழங்கவில்லை. தமிழர்களின் நிலங்கள் கன்னி நிலங்கள். குடியேற்றத்தினால் இந்நிலங்கள் கற்பழிக்கப்பட்டன இதற்கு ஆட்சி உடந்தையாக இருந்தது.

Page 12
மு. திருச்செல்வம் 18
சிங்களமே ஆட்சி மொழி
பாராளுமன்றம் அழைக்கப்படும் முன் அரசாங்கச் சபை என்ற அமைப்பு இருந்தது. 1944இல், ஆங்கிலத்தின் இடத்தில் சிங்களம் மட்டும் ஆட்சி மொழியாக அமர வேண்டும் என அரசாங்கச் சபையில் திரு. ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்த்தனா முன்மொழிந்தார். சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகளாக இருக்க வேண்டும் என இத்தீர்மானம் திருத்தத்துடன் நிறைவேறியது.
1948இல் ஆட்சிப் பொறுப்பை இலங்கை அரசிடம் வழங்கியபொழுது ஆட்சிமொழிபற்றிக் குறிப்பிடவில்லை. ஆங்கிலமே ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.
1951இல் ஆட்சியில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசிய கட்சியில் அமைச்சராக இருந்த திரு. சோலமன் வெஸ்ட் றிட்ச்வே டயசு பண்டாரநாயக்கா அக்கட்சியில் இருந்து விலகினார். சிங்களத்தையும் தமிழையும் ஆட்சி மொழிகளாாக்காமல் காலத்தைக் கடத்துகிறது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி எனக் குற்றம் சாட்டினார். பூரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார். சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகளாகும் எனக் கொள்கை வகுத்தார்.
1954இல் இலங்கைப் பிரதமராக இருந்து சேர் ஜோன் கொத்தலாவலை யாழ்ப்பாணத்துக்கு வந்தார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் அளித்த வரவேற்பில் உரையாற்றினாரர். சிங்களத்துக்கும் தமிழுக்கும் சம உரிமை வழங்குவோம் ஆட்சி மொழிகளாக்குவோம் எனத் தமிழர்கட்கு உறுதியளித்தார்.
1955இல் பூரீலங்கா சுதந்திரக்கட்சிசிங்களத்தை மட்டுமே ஆட்சிமொழியாக்க வேண்டும் எனக் கொள்கை வகுத்தது. 1956 முற்பகுதியில் களனி மாநாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்களத்தை மட்டும் ஆட்சிமொழியாக்க வேண்டும் எனத் தீர்மானித்தது.
1956ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அமோகமாக வெற்றி பெற்றிருந்தது. போட்டியிட்ட 14 தேர்தல்கள் தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றியீட்டியது. மூதறிஞர் செல்வநாயகத்தின் கூட்டாட்சி அரசுக் கொள்கையைத் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக ஏற்றுக் கொண்டனர்.
1956இல் திரு. பண்டாரநாயக்கா பிரதமரானார். தமிழரின் கடுமையான எதிர்ப்பையும் பொருட்படுத்தாது 1956 சூன் 5ஆம் நாள் "சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாகும்' என்ற சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். இந்நாளன்று தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் பாராளுமன்றத்துக்கு முன் உள்ள காலிமுகத் திடலில் அறப்போர் நடத்தினர். உண்ணாவிரதம் இருந்தனர்; சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டனர்.
சிங்கள மொழி மட்டுமே ஆட்சிமொழியாகும் என்ற தீர்மானம் பற்றிய சனப்பிரதிநிதிகள் சபை விவாதத்தில் மூதறிஞர் செல்வநாயகம் கலந்து கொண்டார். அவரின் உரையின் உள்ளடக்கம் பின்வரும் வரிகளில் தெளிந்துள்ளது.
'..தமிழர்கள் இந்நாட்டவர்களாக இருக்க வேண்டும். நாம் அழிக்கப்படுவதை எதிர்க்க - உருக்குலைக்கப்படுவதை எதிர்க்க உறுதி

19 ஈழத் தமிழர் இறைமை
வேண்டும்; வலிமை வேண்டும். எமது அமைப்பு வலிவுடையதாக வேண்டும். உள்ளம் வலிவுடையதாக வேண்டும். சோல்பரி அரசியலமைப்பின் கீழ் ஆட்சி செய்யும் எந்தச் சிங்கள அரசிடம் இருந்தும், சிங்கள அரசின் பிடிகளிலிருந்தும் விடுபடத் தமிழ் பேசும் மக்களுக்கு இவ்வலிமைகள் அவசியம் என நாம் உணர்ந்துள்ளோம். அத்தகைய போராட்டத்தில், இலங்கைத் தமிழர் போன்ற அளவுள்ள சமூகம் இலங்கைக்கு உள்ளும் வெளியேயும் தமது துன்பங்களை எடுத்துக்கூற வேண்டும். ஏனைய நாடுகளின் ஆதரவு பெறும் நோக்குடன் இவற்றை எடுத்துக்கூற வேண்டும்."
1956 ஜூன் 14ஆம் நாள் சனப்பிரதிநிதிகள் சபையில் இச்சட்டமூலத்தை வாக்கெடுப்புக்குவிட்டபொழுதுதமிழ் உறுப்பினர் அனைவரும் கட்சி வேறுபாடின்றி எதிர்த்து வாக்களித்தனர். இரு முசுலிம் உறுப்பினர்களைத் தவிர ஏனைய முசுலிம் உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர்.
இனக்கலவரம்
சிங்கள மொழிச் சட்டம் நிறைவேறிய பின்பு தமிழர்கட்கும் சிங்களவர்கட்குமிடையே கடுமையான கசப்புணர்வு ஏற்படத் தொடங்கியது. தமிழர்களின் உரிமைகள் முழுமையாகப் பறிக்கப்பட்டதைத் தமிழ்த் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர். சிங்களமயமாக்கத்துக்குத் தமிழர்கள் எதிராக உள்ளதைச் சிங்களத் தீவிரவாதிகளும் பெளத்த பிக்குகளும் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறினர்.
சிங்கள-தமிழ் உறவுகள் மோசமடைவதற்கு முன்பு தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் திரு. பண்டாரநாயக்கா விரும்பினார். தமிழரசுக் கட்சியினர்ை அழைத்தார். பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 1957இல் பண்டார நாயக்கா - செல்வநாயகம் ஒப்பந்தம் எழுந்தது. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சிகண்டி நகருக்குப்பாதயாத்திரையை மேற்கொண்டது; பெளத்த பிக்குகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒப்பந்தத்தைக் கைவிட்டதாகத் திரு. பண்டாரநாயக்கா அறிவித்தார். இந்த ஒப்பந்தம், 1. தமிழர் நிலப்பகுதிகளான வடக்குக் கிழக்கு மாகாணங்களைத்தமிழர்களே ஆட்சி செய்யும் மாநில அவை:2. தமிழ் மாநிலங்களில் தமிழ் ஆட்சிமொழி, 3. தமிழ் நிலங்களில் சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்த வகைஆகியனவற்றை உள்ளடக்கியது. ஒப்பந்தம் கைவிடப்ப்ட்டதால் சிங்கள - தமிழ் உறவுகள் மேலும் மோசமடைந்தன.
1958இல் வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்காகக் கிழக்கில் இருந்து சென்றவர்களைப் பொலன்னறுவையில் தாக்கினர். இதைத் தொடர்ந்து சிங்கள தமிழ்க்கலவரங்கள் தீவடங்கிலும் நடைபெற்றன. காலம் கடந்தபின் அவசரகாலச் சட்டத்தை அரசு பிரகடனம் செய்தது. கலவரம் தணிந்தது. தமிழரின் உயிர்கள், உடமைகள், உரிமைகள், சொத்துக்கள் அனைத்தும் பெருமளவில் பறிக்கப்பட்டன. கொழும்பில் உள்ள தமிழர்களைக் கப்பல்கள் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினர். தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனியாக ஆளும் உரிமைபெற வேண்டியவர்கள் என்ற கருத்தையே இந்த இனக் கலவரம் வலியுறுத்தியது.
1958இல் தமிழ் மொழிச் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. அரசு ஊழியர்களாகச் சேர்வோர், தமிழர்களாயிருப்பின், நுழைவுத்

Page 13
மு. திருச்செல்வம் 20
தேர்வுகளில் தமிழ்மூலம் தோற்றலாம் எனவும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் ஆட்சித் தேவைகட்குத் தமிழ் பயன்படும் எனவும், இச்சட்டம் விதித்தது.
கோடீசுவரன் வழக்கு
திரு. செல்லையா கோடீசுவரன் அரச சேவையில் பணிபுரிந்த எழுதுவினைஞர்களுள் ஒருவர். இவர் 1.4.1962இல் தனக்கு வழங்கப்படவேண்டிய வழமையான சம்பள உயர்வு வழங்கப்படவில்லையே, இதற்கான காரணம் என்ன எனத் தனது மேலதிகாரியைக் கேட்டார்; 'அரசுச் சேவை விதிகட்கமையச் சிங்கள மொழித் தேர்வுகளில் நீர் வெற்றி பெறவில்லை; எனவே உமது வழமையான சம்பள உயர்வு வழங்கப்படவில்லை"என மேலதிகாரி திரு. கோடீசுவரனுக்குப்பதிலளித்தார். திரு. கோடீசுவரன் அரசு மீது வழக்குத் தொடர்ந்தார். திரு. கோடீசுவரனின் மூத்த வழக்கறிஞராகநான் வாதிட்டேன். மாவட்டநீதிபதி திரு. ஓ.எல்.டி. கிறெட்சர் அவர்கள் வழக்கை விசாரித்தார்.
1956ஆம் ஆண்டில் 33ஆவது சட்டமாகிய ஆட்சி மொழிச் சட்டம், அரசியலமைப்பின் 29ஆம் பகுதியின் 2ஆம் விதிக்கு முரணானது என நான் வாதிட்டேன். சான்றுகளைநீதிமன்றத்தின் முன் எடுத்துரைத்தேன். அரசியலமைப்புக்கு முரணான சட்டம் செல்லுபடியாகாது என்பதைக் கூறினேன். செல்லுபடியாகாத சட்டத்திற்கமையப் பிறப்பிக்கப்பட்ட விதிகளும் செல்லுபடியாகாதவையே. எனவே திரு. கோடீசுவரனுக்குரிய சம்பள உயர்வு வழங்கப்படாமை அநீதி என்பது எனது வாதம.
அரசு சார்பில் வாதாடிய சட்டமா அதிபர், அரசு ஊழியர் நீதிமன்றத்தில் நீதி கோரமுடியாது எனவும், அரசு ஊழியர்களின் சேவை நிபந்தனைகளைக் காலத்துக்குகாலம் மாற்றும் உரிமை அரசுக்கு உண்டு என்றும், தமிழர்கள் தனியான சமூகம் அல்ல என்றும் வாதாடினார். 1956இன் ஆட்சிமொழிச் சட்டம் அரசியலமைப்பு விதிகட்கு முரணானது அல்ல எனக் கூறினார்.
1964 ஏப்ரல் 24இல் மாவட்ட நீதிபதி திரு.ஓ.எல்.டி. கிறெட்சர் தீர்ப்பு வழங்கினார். 1956ஆம் ஆண்டின் 35ஆவது சட்டமான ஆட்சிமொழிச் சட்டம், அரசியலமைப்பின் 29ஆம் பகுதியின் 2ஆம் விதிக்குமுரணான, வலுவற்ற சட்டம் எனக் கூறினார். இதனால், இச்சட்டத்தை அமுல் நடத்த முயன்ற அரசசேவை விதிகள் செல்லுபடியாகாதவை என்றார். திரு. கோடீசுவரனுக்கு வழமைபோல் வழங்கவேண்டிய சம்பள உயர்வுகளை. இக்காரணத்தால் தடுக்காது வழங்க வேண்டும் எனத் தீர்ப்பளித்தார்.
இனங்களின் உரிமைகளை அரசியலமைப்பின் 29 (2) விதி ஆணித்தரமாகப் பாதுகாத்தது. இனப்பாகுபாட்டுச் சட்டங்களை இயற்றினாலும் செல்லுபடியாகாதுஎன 29 (3) விதி கூறியுள்ளது. 1956இல் 33ஆவது சட்டமான ஆட்சிமொழிச்சட்டம் இனப்பாகுபாட்டுச் சட்டம். எனவே செல்லுபடியாகாத சட்டம். இக்கருத்துப்பட அமைந்த தீர்ப்பு, தமிழ் மக்களுக்குச் சார்பானது.
அரசியலமைப்பின் 29 (2) விதிகளைப் பாராளுமன்றத்தின் பெரும் பான்மை வாக்குப்பலத்தைக் கொண்டு அரசியலமைப்புத் திருத்தம் மூலம் மாற்றி விட்டால், சிங்களமயமாக்கத்தை நிறைவேற்றலாம் எனச் சிங்களத் தலைவர்கள் கருதினார்கள்

21 r ஈழத்தமிழர் இறைமை
இலஞ்ச ஆணையாளர்- ரணசிங்க வழக்கில், 1964ஆம் ஆண்டில் பியர்சுப் பிரவு அரசவையில் வழங்கிய தீர்ப்பு சிங்களத் தலைவர்கட்குக் கசப்பானதாக இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்ட வாசகங்கள், இலங்கை அரசியலமைப்பு வளர்ச்சியில் முக்கிய மாற்றத்தைக் கொணர்ந்தன. இலங்கை அரசியலமைப்பின் 29 (2) (3) ஆம் விதிகளைத் திருத்தவோ மாற்றவோ இலங்கைப் பாராளுமன்றத்தால் இயலாது ஒன்று என்ற கருத்தைப் பிரித்தானிய s986)6 35 5TLJL 8 &n)ltL.
y காப்பு றியது 。魯m s師函由母抽
徽
இலங்கை நாடாளுமன்ற மேலவை (செனற்) யில் மு. திருச்செல்வம் உரையாற்றுகிறார். பார்வையாளர் வரிசையில் மறவன்புலவு க. சச்சிதானந்தன், நீலன் திருச்செல்வம், பிறர்.

Page 14
இரண்டாவது
அரசியலமைப்பு யாத்தல்
நாடுகள் அரசியலமைப்புடன் தோன்றுவதில்லை. பல நாடுகளின் அரசியலமைப்புகள், வரலாற்றினூடாக வளர்ச்சியடைந்தே வந்துள்ளன. காலங்கட்கேற்ப மாற்றமடைந்து வருகின்றன. புதிய கொள்கைகளையும் நடைமுறைகளையும் ஆட்சிமுறைகளையும் வேண்டிய பொழுது புகுத்தக் கூடிய அரசியலமைப்புகள் காலத்தைக் கடந்து வாழ்ந்து வந்துள்ளன.
தம்மைத் தாமே ஆட்சிச் செய்யும் நாடுகள், தமக்குரிய அரசியலமைப்பைத் தாமே தயாரிக்கின்றன. தமது தேவைகளையும் வாழ்வு முறைகளையும் ஒட்டியதாக அமைவதுடன் தமது அரசியல் நோக்கங்களை அடைவதற்கும் பயன்பட வேண்டும் என விரும்புகின்றன.
1948இல் இலங்கை மக்களால் ஏற்றுக்கொண்ட அரசியலமைப்பு இலங்கை மக்களால் யாக்கப்படவில்லை. முழுமையான ஆட்சிப்பொறுப்பை வழங்கிய பிரித்தானியர், அந்த ஆட்சியை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளைக் கொண்ட அரசியலமைப்பையும் வழங்கினார்கள்.
அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகள்
பிரித்தானியர் வழங்கிய அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்கள் தேவை என முதன் முதலில் குரல் எழுப்பியவர் மூதறிஞர் செல்வநாயகம் அவர்களே. 1949 டிசம்பர் 18ஆம் நாள் மூதறிஞர் செல்வநாயகம் கொழும்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முதலாவது மாநாட்டுத் தலைமை உரையில் கூறிய சில வரிகளைத் தருகிறேன்.
பெரிதும் சிறிதுமாக உள்ள மொழி இனங்களிடையே ஏற்படும் முரண்பாடுகள் போருக்குக் காரணமாக இருந்துள்ளன. இப்போர்களில் வல்லரசுகள் கூட இழுக்கப்பட்டுள்ளன. மொழி இனங்களிடையே உள்ள முரண் பாடுகளைத் தீர்ப்பதற்கு இருவழிகள் உள. ஒவ்வொரு மொழி இனத்துக்குமாக இறைமையுடைய தனித்தனி நாடுகளை அமைக்கப் பரந்த நிலப்பரப்பைத் துண்டாடுதல் ஒரு வழி; ஒவ்வொரு மொழிஇனத்துக்குமாகத்தன்னாட்சியுடைய மாநிலங்களை அமைத்து மாநிலங்கள் சேர்ந்து நடுவண் அரசை அமைக்கின்ற கூட்டாட்சி அரசைஉடைய ஒரேநாட்டை அமைத்தல், மற்றொரு எளிதான வழி. இத்தகைய வ்ழிகளுக்கமையச் செயற்படுவதாயின் மொழி இனங்கள் தத்தமக்கெனத்தனியான நிலப்பகுதிளைக் கொண்டிருக்க வேண்டும்.'
*: " ..நாங்க்ள் கேட்கின்ற தீர்வு இதுதான். தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம், தன்னாட்சி உடைய சிங்கள மாநிலம், இரண்டு மாநிலங்கட்கும் பொதுவான நடுவண் அரசு. இவற்றை உள்ளடக்கும் கூட்டாட்சி அரசியலமைப்பு. சிறியதான தமிழ்ப் பேசும் நாட்டினம் அழிந்து போகமலும்,

23 ஈழத்தமிழர் இறைமை
பெரியதான சிங்கள நாட்டினத்தினால் விழுங்கப்படாமலும் இருப்பதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாடு இதுதான். '
குடியரசாக இலங்கை மாறவேண்டும்; அதற்கேற்ப அரசியலமைப்பு மாறவேண்டும் என 1956இல் திரு. பண்டாரநாயக்கா விரும்பினார். 1957இல் இதற்காகப் பாராளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை அமைத்தார். இக்குழுவிற்குத் திரு. பண்டாரநாயக்காவே தலைமை தாங்கினார். ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்ட இக்குழுவின் செயற்பாடுகள் 1959இல் திரு. பண்டாரநாயக்காவைச் சுட்டுக் கொலை செய்ததும் ஓய்ந்து போயின.
1965ஆம் ஆண்டில் திரு. டட்லி சேனநாயக்காதலைமையில் அரசு அமைந்தது. அந்த அரசில் தமிழரசுக் கட்சியின் சார்பில் நான் உள்ளூராட்சி அமைச்சராக 1968 வரை பணிபுரிந்தேன். திரு. டட்லி சேனநாயக்கா இத்தெரிவுக்குழுவை மீளமைக்க முயற்சித்தார். அப்பொழுது எதிர்க்கட்சியிலிருந்தபூரீலங்கா சுதந்திரக் கட்சி, சமசமாசக் கட்சி உறுப்பினர்கள் இம்முயற்சிக்கு ஆதரவு அளிக்க மறுத்தனர். 1964இல் அரசவையில் இலஞ்ச ஆணையாளர்--ரணசிங்கா வழக்கில் பியர்சுப் பிரவு வழங்கிய தீர்ப்பில் உள்ள வாசகங்களைச் சுட்டிக் காட்டிய இவர்கள், அரசியலமைப்பை முழுமையாகத் திருத்துவதற்குப் பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனக் கூறினார்கள்.
'அரசியலமைப்பு யாக்க அவை ஒன்றின் மூலம் புதிய அரசியலமைப்பை உருவாக்கவேண்டும். அதன்மூலம் இலங்கைகுடியரசாகவேண்டும்.' என்ற கருத்தைச் சிங்கள அரசியல் தலைவர்கள் வளர்த்து வந்தனர். 1970ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டி மூன்று கட்சிகளின் கூட்டு முன்னணி இக்கருத்தை வாக்காளர் முன்பு வைத்தது. சுதந்திரக்கட்சி, சமசமாசக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளும் 1970ஆம் ஆண்டுத் தேர்தலுக்காகத் தேர்தல் ஒப்பந்தம் செய்திருந்தன. கூட்டாகத் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்து இருந்தன. இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில்,
"...நீங்கள் தெரிவுசெய்யும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றக் கடமைகளைச் செய்யும் அதே சமயம், அரசியலமைப்பு யாக்க அவையாகச் செயற்பட்டுப் புதிய அரசியலமைப்பினைத் தயாரித்து, ஏற்று, நடைமுறைப் படுத்த அனுமதிக்குமாறு வாக்காளர்களாகிய உங்களிடம் ஆற்றலுரிமையைக் கோருகின்றோம். '
எனக் கேட்டிருந்தார்கள். இலங்கையைக் குடியரசாக்கும் நோக்குடனேயே இந்தப் புதிய அரசியலமைப்பு யாக்கப்படும் எனவும் கூறினார்கள். விடுதலையடைந்த, இறைமையுடைய, தன்னாதிக்கமுடைய குடியரசை அமைக்க வாக்காளரிடம் ஆற்றல் உரிமையைக் கோரினார்கள்.
இந்தியாவில் அரசியலமைப்பு யாக்க அவைதான் விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியலமைப்பை யாத்தது. இதனால் இலங்கையிலும் ஓர் அரசியலமைப்பு யாக்க அவை அமைக்கப்படல் வேண்டும்; அந்த அவை அரசியலமைப்பை யாக்க வேண்டுமெனக் கருதினார்கள். இந்திய அரசியலமைப்பு யாக்க அவை
இந்திய அரசியலமைப்பு யாக்க அவை எவ்வாறு தோன்றியது. எவ்வாறு

Page 15
மு.திருச்செல்வம் 24
செயற்பட்டது, எவ்வாறு அரசியலமைப்பையாத்தது என்று இங்கு நோக்க வேண்டும். சரியான விளக்கம் இல்லாதவர்கள் இந்திய அரசியலமைப்பு யாக்க அவையைப் போன்று இலங்கைக்கும் ஓர் அரசியலமைப்பு யாக்க அவை அமைத்து அரசியலமைப்பை யாக்கலாம் என்று நம்பினார்கள்."
இரண்டாவது உலகப் போரின் பின்னர், பிரிட்டனில் தொழிற்கட்சி ஆட்சி தொடங்கியது. தொழிற்கட்சித் தலைவர்கள் இந்தியாவிற்கு விடுதலை வழங்கப்படவேண்டும் என்பதைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டனர். முதலில் சேர், இசுரபோட் கிறிப்சு தலைமையில் அனுப்பிய தூதுக் குழுவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 1946ஆம் ஆண்டில் சேர். பற்றிக்லோரன்சு தலைமையில் வந்த அமைச்சரவைக் குழு இந்தியா விடுதலை பெற வேண்டும் எனவும், விடுதலை பெற்ற இந்தியா தனது அரசியலமைப்பைத் தானே யாக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தது. இதற்கென அரசியலமைப்பு யாக்க அவை ஒன்றை அமைக்கவேண்டும் என விதந்துரைத்து.
இந்த அமைச்சரவைக்குழுவின் விதப்புரைகட்கமைய, அரசியலமைப்பு யாக்க அவையைத் தெரிவு செய்யும் நோக்கத்துடன் 1946இல் இந்தியாவின் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது:
இந்தத் தேர்தலின் அடிப்படையில் எழுந்த அரசியலமைப்பு யாக்க அவை, அதே காலத்தில் இந்தியாவின் சட்டப் பேரவையாகவும் செயற்பட்டது. இடைக்கால அரசின் ஆட்சித் தலைவராகப் பண்டித ஜவஹர்லால் நேரு பதவி ஏற்றார். பிரித்தானிய இந்தியாவில் வாழ்ந்த முசுலிம்கள் தமக்கெனத் தனிநாடு கோரினார்கள். இந்தியா விடுதலை பெறுவதெனில், முசுலிம்கள், பாகிஸ்தான் என்ற சுதந்திரமுடைய நாட்டில்தான் வாழ்வோம் என்றனர். முசுலிம்கள் தனியான பாரம்பரியம் உடையவர்கள்: தனியான பண்பாடு உடையவர்கள்; தனியன பிரதேசம் உடையவர்கள், முசுலிம்களின் வாழ்வு நோக்கங்கள் நிறைவு பெற வேண்டுமெனில் பாகிஸ்தான் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு திரு. முகம்மதலி ஜின்னா 1947இல் மிக உறுதியாகக் கூறினார். அரைநூற்றாண்டுக்கு மேலாக முசுலிம்கள் தனிநாடு கேட்டு வந்திருப்பதைப் பிரித்தானியரிடம் சுட்டிக் காட்டினார்.
திரு. நேருவின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தபொழுது முசுலிம் லீக் அரசாங்கத்துடன் இணைந்து பணிபுரிய மறுத்தது. பிரித்தானியர் வற்புறுத்தியதன் பேரில் திரு. ஜின்னா அரசில் சேர்ந்தார். சேர்வதன் மூலம் அரசாங்கத்தை நெறிப்படுத்தவதை விட்டு முறியடிப்பதையே நோக்கமாகக் கொண்டார்
இந்திய மக்கள் தொகையின் நான்கில் ஒரு பங்கினரான பத்துக்கோடி முசுலிம்களின் பிரதிநிதிகள் இல்லாத அரசியலமைப்புயாக்க அவையால் இந்தியாவின் புதிய அரசியலமைப்பை வரைய முடியாது எனப் பிரித்தானியர் கருதினார்கள். நாட்டின் எந்த ஒரு சமூகமும் அரசியலமைப்பு யாக்க அவையில் பிரதிநிதித்துவம் பெறாவிடின், அந்த அவை உருவாக்கும் அரசியலமைப்பு முழுமையாகாது; இந்தியாவின் அரசியலமைப்பாகச் செயற்பட முடியாது எனப் பிரித்தானியர் கருதினார்கள்.
நாட்டைப் பிரிப்பதுதான் நலமான வழி முசுலிம்களும் முசுலிம் ஆல்லாதவர்களும் தனித்தனி நாடாக வாழ வழி செய்வதுதான் ஏற்றவழி என்ற

25 ஈழத்தமிழர் இறைமை
கருத்தைப் பிரித்தானியர் ஏற்றுக் கொண்டனர். திரு. நேரு தலைமையிலான இந்திய தேசியக் காங்கிரசு இந்த முடிவை மனவருத்தத்துடன் ஏற்றுக் கொண்டது.
1947இல் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இந்திய - சுதந்திரச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் என்ற இருநாடுகள் எழுவதற்கு இச்சட்டம் வழி வகுத்தது. அரசியலமைப்பு யாக்க அவையும் இரண்டாகப் பிரிந்தது.
1947 ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. இந்நாள் வரை இந்திய மக்களின் இறைமை, ஆட்சியுரிமை, ஆட்சிப் பொறுப்பு என்பன பிரித்தானியரிடம் இருந்தன. இந்நாள் வரை பிரித்தானிய மன்னரே இந்தியப் பேரரசராகவும் விளங்கினார். இந்நாள்வரை பிரித்தானியப் பாராளுமன்றமே இந்தியாவிற்குரிய சட்டங்களை இயற்றியது. பின்னர் இந்திய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு யாக்க அவையிடம் அரசியலமப்பு யாக்கும் உரிமையைப் பிரித்தானியர் வழங்கினர். இந்தியாவின் இறைமையும் ஆட்சியுரிமையும் இந்திய அரசியலமைப்பு யாக்க அவையின் மூலம் இந்திய மக்களிடம் மீளளிக்கப்பட்டன.
இந்திய அர்சியலமைப்பு யாக்க அவை சட்டபூர்வமாக அமைக்கப்பட்ட அவை, பிரித்தானியர் இந்தியாவிற்கு விடுதலை வழங்கியபொழுது, இருசாராரும் ஏற்றுக்கொண்டநிபந்தனைகளுள் ஒன்றுதான் இந்திய அரசியலமைப்பு யாக்க அவை, இந்த அவை மூலம், பிரித்தானியரிடம் இருந்த இந்திய மக்களின் இறைமையும் ஆட்சியுரிமையும் இந்திய மக்களிடம் மீளளிக்க வகை செய்யப்படும் எனப் பிரித்தானியரும், இந்தியர்களும் ஏற்றுக் கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு யாக்க அவையை இந்திய மக்கள் ஒரு தலைப்பட்சமாகத் தெரிவுசெய்து நியமிக்கவில்லை. இந்திய மக்களின் இறைமையை இந்திய மக்களிடம் சட்டபூர்வமாக வழங்குவதற்குப் பிரித்தானியரும் இந்திய மக்களும் செய்து கொண்ட ஏற்பாடுதான் இந்த அவையாகும்.
1949இல் இந்திய அரசியலமைப்பு யாக்க அவையால் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பில், இந்திய மக்களாகிய நாம், இந்திய அரசியலமைப்புயாக்க அவை மூலம் இந்த அரசியலமைப்பைச் சட்டமாக்கினோம் என்று கூறப்பட்டது. சட்டமாக்கும் உரிமை இந்திய அரசியலமைப்பு யாக்க அவைக்குப் பிரித்தானியப் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
பிரித்தானியப் பாராளுமன்றத்தின் சட்டபூர்வமான வாரிசாக இந்திய அரசியலமைப்பு யாக்க அவை விளங்கியது. இதனால்தான் அந்த அவை அரசியலமைப்பைச் சட்டமாக்கி ஏற்றுக் கொண்டது. இதன் மூலம் பிரித்தானிய ஆட்சியில் நடைமுறையில் இருந்த சட்டங்கள் விடுதலை பெற்ற இந்தியாவிலும் சட்டங்களாயின. சட்டத் தொடர்ச்சி ஏற்பட்டது. ஆட்சியுரிமையையும் இறைமையையும் சட்டபூர்வமாக இந்தியாவிடம் வழங்கியது. பழைய சட்டங்கள், புதிய அரசியலமைப்பு, புதிய சட்டங்கள் இவையாவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையனவாக விளங்கின.
இந்தியாவின் தமிழரின் இறைமை
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்திய அரசியலமைப்பு யாக்க அவையில் உறுப்புரிமை பெற்றிருந்தனர். திருவாளர்கள் பட்டாபி சீதாராமையா, சந்தானம்,

Page 16
மு. திருச்செல்வம் 26
கோபால்சாமி அய்யங்கார் சி. சுப்பிரமணியம் போன்ற சட்டமேதைகள் தமிழ் நாட்டிலிருந்து தேர்வாகினர்.
முசுலிம்களின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு யாக்க அவையைப் புறக்கணித்தனர். தனிநாடு கோரினார்கள். முசுலிம்களின் இறைமை பிரித்தானியரிட மிருந்து பாகிஸ்தானிய அரசியலமைப்பு யாக்க அவை மூலம் முசுலிம்களைச் சென்றடைந்ததைப் பார்த்தோம்.
தமிழ் மக்களோ, அரசியலமைப்பு யாக்க அவையைப் புறக்கணிக்கவில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அரசியலமைப்பு யாக்க அவையில் உறுப்புரிமை பெற்றி ருந்தனர்; தமிழ் நாடு தனி அரசாக வேண்டும். தமிழர்களின் இறைமையும் ஆட்சி உரிமையும் தமிழர்கட்கே மீட்கப்படவேண்டும் என அப்பிரதிநிதிகள் கோரவில்லை.
எனினும் இத்தகைய எண்ணங்கள் தமிழர்களிடம் இல்லாமல் போகவில்லை. பகுத்தறிவுத் தந்தை ஈரோடு ராமசாமி நாயக்கர் தலைமையில் அமைந்த திராவிடக் கழகம், வடநாட்டு ஆதிக்கம் தமிழர்கள் மேல் திணிக்கப்படலாம். எனவே தமிழர் தனியாக அரசை அமைக்க வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். திரு. காஞ்சிபுரம் நடராசன் அண்ணாத்துரை போன்ற இளைய தலைமுறையினர் தமிழரே தமிழரை ஆட்சி செய்ய வேண்டும் எனக் கருதினர்.
இந்திய அரசியலமைப்புயாக்க அவையில் இணைந்து ஒப்புதல் கொடுத்துப் பணிபுரிந்து அரசியலமைப்பை உருவாக்கி ஏற்றுக்கொண்டதன் மூலம் தமிழர்கள் தமது இறைமையைத் தனியாகப் பெற முடியவில்லை. முசுலிம்கள் பெற்றதுபோல் பெற முடியவில்லை. இந்தியாவில் உள்ள தமிழர்களின் இறைமை சட்டபூர்வமாக மீளளிக்கப்பட்டது. ஏனைய இந்தியர்களுடன் இணைந்து தமது இறைமையை மீளப்பெறத் தமிழர்கள் சட்டபூர்வமான ஒப்புதலை இந்திய அரசியலமைப்பு யாக்க அவைக்கு வழங்கினர். ஒரு தலைப்பட்ச முயற்சி
நாட்டில் உள்ள சிலர் கூடினார்கள். நடைமுறையில் உள்ள அரசியலமைப்புச் செயற்பாட்டின் அங்கமான தேர்தலுக்குச் சென்றார்கள். நாங்கள் தெரிவு செய்யப்பட்டால், ஆட்சி அமைத்தால், தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் புதிதாக அமைக்கப்படும் அரசியலமைப்பு யாக்க அவை உறுப்பினர்களாகப் பணிபுரிய அழைப்போம் என்றார்கள். இதற்கான ஆற்றலுரிமையை வாக்காளர்களிடம் கோரினார்கள்.
பாராளுமன்றத்தின்மூலம்நாட்டை ஆட்சி செய்ய உறுப்பினர்களைத்தேர்தலில் மக்கள் தெரிவு செய்கின்றார்கள். அதற்கான ஆற்றலுரிமையை வழங்குகின்றார்கள். பாராளுமன்றத்துக்கு வெளியே இருந்து செயற்பட, அதுவும் அரசியலமைப்பு யாக்க அவையாகச் செயற்பட, வாக்காளர்களிடம் ஆற்றலுரிமை கோருவது ஒருதலைப் பட்சமானது. எந்த அரசியலமைப்பின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டார்களோ அந்த அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பான, தொடர்பில்லாத புதிய அரசியலமைப்பைத் தயாரிக்க, ஏற்க, நடைமுறைப்படுத்த ஆற்றலுரிமை கோருவது ஒருதலைப்பட்சமானது.
பிரித்தானியவும் இந்தியாவும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், இந்திய மக்களிடம் இறைமையும் ஆட்சியுரிமையும் வழங்கப்பட்டமைதான் இந்திய

27 ஈழத்தமிழர் இறைமை
விடுதலைப் போரின் வெற்றி.
போரில் வெற்றி பெற்றோ, இரு சாராரும் ஏற்றுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலமோ, சட்டத் தொடர்புடைய ஆட்சியுரிமை மாற்றங்களைச் செய்து வருகின்றனர். ஆனால் அரசியல் எழுச்சி மூலம், சட்டத் தொடர்பில்லா ஆட்சியுரிமை மாற்றங்கள் எழுவது அரிது. அண்மைக்காலங்களில் ரொடீசியா, சூடான் போன்ற நாடுகளில் இத்தகைய சட்டத் தொடர்பில்லாத அரசியலமைப்புகள் எழுந்துள்ளன. இவை அரசியல் எழுச்சி மூலம் எழுந்தன.
ரொடீசியாவில் நடந்தமை
ரொடீசியாவில் கணிசமான அளவு ஆங்கிலேயர்கள் குடியேறி இருந்தார்கள. தென் ஆபிரிக்கா நாட்டில் உள்ள வெள்ளையர் ஆட்சி, ஆங்கிலேயர் ரொடீசியாவில் குடியேறுவதற்கும், உடைமைகளைப் பெறுவதற்கும் ஏதுவாக இருந்தது. பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக இருந்தமையால், ரொடீசியாவின் ஆட்சித் துறைகள் அனைத்திலும் வெள்ளையரின் கைமேலோங்கி நின்றது. பழங்குடிமக்களாக, மக்கள் தொகையில் பெரும்பான்மையினராக உள்ள காப்பிலி இனக் கறுப்புநிற மக்கள் ஆளப்படும் இனமாக, அட்டக்கப்படும் இனமாக, அறிவற்ற இனமாக, நாகரிகம் அற்ற இனமாகக் கருதப்பட்டனர். 1965இல் ரொடீசியாவில் 970,000 காப்பிலிகள்,217,000 வெள்ளையர்கள், 20,000 ஆசியரும் பிறருமாக, மொத்தம் 4,207,300 மக்கள் வாழ்ந்தனர்.
ஏனைய நாடுகளுக்கு விடுதலை வழங்கி வந்த பிரிட்டன், ரொடீசியாவிற்கும் விடுதலை வழங்க முயற்சித்தது. பழங்குடிமக்களான காப்பிலி இனமக்கள், தங்களிடம் ஆட்சிப்பொறுப்பையும் ஆட்சியுரிமையையும் இறைமையையும் மீளத் தருமாறு போராாடினார்கள் ஆட்சித்துறை அனைத்திலும் அமர்ந்திருந்த வெள்ளையர்கள் இதற்குஒப்பவில்லை. பழங்குடிமக்களான காப்பிலிகளிடம் ஆட்சியைக் கொடுத்தால், இறைமையை மீளளித்தால், வெள்ளையர்களின் நலனைப் பாதிக்கும்; வெள்ளையர்கள் அநுபவித்த முன்னுரிமைகள் குறைந்துவிடும் என்று அஞ்சினர்.
1965 நவம்பர் 11ஆம் நாள் ரொடீசிய வெள்ளையர்கள் ஒருதலைப்பட்சமாக நாட்டின் விடுதலையை அறிவித்தனர். பிரித்தானியர்1961இல் அந்நாட்டுக்கு வழங்கிய அரசியலமைப்பை வெள்ளையர்கள் தூக்கி எறிந்தனர். விடுதலைப் பிரகடனத்துடன் புதியதோர் அரசியலமைப்பை அறிவித்தனர். விடுதலைப் பிரகடனத்தின் தொடக்கவரிகளில் ரொடீசியா மேற்கொண்ட நடவடிக்கையின் கருப்பொருள் கூறப்பட்டுள்ளது.
"ஒருநாட்டு மக்கள் வேறு ஒருநாட்டு மக்களுடன் கொண்டுள்ளஅரசியல் பிணைப்புகளை மாற்றியமைத்து, ஏனைய நாடுகளைப் போல், தனியான ஒத்த தகுதி நிலை உடைய நாடாக உரிமத்துடன் தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டி ஏற்படும் என மனித சமுதாயத்தின் வரலாறு காட்டியுள்ளமையால் இந்த அறிவித்தல் மூலம், இத்துடன் இணைத்துள்ள .. . . . . . . . . . . . . . . نهٔ . . . ، அரசியலமைப்பைத் தமதாக ஏற்றுச் சட்டமாக்கி, ரொடீசிய மக்களுக்கு வழங்கி.
ஓர் அறிவித்தல் மூலம், ஒருசாற்றுதல் மூலம், "இத்தால் யாவரும் அறிக' என அறிக்கை வெளியிட்டு, நாட்டுக்கு விடுதலை பெற்ற முறைமைதான் ரொடீசியாவில்

Page 17
மு. திருச்செல்வம் 28
நடந்த ஒருதலைப்பட்சமான விடுதலை அறிவிப்பு,
இந்த விடுதலை அறிவிப்புத்தான், தமதாக ஏற்றுச் சட்டமாக்கி மக்களுக்கு வழங்கப்பட்ட அரசிலயமைப்புக்குரிய வலிமையைக் கொடுத்தது. ஏற்கனவே பிரித்தானியரால் வழங்கப்பட்ட அரசியலமைப்புக்கு முரணாகவும் புறம்டாகவும் இந்த அரசியலமைப்பு எழுந்தது. எனவே இந்த அரசியலமைப்பு, சட்டத் தொடர்புடைய அரசியலமைப்பு அல்ல. அரசியல் எழுச்சியால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு ஆகும். ரொடீசியாவில் நடைபெற்ற ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை, அங்குள்ள வெள்ளையர்களின் தலைவர்கள் மட்டுமே மேற்கொண்டார்கள். இந்த நடவடிக்கையில் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும்பங்குகொள்ளவில்லை. நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள பழங்குடி மக்கள் முற்றுமாக இதில் பங்குகொள்ளவில்லை.
இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டபூர்வமானதா? இந்தக் கேள்வியை ரொடீசிய உயர்நீதிமன்றத்தில் கேட்டனர். பட்டசிம்பமுட்டோ எ. லார்ட்டர் பேர்க்கு வழக்கில், இந்தச் சிக்கலை ரொடீசிய நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்தனர். புதிய அரசியலமைப்பு சட்டபூர்வமன அரசியலமைப்பு அல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சூடானில் நடந்தமை
சூடான் நாட்டில் நடைபெற்றது என்ன? அங்கே கூடச் சில நேரத்தில் சில தலைவர்கள் கூடி, நாட்டுப் பட்டயம் ஒன்றைத் தந்தனர். இந்த நாட்டுப் பட்டயத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு யாக்க அவை எழுந்தது. இடைக்கால ஆட்சி அமைக்கப்பட்டது.
இவை எந்த அடிப்படையில் எழுந்தன என்பதை நோக்க வேண்டும். 1956 ஜனவரி1ஆம் நாள்வரை, சூடான் நாட்டில் அந்நியர் ஆட்சி செய்தனர். பிரித்தானியா, எகிப்து ஆகிய இரு நாடுகளும் இணைந்து சூடானை ஆட்சி செய்தன. 1956 ஜனவரி முதலாம் நாள் சூடான் குடியரசாகியது. நாட்டின் ஆட்சிப் பொறுப்பு, ஆட்சியுரிமை, இறைமை என்பன சூடானிடம் முறையாக மீண்டன. குடியரசாகிய பொழுது புதியதோர் அரசியலமைப்பும் அமைந்தது.
1958 நவம்பர் 17இல் புரட்சி மூலம் குடியரசு ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இராணுவ ஆட்சி தொடங்கியது. ஜெனரல் அபொன்ட் இராணுவ ஆட்சித் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் பதவி ஏற்றார். 1964 அக்டோபர் 22 வரை இராணுவ ஆட்சி பெரும் தொல்லையின்றி நீடித்தது. அன்று கார்ட்டூம் பல்கலைக்கழக மாணவர்களின் கலவரத்தை அடக்க இராணுவத்தினர் சுட்டனர். இரு மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர்களைச் சுட்டுக்கொலைசெய்ததை எதிர்த்து, நாடு முழுவதும் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. நீாட்டின் அரசு செயற்படாமல்நின்றது. ஆட்சித் தலைவரைப் பதவிவிலகுமாறு கோரிக்கைவிடப்பட்டது.
1964 அக்டோபர் 30ஆம் நாள் ஆட்சித் தலைவர் அபொன்ட் தமது இராணுவ ஆட்சியைக் கலைக்க ஒப்புக் கொண்டார். மக்களிடம் ஆட்சியைக் கையளிக்கச் சம்மதித்தார். மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இரண்டு நாள்களாக இக்கலந்துரையாடல் நடைபெற்றது. நாட்டுப்பட்டயம் ஒன்றத்ை தயாரிப்பது பற்றி முக்கியமாகக் கலந்துரையாடினார். மக்களின் ஆட்சி முழுமையாக ஏற்படும் வரை

29 ஈழத் தமிழர் இறைமை
இடைக்கால ஆட்சி எவ்வாறு அமைய வேண்டுமென இவர்கள் ஆலோசித்தனர்.
1964 அக்டோபர் 30ஆம் நாள் இராணுவ ஆட்சியை முற்றாகக் கலைத்து, படைத்துறை சார்பற்ற ஆட்சி அமைந்தது. நாட்டுப் பட்டயம்தான் இந்த இடைக்கால அரசுக்குச் சட்டவலிமையைக் கொடுத்தது.
அரசியலமைப்பு ஒன்றைப் புதிதாக எழுதவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும்; சட்டமாக்க வேண்டும்; மக்களுக்கு வழங்க வேண்டும் எனற நோக்கம் நாட்டுப் பட்டயத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்காக, அரசியலமைப்பு யாக்க அவை ஒன்றினை மக்கள் தெரிவு செய்ய வழி செய்தது.
அரசியலமைப்பு யாக்க அவை ஒன்றை மக்கள் தெரிவு செய்தார்கள். ஒருதலைப்பட்சமாக எழுதப்பட்டநாட்டுப்பட்டயத்தை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் அதனால் அரசியலமைப்பு யாக்க அவையைத் தெரிவு செய்தார்கள்.
இந்த அரசியலமைப்பு யாக்க அவை, புதிய அரசியலமைப்பு ஒன்றைத் தயாரித்ததுடன், இடைக்கால அரசின் சட்டப் பேரவையாகவும் செயற்பட்டது.
ரொடீசியாவில் நடைபெற்ற ஒருதலைப்பட்சமான ஆட்சியுரிமை மாற்றத்தில் மக்கள் பங்குகொள்ளவில்லை. மக்களின் கருத்தை அறியவில்லை. ஆனால் சூடானில் நடைபெற்ற ஒருதலைப்பட்சமான ஆட்சியுரிமை மாற்றத்தில் மக்களின் கருத்தை அறிந்தனர். மக்கள் ஒருமனதாக ஒருமித்த ஆவலுடன் நாட்டுப் பட்டயத்தை ஏற்று அரசியலமைப்பு யாக்க அவையைத் தெரிவு செய்தார்கள்.
1970இல் பொதுத் தேர்தல்
1970ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டன. ஆறாவது பாராளுமன்றத்தில் ஆட்சிசெய்த ஐக்கிய தேசியக் கட்சி, நாடெங்கணும் வேட்பாளர்களப்ை போட்டிக்கு நிறுத்தியிருநத்து. சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் வேட்பாளர்கள ைநிறுத்தியிருந்தது. ஆறாவது பாராளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவியாக இருந்த திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் உள்ள பூரீ லங்கா சுதந்திரக் கட்சி, தன்னுடன் அப்பொழுது எதிர்கட்சி வரிசையில் இருந்து இடதுசாரிக் கட்சிகளான இலங்கை சமசமாசக் கட்சி, இலங்கைக் கம்யூனிசக்கட்சி ஆகியவற்றுடன் தேர்தல் ஒப்பந்தம் செய்திருந்தது. மூன்று கட்சிகளும் பொதுவேலைத்திட்டத்தின் கீழ் தம்மிடையே போட்டித் தவிர்ப்பு ஒப்பந்தம் செய்திருந்தன. நாடெங்கணும் உள்ள தேர்தல் தொகுதிகளில், சிங்களப் பகுதிகளிலும், தமிழ்ப் பகுதிகளிலும் இக்கட்சிகள் போட்டியிட்டன. இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலங்கையின் தமிழ்நிலப்பகுதிகளான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள தேர்தல் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியது. அவ்வாறே அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியும் தமிழ்நிலப்பகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இக்கட்சிகள் தவிர ஏனைய கட்சிகளும் நாடெங்கணும் வேட்பாளர்களை நிறுத்தின.
இக்கட்சிகளுள், திருமதிபூரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் அமைந்த மூன்று கட்சிகளின் கூட்டு முன்னணி மட்டுமே, அரசியலமைப்பு யாக்க அவை ஒன்றை அமைப்பது மூலம், இலங்கையைத் தன்னாட்சியும், இறைமையும் உடைய குடியரசாக மாற்றுவோம் எனத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. வாக்காளர்களிடம் ஆற்றலுரிமையைக் கோரியிருந்தது.

Page 18
மு. திருச்செல்வம் 30
ஏனைய கட்சிகளும் அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றியும், தன்னாட்சியையும் இறைமையையும் மீளப்பெற்ற குடியரசை அமைப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தன. பாராளுமன்ற முறைகள் மூலம் இதனைச் செய்வதென ஐக்கிய தேசியக்கட்சி அறிவித்திருந்தது.
தமிழர்களுக்குத் தனி மாநில ஆட்சி; சிங்களவர்களுக்குத் தனி மாநில ஆட்சி; இரண்டும் இணைந்த நடுவண் அரசு இவற்றையுள்ளடக்கிய கூட்டாட்சி அரசியலமைப்பு அமைப்பதைத் தனது அடிப்படை நோக்கமாகக் கொண்டு தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி போட்டியிட்டது. இந்தக் கொள்கையை முன் வைத்துத்தான் இதற்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தல்களிலும், ஏனைய தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சி 1949ஆம் ஆண்டில் இருந்து போட்டியிட்டு வந்துள்ளது.
1970 மே 27ஆம் நாள் ஏழாவது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. மூன்று கட்சிகளின் கூட்டு முன்னணி இத்தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது.
தேர்தலில் வென்ற கட்சிகளின் நிலை பின் வருமாறு:
பூரீலங்கா சுதந்திரக் கட்சி - - - 91 இலங்கை சமசமாசக் கட்சி 19 ஐக்கிய தேசிய கட்சி 17 இலங்கைத் தமிழரசுக் கட்சி - - - 13 இலங்கைக் கம்யூனிசக் கட்சி - - - 6 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு . 3 கட்சி சாராதவர் - - - 2
மூன்று கட்சிகளின் கூட்டு முன்னணி மொத்தமாக 116 இடங்களைப் பெற்றிருந்தது. 157 இடங்கள் உள்ள சனப் பிரதிநிதிகள் சபையில் மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தைக் கூட்டு முன்னணி பெற்றிருந்தது.
தேர்தலில் 84.9 சதவீதமான வாக்களார்கள் வாக்கு அளித்திருந்தனர். மொத்தம் 4,949,616 வாக்களார்கள் வாக்களித்திருந்தனர். இவர்களுள் 2,415,302 வாக்காளர்கள் கூட்டு முன்னணிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். எதிர்கட்சிகள் கூட்டு மொத்தமாக 2,534,314 வாக்குகளைப் பெற்றிருந்தார்கள், கூட்டு முன்னணிக்குக் கிடைத் வாக்குகளைவிட எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றிருந்தன. இவை கூட்டு முன்னணியின் பொது வேலைத் திட்டத்துக்கு எதிராகக் கிடைத்த வாக்குகளாகும்.
தமிழர்களின் நிலப்பகுதியான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்கட்குரிய தேர்தல் தொகுதிகளில் கூட்டு முன்னணியின் வேட்பாளர்கள் போட்டியிட்டனராயினும் ஒருவராவது வெற்றிபெறவில்லை. தமிழ் வாக்காளர்கள் கூட்டு முன்னணியின் பொதுவேலைத் திட்டத்தை முற்றாக எதிர்த்திருந்தார்க்ள், நிராகரித்திருந்தார்கள்.
திருமதிபூரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் கூட்டு முன்னணி ஆட்சி அமைத்தது. திருமதி பண்டாரநாயக்கா நாட்டின் புதிய பிரதமரானார். ஏழாவது பாராளுமன்றத்தின் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து அரியணை உரையாற்றிய

S. ஈழத்தமிழர் இறைமை
ஆளுநர் முதல்வர் திரு. வில்லியம் கோபலலாவை கூட்டு முன்னணியின் வேலைத் திட்டத்தை விளக்கிக் கூறினார்.
அரசியலமைப்பு யாக்க அவை அமைத்தல்
ஏழாவது பாராளுமன்றத் தொடர்க் கூட்டத்தைத் தொடக்கிவைத்து ஆளுநர் முதல்வர் ஆற்றிய அரியணை உரையையும், அதற்கு நன்றி தெரிவித்துச் சனப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள்நிறைவேற்றிய தீர்மானத்தையும் மேற்கோள்காட்டிப் பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா சனப்பிரதிகள் சபை உறுப்பினர்கள் 157 பேருக்கும் தனித்தனியாகக் கடிதம் எழுதினார்.
"சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். வருக' எனக் கடிதத்தில் அழைத்தார்கள். இக்கூட்டம் கொழும்பு ரோயல் சூனியர் பாடசாலையின் அரங்கமானநவரங்கலாவில் நட்ைபெறும் என அறிவித்தார். 1970 சூன் 19ஆம் நாள் நடைபெறும் என எழுதினார்.
சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், சபை மண்டபத்தில் கூடினால், அது சனப்பிரதிநிதிகள் சபைக் கூட்டமாகிவிடும். புதிய அரசியலமைப்பை யாக்கும் சட்ட உரிமை சனப்பிரதிநிதிகள் சபைக்கு கிடையாது. இருந்திருந்தாற்றான் எப்பொழுதோ செய்திருப்பார்களே!
சபை மண்டபத்தில் கூடாது, உறுப்பினர்கள் நவரங்கலாவில் கூடவேண்டும் எனப் பிரதமர் திட்டமிட்டே அழைப்பு விடுத்தார். சனப்பிரதிநிதிகள் சபைக் கூட்டம் வேறு. சனப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் கூட்டம் வேறு. இந்த வேறுபாட்டை வலியுறுத்தவே 'நவரங்கலாவிற்கு வாருங்கள்' எனப் பிரதமர் அழைத்தார்.
இந்தக் கூட்டத்தைக் கூட்டும் ஆற்றலுரிமையை மக்கள் தமக்குத் தந்துள்ளார்கள் எனக் கூட்டு முன்னணித் தலைவர்கள் கூறினார்கள். மூதறிஞர் செல்வநாயகம் கூட்டு முன்னணித்தலைவர்களின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
"புதிய அரசியற் திட்டத்தை உருவாக்கக் கடந்த பொதுத் தேர்தல் மூலம் பொதுமக்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. பொதுத் தேர்தலின் முடிபை, அரசியல் அமைப்புத் திட்டத்தில் மாற்றம் செய்யப் பொதுமக்கள் வழங்கிய ஆற்றலுரிமையாகக் கொள்ள முடியாது. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் அவர்கள் அத்தகைய ஆற்றலுரிமையை அரசாங்கத்திற்கு வழங்கவில்லை."
என்று கூறிய அவர், அரசியலமைப்பு மாற்றத்தை மட்டும் கொள்கையாக முன்வைத்த பொதுவாக்குக்கணிப்பாகப் பொதுத் தேர்தலைப் கருதமுடியாது எனவும் கூறினார்.
1970 சூலை 19ஆம் நாள் சிங்கள மக்களின் வரலாற்றில் முக்கிய அரசியல் எழுச்சிக்குக் கால்கோள் அமைக்கப்பட்ட நாள்; சிங்கள மக்கள் தங்கள் அடிமைத் தளைகளை அறுத்தெறியக் கால்கோள் அமைத்த நாள்.
சம்பிரதாய பூர்வமான நிகழ்ச்சிக்காக, அன்று நவரங்கலா கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாட்டின் நாலாபக்கங்களிலும் இருந்து 1,700 பேர் அழைக்கப்பட்டுக் கூடியிருந்தனர். உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் அழைக்கப் பட்டிருந்தனர். தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர். வேளாண்மை செய்வோர், சிறு கைத்தொழில் செய்வோர், கடற்றொழில் செய்வோர் என நாட்டின் பல்வேறுநிலையில் உள்ள சிங்களமக்களின் சார்பிலும் பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

Page 19
மு. திருச்செல்வம் 32
157 சனப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களும் வந்திருந்தனர். மூதறிஞர் செல்வநாயகத்தின் தலைமையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வந்திருந்தனர் அரசியலமைப்பு யாக்க அவையைப் புறக்கணிப்பது என்றுதான் முன்னதாகக் தமிழரசுக்கட்சியினர் எண்ணியிருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்வது எனப் பின்னர் தீர்மானித்துச் சென்றிருந்தனர் S.
பிரித்தானியர் வழங்கிய அரசியலமைப்பின் விதிகளைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்கு முரண்பட்ட முறையில் அமைக்கப்பெற்ற அரசியலமைப்பு யாக்க அவையிலும், தமிழ் மக்களினால் மீட்டும் மீட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, கூட்டாட்சி அரசுக் கொள்கையை முன்வைக்க வாய்ப்பாகக் கருதியே மூதறிஞர் செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
1949 டிசம்ப்ர் 18ஆம் நாள், மூதறிஞர் செல்வநாயகம் தமிழரசுக் கட்சியின் முதல் மாநாட்டின் தலைமையுரையில், மொழி இனங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்குரிய இரண்டு வழிகளைக் கூறியிருந்தார். முதல் வழி நாட்டைத் துண்டாடுதல்; இரண்டாவது வழி கூட்டாட்சி அரசை அமைத்தல்.
இரண்டாவது வழியில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இணைந்து வாழ்வதற்குரிய ஆகக் குறைந்த ஏற்பாட்டுக்கு முயற்சி செய்யும் முகமாகத் தனது கடைசி முயற்சியாக அரசியலமைப்பு யாக்க அவைக்குச் சென்றார்.
பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா முதலில் பேசினார். தீர்மானமொன்றை முன்மொழிந்து பேசினார். சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாகிய தாங்கள் அனைவரும் இலங்கை மக்களின் அரசியலமைப்பு யாக்க அவையாக இணைந்து செயற்படப் போவதான தீர்மானத்தை முன்மொழிந்தார். இலங்கை மக்களின் பெயரால் கூட்டத்தைக் கூட்டியிருப்பதாகப் பிரதமர் கூறினார். இக்கூட்டம் நவரங்கலாவில் கூட்டப்பட்டதன்காரணத்ததை விளக்கினார். "இது சனப்பிரதிநிதிகள் சபைக் கூட்டமல்ல; சனப்பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் கூடும் கூட்டம்" என்றார். புதிதாக யாக்கப்பட இருக்கும் அரசியலமைப்புக்குரிய உரிமையும், வலிமையும் மக்களால் வழங்கப்பட்டுள்ளது. 1948 அரசியலமைப்பிலிருந்தோ, அல்லது பிரித்தானிய அரசிடமிருந்தோ புதிய அரசியலமைப்பையாக்கும் வலிமையும் உரிமையும் பெறப்படவில்லை என்பதை வலியுறுத்தினார்.
இலங்கை மக்கள்
இலங்கை மக்களின் அரசியலமைப்பு யாக்க அவை;
இலங்கை மக்களின் வலிமையிலும் உரிமையிலும் யாக்கப்படவுள்ள அரசியலமைப்பு:
இலங்கை மக்களுக்காக யாக்கப்படும் அரசியலமைப்பு:
இலங்கை மக்களின் அடிப்படைச் சட்டமாக விளங்கப் போகின்ற அரசியலமைப்பு:
லங்கை மக்களின் நோக்கங்களை நிறைவு செய்யவழி வகுக்கக்கூடிய
ந கு அரசியலமைப்பு:
இலங்கை மக்கள் என்ற சொற்றொடர் மலந்தும், வலிந்தும் புகுந்திருந்தது.

33 ஈழத்தமிழர் இறைமை
அரசியல் எழுச்சியால் தோற்றுவிக்கப்பட்ட அரசியலமைப்பு யாக்க அவை இவ்வாறுதானே எழுதவேண்டும். சட்டத் தொடர்ச்சியற்ற அரசியலமைப்புக்கு வலிமைகொடுக்கும் தூண்களாக இலங்கை மக்களைக் காட்டினர்.
இலங்கயில்இருபெரும்மொழிவழி மக்கள்உளர். தமிழ் மக்கள் உளர், சிங்கள மக்கள் உளர்; மதவழி மக்களிாகக் கிறித்தவ மக்கள்:இசுலாமிய் மக்கள், இந்து மக்கள், பெளத்த மக்கள் உளர். இதனைப் பிரதமர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
"எம்மிடையே பல இனக்குழுக்கள் வாழ்கிறார்கள். சிங்களவர், தமிழர், பறங்கியர், மலாய்க்காரர்ஏனையோர்இவர்கள். எம்மிடைய பல மதக் குழுக்கள் வாழ்கிறார்கள். பெளத்தர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள், இசுலாமியர்கள் ஆகியோர்கள் இவர்கள். நாங்கள் ஒன்றாகச் செயற்பட வேண்டும்; ஒரு நாடாகச் செயற்பட வேண்டும்."
பல்வேறு இன, மதமக்களின் தலைவர்கள் அரசியலமைப்பு யாக்க அவையில் உறுப்புரிமை பெற்றிருந்தார்கள். தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராக மூதறிஞர் செல்வநாயகம் அங்கிருந்தார். சிங்களவர்களின் ஒப்புயர்வற்ற தலைமையைத் தாங்கித் திருமதி பூரீ மாவோ பண்டாரநாயக்கா அங்கிருந்தார்; இலங்கையிந்இருபெரும்நாட்டினங்களும் அங்கு பிரதிநிதித்துவம் பெற்றிருந்தன. இரு நாட்டினங்களும் கூட்டாகச் சேர்ந்து இந்நாட்டின் அடிமைத் தளைகளின் கடைசிக் கட்டையும் அறுத்து ஏறிய இது நல்ல வாய்ப்பு.
தமிழரும், சிங்களவரும் தனித்தனியாக அளித்த ஆற்றலுரிமைக்கமைய, அவ்வவர்களின் தலைவர்கள் செயற்படவும், பேசித் தீர்க்கவும், சோல்பரி அரசியலமைப்புஆட்சியின்கீழ் ஏற்பட்டநலிவுகளைப் போக்கவும், நலவுரிமைகளைப் பேணவும்,நல்லதோர்வாய்ப்பு எல்லாஇனங்களும் சேர்ந்து ஒரேநாடாகச் செயற்படப் பிரதமர் அழைத்திருந்தார். பிரதமரின் அழைப்பை ஏற்பது. இருந்ாட்டினங்களும் ஒரே நாட்டில் இணைந்து வாழமுயற்சிப்பது. மனிதாபிமான முயற்சியே. இதனால் தான் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் அரசியலமைப்பு யாக்க அவைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அந்நியர் கைப்பற்றும் வரை, அடிமைப்படுத்தும் வரை, தமிழர்களும், சிங்களவர்களும் தனித்தனிநாடுகளாக இலங்கைத் தீவில் வாழந்தனர். தமிழர் தம் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், சிங்களவர் தம் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், இணைப்பான ஆட்சியொன்றை அமைத்து இலங்கையை ஒரே நாடாகக் கொண்டால்? மூதறிஞர் செல்வநாயகத்தின் இந்தக் கடைசி முயற்சி மனித இனங்கள் இணைந்து வாழும் முயற்சிகக இலங்கையையே எடுத்துக்காட்டாக ஆக்கும் முயற்சியன்றோ!
நவரங்கலாவில் நடத்திய முதல் கூட்டம் முடிந்ததும் அரசியலமைப்பு யாக்க அவை தனது கூட்டங்களைச்சனப் பிரதிநிதிகள் சபை மண்டபத்துக்கு மாற்றியது

Page 20
மூன்றாவது
1972இன் அரசியலமைப்பும் ஈழத் தமிழர்களும்
".படையெடுத்த தமிழர்சந்ததிக்குச்சலுகை இல்லை என்று இன்று ஒர் அமைச்சர் கூறுகிறார். சரித்திர காலத்துக்கு முன் தமிழ் அரசன் இராவணன் இலங்கையை ஆண்டான் என்பது அவருக்குத் தெரியாது போலும்; அன்று எரிந்த அசோகவனம் இலங்கையில் உள்ளது என்பதும் அவருக்குத் தெரியாது போலும்.
A
..இந்த நாட்டை ஆண்ட சிங்கள, தமிழ் அரசர்களுக்கிடையில் போர்
மூண்டாலும், மாறி மாறி ஆண்டாலும், சிங்கள இனம் தமிழ் இனத்தைத் தனி இனமாக வேறு இனமாக எப்போதும் ஏற்றுக் கொண்டுள்ளது. வெள்ளையர் வருமுன்தமிழினம் தன் இராச்சியம் கொண்டு சுதந்திர மக்களாக வாழ்ந்தது.
"போர்த்துக்கேயர் தமிழ் இராச்சியத்தின் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றியபொழுது, சிங்கள இராச்சியங்கள், இலங்கை ஒரு நாடு, இங்கு ஓரினம்தான் வாழ்கின்றது என்று கருதிஇயங்கவில்லை. இதனை நீங்கள் நன்றாக விளங்கிக் கொள்ளவேண்டும்.
"ஆங்கிலேயர்சுதந்திரம் தந்தபொழுது, இஃது ஒரு நாடு - இங்கு ஓரினம் வாழ்கின்றது என்ற அடிப்டையில் எங்கள் சரித்திரத்துக்கும் குழ்நிலைக்கும் பொருத்தமில்லாத அரசியலமைப்பைத் தந்தார்கள்.
'இன்றைய நடவடிக்கைக்கு மக்களுடைய அதிகாரம் உண்டு என்று கூறுகின்றீர்கள். மக்களுடைய அரசுரிமையின் அடிப்படையில் இருந்து இயங்குகின்றீர்கள் என்று கூறுகின்றீர்கள். நாட்டில் எத்தனை விதம் மக்கள் இதற்கு வாக்களித்தார்கள்?
"தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் இத்தகைய நடவடிக்கைக்கு எந்தப் பிரதிநிதிக்கும் தமிழ் மக்கள் அதிகாரம் கொடுக்கவில்லை. உங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையில் எந்த ஒரு தமிழ்ப் பிரதிநிதியும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. இதற்கு மாறாக உங்கள் தமிழ் வேட்பாளர்கள் அத்தனை பேரும் தோல்வியுற்றனர்.
".ஜனாப்முகம்மதலிஜின்னாவைப்போல் நாமும் நமது தமிழ்இனமும் நமக்கென நமது இனத்தின் சுயநிர்ணய உரிமையையும் அரசுரிமையையும் நிலைநாட்ட வேறு ஓர் அரசியல் நிர்ணயசபையை நிறுவி நடவடிக்கை எடுத்திருக்கலாம் அல்லவா?
"..தமிழினத்தை உங்களோடு ஒற்றுமையாகச் சேர்த்து வைத்திருக்க அவர்களை உங்களோடு சரிசமமான சுதந்திர இனமாக வைத்திருக்க வழி செய்ய வேண்டும். '

35 ஈழத்தமிழர் இறைமை
இவ்வாறு 1970 சூலை 20ஆம் நாள்திரு. சிவசுப்ரமணியம் கதிரவேற்பிள்ளை அரசியலமைப்பு யாக்க அவையில் உரை ஆற்றினார். சனப்பிரதிநிதிகள் சபை மண்டபத்தில் உரையாற்றினார். பிரதமரையும் அரசாங்கக் கட்சி உறுப்பினர்களையும் விளித்து உரையாற்றினார். அங்கு மேற்கண்ட கருத்துக்களைக் கூறினார்.
சனப்பிரதிநிதிகள் சபையின் கூட்டமல்ல சனப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் கூட்டம் என்பதைக் காட்ட நவரங்கலா மண்டபத்தில் கூடியவர்கள், தொடர்ந்து அதே கூட்டங்களைச்சனப்பிரதிநிதிகள் சபை மண்டபத்திலே கூட்டினார்கள். அரசியலமைப்பு யாக்க அவையாகக் கூட்டினார்கள். இணைந்து உருவாக்குவோம்
1945இல் சோல்பரி ஆணைக்குழு முன் சாட்சியமளித்த தமிழ்த் தலைவர்கள், சிங்கள முக்களுடன் சேர்ந்து தமிழ் மக்கள், ஒரேநாட்டில் இருஇனங்களாக வாழ்வதற்கு ஒப்புதல் கொடுத்தார்கள். சரிசமமாக வாழ்வதற்கு ஒப்புக் கொண்டனர். கூட்டாட்சி அரசையோ, பறிகொடுத்த தமிழ் ஈழ அரசை மீட்டுத் தனி நாட்டு அரசினையோ கேட்கவில்லை. பாகிஸ்தானைப் பிரித்துத்தரஜின்னா கேட்டதுபோல் பிரித்தானியரிடம் தமிழ் மக்கள் தமிழ் ஈழ அரசைப் பிரித்துத் தரக் கேட்கவில்லை.
1970இல் மூதறிஞர் செல்வநாயகத்தின் தலைமையில் அரசியலமைப்பு யாக்க அவை சென்ற போதும் தமிழரசுக் கட்சியினர் தமிழ் மக்கள் தனியான அரசை, இறைமையும் ஆட்சியுரிமையும் உடைய தமிழ் ஈழ அரசை அமைக்க விரும்புகிறார்கள் எனக் கூறவில்லை.
இந்திய அரசியலமைப்பு யாக்க அவையில் சேரமாட்டோம்; பணி புரிய மாட்டோம்; அரசியலமைப்புத் தயாரிப்பதில் பங்குகொள்ள மாட்டோம் என ஜின்னா தலைமையிலான முசுலிம் லீக் கூறியது. அரசியலமைப்பு யாக்க அவையைப் புறக்கணித்தது. நாட்டின் மக்கள் தொகையில் நான்கின் ஒரு பங்கின் பிரதிநிதிகள் இல்லாத அரசியலமைப்பு யாக்க அவை முழுமை அற்றது எனப் பிரித்தானிய அரசு கருதியதால் பாகிஸ்தான் என்ற நாடு எழுந்தது. ஜின்னாவின் பிடிவாதமான போக்கு முசுலிம்கள் தனி நாடு பெற வழிவகுத்தது.
தமிழ்த் தலைவர்கள் அவ்வாறு பிடிவாதமாக இருக்கவில்லை ஒத்துழைப்போம், சேர்ந்து பணிபுரிவோம் என்று கூறினார்கள்.
1970 சூலை 21ஆம் நாளன்று அரசியலமைப்பு யாக்க அவையில், ஊர்காவற்றுறைத் தொகுதி உறுப்பினர், தமிழரசுக்கட்சியைச்சார்ந்த திரு.கார்த்திகேசு பொன்னம்பலம் இரத்தினம் ஆற்றிய உரையில் பின்வருமாறு கூறினார்.
"...இந்த நேரத்தில், இந்தக் கூட்டத்தில், தமிழ் மக்களிடமிருந்து நாங்கள் இணைப்பாட்சி பெறுவதற்குத் தமிழரசு பெறுவதற்குப் பெற்றுக் கொண்ட அதிகாரத்தை நீங்கள் மதிக்க வேண்டும். நீங்கள் சிங்கள மக்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அதிகாரத்தை நாங்கள் மதிப்பதுபோல், நாங்கள் தமிழ் மக்களிடமிருந்து பெற்ற அதிகாரத்தை நீங்கள் மதிப்பீர்கள் என்பதில் எங்களுக்குச் சந்தேகமில்லை. சிங்கள மக்களின் தலைவர்களும் தமிழ் மக்களின் தலைவர்களும் மக்களிடமிருந்து பெற்ற அதிகாரங்களுக்குப் பங்கம் உண்டாக்காமலும், ஓரினத்தை ஓரினம் அடக்கி ஆளாமலும், அரசியலமைப்பு ஆக்கப்படும் என்ற நம்பிக்கையிலேதான் நாங்கள் உங்களுடன் ஒத்துழைக்க முன்வந்து உள்ளோம்.

Page 21
மு. திருச்செல்வம் 36
Сербицидтай
1971 மார்சு 15ஆம் நாள், புதிய அரசியலமைப்புப் பற்றிய முதலாவது தீர்மானத்தைப் பிரதமர் பூரீமாவே பண்டாரநாயக்கா முன்மொழிந்தார்.
"பூரீலங்கா, சுதந்திரமான, இறைமை கொண்ட, தன்னாதிக்கமுள்ள ஒரு குடியரசாதல் வேண்டும்."
அந்தத்தீர்மானம், இலங்கையின் அரசியலில் புதிய, முற்றிலும் புதியநிலையை உருவாக்க வழிவகுத்தது. அரசியலமைப்பு யாக்க அவையில் இருந்த சிங்கள உறுப்பினர்களும், தமிழ் உறுப்பினர்களும் அந்தத் தீர்மானத்தை ஒருமித்து எதிர்ப்பின்றி ஆதரித்து நிறைவேற்றினர்.
ஒற்றையாட்சியா? கூட்டாட்சிப்ா?
1971 மார்ச் 15ஆம் நாள், புதிய அரசியலமைப்புப் பற்றிய இரண்டாவது அடிப்படைத் தீர்மானத்தை, அரசியலமைப்பு அமைச்சர், கலாநிதி கொல்வின் ரெசினால்ட் த சில்வா முன்மொழிந்தார்.
"பூரீலங்காகுடியரசு ஒற்றையாட்சி அரசென்றாதல் வேண்டும்.'
இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்த உடனேயே, மூதறிஞர் செல்வநாயகத்தின் சார்பில் உடுவில் தொகுதி உறுப்பினர் திரு. விசுவநாதர் தர்மலிங்கம் இந்தத் தீர்மானத்துக்கான திருத்தம் ஒன்றை முன்மொழிந்தார். உடுப்பிட்டித் தொகுதி உறுப்பினர் திரு. கந்தப்பா செயக்கொடி திருத்தத்தை வழி மொழிந்தார்.
(அ) "ஒற்றையாட்சி' என்ற சொல்லை அகற்றிவிட்டு அதனிடத்தில் "கூட்டாட்சி' என்ற சொல்லை இடவேண்டும்.
(ஆ) "பூரீலங்கா என்ற சொல்லின் முன் 23-H-70 அன்று இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்புக் குறித்த விஞ்ஞா பணத்தில் பிரேரிக்கப்பட்டவாறு" என்ற சொற்களைச்சேர்க்கப்படல் வேண்டும். தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் இந்தத் திருத்தத்தின் தாற்பரியம் பற்றி விரித்து உரைத்தார்கள். தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பேசியபொழுது, பல தடவை சிங்கள உறுப்பினர்கள், குறுக்கிட்டார்கள், கேள்விக்கணைகள் தொடுத்தார்கள்.
1971 மார்சு 27இல் மூதறிஞர் செல்வநாயகம் சார்பில் முன்மொழிந்த இத்திருத்தங்களை அரசியலமைப்பு யாக்க அவையில் வாக்கெடுப்பில் தோல்வி கண்டன. சிங்களவர் முன்வைத்த இரண்டாவது அடிப்படைத் தீர்மானம் திருத்தமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டது. தமிழர் எதிர்த்து வாக்களித்தனர். பெளத்தமும் மதச்சார்பின்மையும்
1971 மார்ச் 28இல் மூன்றாவது அடிப்படைத் தீர்மானத்தை, அமைச்சர், திரு. திக்கிரி பண்டா இலங்கரத்தினா முன்மொழிந்தார்.
"பூரிலங்கா குடியரசிலே பெரும்பான்மை மக்களின் சமயமாகிய பெளத்தமதத்திற்கு அதற்குரிய இடம் வழங்க வேண்டும். 574)ஆம் அடிப்படைத்

W ஈழத்தமிழர் இறைமை
தீர்மானத்தில் வழங்கியுள்ள உரிமைகளை எல்லாச் சமயங்களுக்கும் உறுதியளிக்கும் அதே நேரத்தில் பெளத்த மதத்தைப் பாதுகாத்தலும் பேணி வளர்த்தலும் அரசின் கடமையாதல் வேண்டும். '
1971 மே 14ஆம் நாள் மூதறிஞர் செல்வநாயகம் சார்பில் திரு. வி. தர்மலிங்கம் இத்தீர்மானத்துக்கு ஒரு திருத்தத்தை முன்மொழிந்தார். திரு. க்ா.பொ. இரத்தினம் வழி மொழிந்தார்.
"பூரீலங்காகுடியரசு ஒரு மதச்சார்பற்றஅரசாதல் வேண்டும். ஆனால் அது பெளத்த மதம், இந்து மதம், கிறித்துவ மதம், இசுலாம் மதம் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் பேணிவளர்க்கவும் வேண்டும்."
இத்திருத்தத்தை முன்மொழிந்து பேசிய திரு. தர்மலிங்கம் 1971 பெப்ரவரி 7ஆம்நாள், வல்வெட்டித்துறையில்நடைபெற்ற அனைத்துத்தமிழர் கட்சிமாநாட்டைக் குறிப்பிட்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசு, ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி, தமிழர் சுயாட்சிக்கழகம் ஆகிய நான்கு கட்சிகளும் கலந்து கொண்ட மாநாட்டைப் பற்றி குறிப்பிட்டார். வல்வைத் தீர்மானங்கள்
1971 பெப்ரவரி 6ஆம் நாள், வல்வெட்டித்துறையில் கூடிய நான்கு கட்சிகள், தமிழினத்தின் சார்பில், அரசியலமைப்பு யாக்க அவையின் முன் வைத்த ஆகக் குறைந்தபட்சக் கோரிக்கைகள் ஒன்பது. அவையாவன :
(I) சிங்களமும் தமிழும் இந்நாட்டின் ஆட்சிமொழிகளாக இருக்க வேண்டும். அவற்றின் திட்டவட்டமான உபயோகம் பற்றிய விபரங்களை அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டும்.
(2) சிங்களமும் தமிழும் இந்நாட்டின் நீதி நிர்வாக மொழிகளாக இருக்க வேண்டும். பதிவேடுகள் முதலியவற்றில் அவ்விரு மொழிகளின் உபயோகம் பற்றிய விதிகளை அரசியலமைப்பில் சேர்க்கவேண்டும்.
(3) இலங்கையின் எப்பாகத்திலும் சிங்களவரோ, தமிழரோதங்கள்தாய் மொழியில் அரசாங்கத்துடன் கருமமாற்றும் உரிமை இருத்தல் வேண்டும்.
(4) ஒவ்வொரு பிள்ளைக்கும் சிங்களமோ தமிழோ அவரவர் தாய் மொழியே போதனா மொழியாய் இருத்தல் வேண்டும். திறமையின் அடிப் படையில் இலவசமாக அக்கல்விக்கு வசதி செய்ய வேண்டியது அரசின் கடமை. (3) உயர்தரக் கல்வி நிலையங்களில் சேருவதற்கோ, அரசாங்க சேவையில் சேருவதற்கோ, தன்தாய் மொழியில் தேர்வு எழுதித்தன் தகுதிக்கு ஏற்பச்சேரும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு.
(6) அடிப்படை உரிமைகளுக்கு முரணான சட்டங்களை ஒட்டியே, நிர்வாக ஒழுங்கீனங்களைப் பற்றியோ, நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசியலமைப்பில் அமையவேண்டும். நீதி நிர்வாகத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இருத்தல் ஆகாது.
(7) இந்நாட்டு மக்களிடையே நிலவும் சாதி பற்றியும் சமயம் பற்றியும் இந்திய அரசியல் அமைப்பு ஏற்றுக்கொண்ட விதிகளைஇங்கும் ஏற்க வேண்டும். (8) இலங்கைக் குடியரசு சமயச் சார்பற்ற அரசாக இருத்தல் வேண்டும்.

Page 22
மு. திருச்செல்வம் 38
ஆனால் பெளத்த, இந்து, கிறித்தவ, இசுலாமிய மதங்களைப் பாதுகாத்துப் பேண வேண்டும்.
(9) (அ) இலங்கையில் பிறநத ஒவ்வொருவரும் அவரது தந்தைஅல்லது தாய் இலங்கையில் பிறந்தவராய் இருப்பின்,
(ஆ) இலங்கைக்கு வெளியில் பிறந்தவராயன அவரது பெற்றோர் இலங்கைக் குடியுரிமைக்குத் தகுதி உடையவராயின்,
(இ) 15-11-48க்கு முன் இருந்து தொடர்ந்து இலங்கையில்
வசிப்பவராகவும் இலங்கைக் குடியுரிமை உடையவராக இருப்பதற்கு விரும்புபவராயும் இருப்பின் அவர்கள் எல்லோரையும் இலங்கைக் குடியுரிமை உடையவர்களாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை அரசியலமைப்பில் ஏற்க வேண்டும். வம்சாவழிக் குடியுரிமை உடையவருக்கும், பதிவுக் குடியுரிமை உடையவருக்கும் எவ்வித பாகுபாடும் இருத்தல் ஆகாது. எக்காரணம் கொண்டும் எவருடைய குடியுரிமையும் பறிக்கலாகாது.
இந்த ஒன்பது கோரிக்கைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தச் சந்திக்கப் போவதாக மாநாட்டுச் செயலாளர் திரு. நாகராசா பிரதமருக்கு 1971 பெப்ரவரி 22இல் கடிதம் எழுதினார். 1971 ஏப்ரல் முதலாம் நாள் பிரதமர் திரு. நாகராசாவிற்குப் பதில் அனுப்பினார். சந்திக்கவும் பேசவும் தனக்கு நேரமில்லை எனத் தெரிவித்தார்.
பிரதமரின் பதிலை அவையில் கூறிய திரு. தர்மலிங்கம், தமிழர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குப் பிரதமரோடு தொடர்புகொள்ள முயற்சிகளை மேற்கொள்வதால், மூன்றாவது அடிப்படைத் தீர்மானத்தின் மீதுள்ள விவாதத்தைப் பின்போடக் கேட்டார்.
அவையினர் ஒப்புக் கொள்ளவில்லை. மூதறிஞர் செல்வநாயம் சார்பில் திரு. தர்மலிங்கம் முன்மொழிந்த திருத்தத்தை அவை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்றாவது அடிப்பத்ை தீர்மானமும் திருத்தமின்றியே நிறைவேறியது.
சிங்களமா? தமிழுமா?
முதல் மூன்று அடிப்படைத் தீர்மானங்களுள் முதலாவதைத் தவிர்ந்த ஏனைய இரண்டுக்கும் மூதறிஞர் செல்வநாயகம் திருத்தம் கொண்டு வந்தார். திருத்தங்களை அவை ஏற்றுக் கொள்ளவில்லை.
முப்பத்தியெட்டு அடிப்படைத் தீர்மானங்களை, அரசியலமைப்பு யாக்க அவை முன் சமர்ப்பித்தனர். ஒவ்வொன்றாக எடுத்து நோக்கினர். அடுத்தடுத்துஎடுத்து நோக்கிய அடிப்படைத் தீர்மானங்கள் மேலும் சிலவற்றிற்குத் தமிழரசுக் கட்சியின் சார்பில் திருத்தங்களை முன்மொழிந்தனர். வல்வை மாநாட்டுத் தீர்மானங்களின் அடிப்படையில் திருத்தங்களை முன்மொழிந்தனர். ஒன்றைக்கூட அரசியலமைப்பு யாக்க அவை ஏற்றுக் கொள்ளவில்லை
1971 சூன் 24ஆம் நாள், பதினோராவது அடிப்படைத் தீர்மானத்தை அரசியலமைப்பு யாக்க அவையில் முன்மொழிந்தனர்.
'அனைத்துச் சட்டங்களையும் சிங்கள மொழியில் சட்டமாக்க வேண்டும். அவ்வாறு சட்டமாகும் ஒவ்வொரு சட்டத்திற்கும் தமிழ்மொழி

39 ஈழத்தமிழர் இறைமை
பெயர்ப்பும் இருத்தல் வேண்டும்.'
மூதறிஞர் செல்வநாயகம் சார்பில் ஊர்காவற்றுறைத் தொகுதி உறுப்பினர் திரு. கா.பொ. இரத்தினம், திருத்தம் ஒன்றை முன்மொழிந்தார். சிங்களமும் தமிழும்,
(அ) சட்டங்கள் ஆக்கப்பட வேண்டிய மொழிகளாதல் வேண்டும். (ஆ) பூரீலங்காவின் அரசகரும் மொழிகளாதல் வேண்டும். (இ) நீதிமன்றங்களின் மொழிகளாதல் வேண்டும். அத்துடன், (AE) அனைத்துச் சட்டங்களும் பிரசுரிக்கப்பட வேண்டிய மொழிகளாதல் வேண்டும்.
இத்தீர்மானத்தையொட்டியும், திருத்தத்தையொட்டியும் 1971 சூன் 28ஆம் நாள்வரை விவாதித்தனர். மூதறிஞர் செல்வநாயகம் சார்பில் முன்மொழிந்த திருத்தத்தை வாக்கெடுப்புக்கு விட்டனர். 13 பேர் திருத்தத்துக்குச் சார்பாகவும், 88 பேர் திருத்தத்துக்கு மாறாகவும் வாக்களித்தனர். திரு. சின்னையா அருளம்பலம் (நல்லூர்), திரு. முத்து கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் (நியம்னம்), திரு. ஆறுமுகம் தியாகராசா (வட்டுக்கோட்டை) ஆகிய தமிழ் உறுப்பினர்கள் மூதறிஞர் செல்வநாயகம் கொண்டுவந்த திருத்தத்துக்கு மாறாக வாக்களித்ததுடன், அடிப்படைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். திருத்தத்தை அவை ஏற்றுக் கொள்ளவில்லை. அடிப்படைத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது,
அவையை விட்டு வெளியேறுதல்
பதினோராவது அடிப்படைத்தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு ஏற்றுக் கொண்ட
பின் உடனடியாக அரசியலமைப்பு யாக்க அவையில் மூதறிஞர் செல்வநாயகம் உரையாற்றினார்.
'பிரதமர்அரசியலமைப்பு யாக்க அவிையைக் கூட்டியபொழுது, நாங்கள் பங்குபற்றுவதனால் உள்ள பயன்பற்றிக் கருத்து வேறுபாடு இருந்தது எனினும், மாண்புமிகு பிரதமரின் அழைப்பில் உள்ள நல் நோக்கத்தை ஏற்றுப் பங்கு பற்றுவது எனத் தீர்மானித்தோம்.
'அரசியலமைப்பின் தன்மை, குடியுரிமைகள், அடிப்படை மனித உரிமைகள் என்பனபறறி நாம் பல திருத்தங்களை முன்மொழிந்தோம். எமது திருத்த முன்மொழிவுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன.
'. வரப்போகிற புதிய அரசியலமைப்பில் எமது மொழி உரிமைகள் திருப்திகரமாக உள்ளடக்கப்படவில்லை. எனவே நாம் இந்த அவையின் நடவடிக்ககளில் கலந்து கொள்வதால் எவ்வித பயனுள்ள தேவையும் நிறைவு செய்யப்படாது என மனநோவுடன் முடிவு செய்துள்ளோம்.
"...இன்று அவை ஒத்திவைக்கப்படும்பொழுது அவையை விட்டுச் செல்லும் நாம், மீண்டும் அவைக்கு வர மாட்டோம். '
1971 சூன் 28ஆம் நாள் அரசியலமைப்பு யாக்க அவையில் மூதறிஞர் செல்வநாயகம் ஆற்றிய கடைசி உரையில் இருந்து சில வரிகளைத் தந்துள்ளேன்.

Page 23
மு. திருச்செல்வம் 40
இதற்குப் பின்பு தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் அரசியலமைப்பு யாக்க அவைக்கு செல்லவில்லை.
புதிய அரசியலமைப்பு
1970 சூலை 19ஆம் நாள் தொடக்கம் 1971 சூன் 28ஆம் நாள் வரை தமிழரசுக் கட்சியினர் அரசியலமைப்பு யாக்க அவையில் ஈடுபட்டுப் பணி புரிந்தனர். பின்னர் தமிழரசுக் கட்சியினர் புறக்கணித்ததையும் பொருட்படுத்தாமல் அரசியலமைப்புயாக்க அவை தொடர்ந்தும் செயற்பட்டது.
1971 ഥേ22ഷ്ട്ര நாள் புதிய அரசியலமைப்பை அவை ஏற்றுக் கொண்டது. அரசியலமைப்பின் முதற் பிரதியில் அந்நாள் காலை அரசியலமைப்பு யாக்க அவைத் தலைவர் திரு. வன்னியாராச்சிகே டொன் ஸ்டான்லி திலகரத்னா சம்பிரதாய பூர்வமாகத் தனது ஒப்புதல் கையெழுத்தை வைத்தார்.
குடியரசாக இலங்கை மலர்ந்தது. பிரித்தானிய அரசுடன் கொண்ட ஆட்சித் தொடர்புகள் முற்றாக அறுந்தன. ஒருதலைப்பட்சமான முயற்சியால் முறிந்தன
1948இல் பிரித்தானியர் ஆட்சிப் பொறுப்பை வழங்கினர். அப்பொழுது வந்த சோல்பரி அரசியலமைப்பைத் தூக்கி ஏறிந்தனர். சட்டப் புரட்சி மூலம் தூக்கியெறிந்தனர். 1948இன் சோல்பரி அரசியலமைப்புச் சட்டம் வலுவிழந்தது வரலாற்றுச் சின்னமாக மாறியது.
இசைவு
மக்களால் மக்களுக்காக நடைபெறும் ஆட்சியே மக்களாட்சி. மக்களின்
குடியுரிமையை மக்களின் ஆட்சியுரிமையை மக்களிடம் உள்ள இறைமையை ஏற்று
மக்களின் அதிகாரம் பெற்று அமைவதே மக்களாட்சிக் குடியரசு,
இலங்கை மக்களின் அரசியலமைப்பு: இலங்கை மக்கள் தெரிவு செய்த அரசியலமைப்பு யாக்க அவை: இலங்கை மக்களின் அதிகார வலுவுடைய அரசியலமைப்பு யாக்க அவை; எனவும் பிறவுமாகப் பிரதமர் பூரீமாவோ பண்டாரநாயக்கா, அரசியலமைப்பு யாக்க அவைத் தொடக்க நாள் கூட்டத்தில் கூறியிருந்தார்.
சட்டத் தொடர்பில்லாத அரசியலமைப்புயர்க்க அவை அமைக்கப்படுவதற்கு ஆற்றலுரிமை தாருங்கள் என, 1970ம் ஆண்டுத் தேர்தலில், மூன்று கட்சிகளின் கூட்டு முன்னணி இலங்கையில் வாழ்ந்த இருநாட்டினங்களுள் ஒரு நாட்டினமான தமிழ் மக்களையும் கேட்டது. தமிழர்களைத் தனது வேட்பாளர்களாகச் சில தமிழ்த் தேர்தல் தொகுதிகளில் நிறுத்தியிருந்தது. இவர்களுள் ஒரு வேட்பாளரைக் கூடத் தமிழ் மக்கள் தெரிவு செய்யவில்லை. சட்டத் தொடர்பில்லா அரசியலமைப்பு யாக்க அவை அமைப்பதற்குத் தமிழர் இசைவு கொடுக்கவில்லை. ஒப்புதல் வழங்கவில்லை.
தேர்தலில், சிங்கள மக்கள் பெரும்பான்மையான வேட்பாளர்களை ஒரே அணியில் தெரிவு செய்து அரசியல் மாற்றத்தை முன்மொழிந்துள்ளார்கள்
எனவே தமிழ் மக்கள் தெரிவுசெய்த சனப் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களும் யதார்த்த நிலையை உணர்ந்து அரசியலமைப்பு யாக்க அவைக் கூட்டங்களுக்குச்

41 ஈழத்தமிழர் இறைமை
சென்றார்கள். தமிழ் மக்களின் அடிப்பன்டக் கோரிக்கைகளை, ஆகக் குறைந்த அரசியல் கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
இந்த அடிப்படைக் கோரிக்கைகளை, ஆகக் குறைந்த ஏற்பாடுகளைச் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் கட்சி வேறுபாடின்றிக் கூட்டாகச் சேர்ந்து எதிர்த்து நிராகரித்தார்கள். தமிழ்ரசுக் கட்சி மட்டுமல்ல், தமிழர்கள் நலம் பேண் அரசியல் கட்சிகள் நான்கும் கூட்டாகச் சேர்ந்து முன்வைத்த கோரிக்கைகளைச் சிங்கள மக்களின் நலம்பேண் கட்சிகள் நிராகரித்தன.
இதனால் தமிழ் உறுப்பினர்களுள் பெரும்பான்மையோர் அரசியலமைப்பு யாக்க அவையில் இருந்து வெளியேறினார்கள். தொடர்ந்தும் அங்கு இருப்பதால் பயனில்லை எனக் கருதினார்கள்.
மக்களாட்சிக் குடியரசாக இலங்கையை மாற்றும் முயற்சிக்கு இலங்கை மக்களின் அதிகாரம், இயைபு, ஒப்புதல் என்பன பெறவேண்டும் எனில், இலங்கையில் உள்ள இருவேறு நாட்டினங்களிடமும் பெற வேண்டும்.
எந்த நாட்டு மக்களுக்காக அரசியலமைப்பு உருவாக்கப்படுகிறதோ, அந்த நாட்டு மக்கள் இசைவு கொடுத்தபின்தான் அது ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களின் அரசியலமைப்பு, அங்குள்ள மாநிலங்களின் இசைவுடன் எழுந்த அரசியலமைப்பே.
கானா நாட்டில் அரசியலமைப்பைப் பொது மக்கள் வாக்குக் கணிப்பு மூலம் ஏற்றுக் கொண்டனர்.
சூடானில் அரசியலமைப்பு யாக்க அவையை மக்கள் நேரடியாகத் தெரிவு செய்ததை ஏற்கனவே பார்த்தோம்.
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அரசியலமைப்பு யாக்க அவைகளை மக்கள் நேரடியாகத் தெரிவு செய்தனர். நாடு பிரிக்கப்படுமுன் தெரிவு செய்த அரசியலமைப்பு யாக்க அவையில் முசுலிம் லீக் கலந்து கொள்ள மறுத்தது. முசுலிம்களின் இசைவைப் பெறாத, மக்கள் தொகையின் நான்கில் ஒரு பங்கினரின் இசைவைப் பெறாத அரசியலமைப்புப் பயனற்றது என்பதால் பிரித்தானியர் பிரிவினைக்கு இசைந்தனர்.
இந்தியாவின் அரசியலமைப்பு யாக்க அவையில் தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் இருந்தனர். இவர்கள் அவையைப் புறக்கணிக்காது அவையுடன் சேர்ந்து பணிபுரிந்தனர். இதனால் இந்திய அரசியலமைப்புத் தமிழ் நாட்டவரின் இசைவுடன் எழுந்த அரசியலமைப்பு என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
ரொடீசியாவில் 1965இல் அறிவிக்கப்பட்ட அரசியலமைப்பும் அதைத் தொடர்ந்த அரசியல் சீர்திருத்தங்களும் ஒருதலைப்பட்சமானவை. நாட்டில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்களான காப்பிலிஇனத்தவர்களின் இசைவைப்பெறாதவை. ஒப்புதலைப் பெறாதவை. இதனால் இந்நூலை எழுதும் வரை ரொடீசிய அரசியல மைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பாக இல்லை. அரசியல் எழுச்சி மூலம் சூடானில் எழுந்ததைப் போல் ரொடீசியாவில் அரசியலமைப்பு எழுந்தது. ரொடீசியாவில் மக்கள் இசைவு வழங்கவில்லை. இதனால் ரொடீசியப் பிரச்னை இந்நூலை எழுதும் வரை தீராத பிரச்னையே. உலக நாடுகள் கூட, இந்தப் பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும் என ஏற்றுக்கொண்டுள்ளன. ஒருநாட்டில் வாழும்

Page 24
மு. திருச்செல்வம் 42
பல இன மக்களில், ஓரின மக்களின் இசைவைப் பெறாத அரசியலமைப்பு, ஏற்றுக் கொள்ளப்படாத அரசியலமைப்பு என்பதற்கு ரொடீசியா சான்று
1972இல் இலங்கையில் எழுந்த அரசியலமைப்பை இலங்கையில் உள்ள இரு வேறு நாட்டின் மக்களுள் ஒன்றான சிங்கள மக்கள் உருவாக்கினர். சிங்கள மக்களின் இசைவுடன் உருவாகியது.
மற்ற நாட்டின மக்களான தமிழ் மக்கள் இசைவு கொடுக்கவில்லை; ஒப்புதல் வழங்கவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை; உருவாக்கவில்லை.
எனவே இலங்கை மக்களின் ஏக இசைவைப் (Consensus) பெற்ற அரசியலமைப்பு என இதைக் கூறமுடியாது. சிங்கள மக்களின் இசைவைப் பெற்றதும் தமிழ்மக்களின் இசைவைப் பெறாததுமான அரசியலமைப்பு என்றே கூற வேண்டும். எதிர்ப்பு
அரசியலமைப்பு யாக்க அவைக்கு வந்தார்கள். தமது கோரிக்கையை முன் வைத்தார்கள். அவை ஏற்றுக் கொள்ளப்படாததால் வெளியேறினார்கள். புறக்கணித்தார்கள். இதனால் தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்புக்கு இசையவில்லை. இசையாமல் விட்டிருக்கலாம். எதிர்க்காமலும் விட்டார்களா?
இலங்கை போன்ற இருவேறு இனங்கள் வாழும் நாட்டில் ஓரினம் தயாரித்த அரசியலமைப்புக்கு இரண்டாவது இனம் எதிர்ப்புத் தெரிவிக்காமல் விட்டாலே, அந்த அரசியலமைப்பு இரண்டாவது இனத்தால் எதிர்ப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் (Acquiesce) 5(5)gaoirib.
1972 மே 22ஆம் நாள் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது. 1972 சூலை 4ஆம் நாள் மூதறிஞர் செல்வநாயகம் தலைமையில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் தேசிய அரசுப் பேரவைக்குச் சென்றார்கள். புதிய அரசியலமைப்பின் மீது பற்றுறுதியுரை கூறினார்கள். ஏற்றுக் கொண்டார்கள் கையெழுத்திட்டார்கள்.
அரசியலமைப்பு யாக்க அவையைப் புறக்கணித்தவர்கள், அதிலிருந்து வெளியேறியவர்கள், அதன் மூலம் அரசியலமைப்புத் தயாரிப்பதில் பங்கு கொள்ள மறுத்தவர்கள், தயாரித்து ஏற்று நடைமுறைக்கு வந்த புதிய அரசியலமைப்பை ஏற்கிறோம் என்று கையெழுத்திட்டார்கள் எனவே தமிழ் மக்கள் புதிய அரசியலமைப்பை எதிர்ப்பின்று ஏற்றுக்கொண்டார்கள் என்று வாதிடலாம்
உண்மை அதுவல்ல. தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் ஒப்புக்காக உறுதியுரை கூறிக் கையெழுத்திட்டார்கள். தேசிய அரசுப் பேரவையைத் தமது அரசியல் மேடையாகப் பயன்படுத்தும் நோக்குக்குக் கையெழுத்திட்டார்கள்.
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலும் இத்தகைய நடைமுறையை ஏற்றுக்கொண்டனர். ஒப்புக்காக உறுதியுரை கூறினார்களே ஒழிய, சம்பிரதாயத்துக் காகக் கையெழுத்திட்டார்களே ஒழிய, உண்மையாக அரசியலமைப்பை ஏற்றுக் கையெழுத்திடவில்லை.
ஏனெனில் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த சில நாள்களுள், 1972 Gud 25ஆம் நாள் தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணத்துச் சைவ பரிபாலன சபையின் நாவலர் மண்டபத்தில் கூடினார்கள். பொது இடத்தில் கூடினார்கள். மக்களின் முன்

43 ஈழத் தமிழர் இறைமை
கூடினார்கள். காவல் துறையினர் வேவு பார்க்கையில் கூடினார்கள் மூதறிஞர் செல்வநாயகம் தலைமையில் கூடினார்கள்.
அந்த அரசியலமைப்பின் படி ஒன்றை எடுத்தார்கள். தீயிட்டார்கள். சொக்கப்பானையாகக் கொளுத்தினார்கள். சாம்பலாக்கினார்கள். புதிய அரசியலமைப்பைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதைச் சிங்கள மக்களுக்கும் உலகுக்கும் பகிரங்கமாக அறிவித்தார்கள்.
அத்தோடு நின்றுவிடவில்லை. 1972 அக்டோபர் 3ஆம் நாள் எனது தலைவர் மூதறிஞர் செல்வநாயகம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயல் ஒன்றைச் செய்ார். அன்று தேசியப் பேரவை கூடியது. மூதறிஞர் செல்வநாயகம் அங்கு பேசினார்.
பேரவை முதல்வரின் அநுமதியுடன் உரையாற்றினார். தமிழில் உரையாற்றினார். அந்த உரை, தமிழ் மக்களால் என்றென்றும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய அறிக்கையாகும். மக்களாட்சியில் நம்பிக்கை உடையவர்கள் எப்பொழுதும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய ஒன்றாகும். அந்த உரையில் கூறப்பட்டுள்ளது என்ன?
"மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, நான் இந்த்த் தேசிய அரசப் பேரவையில் இருந்து விலகுவதற்குத் தீர்மானித்திருக்கிறேன். அதற்கான நியாயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.
'1948ஆம் ஆண்டு தொடக்கம் இந்நாடடில் தமிழ் மக்களுடைய வாழ்வு படிப்படியாகக் கீழ்நிலையடைந்து கொண்டே வருகிறது. 95 உறுப்பினர்களைக் கொண்ட அன்றைய பாராளுமன்றத்தில் தமிழ்த் தோட்டத் தொழிலாளரின் பிரதி நிதிகளாயிருந்த 8தமிழ் உறுப்பினர்கள் இன்று இங்கு இல்லை. அவர்களுடைய இடத்தை இன்று அவுர்க்ளிலும்இரட்டித்த எண்ணிக்கையான சிங்களஉறுப்பினர் கள் எடுத்திருக்கிறார்கள். பெரும்பாலான தோட்டத் தொழிலாளருக்கு அன்று வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்த காரணத்தால் இந்த 8 தமிழ் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். பிரித்தானிய அர்சாங்கம் இந்திய வம்சாவழித் தமிழ் மக்களுடைய பிரச்னையில் இதை ஒரு நீதியான தீர்ப்பாகக் கருதியது.
"இலங்கை சுதந்திரம் பெற்றவுடன் சிங்கள அரசாங்கம் செய்த முதல் வேலை தமிழ் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமையைப் பறித்ததேயாகும். முதலில், அவர்களுடைய பிரஜாவுரிமையைப் பிடுங்கிக்குடியுரிமைச்சட்டத்தை நிறைவேற்றிக், குடியுரிமை உள்ளவர்களுக்கே வாக்குரிமை என்று அடுத்துச் சட்டம் இயற்றியதன் மூலம் இக்கருமம் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டது. இதனால் சோல்பரிஅரசியல்திட்டத்தின்அடிப்படையே தகர்க்கப்பட்டது. அந்த நடவடிக்கையை லங்கா சமாசமாசக் கட்சியும் கம்யூனிசக் கட்சியும் அன்று எதிர்த்தன என்று கூற விரும்புகிறேன். இன்று இக்கட்சிகளும் வகுப்புவாதக் கொள்கைக்கு அடிபணிந்து விட்டன.
"அடுத்து நடந்த அதிமுக்கிய சம்பவம் 1956ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா அரசாங்கத்தினால் தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டமையாகும். தமிழ்த் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதே தனிச் சிங்களச் சட்டத்தையும் சாத்தியமாக்கியது.
'தமிழ்த் தொழிலாளரது வாக்குரிமை பறிக்கப்பட்ட பொழுதிலும்

Page 25
மு. திருச்செல்வம் 44
அவர்களது எண்ணக்கைக்காக ஒதுக்கப்பட்ட பாராளுமன்றத் தொகுதிகள் நீக்கப் படாது அவை சிங்கள வாக்காளர்கட்குக் கொடுக்கப்பட்டன. 1952ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கள மக்களுக்கு அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான பிரதிநிதித் துவம் கொண்டதாகப் பாராளுமன்றம் அமைந்தது. அதன்பின் நிறைவேற்றப் பட்ட சட்டங்களும் சிங்களவகுப்புவாதச்சட்டங்களாகவே அமைந்தன. 1947ஆம் ஆண்டு இருந்தது போல வாக்குரிமை இருந்திருக்குமாயின் 1970ஆம் ஆண்டுத் தேர்தலில் ஏற்பட்ட பிரம்மாண்டமான வெற்றி ஏற்பட்டிருக்க மாட்டாது.
'எண்ணிக்கைக்கு மிஞ்சிய சிங்களப் பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றத்திலும் ஒரு புது அரசியலமைப்புத் தயாரிக்கப்பட்டது அடுத்து நடந்த முக்கிய சம்பவமாகும். இவ்வரசியலமைப்பு சிங்கள மக்களுக்கு எல்லா உரிமைகளயுைம் அளித்திருந்தது. தமிழ் மக்களுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை.
'மூன்றில் இரண்டு பெரும்பான்மையின்றி மாற்றப்பட இயலாதவகையில் தனிச் சிங்களச் சட்டம் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது. சிங்களம் நீதிமன்ற மொழியாக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு மனிதனும் தன் மொழியிலேயே நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்னும் கூற்று சிங்கள மனிதனுக்கே அன்றித்தமிழ் மனிதனுக்கு அல்ல.
"இவ்வரசியலமைப்பிலே உள்ள ஆட்சேபத்துக்குரிய அம்சங்களைப் பற்றி இங்கு நான் குறிப்பிடத் தேவையில்லை. முந்திய அரசியலமைப்பின் 29ஆவது விதியினால் சிறுபான்மையோருக்கு அளிக்கப்பட்ட சிறு பாதுகாப்புத்தானும் இன்று நீக்கப்பட்டது.
'இந்தச் சூழ்நிலையில் பல்வேறு அரசியற் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமிழர் கூட்டணியில் ஒன்று சேர்ந்து இக்குறைபாடுகளிற் சிலவற்றை நீக்குமாறு பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இவ்வரசியலமைப்பில் திருத்தப்பட வேண்டிய ஆறு அம்சங்களைக் குறிப்பிட்டு பிரதமர் அவர்கட்குத் தமிழர் கூட்டணியின் சார்பில் நான் ஒரு கடிதம் எழுதினேன். அப்படித் திருத்துவதற்குச் செப்டம்பர் முப்பதாம் திகதி வரை அவருக்கு அவகாசம் கொடுத்தோம். ஆனால் ஒன்றுமே செய்யப்படவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் எம்மோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பதாகக் கூறுமாறு அவர்களைக் கேட்கும் பொறுப்பு தமிழர் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் என் மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களில் ஒரு கணிசமாக பகுதியினர் இவ்வரசியலமைப்பை ஏற்றுக் கொண்டிருப்பதாக அரசிாங்கம் கூறுகின்றது. நாம் இதை மறுக்கிறோம். ஆகையால் தமது கூற்றை நிரூபிப்பதற்கு அரசாங்கத்திற்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்க விரும்புகிறோம். இதற்குச் சிறந்த வழியாகத் தமிழர் கூட்டணியின தலைவர் என்ற வகையில் இச்சபையின் என். தானத்தை நான் துறந்து, எனது கொள்கையை முன் வைத்து தான் மீண்டும் போட்டியிடும்போது, அரசாங்கம் தனது கொள்கையை முன்வைத்து என்னோடு போட்டியிட வேண்டுமென்று கேட்கிறேன்.
"அத் தேர்தல் முடிவுதமிழ் மக்களது தீர்ப்பாகவே இருக்கும்.
இந்நாட்டில் சென்ற இருபத்தி நான்கு ஆண்டுகளாக நடந்தவற்றை மனதில் கொண்டு, தமிழ் மக்கள் இந்நாட்டில் ஓர் அடிமை இனமாக அழிவதா அல்லது சுதந்திர மக்களாக வாழ்வதா என்று தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும்

45 ஈழத்தமிழர் இறைமை
உரிமை அவர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும். விடுதலை பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ்) மக்களை நான் கேட்பேன்.
"இந்தக் கொள்கையில் அரசாங்கம் என்னோடு போட்டியிடட்டும். நான் தோல்வி அடைந்தால் என் கொள்கையை நான் விட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோல்வியடைந்தால் தமது கொள்கையையோ, அரசியல் திட்டத்தையோ தமிழ் மக்கள் ஆதரிப்பதாகக் கூறுவதை நிறுத்திவிட வேண்டும். இடைத் தேர்தலைப் பின்போட்டு இப்பிரச்னைகளை ஒட்டி மக்கள் தீர்ப்பு வழங்குவதைத் தடுக்க வேண்டாமென்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்."
1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை; தமிழ் மக்கள் விடுதலைபெற்ற மக்களாக வாழ விரும்புகிறார்கள்:இந்த இரண்டு அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட வருமாறு மூதறிஞர் செல்வநாயகம் அரசுக்குச் சவால் விட்டார்.
1972 அக்டோபர் 3ஆம் நாள் தேசிய அரசுப் பேரவை உறுப்புரிமையைத் துறந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இடைத் தேர்தலை நடத்தாது தள்ளிப்போட்ட அரசு, 1975 பெப்ரவரி 6ஆம் நாள் இடைத் தேர்தலை நடத்தியது. அரசின் சார்பில் கம்யூனிசக்கட்சியைச் சார்ந்த திரு. வி. பொன்னம்பலம் வேட்பாளராகப் போட்டியிட்டார்.
மூதறிஞர் செல்வநாயகம் இடைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டினார். அவருக்கு 25,927 வாக்குகள் கிடைத்தன. அரசு சார்பில் போட்டியிட்ட திரு. வி. பொன்னம்பலம் 9,457 வாக்குகளைப் பெற்றார்.
மூதறிஞர் செல்வநாயகம் விட்ட சவாலை அரசு ஏற்றது; போட்டியிட்டது; தோல்வியுற்றது. 1972இன் அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை. விடுதலை பெற்ற மக்களாக வாழத்தாம் விரும்பினர் என்பதனைத் தமிழ் மக்கள் ஐயம் திரிபு அள எடுத்துக் கூறினார்கள்.
மண்வாசனை
இந்திய அரசியலமைப்பின் தொடக்க வரிகளில் உள்ளதை ஏற்கனவே நோக்கினோம்.
"...இந்த அரசியலமைப்பை ன்மது அரசியலமைப்பு யாக்க அவையில் 1949 நவம்பர் 26ஆம் நாள் ஏற்றுச் சட்டமாக்கி எமக்கு நாமே தந்துள்ளோம்."
என்ற வரிகளில் சட்டமாக்கி என்ற சொல் புனிதமானது. இந்திய அரசியலமைப்பு யாக்க அவை பிரித்தானியப் பாராளுமன்றத்தினார் தோற்றுவிக்கப்பட்ட சட்டத் தொடர்ச்சியின் அங்கம். இலங்கை அரசியலமைப்பு யாக்க அவை அவ்வாறு எழுந்ததல்ல. ஒருதலைப்பட்சமாக, மக்களிடம் ஒரு சில அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில், தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆற்றலுரிமை கேட்டதனால் எழுந்தது. பிரித்தானியரிடம் உள்ள தொடர்பை, ஆட்சித் தொடர்பை ஒருதலைப்பட்சமாக முறிக்க, உடைத்தெறிய மேற்கொண்ட முயற்சியால் எழுந்தது.
எனவேதான், 1970 மே 27 இல் நடைபெற்ற தேர்தலில், பூரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் போட்டியிட்ட மூன்று கட்சிகளின் கூட்டு முன்னணி

Page 26
மு. திருச்செல்வம் 46
தயாரித்த தேர்தல் விஞ்ஞாபனத்தில், மக்களிடம் ஆற்றலுரிமை கோரியிருந்தார்கள். சனப்பிரதிநிதிகள் சபைக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்பு யாக்க அவைாயகச் செயற்பட ஆற்றலுரிமை கோரியிருந்தார்க்ள். அந்த
'அரசியலமைப்பு யாக்க அவையானது புதிய அரசியலமைப்பைத் தயாரித்து ஏற்று நடைமுறைப் படுத்த."
ஆற்றலுரிமை கோரியிருந்தார்கள். தயாரிக்கவும், ஏற்கவும், நடைமுறைப் படுத்தவும் ஆற்றலுரிமை கேட்டார்களேயொழியத் தயாரித்து ஏற்றுச் சட்டமாக்கி நட்ைமுறைப்படுத்த ஆற்றலுரிமை கோரவில்லை. சட்டமாக்கி என்ற சொல் விடுபட்டமை முக்கியமானது. ஏனெனில் சட்டமாக்கும் உரிமை இவர்களுக்கு இல்லை.
சூடானிலும், ரொடீசியாவிலும் நடந்ததுபோல் இங்கும் சட்டப் புரட்சி மூலம், "இத்தால் யாவரும் அறிக' என்ற வகையான பட்டயம் மூலம் புதிய அரசியலமைப்பு எழுந்தது.
இந்த அரசியலமைப்பு இலங்கை மண்ணில் எழுந்தது. மண் வாசனை உடையது. வேற்றுநாட்டவரால், வேற்று அதிகாரத்தில் திணிக்கப்பட்டதல்ல. இஃது இத்தீவின் மண்ணுக்குரிய (Autochthonous) அரசியலமைப்பு.
சட்டப் புரட்சி மூலம், பழைய தொடர்புகளை அறுத்து இந்த மண்ணுக்குரியதான அரசியலமைப்பை ஏற்றுக் கொள்வது ஒன்று. அதற்கமையப் பணிந்து நடப்பது பிறிதொன்று. சியோபிரிமார்சல் (1971) என்பார் இந்த நிலையைத் தெளிவாக விளக்கியுள்ளார். ஏற்றுக் கொள்ளாதவர்கள் கூடப் பணிந்து நடப்பது பற்றி கூறியுள்ளார்.
இருவேறு இனங்கள் வாழும் நாட்டில் ஓர் இனத்தால் அந்த மண்ணுக்குரியதாக எழுதப்பட்ட, சட்டப் புரட்சி மூலம் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை மற்ற இனம் ஏற்றுக்கொள்ளாவிடில், அதுவும், இருவேறு இன மக்களுக்காகவும் என எழுதப்பட்ட அரசியலமைப்பு ஓர் இனத்தால் ஏற்றுக் கொள்ளப்படாவிடில், புதுமையான நிகழ்ச்சி எழுகின்றது.

நான்காவது
ஈழத் தமிழர் இறைமை
மன்னரிடம் இறைமை
"வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை'-கட்டியக்காரன் கட்டியம் கூறுமுன் மன்னவனை வாழ்த்தினான். 'பல்லாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு'- மன்னவனுக்கு ஆலோசனை வழங்கும் அமைச்சன் வில்லவன் கோதை கூறியது இவ்வாழ்த்து. சேர இளவல் இளங்கோ எழுதிய சிலப்பதிகார வரிகள் இவை மன்னன் சேரன்செங்குட்டுவனை வாழ்த்தும் வரிகள் இவை, மன்னனை வாழ்த்தினால் மக்கள் வாழ்வர். மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம், நாட்டையோ மக்களையோ வாழ்த்துவதாயின் மன்னனை வாழ்த்தினர். நாடு மன்னனின் உடைமை, மக்கள் மன்னனின் குடிமை. நாட்டின் இறைமை மன்னனிடம் இருந்தது. மன்னராட்சியின் மாட்சியே இதுதான்.
இது தமிழரின் வழமை மட்டுமல்லா, உலகின் வழமையும் கூட அரியணை, முடி, வீரவாள், செங்கோல் இவை அரசச் சின்னங்கள். இவற்றைக் க்ொண்டிருப்பவன் அரசன்.
ஓர் அரசன் இறந்தபின், அடுத்த எவர் இந்தச் சின்னங்களைத் தமதுடைமையாக்குகின்றாரோ அவரே அந்தச் சின்னங்களின் உரிமையாளர், பாதுகாவலர். அதன் மூலம் நாட்டின் பாதுகாவலர், மக்களின் பாதுகாவலர். நாட்டின் இறைமை, ஆட்சியுரிமை என்பன அவருடைத்து.
தெய்வீக சக்தியைப் பெற்றுத் தெய்வத்தின் ஆணை பெற்று தெய்வத்தின் வழி வந்தவர்களாகக் கருதப்பட்ட மன்னவர்களிடம் இறைமை இருந்தது. இந்த இறைமை சட்டத்துக்குக் கட்டுப்படாதது. மன்னர் இயற்றும் சட்டங்கள் மன்னரைக் கட்டுப்படுத்தாதலால், மன்னர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராதலால், உயர்ந்த அதிகாரம் உடையவராதலால் இறைமை மன்னரிடம் இருந்தது.
மன்னர்கட்கிடையே எழும்போரில் அரசச் சின்னங்களை வெற்றி கொள்பவர் ஆட்சியை, இறைமையைக் கொள்பவராகின்றார். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரின் அரியணை, அரசமுடி என்பன சிங்கள மன்னனிடம் அடைக்கலமாகக் கொடுக்கப்பட்டது. பாண்டிய நாட்டை வென்ற சோழ மன்னர், அரியணையும், முடியையும் பெறுவதற்காகச் சிங்கள மன்னன் மீது படையெடுத்தனர். பதினோராம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரின் அரியணை, முடி என்பன சிங்கள மன்னன் மகிந்தனிடம் இருந்து கைப்பற்றப்பட்டதுடன், சிங்கள மன்னனின் முடியும், அரியணையும் கைப்பற்றப்பட்டது. இதன் மூலம் பாண்டியரின் இறைமையும் சிங்களவரின் இறைமையும் சோழரிடம் சென்றடைந்தது.
1619இல் சங்கிலி மன்னனைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், மன்னனின் அரியணையையும் முடியையும் ஏனைய அரசச் சின்னங்களையும் தமதாக்கினார்.

Page 27
மு. திருச்செல்வம் 48
1815இல் கண்டி அரசைக் கைப்பற்றிய பிரித்தானியரும் அரசச் சின்னங்களைத் தம்முடன் கொண்டு சென்றனர். இந்த இரு மன்னர்களின் அரசச் சின்னங்களைப் பெற்றதன் மூலம் தமிழ் ஈழ இறைமை போர்த்துக்கேயரிடமும், கண்டி அரசின் இறைமை ஆங்கிலேயரிடமும் முறையே சென்றடைந்தன. மக்களிடம் இறைமை
நூற்றாண்டுகள் பலவாக, மனித இனத்தின் பெரும்பான்மையினரை மன்னர் ஆட்சி செய்தனர். தனி ஒருவரிடம் அதிகாரம் குவிந்திருந்தமை, அதிகாரப் பயன்பாட்டை அறியா அரசர் அரசியல் பிழைத்தமை, மக்களின் ஆளுமை வளர்ச்சி; ஆட்சியில் மக்களும் பங்குகொள்ள விழைந்தமை, பகுத்தறிவு ரீதியான சிந்தனை வளர்ச்சி என்பன மன்னராட்சியின் அடித்தளங்களை ஆட்டங்காண வைத்தன.
கடந்த நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளில் மனிதன் முன்னெப்பொழுதும் அடையா முன்னேற்றத்தை அடைந்து உள்ளான். அரசியல், ஆட்சியியல் ஆகிய துறைகளிலும் இவ்வளர்ச்சி அளப்பரியது. நூற்றாண்டுகள் பலவற்றிற்கூடாக மனித நாகரிக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மன்னராட்சி முறையை முழுமையாக மாற்றக் கடந்த சிலநூற்றாண்டுகளில் மனிதன்மேற்கொண்ட முயற்சிகள் அளப்பரியன. அறிவியல் வளர்ச்சி, பொருளியல் வளர்ச்சி, வாழ்வியல் வளர்ச்சி என்பன வேகமாக நடைபெற, அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய அரசியல் வளர்ச்சியும் அவசியமாயிற்று.
மன்னராட்சியில் அரசும் ஆட்சியும் மக்களுக்கு மேலானதாக இருந்தன. அரசியற் சிந்தனையாளர்கள் மக்களுக்கும் அரசுக்கும் ஆட்சிக்கும் இடையே இடைவெளிகள், ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது எனக் கருதினர். மக்களே தமக்குரிய அரசை, ஆட்சியைக் கட்டுப்படுத்தும் உரிமை உடையவர்கள் என்ற கருத்தைப் பரப்பினர்.
1649இல் பிரித்தானிய மன்னர் முதலாவது சார்ள்சு கொல்லப்பட்டார். இப்புரட்சியில் பிரித்தானிய மக்களின் அதிகாரம் மூலாதாரமான அதிகாரம் என்பதை ஏற்றுக் கொண்டனர். மக்கள் தெரிவு செய்த பாராளுமன்றமே நாட்டின் அதி உயர் அதிகாரமன்றம் என் ஏற்றுக்கொண்டனர். மக்களின் ஒற்றுமையின் சின்னமாக மட்டும் மன்னரைக் கருதினர்.
வரி கொடுக்கும் மக்களே அந்தப் பணம் எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை உடையவர்கள். இதன் அடிப்படையில் 1776இல் எழுந்த அமெரிக்க விடுதலைப்பட்டாயத்தில்,
"..மனிதனுக்காக அமைக்கப்படும் அரசு, ஆட்சி செய்யப்படுபவர்களின் இசைவுடன்தான் அதிகாரத்தைப் பெறுகின்றது.'
எனத் தெளிவாக எழுதப்பட்டது. மக்கள் நேரடியாக இசைவு கொடுத்தும்பங்கு கொண்டும் தெரிவுசெய்யப்படும் ஆட்சி, அரசு அமெரிக்காவில் அமைந்தது. இறைமை அமெரிக்க மக்களுடையதாக அமைந்தது.
1789இல் பிரஞ்சு மக்கள் இதே உரிமைக் கோரிக்கையின் அடிப்படையில் 'மனிதனினதும் குடிமக்களினதும் உரிமைகளின் பட்டயம்' எழுதினார்.
'மனிதன் தன்னுரிமை உடையவனாகப் பிறக்கின்றான், வாழ்கின்றான்.

49 ஈழத்தமிழர் இறைமை
'மனிதனின் இயல்பான இந்த உரிமைகளைப் பேணுவதே அரசியல் சமூகத்தின் நோக்கமாகும். விடுதலை உரிமை, சொத்து உரிமை, பாதுகாப்பு உரிமை, அடக்கு முறைக்கு எதிரான உரிமை என்பன மனிதனின் இயல்பான உரிமைகளாகும். '
என அந்தப் பட்டயத்தில் எழுதினார்கள். 1793 புரட்சியில் பிரஞ்சு மன்னர் பதினாறாம் லூயிகொல்லப்பட்டார். மக்கள் குடியரசு எழுந்தது. மன்னராட்சி ஒழிந்தது. நாட்டின் இறைமை மன்னரிடம் இருந்து மக்களிடம் பாரப்படுத்தப்பட்டது.
மக்கள் தங்கள் பேராளர்கள் மூலம் ஆட்சி அமைக்கின்றார்கள். பேராளர்களைத் தெரிவு செய்யும் போதும், அரசியலமைப்பு யாக்க அவை உறுப்பினர்களைத் தெரிவுசெய்யும் போதும், அரசியலமைப்பு, பிற அரசியற் சிக்கல்கள் தொடர்பான் பொதுவாக்குக் கணிப்பின்போதும் மக்கள் தங்கள் இறைமையைப் பயன்படுத்துகின்றார்கள்.
மக்கள் தெரிவு செய்த பேராளர்கள் அமைக்கும் ஆட்சி, நலமாக வளமாக அமைகின்றதா என்பதைக் கண்காணிக்கும் மக்கள், நடைமுறையில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டவும், பேராள்ர்களை மாற்றியும், ஆட்சியை மாற்றியும் ஆட்சியில் பங்கு பற்றினார். மக்களிடம் இறைமை உண்டு என்பதற்கு இஃது அடையாளம்,
நாட்டினங்கள், நாடுகள்
கட்ந்த நான்கைந்து நூற்றாண்டுகளில் நடைபெற்ற அரசியல் பரிணாம வளர்ச்சியில் நாட்டினங்களின் எழுச்சியும் முக்கியமானது. மன்னரிடம் உள்ள இறைமை மக்களிடம் மாறியபொழுது, மக்கள் நாட்டினங்களாகத் தங்களைத் தொகுத்து கொண்டனர்.
ஒரு மொழிபேசி, ஒரு மதம் கொண்டு, ஒரே பண்பாடுபேணி, ஒரு கலாச்சாரம் அமைத்து, ஒரே வாழ்வியலில் வளமுற்று, ஒரே அரசியல் நோக்கம் கொண்ட மக்கள் ஒரே நாட்டினமாக எழுந்தனர்.
மன்னர் ஆட்சிக் காலத்தில், மக்கள் குழுக்களாக வாழ்ந்தனர். குழுத் தலைவர்கள் அவர்களை மன்னர் சார்பில் ஆட்சி செய்தனர்.ஒரே இனமாயிருந்தாலும், தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்த மக்களின் இன எழுச்சி, முக்கிய அரசியல் எழுச்சியாகும்.
வன்னியர், வடவர், கொங்கர், பாண்டியர், பல்லவர், சோழர், சேரர், ஈழத்தவர் எனத் தமிழ் இனம், மன்னர் ஆட்சிக் காலத்தில் தனித்தனியாகப் பிரிந்து இருந்தது.
பிரஞ்சு நாட்டிலும், பிரிட்டினும் இத்தகைய குழுப் பிரிவுகள் அமைந்தன. மக்களாட்சி எழுந்தபோது நாடு, நாட்டின் எல்லைகள், மக்களின் தொகுப்பு என்பன தெளிவடைந்தன.
மொழி, பண்பாடு, வாழ்வுமுறை, புவியியல் ஆகிய அடிப்படையில் நாட்டினங்கள் எழுந்தன. குழு வழி அடையாளம் மறைய, நாட்டின அடிப்படையில் மக்கள் தங்களை அடையாளம் கண்டு கொண்டனர்
பிரஞ்சுப் புரட்சியின்போதுதான் நாட்டின் எழுச்சிக் கருத்து இறுகத்

Page 28
மு. திருச்செல்வம் 50
தொடங்கியது. நாட்டுப் பண், நாட்டுக் கொடி, நாட்டுச் சின்னம் என்ற அடையாளங்கள் எழுந்தன. மன்னர் ஆட்சியில் அரச நம்பிக்கை அரசச் சின்னங்கள் மக்களை இணைத்தன. நாட்டுச் சின்னம், கொடி"பண் என்பன மக்களாட்சியின் அடையாளச் சின்னங்களாயின. a
கதிர்த்திடம் இலங்கையில் தாக்கம்
மேல்நாட்டவரின் ஆட்சி உலகின் மூலை முடுக்குகள் எங்கும் பரவியது. இதனால் அவர்களின் நாகரிகம் உலகின் பல்வேறு மக்களிடையே புகுந்தது. மக்களாட்சியின் எழுச்சி மேலைநாடுகளில் பரிணமித்து.ஏனைய நாடுகளில் தத்துவக் கருத்தாக நுழைந்தது. நடைமுறை அமைப்பாக நிலைபெற்றது. நாட்டின எழுச்சியும் மேலை நாடுகளில் பரிணமித்தது. வளர்ச்சி அடைந்தது. ஏனைய நாடுகளில் தத்துவக் கருத்தாக நுழைநந்தது, நிலை பெற்றது.
மேலை நாட்டவர் வருகையால் மக்களாட்சி, நாட்டின எழுச்சி பற்றிய கருத்துக்கள் இலகுவாக மக்களிடையே பரவின. மேலை நாட்டு அரசியற் சிந்தனையாளர்களின் கருத்துக்களை இலகுவாக மக்கள் அறிந்து கொண்டார்கள்
யாழ்ப்பாணத்தார், வன்னியார், கொட்டியாற்றுப்பற்றார், பழுகாமத்தார், பாணமையார் எனப் பிரிந்திருந்த தமிழ் மக்கள் தமிழ் ஈழநாட்டினம் என்ற ஒரே நாட்டினமாக எழுந்தனர்.
கீழ்நாட்டுச் சிங்களவர்க்கண்டிய்ச்சிங்க்ளவ்ர்த்துரோகண்த்தார், கோறளைப்பற்றார் எனப் பிரிந்திருந்த சிங்களக் குழுக்கள், சிங்களநாட்டினம் எனத் தனி | நாட்டினமாக எழுந்தனர்.
மன்னராட்சியில் பழகியிருந்த மக்கள்,மக்களை ஆட்சி செய்த மன்னர் பெற்றிருந்த தெய்வீக உரிமை பற்றி அறிந்திருந்த மக்கள், மக்களே மக்களால் ஆட்சி செய்யப்படலாம் என்பதை அறிந்து கொண்டார்கள் மனிதனின் அடிப்படை உரிமைகளான இயல்புரிமைகளைத் தெரிந்து கொண்டனர். பிரஞ்சு மனித உரிமைப் பட்டயத்தில் கூறப்பட்டிருந்த விடுதலை உரிமை, சொத்துரிமை, பாதுகாப்புரிமை, அடக்கு முறைக்கு எதிரான உரிமை என்பன புதிய உலகை அவர்கட்குக் காட்டின. இலங்கையில் உள்ள இரு நாட்டினங்களும் விடுதலைக் குரல் எழுப்பின. பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெறவிழைந்தன."
1948இல் பிரித்தானியர் இலங்கை மக்களில்ம் ஆட்சிப் பொறுப்பை மட்டுமே வழங்கினர். இறைமையும் ஆட்சியுரிமையும் பிரித்தானியரிடம் இருந்தன. இலங்கை அரசு விரும்பினால், இலங்கைக்காகப் பிரித்தானியப் பாராளுமன்றம் கூடச் சட்டமியற்றும் ஆற்றல் வலிவு என்பன கொண்டிருந்தது. தொக்கி நின்ற இந்த அதிகாரங்களையும் மீட்டு எடுத்துவிடவேண்டும் என்பதாலேயே 1972இன் அரசியலமைப்பு எழுந்தது.
இலங்கை குடியரசு
வளமுடன் வாழ்க, நலமுடன் வாழ்க, நிறைவுடன் வாழ்க என்ற வாழ்த்துடன் தொடங்கும் 1972ஆம் அரசியலமைப்பின் முதல்வரி,
"இலங்கை மக்களாகிய நாம்."

b_
エ。 .
': 't ó If it ar A, i.e.
ཅ། ཀ་ T
و - ... தன் øð) LD6ð) JUL 7 त्777, 77 77 177 鬣 TTTTT
I* -
சிடு Arg/ /571
ά είτε δογράφηση ஆ887
D ט
リ立/s/sの。 s/gyyss//アム_gy)』_s/。 。 577o5 ' o:7°
NGARN zw. 35بری FUL
JOJ ולשלילי ישאל
| Ր 岛 @ BARA 。
5G
என்பதுதான் அரசியலமைப்பு யாத்தவர்கள் GÖT GJIT
IU %) エ
| A : ി.', ' டம் இறைமை மீண்டது தம், இலங்கை மக்களாகிய யாம்
Α.

Page 29
மு. திருச்செல்வம் 52
எனக் கூறியதன் மூலம், இலங்கையில் உள்ள இருநாட்டினங்களையும் உள்ளடக்கியே கூறினார்கள்.
மீளப் பெற்ற இறைமையைப் பயன்படுத்தித் தம்மைத் தாமே ஆட்சிசெய்யச் சிங்கள மக்கள் புதிய அரசியலமைப்பைத் தயாரித்து ஏற்றுக் கொண்டார்கள். இறைமையைப் பயன்படுத்தும் ஆட்சியுரிமையையும் பெற்றனர். தமிழ் ஈழ இறைமை மீண்டது
1972இன் அரசியலமைப்பைத் தயாரிப்பதில் தமிழ் மக்கள் பங்கு கொள்ளவில்லை. பங்கு கொள்ளாததால் இசைவு கொடுக்கவில்லை. ஒப்புதல் வழங்கவில்லை. இலங்கையில் வாழ்கின்ற இரு நாட்டினங்களுள் ஒன்றான தமிழ் நாட்டினத்தின் இசைவு இன்றிச் சிங்கள நாட்டினம் அரசியலமைப்பைத் தயாரித்தது.
1972இன் அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் எதிர்த்தார்கள். வன்மையாக எதிர்த்தார்கள். அரசியலமைப்புப் படிகளை எரித்தார்கள். அரசியலமைப்பைத் தமிழ் மக்கள் ஏற்கவில்லை. எதிர்க்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டத் தேசிய அரசுப் பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து மூதறிஞர் செல்வநாயகம் விலகினார். அரசுக்குச் சவால் விட்டார். தேர்தலில் அரசுடன் போட்டியிட்டார், அமோக வெற்றி பெற்றார். தமிழ் மக்களின் எதிர்ப்பை அரசுக்கும் உலகுக்கும் எடுத்துக் காட்டினார்.
இசைவு வழங்காததால், எதிர்த்தமையால் தமிழ் ஈழ நாட்டினம் 1972இன் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. 1972இன் அரசியலமைப்பின் மூன்றாவது விதிக்கமைய இறைமை இலங்கை மக்களுடையதாயிற்று. பிரித்தானியரிடம் இருந்த இறைமை இலங்கை மக்களுடையதாயிற்று.
1972இன் அரசியலமைப்பைத் தமிழ் நாட்டினம் ஏற்றுக் கொள்ளாவிடினும் தமிழ்நாட்டினத்தின் இறைமை பிரித்தானியரிடமும் இருந்து, மீளப்பெறப்பட்டது.
இஃது ஒரு புதுமையான சூழல், புதுமையான நிகழ்வு- உலகில் வேறெங்கனும் நிகழாத ஒன்று - இலங்கைத் தீவில் வாழ்கின்ற தமிழ் நாட்டினத்தின் இறைமை அவர்களுடையதாயுள்ளது. எனினும் அந்த இறைமையைப் பயன்படுத்தும் ஆட்சியுரிமை அவர்களுடையதாகவில்லை. இது புதுமை,
1972இன் அரசியலமைப்புக்கு இசைவு கொடுக்காததன் மூலம், சிங்கள நாட்டினம் தயாரித்த அரசியலமைப்பை எதிர்த்து ஏற்றுக்கொள்ளாததன் மூலம், தமிழ் ஈழ நாட்டினத்தின் ஆட்சியுரிமையைச் சிங்கள நாட்டினத்திடம் தாரை வார்த்துக் கொடுக்கவில்லை. இது புதுமை,
1619 சூன் 5இல் சங்கிலி மன்னனிடம் இருந்து போர்த்துக்கேயரைத் தமிழ் ஈழ நாட்டினத்தின் இறைமை சென்றடைந்தது. 1972 மே 22ஆம் நாள் மூதறிஞர் செல்வநாயகத்தின் தலைமையில் தமிழ் ஈழ நாட்டினத்தின் இறைமை தமிழ் ஈழ மக்களிடம் வந்தடைந்தது.
கடைசித் தமிழ் ஈழ மன்னன் பயன்படுத்திய வீரவாள், வீர மாகாளி அம்மன் கோயிலில் இருப்பதாகக் கூறுகின்றார்கள். மன்னராட்சிக் காலமெனின் அந்த வாளை மீண்டும் எடுத்துப் பயன்படுத்துபவன் தமிழ் ஈழ மன்னனாவான். மக்களாட்சிக் காலமாதலால், தமிழ் ஈழ மகன் ஒவ்வொருவரிடமும் இறைமை மீண்டுள்ளது.
 

53 ஈழத் தமிழர் இறைமை
தமிழ் ஈழ மக்கள், தமக்கென வரலாற்றுப் பெருமை மிக்க வளமான ஒரு மொழி கொண்டுள்ளனர். மொழி சார்ந்த பண்பாட்டு வாழ்க்கை முறை கொண்டுள்ளனர். பிரித்து அறியக்கூடிய, பரம்பரை உரிமையுடைய வரலாற்றுப் பெருமை மிக்க எல்லைகளைக் கொண்ட தனியான நிலப்பகுதியைக் கொண்டுள்ளனர். சால்பும் ஒழுக்கமும், தத்துவார்த்த நோக்கும், கடுமையான உழைப்பும், பரந்த உளப்பாங்கும், உயர்ந்த அரசியல் நோக்கங்களும் கொண்டுள்ளனர். மனிதச் சமுதாயத்தின் எந்த நாட்டினத்துக்கும் ஈடுகொடுத்து முன்னேறி, மனித நாகரிக வளர்ச்சியில் நேரடிப் பங்கு கொள்ளும் ஆற்றலுடையவர். 1972 மே 22ஆம் நாள் தமிழ் ஈழ நாட்டினத்தின் இறைமை இத்தகைய தமிழ் ஈழ மக்களை வந்தடைந்தது. இவையெல்லாம் கொண்ட தமிழ் ஈழநாட்டினம் ஆட்சியுரிமை இன்றி இருக்கின்றது. தமிழ் ஈழம் - தீர்மானம்
இறைமை மீளப்பெற்ற தமிழ் ஈழமக்கள், ஆட்சியுரிமையைப் பெற விழைகின்றார்கள். மூதறிஞர் செல்வநாயகம் இதனை அறிவித்தார். 1975 பெப்ரவரி 6ஆம் நாள் காங்கேசன் துறை இடைத் தேர்தலில், சிங்கள அரசுக்குச் சவால் விட்டு, சிங்கள அரசைத் தோற்கடித்த பின், தமிழ் மக்களின் விடுதலை முயற்சியை அறிவித்தார்.
அத்தோடு நிற்கவில்லை. தேசிய அரசுப் பேரவைக்குச் சென்றார். தமிழ் மக்கள் விடுதலை பெற்ற இனமாக வாழ்வார்கள் ஆட்சியுரிமையைப் பெறுவதே அவர்களின் நோக்கம் எனக் கூறினார். அவர் தலைமையில், பன்னிரண்டு தேசிய அரசுப் பேரவை உறுப்பினர்களுமாகச் சேர்ந்து தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார்கள்.
இத்தீர்மானம் 1976 பெப்ரவரி 4ஆம் நாளுக்குரிய தேசிய அரசுப் பேரவையின் நிகழ்ச்சிக் குறிப்பேட்டின் பின்வருமாறு இடம் பெற்றது.
‘விடுதலை பெற்ற, இறைமையுடைய, மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழ் ஈழம்'
"அந்நிய ஆட்சியால் பிணைக்கப்பட்ட சிங்கள நாட்டினமும், தமிழ் நாட்டினமும் இன்றுவரை பிணைக்கப்பட்டுள்ளமையால், சுதந்திர இலங்கையின் அரசுகள் அனைத்தும், சிங்கள நாட்டினத்தினை ஆக்கிரமிப்பு நாட்டினமாக ஊக்குவித்து வளர்த்ததன் பயனாக இப்போதுள்ள அரசியலமைப்பு ஒருதலைப்பட்சமாகத் திணிக்கப்பட்டுத் தமிழ் நாட்டினம் ஆளப்படும் நாட்டினமாக்கப்பட்டுள்ளமையால்,
'காங்கேசன்துறை இடைத் தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விடுதலை பெற்ற இறைமையுடைய மதச்சார்பற்ற சமதர்ம நாடான தமிழ் ஈழத்தை அமைப்தற்குரிய ஆற்றலுரிமையாக ஏற்றுக்கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது. '
திருவாளர்கள் சாமுவேல் ஜேம்சு வேலுப்பிள்ளை செல்வநாயகம் (காங்கேசன் துறை), விசுவநாதர் தர்மலிங்கம் (உடுவில்), அருணாசலம் தங்கத்துரை (மூதூர்), சேவியர் மார்க் செல்லத்தம்பு (வவுனியா), பாலசுப்பிரமணியம் நேமிநாதன் (திருகோணமலை), சிவசுப்பிரமணியம் கதிரவேற்பிள்ளை (கோப்பாய்), வல்லிபுரம் நல் தம்பி நவரத்தினம் (சாவகச்சேரி), கந்தப்பா செயக்கொடி (உடுப்பிட்டி),

Page 30
A.
மு:திருச்செல்வம் 54 - - - زیلین"۔ (64 "கதிரிப்பிள்ளை துரைரத்தினம் (பருத்தித்துறை) கார்த்திகேசர் பொன்னம்பலம் இரத்தின்ம் (ஊர்காவற்றுறை)செல்லையா இராசதுரை (மட்டக்களப்பு), வீரசிங்கம் ஆனந்தசங்கரி(கிளிநொச்சி) ஆகியோர் இத்தீர்மானத்தை முன்மொழிந்தனர்: リ。 ttT SASASAS SSSSS S uu uJSSYSLS in
lib காட்டைத் தீர்ம்ர்னம் இ: ம் நாள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது மாநாடு பிேடுக்கோட்ட்ைத்திேர்தல் தொகுதியில் உள்ள பண்ணாகம் என்ற ஊரில்
() (Libé
பிறந்தtண் வட்டுக்கோட்டையில் பிறந்தவர்கள்ப்லர் துவருகின்றனர்:திரு.அப்ப்ாப்பிள்ளை அமிர்தலிங்கம்
ல்தொகுதிக்கு நீண்டகாலமாக உறுப்பினராக 臀 リ ー 。
வட்டுக்கோம்ை தமிழ்ர்விடுதலைக் இங்
鸥 இந்த சிந்தி மண்ணில்ே, தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதல் மாநாட்டில்ே புனிதமரின் தீர்மான்ம் நிறைவேறியது. தமிழர்களின் ஆட்சியுரிமை திரண்ட் தமிழர் விடுதல்ைக்க்kபிேன்னியின்பேராளர்களால் தீர்மானித்தனர். தமிழ் ஈழ வரலாற்றில் இந்நிகழ்ச்சிரென்னெழுத்துக்களால் பொறிக்கப்படும். அந்தத்
தீர்மானத்தின் உள்ளடக்கம்பின்வருமாறு:
" தமிழிர்க்ட்னி முதல் மாநில மாநாட்டுத் தீர்மானம் 鬣 、。
iந்து ܐ ܊ பட்டகாலம் முத் 敬 <器必 பிரககனககான ஆண்டு களுட7:வளஜைத விலிருந்து சிலாபம் வரைக்கும், தெற்கு மேற்குப் 77 22:#ဒွy#; நீடும்ப்குதிகளிலும் சிங்க்ள மக்களும், வடக்கு, கிழக்கு, வடமேற்குநிலப்பகுதிகளில்ருதமிழ்கம்க்களும் வாழ்ந்துஇெந்நாட்டின் ஆளுகைய்ைச்சிங்களிநாட்டின்முத்தமிழ்நாட்டினமும் தமக்குள்பகிர்ந்து வந்ததாலும்,ம் இன்கிதத்திந்து இந்தி கெர்டனித்தின் ஆக்
μια έκρι , , ,
பெற்
t/422 韶警
46.24/0/* =2::
துஆட்சியிலிருந்து இலங்கையை விடுவிப்பதற்கான ச்சியில் தமிழ்த் தலைவர்கள் முன்னோடிகளாக உழைத்து, ல் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாலும், மேற்கூறப்பு:வரலாற்று திண்மைகளை முற்றாகப் புறக்கணித்து, இ6%ந்/%E977%)'ற'அடிப்படையில் முழுத் தீவின்
ಸ್ಧ:
ಹಾಸ್ಲೆ?
97, CAC, S`7 இ' பக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

55 ஈழத்தமிழர் இறைமை
மிதுமான அரசியல் அதிகாரம் சிங்களநாட்டினத்தின் கைக்கு மாறி அதனால் தமிழ் நாட்டினம் அடிமை இனமாகத் தாழ்ந்ததாலும்,
சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அனைத்தும், சிங்கள மக்களின் தீவிர இனவாதத்தைத் தூண்டி வளர்த்துத் தம் அரசியல் அதிகாரத்தைத்தமிழ் மக்களுக்குப் பாதகமாக:
7. தமிழ் மக்களில் அரைப் பங்கினர் குடியுரிமை, வாக்குரிமைகளைப்
பறித்து அதனால் பாராளுமன்றத்தில் தமிழரின் பிரதிநிதித்துவத்தைக்
குறைப்பதற்கும்,
2. திட்டமிட்டு அரசாங்க உதவியுடன் நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களாலும், இரகசியமாக ஊக்கிய சிங்களக் கள்ளக்
குடியேற்றங்களைச் சட்ட பூர்வமாக அங்கீகரித்தலாலும், பண்டைய தமிழ் அரசின் நிலப் பகுதிகளில் சிங்கள மக்களை நுழைத்துத் தமிழரைத்தம் சொந்தத் தாயகத்திலேயே சிறுபான்மையினராக்குவதற்கும்,
3. இலங்கை முழுவதும் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியாக்கிதமிழர் மிதும், தமிழ்மொழி மீதும் தாழ்வு முத்திரையைப் பொறிப்பதற்கும்,
4 குடியரசு அரசியல் அமைப்பில் பெளத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை அளித்து, இந்நாட்டின் இந்து, கிறித்தவ, இசுலாமிய மக்களை இரண்டாந்தரத்திற்குத் தாழ்த்துவதற்கும்,
5 கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, நிலப்பங்கீடு, பொருளாதார வாழ்வு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழ் மக்களுக்குச் சம வாய்ப்பை மறுத்தும், பெருமளவிலான கைத் தொழில்கள், வளர்ச்சித் திட்டங்களில் தமிழ் நிலங்களைப் புறக்கணித்தும், இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கையே ஊசலாடும் நிலையை ஏற்படுத்துவதற்கும்,
6. இலங்கையில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும் வளர்க்கும் சந்தர்ப்பங்களை மறுக்கும் அதே நேரத்தில், தமிழ் நாட்டுக் கலாச்சாரத் தாயூற்றோடு உள்ள தொடர்பையும் திட்டமிட்டுத் துண்டித்துக் கலாச்சார இனக்கொலையை நோக்கி ஈழத்தமிழ் மக்களைத் தள்ளுவதற்கும்,
7 1956ஆம் ஆண்டு கொழும்பிலும் அம்பாறை முதலிய இடங்களிலும் நடந்தது போன்றும், 1958ஆம் ஆண்டு நாடு முழுவதும் மிகப் பெருமளவில் நடந்தது போன்றும், 1967ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கட்டவிழ்த்து விட்ட இராணுவக் காட்டாட்சி போன்றும், 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒன்பதின்மர் உயிர்துறக்கக் காரணமான, காவல் படையின் காரணமற்ற தாக்குதல் போன்றும், 1976ஆம் ஆண்டில் புத்தளத்திலும், இலங்கையின் வேறு பல பாகங்களிலும், காவல்படையினரும், சிங்கள வகுப்பு வெறியரும், தமிழ் பேசும் முசுலீம்கள் மீது நடத்தியதாக்குதல் போன்றும், தமிழ் பேசும் மக்கள் மீது வகுப்புவெறிப்பலாத்கார நடவடிக்கைகளையும், பயமுறுத்தும் நடவடிக்கைகளையும் அனுமதித்தும், கட்டவிழ்த்து விட்டும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தமிழ் பேசும் மக்கள் எதிர்த்து நிற்கும் ஆளுமையை அழித்துப் பீதியை ஏற்படுத்துவதற்கும்,

Page 31
மு. திருச்செல்வம் 56
8. தமிழ் இளைஞர்களை எவ்வித நியாயமோ, நீதி விசாரணையோ இன்றித் தாக்கியும், சித்திரவதை செய்தும், பல்லாண்டுகாலக் கணக்கில் சிறைச்சாலைகளில் அடைத்து வன்தத்தும்,
9. எல்லாவற்றிற்கும் மேலாக நெருக்கடி நிலைச் சட்டத்தின் கீழ், சுதந்திரமாக விவாதிக்கும் சந்தர்ப்பமின்றி, குடிஉரிமைச் சட்டங்களினால் பிரதிநிதித்துவ விகிதாசாரமே மாற்றப்பட்டுச் சிங்களப் பெரும்பான்மைக்கும், விகிதாசாரத்துக்கும் கூடிய பிரதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்றத்தை அரசியலமைப்பு யாக்க அவையாக அமைத்து முந்தைய அரசியல் அமைப்பின் கீழ் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த சிறு பாதுகாப்புக்களையும் நீக்கி, அடிமைத் தளையை இறுகப் பூட்டிய குடியரசு அரசியல் அமைப்பை அவர்கள் மீது திணிப்பதற்கும்,
தமது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி வருவதாலும்,
பல்வேறு தமிழ் அரசியல் கட்சிகளும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசாங்கங்களோடு ஒத்துழைத்தும், பாராளுமன்றத்துக்கு உள்ளும், வெளியும் கிளர்ச்சி செய்தும், தமிழ் மக்கள் தன்மானத்தோடு வாழக்கூடிய ஆகக்குறைந்த அரசியல் உரிமைகளையாவது நிலைநாட்டுவதற்கு அடுத்தடுத்து வந்த சிங்களப் பிரதமர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களும் பயனற்றுப் போனதாலும்,
ஒற்றையாட்சியில் பெரும்பான்மைச் சமூகம், சிறுபான்மைச் சமூகங்களை நசுக்காதவாறு பாராளுமன்றத்தில் சமபல பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு அகில இலங்கைத்தமிழ்க்காங்கிரசு எடுத்த பெரும் முயற்சி தோல்வி கண்டதோடு, எந்தவொரு சமூகத்திற்கும் பாதகமான சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதைத் தடைசெய்யும் பொருட்டு சோல்பரி அரசியல் அமைப்பு ஏற்றுக் கொண்ட29ஆவது விதியின் அற்பப்பாதுகாப்பையும் குடியரசு அரசியல் அமைப்பின் கீழ் நீக்கியதாலும்,
ஐக்கிய இலங்கைக் கூட்டாட்சிக் குடியரசின் ஒர் அங்கமாக ஒரு தன்னாட்சித் தமிழ் அரசை நிறுவவதன் மூலம் தமிழ் மக்களின் தனித்துவத்தைக் காக்கும் அதே வேளையில் நாட்டின் ஒற்றுமையைப் பேணும்பொருட்டு இலங்கைத் தமிழரசுக்கட்சி அரசியலமைப்பு யாக்க அவைக்கு முன்வைத்த திட்டங்களை அவற்றின் தகுதி ஆராயப்பட்ாமலே முழுதாக நிராகரித்த //ւց եւ/7ցyւծ,
வல்வெட்டித்துறையில் 1977 பெப்ரவரி 7ஆம் திகதி கூடிய அனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளின் மாநாட்டு எடுத்த ஏகோபித்த ஒன்பது அம்ச முடிவுகளின்படி அரசியலமைப்பு யாக்க அவையின் அடிப்படைத் தீர்மானங்களுக்குக் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் அரசியல் கட்சிகளாலும் இன்று ஆளுங்கட்சியில் இருப்போர் உட்படத்தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராலும் கொண்டுவரப்பட்ட திருத்தங்களையும் அரசாங்கமும் அரசியலமைப்பு யாக்க அவையும் நிராகரித்தபடியாலும்,
1966ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்மொழிச் சிறப்பு ஏற்பாடுகள் சட்ட விதிகளையாவது அரசியல் அமைப்பில் இடம் பெறச் செய்யும்

57 ஈழத் தமிழர் இறைமை
பொருட்டும் மொழி உரிமை, மத உரிமை, அடிப்படை உரிமைகள் பற்றியும் முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்ட மூலத்திற்கான திருத்தங்கள் அனைத்தையும் தோற்கடித்த காரணத்தினால் மிகப் பெரும்பாலான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நிர்ணய சபையைப் புறக்கணித்ததாலும்,
1972ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி அங்கீகாரம் பெற்ற குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்த தமிழர் கூட்டணி 1972 சூன் 25ஆம் திகதி பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் ஆறு அம்சக் கோரிக்கையைச் சமர்ப்பித்து, அவற்றின் அடிப்படையில் அரசியல் அமைப்பைத் திருத்தித் தமிழ் நாட்டினரின் வேட்கைகளை நிறைவு செய்ய ஏற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மூன்று மாத அவகாசம் அளித்தும், அரசு அவ்வித நடவடிக்கை எடுக்கத்தவறினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் வென்றெடுக்கத் தமிழர் கூட்டணி அரசுக்கு எதிராக அறவழி நேரடி நடவடிக்கையில் இறங்குமென அரசாங்கத்திற்கு அறிவித்ததாலும்,
நாட்டின் ஒற்றுமைக்குப் பாதிப்பற்ற முறையில் தமிழ் தேசிய இனத்தின் உரிமைகளுக்கு அரசியல் ச்ட்டரீதியான அங்கீகாரம் பெறுவதற்குத் தமிழர் கூட்டணியின் இந்த இறுதி முயற்சியைப் பிரதம மந்திரியும் அரசாங்கமும் உதாசீனம் செய்து உதறித்தள்ள்ரியதாலும், Ο U ό よ.O
தமது அரசியல் அமைப்புக்குத்தமிழ் மக்களின் ஆதரவுண்டு என்ற அரசின் கூற்றை நிலைநாட்டுவதற்குத் தேசிய அரசுப் பேரவையில் தமது உறுப்புரிமையைத் துறந்து ஒர் இடைத் தேர்தலை ஏற்படுத்துவதற்குத் தமிழர் கூட்டணித் தலைவர் அளித்த சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒத்திவைத்த காங்கேயன்துறைத் தொகுதித் தமிழ் வாக்காளரின் மக்களாட்சி உரிமையைப் புறக்கணித்ததாலும்,
1975 பெப்ரவரி 6ஆம் திகதி நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கேயன் துறை வாக்காளர் அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் சிங்கள அரசாங்கம் தமிழ் மக்கள் மீது திணித்த குடியரசு அரசியல் அமைப்பை நிராகரித்தது மாத்திரமின்றி திரு. சா. ஜே. வே. செல்வநாயகம்அவர்கட்கும், அவர் மூலம் தமிழர் கூட்டணிக்கும், சுதந்திர இறைமையுள்ள மதச்சார்பற்ற, சோசலிச தமிழ் ஈழ அரசை மீள்வித்துப் புனரமைப்புச் செய்யக்கட்டளையிட்டதாலும்,
1976ஆம் ஆண்டு மே 14ஆம் திகதி பண்ணாகத்தில் கூடிய தமிழர் கூட்டணியின் முதலாவது மாநில மாநாடு,
தமது உன்னதமான தாய்மொழியாலும், தம் மதங்களினாலும், தமது சிறப்புப்பெற்ற கலாச்சார Ly/TITLb Luff?uu /i/ 45 GMT/762y Lo, ஐரோப்பிய படையெடுப்பாளரின் ஆயுத பலத்தினல் வெற்றி கொள்ளப்படும் வரை பல நூற்றாண்டுகளாக ஒரு பிரத்தியேகமான பிரதேசத்தில் தனி அரசாகச் சுதந்திர வாழ்வு நடாத்திய வரலாற்றாலும், தமது பிரதேசத்தில் ஒரு தனி நாட்டினமாக வாழ்ந்து தம்மைத் தாமே ஆளும் உள்ள உறுதியாலும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் சிங்களவரிலிருந்து வேறுபட்ட ஒரு தனிநாட்டினம் என்பதை இத்தால் உலகுக்கு அறிவிக்கிறது.
1972ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்புத் தமிழ் மக்களைப் புதிய

Page 32
(1Ք. திருச்செல்வம்' '" . . . 58
ஏகாதிபத்திய மேலாட்சியாளர்களான சிங்கள மக்களால் ஆளப்படும் அடிமை நாட்டினமாக மாற்றித்தாம் தவறாக அபகரித்துக்கொண்ட அதிகாரத்தைத் தமிழ் நாட்டினத்தின் தனிப்பிரதேசம், மொழி குடியுரிமை, பொருளாதார வாழ்வு, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பறித்துத் தமிழ் மக்கள் ஒரு நாட்டினமென்று கூறுவதற்கான தகுதிகள் அத்தனையையும் அழிக்கின்றார்கள் என்றும் இம்மாநாடு இத்தால் உலகுக்கு அறிவிக்கின்றது.
எனவே, தமிழீழம் என்ற தனியரசுஅமைப்பதை ஒட்டி வட்க்கு, கிழக்குப் பகுதிகளுக்கு வெளியே வாழந்து தொழில் புரியும் பெரும்பான்மையான தோட்டத் தொழிலாளரை உறுப்பினராகக் கொண்ட தொழிற்சங்கம் என்ற முறையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு தெரிவித்த மனத் தடைகளைக் கவனத்திற்கு எடுக்கும் அதே நேரத்தில் இத்தீவில் உள்ளதமிழ் ஈழநாட்டினத்தின் நிலையான வாழ்வைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு நாட்டினத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதச்சார்பற்ற, சோசலிசத் தமிழீழ அரசிைமீள்வித்துப் புனரமைப்புச் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
இம்மாநாடு மேலும் கீழ்க்கண்டவற்றை அறிவிக்கிறது. 1. வடக்கு, கிழக்கு மாகாண மக்களைக் கொண்டதாகவும், தமிழீழக் குடியுரிமையை நாடும் இலங்கையின் எப்பாகத்திலும் வசிக்கும் தமிழ் பேசும் மக்கள் எல்லோருக்கும், உலகின் எப்பாகத்திலும் வசிக்கும் தமிழ் ஈழ வம்சாவழியைக் கொண்ட தமிழ் பேசும் மக்ளுக்கும், முழுமையான சமத்துவக் குடியுரிமைக்குத் தமிழ் ஈழ அரசு உத்தரவாதம் அளிக்கும்.
2. தமிழீழத்தின் அரசியலமைப்பு அவ்வரசின் எந்த மதி, பிரதேசச் சமூகங்கள் மீதும் வேறு எப்பிரிவினரும் ஆதிக்கம் செலுத்தாமையை உறுதிப் படுத்தும் வகையில் மக்களாட்சி வழியில் அதிகாரப் பரவலாக்கம் அமையும்.
3. தமிழீழ அரசில் சாதியை அழித்துத் தீண்டாமை என்ற கொடிய முறையும் பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் நிலையும் வேரோடு களைந்து எந்த உருவத்திலும் அவற்றைக் கடைப்பிடிப்பதையும் சட்டம் தண்டிக்கும்.
4. தமிழீழம் மதச் சார்பற்ற அரசாக இருக்கும். அதே நேரத்தில் அங்கு வாழும் மக்கள் கடைப்பிடிக்கும் மதங்கள் எல்லாவற்றிற்கும் சமமான பாதுகாப்பும் உதவியும் அளிக்கும்.
5. தமிழீழத்தில் அரசு மொழியாகத் தமிழ் இருக்கும், அதே நேரத்தில் சிங்களஅரசில் வாழக்கூடிய தமிழ் பேசும் சிறுபான்மையோருக்குக் கிடைக்கும் உரிமைகளுக்குச் சமதையாகத் தமிழீழத்தில் வாழக்கூடிய சிங்களம் பேசும் சிறுபான்மையோருக்கும் தமது மொழியில் கல்வி கற்கும், அரசுடன் கருமமாற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும்.
6. ஒரு சோசலிச நாடாக இருக்கப்போகும் தமிழீழத்தில் மனிதனை மனிதன் சுரண்டி வாழும் நிலை நீங்கி, உழைப்பின் பெருமை உறுதியாகி, சட்டம் விதிக்கும் எல்லைகளுக்கு உள் தனியார் துறை இயங்கும் அதே நேரத்தில் உற்பத்திச் சாதனங்களும் அவற்றின் விநியோக வழிகளும், அரசுக் கட்டுப் ாட்டுக்கும் உடைமைக்கும் உள்ளாகிச் சோசலிசத் திட்டமிடுதலின் அடிப்
ܟ"

۱۹۶۳ الیقا بوده و ܐܠܦܝܢ
- - - - النقه الش61 59. نههاiقلعه آق قل மிழர் இறைமை
KI ܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܝܠ ܐܠܐ ܠܐ ܐܝܬܝ ܠܥܠ ܐܬܐܕܝ̈܂ܐ ܢ ܐ ؟ படையில் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்டும், தனிமனிதனோ, தனி ஒரு குடும்பமோ சேர்த்து வைக்கக்கூடிய செல்வத்திற்கு உச்சவரம்பு இருக்கும்.
தமிழ்த் தேசிய இனத்தின் Θεοίοέδρεναγμό, விடுதலையையும் வென்றெடுப்பதற்கான ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்துத் திருகோணமலிையல் குலைமாதத்தில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் முன்வைக்குமாறும், போராட்டத்தை விரைவில் ஆரம்பிக்குமாறும் இம்மாநாடு தமிழர் கூட்டணி நடவடிக்கைக்குழுவைப் பணிக்கிறது.
மேலும் சுதந்திரத்திற்கான புனிதப் போரில் தம்மை முற்று முழுதாக அர்ப்பணிக்க முன்வருமாறும், இறைமையுள்ள சோசலிசத் தமிழீழ அரசு என்ற இலக்கை அடையும் வரை தயங்காது உழைக்குமாறும் தமிழ்த் தேசிய இனத்திற்குப் பொதுவாகவும், தமிழ் இளைஞர்க்குச் சிறப்பாகவும் இம்மாநாடு அறைகூவல் விடுக்கின்றது.
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை (LDGQ) தந்துள்ளேன். வழக்குரை
1976 மே 22ஆம் நாள் குடியரசு பெற்ற நினைவு நாளைச் சிங்கள அரசு கொண்டாடியது. அந்நாளில் தமிழ்த் தலைவர்கள் மீண்ட இறைமையைப் பயன்படுத்தும் ஆட்சியுரிமையைப் பெறுவதற்குரிய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வாசகத்தை அச்சிட்டுத் தமிழ் ஈழமெங்கும் மக்களுக்கு விநியோகித்தார்கள்.
யாழ்ப்பாண நகரில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மக்களுக்குக் கூறியதற்காக மக்களைச் சிங்கள அரசுக்கு எதிராகத் தூண்டியதற்காக இத்தீர்மானப் பிரதிகளை விநியோகித்த பலருள், நால்வரை அரசு கைது செய்தது. திரு.அ. அமிர்தலிங்கம், திரு. வ. ந. நவரத்தினம் திரு. கா.பொ. இரத்தினம் திரு க. துரைத்தின்ம் ஆகிய நால்வரும் பத்து நாள்கள் காவலில் இருந்தனர்.
'நாட்டுத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாட்டி அரசு இவர்கள் மீது கொழும்பில் மூன்று நீதிபதிகள் அடங்கிய மேல் நீதிமன்றம் முன்பு 1976 சூன் 18ஆம் நாள் வழக்கு தொடர்ந்தது. நந்நீதிமன்றத்திலும்,அரசியல் வாழ்விலும் வேறு எல்லாத்துறைகளிலும், எனது தலைவரான மூதறிஞர் செல்வநாயகம் அவர்கள் தலைமையில், குற்றம் சாட்டப்பட்டவர்கட்காக நானும் நீதிமன்றத்தில் வாதாடினேன்
* வழக்குரைவாதமாக நான்கூறிய கருத்துக்களைச் சாதாரணத் தமிழ் மக்களும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் இந்த நூலாகத் தந்துள்ளேன்.
ஈழத்தில் வாழ்கின்ற தமிழர் ஒவ்வொருவரும், தமிழ் இளைஞர் ஒவ்வொருவரும், தமிழ் மாணவர் ஒவ்வொருவரும், தமிழ்க்குழந்தை ஒவ்வொன்றும் இந்தக் கருத்துகளை அறிந்து கொள்ள வேண்டும்.
'தமிழ் ஈழக் குடிமகனின் இறைமை மீளப்பட்டுள்ளது. இந்த இறைமையைப் பயன்படுத்தித் தமிழரின் உயர்ந்த அரசியல் நோக்கங்களை நிறைவுசெய்து, தமிழ் ஈழத் தமிழர்கட்கும், உலகின் ஏனைய தமிழர்கட்கும், மனிதச் சமுதாயத்துக்கும், மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கும் பயன்படக்கூடிய வகையில் ஆட்சி அமையக்கூடிய,

Page 33
மு. திருச்செல்வம் 6O
ஆட்சியுரிமையைப் பெறுவது ஈழத்தில் உள்ள தமிழர் ஒவ்வொருவரின் புனிதக் கடமையாகும்.
விடுதலை, தன்னுரிமை, இறைமை, தன்னாதிக்கம், ஆட்சியுரிமை என்பன உடைய மக்காளட்சிக் குடியரசைத் தமிழ் ஈழக் குடியரசை அமைத்து வாழவும், பேணவும், பாதுகாக்கவும், அதனால் தமிழ் மக்களும் உலகமும் நன்மையடைய வாழ்வதற்கும் உறுதி பூணுவோகமாக,
மு. திருச்செல்வம், சி. என். அண்ணாதுரை, மறவன்புலவு க.சச்சிதானந்தன்.
 

*#్యత IIT భాడ క్షణ #7: ಇಂri,
ஐந்தாவது
தமிழ் ஈழம் - அரசும் நாடும்
வரலாற்றில் தமிழ் ஈழம்
ஈழத்துப் பூதந்தேவனாரின் பாடல்கள் சங்கத் தமிழ் இலக்கியங்களில் உள. அகநானூற்றில் மூன்று பாடல்கள், குறுந்தொகையில் மூன்று பாடல்கள், நற்றிணையில் ஒரு பாடல், ஆக ஏழு பாடல்கள் உள. ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தில், ஏறத்தாழ இறண்டாயிரம் ஆண்டுகட்கு முன், தமிழ் ஈழத்தில் அகவாழ்வு அமைந்த வண்ணத்தை அவர் பாடல்களில் காணலாம்.
இரண்டாயிரத்து நூற்றிப்பதினேழு ஆண்டுகட்கு முன்பு வரை தமிழ் மன்னன் எல்லாளன் இலங்கையை ஆட்சி செய்தான். அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். நாற்பத்துநான்கு ஆண்டுகள் (கி.மு. 161-117) ஆட்சி செய்த எல்லாள மன்னன் நல்லாட்சி செய்தான். தமிழ் மக்கள், சிங்கள மக்கள் இருசாராரையும் சமமாக மதித்து, உயர்ந்த கோட்பாடுகட்கு அமைய ஆட்சி செய்தான் எனச் சிங்கள வரலாற்று நூல்கள் எல்லாள மன்னனைப் பாராட்டுகின்றன.
சிங்களச் சிற்றரசன் துட்டகாமினி எல்லாளனுக்கு எதிராகப் படையெடுத்தான். எல்லாளனின் படைகள் சிங்களப் படைகளைச் சிதறடித்தன. துட்டகாமினி சூழ்ச்சி செய்தான் துட்டகாமினி, எல்லாளனை நேருக்கு நேர் தனியாகச் சமரிட அழைத்தான். துட்டகாமினி இளைஞன் எல்லாளன் முதுமை எய்திவன் தனிச்சமரில் எல்லாளன் தோல்வியுற்றான்.
தனது தனிப்பட்ட வீரம், வெற்றி என்பனவற்றுட்ன், தமிழ் ஈழக் குடிமக்களின் வீரம், வெற்றி, நல்வாழ்வு என்பனவற்றைத் தொடர்புபடுத்தியமையால், எல்லானின் தனிச்சமர், தமிழ் ஈழ மக்களின் தோல்வியாயிற்று, தமிழ் அரசு தோல்வியுற அநுராதபுரத்தில் சிங்கள அரசு எழுந்தது.
போரில் தோற்ற மாவீரன் எல்லாளனுக்குத் துட்டகாமினி நினைவுச் சின்னம் அமைத்தான். அந்த வழிச் செல்வோர் அந்த நினைவுச் சின்னத்துக்கு மரியாதை செய்யப் பணித்தான்.
எல்லாளனின் தோல்விக்குப் பின் சில காலம் சிங்கள மன்னர்கள் தீவு முழுவதையும் ஆட்சி செய்தனர். எனினும் மீண்டும் பாண்டிய மன்னரின் உதவியுடன், தமிழர் ஆட்சி (கி.மு. 103) தமிழ் ஈழத்தில் அமைந்தது.
தமிழ் அரசுகளான சேர, சோழ, பாண்டிய அரசுகள் தமிழ் ஈழ அரசுடன் தொடர்புகள் கொண்டிருந்தன. சிங்கள அரசிடமும் தொடர்புகள் கொண்டிருந்தன. பத்தாம் நூற்றாண்டில் சோழ அரசு பேரரசாகத் துளிர்விட்டு வளர்ச்சியடையத் தொடங்கியது. சோழப் படைகள் பாண்டிய அரசைக் கைப்பற்றியபொழுது, பாண்டிய மன்னன் தனது முடியையும் சிங்காசனத்தையும் சிங்கள மன்னனிடம் அடைக்கலமாகக் கொடுத்தான். சோழர் சினங் கொண்டனர்.

Page 34
ബ
தமிழக அரசுகளிடையே வேறுபாடுகள் எழலாம் அதிலே தலையிட்ச் சிங்கள்
அரசுக்கு உரிம்ை கிடையாது:பாண்டிய மன்னனின் முடியைச் சிங்கள அரசியம் ഒിദ്ദിഖgi?:{ി!,:) 11:1്? இந் மக்கள் ?"#േ ീ
ー -』 。 தமிழ் உலகின் பொற்காலம்:
சோழர் இலங்கைமீது படையெடுத்தார்கள். கி.பி.993இல் இராஜஇராஜ சோழன் படிைகள் இலங்கை மீது படிையெடுத்தன. அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னனைப் போரில் புறமுதுகு காணச்செய்தனர்; அநுராதபுரத்தைத் தீக்கிரையாக்கினர் இலங்கையின் வடபகுதியைச் சோழப் பேரரசின் மண்டலங்களுள் உள்ளடக்கின்ற்மும்முடிச்சோழமண்டிலம் எனப் பெயரிட்டனர். சனநாதமங்களத்தை(ரெலன்னறுவை)த் தலைநகராக அமைத்தனர்.
சோழ அரசகுடும்பத்தைச்சார்ந்த ஒருவனை ஆட்சித்தலைவனாக்கினர்: தீவின் தென் பகுதியில் ஐந்தாம் மகிந்தன்'தெர்ர்ந்தும் ஆட்சி செய்தான்.
> இராஜஇராஜசோழனின் மகன் இராஜேந்திரன் காலத்தில் கி.பி.1017இல் சோழப்
படைகள் தெற்கிலங்கைக்குச் சென்று சிங்கள மன்னனைப் போரில் தோற்கடித்து *) இலங்கைத் தீவு முழுவதையும் தமிழரின் ஆட்சிக்குள் கொணர்ந்தன. தமிழர்
சயங்கொண்டி சோழ மூவேந்த வேளார் தலைமையில் வந்தசோழ்ப் படைகள் சிங்கள மன்னனாகிய ஐந்தாழ் மகிந்தனையும், மன்னர் குடும்பத்தையும், சிறைப்படுத்தினர் நரின் தம் E.J. E. ருக்கும்மு േ
"ஒரு நூற்றாண்டுக்குமுன் பாண்டிய மன்ன்ன் மூன்றாம் இராஜசிம்மன் தனது முடியைச் சிங்கள மன்னனிடம் விட்டு வைத்திருந்தான்முதலாம் இராஜேந்திரசோழன் அந்த முடியையும், முடியூைவைத்திருந்த ஐந்தாம்மகிந்தன் மன்னன் குடும்பத்தையும் ப் கூண்டிோடுகைப்பற்றினான்சோழநாட்டிற்குத் தருவித்தான்ந்தும்
தமிழரின் ஆட்சியிலே, ஏராளமான தமிழ் மக்கள் தமிழ் நாட்டிலிருந்து ஈழத்துக்கு வந்தனர், ஏற்கனவே வாழ்ந்த தமிழர்களின் எண்ணிக்கையைப்து பெருக்கினர். இலங்கையின் கரையோரமெங்கும் வழ்ந்தார்கள் மலைநாட்டிையும் தெற்கே உரோகணத்தையும் தவிர்ந்த ஏனைய பகுதிகள் தமிழர் பகுதிளாக இருந்தன.
சோழர்ஆட்சிக் காலத்தில்:தமிழரின் புண்பாடும் வாழ்வுமுறைகளும் தமிழ்ள ಕ್ಲಿಕ್ಗಿ நாட்டிலும் சிறப்பாக இருந்தன. இதனால்தான், சோழர் காலத்தைத்
ழுலகின் வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றுவர்.
F.
த ്ച്ച്,
தமிழ்ஈழத்தில் பல கற்கோவில்கள் சிவாலயங்கள் அமைக்கப்பட்டன. திருக்கேதீச்சரம்,திருக்கோணச்சரம் முன்னேச்சரம் போன்ற பழைய ஆலயங்களைத் திருப்பணி செய்து புதுப்பித்தனர்.தோழரின் தலைநகரான பொலன்னறுவையில் சிவாலயங்களைக் கட்டினர்:4ஆழ்ந்
கி.பி. 1070 வரை சோழர் இலங்கைத் தீவு முழுவதையும் ஆண்டனர். தமிழ் ஆட்சி தமிழரின் ஆட்சி நடைபெற்றஇந்நாட்களில் தமிழ்ஈழத்தின் வலிமை பெருகியது. வலிமையுடைய தொடர்ச்சியான தமிழ் ஈழஅரசு மீண்டும் எழுவதற்குரிய கால்கோள் ട്രങ്ങഥഴ്ച്.-§:'ച്ചൂ *、
முதலாம் விஜயபாகு கி.பி.1070இல் சோழரிட்மிருந்து ஆட்சியிைக்
கைப்பற்றினான். பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்தான்.
 
 
 
 
 
 
 
 
 

63. ஈழத் தமிழர் இறைமை
இவன் ஆட்சி காலத்தில் தலைநகரம், ஏனைய நகரங்கள், ஊர்கள், சந்தைகள் என்பன தமிழரின் கைகளில் இருந்தன என நிக்காய சங்கிரகம் என்ற 14ஆம் நூற்றாண்டுச் சிங்கள நூல் கூறுகிறது.
மாகனும் சந்திரபானுவும்
பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கலிங்க நாட்டவனான மாகன் என்பான் தமிழ் நாட்டுப் பட்ை வீரர்களையும் மலையாளப் படை வீரர்களையும் கொண்டு இலங்கைக்கு வந்தான் படையெடுத்துப் பொலன்னறுவை அரசை வீழ்த்தினான், பொலன்னறுவையைத் தலைநகராக்கினான். மாகனின் ஆட்சி (கி.பி. 1215-1255) தமிழரின் உதவியுடன், தமிழ்ப் படைகளின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சியாகும்.
"கலிங்கனான மாகனின் ஆட்சியைச் சாவக அரசன் சந்திரபானு முறியடித்தான். பாண்டியரின் உதவியுடனே மாகனின் ஆட்சியைச் சந்திரபானு முறியடித்தான். பாண்டியரின் படைகளை இலங்கைக்குக் கொண்டு வந்தான்.
இந்தப் படையெடுப்புகளால் பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்ட
ஆட்சிகள் குலைந்தன. சிங்கள மன்னர்கள் தெற்குநோக்கிச் சென்றார்கள் தங்கள் தலைநகரைத் தெற்கு நோக்கி மாற்றினார்கள். தம்பதெனியா, யாப்பகுவா போன்ற
தலைநகரங்கள் எழுந்தன. தீவின் வடக்குப் பகுதிகள் முதலில் மாகனிடமும் பின்னர்
சந்திரபானுவிடமும் சென்றடைந்தன. இத்தமிழ் அரசுகளின் மேல் ஆதிக்கம் செலுத்தச் சிங்கள மன்னர்களால் முடியவில்லை.
பாண்டியப் படைகளுடன் இலங்கை வந்த சாவக அரசன் சந்திரபானு (கி.பி. 125541262) பாண்டியரின் மேலாட்சியை ஏற்றுக் கொண்டான். பாண்டிய அரசின் பகுதியாகத் தனது ஆட்சியை அமைத்தான்; பாண்டிய மன்னனுக்குத் திறை செலுத்தினான்.
சந்திரபானு சிறிது சிறிதாக வலிமையைப் பெருக்கினான். படைபலத்தைப் பெருக்கினான். தனது நாட்டின் ஆட்சிமுறையைச் சீராக்கினான். காலம் செல்லச்செல்ல அவன் வலிவு பெருகப் பெருக, பாண்டியரின் மேலாட்சியயை ஏற்றுக் கொள்ள மறுத்தான், பாண்டியருக்குத் திறை செலுத்த மறுத்தான். தமிழ் ஈழ மன்னன் எனத் தன்னை அறிவித்தான்.
பாண்டிய நாட்டின் மன்னனான் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இதற்கு ஒப்பவில்லை. தனது இணையரசன் வீரபாண்டியன் தலைமையின் படையை அனுப்பிச் சந்திரபானுவைப் போரில் முறியடித்தான். தமிழ் ஈழ அரசின் மீதான பாண்டியர் மேலாட்சி மீண்டும் உறுதியானது.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாண்டியர் மேலாட்சியைக் கைவிட்டனர். பாண்டிய அரசு வலிமை குன்றப் பாண்டிய அரசு அனுப்பிய படைத் தளபதிகள், தம்மைத் தாமே மன்னராக அறிவித்தனர். தமிழ் ஈழ அரசை அமைத்தனர். கி.பி.1282இல் ஆரியச் சக்கரவர்த்திகள் தமிழ் ஈழ மன்னர்களாக எழுந்தனர். ஆரியச்சக்கவர்த்திகள்
பதினான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய அரசு சீர்குலைந்து

Page 35
மு. திருச்செல்வம் 64
முசுலிம்களால் அடிமைப்படுத்தப்பட்டது. அக்காலத்தில் தமிழ் ஈழ அரசு தன்னாட்சி பெற்ற அரசாக, ஆட்சியுரிமையுடைய அரசாக, ஒப்பாரும் மிக்காரும் இல்லா இறைமையுடைய அரசாக எழுந்தது.
திரு. இபன் பற்றுற்றா நாடுகள் பல கண்ட பெரியார், அறிஞர். கி.பி. 1544இல் இவர் தமிழ் ஈழ மன்னனுடைய 100 கப்பல்கள், கூட்டாக அராபிய நாட்டுக்குப் பயணமானதைக் கண்டார். 100 கப்பல்களும் ஒரே சமயத்தில் வர்த்தகப் பொருட்களை ஏற்றிச் சென்றன. தனது பயணக் கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பதினான்காம் நூற்றாண்டின் தமிழ் ஈழ மன்னர்களான ஆரியச் சக்கரவர்த்திகள் செல்வம் செழித்த வலிமை வேரூன்றிய, படைபெருகிய ஆட்சியை மேற்கொண்டனர். கண்டி அரசரும், கீழ்நாட்டுச் சிங்கள அரசர்களும் தமிழ் ஈழ மன்னர்களின் மேலாணையை ஏற்றுக் கொண்டனர். திறை செலுத்தினர். இதைச் சிங்கள வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
மன்னார் வளைகுடாவில் முத்துக்குளிப்பு நடைபெற்றது. தமிழ் ஈழ மன்னரின் ஆணையின் கீழ் முத்துக் குளிப்பு நடைபெற்றது. இதனால் தமிழ் ஈழ மன்னர்கள் செல்வம் மிகையாகப் பெற்றிருந்தனர். நூற்றுக்கணக்கான கப்பல்களை வைத்திருந்து வாணிபத்தில் ஈடுபடுத்தினர். அராபிய நாடு, கடாரம், சாவகம் போன்ற கடல் கடந்த நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
கி.பி. 1327இல் பாண்டியரின் ஆட்சி வீழ்ச்சியுற்றது. தமிழ் ஈழத்தில் மட்டுமே தமிழரசர்கள் ஆட்சி செய்தனர். இதனால், பரிசில் பெற விழைந்த தமிழ்நாட்டுத் தமிழ்ப் புலவர்கள்கூடத் தமிழ் ஈழ மன்னர்களையே நாடி வந்தனர். தமிழ் ஈழ மன்னர்கள் பன்மொழிப் புலமை பெற்றும், மருத்துவ விற்பன்னர்களாகவும் இருந்தனர். சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர். முசுலிம் படையெடுப்பினால் கலாச்சார அழிவு ஏற்படாமலிருக்கப் பல்துறை வல்லுனர், புலமையாளர், தமிழ்க் கலாச்சாரப் பேழை களுடன் தமிழகத்திலிருந்து கடல்கடந்து யாழ்ப்பாண அரசிடம் தஞ்சம் புகுந்தனர்.
ஆரியச் சக்கரவர்த்திகள் பரம்பரயைச்ைசேர்ந்த கடைசி மன்னன்தான் சங்கிலி, 1619 சூனில் தமிழ் ஈழத்தின் இறைமையையும் ஆட்சியுரிமையையும் தனது கடைசி மூச்சு வரை விட்டுக் கொடுக்க முடியாது என்றான் இந்த மன்னன். தமிழ் மக்களின் இறைமையும் ஆட்சியுரிமையும் இடையீடின்றித் தமிழ் மன்னர்களால் அநுபவிக்கப்பட்டதைச் சங்கிலி உணர்ந்திருந்தான். சங்கிலி மன்னன்
தமிழ் ஈழ அரசை எதிர்த்து உள்நாட்டில் கலகம் நடைபெற்றது. 1618 ஆவணி புரட்டாசி மாதங்களில் இந்தக் கலகம் நடைபெற்றது. சங்கிலி மன்னன் அப்பொழுது தமிழ் ஈழத்தின் தன்னிகரற்ற மன்னனாக ஆட்சி செய்தான்.
போர்த்துக்கேயப் பாதிரியார் பீதுறு பொட்டன்கொன் தலைமையில் கலகம் நடைபெற்றது. தமிழ் ஈழ அரசைக் கவிழ்க்க வேண்டும். போர்த்துக்கேயரின் ஆட்சி அங்கு நிறுவப்படவேண்டும். இதுதான் கலகக்காரரின் நோக்கம். மன்னாரில் படைகளுடன் இருந்த போர்த்துக்கேயர்கள் இதற்கு மறைமுக ஆதரவு தந்தனர்.
சங்கிலி மன்னன் தனது படைபலத்தைப் பயன்படுத்தினான். மேலதிக உதவி தேவைப்படவே தஞ்சை நாயக்க மன்னனுக்குச் செய்தி அனுப்பினான்.

65 ஈழத் தமிழர் இறைமை
'தமிழ் நாட்டுக்கும் தமிழ் ஈழத்துக்கும் உள்ள தொடர்புகள் வெறும் சொல்லளவுத் தொடர்புகளல்ல. இதோ செயலில் காட்டுகிறோம். வருண குலத்தானையும் ஐயாயிரம் வீரர்களையும் அனுப்புகிறோம்' என்று தஞ்சை இரகுநாத நாயக்க மன்னன் செய்தே காட்டினான். தமிழ் ஈழ அரசு தொல்லைக்குள்ளாகின்றது. துன்புறுகின்றது, அல்லற்படுகின்றது என்றால் தமிழ்நாட்டில் உள்ள அரசுகள் அக்கறை காட்டுகின்றன. கடலைத் தாண்டி உள்ள ஒரே தமிழ் அரசு, தமிழ் ஈழ அரசு மட்டும்தான். தமிழ் ஈழ அரசுக்கு உதவுதல், ஒத்தாசைபுரிதல் தமிழ்நாட்டு அரசுகளின் கடனல்லவா? சங்கிலி மன்னனுக்குப் பக்க பலமாக இரு' என வருணகுலத்தானிடம் கூறிப்படை அனுப்பினான் தஞ்சை இரகுநாத நாயக்க மன்னன்.
சங்கிலி மன்னனின் படைகள் கலவரத்தை அடக்கின. தஞ்சைப் படைகளையும் மன்னன் பயன்படுத்தினான். நாட்டில் ஒழுங்கையும், சட்டத்தையும் நிலைநாட்டுவது மன்னனின் கடன் அமைதியையும், கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்துவதும் மன்னனின் கடன் சங்கிலி மன்னன் தன் உயர்ந்த கடமையைச் செய்தான். செய்வதற்குரிய ஆட்சியுரிமை அவனிடம் இருந்தது. ஒப்பாரும் மிக்காரும் இல்லா இறைமை அவனுடையாதக இருந்தது. தமிழ் ஈழ அரசைக் கைப்பற்றுக
சங்கில மன்னன் போர்த்துக்கேயரின் தொல்லைகளை அறிவான். வாய்ப்புக் கிடைத்ததால், சப்புமால் குமரையா போன்றவர்களை அனுப்பித் தமிழ் ஈழ அரசை அடக்கி ஆளச் சிங்கள அரசர்கள்கூட முயல்வார்கள் என்பதையும் சங்கிலி மன்னன் அறிவான்.
"யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக் கொண்ட தமிழ் ஈழ அரசைக் கைப்பற்றுக' என்ற ஆணையை 1617இல் கோவாவில் இருந்த தனது இந்திய ஆளுநருக்குப் போத்துக்கேய மன்னன் அனுப்பியிருந்தான். அந்த ஆணையை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பை எதிர்நோக்கி இருந்தனர், இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள படைத் தளபதிகள் 1619 சனவரி வரை அந்த ஆணையை நிறைவேற்றக்கூடிய சூழ்நிலையைத் தமிழ்ஈழ மன்னன் சங்கிலியன் போர்த்துக்கேயருக்கு விட்டு வைக்கவில்லை.
தமிழ் ஈழ அரசுக்கும் அகன்ற போர்த்துக்கேய அரசுக்கும் போர்கள் நடந்தது உண்டு. போர்களில் மாறி மாறி இரு அரசுகளும் வெற்றி ஈட்டியுள்ளன. திறைப்பணம் கொடுக்கும் அளவிற்குத் தமிழ் ஈழ அரசு போர்த்துக்கேய அரசிடம் சரணாகதியடையவில்லை, அடிமைப்படவில்லை.
இரு ஆண்டுகளாகச் சங்கிலி மன்னன் போர்த்துக்கேயருக்கு எதுவும் கொடுக்கவில்லை. வலுக்கட்டாயமாகச் சன்மானம் கொடுப்பது கூடச் சங்கிலி மன்னனின் தன்மான உணர்வுக்கு ஒப்புவதாக இல்லை. எதுவும் பெறாத நிலையில் திறையைக் கேட்டு எழுதினான் போர்த்துக்கேயன், போர்த்துக்கேயர் போருக்கு மீண்டு
தயாராவதைச் சங்கிலி மன்னன் உய்த்துணர்ந்தான்.
திறைகேட்டு எழுதிய ஒலைக்குச்சங்கிலி மன்னன் பதில் அனுப்பவில்லை. பதில்
அனுப்பத் தேவையில்லை என எண்ணினான்.
ஒல்லாந்தர்
சங்கிலி மன்னன் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுத்தான். ஒல்லாந்தர்

Page 36
மு. திருச்செல்வம் 66
மேலைநாட்டவர். சிறிது சிறிதாகக் கீழைநாடுகளில் காலடி எடுத்துவைக்க முனைகின்றவர்.
தமிழ் நாட்டில் பழவேற்காட்டில் ஒல்லாந்தார் படையும் பாசறயுைமாக இருந்தனர். கோட்டை கொத்தளம் அமைத்திருந்தனர். ஒல்லாந்தர் நறுமணப்பொருள் வாணிபத்தில் நேரடிப் பங்குகொள்ள விரும்பினர். போர்த்துக்கேயரின் செல்வாக்கைப் போக்க விரும்பினர். ஒல்லாந்தரிடம் போர்த்துக்கேயரைத் தாக்கி முறியடிக்கக்கூடிய கப்பற்படை இருந்தது. ஆயுதங்கள் இருந்தன.
சென்னைப் பட்டினத்துக்கு வடக்கேயுள்ள பழவேற்காட்டுப் பாசறையிலுள்ள ஒல்லாந்தருக்குச் சங்கிலி மன்னன் செய்தி அனுப்பினான். போர்த்துக்கேயருக்கு எதிராகத் தனக்கு உதவும்படிக் கேட்டிருந்தான். குஞ்சலி வீரர்
இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் உள்ள மலையாளப் பட்டினம் கோழிக்கோடு. இங்கேயுள்ள மலையாளிகள் போர்த்துக்கேயரின் கொள்கைகளை விரும்பாதவர்கள்.
குஞ்சலி வீரர்கள் இவர்களுள் முதன்மையானவர்கள். கடலிலேயே போர்த்துக்கேயரின் கடற்படைக்கும், வாணிபக் கப்பல்கட்கும் தொல்லை கொடுப்பவர்கள். குஞ்சலி வீரர்களின் கடற்படையை அடக்கப் போர்த்துக்கேயர் பல முறை முயன்றனர்; முடியவில்லை. கடைசியாக அவர்களில் சிலரைச் சிறையில் வைத்தனர்; மதமும் மாற்றினர்.
சிறையில் மதம் மாறிப்பின்னர் சிறையில் இருந்து தப்பி ஓடியவன் டொம்பீதுறு ரொட்றிகசு. தப்பி ஓடியவன் தனக்கென ஒரு கப்பற்படையை அமைத்தான். ஆறு ஏழு கப்பல்களுடன் வீரர்களுடனும், போர்த்துக்கேயருக்குத் தொல்லை கொடுத்தான்.
சங்கிலி மன்னன், டொம் பீதுறுரொட்றிகசுக்குச் செய்தி அனுப்பினான். 1619 மார்ச் மாதத்தில் டொம் பீதுறு ஆறு கப்பல்களில் மலையாளப்படைகளை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணக் கடற்கரைக்கு வந்தான். சங்கிலி மன்னனைக் கண்டான். சங்கிலி மன்னனின் ஆணையை எதிர்பார்த்து யாழ்ப்பாணத்தை ஒட்டிய கடலில் நங்கூரம் பாய்ச்சி நின்றான்.
உட்பகை
1618 ஆவணி - புரட்டாசியில் நடைபெற்ற உள்நாட்டுக் கலகத்தைத் தூபம் போட்டு வழி நடத்தியவர்கள் அந்நியப் பாதிரிமார்களே. வருணகுலத்தான் தலைமையில் ஐயாயிரம் வீரர்களைச் சங்கிலி மன்னன் அழைத்துக் கலவரத்தை அடக்கியதை இவர்கள் உள்ளூர ஆதரிக்கவில்லை.
காக்கை வன்னியன் என்பானும் சங்கிலி மன்னனுக்கு நண்பனாய் நடித்துத் துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறும்,
1619 பங்குனியில் டொம் பீதுறுவின் கடற்படை யாழ்ப்பாணக் கரையோரங்களில் காணப்பட்டதும் பாதிரிமார் உடனடியாகக்கொழும்புக்குச் செய்தி அனுப்பினர். சங்கிலி மன்னன் ஒல்லாந்தருடன் தொடர்புகொள்ள் முயன்று அவர்களின் படையையும் அழைக்க முயல்கிறான் எனவும் பாதிரிமார் செய்தி அனுப்பினர். 1619

67 ஈழத் தமிழர் இறைமை
பங்குனியில் கொழும்பில் தளபதியாக இருந்தவன் கொன்சுடாண்டின் டிசா இவன் சங்கிலியின் படைப்பெருக்கு நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்தான். டொம் பீதுறுவின் கடற்படை வருகை மேலும் கோபத்தையூட்டியது.
படை புறப்பட்டது
1619 பங்குனியில் இரு படைத் தொகுதிகளை யாழ்ப்பாணத்துக்குப் புறப்படக் கட்டளையிட்டான். கடல் வழியாக நூறு போத்துக்கேய வீரர்களும், சிலநூறு சிங்களக் கூலிப் படைகளும் ஆறு கப்பல்களில் மன்னாரை நோக்கிப்புறப்பட்டன.
பிலிப்பு டி. ஒலிவேரா தலைமையில் நூற்றிமுப்பது போர்த்துக்கேயரும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சிங்களக் கூலிப்படைகளும் கரையோரப் பாதையால், புத்தளம்-சிலாபம்-முள்ளிக்குளப்பாதையால் யாழ்ப்பாணத்தை நோக்கிப்புறப்பட்டன. இதைத் தவிர, நாகப்பட்டனத்தில் உள்ள போர்த்க்கேயருக்குக் கடற்படைக் கப்பல்களையும் படைகளையும் அனுப்புமாறு தளபதி டிசா செய்தி அனுப்பியிருந்தான். போர்த்துக்கேயரின் போர் ஆயத்த நடவடிக்கைகளைச் சங்கிலி மன்னன் ஒற்றர் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொண்டான். டொம் பீதுறுவின் வருகைதான் போர்த்துக்கேயரைக் கோபத்துக்குள்ளாக்கி உடன் நடவடிக்கைக்கு வழி செய்தமையைத் தெரிந்து கொண்டான்
டொம் பீதுறுவுக்குச் சங்கிலி மன்னன் செய்தி அனுப்பி அரச அவைக்கு அழைத்தான். யாழ்ப்பாணக் கடலில் நில்லாது எட்டத்தள்ளி நிற்குமாறு கேட்டுக் கொண்டான். டொம் பீதுறு யாழ்ப்பாணக் கடலை விட்டு நீங்கியமையால் போர்த்துக்கேயக் கடற்படைக்குப் பணி குறைந்தது.
பிலிப்பு டி ஒலிவேரா தனது தரைப் படைகளுடன் புத்தளம், மன்னார் வழியாகப் பூநகரியை வந்தடைந்தான். 1619 பங்குனியில் கொழும்பை விட்டுப் புறப்பட்ட படைகள் 1619 வைகாசியில்தான்பூநகரியை வந்தடைந்தன. வழியில் படை வீரர்கள் நோய்வாய்ப்பட்டனர். வெயிற்காலமானதால் களைப்புற்றும் இருந்தனர். காட்டு வழியாதலால் பயணம் கடுமையானதாக இருந்தது.
இவர்களிடம் நவீன படை ஆயுதங்கள் இருந்தன. பீரங்கி வெடிகள், துப்பாக்கிகள், வாள், ஈட்டி என்பன மிகையாக இருந்தன.
தமிழ் ஈழ அரசர்கள் கூடத் துப்பாக்கிகளைப பெற்று அவற்றைப் பயன்படுத்துவதில் வீரர்களைப் பயிற்றி இருந்தனர். வாட்படை, வேற்படை, குதிரைப்படை, யானைப்படை என்பன சங்கிலி மன்னனிடம் மிகையாக இருந்தன. வருணகுலத்தான் தலைமையில் உள்ளஐயாயிரம் வீரர்களுடன் சங்கில மன்னனின் சில ஆயிரம் படை வீரர்கள் இருந்தனர்.
பூநகரியில் இருந்து ஒலிவேரா சங்கிலி மன்னனுக்குத் செய்தி அனுப்பினான். 'குடாக்கடலைத் தாண்ட வேண்டும். படைகள் குடா நாட்டுக்குள் வரவேண்டும். மன்ன்னின் ஓடங்களை அனுப்பி உதவுக."
சங்கிலி மன்னன் பதில் அனுப்பவில்லை. ஒடங்களையோ நாவாய்களையோ அனுப்பவில்லை. இவற்றை அனுப்பஇசையவில்லை.
காக்கை வன்னியன் போன்ற துரோகிகள் உதவினார்கள். சில பாதிரிமார்கள்

Page 37
மு. திருச்செல்வம் 68
உதவினார்கள். அவர்கள் படகுகளையும், நாவாய்களையும் பூநகரிக்கு அனுப்பினார்கள்.
சங்கிலி மன்னன் முதலில் துரோகிகளை ஒழிக்க நினைத்தான். எனவே போர்த்துக்கேயரின்முயற்சியை, அவர்கள் குடாக்கடலைக் கடக்கும் முயற்சியைப் படை கொண்டு தடுக்கவில்லை.
ஆனாலும் அவன் வாளா இருக்கவில்லை. படகோட்டிகளையும் வஞ்சகக் காரர்களையும் மறைமுகமாக அச்சுறுத்திச் செய்தி அனுப்பினான். பயத்தினால் பலர் அரசனின் பக்கம் சார்ந்தனர். படகுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.
1619 மே மாதக் கடைசியில் குடாநாட்டுக்குள் படைகள் வந்துசேர்ந்தன. வந்து சேர்ந்த பின்பு யாழ்ப்பாணக் குடாநாடு பலவிதமான’ படை வீரர்களின் உலாக்களமாயிற்று. சங்கிலி மன்னனின் படைகள் - தஞ்சைப்படைகள் - போர்த்துக்யேப் படைகள் - சிங்களக் கூலிப் படைகள் எனப் பலவகை வீரர்கள் அங்கு இருந்தனர்.
குடாநாட்டுக்குள் வந்ததும் சங்கிலி மன்னனுக்குத் தூதுவன் மூலம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை ஒலிவேரா அறிவித்தான். முதலாவது கோரிக்கை திறை செலுத்துக. இரண்டாவது கோரிக்கை ! வருண குலத்தானையும் ஐயாயிரம் வீரர்களையும் போர்த்துக்கேயரிடம் சரணடைய உத்தரவிடுக.
சங்கிலியன், தமிழ் ஈழத்தின் தன்னிகரற்ற வேந்தன். மான உணர்வு உள்ளவன். தமிழரை, தமிழ் ஈழ அரசை ஆளப் பிறந்தவன். தமிழ் ஈழத்தின் மீது இறைமை கொண்டவன். ஆட்சியுரிமை உடையவன், திறை கொடுப்பதா? தமிழ் ஈழ மன்னன் திறை கொடுப்பதா? s
சன்மானம் என்ற பெயரிலே சங்கில மன்னனின் முன்னோர்கள் போர்த்துகேயர்கட்கு ஏதோ கொடுத்தார்கள். அரசன் விரும்பிக் கொடுக்கும் சன்மானத்தை அந்நியர் வலிந்து கேட்கிறார் - கொடுக்கலாமா?
இப்பொழுது அதையே திறையாகக் கேட்கிறான் போர்த்துக்கேயன். சங்கிலி மன்னனின் நல்லாட்சியிலே தமிழ் மக்கள் ஈழத்திலே செம்மையுடனும் செழிப்புடனும் செல்வத்துடனும் வாழ்கின்றனர். எதற்காகப் போர்த்துக்கேயனுக்கு கொடுக்க வேண்டும் திறை? சங்கிலி மன்னன் திறை கொடுக்க மறுத்தான்.
சங்கிலி மன்னனின் அழைப்பை ஏற்று வந்தவர்களான வருணகுலத்தானும் வீரர்களும். இவர்களை அந்நியன் முன் சரணடையச் சங்கிலியன் சொல்வானா? ஒரு தமிழ் மன்னன், மற்றொரு தமிழ் மன்னன் மீது நம்பிக்கை வைத்து அனுப்பிய வீரர்கள் அவர்களைச் சரணாகதி அடையச் செய்ய முடியாது. அவர்கள் தமிழ் நாட்டுக்குத் திரும்பவேண்டியவர்கள். உரிய காலம் வரும்போது திரும்புவார்கள் அதுவரை தமிழ் ஈழத்திலேயே தங்குவார்கள்.
வருணகுலத்தானையும் வீரர்களையும் போர்த்துக்கேயரிடம் சரணடைய உத்தரவிடச் சங்கிலி மன்னன் மறுத்தான்.
ஒலிவேராவின் இருகோரிக்கைகளும் சங்கிலி மன்னனின் ஆட்சியுரிமையில் தலையிட்டன. சங்கிலி மன்னன் அதைவிட்டுக் கொடுக்க மறுத்தான். இரு கோரிக்கைகளையும் நிராகரித்தான்.

6S ஈழத் தமிழர் இறைமை
ஒப்பந்தம்
ஒலிவேராவின் வீரர்கள் களைப்புற்றிருந்தனர். அவர்களின் உணவு உடைத்
தேவைகளைக் கவனிக்க வேண்டியது படைத் தலைவனின் கடன். நீண்டநாட் பயணம்
செய்ததால் கொணர்ந்த பொருள் முடிவடையும் தறுவாயில் இருந்தது.
ஒலிவேரா மீண்டும்தூதனுப்பினான். திறைகொடுக்க மறுத்த சங்கிலி மன்னன், ஒலிவேராவின் படைகளுக்குரிய பொருட்கள் வாங்கப் பணம் கொடுக்கச் சம்மதித்தான். அதற்கும் ஒருநிபந்தனை. பணத்தை வாங்கியதும், நகரில் பொருட்களை வாங்கிக் கொண்டு ஒலிவேராவின் படைகள் அனைத்தும் குடாக்கடலைத் தாண்டிப் பூநகரிக்குப் பின்வாங்க வேண்டும்.
ஒலிவேரா நிபந்தனையை ஏற்றுக்கொண்டான். ஐயாயிரம் 'பகோடா'களைக் கொடுக்கச் சங்கிலி மன்னன் சம்மதித்தான். அதன்படி, ஒலிவேராவிடம் பணத்தை அனுப்பினான். சங்கிலி மன்னன்தான் சொன்ன சொல்லை காப்பாற்றினான். ஒலிவேரா தன் சொல்லை காப்பாற்றினானா?
இல்லை! ஒலிவேரா சொன்னா சொல்லைக் காப்பாற்றவில்லை. பணத்தை வாங்கியபின் பூநகரிக்குப் பின் வாங்க மறுத்தான். தமிழ் ஈழ அரசின் துரோகிகளின் உதவியுடன் தொடர்ந்தும் குடாநாட்டிலே தங்கினான். படைகளுடன் வண்ணார்பண்ணையை நோக்கி முன்னேறினான்.
சங்கிலி முரசறைந்தான். போர் முரசறைந்தான். புடைகளை அணிவகுத்தான். வருணகுலத்தானின் படைகளையும் தயார் நிலைக்குக் கொணர்ந்தான். மானம் காக்க முனைந்த மறவனாம் மன்னனுக்கு உறுதுணையாகப் போரிட மக்கள் திரண்டனர்.
சங்கிலி போருடை அணிந்தான். போர்க் குதிரையில் அமர்ந்தான். ஏந்திய வாளுடன் வீரமாகாளி அம்மன் கோவிலுக்குச் சென்றான். வெற்றி காணும் உறுதி - வெற்றி அடையும் திண்மை - தமிழரின் மானம் காக்கும் வலிமை - தனக்கும், தன் வீரர்க்கும் - இவை கேட்டு வீரமாகாளி அம்மனிடம் வழிபட்டான்.
வண்ணார்பண்ணைப் போர்
பூநகரியை நோக்கிப் பின்வாங்குவோம் என உறுதி கூறியவர்கள், சொல்லை மீறினார்கள், ஏமாற்றினார்கள், தந்திரோபாயம் செய்தார்கள்.
தமிழர்களோடு ஒப்பந்தங்கள் செய்பவர்கள், தமிழர்களை எப்பொழுதும் ஏமாற்றியே உள்ளார்கள். மாற்றானையும் நம்பும் பண்புதமிழரில் மேலதிகமாக உண்டு. இதனால் தமிழர்களை ஏமாற்றுவது எளிதாக இருந்தது. தமிழர்கள் தம் சொல்லைக் காப்பாற்றியுள்ளார்கள்.
பின்வாங்க வேண்டிய படைகள் முன்னேறிக் கொண்டு வண்ணார் பண்ணையை நோக்கி வந்தன. வண்ணார்பண்ணையைப் போர்க்களமாக்கச் சங்கிலியன் முடிவு செய்தான்.
முதலில் சிங்களக் கூலிப் படைகள் வந்தன. இவற்றைச் சங்கிலி மன்னனின் உள்ளூர்ப் படைகள் சந்தித்தன. சிங்களப் படைகளை புறமுதுகு காணச் செய்தன.
போரின் வேகம் அதிகரிக்க அதிகரிக்கச் சங்கிலியன் வெற்றி பெறுவது சாத்தியமாவதுபோல அமைந்தது.

Page 38
மு. திருச்செல்வம் 70
போரின் நிலை குறித்துத் தஞ்சை மன்னனுக்கும் கண்டி மன்னனுக்கும் செய்தி அனுப்பினான். கண்டி மன்னன் எவ்வித உதவியும் வழங்கவில்லை. ஒல்லாந்தப் படைகள் எந்நேரமும் வரலாம் என எதிர்பார்த்தான். டொம் பீதுறுவின் கடற்படை வருவதற்குரிய காலம் இதுவெனச் செய்தி அனுப்பினான்.
புறமுதுகு காட்டி ஓடும் சிங்களக் கூலிப்படைகளைக் கண்டு ஒலிவேரா துணுக்குற்றான். மன்னாரில் இருந்த கடற்படைக்குச் செய்தி அனுப்பினான். நாகப்பட்டினத்துக்கும் கொழும்புக்கும் செய்திகள் அனுப்பினான்.
ஊர்க்காவற்றுறையில் இருந்துகொண்டே சில போர்த்துக்கேயப் படைத் தலைவர்கள் காக்கை வன்னியனுடன் கதைத்தனர். தந்திரோபாயங்கள் செய்தனர். நேரடிப் போரில் சங்கிலி மன்னனை வெல்ல முடியாது. போரின் கால எல்லையும் நீடிக்கும். சங்கிலி மன்னனைச் சிறை பிடித்தால், தமிழர் படை சீர்குலைந்துவிடும். இவ்வாறு திட்டம் போட்டனர். காக்கை வன்னியனை இத்திட்டத்தில் ஈடுபடச் செய் தனர். சங்கிலி மன்னனைச் சிறை பிடித்தால் காக்கை வன்னியனைப் போர்த்துக்கேய அரசின் கீழுள்ள தமிழ் ஈழ அரசின் ஆட்சித் தலைவன் ஆக்குவதாகக் கூறினார்கள்.
காக்கை வன்னியன் துரோகம் செய்ய முற்பட்டான். தனது இனத்தை விற்க முன்வந்தான் - தனது நன்மைக்காகத் தமிழினத்தை, அதன் மானத் தலைவனை விற்க முன்வந்தான். தமிழ் ஈழ அரசைக் கலைத்து, நாட்டை அடிமை நாடாக்க ஒப்புக் கொண்டான்.
தமிழர்களுக்குத் துரோகிகள் தமிழர்களிடையே இருந்தமையால்தான் தமிழர்கள் அடிமை வாழ்வு வாழநேரிட்டது; இது வரலாற்று உண்மை,
சங்கிலி மன்னனின் படைகள் போர்த்துக்கேயப் படைகளைப் புறமுதுகுகான வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. போர்த்துக்கேயப் பண்டகள் உணவு முதலிய அடிப்பைடத் தேவைகட்காக அல்லலுற்றனர். இழந்த ஆயுதங்களை மீட்க நெடுந்தொலைவில் இருந்துவரும் மீட்புப் படையை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நேரத்தில்தான், காக்கை வன்னியன் புறப்பட்டான். காக்கை வன்னியனின் செயற்பாட்டையாழ்ப்பாண வைபவமாலையில் விரிவாகக் காணலாம். மாற்றுடையில் தமிழ்ப் படைகளுடே சென்றான். சங்கிலி மன்னனின் பக்கம் சேர்ந்து போராட விருப்பம் தெரிவித்தான்.
'காக்கை வன்னியனும் மனம் மாறினான். உட்பகையின் பலம் குறைந்ததே!' எனச் சங்கிலி மன்னனம் மகிழ்ந்தனன். காக்கை வன்னியனைக் கட்டித் தழுவினன். 'இப்பொழுதுதான் உன் மனதில் என்மேற்தயவு பிறந்து எனக்கு உதவி செய்ய வந்தாயோ' எனக் கேட்டான்.
தழுவிய மன்னனைக் கொழுவிய சிக்குப்போல் காக்கை வன்னியன் பிடித்துக் கொண்டான். விடுவதாக இல்லை. காக்கை வன்னியனுடன் மாற்றுடையில் வந்த ஏனையோர் சங்கிலி மன்னனைப் பிடித்துக் கொண்டனர். தனது படைகளால் காப்பாற்றப்படுமுன்பே சங்கிலி மன்னனைச் சிறைபிடித்தனர்.
சங்கிலி மன்னனைச் சிறைவைத்த செய்தி காட்டுத்தீபோல் தமிழ் ஈழமெங்கும் பரவியது. மக்கள் அழுதனர், மானம் காத்த தலைவன் மாற்றானின் சிறைக் கோட்டத்தில் கொடுமைக்குள்ளாக்கப்படுவது பற்றி எண்ணினர். சங்கிலி மன்னனைச்

71 ஈழத்தமிழர் இறைமை
சிறை மீட்க ஆயத்தஞ் செய்தனர்.
தமிழ் ஈழ மண்ணில் சங்கிலி மன்னன் இருந்தால் ஆபத்து என உணர்ந்த போர்த்துகேயர் அவனை இரவோடு இரவாகக் கொழும்புக்கு அனுப்பினர். டி. மோத்தா என்ற போர்த்துக்கேயப் படைத் தலைவனின் கண்காணிப்பில், சங்கிலியையும் அவனது இருமருமக்களையும் கொழும்புக்கு அழைத்துச் சென்றனர்.
சங்கிலி மன்னனை கொழும்புக்கு கொண்டு சென்றதை வருணகுலத்தான் தெரிந்துகொண்டான். தனது படை வீரர்களை அழைத்தான். தமிழ் ஈழ மன்னனின் வீழ்ச்சியால் தமிழ் ஈழம் அந்நியருக்கு அடிமைப்பட்டதை அறிவித்தான். தமிழ்நாட்டுக்குப் போகுமாறு பணித்தான். வருணகுலத்தானும் தமிழ்நாடு சென்றான்.
1619 சூன் 5இல் தமிழ் ஈழம் அடிமை நாடாகியது. தமிழ் ஈழத்தின் இறைமை போர்த்துக்கேயரிடம் சென்றடைந்தது.
சங்கிலி மன்னனைச் சிறை பிடித்தபோது அவன் வாள் அவனுடன் இல்லை. சங்கிலி மன்னின் வலிவு ஆணைக் கருவியான வாள் இன்றும் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் உள்ளதாகக் கூறுவர்.
சங்கிலி மன்னனைக் கொழும்பில் இருந்து இந்தியாவின் மேற்குக் கரையோரத்திலுள்ள கோவாவிற்குச் கொண்டு சென்றனர். தமிழ் ஈழத்தைப் பாதுகாக்க முயன்றமைக்காகத் தமிழ் ஈழ மானம் காத்த பணிக்காக அவன் பெற்ற பரிசு தூக்குத் தண்டனை, கோவாவில் நீதிமன்றத்தில் இராசத் துரோகக் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்ட போதும் வீரனாக நின்றான். தமிழரின் மான உணர்வுக்கு எடுத்துக்காட்டாக நின்றான். தமிழுக்காக, தமிழரசுக்காகச் சுடுகாடு செல்வதானால் அச்சுடுகாடும் பூஞ்சோலையாக அமையும் எனக் கருதினான்.
ஒலிவேரா யாழ்ப்பாண ஆட்சிப் படைத் தலைவனானான். போர்த்துக்கேய மன்னன் தமிழ் ஈழ அரசின் மன்னனானான். சங்கிலி மன்னனிடம் இருந்த தமிழ் ஈழ இறைமையும் ஆட்சி உரிமையும் போர்த்துக்கேய மன்னனைச் சென்றடைந்தது. காக்கை வன்னியனையும் கைகழுவிவிட்டனர்.
பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மீண்டும் எழுந்த தமிழ் ஈழ அரசு, பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் போர்த்துக்கேயரிடம் அடிமைப்பட்டது. தொடர்ச்சியாகக் குலவழி முறையில் ஆரியச் சக்கவர்த்திகள் ஏறத்தாழ முன்னூற்றைம்பது ஆண்டுகள் யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர்.
தமிழ் ஈழம் - நாடு
ஈழத்தில் தமிழர் தனியான வாழ்விடங்களைக் கொண்டுள்ளனர். தமக்கெனத் தனியான நிலப்பரப்பைக் கொண்டுள்ளனர். தீவின் பிறிதொரு நாட்டினமான சிங்கள மக்களும் தமக்கெனத் தனியான தாயகத்தைக் கொண்டுள்ளனர்.
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொட்டு இலங்கைத் தீவின் நிலப்பரப்பு முழுவதும் தமிழர்களுடையதாக இருந்தது. வந்தேறு குடிகளின் வழிவழி வந்த சிங்களவர் காலப்போக்கில் தீவின் தென் பகுதியில் அடர்த்தியாக வாழத் தொடங்க, தமிழர்கள் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய பகுதிகளில் செறிந்து வாழ்ந்தனர்.

Page 39
மு. திருச்செல்வம் 72
தமிழர்கள் வாழ்விடம் தனியாகவும், சிங்களவர்கள் வாழ்விடம் தனியாகவும் இருந்தமையையும் சிங்கள அரசர்களின் வரலாற்றுத் தொகுப்புகள் தெளிவாகக் கூறுகின்றன. மகாவமிசம், இராசவழி போன்ற நூல்களுள் தமிழரின் நிலப்பரப்பு இவைதான் எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளன.
தமிழர்கள் திராவிடர்கள். லிங்க வழிபாட்டை மேற்கொண்டவர்கள் பல நூற்றாண்டுகளின் முன்பு தொட்டே தமிழர்கள் லிங்க வழிபாட்டுக்காரராக, இயற்கை வழிபாட்டுக்காரராக, முருக வழிபாட்டுக்காரராகச் சூரிய வழிபாட்டுக்காரராக இருந்து வந்துள்ளனர்.
இலங்கைத் தீவில் உள்ள ஐந்து இடங்களில் லிங்க வழிபாட்டுச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவை எப்பொழுது தோன்றின என்பதை அறிய முடியாமல் உள்ளது. கோவில்களுள் முதற்தோன்றிய கோவில் முன்னேச்சரம். கேது முனிவர் வழிபாடாற்றிய கோவில் திருக்கேதீச்சரம். திருக்கோணச்சரம் நகுலேச்சரம் மாமாங்கேச்சரம் என்பன மற்ற இரு லிங்க ஈசுவரங்கள் - இவை தமிழரின் பண்பாட்டுப் பேழகைள். தமிழர் தம் வாழ்விடங்களைச் சிறப்பிக்க அணிசெய்ய அமைத்தஇடங்கள்.
திருவள்ளுவர் வாழ்ந்த காலம், கிறித்துநாதர் வாழ்ந்த காலம், இவையொட்டிய நூற்றாண்டுப் பகுதிகளில் தமிழ் நாட்டிலும், இலங்கைத் தீவிலும் வாழ்ந்த தமிழர்கள் புத்த சமயத்தையும், சமண சமயத்தையும் சைவ சமயத்தையும் சார்ந்திருந்தனர். இதனால் தமிழ் ஈழத்தில் சில இடங்களில் பெளத்த சமய வாழ்வுை மேற்கொண்டோரின் வாழ்வையொட்டிய சான்றுகள் இன்னும் காணப்படுகின்றன.
ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த நாயன்மார்கள், தமிழ் ஈழத்துக்கு வந்தனர். தமிழர் வாழ்விடங்களிலும் பழைய சைவக்கோவில்களைப் புதுப்பிக்க ஊக்கு வித்தனர். திருக்கேதீச்சரம், திருக்கோணச்சரம் ஆகிய திருத்தலங்கள் மீது இவர்கள் பாடிய தேவாரப் பதிகங்கள் இன்று வரை நிலைத்துள்ளன. தமிழ் ஈழத்தில் உள்ள ஏனைய கோவில்கள் மீதும் இவர்கள் தேவாரங்களைப் பாடியிருக்கலாம். அவை இன்று கிடைக்கவில்லை.
சோழப் பேரரசு இலங்கைத் தீவைத் தனது ஆட்சிக்குட்படுத்தியபொழுது, தமிழர்கள், சிலாபம் தொடக்கம் பூநகரிவரையுள்ள மேற்குக் கரையோரப் பகுதியில் நெருங்கி வாழ்ந்தனர். யாழ்ப்பாணம் தொடக்கம், பாணமை வரையுள்ள கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் பொலன்னறுவைக்கு வடக்கேயுள்ள நிலப்பகுதிகளிலும் வாழ்ந்தனர்.
சோழப் பேரரசின் வீழ்ச்சியின் பின்னரும், ஈழத்தில் தமிழரின் வாழ்விடங்களில் மாற்றம் இருக்கவில்லை.
நல்லூரைத் தலைநகராகக் கொண்ட தமிழ் ஈழ அரசுகளான ஆரியக் சக்கரவர்த்திகளின் ஆட்சியில், சிலாபம் தொட்டுப் பாணமை வரையில் உள்ள வடக்கு, வடமேற்கு, கிழக்குக் கரையோரப் பகுதிகள் தமிழரின் வாழ்விடங்களாக இருந்தன.
கிழக்கே பழுகாமம், பாணமை முதலிய இடங்களில் வன்னியர்கள் ஆட்சித் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் சில காலங்களில் தமிழ் ஈழ அரசனின் மேலாட்சியை ஏற்றிருந்தனர். சில காலங்களில் கண்டி அரசனின் மேலாட்சியை ஏற்றிருந்தனர். எனினும் தன்னாட்சி உள்ள தமிழ்ப் பிரதேசங்களாக இவை இருந்தன.

73 ஈழத்தமிழர் இறைமை
போர்த்துகேயர் திருகோணமலையில் கோட்டை அமைக்க முயற்சித்தபோது, தமிழ் ஈழ மன்னரான ஆரியச் சக்கரவர்த்திகளிடம் ஆணை பெற்றே அமைத்தனர். ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சி திருகோணமலை வரை பரவியிருந்தது.
போர்த்துக்கேயரின் தமிழ் ஈழம்
சங்கிலி மன்னனைச் சிறைப்படுத்தியதன்மூலம் தமிழ் ஈழ அரசைக் கைப்பற்றிய பேர்ர்த்துக்கேயர்கள் படைத்தளபதி ஒலிவேராவின் தலைமையில் ஆட்சி செய்தனர்.
புத்தளத்தில் இருந்து திருகோணமலைவரை தெற்கெல்லையாக அமைந்த §း: தீவின் வடபகுதியின் மீது போர்த்துக்கேயப் படைத் தளபதி ஒலிவேரா மேலாணை செலுத்தினான். தமிழ் ஈழ நாட்டின் நீதி முறைகளைத் தழுவி ஆட்சி நடாத்தினான்.
தமிழர்களின் நிலப்பகுதியைத் தனியாக ஆட்சி செய்வது எனப் போர்த்துக்கேயர் தீர்மானித்தனர். ஏனெனில் தனியாகவே ஆட்சியுரிமை அவர்களிடம் வந்து சேர்ந்தது.
1619இல் இருந்து 1658 வரை போர்த்துக்கேயர் தமிழ் ஈழ அரசை ஆட்சி செய்தனர். 1656இல் கீழ் நாட்டு சிங்கள அரசை ஒல்லாந்தர் கைப்பற்றினர்; போர்த்துக்கேயரிடம் இருந்து கைப்பற்றினர். எனினும் தமிழ் ஈழ அரசைத் தனியாகத் தொடர்ந்து 1658 வரை போர்த்துகேயர் ஆட்சி செய்தனர். ஒல்லாந்தரின் தமிழ் ஈழம்
1638இல் முதல் முதலில் ஒல்லாந்தப் படைகள் மட்டக்களப்புத் துறையைக் கைப்பற்றின. கண்டியரசனின் ஆட்சிக்கு உட்பட்ட மலைநாட்டுப் பகுதி தவிர்ந்த ஏனைய கரையோரப் பகுதிகள், போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரின் கைக்கு மாறின. படிப்படியாக மாறின. 1656இல் ஒல்லாந்தர் கொழும்பைத் தாக்கி வெற்றி பெற்றனர். கீழ்நாட்டுச் சிங்கள அரசும் கிழக்குக் கரையோரத்தில் இருந்து தமிழ் ஈழ நிலப்பகுதியும் ஒல்லாந்தர் ஆட்சிக்கு உட்பட்டது. எஞ்சிநின்ற தமிழ் ஈழத்தை 1658இல் ஒல்லாந்தரால் கைப்பற்றினர்.
போர்த்துக்கேய அரசனிடம் இருந்த தமிழ் ஈழ இறைமை ஒல்லாந்த அரசரைச் சென்றடைந்தது.ஆட்சியுரிமை ஒல்லாந்தரின் கிழக்கிந்தியக் கம்பெனிக்குரியதாயிற்று
ஒல்லாந்தர் இலங்கைத் தீவின் கரையோர நிலப்பகுதியை ஆறு ஆட்சி மாவட்டங்களாகப் பிரித்தனர். ஒவ்வொரு ஆட்சிப் பிரிவுக்கும் ஒவ்வொரு ஆட்சித் தலைவரை நியமித்தனர்.
பெந்தோட்டை ஆறு தொடக்கம் வடக்கே தெதுறு ஒயாவரைக்கும் உள்ள கொழும்பு ஆட்சி மாவட்டம்.
தெதுறு ஒயா தொடக்கம் மோதரகம் ஆறு வரையுள்ள புத்தளம் - கற்பிட்டி ஆட்சிமாவட்டம்.
புத்தளத்துக்கு வடக்கே, மோதரகம் ஆற்றில் இருந்து பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறு வரையும் பரந்த யாழ்ப்பாண நீதி மாவட்டம் தமிழ் ஈழ நிலப்பகுதி என ஒல்லாந்தர் அறுதியிட்டு எல்லை வகுத்தனர். வளவை கங்கையின்

Page 40
மு. திருச்செல்ஃtச் 74
... : གར་གྱི་༦༡༧ ” ཅ། ༢ م
1790ஆம் ஆண்டில் ஒல்லாந்த ஆதிக்கத்தில் அமைந்த நீதி மாவட்டங்களின் வரைபடம். 1789ஆம் ஆண்டில் ஜே.டு. பெரொனின் படத்தைத் தழுவியது.
 
 

75 ந்ேதிழர் இறைமை
கிழக்கிலிருந்து, கிழக்கு, வடக்கு, வடமேற்கு நிலப்பகுதிகள் சிலாபம் (தெதுறு ஓயா) வரை தமிழரின் ஆட்சி நிலங்கள் எனப் பின்னர் ஆங்கிலேயர் கூறினார்.
மோதரகம் ஆறு தொடக்கம் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாடு வன்னிப்பகுதி என்பனவற்றை உள்ளடக்கிக் கிழக்குக் கரையில் கொக்கிளாய் வரை யாழ்ப்பாண ஆட்சி மாவட்டம்.
கொக்கிளாய் தொடக்கம் கிழக்குக் கரையோரமாகத் தெற்கே வெருகல் ஆறு வரையுள்ள திருகோணமலை ஆட்சி மாவட்டம்,
வெருகல் ஆற்றில் இருந்து கரையோரமாகத் தெற்கே கும்புக்கன் ஆறு வரையுள்ள மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம்.
கும்புக்கன் ஆற்றில் இருந்து தெற்கேயும் மேற்கேயும் ஆக உள்ள உரோகரணமும், பெந்தோட்டை ஆறுவரை பரந்ததுமான காலி ஆட்சி மாவட்டம்.
இந்த ஆறு ஆட்சி மாவட்டங்களின் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொர் ஆட்சிச் தலைவர் இருந்தார். இந்த ஆறு ஆட்சித் தலைவர்களையும், கொழும்பில் உள்ள ஒல்லாந்த ஆளுநர் இணைத்து ஆண்டார். சாவகத்தில், சகர்த்தாவில் ஒல்லாந்தரின் கிழக்கிந்தியக் கம்பெனியின் தலைமை நிலையம் இருந்தது. அவர்கள் அங்கிருந்து ஆளுநரை நியமித்துக் கொழும்புக்கு அனுப்பினார்கள்.
நீதியை நெறிப்படுத்துவதற்காக, மூன்று நீதிப்பிரிவுகளை ஒல்லாந்தர் அமைத்தார்.
கொழும்பு ஆட்சி மாவட்டம், புத்தளம் ஆட்சி மாவட்டம் இரண்டும் ஒரே நீதிப்பிரிவாக இணைந்தன. பெந்தோட்டை ஆற்றில் இருந்து மோதரகம் ஆறு வரையுள்ள கரையோர நிலப்பகுதியில் உள்ள மக்கள் இந்த நீதிப்பிரிவுக்குள் அடங்கினர். கொழும்பு இதன் தலைமை நிலையம்.
யாழ்ப்பாண ஆட்சி மாவட்டம், திருகோணமலை ஆட்சி மாவட்டம், மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம் ஆகிய மூன்று ஒரே நீதிப்பிரிவாக இணைந்தன. மோதரகம் ஆற்றில் இருந்து கும்புக்கன் ஆறு வரையுள்ள வடக்குக் கிழக்குப் பகுதியே இந்த நீதிப்பிரிவு. யாழ்ப்பாணம் இதன் தலைமை நிலையம்.
காலி ஆட்சிமாவட்டம் தனியானநீதிப்பிரிவு கும்புக்கன் ஆற்றில் இருந்து பெந் தோட்டைஆறு வரையுள்ள பகுதியே இந்தநீதிப்பிரிவு. காலி இதன் தலைமை நிலையம்.
இலங்கைத் தீவில் நாட்டினவழி நாடுகள் இரண்டு இருந்தமையை ஒல்லாந்தர் ஏற்றுக்கொண்டனர். சிங்கள நாட்டினம் இருந்தது. தமிழ்நாட்டினம் இருந்தது. மொழி வழியில் மட்டுமல்ல, மதம், வாழ்வு, முறை, பண்பாடு, கலாச்சாரம், நீதி, அரசு, ஆட்சி முறை முதலிய எல்லா வழிகளிலும் இந்த நாட்டினங்கள் வெவ்வேறானவை. இரு நாட்டினங்களும் தனித்தனி நிலப்பகுதிகளைக் கொண்டிருந்தன.
சிங்களவர், கண்டி அரசனின் ஆள்புலத்தில் வாழ்ந்தனர். ஒல்லாந்தரின் ஆள்புலத்தின் தெற்குப் பகுதிகளிலும் சிங்களவர் வாழ்ந்தனர். சிங்களவர்களுள் பெரும்பான்மையினர் பெளத்தர்.
தமிழர்கள் தீவின் வடமேற்கு, வடக்கு, கிழக்கு, நிலப்பகுதியில் வாழ்ந்தனர். இவர்களுள் பெரும்பான்மையினர் சைவர்கள்.

Page 41
மு. திருச்செல்வம் 76
எனவே ஒல்லாந்தர், சிங்களவர்களுக்கு எனத் தனியான நீதிப் பிரிவுகளையும், தமிழர்க்கெனத் தனியான நீதிப் பிரிவையும் அமைத்தனர்.
ஆட்சி மாவட்டங்களில் கூட, யாழ்பபாணம் - திருகோணமலை - மட்டக் களப்பு ஆட்சி மாவட்டங்களில் ஒரே மாதிரியாகத் தமிழரின் ஆட்சி.
ஒல்லாந்தர் காலத்தில் (1638-1795) இலங்கைத் தீவில் தமிழரின் வாழ்விடங்கள் தனியாக அமைந்திருந்தமையை ஏற்றுக்கொண்டனர். தமிழ் ஈழநிலப் பகுதிகள் புத்தளத்தின் வடக்கேயிருந்து கும்புக்கன் ஆறு வரை பரந்திருந்ததையும் ஏற்றுக் கொண்டனர். பிரித்தானியரின் தமிழ் ஈழம்
1795இல் பிரித்தானியப் படைகள் ஒல்லாந்தரிடமிருந்து திருகோண மலையைக் கைப்பற்றின. படிப்படியாக ஏனைய இடங்களைக் கைப்பற்றின. 1815இல் கண்டியரசைக் கைப்பற்றின. இலங்கைத் தீவு முழுவதும் பிரித்தானியரின் ஆட்சிக்குள் அமைந்தது.
இலங்கைத தீவு முழுவதையும் அடிமைப்படுத்தி ஆட்சி செய்த முதல் மேலை நாட்டு அரசு பிரித்தானிய அரசே போார்த்துக்கேயர் கீழ்நாட்டுச் சிங்கள அரசையும் தமிழ் ஈழ அரசையும் கைப்பற்றினர். ஒல்லாந்தர் தீவின் கரையோரப் பகுதி முழுவதையும் ஆட்சிக்குட்படுத்தினர். 1815இல் பிரித்தானியர் கைப்பற்றும் வரை, கண்டிச் சிங்கள அரசு இறைமையும் ஆட்சியுரிமையும் ஆள்புலமும் உடைய தனி அரசாக விளங்கியது.
பிரித்தானியர் ஆட்சி தொடங்கிய காலங்களில் எழுதிய குறிப்புகள், தமிழ் ஈழ நிலப்பரப்புத் தனியான நிலப்பரப்பு எனக் கூறுகின்றன. கிளெக்கோர்ண் என்பார் இலங்கையின் பிரித்தானிய ஆளுநர் நோர்த் அவர்களின் செயலாளர். அவர்,1799 சூன் முதலாம் நாள் பின்வரும் குறிப்பை எழுதினார்.
- இலங்கைத் தீவை இரு வேறு நாட்டினங்கள் வெவ்வேறு
பகுதிகளாக உடைமை கொண்டாடின; ஆட்சி செய்தன. இத்தீவின் நடுப் பகுதியும் தெற்குப் பகுதியும், வளவை ஆற்றில் இருந்து சிலாபம் வரையுமுள்ள மேற்குப் பகுதியும் சிங்களவரின் ஆட்சிப் பகுதி. இத்தீவின் வடக்குக் கிழக்கு நிலப்பகுதிகள் மலபாரிகளின் (தமிழர்களால்) ஆட்சிப் பகுதியாகும். இவ்விரு நாட்டினங்களும் மதத்தாலும் மொழியாலும் வாழ்க்கைப் பண்பாலும் முற்றிலும் வெவ்வேறானவை."
ஆளப்படும் மக்களின் மரபுரிமைகளையும் வழமைகளையும் மதித்து வாழ்ந்த ஒல்லாந்த ஆட்சியாளர், தமிழ் ஈழ நிலப்பகுதியைத் தனியாகவும் சிங்கள நிலப்பகுதியைத் தனியாகவும் பிரித்து நீதி வழங்கினர்; ஆட்சி செலுத்தினர்.
பிரித்தானியர் அவ்வாறு எண்ணவில்லை. பிரித்தானிய ஆட்சி முறையே உலகின் தலைசிறந்த ஆட்சி முறை என எண்ணினார்கள். தம்மால் ஆளப்படும் மக்களிடம் தமது ஆட்சி முறைமைகளைத் திணித்தார்கள். ஆடம் சுமித் போன்ற அரசியல் சிந்தனையாளர்களின் கருத்துக்கமைய ஆட்சிமுறை அமையவேண்டும் என விரும்பினார்கள். ஒல்லாந்தருக்கும், பிரித்தானியருக்கும் இடையே இந்த அடிப்படை வேறுபாடு இருந்தது.

77 ஈழத்தமிழர் இறைமை
பிரித்தானியரின் இத்தகைய சிந்தனைகள் தமிழ் ஈழ மக்களை மிகவும் பாதித்தது. 'இலங்கையில் பிரித்தானியரின் அரசியல் நெறியை, ஆட்சி முறையை நடைமுறைப்படுத்தும் வழிவகைகளை ஆராய்க' என, 1829ஆம் ஆண்டில், கோல்புறுக் ஆணைக் குழு அமைந்தது. நான்காம் ஜோர்ஜ் மன்னர் இந்த ஆணைக்குழுவை நியமித்தார்.
இந்த ஆணைக்குழு 1832ஆம் ஆண்டில் தனது அறிக்கையை நான்காம் வில்லியம் மன்னரிடம் வழங்கியது. அந்த அறிக்கையில் உள்ள முக்கிய கருத்துக்கள் வருமாறு
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமான ஆட்சியைத் தொடர்வதில் பயனில்லை. நாட்டில் உள்ள பல்வேறு இன மக்களியையே உள்ள வேறுபாடுகளைக் குறைக்க வேண்டும். பிரித்தானிய ஆட்சிமுறை வழிகளைக் கையாள வேண்டும்.
கரையோர ஆட்சி மாவட்டங்களும் கண்டி ஆட்சி மாவட்டங்களும் தனித்தனியாக, வெவ்வேறு ஆட்சிமுறைகளால் ஆட்சி செய்யப்பட்டன. அங்கே வெவ்வேறு வழமைகள் இருந்தன. மரபுரிமைகள் செயற்பட்டன.
சிங்களநாட்டினத்தினர்.இராசகாரிய முறையைப் பின்பற்றியவர்கள். தமிழ் நாட்டினத்தினர் தலைவரி முறையைப் பின்பற்றியவர்கள்.
சிங்கள ஆட்சி மாவட்டங்கள் தனியாக இருந்தன. ஆட்சி செய்யப்பட்டன. தமிழ் ஆட்சி மாவட்டங்கள் தனியாக அமைந்தன. ஆட்சி 6):ժանաւյւ/ււ6ծ7.
நாடு ஒருமைப்பட வேண்டும்.தனித்தனி ஆட்சிமுறை ஒழியவேண்டும். சிங்களவருக்கும் தமிழருக்கும் ஒரேமாதிரியான சட்டங்களை இயற்றவேண்டும். பிரித்தானிய ஆட்சி முறையைப் புகுத்தப்பட வேண்டும்.
இலங்கைத் தீவில் உள்ள இருவேறு நாட்டினங்களை, இருவேறு மரபுரிமை உள்ள மக்களை, இருவேறு வழமைகட்கமைய வாழ்ந்தவர்களை, இருவேறு ஆட்சி முறைகளைப் பின்பற்றியவர்களை, இருவேறு நீதித் துறைகளால் நீதி வழங்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து, ஒருமைப்படுத்தி, ஓராட்சிக்குக் கீழ்க் கொணர்ந்து, ஒரு நீதித்துறைக்குள்நீதி வழங்கி, ஆட்சி செலுத்தப்பட வேண்டும் எனக் கோல்புறுக் ஆணைக் குழு விதந்துரைத்து.1833ஆம் ஆண்டு பெப்ரவரி 18ஆம் நாள் பிரித்தானிய மன்னரான நான்காம் வில்லியம் இலங்கைத் தீவில் நீதி (வழங்குதலுக்கான) பட்டயத்தை அறிவித்தார். அந்தப் பட்டயத்தில், கோல்புறுக் ஆணைக்குழுவின் விதப்புரைகள் சட்டமாகின.
1795 தொடக்கம் 1833 வரை பிரித்தானியர் தமிழ் நிலப்பகுதிகளில் தனியாக ஆட்சி செலுத்தினர். நீதி வழங்கினர். சிலாபத்தில் இருந்து வளவைகங்கை வரையுள்ள இலங்கைத் தீவின் வடக்கு, வடமேற்கு, கிழக்கு கரையோர நிலப் பகுதிகள் தமிழரின் வாழ்விடங்கள், தமிழ் ஈழஆள்புலங்கள் என்பதை அப்பொழுது பிரித்தானியர் ஏற்றுக் கொண்டனர்
பிரித்தானிய ஆட்சி முறையைத் திணிப்பதற்காக, மரபு வழி வழமைகளை நீக்குவதற்காக மேற்கொண்ட முயற்சியே 1833இல் வழங்கிய பட்டயம். இதனால்

Page 42
மு. திருச்செல்வம் 78
இலங்கைத் தீவில் ஒரே நீதிமன்றத்தின் கீழ் நீதி வழங்கப்பட்டது. தமிழருக்கும் சிங்களவருக்கும் இருந்த தனித்தனி நீதிமன்றங்கள் கலைக்கப்பட்டன. ஆட்சி முறையிலும் நீதி வழங்களிலும் இரு நிலப்பகுதிகளும் பிரித்தானிய ஆட்சிமுறை, நீதிமுறைகளின் கீழ் கொண்டு வரப்பட்டன.
அரசும் நாடும்-தமிழ் ஈழம்
வரலாற்றினூடாகத் தமிழ் ஈழ நாட்டில் தமிழர் தனியான அரசு அமைத்து வாழ்ந்தனர். தனியான நிலப் பகுதிகளில் வாழ்ந்தனர். தமிழரின் இறைமை தனியானதாக இருந்தது. ஆட்சியுரிமை தனியானதாக இருநத்து. ஆள்புலம் தனியானதாக இருநத்து.
1619இல் ஈழத் தமிழரின் இறைமை தமிழரிடம் இருந்து போர்முனையில் பறிபோனது. இதனால் ஈழத் தமிழர்கள் தமது அரசை இழந்தனர்.
1833இல் ஈழத்தமிழரின் தனியான நிலப்பகுதியை-நாட்டைப் பலவந்தமாகச் சிங்களவரின் வாழ்விடங்களுடன்-நாட்டுடன் இணைத்தனர். இதனால் ஈழத்தமிழர் ஆள்புலத் தனித்துவ உரிமை இழந்தனர்.
வாய்க்கால் ஆறு தொடக்கம், கும்புக்கன் ஆறு வரை இலங்கைத் தீவின்
வடக்கு, கிழக்கு, வடமேற்குநிலப்பகுதியே ஈழத்தமிழரின் ஆள்புலம்-தமிழ் ஈழநாடு. அங்கே அமைவதே தமிழ் ஈழ அரசு.
மு. கருணாநிதி, கே. ஏ. மதியழகன், மு. திருச்செல்வம், சி. என். அண்ணாதுரை.
 
 
 

உசாத்துணை
அரசியலமைப்புச்சபை அதிகார அறிக்கை 1970, 1971, 1972 1, 2ஆம் தொகுதிகள், இலங்கை அரசாங்க அச்சகம்.
இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம், புலியூர்கேசிகன் தெளிவுரையுடன், பக்கம் 1-443, பாரி நிலையம், சென்னை.
சங்க இலக்கியம் - பாட்டும் தொகுப்பும் (1967) பதிப்பாசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, பக்கம் 1-88, பாரிநிலையம், சென்னை,
சத்தியநாதய்யர், ஆர். டி. பாலசுப்பிரமணியம் (1960) இந்திய வரலாறு 2ஆம் பாகம் இடைக்கால இந்தியா (1200-1707 வரை) பக்கம் 1-538 அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்
சபாநாதன், குல. (1953) யாழ்ப்பாணவைபவமாலைபக்கம் 1-96 சரசவதி புத்கசாலை, கொழும்பு
பிள்ளை கே.கே (1960) தென் இந்திய வரலாறு; முதலாம் பகுதி பக். 1-246 இரண்டாம் பகுதி பக். 1-235, பழநியப்பா பிரதர்சு, சென்னை.
Anon (1951) Federal Constitution for Ceylon: Resolutions at the first National Convention of flankai Thamil Arasu Kadchil Trincomallee.
Austin, G. (1966) The Indian Constitution, Cornerstone of a Nationa pp. 1-338; Oxford University Press, Bombay.
Baldaeus, Rev. D. (1672) Jaffna Pattnam;
Basu, D.D. (1958) Shorter Constitution of India; pp. 1-653. C. Sarkar & Sons Pvt. Ltd., Calcutta.
Chelvanayagam, S.J.V. (1949) Presidential Address, Ilankai Thami Arasu Kadchi; pp. 1-15; IATK Book series No. 1.
Cooray, J.A. l. (1973) Constitution and Administrative. Law of Sri Lanka (Ceylon), pp. 1-638; Hansa Publishers Ltd., Colombo.
De Silva, C.R. (1972) The Portugese in Ceylon 1617-1638; pp. 1-258; H. W. Cave & Co., Colombo.
Guansekara, B. (1900) Editor - The Rajavailya; pp. 1-88; Government Printer, Ceylon.
Huntington, S.P. (1968) Political order in changing societies; pp. 1448, Yale University Press, New Haven.

Page 43
மு. திருசசெல்வம் 80
Kodeeswaran vs Attorney General of Ceylon (1964) Supreme Court c Ceylon No. 408; District Court of Colombo Case No. 1026/2
Marasinge, M.L. (1971) Ceylon - A Conflict of Constitutions, pp 645-674; international and Comaprative Law Quarterly, Vol. 20.
Marshall. G. (1957) Parliamentary Sovereignty and the Commonwealth, pp. 1-272; Clarendon Press, Oxford.
Marshali, G. (1971) Constitutional Theory, pp. 1-229 Clarendon Press, Oxford.
Mendis, G.C. (1956) The Colebrokke Cameron Papers, Documents on British Colonial Policy in Ceylon Vol. 1 & II, pp 1-393 and pp. 1-406; Oxford University Press.
Mendis, G.C. Ceylon - Today and Yesterday, Main Currents of Ceylon History, pp. 1-146; Associated Newspapers of Ceylon Ltd., Colombo.
Myrdal, G. (1968) Asian Drama - An inquiry into the poverty of nations - vol. 1-4; The Penguin Press.
Nadaraja, T. (1972) The legal system of Ceylon in its historical setting, pp. 1-306; E.J. Brill, Leiden, Netherlands,
Pathmanathan, Dr. S. (1976) Personal Communication.
Perera, Rev. S.G. A History of Ceylon for Schools Parts I & II; Asssociated Newspapers of Ceylon Ltd., Colombo.
Pieries, R. (1954) Administration of Justice and of Revenue on the island of Ceylon under the Dutch Government "The Cleghorn Minute"; Jour of the Cey. Branch of the Royal Asiatic Soc. New Series Vol. 1 (2) pp. 125151
Ponnampalam, G.G. (1944) Presidential address All Ceylon Tamil Congress; pp. 1-22.
Sinnathamby J.R. (1974) Tamil Nad of Ceylon and her people, pp 1-43; Monograph Typescript Copy,
Stavrianos, L.S. (1962) A global history of man; pp. 1-776, Appyn and BaCon Inc., Boston.
Tennent, Sir J.E. (1859) Ceylon, An account of the island, Physical, Historical and Topographical; Longman Green Longman and RuperT.


Page 44


Page 45